கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூல் தேட்டம் 1

Page 1


Page 2

நூல் தேட்டம்
தொகுதி 1)
தாயகத்திலும் புகலிடத்திலும்
வெளியிடப்பெற்ற
ஈழத்துத் தமிழ் நூல்கள்
குறிப்புரையுடனான நூல்விபரப்பட்டியல்
என்.செல்வராஜா
அயோத்தி நூலக சேவைகள் (ஐக்கிய இராச்சியம்) ஜன், 2002

Page 3
நூல் தேட்டம்
தொகுதி 1)
ஆசிரியர் - என்.செல்வராஜா பதிப்பு - முதற்பதிப்பு, 01 ஜூன் 2002 வெளியீடு - அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம் அச்சுப்பதிப்பு - வாசன் அச்சகம், இலண்டன் அட்டை வடிவமைப்பு - மூன்றாவது கண், இலண்டன் சர்வதேச தராதர பருவவெளியீட்டுப் பதிவெண் . 1477-4690 பக்கங்கள் - XXiv, 332
பதிப்புரிமை டு என்.செல்வராஜா
Nootettam
(Volume 1) An annotated bibliography of 1000 published writings in Tamil language, by Sri Lankan Tamils, home and abroad.
Compiler - N.Selvarajah Edition - First Edition, 01 June 2002 Publishers - Ayothy Library Services, United Kingdom Printers - The Print, London Cover Design - The Third Eye, London international Standard Serial Number - 1477-4690 Pages - xii, 332
© CopyRight 2002 by N.Selvarajah
All Rights Reserved. No part of this publication may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the publishers.

நன்றி
இத்தொகுப்பினை உங்கள் கரங்களில் இன்று கையளிப் பதற்குத் தோன்றாத்துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி öng6g 66ö 560)6buJuu 3560LDuJTõb. w
நூல்தேட்டம் அன்று என் மனதில் கருக்கொண்ட வேளை, தன் பல்கலைக்கழக வாழ்வின் நெருக்கடிகளுக்குள்ளும் ஒடித் திரிந்து நூல்களைத்தேடித்தந்து என்னை ஆர்வமுடன் செயற் படவைத்து மகிழ்ந்துவிட்டு இன்று எம்மிடையே இல்லாது இளமை யிலேயே காலன்வசப்பட்டு, என்றும் இளமையாக மனதில் நிலை கொண்டு விட்ட எம் இனிய மருமகள் சுகந்தியை இன்று நினை யாதிருக்க முடியவில்லை.
தாயகத்தில் தங்கள் அரிய நூற்சேர்க்கைகளை நான் பயன் படுத்த அனுமதியளித்ததுடன் மேலும் பலரின் தொடர்புகளையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தவர்கள் பலர். கலாநிதி இ.பாலசுந்தரம், திருமதி விமலா பாலசுந்தரம், கலாநிதி எம்.ஏ.நு.மான், கலாநிதி சி.மெளனகுரு, திருமதி சித்திரலேகா மெளனகுரு, திருமதி.சர்வ மங்களம் கைலாசபதி, திரு மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகி யோர் அவர்களுட் சிலர். இந்தப்பட்டியல் எல்லையில்லாது நீழும். என்பணியில் இணைந்துதவிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. புகலிடத்தில் தமது சேர்க்கைகளைப் பார்வையிடப் பெரு விருப்புடன் எனக்கு அனுமதியளித்து ஊக்கமுமளித்த திரு.கி.பி. அரவிந்தன், திரு. இ.பத்மநாப ஐயர், திரு. ஐ.தி.சம்பந்தன், திரு. பூபாலசிங்கம் கார்ள் மார்க்ஸ், தேசம் த.ஜெயபாலன் ஆகியோருக் கும் என் நன்றிகள்.
தாயகத்திலும், புகலிடத்திலுமிருந்து தங்கள் வெளியீடு களின் பிரதிகளை தபால் செலவையும் பொருட்படுத்தாது எனக்கு அனுப்பிவருகின்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் நன்றிகள். நூல்களை அனுப்பி வைப்பதுடன் நில்லாது நான் அறியாத பல வெளியீட்டாளர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி நூல்தேட்டத் தின் பரப்பை விரியச்செய்தவர்கள் இவர்கள்.
தொகுப்புக்கடமைகளின்போது குடும்பச்சுமைகளை முழுமை யாகத் தாங்கி என்னைச் சுதந்திரமாக இயங்கவிட்டதுடன் எனக் குத் துணையாகவிருந்து நூலாக்கக் கடமைகளிலும் உதவிய என் அன்புத் துணைவியாருக்கும், இந்நூலைக் கணணியில் பொறிக்கும் வேளை என் அறியாமையினால் நான் விடும் இமாலயத் தவறுகள் அனைத்தையும் பாடசாலை, வீட்டு வேலைக்கடமைக்கிடையேயும் முகம்கோணாது அவற்றைச் சீர்செய்து விட்டு, எனக்குக் கணணி யறிவைச் சிறிது புகட்ட எத்தனித்துத் தோற்றுப்போகும் என் மகன் கெளதமனுக்கும் எனது நன்றிகள்.
இந்நூலைத் தெளிவாகவும் உரியகாலத்திலும் அச்சிட்டுத் தந்த தம்பி வாசனுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துதவிய மூன்றாவது கண் பரதனுக்கும் எனது உளம் நிறைந்த நன்றிகள்.
-என்செல்வராஜா
iii

Page 4
பொருளடக்கம்
நன்றியுரை i
முன்னுரை V
நூல்தேட்டம் - அறிமுகம் x
தமிழ்நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான
சர்வதேச தராதர நூல் எண் வழங்கலும் xiv
நூல்தேட்டத்தில் பயன்படுத்தப்படும் வகுப்புப்பிரிவு xix
பதிவுகள் 1
தலைப்பு வழிகாட்டி 304
ஆசிரியர் வழிகாட்டி 319
நூல்தேட்டம்- நூல்விபரப் பதிவுப்படிவம் 328
iv

முன்னுரை
நூல்கள் எமது இனத்தின் பண்பாட்டை, கலாச்சார விழுமி யங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்க ளாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தை, அறிவின் தேட்டத்தை எமது தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றுப்பதிவை, ஈழத்தமிழ்த் தேசியத்தின் அறிவுத்தேட்டத்தின் கனதியை, பதிவாக்கமுனையும் முடிவில்லாத வொரு நீண்ட பயணத்திற்கான முதற் காலடித்தடம் இங்கே பதியப்பெறுகின்றது.
இது ஈழத்தமிழருக்கான ஒரு தேசிய நூல்விபரப்பட்டியல் அல்ல. அத்தகைய ஒரு தேவைக்கான, சிந்தனைப்போக்கின் ஒரு வெளிப்பாடு என்று கொள்ளலாம். ஈழத்துத் தமிழ்த் தேசியத்துக் கான தனித்துவமானதொரு ஆவணக்காப்பகம், ஈழத்தமிழருக்கான ஒரு தேசிய நூலகம் போன்ற நிறுவனமயப்படுத்தப்பட்ட சிந்தனை கள் வலுப்பெற நூல்தேட்டம் ஒரு வித்தாக அமையுமெனில் அதுவே எம் முயற்சிக்குக் கிட்டிய வெற்றியாகக் கருதுவோம்.
தேசிய நூல்விபரப்பட்டியல் முயற்சியென்பது எமக்குப் புதியதொன்றல்ல. இலங்கையில் இதற்காக, 19ம் நூற்றாண்டி லேயே வழிகோலப்பட்டு விட்டது. 1885இல் உருவாக்கம் பெற்ற அச்சக வெளியீட்டகச் சட்டமூலத்தின் (அத்தியாயம் 179) வாயிலாக இலங்கையில் அச்சிடப்படும் ஒவ்வொரு நூலினதும் விபரம் இலங்கையில் அச்சிட்ட நூல்களின் பட்டியலாகப் பதிவு செய்யப்பட்டு காலாண்டுக்கொருமுறை அரசாங்க வர்த்தமானியின் (Government Gazette) ஐந்தாவது பிரிவாக வெளியிடப்பட வேண்டு மென நிர்ணயிக்கப்பட்டது. செப்டெம்பர் 1949இல் இலங்கை, UNESCO அமைப்பின் அங்கத்துவ நாடாகிய பின்னர், நவீனமயப் படுத்தப்பட்ட தேசிய நூற்பட்டியலின் தேவை வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட கல்விச்சீர்திருத்தம் மற் றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக நூலியல் தேவைகளும், வழங்கல்களும் துரிதமாக அதிகரித்தன.
இதன் விளைவாக, 1952இல் இலங்கைத் தேசியநூல்விபரப் பட்டியலுக்கான உப ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் பேரில் இலங்கை வெளியீடுகளுக்கும் இலங் கை தொடர்பான பன்னாட்டு வெளியீடுகளுக்குமான ஒரு தேசிய நூல் விபரப்பட்டியல், சர்வதேசத் தராதரத்துடன் ஒத்தியையக் கூடியதாக உருவாக்கவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் இலங்கையின் சுவடிகள் காப்பகத்தி னால் அரசாங்க வர்த்தமானியின் ஐந்தாவது பிரிவாக வெளியிடப்
V

Page 5
பட்டுவந்த இலங்கையில் அச்சிட்ட நூல்களின் பட்டியலும், இலங்கைப் பல்கலைக்கழக நூலகத்தினால் மாதாந்தம் தொகுக்கப்பெற்றுப் பிரபல்யமடைந்திருந்த பல்கலைக்கழக நூலகத்தின் புதிய நூற்சேர்க் கைக்கான பட்டியலும் ஒருங்கிணைந்ததாக தேசிய நூற்பட்டியலைத் தயாரிப்பதென முடிவாயிற்று. பதிப்பகச் சட்டத்தின் மூலம் பெறப் படும் அனைத்து நூற்பிரதிகளிலும் ஒவ்வொன்று இலங்கைப் பல் கலைக்கழகத்திற்கும் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டு வந்தமை யால் தேசிய நூற்பட்டியலுக்கான நூல்களின் விபரங்களைத் தொகுப்பது அங்கு எளிதாயிற்று. நீண்டகாலப் பாரம்பரியமுள்ள பிரித்தானிய தேசிய நூற்பட்டியலின் பிரதம ஆசிரியராகவிருந்த A J.வெல்ஸ் அவர்களின் சேவையும் ஆரம்பகட்டத்தில் இதற்காகப் பெறப்பட்டது. இலங்கைத்தேசிய நூற்பட்டியல் தொகுப்பிற்குப் பொருத்தமான அலுவலகம் போராதனையில், பல்கலைக்கழகத்தி லேயே அமைக்கப்பட்டது. முதலாவது இதழ் நவம்பர் 1962இல் வெளிவந்தது.
இன்றுவரை இலங்கைத் தேசிய நூல்விபரப்பட்டியல் பல்வேறு நிர்வாக அரசியல் மாற்றங்களுக்குள் சிக்குண்டு ஒழுங்கற்ற கால இடைவெளியில் வெளிவந்துகொண்டிருக்கின்றது. தற் போது, இலங்கைத் தேசியநூலகத்தின் பொறுப்பில் இது வெளியிடப்படுகின்றது. இடைக்கிடையே அது அத்தி பூத்தது போல் வெளிவந்து தனது இருப்பைப் பிரகடனப்படுத்தி வருகின் றது. உரிய காலத்தில் பிரசுரமாகாமலும், பரவலாக விநியோகிக் கப்படாமலும், இழுத்தடிப்புச் செய்யப்படுவதாலும் முழுமையான நூல்களின் பட்டியலை என்றுமே வெளியிடமுடியாமல் போனதா லும் இலங்கைத்தேசிய நூற்பட்டியல் இலங்கையில் பிரபல்யமாக வில்லை. மாறாக, பேராதனை பல்கலைக்கழக நூலகராகவிருந்த 618.6.g. g600556)556)6. A Bibliography of Ceylon: a systematic guide to the literature on the land, people, history and culture published in the Western languages from the sixteenth century to the present day என்ற ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியல் 1970-1983 காலப் பகுதியில் 5 தொகுதிகள் வெளிவந்து சர்வதேச ரீதியில் அங்கீக ரிக்கப்பட்ட உசாத்துணை நூலாக இன்றும் திகழ்கின்றது.
இலங்கைத் தேசிய நூற்பட்டியலில் மொழிவேறுபாடின்றி, மும்மொழி நூல்களுக்கும் கொள்கையளவில் இடம் ஒதுக்கப்பட்டி ருப்பினும், தமிழ்நூற்பிரிவில் அரசாங்கப் பிரசுரங்களும் ஒரு சில தமிழ் நூல்களுமே இடம்பெற்று வந்துள்ளன. அச்சக, வெளியீட் டாளர் சட்டமூலத்தை மதித்து சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங் காக நூல்களை அனுப்பிவைக்கத் தமிழப்பிரதேச அச்சகங்களோ, வெளியீட்டாளர்களோ எழுத்தாளர்களோ முன்வராமையால் அங்கு தமிழ் நூல்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்பது ஒருசாரார் வாதம். அனுப்பி வைக்கப்படும் தமிழ் நூல்களைப் பட்டியலிடக் கூடிய ஆட்பலம் இல்லாததால் தமிழ்நூல்கள் கேட்பாரற்று முடக் கப்படுகின்றன என்பது மறுசாரார் வாதம்.
vi

இன்றைய யதார்த்தநிலை என்னவெனில் ஈழத்துத் தமிழ் நூல்களில் பெரும்பான்மையானவை இலங்கைக்கு வெளியே தமிழகத்திலும் புகலிடத்திலும் அச்சிடப்படுவதாகும். வெளியீட் டாளர்கள் பெரும்பாலும் நூலாசிரியராகவே இருப்பதால், வெளியீட் டுச் செலவைக் குறைக்கவும், தமிழகச்சந்தைவாய்ப்பைப் பெறவும் தமது நூலைத் தமிழகத்தில் அச்சிடுகின்றார்கள். தாயகத்தில் உருவான அச்சகங்கள் பல இன்றைய நிலையில் தமிழகத்திலும் வேரூன்றியுள்ளதால் ஈழத்து வெளியிட்டாளர்கள் தமிழகத்தில் தம் நூலைப் பதிப்பிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதில்லை. ஈழத் தமிழர்களின் தமிழக வெளியீடுகள் இலங்கை அச்சகச் சட்டத் தின் புவியியல்ரீதியான வரையரைக்குள் அகப்படுவதில்லை. தமிழகத்தின் தேசிய நூற்பட்டியலிலும் இவை அனைத்தும் சேர்த் துக்கொள்ளப்படுவதுமில்லை. தமது நூலை வரலாற்றுப்பதிவாக்கு வதில் எமது எழுத்தாளர்கள் சிலரின் அக்கறையின்மையும் இங்கு சுட்டிக் காட்டப்படல் வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பிரித்தானிய பதிப்பகச் சட்டம் மொழிகளின் எல்லை கடந் து நூல்களைத் தேசியநூலக வைப்பகத்திற்கு ஏற்றுக்கொள்கின் றன. மொழிவழியிலல்லாது, பிரித்தானியாவில் அச்சிடப்பட்ட எம் மொழிநூல்களையும், பிரித்தானியாவில் விநியோகிக்கப்படும் எம் மொழிநூல்களையும் தேசியநூலகம் ஏற்றுக்கொள்கின்றது. இன்று வரை இலண்டனில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்களில் எத்தனை நூல்கள் பிரித்தானிய பதிப்பகச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய தேசிய நூலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன? இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், இன்று தாயகத் திலும் புகலிடத்திலும் வெளியிடப்படும் எந்தவொரு நூலும் தனது வெளியீடு பற்றிய பதிவை உலகில் எங்குமே மேற்கொள்ளவாய்ப் பில்லாது காணப்படுகின்றது என்பதாகும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் வெளியிடப்படும் ஈழத்துத் தமிழ் நூலொன்றை இன்னொரு நாட்டில் வாழும் ஒருவர் பெற்றுக்கொள் ளும் வாய்ப்பு இன்று அரிதாகவேயுள்ளது. நூல் மட்டுமல்ல, நூல் பற்றிய செய்திகளே உரியகாலத்தில் வந்து சேர்வதென்பது அரிதாகவுள்ளது. தாயகத்திலும், புகலிடத்திலும் வெளிவரும் சஞ் சிகைகள் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை அவதானிக்க முடிந்தாலும், அவைகூட விநியோகச் சிக்கலுக்குள் அல்லலுற்றுக் குறுகிய வாசகர் வட்டத் துக்குள் தம்மை அடக்கிக்கொள்கின்றனர். அவற்றால் வாசகருக் குத் தாம் அறிமுகம் செய்யும் நூலைப் பெற்றுக் கொடுக்கவும் முடிவதில்லை.
உலகெங்கும் சிதறுண்டு கிடக்கும் எமது அறிவுத்தேட்டங் களைத் தேடித்தொகுத்து வகைதொகையாகப் பிரித்து வரலாற்று
ஆவண மூலமாக மாற்றும் ஆரோக்கியமான முயற்சி எதுவும் தாயக மண்ணில் பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்படவில்லை.
vii

Page 6
ஆயினும், சிறுசிறு முயற்சிகளாக காலத்துக்குக்காலம் இலக் கியகர்த்தாக்கள் சில வரையறைகளுக்குள் இயங்கி, நூல்களைத் தேர்ந்து அவற்றைப் பதிவு செய்து வந்துள்ளமை அறிய முடிகின் றது. இவ்வகையில் தனிநபர் நூல்விபரப்பட்டியல்கள், கண்காட்சி மலர்கள், தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுமலர்கள், பிரதேசவாரி யான நூல்விபரப்பட்டியல்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. இதை விட, இலங்கை நூலகச்சங்கத்தின் இடைநிலைப்பரீட்சையின் ஒரு அங்கமாகப் பரீட்சார்த்திகள் சமர்ப்பித்து வரும் நூல்விபரப்பட் டியல்களில் பல தமிழ்ப்பிரதேசங்களுக்குரிய நூற்பட்டியல்களும் அடங்குகின்றன. இவை கையெழுத்துப்பிரதிகளாக இலங்கை நூல கச்சங்கத்தின் கோவைகளில் இன்றும் தூங்கிக்கொண்டிருக்கின் றன. மேற்கண்ட முயற்சிகள் எதுவும் ஈழத்துத் தமிழ்நூல்கள் பற் றிய ஒரு முழுமையான வரலாற்றுப் பார்வையைப்பெற உதவும் என்று கூறமுடியாதுள்ளது.
எமது பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து வைத்தலும் அவை பற்றிய வரலாற்றுக்குறிப்புகளைப் பேணு வதும் எமது தார்மீகக்கடமையாகும். எமக்காக அதை வேறொரு வர் செய்வார் என்று எண்ணிக் காத்திருப்பது மிகத்தவறான தாகும். இந்நிலை தொடரின் அது எதிர்காலத்தில் எமது பண்பாட் டுத் தற்கொலைக்கு வழி கோலியதாகவே முடியும். 1981 ஜன் முதலாம் நாளில் தாயக மண்ணில் ரீலங்கா அரசபடைகளால் நிகழ்த்தப்பட்ட யாழ். நூலக எரிப்பைப் பண்பாட்டுப் படுகொலை என்று இன்றும் நினைவு கூருகின்றோம். அன்று நடந்த பண்பாட்டுப் படுகொலையாயினும் சரி, இன்று நாம் பாராமுகமாக இருப்பதன் மூலம் மேற்கொள்ளவிழையும் பண்பாட்டுத் தற்கொலையாயினும் சரி, பாதிக்கப்படப்போவது ஈழத்துத் தமிழ்த் தேசியஇனமே.
இந்நிலையில் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான ஒரு சர்வ தேசரீதியிலமைந்த தொகுப்பு முயற்சியின் தேவையை இங்கே வலியுறுத்துவது அவசியமாகின்றது. தாயகத்திலும், தமிழகத்திலும் மற்றும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தும் புகலிட நாடொன்றில் ஆவணக்காப்பகமொன்றில் சேகரிக்கஒழுங்கு செய்யப்படல் வேண்டும். இந்நிறுவனத்தின் சேகரிப்புக்கள் அனைத் தும் ஈழத்துத் தமிழ்த்தேசிய நூற்பட்டியலாக பதியப்பட்டுக் காலத் துக்குக்காலம் வெளியிடப்பட வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நம்பகத்துக்குரிய ஆவணக்காப்பகமாக அது எழும்வேளை அதுவே ஈழத்தமிழரின் தேசிய நூலகத்தின் அத்திவாரமாக மலரும். இந்தக்கனவு நன வாகும் வரை நூல்தேட்டம் தன் பணியைத்தொடர விழைகின்றது. அதற்கான ஆக்கபூர்வமான உதவியையும் காத்திரமான ஆதரவை யும் பெற உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச்சமூகத்தின் கரங் களையே நூல்தேட்டம் நம்பியிருக்கின்றது.
viii

நூல்தேட்டம் (ஒர் அறிமுகம்)
ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான நூல் விபரப்பட்டியலான நூல்தேட்டத்தின் முதலாவது தொகுதி இதுவாகும். இதில் ஈழத் துத் தமிழ் எழுத்தாளர்களினதும், வெளியீட்டாளர்களினதும் நூல் கள் பற்றிய நூலியல் குறிப்புகளும் அதனையடுத்து நூல் பற்றிய சிறு அறிமுகக்குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
தொகுப்பும் தவிர்ப்பும்
இது ஒரு தேர்ந்த நூற்பட்டியலன்று. இங்கு பட்டியலாக்கப் பட்டுள்ள தனி நூல்கள் (Monographs) எவையும் எவ்வித தரக்கட் டுப்பாட்டுக்கும் உட்படவில்லை. இன்று பெற்றுக்கொள்ளக்கூடிய ஈழத்துத் தமிழ்நுல்கள் அனைத்தையும், ஒரு தொகுதிக்கு 1000 நூல்கள் என்ற எண்ணிக்கையில் பட்டியலிடுவதே நூல்தேட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். வெளியீட்டின் பெளதிகத்தன்மை கருதி சில பிரசுரங்கள் நூல்தேட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. துண்டுப்பிரசுரங்கள், வரைபடங்கள், அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதிகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், தட்டுகள் என்பன இத் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.
பெரும்பான்மையான கல்வெட்டுகள், ஞாபகார்த்தமலர்கள், சஞ்சிகைகள், என்பனவும் இத்தொகுதியில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆயினும், தனி ஆவணமாகக் கருதும்வகையில் வெளியிடப்பட் டிருக்கும் சஞ்சிகைகளின் சிறப்புமலர்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மேலும், சில கல்வெட்டுக்களும், ஞாபகார்த்த மலர் களும் தனிநூலின் வகைக்குள் அடங்கக்கூடியதான கனதியான அம்சங்களுடன் வெளிவந்திருப்பதால் அவற்றையும் இத்தொகுதி யில் சேர்த்துக்கொண்டுள்ளோம்.
இத்தொகுதியில் இடம்பெறும் 1000 நூல்களில், பெரும்பான் மையானவை 1980க்குப் பிற்பட்டனவாக இருப்பினும் எண்பது களுக்குப் பின்னரான மறுபதிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இனி வரும் தொகுதிகளில் 1980க்கு முற்பட்ட நூல்களும் சேர்த்துக் கொள்ளப்படும்.
ஒரு நூலின் பின்னைய பதிப்புகள் வெளிவரும்போது அவை புதுக்கியோ, சுருக்கியோ, வெளிவரும் வாய்ப்பிருப்பதாலும், முற் றிலும் வேறான நூலியல் தகவல்களை அவை கொண்டிருப் பதாலும் குறித்தவொரு நூலின் பல்வேறு பதிப்புகளும் இங்கு ஒரே பதிவிலக்கத்தின் கீழ் இடம்பெறுகின்றன.
பதிவுகளின் ஒழுங்கமைப்பு
நூல்தேட்டம் ஒரு உசாத்துணை நூலாகும். ஒரு நூலைப் பற்றிய நூலியல் தகவல்களைக் குறுகிய காலத்தில் வாசகர்

Page 7
கண்டறிய வகைசெய்யும் வண்ணம் இத்தொகுதி மூன்று பிரிவாகத் தொகுக்கப்பெற்றுள்ளது.
முதற்பிரிவில், நூல் பற்றிய பிரதான பதிவுகள் பாடஒழுங் கில் வகைப்படுத்தப்பட்டு தொடர்எண் மூலம் அடையாளமிடப்பட் டுள்ளன. பாடவாரியாக ஒரு நூலைத்தேடும் வாசகர் இப்பிரிவின் ep6)lb LJuJ60T60L6).
இரண்டாவது பிரிவு, தலைப்பு வழிகாட்டியாகும். முதற் பகுதியில் நூல்கள் பாடவாரியாக முதலில் ஒழுங்குபடுத்தப்பட்டு, பின்னர் அகரவரிசையில் காணப்படுவதால் ஒரு நூலின் தலைப் பைக் கொண்டு நூலைத் தேடவிழையும் வாசகர் இரண்டாவது பிரிவில் அகரவரிசையில் காணப்படும் தலைப்பு வழிகாட்டியின் வாயிலாக நூலின் தொடர் இலக்கத்தைக் கண்டறிந்து முதற் பகுதியில் உள்ள பிரதான பதிவைப் பார்வையிட முடியும். இங்கு தலைப்புக்கள், அகரவரிசை எழுத்தொழுங்கில் அல்லாது சொல் லொழுங்கில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கத் தககது.
ஆசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், மூல ஆசிரியர் ஆகியோரின் விபரங்களைக் கொண்டு ஒரு நூலைத்தேடும் வாசகர் மூன்றாவது பிரிவின் மூலம் பயனடைவர். இங்கு ஆசிரியர் அகர வரிசையில் நூல்களின் தொடர்எண்களைக் கண்டறிந்து அதன் மூலம் தான் தேடும் நூலைச்சென்றடைய முடியும். ஆசிரியர் அகரவரிசையில் புனைபெயர்களும் இடம்பெறுகின்றன. ஒரு நூலா சிரியர் இயற்பெயரிலும் புனைபெயரிலும் நூல்களை எழுதுவதால் புனைபெயரின் கீழ் நூலைத்தேடும் வாசகர் ஆசிரியரின் இயற் பெயரிலும் அவற்றைத் தேட உதவும் வகையில், பார்க்க, மேலும் பார்க்க போன்ற வழிகாட்டி அம்சங்கள் தேவை கருதிச் சேர்க்கப்பட் டுள்ளன. இரு ஆசிரியர்கள் ஒரே புனைபெயரில் வலம் வருவதை யும் இங்கு காணமுடிவதால் புனைபெயரில் நூலைத்தேடும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். வாசகரின் தேடுகை நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில் புனை பெய ரிலும் இயற்பெயரிலும் எழுதும் ஆசிரியரின் ஒரு பெயரின்கீழ் மட் டும் அவரது நூல்களின் தொடர்எண்களைக் குறித்துள்ளோம்.
நூலியல் பதிவுகள்
பிரதான பகுதியில் நூல் பற்றிய தகவல் மூன்று பகுதிகளா கத் தரப்பட்டுள்ளன. முதற்பகுதியில் நூலின் தலைப்பு, உப தலைப்பு, அந்நூலின் ஆக்கத்துக்கு அதிகாரபூர்வ உரித்துடைய ஆசிரியர், தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் விபரங்கள், வெளியீட்டு விபரம், பதிப்பு விபரம், ஆகியனவும் அடைப்புக்குறிக்குள் குறிப் பிட்ட நூலின் குறித்த பதிப்பிற்கான அச்சகத்தின் விபரமும் தரப் பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றிய தகவலில் ஆசிரியரின் இயற்பெயர், புனை பெயர் பற்றிய குறிப்புகளும் அறியமுடிந்தால் குறிப்பிடப்பட்டுள் ளது. பதிவுக்குள்ளாகும் நூலின் உரித்தாளர் மூலநூலாசிரி
X

யராக இல்லாதவிடத்து, அவரின் பங்களிப்புப் பற்றிய தகவல் அவரது பெயரையடுத்து அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள் 615.
நூலின் வெளியீட்டாளர் பற்றிய தகவல் குறிப்பில் வெளி யீட்டாளரின் இயங்குதளம், வெளியீட்டகத்தின் பெயர், முகவரி என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு வெளியிட்டகம் ஒன்றுக்கு மேற் பட்ட நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியிருக்கும் வேளை, பதிவுக்குள்ளாகும் நூலில், குறிப்பாக ஒரு இயங்குதளத்தை மட் டும் வெளிப்படுத்தியிருந்தாலன்றி, பதிவுத்தேவை கருதி, நூல் அச் சிடப்பட்ட நாட்டில் உள்ள வெளியீட்டகத்தின் கிளை அமைந்த ஊரே அதன் இயங்குதளமாகப் பதியப்பட்டுள்ளது. ஆசிரியரே வெளியீட்டாளராகவும் இருக்கும் போது, நூலில் காணும் ஆசிரி யரின் முகவரி வெளியீட்டக முகவரியாகக் கருதப்பட்டுள்ளது.
நூலின் பதிப்பு விபரத்தில், பதிவுக்குப் பெறப்பட்ட நூலின் பதிப்பு விபரமும், அப்பதிப்பு வெளியிடப்பட்ட திகதியும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நூல் முதற்பதிப்பு அல்லாத விடத்து முன்னைய பதிப்புகள் பற்றிய திகதி விபரங்களும் நூ லில் தரப்பட்டவாறாகப் பதியப்பட்டுள்ளன. சில வெளியீட்டாளர் கள், மறுபதிப்பு நூல்களையும் முதற்பதிப்பாகக் குறிப்பிட்டுள் ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வெளியீட்டாளரின் முதற்பதிப்பாகவே அது கொள்ளப்பட வேண்டியுள்ளது. இவ்விபரங் கள் நூலியல்நேர்மை கருதி, பதிப்பு நூலில் குறிப்பிடப்படவேண் டியது அவர்களது கடமையாகும் என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும்.
நூலின் அச்சக விபரம் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள் ளது. இந்த விபரம் பதிவுக்குரிய நூலின் குறித்த பதிப்புக்கு மட் டும் உரியதாகும் என்பதும் கவனத்துக்குரியது.
நூலியல்பதிவின் இரண்டாவது பகுதியாக அமைவது நூ லின் பெளதீகத் தகவல்களாகும். இதில் நூலின் பக்கங்கள், சிறப் பம்சங்கள், விலை, அளவு, தராதர எண் ஆகியன உள்ளடக்கப் பட்டுள்ளன.
நூலின் பக்கங்கள் மூன்று வகையில் குறிப்பிடப்படுகின்றன. அவை ரோமன் இலக்கமிடப்பட்ட பக்கங்கள், இலக்கமிடப்படாத பக்கங்கள், அரேபிய இலக்கமிடப்பட்ட பக்கங்கள் என்பனவாகும். ரோமன் இலக்கமும், அரேபிய இலக்கமும் இடப்பட்ட பக்கங்க ளின் எண்ணிக்கை அவ்வவ்விலக்கங்களாலேயே சுட்டப்பட்டுள் ளன. இலக்கமிடப்படாத பக்கங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட் டுள்ளன. (உதாரணம்: VI, (12), 243 பக்கம்). பெரும்பான்மையான - தமிழ் நூல்களில் முகவுரைப்பக்கங்கள் இலக்கமிடப்படாவிடினும் அவை பின்னர் அரேபிய இலக்கங்களாகத் தொடர்கின்றன. அத்தருணங்களில் அவை அரேபிய இலக்கமிடப்பட்ட பக்கங் களாகவே கருதப்பட்டுள்ளன.
பக்கங்கள் பற்றிய குறிப்பை அடுத்த அமைவது சிறப்பம் சங்களாகும். இங்கு வரைபடங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங் கள், தகடுகள் பற்றிய குறிப்புகள் காணப்படும்.
xi

Page 8
விலை விபரம் காலவரையறைக்குட்பட்டதாக அமைவ தாயினும் வரலாற்றுத்தேவை கருதி மட்டுமே நூல்தேட்டத்தில் அவை சேர்க்கப்பட்டுள்ளது. நூலில் குறிப்பிடப்படும் விலை அந் நாட்டு நாணய அலகின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவுக்கு மாத்திரம் நாடு குறிப்பிடப்படவில்லை. இது ஒரு வர்த் தக நூற்பட்டியல் இல்லையென்பதால் தேவைப்படுமிடத்து நூலின் தற்போதைய விலை பற்றிய தகவலை அதன் விற்பனை யாளர் களிடமே வாசகர் உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.
நூலின் பெதிக விபரங்களில் அடுத்ததாக வருவது, நூ லின் அளவாகும். இது சதம மீற்றரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரிவில் இறுதியாக அமைவது நூலுக்கான சர்வதேச 5yrig5J JT6) 6T60i (International Standard Book Number)sygib. ஈழத்துத் தமிழ் நூல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய நூல் களே இவ்விலக்கத்தைத் தாங்கி வெளிவந்திருப்பினும் அதிகரித்து வரும் அதன் முக்கியத்துவம் கருதி இவ்விலக்கம் இப்பிரி வில் இடம்பெறுகின்றது. எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களின் பயன்பாடு கருதி ISBN பற்றிய விரிவான கட்டுரையொன்று இத் தொகுதியில் xiv-xvi பக்கங்களில் பிரசுரிக்கப்படுகின்றது.
நூலியல் தகவலின் மூன்றாவது, இறுதிப்பிரிவு நூல்பற்றிய சுருக்கக் குறிப்பாகும். இது ஒரு திறனாய்வுக்குறிப்பாகவோ, விளம் பரமாகவோ அல்லாது சிறு அறிமுகமாக மாத்திரம் அமைவது குறிப்பிடத்தக்கது.
வகுப்பாக்கம்
இந்நூலின் பிரதான பகுதியில் நூல்கள் பாட ஒழுங்கில் தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ள பாட ஒழுங்கு வரிசை, தூவியின் தசாம்சப்பகுப்பு முறையாகும். (Dewey Decimal Classification Scheme) 0566OTITéfurtsightb gy (TJLJT6igib நூலகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இப்பகுப்பு முறை தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமானதொன்றென்ற வகையில் இப் பகுப்பாக்கத்தைப் பின்பற்றத் தீர்மானித்தோம். இப்பகுப்பாக்கத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று பிராந்தியத் தேவைகருதி இப்பகுப்பு முறையில் தேவைப்படும் மாற்றத்தைப்புகுத்தமுடியும் என்பதாகும். ஈழத்துத்தமிழ்நூல்களின் பகுப்புத்தேவை கருதி இப்பகுப்பு முறை சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாம் புகுத்திய மாற்றங்கள் அடைப்புக்குறிக்குள் உரிய இடங் களில் தரப்பட்டுள்ளன. இப்பகுப்பாக்கம் அறிவுத்தேட்டத்தை முதலில் பத்துப் பெரும்பிரிவுக்குள் அடக்குகின்றது. பின்னர் ஒவ் வொரு பெரும்பிரிவும் பத்து உபபிரிவுகளாகின்றன. அந்த உப பிரிவுகள் மேலும் பத்து உபபிரிவுகளாகின்றன. இத்தகைய ஒரு தசாம்சப்பகுப்பு முறை பற்றிய விரிவான விளக்கத்தை இங்கே தரமுடியாவிடினும் வாசகரின் தேவை கருதி இந்நூலில் பயன்படுத் தும் பகுப்புத் திட்டம் சுருக்கமாக இந்த அறிமுகப்பகுதியையடுத் துத் தரப்பட்டுள்ளது.
xii

வாழ்க்கை வரலாறு
பகுப்பாக்க ஒழுங்கில் இறுதிப்பிரிவாக அமைவது வரலா றாகும். இதில் வாழ்க்கை வரலாற்று நூல்களும் ஞாபகார்த்த மலர்களும் இடம்பெறுகின்றன. பகுப்பாக்கத்தின் போது பன்முகத் தோற்றம் பெற்ற பெரியார்களின் வரலாற்று நூல்களைத் தரம்பிரிக் கும்போது பிரதான பதிவை ஏதாவது ஒரு பிரிவக்குள் பதிய வேண்டிய கட்டாயத்தேவை எற்பட்டது. ஒருவரது ஆழுமை எத் துறையில் பிரகாசித்தது என்பதை விட குறிப்பிட்ட நூலில் அவரது பன்முகப்பட்ட ஆழுமையின் எப்பகுதி ஆய்வுக்கெடுக்கப் பட்டது என்ற அடிப்படையிலேயே அவரது நூலுக்கான பகுப்புப் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனால் இப்பிரிவைப் பார்வையிடும் வாசகர்கள் தயவு செய்து பல்வேறு வாழ்க்கை வரலாற்றுப் பிரிவுகளிலும் கண்ணோட்டம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின் றோம்.
நிறைவுக்குறிப்பு
நூல்தேட்டத்தின் முதலாவது தொகுதியை எமது சக்திக் கெட்டியவரை சர்வதேச தராதர நூற்பட்டியல்களின் சிறப்பம்சங் களைக் கூர்ந்து கவனத்துக்கெடுத்துத் தொகுத்துள்ளோம். இத் தொகுதியில் காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, சாத்தியப் படக்கூடிய ஆலோசனைகளைத் தெரிவிப்பதன் மூலம் இரண்டா வது தொகுதியை மேலும் சிறந்ததாக அமைக்க உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கின்றோம். இந்நூலின் இறுதியில் காணப்படும் நூல் விபரப்பட்டியல் பதிவுப்படிவத்தை பிரதியெடுத்து உங்களிடம் உள்ள பிரசுரங்கள் பற்றிய தகவலை அதில் எழுதி யனுப்பி, இவ்விதழில் சேர்த்துக்கொள்ளப்படாத நூல் விபரங்களை அடுத்த தொகுதியில் சேர்த்துக் கொள்ள உதவவும்.
இத்தொகுதி வர்த்தகநோக்கமற்றதொரு தனிமனித முயற்சி யாகும். நிறுவனரீதியில் மேற்கொள்ளப்படவேண்டிய இத்தகைய உசாத்துணை வெளியீட்டு நடவடிக்கைகள் தனிமனித முயற்சி யாக மலரும்போது நிதி, காலம், நிபணத்துவ உதவி என்பன எப் பொழுதும் வரையறைக்குட்பட்டதாகவே அமைகின்றது. இதை மனதில் கொண்டு. இத்தொகுதியின் பரந்துபட்ட அறிமுகத்துக்கும் விநியோகத்துக்கும், விற்பனைக்கும் உங்களாலான பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நம்பகின்றோம். இதன் விற்பனை மூலம் பெறப்படும் நிதி எமது அடுத்த தொகுதியின் துரித உருவாக்கத் துக்கு உறுதுணையாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.
OOO
xiii

Page 9
தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச தராதர நூல் எண் (ISBN) வழங்கலும்
இன்று நாம் வாழும் ஐரோப்பியச் சூழலில் வெளியிடப்படும் பல நூல்களின் பின்னட்டையிலும் உட்புறமும் காணப்படும் பத்து இலக்கத்தொடரையே சர்வதேசத் தராதர நூல்எண் அல்லது international Standard Book Number (ISBN) 616örgi (g56ülî666ör றோம். எழுபதுகளுக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி, உலகெங்கும் அந்தந்த நாட்டுத் தேசிய நூலகங்களாலும் வெளியீட்டு முகவர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந் தத் திட்டத்தின் மூலம் மொழிவழியாகவன்றி, இலக்கங்களால் ஒரு நூலின் குறிப்பிட்ட சில வர்த்தகத் தகவல்களைப் பதிவு செய்து வைப்பதன் மூலம் அனைத்துலகரீதியாக மொழித்தடையைத் தாண்டி ஒரு நூலியல் தகவலைப் பரிமாறிக்கொள்ள முடிகின்றது.
சர்வதேச தராதர நூல் எண் பற்றிய விபரங்களையும் பயன் பாட்டையும் தெளிவுபடுத்துவதும் அதன் மூலம் புலம்பெயர் நாடு களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் வெளியீடுகளுக்கு இந்த ISBN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி என்பது பற்றிய தகவல்களை வழங்கி எழுத்தாளர்களையும் வெளியீட்டாளர் களையும் ஊக்குவிப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சர்வதேச தராதர நூல் எண் வழங்கும் முறையானது ஜெனிவாவிலுள்ள சர்வதேச தராதர நிறுவனத்தினால் international Standard Organisation (ISO) 1972 sab sy6ig6b ed(pastu6j55ti ul-L-35.
நூல் வெளியீட்டகங்கள், தமது வெளியீடுகளை இலகு வில் இனம் கண்டுகொள்ள அவற்றுக்கு ஒரு ஒழுங்கில் இலக்கங் களை வழங்கி வந்துள்ளன. நிறுவனங்களுக்கிடையே இவ்வகை யான இலக்கம் வழங்கும் முறையில் இருந்த வேறுபாடுகள், நூ லீட்டல் கடமைகளில் ஈடுபடும் நூலகர்களுக்கும், புத்தகவிற்பனை யாளர்களுக்கும் பல நடைமுறைச்சிக்கல்களையும் குழப்பங்களை யும் ஏற்படுத்தி வந்துள்ளன.
1960களின் பிற்பகுதியில் கணனியின் பாவனை நூல் வர்த் தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து நூல்வெளியிட்டு நிறுவனங்கள் தமது நூலியல் தரவுகளைக் கணனி மயப்படுத்து வதில் ஈடுபட்டனர். அவ்வேளையில் குறியீட்டு எண் வழங்கலில் பொதுவானதொரு முறை பின்பற்றப்படவேண்டும் என்றும் கருதினர்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்தாபனமே இத்தகைய குறியீட்டு இலக்கங்களை வழங்க அதிகாரமளிக்கப்பட வேண் டியதன் அவசியம் உணரப்பட்டதன் பயனாக ஜெனிவாவில்
xiv

1972ஆம் ஆண்டு சர்வதேச தராதர ஸ்தாபனம் இப்பொறுப் பை ஏற்றுக் கொண்டது. ஐக்கிய இராச்சியத்தில் 1967 ஆம் ஆண்டுகளில் விட்டேக்கர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுவந்த நூல்களுக்குக் குறியீட்டுஎண் வழங்கும் முறையினை சில மாற்றங் களுடன் சர்வதேசதராதர நூல் எண் வழங்குவதற்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச தராதர நூல் எண் நான்கு பகுதிகளைக் கொண் டது. முதலாவது பகுதி நூல் வெளியிடப்பட்ட நாட்டைக் குறிக் கும். மற்றது அந்த நூலின் வெளியீட்டாளரைக் குறிக்கும். மூன்றா வது பகுதி நூலின் தலைப்பைக் குறிக்கும். இறுதிப்பகுதி பரி சோதனை இலக்கம் எனப்படும். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு தொகுதிகளையும் உள்ளடக்கிய சர்வதேச தராதர நூல் எண் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சர்வதேச தராதர நிறுவனத்தின் பிரதிநிதியாக விளங்கும் தேசிய நூலகத்தினால் மட்டுமே வழங் கப்படும்.
ஜெனிவாவில் இயங்கும் தலைமை நிலையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இலக்கம் வழங்கப் படுகின்றது. அதுவே அந்த நாட்டுக்குரிய தனித்துவ எண்ணாகக் கருதப்பட்டு சர்வதேச தராதர நூல் எண்ணின் முதலாவது பகுதியில் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை 1986ம் ஆண்டு நடுப் பகுதியில் சர்வதேச தராதர நிறுவனத்தில் அங்கத்துவம் பெற் றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது. இலங்கைக்கு வழங் கப்பட்டுள்ள தனித்துவ எண் 955 என்பதாகும். இலங்கையில் வெளியாகும் நூல்கள் அனைத்தினதும் தராதர எண் 955 இல் ஆரம்பமாவதை அவதானிக்கலாம்.
இரண்டாவது பிரிவு இலக்கமான வெளியீட்டாளர் குறியீடு ஒரு குறித்த நாட்டில் பதிவு பெற்ற வெளியீட்டாளருக்கு வழங்கப் படும் தொடர் இலக்கமாகும். தமது வெளியீட்டு நிறுவனத்தை அல்லது தம்மை ஒரு வெளியீட்டாளராகப் பதிவு செய்து கொள் வது சிரமமானதொரு காரியமில்லை. முதலில் ISBN நிறுவனத் தினால் தயாரிக்கப்பட்ட ஒரு விண்ணப்பப்படிவத்தைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. அவ்விண்ணப்பப் படிவத்தில் வெளியீட்டாளரின் பெயர், முகவரி, கடந்த காலங்களில் வெளியிட்ட நூல்கள், திட்ட மிடப்பட்டுள்ள நூல்கள் போன்றவை தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.
வெளியீட்டாளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு நிரந்தர தொடர் இலக்கம் வழங்குவதற்கு 50 பவுண்கள் (விற்பனை வரி நீங்கலாக) பிரிட்டனில் அறவிடப்படுகின்றது. மற்றைய நாடுகளில் அமைந்துள்ள தேசிய நூலகங்களில் அந் தந்த நாட்டுச் செலவினங்களைக் கேட்டறிந்து கொள்ளமுடியும். வெளியிட்டாளர்
XV

Page 10
பட்டியலில் ஒரு தடவை பதிவுசெய்யப்பட்டதும் எத்தனை நூல் களுக்கும் அவர் இலக்கத்தைக் கோரலாம்.
ஒரு வெளியீட்டாளர் தனது தலைமை அலுவலகம் இயங் கும் நாட்டிலேயே தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். நூல் எங்கு அச்சிடப்படுகின்றது அல்லது எங்கு சந்தைப்படுத்தப்படுகின் றது என்பது இங்கு முக்கியமல்ல. சர்வதேச தராதர எண் வெளி யீட்டாளரை முதன்மைப்படுத்தியே வெளியிடப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களைப்பொறுத்தவரை, ஒரு எழுத்தாளர் தானே நூலை எழுதி வெளியிடுவதாலும், முதலீட்டைத் தானே மேற் கொள்வதாலும் தன்மை வெளியீட்டாளராகப் பதிந்து கொள்ள உரித்துடையவராவார். ஜேர்மனியில் இருக்கும் ஒரு எழுத்தாளர் தனது சொந்தப்பணச்செலவில் ஒரு நூலை பிரித்தானியாவில் அச் சிட்டு வெளியிடுவாராயினும் அவர் ஜேர்மன் வெளியீட்டாளராகவே கருதப்படுவார். அவரது நூலுக்கான தராதரனண் ஜேர்மனியிலுள்ள தராதரளண் வழங்கும் நிறுவனத்திடமிருந்தே பெற்றுக்கொள்ளப் படல் வேண்டும்.
இதுவரை தமிழகத்தில் வெளிவந்த ஈழத்துத்தமிழ் எழுத் தாளர்களின் நூல்களில் ISBN எண் குறிப்பிடப்படாதமை சுட்டிக் காட்டப்பட வேண்டும். இந்தியாவுக்குரிய எண் 81. இவ்வெண் பெறப்படாதவிடத்து எதிர்காலத்தில் தமது நூலை இந்தியாவிலோ, புலம்பெயர் நாடுகளிலோ எளிதாகச் சந்தைப்படுத்துவதில் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம். இந் திய நூல்களில் தராதரனண் பரவலாகப் புழக்கத்தில் உள்ள தால் நூலிட்டலில் தராதரனண் வழங்கப்படாத நூல்கள் ஓரங்கட் டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கையில் வெளியாகும் பல தமிழ்நூல்கள் இவ் விலக்கத்தைத் தாங்கி வருவதும் கவனிக்கப்படல் வேண்டும்.
வெளியீட்டாளர்களுக்குப் பதிவிலக்கம் வழங்கப்பட்டதும் அப்பதிவுகள் யாவும் காலத்துக்குக் காலம் வெளியீட்டாளர் வழி காட்டி (ஆண்டு நூல்) நூலில் பிரசுரிக்கப்படும். அதே வேளையில் அந்த ஆண்டு நூலின் பிரதிகள் அங்கத்துவ நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஜெனிவாவில் வெளியிடப்படும் சர்வதேச வெளியீட்டாளர் வழிகாட்டியில் காலத்துக்குக் காலம் இவை சேர்த்துக்கொள்ளப்படும். குறிப்பிட்டதொரு வெளியீட்டாளருக்கு வழங்கப்பட்ட இலக்கம் எக்காரணம் கொண்டும் அந்நாட்டில் மற் றொரு வெளியீட்டாளருக்கு வழங்கப்படமாட்டாது. வெளியீட்டாளர் தான் ஒரு நூலை வெளியிடத் தீர்மானித்ததும் அச்சகத்துக்குக் கையெழுத்துப் பிரதியை அனுப்பும் முன்னர் நூலின் விபரத்தை அதற்கென இருக்கும் ஒரு படிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.
சில நூல்கள் நூலகப்பதிப்பு, சாதாரண பதிப்பு என்று இரு வகை யில் வெளியிடப்படுவதுண்டு. ஒரே நூலின் சாதாரண பதிப்
xvi

புக்கும் நூலகப் பதிப்புக்கும் வெவ்வேறு சர்வதேச தராதர நூல் எண்கள் வழங்கப்படும்.
ஒரு நூல் வெளியிடப்பட்டு சிலகாலங்களின் பின் அதன் இரண்டாவது பதிப்பு மாற்றமெதுவுமின்றி மறுபிரசுரமாக வெளியிடப்பட்டால் (Reprint) முதலாம் பதிப்புக்கு வழங்கப்பட்ட நூல் இலக்கத்தையே மறுபதிப்பு நூலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் மாற்றங்களுடன் திருத்திய பதிப்பாக (Revised Edition) வெளியிடப்படுமேயானால் அது இரண்டாவது பதிப்பு என்று கணக் கிடப்பட்டுப் புதிய தராதர நூல் எண் வழங்கப்படும்.
ஒரு வெளியீட்டாளர் பதிவுசெய்யும் நூல்கள் தொடர்இலக்க ஒழுங்கில் பதியப்படும் அந்தத் தொடரிலக்கம் சர்வதேச தராதர நூல் எண்ணின் மூன்றாவது பிரிவில் தரப்படுகின்றது.
சர்வதேச தராதர நூல் எண் பின்வரும் உருவஅமைப்புள்ள வெளியீடுகளுக்கு வழங்கப்பட மாட்டாது. நாட்குறிப்புகள்(Diaries), கலண்டர்கள், விளம்பரப் பிரசுரங்கள், நாடக கலை நிகழ்ச்சி நிரல்கள், நிறுவன வழிகாட்டிகள் (Prospectus), தலைப்புப்பக்கம், விளக்கம் போன்றவற்றைக் கொண்டிராத படங்கள், ஒலி, ஒளிப் பதிவுகள் மற்றும் ஆண்டு மலர்கள் ஓரினப்பொருள் பற்றிய நூல் வரிசை ஆகியன தவிர்ந்த சஞ்சிகை பருவவெளியீடுகள் ஆகியன வும் சர்வதேச தராதர நூல் எண் பெறத் தகுதியற்றவையாகும். சஞ்சிகைகளைப் பொறுத்த மட்டில் சர்வதேச பருவ வெளியீட்டுத் தராதர எண் (ISSN) வழங்கும் திட்டம் அமுலிலுள்ளது.
ஒரு வெளியீட்டாளர் தனது வெளியிடொன்று ச.த.நூ.எண் வழங்கப்படுவதற்குத் தகுதியானதாவென்பதை முன்கூட்டியே தராதர எண் வழங்கும் நிறுவனத்திடமிருந்து தெரிந்து கொள்ள லாம். ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்ட நூலொன்றுக்கு ச.த.நூ. எண் கோரி விண்ணப்பிக்கக் கூடாது. குறிப்பிட்ட நூலை மறு பிரசுரம் செய்ய முற்படும்வேளையில் மாத்திரம் விண்ணப்பிக்க 6Os TD.
தராதர இலக்கத் தொகுதியின் இறுதிப்பிரிவு (நான்காவது பிரிவு) பரிசோதனை இலக்கமாகும்.முன்னைய மூன்று பிரிவு இலக் கங்களும் சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை ஒரு கட்டளை விதி (Formula) மூலம் அறிந்து கொள்வதற் காக இப்பிரிவு இலக்கம் பயன்படுத்தப்படும். இவ்விலக்கம் எப் போதும் ஒரு தான இலக்கமாகவே காணப்படும்.
சர்வதேச தராதர நூல் எண் வழங்குவதால் ஒரு ஈழத்து ஆசிரிய, வெளியீட்டாளருக்கு என்ன நன்மை கிட்டப்போகின்றது என்று சிந்திக்கக்கூடும். சர்வதேச தராதர நூல் எண்ணைப் பெறு வதால் நவீனமயப்படுத்தப் பட்டு வரும் தேசிய நூல்வெளியீட்
xvii

Page 11
டாளர் வரிசையில் எம்மவரும் இடம்பெற்று விடுகின்றனர். காலத் துக்குக் காலம் வெளியிடப்படும் சர்வதேச வெளியீட்டாளர் வழிகாட்டியில் எம்மவரின் பெயரும் இடம்பெறுமாகையால் காலக் கிரமத்தில் சர்வ தேச மட்டத்தில் அனைவரும் அறிமுகமாவது சாத்தியமாகிறது. நூலகங்களில் நூற் தேர்வு நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் இவ்வேளையில் இத்தகைய வழிகாட்டி நூல் களில் இடம்பெறுவதால் எமது வெளியீட்டாளர்கள் தமது வெளியீடுகளை சந்தைப்படுத்த மிகநல்ல வாய்ப்பும் கிட்டுகின்றது.
சர்வதேச தராதர நூல் எண் பெற்றதும் அவ்விலக்கத்தை நூலின் பின்புற அட்டையில் தெளிவாக அச்சிடல் வேண்டும். இ தை நூலின் அடிப்பகுதியில் (10 பொயின்ட் எழுத்தில்) அச்சிட வேண்டும் என்பது விதியாகும். மேற்குறிப்பிட்ட இடத்தில் அச்சிட முடியாமல் போகுமிடத்து தெளிவாகத் தெரியக் கூடியவாறு மட் டையின் வேறொரு பகுதியிலும் அச்சிடலாம். மேலும் இவ்விலக் கம் நூலின் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்திலும் (Verso) அச்சி டப்படல் வேண்டும். ISBN என்ற நான்கு ஆங்கில எழுத்துக்க ளுடன் நூலுக்கான எண்ணை அதன் நான்கு பிரிவுகளையும் வேறுபடுத்தத் தக்கவாறு குறுக்குக்கோடிட்டு அச்சிட வேண்டும்.
நூலுக்கு மேலுறை(Jacket) இடப்பட்டு விற்பனை செய்யப்படு மிடத்து அந்த மேலுறையிலும் இவ்விலக்கம் பொறிக்கப்படல் வேண்டும்.
ஐக்கிய இராச்சியத்தில் சர்வதேச தராதர நூல் எண் வழங் கல் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ISBN Agency, Woolmead House West, Bear Lane, Farnham, Surrey, GU97LG.
Telephone: 01252742590, Fax 01252 742526 E-mail: ISBNQwhitaker.co.uk.
DDDDDDD
xviii

நூல்தேட்டத்தில் பயன்படுத்தப்படும்
வகுப்புப் பிரிவு (தூவி தசாம்சப் பகுப்பை அடிப்படையாகக் கொண்டது)
பிரதான பிரிவுகள்
000-099 பொதுப்பிரிவு 100-199 மெய்யியல்துறை
200-299 FIDuss6 300-399 சமூக விஞ்ஞானங்கள் 400-499 மொழியியல் 500-599 தூய விஞ்ஞானங்கள் 600-899 பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பம் 700-799 கலைகள், நுண்கலைகள் 800-899 இலக்கியம் 900-999 புவியியல், வரலாறுகள்
(அடைப்புக்குறிக்குள் பதிவுகளின் தொடர்எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன)
உப பிரிவுகள்
000 பொதுப்பிரிவு
000 பொது அறிவு (01-02) 010 நூலியல், நூல்விபரப்பட்டியல் (03) 020 நூலவியல், தகவல் விஞ்ஞானம் (04-12)
030 கலைக்களஞ்சியங்கள் 050 பொதுப் பருவஇதழ்கள், வழிகாட்டிகள் (13-16) 060 பொது நிறுவனங்கள் (17) 070 ஊடகவியல், வெளியீட்டுத் துறை (18-23)
100 மெய்யியல்துறை
100 தத்துவவியல் (24-27) 150 உளவியல் (28-33) 170 ஒழுக்கவியல் (34-44) 180 இந்து தத்துவம் (45-65) 190 சோதிடம், வானசாஸ்திரம் (66-67)
200 FIDuribor
220 கிறிஸ்தவம் (68-75)
294.3 பெளத்தம்
xix

Page 12
294.5 இந்து சமயம் 297 இஸ்லாம்
300 சமூக விஞ்ஞானங்கள் 301 சமூகவியல்
301.1 பண்பாடு
302 பெண்ணியம்
320 அரசறிவியல்
330 பொருளியல்
334 கூட்டுறவு 336 நிதியியல், வங்கியியல் 340 சட்டவியல் 342 அரசியலமைப்புச் சட்டம் 350 பொது நிர்வாகம் 360 சமூக சேவை நிறுவனங்கள் 370 கல்வியியல் 370.1 கல்வி நிறுவனங்கள் 380 வர்த்தகம், தொடர்புகள், போக்குவரத்து 381 வர்த்தகம் 388 தரைப்போக்குவரத்து 390 நாட்டாரியலும் பழக்க வழக்கங்களும் 390.1 இடப்பெயர் ஆய்வு 394 பொது வழமைகள் 395 நாட்டார் கலைகள் 398 கிராமிய இலக்கியங்கள் 398.1 பழமொழிகளும் விடுகதைகளும்
400 மொழியியல் 491.2 சமஸ்கிருத மொழி 49148 சிங்கள மொழி 4948 தமிழ் மொழி 4948(1) தமிழ் இலக்கணம் 494.8(2) தமிழ்ப் பாடநூல்கள்
500 துய விஞ்ஞானங்கள் 500 தூய விஞ்ஞானம் 510 கணிதம் 520 வானியல் விஞ்ஞானம் 527 விண்வெளிப்பயணம்
XX
(76-129) (130-133)
(134-137) (138-152) (153-159) (160-175) (176-179) (180)
(181)
(182-183)
(184) (185-201) (202-204)
(205) (206) (207) (208-210)
(211-215) (216-230) (231-233)
(234)
(235-240)
(241-247) (248-255)
(256) (257-260)
(261)

600 பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பம்
610 மருத்துவம் 612 உடற்கூற்றுத் தொழிலியல் (262) 613 பொது உடல்நலவியல் (263) 614 பொதுச் சுகாதாரம் (264-267) 616 நோய்கள் (268)
618 பெண்நோயியல், மகப்பேற்று மருத்துவம் (269) 619 கீழைத்தேய மருத்துவம்
619.1 சித்த மருத்துவம் (270) 640 இல்லப்பொருளியல், குடும்பக்கலை (271) 642 உணவும் பரிமாறலும் (272-274) 649 குழந்தைப் பராமரிப்பு (275)
650 முகாமைத்துவம் 657 கணக்கியல் (276-278) 658 விளம்பரத்துறை
700 கலைகள், நுண்கலைகள் 730 சிற்பக்கலை
750 ஓவியக்கலை (279-281) 750.(1) ஒப்பனைக்கலை (282) 780 இசைக்கலை (283-287) 790 நிகழ்கலைகளும், பொழுதுபோக்குக்கலைகளும் 791 நாட்டியக் கலை (288) 792 அரங்கியல், நாடகக்கலை (289-300) 793 திரைப்படக்கலை (301)
800 இலக்கியம்
800.(1)இலக்கிய அமைப்புகள் (302-303) 801 சிறுவர் இலக்கியங்கள் 801.(1) சிறுவர் பாடல்கள், கவிதைகள் (304-325) 801.(2) சிறுவர் நாடகங்கள் (326) 801.(3) சிறுவர் கவிதா நாடகங்கள், காவியங்கள் 801.(4) சிறுவர் சிறுகதைகள் (327-331) 801.(5) சிறுவர் நாவல்கள், குறுநாவல்கள் (332-336) 801.(6) சிறுவர்க்கான கட்டுரைகள் (337) 801.(7) சிறுவர்க்கான பலவின நூல்கள் (338) 8912 சமஸ்கிருத இலக்கியம் (339-340) 89148 சிங்கள இலக்கியம்
8948 தமிழ் இலக்கியம் (341)
8948(1) தமிழ் கவிதைகள் (342-482)
xxi

Page 13
894.8(2) தமிழ் நாடகங்கள் (483-498) 894.8(3) தமிழ்க்கவிதை நாடகங்கள்-காவியங்கள் (499-510) 894.8(4) தமிழ்ச் சிறுகதைகள் (511-61.5) 8948(5) தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (616-733) 894.8(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (734-810) 894.8(7) பலவினத் தொகுப்பு (811-824)
899 பிறமொழி இலக்கியங்கள் 899.(1) பிறமொழிக் கவிதைகள் (825-828) 899.(2) பிறமொழி நாடகங்கள்
899.(3) பிறமொழிக்கவிதைநாடகங்கள், காவியங்கள் (829-831)
899.(4) பிறமொழிச் சிறுகதைகள் 899.(5) பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (832-834) 899.(6) மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்
900 புவியியல், வரலாறுகள்
910 பொதுப் புவியியல் (835) 911 பிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (836-846) 915 பிரதேசப் புவியியல் (847-848)
920 வாழ்க்கை வரலாறு, ஞாபகார்த்த மலர்கள் (849-852) 920.1 ஊடகவியலாளர்,தகவல் ஒலிபரப்புத்துறையினர்(853) 921 மெய்யியலாளர்
922 சமயத் தலைவர், சிந்தனையாளர் (854-860) 923 சமூகவியல்துறை சார்ந்தோர் (861-867) 923.1 பெண்ணியவாதிகள்
923.2 அரசியல் துறையினர் (868-873)
923.3 பொருளியலாளர்கள் 9234 சட்ட அறிஞர்கள் 923.5 பொது நிர்வாகத்துறையினர்
923.6 சமூக சேவகர்கள் (874-875) 923.61 விடுதலைப் போராளிகள் (876-879) 923.7 கல்வியியலாளர்கள் (880-881) 923.8 வர்த்தகர்கள்
923.9 நாட்டாரியல் அறிஞர்கள் (882-883) 924 மொழியியலாளர்கள் (884-889)
925 விஞ்ஞானிகள் 926 பிரயோக விஞ்ஞானிகள், மருத்துவர்கள் (890)
927 கலைஞர்கள் (891) 927.3 சிற்பக்கலைஞர் 927.5 ஓவியக்கலைஞர்கள் (892)
927.8 இசைக்கலைஞர்கள்
xxii

927.91 நாட்டியக் கலைஞர்கள்
927.92 நாடகக் கலைஞர்கள் (893-896) 928 இலக்கிய அறிஞர்கள் (897-931) 929 வம்சாவளி ஆய்வுகள் (932)
950 ஆசிய வரலாறு
954.93 இலங்கை வரலாறு
954.93(1) இலங்கையின் பொது வரலாறு (933-936) 954.93(2) இலங்கை இனப்பிரச்சினை வரலாறு (937-969)
954.93(3) இனங்கள் இன உறவுகள் (970-983) 954.93(4) பிரதேச வரலாறு (984–998) 954.93(5) தொல்லியலாய்வு (999-1000)
OOOOOO
xxiii

Page 14
ΧΧΙV

000 பொது அறிவு, 010 நூலியல், நூல்விபரப்பட்டியல்
000 பொது அறிவு
OO பொது அறிவு: பகுதி 1. க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82,பிரவுண் வீதி, 3வது பதிப்பு, ஜனவரி 1991, 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (யாழ்ப்பாணம்; அபிராமி அச்சகம், செம்பியன் ஒழுங்கை) (4),92 பக்கம். வரைபடம். விலை: ரூபா 30. அளவு: 21X14 சமீ.
பொது அறிவுக் கேள்வி பதில்கள். அரசாங்க உத்தியோகங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான தகுதிகாண் பொதுப்பரீட்சைகளுக்குத் தோற்று பவர்களுக்கும், தமது திறனையும் அறிவையும் விருத்தி செய்து கொள்ள விரும்பும் பிறருக்கும் ஏற்றது.
OO2 பொது உளச்சார்பு. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 2வது பதிப்பு, ஜூன் 1990. 1வது பதிப்பு, 1989. (யாழ்ப் பாணம்: சுவர்ணா அச்சகம்) (8),120 பக்கம். விளக்கப்படம். விலை: ரூபா 50. அளவு: 18x13.5 फ्रLf5.
Intelligence Quotients (IQ) 6T60T 6p135tyUGib GuTg5 p 6T&SFTTL வினாக்களும் விடைகளும். வாசகர் தமக்குரிய பொது உளச்சார்பு நிலையை மதிப்பிடும் அளவுகோலாகவும் இந்நூல் அமைகின்றது.
010 நூலியல், நூல்விபரப்பட்டியல்
OO3 இலக்கிய விருந்து. புன்னியாமீன். கண்டி: தமிழ் மன்றம், கல் ஹின்ன, 1வது பதிப்பு, 1987. (சென்னை: பசுங்கதிர் பதிப்பகம், 43, முத்துமாரி வீதி) 96 பக்கம். விலை: இந்திய ரூபா 6. அளவு: 18X12 சமீ
கண்டி தமிழ் மன்றம் வெளியிட்ட 30 நூல்கள் பற்றிய இவ் விபரப் பட்டியலில், நூலின் பெளதிக விபரங்களும் நூலின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கக் குறிப்பும் தரப்பட்டுள்ளன. வெளிவரவுள்ள ஆறு நூ ல்கள் பற்றிய குறிப்பும் உள்ளது.
மேலும் பார்க்க: 022, 798
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 1

Page 15
020 நூலகவியல், தகவல் விஞ்ஞானம்
020 நூலகவியல், தகவல் விஞ்ஞானம்
OO4 ஆரம்ப நூலகர் கைநூல். என்.செல்வராஜா. யாழ்ப்பாணம்: அயோத்தி நூலக சேவைகள், ஆனைக்கோட்டை. 1வது பதிப்பு, செப்டெம்பர் 1991 (கொழும்பு ராஜன் பிரின்டர்ஸ்) 61 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
சிறு நூலகமொன்றின் செயற்பாடுகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள் ளன. நூலகத் துறையைத் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு நூா லகமொன்றின் அன்றாட நடவடிக்கைகள், மற்றும் நிர்வாக அறிவுரைகள் வழங்கும் நூல். குடும்ப நூலமொன்றை நிர்வகிக்க விரும்புவோருக்கும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
OO5 கலைச்சொற்றொகுதி நூலகமும் தகவல் விஞ்ஞானமும். விமலாம்பிகை பாலசுந்தரம். யாழ்ப்பாணம்: அயோத்தி நூலக சேவைகள், ஆனைக்கோட்டை. 1வது பதிப்பு, 1989.(கல்லச்சுப் பிரதி)
i,46 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 27X20 சமீ
நூலக தகவல் விஞ்ஞானத்துறையில் பயன்படுத்தப்படும் சுமார் 1500 ஆங்கில கலைச்சொற்களுக்குரிய தமிழ்ப்பதங்கள் தரப்பட் டுள்ளன. இலங்கையில் இத்துறையில் தமிழில் வெளிவந்துள்ள முதலாவது கலைச்சொற்றொகுதி இதுவாகும்.
006 கல்வி நிறுவன நூலகங்கள். விமலாம்பிகை பாலசுந்தரம். ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம், ஆர். எஸ். அச்சகம்) 78 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 20x14 சமீ.
ஆரம்பப் பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், உயர் கல்வி நிறுவனங் களான தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக்கல்லூ ரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு ஆய்வகங்கள் ஆகியவற் றில் இயங்கும் நூலகங்களின் நூற்சேகரிப்பு, நூலகங்களின் பயன்பாடு, நூலக சேவைப் பகுதிகள் முதலியன விபரிக்கப்பட்டுள் ளன. இந்நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், அவற் றை நிவர்த்தி செய்ய நூலகர் கையாளக்கூடிய வழிமுறைகள் என் பனவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன.
2 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

020 நூலகவியல், தகவல் விஞ்ஞானம்
OO7 கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும். என்.செல்வராஜா. ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) 86 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18.5x12.5 சமீ.
தமிழ்ப் பிரதேசங்களை மையப்படுத்தி கிராம நூலக இயக்கம், சிறுவர் நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், பாலர்களுக்கான நூ ல்களைக் கிராமமட்டத்தில் தயாரித்தல், சனசமூக நிலையங்களின் நூலக நடவடிக்கைகள், நூல் கொள்வனவு போன்ற விடயங்களை விளக்கும் கட்டுரைகளைக் கொண்டது.
O08 துணயியின் தசாம்ச வகுப்பு: 18ம்பதிப்பு: 3ம்சாராம்சம். வே.இ.பாக்கியநாதன் (தமிழாக்கம்), கொழும்பு 7: இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு ஸ்டார் லைன் அச்சகம்) 54 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 25x18 சமீ.
நூற்பகுப்பாக்கத்தில் இன்று மிகவும் பிரபல்யமாக விளங்கும் தூயி g55TTLb5 6)(5L'ILITábas(3D (Dewey Decimal Classification) QUC5bUTair மையான நாடுகளில் ஆவணங்களை ஒரு சீராக ஒழுங்கு செய் வதற்கு ஏற்புடையதெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனது 18வது பதிப்பின் மூன்றாவது நிரைகள் தமிழ் மொழிபெயர்ப்புடன் இ ணைத்துத் தரப்பட்டுள்ளன. சிறுநூலகங்களில் வகுப்பாக்க நடவடிக் கைகளில் ஈடுபடுவோருக்கும் நூலகவியல்துறை மாணவர்களுக்கும் 630g.
OO9. நூலகவியலில் பட்டியலாக்கம். விமலாம்பிகை பாலசுந்தரம். திருநெல்வேலி: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்; மஹாத்மா அச்சகம்) Vi,116 பக்கம். விலை: ரூபா 60. அளவு; 20.5x14.5 சமீ.
நூலக மேலாண்மைக்கு அடிப்படையானதும் தொழில்நுட்பத்திறன் வாய்ந்ததுமான பட்டியலாக்கச் செயற்பாட்டின் (Cataloguing) வரலாறு, பட்டியலாக்கம், அதன் விதி முறைகள், பயன்பாடு முதலிய பல்வேறு விடயங்களைத் தரும் நூல்.
OO நூலும் நூலகமும்.எஸ்.எம்.கமால்தின். யாழ்ப்பாணம்: அயோத்தி நூலக சேவைகள், ஆனைக்கோட்டை. 1வது பதிப்பு, செப்டெம்பர்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 3

Page 16
020 நூலகவியல், தகவல் விஞ்ஞானம், 050 வழிகாட்டிகள்
1992. (Colombo 12: Linraj's Printers. 282/15, Dam Street) (10),70 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறப்பு மலர்களில் ஆசிரியரால் எழுதப்பெற்ற நூலகவியல், தகவல் விஞ்ஞானம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும்.
O யாழ்ப்பாண நூல்நிலையம்: ஓர் ஆவணம். க.சி.குலரத் தினம். சென்னை: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1997 (G3660)6OT 600024: Mithra Book makers, Arcot Road) iv,152 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாண நூலகம் கருக்கொண்டு உருக்கொண்டு வளர்ந்து வளம்பெற்ற வரலாற்றினை விளக்கும் நூல். யாழ்ப்பாணம், ஈழநாடு தினசரியில் 20.7.1982 முதல் 18.8.1982 வரை வெளியான தொடரின் நூல் வடிவம்.
O2 யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு. என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலகசேவைகள், 1வது பதிப்பு. ஜூன் 2001. (இலண்டன்: வாசன் அச்சகம்) 128 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 10.00. அளவு: 27X21 சமீ.
ஜூன் 1, 1981 இல் இலங்கை அரசபடையினரால் எரித்து அழிக்கப் பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றைக் கூறக்கூடிய பத்திரிகைச் செய்திகள், சஞ்சிகைகள், நூல்கள், இணையத்தளங் கள், போன்றவற்றில் வெளியான தகவல்களையும், துண்டுப்பிரசுரங் கள், சிறு நூல்கள் போன்றவற்றையும் தொகுத்து ஆண்டுவாரியாக ஒழுங்கு செய்து, யாழ். நூலகத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகளுடன் சேர்த்து படங்களுடன் நூலுருவாக்கப்பட்டுள்ளது.
050 பொதுப் பருவஇதழ்கள், வழிகாட்டிகள்
O3 தமிழ் ஓலைகள் 1994. திறிஸ்கந்தராஜா,ஏ.கே.எஸ்.திருலிங்க நாதன்.(தொகுப்பாசிரியர்கள்). இலண்டன்: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW19 8HF, 16gb. ug'ull, 1994. (இலண்டன்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) (12),92 பக்கம். விலை: இலவசம். அளவு; 21X15 சமீ.
4 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

050 பொதுப் பருவ இதழ்கள், வழிகாட்டிகள்
தமிழ் ஒலைகள் 1995. திரீஸ்கந்தராஜா, ஏ.கே.எஸ்.திருலிங்க நாதன்.ஏ.ஞானேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). இலண்டன்: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW198HF, 2வது பதிப்பு.1995, (இலண்டன்:அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 96 பக்கம். விலை: இலவசம். அளவு: 21X15 சமீ.
தமிழ் ஒலைகள் 1996. தி.ழரீஸ்கந்தராஜா, ஏ.கே.எஸ்.திருலிங்க நாதன்.ஏ.ஞானேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). இலண்டன்: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW198HF, 3வது பதிப்பு.1996. (இலண்டன்.அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 104 பக்கம். விலை: இலவசம். அளவு; 21X15 சமீ.
தமிழ் ஒலைகள் 1997. தி.ழரீஸ்கந்தராஜா, ஏ.ஞானேந்திரன். ஏ. கே.எஸ்.திருலிங்கநாதன். (தொகுப்பாசிரியர்கள்). இலண்டன்: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW19 8HF, 4வது பதிப்பு,1997 (இலண்டன்:அச்சக விபரம் குறிப்பிடப்பட வில்லை)
128 பக்கம். விலை: இலவசம். அளவு: 21X15 சமீ.
தமிழ் ஓலைகள் 1998. தி.ரீஸ்கந்தராஜா, ஏ.ஞானேந்திரன். (Qg5 Tg) LIT fifujabei). S6060iiL6: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW19 8HF, 56ugbi Lugil, 1998. (இலண்டன்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 176 பக்கம். விலை: இலவசம். அளவு; 21X15 சமீ.
தமிழ் ஒலைகள் 1999. தி.ழரீஸ்கந்தராஜா, ஏ.ஞானேந்திரன். (Qg5 Tg5'LJTafflujaheit). S6)6OiL6: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW198HF, 661 Lug5L, 1999. (இலண்டன்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 232 பக்கம். விலை: இலவசம். அளவு 21x15 சமீ.
தமிழ் ஓலைகள் 2000. தி.ழரீஸ்கந்தராஜா, ஏ.ஞானேந்திரன். (Qg5T(5tLIIdful 356i). S6)6OiL6it: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW198HF, 76 uglyL,2000. (இலண்டன்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 288 பக்கம். விலை: இலவசம். அளவு; 21X15 சமீ.
தமிழ் ஒலைகள் 2001. தி.யூரீஸ்கந்தராஜா, ஏ.ஞானேந்திரன். (Qg5 Tg5uTaffluijssii). SoogiiL6it: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW198HF, 861 USL, 2001.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 5

Page 17
050 பொதுப் பருவ இதழ்கள், வழிகாட்டிகள் s
(இலண்டன்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 416 பக்கம். விலை: இலவசம். அளவு 21X14.5 சமீ.
தமிழ் ஒலைகள் 2002. தி.யூரீஸ்கந்தராஜா, ஏ.ஞானேந்திரன். (Qg5 Tg5'Justiffujiboi). S6)6Odilair: British Tamil Directories, 52 Kingsley Road, Wimbledon, London SW19 8HF, 96 g us L, 2002. (இலண்டன்: அச்சகவிபரம் குறிப்பிடப்படவில்லை) 480 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X15 சமீ.
1994 தொடக்கம் ஆண்டு இதழாகத் தொடர்ந்து வெளிவரும் பிரித் தானிய, ஐரோப்பியத் தமிழரின் வர்த்தக வழிகாட்டி.
O4 தமிழர் தகவல் 1995. தமிழர் கலை இலக்கிய வட்டம். London: Tamil Art and Literary Circle, P.O. Box 4035, London SW17 9XP, 1வது பதிப்பு, 1995, (இலண்டன்: வாசன் அச்சகம்) 100 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14.5 சமீ.
இது ஒரு லண்டன் வர்த்தக வழிகாட்டி.
O5 தமிழர் தகவல் 2001. பத்தாவது ஆண்டு மலர். பிரதம ஆசிரியர் எஸ்.திருச்செல்வம். கனடா: அகிலன் அசோஷியேட்ஸ், P. O. Box 3, Station F, Toronto, 1615 Luft').2001. (Canada. Ahilan Associates, Printers and Publishers, Toronto) 138 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 27.5X21 சமீ.
கனேடியத் தமிழ் மக்களின் நடவடிக்கைகள், பிரச்சினைகள், தீர்வு கள், வளர்ச்சிகள், அத்தகைய வளர்ச்சிக்காக உழைக்கும் பெரியார் கள் தொடர்பான பல தகவல்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பனவற் றைத் தாங்கி பெப்ரவரி 1991 முதல் வெளிவரும் மாதாந்த சஞ் சிகையின் 10வது ஆண்டு மலர்.
O6 தமிழர் மத்தியில். நடனகுமாரன், ராஜேந்திரம் (தொகுப்பாசிரியர் 356) 356OILT: Nanda Publications, 4, Baldoon Road, Scarborough, Ontario, 1வது பதிப்பு,1993, (அச்சக விபரம் அறிய முடியவில்லை) 384 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X15 சமீ.
வர்த்தக வழிகாட்டி. கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் வாழும்
6 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

060 பொது நிறுவனங்கள், 070 ஊடகவியல், வெளியீட்டுத் துறை
தமிழர் பற்றிய தகவல்கள், வர்த்தகத் தகவல்கள், வளங்கள், சேவைகள் ஆகியனவற்றைத் தாங்கி வரும் தொகுப்பு.
O60 பொது நிறுவனங்கள்
O7 நோர்வே தமிழ்ச்சங்கம் ஆண்டு மலர் 1983. ம.அமரசிங்கம் (பதிப்பாசிரியர்). நோர்வே: தமிழ்ச்சங்கம், ஒஸ்லோ, 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: ஆரெஸ் அச்சகம்) 58 பக்கம், தகடுகள், வண்ணப்படங்கள், ஓவியங்கள். விலை: குறிப் பிடப்படவில்லை. அளவு: 27X20.5 சமீ.
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றிய தகவல் கள் வண்ணப்படங்களுடன் உள்ளன. சமூகவியல், கலை, இலக் கியம் ஆகிய துறைகளில் தமிழ் நோர்வேஜிய மொழிகளில் எழுதப் பட்ட ஆக்கங்களின் தொகுப்பு.
070 ஊடகவியல், வெளியிட்டுத் துறை
O8 இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், கோப்பாய் சிவம். புத்தூர்: ப.சிவானந்த சர்மா, சிவன்கோவில் அருகாமை, ஆவரங்கால், 1வது பதிப்பு, ஜூன் 1985. (கிளிநொச்சி: சர்வசக்தி, குருகுலம்) Vi,44 பக்கம். விலை: ரூபா 7.50. அளவு: 18x13 சமீ.
ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பற்றிய ஆசிரியரின் நோக்கும் 1841 முதல் 1984 வரையில் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பற்றிய சுருக்கமான விளக்கங் களுடனான பட்டியலும் இடம்பெற்றுள்ளன.
O19 இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி. இ. சிவகுருநாதன். சென்னை 26: குமரன் பப்ளிகேஷன்ஸ், வட பழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 1993, (சென்னை 24: சூர்யா ஆர்ட் பிரின்டர்ஸ்) 230 பக்கம், விலை: இந்திய ரூபா 30. அளவு: 18x 12.5 சமீ.
இலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரிகைகளின் வளர்ச்சி பற்றிய வரலாற்றுடன் தினகரன் (கொழும்பு) பத்திரிகையின் வரலாறு, அதன் பங்களிப்பு பற்றியும், அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நீண்ட கால அனுபவங்களினூடாக இந்நூலாசிரியர் ஆவணமாக்கியுள்ளார்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 7

Page 18
070 ஊடகவியல், வெளியீட்டுத் துறை
O2O ஈழத்துப் பதிப்புக்கலை வளர்ச்சியிலே சன்மார்க்க சபையின் பணி- ஓர் ஆய்வு இ.பாலசுந்தரம். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
குரும்பசிட்டி சன்மார்க்க சபையினால் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்ட 53 பிரசுரங்களையும் வகை துறையாகப் பிரித்து விளக்கியுள்ளார். இது ஈழகேசரி பொன்னையா நினைவுதின உரையாகும்.
O21 ஈழநாடு 25வது ஆண்டு நிறைவுமலர். ஈழநாடு ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: ஈழநாடு அலுவலகம், 1வது பதிப்பு, 1984, (யாழ்ப்பாணம்: ஈழநாடு அச்சகம், சிவன் கோவில் மேற்கு விதி) 56 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 43X28.5 golß.
11.2.1984 இல் யாழ்ப்பாணத்து ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தின் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம், ஈழநாடு பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், சமய, கலை, இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்தது.
O22 காந்தளகம்: 20 ஆண்டுகள். அண்ணா கண்ணன். சென்னை 600002. காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஜூன் 2000. (சென்னை: காந்தளகம்) 192 பக்கம், புகைப்படம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12.5 Fuß.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் மரவன்புலவில் முளைவிட்டு சென் னையில் வேரூன்றித் தளைத்து விருட்சமாகியிருக்கும் காந் தளகம் வெளியீட்டகத்தின் இருபது ஆண்டு கால வளர்ச்சியும் வரலாறும் பதிவுக்குள்ளாகியுள்ளது. 1980 முதல் 2000 வரை யிலான காலப்பகுதியில் காந்தளகம் எப்படி உருவானது, வளர்ந் தது, அதன் 20 ஆண்டுக்கால செயற்பாடுகள் எவை, என்னென்ன விளைவுகளை அவை ஏற்படுத்தின போன்ற விடயங்களைப் பதிவு செய்யும் முயற்சியின் வெளிப்பாடு இந்நூலாகும். காந்தளகத்தின் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், உடன் பதிப்பாளர்கள், தொழில் முறைத் தொடர்புடையோர் எனப் பல்வேறு தரத்தினரதும் குரல் கள் இங்கே ஒலித்துள்ளன.
8 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று
 

070 ஊடகவியல், வெளியீட்டுத் துறை, 100 தத்துவவியல்
காந்தளகத்தின் பதிப்பு மற்றும் அச்சு நூல்கள் 218இன் விபரமான நூற்பட்டியல் ஒன்றும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
O23 மல்லிகை வெள்ளிவிழா மலர். டொமினிக் ஜீவா. யாழ்ப்பாணம்: மல்லிகை, 234 B, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 152 பக்கம். விலை: ரூபா 75. அளவு 24.5x18.5 சமீ.
இலங்கை-இந்திய எழுத்தாளர் முப்பத்து மூவரின் கலை, இலக்கிய ஆக்கங்களைத் தாங்கிய இதழாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வரும் மல்லிகை மாத இதழின் வெள்ளிவிழாவையொட்டி வெளியிடப் பெற்றது.
மேலும் பார்க்க: 086, 817, 824
100 தத்துவவியல்
O24 அழகியல் . சபா.ஜெயராஜா. இணுவில் : அம்மா வெளியீடு, மருதனார்மடம், 1வது பதிப்பு, 1989. (இணுவில்: அம்மா அச்சகம்) 54 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12.5 சமீ.
அழகியல் தொடர்பாக உளவியல் நோக்கிலான கருத்துக்களை வழங்கும் நூல்.
025 பிரபஞ்ச மர்மம்; விஞ்ஞான மெய்ஞான ஆய்வுகள். ஆ. 6ila-Tab Gugbgsalub. 36o60iL67; 51, Myrna Close, London SW192HN, 1வது பதிப்பு, ஜனவரி 2001 (சென்னை 4: யுனைட்டெட் பைண்ட் கிரப்பிக்ஸ், 101 D, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மைலாப்பூர்) 144 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண். 2. அளவு: 22x14 சமீ.
இயற்கையின் தத்துவத்தை உணர்த்துகின்ற, தமிழரின் மறைந்து போன திராவிட நாகரீகத்திற்குப் புத்துணர்வூட்டி வளர்ப்பதற்குக் கையாளப்பட வேண்டிய தமிழ்க் கலாச்சார நியதிகளையும், நெறிகளையும் பகுத்தறிவு கொண்டு காலத்திற்கு ஏற்ப, விஞ்ஞான ரீதியாகவும், மெய்ஞ்ஞான ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும், ஆராய்ந்து கருத்துக்களை வழங்கும் நூல். ஆசிரியரின் பாரம்பரிய வைத்தியக்குடும்பப் பின்னணியும் அதன் பயனாகக் கற்றுணர்ந்த பிரபஞ்ச உற்பத்தி, அங்காதிபாதம் போன்ற வைத்திய நூல்களின் ஆளுமையும், வேதாந்த நூல்களான கைவல்யம், ஜீவப்பிரம்ம
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 9

Page 19
100 தத்துவவியல். 150 உளவியல்
ஐக்கிய வேதாந்த இரகசியம் போன்றவை வழங்கிய புலமையும் ஆசிரியரின் ஆய்வை எளிமையாக வழங்கத் துணை புரிந்துள்ளன.
O26 விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும். ஆ.க.ஆனந்த நாதன். போராதனை: ஆ.க.ஆனந்தநாதன், மெய்யியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (யாழ்ப் பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி) xi,222 பக்கம். விலை சாதாரண பதிப்பு: ரூபா 40. நூலகப் பதிப்பு: ரூபா 50. அளவு; 21X14 சமீ.
அளவையியலும் விஞ்ஞான முறையும், விஞ்ஞான மெய்யியல், சமூ க விஞ்ஞான மெய்யியல் முதலிய பாடங்களின் பாடத்திட்டங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ள நூல்.
O27 விமரிசன மெய்யியல். சோ.கிருஷ்ணராஜா. யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: மணிஓசை அச்சகம், 12 பற்றிக்ஸ் வீதி) 76 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18X12.5 சமீ.
கலை இலக்கிய வளர்ச்சியில் விமரிசனம் பெரும் பங்கினை வகிக் கின்றது. அவ்வகையில் விமரிசன ஆய்வுகளின் புதிய வடிவங்கள், புதிய கண்ணோட்டங்கள் வெளிவருவது தமிழுலகில் அரிதாகவுள் ளது. இந்நிலையில் நான் வெளியீட்டு வரிசையில் 14வது நூலாக இது வெளிவந்துள்ளது. விமரிசனக் கொள்கை, விமரிசன முறையியல் ஆகிய இரு இயல்களைக் கொண்ட இந்நூலின் முதலாம் இயலின் கீழ் இலக்கிய விமரிசனமும் சமூகமும், விமரிசனமும் இலக்கியக் கல்வியும், இலக்கியமும் விமரிசனமும், விமரிசனமும் அழகியலும், விமரிசனமும் பொருள்கொள் இயலும், விமரிசனமும் அடிப்படை உண்மையியலும் ஆகிய தலைப்பு களிலும், இரண்டாம் இயலில், முறையியல், முறையியலும் விளக் கமும், முறையியலும் மதிப்பிடலும், ஆகிய தலைப்புகளிலும் விமரிசன மெய்யியல் விளக்கப்பட்டுள்ளது. அனுபந்தமாக, கலையும் இரசனையும், இந்தியக் கலை, இந்திய இரசனைக் கொள் கை ஆகியன பற்றிய குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: 792
150 உளவியல்
O28 உறவுகளின் இராகங்கள். வி.பி. (இயற்பெயர்: D.வின்சன்ற்
10 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

100 தத்துவவியல்
பற்றிக்) யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1989, 1வதுபதிப்பு, ஜூலை 1985. (அச்சகவிபரம் அறியமுடியவில்லை) 91 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18X12 சமீ.
பல இடர்ப்பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியிலே வாழும் மக்கள் உள, வளத் துணையோடு வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாக இது அமைகின்றது. வாழ்க்கை பயனுள்ளதாக அமைவதற்குரிய அரிய கருத்துக்களைக் கொண்ட 11 கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும்.
O29 குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே, ஹேய்ம் ஜிஇனோட் (மூலம்), எஸ்.கே.விக்னேஸ்வரன்(தமிழாக்கம்). கொழும்பு2. மூன்றாவது மனிதன் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜூன் 2001 (கொழும்பு 13: யூ கே பிரின்டர்ஸ்)
144 பக்கம். விலை: ரூபா 200. அளவு 22x14 சமீ.
குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொள்வதனை நோக்கமாகக் Q35T60ii (6 Syldaugbisi) 6T(pp5'LL Between Parents and child 616 ற நூலின் தமிழாக்கம்.
மேலும் பார்க்க: 275
Ꭴ30 சிந்தனைப் பூக்கள். எஸ்.பத்மநாதன். கனடா: நம்நாடு வெளியீடு, g5.Qu. 616xit 99025, 1245 Dupont Street, Toronto, 16 g) usul, டிசெம்பர் 1996, (டொரன்ரோ, விசாலா அச்சகம்) Xxiv,108 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20x13 சமீ.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு உளவியல் பிரச்சினை களுக்குத் தீர்வுகாணும் வகையில், அவர்களின் வாழ்வியல் சிந்தனை களை, பிரச்சினைகளின் தாக்கத்தை உளவியல் காரணிகளை வெளிக்கொணரும் 20 கட்டுரைகளின் தொகுப்பு.
O31 h− நான்-சாத்தான்-ஞானம்-அவன்: மனத்தின் ஆட்பங்களைப் புரிந்துகொள்ள உதவும் கதைகள். சிவாசி (இயற்பெயர்: எஸ். சிவபாலன்). வத்தளை, எஸ்.சிவபாலன், 55/1 ரீ விக்கிரம மாவத்தை, 16...g5 ug54, B6) Libuj 1998. (Gabri (pubL 12. Prakash Printing Works, 1B, Hultsdorf Street) 99 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 18.5x13 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 11

Page 20
100 தத்துவவியல், 170 ஒழுக்கவியல்
மனிதனின் சில நடவடிக்கைகளை உளவியல் ரீதியாகத் தெளிய வைக்கும் வகையில் எழுதப்பெற்ற கதைகள். நான் என்பதை ஆட் டி வைக்கும் மன உறுப்பு களையும், மனிதன் பசி-வலிருசி களையும் சரி என்ற முடிவுகளைக் கூறிய மன அளவுகோல் களையும் ஆராய ஆசிரியர் முயன்றிருக்கின்றார்.
O32 மனவரு நெருக்கிட்டின் உள விளைவுகளும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும். தயா சோமசுந்தரம். யாழ்ப் பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை) xi,218 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275. அளவு: 22X14.5 gß. ISBN 955-9194-01-1
தாயகத்தின் இன்றைய சூழலில் மக்கள் பல்வேறு நெருக் கீடுகளுக்கு உட்படுகிறார்கள். பரபரப்பு, பதகளிப்பு, அச்சம், தவிப்பு, போன்ற உளப்பாதிப்புக்கும் நெருக்கீடுகளுக்கும் உள்ளா கின்ற இவர்கள் இவற்றை எதிர்கொள்ள எவ்வகையான வழிமுறைகளைக் கையாளலாம் என்பதை விளக்கும் நூல்.
O33 ஜீவியப்பயணம். யூ.எல்.எம். குவைலீத். நாவலப்பிட்டி சரண் தீப் இஸ்லாமிய எழுத்தாளர் முன்னணி. 1வது பதிப்பு, 1987 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 16x12 சமீ.
25 தலைப்புக்களில் ஆசிரியர் எழுதிய சமூக உளவியல் கட்டுரை களின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: 187
170 ஒழுக்கவியல்
O34 அறுபதில் அறுபது. ச.வடிவேலு. சுன்னாகம்! வேலழகன் வெளியீடு, கே.கே.எஸ்.வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988, (சுன் னாகம்: திருமகள் அழுத்தகம்) xi60 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
திரு. வடிவேலு அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு வெளியிடப் பட்ட அறுபது நல்வாசகங்கள் அடங்கிய சிறுநூல், அரிய படிப் பினைகளாக அமையும் இக்கருத்துக்கள் அன்றாட வாழ்வியலோடு ஒட்டிய வெவ்வேறு சுவைகளைக் கொண்டவை.
12 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

170 ஒழுக்கவியல்
O35 அன்றாட வாழ்வில் தத்துவங்கள். எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு; எஸ்.ஜே. யோகராசா, மொழியியல் துறை, களனிப் பல் கலைக்கழகம், 2வது பதிப்பு, மாசி 2002. 1வது பதிப்பு, ஆவணி, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) 64 பக்கம். விலை: ரூபா 100. அளவு 22x14.5 சமீ. ISBN 955-95655 4-0.
தோல்விகளைக் கண்டு சோர்ந்து போகாமல் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஒளியாகப்பார்த்து, உற்சாகத்துடனும் முயற்சியுடனும் வாழ இந்நூல் உதவும்.
O36 இரவல் இதயங்கள்: கட்டுரைத்தொகுதி. எழிலன் (இயற் GLJust Suo(36obßy6öI). GgüLD6fl: Poovarasu kultur und Literatur Organisation, Postfach 103401, 28034 Breman, 16ugh LüL, LDTüé 1997. (Chennai 13: Pio Printers, 83 East Mada Church Road, Royapuram) (20),114 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5x12 சமீ.
-ஆசிரியர் (முன்னுரையில்)
எழிலனின் இரண்டாவது நூல் இதுவாகும். சமுதாயத்தைக் கெளவிக் கொண்டிருக்கும் கவனிக்கப்பட வேண்டிய குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் வகையில் அமைந்த 33 கட்டுரைகளின் தொகுப்பு.
O37 உங்களைப்பற்றி: சிறுவருக்கு அறிவுரை நூல். நந்தி. கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார் தெரு, 2வது பதிப்பு, 1995. 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 11: லட்சுமிஹர, 309, செட்டியார் தெரு)
48 பக்கம். விலை: ரூபா 45. அளவு: 18x12.5 சமீ
சமய வாழ்வு, கால வர்த்தமானத்துக்கு ஏற்ப நற்பண்புகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சிறுவர்களுக்கு அறிவு பூர்வமாக சிந்தனைகளை ஊட்டும் முயற்சியாக மேற்கொள்ளப் பட்ட கட்டுரைத் தொடர். வெற்றிமணி இதழில் பிரசுரம் பெற்ற இவை வெற்றிமணி வெளியீடாக 1973 இல் முதற்பதிப்பு வெளியாகியது.
Ꭴ38 ஒளவையார் அறிவுச் செல்வங்கள். கொழும்பு 2: இந்து சமய இந்து கலாச்சார தமிழ் அலுவல்கள் இராஜங்க அமைச்சு
அலுவலகம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 10 இம்பீரியல் பிரஸ்)
நூல்தேட்டம்-தொகுதி ஒன்று 13

Page 21
170 ஒழுக்கவியல்
60 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
ஒளவையார் அருளிச்செய்த வாக்குண்டாம், ஆத்திசூடி, நல்வழி, ஆகிய நூல்கள் உரையுடன் கூடியது.
O39 தந்தையின் பரிசு. ஆகந்தையா. நுகேகொடை ஆகந்தையா, திறந்த பல்கலைக்கழகம், நாவலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1986. (கொழும்பு 14: ஸ்டார்லைன் அச்சகம்) (6),126 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
நூலாசிரியர் இங்கிலாந்தில் இருந்த 1984ம் ஆண்டுக் காலகட்டத் தில் அங்கிருந்து தனது மகனுக்கு எழுதுவதாக அமைந்த 20 கடிதங்களின் தொகுப்பு. அரசியல், சமூக விடயங்கள் பலவற்றை அலசுவதாக அமைகின்றது. இளைஞர்களுக்கான அறிவியல், ஒழுக்கவியல் கருத்துக்களை வலியுறுத்துகின்ற கட்டுரைகள்.
040 தைரியம் இருந்தால் சரித்திரம் படைப்போம். எழிலன் (இயற்பெயர் அமலேந்திரன்). ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் Gl J696), Poovarasu kultur und Literatur Organisation, Postfach 103401, 28034 Breman, 16.g5 Lug'ull, tọaFibulů 1999. (Chennai 13: Pio Printers, 83 East Mada Church Road, Royapuram) 128 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5X12 சமீ.
வறுமை-துயரம்-இழப்பு-ஏமாற்றம்- எனப் பல்வேறு விஷயங்களை எடுத்துப் பேசினாலும். எதில் இருந்தும் விடுபட்டுச் சாதனை படைக்கலாம். சரித்திரம் உருவாக்கலாம். மாமனிதராக உயரலாம் என்ற தன்நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டுவதே இக்கட் டுரைத் தொகுப்பின் நோக்கமாகும்.
இளம்பிறை எம்.ஏ.ர..மான் (முன்னுரையில்)
04 நல்ல குடும்பவாழ்வுக்கு நல்ல உறவு தேவை. எஸ்.ஜே. யோகராஜா. கொழும்பு 11 அன்பின் பரிணாமச்சங்கம், 6வது சின்னப்பர் நடுநிலையம், 5வது மாடி, பூந்தோட்டவீதி, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 12: கிரவுண் அச்சகம், 105 சென்.செபஸ்தியார் வீதி)
47 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21.5X14 சமீ.
குடும்பவாழ்வை சிறப்பாக நடத்தும் வழிவகை ஆராயப்பட்டுள்ளது.
14 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

170 ஒழுக்கவியல், 180 இந்து தத்துவம்
கணவன்-மனைவி உறவில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திருமணம் முடிக்க இருக்கும் இளைஞர்-யுவதிகளுக்கு ஓர் திருமண ஆயத்த நூலாக இது அமையலாம்.
042 பணம் பந்தியிலே: கட்டுரைகள். விக்னா பாக்கியநாதன். சென்னை 17: மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 14:47, 7 தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 17: எம்.கே. என்டர்பிரைஸ்) 100 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
பதினேழு சமூக உளவியல் கட்டுரைகளின் தொகுப்பு. மனித நேயம், பணம், முயற்சி, பணிவு, ஒற்றுமை, மற்றும் புலம்பெயர் வாழ்வில் உறவுகளின் நிலை போன்ற இன்னோரன்ன சமூகவியல் கருத்துக்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
O43 மனித விழுமியங்கள். குமாரசாமி சோமசுந்தரம். கொழும்பு 6: ரஜி வெளியீடு, 73, 21 விகாரை ஒழுங்கை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 14: ஸ்டார்லைன் அச்சகம்) vi,190 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 21.5X14 சமீ.
மனித விழுமியங்கள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஒழுக்கவியல் குறுங் கட்டுரைகள் 45இன் தொகுப்பு.
O44 மூலவேர்: வாழ்வியல் நூல். ம.ந.கடம்பேஸ்வரன். வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டைத்தொகுதித் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1993, (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vi,48 பக்கம். விலை: ரூபா 5500. அளவு 22.5x18 சமீ.
அன்பு, அறம், வீரம், செய்ந்நன்றி பேணுதல், நட்பு, சான்றாண்மை என்னும் உயர்ந்த பண்புகளைக் கருவாகக் கொண்ட 14 கட் டுரைகளின் தொகுப்பு. ஈழநாடு இதழில் வெளியான கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும்.
180 இந்து தத்துவம்
045 அத்வைத சிந்தனை. சி.கணபதிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சி. கணபதிப்பிள்ளை, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 15

Page 22
180 இந்து தத்துவம்
1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) X,105 பக்கம், தகடுகள். விலை: ரூபா 20. அளவு: 18X13 சமீ.
அத்வைதம் பற்றிய பண்டிதமணி அவர்களின் வானொலி உரை களின் தொகுப்பு.
"முகத்துக்கண் கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்துக் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்” என்பது திருமந்திரம். அகத்துக்கண்ணை நெற்றிக் கண் என்று சொல்வதுமுண்டு. அது வெளித்தவர்கள் தாம் கண்டவற்றை நம் மனோர்க்கு விளக்குவது முடியாத காரியம். கண்ணுள்ளவர்கள் கண்டவைகளை, ஊனக்கண்ணால் காண முயன்றதே அத்வைத சிந்தனை,
பண்டிதமணி கணபதிப்பிள்ளை (முன்னுரையில்)
046 இந்து நாகரிகம்; உயர்தர வகுப்புகளுக்குரியது. 1ம் பாகம். பகுதி 2. க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ரீ சுப்பிரமணிய புத்தக சாலை, 1வது பதிப்பு, ஆவணி 1980. (யாழ்ப்பாணம்: பூரீ சுப்பிர மணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி ஒழுங்கை) 272 பக்கம். விலை: ரூபா 18. அளவு; 21X14 சமீ.
இந்நூலின் முதற்பாகத்தின் முதற் பதிப்பு 1979இல் வெளி வந்தது. இரண்டாம் பகுதியாகிய இந்நூல் தென்நாட்டில் நிலவிய பக்திநெறி என்னும் அலகில், சைவசமயத்தின் எழுச்சியும் பக்தி இயக்கமும் விளக்கப்பெற்றுள்ளன. தொடர்ந்து தென்நாட்டுப் பக்தி நெறியாளரான 27 அடியார்கள் அருளிய பன்னிரு திருமுறை கள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
O47 இந்து நாகரீகம்; உயர்தர வகுப்புகளுக்குரியது. 1ம் பாகம். பகுதி 3. க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ரீ சுப்பிரமணிய புத் தகசாலை, 1வது பதிப்பு, கார்த்திகை 1980. (யாழ்ப்பாணம்: பூரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி ஒழுங்கை) 264 பக்கம். விலை: ரூபா 23. அளவு: 21X14 சமீ.
இந்நூலின் முதற்பாகத்தின் முதற்பகுதி 1979இலும் இரண்டாம் பகுதி ஆவணி 1980இலும் வெளிவந்துள்ளன. மூன்றாம் பகுதியாகிய இந்நூல் வட நாட்டில் நிலவிய பக்திநெறி, வைணவ சமயத்தின் எழுச்சி, தமிழிலக்கியத்திற் காணப்படும் தென்னாட்டுச் சைவ மரபு, இந்து சமயத்தில் இக்காலகட்டத்தில் இருந்த சீர் திருத்த இயக்கங்களின் செயற்பாடுகள் ஆகியன விளக்கப் பெற் றுள்ளன.
16 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

180 இந் 拳
O48 இரு பெரும் நெறிகள். க.சொக்கலிங்கம். நாயன்மார்கட்டு: இராம லிங்கம் கைலாசபிள்ளை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1988. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295-7 காங்கேசன் துறை வீதி) 52 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
இந்து நாகரீகம் என்ற பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்குப் பயன் படத்தக்கதாக சைவநெறி, வேதாந்த நெறி ஆகிய இரு நெறிகளை யும் பற்றி எழுதப்பட்ட இரு கட்டுரைகளின் தொகுப்பு.
O49 ஈழத்து சிவயோக சுவாமிகள் ஏற்றிய ஞான விளக்கு. க.ந. வேலன். சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு, 2000. (Qay 616060T 94: Scripts Offset) 240 பக்கம். விலை: இந்திய ரூபா 48. அளவு: 18.5x12.5 சமீ.
ஈழத்துச் சித்தர்பரம்பரை, அவர்களைப்பற்றி இதுவரை மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள், ஈழத்துச் சித்தர் பரம்பரை அட்டவணை, சித்தரும் அவர்தம் ஆற்றலும், சித்தர்கள் அகவழிபாட்டினர், சித்தர்கள் சமயங் கடந்த சான்றோர் ஆகிய தலைப்புக்களில் ஈழத்துச்சித்தர்கள் பற்றிய தகவல்களையும், குறிப்பாக, யாழ்ப்பாணத்து யோக சுவாமிகள் தோற் றமும் சமாதியும், அவர் அருளியவை, அவர் அருளாணையால் எழுதப் பெற்றவை, சுவாமிகள் ஆற்றிய பணிகள், சுவாமிகள் தொடர் பாக இதுவரை வெளிவந்த நூல்கள் ஆகியவை பற்றியும் கூறும்நூல்.
050 என்னை எனக்கு அறிவித்த எங்கள் குருநாதன். நா.முத்தையா. கனடா: இந்து சமயப் பேரவை, ஒன்றாரியோ, 1வது பதிப்பு, மே, 1999. ( கனடா விவேகா அச்சகம்) x,31 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவயோக சுவாமிகளின் 125வது ஜெயந்தி விழாவின் போது வெளியிடப்பட்டது. நூலாசிரியர் அமரர் நா. முத்தையா, யோகர் சுவாமிகளிடம் தான் பெற்ற ஞானஅனுபவங் களை இந்நூலில் விளக்கியுள்ளார்.
O51
கீதை நிழலில். எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600024: Mithra Arts and Creations, 375/8-10, Arcot Road, 16 fill, gy iou) 1999.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 17

Page 23
180 இந்து தத்துவம்
(G3660)6OT 600024: Mithra Book Makers) 216 பக்கம், சித்திரங்கள். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18x12 g5. ISBN 187662678X
கீதையின் தாக்கத்தால் விளைந்த சிந்தனைகளின் பதிவு. 52 உருவகக் கதைகளின் வாயிலாகக் கீதையின் ஆழமான கருத்துக் களை வெளிக்கொண்டுவரும் ஒரு முயற்சி.
Ꭴ52 சாதனைக்குரிய சைவ தோத்திரமும் சாத்திரமும், நா. செல்லப்பா. கொழும்பு உலக சைவப்பேரவை, இலங்கைக்கிளை, 1வது பதிப்பு, ஜூலை 1999, (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், இல. 48B, புளுமென்டால் வீதி) 164 பக்கம், விலை: கனேடிய டொலர் 5. அளவு 22x14 சமீ.
1999 ஜூலை30 முதல் ஆகஸ்ட் 01 வரை கனடாவில் இடம்பெற்ற 7வது உலக சைவ மாநாட்டில் வெளியிடப்படவென உலக சைவப் பேரவை இலங்கைக்கிளையினால் பிரசுரிக்கப்பட்டது. இக் கிளையினால் ஞாயிறு தோறும் கொழும்பில் நடாத்தப்பெற்று வந்த சைவசித்தாந்த வகுப்பில் எடுத்தாளப்பட்ட விடயதானங்கள் இந் நூலுருவில் வெளிவருகின்றன. ஆசிரியரின் பதினொராவது படைப் பும் இதுவாகும்.
Ꭴ53 சிந்தனைக்கோவை. இரா.மயில்வாகனம். கொழும்பு இ.மயில் வாகனம், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி) Xxiv,76 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12 சமீ.
இந்துசமயத் தத்துவங்கள் சில, சிறு கட்டுரைகளாக 15 இயல் களில் தரப்பெற்றுள்ளன.
O54 சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள். மலர் வெளியீட்டுக் குழு (தலைவர்- த.சண்முகசுந்தரம்). தெல்லிப்பழை: சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மணிவிழாச் சபை வெளியீடு, 1வது பதிப்பு, 1985. (ஏழாலை; மஹாத்மா அச்சகம்) XV,238 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 24X17 சமீ.
பல்கலைக்கழக மாணவரும், சைவசமய ஆய்வாளரும், திருக் கோயில் நெறிப்படுத்துபவர்களும் படித்துப் பயின்று பயனடையக் கூடியதாக சைவ சித்தாந்தம் பற்றியும், சைவத் தமிழ்ப் பண்பாட்
18 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

180 இந்து தத்துவம்
டைப் பற்றியுமான 27 அறிஞர்களின் கட்டுரைகளைத் தாங்கி சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மணிவிழாவை யொட்டி வெளிவந்துள்ள சிறப்பு மலர்.
O55 சிவயோக சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளுக்கு அருளிய மணிமொழிகள். சிவயோக சுவாமிகள் (மூலம்). கனடா: இந்துசமயப் பேரவை, ஒன்ராறியோ, 1வது பதிப்பு, மார்ச் 1997. (கனடா: அபிராமி அச்சகம்) (2),26 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5X14 சமீ.
யாழ்ப்பாணத்துச் சிவயோக சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளுக்கு அருளிய மணிமொழிகளின் தொகுப்பு. ஆத்மஜோதி நா. முத்தையா அவர்களின் சிவபதப்பேற்றின் (8.9.1995) நினைவாக கனடாவில் பூரீ ஐயப்பன் ஆலயத்தில் யோக சுவாமிகளின் குருபூசை தின நிகழ்ச்சி யின் போது 23.03.1997 இல் வெளியிடப்பெற்றது.
Ꭴ56 சிறிமத் பகவத்கீதை. இ.இரத்தினம் (தமிழாக்கம்) சென்னை 600002. காந்தளகம், 834, அண்ணாசாலை, 1வது பதிப்பு, மார்ச் 1991 (சென்னை: காந்தளகம்) (8),83 பக்கம், விலை: இந்திய ரூபா 15. அளவு: 21x14 சமீ.
பகவத் கீதையின் மொழி பெயர்ப்பு விளக்க உரை இல்லை.
O57 சுவாமி ராமதாஸ் அருளுரைகள். பாகம் 1. ம.சி.சிதம்பரப் பிள்ளை.(தமிழாக்கம்), தெல்லிப்பழை: பூரீ துர்க்காதேவி தேவஸ் தானம், 1வது பதிப்பு, 1989. (ஏழாலை; மஹாத்மா அச்சகம்). 138 பக்கம், விலை: ரூபா 30, அளவு: 18x12 சமீ
இந்தியாவில் கஞ்சன் காடு ஆனந்தாச் சிரமத்தின் ஸ்தாபகர் சுவாமி இராமதாஸர் அவர்களது அருளுரைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு. பம்பாயிலிருந்து வெளிவரும் பவான்ஸ் ஜேர்னல் ஆங்கில சஞ்சிகையில் வந்த இக்கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஆத்மஜோதி சஞ்சிகையில் ஜூலை 1976 முதல் ஜூலை 1983 வரை வெளிவந்தன. அவற்றின் நூல்வடிவமே இதுவாகும்.
058 சைவசித்தாந்தம் மறு பார்வை. சோ.கிருஷ்ணராஜா.கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1998 (சென்னை 600006: சுமதி லேசர்ஸ்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 19

Page 24
180 இந்து தத்துவம்
96 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 17.5x12 சமீ.
பக்தியுகத்தை ஒட்டிச் சைவசித்தாந்தத்தின் பிறப்பு, அதன் ஒழுக்க வியற்போதனை, முத்திக்கோட்பாடு ஆகியவற்றை விளக்கும் நூல். சைவத்தை ஒரு நம்பிக் கையாகவும், சைவசித்தாந்தத்தை அறிவுபூர்வமாக சைவ நம்பிக்கையை நெறிப்படுத்தித் தரும் மெய் யியலாகவும் புரிதலே சமகாலரிதியான அறிவுநிலைக்குரிய பார்வையாகும். விமரிசனரீதியான அணுகுமுறையே ஐதீக நிலையிலிருந்து அறிவு நிலைக்கு எமது புரிதலை முன்னெடுத்துச் செல்லும் என்பதை உட்கிடையாகக் கொண்டது இந்நூல்.
O59 ஞான மணி டலம் . சுவாமி கெங் காதரானந்தா. திருக் கோணமலை: சிவயோகம் சமாஜம், பெருந்தெரு, 1வது பதிப்பு, 1984 (தாளையான் அச்சகம், 115, மெசெஞ்சர் வீதி) V,112 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12.5 g.
சுவாமி கெங்காதரானந்தாவின் பல்வேறு ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. கடமையைச் சரிவரச்செய்தல், பரிசுத்தமான இதயத் தோடு வாழல், தெய்வ சரணாகதி ஆகிய மூன்று அடிப்படை உபதேசங்கள் பல்வேறு கோணங்களில் உரைக்கப்பட்டுள்ளன.
O60 ஞானச்சுடர், ஆ.கந்தையா. கொழும்பு 6 ஆகந்தையா, நடனா லயம், இல.4, 40வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1987. (கொழும்பு 14. ஸ்டார்லைன் அச்சகம்). 78 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18X13 சமீ.
ஆசிரியரால் பல்வேறு காலகட்டங்களிலும் எழுதப்பெற்ற பத்து சமயக் கட்டுரைகளின் தொகுப்பு. 7 ஆராய்ச்சிக் கட்டுரைகள், இரு விளக்கக் கட்டுரைகள், ஒரு உண்மைச் சம்பவம் ஆகியன இத் தொகுப்பில் அடங்குகின்றன. தேவாரம், பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் உள்ள சில அம்சங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளாகளின் கருப் பொருள்களாகும்.
O6 ஞானரத்நாவளி. காசிவாசி செந்திநாதையர். யாழ்ப்பாணம்: மில்க் வைற் தொழிலகம், காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1984. 1வது பதிப்பு, 1892, 2வது பதிப்பு, 1947. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்)
20 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

180 இந்து தத்துவம்
18 பக்கம். விலை: இலவசம். அளவு: 185x12.5 சமீ.
ஞானரத்நாவளி சைவசமயத்தை இரத்தினச்சுருக்கமாக விளக்குவது. சென்னை ஞானப்பிரகாச அச்சகத்தில் 1892இல் வெளியிடப்பட்டது. திருமயிலை சே.வெ.ஜம்புலிங்கம் பிள்ளை அவர்கள் இதை 2வது பதிப்பாக 1947இல் வெளியிட்டார். மூன்றாவதான இப்பதிப்பு இலவச வெளியீடாக மில்க்வைற் தொழிலகத்தினால் விநியோகிக்கப்பட்டது.
062 பரவெளிதி தத்துவம் . புலவர் நா. சிவபாதசுந்தரனார். (புனைபெயர். தொல்புரக்கிழார்). வட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கம், வட்டுக்கோட்டைத் தொகுதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: விபுலானந்த அச்சகம்) (16),57 பக்கம், விளக்கப்படம், 3 தகடுகள். விலை: ரூபா 15. அளவு: 25X19 gyf5.
பரவெளித்தத்துவம் அல்லது பதிமுதுநிலைத்தோற்ற விளக்கம் எனப் படும் இந்நூல், சிவதத்துவ-வான்தத்துவ ஒப்பீட்டு ஆய்வு நூலாகும். மதுரையில் நடந்த 5வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவாக வெளியிடப்பெற்றது.
O63 வஜனாம்ருதம். பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா. திருக்கோண மலை: சிவயோகசமாஜம், பெருந்தெரு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1988. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி) 44 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12 gß.
சுவாமி கெங்காதரானந்தாவின் 214 அருள்வாக்குகளைத் தொகுத்து 1978 இல் வெளிவந்த வஜனாம்ருதமும், பின்னாளில் சேர்க்கப்பட்ட 41 அருள்வாக்குகளைக்கொண்டதாக 1984இல் வெளிவந்த ஞான மண்டலமும் இணைந்ததாக வெளியிடப்பட்ட நூல் இதுவாகும்.
O64 வேதமும் வருணங்களும். கே. சுப்ரமண்ய வாரியார். நல்லூர்: சாந்திநிலையம், 1வது பதிப்பு, தை 1983. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், கண்டிவீதி) 26 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
பிரம்ம, ஷத்திரிய, வைசிக, சூத்திர ஆகிய நான்கு வர்ணங்களையும் விளக்குவதுடன், வேதாகம அறிவையும் வழங்கும் நூல்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 21

Page 25
180 இந்து தத்துவம், 190 சோதிடம்
O65 முநீ ராமகிருஷ்ண பரமவுறம்ச தத்துவம். ப.சந்திரசேகரம். யாழ்ப்பாணம் : பூரீ இராமகிருஷ்ணாலயம், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). (8),10 பக்கம், 1 தகடு விலை: ரூபா 6.50. அளவு: 22x14 சமீ.
தக் கணேஸ்வரக் காளிகோயில் அமைப்பு, ஐக்கியநாடுகள் சபையின் கொள்கை போன்ற இன்னோரன்ன விடயங்களுடன் மனிதனின் பொதுவான வாழ்க்கைக் கோட்பாட்டை ராமகிருஷ்ண பரமஹம்ச தத்துவத்துடன் தொடர்பு படுத்தியுள்ளார்.
190 சோதிடம், வானசாஸ்திரம்
O66 எண் சோதிட ஜோதி. எஸ்.பி.வைலற் சரோஜா. திருக்கோண மலை; எஸ்.பி.வைலற் சரோஜா, 1வது பதிப்பு.1983. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்.) (12),146 பக்கம். விலை: ரூபா 18. அளவு 12x18சமீ.
நியுமரலோஜி எனப்படும் எண் சோதிடக்கலை பற்றிய நூல்.
O67 சரசோதிமாலை. போசராசபண்டிதர் (மூலம்). யாழ்ப்பாணம்: இ. வெங்கடேச ஐயர், சோதிட பரிபாலனமடம், 3வது பதிப்பு, சித்திரை 1985. 1வது பதிப்பு, பங்குனி 1892 (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை) vi,120 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x14 சமீ.
சரசோதிமாலை என்னும் இச்சோதிட நூல் தம்பை மாநகரத்தரசன் பராக் கிரமவாகு மகாராசன் கேட்டுக் கொண்டபடி பிரமகுல திலகராகிய தேனுவரைப் பெருமாள் என்னும் போ சராச பண்டிதர் இயற்றியது. யாழ்ப்பாணம் நல்லூரைச் சார்ந்த கொக் குவில் சோதிடர் இரகுநாதையராலும்,மேற்படியூர் சு.நடராசையராலும் பல பிரதிருபங்களைக் கொண்டு பரிசோதித்தது. மூன்றாம் பதிப்பு, குரோதன வருடம் சித்திரை மாதம் (1985) இல் அச்சிடப்பட்டது.
22 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

200 சமயங்கள், 220 கிறிஸ்தவம்
200 FIDukla,6f
220 கிறிஸ்தவம்
O68 அல்லைப்பிட்டிப் பதி அருளப்பர் அம்மானை. பா.சத்திய சீலன். மானிப்பாய்: கலாதேவி சத்தியசீலன், கலை வண்ணம், நவாலி தெற்கு, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: பூரீ லட்சுமி அச்சகம், 222 ஆஸ்பத்திரி வீதி). 82 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18.5x12 சமீ.
அண்ணல் யேசுவிற்கு அருள்முழுக்குத் தந்தவரான அருளப்பரைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட அம்மானை.
O69 − உலகினார்க்கு ஓர் உடன்பிறப்பு: சார்ள்ஸ் டி.புக்கோ. சத்தியசீலன். யாழ்ப்பாணம்: வண.ஜே.இ.ஜெயசீலன், PaxChrist, 1வது பதிப்பு, 1990. (மானிப்பாய்: வீ ஜே. அச்சகம்) 32 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
சார்ள்ஸ் டி.ட்புக்கோ அடிகளின் (Brother Charles) வாழ்க்கை வரலாறு பாவடிவில் எளிய முறையில் கூறப்பட்டுள்ளது.
O7Ο எண்பதிலிருந்து எண்பத்தெட்டு வரை. வண. வின்சென்ட் பற்றிக். யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1989. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்) 92 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18.5x12 சமீ.
சமய போதனைகளை சமூகப்பார்வையுடன் அணுகும் ஒரு முயற்சி. 1980 முதல் 1988 வரையிலான காலப்பகுதியில் எம்மைச் சுற்றி நிகழ்ந்த அன்றாட சமூக, அரசியல் நிகழ்வுகளை அலசும் வகையில் அமையும் இது இளைஞர்களுக்கானதொரு கடிதத்தொகுப்பு.
O7 : செபமாலைத் தியானம். துரை ஆரோக்கியதாசன். யாழ்ப்பாணம்: துரை-றோசலீன் படிப்பகம், 60 கோவில் வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சென். பிலோமினா அச்சகம்) 18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 16.5X10.5 சமீ.
செபமாலை(Rosary) ஒதும் விதமும் தியான ஒழுங்கு விதிகளும் இந்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 23

Page 26
220 கிறிஸ்தவம்
நூலில் விளக்கப்பெற்றுள்ளன.
O72 திருக்குறளும் விவிலியமும். இரண்டு பாகங்கள். ம.பாவிலுப் பிள்ளை. மக்கொனா; ம.பாவிலுப்பிள்ளை, 1வது பதிப்பு, 1980, (மக்கொனா, புனித விசேந்தி அச்சகம்) Xxi,164 பக்கம். விலை: தனிப்பிரதி: ரூபா 5. இரு பாகங்களும்: ரூபா 10. அளவு: 22X14 சமீ.
திருக்குறளின் பொருளும் தத்துவக்கருத்தும் ஒழுக்கநெறி விளக் கமும் விவிலிய ஒப்புமையும் ஒருங்கமைந்த நூல். முதற்பாகம் கடவுளர் குடும்பம் பற்றியதாகவும் இரண்டாம் பாகம் மானிடக் குடும்பம் பற்றியதாகவும் தொகுக்கப் பெற்றுள்ளன.
O73 பக்தர்களை இரட்சிக்கும் பரமனவன் கருணை வடு)ழி. கோ. சுப்பிரமணியம். சுன்னாகம்: சமய சமூக ஆய்வுக்கான கிறிஸ்தவ நிறுவனம், மருதனார் மடம், 1வது பதிப்பு, 1987, (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14சமீ.
இயேசு பிரானின் வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளிற் சிலவற்றையும் விளங்கிக்கொள்ள உதவிடும் கவிதை நூல்.
O74 L605 u 6ð. (3u6s , 6f. Lusi só ai . (6.f. f) Colombo 13: Amora Publications, 95, 115 Ratnam Road, 16 g Luft, gay buy 1992. (Colombo 12: Linra's Printers, 282/15 Dam Street) 62 பக்கம், விலை: ரூபா 44 அளவு: 20.5X14 சமீ.
சிந்திக்கத் தூண்டும் இறையியல் கருத்துக்களை தேர்ந்து, சிறு சிறு பந்திகளாக அமைத்து, விவிலியத்திலுள்ள சில வார்த்தை களை மேற்கோள் காட்டி 50 தலைப்புகளில் விபரிக்கும் நூல்.
O75
. வின்சன்ட் பற்றிக். (வி.பி) யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, மார்கழி 1986. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்) (8),84 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12.5 சமீ.
மனிதன், உடல் உள்ளம் ஆன்மா சார்பான முழுவாரியான முழு
24 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

220 கிறிஸ்தவம், 294.3 பெளத்தம், 2945 இந்து சமயம்
மனித விடுதலையை எய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவது விடுதலை இறையியலாகும். நிகழ்காலத்தில் நாம் எதிர்கொள் ளும் இருள்சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க தீர்க்கமான முடிவுகளை எடுத்துச் செயற்படத் துண்டுகோலாக இந்நூல் அமைகின்றது.
மேலும் பார்க்க; 138, 185, 186, 284, 360, 738
294.3 பெளத்தம்
மேலும் பார்க்க: 110
294.5 இந்து சமயம்
O76 அகத்தியர் தேவாரத் திரட்டு. ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: பூரீலயூரீ ஆறுமுக நாவலர் சபை, 2வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: பூரீகாந்தா அச்சகம், வண்ணார்பண்ணை) 62 பக்கம், தகடு. விலை: ரூபா 10. அளவு; 21X14 சமீ.
அகத்திய மகா முனிவர் திரட்டியளித்த தேவாரப் பதிகங்களை பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பரிசோதித்து, நூல் வடிவில் வெளியிட்டிருந்தார். அந்நூலின் பிரதிகள் எதுவும் தற்போது இல்லாத நிலையில் ஆறுமுகநாவலர் சபையின் மீள்பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.
077 ஆற்றங்கரையான். அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முக தாஸ். பருத்தித்துறை: வாராவொல்லை வெளியீடு, தும்பளை, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம், ஆசீர்வாதம் அச்சகம், 50 கண்டி வீதி) XXVi +xvi,184 பக்கம். விலை: ரூபா 50. அளவு: 18.5X13 சமீ.
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோயில் பற்றிய ஓர் ஆய்வு நூல்.
O78 இணுவைச் சிவகாமியம்மை தமிழ். இணுவைச்சின்னத்தம்பிப் புலவர்(மூலம்), தமிழவேல் இ.க.கந்தசாமி (பதிப்பாசிரியர்). கொழும்பு 12. குமரன் புத்தக நிலையம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (Colombo 12: The Kumaran Press) 52 பக்கம். விலை: ரூபா 40. அளவு; 21X14 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 25

Page 27
294.5 இந்து சமயம்
யாழ்ப்பாண அரசர் காலத்தில் சிதம்பரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட சிவகாமித் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து சிவகாமி அம்பாள் ஆலயம் இணுவிலில் அமைக்கப்பட்டது. பழமையும் அற்புதமும் வாய்ந்த இத்திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட சின் னத்தம்பிப் புலவர் பாடியதே சிவகாமி அம்மைத்தமிழ்.
O79 இத்தி மரத்தாள். அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ். பருத்தித்துறை: வாராவொல்லை, அன்பர் வெளியீடு. 1வது பதிப்பு, ஜூலை 1985. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50 கண்டி வீதி) xiv,108 பக்கம், தகடுகள். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
பருத்தித்துறை, தும்பளைப்பகுதியில் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் பற்றிய வரலாற்று ஆய்வு நூல்.
O8O இலங்கைத் திருக்கேதிச்சரக் கோயில் வரலாறு. தி.பட்டுச்சாமி ஒதுவார் (மூலம்). மு.ஞானப்பிரகாசம் (புதுக்கித் தொகுத்தவர்). திருக்கேதீஸ்வரம்: ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம், திருவாசக மடம், 2வது பதிப்பு, ஏப்ரல் 1984. 1வது பதிப்பு, 1974. (யாழ்ப் பாணம்: பூரீகாந்தா அச்சகம், 213 காங்கேசன்துறை வீதி) X,102 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 22x14 சமீ.
திருக்கேதீச்சரக் கோயில் வரலாறு. அங்கே நிகழும் நித்திய நைமித்தியங்கள், வழிபடும் முறை பற்றித் தெரிவிக்கும் நூல் முதற் பதிப்பு வெளியான (1974) காலத்தின் பின்னர் இடம்பெற்ற பல்வேறு திருப்பணிகளும் இப்பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
O8. இலங்கைத் திருநாட்டின் இந்துக்கோயில்கள். நூலாக்கக் குழு. கொழும்பு 4: பிரதேசஅபிவிருத்தி இந்துகலாச்சார அமைச்சு, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு அரசாங்க அச்சகக்கூட்டுத்தாபனம்) 490 பக்கம், வரைபடம், தகடுகள், வண்ணப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x14 சமீ.
இலங்கையின் இந்து ஆலயங்களின் விபரங்கள் அடங்கிய நூல். மாவட்டரீதியாக 23 மாவட்டங்களிலும் இருக்கும் கோவில்களின் பூசை நேரங்கள், கோவில்மேற் பாடப்பெற்ற பாடல்கள் பற்றிய குறிப்புகள், கோவில் சார்ந்த பணிமன்றங்களின் விபரம் போன்ற தகவல்கள், கோவில்களின் புற அமைப்பு, அக அமைப்பு, விக்கிர கங்கள், வாகனங்கள் ஆகியவற்றின் வண்ணப்புகைப்படங்கள்
6 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

2945 இந்து சமயம்
ஆகியவற்றின் தொகுப்பாக வெளியிடப்பட்டதொரு உசாத்துணைநூல்
O82 ஈழத்தில் சிவ வழிபாடு. ப.கோபாலகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: கதிரவேலு கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம், செட்டியார் அச்சகம்) 22 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
சிவவழிபாடு வரலாறு கடந்தது. அதன் தோற்றுக்காலம் அறுதியிட்டுக் கூறமுடியாதது. இந்தியாவிலேயே பெருஞ்சிறப்படைந்திருந்த சிவ வழிபாடு இலங்கையிலும் தனக்கேயுரித்தான புராதன வரலாற்றைக் கொண்டு மிளிர்கின்றது. அத்தகைய ஒரு வரலாற்றுப்போக்கிை எடுத்துக்கூறும் சிறு நூல் இதுவாகும்.
O83 ஒன்பதாந் திருமுறை. ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம். கொழும்பு: ஈழத்துத் திருநெறித்தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1980. (கொழும்பு 2: வெட் பிரின்ட்) 164 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 14X11 சமீ.
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை அரும்பத விளக்கத் துடனும் குறிப்புரைகளுடனும் இடம்பெற்றுள்ளன. ஈற்றில் பாட்டு முதற் குறிப்பகராதியும் காணப்படுகின்றது.
O84 கணபதியே காப்பு. க.இராமசுவாமி. யாழ்ப்பாணம்; துவாரகை, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, சித்திரை 1983. (யாழ்ப்பாணம்: பூரீ சண்முகநாத அச்சகம்) 56 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14 சமீ.
வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கும் நிகழ்ச்சி களுக்கும் இந்துசமயம பற்றிய சில அம்சங்களுக்கும் பாரம்பரியத்தி லிருந்து விலகாதவாறு புதிய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
O85 கந்தபுராண வரலாற்றுச் சுருக்கம். மா.மாணிக்கம். தெல்லிப்பழை: பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, பங்குனி 1989. (அளவெட்டி: பூரீமகள் அச்சகம்) (14),144 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20.5X14.5சமீ.
பதினெண் புராணங்களுள் சிறந்ததொன்றுாகிய கந்தபுராணத்தின் வரலாற்றுச் சுருக்கம் எளிய ஈடியிஜ்ங்குக்ப்பெற்றுள்ளது.
1. TY: A.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 27

Page 28
2945 இந்து சமயம்
O86 கலசம்: 25வது சிறப்பிதழ். மு.நற்குணதயாளன் (ஆசிரியர்) லண்டன்; பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கப் பதிப்பகம், 1வது பதிப்பு, 1999. (இலண்டன்: வாசன் அச்சகம்) 160 பக்கம், புகைப்படம். விலை: ஸ்டேர்லிங் பவுண். 2. அளவு: 27x19.5 F5.
இலண்டனிலிருந்து வெளிவரும் ஆன்மீகக் காலாண்டிதழின் தைமாசி-பங்குனி, 1999 இதழ் 25வது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பல்வேறு இந்து சமயக் கருத்துக்களையும் தத்துவங்களையும் விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
O87 கனடாவில் சைவசமயம். வி.கந்தவனம். கனடா: இந்துசமயப் பேரவை, ஒன்ராறியோ, 1வதுபதிப்பு, ஆகஸ்ட் 2000. (ஒன்ராறியோ: விவேகா அச்சகம்) 120 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X13.5 சமீ.
கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வின் வளர்ச்சிப்படியில் சமயமும் இணைந்து காணப்படுகின்றது. சைவசமயத்தின் வளர்ச்சியின் அளவுகோலாக அமையும் வகையில் கனடாவில் சைவசமய நிறுவனங்களின் பங்களிப்புகள், முயற்சிகள், பெறுபேறுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் வகையில் அமையும் நூல்.
O38 காரைநகர்-பயிரிக்கூடல் ருநீ சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ். சீவிநாசித்தம்பிப்புலவர். காரைநகர்: எம்.ஏ.கந்தையா, 1வது பதிப்பு, மார்கழி 1987 (காரைநகர்: பாலா அச்சகம்) (30),69 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5சமீ.
தமிழில் வழங்குகின்ற 96 பிரபந்த வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று. பாட்டுடைத்தலைவனைக் குழந்தையாக வைத்துப் பாடப் படுவது பிள்ளைத்தமிழாகும். முருகப்பெருமானைக் குழந்தையாகப் பாவித்து ஆக்கப்பெற்றது இப்பிள்ளைத்தமிழ் நூலாகும்.
O89 கோணமலை அந்தாதி. சு.ஆறுமுகம் (மூலம்) இ.வடிவேல் (பதிப்பாசிரியர்). கொழும்பு: இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு: அரசாங்க அச் சகக் கூட்டுத்தாபனம்). (20),72 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X13.5சமீ.
28 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

294.5 இந்து சமயம்
திருக்கோணேசர் மேற் பாடப்பெற்ற அந்தாதி. திருக்கோணமலை சைவசந்தானத்தைச் சேர்ந்தவரும் ஆறுமுக முதலியார் என்று அழைக்கப்பெற்றவருமான புலவர் சு.ஆறுமுகம் அவர்களால் இயற்றப் பெற்று 1856ஆம் ஆண்டளவில் முடிக்கப்பெற்ற அந்தாதியின் நூல் 6) Its 6). D.
O90 சண்முகா சரணம். இ.வடிவேல், திருக்கோணமலை: அருள்மிகு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1988, (யாழ்ப் பாணம்: நியு உதயன் பப்ளிக்கேஷன்ஸ்) (14),110 பக்கம், 3 தகடுகள். விலை: ரூபா 15. அளவு 21X14 சமீ.
திருக்கோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமிஆலய வரலாற்றுச் சுருக்கம், விநாயகருக்குச் சிறப்பு விளக்கம், மூலமூர்த்திகளைப் பற்றிய விளக்கம் போன்ற அம்சங்களையும், திருப்பள்ளியெழுச்சி, பூரீ சண்முக சரணப்பதிகம், மாத, வாரப் பதிகங்கள், ஸ்கந்த சஷ்டித் தியானப்பதிகம், சண்முகப்பெருமான் திருவூஞ்சல் போன்றவற்றையும் கொண்டுள்ளது. பஞ்சபுராணத்திரட்டு, திருப்பள்ளியெழுச்சி, திருவெம் பாவை, திருப்பொற்சுண்ணம், சிவபுராணம் போன்ற பொதுவான பதிகங்கள் பலவும் தொகுத்து இணைக்கப்பெற்றுள்ளது.
O91 சிவயோகம் மலர். பொன்.பாலசுந்தரம் (தொகுப்பாசிரியர்). லண்டன்: ரூட்டிங் அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில், 1வது பதிப்பு, 2001. ( இலண்டன்: வாசன் அச்சகம்) 208 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 10. அளவு: 28X21 öruð.
பல்வேறு சமயக் கட்டுரைகளும் கலை, பண்பாட்டு உணர்வினை புகலிடத் தமிழர் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த பலவினக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. கோவிலின் அறங் காவலர் சபை, அதன் அங்கத்தவர் குடும்பப் புகைப்படங்களும், சபை, கோவில் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
O92 சுந்தரர் பிள்ளைத்தமிழ், சோ. தியாகராசபிள்ளை. கொழும்பு 7: பூரீலறி ஆறுமுகநாவலர்சபை, 4 ஹோல்டன் ரெரஸ், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்; கலைவாணி அச்சகம்) xi,72 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18X12.5 சமீ.
சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 29

Page 29
2945 இந்து சமயம்
பெற்ற பிள்ளைத்தமிழ்.
O93 செவ்வேள், ஆ.கந்தையா. கொழும்பு 7: இலங்கைத் தேசிய நூலகசேவைகள் சபை, 1வது பதிப்பு, 1985. (கொழும்பு அரசாங்க அச்சகம்) 156 பக்கம், விளக்கப்படங்கள் 10. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20x14 சமீ.
சைவபக்தி இலக்கியம் தொடர்பான 4 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கியது. பரிபாடலிலுள்ள செவ்வேள் மேற்பாடப்பட்ட எட்டுப் பாடல்களையும் விளக்கும் கட்டுரைகள் அவையாகும்.
O94 சைவ சமயமும் சர்வமத சமரசமும். நா.சி.கமலநாதன். (&gģLDGriff: G0D3F6nugög56ųþ DEBITIFIÉlabb, Hassel Riede 9, 30900 Wede mark, Germany, 1வது பதிப்பு, 1995, (அச்சக விபரம் குறிப்பிடப் படவில்லை) 62 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் எவ்வாறு பிற உலக மதங்களுடன் ஒத்துப் போகின்றன என்பதை விளக்கும் நூல்.
O95 சைவ நற்சிந்தனை. கோப்பாய்சிவம். கிளிநொச்சி. திருநெறிக் கழகம், 1வது பதிப்பு, 1986, (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 20 பக்கம். விலை: ரூபா 4. அளவு; 21X14 சமீ.
இந்நூலில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான சைவ நற் சிந்தனைகள் பத்து அடங்கியுள்ளன. உதயகாலத்தின் உயர்வை விளக்குவதோடு ஆரம்பமாகி, மிகவும் நன்மை பயப்பதான நாம பஜனை, பிரபஞ்ச தத்துவம், ஒலியின் சக்தி, ஆகிய பல்வேறு அம்சங்களையும் விளக்கி, இறுதியில் விளக்கமறியா வழக்கம் என்ற சிந்தனையோடு நூல் முடிவுறுகின்றது.
O96 சைவ நற்சிந்தனைகள். சி.கணபதிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சி.கணபதிப்பிள்ளை, மூன்றாம் பதிப்பு, 1981. 1வது பதிப்பு 1959, 2வது பதிப்பு, 1980 (சுன்னாகம் திருமகள் அழுத்தகம்) (4),44 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
30 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

2945 இந்து சமயம்
பண்டிதமணியின் சைவநற்சிந்தனைகள் முதலிரு பதிப்புக்களின் உள் ளடக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவை என்ற கட்டுரை இப்பதிப்பில் அனுபந்தமாக இணைக்கப் பட்டுள்ளது.
O97 சைவ விரதங்களும் விழாக்களும் . ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்), ஆவரங்கால், புத்தூர். 1வது பதிப்பு, 1988. (மட்டுவில்: திருக்கணித நிலையம்) 152 பக்கம், அட்டவணை, வரைபடம். விலை: ரூபா 30, அளவு: 12X17 &#f5.
சைவ சமயத்தவர்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்கள், விழாக்கள், புனித பண்டிகைகள் முதலியவற்றை விபரிக்கும் நூல். குறிப்பாக, அவை ஆரம்பித்த வகை, அனுஷ்டித்துப் பயன் பெற்றவர் விபரம், மற்றும் இவை தொடர்பான புராணக் கதைகள் முதலியனவும் தொகுக்கப்பெற்றுள்ளது.
O98 சைவத் திருக்கோவிற் கிரியை நெறி. கா.கைலாசநாதக் குருக்கள். கொழும்பு 11: பூரீ முத்துவிநாயகர்கோவில், 221 செட்டியார் தெரு, 2வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு, ஜூலை 1963. (Colombo 10 Print Pack Ltd., No. 1, Sri Sangaraja Mawatha) xxi,299 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ
பூரீ முத்து விநாயகர் வேதாகம ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் வெளியீடு. சைவத் திருக்கோயில்களில் அன்றாடக் கிரியைகளை நிகழ்த்த இன்றியமையாத அம்சங்களைச் சுருக்கமாக விளக்கிக் கூறும் நூல்.
O99 சைவத் திருமுறைகளின் விழுமியம். முருக வே.பரமநாதன் (ஆழ்கடலான்). கனடா: இந்துசமயப்பேரவை, ஒன்ராறியோ, 1வது பதிப்பு, நவம்பர் 2000. (கனடா! விவேகா அச்சகம்) X48 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5X14 சமீ.
சைவசமயம் தழைத்தோங்கவும் அருள் நெறி எங்கும் பரவவும் சமயகுரவர், சந்தானகுரவர் பணியாற்றினர். அவர்களின் பாசுரங்கள் அடங்கிய தொகுப்பே திருமுறைகளாகும். இத்திருமுறைகளின் பெருமை, அவற்றை ஒதவதால் காணும் நன்மைகள் என்பவற்றின் விளக்கம் இந்நூலாகும்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 31

Page 30
294.5 இந்து சமயம்
OO சைவாலயங்கள்-கிரியைகள்: ஒரு கையேடு. கோப்பாய் சிவம். புத்தூர்: ப.சிவானந்தசர்மா, சிவன் கோயில் அருகாமை, ஆவரங்கால். 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1986. (சுன்னாகம்; திருமகள் அழுத்தகம்) Ivi,(6) விளக்கப்படம், அட்டவணைகள். விலை: ரூபா 10. அளவு: 18.5x12.5 guð.
கோயில்களில் வழிபடச் செல்பவர்கள் அங்கு நிகழும் கிரியை களைப்பற்றித் தெரிந்துகொண்டால் வழிபாடு பெரும் பயனுள்ளதாக அமையும். இவ்வுண்மையைக் கருத்திற்கொண்டு வழிபடுபவர்களுக் குக் கிரியை பற்றிய அறிவை வழங்கும் சிறந்த நூல். ஆலய நிர் வாகிகள், சிவாச்சாரியார்களுக்கும் ஏற்றது.
O செளந்தர்யலகரி. ச.சுப்பிரமணியம். ஆவரங்கால்: சிவன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: பூரீ லட்சுமி அச்சகம், 37 கண்டிவீதி, சுண்டிக்குளி) XXXi,74 பக்கம், தகடுகள், விலை: சாதாரண பதிப்பு: ரூபா 15. விஷேட பதிப்பு: ரூபா 20. அளவு: 17.5x12.5 சமீ.
ஆதிசங்கரர் அருளிய செளந்தர்யலகரியின் தமிழாக்கம். பாடல் களின் பாராயணபலன், இலக்குமிதோத்திரம் ஆகியனவும் இணைக் கப்பட்டுள்ளன.
102 தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும், இராஜேஸ் வரி பாலசுப்பிரமணியம். கோயம்புத்தூர் 641009: நிகழ், 123 காளீசுவரர் நகர், 1வது பதிப்பு, மே 2000. (கோயம்புத்தூர் 12. ஜி. 6ub. Liflodil" gosbLub) (8),120 பக்கம். விலை: இந்திய ரூபா 35. அளவு: 18x12 சமீ.
இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ்க் கடவுள் முருகன் பெறும் இடத்தினை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றார். ஆரியர்-திராவிடர் இன மொழிச்சிக்கல்களை ஆங்காங்கே எடுத்துக் காட்டுகின்றார். அதன்மூலம் திராவிடத் தொன்மையின் தொலைந்து போன சில கோட்பாடுகள், அன்று மறைக்கப்பட்ட உண்மைகளின் வெளிப்பாடே முருகவழிபாடாகும் என்று குறிப்பிடுகின்றார்.
103 தமிழர் சமய வரலாறு. ஆவேலுப்பிள்ளை. சென்னை 600005; பாரி புத்தகப்பண்ணை, 1வது பதிப்பு, அக்டோபர் 1980. (சென்னை
32 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

294.5 இந்து சமயம்
05. வெற்றி அச்சகம்) 240 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.
தமிழர் சமய வரலாறு. ஆ.வேலுப்பிள்ளை. சென்னை 600005; பாரி புத்தகப்பண்ணை, 2வது பதிப்பு, ஜூன் 1985, (சென்னை 05: கல்விப்பிரகாசம் பிரஸ்) 240 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 18X12.5 சமீ.
தமிழர்களது சமய வரலாறு 25 கட்டுரைகளின் வாயிலாக விபரிக்கப் பட்டுள்ளது.
104 தரிசனம். நா.முத்தையா. கனடா: இந்துசமயப் பேரவை, 1வது பதிப்பு, ஆனி 1995. (சென்னை 2 காந்தளகம், 834 அண்ணாசாலை) 84 பக்கம், கோட்டுச் சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள் தான் தரிசித்த 10 மகான்கள் பற்றி இந்நூலில் விபரிக்கின்றார். ரமணர், சுத்தானந்தர், சாயிபாபா, யோகர், சிவானந்தர், சித்தானைக்குட்டி, ஞானானந்தர், இராமதாசர், காட்டுச்சாமியார், சடைவரதர் ஆகிய பதின்மர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் இந்நூலில் இடம்பெறுகின்றன.
1 Ꭴ5 திருக்கதிர்காமப் பிள்ளைத்தமிழ். சிவங்கருணாலயப் பாண்டியப் புலவர். கொழும்பு பிரதேச அபிவிருத்தி இந்துசமய இந்துகலாச்சாரத் தமிழ் அலுவல்கள் அமைச்சு, 2வது பதிப்பு, 1983. முதற் பதிப்பு, 1937. (கொழும்பு அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்) 123 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21x14 ff.
கதிர்காமத்து முருகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு அவர் மீது பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ். புதிய பதிப்பில் குல.சபாநாதன் அவர்கள் எழுதிய திருக்கதிர்காம வரலாறு என்ற கட்டுரையும் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
106 திருக்கோணமலை கோணேசர் கோவில் வரலாறு. இ.வடிவேல். திருக்கோணமலை: இந்துதர்ம வெளியீடு, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு 12: நியுலீலா அச்சகம், மெசெஞ்சர் வீதி). 56 பக்கம், விளக்கப்படம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5x14 gifs.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 33

Page 31
2945 இந்து சமயம்
ஆலய வரலாறு, ஆலயமூர்த்திகளின் அட்டவணை, மூர்த்திகள் அமைந்துள்ள ஸ்தானங்களின் மாதிரிப்படம், மூர்த்திகளின் விளக் கம், பாவநாசதீர்த்தம், தலத்தேவாரம், திருமுறைச் செல்வம் ஆகியன உள்ளிட்ட 10 அத்தியாயங்களில் திருக்கோணேஸ்வரர் ஆலயம் பற்றிய பயனுள்ள தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
O7 திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள். இ.வடிவேல். கொழும்பு பிரதேச அபிவிருத்தி, இந்துசமய, இந்துகலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1982. (கொழும்பு: அரசன் அச்சகம்). 328 பக்கம், வரைபடம், புகைப்படங்கள். விலை: ரூபா 25, அளவு: 22Χ14 σLδ.
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள 65 இந்து சமயக் கோவில் கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அடங்கியுள்ளன. யாத்திரீகர் களுக்கு ஏற்ற தகவல்கள் உள்ளன. கோவில்கள் யாவும் 14 தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 9 பிரதான கோவிலி கள் தனித்தனி அத்தியாயங்களாகவும் (உதாரணம்: கோணேஸ்வரம்) எஞ்சியவை 5 பிரதான தெய்வங் களின் பெயர்களின் கீழும் (உதாரணம்: சிவன்கோவில்கள்) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
O8 திருமுறைக் கதைகள். நா.முத்தையா கனடா: இந்துசமயப் பேரவை, ஒன்ராறியோ, 1வது பதிப்பு, ஆவணி 1999. (கனடா: விவேகா அச்சகம்) xi,51 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
சைவத்திருமுறைகளில் 4,5,6ம் திருமுறைகளை நமக்கருளிய திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்து சிறு கதைகளாக்கி பெரியவர்களும், சிறியவர்களும் அறியும் வண்ணம் தொகுத்துள்ளார். மொத்தம் 18 கதைகளின் வாயிலாக இந்து சமயத்தின் தத்துவங்கள் வாழ்வியல் அறிவுரைகள் ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
O9 திருமுறைப் பெருமை. ரீலழரீ சுவாமிநாத பண்டிதர் (மூலம்) க.வைத்தீஸ்வரக் குருக்கள் (பதிப்பாசிரியர்), யாழ்ப்பாணம் : காரைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப் பாணம்: கு.வி. அச்சகம்) 68 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
34 நூல்தேட்டம் saam தொகுதி ஒன்று

2945 இந்து சமயம்
சைவத்திருமுறைகளின் பெருமையினை விளக்கும் நூல். யாழ்ப் பாணம், கந்தர்மடம் பூரீலழரீ சுவாமிநாத பண்டிதர் 1911 இல் தாம் அடங்கன் முறையில் எழுதி வெளியிட்ட திருமுறைப்பெருமை என்ற கட்டுரையும், க.சி.குலரத்தினம் அவர்கள் எழுதிய பூரீலழரீ சுவாமிநாத பண்டிதரின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரையும் அடங்கியுள்ளன.
1 O திருவாசகரும் இலங்கைப் பெளத்தமும், ஆவேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம். இவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டியல் நிறுவனம், திருநெல்வேலி. 1வது பதிப்பு, நவம்பர் 1989. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) (8),12 பக்கம். விலை: ரூபா 15. அளவு 21X14 சமீ.
கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் நினைவுப் பேருரை. மாணிக்கவாசகர் சுவாமிக்கும் இலங்கைப் பெளத்தத்துக்கும் இடை யிலான தொடர்பு பற்றிய ஆய்வு.
திருவாதவுபூரடிகள் புராணம்: திருவெம்பாவை: உரைக் குறிப்புடன். நா.கனகரத்தினம்(பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: ரீலங்கா அச்சகம்) xiv,208 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5x12.5 சமீ.
மணிவாசகரின் வாழ்க்கை வரலாற்றை வழங்கும் புராணநூல். சைவசித்தாந்த ஞானத்தை உள்ளிடாகவும், சிவாகம விதி முறை களைச் சட்டகமாகவும் வனப்புமிக்க திவ்வியசரிதையை வண்ண வடிவாகவும் கொண்டுள்ள உயிர்ப்புள்ள திருநூல்.
2 தில்லைக் கூத்தன் பக்திப்பாமாலை. சிவநாயகி தியாகராஜா (மூலம்), மு.கந்தையா(உரையாசிரியர்). தெல்லிப்பழை, சிவநிலையம், 1வது பதிப்பு, சித்திரை 1987 (ஏழாலை, மஹாத்மா அச்சகம்) XX,53 பக்கம், 2 தகடுகள். விலை: ரூபா 20. அளவு: 21X14 சமீ.
சிவதத்துவவிளக்கமான சைவசித்தாந்த உண்மைகளை உள்ளடக் கியதான இப்பக்திப்பனுவலின் ஒவ்வொரு பாவுக்கும் எல்லோரும் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கமும் உள்ளது.
113
தெல்லிப்பழை முறி துர்க்காதேவி தேவஸ்தானம். தங்கம்மா அப் பாக்குட்டி. யாழ்ப்பாணம்: முரசொலி வெளியீடு, 1வது பதிப்பு,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 35

Page 32
2945 இந்து சமயம்
ஆவணி 1988. (யாழ்ப்பாணம் முரசொலி அச்சகம்), (2),16 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. 18x12.5 சமீ.
தெல்லிப்பழை, துர்க்காதேவி ஆலயத்தின் பூர்வீகச்சிறப்பும் இன் றைய எழுச்சிப் பெருநிலையும் சுருங்க விளக்கப் பெற்றுள்ளது.
4 தேர். குளோபல். யாழ்ப்பாணம்: குளோபல் கொம்யுனிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1984. (யாழ்ப்பாணம்: நியுலட்சுமி அச்சகம்)
(6), 14 பக்கம். விலை: இலவசம். அளவு 20.5x14 சமீ.
திருத்தேரின் மகிமையை சித்திரிப்பதும் தேர்த்திருவிழா பற்றிய கட்டுரைகள் கொண்டதுமான சிறுநூல்.
15 தேவாரத்திரட்டு. சி.கனகசபாபதி (தொகுப்பாளர்). இலண்டன்: உயர்வாசற் குன்று முருகன் கோவில், நவம்பர் 1995, (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 112 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 20x14 சமீ.
தேவார, திருவாசக, பஞ்சபுராணங்களின் தொகுப்பு.
6 நல்லைக்கந்தரந்தாதி. நாக பரமசாமி. யாழ்ப்பாணம்: நா. பரமசாமி, 1516 புவனேஸ்வரி அம்பாள் வீதி, நல்லூர் கிழக்கு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1986, (யாழ்ப்பாணம்: கண்ணன் அச்சகம், நல்லூர்) 26 பக்கம், தகடு விலை: இலவசம். அளவு: 18.5x12.5 சமீ.
இப்பிரபந்தத்தின் பாட்டுடைத்தலைவன் நல்லடியார் நாடும் நல்லை நாதனாகிய முருகப்பெருமானாவார். இந்நூலின் பாணி, ஈழத் தமிழரின் துயரினை, அவர் தம் இனி னலை முருகனிடம் முறையிடுவதாக அமைந்துள்ளது
17 பகவான் றுநீ சத்யசாயி சுப்ரபாதம்: குழந்தைகளுக்கான பஜனைப்பாடல்கள். சாயி சமித்தி. யாழ்ப்பாணம்: திருநெல் வேலி சாயி சமித்தி, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார்அச்சகம்) 16 பக்கம், தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14சமீ.
36 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

294.5 இந்து சமயம்
பூரீ சத்யசாயி சுப்ரபாதம், அஷடோத்திரமும் குழந்தைகளுக்கான பஜனைப்பாடல்களும், பூரீருத்திரத்தின் சில பகுதிகளும் பகவானின் பொன்மொழிகளும் அடங்கியது. 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
18 பகவான் ருரீ சத்ய சாய் பாபாவின் கீதவாவுறிணி. என்.கஸ்தூரி (ஆங்கில மூலம்), பி.கே.சுந்தரம் (தமிழாக்கம்), கொக்குவில்: பகவான் பூரீ சத்யசாயி சேவா நிலையம், பிள்ளையார் கோவிலடி, தாவடி, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (அச்சக விபரம் குறிப்பிடப் படவில்லை) xi,304 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12.5 சமீ.
தமிழ்நாடு பகவான் பூரீ சத்யசாயி பாபா நிறுவனத்தின் வெளியீட்டு நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினால் (Tamil Nadu Publications Trust) வெளியிடப்பட்ட மூலநூலின் மறுபிரசுரமான இந்நூல் பகவான் ரீ சத்யசாயி பாபாவின் 65வது ஜனன ஜெயந்தி விழா-அவதாரம் பிரகடனப்பொன்விழா என்பவற்றின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது.
119 பராசக்தி பாமாலை. மு.கணபதிப்பிள்ளை. கோட்டைக் கல்லாறு: சதுராலயம், 1வது பதிப்பு, 1989. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்),
42 பக்கம். விலை: ரூபா 20. அளவு; 21X14 சமீ.
சக்தி வழிபாட்டுக்குரிய பாடல்களின் தொகுப்பு. கல்லாற்றுக் கண் ணகை அம்மன் காவியம், கடல்நாச்சி அம்மன் காவியம், கண்ணகை அம்மன் காவடிவிருத்தம், பேச்சிஅம்மன் காவியம், பராசக்தி இசைப் பாடல்கள் ஆகிய தலைப்புகளில் பாடல்களும் ஓலைச் சுவடி களிலிருந்து பிரதி செய்யப்பட்ட கண்ணகை அம்மன் குளிர்த்தி, மாரிஅம்மன் குளிர்த்தி, கண்ணகை கலியாணக்கால் சுற்றுக்காவியம் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
2O பன்னிரு திருமுறைத் தோத்திரத் திருவருட்பாத்திரட்டு. நீ.சி.முருகேசு (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சக்தி நூல்நிலையம், 2வது பதிப்பு, பங்குனி 1989. 1வது பதிப்பு, சித்திரை 1986. (யாழ்ப் பாணம்: செட்டியார் அச்சகம்) (8),150 பக்கம். விலை: ரூபா 25. அளவு 21X14 சமீ.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 37

Page 33
2945 இந்து சமயம்
புராணம், திருப்புகழ், திருமந்திரம், ஆகியவற்றை உள்ளடக்கிய பன்னிருதிருமுறைகளின் தொகுப்பு, ஆலயங்களிலும், மடங்களிலும், பிரார்த்தனை மண்டபங்களிலும் பண்ணோடு பாடிப் பாராயணம் செய்ய ஏற்ற நூல்.
12 பன்னிரு மாத நினைவுகள். நா.முத்தையா. கனடா: இந்து சமயப் பேரவை, ஒன்ராறியோ, 3வது பதிப்பு, மார்ச் 2000. 1வது பதிப்பு, 1978, 2வது பதிப்பு, 1997). (கனடா: விவேகா பிரின்டர்ஸ், ஒன்ராறியோ) 167 பக்கம், சித்திரங்கள். விலை: குறிக்கப்படவில்லை. அளவு: 21Χ14 σιδ.
இந்நூல் விரதங்களின் மகிமையையும் மாதாந்தம் அனுட்டிக்கப்பட வேண்டிய விரதங்கள் பற்றிய விளக்கங்களையும் வழங்குகின்றது. பிள்ளைகள் இந்துசமயம் பற்றிக் கேட்கும் பல கேள்விகளுக்கு விளக்கங்களைப் பெற்றோர் வழங்க முடியாதவர்களாக இருக்கும் வேளை இந்நூல் அவர்களுக்குக் கைகொடுக்கும்.
22 புராதனி நயினை நாகபூஷணி ஆலய வரலாறும் அருட் பாமாலையும், நயினை நா.க.சண்முகநாதபிள்ளை. யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஜூன் 1981. (சாவகச் சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில் வடக்கு) xi,136 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12.5 சமீ.
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயவரலாறு பற்றிக் கூறும் நூல். சக்தி வழிபாட்டின் சிறப்பு, அம்பிகையின் பல்வேறு கோலங் களில் அருளும் வனப்பும், அம்பிகையின் வழிபாடு அடைப்பிக்கும் பெறுபேறுகள் சாக்தமத சம்பிரதாயங்கள் ஆகிய விடயங்கள் பற் றியும் பல நூல்களிலிருந்து பிழிந்தெடுத்த தேறலாக அமைகின் ፬Ööl.
23 மட்டக்களப்புச் சைவக்கோயில்கள்: 1வது தொகுதி. வீ.சீ.கந்தையா. கொழும்பு 4: இந்துசமயத் திணைக்களம், பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 1வது பதிப்பு, 1983. (கொழும்பு10:கூட்டுறவு மொத்த விற்பனை அச்சக நிலையம்) (24),216 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22Χ14 σLβ.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சைவக்கோயில்களைப் பற்றிய
38 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

294.5 இந்து சமயம்
விபரத்தெகுப்பு. கறுப்பு-வெள்ளைப்படங்களுடன் கூடியது. ஈச்சரங்கள், மலைக் கோவில்கள், திருப்படைக் கோயில்கள், பிள்ளையார் கோயில்கள், அம்மன் கோவில்கள், ஆகிய தலைப்புக்களில் கோவில்கள் வகைப்படுத்தப்பெற்று ஒவ்வொரு கோவிலுக்கும் உரிய விபரங்கள் தனித்தனிக் கட்டுரையுருவில் தரப்பட்டுள்ளன.
124 மடாலயத் திறப்புவிழா மலர். மலர் வெளியீட்டுக்குழு. திருக் கோணமலை: பூரீமுருகன் தொண்டர்சபை, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப் பாணம், உதயன் அச்சகம்) 54 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 22x14 சமீ.
திருக்கோணமலை, வில்லூன்றி பூரீ முருகப்பெருமான் ஆலயத்தினை ஆதாரமாகக் கொண்டு சைவசமயப் பணிகளைச் செய்துவரும் சமய ஸ்தாபனமாகிய பூரீமுருகன் தொண்டர் சபை தமது நற்பணி களுக்கு ஒரு செயற்பாட்டு மையமாக அமைத்த கட்டிடத்தைத் திறந்துவைத்த நாளில் வெளியிடப்பட்ட நினைவு மலர், மேற்படி கோவிலின் தலவரலாற்றுடன் திருக்கோணமலை நகரில் இயங்கும் பல்வேறு இந்துசமய நற்பணிமன்றங்கள் பற்றிய தகவல்களையும் இந் நூலின் வாயிலாக அறியமுடிகின்றது.
125 மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும். மாத்தளை பெ.வடிவேலன். கொழும்பு 13: கலைஒளி முத்தையாபிள்ளை நினைவுக்குழு, 3921 அல்விஸ் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமென்டால் வீதி) 68 பக்கம். விலை: ரூபா 60. அளவு 21.5x14 சமீ.
வரலாறு மனிதனுக்கு மட்டுமல்ல மாரியம்மனுக்கும் உண்டென்பதை துணிச்சலுடன் முன்வைக்கிறார் மாத்தளை வடிவேலன். இந்நூல் உருவில் சிறிதாயினும் ஆன்மீகத்தத்துவம், வழிபாட்டு நெறிமுறைகள், ஆலய அமைப்பு முறை, புராதன ஐதீக வழிபாட்டு நடைமுறைகள் போன்ற பாரிய கருப்பொருள்களையும் தொட்டுப் பார்க்கின்றது.
26 வல்லிபுர மாயவண் பிள்ளைத்தமிழ். மு.கந்தையா. ஊரெழு: சிங்கைநகர் ஆழ்கடலார், 1வது பதிப்பு, தை 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) XXvi,206 பக்கம். விலை: ரூபா 50. அளவு: 18x12.5 சமீ.
இலங்கையின் வட பகுதியை அலங்கரிக்கும் விஷ்ணு தலங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலமான வல்லிபுரக்கோயிலில் வீற்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 39

Page 34
294.5 இந்து சமயம்
றிருக்கும் மாயவன் மீது பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம்.
127 வல்லிபுரத்தான் தலபுராணம். ஆழ்கடலான். (இயற்பெயர்-கு. பெரியதம்பி) புலோலி: வல்லிபுரம், இந்து கல்வி கலாசார மன்றம், 1வது பதிப்பு, ஜூலை 1987 (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) XXVi,122 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கிழக்குத்திசையிலுள்ள வல்லிபுரத்து மாயவனைத் தலைவனாகக்கொண்டு பாடப்பட்ட தலபுராணம். இது பதினொரு சருக்கங்களாகப் பிரிக்கப்பெற்று 655 செய்யுள்களாகப் பாடப்பெற்றுள்ளது.
128 விபுலானந்தக் கவித்தேனில் விளைந்த பக்தி அமுதம். சொக்கன். யாழ்ப்பாணம்; வாணி, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஜனவரி 1984. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) X.26 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5X12.5 சமீ.
வீரகேசரி வாரமலரில் 27.3.83 தொடக்கம் 4 வாரங்கள் தொடராக வெளிவந்தது. சுவாமி விபுலானந்தரின் கவிதைகளில் இடம்பெறும் பக்திநெறி தொடர்பான ஆய்வுநூல் இதுவாகும். பக்திப்பாடல்கள் பொதுவாகவும் அவற்றின் தத்துவங்கள் விரிவாகவும் ஆய்வு செய் யப்பட்டுள்ளன. விபுலானந்தருடன் சமகாலப் பக்திப்பாவனைகளை ஒப்பிட்டு நோக்கும் இந்நூலின் பின்னிணைப்பில் அடிகளாரின் மகாலட்சுமி தோத்திரமும் தரப்பட்டுள்ளது.
29 லண்டன் லூசியம் சிவன் கோவில் கிர்த்தனைகள். செ. நாகேந்திரன். சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு, 2000. (G3660)6OT 94: Scripts Offset) 52 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
இலண்டன், லூவரியம் சிவன்கோவிலுக்காக இயற்றப் பெற்ற 17 கீர்த்தனைகளுடன் விநாயகர், முருகன், சக்தி, சத்யசாயிபாபா ஆகியோர் மேற் பாடப்பெற்ற 4 கீர்த்தனைகளுமாக மொத்தம் 21 பாடல்களின் தொகுப்பு. சமூக வாழ்வியல் சிந்தனைகளை பக்திப் பாசுரங்களில் இணைத்துப் பாடியிருப்பது நூலில் குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.
மேலும் பார்க்க: 144, 234, 285, 355, 841, 842, 857
40 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

297 36th6arib
297 இஸ்லாம்
30 அறிவும் உணர்வும். எம்.ஐ.எம்.மீரா லெவ்வை. கல்முனை: இஸ் லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், சாய்ந்த மருது, 1வது பதிப்பு, 1989. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்) 106 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18X12.5 சமீ
அறிவும் உணர்வும், இறைமறை அருளப்பட்ட சூழல் பற்றிய அறிமுகம், திருக்குர் ஆனின் வாழ்க்கை வழிகாட்டும் வசனங்களில் ஒரு சில, ஆகிய மூன்று பகுதிகளாக இஸ்லாமியக் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.
131 உத்தமத் தூதர். எஸ்.எம்.ஹனிபா. கொழும்பு 10: இஸ்லாமிக் புக் ட்ரஸ்ட், 323 ஜும் ஆ மஸ்ஜித் வீதி, 4வது பதிப்பு, 1984. 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 2: அல் ஜசீரா லிமிட்டெட், 90 ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை)
44 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 18X12 சமீ.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல். இது 1980ம் ஆண்டு சிங்களமொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்கு ஏற்ற சமய அறிவுநூல்.
32 நபி பெருமானின் நல்லுரைகள். எம்.வை.எம்.மீஆத். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 12. குமரன் அச்சகம், 201, டாம் வீதி). 56 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18X12 சமீ.
நபிபெருமானின் நல்லுரைகளை விளக்கும் 40 கவிதைகளைக் கொண்டது. நபிபெருமானின் வாழ்வும் வாக்கும் திரண்டு உருவானது ஹதிஸ் . பல துறைகளையும் பற்றி நபி பெருமான் நவின்ற 40 பொன்மொழிகள் பல்வேறு ஹதிஸ் கிரந்தங்களிலிருந்து தேர்ந் தெடுக் கப்பட்டு கவிதை உருவில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையின் முன்னும் ஹதிஸின் அரபு மூலமும் தரப்பட்டுள்ளது.
133 f முவுறம்மது(ஸல்) மனிதரில் தலை சிறந்தவர்கள். கு.ஆ. நதிம் பாரி. (மூலம்), ம.மு.உவைஸ் (தமிழாக்கம்). கொழும்பு 10: பூரீலங்கா இஸ்லாமிய நிலையம், ராஜபொக்குண, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு10. ருகுண பிரின்டர்ஸ், 44, மாளிகாவத்தை விதி.)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 41

Page 35
297 இஸ்லாம், 301 சமூகவியல்
78 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x14 சமீ.
பாக்கிஸ்தான் அரசின் 1985ஆம் ஆண்டு தேசியவீரர் பரிசு பெற்ற மூலநூலின் தமிழாக்கம். நாயகம்(ஸல்) அவர்களின் நற்பண்பு களை விளக்கும் நூல்.
மேலும் பார்க்க. 142
300 சமூக விஞ்ஞானம்
301 சமூகவியல்
134 இதயம் தழுவிய நினைவுகள். ஊரவன். (இயற்பெயர்: இரா. சிவரஞ்சன்) சென்னை 600017 மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (GF660)6OT 94: Scripts Offset) 128 பக்கம். விலை: இந்திய ரூபா 26. அளவு: 18x12.5 சமீ.
ஜேர்மனியிலிருந்து வெளிவரும் கலைவிளக்கு, மண் ஆகிய சிறுசஞ்சிகைகளில் வெளியான 19 சமூக ஒழுக்கவியல் கட்டுரை களின் தொகுப்பு.
135 சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். வெகு ஜனன், இராவணா. யாழ்ப்பாணம்: புதியயூமி வெளியீடு, 1511 மின் சார நிலைய வீதி, 1வது பதிப்பு, பங்குனி 1989. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், 407 ஸ்டான்லி வீதி) vi,144 பக்கம், தகடு விலை: ரூபா 25. அளவு 22x14 சமீ.
சாதி அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும், இலங்கையில் அதன் இறுக்கம், தமிழர் மத்தியில் சாதி அமைப்பின் தாக்கம் காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திரம் வரை சாதியம், ஐம்பது களிலிருந்து 66 ஒக்டோபர் வரை சாதியமைப்பின் தாக்கம், 1966 ஒக்டோபர் 21 எழுச்சியும் அதன் பாதையில் போராட்டங்களும் அதன் தாக்கங்களும் போன்ற அம்சங்கள் இந்நூலில் ஆராயப்பட் டுள்ளன.
36 சிதம்பர சக்கரம். பாலகிருஷ்ணா ரீதரன். லண்டன்: கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ், த.பெ.இலக்கம் 35326, 1வது பதிப்பு, ஜனவரி 2001 (அச்சக விபரம் அறியமுடியவில்லை)
42 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

301 சமூகவியல், 301.1 பண்பாடு
(10),198 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
நாம் வாழும் இந்த உலகம் நமக்குப் புறம்பான ஒரு தனிமையா? அல்லது நாம் தான் இந்த உலகமா? மனிதன் தோன்றிய காலத் திலிருந்தே ஆரம்பித்த இக் கேள்விக்கு நமது அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களையே உதாரணம் காட்டி, நாம் பார்க்கும் இந்த உலகம் நம்மாலேயே உருவாக்கப்பட்டது. நாம் தான் இந்த உலகம் என்று கூறுவது தான் இந்த நூலின் சாராம்சம். சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் குறுங்காதைகள்.
137 யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 26: குமரன் புத்தக இல்லம், 3 மெய்கை விநாயகர் தெரு, 1வது பதிப்பு, ஆவணி 2000. சென்னை 14: மொனார்க் கிரபிக்ஸ்). Xxi,204 பக்கம். விலை: இந்திய ரூபா 100. அளவு: 21X14 சமீ.
இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் இதுவரை தமிழில் ஆழமாகப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படாத யாழ்ப்பாணத்துச் சமூகத்தை, சமூக வியல், சமூக வரலாறு ஆகிய துறைகளினூடாகச் சித்திரிக்க முனைகின்றது. யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் இயங்கியல் விவரணம், அச்சமூகத்தில் மேலாண்மை பெற்று விளங்கும் கருத்து நிலைகள் ஆகியவற்றையும் அவற்றின் பின்புலத்தில் யாழ்பாணத்தின் புலமைத் துவ மரபு, மதநிலைச் சமூக அசைவியக்கம் ஆகியவற்றையும் அச்சு ஊடகங்களின் தொழிற்பாட்டினையும் எடுத்துக் கூறும் இக்கட்டுரைகள் யாழ்ப்பாணச் சமூக வரலாற்றையும் கோடிட்டுக் காட்டுகின்றன.
மேலும் பார்க்க: 971
3.01.1 L I6LTC
138 அவன் அவள் அவர்: கிறிஸ்தவத் திருமணம். சுவாமி வி. மா.தாசன். இளவாலை: குடும்ப மேய்ப்புப்பணி நிலையம், சேந்தான் குளம், 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (திருச்சி 2: பிரஸ் டிலக்ஸ், 40 L JITL (3JIT') (14),234 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
கிறிஸ்தவ மணவாழ்வின் இயல்பு, மணவாழ்வில் புண்ணியமலர்ச்சி, கிறிஸ்தவ மணவாழ்வில் மகிழ்ச்சி, பால்-உறவு, மக்கள் ஆகிய பிரிவுகளின் கீழ், குடும்பவாழ்வில் ஈடுபடவுள்ள கிறிஸ்தவர்களுக்கேற்ற அறிவுரைகள் அமைகின்றன. இது மணமக்களுக்குத் திருமணப்பரிசாக அளிப்பதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 43

Page 36
301.1 பண்பாடு
39 இதயரஞ்சனி-சமூக பண்பாட்டுக் கோலங்கள். எஸ்.கே. பரராஜசிங்கம், என்.சண்முகலிங்கன். சென்னை: காந்தளகம், 1வது பதிப்பு, ஜனவரி 1988. (சென்னை: பூரீ கோமதி அச்சகம்) 92 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 17.5X12.5 சமீ.
இலங்கைவானொலியில் இதயரஞ்சனி என்ற கலை இலக்கிய மஞ் சரியின் பண்பாட்டுக் கோலங்கள் என்ற அங்கத்திலிருந்து 25 கீற் றுக்கள் தேர்ந்து தரப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டின் விழாக்கள், வழிபாட்டு மரபுகள், கிராமியக் கலைகள், சடங்குகள், நம்பிக்கை கள், மனவெழுச்சிகள் தொடர்புசாதனங்கள், ஆளுமைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் அடங்கியது.
40 இந்துப் பண்பாடு சில சிந்தனைகள். கா.கைலாசநாதக் குருக்கள். சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1986 (சென்னை 600005: ஜீவன் பிரஸ், 63 பெரிய தெரு, திருச்சிராப் பள்ளி)
68 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 18x12 சமீ.
சேர் பொன் இராமநாதன் அவர்களின் துணைவியார் லீலாவதி ராமநாதன் நினைவுப் பேருரையின் நூல்வடிவம்.
4. இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும். கா.சிவத்தம்பி. கொழும்பு 3: உதயம் நிறுவனம், 1வது பதிப்பு, 1993, (கொழும்பு 6. யுனி ஆர்ட்ஸ் பி. லிமிட்டெட்) 200 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x15 சமீ.
மலையகத் தமிழ் மக்களுடைய பண்பாட்டுப் பாரம்பரியத் தினை இனம் காண்பதும், அம்மக்களின் மதங்களுடன் தொடர் புடைய பண்பாட்டு அம்சங்களை அறிந்து விளக்குவதும் இவ்வாய் வின் முக்கிய நோக்கமாகும்.
142 இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள். அ.முகமது சமீம், கலகெதர றிசானா பப்ளிகேஷன்ஸ், றசானா மன்சில், மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (சென்னை 6: சுமதி லேசர்ஸ்) xi,56 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X13.5 சமீ.
இலங்கை முஸ்லீம்களின் திருமணச் சம்பிரதாயங்கள் அலாதி
44 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

301.1 Ligodium(6
யானவை. தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய திருமணச் சம்பிரதாயங்களில் பல் வேறு மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களின் பழக்கவழக்கங்கள் இடம் பெற்றிருப்பது கண்கூடு. இவற்றைக் கோடிட்டுக் காட்டுகின்றார் ஆசிரியர்.
143
சி.பத்மநாதன். சென்னை: குமரன் புத்தக இல்லம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலணி, வட பழநி, 1வது பதிப்பு, 2001. (சென்னை: குமரன் அச்சகம்) 410 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: இந்திய ரூபா 500. விஷேட பதிப்பு: இந்திய ரூபா 1000. அளவு 21x14 சமீ. ISBN 955-9429-043 (Ordinary), 955-9429-051 (Special).
இலங்கைத்தமிழர் வாழும் பிரதேசங்களில் நிலவிய வழமைகளைப் பற்றி ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்திலும், பிரித்தானியரின் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் எழுதப்பட்டுள்ள ஆவணங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, புத் தளம், உட்பட பல்வேறு பிராந்தியங்களிலும் வாழ்ந்த இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரின் வரலாறு பற்றிய பல அம்சங் களும் இந்நூலில் விரிவாக பேராசிரியர் பத்மநாதனால் விளக்கப்பட் டுள்ளது.
44 இலங்கைத் தமிழர்களின் கைலாச பாரம்பரியம். ஆ.வேலுப் பிள்ளை. யாழ்ப்பாணம்: கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம். 1வது பதிப்பு, மே 1989. (யாழ்ப்பாணம் செட்டியார் அச்சகம்) 26 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
கயிலாச பாரம்பரியம் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டைக் காத்து வந்துள்ளதென்பதை ஆசிரியர் இக்கட்டுரையின் வாயிலாக நிறுவ முற்பட்டுள்ளார். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய நிறுவகர் நினைவுப் பேருரையாக வெளியிடப்பட்டது.
145 எழுச்சி மாநாட்டு மலர். 13-14. 07.1996, றைன, சேர்மனி. சி. இராசகருணா (மலராசிரியர்). ஜேர்மனி: உலகத்தமிழ்ப் பணி பாட்டு இயக்கம், ஜேர்மன் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 1996, (பாரிஸ்: ரீ பாரதி அச்சகம், 13 rue Cal75010) 84 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 25x18.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 45

Page 37
301.1 பண்பாடு
ஜூலை 1996 இல் 13-14ம் திகதிகளில் ஜேர்மன், றைன நகரில் நடந்தேறிய உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்திய ஐரோப் பிய எழுச்சி மகாநாட்டின் நினைவாக அமையும் சிறப்பு மலர். மாநாட்டுக்கு உலகெங்கணும் இருந்து வந்த வாழ்த்துச் செய்தி களும் தமிழியல் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
46 தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும். கா.சிவத்தம்பி. சென்னை: நியு செஞ்சுரி புக்ஹவுஸ், 1வது பதிப்பு, நவம்பர் 1994. (திருவல்லிக்கேணி கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ்) 87 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 17.5x12 சமீ.
தமிழர் பண்பாடு பற்றியதும், யாழ்ப்பாணச் சமூகத்தின் உருவாக் கம், இயல்பு பற்றியதுமான இரு ஆய்வுக்கட்டுரைகளைக் கொண் lb.
47 தமிழர் திருமண நடைமுறைகள் (முதற்பாகம்). அ.சண் முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப் பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜூலை 1984. (யாழ்ப்பாணம், ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி) xiv,250 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 25. நூலகப்பதிப்பு ரூபா 30. அளவு: 19X13 சமீ.
பழந்தமிழர் திருமண முறைகள் (கி.பி.300 வரை), தமிழர் திருமண முறைகள் (கி.பி.300க்குப் பின்), யாழ்ப்பாணத் தமிழ் உயர் சாதி இந்துக்களின் திருமண முறைகள், யாழ்ப்பாணத்துத் தாழ்த் தப்பட்ட தமிழ் இந்துக்களின் திருமண முறைகள், யாழ்ப்பாணத் தமிழ்க் கிறிஸ்தவர்களிடையே நிலவும் திருமண நடைமுறைகள் ஆகிய ஐந்து பிரிவுகளாக இத்தொகுதி வகுக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவும் முறையே மனோன்மணி சண்முகதாஸ், அ.சண் முகதாஸ், சொக்கன், சி.வன்னியகுலம், கே.டானியல் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன.
48 தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்பகளும். வண. பிதா.தனிநாயகம் அடிகள். யாழ்ப்பாணம்: தந்தை செல்வா அறங் காவற் குழு, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத் தோலிக்க அச்சகம்) 32 பக்கம். விலை: ரூபா 5. அளவு; 21X14 சமீ.
தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுத் தொடரில் 1980ம்
46 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

301.1 பண்பாடு
ஆண்டு நிகழ்த்தப்பட்ட நினைவுதின உரையின் நூல்வடிவம். ஆங்கில மொழி பெயர்ப்பும் இணைந்துள்ளது.
49 தமிழனா தமிங்கிலனா? காசி ஆனந்தன். சென்னை 20: மாணவர் புத்தகப்பண்ணை, அடையாறு, 1வது பதிப்பு, நவம்பர் 1995. (சென்னை 17. மாணவர் மறுதோன்றி அச்சகம், தி.நகர்) 126 பக்கம், விலை: இந்திய ரூபா 35. அளவு: 175x12 சமீ.
தமிழைப் புறம்தள்ளி ஆங்கிலத்தைத் தமிழன் கொஞ்சுவது ஏன்? ஆங்கிலம் கலந்து தமிங்கிலமாய் ஆகிக்கொண்டிருக்கும் தமிழ் மொழியைக் காப்பாற்றும் ஆதங்கம் இந்நூல் எங்கும் பரந்துள்ளது.
15O நாவலர் பணி பாரு. பொ.பூலோகசிங்கம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், த.பெ.1447, தியாகராயநகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்) 136 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
நாவலர் பண்பாட்டம்சங்களும் அவர்தம் சமுதாயத்தின் பண்பாட்டம் சங்களும் காணப்பெறும் 11 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. நாவலர் பண்பாடு, அவர் காலத்தின் பின்பு, அவர் வாழ்ந்திருந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை அடைந்தது என்பதையும், எவ்வளவு தூரம் அது முத்திரை பதித்துச் சென்றுள்ளது என்பதையும் உணர இக் கட்டுரைகள் உதவும்.
151 பண்டிதமணி போற்றிய யாழ்ப்பாணத்துச் சைவத் தமிழ்ப் பாரம்பரியம். ஆ.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: அ.பஞ்சாட்சரம், (காரியதரிசி), பண்டிதமணி நூல் வெளியீட்டுச்சபை, உரும்பிராய் மேற்கு, உரும்பிராய், 1வது பதிப்பு, 1989, (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 42 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14 சமீ.
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர் களின் நினைவு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேருரையின் நூல்வடிவம்.
152 வித்தியானந்தம். சு.வித்தியானந்தன். யாழ்ப்பாணம்: சாயிபாபா அட்வர்டைசிங் அசோசியேற்ஸ், 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 47

Page 38
301.1 பண்பாடு, 302 பெண்ணியம்
xiv.92 பக்கம், தகடுகள், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு: 20x13 சமீ.
ஈழத்துத் தமிழ்ப்பண்பாட்டின் அமைப்புக்கோலம், அமிசவிபரம் ஆகியன பற்றிப் பேராசிரியர் எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பு. பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் அறுபதாவது பிறந்த நாள் நினைவுமலராக வெளியிடப்பட்டது.
மேலும் பார்க்க: 296, 736, 840, 972
302 பெண்ணியம்
153 இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலை. விக்னா பாக்கியநாதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (Q3660)6OT 94: Scripts Offset) 96 பக்கம், விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
ஜேர்மனியிலிருந்து வெளிவரும் கலைவிளக்கு சஞ்சிகையின் துணை ஆசிரியரான நூலாசிரியர் அச்சஞ்சிகையில் தொடராக எழுதிய பெண்ணியம் தொடர்பான 13 சமுகவியல் கட்டுரைகளின் தொகுப்பு
154 இன்னுமொரு ஜாதி; இலங்கைத் தமிழ்ப் பெண்கள். எல் ஸெஸ் யோன்ஸ் பேர்க்(மூலம்), பார்வதி கந்தசாமி.(தமிழாக்கம) யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வுவட்டம், பணிக்கர் வளவு, திருநெல் வேலி. 1வது பதிப்பு, 1989. (சென்னை 600002: சென்னை புக்ஸ், 6, தாயார் சாஹிப் 2வது சந்து). 277 பக்கம், 21 அட்டவணைகள். விலை: இந்திய ரூபா 25. அளவு: 18x12 சமீ.
பெண்கள் தொடர்பான சமூகவியல் பிரச்சினைகளை வெளிக் கொணரும் சமூகவியல் ஆய்வு. மூலநூல் ஆசிரியர், தான் காரைநகர் திமில, பள்ள சமூகத்தவருடன் வாழ்ந்து கண்ட பல உண்மைகளின் அடிப்படையிலான ஆதாரங்களைத் திரட்டி எழுதிய நூல்.
155
மிழ் வர A. A நீங்கள் சி ற்றில் 365 நோக்கு. செல்வி திருச்சந்திரன், கொழும்பு 12: குமரன் புத்தக சாலை, 1வது பதிப்பு, ஜூன் 1997. (சென்னை 26: குமரன் அச்சகம்)
48 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

302 பெண்ணியம்
218 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு; 21X14 சமீ.
பெண்களுக்குத் தோற்றுவிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாட்டு நிலை, சங்ககாலத்துக்கு முன் தொடங்கி 20ஆம்நூற்றாண்டு வரை எப்படிப் பின்னிப் பிணைந்து விரிந்து, இறுகி, கருத்தியல்களையும், கட்டு மானங்களையும், ஸ்தாபனங்களையும் உருவாக்கிவிட்டன என்பது நூலில் இனம்காட்டப்பட்டுள்ளது.
56 நாண் ஒரு பெண். சரிநிகர் ஆசிரியர் குழு (தொகுப்பு). கொழும்பு பாரதி வெளியீடு, 1வது பதிப்பு, மே 1997. (தெகிவளை: டெக்னோ பிரிண்ட், 83, ஆஸ்பத்திரி வீதி, களுபோவில) 126 பக்கம். விலை: ரூபா 100. அளவு 21X13.5 சமீ.
பெண்கள் தொடர்பான சரிநிகர் (கொழும்பு) பருவ இதழில் 1990-1996 காலப்பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். தமிழில் பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வையும் சிந்தனைத் தேடல்களையும் தெளிவுகளையும் தர முற்படுகின்றது.
57 பெண்களின் சுவடுகளில். சாந்தி சச்சிதானந்தம். சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, மார்ச் 1989. (சென்னை 600020: இராசகிளி பிரிண்டர்ஸ், அடையாறு) XV,160 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
தாயுரிமைக் குடும்பப்பண்பு பற்றிய பெண்ணியல் பார்வை. பெண்கள் வரலாற்று மூலங்களை, தாய்வழிச்சமூக அமைப்பை நோக்கிய ஒரு தேடல் முயற்சியாக இது அமைந்துள்ளது.
58 பெண்ணடிமை திர. செ.கணேசலிங்கன். சென்னை 600026; குமரன் பதிப்பகம், 27, 2வது தெரு, குமரன் காலனி, வடபழனி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995, (சென்னை 14: சித்ரா பிரின்டோகிரப்பி) iv,164 பக்கம், விலை: இந்திய ரூபா 28 18x12.5 சமீ.
பெண் எவ்வாறு அடிமைப்பட்டாள். இன்றும் எவ்வாறெல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றாள். அவளது உழைப்பு எவ்வாறெல்லாம் சுரண்டப் படுகின்றது. அவளது விடுதலைக்கு வழி என்ன. வரலாற்றில் அவளது எதிர்காலம் என்ன. இது போன்ற பல்வேறு கேள்வி களுக்கு இந்நூல் விஞ்ஞானபூர்வமாக விடை காண்கின்றது.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 49

Page 39
302 பெண்ணியம், 320 அரசறிவியல்
159 பெண்நிலைவாதம் பொருத்தமானதே. பெண்நிலைவாத ஆய்வு வட்டம். யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வு வட்டம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 18 பக்கம். விலை: ரூபா 3.50. அளவு 21X14 சமீ.
கொழும்பு பெண்நிலைவாத ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. பெண்நிலை வாதத்தின் அரசியல், பொருளாதார, வரலாற்று அம்சங்களை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துக்காட்டுகின்றது.
320 அரசறிவியல்
160 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போலி முகங்கள். பொன் வேலுசாமி. அளவெட்டி: படைப்பாளிகள் வட்ட வெளியீடு, நிழல், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1984. (அளவெட்டி: ஜெயா பிரிண்டிங் வேர்க்ஸ்) vi,26 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5x12.5 சமீ.
இலங்கைத் தமிழர் இனப்பிரச்சினையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நோக்கும் செயற்பாடுகளும் பற்றிய ஒரு விமர்சனம்.
16 இலங்கையின் இனக்குழும அரசியல். சி.அயோதிலிங்கம். கொழும்பு மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2000. (அச்சக விபரம் அறிய முடியவில்லை) ix,64 பக்கம். விலை: ரூபா 100. அளவு; 21X14 சமீ.
சுதந்திரத்திற்குப் பின்வந்த இலங்கையின் அரசியல் யாப்பு களும் இனப்பிரச்சினைகளும், இலங்கை-இந்திய உறவுகள் ஆகிய இரு கட்டுரைகள் உள்ளடங்கிய தொகுப்பு. முதலாவது ஆக்கம் செம்பாட்டான் என்ற பெயரில் ஆசிரியரால் சரிநிகர் (கொழும்பு) பத்திரிகையில் தொடராக எழுதப்பட்டது. இலங்கை - இந்திய உறவுகள் என்ற இரண்டாவது கட்டுரை இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் இலங்கை இந்திய உறவுகளில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆய்வு செய்கின்றது. இது வீரகேசரியின் திங்கள் இணைப்பான இளங்கதிரில் தொடராக வெளிவந்துள்ளது.
162 இன்றைய வளைகுடாப் போர். அ.சி.உதயகுமார். உடுவில்:

320 அரசறிவியல்
Tamil Institute for Strategic Studies, 16lgöl uglül, QuüJ6j, 1991. (யாழ்ப்பாணம்: துருவன் அச்சகம்) x,80 பக்கம். விலை: ரூபா 50. அளவு 21X14 சமீ.
1990இல் ஈராக்கினால் குவைத் கைப்பற்றப்பட்டதும், அதையடுத்து 1991 ஜனவரியில் அதை மீட்கத் தொடர்ந்த வளைகுடா யுத்தமும் அதன் பின்னணியும் ஆராயப்பட்டுள்ளது. போர் தந்திரோபாயங்கள், விளைவுகள், தாக்கங்கள் ஆகிய பல்வேறு அம்சங்களும் இந்நூலில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
163 கட்சித் தொண்டர் கொள்கை பற்றி, கட்சிக் கட்டுப்பாட்டை வழுவாது பின்பற்றுங்கள்.சென் யுன்(மூலம்), எஸ்.கே.(தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: சுகந்தம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம் அச்சகம் குறிப்பிடப்படவில்லை). vi,35 பக்கம். விலை: ரூபா 5 அளவு: 18x12.5 சமீ.
சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சென் யூன் அவர்களின் syids) b|TouT60T Selected Works of Chen Yun (365(5bg5 67(6855 பட்டு பீக்கிங் ரிவியு சீன சஞ்சிகையில் 1984இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கம்.
64
சர்வதேச அரசியல் நிகழ்வுகள்( 1979-1982). க.கைலாசபதி, சென்னை: புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1992 (சென்னை 17. சூர்யா அச்சகம்) 190 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு 21X13.5 சமீ
1979-1982 காலப்பகுதியில் செம்பதாகை, றெட்பார்னா பத்திரிகை களுக்கு எழுதிய சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு.
65 சர்வதேசியம்: சமகாலச் சிந்தனைகள், கருத்தும் நடப்பும். வி.ரி. தமிழ்மாறன். மதுரை 625020: கவிதா பதிப்பகம், தாசில்தார் நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 1995, (மதுரை 1: சங்கர் அச்சகம்) 69 பக்கம். விலை: இந்திய ரூபா 35. அளவு 21X14 சமீ.
ஐ.நா.சபையின் நோக்கமும் அதன் செயற்பாடுகளும், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமும் அதன் சட்ட அந்தஸ்தும், மனிதா பிமானச் சட்டத்தின் கீழ் ஆயுதப் படையினரதும் போராளி களினதும் கடப்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 51

Page 40
320 அரசறிவியல்
பாடுகள், இன முரண்பாடுகளை தீர்த்து வைப்பதில் உகந்த மார்க் கமெதுவென்பன போன்ற பல விடயங்களைச் சுருக்கமாக விளக் கும் நூல்.
166 சண்டினிசப்புரட்சி; நிக்கரகுவா. ஆசிரியர் விபரம் குறிப்பிடப் படவில்லை. யாழ்ப்பாணம்; மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) vi,140 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 12. அளவு: 21.5X14 Guð.
மத்திய அமெரிக்காவில் மாபெரும் அரசியல் எழுச்சியாகவும் பல் வேறு மாற்றங்களுக்கான அடிப்படையாகவும் நிக்கரகுவாப் புரட்சி அமைகின்றது. நகர்ப்புற கெரில்லாப் போர்முறை மூலம் கருக் கொண்ட போராட்டம் மக்கள் கெரில்லா யுத்தமாகப் பரிணமித்து புதிய நிக்கரகுவாவைத் தோற்றுவித்த வரலாற்றை இந்நூலில் காண முடிகின்றது.
167 சனநாயகமும் மனித உரிமைகளும். நீலன் திருச்செல்வம். கொழும்பு இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், (ICES) 16.135 Lg5'IL, 1996. (G|35|T(pubL: Unie Arts) 296 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 22.5X14.5 சமீ.
சர்வதேச தேசிய மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட் டுரைகள், சஞ்சிகைகளில் அவ்வப்போது எழுதப்பட்ட அரசியல் கட்டுரைகள், பாராளுமன்ற உரைகள், அரசியல் பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் என நான்கு பெரும் பிரிவு களாகக் கொண்ட 40 கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
168 தமிழ்மாறன் கட்டுரைகள். வி.ரி.தமிழ்மாறன். கொழும்பு 6: தர்ஷனா பிரசுரம், 58-113, 37வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) 88 பக்கம். விலை: ரூபா 80. அளவு 22x14 சமீ.
சர்வதேச அரசியல். சட்ட, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை
69
தாண்பிரீன்-தொடரும் பயணம். பராமஸ்வாமி. யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், 1வது பதிப்பு,
52 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

320 அரசறிவியல்
1985. (யாழ்ப்பாணம், அச்சகம் குறிப்பிடப்படவில்லை) (8),158 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 21X14 சமீ,
அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து 750 ஆண்டுகளாகத் தொடர்கின்றது. 1916-1948 காலப் பகுதியில் சிறப்பினைப்பெற்ற தலைவர்கள் ஆர்தர் கிரிபித், மைக்கல் கொலின்ஸ், டி வலெரா பொன்றோருக்கு இணையாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு போராளியான தான்பிரீன் அவர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறு இந்நூல்.
| 7 Ο தெலுங்கானா போராட்டம். சுகந்தம், யாழ்ப்பாணம்: சுகந்தம் வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 60 பக்கம். விலை: ரூபா 3. அளவு 21X13 சமீ.
தெலுங்கானா ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த காலகட்டத்தில் (இன்று அது ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதி) நடைபெற்ற நிலவுடைமைக்கு எதிரானதோர் போராட்டத்தின் வரலாறு.
17 தேசிய இனங்களின் விருதலைப் போராட்டங்கள்: மோதல் களும் தீர்வுகளும். வி.ரி.தமிழ்மாறன். கொழும்பு கார்த்திகேயன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஜூன் 1996. (கொழும்பு 6: Karthikeyan Ltd, Hotel Ceylon Inn Shopping Complex, 50 1/2 Galle Road) X,134 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ.
1995இன் பிற்பகுதி முதல் உலக அரங்கில் அண்மைக்காலத்தில் நடந்தேறிய அல்லது இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற காஷ்மீர், வட அயர்லாந்து, தென்னாபிரிக்கா, பயா.வ்ரா (நைஜீரியா), பாஸ்க் (ஸ்பெயின்), எரித்திரியா, சூடான், கிழக்கு ரிமோர், இந் தொனேஷியா, திபேத், ஆகிய பத்து நாடுகளின் தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய 12 கட்டுரைகளின் தொகுப்பு. சரிநிகரில் 1994-95 காலப்பகுதியில் எழுதப்பட்டவை.
72 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம். பி.ஏ.காதர். கொழும்பு 7. தொழிலாளர் கல்வி வெளியீடு, இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ், 1வது பதிப்பு, அக்டோபர் 1981. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்) 42 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 53

Page 41
320 அரசறிவியல்
மலையக மக்களின் நாடு எது, இவர்கள் தனியான ஒரு தேசிய இனமா, இந்தியா செல்வதா அன்றேல் வடக்குக் கிழக்கு மாவட்டங்களுக்குக் குடிபெயர்வதா, மலையகத்தில் நிலைத்து வாழ்வதா என்பன போன்ற கேள்விகளுக்கு பல்வேறு நாட்டுத் தேசிய இனங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து விடைகாண முயலும் [bIᎢ6Ꭰ.
173 மரபும் மார்க்சீயவாதிகளும். சி.சிவசேகரம். சென்னை 600002; சென்னை புக்ஸ், தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, 1989. (சென்னை 24: அலைகள் அச்சகம்). 60 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 18x13 சமீ.
அரசியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாக அவ்வப்போது தாயகம் சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரைகளில், மரபும் மார்க்சியவாதி யும், மதமும் மார்க்சியமும், மு.தளையசிங்கமும் மார்க்சியமும் ஆகிய மூன்று கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.
174 யாவரும் கேளிரென. பொதுமை அசிரியர் குழு. யாழ்ப்பாணம்: ஈழப்புரட்சி அமைப்பு, 39 கோவில் வீதி. 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (யாழ்ப்பாணம், அச்சகம் குறிப்பிடப்படவில்லை.) 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
பொதுமை - ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) வெளியீடாகும். இவ் விதழில் யாவரும் கேளிரென.’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளிவந்த அரசியல் மடல்கள் தொகுக்கப்பெற்று நூலுருவாக்கப் பட்டுள்ளன. இவை 1985-1987 காலப்பகுதியில் எழுதப்பட்டவை. சமகால அரசியல் பிரச்சினைகளை ஆராய்கின்றன.
175 வெகுஜன அமைப்புகளுக்கும் கட்சிக்கும் இடையான உறவுகள். செழியன். யாழ்ப்பாணம்: நதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, மார்ச் 1986. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் குறிப்பிடப் படவில்லை)
22 பக்கம். விலை: ரூபா 2 அளவு 13X12 சமீ.
வெகுஜன அமைப்புகளுக்கும் கட்சிக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவமும் விஞ்ஞானபூர்வமாக இவ்வுறவை வலுவடைய வைக்கும் கருத்துக்களும் இதில் சுருங்கக் கூறப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: 868-873
54 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

330 பொருளியல்
330 பொருளியல்
176 இலங்கை அரசியற் பொருளாதார அபிவிருத்தி 1948-1956; வர்க்க இனத்துவ நிலைப்பாடுகள். விநித்தியானந்தன். யாழ்ப் பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு 1990. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) (5),323 பக்கம். விலை: ரூபா 150. அளவு 13.5X20.5 சமீ.
இலங்கை அரசியற் பொருளாதார மட்டத்தில் எதிர்நோக்கியுள்ள பிரச் சினைகளுக்குப் பொறுப்பாகவுள்ள காரணிகளுள் வர்க்க, இனத்துவ மட்ட வளர்ச்சிகளுக்கும் மாறுபாடுகளுக்கும் பெரும் பங்குண்டு. அவை எவ்வாறு இலங்கையின் அரசியற் பொருளாதாரத்தைப் பாதித் துள்ளன என்பதை இந்நூல் விளக்குகின்றது.
177 இலங்கையின் முதலாவது வேலைநிறுத்தம்: அச்சுத் தொழிலாளர் போராட்டம், 1893. குமாரி ஜெயவர்த்தனா(மூலம்), மு.நித்தியானந்தன்(தமிழாக்கம்). கொழும்பு சஞ்சீவ வெளியீடு, 69 கிரெகரிஸ் வீதி, 2வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: நியுஈரா பப்ளிக் கேஷன்ஸ்)
26 பக்கம், விலை: ரூபா 7.50. அளவு: 18x12 சமீ.
1893ஆம் ஆண்டில் இலங்கையில் முதல் தொழிற்சங்கம் உருவாக வழிவகுத்த எச்.டபிள்யு. கேவ் அன் கொம்பெனியைச் சேர்ந்த 60 அச்சகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பற்றிய வரலாற்றுக் கட்டுரையின் தமிழ் வடிவம்.
178 எமது பிரதேசங்களில் விவசாய உற்பத்தியும் சுயதேவைப் பூர்த்தியும். ஆய்வு நிறுவனக் கருத்தரங்கக் கட்டுரைகள். கொக்கு வில்: ஆய்வு நிறுவனம், 811, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜூன் 1988. (யாழ்ப்பாணம், கல்லச்சுப்பிரதி) 136 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 28x19.5 சமீ.
தமிழ்ப்பிரதேசங்களில் விவசாய உற்பத்திக்குரிய வளங்களும் வாய்ப் புகளும், விவசாய உற்பத்திகள்- இன்றும் நாளையும், பயிரின பீடைகள் நோய்கள் தடுப்பு முறை, விவசாயத்தில் விநியோகம் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 13 ஆய்வுரை களின் தொகுப்பு.
கொழும்புதமிழ்ச்சங்கம்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 55

Page 42
330 பொருளியல், 334 கூட்டுறவு 336 வங்கியியல்
179 மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளும். தென்னாசியவியல் கருத்தரங்கக் கட்டுரைகள். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கலைப்பீடம், 1வது பதிப்பு, ஜூலை 1980. (யாழ்ப்பாணம்: கல்லச்சுப் பிரதி) 90 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 27X21.5 சமீ.
இக்கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பில் பேராசிரியர் கா.இந்திர பாலாவின் மாவட்ட அபிவிருத்திச்சபைகள் வரலாற்றுப் பின்னணி, மா. அந்தோணிமுத்துவின் மாவட்ட அபிவிருத்திச்சபையும் தமிழ்ப் பிரதேச பொருளாதார அபிவிருத்தியும், மு.நித்தியானந்தனின் அதிகாரமாற்றமும் நிர்வாகப் பரவலாக்கமும், மு.திருநாவுக்கரசுவின் மாவட்ட அபிவிருத்திக்கான உத்தேச அமைப்பும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையும் ஆகிய நான்கு கட்டுரைகள் இடம் பெறுகின்றன.
334 கூட்டுறவு
18O கூட்டுறவுக்கோர் அறிமுகம்- முதலாம் பாகம். வை.சி. சிவஞானம். தெல்லிப்பழை: பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், 1வது பதிப்பு, ஜூலை 1980. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்) (8),248 பக்கம். விலை: ரூபா 12.50. அளவு; 21X14 சமீ.
கூட்டுறவுக் கொள்கைகள், அறிஞர்களின் கருத்துக்கள், ஆகியவற் றைத் தொகுத்துத் தந்துள்ளதுடன் இன்று இலங்கையில் உள்ள கூட்டுறவு அமைப்புக்களின் செயற்பாட்டு முறைகளையும் விளக் கியுள்ளார்.
336 வங்கியியல்
18 வங்கியியல் சட்டமும் நடைமுறைகளும் -பாகம் 2. துரைசிங்கம் ரகு. யாழ்ப்பாணம்: வணிக மஞ்சரி வெளியீடு, 1வது பதிப்பு, தை 1990. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) X.146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
இந்நூல் வங்கிச்சட்டம் சம்பந்தமாகப் பல உபயோகமான பகுதி களை உள்ளடக்கியுள்ளது. இதன் முதற்பாகம் 1987 ஆவணியில் வெளியிடப்பட்டது.
56 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

340 சட்டவியல், 342 அரசியலமைப்புச்சட்டம், 350 பொது நிர்வாகம்
340 FIL66)
மேலும் பார்க்க: 181
342 அரசியலமைப்புச் சட்டம்
182
ண் அரசியல் திட்ட வளர்ச்சியும் மாற்றங்களும்: 1833-1978. அம்பலவாணர் சிவராசா, நீர்வேலி. வே.சின்னத்துரை, நீர்வேலி மத்தி. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1980. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) X,131 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 21X14 சமீ.
கோல்புரூக் முதல் இரண்டாம் குடியரசு வரையிலான இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சியும் அங்கு ஏற்பட்ட மாற்றங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
83 இலங்கையின் அரசியல் யாப்புகள். சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 210 டாம் வீதி. 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் அறிய முடியவில்லை) 176 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21x14 சமீ.
அரசியல் யாப்பு ஏற்பாடுகளைக் கற்றல், யாப்பின் பிரயோகத்தினைக் கற்றல் ஆகிய இரு விடயங்களையும் பிரதானமாகக் கவனத்திற் கொண்டு எழுதப்பட்ட நூல். யாப்பு ஏற்பாடுகளை விரிவாகக் கூறுவ தோடு நடைமுறையில் அதன் செயற்பாடு, செயற்பாட்டின் போது சந் தித்த பிரச்சினைகள், அதன் நன்மை, குறைபாடுகள் என்பவை பற் றிய மதிப்பீடாகவும் இந்நூல் அமைகின்றது.
350 பொது நிர்வாகம்
360 சமூக சேவை நிறுவனங்கள்
184 அவசரகாலம் 1979 இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்து வத்துக்குமான இயக்கம். ஏ.ஜே.கனகரத்தினா (தமிழாக்கம்). கண்டி இ.நீ.ச.இயக்கம், 30 புஷ்பதான மாவத்தை, 1வது பதிப்பு, ஆவணி,1980. (யாழ்ப்பாணம்: அர்ச். பிலோமினா அச்சகம், 102, பிரதான வீதி)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 57

Page 43
360 சமூக சேவை நிறுவனங்கள் 370 கல்வியியல்
(4),113 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5X13 சமீ.
இரு பாகங்களாக ஒழுங்கமைக்கப்பெற்றுள்ள இந்நூலின் முதற் பாகத்தில் யாழ்ப்பாணத்தில் 1979 ஆம் ஆண்டில் நிலவிய அவசர கால ஆட்சி பற்றியும் இரண்டாம் பாகத்தில் இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் தோற்றம், அதன் குறிக்கோள்களும் நடவடிக்கைகளும் பற்றிய ஆவணத்தொகுதியும் காணப்படுகின்றன.
மேலும் பார்க்க: 875
370 கல்வியியல்
185 - அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம். சீ.டி.வேலுப்பிள்ளை. வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கல்லூரி, 2வது பதிப்பு, 1984. முதற் பதிப்பு, 1922 (சுன்னாகமி. திருமகள் அழுத்தகம்)
xvi,287 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X13 g5.
போதகர் சீ.டி வேலுப்பிள்ளை அவர்களால் 1922இல் உருவாக்கப் பெற்ற இந்நூல், அமெரிக்க இலங்கை மிஷன் வரலாற்றை மாத்திர மின்றி அக்காலத்தில் நிலவிய யாழ்ப்பாணக் கல்வி முறையையும் அதன் வளர்ச்சியையும் விளக்குகின்றது.
186 அமெரிக்க மிஷனும் இலங்கையில் தமிழ் வளர்ச்சியும். எஸ். ஜெபநேசன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி, 1வது பதிப்பு, 1983. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xvi,104 பக்கம், 10 தகடுகள். விலை: ரூபா 20. அளவு 21X14 சமீ.
அமெரிக்கன் மிஷன் இயக்கத்தினால் தமிழ் அடைந்த பன்முகப் பட்ட வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுநூல். அமெரிக்கன் மிஷனரி மாரும் யாழ்ப்பாணச் சமுதாயமும், அமெரிக்கன் மிஷன் பாடசாலை கள், வட்டுக்கோட்டைச் செமினரி, அமெரிக்கண் மிஷனரிமார் தொகுத்த அகராதிகள், அமெரிக்கன்மிஷன் அச்சுப்பணி, மிஷனின் சாதனைகள் ஆகிய 6 இயல்களில் மேற்படி விடயங்கள் ஆய்வுக் குட்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலின் பின்னிணைப்பாக, இலங்கையில் பணியாற்றிய அமெரிக்கன் மிஷனரிமார் வரிசை, கிறிஸ்தவ தோத் திரப் பாடல்களை இயற்றிய புலவர்கள் அட்டவணை, வட்டுக் கோட்டைச் செமினரியில் கற்பித்த ஆசிரியர்கள் அட்டவணை, செமினரியில் சேர்த்துக்கொள்வதற்கு வேண்டப்பட்ட தகைமைகள், அமெரிக்கன் மிஷனரிமாரின் ஆறுமுக நாவலர் பற்றிய குறிப்புக்கள்
58 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

370 கல்வியியல்
ஆகியவை தரப்பட்டுள்ளன.
187 ஆசிரியரும் உளவியலும், சபா.ஜெயராஜா. இணுவில்: அம்மா வெளியீடு. 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப் படவில்லை)
50 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
உளவியலும் கல்வியும் மிகப்பரந்த ஆய்வுத்துறைகளாக விளங்கு கின்றன. வேகமாகப் பெருக்கெடுக்கும் அறிவு, மிகவும் சிக்கலடைந்து செல்லும் சமூகம் என்பவற்றின் மத்தியில் கற்றலையும் கற்பித்தலை யும் எளிமைப்படுத்த, கல்வி உளவியலறிவு துணைபுரிகின்றது. கல்வி உளவியலைப் பற்றிய விஞ்ஞானபூர்வக் கருத்துக்களை பயிற்சி ஆசிரியர்களுக்கு இந்நூல் வழங்குகின்றது.
88 1981-ம் ஆண்டுக் கல்விச் சீர்திருத்த முன்மொழிவுகள் மீதான மதிப்பீடு. ப.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: ப.சந்திரசேகரம், கல்வித் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) 16 பக்கம். விலை: ரூபா 3. அளவு; 21X14 சமீ.
இலங்கை அரசினால் 1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கல்விச் சீர்திருத்த முன்மொழிவுகள் மீதான இந்த மதிப்பீடு, யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தின் கல்வியியல் பீடப் பேராசிரியரினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
189 இருபதாம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி. சுப்பிரமணியம் சந்திரபோஸ். யாழ்ப்பாணம்: ஆசிரியர், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்; செட்டியார் அச்சகம்) 44 பக்கம், தகடு 1. விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
தாழ்த்தப்பட்ட தமிழர்கள் யார்? கல்வி என்றால் என்ன? கல்வி யாருக்காக? 20ம் நூற்றாண்டுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட தமிழர் களின் கல்வி வளர்ச்சி, 20ம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர் களின் கல்வி வளர்ச்சி ஆகிய தலைப்புக்களின் கீழ் ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
190
ல் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும். சொர்ணவல்லி பத்மநாபஐயர். யாழ்ப்பாணம்:
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 59

Page 44
370 கல்வியியல்
தமிழியல், இல.6, மத்திய மேற்குத்தெரு, குருநகர், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) (12),108 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 20X14.5 சமீ.
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களின் கல்விநிலை பற்றியும் அவர்கள் முகம் கொடுக்கவேண்டியுள்ள பிரச்சினைகள் பற்றியும் யதார்த்த நிலையில் எடுத்துக்காட்டும் நூல். கல்வி முதுமானிப் பட் டத்திற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை.
191 ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்களின் கல்விச்சிந்தனைகளும் பங்களிப்பும். S.H.M.ஜெமீல். கல்முனை: ஸாஹிராக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1ம் பதிப்பு, 1980. (மட்டக்களப்பு: கத் தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி) 94 பக்கம், தகடு 1. விலை: ரூபா 9. அளவு: 18X12 சமீ.
கல்வியியல் துறையில் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்களது சிந்தனை, பங் களிப்பு ஆகியன பற்றி 11 அத்தியாயங்களில் ஆராயப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக ஜனாப் அஸிஸ் அவர்களால் எழுதப்பட்ட நூல் கள், கட்டுரைகள், உரைகள், என்பனவற்றின் விபரப்பட்டியல் ஒன் றும் இணைக்கப்பட்டுள்ளது.
92 கல்விச் சிந்தனைகள். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ் லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, 1990.(சென்னை 01. மில்லத் பிரின்டர்ஸ்) 132 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 17X12 சமீ.
கல்வியியல் தொடர்பான 13 கட்டுரைகளையும் இஸ்லாம், சமூக வியல், வரலாறு தொடர்பான 7 கட்டுரைகளையும் கொண்ட தொகுப்பு. சில கட்டுரைகள் கிழக்கிலங்கையைப் பின்னணியாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
193 கல்வியியற் கோவை. ப.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: கல்விக் கழகம், கல்வியியற்புலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (6),156 பக்கம். விலை: ரூபா 35. அளவு; 21X13.5 சமீ.
மூன்று ஆங்கில மூலக்கட்டுரைகள் உள்ளிட்ட 21 கட்டுரைகளில் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வியாளர்களின் சிந்தனைகள் ஒப்பு
60 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

370 கல்வியியல்
நோக்கப்பட்டுள்ளன.
94 VA கல்வியில் அளவிரும் மதிப்பிடும். க.சின்னத்தம்பி. அச்சுவேலி: நா.சின்னத்தம்பி, வளர்மதி, இடைக்காடு. 1வது பதிப்பு, ஏப்ரல் 1986. (யாழ்ப்பாணம்: செட்டியார்அச்சகம், 430 காங்கேசன்துறை வீதி) xi,204 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5X14 சமீ.
கல்வித்தொழிற்பாடானது இன்று வகிக்கும் உன்னத நிலை ஏற்பட உறுதுணையாக அமைந்ததும், எதிர்காலக் கல்வி அபிவிருத்தியை நிர்ணயிப்பதுமான அளவீடு பற்றிய அறிவு நூல். மதிப்பீட்டுத் தொழிற் பாட்டின் ஒரு பிரதான கூறாக இருக்கும் அளவீடு பற்றிய அறிவினை ஆசிரியர்களும் கல்வியியலாளர்களும் பெற உதவும் நூல்.
195 கீழைத்தேயக்கல்வியியற் சிந்தனைகள். என்.கே.தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: திருமதி சுகலட்சுமி தர்மலிங்கம், தமிழ்த் தென்றல், சுண்டிக்குளி, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம் 411/1, காங்கேசன்துறை வீதி) XX,185 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18X12.5 சமீ.
இராமகிருஷ்ணர், விவேகானந்தர், பூரீ இராஜகோபாலாச்சாரியார், பாரதி, ஜவகர்லால் நேரு, ஆறுமுக நாவலர், விபுலாநந்தர், சேர் பொன் இராமநாதன், அருணாசலம், ஆ.கனகரத்தினம், தவத்திரு லோங் அடிகளார், ஏ.எம்.ஏ.அஸிஸ், தனிநாயக அடிகள் ஆகிய கீழைத்தேய அறிஞர்களின் கல்விச்சிந்தனைகள் ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன. யாழ்ப்பாண இளைஞர் சங்கக் கல்விச்சிந்தனைகள், பெருந்தோட்டப் பள்ளிக்கூடங்கள், கிழக்கிலங்கை கல்வி மறுமலர்ச்சி போன்ற விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
196 புதிய கல்விச் சிந்தனைகள், சபா ஜெயராசா. சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன், 6, தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, ஜூன் 2000 (சென்னை 5 மணி ஆப்செட்) 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21x13.5 சமீ.
ஆசிரியரின் நோக்கு உட்பட 19 இயல்களில் நவீன கல்விச்சிந்தனை யாளர்களின் கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறிஞரின் சிந்தனையும் ஒவ்வொரு இயலாக நூலில் வகுக்கப்பட்டுள்ளது.
நூல்தேடம் - தொகுதி ஒன்று 61

Page 45
370 கல்வியியல்
197 முறைசாராக் கல்வி. ச.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 1987. ( யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 68 பக்கம், வரைபடம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5x12.5 3FL115.
முறைசாராக்கல்வி அவற்றின் பிரிவுகள், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதன் செயற்பாடுகள், முறைசாராக் கல்விப்பயிற்சி நிலையங்கள், மாணவர் தெரிவு, அபிவிருத்திப் பின்னணியும் பொருத்தமான தொழில் வழி காட்டலின் அவசியம், வழிவகைகள், தொழிற்கல்வி வாய்ப்புக்களும் பொருத்தமான தொழில்நுட்பம், வளர்ந்தோர் கல்வி வளர்ச்சி, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதன் பணி ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
198 முறைசாராக்கல்வியில் புதிய பரிமாணங்கள். ச.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: கல்வித்திணைக்களம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப் பாணம்: செட்டியார் அச்சகம்) 27 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12 சமீ.
இலங்கைக் கல்வி அமைச் சின் முறைசாராக் கல்விப் பிரிவு நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட அறிமுக நூல்.
199 லெனினது கல்விச் சிந்தனைகள். அவுறாம்பிள்ளை யோன் பெனடிக்ற். (யோ.பெனடிக்ற் பாலன்) சென்னை 600002: தேசிய கலை இலக்கியப்பேரவையுடன் இணைந்து சவுத்விஷன், 6 தாயார் சாஹிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஜூலை 2000. (சென்னை 600005: மணி ஆப்செட் பிரின்டர்ஸ்) 246 பக்கம். விலை: இந்திய ரூபா 80. அளவு 21x13.5 சமீ.
பல்கலைக்கழக முதுமானிப்பட்டப் படிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
2OO வகுப்பறைக் கற்பித்தல். வ.ஆறுமுகம். உரும்பிராய்: திருமதி செல்வராணி ஆறுமுகம், பழைய தபால்கந்தோர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) xi,134 பக்கம். விலை: ரூபா 45 அளவு: 18.5x12.5 சமீ.
62 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

370 கல்வியியல், 370.1 கல்வி நிறுவனங்கள்
ஆசிரியர் தொழிலை மேற்கொள்ளும் அனைவருக்கும் ஏற்றவகையில் பிள்ளையை அறிந்து கொள்ளல், கற்பித்தல் முறைகள், துணைச் சாதனங்கள், உத்திகள், செயற்பாடுகள் போன்றவற்றையும் பாடத் திட்டமிடுதல், மதிப்பிடுதல், கட்டுப்பாடு போன்றவற்றையும் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
201 வடமராட்சியின் கல்விப்பாரம்பரியமும் இலக்கிய வளமும். எஸ். சிவலிங்கராஜா. பருத்தித்துறை: வடமராட்சிக்கல்வி வட்டம், பொன் னுச்சாமி கோட்டம். 1வது பதிப்பு. மே 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) XX,82 பக்கம், தகடுகள். விலை: ரூபா 25. அளவு: 21X14 சமீ.
ஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தின் கல்விப் பாரம்பரியத்தையும் அதன் விளைவுகளில் ஒன்றாகிய இலக்கிய வளத்தினையும் கண் டறியும் முயற்சி.
370.1 கல்வி நிறுவனங்கள்
202 பூபாள ராகங்கள் 2001. மகாலிங்கம் சுதாகரன்.(மலராசிரியர்), லண்டன்: யாழ். கம்பர்மலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, கொம்மாந்துறை, பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, ஜூலை 2001. (லண்டன்: வாசன் அச்சகம்) 136 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21x15 &ð.
22 July 2001 அன்று இடம்பெற்ற பழைய மாணவர் சங்க விழாவில் வெளியிடப்பட்ட சிறப்புமலர். வாழ்த்துக்களும் பலவினக்கட்டுரைகளும் உள்ளடங்கியது.
2O3 மவுறாஜனாக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம். நா. சண்முகலிங்கன். தெல்லிப்பழை: பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை, மஹாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜூன் 1988. (யாழ்ப்பாணம்: ரீலட்சுமி அச்சகம்) 18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
தெல்லிப்பழை மஹாஜனக்கல்லூரி உருவாக்கிவிட்ட இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய தொகுப்பாக அமையும் இந் நினைவுப் பேருரை பாவலர் துரையப்பா பிள்ளை நினைவுப் பேருரையின் ஏழாவது தொடராகும். vò
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 63

Page 46
370.1 கல்வி நிறுவனங்கள், 381 வர்த்தகம், 388 தரைப் போக்குவரத்து
மேலும் பார்க்க: 293
204 வாணியின் விரு. பழைய மாணவர் சங்கம், இலண்டன்: தெல் லிப்பழை மகாஜனக்கல்லூரி பழையமாணவர் சங்கம், 1வது பதிப்பு, 1988. (தெல்லிப்பழை: பதிப்பக விபரம் குறிப்பிடப்படவில்லை.) 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியினரின் இலக்கிய உலகப்பணி கள் பற்றிய மதிப்பீடு. மஹாகவியின் தெ.து.ஜெயரத்தினம், மஹா ஜனக்கல்லூரி (வாணியின் வீடு) ஆகிய இரு கவிதைகளும் பாவலர் துரையப்பாபிள்ளையின் யாழ்ப்பாணம் - அன்றும் இன்றும்: மீள்பார்வை என்ற ஆவேலுப்பிள்ளையின் கட்டுரையும், ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை - புதுசு- வின் பண்பும் பணியும் பற்றிய நா.சுப் பிரமணியனின் கட்டுரையும், இவர்கள்(சிறுகதைத்தொகுப்பு) ஓர் அறி முகம் என்ற எம்.ஏ.நு.மானின் அறிமுகக்குறிப்பும் அடங்குகின்றன.
380 வர்த்தகம், தொடர்புகள், போக்குவரத்து
381 வர்த்தகம்
205 நடைமுறை விடயங்கள்: வர்த்தகமும் நிதியும். இ.இரட்ணம். uTubjust 600Tib: Higher Education Services Centre, 21 1/21 (35T66) வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 1989. (யாழ்ப்பாணம்: உமா பிரின்டர்ஸ், 32 நல்லூர் குறுக்குத்தெரு, நல்லூர்) 100 பக்கம். விலை: ரூபா 28 அளவு: 20x14 சமீ.
கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர் வகுப்பு மாணவர்களுக்குரிய வர்த்தகமும் நிதியும் தொடர்பான பாடத்திட்டத்துக்குரிய வெளி நாட்டு வியாபாரம் என்ற பகுதி முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.
388 தரைப் போக்குவரத்து
2O6 இங்கிலாந்து சாரதிகளின் எழுத்துப் பரீட்சை உத்தியோக ரீதியான வினா விடை 2001-2002. பூசுபோதிஸ் (தொகுப் பாளர்) லண்டன்: பூபாலசிங்கம் புத்தகசாலை, லண்டன் கிளை, 110 ஹொலண்ட் வீதி, ஈஸ்ட்ஹாம். 2வது பதிப்பு, 2001, 1வது பதிப்பு, 2000. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 190 பக்கம், வண்ணப் புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 20. அளவு; 21x15 சமீ.
64 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

390 நாட்டாரியலும் பழக்கவழக்கங்களும், 391.1 இடப்பெயர்ஆய்வு
figsbroofu 9 Jafair 9tsideBTUub Quip Driving Standards Agency u alsT6) G66suilt Guip The Official Theory Test for Cars 616. Too தமிழில் மொழிபெயர்ப்பு உரிமை பெற்றுத் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது.
390 நாட்டாரியலும் பழக்க வழக்கங்களும்
2O7 இலங்கைத்தமிழ் நாட்டார் வழக்கியல். கார்த்திகேசு சிவத் தம்பி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (கல்லச்சுப்பிரதி). 364 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 31X21 சமீ.
இலங்கைத்தமிழ் நாட்டார் வழக்கியல் பற்றி இடம்பெற்ற பேராசிரியர் கணபதிப்பிள்ளை நினைவுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 15 கட்டுரைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க: 139, 296
390.1 இடப்பெயர் ஆய்வு
208 இடப்பெயர் ஆய்வு: காங்கேசன் கல்வி வட்டாரம். இ.பால சுந்தரம். இளவாலை: பண்டிதர் அப்புத்துரை மணிவிழாக்குழு, புனித வாசம், பத்தாவத்தை, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்; செட்டியார் அச்சகம்) X,73 பக்கம், தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14சமீ.
நீர்நிலைப்பெயர், நிலவியல்பு, நிலப்பயன்பாட்டு நிலை, குடியிருப்பு நிலை, ஊராட்சி நிலை, தாவரப்பெயர், சிறப்பு நிலைப்பெயர் ஆகிய தலைப்புக்களின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட, காங்கேசன் கல்விவட்டார எல்லைக்குள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள் ஆய்வு செய்யப் பட்டுள்ளன.
209 இலங்கை இடப்பெயர் ஆய்வு 2: வடமராட்சி, தென்மராட்சி. இ. பாலசுந்தரம். புலோலி: வல்லிபுரம் இந்து கல்வி கலாச்சார மன்ற வெளியீடு, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: மேர்க்குரி அச்சகம்) XVi,150 பக்கம். விலை: ரூபா 40. அளவு; 21X14 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 65

Page 47
391.1 இடப்பெயர் ஆய்வு, 395 நாட்டார் கலைகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகரையிலே தொண்டைமானாறு பிரிக் கும் வடபகுதியும், அதனோடு இணைந்த வடகிழக்குப்பகுதியும், தென்பகுதியும் வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களாகும். இப் பிரதேசத்து இடப்பெயர்களின் ஆய்வு ஒன்பது இயல்களில் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
210 தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும். கதிர். தணிகாசலம். சென்னை 600095, சரவணா பதிப்பகம், 127 மேற்குத் தெரு, இராகவரெட்டி காலணி, 1வது பதிப்பு, ஜூன் 1992. (சென்னை 600014: மூவேந்தர் அச்சகம், இராயப்பேட்டை) 268 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18x12.5 சமீ.
இலங்கை ஊர்ப்பெயர்களை ஆராய்ந்து, தக்க விதிமுறைகள் கொண்டு தன் ஆய்வை உறுதிப்படுத்தி, திராவிட இன, மொழியி லிருந்தே இலங்கை நாடும் சிங்கள மொழியும் தோன்றியுள்ளன என்பதை ஆசிரியர் விபரித்துள்ளார். தமிழின் தொன்மை, அதன் பரம்பல், சிங்கள மொழியின் தோற்றம், இடப்பெயர்களிலும் தமிழினது செல்வாக்கு மற்றும் பண்பாடு, கலாச்சாரம், போன்ற துறைகளில் உள்ள ஒற்றுமை ஆகியவை தேவை கருதி இந் நூலில் தரப்பட்டுள்ளன.
395 நாட்டார் கலைகள் 2 தாளக்காவடி. ஏ.ரி.பொன்னுத்துரை. குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, அக்டோபர் 1988. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 32 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5x12.5 சமீ.
கிராமியக் கோலங்களும் கலைத்துவமும் இணைந்த கலைவடிவம் தாளக்காவடியாகும். ஆசிரியர் காலத்துக்குக்காலம் பத்திரிகை களில் எழுதிய கட்டுரைகளையும் ஒரு வானொலி உரையையும் உள்ளடக்கிய சிறுநூல். தாளக்காவடிக்கலை, அண்ணாவிமாரின் கலைப்பங்களிப்பு, உடுக்கின் பெருமை, அரங்குகளும் அவைகளும் ஆகிய விடயங்கள் கட்டுரைகளின் கருப்பொருளாக அமைந்துள் 660.
22 நாட்டார் இசை: இயல்பும் பயன்பாடும். இளையதம்பி பாலசுந்தரம். யாழ்ப்பாணம்: நாட்டார் வழக்கியல் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (யாழ்ப்பாணம்: மேர்க்குரி பிரின்டர்ஸ்) vi,132 பக்கம். விலை: ரூபா 75 அளவு: 21x14 சமீ.
66 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

395 நாட்டார் கலைகள்
நாட்டார் இசையின் தோற்றம்-வளர்ச்சி, அதன் வகைகளும் பயன் பாடும், தனித்துவமும் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. நாட் டார் இசை வாய்ப்பாடுகள், அதன் பண்பாட்டில் வளர்ந்த இசைக் கருவிகள் போன்றன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது
23 நாடகம்: நாட்டாரியற் சிந்தனைகள். சு.வித்தியானந்தன், அ. சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை, எஸ்.குணநிதி, தமிழகம் வெளியீடு, வீமன்காமம், 1வது பதிப்பு, தை 1990. (யாழ்ப் பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) vi,112 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களது நாடகம், தமிழ்க்கூத்து மரபு, பாரம்பரிய இசை போன்றவை தொடர்பான நாட்டாரியல் சிந் தனைகளை உள்ளடக்கிய 10 கட்டுரைகளின் தொகுப்பு.
214 வட இலங்கை நாட்டார் அரங்கு. காரை செ.சுந்தரம்பிள்ளை. சென்னை 26: குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (சென்னை 5 தேவா ஒப்செட் அச்சகம்) 403 பக்கம், விளக்கப்படங்களும் புகைப்படங்களும். விலை: குறிப் பிடப்படவில்லை. அளவு: 21x13.5 சமீ.
வட இலங்கை நாட்டார் அரங்கின் பாரம்பரியம் பற்றி இந்நூல் முழுமையாக ஆய்வு செய்கின்றது.
25 வன்னிப்பிராந்தியக் கூத்துக்கள்: பாரம்பரியத் தேடல். அருணா செல்லத்துரை. கொழும்பு 8: அருணா வெளியீட்டகம், A15/1/1 Maning Town Housing Complex, Mangala Road, 16.g. பதிப்பு, 2000 (கொழும்பு யுனி ஆர்ட்ஸ்) xvi,133 பக்கம், விலை: ரூபா 150. அளவு: 22x14.5 சமீ. ISBN 95596159-3-9
வன்னியின் வரலாறும், வரலாற்றிற்கூடாக அவ் வளநாட்டில் முகிழ்ந் தெழுந்த கலைகளும் சிறப்பாகக் கூத்து, இசை, நாடகம், நவீன நாடகக் கலைகளும் அவற்றின் இன்றைய போக்குகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தான் தயாரித்த நாடகங்கள் சம்பந்தமாக ஏனையோர் கூறிய தகவல்களையும் ஆசிரியர் இதில் தந்துள்ளார்.
மேலும் பார்க்க: 882, 883
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 67

Page 48
395 கிராமிய இலக்கியங்கள்
398 கிராமிய இலக்கியங்கள்
26 இலங்கைத் தெனாலிராமன் கதைகள், சந்திரிகா சோமசுந்தரம். சென்னை 600017: அநுராகம், இல.10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 1988. (சென்னை: 600024: அலைகள் அச்சகம்) 32 பக்கம். விலை: இந்திய ரூபா 2.50. அளவு: 17X12 சமீ.
புத்திக்கூர்மையுள்ள 'அந்தரே இலங்கையைச் சேர்ந்தவர். இலங் கைத் தெனாலிராமன் என்று ஒப்பிடப்படும் பாத்திரம் இது. அந்தரே பற்றிய கதைக்ள் சிங்கள மக்களால் இன்றும் நாட்டாரிலக்கியமாக வழங்கி வருகின்றன. இக்கதைகள் நகைச்சுவையாகவும் அர்த்த முள்ளதாகவும் அமைந்து நீதியையும் போதிக்கின்றன. அத்தகைய 22 குட்டிக்கதைகளின் தொகுப்பு இந்நூலாகும்.
217 கண்ணகி அம்மன் கஞ்சிவார்ப்புத் தண்டற் பாட்டு, த.சண் முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை. கந்த சாமி கோவிலடி, 1வது பதிப்பு, மார்ச் 1983. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்)
12 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5X12 சமீ.
மாவிட்டபுரம் வீணியவரை கண்ணகிஅம்மை கஞ்சிவார்ப்புத்தண்டற் பாட்டும் அது பற்றிய அறிமுகக் குறிப்பும்.
28 கனிந்த காதல். ஆ.மு.ஷரிபுத்தீன். கண்டி: தமிழ் மன்றம், கல் ஹின்ன, 1வது பதிப்பு, 1985. (வெள்ளவத்தை சாமர அச்சகம், 22ஏ, மல்லிகா ஒழுங்கை). 72 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x13 சமீ.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் களவொழுக்கம் குறித்துப் பாடப் பட்டுள்ள கிராமியப் பாடல்களின் தொகுப்பு இதுவாகும். கதவு திற கண்மணியே, கதைத்திருக்க வாங்க மச் சான் என்ற இரண்டு தலைப்புக்களில் முறையே கற்பும், களவும் விளங்க இரு கதை களாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
219 தாய் தரும் தாலாட்டு. அநு.வை. நாகராஜன். தெல்லிப்பழை: வைரமான் வெளியீடு, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, மே 1988. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
68 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

395 கிராமிய இலக்கியங்கள்
16 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
அரிய நாட்டாரிலக்கியப் படைப்பான தாலாட்டுப் பாடல் பற்றிய சிறு நூல். (தாலாட்டு-தால்+ஆட்டு. தால்- நாக்கு, ஆட்டு-அடக்குதல், ஆட் டுதல்) தமிழிலும் பிறமொழிகளிலும் வழங்கும் தாலாட்டுக்கள், தாலாட் டின் இலக்கிய நயம் பற்றி விளக்கும் கட்டுரை.
220 தாலாட்டுக்கள். சண்முகம் ஜெயதாசன், சுலோஜனா ஜெயதாசன். மாவிட்டபுரம்: புது வீடு, கருகம்பனை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1988. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 32 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5X12.5
இலங்கைத் தமிழரிடையே வழங்கி வரும் 20 தாலாட்டுப் பாடல்களின் தொகுப்பு.
மேலும் பார்க்க: 415
22 நாட்டார் இலக்கியத்தில் மழை இரங்கிப்பாடல். த.சண்முக சுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவைக் கந்தசுவாமி கோவிலடி, 1வது பதிப்பு, தை 1984. (ஏழாலை; மஹாத்மா அச்சகம்) 24 பக்கம். விலை: ரூபா 8. அளவு: 18.5X12.5 சமீ.
கட்டுவன் வீரபத்திரர் வசந்தன், மாரியம்மன் மழை இரங்கிப்பாடல், மாருதப்புரவல்லிப் பாடல், கொடும்பாவிப்பாட்டு ஆகிய நான்கு வகை மழை இரங்கிப் பாடல்கள் பற்றிய விளக்கத்தை வழங்கும் நூல்.
222 பண்ணைப்பாலக்கும்மி. சிவபூரீ சி.அகிலேஸ்வர சர்மா(மூலம்), வே.இ.பாக்கியநாதன்(பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வே.இ.பாக்கிய நாதன், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: காயத்ரி அச்சகம்) 22 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முற்பட்ட இக்கும்மி, அந்நாளில் யாழ்ப்பாணத் தீவுகளில் ஒன்றாகிய மண்டைதீவையும் யாழ்ப்பாண நகரையும் இணைக்கும் பண்ணைப்பாலத்தின் தேவையை வலியுறுத்தி ஆக்கப் பெற்றதாகும்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 69

Page 49
395 கிராமிய இலக்கியங்கள்
223 பாட்டி சொன்ன கதைகள் (உருவகம்). முருகபூபதி. கொழும்பு 13. மல்லிகைப்பந்தல், 201, 111 ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997 (சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 79, 1வது வீதி, குமரன் காலனி, வடபழநி) 96 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12.5 சமீ.
இக் கதைகளில் வரும் மிருகங்களும் பறவைகளும் மற்றும் உயிரினங்களும் மரம்-செடி-கொடிகளும் பேசுகின்றன.தத்தமக்கே யுரிய பண்பைப்போதிக்கின்றன. கதையில் நாம் அன்றாடம் சந்திக் கும் அரசியல், சமூகம், குடும்பம், மனிதர்களை நாம் இங்கு இனம் காண முடிகின்றது.
224 மலைநாட்டு மக்கள் பாடல்கள். சி.வி.வேலுப்பிள்ளை. சென்னை 17: கலைஞன் பதிப்பகம், 54, பாண்டிபஜார், 1வது பதிப்பு, 1983. (சென்னை17: தமிழோசை அச்சகம், 84, ஹபிபுள்ளா வீதி)
104 பக்கம். விலை: இந்திய ரூபா 7. அளவு 18x12 சமீ.
மலையகத்தில் வாய்மொழியாக வழங்கிவரும் நாட்டார் பாடல் களின் தொகுப்பு.
225 மலையக வாய்மொழி இலக்கியம். சாரல்நாடன். சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1993, (சென்னை02: சூர்யா அச்சகம்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.
எழுத்தறிவற்ற பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் நாட்டார்பாடல்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இன மக்களிடை யேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழி இலக்கியமாக இருந்து வருகின்றது. தென்னிந்தியத் தமிழ்மக்களின் வம்சாவளியினர் என்பதால் தென்னிந்திய- தமிழக நாட்டார் பாடல்களையொத்த பல பாடல்கள் இவர் தம்வாய்மொழி வழக்கில் இருந்துவந்துள்ளன. தம் வாழ்க்கைச்சூழல் இயல்புகளுக் கேற்ப அவை திரிபடைந்து மலையக மக்களுக்கேயுரிய தனித் துவமான பாடல்களாக மிளிர்வதைக் காணலாம். மலையக மக் களின் வாய்மொழி இலக்கியம் பற்றிய 12 கட்டுரைகளும் இதை ஆய்வுரீதியாக வெளிக்கொணர்கின்றது.
70 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

ה
395 கிராமிய இலக்கியங்கள்
226 மாருதப்புரவல்லி கப்பற்பாட்டு. த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980. (தெல்லிப் பழை: குகன் அச்சகம்) X,36 பக்கம், விலை: ரூபா 4. அளவு: 18X12.5 சமீ.
மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள் என்ற தொடரில் முதல் நூலாக வெளிவந்துள்ளது. மக்கள் கலைகளின் மறுமலர்ச்சிக்கான தேவை பற்றிய ஆசிரியரின் கருத்தும் கப்பற்பாட்டும் இதில் இடம் பெற்றுள்ளன.
227 மாவை முருகன் காவடிப்பாட்டு. த.சண்முகசுந்தரம். தெல்லிப் பழை: அருள் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1981. (தெல்லிப் பழை: குகன் அச்சகம்) 18 பக்கம். விலை: ரூபா 2.50. அளவு: 18.5x12 சமீ.
மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள் தொடரில் 3வது நூல். காவடிக்கலை பற்றிய தகவல்களும் ஈழத்தில் காவடிப்பாட்டுக்களின் வரலாறும் மாவிட்டபுரம் முருகன் மேற்பாடப்பெற்ற காவடிப் பாட் டும் இடம் பெறுகின்றன.
228 வண்ணிவள நாட்டுப்பாடல்கள். செ.மெற்றாஸ் மெயில். ஒட்டு சுட்டான். முல்லை இலக்கிய வட்டம், மிதிலை. 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்; செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி) XXXX,132 பக்கம், விளக்கப்படம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 15, நூலகப்பதிப்பு: ரூபா 20. அளவு: 21X14 சமீ.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் வழக்கிலுள்ள நாட்டார்பாடல்களின் தொகுப்பு.
229 விறகு வெட்டி: ஒரு தமிழ் நாடோடிக்கதை. ஜெகதீஸ்வரம் 6th6061. Gogoji. 61: The Refugee Council, 3 Bond way, London SW8 1SJ, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் அறியமுடியவில்லை) 16 பக்கம், வண்ணப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 2.70. அளவு: 29.5X21 சமீ.
பிரபல தமிழ் நாடோடிக்கதைகளில் ஒன்றான விறகு வெட்டியின் கதை ஆங்கில மொழிபெயர்ப்புடனும் வண்ணப்படங்களுடனும்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 71

Page 50
395 கிராமிய இலக்கியங்கள், 398.1 பழமொழிகளும் விடுகதைகளும்
வெளியிடப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக இலங்கையின் வரலாற்றுக் குறிப்பு இறுதி இரு பக்கங்களில் ஆங்கிலத்தில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
230 வெறியாட்டு பாட்டுக்கூத்து. இ.முருகையன். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலககியப் பேரவை, 1வது பதிப்பு, ஜூலை 1986. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், 407 ஸ்ரான்லி வீதி) 46 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 20.5X13 சமீ.
”வேலியே பயிரை மேய்வது போல’ என்பது காலங்காலமாகத் தமிழ் மக்களிடையே வழங்கி வரும் ஓர் உவமைத்தொடர். இதில் வரும் உவமையை விரிவாக்கி அழுத்தம் தந்து காட்சிப்படுத் துவதே இந்த நாடகம். நமது மக்கள் வாழ்விலே அழியாத வடுக் களையும் தாக்கங்களையும் சேதங்களையும் உண்டு பண்ணி வரும் நிகழ்ச்சிகள் யாவற்றின் கூட்டு மொத்தமே இதன் உள்ளடக் கமாகும்.
- ஆசிரியர் (முன்னுரையில்)
1981-ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் பேரினவெறியர்களால் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது. வேலியே பயிரை மேய்வதாகக் காட்சிப்படுத்தப்பட்டு பாட்டுக்கூத்தாக யாழ்ப்பாணம் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட் l-gi.
மேலும் பார்க்க: 487, 618
398.1 பழமொழிகளும் விடுகதைகளும்
231 உருமாறும் பழமொழிகள். என்.செல்வராஜா. ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம், அச்சக விபரம் தரப்படவில்லை). V.30 பக்கம். விலை: ரூபா 15. அளவு; 21X14 சமீ.
பழமொழிகள், மரபுத்தொடர்கள் போன்றவற்றில் காலப்போக்கில் ஓரிரு எழுத்துக்கள் சேர்வதாலோ, அல்லது விடுபடுவதாலோ சொற் களில் இரட்டை அர்த்தம் தொனிப்பதாலோ பழமொழிகளில் திரிபுகள் ஏற்படுகின்றன. காலத்துக்குக்காலம் சமுதாயத்தில் ஏற் படும் கருத்து மாற்றங்களுக்கு ஏற்பவும் பழமொழிகள் உருமாற் றம் பெற்றுள்ளன. இன்று நடைமுறையில் இப்படியாக உருமாற் றம் பெற்ற பழமொழிகள், உவமைத்தொடர்கள் மரபுத்தொடர்கள்
72 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

398.1 பழமொழிகளும் விடுகதைகளும், 400 மொழி, 4912 சம்ஸ்கிருதம்
போன்றவற்றைத் தொகுத்து, அவற்றின் மூலக்கருத்துக்களையும் தற் காலக் கருத்துக்களையும் இலக்கிய, நாட்டாரியல் சான்றாதாரங் களுடன் ஒப்பிட்டு நோக்கும் நூல்.
232 நொடியும் விபையும் பாகம் 2 கோப்பாய் சிவம் (இயற்பெயர்: பா. சிவானந்த சர்மா). ஆவரங்கால்: பா.சிவானந்த சர்மா, 1வது பதிப்பு, 1989. (சாவகச்சேரி. திருக்கணித அச்சகம், மட்டுவில்.) 32 பக்கம். விலை: ரூபா 10. அளவு 17X12சமீ.
ஈழத்துக் கிராமங்களில் நிலவி வரும் பழமையானதும் புதியதுமான விடுகதைகளின் தொகுப்பு. சிறுவர்களுக்கு உகந்தது.
233 மக்கள் வாழ்வில் பழமொழிகள்: பழமொழிக் கட்டுரைகள். க. சத்தியானந்தசிவம் (சச்சி மாஸ்டர்). யாழ்ப்பாணம்: சுகிர்தா பதிப்பகம், 40, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, 1988, (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்)
128 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12 சமீ.
தமிழ்ப் பிரதேசங்களில் வழக்கிலுள்ள தமிழ்ப் பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கான விளக்கங்கள் கட்டுரை வடிவில் தரப் பட்டுள்ளன. மக்களின் மனப்பாங்குகளைப் பொதுவாகவும், யாழ்ப் பாணத்துத் தமிழரின் மனப்பாங்கினைக் குறிப்பாகவும் வெளிப்படுத்தும் சமூக, பண்பாட்டுக் கட்டுரைகள்.
400 மொழியியல்
491.2 சம்ஸ்கிருத மொழி
234
இந்து சமயத்தின் மூலமொழி சம்ஸ்கிருதமா ஆதித் திராவிடமா? ஜே.டி.சேவியர்(மூலம்), ஏ.ஜே.கனகரத்தினா, எம்.சின் னத்துரை (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்க சனசமூகநிலையம், பலாலி பருத்தித்துறை வீதிச்சந்தி, 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 26 பக்கம், தகடு 2. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14சமீ.
மதுரையில் தை 1981 இல் நடைபெற்ற 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுரையின் தமிழ் வடிவம்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 73

Page 51
4948 தமிழ் மொழி
494.8 தமிழ்மொழி
235 உலகம் பரவிய தமிழின் வேர்: கல். பகுதி 1, கு.அரசேந்திரன். ஐக்கிய இராச்சியம்: இரத்தினம் அறக்கட்டளை, 179, Norwal Road, North Wembley, Middlesex, HA0 3SX, 16 gol ugf'L,
g6016 if 1997. (Chennai: Student Offset Services, T.Nagar) XX,216 பக்கம். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5 அளவு 21X14 சமீ.
தமிழில் உள்ள கல் என்ற வேர்ச்சொல்லைப் பற்றிய விரிவான ஆய்வின் முதற் பகுதி. கல் என்பது பல நூறு தமிழ்ச் சொற் களுக்கும் பிறமொழிகளில் வழங்கும் சில நூறு சொற்களுக்கும் மூலமான ஒரு பழந்தமிழ் மூலச்சொல். இந்நூலில் விரித்து விளக் கப்படுத்தும் சொற்கள் அனைத்துக்கும் இச்சொல் ஒன்றே வேரும் மூலமும் ஆகும் என்பதை ஆசிரியர் தன் விரிவான ஆய்வின் மூலம் நிரூபிக்க முனைகின்றார்.
236 தமிழ் எழுத்தின் வரிவடிவங்கள் - மாற்று நோக்கு. க. சச்சிதானந்தன். யாழ்ப்பாணம்; க.சச்சிதானந்தன். 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: பூரீகாந்தா அச்சகம், கே.கே.எஸ். வீதி) 24 பக்கம், விளக்கப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 25x19 சமீ.
தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களில் எதிர்காலத்தில் ஏற்படுத் தப்படக் கூடிய மாற்று அமைப்புக்கள் பற்றிய ஒரு நோக்கு. தை 1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
237 தமிழிற் தரிப்புக்குறிகளின் பயன்பாடு. சி.சிவசேகரம். France. EXIL, 27 Rue Jean Moulin, 92400 Courbevoie, 16).g5 பதிப்பு, ஏப்ரல் 1994. (அச்சக விபரம் அறிய முடியவில்லை) 30 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X15 சமீ.
எழுத்தாளரிடையே தரிப்புக் குறிகளின் பிரயோகம் பற்றிய அறியாமை காரணமாக ஏற்படும் தவறுகளை நிவர்த்திக்கும் பொருட்டு அவற்றின் முறையான பயன்பாடு உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
74 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

4948 தமிழ் மொழி ဒြိုဒ့်် ,ဒ်,်
238 தமிழும் உலகமும்: உலகளாவிய தமிழுறவு மாநாட்டு ஆய்வுரைத் தொகுப்பு. வெ.செ.குணரத்தினம் (தொகுப்பாளர்). புதுச்சேரி. 605011: விஜயா பதிப்பகம், 5, 2வது தெரு, வெங்கட்டா நகர், 1வது பதிப்பு, மார்ச் 1998 (சென்னை 600032 R.G. Graphics, பிள்ளையார் கோவில் தெரு, மடுவன்கரை, கிண்டி) Vi,148 பக்கம், புகைப்படம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 21.5X14 g5.
1993ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை ஜேர் மனியின் புதிய தலைநகர் பேர்லின் மாநகரில் நடந்தேறிய ஐரோப்பா வின் முதலாவது உலகளாவிய தமிழுறவு மாநாட்டு ஆய்வுரைத் தொகுப்பு. பின்னிணைப்புகளாக இணைக்கப்பட்ட 11 ஆவணங்களில், மாநாட்டுக்கு வருகை தந்தோர் விபரம், மாநாடு நிறைவுற உழைத் தவர்களின் விபரம், நிகழ்ச்சி அட்டவணை, செயற்குழு விளக்க அறிக்கை, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் இர.ந.வீரப் பன் ஆற்றிய உரைச் சுருக்கம், மாநாட்டுக்கான ஜேர்மன் மொழி அழைப்பிதழ், முன்னூறு ஆண்டுக்கால ஜெர்மன்உறவு பற்றி மாநாட்டு அமைப்பாளர் வெ.செ.குணரத்தினம் அவர்களின் உரையின் ஜேர்மன் மொழிவடிவம் ஆகியன குறிப்பிடத்தக்கவை.
239 தமிழும் தமிழரும்.வி.சிவசாமி. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தக 5T606), 16 g5 ug5, 1998. (Q36,6060T 5: Page Offset, 6/2 Devarajan Street)
128 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 17X12.5 சமீ
பேராசிரியர் விநாயகமூர்த்தி சிவசாமி அவர்களின் மணிவிழா வெளியீடு. ஒன்பது இயல்களைக் கொண்ட இந்நூலில், சங்ககாலம் தொட்டுக் கம்பதாசன் வரை தமிழகத்திலும், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் வரை இலங்கையிலும் வாழ்ந்த புலவர் பெருமக்கள் பலர் தமிழ் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் - குறிப்பாகத் தமிழ் பற் றிய அடைமொழிகள், உருவகங்கள், உவமைகள் முதலியனவற்றை அடிப்படையாக வைத்துச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. கால முறைப்படி தமிழ்ப்பற்று வளர்ச்சி, அது பற்றிய புதிய நோக்கு, மாற் றங்கள் முதலியன சுருக்கமாக அரசியல், சமய, சமூகப் பின்னணி யில் வைத்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
240 பாரதியின் மொழிச்சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு. எம்.
ஏ. நுஃமான். யாழ்ப்பாணம்: பல்கலைக்கழகக் கலைப்பீட வெளியீடு,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 75

Page 52
4948 தமிழ் மொழி, 4948() தமிழ் இலக்கணம்
1வது பதிப்பு, மே 1984. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) (8).106 பக்கம். விலை: ரூபா 30. அளவு 24x18 சமீ.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மொழி பற்றிய கருத்துக்கள் தொகுத்து நோக்கப்பட்டுள்ளது. அவை நவீன மொழியியல் கண் ணோட்டத்தில் ஓரளவு விரிவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: 758
494.8(1) தமிழ் இலக்கணம்
241 அடிப்படைத்தமிழிலக்கணம். எம்.ஏ.நு.மான், கல்முனை: வாசகர் சங்கம், 2வது பதிப்பு, ஜூலை 2000, 1வதுபதிப்பு, ஆகஸ்ட் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்) 214 பக்கம். விலை: ரூபா 225. அளவு 21.5x14 சமீ.
தமிழ்மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக் கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் விரிவாக எழுதப் பட்ட இலக்கண ஆய்வுநூல்.
242 இலக்கண விதி மூலங்களும் விதிகளும்.க.வீரகத்தி. சென்னை 108 திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1984. (சென்னை 108: அப்பா அச்சகம்) 92 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
தமிழ் இலக்கணம் பற்றிய எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு.
243 இலக்கணத் தெளிவு: உயர்தர வகுப்புகளுக்குரியது. க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: பூரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235 காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1989, 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: பூரீ சுபபிரமணிய அச்சகம், 63 பீ.ஏ.தம்பி வீதி)
vi,166 பக்கம். விலை: ரூபா 30. அளவு 21X13.5 சமீ.
க.பொ.த.(உயர்தர) வகுப்பு மாணவர்களுக்கான விடயங்களை உள்ளடக்கிய இந்நூல் சாதாரணதர மாணவர்களின் அடிப்
76 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

4948(1) தமிழ் இலக்கணம்
படை இலக்கணத் தேவைகளையும் நிறைவு செய்வதோடு, பொதுக் கலைத் தகுதி காண்தேர்வு (GAQ) நாடிகளுக்கு உசாத்துணை நூலாகவும் உதவும். •
244 இலக்கணம் கற்போம். விக்னா பாக்கியநாதன். ஜேர்மனி: கலை விளக்கு வெளியீட்டகம், Droote 13, 4600 Dortmund.14, 1வதுபதிப்பு, 1992. (Germany: VIDI, Druckwerktatt, Offset Cruck, Am Zippen. l,4600, Dortmund 1) (10),60 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
ஜேர்மனியில் இருந்து வெளிவரும் கலைவிளக்கு என்ற சஞ்சிகையில் வெளிவந்த இலக்கணம் கற்போம் என்ற தலைப்பிலான கட்டுரை களின் தொகுப்பு.
245 இலக்கணமும் சமூக உறவுகளும். கா.சிவத்தம்பி. சென்னை 600098 நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, 1982. (சென்னை 600002 மக்கள் அச்சகம்) 68 பக்கம். விலை: இந்திய ரூபா 4. அளவு: 18x12.5 சமீ.
தமிழ்ச் சொல்லிலக்கணக்கூறுகள் பற்றிய ஒரு மார்க்சிய நோக்கு.
246 தமிழ்மொழி இலக்கண இயல்புகள். அ.சண்முகதாஸ். யாழ்ப் பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு. மார்ச் 1982. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) xvi,248 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 25. நூலகப்பதிப்பு: ரூபா 30. அளவு: 18x12 சமீ.
தமிழ் இலக்கணம் பற்றி அறிய வேண்டியவற்றை மரபுவழி நின்று மொழியியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்பு 1989 இல் வெளியிடப்பெற்றது
247 நன்னூல் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும். FX C. நடராசா. காரைநகர் (யாழ் மாவட்டம்): தமிழ் வளர்ச்சிக் கழகம், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
விசாகப் பெருமாளைப் பற்றி எழுதிய காணி டிகை உரையைத்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 77

Page 53
4948(1) தமிழ் இலக்கணம், 4948(2) தமிழ்ப் பாடநூல்கள்
தழுவியும் கூட்டியும் திருத்தியும் புதுக்கியுமே நன்னூலுக்கு நாவலர் உரை எழுதினார் என்பது ஒரு சாராரின் கொள்கை. அக் கொள்கையைத் தக்க சான்றுகள் காட்டி மறுத்து இந்நூல் எழுதப் பட்டுள்ளது.
494.8(2) தமிழ்ப் பாடநூல்கள்
248
(ஆய்வுக் கட்டுரைகள்). விக்னா பாக்கியநாதன். மேற்கு ஜேர் ud6öfl: 8560)6o 66näG5 Q66flus6.Droote 13,4600 Dortmund 14, 1வது பதிப்பு, ஜூன் 1997, (சென்னை 24 சதுர்வேந்தன் அச்சகம், 3, சிவன் கோவில் தெற்குத்தெரு, கோடம்பாக்கம்) 38 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ
கனடாவில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகா நாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையின் நூலாக்கம். புலம் பெயர் நாடுகளில் தமிழ்ச்சிறார்களுக்கு தாய்மொழியைப் பதிய வைத்து ஆர்வமூட்டவும், தமிழ் தெரிந்தவர்களாகவும் வாசிப்பறிவு பெற்றவர்களாகவும் உருவாக்கும் நோக்கத்துடனும் எழுந்த நூல்.
249 செயல்நூல் ஆண்டு 1: தமிழ்மொழி. நகுலா சிவநாதன். Ggud6ofl: Jakob. Kaiser Str 5, 59379, Selm, 16llg Lg5ÜL, 1995. (Gegjud6fl: Caritas, Dannecker Str 94, 72458, Albstadt) 32 பக்கம், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 30X21 gL5.
இலங்கைப் பாடத்திட்டத்துக்கு அமைய 1988 இல் கல்வி வெளி யீட்டுத் திணைக்கள வெளியீடான தமிழ் ஆண்டு 1 என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றது.
250 செயல்நூல் ஆண்டு 2: தமிழ்மொழி. நகுலா சிவநாதன். Geguosofl: Ludinghausener Str. 12A, 59379, Selm, 16ligi LigßlüL, ஏப்ரல் 1996, (ஜேர்மனி, அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 38 பக்கம், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 3OX21 σιδ.
இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய 1988 இல் கல்வி வெளி யீட்டுத் திணைக்கள வெளியீடான தமிழ் ஆண்டு 2 என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றது.
78 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

4948(2) தமிழ்ப் பாடநூல்கள்
251 செயல்நூல் ஆண்டு 3: தமிழ்மொழி. நகுலா சிவநாதன். ஜேர் LD6ofi: Ludinghausener Str.12A, 59379, Selm, 16gb LugéL, e56rò 2000. (GgjLD6öfl, Caritas verband, Dormund e.V.) 27 பக்கம், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 3OX21 σιδ.
இலங்கைப்பாடத்திட்டத்திற்கு அமைய 1988 இல் கல்வி வெளியீட்டுத் திணைக்கள வெளியீடான தமிழ் ஆண்டு 2 என்ற நூலை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பெற்றது. புலம்பெயர்நாடுகளில் வாழும் சிறார்களின் தமிழறிவை வளர்க்கவும் அவர்களின் உளப்பாங்கைக் கருத்திற்கொண்டும் ஆர்வத்துடன் செயற்படக்கூடிய முறையில் ஆக் கப் பெற்ற நூல்வரிசையில் ஆசிரியரின் மூன்றாவது நூல்.
252 தமிழ் ஆண்டு 3 செயல்நூல். விக்னா பாக்கியநாதன். ஜேர் LDGóîl: 8560d6d6î67äbg5 Q66ńsuf6, Droote 13, 44328, Dortmund, 16 ug uśUL, 1994. (Germany: Caritas of Dortmund) 66 பக்கம், விளக்கப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 5uß.
இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய 1986 இல் கல்வி வெளியீட் டுத் திணைக்கள வெளியீடான தமிழ் ஆண்டு 3 என்ற நூலை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பெற்றது.
253 தமிழ்ச்சுவடி -1. மங்கையர்க்கரசி வில்வராசா, மு.அருளம்பலம், சுமத்திரி பிரான்சிஸ், கி.பி.அரவிந்தன். பிரான்ஸ்: தமிழ்ச்சோலை, 22 Rue Perdonnet, 75010, LJTjlgrö, 16lg5 ug5üL, 193-bLj 1998. (LTjlorb: தமிழ் அச்சகம்) (4),58 பக்கம், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 25x19 &լB.
ஐரோப்பிய புலத்தில் வளரும் ஆறு வயதுக்குட்பட்ட தமிழ்ச்சிறார் களுக்கான தமிழ்மொழிப்பாடநூல். முதல் தடவையாகத் தமிழைக் கற்போருக்கும் ஏற்புடையது.
254 பாலர் கல்வி. செல்வநாயகி மகாலிங்கம். லண்டன்; லண்டன் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (லண்டன்: ஜே.ஆர். அச்சகம்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 79

Page 54
4948(2) தமிழ்ப் பாடநூல்கள், 500 தூய விஞ்ஞானம் 510 கணிதம்
32 பக்கம். விலை: இலவசம். அளவு: 30X21 சமீ.
அமரர் திரு. முத்துலிங்கம் தயாபரன் அவர்களின் நினைவாக 4.11.1999 அன்று வெளியிடப்பெற்ற நினைவு மலர். பாலர்களுக்குத் தமிழ் பயிற்றும் பாடநூலாக மலர்ந்துள்ளது.
255 மாணவர் கட்டுரைகள். விக்னா பாக்கியநாதன். ஜேர்மனி: கலைவிளக்கு வெளியீடு, Droote 13,44328Dortmund, 1வதுபதிப்பு, 1995. (Germamy: Caritas, Dortmund) 76 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
ஜேர்மனியில் இயங்கும் தமிழ்க் கல்வி நிலையங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைஅறிவை வளர்க்கும் பொருட்டும், போட்டிகளில் பங்குபற்றும் பொருட்டும் தமிழ்மொழிப் பரீட்சைக்குத் தம்மைத் தயார்படுத்திச் செல்வதற்கும் ஏற்றவகையில் தயாரிக்கப் பட்ட 25 கட்டுரைகள் கொண்டது.
500 தூய விஞ்ஞானம்
256 விந்தைகள் செய்த விஞ்ஞானிகள். இர.சந்திரசேகரன். பருத்தித்துறை: விண்மதி வெளியீடு, 2வது பதிப்பு, புரட்டாதி 1989, 1வது பதிப்பு, புரட்டாதி 1974. (அல்வாய்: அபிராமி அச்சகம்) (12),82 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18X12 சமீ.
விஞ்ஞான அறிவு நூல். கலிலியோ கலிலி, ஐசாக் நியுட்டன், ஜோசப் பிறீஸ்றிலி, ஹம்பிறி டேவி, ஜோர்ஜ் ஸ்டிபன்சன்,மைக்கல் பரடே, சார்ள்ஸ் டார்வின், தோமஸ் அல்வா எடிசன், கிரஹம்பெல், ஜோர்ஜ் வாஷிங்டன் காவர், ஐன்ஸ்டின், சி.வி.ராமன் ஆகிய பன்னிரு விஞ்ஞான மேதைகளின் வாழ்க்கைச் சாரம்.
510 கணிதம்
257 இணைந்த உயர்கனிதம்: பிரயோக கணிதக் கூறு: நிகழ் 5.HGD LISfIngSusid (Probability and Statistics) V.T. upg5upa,61. QabsT(gib 11: Bright Book Centre, Colombo Central Super Market Complex, 16gbi ugbL, b6buí 1998. (Glas(pibu 13; லட்சுமி அச்சகம், 195 ஆட்டுப்பட்டித் தெரு) Vi,250 பக்கம். விலை: ரூபா 125 அளவு: 21X14 சமீ.
80 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

510 கணிதம், 527 விண்வெளிப்பயணம்
க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்குரியது. 333 வினாக்களும் அவற்றிற்கான விடைகளும் கொண்டது.
258 இணைந்த கணிதம்(துயகணிதக் கூறு) ஆள்கூற்றுக் (35.55g S6 of 5b.(Co-ordinate Geometry) V.T.LD5upa,61. Qa5T(pubL 6: Admiral Graphics, 403 1/1 Galle Road, 16 luga lugólíu, மார்ச் 1999, (கொழும்பு 6. அட்மிரல் கிரப்பிக்ஸ்) vi,269 பக்கம். விலை: ரூபா 200. அளவு: 21X14 சமீ.
க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்குரியது.
259 கணிதம். வி.ரி.மதியழகன். கொழும்பு 12. லங்கா புத்தகநிலையம், டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (QaBIT (publ. 6: Admiral Graphics, 403 111 Galle Road) iv,177 பக்கம். விலை: ரூபா 195. அளவு 28X21 சமீ.
10 மாதிரி வினாக்களும் முழுமையான விடைகளும் கொண்ட தொகுதி. க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு ஏற்றது.
260 துயகணிதம் வரிசை மாற்றமும் சேர்மானமும். (Permutation and Combination). V.T.LD5up36t. GasT(publ 11: Bright Book Centre, Colombo Central Super Market Complex, 16 g) ug5L, ஏப்ரல் 1998. ( கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195 ஆட்டுப்பட்டித் தெரு)
42 பக்கம். விலை: ரூபா 45 அளவு; 21X14 சமீ.
க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்குரியது. 125 வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் கொண்டது.
527 விண்வெளிப்பயணம்
26
க.இந்திரகுமார்(மூலம்). லே.தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 1996. (சென்னை 14: ஜோதி ஆப்செட்,159/1, வி.எம்.தெரு)
举
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 81

Page 55
610 மருத்துவம், 612 உடற்கூற்றுத் தொழிலியல், 613 பொது உடல்நலவியல்
258 பக்கம், விளக்கப்படங்கள். விலை: இந்திய ரூபா 100. அளவு: 24X18 g5.
விண்வெளிப்பயணங்களும் அது தொடர்பான முன்னோடி நடவடிக் கைகளும் பற்றிய சுவையான விஞ்ஞானக்குறிப்புகள். விளக்கப் படங்களுடன் இலகு தமிழில் வெளிவந்தது.
600 பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பம்.
610 மருத்துவம்
612 உடற்கூற்றுத் தொழிலியல்
262 பிறப்புரிமை நெறியாள்கை. ஐயாத்துரை கருணானந்தன். யாழ்ப்பாணம்: EASOSEAC, 33 பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: உமாஅச்சகம், கனகசபை அவென்யு, நீராவியடி) 40 பக்கம், விளக்கப்படம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x14 d5.
பிறப்புரிமை நெறியாள்கை (Genetic Engineering) எவ்வாறு தனிப் பட்டவரையும் நாட்டின் குடிகளையும் உருவாக்க வழிகாட்டும் என்று விளக்கும் நூல். நற்பரம்பரையியல், நற்சூழலியல், பரம் பரையலகில் பிழைதிருத்தல், சூழலொழுங்காக்கல் ஆகிய 4 அத் தியாயங்களில் இவை விளக்கப்பட்டுள்ளன.
613 பொது உடல் நலவியல்
263 போதையைத் தவிருங்கள். எம்.கே.முருகானந்தன். பருத்தித் துறை: எம்.கே.முருகானந்தன், பிரதான வீதி, 1வது பதிப்பு, செப் டெம்பர் 1990. (அல்வாய்: அபிராமி அச்சகம்) 20 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 14X10 சமீ.
போதைப்பொருட்பாவனையினால் விளையும் தீங்குகளும் போதைப் பொருட் பாவனையாளரை அடையாளம் காணலும், அவர்களால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள், போதையிலிருந்து மீளல் போன்ற அம்சங்களை விளக்கும் அறிவு நூல்.
82 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

614 பொதுச் சுகாதாரம்
614 பொதுச் சுகாதாரம்
264 ஆரம்ப சுகாதார சேவையாளர்கட்கு ஒரு வழிகாட்டி. த.இராமதாஸ். யாழ்ப்பாணம்: ஆரம்ப சுகாதார ஆராய்ச்சிப்பிரிவு, போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்) vi,102 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
நாம் எமது முயற்சியால் அநேகமான நோய்களைக் கட்டுப்படுத் தலாம். இதற்கான அடிப்படை முறைகளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைகளாகும் . இந் நூலில் , குழந்தைகளையும் தாயையும் மனதில் இருத்தி நோய்களைப் பற்றிய விளக்கங்களும் அவற்றைப் பராமரிக்கும் முறைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எப்படிப்பட்ட நோயாளரை சுகாதார நிலையத்துக்கு அல்லது மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
265 குரும்ப முதலுதவி. க.சுகுமார். கரவெட்டி: கட்டைவேலி நெல் லியடி ப.நோ.கூ.சங்கம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஈகள் பிரிண்டிங் வேர்க்ஸ், 161, சிவன் பண்ணை வீதி) (10),178 பக்கம், விளக்கப்படம். விலை: ரூபா 24.50. அளவு; 21X14 சமீ
மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டில் முக்கியத் துவம் பெறும் விடயங்களான பாம்புக்கடி, வயிற்றோட்டம், போன்றவை பற்றியும் ஏனைய முதலுதவிச்சிகிச்சைகள் பற்றியும் விரிவாக எழுதப் பட்டுள்ளது. பொதுவான முதலுதவி சிகிச்சை முறைகளும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
266 முதல் உதவி. செல்வி பேர்ட்டன் றீட்டா (தொகுப்பாளர்). யாழ்ப் பாணம்: மனித முன்னேற்ற நிலையம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப் பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) (6),38 பக்கம், விளக்கப்படங்கள். விலை: குறிக்கப்படவில்லை. அளவு 24x18 சமீ.
முதலுதவிச் சிகிச்சை முறைகளுக்கான கைநூல்.
267
முதல் உதவி. ந.சிவராஜா. ஆனைக்கோட்டை அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம், ஆரெஸ் அச்சகம்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 83

Page 56
614 பொதுச் சுகாதாரம், 616 நோய்கள், 618 பெண் நோயியல்
Vi,104 பக்கம். விளக்கப்படங்கள். விலை: ரூபா 25. அளவு: 21X14 &ð.
முதல் உதவி செய்வதற்கு வேண்டிய அடிப்படை அறிவை நூல் கள் தரமுடியும் . ஆனால் ஆற்றலை எந்த நூலும் ஊட்ட முடியாது. அதை சாதனாமுறையில் பயிலவேண்டும். அப்படிப்பயில் வதற்கு முன்னும் பயின்ற பின் அதி அவசியமான மருத்துவ அறிவை ஞாபகத்தில் வைப்பதற்குச் சுருக்கமான ஒரு நூல் அவசியம். அந்தத் தேவையை இந்த நூல் திறமையுடன் பூர்த்தி செய்கின்றது.
-பேராசிரியர் சிவஞானசுந்தரம் (வாழ்த்துரையில்)
616 நோய்கள்
268 எயிட்ஸ். எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: யதார்த்தா, உதயன் புத்தகசாலை, 2வது பதிப்பு, 1990. 1வது பதிப்பு, தை 1989 (நெல்லியடி கலாலயா) (6),40 பக்கம், விளக்கப்படம். விலை: ரூபா 15. அளவு 18X12 சமீ.
எயிட்ஸ் நோய் தொடர்பான அடிப்படை மருத்துவச் சந்தேகங் களை நிவர்த்தி செய்யும் சுகாதாரக் கைநூல்.
618 பெண் நோயியல், மகப்பேற்று மருத்துவம்
Զ69 தாயாகப் போகும் உங்களுக்கு. எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: யதார்த்தா, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) 108 பக்கம், விளக்கப்படம், அட்டவணை. விலை: சாதாரண பதிப் பு: ரூபா 25, விஷேட பதிப்பு: ரூபா 30. அளவு; 21X14 சமீ.
கர்ப்பம், தாய்மை, ஆரோக்கியம், உடல் வனப்பு, பிரசவம், பிறந்த குழந்தையின் பராமரிப்பு ஆகிய விடயங்கள் மருத்துவ விளக்கங் களுடன் தரப்பட்டுள்ளன. எளிய தமிழில் விடயங்களும் கருத்துக் களும் படவிளக்கங்களுடன் தெளிவாகக் காணப்படுகின்றன.
84 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

619.(1) சித்த மருத்துவம், 640 குடும்பக்கலை, 642 உணவும் பரிமாறலும்
619 கீழைத்தேய மருத்துவம்
619.(1) சித்த மருத்துவம்
27O மூலதத்துவம்: வினாவிடை. உள்ளகப்பயிற்சி மருத்துவர்கள் கைதடி, சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1989. (இணுவில்: துர்க்கா அச்சகம்) 10 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20x14 gif.
சித்த மருத்துவ அடிப்படைத் தத்துவம் பற்றிய வினாவிடை. பூரீலறி ஆறுமுகநாவலரின் தருக்க சங்கிரகம், கலாநிதி பூரீ அருணாசலம் அவர்களது பதார்த்தவிஞ்ஞான விரிவுரைக்குறிப்புகள் ஆகியனவற் றின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.
மேலும் பார்க்க: 890
640 இல்லப் பொருளியல், குடும்பக்கலை
271 அழகே அமுதே மங்கையர்க்கான அழகுக்குறிப்புகள். ராஜி(தொகுப்பாளர்). யாழ்ப்பாணம்: ஷஜா வெளியீடு, 43, பழைய சந்தை, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). 36 பக்கம். விலை: ரூபா 10. அளவு 21X14 சமீ.
பெண்களுக்கான அழகுக் குறிப்புக்கள் அடங்கிய கைநூல். அழகும் இளமையும் பெற இலகுவான வழிகள், கூந்தல், முகம், கண்கள், பற்கள், கைவிரல், நகங்கள், ஆகியவற்றைப் பாதுகாக்க ஏற்ற சுகாதாரவிதிமுறைகள், சில கைவைத்தியங்கள், உடற்பயிற்சி, அலங்காரம் செய்கையில் கவனிக்க வேண்டியவை போன்ற அழகுக் குறிப்புகள் 13 தலைப்புக்களின் கீழ் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: 041
642 உணவும் பரிமாறலும்
272 சிறீலங்கா தாவரபோசன சமையல். புஷ் பாஞ்சலி முருகேச பிள்ளை. கொழும்பு 13: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார் தெரு, 5வது பதிப்பு, 2000. 1வது பதிப்பு 1971. (கொழும்பு சக்தி என்ரர்பிரைசஸ்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 85

Page 57
642 உணவும் பரிமாறலும், 649 குழந்தை பராமரிப்பு
XVi,559 பக்கம். விலை: ரூபா 790. அளவு: 22x14.5 சமீ. ISBN 955-9409-02-6.
தனித் தாவர போசனம் உண்போருக்கு மட்டுமல்லாது, ஏனையோ ருக்கும், புதிதாகச் சமையல் செய்யத் தொடங்குவோருக்கும், மனையியல் கற்கும் மாணவர்களுக்கும் ஏற்றவகையில் தயாரிக்கப் பெற்றது.
273 சுவையான இலங்கைச் சமையல். பத்மினி சற்குணராஜா. சென்னை 600017: பார்வதி கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ண தாசன் சாலை, தி.நகர், 3வது பதிப்பு, மே 2001, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996, (சென்னை 34: கியுயிகோ பிரஸ்) 160 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18X12.5 சமீ.
இலங்கையரின் சமையற்பாகங்களில் தேர்ந்தெடுக்கப்பெற்ற குறிப் புகள், அனுபவ வாயிலாக, முறைப்படி வகுக்கப்பெற்று இந்நூலில் தரப்பட்டுள்ளது
274 யாழ்ப்பாணத்துச் சமையல்: சைவ அசைவ உணவு வகைகள், லக்சுமி. சென்னை 600017. மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை: M.K.என்டர்பிரைஸ்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 17. அளவு: 18x12.5 சமீ
96 வகையான சைவ அசைவ உணவு வகைகள் பற்றிய சமையல் குறிப்புகள். ஆசிரியரின் முன்னுரையும் வித்துவான் க.ந. வேலன் அவர்களின் ஆய்வுரையும் நூலின் சிறப்பம்சமாகும். யாழ்ப் பாணத்தவரின் பாரம்பரிய உணவு வழக்கங்களின் வலிமையையும் தாவர உணவு வகைகளின் பெருமையையும் இலக்கிய நயத் தோடு இவ்வுரைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.
275 649 குழந்தை பராமரிப்பு
7 சிறுவர் வளர்ப்பில் சிறப்பான வழிமுறைகள். நகுலா சிவநாதன். சென்னை 600017 மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை: M.K.என்டர்பிரைஸ்) 90 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12.5 சமீ
86 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

650 முகாமைத்துவம் 657 கணக்கியல்
புலம்பெயர்ந்த நாட்டுச் சூழலில் தமிழ்ச்சிறார்களை வளர்ப்பது பற்றிய தான ஆசிரியரின் வானொலி உரைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க: 029
650 முகாமைத்துவம்
657 கணக்கியல்
276 கணக்கியல் கொள்கைகளும் கணக்கீட்டு நியமங்களும். பா.பாலச்சந்திரன். யாழ்ப்பாணம் : கணக்கியற் கற்கை நிறுவன வெளியீடு, 1வது பதிப்பு,1990. (யாழ்ப்பாணம்: உமாஅச்சகம், நல்லூர்) 166 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20x14 சமீ.
கணக்கியலை ஒரு உயர்தர வகுப்புப்பாடமாகத் தமிழ்மொழி மூலம் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படக் கூடிய நூல். கணக்கீட்டு நியமங்கள் தொடர்பான விளக்கங்கள் கொண்டது.
277 கம்பனிக் கணக்குகள், க.தங்கராஜா. யாழ்ப்பாணம்: 50/5 சங்கிலியன் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 1990. (யாழ்ப்பாணம்: ரீ சண்முகநாத அச்சகம், 340 காங்கேசன்துறை வீதி) Vi,108 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
கம்பனி தொடர்பான விளக்கங்கள், பங்குகள் வழங்கல், தொகுதிக் கடன்கள் வழங்கல், மீட்டல், உபகாரப்பங்கு வழங்கல், உரித்து வழங்கல், முன்னுரிமைப்பங்கு மீட்டல், மூலதனக்குறைப்பு, வியாபாரக் கொள்வனவு, முடிவுக்கணக்குகள் என எட்டு இயல்களில் கம்பனிக் கணக்கு முறைகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
278 நியமக்கிரயவியல். பா.பாலச்சந்திரன். யாழ்ப்பாணம்: முகாமை கணக்கியல் நிறுவன வெளியீடு, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: முரசொலி அச்சகம், 62 ஏ, ஸ்டான்லி வீதி) 96 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20.5X14 சமீ.
பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கணக்கியல் பரீட் சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏற்ற கிரயக் கணக்கியல் (Cost ACCountancy) b/T6).
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 87

Page 58
700 கலைகள் 750 ஓவியக்கலை
700 கலைகள், நுண்கலைகள்
750 ஓவியக்கலை
279
இருபதாம் நூற்றாண்டுக்கான ஓவியக்கொள்கைகள். சோ.கிருஷ்ணராஜா. சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 61 தாயார் சாகிப் 2வது சந்து. 1வது பதிப்பு, ஜூன் 1994 (சென்னை: சூர்யா,அச்சகம்) 80 பக்கம், ஓவியம், விலை: இந்திய ரூபா 12. அளவு: 16x10.5சமீ.
இருபதாம் நூற்றாண்டின் பிரதான ஒவியக்கூடங்களின் தத்துவார்த்த நிலைப்பாடுகள் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பல்வேறு ஓவியக் கூடங்களின் கொள்கைகளை அறிமுகம் செய்து வைக்க இந்நூல் பெரிதும் உதவும்.
280 சிரித்திரன் சித்திரக்கொத்து. எஸ்.சிவஞானசுந்தரம் (சுந்தர்). யாழ்ப்பாணம்; சிரித்திரன் வெளியீடு, 1வது பதிப்பு, ஆவணி 1989. (யாழ்ப்பாணம், விஜயா அச்சகம்) (6),128 பக்கம், கார்ட்டூன் வரைபடங்கள். விலை: விஷேட பதிப்பு: ரூபா 75, சாதாரணபதிப்பு: ரூபா 45. அளவு: 24x18.5 சமீ.
சிரித்திரன் சஞ்சிகையின் சுவையான கார்ட்டூன் சித்திரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை. தட்டுப்பாட்டுக் காலச் சித்திரங்கள், அரசியல் கருத்தோவியங்கள், சித்திரகானம், போன்ற சுந்தரின் அழியாப்புகழ் பெற்ற கார்ட்டுன்களின் தொகுப்பு.
மேலும் பார்க்க: 892
28 தேடலும் படைப்புலகமும், அயேசுராசா, இ.பத்மநாப ஐயர், க.சுகுமார் (தொகுப்பாளர்கள்). யாழ்ப்பாணம்: தமிழியல்,36, கலட்டி அம்மன் வீதி, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: நியுசுரா பப்ளிக் கேஷன்ஸ்) 136 பக்கம், தகடுகள், வண்ணப்படங்கள். விலை: ரூபா 100. அளவு 25x19 சமீ.
ஓவியர் மாற்கு சிறப்புமலராக வெளிவந்தது. மாற்கு மாஸ்டர் என்று பரவலாக அழைக்கப்பட்ட ஓவியர் மாற்குவின் வாழ்க்கை வர லாற்றுக் குறிப்புகள், செவ்விகள் முதற்பாகத்திலும், ஓவியக் கலை பற்றிய பல்வேறு கலைஞர்களினதும் கருத்துத்தொகுப்பு இரண்டாம்
88 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

750.(1) ஒப்பனைக்கலை, 780 இசைக்கலை
பாகத்திலும் காணப்படுகின்றன. ஒவியர் மாற்குவின் ஒவியங்கள் வண் ண, கருப்பு வெள்ளைப்பிரதிகள் ஆங்காங்கே தகடுகளாக இணைக் கப்பட்டுள்ளன. நவீன ஓவியக்கலை பற்றிய பரந்த அறிவினைத் தரக் கூடிய ஒரு நூல்.
மேலும் பார்க்க: 96
750.(1) ஒப்பனைக்கலை
282 ஈழத்தில் ஒப்பனைக்கலை. இ.பாலசுந்தரம். சுன்னாகம் மகவம் கலை இலக்கிய நிறுவனம், ஊரெழு, 1வது பதிப்பு, ஜூன் 1990. (யாழ்ப்பாணம்: மேர்க்குரி அச்சகம்) 30 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாணத்து ஒப்பனைக்கலைஞர் சாமுவேல் பெஞ்சமீன் அவர் களின் பாராட்டு விழாவின் சிறப்பம்சமாக வெளியிடப்பட்ட கட்டுரை நூல்.
780 இசைக்கலை
283 இசையும் நடனமும். சபா.ஜெயராசா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார் தெரு. 1வது பதிப்பு, 1998. (சென்னை 14: Chitra Printography) 70 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 17x12 சமீ.
சமூகவியற் கண்ணோட்டத்திலும் உளவியற் பின்புலத்திலும் இசை யையும் நடனத்தையும் ஆராய்ந்துள்ளார். இசை உணர்வு, தொழிற் பாடு, கற்பனை இசையாக்கம் எனப்பிரித்து அழகியல் சார்ந்து இசை யை வரலாற்று நோக்கிலும் ஆராய்ந்துள்ளார். நடனத்தில் மந்திரம், சடங்கு, மதவழியான கருத்தியல் பண்புகளை இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
284 கீதாஞ்சலி: கிறிஸ்தவ தமிழ் துதிப்பாடல்கள். பரமேஸ்வரி விஜயரட்ணம், யாழ்ப்பாணம்: வட இலங்கை சங்கீதசபை, 1வது ugüllüL, 1998. (Colombo: Unie Arts pvt Ltd) 79 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 22x14.5 சமீ.
6L S60 6035 grids 360U (North Ceylon Oriental Music Society)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 89

Page 59
780 இசைக்கலை
யின் வெளியீடாக வெளிவந்த இசை, ஸ்வர தாள அமைப்புடனான கிறிஸ்தவ தமிழ்த் துதிப்பாடல்களின் தொகுப்பு.
285 நற்சிந்தனைக் கீர்த்தனைகள். சிவயோகசுவாமிகள். யாழ்ப் பாணம்: சிவதொண்டன் நிலையம், 434 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 136 பக்கம், புகைப்படம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 12.50, நூலகப் பதிப்பு: ரூபா 15. அளவு: 19X13 சமீ.
சிவயோக சுவாமிகளின் 35 கீர்த்தனைகள் சென்னை, மாம்பலம் பூரீ ஓம்ஆனந்தாச்சிரமம் பூரீலறி ஆனந்த தீர்த்த சுவாமிகள் அவர் கள் இயற்றியுதவிய சுர தாளக் குறிப்புகளுடன் பிரசுரிக்கப் பட்டுள்ளன.
286 மிருதங்க சங்கீத சாஸ்திரம். அ.நா.சோமாஸ்கநத சரமா. மருதனார்மடம்: இராமநாதன் நுண்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜூலை 1989. (மட்டுவில்: திருக்கணித அச்சகம்) xiv,188பக்கம், தகடுகள். விலை: ரூபா 45 அளவு: 175x12.5 சமீ.
மிருதங்கக்கலையின் வரலாறு, இன்றைய அபிவிருத்தி நிலை ஆகியன விளக்கப்பட்டுள்ளன. தாளம் சம்பந்தமான விடயங்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்து, சங்கீதத்தில் லயத்தின் முக் கியத்துவம் என்ன என்பதையும் லயவாத்தியங்களின் பங்கு என்ன என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
287 வட இலங்கை சங்கீத சபை பொன்விழா மலர். மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: வட இலங்கை சங்கீத சபை, 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்; செட்டியார் அச்சகம்). (38),80 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 24X18 gL5.
ஈழத்து இசைக்கலைஞர் பற்றிய குறிப்புகளும், இசையின் வரலாறு, தமிழ்ப்பணணிசை, சங்கீத மும் மணிகள், இசை கற்பிக்கும் முறை, ஸ்ருதிகளும் அவற்றின் உபயோகமும், இசையின் தத் துவம் ஆகிய விடயங்கள் தொடர்பான கட்டுரைகளும் அடங்கியுள் 66.
மேலும் பார்க்க: 129
90 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

791 நாட்டியக்கலை, 792 அரங்கியல், நாடகக்கலை
790 நிகழ் கலைகளும் பொழுதுபோக்குக் கலைகளும்
791 நாட்டியக்கலை
288 பரதக்கலை. வி.சிவசாமி. யாழ்ப்பாணம்: வி.சிவசாமி, சம்ஸ்கிரு தத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்). 146 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 30, விசேட பதிப்பு: ரூபா 50. அளவு; 20.5x14 சமீ.
பரதக்கலை பற்றிய 15 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. நடராஜத் திருவுருவம், தமிழகத்தில் பல்வேறு காலங்களில் பரதக் கலை வளர்ச்சி, இலங்கையில் பரதக்கலை, சில நடன ஆசான்கள், வட மொழியில் உள்ள பரதசாஸ்திர நூல்கள் முதலியன அவற்றுள் குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்.
மேலும் பார்க்க: 283
792 அரங்கியல், நாடகக்கலை
289 அரங்கின் பரிமாணங்கள்: நாடகக் கட்டுரைத் தொகுப்பு. தெ.மதுசூதனன், சஜீவாகரன். இராஜகிரிய: விபவி-மாற்றுக் கலாச்சார மையம், 51/7 இராஜகிரிய வீதி. 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (அச்சக விபரம் அறியமுடியவில்லை) (4),169 பக்கம். விலை: ரூபா 150. அளவு: 20.5x14.5 சமீ.
அரங்கு குறித்த அறிவார்ந்த சிந்தனைப்பாங்கில் சிரத்தையையும் தேடலையும் எம்மிடையே வளர்த்தெடுக்கும் நோக்கில் தொகுக்கப் பெற்றுள்ளது.
29O ஈழத்தில் தமிழ் நாடகம். அந்தனி ஜீவா. தமிழ்நாடு: அகரம் வெளியீடு, சிவகங்கை, 1வது பதிப்பு, 1981. (சிவகங்கை அகரம்). 42 பக்கம். விலை: இந்திய ரூபா 4. அளவு: 18.5X12 சமீ.
உலக நாடகப் பின்னணியில் தமிழ் நாடகத்தின் படிமுறை வளர்ச்சி ஆராயப்பெற்றுள்ளது. நாடகவளர்ச்சியிலும் கூத்து ஆராய்ச்சிகளிலும் பங்குபற்றிய சில பிரபல்யமான பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களது பணியையும் ஆசிரியர் சுருக்கமாக விளக்கியுள்ளார். 1978இல் தமிழ்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 91

Page 60
792 அரங்கியல், நாடகக்கலை:
நாடு, திருப்பூரில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் நூலுரு இதுவாகும்.
29 ஈழத்து இசை நாடக வரலாறு. காரை செ.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 1990. (யாழ்ப்பாணம்; செட்டியார் அச்சகம்) XXXi,130 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 18.5x12.5 சமீ.
இசைநாடக வருகையின் போது ஈழம், ஈழத்தில் இந்தியக் கலைஞர்களும் இசைநாடகமும், இசைநாடகமும் இலங்கைக் கலைஞர்களும், இசைநாடகத்தின் மறுபக்கம், இசைநாடக அரங் கம், சிங்கள இசை நாடகங்கள், ஆகிய ஐந்து இயல்களில் ஈழத்து இசைநாடக வரலாறு ஆராயப்பட்டுள்ளது.
292 ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு.சி.மெளனகுரு. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (Glab|T(pubL 12: United Merchants Ltd.) 220 பக்கம். விலை: ரூபா 120. அளவு: 21.5X14.5 சமீ.
பண்டைக்காலம் தொட்டு இன்றுவரையிலான ஈழத்து நாடக அரங் கின் வரலாற்றை இலக்கியக் கலையாக மட்டுமன்றி ஓர் அரங்கக் கலையாகவும் நோக்கும் நூல்.
293 ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி. சி.மெளனகுரு. தெல்லிப்பழை: மகாஜனக்கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரைத் தொடரில் எட்டாவது உரையின் நூல்வடிவம்.
294 கலைமுகம். நீ.மரிய சேவியர். யாழ்ப்பாணம்: திருமறைக் கலா மன்றம், 1வது பதிப்பு, 1981 (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) (10),94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ
இந்நூலில் நாடகம் சார்ந்த உயரிய கருத்துக்களை அடிகளார் நயம்பட உரைத்துள்ளார். நாடகம் பற்றிய நிறைவான கருத்துக் களையும் ஆழ்ந்த அனுபவத்தையும் கற்றறிந்த அறிவையும்,
92 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

792 அரங்கியல், நாடகக்கலை
கலந்து வழங்கும் உயரிய தமிழ் நூலாக இது வெளிவருகின்றது.
நாடகப்பண்பை வெளிப்படுத்தும் நல்ல தமிழ்நூல்கள் தமிழில் இல்
லை என்ற குறையைப் போக்குவதாகவுள்ளது.
-குழந்தை ம.சண்முகலிங்கம் (முன்னுரையில்)
295 சங்காரம் ஆற்றுகையும் தாக்கமும். சி.மெளனகுரு. சென்னை 2: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஜூலை 1993. (சென்னை: சூர்யா அச்சகம்) 96 பக்கம். விலை: ரூபா 21. அளவு: 20x16 சமீ.
சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி நவீன அரசியல் நுட்பங்கள், உத்திகள் ஆகியவற்றை உள்வாங்கும் கூத்துக்களின் வகையில் சங்காரம் என்ற இந்த நாடகம் நூலில் இடம்பெறுகின்றது. நாடகம் பற்றிய விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன.
296 சடங்கிலிருந்து நாடகம் வரை. சி.மெளனகுரு. தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, ஜூன் 1988. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்கஅச்சகம், பூரீலட்சுமி அச்சகம்) 63 பக்கம், விளக்கப்படம். விலை: ரூபா 15. அளவு: 17.5x12.5 சமீ.
ஈழத்துத் தமிழ் நாடக மூலங்கள் என்ற வரிசையில் ஈழத்துத் தமிழர் மத்தியில் வழங்கும் சில சடங்குகளில் காணப்படும் நாடகத் தன்மைகள் பற்றிக் கூறும் நூல்.
297 சமூக மாற்றத்துக்கான அரங்கு.க.சிதம்பரநாதன். சென்னை 2: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 1994 (சென்னை41 சூர்யா அச்சகம்) 157 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18X12 சமீ.
மக்கள் போராட்டத்தில் பண்பாடு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. மானுடநேயம் மிக்க பண்பாடு நிலவாத ஒரு சமூகத்தில் மானுட விடுதலைக்கான போராட்டம் அதன் முழு வீச்சை அடையமுடியாது. மானுடப் பண்பற்றதாகி விட்ட நமது ஒடுக்குமுறைப் பண்பாட்டை மானுடப்படுத்துகின்ற பணியை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக அரங் கைப் பயன்படுத்த முடியுமா என்ற ஆசிரியரின் சிந்தனையின் விளைவே இந்நூலாகும்.
298 பழையதும் புதியதும் நாடகம்-அரங்கியல். சி.மெளனகுரு. மட்டக்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 93

Page 61
792 அரங்கியல், நாடகக்கலை, 793 திரைப்படக்கலை : 8
களப்பு: விபுலம் வெளியீடு, 7 ஞானசூரியம் சதுக்கம், 1வதுபதிப்பு, ஜூன் 1992. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம், 1 இயேசு சபை வீதி)
Xxiv,149 பக்கம். விலை: ரூபா 60. அளவு: 21.5X14 சமீ.
இந்நூலில் அடங்கியுள்ள 10 கட்டுரைகளும் ஈழத்தில் தமிழரி டையே வழங்கும் மரபுவழி நாடகங்கள் பற்றி ஆய்வு ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் ஆசிரியர் பெற்றுள்ள தகவல்களையும் முடிவுகளையும் வெளிப்படுத்தி அவ்வப்போது வெளியிடப்பட்டவை.
299 மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள். சி.மெளனகுரு. சென்னை 14: பார்க்கர், 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (சென்னை14: Parker Computers & Publications) 664 பக்கம். விலை: இந்திய ரூபா 250. அளவு 13.5X21.5 சமீ.
1983இல் கலாநிதிப்பட்ட ஆய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. இது ஈழத்தின் அரங்கியல் பற்றியதொரு விரிவான நூல்.
300 யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு விமர்சனக் கட்டுரைகள். கந்தையா ரீகணேஷன். வவுனியா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 1997 (வவுனியா: ஒன் லைன் பப்ளிஷர்ஸ்) 121 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 19X13 சமீ
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தமிழ் நாடக அரங்கின் 30 வருடகால வரலாற்று வெட்டுமுகமாக அமையும் வகையில் அரங்கியல் திறனாய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வந்துள்ளது. பெரும்பான்மை யானவை தமிழக, ஈழத்துச் சிறுசஞ்சிகைகளில் காலத்துக்குக் காலம் பிரசுரமான கட்டுரைகள்.
மேலும் பார்க்க: 213, 893-896
793 திரைப்படக்கலை
301 இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை. தம்பிஐயா தேவதாஸ். சென்னை 2: காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, மார்கழி 1994. (நுங்கம்பாக்கம்: ஜே சீ பி டாட்ஸ்.) (10),315 பக்கம், புகைப்படங்கள். விலை: இந்திய ரூபா 75. அளவு: 175x12 சமீ.
94 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

800 இலக்கியம், 800.(1) இலக்கிய அமைப்புக்கள் 801.(1) சிறுவர் பாடல்
இலங்கையில் திரைப்படக்கலை முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப் பட்ட நாள் முதல் 1993 வரையுள்ள காலப்பகுதியில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த்திரைப்படங்களின் வரலாற்றினைப் பதிவு செய்துள்ள நூல்.
800 இலக்கியம்
800.(1) இலக்கிய அமைப்புகள்
302 குரும்பசிட்டியின் இலக்கியப் பாரம்பரியம். அம்பலவாணர் சிவராசா. குரும்பசிட்டி: சன்மார்க்க சபை வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1988. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 15 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14 சமீ.
அமரர் த.இராசரத்தினம் அவர்களின் நினைவு நாள் உரை. குரும்ப சிட்டி சன்மார்க்கசபைச் சூழலில் வளர்ந்த இலக்கியகர்த்தாக்களின் பணிகளைக் கால, வர்த்தமானங்களுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்து தயாரித்த சிறப்புச் சொற்பொழிவின் நூலுருவாக்கம்.
3O3 யாழ் இலக்கிய வட்டம்- இருதசாப்தங்கள்: சில நினைவுகள். யாழ்வாணன். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், யாழ்ப்பாண மாநகரசபை அலுவலகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1986. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்) 32 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
யாழ். இலக்கிய வட்டம் என்னும் இலக்கிய அமைப்பின் இருபது ஆண்டுக்கால இலக்கியப்பணி பற்றிய வரலாறு ஆவணம்.
மேலும் பார்க்க: 003
801 சிறுவர் இலக்கியங்கள்
801.(1) சிறுவர் பாடல்கள், கவிதைகள்
304
அ முதல் . வரை குழந்தைகளுக்கான பாடல்கள். சின்னத் துரை இராஜகருணா. சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஆப்செட்) 53 பக்கம். விலை: இந்திய ரூபா 13. அளவு: 18.5x12.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 95

Page 62
801.(1) சிறுவர் பாடல்கள், கவிதைகள்
தமிழ்மொழியைப் படிக்கும்போதே கவிதை உணர்வையும் ஊட்டி னால் மொழிப்பற்று மிகும் என்ற நுட்பத்தை அறிந்த கவிஞர் ஆறே வரிகளில் கவிதையோடு கூடிய தமிழை அறிமுகப்படுத்து கின்றார்.
305 அன்னை நினைவழுதம். ஆனைக்கோட்டை தென்மயிலை சின்னப்பிள்ளை செல்லத்துரை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1987 (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்) 22பக்கம், தகடு. விலை: இலவசம். அளவு: 18x12.5 சமீ.
பல்வேறு ஈழத்துக் கவிஞர்களின் குழந்தைப் பாடல்கள் 12 இன் தொகுப்பு
306 ஈழத்துச் சிறுவர் கதைப்பாடல்கள். நாயன்மார்கட்டு: திருமதி பத்மாவதி கணேசமூர்த்தி நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 8 பக்கம், தகடு விலை: இலவசம். அளவு: 18.5x12.5 சமீ.
ஈழத்துக் குழந்தைக்கவிஞர்களின் ஐந்து குழந்தைப் பாடல்கள்.
3O7 ஊஞ்சல் ஆடுவோம்: சிறுவர் கவிதைகள். மு.பொன்னம்பலம். கொழும்பு 02: மூன்றாவது மனிதன் பதிப்பகம், ஜூன்2001, (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 54 பக்கம். விலை: ரூபா 100. அளவு 22x14.5 சமீ.
W சிறுவர்களுக்கான இலக்கியங்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய இந்நூல் வழிகாட்டுகின்றது. சிறார்களைக் கவரும் வகை யில் சித்திரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
3O8 கதிரேசனின் சிறுவர் பாடல்கள். செ. கதிரேசர்பிள்ளை. QL6öruDITġġis: Mrs. Puvaneswari Chathiresar pillai, Priorensgade 32, 1th 5600 Faaborg, 1வது பதிப்பு, 1993, (அச்சக விபரம் குறிப்பிடப் படவில்லை) 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22.5X16.5 சமீ.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சிறுவர் கவிதைகளின் தொகுப்பு.
96 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

801.(1) சிறுவர் பாடல்கள், கவிதைகள்
309 கப்பல்: சிறுவர்க்கான புதிர்ப்பாட்டுக்கள். பா.சத்தியசீலன். மானிப்பாய்: திருமதி எஸ்.கலாதேவி, நவாலி தெற்கு. 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம், அச்சகம் குறிப்பிடப்படவில்லை). 32 பக்கம், வண்ணப்படங்கள். விலை: ரூபா 10. அளவு: 21X16 சமீ.
எளிய நடையில் அமைந்த சிறுவர்க்கான புதிர்ப்பாட்டுக்களும் விடைகளும் வண்ணப்படங்களுடன் தரப்பட்டுள்ளன. கவிதையினைப் பாடி இரசிக்கும் அதேவேளை சிறுவர்கள் தம் சிந்தனை வளத்தைப் பெருக்கும் விடுகதைகளுக்கு விடைநாடும் ஆர்வத்தினையும் பாடல் கள் ஏற்படுத்துகின்றன. விடைகளும் கவிதையுருவிலேயே அமைவது சிறப்பம்சமாகும்.
31 O கவிதைத் தொகுப்பு 1: சிறுவர் பாடல். மயிலங்கூடலூர் த. கனகரத்தினம். கொழும்பு 6: கொழும்புத்தமிழ்ச்சங்க வெளியீடு, இல. 7, 57வது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை வழி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1991 (கொழும்பு 13: லட்சுமி அச்சகம்) 36 பக்கம், சித்திரங்கள். விலை: ரூபா 35. அளவு 21.5x14 சமீ.
இந்நூலில் 24 தலைப்புக்களில் சிறுவர்க்கான பாடல்கள் அமைந்துள் ளன. பாடசாலைகளிலும் ஆசிரியர்சேவைப் பயிற்சிநெறிகளிலும் இசை யுடன் பாடிமகிழக்கூடிய பாடல்களும் கவிதை நாடகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.
3 குழந்தைக் குயில். முதலாம் பகுதி. க.ப. லிங்கதாசன். ஹட்டன்: மலையக எழுத்தாளர் மன்றம், 1வது பதிப்பு, 1985. (மஸ்கெலியா: விக்டோரியா அச்சகம்) 32 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x14 சமீ.
32 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. உறவுமுறை, பறவைகள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள் என்பவற்றை மையமாக வைத்து இளஞ்சிறார்களுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் புனையப் பட்டுள்ளன.
312 கூடல் மழலைகள். மயிலங்கூடலூர் நடராஜன் (தொகுப்பாளர). இளவாலை: மயிலங்கூடல் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1991. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் அறியமுடியவில்லை)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 97

Page 63
801.(1) சிறுவர் பாடல்கள், கவிதைகள்
16 பக்கம், தகடு. விலை: இலவசம். அளவு: 19X14 சமீ.
புலவர் ம.பார்வதிநாதசிவம், ஆடலிறை, பாரதி பார்வதிநாதசிவம், பா.மகாலிங்கசிவம், பா.பாலமுரளி, ந.திருச்செந்தூரன், வே.செவ் வேட் குமரன் ஆகிய ஏழு கவிஞர்களின் சிறுவர் பாடல்களின் தொகுப்பு.
313 சிறுவர் கவிமலர். இணுவில் திருமதி சரஸ்வதி சோதிப் பெருமாள் நினைவுவெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1988, (யாழ்ப் பாணம்; செட்டியார் அச்சகம்) 30 பக்கம், தகடுகள். விலை: இலவசம். அளவு 20.5x14 சமீ.
ஈழத்துக் கவிஞர்களின் 25 குழந்தைக் கவிதைகளின் தொகுப்பு.
34 சிறுவர் பாட்டு. சாரணாகையூம். கண்டி தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1983.(கொழும்பு 9: டெவலோபிரின்ட், 69, அல்பியன் ഖg)
48 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 18x12 சமீ
8-12 வயதிற்கிடைப்பட்ட சிறார்களை இலக்காகக்கொண்டு அவர் களின் இரசனைக்குத் தீனியாக அமையத்தக்கதாகத் தொகுக்கப் பெற்ற கவிதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
315 சிறுவர்க்குப் பாரதியார். மாவிட்டபுரம் கருகம்பனை சிவகாம சுந்தரி சிவசம்பு நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1982. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 38 பக்கம், தகடு. விலை: இலவசம். அளவு; 21X14 சமீ.
பாரதியார் பாடல்களில் உள்ள சிறுவர்களுக்குகந்த சில பாடல் களின் தொகுப்பு.
36 சிண்ண வண்ண மலரே. சுதுமலை திசைவீரசிங்கம் சியாமினி நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, மே 1981. (யாழ்ப்பாணம்; செட்டி யார் அச்சகம்) 20 பக்கம், தகடு. விலை: இலவசம். அளவு: 18x12 சமீ.
23 குழந்தைக்கவிதைகளின் தொகுப்பு.
98 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

801.(1) சிறுவர் பாடல்கள், கவிதைகள்
317 தமிழில் பாடுவோம். வரதா சண்முகநாதன். லண்டன் வரதா சண் (pabbTg56öı, 9 Wolseley Road, Harrow, Middx, HA3 5RZ, 16mg Lugf'L, sy6ófi 1995. (London. Liso Printing) 40 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப்பிள்ளைகள் தமிழைப் பாடல் மூலம் கற்றுணர்வதற்கும் தமிழின் இனிமையை இசைவடிவில் சுவைப்பதற் குமாக இப்பாடல்கள் எளியநடையில் பாடப்பட்டவையாகும். முதற் பகுதியில் உள்ள 25 பாடல்கள் இசையோடு பாடப்பட்டு ஒலியிழை நாடாவாகவும் வெளிவந்துள்ளதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3.18 தலை காத்த தலைமயிர். சத்தியசீலன். நவாலி: கலை வண்ணம், சின்னப்பா வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1985, (சுன்னாகம்:சுரபிஅச்சகம்) 8 பக்கம், ஓவியங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5x12 y.
சிறுவர்க்கான கதைப்பாடல். ஒவியத் திறமையால் உயிர்தப்பிய ஒரு எலிக்குஞ்சின் கதை.
319 பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா. சத்தியசீலன். மானிப்பாய்: கலைவண்ணம், சின்னப்பா வீதி, நவாலி தெற்கு, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்:சுவர்ணாஅச்சகம், காங்கேசன்துறை வீதி) 32 பக்கம், வண்ணப்படங்கள். விலை: ரூபா 15. அளவு; 21X14 சமீ.
சிறுவர்களுக்கேற்ற எளிய நடையில், அந்த அதிசயமான பாத அணிகள், பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா, உயிர் காத்த ஓவியம், குழப்படியும் குழப்படியும் ஆகிய சிறுவர் கதைகளை கவிதையுருவில் ஆக்கியுள்ளார். இவற்றில் உயிர் காத்த ஓவியம் என்ற பாடல் ஒரு பாட்டுக்கூத்து உருவில் ஆக்கப்பட்டுள்ளது.
32O பாரு பாப்பா. கல்வயல் வே. குமாரசாமி. சாவகச்சேரி: அறிவழகுப் பதிப்பகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஸ்வர்ணம் பப்ளிசிட் டிஸ், 125 ஏ, புகையிரத நிலைய வீதி) 20 பக்கம். விலை: ரூபா 6.50. அளவு: 17.5x12 சமீ.
குழந்தைகள் எளிதில் வாசிப்பதற்கு ஏற்றதாகப் பெரிய எழுத்தில் அமைந்த 18 சிறுவர் பாடல்களின் தொகுப்பு.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 99

Page 64
801.(1) சிறுவர் பாடல்கள், கவிதைகள்
32 பாப்பாப்பா. கல்வயல் வே. குமாரசாமி. சாவகச்சேரி, அறிவழகுப் பதிப்பகம், பெரிய அரசடி, 1வது பதிப்பு, 1984. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம்) 16பக்கம். விலை: ரூபா 6. அளவு: 18X12 சமீ.
பதினாறு சிறுவர்பாடல்கள்.
322 பாலர் பா அமுதம். கல்வி வள நிலையம், நல்லூர். (தொகுப் பாசிரியர் குழு). யாழ்ப்பாணம்: இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (யாழ்ப்பாணம், செட்டியார் அச்சகம்) 38 பக்கம், தகடு. விலை: ரூபா 6. அளவு: 21X14 சமீ.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் இயற்றப்பட்ட பாடல்களில் தேர்ந்த சிலவற்றின் தொகுப்பு.
323 பாலர் பாடல். வி.பாக்கியநாதன். ஜெர்மனி, நெல்சன் வெளியீடு, Jens Nelson, Postfach 100729, 5270 Gummersbach,16lige Ligln, ஜூலை 1989. (ஜேர்மனி: நெல்சன் மொழிபெயர்ப்பு நிலையம்) 34 பக்கம், வண்ணப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X15 சமீ.
வண்ணப்படங்களுடன் கூடியதான குழந்தைகளுக்கான பாடல்கள்.
324 பாலர் பாடல். வி.பாக்கியநாதன். ஜெர்மனி: Droote 13, 4600, Dortmund 14, 16).125 LiflüL, 60)5 1989. (Germany: Karl Schuler Publishers. Untere bach Str. 38, D7470 Albstadt 2) 36 பக்கம், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 30X21 a.
34 பாலர் பாடல்கள். புகலிடத் தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் மொழிப்போதனைக்கு ஏற்ற குழந்தைப் பாடல்களின் தொகுப்பு.
325 மழலைகளுக்கான பாடல்கள். நகுலா சிவநாதன். சென் னை 17. மணிமேகலைப் பிரசுரம், த.பெ.1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை94: Scripts Offset) 72 பக்கம். விலை: இந்திய ரூபா 16. அளவு: 18x12.5 சமீ.
100 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

801(2) சிறுவர் நாடகங்கள், 801.(4) சிறுவர் சிறுகதைகள்
புகலிடத் தமிழ்ச்சிறார்களின் உணர்வுகளுக்கும் இரசனைகளுக்கும் ஏற்றவகையில் இலகு நடையில் அமைந்துள்ள சிறுவர் பாடல்களைக் கொண்டது. அந்நிய தேசத்தில் வாழ்கின்ற தமிழ்க் குழந்தைகளுக்கு அவர்கள் அறிந்திராத வாழ்க்கை முறையியல் அம்சங்களான தேர், கோழிக்குஞ்சு, நிலா, பட்டம், போன்றவற்றையும் நவீன தொழில்நுட்ப வாழ்க்கை முறையோடு தொடர்பான கணனி, தொலைபேசி போன்ற அம்சங்களையும் உள்ளடக்கிய சிறுவர் பாடல்களின் தொகுப்பு.
மேலும் பார்க்க: 395
801.(2) சிறுவர் நாடகங்கள்
326 சிறார்களுக்கான சிறு நாடகங்கள். சு.விக்னா பாக்கியநாதன். சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், த.பெ.1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர். 1வது பதிப்பு 1999. (சென்னை 5 எம்.கே. என்டர் பிரைசஸ்) 164 பக்கம். விலை: இந்திய ரூபா 32. அளவு: 18x12.5 சமீ.
ஜெர்மன் தமிழ்க் கல்விச்சேவை அமைப்பின் வருடாந்தப் பரிசளிப்பு விழாக்களில் இடம்பெற்று வந்த 11 சிறுவர் நாடகங்களின் தொகுப்பு.
801.(4) சிறுவர் சிறுகதைகள்
327 உறவுக்குப் போராட்டம். விக்னா பாக்கியநாதன். ஜேர்மனி: 860)606ss6MéG5 G66flus6, Droote 19, 44328 Dortmund, 16llgöl LiglüL, ஜூன் 1997. (சென்னை 24 சதுர்வேந்தன் அச்சகம், சிவன் கோவில் தெற்குத் தெரு, கோடம்பாக்கம்) 96 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
உறவுக்குப் போராட்டம், பிஞ்சுமணம், வருங்காலச் சிற்பிகள், புதிய கோணங்கள் ஆகிய நான்கு சிறுவர்களுக்கான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கை வலியுறுத்து பவையாக இக்கதைகள் அமைந்துள்ளன.
328 சசிபாரதி கதைகள். சு.சபாரத்தினம். (புனைபெயர்-சசிபாரதி). யாழ்ப்பாணம்: கலைஇலக்கிய பத்திரிகை நண்பர்கள், 123/1, கோவில் வீதி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங்வேர்க்ஸ், 295/7, காங்கேசன்துறை வீதி). xi,60 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 101

Page 65
801.(4) சிறுவர் சிறுகதைகள், 801(5) சிறுவர் நாவல்கள்
1963-68 காலப்பகுதியில் எழுதப்பட்ட குட்டிக்கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் பெரும்பாலும் இளம்வாசகர்களை நோக்கியே எழுதப் பட்டதெனக் கொள்ளலாம். சிறுவர்க்கான கதை இலக்கியங்கள் எம் நாட்டில் தனிப்பிரிவாக, வளர்ச்சி பெறவில்லை. மிகச்சில நூல் களே வெளிவந்துள்ளன. அவ்வகையில் இந்நூலில் இடம்பெறும் குறுங்கதைகளிற் குறிப்பிடத்தக்க தொகையின சிறுவர் இலக்கிய மாகவும் பயன்படக்கூடியன.
-சு.வித்தியானந்தன் (முன்னுரையில்)
329 சூரியனைத் தேடியவண்: குழந்தைகள் படிப்பதற்கான அற்புதக் கதைகள். செ.யோகநாதன். சென்னை 600017: தமிழோசை பதிப்பகம், தி.நகர், 1வது பதிப்பு, நவம்பர் 1986. (சென்னை 17: தமிழோசை அச்சகம், 84 ஹபிபுள்ளாவீதி, தி.நகர்) 402 பக்கம், படங்கள். விலை: இந்தியரூபா35. அளவு: 18x12.5சமீ.
உலக மொழிகளில் வெளியான சிறந்த குழந்தைக் கதைகளை அழகிய எளிய தமிழிலே வழங்கியுள்ளார். அன்பு, மனிதநேயம், நேர்மை, கற்றல், துணிவு, கொடுமைகளுக்கு எதிராக நிற்றல் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்டனவாக அமைந்த கதைகள்.
330 பாலர் நீதிக்கதைகள்: பாகம் 1. த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: பூரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 3வது பதிப்பு, புரட்டாதி 1989. (யாழ்ப்பாணம்: ரீ சுப்பிரமணிய அச்சகம்) 14பக்கம், வண்ணப்படங்கள். விலை: ரூபா 10. அளவு 24.5X18.5சமீ.
33 பாலர் நீதிக்கதைகள்: பாகம் 2. த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: பூரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 2வது பதிப்பு, வைகாசி 1990. (யாழ்ப்பாணம்: ரீ சுப்பிரமணிய அச்சகம்) 14பக்கம், வண்ணப்படங்கள். விலை: ரூபா 12. அளவு 24.5X18.5சமீ.
முதற்பாகம் சிறுவர்களுக்குரிய ஏழு நீதிக்கதைகளையும் இரண் டாம் பாகம் 10 நீதிக்கதைகளையும் கொண்டது. பெரிய எழுத்துக் களில் படங்களுடன் கூடியது. பாலர்களுக்கு ஏற்றது.
801.(5) சிறுவர் நாவல்கள், குறுநாவல்கள்
332
ஆறுகால்மடம்: சிறுவர் நாவல், செங்கை ஆழியான். யாழ்ப் பாணம்: ஹம்சா வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (யாழ்ப்

801.(5) சிறுவர் நாவல்கள், குறுநாவல்கள்
பாணம்: அபிராமி அச்சகம், செம்பியன் ஒழுங்கை) (4),56 பக்கம். விலை: ரூபா 16. அளவு: 16x10 சமீ.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்ததாகப் புனையப்பட்ட விறுவிறுப்பான சிறுவர் நவீனம். தில்லை என்ற சிறுவன் எதிர்பாராத வகையில் தான் சந்தித்த கள்வர்களை சட்டத் தின் கையில் பிடித்துக் கொடுக்க முயல்வதே கதையாகும்.
333 இராவணன் கோட்டை. கே.எஸ்.ஆனந்தன். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, டேவிட் லிகோரி, 38 வேம்படி வீதி, 1வது பதிப்பு, மே 1990. (யாழ்ப்பாணம்; அபிராமி அச்சகம்) 75 பக்கம். விலை: ரூபா 20. அளவு 21X14 சமீ.
வீரதீரச் செயல்கள் அடங்கிய சிறுவர்க்குகந்த சரித்திரக்கதை.
334 காட்டில் ஒரு வாரம். அனு.வை.நாகராஜன். தெல்லிப்பழை: வைரமான் வெளியீடு, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 1988. (யாழ்ப்பாணம்: அம்மா பிரிண்டிங் வேர்க்ஸ், இணுவில்) xi,135 பக்கம், தகடுகள் 8. விலை: சாதாரண பதிப்பு: ரூபா20. நூலகப் பதிப்பு: ரூபா80. அளவு: 18X12 சமீ.
சிறுவரின் காட்டு நவீனக்கதை. 12-16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் உளவியற் கோட்பாட்டுக்கேற்ப ஆய்வுக்கம், பின்பற்றலூக்கம், வீரதீரச்சாகசச் செயலூக்கம் போன்ற இயல்பூக்கங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது.
335 திசை மாறிய பாதைகள். சோ.ராமேஸ்வரன். இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீடு, 41, லும்பினி மாவத்தை, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு சர்வோதய விஸ்வலேகா அச்சகம்) 68 பக்கம். விலை: ரூபா80. அளவு; 21x14சமீ. ISBN 955-59910-9.x
எல்லோராலும் புரிந்து கொள்ளத்தக்க, எளிதான நடை, பழக்கப்பட்ட சொற்கள், நவீனமான வார்த்தையமைப்புக்கள், நாள்தோறும் நம் மிடையே உலாவரும் பாத்திரப்படைப்புக்கள் போன்ற அம்சங்கள் இச் சிறுவர் நவீனத்தின் சிறப்புக்கள்.
336 பூதத் தீவுப் புதிர்கள். செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்:
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 103

Page 66
801.(6) கட்டுரைகள், 801.(7) பலவினம்
கமலம் பதிப்பகம், 82 பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு பூரீ லங்கா புத்தகசாலை) 128 பக்கம், சித்திரங்கள். விலை: ரூபா 100. அளவு: 21.5x14 சமீ.
பூதங்களிடம் அகப்பட்டுப் பல அபாயங்களைக் கடந்து அவற்றை வெற்றி கொண்டு வந்த வசந்தனதும் அவனது நண்பர்களதும் கதை. வீரகேசரி வாரமலரில் 1994 மே 08 முதல் 26 வாரங்கள் தொடராக வெளிவந்தது.
801.(6) சிறுவர்க்கான கட்டுரைகள்
337 பாரதச்செல்வம். வை.ஏரம்பமூர்த்தி. யாழ்ப்பாணம்: பூரீ சுப்பிர மணிய புத்தகசாலை, 6வது பதிப்பு, 1984. 1வது பதிப்பு, 1957. (யாழ்ப்பாணம்: பூரீ சுப்பிரமணிய அச்சகம்) ix,192 பக்கம். விலை: ரூபா 12.70. அளவு: 18x12.5 சமீ.
மகாபாரதம் சிறுவர்க்கேற்ற வகையில் எளியநடையில் வசன நூலாக எழுதப்பெற்றுள்ளது.
801.(7) சிறுவர்க்கான பலவின நூல்கள்
338 தேடலும் பதித்தலும். அநு.வை.நாகராஜன். தெல்லிப்பழை: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென்மயிலை, 1வது பதிப்பு, Glgitu GLbuj 1992. (Gabi (pubu 12: Super Tech Services, 12, Andi wal Street)
Vi,64 பக்கம். விலை: ரூபா 60. அளவு: 19x12.5 சமீ.
இது ஏழாவது வைரமான் வெளியீடாக வரும் மேதைகள் வரிசைத் தொடரில் முதல் தொகுதி. இதில் 5 அறிவியல் மேதைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் அவர்களின் தேடல்களையும் பதித்தல் களையும் மிகச் சுருக்கமாகத் தருகின்றது. கலிலியோ, ஐசாக் நியுட்டன், வில்லியம் ஹேர்ஸ் ஷெல், ஜேம்ஸ் யங் சிம்சன், லுயிஸ் பாஷ்யர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
மேலும் பார்க்க 037, 117, 131, 256
104 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8912 சம்ஸ்கிருத இலக்கியம், 8948 தமிழ் இலக்கியம்
891.2 சம்ஸ்கிருத இலக்கியம்
339 சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள். வி.சிவசாமி. யாழ்ப் பாணம்: வி.சிவசாமி, சம்ஸ்கிருதத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: நியுரா பப்ளிக்கேஷன்ஸ்) 183 பக்கம், தகடு. விலை: சாதாரண பதிப்பு: ரூபா 50, நூலகப் பதிப்பு: ரூபா 65. அளவு; 20.5x13.5 சமீ.
இந்நூலிலுள்ள 12 கட்டுரைகளிலும் சம்ஸ்கிருத இலக்கியத்தின் சில முக்கியமான அம்சங்கள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. சம்ஸ்கிருத இலக் கியப் பரப்பு, இருக்குவேதக் கவிதை, காளிதாசரும் இலக்கியப் பணிகளும், சம்ஸ்கிருத நாடகம், தோத்திர இலக்கியம், யாழ்ப்பாணத் துச் சம்ஸ்கிருதமரபில் நாவலர், சம்ஸ்கிருத காவியவியல் முதலியன குறிப்பிடத் தகுந்தவையாகும்.
340 வடமொழி இலக்கிய வரலாறு பாகம் 1: வைதீக இலக்கியம். கா.கைலாசநாதக் குருக்கள். கொழும்பு கலா நிலையம், 175 செட்டி யார் தெரு. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1962. (கொழும்பு 11: மெய்கண் டான் அச்சகம், 161 கடற்கரை வீதி) Vi,208 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5x12.5 சமீ.
வடமொழி இலக்கிய வரலாறு. கா.கைலாசநாதக் குருக்கள். சென்னை 17. நர்மதா பதிப்பகம், 2வது பதிப்பு, டிசம்பர் 1981. 1வது பதிப்பு, 1962. (சென்னை 17: பிரபு பிரிண்டிங் ஹவுஸ்) 208 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 18.5x12.5 சமீ.
வேதங்களையும் அவற்றின் வழிவந்த பிராமணங்களையும் ஆரணியகங்களையும் வேதங்களின் முடியாக அமைந்த உபநிடதங் களையும் வேதங்களைச் சார்ந்த அறங்களையும் குறிப்பிடும் வைதீக இலக்கியம் பற்றிய அறிவைப்பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
891.48 சிங்கள இலக்கியம் மேலும் பார்க்க: 773, 834
894.8 தமிழ் இலக்கியம்
341 பெருங்காப்பியம் பத்து. எஸ்.பொன்னுத்துரை. சென்னை: மித்ர
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 105

Page 67
8948(1) தமிழ்க் கவிதைகள்
வெளியீடு, 2வது பதிப்பு, ஜனவரி 1997. 1வது பதிப்பு, 1964, (சென்னை: மித்ர அச்சகம்) 184 பக்கம். விலை: இந்திய ரூபா 55. அளவு: 18x12 சமீ.
தமிழ் இலக்கியங்களில் காப்பியங்களுக்கு பல்வேறு அறிஞர்கள் வழங்கிய உரைகளின் தொகுப்பு.
894.8(1) தமிழ்க் கவிதைகள்
342. அக்கரைக்குப் போன அம்மாவுக்கு. ஹம்சத்வனி. சென்னை: தமிழியல், 1வ்து பதிப்பு, ஓகஸ்ட் 1985. (சென்னை 600017: தமிழோசை அச்சகம்) 68 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 18.5x12 சமீ.
தமிழ்ஈழத்தின் மிகப்பயங்கரமான கணங்கள் என்னுள்ளே ஏற்படுத் திய ஆழமான அதிர்வின் பிரதிபலிப்புக்களே எனது கவிதைகள். எனது கிராமங்களும் வீதிகளும் பச்சை வயல்வெளிகளும் ஒரு நாள் சிறைமீட்கப்படும். அந்த மீட்சிக்கு ஒரு உரமாக எனது கவிதைகள் அமையுமாயின் நான் மகிழ்வேன்.
- ஹம்சத்வனி (முன்னுரையில்)
1980-1985 ஆண்டுகளுக்கிடைப்பட்ட ஈழத்தமிழரின் துயர் மிகு அவல வாழ்வை இக்கவிதைகள் பதிவு செய்கின்றன.
343 அகங்களும் முகங்களும். சு.வில்வரத்தினம். யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 1வது பதிப்பு, ஆவணி 1985. (யாழ்ப்பாணம்: புனித வளன் அச்சகம்) XX,84 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18.5X11.5 சமீ.
என்னைப் பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளி கொண்டு பின்னி இழைத்தெடுத்து வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது
-ஆசிரியர் (முன்னுரையில்)
344 அடைப்புக்குறிகள். அல்லை க.வ.ஆறுமுகம் (புனைபெயர்மாஜினி, ஈழமாஜினி) அல்லைப்பிட்டி: எஸ்.திருநாவுக்கரசு, 1வது பதிப்பு, மாசி 1987 (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச்சகம்) xi.39 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18x12.5 சமீ.
106 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமைகளையும் சமூகப்பிரச்சினை களையும் மரபுக்கவிதைகளாக ஆக்கியுள்ளார்.
345 அணையாத அறிவாலயம். சார்ள்ஸ். (இயற்பெயர்: ஐங்கரன்) யாழ்ப்பாணம்: மாணவர் இளைஞர் பொதுமன்றம், 1வது பதிப்பு, 1989, (யாழ்ப்பாணம்: கே.ரீ.அச்சகம்). 40 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x13 சமீ.
1981 இல் எரிந்த யாழ். பொதுசன நூலகம் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. ஈழநாடு, முரசொலி, திசை பத்திரிகைகளில் நூலகளரிப்பை நினைவு கூர்ந்து வெளியிடப்பெற்ற கட்டுரைகளும் இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.
346 அது அவர்கள். இ.முருகையன். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக் கியப் பேரவை, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஸ்வர்ணம் பப்ளி சிட்டிஸ், 125 ஏ, ஸ்டான்லி வீதி) (12),42 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 20x13.5 சமீ.
நேரிசை வெண்பாக்களினாலான நெடிய பாட்டு.
இக்கவிதை நூலில் கூறமுயலும் பொருள் நவீனசிந்தனை சார்ந்தது. கதை சொல்லும் பாங்கில் அவர் தன் கருத்துக்களை விருத்திசெய்து கொண்டு போகிறார். அதே சமயம், தமிழ்க்கவிதை மரபில் நீதி களைக் கூற மிகவும் பயன்பட்டு வந்த வெண்பா வடிவத்தை அவர் தெரிந்தெடுத்தமை அவரது கவிதை நூலின் நோக்கத்தை வலியுறுத்
துகின்றது.
- சி.சிவசேகரம்
347 அந்த விடியலுக்கு. க.இளங்கோ. சென்னை 94: சிவா பதிப்பகம், 18, சங்கரபுரம், சூளைமேடு, 1வது பதிப்பு, 1985. (சென்னை5: பூரீ கோமதி அச்சகம், 41 சூரப்பமுதலி தெரு, திருவல்லிக்கேணி.) 48 பக்கம். விலை: இந்திய ரூபா 5. அளவு: 18x12 சமீ.
”. தான் பார்த்துதான் ரசித்துதான் வெதும்பி-தான் பாடிய சுதந்திர கீதங்கள் ஈழப்போர்முனைக்கு இசையமைக்க வருகின்றது. மக்களே! மக்களே! என்பதே இந்தக் கவிதைக்குப் பின்னால் கேட்கும் மிருதங் கம். எழுக! எழுக! என்பதே இந்தக் கவிதையோடு இயல்பாகப் பின் னப்பட்ட வயலின் இசை.”
* -முல்லையூரான் (முன்னுரையில்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 107

Page 68
8948(1) தமிழ்க் கவிதைகள்
348 அம்பி கவிதைகள். அம்பி. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994 (சென்னை 24: ஏ.ஆர்.பிரின்ட்) 232 பக்கம். விலை: இந்திய ரூபா 43. அளவு: 17.5x12 சமீ.
ஆசிரியரின் நாற்பது ஆண்டுக் காலக் கவிதை ஊழியத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இத்தொகுதி அமைந் gol6T6Tig.
349 அல் அஸமத் கவிதைகள்: மலைக்குயில். அல் அஸ"மத் (இயற்பெயர்: அப்துல் அஸிஸ்). கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1987 (கொழும்பு 12: ரோயல் பிரின்ட்ஸ், 42 பேய்ரா ரோட்)
100 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18.5x12சமீ.
மலையக மக்களின் வாழ்க்கையை அவர்களது சோகங்களை பகைப்புலமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு.
350 அழியாத ஞாபகங்கள். சாந்தி ரமேஷ் வவுனியன். ஜேர்மனி: LITüj5u6ö Q6,16lflus6, Bahnhof Str 4, 55743 dar, Oberstein, 1வது பதிப்பு, சித்திரை 2001. (ஜேர்மனி: அச்சகவிபரம் குறிப்பிடப் படவில்லை) 64பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x14 சமீ.
இத்தொகுப்பிலுள்ள போராளிகளுடனான, போராளிகள் பற்றிய அழியாத நினைவுகளும் அவர்கள் மாவீரர்களான போது மனதில் ஏற்பட்ட வேதனையில் அடக்க முடியாத ஆனால் எமக்குள்ளேயே அடங்கிப்போன துயர் தோய்ந்த விசும்பல்களுமே இவ்வழியாத ஞாபகங்களுக்குள் பதிவாகியுள்ளன.
-சந்திரவதனா செல்வகுமாரன் (முன்னுரையில்)
351 அழியா நிழல்கள்.எம்.ஏ.நுட்மான். சென்னை நர்மதா பதிப்பகம், 1வது பதிப்பு. 1982. (சென்னை: சாதனா ஆர்ட் பிரிண்ட்ஸ்) 72 பக்கம். விலை: இந்திய ரூபா 4.50. அளவு: 18x12சமீ.
தனி மனித உணர்வுகள் சார்ந்த 22 கவிதைகளின் தொகுப்பு.
108 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
352 அழுகின்ற தேசமும் ஒளிர்கின்ற சூரியனும், கஜன். பிரான்ஸ்: தமிழர் கலை பண்பாட்டுக்கழகம், பாரிஸ், 1வது பதிப்பு, (ஆண்டு, அச்சக விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.) 102 பக்கம், ஓவியங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x13.5 3FL115.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சில நாட்டுக் கூத்து, நாடகம், ஒலிநாடா, ஒலித்தட்டு ஆகியவற்றுக்கான தேவை கருதி தமிழீழ விடுதலைப் போராளி கப்டன் கஜனால் எழுதப்பட்டவை. இவரது ஆரம்ப காலக்கவிதைகளும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
353 அறியப்படாதவர்கள் நினைவாக. அ.யேசுராசா. சென்னை 600014: க்ரியா, 1வது பதிப்பு, நவம்பர் 1984. (சென்னை 600014: ரசானா ஒப்செட் பிரின்ட்ஸ்) 34 பக்கம். விலை: இந்திய ரூபா 8 அளவு: 19x12 சமீ.
1968 முதல் 1981 வரையிலான காலப்பகுதியில் இயற்றப்பெற்ற புதுக்கவிதைத் தொகுப்பு.
354 அஸ்தமனத்துடன் ஒரு வாதம். நயினை குலம். யாழ்ப்பாணம்: வெளியீட்டுவிபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப் பாணம்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 66 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18X11 சமீ.
சமூக, அரசியல் கவிதைகளின் தொகுப்பு.
355 ஆத்ம அலைகள்: பக்திப்பாடல்கள். செநாகேந்திரன். சென்னை 600017 மணிமேகலைப்பிரசுரம், தபால்பெட்டி எண் 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை: M.K.என்டர்பிரைஸ்) iv,104 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18.5x12.5 சமீ.
இறைபக்தியும் வாழ்க்கையும் கலந்த இலக்கியப் படைப்புக்களை மையமாக வைத்து இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு.
356 ஆதங்கம். விக்னா பாக்கியநாதன். ஜேர்மனி: கலை விளக்கு, Droote 13,4600 Dortmund 14, 16)g) Lg5ÜL!, Q, b6röt 1990.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 109

Page 69
8948(1) தமிழ்க் கவிதைகள்
56 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19x14 சமீ.
ஈழ விடுதலைப்போராட்டம், இறப்பு, பொருளிழப்பு, அச்சம், வறுமை, நோய், துயரம், கண்ணிர் எனப் பலவகைப்பட்ட பயங்கர முத்துக் களைக் கொண்டிணைந்த எமது சமுதாயத்தில் பெண்ணடிமைத் தனமும் இணைந்து வளர்கிறது. இவற்றின் பாதிப்பு, ஆக்கிரமிப்பு, என்பவற்றைக் கருப்பொருளாகக் கொண்டே ஆதங்கம் என்ற இப் புதுக்கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது.
-ஆசிரியர் (என்னுரையில்)
357 இதயமலர். எம்.எச்.எம்.ஹலிம்தீன். கண்டி: தமிழ்மன்றம், கல் ஹின்ன. 1வது பதிப்பு, 1985. (கொழும்பு 9: எஸ்.எச்.நிலாப்தீன், டெவலோ பிரின்ட், 69, பூரீ தர்மராமா மாவத்தை). 135 பக்கம். விலை: ரூபா 20. அளவு; 20x14 சமீ.
இஸ்லாமிய மணம், தமிழ் மணம், ஆங்கில மணம் ஆகிய மூன்று பகுதிகளின் கீழ் மொத்தம் 130 கவிதைகள் தரப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றவை.
358 இந்த மணினும் எங்கள் நாட்களும். தர்க்கீகம். யாழ்ப் பாணம், தர்க்கீகம் வெளியீடு, தபால்பெட்டி இல.103, 1வது பதிப்பு, வைகாசி 1982. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்)
44 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 20.5X14 சமீ.
குறிஞ்சித் தென்னவன், மு.புஷ்பராஜன், வ.ஐ.ச.ஜெயபாலன், சாருமதி, க.ஆதவன், எம்.ஏ.நு.மான், ஹம்சத்வனி, கவியரசன், புசல்லாவை குறிஞ்சிவளவன், சு.வில் வரத்தினம், சுந்தரன், அ.யேசுராசா, அரு.சிவானந்தன், யோகராணி, ரவீந்திரன், ஆகிய கவிஞர்களின் விடுதலைக்கவிதைகள்.
359 இயந்திர சூரியனி. மேமன் கவி. சென்னை 600017: T.S.இராம லிங்கம், நர்மதா பதிப்பகம், 10, சோமசுந்தரம்வீதி, தியாகராஜநகர், 1வது பதிப்பு, 1984. (சென்னை: 600017: தமிழோசை அச்சகம், 84, ஹபிபுல்லா வீதி, தி. நகர்.) 136 பக்கம். விலை: இந்திய ரூபா 9. அளவு: 18x12 சமீ
ஐம்பது புதுக்கவிதைகளின் தொகுப்பு.
110 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
360 இயேசுபிரான் பற்றிய கவையான கவிதைகள். செநாகேந்திரன். சென்னை 17. மணிமேகலைப்பிரசுரம், 1வது பதிப்பு, 2001 (சென்னை 94. ஸ்கிரிப்ட் ஆப்செட்) 80 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18X12.5 சமீ.
இயேசுநாதர் பற்றிய 27 கவிதைகளின் தொகுப்பினூடாகக் கிறிஸ்தவ ஆராதனைகளின் போது உள்வாங்கிய இறையியல் கருத்துக் களை இலக்கிய நயத்துடன் கவியுருவம் கண்டிருக்கின்றார்.
36 இரண்டாவது சூரிய உதயம். சேரன். தெல்லிப்பழை: வயல் கலை இலக்கிய வட்டம், மஹாஜனக்கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 1983. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 28 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 21X14 சமீ.
இரண்டாவது சூரிய உதயம். சேரன். சென்னை 33; பொதுமை வெளியீடு, M23/10, முத்தாலம்மன் கோவில் தெரு, 2வது பதிப்பு, ஜூன் 1983, (சென்னை 5: பி.ஆர்.வி. பிரஸ், 143, பெரிய தெரு) 44 பக்கம். விலை: இந்திய ரூபா 3. அளவு: 18x12 சமீ.
சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறுகவிதைகளும் ஒரு பாடலும் இத்தொகுப்பில் உள்ளன. 1978-82 காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் சிறுபான்மை யினத்தவர்களின் உண்மையான-வாழ்ந்து பெற்ற-அனுபவம். 2வது பதிப்பு, எஸ்.வி.ராஜதுரை அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப் பட்டுள்ளது.
362 இரண்டாவது பிறப்பு.அருந்ததி. பிரான்ஸ்: Art & Social Sciences of Eelam Academy (ASSEAY), 3 Alles Paul Leautaud, 95200, Sarceles, 1வது பதிப்பு, டிசம்பர்/ 1990. (பிரான்ஸ்: ஈழம், கலைகள் சமூக விஞ்ஞானக்கழகம்)
29 பக்கம். ”விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X15 சமீ.
வெறும் வார்த்தைகளின் குவியல்களாக இல்லாமல் துன்புறும் எமது மக்களின் வலிமுனைகளையும், குமுறும் அவர்களது மனவுணர்வு களையும் மாத்திரமன்றி, சகல அடக்குமுறைகளையும் துணிவுடன் எதிர்த்து நிற்கும் எண்ணங்களையும் தாங்கி நிற்கும் கவிதைகள்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 111

Page 70
8948(1) தமிழ்க் கவிதைகள்
363 இரு இளசுகளின் கவிதைகள். சுட்டா, யுகநேசன். யாழ்ப் பாணம்: பயிர்வட்டம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) (4),46 பக்கம், தகடுகள் 2. (கேலிச்சித்திரங்கள்). விலை: குறிப் பிடப்படவில்லை. அளவு: 17x12 சமீ.
சமூகத்துயர்களையும் துன்பங்களையும் அரசியல் பார்வையினூ டாக மக்களை அடையச்செய்து சிந்தனையைத் தூண்டிவிடும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ள இளம்படைப்பாளிகள் இருவரின் கவிதைத்தொகுப்பு.
364 இன்னமும் இருட்டினிலே, சார்ள்ஸ். யாழ்ப்பாணம்: மாணவர் கலை இலக்கிய மன்றம், 1ம் பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: கே.ரி. அச்சகம்). 40 பக்கம், விளக்கப்படங்கள், ஓவியம். விலை: ரூபா 15 அளவு: 18X13 g5.
நம் தேசத்தின் சமகால நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் கவிதைத் தொகுப்பு. சிறையினில் வாடும் இளைஞர்களின் உணர்ச்சிகளை கவிதை மூலம் இந்நூலில் வெளிப்படுத்த ஆசிரியர் முயன்றிருக் கின்றார்.
365
இனி ஒரு வைகறை. கி.பி.அரவிந்தன். சென்னை 20: பொன்னி, 25, அருணாசலபுரம் பிரதான சாலை, அடையாறு, 1வது பதிப்பு, மார்ச் 1991 (சென்னை 20: இராசகிளி பிரின்டர்ஸ்) 45 பக்கம். விலை: இந்திய ரூபா 6.00. அளவு 16x12 சமீ.
இவை எனது குறிப்பேடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவை.
எழுத்துக்களினாலான இவ்வுணர்வுகள் கவிதைகளாயிருப்பின்
போராளியாயிருந்த ஒருவன் கவிஞனாகின்றான்.
- கி.பி.அரவிந்தன் (முகவுரையில்)
366 இனி வரும் காலம்: சபேசன் கவிதைகள். நா.சபேசன். சென்னை 31 அருட்குமரன், 81 டாக்டர் TV தெரு, சேத்துப்பட்டு, 1615 ugll, Gist'GLibu) 1986. (Madras 20: Blaze Printers, 12 First Main Road, Nehru Nagar) 68 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 16.5X10 சமீ.
112 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
தமிழீழ விடுதலைக்கான அரசியல்செயற்பாடுகளில் தன்னை இணைத் துக்கொண்ட-அதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்ட-ஒரு மனிதன் தன் கவிதைகளின் மூலம் தான் கடந்து வந்த பாதையில் நிகழ்ந்தனவற்றை இங்கு சொல்லியிருக்கின்றான்.
367 ஈழத்து மணினும் எங்கள் முகங்களும், வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 2: காந்தளகம், 1வது பதிப்பு, 1986. (சென்னை 86; சாலை அச்சகம்) 144 பக்கம். விலை: இந்திய ரூபா 11.50. அளவு: 18x12.5சமீ.
இச்சிறு காவியம் ஈழத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டத்தின் கோரத்தையும் கொடுமையையும் மட்டு மல்லாது தீரத்தையும் தியாகத்தையும் சித்திரிக்கின்றது.
368 ஈழத்துப் போராட்டம், கயல்விழி. சென்னை600024: த.கோவேந்தன், புதுமைப்பதிப்பகம், பாவேந்தர் தெரு, ஆண்டவர் நகர், 1வது பதிப்பு, மே 1983. (சென்னை 600014: நாவல் ஆர்ட் பிரின்டர், 137 ஜானி ஜான்சன் தெரு) 32 பக்கம். விலை: இந்திய ரூபா 3. அளவு: 18X12.5 சமீ.
கயல்விழி அவர்கள் எழுதியுள்ள ஈழத்துப் போராட்டம் என்ற இந்தச் சொல்லோவியம், விடுதலை பெறத் துடிக்கும் ஈழத்துக்கான வீர உரையாகவும், விடுதலை பெற்ற பின்னர் இருந்திடவேண்டிய சமதர்ம பூமி குறித்த விளக்கஉரையாகவும் அமைந்துள்ளது.
-கலைஞர் மு.கருணாநிதி (பாராட்டுரையில்)
369 உணர்வுகள்: கவிதைத்தொகுப்பு. செ.நாகேந்திரன். சென்னை 600017 மணிமேகலைப் பிரசுரம், தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை: M.K.என்டர்பிரைஸ்) iv,136 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 175x12.5சமீ.
பல்வேறு உணர்வலைகளை வீசும் 54 கவிதைகளின் தொகுப்பு. தமிழ்த்தாய், அழகு, வெண்ணிலா, சூரியன், காலை, மாலை இப்படிப் பல்வேறு தலைப்புக்களில் தம் உணர்வுகளை கவிஞர் மீட்டியுள்ளார். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர் தம் துயர அனுபவங்களும் புலம்பெயர் வாழ்வின் அவலங்களும் சில கவிதைகளில் புலப்படுத்தப் படுகின்றன.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 113

Page 71
894.8(1) தமிழ்க் கவிதைகள்
37Ο உரத்த இரவுகள். தமயந்தி. யாழ்ப்பாணம்: தமயந்தி, 1வது பதிப்பு, நவம்பர் 1986. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை.) (16),36 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 17X10 சமீ.
களத்திலே நின்று மக்களின் சத்தியாவேசத்தோடு கலந்து தம் மைச் சுற்றி நடப்பனவற்றைத் தமது கவிதையூடகம் முலம் வெளிப்படுத்தும் ஆசிரியரின் முயற்சி இது. நம்மக்களின் மாண்புக் காகவும் விடுதலைக்காகவும் போரிடவும், எக்கணமும் தமது நலன் களைத் தாயகத்தின் நலன்களுக்காகக் கீழ்ப்படுத்தவும் கூடிய ஆத்ம வளமை இங்கே இருக்கின்றன. இவற்றின் பிரதிபலிப்புக் களை இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
371 உள்வெளி. க. ஆதவன். சென்னை: திருமதி மல்லீஸ்வரி ஆதவன், இல.16, 10வது குறுக்குத்தெரு, இந்திராநகர்,அடையாறு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (சென்னை: அச்சகவிபரம் குறிப் பிடப்படவில்லை) 48 பக்கம். விலை: இந்திய ரூபா 5. அளவு: 17.5x12 சமீ.
இலங்கை இனச்சிக்கலின் அவலங்களை விளக்கும் 24 அரசியல் கவிதைகளின் தொகுப்பு.
372 எட்டாவது நரகம். சோலைக்கிளி (இயற்பெயர்:U.L.M.அத்திக்). கல்முனை 4: வியூகம், 374 செயிலன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1988. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்) Vi.62 பக்கம். விலை: 18 ரூபா. அளவு: 18.5x12 சமீ.
கவிஞர் எம்.ஏ.நு.மானின் முன்னுரையுடன் வெளியாகியுள்ள கவிதைத் தொகுதி. காலஓட்டத்தில் புதைந்தும் புதையாமலும் தோன்றுகின்ற கிழக்கிலங்கையின் கவிதை ததும்பும் கிராமியச் சொற்றொடர்களை, கைவேலை வண்ணப்பாட்டுடன் கவிதையாகப் பின்னியுள்ளார்.
373 எப்போதாவது ஒரு நாள். நட்சத்திரன் செவ்விந்தியன். (அருண் அம்பலவாணர்) சென்னை 78; தாமரைச்செல்வி பதிப்பகம், 31/48 இராணிஅண்ணாநகர், கலைஞர்நகர், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1999. (சென்னை 33 விக்னேஸ் பிரிண்டர்ஸ்) 62 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 17.5X12 சமீ.
114 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
1994ம் ஆண்டு சிறந்த கவிதை நூல்களுக்கான சுதந்திர இலக்கிய விழா விருது பெற்ற ஆசிரியரின் இரண்டாவது கவிதைத்தொகுதி. முதற்தொகுதியின் (வசந்தம் 91) 21 கவிதைகளுடன் சரிநிகர், அருவி, படி, காலச்சுவடு, நந்தலாலா, எனவே இனி, இன்னுமொரு காலடி ஆகிய இதழ்களில் வெளியான மேலும் 12 கவிதைகளும் சேர்ந்து 33 கவிதைகளுடன் இத்தொகுப்பு வெளியிடப்பெற்றுள்ளது. ஏழு ஆண்டுக்கால கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு இது.
374 எல்லை கடத்தல். ஒளவை. கொழும்பு 2: மூன்றாவது மனிதன் பதிப்பகம், 3 7/14 வொக்சோல் லேன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000 (அச்சகம் குறிப்பிடப்படவில்லை) - 56 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 20x13 சமீ.
எரிகின்ற ஈழத்து மண்ணிலிருந்து கிளம்பியுள்ள குரல்கள் தான் எத் தனை? அவை எழுப்பிடும் புதுக்கேள்விகளும் தான் எத்தனை? குறிப் பாக, தமிழில் கவிதைத்துறையில் புதிய வீச்சினைத் தருவது ஈழத் துக் கவிதைகளே என்பதை மறுக்க இயலாது. அதிலும் சிறப்பாகப் பெண்கள் பலர் கவிதையினைத் தம்வெளிப்பாட்டு ஊடகமாகத் தேர்ந் தெடுத்தது இன்றைய வரலாற்றில் புதிய கண்ணி.
-அ.மங்கை (முன்னுரையில்)
375 எழுவாண் கதிர்கள். அன்பு முகையதின், பாலமுனை பறுாக். (தொகுப்பாளர்கள்). கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது. 1வது பதிப்பு, 1986. (கல்முனை: அஸிஸ் பிறின்டிங்).
138 பக்கம். விலை: ரூபா 22 அளவு: 18.5x12.5 சமீ.
இது மரபுக்கவிதைகளும், புதுக்கவிதைகளும் அடங்கிய தொகுப் பாகும். 1970ம் ஆண்டின் பின் கவிதையாக்கத் தொடங்கிய கல் முனைப் பிரதேசக் கவிஞர்கள் 24 பேரின் ஆக்கங்கள் இவை. பின் னிணைப்பில் (10 பக்கங்கள்) இக்கவிஞர்கள் பற்றிய யார் எவர்? அறிமுகக் குறிப்பும் காணப்படுகின்றது.
376 எண்ணில் விழும் நாண், வாசுதேவன். யாழ்ப்பாணம்: மல்லிகைப் பந்தல், 2348, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: பூரீகாந்தா அச்சகம்) 48 பக்கம். விலை: ரூபா 9. அளவு: 18.5X13 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 115

Page 72
894.8(1) தமிழ்க் கவிதைகள்
மனிதவாழ்வின் துளிர்ப்பிற்கான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைந்த புதுக்கவிதைத் தொகுப்பு. ;
377 எனது இராகங்கள். வவுனியா திலீபன். வவுனியா; வன்னி இலக் கிய கலாமன்றம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம்)
(8),40 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12சமீ.
. இக் கவிஞன் போராட்டங்களையும் காதலுணர்வினையும் நிறையவே பாடியுள்ளான். சில கவிதைகள் கவிப்பொருளை நேராகப் பாட, சில உருவ அமைவில் உறக்கம் கொள்கின் றன. இத்தகைய முயற்சிகள் கவிஞனை முன்னணிக்கு நகர்த்து கின்றன.
-செம்பியன் செல்வன் (முன்னுரையில்)
378 ஒரு அகதியின் பாடல். வ.ஐ.ச.ஜெயபாலன். கனடா! தேடல் பதிப்பகம், ரொரன்ரோ, 1வது பதிப்பு, மார்ச் 1991. (நோர்வே: Peenads Graphics, Oslo) 49 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X13.5 சமீ.
தான் வாழுகின்ற காலத்தின் நெருக்கடியைப் பல்வேறு தளங் களில் அனுபவித்துக் கவிதையாக்கியுள்ளார். அவை ஒரு அகதியின் குரலாகத் துயரங்களைச் சொல்லி நிற்கின்றது.
379 ஒரு சரித்திரம் தீக்குளித்தது. கவிதாராஜன். கனடா: உலகத் தமிழர் இயக்கம், கனடாக் கிளை. 1வது பதிப்பு, ஜனவரி 1994. (அச்சக விபரம் அறியமுடியவில்லை) 36 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x14 சமீ.
தமிழீழத்தின் அடிமை இருள் போக்கத் தம்மை அக்கினிக் குஞ்சு களாக்கிய மறவர்களை மதித்து அவர்களை ஏற்றிப்போற்றும் கவிதாராஜனின் கவிதைப்பூங்கா.
-பதிப்பாசிரியர்
38O ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகின்றது. ச.சுதாகர். சென்னை 94. சுதா பதிப்பகம், 6, சங்கரபுரம், 3வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, 1986. (சென்னை 24: பாம்ஸ் பிரின்டர்ஸ், 52 ஆர்க் காடு ரோடு, கோடம்பாக்கம்)
116 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
48 பக்கம், விலை: இந்திய ரூபா 3. அளவு: 18x12 சமீ.
ஒடுக்கப்பட்டு நசுக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களின் விடுதலைக் குரலாக விடிவான விரிப்பாக விளங்குகின்ற இளைஞர் ச. சுதாகரின் கவிதைகள் காலத்தைக் கணப்படுத்துகின்றன. நமது கண்களை கெளரவப்படுத்துகின்றன.
- வலம்புரிஜான் (முன்னுரையில்)
381 ஒ சமுதாயமே கவிதைத் தொகுதி. கி.மங்களராணி. யாழ்ப்பாணம்: யாழ். ரோட்டரிக்கழகம், 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: ஆர். எஸ்.அச்சகம்)
vi,30 பக்கம், விலை: ரூபா 3. அளவு: 18x12.5 சமீ.
ஊனமுற்றவர்களின் உள்ளக் குமுறலை, அவர்களின் ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களை ஏமாற்றங்களை அதே நிலையிலுள்ள ஒருவனால் அனுபவபூர்வமாக உணர முடிவது போன்று, பிறிதோர் இரண்டாம் மனிதரால் உணர்வுபூர்வமாக உணர்ந்து உணர்வுகளுக்கு அழுத்தம் தர முடியாது என்பது எனது கருத்து. எனவே தான் எனது சக சகோதரர்களின் சார்பாக அவர்களே நானாக நின்று எம்மவரின் உள வெளிப்பாடுகளை என் கவிதைகளில் ஒலிக்க விட்டேன்.
-நூலாசிரியர் (முன்னுரையில்)
382 ஓவியம்: குறுங்காவியம் . சி.ஏ.எலியாசன். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57 மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, 1988. (ஹல்கிரன் ஒயா: நவலங்கா பிரஸ், ராகலை). 28 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21X14 சமீ.
கொழுந்து ஆயவும் தெங்கு பொறுக்கவும் ரப்பர் பால் சேகரிக்கவும் உரித்தானவர்களாக மட்டுமே - முகம் தெரியாத முத்திரைப் பெண் களாக, இலங்கைத் தபால்தலைகளில் இன்றுவரையிலும் சித்திரிக்கப் படும் (மலையகப்) பெண்களுக்கு அருளன் என்ற ஓவியன் கதாபாத் திரம் மூலம் உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.
-சாரல் நாடன் (அணிந்துரையில்)
383 கட்டிடக் காட்டுக்குள்: செல்வம் கவிதைகள். செல்வம். பிரான்ஸ்: ஈழம் கலைகள் சமூக விஞ்ஞானக்கழகம், (ASSEAX), 1வது பதிப்பு, மார்ச் 1992, (பிரான்ஸ்: ASSEAX) 44 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 117

Page 73
8948(1) தமிழ்க் கவிதைகள்
முகத்தை இழந்து விட்ட அகதி மனிதனின் மனக்குமுறல் ஒவ் வொரு கவிதையிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
384 கல்லறை மேலான காற்று. (தொகுப்பு) சார்ள்ஸ். யாழ்ப் பாணம் மாணவர் இளைஞர் பொது மன்றம், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம்) VII,41 பக்கம், படங்கள். விலை: ரூபா.15. அளவு 21X14 சமீ.
வடமராட்சியில் நிகழ்ந்த ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை நினைவுகூரும் வகையில் ஈழத்தின் வளரும் கவிஞர்கள் எண்மரால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.
385 கவித்தொகை. கிருஷ்ணா வைகுந்தவாசன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: தமிழர் ஒருங்கிணைப்புச் சபை, 1வது பதிப்பு, தை 1997. (UK: 55 Warren Road, Collierswood, London SW19) 50 பக்கம். விலை: ஸ்டேர்லிங் பவுண் 1.50. அளவு; 21X15 சமீ.
தமிழறிஞர் கிருஷ்ணா வைகுந்தவாசன் அவர்களின் வாழ்க்கை, விருப்புக்கள், தொடர்புகளுடன் சம்பந்தப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. பல்வேறு தமிழறிஞர்களின் மேற்பாடப்பட்ட கவிதைகள் பல உள்ளடங்குகின்றன.
386 கவிதைச்சோலை. விக்னா பாக்கியநாதன். ஜேர்மனி: கலை 66IIéG5„Droote 13, 4600 Dortmund 14, West Germany, 26llg பதிப்பு, ஜூலை 1996. முதற் பதிப்பு, நவம்பர் 1988. (Germany Caritas of Dortmund) 104 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X15 சமீ.
கவிதைச் சோலை. விக்னா பாக்கியநாதன். சென்னை 17:
மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 14:47, 7 தணிகாசலம் சாலை,
தி.நகர். 1வது பதிப்பு, 2000. (சென்னை 4: முருகன் ஆப்செட்) 112 பக்கம், விலை: இந்திய ரூபா 23. அளவு: 18.5x12.5 சமீ.
1978 முதல் எழுதப்பட்டதும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டது இக்கவிதைத்தொகுப்பு. மரபுக்கவிதையாக மலர்ந்துள்ள பல்லினக்கவிமலர்கள் அறுபத்தெட்டினை இது கொண்டுள்ளது.
118 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
387 கனல்: நான்கு பெண்களின் கவிதைகள். சுதாகரி சுப்பிர மணியம், விஜயலட்சுமி கந்தையா, ஜயந்தி தளையசிங்கம், சுதாசினி சுப்பிரமணியம். மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 27ஏ லேடி மனிங் டிரைவ், 1வது பதிப்பு, டிசம்பர் 1997 (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிரபிக்ஸ்) 32 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 17.5X13 சமீ.
நான்கு பெண்கள் எழுதிய பதின்மூன்று கவிதைகள் அடங்கிய தொகுதி. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற சமூகத் தின் இரட்டை நிலைப்பாடு பற்றிய அதிருப்தி கவிதைகளின் அடிநாத மாக ஒலிக்கின்றது.
388 கனவின் மீதி கி.பி.அரவிந்தன். சென்னை 600091. பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், 1வதுபதிப்பு, ஆகஸ்ட்1999. (சென்னை 600005; மணி ஆப்செட்) 96 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு 21X14 சமீ.
ஒரு நாட்டில் வாழகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத் தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவல மாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன்.
- கா.சிவத்தம்பி (முன்னுரையில்) இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ் வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.
389 காக்கும் நிலைக்கு உயிராகி. பசீர் (முகம்மது தாவுத் பசீர் உசேன்). யாழ்ப்பாணம்: பொதுமை வெளியீடு, 39, கோவில் வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) (3),51 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 17.5X12 சமீ.
இவன் எழுதுகோல் வரலாற்றை எழுதும்கோலாக இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தால் உற்சாகத்துடன் எழுதப் புறப்பட்டவன். ரீ லங்கா இராணுவம் ஈழப்பகுதிகளில் செய்த அநியாய அட்டூழியங் களைப் பதிவுசெய்தது இவன் பேனா. கடந்த காலங்களில் கூட நடந்து வந்த தோழர்களை இழந்தபோது இவன் எழுதியவை உற்சா கத்தை விதைப்பவையாக விரிந்தன. எதிர் காலத்தை நம்பிக் கையோடு நோக்கும் தெம்பைப் பிறப்பிக்கும் கருவூலங்களாக அவை விளங்கின.
-இளையவன் (முன்னுரையில்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 119

Page 74
8948(1) தமிழ்க் கவிதைகள்
390 காதோடு சொல்லி விரு. மேஜர்பாரதி (இயற்பெயர்: சத்திய பாமா விஸ்வலிங்கம்). பிரான்ஸ்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடு, 2ம் பதிப்பு, ஒக்டோபர் 1995. 1வது பதிப்பு, புரட்டாதி 1993, (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 98 பக்கம். விலை: ரூபா 65. அளவு: 18x12.5 சமீ.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான மேஜர் பாரதியின் 18 கவிதைகள் அடங்கிய தொகுதி. கப்டன் அக்கினோ பற்றிய ஒரு போராட்டக் குறிப்பும். களத்தில் கலைஞர்கள், களத்திலிருந்து ஒரு கடிதம் ஆகிய இரு கட்டுரைகளும் வெள்ளையம்மா என்ற ஒரு சிறுகதையும் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் விடுதலைப்போராட் டத்தைப் பகைப்புலமாகக் கொண்டவையே.
39 காலங்கள்: கவிதைகள் நாட்குறிப்புகள். கிருஷாந்தி ரட்ணராஜா. திருக்கோணமலை: கூடல் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்ரெம்பர் 1998. (தெகிவளை: த நியுட் குரூப்) 48 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 19X12.5 சமீ.
ஈழத்தின் தமிழ்க் கவிதைத் துறையில் பெண் படைப்பாளிகள் வரிசையில் நூலாசிரியருக்கும் இடம் உண்டு என்பதை இந்நூல் புரிய வைக்கின்றது.
392 காலத்தின் கோலங்களி. M.H.M.ஹலீம்தீன். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு 2: VAT Print, 96, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை) 140 பக்கம், தகடுகள், புகைப்படம். விலை: ரூபா 20. அளவு: 18X14 g5.
சமுதாய முன்னேற்றத்தையும், தனி மனிதன் சீர்திருத்தத்தையும் தத்துவச் சிந்தனையையும் தாங்கி வரும் கவிதைத் தொகுப்பு.
393 காலத் துயர் (கவிதைகள்). சு.வில் வரத்தினம். திருக் கோணமலை: வி.ஜெ.வெளியீடு, 1வது பதிப்பு, 1995. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்) (8),35 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 19.5X11.5 சமீ.
அக்டோபர் 1992 இல் யாழ்ப்பாணத் தீவுகள் சிறைப்பிடிக்கப்பட்டது
120 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
முதல் ஆசிரியர் தன் குடும்பத்துடன் இணையத்துடித்த எட்டு மாத காலத்துயர் கவிதைகளாகியுள்ளன. தமிழ்பேசும் மக்களின் சமகாலத் துயர்களையும், வடபகுதி மக்களின் புலப்பெயர்வின் அவலங்களையும் தொடரும் இன்னல்களையும் கவித்துவத்தோடு பதிவு செய்துள்ளார்.
394 காலி லீலை. மு.பொன்னம்பலம். சென்னை 600028. த்வனி புக்ஸ், 25, III Trust Cross Street, 16 gbi LugóČIL, DITġěF 1997. (QF6ör6oo6oT
600001: Students Offset Centre) (14),184 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
இந்நூலில் அடங்கியுள்ள படைப்புகள் நான்கு காலப்பகுதியைக் கொண்டவை. முதற்பகுதி (1960-70) அது என்னும் ஆசிரியரின் கவிதைத் தொகுதியிலும் ஏனைய சிறு பிரசுரங்களிலும் வெளியா னவை. இரண்டாவது பகுதி (1970-80) அக வெளிச் சமிக்ஞைகள் என்னும் தலைப்பில் நூலுருப்பெறக்காத்திருந்த படைப்புக்களாகும். மூன்றாவது பகுதி (1980-90), விடுதலையும் புதிய எல்லைகளும், விலங்கை விட்டெழும் மனிதர்கள் ஆகிய ஆசிரியரின் இரு நூல் களில் வெளியானவை. நான்காவது பகுதியான 1990க்கு உரியவை பேரியல்பின் சிற்றொலிகள் என்னும் தலைப்பில் பிரசுரிக்கப்படவிருந்த படைப்புகளாகும். இவை சில திருத்தங்களுடன் காலி லீலையாக வெளிவருகின்றது. ‘கட்டற்ற காலத்தின்ரூபமான காலியின் (காளி) சிறுஅசைவும் ஆனந்த விளையாட்டின் (லீலையின்) வெளிக்காட்டலே என்றவகையில் நூலின் தலைப்பு காலி லீலையாக அமைகின்றது.
-ஆசிரியர் (முன்னுரையில்)
395 காற்று. மெளனகுரு சித்தார்த்தன். ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).
50 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 17.5X11.5 சமீ.
இந்தத் தொகுப்பில் 20 கவிதைகள் உள்ளன. மனவளர்ச்சி மிக்க ஒரு சிறுவனின் (வயது15) அனுபவங்கள், சிந்தனைகள், கற்பனை களின் வெளிப்பாடுகள். இவை வழக்கமான அர்த்தத்தில் சிறுவர் இ லக்கியத்தின் பாற்படுவனவல்ல. இளமையின் வாசற்படியில் கால் வைக்கும் ஒரு சிறுவனின் படைப்பு.
-எம்.ஏ.நுட்மான் (முன்னுரையில்)
396 காற்றுவழிக் கிராமம். சு.வில்வரத்தினம். திருக்கோணமலை:
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 121

Page 75
8948(1) தமிழ்க் கவிதைகள்
ஆகவே, 1வது பதிப்பு, மார்ச் 1995. (தெகிவளை: Techno Print) 26 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 17.5x12.5 சமீ.
யுத்த காலத்தில் சிதைக்கப்பட்ட ஈழத்தின் கிராமங்களின் பதிவை உள்வாங்கிய ஆவணமாக இக் கவிதைத்தொகுப்பு அமைகின்றது.
397 கானல் வரி. சேரன். சென்னை 20: பொன்னி, 12 முதல் பிரதான சாலை, நேரு நகர், அடையாறு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1989. (சென்னை: இராசகிளி பிரின்டர்ஸ்)
1975 முதல் 1981 வரையிலான காலப்பகுதியில் சேரன் எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுத்த 28 கவிதைகளின் தொகுப்பு.
398 குறிஞ்சித்தெண்னவண் கவிதைகள். குறிஞ்சித்தென்னவன். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57 மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, 1987 (கண்டி: யூனியன் அச்சகம்) 40 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18X12 சமீ.
தேயிலைக் காடுகளிலும் மலை முகடுகளிலும் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றிக்கூறும் கவிதைகள்.
399 கூடைக்குள் தேசம். சு முரளிதரன். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57 மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, 1988. (கண்டி: ரோயல் பிரின்டர்ஸ், 190, கொழும்பு வீதி) 36 பக்கம், ஓவியங்கள். விலை: ரூபா 9.75 அளவு: 18X11 சமீ.
இலங்கையில் முதன்முதலில் வெளிவந்த எழுபத்தியாறு ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு மாதிரிக்குச் சில:
(1) கூடையைக் கணக்க
கனக்கச் சுமந்து சென்றார்கள். உள்ளே இந்த தேசம் (கவிதை இல. 1)
(2) சில்லறை விலையில்
சின்னச் சின்ன சவப்பெட்டிகள்
சிகரெட் பாக்கெட்டுகள் (கவிதை இல. 67)
400 கொக்கூர் கிழான் கவிதைகள்: 1962-1982. கொக்கூர் கிழான் (இயற்பெயர்: கா. வை.இரத்தினசிங்கம்) கொழும்பு 2:
122 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
அறிவராய வெளியீடு, 21 ரைபிள் வீதி, 2வது பதிப்பு, 1983. 1வது பதிப்பு, 1977. (கொழும்பு 12: சிலோன் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்) 102 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 20.5X13.5 சமீ.
என்னளவில் யாப்பும் எழிலும் கவியுணர்வும் மின்னி மின்னி ஆங்காங்கு மிளிர, சமூகத்தில் மாற்றம் பல துறைத்தும் வருவிக்க வே துடிக்கும் சீற்றம் படைத்த ஒரு செய்ய மனத்தை, இந்த நூலில் பல இடத்தும் நோட்டமாய்க் கண்டேன் நான்.
-சில்லையூர் செல்வராசன் (அணிந்துரையில்)
4O கோசல்யா கவிதைகள். கோசல்யா சொர்ணலிங்கம். சென்னை 600017. மணிமேகலைப் பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (சென்னை 600094: Script Offset)
128 பக்கம். விலை: இந்திய ரூபா 26. அளவு: 18.5x12.5 சமீ.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிரியரின் இரண்டாவது கவிதை நூலாக வெளிவரும் இத்தொகுதியில் 51 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
402 சக்தி பாலஐயாவின் கவிதைகள். சக்தி பாலஐயா. கொழும்பு 13: துரைவி பதிப்பகம், 85 ரீ இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வதுபதிப்பு, பெப்ரவரி 1998 (சென்னை14: பார்க்கர் கொம்பியுட்டர்ஸ், 293 அகமட் காம்ப்ளெக்ஸ், கீழ்த்தளம், இராயப்பேட்டை நெடுஞ் சாலை)
160 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு; 21x13.5 சமீ.
மலையக மூதறிஞர் தமிழ்ஒளி சக்தி பால ஐயாவின் இக்கவிதைத் தொகுப்பு துரைவி பதிப்பகத்தின் ஐந்தாவது நூலாகும்.
4O3 சாகுந்தல காவியம். க.தி.சம்பந்தன். (க.திருஞானசம்பந்தன்). யாழ்ப்பாணம்: சு.இராஜநாயகம், திருநெல்வேலி தெற்கு, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) XVi,316 பக்கம். விலை: ரூபா 60. அளவு; 21X14 சமீ.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை நெறிப்படுத்திய தமிழ் மரபுக்கமைய
அபிஞ்ஞான சாகுந்தலக் கதையில் சில மாற்றங்கள் இன்றியமை யாதனவாகின. படலங்களைக் காண்டங்களாக வகுத்தருளியவரும்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 123

Page 76
8948(1) தமிழ்க் கவிதைகள்
பண்டிதமணியவர்களே. பெண்மையின் மாட்சிமையை சான்றோர் உணர்த்திய வழி காட்ட முயன்றிருக்கின்றேன்.
நூலாசிரியர் (நூன்முகத்திலிருந்து)
404 சிரமம் குறைகிறது. கல்வயல் வே. குமாரசாமி. சாவகச்சேரி: அறிவழகுப் பதிப்பகம், பெரிய அரசடி, 1வது பதிப்பு, 1980. (சாவகச்சேரி. திருக்கணித அச்சகம், மட்டுவில்) XVi96 பக்கம். விலை: ரூபா 7.75. அளவு: 18x12.5 சமீ.
மொழியாற்றற் செம்மையும் ஓசையுணர்வுப் பெருமிதமும் தெளிவும் திட்டமும் திறம்பட அமைந்து மிளிறும் மரபுவழிக் கவிதைகளின் தொகுப்பு. பேராசிரியர் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளி வந்துள்ளது.
405 சில்லையூர் செல்வராசன் கவிதைகள்: தொகுதி 1. கமலினி செல்வராசன். கொழும்பு: அதிசயன் பதிப்பகம், 1வது பதிப்பு, 1997 (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) 184 பக்கம், புகைப்படம். விலை: ரூபா 200. அளவு: 22x14 சமீ.
ஈழத்தில் குறிப்பிடத் தகுந்த கவிதைகள் எழுதித் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்ட சில்லையூர் செல்வராசனின் கவிதைகள் அடங்கிய முதலாவது தொகுதி.
406 கடலைகளாகும் நகரங்கள். தீரன். பிரான்ஸ்: Ceylon Arts Centre, Boite No.2, 1 Allee Moliere, 95140 Gorges Les, Gonesse, France. 1வது பதிப்பு, 1989. (சென்னை 2: காந்தளகம், 834, அண்ணா சாலை) 88பக்கம், வரைபடம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 17X10 சமீ.
புண்பட்டுப் புரையோடிப்போன ஈழத்தமிழரின் அவலவாழ்வு புதுக் கவிதைகளின் வாயிலாக மரண ஒலங்களாக எழுகின்றன.
4O7 சுபத்திரன் கவிதைகள். சுபத்திரன். மட்டக்களப்பு பூவரசுகள் வெளியீடு, 37, 2வது குறுக்குத் தெரு, வேலூர், கல்லடி. 1வது ugly, (3LD 1997. (Colombo 4: Pressmate, 90/7 Louries Road) 148 பக்கம். விலை: ரூபா 100. அளவு 21.5x14சமீ. ر
இத்தொகுதியில், கவிஞர் சுபத்திரன் 1963ம் ஆண்டு முதல் இயற்
124 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
றிய கவிதைகள் 91 தொகுக்கப்பெற்றுள்ளன. அவரின் அகால மரணத்தின் பின் 18 ஆண்டுகள் கழிந்து இவை நூலுருப்பெறுவது குறிப்பிடத்தக்கது. N
408 சுவைக்கச் சில துளிகள்: கவிதைகள். கே.கே.பீதாம்பரம் (புனைபெயர்:ஏறாவூர் பரம்) ஏறாவூர் 5: வெளியீட்டுவிபரம் அறிய முடியவில்லை. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1980. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்) (8),20 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5x12 சமீ.
மனித வாழ்க்கையிலே இயல்பாகவே நடக்கின்ற பல அன்றாடச் சம் பவங்கள் சுவையான கவிதைகளாக இந்நூலில் இடம்பெறுகின்றன.
4O9 சூரியனோரு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். கோவை 641015: யாழ்.பதிப்பகம், 386, காமராஜர் வீதி, உப்பிலிப்பாளையம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1986. (கோவை 641030: Printopack) 72 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 18X12 சமீ.
சூரியனோரு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். பிரான்ஸ், ஆசிரியர். 2வது பதிப்பு, ஜூலை 1987 (சென்னை 04: மிதிலா அச்சகம், மைலாப்பூர்) 78 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.
போர்க்களமாய் மாறிப்போன ஈழமண்ணிலிருந்து முகிழ்க்கும் இலக்கி யங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால் இவற்றை மக்களுக்கு வழங்குவதும் கூடப் போராட் டத்துக்குப் புரியும் உதவியே.
-துரை மடங்கன் (வெளியீட்டுரையில்)
410 செப்பனிட்ட படிமங்கள். சி.சிவசேகரம். சென்னை 600002; சென்னை புக்ஸ், 6. தாயார் சாஹிப் 2வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1988. (சென்னை 20: இராசகிளி பதிப்பகம், 12 முதலாவது பிரதான வீதி, நேரு நகர், அடையார்). 56 பக்கம், விலை: இந்திய ரூபா. 7.50. அளவு: 18X12 சமீ.
தாயகம், புதியயூமி, செம்பதாகை, செங்கொடி ஆகிய சஞ்சிகை களில் வெளியான ஆசிரியரின் கவிதைத் தொகுப்பு.
W9
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 125

Page 77
8948(1) தமிழ்க் கவிதைகள்
4 சேரர் வழியில் வீரர் காவியம். அகளங்கள். யாழ்ப்பாணம்: செ.சண்முகநாதன், 1வது பதிப்பு, ஆடி 1982. (யாழ்ப்பாணம்: வஸ் தியான் அச்சகம்) 32 பக்கம். விலை: ரூபா 5 அளவு: 18.5x12 சமீ.
சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில் வரும் பகுதியினை இலகு தமிழில் ஒரு குறுங்காவியமாக்கி, சேரன் செங்குட்டுவனின் வீரத் தினை இலக்கிய ரசிகர்கள் சுவைக்க வழி செய்துள்ளார்.
42 சொல்லாத சேதிகள். அ.சங்கரி, சிவரமணி . இன்னும் பிறர். யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வுவட்டம், 51, சங்கிலியன் வீதி, நல் லூர். 1வது பதிப்பு,1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி) (6),42 பக்கம், விலை: ரூபா 8. அளவு: 17X11 சமீ.
அ.சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு. இலங் கைத் தமிழ்ப்பெண்கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி யாகவும் அமையும் இந்நூலில் பெண் என்ற நிலையிலிருந்து அவர்களது உணர்வுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
43 தண்டிகை கனகராயன் பள்ளு. மாவை சின்னக்குட்டிப் புலவர். காங்கேசன்துறை: தமிழ் மன்றம், மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, நவம்பர் 1983. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்) xiv,(14),67 பக்கம், தகடு விலை இலவசம் அளவு: 18x12.5சமீ.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் வலிகாமப் பகுதியில் அதிகார முதலியாகத் தெல்லிப்பழையில் இருந்த தண் டிகைக் கனகராய முதலியாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரால் ஆதரிக்கப்பட்டவரான மாவை சின்னக்குட்டிப் புலவரால் இயற்றப்பட்டது தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந் தமாகும். கி.பி.1792 ஆண்டளவில் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 1932இல் தெல்லிப்பழை வ.குமாரசுவாமி அவர்களைப் பதிப்பா சிரியராகக் கொண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. இப்புதிய பதிப்பு, ஆசிரியர் ஆ.ஞானசுந்தரம் அவர்களின் நினைவு வெளி யீடாக வந்துள்ளது. முன்னைய பதிப்பிலுள்ளது போன்று நாற்று நடுகை வரையிலான 153 பாடல்களே இப்பதிப்பிலும் உள்ளன.
126 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
414 தாயகச் சமாதானம். ஜெயா நடேசன். சென்னை 600017. மணி மேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஒப்செட்) 80 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18.5x12.5 சமீ.
புலம்பெயர்ந்த நாடுகளில் தாம் தேடிக்கொண்ட, கண்டு கொண்ட அனுபவங்களையும், தாயகமண்ணின் அவலங்கள், சமாதானத்தை நோக்கிய எதிர்பார்ப்பு, ஆகியவற்றையும் எண்ணக்கருவாகக்கொண்டு, சமுதாய நலன் நாடி முகிழ்த்த கவிதைகளின் தொகுப்பு.
415 தாலாட்டுக்கள் 2 (சினிமா). சண்முகம் ஜெயதாசன், சுலோஜனா ஜெயதாசன். காங்கேசன்துறை: புதுவிடு, கருகம்பனை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 30 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
தமிழ்த் திரையுலகில் திரைப்படப்பாடல்களாக வெளிவந்து பிரபல்ய மான 14 தாலாட்டுப் பாடல்களின் தொகுப்பு.
மேலும் பார்க்க: 219, 220
416 திசைகள் வெளிக்கும். தாட்சாயணி (இயற்பெயர்: சபா.சிவானந்தன்) கனடா: தமிழ்த்தேசம் வெளியீடு, 1வது பதிப்பு, கார்த்திகை 1999. (அச்சகவிபரம் குறிப்பிடப்படவில்லை) 141 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 22x14.5 சமீ.
கவிஞர் காசி ஆனந்தன் தொடக்கி வைத்த தமிழீழப் பரணிப்பாடல் களைப் பின்பற்றிப் பாடிவரும் இளங்கவிஞர் வரிசையில் தாட்சா யணியும் திகழ்கிறார். பரண் மீது அமர்ந்து போர்க்களக் காட்சி களைக் கண்டு வியந்து பரணி பாடிய பழந்தமிழ்க் கவிஞர்களைப் போலத் தொலைதூர கனடாவில் இருந்தவண்ணம் தமிழீழப் போராட் டக் காட்சிகளை மனக்கண்ணில் கண்டு இவர் பாடியுள்ள கவிதை கள் அந்தக் காலத்திற்கே நம்மைக் கொண்டு செல்கின்றன.
-பழ.நெடுமாறன் (அணிந்துரையில்)
47 தியாக யந்திரங்கள். சு.முரளிதரன். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57, மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, 1986. (கண்டி: ஹொந்த ஹித்த நியு பிரின்டர்ஸ், 79, திருக்கோணமலை வீதி) 40 பக்கம், விலை: ரூபா 10.50. அளவு: 18x12 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 127

Page 78
8948(1) தமிழ்க் கவிதைகள்
புதுக்கவிதைத் தொகுப்பு.
48 திவ்வியா. புதுநகர் செல்லத்துரை. பிரான்ஸ்: தமிழர் கலைக் கலாச்சார மாமன்றம், செர்ஜிபோந்த்வாஸ், 1வது பதிப்பு, ஒக் (3LTLJ 1999. (Chennai 600007; D.P. Tech, V.M. Printing Works) 168 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை.
அளவு: 18X12.5 சமீ.
தாயகத்தில் வன்னிப் பெருநிலப்பகுதியில் நலிந்து வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டை, அன்றாட வாழ்க்கை முறைகளைப் புகைப் படமாக்கித் தான் புலம்பெயர்ந்த நாட்டுக்கு எடுத்துவந்து அப்படங் களின் விம்பங்கள் தரும் உணர்வலைகளைத் தொகுத்து புலம் பெயர் சூழலில் கவிதைகளாக்கித் தொகுத்துத்தரும் ஒரு முயற்சி. தமது வேரை அறுத்துக் கொண்டு உலகின் பல்வேறு நாடு களிலும் வாழும் நம்மவர்கள் தமது பழைய வாழ்வின் மலரும் நினைவுகளை மீட்டெடுக்க இத்தொகுப்பு உதவும்.
49 திறக்கப்படாத தீப்பெட்டிகள். மு.இ.அ.ஜப்பார். கல்முனை:35, சென்றல்ரோட், மருதமுனை 2, 1வது பதிப்பு, 1986 (யாழ்ப்பாணம்: பூரீகாந்தா அச்சகம்) (12),44 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12.5 சமீ.
இங்கு இளமையின் துடிப்புக் காணப்படுகின்றது. சமகாலத்து நிகழ் வுகள் ஜப்பாரின் மனதில் ஏற்படுத்திய சலனங்களை இத்தொகுதி பதிவு செய்துள்ளது.
-கா.சிவத்தம்பி (முன்னுரையில்)
420 தீயின் வார்ப்புகள். அம்பலவன் புவனேந்திரன். சென்னை 600017. மணிமேகலைப் பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (சென்னை: ஸ்கிரிப்ட் ஒப்செட்) 128 பக்கம். விலை: இந்திய ரூபா 26. அளவு: 18.5x12.5 சமீ.
ஜேர்மனியிலிருந்து வெளியிட்ட தீயின் வார்ப்புகள், கவிஞன், இன் னொரு ஜனனம் ஆகிய மூன்று சிறு கவிதைத் தொகுப்புகளிலி ருந்து தேர்ந்தெடுத்த 63 கவிதைகள் இதில் அடங்கியுள்ளன.
421 துப்பாக்கியில் துளிர்விடும் தேசம். தி.திலீபன். (நோர்வே நக்கீரனார்). நோர்வே: துருவமகள் பிரசுரம், Ammerudhelinga 72,
128 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
Lei 653, 0959 Oslo, 1வது பதிப்பு, 1997. (சென்னை 600040: தொல் காப்பியனார் அச்சகம், 8 நீலா மேற்கு வீதி) 104 பக்கம், சித்திரங்கள். விலை: இந்திய ரூபா 20. அளவு: 175x 12 gß. ISBN 82-91866-01-05
ஈழமக்களின் அவலங்களை, அவைக்குக் கொண்டுவந்துள்ளேன். சம்பவங்கள் சிலவற்றையும் சமர்ப்பித்துள்ளேன். எந்தவொரு விடுதலை இயக்கத்தையோ, தனிமனிதனையோ கண்டிப்பதோ எழுத் துக்களைத் தண்டிப்பதோ எனது நோக்கமல்ல. இது ஈழத்துக்குயிலின் துருவக்குரல்.
-நூலாசிரியர் (என்னுரையில்)
422 தூரத்து விடியல். விக்னா பாக்கியநாதன். சென்னை 600017: மணிமேகலைப்பிரசுரம், 7 தணிகாசலம்சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை: ஸ்கிரிப்ட் ஒப்செட்) 96 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18.5X12.5 சமீ.
மூன்று பகுதிகளாக அமைந்த இக் கவிதைத்தொகுதியில் முதற் பகுதி மொழிப்பற்று, நாட்டுப்பற்று, தத்துவம், பெண்ணுரிமை ஆகிய அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டமைந்த எழுச்சிக் கவிதை கள். இரண்டாம் பகுதி, குறளின் நிழல்கள் என்ற தலைப்பில் திருக் குறளின் சாயலில் அமைந்த 133 ஈரடிக் குறட்பாக்கள். இவை புலம் பெயர் வாழ்வின் கோலங்களை சித்திரிப்பவை. மூன்றாவது பகுதி, ஜேர்மனி)ணிக்குறள்கள் என்ற தலைப்பில், ஜேர்மனியில் வாழும் எம் மவரின் வாழ்வு முறைமைகள், சிக்கல்கள், மொழிப்பிரச்சினை, அந்நி யச் சூழலில் அவதியுறும் நிலைமை மற்றும் தாயகப்பண்பாடுகள் புலம்பெயர் வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதால் ஏற்படும் மோதல்கள் என்பன நகைச்சுவை உணர்வுடன் 70 குறட்பாக்களில் சித்திரிக்கப் பட்டுள்ளன. மாதிரிக்குச் சில:
"அதிபர் ஆசிரியர் மெக்கானிக்கர் முதலாளிகளே நீவிர கொதிக்காதீர் கோப்பை கழுவும் வேளை."
"பெறுமவற்றுள் யாமறிந்த தொன்று அறிவறிந்த மக்களைச் சோஷியலில் இருக்கும் போது பெறல்”
423 தேடல்: கவிதைத் தொகுப்பு. ரமேஷ் வவுனியன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஒப்செட்) 76 பக்கம். விலை: இந்திய ரூபா 16. அளவு: 18.5x12.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 129

Page 79
8948(1) தமிழ்க் கவிதைகள்
1989 முதல் 1995ம் ஆண்டுக்காலப்பகுதியில் ஜேர்மனியிலிருந்து வெளிவந்த இளைஞன், பயணம், ஆகிய இதழ்களிலும் ஈழநாடு (பிரான்ஸ்), உதயன்(கனடா) போன்ற பத்திரிகைகளிலும் வெளி வந்த உயிரோட்டம் மிக்க கவிதைகளின் தொகுப்பு. ஈழமண் ணின் இன்னல்களால் பதினேழு வயதில் புலம்பெயர்ந்து தனிமைச் சிறையில் சிக்கி உயிரறுந்து போன ஒரு இளைஞனின் உணர் வலைகளாக எழும் கவிதைகள்.
424 நதிக்கரை மூங்கில். சி.சிவசேகரம். பெங்களுர் 38: காவ்யா, 8, சாஸ்திரிநகர், 1வது பதிப்பு, 1983. (தமிழ் நாடு: வண்ணம் அச்சகம், வாணியம்பாடி) 70 பக்கம். விலை: இந்திய ரூபா 6. அளவு: 18x12 சமீ.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட 29 கவிதை களின் தொகுப்பு. ஆசிரியரின் முதலாவது கவிதைத்தொகுதி.
425 நமக்கென்றொரு புல்வெளி, வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 14:
க்ரியா, 1வது பதிப்பு, மார்ச் 1987 (சென்னை 14: பகவதிஅச்சகம்) 104 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 18x12 சமீ.
தற்கால ஈழத்துக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற் றிருக்கும் ஆசிரியரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
426 நல்லை அமிழ்தன் கவிதைகள். நல்லை அமிழ்தன். யாழ்ப் பாணம்; வித்தியோதயம், புதிய செம்மணி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1981. (நல்லூர்: நாவலன் பதிப்பகம்) 58 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 18x12 சமீ.
புரட்சிக் கருத்துக்கள் பொதிந்த புதுக்கவிதைகளின் தொகுப்பு.
427 நாங்கள் மனிதர். இ.முருகையன். சென்னை 02: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து, சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 1992 (சென்னை: சூர்யா அச்சகம்) 152 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 175x12.5 சமீ.
இக்கவிதைத் தொகுதியில் ஏறத்தாழ 30 ஆண்டுக்காலத்துக்கு மேலாக முருகையன் இயற்றிய தனிப்பாட்டுக்கள் உள்ளன. இவை
130 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
தனிப்பாட்டுக்களேயாயினும் ஒரே படைப்பாளியின் ஆக்கங்கள் என்ற முறையில் உள்ளார்ந்த தொடர்புகளையுடையன. ஆனால் பல்வகைப் பண்பு படைத்தவையாயும் உள்ளன. இக்கவிதைகள் எல்லாம் மனித் குல மேம்பாட்டை நோக்கிய உள்ளுந்தல்களாகவும், தேடுதலாகவும், விசாரணையாகவும், அங்கலாயப்ப்புகளாகவும் தேற்றமாகவும், தெளிகையாகவும், உறுதியாகவும் இடையறாத பரிசீலனைகளின் ஆவணங்களாகவும் அமைகின்றன.
428 நாளைய நாயகி. சூரியன். யாழ்ப்பாணம்: நதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 24 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18x12 சமீ.
1983 ஜூலை கலவரத்தின் தாக்கத்தால் எழுந்த தேசிய அலையில் பெண்கள் ஈர்க்கப்பட்டபோது எழுதப்பட்ட கவிதைத்தொகுதி.
429 நிகழ்வுகளும் உணர்வுகளும்; இருவர் கவிதைகள். ரமேஷ், உதயன். ஊர்காவற்றுறை: காவலூர் இலக்கிய வட்டம், கரம் பொன், 1வது பதிப்பு, தை 1985. (யாழ்ப்பாணம்: வானதி அச்சகம், 30/1, கே.கே.எஸ். வீதி) (6),48 பக்கம். விலை: ரூபா 7. அளவு: 18.5x12 சமீ.
எமது சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை, சொல்லுக்கும் செயலுக் கும் இடையேயான மனிதமுகங்களை பல்வேறுபட்ட மனித உணர்வு களை, சமகாலப்பிரச்சினைகளை களமாகக் கொண்ட கவிதைத்
தொகுப்பு.
430 நித்தியானந்தம். பரமலிங்கம் நித்தியானந்தன் நினைவு மலர். 1வது பதிப்பு, ஜூலை 1987 (யாழ்ப்பாணம்: ரீலங்கா அச்சகம்) 80 பக்கம். விலை: இலவசம். அளவு: 21X14 சமீ.
ஈழத்துக் கவிஞர் ஐவரது எழுபத்தியேழு கவிதைகளின் தொகுப்பு. கவிஞர் சத்தியசீலன், வ.இராசையா, யாழ்.ஜெயம், வளவை வளவன், த.துரைசிங்கம் ஆகியோரது கவிதைகள் இதில் அடங்கியுள்ளன.
43 நித்யகல்யாணி, முல்லை அமுதன். யாழ்ப்பாணம்: இ.மகேந்திரன். 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: கவின் அச்சகம், 559,காங்கேசன் துறை வீதி).
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 131

Page 80
8948(1) தமிழ்க் கவிதைகள்
(8),40 பக்கம், விலை: ரூபா 5 அளவு: 18x12 சமீ.
சமூகமலர்கள், துயரகீதங்கள், புதுவகைவிளக்கம் என்னும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இப் புதுக்கவிதைத் தொகுதியி லுள்ள சில கவிதைகள் அவ்வப்போது சிரித்திரன் மாத இதழில் வெளிவந்துள்ளன.
432 நிறமற்றுப் போன கனவுகள். இளவாலை விஜயேந்திரன். சென்னை 2: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன், 1வது பதிப்பு, மார்ச் 1999. (சென்னை 05: மணி ஆப்செட் பிரின்டர்ஸ்) vi,103 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு 21.5X14 சமீ.
ஈழத்தமிழரின் புலப்பெயர்வு தமிழிலக்கியத்தின் கவிதை வரலாற் றில் சில பரிமாணங்களை ஏற்படுத்தியது. தமிழ்மக்களின் தற்கால விதியாவது, புலப்பெயர்வு விழுமியங்களின் வேறுபாடான பெறு மானங்கள் என்பவற்றால் தீர்மானிக்கப்படுவனவாயின. கவிஞனின் நெஞ்சில் இவை ஆழமாக உறுத்தியபோது புலப்பெயர்வு இலக் கியத்தில் தமிழ்க் கவிதைக்கு வளஞ் சேர்ப்பனவாய் கவிதைகள் வெடித்துக் கிளம்பின. அவ்வகையில் நோர்வேயிலிருந்து வெடித்த ஒரு சிறுபொறி இது. இளவாலை விஜயேந்திரனின் 1987-1992 வரையுள்ள காலப்பகுதிக் கவிதைகள்.
433 g56)6H6Ogb366s. 35.d6 UT6)6. New York: K. Sivapalan, 3R, 5221, Skillman Avenue, Woodside, loug Lig5 L, goi6) if 1987. (Madras 5. Jeevan Press, Triplicane) 84 பக்கம். விலை: இந்திய ரூபா 3. அளவு: 18x12.5 சமீ.
புதுக்கவிதை ஒரு புதிய இலக்கியம். அதைப் புதுக்கவிதை என்று அழைப்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத் தன்மையால் என் நெஞ்சில் எழுந்த எழுச்சியே இந்த நினைதை கள் என்ற சொற்பிரயோகம்.
-ஆசிரியர் (முன்னுரையில்)
434 . நினைவழியா நாட்கள்: கவிதைத்தொகுதி புதுவை இரத்தின துரை. பிரான்ஸ்: தமிழ்த்தாய் வெளியீடு, 2வது பதிப்பு, ஆவணி 1993, (யாழ்ப்பாணம்; மாறன் பதிப்பகம், 664 மருத்துவமனை வீதி) 174 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
132 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
விடுதலைப் போராட்டச் சூழலில் எழுந்த கவிதைகளின் தொகுதி. மனித அவலங்களையும், ஏக்கங்களையும் படிமக்காட்சிகளாகச் சித்திரித்து, இனவாதக் கொடூரத்தை அழுத்தமாக உணர்த்திக்காட்டு வதுடன், ஒடுக்குமுறைக்கு எதிரான ஆவேசம் மிக்க கொதிப் புணர்வையும் இந்நூலிலுள்ள கவிதைகள் தட்டி எழுப்புகின்றன.
435 நீ இப்பொழுது இறங்கும் ஆறு சேரன் கவிதைகள் ஒரு நூறு சேரன். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2000. (சென்னை: பிரிண்ட் ஸ்பெஷலிட்டிஸ்) 206 பக்கம். விலை: இந்திய ரூபா 90. 21X13.5 சமீ.
ஈழத்து முன்னணிக் கவிஞர்களுள் ஒருவரான சேரனின் கவிதைகள் போர்ச்சூழலின் கொடுமைகள், புலம் பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை, இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கிறது.
436 நீர் வளையங்கள். சண்முகம் சிவலிங்கம். (புனைபெயர்: சசி). சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, நவம்பர் 1988. (சென்னை 4: மிதிலா அச்சகம், 5, கச்சேரி சந்து, மைலாப்பூர்) XXV,142 பக்கம். விலை: இந்திய ரூபா 16. அளவு: 18x12.5 சமீ.
கிழக்கிலங்கையில், பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சசியின் இக்கவிதைத் தொகுப்பு, இலங்கைத் தமிழ்த்தேசிய இனப் போராட்டத்துடன் சம்பந்தப்படாததும் 1983க்கு முன்னையதுமான கவிதைகளை உள்ளடக்கியுள்ளது.
437 நெற்றிமண். சு.வில்வரத்தினம். திருக்கோணமலை கூடல்பதிப்பகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு13: ராஜ் பிரவீண் பிரிண்டர்ஸ்) 78 பக்கம். விலை: ரூபா 100. அளவு 19x13 சமீ.
எமது மண்ணின் யதார்த்தச் சித்திரிப்பு என்பதை விட மண்ணின் ஆத்மார்த்த குரலாய் ஒலிக்கின்ற கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
438 பதம். பாலமுனை பாறுாக். அக்கரைப்பற்று: அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ், உடையார் வீதி, அக்கரைப்பற்று, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1987. (அக்கரைப்பற்று: பாத்திமா மின் அச்சகம்) 80 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18.5x12.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 133

Page 81
8948(1) தமிழ்க் கவிதைகள்:
33 தலைப்புக்களில் அமைந்துள்ள ஆசிரியரின் புதுக்கவிதைகளின் தொகுப்பு.
439 பதினொரு ஈழத்துக் கவிஞர்கள். எம்.ஏ.நு.மான், அ.யேசு ராசா. சென்னை 600014: கிரியா, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1984. (சென்னை 600017: அன்னம் அச்சகம்) 216 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12 சமீ.
மஹாகவி, முருகையன், நீலாவணன், மு.பொன்னம்பலம், நு.மான், சண்முகம் சிவலிங்கம், தா.இராமலிங்கம், சி.சிவசேகரம், அ.யேசு ராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் ஆகிய 11 கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளும் கவிஞர்களது வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
440 பணியில் மொழி எழுதி. சோலைக்கிளி. கோவை 641015: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோயில் வீதி, உப்பிலி பாளையம். 1வது பதிப்பு, ஜனவரி 1996. (சென்னை 600005: மனோ ஆப்செட்) XV,107 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 17.5x12 சமீ.
போர். அது எந்தவகையான போராக இருந்தாலும்சரி, அதன் பக் கச் சார்பாளர்கள் யாராக இருந்தாலும் சரி- அதற்கு எதிரான பிரகடனம் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள்.
44 பனை நூறு. ச.சு.பொன்னம்பலம். யாழ்ப்பாணம்: 81, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, 1981 (நல்லூர்: ரீ நிரஞ்சனா அச்சகம்)
V,41 பக்கம். விலை: ரூபா 6.10. அளவு: 18x12.5 சமீ.
பனைநூறு என்ற இந்த நூல் 100 பாக்களைக் கொண்டு ஆக்கப் பட்டது. அநேகமானவை இசைப்பாக்களாகும். தமிழ் இலக்கண மரபு தழுவி இயற்றப்பெற்ற இந்நூல் இலக்கிய நயங்கொண்டு கற் போருக்கு நல்விருந்தாக அமைகின்றது.
442 பாரதி கவிதைச் சமர். கமலினி செல்வராஜன் (தொகுப்பு). சென்னை 02: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன், 6 தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, ஜூன் 2000. (சென்னை 600005; மணி ஆப்செட் பிரின்டர்ஸ்)
134 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
60 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 21X13 சமீ
79.1958ம் திகதித் தினகரனில் சில்லையூர் செல்வராசன் தான்தோன் றிக் கவிராயர் என்ற புனைபெயரில் பாரதி பற்றி எழுதிய அங்கதக் கவிதை சமகால ஈழத்தமிழ்க் கவிஞரிடையே சுவைமிகு கவிதைச் சமரைத் தொடக்கி வைத்தது. முருகையனின் எதிர்க்கவிதை அடுத்த வாரம் பிரசுரமாயிற்று. அதையொட்டி மோட்டுக்கவிராயர், மஹாகவி, நீலாவணன், இராஜபாரதி, மு.பொன்னம்பலம், பாவேந்தர் பட்டிக் காடனார், பரமஹம்சதாசன், பரணன் என்று ஒரு கவிஞர் குழாமே கவிதைச்சமர் நிகழ்த்தியது. இவை அனைத்தும் தேடித்தொகுக்கப் பெற்று இங்கு நூலுருவாகியுள்ளது.
443 பாரதி பிள்ளைத்தமிழ். க.த.ஞானப்பிரகாசம், கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1983. (நெல்லியடி (கரவெட்டி): கலாலயா) xxiv,113 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18x12.5 சமீ.
மஹாகவி பாரதியாரைப் பாட்டுடைத்தலைவராக வைத்து ஆக்கப் பெற்றதும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினால் சிறந்த சிறு பிரபந்தங் களுக்கான போட்டியில் முதற்பரிசு பெற்றதுமான பிரபந்தம்.
444 பாரதியின் சக்திப்பாடல்கள். சொக்கன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கல்வியங்காடு, திருவாட்டி உமையவல்லி சேதுராசா நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம், ஆசீர்வாதம் அச்சகம்) 44 பக்கம், தகடு விலை: இலவசம். அளவு: 18.5x12.5 சமீ.
க.சொக்கலிங்கம்(சொக்கன்) அவர்களின் சக்தி வழிபாடு பற்றிய முன் னுரையுடன் கூடிய பாரதியின் சக்திப் பாடல்களின் தொகுப்பு.
445 பாலங்கள்: கவிதைத்தொகுதி. பீ.எம்.புன்னியாமீன்.(தொகுப் பாசிரியர்). உடத்தலவின்னை (இலங்கை), சிந்தனை வட்டம்,14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜூலை 1996. (சென்னை 14; சித்ரா பிரின்டோகிராப்) 70 பக்கம். விலை: ரூபா 18. அளவு: 17.5x12 சமீ.
ஈழத்து இளம் கவிஞர்கள் ஐவரின் கவிதைத்தொகுதி. பஹரிமா ஜஹான், மரினா இல்யாஸ், உஸ்மான் மரிக்கார், ஜெயந்தன்,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 135

Page 82
8948(1) தமிழ்க் கவிதைகள்
சுமைரா அன்வர் ஆகிய ஐவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
446 பாலையில் வசந்தம். ஜின்னாஹற் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 1989. (சென்னை: மில்லத் பிரிண்டர்ஸ்)
98 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18.5X12.5 சமீ
அன்னல் நபியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும் நம் முன்னோர் வாழ்வில் நடந்தனவும் மரபுக் கவிதைகளாக எழுதப்பட்டுள்ளன.
447
தலைமுறை: கவிதைகள். இராகலை பன்னிர்செல்வம். கொழும்பு 11 தேசிய கலை இலக்கியப் பேரவை, எஸ்.44 3வது மாடி, மத்தியசந்தைக் கட்டிடத் தொகுதி, 1வது பதிப்பு, மார்ச் 1999, (கொழும்பு யு.கே. அச்சகம்) 44 பக்கம். விலை: ரூபா 50. அளவு 21.5x15 சமீ.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 25வது ஆண்டு நிறைவை யொட்டிய நூல்வெளியீட்டு நிரலில் 1999ம் ஆண்டிற்கான முதலா வது நூல். முழு மானிட விடுதலைப்போக்குடன் மலையக மக் களின் விடிவினை இணைத்துக் கவிதையாக்கம் இடம்பெற்றுள்ளது.
448 புதியதல்ல புதுமையுமல்ல. எழிலன். மலேஷியா; உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கோலாலம்பூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (Madras 24: llampirai Book Makers, 375-8, Arcot Road) 232 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 18x12.5 சமீ.
கவிதைகள், மெல்லிசை மெட்டுப்பாடல்கள், உரைவீச்சுக்கள், என் னும் மூன்று வடிவங்களிலும் சமுதாய விழிப்புணர்வூட்டும் கருத்துக் களை வெளிப்படுத்தும் தொகுப்பு. சமூகத்தில் புரையோடிப் போயுள்ள குறைகளை அடையாளம் காணும் முயற்சி.
449 புது உலகம்: பசுபதி கவிதைகள். க.பசுபதி. (புனைபெயர்: யாழ்ப்பாணக் கவிராயர்) சென்னை 600002: சவுத் விஷன், 2வது பதிப்பு, ஜூன் 2000. 1வது பதிப்பு, 1965. (சென்னை 5 மணி ஆப் செட்) 103 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 20.5X13.5 சமீ.
கவிஞர் க.பசுபதி (1925-1965) அவர்கள் எழுதிய கவிதைகளின்
136 நூல்தேட்டம் -தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
முதற்தொகுதி. 1965இல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வர்க்கபேதமற்ற-ஏற்றத்தாழ்வற்ற ஒரு சுபீட்சமான சமூக அமைப்பை-ஒரு புதிய உலகைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற இலட்சியவேட்கையினால் உந்தப்பட்டு வடிக் கப்பட்ட கவிதைகள். தேசிய கலை இலக்கியப் பேரவையின் 25வது வருட நினைவு வெளியீட்டு வரிசையில் 11வது நூலாக வெளிவந்துள்ளது.
450 புதிய அடிமைகள். கணபதி கணேசன், முல்லை அமுதன். திரு நெல்வேலி, மேகம், 82 சிவன் கோவில் தெற்கு வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1983. (யாழ்ப்பாணம்: கெளரி அச்சகம், 216 மானிப்பாய் வீதி, ஒட்டுமடம்)
80 பக்கம். விலை: ரூபா 12. அளவு 15X10.5 சமீ.
1970களின் பிற்பகுதியில் எழுத்துத் துறையில் புகுந்த கணபதி கணேசன், முல்லை அமுதன் ஆகிய இரு கவிஞர்களின் 50 கவிதை களைக் கொண்ட தொகுதி. பாலஸ்தீனப் பிரச்சினை போன்ற சர்வ தேச அரசியல் பிரச்சினை முதல் பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் வரை கருப்பொருளாக இங்கே கையாளப்பட்டுள்ளன.
451 புதுப்புனல். அன்பு முகையதின் கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, 1988. (சென்னை 600001 மில்லத் பிரின்டர்ஸ்). 88 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12 சமீ.
மனித உணர்வுகளையும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் அன்பு முகையதின் கவிதையாக வடித்திருக்கிறார். இருபத்தியெட்டு கவிதைகளின் தொகுப்பு.
452 புலராத பொழுதுகள். அல்அஸ"மத், கொழும்பு 12: கமல் பிரதர்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், 75/45 அப்துல் ஹமீது வீதி. 1வது பதிப்பு, 1982. (கொழும்பு12. வீனஸ் அச்சகம், 107/18 பண்டாரநாயக்கா மாவத்தை) (8),66 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18.5x12.5 சமீ
வெண்பாவின் பல்வேறு விகற்பங்களையும் கையாளும் கவிஞர் மலையகத்தின் வரலாற்றிலே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைத் தமது கவிதைப்பொருளாக எடுத்து ஆக்கியுள்ள உருவகக் குறுங்காவியம்.
453 புலவர்மணி கவிதைகள்,ஏஇம்ய்தபிேப்பிள்ளை மட்டக்களப்பு:
137

Page 83
8948(1) தமிழ்க் கவிதைகள்
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றம், 1வது பதிப்பு, 1980. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்) (10),107 பக்கம். விலை: ரூபா 16. அளவு 21X14 சமீ.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் பல்வேறு கவிதை கள். நாடும் மக்களும், குருவணக்கம், தமிழ்மொழியும் தமிழ்ப் புலவரும், சான்றோர், கடவுள்வணக்கம், தனிப்பாக்கள், சிந்தனை ஆகிய ஏழு தலைப்புக்களில் அவை தொகுக்கப்பெற்றுள்ளன.
454 பேரண் கவிதைகள். நெல்லை க.பேரன். நெல்லியடி: ஷர்மிளா பதிப்பகம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: பார்வதி அச்சகம்) 26 பக்கம், தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 20x14சமீ.
இருபத்தியெட்டு பலவினக் கவிதைகளின் தொகுப்பு.
455 மக்களே எழுக. சூரியன். சென்னை 94: சிவா பதிப்பகம்,18 சங்காபுரம் 3வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, நவம்பர் 1985. (சென்னை: அச்சக விபரம் அறியமுடியவில்லை) 22 பக்கம். விலை: இந்திய ரூபா 6. அளவு: 17.5x12.5 சமீ.
ஈழத்து அரசியல் கவிதைகள் எட்டின் தொகுப்பு.
456 மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றானிரு விழா நினைவு. க.சி.குலரத்தினம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: க. கனகராசா, மில்க்வைற் தொழிலகம், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப் பாணம்: சாந்தி அச்சகம், காங்கேசன்துறை வீதி) 24 பக்கம். விலை: இலவசம். அளவு: 18.5X13 சமீ.
மகாகவி பாரதியாரின் பாடல்களில் சிலவற்றின் தொகுப்பு. அவரின் நூற்றாண்டுவிழா நினைவையொட்டிப் பிரசுரிக்கப்பட்டு விநியோகிக் கப்பட்டது.
மகாகவி மேலும் பார்க்க மவறாகவி
457 மரண நனவுகள். கல்வயல் வே.குமாரசாமி. யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஸ்வர் ணம் பப்ளிசிடிஸ், 125ஏ, ஸ்டேஷன் விதி)
138 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
40 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 18X12 சமீ.
சமகால இனவிடுதலைப் போராட்டத்தையும் சமூகப்பிரச்சினையையும் மையமாக வைத்து இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.
458 மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அயேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்). யாழ்ப்பாணம்: தமிழியல், 36, கலட்டி அம்மன் வீதி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப் பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) XV,170 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21X14 சமீ.
மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அயேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்) கோவை 641015: விடியல் பதிப்பகம், உப்பிலிபாளையம், 2வது பதிப்பு, டிசம் பர் 1996. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்) 172 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு; 21X14 சமீ.
31கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு. சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு. மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த் துடிப்புடன் வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
459 - மரணம். செழியன். சென்னை 94: சிவா பதிப்பகம், பதிப்பு விபரம் குறிப்பிடப்படவில்லை. (சென்னை 18: சங்கரபுரம் 3வது தெரு, சூளைமேடு). (40) பக்கம். விலை: இந்திய ரூபா 4. அளவு: 16x10.5 சமீ.
தினமும் துப்பாக்கி வேட்டுக்களும் உயிரற்ற உடல்களும் எரிகின்ற மணமும் கொண்ட தேசத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அழகிய அந்திக்காட்சிகளை, பெளர்ணமி நிலாவைப்பற்றி எண்ணி எங்களால் எழுத முடியவில்லை. சிறையிடப்பட்ட எங்கள் இரவுகளை, அதிகாலைப் பொழுதுகளை, முட்களை ஏந்தும் பூக்களைப் பற்றியே
எழுதமுடிகிறது.
-செழியன் (முன்னுரையில்)
460 மல்லிகைக் கவிதைகள். டொமினிக் ஜீவா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மல்லிகைப் பந்தல், 234B, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: பூரீகாந்தா அச்சகம்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 139

Page 84
8948(1) தமிழ்க் கவிதைகள்
72 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12 சமீ.
மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்த 51 ஈழத்துக் கவிஞர்களின் நவீன கவிதைகளின் தொகுப்பு.
46 மழைநாட்கள் வரும். எம்.ஏ.நு.மான். சிவகங்கை: அன்னம், 1வது பதிப்பு, மே, 1983. (சிவகங்கை 623560. அகரம்) 80 பக்கம். விலை: இந்திய ரூபா 5 அளவு: 18x12 சமீ.
1967-1981 காலப்பகுதியில் அவ்வப்போது எழுதப்பட்ட கவிதை களுள் சமூக, அரசியல் சார்பான சில கவிதைகளின் தொகுப் பாக இது அமைகின்றது.
462 மறையாத மறுபாதி; புகலிடத்துப் பெண்கள் கவிதைத் Gorgi - LÎJT66mö: Exil, 27, Rue Jean Moulin, 924000, Courbe voie, 1வது பதிப்பு, பெப்ரவரி 1993. (அச்சகவிபரம் அறியமுடிய வில்லை) 84 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5X14 சமீ.
புகலிடக் கருத்து இலக்கியம் என்ற அமைப்பின் முதலாவது வெளியீடு. இத்தொகுப்பில் ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் புகலிடத் தமிழ்ச்சஞ்சிகைகளான நமது குரல், கண், சக்தி, தூண்டில், பெண்கள் சந்திப்பு மலர், புதுமை, மனிதம், ஓசை ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பெற்ற பெண் கவிஞர்களின் 48 கவிதைகள் உள்ளடக்கப்பெற்றுள்ளன. பெரும்பான்மைக் கவிதைகள் பெண் விடுதலை சார்பான அடிமைத் தனத்தை இனம் காணல், ஆணாதிக்க எதிர்ப்பு, சீதனம், அடிமைத் துவக் கலாச்சார எதிர்ப்பு, புதிய சூழலில் பழமையின் பலவந்தம் ஆகிய அம்சங்களை மூலக்கருவாகக் கொண்டு அமைந்துள்ளன வாயினும் சில கவிதைகள் புகலிடத்தின் பொதுவான முரண்பாடு களையும் ஈழத்தின் இன்னல்களையும் இனம்காட்டி நிற்கின்றன.
463 மவறாகவியின் கவிதைகள். எம்.ஏ.நு.மான்(தொகுப்பாசிரியர்) சிவகங்கை: அன்னம். சிவன்கோவில் தெற்கு வீதி, 1வது பதிப்பு, ஜூன் 1984 (சிவகங்கை அகரம்) 136 பக்கம், விலை: இந்திய ரூபா 12. அளவு: 20.5x14 சமீ.
1943க்கும் 71க்கும் இடைப்பட்ட காலத்தில் மஹாகவி(து.உருத்திர
140 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
மூர்த்தி) யினால் இயற்றப்பெற்ற கவிதைகளிலிருந்து தெரிந்தெடுக்கப் பட்ட 50 கவிதைகளின் தொகுப்பு. மஹாகவியின் சுமார் 30 ஆண்டுக் கால வளர்ச்சிப்போக்குகளை இனம்காட்டக்கூடியதாக அமையும் தொகுப்பு நூல். மஹாகவி பற்றிய, எம்.ஏ.நு.மானின் அறிமுகக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
மவுறாகவி மேலும் பார்க்க மகாகவி
464 மாதுளம் முத்துக்கள். அன்பு முகைதீன். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1984. (கொழும்பு 9. எஸ்.எச்.நிலாப்தீன், டெவலோ பிரின்ட், 69 அல்பியன் வீதி) 80 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12.5 சமீ.
1970க்குப் பின்பு ஆசிரியரால் எழுதப்பட்ட பல்வகைக் கவிதைகளின் தொகுப்பு.
465 மீண்டும் வசிப்பதற்காக. மேமன்கவி. கொழும்பு 13: மல்லிகைப் பந்தல், 201-111 ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (Colombo 13: Laxsu Graphic Ltd., 98, Vivekananda Hill) 144 பக்கம். விலை: ரூபா 100. அளவு; 20x14சமீ. ISBN 955-8250-02-3
பல்வேறு இலக்கியச் சஞ்சிகைகளில் பிரசுரமான புதுக்கவிதைகளின் தொகுப்பு.
466 முகம்கொள்.கி.பி.அரவிந்தன், சென்னை 21: கீதாஞ்சலி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1992 (சென்னை 5: மனோ அச்சகம்) 96 பக்கம், ஒவியங்கள். விலை: இந்தியரூபா 20. அளவு: 18x12.5சமீ.
இக்கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத் தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக் கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ் வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப் பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
467 முகமறியா வீரர்களுக்காக. மட்டுவில் ஞானகுமாரன். ஜேர்மனி: GbT60Id LigßlüL15lb, Seminar Str 2, 49074 Osnabruick, 16llgh LifüL,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 14

Page 85
8948(1) தமிழ்க் கவிதைகள்
செப்டெம்பர் 2000 (சென்னை: மணிமேகலைப் பிரசுரம்) 112 பக்கம். விலை: இந்திய ரூபா 23. அளவு: 18.5x12.5 சமீ.
ஈழத்தமிழர் படும் இன்னல்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் சாடிநிற்கும் 33 கவிதைகள். கவிஞர் காசி ஆனந் தன், சுப.வீரபாண்டியன், முகத்தார் ஜேசுரட்ணம், புஷ்பவனம் குப்பு சாமி ஆகியோரது வாழ்த்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
468 முத்து நகை. ஜின்னாஹற் ஷரிப்புத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 1989. (சென்னை: மில்லத்பிரின்டர்ஸ்) 144 பக்கம். வின்ல: ரூபா 35. அளவு: 18x12.5 சமீ.
இயற்கை அழகினை, வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்பு களை, நாட்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை, பாட்டாளிகளின் துன்பங்களை ஆசிரியர் மரபுக்கவிதைகளாக எழுதியுள்ளார்.
469 யமன். சேரன். அளவெட்டி படைப்பாளிகள் வட்டம், நீழல், 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) (4),28 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 18.5X10.5 சமீ.
இக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத் தும் ஜூலை 1983க்குப் பிறகு எழுதப்பட்டவை. ஈழத்தமிழரின் பல் வேறு இன்னல்களைச் சொல்லிச் செல்பவை.
47Ο வடிவங்கள். நீர் கொழும்பூர் ந.தருமலிங்கன். நீர்கொழும்பு; ந.தருமலிங்கன், 195 கடற்கரை வீதி. 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 13 லட்சுமி அச்சகம், 195 ஆட்டுப்பட்டித் தெரு) 82 பக்கம். விலை: ரூபா 55. அளவு: 18x12 சமீ.
ஆங்கிலக் கவிஞன் யீட்ஸ் சொல்வது போல கவிதை சொற் களில் இல்லை. சொற்களுக்கு இடையில் இருக்கின்றது (Poetry is not in the words. It is in between the words- W. B.Yeates) Signi றின் உண்மை இவரது பாடல்களில் பரிணமிப்பதைக் காணக்கூடிய தாக இருக்கின்றது
-செ.குணரத்தினம் (வாழ்த்துரையில்)
471 வருக தமிழர் பொற்காலம். க.ந.வேலன். சென்னை 17. மணி மேகலைப் பிரசுரம், த.பெ.எண்.1447, தணிகாசலம் சாலை, தி.நகர்,
142 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள்
1வது பதிப்பு, 2000. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்) 108 பக்கம். விலை: இந்திய ரூபா 23. அளவு: 18.5x12.5 சமீ.
வித்துவான் க.ந.வேலன் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்த 33 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளன.
472 வாழ்வின் எளிய பாடல்கள். மஜீத். கோயமுத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (சென்னை 05: மணி ஆப்செட்)
56 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 175x12 சமீ.
தன் தேசத்தின் நதிகள் கல்லானதை, பறவைகள் அழுததை, காடுகள் சிறகசைத்துப் பறந்ததை எண்ணிக் கவிஞர் கவிதை படைத்துள்ளார்.
473 வானதியின் கவிதைகள், பத்மசோதி சண்முகநாதபிள்ளை (கப்டன் வானதி). ஜெர்மனி, தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட் டுப் பிரிவு, 1வது பதிப்பு. டிசம்பர் 1991. (அச்சக விபரம் குறிப்பிடப் படவில்லை) 55 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
ஆனையிரவு மோதலில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கப்டன் வானதி, போராட்டச் சூழலில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.
474 விடியத்துடிக்கும் ராத்திரிகள். முல்லை அமுதன். கல்வியங் காடு; ஷோபா க்ரியேஷன்ஸ், G.B.S.வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1984. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310 மணிக்கூண்டுக்கோபுர வீதி) 20 பக்கம். விலை: ரூபா 5.50. அளவு: 18x12.5 சமீ.
பதினாறு கவிதைகளின் தொகுப்பு.
475 விடியலின் காணல். சார்ள்ஸ். யாழ்ப்பாணம்: மாணவர் இளைஞர் பொது மன்றம், 1வது பதிப்பு. 1989. (யாழ்ப்பாணம்: கே. ரி. அச் 835b). 40 பக்கம், சித்திரங்கள். விலை: ரூபா 12. அளவு: 18x13 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 14.

Page 86
894.8(1) தமிழ்க் கவிதைகள்
இலங்கையில் நிகழ்ந்த சமகால அரசியல் இனப்படுகொலைகளின் சோக நிகழ்வுகளின் வெளிப்பாட்டைக் கவிதைகளாக்கித் தரும் ஒரு நூல்.
476 விடிவை நோக்கி. வண்ணைதெய்வம். பிரான்ஸ்: ரஜனி பதிப் பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992, (அச்சகவிபரம் அறியமுடிய வில்லை)
35 பக்கம். விலை: பிராங்க் 20. அளவு: 18x12.5 சமீ.
புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் தன் ஏக்கங்களை, உணர்வு களைக் கவிதையாக்கியுள்ளார்.
477 விடுதலையும் புதிய எல்லைகளும். மு.பொன்னம்பலம். புங் குடுதீவு: சுயம் வெளியீடு, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) (8),84 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18X12 சமீ.
ஒவ்வொரு மனிதனது விடுதலையும் அவனவன் அறிவுக்கேற்ப நடைபெறுகின்றது. ஒரு சமுதாயத்துக்கும் இனத்துக்கும் அப்படியே. அதனது அளவுக்கேற்ப அதன் விடுதலை குறுகவும் விரியவும் செய்கின்றது. பல்வேறு சிந்தனைத்தளத்துக்குரிய விடுதலை முயற் சிகள் இத்தொகுதியில் காட்டப்பட்டுள்ளன. அவையெல்லாம் எல் லையற்று விரியும் விடுதலையின் பின்னணியிலேயே வைத்துக் காட்டப்படுகின்றன.
478 விலங்கிடப்பட்ட மானுடம். சுல்பிகா. சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ், 6-1, தாயார்சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. 54 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 17.5x12 சமீ.
இன்றைய ஈழத்துப்பெண்களின் கலாசார விழிப்புணர்வையும் சம காலப் பிரச்சினைகள் பற்றிய அவர்களது பிரக்ஞையையும் வெளிப் படுத்தும் 20 கவிதைகளின் தொகுப்பு. பெண்(1983) என்ற கவிதை தவிர்ந்த அனைத்தும் 1990-95ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்டவை.
479
விழித்தெழு விசிடும் காற்றாய் மாறிடு. அருள் தெய்வேந்திரன். சுவிட்சர்லாந்து அருள் தெய்வேந்திரன், via Martignoni6, 6900
144 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(1) தமிழ்க் கவிதைகள், 8948(2) தமிழ் நாடகங்கள்
Massagno, Swiss, 16).ığı uğ5üL4, 2000. (Qör6ob6UT 14: G. P. Printers) 112 பக்கம். விலை: இந்திய ரூபா 22. அளவு: 18x12.5 சமீ.
நாம் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் கடமை உணர்வுடனும் நாட்டுப்பற்றுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தைப் பிரதிபலிக் கும் வகையில் புனையப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் அவை புனையப்பட்டமைக்கான பின்னணி ஆசிரியரால் கூறப்பட்டுள்ளது.
480 விழுதுகள் மண்ணைத்தொடும். முல்லைஅமுதன். சென்னை 02. காந்தளகம், 834, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஜூன் 1992. (சென்னை 02: காந்தளகம்) 68 பக்கம், விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.
ஈழத்து மக்களின் சோகங்களும், காயங்களும் கருப்பொருளாயமைந்த கவிதைத் தொகுதி.
48 வெற்றுடல்கள் அல்ல அவை வெடிமருந்துப் பொதிகள். ஆசிரியர் விபரம் குறிப்பிடப்படவில்லை. யாழ்ப்பாணம்: பிரச்சார வெளியீட்டு வாரியம், அரசியற்பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை). 12 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X13 சமீ.
சுதந்திரப்பறவைகள் இதழில் வெளியான அரசியல் கவிதைகளின் தொகுப்பு.
482 வறிரோவமாவின் வறிரோக்கள். மேமன்கவி. சென்னை 600017: 10 சோமசுந்தரம் தெரு, தியாகராய நகர். 1வது பதிப்பு, 1982. (மதுரை: சாதனா ஆர்ட் பிரின்டர்ஸ், 59 கம்பர் நகர்) 112 பக்கம், விலை: இந்திய ரூபா 6. அளவு: 18x12.5 சமீ.
பதினைந்து தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட புதுக்கவிதை.
894.8(2) தமிழ் நாடகங்கள்
483
அறுவடை நாடகத் தொகுப்பு. எம். அரியநாயகம். பிரான்ஸ்: g5Lñpù 5606ù 56bTág-TJ LD6öpb, GIFT, Groupement lnter Cultural.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 145

Page 87
894.8(2) தமிழ் நாடகங்கள்
Franco-Tamou, No.1, Rue Jean Moulin, 93130 Noisyle Sec, 16).g5 ug5', 19gbu, 1998. (Q366p60I 600024; M L M Offset) XX,152 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5X12.5 SL5.
தீர்ப்பு, விளம்பரம், நாளைய அறுவடைகள் ஆகிய மூன்று நாடகங் களின் நூலுரு. புலம்பெயர்ந்தவர்கள் தாயகம் திரும்புவதைப் பகைப்புலமாகக் கொண்டு புனையப்பெற்ற நாடகமாக நாளைய அறுவடைகள் அமைகின்றது. மற்றைய இரண்டும் ஓரங்க நாடகங் களாகும்.
484 இது எமது படைப்பு: எட்டு நாடகங்களின் தொகுப்பு. வாசுகி ஜெயசங்கர், ஜெயந்தி தளையசிங்கம் (தொகுப்பாளர்கள்). மட்டக் களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 20 டயஸ் வீதி. 1வது பதிப்பு, வைகாசி 2001. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத் தோலிக்க அச்சகம்) vi,88 பக்கம். விலை: ரூபா 75. அளவு: 22x14.5 சமீ.
1995 முதல் 2000 வரை மட்டக்களப்பு, சூரியா பெண்கள் அபி விருத்தி நிலையத்தால் மேடையேற்றப்பட்ட எட்டு வீதி நாடகங் களின் தொகுப்பு. பெண்ணைப் பாரபட்சமாக நடத்தும் எமது சமூ கக் கட்டமைப்பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் அறிவுபூர்வமாக வெளிப்படுத்தும் அரங்கியல் முயற்சி.
485 இலண்டனில் நாரதர்: குறுநாடகங்கள். M.T.செல்வராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், த.பெ.இல.1447, 4, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 1999, (சென்னை: எம். கே. என்டர்பிரைசஸ்) XVi.254 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 18x12.5 சமீ.
ஐரோப்பிய வானொலிகளிலும் மேடைகளிலும் அரங்கேறிப் புகழ் பெற்ற ஒன்பது குறுநாடகங்களின் தொகுப்பு.
486 ஏழு நாடகங்கள். தமிழ்மன்றம். யாழ்ப்பாணம்: சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (14),136 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21X14 சமீ.
146 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(2) தமிழ் நாடகங்கள்
பெண் விடுதலை, பெண்களின் சமூகவிழிப்புணர்வு, தமிழர்கள் எதிர்
நோக்கும் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் ஆகியன குறித்த ஏழு
நாடகங்களின் தொகுப்பு. இவை சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில்
1984ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கல்லூரியின் தமிழ்த்தினங்
களில் மேடையேறியவை. மழை, சரிபாதி, நம்மைப்பிடித்த பிசாசுகள்,
ஆகிய மூன்று நாடகங்களும் கலாநிதி சி.மெளனகுரு அவர்களின்
நெறியாழ்கையிலும், புழுவாய் மரமாகி, மாதொரு பாகம், தாயுமாய்
நாயுமானார், எங்கள் தவப்பயன் ஆகிய நான்கு நாடகங்களும் குழந்
தை சண்முகலிங்கம் அவர்களின் நெறியாழ்கையிலும் மேடையேற்றப் பட்டவையாகும்.
487 காத்தவராயன் நாடகம். இ.பாலசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப் பாணம்: யாழ்.மாவட்டக் கலாசாரப் பேரவை, நாட்டார் கலைக்குழு, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) XXX,72 பக்கம், தகடுகள். விலை: ரூபா 15. அளவு; 42X26 சமீ.
காத்தான்கூத்து என்று வழங்கப்பட்டு வரும் நாட்டார் இலக்கிய வடிவான காத்தவராயன் நாடகத்தின் பதிப்பும் அறிமுகமும்.
488 குருவின் சுவடுகளில். இன்பராஜன். வண.என்.எம்.சவேரி(பதிப் பாசிரியர்) கொழும்பு நாடகப் பிரதியாக்கப் பகுதி, திருமறைக் கலா மன்றம், 1வது பதிப்பு. (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). (கொழும்பு 13. கீதா பப்ளிகேஷன்ஸ்) 100 பக்கம், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5x14 Fuß. ISBN 955-9262-18-1
திருமறை நூல் நாடக வரிசையில் 29வது நூலாக வெளிவந்துள்ளது. சலமொன் மன்னரின் ஆட்சிக்காலத்தில் இருந்த தீர்க்கதரிசியான எலியாவும் அவரது சீடரான எலிசாவும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர் களே இந்நாடக நூலின் பிரதம பாத்திரங்களாவர்.
489 கெட்டிக்காரர்கள். அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை. கொழும்பு 13: ஒலி, ஒளி நேயர் மன்றம், 90/5, புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம்) Xxi,154 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 17.5X12 சமீ.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கெட்டிக்காரர்கள், ஐயாயிரம், பெறுமதி, அப்பாவுக்குச் சலரோகம், வாத்தியார் கவனம்,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 147

Page 88
8948(2) தமிழ் நாடகங்கள்
ஆடு வளர்ப்பது எப்படி, மலராத மொட்டுக்கள், கடன்படாதே கடன் கொடாதே ஆகிய 9 ஓரங்க நாடகங்களின் தொகுப்பு.
490 கோயிலும் சுனையும்; நாடகத் தொகுதி. தா.பி.சுப்பிர மணியம். திருக்கோணமலை: ஈழத்து இலக்கியச் சோலை, 21, ஒளவையார் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: உதயன் அச்சகம்).
(8),60 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 19X12 சமீ.
பணத்தையல்ல, கோவிலும் சுனையும், மகாஜோதி, மூன்றில் இ ரண்டு, பட்ட காலிலே, சத்தியவானும் சாவித்திரியும் ஆகிய ஆறு சிறு நாடகங்களின் தொகுப்பு.
49 சந்ததிச் சுவடுகள். சு.பூரீஸ் கந்தராஜா. களுவாஞ்சிக்குடி: ம.தெ.எ.பற்று, களுவாஞ்சிக்குடி பிரதேச கலாசாரப்பேரவை, 1வது பதிப்பு, ஜூலை 1988 (மட்டக்களப்பு: புனிதசெபஸ்தியார் அச்சகம்) 120 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18X12 சமீ.
வரலாற்றுக் கற்பனையான பகையிலும் நட்பு, சிதைந்த கனவுகள், புத்திரபாசம், ஆகிய மூன்று நாடகங்களும், சமூகச் சித்திரமான உணர்ச்சிகள், சந்ததிச்சுவடுகள், பிராயச்சித்தம், ஆகிய 3 நாடகங் களுமாக மொத்தம் 6 சிறு நாடகங்களின் தொகுப்பு.
492 தடயம்.இளங்கீரன். சென்னை 2: குறிஞ்சி வெளியீடு, இளவழகன் பதிப்பகம், 1வது பதிப்பு, மார்ச் 1992 (சென்னை 05. கோமதி அச்சகம்) 148 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 175x12.5 சமீ.
ஈழத்து முதுபெரும் எழுத்தாளரான ஆசிரியர், வெவ்வேறு கால கட்டங்களில் எழுதிய மூன்று நாடகங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
493 நாடகம் நான்கு. சி.மெளனகுரு, இ.முருகையன், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம். கொழும்பு நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1980. (சாவகச்சேரி. திருக்கணித அச்சகம். மட்டுவில்) XXiv,182 பக்கம். விலை: ரூபா 10. அளவு 21X14 சமீ.
சங் காரம் (மெளனகுரு), அபசுரம் (சுந்தரலிங்கம்), கடூழியம்
148 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(2) தமிழ் நாடகங்கள்
(முருகையன்), காலம் சிவக்கிறது ( சிவானந்தன்), ஆகிய நான்கு நாடகங்கள். இவற்றில் சங்காரம், கடுழியம் இரண்டும் இசை நாடக வடிவிலும், மற்றைய இரண்டும் வசன நாடக வடிவிலும் அமைந்துள் 660.
494 பாரதம் தந்த பரிசு. கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை. தெல்லிப்பழை: பழைய மாணவர் சங்கம், மஹாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக் டோபர் 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50 கண்டி வீதி) Xxi,172 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 185x12 சமீ.
மகாபாரதத்தில் ஒரு சில பகுதிகள் தெரிந்தெடுக்கப்பட்டு காங்கேயன் சபதம், ஜீவமணி, அம்பையின் வஞ்சினம், கோமகளும் குருமகளும், குருதட்சிணை ஆகிய தலையங்கங்களில் நாடகமாக்கப்பட்டுள் ளன. இலங்கை கலைக்கழக நாடகக்குழுவினர் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான நாடகப் போட்டிகளில் 1965-69 வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் முதற்பரிசு பெற்ற தெல்லிப்பழை மஹாஜனக்கல்லூரி யினரின் நாடகங்கள் இவை.
495 மத மாற்றம். அ.ந.கந்தசாமி. கொழும்பு 5. எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 215 G111, பார்க் வீதி, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 12. குமரன் அச்சகம், 201 டாம் வீதி) 80 பக்கம். விலை: ரூபா 30, அளவு 21X14 சமீ.
அமரர் அ.ந.கந்தசாமியின் மேடைநாடகத்தின் நூலுருவாக்கம். மதம் என்ற கருத்தியல் இந்த நாடகத்தில் சாடப்பட்டுள்ளது. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன். கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவிக் காதலைக் கை விடுகின்றனர்.
496 மருமகள். இன்பராஜன், வண.என்.எம்.சவேரி (பதிப்பாசிரியர்) கொழும்பு; திருமறைக்கலா மன்றம், 1வது பதிப்பு, (ஆண்டு குறிப் பிடப்படவில்லை). (கொழும்பு 13 கீதா பப்ளிகேஷன்ஸ்) 34 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21x13.5 சமீ. ISBN 955-9262-18-1
மோவாயியப் பெண்ணும் கைம்பெண்ணுமான ரூத்து, யூதப் பெண் ணான நகோமியின் மருமகள். இனச்சுத்தம், மரபுவழித்தவறாமை என் பவைகளால் பரம வைதிகளான யூதர்களின் விடுதலை வரலாற்றுத் தொடரில், அந்நியப் பெண்ணான ரூத்து ஒரு நிலையான இடத்தை
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 14

Page 89
8948(2) தமிழ் நாடகங்கள், 8948(3) கவிதை நாடகங்கள், காவியங்கள்
வகிப்பது இக்கதையின் முக்கியஅம்சம். மனித வரலாற்றின் துயர்க் கட்டங்களைக் கடவுள் வெற்றிகரமாக மாற்றுகின்றார் என்பது ரூத் துவின் கதையின் கரு.
497 மேற்பூச்சு. இ.முருகையன், சென்னை 2: தேசிய கலை இலக் கியப் பேரவையுடன் சவுத் ஏசியன் புக்ஸ், 611 தாயார் சாஹிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (சென்னை 41 சூர்யா அச்சகம்) 195 பக்கம். விலை: இந்திய ரூபா 35. அளவு: 17.5x13 சமீ.
செங்கோல், கலைக்கடல், கொண்டு வா தீயை கொழுத்து விறகை யெல்லாம், சுமசும மஹாதேவா, அப்பரும் சுப்பரும், ஆகிய ஐந்து நாடகங்களின் தொகுப்பு, செங்கோலில்-செழியனின் பார்வைக் கோணத்திலிருந்து கண்ணகி கதை சொல்லப்படுகின்றது. கலைக் கடலில்-இலக்கியவாதி ஒருவரின் ஈடுபாடுகள், சங்கடங்கள், வேடிக் கையாகச் சொல்லப்படுகின்றன. கொண்டுவா தீயை ..., சுமசும மஹாதேவா இரண்டும் நாடோடிக்கதைகளை மையமாக வைத்து ஆக்கப்பட்டவை. இறுதியான அப்பரும் சுப்பரும் முழுநேர மேடை நாடகமாகும்.
498 மெளனகுருவின் மூன்று நாடகங்கள்.சி.மெளனகுரு. யாழ்ப் பாணம்: நாடக அரங்கக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்) XX,54 பக்கம், விலை: ரூபா 10. அளவு: 21X14 சமீ.
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர்கல்லூரி, இந்து மகளிர்கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் அக்கல்லூரி மாணவியரால் அரங்கேற்றப் பட்ட மழை, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் ஆகிய மூன்று நாடகங்களின் நூலுரு. பெண்களின் சமூகவிழிப்புணர்வு, தமிழர் களின் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் என்பவற்றை மையமாக வைத்து இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
8948(3) கவிதை நாடகங்கள்-காவியங்கள்
499 அகதி நெருங்கவிதை. கெளரி. கனடா: Social Research Circle, 1477 Eglinton Ave. West, P.O. Box3, Toronto, 16...g5 ugly, ஏப்ரல் 1991. (கனடா: அச்சக விபரம் அறியமுடியவில்லை) 90 பக்கம். விலை: கனேடிய டொலர் 3. அளவு: 17X10.5 சமீ.
150 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(3) கவிதை நாடகங்கள், காவியங்கள்
அகதி ஒரு அகதியின் சுயசரிதையாக நகர்கின்றது. தமிழ் அகதிகள் எப்படி உருவாகுகின்றனர் என்பதைக் கவிஞரின் பார்வையில் தான் சந்திக்கும் சில தனிமனிதர்களின் சரிதைகளுக்கூடாக வெளிப்படுத்து கின்றார்.
500 இரண்டு வரம் வேண்டும்; குறுங்காவியம். ம.பார்வதி நாத சிவம். இளவாலை: கூடலகம், மயிலங்கூடல், 1வது பதிப்பு, ஜூன் 1985. (தெல்லிப்பழை, காந்தன் அச்சகம்) 42 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18.5X12.5 சமீ.
உழைப்பு, ஆடவர்-மகளிர் இருபாலாருக்கும் சொந்தமானது. அதிலும் தொழிலில் ஏற்றத்தாழ்வு கருதாது உழைக்கும் உழைப்பாளிகள் வணக்கத்துக்குரியவர்கள், சமூகத்தால் என்றும் வேண்டப்படுபவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் குறுங்காவியம்.
5O1 இரு வேறு உலகம். ம.பார்வதிநாதசிவம். இளவாலை: கூடல் அகம், மயிலங்கூடல், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1980. (தெல்லிப் பழை: குகன் அச்சகம்) 72 பக்கம். விலை: ரூபா 5 அளவு: 18.5X12.5 சமீ.
இந்நூலில் உலகமாதாவை வேண்டுதல் செய்து, தமிழை வாழ்த்தி, நாவலர் பெருமானைப் போற்றி, பண்டிதமணியின் பெருமைகளை நினைந்து களிகூர்ந்து, மேல் லெளகீகமான பணம், பசி, வறுமை முதலியவற்றின் செயற்பாடுகளை வர்ணித்து, செல்வம், அந்தஸ்து ஆகியவற்றின் மிடுக்கையும் புனிதமான காதலின் சிறப்பையும் காதலின் தியாகத்தையும் இரு வேறு உலகங்கள் என்னும் குறுங் காவியமாக்கி நிறைவு செய்துள்ளார் நூலாசிரியர்.
502 இன்னும் ஒரு திங்கள்: குறுங்காவியம். ம.பார்வதிநாத சிவம். யாழ்ப்பாணம், வி.ஆறுமுகம், 1வது பதிப்பு, ஜூலை 1988. (தெல்லிப் பழை: காந்தன் அச்சகம்) 38 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18X12.5 சமீ.
கணவன்-மனைவி உறவில் காணப்படும் பொருந்தாநிலையைக் கருவாகக் கொண்டு அமைந்த குறுங்காவியம்.
503 கோடை, மஹாகவி (இயற்பெயர்:து.உருத்திரமூர்த்தி) யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, 2வது பதிப்பு, நவம்பர் 1988. 1வது
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 151

Page 90
8948(3) கவிதை நாடகங்கள், காவியங்கள்
பதிப்பு, செப்டெம்பர் 1970. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) xiv,74 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 20x14 சமீ.
மேடைப்பா நாடகம். அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியினால் கிராம சமுதாய மனப்பாங்கில் ஏற்பட்ட விளைவுகள், முரண்பாடுகளே கோடையின் அடிப்படையாகும். காதலையும் நாயனக் கலையை யும் இம்முரண்பாடுகளை வெளிக்கொண்டு வரும் ஊடகமாக ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.
504 தமிழ்ப்பாவை: நெரும்பாடல். வாகரைவாணன். யாழ்ப்பாணம்: சண்முகா பதிப்ப்கம், நல்லூர், 1வது பதிப்பு, பங்குனி 1980.(யாழ்ப் பாணம்: கண்ணன் அச்சகம், நல்லூர்) (6),24 பக்கம். விலை: ரூபா 2.50. அளவு: 20x14 சமீ.
இந்நூலில் தமிழின் அருமை, பெருமை, வரலாறு, தாய்நாட்டு வளம், இவை சுருக்கமாகக் கவிதையாக்கப்பட்டுள்ளது.
505 நீதியின் இருக்கைகள்: கவிதை நாடகங்கள். எம்.சாம். பிரதீபன். யாழ்ப்பாணம்: திருமறைக்கலா மன்றம், 1வது பதிப்பு, நவம்பர் 2000. (கொழும்பு 13: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்) (12),103 பக்கம். விலை: ரூபா 150. அளவு; 21X13.5 சமீ.
நீதியின் இருக்கைகள், மீன் தங்காத பட்டிகள், புயலான பூவை, மலையோரக் கருங்குயில்கள், இலக்கியம் இட்ட தீ, ஆகிய 5 கவிதை நாடகங்களின் தொகுப்பு. சிலப்பதிகாரம், புறநானூறு, கவித்தொகை போன்ற இலக்கியங்களில் இருந்து கதைக்கருக் களைப் பெற்று அவற்றை சமகால வாழ்வியலுக்குள் கொண்டு வந்து எமது யுத்தத்தின் நாட்களையும், இழப்புக்களையும், நீதி தவறிய தேசத்தின் நிலையையும் சுட்டுகின்றனவாக இந்நாடகங்கள் அமைந்துள்ளன.
506 நெரும்பா 3: சொக்கன். யாழ்ப்பாணம்: ஜனனி வெளியீடு, 1வது பதிப்பு. ஜூன் 1982. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) vi,96 பக்கம், வரைபடம். விலை: ரூபா 12.50. அளவு: 18x12 சமீ.
நசிகேதன், ஒபியசு, மலர்விழி ஆகிய 3நெடும்பாக்களின் தொகுப்பு.
507 பாதை மாறிய போது: குறுங்காவியம். காரை செ.சுந்தரம்
152 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(3) கவிதை நாடகங்கள், காவியங்கள், 8948(4) சிறுகதைகள்
பிள்ளை. யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1986. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, கே.கே.எஸ். வீதி) 64 பக்கம். விலை: ரூபா 8. அளவு: 18.5X11 சமீ.
ஏழைக் கடற்தொழிலாளியின் மகனான தருமன், பொருளாதாரக் களில் டத்தின் மத்தியிலும் திறமையுடன் படித்து, அரசின் தரப்படுத்தலால் பல்கலைக்கழகம் புகமுடியாது, வெளிநாடு செல்ல முயன்று, முகவர் களால் ஏமாற்றப்பட்டு, விவசாயம் செய்ய முனைந்து அங்கும் அரசின் இறக்குமதிக் கொள்கைகளால் நட்டமடைந்து, காவல் படையின் கெடுபிடிகளால் ஆத்திரமுற்று விடுதலைப்போராளியாக மாறும் கதை.
508 மருத மருமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம், 87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 16 g) ug5 L, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்) (32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு 21x13.5 சமீ.
இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந் துள்ளது.
509 மவுறாகவியின் ஆறு காவியங்கள். மஹாகவி. எம்.ஏ.நு.மான் (பதிப்பாசிரியர்) கொழும்பு 11 தேசிய கலை இலக்கியப்பேரவை, South Asian Books, Vasantham Pvt. Ltd., 44, 3rd Floor, CCSM Complex 1வது பதிப்பு, மார்ச் 2000. (தெகிவளை: டெக்னோபிரின்ட்) ix,296 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 19X13 சமீ.
கல்லழகி, சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணி யாள் காதை, கந்தப்ப சபதம், (கவிஞர் முருகையனுடன் இணைந்து எழுதிய) தகனம் ஆகிய ஆறு காவியங்களின் தொகுப்பு.
5 O வேளாண்மை: குறுங்காவியம். நீலாவணன். மூதூர் தங்கம் வெளியீடு, திரிகூடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1982. (மூதூர்: அமுதா அச்சகம்)
88 பக்கம். விலை: ரூபா 15. அளவு 21X14 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 153

Page 91
8948(4) சிறுகதைகள்
இயந்திர நாகரீகத்தால் கற்பழிந்து விடாத மட்டக்களப்பின் குமரி யழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண் மைத்தனத்தையும் வெளியுலகுக்குக் காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிறார். மட்டக்களப்பின் பழகுதமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்துக்குக் கைகட்டிச் சேவகம் புரிந்துள் 6TTg.
-வ.அ.இராசரத்தினம் (முன்னுரையில்)
894.804) சிறுகதைகள்
5 அகஸ்தியர் கதைகள். எஸ்.அகஸ்தியர். ஆனைக்கோட்டை: ஜனிக்ராஜ் வெளியீடு, உயரப்புலம், 1வது பதிப்பு, தை, 1991. (யாழ்ப்பாணம்: விஜயா அழுத்தகம், 551. கே.கே.எஸ். வீதி) 28+147 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
தமிழ்ச்சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த அகஸ்தியரின் 14 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
512 அண்மையில் ஒரு நட்சத்திரம். செ.யோகநாதன். சென்னை 17. தமிழோசைப் பதிப்பகம், 84, அபிபுள்ளா சாலை, தி.நகர், 1வது பதிப்பு, நவம்பர் 1984. (சென்னை17: தமிழோசைப்பதிப்பகம்) 224 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 18x12.5 சமீ.
1975-84 காலப்பகுதியில் எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு. வளர்முகநாடுகளின் பொதுப்பிரச்சினைகளும் ஈழமக்களின் இன் றைய நிலைமையும் இக் கதைகளில் பேசப்படுவதால் அவை பரந்துபட்ட மக்களின் வாழ்வுக்குப் பொருந்துகின்றன.
513 அதிர்ச்சி நோய் எமக்கல்ல; உருவகங்கள். நாகபத்மநாதன். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீடு, 1வது பதிப்பு, புரட்டாதி 1993, (யாழ்ப்பாணம் மாறன் பதிப்பகம், 664 மருத்துவமனை வீதி) xi96 பக்கம். விலை: ரூபா 50. அளவு 21x13 சமீ.
மண்பற்றும், இன விடுதலையும்-இதற்கான தியாகங்களும் அலை வீசி நிற்கும் 34 உருவகக் கதைகளின் தொகுப்பு.
54 அது வேறுவிதமான காதல். வி.கந்தவனம். சென்னை
154 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
600002. காந்தளகம், 834 அண்ணா சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2001 (சென்னை 600002 காந்தளகம்) 168 பக்கம். விலை: இந்திய ரூபா 65. அளவு 21.5X14 சமீ.
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியப் படைப்பாளி, கவிஞர் கந்தவனத்தின் 20 சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பிலுள்ள கதைகள் சமூக யதார்த்தங்களின் பிரசவங்களாகும். சில கதைகள் ஈழத்து வாழ்வியலையும் பல கதைகள் கனேடிய மண்ணின் நிகழ் வுகளை, புலம்பெயர்நிலையில் புகலடைந்த ஈழத்தமிழர்களின் இயங் கு நிலைகளைப் பிரதிபலிப்பவையாகும்.
515 அந்நிய விருந்தாளி. க.பாலசுந்தரம். யாழ்ப்பாணம்: யாழ்.இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச்சகம்). xi,128 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
இத்தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகளில் மனிததெய்வம், அந்நிய விருந்தாளி ஆகிய இரண்டும் மனித சமுதாயம் முழுமைக்கும் பொது வான மனிதநேயம் என்ற பண்பை வெளிப்படுத்துவன. மற்றையவை ஈழத்தமிழர் சமூகத்துக்குள் புரையோடிப் போயுள்ள சமூக-பொருளா தாரப்பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டவை.
516 அம்மாளைக் கும்பிருறானுகள்: உண்மைக்கதைகள். தொகுதி 1. லண்டன் வெளியீட்டுப்பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 2வது பதிப்பு, ஆகஸ்ட் 1997. 1வது பதிப்பு, ஆகஸ்ட்1994. (லண்டன்: வாசன் லித்தோ பிரின்ட்) 132 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x13.5 சமீ.
உண்மைச் சம்பவங்களைக் கருவாகக் கொண்ட 15 கதைகள். இந் திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்புக் காலகட்ட வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையின் அவலங்களையும் சோகங்களையும் சித்திரிக் கும் படைப்புக்களாக 14 கதைகளும் பூரீலங்கா இராணுவத்தின் கொடூரத்தினைச் சித்திரிப்பதாக ஒரு கதையும் அமைகின்றன.
517 அரைகுறை அடிமைகள். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், 4 தணிகாசலம் சாலை, தி. நகர். 1வது பதிப்பு, 1998. (சென்னை 26: கார்த்திக் பிரின்டர்ஸ்) 200 பக்கம். விலை: இந்திய ரூபா 38. அளவு: 175x12 சமீ.
14 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதியில் பல அரசியல் பின்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 1PP

Page 92
8948(4) சிறுகதைகள்
னணியில் அமைந்த கதைகளும் உள்ளடங்கியுள்ளன. சிங்களப் பேரினத்தின் தமிழ் இன ஒழிப்பு நடவடிக்கையின் கொடுமைகளின் எதிரொலி ஆங்காங்கே தெரிகின்றன.
58 அவர்களின் தேசம்: சிறுகதைகள். மாத்தளை சோமு. திருச்சி 620002 தமிழ்க்குரல் பதிப்பகம், 23 தஞ்சாவூர் குளத் தெரு, சின்னக்கடை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1995, (சென்னை 24. இளவழகன் பதிப்பகம், 4, இரண்டாவது தெரு, ஆண்டவர் நகர், கோடம்பாக்கம்) 160 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 17.5x12 சமீ.
ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத்தொகுதி. இத் தொகுதியில் உள்ள சிறுகதைகளின் களங்கள் வேறானவை. மலையகம், தமிழகம், யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா என்று வெவ்வேறு தேசங்களை அடையாளம் காட்டுகின்றன. மொத்தம் 12 சிறுகதை கள் 1984-1995 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்றவை.
519 அவர்களுக்கென்று ஒரு குடில், பொ.கருணாகரமூர்த்திசென்னை 600026: குமரன் பதிப்பகம், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழநி, 1வது பதிப்பு, ஜூன் 1999, (சென்னை 18: Nam Press) 238 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 20.5x14 சமீ.
ஜேர்மனியில் வாழ்ந்த 20 வருடகால வாழ்க்கையில் ஆசிரியருக்கு ஏற்பட்ட அனுபவறிலை, இரண்டாவது உலக யுத்தம் ஏற்படுத்திய கொடுமைகள், இன்னும் ஜேர்மன் முதியவர்களிடம் உண்டாகும் துன்பியல் உணர்வுகள் மற்றும் அந்த நாட்டின் அதீத வளர்ச்சி யின் போக்குகளின் பிரதிபலிப்புகள் என்பன இங்கு காணப்படும் சிறுகதைகளின் கருப்பொருளாகின்றன. இதில் இடம்பெறும் உபச் சாரம் என்ற சிறுகதை ஜேர்மன்-பூவரசு சஞ்சிகையினால் நடாத்தப் பெற்ற சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றது.
520 அவளுக்குள் ஒருத்தி. விமல் குழந்தைவேல். சென்னை 17: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு, 1999. (சென்னை 5 எம். கே. என்ரர்பிரைஸஸ்) (iv),124 பக்கம், விலை: இந்திய ரூபா 24. அளவு: 18x12 சமீ.
பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. ஈழவிடுதலைப் போராட்டத் துக்கு இரு பக்கங்கள் உள்ளன. ஒன்று அரசியல்தன்மை, மற்றது
156 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
சமூகத்தன்மை. இதிலுள்ள கதைகள் யாவும் சமூகத்தன்மை கொண் டமைந்தனவாக ஈழப்போராட்டம் சமூகத்தில் ஏற்படுத்திய ரணங்களை வெளிக்கொணர்வதாக உள்ளது. தாயண்பு, சகோதர பாசம், நட்பு, மனிதத்துவம், சமூக ஒற்றுமை என்னும் அம்சங்கள் கதைகளுக்கு உயிரூட்டுகின்றன. இது ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி.
521 அறிமுகவிழா. கோகிலா மகேந்திரன், புலோலியூர் ஆ.இரத்தின வேலோன். தெல்லிப்பழை: சிவன் கல்விநிலையம், விழிசிட்டி, 1வது பதிப்பு, 1984. (தெல்லிப்பழை, குகன் அச்சகம்). vi,123 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12 சமீ.
கோகிலா மகேந்திரனின் மூன்று சிறுகதைகளும், இரத்தினவேலோ னின் மூன்று சிறுகதைகளும், இருவரும் இணைந்து எழுதிய ஒரு சிறுகதையும் கொண்ட தொகுப்பு. இச்சிறுகதைகள் பற்றிய பல் வேறு இலக்கியகர்த்தாக்களின் விமரிசனக் குறிப்புக்களும் சேர்க்கப் பட்டுள்ளன.
522 ஆகுதி. என்.சோமகாந்தன். யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: பூரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன் துறை வீதி)
xiv,124 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12 சமீ.
அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழவைக்கும் 11 கதைகள், வர்க்க பேதங்களால் நாசமுற்றிருக்கும் மனிதசமூகத்தின் மனச்சாட்சியை சொடுக்கி எழுப்பும் சவுக்கின் சுரீர் ஒலி ஒவ்வொரு கதையிலும் பளிச்சென்று தொனிக்கின்றது.
523 ஆண்டவர் பிறந்த மனி: காலங்காட்டும் கற்பனைச் சிறுகதைகள். வெற்றிமகன் (வெற்றிவேல் விநாயகமூர்த்தி) மட்டக் களப்பு: பசிமுக நிறுவனம், பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ்க் கழகம், 2, வன்னியனார் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (மட்டக்களப்பு: நியுகின், 73, முனை வீதி) (38),84 பக்கம். விலை: ரூபா 195. அளவு: 19x14 சமீ.
கலாசூரி வெ.விநாயகமூர்த்தி அவர்களின் 14 சிறுகதைகள்.
524 ஆணி மை. எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600024: மித்ர
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 157

Page 93
8948(4) சிறுகதைகள்
வெளியீடு, 375-10 ஆர்க்காடு தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (சென்னை 600094; கோகிலழரீ பிரின்டர்ஸ்) 400 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் அக்கினிக் குஞ்சு என்ற சஞ்சிகையில் ஆண்மை என்ற தலைப்பில் பிரசுரமான சிறுகதைகள். அடங்கியுள்ள அனைத்துச் சிறுகதைகளும் ஆண்மை என்ற கருத் தியலை அடிப்படையாகச் சுட்டி நிற்பவையே.
525 இங்கேயும் மனிதர்கள். குரும்பசிட்டி ஐ.ஜெகதீஸ்வரன். கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபை, ரொரன்டோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (கனடா: விவேகா அச்சகம்) XX,95 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19X13 சமீ.
இந்நூலில் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் நிகழ்ந்த சம் பவங்களைக் கருப்பொருளாகக்கொண்ட கதைகள் இடம்பெறுகின் றன. இக்கதைகளின் வாயிலாக யுத்த அவலங்கள், இடப்பெயர் வுகள், கனேடிய வாழ்வியலும் அதன் போலித்தனமான போக்கு களும் இதனை நிவர்த்தி செய்யவேண்டிய அவசியமும் நன்கு காட்டப்பட்டுள்ளன.
526 இதயச்சிறை. விக்னா பாக்கியநாதன். சென்னை 17. மணி மேகலைப் பிரசுரம், த.பெ.1447, 7 தணிகாசலம் சாலை, தி.நகர், 16 g) ug5t'L, 2000. (Q3660)607 14: M. K. Enterprises) 216 பக்கம். விலை: இந்திய ரூபா 43. அளவு: 18x12.5 சமீ.
இருபத்தி மூன்று சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் வெளிவந் துள்ள ஆக்கங்கள், புகலிடச்சஞ்சிகைகளில் பிரசுரமானவையும், வானொலிகளில் ஒலிபரப்பானவையுமாகும். கதைகள் ஜெர்மனியில் வாழும் தமிழர்களின் புகலிட வாழ்வியலை சித்திரிக்கின்றன.
527 − இரவின் ராகங்கள். ப.ஆப்டின். யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 1வது பதிப்பு, ஜூலை 1987 (யாழ்ப்பாணம்: விஜயா அழுத்தகம்) 120 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
ஆசிரியரின் பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பு.
528 இவர்கள். படைப்பிலக்கிய மன்றம் (தொகுப்பாளர்கள்). தெல்லிப்
158 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
பழை: படைப்பிலக்கிய மன்றம், மஹாஜனக்கல்லூரி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1981. (அளவெட்டி: ஜெயா பிரின்டிங் வேர்க்ஸ்) vi41 பக்கம். விலை: ரூபா 5 அளவு: 18.5x13 சமீ.
1975-1980 காலப்பகுதியில் நிறுவுநர் நினைவுநாள் விழாவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டிகளில் முதற்பரிசு பெற்ற சிறுகதை களின் தொகுப்பு.
529 இன்னும் இரண்டு நாட்கள். செ.யோகநாதன். சென்னை 33: மானுடம் போற்றுதும், 48, ஏரிக்கரைத்தெரு, 1வது பதிப்பு, 1989. (சென்னை 15: துர்க்காதேவி அச்சகம், 13 குமரன் காலனி). 128 பக்கம். விலை: இந்திய ரூபா 14. அளவு: 18x12 சமீ.
தென்னிந்தியச்சஞ்சிகைகளான குங்குமம், குங்குமச்சிமிழ், அலைகள், ராஜம் ஆகியவற்றில் வெளியான இன்னும் இரண்டு நாட்கள் (ஈழத்து இளைஞர்கள் இந்தியாவில் படும் அவலத்தைச் சித்திரிப்பது), கீதம் இனிய குயில், அவளும் அவனும், இறுதியில் அப்படித்தான், ஒப்பனைகள், புற்று ஆகிய 6 புனைகதைகளின் தொகுப்பு.
530 உணராத உண்மைகள். ஜோசப் பாலா. யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, மார்கழி 1986. (யாழ்ப்பாணம்: மணிஓசை அச்சகம்)
72 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
நான், அமிர்தகங்கை, தினகரன், இதழ்களில் வெளியான பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு, சமகாலக் கண்ணோட்டத்தில் இறை நம் பிக்கை, சமூக அரசியல் பொருளாதார சூழ்நிலைகளை பின்னணி யாகக் கொண்டு அவற்றின் நெளிவுசுழிவுகளை நாகரீகமாகவும் நாகுக்காகவும் காட்டியிருக்கிறார்.
53 உயிர்ப்புகள்: சிறுகதைத் தொகுதி. கலாசார கூட்டுறவுப் பெருமன்றம் (தொகுப்பாளர்கள்). நெல்லியடி கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1986 (நெல்லியடி: கலாலயா பதிப்பகம்) 144 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12.5 சமீ.
நெல்லியடி, அல்வாய், கரவெட்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங் களைச் சேர்ந்த சமூகத்தவர்களின் பன்னிரு சிறுகதைகளும் அவற்
t
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 159

Page 94
894.84) சிறுகதைகள்
றிற்கான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் விமர்சனக் குறிப் பும் இடம்பெறுகின்றது.
532 உழைக்கப் பிறந்தவர்கள்: மலையகச் சிறுகதைகளின் இரண் டாவது தொகுதி. துரை.விஸ்வநாதன் (பதிப்பாசிரியர்).சென்னை 17: துரைவி பதிப்பகம், 20A9, கோபாலகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஜூலை 1997. (சென்னை 14: பார்க்கர் கம் பியுட்டர்ஸ், 293, அகமது வணிகவளாகம், இராயப்பேட்டை நெடுஞ் சாலை.) 495 பக்கம். விலை: இந்திய ரூபா 90. அளவு; 21X14 சமீ.
56 மலையக எழுத்தாளர்களின் தேர்ந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இலங்கையின் பெருந்தோட்டத்துறை மக்களின் அன்றாட வாழ்வைச் சித்திரிக்கும் கதைகள். இவற்றுள் 14 கதைகள் மலை யகம் தவிர்ந்த தமிழ்ப்பிரதேசங்களில் வாழ்கின்ற படைப்பாளி களின் ஆக்கங்களாகும். எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பும் அவ்வச் சிறுகதைகளுக்கு முன்னதாகத் தரப்பட்டுள்ளது.
533 எரிகொள்ளி. எஸ்.எச்.நிஹற்மத். எருக்கலம்பிட்டி இலக்கிய வட்டம். 1வது பதிப்பு, 1989, (கொழும்பு 11: பார்வை நியுஸ் பேப் பர்ஸ் அன்ட் பப்ளிக்கேஷன்ஸ், 77, 3வது குறுக்குத் தெரு.) (8),120 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18X12 சமீ.
பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பு. பிரச்சினைகளை மட்டுமே சொல்வதும் பிரச்சினைக்குரிய தீர்வை வெளிப்படையாகச் சொல்லி விடுவதும் நல்ல சிறுகதைகளுக்குரிய பண்புகளல்ல என்று நான் கருதுவதால் எனது சிறுகதைகள் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றுக்குரிய தீர்வினை மறைமுகமாகவே சொல்கின்றன.
-ஆசிரியர் (முன்னுரையில்)
534 ஏன். எஸ்.என்.வாகீசன். சென்னை 600002: தேசிய கலை இலக் கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏவழியன் புக்ஸ், 61 தாயார் சாஹிப் 2வது சந்து, 1வது பதிப்பு, 1991 (சென்னை20: இராசகிளி பிரின்டர்ஸ்) 142 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18x12 சமீ.
1983இல் எழுதிய ஒரு சிறுகதையையும் 90-91ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஏனைய கதைகளையும் உள்ளடக்கிய இத்தொகுதி
160 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
மொத்தம் 11 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. எதிர்பாராத ஒரு அரசியல் திருப்புமுனையில் அகப்பட்டு, மாறிவரும் சூழல் மீது ஆளுமையின்றி, அம்மாற்றங்களுக்கேற்ப வளைந்து கொடுக்கும் நிர்ப் பந்தத்துக்கும் நெடுங்காலம் பழகிய ஒரு வழக்கின் பிடிப்புக்கு மிடையே தத்தளிக்கும் ஒரு சமுதாயத்தை, அதில் வாழும் தனி மனிதரது நிலைமைகளுடு, முற்போக்கான ஒரு கோணத்தினின்றும் காணும் ஒரு படைப்பாளியின் பார்வையின் சில தெறிப்புகள் இச்சிறு கதைகள்.
535 ஒரு காவியம் நிறைவுபெறுகிறது. வ.அ.இராசரத்தினம்.சென்னை: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1996. (சென்னை: Mitra Books Makers.) 448 பக்கம். விலை: இந்திய ரூபா 115. அளவு: 17X12 சமீ.
ஐந்து தசாப்தங்களாக ஆசிரியர் எழுதிய ஐம்பது சிறுகதைகள் இத் தொகுதியில் அடங்கியுள்ளன.
536 ஒரு கூடைக்கொழுந்து. என்.எஸ்.எம். ராமையா. யாழ்ப்பாணம்: வைகறை, 330, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (சாவகச் சேரி. திருக்கணித அச்சகம்) 124 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 17.5x12.5 சமீ.
ஈழத்து ஊடகங்களில் வெளிவந்த ஆசிரியரின் 12 சிறுகதைகளின் தொகுப்பு. மலையக மக்களின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள சகல அம்சங்களும் நேர்மை, கண்ணியம், சமூக தர்மம் பற்றிய உணர்வுவகை அனைத்தையும் இந்த மக்களின் உழைப்பு என்னும் உரைகல்லூடாக நிறுவுகின்றார். இக்கதைகளில் வரும் கதா பாத்திரங்களின் இயக்கப்பாடுகள் அனைத்தும் உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டிருப்பது சிறப்பியல்பு.
537 ஒரு கூடைக் கொழுந்து: இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறு கதைகள்: இரண்டாவது தொகுதி. யோ.சுந்தரலட்சுமி, செ.யோக நாதன். சென்னை 02: சத்தியபாரதி பதிப்பகம், 1வது பதிப்பு, மே 1994. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிரபி) 645 பக்கம். விலை: இந்திய ரூபா 100. அளவு: 175x12 சமீ.
1930-1990க்கு இடைப்பட்ட காலத்தில் ஈழத்தில் எழுதப்பட்ட சிறு கதைகள் சிலவற்றை இந்நூலில் தொகுத்துள்ளனர். சிறுகதையாளர்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 161

Page 95
8948(4) சிறுகதைகள்
கள் பற்றிய சிறுகுறிப்பும் நூலில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கது.
538 ஒரு நாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள். சுதாராஜ். யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச் சகம்)
148 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18.5x13 சமீ.
இத் தொகுப்பில் அழகியல் உள்நோக்கப்பார்வை கொண்டவையும் மனிதநேய பேரபிமானம் படைத்தவையுமான பதினொரு சிறுகதை கள் இடம் பெற்றுள்ளன. சூழலோடு ஏதோ ஒரு வகையில் பிணைந்த மனித நடவடிக்கைகளின் அவலங்கள் இச் சிறுகதைத் தொகுதி மூலம் பேசப்படுகின்றது.
539 ஒரு பிடி மணி. சாந்தன். சென்னை 17. நர்மதா பதிப்பகம், 1வது பதிப்பு, ஜூன் 1999, (சென்னை 04: மணியன் அச்சகம்) 192 பக்கம். விலை: இந்திய ரூபா 37. அளவு: 18X12.5 சமீ.
1975-1980காலப்பகுதியில் ஆசிரியர் எழுதிய கதைகளிற் சில இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகள் பெரும்பாலும் குறுங் கதைகளாகும்.
540 ஒரு வித்தியாசமான விளம்பரம்: சின்னஞ்சிறு கதைகள். ரூபராணி ஜோசப். கொழும்பு 13: துரைவி, 85, ரீஇரத்தின ஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வது பதிப்பு, ஆனி 1998. (கொழும்பு 12: Perfect Printers) 121 பக்கம். விலை: ரூபா 80. அளவு: 18x13 சமீ.
40 குட்டிக்கதைகள், இலங்கையில் தமிழர்வாழ் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மத்திய மேல் மாகாணப்பிரதேசங்கள் கதைகளின் பகைப்புலமாகின்றன. அப்பிரதேசங்களுக்கே உரிய பேச்சுமொழி கள் விரவ, ஆசிரியர் தனது கதைகளைப் படைத்திருப்பது சிறப் பம்சமாகும்.
54 கசின் சிறுகதைகள். பொ.ஆனந்தலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1999.
162 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
(அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) xi, 149 பக்கம், விலை: ரூபா 125. அளவு: 18.5x13 சமீ.
க.சிவகுருநாதன் (புனைபெயர்:கசின்) அவர்களின் 15 சிறுகதை களின் தொகுப்பு. தமிழர் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், பேச்சு முறை என்பன சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. குடும்ப2உறவு களே பெரும்பான்மையான சிறுகதைகளில் முக்கியத்துவம் பெற்றுள் 6T60.
542 கடலில் கலந்தது கண்ணிர். எஸ்.வி.தம்பையா. நீர்வேலி, அம் பிகா இல்லம், அச்செழு, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம். மயூரன் அச்சகம், 47 பிரப்பங்குளம் வீதி) 113 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12.5 சமீ.
1956 முதல் 1960களின் பின்னரைப்பகுதி வரை எழுதப்பட்ட சிறு கதைகள். பல சிறுகதைகள் மலேஷிய மண்ணையும் வாழ்வையும் பகைப்புலமாகக் கொண்டவை.
543 கடலும் கரையும். மு.பொன்னம்பலம். கொழும்பு 6: நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜூன் 1996. (தெகிவளை: ரெக்னோ பிரின்ட்) 144 பக்கம். விலை: ரூபா 80. அளவு: 21.5X14 சமீ.
இத்தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
544 கண்களுக்கு அப்பால், நந்தி. (இயற்பெயர்: சிவஞானசுந்தரம் சென்னை 17: சென்னை புக்ஹவுஸ், 6 மேட்லிசாலை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1984. (சென்னை 5: வெற்றி அச்சகம்) XVi,106 பக்கம். விலை: இந்திய ரூபா 7. அளவு: 18x12.5 சமீ.
பேராசிரியர் நந்தியின் பன்னிரு சிறுகதைகள், பேராசிரியர் கா.சிவத் தம்பியின் முன்னுரையுடன் கூடியது.
545 கதைக்கனிகள்: பரிசுபெற்ற மலையகச் சிறுகதைகள். எஸ்.எம். கார்மேகம். சென்னை 24: குறிஞ்சி வெளியீடு, இளவழகன் பதிப்பகம், 2வது பதிப்பு, ஆவணி 1991. 1வது பதிப்பு, தை 1971. (சென்னை 5: ஜிவோதயம் பிரஸ்) 144 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 17.5x12.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 163

Page 96
8948(4) சிறுகதைகள்
நான்கு சிறுகதைப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளுக்குரிய 12 கதைகள் மாத்திரம் தெர்ந்தெடுக்கப்பட்டு இத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. மலையக மக்களை மையப்படுத் துவதாகவே இத்தொகுப்பு அமைந்துள்ளது.
546 கபாலபதி. திசேரா (எஸ்.தியாகசேகரன்) கொழும்பு 2: மூன் றாவது மனிதன் பதிப்பகம், 37/14, வக்சோல் ஒழுங்கை, 1வது பதிப்பு, அக்டோபர், 2000. (கொழும்பு, அச்சகவிபரம் அறிய முடியவில்லை) vi,62 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 22x14.5 சமீ.
சமகாலச் சூழலின் பின்புலத்தில் இவரது கதைகள் கருக்கொள் கின்றன. அரசியல், இராணுவவாதப் பிரச்சினைகள் தொடக்கம் தனிமனித உணர்வுகளே இவரது படைப்பின் பலமாக உள்ளது.
547 கல்லறைப் பூக்கள் சிறுகதைத்தொகுப்பு. வ.சிவராசா. சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 3 மெய்கை விநாயகர் தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2001 (சென்னை 24: சிவா கிரப்பிக்ஸ்) 138 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18X12.5 சமீ.
ஈழத்தமிழ் மக்களின் சமூகப்பிரச்சினைகளை பின்னணியாகக் கொண்ட 50 சிறுகதைகளின் தொகுப்பு.
548 m கலையாத நினைவுகள்: சிறுகதைத்தொகுதி. சாந்தி ரமேஷ் வவுனியன், ஜேர்மனி. பார்த்திபன் வெளியீடு, Bahn Hof Str-4, 55743 ldar Oberstein,1வது பதிப்பு, ஏப்ரல் 2001 (ஜேர்மனி: அச்சக விபரம் அறியமுடியவில்லை) 76 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X14 சமீ.
தூக்குக்கயிறு, இலக்கைத் தேடி, கலையாத நினைவுகள், இது தொடர்கதையா, எங்கட மண் ஆகிய 5 சிறுகதைகளின் தொகுப்பு. தாயக விடுதலைப்போராட்டத்தைப் பகைப்புலமாகக் கொண்ட சிறு கதைகள்,
549 காசிஆனந்தண் கதைகள். காசி. ஆனந்தன். சென்னை 2: காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (சென்னை 02: காந்தளகம்)
164 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
93 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு 16.5X13 சமீ.
1969-70-71 களில் சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்து பிரபல்யமாகிய மாத்திரைக் கதைகளின் நூலுரு. ஒவ்வொரு குட்டிக் கதையின் இறுதியிலும் பழமொழிகளின் பாணியிலமைந்த மணி மொழிகள் இடம்பெற்றுள்ளன.
550 காணி உறுதி. இளையவன். சென்னை 20: பொன்னி வெளியீடு, 12, முதல் பிரதான சாலை, நேரு நகர், அடையார், 1வது பதிப்பு, 1989. (சென்னை: இராசகிளி பிரின்டர்ஸ்) 93 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 18x12 சமீ.
1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கையில் பிறப்பிக்கப் பட்டது முதல் தமிழ் பேசும் மக்களது போராட்டம் பல படிமுறைமாற் றங்களினூடாகவும் முனைப்புடன் வளர்ந்து வந்தது. பல்வேறு படிப் பினைகளையும் அனுபவங்களையும் இக்கால நிகழ்வுகள் பெற்றுத் தந்தன. இத்தகைய மாறுபட்ட சூழ்நிலைகளில் மக்கள் மீது பிரயோ கிக்கப்பட்ட இராணுவ நிர்ப்பந்தங்களும் இதற்குப் பதிலடியான மாற்று நடவடிக்கைகளும் கொடுத்த தாக்கத்தினால் மக்கள் மத்தியில் தோன்றிய பல்வேறு உணர்வலைகளால் சூழப்பட்ட பாத்திரங் களே இங்கு உங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ளன.
நூலாசிரியர் (முன்னுரையில்)
551 காலச்சாளரம். ராஜ ரீகாந்தன். கொழும்பு எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 1வது பதிப்பு. ஆகஸ்ட், 1994. (கொழும்பு 11: லங்கா ஏஷியா பிரின்ட், எஸ்.26, மூன்றாவது தளம், மத்திய கொழும்பு சிறப் பங்காடித் தொகுதி)
85 பக்கம். விலை: ரூபா 80. அளவு: 18x14 சமீ.
ஆசிரியரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகி அவரின் 12 ஆக் கங்களைத் தாங்கியுள்ள இந்நூலில், இடம்பெறும் கதைகளில் மூன்று, ரஷ்ய உக்ரேனிய மொழிகளிலும், நான்கு, ஆங்கிலத்திலும், மூன்று சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
552 கிராமத்து மண்கள் சிவக்கின்றன. சித்ரா நாகநாதன். திருக் கோணமலை; தாகம் வெளியீட்டகம், சினேக் லேன், 1வது பதிப்பு, ஏப்ரல் 1990. (கொழும்பு 10: செரான் பிரின்டர்ஸ்)
w
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 165

Page 97
8948(4) சிறுகதைகள்
XVi,128 பக்கம். விலை: ரூபா 3000. அளவு: 19x13 சமீ.
இத்தொகுதியில் உள்ள 15 சிறுகதைகளும் சிறுமையை, வறுமையை வெளிப்படுத்தும் கருவியாக மட்டுமன்றி, சமூகத்தின் ஊழல்களை அந்நியர்களின் சுரண்டலை, நாட்டின் பொருளாதாரச் சீரழிவை, கலப்பு மணத்தின் முக்கியத்துவத்தை, மத சுதந்திரத் தின் அவசியத்தை, தமிழீழப் போராட்டத்தில் பெண்களின் பங் களிப்பை, அரசின் மனிதஉரிமைமீறல்களை, இயக்கமோதல்களின் அழிவினை, ஒற்றுமையின் அவசியத்தை அலசி ஆராய்கின்றன.
553 கிழக்கு நோக்கி சில மேகங்கள். பொ.கருணாகரமூர்த்தி, சென் னை 14: ஸ்னேகா பப்ளிஷர்ஸ், 348 இராயப்பேட்டை நெடுஞ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (சென்னை 14: சேகர் ஒப்செட் பிரிண்டர்ஸ்) (38),132 பக்கம். விலை: இந்திய ரூபா 45. அளவு 21.5x13.5 சமீ.
ஜேர்மன்-பேர்லினில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிரியரின் 13 சிறு கதைகளின் தொகுதி. இன்குலாப்பின் முன்னுரையுடன் கூடியது.
554 குறமகள் கதைகள். வள்ளிநாயகி இராமலிங்கம். யாழ்ப் பாணம்: யாழ் இலக்கிய வட்டம், இலங்கை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்டீனா வெளியீடு) 120 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 18x12.5 சமீ.
குறமகள் கதைகள். வள்ளிநாயகி இராமலிங்கம். சென்னை 24: மித்ர வெளியீடு, 375/8,10 ஆர்க்காடு ரோட், 1வது பதிப்பு, டிசம்பர் 2000 (Glggi 6060T 24: Mitra Arts and Creations) 144 பக்கம். விலை: இந்திய ரூபா 45 அளவு: 18x12.5 சமீ. (மித்ர வெளியீட்டின் 1வது பதிப்பு)
குறமகள் (இயற்பெயர்:வள்ளிநாயகி இராமலிங்கம்) பெண்களின் சமூக விடுதலைக்கான கருத்துக்களைத் தம் சிறுகதைகளில் பொறிக்கும் போது குடும்பஉறவின் பிணைப்பு அறாமல் வலுப்படும் படி சமூகப்பொறுப்புடன் எழுதுபவர். இவரது சிறுகதைகள் நம்பிக் கையூட்டும் உணர்ச்சிச் சித்திரங்கள். இப்படித்தான் வாழ்ந்து முடிப் போம் எனத்தமக்கென ஒரு கருத்து நெறியினை வகுத்துச் செயற் படும் கதாபாத்திரங்களை இவரது சிறுகதைகளில் காண முடியும்.
-செங்கைஆழியான் (1வது பதிப்பின் பதிப்புரையில்)
166 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
555 கொருத்தல். சுதாராஜ். யாழ்ப்பாணம், சிரித்திரன் பிரசுரம், 550 கே. கே.எஸ். வீதி, 1வது பதிப்பு, ஜூன் 1983. (யாழ்ப்பாணம்; சிரித்திரன் அச்சகம்)
149 பக்கம். விலை: ரூபா 14. அளவு 21X13.5 சமீ.
ஈழத்துத் தமிழ்ச்சஞ்சிகைகளில் வெளியான ஆசிரியரின் பன்னிரு கதைகளின் தொகுப்பு.
556 சத்தியங்கள். நெல்லை க.பேரன். கரவெட்டி: ஷர்மிளா பதிப்பகம், நெல்லியடி, 1வது பதிப்பு, ஜனவரி 1987. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்)
vi,130 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 175x12 சமீ.
பேரன், 1966 முதல் 1986 வரை பல்வேறு காலகட்டங்களில் எழுதி, பத்திரிகைகளிலும் சிறு சஞ்சிகைகளிலும் வெளியானவற்றுள் தேர்ந் தெடுக்கப்பட்ட 17 சிறுகதைகளின் தொகுப்பு.
557 சாயல். ஜே.எம்.சாலி. கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1983. (கொழும்பு 9. டெவலோ பிரின்ட், 69, அல்பியன் வீதி). 68 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
தமிழக எழுத்தாளர் ஜே.எம்.சாலியின் சிறுகதைத் தொகுப்பு. தீர்ப்பு, ஒட்டு, குர்பாணி, நோன்பு, கிளிமுள், கிணறு, சாயல் ஆகியன இஸ் லாமியப் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளாகும்.
558 சொர்ணம்மா: சிறுகதைகள், முல்லை பொன். புத்திசிகாமணி. சென்னை 17. மணிமேகலைப்பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (சென்னை 94: Scripts Offset) 260 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 18.5x12.5 சமீ.
சொர்ணம்மா என்ற தாயின் பாத்திரத்தினூடாகத் தாயகமண்ணின் நிரந்தரக் குடிமக்கள் இராணுவக் கெடுபிடிகளினால் அகதிகளாகப் புலம்பெயர்ந்த வரலாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேலும் தாயகத்தில் தமிழ்மக்களின் சோகவரலாற்றைச் சித்திரிக்கும் ஏழு கதைகள் அடங்கியுள்ளது.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 167

Page 98
8948(4) சிறுகதைகள்
559 டொமினிக் ஜீவா சிறுகதைகள். டொமினிக் ஜீவா. யாழ்ப் பாணம்: மல்லிகைப்பந்தல், 234 B. காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (சென்னை 14: சித்ரா பிரிண்டோகிராபி, 24 பொன்னுச்சாமி தெரு, இராயப்பேட்டை) (8),544 பக்கம். விலை: ரூபா 150. அளவு: 18x12 சமீ.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வந்துள்ள ஆசிரியரின் 50 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
560 தகவம் பரிசுக்கதைகள்: தொகுதி 1. நூல் வெளியீட்டுக் குழு, யாழ்ப்பாணம்: தமிழ்க் கதைஞர் வட்டம், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: விஜயா அச்சகம்) xi,146 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x13 சமீ.
தமிழ்க்கதைஞர் வட்டம், இலங்கையில் வெளிவரும் சிறுகதை களைத் திரட்டிக் காலாண்டுக்கொரு முறையாக மதிப்பிட்டு, அவற் றுள்ளே சிறந்ததைத் தெரிவுசெய்து வருகின்றது. அவ்வாறு 1975 முதல் 1979 முதற் காலாண்டு முடியவுள்ள காலப்பகுதியில் தேர்ந் தெடுக்கப்பட்ட இலக்கியப்படைப்புக்கள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. இதில் தெணியான், ஆனந்தபைரவி, க.சட்டநாதன், ந. சண்முகரத்தினம், கே.ஆர்.டேவிட், மாத்தளை வடிவேலன், பரிபூரணன், அன்ரனி மனோகரன், சொக்கன், ஆகியவர்களுடைய 12 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
561 தலைவிதியைப் பறிகொருத்தோர். யோ.பெனடிக்ற் பாலன். கொழும்பு 13: குறிஞ்சி வெளியீடு, 12925, ஜெம்பட்டா வீதி. 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ்) 160 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18x12.5 சமீ.
இத் தொகுதியில் அடங்கியுள்ள 16 கதைகளும் கற்பனைகள் அல்ல. நான் இலங்கை மக்களின் சமூகத்தில் உறவாடி மக் களுடன் வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் உண்மையான, உணர் வுபூர்வமான நிகழ்வுகளினதும் உணர்வுகளினதும் சத்தியமான வெளிப்பாடுகளே இக்கதைகள்.
-ஆசிரியர் (என்னுரையில்)
562 திகட சக்கரம். அ.முத்துலிங்கம். சென்னை: காந்தளகம், 4 முதல்மாடி, 834, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஆனி 1995.
168 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
(சென்னை: காந்தளகம்) 130 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
இச் சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகள் யாவும் மேற்கு ஆபிரிக்கா, சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளின் பின்னணியில் அமைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
563 தியானம். என்.கே.மகாலிங்கம். கொழும்பு 13: பூரணி வெளியீடு, 37 Shoe Road, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1982. (சென்னை 40: மீரா நிறுவன அச்சகம்) 65 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
இதயம், மல்லிகை, பூரணி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு.
564 தூரத்து பூபாளம். S.நாகூர் கனி. கொழும்பு 12: இஸ்லாமிய நலவுரிமைச் சங்கம், வாழைத்தோட்டம், 1வது பதிப்பு, 1983. (கொழும்பு 12, ஷபினா பிரஸ், 20 பிரைஸ் பிளேஸ்) 140 பக்கம். விலை: ரூபா 18 அளவு: 18x12 சமீ.
பல்வேறு போட்டிகளில் இடம்பெற்ற பரிசுக்கதைகள் மற்றும் பத்திரி கைகளில் வெளிவந்த 13 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறு கதையின் முடிவிலும் பத்திரிகையில் அக்கதை வெளிவந்தபோது பிரசுரமான வாசகர் விமர்சனக்கடிதங்களும் இடம்பெற்றுள்ளமை சிறப் பம்சமாகும்.
565 தெய்வம் பேசுவதில்லை. ந.பாலேஸ்வரி. சென்னை 600002 காந்தளகம்: 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, மார்கழி 2000. (சென்னை 600002. காந்தளகம், 4, முதல்மாடி, 834 அண்ணாசாலை) 277 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18x12 சமீ.
1960-1980 காலப்பகுதியில் இலங்கையில் வெளிவந்த சிறுகதை களில் தேர்ந்த 29 கதைகள் இதில் அடங்கியுள்ளன.
566 தெருவில் அலையும் தெய்வங்கள். சிறுகதைத்தொகுப்பு. விமல் குழந்தைவேல். சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், 1வது
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 169

Page 99
8948(4) சிறுகதைகள்
பதிப்பு, 1998. (சென்னை 24: சதுர்வேந்தன் அச்சகம்) (4),116 பக்கம். விலை: இந்திய ரூபா 22 அளவு: 17.5x12 சமீ.
ஒரு சாதாரண பாமரனின் மனதைப் பாதித்த சில நிகழ்வுகள் இக் கதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஈழத்தமிழரின் ஒரு காலகட்ட அவல வரலாற்றைச் சித்திரிப்பதாக அமைந்துள்ள 12 சிறுகதை களின் தொகுப்பு.
567 தோட்டக்காட்டினிலே. மலரன்பன், மாத்தளை சோமு, மாத் தளை வடிவேலன். மாத்தளை: தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், 367, பிரதான விதி. 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: கவின் அச்சகம், காங்கேசன்துறை வீதி) (16).98 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
மலையக மக்களின் சோக வாழ்வைப் பகைப்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு.
568 நந்தியின் கதைகள். செ.சிவஞானசுந்தரம் (நந்தி). சென்னை 26: குமரன் வெளியீட்டகம், குமரன்காலனி, வடபழநி, 1வது பதிப்பு, மே 1994. (சென்னை 24: அலைகள் அச்சகம்) iv,140 பக்கம். விலை: இந்திய ரூபா 22. அளவு: 18x12.5 சமீ.
நந்தியின் 11 சிறுகதைகள் அடங்கிய தொகுதி. நந்தியின் படைப் புக்கள் பற்றிக் கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய விரிவான திறனாய்வுக் கட்டுரையும் நூலில் காணப்படுகின்றது.
569 நம்பிக்கை நாற்றுகள்: சிறுகதைத்தொகுதி. எம்.அரியநாயகம். பிரான்ஸ்: ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (சென்னை 24 விசாலம் பிரின்டிங் ஹவுஸ்) 160 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற எழுத்தாளர்களின் சிறுகதை களும் பிரெஞ்சுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புக்களும் இந் நூலில் இடம்பெற்றுள்ளன.
570 நமக்கெண்றொரு பூமி. மாத்தளை சோமு. மதுரை 1: மீனாட்சி புத்தக நிலையம், 60 மேலக்கோபுரத் தெரு, சென்னை 14.
170 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
1வது பதிப்பு, 1984. (சென்னை 14: ஜெயறி பிரின்டர்ஸ்). 128 பக்கம். விலை: இந்திய ரூபா 8.75. அளவு: 8x12 சமீ
மலையக மக்களையும் அவர்களது வாழ்க்கைகையும் பகைப் புலமாகக் கொண்டு ஆக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு.
571 நாளைக்கு இன்னொருத்தன். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 79, 1வது தெரு, குமரன் காலனி, வடபழநி, 1வது பதிப்பு, ஜூன் 1997 (சென்னை 14: சித்ரா பிரின்டோகிரபி) 200 பக்கம். விலை: இந்திய ரூபா 36. அளவு: 18x12.5 சமீ.
ஆசிரியரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளது. ஆணாதிக்கத்தின் சட்டதிட்டங்கள், சமூக வழக்கங்களின் சமய ஒழுங்குகள் என்பனவற்றுக்குள் ஒதுக்கப்பட்டுத் தங்கள் ஆத்மா வை இழந்து கொண்டிருக்கும் பெண்களின் சோகங்களைத் தழுவி எழுதப்பெற்ற 18 சிறுகதைகள் இவை.
572 நியாயமான போராட்டங்கள். கோப்பாய் சிவம். (இயற்பெயர். ப.சிவானந்த சர்மா). கிளிநொச்சி. பத்திரிகையாளர் வாசகர் நலன் புரிச்சங்கம், 1வது பதிப்பு, 1985. (கிளிநொச்சி. சர்வசக்தி குருகுலம்) X.65 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ
இது ஏழு பரிசுச்சிறுகதைகளின் தொகுப்பாகும். ஒரு மரண ஊர்வலம் புறப்படப் போகின்றது, நியாயமான போராட்டங்கள் ஆகிய இரண்டும் யாழ்ப்பாணச் சாதியமைப்பின் ஒரு கோணத்தைச் சித்திரிப்பவை. ஏக்கங்கள், கணிப்பு, நிழல்களும் நிஜங்களும், அவனும் இவளும், சிதைந்த கூடு, ஆகிய ஐந்து சிறுகதைகளும் மனித அகஉணர்வு களின் அறிவுபூர்வமான வெளிப்பாடுகளைச் சித்திரிப்பன.
573 நிழல்கள். சந்திரா தியாகராஜா. பருத்தித்துறை: யதார்த்தா, உதயன் புத்தக நிலையம், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: நியூ ஈறா பப்ளிக்கேஷன்ஸ்) 163 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 19X12 சமீ.
ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த 5 சிறுகதை களினதும் 1984-85 இரசிகமணி கனக. செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலினதும் தொகுப்பு.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 171

Page 100
8948(4) சிறுகதைகள்
574 நீ சாகமாட்டாய் ராதா, எஸ்.தியாகராஜா. சென்னை 17: மணி மேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு, 2001 (சென்னை94: Scripts Offset) 184 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18x12.5 சமீ.
இருபது வருடகால இடைவெளியில் ஈழத்துத் தமிழ்மக்களின் வாழ் நிலையைப் பகைப்புலமாகக் கொண்ட வசந்த நாடகம்(1977), கீரிமலை பஸ்ஸில் ஒரு கட்டழகி (1973), நீ சாகமாட்டாய் ராதா (1983), ஒ தெரெசா என்ன செய்து விட்டாள் (1990), தெய்வ உலா (1998) ஆகிய ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு.
575 பனிப்பாறைகளும் சுருகின்றன. கல்லாறு சதீஷ், சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு, 1999. (சென்னை 05: எம்.கே. என்டர்பிரைஸஸ்) xiv,194 பக்கம், புகைப்படங்கள். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18.5x12.5 g.
18 சிறுகதைகளின் தொகுப்பு. புலம்பெயர் நாடுகளில் கலாச்சாரச் சூழலில் சிக்கி எமது தமிழ்ப்பெற்றோரும் பிள்ளைகளும் எவ்வளவு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை விளக்குவதாக தலைப்புச் சிறுகதை அமைகின்றது. அந்நிய மண் ணில் எம்மவர் எதிர்நோக்கும் அன்றாடச் சிக்கல்களை மையமாக வைத்துப் புனையப்பெற்ற சிறுகதைகள்.
576 பனியும் பனையும்: புலம்பெயர்ந்த 39 கலைஞர்களின் புதுக் கதைகள். இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (சென்னை 94; கோகில பூரீ பிரின்டர்ஸ்) 404 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18x12 சமீ.
இந்நூல் முழுவதும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத் தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாகும்.
577 பாதுகை. டொமினிக் ஜீவா. சென்னை 600098 நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி. சிட்கோ இன்டஸ்ரியல் எஸ்டேட், 3வது பதிப்பு, 1986. 1வது பதிப்பு, 1962, 2வது பதிப்பு, 1979. (சென்னை 12: A.M.P.பிரஸ், 95, அன்னை சத்தியா நகர்)
172 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
140 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் பதினொரு சிறுகதை களின் தொகுப்பு.
578 பாதை. நீர்வை பொன்னையன், கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தக சாலை, 340 செட்டியார்தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1997.(சென்னை 14: சித்ரா பிரின்டோகிரபி, 24 பொன்னுச்சாமி தெரு, ராயப்பேட்டை) 212 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 18X12 சமீ.
1960களில் ஆரம்பித்து 1970களில் தொழிற்சங்க, விவசாய சங்க வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை நாம் நடாத்திய போராட்டங் களிலிருந்தும் பெற்ற அனுபவங்களையும் உணர்வுகளையும் போராட் டங்களின் மூலம் கற்றவற்றையும் பட்டை தீட்டி சிருஷ்டிகளாக எமது மக்களுக்கே திருப்பிக் கொடுத்திருக்கின்றேன்.
ஆசிரியர் (முன்னுரையில்)
579 பிரசவங்கள். கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை, சிவன் கல்வி நிலையம், விழிசிட்டி. 1வது பதிப்பு, 1986. (குரும்பசிட்டி: அம்பிகா அச்சகம்)
126 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18X12 சமீ.
ஈழத்தமிழரின் சமூகப்பிரச்சினைகளைப் பகைப்புலமாகக் கொண்டு பின்னப்பட்ட 14 சிறுகதைகளின் தொகுப்பு.
58O புண்ணிய பூமி. சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: திருமதி செ. ராமேஸ்வரன், 41/2 சித்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (மஹரகம; தரஞ்ஜி பிரின்டர்ஸ், நாவின்ன) 96 பக்கம். விலை: ரூபா 80. அளவு: 21x13.5 சமீ.
பெண்மை, இனக்குரோதம், கலாசாரம், மனிதாபிமானம், மனிதப்பெறு மதிகள் போன்ற பரந்துபட்ட கருத்துக்களை மையமாக வைத்து இக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இது 11 சிறுகதைகளுடன் வெளிவருகின்றது.
58 புது உலகம் எமை நோக்கி. சக்தி, நோர்வே சக்தி வெளியீடு, ஒஸ்லோ, 1வது பதிப்பு, ஜூலை 1999. (அச்சக விபரம் குறிப்பிடப் படவில்லை)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 173

Page 101
8948(4) சிறுகதைகள்
148 பக்கம். விலை; நோர்வே குரோணர் 80. அளவு; 21X15 சமீ.
இந்நூலில் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 23 சிறுகதை களிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் துன் பங்கள், ஒடுக்குமுறைகள், சந்தேகங்கள், தனிமைகள் என்பவற் றிலிருந்து விடுபட முயலும் துடிப்பும், பெண் விடுதலை பற்றிய உணர்வும், பெண் நிலைவாதச் சிந்தனைகளின் வெளிப்பாடு களும் இடம்பெற்றுள்ளன.
582 புது யுகம் பிறக்கிறது. மு.தளையசிங்கம். கோயமுத்தூர் 15: சமுதாயம் பிரசுராலயம், 2வது பதிப்பு, டிசம்பர் 1984 (1வது பதிப்பு, இலங்கையில்). (கோயமுத்தூர்: பாரிஜாதம் அச்சகம்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x13 சமீ.
நடைமுறையிலுள்ள இக்கால சமூக வாழ்க்கை அமைப்பிலும் அதை அங்கீகரிக்கும் அறிவுநிலையிலும் அதிருப்தி கொண்டு அவற்றையே இக்காலத்துக்குரிய ஆத்மாவின் வீழ்ச்சியாகக் கண்டு அந்த ஆத்மவீழ்ச்சியை மீற முயலும் பல்வேறுவகைப் புரட்சி களைப் படம் பிடிக்கும் தொகுதியாக அமையும் 11 சிறுகதை கள் இங்கே தொகுக்கப்பெற்றுள்ளன.
583 புயலை எதிர்க்கும் பூக்கள். ஆதிலட்சுமி இராசையா. யாழ்ப் பாணம்: ஆதிலட்சுமி இராசையா, காங்கேசன்துறை வீதி, கோண் டாவில், 1வது பதிப்பு, சித்திரை 1990. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம்). (16),100 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 185x12.5 சமீ.
சமுதாயம், நாகரீகம் வளர்ந்துள்ள நிலையில் மனித மேம்பாட்டின் பெருமைகளை மட்டுமின்றி, அவற்றுள் புரையோடியிருக்கும் போலி களையும் அவலங்களையும் இனம்கண்டு ஆராய்ந்தறியும் தன்மை யும் மனிதநேயத்தின்பாற் கொண்ட பற்றுதலின் காரணமாய் எழும் மனிதாபிமான உணர்வும் அதற்குப் பரிகாரம் காணமுயலும் தவிப் பும் ஆர்வமும் ஆசிரியரிடம் காண முடிகின்றது.
-கே.எஸ்.ஆனந்தன் (அணிந்துரையில்)
584 பெயர் ஒன்று வேண்டும். இராஜன் முருகவேல். சென்னை 17 மணிமேகலைப் பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர்,
174 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
1வது பதிப்பு, செப்டம்பர் 2000. (சென்னை 94; ஸ்கிரிப்ட் ஒப்செட்) 160 பக்கம். விலை: இந்திய ரூபா 33. அளவு: 18.5X12.5 சமீ.
பூவரசு, மண், ஆகிய ஜேர்மன் சிறுசஞ்சிகைகளில் வெளியான 14 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலானவை 90களின் பின் எழுதப் பெற்றவை. புலம்பெயர்வாழ்வில் எதிர்நோக்கும் சமகால அனுபவப் பகிர்வுகளாக அமையும் சிறுகதைகள்.
585 மண்ணைத் தேரும் மனங்கள்: சிறுகதைத்தொகுதி. எம். அரியநாயகம். பிரான்ஸ்: ஐரோப்பியத்தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1986. (சென்னை 14: மூவேந்தர் அச்சகம்) 107 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
எழுத்துலகிற்குப் புதியவர்கள் சிலருடைய கன்னிப் படைப்பகளான 11 சிறுகதைகளை இந்நூல் கொண்டுள்ளது. -
586 மருதுர் கொத்தன் கதைகள். மருதூர் கொத்தன். (இயற் பெயர்: வீ.எம்.இஸ்மாயில்) கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம். சாய்ந்தமருது. 1வது பதிப்பு, 1985. (மட்டக்களப்பு: கத் தோலிக்க அச்சகம்) (18),132 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18.5X13 சமீ.
கொத்தனின் கதைகள் 70க்குப் பிறகு ஈழத்துச் சிறுகதைகளின் போக்கினையும் கருவினையும் அழகுறச் சித்திரிக்கின்றன.
அ.ஸ்.அப்துஸ் சமது (அணிந்துரையில்)
587 மலையகச்சிறுகதைகள். துரை, விஸ்வநாதன் (பதிப்பாசிரியர்). சென்னை 17. துரைவி பதிப்பகம், 20A9, கோபாலகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1997. (சென்னை 14: பார்க்கர் கம்பியுட்டர்ஸ், 293, அகமது வணிக வளாகம், இராயப் பேட்டை நெடுஞ்சாலை.) 322 பக்கம். விலை: இந்திய ரூபா 75 அளவு: 17.5x12 சமீ.
33 மலையக எழுத்தாளர்களின் தேர்ந்த சிறுகதைத்தொகுப்பு. இலங் கையின் பெருந்தோட்டத்துறை மக்களின் அன்றாட வாழ்வை சித் திரிக்கும் கதைகள். சிறுகதை ஆக்கியோர் பற்றிய குறிப்புக்களும் ஒவ்வொரு சிறுகதைகளுக்கு முன்பாகவும் தரப்பட்டுள்ளன.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 175

Page 102
8948(4) சிறுகதைகள்
588 மலையகப்பரிசுக் கதைகள்: கலைஒளி முத்தையாபிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டி, மணிமேகலை கமலகாந்தன். கொழும்பு 13: கலைஒளி முத்தையாபிள்ளை நினைவுக் குழு, 1வது பதிப்பு, டிசம்பர் 1994 (சென்னை 28. ஆர்க் பிரின்டர்ஸ்) 115 பக்கம். விலை: இந்திய ரூபா 75 அளவு: 21.5x13.5 சமீ.
மலையக ஊடகவியல் முன்னோடியான பதுளை கலைஒளி முத் தையா நினைவாக நடத்தப்பெற்ற மலையகச் சிறுகதைப் போட் டியில் தெரிவுசெய்யப்பட்ட 16 எழுத்தாளர்களின் சிறுகதைகள்.
589 மனித சொரூபங்கள். கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: சிவன் கல்வி நிலையம், 1வது பதிப்பு, டிசம்பர் 1982. (தெல்லிப் பழை: குகன் அச்சகம்) XVi,71 பக்கம். விலை: ரூபா 10. அளவு 21X14 சமீ.
இவர் படைக்கும் கதைகளுக்கு யாழ்ப்பாணச்சமுதாயம் பின்னணி யாக அமையினும், சமுதாயச் சீர்கேடுகள், குருட்டு நம்பிக்கைகள், எல்லைத்தகராறுகள், இலங்கை முழுமைக்கும் பொதுமையாக அமைகின்றன. பாத்திரங்கள் யாழ்ப்பாண உயிரோவியங்களாயினும் பிராந்தியச் சிறுவட்டத்தைக் கடந்து அவை பொதுமையைப் பெறு கின்றன. ஆசிரியரின் பன்னிரு சிறுகதைகளும் பத்திரிகைகள், சிறு சஞ்சிகைகளில் பிரசுரமானவை.
590 மனிதமாடு. அ.செ.முருகானந்தன். யாழ்ப்பாணம்: யாழ். மாவட்டக் கலாச்சாரப் பேரவை. 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர் வாதம் அச்சகம்) XX,164 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18X13 சமீ.
ஈழத்தின் தமிழ்ச்சிறுகதை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக் கால வரலாறுடையது. 1930ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இலங்கையர் கோன், சம்பந்தன், சி.வைத்திலிங்கம் ஆகியோர் இத்துறையில் முதல் முயற்சிகளை மேற்கொண்டனர். இம்முதல் மூவரையும் அடுத்து இரண்டாவது தலைமுறையொன்று 1940ம் ஆண்டுகளின் தொடக்கத்திற் சிறுகதைத்துறையிற் கவனம் செலுத்தத் தொடங் கியது. இவ்விரண்டாம் காலகட்ட எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் அ.செ.மு. அவர்கள். இவர் எழுதிய பெருந்தொகையான சிறுகதைகளில் 24 கதைகள் மனித மாடு என்ற தலைப்பில் நூல் வடிவம் பெறுகின்றது.
-சு.வித்தியானந்தன் (அணிந்துரையில்)
176 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

894.864) சிறுகதைகள்
59 மாற்றம். க.சட்டநாதன். யாழ்ப்பாணம்: 1717 பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜூன் 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம்)
102 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 18x12.5 சமீ.
இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச்சுற்றிப் பிணைந்து கிடக்கும் தளைகளைத் தகர்த்து விட்டு விடுதலையாவது இக்கதைகளில் இயல்பாகவே சாத்திய மா கின்றது. மல்லிகை, அஞ்சலி, பூரணி, அலை ஆகிய சிறுசஞ்சிகை களில் வெளிவந்த ஆறு சிறுகதைகளின் தொகுப்பு.
592 மானிடம் எங்கே போகிறது?: உருவகக்கதைகள், சு.பாக்கிய நாதன். சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, 7, தணிகாசலம் சாலை, 1வது பதிப்பு, 2000. (சென்னை 5 எம்.கே. என்ரர்பிரைஸஸ்) 64 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 18x12.5 சமீ.
ஜேர்மெனியிலிருந்து வெளிவரும் கலைவிளக்கு சஞ்சிகையில் பிரசுர மான சமூகவிழிப்புணர்வை ஊட்டும் 18 உருவகக் கதைகளின் தொகுப்பு.
593 மீறல்கள். மு.பவர். யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234B, காங் கேசன்துறை வீதி 1வது பதிப்பு, நவம்பர் 1996. (சென்னை 600006: சுமதி லேசர்ஸ்) xi,98 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
14 சிறுகதைகளின் தொகுப்பு.
594 முகம் தேடும் மனிதன். குமார் மூர்த்தி. சென்னை 11 காலம் வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1995. (சென்னை5: கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 17.5X12.5 சமீ.
அரசியலின் அசுரப்பிடியில் சிக்குண்டு அல்லலுறும் ஈழத்தமிழர் வாழ்
வின் அவலங்களையும், கோரங்களையும் ஆசிரியர் தம் படைப்புக ளில் வெளிப்படுத்துகின்றார்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 177

Page 103
894804) சிறுகதைகள்
595 முரண்பாடுகளின் அறுவடை. கோகிலா மகேந்திரன். தெல் லிப்பழை, சிவன் கல்விநிலைய வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1984. (தெல்லிப்பழை, குகன் அச்சகம்) xi,125 பக்கம். விலை: ரூபா 16. அளவு: 18x12.5 சமீ.
ஆசிரியரின் 14 சிறுகதைகளின் தொகுப்பு.
596 மெல்லத் தமிழ் இனி. புலோலியூர் செ.கந்தசாமி. கொழும்பு: மீரா வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஜூன் 1999 (கொழும்பு 12: பேஜ் செட்டர்ஸ், 72 மெசெஞ்சர் வீதி) vi,96 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 19.5X13.5 சமீ
ஆசிரியரின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு. கடந்த மூன்று தசாப்த காலங்களாக ஒரு பிராந்தியத்தில் நிகழ்ந்த சமூகமாறுதல் கள் இவரது படைப்புக்களில் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகள் பற்றிய இவரது சீற் றம் இவரது பெரும்பாலான கதைகளில் பிரதிபலிக்கின்றது.
597 மேக மலைகளின் ராகங்கள். மொழிவரதன். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57, மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, 1988. (கண்டி ரோயல் அச்சகம், 190, கொழும்பு வீதி) 70 பக்கம். விலை: ரூபா 19:50. அளவு: 18x12.5 சமீ.
மலையக மக்களின் வாழ்க்கை அவலங்களைச் சித்திரிக்கும் ஒன் பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
598 மோக வாசல். ரஞ்சகுமார். பருத்தித்துறை: யதார்த்தா பிரசுரம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: விஜயா அழுத்தகம்) 78 பக்கம், விளக்கப்பட ஓவியங்கள் 7, விலை: ரூபா 40. அளவு: 21X14 guð.
சுருக்கு ஊஞ்சலும் கபரக்கொய்யாக்களும், காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோசலை, அரசி, கோளாறு பதிகம், மோகவாசல் ஆகிய ஏழு சிறுகதைகளின் தொகுப்பு.
599 யாழ் இனிது. சாந்தன். சென்னை 02: A.A.H.K.Ghori, 1வது
178 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

894.864) சிறுகதைகள்
Lug5'L, 6jj6) 1998. (Gagóró060T 04: Dot and Dots) 108 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12 சமீ.
மணிக்கதைப் பாங்கில் அமைந்த குட்டிக்கதைகளின் வாயிலாக மகத் தான செய்திகளை ஆசிரியர் தெளிவு படுத்தியுள்ளார்.
600 யுகங்கள் கணக் கல்ல. கவிதா (இயற்பெயர் நாகேஸ் வரி கணபதிப்பிள்ளை), சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, நவம்பர் 1986. (சென்னை 17: தமிழோசை அச்சகம், 84, ஹபிபுள்ளா வீதி) 194 பக்கம். விலை: இந்திய ரூபா 16. அளவு: 18.5x12.5 சமீ.
1969-73 காலப்பகுதியில் வீரகேசரி, வானொலி மஞ்சரி, மலர் ஆகிய வற்றுக்காக ஆக்கப்பெற்ற 13 சிறுகதைகளின் தொகுப்பு.
6O. யுகமலர். யோகா பாலச் சந்திரன். கொழும்பு 6: ஜெயபாரதி வெளியீடு, 57 மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, 1983. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி) 96 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18X12 சமீ.
பெண்களின் மன உணர்வுகளையும் உளைச்சல்களையும் துன்பங் களையும் பகைப்புலமாகக் கொண்ட 12 சிறுகதைகளின் தொகுதி. பெண்விடுதலை உணர்வு, குடும்பப்பிணைப்பு மத்திய கிழக்கு பணிப் பெண் வேலை, குடும்பப்பற்று, பாசம், மதுவால் பெண்கள் அடையும் துன்பங்கள், பெண்களின் துணிச்சலான முற்போக்கான முடிவுகள் ஆகியவை கதைகளில் ஊடுருவி நிற்கின்றன.
602 யெளவனமில்லாத யதார்த்தங்கள். இராஜன் முருகவேல். ஜேர் uD6ofl: Poovarasu Kaltur und Literatur Organisation, Postfach 10 34 01, 28034, Bremen, 1வது பதிப்பு, மார்ச் 1998. (ஜேர்மனி, பூவரசு) 60 பக்கம், சித்திரங்கள். விலை: ஜேர்மன் மார்க்குகள் 5.00, அளவு: 20.5X14 3Lỗ.
ஜேர்மனியில் அவ்வப்பொழுது வெளிவந்த சிறு சஞ்சிகைகளில் பிரசுரமான 10 சிறுகதைகளின் தொகுப்பு.
603 வடக்கு விதி. அ.முத்துலிங்கம். சென்னை 600017 மணிமேகலைப் பிரசுரம், 4, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 179

Page 104
8948(4) சிறுகதைகள்
1998. (Chennai 600005: MK Enterprises) 216 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18.5x12.5 சமீ.
இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் சிறுகதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியாடுடே ஆகிய சஞ்சிகைகளிலும், அனைத்துலகத் தமிழ்ப்படைப்புக்களின் தொகுப்பான கிழக்கும் மேற்கும்(லண்டன்) மலரிலும் வெளிவந்தவையாகும்.
604 வம்ச விருத்தி. அ.முத்துலிங்கம். சென்னை: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (சென்னை: மித்ர புக் மேக்கர்ஸ்) 268 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5x12 சமீ.
இதில் பதினொரு சிறுகதைகள் அடங்கியுள்ளன.
605 வரண்டு போன மேகங்கள். திக்குவல்லை கமால். பண்டாரகம: பேசும் பேனா வெளியீடு, 191/3 அட்டுளுகம, பண்டாரகம, 1வது Luft'L, b6JibLil 1999. (Gu(b660)6T: Mass Graphics media, 63 Mosque Road, Beruwela) (8),107 பக்கம். விலை: ரூபா 75. அளவு: 18X13 சமீ. ISBN95595926-3-7.
இத்தொகுதியில் 1996-97ம் ஆண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கியுள்ளன.
606 வரதர் கதைகள். தி.சு.வரதராஜன். சென்னை 26: குமரன் பப் ளிஷர்ஸ், வடபழநி, 1வது பதிப்பு ஜூன் 1996. (சென்னை 14: சித்ரா பிரின்ரோகிரப்பி) w 168 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 18.5x12 சமீ.
ஈழத்து மூத்த சிறுகதை எழுத்தாளரான வரதரின் 12 சிறுகதைகள். தொடக்ககால ஈழத்துச் சிறுகதையின் பண்புகளை இக்கதைகள் கொண்டுள்ளன.
6O7 வலை. டானியல் அன்ரனி, யாழ்ப்பாணம்: சமர் இலக்கிய வட்ட வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 1987, (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664 ஆஸ்பத்திரி வீதி) 108 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x12 சமீ.
180 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள்
வீரகேசரி, சிந்தாமணி, மல்லிகை, கணையாழி, தாயகம், மாற்று, சமர் ஆகிய பத்திரிகை, சிறுசஞ்சிகைகளில் 1970-1980காலப்பகுதியில் வெளியான ஆசிரியரின் சிறுகதைகளின் தொகுப்பு. கடல்வலயத்து மக்களின் உயிர்ப்புள்ள வாழ்க்கையின் முழுமையான ஜீவனை இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் மூலம் தரிசிக்கமுடியும்.
608 வாழ்க்கை ஒரு தேவை. துரை எங்கரசு. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1 ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) X.97 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18x12 சமீ.
நான் வாழ்ந்த சமூகம், சுற்றாடலில் என்னையும் என் நண்பர்களையும் சுற்றத்தவர்களையும் நான் காண்பவற்றையுமே கருப்பொருளாக்கி, கதைகள் பின்னியுள்ளேன். எம்மக்களது தேவைகளும் தேடல்களும் என்ன என்பதையும் சொல்லியுள்ளேன்.
-துரை எங்கரசு (என்னுரையில்)
609
A. A ர் கவடுகள். நயிமா சித்திக். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1987 (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத் தோலிக்க அச்சகம்.)
60 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியான பதினொரு சிறு கதைகளின் தொகுப்பு. நூலின் அட்டையில் வாழ்க்கைச்சுவடுகள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
6 O வாழ்வின் தரிசனங்கள். டொமினிக் ஜீவா. சென்னை 78; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட், 1வது பதிப்பு, 1982. (சென்னை 5 நவஜோதி அச்சகம்) 127 பக்கம். விலை: இந்திய ரூபா 6. அளவு: 17.5x12.5 சமீ.
ஈழத்துச் சமுதாய வாழ்வைப் படம்பிடித்துக்காட்டும் பன்னிரு சிறு கதைகளின் தொகுப்பு.
61 விபசாரம் செய்யாதிருப்பாயாக. யோ.பெனடிக்ற் பாலன். கொழும்பு 15: விவேகா பிரசுராலயம், 134 எலி ஹவுஸ் வீதி, 1வது
g5 L, 35Tl)gigo)as 1995. (Colombo. United Merchants Ltd.)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 181

Page 105
8948(4) சிறுகதைகள்
Vi,124 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 21.5x13.5 சமீ.
1962-96 காலப்பகுதியில் ஆசிரியரால் எழுதப்பட்ட 18 சிறுகதைகள் அடங்கிய தொகுதி. தாமரை, தினகரன், ஈழநாடு, சிரித்திரன், சிந் தாமணி, வீரகேசரி, முரசொலி, தாயகம், குமரன், வசந்தம் ஆகிய ஏடுகளில் வெளிவந்தவை.
62 வெட்டுமுகம். இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன். சென்னை 02: தேசிய கலைஇலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1993, (சென்னை: சூர்யா அச்சகம்) 160 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
வீரகேசரியில் 1980-90 காலப்பகுதியில் பிரசுரமான 11 சிறுகதை களின் தொகுப்பாகவும், யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த மக்களின் வாழ்நிலைமைகளை சித்திரிப்பனவாகவும் அமை யும் கதைகள், ஆசிரியர் 1970களில் தமிழிலக்கியத்துறையில் அடியெடுத்து வைத்தவர். சமகால ஈழத்தின் ஒரு வெட்டுமுகப் பார்வை என்ற வகையில் இது தனிக் கவனிப்புக்குரிய ஒரு ஆக்கம்.
63 வெள்ளிப்பாதசரம்: இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்: முதல் தொகுதி. யோ.சுந்தரலட்சுமி, செ.யோகநாதன். சென்னை 2: சத்தியபாரதி பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1993, (சென்னை 14: சித்ரா பிரின்ரோகிரப்பி) 488 பக்கம், விலை: இந்திய ரூபா 80. அளவு: 175x12 சமீ.
ஈழத்துச் சிறுகதைகளின் வளர்ச்சித்தன்மை பற்றி, ஒரே பார்வை யில் அறிந்து கொள்வதற்கு இந்நூல் ஓரளவுக்கு உதவுகின்றது. சிறுகதையாசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் நூலில் இடம்பெற்றிருக் கின்றது.
64 வெளிச்சம்: சிறுகதைத்தொகுப்பு. முருகபூபதி. அவுஸ்தி (3J65u JAT: (p(g5bġb6iiii LiġióJLu85b, 170, Hothlyn Drive, Craigieburn, Victoria 3064,1வது பதிப்பு, 1998. (சென்னை 600026, குமரன் பதிப்பகம், 79, முதலாவது தெரு, குமரன் காலனி, வடபழனி) 160 பக்கம். விலை: இந்திய ரூபா 36. அளவு: 18x12 சமீ.
182 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(4) சிறுகதைகள், 894.8(5) நாவல்கள், குறுநாவல்கள்
அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இடர்கள், மன ஓட்டங்கள், குடும்ப உறவுகளின் சிதைவுகள், ஒட்டியும் ஒட்டாமலும் அங்கு வாழமுயலும் புதிய கலாச்சாரத்தின் பாதிப்புக்கள், முரண் பாடுகள் என்பனவற்றைச் சித்திரிக்கும் பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பு.
615 - ஜோர்ஜ் சந்திரசேகரன் சிறுகதைகள். ஜோர்ஜ் சந்திரசேகரன். கொழும்பு 13: அமோரா வெளியீடு, 99 ரட்ணம் வீதி, 1வது பதிப்பு, ஜூன் 1994. (கொழும்பு 10: ரட்ணம் பிரிண்டர்ஸ், 60ஏ, பூறி சங்க ராஜ மாவத்தை)
90 பக்கம். விலை: ரூபா 50. அளவு: 19.5x13 சமீ.
1960ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை எழுதிய பத்து சிறு கதைகளும் அதற்குப்பின்னர் எழுதிய இரண்டு சிறுகதைகளும் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
894.8(5) நாவல்கள், குறுநாவல்கள்
616 அக்கினிக்குஞ்சு. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: யாழ். இலக் கிய வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 1983. (யாழ்ப்பாணம்: விவேகா னந்தா அச்சகம்) X,80 பக்கம். விலை: ரூபா 6.90. அளவு: 17.5x12.5 சமீ.
யாழ். இலக்கியவட்டத்தின் 29வது வெளியீடு. தினகரன் நடத்திய குறுநாவல் போட்டியில் 1978இல் பரிசில் பெற்றது. தமிழ்மக்கள் மீதான இனவெறிக் கொடுமையும், தமிழர்களிடையே புரையோடிப் போன சாதிப்பாகுபாட்டுக் கொடுமைகளும் ஒப்பீட்டுரீதியில் பிணையப் பெற்ற குறுநாவல். 1976களில் யாழ்ப்பாணத்தில் தீவிரவாத இளைஞர் களைத் தேடி இராணுவமும் பொலிசாரும் வலைவீசித் திரிந்த காலத் தினைச் சித்திரிக்கும் கதையம்சம்.
1973இல் வீரகேசரியில் வெளிவந்த யொகாறா என்ற இஸ்லாமிய சமூ கப் பின்னணியில் மலர்ந்த குறுநாவலும் இணைக்கப்பட்டுள்ளது.
67 அகதியின் முகம். செ.யோகநாதன். சென்னை 600024 சத்ய பாரதி பதிப்பகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 1992, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1991 (சென்னை 14: சித்ரா பிரிண்டோகிரபி) 92 பக்கம். விலை: இந்திய ரூபா 14. அளவு: 18x12 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 183

Page 106
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்று (1991) கணையாழியில் பிரசுரமான அகதியின்முகம் குறுநாவல், ஈழத்தமிழரின் துயர் நிறைந்த அகதி வாழ்வையும் அவர்களின் தன்நம்பிக்கை தளராத உள்ளப்பாங்கையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் மனதை நெகிழும் விதத்தில் கூறும் கதை.
68 அரங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான். ஏ.வி.பி.கோமஸ். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, 1988. (கொழும்பு 2: Vat Print, 96 ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை) 56 பக்கம், விலை: ரூபா 10. அளவு: 17X12 சமீ.
தேயிலைத் தோட்டத்தில் மலர்ந்த ஒரு காதல் கதையை நாட்டார் பாடல் இடையிட்ட இக்குறுநாவல் விபரிக்கிறது. 1965இல் சுதந் திரன் வார இதழில் தொடராக வெளியிடப்பட்டது.
69 அந்நிய மனிதர்கள். செ.கணேசலிங்கன். சென்னை 1: பரதன் பதிப்பகம், 63. தையப்பன் தெரு. 1வது பதிப்பு, 1982. (சென்னை 14 வீப்சிக் பிரின்டர்ஸ்) 96 பக்கம். விலை: இந்திய ரூபா 4.50. அளவு: 18X12.5 சமீ.
இன்றைய சமுதாய அமைப்பில் பாட்டாளி வர்க்கத்தினால் மாத்திர மன்றி முதலாளிகளாலும் மனிதவாழ்வின் நிறைவை, பூரண மகிழ்ச் சியைக் காணமுடியாது என்ற கருத்தை உணர்த்தும் நாவல்.
620 அவள் நெஞ்சுக்குத் தெரியும். எஸ்.ஐ.நாகூர்கனி. (புனை பெயர்:அமுதன்). கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1986. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). 161 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12.5 சமீ
ஜானகிக்கென்று ஒரு நெஞ்சம் என்ற பெயரில் 25.4.1983 முதல் 11.6.1986 வரை இலங்கையில், தினகரன் வாரமலரில் வெளியான தொடர்கதையின் நூலுருவாகும். சமூக நாவல்.
62 ஆரைகள். சாந்தன். யாழ்ப்பாணம்: ரஜனி வெளியீடு, 223, சிவன் பணணை வீதி, 1வது பதிப்பு, 1985. மலர்1, இதழ்7. (யாழ்ப் பாணம்: திருமால் அச்சகம்) 48பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
184 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
ஆரைகள் நிலா என்ற இரு குறுங்கதைகள்.
622 இந்த நாடகம் அந்த மேடையில். சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: திருமதி செ.ராமேஸ்வரன், 4 1/2 சித்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1997. (மஹரகம; தரஞ்ஜி பிரின்டர்ஸ், நாவின்ன) 120 பக்கம். விலை: ரூபா 75 அளவு 21X14 சமீ.
குடும்பம் என்ற பந்தத்துக்குள் புகுந்தபின், அந்தக் கட்டுக்கோப்பி னுள் கட்டுப்பட்டு, தமது உணர்ச்சிகளை மழுங்கடித்து, நடைப் பிணமாக வாழ்வதைவிட கட்டுக்கோப்பை மீறுவது தவறா? இதற்கு விடைகாண முற்படும் கதையம்சம்.
இந்த நாடு உருப்படாது பார்க்க மண்ணின் தாகம்.
623 இருள் இரவில் அல்ல. இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (யாழ்ப் பாணம்: மணிஓசை அச்சகம்) (6),140 பக்கம். விலை: ரூபா 45. அளவு: 17.5x12.5 சமீ.
1986 பங்குனி 23 தொடக்கம் 20 வாரங்கள் தொடராக ஈழநாடு வார இதழில் வெளிவந்த நாவல். கணவனை இழந்த ஒரு இளம் பெண் சமுதாயத்தில் எதிர்நோக்கும் துயரங்களை உருக்கமாக வெளிப்படுத்துகின்றது இந்நாவல்.
624 இலட்சியப் பயணம். சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: திருமதி ராமேஸ்வரன், 4 1/2, சித்ரா ஒழுங்கை. 1வது பதிப்பு, ஜூன் 1994. (கொழும்பு 4: கிரியேட்டிவ் ஹான்ட்ஸ், 161-171 காலி வீதி) 132 பக்கம். விலை: ரூபா 70. அளவு: 21.5X14 சமீ.
1985 இல் மித்திரன் தினசரியில் 37 நாட்கள் தொடராக வெளி வந்த இளையநிலா அழுகிறது என்ற தொடர்நாவலின் திருத்திய பதிப்பு இதுவாகும்.
625
இவர்களும் வாழ்கிறார்கள். சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5:
திருமதி ராமேஸ்வரன், 3/8, ஐ அடுக்கு, அன்டர்சன் தொடர் மாடி,
1வது பதிப்பு, மார்ச் 1993, (கொழும்பு 4: 臀皆战砲 ஹான்ட்ஸ்,
;)&浮 gF
161 காலி வீதி, பஜபூம்பு தமிழ்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 185

Page 107
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
96 பக்கம். விலை: ரூபா 50. அளவு: 21.5X14 சமீ.
ஒரு தாயும் மகனும் வாழ்கிறார்கள் என்ற தலைப்பில் மித்திரன் வாரமலரில் 1985இல் பல வாரங்கள் தொடராக வெளிவந்த நாவல். ஒரு ஊதாரித் தந்தை, விதவையான மகள், அவளது 10 வயது மகன், விதவைக்கு வாழ்வளிக்க முன்வரும் வாலிபன், நல்ல காரியங்களைச் செய்யத் துடிக்கும் ஒரு ஊர்ப்பெரியவர் ஆகிய கதாபாத்திரங்களினூடாக 70ஆம் ஆண்டுகளின் பின்னணி யில் கதை நகர்த்தப்பட்டுள்ளது.
626 இளமைக்கோலங்கள். சுதாராஜ் கொழும்பு வீரகேசரி, தபால் பெட்டி இல. 160, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: எக்ஸ் பிரஸ் நியுஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட்.) 198 பக்கம். விலை: ரூபா 790. அளவு: 18x12 சமீ,
உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்து பல பிரச்சினைகளு டனும் மனப்போராட்டங்களுடனும் சீவியம் நடத்தும் இளம்உள்ளங் களின் கதை.
627 இன்றல்ல, நாளையே கலியாணம். சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: திருமதி ராமேஸ்வரன், 4 1/2, சித்ரா ஒழுங்கை. 1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (மஹரகம: தரஞ்ஜி பிரிண்ட்ஸ், 506, ஹைலெவல் வீதி நாவின்ன.) vi,104 பக்கம். விலை: ரூபா 50. அளவு 21.5X14 சமீ. ISBN 95596O39-0-6
ஒரு வாடகை வீட்டில் தொழில் நிமித்தம் சேர்ந்து வாழும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆறு இளம்பெண்களின் அன்றாட வாழ்க்கை யைப் பகைப்புலமாகக் கொண்ட நாவல்.
628 இனிப்படமாட்டேன். சி.வி.வேலுப்பிள்ளை. மதுரை: மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுர வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1984. (சென்னை 17: அகத்தியர் அச்சுக்கூடம்) 196 பக்கம். விலை: இந்திய ரூபா 11. அளவு: 18x12 சமீ.
இலங்கை இந்திய வம்சாவளித்தமிழர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் நாவல்.
186 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
629 உலகமெல்லாம் வியாபாரிகள். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். G56ö6601600004: fooLd6), 5, KutcheryLane, Mylapore, 16gJugSCL, ஏப்ரல் 1991 (சென்னை 600004; மிதிலா அச்சகம், மைலாப்பூர்) 200 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
எமது சமுதாயத்தில் ஊறிக்கிடக்கும் சில அதர்மமான கோட்பாடு கள், கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் சட்டதிட்டங்கள் என்பன சிலவேளை என்னைச் சித்திக்கத் தூண்டிய அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்நாவல். 1970-80காலப்பகுதியில் தமிழர்களின் பிரச் சினைகளை எடுத்துக்காட்டும் நாவல் இது.
- -ஆசிரியர் (முன்னுரையில்)
630 உள்ளக்கோயிலில், ந.பாலேஸ்வரி. திருக்கோணமலை: 157, டைக் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1983. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பர்ஸ், 185 கிராண்ட்பாஸ் வீதி) 266 பக்கம். விலை: ரூபா 17.50. அளவு: 17.5x12 சமீ.
விபரம் தெரியாத வயதில் ஒருவனுக்கு வாழ்க்கைத் துணைவியாக நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் அவனுடன் கூடி வாழ்வதற்கு முன்பே விதி வசத்தால் விதவையாகி விடுகின்றாள். அவள் நிலை கண்டு வருந்தும் பெற்றோர் ஒருபுறம், உள்ளக் குமுறலுடன் வாழும் அவள் மறுபுறம், அவளுக்கு மறுவாழ்வளிக்கத் துடிக்கும் சீர்திருத்தவாதி ரஞ் சன் ஒருபுறம். இவர்களது உணர்வுகளுடன் பின்னப்பட்டு விறுவிறுப் பாகச் செல்கிறது கதை.
63 உள்ளத்தின் உள்ளே, ந.பாலேஸ்வரி. மட்டக்களப்பு: உதயம் வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1990. (மட்டக்களப்பு: புனித செபஸ் தியார் அச்சகம், 65 லேடி மனிங் டிரைவ்) 108 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18X12 சமீ.
கடமையுணர்வுள்ள பாடசாலை ஆசிரியையின் வாழ்க்கையைப் பகைப் புலமாகக் கொண்ட சமூகநாவல்.
632 எரிநெருப்பில் இடைபாதை இல்லை. எஸ்.அகஸ்தியர். மதுரை 6250020: ஜெகன் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜூன் 1992. (சென்னை 24: வாழ்க அச்சகம்)
ΚΑ
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 187

Page 108
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
285 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 175x12.5 சமீ.
யாழ்ப்பாண மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 1959இல் எழுதப்பட்ட நாவல் இது.
633 எழுதிச்செல்லும் விதியின் கை. மஹாராஜரீ (இயற்பெயர். சது.சண்முகநாதக் குருக்கள்) யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, ஜூலை 1989. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி) xi,45 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12 சமீ.
ஏழில் செவ்வாய் தோஷமுள்ள சண்முகம் மணவாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முனையும் ஒவ்வொரு சமயமும் செவ்வாயின் ஆதிக் கம் மேலோங்கி அவனது வேணவாவைத் தோல்விப் பாதையில் இ ழுத்துச் சென்று வீழ்த்திவிட, அவன் இறுதியில் துறவியாகி மடம் அமைத்துச் சமய சமுதாயப்பணிகளில் ஈடுபடுவது நாவலின் முதன் மைக் கருவாகும்.
634 என்றாவது ஒருநாள். இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன். யாழ்ப்பாணம்: சிதம்பர திருச்செந்திநாதன், கச்சேரி, 1வது பதிப்பு, வைகாசி 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 55 பக்கம். விலை: ரூபா 10. அளவு; 21X14 சமீ.
ஒரு கிராமப் பாடசாலைக்கு மாற்றலாகிவரும் மனைவியை இழந்த ஆசிரியர், சமூக வஞ்சனைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் மீது காட்டும் இரக்கமும் அதன் விளைவுகளும் இந்தப் புனைகதையில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
635
ஒரு அகதி உருவாகும் நேரம். பொ.கருணாகரமூர்த்தி. சென்னை 14. ஸ்னேகா பப்ளிஷர்ஸ், 348 ராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஏப் J6b 1996. (G361606 5. Segar Offset Printers) (26),132 பக்கம். விலை: இந்திய ரூபா 45. அளவு: 21.5X13.5 சமீ.
ஒரு நாவலும் இரண்டு குறுநாவல்களும் உள்ளடங்கிய தொகுப்பு. ஒரு அகதி உருவாகும் நேரம், கணையாழி சஞ்சிகையால் நடாத் தப்பட்ட தி.ஜானகிராமன் நினைவுப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
188 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

894.8(5) நாவல்கள், குறுநாவல்கள்
636 ஒரு கோடை விடுமுறை.ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். யாழ்ப் பாணம்: அலை வெளியீடு, 48, சுயஉதவி வீடமைப்புத்திட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1981. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டுக் கோபுர வீதி) 248 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 19X12.5 சமீ.
ஒரு கோடை விடுமுறை. ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியம். சென்னை17: மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு, 1998. (சென்னை 4. பூரீ முருகன் ஆப்செட்) 260 பக்கம். விலை: ரூபா 48. அளவு: 18.5x12.5 சமீ.
கூர்மையடைந்து வரும் தேசிய இனப்பிரச்சினையின் சில பரிணாமங் கள் இந்நாவலில் வெளிப்படுகின்றன. நீண்டகாலம் இலங்கையைவிட்டு வந்து லண்டன் வாழ்முறைக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து விட்ட பரமநாதன் ஒரு கோடைவிடுமுறைக்கு தாயகத்துக்கு வந்து தேசிய இனஒடுக்கல்களின் கூர்மைக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக் கப்படுவது கதையாகிறது.
637 ஒரு தந்தையின் கதை. அன்புமணி. மட்டக்களப்பு: உதயம் வெளியீடு, 1வது பதிப்பு, வைகாசி 1989. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்) (7),147 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
இக்கதை ஒரு தந்தையின் கதை மட்டுமல்ல, ஒரு கிராமத்தின் கதை
யுமாகும். சுமார் 50 வருடங்களுக்கு முன்னைய (மட்டக்களப்பின்
ஒரு) கிராமத்தை முடிந்தவரை எழுத்தில் வடிக்க முயன்றுள்ளேன்.
அன்புமணி (முன்னுரையில்)
638 ஒரு தனி விரு. மு.தளையசிங்கம். கோவை 15; சமுதாயம் பிரசுரா லயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1984. (கோவை 15: பாரிஜாதம் அச்சகம்)
215 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18X12.5 சமீ.
எல்லாம் அரசியல், எதிலும் அரசியல் என்ற இக்காலத்தில் மனிதன் ஒதுங்கியிருக்க முடியாது என்ற கட்டாயத்தில் அரசியலும் இக்கதை யில் நிறையவே இடம்பெற்றுள்ளது. ஒரு தனிவீடு, என்ற அபி லாஷை நிறைவேறியவுடன் அதனை சாசுவதம் ஆக்கிக்கொள்ள ஒரு தனிநாடு என்ற இலட்சியமும் ஏற்படுகிறது. தமிழ்ஈழ இயக்க தொடக் கக் காலத்தில் அதற்கான அவசியம் ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 189

Page 109
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
நிலைகளை மிகத்தெளிவாகச் சொல்கிறது கதை.
-சி.கோவிந்தன் (பதிப்புரையில்)
639 ஒரு திட்டம் மூடப்படுகிறது. து.வைத்திலிங்கம். கொக்குவில்: கல்யாணி பிரசுரம், செம்பியன் லேன், 1வது பதிப்பு, ஏப்ரல் 1990. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம்) iv.51 பக்கம். விலை: ரூபா 15. அளவு 21X13.5 சமீ.
ஈழநாடு தினசரியின் அனுசரணையுடன் யாழ். இலக்கிய வட்டம் நடத்திய ரசிகமணி கனக செந்திநாதன் ஞாபகார்த்த குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதை. அரசியல் காற்று கிராமத் தையே முற்றாக மாற்றி விடும் அவலநிலையை இக்குறுநாவல் விளக்குகின்றது. பொதுநல நோக்கில் அமைந்த ஒரு நல்ல திட் டம், போட்டியாலும், பொறாமையாலும் சுயநல நோக்கிற்காகவும் அநியாயமாக மூடப்பட்ட விதத்தைக் கதை சித்திரிக்கின்றது.
640 ஒரு பூ. கே.எஸ்.துரை. டென்மார்க், கே.எஸ்.துரை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1995. (லண்டன் வாசன் லித்தோபிரஸ்) 169 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17X12 சமீ.
ஈழத்தின் சாதாரண குடும்பமொன்றின் வாழ்வியல் மூலமாக மானிடத்தின் பல பக்கங்கள் தொட்டுச் செல்லப்படுகின்றது.
64 ஒரு பெண்ணின் கதை. செ.கணேசலிங்கம். சென்னை 600005; குமரன் பதிப்பகம், 13/2 கஜபதி தெரு, 1வது பதிப்பு, ஜூலை 1992 (சென்னை 600024: அலைகள் அச்சகம், 36 தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம்) 244 பக்கம். விலை: இந்திய ரூபா 28. அளவு: 17.5x12.5 சமீ.
உயிரியலில்-உளவியலில்-சமூக வாழ்வியலில் ஆணுலகும் பெண் ணுலகும் வேறுபடுவதை நாவல் விரித்துக் காட்டுகின்றது. இது ஒரு பெண்ணின் கதையல்ல. பெண்ணினத்தின் பயங்கரமான கதை. பெண்கள் பற்றிய பல பொய்மைகளையும் உடைத்தெறியும் நாவல.
642 ஒரு மைய வடடங்கள். செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜனவரி 1991 (ஏ.எஸ்.ஜே பிரிண் டிங் வேர்க்ஸ்)
190 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
94 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 19X14 சமீ.
மருதங்கேணி என்னும் காட்டு விவசாயக்கிராமத்தில் தமிழ் சிங்கள மக்கள் குடியேறி ஒன்றாக வாழும் வகையினையும், அவ்வப்போது நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் இக்கிராமிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயன்றதையும் அம்மக்களின் மனவிரிசல்களையும் உணர்வுகளையும் வாழ்க்கைப்பிரச்சினைகளையும் பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். சிங்களமக்களும் தமிழ்மக்களும் இலங் கையைப் பொறுத்தவரையில் ஒரு மைய வட்டங்களே. பெரிய வட்டம் சிறிய வட்டத்தை அமுக்கிவிட முயல, சிறிய வட்டம் தனித்துவமாக விளங்க முயல்கின்ற அன்றைய அரசியல் சூழ்நிலையின் காட்சிப் படுத்தல் கதையின் களமாகின்றது.
643 ஓ அந்த அழகிய பழைய உலகம். செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: ரஜனி வெளியீடு, 2வது பதிப்பு, 1988. முதற் பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம், அன்பு பிரின்டர்ஸ்,) 66 பக்கம். விலை: ரூபா 8.50. அளவு 21X14 சமீ.
இரு வேறுபட்ட களங்கள். முரண்பட்ட பாத்திரங்கள் என்பன ஒப்பீட்டு வகையாக விபரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களின் சந் தடி மிக்கதும் நவீன நாகரீகம் நிலைத்ததும் இயந்திரமயமானது மான வாழ்வும், கிராமப்புறங்களின் அமைதியும் அழகும் இயற்கை யோடு இணைந்ததுமான வாழ்வும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வெளிவந்த தாமரை முற்போக்கிதழில் தொடராக வெளிவந்தது.
644 ஓர் அரசியலின் கதை. (நாவல்) செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 79, முதலாவது தெரு, குமரன் காலனி, வடபழநி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1997. (அச்சக விபரம் அறியமுடிய வில்லை) 190 பக்கம். விலை: இந்திய ரூபா 45. அளவு: 18x12.5 சமீ.
எழுத்தாளர் செ.கணேசலிங்கத்தின் 25வது நாவல். வரலாற்றின் ஒரு காலகட்டத்தைக் குறிப்பிடும் அரசியல் நாவல். சமகால தமிழக அரசியலைப் பகைப்புலமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகின்றது.
645 கடல் கோட்டை. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: சு.இராசகுலேந் திரன், விவேகானந்தா அச்சகம், ஸ்டான்லி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1985. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 191

Page 110
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
174 பக்கம், வரைபடம். விலை: ரூபா 20. அளவு: 18X12.5 சமீ.
கடல்கோட்டை, யாழ்ப்பாண வரலாற்றில் போர்த்துக்கேயரின் ஆட்சி மறைவும் ஒல்லாந்தரின் ஆட்சி உதயமும் நிலவிய காலகட்டத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது. அக்காலத்தில் நிலவிய சமய, சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளை யதார்த் தமாகச் சித்திரிக்கின்றது. ஈழநாடு வாரமலரில் 1984 இல் 20 வாரங்கள் தொடராக வெளிவந்தது.
646 கடற்காற்று. அங்கையன் (இயற்பெயர்: வை.அ.கயிலாசநாதன்.) கொழும்பு 11: எம்.டி. குணசேன அன் கொம்பனி, 217 ஒல்கொட் மாவத்தை, 2வது பதிப்பு, 2000. (கொழும்பு குணசேன) 94 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
கடல்சார்ந்த வாழ்வினைப் பகைப்புலமாகக் கொண்டதும், 1962ம் ஆண்டு இலங்கைப்பல்கலைக்கழகம் நடாத்திய குறுநாவல் போட்டி யில் பரிசு பெற்றதுமான இக்குறுநாவல் பின்னர் ஈழநாடு வார மலரில் தொடராக வெளிவந்தது.
647 கந்தவேள் கோட்டம். செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82 பிரவுண் வீதி, நீராவியடி. 1வது பதிப்பு, ஜனவரி 1991. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம்) (4),141 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 16x10 சமீ.
யாழ்ப்பாண இராச்சியத்தை அந்நியப்படைகள் ஆக்கிரமித்த போது நாடும், மண்ணும், மக்களும் தமிழ் மக்களது விழுமியங்களும் எவ் வாறு பாதிப்புற்றன என்பதனைச் சித்திரிக்கும் வரலாற்று நாவல். ஐந்து நூற்றாண்டுக்கால யாழ்ப்பாண வரலாற்றை நல்லூர்க் கந்த சுவாமி கோவிலின் வரலாற்றினூடாக செங்கைஆழியான் இழை யோடியுள்ளார். ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல் என்ற நான்கு அங்கங்களில் இதை நாவலாக்கியுள்ளமை குறிப்பிடத்தக் கது. ஈழநாடு வாரமலரில் 8.9.1985 முதல் 19.1.1986 வரை தொடராக வெளியானது.
648 கவர்ச்சிக் கலையின் மறுபக்கம். செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 79, 1வது தெரு, குமரன் காலனி, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (சென்னை 5: Page Offset) 214 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
192 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
சினிமா என்ற கவர்ச்சிக்கலையினது மறுபக்கத்தில் திரைமறைவில் நடைபெறும் நாடகங்களை ஓரளவு சுட்டிக்காட்டும் நாவல். தமிழக சினிமாத்துறையின் பகைப்புலத்தைக் கொண்ட நாவல். s
649 கனவுப்பூக்கள். அஸ.அப்துஸ் சமது கண்டி: தமிழ்மன்றம், கல் ஹின்ன. 1வது பதிப்பு. 1983. (கொழும்பு 9; டெவலோபிரின்ட், 69, அல்பியன் வீதி)
202 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18x12.5 சமீ
தினகரன் (இலங்கை) பத்திரிகையில் 1981 இல் வெளியான கண்ணிர் புவர்பங்கள் தொடர்கதையின் நூலுரு இதுவாகும். கலையென்றும் கல்வியென்றும் தம்மை அவற்றினுள் முழுமையாக ஆழ்த்திக் கொள் ளும் பெண்களின் இக்கட்டான நிலைமையினைச் சித்திரிக்கும் கதை.
650 காட்டாறு. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிறவுன் வீதி, நீராவியடி 2வது பதிப்பு, ஒக்டோபர் 1997 1வது பதிப்பு, பெப்ரவரி 1977. (அச்சக விபரம் அறியமுடியவில்லை) xxvi,208 பக்கம். விலை: ரூபா 150. அளவு: 19x13.5 சமீ.
வீரகேசரியின் சிறந்த நாவலுக்கான பரிசில், இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசில், இலங்கை சாகித்திய மண்டலப் பரிசில் போன்ற வற்றைப் பெற்றுக்கொண்ட நாவல். பல்வேறு விதங்களில் சுரண்டலுக் கும் பாதிப்புக்கும் உள்ளான மக்கள் தமக்கிழைக்கப்பட்ட கொடுமை களுக்கு எதிராகப் போர்க்குணம் கொள்வது சமூக விழிப்புடனும் கலையழகுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. விவசாயக் கிராமமான கடலாஞ்சியில் நிகழும் சமுதாயச் சுரண்டல்களும் அவற்றிற்கெதிராக நிகழும் எழுச்சியுணர்வுமே இந்நாவலின் கதையம்சமாகும்.
65 காணி நிலம் வேண்டும். செ.யோகநாதன். சென்னை 98. நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 418, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், 2வது பதிப்பு, 1987, 1வது பதிப்பு, 1984. (சென்னை 5: பூரீ கன்னி அச்சகம், ജൺ ബ്രഖൺ). V1,116 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.
காணி நிலம் வேண்டும், விலங்குகளும் கண் புதைக்கும், ஆகிய குறுநாவல்கள் அடங்கியது. முதலாவது நாவல் மலையகத்தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு ஆக்கப்பட் டது. இரண்டாவது, இலங்கையின் 1983 இனக்கலவரங்களின் பின் னணியில் எழுதப்பட்டது. W
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 193

Page 111
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
652 கானகத்தின் கானம். செம்பியன் செல்வன். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1989, (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா பதிப்பகம்). (4),124 பக்கம். விலை: ரூபா 27 அளவு: 17.5x12.5 சமீ. சாதிஅமைப்பில் புரையோடிப்போன அடக்குமுறையினை மையமாக வைத்துப் பின்னப்பட்ட சமூகநாவல்.
653 கானல். கே.டானியல். கும்பகோணம் 612001 தோழமை, 20, ப. கோதண்டபாணித் தெரு, 1வது பதிப்பு, 1986. (சென்னை5: Dignty Printers). xxxxiv,376 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
பரம்பரை பரம்பரையாக சைவமதத்தையே தழுவிவந்த ஒடுக்கப் பட்ட மக்கள் பிரிவினர் இடைக்காலத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதன் மூலம் தங்கள் அவலவாழ்வை விடுவிக்க எத்தனித் தனர். இந்த எத்தனிப்பினால் ஏற்பட்ட பலாபலன்களைச் சித்திரிப் பது இந்த நாவல்.
654 கிருகுவேலி. செங்கைஆழியான். (இயற்பெயர்:க.குணராசா) யாழ்ப் பாணம்: யாழ். இலக்கியவட்டம், 2வது பதிப்பு, 1989, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம், கே.கே.எஸ். வீதி) (16),96 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாணக் கலாச்சாரம் புறக்காரணிகளால் எவ்வாறு மாறுபடுகின் றது என்றும், மனிதஉறவுகளில் பணவசதி எப்படி மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்பதையும் கணவன் மனைவி உறவுகள் எவ்வாறு பூசி மெழுகலின்றி நேரடியாக வார்த்தைகளில் பரிணமிக் கின்றன என்பதையும் ஆசிரியர் இந்த நாவலில் காட்டுகின்றார்.
-கே.எஸ்.சிவகுமாரன் (வீரகேசரி 17.84 இதழில்)
ஈழநாடு வாரமலரில் தொடராக வெளிவந்ததுடன் 1982-85 காலப் பகுதியில் வெளியான சிறந்த குறுநாவலுக்கான தகவம் பரிசை யும் பெற்ற நாவல். யாழ்ப்பாணக் கலாசாரத்தின் ஒரு குறியீடாக கிடுகுவேலி அமைகிறது.
655 கிட்டி. செ.யோகநாதன். சென்னை 108; ஆதி பதிப்பகம், 27 சிங் கர்ஸ் தெரு, பிராட்வே, 2வது பதிப்பு, டிசம்பர் 1994, 1வது பதிப்பு, 1992. (Madras 6000005: Sri Yeses Print House)
194 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
144 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 17.5x12 சமீ.
காடுகளில் வாழ்ந்த ஒரு மக்கள் சமூகத்தின் வாழ்க்கையைப் பகைப் புலமாகக் கொண்ட நாவல்.
656 குரும்பச் சிறையில், செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் வெளியீட்டகம், 3 மெய்கை விநாயகர் வீதி, வடபழநி, 1வது uitu, eyas6mbu' 1999. (Chennai 600014: Monark Graphics) 214 பக்கம். விலை: இந்திய ரூபா 55 அளவு: 18X12.5 சமீ.
பெண்ணியம் சார்ந்த சமூகநாவல். நிலப்பிரபுத்துவக் கூட்டுக்குடும்ப அமைப்பானது, முதலாளித்துவ உற்பத்திமுறை வளர்ச்சியில் எத்த கைய மாற்றமடைகின்றது என்பதையும் கோடிட்டுக்காட்டும் நாவல்.
657 குருதிமலை. தி.ஞானசேகரன். சென்னை 600026: குமரன் பப்ளி ஷர்ஸ், 27, 2வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஜூலை 1995. (Madras 14: Chitra Printography) vi,288 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 18X12.5 சமீ.
ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் பெளத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப் போராட் டத்தை நிகழ்த்திவருபவர்களின் வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின் மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
658 குவேனி. செங்கைஆழியான். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் பதிப்பகம், 1வதுபதிப்பு, தை1991. (யாழ்ப்பாணம்:அச்சகம் குறிப்பிடப்படவில்லை) (8),136 பக்கம். வரைபடம். விலை: ரூபா 40. அளவு 21X14 சமீ.
இந்நாவல் நான் எழுதும் தறுமறாசா வீடு என்ற நாவலின் முன்னிடு ஆகும். வெறும் சரித்திர நாவலென்ற கருத்தில் இதனைப் படிக் கில் இந்த நாவலின் பண்பாட்டியல்புகளின் பாரம்பரியத்தையும் மனித குல வரலாற்றின் நெறிகளையும் புரிந்துகொள்ளத் தவறி விடுவோம்.
-செங்கை ஆழியான் (முன்னுரையில்)
மஹாவம்சத்தின் கதாபாத்திரங்களினூடாக இலங்கைக்குச் சிங்களவர் வந்து குடியேறுவதற்கு முன்னர் திராவிடர் இந்நிலத்தின் ஆதிமக்க ளாக இருந்துள்ளனர் என்பதையும், எமது மூதாதையர் விட்ட தவறு
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 195

Page 112
894.8(5) நாவல்கள், குறுநாவல்கள்
கள் எவ்வாறு இன்று எமது தலைகளில் விடிந்திருக்கின்றன என் பதையும் சுட்டிக்காட்டும் வரலாற்று நாவல்.
659 கே.பானியலின் குறுநாவல்கள். கே.டானியல். பருத்தித்துறை: வாராவொல்லை வெளியீடு, நெல்லண்டைவீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50 கண்டி வீதி) wi.252 பக்கம். தகடுகள். விலை: ரூபா 45 அளவு: 18.5x12.5 சமீ.
முருங்கையிலைக்கஞ்சி, மையக்குறி, இருளின் கதிர்கள் ஆகிய மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. முதலிரண்டும் முறையே தினகரன், ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் தொடராக 1984இல் வெளிவந்தவை.
660 கோபுரங்கள் சரிகின்றன. எஸ்.அகஸ்தியர். யாழ்ப்பாணம்: ரஜனி வெளியீடு, 223, சிவன் பண்ணை வீதி, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: அன்பு பிரிண்டர்ஸ், 248/5, காங்கேசன்துறை வீதி) 70 பக்கம். விலை: ரூபா 4.90. அளவு: 19X13 சமீ
மலையக ஹோட்டல் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினை களை மையமாகவைத்துப் பின்னப்பட்ட நாவல். தமது உரிமை களை வென்றெடுக்க அவர்கள் ஒன்றுபட்டு உழைப்பதைச் சித் திரிக்கும் கதையமைப்பு.
66 கோவும் கோயிலும், ந.பாலேஸ்வரி. திருக்கோணமலை நரெசி வெளியீடு, 157 டைக் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 120 பக்கம். விலை: ரூபா 790. அளவு 18X12.5 சமீ.
ஈழத்துக்குப் பெருமை தேடித்தரும் தேவாரம் பாடப்பெற்ற திருக் கோணேசர் ஆலய வரலாற்றைப் பகைப் புலமாகக் கொண்ட வரலாற்று நாவல். 1977 இல் தினகரன் வாரமஞ்சரியில் நெடுங் கதையாகப் பிரசுரமானது.
662 சங்கரன். வளவைவளவன் (இயற்பெயர்-மா.செல்லத்தம்பி) யாழ்ப்
பாணம்: மீரா வெளியீடு, 38 வேம்படி வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா பதிப்பகம்)
196 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

894.8(5) நாவல்கள், குறுநாவல்கள்
X,71 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 17.5X12.5 சமீ.
அநாதையான சங்கரன் ஒரு பெரியவரின் அரவணைப்பினால் எழுத் தாளனாகி நாவல் பரிசுப்போட்டியில் பங்குபெறுவதற்காகக் கொழும்பு செல்கின்றான். அங்கே இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டு கப்பலில் திரும்புவதான செய்தியை இக்குறுநாவல் தெரிவிக்கின்றது.
663 சத்தியங்கள் சமாதிகளாவதில்லை. சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: திருமதி ராமேஸ்வரன், 4 1/2, சித்ரா ஒழுங்கை. 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (மஹரகம: தரஞ்ஜி பிரின்ட்ஸ், நாவின்ன) 102 பக்கம். விலை: ரூபா 60. அளவு: 21.5x13.5 சமீ.
கலப்புத் திருமணத்தால் தமிழ்-சிங்கள உறவை வளர்க்க முடியாது, அது ஓர் இனத்தின் அழிவுக்கு வித்திடும் என்ற கருத்தை வலியுறுத் gbLD bT616).
664 சந்தன ரோஜாக்கள். ரவிப்ரியா. மட்டக்களப்பு: உதயம் வெளி யீடு, 1வது பதிப்பு, மார்கழி 1988. (மட்டக்களப்பு: புனித செபஸ் தியார் அச்சகம், 65 லேடி மனிங் டிரைவ்) 138 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
சந்தனரோஜாக்கள் எனது கற்பனைக் கண்ணோட்டத்தில் தரிசனமான புதியமலர்கள். தன்னையே சேர்த்துத்தருவது சந்தனம். தனித்துவம் காப்பது ரோஜா. இரண்டு தன்மைகளும் இணைந்துள்ள நெஞ்சங் களின் கதை தான் இந்த சந்தனரோஜாக்கள்.
-ரவிப்ரியா (முன்னுரையில்)
665 சலதி. சொக்கன். யாழ்ப்பாணம்: முரசொலி வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (யாழ்ப்பாணம்:சாந்தி அச்சகம், காங்கேசன்துறை வீதி) XVi,110 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 20. நூலகப்பதிப்பு ரூபா 25. அளவு: 18X12.5 சமீ.
இந்நாவல் 1985 ஆகஸ்ட் 15 முதல் நவம்பர் 22 வரை தினகரன் வாரமஞ்சரியில் தொடராக வெளிவந்தது. சிலப்பதிகாரக் கதை புதிய கோணத்தில் சலதி" என்ற நாவலாக உருவாக்கப்பட்டுள்ளது.
666 சிதறிய சித்தார்த்தண். பாமினி செல்லத்துரை (ஆங்கில மூலம்),
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 197

Page 113
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
சபா. இராசேந்திரன் (தமிழாக்கம்). சென்னை 600041 கோதை பதிப்பகம், 311-5வது தெற்கு குறுக்குத்தெரு, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (சென்னை 600024: MLM Printers, (335TLibUTö535ub) vi,411 பக்கம். விலை: இந்திய ரூபா 75 அளவு 21X13.5 சமீ.
North South and Death 676ip g5606 oil at Q66flurrgo, sytidio) நாவலின் தமிழாக்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கருப் பொருளாகக் கொண்டது.
667 சிவபுரத்து சைவர்கள்: ஒரு சமகால வரலாற்று நாவல். சோ. ராமேஸ்வரன். கொழும்பு 5. செல்வி ராமேஸ்வரன், 4 1/2 சித்திரா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (மஹரகம: தரஞ்ஜி பிரின் ட்ஸ், நாவின்ன) iv,136 பக்கம். விலை: ரூபா 120. அளவு: 21.5X13.5 சமீ.
ஈழத்தமிழரின் சமகாலப்பிரச்சினைகளில் ஒன்று இடம்பெயர்ந் தோரின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும். மோதல்களின் போது, உறைவிடங்களை விட்டு வெளியேறி, மதத்தலங்களையும் பாட சாலைகளையும் நாடிய தமிழரின் புலம்பெயர்வாழ்வு மிகவும் மோச மானதாகும். அந்தச்சூழலின் பகைப்புலத்தில் எழுந்த நாவல் இது.
668 சிறுபொறி பெருந்தி. செ.யோகநாதன். சென்னை600024 சத்திய பாரதி பதிப்பகம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிரபி) 80 பக்கம். விலை: இந்திய ரூபா 14. அளவு: 17.5X12.5 சமீ.
தமிழக ஹோட்டல் தொழிலாளர்களினதும் அதன் நிர்வாகத்தி னதும் அன்றாடப்பிரச்சினைகளின் பின்னணியில் அமைந்ததொரு சமூக நாவல்.
669 சிறைப்பறவைகள். து.வைத்திலிங்கம். சங்கானை: துவைத்தி லிங்கம், உதவி அரசாங்கஅதிபர் பணிமனை, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: புதிய உதயன் வெளியீட்டகம், 15, 2ம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி). (8),66 பக்கம். விலை: ரூபா 10, அளவு 21X14.5 சமீ.
உதயன் தினசரியின் வாரஇதழ் சஞ்சீவியில் தொடராக வெளிவந்த

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
குறுநாவல். தொடர்ச்சியான இன்னல்களைத் தினமும் அனுபவித்தும் அர்த்தமற்ற பத்தாம்பசலித்தனமான கருத்துக்களைத் தலையில் வைத்துக் கூத்தாடும் குடும்பங்கள், இளம் குருத்துக்களை வாழ விடாது தடுக்கும் ஆரோக்கியமற்ற சமுதாயச் சிக்கல்கள். படித்தும் அதற்குரிய பலனைக் காணாது விரக்தியின் எல்லைக்கோட்டுக்குள் தள்ளப்படும் இளைஞர்கள் இவர்களது பிரச்சினைகளைப் பின்னணி யாக வைத்து ஓடும் கதையம்சம்.
670 சுந்தரியின் முகங்கள். செ.யோகநாதன். சென்னை 600024 சத்ய பாரதி பதிப்பகம், 2வது பதிப்பு, ஏப்ரல் 1994. 1வது பதிப்பு, நவம்பர் 1985. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிரபி, 24,பொன்னுச்சாமித் தெரு) 176 பக்கம். விலை: இந்திய ரூபா 28 அளவு: 18x12.5 சமீ.
மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. பிரதமர் அவர்களே என்ன சொல் கிறீர்கள்?(1985), சைக்கிள்(1984), சுந்தரியின் முகங்கள்(1968) ஆகிய குறுநாவல்கள் இதில் அடங்கியுள்ளன.
67 சுயம்வரம். கே.எஸ்.துரை. டென்மார்க்: கே.எஸ்.துரை, 1வதுபதிப்பு, பெப்ரவரி 1993, (அச்சக விபரம் அறியமுடியவில்லை) 109 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17X11.5 சமீ.
ஆசிரியரின் அனுபவங்கள், வடமராட்சி மக்களின் போராட்ட உணர்வு கள் என்பன இந்த நாவலில் மண்வாசனையுடன் விரவிக்கிடக்கின்றன.
672 டானியலின் குறுநாவல்கள். கே.டானியல், கோவை: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன்கோவில் வீதி, உப்பிலிபாளையம், 1வது பதிப்பு, மே 1994. (சென்னை 600024: அலைகள் அச்சகம், 36 தெற் குச் சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம்) 247 பக்கம். விலை: இந்திய ரூபா 35. அளவு: 18x12.5 சமீ.
முருங்கையிலைக்கஞ்சி, மையக்குறி, இருளின்கதிர்கள் ஆகிய மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. சாதிமறுப்பு, ஆதிக்க எதிர்ப்பு, மனித நேயம் ஆகிய பண்புக்கூறுகள் இறுகப் பின்னப்பட்ட கதைக்கரு. (இந்நூல் மூலப்பதிப்பாக 1989இல் பருத்தித்துறை வாராவொல்லை வெளியீடாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.)
673 தண்ணிர். கே.டானியல். பருத்தித்துறை வராவெல்லை வெளியீடு, நெல்லண்டை வீதி, தும்பளை, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்:
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 199

Page 114
894.8(5) நாவல்கள், குறுநாவல்கள்
ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி) XXi,228 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18x12.5 சமீ.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவும் சாதிப்பாகுபாட்டை பகைப்புல மாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நாவல்.
674 தர்மங்களாகும் தவறுகள்.அ.ஸ.அப்துஸ் ஸமது கல்முனை:இஸ் லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, 9abLJ 1997. (Chennai600014. V. Karunanithy, Parker Computers & Publications, 293, Royapettah High Road) 128 பக்கம். விலை: ரூபா 100. அளவு; 21X14 சமீ.
அரசியல் வக்கிரங்களையும் மீறி மனிதஉறவுகள் இன, மத, பேத மின்றி எவ்வாறு வாழ்வில் பரிணமிக்கின்றன என்பதை அழகுறச் சித்திரிக்கும் கதை.ஆசிரியரின் மூன்றாவது நாவல்.
675 தவறுகள். ரஜனி குகநாதன். கொழும்பு 5. ரஜனி பதிப்பகம், 1வது பதிப்பு, தை 1991 (சென்னை 2: காந்தளகம், 834,அண்ணா சாலை)
71 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
ரஜனி மாத நாவல் வெளியீட்டாளரான குகநாதனின் முதலாவது குறுநாவல். இது தினகரனில் தொடராகவும் வெளிவந்தது.
676 தில்லையாற்றங்கரை.ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.சென்னை 17. மணிமேகலைப்பிரசுரம், 1வது பதிப்பு, 1998. (சென்னை 24: சதுர்வேந்தன் அச்சகம்) 352 பக்கம். விலை: இந்திய ரூபா 56. அளவு: 18.5x12.5 சமீ.
தில்லையாற்றங்கரை 1957ம் ஆண்டிலிருந்து 1962ம் ஆண்டு வரை யுள்ள 5 வருட காலத்தின் கதை. கிழக்கிலங்கையின் தில்லை யாற்றுடன்-கோளாவில் கிராமத்தின் பகைப்புலத்துடன் நகர்கின்ற கதையம்சம். குழந்தைப்பருவத்தைத் தாண்டிக் குமரிப்பருவத்தை அடையும் மூன்று பெண்கள் மூன்று தலைமுறைகளின் சட்டதிட் டத்தை எதிர்த்துப் போராடியதைப்பற்றிய கதை. இது ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
200 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

894.805) நாவல்கள், குறுநாவல்கள்
677 தி. எஸ்.பொன்னுத்துரை. சென்னை35 மித்ர வெளியீடு, 375/8-10 Arcot Road, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1996. 1வது பதிப்பு, 1961. (Gay 616060T 600085: Mithra Book Makers) iv,196 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 17.5x12.5 சமீ. ISBN 1876 192 OO2.
இந்நாவல் மனிதரின் அடிப்படை உணர்ச்சிகள், அவர்களது ஆண்பெண் உடலுறவு பற்றியது தான் என்ற மானிடவியல் நோக்கில் நகர்த்தப்படுகின்றது. வசதிபடைத்த ஓர் இளைஞன் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவு பற்றிய கதை. வெளிவந்த காலகட்டத்தில் சர்ச்சைக்கு உள்ளான நாவல்.
678 துயிலும் ஒரு நாள் கலையும்.கோகிலா மகேந்திரன்.தெல்லிப் பழை: சிவன் கல்வி நிலையம், விழிசிட்டி, 1வது பதிப்பு, 1986. (தெல்லிப்பழை, குகன் அச்சகம்) x+bx,134 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
இந்நாவல், கணவனின் தாழ்வுச்சிக்கலாலும் அன்பில்லாத பாலியல் உறவினாலும் பாதிக்கப்பட்டு அச்சிறைவாழ்விலிருந்து விடுதலை பெறத்துடிக்கும் ஒரு மனைவியின் கதையாகவும் கல்லூரிச்சூழலில் பொய்மைகளுக்கும் பொய்முகங்களுக்கும் இடையில் நட்பையும் நல்ல உள்ளங்களையும் காணவிழையும் ஒரு ஆசிரியையின் கதை யாகவும் அமைகின்றது
679 துவானம் கவனம். கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, 1988. (தெல்லிப் பழை; குகன் அச்சகம்). (12),152 பக்கம், விலை: ரூபா 35. அளவு: 18x12 சமீ.
அந்நிய நாடுகளின் தொடர்பால் எமது நாட்டுக்கு ஏற்படக்கூடிய எயிட்ஸ் போன்ற பயங்கரநோய்களின் பாதிப்பே தூவானம் கவனம் என்ற சொல்லால் சுட்டப்படுகின்றது. கல்வியறிவும், கலையுணர்வும் காதலும் நிறைந்த ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்ட கதையின் சம்பவச் சூழல் 1987 ஜூன் மாதத்திற்கு முற்பட்ட 5 ஆண்டுக்கால யாழ்ப்பாணக் கிராமியக் களத்தைப் பகைப்புலமாகக் கொண்டது, பேரினவாதிகளின் இனக்கொலை நிகழ் ச்சிகளின் மத்தியில் கதை நிகழ்கின்றது.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 201

Page 115
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
68O தெய்வ தரிசனம். செ.குணரத்தினம். மட்டக்களப்பு: உதயம் வெளியீடு, புனித செபஸ்தியார் பிரசுராலயம், 1வது பதிப்பு, 1988. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் பிரசுராலயம், 65 லேடி மனிங் 1960).J6) 152 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் அமைந்து மண்வாசனை வீசும் நாவல். அம்பாறை-இங்கினியாகலை போன்ற குடியேற்றத்திட்டங் கள் ஆரம்பித்த வேளையில் தொழில்ரீதியாகத் தங்கள் பங்களிப் பைச் செய்துவந்த வத்தை ஒட்டிகளின் வாழ்க்கையை, அவர் களின் பொருளாதாரத்தை, அவலநிலைகளைக் காட்டும் நாவல்.
68 நச்சுமரமும் நறுமலர்களும். திக்குவல்லை கமால். பண்டார கம: பேசும்பேனா வெளியீடு, 191 B, அட்டுலுகம. 1வது பதிப்பு, L93buj 1998. (Colombo 13. Quick Graphic Print, Kotahena) (8),116 பக்கம். விலை: ரூபா 75 அளவு 17x13 சமீ. ISBN 95595926-2-9
இந்நாவல் பொதுவான சமூகப்பிரச்சினைகளைத் தான் பேசுகின் றது. ஆனால் நோன்புகாலத்தைச் சுற்றிச் சுழல்கின்றது. இன் றைய இஸ்லாமிய இளம் தலைமுறையிடம் அந்நியமாகி வரும் நோன் புகாலக் கிராமியத் தனித்துவமும் குதூகலமும் பற்றிப் பேசப்படும் ஒரு நாவல்.
682 நடந்தாய் வாழி, வழுக்கியாறு. செங்கை ஆழியான். யாழ்ப் பாணம்: சிரித்திரன் பிரசுரம், காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு. 1984. (யாழ்ப்பாணம், அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை). vi,40 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 4 அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்கின்ற ஒரேயொரு நதியான வழுக் கியாற்றைப் பற்றிய சில தகவல்கள் இந்நூலிலிருந்து அறிய முடிகின்றது. தகவல்களை வறட்சியாகக் கூறாமல் அச் சூழலுக் குப் பொருத்தமான கதையினூடாக அவை சொல்லப்பட்டுள்ளன. சிரித்திரன் ஆண்டு மலரில் பிரசுரமான குறுநாவல். வழக்கியாறு தோற்றம் பெறுகின்ற அளவெட்டிப் பினாக்கைக் குளத்திலிருந்து, அது கடலோடு சங்கமமாகும் நவாலிக்கடல் வரை நடக்கும் கதை அமைப்பு. மாட்டுச் சவாரி முகத் தாரின் சவாரி மாடொன்று காணாமல் போகிறது. அது வழுக்கியாற்றுப் படுக்கையினூடாக சென்றதாகக் கிடைத்த தகவலையடுத்து தரகர் மயிலர், சண்டியன்
202 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
செல்லத்துரை, ஊர் அப்புக்காத்து அப்பையர் ஆகியோர் புறப் படுகின்றனர். அவர்களினூடே கதை சுவையாக விரிகிறது.
683 நம்பிக்கைகள். நந்தி (இயற்பெயர்: எஸ்.சிவஞானசுந்தரம்).யாழ்ப் பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவரி ணா அச்சகம்)
(8),349 பக்கம். விலை: ரூபா 60. அளவு: 18X12 சமீ.
எழுபதுகளில் பேராதனை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த யாழ்ப் பாணத்துக் கிராமப்புற மாணவனின் அனுபவங்களையும் உணர்வு களையும் பிரதிபலிக்கும் கதை. மருத்துவ சமூகத்தைப் பகைப் புலமாகக் கொண்டு சமூகத்தின் சிந்தனையோட்டத்தையும் கால ஒட் டத்தின் போக்கையும் சித்திரிக்கும் நாவல். நூலாசிரியரின் மருத்து வத்துறை அனுபவமும், மருத்துவபீட மாணவரின் வாழ்க்கை முறையினைக் கதையில் நுணுக்கமாகப் பிரதிபலிக்கப் பெரிதும் உதவியுள்ளது.
684 நாளை. இதியாகலிங்கம். சென்னை: மித்ரவெளியீடு, 1வதுபதிப்பு, 6Jugot) 1999. (QF660)6O 600024: Mitra Book Makers) 200 பக்கம். விலை: இந்திய ரூபா 60. அளவு: 18x12 சமீ.
நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர் காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை.
685 நான்காவது உலகம். மாத்தளை சோமு. திருச்சி 620003: தமிழ்க்குரல் பதிப்பகம், P-15, 5வது மெயின் ரோடு, ஞானம் காலனி, இராமலிங்க நகர், உறையூர், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1998. (Qajargo)6OT 600014: Parker Computers and Publications, 293, Royapettah High Road, Royapettah) 128 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு; 21X14 சமீ.
ஒரு தோட்டத்து நாதஸ்வரம், ஆயுதங்கள், நான்காவது உலகம் ஆகிய குறுநாவல்களின் தொகுப்பு. வீரகேசரியில் தொடராக வெளிவந்த ஒரு தோட்டத்து நாதஸ்வரம், யாழ் மலையக மக்களின் உறவை, பண்பாட்டை, சூழலைச் சொல்கின்றது. தமிழகத்தில், சுபமங்களாவில் வெளிவந்த ஆயுதங்கள், இலங்கையில் புரை
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 203

Page 116
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
யோடிப்போன இனப்பிரச்சினையின் மற்றொரு பக்கத்தைச் சொல் கின்றது. ஆயுதக்கலாச்சாரத்தின் விளைவுகள் இரு தலைமுறைப் பாத்திரங்களினூடாக விளக்கப்படுகின்றது. கணையாளியில் வெளி வந்த நான்காவது உலகம், மூன்றாவது உலக நாடுகளின் பேரினவாத சக்திகளினால் ஜனநாயகம் என்ற பெயரில் நசுக்கப் படுகின்ற நான்காவது உலகத்தைப் பற்றிய கதை.
686 நிதானபுரி: நான்கு குறுநாவல்கள். கசின். கொழும்பு 4: சி. சபாநாதன், அசோகா கார்டின், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு சிட்டிசன் பிரின்டர்ஸ்) (6),149 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5x14 फ्रLf5.
நிதானபுரி (1961), கற்பகம் (1959), சொந்தக்கால் (தினகரன்,1961), தேடி வந்த செல்வம் (ஈழநாடு,1959) ஆகிய நான்கு குறுநாவல்கள் அடங்கியுள்ளன.
687 நிலவே நீ மயங்காதே. இந்திரா பிரியதர்ஷனி. (இயற்பெயர்: யாமினி சிவராமலிங்கம்). யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (மல்லாகம்: A.S.J.பிரின்டர்ஸ், காங் கேசன்துறை வீதி) (12),124 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 175x12.5 சமீ.
படித்த பெண்ணொருத்தி தனக்காகவல்லாது சமுதாயத்துக்காக வாழ்ந்து பெருமைப்படுவதும் மற்றொரு பெண் காதலனால் ஏமாற் றப்பட்டு மற்றொருவனால் வாழ்வளிக்கப்படுவதுமான இரு வேறு பாத்திரப்படைப்புக்கள் பின்னப்பட்ட சமூகநாவல்.
688 நிழல். சோ.ராமேஸ்வரன். கொழும்பு5: திருமதி எஸ்.ராமேஸ்வரன், 4 1/2 சித்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 1998. (Maharagama Tharanjee Prints, 506 High Level Road, Navinna) 66 பக்கம். விலை: ரூபா 60. அளவு 21:5x14 சமீ. ISBN 95960 39-3-0
எமது தமிழ்ச்சமூகத்தில் புரையோடிக்கிடந்த ஆணாதிக்கத்துக்குச் சார்பான பாரம்பரியக் கோட்பாடுகள் இந்நூலில் சாடப்பட்டுள்ளன.
689 நீண்ட பயணம். செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பப் ளிஷர்ஸ், 1வது பதிப்பு, நவம்பர் 1994 (சென்னை 14: சித்ரா
204 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
பிரின்ரோகிராப்பி) 232 பக்கம். விலை: இந்திய ரூபா 32. அளவு: 18x12 சமீ.
1960களில் ஈழத்தில் எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற நாவல். சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் ஜனநாயக உரிமைக்காகப் போராடுவதைச் சித்திரிக்கின்றது.
690 நோயில் இருத்தல். மு.பொன்னம்பலம். சென்னை 600026; குமரன் பப்ளிஷர்ஸ், 3 மெய்கை விநாயகர் தெரு, வடபழநி, 1வது
ug:Sl', 1999. (Chenai: 600014: Monark Graphics) 290 பக்கம். விலை: இந்திய ரூபா 85. அளவு: 22X14 சமீ.
1984 ஒக்டோபரில் நான் மயிலிட்டி TB சனடோரியத்தில் நோயாளி யாக இருந்த வேளையும் (இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட் டதும், போராளிக்குழுக்கள் அதன் சோகத்தை வெளிப்படுத் தியதுமான காலகட்டம்) 1987 இல் யாழ்.பெரியாஸ்பத்திரியில் பொலிநியுரைரிஸ் நோயாளியாகக் கிடந்தபோதும் (தமிழ் ஈழப் போராளிகளையும் பொதுமக்களையும் இந்திய இராணுவம் வேட்டை யாடிக்கொண்டிருந்த காலம்) இந்த இரு காலகட்டங்களில் எனக்கு நேர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடு இந்த நாவலாகும்.
-ஆசிரியர் (என்னுரையில்)
69 பஞ்சமர். கே.டானியல், தஞ்சாவூர் 613009: பிரகாஷ் வெளியீடு, 2395, எல்லையம்மன் வீதி, 1வது பதிப்பு, 1982. (தஞ்சை 613009: G.M. L. Screen Processing, dip JTg65) (8),424 பக்கம். விலை: இந்திய ரூபா 31 அளவு 21X14 சமீ.
நெடுங்காலமாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்பட்டு இன்ன லுற்று வாழும் பஞ்சமர் என்று வழங்கப்படும் மக்களின் பிரச்சினை களை உள்ளடக்கி எழுதப்பட்ட நாவல். (சாதிப்பிரிவு முறையில் அமைந்த நளவர், பள்ளர். வண்ணார், அம்பட்டர், பறையர் ஆகிய ஐந்து பிரிவினரையும் பஞ்சமர் என்ற பதம் சுட்டி நிற்கின்றது.)
692 பட்டங்கள் சுமக்கின்றான். முல்லை அமுதன். (இயற்பெயர்: ஆர்.மகேந்திரன்) சென்னை 600078; ரிஷபம் பதிப்பகம், பிளாக். 31/45 இராணி அண்ணாநகர், 2வது தளம், கலைஞர் கருணாநிதி நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (சென்னை 05: Nadaraj Offset Press, 28, முத்துகாளத்தி தெரு, திருவல்லிக்கேணி)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 205

Page 117
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
134 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 21X14 சமீ.
மதியழகன்-சுமணா கலப்புத் திருமணமும் அதன் விளைவுகளாக எழும் குடும்ப உறவுகளின் பாதிப்பும் கதையின் பகைப்புலமா கின்றது. 1977இல் எழுதத்தொடங்கி 1988இல் முடிக்கப்பட்டு 1998 இல் பிரசுரமான கதை என்பது ஆசிரியரின் குறிப்பு.
693 படிக்காத மேதை. க.தங்கம். யாழ்ப்பாணம்: 33, கைலாசப் பிள்ளையார் கோவிலடி, நல்லூர், 1வது பதிப்பு, 1989, (யாழ்ப் பாணம்: ஆனந்தா அச்சகம்). 92 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 20X14 சமீ.
சமூக நாவல்.
694 பதினைந்து வயதினிலே, க.தங்கம். யாழ்ப்பாணம்: 33, கைலாசப்பிள்ளையார் கோவிலடி, நல்லூர், 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). 88 பக்கம். விலை: ரூபா 7 அளவு 21X14 சமீ.
அறியாப்பருவமான 15 வயதில் முன்பின்அறியாத ஒரு முரடனுக்கு வாழ்க்கைப்பட்டு முதலிரவு முடிந்த மறுநாளே தாய்வீட்டுக்கு ஓடி வந்துவிட்ட சாவித்திரியின் சோக வாழ்வு.
695 பனிமலர். அ. ஸ.அப்துஸ் ஸமது. கொழும் பு: வீரகேசரி வெளியீடு, த.பெ.160, 1வது பதிப்பு, டிசம்பர் 1982. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ். 185 கிராண்ட்பாஸ் வீதி) (6),215 பக்கம். விலை: ரூபா 10.50. அளவு: 17.5x12 சமீ.
மட்டக்களப்புப் பிரதேசத்தைப் பகைப்புலமாகக் கொண்டதும், நிலப்பிரபுத்துவ மனப்பாங்கிற்கும் கல்விஅறிவு வளர்ச்சியினால் ஏற் பட்ட மனப்பாங்கிற்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித் திரிப்பதுமான கதையம்சம் கொண்டது. மட்டக்களப்புப் பண் பாடுகளையும் முஸ்லிம் மக்களின் தனித்தவமான ஆசாரங்களை யும் நம்பிக்கைகளையும் கதையில் நிறையக்காண முடிகின்றது.
696, பாலாயி. தெளிவத்தை ஜோசப். சென்னை 17. துரைவி பதிப் பகம், 20A9, கோபாலகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 1வது
206 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
பதிப்பு, ஜூலை 1997. (சென்னை 06: சுமதி லேசர்ஸ்) 160 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18x12 சமீ.
மலையக முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான தெளிவத்தை ஜோசப்பின் தேர்ந்த மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. இலங்கை யின் பெருந்தோட்டத்துறை மக்களின் அன்றாட வாழ்வைச் சித்திரிக் கும் கதைகள். ஞாயிறு வந்தது - தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார அவலங்களைச் சித்திரிக்கின்றது. மனம் வெளுக்க - தோட்டங்களில் நிலவும் குரூரமான அதிகாரத்துவ மலையில் அறியாமையுடன் முட்டித் துன்புறும் அப்பாவிகளின் குடும்பச் சிதைவை சித்திரிக்கின்றது. பாலாயி தோட்டத்துரைமாரின் அதிகார தர்பாரையும், மரணப்படுக்கையில் இருக்கும் தாயை தமிழகத்தில் பார்த்துவர மனைவியைப் பிரிந்து செல்லும் கண வனின் சோகக் கதையையும் கூறுகின்றது.
697 பாலைவனப் பயணிகள். கே.ஆர்.டேவிட். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, டேவிட் லிகோரி பதிப்பாலயம், 38, வேம்படி வீதி, 1வது பதிப்பு, 1989, (யாழ்ப்பாணம்: மேர்க்குரி அச்சகம், 401 நாவலர் வீதி)
(8),48 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 17X12 சமீ.
இக்குறுநாவலின் நாயகன் உக்குள் என்ற வாலிபன், சமுதாயக் கரங்களினால் செதுக்கப்பட்டவன். மிகவும் கெட்டவன். சமுதா யமோ இவனிடம் நீதியைத் தேடுகின்றது. முடிவில் சமுதாயக் கால் களால் உதைக்கப்பட்டு தண்டனைக்குள்ளாகின்றான். மேடு பள்ளம் மிக்க சமுதாயம், நபுஞ்சகத்தன்மை மிக்க சட்டம், இரண்டுக்கும் நடுவே அப்பாவி மனிதர். இந்த மேடு-பள்ளங்களைச் சமப்படுத்தாத வரை, உக்குளைப் போன்றவர்கள் பாலைவனப் பயணிகள் தான் என்பதை கதை சித்திரிக்கின்றது.
698 பிரளயம், செங்கைஆழியான். (இயற்பெயர்: க.குணராசா) யாழ்ப் பாணம், கமலம் பதிப்பகம், 2ம் பதிப்பு, 1989, 1ம் பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: கே.ரி.அச்சகம்) 122 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 18x13 சமீ.
1971ஆம் ஆண்டு சிரித்திரன் சஞ்சிகையில் மயான பூமி என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தது. வீரகேசரி பிரசுரமாக 1975இல் வெளிவந்தது. 1976 இல் அவ்வாண்டுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசையும் சுவீகரித்துக் கொண்ட நாவல். தமிழர் சமுதாயத்தின் சாதிப்பிரச்சினை தொடர்பான இந்த நாவலில், ஒரு பிரதேசத்தின்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 207

Page 118
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
சலவைத்தொழிலாளர் சமூகம் தனது அடிமை-குடிமை நிலை யிலிருந்து விடுபடத்துடித்த உணர்வுநிலையே கதையின் கரு வாகும். சமூகமாற்றமானது கல்வி, தொழில் மாற்றம், செல்வம் தேடல் என்பவற்றின் மூலம் ஏற்படலாம் எனச் சித்திரிக்கின்றது.
699 பிராயச்சித்தம். ந.பாலேஸ்வரி. யாழ்ப்பாணம், ரஜனி பப்ளிக்கே ஷன்ஸ், 248-5, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு.1984. (யாழ்ப் பாணம்: அன்பு பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி) 68 பக்கம். விலை: ரூபா 4.90. அளவு: 19x12.5 சமீ.
சமூக நாவல்.
7OO புதியதோர் உலகம்: நாவல். கோவிந்தன். சென்னை: வெளி யீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, மே 1985. (அச்சகவிபரம் குறிப்பிடப்படவில்லை) 365 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 175x12.5 சமீ.
புதியதோர் உலகம்: நாவல். கோவிந்தன். கோவை: 641015: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப் பாளையம், 2வது பதிப்பு, ஏப்ரல் 1997. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்) 244 பக்கம். விலை: இந்திய ரூபா 70. அளவு 21X13.5 சமீ.
பெப்ரவரி 15, 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். நாம் வெளியேறிய பின்பு எம்மை அழிப்பதற்காகத் தேடிய அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொண்டு இரு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அக்காலத்திலேயே இந் நாவல் படைக்கப்பட்டது. இந்நாவல் தனியொரு மனிதனின் படைப் பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புடன் உருவான கூட்டுப்படைப்பு. தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு வருடகாலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந் நாவல் உருப்பெற்றுள்ளது.
-கோவிந்தன் (2வது பதிப்பின் முன்னுரையில்)
7Ο பூம்பன்னி மலர்கள். து.வைத்திலிங்கம், யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 1வது பதிப்பு:ஆவணி 1988. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம்) 115 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 17.5x12.5 சமீ.
208 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
1985இல் ஈழநாடு வாரமலரில் தொடராக வெளிவந்த சமூக நாவல்.
702 பூஜைக்காக வாழும் பூவை. கே.எஸ்.ஆனந்தன். யாழ்ப் பாணம்: மீரா வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (யாழ்ப் பாணம்: புதிய சித்ரா பதிப்பகம்) (10),147 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 18.5X12.5 சமீ.
அழிவுநிலைக்குப் போகவிருந்த தன் குடும்பத்தைக் காப்பாற்றத் தன் வாழ்க்கையையே ஆகுதி ஆக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதை.
7Ꭴ3 பொய்மையின் நிழலில். செ.கணேசலிங்கன். சென்னை 600026; குமரன் பப்ளிஷர்ஸ் , 70 முதலாவது தெரு, குமரன் காலனி, வடபழநி, 2வது பதிப்பு, பெப்ரவரி 1997, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (Madras 600014: Chitra Printographic) 182 பக்கம். விலை: இந்திய ரூபா 32. அளவு: 18x12.5 சமீ.
இராணுவமுகாம் வதைகள், வெலிக்கடைச் சிறைக்கொலைகள் உள் ளிட்ட ஈழத்தமிழர்களின் சமகாலவரலாற்றின் கொடுரங்களை மட்டு மல்லாது அவற்றினடிப்படையானதும் அண்மையில் பிரபல்யமடைந்து வரும் சித்தாந்தங்களையும் இந்நாவல் விளக்கமுனைகின்றது.
704
A. ல் அல்ல. திமிலைத்துமிலன். மட்டக்களப்பு: உதயம் வெளியீடு, 1வது பதிப்பு, வைகாசி-புரட்டாதி 1988, (மட்டக் களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்)
(11),165 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18.5x12 சமீ.
ஈழத்தமிழினத்தின் இன்னல் வரலாற்றில், மீன் பாடும் தேனாட்டின் விதியின் விளையாட்டில் ஒரு தனிக்கட்டத்தை உள்ளம் உணர்ந் துருக வைக்கும் காலக்கண்ணாடி இந்தக்கதை என்று ஓர் உணர்வு பிறக்குமேயானால் அதுவே பெரிதெனக்கு.
- திமிலைத்துமிலன் (முன்னுரையில்)
705 மண்ணிற் சமைந்த மனிதர்கள். வ.அ.இராசரத்தினம். ஆனா நகர் 60001 மீ மகராஜி பதிப்பகம், 809, 12ாதுச்செங்கரின்டி கேட் பாங்க் கொலனி, அண் 明榄山 த்தி Qol ' ' Coll liol Ji 1996, (சென்னை 600014: 醬
நூ$ங்கிக்கித்ெேன்று 209

Page 119
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
112 பக்கம். விலை: இந்திய ரூபா 22 அளவு: 17.5x12 சமீ.
திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் சார்ந்த மக்களின் வாழ்க் கையையும் மண்வளத்தையும் மொழித்தன்மையையும் பிரதிபலிக் கும் ஒரு நாவல். 1930களின் இறுதிப்பகுதியில் ஆசிரியர் சிறு வனாக, மாணவனாக, வறுமையுடன் வாழ்ந்த காலத்தை யதார்த் தமாக நாவலின் கதையுடன் சித்திரித்துள்ளார். அக்காலகட்டத்தில் கிறிஸ்தவ, முஸ்லிம், சிங்கள மக்கள் இன-மத முரண்பாடுகளின்றி மூதூர் பகுதிகளில் ஐக்கியமாக வாழ்ந்த முறைமை நாவலில் இ ழையோடியுள்ளது.
7O6 மண்ணின் தாகம். செங்கைஆழியான். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 38. வேம்படி வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச்சகம்). X, 103 LJä585ld. 66060: (b_JT 25. g266): 18X12.5 8Fuß.
தம் வயல்களில் உழைக்கவும் வருவாய் பெறவும் மனித உரிமை களுடன் வாழவும் முடியாது, அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு கிராம மக்களில் சிலர் தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள் வதற்காக இடையறாது முயற்சிப்பதும் அந்த முயற்சியில் வெற்றி யடையாவிடினும் மாற்றுத் திட்டமொன்றின் மூலம் தம் வாழ்வைச் சீர்செய்வதும் இந்த நாவலின் பிரதான பொருளாகவுள்ளது. 1977ம் ஆண்டுப் பகைப்புலத்தைக்கொண்ட இது 1983இல் எழுதப்பட்டது. இந்நாவல் திராச்சுமைகள் என்ற பெயரில் வீரகேசரி வாரமலரில் வெளிவந்தது. நாவலின் மூலப்பெயர் இந்த நாடு உருப்படாது என் பதாகும்.
707 மண்னும் மக்களும். செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ்,79 1வது தெரு, குமரன் காலனி, வடபழநி, 2வது பதிப்பு, ஏப்ரல்.1996. 1வது பதிப்பு, நவம்பர் 1969. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிரபி) 176 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18X12.5 சமீ.
நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமிடையே உள்ள முரண்பாடு கள் உடைத்தெறியப்படுவதன் மூலமே புதிய ஜனநாயகப் புரட்சி யை ஏற்படுத்தமுடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் நாவல்.
708 மண்ணும் மல்லிகையும். விமல் குழந்தைவேல். சென்னை 600020: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் வீதி, வடபழநி,
210 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
16 gól Lug'ull, 1999. (Chennai 600014: Monark Graphics) 168 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 175x12 சமீ.
ஈழப்போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் கிழக்கிலங்கையில் வாழ்ந்திருந்த ஒரு குடும்பம் எதிர்கொண்ட சமூக, பொருளாதார அரசியல் சிக்கல்களை மையமாக வைத்துப் பின்னப்பெற்ற கதை.
709 மரக்கொக்கு. தெணியான். கொழும்பு நான்காவது பரிமாணம் வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994 (கொழும்பு யுனி ஆர்ட்ஸ்) 182 பக்கம். விலை: 75 ரூபா. அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாண நிலப்பிரபுத்துவத்தின் சிதைவு எவ்வாறு மனிதாயத நிலைப்பட்ட பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது என்பதை இந்த நாவலில் காணமுடிகின்றது.
7 O மழைக்காலம். செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: மீரா வெளி யீடு, வேம்படி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம்) (10),90 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18.5x12.5 சமீ.
1984இல் ஈழமுரசு வாரமலரில் தொடராக வெளிவந்த கதை. யாழ்ப் பாணத்து இளைஞர்களின் மனப்பாங்கினையும் மேலைத்தேயக் கலாச்சாரத்தில் ஊறிவிட்ட தமிழ் இளைஞர்களின் மனப்பாங் கினையும் ஒப்பிட்டு நோக்கும் கதையம்சம். யாழ்ப்பாணத்துச் சீதனக் கொடுமையால் வாழ்வின் ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்ட ஒருத்தி தன் சகோதரிகளுக்காக, கடல் கடந்து சென்று ஒப்பந்த மனைவி யாக வாழ்வதற்குத் தயாராகி ஜேர்மன் செல்கின்றாள். வெளிநாட்டுப் பயணத்தின் நோக்கத்துக்கு புதிய விளக்கம் தருவதாக அமையும் கதையம்சம்.
711 மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம். வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி) - 104 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 17.5x13 சமீ.
ஒரு குடியேற்றத்திட்டத்தின் கதை. மனித முயற்சிகள் இயற்கையின் கர்ப்பத்தில் ஏற்படுத்தும் தாக்க விளைவுகளின் பெறுபேறாக சமூக நிலையில் நிகழும் தார்ப்பரியத்தை நாவல் விபரிக்கின்றது. காடு மூடி, காட்டு விலங்குகள் நிறைந்து, பருவத்துக்குப் பருவம் வெள்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 211

Page 120
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
ளப்பெருக்குக்குட்பட்டு மக்கள் வாழாப் பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சிப்பிரதேசம் இரணைமடுக் குளத்தின் நிர்மாணத்துடன் எவ்வாறு புத்துயிர் பெற்றது என்பதை இந்நாவல் சித்திரிக்கின்றது.
72 மனநதியின் சிறு அலைகள். கே.விஜயன், கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, ஒக்டோபர் 2000. (கொழும்பு 13: பேஜ் செற்றர்ஸ், 113 ஜிந்துப்பிட்டி வீதி) Vi,211 பக்கம். விலை: ரூபா 200. அளவு: 18x12 சமீ.
பழமையானதொரு நெசவாலையும் அதன் புறச்சூழலும் கதையின் களமாகின்றது. நெசவாளர்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள், காதல், விரக்தி, பாசம்மிக்க உறவுகள், சில்லறைத்தனமான சச் சரவுகள், மத சம்பிரதாயங்கள் அனைத்தையும் சுமந்து ஒரு நதி யைப்போலப் பயணிக்கும் கதை. பல்லினப்பண்பாட்டுடன் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தின் வாழ்க்கைப் போராட்டம் இதுவாகும்.
713 முடிவல்ல ஆரம்பம். இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, டேவிட் லிகோரி பதிப்பாலயம், 38, வேம்படி வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சித்திரா அச் 35b).
(8),122 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12 சமீ.
ஒரு பாடசாலை ஆசிரியரின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட சமூக நாவல்.
714 முத்துப்பந்தலில் முல்லைக்கொடிகள். குமாரதாசன் (இயற் பெயர்: க.சிவசுப்பிரமணியம்). லண்டன்: கலைவாணி பதிப்பகம், 1வது பதிப்பு, ஆண்டு குறிப்பிடப்படவில்லை. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 43 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22x16 சமீ.
முத்துப்பந்தலில் முல்லைக்கொடிகள் என்ற குறுநாவலும், சீதனம் பற்றிய ஆசிரியரின் கட்டுரையும், 1994 ஆடி, பாரிஸில் இடம்பெற்ற 3வது உலகத்தமிழ் சைவ மகாநாட்டில் தங்கப்பதக்கம் பரிசாகப் பெற்ற மதமாற்றம7 மனமாற்றமா மனஅமைதிக்கு உகந்தது என்ற கட்டுரையும் உள்ளடங்கியுள்ளது.
75 முற்றத்து ஒற்றைப்பனை. செங்கை ஆழியான். யாழ்ப்
212 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
பாணம்: மீரா வெளியீடு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1989. 1வது பதிப்பு, 1972 (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம், காங்கேசன்துறை வீதி)
(8),52 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18.5X13 சமீ.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிராமத்தைக் களமாகக்கொண்டு அங்கு பாரம்பரியமாக நிலவிவரும் காற்றாடிக்கலையின் பெருமை யைப் பலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நகைச் சுவைக் கிராமியச் சித்திரம். எழுபது வயதாகியும் முற்றத்துப்பனையில் விட் டம் போட்டுக் காற்றாடி விடுகின்ற பழக்கமும், வெறியும் தீராத வண்ணார்பண்ணைக் கொக்கர் மாரிமுத்தரையும், அந்த நெடுந் துயர்ந்த பனைமரம் காற்றுக்கு எங்கே தனது வீட்டின்மேல் பாறி விடுமோ என்று பயப்படுகின்ற அவரின் மைத்துணர் அலம்பல் காசிநாதரையும் அவர்களிடையே வளர்ந்துவரும் பகைமை உணர் வையும் வைத்துப் புனையப்பெற்ற நகைச்சுவை நவீனம்.
76 மூட்டத்தினுள்ளே. புலோலியூர் க.சதாசிவம். கொழும்பு: வீரகேசரி வெளியீடு, தபால் பெட்டி இலக்கம் 160, 1வது பதிப்பு, ஜூலை 1983. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ், 185 கிராண்ட்பாஸ் வீதி) 254 பக்கம். விலை: ரூபா 14.50. அளவு: 18x12.5 சமீ.
மலையகத்தைப் பகைப்புலமாகக் கொண்ட நாவல். உழைப்பையே மூலதனமாக நம்பி வாழும் மக்கள் சமூகம் பலவகை அவலங் களுக்குள்ளும் அபிலாஷைகளுடனும் வாழத்துடிக்கும் மனிதப் பண் பினை இந்நாவல் அழுத்திக்காட்டுகின்றது.
717 மூலஸ்தானம். மாத்தளை சோமு. திருச்சி 620003: தமிழ்க்குரல் பதிப்பகம்,P-15, 5வது மெயின் ரோடு, ஞானம் காலனி, இராமலிங்க நகர், உறையூர். 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1998. (Chennai 600014: Parker Computers and Publications, 293 Royapettah High Road, Royapettah) 228 பக்கம். விலை: இந்திய ரூபா 75 அளவு: 21.5x14 சமீ.
தமிழ்நாட்டின் கிராம சமுதாயம், மக்களின் வாழ்க்கை, கோயில் திருவிழாக்காலச் சிறப்புகள் முதலியவற்றை உரிய முறையில் படம் பிடித்துக் காட்டும் இந்நாவல், அமெரிக்க வாழ்க்கைப் போக் கையும் இங்கு வசிக்க நேர்ந்த பிராமணிய சமூகத்தைச் சேர்ந்த ராமின் அனுபவங்களையும் புதுமைச் சிந்தனைகளையும் சுவார
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 213

Page 121
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
சியமாக விவரிக்கின்றது. தமிழகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதிப்பிரச்சினையின் சில பக்கங்களைத் தன் புலம்பெயர் வாழ் வியல் அனுபவங்களோடு புதியகோணத்தில் மானுடத்தைத் தேடு கின்ற வேட்கையோடு மாத்தளை சோமு சொல்ல முனைகின்றார்.
718 யாக குண்டம். செங்கைஆழியான். யாழ்ப்பாணம்: கமலம் பதிப் பகம், 82 பிரவுண் வீதி, 1வது பதிப்பு, தை 1991. (யாழ்ப்பாணம்: தயா அச்சகம், நாவலர் வீதி) X,128 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 16x10 சமீ.
வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் கடல் தாண்டிச் சென்று விட்ட இளைஞர்கள், அவர்களைப் பின்தொடர்ந்து வாழ்க்கைத் துணை தேடி வெளியேறும் இளம்பெண்கள், புதியகுழலில் வம்ச விருட்சத்தை வளர்க்கும் இவர்களின் பிரிவுத்துயரால் இந்த மண் ணில் ஏங்கும் முதிய உறவுகள், இந்த மண்ணின் உறவுத்துயர் களை நாவல் பேசுகிறது. யாழ்ப்பாணத்து மண்ணோடியைந்த வாழ்க்கைமுறை பற்றி நிறைய விபரிக்கப்பட்டுள்ளது.
719 யாகம். முல்லை அமுதன். சென்னை 78; ரிஷபம் பதிப்பகம், 31145 இராணிஅண்ணா நகர், பி.டி.இராஜன் சாலை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2000. (சென்னை 5 மணி ஆப்செட்) 128 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 21.5x14 சமீ.
இனப்பிரச்சினையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை.
72O யேசுவின் மேல் ஆணை. க. தங்கம். நல்லூர், 33. கைலாசப் பிள்ளையார் கோவிலடி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி) 184 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12.5 சமீ.
ஒரு பெண், சத்தியத்துக்காகத் தன்வாழ்க்கையையே அர்ப்பணித் துத் தன் கணவரையும், உயிருக்குயிராய் மதித்த குழந்தை களையும் விட்டு வீட்டைத்துறந்து வெளியேறுகின்றாள். அவள் படும் கஸ்டங்களும் துயரங்களும் கதையை நகர்த்துகின்றன.
721 ராதையின் நெஞ்சம். கே.எஸ்.ஆனந்தன். யாழ்ப்பாணம்: மீரா வெளியீட்டகம், 38 வேம்படி வீதி, 1வது பதிப்பு, 1988, (யாழ்ப் UT600Tib: K.T. s.38 35lb)
214 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
(10),198 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 17.5x12.5 சமீ.
கல்லூரி வாழ்வில் ஏற்படும் காதலைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கதை.
722 லங்காராணி. அருளர். சென்னை 600018: கனல் வெளியீடு, 75 ஆழ்வார்பேட்டைத் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர், 1978. (சென்னை 14 நொவல் ஆர்ட் பிரின்டர்ஸ்) 256 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18X12.5 சமீ.
லங்காராணி. அருளர். யாழ்ப்பாணம்: ஈழப்புரட்சி அமைப்பு, 39, கோவில் வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 1988. (அச்சகம் குறிப்பிடப் படவில்லை.) (12),220 பக்கம். வரைபடம். விலை: ரூபா 20. அளவு; 21X13.5 சமீ.
1977 ஆகஸ்ட் இலங்கை இனக்கலவரத்தின் போது கொழும்பிலி ருந்து ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்றி, வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின் பெயர் லங்காராணி லங்காராணியின் கடற்பிரயாணத்தின் பின்னணியில் அதன் பிரயாணிகளின் உணர் வலைகளின் ஊடாக ஈழத்து இனப்பிரச்சினையின் பூதாகாரத்தன்மை யையும் விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் அழகாகச் சித் திரிக்கும் நூல்.
723 லயத்துச் சிறைகள். தி.ஞானசேகரன். கண்டி மலையக வெளியீட்டகம், த.பெ.எண். 32. 2வது பதிப்பு, பெப்ரவரி 1998. 1வது ugét'ul, b6Jtbuġ 1994. (g5GoiiLq: Latha lmpress, 302, D. S. Sena nayake Road)
128 பக்கம். விலை: ரூபா 80. அளவு: 20.5X14.5 சமீ.
மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப் பரிசு
பெற்ற நாவல். வெளியுலகத் தொடர்புகள் அதிகமற்ற ஒரு மூடிய
கட்டமைப்புக்குள் வாழ்ந்த மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை
மேம்படுத்த அரசும், அரசசார்பற்ற அமைப்புகளும் மேற்கொண்ட
முயற்சிகளின் பின்பும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையாமைக்கான காரண காரியத்
தொடர்புகள் இந்நாவலில் ஆராயப்படுகின்றன.
724 லாவணியம். தேவதாசன் ஜெயசிங். கொழும்பு 6: மலையக
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 213

Page 122
8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
வெளியீட்டகம், 57 மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, 1988. (கண்டி: ரோயல் அச்சகம். 190, கொழும்பு வீதி) (8),76 பக்கம். விலை: ரூபா 25. அளவு 21.5X14 சமீ.
விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் வரும் சாம்சனின் (Hero Samson) 6856jub.
725 வசந்தம் வந்து போய்விட்டது. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 79, 1வது தெரு, குமரன் காலணி, வடபழநி. 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (சென்னை 14: மொனார்க் கிரப்பிக்ஸ்) 215 பக்கம். விலை: இந்திய ரூபா 55. அளவு: 18x12.5 சமீ.
இலண்டன் நகரின் வாழ்க்கையின் ஒரு அம்சத்தைக் காட்டும் கதை. இங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் சில குழப் பமான கோணங்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. அரை குறையாக வேதாந்தம் பேசவும், மற்றவர்களுக்குப் புத்தி சொல் லவும் முனையும் டாக்டர் பிரமிளா போன்றவர்கள் எப்படி உண்மை யை இறுதியில் உணர்கின்றார்கள் என்பதே நாவலின் கருவாகும்.
726 விடிவெள்ளி பூத்தது. என். சோமகாந்தன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).
vi,146 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 18x12 சமீ.
ஒரு காலத்தில் கொடூரமாக விளங்கிய சாதியாசாரம் எவ்விதம் மெல்ல மெல்ல அழிந்து ஒரு புதிய யுகத்தை எட்டிப் பார்க்கின் றது என்ற உண்மையை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகின் றது. யாழ்ப்பாணத்துப் பிராமணக்குடும்பமொன்றின் கதை உள் விட் டுப் பிள்ளை யொன்றினால் கூறப்படுவதால் அச்சமூகத்தின் ஏக்க தாபங்கள் விரக்தி வைராக்கியங்கள் சிறப்பாகச் சித்திரிக்கப் படுகின்றன.
727 விமானங்கள் மீண்டும் வரும். நெல்லை க.பேரன். கரவெட்டி: ஷர்மிளா பதிப்பகம், நெல்லியடி. 1வது பதிப்பு, டிசம்பர் 1985. (நெல்லியடி கலாலயா) X,36 பக்கம். விலை: ரூபா 9.50. அளவு: 18X12.5 சமீ.
யாழ். இலக்கிய வட்டம், ஈழநாடு நிறுவனத்துடன் இணைந்து
216 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(5) நாவல்கள், குறுநாவல்கள்
நடாத்திய இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்று ஈழநாட்டில் வெளிவந்தது. எமது தமிழ் இளைஞர்களின் மத்திய கிழக்கு வாழ்க்கையைப் படம்பிடித் துக் காட்டும் ரீதியில் அமைந்த நாவல்.
728 விமோசனம் நாளை. முல்லை அமுதன். சென்னை 17. மணி மேகலைப் பிரசுரம், த.பெ.1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 600005: எம்.கே. என்டர்பிரைஸ்) 128 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 18.5x12.5 சமீ.
இலங்கையில் சமகாலத்து இனப்பிரச்சினைகளின் பகைப்புலத் தில் இணைந்து செல்லும் ஒரு சாமானியனின் கதை.
729 விலங்கில்லா அடிமைகள். செ.கணேசலிங்கன். சென்னை 5: குமரன் பதிப்பகம், 13/2 கஜபதி தெரு, 1வது பதிப்பு, ஜூலை 1991 (சென்னை 600024: ஜென்னிராம் அச்சகம், 28 தெற்கு சிவன் கோவில் தெரு) 132 பக்கம். விலை: இந்திய ரூபா 14. அளவு: 17.5x12 சமீ.
ஆசிரியர் இந்நாவல் மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச் சினையில் இலங்கைத் தமிழரின் குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, நாகரிக நவீன உலகில் வாழ்கிறோம் என நம்பிக் கொண் டிருப்பவரும் அறிந்துணராத அளவில் உலகெங்கிலும் பல்வேறு வடிவில் வியாபித்திருக்கும் அடிமைநிலை ஆகிய இரு உண்மை களை உணர்த்த முற்பட்டுள்ளார்.
730) வீடற்றவன். சி.வி.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: வைகறை, 330, நாவலர் வீதி, நல்லூர். 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம், சித்திரா அச்சகம்) vi,114 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
மலையகத் தோட்டங்களுக்குள் தொழிற்சங்கங்கள் வேரூன்றி விடாமல் தோட்ட நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகளின் பின், னணியில் நகர்த்தப்படும் நாவல்.
731 வெள்ளோட்டம். கோப்பாய்சிவம் (இயற்பெயர்:ப.சிவானந்தசர்மா). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 1986. (கிளிநொச்சி. சர்வசக்தி குருகுலம்).
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 217

Page 123
8948(5) நாவல்கள், 8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
(4),72 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 21X14 சமீ.
வெள்ளோட்டம், கரை சேரும் கட்டுமரங்கள் ஆகிய இரு குறு நாவல்களின் தொகுப்பு. வெள்ளோட்டம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாலிபர்வட்டம் நிகழ்ச்சியில் தொடர்நாடகமாக ஒலித்தது. கரைசேரும் கட்டுமரங்கள். 1985 ஆம் ஆண்டின் யாழ் இலக்கியவட்டம் ஈழநாடு நிர்வாகத்துடன் இணைந்து நடத் திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியில் பாராட்டுப்பெற்றது. இது ஈழநாடு வாரமலரிலும் தொடராக வெளி யாகியது.
732 ஸ்னேகம். முல்லை அமுதன். (இயற்பெயர்: இ.மகேந்திரன்) 6)6Oil 6: E126LN: 7 Shakespeare Crescent, Manor Park, 16.g. பதிப்பு, ஏப்ரல் 1999, (சென்னை 600002 காந்தளகம்) 111 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 17.5x12 சமீ.
யாழ்ப்பாணத்துப் பாடசாலை ஒன்றில் இளம்ஆசிரியை ஒருவருக் கும் அவரது மாணவனுக்கும் இடையில் ஏற்படும் காதல் கதை.
733 வடிாமிலாவின் இதயராகம் . ஜெக் கரியா ஐ"னைதன் . பேராதனை: ஸ்பீனத் முற்போக்கு தமிழ் மன்றம், 7ஏ ஹேந்தெனிய, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 9: எஸ்.எச்.நிலாப்தீன், டெவலோ பிரின்ட், 33, அல்பியன் ஒழுங்கை). 264 பக்கம். விலை: ரூபா 50. அளவு: 18x12 சமீ.
இஸ்லாமிய சமூகப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பல்வேறு வகைப்பட்ட உணர்வுகளையும் அதனால் விளையும் விபரீதங்களையும் விளக்குகின்றது. இலங் கையில் தினபதி நாளிதழின் வாரவெளியீடான சிந்தாமணி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
734 அடியும் முடியும் இலக்கியத்திற் கருத்துக்கள். க.கைலாசபதி, சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 79, 1வது தெரு, குமரன் காலனி, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (சென்னை 600014: சித்ரா பிரின்டோகிரபி)
218 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
350 பக்கம். விலை: இந்திய ரூபா 65, அளவு: 17.5x12 சமீ.
அவ்வப்போது பத்திரிகைக் கட்டுரைகளாகவும், கருத்தரங்கக் கட் டுரைகளாகவும் வானொலி உரைகளாகவும் எழுதியனவே திருத் தமும் விரிவும் பெற்று இந்நூலில் அத்தியாயங்களாக அமைகின் றன. வெளியீட்டாளர் முதலாவது பதிப்பு என்று குறிப்பிட்டிருப் பினும் இந்நூல் ஏற்கெனவே 1970இல் ஆசிரியரால் தமிழகத்தில் தமிழ்ப்புத்தகாலயத்தினால் முதற்பதிப்பு வெளியிடப்பட்டதாக மு
னுரையிலிருந்து அறிய முடிகின்றது.
735 அதிதிரன். க.உமாமகேஸ்வரன். லண்டன்: அம்பனை கலைப் Gu(BLD6 pub, gdilu SyT3 fulb, 13, Arcus Road, Bromley, BR1 4NN, 1வது பதிப்பு, அக்டோபர் 1998. (லண்டன்: அச்சக விபரம் அறியமுடியவில்லை) Vi,56 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X15 சமீ.
தமிழறிஞர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பதின்மூன்று இலக் கியக் கட்டுரைகளின் தொகுப்பு. பல்வேறு இலக்கியத்தொகுப்பு களில் பிரசுரமானவை.
736 அரசகேசரியின் இரகுவம்மிசமும் அது எழுந்த இந்துப் பண் பாட்டுச் சூழலும். ஆவேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 1988. (யாழ்ப்பாணம்: அச் சகம் குறிப்பிடப்படவில்லை.) 24 பக்கம், வரைபடம் 1. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 24.5X18.5 gl.
அரசகேசரியின் இரகுவம்மிசம், யாழ்ப்பாணத்து அரசர்களின் காலத் திலேயே தோன்றிய முக்கியமானதொரு பெருநூலாகும். ஆறுமுகநாவலர் இரகுவம்மிசத்துக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டு மென விரும்பியதை அவர் வழிவந்த குமாரசுவாமிப்புலவர், சி. கணேசையர் போன்றோர் அந்நூலைப் பதிப்பித்தல், விளக்கம் தருதல், புத்துரை எழுதுதல் ஆகிய பணிகளின் வாயிலாக நிறைவேற்ற முற்பட்டனர். நம்மவர்களின் பண்பாட்டு விழிப்பின் ஒரு பிரதான அம்சமாக இரகுவம்மிசம் விளங்குகின்றது. இரகுவம்மிசம் எழுந்த இந்துப் பண்பாட்டுச்சூழல் பற்றி பேராசிரியர் வேலுப்பிள் ளை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். இது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட்ட சேர். பொன்னம்பலம் இராமநாதன் நினைவுப் பேருரையாகும்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 219

Page 124
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
737 அழியா அழகு. ஜெயராஜ். சென்னை 17. வானதி பதிப்பகம், 13. தீனதயாளு தெரு, 1வது பதிப்பு, மே 1997. (சென்னை 41 Novena Offset Printing Co) XXXi,170 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12சமீ
கவியரசன் கம்பனைப் பற்றிய இருபத்தியொரு திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
738 இத்தாலியன் தந்த இலக்கியத்தேன். நாவண்ணன்.காங்கேசன் துறை: ஸ்டினா வெளியீடு, கலைவாணி வீதி, தையிட்டி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்) (8),62 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 17X12 சமீ.
மேலைநாட்டினர் தமிழ்நாட்டுடன் கொண்ட உறவுகளின் ஒரு படி நிலை சமய இலக்கியச் சிந்தனைகளின் தொடர்பாகும். இந் நிலையின் ஒரு கூறாகத் தோற்றம் பெற்ற கிறிஸ்தவ தமிழிலக் கியத்தில் முக்கியமானது தேம்பாவணியாகும். இது இத்தாலிய நாட்டு கிறிஸ்தவத் தொண்டரான ஜோசப் பெஸ்கி அவர்கள், வீரமாமுனிவராகத் திகழ்ந்து ஆற்றிய பன்முகப்பணிகளின் ஒரு வெளிப்பாடாகும். இயேசு பிரானின் வளர்ப்புத் தந்தை சூசையப்பர், அன்னை மரியாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றினை விரித்து ரைக்கும் சமயக் கதையம்சம். பல்வேறு கிளைக்கதைகளுடன் புனையப்பட்டுள்ளது. இக்காவியத்தின் மையக்கதையம்சத்தின் முக் கிய பகுதிகள் சிலவற்றை சுவைதேர்ந்து வெளிப்படுத்தும் நோக் கில் அமைந்த ஆக்க முயற்சியே இந்த நூலாகும்.
739 இராசநாயக பிரபந்தம். வல்லிபுரம் இராசநாயகம். வயா விளான்-பலாலி: யூரீ தம்பையா தருமப்பணியினர், கூத்தபிரான் அறங்காவல் மன்றம் (கூட்டு வெளியீடு), 1வது பதிப்பு, 1982. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) xi.192 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21x14 சமீ.
ஆசிரியரினால் ஆக்கப்பெற்ற, செய்யுட்களும் கட்டுரைகளும் அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. வரலாறு, அரசியல், சமூகம், சமயம், சட்டம், இலக்கணம் பற்றிய பல்துறைசார்ந்த விடயங் கள் இதில் அடங்குகின்றன.
740 இலக்கிய நினைவுகள். வ.அ.இராசரத்தினம். திருக்கோண
220 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலை: அன்பர் நிதியம், 1வது பதிப்பு, தை 1995. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்) 203 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 18.5x12 சமீ.
தனது இலக்கிய வாழ்வுடன் கூடிய நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். ஈழத்து இலக்கியம் பற்றிய அறி வுக்கு இந்நூல் உதவுகின்றது.
74 இலக்கிய வழி. சி.கணபதிப்பிள்ளை (மூலம்) அ.பஞ்சாட்சரம் (பதிப்பு). உரும்பிராய்: பண்டிதமணி நூல் வெளியீட்டுச்சபை, 4வது பதிப்பு, 1985. 1வது பதிப்பு, 1964. (சுன்னாகம்: திருமகள் அழுத் தகம்) XVi,XXXVi,122 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18x13 சமீ.
பண்டிதமணி அவர்களின் சமயச் சொற்பொழிவுகளும் கட்டுரை களும் தொகுக் கப்பெற்று சமயக்கட்டுரைகள் என்ற பெயரில் வெளிவந்திருந்தது. அதன் திருத்தப்பதிப்பாக, இலக்கியக்கட் டுரைகளும் சேர்க்கப்பட்டு இருபது கட்டுரைகளுடனும் இரசனைக் குறிப்புகளுடனும் இலக்கியவழி என்ற பெயரில் 1964 இல் வெளிவந் தது. அந்நூலின் 4வது பதிப்பு இதுவாகும்.
742 இலக்கியச் சிந்தனைகள். க.கைலாசபதி, யாழ்ப்பாணம்: திருமதி.சர்வமங்களம் கைலாசபதி, திருநெல்வேலி. 1வது பதிப்பு, 1983. (கொழும்பு 12. குமரன் அச்சகம், 201, டாம் வீதி), (8),144 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18X13 சமீ.
இலக்கியச் சிந்தனைகள். க.கைலாசபதி. சென்னை: குமரன் புத்தக இல்லம், 3 மெய்கைவிநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழநி, 2வது பதிப்பு, 2001 (சென்னை 600014: சித்ரா பிரின் டோகிரபி). 107 பக்கம். விலை: இந்திய ரூபா 175 அளவு: 21X14 சமீ. ISBN 955-9429-10-8
பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன எழுத்துக்களையும் விஞ்ஞான பூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கிய பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய 19 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள்.
743 இலக்கியத் தேறல். அகளங்கள் (இயற்பெயர்:நா.தர்மராஜா)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 221

Page 125
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
வவுனியா; முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப் பாணம்: உமா அச்சகம்) XXiv,132 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 175x12 சமீ.
சங்க இலக்கியங்கள் தொடங்கித் திரைப்படப்பாடல்கள் வரை அலசி வடித்த பன்னிரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.
744 இலக்கியமும் திறனாய்வும். க.கைலாசபதி. சென்னை 60002 சக்கரம் புக்ஸ், 21 ஜான் முகமத் தெரு, 3வது (மீள்)பதிப்பு, டிசம் பர் 1990. 1வது பதிப்பு, ஏப்ரல் 1972, 2வது பதிப்பு, பெப்ரவரி 1976, 3வது பதிப்பு, மார்ச் 1981. (சென்னை 4: பார்வதி அச்சகம். மயிலாப்பூர்) 190 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 18x12.5 சமீ.
இலக்கியமும் திறனாய்வும். க.கைலாசபதி. சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 3. மெய்கைவிநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 4வது (மீள்)பதிப்பு, டிசம்பர் 1999. (சென்னை 18: NAM Process) 174 பக்கம். விலை: இந்திய ரூபா 45. அளவு: 17.5x12 சமீ. (குமரன் வெளியீட்டின் 1வது பதிப்பாகவும், நூலின் 4வது மீள் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது)
திறனாய்வு என்பது வெறும் விவரணமோ, கூற்றுத்திறனோ அன்று. அது அழகியல் சார்ந்த முயற்சியாக இருக்கும் அதே வேளை ஆய்வறிவு சார்ந்த ஓர் ஆயுதமாகவும் அது விளங்குகின்றது. மொழியும் இலக்கியமும், இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகளுடன் தற்கால தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்கு கள் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது.
745 இலங்கைத் தமிழ் இலக்கியம். எஸ் தில்லைநாதன். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, 44, 3வது
மாடி, கொழும்பு மத்திய கூட்டுச்சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்)
(10),184 பக்கம். விலை: ரூபா 150. அளவு: 22X14 சமீ.
பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின் மணிவிழாவையொட்டி வெளிவரும் இந்நூலில் இலங்கைத் தமிழ்இலக்கியம் பற்றிக் கடந் த 25 ஆண்டுக் காலப்பகுதியில் அவர் எழுதிய ஆய்வுக்கட் டுரைகளுள் சிலவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளி வந் துள்ளது. இந்நூலில் 27 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
222 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
746 இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி. துரை மனோகரன். கண்டி: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1997 (கண்டி எஸ்.மகேந்திரன், மெமோ-டெக் கம்பியுட்டர்ஸ்) vi,225 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 21x14 சமீ.
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க காலம் முதல் இற்றை வரையிலான வளர்ச்சிப்போக்கினைத் தொடர்ச்சி யாக உணர்த்தும் முறையில் அமைந்துள்ளது.
747 இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள். க.அருணாசலம். கொழும்பு 12: குமரன் புத்தகஇல்லம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997, (கொழும்பு 12: குமரன் அச்சகம்) X.475 LJébébtd. 66060: IbLIT 150. 96ñ6): 21.5X14 guß. ISBN 9559194-06-2.
தமிழியல் பற்றிய ஆய்வுகளை வரலாற்று விவரண ஆய்வுமுறை யியலூடாகத் துறைகளின் அடிப்படையிலும், கால அடிப்படை யிலும், ஒழுங்கமைத்துத் தருவதுடன் ஆங்காங்கே அவை தொடர் பான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றது.
748 இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்: ஓர் அறிமுகம். க.அருணாசலம், கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்)
(6),537 பக்கம். விலை: 150 ரூபா, அளவு 21.5x14 சமீ.
மலையகத் தொழிலாளர்களின் பரிதாபத்திற்குரிய வாழ்க்கைப் போராட்டங்களை. அவலங்களை, வேதனைகளை, அவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறப்போராடும் நிலைமையை விழிப் புணர்வினை சித்திரிக்கும் வரலாற்று ஆவணங்களான மலையக நாவல்கள் பற்றிய ஆய்வு.
749 இன்றைய உலகில் இலக்கியம். இ.முருகையன். சென்னை 2. சென்னை புக்ஸ், 6, தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, பெப்ரவரி 1988. (சென்னை 4: மிதிலா அச்சகம்) 165 பக்கம். விலை: இந்திய ரூபா 14. அளவு: 17X12 சமீ.
மக்கள்-மொழி-பண்பாடு கலை-இலக்கியம் விஞ்ஞானம் இலக்கியநயப்பு
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 223

Page 126
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
இலக்கிய விமர்சனம்-இலக்கியப்பரவல்-இலக்கிய நூல்வெளியீடு ஆகியவற்றுக்கிடையேயான உறவுகள் தொடர்பாக ஓர் இலக்கிய வாசகனுக்கு எழும் ஐயங்களை தெளிவாக்கும்வகையில் அமைந்த நூல்.
750 இனி ஒரு விதி செய்வோம். எஸ்.பொன்னுத்துரை. அவுஸ்தி (36 Suit: ifjöy Q66fluG, 1/23 Munro Street, Eastwood, Sidney, 16g5 lugL, sab6ò' 2000. ( Q666p6T 600024: Mitra Arts and Creations, 375/8- 10 Arcot Road) 432 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
ஈழத்தின் முன்னணி எழுத்தாளரான எஸ்.பொ.வின் இக்கட்டுரைத் தொகுதி ஈழ இலக்கிய வரலாற்றின் ஆவணமாகக் கருதலாம். வரலாற்று ரீதியாகத் தொகுக்கப் பட்டிருக்கும் இக்கட்டுரைகளில் விவாதத்தக்குரிய பல இலக்கியக் கொள்கைகள் அந்தந்தக் கால கட்டத்தில் எப்படி அர்த்தம் கொண்டதாக இருந்தனவோ, அவ் வகையிலேயே பதியப்பெற்றுள்ளன.
751 ஈழத்தில் தமிழிலக்கியம். கா.சிவத்தம்பி. சென்னை 98: NCBH, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1987, 1வது பதிப்பு, ஏப்ரல் 1978. (சென்னை 14: பாவை பிரின்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்) 215 பக்கம். விலை: இந்திய ரூபா 17 அளவு: 18X12 சமீ.
இலங்கையின் தனித்துவத்தையும் தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் ஓர் இலக்கிய மரபு இலங் கையில் தோன்றி வளர்ந்த முறையினை இந்நூல் சிறப்பாக எடுத் துக் காட்டுகின்றது.
752 ஈழத்து இலக்கிய முன்னோடிகள்.க.கைலாசபதி. சென்னை 02. மக்கள் வெளியீடு, 1வது பதிப்பு, அக்டோபர் 1986. (சென்னை: மக்கள் அச்சகம்) 143 பக்கம். விலை: இந்திய ரூபா 16 அளவு: 21.5X14 சமீ.
இந்நூலிலுள்ள ஆறு கட்டுரைகள் 19ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சில அம்சங்களை விபரிக்கின்றன. பொது வான வளர்ச்சியையும் அவ்வளர்ச்சிக்குச் சிலர் ஆற்றிய காத் திரமான பங்களிப்பையும் ஆங்காங்கு ஆசிரியர் மதிப்பிட்டுள்ளார்.
224 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
753
A a. A. A. a.
Rygb36 * சமகால ஆளுமைகளும் பதிவுகளும் மூன்றாவது மனிதன் நேர்காணல்கள். எம்.பெளசர் கொழும்பு 02:மூன்றாவது மனிதன் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜூன் 2001. (கொழும்பு 13, யு.கே. பிரின்டர்ஸ்) 152 பக்கம். விலை: ரூபா 220. அளவு 22x14 சமீ.
ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆற்றலாளர்களுடனான நேர்காணல் கள் பதினொன்று. கொழும்பு - முன்றாவது மனிதன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்த செவ்விகளின் தொகுப்பு.
754. ஈழத்து வாழ்வும் வளமும். க.கணபதிப்பிள்ளை. சென்னை 26: குமரன் பதிப்பகம், 79, 1வது தெரு, குமரன் காலனி, வடபழநி, 2வது பதிப்பு, பெப்ரவரி 1996, 1வது பதிப்பு, 1962. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிராபி) / 158 பக்கம். விலை: இந்திய ரூபா 28. அளவு: 18X12.5 சமீ.
ஈழத்து வாழ்வும் வளமும், க.கணபதிப்பிள்ளை. சென்னை: குமரன் புத்தக இல்லம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழநி, 3வது பதிப்பு, 2001, 1வது பதிப்பு 1962, 2வது பதிப்பு, பெப்ரவரி 1996, (அச்சக விபரம் அறிய முடியவில்லை) 104 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: இந்திய ரூபா 175. விஷேட பதிப்பு: இந்திய ரூபா 350. அளவு: 21X14 சமீ. ISBN (சாதாரண பதிப்பு)955-9429-15-9. (விஷேட பதிப்பு) 955-9429-09-4
ஈழத்து வாழ்வையும் வளத்தையும் எடுத்துக் காட்டும் சிறந்த நூல். இக்கட்டுரைத் தொகுதியில் வரலாறு, இலக்கிய வரலாறு, இ லக்கிய வளர்ச்சி, அதில் முக்கிய இடம்பெறுவோர், ஈழத்துத் தமிழர் நாட்டார் வழக்காறுகள் ஆகியன பற்றிய கட்டுரைகள் அடங்கியுள் 660.
755 ஈழத்துக் குழந்தைப்பாடல்கள். கனக செந்திநாதன். குரும் பசிட்டி. சன்மார்க்கசபை, 1வது பதிப்பு, 1988, (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) vi,14 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14 சமீ.
ஈழத்துக் குழந்தைப்பாடல்கள், பிரதம வகுப்புகளுக்கான ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் ஆகிய இரு கட்டுரைகளிலும் குழந்தைப்பாடல் களின் அவசியம் பற்றிய கருத்துக்களும் இரசிகமணி சிந்தனைத் துளிகள் என்ற தொகுப்பில் சிறுவர் பாடநூல்களுக்கு ஆசிரியர்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 225

Page 127
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
வழங்கிய உரைகளிலிருந்து தேர்ந்த கருத்துக்களும் எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.
756 ஈழத்துத் தமிழ்இலக்கிய வளர்ச்சி.க.செ.நடராசா. கொழும்பு 6. கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 5வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1982. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) XVi,144 பக்கம். விலை: ரூபா 25. அளவு; 21X14 சமீ.
ஈழத்துத் தமிழ்இலக்கிய வளர்ச்சி.க.செ.நடராசா. சென்னை 2. காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஜூன் 1987. (சென்னை 600086; சாலை அச்சகம்) XVi,192 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18x12.5 சமீ. (காந்தளகத்தின் 1வது பதிப்பாக வெளிவந்துள்ள மறுபதிப்பு)
14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டிறுதி வரையிலான ஈழத் துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றிக்கூறும் வரலாற்று நூல். அக்காலகட்டத்தில் எழுந்த தமிழிலக்கியங்கள் பல்வேறு கோணங் களிலிருந்து ஆராயப்பட்டுள்ளன. சரசோதிமாலை எனும் சோதிட நூலின் ஆசிரியர் தேனுவரைப்பெருமாளின் காலத்திலிருந்து புலியூரந்தாதியின் ஆசிரியராகிய மயில்வாகனப்புலவரின் காலத் தோடு நிறைவு பெறும் ஆய்வு
757 ஈழத்துத் தமிழிலக்கியத்தடம்: 1980-2000: பார்வையும் விமர்சனங்களும். கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு 2: மூன்றா வது மனிதன் பதிப்பகம், 37/14 வக்ஸ்சோல் வீதி, 1வது பதிப்பு, 193buj 2000. (Chennai 4: Multi Craft) xi,172 பக்கம். விலை: ரூபா 210. அளவு 21X14 சமீ.
இத்தொகுதியிலுள்ள 15 கட்டுரைகளும் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. 1980, ஈழத்துத் தமிழிலக்கியத்தின் முக்கிய காலகட்டமாகக் கருதப்படு கின்றது. அரசியல் இலக்கிய பண்பாட்டு சமூகத் தளங்களில் இக் காலம் மிகப்பெரும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் சந்தித்தது. அந்த மாற்றங்கள் தொடர்பான பதிவுகள் இவையாகும்.1980 களிலிருந்து 2000 வரை ஈழத்துத் தமிழ்ச் சூழலில் என்ன நடந்தி ருக்கின்றது என்ற ஒரு சுயமதிப்பீட்டிற்கும், 21ஆம் நூற்றாண்டின் சவால்களை நாம் சந்திப்பதற்கு நம்மைத் தயார் படுத்துவதற்கும் நமக்கான ஒரு ஜன்னல் இத்தொகுதியின் மூலம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
226 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
758 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு. சி.வன்னியகுலம். யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜூன் 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி) XVi,172 பக்கம். விலை சாதாரண பதிப்பு: ரூபா 30. நூலகப்பதிப்பு: ரூபா 40. அளவு: 19X13 சமீ.
இலக்கியத்திற்கும் மொழிக்குமிடையிலான தொடர்பு, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு கையாளப்பட்ட வரலாறு, பிரதேசக் கிளை மொழிகள் எவ்வாறு அவ்வப்பிரதேசங்களில் எழுந்த புனை கதைகளிலே கையாளப்பட்டுள்ளன, எத்தகைய புனைகதைகளுக்கு எத்தகைய கிளைமொழிகள் உபயோகிக்கப்பட வேண்டும், பேச்சு வழக்கினை இலக்கியத்தில் கையாளும்போது எதிர்நோக்கும் பிரச் சினை போன்ற விடயங்களை விரிவாக இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.
7.59 உள்ளத்தனையது உயர்வு. ஆ.கந்தையா. யாழ்ப்பாணம்: காந்தளகம், 213 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு.1984. (யாழ்ப் பாணம்: பூரீகாந்தா அச்சகம்,213 காங்கேசன்துறைவிதி) (10),110 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18x13 சமீ.
நூலாசிரியர், தான் மாணவனாகவும் ஆசிரியனாகவும் ஆராய்ச்சி யாளனாகவும் இருந்த காலங்களில் நிகழ்ந்தவற்றைக் கட்டுரை வடிவில் தந்துள்ளார். பேராசிரியர் மு.வரதராசனார், சேர்.கந்தையா வைத்தியநாதன், பேராசிரியர் யோன். மார், பேராசிரியர் ஆ.ச. ஞானசம்பந்தன் ஆகியோருடனான தொடர்புகளின் இனிய நினைவு களை 11 கட்டுரைகளில் தந்திருக்கிறார்.
760 எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள். ம.தேவகெளரி. யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234-8, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (சென்னை 600014: சித்ரா பிரின்டோ கிரபி, 24 பொன்னுச்சாமி தெரு) 132 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12.5 சமீ.
ஈழத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகை சஞ்சிகையில் 80களில் வெளிவந்த விமர்சனங்களைப்பற்றிய குறிப் பிடத்தக்கதொரு ஆய்வு நூல். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப்பட்டப்படிப்பின் இறுதித்தேர்வுக்காக 1992இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வாகும்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 227

Page 128
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
761 ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: 1956-1963. முதளையசிங்கம். சென்னை 14: க்ரியா பதிப்பகம், 268 இராயப்பேட்டை பிரதான வீதி, 1வது பதிப்பு, 1984. (சென்னை14; ரசனா ஒப்செட் பிரின்ட், 275 இராயப்பேட்டை பிரதான வீதி) 177 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18x12 சமீ.
1956 முதல் 1963 வரையான ஏழாண்டுக்கால இலக்கியவளர்ச்சி யைக் கணிப்பதை இலக்காகக் கொண்டு, இலங்கையில் சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றின் மீது ஆசிரியர் செலுத்தும் பார்வை, இந்நூலின் தனித்தன்மை. நபர்களின் மீதான பார்வையி லிருந்த போக்குகளையும், போக்குகளின் மீதான பார்வையிலிருந்து நபர்களையும் அணுகும் இவரது நிலைகள் ஒன்றுடனொன்று பின் னியும் பிரிந்தும் ஆக்கபூர்வமான இலக்கிய விமர்சனமாகவும் வரலாறாகவும் தோற்றம் கொள்ள வைக்கின்றது.
762 கட்டுரைக் கோவை. நா.மாணிக்கஇடைக்காடர். யாழ்ப்பாணம்: ஆசிரியர், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச் சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 113 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 21.5X14 சமீ.
தமிழ் மக்களின் சங்ககால மரபு-குறிப்பாக, புறநானூறு, திருவள்ளு வரின் பொய்யாமொழி, பாரதம், இராமாயணம் போன்ற இலங்கு நூல்களில் வடித்தெடுக்கப்பட்ட அடிப்படை உண்மைகளை அத்தி வாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட கட்டுரைகள். ஈழநாடு பத் திரிகையில் வெளிவந்தவை.
763 கம்பராமாயணக் காட்சிகள். சி.கணபதிப்பிள்ளை. யாழ்ப் பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி). XXVi,199 பக்கம், தகடுகள். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 15. நூலகப்பதிப்பு: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய முப்பத்திஎட்டு தமிழ் இலக்கியக் கட்டுரைகளைக் கொண்டது.
764 கலை இலக்கியக் கட்டுரைகள். சி.மெளனகுரு. சென்னை 26: குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜூலை 1997. (சென்னை 06: சுமதி லேசர்ஸ்)
228 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
128 பக்கம். விலை: இந்திய ரூபா 36. அளவு: 18x12 சமீ.
கலை சம்பந்தமான ஆறு கட்டுரைகளும் இலக்கியம் சம்பந்தமான நான்கு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
765 கலை இலக்கியத் திறனாய்வு. கே.எஸ்.சிவகுமாரன். கண்டி: தமிழ் மன்றம், 1வது பதிப்பு, 1989. (சென்னை: எம்.ஏ.பிரிண்டர்ஸ், அங்கப்ப நாயக்கர் தெரு) 84 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ
கல்வித் தராதரத்தில் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் பல்கலைக் கழகங்களில் பயில்வோருக்கும் கலைஇலக்கியத் திறனாய்வு பற்றிய அடிப்படை விளக்கத்தைத் தரக்கூடிய நூல்.
766 கலைக்குரல்கள். வி.என்.எஸ்.உதயச்சந்திரன். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு, மே 1999. (கொழும்பு 13: Laxsu Graphic (Pvt) Limited) 207 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 21.5X14 சமீ.
இலங்கை வானொலியில் கலைப்பூங்கா நிகழ்ச்சியில் ஒலிபரப்பான 21 கட்டுரைகளின் தொகுப்பு.
767 கலைஞனின் தாகம் . மு.தளையசிங்கம். கோவை 15: சமுதாயம் பிரசுராலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1985. (கோய முத்துர் 641015: பாரிஜாதம் அச்சகம்) 142 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 175x12.5 சமீ.
உடல், உயிர், மனத்தளங்களையும் கடந்து கலைப்பரவச நிலைக்கு மனிதனை உயர்த்துவதே உண்மையான கலை இலக்கியம் என்றும் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அப்பணி நடக்கவேண்டிய கால கட்டத்தை நாம் அடைந்துவிட்டோம் என்றும் தனது நம்பிக்கையை அறிவுரீதியாக, அழகுற ஆணித்தரமாக ஆசிரியர் முன்வைக்கின்றார்.
768 கற்பகமலர்: திருக்குறள் கட்டுரைகள். கா.பொ.இரத்தினம். சென்னை 600002 காந்தளகம், 4, முதல் மாடி, ராகிசா கட்டிடம், 834, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஆவணி 1986 (சென்னை 600005; மரீகோமதி அச்சகம், 41 சூரப்ப முதலி தெரு, திருவல்லிக் கேணி)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 229

Page 129
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
iv,180 பக்கம். விலை: இந்திய ரூபா 12.50. அளவு: 18x12.5 சமீ.
தமிழ்மறைக் கழகத்தின் 4வது வெளியீடு. திருக்குறள் தொடர்பான ஒரு பாடலையும் 5 உரைகளையும் 9 கட்டுரைகளையும் கொண் டுள்ளது. இவை 1943-84 காலப்பகுதிகளில் எழுதப்பட்டவையாகும். திருக்குறள் பற்றிக் காலம்காலமாகத் தவறாக மக்கள் மனதில் படிந்து விட்ட மாசுகளைப் போக்கும் முயற்சி இதுவாகும்.
769 செங்காவலர் தலைவர் யேசுநாதர். ஏ.ஜே.கனகரட்னா. சென்னை: மித்ரவெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (சென்னை: மித்ரா) 164 பக்கம். விலை: இந்திய ரூபா 5000. அளவு: 18x12 சமீ.
இந்நூலில் உலகளாவிய இலக்கியப் போக்கினையும் நடப்பினை யும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்வகையில் அமைந்த 28 கட்டுரைகள் உள்ளன.
770 செந்தமிழ்க் களஞ்சியம். சி.கணபதிப்பிள்ளை. உரும்பிராய்: பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை, உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, 1987 (சுன்னாகம்; திருமகள் அழுத்தகம்) XXi,176 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
பண்டிதமணி சி.க. அவர்கள் பத்திரிகைகளுக்கும் பேச்சுக்களுக் குமென எழுதிய 27 இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. இது பண்டிதமணியின் மறைவுக்குப்பின் வெளிவந்த முதலாவது நூலும் அவரின் 23வது நூலுமாகும்.
1 לל தமிழ் இலக்கியம்: நூறு சொல் வினாவிடை. செ.கதிர் காமத்தம்பி, யே.அமலசீலன். யாழ்ப்பாணம்: ஆசிரியர்கள், பரி. யோவான் கல்லூரி, 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: ஆசீர் வாதம் அச்சகம்) 24 பக்கம். விலை: ரூபா 12.50. அளவு: 19X13 சமீ.
10ம் 11ம் ஆண்டு வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பெற்ற கைநூல்.
772 தமிழ் இலக்கிய வரலாறு. வி.செல்வநாயகம். கொழும்பு 12:
குமரன் புத்தகஇல்லம், 201 டாம்வீதி, திருத்திய 4ம் பதிப்பு, 1998. 230 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
1வது பதிப்பு, 1951, 2வது பதிப்பு 1956, 3வது பதிப்பு, 1960. 4வது பதிப்பு, 1965, (மறுபிரசுரம்)1996, (கொழும்பு 12. குமரன் அச்சகம்) X.224 பக்கம். விலை: ரூபா 125 அளவு 21X14 சமீ.
தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இந்நூல் இத்துறையில் தமிழில் வெளிவந்த நூல்களில் மிகமுக்கியமான ஒன்றாகும். தமிழிலக்கிய வரலாற்றைத் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து நோக்கும் பண்பினை முதன்முதலில் தொடக்கிவைத்தவர் பேராசிரியர் வி.செல்வநாயகம். தமிழிலக்கிய வரலாற்றில் இன்று ஏற் றுக் கொள்ளப்பட்டுள்ள காலவகுப்பினை முதன்முதலில் தொடக்கி வைத்தது இந்நூலாகும். தமிழிலக்கிய வரலாறு பற்றிய சிறந்த ஆய் வாளர்களான வையாபுரிப்பிள்ளை, ஜேசுதாசன், அருணாசலம் ஆகியோரினாற் பெரிதும் புகழப்பட்ட இந்நூல் தமிழிலக்கிய வரலாறு பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தைத் தருவதில் இன்றும் நிகரற்று விளங்குகின்றது.
-பேராசிரியர் கா.சிவத்தம்பி
73ל தமிழ் சிங்கள இலக்கிய உறவு: ஓர் ஒப்பீட்டு ஆய்வு. த.கனகரத்தினம். கொழும்பு: தமிழ்ச்சங்கம், சாந்தி நிகேதன், 1வது பதிப்பு, 1996, (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) (10),163 பக்கம். விலை: ரூபா 130. அளவு: 22X15 சமீ.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில், இலக் கியங்களில் காணப்படும் ஒருமைப்பாடுகளை விளக்கும் சங்கமம் நிகழ்ச்சியில் 1987-1988 காலப்பகுதியில் இடம்பெற்ற தொடர் கட்டுரைகளின் நூல்வடிவம். தமிழ்-சிங்கள இலக்கிய நூல்களுக் கு இடையே உள்ள ஒருமைப்பாடுகள் ஒரு ஒப்பீட்டு இலக்கிய ஆய் வாக இக்கட்டுரைகளின் வாயிலாக சான்றாதாரங்களுடன் ஆராயப்பட் டுள்ளன.
774 தமிழ்த்துது கட்டுரைக்கொத்து. தனிநாயகம் அடிகள். சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, 5வது பதிப்பு, 1998. 1வது பதிப்பு, 1952 (சென்னை 33; பூரீவிக்னேஷ் பிரின்ட்ஸ்) wi.82 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு 21.5X14 சமீ.
தனிநாயகம் அடிகளின் தமிழியல் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ்த் தூது, சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு, மலரும் மாலையும், காப் பியக்கவிஞர் வீரமாமுனிவர், தமிழ்நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை, செந்தமிழ் வளர்ச்சி, தமிழரும் அவர்தம் கவின் கலை
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 231

Page 130
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
களும், தமிழ்கூறும் நல்லுலகம் ஆகிய எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு. முதற்பதிப்பு 1952இலும் 2ம் பதிப்பு 1959இலும் 6 கட் டுரைகளுடன் வெளிவந்தன. 3வது பதிப்பு இரு கட்டுரைகளுடன் பின்னர் வெளிவந்தது. (வெளியீட்டுக்குறிப்பு இல்லை). 1962இல் 4வது பதிப்பு வெளிவந்தது. அதில் முதலிரு பதிப்புகளில் இடம் பெற்ற கட்டுரை ஒன்று நீக்கப்பட்டு புதிய இரு கட்டுரைகள் சேர்க் கப்பட்டன. 5வது இப்பதிப்பில் முன்னர் நீக்கப்பட்ட கட்டுரையும் சேர்க்கப்பெற்று மொத்தம் 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன.
775 தமிழியற் கட்டுரைகள். எஸ்.சிவலிங்கராஜா, மயிலங்கூடலூர் நடராசன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ரீ சுப்பிரமணியம் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஜூலை 1982. (யாழ்ப்பாணம்: பூரீசுப்பிர மணிய அச்சகம்) Xx,183 பக்கம். விலை: ரூபா 19. அளவு 22x14 சமீ.
தமிழியல் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இக்கட்டுரைகளில் முதற்பகுதியில் தமிழிலக்கிய வளர்ச்சி தொடர்பான கட்டுரை களும் இரண்டாம் பகுதியில் ஈழத்துத் தமிழறிஞர்களின் தொண்டு கள் பற்றிய கட்டுரைகளும் அடங்கியுள்ளன.
776 தமிழில் இலக்கிய வரலாறு. கார்த்திகேசு சிவத்தம்பி. சென் னை 600098 நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 600014: பாவை பிரின்டர்ஸ்) XX,292 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 19X12.5 சமீ.
தமிழில் இலக்கிய வரலாறு. கார்த்திகேசு சிவத்தம்பி. சென் னை 600098 நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 2வது பதிப்பு, மார்ச் 1998. (சென்னை 600005: கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ்) (8),283 பக்கம். விலை: இந்திய ரூபா 60. அளவு: 17.5x12 சமீ. ISBN 81-234-0522-7.
தமிழில் இலக்கிய வரலாறு, நான்கு இயல்களில் ஆராயப்பட்டுள் ளது. இலக்கிய வரலாறு என்னும் பயில்துறை, அதன் புலமைப் பரப்பமைவு பற்றிய சுருக்க அறிமுகம், தமிழில் இலக்கிய வரலாற் றின் வளர்ச்சி, பிரச்சினை மையங்கள் வளர்ச்சியைப் பார்க்கும் முறை ஆகியன இவ்வியல்களின் பரப்புகளாக அமைகின்றன. பின் னிணைப்பாக இலக்கிய வரலாற்று நூல்களிற் சில பற்றிய நூல் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
232 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
777 தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும். பெ.கோ.சுந்தர ராஜன்(சிட்டி), சோ.சிவபாதசுந்தரம் சென்னை 600014: க்ரியா, 268 இராயப்பேட்டை நெடுஞ்சாலை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1989. (Qg 6160601 600020: St. Louis Institute of Printing for the Deaf) (10),368 பக்கம். விலை: இந்திய ரூபா 75 அளவு; 21X13.5 சமீ.
தமிழில் சிறுகதை பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் அது வளர்ந்துள்ள வரலாற்றையும் ஆராயும் நூல். சென்ற நூற்றாண்டில் உதயதாரகை, விவேக சிந்தாமணி, போன்ற சஞ்சிகைகளில் எழுதப் பட்ட சிறுகதைகளில் தொடங்கி, சுப்பிரமணிய பாரதி, மாதவய்யர், வ.வே.சு.ஐயர் முதலியவர்களின் படைப்புக்கள், பின்னர் மணிக்கொடி மூலம் புகழ்பெற்ற பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி முதலியோர் வழியாக அடுத்த இரு தலைமுறைகளில் சிறுகதை வளர்ந்த வரலாற்றை இந்நூல் ஆராய்கின்றது.
778 தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும். கா.சிவத்தம்பி. சென்னை 5: தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி.கோவில் தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, மார்ச் 1983. (சென்னை 14: அன்னை அஞ்சுகம் அச்சகம், இராயப்பேட்டை) 144 பக்கம். விலை: இந்திய ரூபா 7. அளவு: 18x12.5 சமீ.
இலக்கிய விமர்சனக்கட்டுரைகள் ஐந்தின் தொகுப்பு. தமிழிலக்கி யத்தில் மதங்களின் பங்களிப்பு, சைவசித்தாந்தம் பற்றிய ஓர் சமூக வரலாற்று நோக்கு, தமிழிலக்கியத்தில் மானுடம் என்பன கட்டுரை களின் அடிப்படை அம்சங்களாக உள்ளன.
779 தமிழும் அயலும் . சி.சிவசேகரம். சென்னை 02: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஜூன் 1993, (சென்னை: சூர்யா அச்சகம்) 172 பக்கம். விலை: இந்திய ரூபா 22. அளவு: 18X12.5 சமீ.
சமூக வளர்ச்சி எப்படி பல்வேறு காலகட்டங்களிலும் பரிணாமம் பெற்று மாற்றமடைந்து வளர்ந்து வந்திருக்கின்றதோ அவ்வாறே மொழியும் நீண்ட வரலாற்றுக் காலகட்டங்களில் சமூக மாற்றம், சமூகத் தேவைகளுக்கேற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந் திருக்கின்றது. மொழி அதன் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்பது மொழியின் வளர்ச்சிக்கும் அந்த மொழியைப் பேசும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் அவசியமானது. தமிழர்களின் புலம்பெயர் வாழ்வுடன் தொடர்பான சமூகமாற்றங்களைக் கிரகித்து வெளிப்படுத்த வேண்டிய
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 233

Page 131
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
தேவையும் தமிழ்மொழிக்கு உண்டு என்பதை இக் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
78O தலைப் பூக்கள். டொமினிக் ஜீவா. யாழ்ப்பாணம்: மல்லிகைப் பந்தல், 1வது பதிப்பு, மே 1996. (சென்னை 14: சித்ரா பிரின்டோ கிரப்பி) 208 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 17.5x12.5 சமீ.
இலக்கிய வாழ்வில் காலத்துக்குக் காலம் தன் உணர்வுகளைப் பாதித்த சம்பவங்களை, நெஞ்சத்தைத் தொட்ட நிகழ்ச்சிகளை 55 தலைப்புக்களில் ஆசிரியர் தொகுத்துத் தந்துள்ளார்.
781 திருக்குறள் புதிய உரை: அறத்துப்பால். நா.சி.கமலநாதன். ஜேர்மனி உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம் Regel Str 26, 48431 Rheine, 16)g LigÜL!, 2000. (Q56öt6960 600094: Script Offset) 192 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு 12.5X18.5 சமீ.
திருக்குறளின் அறத்துப்பாலுக்கான புதிய கருத்துரை.
782 திறனாய்வு சார்ந்த சில பார்வைகள். மு.பொன்னம்பலம். தெகிவளை: வெளியீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை. 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (கொழும்பு 13: பேஜ்செட்டர்ஸ், 113 ஜிந்துப் பிட்டி வீதி) vi,73 பக்கம். விலை: ரூபா 75. அளவு: 18x12.5 சமீ. ISBN 95597257-OX
இந்நூலில் இடம்பெறும் ஐந்து கட்டுரைகளும் ஈழத்து இலக்கியம் பற்றியதான வரலாறும், விமர்சனமும் உள்ளடங்கியனவாகக் காணப்படுகின்றன. முக்கியமாக இளம் படைப்பாளிகளை இனம் காட்டும் நோக்கம் கொண்டதாகவும் அவை அமைகின்றன.
783 திறனாய்வுக் கட்டுரைகள். எம்.ஏ.நு.மான். சிவகங்கை: அன்னம் பிரைவேட் லிமிட்டெட். 1வது பதிப்பு, 1985, (மதுரை: பரணி அச்சகம்). 186 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு 21X14 சமீ.
234 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
1969 முதல் 1985 வரையுள்ள காலப்பகுதியில் ஆசிரியரால் எழுதப் பட்ட கட்டுரைகளில் கலை, இலக்கியம் தொடர்பான 18 கட்டுரை கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிதை, நாவல், நாடகம், சினிமா விமர்சனம், ஆகியன பற்றிய பல கருத்துக்கள் இக்கட்டுரை களில் முன்வைக்கப்பட்டுள்ளன.
784 துாண்டில். டொமினிக் ஜீவா. யாழ்ப்பாணம்: மல்லிகைப் பந்தல், 2348, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச்சகம்) 120 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18X13 சமீ.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மல்லிகை சஞ்சிகையில் தூண் டில் என்ற தலைப்பில் பிரசுரமான கேள்வி-பதில் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு.
785 தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும். சுபைர் இளங்கீரன், (தொகுப்பாளர்). சென்னை 02: தேசிய இலக்கியப் பேரவை யுடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ், 61 தாயார் சாகிபு 2வது சந்து, 1வது பதிப்பு, மே 1993, (சென்னை: சூரியா அச்சகம்) 152 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18x12.5 சமீ.
ஈழத்துத் தமிழ் இலக்கியப்பரப்பில் தேசிய இலக்கியம் பிரசித்தமான சொல். 1950க்கு முன் இந்தியாவைத் தாய்நாடாகவும் இலங்கையைச் சேய்நாடாகவும் ஈழத்தமிழர் கருதி இந்திய நூல்களை விரும்பிப் படித்தனர். இவை ஈழத்தமிழரின் வாழ்க்கையை அவர்களின் உணர்வு களை அபிலாஷைகளை சிந்தனைகளைச் சித்திரிப்பதாக இருக்க வில்லை. இத்தொகுப்பில் தேசிய இலக்கியம் பற்றிப் பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜேகனகரத்தினா, அ.ந.கந்தசாமி, சுபைர் இளங் கீரன் ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் 30 வருடங்களுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ் இலக்கிய அரங்கில் சர்ச்சைக்குள்ளான விடயங்களையும் படைப்பிலக்கியம் பற்றிப் புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் எடுத்துக்காட்டுவன.
786 நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், க.கைலாசபதி, சென்னை 2: மக்கள் வெளியீடு, 24 உணிசு அலி சாஹிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1980. (சென்னை 2 மக்கள் அச்சகம்)
132 பக்கம். விலை: இந்திய ரூபா 7. அளவு: 18x12 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 235

Page 132
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
தற்கால இலக்கியப்போக்குகளைப் பற்றிய ஆறு கட்டுரைகளின் தொகுப்பு.
787 நானும் எனது நாவல்களும்.செங்கை ஆழியான். கொழும்பு 13: மல்லிகைப்பந்தல், 201-1/1 பூரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2000. (கொழும்பு 13: யு.கே. பிரின்டர்ஸ், 9ஏ, விவேகா னந்தா மேடு)
107 பக்கம். விலை: ரூபா 80. அளவு: 21.5X14 சமீ.
தன்னால் சிருஷ்டிக்கப்பெற்ற நாவல்கள் பிறந்து வளர்ந்து எழுத் தில் வடிக்கப்பட்ட வரலாற்றை நூலுருவில் தந்துள்ளார். சமகால ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றிய ஒரு வரலாற்று நூலாக மலர்ந்துள்ளது.
788 பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம். சி.பற்குணம். சென்னை 600002 தேசிய கலை இலக்கியப்பேரவையுடன் இணைந்து சவுத் விஷன், 6 தாயார் சாகிபு 2வது சந்து, 1வது பதிப்பு, ஜூன் 2000. (சென்னை 600005 மணி ஆப்செட் பிரின்டர்ஸ்) 64 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு 21X13.5 சமீ.
கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தை பாரதியின் பின் புலத்தில் வைத்துப்பார்க்கும் ஓர் ஒப்பியல்ஆய்வு. தமிழ்க்கவிதை ஜனநாயகமயப்பட்டு வந்துள்ள பாதையைக் காட்டுகின்றது.
789 Y பாரதி ஆய்வுகள். க.கைலாசபதி, சென்னை 600098 நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, மார்ச் 1984. (சென்னை 05: பி.ஆர்.வி. பிரஸ், 143, பெரிய தெரு) xi,280 பக்கம். விலை: இந்திய ரூபா 16. அளவு: 18x12.5 சமீ.
பேராசிரியர் கைலாசபதியினால் 1955 முதல் எழுதப்பட்ட சுப்பிர மணிய பாரதியார் பற்றிய 22 கட்டுரைகளின் தொகுப்பு.
790 பாரதியார் சிந்தனைகள். க.அருணாசலம். சென்னை 600004: சோமு புத்தக நிலையம், 42 அப்பர்சாமி கோவில் தெரு, மயிலாப் பூர், 1வது பதிப்பு, 1984. (சென்னை 600014 அன்னை அஞ்சுகம் அச்சகம்) 394 பக்கம். விலை: இந்திய ரூபா 37. அளவு: 175x12.5 சமீ.
236 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் உரைநடை ஆக்கங்களுக்கு முக் கியத்துவம் வழங்கப்பட்டு, அவரது இலக்கியப்பணி பற்றிய ஆய்வு.
791 பாரதியின் குயில்பாட்டின் தத்துவ மர்மம்.எஸ்.கருணானந்த ராஜா. சென்னை 17: மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண்.1447, 4 தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 1999. (சென்னை 4: முருகன் ஆப்செட்) 112 பக்கம். விலை: இந்திய ரூபா 21. அளவு: 18.5x12.5 சமீ.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் குயில்பாட்டு அவரது வாழ்க்கை யின் சாரத்தை வேதாந்தத்தினூடாக நோக்கும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகின்றது. அவரது சித்தத்தின் அந்தத்தில் தோன்றும் கடந்த கால நினைவுகள் வேதாந்தத்தினூடே வெளிப்படுத்த முயன் றுள்ளார் பாரதி. அந்தக் குயில் பாட்டின் தத்தவ மர்மத்தை நூலாசிரியர் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.
792 பாரதியின் மெய்ஞ்ஞானம். நஇரவீந்திரன். சென்னை 600002 சென்னை புக்ஸ், 6 தாயார் சாஹிப் தெரு, 2வது ஒழுங்கை, 1வது ugly, 193tbuy 1986. (Madras 600005: BLS Art Printers) (12),170 பக்கம். விலை: இந்திய ரூபா 13. அளவு: 18x12.5 சமீ.
மஹாகவி பாரதியின் ஆன்மிகப்பார்வை பற்றிய ஆய்வு நூல். இரு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் பாரதியின் அரசியற்களம் பற்றி முதற்பகுதியிலும் பாரதியின் உலகக்கண்ணோட்டம் பற்றி இரண்டாம் பகுதியிலும் ஆராயப்பட்டுள்ளது. ஆன்மீகவாதிகள் அனைவரும் மனிதகுல விடுதலைப் போராட்டங்களின் விரோதிகள், பிற்போக்கு வாதிகள் என்று ஒரு சாராரும், ஆன்மீகம் வேரூன்றிவிட்ட இந்த மண்ணில் ஆன்மீகம் கலந்த ஒருவகை மார்க்சியத்தின் மூலமே ஒரு சமுதாயமாற்றம் சாத்தியமாகும் என்று இன்னொரு சாராரும் கருது கின்ற நிலையில், ஆன்மீகத்தின் முற்போக்கான பாத்திரத்தை எப் படித் தேசநலனுக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படைச் சமுதாய மாற்றத்துக்கும் துணையாகக் கொள்ளலாம் என்ற ஆய்வினை விரிவாக்க இந்நூல் துணைசெய்யும்.
793 பாவலரும் பாரதியும். நா.சுப்பிரமணியம். தெல்லிப்பழை; மஹா ஜனக்கல்லூரி, 1வது பதிப்பு, ஜூன் 1982. (குரும்பசிட்டி அம்பிகா அச்சகம்) 10 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 237

Page 133
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப்பேருரைத் தொடர் நான்கு. ஈழத்தின் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களை சுப்பிரமணிய பாரதி யாருடன் தொடர்புபடுத்தி நோக்கும் முயற்சி இது.
794 புதுமை இலக்கியம்: இலக்கிய ஆய்வரங்கு 1997. கொழும்பு 11: இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) 64 பக்கம். விலை: ரூபா 100. அளவு 24.5X17.5 சமீ.
1997 டிசம்பர் 6,7ம் திகதிகளில் வெள்ளவத்தை (கொழும்பு 6) ராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள். புதுமை இலக்கியம் டிசம்பர் 1997 சிறப்பிதழாக வெளிவந்துள் ளது. இதழ் பொறுப்பாசிரியர் என்.சோமகாந்தன்.
795 புதுமுறைக் கட்டுரைக்கோவை. வெளியீட்டுக்குழு. காரை நகர்: தமிழ் வளர்ச்சிக் கழகம், 1வது பதிப்பு, ஜூன் 1984. (யாழ்ப் பாணம்: பூரீ சண்முகநாத அச்சகம், 336 காங்கேசன்துறை வீதி) (10),66 பக்கம். விலை: ரூபா 12. அளவு 21X14 சமீ.
கட்டுரை எழுதும் ஆற்றலை வளர்க்க உதவும் வகையில் உருவான நூல். க.பொ.த.ப. சாதாரணதர வகுப்புக்களுக்கென்று தயாரிக்கப்பபட்டது.
796 புறநானுறு முதல் புதுக்கவிதை வரை. விதுரன், சேயோன், கலாலட்சுமி, மதுசூதனன் (தொகுப்பாளர்கள்) கொழும்பு 11: தமிழ் நூல் வெளியீட்டு விநியோக மையம், வசந்தம் புத்தக நிலையம், 44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1997 (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்) 186 பக்கம். விலை: ரூபா 150. அளவு: 21.5X14 சமீ.
க.பொ.த. உயர்தரத்தில் தமிழ்ப்பாடம் கற்கும் மாணவர்களை கருத்திற் கொண்டு தொகுக்கப்பெற்ற நூல். பேராசிரியர் சின்னத் தம்பியின் தமிழ்க்கவிதைப் பாரம்பரியம் பற்றிய ஓர் அறிமுகம், ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபு-ஒரு சுருக்கம் ஆகிய இரு கட்டுரை கள் உட்பட 26 தலைப்புகளில் தமிழ் இலக்கியக்கட்டுரைகள் அமைந்துள்ளன. இது விநியோக மையத்தின் முதல் வெளி யீடாகும்.
238 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
797 பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளையின் கவிதைகள்- ஓர் ஆய்வு மாதவி சுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், 1வது பதிப்பு, நவம்பர் 1998. (யாழ்ப்பாணம் பாரதி பதிப்பகம்) X,111 பக்கம். விலை: ரூபா 150. அளவு 22x14.5 சமீ.
வரகவி பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை இலங்கையின் இசை நாடகக் கலைஞர். அவரின் பாடல்கள் அக்காலத்துச் சூழ்நிலைகள் முழுவதையும், அதாவது அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளன. இரண்டாம் உலக யுத்த காலத்திலும் அதையடுத்த காலப்பகுதியிலும் புனையப் பெற்ற இப்பாடல்களின் கருத்து இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
798 மத்து. ஏ.ஜே.கனகரத்தினா. சென்னை: மித்ர வெளியீடு, 2வது பதிப்பு, டிசம்பர் 2000. 1வது பதிப்பு, 1970. (சென்னை: மித்ர அச்சகம்) 152 பக்கம். விலை: இந்திய ரூபா 45. அளவு: 18x12 சமீ.
இதில் இடம்பெறும் கட்டுரைகள் 1970இல் இலங்கையில் அரசு வெளியீடாக வெளிவந்தது. பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங் கும் ஒவ்வொரு நூலினை தமிழ் வாசகர்களுக்குக் கடைந்தெடுத்து அறிமுகம் செய்யும் வகையில் இந்நூலின் கட்டுரைகள் அமைந்துள் 66.
799 மலையக இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும். சாரல் நாடன். கொட்டகல: சாரல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஜூலை 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) 106 பக்கம். விலை: ரூபா 120. அளவு: 18.5X12 சமீ.
மலையக இலக்கியம் உருவான வரலாறு, அதன் ஆரம்ப நிலைப் பாடுகள் ஆகியவற்றை விளக்கும் நூல்.
800 மலையகச் சிறுகதை வரலாறு. தெளிவத்தை ஜோசப். கொழும்பு 13. சென்னை 17. துரைவி பதிப்பகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2000, (சென்னை 34; எக்ஸலன்ட் ஜெராக்ஸ் அன் பிரின்டர்ஸ்) 328 பக்கம். விலை: ரூபா 270. அளவு: 20.5x14.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 239

Page 134
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகச் சிறுகதை முன்னோடிகள் பற்றியும் 1960களின் பின்ன ரான மலையகச் சிறுகதை வரலாறு பற்றியும் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
8O மலையகத் தமிழ் இலக்கியம். க.அருணாசலம். இராஜகிரிய: தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கோடம்பாக்கம்: இள வழகன் பதிப்பகம்) 187 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 17.5X12.5 சமீ.
மலையக இலக்கியம் பற்றியதான ஒரு வரலாற்று ஆய்வு. தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் இலக் கிய முயற்சிகள் பற்றியும் அவர்களது வரலாறு பற்றியும் இந்நூல்
8O2 மலையகம் வளர்த்த தமிழ். சாரல்நாடன். சென்னை 17: துரைவி பதிப்பகம், 20A9, கோபாலகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, நவம்பர் 1997. (சென்னை 14: பார்க்கர் கம்பி யுட்டர்ஸ், 293, அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை நெடுஞ்
FT606).) 156 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு; 21X13.5 சமீ.
1990-1995 காலகட்டத்தில் ஆசிரியரால் எழுதப்பட்ட 13 கட்டுரை களின் தொகுப்பு. மலையகம் தொடர்பான கலை இலக்கியம், மொழி, பண்பாடு, நூலகம், நூாலியலும் வெளியீட்டுத்துறையும், நாட்டார் வழக்கியல், சிறுசஞ்சிகைகள் எனப் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக எழுதப்பட்டவை.
8O3 மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும். எம்.ஏ.நு.மான். சிவகங்கை: அன்னம் (பி) லிமிட், 1வது பதிப்பு, டிசம்பர் 1987. (சிவகங்கை அகரம்) 224 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 17.5x12.5 சமீ.
மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும் பற்றிய சில குறிப்புகள், ரகு நாதனின் சிலப்பதிகாரஆராய்ச்சி, மார்க்சியமும் தமிழ்நாவல் இலக் கியமும், ஆகிய தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள்,
804.
மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள். ஏ.ஜே.கனகரட்னா (தொகுப்பும் தமிழாக்கமும்). யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 48.
240 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
சுய உதவி வீடமைப்புத் திட்டம், குருநகர். 1வது பதிப்பு, 1981. (சாவகச்சேரி. திருக்கணித அச்சகம்). (8),98 பக்கம். விலை: சாதாரணபதிப்பு: ரூபா 10, நூலகப்பதிப்பு: ரூபா 12. அளவு: 18x12 சமீ.
அலன் ஸ்விஞ்வுட் எழுதிய நாவலும் புரட்சியும் என்ற நூலினதும், கேரி சோல் மொர்சன் எழுதிய சோஷலிச யதார்த்தவாதமும் இலக் கியக்கோட்பாடும் என்ற நூலினதும் உருவம், உள்ளடக்கம் ஆகியன பற்றிய நூல். ரெஜி சிறிவர்த்தனா எழுதிய மார்க்சிய விமர்சனம் என்ற கட்டுரையினது தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளது.
805 முற்போக்கு இலக்கியம். மு.தளையசிங்கம். சென்னை 14 க்ரியா, 268, இராயப்பேட்டை பிரதான வீதி, 1வது பதிப்பு, 1984. (Q56160607 14: Rasana Offset Prints, 275, SyTu (3ut'6OL JgBT60T வீதி)
48 பக்கம். விலை: இந்திய ரூபா 5. அளவு: 18x12 சமீ.
கலைச்செல்வி சஞ்சிகை நடாத்திய கருத்தரங்கத் தொடருக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.
806 யதார்த்தமும் ஆத்மார்த்தமும். மு.பொன்னம்பலம். சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, ஏப்ரல் 1991 (சென்னை 04: மிதிலா அச்சகம்) 154 பக்கம். விலை: இந்திய ரூபா 22 அளவு: 21.5x14 சமீ.
ஏற்கெனவே ஊடகங்களில் வெளிவந்த சில கட்டுரைகள் உள்ளடங் கலாக பத்து இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.
807 யெளவனம். தேவதாசன் ஜெயசிங். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57 மகிந்த பிளேஸ். 2வது பதிப்பு, 1988. (கண்டி: யூனியன் அச்சகம்) 94 பக்கம். விலை: ரூபா 25. அளவு 21X14 சமீ.
கல்விப் பெர்துத் தராதர உயர் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ற தமிழ் இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.
808 வரலாற்றுக்கு ஓர் கடிதம். கி.செ.துரை. டெண் மார்க்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 241

Page 135
8948(6) இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள். 8948(7) பலவினத் தொகுப்பு
அலைகள் இணையப் பத்திரிகை, 1வது பதிப்பு, ஜூலை 2001, (GL6öTLDTÜ b: Tamil Teknik) 48 பக்கம். விலை: kr 25. அளவு: 18.5x14 சமீ.
காகம் என்ற சஞ்சிகையில் ஆசிரியரால் தொடராக எழுதப்பட்ட ஏழு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தனது வாழ்வில் தான் சந்தித்த-மனதில் நீங்கா இடம்பெற்ற சாதாரண மனிதர்கள் சிலரின் மகத்துவங்களை இங்கே ஆசிரியர் நினைவுகூர்ந்துள்ளார்.
809 வாலி. அகளங்கள் (இயற்பெயர்: நா.தர்மராஜா), யாழ்ப்பாணம்: பூரீ லங்கா அச்சகம், 234ஏ, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1989. 1வது பதிப்பு 1987. (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச்சகம்) X,86 பக்கம். விலை: ரூபா 23. அளவு: 18x13 சமீ.
கம்பராமாயணத்தில் வாலி வதை என்ற பகுதி புதிய கோணத்தில் வாலியின் பார்வையில் பார்க்கப்படுகின்றது. ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரையாக இது வாலி-கொலைக்கரமும் கேள்விச்சரமும் என்ற தலைப்பில் 1979 இல் வெளி வந்தது.
8 O விமர்சனக் கட்டுரைகள். முகமது சமீம், கொழும்பு 10: றிசானா பப்ளிஷர்ஸ், 20114 சிமெண்ட்ஸ் ரோட், 1வது பதிப்பு, 1999, (சென்னை 600014; மொனார்க் கிரப்பிக்ஸ்) xiv,290 பக்கம். விலை: ரூபா 70. அளவு: 18x12 சமீ.
சிறுகதை நூல்கள், வரலாற்று நூல்கள், அரசியல் நூல்கள் போன்றவற்றிற்கு ஆசிரியர் எழுதிய விமர்சனங்களின் தொகுப்பு. ஆசிரியரின் பல்துறைக்கண்ணோட்டத்தையும் பரந்த ஆய்வறிவை யும் அறிமுகப்படுத்துகின்றன.
894.8(7) பலவினத் தொகுப்பு
8 அர்ச்சனை மலர்கள். அமரர் தம் பாபிள்ளை சிவசம் பு ஞாபகார்த்த மலர். லண்டன், 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (London: Transnews International, P.O. Box 895, Harrow, Middx, ΗΑ2 ΟΥU) 64 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5X12 சமீ.
யாழ்ப்பாணம்- சுதுமலை, அமரர் தம்பாபிள்ளையின் ஞாபகார்த்த
242 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(7) பலவினத் தொகுப்பு
மாக வெளியான நினைவுமலர். பலவினக்கட்டுரைகளின் தொகுப் பாக இது வெளிவந்துள்ளது. புலம்பெயர் தமிழ்ச் சிறார்களின் வாழ் விலே தமிழின் பங்கு (க.இராஜமனோகரன்), மேல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி (க.சுவாமிநாதன்), அயல் புலங்களில் தமிழ்மொழி வளர்ச்சி (அரங்க முருகையன்), உலகளாவிய தமிழ் சமய வளர்ச்சிக்காக நிறுவனங்கள் ஆற்றும் பங்கு (க. ஜெகதீஸ் வரம் பிள்ளை), வானொலியும் தமிழ்வளர்ச்சியும் (விமல் சொக்கநாதன்), இங்கிலாந் தில் இன்பக்கலைகளில் இசை (சரஸ்வதி பாக்கியராஜா), ஆகிய புலம்பெயர் தமிழரை நோக்கிய கலை இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.
812 இருபதாம் நூற்றாண்டுத் தமிழன் கிழக்கும் மேற்கும். இ.பத்ம நாப ஐயர் (பதிப்பாசிரியர்). லண்டன்: தமிழர் நலன்புரிச் சங்கம், 33A, Station Road, Manor Park, 16 g) ug5'L, 6 Job 1997. (Harrow: Ability Printing UK) vi,146 பக்கம், புகைப்படம், ஓவியம், தகடுகள். விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு: 20X27.5 சமீ.
அனைத்துலகத் தமிழ்ப் படைப்பாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு.
813 இன்னுமொரு காலடி. இ.பத்மநாப ஐயர் (பதிப்பாசிரியர்). லண் Lair: 5ufypy boogirlf& Frisb, 33A Station Road, Manor Park, 16olg5 Lg5'IL), 6J'IJ6ö 1998. (Colombo 13: Unie Arts) 224 பக்கம், புகைப்படம், ஓவியம், தகடுகள். விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு; 20X27.5 சமீ.
அனைத்துலகத் தமிழ்ப்படைப்பாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு.
814 இனியும் சூல்கொள். 23வது இலக்கியச் சந்திப்பு. எஸ்.புஷ்ப ராஜா, லட்சுமி, அசோக், கலைச்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). LîJT6ï6rö: S. Pushparajah, 7 Rue Rocine, 95140, Garges Les Gonesse, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (லண்டன் செட் லைன் பிரின்டர்ஸ்) (10),159 பக்கம், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 28X21 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 24

Page 136
8948(7) பலவினத் தொகுப்பு
புலம்பெயர்ந்த நாடுகளில் இலக்கியச் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஈழத்து இலக் கியவாதிகளின் முதலாவது சந்திப்பு 24.9.1988 இல் ஜேர்மனியில் இடம்பெற்றது. பின்னர் பல்வேறு நாடுகளிலும் இச்சந்திப்புத் தொடர்ந்துள்ளது. அதன் தொடர்ச் சியாக 13-14 செப்டம்பர் 1997 இல் பிரான்சில் இடம் பெற்ற 23வது இலக்கியச்சந்திப்பின் போது வெளியிடப்பெற்ற சிறப்புமலர். புகலிட இலக்கியத்தினதும் தமிழ்ச்சூழல் எதிர்கொள்ளும் எல்லா விதமான அரசியல் ஆய்வுகளினதும் இலக்கியப் போக்குகளைப் பிரதிபலிக்கும் கலை இலக்கியப் படைப்புக்களின் தொகுப்பு.
85 எழுத்தாளன். வி.கந்தவனம். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, 1வது பதிப்பு, ஜூலை 1995, (ஜேர்மனி: விடி பிரிண்டர்ஸ்) 68 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14.5 சமீ.
இலண்டனில் வெளிவந்து கொண்டிருந்த ஈழகேசரி பத்திரிகையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஏற்ற வகையில் 30 தலைப்புக் களில் ஆசிரியர் எழுதிய தொடர்கட்டுரைகளின் தொகுப்பு.
816 ? (கேள்விக்குறி). எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600002. காந்தளகம், 834 அண்ணாசாலை, 2வது பதிப்பு, நவம்பர் 1994. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (சென்னை 2: காந்தளகம்) 84 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 175x12 சமீ.
பொன்னுத்துரை தன்னுடைய படைப்பாற்றலில் ஒரு பரிமாணத்தை மற்றதைக் காட்டிலும் கூடுதலாகவே சாதித்திருந்தார். அது அங் கதச்சுவை. அவருடைய ஒரு நூலின் அட்டை மீது வெறும் கேள் விக்குறி மட்டுமே இருக்கும். அட்டையைப் பிரித்தால் 80 பக்கங்க ளுக்கு உங்கள் சிந்தனையை ஒரு சூறாவளியில் பறக்க விட்டது போன்ற இலக்கிய அனுபவம். உண்மையில் அந்த 80 பக்கங் களை mindbogging என்று தான் கூறமுடியும். அங்கதச்சுவை என் பதை விட அங்கதனின் மகா சூரத் தந்தையான வாலிச்சுவை என்று தான் எனக்குத் தோன்றியது.
அசோகமித்திரன் (முன்னுரையில்)
817 தமிழ் முழங்கும் வேளையிலே: தமிழ் முழக்கம். ஆ.சி. 5b5JTg.T. 966),5GyoSu T. Mitra Publications, 1/23 Munro Street, East Wood, 2122 Australia, 16 g) Ligul, boutbuy 2000. (Chennai 24: Mithra Book Makers, 375/8 - 10 Arcot Road)
244 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(7) பலவினத் தொகுப்பு
192 பக்கம். விலை: இந்திய ரூபா 60. அளவு: 18x12.5 சமீ
நாற்பதாவது மித்ர வெளியீடு. அவுஸ்திரேலியாவிலிருந்து (சிட்னி) ஒலிபரப்பப்படும் தமிழ் முழக்கம் வானொலியில் இடம்பெற்ற சுவையான நேர்காணல்களின் தொகுப்பு. மாலன், பீர் முகம்மது ஞானி, குஜாதா, ஆதி குமணன், நவநீதகிருஷ்ணன், கலைஞர் கருணாநிதி, வைகோ, கமல்ஹாசன், பிரபஞ்சன், நாகேஷ், மனோரமா, காரைக்குடி மணி, இராஜனார்த்தனன், துக்ளக் சே அம்பை, அம்பி ஆகியோரது செவ்விகள் இடம்பெற்றுள்ளன. பெரும் பான்மையான உரையாடல்கள் ஈழத்தமிழர் பிரச்சினை, புலம்பெயர் வாழ்வியல் ஆகியவற்றையொட்டியே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தககது.
818 தூவானம். அயேசுராசா. கொழும்பு 2: மூன்றாவது மனிதன் பதிப் பகம், 37114 வக்சோல் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜூன் 2001 (கொழும்பு 13: யு.கே. பிரின்டர்ஸ்) X88 பக்கம். விலை: ரூபா 120. அளவு 21X13 சமீ.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த திசை வாரவெளியீட்டில் 1989.g) காலப்பகுதியில் துணை ஆசிரியராகக் கடமையாற்றிய வேளையில் நீலாம்பரன் என்ற புனைபெயரில் ஆசிரியர் எழுதிய புத்திகளின் (Columns) தொகுப்பு திரைப்படம், ஓவியம், கவிதை, சிற்றிதழ், கலாச்சாரத்துறைசார் நடவடிக்கைகள், எதிர்வினைகள், எனப் பலவற் றைத் தொடுவதாக இங்கே தொகுக்கப்பெற்றுள்ள பத்திகள் அை கின்றன.
819 தோற்றுத்தான் போவோமா? எஸ்.புஷ்பராஜா. பிரான்ஸ் 65É5b B60öïUù56i 6)]'Lub, 7 Rue Racine, 95140 GargesLes Gonesse. 1வது பதிப்பு: மே 1999. (அச்சக விபரம் அறியமுடியவில்லை) 123 பக்கம். சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. 916T6: 27X20 35.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுத அராஜகத்துக்குப் பலியான சபாலிங்கத்துக்குச் சமர்ப்பணமாக அவரின் நண்பர்கள் வம் 1999 இல் வெளியிட்ட இலக்கியத்தொகுப்பு புலம்பெயர் எழுத்தாளர் பலரின் படைப்பிலக்கியங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது.
820 புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல், க.இந்திர
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 245

Page 137
8948(7) பலவினத் தொகுப்பு
குமார். சென்னை 17: மணிமேகலைப் பிரசுரம், த.பெ.1447, தணிகாசலம் சாலை, தி.நகர். 1வது பதிப்பு, 2001. சென்னை 94. ஸ்கிரிப்ட் ஆப்செட்) 201 பக்கம். விலை: இந்திய ரூபா 45 அளவு: 18x12.5 சமீ.
இலண்டனிலிருந்து மாதமிருமுறை இதழாக வெளிவந்த மேகம் பல்சுவைச் சஞ்சிகையில் 1999-2000இல் வெளிவந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பு.
82 மலரும் நினைவுகள். வரதர் (இயற்பெயர்: தி.சு.வரதராஜன்) சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு, ஜூன் 1996. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிராபி) 168 பக்கம். விலை: இந்திய ரூபா 70. அளவு: 17.5x12 சமீ.
1930-40 ஆண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணமக்களின் வாழ் வியல் நிகழ்வுகள் 18 தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ளன. அக் கால மக்களின் வாழ்வனுபவங்களைப் பின்னோக்கிப் பார்க்கத் தூண்டுவதாக இக்கட்டுரைகள் அமைகின்றன.
822 முன்னுரைகள் - சில பதிப்புரைகள். டொமினிக் ஜீவா. கொழும்பு 13: மல்லிகைப்பந்தல், 201, 1/1, பூரீ கதிரேசன் வீதி, 16.g5 g6ůIL, ?łG3LITLJij 1997. (Chennai 600026: Nira Designs, 217, Arcot Road ) 152 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 17.5x12.5 சமீ.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் நூல்களின் முன்னுரை களும், மல்லிகைப்பந்தல் மூலம் அவர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களின் பதிப்புரைகளுமாக 30 ஆக்கங்களின் தொகுப்பு.
823 யுகம் மாறும். இ.பத்மநாப ஐயர் (பதிப்பாசிரியர்). லண்டன்: 25L6ply boogirlf& J stildsib, 33A Station Road, Manor Park, 16 g) u5'il, gygi) 1998. (London: Mearg Print Ltd., 12 Walmgate Road, Perivale, Middlesex) 220 பக்கம், புகைப்படம், ஓவியம், தகடுகள். விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு: 20X27.5 சமீ.
அனைத்துலகத் தமிழ்ப்படைப்பாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக் கங்களின் தொகுப்பு.
246 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

8948(7) பலவினத் தொகுப்பு, 899(1) பிறமொழிக் கவிதைகள்
824 வானொலிப் பேச்சுக்கள். என்.எஸ்.இரத்தினசிங்கம். சென்னை 600108: பாரி நிலையம், 184 பிராட்வே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1992.( சென்னை 24: அலைகள் அச்சகம்) 104 பக்கம். விலை: இந்திய ரூபா 12.50. அளவு: 18x12.5 சமீ.
மேற்கு அவுஸ்திரேலியா சாகிய வானொலியில் மேற்கு அவுஸ் திரேலியா தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்ஒலி நிகழ்ச்சியில் இலக் கியம், விஷேட தினங்கள், சமயம், போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆற்றிய 20 வானொலி உரைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க: 021, 023, 739
899 பிறமொழி இலக்கியங்கள்
899.(1) பிறமொழிக் கவிதைகள்
825 ஒரு சோவியத் கவிஞரின் புதுக்கவிதைகள். கே.கணேஷ் (தமிழாக்கம்). கொழும்பு 5. எழுத்தாளர் பதிப்பகம், 215,G,171 பார்க் வீதி, 1வது பதிப்பு, 1988, (கொழும்பு 13 பேர்ள் பிரிண்டர்ஸ், 48B, கே.சிரில் சீ. பெரேரா மாவத்தை) 32 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 19X14 சமீ.
சோவியத் கவிஞர் வியச் சிஸ்லாவ் குப்ரியானோவ் (Vyacheslav Kuprianov) அவர்களின் இருபத்தியொரு புதுக்கவிதைகளின் தமிழாக்கம்.
826 பலஸ்தீனக் கவிதைகள். எம்.ஏ.நு.மான் (தொகுப்பாளர்). கல்முனை 6: வாச வெளியீடு, வாசகர் சங்கம், 1வது பதிப்பு, நவம் பர் 1981. (யாழ்ப்பாணம்; சித்திரா அச்சகம்) vi,56 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 10. நூலகப் பதிப்பு: (but 15. 961T6: 20X13.5 Flf.
இந்நூல் ஒன்பது பலஸ்தீனக் கவிஞர்களின் முப்பது கவிதை களைக் கொண்டுள்ளது. மஹற்முட் தர்விடி, பெளசி அல் அஸ்மார், றஷிட் ஹ"சைன், சலும் ஜப்றான், தெளபிக் சையத், அன்தோய்னே கபாறா, பத்வாது கான், சமீஹற் அல் காசிம், டுயின் பசைசோ ஆகிய புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற் றுள்ளன. பாலஸ்தீனக் கவிதைகள் பற்றி கடாகர்மி எழுதிய கட்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 247

Page 138
899.(1) பிறமொழிக் கவிதைகள்
டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பிலுள்ள சமீஹற் அல் காசிமின் ஏழு கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் முருகையன். ஏனையவற்றை எம்.ஏ.நு.மான் மொழிபெயர்த்துள்ளார்.
பாலஸ்தீனக்கவிதைகள். எம்.ஏ.நு.மான். கொழும்பு 2: மூன் றாவது மனிதன் வெளியீடு, 2வது பதிப்பு, நவம்பர் 2000. 1வது ug5'), boulbuj 1981. (Chennai 4: Multi Crafts.) 162 பக்கம். விலை: இந்திய ரூபா 200. அளவு: 21X14 சமீ.
1981 இல் வெளிவந்த 1வது பதிப்பில் 9 கவிஞர்களின் 30 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இப்பதிப்பில் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நிசார் கப்பானியும் ஃபத்வா துக் கான் தவிர்ந்த ஏனைய ஐந்து பெண் கவிஞர்களும் இத் தொகுதியில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். பலஸ்தீனக் கவிதைகள் வெளிப்படையான அரசியல் சார்வுடையவை. இது பலஸ்தீனப் படைப்பாளிகளின் வாழ்நிலை அனுபவத்தின் அடிப்படையில் 960) D6).jgil.
827 பாரதி பக்தன் பார்பரா கவிதைகள். அனதோலி பார்பரா (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). கொழும்பு எழுத்தாளர் கூட் டுறவுப் பதிப்பகம், 215, G 1/1, பார்க் வீதி, 1வது பதிப்பு. 1989. (கொழும்பு 6: சாமரா அச்சகம், 22 ஏ, மல்லிகா ஒழுங்கை) 26 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
சோவியத் கவிஞரான அனதோலி பார்பராவின் 12 கவிதைகளின் தமிழாக்கம்.
828 பாலை: அடோனிஸ் கவிதைகள் சில. சி.சிவசேகரம், (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, மார்ச் 1999, (தெகிவளை: டெக்னோ பிரின்ட்) (8),63 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5x14 சமீ.
பாலஸ்தீனக் கவிஞன் அடோனிஸ் (அலி அஹற்மத் ஸாய்த்) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. பாலை முற்றுகையிடப்பட்ட பெய்ருத்தின் நாட்குறிப்பு 1982 லெபனானுள் இஸ்ரவேலியப்படை கள் புகுந்த காலம் தொடர்பானது. அந்த முற்றுகைக்காலத்தின் அவலங்களை மட்டுமன்றி ஒடுக்குமுறைக்குள்ளான அராபியனது எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது.
248 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

89.(3) பிறமொழிக் கவிதை நாடகங்கள், காவியங்கள்
899.(3) பிறமொழிக் கவிதை நாடகங்கள், காவியங்கள்
829 உரைநடையில் கலேவலா: பின்லாந்தின் தேசிய காவியம். ஆர்.சிவலிங்கம். சென்னை 600018: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 154, டி.டி.கே.சாலை, 1வது பதிப்பு, 1999. (சென்னை: அச்சக விபரம் அறிய முடியவில்லை) 352 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5x14.5 சமீ.
பின்லாந்தின் சிறந்த நாட்டாரிலக்கியங்களில் ஒன்றான கலேவலா எலியாஸ் லொண்ரோத் (1802-1884) என்பவரால் தொகுக்கப்பெற்று முதற்பதிப்பு 1835இல் வெளிவந்தது. அதன்பின் பல்வேறு மொழிகளி லும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவியரீதியில் சிறந்த இலக்கியங் கள் வரிசையில் வைக்கப்பட்டது. இந்நூல் ஹெல்சிங்கி பல்கலைக் கழக ஆய்வு உதவியாளராகவிருந்த ஆசிரியரால் (உதயணன்) 1994 இல் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அக்காவியத் தின் உரைநடையாக்கமே இந்நூலாகும்.
83O கலேவலா: மின்லாந்தின் தேசிய காவியம். எலியாஸ் லொண்ரோத் (மூலம்) ஆர். சிவலிங்கம் (தமிழாக்கம்). ஹொங்கொங், ஆல்ட்டனேட்டிவ் பிரஸ், த.பெ.இலக்கம் 47141, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் அறியமுடியவில்லை) xxxvi426 பக்கம், வண்ண ஒவியத்தகடுகள், விலை: இந்திய ரூபா 200. அளவு 26x18.5 சமீ.
பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா, எலியாஸ் லொண்ரொத் தினால் 1835இல் நாட்டுப்பாடல் சேகரிப்பிலிருந்து தொகுக்கப்பெற் றது. பின்னர் 46 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட் டது. இவ்விலக்கியத்தின் தமிழாக்கமே இந்நூலாகும்.ஸ்கண்டி னேவியக் கடல்வீரர்களின் தாக்குதல்களினால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியில் அமைந்த கலேவலாவின் போர் நடவடிக்கைகள் இப் பாடல்களின் முதுகெலும்பாக உள்ளன. போர்க்கருப்பொருளை மட்டு மல்லாது, அக்காலத்தைய சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங் களையும் அவை வெளிப்படுத்துகின்றன. சில காட்சிகள் எமக்கு மஹாபாரதம், இராமாயண நிகழ்வுகளை நினைவுறுத்துகின்றன.
83 லைலா-மஜ்னும் எஸ்.தியாகராஜா. சென்னை: 600017. மணிமேகலை பிரசுரம், த.பெட்டி எண் 1447, தணிகாசலம் தெரு, தியாகராஜ நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஆப்செட்) 124 பக்கம், படங்கள். விலை: இந்திய ரூபா26. அளவு: 18.5x12.5சமீ
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 249

Page 139
899.(5) பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள்
உலக இலக்கிய வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற 12ம் நூற்றாண் டின் பாரசீகக்கவிஞன் நிசாமியின் காவியக் கவிதையான லைலா மஜ்னுவின் தமிழ்வடிவம். ஆசிரியரின் முன்னுரையில் இக்காவியம் பற்றிய வரலாற்றுப் பின்னணி பற்றிய ஆய்வுத்தகவல் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.
899.(5) பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள்
832 சத்தியஜித் ரேயின் பத்திக் சந்த். சொக்கன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், கண்டி வீதி). iv,112 பக்கம். விலை: ரூபா 18. அளவு: 18x12 சமீ.
சத்தியஜித் ரேயின் வங்கமொழி மூலநூலின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர் மன தைக் கவரத்தக்க விறுவிறுப்பான சம்பவங்கள், விநோத அனுபவங்கள், வேடிக்கைக் காட்சிகள் ஆகியன இந்த நாவலில் அர்த்தமுள்ளவையாக அமைந்துள்ளன. திருவும் திமிரும் மிக்க குடும்பத்தில் பிறந்த பாப்லு, தன் 12வது வயதில் ஏற்பட்ட எதிர் பாராத நிகழ்வுகளால் ஏழ்மை மிகுந்த சூழலில் பத்திக் சந்த் என்ற மாற்றுப் பெயரில் வாழ்ந்து பெற்ற அனுபவமும் கண்கட்டு வித்தைக்காரனின் கலையார்வத்திலும் அன்பிலும் தன் மனதைப் பறிகொடுத்ததும், அதனால் அவனது உள்ளம் நேர்மை நீதி என்ற பாதையில் பண்படைந்ததும் எந்தக் கருத்துத்திணிப்பும் இல்லாத முறையில் சொல்லப்பட்டுள்ளது.
833 சிறைகளின் குரல். நகுயன் ஹியு ட்ருஆங் (மூலம்), சித்த புத்திரன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: சுகந்தம், யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம், 1வது பதிப்பு, கார்த்திகை 1985, (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை.) (6),26 பக்கம். விலை: ரூபா 4. அளவு: 17.5X11.5 சமீ.
இது ஒரு வியட்நாமியக் கதையின் தமிழாக்கம். ஒடுக்குமுறை அரசினால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுப் பின் கொலை செய்யப்பட்ட ஒரு அறிவுஜீவியின் கதை. ஒரு புத்தி ஜீவி எப்படிப் புரட்சியாளனாக மாறுகின்றான் என்பதைச் சுவையாக விளக்குகின்றது.
834 பெட்டிசம் . வீல் குணசேகரா (மூலம்). ஐனைதா ஷெரிப்
250 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

900 புவியியல், 910 பொதுப் புவியியல், 911 பிரயாண நூல்கள்
(தமிழாக்கம்). கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1988. (மட்டக்களப்பு: சென் ஜேசப் கத்தோலிக்க அச்சகம்) 80 பக்கம். விலை: ரூபா 21. அளவு: 18x12.5 சமீ.
வீல் குணசேகராவின் பெத்சம என்ற சிங்கள நூலின் தமிழாக்கம். ராஜரட்டைச் சிங்களக்கிராம மக்களின் வாழ்க்கையைப் பகைப் புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. கடமை உணர்வற்ற அரச ஊழியர்களாலும் சந்தர்ப்பவாதக் கிராமத்தலைவர்களாலும் கல்வி யறிவற்ற சிங்களக் கிராம மக்கள் ஏமாற்றப்படுவதைச் சித்திரிக்கும் கதை.
900 புவியியல், வரலாறுகள்
910 பொதுப் புவியியல்
835 அபிவிருத்திப் புவியியல்: ஐக்கிய இராச்சியம். க.குணராசா. யாழ்ப்பாணம்: ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 5வது பதிப்பு, ஏப்ரல் 1989. (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச்சகம்) 56 பக்கம், வரைபடங்கள். விலை: ரூபா 15. அளவு 21X14 சமீ.
க.பொ.த.பத்திர உயர்தரவகுப்பு மாணவர்களின் அபிவிருத்திப் புவி யியல் பாடநெறியின் ஒரு பகுதி தனி ஆய்வாகும். அதில் ஆராயப் படவேண்டிய நாடுகளில் ஐக்கிய இராச்சியமும் ஒன்று. ஐ. இராச்சி யத்தின் அபிவிருத்திப்புவியியலை இந்நூல் விளக்குகின்றது.
911 பிரயாண நூல்கள், வழிகாட்டிகள்
836 இந்தோனேஷரியாவில் இரணிடு வருட அனுபவம். நா.முத்தையா. சாவகச்சேரி. குருபவனம், கண்டி வீதி, 1வது பதிப்பு, 1986. (ஏழாலை, மஹாத்மா அச்சகம்) XV,129 பக்கம். விலை: ரூபா 16. அளவு: 18X12.5 சமீ.
பிரயாணக்கட்டுரையாக அமைந்தாலும், இந்நூல் சமய, சமுதாய வரலாற்று உணர்வுடைய சிந்தனை நூலாகவுள்ளது. இந்தோனே ஷியாவில் வாழும் இந்துக்கள், குறிப்பாகத் தமிழ்மக்கள், பூர்வ குடிகள், சமூக நிகழ்ச்சிகளில் சமயமுறைகள், கோயில்கள், சாதி வேற்றுமை, சீதனக்கொடுமைகள் இல்லாத சமூக அமைப்பு, பொழுதுபோக்கு ஆகிய பல சுவையான தகவல்கள் கொண்ட நூல்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 25

Page 140
911 பிரயாண நூல்கள், வழிகாட்டிகள்
837 இலண்டனில் ஏழுவாரம். தங்கம்மா அப்பாக்குட்டி, தெல்லிப் பளை பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1988. (ஏழாலை; மஹாத்மா அச்சகம்) vi,68 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5x13 guð.
சமயச்சொற்பொழிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு 1987 மே மாதப் பகுதியில் மேற்கொண்ட ஏழு வார லண்டன் பயணத்தின் போது பெற்ற அனுபவங்கள்.
838 ஒளி சிறந்த நாட்டிலே. ஐ.சாந்தன். யாழ்ப்பாணம்: ஈழமுரசு அறிவூட்டகம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: சாய்பாபா அட் வர்டைசிங் அசோசியேற்ஸ், 37, கண்டி வீதி) (4),78பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 10. அளவு: 21X14சமீ.
நூலாசிரியரின் சோவியத் நாட்டுப்பயணம் பற்றிய மனப்பதிவுகள்.
839 சாம்பல் மேட்டில் பூத்த சாதனை அலைகள், கன. சுபாஷ் சந்திரபோஸ், அறந்தாங்கி (தென்னிந்தியா) 614633: கற்பகம் பிரசுரம், கற்பக பவனம், சிதம்பர விடுதி அஞ்சல், 1வது பதிப்பு, 1988. (சென்னை 600017. திருமகள் நிலையம், 55 வெங் கட நாராயணா ரோடு) (10),96 பக்கம், தகடுகள். விலை: இந்திய ரூபா 25. அளவு: 18X12.5gs.
ஜப்பானிய பயணக்கட்டுரை.
84O சிந்திக்கத் துண்டிய ஜேர்மனிய கலாச்சாரம்.சு.பாக்கிய நாதன், திருமதி வி.பாக்கியநாதன். யாழ்ப்பாணம் நான் வெளியீடு, அமலமரி தியாகிகள் சபை, 1வது பதிப்பு, ஜனவரி 1984. (யாழ்ப் பாணம்; சித்திரா அச்சகம்) 236 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 17.5X12.5 சமீ.
ஜேர்மனியில் வாழும் இலங்கையரின் புகலிட வாழ்க்கை முறையையும் ஜேர்மனிய கலாச்சாரத்தையும் பற்றியதோர் ஒப்பீட்டு அடிப்படையிலமைந்த ஆய்வுக் கண்ணோட்டம்.
252 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

911 பிரயாண நூல்கள், வழிகாட்டிகள்
84 சேக்கிழார் அடிச்சுவட்டில்: அறுபத்து மூவர் வரலாறும் யாத்திரையும். சோ.சிவபாதசுந்தரனார். சென்னை 600017. வானதி பதிப்பகம், 13 தீனதயாளு தெரு, தி.நகர், 2வது பதிப்பு, ஆகஸ்ட் 1989, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (சென்னை 600005: பூரீ கோமதி அச்சகம், திருச்சிராப்பள்ளி) XVi,400 பக்கம், 105 புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 52. அளவு: 22X14.5 சமீ.
பிரயாண அனுபவங்களைப் பின்னணியாகக்கொண்டு இந்து சமயத் தின் முக்கிய அடியார்களின் வரலாற்றையும் இந்துப் பண்பாட்டின் அடிப்படையையும் ஆதாரங்களையும் எடுத்துச் சொல்லும் நூல். சேக்கிழாரின் பெரிய புராணம் ஒரு சமய இலக்கியப் பொக்கிஷ மாகக் கருதப்படுகின்றது. அதை உணர்ந்து இரசிக்க இந்நூல் உதவும்.
842 பொய்கை மலர். சோமகாந்தன். சென்னை 600002. காந்தளகம், 834, அண்ணா சாலை, 1வது பதிப்பு, கார்த்திகை 1995. (சென்னை: உதயம் ஆப்செட்) 176 பக்கம். விலை: இந்திய ரூபா 80. அளவு: 17.5X12.5 சமீ.
வட இலங்கையிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாக யாத் திரை செல்லும் வழியிலுள்ள தலங்களின் சிறப்பும் முருகன் பற்றிய வானொலி உரைகளும் கொண்ட தொகுப்பு நூல்.
843 மூன்று நாடுகள் அறுபது நாட்கள்: பயணக்கட்டுரை. இரா.ந. வீரப்பன். யாழ்ப்பாணம்: உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், இலங் கைக்கிளை, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: ஸ்வர்ணம் பப்ளி ஷர்ஸ், பெருமாள் கோவிலடி) 44 பக்கம், விலை: ரூபா 6. அளவு; 21X14 சமீ.
மலேஷியாவிலிருந்து ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கும் விஜயம் செய்து தாம் பெற்ற பயண அனுப வங்களை உலகததமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவரான ஆசிரியர் இந்நூலில் சுவைபடக் கூறியிருக்கின்றார். இதிலுள்ள கட் டுரைகள் மலேஷியப் பத்திரிகையான ஞாயிறு ஒசையில் தொடராக வெளிவந்தது.
844 யாழ்ப்பயணம் இன்றைய யாழ்ப்பாண நிலைமைகள் 1994.

Page 141
911 பிரயாண நூல்கள், வழிகாட்டிகள், 915 பிரதேசப் புவியியல்
ujotoabb561. B60TLIT: LD63f Q66fu(6.1221 Markham Road, Box21, Scarborough, 16g5 Lug5L, g"6 1994. (Canada. Quality Printing Services) 72 பக்கம். விலை: கனேடியன் டொலர் 2. அளவு: 21.5x14 சமீ.
1994 காலப்பகுதியில் இயங்கிய யாழ்ப்பாணத்துக்கு, புகலிடத் தமிழர் ஒருவர் பிரயாணத்தை மேற்கொண்டு அங்குள்ள நிலைமை களைக் கண்டறிந்து வந்து எழுதிய நூல். கனடாவில் வெளிவரும் மஞ்சரி இதழில் தொடராக வெளியிடப்பெற்றது.
845 லண்டன் முதல் கனடா வரை. மாத்தளை சோமு, திருச்சி 620003: தமிழ்க்குரல் பதிப்பகம், P.15, 5வது பிரதான சாலை, ராமலிங்கநகர், உறையூர், 1வது பதிப்பு, நவம்பர் 2000. (சென்னை 14: பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை) 176 பக்கம். விலை: இந்திய ரூபா 75 அளவு: 22X14 சமீ.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முயற்சிகள், போராட்டங்கள், ஏக் கங்கள் யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பயணத்தின் கதை. வீரகேசரி ஞாயிறு இதழில் தொடராக வெளிவந்தது.
846 வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள். ஈ.கே.ராஜகோபால், London SW17 7EZ. தமிழன் பப்ளிஷர்ஸ், 38 Mofat Road, 1வது பதிப்பு, நவம்பர் 1991 (சென்னை 2: காந்தளகம்) (14),87 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. 24X18 சமீ.
1930ம் ஆண்டளவில் இலங்கை வடபுலத்தின் கரையோரப்பகுதி யான வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் குளொசெஸ்டர் துறைமுகத்துக்குச் சென்றடைந்த அன்னபூரணி கப்பலின் பிரயாண வரலாறு.
915 பிரதேசப் புவியியல்
847
இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித் தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும். இரா. சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: அகிலம் சமூக அறிவியலாய்வு வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1981. (யாழ்ப்பாணம்: சித்திரா
254 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

915 பிரதேசப் புவியியல், 920 வாழ்க்கை வரலாறு, குதுபகார்த்த மலர்கள்
அச்சகம், 310, மணிக்கூட்டுக் கோபுர வீதி) 32 பக்கம், வரைபடம். விலை: ரூபா 5 அளவு 20.5x14 சமீ.
இலங்கையில் தமிழர் குடித்தொகை பற்றிய அறிமுகத்துடன் பிரதேச குடித்தொகைப்பண்புகளும், கிராம நகரப்பண்புகளும் விளக்கப் பெற் றுள்ளன. விவசாய, கணிப்பொருள், கடல் வளங்களினதும் இருப்பு பற்றிய பெளதிக தகவல்களையும் உள்ளடக்கியுள்ள நூல்.
848 வண்ணிப்பிரதேசத் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர். சு.வித் தியானந்தன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை, 1வது பதிப்பு, வைகாசி 1983. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (20),98 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 24.5X18.5 சமீ.
வன்னிப்பிரதேசம் தொடர்பான வரலாறு, இலக்கிய முயற்சிகள், நாட் டார் பாடல்கள், மொழி வழக்குகள், கலை கலாச்சாரப்பணிகள், பண் பாட்டுக் கோலங்கள், பொருளாதார வாய்ப்புக்கள் போன்ற பயனுள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு. வன்னி தொடர்பான நூல்கள், கட்டுரைகள் ஆய்வேடுகளின் நூற்பட்டியல் ஒன்றும் காணப் படுகின்றது.
920 வாழ்க்கை வரலாறு, ஞாபகார்த்த மலர்கள்
849 எண் அப்பாவின் கதை. என்.சண்முகலிங்கன். தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்) 40 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x13 சமீ.
தன் அப்பாவின் (அமரர் க.நாகலிங்கம்) கதையை இலக்கியமாக்கும் மகன் சண்முகலிங்கனின் இந்த நூல் அவர் தந்தையாரின் 31ம் நாள் நினைவுடன் வெளியாகின்றது. கல்வெட்டு மரபினின்றும் விலகி ஆக்க இலக்கியங்களையும் பயனான பிரசுரங்களையும் தரத் தொடங்கியுள்ள புதிய மரபினிடை சண்முகலிங்கனின் என் அப் பாவின் கதையும் ஒரு புதிய தொடக்கம்.
-பேராசிரியர் சு.வித்தியானந்தன் முன்னுரையில்)
850 சந்திப்பு. முருகபூபதி. அவுஸ்திரேலியா முகுந்தன் பதிப்பகம், 170, Hothlyn Drive, Craigieburn, Victoria 3064 (G36,60607 600026: (gLDj6
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 255

Page 142
920 வாழ்க்கை வரலாறு, ஞாபகார்த்த மலர்கள்
பதிப்பகம், 79, 1வது வீதி, குமரன் காலனி, வடபழநி) 144 பக்கம். விலை: இந்திய ரூபா 32. அளவு: 15X12.5 சமீ.
நேர்காணல் தொகுப்பு. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், நாட்டுக்கூத்து, ஒவியம் முதலான துறைகளில் தமது காத்திரமான பங்களிப்பை நல்கியவர்களுடனான நேர்காணல் தொகுப்பு. கவிஞர் அம்பி, எஸ் பொ. ஒவியர் செல்லத்துரை, எஸ்.அகஸ்தியர், இந்திரா பார்த்தசாரதி, பரிஷா ஞாநி, எஸ்.வைத் தீஸ்வரன் சார்வாகன், அண்ணாவியார் இளைய பத்மநாதன், என். கே.ரகுநாதன், மா.வை.நித்தியானந்தன் ஆகியோரின் செவ்விகள் உள்ளடங்கியுள்ளன.
மேலும் பார்க்க: 817
85 நினைவின் அலைகள். எஸ்.வீ.தம்பையா. கொழும்பு 13: மல்லிகைப்பந்தல், 201, 111 ரீ கதிரேசன் வீதி. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1977 (சென்னை 600014: சித்ரா பிரின்டோகிரபி) 120 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாணத்தில், வளமிகுந்த மண்ணுள்ள கிராமமொன்றில், சாதாரண குடும்பமொன்றில் பிறந்த எஸ்.வி.தம்பையா தனது சரிதையினை ஒரிரு இடங்களில் கற்பனைத்துளிகள் சேர்த்த இலக் கியமாக்கியுள்ளார். வளமிகு நாடுகள் பலவற்றில் சிதறிப்போயுள்ள யாழ்ப்பாணத் தமிழரின் வாழ்க்கை ஐந்தாறு சகாப்தங்களின் முன் னர் எவ்வாறிருந்ததென்பதை சமூகவியல் ஆய்வாளர்களும் இன் றைய மற்றும் எதிர்கால இளந்தலைமுறையினரும் தெளிவாக அறிந்து கொள்ள உதவும் நூல்.
852 நினைவுகளில் அகிலன். எஸ்.திருச்செல்வம் (தொகுப்பாளர்). கனடா அகிலன் அசோஷியேட்ஸ், 1வது பதிப்பு, மே 1999. (கனடா: அகிலன் அசோஷியேற்ஸ்) 44 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 28X21 சமீ.
ஈழத்துப் பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வத்தின் புதல்வன் அகிலன் இந்திய அமைதி காக்கும்படை யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளை ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட துன்பியல் சம்பவம் நிகழ்ந்து பத்து ஆண்டு நினைவாக 10.5.1999 அன்று அகிலன் பற்றி அவ்வப்போது கிடைத்த விடயதானங்களைச் சேர்த்துத் தொகுத்து வெளியிடப் பட்ட நினைவுமலர். ஈழப்போரின் துர்ப்பாக்கியமானதொரு காலகட்
256 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

920.1 தகவல், ஒலிபரப்புத் துறையினர், 922 சமயத் தலைவர்கள்
டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்நூல் அமைகின்றது.
920.1 ஊடகவியலாளர், தகவல் ஒலிபரப்புத் துறையினர்
853 மன ஓசை: தமிழ் ஒலிபரப்பாளர் ஒருவரின் நினைவு மீட்பு. வீ.சுந்தரலிங்கம்.(புனைபெயர்: சுந்தா). சென்னை 600090: No.6, Eswari Apartments, 23, Beach home avenue, 2nd street, Besant nagar, 1வது பதிப்பு, மார்ச் 1999, (சென்னை 600014: பார்க்கர் 293, அஹமட் காம்ப்ளெக்ஸ், 2வதுதளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை) 176 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 gL5.
இலங்கையின் ஒலிபரப்புத் துறையில் அனுபவ வளமும் ஆற்றலும் வாய்ந்த கலைஞர் சுந்தாவின் மனஓசை இந்நூலில் பதிவாகிறது. தமிழ் ஒலிபரப்புத் துறையிலும் ஈழத்து நாடகத் துறையிலும் கலைத் துறையிலும் ஈடுபாடுள்ளவர்களுக்கு அரிய பல தகவல்களையும் கருத்துக்களையும் இந்நூல் தருகின்றது.
922 சமயத் தலைவர், சிந்தனையாளர்
854 ஈழத்துச் சித்தர் குடைச்சுவாமிகள். முருக வே. பரமநாதன். கனடா: இந்து சமயப் பேரவை, ஒன்ராறியோ, 1வது பதிப்பு, செப் டெம்பர் 2000. (கனடா: விவேகா அச்சகம்) xvi,85 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5X14 சமீ.
ஒன்ராறியோ இந்துசமயப் பேரவையின் 10வது வெளியீடு. கோண்டா விலைச் சேர்ந்த குடைச்சுவாமி (கந்தையா) அவர்களின் வாழ்வும் பணியும் இந்நூலில் விரிவாக ஆய்வுக்குட்பட்டுள்ளது.
855 ஈழத்துச் சித்தர்கள். நா.முத்தையா. சென்னை 26: குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜூன் 1994. (சென்னை 24: அலைகள் அச்சகம்) 192 பக்கம். விலை: இந்திய ரூபா 28. அளவு: 18x12.5 சமீ.
கடந்த காலங்களில் ஈழத்தில் வாழ்ந்த பதினாறு ஈழத்துச் சித்தர் களை இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 257

Page 143
922 சமயத் தலைவர், சிந்தனையாளர்
856 உயிர்க்குயிர்க் கடவுளாகிய சிவயோக சுவாமிகள். சிவன் அடியான். யாழ்ப்பாணம்: வெளியீட்டகம் குறிப்பிடப்பட வில்லை. 1வது பதிப்பு.1987 (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், காங்கேசன்துறை வீதி) XXiv,168 பக்கம், தகடு, விலை: ரூபா 17.50. அளவு: 19.5X13 சமீ
சிவயோக சுவாமிகளின் தொடர்பும் அவரது திருவிளையாடல்களும் பத்திரிகைகளும் சீடர்களும் சுவாமிகள் பற்றிப்பெருமையுடன் கூறியவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
857 காரைக்கால் அம்மையாரின் வாழ்வும் வாக்கும். க.ந. வேலன். சென்னை 600017. மணிமேகலைப் பிரசுரம், த. பெ. 1447, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 5: எம்.கே. என்ரர்பிரைசஸ்) 128 பக்கம். விலை: இந்திய ரூபா 24 அளவு: 18x12.5 சமீ.
முதலில் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு, தெய்வீகம் கமழ வரையப்பெற்றுள்ளது. அடுத்து திருவாலவுடையார் பாசுரத்துக்கும் அம்மையார் பாடல்களுக்கும் முன்னுரையோடு கூடிய தெளிவான பொழிப்புரை எழுதப்பெற்றுள்ளது. நிறைவாக, அம்மையாரின் வாழ் வும் வாக்கும் என்னும் ஆய்வுப்பகுதியில் அவர் அடைந்துள்ள மெய்யுணர்வுச் சிகரமும் அவருக்காக அப்பன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தின் உட்பொருள் முதலியனவும் விளக்கப்பட்டுள்ளன.
858 சாது அப்பாத்துரையின் தியானதாரா. பிரமிள் (இயற் பெயர்-சிவராமலிங்கம், வேலணை) அந்தியூர் 638501 (தமிழ்நாடு): லயம் வெளியீடு, நகலூர், 1வது பதிப்பு, 1989. (சென்னை: 41 கவின் கலை அச்சகம்) 64பக்கம், புகைப்படம். விலை: இந்திய ரூபா 6. அளவு: 18x12சமீ.
திருக்கோணமலையின் ஞானபுருஷரான சாது அப்பாத்துரையின் வரலாறும் வாக்கும் அவர் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகள் சென்ற பின்பு இந்நூலின் வாயிலாக வெளிப்படுகின்றது.
சிவயோக சுவாமிகள் மேலும் பார்க்க 49, 50, 55
859
தீபங்கள் எரிகின்றன: அருட்திரு மேரி பஸ்தியான் வரலாறு. நாவண்ணன். மல்வம் (உடுவில்): சுவாமி ஞானப்பிர
258 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

922 சமயத் தலைவர், சிந்தனையாளர், 923 சமூகவியல் துறையினர்
காசர் சனசமூக நிலைய வெளியீடு, 1வது பதிப்பு, மாசி 1988. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) (14),226 பக்கம், தகடுகள். விலை: ரூபா 20. அளவு: 175x12.5 சமீ.
1985ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி இலங்கை ஆயுதப்படையினால் படுகொலை செய்யப்பட்ட வங்காலை (மன்னார் மாவட்ட) பங்குத் தந்தை அருள்திரு மேரி பஸ்தியான் அவர்களது வாழ்க்கைவரலாறு.
860 முத்தான தொண்டர்; ஞானசுரபி ஆத்மஜோதி நா. முத்தையா அவர்களின் வாழ்வும் பணியும். வி.கந்தவனம். கனடா: இந்து சமயப் பேரவை, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஆவணி 1995. (கனடா: சங்கர் அச்சகம்) 87 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21Χ14 σιβ.
இலங்கையில், நாவலப்பிட்டியில் இருந்து வெளிவந்து, இந்து சமய உலகையே ஆட்கொண்ட ஆத்மஜோத7 என்ற சஞ்சிகையின் தாபகரும், சிவநெறியில் நின்று பல அருங்காரியங்களைப் புரிந்தவ ருமான அருட்திரு நா. முத்தையா அவர்களது வாழ்வும் பணியும்.
மேலும் பார்க்க: 069
923 சமூகவியல்துறை சார்ந்தோர்
86 ஐநாவில் தமிழன்; என் முதல் முழக்கம். கிருஷ்ணா வைகுந்த வாசன். லண்டன் SW192HY. செங்கொட்டில் பதிப்பகம், 55,Warren Road, 2வது திருத்திய பதிப்பு, ஜூலை 1993. 1வது பதிப்பு, ஜூலை 1990. (London: Setline data Ltd.) 204 பக்கம், புகைப்படம். விலை: ஸ்டேர்லிங் பவுண் 4.95. அளவு: 21X14 5-Lß.
திரு கிருஷ்ணா வைகுந்தவாசனின் 73வது பிறந்த தினத்தையொட்டி வெளியிடப்பட்ட நூல். அவரது ஐம்பது வருடகால பொதுவாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், அவர்பற்றிய செய்திகளின் ஆவணத்தொகுப்பு.
862 துணைவேந்தர் வித்தி. அ.சண்முகதாஸ். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு5; சாமர அச்சகம், 22ஏ மல்லிகா ஒழுங்கை.)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 259

Page 144
923 சமூகவியல் துறையினர்
134பக்கம், புகைப்படம், தகடுகள். விலை:ரூபா 15. அளவு:18X13சமீ.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் 60வது பிறந்ததினத்தையொட்டி 8.5.84 அன்று வெளியிடப்பெற்ற நூல். எட்டு அத்தியாயங்களில் அவரது சமூகப்பணிகள் பல்கலைக்கழக வாழ்வு என்பன பற்றிய விரிவான ஆய்வு. அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் பற்றிய நூற்பட்டியல் ஒன்றும் (79.103ம் பக்கங்களில்) காணப்படுகின்றது.
863 தேசபக்தன் கோ. நடேசையர் - ஒரு வரலாற்று ஆய்வு. சாரல் நாடன். கண்டி: மலையக வெளியீட்டகம், 1வது பதிப்பு, 1988. (கண்டி ரோயல் அச்சகம், 190, கொழும்பு வீதி) 210 பக்கம், விளக்கப்படம். விலை: ரூபா 75 அளவு: 21X14 சமீ.
இலங்கை வாழ் பெருந்தோட்டத் தமிழரின் கடந்த 170 வருடகால வரலாற்றிலே யுகப்புயல் ஒன்றை ஏற்படுத்திய மாமனிதர் கோதண் டராம நடேசையரின் வாழ்க்கை வரலாறு.
864 மணிமங்கலம் மணிவிழா மலர். வசந்தா வைத்தியநாதன், இ. ஜெயராஜா(மலர்க்குழு). லண்டன்: பிரித்தானிய சைவ முன்னேற்றச் &Fälä5b. 16jgbJugSüL, 1999. (Colombo 13:UnieArts, Bloemendhal Road) 136 பக்கம், தகடுகள், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு: 21.5x14 சமீ.
கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா சபைச் செயலாளரும் பல்வேறு சிவப் பணிகளின் முன்னோடியுமான திரு.க.பாலசுப்பிரமணியம் தம்பதி களின் சஷ்டியப்த பூர்த்தி விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலர். வாழ்த்துரைகளும் சைவசித்தாந்தக்கட்டுரைகளும் உள்ளடங்கியது.
865 மலையக மாணிக்கங்கள். அந்தனி ஜீவா. கொழும்பு 13: துரைவி, 85, பூரீ இரட்ணஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) 82பக்கம், விலை: ரூபா 65. அளவு: 17X12சமீ. ISBN955-9084-05-4
மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடி களில் பன்னிருவரைப் பற்றிய நூல். திருமதி மீனாட்சி அம்மை யார், கோ. நடேசையர், பெரி சுந்தரம், இராமானுஜம், ஐ.எஸ். பெரேரா, ஜோர்ஜ் ஆர். மோத்தா, மலையக காந்தி ராஜலிங்கம்,
260 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

923 சமூகவியல் துறையினர், 9232 அரசியல் துறையினர்
வி.கே.வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை, ஏ.அஸிஸ், சோமசுந் தரம் அசோகா, பி.டி.ராஜன் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகள்.
866 வைகுந்தவாசன் முத்துவிழா மலர் 2000. பொன் பாலசுந் தரம், ஐதிசம்பந்தர் (தொகுப்பாசிரியர்கள்). லண்டன்: முத்துவிழா மலர் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. 52 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 29.5X21 சமீ.
29.4.2000 அன்று லண்டன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் சிவயோகம்சபை அரங்கில் இடம்பெற்ற பெரியார் கிருஷ்ணா வைகுந் தவாசன் முத்துவிழாவில் வெளியிடப்பட்ட மலர். அன்னாரின் பொது வாழ்வில் அவரை வாழ்த்தி வழங்கப்பட்ட உரைகளின் தொகுப்பு.
867 சேர். றாஸிக் பரீத் வழியும் நடையும். முஹம்மது எம். சபர். கொழும்பு 3: அல்ஹாஜ் ஸஈத் முஹம்மத் இர்ஷாத் அல்பரகாத் முகாமை நிறுவனம், 17 கிளென் ஆர்பர் பிளேஸ், 1வது பதிப்பு, 1982. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185, கிரான்ட்பாஸ் வீதி) (8),174 பக்கம், தகடு விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
சேர் ராசிக் பரீத் அவர்களின் 90வது பிறந்ததினக் கொண்டாட்டத்தை யொட்டி (29.12.1982) வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மூன்று அத்தி யாயங்களில் அவரது சமூக, அரசியல் வாழ்க்கை வரலாறு எடுத்துக் காட்டப்படுகின்றது.
923.2 அரசியல் துறையினர்
868 அண்னை இந்திரா. அந்தனி ஜீவா. கண்டி: தமிழ் மன்றம், கல் ஹின்ன, 1வது பதிப்பு, 1985. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, LITub 6gi) 62 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 10. அளவு: 18x12.5 சமீ.
முன்னாள் இந்தியப் பிரதமர் ரீமதி இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு எளிய நடையில் நூலுருவாகியுள்ளது.
369 சா.ஜே.வே.செல்வநாயகம்: நெருக்கடி காலத் தலைமைத் துவம் பற்றி நினைவு அலைகளின் உருவம் ஒன்றின்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 261

Page 145
923.2 அரசியல் துறையினர்
அடிப்படையினதோர் ஆய்வு . அ.ஜெயரட்ணம் வில்சன். யாழ்ப் பாணம்: தந்தை செல்வா அறங்காவல் குழு, 1வது பதிப்பு. 1981. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 25 பக்கம். விலை: ரூபா 5. அளவு; 21X14 சமீ.
தந்தை செல்வா தமிழ் இனத்தை வழிநடத்திய கால் நூற்றாண்டுக் காலத்தில் அவர் கைக்கொண்ட போராட்ட நடைமுறைகள் மாத்திர மன்றி அக்காலத்தில் வளர்ச்சியடைந்து பூரணத்துவம் பெற்ற அவரது அரசியல் கருத்துக்கள் எல்லாம் இந்நினைவுரையில் தொட்டுச் செல்லப்பட்டுள்ளன.
87Ο தோழர் மணியம் நினைவு மலர். கே.ஏ.சுப்பிரமணியம் ஞாபகார்த்த குழு. யாழ்ப்பாணம்: இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது), 1511 மின்சார நிலைய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (யாழ்ப்பாணம்: ரீ பார்வதி அச்சகம், 536, ஆஸ்பதிதிரி வீதி) 118 பக்கம், தகடுகள். விலை: ரூபா 20. அளவு 21X14 சமீ.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது) பொதுச்செயலாளர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் நினைவு அஞ்சலி 17.12.1989 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது வெளி யிடப்பட்ட மலர். தோழர் மணியம் பற்றி ஏனையோர் பதிவு செய்து வைத்திருந்த எண்ணங்களே இந்நூலில் ஆவணமாக்கப்பட்டுள்ளது.
871 நினைவுத் திரைகள். கா.பொ.இரத்தினம். சென்னை 18: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (சென்னை 108; அப்பர் அச்சகம்) ix,354 பக்கம். விலை: இந்திய ரூபா 60. அளவு: 18x12 சமீ.
பேராசிரியர் முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டால் 20ம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ் இன மொழி இலக்கிய வரலாற்றைத் தமிழுலகம் தெரிந்து கொள்ளுமே என்ற நோக்கத்துடன் அவரிடம் தன் வரலாற்றை எழுதித் தருமாறு தூண்டினோம். அகவை முதிர்ந்த நிலையிலும் கையில் குறிப்பேதுமின்றித் தம் நினைவுகளை எண்ணத்திரை களாக வடித்துத் தந்துள்ளார்.
- -சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
872
பொன்மலர்: தோழர் வி.பி.நினைவு வெளியிரு. பொன் மலர் வெளியீட்டுக் குழு. கனடா: பொன்மலர் வெளியீட்டுக் குழு,
262 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

923.2 அரசியல் துறையினர், 923.6 சமூக சேவகர்கள்
செப்டெம்பர் 1994. (கனடா: ஈழநாடு வெளியீட்டு நிறுவனம்) 128 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X28 glf.
அமரர் வி.பொன்னம்பலம் அவர்களின் மறைவையொட்டி பிரசுரிக்கப் பட்ட அனுதாபச் செய்திகள், மாணி புரைகள், கட்டுரைகள். கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. தோழர் வி.பி. அவர்களது குடும்பப் புகைப்படங்களும் அவர்தம் வாழ்வின் வெவ்வேறு ஆண்டு களில் சம்பவித்த பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பும் இடம் பெற் றுள்ளது. வி.பி. அமரராவதற்குச் சற்று முன்னதாக தமிழில் ஆற்றிய உரையும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
873 விடுதலை நெருப்புக்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி. சென்னை 600017: தமிழர் விடுதலைக் கூட்டணி, 2 தணிகாசலம் வீதி, தியாகராஜ நகர், 1வது பதிப்பு, அக்டோபர் 1985. (சென்னை 600005: ஜீவன் அச்சகம், திருநெல்வேலி). 80 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14.5 guf5.
இலங்கையின் அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர்கள் வி. தர்மலிங்கம், மு.ஆலாலசுந்தரம் ஆகிய தலைவர்கள் 2.9.1985 அன்று ஈழ மண்ணில் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித் தும் விமர்சித்தும் அவர்களின் நினைவாக வெளிவந்த நினைவு மலர். இரங்கல் செய்திகளும், இரு தலைவர்களினதும் வாழ்க்கைக் குறிப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
923.6 சமூக சேவகர்கள்
874 அண்பின் கங்கை அண்னை திரேசா. இளவாலை அமுது (இயற்பெயர்-அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997 (லண்டன்: வாசன் அச்சகம்) (16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00.
அளவு: 20X14.5 சமீ.
அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்த வர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகி யுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரிய
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 263

Page 146
923.6 சமூக சேவகர்கள், 923.61 விடுதலைப் போராளிகள்
ராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ் வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன் னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத் துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.
875 கர்மயோகி ழுநீ வே.க. சி.விசாலாட்சி. கிளிநொச்சி: கரைச்சி சைவ வித்தியாவிருத்திச் சங்கம், குருகுலம், 1வது பதிப்பு, நவம் பர் 1988. (கிளிநொச்சி. சர்வசக்தி அச்சகம், குருகுலம்) Xxiv,72 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x13 சமீ.
கிளிநொச்சியில் இயங்கிய குருகுலம் என்ற சமூகசேவை அமைப் பினை 1964 இல் ஸ்தாபித்த பூரீ வே.கதிர்வேல் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு.
923.61 விடுதலைப் போராளிகள்
876 கிட்டு எங்கள் வரலாற்று நாயகன்: நினைவுத்துளிகள். தமிழீழ விடுதலைப்புலிகள். லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிக ளின் சர்வதேசத் தலைமைச் செயலகம், 54,TavistockPlace, WC1 9RG,1வது பதிப்பு (ஆண்டு, அச்சகவிபரம்குறிப்பிடப்பட வில்லை) 64 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள். விலை: குறிப்பிடப்பட வில்லை. அளவு: 21.5X15.5 சமீ.
16.01.1993 இல் வங்கக் கடலில் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) அவர்களின் நினைவுக் கட்டுரைகள், கவிதைகள், அவரது ஓவியங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
877 தளபதி கிட்டு: ஒரு காலத்தின் பதிவு. நோர்வே: தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவு, 1வது பதிப்பு, மாசி 1994. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 100 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை.
அளவு 21X15 சமீ.
தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கேணல் கிட்டு அவர்
264 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

923.61 விடுதலைப் போராளிகள், 293.7 கல்வியியலாளர்கள்
களின் நினைவாக மாவீரர் (1994) நாளில் வெளியிடப்பட்ட தொகுப்பு நூல். தளபதி கிட் டுவைப் பற்றி அவருடன் பழகிய தோழர் களிடம் இருந்து பெறப்பட்ட ஆக்கங்களும் இயக்கத்தின் அதிகார பூர்வ குரல்களாக வெளியிடப்பட்ட அறிக்கைகளும் சிறப்புக்கட்டுரை களும் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன.
878 தாய்நிலத்து வீரர். மாவீரர் நினைவுகள் 2. தமிழர் ஒருங்கி ணைப்புக் குழு (தொகுப்பாளர்கள்) நோர்வே: தாய்நிலம் பதிப்பகம், P.O.Box 1699, Vika, 0110, Oslo. 16.gb LígólÚL!, B6nbLý 1993. (அச்சக விபரம் அறிய முடியவில்லை) 118 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14.5 சமீ.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்து மாவீரர் களான போராளிகள் 20 பேர் பற்றி வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.
879 மேஜர் கிணிணி. கஸ்ரோ (இயற்பெயர்: வி.மணிவண்ணன்). பிரான்ஸ்: தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகச் செயலகம், 2வது பதிப்பு, பெப்ரவரி 1997 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை.) 72 பக்கம், புகைப்படம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12.5 சமீ.
10.7.92 இல் இயக்கச்சி மோதலில் பலியான விடுதலைப்புலிகளின் போராளி மேஜர் கிண்ணியின் போராட்டகாலச் சரிதை. நெடுங் கேணி இந்திய இராணுவ மினி முகாம் புலிகளால் தாக்கப்பட்ட வரலாறும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
923.7 கல்வியியலாளர்கள்
880 உத்தமர் உவைஸ். எஸ்.எம்.ஹனிபா. கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1981. (கொழும்பு 9 ஐ.பி.சி. பிரிண்டிங் பிரஸ், 320, என்.எம்.எம். இஷாக் மாவத்தை) 172 பக்கம், 8 தகடுகள், புகைப்படங்கள். விலை: ரூபா 20. அளவு: 18x12.5 சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 265

Page 147
2937 கல்வியியலாளர்கள், 9239 நாட்டாரியல் அறிஞர்கள்
அல்ஹாஜ் கலாநிதி ம.மு.உவைஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பதினைந்து அத்தியாயங்களில் தரப்பட்டுள்ளன.
88 வித்துவசிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும். எஸ்.சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல் கலைக் கழகம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: கொமர்ஷியல் அச்சகம்) (12),112 பக்கம், தகடுகள். விலை: ரூபா 30. அளவு 21X14சமீ.
மகா வித்துவான் சின்னையர் கணேசையர் (1878-1958) இலங்கைத் தமிழ் அறிஞர்களில் மிகவும் முக்கியமானவர்களுள் ஒருவர். அவரது வாழ்க்கையும், பணிகளும் இந்நுலில் ஆராயப்பட்டுள்ளன. அவரின் ஆக்கங்களுக்கான நூற்பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: 759
923.9 நாட்டாரியல் அறிஞர்கள்
882 1999 இல் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை நாடக-கூத்து மூத்த கலைஞர் வரலாறு. செல்லையா மெற்றாஸ்மயில். யாழ்ப் பாணம்: ஹி மீனாட்சி அச்சகம், 315, கச்சேரி நல்லூர் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 1999. (யாழ்ப்பாணம்: மீனாட்சி அச்சகம், கச்சேரி நல்லூர் வீதி) 152 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 200. அளவு; 21X14சமீ.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 1999இல் வாழ்ந்து கொண்டிருந்த இசை நாடக கூத்துக் கலைஞர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்கள் தேடிப் பெறப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. நாடகக் காட்சிப்படங்களும், புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், உடுவில், சண்டிலிப்பாய், சங்கானை, தெல்லிப்பழை, வடமராட்சி (கரவெட்டி), பருத்தித்துறை, மருதங்கேணி, சாவகச் சேரி, வேலணை, நெடுந்தீவு, ஊர் காவற்றுறை, பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளின் அடிப்படையில் இத்தொகுப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
883 நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு: கலையுலக வாழ்க்கை வரலாறு. எஸ்.அகஸ்தியர். யாழ்ப்பாணம்: நவரச நாட்டுக்கூத்துக் கலா மன்றம், 1வது பதிப்பு, மே. 1981. (யாழ்ப் பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்)
266 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

924 மொழியியலாளர்கள்
102 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
அண்ணாவியார் பூந்தான் யோசேப்பு அவர்களின் வாழ்க்கை வரலாற் றினூடாக சமகால ஈழத்து நாட்டுக்கூத்துப் பற்றிய அரிய தகவல் களைத் தரும் நூல்.
924 மொழியியலாளர்கள்
884 அருட்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு மலர். மு.கனக ராசன், எஸ்.புனிதலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: மக் கள் குரல் வெளியீடு, 37, புங்கன்குளம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1981. (சென்னை: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 126 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 10. அளவு: 24x18 சமீ.
வண.பிதா தனிநாயகம் அடிகளின் பணிகள் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு. க.அன்பழகன், அ.அமிர் தலிங்கம், கரந்தை கணேஷன், எச்.டபிள்யு.தம்பையா, சு.வித் தியானந்தன், அ.சண்முகதாஸ், அந்தனி ஜான், அருட்திரு பி.சின்ன ராசா, ஆகியோரின் குறிப்புரைகளும் பிதா தனிநாயகம் அவர்களின் வாழ்வின் முக்கிய கட்டங்களைக் காட்டும் புகைப்படத் தொகுதியும், எம்.ஏ.நுஃமான், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.சுப்பிரமணியன் ஆகியோரின் தமிழியல் கட்டுரைகளும் தொகுக்கப்பெற்றுள்ளன.
885 சுடரொளி; தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலர், 1999. ஐ.தி.சம்பந்தன் (பதிப்பாசிரியர்) லண்டன் E7 9QN: சுடரொளி வெளியீட்டுக்கழகம், 198, Neville Road, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1999. 44 பக்கம். விலை; ஸ்டேர்லிங் பவுண் 2.00. அளவு; 26x18.5 சமீ.
தவத்திரு தனிநாயகம் அடிகளார் நினைவாக அவரது தமிழ்ப்பணி களையும் தமிழ்த் தேசியப்பணிகளையும் நினைவுகூரும் வகை யிலும், ஆறுமுகநாவலர், தந்தை செல்வா, மறைமலை அடிகள் போன்றோரை நினைவுகூரும் வகையிலும் தொகுக் கப்பெற்ற சுடரொளி சஞ்சிகையின் சிறப்பு மலர்.
886 சுவாமி ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும். கா.இந் திரபாலா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாசர் நினைவு விழா அமைப்புக்குழு, ஆயர் இல்லம், 1வது பதிப்பு, மே 1981. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 267

Page 148
924 மொழியியலாளர்கள்
44 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 24.5X18 85.
சுவாமி ஞானப்பிரகாசரின் பன்முகப்பட்ட பங்களிப்புக்கள் ஆய்வுக் குட்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றாராய்ச்சித்துறை, மரபுவழித்தமிழ்க் கல்வி, கத்தோலிக்க தமிழிலக்கியம், மொழியாய்வு, சமயப்பணி ஆகியவற்றில் சுவாமி ஞானப்பிரகாசரின் பங்களிப்பை க.அருமை நாயகம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ், வே. அந்தனி ஜான் அழகரசன் அடிகள் ஆகியோர் ஆராய்ந்துள்ளனர்.
887 தமிழ்த் திரு தனிநாயகம் அடிகளார். ஆ.தேவராசன். கொழும்பு 5: கிறிஸ்தவ தமிழ்ப்பண்பாட்டுப் பேரவை, 97 டொரிங் டன் தொடர்மாடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) X.20 பக்கம், தகடு விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 &16.
தினகரன் நாளிதழில் தொடர்ச்சியாக வெளிவந்த தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்.
888 தமிழ்ப் பேரண்பர் வித்துவான் க.வேந்தனார். சொக்கன். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கியவட்டம், 1வது பதிப்பு, 1984. (யாழ்ப் பாணம்: பூரீகாந்தா அச்சகம்) - xi,88 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 22x14 சமீ.
வேந்தனாரின் காலப்பின்னணியில் அவர் பெற்ற கல்வி, அவரின் கவித்துவம், சொற்பொழிவாற்றல், கட்டுரைத்திறன், சமய அறிவு, மனப்பாங்கு என்பன சுருக்கமாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன.
889 தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி: கட்டுரைத் தொகுப்பு1994 சூ.யோ.பற்றிமாகரன். லண்டன்: பிரித்தானிய தமிழ்க்கலா D6örgub, 51, Ruskin Road, Southall, Middx UB1 1 PP.16 g) Lig5L, LDTjö 1994. (London: Golden Printers) 26 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X15 சமீ.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தனிநாயக அடிகளும் என்னும் தலைப்பில் லண்டனில் 19.3.1994 இல் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளான தனிநாயக அடிகளாரும் தமிழாய்
268 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

926 மருத்துவர்கள், 927 கலைஞர்கள், 927.5 ஓவியக்கலைஞர்கள்
வும் ( பொற்கோ), அடிகளாரும் நானும் (மறவன்புலவு சச்சிதானந் தன்), தனிநாயக அடிகள் தமிழ்த்துறையை நவீனப்படுத்திய பாங்கு (ம.மதியழகன்), இறைவனைத் தமிழ் செய்த தனிநாயக அடிகள் (பற்றிமாகரன்) ஆகியன அடங்கியுள்ளன.
926 பிரயோக விஞ்ஞானிகள், மருத்துவர்கள்
890 பிரபு பெரியபரிகாரியார் சரித்திர ஆராய்ச்சி. செ.சர்வேஸ்வரன், மு.சிவசம்பு (தொகுப்பாசிரியர்கள்) யாழ்ப்பாணம்: பெரியபரிகாரியார் ஞாபகார்த்த சித்த வைத்திய சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1987. (ஏழாலை; மஹாத்மா அச்சகம்) 36 பக்கம். விலை: ரூபா 20. அளவு 21X14 சமீ.
பெரியபரிகாரியார் என்ற அழைக்கப்படும் பிரபு ஆறுமுகம் பிள்ை அவர்களின் வாழ்க்கை வரலாறு.
927 கலைஞர்கள்
89 கலை மகிழ்நன். த. சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: மணி விழாக்கழகம், 1வது பதிப்பு, மே 1984. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்) iv,50 பக்கம், தகடுகள். விலை: ரூபா 10. அளவு: 18.5x12.5 சமீ.
கலைமகிழ்நன். பேராசிரியர் சு.வித்தியானந்தனின் புனைபெயர். அப் பெயரைத் தலைப்பாக வைத்து அவரது கலையுலகப் பங்களிப்பும் பணிகளும் தொகுக்கப்பெற்றுள்ளது.
மேலும் பார்க்க: 893, 926,
927.5 ஓவியக்கலைஞர்கள்
892 கார்ட்ரூண் ஒவிய உலகில் நான். சி.சிவஞானசுந்தரம். (சிரித் திரன் சுந்தர்) கொழும்பு 13: மல்லிகைப்பந்தல், 201-111, ழரீ கதி ரேசன் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2001 (கொழும்பு 13: மப்கோ, 59 சங்கமித்தை மாவத்தை) xvi,135பக்கம், சித்திரங்கள். விலை: ரூபா 160. அளவு 21X14.5சமீ.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 269

Page 149
92792 நாடகக் கலைஞர்கள்
1963இல் தொடங்கி 28 ஆண்டுகள் வெளியான சிரித்திரன் சஞ்சிகையின் ஆசிரியர், ஸ்தாபகர் சுந்தர் ஈழத்துக் கார்ட்டூன் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். 318 இதழ்கள் வரை வெளிவந்த சிரித்திரன் சஞ்சிகையின் வரலாற்றினூடாக ஆசிரியரின் கார்ட்டூன் ஓவியஉலக அனுபவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
927.92 நாடகக் கலைஞர்கள்
893 அரங்கு கணிட துணைவேந்தர். ஏ.ரி.பொன்னுத்துரை. மாவிட்டபுரம்: முத்தமிழ்க்கலை மன்ற வெளியீடு, 1வது பதிப்பு, மே 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 26 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் நாடகக் கலைப்பணி பற்றிய நூல்.
மேலும் பார்க்க: 891
894 அறுபது வயது இளைஞர் கலைப்பேரரசு. கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை, கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1988, (தெல்லிப்பழை: குகன்அச்சகம்) 18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 சமீ.
நாடகமணி ஏ.ரி.பொன்னுத்துரை அவர்களின் மணிவிழா நினைவுச் சிற்றேடு. நாடகமணி பற்றிய பேராசிரியர் சு.வித்தியானந்தனின் (இனிய நண்பர் ஏ.ரி.பொ.) கவிதையும், சி.மெளனகுரு (அறுபது வயது இளைஞன்), நா.சுப் பிரமணியன் (மணிவிழாக்கானும் கலைஞர்), அநு.வை.நாகராஜன் (ஆயிரம் பிறை கண்ட கலைஞர் ஏரிபொன்னுத்துரை) ஆகியோரின் கட்டுரைகளும் அடங்கியது.
895 நடிகமணி வி.வி.வைரமுத்து: வாழ்வும் அரங்கும். காரை.செ.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜூலை 1996. (கொழும்பு: யுனி ஆர்ட்ஸ்) xi,160 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 21.5X14 சமீ.
நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் வாழ்வும் பணியும் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்ந்த தமிழர் சமதாயத்தை-குறிப்பாக
270 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

92792 நாடகக் கலைஞர்கள், 928 இலக்கிய அறிஞர்கள்
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் வாழ்வைத் தெட்டத்தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்ற இசை நாடகம் வளர்ந்து வந்த வரலாற்று நெறியையும் விளக்கிக் காட்டுகின்றது. சாதி அமைப்பின் கொடிய மரபுகளின் விளைவான மனித ஏற்றத்தாழ்வுக் கெடுபிடிகளுக்கு நடிகமணி எவ்வாறு துணிச்சலாக முகம்கொடுத்து கலையுலகை வசப்படுத்தினார் என்பது யதார்த்தநிலையில் நின்று விளக்கப் பட்டுள்ளது.
896 நாடக தீபம் நடிகமணி விவிவைரமுத்து நினைவு வெளியிரு. மலர்க்குழு. யாழ்ப்பாணம்: வி.வி.வைரமுத்து நினைவுதின வெளியீடு, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 52 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5x 14 &u6.
நடிகமணி வைரமுத்துவின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட இந் நூலில் அவர் பற்றி மட்டுமல்லாது, சமகால நாடக அரங்கு பற்றிய பல தகவல்களையும் உள்ளடக்கியதான பல்வேறு தமிழ் அறிஞர் களின் இரங்கலுரைகள் இடம்பெற்றுள்ளன.
928 இலக்கிய அறிஞர்கள்
97
Ж-ты он. ஓவியங்கள். டொமினிக் ஜீவா (தொகுப்பாளர்). யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234B, கே.கே.எஸ். வீதி. 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: பூரீகாந்தா அச்சகம், கே.கே.எஸ். வீதி) 136 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 17X12 சமீ.
மல்லிகை மாத இதழில் காலத்திற்குக் காலம் வெளியிடப்பெற்று வந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு படைப்பாளி இன்னொரு படைப் பாளியையோ அறிவு ஜீவியையோ எப்படி முதன்முதலில் சந்தித்தார் என்பது பற்றியும், அவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்ட நிலை பற்றியும் பரஸ்பரம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாதிப்புக்குள் ளாவது எப்படி என்பது பற்றியும் எழுதிய தகவல் குறிப்புரைத் தொகுப்பு இதுவாகும்.
898 அனுபவ முத்திரைகள். டொமினிக் ஜீவா. சென்னை 98; நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, ஜூன் 1980. (சென்னை 98: நியு செஞ்சுரி பிரின்டர்ஸ்) vi,128 பக்கம். விலை: இந்திய ரூபா 5 அளவு: 18x12.5 சமீ
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 271

Page 150
928 இலக்கிய அறிஞர்கள்
அனுபவ முத்திரைகள். டொமினிக் ஜீவா. யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 2348 காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிரப்பி, 24 பொன்னுசாமி தெரு, இராயப்பேட்டை) 136 பக்கம். விலை: ரூபா 26. அளவு: 17.5x12 சமீ
எனது வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள் விசித்திர மானவை. அந்த விசித்திரக்கலப்புள்ள அனுபவங்களின் தொகுப் பே இது. அவை விசித்திரமானவையாக விளங்கியபடியால் தான் சுவை நிரம்பியவைகளாக இருக்கின்றன. எனது வாழ்வுப் பாதை யில் குறுக்கிட்டு என்னை நெறிப்படுத்திய பலசம்பவங்களை இதில் சேர்த்துள்ளேன்.
-ஆசிரியர் (முன்னுரையில்)
899 ஆககவி கல்லடி வேலுப்பிள்ளை. சிலோன் விஜயேந்திரன். சென்னை 2: காந்தளகம், 834 அண்ணா சாலை, 1வது பதிப்பு, மார்கழி 1990. (சென்னை 2: காந்தளகம்) 68 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 175x12 சமீ.
யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தையும் யாழ்ப்பாணக் குடிகளையும் பற்றி அறிய உதவிய யாழ்ப்பாண வைபவ கெளமுதி என்ற நூலை ஆக்கிய கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும், கவிஞராக மட்டுமன்றி அவரை உரையாசிரியராகவும் பத்திரிகையாளராகவும் (சுதேச நாட்டியம் என்ற பத்திரிகையை நடாத்தியவர்), விமர்சகராக, வரலாற்றாய்வாளராக, சைவத்தொண்ட ராகக் காட்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றுச்சுருக்க நூல்.
900 இணுவையர் சின்னத்தம்பிப் புலவர். கார்த்தியாயினி நடராசா. யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1988. (யாழ்ப்பாணம் நியு உதயன் பப்ளிக்கேஷன்ஸ்) (14),80 பக்கம், தகடுகள். விலை: ரூபா 25. அளவு: 21.5X14 சமீ.
சின்னத்தம்பிப் புலவரின் வாழ்க்கை வரலாறும் அவரது ஆக்கங் களும்.
901
இலக்கியப் பூந் துணர்: தமிழ் ஒளி-கலாபூஷணம் வ.அ.இராசரத்தினம் அவர்களின் பவளவிழா நினைவு மலர். சித்தி அமரசிங்கம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை:
272 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

928 இலக்கிய அறிஞர்கள்
முத்தமிழ் வளர் கலை மன்றம், 21, ஒளவையார் வீதி, திருக் கோணமலை, 1வது பதிப்பு, ஜூன் 2000. (திருக்கோணமலை: கலர் டொட்ஸ்) 200 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 25X16.5 gf.
ஈழத்தமிழ் எழுத்தாளர் வஸ்தியாம்பிள்ளை அந்தோனி இராசரத் தினம் அவர்களின் பவளவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வ.அ.இ. அவர்களின் இலக்கியப்பணிக்கு வழங்கப்பட்ட வாழ்த்துரைகள், அவர் பற்றியதும் அவரது படைப்பக்கள் பற்றியது மான பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களின் தொகுப்பு.
902 இன்றும் கேட்கும் குரல்: விபுலானந்தர். செ.யோகநாதன். சென்னை 2: காந்தளகம், 834, அண்ணா சாலை, 1வது பதிப்பு, மார்ச் 1992 (சென்னை 20: இராசகிளி பிரின்டர்ஸ்) 176 பக்கம். விலை: இந்திய ரூபா 36. அளவு: 18x12 சமீ.
சுவாமி விபுலானந்தர் வாழ்வும் காலமும் பற்றிய நூல் அவரது நூற் றாண்டு நிறைவின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது நூல் களைப் பற்றிய விபரக்குறிப்பும் பின்னிணைப்பில் காணப்படுகின்றது.
903 ஈழத்துத்திறனாய்வு முன்னோடி பேராசிரியர் வி.செல்வ நாயகம் அவர்கள். அ.சண்முகதாஸ். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை. 1வது பதிப்பு. 6Juj6), 1990. (Colombo 12: The Kumaran Press, 201 Dam Street) vi,20 பக்கம், விலை: ரூபா 15 அளவு 21.5x14 சமீ.
பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் தகைமைகள் பலவற்றுள் ஒரு சிலவற்றைத் தொகுத்து அவரை எம் கண்முன்பு கொண்டு வந்து நிறுத்தும் உரை. அன்னாரின் பாரிய பங்களிப்பான திறனாய்வின் முன்னோடியாக அவரைக்கண்டு இனம்காட்டித் தமிழ் உலகினுக்கு அவரது சேவைகளை நினைவு கூர வைத்துள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 16வது வெளியீடாக மலர்ந்துள்ள நினைவுச் சொற்பொழிவு.
904 ஈழநாட்டுப் புலவர். சி.கணபதிப்பிள்ளை. சுன்னாகம்: கந்த ரோடை, திருவாட்டி ரேவதி சிவசுப்பிரமணிய சர்மா நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜூன் 1983 (யாழ்ப்பாணம்; செட்டியார் அச் சகம்)
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 273

Page 151
928 இலக்கிய அறிஞர்கள்
30 பக்கம், தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14சமீ.
ஈழநாட்டுப் புலவர் வரிசையில் சின்னத்தம்பிப்புலவர், நாவலர், வித் துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, சோமசுந்தரப்புலவர், கவிஞர் மஹாலிங்கசிவம் ஆகியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் இலக்கியநயம் கமழ வழங்கப்பட்டுள்ளது.
905 உள்ளதும் நல்லதும். ஏ.பெரியதம்பிப்பிள்ளை. மட்டக்களப்பு: புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், 1வது பதிப்பு, 1982. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்) vi,(14),258 பக்கம், தகடு. விலை: ரூபா 20. அளவு: 21X14 சமீ.
சிந்தாமணி வார இதழில் வெளிவந்த 50 கட்டுரைகளின் தொகுப்பு. இது புலவர்மணியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளவும், மட்டக்களப்பின் சமூக வரலாற்றை அறிந்து கொள் ளவும் இந்நாட்டிலுள்ள பல்வேறு சாதி சமயங்களைச் சேர்ந்த பெருமக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பினை அறிந்து கொள்ளவும் உதவும் நூல்.
906 எங்கள் நினைவுகளில் கைலாசபதி. டொமினிக் ஜீவா (தொகுப்பாசிரியர்). சென்னை 98; நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, நவம்பர் 1985. (சென்னை 14: பகவதி பிரஸ், 129 ஜானி ஜான்கான் ரோடு) 96 பக்கம். விலை: இந்திய ரூபா 7. அளவு: 18x12.5 சமீ.
தமிழறிஞர் கைலாசபதி அவர்களின் பன்முகப் பங்களிப்பு பற்றிய கருத்துக்களின் தொகுப்பு. சு.வித்தியானந்தன், முருகையன், பட் டுக்கோட்டை வே.சிதம்பரம், சபா.ஜெயராசா, என்.கே.இரகுநாதன், வல்லிக்கண்ணன், பிரேம்ஜி, டொமினிக் ஜீவா, அசோகமித்திரன், க.அருணாசலம், தி.க.சிவசங்கரன், ஆகியோரின் கட்டுரைகளும், புதுவை இரத்தினதுரையின் கவிதையும் அடங்கியுள்ளன.
907 எண் கதை. கே.டானியல். புங்குடுதீவு: வி.ரி.இளங்கோவன், மூலிகை வெளியீடு, 3ம் வட்டாரம், 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், காங்கேசன்துறை ഖി) 31 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
எழுத்தாளர் கே.டானியலின் இலக்கியவாழ்வு பற்றிய நூல்
274 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

928 இலக்கிய அறிஞர்கள்
908 கைலாசபதியும் நானும். கே.எஸ்.சிவகுமாரன். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 6: சாமர பிரிண்டர்ஸ், 22 ஏ, மல்லிகா லேன்.) 36 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 19X13 சமீ.
பேராசிரியர் கைலாசபதி பற்றிய ஓர் விமர்சனம். கைலாசபதியும் நூலாசிரியரும், கைலாசபதியின் அணுகுமுறை, கைலாசபதியின் திறனாய்வும் குறையும், அழகியலும் சமூகப் பண்பும் முதலிய தலைப்புக்களில் நூலின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.
909 கைலாஸ்: கைலாசபதி நினைவேரு. மெள.சித்திரலேகா, க. சண்முகலிங்கம், சி.மெளனகுரு (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக்குழு, 62 பல்கலைக்கழக ஒழுங்கை, திருநெல்வேலி. 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). X.236 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 28x12 சமீ.
இலக்கியத் திறனாய்வு, சமூகவியல் கட்டுரைகள் அடங்கியது. தமிழ்க் கட்டுரைகள் எட்டும், ஆங்கிலக்கட்டுரைகள் பதினாறும் கொண்டது. பேராசிரியர் கைலாசபதியின் வாழ்க்கைக்குறிப்பு, நாவல் இலக்கியம், மொழியியல், மெய்யியல், நாடகக் கலை, மெல் லிசை ஆகிய அம்சங்கள் கட்டுரைகளின் கருப்பொருளாகும். பேராசிரியர் கைலாசபதியின் ஆக்கங்களுக்கான நூற்பட்டியலும் (தொகுப்பு:என்.செல்வராஜா) இடம் பெற்றுள்ளது.
910 சி.வி.சில சிந்தனைகள். சாரல்நாடன். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57 மஹிந்த பிளேஸ், 1ம் பதிப்பு, 1986. (கண்டி: யூனியன் அச்சகம், கொழும்பு வீதி) vi,72 பக்கம். விலை: ரூபா 17.50. அளவு: 18x12.5 சமீ.
இலக்கியப் படைப்பாளியான அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர் களின் வாழ்வும் சிந்தனையும் பற்றிய நூல்.
911 . சி.வை.தாமோதரம்பிள்ளை-ஓர் ஆய்வு நோக்கு. மனோன் மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1983. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், கண்டி வீதி) XX.208 பக்கம். விலை: சாதாரண பதிப்பு ரூபா 25. நூலகப் பதிப்பு:
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 275

Page 152
928 இலக்கிய அறிஞர்கள்
ரூபா 30. அளவு: 18x12.5 சமீ.
சிறந்த தமிழறிஞர், கவிஞர், ஆய்வாளர் சி.வை.தா.அவர்களின் வாழ்வும் பணிகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ஏட்டு ருவிலான இலக்கண நூல்களைப் பதிப்பித்தமை, நூலாசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, பாடசாலை நிறுவுநராக அவரது பங்க ளிப்பு, அவரது தமிழாய்வு முயற்சிகள், போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது முதுகலைமாணிப் பட்டத் தேர்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆய் வேடாகும்.
92 செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்.(பாகம் 1). க.சி.குலரத் தினம். யாழ்ப்பாணம்: சுடரொளி வெளியீட்டுக்கழகம், 1214 மானிப் பாய் வீதி, 1வது பதிப்பு, அக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம்) (14),203 பக்கம், விலை: ரூபா 45. அளவு; 20.5X14 சமீ.
ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர்களின் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றிய கட்டுரைகள்.
93 சொக்கன் அறுபது: வித்துவான் க. சொக்கலிங்கம் மணிவிழா மலர். சொக்கன் மணிவிழா நூல்வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம் சொக்கன் மணிவிழாச்சபை, 32/3 அம்பாள் வீதி, நாயன்மார் கட்டு, 1வது பதிப்பு, ஜூன் 1990. (யாழ்ப்பாணம்: உதயன் அச்சகம், 2வது ஒழுங்கை, மின்சார நிலைய வீதி) vi,162 பக்கம், விளக்கப்படம், தகடு. விலை: நூலகப்பதிப்பு: ரூபா 75, சாதாரண பதிப்பு: ரூபா 60. அளவு: 25x18.5 சமீ.
வித்துவான் க.சொக்கலிங்கம் அவர்களின் சமூக இலக்கியப் பணிகள் பல்வேறு அறிஞர்களாலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சொக்கனின் சிறுகதைகள், நாவல்கள், கவிதை, நாடகம், சமயப் பணி, பாடநூல், கல்விப்பணி, புத் திலக்கணம், வாழ்க்கை வரலாறு, பேச்சு, பொதுப்பணி, அகநோக்கு, நடையியல், ஆகிய அம்சங்களும், அவரது ஆக்கங்களின் தொகுப்பான 356 பதிவுகளுடன் கூடிய நூல்விபரப்பட்டியலும் இடம்பெறுகின்றது.
94 டொமினிக் ஜீவா. கருத்துக் கோவை. மேமன்கவி (தொகுப் பாளர்). கொழும்பு 11: மணிவிழாக் குழு (கொழும்புக்கிளை),
276 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

928 இலக்கிய அறிஞர்கள்
188/ ெகெய்சர் வீதி, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்; அபிராமி அச்சகம்.) 76 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 15. அளவு: 18X13 சமீ.
மல்லிகை சஞ்சிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மணி விழாவையொட்டி பல்வேறு கலை இலக்கிய அறிஞர்களினால் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், வானொலி யில் இடம் பெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள், வானொலி, தொலைக் காட் சிப் பேட்டிகள் மற்றும் கூட்டங்களின் விபரம் என்பவற்றின் தொகுப்பு.
915 தமிழ் தந்த தாதாக்கள்.க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: சுடரொளி வெளியீட்டுக்கழகம்,1214 மானிப்பாய் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987, (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம்) (12),110 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 21X14 சமீ.
ஈழநாடு வாரமலரில் வெளிவந்த கட்டுரைகள். எவ்வெப் புலவர்கள் எந்தெந்தத் துறைகளில் எத்தகைய காலங்களில் எவ்வாறெல்லாம் தமிழ்த்தாயை அணி செய்தார்கள் என்பதை இலகு நடையில் இலக் கியச் சுவையுடன் தந்துள்ளார்.
916 திரும்பிப் பார்க்கிறேன். செ.கணேசலிங்கன். சென்னை 600026; குமரன் பப்ளிஷர்ஸ், 79 முதல் தெரு, குமரன் காலனி, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (சென்னை 600026: குமரன் அச்சகம்) 160 பக்கம். விலை: இந்திய ரூபா 36. அளவு: 18x12 சமீ.
1942,48,56 ஆகிய காலகட்டங்களின் அடித்தளமாக அமைந்த பொருளாதார அரசியல் சமூகப் பின்னணியுடன் இயைந்ததாக அமையும் நூலாசிரியரின் இளமைக்கால வாழ்க்கையின் சுவையான பக்கங்கள்.
917 நந்தி நோக்குகள் இருபத்தைந்து என்.சோமகாந்தன் (பதிப் பாசிரியர்). கொழும்பு5. எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 215ஜி. 1-1 பார்க் வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: ரீகாந்தா அச்சகம்) xvi,144 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x13 சமீ.
பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்களது மணிவிழா நாள் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டது. இம்மலரில் நந்தியைப் பற்றிய மனப்பதிவுகளையும் கலை இலக்கியப் பங்களிப்பு பற்றிய கணிப்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 277

Page 153
928 இலக்கிய அறிஞர்கள்
பீடுகளையும் ஈழத்து எழுத்தாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
98 நிஜங்களின் தரிசனம். ஏ.ரி.பொன்னுத்துரை. குரும்பசிட்டி: சன் மார்க்க சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988, (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 46பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12சமீ.
அமரர் குரும்பசிட்டி த.இராசரத்தினம் அவர்களது வாழ்க்கை வரலாறு. பல்வேறு தமிழ்அறிஞர்களின் இரங்கல் செய்திகளுடனும் புகைப்படங்களுடனும் கூடிய நினைவஞ்சலி.
919 நீலாவணன்: எஸ்.பொ.நினைவுகள். எஸ்.பொன்னுத்துரை. கனடா, காலம் வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (Madras 94: Kohila Sri Printers) 132 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5x12 சமீ.
காலம் வெளியீட்டின் நான்காவது நூலாக வெளிவந்துள்ளது. கவிஞர் நீலாவணன் அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை இந் நூலில் எஸ்.பொ. அவர்கள் தொகுத்துள்ளார். தம் இலக்கிய வாழ் வில் கவிஞரின் பங்களிப்பைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
920 பஞ்சாவடிரம். கோப்பாய் சிவம்.(இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா) ஆவரங்கால்: புத்தூர் யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 1987 (மட்டுவில்: திருக்கணித நிலையம்) xvi,188 பக்கம், அட்டவணை. விலை: ரூபா 25. அளவு: 23x20சமீ.
மறுமலர்ச்சி எழுத்தாளர் பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மாவின் எழுபதாவது பிறந்ததினத்தையொட்டி அவரது வாழ்க்கைச்சிறப்பு கள், அவரது ஆக்கங்கள் சில, அவரைப் பற்றிப் பிற அறிஞர்கள் எழுதியவை என்பனவற்றின் தொகுப்பு.
921 பண்டிதமணி நினைவாரம். சி.சதாசிவம் (தொகுப்பாளர்). திருநெல்வேலி. பண்டிதமணி இல்லம், கலாசாலை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) xi,52 பக்கம், தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18Χ12 σιδ.
278 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

928 இலக்கிய அறிஞர்கள்
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களது அமரத்துவம் கருதி வெளியிடப்பட்ட நினைவஞ்சலிமலர். பண்டிதமணி பற்றிய நினைவுக் குறிப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தம் ஆக்கங்களின் சிறு பட்டியலும் தொகுக்கப்பட்டுள்ளன.
922 பண்டிதமணி நினைவுமலர். நூல் வெளியீட்டுக்குழு. யாழ்ப் பாணம்: பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நூல் வெளியீட்டுச்சபை, 1வது பதிப்பு, ஜனவரி 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) XXXVi,302 பக்கம், தகடுகள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 23.5x18 gruf5.
இலக்கியக்கலாநிதி பண்டிதமணியின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது இலக்கியப்பணிகள் பற்றிய பல்வேறு ஆய்வுக்கட்டுரை களையும் கொண்டது.
923 பண்முக ஆய்வில் கைலாசபதி பதிண்மூன்று ஆய்வுக் கட்டுரைகள். தேசிய கலை இலக்கியப் பேரவை. சென்னை 02: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1992.(சென்னை 17. சூர்யா அச்சகம்) 244 பக்கம், விலை: இந்திய ரூபா 30. அளவு: 18.5x12.5 சமீ.
தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தி வந்த பேராசிரியர் க. கைலாசபதி நினைவு ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், தாயகம் இதழ்களில் வெளியிடப்பட்டு வந்தன. இவற் றின் தொகுப்பு இந்நூலாகும். கைலாசபதியின் நண்பர்கள், பன்முகச் செயற்பாட்டில் அவருடன் சேர்ந்து உழைத்தவர்கள்.அவரது மாணவர் கள், அவர்மீது ஈடுபாடு கொண்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் ஆய்வுகள் இவை.
924 புலவர் சிவங் கருணாலய பாணி டியனார் வாழ்வும் பணிகளும். சு.வித்தியானந்தன். கொழும்பு 6 கொழும்புத் தமிழ்ச் சங்கம், 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (கொழும்பு 12. குமரன் அச்சகம்) (6),28 பக்கம், 2 தகடுகள். விலை: ரூபா 18. அளவு 21X14 சமீ.
புலவர் சிவங் கருணாலயப்பாண்டியனார் தமிழகத்தில் பிறந்து கொழும்பில் தம் ஆசிரியர் தொழிலையும் தமிழ்ப் பணிகளையும் மேற்கொண்டவர். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தோடு நீண்டகாலத் தொடர்பு கொண்டவர். அவரது தமிழ்ப்பணிகள் பற்றி பேராசிரியர்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 279

Page 154
928 இலக்கிய அறிஞர்கள்
வித்தியானந்தன் ஆற்றிய நினைவுப்பேருரை. 25.9.1988 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நிகழ்த்தப்பட்டது. பேராசிரியரின் மறைவுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது.
925 பேராசிரியர் கணபதிப்பிள்ளை; அவரது புலமைப்பாரம் பரியம் பற்றிய ஓர் அறிமுக ஆய்வு. கா.சிவத்தம்பி. கொழும்பு 6; கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, தை 1997. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 72 பக்கம், விலை: ரூபா 100. அளவு; 21X14.5 சமீ.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய நினைவுப் பேருரை. பேராசிரியர் கணபதிப்பிள்ளை பற்றிய எழுத்துக்கள், கல்விப் பின் புலம், சேவைக் காலமும் பிரசுரங்களும், ஆய்வுப் பங்களிப்பு, துறைத்தலைமை, இலக்கியப் படைப்புக்கள், நாடகம், ஆளுமையும் கருத்து நிலையும் ஆகிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
926 பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக் கோலம். ஆவேலுப்பிள்ளை. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி) (4),26 பக்கம், தகடு. விலை: ரூபா 25. அளவு 24.5x18.5 சமீ.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களைப் பற்றி ஆற்றிய சொற் பொழிவின் நூல் வடிவம்.
927 மட்டுவில் தந்த பண்டிதமணி சி.க. இ.சிதம்பரப்பிள்ளை. சாவகச்சேரி: கா.சிவபாலன், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஆனி 1988. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) XXiv,64 பக்கம், தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12.5 3ufs.
பண்டிதமணியின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு.
928 மல்லிகை முகங்கள். டொமினிக் ஜீவா. யாழ்ப்பாணம்: மல்லிகைப் பந்தல், 1வது பதிப்பு, ஜனவரி 1996. (சென்னை 14: சித்ரா பிரிண்டோகிராபி) 238 பக்கம். விலை: ரூபா 60. அளவு 21X14 சமீ.
280 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

928 இலக்கிய அறிஞர்கள், 929 வம்சாவளி ஆய்வுகள்
ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள், விற்பன்னர்கள், எனப் பலரும் மல்லிகை சஞ்சிகையின் அட்டையை அலங்கரித்துள்ளனர். அவர்களில் தேர்ந்த 60 பேரைப்பற்றிய குறிப்புகளின் தொகுப்பு இந் நூலாகும்.
929 மல்லிகை ஜீவா. நந்தி, தெணியான்(தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப் பாணம்: மணிவிழாக்குழு, 152 மின்சார நிலைய வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி) 176 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18X12.5 சமீ.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மணிவிழாவை யொட்டி வெளியிடப்பட்ட நூல். இதில் மூன்று கவிதைகளும் 29 கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன.
93O மவறாகவி பாரதி. எஸ்.எம்.ஹனிபா. கண்டி: தமிழ் மன்றம், கல் ஹின்ன. 1வது பதிப்பு, 1988. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி)
40 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு.
931 வண்ணைச் சிலேடை வெண்பா. குரு சி.மாணிக்கத்தியாக ராஜ பண்டிதர். வண்ணார் பண்ணை: மா.குமாரசுவாமி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்; மேர்க்குரி அச்சகம்) 42 பக்கம், தகடு. விலை: ரூபா 20. அளவு: 21X14 சமீ.
பெரியார் மாணிக்கத்தியாகராஜ பண்டிதரின் வாழ்க்கை வரலாறும் அவர் இயற்றிய வண்ணைச் சிலேடை வெண்பாவும் அன்னாரின் நினைவு மலராக வெளியிடப்பெற்றுள்ளது.
929 வம்சாவளி ஆய்வுகள்
932 யாழ்ப்பாண அரசபரம்பரை. க.குணராசா. கொழும்பு 4: யாழ்ப் பாண அரசபரம்பரை வரலாற்றுக் கழகம், 19 - 4/6 மிலாகிரிய அவென்யு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு 13: Unie Arts, 48 B, Bloemendhal Road) sa
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 281

Page 155
900 வரலாறு, 954.93(1) இலங்கையின் பொது வரலாறு
Vi,140 பக்கம், புகைப்படங்கள். விலை: குறிக்கப்படவில்லை. அளவு 22.5X15 சமீ.
யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசபரம்பரையினரின் வழித்தோன்றல் களைத் தேடி அறியும் பரம்பரை அறிவியல் முயற்சி. விஜயகாலிங் கண் முதல் நரசிங்கன் வரையிலான அரசபரம்பரையினரின் வம் சாவளி ஆய்வு இது.
950 ஆசிய வரலாறு
954.93(1) இலங்கையின் பொது வரலாறு
933 ஈழத்தமிழர் யார்? க.ந.வேலன். இலண்டன்SW17. திருமுருகன் 96.5b, 186, Upper Tooting Road, 16...g5 ugll, b6tbuj 2000 (சென்னை 600017. நர்மதா பதிப்பகம்) 177 பக்கம். விலை: ஸ்டேர்லிங் பவுண் 499. அளவு: 18x12.5 சமீ.
யார் இந்த முஸ்லிம்கள்? யார் இந்த இந்திய வம்சாவளியினர்? யார் இந்தச் சிங்களவர்? ஈழமண்ணின் மைந்தர் யார்? இலங்கைத் தமிழர் வந்தேறு குடியினரா? என்ற 5 கேள்விகளுக்கு முன் வைக் கப்பட்ட பதில்களாக அமையும் நூல்.
934 எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும். ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம்(மூலம்). ஏ.ஜே.கனகரட்னா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்; மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: நொதேன் பிரிண்டர்ஸ், 411, ஸ்டான்லி வீதி). 32 பக்கம், வரைபடம், 1தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19X14 சமீ.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலாக எல்லாளன் சமாதியென மரபு ரீதியாகவும் வரலாற்றுச் சான்று ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்த உண்மையைத் திரித்து, துட்டகைமுனுவின் சமாதி யெனச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறினர். நூலாசிரியர், அது எல் லாளன் சமாதியே என்று வரலாற்றுச் சான்றுகளுடன் இந்நூலில் நிரூபித்துள்ளார். இதன் ஆங்கில மூல நூல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
282 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

95493(1) இலங்கையின் பொது வரலாறு 954.93(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
935 புராதன இலங்கை. ப.கணபதிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: அரியாலை பிரஜைகள் குழு, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 18 பக்கம், தகடு விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
அகத்திய மஹா முனிவர் இலங்கையின் பூர்வீகம் பற்றி இராமன் அறியும் பொருட்டு எடுத்துரைத்தார். அவ்வாறு இலங்கை பற்றி அகத்திய முனிவர் கூறியதே. அகத்தியர் இலங்கை என்னும் நூலாகும். இந்நூலின் வழி நூலாக புராதன கால இலங்கையின் வரலாற்றை சுகேதன், மாலியவான், குபேரன், இராவணன் போன் றோர்களின் ஆட்சிகளினூடாகக் கூறப்பட்டதே இந்நூலாகும்.
936 முத்துராச கவிராசரின் கைலாயமாலை. மயிலங்கூடலூர் பி.நடராஜன் (பதிப்பாசிரியர்), இராஜராஜேஸ்வரி கணேசலிங்கம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சுழிபுரம் வள்ளியம்மை முத்து வேலு ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). xiv,60 பக்கம். விலை: ரூபா 5 அளவு: 21X14 சமீ.
முத்துராசர் கவிராசர் இயற்றிய கைலாயமாலை முதன்முதலாக 1906ம் ஆண்டு த.கயிலாசபிள்ளையால் யாழ்ப்பாணத்தில் வெளி யிடப்பட்டது. கைலாயமாலைக்குப் புதியஒளி என்ற தலைப்பில் பதிப்பாசிரியரின் முன்னுரையும் பின்னிணைப்பாக கைலாயமாலையில் கூறப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் பண்டிதை திருமதி இ.கணேச லிங்கம் அவர்களின் குறிப்புரையும் கைலாயமாலையின் ஆங்கில மொழிபெயர்ப்பாக திரு.அ.முத்துத்தம்பிப்பிள்ளையின் கட்டுரை யும் இடம் பெற்றுள்ளது.
954.93(2) இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
937 1983 ஜூலை வன்செயல்கள். சரத் முத்தெட்டுவேகம. கொழும்பு 5: ஆசிரியர், 507 சிறிபா வீதி, 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: புதுயுக அச்சகம், 217 ஆஸ்பத்திரி வீதி) 83 பக்கம். விலை: ரூபா 5.50. அளவு 21X14.5 சமீ.
1983 ஜூலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் சம்பந்தமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சரத்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 283

Page 156
954932) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
முத்தெட்டுவேகம இலங்கைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய நான் கு உரைகள் இப்பிரசுரத்தில் அடங்கியுள்ளன. இலங்கை கம் யூனிஸ்ட் கட்சியின் மீது விதிக்கப்பட்ட தடை, இனக்கலவரங்கள் போன்ற அம்சங்கள் இதில் அடங்குகின்றன. பாராளுமன்ற விவா தத்திரட்டிலிருந்து (Hansard) தொகுக்கப்பெற்று தமிழாக்கம் செய் ti | Lit. 606).
938 இந்துசமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனம் பிரச்சினையும். உதயன், விஜயன்.(புனைபெயர்) யாழ்ப்பாணம்: வெளியீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, மார்ச் 1987, (யாழ்ப்பாணம்; நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்). Vi,132 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21X13.5 சமீ.
இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப் பிரச்சினையும். உதயன், விஜயன், சென்னை 33; ரோசா லக்சம்பேர்க் படிப்பு வட்டம், 2வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 04: மிதிலா அச்சகம்) 175 பக்கம், விளக்கப்படங்கள். விலை: இந்திய ரூபா 15. அளவு: 21x14 சமீ.
சர்வதேச2உறவு, இந்துசமுத்திரப்பிராந்தியமும் வல்லரசுகளும்,இந்து சமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும், தென்னாசியப் பிராந்தி யமும் இந்தியாவும், இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும், தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின் நிலையும், ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்சினை ஆராயப்பட்டுள்ளது.
939 இலங்கை இனஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும். இமய வரம்பன். சென்னை 2 சென்னை புக்ஸ், 6 தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, 1988. (சென்னை 4: மிதிலா அச்சகம், 5, கச்சேரி சந்து). 124 பக்கம். விலை: இந்திய ரூபா 11. அளவு: 17X12 சமீ.
இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழினத்தின் தேசியப் பிரச் சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் மார்க்சிச லெனினிச நோக்கி லிருந்து ஆராய்ந்து எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளும் பின்னி ணைப்பும் கொண்டது. இன உணர்வுகள் பற்றி, இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும், சமாதானமும்ஒப்பந்தங்களும் ஆகியவை கட்டுரைகளாகவும், இனப்பிரச்சினைக்கான இடைக்காலத்தீர்வுக் கான பிரேரணைகள் பின்னிணைப்பாகவும் உள்ளன. இவை
284 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

954.93(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
செம்பதாகை, புதிய பூமி ஆகிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது), ஏடுகளில் 1983க்குப் பின்னர் வெளிவந்த கட்டுரைகளாகும்
940 இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள். மு.திருநாவுக் கரசு. மதுரை: தமிழ்க்குலம் பதிப்பாலயம், 1வது பதிப்பு, டிசம்பர் 1991 ( அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 157 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21x14.5 சமீ.
ஐரோப்பியராலும் இந்தியராலும் சிங்களப் பேரினவாதிகளாலும் தமிழ் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதையும், தமிழ்மக்களை ஒடுக்கியமைக்கான அடிப்படைகளையும் இந்நூல் கண்டறிய முயல் கின்றது.
94 இலங்கைத் தமிழர் கண்ணிர். தில்லைக் கூத்தன் (இயற் பெயர்: இ.நடராஜா) கொழும்பு இ.நடராஜா, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு நியு கார்த்திகேயன் அச்சகம்) (12),153 பக்கம். விலை குறிப்பிடப்படவில்லை. அளவு: 20x14.5 சமீ.
1998-99 காலப்பகுதியில் வீரகேசரி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகை களுக்கு எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. சாதாரண பொதுமக்கள் இலங்கையில் நிகழ்ந்த, நிகழ்கின்ற மிகக்கொடூரமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் எழுதப்பட்ட 27 கட்டுரைகள் இவை.
942 இலங்கைத் தமிழர் சிக்கல்: ஒரு வரலாற்றியல் ஆய்வை நோக்கி. எஸ்.வி.ராஜதுரை. அஹமதாபாத் 380009: Setu,B15, Kedar Apartments, Behind H.L.Commerce College, 16) glugstill, 1985. (சென்னை 14 க்ரியா, 268 ராயப்பேட்டை நெடுஞ்சாலை) (6),80 பக்கம். விலை: இந்திய ரூபா 3. அளவு: 18x13 சமீ.
காலனியாட்சியும் உள்நாட்டு சமூக அமைப்புகளும். 19ம் நூற்றாண் டின் இறுதியில் தோன்றிய தொடக்க கால தேசிய இயக்கத்தின் சித்தாந்த உள்ளடக்கம், சிங்கள இனவெறி நிறுவன மயமாக்கப் படல், அரசு முதலாளித்துவமும் சிங்கள் முதலாளிகள் வலுப் பெறுதலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியும் புதிய பொருளா தாரக் கொள்கையும் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.
943 இலங்கைத் தீவின் இனங்கள், இனப் பிரச்சினை
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 285

Page 157
954.93(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
என்பன பற்றிய ஒரு வரலாற்று அறிமுகம். மு.திருநாவுக் கரசு. (புனைபெயர்: உதயன்). யாழ்ப்பாணம்; மறுமலர்ச்சிக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (அச்சக விபரம் அறிய முடியவில்லை) 44 பக்கம். விலை: ரூபா 4, அளவு; 21X14 சமீ.
இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை பற்றிய வரலாற்று நூல். வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து ஐரோப்பியர் காலம்வரை, ஐரோப் பியர்காலம், சுதந்திரத்துக்குப்பின், குடியரசுக்காலம், ஆகிய நான்கு காலப்பிரிவின் கீழ் இலங்கைத்தீவின் வரலாறு ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது.
944 இலங்கையின் இனவர்க்க முரணி பாடுகள். குமாரி ஜெயவர்த்தனா (ஆங்கில மூலம்) மெள.சித்திரலேகா, மு.நித்தி யானந்தன், செ.கணேசலிங்கன். (தமிழாக்கம்). சென்னை 5: குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (சென்னை 17: வேளாங்கண்ணி அச்சகம்) 167 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 175x12.5 சமீ.
இந் நூலிலுள்ள 11 கட்டுரைகள் லங்கா கார்டியன் இதழில் வெளிவந்தவை. இலங்கையின் இனக்குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் இங்கே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
945 இலங்கையின் இனப்போராட்டமும் இந்திய-இலங்கை ஒப்பந்தமும். தமிழ்ஈழ மக்கள் மன்றம். யாழ்ப்பாணம்: த.ஈ.ம. மன்றம், 121 பருத்தித்துறை வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப் பாணம்: ரீ சண்முகநாதன் அச்சகம்). (4),70 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 20x14 சமீ.
இந்நூலின் முதற்பகுதி இலங்கை இனப்பிரச்சினை பற்றிய வரலாற் றுக் குறிப்பினையும் இரண்டாம் பகுதி 1987 ஜூலை 29இல் கைச் சாத்தாகிய இலங்கை-இந்திய உடன்படிக்கையையும் அது தொடர் பான விமர்சனங்களையும் கொண்டுள்ளது.
946 ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை. எஸ்.எம்.கோபால yig560TLb. LD'Lis356T'L: World voice Publications, 16...g5 ugl, ஆகஸ்ட் 2000. (மட்டக்களப்பு: ஈஸ்வரன் கிராபிக்ஸ் அச்சகம்) 170 பக்கம். விலை: ரூபா 150. அளவு: 21.5x15 சமீ.
'86 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

954.93(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறைஅனுபவம் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை அனைத்தும் பதிவுக்குள்ளாகியுள்ளன.
947 ஈழத்தமிழர் இறைமை. மு.திருச்செல்வம்(மூலம்), க.சச்சிதா னந்தம் (தமிழாக்கம்) சென்னை 17: மணிமேகலைப் பிரசுரம், த.பெ.1447, தி.நகர், 4வது பதிப்பு, ஜூன் 2000, 1வது பதிப்பு, 1977. (சென்னை: காந்தளகம், 834 அண்ணாசாலை) 80பக்கம். விலை: இந்திய ரூபா 17. அளவு: 18x12.5 சமீ.
1976 இல் மேல் நீதிமன்றக்குழு (Trial At Bar) நீதிபதிகளின் முன் னிலையில் ஆற்றிய வழக்குரைவாதக் கருத்துக்கள். ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை நன்றாக விளங்கிக் கொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
948 ஊரடங்கு வாழ்வு. ந.சபாரத்தினம். சென்னை 20: கலாநிதி பொ.இரகுபதி, தமிழியல், வெளியீடு, 1வது பதிப்பு, 1985.(சென்னை 20: Blaze Printers). XVi,176 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 19x14 சமீ.
1984ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் வெளியான ஆசிரியத் தலையங்கங்கள் சில மீளப் பிரசுரமாயுள்ளன. ஈழத்தமிழருடைய போராட்ட வரலாற்றில் உண்மையாய் எழுதப்பட்ட பதிவேடுகள் இவை. இக்கட்டுரைகளின் ஆழத்தையும் சமூகப் பின்னணியையும் விரிவாக ஆராய்ந்து அச்சிடக்கூடிய நிலை இன் றில்லை. அது வருங்காலத்துக் குரியது.
-கலாநிதி பொ.இரகுபதி (அறிமுகவுரையில்)
949 எனது யாழ்ப்பாணமே. க.சச்சிதானந்தன். சென்னை 30: காந்த ளகம், 72, அய்யாவு நாயுடு வீதி, 1வது பதிப்பு, 1980. (சென்னை 5: ஜீவன் பிரஸ்) 276 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ
யாழ்ப்பாணத்தில் 1974இல் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு உலகெங்கும் வாழ்கின்ற தமிழரின் உள்ளத் திலும் தமிழறிஞர்கள் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றது. ஈழத் தமிழரின் அடங்காத்தமிழ் ஆர்வம் அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 28

Page 158
95493(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
ஆற்றும் பணி வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள உட்பூசல்கள் ஆகியன இம்மாநாட்டு நிகழ்வால் உலகுக்குத் தெரியவந்தன. மாநாடு தொடர்பான நிகழ்வுகளைத் தொகுத்து 32 அத்தியாயங் களில் விபரித்துள்ளார். பின்னிணைப்பாக மரண விசாரணை நீதவான் தீர்ப்பு, யாழ். குடிமக்கள்குழுவின் விசாரணை அறிக்கை ஆகியன இடம்பெற்றுள்ளன.
950 சர்வதேச அனுபவங்களிலிருந்து இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை. பிருதுவி. யாழ்ப்பாணம் : நதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 28 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 21X13.5 சமீ.
சுவிட்சர்லாந்து. கனடா, சோவியத் யூனியன், சொக்கோசெலவாக் கியா, இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய இனப்பிரச்சினைகளும் அவற்றுக்காக முன்வைக்கப்பட்ட தீர்வுகளும் ஆராயப்பட்டு அந்த அனுபவங்களின் வாயிலாக இலங்கையின் இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்பட்ட தீர்வுகளின் பலாபலன்கள் அலசப்பட்டுள்ளன.
95 சூரியக்கதிர்: வென்றது யார்? வெல்லப்போவது யார்? G3bTiği(36): b1TL'ÉGob Lu'Lua5b, P. boks 1699, Vika 01 10, Oslo. 1வது பதிப்பு, மே 1996. 35 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X15 சமீ.
விடுதலைப்புலிகள் பத்திரிகையில் (பங்குனி 1996) தி.இனியவன் எழுதிய யாழ்ப்பாணப்படையெடுப்பு: தமிழ் மக்களுக்கான ஒரு செயன் முறைப் பாடம் என்ற கட்டுரையும், திலீபன் எழுதிய குரியக்கதிர் கட் டெரித்து விடுமா விடுதலை உணர்வை? என்ற பதிக்கப்படாத கட்டுரை யும் இந்நூலில் இடம்பெறுகின்றது. முதற்கட்டுரை வலிகாமச் சமர் பற்றிய முழுப்பரிமாணத்தையும், இரண்டாவது கட்டுரை சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னதான நிலைமை களையும் விபரிக்கின்றது.
952 தமிழ் அகதிகளின் சோக வரலாறு. ஐ.தி.சம்பந்தன். லண் டன்; சுடரொளி வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜூன் 1996. (London: Setline Data Ltd.) 66 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X15 சமீ.
இலங்கையில் இடம்பெற்ற 1983 யூலை இனக்கலவரச் சம்பவங்
288 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

954.93(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
களின் போது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாக்கு மூலங்களின் தொகுப்பு.
953 தமிழ் தேசிய இனப்போராட்டம் எங்கே போகிறது? சுப்பு. Ggjud6öfl: Brite Str 35, 6920Sinsheim, Hitsbach, 16)]gh LglüL, ஜனவரி 1991. (அச்சக விபரம் அறிய முடியவில்லை) 44 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21x15 சமீ.
தமிழ் தேசிய இனப் போராட்ட வரலாறு பற்றிய குறிப்புகள் கொண் டுள்ள கைநூல். பல இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர் கள் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
954 தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம். ஏ.எஸ்.பாலசிங்கம். கொழும்பு 10: தொழிலாளர் பாதை, 121 மாளிகாகந்தை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1980. (கொழும்பு12: லக்ஷ்மன் பிரிண்டர்ஸ், 219, ஹல்ஸ்டொப் வீதி) iv,36 பக்கம். விலை: ரூபா 250. அளவு 21X14 சமீ.
தமிழ்த் தேசியஇயக்கத்தின் வரலாறு, பிரச்சினைகள். புரட்சிகர மார்க்ஸிஸ்டுகளின் மூலஉபாயங்கள் என்பன தெளிவு படுத்தப்பட் டுள்ளன.
955 தமிழர் வடபுலப் பெயர்ச்சி அவலமும் அதற்கு அப்பாலும். வஸந்த-ராஜா (ஆங்கில மூலம்) எஸ்.சங்கரமூர்த்தி (தமிழாக்கம்). London N193TY: Rajah Publishers, 56 Iberia House, New Orleans Walk 1வது பதிப்பு, 1996. (லண்டன்: வாசன் அச்சகம்) 181பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14.5 சமீ.
இலங்கையில் நடக்கும் தேசியப்போராட்டம் குறித்த பகுப்பாய்வுக் 3560i (3600TT'Lib. Tamil Exodus and Beyond 616örp syrissou b/TGSai தமிழாக்கம்.
956 தமிழா விழித்தெழு. கி.ஞானசூரியன். லண்டன்: உலகத்தமிழர் மறுமலர்ச்சி நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 1980. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்) xix,185 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18.5x12.5 சமீ.
W
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 289

Page 159
954.93(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
5 fupi. 6).JGoTB) 3 notb b|T6b. Issues in World Tamil Politics 616órp ஆங்கிலக்கட்டுரை பக்கம் 58-129 களில் இணைக்கப்பட்டுள்ளது.
957 தமிழீழ விடுதலைப்போராட்டமும் இந்தியாவும்.எஸ்.சர்மா. யாழ்ப்பாணம்: சுகந்தம் வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்.அச்சகம் குறிப்பிடப்படவில்லை). 42 பக்கம். வரைபடம். விலை: ரூபா 4. அளவு: 18.5x12 சமீ.
தென்னாசியாவின் புவிசார் அரசியல் இனஅமைவுச் சூழலில் இலங் கையின் இனப்பிரச்சினையும் இந்தியாவின் நிலைப்பாடும் பற்றிய ஒரு ஆய்வு நோக்கு.
958 திருமலைக் கொடுமைகள். கா.யோகநாதன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 80 பக்கம், புகைப்படங்கள், வரைபடம். விலை: ரூபா 5. அளவு: 14X11 315.
ஆகஸ்ட் 1985இல் திருக்கோணமலையில் நிகழ்ந்த இனப் படு கொலைகளினதும் தொடர்பான அசம்பாவிதங்களினதும் பதிவுகள். ஈழநாடு செய்தித்தாளில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.
959 நாடற்றவர் கதை. சி.வி.வேலுப்பிள்ளை. Nilgris(India):Indo-Sri Lankan Development Trust Island College, 14-56, Club Road, Kothagiri, 1வது பதிப்பு, 1987. (சென்னை 4: மிதிலாஅச்சகம், 5 குச்சேரி, மைலாப்பூர்) 62 பக்கம். விலை: இந்திய ரூபா 6 அளவு: 18x12 சமீ.
மலையக மக்களின் நாடற்றவர் நிலையைச் சித்திரிக்கும் நூல். ஈழநாடு 25வது ஆண்டு மலரில் (11.2.1984) இடம் பெற்ற மலையகத்தமிழர்களின் இன்றையபிரச்சினைகள் என்ற கட்டுரையும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
960
நீலன் திருச்செல்வம்: தேர்ந்த நாடாளுமன்ற உரைகள். கோலன், மாதவன்.(தமிழாக்கம்) கொழும்பு: இனத்துவ ஆய்வுக் கான சர்வதேச நிலையம், 1வது பதிப்பு, 2000. (சென்னை 600014:
290 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

95493(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
Monark Graphiks) (8),173 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21X14 சமீ.
1983இல் வட்டுக்கோட்டைத்தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதி திருநாவுக்கரசு இறந்த பின் அவரிடத்துக்கு மார்ச் 1983இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட நீலன் திருச்செல்வம், பின்னர் த.வி.கூட்டணியின் தேசியப்பட்டியலில் நாடாளுமுண்ற உறுப்பினராக 1994இல் நியமிக்கப்பட்டார். 29.7.1999 இல் கொலை செய்யப்படும் வரை நாடாளுமன்ற அங்கத் தவராகச் சேவை புரிந்தார். இக்காலப்பகுதியில் அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இதுவாகும். 46 உரைகள் உள்ளடங்கிய இந்நூலின் வாயிலாக இலங்கை வரலாற் றின் இருண்ட தசாப்தங்களின் சம்பவங்கள் பதிவுக்குள்ளாகியுள்ளன.
96 பச்சை மண்னும் சுட்டமனினும். கா.பொ.இரத்தினம். ஊர் காவற்றுறை: தமிழர் விடுதலைக் கூட்டணிக்கிளை, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை) 96 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 21X14 சமீ.
ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த பண்டிதர்.கா. பொ.இரத்தினம் அவர்கள் 1979ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. - -
962 போர் உலா: பயணக்குறிப்பு. கப்டன் மலரவன். (இயற்பெயர் காசிலிங்கம் விஜித்தன்). ஐக்கிய இராச்சியம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவு, 2வது பதிப்பு, ஏப்ரல் 1994 (1வது பதிப்பு, ஆவணி 1993). (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 132 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
மணலாற்றிலிருந்து மாங்குளம் முகாம் வரை கப்டன் மலரவன் (லியோ) என்ற புலி வீரனின் பயணக்குறிப்பு. மணலாற்றிலிருந்து மாங்குளம் முகாம் தகர்ப்புக்கெனச் சென்ற புலிவிரர்அணியில் இடம் பெற்றிருந்த கப்டன் மலரவன் தனது பயணத்தின் போதும், முகாம் தகர்ப்பிற்கான சண்டைகளின் போதும் தான் தரிசித்த நிகழ்வுக ளையும் பெற்ற அனுபவங்களையும் நூலுருவில் தந்திருக்கின்றார்.
963 போரா சமாதானமா: இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை. விடுதலை தரும ஒன்றியம். நிட்டம்புவ: விமுக்தி தர்ம கேந்திரய,
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 291

Page 160
954.93(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
2294. நீர்கொழும்பு வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1982. (கொழும்பு 2. அரச இலிகிதர் சேவைச்சங்க அச்சகம், 90, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை) vi,76 பக்கம், கேலிச்சித்திரங்கள். விலை: ரூபா 5 அளவு: 21.5x 14 சமீ.
யுத்தயத சாமயத? என்ற சிங்கள நூலின் தமிழாக்கம். இரு பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதற்பகுதியில் பண்டைக்கால வரலாறு முதல் 1948 வரை இனஉறவுகள், மோதல்கள், அவற்றுக் கான சமூக அரசியல் பின்னணி என்பனவும், இரண்டாம் பகுதியில் சுதந்திரத்தின் பின் இனவாதம் எவ்வாறு வேரூன்றியது, அரசியல் நடவடிக்கைகள், அது எவ்வாறு உக்கிரம் அடைந்தது, மார்க்சிய அமைப்புகள் தீர்வுக்கு என்ன பங்காற்றின என்பன ஆராயப்பட்டுள் ளன. பல்வேறு அரசியல் ஒப்பந்தங்கள் பின்னிணைப்பில் காணப் படுகின்றன.
964 மனித உரிமையும் எமது போராட்டமும், ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, LDT& 1993. (Ratnapitiya: CRC Press) 40 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20x14 சமீ.
இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் மனித உரிமைப் போராட் டமும் அதன் மூலகாரணமும் திசைத்திருப்பமும், தமிழர் போராட் டத்தில் விடுதலையும் மனிதஉரிமைகளும், மற்றும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்), அவர்களது வரலாற்றுப் பாதை ஆகிய அம்சங்களின் உள்ளடக்க மாக வெளிவந்த நூல்.
965 மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது. நீலவண்ணன். யாழ்ப் பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: ஆனந்தா புத்தகசாலை, 226 காங்கேசன்துறை வீதி) 84 பக்கம், புகைப்படங்கள். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 8. நூலகப் பதிப்பு: ரூபா 10. அளவு: 20.5x14 சமீ.
1981 மே 31 ம் திகதி இரவு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தற் பிரச்சாரக் கூட்டத்தில் ஆரம்பமான வன்செயல்களும் அதை யொட்டி யாழ் நகரெங்கும் பரவி யாழ். பொது நூலகம், ஈழநாடு அலுவலகம். நாச்சிமார் கோவில், வீடுகள், கடைகள், வாகனங்கள்
292 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

95493(2) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு
என யாழ் நகரமே அரசபடைகளினால் எரியூட்டப்பட்டமையும் செய்தி கள், புகைப்படங்கள், நேரடி அறிக்கைகள் ஆகியவற்றின் துணை யுடன் தொகுக்கப்பெற்றுள்ளது.
966 யுத்தத்தின் வரலாறு. சார்ள்ஸ் தயானந்தவின் கார்ட்டூன் சேகரிப்புகள், சார்ள்ஸ். தயானந்த பேராதனை: National Integrated programme Unit and Media Circle, 16jugbi ugi JL, 6gty6b 2000. (கண்டி: லதா இம்பிரெஸ்) 76 பக்கம், கார்ட்டூன் சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 30X22 சமீ.
23-26 ஒக்டோபர் 1998 இல் நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெற்ற சமகால அரசியல் கேலிச்சித்திரங்கள் 1980-98 வரையான காலப் பகுதியின் இலங்கை அரசியல் நிலவரங்களை கருத்துப்படங்களாக் கியிருந்தன. இத்தொகுப்பினுடாக 20 வருட கால அரசியல் இ வாத குழப்ப நிலை படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
967 வரலாற்றுத் தவறுகள். சண்முகம் தியாகராசா. லண்டன்: Om Organisation,1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில் 60Ꭰ6Ꭰ) xi,122 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12 சமீ.
இலங்கை அரசியலில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்குக் காரண மாக இருந்தவர்களும் துணைபோனவர்களுமான தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் அக்கால கட்டங்களில் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த கட்டுரைகள். இவை 1996 இல் ஈழநாடு பத்திரிகையில் தொடராகப் பிரசுரமானவை.
968 விடியலுக்கு முந்திய மரணங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள். நெயப் வேலி 12 (தென் இந்தியா); ஈகம் பதிப்பகம், சரோசினி நாயுடு சாலை, 1வது பதிப்பு, 1988. (குறிஞ்சிபதி (தென் னிந்தியா); அழகிரி அச்சகம்). 112 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 12. அளவு: 19X13 சமீ.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொக்கிளாய் இராணுவமுகாம் தாக் குதலை விளக்கும் போராட்ட வரலாற்று நூல்.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 293

Page 161
9549302) இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு, 954933) இனங்கள், இன உறவுகள்
969 ஜூலை இருபத்தொண்பது உடன்பாடும் எமது நிலையும். ஈழப்புரட்சி அமைப்பு. யாழ்ப்பாணம்: ஆவணக்காப்பக வெளியீடு, ஈழப்புரட்சி அமைப்பு, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18X12.5 சமீ.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் தொடர்பான ஈரோஸ் அமைப்பின் கருத்துக்களும் அது பற்றி வெளிவந்த பத்திரிகைக் குறிப்புக் களினது தொகுப்புகளும்.
மேலும் பார்க்க: 184
954.93(3) இனங்கள், இனஉறவுகள்
97Ο இலங்கை வாழ்தமிழர் வரலாறு. க.கணபதிப்பிள்ளை,யாழ்ப் பாணம்: நாயன்மார் கட்டு திருவாட்டி வள்ளிப்பிள்ளை சுந்தரம் பிள்ளை நினைவு வெளியீடு, 2வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி). iv,29 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21X14சமீ.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஈழத்தில் தமிழர் இடை யீடின்றி வாழ்கின்றனர் என்பதும் அவர்கள் தமக்கெனத் தனியர சொன்றைக் கொண்டிருந்தனர் என்றும் ஆசிரியருடைய கோட்பாடு. புராணம், இலக்கியம், சாசனம், மகாவமிசம் முதலிய சிங்கள நூல் கள், பயணிகள் குறிப்புகள், வரலாற்று நூல்கள் என்பனவற்றை ஆதாரமாகக்கொண்டு வரலாற்றுக்கு முற்பட்டகாலம் முதல் போர்த் துக்கேயர் காலம் வரையிலான ஈழத்தமிழர் வரலாற்றை சுருக்க மாக வரைந்துள்ளார். இதன் முதற்பதிப்பு, ஆவணி 1956இல் ஆசிரியரால் கொழும்பு, சுதந்திரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 38 பக்கங்களுடன் வெளிவந்தது. ஆசிரியரின் சங்கிலி என்ற நாடக நூலில் ஒரு பகுதியாகவும் இக்கட்டுரை வெளிவந்துள்ளமை குறிப் பிடத் தக்கது.
971
இலங் பில் இனத் 拳 i 48 AA 408 கட்டுரைகளர் சமூக விஞ்ஞானிகள் சங்கம். கொழும்பு: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 1296A, நாவல வீதி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்) xi,288 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 21X14 சமீ.
294 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

954.93(3) இனங்கள், இன உறவுகள்
1979 டிசம்பர் மாதத்தில் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கம்.ஆங்கில மூலம், 1984இல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் உள்ளிட்ட 12 அறிஞர் களின் சமூகவியல் கட்டுரைகள் அடங்கியுள்ளன.
972
கா.குகபாலன். ஒலுவில்: சமூக விஞ்ஞானத்துறை, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 6: பரணன் அசோசியேற்ஸ், 403, 11 காலி வீதி) 103பக்கம். விலை: ரூபா 125. அளவு: 20x15 சமீ.
இலங்கையின் வட மத்திய மாகாணத்திலும், கிழக்கு மாகாணத் திலும் அனுராதபுரம், பொலந்நறுவை, அக்கரைப்பற்று, திருக்கோயில் ஹிங்குரான போன்ற இடங்களில் கணிசமாக வாழும் (சுமார் 5500) வணக்குறவரின் வாழ்வியல் ஆய்வு.
973 உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களும் சுவையான விபரங்களும். சு.பாக்கியநாதன். சென்னை 17. மணிமேகலைப் பிரசுரம், த.பெ.1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2000. (சென்னை 17. எம்.கே. பிரின்டர்ஸ்)
பக்கம், வரைபடம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 18.5x12.5 F).
புகலிடத்தமிழர் வரிசையில் ஜேர்மனியில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் புகலிட வரலாறு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பண்பாட்டு, கலாச்சார நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகளுக்கு முக் கியத்துவம் தரப்பட்டுள்ளன.
974 ஒரு சிறுபானி மை சமூகதி தினர் பரிரச்சினைகள் : தொகுதி 1. இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய ஓர் ஆய்வு. முகம்மது சமீம். கொழும்பு 10: றிசானா பப்ளிஷர்ஸ், மருதானை. 1வது பதிப்பு, நவம்பர் 1997. (சென்னை: குமரன் வெளியீட்டகம், வடபழநி)
X,196 பக்கம். விலை: ரூபா 50. அளவு: 18.5X12.5 சமீ.
தினகரன் வார மலரில் வெளிவந்த கட்டுரைத் தொடர். பண்டைய காலம் முதல் 19ம் நூற்றாண்டின் இறுதிவரையான காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஆய்வு.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 295

Page 162
954.93(3) இனங்கள், இன உறவுகள்
975 ஒரு சிறுபாண்மை சமூகத்தின் பிரச்சினைகள்: தொகுதி 2. Ah முஸ்லிம்களைப் பர் ஒர் ஆய்வு முகம்மது சமீம். கொழும்பு 10: றிசானா பப்ளிஷர்ஸ், அப்துள்ளா சொப்பிங் சென்டர், 20-14 சிமென்ட்ஸ் ரோட், 1வது பதிப்பு, நவம்பர் 1998. (சென்னை: குமரன் வெளியீட்டகம், வடபழநி) iv,346 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 18.5x12.5 சமீ.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 1945 வரையான காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வு.
976 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்: தொகுதி 3. இலங்கை அரசியலில் உயர்சாதிக் குடும்பங்களின் ஆதிக்கமும் சிறுபாண்மை இன மக்களின் தவிப்பும். முகம்மது சமீம், கொழும்பு 10: றிசானா பப்ளிஷர்ஸ், மருதானை. 1வது பதிப்பு, 1998 (சென்னை: குமரன் வெளியீட்டகம், வடபழநி) xx,164 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 185x12.5 சமீ.
சமகால இலங்கையில் அரசியலாதிக்கத்தை எவ்வாறு பெரும் பான்மைச் சமூகமாகிய சிங்கள மக்களின் உயர்ந்தோர் குழாம் எனப்பட்ட கொய்கம சாதியினர், தமது இனத்தினரின் பிற சாதியினரைக் கூட ஓரங்கட்டி, அரசியலாதிக்கத்தைச் சுவைத்து வந்துள்ளனர் என்பதைப் புள்ளி விபரங்களுடன் எடுத்துக்காட்டும் நூல். தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட, சிங்கள பெளத்த பேரினவாதத்தை நல்ல கருவியாகவும் பயன்படுத்தினர் என்பதை யும் இந்நூல் விளக்குகின்றது.
977 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்: தொகுதி 4. சிங்கள பேரினவாத அரசாங்கங்களின்
நிலையும். முகம்மது சமீம், கொழும்பு 10: றிசானா பப்ளிஷர்ஸ் மருதானை. 1வது பதிப்பு, 1998 (சென்னை: நிரா டிசைன்ஸ், வட பழநி)
xxiv,423 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 18.5x12.5 சமீ.
இலங்கையில் சிறுபான்மை சமூகங்களைப் பாதித்த அரசாங்கக் கொள்கைகளையும். சிங்கள அறிஞர்களினதும் எழுத்தாளர் களினதும் கருத்தோட்டங்களையும் இன உணர்வுச் செயல் களையும் கூறும் நூல்.
296 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

95493(3) இனங்கள், இன உறவுகள்
978 தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும், வ.ஐ.ச. ஜெயபாலன். யாழ்ப்பாணம் : அலை வெளியீடு, 48 சுயஉதவி வீடமைப்புத்திட்டம், குருநகர். 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: Pats Prints, 601, BTris(8556160B 65) (6),38 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 20x14 சமீ.
இலங்கை முஸ்லீம் மக்களையும் இலங்கைத் தேசிய இனப் பிரச் சினையில் அவர்களது நிலைப்பாடுகளையும் சமூக அரசியல் நோக்கில் ஆய்வு செய்யும் நூல்.
979 நாம் தமிழர். பொ.சங்கரப்பிள்ளை. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம்,57வது ஒழுங்கை, வெள்ளவத்தை. 2வது பதிப்பு, பெப்ரவரி 1991. 1வது பதிப்பு, ஜூன் 1979 (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி) vi,164 பக்கம். விலை: ரூபா 75. அளவு; 21X14 சமீ.
இந்நூல் தமிழர்களின் அரசியல் வரலாற்றினை மட்டும் ஆய்வுக்குட் படுத்துவதுடன் நில்லாது அவர்தம் பண்பாடு, கலை இலக்கிய சமய வாழ்முறைகளையும், கைத்தொழில், விவசாயம் போன்ற பொருளா தார முயற்சிகள் போன்றவற்றினையும் வரலாற்று ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் அணுகுகின்றது.
98O புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள். லயனல் சரத் (சிங்கள மூலம்). றம்சியா பாரூக் (தமிழாக்கம்). நுகேகொடை இனத்துவ தொடர்பியல் அமைப்பு, 40723 ஜீ-சமகி மாவத்தை, உதகமுல்லை, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு13: பேஜ் செட்டர்ஸ்)
100 பக்கம். விலை: ரூபா 70. அளவு; 21X14.5 சமீ.
சிங்கள மக்களிடையே அரசியல் அபிப்பிராயத்தை ஊடகங்களிற் சில எடுக்கும் கண்ணோட்டத்திலிருந்து விலகி, வரலாற்று உண்மை யை வலியுறுத்திச் சொல்லும் பாங்கு இந்நூலின் மிகப்பெரிய பலமாகும். இவரது நூலின் முக்கியசிறப்பு, இந்நூல் பாரம்பரியமாகத் தமிழ் விரோதத்துக்கு மேற்கோள் காட்டப்பெறும் வரலாற்று மூலங் களையே உண்மையினை வெளிப்படுத்துவதற்கான தடயங்களாகச் சொல்கின்றமையேயாகும். பேராசிரியர் பரணவிதானவின் எழுத்துக் களைக் கொண்டே தமிழ்-சிங்கள உறவின் அந்நியோன்யத் தன்மை யை நிறுவியுள்ளார்.
நால்சேட்டம் - கொசுகி ன்ெறு 297

Page 163
95493(3) இனங்கள், இன உறவுகள், 95493(4) பிரதேச வரலாறு
981 மலையகத் தமிழ் மக்கள். இரா.சிவச்சந்திரன். குமாரி ஜெய வர்த்தனா. சென்னை 20: பொன்னி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (சென்னை 20: இராசகிளி பிரிண்டர்ஸ்) 50 பக்கம். விலை: இந்திய ரூபா 4 அளவு: 175x12 சமீ.
மலையகமக்களின் வாழ்நிலை எவ்வளவு தூரம் துயரத்துக்கு ஆளாகியுள்ளது என்பதையும், இம்மக்களுக்கு எதிராக இனத் துவேஷம் எப்படி விதைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது என்பதை யும் இச்சிறுநூல் தாங்கிய இரு கட்டுரைகளும் விளக்குகின்றன.
982 யாழ்ப்பாணத்து வீரசைவர். த.சண்முகசுந்தரம். தெல்லிப் பழை: அருள் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1983. (ஏழாலை; மஹாத்மா அச்சகம்) 24 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 18.5X12.5 சமீ.
யாழ்ப்பாணத்துப் பொது வழக்கில் பண்டாரம் என அழைக்கப்படும் வீர சைவர்கள் பற்றிய வரலாற்றாய்வு.
983 விவர்ணு புத்திரர் வெடியரசன் வரலாறு. மு.சு.சிவப் பிரகாசம். தொல்புரம்: அகில இலங்கை வெடியரசன் கலா மன்றம், 1வது பதிப்பு, 1988. (வட்டுக்கோட்டை கற்பக விநாயகர் அச்சகம், வட்டுக்கோட்டை மேற்கு) (24),200 பக்கம், பின்னிணைப்பு 18 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 27.50. அளவு: 21X14 சமீ.
இலங்கைத் தமிழரிடையே காணப்படும் ஒரு சமுதாயப்பிரிவினரான முற்குகரிடையே வழங்கி வரும் நாட்டார்பாடல்களை அடிப்படை யாகக் கொண்டு அமைந்த நூல். v−
954.93(4) பிரதேச வரலாறு
984 ஆரையூர்க்கோவை. ஆரையூர் நல். அழகேச முதலியார். மட்டக் களப்பு: அலெக்ஸ் கல்வி நிலையம், பிரதான வீதி, ஆரையம்பதி, 1வது பதிப்பு, 1989. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). 88 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 18x12 சமீ.
298 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

95493(4) பிரதேச வரலாறு
மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள ஆரையம்பதியின் வரலாற்றை விளக்கும் செய்யுள் நூல். இதுவே ஆரையம்பதியின் வரலாற்றைக் கூறும் முதலாவது நூலாகக் கருதப்படுகின்றது. ஆரையம்பதியிலுள் ள திருக்கோவில்கள், சான்றோர்கள், சமூகப்பணிகள் முதலிய சிறப் பம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைகின்றது இந்நூல்.
985 ஈழத்தவர் வரலாறு: கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.1621 ம் ஆண்டு வரை. க.குணராசா. கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 2வது பதிப்பு, நவம்பர் 2000. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1992 (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) xi,172 பக்கம், வரைபடம். விலை: ரூபா 200. அளவு: 21.5x14 சமீ.
கி.மு.5ம் நூற்றாண்டிலிருந்து கி.பி.1621ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஈழத்தமிழரின் அரசியல், நிர்வாக, சமூகக் கட் டமைப்பு வரலாறு.
986 திருக்கோணமலை. கா. இரத்தினலிங்கம். திருக்கோணமலை: டர்ஷிக்கா கிரியேஷன்ஸ், 160 பிரதானவீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: உதயன் அச்சகம்) (8),48 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 20x12.5 சமீ.
திருக்கோணமலையின் வரலாற்றுச் சிறப்பையும் இப்பிரதேசத்தின் தொழில்வளங்கள் மற்றும் சமய, சமூக கலாச்சாரப் பாரம்பரியங் களையும் விளக்கி எழுதப்பெற்ற நூல்.
987 திவகம்: ஒரு வரலாற்று நோக்கு. வி.சிவசாமி. யாழ்ப்பாணம்: வி.சிவசாமி, சம்ஸ்கிருதத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜூன் 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 18 பக்கம், அட்டவணை. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21X14 gL5.
யாழ்ப்பாணக் குடாநாட்டினை அடுத்துள்ள ஏழு பிரதான தீவுகளான வேலணை, புங்குடுதீவு, நெடுந் தீவு, நயினைதீவு, அனலதிவு, எழுவதிவு, காரைதீவு (காரைநகர்) ஆகியவை கூட்டாக சப்த தீவுகள் எனவும் தீவகம் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளன. இத் தீவகத்தின் வரலாறு சிறு நூலுருவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
988 நல்லை நகர் நூல். க.குணராசா. யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 299

Page 164
954934) பிரதேச வரலாறு
புத்தகசாலை, 1வது பதிப்பு, 1987 (யாழ்ப்பாணம்: பூரீலங்கா அச் சகம்) xi,57 பக்கம், தகடுகள்4. விலை: சாதாரண பதிப்பு:ரூபா 15, விஷேட பதிப்பு: ரூபா 20. அளவு: 17X14 சமீ
யாழ்ப்பாண இராச்சியத்தினதும் நல்லூர் கந்தசுவாமிகோவிலினதும் வரலாற்றைக் கூறும் நூல்.
989 பாவலர் துரையப்பாபிள்ளையின் யாழ்ப்பாணம்அன்றும் இன்றும்; மீள்பார்வை. ஆவேலுப்பிள்ளை. தெல் லிப்பழை; மஹாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜூன் 1986. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்) 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5X14 சமீ.
பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை. 1907ஆம் s6.ji(6 LJT66oj 9636ii Ceylon National Review 35ţlso எழுதிய யாழ்ப்பாணம் - அன்றும் இன்றும் என்ற தலைப்பிலான ஆங்கிலக்கட்டுரையின் முக்கிய கருத்துக்களை ஆசிரியர் மீள் பார்வையிட்டுள்ளார்.
990 புத்தளம் வரலாறும் மரபுகளும் .ஏ.என்.எம்.ஷாஜஹான். பிரான்ஸ்: ஆசியா (Asseay) வெளியீடு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1992 (கொழும்பு 9: நிப்பொன் பிரின்டர்ஸ்) 318 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20.5X14 சமீ.
தமிழ் பேசும் முஸ்லீம்கள் பெருந்தொகையாக வாழும் ஒரு பாரம் பரியப் பிரதேசமான புத்தளத்தின் வரலாற்றினையும், அங்கு வாழும் மக்களிடையே பரிமாறப்படும் கலாச்சாரச் சின்னங்களையும் மரபுகளையும் வாழ்க்கை முறையினையும் இந்நூலின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
991 மட்டக்களப்பு மாண்மியம்.எப்.எக்ஸ்.சி.நடராஜா(பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மாவட்ட கலாசாரப் பேரவை, 2வது பதிப்பு, நவம்பர் 1998. முதற் பதிப்பு ஆகஸ்ட் 1962. (மட்டக்களப்பு: கொம்ப்செல் லேசர் செட்டிங், இல.2, வன்னியர் வீதி) xi,127 பக்கம். விலை: ரூபா 75 அளவு: 18.5x12.5 சமீ.
இந்நூல் மட்டக்களப்பு சரித்திரம் என்னும் பெயரில் இப்பிரதேசத்
300 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று
 

95493(4) பிரதேச வரலாறு
தில் உலவிய ஏட்டுப் பிரதியின் அச்சுப்பதிப்பாக 1962இல் பதிப்பா சிரியரால் வெளியிடப்பட்டது. 1998இல் மீள்பதிப்பிற்குள்ளாகியுள்ளது.
992 மொறிஷயஸ் தீவில் எங்கள் தமிழர்: செவ்வி. மா.தங்கண முத்து. செவ்வி கண்டவர் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம். குரும்ப சிட்டி; இ.கனகரத்தினம், தமிழகம், 1வது பதிப்பு, 1980.(சுன்னாகம்: சக்தி அச்சகம்)
24 பக்கம். விலை: ரூபா 2. அளவு; 21X14 சமீ.
மொறிவழியஸ் தீவில் வாழும் தமிழர்கள் பற்றிய தகவல்களை அத் தீவைச் சேர்ந்த பெரியார் திரு. மா.தங்கணமுத்து அவர்களுடனான நேர்காணல் ஒன்றின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார்.
993 யாழ்ப்பாணக் குடியேற்றம். கு.முத்துக்குமார சுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: மு.குமாரசுவாமி, புலவரகம், மயிலனி, 1வது பதிப்பு, 1982. (தெல்லிப்பழை, குகன் அச்சகம்) xi,64 பக்கம், தகடுகள். விலை: ரூபா 10. அளவு: 18.5x12.5 சமீ.
ஆதிகாலம் தொடக்கம் ஒல்லாந்தர் காலம் முடியும் வரையிலான யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிய வரலாற்று நூல்.
994 யாழ்ப்பாணச் சரித்திரம். ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. NewDelhi. Asian Educational Services, 26gs ugli'il, 2001. (upgbi Lugi'L, 1915. (New Delhi: 110032. Subham Offset) 158 பக்கம். விலை: இந்திய ரூபா 165. அளவு 22x14 சமீ.
1915 இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பெற்று வெளியிடப்பெற்ற வரலாற்று நூலின் மறுபதிப்பு.
995 யாழ்ப்பாணச் சரித்திரம். செ.இராசநாயகம். New Delhi Asian Educational Services, 31 Hauz Khas Village, 56.g5 Lug'ull, 1999. (ppi) ug5 L, 1933. (New Delhi: 110092. Nice Printing Press) xi,158 பக்கம். விலை: இந்திய ரூபா 165. அளவு: 22x14 சமீ.
1933 இல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பெற்று வெளியிடப்பெற்ற வரலாற்று நூலின் மறுபதிப்பு.
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 301

Page 165
954.93(4) பிரதேச வரலாறு
996 யாழ்ப்பாணத்தமிழரசர் வரலாறும்காலமும். பொ.ஜெகந் நாதன். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம். 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) xiv,167 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 21X14சமீ
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு புதிய கோணத்தில் ஆராயப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தரசு 13ம் நூற்றாண்டில் அல்ல 8ம் நூற் றாண்டில் தான் ஆரம்பமானதென்றும் கலிங்கமாகன் முதலாவது சிங்கையாரிய மன்னனல்ல, அவனுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் தொடர்பில்லை என்றும் நல்லூர் கந்தவேள் கோட்டத்தை நிறுவிய புவனேகபாகுவும் செண்பகப்பெருமாள் புவனேகபாகுவும் ஒருவரல்ல வென்றும் இந்நூலில் ஆசிரியர் நிறுவ முனைந்துள்ளார்.
997 யாழ்ப்பாணம்-தொண்மை வரலாறு. சி.க.சிற்றம்பலம். திருநெல்வேலி; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993, (ஏழாலை, மஹாத்மா அச்சகம்) XVi,764 பக்கம், தகடுகள். விலை: ரூபா 950. அளவு: 22x15 சமீ.
இந்நூல் கிறிஸ்தாப்தத்துக்கு முன்னருள்ள காலப்பகுதியிலிருந்து கி. பி. 13ம் நூற்றாண்டில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு எழுச்சி பெற்ற யாழ்ப்பாண இராச்சிய காலத்திற்கு முன்னருள்ள காலப்பகுதி வரையிலான இலங்கையின் வடபகுதி வரலாற்றை நிறைவு படுத்துகின்றது.
998 வையாபாடல். வையாபுரி ஐயர் (முலம்), க.செ.நடராசா (பதிப் பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு, 1980. (கொழும்பு 12: சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட், 194 ஏ, பண்டாரநாயக்க மாவத்தை). iv,68 பக்கம். விலை: ரூபா 10. அளவு 21X14 சமீ.
யாழ்ப்பாணம் செகராசசேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவான் வையாபுரி ஐயர் அவர்கள் 16ம் நூற்றாண்டில் இயற்றிய வையாபாடல் பற்றிய ஆய்வுரையும் பாடலும் பின்னிணைப்பாகச் சொற்றொகை வகுப்பும் (Index) தரப்பட்டுள்ளன.
302 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

954.93(5) தொல்லியலாய்வு
954.93(5) தொல்லியலாய்வு
999 பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும், பரமு புஷ்ப ரட்ணம். கொழும்பு கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001 (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) xi,120 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 21.5x14.5 சமீ. ISBN 955-8564-00-1
பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு மேற்கொண்டுள்ள ஆய்வு. இலங்கைத்தமிழர் வாழ்வும் வகிபாகமும் என்ற தலைப்பில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வரும் சிற்றாய்வேடுகளின் வரிசையில் இரண்டாவது நூல்.
1000 பெருங்கற்கால யாழ்ப்பாணம். பொ.இரகுபதி. தெல்லிப்பழை: பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுக்குழு. 1வது பதிப்பு. ஜூன் 1983. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.
யாழ்ப்பாணத்தில் வியத்தகு ஆதிக்குடியிருப்புப் பண்பாடு ஒன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆனைக் கோட்டை, கந்தரோடை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மேற் கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.
DDDD
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 303

Page 166
தலைப்பு வழிகாட்டி
தலைப்பு
அ முதல் .”. வரை குழந்தைகளுக்
கான பாடல்கள் 304 அக்கரைக்குப் போன அம்மாவுக்கு
342 அக்கினிக் குஞ்சு 616 அகங்களும் முகங்களும் 343 அகத்தியர் தேவாரத் திரட்டு 76 அகதி 499 அகதியின் முகம் 617 அகஸ்தியர் கதைகள் 511 அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்
618 அட்டைப்பட ஓவியங்கள் 897 அடிப்படைத் தமிழிலக்கணம் 241 Ֆյլգակմ) (փգալք 734 அடைப்புக்குறிகள் 344 அடோனிஸ் கதைகள்
LuTjass LIFT606) அண்மையில் ஒரு நட்சத்திரம் 512 அணையாத அறிவாலயம் 345 அத்வைத சிந்தனை 45 அதிதிரன் 735 அதிர்ச்சி நோய் எமக்கல்ல 513 அது - அவர்கள் 346 அது வேறுவிதமான காதல் 514 அந்த விடியலுக்கு 347 அந்நிய மனிதர்கள் 619 அந்நிய விருந்தாளி 515 அபிவிருத்திப் புவியியல்:
ஐக்கிய இராச்சியம் 835 அம்பி கதைகள் 348 அம்மாளைக் கும்பிடுறானுகள் 516 அமெரிக்க இலங்கை மிஷன்
சரித்திரம் 185 அமெரிக்க மிஷனும் இலங்கையில்
தமிழ்வளர்ச்சியும் 186 அர்ச்சனை மலர்கள் 811 அரங்கின் பரிமாணங்கள் 289 அரங்கு கண்ட துணைவேந்தர் 893 அரசகேசரியின் இரகு வம்மிசமும்
அது எழுந்த இந்துப் பண் பாட்டுச் சூழலும் 736 அருட்திரு தனிநாயகம் அடிகளார
' நினைவு மலர் 884
வழிகாட்டி
அரைகுறை அடிமைகள் 517 அல் அசுமத் கவிதைகள் 349 அல்லைப்பிட்டிப்பதி அருளப்பர்
அம்மானை 68 அவசரகாலம்-1979, 184 அவர்களின் தேசம் 518 அவள் நெஞ்சுக்குத் தெரியும் 620 அவளுக்குள் ஒருத்தி 520 அவளுக்கென்று ஒரு குடில் 519
9166 si6)l6ir bl62. 138 அழகியல் 24 அழகே அமுதே மங்கையர்க்கான
அழகுக் குறிப்புகள் 271 அழியா அழகு 737 அழியா நிழல்கள் 351 அழியாத ஞாபகங்கள் 350 அழுகின்ற தேசமும் ஒளிர்கின்ற
சூரியனும் 352 அறிமுக விழா 521 அறியப்படாதவர்கள் நினைவாக 353 அறிவும் உணர்வும் 130 அறுபதில் அறுபது 34 அறுபது வயது இளைஞர் கலைப்
பேரரசு 894 sig6.j60L. 483 அன்பின் கங்னை அன்னை
திரேசா 874 அன்றாட வாழ்வில் தத்துவங்கள் 35 அன்னை இந்திரா 868 அன்னை நினைவமுதம் 305 அனுபவ முத்திரை 898 அஸ்தமனத்துடன் ஒரு வாதம் 354 ஆகுதி 522 ஆசிரியரும் உளவியலும் 187 ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
899 ஆண்டவர் பிறந்த மண் 523
6,60LD 524 1981ம் ஆண்டுக் கல்விச் சீர்திருத்த
முன்மொழிவுகள் மீதான மதிப்பீடு 188 1983 ஜூலை வன்செயல்கள் 937 1999இல் வாழ்ந்து கொண்டிருக்கும்
இசைநாடக-கூத்து மூத்த
304 நூல்தேட்டம் -தொகுதி ஒன்று

தலைப்பு வழிகாட்டி
கலஞர் வரலாறு 882 ஆத்ம அலைகள் 355 ஆதங்கம் 356 ஆரம்ப சுகாதார சேவையாளர்கட்கு
ஒரு வழிகாட்டி 264 ஆரம்ப நூலகர் கைநூல் 04 ஆரைகள் 621 ஆரையூர்க் கோவை 984 ஆற்றங்கரையான் 77 JgqB8bT6ÜLDLlD 332 இங்கிலாந்து சாரதிகளின் எழுத்துப்
பரீட்சை 206 இங்கேயும் மனிதர்கள் 525 இசையும் நடனமும் 283 இடப்பெயர் ஆய்வு 208 இணுவைச்சிவகாமிஅம்மை தமிழ் 78 இணுவையூர் சின்னத்தம்பிப்
புலவர் 900 இணைந்த உயர்கணிதம்; பிரயோக
கணிதக்கூறு 257 இணைந்த கணிதம்: ஆள்கூற்றுக்
கேத்திரகணிதம் 258 இத்தாலியன் தந்த இலக்கியத்
தேன் 738 இத்திமரத்தாள் 79 இதயச்சிறை 526 இதயம் தழுவிய நினைவுகள் 134 இதயமலர் 357 இதயரஞ்சினி; சமூக பண்பாட்டுக்
கோலங்கள் 139 இது எமது படைப்பு 484 இந்த நாடகம் அந்தமேடையில் 622 இந்த மன்னும் எங்கள் நாட்களும்
358 இந்து சமயத்தின் மூலமொழி
சம்ஸ்கிருதமா ஆதித்திராவிடமா? 234 இந்து சமுத்திரபுபிராந்தியமும் இலங் கை இனப்பிரச்சினையும் 938 இந்து நாகரீகம்: 1ம் பாகம்
2ம்பகுதி 46 இந்து நாகரீகம்: 1ம் பாகம்
3ம்பகுதி 47 இந்துப் பண்பாடு: சில சிந்தனைகள்
140 இந்தோனேஷியாவில் இரண்டு வருட
அனுபவம் 836
இயந்திர சூரியன் 359 இயேசுபிரான் பற்றிய சுவையான
கவிதைகள் 360 இரண்டாவது சூரிய உதயம் 361 இரண்டாவது பிறப்பு 362 இரண்டு வரம் வேண்டும் 500 இரவல் இதயங்கள் 36 இரவின் ராகங்கள் 527 இராசநாயக பிரபந்தம் 739 இராவணன் கோட்டை 333 இரு இளசுகளின் கவிதைகள் 363 இரு பெரும் நெறிகள் 48 இரு வேறு உலகம் 501 இருபதாம் நூற்றாண்டில் தாழ்த்தப் பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி 189 இருபதாம் நூற்றாண்டுக்கான ஓவியக்
கொள்கைகள் 279 இருபதாம் நூற்றாண்டுத் தமிழன்; கிழக்கும் மேற்கும் 812 இருள் இரவில் அல்ல 623 இலங்கை அரசியற் பொருளாதார
அபிவிருத்தி 1948-1956; வர்த்தக இனத்துவ நிலைப் பாடுகள் 176 இலங்கை இடப்பெயர் ஆய்வு(2)
வடமராட்சி-தென்மராட்சி. 209 இலங்கை இன ஒடுக்கலும்
விடுதலைப் போராட்டமும் 939 இலங்கை இனப்பிரச்சினையின்
அடிப்படைகள் 940 இலங்கை மலையகத்தமிழரின்
பண்பாடும் கருத்துநிலையும் 141 இலங்கை முஸ்லீம்களின் திருமணச்
சம்பிரதாயங்கள் 142 இலங்கை வாழ் தமிழர் வரலாறு 970 இலங்கைத் தமிழ் இலக்கியம் 745 இலங்கைத் தமிழ்ச் சினிமாவின்
கதை 301 இலங்கைத் தமிழர் கண்ணிர் 941 இலங்கைத் தமிழர் சிக்கல் 942 இலங்கைத் தமிழர் தேச வழமை களும் சமூக வழக்கங்களும் 143 இலங்கைத் தமிழர் நாட்டார்
வழக்கியல் 207
இலங்கைத் தமிழர் 器 ஒந்தம்
துெகழ் தொகுதி ஒன்று 305

Page 167
தலைப்பு வழிகாட்டி
பாரம்பரியம் 144 இலங்கைத் திருக்கேதீச்சரக்
கோயில் வரலாறு 80 இலங்கைத் திருநாட்டின் இந்துக்
கோயில்கள் 81 இலங்கைத் தீவின் இனங்கள் இனப்
பிரச்சினை என்பன பற்றிய ஓர் வரலாற்று அறிமுகம் 943 இலங்கைத் தெனாலிராமன்
கதைகள் 216 இலங்கைத் தொழிலாளர் காங்
கிரசின் போலிமுகங்கள் 160 இலங்கையில் இனத்தவமும் சமூக
மாற்றமும் 971 இலங்கையில் தமிழ் இலக்கிய
வளர்ச்சி 746 இலங்கையில் தமிழ்ப் பத்திரிகை
கள் சஞ்சிகைகள் 18 இலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரி
கையின் வளர்ச்சி 19 இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும் 847 இலங்கையில் தமிழியல் ஆய்வு
முயற்சிகள் 747 இலங்கையில் தோட்டப் பள்ளிக்
கூடங்களின் கல்வி அமைப்பும் பிரச்சனைகளும் 190 இலங்கையில் பழங்குடிகள் வனக்
குறவர் வாழ்வியல் ஆய்வு 972 இலங்கையின் அரசியல் திட்ட
வளர்ச்சியும் மாற்றங்களும் 182 இலங்கையின் அரசியல் யாப்புகள்
183 இலங்கையின் இன வர்க்க முரண்
u(656ir 944 இலங்கையின் இனக் குழும
அரசியல் 161 இலங்கையின் இனப் போராட்டமும்
இந்திய இலங்கை ஒப்பந்தமும் 945
இலங்கையின் மலையகத் தமிழ்
நாவல்கள் 748
இலங்கையின் முதலாவது வேலை நிறுத்தம்: அச்சுத்தொழிலாளர்
List girl LD 177
இலக்கண விதி மூலங்களும்
விதிகளும் 242 இலக்கணத் தெளிவு. உயர்தர
வகுப்புக்குரியது 243 இலக்கணம் கற்போம் 244 இலக்கணமும் சமூக உறவுகளும்
245 இலக்கிய நினைவுகள் 740 இலக்கிய வழி 741 இலக்கிய விருந்து 03 இலக்கியச் சிந்தனைகள் 742 இலக்கியத் தேறல் 743 இலக்கியப் பூந்துணர் 901 இலக்கியமும் திறனாய்வும் 744 இலட்சியப் பயணம் 624 இலண்டனில் ஏழு வாரம் 837 இலண்டனில் நாரதர் 485 இவர்கள் 528 இவர்களும் வாழ்கின்றார்கள் 625 இளமைக் கோலங்கள் 626 இன்றல்ல நாளையே கலியாணம்
627 இன்றும் கேட்கும் குரல்:
விபுலானந்தர் 902 இன்றைய உலகில் இலக்கியம் 749 இன்றைய சமுதாயத்தில் பெண்
களின் நிலை 153 இன்றைய வளைகுடாப் போர் 162 இன்னமும் இருட்டினிலே 364 இன்னும் இரண்டு நாட்கள் 529 இன்னும் ஒரு திங்கள் 502 இன்னுமொரு காலடி 813 இன்னுமொரு ஜாதி 154 இனி ஒரு விதி செய்வோம் 750 இனி ஒரு வைகறை 365 இனி வரும் காலம்: சபேசன்
கவிதைகள் 366 இனிப் படமாட்டேன் 628 இனியும் சூல்கொள் 814 ஈழத்தமிழர் இறைமை 947 ஈழத்தமிழர் யார் 933 ஈழத்தவர் வரலாறு 985 ஈழத்தில் ஒப்பனைக்கலை 282 ஈழத்தில் சிவவழிபாடு 82 ஈழத்தில் தமிழ் நாடகம் 290 ஈழத்தில் தமிழிலக்கியம் 751 ஈழத்து இசை நாடக வரலாறு 291
306 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

தலைப்பு வழிகாட்டி
ஈழத்து இலக்கிய முன்னோடிகள்
752 ஈழத்து இலக்கியத்தின் சமகால
ஆளுமைகளும் பதிவுகளும் 753 ஈழத்து சிவயோக சுவாமிகள் ஏற்றிய
ஞானவிளக்கு 49 ஈழத்து மன்னும் எங்கள் முகங்
களும் 367 ஈழத்து வாழ்வும் வளமும் 754 ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் 755 ஈழத்துச் சித்தர் குடைச்சுவாமிகள்
854 ஈழத்துச் ஈழத்துச் 306 ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
756 ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு 292 ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மஹா
ஜனக்கல்லூரி 293 ஈழத்துத் தமிழிலக்கியத் தடம்:
பார்வையும் விமர்சனங்களும் 757 ஈழத்துத் திறனாய்வு முன்னோடி
பேராசிரியர் வி.செல்வநாயகம் 903 ஈழத்துப் பதிப்புக்கலை வளர்ச்சி யிலே சன்மார்க்க சபையின் பணி 20 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு
வழக்கு 758 ஈழத்துப் போராட்டம் 368 ஈழநாட்டுப் புலவர்கள் 904 ஈழநாடு 25வது ஆண்டு நிறைவு
LD6), 21 ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை 946 உங்களைப் பற்றி 37 உணர்வுகள்: கவிதைத்தொகுப்பு 369 உணராத உண்மைகள் 530 உத்தமத் தூதர் 131 உத்தமர் உவைஸ் 880 உயிர்க்குயிர்க் கடவுளாகிய
சிவயோக சுவாமிகள் 856 ೭ಿಖ್ಖಹi: சிறுகதைத் தொகுதி
531 உரத்த இரவுகள் 370 உருமாறும் பழமொழிகள் 231
சித்தர்கள் 855 சிறுவர் கதைப்பாடல்கள்
V,
உரைநடையில் கலேவலா 829 உலகம் பரவிய தமிழின் வேர்:
கல், 235 உலகமெல்லாம் வியாபாரிகள் 629 உலகினர்க்கு ஓர் உடன்பிறப்பு:
சார்ள்ஸ் டிஃபுக்கோ 69 உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்
களும் சுவையான விபரங்களும் 973 உழைக்கப் பிறந்தவர்கள் 532 உள்வெளி 371 உள்ளக் கோயிலில் 630 உள்ளத்தனையது உயர்வு 759 உள்ளத்தின் உள்ளே 631 உள்ளதும் நல்லதும் 905 உறவுக்குப் போராட்டம் 327 உறவுகளின் இராகங்கள் 28 pSteb66) gy686JITLD 307 ஊரடங்கு வாழ்வு 948 எங்கள் நினைவுகளில் கைலாசபதி
906 எட்டாவது நரகம் 372 எண்சோதிட ஜோதி 66 எண்பதில் இருந்து எண்பத்தெட்டு
ഖങ്ങj് 70 எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்
கள் 760 எப்போதாவது ஒரு நாள் 373 எமது பிரதேசங்களில் விவசாய உற்பத்தியும் சுயதேவைப் பூர்த்தியும் 178 எயிட்ஸ் 268 எரிகொள்ளி 533 எரிநெருப்பில் இடைபாதை இல்லை
632 எல்லாளன் சமாதியும் வரலாற்று
(BLDalgulo 934 எல்லை கடத்தல் 374 எழுச்சி மாநாட்டு மலர் 145 எழுத்தாளன் 815 எழுதிச் செல்லும் விதியின் கை 633 எழுவான் கதிர்கள் 375 என் அப்பாவின் கதை 849 என் கதை 907 என்றாவது ஒரு நாள் 634 என்னில் விழும் நான் 376 என்னை எனக்கு அறிவித்த எங்கள்
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 307

Page 168
தலைப்பு வழிகாட்டி
குருநாதன் 50 எனது இராகங்கள் 377 எனது யாழ்ப்பாணமே 949 ஏ.எம்.ஏ.அசீஸ் அவர்களின்
கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும் 191 ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 761 ஏழு நாடகங்கள் 486 ஏன் 534 ஐ. நாவில் தமிழன்; என் முதல்
முழக்கம் 861 அகதி உருவகும் நேரம் 635 அகதியின் பாடல் 378 காவியம் நிறைவு பெறுகிறது 535
கூடைக்கொழுந்து 536 கூடைக்கொழுந்து: இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் 537 கோடை விடுமுறை 636 சரித்திரம் தீக்குளித்தது 379 சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்: (பாகம் 1) 974 சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்: (பாகம் 2) 975 சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்: (பாகம் 3) 976 சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்: (பாகம் 4) 977 சோவியத் கவிஞரின் புதுக் கவிதை 825 தந்தையின் கதை 637 தனி வீடு 638 திட்டம் மூடப்படுகின்றது 639 நாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள் 538 Ꭵfiug ᎥᏝ60ifl 539 | Ա 640 பெண்ணின் கதை 641 60LDu 6 Lilab6ft 642 யாழ்ப்பாணக்குயில் பேசுகிறது 380 ஒரு வித்தியாசமான விளம்பரம் 540 ஒளி சிறந்த நாட்டிலே 838 ஒன்பதாந் திருமுறை 83 ஓ அந்த அழகிய பழைய உலகம்
643
ஒரு (5 9(5
ዩ9፴
ዩ9® (5. ஒரு
9C
ஒரு
9(5
(5
(9(5.
ஒ சமுதாயமே 381 ஓர் அரசியலின் கதை 644 ஒவியம் 382 ஒளவையார் அறிவுச் செல்வங்கள்
38 கசின் சிறுகதைகள் 541 கட்சித் தொண்டர் கொள்கை பற்றி
63 கட்டிடக் காட்டுக்குள் 383 கட்டுரைக் கோவை 762 கடல் கோட்டை 645 கடலில் கலந்தது கண்ணிர் 542 கடலும் கரையும் 543 கடற்காற்று 646 கண்களுக்கு அப்பால் 544 கண்ணகி அம்மன் கஞ்சிவார்ப்புத்
தண்டற் பாட்டு 217 கணக்கியல் கொள்கைகளும்
கணக்கீட்டு நியமங்களும் 276 கணபதியே காப்பு 84 கணிதம் 259 கதிரேசனின் சிறுவர் பாடல்கள் 308 கதைக்கனிகள் 545 கந்தபுராண வரலாற்றுச் சுருக்கம்
85 கந்தவேள் கோட்டம் 647 கப்பல்; சிறுவர்க்கான புதிரப்
பாட்டுக்கள் 309 கபாலபதி 546 கம்பராமாயணக் காட்சிகள் 763 கம்பனிக் கணக்குகள் 277 கர்மயோகி றி வே க 875 கல்லறை மேலான காற்று 384 கல்லறைப் பூக்கள் (சிறுகதைத்
தொகுதி) 547 கல்வி நிறுவன நூலகங்கள் 06 கல்விச் சிந்தனைகள் 192 கல்வியியற் கோவை 193 கல்வியில் அளவீடும் மதிப்பீடும்
194 கலசம்: 25வது சிறப்பிதழ் 86 கலேவலா: பின்லாந்தின் தேசிய
காவியம் 830 கலை இலக்கியக் கட்டுரைகள் 764 கலை இலக்கியத் திறனாய்வு 765 கலைக் குரல்கள் 766 கலைச் சொற்தொகுதி: நூலகமும்
308 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

தலைப்பு வழிகாட்டி
தகவல்விஞ்ஞானமும் 05 கலைஞனின் தாகம் 767 கலைமகிழ்நன்: பேராசிரியர்
வித்தியானந்தன் வாழ்க்கைப் பணி 891 கலைமுகம் 294 கலையாத நினைவுகள் 548 கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் 648 கவித்தொகை 385 கவிதைச் சோலை 386 கவிதைத் தொகுப்பு 1: சிறுவர்
LIL6) 310 கற்பகமலர்: திருக்குறள் கட்டுரைகள்
768 E6LT660 60*6)louduJD 87 கனல்: நான்கு பெண்களின்
கவிதைகள் 387 கனவின் மீதி 388 கனவுப்பூக்கள் 649 கனிந்த காதல் 218 காக்கும் நிலைக்கு உயிராகி 389 காசி ஆனந்தன் கதைகள் 549 காட்டாறு 650 காட்டில் ஒரு வாரம் 334 காணி உறுதி 550 காணி நிலம் வேண்டும் 651 காத்தவராயன் நாடகம் 487 காதோடு சொல்லிவிடு 390 காந்தளகம்: 20 ஆண்டுகள் 22 கார்ட்டூன் ஓவிய உலகில் நான் 892 காரைக்கால் அம்மையாரின் வாழ்வும் வாக்கும் 857 காரைநகர்-பயிரிக்கூடல்
ஹி சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத்தமிழ் 88 காலங்கள்: கவிதைகள் நாட்
குறிப்புகள் 391 காலச் சாளரம் 551 காலத்தின் கோலங்கள் 392 காலத்துயர் 393 காலி லீலை 394 காற்று 395 காற்று வழிக் கிராமம் 396 காணகத்தின் கானம் 652 5.T66) 653 கானல்வரி 397 கிட்டி 655
கிட்டு எங்கள் வரலாற்று நாயகன்
876 கிடுகு வேலி 654 கிராமத்து மண்கள் சிவக்கின்றன
552 கிராமிய நூலகங்களும் அபிவிருத்தி
uqub 07 கிழக்கு நோக்கி சில மேகங்கள் 553 கிழக்கும் மேற்கும்
பார்க்க இருபதாம் நூற்றாண்டுத்தமிழன் கீதாஞ்சலி: கிறிஸ்தவ தமிழ் துதிப்
பாடல்கள் 284 கீதை நிழலில் 51 கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள் 195 குடும்ப முதலுதவி 265 குடும்பச் சிறையில் 656 குருதி மலை 657 குரும்பசிட்டியின் இலக்கியப்
பாரம்பரியம் 302 குருவின் சுவடுகளில் 488 குவேனி 658 குழந்தைக் குயில் (1) 311 குழந்தைகளுக்கும் உங்களுக்கு
மிடையே 29 குறமகள் கதைகள் 554 குறிஞ்சித்தென்னவன் கவிதைகள்
398 குறுகிய காலத்தில் தமிழை
6T U1985 Efi B6) TD 248 கூட்டுறவுக்கோர் அறிமுகம் (1 LD LJIT86LD) 180 Lൺ ഥpങ്ങബടണ് 312 கூடைக்குள் தேசம் 399 கெட்டிக்காரர்கள் 489 கேடானியலின் குறுநாவல்கள் 659 ? (கேள்விக்குறி) 816 கைலாசபதியும் நானும் 908 கைலாஸ்: கைலாசபதி நினைவேடு
கோக்கூர் கிழான் கவிதைகள்
(1962-1982) 400 கொடுத்தல் 555 கோசல்யா கவிதைகள் 401 கோடை 503 கோணமலை அந்தாதி 89
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 309

Page 169
தலைப்பு வழிகாட்டி
கோபுரங்கள் சரிகின்றன 660 கோயிலும் சுனையும் 490 கோவும் கோயிலும் 661 சக்தி பாலஐயா கவிதைகள் 402 சங்கரன் 662 சங்காரம்: ஆற்றுகையும் தாக்கமும்
295 சசிபாரதி கதைகள் 328 சடங்கிலிருந்து நாடகம் வரை 296 சண்முகா சரணம் 90 சத்தியங்கள் 556 சத்தியங்கள் சமாதிகளாவதில்லை
663 சத்தியஜித்ரேயின் பத்திக் சந்த் 832 சந்ததிச் சுவடுகள் 491 சந்தன ரோஜாக்கள் 664 சந்திப்பு 850 சமஸ்கிருத இலக்கியச்
சிந்தனைகள் 339 சமூக மாற்றத்துக்கான அரங்கு 297 சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 164 சர்வதேச அனுபவங்களிலிருந்து இ லங்கையின் தேசிய இனப் பிரச்சினை 950 சர்வதேசியம்: சமகாலச்சிந்தனைகள்
165 சரசோதி மாலை 67 சலதி 665 சன்டினிச புரட்சி; நிக்கரகுவா 166 சனநாயகமும் மனித உரிமைகளும்
67 சா.ஜே.வே.செல்வநாயகம் -
நெருக்கடி காலத் தலைமைத் துவம் பற்றி நினைவு அலை களின் உருவம் ஒன்றின் அடிப்படையினதோர் ஆய்வு 869 சாகுந்தல காவியம் 403 சாதனைக்குரிய சைவ தோத்திரமும்
சாத்திரமும் 52 சாதீயமும் அதற்கெதிரான போராட்டங்களும் 135 சாது அப்பாத்துரையின் தியான
தாரா 858 சாம்பல் மேட்டில் பூத்த சாதனை
அலைகள் 839 FT u 6b 557
சி.வி. சில சிந்தனைகள் 910 சி.வை.தாமோதரம்பிள்ளை; ஒர் ஆய் வு நோக்கு 911 சிதம்பர சக்கரம் 136 சிதறிய சித்தார்த்தன் 666 சிந்தனைக் கோவை 53 dyb560)6HL 556ft 30 சிந்திக்கத் தூண்டிய ஜேர்மனிய கலாச்சாரம் 840 சிரமம் குறைகிறது 404 சிரித்திரன் சித்திரக்கொத்து 280 சில்லையூர் செல்வராசன் கவிதைகள்: (தொகுதி 1) 405 சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் 54
சிவபுரத்து சைவர்கள் 667 சிவயோக சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளுக்கு அருளிய மணிமொழிகள் 55 சிவயோக மலர் 91 சிறார்களுக்கான சிறு நாடகங்கள் 326 சிறிமத் பகவத்கீதை 56 சிறீலங்கா தாவர போசன சமையல் 272 சிறு பொறி பெருந்தி 668 சிறுவர் கவிமலர் 313 சிறுவர் பாட்டு 314 சிறுவர் வளர்ப்பில் சிறப்பான வழி. முறைகள் 275 சிறுவரக்குப் பாரதியார் 315 சிறைகளின் குரல் 833 சிறைப்பறவைகள் 669 சின்ன வண்ண மலரே 316 சுடரொளி; தனிநாயகம் அடிகள் சிறப்பு மலர் 885 சுடலைகளாகும் நகரங்கள் 406 சுந்தரர பிள்ளைத்தமிழ் 92 சுந்தரியின் முகங்கள் 670 சுபத்திரன் கவிதைகள் 407
Fu JLd6Judo 671 சுவாமி ஞானப்பிரகாசர் சிந் தனையும் பணியும் 886 சுவாமி ராமதாஸ் அருளுரைகள் 57 சுவைக்கச் சில துளிகள்: கவிதைகள் 408 சுவையான இலங்கைச்
310 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

தலைப்பு வழிகாட்டி
&F60tDuJ6ü) 273 சூரியக்கதிர் வென்றது யார்? வெல்லப்போவது யார்? 951 சூரியனைத் தேடியவன் 329 சூரியனோடு பேசுதல் 409 செங்காவலர் தலைவர் யேசுநாதர்
769 செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்
(1வது பாகம்) 912 செந்தமிழ்க் களஞ்சியம் 770 செப்பனிட்ட படிமங்கள் 410 செபமாலைத் தியானம் 71 செயல்நூல் ஆண்டு 1:தமிழ் மொழி
249 செயல்நூல் ஆண்டு 2:தமிழ் மொழி
250 செயல்நூல் ஆண்டு 3:தமிழ் மொழி
251 செவ்வேள் 93 சேக்கிழார் அடிச்சுவட்டில் 841 சேர் றாசிக் பரீத் வழியும் நடையும்
867 சேரர் வழியில் வீரர் காவியம் 411 சைவ சமயமும் சர்வமத சமரசமும்
94 சைவ சித்தாந்தம்; மறுபார்வை 58 சைவ நற்சிந்தனை 95 சைவ நற்சிந்தனைகள் 96 சைவ விரதங்களும் விழாக்களும்
97 சைவத் திருக்கோவிற் கிரியைநெறி
98
சைவத் திருமுறைகளின்
விழுமியங்கள் 99 சைவாலயங்கள்-கிரியைகள்: ஒரு
கையேடு 100 சொக்கன். அறுபது மணிவிழா
மலர் 913 GlaПЈ600LDuom 558 சொல்லாதசேதிகள் 412 செளந்தரயலகரி 101 ஞானச்சுடர் 60 ஞானமண்டலம் 59 ஞானரத்னாவளி 61 டானியலின் குறநாவல்கள் 672 டொமினிக் ஜீவா கருத்துக்கோவை
914
டொமினிக் ஜீவா சிறுகதைகள் 559 தகவம்பரிசுக்கதைகள் (1) 560 g5Lu JD 492 தண்டிகைக் கனகராயன் பள்ளு
43 தண்ணீர் 673 தந்தையின் பரிசு 39 தமிழ் அகதிகளின் சோக வரலாறு
952 தமிழ் ஆண்டு 3 செயல்நூல் 252 தமிழ் இலக்கிய வரலாறு 772 தமிழ் இலக்கியம் நூறு சொல்
வினாவிடை 771 தமிழ் எழுத்தின் வரி வடிவங்கள்
மாற்று நோக்கு 236 தமிழ் ஒலைகள் 13 தமிழ் சிங்கள இலக்கிய உறவு
773 தமிழ் தந்த தாதாக்கள் 915 தமிழ் தேசிய இனப்போராட்டம் எங்கே போகிறது 953 தமிழ் தேசிய விடுதலைப் (3TTÜb 954 தமிழ் மாறன் கட்டுரைகள் 168 தமிழ் முழங்கும் வேளையிலே 817 தமிழ் மொழி இலக்கண இயல்புகள் 246 தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற் றில் ஒரு பெண்நிலை நோக்கு 155 தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும் 102 தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள்
கண்டுபிடிப்பும் 146
தமிழ்ச் சுவடி () 253
ಕ್ಲೌಹಿ திரு தனிநாயகம் அடிகளார் தமிழ்த் தூது: கட்டுரைக்கொத்து தமிழ்ப் பாவை: நெடும்பாடல் 504 தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க.
வேந்தனார் 888 தமிழர் சமய வரலாறு 103 தமிழர் தகவல் (1995) 14 தமிழர் தகவல்: 10வது ஆண்டு
LD6 (2001) 15 தமிழர் திருமண நடைமுறைகள் -
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 311

Page 170
தலைப்பு வழிகாட்டி
முதற்பாகம் 147 தமிழர் பண்பாடும் அதன் சிறப்
பியல்புகளும் 148 தமிழர் மத்தியில் (1993) 16 தமிழர் வடபுலப்பெயர்ச்சி
அவலமும் அதற்கு அப்பாலும் 955 தமிழர் வரலாறும் இலங்கை
இடப்பெயர் ஆய்வும் 210 தமிழனா தமிங்கிலனா 149 தமிழா விழித்தெழு 956 தமிழியற் கட்டுரைகள் 775 தமிழில் இலக்கிய வரலாறு 776 தமிழில் சிறுகதை வரலாறும்
வளர்ச்சியும் 777 தமிழில் பாடுவோம் 317 தமிழிலக்கியத்தில் மதமும்
BT gjit (po 778 தமிழிற் தரிப்புக்குறிகளின் பயன்
LITTOG 237 தமிழீழ விடுதலைப் போராட் டமும் இந்தியாவும் 957 தமிழும் அயலும் 779 தமிழும் உலகமும்: தமிழுறவு மாநாட்டு மலர் 238 தமிழும் தமிழரும் 239 தர்மங்களாகும் தவறுகள் 674 தரிசனம் 104 தலை காத்த தலைமயிர் 318 தலைப் பூக்கள் 780 தலைவிதியைப் பறிகொடுத்தோர்
56 தவறுகள் 675 தளபதி கிட்டு: ஒரு காலத்தின்
பதிவு 877 தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி
889 தாய் தரும் தாலாட்டு 219 தாய் நிலத்து வீரர் 878 தாயகச் சமாதானம் 414 தாயாகப்போகும் உங்களுக்கு 269 தாலாட்டுக்கள் 220 தாலாட்டுக்கள் 2 (சினிமா) 415 தாளக்காவடி 211 தான்பிரின் தொடரும் பயணம் 169 திகட சக்கரம் 562 திசை மாறிய பாதைகள் 335
திசைகள் வெளிக்கும் 416 தியாக இயந்திரங்கள் 417 தியானதாரா
unists சாது அப்பாத்துரையின் தியானதாரா தியானம் 563 திருக்கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
105 திருக்குறள் புதிய உரை: அறத்துப்
LT6) 781 திருக்குறளும் விவிலியமும் 72 திருக்கோணமலை 986 திருக்கோணமலை கோணேசர்
கோவில் வரலாறு 106 திருக்கோணமலை மாவட்டத் திருத்
தலங்கள் 107 திரும்பிப் பார்க்கிறேன் 916 திருமலைக் கொடுமைகள் 958 திருமுறைக் கதைகள் 108 திருமுறைப் பெருமை 109 திருவாசகரும் இலங்கைப் பெளத்தரும் 110 திருவாதவூரடிகள் புராணம் 111 தில்லைக்கூத்தன் பக்திப்பா
DIT606) 12 தில்லையாற்றங் கரை 676 திவ்வியா 418 திறக்கப்படாத தீப்பெட்டிகள் 419 திறனாய்வு சார்ந்த சில
பார்வைகள் 782 திறனாய்வுக் கட்டுரைகள் 783 g 677 தீபங்கள் எரிகின்றன:
மேரி பஸ்தியான் வரலாறு 859 தீயின் வார்ப்புக்கள் (கவிதை) 420 ಹೆಚ್ಹ95 வரலாற்று நோக்கு துப்பாக்கியில் துளிர்விடும் தேசம்
42 துணைவேந்தர் வித்தி 862 துயிலும் ஒருநாள் கலையும் 678 தூண்டில் 784 தூயகணிதம்: வரிசை மாற்றமும்
சேர்மானமும் 260 தூரத்து விடியல் 422 தூரத்துப் பூபாளம் 564
312 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

தலைப்பு வழிகாட்டி
தூவானம் 818 தூவானம் கவனம் 679 தூவியின் தசாம்ச வகுப்பு 08 தெய்வ தரிசனம் 680 தெய்வம் பேசுவதில்லை 565 தெருவில் அலையும் தெய்வங்கள்
566 தெல்லிப்பழை ரீ துர்க்காதேவி
தேவஸ்தானம் 113 தெலுங்கானா போராட்டம் 170 தேசபக்தன் கோ.நடேசையர் 863 தேசிய இலக்கியமும் மரபுப்
போராட்டமும் 785 தேசிய இனங்களின் விடுதலைப்
போராட்டங்கள்: மோதல்களும் தீர்வுகளும் 171 தேசிய இனப்பிரச்சினையும்
முஸ்லிம் மக்களும் 978 தேடல் 423 தேடலும் படைப்புலகமும் 281 தேடலும் பதித்தலும் 338 தேர் 114 தேர்ந்த நாடாளுமன்ற உரைகள்
UsTjisab நீலன் திருச்செல்வம் தேவாரத்திரட்டு 115 தோட்டக்காட்டினிலே 567 தோழர் மணியம்
(கே.ஏ.சுப்பிரமணியம்) நினைவு uᏝ6uj 870 தோற்றுத்தான் போவோமா 819 தைரியம் இருந்தால் சரித்திரம்
Lj60LL (3UTLD 40 நடந்தாய் வாழி வழுக்கியாறு 682 நடிகமணி வி.வி.வைரமுத்து: வாழ்வும் அரங்கும் 895 நச்சு மரமும் நறுமலர்களும் 681 நடைமுறை விடயங்கள்:
வர்த்தகமும் நிதியும் 205 நதிக்கரை மூங்கில் 424 ೫ಿಜ್ಯೀರ್ಣಕಿಅಹಂ। இருபத்தைந்து
நந்தியின் கதைகள் 568 நபிபெருமானின் நல்லுரைகள் 132 நம்பிக்கை நாற்றுகள் 569 நம்பிக்கைகள் 683 நமக்கென்றொரு புல்வெளி 425
நமக்கென்றொரு பூமி 570 நல்ல குடும்ப வாழ்வுக்கு நல்ல
உறவு தேவை 41 நல்லை அமிழ்தன் கவிதைகள் 426 நல்லைக்கந்தரந்தாதி 116 நல்லை நகர் நூல் 988 நவீன இலக்கியத்தின் அடிப்
U6)L56i 786 நற்சிந்தனைக் கீர்த்தனைகள் 285 நன்னூற் காண்டிகை உரையும்
நாவலர் பெருமானும் 247 நாங்கள் மனிதர் 427 நாட்டார் இசை: இயல்பும் பயன்
JAT(BILD 212 நாட்டார் இலக்கியத்தில்
மழை இரங்கிப்பாடல் 221 நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான்
யோசெப் கலையுலக வாழ்க்கை வரலாறு 883 நாடக தீபம் நடிகமணி வைரமுத்து
நினைவு வெளியீடு 896 நாடகம்: நாட்டாரியற் சிந்தனைகள்
213 நாடகம் நான்கு 493 நாடற்றவர் கதை 959 நாம் தமிழர் 979 நாவலர் பண்பாடு 150 நாளை 684 நாளைக்கு இன்னொருத்தன் 571 நாளைய நாயகி 428 நான் ஒரு பெண் 156 நான்-சாத்தான்-ஞானம்-அவன்; மனதின் ஆட்டங்களைப் புரிந்து கொள்ள உதவும் கதைகள் 31 நான்காவது உலகம் 685 நானும் எனது நாவல்களும் 787 நிகழ்வுகளும் உணர்வுகளும்: இருவர் கவிதைகள் 429 நித்திய கல்யாணி: கவிதைத்
தொகுதி 431 நித்தியானந்தம் 430 நிதானபுரி 686 நியமக்கிரயவியல் 278 நியாயமான போராட்டங்கள் 572 நிலவே நீ மயங்காதே 687 நிழல் 688
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 313

Page 171
தலைப்பு வழிகாட்டி
நிழல்கள் 573 நிறமற்றுப்போன கனவுகள் 432 நினைதைகள் 433 நினைவழியா நாட்கள் 434 நினைவின் அலைகள் 851 நினைவுகளில் அகிலன் 852 நினைவுத் திரைகள் 871 நிஜங்களின் தரிசனம் 918 நீ இப்போது இறங்கும் ஆறு 435
6 FT GELDITL LTU JATg5T 574 f605L Jul600TLD 689 நீர் வளையங்கள் 436 நீலன் திருச்செல்வம்: தேர்ந்த
நாடாளுமன்ற உரைகள் 960 நீலாவணன்: எஸ்.பொ நினைவுகள்
919 நீதியின் இருக்கைகள்: கவிதை
நாடகங்கள் 505 நூலகவியலில் பட்டியலாக்கம் 09
hisTyto bJT6NDB(yptid 10 நெடும்பா (3) 506 நெற்றி மண் 437 நொடியும் விடையும்(பாகம் 2) 232 நோயில் இருத்தல் 690 நோர்வே தமிழ்ச்சங்கம்: ஆண்டு
LD6) (1983) 17 பக்தர்களை இரட்சிக்கும் பரமனவன்
கருணை வாழி 73 பகவான் பூரீ சத்யசாயி சுப்ரபாதம்
17 பகவான் ரீ சத்யசாயி பாபாவின்
கீதவாஹினி 118 பச்சை மன்னும் சுட்ட மண்ணும்
961 Licsby LD 691 பஞ்சாட்சரம் 920 பட்டங்கள் சுமக்கின்றான் 692 பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம்
788 படிக்காத மேதை 693 பண்டிதமணி நினைவாரம் 921 பண்டிதமணி நினைவு மலர் 922 பண்டிதமணி போற்றிய யாழ்ப்
பாணத்துச் சைவத்தமிழ் LJпЈошfuЈцо 151 பண்டைய இலங்கையில் தமிழும்
தமிழரும் 999
பண்ணைப் பாலக்கும்மி 222 பணம் பந்தியிலே 42 பத்திக் சந்த்
பாரகக சத்தியஜித்ரேயின் பத்திக்சந்த் பதம் 438 பதினைந்து வயதினிலே 694 பதினொரு ஈழத்துக்கவிஞர்கள் 439 பரதக்கலை 288 பரவெளித்தத்துவம் 62 பராசக்தி பாமாலை 1 19 பலஸ்தீனக் கவிதைகள் 826 பழையதும் புதியதும்: நாடகம்
அரங்கியல் 298 பன்முக ஆய்வில் கைலாசபதி 923 பன்றியாரை வென்றுவிட்ட LITTLEquuLD DIT 319 பன்னிரு திருமுறைத் தோத்திரத்
திருவருட்பாத் திரட்டு 120 பன்னிரு மாத நினைவுகள் 121 பனிப்பாறைகளும் சுடுகின்றன. 575 பனிமலர் 695 பணியில் மொழி எழுதி 440 பணியும் பனையும் 576 பனை நூறு 441 பாட்டி சொன்ன கதைகள் 223
JT(B LIITILJT 320 பாதுகை 577 LIT605 578 பாதை மாறிய போது: குறுங்
காவியம் 507 LJILJLITLJLIT 321 பாரதச் செல்வம் 337 பாரதம் தந்த பரிசு 494 பாரதி ஆய்வுகள் 789 பாரதி கவிதைச்சமர் 442 பாரதி பக்தன் பார்பரா கவிதைகள்
827 பாரதி பிள்ளைத்தமிழ் 43 பாரதியார் சிந்தனைகள் 790 பாரதியின் குயில்பாட்டின் தத்துவ
Dipp 791 பாரதியின் சக்திப்பாடல்கள் 444 பாரதியின் மெய்ஞ்ஞானம் 792 பாரதியின் மொழிச்சிந்தனைகள்
240 For iss6i 445
314 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

தலைப்பு வழிகாட்டி
பாலர் கல்வி 254 பாலர் நீதிக்கதைகள் (1) 330 பாலர் நீதிக்கதைகள் (2) 331 பாலர் பா அமுதம் 322 uT6) LITL6) 323, 324 பாலாயி 696 பாலை; அடோனிஸ் கவிதைகள்
சில 828 பாலையில் வசந்தம் 446
ITGoGo6)6o u Ju u6ocia66i 697 பாவலர் துரையப்பா பிள்ளையின்
uupJ60d 989 பாவலரும் பாரதியும் 793 பிரசவங்கள் 579 பிரபஞ்ச மர்மம் 25 பிரபு பெரியபரிகாரியார் சரித்திர
ஆராய்ச்சி 890 ligonuld 698 பிராயச்சித்தம் 699 பிறப்புரிமை நெறியாழ்கை 262 புண்ணிய பூமி 580 புத்தளம்: வரலாறும் மரபுகளும் 990 புதிய அடிமைகள் 450 புதிய கல்விச் சிந்தனைகள் 196 புதிய தலைமுறை 447 புதியதல்ல புதுமையுமல்ல 448 புதியதோர் உலகம் 700 புது உலகம் எமை நோக்கி 581 புது உலகம்: பசுபதி கவிதைகள்
449 புது முறைக்கட்டுரைக் கோவை
795 புதுப்புனல் 451 புதுமை இலக்கியம்: இலக்கிய
ஆய்வரங்கு 794 புதுயுகம் பிறக்கிறது 582 புதையல் 74 புயலை எதிர்க்கும் பூக்கள் 583 புராதன இலங்கை 935 புராதன இலங்கையின் தமிழ்
சிங்கள உறவுகள் 980 புராதனி நயினை நாகபூஷணி
ஆலய வரலாறும் அருட் பாமாலையும் 122 புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல் 820
புலராத பொழுதுகள் 452 a
புலவர் சிவங் கருணாலயப் பாண்டியனார் 924 புலவர்மணி கவிதைகள் 453 புறநானூறு முதல் புதுக்கவிதை
வரை 796 பூதத் தீவுப் புதிர்கள் 336 பூபாள இராகங்கள் (2001) 202 பூம்பனி மலர்கள் 701 பூஜைக்காக வாழும் பூவை 702 பெட்டிசம் 834 பெண்களின் சுவடுகளில் 157 பெண்ணடிமை தீர 158 பெண்நிலைவாதம் பொருத்தமானதே
159 பெயர் ஒன்று வேண்டும் 584 பெருங்கற்கால யாழ்ப்பாணம் 1000 பெருங்காப்பியம் பத்து 341 பெருந்தோட்டத் தொழிலாளரின்
எதிர்காலம் 172 பேரன் கவிதைகள் 454 பேராசிரியர் கணபதிப்பிள்ளை:
அவரது புலமைப்பாரம்பரியம் 925 பேராசிரியர் வித்தியானந்தன்
காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக் கோலங்கள் 926 பொது அறிவு (பகுதி 1) 001 பொது உளச்சார்பு 002 பொய்கை மலர் 842 பொய்மையின் நிழலில் 703 பொன்மலர் தோழர் வி.பி. நினைவு
வெளியீடு 872 பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை
யின் கவிதைகள்: ஓர் ஆய்வு 797 போதையைத் தவிருங்கள் 263 போர் உலா: பயணக்குறிப்பு 962 போரா சமாதானமா: இலங்கையின்
தேசிய இனப்பிரச்சினை 963 மக்கள் வாழ்வில் பழமொழிகள்
233 மக்களே எழுக 455 மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
நூற்றாண்டு விழா நினைவு 456 LD35s 356)
மேலும் பார்க்க மஹாகவி
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 35

Page 172
தலைப்பு வழிகாட்டி
மஞ்சு நீ மழைமுகில் அல்ல 704 மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்
299 LD Liss6TJ LDT66 fluid 991 மட்டக்களப்புச் சைவக்கோவில்கள்
(தொகுதி 1) 123 மட்டுவில் தந்த பண்டிதமணி
சி.க. 927 மடாலயத் திறப்புவிழா மலர் 124 மடுமாதா காவிய மல்லிகை
பார்க்க மருதமடு மாதா காவிய மல்லிகை மண்ணிற் சமைந்த மனிதர்கள் 705 மண்ணின் தாகம் 706 மண்ணும் மக்களும் 707 மண்ணும் மல்லிகையும் 708 மண்ணைத் தேடும் மனங்கள் 585 LoGif Dissoid 864 மத்து 798 மதமாற்றம் 495 மரக் கொக்கு 709 மரண நனவுகள் 457 மரணத்துள் வாழ்வோம் 458
DJ600TD 459 மரபும் மார்க்சீய வாதிகளும் 173 மருதமடு மாதா காவியமல்லிகை
508 மருதூர்க் கொத்தன் கதைகள் 586 மருமகள் 496 மல்லிகை கவிதைகள் 460 மல்லிகை முகங்கள் 928 மல்லிகை வெள்ளிவிழா மலர 23 மல்லிகை ஜீவா 929 மலரும் நினைவுகள் 821 மலைநாட்டு மக்கள் பாடல்கள் 224 மலையக இலக்கியம் தோற்றமும்
வளர்ச்சியும் 799 மலையக மாணிக்கங்கள் 865 மலையக வாய்மொழி இலக்கியம்
225 மலையகச் சிறுகதை வரலாறு 800 மலையகச் சிறுகதைகள் 587 மலையகத் தமிழ் இலக்கியம் 801 மலையகத் தமிழ் மக்கள் 981 மலையகத்தில் மாரியம்மன்
வழிபாடும் வரலாறும் 125
மலையகப் பரிசுக்கதைகள் 588 மலையகம் வளர்த்த தமிழ் 802 மழலைகளுக்கான பாடல்கள் 325 மழைக்காலம் 710 மழைநாட்கள் வரும் 461 மழையில் நனைந்து வெயிலில்
காய்ந்து 711 மறையாத மறுபாதி 462 மன ஓசை: தமிழ் ஒலிபரப்பாளர்
ஒருவரின் நினைவு மீட்பு 853 மன நதியின் சிறு அலைகள் 712 மன வடு; நெருக்கீட்டின்
உளவிளைவுகளும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் 32 மனித உரிமையும் எமது
போராட்டமும் 964 மனித சொரூபங்கள் 589 மனித மாடு 590 மனித விழுமியங்கள் 43 மஹாகவி கவிதைகள் 463 மஹாகவி பாரதி 930 மஹாகவியின் ஆறு காவியங்கள்
509 மஹாஜனக் கல்லூரியின்
இலக்கியப் பாரம்பரியம் 203 மாணவர் கட்டுரைகள் 255 மாதுளம் முத்துக்கள் 464 மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் 803 மார்க்சியமும் இலக்கியமும்; சில
நோக்குகள் 804 மாருதப்புரவல்லி கப்பற்பாட்டு 226 மாவட்ட அபிவிருத்திச்
சபைகளும் இலங்கைத்தமிழர் பிரச்சினையும் 179 மாவை முருகன் காவடிப்பாட்டு 227 மாற்றம் 591 மானிடம் எங்கே போகிறது 592 மிருதங்க சங்கீத சாததிரம் 286 மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது
965 மீண்டும் வசிப்பதற்காக 465 மீறல்கள் 593 முகம் கொள் 46 முகம் தேடும் மனிதன் 594 முகமறியா வீரர்களுக்காக 467
316 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

தலைப்பு வழிகாட்டி
முடிவல்ல ஆரம்பம் 713 முத்தான தொண்டர்: ஞானசுரபி
ஆத்மஜோதி முத்தையா அவர்களின் வாழ்வும் பணியும் 860 முத்துநகை 468 முத்துப்பந்தலில் முல்லைக்கொடிகள் 714 முத்துராசக் கவிராயரின் கைலாய
Lofg)6) 936 முதல் உதவி (சிவராஜா) 267 முதல் உதவி (பேர்ட்டன்) 266 முரண்பாடுகளின் அறுவடை 595 முற்போக்கு இலக்கியம் 805 முற்றத்து ஒற்றைப்பனை 715 முறைசாராக்கல்வி 197 முறைசாராக்கல்வியில் புதிய
பரிமாணங்கள் 198 முன்னுரைகள்- சில பதிப்புரைகள்
822 முஹம்மது (ஸல்) மனிதரில் தலை
சிறந்தவர்கள் 133 மூட்டத்தினுள்ளே 716 மூலதத்துவம் 270 மூலவேர் 44 மூலஸ்தானம் 717 மூன்று நாடுகள் அறுபது நாட்கள்
843 மெல்லத் தமிழ் இனி 596 மேக மலைகளின் இராகங்கள் 597 மேற்பூச்சு 497 மேஜர் கிண்ணி 879 மோறிஷயஸ் தீவில் எங்கள்
தமிழர் 992 மோகவாசல் 598 மெளனகுருவின் மூன்று நாடகங்கள்
498 யதார்த்தமும் ஆத்மார்த்தமும் 806
LD6 469 ujT36 gö6őILLb 718 ust so 719 யாவரும் கேளிரென 174 யாழ், இலக்கிய வட்டம் இரு
தசாப்தங்கள் 303 யாழ் இனிது 599 u Tp'JLJULJ600 td 844 யாழ்ப்பாண அரச பரம்பரை 932
யாழ்ப்பான நூல்நிலையம் ஓர்
ஆவணம் 11
யாழ்ப்பாணக் குடியேற்றம் 993
யாழ்ப்பாணச் சரித்திரம் 994, 995
யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு
300
யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும்
851T6Io(!pud 996 யாழ்ப்பாணத்து வீரசைவர் 982 um PÜUT600öbé 860)[Du 16O 274 யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு 12 யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு,
கருத்துநிலை 137 யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு
997 யுகங்கள் கணக்கல்ல 600 யுகம் மாறும் 823 யுகமலர் 601 யுத்தத்தின் வரலாறு (கேலிச்
சித்திரங்கள்) 966 யேசுவின் மேல் ஆணை 720 யெளவனம் 807 யெளவனமில்லாத யதார்த்தங்கள்
602 ராதையின் நெஞ்சம் 721 லங்காராணி 222 லண்டன் முதல் கனடா வரை 845 லண்டன் லூசியம் சிவன் கோவில்
கீரத்தனைகள் 129 லயத்துச் சிறைகள் 723 6IM6)J60öu Jüd 724 லெனினது கல்விச் சிந்தனைகள்
199 606)6OT DEggp 831 வகுப்பறைக் கற்பித்தல் 200 வங்கியியல் சட்டமும் நடைமுறை
களும் (பாகம் 2) 181 வசந்தம் வந்து போய்விட்டது 725 வட இலங்கை சங்கீதசபை
பொன்விழா மலர் 287 வட இலங்கை நாட்டார் அரங்கு
24 வட மராட்சியின் கல்விப்
பாரம்பரியமும் இலககிய 66TT(pD 201
வட மொழி இலக்கிய வரலாறு 340
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 317

Page 173
தலைப்பு வழிகாட்டி
வடக்கு வீதி 603 வடிவங்கள் 470 வண்ணச்சிலேடை வெண்பா 931 வம்ச விருத்தி 604 வரண்டு போன மேகங்கள் 605 வரதர் கதைகள் 606 வரலாற்றுக்கு ஓர் கடிதம் 808 வரலாற்றுத் தவறுகள் 967 வருக தமிழர் பொற்காலம் 471 வல்லிபுர மாயவன் பிள்ளைத்தமிழ்
26 வல்லிபுரத்தான் தலபுராணம் 127 வல்வெட்டித்துறையிலிருந்து
அமெரிக்கா வரை கப்பலோட் լգԱl தமிழர்கள் 846 ബ് 607 வன்னிப்பிரதேசத் தமிழாராய்ச்சி
மகாநாட்டு மலர் 848 வன்னிப்பிராந்தியக் கூத்துக்கள் 215 வன்னிவள நாட்டுப்பாடல்கள் 228 வஜனாம்ருதம் 63 வாணியின் வீடு 204 வாலி 809 வாழ்க்கை ஒரு தேவை 608 வாழ்க்கையின் சுவடுகள் 609 வாழ்வின் எளிய பாடல்கள் 472 வாழ்வின் தரிசனங்கள் 610 வானதியின் கவிதைகள் 473 வானொலிப் பேச்சுக்கள் 824 விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும் 26 விடியத் துடிக்கும் ராத்திரிகள் 474 விடியலின் கானம் 475 விடியலுக்கு முந்திய மரணங்கள் 968
விடிவெள்ளி பூத்தது 726 விடிவை நோக்கி 476 விடுதலை இறையியல் 75 விடுதலை நெருப்புகள் 873 விடுதலையும் புதிய எல்லைகளும்
477 விண்வெளியில் வீரகாவியங்கள் 261 வித்தியானந்தம் 152 வித்துவசிரோமணி கணேசையரின்
வாழ்க்கையும் பணியும் 881 விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்
256
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக 611 விபுலானந்தக் கவித்தேனில்
விளைந்த பத்தி அமுதம் 128 விமர்சனக் கட்டுரைகள் 810 விமரிசன மெய்யியல் 27 விமானங்கள் மீண்டும் வரும் 727 விமோசனம் நாளை 728 விலங்கிடப்பட்ட மானுடம் 478 விலங்கில்லா அடிமைகள் 729 விழித்தெழு வீசிடும் காற்றாய்
மாறிடு 479 விழுதுகள் மண்ணைத் தொடும்
480 விறகு வெட்டி: ஒரு தமிழ்
நாடோடிக்கதை 229 விஷ்ணு புத்திர வெடியரசன்
வரலாறு 983 வீடற்றவன் 730 வெகுஜன அமைப்புகளுக்கும்
கட்சிக்கும் இடையான உறவுகள் 175 வெட்டுமுகம் 612 வெள்ளிப்பாதரசம் 613 G6j6it(86TITLLID 731 G6.6f& FLD 614 வெற்றுடல்கள் அல்ல அவை
வெடிமருந்தப் பொதிகள் 481 வெறியாட்டு-பாட்டுக்கூத்து 230 வேதமும் வருணங்களும் 64 வேளாண்மை: குறுங்காவியம் 510 வைகுந்தவாசன் முத்துவிழா மலர்
(2000) 866 606 Turf L-6) 998 86iu If JLJu600TLD 33 ஜூலை இருபத்தொன்பது - உடன்
பாடும் எமது நிலைப்பாடும் 969
ஜோர்ஜ் சந்திரசேகரன்
சிறுகதைகள் 615 ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச
தத்துவம் 65 ஷர்மிளாவின் இதயராகம் 733 ஸ்நேகம் 732 ஹிரோஷிமாவின் ஹிரோக்கள்
482
318 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

ஆசிரியர் வழிகாட்டி
ஆசிரியர் வழிகாட்டி
அகளங்கன் 411, 743, 809 அகஸ்தியர், எஸ். 511, 632,
660, 883, அகிலேஸ்வரசர்மா, சி. 222 அங்கையன் 646 அசோக் 814 அடைக்கலமுத்து, அமுதசாகரன்
UTjä585
இளவாலை அமுது gഞ്ഞങ്ങI 5ഞ്ഞങ്ങ6, 22 அத்தீக், யு.எல்.எம்.
பார்க்க
சோலைக்கிளி அப்பாக்குட்டி, தங்கம்மா 113, 837 அப்துஸ் ஸமது, அ.ச. 649, 674,
695 அம்பலவாணன், அருண்
பார்க்க
நட்சத்திரன் செவ்விந்தியன் அமரசிங்கம், சித்தி 901 அமரசிங்கம், ம. 17 அமலசீலன், யே, 771 அமலேந்திரன்
LлЈ8686
எழிலன் அமுதன்
பாரகக
நாகூர்கனி, எஸ்.ஐ. அமுது
பாரகக
இளவாலை அமுது அரசேந்திரன், கு. 235 அரவிந்தன், கி.பி. 365, 388, 466 அரியநாயகம், எம். 569, 483, 585 அருணாசலம், க. 747, 748, 790,
8O அருந்ததி 362 அருளர் 722 அல் அஸ"மத் 349, 452 அழகேச முதலியார், நல், 984 அன்புமணி 637 அன்பு முகையதின்
பார்க்க
முகையதின், அன்பு
அன்ரனி, டானியல் 607 அஸஸ், அப்துல்
பார்க்க
அல் அஸ"மத் ஆதவன், க. 371
la 6ö, Lu. 527 ஆரோக்கியநாதன், துரை 71 ஆழ்கடலான் 99, 127, 854 ஆறுமுக நாவலர் 76 ஆறுமுகம், அல்லை. க.வ. 344 ஆறுமுகம், சு. 89 ஆறுமுகம், வ. 200 ஆனந்தன், கா.சி.
பார்க்க
காசி ஆனந்தன் ஆனந்தன், கே.எஸ். 333, 702, 721 ஆனந்தநாதன், ஆக. 26 ஆனந்தலிங்கம், பொ. 541 இந்திரகுமார், க. 261, 820 இந்திரபாலா, கா. 886 SQLDu 6 g D JGö 939 இரகுபதி, பொ. 1000 இரத்தினசிங்கம், கா.வை.
பார்க்க
கொக்கூர் கிளான் இரத்தினசிங்கம், என்.எஸ். 824 இரத்தினதுரை, புதுவை 434 இரத்தினம், இ. 56, 205 இரத்தினம், கா.பொ. 768, 871, 961 இரத்தினம், ஜேம்ஸ் தேவதாசன் 934 இரத்தினலிங்கம், கா. 986 இரவீந்திரன், ந. 792 இராசகருணா, சி. 145, 304 இராசநாயகம், வல்லிபுரம் 739 இராசநாயகம், செ. 995 இராசரத்தினம், வ.அ. 535, 705, 740 இராசேந்திரன், சபா. 666 இராசையா, ஆதிலட்சுமி 583 இராமசுவாமி, க, 84 இராமதாஸ், த. 264 இராமலிங்கம், வள்ளிநாயகி 554 இராவணா 135 இராஜகருணா, சி.
பார்க்க
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 31

Page 174
ஆசிரியர் வழிகாட்டி
இராசகருணா, சி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
UTjës5
பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி இளங்கீரன் 492 இளங்கீரன், சுபைர் 785 இளங்கோ, க. 347 இளவாலை அமுது 508, 874 இளவாலை விஜயேந்திரன் 432 இளையவன் 550 இன்பராஜன் 488, 496 இனோட், ஜிஹேய்ம் 29 இஸ்மாயில், வி.எம். 586 உதயகுமார், அ.சி. 162 உதயச்சந்திரன், வி.என்.எஸ். 766 உதயன் 429, 938, 429 D LOTLD656)66, B. 735 உருத்திரமூர்த்தி, து
பாரகக
மஹாகவி ஊரவன் 134 எங்கரசு, துரை 608 எலியாசன், சி.ஏ. 382 எழிலன் 36, 40, 448 ஏரம்பமூர்த்தி, வை. 337 ஏறாவூர் பரம் w
பாரகக
பிதாம்பரம், கே.கே. ஐங்கரன்
பார்க்க
சார்ள்ஸ் ஒளவை 374 கசின்
பார்க்க
சிவகுருநாதன், க. கடம்பேஸ்வரன், ம.ந. 44 கணபதிப்பிள்ளை, க. 754, 970 கணபதிப்பிள்ளை, சி. 45, 96, 741,
763, 770, 904 கணபதிப்பிள்ளை, நாகேஸ்வரி 600 கணபதிப்பிள்ளை, ப. 935 கணபதிப்பிள்ளை, மு. 119 கணேசலிங்கம், இராஜராஜேஸ்வரி
936 கணேசலிங்கன், செ. 158, 619, 641,
644, 648, 656, 689, 703, 707,
729, 916, 944
கணேசன், கணபதி 450 கணேஷ், கே. 825, 827 கதிர்காமத்தம்பி, செ. 771 கதிரேசர் பிள்ளை, செ. 308, 494 கந்தசாமி, அ.ந. 495 கந்தசாமி, இ.க. 78 கந்தசாமி, பார்வதி 154 கந்தசாமி, புலோலியூர் செ. 596 கந்தராஜா, ஆசி 817 கந்தவனம், வி. 87, 514, 815, 860 கந்தையா, ஆ 39, 60, 93, 759 கந்தையா, மு. 112, 126 கந்தையா, விஜயலட்சுமி 387 கந்தையா, வீ.சி. 123 கமலகாந்தன், மணிமேகலை 588 கமலநாதன், ந.சி. 94, 781 கமால், திக்குவல்லை
பார்க்க திக்குவல்லை கமால் கமாலுத்தீன், எஸ்.எம். 10 கயல்விழி 368 கயிலாசநாதன், வை.அ. 646 கருணாகரமூர்த்தி, பொ. 519, 553,
635 கருணானந்தராஜா, எஸ். 791 கருணானந்தன், ஐயாத்துரை 262 கல்லாறு சதீஷ் 575 கலாலட்சுமி 796 கலைச்செல்வன் 814 கவிதா 600 கவிதாராஜன் 379 கனகசபாபதி, சி. 115 கனகரட்னா, ஏ.ஜே 184, 234, 769,
798, 804, 934 கனகரத்தினம், இரா. 992 கனகரத்தினம், மயிலங்கூடலூர் த.
310, 773 கனகரத்தினம், நா. 111 கனகராசன், மு. 884 கஜன் 352 கஸ்தூரி, என். 118 கஸ்ரோ 879 காதர், பி.ஏ. 172 காசி ஆனந்தன் 149, 549 கார்மேகம், எஸ்.எம். 545 கிருஷ்ணராஜா, சோ. 27, 58, 279 குகநாதன், ரஜனி 675
320 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

ஆசிரியர் வழிகாட்டி
குகபாலன், கா. 972 குணசேகரா, வீல், 834 குணரத்தினம், செ. 680 குணரத்தினம், வெ.செ. 238 குணராசா, க.
பார்க்க
செங்கை ஆழியான் குமார் மூர்த்தி
பாரகக
மூர்த்தி, குமார் குமாரசாமி, கல்வயல், வே. 320,
321, 404, 457 குமாரதாசன் 714 குலம், நயினை 354 குலரத்தினம், க.சி. 11, 46, 47, 456,
915, 912 குவைலீத், யூ.எல்.எம். 33 குழந்தைவேல், விமல் 708, 566, 520 குறமகள்
Tjib85
இராமலிங்கம், வள்ளிநாயகி குறிஞ்சித் தென்னவன் 398 கெங்காதரானந்தா, சுவாமி. 59, 63 கையூம், சாரணா 314 கைலாசநாதக் குருக்கள், கா. 98,
140, 340 கைலாசபதி, க. 164, 734, 742, 744,
752, 789, 786, கொக்கூர் கிளான் 400 (385/TiIL JTuiu dfé5ILD 18, 95, 97, 100,
232, 572, 731, 920 கோபாலகிருஷ்ணன், ப. 82 கோபாலரத்தினம், எஸ்.எம். 946 கோமஸ், ஏ.வி.பி. 618 கோலன் 960 கோவிந்தன் 700 கெளரி 499 சக்தி 581 சக்தி பால ஐயா 402 சங்கரப்பிள்ளை, பொ. 979 சங்கரமூர்த்தி, எஸ். 955 சங்கரி, அ. 412 சச்சிதானந்தம், சாந்தி 157 சச்சிதானந்தன், க. 236, 947, 949 சசிபாரதி
பார்க்க
சபாரத்தினம், சு
சட்டநாதன், க. 591 சண்முகசுந்தரம், த, 54, 221, 226,
217, 227, 891, 892 சண்முகதாஸ், அ. 79, 147, 246,
862, 903 சண்முகதாஸ், மனோன்மணி, 77,
147, 911 சண்முகநாதன், வரதா 317 சண்முகநாதக் குருக்கள், சது.
பார்க்க
மஹாராஜ ரீ சண்முகநாதபிள்ளை, நா.க. 122 சண்முகநாதபிள்ளை, பத்மசோதி 473 கண்முகலிங்கம், க. 909 சண்முகலிங்கன், என். 139, 849 சண்முகலிங்கன், நா. 203 சத்தியசீலன், பா. 68, 69, 309, 318,
319 சத்தியானந்தசிவம், க. 233 சதாசிவம், சி. 921 சதாசிவம், புலோலியூர் க. 716 சதீஷ், கல்லாறு
பார்க்க
கல்லாறு சதீஷ் சந்திரசேகரம், ப. 65, 188, 193 சந்திரசேகரன், ஜோர்ஜ் 615 சந்திரசேகரன், இர 256 சந்திரபோஸ், கண. சுபாஷ் 839 சந்திரபோஸ், சுப்பிரமணியம் 189 சபர், முஹம்மது,எம். 867 சபாரத்தினம், சு. 328 சபாரத்தினம், ந. 948 சபேசன், நா. 366 சம்பந்தர், க.தி. 403 சம்பந்தன், ஐதி. 885, 866, 952 சமீம், முஹம்மது 810, 974, 975,
976, 977 சர்மா, எஸ். 957 சர்வேஸ்வரன், செ. 890 சரத், லயனல் 980 சரோஜா, வைலற் எஸ்.பி. 66 சலீம், முகம்மது, அ. 142 சவேரி, என்.எம். 488, 496 சற்குணராஜா, பத்மினி 273 சாந்தன் 539, 599, 621 சாந்தன், ஐ. 838 சாந்தி, ரமேஷ் வவுனியன் 350, 548
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 321

Page 175
ஆசிரியர் வழிகாட்டி
சார்ள்ஸ் 345, 364, 384, 475 9]ങ്ങ് ഞbut
பார்க்க
60)85ul D, FTS600FFT சாரல்நாடன் 225, 799, 802, 863,
910 சாலி, ஜே.எம். 557 சித்தபுத்திரன் 833 சித்தார்த்தன், மெளனகுரு 395 சித்திரலேகா, மெள. 909, 944 சித்திக், நயிமா 609 சிதம்பரநாதன், க, 297 சிதம்பரப்பிள்ளை, இ. 927 சிதம்பரப்பிள்ளை, ம.சி. 57 சிதம்பர திருச்செந்திநாதன்,
இணுவையூர் 612, 623, 634,
73 சிவகுமாரன், கே.எஸ், 765, 908 சிவகுருநாதன், இ. 19 சிவகுருநாதன், க. 541, 686 சிவங்கருணாலயப் பாண்டியப்
புலவர் 105 சிவச்சந்திரன், இரா. 847, 981, சிவசம்பு, மு, 890 சிவசாமி, வி. 239, 288, 339, 987 சிவசுப்பிரமணியம், க. 714 சிவசேகரம், சி. 173, 237, 410, 424,
779, 828 சிவஞானசுந்தரம், எஸ். 280, 892 சிவஞானசுந்தரம், செ.
பார்க்க
நந்தி சிவஞானம், வை.சி. 180 சிவத்தம்பி, கார்த்திகேசு 137, 141,
146, 207, 245, 751, 757, 776,
778, 925 சிவநாதன், நகுலா, 249, 250, 251,
275, 325 சிவப்பிரகாசம், மு.சு. 983 சிவபாதசுந்தரம், சோ. 777, 841 சிவபாதசுந்தரனார், நா. 62 சிவபாலன், எஸ்.
பார்க்க
சிவாசி சிவபாலன், க. 433 சிவயோக சுவாமிகள் 55, 285
சிவரஞ்சன், இரா.
பார்க்க
ஊரவன் சிவரமணி 412 சிவராசா, அம்பலவாணர் 182, 302 சிவராசா, ந. 267 சிவராசா, வ. 547 சிவராமலிங்கம்
பிரமிள் சிவராமலிங்கம், யாமினி 687 சிவலிங்கம், ஆர். 829, 830 சிலலிங்கம், சண்முகம் 436 சிவலிங்கராஜா, எஸ். 201, 775, 881 சிவன் அடியான் 856 ദ്ദിഖി 31 சிவானந்த சரமா, ப.
பார்க்க
(35üJuu feb சிவானந்தன், சபா
பார்க்க
தாட்சாயணி சிற்றம்பலம், சி.க, 997 சின்னக்குட்டிப் புலவர், மாவை 413 சின்னத்தம்பி, க. 194 சின்னத்தம்பிப் புலவர் 78 சின்னத்துரை, வே. 182 சின்னத்துரை, எம். 234 சுகந்தம் 170 சுகுமார், க. 265 FLLss 363 சுதாகர். ச. 380 சுதாகரன், மகாலிங்கம் 202 சுதாராஜ் 538, 555, 626 சுந்தர்
பாரகக
சிவஞானசுந்தரம், எஸ். சுந்தரம், பி.கே. 118 சுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. 489 சுந்தரம்பிள்ளை, காரை செ. 214,
29, 507, 895 சுந்தரம்பிள்ளை, மாதவி 797 சுந்தரராஜன், பெகொ, 777 சுந்தரலட்சுமி, யோ. 537, 613 சுந்தரலிங்கம், வி. 853 3,u 953 சுப்பிரமணிய வாரியார், கே. 64 சுப்பிரமணியம், கே. ஏ. 870
322 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

ஆசிரியர் வழிகாட்டி
சுப்பிரமணியம், கோ. 73 சுப்பிரமணியம், ச. 101, 197, 198 சுப்பிரமணியம், சுதாகரி 387 சுப்பிரமணியம், சுதாசினி 387 சுப்பிரமணியம், தா.பி. 490 சுப்பிரமணியம், நா. 793 சுபத்திரன் 407 சுபோதிஸ், பூ, 206 சுல்பிகா 478 சுவாமிநாத பண்டிதர் 109 சூரியன் 428, 455 செங்கை ஆழியான் 001, 002, 332,
336, 642, 643, 645, 647, 650,
654, 658, 6.16, 682, 698, 706,
710, 711, 715, 718, 787, 835,
932, 985, 988 செந்திநாதன், கனக 755 செந்திநாதையர், கா. 61 செபநேசன், சு.
Tjisas
ஜெபநேசன், எஸ். செம்பியன் செல்வன் 652 G&6o6og55iol, uDT.
பார்க்க
ഖണങ്ങഖഖണIഖങ് செல்லத்துரை, அருணா 215 செல்லத்துரை, பாமினி 666 செல்லத்துரை, புதுநகர் 418 செல்லப்பா, நா. 52 செல்வநாயகம், வி. 772 செல்வம் 383 செல்வராசன், கமலினி 405, 442 செல்வராஜா, எம்.ரி. 485 செல்வராஜா, என். 04, 07, 12, 231 செழியன் 175, 459 சேயோன் 796 சேரன், உ. 361, 397, 435, 458, 469 சேவியர், ஜே.ச, 234 சொக்கலிங்கம், க. 48, 243 சொக்கன் 128, 444, 506, 665, 832,
888 சொர்ணலிங்கம், கோசல்யா 401 சோமகாந்தன், என். 522, 726, 842,
917 சோமசுந்தரம், குமாரசாமி 43 சோமசுந்தரம், சந்திரிகா 216 சோமசுந்தரம், தயா 32
சோமஸ்கந்த சரமா, அ.நா. 286 சோமு, மாத்தளை
பார்க்க
மாத்தளை சோமு சோலைக்கிளி 372, 440 ஞானகுமாரன், மட்டுவில்
பார்க்க
மட்டுவில் ஞானகுமாரன் ஞானசூரியன், கி. 956 ஞானசேகரன், தி. 657, 723 ஞானப்பிரகாசம், க.த. 443 ஞானப்பிரகாசம், மு. 80 ஞானேந்திரன், ஏ. 13 டானியல், கே. 653, 659, 672, 673,
691, 907 டேவிட், கே. ஆர். 697 55.5LD, E, 693, 694, 720 தங்கராஜா, க. 277 தணிகாசலம், கதிர் 210 தம்பையா, எஸ்.வி. 542, 851 தமயந்தி 370 தமிழ்மாறன், வி.ரி. 165, 168, 171 தயானந்தா, சார்ள்ஸ் 966 தர்மலிங்கம், என். கே. 195 தர்மலிங்கம், நீரகொழும்பூர் ந. 470 தர்மராஜா, நா. 809 தளையசிங்கம், மு. 582, 638, 761,
767, 805 தளையசிங்கம், ஜெயந்தி 387, 484 தனிநாயக அடிகள் 148, 774 தாசன், வி. மா. 138 தாட்சாயணி 416 திக்குவல்லை கமால் 605, 681 திசேரா
பார்க்க
தியாகசேகரன், எஸ். திமிலைத்துமிலன் 704 தியாகசேகரன், எஸ். 546 தியாகராசபிள்ளை, சோ 92 தியாகராசா, சண்முகம் 967 தியாகராஜா, எஸ். 574, 831 தியாகராஜா, சந்திரா 573 தியாகராஜா, சிவநாயகி 112 தியாகலிங்கம், இ. 684 திருச்சந்திரன், செல்வி 155 திருச்செல்வம், எஸ். 15, 852 திருச்செல்வம், நீலன் 167, 960
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 323

Page 176
ஆசிரியர் வழிகாட்டி
திருச்செல்வம், மு. 947 திருநாவுக்கரசு, மு. 938, 940, 943 திருநாவுக்கரசு, மு. திருலிங்கநாதன், ஏ. கே. எஸ். 13 தில்லைக்கூத்தன் 941 தில்லைநாதன், எஸ். 745 திலீபன், தி. 421 திலீபன், வவுனியா
பார்க்க
வவுனியா திலீபன் தீரன் 406 துரை, கே.எஸ். 640, 671 துரை, கி.செ. 808 துரைசிங்கம், த. 330, 331 தெணியான் 709, 929 தெய்வேந்திரன், அருள், 479 தெளிவத்தை ஜோசப் 696, 800 தேவகெளரி, ம. 760 தேவதாஸ், தம்பிஐயா 301 தேவராசன், ஆ 887 நட்சத்திரன் செவ்விந்தியன் 373 நடராசா, க.செ. 756, 998 நடராசா, கார்த்தியாயினி 900 நடராசா, எப்.எக்ஸ்.சி. 247, 991 நடராஜன், மயிலங்கூடலூர் பி. 312,
458, 775, 936 நடராஜா, இ.
LTjisas
தில்லைக்கூத்தன். நடேசன், ஜெயா 414 நதிம்பாரி, கு.ஆ 133 நந்தி 37, 544, 568, 683, 929 நயினை குலம்
பார்க்க
குலம், நயினை நல்லை அமிழ்தன் 426 நற்குணதயாளன், மு. 86 நாகநாதன், சித்ரா 552 நாகராஜன், அனு வை. 219, 334,
338 நாகூர்கனி, எஸ்.ஐ 564, 620 நாகேந்திரன், செ. 129, 355, 360,
369
நாவண்ணன் 738, 859 நித்தியானந்தன், வி. 176
நித்தியானந்தன், மு. 177, 944 நிஹற்மத், எஸ்.எச். 533
நீரவை பொன்னையன் 578 நீலவண்ணன் 965 நீலாவணன் 510
..LDIT6, 6TLD.6. 240, 241, 351,
439, 461, 463, 509, 783, 803,
826, நெல்லை க. பேரன்
பார்க்க
பேரன், நெல்லை க. நோர்வே நக்கீரனார்
Tjaisab
திலீபன், தி.
பசுபதி, க. 449 பஞ்சாட்சரம், அ. 741 பட்டுச்சாமி ஒதுவார், தி. 80 பத்மநாதன், எஸ். 30 பத்மநாதன், சி. 143 பத்மநாதன், நாக 513 பத்மநாப ஐயர், இ. 458, 812, 813,
823 பத்மநாப ஐயர், சொர்ணவல்லி 190 பரமநாதன், முருக வே.
பார்க்க
sp85-6 T6 பரமசாமி, நாக. 116 பரராஜசிங்கம், எஸ்.கே. 139 பற்குணம், சி. 788 பற்றிக்ஸ், டேவிட் வின்சன்ற் 28,
70, 74, 75 பற்றிமாகரன், சூயோ. 889 பன்னிரச்செல்வம், இராகலை 447 பஷர, மு. 593 பாக்கியநாதன், சு. 592, 840, 973 பாக்கியநாதன், விக்னா 42, 153,
244, 248, 252, 255, 323, 324,
326, 327, 356, 386, 422, 426,
840 பாக்கியநாதன், வே.இ. 08, 222 பார்த்தசாரதி, இந்திரா 576 பார்வதிநாதசிவம், ம. 500, 501, 502 பாரதி, மேஜர்
பார்க்க
விஸ்வலிங்கம் சத்தியபாமா பாரூக், பாலமுனை
பார்க்க
பாலமுனை பாரூக்
324 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

ஆசிரியர் வழிகாட்டி
பாரூக், றம்சியா 980 பாலச்சந்திரன், பா. 276, 278 பாலச்சந்திரன், யோகா 601 பாலசுந்தரம், இ. 20, 208, 209, 212,
282, 487 பாலசுந்தரம், க. 515 பாலசுந்தரம், பொன். 91, 866 பாலசுந்தரம், விமலாம்பிகை 05, 06,
09 பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி 102,
517, 571, 629, 636, 676, 725 பாலசிங்கம், ஏ.எஸ். 954 பாலமுனை பாரூக் 438 பாலேஸ்வரி, ந. 565, 630, 631, 661,
699 பாவிலுப்பிள்ளை, ம. 72 பிரதீபன், எம். சாம். 505 பிரமிள் 858 பிரியதர்ஷனி, இந்திரா 687 பிருதுவி 950 பிதாம்பரம், கே.கே, 408 புத்திசிகாமணி, முல்லை பொன். 558 புதுவை இரத்தினதுரை
பாரகக இரத்தினதுரை, புதுவை. புவனேந்திரன், அம்பலவன் 420 புன்னியாமீன், பி.எம். 03, 445 புனிதலிங்கம், எஸ். 884 L6gLugL60OTLo, g(p 999 புஷ்பராஜா, எஸ். 814, 819 பூலோகசிங்கம், பொ. 150 பெரியதம்பி, கு. Uljébb sp85L6) T6 பெரியதம்பிப்பிள்ளை, ஏ. 453, 905 பேர்க், எல்ஸெஸ் யோன்ஸ் 154 பேனடிக்ற், யோன் அவுறாம்பிள்ளை
பார்க்க பெனடிக்ற் பாலன், யோ. பெனடிக்ற் பாலன், யோ. 561, 611,
199 பேரன், நெல்லை க. 454, 556, 727 GuT660, LDL16)td, (p. 307, 394 477,
543, 690, 782, 806, GuT660TLDLusop, 3.35. 441 பொன்னுத்துரை, எஸ். 51, 341, 524,
576, 677, 750, 816, 919
பொன்னுத்துரை, ஏரி. 211, 893, 918 போசராச பண்டிதர் 67 GuóTig, 6TD. 753 LD&Estab6)
பார்க்க
மஹாகவி மகாலிங்கம், என்.கே. 563 மகாலிங்கம், செல்வநாயகி 254 மகேந்திரன், இ.
Ty865
முல்லை அமுதன் மகேந்திரன், கோகிலா 521, 579,
595, 589, 678, 679, 894 மங்களராணி, கி. 381 மட்டுவில் ஞானகுமாரன் 467 மணிவண்ணன்.வி. 879 மதியழகன், வி.ரி. 257, 258, 259,
260, மதுசூதனன் 796 மதுசூதனன், தெ. 289 மயில்வாகனம், இரா. 53 மயிலங்கூடலூர் நடராஜன்
LTjisab
நடராஜன், மயிலங்கூடலூர் பி. மரியசேவியர், நீ, 294 மருதூர்க்கொத்தன் 586 மலரவன் 962
D66tru6, 567 மனோகரன், துரை. 746 மஜீத் 472 மஹாகவி 463, 503, 509 மஹாராஜ ரீ 633 மாணிக்க இடைக்காடர், நா. 762 மாணிக்கத் தியாகராஜ பண்டிதர், சி.
931 LDJ60östsæld, uDM 85 மாத்தளை சோமு 518, 567, 570,
685, 717, 845 மாத்தளை வடிவேலன் 567 மாதவன் 960 LDT36f
பார்க்க
ஆறுமுகம், அல்லை க.வ. மீ ஆத், எம்.வை.எம். 132 மீரா லெவ்வை, எம்.ஐ.எம்.
பார்க்க
லெவ்வை, எம்.ஐ.எம். மீரா
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 325

Page 177
ஆசிரியர் வழிகாட்டி
முகையதின், அன்பு 375, 451, 464 முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, கு.
993 முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, 994 முத்துலிங்கம், அ. 562, 603, 604 முத்தெட்டுவேகம, சரத் 937 முத்தையா, நா. 50, 104, 108, 121,
836, 855 முரளிதரன், சு, 399, 417 முருகபூபதி 223, 614, 850 முருகவேல், இராஜன் 584, 602 முருகானந்தம், அ. செ. 590 முருகானந்தம், எம். கே. 263, 268,
269 முருகேசபிள்ளை, புஷ்பாஞ்சலி 272 முருகேசு, நீ.சி. 120 முருகையன், இ. 230, 346, 427,
497, 749 முல்லை அமுதன் 431, 450, 474, 480, 692, 719, 728, 732 மூர்த்தி, குமார் 594 மெற்றாஸ்மெயில், செல்லையா 228,
882 (3LDLD6856, 359, 465, 482, 914 மொழிவரதன் 597 மெளனகுரு. சி. 292, 293, 295,
296, 298, 299, 493, 498, 764, 909 யாழ்ப்பாணக் கவிராயர்
பார்க்க பசுபதி, க. யாழ்வாணன் 303 யுகநேசன் 363 யேசுராசா, அ. 281, 353, 458, 818 யோகநாதன், கா. 958, யோகநாதன், செ. 329, 512, 529,
537, 613, 617, 651, 655, 668, 670, 902 யோகராசா, எஸ்.ஜே. 35, 41 யோதிலிங்கம், சி.அ. 161, 183 ரகு, துரைசிங்கம் 181 ரஞ்சகுமார் 598 ரட்ணராஜா, கிருஷாந்தி 391 ரமேஷ் 429 ரமேஷ் வவுனியன் 423 ரவிப்ரியா 664 gTLD6ù6JFTLô, Lu. 169
ராமேஸ்வரன், சோ. 335, 580, 622, 624, 625, 627, 663, 667, 688 ராமையா, என்.எஸ்.எம், 536 ராஜகோபால், ஈ.கே. 846 ராஜதுரை, எஸ்.வி. 942 ராஜரீகாந்தன் 551 ராஜி 271 ராஜேந்திரன், நடனகுமாரன் 16 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பார்க்க பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி 6 osô 274, 814 லிங்கதாசன், க. ப. 311 லெவ்வை, எம்.ஐ.எம். மீரா 130 வசந்தராஜா 955 வடிவேல், இ. 89, 90, 106, 107 வடிவேலன், பெ. 125 வடிவேலன், மாத்தளை
பார்க்க மாத்தளை வடிவேலன் வடிவேலு, ச. 34 வண்ணை தெய்வம் 476 வரதர் 606, 821 வரதராஜன், தி.சு.
பாரகக வரதர் வவுனியா திலீபன் ഖബഞഖഖണബ6 662 வன்னியகுலம், சி. 758 வாகரைவாணன் 504 வாகீசன், எஸ்.என். 534 வாசுதேவன் 376 வானதி
பார்க்க சண்முகநாதபிள்ளை, பத்மசோதி
377
6.
LT85 பற்றிக்ஸ், டேவிட் வின்சன்ற் விக்னேஸ்வரன், எஸ்.கே, 29 விசாகரெத்தினம், ஆ, 25 விசாலாட்சி, சி. 875 வித்தியானந்தன், சு. 152, 213, 848,
924 விதுரன் 796 விநாசித்தம்பிப் புலவர், சீ. 88 விநாயகமூர்த்தி, வெற்றிவேல் 523 வில்சன், அ. ஜெயரத்தினம் 869
326 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

ஆசிரியர் வழிகாட்டி
வில்வரத்தினம், சு. 343, 437, 393,
396 வில்வராசா, மங்கையர்க்கரசி 253 விஜயரட்ணம், பரமேஸ்வரி 284 விஜயன் 938 விஜயன் கே. 712 விஜயேந்திரன், இளவாலை
பார்க்க இளவாலை விஜயேந்திரன் விஜயேந்திரன், சிலோன் 899 விஜித்தன், காசிலிங்கம் 962 விஸ்வநாதன், துரை 532, 587 விஸ்வலிங்கம், சத்தியபாமா 390 வீரகத்தி, க, 242 வீரப்பன், இர.ந. 843 வெகுஜனன் 135 வெற்றிமகன்
பார்க்க விநாயகமூர்த்தி, வெற்றிவேல் வேலன், க. ந. 49, 471, 857, 933 வேலுச்சாமி, பொன், 160 வேலுப்பிள்ளை, ஆ, 103, 110, 144,
151, 736, 926, 989 வேலுப்பிள்ளை, சி.வி. 224, 628,
730, 959 - வேலுப்பிள்ளை, சீ.டி. 185 வைகுந்தவாசன், கிருஷ்ணா 385,.
86 வைத்தியநாதன், வசந்தா 864 வைத்திலிங்கம், து. 639, 669, 701 வைத்தீஸ்வரக் குருக்கள், க. 109 வையாபுரி ஐயர் 998 றம்சியா
LMTijd585 LITT (5őb, BubfusT றிட்டா, பேர்ட்டன் 266 ஜப்பார், மு. இ. அ. 419 ஜீவா, அந்தனி 290, 865, 868 ஜீவா, டொமினிக் 23, 460, 559, 577,
610, 780, 784, 822, 897, 898, 906, 928
ஜீவாகரன், ச, 289 ஜூனைதா ஷெரீப்
பாரகக
ിഖ്, ജ്ഞങ്ങക്ര ஜுனைதீன், ஜெக்கியா 733 ஜெகதீஸ்வரம்பிள்ளை, 229 ஜெகதீஸ்வரன், குரும்பசிட்டி ஐ 525 ஜெகந்நாதன், பொ. 996 ஜேபநேசன், எஸ். 186 ஜெமீல், எஸ்.எச்.எம். 191, 192, ஜெயசங்கர், வாசுகி 484 ஜெயசிங், தேவதாசன் 724, 807 ஜெயசீலன், ஜே.இ. 69 ஜெயதாசன், சண்முகம் 220, 415 ஜெயதாசன், சுலோசனா 220, 415 ஜெயபாலன், வ.ஐ.ச. 367, 378, 409,
425, 978 ஜெயராஜ் 737 ஜெயராஜா, இ. 864 ஜெயராஜா, சபா 24, 187, 196, 283, ஜெயவர்த்தனா, குமாரி 177, 944,
981 ஜோசப், தெளிவத்தை
பார்க்க
தெளிவத்தை ஜோசப் ஜோசப், ரூபராணி 540 (8g.Taft LT6 T 530
ரீ கணேஷன், கந்தையா 300 ரீகந்தராஜா, தி. 13 ரீதரன், பாலகிருஷ்ணா 136 பூரீஸ்கந்தராஜா, சு. 491 பூரீஸ்கந்தன், ப. 844 ஷரிபுத்தீன், ஆ.மு. 218 ஷரிப்புத்தின், ஜின்னாஹற் 446, 468 ஷாஜஹான், ஏ.என்.எம். 990 ஷெரீப், ஜுனைதா 834 ஹம்சத்வனி 342 ஹலிம்தின், எம்.எச்.எம். 357, 392 ஹனிபா, எஸ்.எம். 131, 880 930
நூல்தேட்டம் - தொகுதி ஒன்று 327

Page 178
நூல்தேட்டம்: தொகுதி 2: தகவல் படிவம்
நூல்தேட்டம் தொகுதி 2)
நூல்தேட்டத்தின் முதலாவது தொகுதியில் இடம்பெறத் தவறிய நூல்களின் விபரங்களை அடுத்து வெளிவரவுள்ள இரண்டாவது தொகுதியில் சேர்த்துக்கொள்ள விரும்பும் நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் தங்கள் நூலின் பிரதியொன்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
நூலின் பிரதியை அனுப்பி வைக்க இயலாதவிடத்து 329ஆம் பக்கத்திலுள்ள படிவத்தின் பிரதியொன்றை நிரப்பி மேற்படி நூலின் நூலியல் தகவல் அடங்கிய முதலிரு பக்கங்களின் புகைப்படப் பிரதியொன்றை அதனுடன் இணைத்தும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
N.Selvarajah 48 Haliwicks Road Luton Bedfordshire LU29BH United Kingdom
Telephone: 01582703 786 Fax: 01582 528 765 E-mail: n.selvarajah(2ntlworld.com
328 நூல்தேட்டம் - தொகுதி ஒன்று

BBLOGRAPHICAL INFORMATION (NOOLTHETTAM-VOLUME 2)
Title of the Book
Subtitle:
Author Compiler:
Country of Publication:
Publishers' Full Address:
Country of Printing: Mx M
Printers' Full Address:
Edition: Month: Year:
f not 1st Edition, detail of previous editions: www.www.maww.naww.m. www.www.rew.ww zog. ist ed., Jan.1982,
Preliminary pages and text pages:
(eg. iv, 244 p.)
*** rw KM ۱۶ ن» سم مهر ۳۷.سم
ISBN Number
SLLALALSqSqESLLL0LLS SLLSLE LEELSLAqAqATSLSqAAAAAASLLLL0LSALAASAAAAASAS SLSLSASELALLLLLAqSq qL S SLLLLLASqSL LSL0L SLLSLLASLLASSALAAq qqLqLLLL LSLLLLL SALLqLSLqSqSqqSACSSqAqALLqAqSAAAqqq SSLLLLSAAALLSSLS qLLLLLS
ilustrations details: (e.g. Maps, Photos, Tables, Plates etc)
Price in Original Currency: (eg. Indian Rupees 25. Canadian $3 etc.)
Size in cm.: (eg. 18x12.5 cm)
X aw ww~”•w+•"~'..''mዔ፡~‹ »“፡‹ '' ' , •፡ ››**xvv‹‹“»v v” ዮ➢x.ሥ.vxt 's.ኣ.~ “... “ “”ኑ•ሙ*•“o .............“•**“ሡ
Brief description or content of book:
(Please continue in next page)
329

Page 179
தொடர்புகளுக்கு:
த.ஜெயபாலன் ஆசிரியர்.
முகவரி: T.Jeyabalan Thesam Publications P.O.Box 35806 London E11 3JX United Kingdom
Tel. O208 2790354
ஆண்டு சந்தா: ஸ்டேர்லிங்
பவுண் 10 ( ஆறு இதழ்களுக்கு)
330
 
 
 

அப்பாலும் விரிகின்றது வேற்றுமைச் சுழல் அணையாது எரிகின்றது, நெஞ்சினுள் தழல் ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் எழும் தமிழ்.
உலா, வண்ணச்சிறகு, மகரந்தம், நூல் நயம், நூல்தேட்டம். எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட திறக்கும் கதவங்களுடன் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இணையத்தளம்
உங்கள் வரவு நல்வரவாகுக!
appaal-tamil.Com
331

Page 180


Page 181
G 5 FTgJbiiL I Tiff UII ii
நூலகவியல்துறையில் 1976ஆம் ஆண்டுமு: ஈடுபட்டுவரும் திரு. என். செல்வராஜா, ஈழ: நூலகவியல்துறையிலும், வெளியீட்டுத்துரை லும் நன்கு அறிமுகமானவர்.
தாயகத்தில், சான்னாகம் இராமநாதன் கல்லு யில் தன் நூலகப்பணியை ஆரம்பித்த இக் பின்னர் பாழ். சர்வோதய மத்திய நூலக இவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டிய நிறுவன நூலகம், இனத்துவ ஆய்வுக்க சர்வதேச நிலையத்தின் கோழும்புக் கிளைய நூலகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
அயோத்தி நூலக சேவைகள் நிறுவனத் தாபகரான இவர், அந்நிறுவனத்தினூடாகப் நூலகவியல்துறை சார்ந்த நூல்களை sெ யிட்டிருந்தார்.
நூலகவியல், நூல்தேட்டம் ஆகிய இநசஞ்சி களினதும் பிரதம ஆசிரியராக இருந்தது. கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும், ஆr நூலகர் கைநூல், உருமாறும் பழமொழி யாழ்ப்பானப் பொது நூலகம் ஒரு வரலார் Gedib, TobüLq. Selecled Bibliography { of Jerline': RLIII ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்
இலங்கையில் வெளியான 150 சிறப்புமலர்க 2002 கட்டுரைகளுக்கான சுட்டி ஒன்றை
அண்மையில் தயாரித்துள்ளர்,
ாழுத்து தமிழத் தேசிய நூலகம் பற்றிய இன் தாகத்தின் வெளிப்பாடே இந்த நூலாகும்.
ISSN 1477 - 4690
-പ്ര
 

ல்
juli பி
னின் IIL
նIITil
s
|-
f
은
*