கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கியச் சிமிழ் - கட்டுரைகள்

Page 1
绸 t్కస్ట్రీ
圣湄 胃
9|ab01 Sl
 


Page 2

உதயம் வெளியீடு :
இலக்கியச் சிமிழ்
(கட்டுரைகள்)

Page 3
UTHAYAM : 10
ILAKKIYAH SIMIZH
W. inten by: Aga langan
Second Edition: February, 1993
Pages: 104
Published by: ... St. Sebastian Printers,
Printers; St. Sebastian Printers,
65, Ďady Manning Drive, Batticaloa.
Cover: S. Velau thampillai.
Rs... SO/-
உதயம் : 10
இலக்கியச் சிமிழ்.
எழுதியவர்: அகளங்கன்.
2ம் பதிப்பு: шоп9, 1993 பக்கங்கள்: 104
வெளியீடு: புனித செபத்தியார் அச்சகம்
அச்சுப்பதிவு: புனிதி சீெபத்தியார் அச்ச்கம்
65,ல்ேடி மனிங் டிறைவ் மட்ட்க்களப்பு.
அட்டை: ஒவியர்.எஸ்.வேலாயுதம்பி ள்ளை

உதயம் ஒளி: 6 பெப்ரவரி 1993 கதிர்: 1
'உதயம்" வெளியீட்டு வரிசையில் முற்றிலும் மாறு பட்டதாக கட்டுரைகளை உள்ளடக்கிய அகளங்கனின் ‘இலக்கியச் சிமிழ்’ என்னும் நூலை பத்தாவது வெளி யீடாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். வாசகர் வட்ட உறுப்பினர்களில் சிலர், உதயம் நாவல் வெளியீட்டுடன் மட்டும் நின்றுவிடாது கவிதை, கட்டுரை, சிறுகதை தொகுப்புகள் போன்றவற்றையும் வெளியிடவேண்டு மென அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள். அவர்க ளுடைய கருத்துக்களை வரவேற்று, வரிசையாக ஒன்பது நாவல்களை வெளியிட்ட நாம் பத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் இலக்கிய கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளோம்.
அகளங்கன் எமது வாசகர் வட்ட உறுப்பினர். அவர் எழுதிய இந்நூலை வவுனியா முத்தமிழ்க் கலா மன்றத்தினர் மார்கழி 1992ல் வெளியிட்டிருந்தார்கள். இதனைப் படித்துச் சுவைத்த நாம் இதன் இரண்டா வது பதிப்பை அச்சிட்டு உதயம் வாசகர்களுக்கு வழங் கியுள்ளோம்.
இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. இலக்கியத்தை வாழ்க்கையுடன் இணைத்து ஒரு வித்தி யாசமான முறையில் ஆசிரியர் இக்கட்டுரைகளை எழுதி
iii

Page 4
யுள்ளார், ஆசிரியரின் புடைப்புக்களில் நூலுருப் பெறும் ஒன்பதாவது நூல் இதுவாகும். ட , 15 - 01 - 1993ல் உதயம் தனது ஐந்து ஆண்டு காலச் சேவையைப் பூர்த்தி "செய்து விட்டது. ஐந்து ஆண்டு காலப் பகுதியிலும் ஒன்பது நூல்களை வெளி யிட்டுள்ளது. ஆனால் வாசகர் "வட்ட உறுப்பினர் தொகை இன்றுவரை. 650 லேயே உள்ளது குறைந்தது 1000 உறுப்பினர்கள் சேர்ந்தால்தான் எமது திட்டத் தைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.
ஆதலால், எமது 11 வது வெளியீடு உங்களுடைய கைகளுக்குக் கிடைப்பதற்கு முன்னர் ஒவ்வொரு வாசகர் வட்ட உறுப்பினரும் ஒவ்வொரு புதிய உறுப்பினரைச் சேர்த்துக் கொடுக்க வேண்டுமென்று அன்புடன் வேண்டு கோள் விடுக்கின்றோம்.
உஷா சிவதாசன்
ஆசிரியர்
உதயம் வெளியீடு: 11
மூதூர் வ. அ. இராசரெத்தினம் எழுதிய
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது.
(நாவல்)
vi

என்னுரை
இது ஒரு வித்தியாசமான இலக்கிய முயற்சி. தான் வாழும் சமூகத்தை நோக்கி இலக்கியப் பார்வை UT ri t’i பதுதான் இலக்கிய வாதிகளின் வழக்கம்.
தான் படித்த இலக்கியத்தைத் தான் வாழும் சமூ கத்தை நோக்கிச் சமூகப் பார்வை பார்த்தால் எப்படி யிருக்கும் என்பதற்கு இந்நூலே எடுத்துக்காட்டு.
சமூக நெளிவு சுளிவுகளை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துப் படித்த இலக்கியத்தைச் சமூகப் பார்வை பார்த்து இலக்கியம் படைக்க, எனக்கு அறிவுரைகளை அறிவுரைகளாகத் தந்து வழிகாட்டியவர், என் மதிப் புயர்ந்த சிரித்திரன் ஆசிரியர் திரு. சி. சிவஞானசுந்தரம் அவர்களாவார்.
அத்தகைய என் ஆக்கங்களுக்கு இலக்கியச் சிமிழ் எனத் தலைப்பிட்டுச், சிரித்திரனிலே தொடராக வெளி யிட்டு, ஒரு புது இலக்கிய மரபை ஏற்படுத்திய சிரித்தி ரன் ஆசிரியர் அவர்கள் என்றும் என் நன்றிக்கு முந்து பவர்.
"குங்குமச் சிமிழினுள் விரலை விட்டுத் தொட்டு இந்துச் சுமங்கலிகள் நெற்றியிலே குங்குமத்தை நிறைய இட்டுக் கொள்வார்கள். இந்த இலக்கியச் சிமிழினுள் மனதை விட்டுத் தொட்டு இதயத்தில் நிறைய இட்டுக் கொள்ளக் கூடியதாகக் கட்டுரைகள் எழுத வேண்டும் என ஆசிரியர் அவர்கள் கூறிய அறிவுரை என் இதயத் தைத் தொட்டது.
“உங்கள் எழுத்துக்கள் உங்கள் தாயும், உங்கள் மனைவியும், உங்கள் மகளும், ஒன்றாக இருந்து வாசிக் கக் கூடியதாகத் தூய்மையானதாகவும், எளிமையான தாகவும் இருக்கவேண்டும்" என்று எனக்கு அவர் கூறிய
w

Page 5
அறிவுரைகள் என் எல்லா ஆக்கங்களிலும் நிதர்சனமா கக் காணக்கூடியவை.
இந்நூலிலுள்ள கட்டுரைகளில் அநேகமானவை சிரித் திரனில் வெளிவந்தவை. சில விரிவுபடுத்தப்பட்டு வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டவை.
இலக்கியச் சிமிழ் எனது ஒன்பதாவது நூல். இந் நூலின் முதற்பதிப்பை வவுனியா முத்தமிழ் கலாமன் றத்தினர் மார்கழி 1992 ல் வெளியிட்டிருந்தார்கள். இ த ன் இரண்டாவது ப தி ப் பை மட்டக்களப்பு உதயம் பிரசுராலயத்தினர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டிருந்தார்கள். உதயம் வாசகர் வட்ட உறுப்பினர் களில் நானும் ஒருவன் என்பதனாலும், இவ்வெளியீட் டின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள உதயம் வாச கர் வட்ட உறுப்பினர்கள் 650 பேரும் இந்நூலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதனாலும் எனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தேன்.
இந் நூலை இரண்டாவது பதிப்பாக வெளியிட்ட மட்டக்களப்பு உதயம் பிரசுராலயத்தினருக்கும் குறிப் பாக திரு. அ. சிவதாசன் அவர்களுக்கும் எனது நன்றி. என் உணர்வேயாகி முன்னின்றுழைத்து என் இலக் கிய முயற்சிகளுக்குக் காரணமாக இருக்கும் என் இல் லாளின் இதயச்சிமிழ் என்றும் எனக்கு அட்சயபாத்தி ரமாகும்.
இந்நூலை விரும்பிப் படித்து நல்லுணர்வு பெற்று மேலும் பல நல்லாக்கங்களை நான் படைக்க உதவப் போகின்ற எல்லா இலக்கிய இதயங்களுக்கும் இந்நூலே நன்றிப்பரிசாகும்.
Ljubooulo() அன்புடன் , வவுனியா, அகளங்கன் 1993 - 02 سے 01
vi

பொருளடக்கம்
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
11)
12)
அம்புலி மாமா
(சிரித்திரன் - தை, 1981)
பிணைமானும் துணைமானும் (சிரித்திரன் - மார்கழி, 1980)
கட்டிலும் வட்டிலும் (சிரித்திரன் - கார்த்திகை, 1979) அத்தான் அக்கரையில்
(சிரித்திரன் - ஆடி, 1984)
பற்றற்ற தமிழ்ப்பற்று (சிரித்திரன் - புரட்டாதி, 1985) தமிழரும் கொடையும் (சிரித்திரன் - ஆணி, ஆடி 1987) அன்னையர் போராட்டம் (சிரித்திரன் - ஆணி, ஆடி 1987) தமிழிலக்கியமும் வானியலும் (வீரகேசரி - 06-09 - 1992) விண்வெளி யுத்தம் (சிரித்திரன் - மாசி, 1986) கவியரசு செய்த கவியரசு (தினகரன் - 11 - 06 - 1989) கம்பனும் சனநாயகமும் (முரசொலி - 29 - 04 - 1990)
0.
07
3
21
31
37
46 52
60
68
78
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று 87
(முரசொலி - 15 - 01 - 1989)
wii

Page 6
இலக்கிய நெஞ்சங்களே!
கிழக்கிலங்கையில் முதன் முதலாகத் திட்டமிட்ட வெளியீட்டு நிறுவனமாக 15 - 01 - 1988ல் தோன்றிய *உதயம்’ பிரசுராலயத்தினர் ஐந்து வருட சேவையைப் பூர்த்தி செய்துள்ளார்கள். இதுவரை ஒன்பது (9) பிர பல கிழக்கிலங்கை நாவலாசிரியர்களுடைய நாவல்களை வெளியிட்டுள்ளனர்.
இன்றுவரை 650 இலக்கிய நெஞ்சங்கள் ரூபா 100/- செலுத்தி உதயம் வாசகர் வட்ட உறுப்பினராகச்சேர்ந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது வெளியீடுகளையும் இலவசமாகப் பெற்றுப் பயனடைந்துள்ளார்கள்.
உதயம் வெளியீடுகள்:
1. தெய்வ தரிசனம் - செ. குணரத்தினம் 2. மஞ்சு நீ மழைமுகில் அல்ல - திமிலைத்துமிலன் 3 . சந்தன றோஜாக்கள் - ரவிப்பிரியா 4. ஒரு தந்தையின் கதை - அன்புமணி 5. உள்ளத்தின் உள்ளே - ந. பாலேஸ்வரி
(சொந்தம் எப்போதும் - செ. குணரத்தினம் 6. தொடர் கதைதான்
ッ புதிய பாதை சுமதி அற்புதராஜா
7, பாதை மாறுகிறது - திமிலை மகாலிங்கம் 8. நான் நீதியின் பக்கம் - க. அருள்சுப்பிரமணியம் 9. பாதைமாறிய பயணங்கள் - மண்டூர் அசோகா இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் 'உதயம்" வாசகர் வட்ட உறுப்பினராக இன்றே சேர்ந்து கொள்ளுங்கள்.
, :மேலதிக விபரங்களுக்கு ۔
ஆசிரியர் - 'உதயம்' 65, லேடி மனிங் டிறைவ், மட்டக்களப்பு.
97 VQ 065 - 2086
wiii

அகளங்கன்
அம்புலி மாமா
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என் றார் மகாகவி பாரதியார். தமிழ்ச் சொல்லின் உயர்வு அதன் பொருளிலேயே பெரிதும் தங் கியிருக்கின்றது.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்த னவே” என்பது தமிழ் இலக்கணம்.நாங்கள் நடிை. முறையிலே பயன்படுத்தும் எல்லாச் சொற்களை யும் அதன் உண்மை அர்த்தத்தோடு பொருள் விளங்கிக் கொண்டு பயன்படுத்துவதில்லை:
பல உயர்ந்த பொருளுள்ள சொற்கள், எமது அன்றாட வாழ்க்கையில் அநாயாசமா கப் பிரயோகிக்கப்படுவதை அநேகர் எண்ணிப் பார்த்திருக்கலாம்.
0.

Page 7
அகளங்கன்
சில சொற்கள் உயர்ந்த ஆன்மீகக் கருத்துக் களையும் உடையன. அவற்றையெல்லாம் அர்த் தங் கண்டுகொள்ளாமலேயே பயன்படுத்துகி றோம்.
ஒரு தீராநோயாளியைப் பார்த்துப், “பாபம்’ என்கிறோம். ஊனமுற்றவனை, பிச்சைக்கா ரனை, வாழ்க்கையில் சொல்லொணாத் துன் பத்தில் வாடுபவனைப் பார்த்து, "ஐயோ பாபம்" என்று வாய் விட்டுச் சொல்லி இரங்குகிறோம். அவன் கடந்த பிறவியிலே பாபஞ் செய்த வன் அல்லது இந்தப் பிறவியிலே பாபஞ் செய் தவன். அந்தப் பாபத்தின் சம்பளத்தைத்தான் அனுபவிக்கிறான். அதைத்தான் நாங்கள்‘பாபம்’ என்ற சொல்லால் குறிக்கிறோம். ஆனால், இதனை இப்படி அர்த்தந் தெரிந்து நாம் பயன் படுத்துவதில்லை.
நல்ல நிலையிலே வாழ்பவனை, நல் ல அதிஷ்டமுள்ளவனை, நல்ல வெற்றிகளைப் பெறு பவனைப் பார்த்து, “அவனுக்கென்ன கொடுத்து வைத்தவன்’ என்று கூறிக் கொள்கிறோம்.
கடந்த பிறவியிலே பலருக்குக் கொடை கொடுத்துப் பலருக்கு உதவிசெய்து புண்ணியத் தைத் தேடிக் கொண்டவன் அவன். அதனால்
இலக்கியச்
02

அகளங்கன்
அவன் அந்தப் புண்ணியத்தை இப் பிறவியிலே அனுபவிக்கிறான். என்ற கருத்துத் தா ன் **கொடுத்து வைத்தவன்' என்பதன் கருத்து. இதனையே, “அவன் பாவி - இவன் புண் ணியவான்' என்ற சொற்களாற் குறிக்கிறோம். பாபம், புண்ணியம், மறுபிறவி, கர்மவினை போன்ற உயர்ந்த இந்து சமயத் தத்துவங்கள் வெகு எளிய சொற்களில் அன்றாட வாழ்க் கையிற் பயன்படுவது ஒரு காரணங் கருதியே.
காலையில் எழுந்ததும் நாம் அக ற் று ம் கழிவுக்கு மலம் என்றே பெயரிட்டு அழைக்கி றோம். ஆன்மாக்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் பீடிக்கப்பட்டு ஸ் ள ன என்பதும், மலம் அகல முத்தி கிடைக்கும் என் பதும் இந்துக்கள் கொள்கை.
அகற்ற வேண்டியது மலம் எ ன் ப ைத நினைவுபடுத்தும் சொல்லாக மலம் என்ற சொல் வழக்கில் நின்று நிலவுகிறது.
எங்கள் குடியிருப்புக்களுக்கு நாம் இட்ட பெயர் வீடு. வீடு என்றால் முத்தி என்று பொருள். வெளியிற் செல்லும் மனிதருக்குத் தமது வீட் டுக்கு வரவேண்டும்; வந்து நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
சிமிழ்
U.

Page 8
அகளங்கன்
ஆன்மாக்களும் முத்தியின்பத்தை - வீட்டின் பத்தைப் பெற்று சாந்தியடைய வேண்டும் என்பதை நினைவு படுத்தும் சொல்லாக வீடு என்ற சொல் விளங்குகிறது.
பிள்ளைகளுக்குக் கடவுட் பெயர்கள் இட்டு அழைப்பதும் இதே வகையைச் சேர்ந்ததே. அபிராமி, பார்வதி, முருகா, விநாயகா, பரம சிவம் என்று பிள்ளைகளை அழைக்கும் போதே ஆண்டவனையும் அழைக்கும் வாய்ப்பு எமக்கு ஏற்படுகிறது. ஆண்டவனின் நாமங்களைக் கூறு தல்கூடப் புண்ணியமானதுதான் என்பது ஆன் மீக வாதிகள் கருத்து.
இத்தகைய ஆன்மீகச் சிந்தனையை ஏற்படுத் துஞ் சொற்கள் மட்டுமின்றித் தமிழ்ப் பண் பாட்டை விளக்குஞ் சொற்கள் கூட எமது அன்றாடப் பாவனையில் வந்து போகின்றன. வீட்டுக்கு வரும் அந்நியனை, வீட் டி லே உள்ள தாய் தன் பிள்ளைகளுக்கு மாமா என்று உறவுமுறை சொல்லிக் கொடுப்பது எல்லா வீடு களிலுமுள்ள வழக்கம்.
எந்தத் தமிழ்ப் பெண்ணொருத்தியாவது வீட்டுக்கு வரும் அந்நியனைத் தனது பிள்ளைக ளுக்குச் சித்தப்பா என்றோ பெரியப்பா என்றோ சொல்லிக் கொடுக்க மாட்டாள். Y
இலக்கியச்
04

அகளங்கன்
தாயின் சகோதரன் பிள்ளைகளுக்கு மாமன் என்ற உறவில் அமைகிறான். மறுதலையாக மாமா என்று பிள்ளை அழைக்கும் ஆடவன் தாய்க்குச் சகோதரனாகிறான்.
வீட்டுக்குவரும் அந்நிய ஆடவனைத் தன் பிள்ளைக்கு மாமா என்று சொல்லிக் கொடுத் துத் தனக்குச் சகோதரன் என்ற உறவை, உணர்வைத் தனது உள்ளத்திலும், வீட்டுக்கு வருபவனின் உள்ளத்திலும் வளர்த்து விடுகி றாள், தமிழ்த் தாய்.
இந்தப் பண்பாட்டு வெளிப்பாட்டின் உச்சக் கட்ட உறவு முறைதான், சந்திரனையும் பிள் ளைக்கு மாமா என்று சொல்லிக் கொடுக்கும் பழக்கமாகும்.
நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டும் தாய் அந்த நிலவை, ‘அம்புலிமாமா' என்றே சொல் லிக் கொடுக்கிறாள்.
சந்திரன் என்ற சொல்லில் வரும் ‘ன்’ விகுதி உயர்திணை ஆண்பாலை உணர்த்து கிறது. அதனால் வீட்டுக்கு வராத, மனிதர் களோடு வந்து பழகி வாழ்க்கையிற் பங்கு கொள்ளாத சந்திரனும், தமிழ்ப் பெண்ணின் உறவு முறைப் பண்பாட்டிற் சிக்கிவிடுகிறான்.
சிமிழ்
05

Page 9
அகளங்கன்
அம்புலியை மாமா என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துத் தனக்குச் சகோதரனாக் கிய த மிழ் ப் பெண்ணின் ஒழுக்கம், என்றும் வியந்து போற்றுதற்குரியதே.
இத்தகைய பல நல்ல தமிழ்ச் சொற் களை, எமது வாழ்க்கையிலே நாம் அவைகளின் உண்மை அர்த்தத்தைப் பற்றி அறிந்து கொள் ளாமலேயே பயன்படுத்தி வருகிறோம்.
இலக்கியச்
O6

2.
அது ஒரு திருமண வைபவம். இந்துக்க ளின் திருமண மரபுப்படி நடைபெற்றுக் கொண் டிருந்தது. அங்கே ஒரு நிகழ்ச்சி. தாலி கட்டி ஆயிற்று. மணமகனும் மணமகளும் தண்ணிர்ப் பாத்திரம் ஒன்றிற் கைவிட்டு ஏதோ தேடுகி றார்கள்.
ஆம், தெரிந்த விடயந்தான். அதாவது மோதிரம் ஒன்று தண்ணீர்ப் பாத்திரம் ஒன்றி னுட் போடப்பட்டிருக்கும். அதனை அவர்கள் எடுக்க வேண்டும்.
மணமகனும் மணமகளும் தத்தம் வலக் கை களைத் தண்ணீருள் வைத்தனர். சிறிது நேரத் துக்கு எவர் கையும் வெளியே வரவி ல்  ைல.
சிமிழ்
07

Page 10
அகளங்கன்
ஏதோ பெரிய பிரச்சினை அவர்களுடைய கைகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
இருவரும் அந்த மோதிரத்தை எடுப்பதில் அதிதீவிர ஆர்வங் காட்டினர். இருவரும், ஒரு வரிடமிருந்து ஒருவர் பறிபட்டுக் கொண்டிருந் தனர்.
அதைப் பார்த்துச் சபையோர்கள் குதூக லமாகச் சிரித்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியை இரசித்துக் கொண்டிருந்தனர். எனக்கு அந்த நிகழ்ச்சியை அதாவது அந்த மணமகனதும், மணமகளதுஞ் செய்கையைப் பார்க்கப் பெரும் அருவருப்பாக இருந்தது.
வேடிக்கை பார்த்துச் சிரித்துக் குதூகலித்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவரிடங் கேட் டேன். "இப்படி மோதிரம் எடுக்கும் நிகழ்ச்சி ஏன் நடைபெறுகிறது?"
அவர். "இது புதிதாகத் திருமணஞ் செய்து கொள்ளும் இருவரதும் கூச்சத்தைப் போக்குவதற்காக நடை பெறுகிறது" என்று தொடங்கி ஏதேதோ அலட் டினார். தொடர்ந்து நானே கேள்வியைப் போட் டேன்.
இலக்கியச்
08

"ஆமாம், முற்காலத்தில் கூச் சம் இருந்தது உண்மைதான். அதைப்போக்க இப் படி ஒரு நிகழ்ச்சி நடத்து வது பொருத்தந்தான். ஆனால் இப்போது. தேவைதானா?”
புன்னகைத்து விட்டு அங்கே பொன்னகை யில் மனம் இலயித்துப் பறிபட்டுக் கொண்டிருந்த புதுமணத் தம்பதிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
பழந்தமிழ் இலக்கியத்தில் என்றோ ஒரு நாள் படித்து இரசித்த பாடற்காட்சி ஒன்று எனது மனதிலே நிழலாடியது.
ஒரு பிணைமான் தன் துணைமானோடு தண்ணீர்த் தாகத்தில் நீர்தேடி அங்கும் இங் கும் ஒடுகிறது. நீண்ட அலைச்சலின் பின் ஒரு சிறு பள்ளத்திற் சிறிதளவு நீர் இருப்பதைக் கண்டு விடுகிறது.
நீரின் அளவோ ஒருமானுக்கு மட்டுமேதான் போதுமானது. கலைமானோ அந்த நீரைத் தன் அன்புப் பிணைமான் அருந்தட்டுமென்று எண் ணித் தனது தாகத்தையும் மறந்து பிணைமா னைப் பார்த்து நிற்கிறது.
பிணைமானோ தன் காதற் கலைமான் அந்நீரை அருந்தட்டும் என்று எண்ணித் தான் அருந்தாது தன் துணைமானைப் பார்த்து நிற் கின்றது.
சிமிழ்
09

Page 11
அகளங்கன்
இருமான்களுமே ஒன்றுக் கொன்று விட்டுக் கொடுத்து, இருமான்களும் நீரிலே வாய்வைத் துக் குடிப்பது போல் நடிக்க, அந்த நீரின் அளவு மாறாமல் அப்படியே இருக்க, மான்கள் இரண் டும் ஒன்றை ஒன்று நிமிர்ந்து பார்த்துக் கொள் ளும் அற்புதக் காட்சியை, கள்ளமற்ற காதற் காட்சியைக் கற்பனை செய்வது எனக்கு இத மானதாக இருந்தது.
முடிவிலே பிணைமானை நீருண்ணச் செய்வ தற்காகக் கலைமான் தானும் நீரில் வாய்வைத்து நீர் அருந்துவது போலப் பாவனை செய்கின்றது.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமான் பெரிதுண்ண வேண்டிக்-கலைமான் தன் கள்ளத்தால் ஊச்சும் சுரம் என்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி.
மான்களின் காதல் உள்ளத்தைக் காட்டும் இலக்கியக் காட்சிக்குரிய பாடல்தான் இது. பெண்மானை நீர் குடிக்கச் செய்ய ஆண்மான் செய்த தந்திரத்தைத் தான் இப்பாடல் காட்டு கிறது.
ஆண்மானை நீர்குடிக்கச் செய்யப் பெண் மானும் இதே தந்திரத்தைக் கையாண்டிருந்தால் எப்படி இருந்திருக்குமென்று நான் எண்ணிப் பார்ப்பதுண்டு.
இலக்கியச்
10

அகளங்கன்
அந்தத் திருமண வைபவத்தில் மோதிரம் எடுக்கும் நிகழ்ச்சியையும், மானினத்தின் காதல் வாழ்வையும் மாறிமாறி நினைத்துப் பார்த் தேன். மனிதரின் செய்கை அருவருப்பைத் தந்
ძნჭტl • w
அந்த மோதிரம் ஒன்றுக்காக, கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தப்போகும் அவர் கள் பட்டபாடு பெரும்பாடாக இருந்தது. அந்த மோதிரம் அவர்களுக்குரியதுதான். அவர்களில் யார் எடுத்தாலும் அது அவர்களுக்குத்தானே.
திருமணமாகிய முதல் நாளிலேயே இப்படி
இழுப் என்றால் அவர்களின் குடும்ப வாழ்க்கை எப்படி இனிதே அமையும்? கணவன் - மனைவி பலப்பரீட்சை, அன்றே அத்தனை பேர் மத்தி யிலேயே, ஒரு நல்ல சுபநேரத்திலே ஆரம்பித்து விட்டதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேன். ஆத்திரப்பட்டுக் கொண்டேன்.
கணவனோடு தான் போட்டி போ ட க் கூடாது என்று, மனைவி அந்த மோதிரத்தைக் கணவனுக்கே விட்டுக் கொடுத்திருக்கலாம்.
பொன் போகவேண்டியது பெண்ணுக்கே என்று கணவன் அந்த மோதிரத்தை மனைவிக்கே விட்டுக் கொடுத்திருக்கலாம்.
சிமிழ்
11

Page 12
அகளங்கன்
சிறிது சிந்தித்தால்.நீரினுள் வைத்த கையை அந்த இருவருமே வெறுங்கையாக எடுத்திருந் தால் எத்தனை அழகாக இருந்திருக்கும்."
கள்ளத்தால் நீர்குடித்த மான்கள் போல இருவருமே, மற்றவர் எடுக்கட்டும் என்று விட் டுக் கொடுத்து, வெறுங்கையை வெளியே எடுத்து, அதை இருவரும் உணர்ந்து கொண்டால் எவ் வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
அவர்கள் வாழப்போகும் இன்பமான அன்பு வாழ்க்கையை அன்றே கண்டு ஆனந்தப்பட்டி ருக்கலாம். ஆனால், 'தான்’ என்ற நிலையிலேயே இருக்கும் அவர்கள், "தாம்’ என்ற நிலையை அடைவார்களா என்பது எனக்குச் சந்தேகமா கவே இருந்தது.
இன்று சில திருமண வைபவங்களில் யாரா
வது ஒருவரின் மோதிரத்தை வாங்கி இந்த நிகழ்ச்சியை வேடிக்கை நிகழ்ச்சியாக நடாத்தி விட்டு மோதிரத்தை மீண்டும் அவரிடம் ஒப்ப டைத்து விடுகிறார்கள்.
இது தவறான வழக்கம். திருமணஞ் செய்து முதன் முதல் கையில் கிடைக்கும் சொத்தாகிய அந்த மோதிரம், அந்தத் தம்பதிகளுக்கே சொந் தமாக வேண்டும், அதுதான் முறை.
மானினம் மானத்தில் மட்டுமல்ல காதல் வாழ்விலும் மானிடர்க்கு முன்னுதாரணமாகத் திகழ வல்லதே.
இலக்கியச்
12

அகளங்கன்
3 கட்டிலும் வட்டிலும்.
'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன’ என்பார்கள் ஆஸ்திகர்கள். இல்லை, இல்லை சொந்த விருப்பத்தின் பேரிலே தான் நிச் சபிக்கப்படுகின்றன’ என்பார்கள் நாஸ்திகர்கள்.
திருமணங்கள் எந்த வகையில் நடந்தேறி னாலும் குடும்ப வாழ்க்கை பற்றி இருசாரா ருமே சில பொதுவான கருத்துக்களை வைத் திருக்கின்றனர்.
'அறஞ்செய்ய விரும்பு’’ என்று கூறிய ஒளவையார்,"இல்லறம் அல்லது நல்லறம் அன்று' என்கிறார். இல்லற வாழ்வை நல்ல முறையில் வாழ்வதுதான் மேலான அறம். அ  ைத விட மேலான அறம் இல்லை என்பது அவரது கருத்து
சிமிழ்
3

Page 13
அகளங்கன்
அந்த இல்லறத்தை நல்லறமாக்குவதும் இல்லாமற் செய்வதும் மனையாளின் மாண் பி லேயே பெரிதும் தங்கி பிருக்கின்றது.
மனைவி, மனைமாட்சி இல்லாதவளாய் இருந்துவிட்டால், அந்தக் குடும்பம் எத்தகைய மாட்சிமைப் பட்டதாக இருந்தாலும் மாட்சி மையுடையதாக ஆகாது என்கிறார் வள்ளுவர். மனைவி குணநலன்களில், செய்கைகளில் ஒழுங்கற்றவளாக இருந்து விட்டால் கணவன் தெருவிலே தலை நிமிர்ந்து நடமாடவே முடி LuTg] . .
இதனால் தமிழரின் குடும்ப வாழ்விலே பெண்கள் பெரும் மதிப்போடு போற்றப் படுகி றார்கள். இந்துக்களின் திருமண வைபவத்தின் போது மனைவியின் காலைப் பலர் முன்னிலையில் கணவன் தொட்டு, கல்லில் (அம்மியில்) தூக்கி வைத்து அருந்ததி காட்டுவதைப் பலர் அவதா னித்திருப்பீர்கள். மணவாழ்வு தொடங்கும், முதல் நாளிலேயே பலர் முன்னிலையில் மனைவி யின் காலைப் பிடித்துக்கெஞ்சி, குடும்பமான தைக் காப்பாற்றும்படி கணவன் வே ண் டி க் கொள்வதாக சிலர் இந்நிகழ்ச்சிக்கு விளக்கங் கூறுகின்றனர். . . . . . . .
தமிழ்க் கலாசாரத்தைப் பொறுத்த வரை யில், நல்ல மனைவி ஒருத்திக்கு இருக்க வேண்டிய
இலக்கியச்
14

அகளங்கன்
குணநலன்கள் பற்றி அளவுக்கு அதிகமாகவே சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றது.
நல்ல மனைவியின் குணநலன்கள் பற்றி **வெற்றி வேற்கை’’ என்ற நீதி நூலில் அதி வீரராம பாண்டியர், ‘குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்' என்று கூறுகிறார். நல்ல குடும்பப் பெண்ணுக்கு அழகு என்று சொல்லப்படுவது, தன் கணவனைப் பேணுதல் என்பது இதன் பொருள். கணவனை மனைவி பேணுவதில் முக்கியமான இரண்டு காரியங்கள் இருக்கின்றன.
மனைவியிடங் கணவன் காணும் முக்கிய மான இரண்டு சுகங்களில் ஒன்று கட்டில் சுகம். மற்றது வட்டில் சுகம். வீட்டைவிட்டு வெளியே செல்லும் கணவன் இந்த இரண்டு சுகங்களை யும் மனைவியை விட வேறு எந்த இடத்திலுஞ் சிறப்பாகப் பெறமுடியாத அளவுக்கு மனைவி கணவனுக்கு வழங்க வேண்டும்.
இதில் கட்டில் சுகம் இளமை உணர்வோடு மறைந்து விடுவது. ஆனால் வட்டில் சுகமோ வாழ்க்கை முடியும் வரை தொடர்வது.
எனவே வட்டில் சுகமென நான் குறிப்பி டும் உணவுச் சுகம் பற்றி இங்கு பார்ப்போம்.
சிமிழ்
15

Page 14
அகளங்கன்
சாப்பாட்டு நேரம் வந்தால் எத்தனை தூரத் திலுள்ள கணவனும் வீட்டைத் தேடிவரக் கூடி யதாக வீட்டை நினைக்கக் கூடியதாக மனைவி யின் சமையல் சிறப்பாக அமைய வேண்டும்.
கணவனைக் கவர்ந்திழுத்து, இல்லறத்தை நல்லறமாக்கப் பெரிதும் உதவுவது மனைவியின் சமையலும், உணவு பரிமாறுந் தன்மையுமே ஆகும். நல்ல உணவு கடைகளிலும் பெறக் கூடி யதாக இருக்கலாம். ஆனால் அன்பான பரிமாறல் மனைவியைத் தவிர வேறு எவரா லும் செய்ய முடியாதது.
இந்தச் சிறப்பான தன்மையைச் சில காவியங் களிலும், பல தனிப்பாடல்களிலும் காணக் கூடிய தாக இருக்கின்றது.
மதுரையிலே கோவலன்கொல்லப்படுவதற்கு முதல் வீட்டில் கண்ணகி தன்கையால் சமையல் செய்து அன்போடு பரிமாறுகிறாள். அதுதான் கோவலன் உண்ட கடைசி உணவு கண்ணகி அன் போடு பரிமாறுவதையும், கோவலன் மகிழ்ச்சி யோடு சாப்பிடுவதையும், அதைப்பார்த்துக் கண் ணகி மகிழ்வதையும், ஆயர்பாடியில் மாதரியும் அவளது மகள் ஐயையுங்கண்டு ஆனந்தப் படுகின் றனர்.
"ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு"
இலக்கியச்
16

9567 fS67
என்று இளங்கோ இதனைக் குறிப்பிடுகின் றார். ஐயைக்கும் அவள் தாய்க்கும் அக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது.
பெரி ய புராணத்திலே, புனிதவதியார் த ன் கணவன் பரமதத்தனுக்கு உணவு பரி மாறிய காட்சி மிகவும் அருமையாக விபரிக்கப் பட்டுள்ளது. புனிதவதியாரே பின்பு காரைக் கால் அம்மையாராக சைவம் போற்றும் பக்தை என்பது நினைவு கொள்ளத் தக்கக
குறுந்தொகை என்ற நூலில் வரும் பாடல் ஒன்றில், கணவனுக்குத் தன்கையால், "புளிச் சாதம்" சமைத்து அன்போடு பரிமாறும் பாவை, கணவன்"இனிது இனிது' என்று மகிழ்ந்து உண வருந்துவதைப் பார்த்துப் பூரிப்படையும் காட்சி யொன்று அழகாகக் காட்டப்பட்டுள்ளது. முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் "இனிது’ எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந் தன்று ஒண்ணுதல் முகனே
கட்டித் தயிரைப் பிசைகிறாள், புளிப்பாகர் செய்வதற்கு, உடுத்திருந்த சேலை சிறிது அவிழ் கிறது. த ன் கைகளைக் கழுவாமலேயே காந்
சிமிழ்
7

Page 15
அகளங்கன்
தள் போன்ற மெல்லிய விரல்களால் உடுத்துக் கொள்கிறாள். குவளை மலர் போன்ற அவளின் கண்களிலே அவள் செய்த தாளிதப் புகை வந்து மோதுகிறது. அத்தனை சிரமப்பட்டு புளிப்பாக ரைச் சமைக்கிறாள் அவள். -
கணவனுக்கு அன்போடு பரிமாறுகிறாள். கணவன்;"மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் போடு” என்று வயிறு நிறையச் சாப்பிடுகிறான். அதைப் பார்த்துப்பூரித்துப் போய் அவளது முகம் மகிழ்ச்சியால் பிரகாசிக்கின்றது.
இதே போல வள்ளுவருக்கும், அ வ ரி ன் மனைவி வாசுகி நன்றாகச் சமையல் செய்து அன்போடு பரிமாறுவாள். வாசுகி இறந்ததும் அதனை ஆற்ற முடியாத வள்ளுவர், "அடிசிற்கு இனியாளே' என்று தொடங்கிப் பாடுகிறார்.
அடிசிற்கு இனியாளே அன்புடைய மாதே படிசொற் தவறாத பாவாய் - அடிவருடிப் பின்தூங்கி முன்னெழும்பும் பேதையே போதியோ என்துரங்கும் என்கண் இனி.
அன்புடைமை, சொற்படி தவறாத தன்மை, அடிவருடிப் பின்தூங்கி முன்னெழும்புஞ் சிறப்பு போன்ற எல்லாவற்றையும் விட,"அடிசிற்கு இனி யாள்' என்ற தன்மையே பெரிதாகத் தெரிகி றது வள்ளுவருக்கு. அதனால் அதனையே முன் வைத்து ‘அடிசிற்கு இனியாளே' என்றே இரங்குகி றார், வான் மறை தந்த வள்ளுவப் பெருந்தகை.
இலக்கியச்
18

அகளங்கன்
தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் ஒளவை யாரிடம், ‘‘கொடியது என்ன" என்று கேட்க ஒளவையார்,
கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய் அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே.
என்று பாடுகிறார். இந்த வரிசையில் அன் பில்லாத மனையாளிலும் கொடியது, அவர் கையால் உண்பது தான் என்று முடிக்கிறார். உணவு பரிமாறுதலுக்கு ஒளவையார் கொடுத்த முக்கியத்துவத்தை இப்பாடலிலிருந்து தெரிந்து தெளிந்து கொள்ளலாம்.
இக்கருத்தை மிகவும் எளிய நடையில் கவி யரசர் கண்ணதாசன், “பாலும் பழமும் கைகளில் ஏந்தி ' என்று தொடங்கும் பாடலில் அற்புத மாகக் கூறுகிறார். 'உண்ணும் அழகைப் பார்த் திருப்பாயே..' என்பது அவ்வரி.
கணவன் உண்ணும் அழகை, மனைவி பார்த் துப் பரவசமடைய, அதைப் பார்த்துக் கணவன் மகிழ்ச்சியடைய அது ஒரு பூலோக சொர்க்க மாகக் காட்சியளிக்கும்.
மனைவிக்கு முதற் குழந்தை கணவன் என் பார்கள், குழந்தை பாலருந்துவதைப் பார்த்துத் தாய் எப்படி மகிழ்ச்சியடைகிறாளோ, அதே
சிமிழ்
19

Page 16
அகளங்கன்
போல் கணவன் உண்ணும் அழகைப் பார்த்து மனைவி மகிழ்ச்சியடைவது தான் நல்ல அன்பு மிக்க மனைவிக்கு- குடும்பப் பெண்ணுக்கு அழகு
இன்று பெண்கள் சிலருக்குச் சமைக்கவே தெரியாது. கணவனுக்கு அன்போடு பரிமாறும் பழக்கமும் மிகக் குறைந்து கொண்டே வருகிறது. கணவன் தன் பாட்டுக்குப் போட்டுச் சாப்பிடும் குடும்பங்கள் பல உண்டு.
தொழிலால் ஏற்படும் பிரிவால் மட்டுமன்றி வீட்டில் இருவரும் இருக்கும் சந்தர்ப்பங்களில் கூட இந்தப் பரிமாறல் நிகழ்வது குறைவு.
"இன்னும் உண்ணுங்கள்" என்று கூறிப்பரி மாறும் மனைவியையும், ‘இனிதாக இருக்கிறது" என்று மகிழ்ச்சியோடு உணவுண்ணும் கணவ னையும், அதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் மனைவியையும் இலக்கியங்களில் மட்டுந்தான் இனிமேல் காண வேண்டும் போல் தெரிகிறது.
இதனாலேதான் பல குடும்பங்களிற் கணவன் மனைவிக் கிடையே அந்நியோன்யம் குறைந்து இயந்திரத் தன்மை பெருகி அன்பு அருகி வருகிறது. பல குடும்பங்கள் ஏனோ தானோ என்ற போக்கில், இல்லறத்தை நல்லறமாக வாழ முடியாமல் தவிக்கின்றன.
குடும்பம் சிறக்கக் கொண்டவனைப் பேணுந் தன்மை பெருக வேண்டும். அப்போதுதான் இல்லறம் நல்லறமாகும். 'மண்ணில் நல்ல வண் ணம் வாழலாம்.'"
இலக்கியச்
20

அகளங்கன்
4 அத்தான் அக்கரையில்
பொருளுக்காகப் பிரிதல், போருக்காகப் L9ብ தல், கல்விக்காகப் பிரிதல் என்ற மூன்று முக் கிய பிரிவுகள் பிரிவுகளிலே உண்டு.
திருமணமாகி மனைவியை விட்டுப் பிரிந்து சென்று கல்வி கற்பது இன்று குறைவுதான். இருப்பினும் கல்விக்காகப் பிரிவதும் நடைமுறை யிலுள்ள ஒரு பிரிவுதான். そ கணவனைப் பிரிந்திருப்பது, மனைவிக்குப் பெரிதும் வேதனை தருவது. அதுவும் இளந் தம்பதிகளிடையே இத்தகைய பிரிவு ஏற்படும் போது துயரம் மிக அதிகமாகவே இருக்கும்.
ஒரு தனிப்பாடலிலே கல்விக்காகப் பிரியும் பிரிவும், அதனை ஆற்றாது அழுது புலம்பும்
சிமிழ்
2

Page 17
அகளங்கன்
காட்சியும் அழகாகச் சொல்லப் பட்டிருக்கின் றன.
கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்குப் பிரிந்து செல்லப் போவதாகத் தலைவன் கூறுகிறான். தலைவியோ பதறுகிறாள்; கதறுகிறாள், பிரி வென்னுஞ் சுடுநெருப்புத் தன்னைச் சுட்டுச் சாம்பலாக்கி விடும் என்று அஞ்சுகிறாள்.
தடுத்துப் பார்க்கிறாள். முடியவில்லை. இறுதியாக ஒரு வார்த்தை கூறுகிறாள். தன் தலைவன் நன்றாகக் கற்றுவர வேண்டும் என்று, அதுவும் எப்படி வரவேண்டும்? அதற்கு உதார ணமுங் கூறுகிறாள். திருஞான சம்பந்தரைப் போல வரவேண்டுமாம்.
எலும்பைப் பெண்ணுருவாக்கியவர் திரு ஞான சம்பந்தர். அவர்போல வந்தாலேதான் எலும்பாகிப் போய் இருக்கும், தன்னையும் பெண்ணாக்க முடியும் என்று, தான் அடையப் போகும் துயரத்தை அழகாகச் சொல்லுகிறாள் தலைவி.
விண்ணாக்கு மாமதி காயாவங் காமவெரி
கொளுத்தப் பண்ணாக்கு மாமொழி மாதங்க மாம்பஞ்ச
பூதியம்போம்
இலக்கியச்
22

அகளங்கன்
கண்ணாக்கு மூக்குச் செவியாக்கை அற்ற கடத்தி லங்கம்
பெண்ணாக்கு வார்தமைப் போலோதி வாரும்
பிரிபவரே
கண், நாக்கு, மூக்கு, செவி, யாக்கை. எதுவுமில்லாமல் வெறும் எலும்பாக இருந்த பெண்ணை, மீண்டும் அழகிய தோற்றம் பெறச் செய்தவர் திருஞான சம்பந்தர். அவரைப் போல வந்தாலேதான் தன்னையும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று அவள் கூறுவது, அவளது பிரிவுத் துயரை அழகாகக் காட்டுகிறது.
'பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை' 'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லைப் பொருள்.’’ என்பவை வள்ளுவர் வாய்மொழிகள்.இவை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மைகள் தாம். இந்தப் பொருளை நல்ல வழியிலே தேடவேண் டும் என்பதும் அவனது கூற்றுத்தான்.
ஆனால் எந்த வழியிற் பொருளைத் தேடி னாலும், பொருள் உள்ளவனை உலகம் போற் றுவது இக்காலத்திற் காணக்கூடிய ஒன்றாகி விட்டது.
சிமிழ்
23

Page 18
அகளங்கன்
பாரதியார், பாஞ்சாலி சபதத்தில் இந்தக் கருத்தைத் துரியோதனன் வாயிலாக அழகாகச் சொல்கிறார். சகுனியிடம், பாண்டவர் செய்த இராச சூய யாகம் பற்றிய பொறாமைக் கருத்தை வெளியிடுகிறான் துரியோதனன்.
நிதிசெய்தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே!
r நெறியினாலத செய்யினும் நாயென நீள்புவி 西西 துதிசெய்தே அடிநக்குதல் கண்டனை மாமனே!
இன்றைய இளைஞர்கள் பொருளைத் தேடி வெளிநாடு செல்வது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. திருமணத்தை எழுதிவிட்டு, சீதனப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்பவர்களையும், திருமணஞ் செய்து ஒரிரு கிழமைகளுக்குள்ளே வெளிநாடு செல்பவர்களை யும் கூட இன்று சாதாரணமாகக் காணக் கூடிய தாகவுள்ளது.
திருமணத்தை எழுதிவிட்டு அல்லது மணஞ் செய்துவிட்டு ஓரிரு கிழமைகள் மனைவியைக் கடைத்தெருவுக்கும், சினிமாக் கொட்டகைக்கும் அழைத்துச் சென்று, அவர்களது பெண்மை உணர்வுகளை அவர்களுக்கு நன்றாக விளக்கிக் கிளர்ந்தெழச் செய்துவிட்டு, வெளிநாட்டுக்குப் பிரிந்து சென்று விடுகிறார்கள்,இன்றைய இளை
இலக்கியச்
24

அகளங்கன்
ஞர்கள். பெண்களோ பிரிவுப் பெருநெருப்பில் எரிகிறார்கள்.
இத்தகைய பிரிவுகள் இன்று நேற்றல்ல சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றன. பிரிவுத் தனிமையில் வாடுங் கன்னியரின் பிரிவுத்துயர் பற்றிப் பாவலர்கள் பலர் பலவாறாகப் பாடி இருக்கிறார்கள்.
கலித்தொகை என்னும் நூலிலே ஒரு காட்சி. பொருள் தேடி வெளிநாடு செல்ல முயன்ற தலைவனுக்குப் புத்தி கூறுகிறாள் தலைவி.
அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப் பிரிந்துறை சூழாதி ஐய!.
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது. ஒழிந்தோர் எல்லோரும் உண்ணாதும் செல்லார் இளமையும் காமமும் ஒராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ. . ஒன்றன் கூறாடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதரோ சென்ற இளமை தரற்கு5
வெளிநாட்டுக்குச் சென்ற உடனேயே அள் ளிக் கொண்டு வரக்கூடியதாக அங்கே பொருள் கள் குவித்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை.
சிமிழ்
25

Page 19
அகளங்கன்
வெளிநாடு செல்லாதோர் எல்லோரும் உண்ணாது பட்டினியாக இருக்கப் போவதும் இல்லை. இளமையும், அந்த இள உடலிலே தோன்றுகின்ற காம உணர்வுகளுந் திரும்ப வரக் கூடியனவல்ல.
ஒரு ஆடையைக் கிழித்து இருவர் உடுத்து வாழும் வறுமை வந்தாலும் ம ன ம் ஒன்றி ஒன்றாக வாழ்கின்ற குடும்ப வாழ்க்கையே வாழ்க்கையென்று கணவனுக்குப் புத்தி கூறுகி றாள் மனைவி.
இவள் வாய் விட்டுக் கூறுவதைத் திருக் கோவையாரில் வருங் கன்னியின் செயலால் உணர்த்துகிறாள். கணவன், 'வெளிநாடு செல் லப் போகிறேன்' என்று புறப்பs, மயக்க மடைந்து விடுகிறாள் மனைவி.
பிரிவைப் பொறுக்க மாட்டாமையால் ஏற் பட்ட மயக்கம் அது. உடனே அவளை எடுத்து முகத்திலே நீர் தெளித்து மயக்கந் தெளிவிக் கின்றனர். மயக்கந் தெளிந்ததும் அவள் கேட் கிறாள், ‘என்னுடைய கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும் நாள் இன்று தானே. மாணிக்க வாசகரின் பாடலில் வருவது இச் செய்தி.
இலக்கியச்
26

அகளங்கன்
திருவள்ளுவர் இக்காட்சிகளைத் திருக்குற ளிலே அழகாகக் காட்டுகிறார். த  ைல வ ன் பிரிந்து செல்லப் போகிறான். அந்தச் செய்தியை மனைவியிடம் வந்து சொல்ல முயல்கிறான். மனைவி தனது பிரிவை ஆற்றாள் என்பதும் அவனுக்குத் தெரியும், அதனால், “விரைவில் வந்து விடுவேன்"என்றுகூறி, தான் திரும்பி வருங் காலத்தையுங் குறிப்பிடுகிறான் அவன். அவளோ அதனைக் கேட்க விரும்பவில்லை.
அவள் சொல்லுகிறாள். "என்னை விட்டுப் பிரிந்து போகாமல் இருந்தால் அது பற்றிக் கூறுங்கள், கேட்கிறேன். ஆனால் திரும்பி எப் போது வருவது என்பதைக் கூறுவதாயின், அப் போது யார் வாழ்ந்து கொண்டிருக்கப் போகி றார்களோ அவர்களுக்குச் சொல்லுங்கள்."
செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.
இன்னொரு காட்சி. கணவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்று விட்டான். அவன் சென்ற வழி வெப்பம் மிகுந்தது என்று பலருங் கூறுகிறார்கள்.
பிரிவைத் தாங்க மு டி யா ம ல் கண்ணிர் விட்டுக் கொண்டிருந்த தலைவி, க ண வ ன் வெயிலிலே கால் வெந்து போகுங் கொடிய
சிமிழ்
27

Page 20
அகளங்கன்
பாலைவனத்தினுரடே செ ல் கி றா ன் என்று அறிந்து நெஞ்சு விம்முகிறாள்.
கணவன் செல்லும் பாதையிலே மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறாள். மழை பெய்து நிலம் குளிர்ச்சி யடைந்தால் அவளுடைய கணவன் செல்லும் வழியில் வெப்பம் இருக்காது. கணவனின் கால் கள் குளிர்ச்சியடைய அவள் நெஞ்சமும் குளிர்ச் சியடையும்.
ஆனால் அந்த அருங்கோடையில் மழை எப்படிப் பெய்யும்? வானத்தில் மழைமேகமே இல்லையே. அவள் அதற்கு ஒரு வழிகூறுகிறாள்.
"வானமே! மழை பொழிவதற்கு நான் தண்ணிர் தருகிறேன். எனது கண்ணிரை முகந்து சென்று அவர் செல்லும் பாதையிலே மழை பொழிய மாட்டிாயோ' என்று வானத்தைக் கெஞ்சுகிறாள்.
என் கண்ணீர்க் கடலால் கனைதுளி வீசாயோ
கொண்மூக் குழிஇ முகந்து.
வானம் கடல் நீரை முகந்து, குளிர்ச்சி பெற்று மழை பெய்வது வழக்கம். அவள் தனது கண்ணீரைக் கடில் என்று தன் சோகத்தைச் சொல்லி கணவன் சேல்லும்
இலக்கியச்
28

அகளங்கன்
பாதையிலே துளித் துளியாய்ப் பெய்யும்படி கூறித் தனது பதிபத்தியையும் காட்டுகிறாள்.
போரிற் பிரிவு இன்றும் உண்டு. கலித் தொகையில் ஒரு பிரிவு, அது போரிற் பிரிவு போன்றதுதான், நீண்ட நாள்களாக அவளு டைய கணவன் வரவில்லை. அவன் இறந்து தான் இருப்பான் என்று ஊரார் கதைக்கின்ற
Tri •
இந்த விடயத்தைத் தோழி, தலைவிக்குச் சொல்ல முயல்கிறாள். தலைவிக்குத் தன் கண வன் பற்றிய அந்தக் கதை வேடிக்கையாக இருக்கிறது. வியப்பாக இருக்கிறது. அவள் கூறு கிறாள்.
‘அடி பேதைப் பெண்ணே, என் உயிர் என் உடலில் இருப்பது என் கணவனின் உயி ருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதைக் காட்ட வில்லையா.”
இன்னுயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை என்னுயிர் காட்டாதோ மற்று.
உடலிரண்டில் உயிரொன்றாக வாழ்ந்த குடும்பம் அது. அதனால் அத்தனை நம்பிக்கை
சிமிழ்
29

Page 21
அகளங்கன்
அவளுக்கு. ‘இருவருக்கும் ஒருயிர்தான். ஒரு உயிர் போயிருந்தால் இரண்டு உடலுமன்றோ போயிருக்க வேண்டும். எனது உடல் உயிரோடு இருப்பது என் கணவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்பதைக் காட்டவில்லையோ' என்று அவள் கூறுவது அவளது கற்பொழுக்க மேம் பாட்டையே காட்டுகிறது.
பிரிவுகள் வேதனையா ன  ைவ. அதிலும் இளமையிற் பிரிவு கொடியது. காவிரிப் பூம் பட்டினமே தனக்குக் கிடைப்பதாக இருந்தா லும் தன் காதலியை விட்டுப் பிரிய முடியாது என்கிறான் பட்டினப் பாலைத் தலைவன். இன்று பிரிவே கெளரவமாகி விட்டது. பிரிவே மகிழ்ச்சியானதாகவும் மாறி வருகிறது.
இலக்கியச்
30

அகளங்கன்
5 பற்றற்ற தமிழ்ப் பற்று
யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்று கொண்
டிருக்கிறது, பேரூந்து வண்டி. சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க தமிழ் ப் பெண்மணி ஒருத்தி பேரூந்து வண்டியை மறித்து ஏறிக் கொண்டாள்.
'அம்மா எங்க போறியள்" இது நடத்துநரின் குரல். 'ஜப்னா (Jaffna) என்றார் அந்தப் பெண்மணி ‘ஏன். யாழ்ப்பாணம் போகேல்லயோ' என்று கேட்டுச் சிரித்தார் நடத்துநர்.
அருகில் இருந்த எனக்கு நடத்துநரின் கிண்டல் மிகுந்த உற்சாக மா ன த ரா க வம். பொருத்தமானதாகவும் தெரிந்தது.
சிமிழ்
3.

Page 22
அகளங்கன்
தமிழுக்குத் தேசிய அந்தஸ்து வேண்டும் என்று ‘திம்பு’வில் பேச்சு வார்த்தை நடை பெற்றால் மட்டும் போதாது.
எங்கள் இதயத்திலே தமிழின் அந்தஸ்து உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும். அது வாய் வார்த்தைகளின் மூலம் அமுல் நடாத் தப்பட வேண்டும்.
எங்குந் தமிழ், எதிலுந் தமிழ், எப்போதுந் தமிழ் என்ற எண்ணம் எங்கும் ஒலிக்க வேண் டும். எங்கள் பாவனைக்கு நாங்கள் பயன்படுத் தாமல் விட்டு விட்டு, எங்கள் மொ ழி க்கு உரிமை தாருங்கள் என்று எங்கெங்கோ போய்க் கையேந்தும் நிலை எங்களுக்குத் தேவையில் லாதது; வெட்கக்கேடானது.
எமது கடந்தகால அரசியல் வரலாற்றில் தமிழுக்கு உரிய அந்தஸ்துக் கோரிப் போராட் டம் நடத்திய அரசியற் கட்சிகள் தம் கட்சிப் பெயர்களையும், தம்முடைய பெயர்களையும் ஆங்கில அந்தஸ்துக்குள் புதைத்தே வைத்திருந் தனர்.
தமிழுக்குச் சம அந்தஸ்துக் கோரிச் சத்தி யாக்கிரகப் போர்களை நடத்திய தந்தை செல் வநாயகம் அவர்கள் தன் பெயரையோ, கை
இலக்கியச்
32

அகளங்கன்
யெழுத்தையோ சா. ஜே. வே. செல்வநாயக மாக எழுதியதில்லை. S. T. W. செல்வநாயகமா கவே எழுதிக் கொண்டார்.
"ஐம்பதுக்கு ஐம்பது கோரிய G,G பொன் னம்பலம் தனது பெயரை க. கா பொன்னம் பலமாக நினைத்துப் பார்த்ததே இல்லை. அப் படி எழுதியவர்கள் மேல், “கோபம் கொண்ட தமிழ்ப் பற்று" அவருடையது.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலுங் கூட இந்த நிலையைக் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழ்ப் பேச்சாலும் எழுத்தாலும் தமிழர் இதயங்களைக் கொள்ளை கொண்டு, பேரறிஞர் அண்ணா என்று தமிழ் கூறு நல்லு லகம் இன்னும் அழைக்கும் அண்ணாத்துரை அவர்கள் முன்னாள் தமிழக முதல்வர், தன் பெயரை C. N. அண்ணாத்துரையாகவே கடைசி வரை எழுதிப் பயன்படுத்தினார்.
இன்றைய தமிழக முதல்வர்,M. G. R ஆக திரையில் அறிமுகமாகி, அரசியலிலும் M.G.R ஆகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்,
தமிழோடு நன்றாக ஒன்றிக் கலந்த சமஸ் கிருதச் சொல்லே, தம் பெயர்களிலுங் கலந்தி ருப்பதைக் கண்டு பொறுக்க மாட்டாதவர்க ளாய்த் தம்முடைய பெயரைத் தனித் தமிழில்
சிமிழ்
33

Page 23
அகளங்கன்
மாற்றிய தமிழறிஞர்கள் இன்றும் நினைத்துப் போற்றுதற்குரியவர்கள்.
சூரிய நாராயண சாஸ்திரிகள் தன்னு டைய பெயரைப் பருதிமாற் கலைஞர் என்றும், வேதாசலம்பிள்ளை அவர்கள் தன்னுடைய பெயரை மறைமலை அடிகள் என்றும், கருத்து மாறுபாடில்லாமல் தனித் தமிழில் மாற்றிக் கொண்ட கதை தமிழ் உணர்வின் உச்சக்கட்ட மான வெளிப்பாடாகும்.
தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகள் கூட்டப்படு கின்றன. உலக மொழிகள் பலவற்றில் தமிழ் ஆதிக்கஞ் செலுத்தி இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப் படுகின்றன.
ஆனால் இங்கோ பருத்தித்துறை, பொயின் பெட்றோ (Point Pedro) ஆகவும், திருகோண மலை நிங்கோ மலி (Trincomalee) ஆகவும், மட்டக்களப்பு பற்றிக்கலோ (Batticaloa) ஆக வும், யாழ்ப்பாணம் ஜப்னா (Jaffna) ஆகவும் தமிழராலேயே அழைக்கப்படும் பரிதாபம் நடை பெறுகிறது.
தமிழிலுள்ள இவ்வூர்ப் பெயர்களைச் சரி யாக உச்சரிக்கத் தெரியாத ஆங்கிலேயர் அழ
இலக்கியச்
34

அகளங்கன்
கான தமிழ்ப் பெயர்களைக்கெடுத்துச் சிதைத்து இப்படி அலங்கோலமாக உச்சரித்தனர். இந்த அநாகரிகத்தையே நாகரிகமாக எண்ணி இன்றும் பலர் அப்பெயர்களையே பயன்படுத்துவது மிக வும் கேவலமானது.
துகிலுரிந்த துச்சா த ன  ைன திரெளபதி போற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த ஆங்கில மாயை,
தங்களுடைய குழந்தைகள், குழலையும், யாழையும் வென்ற இனிய குரலிலே தங்களை டடி, மம்மி என்று அழைப்பதையே, அவர்க ளைப் பெற்றதனாலே தாமடையும் பெ ரு ம் பேறெனக் கருதும் தமிலர்கள் (Tamils) எம்மி டையே இன்றும் உண்டு.
குழந்தைகளின் பெயர்களினாற்கூட தமிழ்ப் பெயர்களைக் காண்பது அருமையாகி வருகின் றது. தம்முடைய கையெழுத்தை ஆங்கிலத்தில் வைப்பதே தாங்கள் கற்ற கல்வியின் பெரும் பேறு என்றும், அதுவே தமக்கு உயர் மதிப் பைக் கொடுப்பது என்றும் எங்கள் தமிழர் பலர் இன்றும் நம்பிக் கொண்டிருக்கும் இழிநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிமிழ்
35

Page 24
அகளங்கன்
கையெழுத்து வைக்கக் கூடப் பயன்படாத மொழிக்குப் போராட்டம் ஏன்? அந்தஸ்து ஏன்?
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்ற பாரதியின் பாடலின் பொருள், பொருளற்ற தாகி விட்டது. தேமதுரத் தமிழோசையை உலகமெல்லாம் பரவச் செய்வதற்கு முன் எமது சகல பாவனைகளிலும் தமிழைப் பயன்படுத்து வது மிக மிக முக்கியமானது.
உட்சுவர் தீட்டப்படாமல், புறச்சுவர் தீட் டப்படுவதில் என்ன பயன்? பற்றற்ற தமிழ்ப் பற் றினை இனியும் பற்றுவது நல்லதல்ல. வீட்டிலும் ஏட்டிலும் நாட்டிலும் எல்லாத் தொடர்புக ளையும் தமிழிலேயே செய்யத் தொடங்கினால் அது தமிழுக்குத் தமிழரே கொடுக்கும் அந்தஸ் தாகும். கையேந்திப் பெறும் அந்தஸ்து நிலைப் பதுமில்லை. நீடிப்பதுமில்லை,
இலக்கியச்

அகளங்கன்
6 தமிழரும் கொடையும்
“கொடுத்துக் கெட்டவன் தமிழன்' என்பது தமிழரைப் பற்றிய ஒரு பொதுவான அபிப்பிரா யம். தன் சொத்துக்களையும், சுகங்களையும் மற்றவர்களுக்குக் கொடுத்து அதனால் வறு மையை அடைந்தவன் தமிழன் என்பதே இதன் பொருள்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
என்றார் வள்ளுவப் பெருந்தகை. அவரின் கூற்றுத்தான் தமிழரின் மூச்சாக இருந்திருக் கின்றது. தம் செல்வங்களை இல்லாதவர்களுக்கு வழங்குதலும், அதனாற் கிடைக்கும் திருப்தி யையும் புகழையும் கொண்டு வாழ்தலுமே உயி ருக்கு மேலான சன்மானம் என்றும், ஊதியம்
சிமிழ்
37

Page 25
அகளங்கன்
என்றும் கொண்டு அதை உள்ளத்தில் நிலை நிறுத்தி வாழ்ந்தவர்கள், தமிழர்கள். ஈத்துவக் கும் இன்பமே இன்பத்துள் எல்லாம் தலையாய இன்பம் என உணர்ந்து வாழ்ந்து காட்டியவர் கள், தமிழர்கள்.
மற்றவர்களைப் பசிக்க விட்டுத் தான் மட் டும் உண்டு கொழுத்துச் சுகபோகம் அனுபவிக் கும் பழக்கம் தமிழருக்கு முற்காலத்தில் இருந் ததில்லை. நிலையில்லாத இந்த உ ல கத் திலே நிலையில்லாத பல செல் வங்க  ைள ச் சேர்த்து அந்தச் செல்வங்களை நிலைபெறச் செய்யத் தமிழர் கையாண்ட வழி இன்றும் நினைத்துப் போற்றுதற்குரியது.
தம் செல்வங்களை ஏழைகளின் வயிற்றிற் சேமித்து வைத்த சமத்துவ வாதிகள் அவர்கள் தாம் உழைத்த செல்வங்களை ஏழைகளின் பசிப்பிணி போக்க உதவிப் புண்ணியமாக மாற் நீடு செய்து அடுத்த பிறவியிலும் அந்தச் செல் வத்தை அனுபவித்த புண்ணியவாளர்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான். பொருள்வைப் புழி.
என்றான் வான் ܗܝ
மறை தந்த வள்ளுவன். பசிப்பிணியால் அழிந்து
இலக்கியச்
38

அகளங்கன்
கொண்டிருக்கும் ஏழையின் பசியைப் போக்கத் தானஞ் செய் த லே தமது செல்வத்தைச் சேமித்து வைக்க வழி என்பது அவன் கருத்து. இந்திரர் அமிழ்தம்
கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் ஒன்று தமிழரின் கொடைச் சிறப்பைக் கூறுகிறது. புறநானூற். றிலே இடம் பெறுகிறது அவனுடைய அப்
• (6-ו חt_jי
இந்த உலகம் இயங் கி க் கொண்டிருப்ப தற்குக் காரணமே, இந்த உலகிலே தானஞ் செய்பவர்கள் இருப்பது தான்,என்கிறார் அவர்.
உண்டால் அம்மஇவ் வுலக மிந்திரர் அமிழ்தம் இயைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே . .
இந்திர உலோகத்துச் சாவாமருந்தாகிய அமிர்தந்தான் கிடைத்தாலும் அது மிகவும் இனிமையானது; பெறுமதியானது; கிடைத்தற்கு அருமையானது; பெருமையானது என்று தனித்து உண்ணாது எல்லோருக்கும் கொடுத்து உண் ணும் பண்புடையவர்கள் இருப்பதனாலேதான் உலகமே இயங்குகிறது என்றார் அவர்,
சிமிழ்
39

Page 26
அகளங்கன்
தேவர்களும், அசுரர்களும், ஒன்று பட்டு ஒற்றுமையாகப் பாற்கடலைக் கடைந்த போது சாவா மருந்தாகிய அமிர்தம் தோன்றியது. பாற்கடலைக் கடைவதிலே தேவர்களை விட உடல் வலிமை அதிகங் கொண்ட அசுரர்களின் பங்கே அதிகமாக இருந்திருக்கும் என்பது நினைத்துப் பார்க்கக் கூடியது. அப்படி இருந் தும் தெய்வத்தன்மை வாய்ந்த தேவர்கள் அமு தத்தை அசுரர்களுக்குக் கொடுக்காமல் தாமே தனித்துண்ட கதை புராணக் கதை.
அந்தத் தெய்வத் தன்மை வாய்ந்த தேவர் களை விட, பூமியிலே வாழ்கின்ற மனிதர்கள் மேலானவர்கள். அவர்கள் தாமே உழைத்துத் தமது உழைப்பிற் பங்கு பெறாத ஏழைகளுக் கும் மற்றோருக்கும் தமது செல்வத்  ைத க் கொடுத்து வாழ் ந் த னர். அத் த  ைகய, மனிதர்கள் பூமியிலே இருப்பதனாலேதான் இந் தப் பூமியே இயங்குகிறது என்று பூமியின் இயக் கத்துக்குக் காரணஞ் சொல்லுகிறான் இந்தப் பாண்டிய மன்னன். இவன் கூறும் மனிதர்கள் தமிழர்கள்தாம் என்பது தெளிவானது.
இறப்பை இல்லாமற் செய்யவல்ல சாவா மருந்தாகிய ஒரு நெல்லிக் கனியை அதிகமான் என்ற சங்க காலத்து அரசன், தான் உண்ணா
இலக் கியச்

அகளங்கன்
மல் ஒளவையாரிடம் கொடுத்து மகிழ்ந்தான். அரசர்கள் அழிபவர்களே, அறிவுக் கருத்துக் கள் அகிலமெங்கும் பரப்பப்பட்டு வாழவேண் டியவை. அறிவை வ ழ ங் கும் அறிவாளிகள், புலவர்கள், இறவாத இன்பநிலை எய்த வேண் டியவர்கள் என்பது அவ்வரசனின் கருத் து. சாவா மருந்தென்று தெரிந்தும் அ த  ைன த் தானுண்ணாது ஒளவைக்குக் கொடுத்துப் புகழ் பெற்ற அதிகமான் போன்றவர்கள் தமிழ்க் குலத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள். பாரியும் பேகனும்
“எள் என்றாலும் ஏழாகப் பிரித்து உண்' என்பது தமிழ்ப் பழமொழி. பூசணிக்காயை ஏழாகப் பிரித்துக் கொடுத்து உண்டால் அதிற் பெருமையில்லை. எள் போன்ற மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் அதனைப் பங்கிட்டு உண்ண வேண்டும் என்பதே தமிழரின் தத்துவம். தனது நாட்டிலே ஒரு முல்லைக் கொடி தானும் படர்வதற்கு ஆதாரம் இன்றி அல் லற்பட்டு வீழ்ந்து கிடக்கக் கூடாது என்ற உணர்விலே தனது தேரினையே அக்கொடி படரக் கொழுகொம்பாகக் கொடுத்து விட்டுக் கால் நடையாகத் தன் அரண்மனைக்குச் சென்
சிமிழ்
4t

Page 27
அகளங்கன்
றவன், பாரிவள்ளல். பாரிமன்னன் என்பதை விடப் பாரிவள்ளல் என்பதே தமிழர் மனதிற் பதிந்து விட்ட பெயராகும்.
வையாவிக் கோப்பெரும் பேகன் என்ற அரசன், மழையிலே நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மயிலுக்குத் தனது போர்வையை எடுத்துப் போர்த்தி வி ட் டு க் குளி ரி ல் நடுங்கியபடி அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். புறநானூற்றுப் புலவர்களாற் போற்றப்பட்ட பேகன் பிறந்த தமிழ்க் குலத்திற் பிறந்தவர்கள் நாங்கள் என்று நினைக்கப் பெருமையாக இல் GoG) u JIT?
முல்லைக்கொடி கிடந்த இடத்தைக் கவ னித்து வைத்து, ஆறுதலாக மீண்டு வந்து பந் தல் போட்டுப் பட ர விட்டிருந்தால் இன்று பாரியின் பெயர் பாரிலே நிலைத்திருக்காது. குளிரில் நடுங்கிய மயிலுக்கு அரண்மனையிலி ருந்து போர்வை அனுப்பி வைத்திருந்தால் அவன் புகழ் புறநானூற்றிலே புகழப்பட்டிராது.
துயரத்தைக் கண்ட உடனேயே துடைக்க வேண்டுமென்ற எண்ணமும், செயற்பாடும் அத் துயர் துடைப்பினாலே தனக்கு ஏற்படும் துன் பத்தைப் பொருட்படுத்தாத தன்மையும், பாரி
இலக்கியச்
42

அகளங்கன்
யையும், பேகனையும் இன்றும் V நினைவு கொள் ளச் செய்கின்றன.
குறுந்தொகையிற் கொடை:
குறுந்தொகை என்று ஒர் அகத்திணை நூல் தமிழ் இலக்கியத்திலே உண்டு. இது சங்ககால இலக்கியமாகப் போற்றப்பட்டு வருகின்றது. அக் குறுந் தொகையிலே நறுந் தொகைத் தேன். கள் செறிந்து கிடக்கின்றன.அங்கே ஒரு பாடல். அது அன்றைய தமிழனை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. அந்தத் தமிழனின் வாரிசுதானா இன்றைய தமிழன் என்பதை நீங்களே கண்டு கொள்ளுங்கள்.
காதலனும் காதலியும் களித்திருக்கும் ஓர் இன்பமான மாலைப் பொழுது. காதலியோ காதலனிடம் ஏதோ கேட்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறாள். முற்காலத்திற் காதல் முற்றிய பின் காதலன் காதலியை மணஞ் செய்வதற்காகப் பொருள் தேட வேற்றுார் செல்வது வழக்கம். பொருள் இல்லார்க்கு இவ் வுலகு இல்லைதானே. இன்று காதலி வீட்டிற் சீதனமாகப் பொருள் பெற்றுக் காதலன் வெளி நாடு செல்வதை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்
கள்.
சிமிழ்
43

Page 28
அகளங்கள்
இந்தக் காதலனும், பொருள் தேடுவதற் காக வெளியூர் செல்லப் போகிறான் என்று ஒரு செய்தி காதலியினுடைய தோழியின் செவி களுக்கு எட்டுகிறது. அவள் அதைத் தன் தோழி யிடம் கூறினாள். காதலியினாலே தன் காத லனின் பிரிவு ஆற்றக் கூடியதாக இல்லை. அவள் அவனைப் பிரியாள். பிரிந்தால் உயிர் தரியாள்.
அவள் தன் காதலனிடம் அது பற்றி க் கேட்டு விடுகிறாள். அவனோ அப்படி எண் ணங் கொண்டு இருக்கவும் இல்லை, அவளைப் பிரிந்து வேறு பொருளைப் பொருளென மதித் துத் தேடச் செல்லும் துணிவும் அவனுக்கு இல்லை. அதனால் அவளது கேள்விக்கு ஆத்தி ரத்தோடு பதில் சொல்கிறான்.
மெல் இயல் அரிவை! நின் நல்அகம் புலம்ப நிற் துறந்து அமைகுவ்ென் ஆயின் - எற்துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக! - யான் செலவுறு தகவே.
'உன்னைப் பிரிந்து சென்று நான் உனக் குத் துன்பத்தை விளைவிப்பேனாயின் என்னைத் துறந்து நீண்ட நாள்களுக்கு இரவலர் வராமற் போகட்டும். நான் இரவலருக்குத் தானஞ் செய்ய முடியாது தவிர்த்து வருந்தும் நிலையை அடைவேனாக' என்று சபதஞ் செய்கிறான். இரவலர் வீடு நோக்கி வருவதும், அவர் களுக்கு வாரி வழங்கி மகிழ்வதும் அன்றைய தமிழனின் இல்லற் தருமம். இரவலர் வராத
இலக்கியச்
44

அகளங்கன்
நாள்கள் அவர்களுக்குத் துன்பத்தை விளைவிக் கும் நாள்களாகும். அதுவும் எத்தகைய துன் பம்? காதலி காதலனைப் பிரிந்து இருப்பதிலே படுகின்ற துன்பத்தை விடப் பன்மடங்கு துன் L l l fD.
தன் காதலியைத் தான் வருத்தினால் அதைவிடப் பன்மடங்கு துன்பத்தைத் தான் அனுபவிக்க நேரட்டும் என்று தனக்கே தான் சாபங் கொடுக்கிறான், அக்காதலன். "எற் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக'. யான் செலவுறு தகவே."
பல நாள்கள் இரவலர் வாராது போக அதனாலே துன்பமடையும் நிலையை நான் அடைவேன் எனச் சத்தியஞ் செய்யும் தமிழ னின் அன்றைய வாழ்க்கை முறையை எண் ணிப் பார்த்தால் வியப்பாக இல்லையா!
இது, பாலை பாடிய பெருங் கடுங்கோ என் னும் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல். நாம் அதே தமிழினத்தின் வரிசுகள் தாமா? நாம் அதே தமிழினத்தின் வாரிசுகளா?. தமிழ்ச் சொற்கள் திரிபுபட்டது போலத் தமிழ் உள்ளமும் திரிபுபட்டு விட்டது. தமிழன் தமி ழனாக இல்லை. தமிழனின் கொடைப் பண் பும், இரக்க மனப்பான்மையும் இன்று எங்கே? இவைகளையும் அன்றைய தமிழன் கொடை யாகக் கொடுத்து விட்டான் போலும்.
சிமிழ்
45

Page 29
அகளங்கன்
7 அன்னையர் போராட்டம்
நாட்டுக்கு நாடு போராட்டங்கள் ஒபாது நடந்து கொண்டே இருக்கின்றன. ஆயுதப் போராட்டங்கள் மட்டுமின்றி அ கி ம்  ைச ப் போராட்டங்சளும் ஆங் காங் கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சட்டமறுப்புக்கள்,சத்தியாக்கிரகங்கள்,ஊர் வலங்கள்,மறியல்கள் எனப் பலவகைப் போராட் டங்களிலும் ஆண்களோடு பெண்களும் கலந்து கொண்டு போராடி வருகின்றனர்.
பெண்கள் இன்று தங்கள் உரிமைகளுக் காகவும், பொதுவான மனித உரிமைகளுக்கா கவும், தனித்துப் போராட்டம் நடாத்துமள விற்கு உயர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இலக்கியச்
46
 

அகளங்கன்
மகளிர் அணி, மாதர் அணி, அன்னையர் அணி எனப் பலமுன்னணிகள் இன்றைய பல போராட்டங்களில் முன்னணி வகிக்கின்றன. அண்டை அயல் நாடுகளில் மட்டுமின்றி இங்கும் கூட இந்த அணிகளின் அணிவகுப்பை அண்மைக் காலங்களில் மிக அதிகமாகவே காண்கிறோம். கம்பரின் இராமாயணத்தில் ஒரு அன்னை யர் முன்னணி மறியற் போராட்டம் ஒன்றை நடாத்தி வெற்றி பெற்றிருக்கின்றதெளன்பதை இன்று சிந்தித்துப் பார்க்கும் போது ஆச்சரியம் எம்மை ஆட்கொள்வதை மறுக்க முடியாதிருக் கின்றது.
வாலியைக் கொன்று கிட்கிந்தை இராச்சி யத்தைச் சுக்கிரீவனுக்குக் கொடுத்தார்,இராமர் அதற்குப் பிரதியுபகாரமாகச் சீதையை இரா வணன் சிறைவைத்திருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடித்துத் தருவதாகச் சுக்கிரீவன் இராம ரிடம் வாக்களித்திருந்தான்.
வாலி இறந்ததும் கார்காலம் தொடங்கி யது. கார்காலம் முடிவடைந்ததும் சீதையைத் தேடும் பணியைத் தொடங்குவதாகக் கூறி அர சாட்சித் தொழிலை ஏற்றான், சுக்கிரீவன்.
கார்காலம் முடிவடைந்த பின்னுங் கூட சுக்கிரீவன் அந்த முயற்சியில் இறங்கவில்லை.
சிமிழ்
47

Page 30
அகளங்கன்
மதுவுண்டு, இளம் பெண்களோடு இன்பமனு பவித்துக் கொண்டு இருந்து விட்டான்.
தன்னைச் சுக்கிரீவன் ஏமாற்றிவிட்டான், என நினைத்த இராமர், கோபங்கொண்டார். சுக்கிரீவனிடஞ் சென்று அவனை எச்சரிக்க்ை செய்து வரும்படி இலக்குவனை ஏ வினா ர் இராமர்.
இலக்குவன் இ ய ல் பா க வே முன்கோபி. இராமரே கோபப்படும் போது இ லக் கு வ ன் எப்படிப் பொறுமை காப்பான்? வில்லும் அம் புங் கொண்டு கோபாவேஷமாகச் சுக்கிரீவனின் அரண்மனையை நோக்கி வந்துகொண்டிருந் தான்.
இலக்குவனின் கோபாவேஷத்தைக் கண்ட வானரச்சேனை கதிகலங்கியது. வழமையான பாதையிலே சென்றால் ஏதாவது ஆபத்துக் களைச் சந்திக்க நேருமோ என்று ஐயுற்ற இலக்குவன் வேறு வழியில் அரண்மனைக்குட் புக முயன்றான். குரங்குகள், அதை அறிந்து மலைகளைக் கொண்டு வந்து வாசற் கதவை அடைத்து விட்டன.
இலக்குவனின் கோபம் எல்லை கடந்தது. கதவையும், அடைத்து வைத்த மலைகளை யும் உதைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
இலக்கியச்
48

*56T虚み67
வாலியின் மகனான அங்கதன் சுக்கிரீவனி டம் ஒடிச் சென்று நிலைமையைக் கூறினான். மதுமயக்கத்தில் இருந்த சுக்கிரீவன் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. -- ۔
இலக்குவனின் கோபத்தினால் ஏற்படப் போகும் இழப்புக்களை எப்படியும் தடுத்தே யாக வேண்டும் என்று சிந்தித்த அங்கதன் அனு மானிடஞ் சென்று விபரத்தைக் கூறுகிறான்.
அனுமான், இலக்குவனின் கோபத்தை ஆற்றித் தம்மைக் காத்துக் கொள்ள ஒரு உபா யத்தை நாடுகிறான். வாலியின் மனைவியான தாரையிடஞ் சென்று இலக்குவனைச் சமாதா னப்படுத்துவதற்கு ஒரு போராட்டம் நடாத்தும் படி கேட்டுக் கொண்டான்.
தாரை, பெண்கள் பலரை அழைத்து அரண் மனை வாசலில் ஒரு மறியற் போராட்டத்தை நடாத்துகிறாள். ஆண்கள் எல்லோரையும் அவ் விடத்தை விட்டு அகலும்படி கூறிவிட்டுத் தானே தலைமை தாங்கிப் பெண்கள் பலரை அழைத்து வாசலிலே இருந்து ஒரு மறியற் போராட்டத்தை நடத்தினாள் தாரையென்று கம்பன் கூறுகிறான்.
சிமிழ்
49

Page 31
அகளங்கன்
நீரெலாம் அயல் நீங்குமின் நேர்ந்தியான் வீரனுள்ளம் விளக்குவல் என்றலும் பேர நின்றனர் யாவரும் பேரகலாத் தாரை சென்றனள் தாழ்குழலாரொடும்.
கோபமும் வேகமும் ஒன்றோடொன்று போட்டியிடக் கூற்றுவனைப் போல வந்த இலக் குவன், அரண்மனை வாசலிற் பெண்கள் வழி மறித்து நிற்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றான்.
பிற பெண்களைத் தாயாகவும், சகோதரி யாகவும் நினைத்து மதிக்கும் இலக்குவனால் அந்த அன்னையர் முன்னணியை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.
தனது தாமரை மலர் போன்ற முகத் தைச் சாய்த்து, முகங்கவிழ்ந்து, வில்லைப் பூமி யிலே ஊன்றியபடி கூச்சத்தோடு அடக்க ஒடுக் கமாக மாமிமார் மத்தியிலே நிற்கின்ற மரும கன் போல, இலக்குவன் நின்றானென்று கம்பர் இலக்குவனின் நிலையை அழகாக விப ரிக்கின்றார்.
தர்மரை வதனஞ் சாய்த்துத்
தனுநெடுந் தரையில் ஊன்றி மாமியார் குழுவின் வந்தா
னாமென மைந்தன் நிற்ப,
இலக்கியச்
50

அகளங்கன்
இப்படி நின்ற இலக்குவனிடம், தாரை இனிமையான வார்த்தைகளால் உரையாடுகி றாள். இலக்குவனின் கோபத்தை ஆற்றிவிடுகி றாள். இராஜதந்திரம் மிக்க வார்த்தைகளைப் பேசி இலக்குவனைச் சமாதானப்படுத்திக் குரங் குக் கூட்டங்களைக் காப்பாற்றுகிறாள், தாரை. இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத் தில், குரங்குக் கூட்டத்திற் கூட பெண்கள் போராட்டம் ஒன்று அன்னையர் முன்னணி , யாக - மறியற் போராட்டமாக நிகழ்ந்திருக் கின்றதென்பதை அறியும் போது ஆச்சரியம் எனக்கு மட்டும்தானா ஏற்படுகிறது?
சிமிழ்
51

Page 32
அகளங்கன்
S தமிழிலக்கியமும் வானியலும்
வானியல் ஆராய்ச்சிகள், விஞ்ஞானச் சாத னைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளாக இன்று விளங்குகின்றன. சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிந்த விஞ்ஞானிகள், செவ்வாயிற் காலடி பதிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் 95@YT。
சூரியனிலிருந்து துண்டுகள் ஏ தா வ து வெடித்து விழுந்தால் அத்துண்டுகள் பூமியைத் தாக்காதிருப்பதற்காகப் பூமியையே புரட்டி நகர்த்தும் அளவிற்கு விஞ்ஞான ஆய்வுகள் வளர்ந்து விட்டதைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை. *
தகுந்த ஒரு நெம்புகோலும், நிற்பதற்கு ஒரு இடமும் தந்தால் இந்தப் பூமியையே புரட்டி
இலக்கியச்
52
 

அகளங்கன்
எறிய முடியுமென்றான், விஞ்ஞானி ஆக்கி மெடீஸ்,
இதனைப் படித்த காலத்தில் இரணியாக் கதன் என்பவன் பூமியைப் புரட்டிச் சென்று எங்கோ ஒரு கடலில் வீழ்த்திய புராணக் கதை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. w
இப்போது, விஞ்ஞானிகளின் வானியல் ஆராய்ச்சிகளையும், எமது பழந்தமிழ் இலக்கி யங்களிலும் புராண இதிகாசக் கதைகளிலும் சொல்லப்பட்டுள்ள வானியல் சம்பந்தமான கருத்துக்களையும் ஒப்பிட்டுக் காணும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
நாங்க ள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த ஒரு சூரியக் குடும்பத்தை மட்டுமே விஞ் ஞானிகள் முற்காலத்திற் கண்டு கொண்டனர். ஆனால் இப்போது பல சூரியக் குடும்பங் கள் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானி கள் வந்து, அது சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஆவலாக ஈடுபட்டிருக்கின்றனர்.
எமது கந்த புராணத்தில் சூரபன்மன் ஆயி ரத்தெட்டு அன்னர் றடடு யுகாக ஐாக அரசாண்விழிதுதவகமிர்ச் ஆெ பேசுகிறான்.
சிமிழ்

Page 33
அகளங்கன்
ஆயிரத்தெட்டு அண்டங்களும், ஆயிரத் தெட்டுச் சூரியக் குடும்பங்களாக இருக்கலா மென்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு,
சூரபன்மனின் பெருமித வார்த்தைகளைக் கேட்டு முருகப் பெருமான், “நீ அறிந்தது அவ் வளவு தான். ஆனால் அவைகளுக்கு அப்பா லும் அண்டங்கள் இருக்கின்றன." என்று கூறு கிறார்.
கந்த புராணக் கதைப்படி ஏராளமான சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன, என்ற கருத்து எமக்குக் கிடைக்கின்றது.
இராமாயண காவியத்தைத் தமிழிலே அதி யற்புதமாகப் பாடியவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன். தனது வானியற் புலமையையும் கம் பன் தனது இராமாயணத்திற் காட்டவே செய் கிறான்.
‘வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பரிலே’ அசோக வனத்திற் சோகவன மாகச் சிறையிருக்கிறாள் சீதை. கண்ணீர் சிந் திய படி கவலையோடு இருந்த சீதையைக் காண வருகிறான்.காமுகன்.இராவணன்.
*அவனின் ஆபத்துத் து லகளிலும் பத்து மணிமுடிகள் ಕ್ವೈಕ್ಲಿಕೆ': ፊ፵ናr dቻ
இலக்கியச்

அகளங்கன்
வைக்கின்றன. அந்தப் பத்து மணி முடிகளின் பிரகாசத்தையும் ஒருங்கே தன் கற்பனைக் கண் ணாற் காணுகிறான் கம்பன்.
பன்னிரண்டு சூரியர்களிலே, இரு சூரியர்கள் வராமல் பத்துச் சூரியர்கள் ஒன்றாக வந்தது போல் இருக்கிறது,அக்காட்சி என்கிறார் கம்பன்.
சன்ன வீரத்தகோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த பொன் நெடுவரையில் தொத்திய கோளும்
நாளும் ஒத்து இடையிடை பொலிய மின் ஒளிர்மெளலி உதயமால் வரையின் மீப்படர் செங்கதிர்ச் செல்வர் பன் னிருவரினும் இருவரைத் தவிர்வுற்று
உதித்தது ஒர்படி ஒளிபரப்ப.
V ( சுந், காண். 81 ) தான் அணிந்துள்ள வெற்றிமாலையாகிய பொன்மாலையிற் பதிக்கப்பட்ட வெண்மை யான முத்துக்கள்,ஊழியின் இறுதியிலே தனித்து நின்ற நீண்ட பொன்மயமான மகாமேருமலை யிற் காணப்பட்ட கிரகங்களையும், நட்சத்தி ரங்களையும் போன்று இடையிடையே பிரகா சிக்கவும்;
மின்னுகின்ற ஒளியையுடைய பத்து முடிகள், பெரிய உதயகிரியில் உதிக்கின்ற பன்னிரண்டு
சிமிழ்
55

Page 34
அகளங்கன்
சூரியர்களிலே இருவரைத் தவிர்த்துப் பத்துச் சூரியர்கள் ஒருங்கே வந்ததைப் போன்று ஒளி வீசவும், வந்தான் இராவணன் என்கிறான் கம்பன்.
சூரியர் பன்னிருவர் என்ற வானியற் கொள் கை கம்பர் காலத்துக் கொள்கையாக இருந்தி ருக்கிறது. சோதிடத்தில் மேடம் முதலான பன் னிரு வீடுகளிலும் சஞ்சரிக்கும் சூரியனைப் பன் னிரு சூரியர் எனத் தனித்தனிப் பெயரிட்டுத் துவாதச ஆதித்தர்கள் என அழைக்கும் வழக்கம் உண்டு.
கந்த புராணத்திலே ஒரு காட்சி.யுத்த களத் திலே சூரபன்மனின் கொடியை முருகப் பெரு மான் அறுத்து வீழ்த்தி விடுகிறார். அக்காட் சியைக் கண்ட தேவ சேனைகள் மகிழ்ச்சி ஆர வாரஞ் செய்கின்றன.
பானுகம்பன் என்பவன் தன் ஆயிரம் வாய் களிலும் ஆயிரம் சங்குகளை வைத்து வெற்றிச் சங்கொலிக்கிறான். அந்தச் சங்கொலி கேட்ட தேவ சேனைகளின் சந்தோச நிலையைக் கச்சி யப்பர் அழகாகக் காட்டுகிறார்.
சங்கமோடு தபனனும் ஆர்த்தலும் மங்குல் வண்ணத்து மாயவன் ஆர்த்தனன்
இலக்கியச்
56

அகளங்கன்
பங்க யாசனப் பண்ணவன் ஆர்த்தனன் திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே
(கந்த சூரபன். 208)
பானுகம்பனின் வெற்றிச் சங்கொலியோடு முருகனின் கொடியில் அப்போது சேவலாக இருந்த அக்கினி பகவானும் ஆரவாரித்தான்.
அத்தோடு மேக வண்ணனான மகாவிஷ்ணு வும் மகிழ்ச்சி ஆரவாரஞ் செய்தார். தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவரான பிரம்ம தேவரும் ஆரவாரஞ் செய்தார். எனத் தனித்தனியே மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கூறிய கச்சியப்பர், இறுதியாகச் சந்திரன் ஆரவாரஞ் செய்தது. சூரியன் ஆரவாரஞ் செய்த த னா ல் என முடிக்கிறார்.
அக்கினி பகவான், மகாவிஷ்ணு, பிரம்ம தேவர் ஆகியோர் தனித்தனியே சுயமாக ஆரவாரஞ் செய்ததைக் கூறிய கவிஞர், சந்தி ரன் ஆரவாரஞ் செய்தது, சூரியன் ஆரவாரஞ் செய்தது, எனத் தனித்துக் கூறாமற் சூரியன் ஆரவாரஞ் செய்ததன் காரணமாகச் சந்திரன் ஆரவாரஞ் செய்ததென்று கூறியிருப்பதை நோக்கும் போதுதான் அன்றைய வானியல் அறிவு எம்மை வியக்க வைக்கின்றது.
சிமிழ்
57

Page 35
அகளங்கன்
சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் சந்திரனி லும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத் தைக் கந்தபுராணக் காலத்திலேயே சொல்லி விட்டார் கச்சியப்பர்.
கம்பராமாயணத்தில் வாலிக்கும் சுக்கிரீவ னுக்கும் யுத்தம் நிகழ்கின்றது. அண்ணன் தம் பியாகிய அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்துக் கடித்துப் போர் புரிகின் றனர்.
கொடிய பற்களினால் ஒருவரை ஒருவர் கடிப்பதனால் க டி வா யிலிருந்து இரத்தம் தெறிக்கின்றது. தெறிக்கும் இரத்தம் திக்கின் எல்லைவரை செல்கிறதாம். அதனால் நட்சத் திரங்கள் இரத்தத்திலே தோய்ந்து சிவப்பு நிறத்தை அடைகின்றனவாம்.
நட்சத்திரங்கள் செ வ் வாய் க் கிரகம் போன்று செந்நிறமாகக் காட்சியளிக்கின்றன, என்றான் கம்பன்.
வெவ்வாய் எயிற்றான் மிடல் வீரர்
கடிப்ப மீச்சென்று அவ்வா யெழுசோரிய தாசைகள்
தோறும் வீச
இலக்கியச்
S8

அகளங்கன்
எவ்வாயு மெழுந்த கொழுஞ்சுடர்
மீன்கள் எல்லாம் செவ்வாயை நிகர்த்தன செக்கரை
ஒத்த மேகம்,
(வாலி வதை. 44) செவ்வாய்க் கிரகம் சிவப்பு நிறமானதென் பதைக் கண்டு பிடித்து அதற்குச் ‘செவ்வாய்' எனக் காரணப் பெயரும் இட்டழைத்தனர் எமது வானியல் ஆய்வாளர்கள். 亨 இன்று, பல கோடிக்கணக்கான பொருட் செலவின் பின் விஞ்ஞான உலகம் செவ்வாய், செந்நிறமுடையது என்று கண்டு பிடித்திருக்கி ქ[198ტl.
இப்படிப் பலவிதமான வானியற் கருத்துக் களை எமது புராண இதிகாசங்களிலே கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சிமிழ்
59

Page 36
அகள்ங்கன்
9 விண்வெளி யுத்தம்
நாட்டுக்கு நாடு யுத்தங்கள் நிகழ்கின்றன.
புதுப்புது வகையான ஆயுதங்கள் யுத்தங்களிலே பயன்படுத்தப்படுகின்றன.
மனித இனத்தின் முடிவுக் காலமே யுத்தங் களின் முடிவுக் காலமுமாக இருக்கும் போலே தெரிகிறது. இடையில் யாராலும் எந்த ஏற் பாட்டாலும் தடுத்து நிறுத்தவே முடியா தென்று எண்ணுமளவுக்கு உலகின் இன்றைய போக்கு அமைகின்றது. w
முற்காலத்திற்கும், இன்றைய விஞ்ஞான யுகத்திற்கும் இடையே எத்தனையோ வகை யான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.
ஆனால் யுத்தங்களைப் பொறுத்த வரை யில் யுத்த ஆயுதங்களில் மாற்றங்கள் ஏற்பட்
இலக்கியச்
60
 

அகளங்கன்
டாலும், யுத்த முறைகளின் அடிப்படைகளில் அதிக மாற்றங்களைக் காணமுடியவில்லை.
பூமியிலே இருப்பவர்களை ஆகாயத்தில் இருந்து கொண்டு தாக்கும் முறை இன்று கண் கூச, மனம் நடுங்கக் கண்டு கலங்கும் ஒரு யுத்த முறையாகும்.
மகாபாரத யுத்தத்தின் போதும் இந்த யுத்தமுறை இடம் பெற்றிருக்கின்றது. அரக்கர் கள், அசுரர்கள் தமது மாயையால், ஆகாயத் திற் பறக்கும் வல்லமை படைத்திருந்தார்க ளென்று எமது இலக்கியங்கள் இயம்புகின்றன. வீமனுக்கு இடும்பி என்ற அரக்கி மூலமா கப் பிறந்தவன் கடோற்கஜன். இவன் மகா பாரத யுத்தத்தின் போது அடிக்கடி ஆகாயத் தில் நின்று கொண்டு பூமியிலுள்ளவர்களை அம்பெய்து கொன்ற கதையைப் பாரதக் கதை யிலே காணலாம்.
இராம - இராவண யுத்தத்திலும், இராவ ணனும் அவனின் மகன் இந்திரஜித்துப் போன்ற வீரர்களும், ஆகாயத்தில் நின்று கொண்டு பூமி யில் நின்ற இராமரின் சேனையோடு போர் புரிந்ததாக இராமாயணம் கூறுகிறது.
தேவாசுர யுத்தத்தின் போது முருகன், பறந்து செல்லக் கூடிய மயிலையே தனது யுத்த
சிமிழ்
6

Page 37
அகளங்கன்
விமானமாக வாகனமாகப் பயன்படுத்தியிருகிக் றார்.
சூரபன்மனின், 'இந்திரஜாலம்" என்னும் பெயர் கொண்ட தேரும் அடிக்கடி அந்தரத் திலே பறந்து மறைந்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
முருகனும் சூரனும் ஆகாய விமானங்களில் நின்று கொண்டு விண்வெளியிற் சண்டை செய்ததாக எண்ணுதற்குக் கந்த புரா ன ம் இடமளிக்கிறது.
அத்தோடு பூமியில் ஒடக்கூடியதும் ஆகாயத் திற் பறக்கக் கூடியதுமாக மயில் மட்டுமன்றிச் சூரபன்மனின் தேரும் இருந்திருக்கிறதென் பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கி Д0&5].
ஆகாயத்திலும் பூமியிலும் நின்று தாக்குதல் செய்யக்கூடிய யுத்த விமானமாகச் சூரபன்ம னின் இந்திரஜாலம் என்ற தேர் இருந்திருக் கின்றதென்பது இன்றும் புதுமையானதே.
பொய் வேடமாகச் சிவவேடம் பூண்டு வந்த இராவணன் சீதையைச் சிறையெடுத்துத் தனது புட்பக விமானத்தில் ஏற்றி ஆகாயத் திற் பறந்து செல்கிறான்.
இலக்சியச்

அகளங்கன்
தசரதனின் நண்பனும் பறவைகளுக்கு அர சனான கழுகு இனத்தில் பிறந்தவனுமான சடாயு, இராவணனின் புட்பக விமானத்தை வழிமறித்துப் போர் செய்தான்.
ஆகாயத்தில் - விண்வெளியில் உக்கிரமான சண்டை உண்டாகிறது. விண்வெளியில் இரு யுத்த விமானங்கள் மோதுவது போல இராவ ணனது புட்பக விமானமும் சடாயு என்ற பற வையும் மோதியிருக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றவில்லையா?
காட்டிலே சீதையும் இராமனும் தனித்தி ருக்கின்றனர். இந்திரனின் மகனான சயந்தன் சீதையின் அங்க இலாவண்யத்திலே ஆசையுற்று மோகங் கொண்டு காகவடிவெடுத்து வந்து அவள் அங்கங்களில் இருந்து சேட்டை செய்கி றான்.
இராமர் அதை அறிந்து அயலிலேயுள்ள கல்லின் அருகிலுள்ள புல்லொன்றை எடுத்து அதையே அம்பாக அக்காகத்தின் மீது விடுக்கி றார்.
*வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழி அன்றிலிருந்து தான் தோன்றியி ருக்க வேண்டுமென எண்ண இடமுண்டு.
சிமிழ்
63

Page 38
அகளங்கன்
காகம் பறக்கிறது. அவ்வம்பு அதனைத் துரத்துகிறது. அந்தக் காகம் சென்ற திசை யெல்லாம் அவ்வம்பு துரத்திச் சென்று இறுதி யாக அக்காகத்தைச் சீதையின் கால டி யி ற் கொண்டு வந்து விழுத்துகிறது. இராமாயணத் தில் நடந்த ஒரு சம்பவம் இது.
மன்னிப்புக் கேட்ட சயந்தனாகிய காகத் தின் கண்களில் ஒன்றை, அடையாளமாகவும் தன் அம்பு பொய்க்காதது என்பதைக் காட்டு வதற்காகவும் இராமர் எடுத்துக் கொண்டார், என்கிறது இராமாயணம்.
அன்றிலிருந்துதான் காகங்களிற்கு இருகண் களிற்கும் ஒரு கண்மணி மட்டுமே, பொதுவாக இருக்கிறது என்பது ஐதீகம்,
அண்மையில் எகிப்திய விமானமொன்றைத் துரத்திச் சென்ற அமரிக்க யுத்த விமானம், ஆகாயத்தில் வைத்து வழிமறித்துத் தரையிறக் கிய செய்தி உலக அரங்கில் பெரும் பரபரப் போடு பேசப்பட்ட செய்திதான்.
காக வடிவில் வந்த சயந்தனைத் துரத்திச் சென்ற இராமபாணம், வான்வெளியில் அவனை மடக்கி வழிமறித்துச் சீதையின் காலடியிலே தரையிறக்கிய செய்தியை அறியாதவர்களுக்கு
இலக்கியச்
64

அகளங்கன்
முன்னது ஆச்சரியமான பரபரப்பூட்டும் செய் தியேதான். விண்வெளிச் சண்டைகள் பற்றிய பல அபிப்பி ராயங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன விண்வெளியிற் பறக்க விடப்படும் செயற்கைக் கோள்கள் மூலம் பூமியைத் தாக்கிப் போர் புரியும் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன.
யுத்த நோக்கோடு விண்வெளியிற் சஞ்சரிக் கும் செயற்கைக் கோள்களை அழித்தொழிக்க "லேசர்’ கதிர்கள் எனப்படும் ஒருவகை ஒளிக் கதிர்களையும் வல்லரசுகள் கண்டுபிடித்து விட் டதாக அறிகிறோம்.
தாரகாக்கன், கமலகாக்கன், வித்தியுன்மாலி என்ற மூன்று அரசர்கள் ஆகாயத்திற் சஞ்சரிக் கும்படி அனுப்பியிருந்த மூன்று கோட்டைகள் முப்புரங்கள் என்று அழைக்கப்பட்டன.
அந்த முப்புரங்கள் பூமியில் உள்ளவர்க ளுக்குத் தொல்லை கொடுத்து அழிக்க முற் பட்டன.அந்த முப்புரங்களை அழிக்கச் சிவபெரு மான் போருக்குப் புறப்பட்டதாகவும், போர் புரியாது தனது சிரிப்பாலே முப்புரங்களைத் தீயிட்டு எரித்து அழித்ததாகவும், சைவசமயத் திலே கதையுண்டு.
சிமிழ்
65

Page 39
அகளங்கன்
முப்புரங்கள் என்பது மூன்று செயற்கைக் கோள்களாகவும் சிவபெருமானின் சிரிப்பிலே வெளிவந்தது, "லேசர் கதிர்கள் போன்ற சக்தி வாய்ந்த ஒலியாகவும் இருந்திருக்கலாமென்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
மகத நாட்டு மன்னனான சராசந்தனின் புத்திரிகள் இருவரைக் கம்சன் திருமணஞ் செய் திருந்தான்.கம்சனின் சகோதரியான தேவகியின் மகன் கிருஷ்ணன், கம்சனைக் கொன்றான். கணவனை இழந்த பெண்கள் இருவரும் தம் தந்தையான சராசந்தனிடஞ் சென்று முறை யிட்டனர்.
சராசந்தன் பதினெட்டுத் தடவைகள் கிருஷ் ணனோடு யுத்தஞ் செய்து வெற்றி கொண் டான். பின்பொருநாள் தன் புத்திரிகளின் துய ரத்தைத் தாங்க மாட்டாதவனாகித் தனது கதாயுதத்தைச் சுழற்றிக் கிருஷ்ணனின் நகர மான மதுரையின் மேல் எறிந்தான்.
கதாயுதம் மதுரையில் விழுந்தது. ஏராள மான மக்கள் மடிந்தனர். பல கட்டிடங்கள் சிதைந்தன. மதுராபுரிக்குப் பெருஞ்சேதம் ஏற் ull-gil.
இலக்கியச்
66

அகளங்கன்
அதன் பின்பு, கிருஷ்ணன் கடல் நடுவே துவாரகை என்ற நகரை நிரு மா னித் து க் கொண்டு இடம் பெயர்ந்து சென்றானென்று மகாபாரதம் கூறுகிறது.
சராசந்தன் எறிந்தது இன்றைய ஏவுகணை யாக இருக்கலாம். ஏவுகணை செல்ல முடியாத தூரத்திலே தனது தலைநகரைக் கிருஷ்ணர் நிரு மாணித்துத் துவாரகை எனப் பெயரிட்டிருக் கலாம் என்று எண்ணத் தோன்றவில்லையா?
மனிதனின் அறிவுப் பாதை, அழிவு ப் பாதையை நோக்கிச் செல்லும் இன்றைய விஞ் ஞான உலகிற் பல வகையான யுத்த ஆயுதங் கள் கண்டு பிடிக்கப் படலாம். ஆனால் அடிப் படைகள், ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்* என்ற வகையாகத்தான் இருக்க முடியும் போலே தோன்றுகிறது.
எந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்தாலென்ன? எந்த யுத்த முறையைக் கண்டு பிடித்தாலென்ன? இறப்பு மட்டும் ஒரு பிறவிக்கு ஒரு தடவை மட்டுமேதான் நிகழ முடியும்.
சிமிழ்
67

Page 40
அகளங்கன்
10 கவியரசு செய்த கவியரசு
திரைப்படங்களுக்குப்பாட்டெழுதுபவர்கள் பாடலாசிரியர்கள் என்று அழைக்கப்பட்ட காலத் திலே திரைப்படங்களுக்குப் பா ட் டெழு த ப் புகுந்தவர் கண்ணதாசன்.
அவர் தன்னுடைய திறமையாலும்,தமிழ்ப் புலமையாலும், கவிஞர் கண்ணதாசன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.திரைப்படங் களுக்குப் பாட்டெழுதுபவர்களும் கவிஞர்களே என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர், கவி யரசு கண்ணதாசன்தான் என்றால் மிகை யில்லை.
பாமரர்களின் செவிக்குள்ளும் பழந்தமிழ் இலக்கியச் சாற்றினை, இனிய இசைப் பாடல்
இலக்கியச்
68
 

அகளங்கன்
களாகப் புகுத்தி - இதயத்தில் நிலைநிறுத்திவாய் முணுமுணுப்பை ஏற்படுத்திய கவியரசு கண்ணதாசனுக்குத் தமிழக அரசு, ஆஸ்தான கவிஞர் என்ற அந்தஸ்தை வழங்கிச் சிறப்பித் ógi·
பாமரர்களுக்கும் படித்தவர்களுக்கும் எல் லோருக்கும் தெரிந்தவராகச் சமகாலத்திலேயே அரசாலும் ம க்க ள |ா லும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட்டு அமரத்துவமடைந்த கவியரசர், அழியாப் பெரும் புகழ் பெற்றார்.
நான் நிரந்தர மாணவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
என்ற கவியரசரின் கவிவரிபோலவே அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கி றார். சொல்வளம், பொருள்வளம், கற்பனை வளம் இவை கவியரசருக்கு வளமாக வந்து வாய்த்த சொத்துக்களாகும்.
அவரின் சில திரைப்படப் பாடல்கள் என் இதயத்து இன்ப வீணையை மீட்டி என்னைப் பரவசத்தில் ஆழ்த்துவதுண்டு. அவற்றிலொன்று இது.
பார்த்தேன்’ சிரித்தேன்? பக்கத்தில் அழைத்தேன்? உனைத்தேன்" என நான் நினைத்தேன்' - அந்த மலைத்தேன்" இதுவென மலைத்தேன்."
சிமிழ்
69

Page 41
அகளங்கன்
மலைத்தேன்’ என்றால் மலையிலுள்ள தேன் என்றும், மலைப்பு அடைந்தேன் என்றும் பொருள். திரைப்படப் பாடல்களைப் பொறுத்த வரையிலே, “தேன் வந்து பாயுது காதினிலே?" என்று சொல்லக் கூடிய பாடல்களுள் இதுவும் ஒன்று.
இப்பாடலின் முடிவில் வரும் வரிகள் பாட லின் முடிவை சுவாரசியமாகச் சொல்லி நிற் கின்றன.
க்கேன் · A · is as air - எடுத்தேன், கொடுத்தேன், "مفه و هوایی "ه இல்லாத படி கதை முடித்தேன்.
மொத்தம் முப்பத்தொரு‘தேன்"கள் இப் பாடலில் இருக்கும்போது தித்திப்புக்குக் கேட் கவா வேண்டும்? திகட்டாத தேன் விருந்து இந்தப்பாடல்.
இதே போ ன் ற துதா ன் கவியரசரின், "அத்திக்காய்' எனத் தொடங்கும் பாடலும்.
"அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே. இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ' "அத்திக்காய்' என்பது அத்திமரத்தின் காய் எனவும், அந்தத் திக்காக (அ+திக்காய்)
இலக்கியச்
70

அகளங்கன்
எனவும் பொருள் தரும் சொல். ஆலங்காய் என்பது ஆலமரத்தின் காய் எனவும், ஆலகால விஷம் போன்று காய்கின்றதெனவும் பொருள் தரும் சொல்.
கன்னிக்காய் என்றால் கன்னிக்காக என வரும். அவரைக்காய் என்றால் அவரைக் கோபி (காய்தல் - கோபித்தல்) என வரும். மாதுளங் காய் என்பது மாதின் உளம் காய் (மாது+ உளம்--காய்) எனவும், மாதுளங்காய் எனமே லோட்டமான பொருளிலும் வரும்.
இப்படியே வாழக்காய், விளாங்காய் தூது வழங்காய், இளங் காய், கொற்றவரைக்காய் போன்ற சொற்களும் பிரித்துப் பொருள் கொண்டு மகிழ வேண்டிய சொற்களாகும். இதே போ ன் று முப்பத்தொன்பது "காய்கள்? இப்பாடலில் வருகின்றன:
அத்'தான்" என்னத்'தான்" என்ற பாடலும், பொன் என்'பேன்’ சிறு பூ வென்"பேன்’ என்ற பாடலும் "தான்', 'பேன்’ என்ற சொற்களையே அதிகமாகக் கொண்டவையாகும்.
காதற்பாடல்களைப் பாடுவதிற் கவியரச ருக்கு இணை யாருமில்லையென்று துணிந்து
சிமிழ்
1.

Page 42
அகளங்கன்
கூறலாம். அவரின் பல காதற் பாடல்கள் பல ருக்கும் காதல் உணர்வை ஏற்படுத்தவல்லன.
காதலன் காதலியின் ஒன்றுபட்ட இதயத் தின் செம்மையை ஒரு வரியிலே அழகாக ஆழ மான அருத்தத்தோடு பாடினார், கவியரசர்,
"நான் பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்'
ஒருவர் பேச நினைப்பதையே மற்றவர் பேசும் அளவுக்கு, ஒன்றிப்போன உணர்வுடைய காதலரைக் காட்டியவர் கவியரசரே.
குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை அற் புதமாகக் காட்டியவர் அவர். பொதுவாகக் கணவனைத் தெய்வமாக மதித்துப் போற்றி வழிபடும் பெண்களைத்தாம் தமிழிலக்கியத்திலே நாங்கள் படித்திருக்கிறோம்.
ஆனால் கணவனைத் தெய்வமாக நினைத்துப்
பேணி வழிபடும் மனைவி, கணவனால் வழிபடத் தக்கவள் என்ற உயர்ந்த கருத்தைத் திரைப்படப் பாடல்கள் மூலம் அற்புதமாகத் தந்தவர் கவி யரசர்.
ஈன்ற தாயை நான் கண்ட தில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனைநான் காப்பேன்
உதய நிலவே கண் வளராயே,
இலக்கியச்
72

அகளங்கன்
மனைவியைத் தாலாட்டித் தூங்கவைக்கும் கணவன், தன் உயிரைக் கொடுத்தும் அவளைக் காப்பாற்றப் போவதாகவும், "அவளே தன் தெய்வம் என்றும் பாடிய பாடல்தான் இது. பாலும் பழமும் என்ற படத்தில், “பாலும் பழமும்’ என்று தொடங்கும் பாடலில் வரு கிறது இது.
இதேபோல வியட்நாம் வீடு என்ற படத்தில் வரும், "உன்கண்ணில் நீர் வழிந்தால்...”* என்ற பாடலில் இப்படி வருகிறது.
பேருக்குப் பிள்ளை உண்டு - பேசும்
பேச்சுக்குச் சொந்த முண்டு - என்
தேவையை யாரறிவார்
உன்னைப்போல்
தெய்வம் ஒன்றே அறியும்,
தெய்வத்தைப் போன்ற மனைவி என்று சொல்லலாம். இது சாதாரணம். ஆனால் மனை வியைப் போன்ற தெய்வம் என்று பாடும் பாங்கு உயர்ந்தது; பாராட்டத் தக்கது. நல்ல மனைவி ஒருத்திக்குக் கணவன் கொடுக்க வேண்டிய மரி யாதையை அற்புதமாகச் சொல்லிக் காட்டுகி றார் கவியரசர்.
நல்ல மனைவி ஒருத்தியின் குணத்தை ஒரு பாடலிலே அழகாகச் சொல்லியிருக்கிறா, கவி
சிமிழ்
73

Page 43
அகளங்கன்
யரசர். கவித்துவம் மிகுந்த அப்பாடல், இந்த நாடகம் அந்த மேடையில்..' எனத் தொடங் குகிறது. பாலும் பழமும் என்ற படத்தில் வரு கிறது அப்பாடல்,
கணவன் குருடன். அவன் குருடனாக இல் லாமற் பார்வை பெறுவது எப்போதென்று அம்மன் கோவிலிற் பாடுகிறாள் மனைவி. தன் கணவனைக் குருடன்" என்று சொல்ல அவ ளது உயர்ந்த உள்ளம் ஒருப்படவில்லை. நா எழவில்லை. அதனால் அவள் பாடுகிறாள்.
*அவர். இரவையும் பகலையும் ஒன்றாய்க் காண்பது எத்தனை நாளம்மா" இரவையும் பகலையும் பேதம் இல்லாமற் பார்ப்பவன் குருடனே. குருடன் பார்க்க மாட் டான். ஆனால் இங்கே காண் பது என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ள விதம் கவிஞரின் கவித்துவத்திற்குச் சான்று பகர்கின்றது. தன் கணவன் குருடனல்லன் - காணுகிறான். மற் றையோருக்கும் அவனுக்குமுள்ள பேதம் என்ன வெனின் அவன், ‘இரவையும் பகலையுப் ஒன் றாய்க் காண்கிறான்என்பதுதான்* இங்கு அந்த நிலையைநாகுக்காகவெளிப்படுத்தியதிறமைஅந்த
இலக்கியச்
74

அகளங்கன்
உயர்ந்த மனைவியின் பண்பை நன்கு வெளிப் படுத்துகிறது. V−
கவியரசரின் கற்பனைகள் அதீதமானவை. சில கற்பனைகள் மிகையாகத் தெரிந்தாலும் இரசிக்கத் தக்கனவாக அமைந்து விடுகின்றன. மாலையிட்ட மங்கை படத்தில், “செந்தமிழ்த் தேன்மொழியாள்" எனத் தொடங்கும் பாட லொன்றை எழுதியுள்ளார்.
"கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ"
என்பது அப்பாடலில் வரும் கற்பனை. பெண்களுக்குக் கண்கள் நீலமாக இருப்பது தனி யழகு. அந்தப் பெண் தன் கண்களில் நீல நிறத்தை விளைவித்தாள். அதைக் கடலிலே கரைத்தாள். அதனாலேதான் கடல் நீர் நீலமா கத் தெரிகிறதென்று கற்பனை செய்கிறார் கவிஞர்.
கவியரசரின் திரைப் பாடல்களிற் காதல் பாடல்கள் பெற்ற அதே மதிப்பைத் தத்துவப் பாடல்களும் பெற்றிருக்கின்றனவென்று கூற லாம். சோகத்தின் உச்சக்கட்டத்தை நயமாக ஒருவரியிலே இப்படிக் கூறியிருக்கிறார்,கவியரசர்
சிமிழ்
75

Page 44
அகளங்கன்
"என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு’
நிழலிலே உருவம் கூடச் சரியாகத் தெரிவ தில்லை. இது இன்னாரின் நிழல் என்று கண்டு பிடிக்க முடியாது. ஆனால் கவியரசர் நிழலிற் gh. N. உணர்வுகளைக் காட்டி விடுகிறார். உருவத் தையே கண்டு பிடிக்க முடியாத நிழலில் உணர் வுகள் தெரிகின்றதென்றால் அது அற்புதமான கற்பனைதானே. தனது சோக அனுபவம் தனது நிழலிலும் தெரிகிறதென்று கூறித் தனது சோகத்தின் மிகுதிப் பாட்டை விளக்குகின்ற கவித்துவம் அவரது மகத்துவமாகும்.
பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா சோதனையைப் பங்கு வைத்தால் சொந்தமில்லே பந்தமில்லே.
என்ற வரிகள் வாழ்க்கையிற் பலரை இனங் காட்டிச் செல்லும் தன்மை வாய்ந்தவை.
*கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து" *உனக்குத் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
இலக்கியச்
76

அகளங்கன்
“ஒன்பது ஒட்டைக்குள்ளே ஒரு துளி காற்றடைத்து சந்தையிலே விற்று விட்டான் - ஒருவன்’ எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்த தடா - நான் இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்த தடா,
போன்ற பல தத்துவப் பாடல் வரிகள் சிந்திக்கத் தூண்டுவன. காதல், குடும்பம், கற்பனை, தத்துவம், நாடு, மொழி, வீரம், என எல்லா வகையிலும் திரைப்பாடல்கள் மூலம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தவர் கவியரசர்.
திரைப் படப் பாடல் க  ைள மட்டுமே வைத்து மதிப்பிடும் போதுங் கூட கவியரசர், கவியரசு செலுத்தித்தான் இருக்கிறாரென்பது மறுப்பதற்குரியதன்று
சிமிழ்
77

Page 45
அகளங்கன்
11 கம்பனும் சனநாயகமும்
பெரும் பாலான நாடுகள் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டன. அங்கெல்லாம் குடியாட்சி கோலோச்சிக் கொலு வீற்றிருப்ப தைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
படித்தவர்கள், பாமரர்கள், ஏழை, பணக் காரர், ஆண், பெண் என்ற எந்தவித பேதமும் இல்லாமற் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தங்களை ஆளும் தலைவர்க ளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அதாவது வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தங்களை ஆளுவோரைத் தாமே தேர்ந்தெடுத்து அவர் களை இயக்குகின்ற முறை சனநாயகத்தில் போற்றத்தக்க ஒரு அமிசமாகும்.
இந்தச் சனநாயகக் கோட்பாடுகள் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கையிலே முடியாட்சிக்
இலக்கியச்
78
 

அகளங்கன
காலத்திலேயே சிந்திக்கப்பட்டு முன்மாதிரியா கச் சில செயற்பாடுகளும் செய்யப்பட்டிருக் கின்றன. அந்தச் சிந்தனை, புலவர்கள் சிலரால் அரசனுக்கு அரச சபையிலே வைத்து வெளிப் படுத்தப் பட்டுமிருக்கின்றது.
அரசன் என்பவன் பரம்பரையின் காரணத் தினாலும், படைவலிமையின் காரணத்தினா லும் மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட காலத்தை , முடியாட்சிக் காலம் என்று குறிப்பிடுகின்றோம்.
அந்த முடியாட்சிக் கா லத் தி லே கூட இராஜராஜசோழன் குடவோலை முறை என் றழைக்கப்படுகின்ற முறையிலே கிராம அதிகா ரிகளைத் தேர்ந்தெடுத்தானென்ற செய் தி, சோழராட்சிக்கால வரலாறுகளிலிருந்து தெரிய வருகின்றது. வாக்குச் சீட்டுகளினால், அரசாளு பவர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற இன்றைய சன நாயகத் தேர்தல் முறைக்கு முன்னோடியான தாக இந்நிகழ்ச்சியைக் கூறலாம்.
மன்னன் மக்களுக்கு உயிராக விளங்குகின் றான் என்ற கோட்பாடு முடியாட்சிக் காலத் திலே இருந்தது. ‘மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்’ என்பது புறநானூற்றில் மோசி
சிமிழ்
79

Page 46
அகளங்கன்
கீரனார் வாக்கு. மக்களுக்கு மன்னன் உயி ராக இருக்கிறான் என்பது, மக்களை மன்னனே இயக்குபவன் என்ற முடியாட்சித் தத்துவத் தின் வெளிப்பாடே. -
சேக்கிழார் பெருமான் பெரிய புராணத் திலே இக்கருத்துப் புலப்படும் படியாகப் பின் வருமாறு பாடுகிறார்.
மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான், விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள் எண்ணி லாதன மாண இயற்றினான்.
திருநகரச் சிறப்பில் மனுநீதி கண்ட சோழ னைப் பற்றிக் கூறும் பொழுதே மேல்வருஞ் செய்தியைக் கூறினார். இங்கே மண்ணிலே வாழ்கின்ற எல்லாவற்றையும் கண்ணாகவும் உயிராகவும் இருந்து காவல் காக்கின்றான், மன்னன் என்பது முதலிரு வரிகளின் பொருள்.
*கண்ணிற் சிறந்த உறுப்பில்லை" என்பர் ஆன்றோர். எனவே மன்னனே மக்களைவிட உயர்ந்தவன்; சி ற ந் த வ ன் என்ற பொருள் தொனிப்பதை இங்கே அவதா னிக் க லா ம். உயிர்தான் உடலை இயக்குவது. ஆகவே மன் னன்தான் மக்கன்ள இயக்குகிறான் என்ற
இலக்கியச்
80

அகள்ங்கன் செய்தி மன்ன்ன் ஆவியாக نام دهد. و பதிலிருந்து பெறப்படும்.
இந்த யாட்சிக் கோட்பாங்களிலிருந்து வேறுபட்ட த்தாக மக்கள் தங்களைத்_த்ாங் களே ஆளுகி குடியாட்சிக் க்ேர்ட்ப்ாட்டைத் தமிழ் மூதாட்டி ஒளவையார் அரச சபையிலே எடுத்தியம்பி இருக்கின்றார். வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோன் உயர்வான். குடிமக்கள், கல்வி அறிவிலே மேம்பட்டவர் களாக இருந்தால் அரசனும் மேம்பட்டவனாக இருப்பான் என்பதே , 'குடியுயரக் கோன் உயர் வான்' என்பதன் பொருள்.
மக்களால் மன்னன் தெரிவு செய்யப்படும் சனநாயக முறை யில் மட்டுந்தான், குடி உயர் வானதாக இருந்தால் அவர்களாலே தெரிவு செய்யப்பட்டு அவர்களை அரசாளுகின்ற மன் னன் உயர்வானவனாக இருக்க முடியும்.
பரம்பரையினாலும், படைவலிமையினா லும் மக்களை அரசாளும் தகுதி பெற்ற அரசர்
சிமிழ்
81

Page 47
அகளங்கன்
களுக்கு, “குடி உயரக் கோன் உயர்வான்' என்ற கூற்று எந்த வகையிலும் பொருந்தாது.
எனவ்ே, ஒளவையார் அக்க்ாலத்திலேயே சனநாயகத் தேர்தல் முறைபற்றிய ஒரு சிந்த னையை வெளிப்படுத்தியிருக்கிறாரென்று கொள் ளலாம்.
அரசாளுவோர் அறிஞர்களாக இருக்க வேண்டும் என்ற கிரேக்கத்து அரசியற் சிந்த னைக்குத் தமிழ் அரசர்கள் பலர் இலக்கணமாக விளங்கியிருக்கிறார்கள். புறநானூற்றிலே போற் றப்படுகின்ற அரசர்கள் நைடதம், வெற்றி வேற்கை என்பவற்றைப் பாடிய அதி வீர இராம பாண்டிய மன்னன் போன்றோரும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்கள் பலரும் பெரும் அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள்.
தமிழ் அரசர்கள் சிலர், அறிவாளிகளைத் தம்முடைய முதலமைச்சர்களாக நியமித்து அவர்கள் காட்டிய செந்நெறியிலே அரசாட்சி செய்திருக்கிறார்கள். பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் சுவாமிகளைத்தன்முதலமைச் சராக வைத்திருந்தான், அநபாய சோழன்.திருவா சகம், திருக்கோவையார் என்பவற்றைப் பாடிய மாணிக்கவாசக சுவாமிகளை அரிமர்த்தன
இலக்கியச்
82

அகளங்கன்
பாண்டிய மன்னன் த ன் னு  ைடய முதல மைச்சராக வைத்திருந்தான்.
கவிச்சக்கரவர்த்தி என உலகம் போற்று, கின்ற கம்பனுக்கு மக்களாட்சிக் கருத்திலே மிக அதிகமான நாட்டம் உண்டென்பது, அவர் பாடிய இராமாயணத்திலிருந்து தெரிய வரு கிறது. -
தசரதரின் ஆட்சிச் சிறப்பைக் கூறுமிடத்தில் மன்னன் உயிராக விளங்குகிறானென்ற கூற் றுக்கு எதிர்க் கருத்தாக மன்னன் உடலாக விளங்கினான் என்ற கருத்தை முன்வைக்கிறார் கம்பர்.
வைரவாண் பூணணி மடங்கல் மொய்ம்பினான் உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பு மாயினான்:
உயிரெல்லாவற்றையும் தன்னுயிர் போலப் பாதுகாக்கிறான் தசரதன் என்ற கருத்தை முதலிற் கூறுகிறார். 'தன்னுயிர் போலே மன் னுயிர் காப்பான் மன்னன்' என்பது இங்கு குறிப்பிடப்படுகின்றது.
'உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயி னான்' என்ற கூற்று முடியாட்சிக் காலத்தில்
சிமிழ்
83

Page 48
அகளங்கன்
மிகவும் புதுமையானது. இன்றைய சனநாயகக் கோட்பாடாகக் கொள்ளக் கூடியது. 'அவனது ஆட்சிப் பரப்பிலே இருக்கின்ற உயிர்கள் எல் லாம் தங்கியிருக்கின்ற உடலாகத் தசரத மன் னன் விளங்குகின்றான்' என்கிறான் கம்பன், இந்த வரியிலே.
வழமையாக மன்னனே உயிர் என்றும், அந்த உயிரால் இயக்கப்படும் உடலே மக்கள் என்றும் கூறுவது முடியாட்சி மரபு. அதாவது மக்களை ம ன் ன ன் இயக்குகிறானென்பதே இதன் சாரம்.
புதுமை செய்வதில் வல்லவனான கம்பன், மன்னனை உடல் என்று கூறி அந்த உடலை இயக்குகின்ற உயிரே மக்கள் என்கிறான். அதா வது மக்களினால் மன்னன் இயக்கப்படுகின் றான் என்கிறான், கம்பன். மக்களை மன்னன் இயக்குகிறான் என்ற முடியாட்சிக் கருத்துக்கு எதிரான அரசியற் கருத்தாக மன்னனை மக் கள் இயக்குகிறார்கள் என்ற குடியாட்சிக் கருத் தைக் கூறுகிறான் கம்பன்.
இதேபோல இன்னுமொரு சந்தர்ப்பத்தி லும் கம்பன் இக்கருத்தைக் கூறுவதைக் காண லாம். இராமனுக்குப் பட்டாபிசேகம் செய்வ
இலக்கியச்
84

அகளங்கன்
தற்குத் தீர்மானிக்கப் பட்டபின் வசிட்டர் இராமனுக்கு அரசாட்சி பற்றி அறிவுரை கூறு கிறார்.
வையம் மன்னுயிர் ஆகவம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு ஐய மின்றி அறங்கட வாதருள் மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ.
பூமியிலுள்ள உயிர்கள் எல்லாவற்றையும் காப்பாற்றுகின்ற உடலாக மன்னன் விளங்க வேண்டும். உடல் உயிரைக் காப்பாற்றுவதுபோல பயக்களை மன்னன் காப்பாற்றினால், நாட்டின் மேம்பாட்டிற்காக வேள்விகளே செய்ய வேண்டி யதில்லை என்பது இதன் பொருள். கம்பனின் சனநாயகக் கோட்பாடு வசிட்டரின் வாயிலாக வெளிவந்ததை இங்கே பார்த்தோம். இங்கும் மன்னனே உடல் - உடலை இயக் கு கி ன் ற உயிரே மக்கள் என்று கூறுவதைக் காணலாம். சனநாயகம் தமிழர்களுக்குப் புதுமையான அரசியற் கோட்பாடு அன்று. இன்று சனநாய கத்தின் அர்த்தமே தலைகீழாகப் போய்விட்ட தைப் பல நாடுகளிலும் கண்டு கவலை கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசாளுவோர். தேர்ந்தெடுக்கப்படும் வரை மட்டுமேதான் அவர்கள் மக்களை மதித்து
சிமிழ்
8S

Page 49
அகளங்கன்
சனநாயகப் பண்பைக் காப்பாற்றுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியாளர்களான பின்பு சனநாயகம் குழிதோண்டி ஆழப் புதைக்கப் பட்டு விடுகிறதையே காண்கின்றோம்.
மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி யாளர்கள் பலர் தான் தோன்றித் தனமான தலைவர்களாக முடியாட்சிக் கோட்பாட்டைப் பின்பற்றி வருவதை உலகின் பல பாகங்களி லும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலக்கியச்
86

அகளங்கன்
12 சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
சிவபெருமானின் பெருமைகளையும் அவரை வழிபட்டு உய்ந்த சிவனடியார்களின் பெருமை களையும், அழகாக எடுத்துக் கூறும் புராணம் பெரியபுராணமாகும்,
சேக்கிழார் சுவாமிகள், 'பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப்” பாடிய இப்புரா ணத்திற்குச் சிவபெருமானே, "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்ததாக இப்புரா ணத்தின் சிறப்பினை ஆன்றோர் போற்றிப் புகழ்கின்றனர்.
'உலகெலாம் என இறைவன் எடுத்துக் கொடுத்த அடியைத் தனது முதற்பாடலின்
சிமிழ்
87

Page 50
அகளங்கன்
முதற் சொல்லாக வைத்துப் பாயிரத்தின் வாழ்த்துப் பாடலிலே,
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவுலா விய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சிலம் படி வாழ்த்தி வணங்குவாம்.
எனப்பாடுகிறார் சேக்கிழார் சுவாமிகள். முதற்பாடலில் மட்டுமன்றிப் புராணத்தின் நடு விலே உள்ள ஒரு பாடலிலும், உலகெலாம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். திருஞான சம்பந்தர் புராணத்தில், "சோதி முத்தின் சிவிகை" எனத் தொடங்கும் பாட லிலே வருகிறது ‘உலகெலாம்’ என்ற சொல்.
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார் மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போறறிநின்று ஆதி யார்அரு ளாதலின் அஞ்செழுத் தோதி ஏறினார் உய்ய உலகெலாம்.
இவை மட்டுமன்றிப் பெரிய புராணத்தின் இறுதிச் சருக்கமான வெள்ளானைச் சருக்கத் தின் இறுதிப் பாடலான, "என்றும் இன்பம்." எனத் தொடங்கும் பாடலின் இறுதி வரியில் இறுதிச் சொல்லாகவும், இறைவன் கொடுத்த உலகெலாம் என்ற சொல்லைப் பயன்படுத்தி னார் சேக்கிழார் சுவாமிகள்.
இலக்கியச்
88

அகளங்கன்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்
இப்படியாக முதல், இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் உலகெலாம் என்ற சொல் லைச் சேக்கிழார் சுவாமிகள் சேர்த்துச் சிறப்பு றச் செய்தது, இப்புராணத்தின் தனிச்சிறப்பா G95 D.
திருவள்ளுவர், திருக்குறளில் முதற்குறளை, 'அகர முதல..." என ‘அ’ விலே தொடங்கி இறு திக் குறளை, ‘ன்’ இல் முடித்தது, சேக்கிழார் சுவாமிகளுக்கு ஒரு உந்துதலாக இருந்திருக்க லாம். தமிழ் மொழியின் முதலெழுத்து, "அ"இது உயிர் எழுத்தின் முதலெழுத்துமாகும். மெய் யெழுத்தின் கடைசி எழுத்து, ‘ன்’ ஆகும். வள் ளுவரின் இறுதிக் குறள்
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். என, ‘ன்’ இல் முடிவதைக் கவனிக்கலாம். திருக்குறளின் இ ர ண் டாம் குறள், ‘கற்றத னால்." எனக் 'க' விலே தொடங்குகிறது. உயிர் எழுத்தின் முதலெழுத்தான ‘அ’, மெய்யெழுத்
சிமிழ்
89

Page 51
அகளங்கன்
தின் முதலெழுத்தான, "க்" உடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்தான, "க" உண்டாகிறது.
இந்த மூன்று குறள்களிலும் நான் குறிப் பிட்ட எழுத்துக்களை ஆராய்ந்தால் வாழ்க்கைத் தத்துவம் அவற்றிலிருந்து உருவா கு வதை அறிந்து கொள்ளலாம். உயிர் (அ) தனியாக இருப்பது. பின்பு மெய்யுடன் (க்) சேர்ந்து உயிர் மெய் (உடல்) உண்டாகின்றது. வாழ்க்கை முடிந் தவுடன் மெய்யை விட்டு (ன்) உயிர் சென்று விடுகிறதென்பதை விளக்கவே வள்ளுவன் இந்த வகையிற் குறட்பாக்களை அமைத்ததன் உட்பொ ருளாகும்.
இந்த உந்துதலினாற் போலும் சேக்கிழார் சுவாமிகள், 'உலகெலாம்" என்பதை இவ்வ கையிற் பயன்படுத்தினார். உலகம், பதின்நான்கு என்ற முற்காலக் கருத்திற்கேற்ப மொத்தம் பதின்நான்கு இடங்களிலே உலகெலாம் என்ற திருவாக்கைப் பெரிய புராணத்தில் ஒலி க் க ச் செய்த சிறப்பும், போற்றி வியக்கத்தக்கதே;
சைவத்தின் மேன்மையைப் பாட ஆ  ைச கொண்ட சேக்கிழார் பெருமானுக்குத் தமிழின் பெருமை, தமிழ் நாட்டின் மேன்மை என்பவற் றையும் பாடவேண்டுமென்ற ஆசை இருந்திருக் கிறது என்பது, இப்புராணத்தின் வாயிலாக
இலக்கியச்
90

அகளங்கன்
அறியக்கூடியதாக இருக்கிறது. திருவையாறும் கயிலை மலையும்
சேக்கிழார் சுவாமிகளுக்கு நாட்டுப்பற்று மிக அதிகம். சோழ நாட்டில் அநபாயச் சோழ னின் முதன்மந்திரியாக இருந்து, நாட்டின் முன் னேற்றத்திற் பங்கு கொண்டமையாற் போலும் அவருக்கு நாட்டுப் பற்று மிக மிக அதிகம்.
சிவபெருமான் வடநாட்டுக் கயிலையங்கிரி யில் வீற்றிருக்கிறாரென்ற கொள்கையிற்கூட சேக்கிழார் சுவாமிகளுக்கு அதிகம் பற்றில்லை என்றே கூறலாம். வடநாட்டுக்குச் சென்று கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தரி சிப்பது முத்திக்கு வழிவகுக்குமென்ற கொள்கை யிலும் சுவாமிகளின் மனம் அதிகம் ஒன்றியதா கத் தெரியவில்லை.
அவரது நாட்டுப் பற்று அதற்கு இடங் கொடுக்கவுமில்லை. தமிழ்நாடு எல்லா வகையி லும் சிறப்புடையதென்பதே அவரது புராணத் தின் அடிநாதமாக இருக்கிறது.
நமிநந்தி அடிகளின் கனவிலே சிவபெருமான் தோன்றி, ‘திருவாரூரில் பிறந்தவர்கள் எல் லோரும் தேவ கணங்களே' என்று கூறுவது திருவாரூரின் சிறப்பைக் கூறும் ஒன்று.திருவாரூர்
சிமிழ்
91

Page 52
அகளங்கன்
தமிழ் நாட்டிலுள்ள ஓர் ஊர்.
திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலே, திருநாவுக்கரசர், கயிலேமலை நோக்கிச் செல் லும் காட்சியை மிக அற்புதமாகக் காட்டுகிறார் சேக்கிழார் சுவாமிகள்.
முதுமையின் கொடுமையால் நடக்க முடி யாமல் தவழ்ந்து செல்கிறார் அப்பர். அவரின் மார்பு அரைந்து, தசை கிழிந்து, குருதிசோர, எலும்பு முறிய, இரவு பகலாக விடாமுயற்சியு டன் தவழ்ந்து, தவழ்ந்து கயிலைமலை யாத் திரையை மேற் கொள்ளுகிறார் நாவுக்கரசர். கொடிய கூரிய கற்களும் அடர்ந்த இருண்ட காடும் மிருகங்கள், பாம்புகள், விஷஜந்துக்க ளும் நிறைந்திருக்கும் வழியிலே, தன் ஊன் அழிய ஊர்ந்து சென்று அதுவும் முடியாமல் தவித்த நேரத்திற், சிவபெருமான் முனி வர் போல அவரருகே வந்து,
சிந்தி இவ்வுறுப் பழிந்திட வருந்திய திறத்தால் இந்த வேங்கடத் தெய்திய தென்."
என்று கேட்கிறார். அதற்கு அப்பர் அடிகள் 'மலைமகளுடன் எம்பெருமான் வீற்றிருக்கும் சிறப்பை அவர் அடியவனாகிய நான் கண்டு கும்பிடும் நோக்கில் வந்தேன்' என்று
இலக்கியச்
92

அகளங்கன்
கூறுகிறார். அதற்கு, முனிவராக வந்த சிவ பெருமான்,
கயில்ைமால்வரை யாவது "காசினி மருங்கு பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்
கெளிதோ அயில்கொள் வேற்படை அமரரும் அணுகுதற்
கரிதால் வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர் வந்தென விளம்பி.
என்று கூறுவதாகக் காட்டுகிறார் சேக்கி ழார் சுவாமிகள். கயிலைமலை,தேவர்கள் கண்டு தொழுவதற்கே அருமையானது. அப்படியிருக்க மானுடர் சென்று கண்டு தொழுதல் எளிமை யானதோ? வீணாக இந்தச் சுடுகரத்தில் வந்து விட்டீ ரெனக் கூறி, ‘‘மீளும் அத்தனை உமக் கினிக் கடன்" என்றுரைக்கின்றார் அந்த முனி வர். அதற்கு அப்பர் அடிகளோ,
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீலோன் , ..??
என்று பிடிவாதமாக மறுக்கிறார். நாவுக் கரசரின் மனத்திண்மையையும் வைராக்கியத் தையும் உறுதியையும் கண்ட முனிவர், சிவ பெருமானாகக் காட்சி கொடுத்து, அருகிலே ஒரு பொய்கையை உண்டாக்கிக் காட்டி, 'இப்
சிமிழ்

Page 53
அகளங்கன்
பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்து கயிலைக் காட்சியை அ ங் கி ருந்து ‘காண்க** எனப் பணித்து மறைகின்றார்:
நாவுக்கரசர் அப்பொய்கையில் மூழ்கித் திரு வையாற்றிலேயுள்ள ஒரு வாவியிலே எழுந்து அங்கே கயிலைக் காட்சியைக் கண்டு வணங்கி னாரென்று சேக்கிழார் சுவாமிகள் பாடுகிறார். சிவபெருமானை வழிபடுவதற்குக் கயிலை மலைக்குச் செல்ல வேண்டியதில்லை; திருவை யாற்றிலே தமிழ் நாட்டுக்குள்ளேயே தரிசிக்க லாமென்பதைச் சிவபெருமானே அடியார்க ளுக்கு எடுத்துக் கூறுவதாகச் சேக்கிழார் சுவா மிகள் கூறித் தமிழ் நாட்டின் சிறப்பை விபந்து தனது நாட்டுப் பற்றைக் காட்டியுள் 6ITITri . திருவாலங்காடும் கயிலைமலையும்
இதேபோலக் காரைக்காலம்மையார் புரா ணத்திலும், சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப் பற்றைக் கண்டு வியக்கலாம்.
சோழ நாட்டிற் காரைக்காலிற் பிறந்த புனிதவதியார் காரைக்காலம்மையாராகிப் பேயு டம்பைப் பெருமானிடம் வேண்டிப் பெற்ற வர்.
கயிலைமலைக்குச் சென்று சிவபெருமா னைத் தரிசிக்கும் ஆவலினாலே தலையால் நடிந்து சென்றார் அம்மையார். சிவபெருமான்,
இலக்கியச்
94

அகளங்கன்
"அம்மையே’’ என்றழைத்தார். அம்மையார் எம்பெருமானின் பாதங்களில் விழுந்து பணிந் தார். சிவபெருமான் அம்மையாரைப் பார்த்து “நம்பால் இங்கு வேண்டுவதென்” என்று கேட்க, அம்மையார் கூறுகிறார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கிறார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவாநி ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க
என்றார்அழியாதஇன்பஅன்பு வேண்டுமென்று கேட்டு மேலும் கேட்கிறார். பிறவாமை வேண் டும். பிறப்புண்டேல் உன்னை என்றும் மற வாமை வேண்டும். நீ ஆடல் புரியும் போது உன் அடியின்கீழ் இருந்து மகிழ்ந்து பாட வேண் டு மென்று இறைவனை வேண்டுகின்றார், காரைக்கால் அம்மையார். அவருக்கு அருள் கொடுத்துப் பின்வருமாறு கூறுகிறார் சி வ பெருமான்.
கூடுமா றருள் கொடுத்துக்
குலவுதென் திசையி லென்றும் நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய வாலங் காட்டில் ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும் பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்கு
சிமிழ்
95

Page 54
அகளங்கன்
*தென்திசையில், அதாவது தமிழ் நாட்டி லுள்ள திருவாலங்காட்டிலே சென்று எமது நடனத்தைக் கண்டு ஆனந்தமடைந்து நம்மைப் பாடுவாயாக’ என்று பரமசிவன் காரைக்கால் அம்மையாரைப் பணிக்கிறார்.
காரைக்காலம்மையாரும் திருவாலங்காட் டுக்குச் சென்று, திருவாலங்காட்டு மூ த் த திருப்பதிகம் பாடிப்பரவிச் சிவபெருமானைத தரிசித்தாரென்று சேக்கிழார் சுவாமிகள் பாடு றாா.
சிவபெருமானே கயிலைக்கு வந்த தன்னு டைய மெய்யடியர்ர்களைத் தென்திசையில், அதாவது தமிழ்நாட்டிலுள்ள திருவையாற்றுக் கும் திருவாலங்காட்டுக்கும் சென்று அங்கே தன்னை வழிபடும்படி அனுப்பி வைத்ததாகச் சேக்கிழார் சுவாமிகள் கூறும் செய்தி, தமிழ் நாட்டின் சிறப்புக்கும் அவரின் நாட்டுப் பற் றுக்கும் அத்தாட்சியாக இருக்கின்றது.
சேக்கிழார் சுவாமிகள், நாட்டுப்பற்றை மக்களுக்கு ஊட்டுவதற்காகச் சிவபெருமானே தமிழ்நாட்டைப் பெரிதும் மதித்ததாகவும் கயிலைக்குச் சென்ற அடியார்களை மீண்டும் தமிழ் நாட்டுக்குச் செல்லும்படி அனுப்பியதா கவும் பாடியிருக்கும் விதம் கவனிக்கத் தக்கதுகணிக்கத்தக்கது.
இவற்றை நோக்கும் போது சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று சமயப்பற்றோடு ஒப்பு நோக்கத்தக்க பெருமையுடையதென G) ITL.
இலக்கியச்
t


Page 55
|6: Իր հզոր քննո:
-
og Stor – U.
गाणी
|
அன்றில் பறவைகள்
முத்தமிழ் வித்தக சுவாமி இலக்கியச் சிமிழ்
 

(அஞ்சலிக் கவிதை ம் குறுங்காவியம்)
(-ԱԼԵկեր:Ss)
O. GIULIGO
... விபுலானந்த
(கட்டுரைகள்
11 ܛ
by : TRISTAR, DEHIWALA.