கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசு 1999.05-06

Page 1


Page 2
அடுத்த (2000)தைத்திங்களில் பூவரசு தனது பத்தாவது ஆண்டுக்கான கலை இலக்கியப் பணியில் கால்பதிக்கிறது.
பூவரசு முதல் இதழிலிருந்து இந்த ஆண்டு இறுதிவரை பூவரசு சந்தித்த-சந்திக்கும்~ படைப்பாளர்களை, வாசகர்களை, கலைதூர்களை அன்புடன் நினைவுகூர்வதோடு அதன் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உழைத்தவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறது.
அடுத்த ஆண்டு வெளிவரும் அத்தனை இதழ்களும் சிறப்பிதழ்களாக மலர்கின்றன.
உங்கள் படைப்புக்கலுநம் பூவரசு 2000 சிறப்பிதழ்களில் வெளிவர வேண்டுமெனில் உடன்அனுப்பி உதவுங்கள்.
 

உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம்
இதழ்: 57 வைகாசி ஆனி 1999. Mai - Juni 199
Poovaras Tamilische Kultur Magazin
ஆசிரியர்: இந்துமகேஷ்
Poovarasu Sianiah Maheswaran
Postfach: O 34 O 28034 Bremen Germany
இந்தமலரினர் இதழ்கள்.
வல்லிக்கர்ைனணி சீஅருணர் மணிபல்லவனர் இசம்பந்தனர் ஏ.ஜே.ஞானேந்திரணி மு.பொன்னம்பலம் எழிலனி. விகந்தவனம் முனைவர் தமிழப்பணி மகேஸ்வரி வரதராஜா அ.வேணுகோபாலணி த.பவானந்தராஜா மா.கி.கிறிஸ்ரியனர் வேலணையூர் பொனர்னணினா ஆனந்த் குலதாசனி

Page 3
நலம் தலமறிய ஆவல் பங்குனி சித்திரை இதழ் என் கையில் கிடைக்கப் பெற்றேன்.நன்றிகள். நான் பலதடவை தொலைபேசி அழைப்பில் உங்களுடன் தொடர்புகொள்ள முயன்றம் பலனளிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் பூவரசு éßOLä 鲁 சந்தோசமே. பூவரசு எதுவித தடங் இல்லாமல் வெளிவந்து புலம்பெயர் தமிழர்களின் கலை இலக்கிய தாகத்தை பூர்த்தி செய்யவேண்டும் என வாழ்த்துகிறேன்.
அன்புடன் குஞானக்குமாரன் (ஒஸ்ணாபுருக், ஜெர்மனி)
○ தெங்கள் தமிழ்ப்பணிக்கும் இலக்கியவளர்ச்சிக்கும்
எனது ஆதரவும் வாழ்த்தம் என்றம் உண்டு பூவரசு 8வது ஆண்டுமலர் பார்த்தேன். ஓவியர் கண்ணாவின் கைவண்ணத்தைத் தாங்கிய அட்டையுடன் ஆண்டுமலர் அரும்பெரும் விடயங்கள் பலவற்றைத் தந்த எம்மையெல்லாம் பூரிக்க வைக்கின்றது. இலக்கி ஆர்வலர் 参
தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். g(
அன்புடன் விகந்தவனம் (ரொரன்டோ, கனடா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய தமிழ் இலக்கியம் சீராகவும் சிறப்புடனும் திகழவில்லை.
அது வளமுற்றுச் செழிக்கவுமில்லை. வனப்புடன் வளரவுமில்லை என்று சிலர் அவ்வப்போது அழுத்தமாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தமிழில் நாவல் வளர்ச்சி பெறவில்லை, சிறுகதை தேக்கமுற்று விட்டது. மரபுக் கவிதை செத்துப்போச்சு. புதுக்கவிதை சாரமற்று வறண்டு மங்கிவிட்டது. இப்படி எல்லாம் எழுதியும் பேசியும் மகிழ்ந்து போகிறார்கள் அனேகர்,
உண்மைநிலை இதுவாக இருக்குமானால் அது எழுதுகிறவர்களுக்கும் மொழிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கிற விஷயம் இல்லை.
இதுதான் இன்றைய நிலைமை என்றால் அதற்கு எழுதுகிறவர்கள், அவர்கள் எழுதுகிறவற்றைவெளியிட்டுக்கொண்டிருப்பவர்கள், அவற்றைப் படிக்கிறவர்கள்எழுத்தாளர்கள், பத்திரிகை மற்றும் புத்தகப் பிரசுரகர்கள், வாசகர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் பொறுப்பாளி ஆவார்கள்
எழுத்தாளர்கள் ஏதேதோ நோக்கத்தடண் எழுதுகிறார்கள். தாங்கள் எழுதுகிறவை அச்சில் வரவேண்டும், பரவலான கவனிப்பைப் பெறவேண்டும் என்ற ஆசை அவர்களை உந்திக்கொண்டிருக்கிறது.
அவர்கள் எண்ணம் ஈடேற பத்திரிகைகள் துணைபுரிய வேண்டும்:
பத்திரிகைகள் பெரும்பாலானவை அதிகமான விற்பனையை நோக்கமாக உடையவை. லட்சக்கணக்கில் வாசகர்களை ஈர்ப்பதற்கு வழிவகைகளைத் திட்டமிட்டு அவை பலவாறான உத்திகளைக் கையாள்கின்றன. எழுத்தின்தரம் பத்திரிகை நடத்துகிறவர்களுக்கு முக்கியமில்லை. வாசகர்களை வசீகரிப்பதும் பத்திரிகையில் விற்பனையைப் பெருக்குவதும்தான் அவர்கள் நோக்கம். வாசகர்கள் பல தரத்தினர். பல்வேறு நோக்கங்கள் கொண்டவர்கள். பெரும்பான்மை வாசகர்கள் சிரமப்படவிரும்பாதவர்கள், தரமான நல்ல விஷயங்களைத் தேடிப் படிப்பதற்கான சிரத்தையை மேற்கொள்ளாதவர்கள். பொழுது போக்குத்தான் மிகப்பலரின் நோக்கமாக இருக்கிறது. ஹெவியான விஷயங்களை அவர்கள் நாடுவதில்லை. லைட்டானவை தான் வாசகர்கள் மிகுதியாக விரும்புவது, பத்திரிகைகள், சினிமா, டிவி எல்லாம் அவர்களது ரசனைக்குத் தீணி போடுவதிலேயே கருத்தாக இருக்கின்றன. தங்களது சயலாபத்துக்காக அவர்களுடைய ரசனைத்தனம் உயர்ந்துவிடாமலிருப்பதற்கான வேலைத்தனங்ளையும் மும்முரமாகச் செய்து வருகின்றன.
8. பூவரசு

Page 4
இது பொதுவான ஒரு பார்வை, உண்மையில் தமிழ்எழுத்து. தற்காலத் தமிழ் இலக்கியம் வளரவே இல்லையா?
அது வளர்ந்துதான் வந்திருக்கிறது. இப்பவும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இலக்கியத் தீவிரவாதிகள் ஆசைப்படுகிற அளவுக்குத் தமிழ் இலக்கியத்தின் பலவகைகளும் வேகமாக வளராமல் இருக்கலாம். அவர்கள் கனவு காண்கிற இலட்சியத்தன்மைகளோடு தமிழ் நாவல், சிறுகதை, கவிதை முதலியன ஜிலுTலுத்து தகத்தகாயம் காட்டாமல் இருக்கக்கூடும், ஒரேயடியாக எதுவும் வளரவில்லை என்று கூறிக்கொண்டிருப்பது அவர்களுடைய பார்வைக் கோளாறையும், மன வக்கிரத்தையும் புலப்படுத்தும் செயலாகும்:
இப்படி குரல் கொடுக்கிறவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். இப்பவும் இருக்கிறார்கள்.
1949களில் தற்காலத் தமிழ்இலக்கியம் குறித்து ஒரு அறிஞர் ஒரு நூல் எழுதினார். மறுமலர்ச்சி இலக்கியம், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்பற்றி வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். இவர்கள் எழுவதெல்லாம் தமிழே இல்லை; இவர்களுக்குத் தமிழ்மரபும் தெரியாது: எதுவும் தெரியாது என்றெல்லாம் வெளுத்துக்கட்டி நையாண்டிகள் பண்ணி மனநிறைவு பெற்றிருந்தார் அவர்,
198 களில் தமிழில் சிறுகதை எழுதுகிறவர்கள் ஒருசிலர் தான் என்று பட்டியல் தீட்டி மகிழ்ந்தார் ஒருவர். மிகளில் அந்தப்பட்டியலில் இருந்து அவரே சில பெயர்களை நீக்கினார். முதலில் ஏன் சேர்த்தார், அப்புறம் ஏன் சிலரைப் பிடித்து வெளியே தள்ளினார் என்று காரணம். விளக்கம் எதுவும் அவர் சொன்னாரில்லை.
தமிழ் சிறுகதை நன்றாக வளர்ந்து கொண்டிருந்த வருடங்களில் சிறுகதை தேங்கிப்போச்சு வளர்ச்சியேவில்லை என்று அறிவித்தார் ஒருவர்.
எல்லோரையும் மிஞ்ச விரும்பிய ஒருவர். இந்த மண்ணில் பசுமையே கிடையாது இதில் நல்லது வளரவே வளராது இங்கிருப்பவர்களுக்கு சுய சிந்தனையே கிடையாது என்று ஓங்கி அடித்தார். இன்னொருவர் எழுத்தாளர்கள் பலரையும் கடுமையாகச் சாடிக் குறைகூறிவந்தார்.
19களில் ஒருவர் தமிழில் நாவலே இல்லை இரண்டு நாவல்களைக் குறிப்பிடலாம் அவைகூட வெற்றிபெறாத நாவல் முயற்சிகளே என்று அறிவித்தார்.
இத்தகைய தரிசனவாதிகள் தத்தமது தற்சிறப்பை அம்பலப்படுத்தவும் தான் என்கின்ற அகங்காரத்தைச் சிலிர்த்துக்காட்டவுமே தான் இப்படி எல்லாம் கருத்துகள் வெளிப்படுத்தி பெருமைப்படுகிறார்கள். அவ்வளவுதான்.
தமிழில் நாவலும் சிறுகதையும் நன்றாக வளர்ந்துதான் இருக்கின்றன. அவற்றை எழுதியவர்களை-அவர்களது எழுத்துக்களை-ஏற்றுக்கொள்ள மனம் கொள்வதில்லை மதிப்பீடு செய்யும் எழுத்தாளர்கள்.
மரபுக்கவிதை செத்துவிட்டது எனும் கூற்றும் கண்மூடித்தனமான மதிப்பீடே. அழகான அருமையான மரபுக்கவிதைகள் எழுதப்படுகின்றன, அறிவியல் எண்ணங்களையும் காலத்தோடு ஒட்டிய நவீன கருத்துகளையும் மரபுக்கவிதையில் எழுத முடியும் என எடுத்துக்
i- பூவரசு

காட்டும் தொகுப்புகள் வெளிவந்துள்ளன,
தோன்றி வளர்ந்த இலக்கிய வடிவம் எதுவும் எளிதில் சாவதில்லை, அதன் நன்மையால் ஈர்க்கப்பட்டு அதைப் போற்றிவளர்க்கும் ஆர்வலர்கள் அவ்வப்போது தோன்றத்தான் செய்கிறார்கள். புதுக்கவிதை நூல்கள் சமீப காலத்தில் அதிகமாகவே பிரசுரம் பெற்றிருக்கின்றன. சிற்றிதழ்களிலும் அதிகமான பேர் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவரவர் அனுபவங்களும் வாழ்க்கை நோக்கும் உள்ளத்தில் ஏற்படுத்திய சலனங்களையும் எண்ண ஓட்டங்களையும் நல்ல முறையில் கவிதைகளாகப் பலர் பதிவு செய்திருக்கின்றார்கள், தமிழில் வெளிவந்துள்ள-வருகிற-படைப்புக்களும் எழுத்து முயற்சிகளும் எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் சரியாக வரவேற்கப்பட்டு உரிய கவனிப்பைப் பெறுவதில்லை. இது பரிதாபத்துக்கு உரியது.
இலக்கிய மாணவர்களும் ரசிகர்களும் பலவிதமான பார்வைகளோடு தான் படைப்புக்களை அணுகுகிறார்கள் அவர்கள் சார்ந்துள்ள குழு-கட்சி-தத்துவம் போன்றவற்றிற்கு ஏற்ப அவர்களுடைய பார்வையும் அமைகிறது.
ஆயினும் பல்வேறு விதமான அபிப்பிராயங்களும் வெளிப்படத்தான்வேண்டும். படிக்கிறவர்கள் எல்லோருமே அபிப்பிராயங்கள் சொல்லிவிடுவதில்லை, கருத்து தெரிவிப்பவர்களில்கூட ஆளுக்குத் தக்கபடியும் இடத்துக்குத் தக்கபடியும் அபிப்பிராயம் கூற விரும்புகிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள்,
தமிழ் எழுத்துக்களின் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை நாடகம் முதலிய பல வகைகளின்) வளர்ச்சி கணிக்கப்படவேண்டும். 19 வரிசையிலான ஆண்டுகள் முடிவை நெருங்கிவிட்டன. ஒரு நூற்றாண்டு பூர்த்தியாகிறது. இந்த நூற்றாண்டின் எழுத்து முயற்சிகளையும் சாதனைகளையும் அளவிட, பத்துப்பத்து வருடங்களாக எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு பத்துவருட காலகட்டத்திலும், எழுதத் தொடங்கியவர்கள், எழுதிக் கொண்டிருந்தவர்கள், அவர்களுடைய எழுத்துக்கள் பற்றிய விபரம் சேகரிக்கவேண்டும், அவற்றின் தன்மைபற்றி சிந்திக்கவேண்டும்,
இவ்வாறு பத்துப்பத்து வருட ரீதியில் பட்டியலிட்டுப் பார்த்தால் காலஓட்டத்தோடு தமிழ் இலக்கியமும் எப்படி வளர்ந்திருக்கின்றது என்பதைக் கண்டறியலாம்.அப்போது கூட இவன் எல்லாம் எழுத்தாளனா? இவன் எழுதியதெல்லாம் எழுத்தா என்று எள்ளல் சிரிப்பு சிந்தக்கூடிய ஞானசூரியன்கள் இருக்கத்தான் செய்வார்கள், உலகம் பலவிதம்: ருசிகள் விதம் விதம்
நன்றி: கணையாழி
5. பூவரசு

Page 5
தளிச் சேகரிப்பில் நிறைந்துப்போன குடம் தொடிக்கடிர் என
விழுந்தார் அப்பா
என்ன வியப்பு
அப்பாவுக்குள் தாத்தா அதே நடை سمسم W குரல்கூட ஒரேமாதிரியாக །སྐ (, அக்கடி நீக்ச்ைசுளிக்கிறார் 4 பேசும்போது வாயொரு பக்கம் 笼 இதுவெல்லாம்
தாத்தாவிடம் உண்டு
தாத்தா~ அடிக்கடி சுருட்டு பற்றவைப்பார் வீடே நாற்றமடிக்கும் பரவாயில்லை
அப்பாவிற்கு அந்தப் பழக்கமில்லை! சுருட்டிற்குப் பதிலாக சிகரெட் இருக்கிறது அப்பா அடிக்கடி புகை உலகில் கனவு காண்பார்
மற்றொரு தளியில் நான் குதித்தேன்!
ராசா எண் மவனைப் போலவே உரிச்சி வைச்ச மாதிரி இருக்கறே பாட்டியின் பாராட்டில் நனைந்தப்போனது மனம்,
.ேபூவரசு
எனக்கும் அடிக்கடி தம்மல் வரும் சிரிப்பு எப்போதோ வந்தபோகும் கைநிறை மயிர்கள் வாய் அரிக்கும்போத சிகரெட்சிலவேளைகளில் அப்பா குடிக்காத பிராண்டி
இப்படியாக நானும் என் அப்பா மாதிரியே குரங்குகளின் முன்!
-சீஅருண். (மலேசியா)
 

மொழியாலும் இனத்தாலும் கலை கலாச்சாரப் பண்பாட்டாலும் தொப்புள் கொடியுறவோடு ஒன்றிவிட்ட தமிழக ஈழத்தமிழர்களைக் காலம்காலமாக அரசியல் என்னும் சதுரங்க விளையாட்டாலும் மாற்று இனத்தாரின் மாற்றாந்தாய் மனப்பாண்மையாலும் சிக்குண்டு விரிசலடைந்த நிலையிலுள்ள தமிழக-ஈழத்தமிழரின்- உறவுகள் எவ்வாறு உள்ளன: உண்மை நிலையென்ன? எமக்காகக் குரல்கொடுப்போர் எவர் அவர்தம் நோக்கங்கள் என்ன எம்மினம் படும் வேதனைகளை நீறு பூத்த நெருப்பாகச் சுமக்கும் இளம் இன உணர்வாளர்கள் நிலையென்ன? என்பனபோன்ற எத்தனையோ கேள்விகள் வருடக்கணக்காக என் மனதைக் குடைந்துகொண்டிருந்தன. இவற்றிற்கான பதில்களை பத்திரிகை வாயிலாகவும் சஞ்சிகைகள் வாயிலாகவும் ஒரளவே அறியக் கூடியநிலை இருப்பதாலும் தணிக்கை எனும் பூதத்தையும் தாண்டிவரும் செய்திகளிலுள்ள நம்பகத் தனமைஇவற்றை எடைபோட்டுப் பார்த்து வந்த நேரத்தில்தான். நேரில் தமிழகம் சென்று வர வாய்ப்புக் கிட்டியது. தமிழகத்தையும் அங்கு வாழும் நம்மவர்கள் பற்றியும் இயற்கை வளங்களையும் பழைமை வாய்ந்த ஆலயங்களையும் அவற்றின் தற்போதைய நிலைகளையும் புலம்பெயர் மண்ணில் 2 வருடங்களைத் தொலைத்துவிட்டுபோது மனதில் பதிந்த அனுபவக் கீற்றுக்களையாவும் கற்பனைகளற்று நம்மண்ணில் வாழ்ந்தபோது குறுக்கிட்டு சம்பவங்களையும் யதார்த்தத்தினுடு-சுவைகலந்து-குழைத்து-பெற்ற தாயின் ஆசியோடும் நிழல்தரும் பூவரசின் கனிவோடும்-பூவரசு இனிய தமிழேட்டின் அன்பு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென விழைகின்றேன். பொறுப்பதும் போற்றுவதும் உங்களிடம்.
-மணிபல்லவன்
7. பூவரசு

Page 6
அதற்குமுன்.
96ம் ஆண்டென நினைக்கிறேன். ஒரு தமிழ்ப் பெண்மணி கணவனை இழந்தவர், தன்மகளுக்கு எவ்வளவோ கஷ்டத்தின்மத்தியில் பரதக்கலையைக் கற்பித்து அரங்கேற்றம் காண விழைந்தார். அதற்குமுன் தானும் மகளும் தமிழகம்சென்று அரங்கேற்றத்திற்குத் தேவையான பொருட்களையும் அங்கு அகதியாக வதியும் தன் தாயின் ஆசீர்வாதத்தையும் பெற நினைத்தார். இந்திய தூதரகத்தில் விசா விண்ணப்பித்தபோதுதான் அவர் அதிர்ந்து போனார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
காரணம் ஏதேதோ கூறினார்கள். மனமுடைந்த தாயார் என்னை ஒருபொழுது சந்தித்து நிலைமையைக்கூறி நீங்களெல்லாம் பத்திரிகையில் எழுதி எங்களுக்கு உதவக்கூடாதா? தமிழகம் போகும் அத்தனைபேரையுமே புலிகளாக எண்ணுகிறார்களே என அங்கலாய்த்தார்.
அவருக்கு ஆறுதல்கூறி முயற்சிப்பதாகக் கூறினேன். தமிழ்அருவியின் 4வதுஆண்டு மலர் தமிழகத்தில் அச்சாகிக்கொண்டிருந்த வேளை. அதில் இந்நிலை குறித்து எழுதினால் எம்மவர் பலர் பயனடைய வாய்ப்பு உள்ளது என எண்ணினேன். பூரீலங்காவைவிட ஓரளவேனும் பத்திரிகைச் செய்திகளை உள்வாங்கும் மனப்பக்குவம் தமிழக- இந்திய - அரசியல்வாதிகளிடம் இருப்பதையாரும் மறுத்துவிட முடியாதல்லவா?
அப்பத்திரிகையிலேயே இப்படியும் நடக்கின்றது' என்ற தலைப்பின் கீழ் ஜேர்மனியில் ஈழத்தமிழர்கள் இந்திய தூதரக அதிகாரிகளால் புறக்கணிக்கப் படுகின்றார்கள். உல்லாசப்பயணிகளையும், உறவினர்களைக் காணவிழையும் மக்களையும் சென்று வர அனுமதிக்கலாமே என்ற சாரப்பட எழுதினோம். அப்பத்திரிகை தமிழகத்திலேயே பல அமைச்சர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தோம். தமிழகத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருந்த காலமது.
மறுவாரம் இந்திய தூதரகத்திலிருந்து ஒரு தொலைபேசியழைப்பு தூதரகத்திலிருந்த 2வது தர அதிகாரியின் குரல்.
8. பூவரசு

என்ன சார் உங்க பத்திரிகைச்செய்தி டில்லிவரைக்கும்போய்விட்டதே.நாங்கள் விசாரித்துத்தான் விசா கொடுக்கின்றோம். அதுதான் சிலசமயங்களில் தாமதமாகிவிடுகிறது என்றார். தாமதமாகிவிடுகிறதா? அல்லது தங்கியே விடுகிறதா சார்?' என்றோம்.
'சார் அப்பாவிகளைத் தடுக்காதீர்கள் சார். பூனிலங்காவிற்குப் போகமுடியாதவர்கள் தங்கள் உறவுகளைப்பார்க்க தமிழகத்திற்குத்தான் செல்லவேண்டும். இதையும் விட்டால் வேறு வழியில்லை சார்' என்றோம். ஆவன செய்கிறோம் என்றார். அதன் பின்னர் பலரும் விசாபெற்றுத் தமிழகம் சென்றுவந்ததாகக் கூறி மகிழ்ந்தனர். அந்தத்தாயும் மகளும்கூடத் தமிழகம்சென்று வந்ததாகக்கூறி மகிழ்ந்தனர். நிலையற்ற வாழ்வில் நிறைவான சுகம் காணும் குடும்ப உறவுகளை என்னதான் தடைகள் போட்டாலும் அன்பு மீறித் துடித்து அனுபவிக்கும் தன்மையை யாராலும் தடுக்க முடியாதல்லவா? ஈழத்தமிழரின் குடும்ப அமைப்பும் சிங்கள அரசின் நிலப்பறிப்பும் இன்னமும் தமிழரின் உறவுகளின் சங்கமங்களை பிரிக்க முடியவில்லையே?
யூலை 98, 19ம் நாள். வெண்பஞ்சுக் கூட்டங்களின் மேலே தேரென அசைந்து கொண்டிருந்தது விமானம். கண்கொள்ளாக் காட்சி. 20 வருடங்களுக்கு முன்னர் ஏஜென்சிக்காரன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் முதன்முதலாக விமானப்பயணம் செய்தபோது அந்தத் துக்கத்தையும் மறந்து ரசித்து மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அனுபவிக்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்தது ஞாபகத்திரையில் மின்னல் கீற்றென தோன்றி மறைந்தது. எழுத்தாளர் மு.வரதராசனார் தன் முதலாவது விமானப்பயணம் குறித்து எழுதியபோது தான் கழுகைப் பார்த்துப் பொறாமைப்பட்டது தீர்ந்தது என்று எழுதியிருந்தார்.
பணிப்பெண் ஒருவர் அவசரகாலத்தில் அணியும் பாதுகாப்பு உடைபற்றியும் பாதுகாப்புப் பட்டி எப்படி அணியவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார். தமிழினி தரையில் போகும்போதுகூட பாதுகாப்புப் பட்டி அணிய மறுப்பவள். விமானத்திலா அணியப் போகிறாள்? பணிப்பெண்ணின் வற்புறுத்தலால் கட்டளையை ஏற்றுக்கொண்டு எம்மைப்பார்த்து முறைப்பது தெரிந்ததும் நானும் மனைவியும் அதைக் கவனியாது யன்னலினூடே மேகங்களை நோக்கினோம்.விமானம் சிறிது நேரத்திலேயே மிக உயரத்திற்கு வந்துவிட்டது.கட்டிடங்கள், மலைகள், வயல்வெளிகள் மெல்ல மெல்ல விடைபெற்றுச் செல்ல கடல் நீண்டுகொண்டே வந்தது. கடலும் நிலமும் கொஞ்சும் காட்சி கீற்றாகத் தெரிந்தது.
9.பூவரசு

Page 7
கப்பல்கள் சிறு விளையாட்டுக் கப்பல்கள் போல் சிறிதாகத்தெரிந்தன. விமானத்தின் யன்னல் கரையோரம் நானும் மனைவியும் மாறிமாறி உட்கார்ந்து இயற்கையை இரசித்தபடி இருக்க நமது கடைக்குட்டியை ஒரு தாடிக்கார பஞ்சாபிக்காரர் சமாளித்துக் கொண்டிருந்தார். 3 வயதை நெருங்கிக்கொண்டிருந்த தமிழினிக்கு தாடிக்காரன் என்றால் பயம். 8 மணித்தியால விமானப் பயணத்தை எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என எண்ணியபடியே போன எங்களுக்கு தாடிக்காரன் கைகொடுத்ததில் கொஞ்சம் நிம்மதி. விமானப் பணிப்பெண்களின் அன்பான உபசரிப்பு விமான விபத்துக்களின் கற்பனை வடிவங்களை தகர்த்துக்கொண்டிருந்தன. பல விமான விபத்துக்களை கேள்விப்பட்டபோதும் உலகில் யாரும் பயணம் செய்யாதிருக்கிறார்களா என்ன? இதுதானே மனித இயல்பு. இறந்தாரை எரித்துவிட்டு, என்ன உலகமடா என்று என்று சலித்துவிட்டு அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் நாம் வாழ முற்படவில்லையா? உலகச் சிக்கலில் மூழ்கவில்லையா?
ஆனால் ஒன்று நிச்சயம். எனது துணைவி நாம் சென்று மீண்டும் சுகமாகத் திரும்பிவரவேண்டும் என்று அகில உலகத் தெய்வங்களுக்கெல்லாம் அறிவித்திருப்பார், வேண்டுதல் செய்திருப்பாள்.
இரவுச் சாப்பாடு தரப்பட்டதும் எம்முடன் பயணம் செய்தகொண்டிருந்த பல வெள்ளையர்கள் தவிர்த்தும் சேர்த்தும் கேட்டும் வாங்கியும் சுவைத்தும் அலுத்தும் அனுபவித்துவிட்டு தூக்கத்திற்கு ஆட்பட முயற்சிசெய்து கொண்டிருந்தார்கள். தமிழினி இடையிடையே குழப்படிக்கு ஆயத்தம் செய்யும்போது 35.79 அமைதி காத்தது. துணைவியார் சாப்பாட்டின்பின் தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தார் வழமைபோல. விமானத்தின் அசைவும் தாலாட்டுவதுபோல வேறு இருந்தது வாய்ப்பாக. தூங்கியே விட்டாள். வெண்பஞ்சுமேகங்கள் விமானத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பஞ்சுமேக மெத்தைதான். விமானம் பறக்கும் உயரம். இப்போது தாண்டிக்கொண்டிருக்கும் நாடு, ஐரோப்பாவில் நேரம், இந்தியாவின் நேரம் என விலாவாரியாக அத்தனையையும் அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் காணக்கூடியதாக இருந்தது. தமிழீழத்தின் மேலாக விமானம் பறந்துகொண்டிருக்கின்றது என்ற அறிவிப்பை எப்போது என் கண்கள் காணப்போகின்றன? ஆசையொன்று எட்டிப்பார்த்தது.
10.பூவரசு

விரைவில்.விரைவில்.என்று மனச்சாட்சி பதில் தந்துகொண்டிருக்க புதுவையாரின் நினைவழியா நாட்கள் கவிதைக்குள் கண்களை மேயவிட்டேன். என்ன அற்புதமான வரிகள்
வேர்கள் வெளியினிற்தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை பேர்களைச் சொல்லக்ஷ்ம் முடிவதில்லை - கரும் புலிகளின் கல்லறை வெளியிவில்லை./ விமானத்தின்வேகத்தைவிட, நெஞ்சின் அலைகள் வேகமாக தமிழீழத்தை சுற்றிப் பறக்கத்தொடங்கிவிட்டது. இதயம் கணக்க கண்கள் பனிக்க அந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்துப் போற்ற இவ்வரிகள்போதுமே! எத்தனை எத்தனை இளம் குஞ்சுகள். இனவெறிக் கொடுமைக்கு இரையாகிப் போயின? சிந்தனைகள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த வேளையில்தான் அந்தக்குரல். வந்த திசையைப்பார்த்து அதிர்ந்து போனேன்.
(பயணம்தொடரும்)
11. பூவரசு

Page 8
எப்போது?
பொண்பொருளைக் குவித்து
அதன்மேல் மமதையுடன்
வீற்றிருக்கும் மனிதா
தண்மானத்தை விலைபேசியா - உன்
தகுதியை உயர்த்தினாய்?
தாய் நாட்டையே ஏலம் விடுகின்ற ஆயுத தரகனா நீ ~ இல்லை ஆரணங்கின் தரகனா?
அதோபார்
உனக்குக் கீழே
அந்த ஏழை
ஏந்தவதோ
பிச்சைப் பாத்திரம்
உழைத்தழைத்து ஓடாய்த் தேய்ந்தவன் கீழே உழைப்பையே அட்டையென
நீயோ. வசதிகளின் எல்லை
வறமையின் எல்லை
தீபாவளி வந்துபோகும்
உயர்வு தாழ்வு நீங்கிச் செல்லுமோ? பங்களாக்களின் பகட்டான கதவுகளைப் பார்த்துப் பார்த்து தட்டுகின்ற தீபாவளியே ஏழை வீட்டின் இதயக் கதவுகளை எப்போது போய்த் தட்டப் போகின்றாய்?
12. பூவரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவிஸ்- பாசல் நகரிலிருந்து ஏ.ஜே.ஞானேந்திரன்.
அணைகடந்த வெள்ளம் அரசுக்கு
வெள்ளம் அணையை உடைத்துக்கொண்டு காட்டுமிராண்டித் தனமாகப் பாயத் தலைப்பட முன்பு முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டால் தப்பிப் பிழைத்துக் கொள்ளலாம். செய்தித்தாள்கள் சட்டைப்பொத்தான்கள் என்று பலவற்றை அறிமுகஞ்செய்துவைத்த சீனர்கள் உஷாராகி இருக்கிறார்கள், திபெத்திலிருந்து ஆரம்பிக்கும் YANGTZE ஆறுதான் சீனாவின் முக்கியமான ஆறாகும்.
16 கிமீ நீளமான இதுதான் உலகின் அதிநீளமான 3வது நதி என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது இந்த நதி பெருக்கெடுக்கும் போதெல்லாம் சீன அரசுக்கு எப்பொழுதுமே தலையிடி, பேரழிவை ஏற்படுத்தும் இதனைத் தடுக்க உலகிலேயே மிகப்பெரிய தண்ணீர் சக்திகொண்டு மின் உற்பத்தி செய்ய நிலையம் ஒன்றை எழுப்பும் பணியில் சீனா இறங்கியுள்ளது. THREE GORGES அணைக்கட்டு என்று அழைக்கப்படும் இந்த அணைக்கட்டு 1994ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 19 இல்தான் பணி பூர்த்தியாகும். 18 மீற்றர் உயரமாக அணை இருக்கும். 18 கிாைற் மின்னை உற்பத்திசெய்யமுடியுமாம்.
18.பூவரசு

Page 9
11 மில்லியன் கியூபிக் மீற்றர் மண்ணையும், கற்பாறைகளையும் இதற்காக அகற்றவேண்டியுள்ளதாம்
இந்தச் சிரமமமான பணியை விட இத்திட்டத்தால் பாதிக்கப்படும் 11 மில்லியன் சீனர்களை பத்திரமாக ஒரு இடத்தில் குடியமர்த்துவது தான் தலையிடியான விவகாரம் என்கிறது சீன அரசு ஜனத்தொகை அணைகடந்துவிட்டதால் முளைவிட்ட தலைவேதனை இது.
படிப்பறிவு இல்லாத பாமரர்கள்.
ஐரோப்பிய நாடுகளில் வானொலிச்சேவை வந்துவிட்டபின்பு -அதுவும் ஏட்டிக்குப் போட்டியாக ஒன்றுக்கு மூன்று- நம்மவர்கள் சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டார்கள். அதாவது கண்ணுக்குப் பதவி ஓய்வு கொடுத்துவிட்டு காதிற்கு வேலை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியொரு நிலையில் வாசிக்கவோ எழுதவோ தெரியாதவர்கள் உலகில் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள் என்று ஒரு அணுகுண்டைப் போட்டிருக்கின்றது ஐநா சபை ஐ.நா.சபையின் ஒரு பிரிவான UNICEF இன் அறிக்கையின்படி உலகின் மொத்த ஜனத்தொகையான $3 பில்லியனில் ஆறில் ஒரு பகுதியினர் வாசிக்கவோ எழுதவோ முடியாத அவல நிலையிலிருக்கின்றார்கள் என்று கூறியுள்ளார்கள். உலகின் ஏழைநாடுகளிலுள்ள நான்குபிள்ளைகளில் ଅyଲାf பாடசாலைக்குப் போவதில்லையாம். இதைவிட கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளும் திடீரென வெடிக்கும் உள்நாட்டுக் கலவரங்களும் பாடசாலைக்குச் செல்பவர்களை இடைநிறுத்திவிடக் காரணிகளாகிவிடுகின்றன. சிறுவயதிலேயே ஆயதம் ஏந்திவிடுபவர்களும் இல்லாமல் இல்லை. படிக்காத பெண்கள் நிறையப் பெற்றுத்தள்ள படித்தவர்கள் திட்டமிட்டு அளவோடு பெற்று நிறைவோடு வாழ்வது இன்னொரு காரணம் அப்படியானால் படிக்காத மேதைகள் யார்
மலிவு விலையில் மரண விடுகள்.
மரண வீடுகள் கலந்து கொள்பவர்களை மாள வைக்கின்றன. இப்படி ஒப்பாரி வைக்கின்றது ஒரு ஸாம்பியப் பத்திரிகை, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கின்றன. அதைவிடச் சாவது என்பது மேலும் செலவுகளை அதிகரிக்க வைக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளது ஸாம்பியாவின் ரைம்ஸ் பத்திரிகை.
14. பூவரசு

பொதுவாக ஸம்பியா உட்பட பல ஆபிரிக்க நாடுகளில் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள உறவினர்கள் துர இடங்களில் இருந்து வரும்வரை மரணவீட்டார் காத்திருக்கின்றனர். இத் தாமதம் இவர்களுக்குப் பெரிய ஒரு சுமையைக் கொடுக்கத் தவறுவதில்லை. ஒருவார காலத்திற்கு மேல் பிரேத அடக்கம் நடக்கத் தாமதப்படுத்தப் படுவதால் துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு இருப்பிடமும் உறங்க வசதியும் அளிக்க வேண்டியிருப்பதோடு மூன்று வேளையும் ஆக்கிப்போடவேண்டிய பொறுப்பும் சம்பந்தப் பட்டவர்கள் தலையில் விழுந்துவிடுகின்றது. வந்து நிற்பவர்களுக்கு பணமு ைஇருந்தால் பயணவசதிகள் செய்து பணமும் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தமும் சூழ்ந்துகொள்கின்றது. ஏற்கனவே பணவிடயத்தில் சிரமப்படும் இவர்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகிவிடுகின்றார்கள். பொதுவாக துக்கம் விசாரிக்க வருபவர்களில் பலர் எந்த உதவியும் செய்வதுமில்லை. உடனடியாக உடலைப் புதைக்கச் சட்டம் இயற்றப்படக்கூடாதா என்று கேட்கிறது இந்தப் பத்திரிகை.
மலிந்தால் சந்தைக்கு வரும் என்பார்கள். ஆனால் இங்கேயோ சவ குழிக்குஉடல்) சீக்கிரம் போனால்தான் மலிவு ஏற்படும் போலிருக்கின்றது.
மூடிகளுக்கு தக்கை மூடுவிழா!
வைன் பிரியர்களுக்கு ஐரோப்பாவில் பஞ்சமில்லை. ஆனால் இந்த வைன் போத்தல்கள் தொடக்கம் வேறுபல பானங்களைப் போத்தல்களில் நிரப்பி கற்று உட்புகாவண்ணம் அடைக்க உதவும் தக்கைகளுக்கு (CORK) பஞ்சம் ஏற்பட்டுவிடும் போல் இருக்கின்றது. எண்பது வீதமான தக்கைகளை உற்பத்தி செய்யும் ஒக் (OAK) மரங்கள் ஸ்பெயினிலும் போர்த்துக்கல் நாட்டிலுந்தான் வளர்கின்றன. ஒன்பது வருடங்களுக்கு ஒருமுறை இந்தக் கம்பீரமான நெடுத்து வளர்ந்த மரங்களின் பட்டை உரிக்கப்படுகின்றது. (ORKOAK என்று அழைக்கப்படும் இந்த ஒரேயொரு மரந்தான் பாம்பு தன் சட்டையை உரித்துக்கொள்ள புதியது வளர்வது போல மீண்டும் பட்டையை வளர்த்துக்கொள்ளக்கூடியது. ஆனால் இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் போத்தல் பாவனை (உலோகமூடி) அதிகரித்து வருவதால், இந்த மரங்களெல்லாம் தறித்து வீழ்த்தப்பட்டு வேறு பயிர் செய்யவேண்டிய நிலை வந்துவிடும் என்ற அச்சம் பலரிடையே மேலோங்கி இருக்கின்றது. இந்த மரங்களையே நம்பிவாழும் 4 வீதமான பறவை இனங்களும் அழியும் அபாயம் இருக்கின்றது. இன்று 13 ஜோடிகளே எஞ்சியிருக்கும் ஸ்பானிய நாட்டின் ஒரு கழுகு இனம் இந்த மரத்தின் உச்சியிலேயே கூடு கட்டுகின்றது அழிவு என்று வந்தால் சில சமயங்களில் அது ஒரு தொடர்கதையாகி விடுவது நிஜந்தான்.
15. பூவரசு

Page 10
ஒரு படகின்பாடல்
நேற்றுவரை ஆற்றின் நீரைக் கிழித்தபடி ஏற்றி
இறக்கி இருகரைக்கும்
இம்மனிதர் போக்கு வரத்துப் புரிய உழைத்த, மரக் கீற்றுச் சிறுபடகே, கேட்பார் அற்(று) இன்றங்கே ஏன் கிடந்தாய் மெய்யை எரிக்கும் சுடுமணலில், கூன் விழுந்த யாரோ குடிகாரன் குப்புறப் போய்
தா ங்குகிறான் போலி தர ரத்தே நின் பெருமை எல்லாம் அழித்தே, எழுந்தங்கே ஓர் பெரிய அசுரன்போல் நிற்கிறதே, அந்தப் பெரும் பாலம்
எவர் இங்கே வந்தினிமேல் உண்னைக் கவனிப்பார்? இடையின்றி உனை மொய்த்த இந்தச் சனம் இப்போ
நடைபோடும் பாலத்தால்:
நன்று! எவரேனும் நின்று உனக்காக நெஞ்சுருகக் கண்டாயோ? ஆற்றுப் பெருக்காய் அவிழ்கின்ற நிகழ்வுகளில் அள்ளுண்டு செல்லுமவர்,
16.பூவரசு
N
N
S
 
 

இங்கே பார் எமைச்சுமந்த வள்ளம் இது என்றே உள்ளம் கசிந்தாரோ? ஊற்று வரண்ட உள்ளங்கள், உண்நிலையை கேட்டுருகும் நண்ணுணர்வுக் கிளர்ச்சி இவைக்குண்டோ? ஆற்றுமணலில் அனாதரவாய்
நீ கிடக்க,
ஆறு கலகலத்த அலையெறிந்து செல்கிறத, வேலையிழந்தவனை
விட்டோடும் காதலிப்போல்
ஆரை இனி நோவாய்? ஆறியிரு, ஆனாலும் பாடல் உனக்காக குயிலொன்று பண்ணிசைக்கும் அருகே நெடுமரங்கள் அன்போடு பூச்சொரியும். ஓரம் கிளைத்துள்ள மூங்கில் குனிந்தனக்கு
ஈரநிழல் பரப்பும் போதாவோ இவை உனக்கு?
ஆறியிரு வாழ்க்கை அடைபடுமொ ஓர் நிகழ்வாலி
ஆயிரம்கண் ஊற்றெடுக்கும் ஆற்றுப் படுகையிலே வேர் கொண்ட எண்படகே விழித்தெழுவாய், அங்கேபார் ஓர் மனிதன் தாண்டிலுடன் உனைத்தேடி வருகின்றான்!
தோணி இதைக்கேட்டுத் தண்பம் கலைந்ததுவோ? ஹோ வென்று வாடையதன் உள்மூச்சாய் வீசியெழும் - ஆறு பெருங்கர்வம் கைவிட்டு, அலைமொழியும்.
1. பூவரசு

Page 11
-எழிலன்.
சுவடு பதினேழு,
606. ଖୈ, அவர் அந்த இடத்துக்குப் பகலுணவுக்காக அழைத்தபோது அவன் மறுத்தது அவரைத் தூக்கிவரிப்போட்டது. அவன் மிகத்தெளிவாக விளக்கித் தனது ஆட்சேபணையைச் சொன்னான். "மிஸ்டர் டொனால்ட்! உங்களோடு இருப்பதால் மட்டுமே நுழையக் கூடியதாகவும் சுதந்திரமாக நான் நினைத்த மாத்திரத்தில் எண்ணைக் கறுப்பு நண்பர்களோடு நுழைய முடியாததுமான இடங்களுக்குள் நான் போவது எனது கொள்கைகளுக்கு ஏற்பானதல்லவென்று நினைக்கிறேன்." என்று மிக நிதானமாக அமைதியான தொனியில் பிக்கோ சொன்னான். டொனால்டின் முகம் தொங்கிப்போய்விட்டது. உணர்வேயற்ற முகத்துடன் நின்ற அவரது விழிகள் அவனது விழிகளை ஊடுருவின. பிக்கோவின் மனதுக்குள் ஏதொவொரு உளைச்சல். தான் தன்னை அன்புடன் அதுவும் ஆபத்தையும் பொருட்படுத்தாது அழைக்கும் ஒரு நண்பனை அவமானப்படுத்திவிட்டோமோ என அவனது சிந்தனை படபடவென விரிந்தது.
டொனால்டின் மனதை உணரமுயன்றவனாக அவதானித்தான். அவரது முகம் சோர்வதையும் தனது உண்மையான கருத்தை அவர் உணர்ந்திருப்பதையும் அவன் மனம் அவனுக்கு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். ஏனெனில்.அவன் சட்டெனச் சொன்னான். "ஒகே.லெட்ஸ் கோ" என்றவாறே “அது மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கும்" முறுவலித்தான் அவன். டொனால்ட் மகிழ்ச்சியில் வானத்தில் பறந்தார். அவர் அவனுக்காகத் தாம் விசேஷ அனுமதி பெற்றுக்கொண்ட விஷயத்தைச் சொல்லவில்லை. அதை அவன் தனக்கேற்பட்ட இழுக்காக நினைத்துவிடக்கூடும் என அவர் பயந்தார். ஓர் உண்மையான இலட்சியவாதியின் சுயமரியாதையுணர்வை நன்குணர்ந்த அறிஞரல்லவா!
18.பூவரசு
 

அதே சமயம் தான் ஏற்கனவே டொனால்ட்டுடன் பகலுணவுக்கு ஏற்பாடு செய்திருந்ததை பிக்கோவும் சொல்லவில்லை. ஒருவர் மனதை மற்றவர் நோகவைக்கா பணிபு அவ்விருவர் செயற்பாட்டிலும் மிளிர்ந்து கொண்டிருந்தது.
என்றாலும்.
பிக்கோ தன்னிடத்துக்குள் நுழைந்தபோது.
பிக்கோவின் இடத்தில் நுழைந்ததும் பிக்கோ தான் அன்று டொனால்டுடன் ஜெக்ஸ்பிளேசில் பகலுணவுக்கு நினைத்திருப்பதாகத் தெரிவித்தான் அப்படியே முன்கூட்டியே தெரிவித்தால் சூட்சுமமறிந்து மனம் நோகாதபடிக்கு நடந்துகொள்ளலாம் என அவன் நினைத்தான்.
ஆனால். அவர்களுக்கான உணவைத் தயாரித்த மம்பேலா உரத்துக் கத்தினாள். "அதுவொரு குழப்பமான தீர்மானம். உங்களுக்குப் பைத்தியமா என்ன..? எப்படி நீங்கள் உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள்? இல்லையில்லை நீங்களிருவரும் இங்குதான் உண்ணுகிறீர்கள். அத்தோடே அனைத்தும் ஆயத்தமாக வேறு இருக்கிறது வாருங்கள் குரலில் அன்புகலந்த கடுமையுடன் கூறியவள் சென்று விட்டாள். அவ்வளவுதான் திட்டமே தலைகீழாகிவிட்டது.
பிறகுதான் அவர் பிக்கோ ஏற்கனவே அந்தக் குறிப்பிட்ட உணவகத்துக்குப் போயிருக்கிறான் என்றும் அது வெறும் பொழுதுபோக்கிடமேயன்றி மக்கள் கூடுதற்கேற்ற இடமல்லவென்று அவன் கருதியிருக்கிறான் என்றும் அறிந்தார்.
டொனால்டுக்கு ஏமாற்றம்தான் என்றாலும் அதற்குமேல் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. விருந்துக்கழைத்தவரே விருந்தினராக அமர்ந்துவிட்டார்.
கொள்கைவாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களை அடையாளம் காட்டுவதில் சரியாக இருந்துவரவேண்டும் என்பதை அவனைவிட அவனது உறுப்பினர்கள் எவ்வளவு கவனமாகக் கருத்தில் கொண்டிருக்கின்றார்கள் என்றுமட்டும் உணர்ந்ததோடு தமது தீரமிகு திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார். ஒரு நல்ல மனிதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவனது நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே கேள்விஞானத்தோடே பிழையாக மதிப்பிட்டுவிடுபவர்களே எல்லாச் சமுதாயங்களிலும் பெரும் பான்மையினராக இருக்கின்றார்கள்.
19.பூவரசு

Page 12
அதனால்தான் பல இடங்களிலும் மக்களின் வழிநடத்தல்களில் தவறான அணுகு முறைகளைப் பிழையான சிந்தனையுள்ள மனிதர்கள் பின்பற்ற வைத்துவிடுகின்றார்கள். இவர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொள்வதில் பலரும் தவறாகவே நடந்துகொள்கிறார்கள். ஆகவே சரியான மனிதர்களைப் பிழையாகக்காட்டிச் சந்தர்ப்பவாதிகள் தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து நிற்கும் மக்களுக்கு அநியாயமாக நல்லமனிதர்களைப் புரிந்துகொள்ளாமல் தப்பபிப்பிராயம் பரவுவது பெரும் வேதனையையும் கவலையையும் அளிக்கின்றது. எல்லாச் சமூகத்திலும் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையிலான வேற்றுமையைச் சரியாக உணர்ந்துகொள்ளும் திறமை மக்கள்மத்தியில் மிகக்குறைவாக இருப்பது கண்கூடு.
இந்த அனுபவத்தில் நம்மில் பலருக்கும்கூட அறிமுகமிருக்கும். அதுபோலவே திரு.டொனால்டும் அவரது மனைவியும் இன்னும் மிகச் சில வெள்ளைசமூகத்தினரும் பிக்கோவின் விடயத்தில் அனுபவப்பட்டிருந்தார்கள்.
பிக்கோ தனது வேறுபாடுகளைக் கொள்கைகளுடன்மட்டுமே வைத்துக் கொண்டவன் என்பதும் தனிநபர்கள்மேல் எந்தவிதத்திலும் அதைப் பயன் படுத்தியவனல்ல என்பதும் பலவெள்ளையர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
தமது சொந்த அடையாளத்தை மறுத்து அல்லது மறைத்து நிற்கும் கோழைத்தனத்தை சாடிய அவன் தனது மக்களைத் தமது பெருமையைப் பிரதிபலிப்பவர்களாக எடுத்த முயற்சி பொதுவான கண்ணோட்டத்தில் வெள்ளையின மக்களுக்கெதிராகத் தூண்டிவிடப்பட்ட ഴ്ച്ഖേ உணர்வாகவே கணிக்கப்பட்டதைப் பிழையென அவனுடன் நெருங்கிப் பழகக் கிடைத்த வெள்ளையர்கள் உணர்ந்து மனம் கொதித்தார்கள்.
மிகத் தெளிவாகத் தன் கருத்துக்களை விளக்கும் அவனது ஆற்றல் சிறுவயது முதலே அவனிடம் வளர்ந்திருந்தது. தன்னைக் கைது செய்தவர்களையும் விசாரணை என்றபெயரில் சித்திரவதை செய்தவர்களையும்கூட அவன் இழிவாகப் பேச்சுக்களில் குறிப்பிடாததும் அவர்களைப்பற்றிக் கெளரவக்குறைவாக எதையும் கூறாது நின்றதும்
பிக்கோவின் உயர்குணத்தைப்பற்றிய நல்லபிப்பிராயத்தை வளர்த்திருந்தன. அவன் அவர்களைப் பற்றியுங்கூட ஒருவித பாசவுணர்வோடேயே தன் பேச்சுக்களில் குறிப்பிட்ட அனுபவங்களைப் பெற்ற அந்த வெள்ளையின அன்பர்கள பலரும் அவனை மிகவுயர்ந்த அறிஞனாகவும் சாத்வீகனாகவும் கண்டு போற்றியமையைச் சரித்திரம் பதிந்து வைத்திருக்கின்றது.
20.பூவரசு

உலகின் மிகப் பெரிய பெரிய தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் அரசுத் தலைவர்களையும் பேட்டிகண்ட அனுபவமிக்க டொனால்டே தாம் பிக்கோவைப்போன்ற உயர்ந்தவனை அவர்களில் காணமுடியவில்லை என்று குறிப்பிடுகின்றார் என்றால் அந்த அரிய வீரனின் தனித்துவத்தை மேலும் விளக்க அவசிமில்லை.
ஒரு சமயம் பிக்கோ நூற்றியொரு நாட்கள் விசாரணைக்காகச் சிறையிலடைக்கப்பட்டு விடுதலையாகி வந்தபோது நண்பர்கள்பலரும் அவனுக்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். டொனால்டும் அவர்மனைவியும் சம்பைன் போத்தல்களுடன் கலந்து கொண்டார்கள்.
நடு இரவில் பிக்கோ வெளியேறினான். அவன் திரும்பிவருகையில் அவனுடன் அவனுடைய நெருங்கிய நண்பனொருவனும் வந்தான். அந்த நண்பன் ஒரு நாளைக்கு முன்னம்தான் நடமாடத் தடைவிதிக்கப்பட்டு வீட்டுத்தடையில் இருந்தவன். அவனை சந்திப்பதோ அவன் பிறரைச் சந்திப்பதோ மிகமிகப் பாரதூரமான தண்டனைக்குரிய குற்றம். அப்படியிருக்க பிக்கோ அவனை எப்படியோ அரசகாவலுக்கும் தெரியாமல் அழைத்து வந்திருந்தமை முதலில் மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்று நின்றனர். டொனால்டுக்கும் அவர்மனைவிக்கும் அவனது செயல் குற்றமாகப் படவில்லை. ஒரு சாதனையாகவே பட்டது. என்றாலும் அவனிடம் எப்படி அவன் அதைச் சாதித்தான் என்று வினவினார்கள். அதற்கு அவன் சொன்ன பதில் - 'இது எங்களின் தேசம். இங்கே நாங்கள் எங்கும் போவோம். வருவோம். ஆம். தனது தேசத்தின்மீது தீராத அன்புடைய மனிதனின் சுதந்திரவுணர்வின் சுதந்திரமான கருத்து இப்படித்தான் இருக்கும் இருக்க முடியும் என்ற உண்மை அவனது சொற்களில் மிதந்துகொண்டிருந்தன. இன்னொரு சமயம் தனது வழக்கு சம்பந்தமாக ஜோகன்னஸ்பார்க் நோக்கி பிக்கோ பயணஞ்செய்யவிருந்தது. அதற்குரிய அனுமதியுடன் அவன் தனது காரில் தன்னந்தனியனாகப் பயணித்துக்கொண்டிருந்தான். தனிமைப்பயணம் பெரும் போரடித்துக் கொண்டிருந்தபடியினால் வழியில் இரு வெள்ளை இளைஞர்களுக்குத் தன்னுடன்போக இடமளித்து ஏற்றிக கொண்டான்.
21. பூவரசு

Page 13
அந்த இளைஞர்களிருவரும் ஆங்கிலத்திலே பேசினாலும் அவர்களது உச்சரிப்பு வழக்கில் ஆப்பிரிக்கான் மொழியசைவை அவதானித்த பிக்கோ அவர்களிடம் தாய்மொழி ஆப்பிரிக்கான் மொழியா என வினவினான். தயங்கிய இருவரும் தாங்கள் ஆங்கிலேயரே என விடைகூறினார்கள். ஆனால் அது பொய்யென்று பிக்கோவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் கூறினான்"அடடா! நீங்கள் ஆப்பரிக்கான இளைஞர்கள் என்றல்லவா நம்பினேன். எனக்கும் கொஞ்சம் ஆப்பிரிக்கான மொழியில் பேசவேண்டும் போல இருந்தது. பரவாயில்லை. ஆங்கிலத்திலேயே பேசுவோம்" பிறகு தொடர்ந்து ஆங்கிலத்திலேயே மடமடவென்று பேசத்தொடங்கினான் அவனது மொழியறிவுக்கு ஈடுகொடுத்துப் பேசமுடியாமல் தடுமாறிய அந்த இளைஞர்களைக் கடைசியில் பிக்கோ பார்த்துக்கேட்டான். "நீங்கள் உண்மையில் ஆப்பிரிக்கான் இளைஞர்கள்தானே?” தயங்கித் தயங்கி அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். "அப்படியானால் ஏன் மறுத்துரைத்தீர்கள்?”
அவர்கள் கறுப்பினத்தவர்கள் ஆப்பரிக்கானரை விரும்புவதில்லை என்பதாலேயே தாம் அப்படிச் சொன்னதாக ஒரு நீண்ட பிரசங்கமே வைத்துவிட்டான் பிக்கோ. எவரும் தமது சொந்த அடையாளத்தைச் சொல்லிக் கொள்ள எப்போதுமே தயங்கக்கூடாது என்றும் எந்த சூழ்நிலையிலும் காலகட்டத்திலும் சுயமொழி இனம் கலாச்சாரத்தை மறுக்கவே கூடாது எனவும் புரியவைத்த பிக்கோவுடன் முழுக்க முழுக்க ஆப்பரிக்கான மொழியிலேயே கதைத்துத் தம் பயணத்தை முடித்த அந்த இளைஞர்களும் அவரவர் தனித்துவத்தை மதித்து உயர்த்திவாழும் முக்கியத்துவத்தை உணர்ந்து பெருமதிப்பு வைத்தவர்களால் தமது இல்லங்களுக்குத் திரும்பினார்கள். நீதிக்கான அவனது பயணம் தொடர்ந்தது.
(தொடரும்)
வாழ்க்கையை நேசிப்பவரா நீங்கள். அப்படியானாலி நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனிறால் வாழ்க்கை நேரத்தால் ஆனது -சுவாமி விவேகானந்தர்.
22.பூவரசு

sაM6016იზი:
மழைபெய்யும் நேரம் வானத்தின் ஒரம் வண்ணவில் ஒன்று வளர்ந்திருக்கு பழகிய நிறங்கள் எழுவகை இணைந்து பரவசம் ஊட்டும் அதிசயம்பார்
மங்கல் கறுப்பு நீலம் பச்சை மஞ்சள் தோடை சிவப் பேமும் எங்கணும் அடுக்கு வரிசையில் வளைந்தே இந்திர வில்போல் எழுதல் பார்!
சூரியனுக்கு நேர் எதிராக தோன்றிச் சுடரும் அரைவட்டப் பாரிய மாலை எனது கழுத்தில் பரிசாய்த் தொங்கப் போகிறதோ?
நெஞ்சினைக் கவரும் வானவில் அழகு நீர்த்திரை மகனைக் கதிரவனார் கொஞ்சிடும் அழகு கொடைவள இயற்கைக் கோலங்கள் எல்லாம் குதுாகலமே!
-மதுரகவி விகந்தவனம்.

Page 14
எங்கள் இளந்தளிர்கள்
நாம் இப்போது @lá நூற்றாண்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம். இன்றைய காலகட்டம் விஞ்ஞான யுகமாகவே இருக்கின்றது. நாம் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அந்தந்த நாடுகளில் உயர்கல்விவரை கற்றிருப்பது மிகமிக அவசியம். இங்கு வெளிநாடுகளில் பலர் உயர்கல்விவரை படித்துமுடித்துவர குறைந்தது 4-5 வருடங்களாவது செல்லும் என நினைத்து தம் பிள்ளைகளை சாதாரண கல்வியோடு நிறுத்தி வேலைக்கு அனுப்புகின்றார்கள். அதனால் படிப்புக்கேற்ற வேலை இன்மையால் இன்னொருவனுக்குக் கீழே அடிமைகளாக உழைக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எந்த ஒரு நாட்டை எடுத்துக்கொண்டாலும் அந்த மக்கள் தம் பிள்ளைகளை உயர்கல்விவரை படிப்பிப்பார்கள்.எந்த ஒரு தொழிலைப்பார்த்தாலும் அதாவது வர்த்தக ஸ்தாபனங்களையோ, வைத்தியசாலைகளையோ எடுத்துக் கொண்டால் அங்கு கதிரையில் அமர்ந்து கம்பியூட்டர்மூலம் தொழில் புரிபவர்கள் கூடுதலாக அந்த நாட்டு மக்களாகத்தான் காணப்படுவார்கள். இதற்குக் காரணம் என்ன? இந்த நாட்டவர் உயர்கல்விவரை கற்று அதற்கேற்ற நல்ல தொழிலைப் புரிகின்றார்கள். நாம் பாதியிலேயே படிப்பை நிறுத்தி அதனால் சுத்தம் செய்வதற்கும், தூசிதட்டுவதற்கும், சமைப்பதற்குமாக தொழில்களைப் புரிகின்றோம். சிலவேளைகளில் இலைமறை காய்மறைகளாக கதிரையில் அமர்ந்து தொழில் புரியும் ஓரிரு தமிழரையும் காணக்கூடியதாக உள்ளது. கூடுதலான தமிழர்கள் தாங்கள் வெளிநாட்டுக்கு வந்த 6COrth கொடுப்பதற்காகவும், அக்காவின் சீதனப் பணம் கொடுப்பதற்காகவும், அடைவு வைத்த நகையை மீட்டு எடுப்பதற்காகவும் சிறுவயதிலேயே படிப்பை நிறுத்தி கூட்டுவதற்கும் பெருக்குவதற்கும் கழுவுவதற்குமாக கூலிக்கு உழைக்கின்றார்கள்.
எமது தாயகத்தில்தான் போரினால் உயர் கல்வியைத் தொடரமுடியாமல் எம் சகோதர சகோதரிகள் கஸ்டப்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் அங்கு உயர்கல்வியில் உயர்ந்துதான் நிற்கின்றார்கள் அதேபோல் வெளிநாடுகளில் வாழும் நாமும் உயர்கல்வி கற்றிருப்பது ජෙඛJöft| ||h. இன்றைய காலகட்டத்தில் எல்லாமே கணணியில்(Computer)தான் இயங்குகின்றது.
24.பூவரசு

எங்கள் இளந்தளிர்கள்
ஒரு இலக்கத்தை அழுத்தியவுடன் ஒருவரின் விபரங்கள் முழுவதும் தொலைக் காட்சியில் வரும். நாம் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு எமக்கு கணணி பெரும்பங்கு உதவிசெய்கின்றது. நாம் உயர் கல்வியைக் கற்பதனால் எமது வாழ்வு சிறப்படையுமே தவிர ஒருபோதும் தீமையடையாது. எமது தமிழீழத்தை எடுத்துக்கொண்டால் தடுக்கிவிழுந்தால்கூட ஒரு மருத்துவரின் அல்லது ஒரு பொறியியலாளரின் வீட்டின் எதிரேதான் விழவேண்டும் என்று கூறுவது வழக்கம். நாம் இங்கு வெளிநாடுகளில் தொழிற்கல்வி மூலம் எவ்வளவோ தொழில்களை கற்றுக் கொள்ளலாம். நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் கொண்டு சென்று, எம் தமிழீழ மண்ணில் கொட்டத் தயார் நிலையில் இருக்கவேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழீழ மாணவர்கள் அனைவரும் நாளை எமது நாட்டில் பொறியியலாளராக, மருத்துவராக, விஞ்ஞானத்துறை நிபுணராக, கலைத் துறைப் பட்டதாரியாக சட்டத்தரணியாக விவசாயத்துறை விற்பனராக எம்மண்ணில் கடமையாற்ற வேண்டும். ஆகவே மாணவர்களாகிய நாங்கள் a figbi (Je. I வகுப்புக்களோடு நின்றுவிடாமல் உயர்கல்வியின் பெருமைதனை உணர்ந்து உயர்கல்வியைத் தொடரவேண்டும். உயர்கல்வியைக் கற்றால்மட்டும் போதாது. வள்ளுவர் சொன்ன வாக்கிற்கு இணங்க கற்கக் கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத்தக என கடமையாற்ற வேண்டும்.
- ஆனந்த் குலதாசன்.
அடுத்த இதழில்.
பூவரசு எட்டாவது ஆண்டு நிைைறவையொட்டி எங்கள் இளந்தளிர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற கட்டுரைகள் வெளியாகின்றன.
25. பூவரசு

Page 15
ド*さ
o.门~ZZT·...o ( - )飞•*、、、?.*2á ! \ .|- 詹職| 1~~~~ .. !
d
; i , | | | :
《 * ș
% £ € ©ự \,
oo ~
quos puse@goss qi@swgs økoosnokoroșakovi (surtons##ơi „șeș@un ņtırış giocogno poș@ssy-ızış się07Inn-IĠ psựsph
 
 
 
 

அருவி அருவி அருவி அழகு கொஞ்சும் அருவி
மலையை அதுவும் மருவி மருந்துச் செடியை உருவி
மணத்தை அதுவும் துருவி
Α \ மண்ணில் பாயும் அருவி /ނިމެެނެzخبا
~് - எண்ணிப் பாரு தம்பி இனிய வெள்ளிக் கம்பி 、ミ வெயிலில் காயப் போடும் வெள்ளைச் சேலை அருவி
அம்மாபோல நீரை அள்ளி அள்ளிக் கொட்டும்
அடம் பிடித்தால் தலையில் அப்பா வைப்போல் குட்டும்
மண்ணில் வீழ்ந்த பின்னர் வயலில் பயிரை வளர்க்கும்
கண்ணே நீயும் அருவி காட்டும் வழியில் செல்வாய்,
சென்று நீயும் தொண்டு ށިޒައިT செய்யும் கருவி யாகு
சின்னக் குருவி போல ހރަރި~ s சிட்டுக் குருவி போல
சிரிக்கும் அருவி போல
சிரிக்கப் பழகு தம்பி முனைவர் தமிழப்பன்
(சென்னை, தமிழ்நாடு)

Page 16
-மகேஸ்வரி வரதராஜா
சில்லுக் கோடு கீறி தெருவில் விளையாடிய காலம் சுட்டெரிக்கும் வெய்யில்கூட சுகமாக இருந்தது ஈரைந்துவயதெனக்கு அப்பொழுது பள்ளிவிட்டு வீடுவந்தால்
பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் கெந்திப்பிடித்தல் கிட்டியடித்தல் மாங்கொட்டை எத்தல்
28. பூவரசு
இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள் நேரம் போவது தெரியாது அம்மாவின் கூச்சல் படலையடியில் அடிக்கடி கேட்கும் மஞ்சு மஞ்சு என்று கத்தியே அம்மா களைத்துவிடுவாள் அப்பா வேலைமுடிந்து வீடுதிரும்பும் நேரம்பார்த்து அமைதியாகச் சென்று முகம்கழுவி திருநீறு தரித்து அவரின் கண்ணில்படும்படி பாடப்புத்தகங்களை எடுத்து பக்கம்பக்கமாக புரட்டி உரத்துப் படிப்பேன் கடைக்குட்டியான எனக்கு வீட்டில் செல்லம் அதிகம் பெண்பிள்ளையானாலும் அரைக்காற்சட்டையுடன் திரிவதில் அலாதிப் பிரியம் எனக்கு இதனால் தங்கச்சி என்று கூப்பிடுவதற்குப் பதிலாக டேய்.தம்பி என்றே கூப்பிடுவர் என்னை எங்கள் வீட்டுக்கு எதிரில் மாமாவின் சிறிய பெட்டிக்கடை இனிப்புத் தின்பண்டங்களுடன் சில சில்லறைச் சாமான்களையும் வைத்து வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தினார் மாமா
பெரிய கடை இல்லையென்றாலும் அக்கம் பக்கத்தவர்கள் அவசரத் தேவைகளுக்காக அவரின் கடையை நாடுவர் மத்தியான நேரத்தில் குட்டி நித்திரைபோடாவிட்டால் தலையே வெடித்துவிடும் அவருக்கு கடைக்கு முன்னால் நின்ற
மாமர நிழலில்
 

சாக்குக்கட்டிலில் சரிவது அவரது வழக்கம். அந்நேரங்களில் கடையைப் பார்த்துக்கொள்வதற்காக மாமா என்னிடம்தான் கூறுவார் மதிய வெய்யில் ஒருவர் இருவர் கடைக்குவருவர் மஞ்சு நான் சிறிது தலை சாய்க்கிறேன் கடையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள் என்று அதட்டலாகக்கூறுவார். எனது தோழிகளுடன் விளையாட முடியாத கவலை ஒரு புறம் மறுபுறம் மாமாவுக்குத் தெரியாமல் போத்தல்களில் இருக்கும் இனிப்புப் பண்டங்களை ஒருகை பார்க்கலாம் என்ற ஆனந்தம் மாமா சாக்குக்கட்டிலில் சாய்ந்த சில நிமிடங்களில் குறட்டை இழுக்கத் தொடங்கிவிடுவார் அதன் பிறகு கடையில் எனது ஆட்சிதான் ஒவ்வொரு போத்தலாகத் திறந்து இனிப்புப் பண்டங்களை சுவை பார்ப்பேன் தினம் இதுதான் வாடிக்கை அன்றும் அதேபோல் சாக்லேட்டுக்களை எடுத்து வாயில் போடவும் மாமரத்தில் அமர்ந்திருந்த காகம் ஒன்று மாமாமேல் எச்சமிட மாமா திடுக்குற்று எழவும் சரியாக இருந்தது நித்திரை கலைந்த எரிச்சலில் மாமா காகத்தைத்
29. பூவரசு
திட்டிக்கொண்டு எழுகையில் கண்ணெதிரே வாய்நிறைய சாக்லேட்டுடன் விழிபிதுங்க நான் நின்றேன் நித்திரை கலைந்த கோபம் எனது திருட்டுத்தனம் எல்லாம் சேர்ந்து மாமாவை உருத்திரமூர்த்தியாக்கியது கண்களில் கோபக்கனல் தெறிக்க பாய்ந்துவந்த அவர் என் முதுகில் நாலுசாத்துச் சாத்த வாயில் கரைந்தும் கரையாமலும் இருந்த சாக்லேட் என் சட்டையில் வழிய வீறிட்டு அலறினேன் திருட்டுக்கழுதை என்ன பழக்கம் பழகுகிறாய்? என்று கத்தினர் அவருடைய கஷ்டம் அவருக்கு அந்தப் பெட்டிக்கடையில் வரும் வருமானம்தான் அவருக்கும் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி இரண்டு பிள்ளைகள் ஆக நான்கு சீவன்களின் அன்றாட சீவியம்
அடுத்த நாள் பாடசாலை முடிந்து வந்து மாமாவின் கடைப்பக்கம் போகவில்லை. முதல்நாள் மாமாவிடம் அடிவாங்கிய கோபம் எனக்கு அயல்வீட்டுத் தோழியருடன் சில்லுவண்டி ஒட்டி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தேன் மஞ்சு மஞ்சு என்று யாரோ கூப்பிடுவது கேட்டது மாமாவின் குரல்போல் இருக்கிறதே என்று பயத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்

Page 17
மாமாவேதான் மஞ்சு கடையைக் கொஞ்சம் பார்த்துக் கொள் நான் இந்தச் சாக்குக் கட்டிலில் கொஞ்சம் சாய்ந்திருக்கிறேன் என்றார் முதல்நாள் நடந்தவற்றை முற்றாக மறந்தவர்போல் காணப்பட்டார் நானும் சரியென்று கூறி கடையில் சென்றமர்ந்தேன் எனக்கு முன்னால் கண்ணாடி போத்தல்களில் இனிப்புப் பண்டங்களும் சாக்லெட்டுக்களும் வாயில் நீர் ஊறியது. என்னையறியாமல் போத்தல் மூடியைத்திறப்பதற்காய் என்கை நீண்டது (pgsfibirsst LDMLDst முதுகில் சாத்தியது இன்னும் எரிச்சலாக இருந்தது சட்டென்று கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டேன் இந்த மாமாவுக்கு சாக்லெட்டை எடுத்தால்தானே தெரியும் எனவே மேசை லாச்சியில் இருந்த சில்லறைக் காசில் இரண்டு ரூபாயை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டேன்.
அடுத்த நாள் பாடசாலை இடைவேளையின்போது இனிப்பும் சாக்லேட்டும்வாங்கி எனது தோழியருக்கும் கொடுத்து உண்டு மகிழ்ந்தேன் சாக்லெட் உருசி என்னைத் தினமும் மாமாவின் கடையில்
30.பூவரசு
அவருக்குத் தெரியாமல் பணத்தைத் திருட வைத்தது. இது சரியா பிழையா என்று அப்பொழுது எனக்குத் தெரியவில்லை இப்படியே பலநாட்கள் தொடர்ந்தன அன்று பாடசாலை உதவிப்பணம் கட்டும்நாள் முதல்நாள் ஆசிரியர் கூறியபடி வீட்டில் அப்பாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு வந்தேன் ஆசிரியரும் பணம்கொண்டுவந்த பிள்ளைகள் கையை உயர்த்துங்கள் என்றார் முதல் ஆளாகக் கையை உயர்த்தினேன் ஆசரியரும் ஒவ்வொருவரிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வந்தார் இடைநடுவில் இடைவேளைக்கான மணியொலி கேட்டது. ஆசிரியரும் மிகுதிப்பிள்ளைகளிடம் அடுத்த பாடத்திற்கு வரும்பொழுது வாங்குகிறேன் என்று கூறிச் சென்றார். இடைவேளைக்கு வெளியில் சென்றேன் வழமைபோல் என்னைச் சூழ நின்ற தோழியருக்கு இனிப்புப் பண்டம் வாங்கிக் கொடுத்து
நானும் சுவைத்தேன் பின்னர்தான் உணர்ந்தேன் ஆசிரியரிடம் கொடுக்கவேண்டிய பணத்திற்கும் சேர்த்துத்தான் சாக்லேட் வாங்கினேன் என்பது. மனம் திக்கென்றது என்றாலும் இன்று கேட்கமாட்டார் நாளை

கொண்டுவந்து கொடுத்திடலாம் என்று என்னுள் குருட்டுத்தைரியம் மீண்டும் வகுப்பு தொடங்கியது எனது துரதிர்ஷ்டம் ஆசிரியர் மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு என்னருகில்வந்தார். நான் தலையைக்கவிழ்ந்தபடி அமர்ந்திருந்தேன் என்ன மஞ்சுளா பணம் எங்கே? அப்பொழுது பணம் கொண்டு வந்திருப்பதாகக் கையை உயர்த்தினாயே என்றார் எழுந்து நின்ற எனக்குக் கால்கள் வெலவெலத்தன பேசாதிருப்பதை கண்ட ஆசிரியர் சற்றே கோபம் மேலிட பணம் எங்கே என்று சற்று அதட்டலாகக் கேட்க கண்களில் நீர்முட்ட நின்றேன் அதேவேளை தினமும்எண்ணிடம் சாக்லெட் வாங்கிச் சுவைத்த என் தோழியர் டீச்சர் இவ இன்றைக்கு நிறையச் சாக்லேட்வாங்கி எல்லாருக்கும் கொடுத்தா என்று கோரசாகக் கூறினர் இவ ஒவ்வொரு நாளும் எங்களுக்கு நிறைய சாக்லேட் வாங்கித்தருவா என்று மேலும் ஒரு மாணவி கூறினாள் ஆசிரியரின் மூளையில் ஏதோ நெருட, உனக்குத்தினமும் யார் பணம் கொடுப்பது என்று வெருட்ட பொய்சொல்லத் தெரியாத நான் உண்மையை ஒப்புக்கொண்டேன் தினமும் மாமாவின் கடையில் அவருக்குத் தெரியாமல் பணம்
31.பூவரசு
எடுத்து வருவதைக் கூறினேன் உடனே உயர்வகுப்பில் படிக்கும் எனது மூத்த சகோதரியை வரும்படி தகவல் பறந்தது. அக்காவும் உடன் வந்தார் இப்படியா கவனம் இல்லாமல் ஒரு பிள்ளையை வளர்ப்பது உமது பெற்றோர் எதிலும் கவனம் செலுத்துவது இல்லையா இத்தனை நாட்களாக இந்தப் பிள்ளை இப்படியொரு தவறை செய்திருக்கிறது நீங்களெல்லாம் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று எரிமலையாக வெடித்தார். அக்காவின் முகம் இரத்தச் சிவப்பாகியது. பாடசாலை மாணவத் தலைவியான அவ அவமானத்தால் துவண்டுபோனா அக்காவின் முகத்தைப் பார்த்தேன் கண்கள் இரண்டும் கோவைப் பழங்களாக வீட்டுக்கு வா உன்னை ஒரு வழி பண்ணுகிறேன் என்பது போலிருந்தது பாடசாலை முடியும் நேரம் மணியடித்ததுதான் தாமதம் அக்கா வரும்வரை தாமதிக்கவில்லை வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக வீடுநோக்கிப் பறந்தேன் படலையை மெதுவாகத்திறந்து அம்மாவுக்கும்தெரியாமல் சுவாமியறையில் நுழைந்தேன் கடவுளே என்னைக் காப்பாற்று என்று என் மனம் கூறியது சுவரில் மாட்டியிருந்த சுவாமிப்படங்களுக்கு கீழாக கதவு போடப்படாத அலுமிாரியிருந்தது

Page 18
அதுவே அப்போது எனக்கு அபயமளித்தது. பாடசாலை சீருடையையும் மாற்றாது
பக்கத்தில் கிடந்த சாக்கொன்றை எடுத்து என்னை மூடிக்கொண்டு அந்த அலுமாரி கீழ்தட்டில் படுத்துவிட்டேன் வெளியில் சத்தம் கேட்காதவாறு விக்கி விக்கி வெகுநேரம் அழுதேன் எவ்வளவு நேரம் அப்படி அழுதேனோ தெரியாது என்னையறியாது உறங்கிவிட்டேன் நேரம் செல்லச் செல்ல என்னைக் காணாது வீடு அல்லோல கல்லோலமாகியது அப்பாவும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிவிட்டார். எனது அம்மாவின் கூக்குரல் அப் பிரதேசத்தையே அதிரவைத்தது எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக என்னைத் தேடிப் பறந்தனர் அழுதழுது ஆற்றாத என் அம்மா சுவாமியறையில்வந்து தாயே துர்க்கையம்மா என் மகளை என்னிடம் சேர்ப்பித்து விடு என்று சுவரில் தலையை மோதியவாறு கண்ணிர் வடித்தார் அப்பொழுது எனது மெல்லிய முனங்கல் ஒலி கேட்க அம்மா ஓடி வந்து அலுமாரியின்கீழ் இருந்த சாக்கை நீக்கிவிட்டு பார்த்தபொழுது உடம்பே அனலாய்க் கொதிக்க முனங்கல் ஒலியுடன் மயக்க நிலையில்
32.பூவரசு
இருந்த என்னைப் பார்த்ததும் ஐயோ மஞ்சு என்று வாரி என்னை மார்போடு அணைத்துக் கொண்டார் எனக்கு ஜூரம் 105 டிகிரியைத் தாண்டியிருந்தது உடனே வைத்தியர் வரவழைக்கப்பட்டு எனது ஜூரத்துக்கு வைத்தியம் பார்க்க இரண்டு மூன்று தினங்களில் பழைய நிலைக்கு வந்துவிட்டேன் வீட்டில் ஒருவருமே என்னிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்கவில்லை எங்கள் வீட்டு துர்க்கையம்மாதான் என்னை அடியிலிருந்து காப்பாற்றினார் என் தவறும் அன்றே எனக்குப் புரிந்தது
இப்பொழுது நான் புடம்போட்ட மஞ்சு பழையபடி எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக மாமா குட்டி நித்திரை போடும்போது அவரது கடைக்கு முதலாளியாகவும்இருந்தேன் அதன் பின்னர் சாக்லேட் என்றாலே எனக்குப் பாகற்காய்தான்!

-அ.வேணுகோபாலன்
இளைய தலைமுறையே எழுந்துவாசொல்கின்றேன் பழமைமிகு தமிழ்க்குலத்தின் வரலாற்றை அறிவாயோ இளமையிலே இவற்றை நீ முழுமையாய்ப் புரிந்துகொண்டால் வளமைமிகு புதுயுகத்தை வரையறுக்கப் புரிந்துகொள்வாய்
செந்தமிழும் வளம் கொழிக்கும் வயல்வெளியும் தெங்குபனையும் தேன்சொரியும் வாழைபலா மாவும் அங்கமெலாம் நோயகற்றும் அருமருந்து மூலிகையும் எங்கும் நிறைந்து வளம் கொழிக்கும் தேசமெங்கள் தேசம் பலநூறு ஆண்டுகளாய் டாராண்ட மன்னர்களால் வரலாறு பல கண்ட மக்கள் வாழ்ந்த தேசம் சிவபூமி என்கின்ற சிறப்புப் பெயர் இராவணனால் வசமாக இசைவளர்த்து வான்புகழ்கொண்டதேசம் அந்நியரை எதிர்கொண்டு அடங்களப் பற்றுடனே வண்ணிமன்னன் சங்கிலியன் வளமோடு ஆண்டதேசம் பாழிசைத்துப் பெருமையுடன் யாழ்ப்பாணம் எனக்கூறும் ஏழிசையால் புகழ்மாலை ஏற்றிருந்த தெசம் இளைய தலைமுறையே எழுந்து வா சொல்கினறேன்
வஞ்சகரின் சூழ்ச்சிகளால் வலைவிரித்த புல்லர்களால் நெஞ்சுரம் கொண்ட தமிழனை நேரெதிர்க்க முடியாமல் கொஞ்சங் கொஞ்சமாய் கூடி நின்று குழிபறித்து வஞ்சகமாய் பொறிகளுக்குள் வலுவிழக்கச் செய்தார்கள் கூடியிருந்தவரால் குழிபறித்த கொடியவரால் தமிழன் பேடியாகிப் பிறர்வலைக்குள் பிடிபட்டுப் போனான் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் இண்னொருவன் கையில் எங்கள் உரிமையும் எங்கள் சுதந்திரமும் இழந்த நிலையாச்சு இளைய தலைமுறையே எழுந்துவா சொல்கின்றேன்
ஆண்டிருந்த எங்களினம் அடிமை விலங்குகளுக்குள் மாண்டழிந்து துடிக்கின்ற வரலாற்றை எண்ணிப்பார் அடக்குமுறைகளாலும் ஆதிக்கத் தடைகளாலும் குடிக்கக் கஞ்சியின்றி கூழுக்குமலைகின்றார் கல்வி பொருளாதார அரசியலுரிமையெல்லாம் இனி
88. பூவரசு

Page 19
இல்லையென்ற முடிவாகி இருட்டறை வாழ்வுக்குள்ளே.
சொல்லிமுடியுமா இந்தச் சோக வரலாற்றை கல்விகொள்ளச் சென்ற பள்ளிச்சிறுவர்கள் ஷெல்களினால் சிதறி சிதைந்து மடிந்தார்கள் கோயில் தேவாலயங்களை குண்டு போட்டழித்தார்கள் பாலியல் வன்முறைபால் பருவமழிந்த கன்னியர்கள் கொல்லப்பட்டு கொடியவரால் புதைகுழியில் மடிந்தார்கள் சிறிலங்கா இனவாதப் பாசிசக் கொடுமைகளால் இன்னமும் எத்தனைபேர் எங்கெயெண் றறியாமல்
பட்டமரமாகிப் பாசமிழந்த பறவைக் கூட்டங்களாய் நட்டமரமாகி நாடிழந்து அகதிகளாய் இன்று மண்ணை விட்டிழந்து உலகமெலாம் வீதிகளில் அலைகின்ற துயர நிலையறிந்தால் தூக்கம் வருமா சொல்லு. எம்மண்ணிலே புதைக்கப்பட்டது உயிரற்ற உடல்களல்ல தமிழீழ மக்களின் உரிமைகளும்தான் அறிவாய்.
உன்னைப் பெற்றவர்கள் உளம் மகிழ்ந்திருந்த மண்ணில் தண்ணீர் பருகிடவும் சுதந்திரமற்றுப் போச்சு சொந்தமண்ணிலே சுதந்திரமாய் வாழ முடியவில்லை காடு வணங்களெல்லாம் கால்கடுக்க அலைகின்றார் இல்லாமையாக்கி இயலாமைப்படுத்தி அவர்களை பொல்லாச் சிறைகளுக்குள் கொல்லும் அரக்கர்கள் ஷெல்களும் குண்டுகளும் சீரழித்த நிலக் குழியில் சிதைந்தழிந்த தமிழர்களின் செங்குருதி வழிபலாச்சு வதைபட்டழியவோ தமிழன் பிறந்தான் மண்ணின் வருங்கால வாழ்வுதேடும் தலைமுறையே நீயே சொல்,
உன்னோடு பிறந்தவர்கள் உறவினர்கள் அழிந்துபோக இந்நாடே சொந்தமென்று இருப்பாயோ வாய்மூடி நள்ளிரவோ சாமத்திலோ நம்மவர்கள் வாழ்ந்ததேசம் ஷெல்லாலும் குண்டுகளாலும் தீப்பற்றி எரிகிறதே. முகவரி அற்றவராய் முகமூடிப் போலிவாழ்வில் அகமகிழ்ந்து இம்மண்ணில் அகதியாய் இருப்பாயோ!. சுழன்றடித்த சூறாவளிப் புயல்களினால் எங்கள் சுதந்திர தேசம் வெந்து சிவப்பாகிப் போனதுபார் வளம் கொழித்த எங்கள் மண் வாழ்விழந்து வெறுமையாய் உளம் நொந்து ஊமையாக நீ உறங்கிக் கிடப்பாயோ முழங்கியெழு நாளை நீயும் சுதந்திரமாய் வாழவேண்டும் தாயக உணர்வுகள் உரிமைகள் பெற்றிடவும் தாயிலும் மேலான தாய்மொழியை வளர்த்திடவும்
34.பூவரசு

அறிவியல் வல்லமையால் அகிலத்தில் உயர்ந்திடவும் மனுதர்மம் நிலைத்திட அதர்மங்கள் அழிந்திட மண்மீட்புப் போரிலே மார்க்கங்கள் உணர்த்திட அடிமை விலங்கொடித்து அவனியிலே புதுமையுடன் புதுமைப் புரட்சிசெய்து புது உலகைப் படைத்திட இளைய தலைமுறையே எழுந்துவா விடிவை நோக்கி.
உறங்கிக் கிடந்த பெண்மை உலகளும் தகுதி பெற்று இறங்கிக் களம் புகுந்த எம் தமிழர் சாதனையை மறத்தமிழன் தாய்க்குலத்தின் மாண்புமிகு பெருமைகளை சாவிலும் தன்மானத் தமிழனென்றே பொறிக்கவும் உலகத் தமிழினங்கள் ஒற்றுமையாய் வாழவும் உறுதியுடன் இலட்சியத்தை உருவாக்க எழுந்து வா.
இளமைச்சுகம் மறந்து இன்னுயிரை மண்ணுக்காய் களமாடித் தமையிந்த காவிய நாயகரின் பாதையிலே இளந்தோள்கள் வலிமைபெற இன்றே உன் கரங்கள் இணைந்திடல் வேண்டும் இப்போதே எழுந்து வாராய். ஜாதிமதங்களற்ற சமரச வாழ்க்கையிலே அச்சமில்லை அச்சமில்லை அன்புடனேயிணைந்து நாம் இச்சைகொண்டு எங்கள் மண்ணை மிதயத்திலிருத்துவோம் விடியாத இரவுகள் என்று ஒன்றுமில்லை விடைகளை ஒற்றுமையாய் எழுந்துவிட்டால் புரியாத புதிர்களும் தெளிவுபெற்று தமிழால் புது உலகைப் படைக்கலாம் எழுந்துவருவாய் தாய் மொழியும் தாய்மண்ணும் தனியுரிமை பெற்றிட வாழ்வுபெற்று வளமுடனே வாழவே எழுந்துவா! இளைய தலைமுறையே எழுந்து வா சொல்கின்றேன் செழுமைபெற்று தமிழீழம் சிறப்போடு வாழவேண்டும்.
{பூவரசு 8வது ஆண்டுநிறைவுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற ජීවිශබීජිතපුද්‍රි)
35. பூவரசு

Page 20
களைப்புடன் ஒரு சிறு தாக்கம். மறுபடி விழித்துக் கொள்ளும்போது ஒருவித புத்துணர்வு உடலெங்கும் பரவுவதை உணர்கிறோம் அல்லவா? அப்படித்தான் இதஷம். நானும் தாங்கிக்கொண்டிருந்தேன். இந்தத் தாக்கத்தில் எனக்குக் கனவுகள் வந்தன. அந்தக் கனவுகளில் எனக்குத் தோன்றியவைகளெல்லாம் நல்லவைகளாய்த் தெரிந்தன. விழித்துக்கொண்டபோதுதான் விளங்கிக்கொண்டேன்கனவு வேறு-நிஜம்வேறு என்று: பூவரசு தொடங்கப்படுவதற்கு முன்னால் நாண் எழுதியத அதிகம். தொடங்கப்பட்டபின்னால் எழுதியத குறைவு எழுதத்தடிக்கும் இளைய தலைமுறைக்கு களம்அமைத்தத்தருவதே என்பணி என்ற எண்ணிக்கொண்டு அப்படியே காரியமாற்ற முனைந்தேன். எண் நேரத்தையும் பொருளையும் உடலுழைப்பையும் பூவரசுக்கென்றே அர்ப்பணித்தேன். அதில் ஒரு ஆத்மார்த்தமான நிறைவு இருந்தத. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று ஒரு பெயர்படைத்து ஈழத்தமிழர்தம் படைப்பாற்றல் வெளிப்பட்டுக்கொண்டிருந்த அந்த ஆரம்பப் பொழுதுகளில் நமது படைப்பாளர்கள்பற்றி, வாசகர்கள் பற்றி எனக்குள் ஒரு பெருமிதம் இருந்தது. ஆனால் அப்பொழுதே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒருசில மூத்த எழுத்தாளர்களால் நக்கல்களுக்குள் சிக்கிக்கொண்டிருந்ததும் உண்மை. என்றாலும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வளர்கிறதுவளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
36.பூவரசு
 

பத்தாண்டுகளுக்கு முன் தோன்றிய பல சஞ்சிகைகளை இப்போது காணோம். ஒரு சில உயிர்வாழத் தடித்தக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில முளைவிடத் தடிக்கின்றன. வளர்த்தெடுக்க முனைபவர்களைவிட, முளைப்பவைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடத் தடிப்பவர்களும், தீட்டியமரத்திலேயே கூர்பார்க்க முயல்பவர்களும்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்பது கசப்பான ஒரு உண்மை. ஏன் இப்படி ஆகிப்போனார்கள் என்பது தெரியவில்லை. இதைச் சுயநலம் என்றும் சொல்வதற்கில்லை. ஒன்றை அழிப்பதன்மூலம் இன்னொன்றை வளர்த்தெடுக்கிற~ அல்லது அதன்மூலம் அவர்கள் பயன்பெறத்தக்க~ காரியமாக இருந்தால்கூடப் பாதகமில்லை. ஆனால் இருப்பதையும் இல்லாதொழித்துவிட்டு எல்லோரும் கையாலாகாதவர்களைப்போல இருப்பதைப்பார்த்து ஆனந்திப்பதற்கென்றே ஒருசிலர் தயாராகியிருக்கிறார்கள். ஏன் இப்படி? தெரியவில்லை! நல்லதம் கெட்டதும் எல்லா இடத்திலும்தான். இதில் நல்லவைகளை எடுத்துக்கொண்டு அல்லாதவைகளை விலக்கிவிடுவது நல்லது என்று எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்-இப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். சில விடயங்களை எழுதினால் அது நம் தமிழ்ச் சமூகத்துக்கு அவமானத்தைத் தேடித்தந்தவிடக்கூடும் என்ற கருதம் சில விடயங்கள்பற்றி நான் பேசாதிருந்தது உண்மை. ஆனால் எப்போதம் எல்லாவற்றிலும் மெளனம் சாதிப்பத பல சந்தர்ப்பவாதிகளை உற்சாகமாக உலாவவிடுவதற்கு ஒத்துழைப்பது போலாகும் என்று இப்போது உணர்கிறேன். எழுதமறந்த எழுத்துக்கள் என்னும் இந்தப்பக்கத்தில்- என்னுடைய எழுத்தப் பயணத்தில் நான் சந்தித்த உண்மையான கலை இலக்கிய வாதிகளையும் கலை இலக்கியவாதிகளாகத் தங்களுக்குத் தாங்களே பட்டம் அளித்துக்கொண்டு மற்றவர் கால்களை வாரிவிடுவதையே குறியாய்க்கொண்டவர்களையும் பற்றி எழுதவேன்.
தொடர்வோம்!
அன்பன் இந்தமகேஷ்,
37. பூவரசு

Page 21
-த.பவானந்தராஜா
உலகில் இயற்கையால் உருவாக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உள்ள விசேடதன்மை சந்ததி விருத்தியாகும். சாதாரண கண்ணுக்குத் தெரியாத கிருமியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன்வரை தம்மையொத்த உயிரினங்களைத் தொடர்ந்து உருவாக்கும் தன்மையுள்ளதாகப் படைக்கப் பட்டுள்ளதானது இயற்கையின் நியதிகளில் ஒன்றாகும். அதுவும் மற்றெல்லா ஜீவராசிகளைவிடவும் இந்த உணர்வானது மனிதனிடம் தேவைக் கதிகமாகவே உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டில் உலகின் சனத்தொகை ஆறாயிரம் கோடியைத் தாண்டிவிடும் என்று கூறப்படுவதிலிருந்தே தனது சந்ததி விருத்தியில் மனிதகுலம் எவ்வளவு அக்கறையாய் உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.ஆக பூமிப்பந்தின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அதனைக் கண்டங்களாகவும், நாடுகளாகவும் பிரித்து வைத்திருப்பதோடு மாத்திரமல்லாமல் பல்வேறு இனமத,மொழி வேறுபாடுகள் உள்ளவனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இந்தவகையில் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதன் தனக்கென்று மொழிவழித் தேசியங்களை உருவாக்கிக் கொண்டு, அதற்கேற்ப நாடுகளையும் உருவாக்கிக்கொண்டு தனது நாட்டின்மீதும், தனது மொழியின்மீதும், தனது இனத்தின் மீதும் ஒருவித தீராத பிணைப்பினை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்துவருகின்றான். இந்தவகையில் இன்றைய மனிதன் பெரும்பாலும் தான் எந்த நாட்டவன்
38.பூவரசு
 

என்று கூறித்தான் தன்னை மற்றையநாட்டவர்களுக்கு அடையாளம் காட்டிக் கொள்கின்றான். இன்று உலகில் அறுநூற்றிற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. எந்த நாட்டினை நாம் எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் முதியோர், நடுத்தர வயதினர், இளைஞர்கள், குழந்தைகள் என்று பல தலைமுறையினர் வாழ்ந்துகொண்டிருப்பது இயற்கையே. இன்று உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் தத்தம் நாட்டுப் பொருளாதார அமைப்புகளிற்கு ஏற்பவும், தமது கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களிற்கு ஏற்பவும் வெவ்வேறுவிதமான வாழ்வு முறைகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
{51ՔՖ] தாய்நாட்டினை எடுத்துக்கொண்டால், இன்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடுதலைப்போராட்டம் காரணமாக நமது இனம் பல்வேறு துன்பங்களைச் சுமந்துகொண்டு வாழ்ந்தாலும், இந்தப் போராட்டம் நமது இளைய தலைமுறையினரின் விழிப்புணர்வு காரணமாகவும், தியாக உணர்வு காரணமாகவுமே இன்னும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதைவிட, அரசபடையினரால் காரணமில்லாமல் கைது செய்யப்பட்டு கொல்லப்படுதல், பல்வேறு உடல்ரீதியிலான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல், பாலியல்ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுதல், அடிக்கடி அகதிகளாக புலம்பெயர்தலால் கல்வி பாதிக்கப்படுதல், போசாக்கான உணவின்மை, மருத்துவவசதியின்மை என்று பல்வேறு மன, உள, உடல் ரீதியான வேதனைகள், விரக்திகளிற்கு மத்தியில் நமது இளம் தலைமுறையினர் தாயகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழினத்தின் மாபெரும் கொடை அதன் கல்விச் செல்வமாகும். ஆனால் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டம் நமது இன இளம் தலைமுறையினர் பலரின் கல்வி மேம்பாட்டை பலவகையிலும் சீரழிய வைத்துள்ளதோடு, பல வருடங்களிற்குப் பின்னடையவும் செய்துள்ளது. ஆனால் இத்தனை துன்பதுயரங்களிற்கு மத்தியிலும் கல்வி கற்று திறமான பரீட்சைப் பெறுபேறுகளை நமது இளம் தலைமுறையினர் பெற்றுக் கொண்டிருப்பது ஒன்றே தமிழினத்தின் கல்விமீதான ஈடுபாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆனால் இந்தப் போராட்டம் மேலும் பல வருடங்களிற்குத் தொடருமானால் இதன்மூலம் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கப் போகின்றவர்கள் நமது இளைய தலைமுறையினர்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதைவிட இந்தப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய எண்பதுகளின் ஆரம்ப காலத்திலிருந்தே ஈழத் தமிழர்கள் பலர் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயரத் தொடங்கிவிட்டார்கள். இப்படிப் புலம்பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குபவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.
9.பூவரசு

Page 22
முக்கியமாக இவர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு மொழியிலேயே கல்வி கற்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் தாய்நாட்டில், தாய்மொழியில் சிறிது காலம் கல்வி கற்றுவிட்டு இடையில் இங்குவந்து கல்வியைத் தொடர்பவர்கள், ஆரம்ப காலங்களில் அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குபவர்களாகவே உள்ளார்கள். இதேவேளை, இங்கு பிறந்து பாலர் வகுப்புத் தொடக்கம் கல்வி பயிலும் குழந்தைகள் தாம் வாழும் நாட்டு மொழியில் மிகவிரைவில் தேர்ச்சி பெற்றவர்களாகிவிடுகிறார்கள். பொதுவாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் நமது குழந்தைகள் பலரும் கல்வியில் திறமையுள்ளவர்களாகவே மிளிர்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களிற் பலர் உயர்கல்வி வாய்ப்புக்கள்பெற்று, பல்வேறு உயர் தொழில்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய உண்டு. ஆனால் இவர்களிற் பெரும்பாலானோர் தாய்மொழி அறிவு குறைந்தவர்களாகவே உள்ளனர். இதனால் இவர்களுக்கு நமது மொழி பண்பாடு போன்றவற்றின் மீதான பற்று குறைந்துகொண்டு போவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மொழிதான் ஒரு இனத்தின் பண்பாட்டைச் சுமந்து செல்லும் ஊடகம், எந்த மொழி மறக்கப்படுகின்றதோ, அங்கு பண்பாடும் மறக்கப்படுகின்றது. அத்தோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் இரண்டு விதமான பண்பாட்டுச் சூழலின் மத்தியில் வாழ வேண்டியுள்ளது. வீட்டில் தமிழ்ப் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றில் வாழ்ந்த பெற்றோரின் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் இவர்கள், வெளியில் காண்பதோ ஒரு வித்தியாசமான பண்பாட்டுச் சூழல், முக்கியமாக இவர்கள் தாம் வாழும் நாட்டுப் பிள்ளைகளுடன் படிக்க வேண்டிய பழக வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. அத்தோடு இவர்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது, புத்தகங்களில் வாசிப்பது எல்லாம் வாழும் நாட்டு கலாச்சார, பண்பாடு போன்றவற்றோடு சம்பந்தமான விடயங்களாகவே உள்ளது. இதனால் இங்கு வாழும் நமது இளைய தலைமுறையினர் ஒருவிதத் தடுமாற்றத்திற்கு உள்ளாவதோடு, இவர்களிற்கும், பெற்றோர்களிற்கும் இடையில் பெரும் சிக்கல்களும் ஏற்படத் தொடங்கியுள்ளன. இப்படியான சூழ்நிலையில் நமது இளம் தலைமுறையினரை மிகவும் அன்பாகவும், அவதானமாகவும் கையாள்வதன் மூலம் மாத்திரமே எதிர்காலத்தில் இவர்களிற்கு ஏற்படப்போகும் பல்வேறு சிக்கல்களிலிருந்து ஓரளவாவது பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்தோடு தாம்தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு இளைய தலைமுறையினரின் வாழ்க்கைமுறை பற்றியும் ஓரளவாவது அறிந்து வைத்திருப்பதன்மூலம் நமது பண்பாட்டிற்கும்,நாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு இளம் தலைமுறையினரின் பண்பாட்டிற்கும் இடையில் உள்ள தன்மை, தீமைகளை எமது இளம்தலைமுறையினருக்கு எடுத்து விளக்க முடியும்.
40.பூவரசு

இந்த வகையில் நாம் புலம்பெயர்ந்து வாழும் ஜேர்மன் நாட்டு இளைய தலைமுறையினரை எடுத்துக் கொண்டால் தமது முந்திய இளைய தலைமுறையினர் பலரும் அனுபவிக்காத பல்வேறு சுதந்திரங்களையும் இவர்கள் இன்று அனுபவிப்பது கண்கூடு. இன்று உலகம் முழுவதுமே குழந்தைகள் மிகச்சிறுவயதிலேயே பருவவயதினை எட்டிப் பிடித்து விடுகிறார்கள். சுமார் நூறு வருடங்களிற்கு முன்னர் பெண்பிள்ளைகள் பருவமடையும் வயது சராசரி 8 - 17 ஆக இருந்தது. ஆனால் இது இன்று 10 - 12 ஆகக் குறைந்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் குறையலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இப்படி மிகச் சிறுவயதிலேயே பருவவயதை எட்டிப் பிடித்துவிடும் இளவயதினர் மத்தியில் ஜேர்மன் நாட்டில் அண்மைக் காலங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விபரக் கணக்கொன்றின்படி இவர்களில் நூற்றிற்கு இருபத்தியாறு பேர் தமது பதின்மூன்றாவது வயதிற்குள் இடைக்கிடை மதுபானம் அருந்துபவர்களாக உள்ளார்கள். பத்தில் ஒருவர் தனது பதினைந்தாவது வயதிற்குள் போதை மருந்து பாவிப்பதில் அனுபவம் பெற்றுவிடுகிறார். ஒரு வருடத்தில் சுமார் ஒரு லட்சம் பருவவயதினர் பாடசாலையில் ஏற்படும் சிறு சண்டைகளில் காயமடைகிறார்கள்.நான்குபேரில் ஒருவர் ஒருமுறையாவது சிறிய ஆயுதத்துடன் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். தமிது பதின்மூன்றாவது வயதில் சராசரி ஒருநாளைக்கு இரண்டு மணித்தியாலத்திற்குமேல் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவளிக்கின்றனர். வருடத்திற்கு சுமார் ஐயாயிரம் பருவவயதுப் பெண்கள் தவறுதலான முறையில் கர்ப்பமடைகிறார்கள். இதில் பாதிப்பேருக்குமேல் கருவினைக் கலைத்தும் விடுகின்றார்கள். பதின்மூன்று பதிண்னான்கு வயதினரில் சுமார் எட்டு வீதத்தினரும், பதினேழு பதினெட்டு வயதினரில் சுமார் எண்பது வீதத்தினரும் பாலியல் உறவை அனுபவித்தவர்களாக உள்ளனர். வீட்டில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகள் காரணமாக சுமார் நாற்பதினாயிரம் (பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள்) வருடம்தோறும் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதில் பாதிப்பேர் ஒருசில நாட்களில் திரும்பி வந்தாலும் மிகுதிப்பேர் நிரந்தரமாகவே வெளியேறிவிடுகின்றார்கள். அத்தோடு இங்கு இளவயதுக் குற்றவாளிகளின் தொகையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 1997ம் ஆண்டில் ஒருலட்சத்து முப்பத்தி ஓராயிரம் இளவயதினர் குற்றவாளிகளாகக் கண்டு பிடிக்கப்பட்டனர். இவர்களிற் பெரும்பான்மையினர் சொந்தத்தாய், அல்லது தந்தையின் பராமரிப்பின் கீழ் வாழாமை கண்டுபிடிக்கப்பட்டது. ஜேர்மன் நாட்டில் அதிகரித்துவரும் விவாகரத்துக்கள் காரணமாக, இங்கு வாழும் இளம் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு ஒவ்வொரு நாலாவது குழந்தையும் சொந்தத் தாய் அல்லது தந்தையின் பராமரிப்பில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி சொந்தத் தாய் அல்லது தந்தையின் அன்பு, பாசத்தை இளவயதில் இழக்கும் குழந்தைகள் மற்ற எது இருந்தும் உண்மை அன்பிற்கு ஏங்குபவர்களாகவும், ஒருவித
41. பூவரசு

Page 23
விரக்தியுடனுமே வளர்ந்து வருகிறார்கள்.
பொதுவாகவே ஜேர்மன் நாட்டில் மாத்திரமன்றி மேற்குலகு நாடுகள் அனைத்திலுமே இளம்தலைமுறையினர் தமது பதினெட்டாவது வயதிலேயே தமது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வெளியேறி சுதந்திரமாகவே வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இங்கு பெற்றோரும் பெரும்பாலும் இதைத்தான் விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் தமக்கென நண்பர், நண்பிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்களுடன்முறைப்படி திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இப்படிச் சேர்ந்து வாழ்வது இங்கு சர்வசாதாரணமானது. இப்படிப் பலகாலம் ஒன்றாக வாழ்பவர்கள் சிலர் திருமணம் செய்துகொள்வார்கள். கருத்து வேறுபாடுள்ளவர்கள் பிரிந்தும் விடுவார்கள். இங்கு ஒரு வருடத்தில் நடைபெறும் திருமணங்களில் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்திலேயே முடிகின்றது. வாழ்வு ஒருமுறைதான். ஒத்துவராத ஒருவருடன் காலம் முழுவதும் கஷ்டப்படுவதைவிட பிரிந்து போவதே இருவருக்கும் நல்லது என்று இன்றைய இளம் தலைமுறையினர் இங்கு நம்புகிறார்கள்.
இப்படியான வாழ்வுமுறைகளைத் தமதாக்கிக் கொண்ட பல்வேறு நாட்டு இளம் தலைமுறையினர் மத்தியில் இன்று நமிது இளம் தலைமுறையினரும் வாழ்ந்து கொண்டிருப்பதனால் இவர்களிற் பலரும் இன்று, நமது கலாச்சாரத்தினை வெறுத்து இவர்களது கலாச்சாரத்தின்படி வாழவே விரும்புகிறார்கள். இப்படியான நிலையில் இருந்து இவர்களைத் தடுக்க வேண்டுமாயின், இவர்கள் இங்கு பெறும் அன்னிய மொழிக் கல்வியோடு தமது தாய்மொழியையும் கட்டாயம் கற்பிப்பதற்கு ஊக்குவிப்பதோடு, தமது கலை, கலாச்சாரம், பண்பாடு சம்பந்தமான கலைகளைப் பயில்வதற்கும் ஊக்குவிக்க வேண்டும். அதேவேளை நமது கலாச்சாரத்திலுள்ள பிற்போக்குத்தனங்களான சாதி வேறுபாடுகள், சீதனக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை எமது இளம் தலைமுறையினர் மத்தியில் அறிமுகப்படுத்தாமலும் விடுவதற்கு நாம் முயற்சி செய்யவேண்டும். இதன்மூலம் ஒரு நல்ல இளம் தலைமுறையை நாம் உருவாக்க முடியும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இவர்கள் தமிழினத்தால் மறக்கப்பட்ட, அதேவேளை அன்னியராலும் முற்றாக ஏற்றுக்கொள்ளப்படாத, முகம் தொலைந்த இளம் தலைமுறையினராக உருவாகப்போவது மாத்திரம் நிட்சயம். |
பூவரசு எட்டாவது ஆண்டு நிறைவுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை.
42.பூவரசு

மறுதலிப்பு
-மா. கி.கிறிஸ்ரியன்
என்னைப் பெற்றவளின் கட்டிமையும், செல்வமும் என்னை மேலும் மேலும் சங்கடத்துக்குள்ளாக்கி விட்டது. இந்தமண்ணில் மரணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்விதத்தில், உரத்தில், உருவத்தில், கனத்தில் ஏதோவொரு அர்த்தம் இருப்பதாகவே நான் நினைத்துக் கொண்டேன். அதன்விபரத்தைச் சொல்லவும் முடியும். வெல்லவும் முடியும் முடியாது எனும்போது உண்மைகள் புதைக்கப்படும். ஏனோ சொல்லத் துடிக்கிறேன். முடியாமலே முடிகிறது.
பூனையைக் கண்டாலே பயம் ஏற்படும் அளவுக்கு பயந்தசுபாவம் போர்த்தப் பட்டவனாகவே சிலகாலம் வாழ்ந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே வெளிக்கிடும் போதெல்லாம், "எடேய் மகனே! பெலனாக ஓடாதடா. றோடுகள் பள்ளம் புட்டியாகக் கிடக்குது. அங்கின விழுத்து காலை கையைடடைத்திடப் போறாயப்யனே. என்ரசெல்வமே தொலைவுக்கும் போயிடாதே. பெடி, பெட்டைகள் காணாமல் போறாங்க. வாசகசாலைவரையும் போயிற்றுத் திரும்பிச் சுறுக்காகவந்திடு மகனே! நீ வரும் வரைக்கும் என்ர உசிரக் கையில பிடிச்சுக் கொண்டுதான் இருக்க வேண்டிகிடக்குது.
- அம்மாவின் குரல் இப்பவும் என் காதுக்குள் fங்காரமிட்டவண்ணமே இருக்கின்றது.
S. பூவரசு

Page 24
நிரந்தரமாகவும், நிர்ப்பந்தமாகவும் தொடர்ந்திருந்தன. பக்கத்து வீட்டு மாமியும் அம்மாவின் பாட்டுக்கு பிற்பாட்டு ஒத்து ஊதுவதுபோலவே பாடுவாள்.
"சாகிறவரைக்கும் ஆம்பிளைகளைப் பெத்தாலே அவலக் குரல்தான்" காலை எழுந்து நித்திரைக்குப் போகும்வரைக்கும் இந்த ஒலம் தணிவதில்லை. திடீரெனக் காணாமல்போன மூத்த மகனின் இறந்த சடலத்தைக்கூடப் பார்க்காத கணத்த கவலை இருப்பவர்களையும் காவாந்து பண்ணும் சிறைப்பாடலாகவே தோற்றமளித்ததாக நானும் உணர்ந்து கொண்டேன். இதன் உள்ளிருப்பே அம்மாவின் சோடணையற்ற தோரணையுமாகும்.
"மகனே எனக்கு உன் வாழ்வுதான் உசிராக ஊசலாடுது. கூடப்பிறந்தவர்கள் மூன்றுபேரும் கட்டினவளுகளுடைய வீட்டிலேயே போய்க் கிடக்கிறாங்கள். இங்கால எட்டியும் பார்க்கிறாங்களில்லையடா. மோன் சேர்த்து வைச்ச காணி, காசுக்குக் குறைவில்லை. அதனால்தான் உன்னையும் என்ர மடியில பொத்திப் பொத்தி வளர்க்கிறேன். மகனே அள்ளிக் கொடுக்க என்ர நெஞ்சு தாங்காதடா. உன்ர கல்யாணத்தைக் காணத்தான் என்ர உசிரு ஊசலாடுது" என்று அழும்போதெல்லாம் என்மனம் பதறும், பயம் தோன்றும். திரும்பவும் அம்மா கதையை வளர்க்கப் போகிறாள்.
இந்த நேரம் மின்னல் வீச்சில் வேட்டுகள் தீரும் சத்தம் கேட்கும். உள்ளூர உருகினேன். விழிகளில் கண்ணீர்த் துளிகள் விழாது சலசலத்து நிற்கும். அம்மா ஊதிய புல்லாங்குழலின் பழைய ராகங்களுக்கு புதிய ராகமெட்டுக்கள் இசைக்கப்படுகின்றது. அம்மாவின் பக்குவப்பட்ட பயtதிகள் பலவகைத் திருப்பங்களின் நிறுத்தல்குறி. ஆச்சரியமாகவே தோன்றியது.
மாலைநேரம் சைக்கிளை உறுட்டிக் கொண்டு பதுங்கிப் பதுங்கி வெளிப்படலையைத் திறந்துகொண்டு தார் றோட்டுக்கு வந்தேன். மகிழ்ச்சியோடு சற்று நிமிர்ந்தேன். பின்புறமாகக் கூப்பிடுகுரலில் சோர்ந்துபோய் நின்றேன். ஆமியின் செல்லடியில் இடதுகாலை இழந்த அம்மாவின் தமையன், கமக்கட்டுக்குள் முட்டுக்கொடுத்த தடிகளுடன் தாண்டித் தாண்டி வந்து என் முகம் முட்ட நின்றார்.
"தம்பி வெளியப் போறிங்க போலக்கிடக்கு." நான் தலையை மெல்ல ஆட்டினேன். அவர் வலப்பக்க ஊண்டுத்தடியை நெஞ்சுக்கு நேர் எழுப்பி எழுப்பி மூன்றுமுறை நிலத்தில் குத்தின கோபத்தோடு வாய் நிறைந்த வெற்றிலையையும் குதப்பி வலப்பக்கக் கடவாய்க்குள் திணித்ததும், இரத்தத் துளிகள் பறக்க கரகரத்த குரல் எழுப்பிக் கத்தினார்.
"டேய் மடையா நேற்றைக்குக் காலையில போன மாரிமுத்தரின் பெடிகள் இன்னும் வாசல்வந்து ஏறயில்லை. அவன்ர வீட்டில ஒப்பாரி ஒலமா ஒலிக்குது. நீர் கொம்பனாட்டம் லோங்கிசும், சேட்டும் மாச்சாகப்
44. பூவரசு

போட்டுக்கொண்டு எந்தத் திருவிழாவுக்கு வெளிக்கிட்டனீர். போடா போய் உள்ள கிட"
தினமும் நிரந்தரமாகிப்போன நிர்ப்பந்தமாகிவிட்டது.
இத்தொல்லையிலிருந்து. இல்லை இக்கட்டாயத்திலிருந்து, அதுவும் இல்லை பயந்த வாழ்விலிருந்து இரும்புச் சிறையிலிருந்து கிழித்து வெளிவரவேண்டிய கட்டாயமான ஒத்திகை எனக்குத் தேவைப்பட்டது. படித்த படிப்பைப் பயன்படுத்தக்கூடிய காலமும் கனிந்து வரவில்லை. வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பவர்களால் பயம், திகைப்பு, சலிப்பு, வெறுப்பு, கடுப்பு, எங்கும் ஒரு சூனிய இருளைத் தோற்றுவித்துள்ளன. இதிலிருந்து நான் வெளிவர வேண்டும்.
யாழ். பெரியகோவில் பூசையின்போது கண் எறிந்தவளைக்கூடப் பார்க்க காதலிக்க இடையூறாக இருந்தன. நானும் ஒரு பயந்தாங்கொள்ளியாகி விட்டேன். என்னைத் தேற்ற என்னிடமிருக்கும் புத்தகங்களின் பக்கங்களில் ஒருவரியேனும் ஆறுதல் வார்த்தைகள் இல்லை. பேனா எடுத்தவர்களின் எழுத்தில்கூட தேறுதல் தரவில்லை. அம்மாவும் அடிக்கடி இரவில் எந்நேரம் என்றில்லாது அரிக்கேன் விளக்குடன் வெளிப்படலைவரை போய் வீதியை அங்குமிங்குமாக நோட்டமிடுவதும், எங்காவது வேட்டுச் சத்தம் கேட்டால் முற்றத்தின் நடுவே செழித்துநிற்கும் வேப்பமரத்தின் கீழ் நின்று அந்தரிப்பதும், தனக்குள்ளாக முணுமுணுத்தபடி சதா என்னுடைய படுக்கையின் பக்கத்திலிருந்து செபம் சொல்லிக் கொண்டிருப்பதைக் காணும்போதெல்லாம் என்ர உசிரு கசிந்துருகும். அம்மாவின் மீதிருக்கும் உசிர் கெட்டியான பிடிப்பு என் வாழ்வின் வசந்தத்தைத் தரிசிக்கும் நிஜதரிசனமாக நிர்ப்பந்தப்பட்டிருப்பதால் நானும் ஊரைவிட்டு புறப்பட்டுவிடும் துர்ப்பாக்கிய நிலைக்குள்ளானேன். படு விரைவாகவே காரியம் நடந்தது.
ஒருமுறை கோயிலடி பக்கம் போயிட்டு வரலாம் எனும் அங்கலாய்ப்பு. அடுத்தகணம் தவிடுபொடியானது. அவள் வீசிய கணையால் நெஞ்சத்தைத் துளைத்த நிலாமுகம் கண்முன்னே திரைப்படம்போல் ஓடிக் கொண்டிருந்தன. வாய்விட்டுப் புலம்பும் பயித்தியக்காரப் பாவனையைத் தோற்றுவித்தன. இந்தநேரம் பெரியகோயில் திருந்தாதி மணி கிடாங். கிடாங். என்று அடித்து ஓய்ந்தது. ஊரைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் மறந்து விட்டேன்.
மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாத அம்மாவின் திருமுகத்தை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டேன். அவளது கண்வழியோடிய கண்ணிருக்குள்ள சக்தி என் நெஞ்சத்தைப் பிய்த்தெடுத்தது. தாயழுத கண்ணிர் வற்றுமுன் ஆகாயவீதியில் பறந்து கொண்டிருந்தேன். தனித்துவிடப்பட்டவனாக, தன்னுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தேன். முடுக்கிவிடப்பட்ட தொல்லைகள்யாவும் நாளைய வரலாற்றின் பதிவுகள்தான். நான் இப்போது தேசம் தாண்டுகிறேன்.
45.பூவரசு

Page 25
பிரான்சில். புகலிடத்துச் சீவியத்தின் புதுமைகளை, புரட்டுகள், உருட்டல்கள், உருவமாற்றங்கள் எல்லாமே எம்மவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து, பூனையைக் கண்டும் அஞ்சும் பழக்கமும் தூரப்போய்விட்டது. இப்போது கொடிய மிருக வேட்டையாடும் துணிவு வந்துவிட்டது. அவன், இவன், அவள் என்று பலரது பழக்கங்களும் என்னுள் புகுந்துவிட்டன. தொழில் அனுபவம், மொழித்தேர்ச்சி விளாவரையாக விளங்கிவிட்டன. உடனுக்குடன் மறுமொழி சொல்லவும், தேவைப்படும் நேரம் மறுதலிக்கவும் பக்குவம் பெற்றுவிட்டேன்.
கோடைவெப்பம் தாங்கமுடியாது விரைந்து கொண்டிருந்தேன். போர்த் லாச் சப்பல் பெரும் வீதியில் கண்டுகொண்ட காட்சிகள் நினைவில் நின்றனவாக எனக்குத் தெரியவில்லை. ஸ்டாலிங்கிராட் தாண்டி மெத்ரோ அடியின் கீழாக ஓடிக் கொண்டிருக்கும் செயின் நதி அணைக்கட்டருகே போடப்பட்டிருந்த வாங்கில் கால்நீட்டி அமர்ந்திருந்தேன். அந்தியின் தென்றல் தழுவ மாப்பசானின் சிறுகதைத் தொகுதியைப் படித்து லயித்திருந்தேன். என்னை ஒருவர் தோளில் உரிமையோடு தட்டுவதுணர்ந்து திரும்பினேன். கடவாய்க்குள்ளிட்ட சிரிப்பைக் கண்டதும் அவர் நமக்கு வேண்டியவர்தான் என்பதைப் புரிந்துகொண்டேன்.
"தங்கச்சியை எடுப்பதற்கான ஒழுங்குகளைச் செய்திருக்கிறேன். உம்மட அம்மாவின் சம்மதத்தோடுதான் இவ்வித ஒழுங்குகள் துரிதகதியில் செய்யப்பட்டுள்ளது" என்று சொல்லிவிட்டு மேலும் பேச முயலும்போது, நான் குறுக்கிட்டு "இப்ப நான் அம்மா வாறதைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன். அவர்கள் வந்த பிற்பாடு மிச்சத்தைப் பார்ப்போம்" என்றேன்.
அவர் கதையை முடிப்பதாக இல்லை. "அம்மாவின் சம்மதத்தோடுதான் உம்மோடு உரிமையோடு கதைக்கிறேன். என்னுடைய தங்கச்சியை முடிக்க உனக்கு சம்மதம்தானே?" அவரது குரலில் கொஞ்சம் இறுக்கம் தொணித்தது. எனது குரல் சற்று தாழ்ந்து தவழ்ந்தது.
"இப்ப நான் கொஞ்சம் தனிமையில் இனிமையாயிருக்கிறேன்." "இதைவிட இருவருமாக இருந்தால் மலரும் மனமுமாக இருக்கலாமே?”
"மனமிருக்க வேணுமேன்?" சற்று ஏறிய தொனியில் நான் சொன்னபோது அவரது முகம் வாடிப்போனது. பின் அடைச்ச குரலில் முணுமுணுத்தார். ஓசை எழவில்லை. காதலித்தவளைக் கைவிடப் போறியா? போலிக்கு வேலிபோடப் போற போக்கிரியே" என என்னை ஏசுவதுபோல் எண்ணிக் கொண்டேன்.
"யோசித்துப் பதில் சொல்" என்றவர் இருந்த இடத்தைவிட்டு பலமீட்டர் தூரம் போய்விட்டார்.
வெறித்து பார்த்தபடி எனக்குள் ஒரு சிலுவைப் பாதையைத் தொடர்ந்தேன். "காதலித்தால் கல்யாணம் கட்ட வேணும் என்பது சட்டமா?
46.பூவரசு

சம்பிரதாயமா? விளங்குகிறது. விபரம் பின்னாடி கிடைக்கும். திரும்பவும் மாப்பசானின் "செத்துப்போனவள்" சிறுகதையின் கடைசி வாக்கியம் நெருஞ்சி முள்ளாக இதயத்தில் குத்தியது.
திரும்பவும் படித்தேன். "சற்றுமுன் காதலித்தாள். காதலிக்கப்பட்டாள், இறந்தாள்” என்று அவளுடைய பளிங்கு சிலுவையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இப்போது வேறாய் தெரிந்தன.
"5660)Lių காதலனை ஏமாற்றி, ஒருநாள் மழையில் வேறொருவனைத் தேடிப்போனாள். மழையில் நனைந்ததால் காய்ச்சல் வந்து இறந்தாள்" இவ்வாக்கியங்களை வாசித்தபோது "பெண்களை. எனது மறுதலிப்புகள் தொடர்வது என்னுள்ளத்தில் ஒருவித மாற்றத்தைக் கொடுத்து துன்புற வைத்தன.
ஊரிலிருந்து அம்மாவும் வந்திருந்தாள். தலைநகர் பாரிஸில் ஈபிள் கோபுரம், வளைவுகள், பூங்காக்கள், நூதனசாலைகள் என்றெல்லாம் சுற்றிக்காட்டிவிட்டேன். லூர்து மாதாவிடமும், சார்ட் மாதாவிடமும் நேர்த்திகடன் செலுத்திவிட்டு வந்திருந்தோம். அம்மாவின் மனசில் ஒருவகைத் தாக்கம் தக்கித்து நிற்பதையும் ஊகித்துக் கொண்டேன்.
குண்டைத் தூக்கிப்போடும் சந்தர்ப்பத்தை சறுக்கிப்போய்விடாது இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள்.மெல்ல ஒடிய ஏறுநடை எண்ணத்துடன் முகத்தில் பிரகாசமான புன்சிரிப்பின் ஒளித்தெறிப்புடன் என்னை அன்பாக அழைத்தாள். கல்யாணச் சமாசாரத்தையும், மருமகளின் வரவையும் குழைவாக இழையோடவிட்டாள். என்ர கள்ளமனத்தின் மறுதலிப்பு சுள்ளென்று சுண்டி நீண்டு உடைஞ்சிடும் வார்த்தைகளாக விழுந்தன. நான் ஊரில் வாழ்ந்தபோது அம்மாவின் வார்த்தைகளுக்கு எதிர்வாதம் புரிந்ததில்லை. செல்லமாக வளர்ந்தாலும் கண்டிப்புகள் தண்டிப்புகள், கட்டுப்பாடுகள், அதட்டல்களாலும் அடங்கி நடந்து பழக்கப்பட்டவன். எதிர்த்து குரல் கொடுக்க சஞ்சலப்பட்டேன். பூனையைக் கண்டும் பயப்படும் நிலை மாற்றிய தேசத்தில் நிற்கிறேன். துணிவு கொண்டதால் பேசலானேன்.
"என்னங்கம்மா பேசாமலிருங்கோ. இப்பயென்னத்திற்கு கல்யாணம்? இன்னும் கொஞ்சகாலம் உங்கட அன்பின் அணைப்பில், ஆறுதலில் தேறி வாழ்ந்தப்புறம் பார்த்துக் கொள்ளலாமுங்கம்மா" சொல்லி முடிக்கு முன்னர் அம்மா மெல்ல எனது வலக்கையைப் பிடித்திழுத்து நடு உச்சியில் விரல்களைப் பொத்தி குண்டொன்று போட்டாள். பின் இமைகள் எழுப்பி அகலப்பார்வையில் அன்பொழுகப் பார்த்தாள். நான் அழுதுவிடும் தோரணையில் தாயின் கண்களுக்குள் என் உருவத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.
மனத்தின் கனத்தின் மறுதலிப்பு மறுபக்கத்தில் தெளிவாகத் தெரிந்தன. அம்மாவின் ஊகிப்பு உருவத்தைக் காட்டிவிடும் பயவுணர்வையும், குற்றவுணர்வையும்சேர்த்து கடப்பாரையால் உச்சிபிளந்திடும் வேதனையைத் 47.பூவரசு

Page 26
தநதன.
"அம்மா நான் ஒருத்தியை வச்சிருந்தேன். அந்த அல்ஜீரியப் பெண்ணுக்கும் எனக்கும் பிறந்த மகள் என் சாயலில் பிறந்திருக்கிறாள் எனும் உண்மையை எப்படி மறுதலிப்பேன்? அந்த அல்ஜீரியப் பெண் ஏற்கனவே திருமணமானவள். என்னோடு பிள்ளைவரம் வேண்டி வந்தவள். துணையாக என்னை ஏற்றுக்கொள் என இப்போது சதா அடம்பிடிக்கிறாள். என்னை விடாது துரத்துகிறாள் எனும் உண்மையை எப்படி மறுதலிப்பேன்?"
அம்மா தீர்க்கமான பார்வையோடு திரும்பவும் என்னைப் பார்ப்பதை நான் ஒரக்கண்ணால் கள்ளமாகப் பார்த்தேன். இப்போது மெளனத்தின் மோனத்திலிருந்து புன்சிரிப்பை சிந்தினாள். அவ்வீச்சின் தழுவலுடன் தார்ப்பரியத்தின் கணப்பும், கருணையுமுள்ள வளர்ப்பின் பெறுமதியை உணர்த்தியது. என்னைத் திக்குமுக்காடப் பண்ணியது. தலைமுறையின் வரைமுறை வாழ்வுக்கு நான் செய்தபாவம் பெரும் சாவான பாவமாகவே தெளிவாக்கப்பட்டன.
என் இனிய வசந்தத்தையே மூச்சாகக் கொண்டிருக்கும் அம்மாவின் கண்ணிரையும், நீண்ட துயரத்தையும் நிருபணமாகவே ஊகித்தேன். முகத்தில் ஓடும் ரேகைகள் வீங்கி வெடித்துவிடும் போலிருந்தன. இந்த நேரம் என்னை வாஞ்சையுடன் நெஞ்சுமுட்ட இழுத்து அணைத்தபோது, இமையோரத்தில் முட்டி நின்ற நீர்த்துளிகள் என் கைகளில் விழுந்தன. நெஞ்சு விம்மித் தாழ்ந்தன. "பாவத்தின் சம்பளம் நரகம், மோட்சத்தின் திறவுகோல் மறுதலிப்பு. கண்ணிர் நெஞ்சைச் சுட்டது.
அம்மாவின் குரலில் இரக்கம் வியாகுலம்நிறைந்ததாகவே தொனித்தன. "என்ர செல்வமே! நீயாக விரும்பிய பிள்ளைதான்ரா. அவள இப்ப உனக்குப் பிடிக்கலையா? வயசு வேற ஏறிக்கொண்டு போகுது. உனக்காக எத்தனை காலம் அவள் காத்திருப்பாள்? இக்கேள்விக்கும் பதில் சொல்லாவிட்டால், அம்மாவின் நெஞ்சில் மூண்டிருக்கும் அனல் கொழுந்து விட்டெரியும். ஏற்கனவே புண்ணாகிப் போன நெஞ்சம் ஊரில் மிருகங்களின் மேய்தலால் மாளாத்துயரம் கொண்ட உள்ளம்.
"அம்மா, நான் திருமணத்திற்குச் சம்மதம்" என்று சொன்னபோது அவளின் மனம் மெழுகுதிரிபோல பிரகாசமடைந்தன. நான் இருண்ட சூனியத்துக்குள் மருண்டுபோய் தவித்தேன். இந்த நேரம் கடப்பாரையால் ஓங்கி அடித்ததுபோல் சத்தம் ஊர்ச் செல்லடியை மிஞ்சிட ஒலித்தது. கதவைத்திறக்க பயந்துகுறுகினேன். அம்மா எழுந்து கதவைத் திறந்துவிட எத்தனித்தபோது முன்னடித்து நானே கதவைத் திறந்தேன். கேடுவரும் முன்னே, மதி கெட்டுவரும் பின்னே என் காதலியின் அண்ணன்தான். செயின் நதியோரம் என்னோடு உரையாடிய உருவம்தான். விறுமனாட்டம் அந்த அல்ஜீரியப்
48. பூவரசு

பெண்ணோடும், எனக்குப் பிறந்த மகளோடும் வந்து நின்று நியாயம் பேசிக்கொண்டு நின்றான். என்தாய் மயக்கம்போட்டு விழுந்துவிட்டாள். மீண்டும், மீண்டும் நான் மறுதலித்தேன். அவளை ஏற்கவும் சம்மதிக்கவில்லை. அவள் மகளோடு திரும்பி போய்விட்டாள்.
"விரும்பியும், விரும்பாமலும் உன்போன்ற அயோக்கியனுக்கு என் தங்கையைக் கொடுப்பதை விடவும் பாழும் கிணற்றில் பிடிச்சுத் தள்ளலாம்" என்று இறுதி மூச்சோடு கத்திவிட்டு அவனும் போய்விட்டான்.
என் தாயின் அருகில் குந்தியிருந்து "அம்மா, அம்மா" என்று தட்டி எழுப்பினேன். எழும்பவில்லை என் தாய். என் மறுதலிப்பு மரணத்திற்குக் காரணம் கற்பித்துவிட்டதாக உணர்ந்தேன். சகலபொறிகளும் பேரமைதி கொண்டன.
அம்மா! அம்மா! மீண்டும் மீண்டும் எழுப்புகிறேன்.
பூவரசு 8வது ஆண்டு நிறைவுப் போட்டியில் முதற்பரிசுபெற்ற சிறுகதை
முட்பாதைகளின் வீதியில் என் நினைவுகளும் பெருமூச்சும் சோர்வாகும் போதெல்லாம் தட்டியெழுப்பும் கனவுகள்
கனவுகளின் மடியில் பாலருந்தும் சிசுவாப்
56可G, எண்மனம்
ஓ! பூமியின் பிம்பங்களே
தாய்வயிற்றுத் தளிர் பயணம் ஒரேயொரு முத்தம் கொடுக்கின்றேன்
வாழ்வுத் தேடலில் அதை சேர்த்துவிடுங்கள்
தொலைந்துப் போயின இறைவனிடம்.
விளக்கும் ஒளியும்.
--வெ.தேவராஜரிலு
கனவொளிகளில் சீரித்திடும் (பினாங்கு,மலேசியா)
இறைவனின் முகம்
கனவு பூக்களின் மடியில் (அருவி இதழிலிருந்து
உயிர்பெறும் என்உடல்

Page 27
6al Telf b Jes T geob .
உலகம் விழித்திட கதிரவன் உதயம், இரவும் வெளுத்திட நிலவது உதயம், இலையும் அசைந்திட இளந்தென்றலின் உதயம். தமிழ் இலக்கியம் வளர்த்திட பூவரசது உதயம் என்ற உணர்வோடு நான் பூவரசை தமிழ் உணர்வோடு நேசிக்கின்றேன். எனக்கு முதன் முதலாக பூவரசின் 19ம் ஆண்டு மலரே கிடைத்தது. அதுவும் டென்மார்க்கில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிறேமன் நகருக்கு சுற்றுலா சென்ற எண் நண்பர் ஒருவர் எடுத்து வந்து தான் படித்து முடிந்ததும் எனக்கு தந்தார் சிறிது கசங்கிய நிலையில், நானும் அதை மிகவும் ஆவலுடன் பெற்று கசங்கிய தாள்களை சீர்செய்து படிக்கத்தொடங்கினேன். காரணம் அன்றைய காலகட்டத்தில் டென்மார்க்கில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தமிழ் இலக்கிய ஆர்வம் குன்றி இருந்ததால் சஞ்சிகை வெளியீடுகள் எதுவும் முறையாக வெளிவரமுடியாத நிலையில் எனது கரத்துக்கு கிட்டிய பூவரசு கிடைக்காத ஒரு பொருள் கிடைத்ததைப்போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. அட்டையைத்தட்டி உள்ளே புகுந்ததும் என்னை வரவேற்ற வாசகம்
உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்: இந்த வாக்கியம் என்னை ஒருகணம் சிந்திக்க வைத்தது. ஏனெனில் நான் நாட்டில் ஏற்பட்ட அவலச்சூழ்நிலையால் நாட்டை விட்டு ஓடிவந்து காலாறா நேரமது எண்பதால். இப்படியும் ஒருவர் இருக்கிறாரா அவர் யாராக இருப்பார் என்று அறிந்துகொள்ளும் ஆவலுடன் என்னிரு கண்களையும் இறுக்க அழுத்தித்துடைத்தவண்ணம் பக்கத்தின் கீழே கண்களை ஒடவிட்டேன். . அங்கேதான் நாண் புரிந்துகொண்டேன் இந்துமகேஷ் என்று. ஆமாம் இவரின் சில படைப்புக்களை இலங்கையில் இருக்கும்போது படித்த ஞாபகம். மீட்டல் செய்தது என் மூளையின் நரம்புகள். ஒரு பரந்த நோக்கம் விரிந்த பார்வை ஒரு மனிதனை ஆட்கொள்ளுமானால் அவரின் இதயத்தில் அடித்தளத்தில் இறுக்கமான சிறந்த இலக்கியப் பார்வையும் தமிழ் தமிழன் என்ற பொதுநோக்கும் இருந்தால்தானே இப்படியான ஆழமான பற்றுதல் கொண்ட வாசகங்களை உள்வாங்கி செயல்வடிவம் கொடுக்க முடியும் என எண்ணியது என்மனம்,
என்ன பூவரசைப்பற்றி சொல்லவந்தவர் ஆசிரியரைப்பற்றி சொல்லுகின்றாரே என்று 6.பூவரசு

கேட்கின்றீர்களா? பொங்கலைப்பற்றி சொல்லவரும்போது பொங்கிய பானையின் சிறப்பையும் சேர்க்காது விட்டுவிட்டால், உடன் மீன் சொதிக்கு உப்பில்லா குறையாகிவிடாதா அதனால்தான். இனி பூவரசின் சிறப்புப்பற்றி கவனிப்போம்புலம்பெயர் மக்கள்மத்தியில் ஆரம்பகாலத்தில் பற்பல இன்னலுக்குள் மக்கள் வாழ்ந்த நேரத்திலும் ஈழத்தமிழர் மத்தியில் ஒருவிதமான துணிகரமான இலக்கியப்பணி முளைவிட்டது. அதற்கேற்ப மக்களின் ஆதரவும் வாசகர்களின் ஒத்துழைப்பும் தொடர்ந்து கிடைக்காத காரணங்களால் சில சஞ்சிகைகள் வந்த வேகத்தில் சில முகவரி அற்று மறைந்திட சில ஆற்றல் கொண்ட இலட்சியப் பற்றுக்கொண்ட தனித்திறமைகள் பல கொண்ட நிர்வாகிகளின் கைவண்ணம் தாங்கிவந்த சில சஞ்சிகைகள்மட்டுமே குண்டடிக்குத் தப்பிய நம் தாய்மண்ணில் சில வீடுகளைப்போல் பாதி உடைந்து பாதி உடையாது திருத்தி குடியிருக்கக்கூடிய நிலையில் எஞ்சி நின்றன. இந்த நிலையில் தப்பிப் பிழைத்து நின்றதுதான் நம் பூவரசும். இதை வளர்த்து எடுக்க கூடிவந்தோர் பலர். இடையில் குழிபறித்தோர் சிலர், தாம் நினைத்தது நடக்காத நிலையில் கூட்டை உடைத்த குருவிகளாய் பறந்தவர் சிலர், இருந்தாலும் நல்ல இதயங்கள் இன்றுவரை ї. அவர்களின் துணையோடு ஆசிரியர் (மகேஸ்வரன்) இந்துமகேஷ் அவர்கள் எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவது இழுக்கு என்ற பொய்யாமொழிப் புலவன் வாக்குக்கமைய தண்பணியை கைப்பொருள் இழப்பை, நேரத்தை கருத்தில் எடுக்காது பூவரசின் வாசகர் துணையோடு கையெழுத்து பிரதி தட்டச்சாகி கணணியாகி வண்ணத்தில் ஆண்டுமலர் வெளியிடுகின்றார். இருதிங்கள் ஒருஇதழாய் வெளிவந்து ஐந்தாவது ஆண்டில் திங்கள் ஒரு இதழாய் வெளிவரத் தொடங்கிய பூவரசு மறுபடி இருதிங்கள் ஒரு இதழாய் வெளிவருகிறது. அது மீண்டும் திங்கள் இதழாய் வெளிவருவது நம்போன்ற ஆக்கதாரர்களின் ஒத்துழைப்பும் வாசகர்களின் அரவணைப்பும் கிடைக்கும்பணியிலே உள்ளது. தாய்மண்ணில் ஏற்பட்ட யுத்ததியின் வெப்பம் தாங்கமுடியாது தாய்மண்ணைவிட்டு ஓடிவந்து அகதியானோமே என்று எண்ணாது நம்மைச் சேர்ந்தவர்களையும் அழைத்து அகதியாக்கிவிட்டதோடு நிற்காமல் அகதித்தமிழர் என்று புதிய ஒரு சந்ததியை உருவாக்கிக்கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் நம்தவறை உணர்ந்து நம் பரம்பரையை தமிழராக தமிழ்ப் பண்பாட்டோடு வளர்த்தெடுக்கவும் தமிழரின் பாரம்பரிய கலை கலாச்சாரம் நடைமுறை கட்டிக்காக்கவும் அவசியமான முக்கிய செயற்பாடு தமிழ் அறிவும் தமிழ் உணர்வுமாகும். இந்த விடயங்களை பூவரசு போன்ற சஞ்சிகைகள் செயற்படுத்தி வருகின்றன. அதனால் தமிழர் எங்கிருந்தாலும் இப்பணிக்குதவி, ஊக்குவித்து ஆதரவு கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டும், பூவரசு பல புதிய எழுத்துலகத்தை கட்டி வளர்த்து வருகிறது. இன்றைய இளந்தளிர்கள் நாளைய எழுத்தாளர்கள்.
இன்னும் பல கவிதை கட்டுரை சிறுகதைப் போட்டிகளை நடாத்தி தமிழ் இலக்கிய
31. பூவரசு

Page 28
உலகுக்கு ஓர் நல்ல எழுச்சியை ஆண்டுதோறும் செய்துவருவதோடு வளரும் கலைஞர் எழுத்தாளர்களுக்கு ஊட்டச்சத்தாய் களமமைத்து ஆண்டுக்காண்டு புதுபுதுவிதமான விழாக்களை நடாத்தி எழுத்துலகை கெளரவித்தும் இளந்தளிர்களை ஊக்குவிக்கவும் மறக்கவில்லை. இவை எல்லாம் பூவரசின் வளர்ச்சிப் படிகளாகவே கருதுகின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர் இந்துமகேஷின் கதைபடிக்க ஒரு வாசகர் கூட்டமே இருக்கும். அவரின் துணிவுக்கும் உறுதிக்கும் விடாமுயற்சிக்கும் தமிழ்ப்பற்றுக்கும் பலன்கிடைத்தே திரும், தீரவேண்டும் என்பதே எண் ஆசை, குறைகள் இல்லையா? என்று கேட்காதீர்கள். குறைகளைப் பட்டியல்போட்டு பார்வைக்கு வைக்காமல் எழுத்துத்துறையின் கஷ்டநஷ்டங்களை இதயத்தில் ஏற்று குறைகளைத் திருத்த அனைவரும் ஆலோசனை வழங்குவோம் எனக்கூறுவதோடு வளர்ந்துவரும் புதிய இளந்தளிர்கள் நாளைபொருநாள் கட்டாயம் பூவரசின் கலை, இலக்கியப்பணியால் நாம் வளர்ந்தோம் என்று எண்ணி நன்றிகூறும் என்பது திண்ணம். தமிழால் ஒன்றிணைவோம். தமிழுக்காய் பணிதொடர்வோம்.
நன்றி. -வேலணையூர் பொன்னணினா, டென்மார்க்
பூவரசும் நானும் கட்டுரைப் போட்டியில் சிறப்புப்பரிசுபெற்ற கட்டுரை
அன்பு வாசகநெஞ்சங்களுக்கு அன்புடன்,
பூவரசின் தாமதம் குறித்து உங்களி மண உணர்வுகளை எனினால் உணர முடிகிறது. உள்ளனிபோடு பூவரசை நேசித்துவரும் உங்கள் ஆதரவு உள்ளவரை பூவரசு வாடிவிடாது. அது தழைக்கும். தனி பணியில் சோர்வுறாது மணம்பரப்பும்.
தொடர்வோம். http:Www.thamizhan. அணியுடனி
FREEE Books (тAML) -இந்துமகேஷ்,
 
 
 
 
 
 
 
 

எழுதுகிறார்கள் ------
பூவரசு இனிய தமிழ் ஏட்டின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்

Page 29
கவிதை சொ
இந்த இதழின் 2 Lä. அந்தச் சி. உள்ளத்து புரிந்துகொள்ள
உங்கள் 6 கவிதையாக்கி
8
O
ந33|ங்கள்!
உங்கள் கவிதை பூவரசின் ஒரு
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS

ல்பவரா நீங்கள்?
அட்டைப்படத்தில் ார்ந்திருக்கும் ன்னஞ்சிறுவனின் உணர்வுகளைப் முடிகிறதா உங்களால்?
எண்ணங்களைக்
அனுப்பிவையுங்கள்
][]ԱլIFilSI ach IO 3 OI Bremen
esTMany
பக்கத்துக்குள் மட்டும் அமையவேண்டும்.