கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமலம் 1996.04

Page 1
|-|- - |-|- - - - - -
 

|--------------|-|-|-|-|-|- ---------ı, --------
- ----- - - -----|-- ----|-!!!!!!!!!!!!!!!!!! -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------~--~~~~|-
,分|-
|------

Page 2
d t d தமிழ்த்தாய் வணக்கம் உலகம் யாவிலும் உரைமொழி ஆக்கியும் திலகமாய்க் குமரிநன் நாட்டிடை நின்றும்பூ எங்கும் மானிடம் ஏற்புறப் பண்பெனும் அங்கம் ஆகினாய் அன்னையுன் தாள்தலைக்கே
பலமொழி உலகிடைப் பயின்று GJGTDěj பலமுதற் பொருள்படு சொற்கள் நல்கியே நலமுறப் பிறமொழி நின்றாய் இயற்கையின் பலமுறப் பார்முதற் பிறந்து என்தமிழே.
குமரியில் முதலெனப் பிறந்தவன் வாயிடைப் புகுந்தனை முப்பிரிவிலக்கணம் கொண்டே உலகிடைப் பலவினம் தோன்றியப் பின்னும் அலகிலாப் புகழுறப் பரந்தனை தமிழே
மூண்டெழு புதுமையிற் பலமொழி பிறந்தும் தோற்றம் அழிவெனப் பலமொழி சிதையப் மூத்தும் காத்தும் முருகினிற்: சிறந்தும் போற்றும் என்தமிழே புவிதனில் நிலைத்தாய்.
வள்ளுவன் கம்பன் வான்புகழ் இளங்கோ தெள்ளிடு புலமைத் திருமகள் அவ்வை சங்கச் சான்றோர் சாற்றிடப் பெருகிய மங்காப் புகழே! என்தமிழே பணிந்தேன்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிசமென்ற சங்கே முழங்கு!
சுப்புரத்தினம்
 
 
 
 

ஆசிரியம் நண்பா r உலகிற்கே ஒர் உயர்தனி இனம் தமிழினம். உண்மைதான். பண்டைய வரலாற்றுச் சான்றுகள் யாவும். உலகிற்கே ஒரு தனியினமாகத் தான் தமிழினத்தைக் காட்டுகின்றன. -
யாதும் ஊரே யாவரும் கேளிர் - - அனைத்து நாட்டுணர்வை ஒருவனே தேவன் - - - - சமய ஒருமைப்பாட்டை சாதி இரண்டொழிய வேறில்லை - - சமத்துவ நீதியை
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்- அன்புப்பெருக்கை கனகவிசயன் முடித்தலை நெரித்த - - இனமான வீரத்தை கல்லிலே கலைவண்ணம் கண்ட- - நாகரீக முதிர்ச்சியை 姆
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு வழங்கி உயர்ந்த இனம் தமிழினம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி. ஆம் மனிதன் தோன்றி, விலங்கியல்பு மாறி, குடும்ப வாழ்வு உருவாகிற வரை அவன் நாகரீகப்பட்டது குறிஞ்சியிலே (மலையும மலை சார்ந்த இடமும்) காலப்போக்கிலே அவன் முல்லை - மருதம் நெய்தல் எனப் பரவினான். கல்லான மலைப் பிரதேசத்திலே மனிதன் முதலில் தோன்றினான். அந்த முதல் மனிதன் தமிழன். அவன் முல்லை - மருதம" நெய்தல் எனப் பரவிய காலத்தில் அவனிலிருந்து வெவ்வேறு இனங்கள் தோன்றின. ஆனால், அந்த முதல் மனிதனான தமிழன் இன்றும் தமிழனாக இருக்கின்றான் இந்த உண்மையைத் தான் சான்றோர்கள் கல்தோன்றி மணி தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த என்றார்கள் இது புரியாத சிலதுகள் மண் தோன்றுமுன் மனிதன் எப்படித் தோன்றுவான் சும்மா ஊரை ஏமாத்துறி கதை என்பார்கள்- போகட்டும்.
இப்படிப்பட்ட தமிழினம் பின்னாளில், சூழ்நிலையாலும், சூழ்வினை இன்மையாலும் தன்வலுவிழந்து தாழ்ந்தது. மீண்டும் தமிழினம் சீர்பெற்று பண்டை நிலைக்குயரக் கண ஆசைப்பட்டான் புரட்சிக் கவிஞன் சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
வெள்ளம்போல் தமிழர் சுட்டம் வீரம்கொள் கூட்டம் அன்னார் உள்ளத்தால் ஒருவரே மற்று உருவினால் பலராய்க் காண்பார்(அவரை) கள்ளத்தால் நெருங்கொனதே எனவையம் கலங்கக் கான அங்கலாய்த்தான். ஆனால் தன்மானம்-இனமானம் - மொழிப்பற்றுமனச்சாட்சி இவற்றைத் தமிழினம் மறந்து விட்ட்தாகத் தெரிகிறதே!
ஏ! தமிழா என் அன்பு நண்பா சிறிது சிந்தி- சிந்தித்துப்பர். ۔ ۔ پھر سے இனம் வளர்க்கப் புறப்பட்ட ஐயா பொன்னம்பலம் இராமநாதனில் இருந்து அண்ணன் தளபதி அமிர்தலிங்கன் வரை, தந்தை தனயன்கள் எல்லாருமே,

Page 3
2
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் நாள்வரை இனத்தை ஏமாற்றித் தாம் வாழ்ந்து விட்டுப் போனர்கள். இன்றோ யார் வந்தாலும் கால் தடவி - நான் யார்? இந்தியனா - தமிழனாசிங்களவனா? என்கிற உணர்வேயில்லாமல் ஒரு கூட்டம், தமிழீழவிடுதலை என்று தங்கள் பெயருக்கு முன்னால் முத்திரை குத்திக் கொண்டு, எந்த இடத்தில் குண்டு போட்டால் எவ்வளவு தமிழரைக் கூடக்கொல்லலாம் என சிங்களவனுக்குப் பிளான் போட்டுக் கொடுத்துக் கொண்டு கொழும்பில் குடி மிருக்குதுகளே. இதுகளுக்கெல்லாம் உணர்வில்லையா? தன்னைத்தானே தற்காலிகமாக வளர்த்துக் கொள்வதற்காக, தண்ணினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்களே கோடரிக் காம்புகள்.
தினமும் தமிழீழத்திலே குண்டுமாரி - பச்சைக்குழந்தைகள் பசிக் ’கொடுமையால் மயங்கிக்கிடக்கின்றனவே - உணவில்லை உறைவிடமில்லை
- பற்றைக்காடுகளுள் பாம்புகளோடு- நம் இளம் சகோதரிகள் வாழ்வின் வசந்தங்களை மறந்து வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் களத்தில் - இலக்கம் இலக்கமாக அகதிகள்- எங்களுடையவர்கள் வாழ்வின் கடைசி எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் எதிரியால்.
பல இலக்கம் ஆண்டுகளின் முன்னால் மனிதன் குமரிக்கண்ட த்தில் தோன்றினான். அந்த மனிதன் தமிழன். அந்த மனிதன் தோன்றிய குமரி மணர் கடல் கோளால் அழிந்தபோது, எஞ்சிய துாயகுமரி மணி தென்தமிழகமும் தமிழீழமும் தான். தென் தமிழகம் இன்று தமிழ்மண் என்று சொல்லமுடியாத இரத்தக் கலப்புகளால் சீரழிந்துகொண்டிருக்கிறது. உலகம் தோன்றிய நாள் முதலாய், மனிதன் தோன்றிய நாள் முதலாய், தமிழன் தடம் மாறாமல், நாகரீக வளர்ச்சியை பதித்த புனிதம் நிறைந்த ஒரேமணி. தமிழீழத்து யாழ்ப்பாண மண். நாகரீகம் வளர்த்தது - கலை வளர்த்தது - கல்வி வளர்த்தது யாழ்ப்பாண மண். இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. அந்த அரிய மண்ணை - மனித நாகர்த்தின் ஆதியிலிருந்து மனிதத் துகளால் நிறைந்த மண்ணை, உலக மனித வரலாற்றில் முதன் முறையாக கைவிட்டு வெளியே வந்திருக்கிறான் தமிழன். அந்தப் புனித பூமியிலே அந்நியன் கால் மிதித்திருக்கிறான். ஒவ்வொரு தமிழனும் நெஞ்சம் கொதித்தெழ வேண்டிய வரலாற்றுக் கட்டம்.
இந்நிலையிலும் யாரையோ எதிர்க்கிறோம் என்று மொத்த இனத்துக்கும் எதிாரக நிற்கிறார்களே. வீரபாண்டிய கட்டபொம்மன் சரியாகத்தான் சொன்னான் - - - - - - - - - இருக்கமுடியாது என்று.
ஏன் இந்நிலைக்குள்ளாயிற்றுத் தமிழினம் ? ஏன் சீரழிந்து நிற்கிறது ? எப்படித் தமிழனிடையே துரோகத்தனம் வளர்ந்து இனத்தை மூடியது ? என்ன காரணம்?
நண்பா! தமிழினம் சிந்திக்கத் தவறிவிட்டது. தற்சிந்தனையை இழந்துவிட்டது. எவனெவனோ கூறுவதை எற்றுக்கொள்ளப் பழகிக் குழு அடிப்படையிலே சிந்திக்கத் தலைப்பட்டு ஒற்றுமையை இழந்துவிட்டது.

3
காங்கிரசு, தமிழரசு, புலிப்படை புளட் என்று ஏதோ ஒன்றில் சார்ந்து நின்று ஆராய்ந்து பாராமல் - கண்மூடி பக்தி மயமாகி- ஆதரித்து நின்றாயே! குழுக்குழுவாக நின்று அடிபட்டு நின்றாயே! என்ன? ஏன்? எதற்காக? என்று கேட்கத் தவறினாயே! அழகு தமிழில் பேசி ஏமாற்றுகிறவன் யார்? உண்மையைச் சொல்கிறான் யார்? யார் சொன்னதைச் செய்கிறான் என்று சிந்திக்கத் தவறினாயே! இவையே காரணம். எம்மினம் இந்நிலைக்குள்ளானதற்கு.
நண்பா! நீ யாரோ நான் யாரோ - ஆனால் நாங்கள் தமிழர்கள். இனியும் எங்களுக்குள் நான் அந்தக் கட்சி, நீ இந்தக் கட்சி வேண்டாம் நண்பா சிந்திப்போம் - தெளிந்து சிந்திப்போம் சரி எங்கிருக்கிறதோ - உண்மை எங்கிருக்கிறதோ - அங்கு ஒத்துழைக்க - நாட்டுக்கு இன்று நாம் செய்யவேண்டியதென்ன - - - -நம் மக்களுக்கு எம்மால் எவ்வகையில் உதவலாம் என்று சிந்திப்போம்! எங்கள் சிந்தனையால் கள்ளத்தால் நெருங்கொணாத வீரம்கொள் கூட்டம் தமிழர் கூட்டம் என வையம் கலங்கக் காண தமிழீழம் நாளை பிறக்கும்! உலிற்கே ஒரு தனியினமாகத் தமிழினம் உயர்ந்து நிற்கும்- - சிந்தி
ஆசிரியர் - அழலாடி.
தமிழார்வம் மிக்க எண் இனிய தமிழன்பர்களே உங்கள் கையில் மனங்கமமும் கமலம், தமிழையும் தமிழனையும் துய்மைப்படுத்த, அனைத்துத் தமிழர்களும் மறைக்கப்பட்ட தமிழினத்தின் மாண்புகளை அறிந்து எழுச்சிகொள்ள, பணி
செய்வதே இலக்காகக் கொண்டுளது. இந்த நற்பணி சிறக்க தங்கள் நல்லாதரவு வேண்டும்.ஆகையால், ஆண்டு அறநிதியர்க(சந்தா) 2O/டிஎம் கொடுத்துதவுங்கள் கமலத்திற்கு. --நன்றி--கழே வங்கி விபரம்---
Kreissparkasse Hannover. Konto-1 170844037. BLZ-250 50299.
தங்கள் ஆதரவுக்கு நன்றி தமிழாலி தமிழுக்குள் தமிழனைத் தேடும் கமலத்தின் நற் பணிக்கு உரமூட்டுங்கள். ------------ பணிவன்புடன்--- (8tagoth-goe7. <9ураллург
தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடுவோம்.

Page 4
4.
வள்ளுவண் காட்டும் வாழ்க்கைத் தணைநலம்
ATSLLLSAAAAAAS TSSSLSA TSMLSSSM TMLSSSMA TMST eqeAkMLSST TeLSLSST TSSSLSLSST TSSSLSLSST TSSSLSLSLSAAAA
தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதிலே நாங்கள்
பெருமைப் படுகின்றோம். ஏனென்றால், எங்கள் மொழி உலகில் சிறந்த இலக்கண முறைமையும்-கலைவளமும்~ காவிய வளமும் கொண்டமொழி. இயற்கையிலிருந்து
தோன்றிய மொழி. தனித்தும், சொற்களில் கூடியும் ஒரே ஒசையையுடைய மொழி இனிமையும் எளிமையும் உடையது. வரிவடிவில் எவ்விடத்தும் உருவமாற்றம் கொள்ளாக மொழி. எதையும் , தன்னுள் அடக்கும் சொல்வளம் கொணர்ட மொழி. மாந்தவாழ்வின் உறுதிப் பொருள் நான்கின் இறுதிப் பொருளுரைத்த ஒரே மொழி தமிழ் தான். எண்பதால்.
ஆனால், ஒரு சிரிப்புக்கிடமான விடயம். மாபெரும் உண்மை. தமிழைப் பற்றித் தமிழன் உணர்ந்து கொணர்டது ஒரு சிறிது தான். ஒரு சிறிது உணர்ந்தே பெருமை கொள்ளின் முழுதணர்ந்தால் எத்துணை இன்பம்.
தமிழன் தமிழைப் பற்றி ஏன் முழுதுணரவில்லை. தமிழன்-தமிழைப் பற்றி அறிய~அறிந்து கொள்ள விடப்பட வில்லை. 2000 களுக்கு முன்பிருந்தே இரண்டுமூன்று வருடங் களுக்கு முன்புவரை தமிழைப் பேசியதால் தமிழன் ஆனவனும் ஆரியனைப் மணிந்து அவனாசைக்குத் தமிழைக் கெடுப்பவனும், தமிழின் பெயரால் வயிற கழுவுவதையே நோக் காகக் கொண்ட தமிழகத்த அறிஞர்களும், தமிழன் தமிழை அறிய விடாமல் வைத்துக்கொண்டார்கள். அவன் அறிந்தால் இவர்கள் வாழமுடியாதல்லவா ?
மூவேந்தர்களில் பிற்காலச்சோழர்கள் (கி.பி 9-12) தமிழகத்தில் முதன்மை பெற்று ஆண்டனர். இவர்கள் தாய தமிழர்கள் என்று கூறமுடியாது. இவர்கள் திருமண உறவுகளால் தமிழுக்குள் வந்த தமிழரானவர்கள். அதனால் இவர்கள் இலகுவாகத் தமிழைப் புறக்கணித்து, ஆரியத்தை முதன்மைப் படுத்தினார்கள்.இச்சோழர்களுடைய காலத்திலே, தமிழகத்திலே பல பல்கலைக்கழகங்கள் இருந்தன.அவற்ற்ைச் சோழர்களே மானியங்கள் வழங்கிப் பாதுகாத்து வந்தார்கள். அக்கலாசாலைகளில் பிராமணர்களே கல்வி மயிலலாம். என்று கட்டுப்பாடு இருந்தது. பல்லவர் காலத்தில் காஞ்சியிலும்

5
இத்தகைய கலாசாலைகள் இருந்தனவெனினும் பிராமணர் அல்லாதாரும் கல்வி கற்க அனுமதியிருந்தது. இப் பிற்காலச் சோழர்கள் பிராமண-வடமொழிக் கல்விக்கு மட்டுமே ஊக்க மளித்து வடவன் எதைச் செய்ய விரும்பினானோ அதைக் கச்சிதமாகச் செய்தார்கள். இதனால் தமிழன் தாழ்ந்நமோனான். இவ்விதம் அடிமைப்பட்டும்மோன தமிழன், 50 ஆண்டுகளுக்கு முன்பு af6) is நாற்றுக்குக் தொணர்ணுாற்றைந்து வீதம் கல்வியறிவு இல்லாதவர்களாய்ப் போனார்கள். கற்ற்றிவு பெற்றி ருந்த ஒரு சிலரால் ஆரியத்தை வெல்லமுடியாமல் போயிற்று. இதைப் பயன்படுத்தி இன்றுவரை மார்ப்பான் தமிழைத் தமிழன் அறியாமல் மறைத்தான். அதனால் தமிழன், தமிழ் என்ற வெறும் தமிழ் நெடுங்கணக்கையே அறிவான்.
இந்நிலையில் இருந்து மீளமுடியாமல், முனையாமல், ஆரியரின் பொய்யுரைகளின் வழியே*தமிழிலக்கியங்களையும்தமிழ் அறிவியலையும்-தமிழ்ப் புலமைபற்றியும் சிந்தித்த பொய்யாமொழி என்ற குறளில் கூடப் பிழை காணப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவிலே கிளர்ந்த எழுத்தாளர்களிடையே, வள்ளுவணும் பெணிகளை வஞ்சித்தான் என்றொரு கருத்த விவாதிக்கப்பட்டு பரவியது. அந்த விவாதத்திலே வள்ளுவண் கூறியது சரியா? பிழையா? என்ற விவாதிக்கப்பட்டதே தவிர, வள்ளுவன் கடறியதாக உரைக்கப்பட்ட உரைகள் சரியா? இப்படிப் பொருந்தாத கருத்துக்களை வள்ளுவண் பாடியிருப்பானா? என்ற சிந்திக்க வில்லை. இதுவும் அறிவுமடம் தான். --
இந்நிலை கண்டு பொறுக்கமுடியாமல், வாழ்க்கைத் துணைநல்ம், பெண்வழிச்சேறல் எணம் மெணர்கள் சம்பந்தப் பட்ட இரு அதிகாரங்களில் உள்ள சில குறள்களுக்கு, மறைக்கப்பட்ட பொருளை தமிழ்மணிமாடு இலக்கணம் வழுவாமல் வழங்க விரும்புகிறேன். படித்தத் தெளிக!
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்திலே 5வது குறள்தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. இந்தக் குறளுக்கு இன்றுவரை மொருளுரைத்த உரைஞர்கள், கற்புக்குப் பங்கம் வந்துவிடும் எண்பதால், தெய்வத்தையே தொழாமல் கணவனைத் தெய்வமாக வழிபடும் பெண், கற்பின் திறத்தால் மெய்யென்று சொன்னால் மழைபெய்யும். எனப் பொருள் உரைத்தனர். பெண்ணடிமைப் பணிமை முதன்மை 'யாகக் கொண்ட ஆரியச் சதியால் உரைக்கப்பட்ட இப்பொப்
யுரையைப் போற்றி ஆகா கற்பின் சிறப்பே சிறப்பு என்ற

Page 5
6
போற்றிய சிந்தனை மடம் கொணர்ட தமிழினமே!
அறம்-பொருள்-இன்பம்-வீடு எனும் உறுதிப்பொருளின் -இறுதிநிலையை-பயனை இனியொரு மூடிவிற்கிடமில்லை எனும்படி உரைத்த வள்ளுவமாப்புலவன், இப்படியொரு நடை முறைச் சாத்தியமற்ற குறளை எழுதியிருப்பானா ? என்று சிந்தித்தாயா?
தமிழ்ச் சாதியிலே இருக்கக்கூடிய மூன்று கோடிப் டிர்ைகளிலே, எந்தவொரு பெண்ணாலம் இவ்விதம் மழையை பெய்விக்கமுடியுமா? முடியாது. ஆகவே தமிழினத்திலேயே கற்புள்ள பெண்கள் இல்லையெண்பதா வள்ளுவனின் ypillés.
இந்த முடிவை மனதில் கொண்டு, தன் மனைவி கற்பு உள்ளவள் தானா? என்றறிய ஒவ்வொரு கணவனும் முற்பட்டால், தமிழினத்தின் குடும்பஅமைப்பே சிதறிப்போகாதா?
இப்படிப்பட்ட தவறான கருத்தைக் கரும் குறளை வள்ளுவன் பாடியிருப்பானா? சிந்திக்க வேணர்டாமா?
உரையாசிரியர்கள் சிந்திக்கமாட்டார்கள், படித்ததமிழன் ஏன் சிந்திக்கவில்லை. இக்குறளின் உணர்மை உரை என்ன? தெய்வந்தொழாளர்-தெய்வத்தைத் தொழமாட்டாளர் தொழுதல்= தன்னை முற்றாக இன்னோரிடத்தில், இன்னொன்றில் முற்றாக இழந்து நிற்கும் நிலை. அடிமை நிலை cersbro தொழும்பண் எனப்படுவான். கொழுநன்-கணவண் ஆதரித்துக் அனைத்துத்தரங்கி நிற்பவன். அதணர்மையெனும் இயல்பான வலிமையின் காரணமாக பற்றக் கோடாக நிற்பவன். பெண்மை தனித்து நிற்கும் போது மெல்லியல்புடையதாகவும், ஆனைப் பற்றிநிற்கும்போது ஆணைவிட வலிமையுடையதாகவும் மாறாம் தன்மையத கொடி பற்றிப் படர்வதற்கு நாட்டப்படும் கொம்பு கொழுகொம்பு எனப்படும். தனித்த நிற்கும்போது கொடி பலமற்றதாகவும், கொம்பில் படர்ந்தபின் அக்கொடியைப் பற்றி ஏறினால், கொடி தாங்கும், கொம்டி தாங்காமல் வளையும், குறிஞ்சியில் தலைமகன் கொழுநன் என்றும் தலைமகள் கொடிச்சி என்றும் கஉறப்படுவதை இங்கு நோக்குக தொழுதெழுவானர்-தொழு என்ற சொல்லானது வணங்கு என்பதை மட்டுமல்லாமல், கூடிநிற்றல்-இணைந்துநிற்றல்இல்வாழ்க்கை என்ற பொருள்களையும் தருகிறது. எனவே, தொழுதெழுவாள்-தொழுது+எழுவாள், எழுவாள் என்பது முன் னேறுவாளர்-உயர்வடைவாள் என்பதாகும்.தயில் விட்டெழுதல்

7
அல்ல. அதாவது, தண்கொழுநனுடன் இல்வாழ்வில் இணைந்து இல்வாழ்க்கைக்கான காரியங்களில் ஒன்றுபட்டு உழைத்து வாழ்வில் உயர்வடைவாள் ( காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்த) எழுதல்- உயர்வடைகல். எழுவாளர்-உயர்வடைவாள். வள்ளுவர் வேறோரிடத்திலே -தெய்வத்தால் ஆகாது. எனினும் முயற்சிகன் மெய் வருந்தக் கடலி தரும் என்ற கூறியவாறு, தெய்வத்தால் ஆகப்போவதில்லை. ஆனால் உடலுழைப்புக்கு கடலி கிடைக்கும். எனவே, உழைப்பால் உயர்வு பெற்ற~ நிறைவும்-அமைதியும்-இன்பமும் பெற்று.கொழுநனும் இன்புற வாழுவாள். இத்தகையவள் பெய்யெனப் பொய்யும் மழை~மெய் என்று வேண்டியவுடன் பெய்கின்ற மழையைப் போன்றவள். நீண்ட நாட்களாக பயிர்கள் நீரின்றி வாடி வான்மழைபார்த்து நிற்கின்றன. நிலம் களரோடி~கானல் தெறித்தர-வரமை மிகுந்து-உயிரினங்கள் துன்புற்று நாடழிகின்ற நிலையில் மழையே ஒருதடவை மெய் என்று கேட்டவுடன் மழை பெய்யுமானால் எத்துணை இண்மம். அவ்விதம் கேட்ட்வுடன் பொப்கின்ற மழையைப் போன்றவள். முயற்சி திருவினை ஆக்கும் ஆதலால், இல்லறம் சிறக்கப் பார்ப்பாரச் சுப்பிரமணியனைப் போல்-~காணிநிலம் வேண்டும்- தானில் அழகிய மாடம் வேணர்டும்-ாத்துப் பண்னிரண்டு தென்னைமரம் வேண்டும்-எல்லாவற்றையும் அநபவிக்க ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பராசக்தியிடம் தொழுது நிற்காமல்கொணர்டன்னுடன் இணைந்து நின்று இல்லறம் சிறக்கும்படி வாழ்பவள் பெய்யென்று கேட்டவுடன் பெய்யும் மழையைப் போன்று இன்பம் பயப்பவள். எண்கே வள்ளுவன்தந்த உணர்மைப்பொருளாகும். அறிவுபூர்வமாகவும் நிகழக்கூடிய தண்மையாலும் இக்கருத்தே குறள் போன்ற நல்லேட்டின் கருத்தாகும். வள்ளுவன் பாயிரத்தில் கடவுள் வாழ்த்துக்கடுத்து வான் சிறப்பெண்ணும் அதிகாரம் மூலம் மழையே உயர்வானது எனக் காட்டியிரும் பதையும் நாமிங்கு நோக்குதல் வேண்டும்.
இவ்வுலக வாழ்வின் இன்பமும் இயக்கமும் இல்லறத்தின் கண் இருப்பதால், இல்லறத்தை நெறிப்படுத்துதலை பென்னே புரிவதால் நற்குணங்கள் நிரம்பிய மனைமாட்சியுடைய பெண் மழைக் கொப்பானவள் என்ற வள்ளுவனின் கருத்து மறுப்பதற்கில்லை.

Page 6
இதே அதிகாரத்தில் 4 வது குறள்
பென்னிற் பெருத்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண்டாகப் பெறின். ஒருத்தி கற்புத் தவறாமல் வாழுவாளாயின் அவளை விடச் சிறந்த பொருள் வேறொன்றில்லை என்று பொருள் கூறி வருகிறார்கள் இதன்படி பார்த்தால் கற்புடைய பெண்கள் அரிது என்பது போலவும் பென் என்றாலே சபலமுடையது போலவும் உரைத்திருக்கிறார்கள் இவ்விடத்திலே, உங்களின் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வருகின்றேன். அநேகமாகக் குறட்பாக்கள் ஆணைநோக்கிக் கூறப் படுவது போல் அமைந்துள்ளதை அவதானியுங்கள். அதன்படி பொருள் கொன்டால், வள்ளுவன் ஒரு கணவனை நோக்கிக் கூறுகின்றான்.
பெண்ணிற் பெருத்தக்க யாவுள-இவ்வுலகச் செல்வங்களில் பெண்ணைப்போல் உயர்ந்த பொருளிருக்கிறதா? யாவுள என்று
கேள்வி எழுப்பி, aī6) 6) இல்லையெனத் தொகையில் தந்திருக்கிறார். (பென்னிற் பெரிது Kus T (til 36 58uLD பெண்ணிடம் கேட்டிருக்க மாட்டார்:) எப்போது ? (உன்னிடத்தில்) கற்பு என்னும் fairgood உண்டாகப்பெறின் அதாவது, கணவனிடத்தில் கற்பு என்று சொல்லப்படுகின்ற.. தின்ைமை. சபலமின்மை நிறைந்து, பிறர்மனை விழையாமை. பரத்தையர்
ஒழுக்கம் இல்லையேல், அந்த உன் நற்குனங்களின் பாற்பட்டு, மனைவி ஆதரவும் பற்றும் கொண்டு, மனவேறுபாடின்றி, ஒன்றிநின்று இல்லறம் சிறக்கப் பாடுபடுவாள். இவ்விடத்திலே பெண்ணின் சிறப்பு வெளிப்பட்டு இல்லறம் சிறக்கும். கணவனிடம் கற்பென்னும் திண்மை இன்றேல், பெண் கற்பைப்போற்றி வாழ்ந்தும் இல்லறம் நரகமாகி, அழிவில் சென்று முடியும்.
இதுவே, தமிழ்ப்பெருங்காப்பியம் சிலம்பு கூறும். பிறப்பாலும் நற்குணங்களாலும் உயர்ந்தவளாகக் கண்ணகி இருந்தும். கோவலனிடத்தே கற்பென்னும் திண்மை அற்றுப் போனதால், அவர்களுடைய உயரிய இல்லறம் அழிந்து கோவலனும் கொலைப்பட்டான். கண்ணகியுடன் இணைந்த வாழ்வில் பெண்மை எனும் பெருஞ்செல்வத்தை அவனடைந்தும் வாழ்வின் பயனை அடையமுடியாமற் போயிற்று. எனவே, இக்குறள் தரும் பொருள். கணவனிடத்திலே கற்பெனப்படும் மனந்திறம்பாமை இருக்குமானால், மனைவியானவள் உலகச் செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்த பொருளாகி நிற்பாள் என்பதாகும். “ சங்ககால வாழ்வில், மனைவி

இல்லுறைபவளாகவும் கணவன் பொருள்வயிற் பிரிந்தும்-பணிவழிப் பிரிந்தும் ‘புலம்பெயர்வதாலும் கற்பின் கடைப்பிடிப்பு கணவனிடத்தே மிகுந்து காணப்படுகின்றது. அகத்தில் மருதத்தினையில்-ஒளடலில் தலைமகனின் பரத்தையர் ஒழுக்கம் சிறப்பாகச் சொல்லப்படுதையும் இதனுடன் ஒப்பு நோக்கவேண்டும்.
இவ்வுயர் பொருளை மறைத்து, வடவரின் பதிபக்தி என்னும் புரானப் பண்பை அடிப்படையாகக் கொண்டு கற்பென்றால் பெண் ஆணிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதே என்ற கருத்தை இன்று வரை ஏற்றுககொண்டிருந்தது எத்துனை மடமை.
இதே அதிகாரத்தில் 9 வது குறளையும் சிறிது நோக்கு வோம். புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீ டு நடை: இக்குறளுக்கு கற்பின் வழிப்பட்டு பிற ஆடவரைக் கண்ணெடுத்தும் பாராமல் வாழ்கின்ற மனைவியை இல்லாதவர்கள் பழித்துரை ப்பவர்களின் முன்னால் ஏறுபோல் நிமிர்ந்து நடந்து செல்ல முடியாது. என்று இதுவரை பொருள் கூறப்பட்டு வந்துள்ளது புகழ் எனப்படுவது யாது ? உலகோரால் போற்றப்படுவது. கணவனும் மனைவியும் ஈருடல் ஒருயிராகி ஒன்றுபட்டு இன்புற்று வாழ்தல் புகழ்புரிதல் என்று சொல்வது பொருந்தாது. ஏனெனில் வள்ளுவன் வேறோரிடத்தில், தோன்றிற் புகழொடு தோன்றுக1 என்று. புகழின் பொருள் விளங்கக் கூறியள்ளான். அதுமட்டு மல்லாமல் கற்பு என்ற சொல் பிற ஆடவரை பெண்கள் நயவாமை என்ற பெரிருள்பட உரைக்கப்பட்டுள்ளமை, பெண்கள் காமத்தால்" விரகதாபத்தால் அலைபவர்கள் என்பதுபோல் ஒரு பக்கம் சார்ந்து நிற்கிறது. அது தவறு. கற்பெனப்படுவது இரு பாலார்க்கும் பொது. வரைவின் மகளிர் அதிகாரத்தில், நிறை நெஞ்சம் இல்லார் என்று பரத்தையர் 6 geisó(p65)Lu salaj60)65T வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து. கற்பெனும் திண்மையில்லாதவன் அவன் என்றாகிறது. எனவே, இரண்டு வேறிடங்களில் கற்பு என்னும் சொல்லை ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் கூறியதிலிருந்து. கற்பு இருப்ாலாருக்கும் பொது என்று வள்ளுவன் pņ6 தந்திருக்கிறான். ஆனால் உரைகாரர் பெண்ணனுக்கு மட்டுமே &5ibւ என உரைத்துப் பென்மையை இழிவுபடுத்தியுள்ளனர். உன்மைப் பொருள் என்ன?
எழுசீ ர்களினுள் அடக்கப்பட்ட குறள் அனுவைத்துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள்" எனப் போற்றப்படுவதால்

Page 7
10
குறளுக்கு மேலெழுந்த வாரியாகப் பொருள் காணாமல் ஆழவுன்னிப் பொருள் காணவேண்டும். 德 ஒரு பெண் கற்புத்தவறாதவளாக இருக்கின்றாள். ஆனால் அது உண்மையென யாரால் நிறுவமுடியும். அது &la Jigsbeolu LD615 ளவில் மட்டும்தான் உணரப்படும். ஏனெனில் பட்டினத்தார் கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையகற்றி அப்புறம் சென்று. என்று பாடுகிறாரே, ஆக உடலுறு காமம் சம்பந்தப்பட்டு புகழ் என்பது பேசப்பட வேண்டியதில்லை. படிதாண்டாப் பத்தினி, மாமன் மாமியைக் கன்னேபோல் காப்பவள் செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருபப்வள், இக்காரியங் களாவது இவளுக்குப் புகழ் சேர்க்குமா ? இல்லை. விருந்தோம்பலில் சிறந்தவள் எல்லாம, சிறந்த பெண்நலம் கனிந்தவள் என்றும் கூறமுடியாது. அல்லாமலும் கனவனின் தேட்டத்தில் விருந்தோம்பி, பரதேசிகளின் பசி தீ ர்ப்பதால் இவள் புகழடைவாள் என்றும் சொல்லமுடியாது. நான்கு சுவர்களுக்குள் நடந்தவை பற்றிக் கணவன் சந்திக்குச் சந்தி நின்று மனைவியை உயர்த்திப் பேசிப் புகழ் சேர்ப்பானா ? இல்லை. எனவே, அவ்வழியும் புகழ்சேர இடமில்லை. அல்லாமலும் கனவனறியாமல் களவொழுக்கமுடையவளாக ஒரு மனைவி இருக்க முடியும். களவொழுக்கம் என்பது இன்பம் பொருள் இருவகைத்தும் கற்புத் தவறாத பெண் மழையைப் பெய்விப்பாள் என்றாலும் பரவாயில்லை. அதுவும் முடியாது. எனவே உலகம் புகழும் காரிய த்தைச் செய்திருக்கவேண்டும் இங்கே உலகம் ஆகுபெயராக
மக்களினைக் குறிக்கும், எனவே 956 rfumb වart(8/Ifr(Gub குமுகாயத்தோடும் தொடர்புடையதாக இருக்கும். இதிலிருந்து உலகம் பயன்பெறும் சமுகக்கடமை, பொதுவாழ்வில் பங்கு
கொண்டு சிறந்த சேவையாற்றினாலே புகழடையமுடியும் என்று தெரிகிறது. அப்படிப் புகழடைந்த பெண்ணின் கணவன் சபைநடுவே ஏறுபோல் இறுமாந்து நடந்து செல்லமுடியும்.
தன் இல்லக்கடமைகளோடு உலகோர் போற்றும் உயர்ந்த சமுகத்தொண்டினை செய்து புகழ் பெற்ற LD6)6O1660)u ?-63)Lu கணவன் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நடக்கமுடியும். அவனது சிறப்புக்கு அளவில்லை என்று கூறுவதன் முலம், கணவனுக்கு வள்ளுவன் கூறும் மறைபொருள், 必
பெண் சாதுரியம் மிக்கவள். செயற்றிறம் படைத்தவள். அவளுடைய செயற்றிறன் உலகுக்குப் பயன்படும்படி சுதந்திரமாகச் செயலாற்ற அவளை அனுமதிக்கவேண்டும். வி ட்டுக்குள் பூட்டி

வைக்காதே என்பதாகும். உன் மனைவியை அடிமைப்படுத்தாதே, அவள் சுதந்திரமாக வாழ்ந்து செயலாற்றினால் நீ பெருமையுடன் தலைநிமிர்ந்து செல்லமுடியும், அவள் பொதுவாழ்வில் ஈடுபட்டு அரிய பெரிய பணிகளை ஆற்றி உனக்குப் புகழ் சேர்ப்பாள். என்பதாகும்.
வள்ளுவனடைய காலம் ஆரியப் பெண்ணடிமை, சாதி முறை, ஆபாசப்புராணங்கள் தமிழியத்தை முடத்தொடங்கியிருந்த காலம். அதுவரை தமிழகத்தில் பெண்ணுரிமை சிறந்திருந்தது. பென்கள் சமுகத்தில் தலைமை பெற்றிருந்தனர். ஆரிய முடலில் அகப்பட்டவர்களுக்கே இக்குறள் பாடப்பட்டிருக்க வேண்டும்.
இதே அதிகாரத்தின் 7வது குறள். சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை மகளின் கற்பைச் சிறையிட்டும் காக்க முடியாது. அவர்கள் தங்கள் கற்பைத் தாங்களே காப்பாற்றினால் மட்டுமே கற்புக் காக்கப்படும். என்று பொருளுரைத்திருக்கிறார்களே இதன்படி பார்த்தால், பெண்கள் அரும்பாடுபட்டுக் கற்பைக் காக்க வேண்டிய சபலப் பிறவிகள் என்று ஆற்றாமையுடன பாடுவது போலல்லவா, தொனிக்கிறது. இந்தக் கருத்தை இன்று வரை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமே வெட்கமாயில்லையா? உண்மைப்பொருளைக் காண்போம்.
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்.-ஒரு பெண்ணின் கற்பைக் காப்பதற்காக சிறையில் பூட்டி வைத்துப் பயன் என்ன? ஒன்றுமில்லை. ஏன்? பிறஅடவர் அவளை நயவாவண்ணம் சிறையிட்டு
காக்கக்படுகின்ற பென்னை சிறைக்காவலர்கள் தமக்குக் கிடைத்திருக்கிற தனிமையைப் பயன்படுத்தி அவளின் 6ib60LJ35 கெடுக்கலாம். ஆகையினால் சிறையிலிட்டும் காப்பாற்ற
முடியாது. அதுதான் தினத்தாள்களில் பார்க்கிறோமே, நீ தி கேட்டு காவல் நிலையம் சென்ற பெண்கள் காவலர்களால் கற்பழிக்கப் படுகின்ற செய்திகளை. எனவே, காவலர்கள் காவலைத் தாங்களே கடக்கிறார்கள். எனவே சிறைக் காப்பில் பயனில்லை. அதற்கு ஏற்றாற்போல் வடவர் தங்களுடைய எட்டுத் திருமண முறைகளிலே பைசாசம், இராக்கதம் என்று இரண்டு முறைகளை தர்மமாக்கி வைத்திருக்கிறார்கள். இதன்படி பெண்னைப் பலவந்தமாகப் புணர்ந்து அவளைத் திருமணம் செய்யலாம். இவற்றையெல்லாம் கண்டுதான் வள்ளுவன் மேற்படி கற்பிலக்கணத்தை வகுத்தான்
மகளிர் -மகளிருடைய, நிறை காக்கும் காப்பே தலை

Page 8
12
தலையாய சிறந்த காப்பு ஆடவர்கள் மகளின் கற்பெனும் நிறையை அழிக்காமல் தாங்கள் தாங்களைக் காத்தலே. அதாவது பிறர்மனை நயவாமை என்ற உயர்பண்பை ஆடவர் கடைப்பிடித்தால் மட்டுமே மகளிரின் நிறை காப்பாற்றப்படும்.
ஆகவே, இக்குறளின் உறுபொருள்-மகளிருடைய நிறையை அழிக்காது அதைக் காக்கின்ற உள்ளக் காப்பை, உறுதியை, மனத்தின்மையை ஆடவர் கொண்டிருந்தால் மட்டுமே அல்லாமல், சிறையிலடைத்து அவரின் கற்பைக் காப்பாற்ற முடியாது ஏனென்றால், சிறையிலும் காவலில்லை.
இதை வலியுறுத்துமாறு வரைவின் மகளிர் அதிகாரத்தில் நிறைநெஞ்சம் இல்லார் என ஆடவரைச் சுட்டிப் பேசப்பட்டுள்ளது.
குறள் 917-நிறைநெஞ்சம் இல்லார் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்.
இந்த இனியபொருளை விட்டு விட்ட பார்ப்பாரப் பரிமேலழகன், ஏதோ படாத பாடுபட்டுக் காத்தாலும், தமிழச்சி கற்புடைமையைப் பேணமாட்டாள் எனப்பொருளுரைத்துள்ளான்.
வாழ்க்கைத்துணைநலம் என்னும் அதிகாரத்தில் இதுவரை முறைக்கப்பட்டதும், வள்ளுவன் கூறிய உண்மை நீ கியையும், ഭ!,ങ്ങ് பென்ை இருபாலாரிடத்தும் D6D6OTLDrafu quid 5E5ib1 qib வேன்டுமென்று அவர் கூறிய கருத்துக்களை இலக்கண தமிழற வழுவின்றி எடுத்துக் காட்டியிருக்கின்றேன் என நம்புகிறேன்.
அடுத்துப் பெண்வழிச்சேறல் என்கிற அதிகாரத்தில் பெண்கள் தாழ்த்தப்பட்டுள்ளார்களா? எனப் பொருள் காண்போம். தமிழறத்தின் முறைப்படி வள்ளுவர் வாழ்க்கைத் துணைநலத்தை அறத்துப்பாலிலே சொல்லிவிட்டு, பெண்வழிச்சேறலை பொருட்பாலில் கூறியிருப்பதும், அடுத்து வரைவின் மகளிரைக் கூறியிருப்பதும், ஓர் உண்மையை எமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதாவது வாழ்க்கைத் துணைநலம் கூறும் பெண்ணனும்-பெண்வழிச்சேறல் கூறும் பென்னும் வேறு வேறானவர்கள்.
வாழ்க்கைத்துணைநலம் கூறுவது பண்பின்வழிப்பட்ட,
பெய்யெனப் பெய்கின்ற மழையைப் போன்ற நற்பெண்டிரை, பெண்வழிச் சேறல் கூறுவது வரைவின் மகளிரை அல்லவென்றாலும் இல்லறத்தின் பண்புகளுக்கு வெளியே பொருள்வழிப் பட்டும், காம வழிப்பட்டும் வாழ்கின்ற சிறுத்தக்க பெண்களையாகும்

13
எல்லாச் சமுகத்திலும், எல்லாக் காலத்திலும் பென்மை யைமறந்து காமம் தலைப்ப்ட்டு அலையும் பெண்களையும், உடல் அழகைப் பயன்படுத்தி பொருள் தேட அலையும் பெண்களையும், கணவனிடம் ஒட்டி உறவாடாமல் வெளியே அலையும் பெண் களையும் நாம் கானன்கின்றோம். இத்தகைய பென்டிரைத்தான் வள்ளுவன் பென்வழிச் சேறலில் பாடியுள்ளான்.
சட்டமும் காவலும் நாட்டில் இருக்கிறது என்றால், குற்ற வாளிகளைத் தண்டித்து ஒழுங்கை நிலைநாட்ட என்பதால், அந்த நாடு முழுவதும் குற்றவாளிகளும் ஒழக்கங் கெட்டவர்களும் நிறைந் திருக்கிறார்கள் என்பதல்லக் கருத்து. அதேபோலத்தான், பெண் வழிச்சேறல் அதிகாரமும். எனவே இவ்வதிகாரத்தின் முலம் வள்ளு வனும் பெண்களை வஞ்சித்தான் என்று குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. பெண்ணடிமைச் சிந்தனையாளர்கள் மொத்தப் பென் குலத்தையும் சுட்டியது போல் உரை எழுதிவிட்டார்கள் முன்னரும் கூறினேன். வள்ளுவரின் காலம் வடவாரியச் சூது நீ திகள் நன்றாகவே திராவிடத்துள் ஊடுருவிவிட்ட காலம். அதனால் பலதாரமனம், பொருந்தாமனம், வலிந்து 6_6T கொள்ளல் என்பன ஏற்கப்பட்டிருந்த காலம். இவை சமுகக் கேட்டிற்கு வழி வகுக்கும் என்பதால் அவற்றைக் கண்டிக்கப் புகுந்தார். வள்ளுவர்.
இல்லறமல்லது நல்லறமன்று-அவ்வை KOஅறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரில் நோன்மையுடைத்து
N -வள்ளுவன். இந்த இனிய இல்லறத்தின் இருபாதிகள் கணவனும் மனைவியும். ஆதலால் கணவனும் மனைவியும் அன்புற்று இன்புற்று இருப்பதை வள்ளுவர் கண்டித்து இருக்கமாட்டார். அப்படிக் கண்டிப்பின் வள்ளுவம் முரண்படக் கூறிய குற்றமுடையதாகிவிடும். எனவே, பெண்வழிச்சேறலை இனிய இல்லாளுடன் தொடர்புபடுத்தக்கூடாது. பார்ப்பாரச் சுப்பிரமணியன் பாடியதைப் போல
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்தும் நின் மேனிதனை விடலின்றி இட்டுப் பலமுத்தம் இட்டுப் பல முத்தம் இட்டு- விடாமல் சேருகிற பெண்பித்தர்களைப் பார்த்துத் தான் வள்ளுவன் இந்த அதிகாரத்தையே பாடினான். p இதைய்ே அதிகார முதற்குறளிலேயே-மனைவிழைவா என்று கூறினான்.

Page 9
4.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. மனைவியினிடத்தே தீராக் காமம் கொண்டு இல்லிற் கிடப்பவன் சிறப்படையமாட்டான். தனக்குரிய கடமைகளைச் செய்ய விரும்புகின்றவன் பெண்ணின்பமே பெரிதென எண்ணமாட்டான்.
இாண்டாவது குறள்
பேனாது பெண் விழைவான் ஆக்கம்பெரியதோர் நானாக நானும் தரும். ஊடலும் கூடலுமாகிய இனிய காதல் வழி நில்லாமல், தீராத காமவழி நின்றானாயின் அவனுடைய ஆக்கம் அதற்குத் துணை நிற்பதால், அவன் பொருள்தேடவேண்டிய அவசியமின்மை காரணமாகத் தன் ஆண்மைக்குரிய புறக்கடமைகளை ஒழித்து, இல்லத்தினுள் உறைவதால் மற்றவர்களுடைய கேலிப் பேச்சுக்கு ஆளாகின்றான். அவனுடைய செல்வம் அவனுக்கு நானத்தை உண்டாக்குகிறது. இந்தப் பொருளிருக்க பரிமேலழகன் சுற்றி வளைத்து மூக்கைப்பிடிக்கிற கருத்தைத் தேடி அதையும் பென்களின் மேல் சுமத்தி உரை செய்துள்ளான்.
இவ்விரு குறள்களும் ஆடவரின் தவறைத் தெளிவாக வள்ளுவன் கூறியிருப்ப-மனையாளின் வசமாகி தன் ஆக்கம் இல் வாழ்வானின் கடமைகளுக்கு உதவாமல் அவளே அநுபவித்த லால் நாணம் தரும். எனப் பொருந்தாப் பொருளுரைத்துள்ளான்
3-இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நானும் தரும். ந-மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை விறெங்தல் இன்று. இந்தக் குறள்களிலே வருகின்ற, இல்லாள்கண் தாழ்ந்தமனையாளை அஞ்சும் என்ற சொற்றொடர்கள் மனைவிக்கு அஞ்சாதே என்ற அறிவுரையின் எதிரொலப்பு அல்ல.
கணவன் மனைவியின் அன்புக்கு அடங்கியே ஆகவேண்டும். மனைமாட்சி இருவரிடத்தும் இருப்பதால், அச்சமும் அடக்கலும் அங்கில்லை. இயல்பில் தவறிய குடும்ப அமைப்பொன்றிலேயே இந்நிலை ஏற்படுகின்றது.
நாங்கள் எங்கள் கண் முன்னால் காண்கிறோமே, பெண்மை இல்லாத பெண்ணுடனும், அடங்காப்பிடாரியுடனும் வாழ்க்கையில் இணைந்துவிட்டவன், பல காரணங்களை முன்னிட்டும் அவளிட்ம் அடங்கிப் போவதை. அவ்வைக் கிழவியே சற்றேனும் ஏறுமாறாக
தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடுவோம்

s
நடந்தால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று கூறுமளவுக்கு ஒரு நல்ல மனிதன் மனைவியிடம் அடங்கிப்போனான்.
பலதார மணம் புரிந்த ஒருவன், தன் தளர்ந்த வயதில் இளங்குமரியிடம் பெறுகின்ற இன்பத்துக்காக அடங்கிப் போகலாம். இவை, சமூகப்பொது நடையல்ல. ஆகவே, இங்கே பெண்களைப் பழித்துரைக்கவில்லை. அதிகாரம் முழுமையும் இத் தன்மையில் தான் பொருள் கொண்டுள்ளது. r
7வது ළ5[Ø6ffශිඛර பெண்னேவல் செய்தொழுகும் ஆண்மையிலும் நாணுடைப் பெண்மை சிறந்தது என்றவிடத்து நாணுடைப் பெண்மை என்று பெண்களை பழித்துரைத்ததாகக் கொள்ளமுடியாது. அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் என்றான் சுப்பிரமணியன். அவன் சொன்னது வடவாரியப் பார்ப்பாரப் பண்படிப்படையில். தமிழிச்சி சமூகத்தில் பழி கண்ட ஞ்சுவாள், கணவனிடத்தில் ஊடலின்போது நாணுவாள் பெண் மையின் சிறப்பே நானத்தில் தானுள்ளது. பல்லாண்டு கூடி வாழ்ந்த பின்னும் மனைவி தன் கணவனிடம் கூடலின் போது நானவே செய்கின்றாள். இந்த நாணம் தன்னை மறந்தநிலையில் தன்னை கணவனிடம் ஒப்படைக்கிறது. ஆனால் ஆணுக்கு இந்த நானம் இல்லை: காரணம் எந்த இடத்திலும், தன்னை இழக்காமல் செயற்படவேண்டியது ஆண்மை. எனெனில் இன்ப துன்பங்களில் புறக்கடமைகளைச் செய்யவேண்டியவன் அவனே. இந்த ஒப்பீட்டில் தான் நாணுடைப் பெண்மை என்றார்.
அதிகார இறுதியிலே, வள்ளுவர் கூறியுள்ள குறள் மேற்சொன்ன கருத்துக்கள் சரியென்பதை நிறுவுகின்றது.
எண்சேர்ந்த நெஞ்சத்து இடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதமை இல். இந்தக்குறளில் வரும் பெண்சேர்ந்தாம் என்ற சொற்றொடருக்கு மனைவியைச் சேர்தல் என்று பொருளுரைக்கப்பட்டது தவறு. பெண் என்றால், வரைவின்மகளிர், ஆசைநாயகி, நாட்டியமகளிர் எல்லாரும் அடங்குவர். ஆனால் மனையாளைத் தாழ்த்தும் நோக்கில், மனையாள் என்று பொருள் தந்ததுமல்லாமல், இந்தக் குறளை மன்னர் மேல் சார்த்தி வேந்தர்க்கு என்றும் சேர்த்துள்ளார். நாட்டிலுள்ள பல வெள்ளம் மக்களை விட்டு ஒரே ஒரு மன்னனுக்கா வள்ளுவன் குறளைப்பாடினான் ஆரியச் சதி ஆரம்பமானதே மன்னர்களில் இருந்து தான் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி அல்லவா பென்சேர்தல்- மனையாளைச் சேர்தல் என்று கொண்டால், வள்ளுவன் சங்கத்தமிழ் தரும்

Page 10
6
காதலறத்துக்கு ԼԸIIց)IT&5 கருத்துரைத்ததாக அமையும். அகத்திலே, பாலைத் திணையிலே தலைமகன் தலைமகளைப் பிரிவதில் படும் துயர் இனிய இலக்கிய வடிவம். ஆகவே மனையாளைச் சேர்தல் பெண் சேர்தல் என்ற சொல்லுக்குள் அடங்காது ஆகவே, இக் குறளிலே பென்சேர்தல் என்ற சொல் இல்லறத்தின் கண் நிற்கும் இனிய மகளிரைக் குறிக்கவில்லை. ஆதலால், பெண்கள் இங்கே தாழ்த்தப்படவில்லை, வாய்த்த இடங்களில் எல்லாம் பெண்ணைத் தாழ்த்தும் வடவாரியப் பரிமேலழகனின் பொருந்தாப் பொய்யுரைகளேயாகும்.
பழந்தமிழகத்தில் பரத்தையர் ஒழுக்கம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. எனினும் பண்பின் தலைப்பட்டோர் பரத்தையர் ஒழுக்கத்தைப் பின்பற்றமாட்டார்கள். இத்தொடர்பில் கூடக்குறள் கூறியிருக்கலாம். ஏனெனில், அதிகாரமுடிவில் பெண்’ சேர்தலைக் கூறிவிட்டு அடுத்த அதிகாரமாக வரைவின் மகளிர் கூறப்படு கிறது. இதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். அதாவது, பெண்வழிச் சேறலில் வரைவின் மகளிர் முதன்மை பெறுகிறார்கள் என்பதே அதிகார முறைமை காட்டும் பொருள். ஆகையினால், சகோதரிகள் தவறான உ ரைகளைப்படித்து தமிழ் மறை குறளில் குறை காணவேண்டாம் என்று வேண்டுகிறேன். ( gi)6i படிக்குடம்போது புதிய கருத்துக் களைக் காணர்பவர்களுபD -கருத்துக்களில் ஐயுறுபவர்களுடம் கமலத்துடன் பேசங்கள்)
தாலாட்டு ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ! கட்டான முத்தல்லவோ! கட்டிக்கரும்பல்லவோ!~~குழந்தையைத் தாங்க வைப்பதற்குத் தாய் பாடுகிறார். இதை நாங்கள் தாலாட்டு என்கிறோம். இந்நாளில் விகம் விதமான தொட்டில்கள், இயந்திரத் தொட்டில்கள் வந்துவிட்டன. அவை தாமாகவும் ஆடும், தாய் தன் வேலைகளைக் கவனித்துக் கொணர்டே ஆட்டும் முறையிலும் தொட்டில்கள் இருக்கின்றன.
முன்னாளில் வசதி படைத்தோர் அழகிய தொட்டில் களைச் செய்து தாங்கவிட்டும், ஏனையோர் தனியில் ஏனை கட்டியும் குழந்தையைப் படுக்கவைத்து மாடிக்கொணர்டு ஆட்டுவார்கள் ک
தால் -தொங்கு. தாலாட்டு-தொங்கவிட்டு ஆட்டுதல் ஆனால் ஆகுபெயராக தொங்கும் ஏனையை ஆட்டும்போத

I7
பாடும் பாடலையே தாலாட்டு என்கிறோம்.
தாலாட்டுப் பாடல் குழந்தை தாங்குவதற்காகப் பாடப் 'படுவதாக நாம் கருதுகின்றோம். ஆனால் பண்டைத்தமிழன் 394μός»ίταού அடிப்படையிலேயே தாலாட்டை வழிப்படுத்தி யுள்ளான். தாலாட்டில் ஒரு மனித உருவாக்கம் இருப்பதை அவன் அறிந்திருந்தான்.
தாலாட்டுப் பாடும்போது குழந்தை அமைதியடைந்து தாலாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கும். பின் மெல்ல மெல்ல அறிதுயில் நிலையில் பாடலைச் செவிமடுத்துக் கொணர்டே ஆழ்துயில் கொள்கிறது. மொழியையோ பாடப்படும் மாடலின் உட்பொருளையோ அந்தக் குழந்தை உணர்ந்து கொள்ள மாட்டாது. ஆனால் திரும்பத் திரும்ப பாடப்படும்போது பாடலின் உட்பொருள் குழந்தையின் அடிமனதில் விளங்கா நிலையில் பதிந்துவிடுகிறது. அன்றே தமிழன் இதையுணர்ந்து குழந்தையின் வாழ்வில் தாலாட்டை ஒரு கலையாக வளர்த்தான். இன்று இதை மனோவியல் விஞ்ஞானம் உறுதிப் படுத்துகின்றது.
தாலாட்டில் மட்டுமல்ல, பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதிலும் காரணத்தையொட்டிய அறிவைப் பெற்றிருந் கார்கள். அதனால் ஒரு குறிக்கோளையொட்டியே பெயர் ஆட்டி னார்கள். பெயர் சூட்டப்பட்ட நாளிலிருந்த பெற்றோரும் மற் றோரும் அப்பெயரைத் தினமும் சொல்லச் சொல்ல, அப்பெயர்
அந்தக் பிள்ளையிடத்திலே அப்பெயர்ப் பர்ைபின் ஆளுமையை உருவாக்குகின்றது. இந்த அறிவியல் ஞானத்துடன் தான் மணர்டைத் தமிழன் பெயர்
வைத்திருக்கிறான். அதனாலேயே அந்நாளில் நம் மூதாதையர் ஆணர்மையிற சிறந்தவர்களாய்-ஆற்றல் மிக்கோராய்ட் அருங் குணங்கள் கொணர்டோராய் இருந்தார்கள். ஆரியம் தமிழனை மூடியபின், தமிழன் முற்றாகத் தாழ்ந்தபோனபோது, அவன் தன் பெயரை தாழ்மையாகவே வைத்துக் கொண்டான். உதாரணமாக~கறப்பண், சின்னான். மாயாணர்டி பிச்சைஇப்படி ஏராளம். நீங்கள் அறிவீர்கள். இப்படித் தாழ்நிலைக்குத் தள்ளும் உக்கிரமற்ற-உணர்வற்ற-பெயர்களை கொணர்டிருந்த தால் உளவியல் சார்ந்த விழிப்புணர்ச்சியை அவர்கள் அடையவில்லை.
தமிழீழத்தைப் பொறித்தவரையில் ஆசியம் மூடாவிட் டாலும், ஆசியத்தின் வேதவீச்சு நழைந்து சாதியை உருவா க்கியது. அந்த மக்கள் கடந்த தலைமுறை வரை சாதியின் பெயரால் மிகமிகப் பின்தங்கிப்போனார்கள். அதற்கு ஒரு

Page 11
S
காரணம், அவர்கள் தாழ்விலிருந்த மீளும் உணர்வோட்ட முள்ள பெயர்களை வைத்துக்கொள்ளவில்லை. பெயரை உச்ச ரிக்கும் போத இயல்பாகவே தன்னைத் தாழ்த்திக் கொள்கிற பெயர்களை அவர்கள் வைத்துக்கொணர்டார்கள். உதாரணமாக ~சின்னவண்-முருகனிடி~குண்டுமணி-சீனியன்,சின்னம்மொடியன் என்று. இந்தப் பெயர்களை உச்சரிக்கும் போதே பெயருக்குரியவர் தாழ்வுணர்வைத் தானறியாமல் கொள்கிறார். ‘இன்று ஏறக்குறைய முப்பது வருடத்தள் தோன்றியவர்கள், சமூக மட்டத்தில் நடுமையான கேரிகாலன்-இராசேந்திரன்மாறன் இப்படியான) பெயர்களை வைத்துக்கொண்டபோது, அப்பெயர் அழைக்கப்படுகிறபோது அதிலொரு புத்துணர்வு உளநிலையை பெற்றார்கள். இன்று சாதியமைப்புத் தகர்ந்து, மறுமலர்ச்சி ஏற்பட்டமைக்கு பெயர் வைப்பு முறை பெரிதம் உதவியிருக்கிறது. இன்று வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறார்களே, நிரோசன்- கலக்னா~ சுவானி~றஞ்சா சிந்தகா என்று. ஒரு வித்தியாசமான ஓசை நாகரிகம் என்ற எணர்ணுகிறார்கள். பரிதா மத்துக்குரிய்வர்கள். இப்பெயர்கள் தங்கள் குழந்தைகளிடம் இயற்கையின் விருப்பப்படி மனோவியல் அடிப்படையில் ஆள்வினைமையை ஏற்படுத்தமாட்டா, அதனால் குழந்தைகள் மனித இனம் பண்புக்கு வெளியே, விஞ்ஞானச் சூழலின் இயந்திர மனிதனாக மாறி, முழுமானிட வாழ்வை அடையாமல் போகிறார்கள், என்பதை உணராமல் உள்ளார்கள்.
தாலாட்டும்-பெயரும் ஒரு மனிதனின, வாழ்வை ஒழுங்கு படுத்துகின்றன என்பதை அன்னையர் புரிந்துகொண்டு தங்கள் பிள்ளை வளர்ப்பினை ஒழுங்குபடுத்துவது சிறந்தது. சில தாலாட்டு வரிகள்
தேரோடும் வீதியெல்லாம் எங்கடைகம்பி தானோட வல்லவரோ! முத்தான முத்தல்லவோ முதுகடலின் ஆணிமுத்தோ! ராசாதி ராசன் எங்கள் ராசாவே கணினூறங்கு! கட்டிக் கரும்யே! கட்டழகே கண்ணுறங்கு: இப்படியாகத் தன்னைப்பற்றி மொழியறியா அக்குழந்தை, ஏதோ உயர்வான மொழிகளை உள்வாங்கிக் கொணர்டே உறங்குகிறது. மொழியறியும்போது அதனுடைய உள்ளத்து உணர்வுகளில் தாலாட்டின் பொதிவுகள் தோன்றுவதால், அத்தன்மைகளில் இருந்த மாறா நிலையில் உருவாகுகிறது.
இந்தநாட்களில் தான் பார்க்கிறோமே, தாலாட்டுப் பாடமாட்டாள் தாய். அப்படிப் பாடினாலும் உர்ர்

9
-உம்ம்ம்ம்ம்ம் என்ற ஏதோ காக்கா குருவி மாதிரி சத்தம் போட்டு, இந்த விலங்கொலியால் தாங்கவைக்கின்றாள். இந்த விலங்கொலி குழந்தையின் அடிமனநிலையில் பதிவுகள் வெற் றிடமாகப் பதிவாகின்றன. அத காட்சிக் கருத்தறிவை மொழி யறிவை உள்வாங்குகிறபோது, தெரிவாற்றலின்றி அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. பண்பாட்டியல்பு உருவாக்கம் பின்தள்ளப்பகிறது. அல்லத சிரமத்தின் 

Page 12
2Ο
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தை கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை உய்விக்க வந்த உவப்பே பகுத்தறிவே வாயிலிட்டுத'தொப்பை வளர்க்கும் சதிக் கிடங்கை கோயிலென்று காகதரும் கொள்கை தவிர்ப்வளே சாணிக்குப் பொட்டிட்டு சாமியென்டார் செய்கைக்கு நாணியுறங்கு, நகைத்துக் கண்ணுறங்கு சுப்புரததினமும் அவன் வழிவந்த கவிஞர்களும் இப்படி எராளமான இனிய தாலாட்டுப் பாடல்களைப் மாடித்தந்து இளைய~ புதிய~ விழிப்புள்ள தலைமுறையை உருவாக்க உதவினார்கள்.
அன்னையரே! நல்ல தமிழ் எணர்ணமும், தமிழனாய் நற்பண்பும் கொண்டு உங்கள் குழந்தைகள் வாழ்வில் சிறக்க வேண்டுமானால், உங்கள் குழந்தைகளை தாலாட்டால் மகிழ வைப்பதோடு, இனிய தமிழ்ப் பெயர்களை அவர்களுக்குச் கட்டுங்கள். என்ற கமலம் உங்களிடம் மன்றாடுகிறது.
erreAArErrLeLLLrSSLsLeSLLLLesseLeLeLSsLLSsLLS
இனியநறுந் தமிழில்-வாழ்த்துப் பாடல்கள் திருமண அழைப்பிதழ்கள் உள்ளத்தை உருக்கும் தமிழில் அஞ்சலிப்பாக்கள் முடிந்தளவு தணித்தமிழில் வேண்டிய விளம்பரங்கள் எதவானலும் தமிழுணர்வைப் போனும் வகையில் கமலம் மலிவாகச் செய்து தரும் விபரங்களுக்கு முத்திரை கொண்ட மடலுறையுடன் தொடர்புகொள்க. SSrSLAeAsArrAAAererSrAAAALAALALeeeLLeeeLsLLS
தமிழகத்தின் கிணற்றுத் தவளைப் பேராசிரியர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டிருக்கும் கிணற்றுத்தவளை ஆராய்ச்சி என்றுதான் மாறுமோ? தெரியவில்லை.--உலகத்தமிழர்-பேராசிரியர். வீரப்பன்

2王
செந்தமிழின் பெயரும் அதன் பிரிவுகளின் பெயரும் கூறும் இனிய செய்தி
ஒரு மொழியானது தளர்வும் தடங்கலுமற்ற இலக்கண அமைவாலும், எப்பொருளையும் எவ்விடத்தும் எடுத்துரைக்கக் கூடிய சொல் வளத்தாலும், விஞ்ஞான விரிவின் விளக்கங்களை தன்னுள் கொண்டு தானே ஆட்கொள்ளும் மொழிப் பரப்பாலும், இவ்வுயர் திறன்களைக் கொண்டு அம் மொழியை மொழிவோர் படை த்திருக்கக் கூடிய பொருள் நயமும், கருத்தாழமும் மிக்க இலக்க யங்களாலும் தன் சிறப்பை உயர்த்தி நிற்கும். மாற்றானாலும்
போற்றப்படுவது மட்டுமல்லாமல்.ஆதியும் அந்தமும் இல்லாமல் நின்று நிலைத்து வாழும்.
இத்தகைச் சிறப்புகள் அனைத்தையும் கொண்ட ஒரே மொழி உலகில் தமிழ் தான். மனிதவரலாறு அறியப்படுவதன் முன் இயற்கையோடினைந்து நம் முன்னோர்களால் அத்தகைச் சிறப்புடன் ஆக்கப்பட்டடிருக்கிறது தமிழ்மொழி.
அத்தகைய தகவுடைய எம்மொழியின் பெயரையும், முப்பிரி வுகளின் பெயரையும் சிறிது துணுைகி ஆராய்ந்தால், நம் முன்னோர் மொழியாளுகையில் கொண்டிருந்த நுண்மான் நுழைபுலன் வியக்கத் தோன்றும். உள்ளத்தில் பேரின்பக் கிளுகிளுப்பை நிரப்பும்.
எமது மொழியின் பெயர் தமிழ். தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால 'நீ ர்மை. தமிழ் என்றால் சாவாமருந்து. இன்னும் பல பொருள்களுள. தமிழ் பேசுவதற்கு இனிமையானது. இசைப்ப தற்கு எளிமையானது. தமிழின் சொல் வளமும் சந்தமும் கேட்போரின் செவிக்கு இனிமையானது.
அப்பர் பாடுகின்றார் ” தமிழோடு இசை பாடல் மறந் தறியேன்” என்று. இசையே இனிமையானது தான். எந்த மொழியில் என்றாலும் அல்லது மொழியில்லா உயிர்களின் ஒலிகளில் என்றாலும் இசை இனிமையானது தான். அப்படியிருந்தும் நல்லினி மையோடு என்ற அப்பர், இனிமை என்ற சொல்லே இருக்க, அந்த இனிமையைக் குறிக்கக்கூடிய வேறு சொற்களிருக்க, இனிமையைச் சுட்ட தமிழ் என்ற சொல்லைக் கையாண்டதேன். இனிமைகளுள் சிறந்த இனிமையாக மட்டுமல்ல, தமிழாகிய இனிமையோடு பாடுவேன் என்பதே, அப்பர் கூறிய தமிழோடு என்பது. கேட்பார்க் தகையவாய் கேளாரும் வேட்ப இனிமையாக இசைப்பேன் எனப் பொருள்படுவதாகும்.

Page 13
22
எனவே, தமிழ் என்ற சொல்லானது இனிமையை. உள வயப்பட்டு. ஐம்புலன்களைக் கடந்து. உயிரோடு ஒன்றுகிற அமிழ்த மான இனிமையாகும். இத்தகு பொருள் தரு சொல்லைத் தேர்ந்து எடுத்து எம்மொழிக்கிட்ட முன்னோரின் மொழியுணர்வுதான் என்னே! இத்தகு பெயரை எம் மொழி கொண்டிருப்பதைப் பொறுக்காத ஆரியரும் அவர் சார்ந்த அடிவருடித் தமிழர்களும் வலிந்து ஆய்வுகள் செய்வதும் .தமிழ் என்ற பெயர் மருவி வந்த பெயர் எனக்கூறு வதும் பித்தலாட்டமாகும்.
ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் என்ற பெயர் அடையாளம் காணப்படுகிறது. அப்படி இருக்க ஏறக்குறைய கி.மு இரண்டாயிரம் அளவில் இந்தியாவுக்குள் நுழைந்த வடவரின் மொழியிலிருந்து தமிழ் மருவி வந்த பெயர் என்றால், எந்தளவுக்கு ஆரியச்சதி தமிழினத்தைச் சூழ்ந்துள்ளது என்பதை உணர்க.
இத்தமிழை நம் முன்னோர் முன்றாக வகுத்தார்கள். அவை இயல். இசை.நாடகம் என்றாகும். நல்லகர்லம் இம்முப் பிரிவின் பெயர்களை மருவி வந்தபெயர்கள் என்று யாரும் கூறவில்லை. அப்படிக் கூறக் கதைகள் ஒன்றும் அகப்படவில்லைப் போலும். இப்பெயர்களை எக்காரனம் கொண்டு சூட்டினார்கள். ஆகவே, முத்தமிழ்களின் பெயர் இயல்பானதாயின், மொழியின் பெயரும் இயல்பானதே எனத் தெளியலாம். இம்முப் பெயர்களைப் பற்றிய ஆய்வானது, தமிழர்களின் மொழியியல் புலமையைக் கன்டின்புற உதவுவதாகும்.
இயல்=தன்மை, பகுதி, தகுதி என்று பல பொருள் தருவதோடு இயல்புடையது, மொழியியல் என்றும் பொருள் கொன் டிருக்கிறது. எனவே, உயிரின், வாழ்வின் இன்றியமையாமையான
நுகர்வுகளைப்பெறுவதற்கும், தெரிவிப்தற்குமான தகுதி-ஒலிக்குறிப்பு, இயற்கையோடிணைதல் என்ற தன்மைகளைக் கொண்டிருப்பது மொழியின் இயல்பாகும். அதாவது, ஒருவர் தன் உள்ளக்கருத்தை மற்றவர் உணரும்படியாக-உணர்த்துவதற்குக் கரவியாகப் பயன் படுத்துவதே மொழி. இதன்முலம் ஒருவர் மற்றொருவரின் கருத்து க்களை, அக்கருத்தில் தோன்றக்கூடிய வேறுபட்ட உணர்நிலைகளை, பகுத்துணர்ந்து அறிந்துகொள்வதோடு, அதற்கு எற்பத் தன் செயற்பாடுகளில் எதிர்விளைவுகளைக் காட்டுகின்றார். இதற்கு ஐவகைநிலை மொழி இலக்கணமே போதும். அதன்வழி சொற்கோப்பினால் கருத்துக்கள் பிறப்பிக்கப்படுகின்றன. உலகில்
(என்,இடம், காலம்,பால்,தினை, ஐவகை இலக்கணப்பிரிவுகள்)

23
கானப்படும் முவாயிரம் வரையிலான மொழிகளில் அநேகமானவை இத்தகைய அளவில் மட்டுமே இலக்கணத்தையுடையன. G மொழிகள் அதற்கு மேலும் இலக்கிய வளமுடையனவாக வளர்ந்துள்ளன. ஆனால், தமிழோவெனில், இவ்விலக்கணவரம்பைக் கடந்து, மேலும், இசை நாடகம் என இரு இலக்கணப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இத்தகைய மொழி உலகில் ஒன்றே ஒன்று தான். அது தான் தமிழ். t
இயல் என்ற தன்மையால், ஐம்புலனுணர்வுகளின். குமுகாயக் கட்டொழுங்கின். இயக்கத்தோடு சம்பந்தப்பட்டது மொழி என்ற நிலையைக் கடந்து, அதற்கு மேலும் மொழியினால் மனிதன் பயன்பெற வழிகாட்டியது தமிழ்.
இசை-இசை என்ற சொல்லானது, இசைந்துபோ.. உடன்படு. சேர். இணை. பொருந்து. பொருந்துதல்என்றிவ்வாறான பொருள்களைக, கொண்டுள்ளது. இசை என்ற தமிழ்ச்சொல், ஏவல், எச்சவினையாகவுமுள்ளது. அதாவது சேர், இனை என்று ஏவுகிறது. எனவே, இசைத்தமிழ் என்ற பிரிவானது, இசையின் முலம் வாய்ப்பாட்டு. கருவி எனுமிரண்டும் சேர்ந்து. சுரங்களின் வழி.நவரசங்களினூடாக உள்ளத்தை இசைய வைப்பதாகும். தன் புலன்களைக் கடந்து இசையின் இனிமையில் பொருந்துதல்.
இனிய இசை கேட்பின் பசி தோன்றாது. செவிக்குன வில்லாதபோது சற்றே வயிற்றுக்கும் ஈயப்படும். அன்னை தன் மழலையைக் கையிலேந்தித் தாலாட்டுப் பாடுகிறாள். அழுது முரண்டு பிடித்த குழந்தை தாயின் பாடலிசையில் மனமொன்றி அழாமல் துயில்கிறது. பக்திப்பாடலொன்றை இசைக்கும்போது. பக் தர்களின் உள்ளம் நெக்குருகி கன்னி ர் கசிகிறது. (இது மடமை எனினும் இசைவு) தாவரங்கள் இசையில் மகிழ்வதை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது. அந்நாளில் SierreoILDr STSörd விலங்கு அபசுரம் கேட்டால் இறந்துபட்டதாக இலக்கியம்கூறும். முல்லை. மருதநில மக்களின் வாழ்வில் வேய்ங்குழல் முக்கிய இடம் வகிப்பதும். முல்லை நிலத்தவனாயினும் இரண்டு இடங்களிலும் இடம்பெறும் கண்னன். புல்லாங்குழல் வல்லவனாகவும் இருப்பது ஏன்? ஆனிரைகளைக் கட்டுப்படுத்திக் கட்டுப்பாட்டெல்லைக்குள் வைத்திருப்தற்கே இவர்கள் வேய்ங்குழலைப் பயன்படுத்தினார்கள். குழலோசையில் ஆனிரைகள் தங்கள் இடையனை அடையாளம் கண்டதோடு, குழலிசையில் தம்புலன்களைச்செலுத்திக்கட்டுண்டன.
தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடுவோம்

Page 14
24
தமிழ் மொழியியலாளர் இதற்கென இலக்கணம் வகுத்து, சுரங்களின் வழி. . ஆரோகண. அவரோகனங்கள்ை ԹT(Անւն அவற்றுள் தாளவகைகளைப் பொருத்தி.நவரசங்களை இனைத்து கேட்போர் இதயத்தை எவ்வாறு இரசாங்களுடன் இனையவைப்பது என்று இசைத்தமிழைத் தந்தார்கள். பொருந்திவிடு. இசைந்துவிடு என்பதே இசை என்பதாகும்.
இன்று உலகில் வளர்ந்த. வளராத எல்லாமொழிகளிலும் இசை முக்கிய இடம் பெற்றாலும் அதற்கென மொழியிலக்கணமும், மிகப்பண்டையிலேயே அதைக் கொண்டிருந்ததும் தமிழ் மொழியே என்பதை உணர்ந்து மகிழ்க!
நாடகம்-நாடகத்தமிழ். இயலும் &6O)3Futb சேர்ந்தது நாடகம் என்றார்கள். இவை இரண்டுடன் மெய்வெளிப்பாடும் சேர் ந்த முன்றின் கூட்டே நாடகம் என்பேன். இது ஆடலும். பாடலும். உரையும். மெய்வெளிப்பாடும் கலந்தியல்வது. நாடகத்தைக் கூத்து என்ற பெயராலும் இலக்கியங்கள் கூறுகின்றன.
இறைவனை. . ஆடலழகன். தில்லையிற்கூத்தன். கூத்துக ந்தான் என்று தேவாரம் கூறும். பன்நின்ற கூத்துப் பதினொன்று என்கிறது சிலம்பு. எனவே, நாடகமானது கூத்து.நாட்டியம். நடனம் என்ற சொற்களாலும் அழைக்கப்படுகிறது. இச்சொற்கள் ஒன்றையே குறிப்பினும், இயங்கும் தன்மையில் இவற்றிடையே வேறு பாடு இருக்கக்கூடுமென நான் நம்புகிறேன். கைக்கெட்டாமல் அழிந்துபோன நாடக நூல்கள் அவை பற்றிக் கூறக்கூடும். இக் கூத்து அல்லது நாட்டியம் இலக்கணப் பிரிவில் இடம்பெறும்போது நாடகம் எனப் பெயர் பெறுகிறது. ஏன் இச்சொல் வேறுபாடு? இங்கே தான் நம் முன்னோரின் புலமைச் சிறப்பை நன்கு உணர முடிகிறது. இயலும். இசையும். மெய்வெளிப்பாடும் கலந்து கூத்து வெளிப்படும்போது நிகழ்வதென்ன?
இயலால் உள்ளக்கருத்துக்களை உள்ளபடி உணர்வுகள் வழி உணர்தல். செயல்படலில் முடிகிறது. இசையால் உணர்த்தப் படுவதால் பயன் விளைவதில்லை. ஏனெனில், இசையோடு இசைந்து. தன்வயமிழந்து. ஆழ்ந்துபோதல் நிகழ்கிறது. உள்ளமும் புலன்களும் ஒன்றி நிற்கும். இசைமுடிவில் அந்த ஒன்றிய நிலையும் முடிந்துவிடும். கூத்தோவெனில், இயல் முலம் கருத்துரைத்து, இசைமுலம் வயப்படுத்தி அக்கருத்துணர்வுக்கு இசைய வைத்து, மெய்வெளிப்பாடுகள் முலம் உணர்வுகளின்..நவரசங்களின் உயிர் நிலையைக் காட்டுவித்து, காண்போர் புலன்களின் வழி தாமே

25
தம்முள் உணரவைத்து, அவர்களுள்ளே நவரசங்களைத் தோன்ற வைக்கின்றது. இரசாங்கள் புலன்களால் முழுமையாக உணர வைக்கப்படுகின்றன. இதை நிறுவ கூத்தின் நவீ ன வடிவங்களில் ஒன்றான (திரைப்படம்) ஒளிநாடகத்தைப் எடுப்போம்.
நூல்களைக் கற்பதை விட. சொற்பொழிவுகளின் வழி பெறப்படுகின்ற அறிவை விட. முழுமையான புலனுணர்வு அறிவை ஒருவன் ஒளிநாடகம் 'முலம் இலகுவாகப் பெறுகின்றான். காவியங்களைப் படித்து மனத்திருத்த முடியாத ஒருவன், அதையே ஒரே தடவையில் ஒளிநாடகத்தைப் பார்த்து மனத்திருத்திக் கொள்கிறான். எவ்வாறெனில், வீ ரத்தில் நெஞ்சம் விம்முகிறான். நகையில்சிரிக்கிறான். காதலில்களிக்கிறான். துன்பத்தில் கண்ணி ர் வடிக்கிறான். கூத்தின் மெய் வெளிப்பாடு உள்ளத்தில் ஒளடுருவி உணரவைப்பதே காரணமாகும்.
இயலும் இசையும் செய்யமுடியாததை கூத்துச் செய்கிறது. கூத்துத் தரும் இரசாங்களுக்கான மெய்வெளிப்பாடுகள் உள்ளத்தை ஊடுருவிச் செல்கின்றன. எனவே உள்ள்மானது கூத்தை உணர்வுகளால் நாடிச்சென்று உள்வாங்குகிறது. உள்ளத்தை நாட வைக்கின்றது கூத்து.
உள்ளம்-அகம், நாடு-விரும்பு, சென்றடை என்பதுபொருள்
நாடு+அகம்=நாடகம். உள்ளமாகிய அகம், விரும்பியேற்பதால்.நாடு வதால். நாடகம். எனவே தான் இப்பிரிவிற்கு நாடகத்தமிழ் என்று பெயரிட்டனர். இதிலிருந்து இயல்பினால் கூத்தான முன்றாந் தமிழை, இலக்கணத்தால் நாடகம் என்றார் எனத் தெரிகின்றது.
இவ்விதமாக எமது மொழிக்கும் அதன் பிரிவுகளுக்கும் அமைந்த பெயர்கள், மொழியியல் சிந்தனையின் மிகவுயர்ந்த பரிமா னத்தில் வைக்கப்பட்டவையாகும். நம் முன்னோரின் மொழியிலக்க னப் புலமையும் தமிழின் சிறப்பும்தான் என்னே!
இந்த முடிவுகளை நிறுவ இன்னுமொன்றை இங்கு நான் கூறவேண்டும். முத்தமிழுக்கு உள்ளும் புறமும் இருக்கக்கூடியதும் நாடகத்தமிழுக்கு இன்றியமையாததாக இருப்பதுமான இராகம் (அராகம்). தாளம் ஆகிய இசைக்கூறுகளையும் அதன் இலக்கண அமைவையும் கருநாடகம் என்னும் பெயரால் அழைத்தார்கள். தியாகையர் கீர்த்தனங்களை வெளுத்துவாங்குகிற சில தமிழகத்துச் சங்கீ த வியாபாரிகள், கருநாடக இசை தெலுங்கிலிருந்து தமிழர் பெற்றதாகக் கூறுவார்கள். ஏன் தமிழைவளர்த்தவன் என்று தமிழர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிற பார்ப்பாரச் சுப்பிரமணியன் கூட

Page 15
26
சுந்தரத்தெலுங்கில் தானே பாட்டிசைத்து இன்பம் கண்டான். கி.பி 2ம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்திலே, கருநாடக இசைபற்றி. இசையமைப்புகள் பற்றி. இசைவித்துவம் பற்றி. இசை வல்லானின் ஆளுமை பற்றி மிக விரிவாகவே கூறப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் தெலுங்கு என்று ஒரு தேசமும் மொழியும் இருக்கவில்லை. அன்று கங்கைக் கரைவரை, சிறிது திரிந்த தமிழ் நாகர் கப்படாத மக்கள் கூட்டங்களிடை வட்டார வழக்காக இருந் தாகத் தெரிகிறது. அப்படியிருக்கக் கருநாடக இசை தெலுங்கில் இருந்து வந்ததாக அடிமைத் தமிழகக் கலைஞர்கள் கூறுவார்கள். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தமிழகத்தில் இசை கூத்து துறைகளில் இடம் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அதிகமாகப் பார்ப்பாராக இருப்பதுதான். மொகலாயர் ஆட்சியில் ’ இருந்த தமிழகத்தில் இந்து சமயத்தைக் காக்கவென கி.பி 13ம் நூற்றான் டளவில் வந்து சமயத்தின் பெயரால் தமிழகத்தைக் கொள்ளைய டித்த தெலுங்கர்கள் கொண்டுவந்ததே கருநாடக இல்சயாம். எத் 556O)65uu கேலிக்குரியது இவர்களின் கூற்று. எப்பேர்ப்பட்ட சதித்தனக் கருத்து. என்பதை இங்கு காண்போம்
இந்தத் தமிழிசைப் பகுதிக்கு கருநாடகம் என்று ஏன் பெயர் வந்தது. கூத்தானது அன்றும் சரி, இன்றும் சரி இசையின் வழியே இயங்குகிறது. இன்றைய மேடைநாடகங்கள் போலன்றி, அன்று நாட்டிய நாடகங்களும், நடனங்களும் நடைமுறையில் இருந்தன. இன்றும் பரதம் இசைவழி தான் இயங்கும். ஏறத்தாழ 25.30 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் நாட்டியநாடகங்கள் (கூத்து பெருவழக்கில் இருந்ததைப் பலரும் அறிவர். அக்கூத்துகளில் இசை நுணுைக்கங்கள் இடம்பெறவில்லையாயினம், கிராமங்கள் தோறும் உடுக்கு. கடம் . சில தோற்கருவிகள் கொண்டு ஒழுங்க மைக்கப்பட்ட தாளவிசை பின்பற்றப்பட்டது. எனவோ இசைவழி இயங்கும் கூத்திற்கு உயிரோட்டத்தை அளிப்பது தாளங்கள் அத் தாளங்களின் வழியே தான் கூத்தன் கூத்தாடுகிறான். இதைச் சிலம்பு அரங்கேற்றுகாதையில் தெளிவாகக் கூறுகின்றது. கூத்துகந்த நடராசர் கையில் உடுக்கு இருப்பதை என்னுக.
எனவே, கூத்தாகிய நாடகத்தின் உயிர்ப்பும் தளிர்ப்பும் தாளங்களில் இருக்கிறது. தாளங்கள் தரும் இசையில் இருக்கிறது தாளம் பிழைத்தால் இசையமைப்பும் கூத்தும் பிழைக்கிறது. எனவே, கூத்தாகிய நாடகத்தின் உயிர் இசையே. உயிரூட்டுவதும்
உயிரூட்டமுமாய் இருப்பதை நாம் கரு என்கிறோம். கரு-உயிர்.

27
நாடகத்தின் கருவாய் இருப்பது இசை= கருவாவது நாடகத்திற்கு= கருநாடகம். எத்துணைச் சிந்தனை வளர்ச்சியில் இப்பெயர்கள் இடப்பட்டன. இவற்றையெல்லாம் தமிழர்கள் என்னிப்பார்த்து விழிப்புணர்வு கொள்ளவேண்டும்.
தமிழா! உலகுக்கு மொழி தந்தவன் நீ! வாழ்வறம் தந்தவன் நீ! இசை கூத்தெனும் கலைகளைத் தந்தவன் நீ அறம்-பொருள்இன்பம்-விடு என்னும் வாழ்வின் உறுதிப்பொருள் நான்கை உணர்த்தியவன் நீ! ------------------ இத்தகைப் புகழுக்குரிய உனக்கு உன்னைத் தெரியாமல் போய்விட்டதே!------ (UT! பரிதாபத்திற்குரியவனே! உன்கோவிலிலே வடமொழி, உண்வீட்டில் திருமணத்தில் வடமொழி, காக்கா குருவிக் கதறல்களை மந்திரம் என்கின்றாய் நீ! இந்த மந்திரமும் அதைச் சொல்கிறவனும் தானே, உன் இனம் அழிந்து போனதற்குக் காரணம். வேண்டுமா? உனக்கு விளங்காத மொழியில் மந்திரம். அதையும் படிக்காமல் பாடமாக்கின கடவுள்தரகண் கத்துகிறானே? உனக்கு விளங்காத மொழியில் வேண்டுமா? சடங்குகளும் வணங்குதலும். எண்ணித்தெளி!!! இன்னும் ஏமாறத்தான் வேண்டுமா!!!

Page 16
8
d வந்தது இளவேனில் அன்புத் தமிழ் நெஞ்சங்களே!
பழந்தமிழன் ஓராண்டை ஆறு பருவகாலங்களாகப் பகுத்து, அவ்வக்காலத்திற்கும்- அக்காலங்களின் கருப்பொருளு க்கும்-இயற்கையின் இனிய மாற்றங்களுக்கும் ஏற்ப வாழ்க்கைச் சுவையை நுகரும் பாங்கை அமைத்திருந்தான். அதற்கும் முன்னர் அவன் இயற்கையின் அமைப்பிற்கேற்ப, நிலத்தை குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல்-பாலை என வகுத்து வாழ் ഖങ്ങ அடிப்படைத் தன்மைகளை-முறைகளை வகுத்துக் கொண்டிருந்தான்.
குறிஞ்சி -மலையும் மலைசார்ந்த இடமும் முல்லை -காடும் காடு சார்ந்த இடமும், மருதம் -வயலும் வயல் சார்ந்த இடமும். நெய்தல் -கடலும் கடல்சார்ந்த இடமும், பாலை -குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பு மாறி வரண்ட
பாலை நிலமாதல். இந்நிலப் பாகுபாட்டில் அமைத்த வாழ்வியல் தன்மைகளை காலப்பாகுபாட்டில் சுவைப்படச் சீரமைத்தான்.
கார்-கூதிர்-முன்பனி-பின்பனி-இளவேனில்-முதுவேனில். என்பவை அவ்வாறு பருவங்களாகும்.
கார்காலம் - மடங்கல், கன்னி, (ஆவணி புரட்டாதி ) கூதிர்காலம்- துலாம், நளி ( ஐப்பசி, கார்த்திகை ) முன்பணி - சிலை, சுறவம் ( மார்கழி, தை ) பின்பணி - கும்பம், மீனம் ( மாசி, பங்குனி ) இளவேனில்- மேழம், விடை ( சித்திரை, வைகாசி ) முதுவேனில்- ஆடவை, கடகம் ( ஆனி, ஆடி )
இந்த ஆறு பருவகாலங்களில், தமிழர் தம் அகவாழ்வில் இனிமைக்குரிய சிறந்த பருவகாலமாக இளவேனிலைக் கொண் டார்கள். மேழம்-விடைத் திங்கள்களில் இப்பருவம் மலரும்.
அந்தப் பருவகாலத்தில் இயற்கையே பொங்கிப்பூரித்து, புதுப் பெண்ணின் கன்னிப் பொலிவோடு சிலிர்த்து நிற்கும். பார்க் குமிடமெங்ங்னும் நீக்கமற நிறைந்திருக்கும் தாவரங்கள், புல் பூண்டு-செடி கொடி-மரம மட்டை எல்லாம் மலர்ந்து, இதழ் விரித்து, மணம்பரப்பி, காற்றில் இன்பத்தைக் கலந்து, தென்றலாய் மேனி தழுவிவர, உலகப் படைப்பெலாம் கூத்தாடும் காலமது. வண்டுகளும்-தும்பிகளும் பண்ணிசைக்க, பறவையினங் -கள் பண்ணோடு பாட்டிசைக்க, சோலைகளில் புதுத்தளிரை

මූ9
மேய்ந்த ஆனிரைகள்-மானிரைகள் சுகம் தேட இன்பம் பெருக் கெடுக்கும் காலமது. Wh
குறிஞ்சியிலே வாழ்வைத் தொடங்கிய மனிதன், தமிழ் மாந்தன். அவ்விளவேனில் காலத்திலே நீர்வளம் மிகுந்த மலைச்சாரலிலே, சுனைகளிடையே, அருவிகளிடையே, மலர்ந்து மனம் பரப்பி, கண்னைக் கவரும் வண்ண மலர்களில் தன்னை மறந்து அழகைப் போற்றி ஆரவாரித்தான். அதனாலன்றோ முருகவழிபாடு தோன்றியது. முருகவழிபாடு என்றால் அழகுவழி பாடு-அழகைப்போற்றுதல். பின்னாளில் எப்படியெல்லாமோ மாறி, தடுமாறித் திசைமாறி இரண்டு மனைவியரைக் கொண்ட இளைஞ னாக, நித்திய இளமையுடையவனாக மாற்றப்பட்டுவிட்டது. இம் முருகவழிபாடு பழைய குறிஞ்சி மாந்தனின் காலத்தில் தோன்றிய படியால்தான். முருகன் குன்றுதோறாடும் குமரனாக உருவகப் படுத்தப்பட்டுள்ளான். மலை மாறாங்ர்வளம் உடையதாய் இருந்த மையால் என்றும் செழிப்புடன் இருந்தது. அதனால் தான் முருகன் மாறா இளமையடையவனாக், கொள்ளப்படுகிறான். இந்த முருகு-அழகு இயற்கையில் முகிழும் காலம் இளவேனில் காலமாதலால், தன் வாழ்வின் இன்பக் களியாட்டுக்கேற்ற கால மாக ஆக்கிக் கொன்டான்.
கானம் சிலிர்த்தது வையம் சிலிர்த்தது
வந்தது இளவேனில் கானம் ஒலித்தது கான்மலர் சிரித்தது
வந்தது இளவேனில் பொதிகை சிரித்தது பொருநை சிரித்தனள்
பூங்கொடி யாவும் புன்னகை செய்தன. மரங்கள் தளிர்த்தன மட்டை தளிர்த்தன
மாருதம் வீசிட மாங்கொழுந்தவிழ்ந்தன களிவண்டினங்கள் கவி பாடினவே என்றொரு புலவன் புத்தெழுச்சியோடு பாடுகின்றான் இளவேனி லைக் கண்டு. இளவேனில் என்றால் பத்தெழுச்சிக் காலம்தான்.
(பல்லவம்) மாங்கொழுந்து அவிழ-மாந்தளிர் கோதி இன்புற்றுக் குயிலினங்கள் நீட்டொலியால் பாட்டிசைக்க, இன்பம் கொப்பளிக்கும் இக்காலத்தைத் தமிழன் திருமனக் காலமாகக் கொண்டான். அவன் நாட்காட்டி காட்டும் காலக்கணிப்பைக் கொண்டு இளவேனிலைத் தேடவில்லை. இயற்கையின் மாற்றங் களில் கண்டான். வேங்கைமரம் பூத்தலையும் சந்திரன் பரிவட்டம் கொள்வதையும் கண்டு, இளவேனில்

Page 17
3O
கருக்கொள்வதைக் கண்டான். இவ்வடையாளங்களின் அடிப்ப டையில் அப்பருவத்தைக் கண்டு, கூடி மகிழும் இனிய பருவ மாகக் கொண்டான். இதனை அகத்துறைச் சங்கத் தமிழ் பலவிடங்களில் கூறும். மலர்கள் கொஞ்சி மனம் கமழ்ந்து மகரந்தப் புணர்ச்சி செய்ய, வண்டினங்கள் தேனுண்டு களியாடி வதுவை செய்ய, மாங்குயில்கள் இசைபாடக் காதலர்கள் களியாடி-விளையாடிக்-கொண்டாடி-உறவாடி கூடிக்களிக்க, உயிரி னங்கள் தூய காதலின்பத்தில் மகிழ்ந்த காலம்.
இந்நாளில் தமிழன் இன்பத்தால் இந்திரவிழாவெடுத் தான். எனச் சிலப்பதிகாரத்தால் தெரிகின்றது. காவிரிப்பூம் பட்டினகாலம் வரை (கி.மு ) தமிழின்ப விழாவாகக் இந்திரவிழா கொண்டாடப்பட்டது. அது முற்றிலும் தமிழ் விழாவே.
சிலம்பு காட்டுகின்ற, மாதவி கலந்தகொண்ட இந்திர விழாவிலே, ஆரிய-வேதச் சம்பிரதாயங்கள் ஆதிக்கடி செலுத்த வில்லை. ஆக, அவர்களும் இந்திரவிழாவில் கலந்து கொண்டு, ஒரு புறத்தில் தம் வேள்விக் கடமைகளைத் தம்பாட்டில: செய்துகொண்டிருந்தார்கள். சிலப்பதிகாரம் வரி 175 நான்மறை மரபின் திமுறை ஒருபால்” என்று கூறுகிறது.
பின்னாளில் வடவன், தமிழனின் இந்த இனிய விழாவை மொழியால் வசந்தருது என்று நுழைத்து, இந்திரன் என்கிற புராணக் கதாநாயகனை உருவாக்கி முடிச்சுப் போட்டு, பின்னால், அந்த இளவேனில் காலத்து சித்திரை மாதத்து முதல் நானை வருடப்பிறப்பும் ஆக்கிவிட்டான்.
ருது என்ற வடசொல்.-பருவமடைதல், பூப்படைதல் என்று பொருள்படும். இளவேனிலைத் தமிழன் திருமணநாளாகக் கொண்டிருப்பதைத் தமக்கேற்றமாதிரி ஆக்கி, வருடப்பிறப்பு மாக்கி விட்டான்.
நாங்களும் இன்றுவரை தாய்மண்ணிலும், வெளிநாடுக ளிலும் விட்டோமா? கொண்டாடி மகிழ்கிறோம். ஏன்? தெரியாது எந்தக் காரணத்திற்காக இந்த நாள் வருடப்பிறப்பு தெரியாது. இராகுகாலம் பார்த்து பார்ப்பாரும்-அந்தணரும் தருகிற-பசு மாட்டின் சலம், சானம் இன்னும் பல பொருட்களைக் கலந்து மருத்துநீர் என்று தந்த அசிங்கத்தை, தலையில் தப்பி நீராடு கிறோம். நாகரீக உலகம் நகையாடும் இது கண்டால்.
சித்திரைவருடப் பிறப்புக் கொண்டாட்டம் மடைமையின் சின்னம். அடிமைத்தனத்தின் சின்னம். தாழ்மையின் சின்னம். ஏமாந்துபோனதன் அடையாளம். இந்த நாளை நாம்

5l
வருடப்பிறப்பாகக் கொண்டாடும் வரை எம்மினம் அடிமைத்த ளையிலிருந்து மீளமுடியாது.
தமிழருடைய வருடப்பிறப்பு சுறவம் திங்கள் (தைத்திங்கள்) முதலாம் நாள்.-தைத்திருநாள்-அந்நாள் பகுத்தறிவின் அடிப்படையில்-உலகுய்யும் உழவுத் தொழிலின் பயனைப் பெற்று வாழ்வு சிறப்படையும் திங்களின் முதல் நாளாத லால்-அந்நாளை வாழ்வுப்பயனின் முதல் நாளாய்-வருடப் பிறப்பாய் வகுத்துக் கொண்டான்.தமிழரின் வருடப்பிறப்பு சுறவத் திங்கள்-தைத்திங்கள் முதல் நாளாகும்-தைப்பொங்கல்நாளாகும் அதையறியாமல் அந்நியனின் புராணத்திருநாட்களைக் கொண்டாடி மகிழ்வது வேதனை.
இந்திரவிழா முன்னாளில்- மருதநிலக் காலத்தில், வேந்தன் விழாவாகத் தொடங்கப்பட்டு பின்னாளில் ஆரியத்தால் இந்திரவிழாவெனப் பெயர் மாற்றம் பெற்றது என அறிஞர் கூறுவர். தமிழ் வாழ்வின் எல்லாவிடங்களிலும், ஆரியநுழைவு இருப்பதால், இந்திரவிழாவும் அப்படித்தான் எனக் கருதினர் போலும். என்னால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
மேழத்திங்களையொட்டி வருகின்ற இளவேனில் பருவத்து சந்திரன் பரிவட்டம் கொள்ள, வேங்கைமரம் மலர் விரிக்க, காதலர்களை இல்லறப் படுத்திய இனியநாட்களவை. இந்நாட் 'களின் முதற்பொருளாய் நிற்பது சந்திரன். கூடிய காதலரை இன்புறுத்தியும்-பிரிந்த காதலரைத் துன்புறுத்தியும் இளவேனிலை ஆட்சிசெய்தவன் சந்திரன்.
சந்திரனை-சந்திரப்பண்பை இந்து என்ற சொல்லால் அகராதி சொல்கிறது. வெள்ளிய ஒளித்தன்மை இந்து எனப்படும். ஒரு பக்திப்பாடல் வரி-பிள்ளையாரை 'இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை” -ஒளிவீசுகின்ற சந்திரனின் இளையபிறை வடிவையுடைய தந்தங்களையுடையவன். என்கிறது. வெடிமருந்து க்குப் பாவிக்கப்படும் வெள்ளுப்பினை இந்துப்பு எனப்படுகிறது. எனவே, தமிழன் வாழ்வின் இனிய பருவத்தின் முதல்வனாகிய இந்துவான-இந்திரன்-சந்திரன்-சந்திரனைப் போற்றும் விழாஇந்திரவிழா. இந்தவிழாவை ஆதியிலிருந்து கொண்டாடியவர்கள் பாண்டியர்கள். இவர்கள் சந்திரகுலத்தவர்கள். சந்திரனை இந்து என்றழைக்கப்படுவதால், தங்கள் குலமுதல்வனாகிய சந்திரனைப் போற்றி இந்தவிழா இந்திரவிழா எடுக்கப்பட்டது. என்ற கருத்து மறுககமுடியாதது.
இந்திரவிழாவில் கடலாடுதலும், கடற்கரையோரங்களில்

Page 18
552
அனைவரும் கொண்டாடி மகிழ்தலும்- அது ஒரு கடல்விழாப் டோல் அமைவதை சிலப்பதிகாரம் காட்டுகிறது. கடலும்நிலவும் இன்பம் கூட்டும் என்பது சொல்லவேண்டியதில்லை.
கி.மு எண்ணாயிரங்களில் வாழ்ந்த நெடியோன் என்ற பாண்டிய மன்னன் கடல்விழா எடுத்ததாகப் புறநாநூறு கூறுகிறது. புறம்,8, முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியபோது, அவனை வாழ்த்திய இடத்தில 'முந்நீர் விழவின் நெடியோன்” எனப்பாடியதால் இது அறியப்படுகிறது. எனவே, கடலுக்கு விழா எடுப்பதுபோல் கடலாடிக் களிக்கும் விழா முன்னாளிலும் முதன்மை பெற்றிருந்ததென்றால் அது இந்திர விழா என்று நாம் துணியலாம்.
விளைவின் பயனை-அதைத்தந்த கதிரவனைப் போற்றிஅது கிடைக்கும் சுறவத் திங்களின் முதல் நாளில்தைத்திருநாளாய்-புதுவருடமாய் கொண்டாடினான் தமிழன்.
விளைவின் பயனில் நிறைந்த வாழ்வின் பயனில்அகவாழ்வின் மலர்ச்சிக்கு-இன்பம் சேர்க்கும் இளவேனிலின் நாயகனான சந்திரனைப் போற்றி மேழத் திங்களில் இந்திரவிழாக் கொண்டாடினான் தமிழன்
உலகவாழ்வின் நாயகனாக கதிரவனையும், காதல் வாழ்வின் நாயகனாக சந்திரனையும் தமிழிலக்கியங்கள் பாடுவதும் இதை உறுதிப்படுத்தும்.
பழந்தமிழனின் அகவாழ்வின் இனிய விழாவான இந்திர விழாவை-நீங்கள் அந்நியம் புகுத்திய வருடப்பிறப்பாகக் கொண் டாடாமல்-வாழ்வின் இனிமைக்குரிய இளவேனில் விழாவாகக் கொண்டாடி மகிழுமாறு வேண்டுகிறேன்.
கலைமன்றங்களும்-கலைஞர்களும் சித்திரைவிழா என்றும், வருடப்பிறப்பென்றும் கொண்டாடாமல், இந்நாளை இளவேனில்விழா அல்லது இந்திரவிழா எனக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்திரவிழா என்பது, தமிழியத்திற்கு விரோதமான, வட வாரிய, புராணப்புனை கதையில் வரும், பிறர்மனை விளைகிறஅங்கமெலாம் <8u]to யோனிகளால் அழகு பெற்ற, தேவலோகத்து அரசன் இந்திரனுக்கான விழாவல்ல. தமிழனின்தமிழின் விழாவெனத் தெளிக:
essal SOI கமல)
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழீழம் எங்கள் வாழ்வுக்கு வேர்

53
இன்பத்தமிழ் தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மனமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால! - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வாள்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத'தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
சங்கநாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! (சங்கே)
சிங்களம் சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் று தூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!
கனக.சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடுவோம்

Page 19
34
அவசியத்திலோர் ஆசிரியம். சி
மனிதனாய் இருக்கிறவனுக்கு அனைத்துயிரும் உயிராகத் தெரியும். மிருகத்துக்கு மட்டும் மற்றெஷ்வுயிரும் உயிராகத் தெரிவதில்லை. அதனால் கொன்று மகிழும், ஆனால், மனிதனாகப் பிறந்திருக்கிற சிங்களவனும் இந்தப் பண்பையே கொண்டிருக்கிறான் என்பதை, மத்திய வங்கிக் குண்டு வெடிப்பின் பின் சிங்களப் பத்திரிகையாளர்களும், புத்தசிவிகளும் நிரூபிக்கிறார்கள் போகட்டும் அவர்கள் தாங்கள் சிங்கத்திற்குப் பிறந்தவர்கள் என்று தான் சொல்கிறார்கள்.
ஆனால், இந்தியப் பிரதமர் நரசிம்மராவ்அவர்களும் அவருடைய கூட்டாளிகளும் கொழும்புக் குண்டு வெடிப்புக்கு குத்திமுறிகிறார்களே, இவர்களுக்கு ೭೧ುಹಬ್ಬ கண்டு ஏங்கும் வனனம கடநத பல வருடங்களாக தவவல முதல தளநத முதியோர்வரை, அகதி முகாங்களிலும்-தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் தங்கியிருந்த தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்து அநியாயமாகக் கொன்றொழித்துக் கொண்டிருக் கிறார்களே, அது தெரியவில்லை என்றால், இவர்களது தமிழழிப்பு நோக்கம் தான் காரணம். இவர்கள் அத்துடன் விட்டாலும் நாங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். இவர்களோ கடந்த 14.02.96 ல் அன்று கடற் புலிகளுக்கும் சிங்களக்கடற்படைக்கும் நடந்தசமரின்போது சிங்களப் படைகளுடன் சேர்ந்து கடற்புலிகளைத் தாக்கியுள்ளார்கள். இந்தச்செயலானது சாதாரண விடயமல்ல ஒரு வல்லரசு. தென்னாபிரிக்க @(లేలై முறைக்கும்-பலத்தீனியர் பிரச்சினைக்கும் உலகமட்டத்தில் குரல் கொடுத்த மனித நேயப் பாதுகாவலர்கள். தன்னுயிரையும் உடைமையையும் காக்கப் போரிடுகின்ற தமிழனுக்கு எதிராகப் படைநடத்தி யிருக்கிறார்கள். முன்னர் பலதடவை இப்படித் தமிழனுக்கு ஏதோ ஒரு சாட்டில் துன்பம் விளைத்தவர்கள் இம்முறை சாட்டொன்றும் இல்லாதபடியால் நாங்கள் வரவில்லை என்கிறார்கள். இப்படி உலகுக்கு மறைத்துக் கள்ளத்தனமாக ஈழத்தமிழனுக்கெதிராக போர் தொடுக்கிற இந்தியப் பிரதமர் நரசம்மராவ் அவர்களுக்கும், தமிழகத்தை ஆண்டு கொண்டும், தமிழர்களுக்கு எதிரியான வட இந்திய வல்லாதிக்கத்துக்கு ஆதரவான கொள்கையைக் கொண்டிருக்கிற தமிழக முதல்வர்

35
செயலலிதா அவர்களுக்கும் தமிழீழத் தமிழன் என்ற வகையிலே ஒன்று கூற விரும்புகிறேன். உங்களுக்குச் சரித்திரம் சொல்லிக் கொண்டிருக்க இது நேரமில்லை. இரண்டாயிரங்களுக்கு மேலாகவே தமிழனைத் தமிழகத்தில் மொழியால்-மதத்தால் -பொருளாதாரத்தால் நசித்துவந்த ஆரியத்தின் பார்ப்பனிய வாரிசுகளாக, இன்று தமிழகத்தானை அரசியலாலும் அடிமைப்படுத்தி விட்டீர்கள். ඡle.Jör நிமிரமுடியாமல் இருக்கிறான். ஆரியத்தின் மற்றொருவடிவான சிங்களவன் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். தன்னை-தன்னுறவுகளைக் காத்துக்கொள்வதற்காக-தான் නූ_17ir வாழ்வதற்காக (3UIIIIIIIQë கொண்டிருக்கிறான். ஈழத்தமிழன். இந்த வேளையிலே, மொத்தமாகவே தமிழ் இனத்தை அழித்துவிடுகிற, ஆரியப்-பார்ப்பனிய குரோதப் பண்பில் புலிகளின் கடற்களத்தில் சிங்களவனோடு சேர்ந்து புலிகளைத் தாக்கியிருக்கிறீர்கள். உங்களுடைய செயல் கொடுமையானது மட்டுமல்ல, புத்திசாலித்தனமற்றுதும் கூட. உங்களுடைய கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கிடந்த தமிழகத்துத் தூயதமிழ் இளைஞன், ஈழத்தமிழர்கள் கொன்றுகுவிக்கப் படுவதைக் கண்டு குமுறிக்கொண்டிருக்கிறான். இரத்த பாசத்தால் உணர்வலைகள் பொங்கித் ததும்பும் விளிம்பில் குமுறிக் கொண்டிருக்கிறான் உங்களுடைய நரித்தனத்தைப் புரிந்து கொண்டு தருணம் பார்த்திருக்கிறான். மேலும் மேலும் அவனுடைய உடன்பிறப்புகளுக்கு நீங்கள் செய்கிற காரியம் அவனை வெடித்துக் கிளம்ப வைக்கிறபோது, கொழும்பு மத்திய வங்கியில் மட்டுமல்ல, உங்களுடைய மத்திய வங்கியிலும் குண்டு வெடிக்காது என்பதற்கு என்ன உத்தர வாதம். இதையெண்ணிப் புத்திசாலித்தனமாக மட்டுமல்ல, மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். தமிழினத்தின் பொறுமை என்னும் os,6066 உடைக்காதீர்கள். உடைத்தீர்கள் அந்தப் பிரளயத்தில் அடிபட்டுப் போவீர்கள். தமிழ் இருக்கிறதே, அது வரலாற்றில் என்றுமே மாற்றரரால் தாழ்த்தப்பட்டதில்லை, தாழ்த்தினாலும் மீண்டும் கனன்று எழும். அதன் எழுச்சி தன்னைத் தாழ்த்தியவனை அழித்தே அமையும், அமரர் ஆதித்தனார் கூறிப்போயுள்ளார், தமிழ் அறுநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிளர்ந்தெழுந்து தன்னை விடுவித்துக் கொள்ளும், அந்த விடுவிப்பின் காலம் இந்த

Page 20
Ap
W
其冷
§
A
vn
N
49
A.
s
2M
36
நாட்கள் தான் என்று. அந்தவிடுவிப்பின்போது ஏற்படுகிற பிரளய வீச்சுக்குள் நீங்கள் அகப்படாமல், அழிவற்றநிரந்தரமான மனிதநேயத்தின் பாற்பட்டு நில்லுங்கள். அது தர்மமும் கூட. அன்னை இந்திராகாந்தி அவர்களின் காலம் வரை இந்தியாவைத் தன் தாய்வீடாகத்தான் ஈழத்தமிழன் கொண்டிருந்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். மானம் ரோசம் கெட்டாலும் ஆரிய மேலாதிக்கத்தைத் தான் பெரிது என்று எண்ணாதீர்கள். அமரர் இரசீவ்காந்தியை வேட்டேவு (துப்பாக்கி) கொண்டு அடித்த சிங்களவனுக்கு 'பூமிபுத்திரா அரசியல்கட்சி அமைத்து கனவானாக வழிகாட்டியவர்கள் சிங்கள அரசியல் வாதிகள் என்பதை மறந்துவிடாதீர்கள். என்று கமலம் கேட்டுக்கொள்கிறது.
கமலத்தின் ஆண்டு அறநிதி (சந்தா) யையும் வைப்
பகத்தில் செலுத்தி, கமலத்தின் வளர்ச்சி நோக்கி
அன்பளிப்பும் செய்தவர்களிடம் நன்றியுடன் கமலம் மலர்கிறது - நன்றி.
2V 7 wi ? 守
恶恶恶恶恶恶恶墨恶恶
வாழ்க! * தமிழ்ப்பணி 巽 கமலத்தின் மலர்வில் மணங்கமழும் தமிழியம் |இ -0,000്ത്ര-தமிழ்மறம் கண்டு மகிழ்ந்த ଝିଙ୍କ தமிழ்ப்பணிச்செம்மல் * கே.ரி.கணேசலிங்கம் § அவர்களின் நன்கொடையில் இக் கமலம் 3
ഗ്രഖസ്കിmക്സ്, 等 வாழ்க! தமிழ்ப்பணச் செம்மல். ਨੂੰ
 

சிறுத்தையே வெளியில் வா! பூட்டிய இரும்புக் கூடட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே! வெளியில் வா! எலி என உண்னை இகழ்ந்தவர் நடுங்க புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில். நம்பினை பகலினை நள்ளிருள் என்றே. சிம்புட் பறவையே! சிறகை விரி எழு சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? கைவிரித்து வந்த கயவர் நம்மிடம் பொய்வித்த நம்புலன்கள் மறைத்தத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கு எண்பார் எனில் வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே? மொழிப் பற்றெங்கே விழிப்புற் றெழுக! இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றம் புகழ்ச்சியே எம் பூணாம் என்றும் வையகம் ஆணர்ட வணர்டமிழ் மரயே! கையிருப்பைக் காட்ட எழுந்திரு குறிக்கும் உண் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணரக் கடல் போல் மாப்பகை மேல் விடு. நண்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு பொன் மொழிக்கு நீ புதமை ஏற்றவாய். மக்களை ஒன்றசேர் வாழ்வையுயர்த்துக! கைக்குள திறமையைக் காட்ட எழுந்திரு. வாழ்க! இளைஞனே வாழ்க! நின் கூட்டம். வாழ்க! திராவிட நாடு. வாழ்க! நின் வையத்த மாப்புகழ் நன்றே.
-~~~கப்புரத்தினக் கவிஞன
0. ! ஈழத்தமிழர்களின் மொழியா?
1982 ம் ஆண்டு, அப்போது நான் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வெள்ளைப் பிரஞ்சுக்காரர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டார். ” உங்களுடைய மொழி அது தானே" ”இல்லை” “உங்களுடைய மொழிதான் என்ன?” ”தமிழ்” ” ஒ ஈழத்தமிழர்களின் மொழியா? அந்த வியப்பு வினாவை அவர் சொன்னபோது, கம்பீரத்தோடு கை குலுக்கினார்.முனைவர் க.ப.அறவாணன்அவர்களின் நூலிலிருந்து

Page 21
莲
அன்புத் தமிழீழ உலகத் தமிழின
தாம் வாழத்தமிழழிக்
த்தின் அடிதடவ.
لبنا
う
○
தமிழர் பன்னாட்டைத் ஆபாசக் காவியங்கை
முந்தமானத்தில் எழு
al
திரவனின் வரவால் 6 கமலம் - வண்டினங்க: மங்கையர்கள் குழல்சூடி L தமிழின் பகை கண்டால்தமிழறியாத் தமிழனைக் க கனன்று எரிக்க தீயில் மல கமலம் ஒரு பொழு தொகுப்பு நூலான முத்திங்கள்
கமலத்தின் எண்ண கருத்துடையோரின் எழுத்துக்கள் தொடர்பு KAMA HASSEL 30900. WE
GERM
தமிழ் எங்கள் தமிழீழம் எங்கள்

மக்களே! 3ԼՈ!
தம் தமிழ் விரோதிகளை, ம் அடிமைத் தமிழர்களை, நிக்கு புகழ்பாடும், தரங்கெட்ட தமிழர்களை,
தாழ்த்தி நிற்கும், ஆரிய ளப் போற்றி நிற்கும்
தமிழ்ப்பேதைகளை,
ஒதுகன்ற, நானும் கின்ற தமிழ்ப்போலிகளை, தி நேர்ப்படுத்த மலர்கிறது லம்* விடியல் கண்டு மலரும் ள் மதுவாடிக் களியாடமகிழாட மலரும் மலரல்ல
ண்டால்--- 0ரும் கமலம். ஒதுபோக்கு இதழல்ல. ஆய்வுத் ஒடு.
த்தடிப்படையில் சீர்திருத்தக்
வரவேற்கப்படும் యేప్రయోg
ALAM REDE-9 DEMARK
ܨ+
உயிருக்கு நேர்
வாழ்வுக்கு வேர்