கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காசி ஆனந்தன் கதைகள்

Page 1
||||-
-.
---- | - ||
 


Page 2


Page 3

இது ஒரு
காந்தவுகம்
தயாரிப்பு
http:Wwww.thamizham.net FREEE-BOOKS (TAMIL)- loo96
வாள்ளாச்சிதசன் Oq

Page 4

காசி ஆனந்தன் கதைகள்

Page 5
காசி ஆனந்தன் கதைகள் முதற்பதிப்பு 20 23 மார்கழி (1992) ஒவியம் வீர சந்தானம்
வெளியீடு
காந்தளகம்
83 4, அண்ணா சாலை,
சென்னை - 600 002. மறவன்புலவு சாவகச்சேரி
அச்சு
க7ந்தள7கம் 83 4, அண்ணா சாலை, சென்னை - 600 002.
பதிப்புரிமை ஆசிரியருக்கு
விலை ரூ. 30.00

இலக்கியத்தில் புதிய முகைகளின் தளை அவிழ்ப்பை எதிர்பார்க்கும் மண்ணோடு மொழியோடு இனத்தோடு ஒன்றிய சென்னை அடையாறு மாணவர் நகலகத்தின் அன்புத் தம்பி
அ. செளரிராசனுக்கு.

Page 6
ஈசாப் கழுதை, நரி என்றது கழுதை நரிகளை அல்ல; மனிதர்களைத்தான். ஈசாப் அச்சத்தினால் அப்படி மறைத்துச் சொன்னதாகச் சிலர் நினைக்கிறார்கள். இல்லை, தைரியமுள்ளவன்தான் மனிதனைப் பார்த்துக் கழுதை என்று சொல்லமுடியும். கவிஞர் காசி ஆனந்தன் ஈசாப் ஆகியிருக்கிறார். அவர் காட்டும் கழுதைகளையும் ஒனான்களையும் நாம் அடை யாளம் கண்டுகொள்ள முடிகிறது. 'கந்தசாமி’ என்று சொல்லியிருந்தால் கந்தசாமியை மட்டும் தான் குறிக்கும். 'கந்தசாமி செத்துப்போனால் கதையும் செத்துப்போகும். கழுதை என்றால் இருந்த இருக்கிற இனி இருக்கப்போகிற எல்லாக் கழுதைகளையும் குறிக்கும். கதையும் வாழும். கருத்துக்களுக்குக் காயகல்பம் ஊட்டும் கலை காசி ஆனந்தனுக்குத் தெரிந்திருக்கிறது. அவர் கருத்துக்கள் வாழும்; அதனால் அவரும் வாழ்வார்.
அப்துல் ரகுமான்

ழெ DT ழி GTT5 ... is (; ; ; ; s: ";, , , ** இங்கு புதுமொழிகள்
கவிதைகளில் இருந்து கவிஞர் காசி ஆனந்தன் முகந்திருப்பிய
பொழுது நொடிக்கதைகளோடு நிற்கிறார். விடுதலை வேட்கை, போர்க்குணம், மானுட அன்பு இவற்றின் நிறம் மாறாத மையில்தான் தொட்டுத் தீட்டியுள்ளார் - இக்கதைகளையும்.
எனவே இவையும் கவிதைகளைப் போலவே நெஞ்சில் கனல்
மணக்கின்றன.
சேக்ஷ்பியரின் ஹாம்லெட் நாடகத்தின் உரையாடல்களில்
பல, ஆங்கிலத்தில் பழமொழிகளாகிவிட்டன என்பர். இத்
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையின் இறுதியிலும் பழ
மொழிப் பாணியிலான புதுமொழிகள் இடம்பெற்றுள்ளன.
இப் புதுமொழிகள் பழமொழிகளாகி நின்று நிலவும்.
ஏனெனில் வாழ்க்கைக்கும் கவிதைக்கும் வேறுபாடறியாத ஒரு போராளிக் கவிஞனின் உள்ளத்திலிருந்து உண்டாகியவை. அதனால், உண்மைகளாகி ஒளி வீசும்.
இன்குலாப்

Page 7
தா ழக்கி GSGT யில் సkశిక్:4;$$* பழுத்த கனிகள்
யோசிக்கும் வேளையில் தோன்றுகிறது, கவிதை கதை எழுதுவதெல்லாம் அபத்தமான செயல்கள்தான் என்று. ஆனால், அபத்தமாகக் கழிந்து திடீரென்று மரணத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு விடுகிற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் கவிதையும் கதையும் முனைந்து விடுகிறபோது அவை அற்புதமான செயல்பாடுகளாகி விடுகின்றன.
காசி ஆனந்தனின் எழுத்துக்கள் இத்திறத்தவை. வாழ்க்கையை வாழத் தகுந்ததாக மாற்றுவதில் முன்னிற்பவை. காசி ஆனந்தனும் தான் எழுதும் எழுத்துக்களைக் காட்டிலும் சிறந்தவர். ஏனெனில் அவர் வாழும் இந்தக் காலத்தின் நிகழ்வுகள் அவரது நம்பிக்கைகளின் மீது கால் வைத்து மிதிக்கிறபோது கூட மனித சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காகப் பலவற்றை இழக்கத் தயாரானவர் அவர். கவிஞனின் கசப்பும் இனிப்புமான வாழ்க்கை அனுபவங்கள் தாழக் கிளையில் பழுத்த கனிகள் போல் இந்தக் கதைகளின் முடிவுகள் தோறும் இனிக்கப் பழுத்துள்ளன.
இதற்கு அவர் நேசிக்கும் தமிழ் அவருக்குக் கைகொடுத்து உதவுகிறது.
இந்திரன்

FT GUST Ol SFS கவி ஞ 门”、臀发等
இரண்டு வாழ்க்கை வாழத்தெரியாதவர்; இரண்டு பேச்சு பேசத் தெரியாதவர்; துயரங்களின் இடிபாடுகளுக்கிடையி லேயும் நம்பிக்கைகளின் நண்பராக வாழ்பவர்; பாவேந்தருக் கடுத்துப் பார்க்கக் கிடைத்த வீரியத் தமிழாளர். அத்தகைய பொங்கும் எரிமலையிலிருந்து பொறுப்புணர் வோடு வெளிவந்திருக்கும் குட்டிக் கதைகளிவை. ஒவ் வொன்றும் புத்தகப் பக்கங்களில்தாம் விதைகள், படிக்கும் மனசுகளிலோ கிளை பரப்பி. இலை வெடித்து. எழுச்சி செய்யும் பிரமாண்டமான மரங்கள். வாழ்க்கையை அழகுபடுத்த மரண வளையங்களுக்கு மத்தி யிலும் மரியாதையாய்ச் சிந்திக்கும் இந்த மழலை மனசுக்காரர் எம் இனத்தின் சான்றுக் கவிஞர். பதுங்கு குழிக்குள் இருக்கும் தாய் அழும் குழந்தைக்குப் பாலூட்டியபடியே பாடுகிற தாலாட்டுகளின் நியாயங்கள் யாவும் இந்தக் குட்டிக்கதைகளில் நிரம்பித் தளும்புகின்றன. நாளைய நம் தலைமுறைக்கு வரலாற்றோடு ஒப்புமை செய்து பேச இன்றைக்கே எம் கவிஞர் எழுதிவைத்த இந்த அழகுகள் என்றும் வாழும். திலீபத் தளிர்களாய்!
அறிவுமதி

Page 8
மனிதனா?
வானில், பரிதியில், மலையில், ஆற்றில், தாமரையில், புல் லில், மரங்கொத்தியில், ஒனானில், தெருவிளக்கில், குடை யில் - எதிலும் மனிதனைப் பார்க்கிறேன். மனிதனுக்கு உள்ளே இருப்பதைவிட இன்னும் கூடுதலாக அவன் மனிதனுக்கு வெளியே இருக்கிறான். தெருவில் கிடக்கும் கூழாங்கல்லில் கூட மனிதனின் முகம் தெரிகிறது. இந்த மனிதனில்தான் நான் இலக்கியம் பிழிகிறேன். எதிலும் மனிதனைக் காண்பது எளிதாக இருந்தபோதும் அவனை இலக்கியமாக்குவது எனக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை. பெரிய எழுத்தாளர்கள் சிலர் பெருமைப்பட்டுக் கொள்வது போல் எனக்கு அப்படி ஒன்றும் அள்ளிக்கொட்டவில்லை. ஒவ்வொரு எழுத்தையும் வருந்தி முயன்றே எழுதினேன். கதைகளை உருவாக்குவதில் ஏற்பட்ட முயற்சியின் சுமையை விட கதைகளின் முடிவில்; மனதில் நிற்பதுபோல் படைக் கப்பட்டுள்ள சொற்றொடர்களை அமைக்க நான் பெரும் பாடு பட்டிருக்கிறேன்.
நெடுங்கால முயற்சி.
1961 என்று நினைவு.
O

SS SSSJJkSYSSeeSeSTiAeieii ee eeeeSAMAeAeAeSeee eBYSTiiYYe eeeSYZeeSeeTYS
வீறுமிக்க தமிழர் தலைவரும், விடுதலை உணர்வாளருமான ஈரோடு பெரியவர் மு. சின்னசாமி அவர்களின் ‘சமநீதி' இதழில் இக்குறுங் கதைகளை நான் எழுதத் தொடங்கினேன். நீண்ட இடைவெளிக்குப் பின்1969-70-71களில் தமிழீழத்தின் தனிப்பெரும் சிந்தனை யாளர் சிவஞான சுந்தரம் அவர்களின் ‘சிரித்திரன்’ இதழில் மாத்திரைக் கதைகள்' என்னும் தலைப்பில் என் கதைகள் தொடர்ந்தன. ஒரு விடுதலைப் போராட்டத்தின் நடுவில் ஓயாத அலைவுகள் - சிறைச்சாலைகள் - தலைமறைவுப் பொழுதுகள் - உசாவல் கள் - கடல்கடந்த பாய்ச்சல்கள் - இவற்றின் இடையில் ஒவ் வொரு கதையாய்ப் படைத்தேன். அடிக்கடி எங்கள் வீட்டில் 'தேடுத்ல்" என்று சொல்லிக் கொண்டு பாயும் சிங்கள வெறிப்படையினர் கையில் என் பிற இலக்கியங்களைப் போலவே இக்குறுங்கதைகளில் சில வற்றையும் பறிகொடுக்க வேண்டியதாயிற்று. நான் அழுதிருக்கிறேன். முப்பது ஆண்டுகளில் நாற்பது கதைகளை மட்டுமே காப் பாற்ற முடிந்திருக்கிறது. நெருப்பில் குளித்ததுபோக நீறாகாமல் இருக்கும் என் இலக் கியத்தின் ஒருபகுதியை உங்கள் முன் வைக்கிறேன்.
காசி ஆனந்தன்

Page 9
கற்பனைக்கு ஒரு காலம்
காலத்தால் கற்பனைக்கு வாழ்வா? கற்பனையால் காலத்துக்கு வாழ்வா? காலத்துக்கும் கற்பனைக்கும் மோதல். காலத்தின் கடுமைகளைத் தாண்டும் கற்பனைகள் காலத்துக்கு வாழ்வு கொடுக்கின்றன. காலத்தைக் கடக்க விழையும் உயிருக்குக் கற்பனை இயல் பூக்கம். காலத்தை வெல்ல முயலும் மனிதனுக்கு இலக்கியம் போர்க்கருவி. கவிஞர் காசி ஆனந்தனின் கற்பனைகள் காலத்துக்கு விடப் பட்ட சவால், காலத்துக்கு வாழ்வு கொடுக்கும் இலக்கியப் படைப்புகள் இவை.
2

s
స్లో
深
'^{-1}్యస్కేన్గన్స్లో
1938 பங்குனியில் பிறந்தார். பத்து வயதில் முதல் கவிதை படைத்தார். இன்றுவரை 44 ஆண்டு கால இலக்கியப் பணி சிறைக்குள் இருந்தபொழுது, மனித உறவுக்கும் தொடர் புக்கும் அப்பால், அஃறிணைகள் அவருக்கு நெருக்கமாயின. அஃறிணைகளில் உயர்திணைகட்குப் பாடம்புகட்டும் படிமங் களைக் கண்டார். காலத்தின் கண்ணாடியாக்கினார். போராட்டம் இவருக்கு வாழ்க்கை. இவரது வாழ்க்கையும் போராட்டமே. போராட்டத்துக்கு நடுவே கருக்களைத் தேடி னார். கற்பனைகளை வளர்த்தார். கதைகள் பிறந்தன. புகழ்பெற்ற ஒவியர் வீர சந்தானம் ஒவ்வொரு கதைக்கும் ஓவியம் தீட்டியுள்ளார். கவிஞரின் படிமங்கட்கு அவ் ஓவி யங்கள் உயிர் கொடுக்கின்றன. நூல் வடிவமைப்பு கவிஞர் பழனி பாரதியின் கருத்து வண்ணம்.
பச்சையப்பன் கல்லூரிப் படிக்கட்டுகளில் பக்கம் பக்கமாக ஏறி இறங்கிய காலம்; அவரது திருமண அழைப்பாளராகக் கடமை புரிந்த காலம்; இக்கதைகளின் வெளியீட்டாளராகப் பணிபுரியும் காலம்; இக்காலங்கள் ஊடாக அன்பும் உணர் வும் பின்னிப் பிணையப் பழகிய நெருக்கமும் நிறைவும், அவருக்கும் எனக்கும் இடையில்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
13

Page 10
L-f
காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் கத்தியால் வெட்டப் பட்டது. நெருப்புக் கம்பி தன்னைத் துளைத்தபோது "ஐயோ உடல் புண்ணாகிறதே..' என்று கதறி அழுதது.
கொஞ்சம் பொறுமையாக இரு.’ என்று மூங்கிலைப் பார்த்து ஆறுதல் சொன்னது காற்று.
மூங்கில் புல்லாங்குழல் ஆனது.
மேடையில்
உலகமே மயங்கும் இசையை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த புல்லாங்குழலைப் பார்த்து மேனி சிலிர்த்தது காற்று.
அது சொன்னது -
'புண்பட்டவன்
பண்பட்டவன்.
14


Page 11

தேவை
புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
பர்னம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?
தாய்க்குருவி சிரித்தது.
'மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை' என்றது தாய்.
தாய்க்குருவி சொன்னது:-
'வானத்தில் புல் முளைத்தால்
மாட்டுக்கும் சிறகு முளைக்கும்
17

Page 12
நிறைவு
நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.
எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஒரு கல்தானே.” என்று ஒலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது:- ’ஏ குறுணி! காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால், இரத்தினக்கல் அப்படியா? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே உரு வாக்கிக் கொண்டிருந்தது.'
அப்படியென்றால்..?’ என்று இழுத்தது குறுணிக்கல். கடப்பாரை சொன்னது:- நிறைவாகும் வரை மறைவாக இரு.
8


Page 13
குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன. ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து, இந்தக் கழுதைமேல் உனக்கு இரக்கம் வரவில்லையா? எப்போது பார்த்தாலும் மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே. என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது. vr
'நாம் என்ன செய்யமுடியும்? கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும்' என்றது மற்றக் காக்கை,
'ஏன் அப்படிச் சொல்கிறாய்? இறக்கைகளைக் கோதிக்கொண்டே இரண்டாம் காக்கை சொன்னது:-
' குனிந்துகொண்டே இருப்பவன் சுமந்துகொண்டே இருப்பான்.
20


Page 14
இடம்
கழுதையும் பட்டாம்பூச்சியும் உலாப் போயின. மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ‘இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரி வைப்பேன் - இங்கே எனக்கு வரவேற்பிருக்கும். என்றது கழுதை.
அது பாடத் தொடங்கியது. என்ன கொடுமை. கழுதைக் கச்சேரி - கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது.
அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன.
கழுதைக்கு ஒரே கொண்டாட்டம். ஒனான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. கழுதை மகிழ்ச்சியோடு பாடத் தொடங்கியது.
என்ன ஆச்சரியம்! தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு 'ஒன்றும் வியப்படையாதே. இங்கே அப்படித்தான்’ என்று கூறியது.
சுருக்கமாக அது சொன்னது:- ‘ஓனான்களின் ஊரில்
கழுதைகளும் வித்துவான்களே.
22


Page 15
*。 %
 

அலைவு
ஆறு, கடலில் ஓடிக் கலப்பதையும் - அலை கரையைத் தேடித் தழுவுவதையும் அன்றாடம் பார்த்து வந்த வானம் பாடி சிந்தனையில் ஆழ்ந்தது.
‘உலகம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதான். என்றது வானம்பாடி,
பிறகு அது பாடியது:- ‘மண்ணில் இருக்கிற ஆற்றுக்கு
மண்ணில் வெறுப்பு: கடலில் ஆசை கடலில் இருக்கிற அலைக்கு கடலில் வெறுப்பு: மண்ணில் ஆசை
25

Page 16

சொரணை
நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களை யெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.
'மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே - பார். பார். அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர் களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள்’ என்றது அறுகம்புல்.
நெருஞ்சி சூடானது.
‘என்னைக் காலால் மிதித்துவதைக்கிறவர்களையெல்லாம் நான் தாங்கிக்கொள்ள வேண்டுமாக்கும்.
நெருஞ்சிப்புல் சொன்னது:-
‘வதைபடுவதை விட
புதைபடுவது மேல்
27

Page 17
உயவு
காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.
பார்த்தீர்களா..? நான் எவ்வளவு உயரத்தில் இருக்கி றேன்.' என்று தன் பெருமையைப் பறைசாற்றியது.
பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.
நூல் இனி எதற்கு?’ என்று கூறிக்கொண்டே நூலைப் பட்டென்று அது அறுத்துக்கொண்டது.
கொஞ்ச நேரத்தில்ஊரின் மூலையில் - ஒரு முள் மரத்தில் விழுந்து - கிழிந்து உருக்குலைந்து கிடந்தது காற்றாடி
காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது:-
ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான்!
28

-&ހަށަހަށާފަކީ
Xரி2 蓋 Ny 1 )
NS

Page 18

பாய்ச்சல்
மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப் பக்கத்தில் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.
காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.
‘இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தை யாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?’ என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.
மரங்கொத்தியால் அது முடியாது' என்றது கயிறு.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?
கயிறு சொன்னது:-
'நாலு மரத்தையும்
வெட்டுகிறவன்
ஒரு மரத்தையும்
விழுத்துவதில்லை
3

Page 19
முனைப்பு
காலைப் பணி
கொக்கும் குருவியும் குளிரால் நடுங்கின. தங்களுக்குள்ளேயே பேசி அவை ஒரு முடிவுக்கு வந்தன.
‘இன்று நான் குளத்துக்குப் போவதில்லை - வேண்டு மானால் மீன் இங்கே வரட்டும்' என்றது கொக்கு.
‘நானுந்தான் தோப்புக்குப் போவதில்லை - வேண்டு மானால் பழம் இங்கே வரட்டும்' என்றது குருவி.
பொழுது கரைந்தது.
பசி வயிற்றைக் கிள்ளியது.
நடுப்பகல் தாண்டியபின்பும் பசியை எப்படித் தாங்கிக் கொள்ளமுடியும்.
கொக்கு குளத்துக்குப் போனது. குருவி பழத்துக்குப் போனது.
மரத்தில் இருந்த அணில் பாடியது:- "கொக்கைத் தேடிக் குளம் வராது குருவியைத் தேடிப் பழம் வராது
32


Page 20
烧忽 ܐܶ؟ ട്
 
 
 
 

தோல்கள்
பாம்பு தோலைக் கழற்றி வைத்துவிட்டுப் புறப்பட்டது. ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பக்கம் அது போனது. அங்கே நின்ற தனியன் ஆட்டிடம் அதோ பார். பாம்பு உன்னுடையவர்கள் இருக்கும் இடத்தை நோக்கித்தான் போகிறது. நச்சுப் பாம்பு-பல்பட்ட 'லே போதும்.’ என்று கூறியது சேவல்.
அப்படி ஒன்றும் நடந்துலடாது. பாம்பு தோலைக் கழற்றிப் புதிதாய்ப் பிறந்திருக்கிறது.’ என்றது தனியன் ஆடு.
சிறிது நேரத்தில் - ஆடுகளின் அலறல் புல்வெளியை உலுக்கியது. ஓசை வந்த திசை நோக்கி தனியன் ஆடும் சேவலும் ஓடின.
அங்கே - பாவம். அப்பாவி ஆடுகள் இரண்டு பாம்புக்குப் பலியாகிச் செத்துக் கிடந்தன. சேவல் சொல்லியது:-
பல்லைக் கழற்றாத பாம்பு தோலைக் கழற்றி என்ன? வாலைக் கழற்றி என்ன?
35

Page 21
ந S SSASAAASAA SS SSAASSSSSSSz SSSSSSAS S SAS TTAAS పల్లిష్ట వేసే ; *-స్ట్రీస్లో:
கடலோரத்தில் நண்டு நடந்து கொண்டிருந்தது, மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது.
நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை,
ஒருநாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.
வளைக்குள் இருந்து ஒரக் கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.
அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு.
தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-
முன்பே காப்பான்
அன்பே நட்பு
36

* な。
* 2後 リ ރޮ ఫ
ŽN م

Page 22
முகவரி
LD66 p.
வழங்கும் வானமே நீ வாழ்க என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.
காற்றுக்குச் சினம் பொங்கியது. ‘என்ன கொடுமை! வானமா வழங்கியது? பூமிக்காகக் காற்று பொருமியது:- 'நீர் கொடுப்பதோ பூமி
பேர் எடுப்பதோ வானம்
38


Page 23
தலைமை எறும்பு கூறியது:-
ஒழுங்காகச் செல்லுங்கள். . . பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது.
ஒர் எறும்பு - “ ‘என்பாட்டில் நான் போவேன்.' என்று வரிசையை
உடைத்துக் கொண்டு தனிவழி போனது.
கொஞ்ச நேரத்தில் - வரிசை குலையாமல் போன எறும்புகளெல்லாம் வாயில்
அரிசியோடு திரும்பி வந்தன.
ஒற்றை எறும்பின் முகம் ஒடுங்கியது. நிரை குழம்பாத எறும்புகளில் ஒன்று சொன்னது:-
' வரிசை பிளப்பான் பரிசை இழப்பான்
40
 


Page 24

நடப்பு
சேவல் கூவியது.
‘நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது.’ என்று கதிரவன் பூரித்துப் போனான்.
மாலை வந்தது. கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான். சாயும் போது - ‘நான் விழுகிறேனே. என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா' என்று ஏங்கினான்.
சேவலை அவன் எதிர்பார்த்தான், வரவில்லை. விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான்:- 'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை
43

Page 25
####***స్ట్స్ట్రో'###ళ్ల
g G ##శిక్ష', 'నస్రిk్య'';
இரவு. புற்றில் இருந்து வெளியே வந்த ஈசல் - வெளிச்சத்தைத் தன் உடலில் தூக்கிப் பறந்த மின்மினியைப் பார்த்தது.
அதன் அழகைப் புற்றிசலால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.
‘மின்மினியைப்போல் வெளிச்சத்தைத் தூக்கிப் பறக்க என்னாலும் முடியும்.’ என்று கூறிக்கொண்டே குடிசையில் எரிந்து கொண்டிருந்த குப்பி விளகதின் வெளிச்சத்தைத் தூக்கப் போனது புற்றீசல்.
பாலம். ஒரு நொடியில் அது எரிந்து கருகிப் போனது. குப்பி விளக்கு சொன்னது:-
பொறாமை எரிந்து போகும் புற்றீசல் கரிந்து போகும்
4 4
 
 


Page 26
t ዘዘffilዞ
E. &
Այլիի
till |im;
iଜ୍ଞା
ula.His
N 院
Lssi li
I \ N.
is, FA"
 
 

உயர்வு
இரவின் பிடியில் அழுந்திக் கண்ணிர்விட்டது வானம்.
கண்ணிர் பனித்துளிகளாய் விழுந்தபோது - வானத்தின் துன்பத்தை எண்ணி வருந்திய பசும்புல் கண்ணிர்த் துளி களைத் தாங்கிக் கொண்டே வந்தது.
ஒவ்வொரு நாளும் புல் ஓங்கி வளர்ந்தது.
பரவி உயர்ந்து எங்கணும் பச்சைக் காடாய் நிறைந்தது பசும்புல்,
காலைக் குருவி பாடியது:-
ஏங்குவான் கண்ணிரைத்
தாங்குவான் உயர்வான்
47

Page 27
乐门广 லம் ehe SAeS SiSeSSSJeSeYS e SeeSAS SiSSS eeeSSSYSe SyeSSYZeSseeS
குருவிக் கூடு. சிறகு முளைக்காத குருவிக் குஞ்சுகள் சிரித்து ஆரவாரித்தன. மரத்தில் இருந்த அணில், குருவிக் கூட்டுக்குத் தாவி, உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்கவில்லை - சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?’ என்று கேட்டது.
குஞ்சுகள் கவனிக்கவில்லை. பாம்புக்கு இது வாய்ப்பானது. குஞ்சுகளின் சிரிப்பொலி கேட்டு, பாம்பு கூட்டுக்குள் நுழைநதது.
நொடிப்பொழுதில் - பாம்பின் வாயில் குஞ்சுகள் பலியாகிப் போயின. அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை. அது மீண்டும் இரைந்து கத்தியது:- ‘சிறகு விரி பிறகு சிரி
48

S
ህአ፻ R S S ፬ንክዩጸWእኳ R କ୍ଳୀବ୍ଧି Yଦ୍ଧି
|ነ'|ሀለ!'ኳ ፳፻፱፻!
NSSSSSN
S. WW ایسکی

Page 28

உலகம்
தாமரையைக் கொத்திக் கிழித்து வீசவேண்டும் போல் மீனுக்குத் தோன்றியது.
குளத்துக்குத் தேன் அருந்த வந்த வண்டு மீனைப் பார்த்துக் கேட்டது:-
'உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறாயே - ஏன்?"
'ஒன்றுமில்லை. காலம் முழுதும் தன்னைத் தாங்கி நிற்கும் தண்ணிரைத் தாமரை இலை உருட்டி வெளியே தள்ளுகிறதே - இந்தத் தாமரைக்கு மனச்சாட்சியே இல்லை பார்.'
வண்டு புரிந்துகொண்டது.
அழுத்தமாக நெஞ்சின் அடியில் அது உச்சரித்தது.
தாங்கும் தண்ணீரைத்
தாங்காத தாமரை
51

Page 29

சக்கை
எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒதுக்குப் புறத்தில் கவனிப்பாரற்றுப் படுத்திருந்ததை வெள்ளாடு கவலையோடு நோக்கியது.
பசுவைப் பார்த்து, 'முன்பெல்லாம் உன்னை வீட்டுக்
காரன் நாள் தவறாமல் குளிப்பாட்டுவானே - புல்லும் வைக்கோலும் போட்டுத் தடவிக் கொடுப்பானே - இப் போது திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையே - ஏன்?’ என்று கேட்டது ஆடு.
பசு பெருமூச்சு விட்டது.
பயனில்லை - அதனால் பார்ப்பதில்லை' என்றது பசு சுருக்கமாக அது சொன்னது:- மடியில் பாலும் இல்லை
மதிக்க ஆளும் இலலை
53

Page 30
V '...: ہمعمہ ,ീല്ലേ
"","",--
مسی می
ممبر محم محمد سمم عبریF
 

கிழட்டு அணில் மற்ற அணிலைப் பார்த்து, 'அடுத்தவர் களின் உழைப்பில் வாழ்வதே சிலருக்கு வாழ்க்கையாகி விட்டது பார்.’ என்றது.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டது இரண் டாம் அணில்,
கிழட்டு அணில் சொன்னது:-
ஒணானைப் பார்த்தேன். யாரோ ஒரு மனிதன் புதுவீடு கட்டிக் கொண்டிருக்கிறானாம். பக்கத்தில் குப்பை மேட்டில் ஒரு பல்லி இருந்ததாம். அது ஒணானிடம் ஏதோ சொன்னதாம்.
‘என்னவாம்?’ என்றது இரண்டாம் அணில். கிழட்டு அணில் சொன்னது:- 'எனக்குத்தான் வீடு
கட்டுகிறான் என்றதாம் பல்லி,
55

Page 31
காவல்
பக்கம் பக்கமாய் இரண்டு காணிகளில் இரண்டு நாய்கள்.
ஒரு நாய் எப்போதும் துடிப்பாக இருக்கும். இன் னொன்று சோர்ந்து கிடக்கும்.
துடிப்புள்ள நாய் தன் காணியில் நுழைந்த மாடுகளைக் குரைத்து விரட்டி அடித்தது. சோர்ந்த நாயின் காணியிலோ பயிர்களை மாடுகள் மேய்ந்து முடித்திருந்தன.
ஒருநாள் -
இரண்டு காணிகளிலும் பாம்புகள் நுழைந்தன.
விழிப்போடிருந்த நாய் பாம்பைத் துண்டு துண்டாய்க் கடித்துக் குதறியது.
தூங்கு மூஞ்சி நாயோ பாம்பு தீண்டித் துடிதுடித்துச் செத்துப் போனது.
பொது வேலியில் இருந்த காக்கை சொன்னது:- ‘இயலான் மண்ணில்
அயலான் ஆட்சி
56


Page 32
心八
藏 琵
 
 
 

அளவை
அன்றாடம் ஒடிக்கொண்டிருந்த பேருந்தின் சக்கரத்தைப் பார்த்துத் தெரு கேட்டது:-
‘மண் முழுவதும் சுற்றி வருகிறாயே - நீ பெற்ற அனு
பவம்தான் என்ன?
சக்கரம் அமைதியானது. பின்பு அது தெருவைப் பார்த்துச் சொன்னது:-
‘நான் என்னையே பலமுறை சுற்றி அளந்து கொள்கிறேன் - அதனால் தான் உலகத்தையே அளந்து வருகிறேன்.
திரும்பவும் தெருவைப் பார்த்து, ‘புரிகிறதா?’ என்று கேட்டது சக்கரம்.
அது சொன்னது:- ‘தன்னை அளந்தவன்
மண்ணை அளந்தவன்'
59

Page 33
இலக்கு
மைதானத்தின் இரு பக்கங்களிலும் புல்லும் கொள்ளும் பச்சைப் பசேலென்று செழித்திருந்தன.
குதிரை ஒட்டப்போட்டி தொடங்கியது.
இந்தக் குதிரைகள் கொள்ளையோ புல்லையோ கொஞ்சம் கூடத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றனவே - உனக்கு இது வியப்பாக இல்லையா?’ என்று ஓர் ஆடு மற்ற ஆட்டைப் பார்த்துக் கேட்டது.
‘போட்டிக் குதிரைகள் அப்படித்தான்' என்றது இரண் டாம் ஆடு,
பிறகு அது சொன்னது:-
‘வெல்லப் பாயும் குதிரை
புல்லைப் பார்க்குமா?
கொள்ளைப் பார்க்குமா?
6 O


Page 34
\\多W 多多グ多
!\
 

சண்டித்தனம்
‘எல்லோரையும் அடித்து நொறுக்குவேன்.' இடியோசையோடு சண்டித்தனத்தில் இறங்கியது மின்னல். ஒரு நொடிதான். வளைந்து நொறுங்கி அது முறிந்து விழுந்தது. மண்ணில் இருந்தபடியே மின்னலின் சண்டித்தனத்தை யும் வீழ்ச்சியையும் பார்த்த தவளை சொல்லியது:-
'சண்டியாய் எழுவான்
நொண்டியாய் விழுவான்'
63

Page 35
பணிவு
மண்ணை நோக்கிக் குனிந்திருந்தது தெருவிளக்கு.
இந்தத் தெருவிளக்கு கோழையாய்க் கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கமாக இல்லையா?’ என்றது காக்கை.
நீண்ட காலமாகத் தெருவின் ஒரத்திலேயே நின்ற தென்னை நெருப்பானது.
'கூர்ந்து கவனி. தெருவில் ஒளியைப் பாய்ச்சி - தொண் டாற்றிக் கொண்டே - பெருமையால் தலை வீங்கிப் போகாமல் அடக்கத்தோடு நிற்கிறது தெருவிளக்கு.
என்றது தென்னை,
மீண்டும் ‘புரிகிறதா’ என்று காக்கையைப் பார்த்து அது கேட்டது.
பிறகு சொன்னது:-
‘பணிவு வேறு குணிவு வேறு
6 4.

丝多 办'》多 %、S
彩 丝、绍 丝五彩 丝毛丝 丝密 孔抗御 彩多Ź. 忽深*? 必?死后*燃黎必 員% {3肋後 黎**—人物物杉 秘 忽 5 e 《氹

Page 36

ஒவ்வொரு சின்ன ஓசைக்கும் முயல், புதருக்குள் ஒடி ஒளிந்தது. இதைக் கவனித்த மான் இன்னொரு மானைப் பார்த்துக் கேட்டது:-
முயல் ஏன் அடிக்கடி அஞ்சி நடுங்கி ஓடி ஒளிகிறது? இரண்டாவது மான் சொன்னது:- 'உனக்கும் எனக்கும் கொம்புண்டு. யானைக்குத் தந்தம் உண்டு. கரடிக்கு நகம் உண்டு. நம்மிடம் நம்மைப் பாது காக்கும் ஆயுதம் உண்டு. முயலிடம் எதுவுமே இல்லையே.
சுருக்கமாக 9.S. சொன்னது:-
’கொம்பில்லா முயலுக்குத்
தெம்பில்லா வாழ்க்கை
67

Page 37

தளிர்ப்பு
இலையுதிர் காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
'உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன. உன்னைப் பார்த்தால் அழவேண்டும்போல் இருக்கிறது.’ என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது:-
*நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தளிர்
களுக்காக அவை விழத்தான் வேண்டும்’
நிமிர்ந்தே நின்றது மரம்.
அது சொன்னது:-
'விழுவதற் கெல்லாம்
அழுவதற் கில்லை.
69

Page 38
இரவு. கடலில் வந்துகொண்டிருந்த படகுகளில் ஒன்று மற்றதைப் பார்த்துக் கேட்டது:-
அதோ.கடற்கரையில் தன்னந்தனியாக நின்று ஒளிவீசும் கலங்கரை விளக்கத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
தெரியவில்லையே." என்றது இரண்டாம் படகு. முதல் படகு சொன்னது:-
கூட்டமாகத்தான் பணி ஆற்றலாம் என்பதில்லை - தன்னந்தனியாகக் கூட ஒருவர் தொண்டாற்றலாம் என்று நமக்கு அது கூறவில்லையா?
வார்த்தைகளை அது நறுக்கி வைத்தது:-
'தனி என்றிருப்பினும்
பணி என்றிரு.
70


Page 39
உரிமை
LDoS), தவளைகள் மகிழ்ச்சியோடு உரக்கக் குரலெழுப்பின.
குளத்தில் இருந்த ஆமை தவளைகளைப் பார்த்துச் சொன்னது:-
இப்படிக் கத்துகிறீர்களே - உங்கள் குரலைக் கேட்டுப் பாம்பு உங்களைப் பிடித்துவிட்டால் உங்கள் நிலை என்ன ஆவது?
தவளைகள் சிரித்தன.
'நாங்கள் கொஞ்சமும் கவலைப்படமாட்டோம் என்றது கூட்டத்தில் ஒரு தவளை.
இன்னொரு தவளை சொன்னது:-
மூச்சை இழக்கலாம் பேச்சை இழக்கலாமா?
72


Page 40
'யானையைப் போர்க்களங்களுக்கு அழைத்துப் போகிறார் கள். களியாட்டங்களில் பழக்கி, வீர விளையாட்டுக் காட்டு கிறார்கள். ஊர்வலங்களில் கொண்டுவருகிறார்கள். யானை இல்லாத விழாக்களே இல்லை!
என்று ஒரு குருவி மற்றக் குருவியைப் பார்த்துச் சொன்னது.
இரண்டாம் குருவி வியப்போடு கேட்டது:- 'யானைக்கு எப்படி இத்தனை ஆற்றல்கள்? முதல் குருவி சொன்னது:-
வீறுடையான் நூறுடையான்.
74

秘心?Q%
忽 翊 & |-忽飞望 %物陥之 B%

Page 41

தோழமை
கிழிசல் துணியைத் தைக்கும் வேலையில் விரல்கள். சுட்டு விரல் அடுத்த விரலைப் பார்த்து, "துன்பப்
படுகிறவர்களுக்குத் துன்பப் படுகிறவர்களே துணை’ என்றது.
அடுத்த விரல் கேட்டது:- 'ஏன் அப்படிச் சொல்கிறாய்? 'இதோ பாரேன். சுட்டு விரல் சொன்னது:-
கிழிசல் துணிக்கு
ஒட்டை ஊசி
7 7

Page 42
விதைகள்
வெயிலில் நெடுந்தூரம் பறந்து வந்த நாடோடிப் பறவைகள் முகில்களின் இடையே நுழைந்தபோது குளிரில் நனைந்து களித்தன.
கொஞ்ச நேரத்தில் மழைத் துளிகளாக முகில்கூட்டம் கீழே விழத் தொடங்கியது.
"ஐயோ! நல்ல முகில்கள் விழுகின்றனவே...' என்று இரங்கி அழுதது ஒரு பறவை.
வழிகாட்டிப் பறவையோ ‘எல்லாம் நன்மைக்கே என்றது
குளங்கள் நிரம்பும் - நாம் மீன்கள் பிடிக்கலாம் மரங்கள் தழைக்கும் - நாம் கூடுகள் கட்டலாம்.'
அது சொன்னது:-
‘நல்லவர்கள்
எழுந்தாலும் நன்மைக்கே
விழுந்தாலும் நன்மைக்கே"
78


Page 43

கொதிக்கும் வெயிலையும் - குடைபிடித்துப்போன மனிதனையும் - குடையையும், மின்கம்பம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தது.
‘என்ன உலகம்' என்று தனக்குள்ளேயே அது சலித்துக் கொண்டது.
பெருமூச்சோடு மின்கம்பம் சொல்லியது:-
'நிழல் கொடுக்கும் குடைக்கு வெயில்
8

Page 44
சுற்றம்
மலையின் உச்சியில் இருந்து பள்ளத்தாக்குக்குப் பாய்ந்த ஆற்றை, பள்ளத்தில் பச்சைப் பசேலென்று வளர்ந்திருந்த புற்களும் செடிகளும் மனமாரப் புகழ்ந்தன:-
கீழே இருக்கிற எங்களை யார் கவனிக்கிறார்கள்.? ஆற்றை எப்படி மறப்போம்?
கொழுத்த புல்லின் நிழலில் உரையாடலைக் கேட்டபடி படுத்திருந்த ஆமை சொன்னது:-
'பள்ளத் திருப்பார்
உள்ளத் திரு'
82


Page 45
கடற்கரை ஓரத்தில் படகைப் பார்த்து நண்டு கேட்டது:-
வண்ண வண்ண மீன்களை யெல்லாம் பிடித்துக் கொண்டு போனார்களே - எதற்கு?
படகு அசைவற்றிருந்தது.
பின்பு அது சொன்னது:-
'அந்த மீன்களையெல்ல்ாம் சின்னஞ்சிறு கண்ணாடித் தொட்டியில் அடைத்து வைத்திருக்கிறார்களாம்.
அப்புறம்?
படகு சொன்னது:-
எட்டி எட்டி
அலையைத் தேடுகிறதாம்
தொட்டியிலே கடல் மீன்'
84


Page 46

பார்வை ༦༤་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
தரிசு நிலம். குப்பைகளும் கூழாங்கற்களும் குவிந்து கிடந்தன. 'உதவாத குப்பைகள் - கூழாங்கற்கள் என்று உலாத் தலுக்கு வந்த நாய் கண்களை மூடி உரக்கக் குரைத்தது.
படுத்துக் கிடந்த மாட்டுக்கு இது பிடிக்கவில்லை. 'குப்பைதானே பெறுமதியான எருவாகிறது - கூழாங் கல்லைத்தானே தெருவாகப் போடுகிறார்கள்’ என்றது மாடு.
‘நன்றாகப் பார். எதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது. மாடு தொடர்ந்தது:- ‘குப்பையை எருவாய்ப் பார்
கூழாங்கல்லைத் தெருவாய்ப் LT.
87

Page 47
‘வாழ்ந்தால் குயிலைப்போல் வாழவேண்டும்' என்றது பட்டாம்பூச்சி.
இன்னொரு பட்டாம்பூச்சி கேட்டது:-
ஏன்?
அதோ பார் . . . மா மரத்தில் பாடுகிறது குயில், மா மரத்துக்காகத்தான் அது பாடுகிறது. பின்பு மாங்கனியைச் சாப்பிடுகிறது. பறக்கிறது.
‘புரியவில்லையே.
யாருக்கும் கடமைப் படக்கூடாது. கொடுத்துப் பெறு. தங்கி வாழாதே.
‘ஓ! இப்போது புரிகிறது!’ என்றது இரண்டாவது பட்டாம் பூச்சி.
தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-
மரத்துக்கு ஒரு பாட்டு குயிலுக்கு ஒரு பழம்.
88


Page 48
உறுத்தல்
துரியனைப் பார்த்து நிலம் கத்தியது:-
'நீ செய்வது சரிதானா?
சூரியன் அதிர்ச்சியுற்றான்.
இதுவரை அவனை யாருமே இப்படிக் கேட்டதில்லை.
‘என்ன சொல்கிறாய்?
இருளை நீ மறைக்கலாம். அழகான விண்மீன்களை எப்படி நீ மறைக்கலாம்?
துரியன் திடுக்கிட்டான்.
ஒவ்வொரு ஒளியிலும் ஒவ்வொரு அழகு இருக்கிறது - உனக்குத் தெரியுமா?
ஞாயிறு முகிலுள் ஒளிந்தான்.
நிலத்தின் குரல் அவன் காதில் ஓங்கி ஒலித்தது.
வெளிச்சத்தை
மறைக்கலாமா
வெளிச்சம்'
9 O


Page 49

கறை
தராசில் பொருட்களை ஏற்றும் போதெல்லாம் தட்டு ஒரு பக்கம் சாய்ந்தது. படிக்கல் இருக்கும் தட்டு மேலேயே நின்றது. V
உருளைக் கிழங்குகளும் வெங்காயங்களும் இதை உற்றுக் கவனித்தன.
‘ஓ! இது கொடுமை!’ என்று கத்தியது உருளைக்கிழங்கு. வெளியே தலை நீட்டிக்கொண்டிருந்த வெங்காயமும் இது பச்சைத் திருட்டு' என்று வயிற்றெரிச்சலைக் கொட்டியது.
இரண்டும் குரலெழுப்பின:- 'தராசை
முதலில்
எடைபோடு!
http:Wwww.thamizham.net 93 Free E:Bö9șAniil- tooC/oa
GhanarcirearrarèraffiapBandir

Page 50


Page 51