கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனக்கோலங்கள்

Page 1


Page 2


Page 3

மனக்கோலங்கள்
க. கோணேஸ்வரன்
SD UT 3Fıç su djo naoruuů Luf, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், 34/1, வெலிங்டன் அடை விதி, திருக்கோணமலை, இலங்கை.

Page 4
மனக்கோலங்கள்
(கட்டுரைத்தொகுப்பு) க. கோணேஸ்வரன்
உரிமை ஆசிரியருக்கே (c)
முதற்பதிப்பு : நவம்பர் 1999
வெளியீடு : அரசடி அர்ச் சூசையப்பர்
கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்
விற்பனையாளர் : வினோத்பூரீ
322/1 மத்தியவிதி, திருக்கோணமலை. தொலைபேசி 026. 23264
அச்சு ஈஸ்ரன் கிராபிக்ஸ்,
230 திருமலை வீதி, மட்டக்களப்பு தொலைபேசி 065 - 24821
பிரதிகள் : 1000
விலை 75.00
ISBN 955-8340-00-6
* மேற்கோள்கள் காட்டுதல் தவிர்ந்த வேறு நோக்கங்களுக்கு ஆசிரியர் முன் அனுமதியின்றி இந்நூலில் வரும் விடயங்கள் முழுமையாகவோ பகுதியாகவோ எடுத்தாளப்படலாகாது.
(η)

mm m m m
ހަހިރ வெளியீட்டாளர் உரை
'மனக்கோலங்கள்' நூலை வெளியிடுவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
அன்றாட வாழ்க்கையில் - அலுவலகத்தில் - ஆன்மீகத் தில் அறிவாற்றலில் மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உள்ள தான (அலங்) கோலங்களை மனக்கோலங்களாக ஆசிரியர் திரு. க. கோணேஸ்வரன் வடித்துள்ளார்.
காலத்துக்கேற்ற கருத்தாழம் உள்ளதும், கசப்பும், இனிப்பும், துவர்ப்பும் நிறைந்ததுமான இந்நூலை வெளியிடும் உரிமையை எமக்களித்த ஆசிரியருக்கும் ஒத்துழைப்பு வழங் கிய எமது சங்க அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இந்நூலைச் சமர்ப்பிக்கிறோம்.
என்றும் சங்கப் பணியிலுள்ள இ. பாக்கியராசா, ஆலோசகர் அரசடி அர்ச் சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், திருகோணமலை.
--

Page 5
r
ܢܠ
ஆசியுரை
அன்பர் க. கோணேஸ்வரனின் மனக்கோலங்களை அமைதியாக ஆழ்ந்து படித்தேன்.
காலத்திற்கு ஏற்ற நல்ல தமிழ் எழுத்துக்கள் என்றே கூற வேண்டும். மிகவும் சிக்கலான பல்வேறு விடயங்களையும் வாசகர்கள் புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதியுள்ளார்.
மக்களின் மனங்களிலே புரிந்துணர்வும் சகோதர மனப்பாங்கும் தோன்றிட இவரின் எழுத்துக்கள் உதவும் என்பதே உண்மையாகும்.
தமிழன்னையின் ஆசிகள் இருக்கம் என்பதில் கருத்து பேதம் இல்லை.
மலாகுரி விஸ்வப் பிரசாதினி ஆர். சிவகுருநாதன் முன்னாள் தினகரன் ஆசிரியர் கொழும்பு 10. 11, 1999

2 Pet NJ œa8 "99 12:24
නිවාස හා තාගරීක සංටර්ධකු අමාතෘඩාංශය வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைக்க
MINTSTRY OF HOUSING AND URTAN DEVELOPMENT
වතු නිවාස නියෝජ්‍ය අමාත්‍ය தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சர் DEPUTY MINISTER OF ESTATE HOUSING
ፉ
පී, චන්ද්‍රෙස්කරක්, පා. ඹ a 05-11- 1999 பெ. சந்திரசேகரன், பா. உ. 4. ... www.waw.8.x was . P, Chandraseka oran, M. P,
அணிந்துரை
திரு. கோணேஸ்வரனோடு (அருணன்) ஒரு குடும்பத்தவனாகவே பழகி உறவாடியிருக்கிறேன். சந்தித்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவரின் அன்பாலும் உபசரிப்பாலும் திணறியிருக்கிறேன். அவள் நல்ல நண்பன், பண்பாளன் என்று மட்டுந்தான் கருதியிருந்தேன்.
ஆனால் அவருடைய 'மனக்கோலங்கள்” சில தொடர்களை வாசித்த பின்னர்தான் அவள் ஒரு சிந்தனையானன் ஆய் 站, த்துவார்த்தவாதி என்பதையெல்லாம் புரிந்து 6
�uálá &b!!.
வாழ்க்கையென்பது வெளியிலிருந்து தருவித்துக்கொள்வதல்ல, அது தாக்குத் தானே உருவாக்கிக்கொள்வது என்பதை மிக சிறப்பாகவும் எளிமையாகவும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
எழுதவேண்டும் என நினைப்பவர்களின் சிந்தனை கதை, கவிதைகளின் பக்கம்தான் தரவுவது இயல்பு, ஆனால் சிந்தனைக் கட்டுரைகளை எழுதவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு TTTL LLLL S STTttLLtLLLLS TTTTtTLMTTrS S MLT LGGLMLSSS STCtMTT இருப்பது ஆனந்தம் தருகிறது,
“ஊழல் அரசியல்வாதிகளை வந்தாண்டுகளுக்கொருமுறை தூக்சிபெற்றுவிடாவது மக்களுக்கு முடிகிறது ஆனால் ஊழல் அதிகாரிகளை மக்களால் ஒன்றும் செய்துவிட முடிவதில்லை" என்ற இவரின் பார்வை சடுக அவலகங்களில் கவருக்கு இருக்கும் டிமான கண்ணோட்டத்தையும் S0LT LCTLMTLL TTTTTLL TTMTTL TLLMTLL LMMLL LLLLLLTTTT TL LLLLLL
நாட்டத்தையும் காண முடிகிறது.
இத்தகைய நல்ல சமுக சிந்தனையாளனை எாது நண்பனாக கொண்டிருப்பதில் பெருமிதமடைகிறேன். இவர் இன்னும் நிறைய எழுதவேண்டும்; இவருடைய சிந்தனைகள் சமுதாய வேர்களைப் போய்ச்சேரவேண்டும்; இகள் தொட்ட முயற்சி பெருவெற்றியடைய ક્ષિા(5b દ્વારા
வாழ்த்துறேன். *ー*
*必、"ギー・
räpyraraya süLou-CalDüt Mauewudässt தலைவர், மலையக மக்கள் முன்னணி,
سلسلة
“ෙසත්සිරියාය” ශ්‍රී ජයවර්ධනපුර, කේළුවේ, බෆ්තරමුල්ල gణీడతో - జల
Kwiry, gar:2L, używana. is navue synass 85304.8 .ே: * په سهېليفونه Schuiripya’’, Sri JayAwarde Ciputik, Kotic, RRAIarnrrutia. Telephone . Ofte 8654 لم لأمة *ඝaiෆ්ඝඥ
Fax: 82392
Ο

Page 6
z- O O
வாழததுரை திருக்கோணமலை மண்ணின் இலக்கிய வரலாற்றில் முக்கிய பங்காற்றிய "தாகம்' கலை இலக்கிய சஞ்சிகையின் ஆரம்ப காலங்களிலேயே அறிமுகமானவர் க.கோணேஸ்வரன்
அவர்கள் அறிமுகமானவர். இது ஒரு தசாப்த காலத்திற்கு மேற்பட்ட பழக்கம்.
ஆரம்பத்தில் எனக்கு ஒரு மரபுக் கவிஞனாக அறிமுக மான இவர் ஈழத்து புதுக்கவிஞர்களின் கவிதைகளைச் சேர்த்து என்னால் தொகுக்கப்பட்ட புதுக்கவிதைத் தொகுதியில் புதுக் கவிதை எழுதியதன் மூலம் தன்னை ஒரு ஆளுமை மிக்க புதுக்கவிஞராகவும் இனங்காட்டினார். தொடர்ந்து அவர் ஒரு சிறுகதை படைப்பாளியாகவும் பல மேடைகளில் சிறந்த விமர்சக ராகவும் பன்முகம் கொண்ட படைப்பாளியானார்.
'தினக்கதிர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நான் பொறுப்பேற்ற பின்பு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் எழுதிய எழுத்துக்களே 'மனக்கோலங்கள்' தொடராக வெளிவந்த காலங்களில் இதற்கு வந்த வாழ்த்துக் கடிதங்கள் இந்த எழுத்தின் ஆழ அகலத்தை நன்கு புலப்படுத்தியது. தொடராக வெளிவந்த காலங்களிலேயே மட்டக்களப்பு பசிமுக நிறுவனத்தின் சிறந்த கட்டுரைகளுக்கான விருதினையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சீரிய சிந்தனைகளே ஒரு மனிதனை முழுமையானவ னாக்குகின்றது. அந்த வகையில் பல அரிய சிந்தனைகளை கொண்டுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெறுமனே தத்துவங்களை மட்டும் கொண்டிராமல் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்துள்ளது. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி அதனை 'மனக்கோலங்கள் கோலமிடுகிறது.
அன்பகலா பிரியங்களுடன்
தாகம் வி. மைக்கல் கொலின் BBA
ار )பிரதம ஆசிரியர் - தினக்கதிர்( ܢ
GviD

அறிமுகவுரை
அப்போது வயது 15
யாழ் நூல் கையெழுத்து சஞ்சிகையில் ஆக்கங்கள்.
அடுத்த வயது 16 - முதற் கவிதை தினபதி இளைஞர் மன்றத்தில் பிரசுரம் "கன்னித்தமிழ்”
கையெழுத்து சஞ்சிகையில் ஆசிரியர்.
அடுத்த வயது 17 - “செய்தி” வார சஞ்சிகை ஒளவை கண்ட வாழ்க்கை முறை” கட்டுரைக்கு அகில இலங்கையில் 2ம் பரிசு வழங்கியது. 'தினகரன்” கட்டுரைப் போட்டியில் வாரப் பரிசினையும் “நவீன விஞ்ஞானி’யின் கட்டுரைப் போட்டியில் பாராட்டினையும் பெற்றார். “தமிழ் மகள்” கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியர் “சுதந்திரன்' பத்திரிகையின் திருக்கோணமலை நிருபராக நியமனம் “சுதந்திரன்” மூடப்படும் வரை நிருபர்.
அடுத்து அடுத்து - சுதந்திரனில் கவிதைக்குக் களம் இலங்கையின் பல பத்திரிகைகளில் எழுத்தாக்கங்கள். இந்திய சஞ்சிகையான ராணியில் கவிதை பிரசுரம், "ஈழமுரசு' , 'முரசொலி” திருக்கோணமலை நிருபர்.
1982 - தமிழ் நாட்டுக் கவிஞர் தமிழ்ப்பணி ஆசிரியர் பெருங்கவிக்கோ வா. (P. சேதுராமன் தலைமையில் பாரதியார் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற தண்லப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இவரது கவிதையைக் கேட்ட கவிஞர்
“பாரதியார் மீண்டும் ஏன் பிறக்க வேண்டும் தம்பி. நீ என் தம்பி நீயே பாரதி” எனக் குறிப்பிட்டார்.
இதனை அடுத்த காலத்தில் எல்லாச் சந்திப்பிலும் திருக்கோண மலைக் கவிராயரால் கவிஞர் என உரிமையுடன் விளிக்கப்பட்டார்.
ヘ கவியரங்குகள், விவாத அரங்குகள், உரையரங்குகள் இவரின் பொய்யற்ற
நெஞ்சினால் சிறப்புற்றன.
உலகத் தமிழ்க் கவிஞர்களின் தொகுப்பான "செம்மாங்கனி' கவிதை
நூல் அறிமுக விழா திருக்கோணமலைப் பொது நூலகக் கேட்போர்
கூடத்தில் பண்டிதர் இ.வடிவேல் தலைமையில் நடைபெற்றது. தமிழ்)
ܢܠ

Page 7
Z=
நாட்டிலிருந்து கவிஞர் கண்ணதாசனின் மருமகன் அழகாபுரி அழகுதான் N விருந்தினராக வருகை தந்திருந்தார். மேடையில் ஏற்றப்பட்டிருந்த மங்கல விளக்கு எண்ணெய் இன்றி புகையத் தொடங்க பண்டிதர் வடிவேல் அணைத்தார்.
விளக்கை அணைத்த சம்பவத்தை மையமாக வைத்து கவிதை எழுதித் தரும்படி பார்வையாளர்களைக் கேட்டார்.
“விளக்கை ஏன் அணைத்தீ "விடிவைத் தேடி” எனத் தொடங்கும் கவிதை எழுதினார். திரு. செல்வஜோதி தெளிவான கையெழுத்தில் எழுதி அதனை முதற் கவிதையாக தலைவரிடம் சேர்ப்பித்தார்பண்டிதர் பண்ணோடு பாடினார். அவர் முடித்த பிறகே அழகாபுரி அழகுதாசன் தனது கவிதையைக் கொடுத்தார்.
19886ზ -
திருக்கோணமலையலருநது அச்சேறிய "வசந்தம்' சஞ்சிகையின் இணை ஆசிரியர். இச்சஞ்சிகையில் இவரால் எழுதப்பட்ட 'மலர்ந்தும் மலராத" சிறுகதைக்கு மறுமொழியாக "விஜயா’ அவர்களால் சிறுகதை ஒன்று எழுதப்பட்டது.
"கோணைத்தென்றல்' சஞ்சிகையில் எழுதப்பட்ட "நிலவின் மறுபக்கம்" நிவேதனம் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இச்சிறுகதையினை தனது ஆய்விற்கு உட்படுத்திய கலாநிதி கா. அருணாசலம் “யாவும் கற்பனை” எனக் கூறப்பட்டாலும் கூர்ந்து நோக்குமிடத்து அவையாவும் நிகழ்காலத் தரிசனங்களே என்பது எளிதிற் புலனாகும். மனித நேயத்துடனும் ஆழ்ந்த சமூகப் பிரக்ஞையுடனும் எழுதப்படும் புனைகதைகள் வெறுங் கதைகளாகவன்றி வரலாற்று ஆவணங்களாகவும் விள்ங்குவதை மேற்படி கதைகளில் அவதானிக்க முடிகிறது எனக் குறிப்பிட்டமை சிந்தனைக்குரியது.
தத்துவப்பார்வை, மனவிசாலம் கொண்ட கவிஞர் இலக்கியத்தின் மறுபக்கம் சொல்லும் செயலும் ஒன்றாயிருத்தல் என்பதே தனது வாழ்வின் எல்லா இடங்களிலும் நிரூபித்தவர்.
கட்டுரையாளர், சிறுகதையாளர், கவிஞர், பேச்சாளர். நிருபர் என இருந்தும் எல்லாவற்றிலும் மேலாக இலக்கியவாதி மனிதனாக வாழ்வதே அவனை மேன்மையுறச் செய்யும் என்பதனை குறிப்பாக தமிழ்ச் சமூகத்துக்கு உணர்த்தி நிற்கும் காலத்தின் குறியீடுதான் க.கோணேஸ்வரன்.
ப. ச. மெளலீஸ்வரன்
கொழும்பு. گرے
ܢܠ

2 ཡ།《༽ s இதயத்திலிருந்து. ། ས་
தினக்கதிர் வார இதழுக்கு அருண் என்ற பெயரில் என்னால் எழுதப்பட்டவையே இந்த 'மனக்கோலங் கள்” இதுவே அச்சுருப் பெறும் எனது முதலாவது
மனக்கோலங்களிட அனுமதித்த தினக்கதிர் ஆசிரியர் திரு. வி. மைக்கல் கொலின் என்றும் என் நன்றிக் குரியவர். எனது எழுத்துக்களை உடனுக்குடன் தட்டச்சுச் செய்து தந்த சகோதரிகள் திருமதி சுகந்தி சைலேந்திரனும், திருமதி கோமதி கென்னடியும் இவ் வெளியீட்டுக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இந்நூலை வெளியிட முன்வந்த அரசடி அர்ச். சூசையப்பர் கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும், அணிந்துரை வழங்கிய எனது நண்பரான தோட்ட வீடமைப்புப் பிரதியமைச்சரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான திரு. பெ. சந்திரசேகரன், ஆசியுரை வழங்கிய கலாசூரி விஸ்வப்பிரசாதினி ஆர். சிவகுருநாதன் (முன்னாள் தினகரன் ஆசிரியர்) ஆகியோரும் எனது மனமார்ந்த நன்றிக்குரியவர்கள்.
சகோதரர்கள் ப. சந்திரமௌலீஸ்வரன், க. கந்தசாமி (அஞ்சலதிபர்) பால்ய நண்பன் செ. நவசோதிராசா, இலக்கிய நண்பர்கள் இராஜ தர்மராஜா திருமலை சுந்தர், க. தேவகடாட்சம், கெ. தர்மகுலராசா மற்றும் இந்நூல் வெளிவர வெளிப்படாது நின்று பணி புரிந்த நண்பர்கள் ச. விஜயகுமார் (இளைஞள் சேவைகள் மன்ற அதிகாரி) எஸ். திருக்குமார் (கொழும்பு மாநகரவரி அதிகாரி) சி. சித்திரகுமார், திரு. அரவிந்த்குமார் ஆகியோரும் என்றும் என் நினைவில் நிற்பவர்கள்.
நாடகத்துறையில் தனக்கெனத் தனியிடத்தை வைத்துக் கொண்டிருக்கிற கவிஞர் எனது அண்ணன் நாடக வித்தகள் தம்பி தில்லைமுகிலன் என்றும் என் மதிப்புக்குரியவர்.
இவர்கள் அன்புடன் மட்டக்களப்பு “ஈஸ்ரன் கிராபிக்ஸ்” அச்சகத்தாரின் கைவண்ணத்தில் சிறப்புற அமைந்த இந்நூலை தெய்வங்களாகி விட்ட என் பெற்றோரின் பாதம் பணிந்து, உளத் தூய்மையுடன் சமூக நீதிக்காகப் போராடிய, போராடிக்கொண்டிருக்கிற செயல் வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
எனது தந்தையாரின் 78வது பிறந்ததினத்தில் இந்நூல் வெளிவருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி A. 密
நன்றி! என்றும் அன்புடன்
க. கோணேஸ்வரன்
لبرسے .1999 ,11 .21 ܗܝ ܡܗܝ ܗܝ ܢܠ
(e)

Page 8
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
பொருளடக்கம்
வெளியீட்டுரை
ஆசியுரை
வாழ்த்துரை
அணிந்துரை
அறிமுகவுரை இதயத்திலிருந்து. மதங்களும் மனிதர்களும் மனிதனும் மகிழ்ச்சியும் உயர்ந்த வாழ்க்கை மனிதனும் நம்பிக்கையும் அறிவு - கல்வி அதிகாரம் அலுவலர் - பொதுமக்கள் பொதுமக்கள்
அரசியல்வாதிகள் - தலைவர்கள் எண்ணங்களும் வாழ்வும் மனித உறவுகள் நாடும் அரசும்
ܢܔܠ -yello all كصك *婆婆斗们
பக்கம்
01
O7
13
21
29
36
43
51
58
65
།༽
ܢܠ

மதங்களும் மனிதர்களும்
உலகிலுள்ள எந்த மதமும் தீய வழிகளைப் போதிப்ப தில்லை. மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்று தான் அவை கூறுகின்றன. ஆனாலும் இந்த உலகில் உண்மையான மனிதர்கள் அருகிக் கொண்டே போகிறார்கள்.
எந்த மதமும் பிறருடைய அமைதியைக் கெடுத்து வாழ் என்றோ, பிறருக்குத் தீங்கு செய்து உயர்ந்து கொள் என்றோ யாருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும், கூறவில்லை. ஆனாலும் இவையே இன்றைய வாழ்க்கைப் போக்காக மாறிக் கொண்டிருப் பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்து தர்மம் போதிப் பதை, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகப் புத்தமதம் கூறுவதை, இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் வலியுறுத்துவதை எத்தனை மனிதர்கள பய பக்தியுடன் கேட்டு, அதன்படி நடக்கிறார்கள் என்றால் விடை மிக மிகக் கவலைக்குரியதாகவேயிருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில், மதங்கள் போதிக்கும் நல்வழி யில் நடக்கத் துணியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும்
நாம், இந்து என்றோ பெளத்தன் என்றோ, கிறிஸ்தவன் என்றோ
இஸ்ல்ாமியன் என்றோ மார் தட்டவோ, எம்மை நாமே அடை யாளப்படுத்திக்கொள்ளவோ பின் நிற்பதில்லை. மதங்கள் போதிப்பவையே எமது வாழ்க்கை நடைமுறையென்று நெஞ்சாரப் பொய் வேறு சொல்லி வைக்கின்றோம்.
7Y L D686YEEG
01
ܢV

Page 9
Z=
ܓ
ஏன். மதங்கள் வாழ - மதக்கோட்பாடுகள் வாழ யுத்தங்கள் கூட நடத்தியிருக்கின்றோம். இந்த யுத்தங்களில் அப்பாவித் தனமாக ஈடுபட்டு அழிந்து போனவர்களைப் புனிதமா னவர்கள் எனப் போற்றி உயர்த்துகின்றோம் இப்படி உயர்த்து வதன் மூலம் இன்னொரு யுத்தத்திற்குத் தேவை வரும் போது ஆட்களைத் திரட்டிக்கொள்ள வகை செய்கின்றோம்.
அரசியல்வாதிகள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, அப்பாவி மனிதர்களை 'வீரர்கள்' என்று ஏய்த்து, யுத்த களத்தில் பலிகொடுத்துத் தங்கள் சொகுசுகளைக் காப்பாற்றி கொள்வதில்லையா..? அதுபோல் தான் வரலாறுகளில் சமயச் சண்டைகள் இடம் ப்ெற்றிருக்கின்றன. மதத் தலை வர்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ள வெறியேற்றப்பட்ட சாதாரண மக்கள் தாம் உயிர் துறந்திருக்கின்றார்கள்.
இவை ஏன்? நாம் சிந்தித்ததுண்டா?
இறைவனைத் தேடும் மதங்கள் இங்கே ஏன் சண்டை யிட்டுக் கொள்ள் வேண்டும்? பொய், களவு, கொலை, காமம், பொறாமை என்பவற்றை எல்லாம் மதங்களும் 'தியவை, வேண்டாதவை' என்று கூறுகின்ற போதிலும் தமக்குள் ஏன் இவை வேறுபட்டிருக்க வேண்டும்? இவற்றால் தவிர்க்கப்பட்ட பாவங்களும், இவற்றால் ஏற்கப்பட்ட புண்ணியங்களும், இவற் றால் இலக்காக கொள்ளப்பட்டிருக்கும் கடவுளும் ஒன்றாக இருக்கும் போது இவற்றில் பிளவு நிற்பது எப்படி?
இங்கே விழிப்பாக இருப்பவன் மனிதனாகிறான். மயக்கம் கொள்கிறவன் மனச் சஞ்சலமடைகிறான்.
நாங்கள் விழித்திருப்பதா, மயங்கிப்போவதா என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மதங்கள் எப்போதும் புனிதமானவை.
க. கோணேஸ்வரன்
ཛོད་༽
 
 
 

/*
அவை கொண்டிருக்கும் கோட்பாடுகளும், நடைமுறைக ளும் பவித்திரமானவை என்பதில் எவருக்கும் கருத்துவேறு பாடில்லை. மதங்களை மனிதர்கள் சார்ந்திருக்கும் போது தெய்வீகத்தன்மையும், மதங்கள் மனிதர்களை சார்ந்திருக்கும் போது பைசாசத்தன்மையும் ஏற்படுவதை நாம் கண் கூடாகக் காணமுடிகிறது.
மதம் மனிதர்களை சார்ந்திருக்குமானால்,
எனது மதம் உயர்ந்தது, அவற்றின் கோட்பாடுகளே சிறந்தவை. பிற மதங்கள் சரியான வழியைக் காட்ட வல்லன அல்ல. என்பவை போன்ற திமிரான எண்ணங்கள் அப்பாவித் தனமாக அம்மனிதனில் குடியேறும்,
இதன் பலனாக பிற மதங்களை இழித்துரைப்பதில் இன்பம் காணும் சுபாவமும், தனது மதத்திற்கு வலைபோட்டு ஆட்களைப் பிடிக்கும் தன்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியா
ததாகின்றது.
மதச் சண்டைகள் மத வேறுபாட்டு உணர்வுகள் இத்த கைய சிறுபிள்ளைத்தனமான மனிதர்களால்தான் ஏற்படும்.
ஆனால் மதங்களை மனிதர்கள் சார்ந்திருக்கும் போது அவை காட்டும் நல் வழிகளும் அவை வகுத்துள்ள வாழ்க்கை முறைகளுமே அம் மனிதர்களை ஆட் கொள்கின்றன. மதங்க ளின் நற்போதனைகளால் ஆட் கொள்ளப்படும் மனிதருக்கு அல்லாவும், சிவனும், கர்த்தரும், புத்தரும் ஒன்றாகத் தெரிவார்
凸56T、
இறைவன் ஒருவனே. எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் அவனே என்ற தெளிவு ஏற்படும். பிறரின் நியாயமான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல் வாழ்வது சரியான வாழ்க்கை என்ற உணர்வு ஏற்படும்.
D685TGOESG
༄༽

Page 10
Z=
ܢܠ
இவர்கள் பிற மதங்களை இழித்துரைக்க மாட்டார்கள். எல்லா மதங்களின் வழிகளிலும் நியாயங்கள் உண்டென ஏற்றுக் கொள்வார்கள்.
பிற மதங்களையும், பிறரையும் இரண்டாம் தரமாக எண்ணி இழிவுபடுத்தி, அமைதியின்மைக்கு காரணமான மனி தனாக வாழப் போகிறோமா? அல்லது எல்லோரும் எம்மவர், எல்லா மதங்களும் நேரியவையே என்ற மனித நேயம் கொண்ட வராக வாழப் போகிறோமா என்று நாம் நிதானித்துத் தீர்மானித் துக் கொள்ள வேண்டும்.
வழிபாட்டுமுறையும், அவை சம்பந்தமாகக் கொண்டிருக் கும் கருத்துக்களும் தான் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றதேயொழிய, கடவுள் சம்பந்தமாக அவை கொண்டிருக்கும் நம்பிக்கையிலோ, கருத் திலோ அல்ல என்பதை விளங்கிக் கொண்டால் பல பிரச்ச னைகள் தாமாகவே மறைந்து போகும்.
எந்த மதத்தை சார்ந்து இருந்தாலும் உண்மையான பக்தன் ஒருவனுக்கு கடவுள் உருவமுடையவரா அல்லரா என்பதிலோ, உருவ வழிபாடு சரியானதா, அல்லதா என்பதிலோ ஒரு போதும் பிரச்சனை எழமாட்டாது.
கடவுளே இல்லையென்று ஒருவன் அவனிடம் அடித்துச் சொன்னாலும் கூட "கடவுளே! இவனை மன்னித்து விடு" என்று வேண்டிக் கொண்டு அமைதி காக்கும் சுபாவம் தான் அவனது தெய்வ நம்பிக்கைக்கு சான்றாகின்றது.
மதங்களின் சடங்கு சம்பிரதாயங்கள், நடைமுறை வழக் கங்கள் எல்லாம் அவை தோன்றிய இடத்தையும், காலத்
தையும் சமூக அமைப்பையும் பொறுத்தன.
கீழைத்தேய தர்மமான இந்து மதம் குளித்து, தோய்த்து
க. கோணேஸ்வரன்
ཛོད་༽
 
 
 

Z=
உலர்ந்த ஆடை அணிந்து, அங்க வஸ்திரம் அணியாமல் கோயிலுக்கு போ என்று வற்புறுத்துவது சுத்தம் பேனும் நடவடிக்கையே என்பதை உணர்ந்தால் கனடாவில் வசிக்கும் கிறிஸ்தவன் அவன் தர்மப்படி "கோட்சூட்" சப்பாத்து சகிதம், கோயிலுக்குள் நுழைவதும் சுகம் பேணும் நடவடிக்கை என்று ஏற்றுக் கொள்வதில் சிரமம் இருக்காது.
பாலை வனம் சார்ந்த மக்கள் திசையை வணங்கி
யது, சூழல் அமைப்புக் கருதியே என்பதை தெரிந்து கொண் டால் இந்திய மக்கள் கருங்கல்லிலே கடவுளருக்கு உருவம் கொடுத்ததும் சூழலில் கிடைக்கக் கூடிய அழியாப் பொருள் என்பதினா லேயே என்பதுவும் தெளிவாகிவிடும்.
கட்டட அமைப்புக்களைப் பாருங்கள். யன்னல், கத வுகள் வைத்த மூடிக் கட்டிய குளிர்வலய கிறிஸ்தவ ஆலயங்கள் போல் நம் நாட்டுக் கோவில்களை அமைத்தால் வழிபட வருபவன் வெந்து மடிந்து போக மாட்டானா?
காற்றும் ஒளியும் தாராளமாகப் புகுந்து வரத்தக்க நம் நாட்டு ஆலய கட்டட அமைப்பில் இங்கிலாந்து கிறிஸ் தவ தேவாலயம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பக்தன் குளிரால் நொந்து நடுங்கிப் போய் விட மாட்டானா?
கட்டடத்தால், வாழிடத்தால் சமூக அமைப்பால்,
பழக்க வழக்கங்களால் விளைந்த இடத்திற்கு இசைவாக அமைந்த முறையையோ கோட்பாடுகளையோ நாம் ஏன்
ப்ேதம் பார்க்க வேண்டும்? உயர்வு தாழ்வு நோக்க வேண்டும்?
குளிர்காலத்து கம்பளிச்சட்டையிலும், கோடை
காலத்து பருத்திச் சட்டையிலும் ஏற்றத்தாழ்வு பார்ப்பது எவ்வளவு மடைத்தனம்.
அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
ܥܠ
Duðli,6EI6ðIöllui

Page 11
/ー
"உன் மதக் கோட்பாடுகள் சரியில்லை. என் மதத் திற்கு வா" என்று அறிவிலித்தனமாக மதமாற்றம் செய்ய முயல்கிறோம் இறைவனிடம் எங்களை இட்டுச் செல்வதற்காக எம் முன்னோர் களால் காட்டப்பட்ட வழிகளுக்கு உயர்வு தாழ்வு பூசி ஒருவருக் கொருவர் பகைமை பாராட்டுகின்றோம்.
மதங்களை உலக ஆசாபாசாங்களுக்கு அடிமைப் படுத் தும் அசிங்கமான காரியங்களைச் செய்து கொண்டிருக் கின்றோம்.
இதைத் தவிர்ப்பது எப்படி?
நீ எந்த மதத்தில் பிறந்தாயோ அந்த மதத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் தர்மம் என்று உறுதியாக நம்பு.
எனக்கு என் தாய் உயர்ந்தவள். என்பது போல அயலா னுக்கு அவன் தாய் உயர்ந்தவள் என்பதில் உறுதியாக இரு.
உன் வழிபாட்டு முறை - கொள்கைகள் சரியானவை என்றும் உயர்ந்தவை என்றும் நம்புகின்ற அதே வேளை அய லான் வழிபாட்டு முறையோ கொள்கைகளோ பயனற்றைவை என்று கனவிலும் எண்ணாதே.
"உன்னைப் போல் பிறரையும் நேசித்து "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற சிந்தனை உனக்கு உருவா னால் "எல்லாப் புகழும் இறைவனுக்கே!” என்று ஒவ்வோர் மனதிலும் இனிய சிந்தனை தோன்றும், அமைதி ஓங்கும்.
க. கோணேஸ்வரன்
 
 
 
 

r
-།༽ 2
மனிதனும் மகிழ்ச்சியும்)
உலகம் அமைதியாக இருந்தால் மட்டும் போதாது. சந்தோசமாகவும் இருக்க வேண்டும். உலகில் உயிர்கள்
பிறப்பது சந்தோஷமாக வாழ்ந்து விட்டுப் போவதற்குத்தான்.
இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று இயற்கை தீர்மானித்திருந்தால் இறைவன் நினைத்திருந்தால் காடு, மலை, கடல் என்பனவற்றுடன் இயற்கைப் படைப்பு நின்று போயிருக்கும். அவ்வாறு நிற்கவில்லையே!
உயிர்கள் பிறந்த பிறகு தான் உலகம் உவகையுற்றது. படைப்பின் சிறப்பு உயர்ந்து நின்றது. மனங்கள் இயங்கத் தொடங்கிய போதுதான் கடவுள் உச்சத்தை தொட்டார். மகிழ்ச்சி பிறந்தது.
ஆரம்பத்தில் சூடு, குளிர், அச்சம் என உணர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. மனதில் சிந்தனைகள் உருவான பின்னர் பாசம், பரிவு, கருணை, வெறுப்பு என்று அவை விரிவ டைந்தன. பேச்சுப் பிறந்தது. சிந்தனை வளர்ந்தது. கருது கோள்கள் தோன்றின. கருத்துக்கள் மோதின.
மோதிய கருத்துக்கள் ஊடாக தெளிவு பிறக்கும். தெளி விலிருந்து உண்மையான மகிழ்ச்சி பிறக்கும் என்று தான் இயற்கை கணக்குப் போட்டது.
ஆனால் மனிதன் வேறுவிதமாகக் கணக்குப் போடத் தொடங்கினான். தனது கருத்தை மட்டும் உலகம் ஏற்றுக்
)" -ܠ
staðli, (84,1 in)|| Juni ۰۰،۔”

Page 12
/—
காள்ள வேண்டும் என்று விரும்பினான். தனது எண்ணங்களை யும் சிந்தனைகளையும் பிறர் மீது வலிந்தாவது ஏற்றிவிட வேண்டும் என்று முயன்றான். r
விளைவு, கசப்பு, எதிர்ப்பு, வன்முறை, பழிவாங்கல் என்று எதிர்மறையாக மனித வாழ்க்கை போகத் தொடங்கியது. சந்தோஷத்தை அனுபவிக்க உலகில் பிறந்த மனிதன் அடிப் படை விசயமான அமைதியையுந் தொலைத்து விட்டு அழுது புலம்ப வேண்டியதாயிற்று.
இந்நிலை எதனால் ஏற்பட்டது? மனிதனின் குறுகிய சுயநலப்புத்தியினாலன்றோ?
சுயநலத்தை முழுமையாக ஒரு மனிதன் விட்டு விடாவிட் டாலும், ஓரளவாவது தளர்த்திக் கொண்டால் போதும். வீட்டில், நாட்டில், உலகில் பல பிரச்சனைகள் தானாகவே ஓடிவிடும்.
எனது மொழியை அயலான் அறிந்திருக்க வேண்டும் என்று மட்டும் சுயநலமாக சிந்திக்கும் ஒருவன். அயலான் மொழியை நாமும் அறிந்திருந்தால் என்ன என சற்றுத் திருந்தி னால் மொழிப் பிரச்சனை, விளங்காத்தன்மை நாட்டில் குறைந்து போகும்.
எனது குடும்பமே பாரம்பரிய மரியாதைக்குரியது எனக் கருதும் நிலையை சற்றே தளர்த்தி பிறர் குடும்பங்களும் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றன. அவர்களுக்கு பாரம் பரியங்கள் உண்டு என நினைத்தால் போதும், குலம் கோத் திரம் தனது கோரப்பற்களை உள்வாங்கிக் கொள்ளும்.
நாங்கள் மட்டும்தான் நாகரிகமானவர்கள் என்ற நினைப்பை, எங்கள் சமயந்தான் மேலானது என்ற எண் ண்த்தை எங்கள் தேசம்தான் உயர்ந்தது என்ற பேதைமையை
வளர்ப்பதால் பிரச்சைைனகளைத் தவிர வேறெதை நாங்கள்
, ,ாலேஸ்வரன்
 
 
 

7- ཛོད་༽
தேடி வைத்திருக்கின்றோம்? சந்தோஷத்தைத் தொலைத்து விட்டுத் தத்தளிப்பதைத் தவிர வேறெதை சாதித்திருக்கின்றோம்?
இவற்றுக்கு என்ன காரணம்? உண்மையான சந்தோ ஷம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாததும் அற்பத் தனமான கிளர்ச்சிகளையும் போதைகளையும் சந்தோஷம் என்று நம்பியதுதான் காரணம்.
தனது தேவைக்கு வேண்டாதவற்றை சேர்த்து வைப்பதும் வேண்டியவற்றை அளவுக்குமீறிக் குவித்து வைப்பதும் சந்தோஷக் கேடுகளில் ஒருபடி,
குறுக்கு வழியில் பிரபல்யம் அடைய நினைப்பதும் எப்படியாவது பணக்காரனாகி விட வேண்டும் என்று துடிப்பதும் இன்னொரு படி,
பிறரின் திறமைகளை தனது என்று போலி உரிமை பேசுவதும் பிறரின் கழுத்தில் விழவேண்டிய மாலைகளுக்குத் தன் கழுத்தை நீட்டுவதும் பிறிதொரு வழி.
சமூகத்தை மிதித்தேனும் காட்டிக் கொடுத்தேனும் அதிகா ரங்களைப் பெற்று விடவேண்டும் என்று தவிப்பதும் சந்தோஷக் கேடுகளின் படிகளில் ஒன்று.
இவை சமூகத்தில் பெரிய மனிதர்கள் என்று பலரால் நம்பப்படும் சின்ன மனிதர்களால் கைக்கொள்ளப்படுபவை. சாதாரண மனிதன் அவர்களைப் பார்த்து “இவர்களுக்கு என்ன குறைச்சல்?” என்று பெருமூச்செறிந்தாலும் உண்மையில் இந்தப் பெரிய மனிதர்கள் ஏராளமான குறைச்சல்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களது தனிப்பட்ட வாழ்க் கையை ஆராய்ந்து பார்த்தால் புரியும்
Õi,8)

Page 13
Z=
தவிப்பு, வேதனை, குடும்பத்தின் சச்சரவு, நித்திரை யின்மை, பதற்றம், நிம்மதியின்மை ஆபத்து ஆகிய துயரங் களுக்கு மத்தியில் தான் இவர்கள் மகிழ்சியைத் தேடி தோற்றுப் போகிறார்கள். நண்பன் யார் பகைவன் யார் என்று தெரியாமல் குழம்பிப் போகிறார்கள். எவரால், எந்தநேரம், ஆபத்து நேரக்கூடும் என்பது தெரியாமல் எல்லோரையும் சந்தேகப் பார்வை பார்க்கி றார்கள்.
சாதாரண சமூக மனிதனோ இவர்களைப் பார்த்து இவர்க ளல்லவா பிறந்த பயனை அடைந்தவர்கள் என்று சிறுபிள் ளைத்தனமாக நம்பிக் கொண்டு அவர்களைப் போல நானும்
ஆகிவிடமாட்டேனா என்று அங்கலாய்த்துக் கொண்டு தவறுகளுக்
குள் காலடி வைத்து, இருப்பதையும் கெடுத்துக் கொள்கிறான்.
வட்டிக்கு பணம் கொடுக்கிறான். லஞ்சம், வாங்குகிறான். பிறரது காணிகளை வளைத்துப்போட்டுக் கொண்டால் என்ன என்று துடிக்கிறான்.
இந்தத் துடிப்பினால் இருக்கின்ற நிம்மதியையும் இழந்து போகின்றான்.
முன்னைய்வனைப் போல இவன் இல்லாவிட்டாலும், இவனாலும் சமூகத்திற்குத் தீங்கு விளைகிறது என்பதுதான் உண்மை. முன்னையவனது தீங்கின் தாக்கம் பல தலை முறை களுக்கு நீடிக்கும். இவனின் தாக்கமோ சில வருடங்களுக்குள் ளேயே மறைந்து போகும்.
எது எவ்வாறானாலும் தீங்கான சிந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு, தீங்கான செயற்பாடுகளைத் த்ொடர்ந்து செய்து கொண்டு மகிழ்ச்சியாக எவராலும் இருந்துவிட முடியாது என்பதே உண்மை.
i 10
༄༽

/キ
மகிழ்சிக்கு உயர்வு, தாழ்வு, சமூக, வரம்புகள் எதுவும் கிடையாது. படிப்பறிவற்ற ஒரு விவசாயிடமோ, உடைமைகள் எதுவுமற்ற ஒரு நரிக்குறவனிடமோ கடலில் காலந்தள்ளும்
ஒரு மீனவனிடமோ காணப்படும் நிம்மதியோ அதிலிருந்து
பிறக் கும் மகிழ்ச்சியோ, அதிகாரியிடமோ, ஆள்பவனிடமோ பணக்கார னிடமோ இல்லாமல் போய் விடலாம்.
சந்தோஷம் என்பது புறச் சம்பத்துக்க்ளால் கிடைப்ப தில்லை. சீரிய எண்ணங்கள் தோன்றும் மனத்திலிருந்து தான் அது பிறக்கின்றது. சீரிய எண்ணங்களை மனதிலிருந்து தோற்று விக்க நாம் தான் முயலவேண்டும்.
"உட்சுவர் தீற்றிப்புறச்சுவர் தீற்று" என்று இதைத் தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். முதலில் உட்சுவரை - மனதை - நல்ல சிந்தனைகளால் நிரப்பிக் கொள்வோம். அதை முடிந்த அளவில் நடைமுறைப்படுத்த முயல்வோம்.
வட்டிக்குக் கொடுப்பது பாவம் என்று பிறருக்கு போதிக்க முன்னர் நானே வட்டிக்குக் கொடுக்காமல் இருக்கக் திடசங் கற்பம் கொள்ளவேண்டும்.
மது கண்ணை மறைக்கும். கருத்தை அழிக்கும் என்று எழுத முன்னார் தான் மது குடிப்பதில்லை என்று உறுதி கொள்ளவேண்டும்.
பெண் விடுதலையைப் பற்றிக் கோஷம் போடும் முன்னர் தங்கள் குடும்பத்துப் பெண்களைத் தாங்கள் சரியாக நடத்து
கிறோமா என்று சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.
பிறர் குடியைக் கெடுத்துக் கொண்டு பெருந்தன்மை
பற்றிப் பேசுவதையும் தனது குடும்பம் - பரம்பரை என்று .
=ܔ
D64.3ET6 Illi
༄༽

Page 14
/*
சொத்துச் சேர்த்துக்கொண்டு "நாட்டுக்காகப் பொதுமக்கள் கொஞ்சக் காலம் சோதனையைத் தாங்கித்தானாக வேண் டும்" என்று அரசியல் நடத்துவதையும்,
பூனைக்குட்டிகளைச் சாக்கில் போட்டுத் தெருவில் எறிந்து விட்டு ஜீவகாருண்ய மாநாட்டில் தலைமை தாங்கு வதையும்,
நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்ப
வர்களை அடையாளம் கண்ட பின்னும் கைதட்டி மாலை
போட்டு, சலாம் போடும் மூடத்தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
பாதகம் செய்பவரை எல்லோராலும் மோதி மிதிக் கவோ, முகத்தில் உமிழவோ முடிவதில்லைத்தான். ஆனால் ஆகக் குறைந்தது கனம் பண்ணுவதிலிருந்தாவது விலகிக்
கொள்ளலாம் அல்லவா. அதையேனும் இன்றிலி ருந்து
செய்வோம்.
நல்லவரைப் பணிவோம்; துதிப்போம் அல்லாதவரை
எதிர்ப்போம். முடியாவிட்டால் அவர்களை மதிப்பதையாவது
தவிர்ப்போம்.
அதற்குமுன் "வாழ்வோம் வாழ விடுவோம்" என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதுதான் உனக்கும் எனக்கும் இந்த உலகத்திற்கும் மகிழ்ச்சி தரப்போகும் மா மருந்து.
1
க. கோணேஸ்வரன்
༄༽
 

உயர்ந்த வாழ்க்கை முறையில்தான் உலகத்தில் மகிழ்ச்சி தங்கியிருக்கின்றது.
மனிதர்கள் அனைவரும் உயர்ந்த வாழ்க்கை முறை யைத்தான் தேடிப் போகிறார்கள். எது உயர்ந்த வாழ்க்கை முறை என்பதைத் தெரிந்து கொள்ளாமல்.
உயர்ந்த வாழ்க்கை என்பதை மனம் போனபடியும், வாய்ப்பிற்கேற்பவும் பிழையாக அர்த்தப்படுத்திக் கொண்டு தவிப்பவர்கள் தாம் நம்மில் அநேகம். இதனால்தான் தனி மனிதர்கள் வாழ்க்கையில் சோர்ந்து போய் விடுகின்றார்கள். வாடிப்போய் நிற்கின்றார்கள்.
பணத்தாலோ, பிரபல்யத்தாலோ, அதிகாரத்தாலோ உயர்ந்த வாழ்க்கையை அமைத்துவிட முடியாது, அப்படி அமைக்கலாம் என்று கனவு கண்டவர்கள் கால வெள்ளத்துள் அமிழ்ந்து சிக்கிச் சீரழிந்து போயிருக்கிறார்கள்.
பணத்தாலோ, பிரபல்யத்தன்மையாலோ, அல்லது புக ழாலோ உயர்ந்த வாழ்க்கை அமைக்க முடியாது என்பதற்கு இளவரசி டயனாவே நல்ல சாட்சி.
இளவரசி பணமில்லாமலா இருந்தார்.? புகழ் இல்லாமலா இருந்தார்? நேரத்திற்கு ஒரு காலணியும், நினைக்கும் வண்ணத் தில் உடையும் கூப்பிட்ட குரலுக்கு ஆட்களுமாகவல்லவா இருந்தார்!
-:-
Disco

Page 15
Z=
கண் நிறைந்த கணவனும் கருத்தில் நிறைந்த குழந்தை களுமாகவல்லவா வாழ்ந்தார்!
அரண்மனை வாழ்க்கையும் அரசியின் மருமகள் என்ற அந்தஸ்தும் எத்தனை பேருக்கு உலகில் கிடைக்கும்?
இருந்தும் என்ன பயன்? மகிழ்சிகரமாகக் கழிந்த நாட்க ளை விட மகிழ்ச்சியைத் தேடித் தோற்றுப்போன நாட்களே அவர் வாழ்க்கையில் அதிகம்.
தூக்கத்தில் கழிந்த இரவுகளை விட ஏக்கத்தில் பாழான இரவுகளே ஏராளம்.
பிறர் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற விருப்பம் நெஞ்சில் நிறைந்திருந்தும் கூடத் தன் கண்ணிரையே துடைக்க வகையறியாமல் திண்டாடியிருக்கின்றார்.
அவரது சொத்துக்கள் எந்த முதலீட்டிலும் கரைந்து விடவில்லையே! அவரது புகழை யாரும் அள்ளிச் சென்று விடவில்லையே!
நோய் நொடியில் குழந்தைகள் படுத்திருந்து அதற்காக அழுதாரா? அல்லது தானே இளமையில் நோயாளியாகி விட் டேன் என்று தவித்தாரா?
எதுவுமில்லை, ஆனாலும் அழுதார். துக்கத்தை தொகை தொகையாக வாங்கிக் கட்டிக் கொண்டு இறக்கி வைக்க இடமில்லாமல் அலைந்திருக்கிறார்.
இளவரசி மட்டும் என்றில்லை பணத்தாலும் புகழாலும்
மட்டும் நிம்மதியாக வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை.
பணம் தேடுமட்டும் பணம் பணம் என்று நித்திரையின்றி
: 14
ཛོད༽
് ‘မွို க. கோணேஸ்வரன்

/ー
-ܠ
உழைக்கிறான். பணம் தேடிய பின்னே படுத்திருந்தும் கண் களை மூடாமல் கொட்டகொட்ட விழித்திருந்து பணத்தை எப்படி மேலும் பெருக்கலாம் என்றோ எப்படிப் பாதுகாக்கலாம் என்றோ ஒவ்வொரு விரலாக மடக்கி நீட்டிக் கணக்குப் போடு கின்றான்.
சொந்த மனைவியைக் கூடச் சந்தேகமாகப் பார்க்கின் றான். அவளின் அன்பு உண்மையில் தன்மீது தானா அல்லது தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மீது தானா என்று கண்டு பிடிக்க முடியாமல் கற்பனைக் கவலைகளில் மிதக் கிறான், தேடிவரும் உறவினர்களைக்கூடத் துரத்தி விடுவோமா என்று யோசிக்கிறான்.
கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, உடன் பிறப்புக்கள், நண்பர்கள், உறவினர்கள் எவராயிருந்தாலும் தன்னை வளைய வருவது தன் சொத்தை பங்கு போடவே என்று நினைத்து நினைத்து நிம்மதியிழந்து போகிறான்.
பணக்காரர்கள் படும்பாட்டைத் தெரிந்திருந்தும் புதியவன் பேசாமல் இருக்கிறானா என்றால் அதுவுமில்லை, பட்டதைக் கண்ணால் கண்ட பின்பும் காதால் கேட்டபிறகும் தானும் பணக்காரனாகி விடத் தான் துடிக்கிறான்.
இந்தத் துடிப்பு, சைக்கிளில் வருபவனைக் கண்டவுடன் மோட் டார் சைக்கிளை மிடுக்காக முறுக்கி செல்வச் செழிப்பைக் காட்ட ஆசைப்படுகிறது.
மனைவிக்கு ஐந்து பவுண் தாலிக்கொடி போட்டவன் முன்னால் பத்துப் பவுண் போட்டவனை நிமிர்ந்து நிற்க வைக் கிறது.
நான் என்று அகங்காரமாகப் பேசிப் பக்கத்து வீட்டுக் காரனைப் பணிய வைத்து விடத் துணிகிறது.
-།༽

Page 16
Z
உயர்ந்த வாழ்க்கை என்றால் என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொள்ளாததால் விளைந்த கோளாறுகள் இவை.
சரியாக விளங்கியிருந்தால் குறுக்கு வழியிலேனும் புகழைச் சேர்த்து விடுவது, எப்படியாவது சமூகத்தில் பெரிய மனிதர்கள் என்போரிடம் தொடர்புகளை ஏற்படுத்திப் பிரபல்யம் அடைவது, மானத்தை இழந்தேனும் வானத்தை தொட்டால் போதும் என்று கனவு காணுவது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயற்பாடுகள் தானாகவே அருகிப் போகும், பணம் புகழ் என்பன வாழ்க்கையில் சிறுசிறு அம்சங்கள் என்பது புரிந்து போயிருக்கும். அதிகாரத்தை தேடியோட மனம் முயன்றி ருக்காது. ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகளில் கால் வைத்தேனும் அதிகாரத்தினைக் கைப்பற்றி விட வேண்டும் என அரசியல்வாதி கங்கணம் கட்ட மாட்டான்.
ஹிட்லரிடம் இல்லாத அதிகாரமும் வலிமையுமா? இன் றைய எம் நாட்டு அரசியவாதிகளிடம் வரப் போகிறது? அமெ ரிக்க ஜனாதிபதியின் அதிகாரத்தை விடவா இவர்கள் கூடப் பெற்றுவிடப் போகிறார்கள்.
அவ்வளவு அதிகாரத்தை வைத்துக் கொண்டே அவர் கள் நிம்மதியிழந்து தவித்திருக்கிறார்கள். ஹிட்லர் ஒரு நாளாவது தன்னை மறந்து உறங்கியிருப்பாரா என்பது சந்தேகமே.
சூழ்ச்சிகள், கவிழ்ப்புகள், கொலைகள் அடக்குமுறை கள் என்றே அவர் சிந்தனை சுழன்றிருக்கும் தான் அயர்ந்து விட்டால் கூட இருப்பவனே தன்னைப் படுகுழியில் விழுத்தி விடக்கூடுமென்று அவர் மனது பயந்து போயிருக்கும்.
எவ்வளவோ அதிகாரங்கள் இருந்தும் உலகத்தை நடுங்க வைத்தும் என்ன பயன். காதலியுடன் சேர்ந்து தன் வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்
16 .
༄༽
سم“س۔: ۔۔۔ء
6་ཉི་

பந்தம் அல்லவா அவருக்குக் கடைசி காலத்தில் ஏற்பட்டது.
உலகத்தை ஆட்டி வைத்த ஹிட்லர் உலகத்தைக் கண்டு. நடுங்கியன்றோ வாழ்க்கையைக் கண்டு பயந்தன்றோ விடை பெற வேண்டியதாயிற்று.
இன்றைய "உலகின் முதல் மனிதன் அதி உயர் அதிகா ரங்களைக் கொண்ட மனிதன் பிரபலமும் செல்வாக்கும் கொண்ட மனிதன் அமெரிக்க ஜனாதிபதி படும்பாட்டை உலகமே அறியும். எல்லாம் இருப்பது போல் தோற்றம் இருந்தும் ஏதோ இல்லை யென்று அவர் வாழ்க்கையின் சிக்கல்கள் தெளிவுபடுத்தவில் லையா?
இங்கேதான் இவர்கள் தோற்றுப்போன வாழ்க்கை முறை மைக்கு சாட்சியாக நிற்கிறார்கள். வெற்றிகரமாக அல்லது உயர்ந்த வாழ்க்கைஎன்பது அதிகாரத்திலோ பணபலத்திலோ செல்வாக்கு அந்தஸ்த்திலோ இல்லை என்பதற்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படியாயின் உயர்ந்த வாழ்க்கை முறைமை என்றால் என்ன என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
அதன் உச்சத்தை காந்தி தொட்டிருக்கிறார். அன்னை திரேசா தொட்டிருக்கிறார். இலங்கையில் தந்தை செல்வா தொட்டிருக்கிறார். V
இவர்கள் வெவ்வேறு துறைகளில் கீர்த்தி பெற்றிருந் தாலும் அந்தந்தத் துறைகளில் வளர்ந்துவிட வேண்டும் என்பதற் காக தங்களை மாற்றியவர்கள் அல்ல. தங்கள் உண்மையான நேர்மை மிகுந்த ஒன்றித்த வாழ்க்கை முறையினால் தாங்கள் சார்ந்த துறைக்கு புதுத்தெம்பு கொடுத்தவர்கள்.
சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர்கள், புகழுக் காகவோ பட்டம் பதவிக்காகவோ போலித்தனமாக நடக்காத

Page 17
வர்கள் யாரையும் கனம் பண்ண வேண்டும் என்பதற்காகவோ
யாராலும் கனம் பண்ணப்பட வேண்டும் என்பதற்காகவோ தம் பாதையை எச்சந்தர்ப்பத்திலும் மாற்றிக் கொள்ளாத வர்கள்.
இவர்கள் புகழைத் தேடவில்லை; பொன்னைத் தேட வில்லை; அதிகாரத்தைத் தேடவில்லை; அவை தாமாகவே இவர்களது பாதம் படாதா என்று ஏங்கிக் காத்துக்கிடந்திருக் கின்றன.
இவர்கள் கேட்டால் அள்ளிக் கொடுப்பதற்கு வள்ளல்
கள் பலர் வரிசையில் நின்றிருக்கிறார்கள். ஆணையிட
மாட்டாரா செய்து முடிப்பதற்கு என்று இவர்கள் ஆணைக்காக ஆயிரக்கணக்கானோர் உளமார எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
இவர்கள் சலனமற்ற மனதுடன் வாழ்ந்தவர்கள் நிம்ம தியாக உறங்கினர். உடனிருந்தோரை நம்பினர். அனபு செலுத்தினர்!
இவர்கள் கவலைப்பட்டிருந்தால் அது பிறருக்காகத் தான். இவர்கள் தூக்கத்தை மறந்து சிந்தித்திருந்தால் அது எங்களுக்காகத்தான்!
இதுதான் வாழ்க்கையில் வெற்றி உயர்ந்த வாழககை! தானும் மகிழ்ந்திருந்து பிறரையும் மகிழ வைத்த வாழ்க்கை முறை "தான் பெற்ற இன்பம் வையகம் பெற உழைத்த உன்னத முறை
இவர்களை உதாரணமாகக் காட்டியது நம் முன்னே நிதர்சனமாக வாழ்ந்து மறைந்தவர்கள் என்பதற்காகத்தான். பலரால் அடையாளம் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதி னால்தான்.
༄༽

/ー
ܢܠ
நம் முன்னோர்கள் பலர் இந்த விடயத்தில் வழிகாட்டி யாகத் திகழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள்.
அடையாளம் காணப்பட்ட புத்தன், ஏசு போன்றோரும் அடையாளமின்றிப் போய்விட்ட முத்தன், முனியன் ஆகியோ ருமான பல்லாயிரக் கணக்கானோர் உயர்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துத் தானும் உயர்ந்து பிறர் உயர்வுக்கும் உழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.
இன்று நம் கண் முன்னே மேடையில் மாலை வாங்கும் உயர்ந்த மனிதர்களில் பலர் அதற்குத் தகுதி இல்லாதவ ராகவும் இருக்கக் கூடும். ஆனால் அந்த மண்டபத்தின் "எங்கோ ஒரு மூலையில் இருந்து கை தட்டும் ஒருவர் உண்மையான உயர்ந்த வாழ்க்கை வாழ்பவராகவும் இருக்கவும் கூடும்.
உயர்ந்த மனிதனாக உன் பக்கத்து வீட்டுக்காரன் கூட வாழ்ந்துகொண்டிருக்கலாம். அவனை அடையாளம் கண்டு கொள்ளாமல் ஆயிரம் மைல்களுக்குப்பால் உள்ள யாரோ ஒருவனை பிரபலம், பணம், அதிகாரம், காரணமாக ஏற்பட்ட விளம்பரத்தால் உயர்ந்தவன் என்று நீ ஏமாந்து கொண்டிருக் கிறாய்.
உன் தந்தை, தாய், நண்பன் இவர்களிடையே நீ எங்கு தேடியும் காணாத உயர்ந்த மனிதத் தன்னை இருக் கலாம்.
அவற்றை அடையாளம் கண்டுபிடி
உன் ஆசிரியரிடம், உன் விருந்தாளியிடம், ஏன் உன் னோடு முரண்பட்டு நிற்பவரிடம் உயர்ந்த பண்புகள் இருக்
&56\DIT Lb.
அவற்றைத் தேடி அடையாளம் இடு.
-།༽

Page 18
அவர்களது நல்ல பழக்க வழக்கங்களை. நல்ல சிந்த னைகளை? பரோபகாரச் செயல்களை நீயும் பின் பற்று.
விளம்பரத்தால் உயர்ந்தவர்களை எண்ணி மயக்கம் கொள்ளாதே!
உன் மயக்கம் தெளியும் முன்னரே அவர்கள் காணாமல் போய்விடவும் கூடும்.
உண்மையான மனிதனைத் தேடு! நீயும் உண்மையான மனிதனாக வாழ்!
அந்த வாழ்க்கை, உனக்கு நிறைவைத் தரும் அமை தியையும் மகிழ்ச்சியையும் தரும். அடுத்த மனிதர்களுக்கும் பயன் தரும். புகழ், செல்வம், அதிகாரம்எல்லாம் உனக்கு
அடங்கி ஏவல் செய்யக் காத்திருக்கும்.
போலி ஆடம்பரத்தில் மயங்கப் போகிறாயா? உண்மை மனிதனாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கப்போகிறாயா?
நீயே தீர்மானித்துக்கொள்!
உன் வாழ்க்கைக்கு நீயே அதிகர்ரி!
ககோணேஸ்வரன்
: 棘
3
 

Z
மனிதனும் நம்பி f
LDனிதனுக்கு நம்பிக்கை என்பது மிகமிக முக்கியமான உடைமை. நம்பிக்கை இல்லாமல் மனிதனால் மாத்திரமல்ல, வேறு ஜீவராசிகளால் கூடச் சரியாக வாழ்ந்துவிட முடியாது.
வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எரிகின்ற தீபத் திற்கு காற்றுப்போல் அமைய வேண்டும் என்று முன்னோர்கள் கூறிவைத்திருக்கின்றார்கள். காற்று அளவாக வீசினால்தான் தீபம் எரியும். காற்று இல்லாவிட்டால் தீபம் எரியாது. காற்று அதிகரித்து விட்டாலோ அணைந்துவிடும்.
இவ்வாறுதான் நம்பிக்கை அளவோடு இருக்க வேண் டும். விரலுக்குத் தகுந்த வீக்கம் போல, சிறிய படகை வைத்துக் கொண்டு கடலில் மீன் பிடித்து விடலாம் என்பது நியாயமான நம்பிக்கை. அதே படகில் உலகைவலம் வர லாம். இந்து மகா சமுத்திரத்தை ஒரு சுற்றுச்சுற்றி விட்டு வந்து விடலாம் என்றோ நினைத்தால் அது நம்பிக்கையாகாது. வெறும் கற்பனையாகிவிடும். நடைமுறைப்படுத்தத் துணிந்தால் அழிவுதான் விளையும்.
நீயோ நானோ ஹிட்லரைப் போல் உலகை அடக்கி விடலாம் என்று நம்பிக்கை கொள்ளலாமா? கார்ல் மாக்ஸ். லெனின் போல் உலகில் ஒரு புதிய சிந்தனைப் போக்கை நடைமுறைப்படுத்திவிடலாம் என நம்பலாமா?
வேண்டுமானால் எனது சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம். எமது அரசியல் போக்கிலே ஒரு திருப்
D6666
பத்தை ஏற்படுத்தி வி லாம். ༦ 型ノ

Page 19
ܢܠ
இந்த நம்பிக்கைகள் கூடக் கடின உழைப்பினால் தான் வெற்றிபெறும். சும்மா பேசிக்கொண்டிருந்தால் அது வெறும் கற்பனையாகவே இருக்கும். திண்ணைப் பேச்சு வீரன் என்ற பட்டம்தான் கிடைக்கும்.
நமது சமூகத்தில் திண்ணைப்பேச்சு வீரர்கள்தான் அதிகம். தத்துவங்களை அள்ளி வீசுமளவிற்கு அவர்கள் நடைமுறை வாழ்க்கை இருக்காது. பிறரை உஷார்படுத்து மளவிற்கு அவர்களது செய்கையில் உஷார் இருக்காது. சொல்லொன்று செயலொன்றாய் வாழ்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றை நம்புவதுபோல் சமூகத்தில்
தோற்றமளிப்பார்கள். ஆனால் உளமார வேறொன்றை நம்பி
நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
நெற்றியிலே நீறிட்டு சிவசிவ என்று தானும், சொல்லிப் பிறரையும் சொல்ல வைத்துக்கொண்டே அநாதை சிறுவர் விடுதிச் சொத்துக்களை சூறையாடி விடுவார்கள். கர்த்தரின் அன்புக் குரியவர் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு "யாரடா என்னை விடப் பெரியவன்?" என்று துள்ளிக் குதிப் பார்கள்.
வெறும் புகழுக்காகச் சாமி வேஷம் போட்டவர்களைக் கண்முன்னாலேயே காண்கிறோம். சமுதாயத்தில் உயர்ந்துவிட எந்தத் தகுதியும் இல்லாதவன் ஆன்மீகவாதி போல் தோன்றி தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கத் துடிப்பதையும் பார்க் கிறோம்.
சமுதாயத்தில் மிக உச்ச அநியாயங்களைச் செய்து விட்டு, தண்டனையிலிருந்து தப்பிக்கொள்வதற்காக "குழந் தைகள் காப்பகம்” என்றும், கோவில்குளம் என்றும் திரிப வர்கள் பலர் இருக்கின்றார்கள். பகற்கொள்ளையிலே பணத் தைச் சேர்த்துவிட்டு, அங்கொன்று இங்கொன்றாகத் தெளித்து வள்ளல்கள் என்றும் தர்மவான்கள் என்றும் மாலை சூடிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.
༄༽
 

Z
இத்தகையோர் ஒரு வித நம்பிக்கையிலேயே வாழ்க் கையைச் செலுத்துகிறார்கள். நம்பிக்கை என்பதன் திரிவுபட்ட
அர்த்ததாரிகள் இவர்கள். இவர்களது நம்பிக்கை என்பது
ஊரை ஏமாற்றிவிடுவதிலேயே இருக்கிறது. ஊரை ஏமாற்றிக் கொள்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார் கள் என்பதை உணர்வதேயில்லை.
ஆன்மீகவாதியாகவோ, அரசியல்வாதியாகவோ, தர்ம வானாகவோ மாறச் சொல்லி, அல்லது வேஷம் போடச் சொல்லி யாரையும் இந்தச் சமூகம் கெஞ்சியதில்லை. படி யேறி மனுக் கொடுத்ததில்லை. அல்லது இவர் போடும் வேடத்தைக்கண்டு "இவரன்றோ சத்தியவான்" என்று அந்தச் சமூகம் இவர்கள் பின்னே சென்றதுமில்லை.
இப்படியிருக்க இவர்கள் ஏன் வேஷம் போடுகிறார்கள்? ஒன்று மனச்சாட்சி உறுத்தவேண்டும். இன்னொன்று நல்ல மனிதர்களைத்தான் சமூகம் அங்கீகரிக்கும் என்ற உண்மை இவர்களை வருத்தவேண்டும். குடிப்பவன் ஒரு தவறு செய்கி றான். குடித்துவிட்டு இல்லை என்று மறுப்பவன் இரண்டு தவறுகள் செய்கிறான். சமூகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் இந்த உண்மை பொருந்தும் குடிப்பது நடத்தைக்கேடு என் கிறது சமூகம், பாவம் என்கிறது ஆன்மீகம், பொய் சொல்வது வாழ்க்கையில் பிறழ்வு என்று சமுதாயம் கூறுகிறது. பொய் பேசுபவனை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று கூறு
óBgbi FLDuuLib.
ஆனால் மனிதன் இரண்டும் செய்யவே ஆசைப்படு கிறான். இரவிரவாகக் குடித்துவிட்டு பகலில் பரமபிதா என்றும் பரமசிவனே என்றும் பஜனை பண்ணிக்கொள்ளத் துடிக் கிறான்.
ஊரைச் சுரண்டிப் பொருளைச் சேர்த்துவிட்டு, தர்மவா னாகப் பவனி வருகின்றான். கூசாமல் கொலைகளைச் செய்து விட்டு, சாந்த சொரூபியாக ஜனநாயகம் பேசுகிறான்.
- K E_/ذ. دۂ D6515,694.5 TGANOTEG

Page 20
Z=
இவர்களுக்கு வந்த நோய் என்ன? நம்பிக்கையைப் பிழையாகப் பயன்படுத்தியதுதான். சமூகத்தைப் பிழையாக எடை போடுவதுதான். ஆரோக்கியமான மனிதன் தன்னில் நம்பிக்கை வைக்கிறான். தெய்வத்தில் நம்பிக்கை வைக்கிறான். பிறரில் நம்பிக்கை வைக்கிறான்.
இந்த நம்பிக்கைகளில் எது குறைந்தாலும். அவனைக் கோளாறு ஆட்கொண்டுவிடும்.
தன்மேல் நம்பிக்கை குறைந் தவன் வாழ்க்கையையே இழந்து விடுகின்றான். தன்னால் எதுவும் முடியாது என்று
பயந்த போகின்றான். எதற்கெடுத் தாலும் தொடை நடுங்கு
கிறான். மொத்தத்தில் பிறர் தயவில் வாழும் தன்மை மிகுந்து சமூகத்துக்கே பாரமாகி விடுகின்றான்.
தெய்வ நம்பிக்கை குறைந்தவன் நேர்மையை இழந்து விடுகின்றான். நிதானத்தைத் துறந்தவிடுகின்றான். ஒரு
நோக்கை அடைவதற்கு எதுவும் வழியாகலாம் என்று தீர்மா
னித்துவடுகின்றான். இவனால் சமூகத்திற்குத் தொல்லைதான்.
பிறர் மேல் நம்பிக்கை வைக்காதவன் எல்லா நம்பிக் கைகளையும் இழந்து போகிறான். மனைவியை. மக்களை, உறவை, நண்பர்களை என்று எவரையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறான். வாழ்க்கையில் சகலதையும் இழந்து தனி மனிதன் ஆகிவிடுகிறான்.
விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் தன்னம்பிக் கையால் என்ன சாதிக்கமுடியும் என்று கேட்பவர்கள் இருக்கி
றார்கள். விதி என்றால் என்னவென்றோ தன்னம்பிக்கை என் றால் என்னனென்றோ அறியாததால் எழுந்த கேள்வி இது.
விதியை ஆற்று நீரோட்டத்திற்கு ஒப்பிட்டுக் கொள்
கிறோம். ତ୯୭ மனிதன் ஆற்றில் தவறி விழுந்துவிடுகிறான்.
i கு, கோணேஸ்வரன்) "
ཛོད༽

s நீரோட்டத்தை எதிர்த்து நீந்தலாம் என்று அவன் மூர்க்கத்
தனமாக முயன்றால் அதன் பெயர் தன்னம்பிக்கையல்ல. முட்டாள்தனம் "ஐயகோ விழுந்துவிட்டோம். இனி மீட்சி யில்லை,” என்று ஆற்று நீரோடு அடிபட்டுச் சென்றால் அது பைத்தியக்காரத்தனம்.
புத்திசாலிதனமும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன் என்ன செய்வான்? ஆற்றின் திசையிலேயே நீந்தி வசதியான இடத்தில் கரையேறி விடுவான். இவன் ஆற்றின் திசையுடன் சேர்ந்து கொள்வது விதி, வசதியான இடத்தில் கரையேறி விடுவது தன்னம்பிக்கை.
எந்த இக்கட்டான் சூழ்நிலையிலும், தனக்குச் சாதக மான சிறிய துணிக்கையைக் கூட மலையாக்கிப் பயன் படுத்திக் கொள்வதான் தன்னம்பிக்கை. இதுதான் மனித குலத்தின் உயிர்நாடி, வாழ்க்கையின் தலையான தன்மை,
தெய்வ நம்பிக்கையும் வாழ்க்கையின் உயிர்நாடிதான். தெய்வ நம்பிக்கை அற்ற மனிதன் ஏதோஒரு குறைபாடு
உடையவனாக இருப்பதைக் காணலாம். வளர்ந்த சூழலில்
ஏற்பட்ட கோளாறு. வளர்ந்த பின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் என்பவற்றால் இவன் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
சமுதாயத்தின் டெக்கை உடைக்க முயல்பவன். அல்
லது மாற்ற முயல்பவன் ஒன்றில் அறிவாளியாக இருப்பான், அல்லது விரக்தியாளனாக இருப்பான். சமுதாய ஓட்டத்திற்கு அறிவாளியொருவன் தடை போட முயல்கிறான் என்றால் அது நல்லதோர் அறிகுறி. விரக்தியாளன் ஒருவன் தடைபோட முயல்கிறான் என்றால் அது விரக்தியால் விளைந்த தற்குறி. அபாயகரமானது.
தெய்வ நம்பிக்கை குறைந்தவர்கள். இத்தகைய அபாய கரமான பேர்வழிகளாகவே இருக்கிறார்கள். தங்கள் தவறு களைச் சமூகத்தின் தலையிலும், பிறரின் தலையிலும் போட்டு
t f D66CTaf,085 TGA) felly, Sir
25
༄༽

Page 21
Z=
விடுவதில் வல்லவர்களாக இருப்பவர்கள் இவர்கள்தான்.
விளங்காத வார்த்தைகளால் ஏதேதோ சொல்ல முற் படுவார்கள். அதற்குப்புத்திசாலித்தனம் என்று பெயர்வேறு
வைத்துவிடுவார்கள். விளங்கவில்லையே என்று யாராவது
சொல்லிவிட்டால், பிற்போக்காளன் என்று அவனுக்கு நாமம் சூட்டி விடுவார்கள். இவையெல்லாம் தெய்வ நம்பிக்கையற்ற வர்களால் ஏற்படும் பிரச்சனைகள்.
தெய்வ நம்பிக்கை உள்ளோரில் பலர்கூட, தெய்வம் கை விடாது என்று கூறிக் கொண்டு, வாளா இருந்து வாழ்க் கையை வீணாக்கிக் கொள்வதைக் காண்கிறோம்.
தெய்வம் உதவும் என்று கூறிக்கொண்டு, நாம் பேசாமல் இருந்தால் எப்படி? கிணற்றுள் வீழ்ந்துவிட்ட ஒருவர் கையைக் கட்டிக்கொண்டு நின்றால் மேலே இருப்பவன் எவ்வளவு ஜாம்ப வனாக இருந்தாலும் ள்ன்ன செய்ய முடியும்? கயிற்றையோ கொடியையோ சமயோசிதமாக இறக்க வேண்டியதுதான் அவன் பணி. கயிற்றைப்பிடித்துக் கொண்டு வர வேண்டியவன் கிணற் றுள் இருப்பவன் அல்லவா?
தெய்வ நம் பிக் கையும் , முயற்சியும் உடையவனால்தான், தெய்வ நம்பிக்கையால் சரியான பலனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தன்னம்பிக்கை, தெய்வநம்பிக்கை போன்று பிறர்மேல் கொள்ளும் நம்பிக்கையும் அபாரமானதுதான்.
"நான் மனிதர்களை நம்ப மாட்டேன். தெய்வத்தை நம்புகிறேன்" என்று சிலர் பீற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம்.
"நான் எவரையும் நம்புவதில்லை. என்னைத்தவிர” என்று தன்னம்பிக்கையை உயர்த்திப் பெருமிதம் கொள்பவர்களைக் காண்கிறோம். உண்மை என்னவென்றால் அவர்கள் தாங்கள்
ܢܠ
கே. கோணேஸ்வரன்)
༄།༽
် 26 “း

ܢܠ
/ー அறியாமலேயே பொய் பேசுகிறார்கள் என்பதுதான்.
தன்னை மட்டும் நம்பி ஒரு மனிதன் உலகத்தில் ஒரு
கணம்கூட வாழ்ந்து விடமுடியாது. எதிரில் நிற்பவனை நம்ப
வேண்டும். இயற்கை அமைப்பை நம்பவேண்டும். அப்படி நம்பினால்தான் உலக வாழ்க்கை. அல்லது மனநோய் மருத் துவ மனைக்குத்தான் செல்லவேண்டும்.
சவரம் செய்யும் போது நாவிதனை நம்பத்தான் வேண் டும். அவன் ஒரு கணம் தடுமாறினால் கூட கூரிய கத்தியால் கழுத்தை வெட்டிவிட முடியும். யாராலும் தடுக்கக்கூட முடி Ulf Jg5).
தெருவில் இறங்கி நடக்கும் போது எதிரே வருபவரை நம்ப வேண்டும். வாகனவோட்டிகளை நம்ப வேண்டும். வாகன வோட்டி வாகனம் இணைத்தவரை நம்ப வேண்டும். அழுத்திய உடனே பிரேக் பிடிக்கும் என்பதை நம்ப வேண்டும்.
"நாளை பகல் வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லி விட்டு வருபவருக்கு, "நாளை உதிப்பேன்" என்று சூரியன் எங்காவது கையெழுத்துப் போட்டுக் கொடுத்தானா? "ஆடி மாதத்தில் இத்தனையாம் திகதி நான் மறைந்து கொள்வேன். அன்று அமாவாசை” என்று சோதிடர் எவரிடமேனும் சந்திரன் உறுதி மொழி கூறினானா?
நேற்று சூரியன் உதித்தான். முந்தநாள் உதித்தான். கோடிக்கணக்கான நாட்களாக ஒழுங்கு தவறாமல் உதித்தான். இன்றும் உதித்தான். எனவே நாளையும் உதிப்பான் என்பது இயற்கையின் விதியில் மனிதன் கொண்ட நம்பிக்கை.
இன்று பெளர்ணமி வரும் இன்று அமாவாசை வரும் என்பதெல்லாம் சந்திரனின் சுற்றுப்பாதை விலகவில்லிை, இனியும் விலகாது என மனிதன் கண்டறிந்ததால் ஏற்பட்ட நம்பிக்கை. வாகனமோட்டிக்கு உடல் நிலை நன்றாக இருக்
27
༄༽
'r

Page 22
கின்றது. மனோநிலை தெளிவாக இருக்கின்றது. எனவே அவர் என்மேல் மோதாமல் வாகனத்தை ஒட்டிச் செல்வார் என்பது பாதசாரி ஒருவரின் நியாயமான நம்பிக்கை.
ஒரே இரவில் எனது வீட்டை இடித்து, ஆளுக்கொரு பாகமாக எடுத்துச் சென்று, என்னை நிர்க்கதிக்குள்ளாக்க மாட்டார்கள் என்பது நான் சமுதாயத்தில் கொண்ட நம் பிக்கை.
இங்கே பிறரை நம்பாமல் வாழ்வதெப்படி? நம்பிக்கை வேறு. ஏமாளித்தனம் வேறு, பிறரை நம்பிக் கெட்டேன் என்று சொல்வதெல்லாம் ஏமாளித்தனத்திற்குப் பூசப்பட்ட சாயமேயன்றி வேறல்ல.
உன்னை நம்பு! தெய்வத்தை நம்பு சூழ இருப்ப வரை நம்பு!
அவநம்பிக்கை வாழ்வை சூனியமாக்கும், நம்பிக்கை வாழ்வில் ஒளியைப் பாய்ச்சும்.
உயர்வேன் என்று நம்பு, சாதிப்பேன் என்று நம்பு சமூகத்தை மாற்றுவேன் என்று நம்பு.
நீ நேர்மையான மனிதனாக நடந்தால் இந்த நம்பிக் கைகள் உனக்கும் உலகத்திற்கும் பயன்படும்.
தீர்மானிக்க வேண்டியவன் நீ
Ա
 

(Z=
அதிகாரத்திற்கும் கல்விக்குமிடையே அறிவு தத்தளித் துப் போய் நிற்கிறது. இரண்டு சாராரும் தாங்கள் அறிவாளிகள் போல் நடக்க முற்படுகிறார்கள். சமூகமும் இவர்களிடம் அறிவு இருந்தாலும் இருக்கலாம் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதால் அதிகாரமுள்ளவர்களோ, படித்த
வர்களோ அறிவுக்குச் சொந்தக்காரராக இருக்க முடியாது
என்பது கருத்தல்ல. கல்வி வேறு, அதிகாரம் வேறு, அறிவு வேறு என்பது தான் உண்மை.
அதிகாரத்திற்கு வந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அறிஞர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் அநேகரை நாம் காண்கிறோம்.
இவர்கள் அடிக்கடி பொன்மொழிகளை உதிர்த்துக்
கொண்டிருப்பார்கள். உலகத்திற்கே புத்தி சொல்லிக் கொண்டி ருப்பார்கள்.
பத்திரிகைகளும் பாவம், பதறியடித்துக்கொண்டு அவர்க ளது அறிவுரைகளைக் குறிப்பிட்டு மெய்சிலிர்க்கும் தலையங் கங்களைத் தீட்டி விடுகின்றன. பக்கம் பக்கமாகப் படங்கள் போட்டுப் பாராட்டியும் விடுகின்றன.
அதிகாரத்திற்கு வருவதற்குக் கல்வி தேவையில்லை. பத்திரிகை நடத்துவதற்கும் கல்வி இல்லாமல் முடியவே
, , ; ; ).
D61E30s.Torso
29

Page 23
/*
ܢܠ
அதிகாரத்திலிருப்பவர்கள் தாம் அறிவுக்கெட்டதனமாய் பொன்மொழிகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் படித்த பத்திரிகையாளர்களுக்கு அறிவு எங்கே போகிறது? இவர்களைப் பாராட்டும்படி யார் அடித்தார்கள்? அதிகாரத்திற்குப் பயந்து கொண்டு பத்திரிகைகள் மூலம் சமூகத்தைப் பிழைபட வைத்தால் அது அறிவாகுமா?
நான்கு யுகங்களுக்குப் புறம்பாக அரசியல்வாதியொரு வரின் பெயரில் ஐந்தாவது யுகத்தை தோற்றுவித்தது எங்கள் நாட்டுக்குப் படித்த மனிதர்கள்தானே. ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள் ஒரு யுகம் முடிந்து விடுமென்று இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? ,
எங்கள் நாட்டுத் தலைவர் இந்த உலகத்திற்கே வழி காட்டக் கூடியவர் என்று அரசியல்வாதி ஒருவரைத் தலையில்
வைத்துக் கூத்தாடியது எங்கள் நாட்டுக் கல்விமான்கள் தானே. அந்த அரசியல்வாதியும் ஆகா ஓகோ என்று கருத்துமழை
பொழிந்து கொண்டிருந்தது மட்டுமல்லாது "படித்தவர்களுக்கு மூளையில்லை. முடிவுகளை நான் எடுக்கிறேன். இவர்கள் வெறும் தலையாட்டிகளே” என்றதோரணையில் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே கூறியபோது அதற்கும் தலை யாட்டிக்கொண்டிருந்த கல்விமான்களுக்கும் அறிவுக்கும் ஏதா வது சம்பந்தம் இருக்க முடியுமா?
கொஞ்சநஞ்சமேனும் அறிவிருந்தால் இவர்கள் துடித் தெழுந்திருக்க வேண்டுமே? " மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ” என்று பதவிகளை உதறிவிட்டுச் சென்றிருக்க வேண்டுமே.
தன்மானத்தைக்கூடப் பேணத் தெரியாத பேடிகளுக்கு அறிவாளிகள் என்று பட்டம் கட்டினால் நாடு உருப்படுமா?
இன்றென்ன இங்கு வாழ்கிறது? மனச்சாட்சிக்குக்கும்
ཛོད༽

தன்மான உணர்வுக்கும் விரோதமாக அதிகாரத்தில் இருப்பவள் களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் படித்தவர்கள் அறிவாளி களா? அல்லது சந்தர்ப்பவாதிகளா?
அறிவு என்பது சந்தர்ப்பவாதமல்ல. தன்மானமிழந்து தலைசொறிந்து எப்படியாவது பிழைத்துக்கொள்வதல்ல.
மாலை மரியாதை கார்ப்பவனி அதிகாரங்கள் என்ப வற்றால் அறிவு மயங்கிவிடாது.
உயர் பீடத்தில் உள்ளவர்களின் சிரிப்பிற்காக தவம் கிடப்பது அறிவு என்றாகாது.
சரியானதை எடுத்துரைக்க வேண்டும். சரியானபடி நடக்க வேண்டும். பிறரை வாழ வைப்பதற்காக தன் அறிவுப்
பலத்தை பிரயோகிக்க வேண்டும். இதுதான் அறிஞர்க்கழகு.
என்னிடமுள்ள பலமும் தைரியமும் இன்னோருயிர்க்கு
உதவுவதற்காகவே என்றொரு பொன்மொழி உண்டு.
ஆனால் பிறரின் பலவீனங்களைக் கூடத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் மனிதர்களைத் தான் இன்று அறிவாளிகள் என்று சமுதாயம் நம்பிக் கொண்டிருக்கிறது.
அறிஞன் எனப்படுபவன் எபபோதும் நல்ல மனிதனாக இருப்பான். பிறரை உயர்த்துவதன் மூலம் தன் வளர்ச்சியை யும் பேணிக்கொள்வான்.
அரசியல்வாதிகளில் எங்காவது ஒன்றிரண்டு பேரைத் தவிர அப்பழுக்கற்றவர்களைக் காண முடியுமா?
மக்களின் எலும்புக்கூடு குவியல்களின் மீது நடந் தாலும் மகுடத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிப்பவன்தானே அரசியல்வாதி.
D686)6
محس!"==

Page 24
7- இவர்களிடம் மனிதத்தன்மையையோ அறிவுத்தன்
மையோ எதிர்பார்ப்பது எவ்வளவு மடைமைத்தனம்?
அதிகாரிகள் என்பவர்களும் ஏறத்தாழ இப்படித்தான், படிக்காமலே அரசியலுக்கு வந்து விடலாம். படித்துவிட்டுத்தான் அதிகாரியாக வரவேண்டும் இதுதான் வித்தியாசம் மற்றப்படி இரண்டு சாராரும் ஒரே மனப்பக்குவம் கொண்டவர்தாம்.
அதிகாரிகள் எனப்படுவோரின் சொத்துக்களுக்கும் வருமானத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
நேற்றுவரை சோற்றுக்குத் தாளம் போட்டவன் உத்தி யோகத்தில் இணைந்ததும் என்னமாய் வளர்ந்து விடுகிறான்?
இந்தப் பகல் கொள்ளைக்காரர்களையும் மக்கள் ஐயா என்று அழைத்து வழிந்து நிற்க வேண்டியிருக்கிறது என்பது தான் சங்கடமான விடயம்.
அரசியல்வாதிகளை ஐந்தாண்டுகளுக்கொரு முறை தூக்கியெறிந்து விடவாவது மக்களுக்கு முடிகிறது. ஆனால் இந்த அதிகாரிகளை மக்களால் ஒன்றும் செய்துவிட முடிவ தில்லை. அவர்களும் இந்த தைரியத்தில் ஐம்பத்தைந்து வயதுவரை, அறுபது வயதுவரை என்று கூத்தாடிக்கிறார்கள். அறுபதுக்குமேல் கூத்தடிக்கும் அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
அரசியலில் நேர்மையாளர்கள் இருப்பதுபோல் அதிகாரிக ளிலும் மக்கள் சேவையாளர்கள் இல்லாமல் இல்லை. இந்த நேர்மையாளர்கள் தொகை வெகு குறைவு என்பது சோகமான சங்கதி.
ஊரைச் சுரண்டுபவனை சமூகத்தை விற்றுப் பிழைப்ப வனை உலுத்தல்தனமாகக் காரியங்கள் பார்ப்பவனை அறிஞன் என்று அழைக்கலாமா? இங்கேதான் படிப்பிற்கும் அறிவுக்கும் )32 .சம்பந்தம் இல்லாமல் போகிறது ܢܠ

7.
யூட்டாத தனித்து நிமிர்ந்து வாழும் துணிவைப் புகட்டாதது
இதற்கு என்ன காரணம்? கல்வி முறைபற்றி எமது རྗོད་ சமூகம் கொண்டுள்ள பிழையான கருதுகோளே காரணம். கல்வி என்பது பணம் பண்ணும் சாதனம் என்று அநேகள் நம்பிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைக்குக் கல்வியூட்டுவது என்ஜீனியர் ஆக்க, டாகுத்தர் ஆக்க, அதிகாரியாக்க என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.
கல்வியூட்டல் என்பது குழந்தையைப் பண்புள்ள மனித னாக்க, நல்ல குடிமகனாக்களன்று எவராவது நினைக்கிறோமா? ஓடுபவர் பின்னே ஓடிப் பழக்கப்பட்டது இந்தச் சமூகம் எதையும் யோசித்து முடிவெடுக்க தயங்குவது இந்தச் சமூகம். யாரோ எடுத்த முடிவை கண்மூடி ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு நிகள் யார் உண்டு.
வெள்ளைக்காரன் தனது நிர்வாக வசதிக்கு கிளாக்கள் மாரை உருவாக்கப் பாடசாலைகளை கட்டி வைத்தான். நாமும் இன்று பாடசாலைகளில் கிளாக்கள்மாரைத்தானே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்?
டாக்குத்தரையும் எஞ்சினியரையும் உருவாக்க பல்க லைக்கழகங்களைக் கட்டி வைத்தான். நாங்களும் அடிச்சுவடு மாறால் அவற்றைத்தானே அச்சொட்டாகப் பின்பற்றுகிறோம். சமுதாயத்திற்கு வழிகாட்டி முன்னே செல்ல வேண்டிய துருவ நட்சத்திரங்களான பட்டதாரிகள் அரச இயந்திரத்தில் ஒட்டிக் கொண்டு காலங்கடத்த துடிக்கின்றார்கள் என்றால் அது சமுதா யத்தின் பிழை இல்லையா? இளைஞர்களுக்கு நம்பிக்கை
கல்வித் துறையின் பழுதில்லையா?
இங்கே தான் நாம் தோற்றுப் போயிருக்கிறோம்.
நமது குழந்தைச் செல்வங்களுக்கு அறிவைப் புகட்டு வதற்குப் பதிலாக பாடப் புத்தகங்களில் காணப்படும் விடயங்
மனக்கோலங்கள்

Page 25
7- களை வைத்துக் கொண்டு உச்சப் புள்ளிகளை எடுக்கப் பழக்கி ཛོད༽ இருக்கிறோம். தொண்ணுாற்றைந்து புள்ளிகள் எடுத்த குழந்தை யைப் பார்த்து ஐந்து புள்ளிகள் ஏன் குறைந்தது என்று கேட்கும் பக்குவத்தில் இருக்கிறோம்.
இது பெற்றோர்களின் தனித்த பிழையல்ல. பெற்றோர் ஆசிரியர்களின் கூட்டுப் பிழை. கெட்டித்தனம் என்பது புள்ளி களால் கணிப்பிடப்படக்கூடியது என்ற மாயையை வளர்த்த சமுதாயத்தின் பிழை. பணம் பண்ணுவதற்காக தர்மங்களை துறந்து விட்ட ஆசிரியர்களினது பெரும் பிழை.
டியூட்டரிகள் மாணவர்களுக்காக எழுந்தன என்று யாரா வது கூறினால் அது அப்பட்டமானகடைந்தெடுத்த பொய். படிப்பித் தலால பணம் பண்ணத் துடித்த வியாபாரிகளின் கடைகளே டி பூட்டரிகள். தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரத்தை இவர்கள் உயர்த்துவார்கள் என்று டியூட்டரி வியாபாரிகளை நம்பியதுதான் பெற்றோரின் தவறு.
சமூதாயத்தில் கபட மனிதர்களை இந்த டியூட்டரிகள் தான் தோற்றுவிக்கின்றன. சிந்திக்காமல் படிக்கவும், கஷ்டப் படாமல் புள்ளிகள் பெறவும் இவை சொல்லிக் கொடுக்கும் வழிகள்தான் பிற்காலத்தில் சிந்திக்காத படித்தவர்களையும் பிறர் எக்கேடுகெட்டாலும் சுலபமாக தாம் மட்டும் உயரும் வழியைத் தேடும் உத்தியோகத்தர்களையும் அரசியல்வாதிக ளையும் உருவாக்குகிறது. ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை.
ஆஸ்பத்திரிகளில் சம்பளம் எடுத்துக் கொண்டு வெளி யில் வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள் பாடசாலைகளில் சாட் டுக்கு வரவு பதிந்துகொண்டு டியூட்டரிகளில் படிப்பிக்கும் ஆசி யர்கள். எனக்குரிய விகிதத்தை தராவிட்டால் கட்டட ஒப்பந் தத்தை உனக்குத் தரமாட்டேன் என்று பேரம் பேசும் எஞ்ஜினி யர்கள், கையூட்டு இல்லாவிட்டால் கடுகளவும் பணிபுரியேன் என்று வாய் கூசாது கேட்கும் உத்தியோகத்தர்கள் எல்லாம்
الر34 .இந்த தயாரிப்புக்களே ܢܠ
க. கோணேஸ்வரன்

நல்ல உள்ளம் படைத்த சேவையாளர்கள் கூட இந்த ནོ༽
பிரகிருதிகளின் கொட்டத்தால் புதைந்து அல்லவா போயிருக்கி றார்கள். இதற்குக் காரணம் என்ன? கல்வி வேறு அறிவு வேறாக பிரிந்து போவதுதான். கல்வியுடன் அறிவு ஊட்டப் படுவதற்குப் பதிலாக கல்வியுடன் தந்திரம் ஊட்டப்படுவதுதான்.
அறிவு என்பது நேர்மையற்ற வழியில் பொருள் சேர்ப் பதற்கான திறமையல்ல. பிறரை ஏய்த்துப் புகழ் தேடுவதற்கான பாதையுமல்ல.
பொது நன்மைக்காக உழைப்பதன் மூலம் தன் குடும்ப நன்மையைப் பேணும் நேர்மையான மனிதனே சிறந்த அறி வாளி. தான் பிறந்த மண்ணுக்கும் மனிதகுலத்தின் உயர், வுக்கும் கபடமற்ற சேவை செய்பவனே உண்மையான அறி வாளி.
பிற துன்பம் கண்டு பொறுக்க மாட்டாதவன், பிறர் பொருளை அபகரிக்க விரும்பாதவன், எல்லோரும் இன்புற்றி ருக்க நினைப்பவன் எவனோ அவனே சிறந்த அறிஞன். சிறந்த கல்வியாளன். சிறந்த அதிகாரி. உயர்ந்த அரசியல்வாதி.
உன்னையே நீ திருத்திக் கொள்வதற்கு எது ஆயுதம் என்று நினைக்கிறாயோ அதுவே அறிவு. அறிவை அடையாளம் காண். அதன் படி நட. அதுதான் மனித நேயம். அதுதான் சிறந்த மதம்.
அதுதான் தர்மங்களுக்கெல்லாம் தலை சிறந்த தர்மம்.
35
محمد"== மனக்கோலுங்கள் نشان *
ܠ

Page 26
(அலுவலக
பொதுத்திணைக்களங்களில் கடமை புரியும் அதி காரிகள் பலர் பொது மக்களிடம் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பதில்லை. "நான் இல்லாவிட்டால் இந்த சனம் எப்படித்தான் காலந்தள்ளப் போகிறதோ?’ என்று மகதனமுத்தா பாணியில் சிந்திக்கி றார்கள்.
அதிகாரிகள்தான் இப்படியென்றால் அடிமட்ட ஊழியன் கூட பொதுமகன் தனக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்றெல் லாம் எதிர்பார்க்கிறான் அதிகாரிகளை அண்ணார்ந்து பார்க்கும் பொதுமக்கள் தன்னையும் அப்படிப்பார்த்தாலென்ன என்று இவன் நினைத்துக் கொள்கிறான்.
இது எதனால் நிகழ்கிறது? தான் எந்த இடத்தில் நிற்க முடியும் என்று அலுவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. தங்கள் சக்தி என்ன? தாங்கள் யார் என்று பொதுமக்களும் புரிந்து கொள்வதில்லை.
பொதுத்திணைக்கள ஊழியர்கள் எல்லாம் மக்கள் சேவர்கள்தாம் மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசு ஒன்றி னால் மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கருவிகள்தாம்.
ஆனால் நடைமுறையோ நேர்மாறாக இருக்கிறது.
3
༄།༽
 

தாங்கள் மக்களை வழிநடத்த வேண்டியவர்கள். தாங்கள் சொல்வதை அப்படியே கேட்டு மக்கள் நடக்க வேண்டும் என்றுதான் பல அலுவலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மக்களின் வாழ்க்கையை இலகுவாக்குவதற்காகத்தான் இவர்கள் அமர்த்தப்பட்டார்கள் என்பதை மறந்து போனதால் வந்த வினை. இது மக்களுக்கு வேண்டிய செளகரியங்க ளைத் தங்கள் அதிகார எல்லைக்குள் நின்று செய்வதுதான் தங்கள் பணி என்பதை உணர்ந்து கொள்ளாததால் வந்த துயர் இது.
அதிகாரிகளோ அலுவலர்களோ இல்லாமல் மக்கள் வாழ முடியும். சிரமப்பட்டாவது வாழ்ந்து விடுவார்கள். வாழ்ந் தும் இருக்கிறார்கள்.
ஆனால் மக்கள் இல்லாமல் எந்த அதிகாரியும் தோன்றி விடவோ வாழ்ந்து விடவோ முடியாது.
மக்களின் வாழ்க்கை என்ற இயந்திரத்தின் உராய்வு நீக்கும் எண்ணெய் தான் பொதுத்திணைக்கள அலுவலர்கள் எண்ணெய் இல்லாமல் இயந்திரம் சிரமப்பட்டாவது இயங்க முடியும். இயந்திர வடிவமைப்பை மாற்றி விட்டால் எண்ணெய் தேவைப்படாமல் கூடப் போய் விடலாம்.
ஆனால் இயந்திரமே இல்லாமல் எண்ணெய்யால் யாருக்கு என்ன பயன்? இயந்திரங்களை நம்பித்தான் எண் ணெய்யே தவிர எண்ணெய்க்காக இயந்திரமல்ல. இதை அதிகாரிகளும் கீழ் மட்ட ஊழியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்நாட்டில் சில திணைக்களங்களின் பெயரைச் சொன் னாலே கண்ணை மூடிக் கொண்டு பொதுமக்கள் காறித் துப்புகிறார்கள். இந்த ஊர் அந்த ஊர் என்றெல்லாம் எல்லா
idge: 3: Tours
37 και
༄༽
- r '

Page 27
இடங்களிலும் இத்திணைக்களங்கள் மக்கள் வயிற்றெரிச்ச லைக் கொட்டிக் கொண்டு வாழ்கின்றன.
சில பதவிப்பெயர்களைச் சொன்னாலே இவர்கள் கொள் ளைக்காரர்கள் என்று ஏக மனதாகக் கூறிவிடுகிறார்கள்.
நாட்டுநடைமுறைகளும் சிலகாலங்களில்சில உத்தி யோகத்தர்களுக்கு கொள்ளையடிப்பாதற்கான வாய்ப்புக்களை வகுத்துக் கொடுத்து விடுகிறது.
ஆட்சிகள் மாறும் பொழுதும் நாட்டு நடப்புகள் வித்தி யாசப்படும் பொழுதும் முறை மாற்று அடிப்படையில் வேலை செய்வது போல் சில பதவிகள் மக்களை ஏய்த்துப் பொருள் தேடுவதற்காக என்றாகி விட்டது.
வேலை நியமனம் பெறும் போது ஒட்டிய வயிறுடன் காணப்பட்டவர்கள் ஓரிரு மாதங்களிலேயே உருட்டி மிரட்டி
பொதுமக்களைப் பயமுறுத்தும் அளவிற்குப் பெருத்து விடுகி
றார்கள்.
தெருவில் கையேந்தும் நிலையில் நின்றவர்கள் ஒன்றி ரண்டு வருடங்களிலேயே நகர்ப் புறத்தில் காணி வாங்கி வீடு கட்டி மற்றவர்களுக்கு புத்தி சொல்ல வந்துவிடுகிறார்கள்.
ஆனால் இவர்களை விட அதிக சம்பளம் பெறும் நேர்மையான உத்தியோகத்தர்கள் ஆண்டுகணக்காக வாழ்க் கையுடன் போராடிக்கொண்டு ஐம்பது ரூபாய் கூட சேமிக்க முடியாது தவிக்கிறார்கள்.
நேர்மைக்குக் கிடைத்த பரிசு இந்த உத்தியோகத் தர்களுக்கு! ஏய்த்துப் பிழைக்கப் பழகியதால் கிடைத்த பரிசு அந்த உத்தியோகத்தர்களுக்கு!
ܢܠ
38 ="71ار

அதிகாரிகளின் பெருமை என்பது வீடு கட்டி வாழ்ந்து விடுவதில் தங்கி விடுவதில்லை. பளபளக்கும் வாகனங்களில் பவனி வருவதில் தங்கிவிடுவதில்லை.
காரியங்கள் ஆக வேண்டும் என்பதால் பொதுமக்கள்
இவர்களைச் சுற்றிப் போடும் "ஐயா' உள்ளத்தைத் தழுவி வந்த வார்த்தை அல்ல வெறும் உதட்டிலிருந்து வருவதே.
அவர்கள் உள்ளத்தில் "ஐயா” என்ற பதத்திற்கு அற்பப்புழு என்றுதான் அர்த்தம் தொனித்துக் கொண்டி ருக்கும்.
அந்த அதிகாரி அருகில் இல்லாத போது அவன் இவன் என்று ஒருமைப்பதத்துடன் மோசமான வார்த்தை
களையும் இணைத்துத்தான் உச்சரிப்பார்கள்.
ஆனால் நேர்மையான உத்தியோகத்தர்களை மக்கள் என்றும் மனதால் போற்றுவார்கள். குறிப்பிட்ட உத்தியோகத் தருடன் எவ்வித நேரடித் தொடர்பும் கொண்டிராதவர் கூட ”அவரா. நல்ல மனிதர்” என்று நற்சான்றிதழ் வழங்கு வார்கள். அதிகாரத்தை விட்டு அந்த உத்தியோகத்தர் அகன்ற பின்பும் கூட அவருக்கு மதிப்புக் கொடுப்பார்கள் அன்பு செலுத்துவார்கள்.
இதுதான் நல்ல பொதுத்துறை ஊழியருக்கு கிடைக் கக் கூடிய உயரிய பரிசு. இப்பரிசை எத்தனை பேர் பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் எண்ணிக்கை கவலையளிப்பதா கவே உள்ளது.
மோசமான பொதுத்துறை ஊழியர்கள் பெருகுவதற்கு பொதுமக்களும் ஒரு காரணமாகிவிடுவதை மறுக்க முடியாது. லஞ்சம் வழங்கியாவது காரியத்தை சாதிக்கும் மனோபாவம் தமக்குச்சேர தகுதியற்ற பொருளையோ பணத்தையோ பெற்

Page 28
ܢܠ
றுக் கொள்வதற்காக உத்தியோகத்தர்களின் கால் கைக
ளைப் பிடிக்கும் எண்ணம். உத்தியோகத்தர்கள் எல்லாம் வல்லவர்கள் எதிர்ப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கணிப்பு ஆகியவை பொதுமக்களுக்கு மத்தியில் இருக்கும் போது நேர்மையான அதிகாரிகள் எங்கே தோன்றப்போகிறார்கள்?
பொதுமக்கள் தவறுவிடும் அதிகாரிகளை தட்டிக் கேட்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுத் துறை ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் பெறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் கள் உத்தியோகம் வகிப்பது மக்களுக்காகவே என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இதற்கு முன் பொதுமகன் என்பவன் தன் னையும் திருத்திக் கொள்ள வேண்டும்.
வீடுகளைக் கட்டி வாடகைக்குக் கொடுத்து விட்டு அகதி வேஷமிட்டு அரச காணிகளில் குடியேறிக் காணி பிடிக்கும் கயமைத் தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் ஏழைகளுக்கு வழங்கவெனக் கொண்டு வரும் கூரைத்தகரங்களை தானும் ஏமாற்றிப் பெற்றுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பத்துக் குடும்பங்களுக்கு சோறு போடக்கூடிய வச தியை மறைத்து வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறேன் எனப்பொய் கூறி ஜனசக்தி, சமுர்த்தி நன்மைகளைப் பெற்றுக் கொள்ள போடும் வேசங்களை களையவேண்டும்.
உண்மையாகவே அகதிகளாகிவிட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களைத் தாங்களும் பங்குபோட்டுக்
கொள்ளும் கேவலத்தை அகற்றிக்கொள்ளவேண்டும்.
இவைபோன்ற கடைகெட்ட பழக்கவழக்கங்களை

Z
கைவிடும் ஒரு பொதுமகன்தான் ஒரு நேர்மையான அதிகா ரியை உருவாக்க முடியும். நேர்மை கெட்ட அதிகாரியை தட்டிக்கேட்க முடியும்.
தன் முதுகில் புண்ணை வைத்துக்கொண்டு காடு நுழையக்கூடாது என்பது தமிழ்ப் பொன்மொழி.
ஒருவரது நேர்மையினம் பற்றி வாய் திறக்க முன் நாம் அந்த விடயத்திலாவது நேர்மையாக இருக்கின்றோமா என திரும்பிப் பார்க்க வேண்டும். நாம் சரியாக நடக்காத ஒரு விடயத்தில் பிறர் சரியாக நடக்கவில்லை என்ற குற்றச் சாட்டை வைக்க எமக்கு எந்த உரிமையும் கிடையாது.
பொதுத்துறை ஊழியர்களும் தங்களைத்திருத்திக் கொள்வதற்குத் தயங்கக்கூடாது.
முறைப்படி செய்யக்கூடிய ஒரு காரியத்தைக்கூட
தடைப்படுத்தி வைத்து விட்டு இலஞ்சம் பெற திட்டம்
போடுவதை கைவிட வேண்டும்.
தங்களின் சேவையை நாடி வரும் பொதுமக்களின் தரம் கண்டு பொறுமையுடன் உதவ வேண்டும்.
குறிப்பிட்ட சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நன்கு தெரிந்து வரும் பொதுமக்களும் இருக்கிறார்கள். ஒரு தடவை விளக்கம் அளித்தால்
புரிந்து கொள்ளக்கூடிய பொதுமக்களும் இருக்கிறார்கள்.
பல தடவை விளக்கி னாலும், புரிந்து கொள்ளச் சிரமப்படும் பொதுமக்களும் இருக்கிறார்கள். இவைகளை அனுசரித்து பொறுமையுடன் உதவ வேண்டும்.
பிழையான விளக்கங்களையும், தரவுகளையும் பெற்றுக் கொண்டு வருபவர்களுக்கு அன்பாக விளக்கம்
༄༽

Page 29
-ܠ
அளித்து புரிய வைக்க வேண்டும்.
நாடி வரும் பொதுமக்களின் வாழ்வியற் சூழல் மனோநிலை என்பவற்றை பார்த்த மாத்திரத்தில் ஊகித்து
அதற்கிசைய அவர்களை வழி நடத்திப் பழக வேண்டும்.
இவ்வாறான செயல்களை செய்வது எந்த பொதுத் துறை ஊழியர்களுக்கும் சிரமமான காரியம் அல்ல. சிறிய முயற்சியே போதும் பெரிய பலனைத்தேடித்தரும்.
பதறியடித்துக் கொண்டு வரும் பொதுமக்களை அதி காரி ஒருவனின் பண்பான வார்த்தைகள் குளிர்விக்கும். இனிய உபசரிப்புகள் இமயமாய் உயர்ந்து நிற்கும். பொதுத் துறை அலுவலர் ஒருவரின் சிறிய உதவி கூட அவன் நெஞ்சில் வாழ்நாள் எல்லாம் நிலைத்து நிற்கும்.
அதிகாரிகள் பொது மக்கள் நல்லுறவை தினங்கள் கொண்டாடுவதாலோ விழாக்கள் நடத்திக் கூட்டம் கூடுவ தாலோ ஏற்படுத்திவிட முடியாது. அவை வெறும் போட் பாடுகளாகவே போய்விடும்.
கோட்பாடுகளை சுமந்து கொண்டிருப்பதா? நடை முறைகள் செயற்படுத்திக் காட்டுவதா என்பதை பொதுத் துறை சார்ந்தோரே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
ز :'-

-ܠ
அரசியல்வாதி எனப்படுபவன் மக்களிடமிருந்துதான் தோன்றுகிறான். ஆனால் மக்களைவிடத் தான் மேலானவன் என்று நினைத்துக்கொள்கிறான்.
இந்தப் போக்குக்கு யார் காரணம்? சந்தேகமேயில் லாமல் மக்களேதான். இவர்கள் நினைத்தால் அரசியல்வாதி களின் கொட்டத்தை ஒரே நாளில் அடக்கிவிட முடியும், !
ஆனால் மக்கள் அவ்வாறெல்லாம் நினைப்பதில்லை. அரசியல்வாதிகளை அனுசரித்துப்போனால் தான் தங்களால் வாழ முடியும் என்று பைத்தியக்காரத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளை குறுநில மன்னர் கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது நினைப்புக்கு உரமிடுவது போல் சில
படித்தவர்களும் நடந்து கொள்வது ஜீரணிக்கமுடியாத ஒன் றாக உள்ளது.
படித்த மனிதர்கள் பெரிய மனிதர்கள் என மக்களால் வியப்புடனும் பெருமிதத்துடனும் நோக்கப்படுபவர்கள் பலபேர் அரசியல்வாதிகளிடம் தெண்டனிட்டு அவர்கள் சிரிப்புக்காகக் காத்துக்கிடப்பதைப் பேதைமை என்று சொல்லாமல் வேறென்ன வென்று அழைக்கமுடியும்?
யானைக்குத் தன் பலம் தெரியாமல் பாகனிடம் மண்டி
d606, Gasions of
"ノ

Page 30
r
ܢܠ
யிடுவதுபோன்ற அபத்தமான நிலைதான் மக்கள் அரசியல் வாதிகளிடம் அடங்கிப்போவது
தலைவர்களிடம் மக்கள் கட்டுப்பட்டுப்போவது வேறு. அரசியல்வாதிகளிடம் மக்கள் அடங்கிப்போவது வேறு.
பல அரசியல்வாதிகள் தம்மைத் தலைவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். செய்தித்துறை ஊடகங்க ளும் அவ்வாறான ஒரு மாயப் பிரக்ஞையில் சிக்குண்டு கிடக்கின் றன. மக்கள் என்ன செய்வார்கள்? நம்பி அடங்கிப் போய் விடுகிறார்கள்.
பிரதேச சபை உறுப்பினர், வட்டாரத் தலைவர், நகர சபை உறுப்பினர், நகரத்தின் பகுதித்தலைவர் என்று தொடங்கி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதித் தலைவர்கள் என்று முத்திரை பதித்துவிடுகிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகள் என்பதை இவர்கள் தலைவர்கள் என்ற அாத்தப்படுத்திக் கொண்டதால் வந்த கோளாறு இது.
மககள் பிரதிநிதி தேர்தலில் நின்றுதான் வரவேண்டும். தேர்தலில் தோற்றுவிட்டாலோ அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு பெற்றுத்தான் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என்பதில்லை. ஆதரவு எதுவுமில்லாமல் பிரதிநிதிகள் வர ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அவ்வாறு வந்தவர்களும் ஏராளமாக உள்ளனர்.
ஆனால் தலைவர்கள் அவ்வாறு இல்லை. மக்கள் இதயங்களை ஆகள்வழித்து எழுதுபவர்களே தலைவர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் மக்களது இதய உணர்வுகளின் மொத்த உருவம் ஆகிறார்கள்.
ჭamფფიზიuმ
༄༽
 
 
 

Z=
தலைவர்கள் தேர்தல்கள் மூலம் தான் உருவாக வேண்டும் என்பதில்லை. தலைமைப் பண்பு குடிகொண்டிருக் கும் ஒருவருக்கு தேர்தல்கள் அதிகாரத்தையும் பிரபலத்தை யும் தருவதால் அதனுாடாக தலைவராக வருவது இலே சானது அவ்வளவுதான்.
இந்திய நாட்டின் தலைவர் மகாத்மா காந்தி எந்தக் தேர்தல் மூலம் மக்கள் தலைவர் ஆனாள்? பகுத்தறிவுத் தந்தை பெரியோர். ஈ. வெ. இராமசாமி நாயக்கள் எந்த தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்? மறைந்த பின்னர் கூட இவர்கள் நாடு மொழி கடந்து மக்கள் மன தில் உயர்ந்து நிற்கவில்லையா?
எனவே தலைவர்கள் வேறு மக்கள் பிரதிநிதிகள் வேறு என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தலைவர்கள் மறைந்த பிறகும் வாழ்பவர்கள். அவர்
களது நேரிய நடைமுறைகளும் வார்த்தைகளும் தொடர்ந் தும் மக்களுக்கு வழி காட்டுவன.
மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு இல்லை. அதிகாரம் போனால் அனைத்தும் போய்விடும். விலாசமே போய்விடும். அவர்கள் இறந்துவிட்டால் அடுத்த நாளே மக்கள் மறந்து விடுவார்கள்.
அவர்கள் சார்ந்த கட்சிகள் வேண்டுமானால் பதிவேடு களில் விபரங்களை வைத்துக் கொண்டு வருடா வருடம் நினைவுக் கொண்டாட்டங்களை நடத்தி பத்திரிகை விளம் பரங்களையும் செய்துவிடக் கூடும்.
ஆனால் மக்கள் மனதில் இவர்கள் வாழ்பவர்கள் ஆகிவிட மாட்டார்கள்!
தலைவர்கள் நேர்மையானவர்களாகவும் அப்பழுக்
dogs (gastorso
༄༽

Page 31
கற்றவர்களாகவும் இருப்பார்கள். அப்படியிருக்கும் வரைதான் அவர்கள் தலைவர்கள். பிழைப்புக்காக இலட்சியத்தை விற்பவர்களும், பதவியொன்றே இலட்சியம் எனச் செயற்படுப வர்களும் தலைவர்கள் ஆவதில்லை.
இவர்கள் பத்திரிகைளின் பிரச்சாரம் காரணமாக சில காலம் தலைவர்கள் போல் தோற்றம் அளிக்கக்கூடும்.
அரசியல் அந்தஸ்த்து, அதிகார வல்லமை காரணமாக
மக்கள் இவர்களைத் தற்காலிகமாகக் கொண்டாடக் கூடும். இடம் மாறிவிடாலோ இவர்களுக்கு எல்லாமே மாறிவிடக் கூடும். “நான்தான் இன்னார். என்னைத் தெரியவில்லையா?” என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு வந்துவிடுவார்கள்.
இதை அரசியல்வாதிகள் உணர்வதேயில்லை. விபத் தாக வந்தாலென்ன விசுவாசமாக வந்தாலென்ன பதவி கிடைத்
ததும் மயங்கிப்போய் விடுபவர்கள் தாம் அநேகள்.
தம்மைத் தேர்ந்தனுப்பிய மக்களை மறந்து போகிறவர் கள்தாம் அதிகம்.
நடந்து வந்த பாதையைக் கூட திரும்பிப் பார்க்க பலர் விரும்புகிறார்கள் இல்லை.
ஆகக் குறைந்தது மக்களின் தயவால் இன்று வயிறாரச் சாப்பிடுகிறோமே என்று கூட இவர்கள் நினைப்பதில்லை.
இவர்கள் நினைப்பு சிந்தனையெல்லாம் மக்ளை எவ்வாறு
மடையார்கள் ஆக்கலாம். அடுத்த தேர்தலில் இதைவிட
உயர்ந்த இடத்தை எப்படிக் கைப்பற்றலாம் என்பதிலேயே கழிந்துவிடுகின்றது.
ཛོད༽
Ο این را نیرون க. கோணேஸ்வரன் ;ふ*ー

இவர்களைச் சுற்றி பிழைப்பு நடத்துகின்ற அடிவருடிக ளும் உச்சாணிக் கொப்பில் இவர்களை ஏற்றி வைத்து அவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்.
மக்கள் ஏமாறவில்லை என்று இவர்கள் புரிந்து கொள்கிற காலத்தில் இவர்கள் ஏமாந்துபோய்விட்ட காட்சி அரங்கேறி முடிந்து இருக்கும்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்தால் ஆவதென்ன? பதவி பறிபோனபின்னர் மக்கள் மந்தைக் கூட்டம் என்று புலம்புவதில் பயனில்லை. மக்கள் தன்னை அங்கீகரித்த காலத்தில் 'மக்கள் ஆணை’ என்று மக்களை உயர்த்தும் அரசியல்வாதி தான் தூக்கி எறியப்படும்போது மக்களை மந்தைகள் என்று வர்ணிப்பது வேடிக்கையாக இல்லையா?
அரசியல்வாதிகள் பிரதிநிதிகளாக பவனி வருங்காலத் தில் தலைவர்கள் போல் வேடமிட்டாலும் மக்கள் எந்த நேரத்திலும் அவர்களைத் தூக்கி எறிந்துவிடக் கூடும்.
தலைவர்கள் அப்படியல்ல. கால் நூற்றாண்டுக்கு மேலா கச் சிறைப்பட்டிருந்த காலத்திலும் மக்கள் மனதை ஆகள் வழித்த நெல்சன் மண்டேலா தலைவர். கதராடையும் கைத்தடி யுமாகத் திரிந்த காந்தியடிகள் தலைவர். வெண்தாடியும் வீறாப்புமாக இருந்த பெரியார் தலைவர். காமராஜர் தலைவர். அண்ணா தலைவர்.
இவர்களை மக்கள் எந்தக் காலத்திலும் தூக்கியெ றிந்து விடமாட்டார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் மறந்துவிட மாட்டார்கள். எந்தக் கருத்து விதைப்புகளும் மக்கள் மனதிலிருந்து இவர்களை அகற்றி விடாது.
இவர்கள் காலங்கடந்து கருத்து வேறுபாடுகள் கடந்து மக்கள் நெஞ்சங்களில் கொலுவீற்றிருப்பார்கள். தந்தை செல்
வாவைப் போல!
-ܠ
மனக்கோலங்கள் )
ر"=

Page 32
இந்த நிலைக்கு அரசியல்வாதிகள் உயரவேண்டும். ༄༽ அரசி யல்வாதி தன்னைப் பற்றிச் சிந்திக்கிறான். அரசியல் ஞானி நாட்டையும் மக்கள் நலனையும் பற்றிச் சிந்திக்கிறான்.
நாட்டையும் மக்கள் நலனையும் பற்றிச் சிந்திக்கும் அரசி யல்வாதிகள் தங்களையறியாமலேயே மக்கள் மனதில் உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவரப்படுகிறான்.
ஆள், அம்பு, ஆடம்பரம், வேலைவாய்ப்பு வழங்கல், பாலம் போடுதல், பாதை திருத்துதல் எல்லாம் இரண்டாம்
I'd (3LD.
தன்னுடைய உறவினர் வாழும் பகுதியில் பாதை போட்டுவிட்டு ஊருக்குப் பாதை போட்டேன் என்று சொல்ல 6) TLDT?
தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவி பெற்றுக் கொடுத்துவிட்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினேன் என்று தம்பட்டம் அடிக்கலாமா?
இருக்கின்ற ஆஸ்பத்திரியை அழிய விட்டுவிட்டு தன் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தக் கூடிய இடத்தில் புதிய ஆஸ்பத்திரி கட்டி பணத்தை வீணாக்கிவிட்டு ஆஸ்பத் திரி கட்டினேன், பார் என்று அகங்காரம் கொள்ளலாமா?
அடுத்த தடவையும் தேர்தலில் வென்று சுகபோகம் அனுபவிக்க வேண்டும என்பதற்காக கந்தனையும், காதரை யும், பண்டாவையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கலாமா?
இன்றைய அரசியல்வாதிகள் இவற்றைச செய்துதான் வயிறு கழுவுகிறார்கள். இந்த நாட்டின் இனவாதம் சாதாரண சிங்களவனிடமிருந்தோ தமிழனிடமிருந்தோ முஸ்லிமிடமி ருந்தோ தோற்றம் பெறவில்லை.
ܢ
 

ܢܠ
பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடித்த அரசியல் வாதிகள் விதைத்த விதை இன்று அசைக்க முடியாத ஆலமரம் ஆகிப்போய்விட்டது.
இன்றும் இவர்கள் மக்களை ஏமாற்றலாம் என்றுதான் நினைக்கிறார்கள். இல்லாவிட்டால் இனவாதம் என்ற ஆல மரத்தின் வேரை வெட்டாமல் விழுதுகளுக்குப் பூசை போட்டுக் கொண்டிருப்பார்களா? வலி த்லையில் தான் என்று நன்கு தெரிந்திருந்தும் குதிக்காலுக்கு கழிம்பு தடவிக் கொண்டு இருப்பார்களா?
நம்நாடு செய்த துரதிஷ்டம். இந்த நாட்டில் தலைவர்கள் தோன்றவில்லை. அரசியல் ஞானிகள் தோன்ற்வில்லை. அரசியல்வாதிகளே வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சுதந்திர இலங்கையில் தந்தை செல்வாவுக்கு முன்னரோ, பின்னரோ அரசியல் அரங்குகளுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைக்கவில்லை. அவரும் சிறுபான்மையினர் மத்தியில் தோன்றியதால் தேசிய அளவில் சாதிக்க முடியாது போய் விட்டது.
இன்று அரசியல் நடத்திக்கொண்டு இருப்பவர்களில் எவருமே தலைவர்களில்லை. தலைவர்கள் போல் தோற்றமளிக் கிறார்கள்.
இவர்கள் நினைத்தால் தலைவர்களாக வரமுடியும். அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்காமல் அடுத்த தலைமுறை யைப் பற்றிச் சிந்திக்கப்பழக வேண்டும்.
வாதப் பிரதிவாதங்கள் தலைவர்களை உருவாக்கி விடாது. வளமான உள்ளங்கள்தான் தலைமைப் பண்பைத் தோற்றுவிக்கும்.
༄༽

Page 33
ܢܠ
இந்தநாட்டில் இரண்டு தலைவர்கள் நாளை தோன்றட் டும்; நாளை மறுதினம் இனவாதம் அடியோடு மண் கவ்விவிடும். நம்நாடு சொர்க்க பூமியாக மாறிவிடும்.
இந்த உண்மையை அரசியல்வாதிகள் மட்டுமல்ல,
மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டும். தங்கள் வாக்குகளைப் பெற்றவர்கள் சரியாக நடக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் செய்வது பிழை என்று தெரிந்தால் இடித்து ரைக்கத் தயங்கக் கூடாது.
அரசியல்வாதிகளின் பிழைகள் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதைவிட சாதாரண மக்களுக்குத்தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொண்டால் தான் நீயும் நானும் உனது தலைமுறையும் எனது தலைமுறையும் இந்த நாட்டில் உரிமையோடும் தன் மானத்தோடும் மகிழ்ச்சியாக வாழமுடியும்.
அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பங்களும்
பிழைத்துக்கொள்வதா? உனது எனதும் தலைமுறை இந்த நாட்டில் தொடர்ந்தும் தலை நிமிர்ந்து வாழ்வதா?
தீர்மானிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!
༄༽
இ. கோணேஸ்வரன்)
 
 

ܢܠ
B
)
Iெண்ணங்கள் தாம் ஒரு மனிதனை ஆட்டுவிக்கின்றன என்று பெரியோர்கள் கூறுவார்கள். எண்ணங்கள் நல்லவை யாக இருந்தால் அந்த மனிதனின் வாழ்வு சிறப்படைகிறது. எண்ணங்கள் தீயவையாக இருந்தால் மனிதனின் வாழ்வு பாழடைகிறது. இதைத்தான் மனம் போல வாழ்வு என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
(எண்ணங்களும் வாழ்வு
ஆனால் பல மனிதர்கள் தீய எண்ணங்களைச் சுமந்து கொண்டு-நல்ல மனிதர்கள் போல் தோற்றமளிக்க ஆசைப்ப டுகிறார்கள். பெரியார்கள் போல் பவனி வரத் துடிக்கிறார்கள். எண்ணங்கள் தாம் ஒரு மனிதனது வாழ்க்கை முறைமை யைத் தீர்மானிக்கிறது என்பதிலெல்லாம் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது.
என்றாலும் இவர்கள் சமூகத்தின் முன்னால் என்றோ ஒரு நாள் தோற்றுப் போய்த் தலை குனிந்து நிற்க வேண்டி வந்து விடுகிறது. புத்தியுள்ளவர்கள் உணர்ந்து கொள்கிறார் கள். திருந்தியும் விடுவார்கள். புத்தியற்றவர்களோ பாவம் தலைகுனிந்து போன சங்கதி கூடத் தெரியாமல் வாழ்ந்து விடுகிறார்கள்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் என்று சொல்வது இத்தகையவர்களுக்குத்தான் வெகுவாகப் பொருந்தும். ஆடுகிற ஆட்டமும் போடுகிற வேஷமும் ஒரு நாளைக்கு வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
D65 (gefores
از لS アイ
لله،\/.

Page 34
ܢܠ
தீய எண்ணங்களால் ஆட்கொள்ளப்படுபவர்கள் தங்க ளது புத்திப்பலத்தால் குடும்பப் பலத்தால் வேறு புறக் காரணிகளால் அந்தஸ்துடனும் மாலை மரியாதைகளுடனும் வாழக் கூடும். ஆனால் இவை அவர் பலமாக இருக்கும் வரைதான் நீடிக்கும். பலம் குறைந்து விட்டால் அடுத்த கணமே அரைக் காசுக்குக் கூடப் பெறுமதியற்றுப் போய் விடுவார்கள்.
தீயவர்களாக இருப்பதைவிட தீய எண்ணங்களைச் சுமந்து கொண்டு நல்லவர்கள் போல் வேஷம் போடுபவர்கள் எப்போதும் ஆபத்தானவர்கள். இவர்கள் எல்லா இடங்களி லும் ஊடுருவார்கள். எல்லா மேடைகளிலும் மாலை பெறு வார்கள். எல்லாப் பதவிகளையும் அலங்கரிக்கத் துடிப்பார்கள்.
இத்தகையவர்கள் ஏறுகின்ற மேடையும் நாசம், அலங் கரிக்கின்ற பதவிக்கும் தோஷம். நல்ல கெளரவமான பதவிகள் கூட இவர்களால் கேவலப்பட்டுப் போகிறது.
இவர்கள் பெறும் பதவிகளுக்கு எவ்வளவுக்கெவ்வ ளவு அதிகாரம் இருக்கிறதோ அவ்வளவுக் அவ்வளவு நாட்டுக்கும் மக்களுக்கும் கேடு.
இவர்கள் நகரத் தலைவராக இருந்தால் நகரத்துக் குக் கேடு. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் தொகு திக்குக் கேடு. மத்திய அமைச்சராக இருந்தால் நாட்டுக்கே கேடு
இவர்கள் பதவி தேடுவதெல்லாம் சேவை செய்வதற் கல்ல. தானும் தன் குடும்பமும் வாழ்ந்து விட்டுப் போவதற் காக. சமுதாயத்தின் பெரிய குடும்பம் என்று முத்திரை குத்திக் கொள்வதற்காக. ஊருக்குப் பொதுவாக இருக்க வேண்டியவற்றை முடிந்த மட்டும் வளைத்து தங்கள் குடும்பச் சொத்தாக மாற்றிக்கொள்வதற்காக.
༄༽
 
 

அபின் விற்ற பணம் கூட அதிகாரம் கிடைத்தால் ༄༽
நியாயமாகி விடும் என்று நம்புபவர்கள் இவர்கள். இல்லா விட்டால் வடிசாராயம் வடித்தவன், கோழி களவெடுத்தவன், களவாக வாழைக்குலை வெட்டி வயிறு வளர்த்தவன் என்று எத் தனை அயோக்கிய சிகாமணிகள் பெரிய மனிதர்களாகப் பவனி வருகிறார்கள். கோயில் பணத்தைத் திருடி வாயில் போட்டுக் கொண்டு தர்மவான்களாகத் திரிகிறார்கள். லளரை அடித்து உலையில் போட்டவர்கள் ஊர்மக்களுக்கே வழி காட்டுகிறார்கள்!
இவர்களைப் பார்த்து ஊரே கெட்டுப் போகின்றது. நல்ல சிந்தனைகள் வீறு கொண்டெழவேண்டிய இளைஞர் நெஞ்சங்களில் விரக்தி தோன்றுகிறது. தருமம் பிழைத்துக் கொள்ளும் நீதி நியாயங்கள் எப்போதும் நிமிர்ந்து நிற்கும் என்று சொல்வதெல்லாம் ஏட்டுச்சரக்கு என்ற எண்ணமே மேலோங்கி வருகிறது.
இவர்களைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன்
அறிந்து கொள்கிறானோ அந்த அளவுக்கு அவனும் கெட்டுப்
போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். நல்ல வாழ்க்கை என்பது ஊரை ஏமாற்றுவது நியாயங்களைக் கொல்வது என்பவற்றால் மட்டுமே கிடைக்க வல்லது என்று முடிவு கட்டுகிறான்.
நேர்மையாய் வாழ்பவன் தரித்திரனாயும் அதிகாரபலம் அற்றவனாயும் இருப்பதைக் காணும் எவனுக்குத்தான் நேர்மையில் நம்பிக்கை பிறக்கும். அயோக்கியன் நாட்டுக் கொடியை ஏற்ற நேர்மையானவன் ஓரத்தில் நின்று கை தட்டுகிறான். ஊரை ஏய்த்தவன் நீதி சொல்ல உழைப்பாளி கேட்டுக் கொண்டிருக்கிறான்.
கஷ்டப்பட்டு உழைத்தால் முன்னுக்கு வரலாம் என் பது இவர்களால் பொய்த்துப் போகிறது. கஷ்டப்பட்டு ஏமாற்
றினால் மட்டுமே முன்னுக்கு வரலாம் என்று நம்ப வைக்கிறது.
ליאא א* .
va حY
D60T (REGNO SEG
لار53 \

Page 35
/-
பெயர் தெரியாத பெரியார்களால் தோற்றுவிக்கப்பட்டு இன்றும் நம் வாழ்க்கையில் ஒளி வீசும் நல்ல நடைமுறை களை கணக்கிடத்தான் முடியுமா?
இவை எதனைக் காட்டுகின்றன? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தாலும் தோற்றுவிக்கப்பட்டவர் பெயர் அறியப் படாமல் போனாலும் நல்ல எண்ணங்களும் அவற் றால் முகிழ்த்த நடைமுறைகளும் சந்ததி சந்ததியாக நல்ல பலனைத் தந்துகொண்டேயிருக்கும் என்பதையல்லவா?
யார் நெஞ்சிலோ உதித்த நல்ல எண்ணங்கள் இன்று வரை இனிமேலும் வழிகாட்டும் சக்தியைக் கொண்டிருக் கின்றது என்றால் உன் நெஞ்சில் உதிக்கும் நல்ல எண் ணங்கள் உன்னை உய்விக்காமலா போகும்?
நல்ல எண்ணங்களால் நெஞ்சை நிரப்பிக் கொள். நல்ல எண்ணங்களால் பிறர் வாழ்க்கையையும் உயர்த்த உதவு. அது உன்னை உன் சுற்றத்தை சமுதாயத்தை உய்விக்கும். இனிய அமைதியான வாழ்க்கையை இந்த உலகத்திலேயே அள்ளித் தீய எண்ணங்கள்ால் மாளப் போகிறாயா? நல்ல எண்ணங்களால் வாழப் போகிறாயா?
தீர்மானம் உன் கையில்!
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இவர்கள் ஆடம்
பரமான வாழ்க்கையும் அதிகாரத்தனமான சூழலும் நேர்வழி யில் வந்ததல்ல என்று இவர்கள் மனமே உறுத்திக்
கொண் டிருக்கும். எந்தக் கணமும் இவை பறிபோய்விடக்
கூடியவை என்று உள்மனம் எரிந்து கொண்டிருக்கும். வெற்று மனிதனாகி விட்டால் சமுதாயம் தன்னை அடித்தே கொன்று விடும் என்று உள்ளுணர்வு பயமுறுத்திக் கொண்டே المنوفية
-Ret
راة=

Z
-ܠ
தங்களைச் சமுதாயம் உள்ளுர மதிப்பதில்லை என்று இவர்களுக்கு தெரியாமல் இல்லை. தங்கள் குடும்பமும் சந்ததியும் ஊராரின் அவப் பேச்சுக்கு ஆளாகும் என்பது இவர்களுக்குப் புரியாமல் இல்லை.
ஆனால் என்ன செய்வது? சொறியச் சொறிய சுகமாக இருக்கும் சிரங்கு போன்றது தான் இவர்க்ளது செய்கை.
சொறிவதில் கிடைக்கும் சுகத்திற்காக சிரங்கையே வளர்த்துக் கொள்வதால் என்ன லாபம்? சொறியமாட்டேன் என்று சபதம் செய்தாலே பாதிச் சிரங்கு குறைந்த மாதிரித் தான்!
உணர்ந்து திருந்துபவர்கள் வெகு அரிது. திருந்தி னால் பட்டம் பதவி பறிபோய்விடக் கூடும். அதிகாரங்கள் கைநழுவி விடக் கூடும். ஆனால் நல்ல மனிதனாக வாழ் கிறோம் என்ற தார்மீக நியாயம் இழப்புக்களை எல்லாம் கடந்து இவர்கள் நெஞ்சைத் தாலாட்டும்.
அயோக்கியர்கள் சமுதாயத்தை ஆளும்வரை, துட்டர்கள் நாட்டில் கொடி கட்டிப் பறக்கும் வரை, நல்ல சிந்தனையாளர் கூட தளம்பிப் போக வேண்டித்தான் இருக்கிறது.
ஆனால் எண்ணங்களில் நிறைவானவர்கள் என்றும் தோற்றதாக வரலாறு கிடையாது. சரித்திரத்தில் பெயர் பொறிக்காமல் போகக் கூடும். மாலை மரியாதைகளுக்காக மேடைகளில் தோன்றாமல் இருக்கக் கூடும். எனினும் ஆகக் குறைந்தது தம் சுற்றமும் சூழலும் போற்றுபவனாக வாவது அவன் இருந்து விடுவான். அவன் பெயர் எவன் நெஞ்சைத் தொடுகிறதோ அங்கெல்லாம் இவன் அர்ச்சனைக் குரியவனாகி இருப்பான்.
D60s, Gas To Esso
༄༽

Page 36
r
இதுதான் நல்ல சிந்தனைகளின் சிறப்பு. நல்ல எண்ணங்களின் வனப்பு.
தீய எண்ணங்களால் நிறைந்தவர்கள் பட்டம் பதவிக ளுடன் வாழ்ந்தாலும் கூட எதிரே நிற்பவனின் உடம்பு தான் அவர்களுக்கு வளைந்து வாழ்த்துக் கூறும் நெஞ்சமல்ல! ஆனால் நல்ல எண்ணங்கள் நிறைந்தவர்கள் மறைந்த பிறகும் கூட மக்கள் மனதில் நிற்கிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.
பட்டம் பதவி மாலை மரியாதை ஆட்பலம் அதிகாரம் என்பவற்றால் சாதிக்க முடியாததை அன்புச் சிந்தனைகளால் சாதிக்க முடியும் என்று நினைத்தார் புத்தர்.
அரசனாக இருந்திருந்தால் புத்தரைப் பற்றி இங்கு யார் பேசப்போகிறார்கள்? அரசனான சித்தார்த்தனின் சிந்த னைகளை இங்கு யார் பேணப்போகிறார்கள்.
நல்ல எண்ணங்களை நெஞ்சில் வளர்த்தார். பிறருக்கு ஊட்டி தானும் உயர்ந்தார். இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகள் கழித்தும் பலகோடி மக்களை அவர்களின் நல்ல சிந்தனைகள் வாழ்விக்கின்றன.
யேசு மறைந்து இரண்டாயிரம் வருடங்களாகி விட்டன. அவரது எண்ணங்கள் மறைந்தனவா? இல்லையே! எத்த னையோ கோடி மக்களை வழி நடத்துகின்றதே!
காந்திஜியின் சிந்தனைகள் அண்ணாவின் சிந்தனை கள், பெரியாரின் சிந்தனைகள் இன்றும் பலரை நல்வழிப் படுத்திக் கொண்டிருக்கவில்லையா?
கார்ல் மார்க்ஸ், லெனின் சிந்தனைகள் உழைக்கும்
மக்களின் உள்ளுணர்வைக் கிளறி உலகை நெறிப்படுத்த 66)60)6OuJIT?
لغر؟--
༄༽
 

r
போலிகளாக வாழாத எந்த மனிதனது நல்ல எண் ணங்களும் காலம் கடந்தும் மக்களை வழி நடத்தும் தன்மை கொண்டன. வானொலி, பத்திரிகை, ஆட்பல விளம்பரங்களை நம்பிய எந்தப் போலி மனிதன் நிலைத்து நின்றான்?
தன் அதிகார பலத்தால் தனக்குச் சாதகமாகக் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டங்கள் தன் கண்முன்னா லேயே சீரழிந்து சிறுமைப்பட்டுப் போனதை - போவதைப் பார்த்து உளஞரக் கண்ணிர் வடித்தவர்களை நாம் பார்க்கா மலா இருக்கின்றோம்?
புத்தரோ நபியோ காந்தியோ தம் எண்ணங்களில் விளைந்த நல்வாழ்க்கை நெறியினை எந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்? எந்தச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கேட்டு இரந்தார்கள்?
சித்தர்களோ, யேசுவோ தாம் போதித்தவற்றை எந்த இராணுவத்தைக் கொண்டு மக்கள் மீது திணித்தார்கள்?
ஆனாலும் இவை இன்றுவரை மக்கள் மனதில்
முடிசூடி ஆட்சி நடத்துகின்றன. இனியும் ஆட்சி நடத்த உள்ளன.
என்ன காரணம்? அவை நல்ல எண்ணங்களின் அடிப்ப
டையில் உதித்த சிந்தனைகள் என்பதால் தான்! அவை சுயநலன்களை உதறித் தள்ளிவிட்டு எழுந்து வாழ்க்கை நடைமுறைகளாகி விட்டதால் தான்!
༄༽
”ノ

Page 37
Z=
9
(மனி தி உறவுகள்)
LDனித வாழ்க்கைக்கு உறவுகள் இன்றியமையாதன. உறவுகள் இல்லா வாழ்க்கை ஒருபோதும் முழு வாழ்க்கை ஆகிவிடுவதில்லை. ஆனாலும் என்ன பேதைமை? சில மனிதர்கள் உறவுகளைத் தூர விலக்கி வைத்து விட்டு வாழ்ந்து விடலாம் என்று இன்னமும் நம்புகிறார்கள்.
கோடி கொடுத்தேனும் குடிப்பிறந்தாரோடு கூடுதல் கோடி பெறும் என்று தமிழ்ப் பாடலொன்று வலியுறுத்து கின்றது. ஆபத்தில் உதவுபவர்கள் மாத்திரமல்ல வாழ்க்கை செப்பனிட உதவுபவர்களும் உறவுகள் என்பதை மறந்து விடக் கூடாது. மேலை நாட்டு வாழ்க்கை முறை இன்று தோற்றுப் போய் நிற்பதற்கான பெரிய காரணம் உறவுகள் பேணப்பட்டமைதான். புற வளங்களைப் பயன்படுத்தும் அவர்களால் அக வளங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தால் மண்ணில் சொர்க்கம் என்பார்களே அதை அங்கே கண்டி ருக்கமுடியும்.
உடலுக்குச் செளகரியங்களைச் செய்து கொண்ட அவர்களால் உள்ளத்தின் செளகரியங்களை பேண முடி
யாமற் போனது, விந்தைதான். இல்லையென்றால் பெரும்
பொருட் செலவில் உல்லாசப் பயணம் என்ற போர்வையில் நிம்மதியை விலைக்கு வாங்கி விடலாம் என்று கீழை நாடுகளைத் தேடி ஓடுவார்களா?
அதிஷ்டவசமாக இந்தியா இலங்கை போன்ற நமது
ܢܠ
 

ܝܢܠ
கீழைத்தேய முன்னோர்கள் கூடி வாழும் வாழ்க்கை முறையை அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இவ் வரப்பிரசாதத்ைைத சரியாகப் பயன் படுத்து கிறோம் என்பது கேள்விக்குரியதே.
தனி மனித சுதந்திரம் என்ற பதத்தின் அர்த்தத்தைத் திரிபுபடுத்திக் கொண்டு காட்டாற்றுச் சுதந்திர புருஷர்களாக இருக்கவே பலர் விரும்புகிறோம். இந்த விருப்ப மெல்லாம் இரத்தம் பாயும் வரை மட்டும் தான் இனிப்பானதாக இருக்கும். "எனது வாழ்க்கையை நானே தீர்மானித்துக் கொள்வேன். யாரும் தலையிடக் கூடாது" என்று உத்தரவு போடுகிறோம். எங்காவது தடக்கி விழுந்து விட்ட பிறகு தான் வருந்து கிறோம்.
புத்திசாலித்தனமாகத் தடக்கி விழாத வகையில் வாழ்க்கை முறைகளை நுட்பமாக திட்டமிட்டவர்கள் கூடக் கடைசி நாட்களில் தலையில் கை வைத்துக் கொண்டிருக் கிறார்கள்.
கானல் ஆற்றை கடந்திருக்கிறோம் என்ற சங்கதி அப்போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது. என்ன பிரயோச னம்? தலைமுடியெல்லாம் உதிர்ந்த பின்னர் சீப்பை வாங்கி வைத்துக் கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?
மேற்கு உலக நாடுகளில் பெரும்பாலானோர் தலையில் மயிர் இல்லாத போதுதான் சீப்பைக் கொள்வனவு செய்ப வர்களாக இருக்கிறார்கள். கிடைத்த சீப்பை எறிந்து விடவும் முடியாது. கவலையைத் துறந்து விடவும் முடியாது என்ற கையறு நிலையில் தற்காலிகமாகவேனும் தோல்வியை மறப்ப தற்காக உல்லாசப் பயணம் என்ற போர்வையில் பெரும் பணம் செலவு செய்கிறார்கள்.
மனதைத் திருப்திப்படுத்திக் கொள்ளாத வரைக்கும்
dogs (gaston) Esso

Page 38
r
எவருக்கும் எதிலும் திருப்தி கிடைப்பதில்லை. வானொலி வைத்திருப்பவரின் மனம் தொலைக்காட்சியை நாடும், தொலைக்காட்சி வந்து விட்டாலோ நவீன ரகமாக இல்லையே என ஏங்கும். நல்ல ரகமாகவும் அமைந்து விட்டால் கூடுதல் அலைவரிசைகளில் காட்சிகள் பிடித்தால் என்ன என்று துடிக்கும். பல அலைவரிசைகளில் தெளிவாகப் பார்த்தால் கூட அடடா இந்த அலைவரிசையில் நல்ல நிகழ்ச்சி போகும் போது அந்த அலைவரிசையிலும் நல்ல நிகழ்ச்சிப் போட்டுத் தொலைக்கிறார்களே எதைப் பார்ப்பது என்று குழம்
இறுதியில் எதையும் பார்க்காமல் தவிக்கும்.
இதுதான் மனித மனம், பலர் நினைப்பது போல் வசதிகள் வாழ்க்கையில் திருப்தியை அளிப்பதில்லை. மாறாக சுற்றிசுற்றி ஓடி தொடக்கப்புள்ளிக்கே வந்துவிடும்.மனதை பண்படுத்திக் கொண்டால் திருப்தி தானாகவே வந்து விடுகி றது. டொனிக் குடித்து உடற்பயிற்சி செய்கிற நகரத்தானை விடக் கீரை சாப்பிட்டு உழைக்கிற கிராமத் தானின் உடல் வலுவாகவும் தெளிவாகவும் இருப்பதற்கு அலைபாயாத மனம்தான் காரணம். நிம்மதியான வாழ்க்கை முறை தான் காரணம்.
குடையும் சப்பாத்துமாக பள்ளி சென்று விட்டு நோய் வாய்படுகிற நகரத்துக் குழந்தையை விட வெறுங்காலுடன் உச்சி வெய்யிலில் நடந்து திரிகிற கிராமத்துக் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைக்கும் பெரியோர்களினதும் உறவினர்களினதும் அன்பு மழைதான்
இன்னற்படுகின்ற இந்தக் காலத்திலும் இழப்புகளின் மேல் இழப்புகளைச் சுமந்து கொண்டும் கிராமங்கள தலை நிமிர்ந்து நிற்கின்றன. தன்னம்பிக்கையுடன் வாழ்கின்றன. என்றால் கோடி கொடுத்தும் குடிப்பிறந்தாரோடு கூடி வாழும் பண்பினால் தான்.
ܢܠ
༄༽
 
 

(Z=
வீதியில் வீழ்ந்து கிடபபவனை யாரென்று பார்க்கவோ ஏனென்று கேட்கவோ நகர நாகரிகம் அனுமதிக்கவில்லை. மீறிக் கேட்பவர் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்பவன். என்று கேலி பண்ணப்படுகிறான்.
இங்கே உறவுகள் கிடையாது. ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பண்பு கிடையாது. நாமெல்லாம் மனித ஜாதி என்ற விவஸ்தை கூட கிடையாது.
தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய எண்ணம், பிறர் துன்பம் கண்டு கிஞ்சித்தும் கலங்காத திட மான உள்ளம், அன்பைக் கூட காசாக்கி விடலாமா என்று துடிக்கும் அயோக்கிய மனம், எல்லாம் இங்கே தாராளம். இதற்கான ஒரே ஒரு காரணம் உறவுகளின் தேவை உணரப் படாமற் போனதுதான்.
கிராமங்களில் பண்புகள் பழக்கவழக்கங்கள் விருந் தோம்பல்கள் ஒற்றுமை என்பன உயர்ந்து நிற்பது உறவுகளின் தன்மையினால் தான்.
"உறவு பேணும் தன்மையினால்" ஒவ்வொருவருக்கும் மற்றவர் குடும்பத்தில், மற்றவர் நலனில், அக்கறை பிறக்கிறது. தறிகெட்டுப் போகத் துடிக்கும் தனது உறுப்பினன் ஒருவனைத் திருத்த வேண்டும் என்பதற்காக பழி வந்தாலும் கவலை கொள்ளாமல் முயல வைக்கிறது.
இரண்டு பேர் மோதிக்கொண்டால் அடிபட்டுச் சாகட்டும் என்று விடாது அவர்கள் எதிர்த்த போதும் உறவே திரண்டு வந்து நீதி தீர்க்கிறது.
புதிய உயிரின் வருகையில் ஊரே குளிர்ந்து போகிறது. பழகியவர்களின் பிரிவில் துடித்துப் போகிறது.
豊ノ
༄༽

Page 39
Z
பக்கத்து வீட்டுக்காரன் இறந்து கிடந்தாலும் அழுகி நாற்றம் எடுக்கிற வரையில் உணராத அடுத்த வீட்டுக்காரன் நகர நாகரீகத்தில் ஏராளம் உண்டு.
கடைக்குச் செல்கின்ற சிறுவனைக்கூட "எங்கே போகி றாய்?" என்று தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டி உறவு பேணும் கிராமத்துப் பண்பு.
சிறுவன் திரும்பி வர நேரமாகிவிட்டால் கூட பதறும் தாயிடம் "நான் இந்த இடத்தில் அவனைக் கண்டேன் கவலைப்படாதே" என்று இயல்பாகவே கூறுவதற்கு அந்தப் பண்பால் தான் முடியும். "காணாமற் போய்விட்டானா? எத்தனை நாளாகக் காண வில்லை? நீங்கள் சொல்லும்வரை எனக்குத் தெரியாதே" என்று அக்கறை போல் விசாரித்து விட்டு அடுத்த கணமே மறந்து போய்விடுவதற்கு பெயர் தான் பிறர் விடயத் தில் தலையிடாமை என்ற கொள்கை!
எது சரியென்று நீ நினைக்கிறாய்? பிறர் நலனில் நீ தலையிட்டு உனது இன்பதுன்பங்களில் அக்கறையுடைய பிறர், தலையிட அனுமதிப்பதுதான் மனித வாழ்வென்று ஒத்துக் கொள்கிறாயா? இல்லை" பிரை வேசி" என்ற பெயரில் எவர் எக்கேடுகெட்டாலும் நான் மட்டும் இன்பம் அனுபவித்தால் போதும் அதற்கு இடைஞ்சல் இல்லாமல் சுற்றம் அமைந்து விட வேண்டும் என்று சுயநலமிகளாக இருப்பது நல்ல வாழ்வென்று நினைக்கிறாயா?
நீயும் உன் மனைவியும் பிரச்சனைப் பட்டுக் கொள் கின்ற போது பெரியோர்கள் தலையிட்டு பத்திமதி கூறி பிரச்சனையைத் தீர்த்து ஒற்றுமையாக வாழ்வதற்கு உந்து சக்தி கொடுப்பது சரியானதென்று நினைக்கிறாயா? அல்லது, நினைத்தபடி நடப்பேன் என்று முடிவ பண்ணிக் கொண்டு அற்ப இன்பத்திற்காக முழு வாழ்க்கையும் அழிந்து போவது சரியானது என நினைக்கிறாயா?
 

r
உன்னைத் தட்டிக் கேட்கிற அதிகாரம் உறவுக்கு இருக்கும் வரைதான் நீ தறிகெடாமல் நேராக வாழ்ந்து கொள்ள முடியும்!
உறவுக்கும் சுற்றத்துக்கும் உன் மீது ஒரு கண் இருக்கிற வரைதான் நீ ஒழுக்கம் தவறிப் போவதற்கு அஞ்ச வேண்டி இருக்கிறது. பிறர் நிச்சயமாக அறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்றால் உலகத்தில் எந்தப் பெண்ணோ ஆணோ கெட்டுப் போகத் தயங்கமாட்டார்கள்.
ஒழுக்கம் பண்பு எல்லாம் ஒரு மனிதன் சூழலிடம் தன்னை வலிந்து கைதியாக்கிக் கொள்கிற வரைதான் நிலைக்கும். இது தான் மனிதமனம். இதைதான் எவன் மறுத்துரைத்தாலும் அவன் திரை மறைவில் அயோக்கிய னாகவே இருப்பான்.
புகை பிடிப்பதை விட்டுவிட வேண்டும். என்று தீர்மானம் எடுத்துக் கொள்கிற ஒருவன் தன்னைத் தட்டிக் கேட்கும் தகுதி பெற்ற, உரிமை பெற்ற நண்பள்களிடமோ பெரியவர்களி டமோ தன் தீர்மானத்தை பரப்பி விட வேண்டும். அப்போது தான் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய நினைக்கும் போது அச்சம் ஏற்படும். கட்டாயமாகக் கைவிட வேண்டிய நிலை உருவாகும்.
இதேபோல் தான் சகல விடயங்களும், சூழலில் சிறைபட்டுக் கொள்ளும் இயல்பு இருக்கிற வரையில் தான் ஒருவன். காதலித்தவளையே கைபிடிக்க வேண்டும் என நினைப்பான். கைபிடித்தவளை கடைசிவரை பாதுகாப்பான்.
குழந்தைகளுக்கு சீரிய வாழ்வு, அமைக்க வேண்டும்
என செயல்படுவான். தாய் தந்தை சகோதரங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடிந்த வரையில் செய்வான்.
TDGE (IGOE 26
63 של

Page 40
ܢܔ
உலுத்தல் தனமாக நடந்து ஊராரின் வெறுப்பைக் ༄༽ கட்டிக் கொள்ள அஞ்சுவான். எல்லோரையும் அரவணைத்து நடக்கவேண்டும். என்பதை உணர்வான். எல்லாவற்றிற்கும் மேலாக எந்தத் துன்பம் வந்தாலும் யோக்கியனாகவே வாழ்ந்து மடிவேன் என்று உறுதி எடுத்துக் கொள்வான். அதன்படி நடந்து குடும்பத்திற்கும் பெருமை தேடித்தருவான்.
இத்தகைய மனிதனைத்தான் சமுதாயம் வேண்டி நிற்கிறது. இத்தகைய மனிதர்களின் பெருக்கத்தால் தான் அநாதை இல்லங்களின் சுமையையும், முதியோர் இல்லங்க ளின் சுமையையும் குறைக்க முடியும். எண்ணாயிரம் குடும் பங்கள் வாழ்கின்ற நகரமொன்றில் என்பது பிள்ளைகளைக் கொண்ட அநாதைச் சிறுவர் இல்லம் இயங்குகிறது. என்றால் என்ன அர்த்தம்? நல்ல குடும்பத் தலைவர்கள் எண்பது பேர் கூட இல்லை என்பது அர்த்தமாகாதா? இருந்திருந்தல் ஆளுக்கொரு குழந்தையை எடுத்து குடும்ப உறவுகளுடன் வாழ வைத்திருக்கலாமே?
நாம் தோற்றுப் போகவில்லையா? தோற்றுத்தான் போயிருக்கிறோம். இனியாவது வென்றாக வேண்டும். அதற் குள்ள ஒரே வழி எங்களைச் சுற்றத்தின் சூழலின் கைதியாக் கிக் கொள்வது தான். அதன் அர்த்தம் மூத்தோரை மதிப்பது, இளையோரை அணைப்பது, அயலாரை நேசிப்பது, ஊராரை போஷிப்பது, என்ற பண்புகளை வளர்த்து உறவுகளை யாசிப்பது தான்.
நீ உனக்காவும் நான் உனக்காவும் வாழ்வதா நீயும் சேர்ந்த நமக்காக வாழ்வதா?
முடிவை நீயே தேர்ந்து கொள்.
64 از
 

7.
()
நாடும்அரசு ம்)
BTடு என்ற ஒன்று இருப்பின் அரசு என்ற ஒன்று இருந்துதானாக வேண்டும் என்பது மனித நாகரீகத்தின் நியதியாகிவிட்டது. அரசு இல்லாமல் நாடு இயங்க முடியுமா என்பதற்கு மாற்றுவழி எதுவும் கண்பிடிக்கப்பட்டதாகத் தெரிய வில்லை. எனினும் என்றாவது ஒருநாள் அரசுகள் அழிந்து
போய்விடும். மக்களின் வாழ்க்கை முறைமைகளும் தரமும்
இப்போது இருந்ததைவிடப் பன்மடங்கு உயர்வாக அந்த நாட்களில் அமையும் என்று ஒரு சாரார் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக்கோட்பாட்டு ரீதியான நம்பிக்கை உண்மையாகிவிடக் கூடாதா என்ற தவிப்பு பலரிடம் இல்லா மல் இல்லை.
அந்தளவுக்கு இன்றைய அரசுகள் மக்களின் வயிற் றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. அரசு என்பது
ஏழைகளை உயர்த்துகிறேன். வாழ்விக்கிறேன் என்று சொல்
லிக் கொண்டே பணபலம் உள்ளவர்களுக்காக உழைக்கும் ஸ்தாபனம் என்றாகிவிட்டது.
எந்த நாட்டு அரசை எடுத்துக்கொண்டாலும் இந்தப் போக்குத்தான் அதிகரித்துக் காணப்படுகிறது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்றவற்றின பலத்தை வைத் துக் கொண்டு ஏழைகளை உயர்விப்பவர்கள் எங்களைப்போல் யாருண்டு என்று வேறு உரத்துச் சொல்லிக் கொண்டிருக் கிறது. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள்.
D6Iä (8or6ýí5á56ľ

Page 41
ܢܠ
இன்றென்றில்லை, அரசு என்பது தோற்றம் பெற்ற நாளிலிருந்து இந்த நடவடிக்கைகள் தாம் கூடியோ, குறைந்தோ தொடர்ந்துகொண்டிருக்கின்றன. முடியாட்சியாக இருந்தா லென்ன? குடியாட்சியாக இருந்தாலென்ன? நாவில் ஒன்று மனதில் ஒன்றாகத்தான் செயற்பட்டு வருகிறது.
எப்போதாவது ஓரிருவர் சேற்றுக்குள்ளிருந்து செந்தா மரை எழுவது போல எழுந்து மலர்ந்து மக்கள் நலனுக் காக அரசு நடத்தியதையும் மறந்து விடுவதற்கில்லை. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் இந்தக் காலங்கள் மனித குல வரலாற்றில் எங்காவது ஓரிரு புள்ளிகளாகவே அமைந்துவிடுகின்றன.
பெருவாரியான அரசுகள் தில்லு முல்லு மலிந்தவை யாகத்தான் இருந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன. இன்று செய்தித்துறை ஊடகங்கள் போல் அன்று புலவர் கள் அரசுக்கு முண்டு கொடுத்திருக்கிறார்கள்.அரசின் கைப் பிடிக்குள் உள்ள செய்தித்துறை ஊடகங்களின் பணியை, முரசறையும் வள்ளுவன்மார் செய்திருக்கிறார்கள். வசதி கருதி அரசை ஆதரிக்கும் செய்தித்துறை நிறுவனங்கள் போல் அவ்வப்போது புலவர்கள் அரசையும் அவன் பரிவாரங் களையும் புகழ்ந்து பாடிக் தள்ளியிருக்கிறார்கள்.
பகட்டு, பட்டாடை, பழரசம் என்பவற்றுக்காக அரசைப் புகழ்ந்து பாடிய புலவர்களும் இருந்திருக்கிறார்கள். இவர்க ளின் வாரிசுகள் இப்போது அரசதரப்புப் பிரச்சாரங்களாகச்
செயற்படுகிறார்கள். ஆனால் பசியின் கொடுமைக்காகக்
கள்ளனைக் கனவான் என்றும், புல்லனைப் புருடோத்தமன் என்றும் சில புலவர்கள் பாடிப் பரிசு பெற்றிருக்கிறார்கள், என்பதும் வரலாறு நமக்குச் சொல்லித் தருகின்ற சங்க திகள்தாம்.
இந்த நிகழ்ச்சிகள், பஞ்சம் கொடிகட்டிப் பறந்திருக் கிறது. முகமன் முடிசூடித் தழைத்திருக்கின்றது என்பதற்
༄༽

ܢܠ
கான சான்றுகளே தவிர பாடல் வரிகளில் காணப்பட்டவாறு
பாலும் தேனும் வீதியெங்கும் ஒடியதற்கான சான்றுகளாக
(bababLDT LLIT.
பஞ்சத்தைப் போக்குவதற்காகப் படித்தவனே, பலதும் அறிந்தவனே வல்லோன் முன் பணிந்து வயிறு கழுவினான் என்பதற்கான ஆதாரங்களே தவிர பண்பு செழித்திருக்கிறது. பல கலையும் அறிந்த புலவர்களே வியக்கும் அளவுக்கு மன்னன் நெறி தவறாது இருந்தான். என்பதற்காக ஆதாரங் கள் அல்ல அவை.
அன்றைய அரசானாலும் இன்றைய அரசானாலும் இலட்சணங்கள் ஒன்றுதான். வல்லோன் வாழ்ந்து கொள்ள வாய் பேசாதவன் தாழ்ந்துபோவது எல்லா அரசுகளுக்குமுரிய ஆட்சிப்பண்புதான். இந்த நோக்கத்திற்கான செய்கைகளும் வார்த்தைப் பிரயோகங்களும் மக்களின் பலத்தையும் ஒற்று மையையும் அனுசரித்து அவ்வப்போது வித்தியாசப்படக்
கூடும்.
முடியாட்சியில் மக்கள் அயோக்கியன் ஒருவனிடம் சிக்கித் தவித்தார்கள். அவனது பரிவாரங்கள் அயோக்கியர்க ளாக இருந்தாலும் கூட அரசன் என்ற அயோக்கியனின் பிம்பங்களாகத்தான் இருக்க முடிந்தது. அரசன் யோக்கிய னாகி விட்டால் இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்,
குடியாட்சியில் எண்ணிறந்த அயோக்கியர்களிடமல் லவா மக்கள் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது? ஒரு அயோக்கியன் திருந்த நினைத்தாலும் மற்றைய அயோக் கியன் விடுகிறான் இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எவரோ கண்டுபிடித்துக் கொடுத்ததால் வந்த வினை கள் இவை.
மக்களும் பாவம். ஜனநாயகத்தில் பல திருடர்களில் எந்தத்திருடன் நல்லதிருடன் என்று தெரிவு செய்யவெண்டிய
D6. (3606
الر"-

Page 42
நிலைக்குத்தானே தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தத் திருடர்
கள் தங்கள் நலன் கருதிக் கூட்டு வைப்பார்கள். தங்கள்
நலன் பாதிக்கப்படும்போது உடைத்துக்கொள்வார்கள். எல்
லாம் மக்களுக்காகவே என்றும் கூக்குரலிடுவார்கள்.
மக்களால் எதுவுமே செய்ய முடிவதில்லை. ஐந்தாண்
டுக்கொருமுறை ஜனநாயகத்தின் பெயரால் மக்கள் ஓரிரு
வாரங்களுக்கு மன்னர்கள்போல் சித்தரிக்கப்படுகிறார்கள். போற்றப்படுகிறார்கள். குறைகளைத் தைரியமாகச் சொல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். யாரை வேண்டுமானாலும் சாடச் சுதந்திரமளிக்கப்படுகிறார்கள்.
எல்லாம் வாக்குச்சாவடிக்குள் நுழைகிற வரைக்கும் தான். நுழையும்போது மன்னனாகப் போன பொதுமகன், பாவம் வாக்களித்து விட்டு வந்த கணமே மடையன் பட்டிய லில் இணைந்து கொள்கிறான். அடுத்த தேர்தல்வரை இவ னைத் தீண்டுவார் யாருமில்லை.
ஆட்சியைப் பிடிக்கமுயன்று தோற்றுப்போனவர்கள் இவன்ை அடிக்கடி தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்வதுண்டு. இந்தப் பொது மகனின் ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் இவர்கள் குளிர் காய்ந்து கொள்வதுண்டு. எல்லாமே வெளி வேஷந்தான்.
பொதுமகன் பாடு இவ்வாறென்றால் அரசியல் தொண் டன் என்பவன்பாடு பரிதாபகரமாகிவிடுகின்றது. தைரியம் உள்ள பொது மகன் நினைத்தான் என்றால் எந்த அணி சார்ந்த சிகாமணியையும் ஏமாற்றிவிட முடிகிறது. நான் உங்களுக்குத்தான் வாக்களித்தேன். எனது உடல் பொருள் ஆவி அனைத்தம் உங்கள் அணிக்கே என்று பொய்ச்
சத்தியம் கூடிச் செய்து காரியம் சாதித்து விட முடிகிறது.
அணித் தொண்டனோ பாவம், தன் அணியின் முன்னி
-ܢܠ
*
ཛོད༽
 

ܥܠ
லையில் உறுப்பினர்களின் சிரிப்பையும் கையசைவையும் தவிர எதையும் இவனால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. அதுவும் நேர்மையான தொண்டனாக இவன் இருந்தால் கால் நூற்றாண்டு கடந்தாலும் இவனால் வாழ்க்கையில் கூட முன்னேற முடிவதில்லை. எதிரணிக்கும் போக முடியாது தன்னணியிலும் தழைக்கமுடியாது என்ற நிலை. வாயுள்ள வன் பிழைத்துக் கொள்கிறான் என்ற மொழி அரசியலுக்கு நன்றாகவே பொருந்தும்.
அரசைப் பிடிக்கத்துடிப்பவன் நாட்டுக்கும் மக்களுக்கும் எது தேவை என்பதைவிட அதிக மக்களுக்கு எதைச் சொன்னால் பிடிக்கும் என்பதைப் பார்த்து தேர்தல் வாக்குறு திகளைத் தயார் செய்கிறான்.
நியாயம் எது என்பதை விட, நிறைந்த வாக்குகளை அள்ளித் தருவது எது என்பதிலேயே குறியாக இருக்கிறான்.
மொழி வெறியை ஊட்டினால் வாக்குச் சேரும் என் றால் மொழி வெறியை ஊட்டுகிறான். இன வெறியை வளர்த்தால் வாக்குச் சேரும் என்றால் இன வெறியை வளர்க்கிறான்.
ஒரே இனம், ஒரே மொழி அமைந்த நாட்டில் சாதி வெறியை ஊட்டலாமா? மத வெறியைக் கிளறலாமா? என்று கணக்குப் பார்க்கிறான்.
ஆக மொத்தம் நாடு கெட்டாலென்ன நாளைய சமுதா யம் அழிந்தாலென்ன நானும் என் திருக்கூட்டமும் வாழ்ந்தால்
போதும் என்றல்லவா நினைக்கிறான்.
மக்கள் விழித்துவிட மாட்டார்கள் எனபதில் எவ்வளவு நம்பிக்கை இவர்களுக்கு.
does (35tonio
༄༽

Page 43
இல்லாவிட்டால் சின்னஞ்சிறு இலங்கை இந்தப்பாடு படுமா?
சாதாரணமான சிங்களவனிடமிருந்தோ தமிழனி மிருந்தோ முஸ்லிமிடமிருந்தோ இனவாதம் தோன்றவில்லை. அடுத்த வேளைச் சோற்றுக்கு சிந்தித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு இவை பற்றிச் சிந்திப்பதற்கு நேரமே கிடைப் தில்லை.
அரசியல்வாதிகள் தாம் இவற்றைத் தோற்றுவிக் கிறார்கள். உண்டு கொழுத்து உறங்குகதிரையில் அமர்ந்து கொண்டு நாட்டைக் குழப்பி நாம் நன்மையடைய என்ன வழி என்று யோசித்ததால் வந்த வினை இது. விருட்சமாகி விட்ட அதன் நிழலிலேயே இருந்து ஆறுதலடைகிறார்கள். ஆட்சி பிடிக்க ஆலோசனை நடாத்துகிறார்கள்.
தேசிய சிந்தனை என்று பெயர் வைத்தால் என்ன? இனக் காவற் சிந்தனை என்று அழைத்தாலென்ன? எல்லோர் நோக்கமும் ஒன்றுதான். கதிரைச் சுகத்துக்காக மக்களை ஏமாற்றுவதுதான்.
சுதந்திரம் கிடைத்தது என்று யாரோ சொல்ல அதைக் கேட்டுத் தலையாட்டி பொன்விழாக்கூடக் கொண்டா டியவர்களல்லவா நாம்.
இந்தச் சுதந்திரம் மக்களுக்கல்ல. ஒரு சில குடும் பங்களுக்கும் அவர்கள் வாரிசுகளுக்கும் தான் என்பதைக் கண்டும் உணர மறுப்பவர்கள் நாம்.
காலவோட்டத்தில் சிறு மாற்றங்கள் தவிர்க்க முடியா மல் நடந்த போதிலும் மிக உயர் பதவிகளை நிலப் பிரபுக்களின் குடும்பங்கள் அல்லவா அனுபவிக்கின்றன.
ܢܠ
”ノ

எங்களை ஏமாற்றுபவர்களைத் தலைவர்கள் எhnறு ༄༽ வேறு நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையான தலைவர்கள் அதிகாரங்களைப் பெற்றிருந்தால் நாட்டில் இனப்பிரச்சனை எப்படித் தோன்றி யிருக்க முடியும்? மீறித் தோன்றினாலும் எப்படி நிலைபெற
முடியும்?
சிங்களவனும், தமிழனும், சோனகனும் (மானவள் என்று கூற எந்தச் சாதாரண மகனும் த ைபோடவில் லையே.
வார்த்தை ஜாலங்களை வைத்துக்கொண்டு எந்தச் சாமான்யனும் விளையாடவில்லையே.
ஆளும் கட்சிக்காரன் கூறினால் எதிர்கட்சிக்காரன் தடை சொல்கிறான். எதிர்கட்சிக்காரன் கூறினால் ஆளும் கட்சிக்காரன் தடை சொல்கிறான்.
நாடு எக்கெடு கெட்டாலும் தனது கதிரைக் , ஆபத்து வந்துவிடக்கூடாது என்றல்லவா நினைக்கிறான்.
இனவாதம் மதவாதம் பேசுவது பாரிய குற்றம் என்று அறிவிக்க ஏன் இவர்கள் முன் வருகிறார்களில்லை?
இனவாதிகள் போடும் ஊர்வலங்களை ஏன் இவர்க ளால் கலைக்கமுடிவதில்லை?
அரச கட்டிலில் உள்ளவர்கள் இன்று இந்த நாட் டைப் பற்றிச் சிந்தித்து நல்லதைச் செய்யட்டும். நாளையே வன்முறைகள் மாய்ந்து விடாதா? வன்முறைகள் பேசுப
t வர்களை மக்கள் உதறியெறிய மாட்டார்களா?
அரச கட்டிலில் உள்ளவர்கள் இதை விரும்பப் போவதில்லை. புண்ணை வைத்துக் கொண்டால்தான்
DGS (ETG)

Page 44
/ー
பிச்சைக்காரனுக்குப் பிழைப்பு இனப்பிரச்சினை தொடர்ந் தால் தான் இவர்களுக்குப் பிழைப்பு.
ஏழை வீட்டுச் சிங்களவனும், தமிழனும், சோன கனும் மோதிச் சாவதில் சுகபோகம் அனுபவித்துக் கொண் டிருக்கிறார்கள்.
சர்வ வல்லமை பொருந்திய பதவிகளில் அமர்ந்து கொண்டு தமக்குச் சாதகமான வல்லமைகளை மட்டும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்குப் பெயர் தலைவர்கள். இவர்களது பதவிகளின் தொகுப்புக்குப் பெயர் அரசு இவர்கள் பிழைக்க வாய்த்த நிலப்பரப்புக்கு பெயர் நாடு.
இது எங்களுக்கு வெகுவாகப் பொருந்தினாலும் எல்லா மக்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் சாதாரணமாக வாவது பொருந்தக்கூடியவைதான்.
தேசம் என்றால் ஒளி மயமானது என்பது பொருள். ஆனால் இருள் மயமாக்கியல்லவா வைத்திருக்கிறார்கள்.
இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. இளைஞர் கையில்தான்.
இந்து, பெளத்தன், இஸ்லாமியன், கிறிஸ்தவன் . தமிழன், சிங்களவன், முஸ்லிம், பறங்கியன் இந்த விலங்கு களை உடைத்தெறிந்துவிட்டு மனிதனாக முன்னே வா! காரியம் கை கூடும்.
இ. கோணேஸ்வரன்)
リノ
ཡོད
 


Page 45


Page 46
、)
cm。
जेम" + ।
T
L
புள்ாத்
இன்னும்
|ցիներ ·
இனி
ՄԻԱԼԻ Կլ
-Hம் பு
 
 

வித் தேடி
Int | * 壹) I LEE 1.
■ )
பாபோ பு
±s (
リI cm | լքվել է II Ուր BLEMI minu II
து விடு 孪、 )
LIET
st