கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2000.06

Page 1
|-|T FT-──── 디"-T 「미구의 수「『디「.=============::=≡: -–)-======::= ===)============= | − −, .
|- |- No. = = ) {
 


Page 2
தமிழில் မျို முதன்முதலி DLU அகராதி
الثالثلا | All
 

4. Baldoon Road, Scarborough
(4 6) 321 - 1354 (416) 321-394.4
.aniaooT Han adalam

Page 3
5IT6lb 13
2OOO
வாழும்தமிழ் சிறப்பிதழ்
ஆசிரியர் செல்வம்
ஆலோசனை என். கே. மகாலிங்கம் அ. கந்தசாமி
வடிவமைப்பு டிஜி கிராபிக்ஸ் அன்ட் ஸ்ரூடியோஸ்
வெளியிடுபவர்
குமார் மூர்த்தி
அட்டையில் ஓவியர் அ. மாற்கு
AR. Pathmanaba Iyer 27-9 high Street 1Plaistozv Londom E13 0241D Les 02084715636
Kalam P.O. BOX 7305 509 St. Clair Ave. W Toronto, ON M6C 1CO
Canada.
WWW.tamibook. COm tbook Gyesic.com
நேற்றுப்
தசாபதக என்ற ெ என்கிற அளவுக் கேள்வி
தற்காலி எண்ண
OG)6)&656 பிறந்த ( சிறந்தன இலக்கிய எழுதப்ட
தமிழ் சு வடவோ தென்துரு பரப்பில் விழுந்த
வாழவை வழிகளி இலக்கிய சங்கங்க அர்ப்பன அர்ப்பன்
சாமானி
ஆனால் ஒன்றுன
எதுவும
இதுவ.ை தான் இ இது தமி
அடையு. இலக்கிய
சாதனை வாழ்வும் செய்யப்
 

புலம் பெயரா மனமும் புகலிட இலக்கியமும்
போல இருக்கிறது. ஏறத்தாள இரண்டு கள் உருண்டோடி விட்டன. தமிழ் இலக்கியம் பெருங்கதையாடலில் இன்று புகலிட இலக்கியம்
பதம் முதன்மைப் படுத்தப் படுகின்றது. அந்த கு புகலிட இலக்கியம் சாதித்தது என்ன? என்பது பாக குத்திட்டு நிற்கின்றது.
கமாகவோ நிரந்தரமாகவோ தப்பித்தோம் என்ற த்தோடு தான் கடலைக் கடந்தோம். ளையும் கடந்தோம். ஆனால் “பெற்ற தாயும் பொன்னாடும் நற்றவ வானிலும் நனி வே” என்பதற்கமைய இதுவரை வந்த புலம்பெயர் பம் எல்லாம் அதற்குச் சாட்சியாகவே
ாட்டள்ளன.
உறும் நல்லுலகம் என்பது இப்போது ங்கடம் தென்குமரி அல்ல. அது வடதுருவம் ருவம் என விரிந்து விட்டது. தமிழறியா இப்பெரும்
ஒவ்வொரு தேசத்திலும் துளிப்பொறியாக ஈழத்தமிழர் தங்கள் மொழியையும் மொழி சார்ந்த பயும் துடிப்போடு காப்பாற்றுவதற்காக பல்வேறு ல் வானொலியாக, பத்திரிகையாக, சஞ்சிகையாக,
முயற்சிகளாக, பாடசாலைகளாக, கோயில்களாக, ளாக, இணையத்தளங்களாக தங்கள் உழைப்பை ணத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 3ணிக்குப் பின் இருப்பவர்கள் வெறும்
யர்களே.
நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம் ண்டு. அதுதான் புலம்பெயர்ந்த இலக்கியத்தில் நாம்
பெரிதாகச் சாதித்துவிடவில்லை என்பது. ர காலமும் தமிழ் இலக்கியம் என்ற சூழலுக்குள் }ப் புலம்பெயர் இலக்கியம் கட்டுண்டு கிடக்கிறது.
ழில் இலக்கியம் என்னும் நிலைக்கு பரிமாணம் ம்போது தான் -ஆங்கில இலக்கியம், ஆங்கிலத்தில் பம் ஆகியதைப் போல- புலம்பெயர் இலக்கியம்
நிலையை எட்டும். அத்துடன் இன்றைய ) எமக்குப் பின்வரும் வாழ்வும் தமிழில் பதிவு படும்.
வாழும் தமிழ் 2000 காலம் - R --

Page 4
நண்பர்கள் எனக்காகக் கொண்டு வந்திருந்த சிப்பிகளை என் முன்னால் கொட்டியபோது சிலிர் என்று எழுந்த சத்தத்துடன் மனதின் ஒரு மூலையில் புதைத்து வைத்திருந்த அந்த இனிய நாட்களின் நினைவுகள் எழுந்து வந்தன. அவை மாற்கு மாஸ்ரரிடம் ஒவியத்தையும் வாழ்தலையும் கற்ற நாட்கள். ஒவியம் கற்பித்தலுடனே இயற் கையையும் வாழ்க்கையையும் ரசிக்கப் பழக்கித் தந்தார்.
விதம் விதமான சிப்பிகள். பழைய கலைப் பொருட்கள், விலங்குளின் முள்கள், எலும்புகள், நாணயங்கள், கற்கள், பூனைகள், நாய்கள் போன்ற மிருகங்கள், தாவரங்கள் என்று பலவகைப் பொருட்களால் வீடு ஒரு குட்டி நுாதனசாலையாகவே நிரம்பி வழியும். வாழ்க்கை முழுவதும் சேகரித்த இந்தப் பொருட்கள் அனைத்தையும் 1995 இடப்பெயர்வில் விட்டுப்
-Դ- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 

வாசுகி
போக நேர்ந்தபோதும் தற்காலிகமாக இருந்த இடங்களிலும் அவரது சேகரிப்புத் தொடர்ந்து இன்னும் மன்னாரில் தொடர்கிறது.
இந்தப் பொருட்களின் அழகை, லயத்தை ரசிப்பதில் அவற்றுள் உள்ள உருவத்தை அடை யாளம் காண்பதில் எமது கற்கை ஆரம்பிக்கும்.
ஒவியர் மாற்கு 1933 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்தார். இவரது தாயின் பெயர் வரோனிகா. தந்தையின் பெயர் ஹேரத் முதியான்சலாகே அப்புஹாமி. குருநகரிலிருந்த போது இவரது வீட்டுக்கு அருகில் வசித்தவர் திரு ராஜேந்திரன் என்னும் பெயருள்ள சீமெந்தில் கிறிஸ்தவ சிலைகள் வடிப்பவர். சிறுவயதிலிருந்தே மாற்கு இவற்றைப் பார்ப்ப திலும் தானும் அதுபோல் செய்வதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார். பின்னர் யாழ்ப்பாணம் சென்ற் பற்றிக்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற காலத்தில் உருவங்கள் வரைவதில் இவருக்கு இருந்த

Page 5
ஆர்வத்தைக் கண்ட அதிபர் வண. ஜெயக்கொடி அவர்கள் நுாலகத்திலிருந்த ஒவியப் புத்தகங்களை இவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தக் கட்டத்தில் ஒவியர் பெனடிக்ற் அவர்கள் குருநகரிலிருக்கும் சென்ற் ஜேம்ஸ் கல்லுாரியில் ஒவிய வகுப்புக்களை நடாத்தி வருகிறார். மாற்குவுடன் 15 மாணவர்கள் இங்கு ஒவியப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டனர்.
பாடசாலைக் கல்வியை எஸ்.எஸ்.சியுடன் முடிக்கும் நேரத்தில் கொழும்பிலுள்ள தொழில் நுட்பக் கல்லுாரியில் ஒவிய டிப்ளோமா பயிற்சி நெறி நடப்பதுபற்றி இவருக்குத் தெரிய வருகிறது. ஆனால் குடும்பத்தினரோ இவர் வேலைக்குப் போவதையே விரும்புகின்றனர். இவ்வாறாக இரண்டு தடவை இவரது பயணம் தடைப்பட்ட பின் அந்நேரம் கொழும்பிலிருந்த இவரது ஒன்றுவிட்ட சகோதரனின் ஒத்துழைப்புடன் பகுதிநேரக் கற்கை நெறியாக ஒவியத்தைப் பயில கொழும்பு தொழில்நுட்பக் கல்லுாரியின் ஒவியப்பிரிவில் இணைகிறார். (இதுவே இலங்கை நுண்கலைக் கல்லுாரியாகப் பின்னர் மாற்றப் பட்டது) பின்னர் ஆர்வம் காரணமாக முழுநேரக் கற்கைநெறியைத் தொடர்ந்தார்.
கொழும்பு தொழில்நுட்பக் கல்லுாரியில் மாற்கு அவர்கள் கல்விகற்ற காலத்தில் அங்கு ஜே.டி.ஏ. பெரேரோ அதிபராகவும் திரு டேவிட் பெயின்ரர் விரிவுரையாளராகவும் இருந்துள்ளனர். ஒவியம் கற்கையில் மாற்கு காட்டிய இடையறா ஈடுபாடும் திறமையும் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டிற்கு நேரடி உயர்வைப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன், மேலதிகமாக உயர்கற்கை நெறியையும் கற்கிறார்.
இங்கு கல்வி கற்கும்போதே தனக்குப் பிடித்த மானதும் மிகவும் பாராட்டப்பட்டதுமான கழுவுதற் பாணி நீர்வர்ன ஒவியங்களை ஆக்கத் தொடங்குகிறார்.
ஒவிய டிப்ளோமா கற்கை நெறியின் பின் ஒவிய ஆசிரியராக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரி யிலும் பின்னர் கொக்குவில் இந்துக் கல்லுாரி யிலும் பணியாற்றத் தொடங்குவதுடன் ஒவியராக மட்டுமன்றி ஒவிய ஆசிரியராகவும் இவரது வாழ்வு விரிவடைகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த வின்சர் ஒவியக் கழகத்துடன்

நவீன ஓவிய வடிவங்களை தமிழர்மத்தியில் ஒவியங்கள் மூலமும் கற்கை நெறியாகவும் கண்காட்சிகளாகவும் தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஒவியர் மாற்கு அவர்களே ஆகும்.
தொடர்பும் ஏற்படுகிறது. (வின்சர் ஒவியக் கழகம் 1938-1955) பின்னர் எம்.எஸ்.கந்தையா, சி. பொன்னம்பலம் போன்றோரும் மாற்குவும் 1959 இல் விடுமுறை ஒவியக் கழகம் என்கின்ற பாடசாலைக் கற்கை நெறிக்கு புறமான சுயமாக இயங்கும் ஒவியர்களைக் கொண்ட குழுவை தோற்றுவிக்கின்றனர். இது வெவ்வேறு அங்கத்தவர்களுடன் வெவ்வேறு இடங்களில் 1995 வரை யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்துள்ளது.
இலங்கையில் மரபுசார் ஒவியக்கலை வளர்ச்சி ஐரோப்பியர் வருகையுடன் தடைப்பட ஐரோப்பி யரது இயற்பணிபுவாத, நவீன ஒவிய மரபுகள் இலங்கைக்கு அறிமுகமாகின்றன. கலைக் கல்லுாரியின் மூலமும் கண்காட்சிகள் மூலமும் தலைநகர் மையப்பட்டதாக இது நடைபெற இங்கு கற்ற ஒவியர்கள் மூலமும் ஏனைய இடங்களுக்குப் பரவுகிறது. இவ்வாறே யாழ்ப்பாணத்திற்கும் தனிப்பட்ட ஒவியர்கள் மூலமும் வின்சர் ஒவியக் கழகத்தின் தோற்றத்துடன் (1938-1955) அமைப்பு ரீதியாகவும் ஐரோப்பிய ஒவிய மரபுகள் அறிமுகமாகின்றன.
இக்காலகட்டத்தில் ஒவியத்துறையில் ஈடுபட்ட எமது ஒவியர்கள் அனைவருமே ஐரோப்பிய இயற்பணி புவாத-பிரதிமை, பொருட்கட்ட, நிலைப் பொருட்கட்ட ஒவியங்களை தீட்டுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இவ்வாறு குறித்த விடயங்களைப் பற்றி மட்டும் பேசக் கூடிய இயற்பணி பு வாதத்திலிருந்து உலகினதும் வாழ்வினதும் பல் வேறு பரிமாணங்களை பல்வேறு விதமாக வெளிப்படுத்தக்கூடிய நவீன ஒவிய வடிவங்களை தமிழர்மத்தியில் ஒவியங்கள் மூலமும் கற்கை நெறியாகவும் கண்காட்சிகளாகவும் தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஒவியர் மாற்கு அவர்களே ஆகும்.
ஒவியர் மாற்கு பலவகையான வர்ணங்களி
னாலும், ஊடகங்களாலும் வெளிப்படுத்தக் கூடிய
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -3-

Page 6
燦
சாத்தியமான பல தளங்களில் தனது எண்ணங்
களை வெளிப்படுத்துவதன் மூலம் தனது ஒவியங்க ளைப் படைக்கிறார்.
அவரது ஆரம்பமான நீர்வர்ண ஒவியங்கள் நீர்வர்ணத்தின் இரகசியமான அற்புதமான பக்கமொன்றுக்கு நம்மை இட்டுச் செல்வன. கருப்பொருளாக கிறிஸ்தவ கதைகள் கூடுதலாக இடம் பெறுகின்றன. கடதாசியில் நீர்வர்ணம் கொண்டு தீட்டப்படும் உருவங்கள் மீண்டும் மீணடும் கழுவப்படுவதன் மூலம் கடதாசியில் சாயமேற்றப்பட்டது போன்றும் வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கரைந்து இருண்ட மண்ணிறம் அல்லது கருநீல சாயலுடையவனவாகத் தோன்றக்கூடிய வகையில் ஆக்கப்பட்டுள்ளன. இவ்வகை ஒவியங்களின் ஆரம்ப காலத்தில் உருவங்கள் பின்னணியிலிருந்து தெளிவாக வரையறுக்கப்படாமல் கரைந்தும் கரையாததுமாக தோன்ற பிற்காலத்தில் படிப்படியாக உருவங் களின் வெளிவரைகள் தெளிவாகத் தொடங்கி பின்னர் இவையே மாற்குவின் ஒவியங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கட்டத்தில் ஊடகத்திலும் மாற்றமேற்படுகிறது. நீர்வர்ணத்தி லிருந்து சுணர்ண வர்ணம் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாற்கு மனிதரதும் விலங்குகளினதும் உடலமைப் பில் கூடிய ரசனை கொண்டுள்ளார். உயிர்களின்
3 - வாழும் தமிழ் 2000 காலம் -4۔
 

உடலமைப்பு அனைத்துமே ஏதோவொரு வகையில் லயமும் சந்தமும் உடையவை. ஒன்று டனொன்று ஒத்திசைவானவை என்றும் நம்புகின்றார்.
தமிழர் வாழ்வின் நிகழ்வுகளான காவடி, நாதஸ்வர கச்சேரி, பெண்கள் போன்ற விடயங்களுடன் புரான இதிகாசக் கதைகள் இயற்கை நிகழ்வுகள் என இவரது கருப் பொருட்கள் விரிவடைகின்றன.
இயற்கை நிகழ்வுகளான அலை, மின்னல், முகில் போன்றவற்றை, இராகங்களுக்குரிய விளக்கங்கள் அனைத்தையுமே மனிதரதும் விலங்குகளினதும் உருவங்களுடாக அவற்றின் லயத்தினுாடாக வெளி ப்படுத்துகிறார். இங்கு உருவங் களின் வெளிவரைகள் (outines) முக்கியத்துவம் பெறுகின்றன. நேர்கோடுகளும் வளைகோடுகளும் உருவங்களின் அமைப்பிற்கேற்ப அழுத்தம் பெறுவதின் மூலம் அவற்றிலுள்ள லயத்தை ஒத்திசைவை வெளிப் படுத்துகின்றன.
கோடுகளின் -ரேகைகளின் பல்வகைப்பட்ட தன்மைகளையும் இவர் பரீட்சித்து பார்த்திருப்பது ரசனைக்குரியது. அடுத்த கட்டமாக உருவங்களின் லயத்தினுள் மட்டும் அடங்கி விடாது ரேகைகள் திமிறி வெளியேறுகின்றன. இது உருவங்களின் அசைவை அதிர்வை வெளிப்படுத்துவதுடன் ஒவிய வெளியையும் நிரப்புகின்றன.
இவ்வாறு ரேகைகளை சுயாதீனமாகக் கையா ளுவதற்கு மிகவும் வசதியான ஊடகமாக ஒவியர் மாற்குவிற்கு சுண்ண வர்ணங்களே (pastes) அமைகின்றன. எனினும் எண்ணெய் வர்ணம், நீர்வர்ணம், மை போன்ற இன்னோரன்ன
ஊடகங்களாகவும் பாவிக்கிறார்.
இங்கு ஒவியர் மாற்குவின் தன்னுருவப் பிரதிமை ஒவியங்கள் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும். ஒருவரை அச்சாகப் புகைப்படம் போன்று பிரதிபண்ணல் என்ற தன்மையிலிருந்து மாறுபட்டு அவரின் இயல்பையும் தனித்துவத்தையும் காட்டி நிற்பவை. மாற்குவின் ஏராளமான ஒவியக் குவியலுக்குள் மறைந்து கிடக்கும் இவை அவரது

Page 7
இளமைக் காலம் தொட்டு இன்றுவரையான
பல்வேறுபட்ட தோற்றங்களை அந்தந்தக் காலப் பகுதியில் அவர் பாவித்த பல்வேறுபட்ட
ஊடகங்களால் வெளிப்படுத்துபவை.
கருப்பொருள் ரீதியாகவும், பாணியிலும் ஏற்கெனவே புழக்கத்திலிருந்த முறைகளுக்கு மாற்றாக பல விடயங்களைப் பரீட்சித்து
அறிமுகப்படுத்திய மாற்கு ஒவியத்தை ஆக்குவ
தற்கான ஊடகங்களிலும் பலவகையான பொருட்
களைக் கையாண்டிருக்கிறார்.
கன்வஸ், நீர்வர்னத்துக்குரிய கடதாசி, எண்ணெய் வர்ணம், நீர்வர்ணம், சுண்ண
வர்ணம் போன்றவற்றுடன் கரி, சுண்ணாம்பு
பிறின்ரிங் இன்லா, கொப்பித்தாள், பத்திரிகைத்
தாள் என்பவற்றில் தொடங்கி பலகை, மேசை,
கதவு, சுவர் என அவரது ஒவியம் தீட்டு
பொருட்களின் பட்டியல் விரியும்.
எண்ணெய் வர்ணமும், கன்வசும் இல்லாவிடில் ஒவியம் வரைய முடியாது. அல்லது, இவற்றால் வரையப்படாதவை ஒவியங்களல்ல என்றிருந்த எம்மவரின் மனநிலையை மாற்றி ஒவியனது
 

உணர்வுகளுக்கும் கற்பனைக்கும் ஊடகம் தடையாக இருக்க முடியாது என்பதை உணர்த்தியவர். அதிலும், போர்க்கால சூழலில் பொருளாதாரத் தடை எல்லாப் பக்கங்களாலும் சூழ்ந்து வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறிய காலத்தில் i f'T PE 7603)6) Öff 68 Goff SG சாதாரணமாகப் பாவிக்கும் சுண்ண வர்ணங்களோ, வெள்ளைக் கடதாசிகளோ கூடக் கிடைக்காது போன காலத்தில் வீடுகளில் பரணர்களில் கிடந்த பழைய சீனச் சஞ்சிகைத்தாள்களையும், கலனர்டர் படங்களையும் எடுத்து அவற்றிலுள்ள வர்ணங் களை மீள உருவமைப்பதன் மூலம் தனது ஒவியங்களாக்குகிறார். அடக்குமுறையோ தடையோ அதிகரிக்க அதிகரிக்க ஒவியர் மாற்கு படங்களாக கீறிக் குவிக்கும் வேகமும் அதிகரிக்கும்.
யாழ்நகரைப் போர் சூழ்ந்து வந்த காலத்தில் சில மூத்த கலைஞர்களும் இளையவர்களும் போருள் வாழ்தலை தம் கலைகளில் வடிக்கத் தொடங்கு கின்றனர். மாற்குவும் தனது போர்க்காலப் பொருளாதாரத் தடை வாழ்க்கை போன்றே பேனாவாலும் மிகச் சில சந்தர்ப்பங்களில் ஒரிரு வர்ணங்களாலும் ஆக்கப்பட்டவை. உடல்கள் முறுகியும் திரும்பியும் வாழ்தலின் அந்தர நிலையை வெளிப்படுத்துபவை.
போர் விமானங்கள் சூழப்பறக்க, குண்டு மழை பொழிய, அதிகமான நேரங்கள் குழிகளுக் குள்ளேயே கழிய, எஞ்சிய நேரத்தில் மாற்குவைப் பார்க்கப்போனால் வாழ்தலில் நம்பிக்கை ஊட்டும் படியாக போரால் வாழ்க்கை சலித்துப் போகாதிருக்கும்படியாக அவர் புதிதாக ஏதாவது வரைந்தோ செதுக்கியோ வைத்திருப்பார்.
ஒரு சிறுதடியோ எலும்போ தேய்ந்துபோன சைக்கிள் பெடல் கட்டையோ பனங் கொட்டையோ எதுவாயினும் பல சமயங்களில் சிதறி விழும் ஷெல் துண்டுகள் கூட மாற்குவின் கண்களில் உருவங்களாகி தமது இயல்பை மாற்றி மாற்குவின் படைப்புக்களாக மாறி விடும்.
இந்த ஒயாத நீண்ட காலத் தேடலில் சேர்த்தவை அனைத்தையுமே விட்டு விட்டு இடம் பெயர்ந்த பொழுதும் உடலில் நரம்புகளை நோய் தாக்கி யிருந்த வேளையிலும் கிளாலியில் பற்றைக் காடுகளுள் திரிந்து காட்டுத்தடிகளை வெட்டி தனது நினைவிலிருந்த நண்பர்களுக்காக எல்லாம் ஊன்றுகோல்கள் செதுக்கி வைத்திருந்தார்.
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -5-

Page 8
எங்களுக்காகவும் (மாணவர்கள்) என்று அதிலி ருந்தது.
மீண்டும் வண்ணிக்கு இடப்பெயர்வும் நோயும் அதிகரித்து தலையில் சத்திர சிகிச்சையின் பின் கால்களுடன் ஒயாது வரைந்து கொண்டிருந்த கைகளும் இயங்காமல் போன பின்னரும் மாற்கு ஒயவில்லை. நடக்க முடியாவிடினும் கைகளுக்கு சலியாத பயிற்சி கொடுத்ததின் மூலம் மீண்டும் கீறத் தொடங்கி உள்ளார். இப்பொழுது அவர் ஒவியங்களை ஆக்குவதற்காகத் தெரிந்தெடுத்துள்ள பின்னணி பெட்டி அட்டைகள் (corrugated boards) ஆகும். இத்தனை வருட உழைப்பில் படைத்தவை எதுவும் அவரது கைகளில் இன்று இல்லாத காரணத்தால் அவை அனைத்தையும் மீண்டும் ஆக்கிவிட வேண்டும் என்ற வேகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இயங்க முடியா திருந்த கைகளால் மீணடும் அவர் வரையும் இந்த ஒவியங்களும் அவரது ரேகைகளும் பழையனவற்றையே ஞாபகப்படுத்தினும் நம்பிக்கை ஊட்டுவன. முக்கியமாக இவற்றை அவர் துரிதமாக மீண்டும் படைப்பதன் நோக்கம். இன்று தன்னிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இந்தப் பல்தன்மை கொண்ட உத்திகளும் வடிவங்களும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.
பாடசாலையில் சித்திர ஆசிரியராக இணைந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக ஏராளமான மாணவர்களுக்கு ஒவியம் கற்பித்ததுடன் மட்டுமன்றி பாடசாலைக்கு வெளியேயும் நீண்ட காலமாகத் தொடர்ந்து ஒவியத்தில் ஆர்வம் கொண்ட பலதரப்பட்ட பலவயதினருக்கும் ஒவியம் கற்பித்து வந்துள்ளார்.
ஒவியராக மாற்கு பலதளங்களிலும் தனது கற்பனையை விரித்தது போன்றே ஒவிய ஆசிரியராகவும் மாணவர்களதும் கற்பனையை, ஆற்றலை வளர்ப்பதில் όσεις-ιμ கவனம் எடுத்திருக்கிறார்.
தமது உணர்வுகளை சிந்தனையை ஒவியமாக வடிப்பதற்கு அடிப்படையான வெளியிலுள்ள பொருட்களை, நபர்களை, காட்சிகளை அவ்வாறே பார்த்து வரையும் பொருட்கட்ட பிரதிமை, நிலவுருவக் காட்சி ஒவியங்களில் தொடங்கி கருப்பொருட்களையும் பற்றிச் சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் கூடிய வகையில் பயிற்சியை
-5- வாழும் தமிழ் 2000 காலம் - 13

வழங்குகிறார். மேலும் ஒவிய வடிவ ரீதியாகவும் ஊடக ரீதியாகவும் வேறுவேறுபட்ட பலதையும் அறிமுகப்படுத்துவதன் மூலமும் மாணவர்கள் தமக்கு வாலாயமான முறைகளைத் தெரிவு செய்து கொள்ளவும் வழி செய்கிறார்.
அவரது பலவிதமான சேகரிப்புப் பொருட்கள் போன்றே அவரது மாணவர்களும் 6 விதமானவர்கள். சுண்ணக் கட்டியை கையில் பிடிக்கத் தெரிந்தவுடன் நானும் படம் கீறப் போகிறேன் என்று புறப்பட்ட அவரது பேத்தி முறையான குழந்தையில் தொடங்கி பலதரப்பட்ட வயதில் பெண்களும் ஆண்களும் -கவிஞர்கள், பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள், போராளிகள் என்று அனைவருக்கும் வர்ணங்களுடனும் கோடுகளுடனும் மட்டுமன்றி இயற்கையுடனும் சக மனிதர்களுடனும் சிநேகிதமாக இருக்கக் கற்பித்தார்.
நிறைய இடங்களுக்கு அழைத்துச் செல்வார். நிறையப் பேரை அறிமுகப்படுத்துவார். நிறைய கதைகள் சொல்வார். பாடசாலை ஆசிரியப் பதவியிலிருந்து ஒய்வுபெற்ற பின்னர் வீட்டில் ஒவியம் கற்பித்தலே அவரது முழுநேரத் தொழிலாகிற்று. பணமோ, பிரதியுபகாரமோ எதிர்பாராது இந்தக் கற்பித்தல் இன்றும் தொடர்கிறது. இதனால் அவருள்ளிருந்து ஒவியருக்கான நேரம் நிறைந்து ஒவிய ஆசிரியருக்காகவே கூடிய நேரத்தை செலவிடுகிறார்.
இவ்வாறு எமது சமூகத்தில் தனிநபர்களுக்கு ஒவியம் கற்பதிலும் ஒவியர்களாக வாழ்வதிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் மட்டும் நின்றுவிடாது சமூகத்தின் மத்தியில் ஒவியர்களைப் பார்த்து, ரசித்து, மதிப்பதற்கான அறிமுகத்தை ஏற்படுத்துதிலும் ஈடுபடுகிறார். ஒவியக் கணி காட்சிகளிலே தனது மாணவர்ளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் முன்னிற்கிறார்.
OOOடு

Page 9
கடலும் மலையும் மழைக்காடுகளும் சேர்ந்திருக்கும் ஒரு அற்புத உலகத்தில் மிக மென்மையான குளிரில் தரையில் நிற்கிறேன் என் காலடி ஈரம்
பெருக்கின்போது கடல் வந்து போன உயிர்ச் சுவடுகள் மணற் கோலங்களாகக் கிடக்கின்றன இப்போதும் புதிதாக
மெல்ல மெல்லக் கடலை மூடிக் கொண்டு வருகிறது
ஒரு பெரும் புகார் கடல் எது வானம் எது நிலம் எது என்று தெரியாத ஒரு மந்திரப் பொழுது பிறக்கிறது அப்பொழுது வழி தெரியாமல் தத்தளிக்கப் போகும் தோணிகளுக்குக் குரல் காட்டத் துறைமுகச் சங்கு விட்டு விட்டு முழங்குகிறது
பெரும்புகார் இப்போது மலைகளையும் மழைக்காடுகளையும் மூடுகிறது
கொலம்பஸின் கோடரிக்கும் தப்பி ஆயிரம் வருடங்களாக ஒங்கி நிற்கும் இந்த நானுாறு அடி உயரச் சீடார் மரத்தைப் புகார் மூட முயல்கிற போது யுத்தம் எழுமோ என்று தோன்றியது
 

ஒன் ஸ்டு பிரமீ
ரன
ஆனால் அனுபவம் புடமிட்ட நிறைவின் புனிசிரிப்புடன் பெருமரம் புகாரைத் தழுவிக் கொள்கிறது நான் கீழே நிற்கிறேன்
காடுகளின் உயிரைத் தன் வேரிலும் காற்றின் ஆத்மாவைத் தனி முடியிலும் சுமந்து நிற்கிறது இப்பெருமரம்
வார்த்தைகள் இல்லாவிட்டாலும் அதன் மூச்சில் இருக்கிறது வரலாறுகளின் பேச்சு
பொறுமையில் மலைகளையும் பூமியையும் புறங்கண்ட பிற்பாடு வெறி கொண்ட காற்றைச் சாடுவதற்கு ஒரு சிறு கிளையை மட்டுமே வீசி எறிகிறது பெருமரம்
அதன் கீழ் வெட்டரிவாளுடன் மானுடத்தின் சிறுமை
(Oஇடுடு

Page 10
அழகு பற்றியும் அவலட்சணம் பற்றியும், நிறையப் பிரச்சினைகள் எமக்கு. இரண்டையும் இருவேறு எதிர்நிலைகளில் நிறுத்தி விட்டு, நடுவில் நின்றுகொண்ட சிதைவு, விகாரம் என்று நிகழும்போது, இதுவெல்லாம் அழகுக்குப் புறம்பான விஷயங்கள் என்று சலிப்புடன்
விலகிவிடுவோம்.
இது பிழை!
ஒரு நல்ல ஒவியனுக்கு அழகு, அவலட்சணம் என்று எதுவும் கிடையாது அழகானதிலும் கோரம் இருக்கும், கோரமானதிலும் அழகு இருக்கும். திரிபு, சிதைவு, விகாரம், இவை யெல்லாம் அழகின் வெவ்வெறு நிலைகள் தான். எல்லாச் சிதைவுகளிலும், விகாரத்திலும் அடிப் படையில் ஒரு அழகு இருக்கும். இந்த அழகு எவ்வளவு தூரம் சிதைக்கப்பட்டது, எந்தளவுக்கு விகாரமாக்கப்பட்டது என்பதெல்லாம் ரசிகர்கள்
கண்டு பிடிக்கவேண்டியது.
பிக்காஸோகூட ஒரு முறை தன்னுடைய செயலாளரிடம் கேட்டாராம், “அழகின் எதிர்மறை என்ன என்று உமக்குத் தெரியுமா? நான் நினைக்கிறேன், அப்படி ஒன்றும் இல்லை என்று.
அது சரி, இந்த ஒவியர்களுக்கு, குறிப்பாக நவீன ஒவியர்களுக்குச் சிதைவு, விகாரம் இவற்றில் எல்லாம் ஏன் இவ்வளவு ஈடுபாடு? எல்லாவற் றையும் திரிப்பதில், சிதைப்பதில், விகாரப் படுத்துவதில் அவர்களுக்கு ஏதும் திருப்தி இருக்கின்றதா? மனிதரை மனிதராய்க் கீறாமல்
-8- வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

துண்டுபோட்டு, பகுத்து, சிதைத்து என்னபாடு படுத்துகிறார்கள்? எதற்காக இது?
இன்று - நான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கிய, 87இன் சித்திரை மாதத்து 23ஆம் திகதியாகிய இன்று எந்திரப்பறவை குனிந்து, குண்டுகளை எறிகின்றது. துண்டுகளாய்ச் சிதறி, மாண்டு போகின்றனர் மக்கள். . . இரத்தமும் சதையுமாக . . நாங்கள் பார்த்த, ரசித்த, பழகிய எமது சகஜீவிகள், துண்டுகளாய். வெறும் சதைத் துணர்டுகளாய்ச் சிதறுண்டுபோகிறார்கள்.
இதைவிடச் சிதைவு ஏதாவது? இதைவிடத் திரிபு அல்லது, விகாரம் வேறு ஏதாவது?
இல்லை! இதுதான், இதைத்தான் கீறுகிறான் நவீன ஒவியன்! சூழலின் பாதிப்புத் தவிர, புதிதாய் எதுவும் இல்லை.
I “நான் தேடுகின்றேன். கண்டுபிடிக்கின்றேன். கீறுகின்றேன். நீங்களும் தேடுங்கள். கண்டுபிடியுங்கள். ரசியுங்கள்." இது, மாற்கு அடிக்கடி சொல்லுவது.
உண்மை!
இதுதான் அடிப்படை சிருஷ்டி நிலையிலும் சரி, ரசிக நிலையிலும் சரி அடிப்படை தேடல். ஒவியனும் தேடுகிறான். எந்தக் கோடு எங்கு தொடங்கி, எப்படி முடிவுறும் என்பதை எந்த

Page 11
இடத்தில் வளையும், அல்லது முறியும் என்பதை நுட்பமாகத் தேடுகிறான். பிறகு கீறுகிறான்.
சிருஷ்டியின் அடிப்படை, உள்ளொருங்கிய தேடல்.
தேடலின் ஆழம் கூடக்கூட, சிருஷ்டியின் தரமும் அதிகரிக்கும்.
துாரிகையின் மொழி சிக்கலானது வித்தியா சமானது. ஒவ்வொரு கோட்டுக்கும், ஒவ்வொரு நிறத்துக்கும் தனித்தனி அர்த்தங்கள், குணங்கள் இருக்க முடியும். இதுபற்றிய புரிதல்கள் இன்றி, ஒரு ஒவியத்தை ரசிப்பது சிரமம். விமர்சிப்பது சுத்த அபத்தம்.
‘எல்லோரும் கீறக் கூடியது, ஆனால் எல்லோருக்கும் புரியாதது! இதுதான் நவீன ஒவியம்” என்று விவஸ்தைகெட்டுப் பேசுவது இன்னும் அபத்தம்.
இப்படியிருக்க, புரட்சியும்கூட ஒரு நீண்டகாலத் தலைமுறையின் உன்னதமான தேடல்தானி என்பதை, எப்படிப் புரியவைப்பது?
2. மாற்குவின் முகமிழந்த மனிதர்கள்
பிரமைகளும், பாவனைகளும், தேவையற்ற பழைய பெருமைகளும் செறிந்த இந்தச் சமூகப் பரப்பில், தங்களுக்குரிய தனித்தனி அடையா
 

ளங்களை இழந்து நசுங்குண்ட மனிதர்களுக்கு முகங்கள் இருக் காதுபோலும்.
அதுதான் மாற்குவின் ஒவிய மாந்தர்கள் நிறையப்பேருக்கு முகங்கள் கிடையாது. இந்த முகமிழந்த மனிதர்களை, பெரும் பாலும் உருண்ட, திரண்ட தலை களையும், பிற அவயவங்களை யும் உடையவர்களாக மாற்கு சித்திரிக்கிறார். இந்த வடிவங் களில் ஒளிவிழத் தவறிய பகுதி களை இருள் விழுத்திக் காட்டு கிறார். இதனால் வடிவங்களில்
கனபரிமாணம் ஏறுகிறது. இயல் புக்கும் மீறிய வளர்ச்சி முனைப் பாகத் தெரிகின்றது.
கடுமை தெறிக்கும் நிறங்களில் மாற்குவிற்குப் பிரி யம் அதிகம், சேர்கிலைப் போல. ஆனால் சேர்கிலிடம் (Amirtha Sher Gil) G)udaöaS? uu சோகத்தின் சாயல் எப்பொழுதும் இருக்கும். கறுப்பு - பொதுவாக அச்சம், துக்கம். இவற்றின் குறியீடாகத்தான் தொழிற்படுவதுண்டு மாற்குவிடம் இப்படி இல்லை.
இவரிடம் கறுப்பு, துயரத்தின் குறியீடாய் அல்ல, வீரியத்தின் குறியீடாய் நிற்கிறது, எமது நிலத்தின்
பனைகளைப் போல.
கரியதும், பெரியதுமான எமது பனைகளில், அவற்றின் விறைப்புக்கும் உறுதிக்கும் உரம் சேர்ப்பதாகவே கறுப்பு தொழிற்படுகிறது. பனை களின் நிமிர்வும் விறைப்பும், வாழத்துடிக்கும் ஆவேசத்துக்கும், வாழ்வின் மீதான விசுவாசத் துக்கும் ஒரு குறியீடாகவே சொல்லப்படுவதுண்டு மாற்குவின் மனிதர்களிடமும், முகங்களை இழந்த பிறகும், வாழமுனையும் தீவிரம் வெளித்தெரிகிறது.
இந்த முகமிழந்த மனிதர்களை, ஒவியங்களில் வாத்தியம் வாசிப்பவர்களாயும், காவடி சுமப்பவர்
களாயும், உதிரிகளாயும் காணமுடியும்.
பிந்திய நிலைகளில், இந்த முகமிழந்த மனிதர்களிடம் உருண்ட, திரணிட தன்மைகளை விடவும், தட்டையான, நசுக்கப்பட்டது போன்ற
தன்மைகள் தூக்கலாய்த் தெரிகின்றன. கிட்டத்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -9-

Page 12
தட்ட தகடுகளில் வெட்டி எடுக்கப்பட்டு மெல்லிய
ஒத்திசைவுடன் வளைத்துவிடப்பட்டது போல் ஒரு தோற்றம். இடியும் மின்னலும்’, ‘நடனம்” போன்ற ஒவியங்கள் நல்ல உதாரணங்கள்.
3 மாற்கு நிறையப் பரிசோதனைகள் செய்திருக் கிறார். இளம் மாற்கு, தனது மங்கல் பருவத்தில் நீர் வர்ணங்களைப் பாவித்து உருவாக்கிய கழுவுதற் பாணி ஒவியங்கள் குறிப்பிடத்தக்கவை. நீர்வர்ணங் கொண்டு வரையப்பட்ட சித்திரத்தை நீரினால் கழுவும் போது நிறங்கள் படிப்படியாகக் கரையும். ஒவியர், தான் பெற விரும்புகிற தோற்றம் வரும்வரையும் வர்ணங்களை மறு படியும் பூசி, பிறகு கழுவுதல்வேண்டும்.
இந்தவகைச் சித்திரங்களின் விசேஷ குணம் இவற்றின் மங்கல் தன்மைதான். குறிப்பாக, தீவிர பிரகாசத்துக்கும் தீவிர இருட்டுக்கும் இடையில்
இந்த மங்கலான தன்மைக்கூடாக வர்ணச்
- O- வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

சமநிலையைப் பேணுவது சிரமமான காரியந் தான். மாற்கு இங்கு வெற்றிபெறுகிறார். இருந் தாலும் தனக்குரிய ஒரு தனியான பாணியாக, இதைத் தொடர்ந்தும் வளர்த் தெடுப்பதில் ஏனோ தீவிரம் காட்டாமலே இருக்கிறார்.
பிந்திய நிலைகளில் தன்னுடைய மங்கல்
பருவத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு நிற்கும் மாற்குவைத்தான் நாம் பார்க்கிறோம்.
அடுத்தது சாதனத்தை எளிமைப்படுத்தல்: பொதுவாக எல்லா ஒவியர்களும் வெறுமையாகக் கிடக்கும் சாதனத்தை நிறங்களாலும் கோடுகளாலும் நிரப்புகிறார்கள். இங்கு மாற்கு, ஏற்கனவே ஒரு நிறம் அல்லது நிறச்சேர்க்கை கொண்ட சாதனத்தில் தான் வெளிப்படுத்த விரும்பும் விஷயத்துக்குத் தேவையான பகுதிகள் தவிர மிஞ்சிய பகுதிகளை வேறு நிறங்களால் மறைத்துவிடுகின்றார்.
இந்தவகைச் சித்திரங்களுள் முக்கியமானது 'திருமுகம்" அமைதியும் சாந்தமும் பரவிய கிறிஸ்துவின் முகத்தில் எல்லாச் சீவன்களையும் இரட்சிக்கும் வழிகள் அற்புதமாய்ச் சுடர்கின்றன. இந்தச் சித்திரத்திலும் இருண்ட நிறங்களின் ஆதிக்கம் அதிகம். இங்கும் கூட கறுப்பு, தனது சராசரிக் குணத்தை இழந்து சுடரும் வழிகளுக்கு அழுத்தம் கொடுப்பது போலத் தொழிற்படுகிறது.
துயரத்தையும் மீறி இரட்சிப்புத் தெரிகின்றது. (இங்கு சாதனம் என்று கருதப்படுவது ஒவியம் கீறப்படுகின்ற காகிதத்தைத்தான்.)
இதற்கும் அடுத்ததாக, மாற்குவின் முக்கிய பரிசோதனை இராகங்கள் பற்றியது. ‘இராக மாலா' என்ற பெயரில் இந்தியாவில் மேற் கொள்ளப்பட்ட முன்முயற்சியைத் தொடர்ந்து மாற்குவும் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுகிறார்.
படிமங்களுள் விழ மறுத்து விலகி ஒடும் இசையின் விசேஷ அரூபத் தன்மையைக் கோடுகளாலும் நிறங்களாலும் தீர்மானிக்க முயலுவது பிரச்சினைக்குரிய ஒரு விஷயந்தான்.
மாற்கு இதில் வெற்றிபெற்றாரா?
இல்லை என்று சொல்ல முடியாது ஆனாலும் வெல்ல இன்னும் இருக்கிறது என்பது என்

Page 13
னுடைய அபிப்பிராயம். நான் நினைக்கிறேன், குறித்த இராகங்கள் மனதில் தூணி டிவிடும் உணர்வு நிலைகளை, அதே சமபலத்துடன் துாண்டிவிடும் ஆற்றல் இந்தக் கோடுகளுக்கும் நிறங்களுக்கும் இருக்கவேண்டும் என்று.
4. மாற்கு நிறையக் கீறியிருக்கிறார்!
காலத்துக்குக் காலம் வேறுபட்ட பிரக்ஞை நிலைகளை அவர் வெளிப்படுத்துகின்றார். இளம் மாற்கு பெருமளவில் கிறிஸ்தவப் பின்புலத்துடன் கீறத் தொடங்குகிறார். வளர்ச்சிநிலைகளில் எதையும் எமது கலாசாரப் பின்புலத்துக் கூடாய் வெளிப்படுத்தும் முனைப்புத் தீவிரம் பெறுகின்றது.
இப்போது நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கோடுகள் பற்றிய பிரக்ஞையுடன் கீறிக் கொண்டிருக்கும் முதிர்ந்த மாற்குவை.
இங்கு குறிப்பிட வேண்டிது இறுதி இராப்போசனம்' என்ற ஒவியம். முகபாவங்களால் சித்திரிக்கப்பட வேண்டிய மிகை உணர்ச்சி நிலைகள் ஒத்திசைவுடன் நீளுகின்ற கழுத்துக்களினூடாகச் சித்தரிக்கப்படுவது அரு மையாயிருக்கின்றது. உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பானி” என்று கிறிஸ்து கூறும் போது நானாயிருக்குமா? அவனாயிருக்குமா? என்ற ஆதங்கம் கலந்த திகைப்புடன் அதிர்ந்து நிற்கும் சீடர்களை நேரில் தரிசிக்கின்றோம்.
முதிர்ந்த மாற்குவிடம் எல்லாவற்றையும் கோடுகளாலேயே சாதிக்க முயலும் தீவிரம் நிரம்பிக்கிடக்கின்றது. அரூப பாணியிலும்கூட, ‘கோடுகளைக் குறைத்தல்’ என்ற நிலையில்தான் அவரைப் பார்க்க முடிகின்றது.
அரூப பாணி என்றதும், ‘ஒன்றும் புரியாத வெறும் பிரமைகளைக் கூட்டும் புதிர்கள்’ என்ற அளவில்தான் நிறையப்பேர் நினைக்கிறார்கள்.
இதுவும் பிழை!
அரூப பாணியிலும் கூட, கீறப்போகும் விஷயம் குறித்துத் திட்டவட்டமான, நிச்சயம் செய்யப்பட்ட
படிமங்கள் ஒவியரிடம் இருக்கும். படிமங்கள்

தெளிவற்று மங்கலாய் இருக்கும்போது, ஒவியமும் புதிர்களின் குவியலாகிப் பொறுமையைச்
சோதிக்கும்.
* கீற ஆரம்பிக்கலாம். பிறகு சமாளிக்கலாம்’ என்பதெல்லாம் ரசிகர்களை முட்டாள்களாக்கும் முயற்சி மட்டுமே. இங்கு பிரமிக்க எதுவும் இருக்காது. பிரமைகளும் புதிர்களும்தான் மிஞ்சும்.
மாற்குவிடம் இந்தச் சிரமங்களில்லை. ரசிகர்களுக்குப் பிடிகொடுத்துக் கீறவேண்டும் என்பதில் அதிகம் அக்கறை அவருக்கு இவருடைய அரூப பாணியை முன்பு சொன்னதைப் போலக் கோடுகளைத் தவிர்த்தல் என்ற அர்த்தத்தில்தான் நாம் புரிந்து கொள்ளமுடியும்.
குறிப்பாக, அலையின் முகப்பு அட்டையில்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 - -

Page 14
(அலை - 26) வெளிவந்த 'குருட்டுப் பாடகன்’ ஒவியம். அடுத்தது ‘மண்ணின் அழைப்பு’ என்ற ஒவியம். இப்படி இன்னும் இன்னும்.
குருட்டுப் பாடகனின். வான் நோக்கி நிமிரும் முகமும், கைகளில் வாத்தியக் கருவியுமாகக் குந்தியிருக்கும் மனித வடிவம் வரையப்பட்டுள்ளது. கோடுகளின் சிக்கனம் பேணப்பட்டிருக்கிறது. பாடகனுக்குப் பார்வையில்லை என்பது மேலுயரும் சிரசுக்கூடாய்ச் சித்திரிக்கப்பட்டாலும் கூட, தலைப்பிலிருந்து தரவுகளைப் பெற்றுப் புரிந்துகொள்ளவேண்டிய நிலைமை.
5.
ஒரு ஒவியத்தின் மையக் கருத்தைக் கட்டியெழுப்பும் கோடுகளும், பிற துாரிகை அசைவுகளும் சாதனத்தின் முழுப் பரப்பையும் நிரப்பாத நேரங்களில், மிஞ்சியிருக்கும் வெளி பிரச்சினைக்குரியது. இந்த வெளிக்குள் அர்த்தங்களைப் புதைத்து, அதைத் தொடர்ந்தும் வெளியாகவே பேணுவதும் ஒரு முறை. தவிர இந்த வெளியை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதைக் குறியீடுகளால் (Symbols) நிரப்பியவர் பணிக்கர் (K.C.S. Paniker), அலங்காரங்களால் நிரப்பியவர் ஜாமினி ராய் (Jamini Roy), கோடுகளால் நிரப்புகிறார் மாற்கு.
வடிவத்துள் தொடங்கும் கோடுகளை, வடிவத்துக்கு வெளியிலும் நீட்டி, வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார். ‘அலங்காரம்’, ‘காதலர்’ போன்ற ஒவியங்களைப் பார்த்தால், இது தெரியும்.
- 2- வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

வடிவ எல்லைகளுள் நின் றுவிடாது, அதற்கும் அப் பால் நீண்டுசென்று அந் தரத்தில் நின்றபடி எதையெல்லாமோ பேசத்துடி க்கும் கோடுகள். அருமை யாக ஒத்திசைகின்றன.
இது பிக்காஸோவின் பகுப்புக் கலவைச் சித்தி ரத்தை ஞாபகப்படுத்தி னாலும் அதுவல்ல இது.
இன்னுமொன்று ‘பெனி' நிலைக்குத்துத் தோற்றத் தில் சரிபாதியாக வெட்டிப் பிளக்கப்பட்ட பெண் உருவத்தை, கோடுகளால் பிரதிசெய்து அங்கேயும் தேவையற்ற கோடுகளைத் தவிர்த்து, குறைந்த கோடுகளால், கிட்டத்தட்ட நிமிர்த்தி வைக்கப்பட்ட வீணையைப்போல
வரையப்-பட்டிருப்பது பிரமாதம்!
மாற்கு இதுவரை கீறியிருப்பது இரு நூறுக்கும் அதிகம், மூன்று கணிகாட்சிகளுக்குப் போதும். இன்னும், எஸ் - லோன் (S-Lon) பைப்புகளை வெட்டியெடுத்து, தனது கருத்துக்கிசைய வளைத்து, நிமிர்த்தி நிறையச் சிற்பங்களையும் (Sculpture) செய்திருக்கிறார். இது, இன்னுமொரு கட்டுரையில் விரித்து எழுதப்படவேண்டியது. இக்கட்டுரையும் கூட, குறிப்பிட்ட ஒரு ரசிக நிலையில், மாற்கு பற்றிய சில அவதானங்களும் அபிப்பிராயங்களும் மட்டுமே.
என்னளவில், கோடுகளை உயிர்ப்பிக்கும் மாற்கு பெறுமதியானவர், பிரமிக்கச் செய்கின்றவர். ஏனெனில். . . .
கோடுகள் தனித்து நின்று இயங்குபவை. எல்லாவகைக் குறியீடுகளும் தாமாகி நிற்பவை. இதுவெல்லாம், ஆழமாயத் தேடுகின்ற ஒவியரின் கையில் துரிகை இருக்கும்போது.
- சங்கரா (நன்றி. தேடலும் படைப்புலகமும்)

Page 15
கயானாவின் அரசிய ஜனற் அல்
இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரால் அவர்களின் குடியேற்ற நாட்டுத் தோட்டங்களில் வேலை செய்ய அழைத் துச் செல்லப்பட்டவர் கள் தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், ஃபிஜித் தீவுகள், மலாயா, இலங் கை தொடக்கம் தென் அமெரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் 5th T60 ft.
வரை சென்றார்கள். அவர்களின் பரம்பரையினர் அங்கு இப்போது வாழ்கின்றனர். கயானாவில் கறுப்பர்கள், இந்திய வழித்தோன்றல்கள், அமெரி இந்தியர்கள், போர்த்துக்கீசர், சீனர்கள் வாழ்கி றார்கள். ஆனால் இந்தியர்கள் இரண்டாவது பெரும் பான்மை இனம். கறுப்பர்களுக்கு அடுத்ததாக, இந்தியாவில் என்ன மொழியைப் பேசினார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியாத இந்தியே தங்கள் தாய்மொழி என்று நம்பும் பலர் அங்குள்ள னர். ஆனால் நம்மவர்கள் அவர்கள் அனைவரும் தமிழ் தான் பேசினார்கள் என்ற ஆதிக்க முடிவுடன் சொல்லி விடுவார்கள். அவர்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், வங்கா ளம், இந்தி போன்ற பல மொழி பேசியவர்கள். ஆனால் இப்போது தம் தாய்மொழியை மறந்து ஆங்கில மொழியை தங்கள் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்துடன் தாங்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற உணர்வுடையவர்கள் என்பதால் இந்தி மொழி தான் தங்கள் தாய்மொழி என்றும் இந்தி மொழி தான் இந்தியாவின் ஒரே மொழி என்ற தப்பும் பலரிடம் காணப்படுகிறது. அந்த எண்ணத்தாலோ என்னவோ இந்தி மொழியை மேற்கிந்திய தீவுகளில் இந்தியாவின் மொழியாக ஒரு காலத்தில் கற்பித்தார்கள். அத்துடன் இந்தியா இந்தி என்ற மாறாட்டம் (சிறிலங்காவிலிருந்து வந்தவர்கள் நாம் என்ற படியால் சில கனடியர்கள் எங்கள் மொழி சிறிலங்கன் என்று சொல்வதைக் கேட்டிருக்கி றேன்) பொருத்தமாகவும் வந்துள்ளது. மேலும் இந்திப் படங்கள் முக்கியமாக அப்படங்களின் பாட்டுக்களும் நடனங்களும் இவர்களை ஆட்
 

ல் அகதிக் கவிஞர், மேல் நாயுடு
கொண்டுள்ளன. அதுவும் அவர்களை இந்தி பேச அல்லது இந்தியா என்றால் இந்தி என்ற எண் ணத்தை மனதில் இடம் பிடிக்கச் செய்துள்ளது. படித்தவர்கள் மட்டும் தங்கள் வேர்களைத் தேடிக் கணி டு பிடிக்க முயற்சித்துள்ளார்கள். வி.எஸ்.நாய்ப்போல் போல. எது எப்படி இருப்பினும் அவர்கள் தங்களின் குடும்பப் பெயர்களை இன்னும் வெட்டிக் கொத்தி வைத்துக் கொண்டிருக்கிறபடியால் எங்களால் ஒரளவு அவர்களின் வேர்களை ஊகிக்க முடிகிறது. (அலுமேலு), அல்மெல், மதுர்வீர், (மதுரைவிரன்), சுப்ரமணி, பால்கிஷசன், செல்மா. இப்படி
எத்தனையோ பெயர்கள்.
ஜனற் அல்மேல் நாயுடு தென் அமெ ரிக்காவில் ஒரேஒரு ஆங்கிலம் பேசும் நாடான கயானாவிலிருந்து வந்து கனடாவில் குடியேறி யவர். இது 1975 இல், இங்கு வருமுன்னரே கயானாவின் சிறந்த கவிஞரான ராஜ்குமாரி சிங்கின் ஹெரிற்றேஜ் என்ற இதழில் 1973 இலேயே தனி இரணர்டு கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். இவர் டெமெறாற ஆற்றின் கிழக்குக் கரையிலுள்ள கவனிற் காடின் என்னுமிடத்தில் பிறந்தவர். கரும்புத் தோட்டத்தில் இவரின் பெற்றோர் வேலை செய்தவர்கள். தோட்டத்தில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி இவரின் தந்தை இறந்து போனார். இவரின் தாயார் பால் விற்று வாழ்க்கையை ஒட்டியவர். இவரும் பாலை வீடு வீடாகக் கொணர்டு சென்று விற்றவர் என்கிறார். இப்போது உயர்ந்த தொழில் பார்க்கிறார். ரொ றொன்ரோ பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புப் பட்டத்திற்காக படித்துக் கொண்டும் இருக்கிறார். இந்தியப் பணி பாடு. வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை உள்ளவர். இவர் தன் முதலாவது கவிதைத் தொகுதியான Winged Heart ஐக் கடந்த ஆண்டு ரொறொன்ரோவில் வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கவிதை மறு பக்கத்தில் மொழியாக்கம் பெறுகிறது.
- எண். கே. மகாலிங்கம்
Gurt(Lolò su6luò 2OOO sfTaouò - 3 -3-
(LLD 5UDP

Page 16
உருகும்
அமைதியற்ற அணைக்கட்டின் ே கவனிற் தோட்டத்தின் அருகே, இ இடைவிடாது பலத்துடன் உருண். அந்நாளின் வேலையை நிறுத்துே
ஆக நேரத்துடன் காலைப்பொழு தோட்டத்தில், மேலும் பல கரும் அழையாச் சத்தங்களுடன் மழை வருமுன்
பூமியின் மடியில் குப்புற, புயல் வெளிச்சம் வரி வரியாகச் சீறிய அவர்களின் உடலுள் கீறிய காய் கரும்பை எரிக்க விரும்பியது பே
வளரும் மின்னலின் சாபம் அணையின் நடு நடைபாதையில் விதியின் கோணலின் வியர்வை: ஒருவரின் வாழ்வை உலுப்ப
நாம் இரவில் காத்திருக்கிறோம்,
கரையோரம் இலைகள் மிதப்பை தொழிலின் பழுவை எணர்ணுவது அமைதியாகத் தரையில் கரைந்து
-14
வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

தேசம்
நரே பின்புறம் இடிகள்
வன் எனப் பயமுறுத்தின.
து கனிய முன்
புகளை நட்டார்கள்
ᏝᎧᏈgp து, நீலம்பாரிய, பங்கள்
6
சூடு வரி வரியாக பரவியது யைத் துடைக்க
காவல்காத்து, அமைதியாக வ போல
போல
அலைந்தன

Page 17
கொடும் வெயில், அவன் கண்க
இழுப்பினால் காலமற்ற கால அ பிளவுபடும் நிலத்தின் வெளியில் பல மணி நேரம் கிடந்ததால் பா நிலத்தை வளம்படுத்த திரும்பும்
புதிய கரும்புக் கன்றுகள், நான்
மின்னல் கீற்றால் நிலைதடுமாறி அவர் நண்பன் தான், தப்பிய ஒ
அவரின் பலத்தை நினைக்கிறோ தோணிப்பழுவை தனியே ஏற்று ஒளிச்சலற்ற விதிக்கெதிராகப் பே இப்போது இன்னோர் பூதத்தால் நாதியற்ற உடல், செயலடங்கி, க
என் தந்தையின் கண்களின் அை அவரின் கைகள் எம் நிலத்தைப் கீழும்
அவரின் கால்கள் இரவு முழுதும் அவற்றைக் கட்டுவதில், சிலவேை
ஒருவர் தன்னை பூரணமாக அர் அவர் எழுகிறார்
எம் அடையாளங்கள் எம் தேசத்
*Covent Garden- கவனிற் தோட்டம். இது கரும் தெமெராரா நதியின் கிழக்குக் கரையோரத்தில் உ
 

ள் சுருங்கின
Lq.36i,
ரமான கரும்பு
என் தந்தைக்காக நோகிறேன்
ரே ஒருத்தர்.
ம்
பவர்
பாராடிய வீரன் தாக்கப்பட்டார்
ாயம் பட்டு,
மைதிக் கவர்ச்சி
பிணைத்தன-மேலும்
> அகழிகளில் கழிந்தன ளை தன்னந்தனியே
ப்பணித்துக்கும்போது
தில் உருகும் வரை
புத் தோட்டத்தில் உள்ள ஒர் இடம். கயானாவின்
ளளது.
வாழும் தமிழ் 2000 காலம் - 13
- 5

Page 18

அன்றெனக்கு அசுபதினம் என்று தானி நினைத்திருந் தேனி. ஜீனாவைச் சந் திக்கும் வரை. அடுக்கடுக் காய் அத்தனை துன்பங்கள் அன்றெனக்கு
தொழில் செய்யும் இடத்தில் எந்த ஒரு பொழுதிலும் அதிகப் பிரசங்கி த்தனம் கூடாது என்பது தெரியும் தான். தெரிந்தும் என்னால் கட்டுப் படுத்திட முடியாது எல்லாம் தெரிந்த சுவாமித்தம்பியாய் நடந்து கொண்டது தவறுதான். திறமையை அடக்கி வைத்துக் கொண்டு மண்டுப் பையனாய் சொன்ன

Page 19
வேலையை மட்டும் எப்படிச் செய்வது?
செய்தேனர் - வாயால் சொன்னார்கள்.
செய்தேன் - கடதாசியில் டைப் பண்ணித் தந்தார்கள். செய்தேன் - ஸ்தாபனத்துக்குச் சொந்தமான
வாகனம், கையொப்பம் இடப்பட்ட வெற்றுக் காசோலை, மற்றும் எண் விசுவாசம், வேலை சகலதையும் பறித்து விட்டு மன்னிக்கச் சொன்னார்கள். மன்னித்தேன்!
நெடுநேரமாய் விறைத்துப்போய் நின்றிருந்தேன். பளல் நிறுத்தத்தில். பஸ்ஸில் போவதற்கு சில்ல றைக்கா சும் இல்லை-டக்ஸியில் போவதற்கு தான் காசும் இல்லை. விதியை நொந்து கொண்டு விறைத்துப் போய் நின்றிருந்தேன்.
புஸ்பிந்தர் (திதி) வீட்டில்தான் இருப்பாள். போன் பண்ணினால் காருடன் வருவாள். போன் பணின க்வாட்டர் வேண்டுமே. மன்னிக்கப் பட்டவர்கள் செல்போனைக்கூடப் பறித்து விட்டார்கள். விசுவாசத்தின் பெறுமதி தெரியாத
பாதகர்கள்.
குளிர்காப்பு ஆடையின் உட்புறமாய் நெஞ்சை எதுவோ உறுத்தியது. வொலட்! பட்டென ஞாபகம் வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வொல ட்டின் உள் அறையொன்றில் எமர்ஜென்ஸிப் பாவனைக்கென்று 50 டொலர் பதுக்கி வைத்தது பட்டென ஞாபகம் வந்தது.
துன்பம் ஒன்றாயிற்றா .
டக்ளி பிடித்து வீட்டுக்கு வந்து வெறும்தரையில் மல்லாக்கப் படுத்து கணிகளை சும்மா மூடிக் கிடந்தேன். கடைவிழி ஒரம் கணினிர் தன்னிச்சையாய் ஒழுகியது.
விசுவாசத்தின் அர்த்தம் தெரியாத பாவிகள். இப்படியா நட்டாற்றில் தத்தளிக்க விடுவது? ஆறுவருட விசுவாசத்தையும் என் உழைப்பையும் எத்தனை சுலபமாய் இவர்களால் துாக்கி எறிய முடிந்தது? எல்லோரும் கட்டளைக்கு கட்டுப் பட்டவர்கள். சொல்லப்பட்ட "அல்லது கற்றுக் கொடுக்கப்பட்ட - காரியங்களை மட்டும் செய்கின்றவர்களுக்கு இடையில் அட்டாவதானி அடிபட்டுப் போவான். இல்லையேல் அடிக்கப் படுவான். நான் அடிபட்டுப் போனேனா?

நேற்று இரவு ஒரு மணிவரைக்கும் அவளுடன் தான் கலிப்ஸ்ஸோ ஹட் நைட் கிளப்பில் இருந்தேன். வயிற்றுக்குள் லேசாக வலிக்கிறது என்று வேறு சொன்னாள். இன்று ஹங் ஒவரில் படுத்துக் கிடப்பாள்.
அடிக்கப்பட்டேனா?
அடிவயிற்றில் இருந்து நெஞ்சுவாரியாய் பீறிட்டு வந்தது துக்கம் கலந்த அழுகை . அழுதேன்.
புஸ்பிந்தர் (திதி)யிடம் சொன்னால் ஆறுதல் சொல்வாள். அவள் ஒருத்தி தானே சொல்லிக் கொள்ளும்படி இருக்கின்ற ஒரே உறவு. ஏதோ திசையில் பிறந்தும், ஏதேதோ திசையில் வளர்ந்தும் தனிமை சேர்த்து வைத்த ஸ்நேகம்.
நேற்று இரவே சொல்லி விட்டாள். இன்று எங்கேயும் போவதில்லை வீட்டில் தான் என்று. நேற்று இரவு ஒரு மணிவரைக்கும் அவளுடன் தானி கலிப்ஸ்ஸோ ஹட் நைட் கிளப்பில் இருந்தேன். வயிற்றுக்குள் லேசாக வலிக்கிறது என்று வேறு சொன்னாள். இன்று ஹங்கோவரில் படுத்துக் கிடப்பாள்.
துக்கமும் பசியும் அழுகையும் ஒன்றாய்க் கலக்க உடல் மாறுபட்ட சோர்வு நிலையொன்றை
அடைந்தது.
வயிறு நிறையச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது.
சனியும் ஞாயிறும் புஸ்பிந்தர் (திதி)யுடன் சுற்றித் திரிந்ததில் வீட்டில் சமையல் இல்லை. குளு குளு பியர் மாத்திரம் தான் இப்போதைக்கு இங்கு கிடைக்கும். புஸ்பிந்தர் (திதி) வீட்டில் காய்ந்த சப்பாத்தியும் புளித்த பருப்பு பப்ஜியாவது வைத்திருப்பாள். துக்கத்துக்கு ஆறுதலும் சொல்லி வயிற்றுக்கு சாப்பாடும் போடுவாள்.
அவள் வீட்டுக் கதவை நெடுநேரமாய் தட்டினேன். திறக்கவில்லை. வேலைக்குப் போய் விட்டாளோ? இருக்காது! ஹங்கோவரில் படுத்துக் கிடப்பாள் என நான் நினைத்துக் கொண்டே என்னிடம் இருந்த அவள் வீட்டுத் திறப்பால் கதவைத் திறந்து உள்ளே போனேன்.
வாழும் தமிழ் 2000 காலம் - 3 - 7.

Page 20
வீடு நிசப்தமாய்க் கிடந்தது.
அவளது றுப்பிதா மட்டும் அதற்கான படுக்கையை விட்டு எழுந்தோடி வந்தது. செவிகளையும் விழிகளையும் உயர்த்தி என்னைப் பார்த்தது. பின் அதற்கான படுக்கையில் ஒடிப்போய் சலிப்பாய் படுத்துக் கொண்டது.
படுக்கை அறை திறந்து கிடந்தது. எட்டிப் பார்த்தேன். புஸ்பிந்தர் (திதி)யை அங்கும் காணோம். முதல் நாள் இரவு கிளப்புக்கு போட்டு வந்த ஆடைகள் அவிழ்த்துக் கிடந்தது படுக்கையில்.
கிறடிட் காட், லைசன்ஸ், லிப்ஸ்டிக், மஸ்காரா, டம்பக்ஸ் சகலதையும் அடக்கிக் கொள்ளும் கறுப்பு நிறப் பை திறந்து கிடந்தது. இத்தனையும் இல்லாமல் ஒருபோதும் வெளியே செல்ல மாட்டாளே . எங்கே போனாள் இவள்?
செவிகள் கூர்மையுற அசைவுறும் சத்தம் கேட்டது. தண்ணிர் சலசலக்கும் சத்தம் கேட்டடுது. ச்சே. குளித்துக் கொண்டிருக்கின்றாள்.
குளியல் அறைக்கதவைத் தட்டினேன். அது அதுவாகவே திறந்து கொண்டது. தனிப் பெண்தானே அதுதான் கதவைக் கூட மூடாது குளிக்கின்றாள். வரவழைத்த புன்னகையுடன் புஸ்பிந்தரைப் பார்த்தேன். சோப் நுரைக்குள் முங்கிக் கிடந்தாள். என்னை இந்நேரம் எதிர்பார்க்காததாலோ என்னவோ என்னை ஒரு
- 8- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 

மாதிரியாக பார்த்தாள். கோபமா ஸ்நேகமா என்ன உணர்ச்சியில் என்னைப் பார்க்கிறாள் எனப் புரிய முடியாமல் இருந்தது.
சோப் நுரைக்குள் இருந்து இடது காலைத் துாக்கி இல்லாத கால் முடிகளை றேசரால் வழித்தாள். ச்சே . இந்த பஞ்சாபிகளுக்கு எங்கிருந்து தான் இந்த நிறம் உடம்புக்கு கிடைத்ததோ? சிவப்பும் இல்லாது மஞ்சளும் இல்லாது.
"திதி”
என விழிக்க மீண்டும் கோபமா ஸ்நேகமா என உணர முடியாத பார்வை பார்த்தாள். "கொமட்' மூடியை வீழ்த்தி விட்டு அதன்மீது அமர்ந்து கொண்டேன்.
இப்போது சோப் நுரைக்குள் இடது காலை அமுக்கிக் கொண்டு வலது காலை வெளியெடுத்து முடிகளை வழித்தாள். சோப் நுரைகளை துடைக்காமலே கால்களை கொஞ்சிடத் தோன்றிற்று.
புஸ்பிந்தர் என்னுடன் பேசத் தோன்றாது நுரைகளுடனே சல்லாபித்துக் கிடந்தாள்.
"திதி”
“வெளியே போ!”
தீதீயிடம் இருந்து இந்தக் கோபமான சொல்லை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"தீதீ .” நான் அதிர்ந்தேன்.
“என்ன தீதீ? உன் அப்பாவுக்கா நான் பிறந்தேன்.”
“என்ன ஆயிற்று உனக்கு?”
“எதுவேனுமானாலும் ஆகட்டும் எனக்கு நீ முதலில் வெளியே போ”
"தீதீ நீயுமா? நான் மிகவும் துன்பத்தில் உள்ளேன்” எண் தொண்டைக்குள் துன்பம் சிக்கிக் கொணர்டது.
“உனக்குத் துன்பம் எனில் எண் குளியல் அறைவரை வருவாயா?”

Page 21
“இது முதல் தடவை இல்லையே."
நான் கேட்க நனைந்த கூந்தலை உதறிவிட்டு . மேலும் நனையாமல் இருக்க உச்சந்தலை
முடியோடு சேர்த்துச் செருகிக் கொண்டாள்.
“சரி இதுதான் கடைசி. போ வெளியே . என் கண்ணில் தென்படாது போய் விடு” முதலில் சேவிங் றேசரும் பின் சிறிது சோப் நுரையும் எண் முகத்தில் வந்து விழுந்தன.
பட்டென எழுந்து குளியல் அறையை விட்டு வெளியே வந்து விட்டேன். ஏன் என்னுடன் புஸ்பிந்தர் இப்படி நடந்து கொண்டாள் என எனக்கு சற்றேனும் புரியவில்லை. கடைசியாய் பார்த்த நடுநிசி வரையும் நல்லாய்த்தானே இருந்தாள். என்ன ஆயிற்று இவளுக்கு? இனி எனக்கு யார் இருக்கின்றார்கள்?
வேலையை விட்டு துரத்தி விட்ட துக்கமும், புளில் பிந்தர் காரணம் இல்லாமல் என மீது கொண்ட கோபமும், பசியும் எல்லாமும் சேர்ந்து மணர்டையைப் பிறாண்டியது.
துக்கம் இரண்டாயிற்றா .
என்மீது ஒருபோதும் இப்படி அவள் நடந்து கொண்டதில்லையே . ஐந்து ஆண்டுதான் கொண்டாடிய நெருங்கிய உறவில் இப்படி ஒர் சம்பவம் இதுவரை நிகழந்ததில்லை.
என் அப்பார்மெனிட்டுக்கும் அவள் அப்பார்மெண்ட்டுக்கும் இடைப்பட்ட துாரம் ஒரே ஒரு சுவர்தான். என்னைப்போல் தனியாகத்தான் சீவியம். அப்பாவும் அம்மாவும் கலிடன் தாண்டி ஒரேஞ்வில்லுக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் தோட்டம் செய்கின்றார்கள். ஒரே ஒரு அண்ணன் மாத்திரம் கூடப்பிறந்தவன். அவன் எயர்போட்டில் டக்சி ஒட்டுகின்றானாம். இவர்கள்
எவர்களுடனும் இவளுக்கு உறவு கிடையாது.
இவளது பெற்றோர்கள் இவளுக்கு ஏழு வயதில் பஞ்சாபை விட்டு ஹம்டனுக்கு குடிபெயர்ந்தி ருக்கிறார்கள். கடைக்குப் போய் சப்பாத்தி வாங்குகின்ற அளவுக்கு பஞ்சாபியும் மூன்று ஹிந்தி வார்த்தைகளும் பேசுவாள். என்னை விட மூன்று வயது மூத்தவள் என்கின்ற காரணத்தால் தான் நான் அவளை தீதி என்று கூப்பிடுவது

கிடையாது.
ஒர் நாள் சொல்லி அழுதாள்.
சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும் காலத்தில் பையன் ஒருவனுடன் மோட்டலில் தங்கினாளாம். வீட்டுக்குத் தெரிந்ததும் அவளைத் துரத்தி விட்டார்கள்.
“யாரும் உறவு இல்லை. நான் அனாதை ." என சொல்லி அழுதாள். ஆதரவு சொல்லி நானும் உன்னைப்போல்தான். என்னையும் நாட்டை விட்டு துரத்தி விட்டார்கள். நீ எனக்கு சகோதரி மாதிரி எனச் சொல்லி அவளுக்கு கொடுப் பதற்காக கொண்டுபோன பிள்ளையார் கோயில் பொங்கலை கொடுத்தேன். வாங்கி உண்டு விட்டு வாஞ்சையுடன் ஸ்நேகித்தாள்.
சகோதரி என்றால் தீதீ என்று அவள் தான் சொல்லித் தந்தாள். ஆரம்பத்தில் தீதீ என்பது சகோதரி என தோன்றினாலும் நாள்பட்டுப் போக தீதி என்பது என்னுள் பெயர் போல் ஆயிற்று. அப்புறம் தீதீ என்னும் போதெல்லாம்
என்னுள் சங்கடம் உண்டாவதில்லை.
எத்தனை பாசமாய், காதலாய் இருந்தவள் கண்காணாத தொலைவுக்கு போவென விரட்டி விட்டாளே. எப்படி வந்தது இவளுக்கு மனசு.
இனி இவளின் முகத்தில் ஒருபொழுதும் விழிப்பதில்லை என நான் முடிவெடுத்து வெளியேற கதவைத் திறக்க முற்பட்டபோது தன்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 - 9

Page 22
படுக்கையில் சோர்வாய்க் கிடந்த றுப்பிதா கண்ணில் பட்டது. படுக்கையில் கிடந்தபடியே செவியை மட்டும் உயர்த்தி விட்டு பின் தாழ்த்திக் கொண்டது.
அதன் அருகே போனேன்.
“றுப்பிதாக் குட்டி நீயும் என்னை வெறுக்கிறாயாடீ . இல்லத்தானே . என்னோட ராசாத்தி வாடி .”
படுத்துக் கிடந்த றுப்பிதாவை துாக்கினேன்.
உடலை ஒருவிதமாய் சிலுப்புச் சிலுப்பியது உடலை உதறியது. லேசாய் உறுமியது . நான் அசம்பாவிதத்தை உணரும்முன்னே நாலு பல்லும் சுள்ளென ஏற வலது கையை கடித்து இழுத்து விட்டு சோபாவின் பின்பக்கமாய் பதுங்கிக் கொண்டு முனகிக் கொணர்டு இருந்தது.
கடிபட்ட இடம் முதலில் வெள்ளை நிறமாய் தெரிந்தது. பின் மெல்ல மெல்ல நிறம் மாறி சிவப்பாகி இரத்தம் கொப்பளிக்க தொடங்கியது.
எண் கெட்ட நேரம் இன்றுதானா புஸ்பிந்தரின் வீட்டு நாயும் வீட்டுக்கு விலக்காக வேண்டும்.
துன்பம் மூன்றாயிற்றா .
குடும்ப வைத்தியரிடம் கொண்டு காட்டினேன்.
வீட்டு நாயா தெரு நாயா? என்றார். பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை. இப்போதும்
-2O- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 

பிலிப்பைன்ஸ் நினைவிலேயே இருக்கின்றாரா என்னவோ.
“உன் நண்பன் வீட்டு நாய் தானே . நீ அதை
6.
கோபம் மூட்டியிருக்கிறாய். சரி! என்றார் அப்புறம். நான் சுரத்தில்லாமல் தலையை ஆட்டினேன். காயத்தை அமுக்கி தேய்த்து பார்த்து விட்டு “நாய்க்கு ஏதும் ஆகிறதா பார்த்துக் கொள். ஆகினால் உடனே வா” எனச் சொல்லி களிம்பு டப்பி ஒன்றைக் கொடுத்து "நன்றாக சவர்க்காரம் போட்டு கழுவி விட்டு இதைத் தடவு. குணமாகி விடும்” என்று அனுப்பி விட்டார்.
ஆங்கிலம் தெரியாமல் இந்த தேசத்தில் எப்படித்தான் பிழைப்பு நடத்துகின்றாயோ என கேட்கின்றவர்களை இந்த வைத்தியரிடம் அனுப்ப வேண்டும். ஆங்கிலம் தெரியாமல் எப்படி இவன் பிழைப்பு நடத்துகின்றான் என்பதைப் பார்ப்பதற்கு
நாய் கடிக்கு எத்தனையோ ஊசி தொப்புளைச் சுற்றி போட வேண்டும் அல்லவா. எனக்கு நெடுநாளாக சந்தேகம் இவர் போலி வைத்தியராக இருப்பாரோ என்று. எந்தப் பெரிய வியாதியுடன் போனாலும் "உனக்கு எதுவும் இல்லை. நீ நலமாய்த்தான் இருக்கின்றாய்” எனச் சொல்லி அனுப்பி விடுவார்.
எதிர் திசைச் சிக்னல் பச்சைக்கு மாறியதும் நேர்ப்பக்கமாய் பாதசாரிகளுக்கான பாதை திறக்க நான் மட்டும் சாலையை தனித்து கடந்து கொணர்டிருந்தேன். காலுக்கு ஒரடி தள்ளி வாகனங்கள் மெதுவாய் அடங்கின.
என் பின்னே யாரோ பேசுகின்ற அரவம் தோன்ற நடையை நிறுத்தாது தலையை மாத்திரம் திருப்பி வந்த பாதையை பார்த்தேன்.
கணினுக்குள் நீலம் பாய்ந்தது . நடுச்சாலையில் அசையாது நின்று விட்டேன். எதிர்த் திசையில் இறகுகள் அற்ற தேவதை உணர்வற்ற நிலை . தேகம் லேசாய் நடுங்கியது. அடித்துப் போடுகின்ற அழகு . நேர்ப்படக்கமாய் பச்சைக்கு மாறியது சிக்னல். தேவதை கை அசைத்தது. உடல் சிலிர்க்க பாய்ந்து கடந்தேன் சாலையை எதிர்த் திசையில் அவள் நின்றி ருந்தாள். என்னைப் பார்த்து மீண்டும் கை அசைத்தாள். நாய் கடித்த வலி பட்டென

Page 23
வெளியேறி காற்றோடு கலந்தது. சிக்னல் மாறும் முன்னரே வாகனங்களின் வரவை பார்த்து வீதியை கடந்து எனை நோக்கி வந்தாள்.
இதுவரை நான் நுகராத புதுவகைத் திரவியம் அவ்விடத்தே பட்டென படர்ந்தது. புன்னகைத்தாள். புன்னகைத்தேன். படபடவென பேசினாள். புரியவில்லை. திருதிருவென விழித்தேன். அவள் மொழி எனக்கு புரியவில்லை.
“உண்மையில் உன் மொழியை என்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை. மன்னித்துக் கொள் என்றேன் சங்கடத்துடன்,
அவள் முகம் சட்டென மாறியது. உதட்டோரம் எட்டியிருந்த புன்னகை கூட இல்லாது போனது. திரும்பவும் படபடவென பேசினாள். இது
கோபமான பேச்சு என்பது மட்டும் விளங்கியது.
மனிதனுக்கு கஸ்டம் வருவது இயற்கைதான். அதற்காக இப்படியா மணிக்கொரு தடவை வரவேண்டும்? எனக்கு புரிந்து போனது இதுதான் துன்பம் நான்கிற்கான அறிகுறி.
அழகி என நான் நினைத்தது ஆபத்தில் தான் கொண்டு முடியப் போகிறது . அறிவுள்ள பிள்ளைக்கு அழகு இவ்விடத்தை விட்டு ஒடிப்போவது தான் என நினைக்க திரும்பவும் அதே பாசையில் பேசினாள். இப்போது என்னைத் திட்டுகின்றாள் என்பது விளங்கியது.
இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்ன தீங்கிழைத்தேன் இவளுக்கு? போன பிறவியில் நான் இவளைக் காதலித்து விட்டு கல்யாணம் செய்கிறேன் எனச் சொல்லி பிள்ளையையும் கொடுத்து விட்டு ஏமாற்றி விட்டேனோ? இப்பிறவியில் இப்போது என்னை அடையாளம் கண்டு விட்டாள் போலும்!
இதே உயரமும் இதே மெலிந்த தேகமும் இதே பழுப்பு விழிகளும் தோள்வரை மட்டுமே வளர்ந்த இதே செம்பட்டை நீள் சுருள் முடிகளும் வளைந்த இமைகளும் கறுப்பும் அல்லாத வெள்ளையும் அல்லாத இதே கோதுமை மா நிறமும் உப்பிய வயிறும் துணையின்றி நிமிர்ந்த முலைகளும் இரு தோடம் சுளைகளை பிரித்து வைத்த உதடுகளும் அமையப் பெற்ற இதே பெணி போன

ஜென்மத்தில் கிடைக்கப் பெற்றவனாக இருப்பின் நான் அவளை ஏமாற்றி இருக்கச் சந்தர்ப்பமே இல்லை. ஏதேனும் குறுக்குப் புத்தி எனக்கு வந்து அவளை நான் வஞ்சித்து இருப்பின் நான்காம் துன்பத்துக்கு நான் தயார்.
அவள் கணிகளை ஏழ்மையாய்ப் பார்த்தேன். எந்தவிதமான அழகு எத்தனை அழகு இந்த சுட்டும் விழிகள். ப்றவுணி நிறத்தில் கண் விளிம்புகளைச் சுற்றி மெல்லியதாய் .மிக மிக மெல்லியதாய் . மிக மிக நுணுக்கமாய் தீட்டியிருக்கும் மை எத்தனை அழகாய் இருக்கிறது இந்த பழுப்பு விழிகளுக்கு. அதே ப்றவுணர் நிறத்தில் மஸ்காரா போட்டு இமைகளை மேல் நோக்கி வளைத்திருக்கும் லாவணியம் அற்புதமாய் பொருந்தியிருக்கிறது பழுப்பு விழிகளுக்கு யார் இவள்?
“ யார் நீ? தயவுசெய்து சொல் எனக்கு . நீ பேசும் மொழி எனக்கு உணர்மையாக
புரியவில்லை.”
"நீ இந்த நாட்டுக்கு வந்து எத்தனை வருடங்களாயிற்று?" அப்பாடா மெல்ல மூச்சு வந்தது எனக்கு. இத்தனை நேரமும் ஏன் புரியாத பாசையில் பேசினாள் என புரியவில்லை."
• àà “ஒன்பது வருடங்கள
“ஒன்பது வருடங்களுக்குள் தாய்மொழியை மறந்து விட்டாயா நீ?”
“பார் . நான் நினைக்கிறேன் நீ மீண்டும் புரியாத பாசையில் பேசுகின்றாய் என்று”
"நீ சோமாலியன் தானே ..?
புரிந்து போயிற்று. இத்தனை நேர திண்டாட்டத்துக்கும் என் உருவம் தான் காரணம் என்று. வறுமைத் தேகமும் கறுப்பு நிறமும் மெல்லிய தனிச் சுருள் முடிகளும் ஊசி மூக்கும் . என்னை அவளுக்குச் சோமாலியனாக தோற்று வித்திருக்கிறது.
புன்னகைத்தேன் .
“உன் தீர்ப்பு பிழை. நான் சோமாலியன் அல்ல. இலங்கையன்! போகட்டும் . நீ பேசிய பாசை
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -2-

Page 24
参毅
சோமாலியப் பாசையா? நீ சோமாலியப் பெண் அல்லவே. ஒ . உனக்கு பல பாசைகள் தெரியும். நான் பேசுவது சரிதானே . என் தாய் மொழி தெரியுமா உனக்கு? தமிழ் . தமிழ் மொழி பேசுவாயா நீ .? வணக்கம்! “ கைகுவித்தேன் அவளைப் பார்த்து.
விநோதமாய் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். புன்னகைத்துக் கொண்டே வலது கையை ஸ்நேகமாய் நீட்டினாள். மெல்லிய குளிரில் சில்லிட்டது அவள் கை, எந்த வேலையும் கைகளால் செய்ய மாட்டாள் போலும் . இத்தனை மிருதுவாய் இருக்கிறதே . புஸ்பிந்தரின் கைகள் கூட இத்தனை மிருதுவாய் இருந்ததில்லை. சில சமயங்களில் சப்பாத்திக்கு மா பிசைவதுண்டு
அவள.
“மன்னித்துக் கொள். நான் உன்னை சோமாலியன் என நினைத்து விட்டேன். என் பெயர் கரோசோக்கி க்வான். நான் சோமாலியப் பிரஜை தான்.”
இவள் சோமாலிச்சி என்பதை என்னால் சற்றேனும் நம்ப முடியவில்லை. சோமாலியர்கள் அசப்பில் என்னைப் போல்தான் இருப்பார்கள். அதிலும் பெண்கள் என்றால் பின் பக்கம் வஞ்சகம் இல்லாமல் பெருத்தல்லவா இருக்கும். இவளுக்கு அப்படியில்லை. இல்லை அப்படித் தான் இருக்கிறது. இப்போது தான் கவனித்தேன். மற்றவர்களைப் போல் பெரிதாக இல்லைத்தான் உறுத்துகின்ற மாதிரி. ஆனாலும் அதே வடிவம்தான்.
-22- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 
 
 

அவள் தன்னை சோமாலிச்சி என சொன்னதற்கு அப்புறம்தான் உற்று கவனிக்க - அந்த பாரம் பரியம் மெல்லிய நுால் வடிவில் தெரிந்தது. மாறாத உதட்டோரம் புன்னகை இவள் சோமாலிச்சி தான் என மெல்ல மெல்ல என்னை நம்ப வைத்தது.
கடவுள் ஒருவனுக்கு அடுக்கடுக்காய் துன்பங் களைக் கொடுக்கின்றார் எனில் அந்த ஒருவன் அடுத்ததாய் இன்பத்தில் திளைக்கப் போகின்றான் என்னும் தத்துவத்தை நம்ப ஆரம்பித்தேன் நான். ஜினாவை சந்தித்த அடுத்தடுத்த நாட்களில் இருந்து.
ஜினா என்பது யாருமல்ல கரோசோக்கி க்வான் தான். எனக்கு இந்தப் பெயர் பிடிக்க வில்லை. ஏதோ ஊர்வனவற்றின் பெயர்போல் இருக்கிறது. எனக்காக உன் பெயரை மாற்றேன் என ஒரு மங்கிய பொழுதில் அவளிடம் கேட்டபோது உனக்கு பிடித்த பெயர் ஒன்றை வையேன். உனக்கு பிடிக்காதது எனக்கெதற்கு என்றாள். பட்டென வாயில் வந்தது ஜீனா தான்.
ஜினா என்கின்ற பெயர் வைத்து மனசு முழுக்க அந்தப் பெயர் பதிவான பிற்பாடுதான் சொன்னாள் கரோசோக்கி க்வான் கூட அவள் இல்லையாம். கவிதை எழுதுவதற்காகத்தான் அந்தப் பெயரை தனக்குத் தானே சூட்டிக் கொண்டாளாம். மத்திய ஆபிரிக்க பழங்குடி மக்களின் மொழியில் கரோசோக்கி க்வான் என்றால் விமோசிக்க வந்த பெண் கடவுள் என்று அர்த்தமாம். உணர்மையில் ஜூனாவின் பெயர் நூர்ஜஹான். முன்னமே சொல்லியிருந்தாள் எனில் தமிழ் நூர்ஜஹான் என வைத்திருக்கலாம். என்ன செய்வது மனசின் சுவர் எங்கும் ஜீனா என்னும் பெயரே பதிவாகி விட்ட பிற்பாடு
ஜீனா அழகுள்ள பெண் மட்டுமல்ல, அறிவும் குணமும் கொண்டவளும் கூட என்பது நாள்பட நாள்பட எனக்கு புரிந்து போனது. புரியாத விசயம் என்னவென்றால் எப்படி இவள் என்னுடன் ஒட்டிக் கொண்டாள் என்பது தான். சோமாலிய அகதிகளுக்காக நிதி சேகரிக்கின் றார்களாம். நிதி கேட்டுத்தான் அவள் என்னுடன் பேசியிருக்கின்றாள். அப்போதைக்கு பணம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. போன் நம்பரை மட்டும் கொடுத்துவிட்டு நாண் போய்விட மறுநாள் வீடு தேடி வந்தாள்.

Page 25
நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம் . சர்வதேச வன்முறை பற்றி சர்வதேச அகதிகள் பற்றி சர்வதேச அணுஆயுதங்கள் பற்றி சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
“பாப் - உனக்குத் தெரியுமா ஒரு தேசத்துக்கு பஞ்சத்தையும் இன்னொரு தேசத்துக்கு பட்டயத்தையும் அனுப்புவது கடவுள் தானாமே. இந்த தேசத்துக்கு பட்டயத்தையும் எங்கள் சோமாலியாவுக்கு பஞ்சத்தையும் அனுப்பிய கடவுள் ஒரவஞ்சகன் அல்லவா? நீ நம்புகிறாயா
கடவுளை?” - ஜீனா கேட்டாள்.
“நீ நம்புகிறாயா?” - என நான் கேட்க மெள னித்திருந்தாள். கணிகள் லேசாக நீர் கட்டிக் கொண்டது. தலையை தடவிக் கொடுத்து, வேண்டாம் என தலையை சூட்டினாள். ஏனோ அவள் சட்டென உணர்ச்சி வசப்பட்டு நிலை தடுமாறினாள். சூழ் நிலையை மாற்ற வேண்டும் போல் தோன்றியது எனக்கு.
“என்னால் இப்பவும் நம்ப முடியாமல் இருக்கிறது க்வான். நீ சோமாலியப் பெண் என்பதை”
“நான் கலப்பு கலவியில் பிறந்தவள்." - சொல்லிக் கொண்டே எழுந்து சென்று ஜன்னல் கதவை மெல்லத் திறந்தாள். குளிர் காற்று அறையுள் பரவிற்று . ஜன்னலை மூடிவிட்டு துாரத்தை சிறிது நேரம் மெளனித்து பார்த்தாள். பின் மறுபடி இருக்கையில் வந்து அமர்ந்து
கொண்டாள்.
“சோமாலியாவின் வறுமை உலகத்தை உலுக்கத் தொடங்கிய கால கட்டம். சோமாலியாவின் வறுமையயை உலகத்துக்கு படம் பிடித்துக் காட்ட வந்த ஒரு ஜேர்மனியனுடன் என் அம்மா . ஒரு இராத்திரி . சும்மா ஒரே ஒரு இராத்திரி வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் என்றால் கடவுள் என்று யாரோ அவளுக்கு சொன்னார்களாம். கடவுளின் அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லை." சொல்லி விட்டுச் சிரித்தாள். வேதனையாகவா சிரிக்கின்றாள்.
சந்திப்பின் முதல் நாளிலேயே மனம் திறந்து பேசும் இவளை எனக்கு ரொம்பத்தான் பிடித்துப்

போனது.
“உங்கள் நாடு இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டது அல்லவா? உன் அம்மா செய்தது பெரும் குற்றமாகி இருக்குமே .”
“அதுதான் எனக்கும் புரியவில்லை. என்னை பெற்று, வளர்ந்து பெரிய மனுசியாக்கும் வரை
என் குடும்பம் எந்த கஸ்ரமும் படவில்லை என்றே நான் நினைக்கின்றேன். என் பரம்பரையினர் பணம் படைத்தவர்களாக இருந்தது காரணமாக இருக்கலாமோ. பணம் கொணர் டவர்களிடம்
தானே சட்டங்கள் இருக்கிறது."
இப்படித்தான் எங்கள் உறவு ஆரம்பமாயிற்று. வேலையும் இல்லை. புஸ்பிந்தர் உடனும் உறவு இல்லை. எப்போது பார்த்தாலும் ஜீனாவுடன் தான் அவளுடன் இல்லாத நேரத்தில் அவள் பற்றிய நினைவுகளுடன்.
அழகுள்ள பெண்ணுக்கு அறிவும் குணமும் இருந்தால் அவள் சொர்க்க பூமி என்று. கலீல் ஜிப்ரான் எந்தப் பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு பலஸ்தினிய பள்ளத்தாக்குகளில் உலாவும் போது சொல்லியிருப்பான்?
மங்கிய வெளிச்சத்தில், குளிரும் அதிகாலைப் பொழுதில், சுடாத உச்சி வெயிலில், நட்ட நடு நிசியில், பனி கொட்டும் புல் வெளியில், கொட்டிய பனியில் கால் புதைய நடக்கையில் சகல பொழுதுகளிலும் ஜீனாவுடன் இருக்கையில் இவள் சொர்க்கபூமி என்று தோன்றிற்று எனக்கு
அழகுள்ள புளில் பிந்தர் அறிவுண்டு. குணம் இல்லை. அறிவுரீதியில் பேச முடிந்த அளவுக்கு அனேகமான நேரங்களில் மனம் திறந்து பேச முடிவதில்லை அவளால். தன் அழகைப் பற்றியும் தன்னைப்பற்றியும் மட்டுமே எப்போதும் கவலை அவளுக்கு மற்றவர்கள் பற்றி சற்றேனும் கவலை இல்லை. இப்படித் தான் ஒருநாள் வீட்டுக்கு வந்தாள். அன்றிரவு என்னுடன் தான். வீட்டுக்கு அவள் போகவில்லை.
அதிகாலைப் பொழுது . வெப்பம் கூடி துாக்கம் கலைந்தது. புஸ்பிந்தர் குப்புறப் படுத்துக் கிடந்தாள். திறந்த முதுகு வளைந்து கிடந்தது. இட முழங்கையால் கட்டிலில் முதுகிக் கொண்டு வலது சுண்டு விரலால் திறந்த அவள் முதுகில் ஏதேனும்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -23

Page 26
..:პჯ 拳
எழுத வேண்டும் போல் தோன்றியது. எழுதினேன்.
அவளும் விழித்துக் கொண்டுதான் இருந்தாளோ - இல்லை - நான் அவளின் முதுகில் எழுதியதால் விழித்துக் கொண்டவளோ தெரியவில்லை. முதுகை நெளிந்து கொணர்டாள்.
"கூச்சமாக இருக்கிறது. என்ன எழுதுகின்றாய் என் முதுகில்..?”
66 பிதை”
என் கவிதையை அவள் முதுகில் வைத்து படுத்துக் கொண்டேன். கன்னம் சுட்டது. மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் - பிடரி தாண்டிய முதுகுப் பள்ளத்தில் பூனை ரோமம் பொன்னிறத்தில் மின் னியது. இதுவல்லவா கவிதை .
“கவிதையா? சொல் பார்ப்போம்.” தலையணைக்குள் வார்த்தை அமுங்கிக் கேட்டது.
“நான் மீண்டும் ஒரு தடவை எழுதுகின்றேன். நீ கண்டு பிடி” - சொல்லிக் கொண்டே எழுதி னேன். அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. நெடுநேரம் மெளனித்துப் படுத்திருந்தாள். பின்.
“நீ தமிழில் எழுதினால் எனக்கு எப்படிப் புரியும்?”
'இல்லை. இல்லை. நான் தமிழில் எழுதவில்லை."
“சரி நீயே சொல்.”
-24- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 
 

“சூரியன் எழும் திசையெல்லாம் விரியும் மனிதரின் உலகு. உலகை விரித்து
எல்லை வகுத்து உள்ளும் புறமும் விளையும் போர் போரின் அறுவடை அகதி.
உலகின் பரந்த வெளியெல்லாம் அகதி மேற்கில் சூரியன் விழ - என்றோ ஒர் நாள் எழும் கிழக்கில் புதிய சூரியன்.
அன்று மலரும் அகதிகள் இல்லா உலகம்.
நான் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாய் படுத்திருந்தாள். புரண்டு என்னை அருவருப்பாய் பார்த்தாள்.
“உனக்கு படுக்கையிலும் அகதிகள் பற்றிய கவலைதானா?” - முதற் தடவையாய் புஸ்பிந்தரின் நிர்வாணம் அசிங்கமாய் தோன்றியது எனக்கு. ஜினாவுக்கும் புஸ்பிந்தருக்கும் இடையில் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கவிதை என்றால் ஜூனாவுக்கு உயிர். சொல் சொல்லாய் சுவைப் பாள். கவி சொல்ல கண்மூடிக் கிறங்குவாள்.
புகையை ஊடறுத்துக் கிழித்துப் பாயும் லேசர் ஒளியினுாடு, காது கிழிக்கும் தடால் அடி சத்தங் களை கிளப்பில் இருந்து கேட்க புஸ்பிந்தருக்குப் பிடிக்கும்.
இப்போதெல்லாம் உள் மனசுக்குள் ஜினாமீது பிரியம் வளர்வதை என்னால் கட்டுப்படுத்திட முடியாது போகிறது. வெறும் சிநேகம் தாண்டி ஜினா என்னும் தேவகன்னி என்னுள் கிளர்ச்சியை உண்டு பண்ணுவதை இல்லையென மறுத்திட முடியாது.
8) lift ...
8)
“ஹேய் . பாப்."
"நீ இங்குதான் இருக்கின்றாயா?" - ஜீனா
எதிர்க்க நின்றாள்.

Page 27
“கதவைக் கூட மூடவில்லை. பகலில் என்ன சொப்பனம்?”
ஜினாவைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்தேன். நான் வேறுபட்டு இருப்பதாய் அவளுக்கு தோன்றி விட்டது போலும்.
“ஹேய் . ஏழைப்பையா - சொப்பனத்தில் இருக்கின்றாயா?" - கொஞ்சினாள். வார்த்தையும் குரலும் அத்தனை அழகாய் இருந்தன.
என் அருகே ஏறக்குறைய என்னை உரசிக் கொண்டு சோபாவில் அமர்ந்து கொள்டாள். அதே . அதே . சுகந்த வாசம். அதே திரவியம். தெருவில் முதன் முதலாய் சந்தித்த அன்றும் இந்த ப்பெயியூம் தான் பாவித்திருக்கின்றாள். சுகந்த வாசம். கிறங்கினேன்.
“ஜினா .”
G.
Bil.
“நீ புருவம் செதுக்குவாயா. இத்தனை நேர்த்தியாய்
மேல் வளைந்து, கணி தாண்டி மெல்லியதாய் நீண்டு இருக்கிறதே."
அவள் முகத்தை என் முகத்துக்கு நேராய், மிக நெருக்கமாய் கொணர்டு வந்தாள். நான் மூச்சை நிறுத்திக் கொண்டேன். அவளது சூடான மூச்சு என் முகத்தில் பட்டது. எனி இதயம் சீரான வேகம் தாண்டியது,
“பார். இது செதுக்கிய புருவமாகவா இருக்கிறது.? இயற்கையானது என் புருவம் ”
முகத்தை இப்போது விலத்திக் கொண்டாள். எனக்கு மூச்சு வந்தது. சிரமப்பட்டு உடலையும் மனதையும் நிதானப்படுத்திக் கொணர்டேன். அவள் புன்னகைத்தாள்.
“அது என்ன? இன்று நீ உளறுகிறாயா? என்ன ஆயிற்று உனக்கு?”
“என்னுடன் வாழப் பிடிக்குமோ ஜீனாவுக்கு?”
பட்டென நான் கேட்க எண் முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல

பார்வையையும் முகத்தையும் நிலம் பார்த்து சிரித்துக் கொண்டாள். மெல்லிய நீர்ப்படலம் கணிகளுக்குள் கட்டிக் கொண்டது. மெல்லிய உதட்டில் புளிப்பாய் புன்னகை கசிந்தது. நெடுநேரம் மெளனித்திருந்தாள். மெளனம் நேரத்தைக் கடத்தியது.
“ஜினா” நான் அழைத்தது எனக்கோ கேட்கவில்லை.
நேரம் கடந்து போனது. இறுக்கமான மெளனம். நான் அப்படி கேட்டிருக்கக் கூடாதோ என நினைக்க . மெல்ல தலை சாய்த்து என் தோளில் சரிந்து கொண்டாள். எண் தோள் சுட்டது. பின் மெல்லிதாய் ஈரலித்தது. அழுகின்றாள். தலை கோதி விட்டேன். விசும்பும் சத்தம் கேட்டது.
நான் பாவப்பட்டவள் பாப். சபிக்கப்பட்ட உயிர்
இது. நான் உனக்கு பயன்பட மாட்டேன் நண்பா'
மெல்லிய நுணி அதிர்வாய் அவள் உதடுகள் துடித்தன. உதட்டு விளிம்பில் ஆரம்பித்த உள் உதடு நோக்கி நகரும் மெல்லிய ரேகைகள்
ஈரலித்திருந்தன. எனக்குத் தொண்டை வறண்டது.
தோள் பிடித்து அவளை நிமிர்த்தி என் முகத்தை பார்க்க வைத்தேன்.
“இல்லை. நீ என் தேவதை. நீ விமோசிக்க வந்தவள். நீ தேவ கன்னி.” - மெய் சிலிர்த்து பரவசம் கொண்டேன்.
“இல்லை நண்பா. இல்லை. நான் கன்னி இல்லை. தசை உண்ணும் ஐந்து மிருகங்களால் ஒரு இரவுக்குள் புசிக்கப்பட்ட எச்சில் தசைகளைத்தான் நீ இப்போது பார்க்கின்றாய். இது மலம் பாப். இது மலம் பாப். - தன் நெஞ்சை ஓங்கி அடித்தாள். பின் அழுதாள். அவள் இரு கைகளையும் பற்றிப் பிடித்து என் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டேன்.
அழுதாள். அழுதுகொண்டே என் நெஞ்சோடு சாய்ந்தாள். அழுது அடங்கும்வரை எண் நெஞ் சோடு அணைத்துக் கொண்டேன். அது ஆதரவு அல்லவா. ஆயினும் அழுதாள். கேவிக் கேவி அழுதாள். பொழுது இருட்டிற்று.
“மூன்று வருடங்களாயிற்று பாப். மகிழ்வையும்
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -25

Page 28
மீளாத் துன்பத்தையும் ஒரே நாளில் அனுபவிக்கச் சபித்து விட்டான் கடவுள் என்னை. முப்பத்தேழு பேர் கலந்து கொண்ட போட்டியில் ஜெயித்தது நான் தான் பாப். மிஸ் சோமாலியா! எனக்குத் தான் சூட்டினார்கள் கிரீடத்தை. அத்தனை சந்தோசம் எனக்கன்று. கையிரணர்டையும் கன்னத்தில் வைத்து வாய் திறந்து விழி பிரித்து நான் கொண்ட பரவசம் இருக்கே அதை எப்படி உன்னுடன் பகிர்ந்து கொள்ள முடியும்? என்னுடைய அழகுராணி அந்தஸ்தை ஒரு மணி நேரம் கூட அனுபவிக்க முடியாமல் பணிணி விட்டது பாப் உன்னுடைய கனேடிய இராணுவம்.”
சொல்லிவிட்டு என்னை ஒரு மார்க்கமாய் பார்த்தாள் ஜினா. கணினோரம் கணிணிர் காய்ந்திருந்தது. என் கணிகள் ஈரலிக்க ஆரம்பித்தது.
“எப்படி. எப்படி ஜீனா? என்னால் நம்பமுடியாது இருக்கிறது. கனேடிய ராணுவம் எப்படி உன் சந்தோசத்தை கெடுக்க முடியும்?”
“ஐ. நா. சபை அனுப்பிய சமாதானப்படையில் கனேடிய ராணுவமும் சோமாலியா வந்தது உனக்கு தெரியாதா?”
"ஆமாம். ஆமாம். ஞாபகம் இருக்கிறது. தொண்ணுாற்றி நாலில்.”
“அங்கு வந்த உங்கள் கனேடிய ராணுவம் பண்ணிய கொடுமை சொல்லி மாளாதவை நணி பா. கிரீடம் சூட்டிய தலையுடனேயே மேடையில் வைத்தே என்னை துாக்கி சென்று விட்டனர் கனேடிய ராணுவத்தினர். முதலாம வனுடன் போரிட முடிந்தது. இரண்டாமவனுக்கு எதிர்ப்புக் காட்ட முடிந்தது. அப்பறம் என்னால் முடியாது போய் விட்டது பாப். ஐந்து வேசி பெற்ற மக்களை எப்படி இந்த உடம்பு தாங்கும். நான் இறந்து விட்டேன் பாப். அவர்களை எதிர்த்த எண் காதலனைக் கூட என் கணி முன்னாலேயே கழுத்தில் கட்டையை செருகி வாய் நிறைய இரத்தம் கக்கி செத்தான். என் கணி முன்னாலேயே செத்து விழுந்தானி பாப்.!"
ஜினா குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஆற்றிட முடியா துன்பம் என்னில் படர்ந்து கொண்டது. என்ன செய்வது, எப்படி ஆறுதல் சொல்வது
-26- வாழும் தமிழ் 2000 காலம் - 13

என்று எனக்கு புரியவில்லை. எனக்கு யாராவது ஆறுதல் சொன்னால் தேவலாம் போல் தோன்றியது. ஆயினும் ஜீனாவின் தலையில் மிருதுவாய் கை வைத்தேன். விலத்தி போனாள். பட்டென பனியனை விலத்தி நெஞ்சைக்
காட்டினாள்.
6 e e
பார் நணர்பா பார். உங்கள் கனேடிய சமாதான
w 3) துாதர்கள் செய்ததை பார்.
முலைகள் இரண்டிலும் கறுப்பு கறுப்பாய் தழும்புகள்.
“அந்த வெறிநாய்களின் பற்கள் பட்ட இடங்களில் எல்லாம் மாறாத தழும்புகள் நண்பனே. நான் உனக்கு வேண்டுமா? என் தொடைகள், வயிறு. இன்னும் என்னென்னவோ இடங்களில் எல்லாம் மாறாத தழும்புகள் . நான் உனக்கு வேண்டுமா பாப்.? -சொல்லிக் கொண்டே என்னை விட்டு விலத்திப் போய் எட்டத்தில் நின்றாள். எண் தொண்டை வறண்டது. எச்சிலை விழுங்கினேன். எங்கேயே வலித்தது. நெஞ்சுக்குழிக்குள் உயிர் உருண்டு திரண்டது. உடல் பதறியது. நான் செத்துவிட போகின்றேனோ . சுவாசிப்பது கூட சிரமமாய் இருந்தது .
ஜினா நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள். பயந்து இருந்தாள். என்னை கட்டுப்படுத்தி நிதானமாக்க முற்பட்டேன் உடலை,
கீழ் உதட்டை மேற்பற்களால் பற்றிப் பிடித்திருந்தாள். அவள் நெற்றி வியர்த்திருந்தது. மூக்கு நுனியும் வியர்வையை அரும்பியது. மேல் உதட்டிலும் வியர்வை. அழுகையை நிறுத்தி இருந் தாள். அவள் எட்டத்தில் நின்றிருந்தாலும் பார்வை என்னை நோக்கியதாகவே இருந்தது.
“ஜினா”
இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள். அகலக் கை விரித்து தலை அசைத்தேன். தலையை அசைத்து அவள் மறுத்தாள்.
"நாண் மனிதன் ஜீனா”
இன்னும் இரண்டு அடி பின் வைத்தாள். ஆயினும் கலங்கி கண்ணிராயிற்று

Page 29
“பாப் அழுகின்றதா? ஹேய் . ஹேய் பாப் .
நெருங்கி வந்து என் தோள் பிடித்து உசுப்பினாள். குலுங்கி குலுங்கி அழத் தோன்றிற்று. அழுதோன்
சோபாவில் அமர்ந்திருந்த எண் அருகில் வந்தாள். நான் குனிந்திருந்தேன். என் தலை நிமிர்த்தி அவள் முகம் பார்க்க வைத்து புன்னகைத்தாள். என்னால் முடியவில்லை. அண்ணாந்து அவள் முகம் பார்க்க முடியாது இருந்தது. அவள் வயிற்றோடு என் முகம் சாய்த்துக் கொண்டாள். குட்டை பனியன் விலகிக் கொள்ள வெற்று வயிற்றில் என் கன்னம் சாய்த்தேன். என் தலைமுடியை அவள் விரல் கோதி விட்டது.
நெடுநேரம் . நெடுநேரம் . கோடானுகோடி ஒளி ஆண்டுகள் ஒடிப் பறந்தன. இருளில் துக்கம் கரையும். கரைந்தது. வானம் பிளந்து நட்சத்திரமாய் உதிர்த்தது. துக்கத்தில் கூடல் சுகமானது. அற்புத அதிசயம் அது. இன்னும் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் ஒடி மறைய என் நெஞ்சோடு சாய்ந்தாள் ஜினா,
 

"உன்னைப் பிரியும் நேரத்தில் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப் போகிறேனோ”
கிறங்கிக் கிடந்த எண்ணிடம் கிசுகிசுப்பாய் சொன்னாள். புரண்டு படுத்தேன். நெஞ்சோடு விழுந்தாள். சுட்டது என் நெஞ்சு.
"நீ சொல்லியதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” “நாம் பிரியும்போது எப்படி அந்த துக்கத்தை சகித்துக் கொள்ளப் போகிறோமோ என்றேனர்.”
“அப்படியெனில்?”
"அப்படியெனில், நான் வரவழைக்கப் பட்ட காரியம் முடிந்ததும் மீண்டும் சோமாலியாவுக்கு அனுப்பி விடுவார்கள் என்னை”
KK 2 p யார்? என்ன காரியத்துக்காக கனடா வந்தாய்:
KK r?»
வழககுககாக!
66.
வழக்கா?
"ஆமாம் List Lil என்னை துவம்சம் பணிணியவர்களுக்கெதிரான வழக்கு இங்கு நடத்தப்படுகின்றது. என்னுடன் பாலியல் வல்லுறவு கொண்டதையும் என் காதலனைக் கொலை செய்ததையும் வீடியோ பண்ணி வைத்திருக்கின் றார்கள். அதை வைத்துத்தான் வழக்கே நடத்தப் படுகின்றது. வேடிக்கை என்ன தெரியுமா? அந்த வீடியோவைப் பார்த்துத்தான் ஐந்து ஒநாய்கள் என்னைத் தின்றன என்று நானே தெரிந்து கொண்டேன்."
மறுபடி அவள் கணிகள் கலங்கின. அவள் கழுத்துக்கள் கையைப் போட்டு அணைத்துக் கொண்டேன்.
“அப்படியானால் உன் வழக்கு முடிய போய் விடுவாயா?" - ஏக்கமாய் வார்த்தை என்
தொண்டைக்குள்.
“அதிகாரிகள் அப்படித்தான் சொல்லியிருக்கின் றார்கள்.” - சொல்லிவிட்டு நெடுநேரம் கண்மூடி மெளனித்திருந்தாள். எண் இதயம் சுரத்தில்லாமல் துடித்துக் கொண்டிருந்தது.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -27

Page 30
"ஆனாலும் காலம் முழுவதும் உன்னுடன் நான் இங்கு வாழ ஒரு வழி உள்ளது பாப்"
சொல்லிக் கொண்டே போர்வையை விலத்தி ஆடைகளை அணிந்து கொண்டாள். பின் இறுக்கி என்னை முத்தமிட்டு விட்டுப் போய் விட்டாள்.
இரவு முடிந்து பகல் வந்தது. ஒருநாள் முடிந்து மறுநாள் வந்தது. ஜீனா மாத்திரம் வரவில்லை.
மனசு, உடல் சகலமும் வலித்தது. பசலை நோய் வந்தது. பனிக்காலம் முடிந்து இளவேனில் வந்தது. கோடை வந்தது. இலையுதிர் காலமும் வந்தது. ஜீனா வரவேயில்லை.
என்ன ஆயிற்று இவளுக்கு எங்கு போனாள்? மனசு தளர்ந்தது. ஆண்டொன்று இன்னோர் வந்தது.
வாழ்க்கை மெல்ல மெல்ல மாறிற்று. புஸ்கிந்தரின் ஞாபகம் அடிக்கடி வருவதில்லை. அழகான சீக்கியச்சிகளை பார்க்கும் போது சமயங்களில் அவள் நினைவு வருவதுண்டு கலியாணம் கட்டி பிள்ளைகூட பிறந்திருக்கலாம் அவளுக்கு. வீடுமாறி எங்கேயோ போய் விட்டாள். ஜினாவுடன் சொக்கித் திரிந்த அன்றில் வீட்டுக்கு வந்தாள். அவளுடன் பேச வேண்டும் போல் எனக்குத் தோன்றவில்லை. மெளனித்து இருந்தேன்.
“நான் உனக்கு கொடுத்த திறப்பை வீட்டிலேயே
-28- வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

வைத்து விட்டு வந்து விட்டாயே . ஏன்?"
"உன் பார்வையில் நான் படக்கூடாது என நீதான் கோபப்பட்டுக் கொண்டாயே என்மீது”
“அதற்காக கோபித்துக் கொண்டு வந்துவிட்டாயா? நீ என்னை புரிந்து கொண்டது அவ்வளவுதானா?”
என் அருகே வந்து இடுப்பை வெட்டி சீண்டி நின்றாள். மனசுக்குள் ஜீனா இருப்பாதாலோ என்னவோ தெரியவில்லை. புளில் பிந்தரை என்னால் அப்போது ரசிக்க முடியவில்லை.
எனக்கிருந்த தனிமை வாழ்க்கை பிடிக்கவில்லை பாபுஜி. இந்தியா GSuntui பஞ்சாப்பில் தலைப்பாகை இல்லாத - முடிய வெட்டி, தாடியை வழித்த ஒருவனை கல்யாணம் கட்டிக் கொண்டு வரப்போகின்றேன். இந்தா உன் வீட்டுத்திறப்பு” - கொடுத்து விட்டு என்னை சோகமாக பார்த்தாள். பின் -
“பாபுஜி என்னை வெறுக்கின்றதா?” - கணி கலங்கி ஏக்கமாய் கேட்டாள். பாவமாய் இருந்தது
அவளைப் பார்க்க
“தீதீ - தொண்டை கூட கட்டிக் கொண்டது எனக்கு பட்டென கதவைச் சாத்திவிட்டு போய் விட்டாள். புளில் பிந்தர் போனது t/t)6ólf6ნშ))ტr வாட்டினாலும் பெரிதாகப் பாதிப்பு எதுவும் ஆகிவிடவில்லை. மனசு நிறைய ஜினா இருந்தது தான் காரணமாக இருக்கலாம் அல்லது ஜீனா அளவுக்கு புஸ் பிந்தர் மனசுக்குள் கிளர்ச்சி உண்டு பணிணதாதது ć96-L- காரணமாக இருக்கலாம். என்ன கிளர்ச்சியை ஜினா உண்டுபண்ணியிருந்தும் தோற்கப் போவது மனசுதானே.
புளில் பிந்தரைப் போல ஜினாவையும் மறக்க வேண்டிய நிலைமை. வாழ்க்கை வேறு வேறு விதமாய் உருமாறிற்று. எங்கு போனாள், என்ன ஆனாள் என்கின்ற கவலையும் பசலை நோயும் மெள்ள மெள்ள கரையலாயிற்று.
மூன்று பனிக்காலம் கரையலாயிற்று.

Page 31
“ஜினார்”
நெடுநேரம் கடந்து வார்த்தை வந்தது எனக்கு. பரவசத்தில் உடல் நடுங்க கணிணிர் வழிந்தோடியது எனக்கும் ஜீனாவுக்கும்.
ஒடி வந்து என்னருகே நின்று கொண்டாள். நெஞ்சு GSLD6 ஏறி இறங்கியது. மூச்சு வாங்கினாள். முன்னரைக் காட்டிலும் இன்னும் எவ்வளவு அழகாய் இருக்கிறாள். ஆயிரம் பின்னல்கள் கொண்ட தலை அலங்காரம் எத்தனை அழகாய் இருக்கிறது இவளுக்கு, யாராவது எனக்கொரு தேசம் தாருங்களேன். இவள் காலடியில் போடுவதற்கு.
எதிரே நின்று கண்சிமிட்டி புன்னகைத்தாள்.
“எங்க ஜீனா போயிருந்தாய் இத்தனை காலமும்”
“நான் முடித்து விட்டேன் பாப். எல்லாக் காரியத்
தையும் முடித்து விட்டேன் பாப். இனி ஒரு போதும் உனை விட்டுப் பிரியேன்.”
இறுக்கமாய் அனைத்துக் கொண்டாள்.
வினாடிகள் கடந்ததும் அவள் பிடியை விலக்கினேன். “நான் எப்படியெல்லாம் தவித்தேன் தெரியுமா? எங்கே போயிருந்தாய் ஜீனா இத்தனை காலமும்?” “கனேடிய ராணுவத்துக்கு எதிரான வழக்கு நான் சமூகம் தராமல் தலைமறைவாகினால் இந்த தேசத்தின் குடியுரிமையும் எழு நுாறு ஆயிரம் டாலர்களும் தருவதாக ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் மறுத்தேன். என் தனி மானத்தைக் காட்டிலும் உன் காதல் பெரிதல்லவா. அதுதான் அதிகாரிகளின் சொற்படி” மறுபடி என்னை இறுக அனைத்து கணிகள் சிவந்தாள். அவள் முகத்தை நிமிர்த்தி எண் முகம் பார்க்க வைத்தேன்.
“என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நீ தலைமறைவாகி இருக்கலாமே?”
“நான் அதற்கு முயற்சி செய்தேனி பாப். அதிகாரிகளும் உளவு ஸ்தாபனத்தினரும் தடுத்து விட்டனர். ஐ.நா.சபைக்கு ஏதாவது

போக்குக்காட்டுவதற்கு திட்டம் இருந்திருக்கலாம். யாருடனும் தொடர்பு கூடாது என்றும் எவரும் என்னைக் காணக்கூடாது என்றும் தனியாக என்னை பத்திரப்படுத்தி வைத்தனர். நீ எனக்கு வேண்டும். காலம் முழுவதும் நீ எனக்கு வேண்டும். அதற்காகத்தான் நான் சம்மதித்தேன்.
இன்னும் அவள் என்னை இறுக்கமாய் அணைத்தாள்.
“ஜினா!" “ம் .” தலையாட்டினாள். “நீ கேட்டதுபோன்று
உன்னுடன் நான் வாழ விரும்புகிறேன் பாப் ." சொன்ன ஜீனாவின் பிடியை தளர்த்தி அவள் முகத்தை பார்த்தேன்.
“யாருங்க இவ.?” - நெருங்கி வந்த ராதிகா ஜினாவைப் பார்த்து என்னைக் கேட்க ஜினா ராதிகாவை வினோதாவை பார்த்தாள். பின் இருவரும் ஒரே நேரத்தில் புதிராய் எனை பார்த்தனர்.
என் இரண்டு வயது கணிமணி ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டது.
தினம்தோறும் அசுபதினம் எனக்கு தொடங்கிற்று.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -29

Page 32


Page 33
இலங்கையில் அரசி
செல்வா க
ரொரொன்ரோ ப
இந்தக் கட்டுரையின் உண்மையான நோக்கம் இலங்கை அரசியல் அல்லது இலக்கியக் காட்சியை விபரமாக எடுத்துரைப்பதல்ல. மேலாக, இது அவை ஒன்றை ஒன்று தொடர்புறும் பல் வழிகளைப் பற்றிய பல பொதுக் கேள்விகளையே எழுப்ப விரும்புகிறது. இப்படிப்பட்ட விசாரணை மொத்தமாக அவை பற்றிய அறிவில்லாததும் இல்லை. மேல்வரும் உரையாடல் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டவையிலிருந்தும் சிங்கள இலக்கியத்தில் நடைபெறும் விசயங்கள் பற்றிய மூல அறிவுடனும் இடம் பெறுகிறது. அனைத்திலும் முக்கியமாக, இப்படிப்பட்ட சச்சரவுள்ள ஒரு தலைப்புப் பற்றி ஆராயும் போது அதில் என் நிலைப்பாடு அல்லது சாய்வுநிலையும் உள்ளது. இலக்கியத்தின் பங்கு பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் தேசம், இனத்துவம், கலாச்சாரம் பற்றிய எனது எண்ணங்கள் என்ன என்பது பற்றியும் நான் என்னையே கேட்க வேணர்டியும் உள்ளது. எனக்கு ஒரு நிலைப்பாடு இல்லை என்று வலியுறுத்துவதே துரதிஷ்டவசமாக, ஒரு நிலைப்பாடே. அதை ஒரு தற்பாதுகாப்பாக அல்லது மேலோங்கித்தனமாக எடுத்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. இத்தலைப்பு இக்கேள்விகளைக் கேட்க வேண்டிய தேவையை அளித்துள்ளது. குறைந்தது அத்தேவை தொக்கி நிற்கிறது. அதையே இக்கட்டுரை செய்ய எத்தனித்துள்ளது.
இலக்கியத்தையும் அரசியலையும் இணைத்த ஒரு தலைப்பு உள்ளார்ந்தே பிரச்சினைக்குரியது. அதாவது, இவ்வெழுத்தின் மெய்ப்பொருளே அரசியலால் கட்டமைக்கப்பட்டதாகவும் முற்சார் புள்ளதாகவும் கருதப்படும். பொதுவாக அவை இரண்டும் கலப்பதில்லை. இலக்கியம் முற்று முழுதாக அரசியலையே கொணர்டிருந்தால் செய்தி அறிவிப்பாகவே இருக்கும். அத்துடன் அது சலிப்புள்ளதாகவும் முடிவு தெரிந்ததாகவுமே இருக்கும். காலனித்துவத்திலிருந்து மீண்டு வரும் அனுபவத்தைக் கொணிட, தென்னாபிரிக்கா

யலும் இலக்கியமும்
னகநாயகம்
ல்கலைக்கழகம்
தமிழாக்கம்: மகா
போன்ற நவகாலனித்துவ நாடுகளில் இலக்கியம் பதிவு செய்யப்பட்டு பிரசங்கிக்கப்பட வேண்டும் என்ற உந்துதலுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. இவ்விசயத்தைச் சொன்னதன் என் நோக்கம் இலங்கையைப் பொறுத்தவரை அதைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே. இலங்கையில் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவு குறிப்பாக கவனிக்கத்தக்கது. இலக்கியங்கள் பலவீனமானவையாகவும் சோர்வா னவையாகவும் இருந்தால் அவை ஒரு குறிக்கோள் கொண்டதாகவே இருக்கும். ஏனெனில் படைப் பெழுத்துக்கள் இலக்கியத்துடன் தொடர்புறுகையில் அதற்கு ஒரு தனித்த ஒரு பங்கொன்று ஏற்படுகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள இலக்கியங்களில் அரசியல் பிரதிபலிப்பதிலும் பார்க்க, அது பதிவு செய்வதிலும், அரசியல் யதார்த்தங்களை தலைகீழாகப் புரட்டுவதிலுமே ஈடுபட்டது. அது சிக்கலான, சதா மாறும் அரசியல் சூழலை புரிந்து கொள்ள முயற்சித்தது.
1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து இலங்கை அரசியல் கொந்தளிப்புக்கள் உள்ளதாகவே இருந்திருக்கின்றது. இனத்துவ, இறப்பிறப்பியல் பிரச்சினைகளை கணக்கிலெடுக்காத ஜனநாயக அரசில் உள்ள சிறுபான்மை இனங்களின் பயம் ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் என்று இப்போது அழைக்கப்படுவதற்கான தேவையை 1948 இலேயே ஏற்படுத்தியது, அது தோல்வி யடைந்தது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு முன் மொழிதலை மேசையில் போட வேண்டிய தேவையை திருப்தியற்ற ஒரு தீக்குறியாகவே பார்க்க வேண்டும். அதன்பின்னர் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிபோனமை, 1956 இல் வந்த அரச மொழிச் சட்டம், 1958 ஏற்பட்ட இனக் கலவரம், ஆகியவற்றைப் பின்னோக்கிப் பார்க்கையில் அவை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில என்று தெரியும். இவைகள் எவற்றையுமே எழுத்தாளர்கள் அதிகம் கவனத்தில் எடுக்கவில்லை. இதற்கான காரணங்கள் பல
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -3-

Page 34
இருக்கலாம். சமூக அடுக்கமைவு, வாசகர்,
பொருளாதாரம், பிரதேச உட்கலாச்சாரங்கள், வர்க்கம் ஆகியவை பற்றியனவாக அவை இருக்கலாம். ஆங்கிலத்தில் எழுதிய நுாலாசிரியர் களுக்கு வர்க்கம் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். அவர்கள் பெரும்பான்மையாக மத்தியதர வகுப்பினராகவும், தனியார் பாடசாலைகளில் அல்லது ஆங்கில மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்றவர்களாகவும் மேற்கு நாடுகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், கொழும்பில் வசித்த வர்களாகவும் இருந்தார்கள். இந்த எழுத்தாளர்கள் நவகாலனித்துவ, அரசியலற்ற உலகத்தவர்களா கவும் அடுத்தவர்களை போலி எளிமையாகப் பார்ப்பவர்களாகவுமே இருந்தார்கள்.
தமிழ் எழுத்தாளர்கள் வேறு போர்களைச் செய்து கொண்டிருந்தார்கள். அரசியல் பிரச்சினைகளை விட உடனடிச் சமூக நோய்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வர்க்கப் பின்னணி பல தரப்பட்டவை. பிரதேச, கிராமிய யதார்த்தங்களைச் சேர்ந்தவர்கள் அவர் கள். பொதுமைப்படுத்தல் தப்பான வழிகாட்ட லுக்கு இட்டுச் சென்றாலும் அது பெரும்பான் மையும் உண்மை. பிரதேச உப கலாச்சாரங்கள், வித்தியாசமான சமயங்கள், பரந்த சாதிய இணைப் புக்கள் ஆகியவை தமிழர்களின் இலக்கியக் காட்சியினர் பெரும்பகுதியாகும். உணர்மை என்னவெனில் மிகச்சில எழுத்தாளர்களே அர்த்தமுள்ள வழியில் அரசியலை எடுத்தாள்வதற் கான தேவையை உணர்ந்தவர்கள்.
ஜே.வி.பி யால் கிராமிய மட்டத்தில் உள்ள இளைஞர்களைக் கொண்டு 1971 இல் நடந்த கிளர்ச்சியே உண்மையில் இலக்கியக் காட்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. விசாலமான பொதுமைப்படுத்துதலால் ஏற்படும் ஆபத்து உணர்டென்றாலும், இலங்கை அரசியலில் இந்நுாற்றாண்டின் முதலிரண்டு தசாப்தங்களும்
-32- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 

ஆங்கிலக் கல்வி கற்ற உயர்குழாத்தினரின் ஆதிக்கம் நிறைந்த காலம் என்று கூறலாம். அவர்களே இனத்துவ தேசியத் தீயை எரியத் துாணர்டிக் கொண்டிருந்தவர்கள். 1971 கிளர்ச்சியே ஒரம் தள்ளப்பட்ட கோபமடைந்த இளைஞர்களின் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பெருமளவில் நடந்த முதலாவது முயற்சி எனலாம். அது விதி சதி செய்த முயற்சி. அது இலகுவாக நசுக்கப்பட்டது. ஆனால் பழைய கருதுகோள்கள் முற்றாக மறைந்து விட்டன என்பதை எழுத்தாளர்களுக்கு அது தெளிவாக எடுத்துக் காட்டியது. ஆகவே, அதிகமான பெரும் எழுத்தாளர்கள் அனைவருமே ஒரு நுாலாவது கிளர்ச்சியின் கொடிய பிற்பகுதியை வைத்து எழுதினார்கள். இந்த எழுச்சியை வைத்து எழுதிய இலக்கியங்களைப் பற்றி பல எழுத்துக்கள் வந்து விட்டன. ஒரு சில புறநடைகளைத் தவிர இவ்விலக்கியங்களின் பலவீனம் அவற்றில் உணர்மையான ஈடுபர்டு காணப்படவில்லை என்பதே. இதில் பொதுவான கருத்தொற்றுமை உண்டு. இக்கிளர்ச்சி தமிழர்களை உள்ளடக் கவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். தமிழ் எழுத்தாளர்களுக்கு இக்கிளர்ச்சி அவர்களுடன் தொடர்புள்ள ஒரு பிரச்சினை அல்ல.
உண்மையில் 1983 இன் பின்னர் தான் அரசியல் முழு நாட்டையுமே பாதித்தது. 1983 இல் நிகழ்வுகளுக்கு அதற்கு முன்னர் நடந்தவை பல காலாகின. இருப்பினும் யாழ்ப்பாணத்தில் போராளிகள் 13 இராணுவத்தினரை சுற்றி வளைத்துக் கொன்றதே அந்நெருக்கடியை துரிதப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பரந்தளவில் இனக் கலவரம் ஏற்பட்டது. நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்த தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன, அந்தப் புள்ளியிலிருந்து சுமூகச் சூழ்நிலை திரும்பாதது போலவே உள்ளது. எழுத்தாளர்களும் தொடரும் அம்மோதல்களின் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். இனம், சமயம், வர்க்கம், என்ற பேதமில்லாது அனைவருமே அரசியல் வன்முறையின் தாக்கத்தை உணர்ந்துள்ளார்கள்.
வித்தியாசமான தொலைதோற்றத்திலிருந்து கடந்த இரு தசாப்தங்களின் நிகழ்வுகளும் நன்கு பதிவு செய்யப்பட்டள்ளன. ஆனால் தற்போதைய நோக்கத்தின் Luq பார்த்தால் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் எந்தவித உணர்மையான முன்னேற்றமும் காணப்படவில்லை. இனத்துவத்

Page 35
தேசியம் ஆயுதப் போராட்டமாக மாறிய 1983 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைப் படையினருடன் விடுதலைப் புலிகள் நேரடியாக மோதுதல் நடைபெற்று வருவதே ஒரு மாதிரி வார்ப்பாக இருந்து வருகிறது. பின்னோக்கிப் பார்க்கையில், பல தப்புக்கணக்குகள், பல பிழையான தீர்மானங்கள் ஆகியவை நாட்டை திரும்ப மீட்க முடியாத முட்டுக்குள் கிடத்திவிட்டார்கள் என்பது துல்லியமாகத் தெளிவாகி விட்டது. நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அவை அரசியலுக்கு ஒரளவே தொடர்புடையதாகத் தெரிந்தவை இப்போது அவை இனத்துவ தேசியத்தின் அதிக நச்சுத்ததன்மையுடைய உருவத்தின் முக்கிய முகப்பாக வளர்ந்துள்ளதை நிரூபித்துள்ளன.
இன்றுள்ள வன்முறைக் கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் அரசியல் போக்கை சிருஷ்டிப்பதாகவே வளர்ந்துள்ளது. அதாவது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் போக்கே காணப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்தினரும் தங்கள் நியாயத்தை நிரூபிக்க 6) கதைகளைக் கூறுவார்கள். முக்கிய தமிழ, சிங்கள அரசியல்வாதிகளைக் கொன்றமை, சந்தர்ப்பம் கிடைத்தபோது பேச் சுவார்த்தைகளின் மூலம் உடன்படிக்கைக்கு வராமை, ஒற்றையாட்சியின் முழுமையை தகர்ப்பதற்கு பலவழிகளாலும் முயற்சித்தமை போன்ற நிகழ்ச்சிகள் ஒரு நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கு முக்கிய பிழைகளாக இருக்கும். அரச மொழிச் சட்டம், பல்கலைக் கழக அனுமதியை மட்டுப்படுத்தும் புள்ளிகளைத் தரப்படுத்தியமை, தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுத்தமை, தமிழர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டமை போன்றவை இன்னொரு நிலையில் இருந்து விவாதிப்பதற்கு பாவிக்கப்படும்
காரணங்கள்.
அரசியல் மோதல்களில் இரணர்டு அம்சங்கள் குறிப்பாக முக்கியமானவை. முதலாவது, மோதலின் பருமன், அதன் பின் மக்களுக்கு, உடைமைக்கு, பொருளாதாரத்துக்கு நிகழும் தீங்கு முக்கியமானவை. பல ஆய்வுகளில் முன்பே குறிப்பிட்டவாறு, தேசத்தை இராணுவமயமாக்கல் நடைபெற்று வருகிறது. ஜனநாயக அழிவு, ஆயிரக் கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்ச்சி, 50,000 மக்களுக்கு மேல் இறப்பு, பெரியளவில் பணவீக்கம், பெரும் தேசியக் கடன், தொடர்பூடக நிலைகுலைவு, அரசியல் நிலைப்பாடுகளின்

த்திப்
துருவமயமாதல் ஆகியவையும் நடைபெற்றுள்ளன. மோதலால் ஏற்பட்ட மனித அழிவு பிரமா ணிடமானது. அதன் தாக்கத்தினால் ஏற்பட்ட அழிவுகளை, நட்டங்களை நிவர்த்தி செய்ய பல தசாப்தங்கள் தேவைப்படலாம். இலங்கைத் தீவின் வடபகுதி கப்பல் மூலம் அல்லது விமான மூலம் மட்டுமே அடையக் கூடியதாக பல ஆண்டுகளாக உள்ளது. நவீன தொடர்புச் சாதன வலைகள் உள்ள நவீன தேசத்தில் இந்தப் பிரச்சினையின் ஈர்ப்புச் சக்தியை அறிய அது மட்டுமே போதும். இரண்டாவதாக, இன மோதல்களுக்கான ஆரம்ப மூலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன. உதாரணமாக, இனப் பிரக்ஞையில் முக்கிய திருப்பு முனையாக கருதப்பட்ட, 1956 இன் அரச மொழிச் சட்டத்தில் 1978 இல் தமிழும் அரச மொழி அந்தஸ்துக் கொடுக்கப்பட்டுத் தீர்க்கப்பட்டு விட்டது. 1948 இல் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அவர்களுக்கு குடியுரிமை வழங்க ப்பட்டு அது மாற்றப்பட்டு விட்டது. அப்படிப் பட்ட குறிப்பிட்ட பிரச்சினைகள் இனத்துவ தேசியம் என்றதின் முன் முக்கியமற்றவையாக மாறிவிட்டன. இனத்துவ தேசியமே ஒரேயொரு பிரச்சினையாகவும் அதில் இரண்டு பகுதியின ருமே விட்டுக் கொடுக்காதவர்களாக வந்து விட்டார்கள். அனைத்து விவாதங்களும் அலச ல்களும் இந்தப் பிரச்சினையின்பாலே ஈர்க்கப் பட்டுள்ளன.
முரணியலாக, மோதல்களைப் பற்றிய ஆய்வு களும் பெரும்பாலும் துருவமயமாகி விட்டன. நடுக்களத்தைச் சிலர் முன்வைத்தபோதும் பலருக்கு கருத்தியல் நிலைப்பாடுகளில் ஒற்றுமை இல்லை. ஒன்று, பிரதேச ஒருமையுடன் கூடிய ஒற்றையாட்சி முறை. மற்றது, இனத்துவத்தின் அடிப்படையில் இரு தனியான தேசங்கள். சமயப் பனுவல்களிலிருந்து கல்வெட்டுக்கள் வரை சகல சாத்தியமான மூலங்களும் தங்கள் நிலைப்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -33

Page 36
பாடுகளை நியாயப்படுத்துவதற்கு உதாரணங்களாக
எடுத்துக் காட்டப்படுகின்றன. வரலாற்று ஆய்வுகள் வரலாற்றியலிருந்து வரவழைக்கப்பட்டு மூல ஐதீகங்களை அரச உதவியுடன் விலையேற்றி தங்களின் நிலைப்பாடுகளை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.
குற்றம் சாட்டுதலைப் பொருட்படுத்தாமல், தற்போது முக்கியமானது என்னவெனில் அரசபியல் ஈடுபட்டுள்ள ஐதீகச் சிருட்டியை ஏற்றுக்கொள்ளலே. சிறி லங்கா, ஈழம் என்ற இரு சொற்களுமே மூல ஐதீகங்களே. அவை தனியான இரு அடையாளங்களை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் கொடுக்கின்றன. அரசியல் விஞ்ஞானிகள், மானிடவியலாளர்கள், மொழியபியலாளர்கள், இலக்கியத் திறனாய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றியலாளர்கள் அனைவருமே இரு பிரிவு வரலாற்றினை ஏற்றுக்கொள்ளும் மனச்சார்பு உடையவர்களாகி விட்டார்கள். கடந்த சில தசாப்தங்களாக வெளிவந்த பெருந்தொகையான நுால்களால் வரலாற்றியல் ஒன்றை மற்றதிலும் பார்க்க தலைமைச் சிறப்பு எடுக்க வைக்கத் தொடங்கியுள்ளது இப்பொழுது தெளிவாகி வருகிறது. தங்கள் முயற்சிகளில் அகச்சார்பு உள்ளது என்பதை பிரக்ஞையுடன் ஏற்றுக் கொண்டு மெய்ம்மைகளை வைத்து புறச்சார்பாக ஆயும் பனுவல்கள் உள்ளன. அதேவேளை பெருந்தொகையான அறிஞர்களும் அலசல்காரரும் “வரலாறுகளை” சிருட்டித்திருக்கிறார்கள். அவர்களின் தெரிவுகளும், விடுதல்களும். ஒரு பார்வையை மற்றவற்றின் மேலாகக் கொணர்டாடுவதன் மூலம் “வரலாறுகளை” சிருட்டிக்கிறார்கள். இந்த உச்ச துருவமயப்பட்ட, உள்நோக்குள்ள ஐதீகச் சிருட்டிப் போக்குப் பின்புலத்தை வைத்து இலக்கியத்தின் பங்கை நாம் நோக்க வேண்டும்.
-7மம் தமிழ் 2000 காலம் - 3
 

Handwriting (1998) கையெழுத்து என்று அண்மையில் வெளிவந்த கவிதைத் தொகுதியில் ஒண்டாச்சி வேலைக்காரி பற்றிய தன்னிலைக் கவிதை ஒன்றை முழுவதாக இவ்விடத்தில் பெயர்த்தல் பொருத்தமானது:
கடைசியாக நான் இழந்த சிங்கள வார்த்தை வதுற
தணிணிர் என்ற வார்த்தை காட்டுத் தணிணிர். முத்தத்தில் ஒரு தண்ணிர். கணினிர் என் ஆயா றோசலினுக்கு நான் கொடுத்தது. பிரியும்போது. என் வாழ்வின் முதல் வீட்டினை விட்டுப் பிரியும் போது.
அதிக தண்ணிர் அவளுக்காக வெறெவருக்காகவும் அல்ல என் கண்ணில் இருந்து மேலும் விழுந்தவை இந்த ஆண்டு, அவளை நினைத்து, அவ்வாண்டுகளில் அன்புக்கு ஏங்கும் இழந்த அன்னையே ஆனவள் அவளின் உருவப்படம் என்னிடம் இல்லை. அவளைப் பதினொரு வயதிலிருந்து சந்திக்கவில்லை. அவளின் கல்லறை எங்கே உள்ளதும் தெரியவ
பில்லை.
யார் யாரைக் கைவிட்டது, எனக்கு வியப்பாய் உள்ளது இப்போ (50)
முக்கியமான இத்தொகுப்பில் கருத்தைக் கவரும் இந்தக் கவிதை குறிப்பிடக் கூடியது. சிங்கள வார்த்தையான வதுர என்பதை அழுத்தமாகக் கூறியது தனிக்கவனத்துக்குரியது. ஏனெனில், வீட்டு மொழி பெரும்பாலும் ஆங்கிலமாக இருந்ததால் ஒண்டாச்சி குழந்தையாக இருக்கும் போது அப்படியாகத்தான் தன் வேலைக் காரியுடன் தொடர்புகொள்ளக் கற்றிருக்க வேண்டும். ஆயாவின் பெயர் றோசலின். அது ஒரளவு வித்தியாசமானது. ஆனால் முற்றிலும் அறியாததல்ல. அக்காலத்தில் வேலைக்காரர்கள், தொழிலாளர்கள் அல்லது நன்னிகளிலும் பார்க்க வித்தியாசமானவர்கள். ஏனெனில் அவர்கள் எஜமானரின் குடும்பத்துடன் பல்லாணர்டுகள் வாழ்ந்து வந்தார்கள். பலவேளை அவர்கள் மணம் முடிக்கும் வரை. பின்னரும் தங்கள் தொடர்புகளை

Page 37
நீண்ட காலம் வைத்திருந்தார்கள். அந்தச் சூழலில் “யார் யாரைக் கைவிட்டது” என்ற தொடர் சிறப்பாக எதிரொலிக்கின்றது. தன்னிலை மட்டத்தில் வேலைக்காரியைப் பொறுத்தளவில் இவர் செய்தது ஒரு நம்பிக்கைத் துரோகமே. தேசிய அரசியல் மட்டத்தில் பறங்கியர்களின் புலப்பெயர்வு 1956 இல் அரசின் தீர்மானமான ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு அரச மொழி மாற்றமே. ஆகக் குறைந்தது ஒரளவு அது தான் காரணம். அதனால் ஆங்கிலம் தாய் மொழியாக இருந்தவர்களின் புலப்பெயர்வு தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. வேலைக்காரியை வைத்து எழுதப்பட்ட ஒரு குறிப்பிட்ட கவிதையை வைத்து ஒரு சிறிய கருத்தை விவாதிப்பது அதை நோக அடிப்பதல்ல. வேலைக்காரிகள் அவர்களின் பலவித பங்குக ளால் கலாச்சாரத்தைப் புரிவதற்கு ஒரு முக்கிய பணி புக்கூறாகப் பயன்படுகின்றனர். ஆகவே, விஜேசிங்க ஒரு சிறுகதைத் தொகுதியே வேலைக்காரி Servants (1995) என்ற தலைப்பிட்டு எழுதியுள்ளது ஆச்சரியப்படுவதற்கில்லை. அது இலங்கையில் வேலைக்காரிகளின் பங்கையும் சிறப்பான இடத்தையும் எமக்குத் தெளிவாக எடுத்தியம்புகிறது.
வோட்டர்லுாவில் வாழும் றியன்சி குறுாஸ் என்ற இன்னொரு பறங்கி எழுத்தாளர் Lord of the Mountain: The Sardiel Poems (1999) ataoi p gayoi கவிதை ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டு ள்ளார். சரதியேல் என்ற இக்கவிதை இலக்கியத் தொகுப்புக்குரிய இனத்தில் முதல் என்ற தனி இடத்தைப் பெற்றுள்ளது. சரதியேல் என்ற கவிதை 19 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த சட்டத்தை மீறி நடந்த சரதியேல் என்ற ஒருவரின் கதை பற்றியது. இலங்கையில் புத்தசமய குருமாருக்கும் பெருநிலச் சொந்தக்காரருக்கும் எதிராக கிளம்பிய கிளர்ச்சிக்காரரே இவர். அப்படிக் கிளம்பிய அவருக்கு படிப்படியாக பிரிட்டிஷாருடன் மோத வேண்டிய நிலை வந்தது. இறுதியில் அவர் பிடிபட்டு துாக்கிலிடப்பட்டார். அவ்வெழுத்தாளாபின் படி, சரதியேல் அவரின் வாழ்வின் இறுதி நாட்களில் கத்தோலிக்கராக மாறினார். குறுாஸ் அப்படிப்பட்டதை ஒரு ஆய்வுப்பொருளாக எடுத்துக் கொண்டதே பலவழிகளில் ஆச்சரி யத்துக்குரியது. அவர் அதிகமாக அரசியல் காட்சிகளிலிருந்து தொலைவிலே இருந்துள்ளார். அத்துடன் காலனித்துவ அரசியலை அழுத்தாதிரு ப்பதற்காகவும், மிகவும் அடுக்காக அமைந்ததும் அடக்குமுறை அமைப்புக்கும் எதிராக சட்டத்தை

குடும்பத்தில் ஒருவராக வாழ்வதற்கு முயற்சிகள் பல செய்தும் அவர்களால் ஒவ்வொரு முறையும் புறத்தியாளாகப்
புறக்கணிக்கப்பட்டவர் என்று சொல்லாற்றலுடன் எழுதுகிறார்.
மீறி நடந்த ஒரு வரலாற்று நாயகனைத் தெரிவு செய்துள்ளார்.
மூன்றாவது உதாரணமும் ஒரு பறங்கியரான ஜின் அரசநாயகம் என்பவரே. இவர் ஒரு தமிழரை திருமணம் செய்து இலங்கையிலே வாழ்ந்தவர். அவர் தன் கணவனின் குடும்பத்தில் ஒருவராக வாழ்வதற்கு முயற்சிகள் பல செய்தும் அவர்களால் ஒவ்வொரு முறையும் புறத்தியாளாகப் புறக்கணிக்கப்பட்டவர் என்று சொல்லாற்றலுடன் எழுதுகிறார். அதேவேளை 83 இல் நடைபெற்ற இனக் கலவரத்தின் போது, அவர் தமிழரை மணம் முடித்திருந்ததினால், தமிழர் என அடையா ளப்படுத்தப்பட்டு அகதியானார். சமாதானமாக சகவாழ்வு நடாத்திய பலவகையான அடையாளங்கள் விளிம்புகளுக்கு தள்ளப்பட்டன. புறத்தி யாள் The Outsider (1995), 9,60607 gigslid at figlaci poor All is burning (1995) 6Taip நுால்களில, இனக்கலப்பு அடையாளங்களின் சிக்கல்களை அவர் புத்தாய்வு செய்கையில் பல்வகை மரபுகள் அவரின் எழுத்துக்களில் சங்கமமாகின்றன. 1970 ஆரம்பங்களிலிருந்து கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை எழுத்துக்களில் அரசியல் ஆதிக்கம் செலுத்தி யுள்ளது என்பதை திரும்பவும் அழுத்துகிறேன். 6600i Ltd duSaoi Running in the Family Gouluyub அவரின் Handwriting யும், குறுாசின் Elephant and Ice guyb 96 faoi Lord of the Mountain uyb ஒப்பிட்டுப் பார்க்கையில் இவ்வெழுத்தாளர்கள் எவ்வளவு துாரம் பயணித்து விட்டார்கள் என்பதை அறிய முடியும். ஆனால் இது அரசியலுக்கு நேருக்கு நேர் முகம் கொடுக்கும் தேவையிலும் பார்க்கக் கூடியது. ஒண்டாச்சியின்
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -35

Page 38
நீண்ட கவிதை ஒரு நுட்பமாக ஆக்கப்பட்ட ஐதீகமே. அதில் காலம் தகர்க்கப்பட்டு இறந்த காலமும் நிகழ்காலமும் ஐக்கியமாகின்றன. புலிகள் தாங்கள் பிடிபடுவதிலும் பார்க்க சாவினைத் தெரிவு செய்தலும் பிக்குகள் ஆக்கிரமிப்
போரிடமிருந்து எப்படியாவது தப்ப முயற்சிப்பதும் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
எழுத்துக்களையோ எழுத்தாளர்களையோ வகை மைப்படுத்தும்போது அவர்களிடையே உள்ள வேறுபாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே செய்யப்பட வேண்டும். அப்படிப் பட்டவை பல உள்ளன. இலங்கை, ஒஸ்ரேலியா, இங்கிலாந்து, கனடா என்ற நாடுகளில் இருந்து எழுதுகிறார்கள் என்ற வெளிப்படையானதும் அதில் அடங்கும். சமயம், இனத்துவம், அரசியல் கொள்கைப் பற்றுறுதி ஆகிய அனைத்துமே அப்படியான காரணிகளே. ஏன் ஏ.சிவானந்தன் When Memory Dies (1997) gav øyüJLquuntGOT GODg5 எப்படி எழுதுகிறார் அல்லது சியாம் செல்வத்துரை Funny Boy அல்லது ராஜீவ 65GSgduis Days in Despair (1989) grisai கதைசொல்லலை அப்படி அமைத்துள்ளார்கள் என்பவையும் அதையே காட்டுவன. “Sri Lanka A Case Study' என்ற சிவானந்தனின் கட்டுரை அவரின் படைப்புக்களில் காணப்படும் மாக்சிசக் கொள்கைப் பிணைப்பைக் காட்டி நிற்கிறது. விஜேசிங்க பகுத்தறிவால் புரிந்துகொள்வதற்கு முடியாத கட்டற்ற புனைந்துரைகளை எழுதுவதற்கு மாயா யதார்த்தத்தை எடுத்துக் கொண்டார் என்பதற்கு அவரின் ஜனநாயகத்தை பாதித்தவை பற்றிய ஆய்வு வெளிக்காட்டுகிறது.
பல்வேறு முரணர்கூறுகளையும் சிக்கலையும் எழுத்தாளர்களாக இருந்தபோதும் பற்றுறுதியுடன் அவர்கள் எழுதுவதையும் அவர்களின் தரிசனம் பெரும்பான்மையும்
-36- வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட தையும் நாம் அவதானிக்கலாம். செல்வத்துரையில் கூட இது உண்மை. அவருடைய Funny Boy என்ற நாவல் குறைந்தது ஒரளவு சுயசரிதையை வைத்து எழுதப்பட்டது. நாவலின் வன்முறை எப்படி யிருந்தாலும் அவரின் தரிசனம் பெருந்தன்மை யுடையதும் பிரிக்க முடியாததிலும் பார்க்க பரஸ்பரத்தன்மையுடையதும் ஆகும். விஜேசிங்க வின் Days of Despair என்ற நாவலின் முடிவு கடவுள் அருள் வெளிப்பாட்டுத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. அது எதிர்காலத்திற்கு புத்தாரம்பத்தை சிருட்டிக்க முயற்சித்த ஒன்றே. வர்க்க ஒருமைப்பாட்டின் எச்ச இருப்போ அல்லது மொழியைக் கட்டுமானப்படுத்தும் விழுமியங்க ளோ அதில் உள்ளன. ஆனால் அதை ஆங்கிலத் தில் எழுதி ஒற்றையாட்சியை ஆதரிக்கிறது. அதற்குக் காரணம் அது ஒரு குழுவுக்கு எதிராக மற்றதை ஆதரிக்கிறது என்பதல்ல ஆனால் அதன் தார்மீக உரைகல் மேற்கத்தைய தாரணிமை வாதத்தைச் சேர்ந்தது என்பதே சரி.
கருத்தியல் நிலைப்பாட்டைப் பொறுத்து இந்த எழுத்துக்களை அவை ஒரு பக்கத்தையும் சார மறுத்ததற்காக நிந்திக்கலாம். அந்தக் கைங்கரி யத்தில் இதுகாறும் உள்ள நிலையை அப்படியே வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தை அவை பாதுகாக்கிறது எனலாம். அதேவேளை, இந்த எழுத்துக்கள் அவற்றின் கைத்திறனுக்காக, சுய பிரக்ஞைக்காக, இனத் தேசியம் ஆகியவற்றுக்காக விலைமதிப்பைக் கூட்டலாம். ஆங்கிலத்தில் எழுதுவதால் அரசு நுண்ணாய்வுக்கு அகப்படும் ஆபத்து இல்லை எனச் சொல்ல முடியாது. றிச்சட் 9. சொய்சா என்ற எழுத்தாளர் தன் பற்றுறுதிக்காக தன் உயிரையே விலையாகக் கொடுத்தார். ஆங்கிலத்தில் எழுதுவது மேற்கத்தைய வாசகர்களுக்கு கிடைக்கும். ஆகவே, அவை அரசைக் கவிழ்க்கும் தன்மையுடையவை என்று நோக்கப்படும். இவ்விலக்கியம் அரசியல் பற்றியதே அல்லாமல் அரசியல் பக்கச் சார்பு எடுக்கச் சொல்பவை அல்ல. வரலாற்றின் பெயரால் நடைபெறும் உரிமைக் கோரிக்கைகள் பெரும்பாலும் பனுவல் கோரிக்கைகளே என்பதை ஞாபகமூட்டும் இலக்கியம்.
ஆங்கிலத்தில் எழுதுவது அதன் தரிசனத்தை வைத்துப் பார்க்கையில் தமிழ் எழுத்துக்களை விட சிறப்பாக வித்தியாசமானது. இது வாசகர்களைப் பற்றிய கேள்வி அல்ல. இருப்பினும் வாசகர்

Page 39
களுக்கும் அதில் பங்குண்டு ஆங்கிலத்தில் எழுதும் உலகம் முழுவதும் பரம்பிய இலங்கை எழுத்தா ளர்களின் ஆங்கில எழுத்துக்களைப் பொறுத்த வரை இது உண்மை. அவர்கள் மிக வித்தியா சமான ஒரு வாசகர்களுக்காக எழுதுகிறார்கள். செல்வத்துரையின் நாவலில் ஜெகன் என்ற ஒரு பாத்திரத்தை உள்ளடக்கி உள்ளார். அவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குத் தொழில் தேடிச் செல்கிறார். அங்கு புதுவாழ்க்கை அமைக்க ஆரம்பிக்கிறார். அந்தக் கதைசொல்லலில் ஜெகனிடம் அரசியல் சார்பு உள்ளது, அவருக்கு இடமளிக்கும் குடும்பத்தினர் இடம் கொடுத்ததால் ஏற்படும் விளைவுகளுக்கும் முகம் கொடுக்க ஏற்படுகிறது என்பது தெளிவாகிறது. இந்த நாவலின் தார்மீக கட்டுமானத்துள், ஜெகன் ஒரு சிறு பாத்திரம்தான். அவர் கதைசொல்லலில் வருகிறார். மறைந்து விடுகிறார். தமிழில் எழுதப்படும் நாவலாக இருந்தால் ஜெகன் ஒரு மையப் பாத்திரமாக அமைந்திருக்கும். அது தமிழில் எழுதும் இலக்கியம் பிரிவினையை ஆதரிப்பார்கள் என்பதல்ல இதன் அர்த்தம். மாறாக, தனி குடும்பத்தைத் தொலைத்த ஒரு பிள்ளையின் வேதனை செல்வத்துரையின் நாவ லின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டது. 1983 இல் நடைபெற்ற இன வன்முறையில் அனுபவித்த துயரங்களை நேர்மையாக விமர்சித்த நாவல் என்று செல்வத்துரையின் நாவலைச் சொல் வார்கள். ஆனால் உணர்மையில் அதன் உண்மையான நிலைப்பாடு இனத்துவத்தைக் கடந்த தாராணிமை எண்ணங்கள் கொண்ட ஒரு
நாவல் என்றே அதைக் கூறலாம்.
அப்படி அதை பிரித்துப்பார்த்து நிலைநிறுத்த முயற்சிப்பது ஒர் எழுத்துருவத்துக்கு மேலாக இன்னொன்றை விரும்புவது அல்ல. ஒப்பீட்டு மதிப்பீடுகள் எப்பொழுதுமே சிக்கல் நிறைந்ததே. ஏனெனில் அது இலக்கிய எதிர்வினையைக் கடந்து விடுகிறது என்பதாகி விடும். இரண்டு தரப்பினரிலும் வெளிப்படையான அரசியல் குறிப்புப்பொருள்கள் உள. அப்படிச் சொல்லும் போது தமிழில் எழுதப்படுவனவற்றைப் போற்றும் எந்த முயற்சியையும் அகன்ற தன்னின இனச் சார்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே திரித்துப் பார்ப்பார்கள். அது இறுதியில் இனத்துவத் தேசிய உருவங்கள் என்றதில் போய் முடியும். அதே தர்க்கத்துடன், ஆங்கிலத்தில் எழுதுவதற்காக வாதிட்டால் அதை இன்னொரு வர்க்கப் பிரக்ஞையுடன் சேர்ந்து கொள்வதாக எடுத்துக்

கொள்வர். அதாவது, அவ்வர்க்கம் ஆங்கில,
மேலோங்கி, பிற்போக்குக் கருதுகோள்களைக் கொண்டதாகும். என் நிலைப்பாடு என்னவென் றால் தமிழில் எழுதுகிறவர்கள் வித்தியாசமான வர்கள்.
ஆங்கிலத்தில் எழுதுவது போலவல்லாது, தமிழ் எழுத்தாளர்கள், அறுபதுகளிலும் எழுபதுகளிலும், மாக்சியக் கொள்கைகளினர் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். அவர்கள் தமிழ் சமூகம் பற்றிய அடிப்படைக் கருதுகோள்களில் சிலவற்றைக் கேள்விக்குட்படுத்த ஆரம்பித்தார்கள். இந்தியாவில் தலித்துக்கள் பற்றி வரும் எழுத்துக்கள் அணிமைக் காலத்தவை. ஆனால் இலங்கையில் அது முழு ஆற்றலுடன் அறுபதுகளிலேயே எழுதப்பட் டுள்ளது என்று சிவத்தம்பி கூறுவது முக்கியமான ஒரு குறிப்பாகும். மிகவும் பாரம்பரிய மொழி ஒன்று புதிய யதார்த்தங்களை வெளிப்படுத்துவதில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப் படுகிறது.
ஆனால் அனைத்து முற்போக்கான இயக்கத் துடனும், தமிழ் எழுத்துக்களில் இன்னும் பழமைபேணும் மூலகங்களும் காணப்பட்டன. தமிழர்கள் நாட்டின் பல பாகங்களில் வாழ்ந்த போதும், பிரதேசப் பற்றுக்கள் -மணி வாசனைஅவர்களிடம் அதிகம் காணப்பட்டது. ஒவ்வொரு பிரதேசத்தினரும் தம் மண்ணினைப் பற்றி எழுதினாலும் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் பிரதேசங்களைக் குறுக்காக வெட்டித் தொடர்பு கொள்ளக் களம் அமைத்துக் கொடுத்தன. பொதுவாக, இலக்கியம் தனிச் சிறு அமைப்புக்களாகும் போக்கு இருந்தன. 1983 இன் பின் அனைத்துமே ஒருவருமே எதிர்பாராத முறையில் மாற ஆரம்பித்தன.
புதிய அரசியல் காட்சியால் பழைய பிரிவுகள்
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -37

Page 40
நொருங்குவது தவிர்க்க முடியாததாகிறது. மக்கள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு பெயர்வதாலும், போராளிகளும் வெவ்வேறு இடங்களுக்கு செல்லுவதாலும், புவியியல் பிரிவுகள் மறையத் தொடங்கின. அதேநேரத்தில்,
பல்கலைக் கழகங்களில், சமூகத்தை மாற்றுவதற்கும் புதுத் தோற்றங்கள் எடுக்கச் செய்வதற்கும் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டபோது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சாதி, வர்க்கம், பால் ஆகிய பிரச்சினைகள் மிக முக்கியமாகின. விடுதலை இராணுவத்தில் பெண்கள் சேர்க்கப் பட்டமை சமூகப் பரிமாணத்தைக் கணிசமாக மாற்றியது. சுருக்கமாக, அரசியல் மாகடலில் ஒரு பகுதியாகியது. அது சமுதாயத்தை மாற்றங்க ளுக்குள்ளாக்கியது. சடுதியாக கற்பனை மாற்ற முற்றது. மொழி மாற்றங்களை வெளிப்படுத்தப் போராடியது.
விரிவான திறனாய்வோ தமிழ் இலக்கியத் தொகுப்போ வெளிவர அதிக முயற்சிகள் செய்யப்படவில்லை. வெளியீட்டுத் தன்மை தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரளவு காரணம். அதிகமாக தனிப்பட்ட பணத்திலே தான் பல நாடுகளில் வெளியீடுகள் நடைபெறுகின்றன. காலத்துக்குக் காலம் வெளிவரும் வெவ்வேறு நுால்களைப் பெறுவது சுலபமில்லை. சரிநிகர் பத்திரிகை, காலச் சுவடு சஞ்சிகை, பிரிட்டனில் அல்லது பிரான்சில் அல்லது காலத்துக்குக் காலம் வரும் மரணத்துள் வாழ்வோம் போன்றவை ஊடாக ஒரு பொதுக்களத்தை ஏற்படுத்துவதற்கு ஒரளவு முயற்சிகள் செய்துள்ளன. அவை வெவ்வேறு நாடுகளின் குரல்களை ஒன்று சேர்த்து வந்துள்ளன.
அதேநேரத்தில் பல அபிவிருத்திகள் நடைபெற்றுக்
-38- வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

கொண்டிருந்தன. மிகத் தெளிவான மட்டத்தில் விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களே ஆர்வத்துடன் எழுதிக் கொண்டிருந்தனர். இன்னொரு மட்டத்தில் “உத்தியோகபூர்வ” கவி தைகள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டவை எழுதப்பட்ட முழுவதும் ஆகும். ஆனால் அவற்றின் சிறந்த பண்பு என்னவெனில் அவை வாய்மொழி மரபுப் பாடலிலிருந்து தம் வளத்தைப் பெற்றன. அந்தக் காரணத்தால் கவிதை இயல்பாய் இயங்கும் தன்மையதாய் வெளிப்பட்டது.
கவிதைக்கும் புனைகதைக்கும் ஆற்றிய மிகக் குறிப்பிடக்கூடிய பங்களிப்பு புதிய எழுத்தாளர் களிடமிருந்தே வருகிறது. அவர்கள் மோதல்களில் நேரடியாகப் பங்கேற்றவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் உலகளாவிய பார்வை அந்நிகழ்ச் சிகள் நடைபெற்ற முறையினால் மாற்றமடைந்தது. அரசியலில் புதுவிறுவிறுப்புக்கள் ஏற்பட்டதன் விளைவாக பெரும் இருப்பியல் வெறுமையை உணர்ந்தார்கள். நுாற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்த கிராமத்திலிருந்து அல்லது நகரத்திலிருந்து வேர் பிடுங்கப்பட்டு துாக்கி எறியப்பட்டார்கள். புலம்பெயரரால் ஏற்பட்ட முழுச் சிதறல்களால் ஐந்து இலட்சம் தமிழர்கள் மேற்கிலும் ஒஸ் ரேலியாவிலும் தஞ்சம் புகும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். அவை அனைத்தும் அவர்களின் பிரக்ஞையில் இடம் பிடித்தன.
தமிழ் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை வாசகர்கள் குறுகிய எல்லைக்குட்பட்டவர்களே. அவர்களின் நுால்கள் வெளியிடும் செயற் பாங்கினைக் கொண்டே நாம் அறியலாம். அவர்களின் மூல வாசகர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ளவர்களே. அவர்களுடைய அக்கறைகள் எந்த நிலைமைகளுக்குள் அவர்கள் அகப்பட்டு உள்ளா ர்களோ அவற்றால் வரையறை செய்யப் பட்டுள்ளன. மேற்கில் உள்ள தமிழ் எழுத்தா ளர்களைப் பொறுத்தவரை கட்டுப்பாடற்ற அனைத்தையும் சேர்த்த இலக்கியச் செல்வாக்குக்கு
அதிகம் உட்பட்டவர்கள் அவர்கள்.
ஆச்சரியத்துக்குரிய இருமுனைக் குணமொன்று தமிழ் எழுத்தில் காணப்படுகிறது. இது கவனத்துக்குரியது. அதிகமாக, மேற்படையாகவே அரசியல் பேசுபவராக இல்லாவிட்டாலும் சில தமிழ் எழுத்தாளர்கள் அரசியல் போராட்டத்துக்கு எதிரானவர்களல்ல. புலிகள் இயக்கத்தின் பங்கு பற்றி நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும்

Page 41
அவர்கள் பற்றி ஒரு விமர்சனத்தை முன் வைக்காதவர்கள் இவர்கள். அதேபோல அவர்கள் சிங்களவர்களுக்கும் அதிக எதிர்ப்பாளர்களும் அல்லர். எழுதப்பட்ட இலக்கியங்களில் இனத்துவ எதிர்ப்பு அதிகம் இல்லை. சமூகவியல் பார்வையிலிருந்து பார்க்கையில் அது முழுக்கச் சரி எனலாம். ஏனெனில் இரு இனத்துவ குழுமங்களுக்கிடையேயும், கொழும்பிலும் சரி மேற்கிலும் சரி அவர்களுக்கிடையே உள்ள ஊடாடல் சிநேகயூர்வமாகவே உள்ளது. அது தேவை நோக்கிலும் மனிதாபிமான பங்காளிகள் என்ற நோக்கிலும் சரியாகவே இருக்கிறது. முனைப்பான முன்னிடுபாடு முழு உலகப் பார்வையையுமே பூரணமாக நிலைகுலையச் செய்யும். தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்திற்கு மையம் என்ற எண்ணங்களே ஒடுக்குவதாகவும் மேலாண்மையானதாகவும் இப்போது தெரிந்தன. அரசியல் பிரிவினையைத் தேடும் ஒருமைக்கு ஒரு விநோதமான கோணமாக சிதறல்கள் இருந்தன.
சுருக்கமாக, தமிழ் எழுத்து இலங்கையிலும் மேற்கிலும் நடைபெறுபவை பரம்பலின் யதார்த்தத்தையும் நம்பிக்கையின் முழு அமைப்பும் நிலைகுலைவதையும் எடுத்துக் காட்டுகின்றன. அந்தப் பொருளில் அவர்களின் இலக்கியங்களில் இன்னொரு மட்டப் புரிதல் உணர்டு என்று விவாதிக்க இடமுண்டு. பிரிவினை, இனத்துவத்தின் அடிப்படையில் பூரண உலகப் பார்வை, மரபிற்குத் திரும்புதல், ஒற்றுமையை உறுதிப்படுத்தல், ஆகியவற்றைக் கோரி நிற்கிறது. தமிழில் எழுதுவது ஐதீகத்தை உருவாக்குவதோ, தக்க வைப்பதோ அல்ல. மாறாக அவற்றை அலசுவதே ஆகும். அரசியல், தேக்கம் (stasis) பற்றியதாய் இருக்கும்போது, இலக்கியம், நெகிழ்ச்சி (fluidity) பற்றியதாக இருக்கிறது. அரசியல் போராட்டம், பற்றுறுதியைக் கோருகிறது. இலக்கியம், இருமனப்போக்கைக் (ambivalence) அளிக்கிறது.
முடிவாக, ஆங்கிலத்தில் சரி தமிழில் சரி எழுதும் இலக்கியம், அரசியல் ஈடுபாட்டால் தொடுக்கப்பட்டு இருந்தபோதும் தனித்தனி வெளிகளை கொண்டிருக்கின்றது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். கருத்தியல் நிலை ப்பாடுகள் ஒன்றை மற்றதிலிருந்து வித்தியாசப் படுத்துகிறது. ஆனால் இரண்டும் ஒன்றாக இணைந்து அரசியல் கூற்றுக்களை எதிரான வற்றை கட்டுடைக்கிறது. இந்தியப் பிரிவினை

பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் ஒப்பியல் நோக்கில் இங்கே பார்க்கப்பட வேணடியவை. சிக்கல் நிறைந்த இயக்கத்தாக்கத்தைக் கொண்ட அந்த முக்கிய நிகழ்வை ஆய்வதற்கு வாய்மொழி இலக்கியம், எழுத்து இலக்கியம் இரண்டையும் அறிஞர்கள் அதிகம் உபயோகிக்க வெளிக் கிட்டுள்ளார்கள். அரசியல், சமய எதிர்ப்பால் பத்துக் கோடி மக்கள் இறந்த அந்நிகழ்ச்சி மிகச் சிக்கலான புரிதலைக் கோருகிறது. அவற்றையே அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. தனக் கேயுரிய முறையில் இலங்கையில் இலக்கியம் அதையே செய்கிறது. துருவமயப்பட்ட, பயனற்ற, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் அரசியலை விட்டு அதிகம் தேவைப்பட்ட இருமனப்போக்கை அழுத்த வேண்டும். இலக்கிய அமைப்புக்களால் சிறி லங்கா, ஈழம் ஆகியவற்றைக் கேட்பவர் களுக்கு அதைப் பல்வேறு மாதிரிகளால் வெளிப் படுத்தலாம்.
பின் அட்டையிலும், பின் உள் அட்டையிலும் ஓவியர் மாற்குவின் ஒவியங்கள்.
ஒவியர் மாற்குவின் நிழற்படங்களையும் அவருடைய சமீபத்திய ஒவியங்களையும் மிகச்சிரமங்களின் மத்தியில் "காலத்திற்கு" சேர்ப்பித்த அருட்திரு. மார்க்கஸ் சந்தியாப்பிள்ளை அடிகளார் அவர்கட்கும் திருமதி. பற்றீசியா தனராஜ் அவர்கட்கும், கருணாவுக்கும் காலத்தின் நன்றி.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -39

Page 42
காலத்துடன் பாலேந்திரா
பாலேந்திரா ஒரு நாடக இயக்கமாக மூன்று தசாப்தங்களாக இயங்கி வருவது ஒரு அசுர சாதனை என்று தான் குறிப்பிடப்பட வேண்டும். அவைக் காற்றுக் கலைக் கழகம் என்ற அமைப்பு உருவாகி 22 ஆண்டுகள் சென்று விட்டன. பாலேந்திரா அதன் உயிர். அதன் மூலம் பல அரிய நாடகங்களை இலங்கை, லண்டன், ஐரோப்பிய நாடுகள், கனடா என்று பல நாடுகளில் சிறப்பாக மேடையேற்றி உள்ளார். காலத்திற்கு ஏற்ப அவர் நாடகங்களைத் தெரிவு செய்கிறார். பெரும்பான்மையாக அவரின் நாடகங்கள் தமிழாக இருந்தபோதும் அவரின் மொழி பெயர்ப்பு நாடகங்களையே அவர் நெறிப்படுத்தியதான எண்ணம் பலரிடம் இருக்கிறது. காரணம் அவை சிறப்பாக மேடையேற்றப்பட்டதாக இருக்கலாம். அவர் பலமுறை மேடையேற்றிய இந்திரா பார்த்தசாரதி எழுதிய "மழை” க்கு இன்றைக்கும் அருமையான வரவேற்புள்ளது. அவர் கனடா வந்த போது காலத்திற்காக எடுத்த பேட்டியே இது. A
Քե-n
-4O- வாழும் தமிழ் 2000 காலம் - 3

இளமையில் உங்களுக்கு நாடக ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? உங்கள் இளமைக்கால நினைவுகளை எங்களுடன் பகிர முடியுமா?
எனது ஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள அரியாலை, அங்கு நான் சிறுவனாக இருந்தபோது திறந்த வெளி அரங்குகளில் நாடக நிகழ்வுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வருடத்திற்கு ஒருமுறை புதுவருடத்தை ஒட்டி சுதேசிய விழா நடை பெறுவதுண்டு. அக்காலங்களில் நான் பார்த்தவை சரித்திர நாடங்கங்களும் நகைச் சுவை நாடகங்களுமே. படச்சட்ட மேடை அமைப்பில் பின் திரைகளைத் தொங்க விட்டு ஒலிவாங்கியை மையப்படுத்தி நடிப்பார்கள். இந்நாடகங்கள் சிலவற்றிற்குப் பின்னணியிலும் ஆர்வத்துடன் உழைத்துள்ளேன். ஆனால் இந்த நாடகங்கள் எனது நாடகத் தேடலுக்கு நிறைவு ஊட்டின என்று சொல்வதற்கில்லை.
பின்னர் 1970 இல் கொழும்பிற்குச் சென்ற பின் சிறந்த சிங்கள நாடகங்களையும் ஆங்கில நாடங்களையும் பார்க்க வாய்ப்புக் கிட்டியது. இதற்கு முன்பே வாசிப்புப் பழக்கம் இருந்த படியால் நவீன இலக்கியப் பரிச்சியம் இருந்தது. ஜெயகாந்தன் சிறுகதைகள் தான் எனது சீரியஸ் இலக்கியத்திற்கான வாயிலாக இருந்தது. தொடர்ந்து தீபம், கணையாழி, மல்லிகை, தாமரை, மற்றும் பூரணி போன்ற சஞ்சிகைகளையும் ஏனைய தரமான நவீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்து

Page 43
ககளையும் படிப்பதுண்டு
தமிழகத்தில் இருந்து வானம்பாடி, கசடதபற, பிரக்ஞை, Enact, பாலம் போன்ற சிறு சஞ்சிகைகளும் பத்மநாப ஐயர் மூலம் கிடைத்தன. கொழும்பில் சிங்கள, ஆங்கில நாடகங்களைப் பார்ப்துடன், பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் சென்றர் ஆகிய இடங்களுக்கும் சென்று அங்குள்ள நல்ல ஆங்கில நாடக நுால்களையும் சஞ்சிகைகளையும் படிப்பதும் வழக்கம். இவை எல்லாம் அக்காலங்களில் எனக்கு இலக்கியம், நாடகம் பற்றிய ஒரு புரிதலுக்கு வழி வகுத்தன. கொழும்பில் நிகழும் நாடக நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள் எல்லாவற்றையும் முடிந்தவரையில் சென்று பார்ப்பதுண்டு. தனிப்பட்ட சில திரைப்படச் சங்கங்களிலும் நல்ல உலகத் திரைப்படங்களைத் திரையிடப்படும்போதும் தேடிப்பார்த்ததுண்டு. தொடர்ந்து தமிழில் நல்ல நாடகப் பிரதிகளைத் தேடினேன். தமிழ் நாடக நிகழ்வுகள் மிக அபூர்வமாகவே இருந்தன. தமிழ் தியேட்டரில் சீரியஸாக இருப்பவர்களையும் தேடினேன். இந்த சந்தர்ப்பத்தில் சுஹேர் ஹமீட்டின் அறிமுகம் ஏற்பட்டது. இவர் சில தழுவல் நாடகங்களையும் சுயமொழி நாடகங்க ளையும் மேடையேற்றி இருந்தார். 1972 இல் நான் மொறட்டுவ (கட்டுபெத்தை) பல்கலைக் கழகத்தில் பொறியியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். அங்கு இயங்கிய தமிழ்ச் சங்கம், கொழும்பில் நாடகங்களை மேடையேற்றும் முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியது. எனது நாடகங்களுக்கு இலங்கையில் இருந்து 1982 இல் நான் வெளியேறும் வரை முக்கிய களமாக மொறட்டுவப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கமே இருந்தது.
மொறட்டுவ பல்கலைக் கழக தமிழ்ச் சங்கத்தில் நீங்கள் தயாரித்த நாடகங்கள் பற்றியும் உங்கள் பங்களிப்புப் பற்றியும் கூறுங்கள்?
1972ல் கு.புனிதவேல் தயாரித்த தாகூரின் கதையை அடிப்படையாகக் கொண்ட சாவின் சதி நாடகம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடை யேறியது. அதில் பங்குபற்றினேன். தொடர்ந்து இத்தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த வெளியீடான
“நுட்பம் மலரின் ஆசிரியராக 1973 இலும் தலைவராக 1975 இலும் பணிபுரிந்திருக்கிறேன்.

“நுட்பம்” இதழில் அக்காலங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட புதுக்கவிதை குறித்து ஒரு விசேட அனுபந்தம் ஒன்றையும் வெளியிட்டி ருந்தேன். அப்போது ஈழத்து இலக்கியவாதிகள் i 16vJgt அறிமுகம் கிடைத்தது. எஸ்.பொ, சில்லையூர் செல்வராசன், புதுவை இரத்தினதுரை, நேமிநாதன், புஸ்பராஜன், சாந்தன், யேசுராசா, கே.எஸ்.சிவகுமாரன் போன்றவர்களைக் குறிப்பிட லாம். 'நுட்பம்" சஞ்சிகையை இலங்கை வானொலி “கலைக்கோலம்" நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் போது பேராசிரியர் கைலாசபதியுடனும் அறிமுகம் ஏற்பட்டது. தினகரன் சஞ்சிகையில் அப்போது “நுட்பம்” மலர் குறித்து மு.நித்தியானந்தன் விமர்சித்ததைத் தொடர்ந்து அவருடன் தொடர்பு ஏற்பட்டது. இப்படியான ஒரு இலக்கியப் பின்னணியுடன் தான் எனது நாடக கலைப் பயணம் 1973 இல் சீரியஸாகத் தொடங்கியது.
சுஹேர் ஹமீட்டை மொறட்டுவப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்து “ஏணிப்படிகள்" நாடகத்தைத் தயாரித்ததன் பின்னர் தான்
நாடகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். இலங்கையில் 1970 இல் ஐக்கிய முன்னணி அரசில் பூரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இடதுசாரிக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்திருந்தன. இந்தக் கூட்டரசு குறித்து அப்போது இருந்த எதிர்ப்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் குறியீட்டு முறையில் இந்த நாடகம் வெளிப்படுத்தியது. இந்நாடகம் ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான ஒரு நாடகமாகும். இந்நாடகத்தின் மூலம்தான் நாடகத் தயாரிப்பில் லயம், இசை, ஒளி, போன்ற பலவற்றின் பயன்பாடுகளை செயல்ரீதியாக பயின்றேன். தற்போதும் கூட எமது நாடகங்களில் இசை-நாடக உறவு பலமாக இருப்பதாகப் பலர் கூறுகின்றனர். இதற்கான அத்திவாரம் “ஏணிப்படிகள்’ நாடகத்திலேயே எனக்குக் கிடைத்தது. பிரபல இசை அமைப்பாளர் மொகமட் சாலி அந்த நாடகத்திற்கு இசை அமைத்திருந்தார். இவர் சிங்கள திரைப்படங்கள் பலவற்றிற்கு இசை அமைத்தவராவார். “ஏணிப்படிகள்’ நாடகம் 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் முதல்முறையாக 01-07-73 இல் ஏணிப்படிகள் மேடையேறிய அதேதினம் மாவை நித்தியானந்தனின் "ஐயா எலக்சன் கேட்கிறார்” நாடகமும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேறியது. எனக்கு முந்திய மாவை நித்தியானந்தன் மூலம்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -4-

Page 44
ஏற்கெனவே கொழும்பிலுள்ள இலக்கியவாதிகளின் தொடர்பு கட்டுபெத்தைக்கு இருந்ததும் குறிப்பிடத் தக்கது.
வருடாந்தம் கொழும்பில் ஒரு கலை இலக்கிய விழாவை பெரிய அளவில் கட்டுபெத்தை தமிழ்ச் சங்கம் நிகழ்த்தி வந்தது. தமிழ்ச் சங்க நிதிக்காக தென்னிந்திய திரைப்படம் மூலமாக நிதி சேர்க்கும் வழக்கமே இருந்தது. இவ்வழக்கத்தை விட்டு தமிழ் நாடக மேடையேற்றம் மூலமாக நிதி சேர்ப்பதென முடிவு செய்தோம். இதன் பெறுபேறாக 1974 இல் “ஏணிப்படிகள்” நாடகத்துடன் சுஹேர் ஹமீட் டின் வேறும் நாடகங்களைச் சேர்த்து குரல்கள் என்ற பெயரில் மேடையேற்றினோம். திரைப் படத்தில் கிடைக்கும் நிதியை விட கூடிய நிதி கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை எழுத்தாளர் எஸ்.பொ. தொகுத்து வழங்கினார். இதே ரீதியில் Gan 160oi l_trib (1975) Alexi Arbuzo y gaor It happened in Irkutzk, poop daugirupa Saoi plagigy வாஸி’ (1978), யுகதர்மம் (1979), பெர்லோட் ப்றெக்ற்றின் த எக்செப்சன் அணி த றுாள், ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் (1979), முகமில் லாத மனிதர்கள் (1980), (பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித்) கிரிஷ் கர்னாட்டின் துக்ளக் (1982) ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இதில் முதல் நாடகத்தை அதாசிசியஸ் நெறிப்படுத்த மற்றவற்றை நான் நெறிப்படுத்தினேன். மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்திற்காக நிதி சேகரிக்க கொழும்பிலும், சில நாடகங்கள் யாழ்ப்பாணத்திலும் மேடையேற்றப்பட்டன. வீடு வீடாகச் சென்று ரிக்கற் விற்று சுமார் ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்குகளில் இந்த நாடகங்கள் மேடையேறின. நல்ல ஆதரவையும் வந்தன.
-42- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 

இவற்றைவிட கலை விழாக்களுக்காக சிறு நாடகங்களையும் தயாரித்திருக்கிறேன். இக்கலை இலக்கிய விழாக்கள் வருடந்தோறும் கொழும்பில் இலவசமாக நடைபெறும் போது மக்கள் கூட்டம் அலைமோதும், கலை விழா நாடகங்களாக ஜெயகாந்தனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு 1974 இல் "இவர்களுக்கு வேடிக்கை” பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நிகழந்த மாணவர் கிளர்ச்சியையும் ஒருவன் மாணவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் குறியீடாக “துாரத்து இடிமுழக்கம்” மற்றும் சாமுவேல் பெக்கற்றின் Act without Words gtsu607 மேடையேற்றப்பட்டன. கட்டுபெத்தையில் எனது நாடக முயற்சிகளுக்கு உந்துதலாக இருந்தவர், ஈஸ்வரன் செல்வராசா என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இவர் கொழும்பு அக்குவனாளில் பல்கலைக் கழகத்தில் நாடகப் பட்டறையில் பயின்றவர்.
மொறட்டுவப் பல்கலைக் கழகத்தை அடுத்து உங்களது வளர்ச்சிப் போக்கை விளக்குவீர்களா?
தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியில் நாடகங்கள் திரும்பத் திரும்ப மேடையேற வேண்டும் என்பதில் நான் ஆரம்ப காலத்தில் இருந்து அக்கறை காட்டியுள்ளேன். இந்த வகையில் பல்கலைக் கழக விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்றபோது 1973 இல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏணிப்படிகள், ஐயா எலக்சன் கேட்கிறார் போன்ற நாடகங்களை மேடையேற்றினோம். நல்ல வரவேற்புக் கிடைத்தது. சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அந்நிகழ்வை பார்த்ததிலிருந்து எனது எல்லா நாடகங்களுக்கும் தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து வந்திருக்கிறார்.
1973 இல் ஏணிப்படிகளின் வெற்றியைத் தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தில் மாவை நித்தியானந்தினின் இனிச் சரிவராது நாடகத்தைத் தயாரித்த தில்லைக்கூத்தன் மூலம் நா.சுந்தரலிங்கம், தாசிசியஸ், மெளனகுரு போன்றோரின் அறிமுகம் 1974 இல் கிடைத்தது. இவர்களது நாடகங்கள் கொழும்பில் 1970க்கு முன்னர்-நான் கொழும்புக்கு வருவதற்கு முன்னர்மேடையேறி இருந்தன. கொழும்பில் தொடர்ந்து

Page 45
நாடகங்கள் நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கில் நடிகர் ஒன்றியம், ரசிகர் அவை ஸ்தாபிக்கப்பட்டது. 1974 இல் யாழ்ப்பாணத்தில் மாவட்டபுரம் சாதிப்போராட்டத்தை அடிப்படை யாகக் கொண்ட கந்தன் கருணை நாடகத்தை இளைய பத்மநாதன், மெளனகுரு ஆகியோருடன் தாசிசியஸ் தயாரித்தபோது நான் அதில் பங்குகொணர்டேன்.
தொடர்ந்து நாடகங்கள் மேடையேற்ற ஒரு நிரந்தர பார்வையாளர்களை உருவாக்கும் நோக்குடன் நடிகர் ஒன்றியம், ரசிகர் அவை அமைக்கப்பட்ட போது இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடக த்தை 27-10-76 இல் கொழும்பு லயனல் வென்ற் அரங்கில் மேடையேற்றினேன். இதுதான் என்னு டைய முதல் தயாரிப்பாகும். இந்த நாடகத்தை இன்று வரை மேடையேற்றி வருகிறோம். நானும் எனது ஆனந்தராணியும் தொடர்ந்து நடித்தும் வருகிறோம். 1977 இல் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரம் காரணமாக கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் தான் ரெனெஸி வில்லியம்ஸின் த கிளாஸ் மெனாஜெரி பிரதியை யாழ் பொது நுால் நிலையத்திலிருந்து எடுத்து வாசித்தேன். முதல் வாசிப்பிலேயே பிடித்து விட்டது. இதனை எப்படியாவது தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எனது தங்கை மல்லிகாவோடு மொழிபெயர்த்தேன். இதே காலங்களில் தமிழில் நாடகப்பிரதிகளுக்கான தேடுதலையும் தொடர்ந்து கொண்டிருந்தேன். தமிழ் நாடகப் பிரதிகள் அச்சில் வரவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. egg)l நாடகங்கள் நாடகத் தொகுதி வெளியிடுவதற்கான நிதிப்பணத்தை சேகரிக்கவே முதலில் யாழ்ப்பாணத்தில் மேற்படி நாடகம் கணினாடி வார்ப்புகள் எனும் பெயரில் 1978 இல் மேடையேறியது. மேடையேற்றத்திற்கு தாய் பாத்திரத்திற்கான நடிகையைத் தேடும்போதுதான் நிர்மலாவைச் சந்திக்க நேர்ந்தது. நாடக மேடையேற்றத்தின் போது நிர்மலாவுடன் இணைந்து பிரதியில் சில மாற்றங்களைச் செய்தோம். இதேவேளையில் யாழ் பல்கலைக் கழகத்தில் ஏ.ஜே.கனகரட்னா, கா.கிருஷ்ணராஜா, எம்.ஏ.நுஃமான். சித்திரலேகா மெளனகுரு ஆகியோரது அறிமுகம் ஏற்பட்டது. 1978 இல் தருமு சிவராமுவின் நட்சத்திரவாளி தயாரித்த போது இசையமைப்பாளர் எம்.கண்ணனின் திறமையை அறிந்தேன். அதில் வரும் பின்னணி இசையை மிகவும் நேர்த்தியாக ஆக்கி இருந்தார்.

அதைத் தொடர்ந்து எனது யுகதர்மம், முகமில்லாத மனிதர்கள் போன்ற நாடகங்களில் இடம்பெற்ற
அவரது பாடல்கள் பிரபல்யமானவை.
1978க்கு முதலே நாடகங்களைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கங்கள் தமிழ் இலக்கிய மன்றங்களு க்காக மேடையேற்றிய போதும் தொடர்ந்த இயக்கத்திற்காக ஒரு அமைப்புத் தேவை என்று கருதி தமிழ் அவைக்காற்றுக் கழகம் ஆரம்பிக்கப் பட்டது. தமிழ் அவைக்காற்றுக் கழக மூலமாக இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோ ணமலை, பேராதனை, பதுளை, பணி டாரவளை, மாத்தளை போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று நாடக நிகழ்வுகளை விடாமுயற்சியுடனும் கடின உழைப்புடனும் தொடர்ந்து நிகழ்த்தி எமக்கென ஒரு பார்வையாளர் கூட்டத்தை வளர்த்துக் கொண்டோம். மனித முரண்பாடுகளின் பன்முகப் பட்ட பரிமாணங்களை வெளிப்படுத்தும் நவீன நாடகங்கள் பரவலான அங்கீகாரம் பெற்று சிறுகுழு சார்ந்த நாடக அரங்காக அன்றி பரந்த பிரதான போக்கினை நிர்ணயிக்கும் இயக்கமாக முகிழ்ப்பதற்கு தமிழ் அவைக்காற்றுக் கலைக்
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -43

Page 46
கழகம் உழைத்தது. தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் ஸ்தாபிதமான போதிலும் மொறட் டுவ தமிழ்ச் சங்கம், சுணர்டுக்குளி பழைய மாணவர் சங்கம், யாழ் பல்கலைக் கழக தமழிலக்கிய மன்றம், கொழும்பு றோயல் கல்லுாரி தமிழ் மாணவர்கள் அமைப்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரி அமைப்பு, கொழும்பு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் அமைப்பு, பேராதனை பல்கலைக் கழக சங்கீத நாட்டிய சங்கம், சட்டக் கல்லுாரி தமிழ் மன்றம் போன்ற அமைப்புக் களின் ஊடாகவும் வெவ்வேறு சமூக, கலாச்சார அமைப்புக்கள், பாடசாலைகளுடன் இணைந்து தான் இதனை சாதிக்க முடிந்தது.
6тиDg5! முயற்சிகளுக்கு முன்னர் தீவிர நாடகங்களுக்கு ஆயிரக் கணக்கான பார்வை யாளர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. இதற்கு வானொலி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் நன்கு கைகொடுத்தன. வானொலியில் கே.எம்.வா சகர், பத்திரிகைகளில் தினகரனில் சிவகுருநாதன், இராஜகோபால் மற்றும் வீரகேசரியில் பொன். இராஜகோபால் ஆகியோர் எமது பணியின் முக்கியம் அறிந்து எமக்கு ஆதரவு தந்தார்கள். நாடகம் மேடையேற்றுவதோடு நின்று விடாது விமர்சன அரங்குகளையும் ஒழுங்கு செய்து பலவிதமான விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் 1978-82 காலப்பகுதியில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மையமாக இருந்தது. ஏற்கெனவே குறிப்பிட்ட நாடகங்களுடன் ஒருபாலை வீடு (Garcia Lorca s The House of Bernada Alba) மோகன் ராகேசின் அரையும் குறையும், அலெக்சி அற்புளேபாவின் புதிய உலகம் பழைய இருவர், ஞானராஜசேகரனின் மரபு, ந.முத்துசாமியின் சுவரொட்டிகள் ஆகிய நாடகங்களும்
அக்காலங்களில் என்னால் தயாரிக்கப் பட்டன.
உங்களது நாடகத் தேர்வுகள் பொதுவாக குடும்பம், உளவியல், சமூக தர்மம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மேடையேறியவையாகவே இருக்கின்றன. அதாவது, சிந்திக்கும் மனிதர்கள் அவர்களையே சிந்திக்கத் துாண்டுவது, மத்திய வர்க்க அல்லது படித்தவர்களைச் சிந்திக்கத் துாண்டுவது இன்னும் கொஞ்சம் கீழே போய் அதிகம் படிக்காதவர்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை அவர்கள் மட்டத்தில்
-44- வாழும் தமிழ் 2000 காலம் - 13

இருந்து சிந்திக்க வைக்கும் நாடகங்கள் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அல்லது உங்களுக்கு அவற்றில் அக்கறை இல்லையா?
தன் அனுபவங்களுக்கு நேர்மையுடன் செயற்படுவதே ஒரு கலைஞனுக்குச் சாத்தியப் படுகிற விசயம். நான் மனிதனை நேசிப்பவன். கலைக்கு நேர்மை தான் முக்கியம். கொள்கை என்று சொல்லி எந்தக் குழுவிலும் அகப்பட விரும்பவில்லை. செயற்பாட்டில் சுதந்திரம் வேண்டும். கலை இலக்கியத் துறையில் எப்போ தும் புதுமைகள் நடந்துள்ளன. புதிய தேவையும் அணுகுமுறையும் தமிழில் இருந்து கொண்டே இருக்கின்றது. எனவே, புதிய வெளிப்பாடுகளை கண்டுபிடிக்க தேவை உள்ளதென உணர்ந்தேன். எனது நாடகங்கள் புரியவில்லை. அல்லது சாதாரண மக்களுக்கு புரியாது என்று சொல் லுவது பிழை. நாடகத்தை அணுகினால் புரிவதில் பிரச்சினை இல்லை. கனடாவில் CTBC வானொலி உரையாடலில் நேயர்களுடன் கலந்துகொண்டபோது ஒருவர் நாடகம் புரிய வில்லை என்றார். உங்களுக்குப் புரிந்ததைக் கூறுங்கள் என்று கேட்டபோது நாடகத்தை அவர் புரிந்து கொண்டது இருந்தது.
நான் எனது நாடகத் தேர்வுகளில் மேடையின் பலவிதமான சாத்தியப்பாட்டையும் கையாள விரும்பினேன். அது நான் எதிர்பார்த்ததை விடவும் பார்வையாளர்கள் அளவில் வெற்றி கிடைத்து வருகிறது. ஈழத்தில் மாற்று அரங்கம் தான் பிரதான அரங்கமாக உள்ளது என்று
பேராசிரியர் காசிவத்தம்பி ஒருமுறை குறிப்பிட்

Page 47
டிருக்கிறார். ஆரம்பத்தில் 1975 இல் பிச்சை வேண்டாம் நாடகம் நிகழ்த்திய போது பார்வை யாளர்கள் நாடகத்தை அணுகும்முறை வித்தி யாசமாக இருந்தது. நாம் எதிர்பாராத இடங்களில் எல்லாம் வார்த்தைகளுக்கு இரட்டை அர்த்தத்தை தாமாகவே கற்பித்துக் கொணர்டு அவையில் சிரிப்பொலி எழுந்தது. மழை நாடகத்தின் முதல் மேடையேற்றங்களும் அப்படித்தான். காலப் போக்கில் அது குறைந்து வருவதை அனுபவ ரீதியாக கண்டு இருக்கிறேன். எமது நாடகங்கள் பல பார்வையாளர்கள் மனதில் கேள்விகளை எழுப்பி அவர்களது மனவெளியில் பலகாலம் ஜிவிப்பதாக பலர் கூறியிருக்கிறார்கள்.
மற்றவர்களின் நாடகங்களிலும் பார்க்க உங்கள் நாடகங்கள் பெரும்பாலும் தழுவல்களாக உள்ளன. தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தவில்லை என்ற குற்றச்சாட்டொன்று உண்டு. ஆனால் தேடல்கள் உலகாளாவியவை என்பதால் அது தமிழ்ச் சூழலுக்கும் பொருந்தும் என்றும் கூறலாம். அத்துடன் நாடகங்கள் பல பரிமாணங்கள் கொண்டவை. ஆகவே, பார்வையாளர்களின் அறிவு, அனுபவம், படிப்பு, கற்பனை, விழுமியங்கள் போன்றவற்றால் நாடகங்களின் அனுபவங்கள், பார்வைகள் வித்தியாசப்படும். அதனால் உங்கள் பிறமொழி நாடகங்கள் எங்கள் பார்வையாளர்கள் பலருக்குப் பிடிக்கின்றன. இதுபற்றிய உங்கள் கருத்தென்ன? தமிழ்ச் சூழலைச் சரிவர நீங்கள் அறிந்ததால் உங்கள் நாடகங்கள் பொருந்தி விடுகின்றனவா?
ஆம். தமிழ்ச் சூழலை சரிவர அறிந்து அதற்கேற்ற நாடகங்களையே தெரிவு செய்கிறேன். இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் உண்மையில் சுயமொழி நாடகங்கள் அதிகமாக தயாரித்திருக்கிறேன். எமது சில மொழிபெயர்ப்பு நாடகங்கள் பிரபலமாக இருப்பதாலேயே அதிகம் போல் தோற்றமளிக்கிறது. இன்னும் பல்வேறு பட்ட மொழிபெயர்ப்பு, தழுவல் நாடகங்களை தயாரித்து வருகிறேன். மொழி பெயர்ப்பு, தழுவல் நாடகங்களும் பரவலாக நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. காரணம் அவை எமது வாழ்க்கை அனுபவங்களோடு ஒட்டியதாக இருக்கின்றன. எமது வாழ்க்கைக்கு ஒட்டிய வகையில் உணர்வுச்

சூழலை உருவாக்கும்படி நாடக உரையாடல்களை அமைத்து அவற்றைத் தயாரிக்கிறோம். பலவபிதமான உலகளாவிய கருத்தியல் பிரச்சினைகள் எமது வாழ்வியலையும் பாதிக்கின்றன. இன்றைய வாழ்வின் அவலமும் நெருக்கடியும் வன்முறையும் எமது மனங்களில் 6) கேள்விகளை எழுப்புகின்றன. ஒடுக்குமுறையின் அவலம் பயங்கரம், மனிதவதை போன்ற அவலங்களையும் இருப்பின் இழப்பையும் கூறும் நாடகங்கள் ஈழத்தவரின் இன்றைய வாழ்வில் இன்று பிரிக்க
முடியாத அனுபவங்களாக உள்ளன.
கால ஒட்டத்தில், காலத்தின் தேவை, சூழல் கருதியே நாடகப் பிரதிகளைத் தெரிவு செய்கி றேன். எமது இருபது வருடத்திற்கு முந்திய தெரிவுகளுக்கும் இன்றைய தெரிவுகளுக்கும் இடையே காலத்தை ஒட்டிய ஈழத்தமிழர் வாழ்வையொட்டிய மாற்றங்களை அவதானிக் கலாம். அதனால் தான் அவை மொழிபெயர் ’ப்புக்களாக, தழுவல்களாக இருந்தாலும் எமது பார்வையாளர்களுக்கு ஒத்துப் போகின்றன. தமிழகத்தில் எழுபதுகளில் மொழிபெயர்ப்பு நாடகங்கள் அவ்வளவு வெற்றிகரமாக மேைைட யேறியதாக நான் அறியவில்லை. கோமல் சுவாமிநாதன், தமிழ்ச் சூழலை வைத்தே மொழி-ெ பயர்ப்பு நாடகங்களை அந்நியமானவை என்று கூறியிருக்கிறார். எமது அனுபவம் வேறு. எமது நாடகங்கள் கூடுதலான பார்வையாளர்களைச்
சென்றடைந்துள்ளன.
மேலும், பெற்றொல்ற் பெறெக்ற் கற்பித்த லுக்கான நாடகம் என்று குறிப்பிட்ட நாடகம் “யுக தர்மம்" அதனைப் பல கிராமங்களிலும் பாடசாலைகளிலும் 79-80 காலப்பகுதியில் சுமார் 30 தடவைகள் மேடையேற்றி இருக்கிறோம். மனித குலத்துக்குப் பொதுவான பிரச்சினைகளைக் கூறும் நாடகங்கள் பல சாதாரண மக்கள மத்தியிலும் பரதரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களைப் போய்ச் சேரக்கூடிய வானொலித் தயாரிப்புக்களாக வெற்றியளித்துள்ளன.
உங்களுடைய நாடகங்கள் எல்லாவற்றையும் பார்க்கவில்லை. இருந்தும் மனித நேயம், மனித அவலங்கள் சொல்கிற பிரக்ஞை தான் அவற்றில் உள்ளன. அது பற்றி.
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -45

Page 48
தன்னைச் சூழவுள்ள மனித அவலங்கள் எந்தக் கலைஞனையும் பாதிக்கவே செய்யும். மனச்சாட்சியின்படி மனிதநேயத்துடன் மனித அவலங்களைச் சொல்கிற கலைவடிவங்கள் எப்போதும் சமூகத்திற்கு தேவை. நாடகம் குறிப்பாக எந்தக் கலைவடிவத்தை விடவும் சமூகம் சார்ந்தது. ஒரு நேரடிக்கலை. பரஸ்பரம் பார்வையாளர்களையும் நிகழ்த்தும் கலைஞர் களையும் பாதிக்கவல்லது. பொழுதுபோக்குக்கு அல்லது வியாபாரத்திற்கு கலையைப் பயன்படுத்த விரும்பாதவர்களது வெளிப்பாடுகள் மனித நேயத்துடன் மனித அவலங்களை நோக்குபவையா கவே இருக்கும். அந்த வகையிலே எமது முயற்சிகளும் இருக்கின்றன.
இன்றைய ஈழத்தவர் வாழ்வில் போர்ச்சூழலும் அதன் கொடூரமும் தவிர்க்க முடியாதவை. அந்த ரீதியில், போர் குறித்த “எரிகின்ற தேசம்”, “பாரத தர்மம்”, “துன்பக் கேணியிலே”, “போகிற வழிக்கு ஒன்று”, “பெயர்வு” ஆகிய தயாரிப்புக்கள் புகலிடங்களில் பலதடவை மேடையேற்றப்பட் டுள்ளன. பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்து தமிழர்கள் தற்போது பெருவாரியாக இருப்பதற்கு காரணமும் தாயகத்தின் போர்ச்சூழலே காரணம். இதிலும் போகிற வழிக்கு ஒன்று என்ற பின்ரரின் நாடகம் குர்தீஷ் நாட்டு அகதிகளின் அனுப வத்தை வைத்து எழுதப்பட்டது. ஆனால் எம்மில் பலருக்கு ஏற்பட்ட அனுபவம் அது. இந்த நாடகத்தில் தொனிக்கும் கோபம் பலரையும் உலுக்கி இருக்கிறது.
சினிமா, கூத்து மரபு உங்கள் நாடகங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை?
சினிமாவும் நாடகமும் இருவேறு ஊடகங்கள். இவற்றின் வேறுபாடுகள் இயைபு குறித்து நான் பல இடங்களில் கட்டுரைகளிலும் பேச்சுக் களிலும் சொல்லி இருக்கிறேன். கூத்தின் பாதி ப்புக்களை எமது தமிழ் சினிமாவின் நடிப்புப் பாணியில் காணலாம். அது பல இடங்களில் சினிமாவுக்கென நடிப்பாக இல்லாமல் போயி ருக்கிறது. எமது நவீன நாடகங்கள் சிக்கலான பல வாழ்வியல் பிரச்சினைகளைக் கூறுபவை. நாடக வடிவத்திற்கு ஏற்ப நடிப்பு முறைகளை மாற்றி அமைத்திருக்கிறோம். நாடகத்தில் நடிப்பை எடுத்துக் கொண்டால் சினிமாவை விட நடிகர்களின் பங்கு
-46- வாழும் தமிழ் 2000 காலம் - 3

முக்கியமானது.
ஒரு அபத்த நாடகத்தில் நடிப்பது போல யதார்த்த நாடகத்தில் நடிக்க முடியாது. நான் நடிகர்களின் இயல்பான வெளிப்பாட்டை நெறிப்படுத்துகிறேன். நடிப்பைச் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் எமது நாடகங்களில் ஒரே மாதிரியான நடிப்பைக் காணமுடியாது. துரதிஷ்டவசமாக பல ஈழத்து நவீன நாடகங்களில் ஒரேமாதிரியாக ஒரே நாடகத்தில் பல நடிகர்கள் நடிப்பதுண்டு நாடகப் பயிற்சி டிரில் இல்லை. நாடகப் பயிற்சி மனித நேயத்துடன் மனிதர்களை இணைக்கும் பாங்கா கவே நான் செய்து வருகிறேன். எனவே, நடிகர்கள் இயல்பாகவே இயங்க முடிகிறது. கூத்தை நான் சிறுவர் நாடகங்கள் பலவற்றில் புகலிடத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். மற்றப் படி, எமது நாடகங்களில் தமிழ்ச் சினிமாவின் பாதிப்பையோ கூத்தின் பாதிப்பையோ
காணமுடியாது.
நாடகங்களைப் பொறுத்தவரை நடிப்பது இயக்குவதை விட நாடகங்கள் எழுதி இருக்கிறீர்களா?
முன்பு சொன்னதுபோல பல்கலைக் கழக கலை விழாக்களில் குறுநாடகங்கள் சில ஆக்கியுள்ளேன். லண்டனில் “பார்வையாளர்கள்” (1985) என்ற ஒரு நாடகத்தை நடிகர்களுடன் இணைந்து வேர் க்சொப் இல் பிரதியை ஆக்கி நடித்திருக்கிறோம். புகலிடங்களில் அவசர வாழ்க் கைச் சூழல் காரணமாக, பிரதி ஆக்குவதற்கு நடிகர்கள் நேரத்தைச் செலவிட விரும்புவதில்லை. நாடக ஆக்கங்களில் மேடை மொழிக்கு ஏற்ப மொழியைத் தெரிவுசெய்வதில் என்னுடைய பங்கு இருந்து வந்திருக்கிறது.
உங்களுடைய நாடகங்களை மேடையோடு அழிந்து போகாமல் வீடியோவில் பதிவு செய்திருக்கிறீர்களா?
அநேகமான எண் நாடகங்களை லண்டனுக்கு வந்ததில் இருந்து ஆவணப் படுத்துவற்காக வீடியோவில் பதித்து வருகிறோம். மேடை அனுபவத்தை வீடியோவில் பெறமுடியாது என்ற காரணத்தினால் இதுவரை நாடகங்களை
வீடியோவில் வெளியிடுவதில்லை. மேற்படி

Page 49
வீடியோ பதிவுகளில் சிறுவர் நாடகங்களில் ஒன்றை “மத்தாப்பு” என்ற வீடியோ சஞ்சிகை க்கும் இன்னொன்றை பரிசில் இருந்து “தமிழ் ஒளி' தொலைக் காட்சிக்கும் கொடுத்திருக்கிறோம். இதில் ஒரு
சாதகம் உண்டு. பல பார்வையாளர்களை
ஒளிபரப்பாகும்
புவியியல் எல்லைகளைக் கடந்து சென்றடை கின்றன. சில நாடகங்களையாவது தொழில்ரீதியில் பதிவு செய்யும் திட்டம் உண்டு. பொருளாதாரம் தான் பிரச்சினை.
பல மேடை நாடகங்களைச் செய்து அனுபவமுள்ள நீங்கள் தரமான சினிமாப்படங்கள் எடுப்பது பற்றி சிந்திக்கவில்லையா? இரண்டும் வேறு வேறு தளங்கள் தான். ஆனால் நாடகங்களை விட சினிமா அதிக மக்களை சென்றடையும் சாதனம் என்ற படியால் அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?
செய்யலாம். அதற்கு நிறைய நேரமும் பயிற்சியும் தேவை. பணமும் தேவை. புகலிடச் சூழலில் மிகவும் சிரமம். அதனால் இதுபற்றி அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை.
இலங்கையில் நாடகங்கள் தணிக்கை சபையின் தணிக்கைக்குப் பின்னர் தான் மேடையிட முடியும். இது பற்றி உங்கள் அனுபவம் என்ன?
கொழும்பில் பொதுவாக நாடகப் பிரதியைப் பார்த்து தணிக்கை சபை அனுமதி வழங்குவது வழக்கம். கொழும்பு மருத்துவக் கல்லுாரிக்காக ஜெயந்தனின் “இயக்கவிதி-3” என்ற நாடகத்தை 1980 இல் தயாரித்தேன். மேடையேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தணிக்கை சபை நாடக ஒத்திகையைப் பார்த்துவிட்டு தடைசெய்தார்கள். 1982 இல் “துக்ளக்’ நாடகத்தின் ஒத்திகையையும் பார்த்தார்கள். பின்னர் நீண்ட வார்த்தகளை நீக்கி மேடையேற்ற நேர்ந்தது. புகலிடங்களில் கூட சுயதணிக்கை அவலம் நிலவுவது கவலைக்குரியது.
லண்டனில் பல சிறுவர் நாடகங்கள் தயாரிப்பதாய் அறிகிறோம். அவைபற்றிக் கூறுங்கள்?

அந்நியச் சூழலில் எமது சுய அடையாளத்தை இனம் காணவும் இச்சமூகத்தில் தன்னம்பிக்கை யுடன் வாழவும் பலமான ஒரு அத்திவாரத்தை எமது சிறுவர்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும். மரபு பேணும் முயற்சியில் பரதம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றில் காணப்படும் ஆர்வம் நாடகத்துறையில் இல்லை என்பதும் கசப்பான உணர்மை. லண்டனில் தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் சிறுவர்களுக்கான நாட கத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் அவர்களுக் குத் தமிழின் பாரம்பரிய கலை மரபை எடுத்துச் சொல்வனவாகவும் ஆங்கிலச் சூழலில் வளரும் சிறார்கள் தமிழ் மொழியை சரளமாகப் பேசிப் பயில்வதற்கும் ஏற்ற சூழலை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.
இந்த வகையில் நாடகப் பயிற்சிப் பட்டறை மூலம் சிறுவர்களைப் பயிற்றுவித்து கலாநிதி சிமெளனகுருவின் “வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்’ நாடகம் 1991 இல் முதலில் தயாரிக்கப்பட்டபோது சிறுவர்களின் ஊக்கமும் தமிழ் உச்சரிப்பும் திருப்தி தருவதாக இருக்க வில்லை. தொடர்ந்தும் நாடகத்தை மேடையேற்றி நல்ல வரவேற்பைப் பெற்றபின்னர் அடுத்த வருடம் “தப்பி வந்த தாடி ஆடு" நாடகம் தயாாவிக்கப் பட்டபோது கூடுதலான சிறுவர்கள் பங்குபற்றினர். அவர்களுடைய ஆக்கத் திறமைகளுக்கும் இடம் கொடுத்து பயிற்சிப் பட்டறைகளில் அவர்களின் ஆர்வத்தைத் துாண்டும் விதமாக அரங்க விளையாட்டுக்களுடன் தயாாவிக்கப்பட்ட போது மிகவும் நல்ல வரவேற்பு சிறுவர்களிடத்தும் பார்வையாளர்களிடம் கிடைத் தது. இதனைத் தொடர்ந்து “நம்மைப் பிடித்த
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -47

Page 50
பிசாசுகள்” நாடகத்தில் சில காட்சிகள் சிறுவர்களையே உருவாக்கும்படி கேட்டு அக்காட் சிகள் இறுதி நாடகத்திலும் அங்கமாக்கப்பட்டது. இது ஒரு நல்ல உத்தியாக்கப்பட்டது. பேராசிரியர் சிவசேகரம் “மலைகளை அகற்றிய மூடக் கிழவன்’ நாடகத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அழகு தமிழில் பேசி நடித்தனர். இந்நாடகத்தில் நாட்டார் இசை, கூத்து ஆகியன கையாளப்பட்டன. சிறுவர்களின் சுத்தமான தமிழ் உச்சரிப்புக் குறித்தும் மூத்த தமிழ் அறிஞர் சோ.சிவபாதசுந்தரம் அன்றைய தமிழ் வானொலி விமர்சனத்தில் விதந்து குறிப்பிட்டார். 35 சிறுவர்களுடன் நம்மவர் பிரச்சினையில் அந்நி யரைப் புகவிட்டால் விளையும் விபரீதத்தை இரு பூனைகளின் அப்பத்தை ஒரு குரங்கு பங்கிட முற்பட்டு தானே உண்டுவிட்ட கதையை வைத்து “அயலார் தீர்ப்பு” என்ற நாடகம் 1997 இல் மேடையேறி உள்ளது. இச்சிறுவர் நாடகங்கள் பல தடவைகள் லணர்டனில் மேடையேற்றம் கண்டபோதும் மீண்டும் மீண்டும் நல்ல வரவேற் பைப் பெறுகின்றன. துரதிஷ்டவசமாக நடை முறைப் பிரச்சினைகள் காரணமாக இந்த நாடகங்களை லண்டனுக்கு வெளியே இதுவரை கொண்டு செல்ல முடியவில்லை.
நீங்கள் இந்தியா அதாவது தமிழ் நாட்டுக்குச் சென்று உங்கள் நாடகங்களை மேடையேற்றவில்லையா?
திட்டம் உண்டு அழைப்பு உண்டு. ஆனால் இன்னும் காலம் வரவில்லை. லண்டனில் எமது குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் லீவு எடுத்து தமிழகம் செல்வதில் சில நடைமுறைப் பிரச்சினைகளை தாண்டினால் முடியும். எமது குழுவினர் எல்லோருமே வெவ்வேறு தொழில் புரிபவர்கள். நாடகத்தை தன்னார்வத்துடன் தொண்டாகவே செய்கிறார்கள். புகலிடங்களில் எந்த அமைப்பினதோ அரசினதோ உதவிப்பணம் எதுவும் இன்றி சுயாதீனமாகவே இயங்கி வருகிறோம்.
இப்படித் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு நீண்ட காலத்திற்கு நாடகக் குழுவைக் கொண்டு செல்வதில் சிரமம் இருக்கவில்லையா? ←9/፴! காலப்போக்கில் சிதைந்து GSLitas
வாய்ப்புணர்டல்லவா?
-48- வாழும் தமிழ் 2000 காலம் - 3

தொழில் முறைக் குழுக்கள் நாடக இயக்கத்தை எடுத்துச் செல்வது தான் உகந்தது. எனினும் தமிழ்ச் சூழல் அப்படியில்லை. தமிழ் நாட்டில் கூத்துப்பட்டறையை விட்டால் தமிழ் உலகில் ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் முழுநேர தீவிர நாடகக் குழுக்கள் இல்லை. இருந்தும் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் மட்டுமே 78 இலிருந்து தொடர்ந்து இயங்கி வரும் ஒரு அமைப்பாக இருக்கிறது. இரண்டு தசாப்தங் களுக்கு மேலாக ஒரு தீவிர நாடக இயக்கத்தைக் கொண்டு செல்வது இலகுவான காரியமல்ல. புலம்பெயர் நாடுகளிலும் எமது முயற்சிகள் பல இடங்களில் ஒரு உந்துசக்தியாக இருப்பது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நாம் லண்டனிலும் அரச உதவிப் பணம்பெற்று இதுவரை இயங்கவில்லை. பங்குபெறுபவர்களுக்கு போக்குவரத்துப் பணம் கூடக் கொடுப்பதில்லை. புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக லண்டனில் நேரம், பொருளாதாரம் என்ற பல்வேறு பிரச்சினைகளுடன் வாரோட்டம் போன்ற வாழ்க்கை முறையில் ஒரு நாடக இயக்கத்தைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன. இருந்தும் ஒருவித இலட்சியம் வேலை செய்பவர்களுடன் ஐக்கியம், விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம் ஒரு புரிந்துணர்வு, கூட்டுழைப்பில் கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சி ஆகியன ஒரு ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது.
பலவிதமான திறமைகள் கொணர்ட எமது குழுவினர் கூட்டு முயற்சியில் இணைவதால் தான் இது சாத்தியமாகிறது. பல்வேறு கலைகள் அடக்கியது நாடகக் கலை. அந்த வகையில் நடிப்பதை விட மேடை அமைப்பு, ஒப்பனை, உடைவண்ணம் போன்றவற்றை க.கிருஷ்ண ராஜாவும், நடன கூத்து அமைப்புக்களை எனது மனைவி ஆனந்தராணி, மற்றும் திறமைவாய்ந்த இசைக் கலைஞர்கள் மாசத்தியமூர்த்தி, ஆவேந்தன், விஜயகுமாரி, முத்து சிவராஜா போன்றோரும் சி.சாந்தகுணம், ச.வாசுதேவன் இன்னும் பெயர் குறிப்பிடாத பலரும் நீண்ட காலமாகவே எமது லண்டன் முயற்சிகளுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். கூட்டு உழைப்பினால் பல நாடுகளுக்கும் சென்று நிறைய மேடையேற்றங்களைச் செய்து வருகிறோம்.

Page 51
Banc
50 பேர் தொடக்க போதிய வாகன தர்
2648 Eglir Te: (41
 

Gിസ്റ്റിസ്റ്റി)
uet facilities up to 700 Persons
ம் 700 பேர் வரையில் கொள்ளக்கூடிய அலங்கரிக்கப்பட்ட3மண்டபங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. ப்பீட வசதிகள் உண்டு திருமணம், பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழாமற்றும் சகல வைபவங்களுக்கும்.
Contact: Jey or Sasi
ton Ave. East (a Brimley), Scaborough, ON. 6) 265 3333, (416) 266 3841

Page 52
மாமிச ப
'உன்னிடம் ஒரு வில்லுக்கத்தி இருக்கிறதா?” என்று அந்தப் பெண் கேட்டாள். அந்தக் கேள் வியில் ஒரு தப்பும் இல்லை. ஆனால் அதைக் கேட்ட இடமும், நேரமும் தான் தப்பு என்று அவர் நினைத்தார். அது தவிர அந்தப் பெண்ணுடைய தோரணையும் அவருக்குப் புரியாததாக இருந்தது.
அந்த ஜேர்மன்காரர் ஞாயிற்றுக்கிழமை மாலைப் பொழுதுகளில் சந்தோஷமாக இருக்கப் பார்ப்பார். அதனால் அந்த சமயங்களில் அந்நியப் பெண்களுடன் பேச்சு வார்த்தைகள் வைக்க அவர் விரும்பியது கிடையாது. அதிலும் வில்லுக்கத்தி கேட்டு அலையும் பெண்களிடம் முழுக்க முழுக்க சகவாசம் வைப்பதில் நாட்டமாய் அவர் இருந்ததில்லை.
தடித்த கழுத்தும், வெடித்த உதடுகளுமாக இருந்தாள் அந்த ஆபிரிக்கப் பெண். பாரியதான பிருட்டத்தை துாக்கிக் கொண்டு, ஒரு தாராவைப் போல தத்தித்தத்தி மேசைக்கு நடந்தாள். ஒரு வில்லுக்கத்தியை இவள் தேடி அலைந்தாள். இவளை இதற்கு முன்பு அவர் பார்த்த ஞாபகம் இல்லை. வில்லுக்கத்தி இல்லை என்பதுபோல சைகை காட்டியதும் அவள் மறைந்து விட்டாள்.
இந்த ஜேர்மன்காரர் பெயர் ரேயினியர். உணவகம் ஒன்றில் எமிலி என்ற பெண்ணுக்காக காத்திருந்தார். அவளைப் பற்றி சிந்திக்கும் அந்த சந்தோஷமான நேரம் இப்படித்தான் இந்த வில்லுக்கத்திக்காரியால் கெட்டுப்போனது. எமிலியை சந்திக்க எப்பொழுது வந்தாலும் அவன் சிறிது நேரம் கழித்தே வருவாள். இது அவள் வேண்டுமென்றே செய்வதுபோல பட்டது. அவளை உடனேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையையும் அது துாண்டிவிட்டது.
எமிலியிடம் மறைக்கப்பட்ட சாமர்த்தியம் ஒன்று இருந்தது. வசதியான சமயங்களில் அவளுடைய
-5O- வாழும் தமிழ் 2000 காலம் - 13

ட்சணிகள்
(G). முத்துலிங்கம்
ஞாபகசக்தி பழுதாகிவிடும். அன்றும் அவள் தாமதத்திற்கு அது காரணமாக இருக்கலாம். இன்றைய சம்பாஷணையில் அவளுடைய தாயார் பற்றிய பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அது வந்தால் அவள் கணிகளில் நீர் பெருக் கெடுத்துவிடும். வந்த காரியத்தைக் கட்டி வைக்க வேணிடியதுதான்.
இரண்டு விவாகம் செய்து அதை வெற்றிகரமாக முறித்த களை ரேயினர் முகத்தில் இருந்தது. விரி வாக்கம் செய்யப்பட்ட உடம்பு நாற்பது வயது தாண்டிய தோற்றம். அவர் அறியாமல் சிறிது வழுக்கை அவருக்குத் துரோகம் செய்து கொணர் டிருந்தது. குளிரை எதிர்கொள்ள அணிந்திருந்த மெல்லிய கோட் அவருடைய வயதை மறைக்க
உதவி செய்தது.
தவறுகளில் இரண்டு வகை. ஒன்று செய்துவிட்டு வருந்துவது. இதற்கு ஆயுள் குறைவு. விரைவில் மறதி மூடிவிடும். இரண்டாவது, ஒரு செயலை உரிய நேரத்தில் செய்யாமல் விட்டு பிறகு வருந்துவது. இந்த வருத்தம் வாழ்நாள் முழுவதும் வாட்டும். இவர் இரண்டாவது தவறை செய்வ தில்லை என்ற முடிவிலிருந்தார். இன்று எப்படியும் எமிலியை கேட்டு விட்டார். அதன் விளைவுகள் பாதகமாக இருந்தாலும் பரவாயில்லை.
இன்று ஒரு சகுனப்பிழை நடந்துவிட்டது. எமிலியைப் பார்க்க வேண்டும் என்று அவசரமாக வந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.
வரிக்குதிரைக் கடவை ஒன்று சமீபத்தில் இருந்தது. அப்படிப்பட்ட கடவையில் கடப்பது தங்கள் சுய மரியாதைக்கு இழுக்கென்று நினைத்தோ என்ன வோ இந்த தாயும் மகளும் சற்றுத் துாரம் தள்ளிக்
கடந்தன.
இரண்டு ஒட்டைச் சிவிங்கிகள். அதில் தாய்

Page 53
முதலில் ரோட்டைக் கடந்து விட்டது. வேகமாக வந்த ரேயினியர் பிரேக் பிடிக்காமல் நேரே போனபோது குட்டி ஒட்டைச்சிவிங்கி திரும்பி வந்த வழியே ஒடி மறைந்து விட்டது. அவருக்கு பின்னால் கார்களும் லொறிகளும் வந்தபடியே இருந்தன. திரும்பிப்பார்த்தால் தாய் ஒரு பக்கத்தில் இருந்து யோசித்தபடி நின்றது. என்ன செய்வது என்று அதற்குப் புரியவில்லை. குட்டியை காணவபில்லை. அது காட்டுக்குள் மறைந்து விட்டது. ஒரு கணம் தாமதம் செய்திருந்தால் அந்த தாயையும், குட்டியையும் பிரித்த பாவம் அவருக்கு சம்பவித்திருக்காது.
அந்த யோசனையும் அவர் மனதை சங்கடப் படுத்தியது. அதற்கிடையில் இந்த வில்லுக்கத்திக் காரி வந்து அவரை தொந்திரவு செய்தபடி இருந்தாள்.
துாரத்தில் எமிலி வருவது தெரிந்தது. அவள் உயரமான பெண். எவ்வளவு துாரமாக இருந் தாலும் அவள் தெரிந்து விடுவாள். அதனால்தான், அவள் பக்கத்தில் நிற்கும் மற்ற பெண்கள் எல்லாம் மிகச் சாதாரமாகி விடுகிறார்கள்.
அவள் அறியாமல் அவளை கண்காணிப்பதில் ரேயினருக்கு ஒரு சந்தோசம் இருந்தது. இப்பவும் சனங்கள் நிறைந்த இந்த உணவகத்தில் அவள் எப்படி பிரவேசிக்கிறாள் என்று பார்க்க ஆவ லாக இருந்தார். பாதுகாப்பில்லாத எலி சுவரை ஒட்டிக்கொண்டு ஒடுவதுபோல அவள் சுவர் ஒரமாக வரவில்லை. மாறாக நடுப்பாதையில், பல தலைகள் திரும்ப, ஒரு குதிரையைப்போல நடந்து வந்தாள். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
முதன்முறையாக பணம் மாற்ற அவர் வங்கிக்கு சென்றிருந்தார். இவள் புன்சிரிப்புடன் வரவேற் றாள். தலையை முற்றிலும் மழித்திருந்தாள். அவளுடைய நீண்ட காதணிகள் சட்டை மறைக் காத தோள்களைத் தொட்டன. அவரசரப்படாத ஒரு அழகு தலைமயிரின் அநாவசியத்தை அது பறைசாற்றியது. ரேயினியர் உடனேயே தான் மாற்ற வந்த தொகையை குறைத்துவிட்டார். இன்னும் பலமுறை வங்கிக்கு வரும் ஆவலை அவள் துாண்டிவிட்டது தான் காரணம்.
அடுத்த நாளும் வந்தார். அதற்கடுத்த நாளும் வந்தார். வேண்டாத பணத்தையெல்லாம் மாற்றி தொடர்பை நீட்டுவித்தார். சிநேகிதத்தை வளர்த்

தார். இப்படித்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள்.
எமிலி “வக்கம்போ இனத்தைச் சேர்ந்தவள். வில்லையும், அம்பையும் வைத்து வேட்டையாடிப் பிழைக்கும் இனம். ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவளுடைய தாத்தா விஷம் வைத்த அம்புகளால் ஒரு யானையையே கொன்றிருக்கிறார்.
அந்த வேட்டைக்கார பரம்பரை குணாதிசயங்கள் சில அவளிடம் இன்னமும் இருந்தன. சிங்கம் வேட்டையை எதிர்பார்த்து ஆடாமல் அசையாமல் இருப்பது போல எமிலியும் சில சமயங்களில் நீண்ட நேரம் அசையாமல் தன்னை மறந்து இருப்பாள். அவளை சுற்றி அந்த நேரங்களில் மெளனம் சூழ்ந்து விடும்.
ஒருநாள் திடீரென்று உங்களை முதன்முதலில் வங்கியில் பார்த்தபோது எனக்கு என்ன தோன் றியது தெரியுமா?’ என்றாள். பிறகு சிரிக்கத்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -5-

Page 54
தொடங்கினாள். அடக்க முடியாத சிரிப்பு. ரேயினியர் அவள் வலையில் விழுவதாக இல்லை. அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தார். அவளுக்கும் சொல்ல வேண்டும் என்ற ஆவல் கட்டுமீறி விட்டது.
'நீங்கள் நடனம் ஆடும்போது எப்படி இருப் பீர்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன். எனக்குச் சிரிப்பு வந்தது' என்றாள். மறுபடியும் சிரிக்கத் தொடங்கி விட்டாள்.
எமிலியுடன் நடனம் ஆடுவதும் ஒரு நுாதனமான அநுபவம் தான். அவளுடைய அங்கங்கள் எல் லாம் அவர் உடம்பில் சுமையாகப் படும்படிதான் ஆடுவாள். மிகவும் நல்ல ஆட்டக்காரி. இன்று அவள் நடனத்துக்கு ஆயத்தம் செய்யும்போதே அவளை மடக்கிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அவளை கண்டதில் ஏற்பட்ட சந்தோஷம் ஒரு கணத்தில் அவர் முகத்தில் இருந்து மறைந்து போனது. அவள் ஒர் உயரமான ஆபிரிக்க ஆடவனுடன் பேசிக்கொண்டடிருந்தாள். இருவரும் உரசியபடியே மிக அருகில் நின்றது இவரை என்னவோ செய்தது.
இது இரணர்டாவது சகுனப்பிழை. ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் இன்னும் கொஞ்சம் மீதி இருந்தது போலும், அவன் தன் நண்பர்களைத் தேடி வேறு ஒரு மேசைக்கு போய்விட இவள் மாத்திரம் தனிய இருந்தாள்.
மாமிச பட்சணி என்பது நைரைபியில் மிகவும் பிரசித்தமான உணவகம். இது சாதாரண மாமிச உணவு பரிமாறும் உணவகம் அல்ல. வேட்டை மிருகங்களின் இறைச்சி தான் இங்கு பரிமாறப்படும். கோழி, ஆடு, மாடு போன்றவற்றை இங்கே யாரும் புசிக்க வருவதில்லை. இரவு நேரங்களில் வெளி நாட்டவரும், உள் நாட்டவரும் படையெடுப்பது காட்டிலே தன்னிச்சையாக திரியும் தாவர மிருகங்களை வேட்டையாடி சமைத்த உணவை சாப்பிடத்தான்.
தடித்த பெரிய கம்புகளில் இந்த இறைச்சியை நெருப்பில் நேராக வேகவைத்துக் கொண்டு வருவார்கள். யாமாசோமா என்ற இந்த இறைச்சி வெளியே கருகாமலும், உள்ளே கணக்காக வெந்தும் இருக்கும். இப்படி
-52- வாழும் தமிழ் 2000 காலம் - 3

இறைச்சியை வேக வைப்பது மிக நுணுக்கமான சமையல் கலை. இந்த வித்தை தெரிந்தவர்கள் மிகவும் சொற்பமே. அவர்களை கண்டுபிடித்து இந்த உணவகத்தில் வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள்.
எமிலி வந்ததும் அந்த இடத்தில் விளக்கு போட்டது போல பளிச்சென்று ஒரு வெளிச்சம் பரவியது. சாய்ந்திருந்த கண்கள் அவளுக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்தன. நீளமான கறுப்பு உடையில் ஒரு ஒட்ட வீராங்கனைக்கு உரிய தோரணையில் அவள் இருந்தாள். ஊகத்துக்கும் கற்பனைக்கும் மிகவும் செலவு வைக்காமல் அவளுடைய மார்புகள் யோக்கியத்தோடு இருந்தன. திடீர் அசைவுகளோ, திருப்பங்களோ இல்லாமல் காற்றில் செடி அசைவது போல அவளுடைய நகர்வு இருந்தது.
நீண்ட உடையை லாவகமாக விசிறி, அதே நேரத்தில் இடையை ஒடித்து உட்கார்ந்தாள். ஆயிரம் முறை ஒத்திக்கை பார்த்தது போல ஒர் உத்தமத் தன்மையோடு அந்த அசைவுகள் இருந்தன. அவருடைய சந்தோஷத்தை நீடிக்க இன்னொரு முறை அப்படி செய்வாளா எனது மனது ஏங்கியது.
கால்களை மாறிப்போட்டாள். தொடையிலிருந்து கீழாக அவள் 960 வெட்டியிருந்தது. இடது தொடையாவது, வலது தொடையாவது அவர் கணிகளுக்கு எப்பவும் தெரிந்து கொண்டிருந்தது. அவள் எப்படி மாறிக் கால் போடுகிறாாள் என்பதிலிருந்து.
அகலமான மிமோசா மரத்தின் கீழ் அவர்கள் மேசை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஒரு சிறிய விளக்கு வேண்டுமானவற்றை மட்டும் ஒளி வீசி பார்க்கும்படி செய்தது. ஒரு ஜாடியில் நீண்ட காம்பு ரோஜா ஒன்று தனியாக நின்றது. மேசையிலே இருந்த கொடியை ஏற்றி வைத்தார்கள். சிவப்பும் வெள்ளையுமான இந்தக்கொடி ஒரு சமிக்ஞை இதை இறக்கும் வரை வேட்டை இறைச்சி வந்துகொண்டே இருக்கும். அதைச் சாப்பிட வேணர்டியதுதான் அவர்கள் வேலை. போதும் என்று தோன்றும்போது கொடியை இறக்கி வைத்துவிட வேண்டும்.
டொக்டர் காவா என்பவன் முதலில் வந்தான். இவன் டொக்டருமல்ல மணினுமல்ல.

Page 55
தனக்காக அவனே கொடுத்துக் கொண்ட ஒரு பட்டம் பெயர். குள்ளமான உருவம் படைத்து, கட்டையான கால்களுடன் இருந்தான். இவனுடைய தலை உடம்புக்கு பொருத்தமில்லாமல் பெரிசாக மேசையின் உயரத்துக்கு மேலாக தெரிந்தது. அவிந்துபோன லோங்கனட் எரிமலைபோல இவனுடைய வாய் அகன்றுபோய் இருக்கும். இவன்தான் ஒவ்வொரு மேசையையும் ஆரம்பித்து வைப்பான். உலகத்திலே எங்கேயும் கிடைக்காத ஒரு அபூர்வமான மதுக்கலவை இவனிடம் இருந்தது. அதன் கலைவைமுறை ரகசி யம். ஜின், தேன், எலுமிச்சை சாறு, ஐஸ்கட்டிகள் இதில் அடங்கும்.
*uflamyv fl'
* மிளிரி சாண்’
வணக்கம் தெரிவித்த பிறகு காவா ஒரு விஞ்ஞானியின் கவனத்தோடு மதுவைக் கலக்கத் தொடங்கினான்.
‘இன்று பதினைந்து நிமிடம் நீ பிந்தி வந்துவிட்டாய். என் மனம் தனித்துவிட்டது என்று மிகவும் சாதாரணமாகத்தான் தொடங்கினார், ரேயினியர். ஆனால் எமிலியின் பதில் சாட்டிலைட் ரெலிபோன் போல மிகவும் தாமதமாக வந்தது.
*பதினைந்து நிமிடம் லேட்டா? என் அம்மா பத்து மாதம் எனக்காக காத்திருந்ததாக சொல்கிறாள். உங்களுக்கு பதினைந்து நிமிடம் பெரிதாகப் போய்விட்டதா?’ என்று சிணுங்கினாள்.
ஆரம்பமே சரியில்லை. அம்மா என்றதும் அவள் கண்கள் பனித்துவிட்டன.
ஒருமுறை அவளுடைய தாயாரை சந்தித்திருக்கிறார். பலமிழந்த தேகம். கோடுகள் நிறைந்த முகம். அந்த மூதாட்டி கணிணிர் விடும்போது அந்தக் கண்ணிர் கீழேயே விழுவ தில்லை. சுருக்கங்களுக்கிடையில் மறைந்துபோகும்.
ரேயினியர் பேச்சை மாற்றினார். கா-ை வவை நோக்கி மதுவை விரைவில் கொண்டு வரும்படி பணித்தார். எமிலி சின்னப்பெணி போல ஐஸ் கட்டிகளை முதலில் எடுத்து

நறுக்கென்று கடித்து சாப்பிட்டாள். பிறகு ஏதோ பிழை செய்துவிட்டதுபோல வாயை விரல்க ளினால் பொத்தினாள். மயக்குகின்ற ஒருசிரிப்பு அவளிடமிருந்து வெளிப்பட்டது.
இறைச்சி ஊர்வலம் வரத்தொடங்கியது. முதலில் வந்தது முதலை இறைச்சி. அதைத் தொடர்ந்து இம்பாலா இறைச்சி. பிறகு மான், மரை என்று தொடர்ந்தது. தீக்கோழியின் இறைச்சி வந்தபோது மிகவும் ரசித்து சாப்பிட் டார்கள். அதற்கு பிறகுதான் வரிக்குதிரை வந்தது. அதன் சுவையும் அவர்களுக்கு பிடித்திருந்தது.
வேட்டைக்கார பரம்பரை என்பதால் எமிலிக்கு வேட்டை இறைச்சி மிகவும் பிடித் தமானது. தனக்கு பிடித்தமான இறைச்சி வகை களையே அவள் தேர்ந்து உணர்டு கொண்டி ருந்தாள். ரேயினியர் என்றால் தன் பங்குக்கு
எல்லாத்தையும் ஒரு கைபார்த்தார்.
ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் அந்த இடத்தின் குளிர் காற்று மனதுக்கு வெகு இதமாக இருந்தது. மலைக்குளிரைப் போக்க கணப்பு அடுப்புக்கள் மூட்டி அங்கங்கே வைத்தி ருந்தார்கள். மிகையில்லாத அங்க அசைவுகளுடன் அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொணர் டிருந்தார், ரேயினியர்.
அவளுடைய முதல் ஆர்வம் தணியும்வரை காத்திருப்பது என்று முடிவு செய்தார். அதன் பிறகு அவளை கேட்டுவிடுவதில் தாமதிக்கக் கூடாது. அதிலும் இன்று அவளை உரசியபடி வந்த அந்த இளைஞனை அவருக்கு பிடிக்கவில்லை.
அப்போது பார்த்து ஒட்டைச்சிவிங்கி இறைச்சி வந்தது. பெரிய உலக்கை போன்ற கம்பில் நாலு பக்கமும் சமமாக வேகவைத்து நல்ல மணத்துடன், ஆனால் திடீரென்று இவருக்கு என்னவோ போல ஆகிவிட்டது. வேண்டாம் என்று கூறிவிட்டார். எமிலி மாத்திரம் தொடைப்பகுதியில் ஒரு இடத்தைக் காட்டி அதில் ஒரு துணர்டை வெட்டி கோப்பையில் போட்டு உணர்ணத் தொடங்கினாள்.
இவருக்கு நீண்ட கழுத்துடைய அந்தக் குட்டியின் திகைத்த பார்வையும், தவிப்பும் ஒரு கணம் மனக்கண்ணில் தோன்றியது. தாயையும்,
மகளையும் பிரித்தது சரியா என்ற ஒரு நினைப்பும்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -53

Page 56
வந்தது. மறுகணம் மறைந்துவிட்டது.
அவர் ஒட்டைச்சிவிங்கி இறைச்சியை வேண்டாமென்றது தாவர மிருக சமுதாயத்தின் நன்றியை எதிர்பார்த்தென்று சொல்லமுடியாது. ஏதோ அப்பொழுது ஏற்பட்ட உந்துதலால் அப்படி சொல்லவேண்டும் போலபட்டது. சொல்லிவிட்டார்.
உண்மையில் ரேயினியருக்கு சகுனத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் timing என்று சொல்லப்படும் ஒன்றில் நம்பிக்கை இருந்தது. எந்த விஷயத்தையும் வெற்றியாக்குவதற்கு “கால நேரம்” அறிந்து செயல்பட வேண்டும் என்று சொன்வார். அலுவலகத்திலும் அவர் அப்படித் தான். சில கோப்புகளை வந்த உடன் பார்த்து அனுப்பி விடுவார். சிலவற்றை ஒரு காரணமும் இன்றி நாலு ஐந்து நாட்கள் மிகையாக வைத்திருந்து பிறகு திரும்பி அனுப்புவார். அவரெ டுத்த முடிவு ஒரு குறிப்பிட்ட “நேரத்தில்தான்” அறிவிக்கப்பட வேண்டுமென் பதில் பிடிவாதமாக இருப்பார்.
அப்படியான ஒரு தருணத்தை இன்று பார்த்திருந்தார். அவளிடம் தன் காதலை வெளியி டும்போது பதற்றம் இருக்கக் கூடாது. ஆனால் அவர் நினைத்தற்கு எதிராக, அந்த பொன்னான, மயிரிழையில் தவறிக் கொண்டு போனது. சரியான சமயத்தில் கேட்டால் அவள் மறுக்க
மாட்டாள் என்பது அவர் நம்பிக்கை
ரேயினியர் நைரோபிக்கு வந்ததே ஒரு காரணத்துக்காகத்தான். இந்த மூன்று மாதமாக அவர் வந்த காரியம் பலிக்கவில்லை. எப்படியும் ஒரு ஆபிரிக்கப் பெண்ணை மணமுடித்துப் போகவேணி டும் என்பது அவர் ஆசை. அவருடைய நண்பர்கள் பலர் இப்படி வந்து ஏற்ற பெண்களை வசீகரித்து கூட்டிப் போயிருக் கிறார்கள். ஆபிரிக்கப் பெண்களில் ஒரு வசதி. விவாகரத்தை நினைத்துக் ésh L பார்க்க
மாட்டார்கள்.
எமிலி எல்லா விதத்திலும் பொருந்தி இருந்தாள். நல்ல வாலிபம். வயது வித்தியாசம் பார்க்காமல் அவருடன் அந்நியோன்யமாக இருந்தாள். ஆனால் ஒரு பெரிய பிரச்சினை இருந்தது. அவளுடைய தாய் இவளையே நம்பி இருந்தாள். அவர்களுக்கு வேறு யாருடைய துணையும் இல்லை. இவரை மணக்க எமிலி
-54- வாழும் தமிழ் 2000 காலம் - 3

சம்மதித்தால் தாயினுடைய கதி எண்னவாகிறது என்பது பற்றிய விசாரம் இருந்தது.
அன்றைய சாயங்காலத்தின் இனிமை யான தன்மை மறைந்து கொண்டு வந்தது. திடீரென்று எமிலி, வேட்டைக்காகக் காத்திருப்பது போல, அசைவற்ற நிலைக்குப் போய்விட்டாள். தற்செயலாக வைத்ததுபோல கைகளை அவளு டைய முழங்காலுக்கு மேல் வைத்தார். கறுப்பு மெழுகினால் செய்தது போல அவளுடைய இறுக்கமான கால்கள், மயிர்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, பளபளத்தன. அவள் உடல் மொழியபில் சிறிதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, இன்னும் கொஞ்சம் கால்களை அகட்டி உட்கார்ந்தாள்.
நிலைமை சாதகமாக மாறிக்கொண்டு வந்தது. அவள் மறுத்து விடுவாளோ என்ற பயமும் இருந்தது. அவள் நல்ல மூடிற்கு வரும் வரை காத்திருந்தார்.
கோப்பியும் வந்துவிட்டது. இனிமேல் பணத்தை கொடுத்துவிட்டு போக வேண்டியது தான். கோப்பி குடிக்கும் தறுவாயில் நடனம் ஆரம்பமாகி விட்டது. வாத்தியங்களும், மேளமும் அதிர ஆபிரிக்க நடனம் தொடங்கியது. இந்த மேளத்தின் அதிர்வு தசையை தானாக ஆட வைத்தது. எமிலி தன் காலால் தாளம் போட்டபடி இருந்தபடியே உடலை மெல்ல இருபக்கமும் அசைத்தாள். அவள் நடனமாடுவதற்கு துடிப்பது தெரிந்தது. அவளுடைய முகமும் மலர்ச்சி பெற்று ஒரு நல்ல தருணமாக மாறிக் கொண்டிருந்தது.
இதுதான் சமயம். இதை தவறவிடக் கூடாது. இப்படி அவர் சிந்தித்துக் கொண்டிருந்த போதே அவள் எங்கிருந்தோ திடீரென்று முளைத்தாள். தடித்த கழுத்தும், வெடித்த உதடுகளு மாக இருந்தாள்.
“தாயோடு படுப்பவனே, உன்னிடம் ஒரு வில்லுக்கத்தி இருக்கிறதா? என்றாள்.

Page 57
வாராந்த மலிவு விற்ப6ை
195 & 199 மார்க்கம் வீதி,
 

rde S
NDIAN STOR
(6)
னயின் முன்னோடிகள்
ஸ்காபரோ (416) 266-5025

Page 58
gJ அணிை
-கன்னட வீரை
ஆங்கில மூலம்:
தமிழில்: இ.ச
தென்னிந்தியாவின் சிறப்படையாளங்களில் ஒன்று பக்தி இயக்கம். அதற்குப் பெரியளவில் ஒரு தேசியப் பரிமாணம் உண்டு. தென்னிந்தியாவின் பக்தி இயக்கக் கிளைகளில் ஒன்று கன்னடத்தைத் தளமாகக் கொண்டது. கி.பி.12 அளவில் நிறுவனமயப் படுத்தப்பட்ட போதிலும் இவ்வியக்கம் அதற்கு முன்பே தனக்கான தளத்தயாரிப்புக்களை வைத்திருந்தது.
பக்தி இயக்கங்களின் பிரதான வெளிப்பாட்டுத் தளம் இலக்கியம். வீரசைவ பக்தி இலக்கியங்கள் வசனங்கள் எனப் பெயரிடப் பட்டவை. தம்மீதும், சமூகம்மீதும் மிகவும் Grbirsошоштвот штiso6n Glasmsoon சொல்லிலும், செயலிலும் சமதள முடைய, ஒரு காலகட்ட சமூக நிர்ப்பந்தங்களின் விளைவுகளுமான அருளாளர்களது அனுபவங் களின் பதிவுகளவை. பாரம்பரியமயமான சமய ரீதியான பார்வையை விடுத்து இவற்றுள் நுழையும் போதும் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் அக, புற அனுபவங்களின் மிகச் சிறந்த பதிவுகளாகவும் இவையிருக்கும்.
-56- வாழும் தமிழ் 2000 காலம் - 13

)ானது
LDus609
சவ வசனங்கள்
ஏ.கே.இராமனுஜன்
கிருஷ்ணகுமார்
தாயே சுடரில்லாத ஒரு நெருப்பில் நான் எரிந்தேன்.
தாயே இரத்தமற்ற ஒரு காயத்தால் நான் துன்புற்றேன்.
தாயே ஒரு மகிழ்ச்சியுமற்று
நான் புரணர்டேன்.
சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன், என் இனிய மல்லிகார்ஜினரே.
மகாதேவியக்கா
E. S. 12

Page 59
நானோ உடலை வைத்திருப்பவன் நீயோ உயிர்மூச்சை பிடித்திருப்பவன்.
என் உடலின் இரகசியத்தை நீ அறிவாய். உன் உயிர்மூச்சின் இரகசியத்தை நான் அறிவேன்.
அதனால் தான் உனதுடல் என்னுள்ளே இருக்கிறது.
நீ அறிவாய் நானும் அறிவேன்
ஒ ராமநாதா,
உனது உயிர்மூச்சு எனது உடலினுள் இருக்கும் அதிசயத்தை
தேவிநரசிம்மையா փ.ւն].10
எனது உடல் அழுக்கு எனது ஆத்மா வெளி
எதை − நான் பற்றிப்பிடிப்பேன் பிரவுவே எப்படி
எவ்வாறு உன்னை நான் நினைப்பேன்? எனது மாயைகளை அறுத்து விடு மல்லிகார்ஜினனே.
மகாதேவியக்கா கி.பி.12
யாருக்குத் தெரியும்? இது உடலின் உடலா?
உயிரின் உயிரா?
உணர்வின் உணர்வா?

இது துாரமானது, அணிமையானது. இங்கில்லை, அங்குண்டு.
என்று எண்ணி எண்ணி தமக்குள்ளேயே அவர்கள் களைத்துப் போகிறார்கள்.
அல்லம்ம பிரவு கி.பி.12
உயரமான மூங்கில் ஒன்றை வெட்டி அதன் அடியைக் கொண்டு பெண் ஒன்றும் நுனியைக் கொண்டு ஆணி ஒன்றும் செய்கிறாய் என்று வைத்துக் கொள் தீப்பற்றும் வரை அவற்றை உரசியபோது பிறந்த நெருப்பு
ஆனா
பெண்ணா
கூறுவாய் ஒ ராமநாதா?
தேவநரசிம்மையா գ).ւն).10
மார்பையும், நீண்டு வளரும கூந்தலையும் அவர்கள் கணிடால்
அதைப் பெண்ணென்று அழைப்பர்.
தாடியையும் மீசையையும் கண்டால் அதை ஆணி என்று அழைப்பர்.
ஆனால், இவற்றிற்கு இடையில் மிதக்கும்
ஆத்மாவைப் பார்
அது ஆணுமில்லை. பெண்ணுமில்லை.
ஒ ராமநாதா.
தேவநரசிம்மையா փ.ւն].10
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -57.

Page 60
இங்கே பார் இனிய நண்ப மனிதர்களின் இந்த உடைகளை அணிவது
உனக்காக மட்டுந்தான்.
சிலவேளைகளில் நான் ஆணர். சிலவேளைகளில் நான் பெண்.
ஒ கூடலி சங்கம தேவா உனக்காக நான் யுத்தம் புரிவேன். ஆனால், நான் உனது பக்தனின் மணவாட்டி
பசுவண்ணா
E. S.12
நெருப்பு எரிக்கும்
ஆனால் அசைவதில்லை.
காற்று அசையும் ஆனால் எரிப்பதில்லை.
காற்றும் நெருப்பும் இணையும்வரை அதற்கு எந்தவொரு ஏற்றமும் இல்லை.
அறிதலும், செய்தலும் இது போலத்தான் என்று மனிதர்கள் அறிவார்களா?
தேவநரசிம்மையா
S. 5.10
ஒளி
இருளை விழுங்கியது
நான் தனிமையில்
உள்ளிருந்தேன்.
கலையும் இருளில்
நானே
உன் இலக்கானேன்
ஒ குகேஸ்வரா
அல்லம்மபிரபு g.ւն).12
-58- வாழும் தமிழ் 2000 காலம் - 3

பட்டுப்பூச்சி ஒன்று தன் ஊனத்தின் நுாலிழையால் அன்புடன் தன் வீட்டை நெய்கையில் தன் உடலையே இறுக்கமாக
சுற்றிச் சுற்றி இறுதியிலே தானே இறந்து கொண்டிருப்பது போல
நானும் என் மனத்தின் ஆசையின் ஆசையால் எரிந்து போகிறேன்.
ஒ பிரபுவே என் மனத்தின் பேரவாவை அறு வெளியேற உன் வழிதனை காட்டு மல்லிகார்ஜினனே.
மகாதேவியக்கா
d.1.12
சிலர் சொல்கிறார்கள் தாங்கள் அதைக் கண்டதாக அது என்ன?
சுற்றும் சூரியனா நட்சத்திரங்களின் வட்டமா? நிலவின் குன்றுநகர் வாழும் குகேஸ்வரா
அல்லம்ம பிரபு
S.L. 12
பானை ஒரு கடவுள் பொலி சுளகும் ஒரு கடவுள் தெருவில் கிடக்கும் கல்லும் கடவுள் தலைவாரும் சீப்பும் கடவுள், வில் நாணுங் கூடக் கடவுள் கெண்டியும் ஒரு கடவுள்.

Page 61
கடவுள்கள், கடவுள்கள் பாதம் பதிக்க இடமேதுமின்றி பலப்பல கடவுள்கள்.
கடவுள் ஒருவரே இருக்கிறார், அவரே எங்கள் கூடலிசங்கம தேவர்.
பசுவண்ணா
փ.ւն].12
மரத்து நெருப்பு மரத்தை எரித்தது போல நான் எரிந்தேன்.
பெருவெளிக் காற்று நறுமணம் நாசித்துளையை நிறைத்ததபோல நான் நிறைந்தேன்.
மெழுகுப் பாவை தீக்கொழுந்தானது போல நான் தீக்கொழுந்தானேன்.
பிரபுவே நான் உம்மை வணங்கினேன்.
உலகத்தை இழந்தேன்.
அல்லம்ம பிரபு
d. S. 12
அதோ அவர்களைப் பார் நீர்க்குமிழி ஒன்றைப் பாதுகாக்க இரும்புச் சட்டகம் ஒன்றை ஆக்குகிறார்கள் சுறுசுறுப்பாக,
உடலின் உறுதியை நம்பாது வாழ, அனைத்தும் வழங்கும் பிரபுவை வணங்கு
பசவணர்ணா
á9. 9.12

சிவனுடன் முழுமையாய் ஒன்றித்திருப்போருக்கு
விடியல் இல்லை,
வளர்பிறை இல்லை, சமமான பகல் இரவு இல்லை, சூரிய அஸ்தமனமும் இல்லை, பூரண நிலவும் இல்லை.
அவனது முற்றமே உண்மையான காசி,
ஒ ராமநாதா
தேவநரசிம்மையா
g.ւն].10
நாளை வரவிருப்பது இன்றே வரட்டும்
இன்று வரவிருப்பது இப்பொழுதே வரட்டும்.
மல்லிகார்ஜினா இப்பொழுதுகளையும் அப்பொழுதுகளையும் எங்களுக்கு தராதே
மகாதேவியக்கா
E. S. 12
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -59

Page 62
ஜி.நாக பால் பிரமைக
60)
"மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர பரஸ்பர அன்பு அல்ல. அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்."
- ஜி.நாகராஜன்
மேற்கூறிய ஜி.நாகராஜனின் பொன்மொழியுடன் இக்கட்டுரையை ஆரம்பிப்பதுதான் மிகப் பொருத்தமானது. ஏனெனில் அவரது பல படைப்புக்களின் சாரமும் அதுதான்.
பால், பாலுறவு, காதல் என்பன தொடர்பான பல பிரமைகளை அடிப்படையாகக் கொண்டே 20 ம் நுாற்றாணர்டின் தமிழிலக்கியத்தின் காதல் தொடர்பான படைப்புக்கள் உருவாகி உள்ளன. “காதல் தெய்வீகமானதும் நித்தியமானதும்”, “அன்பினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம்" “அன்பு நிரந்தரமானது” என அந்தப் பிரமைகள் நீண்டு செல்கின்றன.
பாலியல் விஞ்ஞானமும் இரசாயனமும் காதல், அன்பு தொடர்பான பிரமைகளை உடைத்தன. பாலியல் விஞ்ஞானம் பால் தொடர்பான பிரமைகள் அல்லது மாயைகள் என்ற தலைப்பின் கீழ் காதலையும் சேர்த்தது. காதல் ஒரு பிரமை (Love is a myth) மிக அழகான பிரமை. எங்கள் எல்லோருக்கும் ஜீரணிக்கக் கடினமானது தான்.
காதல் வசப்பட்டவர்களின்
காட்டாற்றுத்தனத்துக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும்
-6O- வாழும் தமிழ் 2000 காலம் - 3

ராஜன்: ளை உடைத்த ப்பாளி
நட்சத்திரன் செவ்விந்தியன்
பின்னால் சில ஹோர்மோன்களை அடிப்படை யாகக் கொண்ட மனித உடலின் இரசாயனம் இருப்பதாக பாலியல் விஞ்ஞானமும் இரசாயனமும் கண்டறிந்தன. இரண்டு காதலர்களின் குறிப்பிட்ட ஒரு காதலொன்றுக்கு இந்த ஹோர்மோன்கள் ஏற்படுத்துகின்ற பைத்தியக்காரத்தனம் நான்கு ஆண்டுகளுக்கே நீடிக்கக் கூடியது. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் இந்த உணர்மையை உணர்ந்திருப்பார்கள். நான்கு ஆண்டுகளின் பின்னரும் அவர்களை இணைத்து வைத்திருப்பது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற நம்பிக்கைப் பிணைப்பும் நட்புமே தவிர காதல் அல்ல. இதை அடிப்படையாகக் கொண்டே “காதலை விட நட்பு ஆழமானது. ஏனெனில் அது அதிக காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியது” என்றே பொன்மொழி உருவானது. பெண்களை வசீ கரித்து சரசமாடித் திரிந்த இலத்தீன் அமெரிக்க மகாகவி பாப்லோ நெருடா அதுதான் பின்வரு மாறு எழுதினான்.
“ஒரு காதலின் முறிவை கொண்டாடுவோம் ஏனெனில் இன்னொருமுறை காதலிப்பதற்கான சுதந்திரத்தை அது தருகிறது”
அமரத்துவமான காதல் என்று சொல்லி வாசகர்களை கனவுலகில் ஆழ்த்தி இலக்கியம் படைத்தவரல்ல நாகராஜன். கணிதத்தில் அதிக ஈடுபாடும் திறமையும் கொண்ட அவர் மிக்க நுண்மதி படைத்தவராக இருந்ததால் அவரது படைப்புக்கள் முழுவதும் அதிர்ச்சி ஊட்டும் உணர் மைகள் நிறைந்திருந்தன. பாலியல் தொடர்பான அவரது படைப்புக்களில் வருகின்ற பாத்திரங்கள்

Page 63
தமிழிலக்கியத்தில் இதுகாறும் இருந்து வந்த பால் தொடர்பான பிரமைகளை உடைத்துப் போட்டன.
“நான் புரிந்த நற்செயல்கள்”, “மனச்சிறை” என்ற இரண்டு சிறுகதைகளிலும் வருகின்ற பெண் பாத்திரங்கள் துணிகரமும் புரட்சிகரமுமானவை. அழியாத காதலுக்காகவோ அல்லது அழிந்த காதலுக்காகவோ அவை புலம்பித் திரியவில்லை.
“நான் புரிந்த நற்செயல்கள்” இல் ஒரு பகுதி வருகிறது:
ஜேன் விக்கி விக்கி அழுதாள். நான் அவளை அணைத்து முத்தமிட்டேன்.
“என்னைக் கைவிட மாட்டீர்களே”
“கேட்டுச் சொல்றேன்”
“யாரைக் கேட்டு”
“மனேஜரைக் கேட்டு”
“அவர ஏன் இழுக்கிறீங்க”
“நான் இழுக்கலே, அவருந்தானி இதில் இருந்தாரே!”
தனது காதலி இன்னொருவனோடு படுப்பதைக் கண்டதும் வழமையான இலக்கியமாயின் எப்படி இருந்திருக்கும்? உலகத்துத் துயரம் முழுவதும் அவனின் முகத்தில் படிய கையாலகத்தனத்தோடும் விரக்தியோடும் தோல்வியோடும் அவன் உலாவ உலகத்துத் துயர இசைகள் அத்தனையும் முழங்கி இருக்கும். அந்தத் புலுடா எதனையும் நாகராஜன் செய்யவில்லை.
பிரமைகளை உடைக்கின்ற பணியில் அவரது சிறுகதை ஒவ்வாத உறவுகள் மற்றும் பரத்தையாபின் உலகிற்குள் புகுந்தது. பெரும்பாலான கதைகளில் மகன் அல்லது மகள் தகப்பன் மூலம் தான் கருத்தரித்தாளோ அல்லது வேறு யார் மூலம் கருத்தரித்தாளோ என்ற சந்தேகம் வரும். “மிஸ் பாக்கியம்” இலும்” “கல்லுாரி முதல்வர் நிர்மலா” விலும் பெண்கள் உணர்கின்ற, கொள்கின்ற “தகாத" உறவுகள் வருகின்றன.
“வாழ்வும் எழுத்தும்” என்ற சிறுகதையில்

வருகின்ற எழுத்தாளர் ஏறத்தாழ பால் தொடர்பான பிரமைகளை வைத்திருக்கின்ற ஒரு மரபுக்குரியவர். முரணி நகை என்னவென்றால் கல்வியறிவில்லா எழுத்தாளரின் மனைவிதான் பிரமைகளை உடைத்தவளாக இருக்கின்றாள். எழுத்தாளனை மலடன் என்று மற்றவர்கள் சொல்லுகின்றார்கள் என்பதனால்தான் மனைவி வேறுயார் கூடவோ படுத்துக் கருத்தரிக்கின்றாள். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் எழுத்தாளர் இல்லை.
“பரத்தையர்கள் இன்பத்தின் ஊற்று',
"ஆசையைப் போக்குகின்ற வடிகால்கள்” என்று இருந்து வருகின்றவற்றை உடைத்து அவர்களும் மனிதர்கள் தான். அவர்களையும் காதலிக்க முடியும். நேசமும் பெருந்தன்மையும் மிக்கவர்கள் என அவரின் படைப்புக்கள் பேசின.
இவையெல்லாவற்றையும்விட முக்கியமானது தனது படைப்புக்கள் பற்றிய மிகச்சரியான மதிப்பீடுகளை அவர் கொண்டிருந்தார் என்பதுதான். அவரது சிறுகதைகள் பற்றி இதுவரை வந்த விமர்சனங்களுக்குள் அவரே செய்துகொண்ட சுயவிமர்சனம்தான் ஆழமானது. (பக்.352. ஜி.நாகராஜன் படைப்புக்கள்) தன்னைப்பற்றி இல்லாத பிரமைகள் எதனையும் அவர் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான தன்னுடைய சிறுகதைகள் Sketches என்றும் சிறந்த சிறுகதைகள் இவை இவையே என்பதையும் அவரே சொல்லித் தெரியவேண்டி இருப்பதுதான் தமிழ்ச் சூழலின் விமர்சன வறுமையும் அவலமும்.
பாலியல் சம்பந்தமாக அவர் அதிகமாக எழுதிய போதும் அவற்றுக்கூடாக அடுத்த தளமொன்றுக்கு அவர் சென்று விட்டார் என்பதையே அவரது உன்னதமான படைப்புக்கள் காட்டுகின்றன. “மிஸ் பாக்கியம்தில்” கள்ள உறவுகளைவிட மிஸ் பாக்கியத்தின் தனிமை முக்கியம். “யாரோ முட்டாள் சொன்ன கதை"யில் பாக்கியத்தின் நடத்தையை விட லுாளில் மணியினதும் அழகரினதும் அவலமும் தான் முக்கியம்.

Page 64

டயின் طائرته ൬൬'
தில்லை floartoj UP
டும் அந்தப் narఆవలి
"إلا في أنتجrع alue Ruli/P தொலிக்கும்قوقی
துதான் ” ഖങ്@് ஜயே ഖങ്ങ (P
G36) அது எ? gyo தாயகமே
வருடங்கள் ഞഖഴ്ച
sሆùùጫ அழுத்து (போதாத"
தும்
ாம் வழக்கழிந் Gun历T@
எம் வாழ்விழந் Gun历T@
D gff®D . ഖങ്ങി
உரத்து? சொல் லும் rદ્ધsrાfી!p? faoud9 @007(5 ஜயனே த விட்டு அது هrbCظالا grGat" ç,GሠTD*"° usદ્ધાં ઊtP
Lዘ9* வாத்தியத்தில் ரணிக்கும்
டியலைந்த சுதந்திர மானுடர"
ys ظفارقة تنتهي" ്ഥിഴ് انتهای LDآ۶ دقیق
ിങ്ങെ if દ્વાજ ઉો oygol JTآ
" ہفتےpLشعقل إنال ങ്ങ്@ ங்கொலி
(ஐகட்கும் விகளைத்
5 ானிடர" திறந்து ”

Page 65
Scarbo extiles &
1477 Gerı Toront M4L
Tel: (416) 4
 

Suits, Sarees Fancy Duppatas Fabrics & Dress
Matericals
நங்கையர் விரும்பும் நவநாகரீக லீடைகள், பஞ்சாபி வகைகள், சாறி வகைகள் மற்றும் துணி வகைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள
நாடவேண்டிய இடம்
rough k Fabrics
ard St. E o, ON
2A1
466-3005
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -63

Page 66
ஒட்டாத
6. ΟΦ -9/LDLDT ... s 9/LDIDIT.
தாயைப் பிரிந்த ஒரு ஆட்டுக் குட்டியின் ஆற்றாமை உணர்வுடன் கூடிய தவிப்பில் அவலக் கூக்குரல் இட்டபடி பிடரியில் குதிக்கால்படும் வேகத்தில் விழுந்தடித்து ஒடி வந்தான் வசந்தன்.
அவன் குழறிக் கொண்டு ஒடி வந்த அந்த ஆற்றாமையின் அவலக்குரல் கேட்டு என்னவோ ஏதோ என்ற நெஞ்சப் பதைபதைப்புடன் தாய் புஷ்பமும், சகோதரி மாலதியும் விழுந்தடித்து படலைக்கு வெளியே ஒடி வந்து விட்டார்கள்.
வசந்தன் வந்த வேகத்தில் தாயின் கால்களைக் கெட்டியாகக் கட்டிப் பிடித்தபடி மூச்சு இரைக்க இரைக்க கணிமுழிகளும் பிதுங்கிய நிலையில் நின்று திணறினான். வியர்வையில் தோய்ந்து நனைந்து குளிர்ந்து போயிருந்த அவன் முகத்தையும் உடலையும் மெல்ல வருடி ஆசுவாசப்படுத்தியபடி தாய் புஷ்பம் கேட்டாள் "எண்ணப்பு . என்ன நடந்தது? ஏன் குழறிக் கொண்டோடி வந்தனி .பிள்ளையை யாரும் வெருட்டினவையே.? அம்மம்மா எங்கே?” நெஞ்சுப் பதகளிப்பு அடங்காத நிலையில் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டாள் புஷபம். “அம்மா . அம்மம்மாவை . " ஓடி வந்த இளைப்பினால் மேல்மூச்சு கீழ் மூச்சு விட்டு நிறுத்தி நிறுத்திக் கூறினான் சிறுவனி வசந்தன்.
"அம்மம்மாவுக்கு என்னடா நடந்தது?” . கெதி யாகச் சொல்லடா? “ வசந்தனின் பிஞ்சுத் தோள்களைப் பிடித்துலுப்பியபடி அவசரப் படுத்தினாள் தாய் புஷபம்.
“அம்மம்மாவை a -- a அந்தப் பிள்ளையார் கோவிலடி சென்றியிலை நிக்கிற ஒரு ஆமிக்கார மாமா கட்டிப் பிடிச்சு கொஞ்சி .” வசந்தன் சொல்ல முடிக்கவில்லை.
GG
அட பாழ்படுவானே! அந்தக் குறுக்காலை
-64- வாழும் தமிழ் 2000 காலம் - 13

உறவுகள்
கே.வி. நடராஜன்
போவானைக் கட்டையிலை வைக்க. அவனை ஒரு தாய் பெத்திருக்க மாட்டாள். நாய் பெத்திருக்க வேணும். அத்தனைக்கு நாய் மேனுக்கு காமம் கணிணை மறைச் சுப் போட்டுது. கிரிசாந்தி, ரசனிக் குமரிப் பெட்டையளை எல்லாம் கொஞ்சிக் குலாவிப்போட்டு கொன்று குவித்து செம்மணிச் சுடலை மண்ணுக்கை தோண்டிப் புதைச் சுப் போட்டு இப்ப பொன்னம்மாக் கிழவியளையும் கட்டிப்பிடிச்சுக் கொஞ்ச வெளிக்கிட்டாங்களோ? அந்த நாய் மேனுக்கு இடியேறு விழ” எரிமலையாய்க் குமுறிய உள்ளத்தில் இருந்து தீப்பிளம்புகளாகப் புஷ்பத்தின் வாயில் இருந்து வார்த்தைகள் சிதறிப் பறந்தன.
“பிறகென்ன? . வசந்தன் வார்த்தையை இழுத்தான். “உந்த இழுவல் கதையை விட்டிட்டு கெதியாய்ச் சொல்லடா குத்தியா.”
சிறுவன் வசந்தனின் இராக ஆலாபரணையிலான இழுவல் வார்த்தைகளால் பொறுமை இழந்த தாய் புஷபம் அவனைக் கடிந்து கொண்டாள்.
“பிறகெணை. அந்த ஆமிக்கார fDfT DIT அம்மம்மாவின்ரை காலிலை தொட்டுக் கும்பிட்டு எங்கட ஆச்சி . எங்கட ஆச்சி எணர்டு சொல்லிக்கொண்டு அழுதவர். “ என்றான் வசந்தன்.
‘இதென்ன இடியேறு விழுந்த கதையாய்க் கிடக்கு” என்று முனகியவள் எதுவும் புரியாமல் குழம்பிப் போய் தலை சுற்றி கிறுதி வருவதான உணர்வு ஏற்படவே இரு கைகளாலும் தலையை அமர்த்திப் பிடித்தபடி பொத்தென்று குந்தினாள் புஷ்பம்.
இத்தனை நேரமாய் உயிரற்ற ஜடமாக விறைத்துப் போய் நின்ற சகோதரி மாலதி "இப்ப அம்மம்மா எங்கையடா? “ என்று வசந்தனைப் பார்த்துக்
கேட்டாள்.

Page 67
"அம்மம்மாவும் அழுதவ அக்கா. நான் ஒடிவந்திட்டன்” என்றான் வசந்தன்.
"அம்மம்மாவும் அழுதவவோ?” ஏதோதோ விபரீத எண்ணங்களும் குழப்பங்களுமாய் உள்ளத்தில் குடிபுகுந்து வதைத்தபோது நெஞ்சும் நாவும் வரண்டு போனவளாய் உருமிலை முடறு முறித்து விழுங்கினாள் மாலதி
KK
அக்கா! . அம்மம்மா வாறா . அம்மா
அம்மம்மா வாறாவெணை வசந்தன்
குதுாகலத்துடன் துள்ளிக் குதித்தபடி கூறினான்.
மாலதி எதிரே வந்து கொண்டிருந்த அம்மம் மாவை நிமிர்ந்து பார்த்தாள். அவரின் முகத்தில் எந்தச் சாடையையும் கண்டு கொள்ள முடிய வில்லை. கணிகள் மட்டும் துாசி விழுந்து கசக்கப் பட்டது போன்று சிவந்து கலங்கிக் காணப் பட்டன. அதிலிருந்து அம்மம்மாவும் அழுதிருக் கலாம் என்ற முடிவுக்கு வந்தாள் மாலதி.
அம்மம்மா வந்ததும் வராததுமாக பேரப்பிள்ளை வசந்தனைக் கடிந்து கொண்டாள்.
“பற்றாக்குறைக்கு இந்தக் குத்தயன் வேறை எரியிற நெருப்பிலை எண்ணெயை ஊத்தினது மாதிரி . இவனைக் காணாமல் என்ர நெஞ்சு துடிச்சுப் பதைச் சுப் போச் சு. இப்ப இவனைக் கண்ட பிறகுதான் என்ர நெஞ்சிலையும் நாக்கி லையும் ஈரம் வந்தது.
“அந்த ஆமிக்காரன் அம்மம்மாவைக் கட்டிப் பிடிச்சு என்னென்ன கொடுமை எல்லாம் செய்யப் போறானோ எண்டு பயந்து போய் எங்களுக்கு அதைச் சொல்றதுக்காக வல்லோ பிள்ளை அம்மா வட்டை சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவந்தது.”
தம்பி வசந்தனுக்காக பரிந்து பேசினாள் மாலதி,
வசந்தன் கூறிய அம்மம்மா ஆமிக்காரன் கதை யைக் கேட்டு இடியோசை கேட்ட சர்ப்பமாக சர்வாங்கமும் ஒடுங்கி குறாவிப் போய் குந்தி இருந்த புஷபம் இப்பொழுது தான் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை தாயை ஆசறுதியாகப் பார்த்தாள். அம்மம்மா மேற்கொண்டு எதுவும் பேசாது மகள் புஷ்பத்தையும் பேரப்பிள்ளைகளை யும் அழைத்துக் கொண்டு வீட்டினுள் வந்தாள்.
வீட்டினுள் வந்த அம்மம்மா விறாந்தைச் சுவரில்

மாட்டி வைத்திருந்த புகைப்படத்தை - அது பதினைந்து வருடங்களுக்கு முந்திய புகைப்படம். பழுப்பேறி செங்கல் மங்கலாகி விட்ட அந்தப் புகைப்படத்தை - கண்கொட்டாது சிறிது நேரம் பார்த்தபடி நின்றிருந்தாள். ஏனோ அவர் கணிகளில் இருந்து கண்ணிர் வழிந்தோடியது.
“இப்ப என்ன நடந்ததுக்காக வீட்டுக்குள்ள வந்ததும் வராததுக்காக அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ஏங்கிப் போய் நின்று இந்த மனிசி இப்படிக் கணிணிர் சிந்த வேணும்? ஒ! அது என் அண்ணன் சேனாதிராசரும் அவரின்ன பிள்ளை களுமான சேனாதிராவும் புஷ்பகிதாவும் நாங்க ளும் சேர்ந்து எடுத்த படமல்லவா? “
ம் . அண்ணன் செத்தும் பதினைந்து பதினாறு வருஷங்களாகி விட்டன. படமும் பழுத்துப் போய் விட்டது. தமிழனுக்கும் சிங்களத்திக்கும் பிறந்த அந்தச் சின்னஞ் சிறுசுகளக்கு என்ன நடந்ததோ? ஆர் அறிவார். இருந்தால் நல்ல விடலைத் தரவளியாக இருக்குங்கள்."
அந்தப் புகைப்படத்திற்குள் இருந்தவர்களைப் பற்றி புஷபம் இவ்வாறு நினைத்துக் கொணர் டிருக்கையில் படத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொண்ட அம்மம்மா பெரிதான மூச்சொன்றுடன், “ம். இண்டைக்குப் பிள்ளையாரைக் கும்பிட்ட புதுமையாக்கும். பெருமான் கூப்பிட்டுக் காட்டி னது மாதிரி ஆயிட்டுது. எல்லாம் தும்பிக்கையான் புதுமை நம்பித்தான் ஆக வேண்டிக்கிடக்கு
என்றாள் அம்மம்மா. அம்மம்மா கூறியதன் அர்த்தம் புரியாமல் புஷ்பமும் மாலதியும் ஆளை ஆள் பார்த்துக் கொண்டார்கள். அந்தச் சென்றியில் நின்ற ஆமிக்காரன் தன்னைப் படுத்திய பாட்டை சாங்கோபாங்கமாக சிந்திச் சீறிச் சினந்து சீற்றத்துடன் சொல்லித் தீர்ப்பார் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கிழவியின் பேக் சும் போக்கும் உப்புச் சப்பற்றுப் போயிற்று. ஒருவேளை அந்த ஆமிக்காரணி செயலால் அதிர்ச்சியுற்று மூளை மாறாட்டம் ஏற்பட்டு விட்டதோ என்று கூட நினைக்கலானார்கள். திடீரென அம்மம்மா ஆணியில் மாட்டி வைத்திருந்த அந்தப் புகைப்படத்தை களற்றி எடுத்து துாசியை தன் முகதலைப்புச் சேலையால் துடைத்து மகள் புஷ்பத்திடம் தந்தாள். பின் அதில் நின்றிருந்த அந்தப் பத்து வயதுச் சிறுவனைச் சுட்டிக் காட்டி "இது உன் அண்ணனின் மகன் சேனாதிரா தானே? . இவன்தான் அந்தச்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -65

Page 68
சென்றியிலை நின்று எப்படியோ என்னை அடையாளம் கண்டு கொண்டு எங்கடை ஆச்சி! எங்கடை ஆச்சி எண்டு என்னைக் கட்டிப் பிடிச்சுக் கத்திக் குளறின ஆமிக்காரன். அவனும் இந்தப் போட்டோப் படத்தை வச்சிருக்கிறான்! அம்மம்மா சொல்லிக் கொண்டே போனாள்.
ஐந்தும் கெட்டு அறிவும் கெட்ட நிலை என்று ஒருநிலை இருப்பதாக பேச்சுவாக்கில் கதைக் கிறார்களே. அப்படியென்றால் சர்வ புலன்களும் அடங்கி விட்ட நிலையை என்ன வென்று சொல்லுவது? செத்து விட்ட நிலையா? அல்லது சாகப்போகும் தறுவாயா?. இதில் ஏதோ ஒருநிலையில் பேச்சு மூச்சற்று இருந்த மாலதியும் புஷ்பமும் விழிகள் குத்திட்டுக் கிடக்க அம்மம் மாவும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லாம் சொற்ப வேளை தான். தன்னைச் சுதாரித்துக் கொண்டு நெடுமூச்சு விட்டு நிமிர்ந்த மாலதி அந்த மரணவேளையில் மெளன அமைதியைக் கலைத்தவளாய் அம்மம்மாவைப் பார்த்து, “ஏன் அம்மம்மா . அந்த ஆமிக்காரன் இந்தப் படம் மாதிரி ஒரு படத்தை வைச்சிருக்கி றதாலை, மாமாவின் மகன் சேனாதீராதான் என்பதை நம்ப முடியும்? அதிலையும் நாங்கள் போராளி குடும்பம் என்ற பொல்லாப்பையும் தேடிக் கொண்டிருக்கிறம். நல்லவேளையாக தம்பி ராகவன் கோட்டை அடிபாட்டோடு அப்பவே போய்ச் சேர்ந்திட்டான். இதெல்லாத் தையும் வைச் சுப் பாக்கிறபோது ஒரே பயமாகவும்
-66 வாழும் தமிழ் 2000 காலம் - 3
 

கிடக்கு . இதிலே ஏதோ சூதுவாது இருக்குமாப் போலையும் படுகுது, அம்மம்மா" சொன்னாள்.
“முளங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடாதை பிள்ளை . நீ நாலெழுத்துப் படிச்சனி இண்டைக்கு வாத்தியார் வேலையும் பார்க்கிறாய். ஊருலகத்தை இன்னும் சரியாகப் படிக்கவில்லை எணர்டு தான் நினைக்கிறன். போனதெல்லாத்தையும் புளி விட்டழைக்கிற மாதிரி கதைக்கிறது எனக்குப் பிடிக்கல்லை. இந்தக் காலத்தை வைச்சு நல்லதையும் கெட்டதையும் யோசிக்கவும் தான் வேணும், பிள்ளை.
எண்டாலும் பிள்ளை மாலதி! இந்த அம்மம்மா நீங்க நினைக்கிற மாதிரி அந்தளவு மோட்டு ஜென்மம் இல்லை. மோனை. எனிர பிள்ளை யின்ர சாங்கம் . அதுதான் அச்சுப் பதிவு அப்பிடியே அந்தச் சேனாதிராவிலையும் அப்படியே கிடக்கு. உண்ரை மாமாவின்ரை மறு அவதாரம் தான் அவன்ரை தோற்றம். அந்த மூக்கு முகம், முழி, கணி, காது, கன்னம் அந்தத் தெத்துப்பல், வரிசை எல்லாம் உன்ரை மாமாவை உரிச்சு வைச்சு அப்படியே அவதிரிச்சிருக்கிறான். பாம்பின் கால் பாம்பறியும் என்று சும்மாவே சொன்னார்கள். உண்ரை மாமாவை ஒருதரம் நினைச் சுப்பார். ஆசாட்டமாகவாவது தெரியவரும் . நீ அப்ப சின்னப் புள்ளை தானே! இந்தச் சேனாதிராவுக்கும் உனக்கும் இரண்டு வயசு தானே வித்தியாசம் மோனை. வேணுமெண்டால் உண்ரை அம்மாவைக் கேட்டுப்பார். காணாமல் போய்விட்ட உணர்ரை மாமாவை நாங்கள் செத்ததில் ஒன்றாக நினைத்து மனதிலிருந்தும் மெல்ல மெல்ல மறந்து போய் விட்ட வேளையில் எண்ணிப் பதினைந்தாவது வருசம் . அன்றைக்கு ஒரு காலங்காத்தாலை பொழுது . வான் ஒன்று வந்து எங்கள் வீட்டு படலைக்கு முன்னால் நின்றது. அதிலிருந்து ஒருவன் இரண்டு பிள்ளைகளுடன் இறங்கி எந்தக் கேட்டுக் கேள்வியும் இல்லாமல் விறுவிறென்று வீட்டு முற்றத்துக்கு வந்து விட்டான். ஆர்? எவர்? என்று கேட்டறிவதற்குள் வந்தவன் விறைத்துப் போய் நின்ற என்னைக் கட்டிப் பிடித்து கன்னத்தோடை கன்னம் வைச்சு “அம்மா! . எண்ரை அம்மா! . என்று விக்கி விக்கி கதறி அழுதான். உன்ரை அம்மாவையும் அதுபோலவே இழுத்தணைச்சு வைச் சுக்கொண்டு என்ரை அருமைத் தங்கச்சி புஷ்பா! என்னை மறந்து போய் விட்டையளா அம்மா என்று சொல்லிச் சொல்லிக் கதறிக் கதறி

Page 69
அழுதான்.
பித்துப் பிடித்து திக்கிட்டுப் போய் நின்ற நாங்கள் எப்பவோ காணாமல் போய் விட்டவனை செத்ததிலை ஒன்றாக நினைத்து மறந்துவிட்ட வேளையிலை அந்தச் செத்தவன் திரும்பி வந்த விந்தையை அறிந்து நாங்களும் சித்தங்கலங்கி அழுது அரற்றி நின்ற வேளையில் . மிச்சத தையும் சொல்லட்டுமா மாலதி . அப்போ நீயும் மாமாவுடன் கூடவந்த பிள்ளைகளும் திக்கிட்டுப் போய் முழுசி முழுசிப் பார்த்தபடி மூலைக்கொரு வராய் நின்றிருந்திருந்தீர்கள்! நல்லா ஞாபகப் படுத்திப் பார் மாலதி!
பிறகு மாமா தன் பிள்ளைகளை எங்களுக்குப் பழக்கப் படுத்தி வைத்தாரே! பத்து வயதான ஆம்பிளைப் பெடியனை சேனாதிரா என்றும், எட்டு வயசான பொம்பளைப் புள்ளையை புஷ்பகிதா என்றும் சொல்லி வைத்தபோது உன் அம்மா என்ன சொன்னவள் தெரியுமே! . பெடியன் சேனாதீரா அணர்ணனை உரிச்சு வைச்சு அப்படியே அச்சொட்டாக மாற்றுக்குறை யாமல் பிறந்து வந்திருக்கிறான் என்றும் பேரைக்கூட தன்ரை பேரையும் என்ரை பேரை யும் மறந்திடாமல் புஷ்பகீதா என்றும் சேனாதீரா என்றும் வைத்து விட்டார் என்றும் சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போய் நின்றாளே!
அவர்கள் இஞ்சை இருந்த அந்த ஒன்றரை மாச காலத்திலை நீயும் அதுகளும் வெகு அன்னி யோன்யமாகப் பழகி ஆனந்தமாய் ஒடிப் பிடித்து விளையாடித் திரிந்தீர்களே! அதெல்லாத்தையும் கூடவா மறந்திட்டாய் மாலதி! அப்ப ஒருநாள் மாமாவின்ரை வானிலை நாங்கள் எல்லாம் சேர்ந்து போய் சேர்ந்திருந்து எடுத்த படம் தான் இந்தப் போட்டோப் படம், மாமாவும் ஒரேயடி யாகச் செத்துப்போறதுக்காக்கும் இந்த ஞாபகத்தை வச்சிட்டுப் போயிட்டான் கடைசியாக! "என்றெல் லாம் கதையைச் சொல்லிக் கொண்டு வந்த அம்மம்மா சிறிது வேளை நிறுத்தி பெரியதொரு பெருமூச்சுடன் சொல்லத் தொடங்கினாள்.
“ம் . மாமாவும் பிள்ளைகளும் இஞ்சை இருந்து போன அடுத்த வருஷமோ அதுக்கடுத்த வருஷமோ என்று தான் நினைக்கிறனர். இந்தக் கோதாரியிலை போன இனக்கலவரம் துவங்கியது. அது 83 ஆம் ஆண்டு தானே. அந்த ஆடிமாசத் திலை கன்னிக்கால் நட்டு துவங்கி வைச்ச இந்தத்

துலைஞ்ச யுத்தத்தாலை இன்னும் ஒடித்தான் திரியுறம்.
மாமாவையும் அந்த இனக்கலவரத்திலை கொழும் பிலை வைச்சு முடிச்சுப் போட்டாங்கள். அந்தப் பஞ்சமா பாதகர்கள். ம் . இந்தப் பெடியனை . இண்டைக்கு நடக்கிற தமிழன் சிங்களவன் சண்டையாலை . பதினைஞ்சு பதினாறு வருஷத் துக்குப் பிறகு பாக்கிற இந்தப் பிள்ளையை என்ரை பேரப்புள்ளை எண்டு சொல்லவே பயமாக் கிடக்கு சொன்னாலும் நீங்க நம்பி றையள் இல்லை. . ஊருலகமா நம்பப் போகுது. ஏன் ஒரு சிங்களத்தி பெத்த புள்ளையெண்டால் இவ்வளவு சீத்துவக் கேடு. அப்பிடிப் பாக்கப் போனா மாமா மட்டுமே சிங்களத்தியைப் பெண் டாண்டவன். அந்தக் காலத்திலை உத்தியோகத்துக் கெண்டும் வியாபாரத்துக்கெணிடும் போன தமிழர்கள் சிங்களத்தியளை பெணி டாண்டு புள்ளைகுட்டியளும் பெத்திருந்தவங்க தானே! அந்த வாரிசுகள் தானே இணர்டைக்கு இஞ்சை அந்தத் தமிழ் பேசுற எங்களை சித்திரவதை செய்ய ஆமியா வந்து நிக்குதுகள்! எல்லாம் ஒருகாலத்திலை தமிழன் செய்த பழிபாவம்! திரும்பி வந்து துரத்தித் துரத்தி அடிக்குது! “ என்று போனது வந்தது என்றெல்லாம் சுற்றி வளைத்து அம்மம்மா சொல்லிக் கொண்டு வந்த கதையின் குறுக்கே புகுந்த மாலதி, “ஏன் அம்மம்மா, அப்படியெண்டா இந்த ஆமிக்காரனி சேனாதீ ராவை மாமாவின்ரை மகன் தான் எணர்டு நம்பச் சொல்றியள். அப்படித்தானே!
“நம்பிறதும் நம்பாமல் விடுவதும் இனி உங்களைப் பொறுத்தது. ஏதோ நடந்ததைச் சொன்னன். நம்ப வேணுமெண்டு ஏதோ அடிச்சு அப்பம் தீத்தினது மாதிரி இதைச் சொல்லேல்லை. நீ இப்ப என்ன கேட்டு வாறா எணர்டும் எனக்குத் தெரியுது, மாலதி” என்று நிறுத்தினாள் அம்மம்மா.
"ஒம். அம்மம்மா! எனக்கு இன்னொரு சந்தேகம். அது தான் அந்தச் சென்றியிலை நிக்கிற ஆமிக்கார சேனாதிரா நீ வருவாயெணர்டு இந்தப் படத்தையும் வைச் சுக் கொண்டு நிணர்டு உன்னை அடையாளம் கண்டு கொண்டானா? . இல்லை நீயாக அவனை மாமாவின்ரை மகன் தான் எண்டு அடையாளம் கண்டு கொண்டியா?
அம்மம்மா! .
“ஆமிக்காரன் எணர்டால் ஆருக்குத்தான்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 6༨

Page 70
பயமில்லை. நான் கிழவி எண்டாப்போலை அவங்களை நிமிந்து பாத்து பல்லை இளிச்சுக் கொண்டு வரவேணுமா? என்ன? நான் என்போக்கிலை தலை நிமிந்து பாக்காமை இவனை வசந்தனை எனக்கு முன்னுக்கு விட்டுக் கூட்டிக்கொண்டு வந்தன். அந்த ஆமிக்காரன் இவனைப் பிடிச்சு வைச் சுக்கொண்டு செல்லமாக இவன்ரை சொக்கில கிள்ளி சின்னத்தம்பி எங்க போறது?’ என்று எண்னெல்லாமோ கேட்டுக் கொண்டிருந்தான். இவன் மிரண்டு போய் நிண்டு என்னைப் பாத்தான். அப்போ தான் அவனை அந்த ஆமிக்காரனை நான் நிமிந்து பாத்தன். எங்கோ எப்பவோ பாத்த முகம். நான் பெத்தவன் பொக்கிள் கொடி விழாது என் பக்கம் கிடந்து வீரிட்டுக் கத்திய போதெல்லாம் என் மார்பில பொங்கிய முலையை அவன் வாயிலை திணித்து அந்தச் சத்தத்தை வெளிவராமை அடைச்ச போதிருந்து கேட்ட அந்த இனிய குரலை இண்டைக்கு இவன்ரை இந்த ஆமிக்காரன்ரை குரலிலை கேட்டதான நினைப்பு என்னுள் எழவே அவனை மிக உன்னிப்பாக தீர்க்கமுடன் பாத்தன். ஊனையும் உள்ளத்தையும் உருக்குவதான என்ரை உறவுப்பார்வை அவன் உதிரத்தை ஊடுருவிப் பாஞ்சு தானாடாமை விட்டாலும் தன் தசை ஆடும் எண்டோ என்னவோ அவன் கேட்டான். “ என்ன ஆச்சி அப்பிடிப்
KK
பாக்கிறது? . எங்க போறது?
“ கோயிலுக்குப் போயிற்று வீட்டுக்குப் போறம்"
“ ஆச்சி பேரென்ன?”
ad é ó பொன்னம்மா
அவன்ரை நெத்தியில்ை சுருக்கம் விழ புருவத்தை உயத்தி என்ன எண்டு தீர்க்கமாய் ஊடுருவிப் பாத்தபடி கேட்டான்,
“ஐசி காட் அடையாள அட்டை இல்லே?"
“கொண்டு வரேல்லை. வீடு கிட்டத்தான்” எணர்டன்.
.
உங்க ஐயா பேர் என்ன?
44
அபபாவு
KK s
அப்பாவு' அவன் நான் சொன்ன பெயரை
-68- வாழும் தமிழ் 2000 காலம் - 13

அழுத்தச் சொன்னான். முன்பு தன்னிச்சையாக எனக்குக் கேட்கும்படியாக முனகினான்:
"அப்பாவு பொன்னம்மா சேனாதிராசா .”
“ஆச்சி நீங்க இடம்பெயர்ந்திருக்கிறதுதானே? உங்க சொந்த ஊரு வசாவிளான் தானே?”
அவன் கேள்வி மேல் கேள்வியாக கேட்டான். நான் இமை கொட்டாது அவனையே பாத்தபடி நிண்டனர்.
“அச்சி உங்கடை மகன் சேனாகிராசா
ת
எண்டொரு ஆள் இருந்தது தானே?” அவன் குரலில கமறலுடன் கேட்டான்.
“அவர் கொழும்பிலை கலவரத்திலை செத்துப் போயிட்டார் தம்பி” “ஆச்சி. எங்கட ஆச்சி! நா உங்கடை பிள்ளை இன்ரை பிள்ளை ஆச்சி! சேனாதிராசா பிள்ளை. பேரப்பிள்ளை. என்னை நல்லாப் பாருங்கோ ஆச்சி. பத்து வயசிலை உங்கடை வீட்டுக்கு தாத்தாவோடை நாங்க தங்கச்சி நான் எல்லாம் வந்திருந்தது.
“அவன் அக்கம் பக்கத்திலை நிண்டவர்களைக் கூட மறந்து அரைகுறைத் தமிழில் ஏதோதோ சொல்லிச் சொல்லி அழுதான்.
பெண்ணென்றால் பேதலிக்கும் மனமுள்ளவன் தானே! அதிலையும் என்னைப் போன்ற பாவாத்மக்கள் காலம் காலமாய் அழுதே காலத்தை முடிக்க வேண்டுமென்ற கடவுளின் தீர்ப்பாக வந்தது தான் இந்த இனக்கலவரங்களும் கொடிய யுத்தமும், புள்ளையைப் புரியனை பேரப்பிள் ளையை அவலமாய் அள்ளிக் குடுத்திட்டு பிறந்த மண்ணில் இருந்தும் துரத்தப்பட்டு ஆத்தலைஞ்சு திரியும் என்னைப்போன்றவர்களுக்கு அழுகை தானே துணை.
எண் பேரப்பிள்ளையின் சாங்கத்திலிருந்து இந்த ஆமிக்காரப் பெடியனை என் பிள்ளையின் பிள்ளையாக இருப்பானோ என்றெல்லாம் என் மனம் பேதலிச்சுக் குழம்பிப் போய் நின்ற வேளையில் அவனே நான் உங்கள் பிள்ளையின் பிள்ளை என்று சொன்னபோது எந்தத் தாயினால் தானி அழாமல் இருக்க முடியும்? நானும் அழுதேன். பிறகு அவன் என் கையை

Page 71
ஆதாரத்துடன் பற்றி அருகிலுள்ள தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று இதே போட்டோப் படத்தை எடுத்துத் தந்தான்.” கதையை நம்பும் படியாக சொல்லி முடித்தாள் அம்மம்மா.
அம்மம்மாவுக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டாலும் இன்னும் வாக்குமாறிப் போய் விடவில்லை என்பது மகள் புஷ்பத்திற்கும் பேத்தியார் மாலதிக்கும் நன்கு தெரிந்த விடயம்தான். அவளுடைய நினைவாற்றலும் அறிவாற்றலும் இப்போதும் அற்றுப் போய் விடவில்லை என்பதை மாமாவின் மகன்தான் இந்தச் சேனாதிரா என்பதை புள்ளிவிபரமாகக் கூறி ஆணித்தரமாக அடித்துச் சொன்னதன் பின்பும் அதனை நம்பமுடியாமல் இருக்க முடியுமா?
மாலதியின் முகத்தில் ஈ ஒன்று வந்தமர்ந்த தன் உணர்வு கூடத் தெரியாமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். புஷ்பத்தின் கணிகளில் இருந்து மட்டும் கணிணிர்த் துளிர்த்திருந்தது.
III III, III
மறுநாள் காலையில் தெருநாய்கள் “அவக் .அவக்” என்று குரைத்து அந்தத் தெருவின் சுற்றாடல் மனிதர்களைத் திகிலடையச் செய்தன.
“ஆமிக்காரங்களாக்கும் . அந்த அறுவாரைக் கண்டால் தான் இந்த நாய்ப்பட்டாளம் இப்படி அறம்புறமாகக் குலைக்கும். ஒ, அவங்க தான். இந்தா வாறாங்கள். இண்டைக்கென்ன என்ன
றவுணர்டப்போ .செக்கப்போ என்ன இடியேறோ தெரியவில்லை. அறுவாரைக் கணிடால் மனிசற்றை கையுமோடாது
காலுமோடாது. செய்த காரியங்களை அப்படியே விட்டிட்டு விறைச் சுப் போய் நிக்க வேண்டிக் கிடக்கு.”
ஆமிக்காரங்களின் வருகையைக் கண்டு இப்படித் தனக்குள் புறுபுறுத்துக் கொண்ட அம்மம்மா கூட்டிக் கொண்டிருந்த முற்றத்தை அரைகுறையாக நிறுத்தி விட்டு கூட்டுமாறுடன் விறைத்துப் போய் நின்றாள். படலையைத் திறந்து வந்த இருவரில் ஒருவன் தொப்பியைக் கழற்றியபடி அம்மம்மா வின் அருகே வந்து நின்று சிரித்தபடி "ஆச்சி!
” என்றான் அன்பொழுக. “அட, சேனாதீர .?”

ஆச்சரியத்துடன் இப்படித் தனக்குள் நினைத்த அம்மம்மா முகமலர்ச்சியுடன், “வா தம்பி, சேனா தீர” என்று சிரித்தபடி அன்பு ததும்ப வரவே ற்றாள்.
“ஆமிக்காரங்கள்” என்றவுடன் அவரவர் செய்த காரியங்களை அப்படி அப்படியே விட்டு விட்டு வீட்டினுள் இருந்து வெளியே வந்து தாய் புஷ்பத்தை ஒட்டிக்கொண்டு நின்றாள் மாலதி, வசந்தன் ஆகிய ஒவ்வொருவரையும் சேனாதிரா வுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் அம்மம்மா.
“நந்தா . எங்கட மாமி . தாத்தாவோடை எல்லாம் மறந்திட்டீங்களா நந்தா ." நா தழுதழுக்க ஈரலித்த கணிகளுடன் புஷ்பத்தின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டான் சேனாதிரா.
அம்மம்மாவை அறிவுகெட்ட முண்டம் என்று ஆர் சொல்ல முடியும்? ஆரோ ஒரு சிங்கள ஆமிக்காரனைப் பார்த்து விட்டு வந்து அணி ணனின் பிள்ளை என்று ஆயிரம் தடவைகள் அடித்துக் கூறிய போதும் இதுவரை அரைகுறை நம்பிக்கையுடன் நம்பியும் நம்பாமலும் இருந்த புஷபம் அழுதே விட்டாள்.
“மல்லி சேனாதீர! . அண்ணாதான் ஆவியாக வந்திருக்கிறாரோ என்று நினைச்சன். அண்ணன் சாகயில்லை. “ புஷபம் வழிந்த கண்ணிரைத் துடைத்தவளாய் சேனாதீரவின் கன்னத்தை
தொட்டுத் தடவி வருடியபடி கூறினாள்.
lll lll lll
அதன் பின்பு சாதாரண உடையில் சேனாதிரா வீட்டுக்கு வரப்போகத் தொடங்கி விட்டான். வீட்டில் எல்லோருடனும் அன்புடனும் பண்புட னும் பேசிப் பழகத் தொடங்கி நாட்கள் மாதங் களாகி போய்க் கொண்டிருந்தன.
சேனாதிராவின் வருகையால் செத்துப் போன அண்ணன் சேனாதிராசா திரும்பி வந்துவிட்டதான ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த அம்மம்மாவும் புஷ்பமும் நாளடை வில் அயலட்டத்தின் அபத்தமான குசு குசு கதை பேச்சுக்களால் பெருந்துயரம் அடையத் தொடங்கி னார்கள்.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -69

Page 72
“என்ன உந்தச் சிங்கள ஆமிக்காரன் உங்கை அடிக்கடி வந்து அடுகிடை படுகிடையாகக் கிடந்து போறான். என்ன சங்கதி?” என்றும் தமையனுக்கு சிங்களத்தி பெத்த பிள்ளையாம்” என்றும் ‘நல்ல மாயம் தான். சுத்து மாத்துக் கதையளிலை உவளுகள் நல்லாக் கைதேர்ந்தவர்கள். அவ ஆர் தெரியுமே? அவதான் அந்த மாலதிக் குமரி. வாத்தியார் வேலை பார்க்கப் போறனெண்டு சொல்லிச் சொல்லி வழி தெருவிலை அதுதான் அந்தச் சென்றியிலை நிக்கிற உவனை வலை வீசிப் பிடிச்சுப் போட்டு இப்ப அண்ணன்ரை பிள்ளை ஆமிக்காரப் பிள்ளை எண்டெல்லாம் கதை அளக்கீனம். அவ அதிலை நிண்டு அவ னோடை பல்லை இழிச்சிழிச்சு கதைக்கிறதை நாங்கள் கனதடவை பாத்திருக்கிறம். முழுப்பூச னிக்காயை முக்காக்கொத்து சோத்தாலை மறைக் கிற கதையாக இருக்கு ஆருக்கு மாய்மாலம் போடுறளாவை. இக்கணம் பொடியங்கள் அறிஞ்சாங்களோ உதாலை பெரும் வில்லங்கம் தான் வரும். உங்கினை ஒட்டிப் பதுங்கி கண்டு காணாமல் திரியிற இயக்கப் பெடி பெட்டைக்கும் உதாலை பெரும் ஈனம்தான். உந்த இரணியச் சாதியை இஞ்சை இருந்து அடிச்சுக் கலைச்சுப் போடவேணும். “
ஊரின் அயலட்டத்தின் இந்த மாதிரியான குசுகுசு கதை பேச்சுக்கள் காதில் விழுந்தபோது அம்மம்மாவினதும் புஷ்பத்தினதும் சப்த நாடியும் நின்று சன்னி கண்ட நிலைக்கு உள்ளானார்கள்.
“ம். அட கடவுளே! இப்படியும் மனிதர்களா?. இதனால் தானோ என்னவோ, கணிணால் கண்டதும் பொய். காதால் கேட்டதும் பொய். தீர விசாரித்து அறிந்ததே மெய் என்று இப்படியான தெருக்கூட்டத்தை நினைத்து வைத்துத் தான் எம்முன்னோர் இந்த முதுமொழியைச் சொல்லி
வைத்தார்களோ, என்னவோ?
பெருமூச்சு விட்டபடி இப்படியாக தங்களுக்குள் நினைத்துக் கொண்ட அம்மம்மாவும் மகள் புஷ்பமும் ஊரின் ஊத்தைத்தனமான நிந்தனைப் பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து தங்களுக்குள் கதைத்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதனால் அன்று சேனா தீரா வீட்டுக்கு வந்தபோது அவனை வரவேற்று உபசரித்த பின்பு அம்மம்மா அவனைப் பார்த்து, “தம்பி சேனாதீர, இப்படிச் சொல்றதுக்காக நாங்கள் ரொம்பவும் வேதனைப்படுறம். என்ன
-7O- வாழும் தமிழ் 2000 காலம் - 3

செய்யிறது. சொல்லவும் வேண்டித்தான் கிடக்கு எல்லாம் உண்ரை நன்மைக்காகத்தான் இப்படிச் சொல்லிறம். நீ அடிக்கடி இங்க வந்து போகாதே அதனாலை உனக்கு எங்களுக்கு எல்லாருக்கும் அபாயம். தமிழன் சிங்களவன்ரை இந்தக் கொடிய யுத்தத்தாலை சனங்களும் ஆளை ஆள் வெறுக்கிறார்கள். உன்னை என்ரை பிள்ளை யின்ரை பிள்ளை பேரப்பிள்ளை எண்டு சொன் னாலும் நம்பிறாங்களில்லை. சிங்கள ஆமிக் காரனை தங்கடை எதிரி எண்டு தான் நினைக் கிறாங்க”
அம்மம்மாவும் புஷ்பமும் ரொம்பவும் வேதனை யுடன் ஒருவகையாக திக்கித் திணறி சேனாதி ராவுக்கு விசயத்தைப் புரிய வைத்தபோது அவன் கல்லாகச் சமைந்து போயிருந்தான். அப்பொழுது திடீரென்று தெருவின் திருப்பத்தில் கேட்ட துப்பாக்கி வேட்டுக்களின் அதிர்வினால் திடுக் குற்று எழுந்து நின்றான் சேனாதீரா.
அப்பொழுது தான் பாடசாலையில் இருந்து வீடு திரும்பாத மாலதியின் நினைவுவரவே புஷ்பமும் அம்மம்மாவும் திகிலுடன் கூடிய பரபரப்புடன் எழுந்து நின்றார்கள்.
“சரி ஆச்சி நான் போயிட்டு வாறது” என்று கூறி
படலைக்கு வெளியே வந்தான் சேனாதீரா.
“டுமீல், டுமீல், டுமீல்.” தெருவில் சேனாதிராவின் எதிரே சைக்கிளில் வந்த ஒருவனின் கையிலிருந்த துப்பாக்கி தனிமொழி பேசி ஒய்ந்தது. தெருவில் சேனாதீரா சுருண்டு போய் விழுந்து கிடந்தான்.
அங்கே தெருமுனையில் மாலதி சுருணர்டு கிடந்தாள்.
அங்கே மாலதி.
இங்கே சேனாதிரா.
ஒருகொடியின் அந்த இரு மலர்களும் ஒட்டாத உறவாகிச் சருகாகி போய் விட்டது காலத்தின் கொடுமைதான்.
O O O

Page 73
மேய்ப்பன் மத்தியானம பகல்களும்
இயங்குதலுக்கு முன்: மேய்ப்பன் இல்லை
களிக்க எந்த ஆட்டமும்
காதைப் பிய்க்கும் இை
வானலையில் தவழ்ந்து உருகுவதும் இல்லை
இன்று: எப்போதுமே இப்படித் இப்படியே இருக்கவும் சும்மா இருத்தல் வாழ்வு சாத்தியமுமல்ல
எழ வேண்டுமென்கிற வானலையில் வரும் ப இணங்குவதே
எல்லோருக்குமான வழி
சுவர்ப் புன்னகை வெ நரகம் சுவர்க்கமாய் வி சோகித்த, மோகித்த, ச அடுக்கு மொழி தேடிய மத்யானமாய் விடியும்
மந்தமாய் இருந்து போ வாழ்க்கை பின்னாற் (
மேய்ப்பன் தேடும் ஆ
 

தேடும் இரவுகளும் )ாய் விடியும்
- பிரதீபா தில்லைநாதன்
b இல்
வரும் பாடல்களில்
தான்
(pluit gi. வில் சரியுமல்ல
முனைப்பு இன்றி
ாடல்களோடு
ருட்டலாகிவிட யாபித்து இருந்திருக்கையில் *கித்த, தகித்த
இரவுகளும்,
6
போகத் துடிக்கும் டுகளுமாய்
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -71

Page 74
பின் தொடர்நது பின்பற்றி சலிப்புற்று பறித்துப் போட்ட மூ கலவையில் இருந்து கை சுட்டு விலகிச் தளிராய் துளிர்க்கும் கதவை வந்து தட்டிப் பரிசுத்த வேதாகமங்க மூளையில் வளரும் க
முளையில் வெட்டுவ
கட்டிலில் பிணமாய்
வாயில் வீணி நாற்ற கழுவ மனமற்று இரு அந்த நாட்களைப் ே அம்மா நினைத்திருக்
எழுந்து நின்று தள்ள மீண்டும் எழுந்து வி தொடர்ச்சி அற்றுப்
முட்களோடு கோபப் காரமாய் நிராகரித்து நீ உன் பாட்டிற்குப் தூங்கும், நடுப் பகல்களை தலைக் கனத்துடன் விரைவில் தூங்கிவி அர்த்தமற்ற அந்த நாட்களைப் ே அம்மா நினைத்திருக்
குற்ற உணர்ச்சி உட இன்று நாளை என ஏமாற்றி ஏமாந்து ே பகல்களை இழந்து ந பொக்களித்துப்போன மனக்கிடங்கில் சரி துவண்ட,
அந்த நாட்களைப் ே அம்மா எண்ணியிரு
-72- வாழும் தமிழ் 2000 காலம் - 13
 

666) பறித்துக் கலைத்து சுதாரிக்கையில், அதே சலவையை
போகும் சாட்சிகளின் கூட சுத்தமாக்காதபோது, னாக்களை
து தவறா
த்தோடு
ப்பதை,
பால இதுவும் என கக் கூடும்.
ாாடி, விழுந்து ழுந்து, போன பகல்கள்
பட்டு
போ என்று
எதிர்கொண்டு டும் இரவுகளைப்போல
போல இதுவும் என
கக் கூடும்.
ல் எங்கும் உறைக்க வாக்குக் கொடுத்து
L JIT6ÖT, நடுவில் தத்தளித்த எ விழிகளுடனான, பிழை தேடி விழுந்த
போல இதுவும் என
க்கவே கூடாது.

Page 75
உங்கள் வாழ்க்ை
இடத்தில் டெ
நாம் வழிகா 2. A CanTN
NJA C O M P L T E R E D
1919 Lawrence Ave East, Suil
Tel:(416)755-049 Web. WWW.Connet.net
 
 

கயைச் சரியான
பாருத்துங்கள்
ாட்டுகிறோம்
let TECHNOLOGY INC.
J C A O N A N D T R A N N G
e 305, Scarborough, ON M1R2Y6 9, Fox: (416) 755-0699
e.mail: infoGconnet.net
வாழும் தமிழ் 2000 காலம் - 13
-73

Page 76
We specialize in Textiles, Jewelleries,
gift items, Toys, Audio & Video
We provide same day services in convering
video system (PAL/ Secam /NTSC)
langa Emporium
3852 Finch Ave. East, Unit #204-205 Scarborough, ON MIT 3T9
(476) 32-3743
-74- வாழும் தமிழ் 2000 காலம் - 3

எப்பொழுதும் உயர்ந்த பெறுமதி
கனடாவின் முக்கிய நகரங்களிலிருந்து பணம் அனுப்ப ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புகளுக்கு: எஸ். ஆறுமுகம் Aே(ey)
AGR
Money Transfer
துரித பணமாற்றுச்சேவை
(476) 267-oo24 Faxe 46 267-94.62

Page 77
ஆக்க இல மொழிெ
சில வருடங்களுக்கு முன்பு, யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றி வரும் நாட்களில் ஆங்கில மாணவர்களையும் இளம் போதானசிரியர்களையும் கவிதை மொழி பெயர்ப்பில் ஈடுபடுத்தினேன். இவர்களில் ஒருவர் -வி.சுந்தரேசன்- முருகையனின் “வாயடைத்துப் போனோம்” என்ற கவிதையை மொழிபெயர்த்து என்னிடம் சமர்ப்பித்தார். மொழிபெயர்ப்பில் மாற்றங்களைச் செய்ய முன்னதாக, *55 ஆசிரியரும் முதிய மொழிபெயர்ப்பாளருமான ஏ.ஜே. கனகரட்னாவிடம் இதுபற்றி ஆலோசனை கேட்கலாம் என்று எண்ணினேன். அப்பொழுது தான் ஏ.ஜே. தானே இந்தக் கவிதையை முன்பொரு முறை மொழிபெயர்த்திருந்ததாகவும் கூறினார். முருகையனும் தனி கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருப்பதாக ஏ.ஜே. கூறினார். இவர்கள் இருவருடைய பிரதிகளையும் ஒருவாறு பெற்றுக் கொண்ட பின்னர் இவற்றை சுந்தரேசனின் மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டேன். இந்த முயற்சியின் விளைவே இக்கட்டுரை. ஒரே படைப்புக்கான மூன்று வித்தியாசமான மொழிபெயர்ப்புக்களை ஒப்பிடும் பாக்கியம் எமக்கு எப்போதும் கிடைப்பதில்லை! இந்த ஒப்பீடு மொழிபெயர்ப்பைப் பற்றி பல கேள்விகளையும் அவதானிப்புகளையும் என் மனதில் எழுப்பின.
யாருடைய மொழிபெயர்ப்பு சிறப்பானதாக அமைந்தது என்பதை ஏற்கெனவே மிகவும் நேர்மையாகக் கூறுவது நல்லது என்று எண்ணு கிறேன். இதைக் கூறும் போது, வித்தியாசமான வாசகர்களுக்கு வேறொருவருடைய மொழி-ெ பயர்ப்பு சிறப்பானதாகப் படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏ.ஜே.யின் மொழி-ெ பயர்ப்பு தாக்கம் கூடியதாக எனக்குத் தென்பட்டது என்பதற்கு நான் கீழே உதாரணங்கள் தர முயலுகிறேன். ஆனால் இம்முடிவு ஏனைய இரு

0க்கியமாக பயர்ப்பு
சுரேஷ் கனகராஜா
சிற்றி யூனிவேசிற்றி ஒஃவ் நியூயோர்க்
மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கில பாண்டித்தி யத்தைப் பற்றி தப்பபிராயங்கள் ஏற்படுத்தக் கூடாது. சுந்தரேசன் ஒரு ஆங்கிலப் போதானா சிரியர். சிறந்த கல்விமானாகிய முருகையன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, எழுதக் கூடியவர். இவர்கள் இருவரதும் மொழிபெயர்ப்புக்களில் இலக்கண ரீதியான பிரச்சினைகள் ஒன்றுமில்லை. கவிதையின் பொருளை மூவருமே நல்ல முறையில் ஆங்கிலத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். ஆனால் சிறப்பான மொழிபெயர்ப்பிற்கு மொழிப் பாண்டித்தியம் மாத்திரம் போதாது என்பதே இங்கே என் வாதம்.
மொழிபெயர்ப்புக்களை ஒப்பிட முன்பதாக அவற்றின் வேறுபாடுகளுக்குப் பின்னால் நில வும் இரு பொதுவான பணிபுகளை இங்கே கூற வேண்டும். முதலாவதாக, மொழிபெயர்ப்பும் வியாக்கியானமும் இரண்டறக் கலந்தவை. மூன்று மொழிபெயர்ப்பாளர்களும் இந்த ஒரே கவிதையை சற்று வித்தியாசமாக விளங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக ஏனைய இருவரிலும் பார்க்க வயதில் குறைந்தவரான சுந்தரேசன் தன்னுடைய சொந்த சரித்திரப் பின்னணியால் உந்தப்பட்டு கவிதையை வித்தியா சமாக விளங்கி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. என்னுடைய ஒப்பீடு கூட நான் கவிதையை வியாக்கியானஞ் செய்த முறையில் தங்கி இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இரண்டாவதாக, மொழிபெயர்ப்பு ஒரு ஆக்கரீதி யான புதிய படைப்பு. அழகியற் காரணங்களுக்காக மொழிபெயர்ப்பாளர் மூலப் படைப்பிலிருந்து வேறுபடும் வகையில் வரி-வசன அமைப்புக் களைக் கையாள வேண்டியிருக்கும். இரண்டாவது மொழியின் அழகியல்-கலாச்சார பாரம்பரியங்க ளுக்கு ஏற்ற வகையில் மூலத்தின் பொருளை
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -75

Page 78
மொழிபெயர்ப்பாளர் வெளிக்கொண்டு வர முயலும் போது தனித்துவமான பல முடிவுகளை மொழிபெயர்ப்பாளர் எடுக்க வேண்டி வரும். இரண்டாவது, மொழியின் கலை-இலக்கிய ரச-ை னயில் ஈடுபாடு குறைந்த ஒருவர் மொழி பெயர்ப்பை திறம்படச் செய்ய முடியாது.
இந்த எடுகோள்களின் ரீதியில் தான் என் தீர்மானத்தின் பின் உள்ள ஒரு பெரிய சிக்க லைத் தீர்க்க முடியும். அதாவது, கவிஞர்தானே தன் சொந்தக் கவிதைக்குச் செய்த மொழி பெயர்ப்பிலும் பார்க்க இன்னுமொருவருடைய மொழிபெயர்ப்பு திறம்பட்டது என்று கூறுவது பலருக்கும் ஆச்சரியம் ஊட்டலாம். எனினும் கவிஞர் தானே தனி வரிகளினர் முழுத் தாத்பரியத்தையும் ஏற்கெனவே விளங்கிக் கொள்ளாமல் இருப்பது இலக்கிய சரித்திரத்தில் நாம் அடிக்கடி கணிடு கொள்ளக் கூடிய உணர்மை. வில்லியம் பிளேக் தான் கற்பனைப் பரவசத்தில் எழுதிய வரிகள் பின்னர் தனக்கு முற்றாக விளங்கவில்லை என்று ஏற்றுக் கொள்வாராம். மேலும், கவிதையின் பொருளைத் தீர்மானமாகக் கூறக் கூடியவர் எழுதியவர் மாத்திரமே என்று நாம் ஏற்றுக் கொண்டாலும் கூட இதை இன்னுமொரு மொழியின் அழகியல்கலாச்சார வரம்புகளுக்கு ஏற்ற முறையில் கவிஞர் கொண்டு வரும் முயற்சியில் தவறுவது நாம் விளங்கிக் கொள்ளக் கூடிய பிரச்சினையே.
மொழிபெயர்ப்புக்களை ஒப்பிடும் நோக்கில், முதலில் கவிதையின் தலைப்பை நாம் பார்ப்போம். “வாயடைத்துப் போனோம்” என்ற தலைப்பை, சுந்தரேசன் “Tongue-tedam 1”என்று மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இந்த வசனம் பன்மையில் அமைந்தாலும் சுந்தரேசன் இதை ஒருமையில் அமைப்பதற்குக் காரணம் இருக்கிறது. கவிதையில் எழுத்தாளரின் சொந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான் தெரிவிக்கப்படுகிறது என்று சுந்தரேசன் வியாக்கியானம் செய்திருக்கிறார். 1983 கலவரத்தின் போது எப்படியாக முன்பு அமைதியாகவும் பண்பாகவும் நடந்து கொண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பின்னர் கொடிய வண் செயல்களில் சடுதியாக இறங்கினார்கள் என்ற அதிர்ச்சியையும் வியாகூலத்தையும் மனக் குழப்பத்தையும் கவிதை தெரிவிக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். எனினும் கவிதையில் தெரிவிக்கப்படும் உணர்வுகளை “tongue-ted" என்ற பதம் சித்தரிக்குமா என்பது கேள்விக்
-76- வாழும் தமிழ் 2000 காலம் - 3

குரியது. ஒருவர் பேச அல்லது பாட மேடையில் ஏறும் போது மேடைக் கூச்சத்தால் தொடங்க முடியாதிருக்கும் "nervous" ஆன நிலையும் "tongue-tied" 6T607, LGub. s.GeguSaoi "dumbstruck's lib upcoasusofloor "dumbfounded" did மனக்குழப்பத்தையும் அதிர்ச்சியையும் கூடிய தாக்கத்தோடு தெரிவிக்கின்றன. மேலும் தலைப்பு முழு வசனமாக விரிவடைந்த நிலையில் சுந்தரேசன் அமைக்க, ஏ.ஜே.யும் முருகையனும் ஒரு சொல்லில் அமைப்பது பொருத்தமானதே. ஆச்சரியத்தில் இருக்கும் ஒருவர் இப்படியாக சுருக்கமான முறையில் சொற்களை அரை குறையாக பிதற்றுவது அந்த நிலைக்கு ஏற்ற வடிவமே, ஏ.ஜே.யினதும் முருகையனதும் தலைப்புக்கள் கருத்தில் நெருங்கிய ஒற்றுமை d 606096). If இருந்தாலும் அழகியல் காரணங்களுக்காக "dumb-struck' 6T6oip தலைப்பை நான் ஏற்றுக் கொள்வேன். "struck" என்ற சொல்லின் ஒலி (உச்சரிப்புக் கடினமான, விரும்பத்தகாத சத்தத்தை கொண்டிருப்பது) மன நிலையை தாக்கத்தோடு தெரிவிக்கிறது. மேலும் கலவரத்தால் மனதுக்கு ஏற்பட்ட அடியை, பலாத் காரத்தை 'struck' என்ற சொல் கற்பனை ரீதியாக வெளிக்கொண்டு வருகிறது.
முழுக் கவிதையையும் விரிவாக ஒப்பிடுவதற்கு இங்கே இடமில்லை. எனவே, கவிதையின் முதலா வது பந்தியை மாத்திரம் இங்கே ஒப்பிட விரும்பு கிறேன். கவிதை இப்படியாகத் தொடங்குகிறது.
“ஏன் நண்பா, மெளனம் எதற்கு?”
என்று கேட்டிருந்தாய்? வாயடைத்துப் போனோம். வராதாம் ஒரு சொல்லும். 'திக் கென்று மோதல்
திடுக்கிட்டுப் போனோமே!”
இதை முருகையன் பின்வரும் விதமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
“Why keep mum, my dear?"
That's the question. Dumb-founded are we, speechless, mute. So sudden a bang it is - We are simply non -plussed.
முருகையன் வரிக்கு வரி ஒத்த முறையில் கவி-ை தயை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் உள்ள ஐந்து வரிகளும் அதே ஒழுங்கில் ஆங்கிலத்தில்

Page 79
அமைந்துள்ளன. ஆனால் ஒரு சில சிக்கல்களை நோக்க வேண்டும், “My dear” என்ற சொற் றொடர் பேச்சில் நண்பர்களுக்கிடையே உரை யாடலில் பாவிக்கப்படுவது குறைவு. அநேகமாக, குடும்ப உறவுகளிலேயே பாவிக்கப்படும். ஆனால் தமிழில் “ஏன் நண்பா?” என்பதை வாசிக்கும் போது கலவரத்தில் பின் ஒருநாள் அலுவலகத்தில் ஒரு சிங்கள சகா இக்கேள்வியைக்
கேட்பதாகவே இதை நான் கற்பனை Gag=üğŞabğG3356&si. GBudo ayub, “That's the question. " என்ற வசனம் சற்று மிகைப்படுத்தப்
பட்டிருக்கிறது. அதன் தொனி நாளாந்த வாழ்க ‘கையில் ஏற்படும் ஒரு சாதாரண கேள்வியைப் பிரதிபலிக்கவில்லை. சற்றுத் தர்க்கரீதியான Gziraofaoul 6TGidpg. "To be or not to be / That is the question” என்ற ஹம்லற்றின் சித்தாந்த ரீதியான கேள்வியையே பிரதிபலி க்கிறது. இப்படியான மிகைப்படுத்தல் அடுத்த வரியிலும் காணப்படுகிறது. ஆச்சரியத்தைப் பிரதிபலிக்க தமிழில் இரு சொற்களை மாத்திரம் பாவித்த கவிஞர், ஆங்கில மொழிபெயர்ப்பில் மூன்று சொற்களைப் பிரயோகிக்கிறார். “dumbfounded Speechess, mute’ இப்படியே கடைசி வரியில் பிரயோகிக்கப்படும் "non-plussed" என்ற சொல் லும் சாதாரண உரையாடல்களில் பாவிக்கப் படுவது குறைவு. இது மிகைப்படுத்தப் பட்ட பதம். மற்றும், “bang ” 6Taoi p பதமும் இந்தச் சூழ்நிலையில் அவ்வளவு பொருந்தவில்லை. இது துப்பாக்கிச் சத்தத்தை அல்லது சீனவெடிச் சத்தத்தையே அதிகமாகக் குறிக்கும். கலகம் வெடித்தமைக்கு இது பொருந்துமோ என்றது கேள்விக் குறியே.
ஏ.ஜே.யின் வரிகள் கூடுதலாகவும் (6 வரிகள்) அவற்றின் ஒழுங்கு மாற்றப்பட்டவையாகவும் அமைந்தாலும் அவற்றில் மொழி நடையில் ஒரு எளிமையும் காணப்படுகிறது.
“Why so mum, my friend?"
You asked Dumb-struck are we, Struck speechless Dazed By the sudden explosion"
ஏ.ஜே. கவிதையின் பொருளை சிக்கனமாகக் கூற முயல்வது அதன் தாக்கத்தை வலுப்படுத்துகிறது. <9y gyfraugga, “That is the question” a Taoigol (ypx(560).5u6öï மொழிபெயர்த்ததை மிகவும் சாதாரணமாக “You

asked" 6T60Tayib "We are simply non-plussed" என்பதைச் சுருக்கமாக ஒரு சொல்லில் “dazed" எனவும் கூறுவது அதிர்ச்சியால் வாயடைத்துப் போன ஒருவரின் மனோநிலைக்கு நன்றாகப் @LluíTU5jög&pgs. Gud, Gyub, “my dear" & "my friend” என மொழிபெயர்த்தமை கூடப் பொருத்தமானதே. அப்படியே, “bang” க்குப் பதிலாக 'Sudden explosion" எனக் கூறுவதால் கலகம் வெடித்தமைக்குப் பொருத்தமான சில கருத்துக்களை வெளிக் கொண்டு வருகிறார். “explosion " பல வகையான சந்தர்ப்பங்களைச் சுட்டி நிற்கக் கூடிய சொல். வெடி, குண்டு, 565th, prld, g36.65 (information explosion) என்பவற்றோடு கூட, பெரும் சனத்திரளின் 6TQpids6061Tuquib (the city exploded in riots) குறிக்கிறது.
கருத்தளவில் கவிதையின் பொருளுக்கு மிகக் கிட்டவாக ஏ.ஜே. நின்று கொண்டாலும் அழ கியல் காரணங்களுக்காக வரி ஒழுங்கில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். தமிழில், நண்பனின் கேள்வியின் பின் வரும் கவிஞரின் பதில் இரு வசனங்களில் அமைகின்றது. இப்ப டியே, தன் ஆங்கில மொழிபெயர்ப்பில், கடைசி மூன்று வரிகளையும் இரு வசனங்களாக முருகை யன் அமைத்திருக்கிறார். ஆனால் ஏ.ஜே. இதை ஒரே வசனமாக அமைத்திருக்கிறார். இதனால் கவிஞரின் மனோநிலையை விரைவாகவும் சொல்லடக்கத்தோடும் இவர் கூற முடிகிறது. gy,607 Tai giTaoi "We are simply non-plussed" என்று முருகையன் கூறும் வசனத்தை ஏ.ஜே. ஒரே சொல்லில் “dazed" எனப் போட முடிகிறது. இந்த வசனம் முருகையனின் மொழிபெயர்ப்பில் (கவிதையில் தமிழில் அமைவது போல்) கடைசி வரியாக அமைந்தாலும், ஏ.ஜே. இன் மொழி-ெ பயர்ப்பில் இடம் மாறி வருவது வசன அமைப்பின் இலக்கணத் தேவையால் மட்டுமல்ல அதற்கு அழகியற் காரணங்களும் இருக்கின்றன. ஒசையைக் கவனியுங்கள்.
"Dumb-struck are we,
Struck speechless
Dazed"
வரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து போவது கவிஞரின் வாயடைத்துப் போன
நிலைமைக்குப் பொருந்துகிறது. ஏ.ஜே. பிரதியில் (upg,656, "Dazed by the sudden explosion" என்பதை ஒரே வரியில் எழுதி, பின்னர் கடைசி
வாழும் தமிழ் 2000 காலம் - 13 77.

Page 80
வரிகளை பேனையால் வெட்டி விட்டு 'By the Sudden explosion" என்ற சொற்றொடரை அடுத்த வரிக்குத் தள்ளி இருக்கிறார். எனவே, ஒசை நயத்தைக் கருத்தில் கொண்டே இப்படி மாற்றஞ் செய்திருக்கிறார் என இது சிந்திக்க வைக்கிறது. (மூன்று மொழிபெயர்ப்பாளர்களதும் பிரதிகள் அவர்கள் சொந்தக் கையெழுத்தில் எண் முன் இருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியமே!) GBudayb “dumb-struck” gai gojigib 'struck ' அடுத்த வரியில் “Struck Speechless" என மீளப் பிரயோகிக்கப் படுவது கவிதையின் ஒலி அமைப்புக்கு உதவுகிறது. இப்படியே “struck Speechless" என்பதில் இரு சொற்களும் “s'இல் sygoudougitid "dumb-struck .... dazed" 6T6aip சொற்களில் “d' மீள பாவிக்கப் படுவதும் ஒலி அமைப்புக்கு உதவுகிறது. (முதலில் struck wordless" என பிரதியில் எழுதிவிட்டு பின்னர் wordleSS ஐ வெட்டி, அதன் மேல் SpeechleSS எனத் திருத்தியமை ஏ.ஜே. ஒலி நயத்தைக் கருத்தில் எடுத்திருக்கிறார் என ஊகிக்க வைக்கிறது)
சுந்தரேசனது மொழிபெயர்ப்பை அடுத்துப் பார்க்குமிடத்து முருகையனைப் போல இதுவும் ஒரளவு விரித்து எழுதப்பட்டிருப்பது புலனாகிறது.
"You asked me
"Comrade, what causes you
to remain silent?' Tongue-tied am I, Not a word comes out Panic stricken an IAt the report of A sudden combat"
ஏ.ஜே. “Why so mum" எனச் சிக்கனமாக எழுதிய வரி இங்கே இரண்டு வரிகளில் விரித்து எழுதப்படுவது கவிதையின் தொனிக்கு முரணா னது. அப்படியே கவிஞனின் உணர்வுகளை 6(5fa Gait p56fai "dumb-struck, speechless, dazed" என்று ஏ.ஜே. வர்ணிக்க சுந்தரேசன் இவற்றை முழு வசனங்களாக விபரித்து எழுதி @05 šéfpTi. Gud. 6.yyub, “by the sudden explosion” 6T6oip auf "At the report of7A sudden combat '' என இரு வரிகளில் விபரிக்கப்படுவது கவி-ை தக்குத் தேவையான இறுக்கத்தைப் பாதிக்கிறது.
இன்னும் முக்கியமாக, சுந்தரேசன் இந்தக் கவி-ை தயை வியாக்கியானஞ் செய்திருக்கும் முறை என்
-78- வாழும் தமிழ் 2000 காலம் - 3

கவனத்தை ஈர்த்தது. கவிஞனின் உணர்வுகளைப் பொறுத்தவரை அவரின் அதிர்ச்சியிலும் பார்க்க பயத்தையே சுந்தரேசன் கண்டிருக்கிறார். “PanicStriken am l' என்ற வரி இந்த வகையில் தான் கவிஞன் பேச்சிழந்தமைக்குக் காரணம் SITGlaßpg. Gud 6.yyub, “sudden explosion எனப்படுவது “sudden combat” என மொழி-ெ பயர்க்கப்பட்டிருத்தல் வயதில் இளைஞனாகிய
6 Ꮺ
சுந்தரேசன் கவிதையின் சூழ்நிலையை அணிமைக் கால ஆயுதப் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி இருக்கிறார் போலத் தெரிகிறது. முருகையனின் கவிதையில் இடம்பெறும் “மோதல்” என்ற பதம் 6) இளைஞர்களுக்கு இராணுவத்துடனான மோதலையே குறிக்கும். முழுக் கவிதையையும் இராணுவத்தின் அட்டகாசமாகத் தான் இவர் வியாக்கியானம் செய்திருக்கிறார். அப்படியே “நண்பா” என்ற பதம் “comrade" என மொழி-ெ பயர்க்கப்பட்டிருத்தல் இச்சம் பாசணை இரு போராளிகளுக்கிடையில் ("தோழர்களுக்கி-ை டயில்") இடம் பெறுவதாக வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கிறது. 1983 கலவரத்தின் பின் ஏற்பட்ட போராட்ட சூழ்நிலையை மனதில் வைத்தே இதை இவர் மொழிபெயர்த்திருக்கிறார் என என்னைச் சிந்திக்க வைக்கிறது. பயத்தால் பேச்சிழந்திருக்கும் ஒருவரை அரசியல்மயப் படுத்திப் போராட்டத்தில் இறங்க வைக்கும் ஒரு முயற்சியாகவே இவர் இந்தக் கவிதையை வியாக்கியானஞ் செய்திருக்கலாம். இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய மொழிபெயர்ப்பு கூடிய தாக்கம் உடையதாக மனதில் பட்டால் நாம் சரித்திர சூழ்நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலே இடம்பெறும் விமர்சனம் எங்களிடையே உள்ள மொழிபெயர்ப்பாளர்களை மனந்தளர வைக்கக் கூடாது. தமிழ் இலக்கியச் செல்வத்தை பிற சமூகத்தை எட்ட வைக்கும் முயற்சியில் இன்னும் பல மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால் இத்தகைய விமர்சனம் எம்மொழிபெயர்ப்புப் புலமையையும் பாரம்பரியத் தையும் இன்னும் வலுப்படுத்தக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, கவிஞனை ஒத்த கற்பனைத் திறனும் அழகியல் உணர்வும் மொழிபெயர்ப்பாளனுக்குத் தேவைப்படுகிறது என்ற செய்தி மொழிபெயர்ப்பாளர் தம் கலையைப்
பற்றி பெருமையோடு சிந்திக்க உதவக்கூடும்.

Page 81
Specilalized in Banquets Hall, Balloon Decoration Floral Arrangements for All Occasions Catering & All in One
தொடர்பு (3LDT assiT
YARL FANCY INNOVATIONS
30 Dundalk Drive Unit #48, Scarborough
476) 292-8357
(4 f6 754-2873 Pag: (476) a67-o894
 

Table - Chair
Casino games
Helium balloons
Party Supplies Hone Owner's Equipment Glass Ware
Bars - Tools Cutlery-linen
Fine Chine Fantastic Desposable Table Ware
Complete line of Party Rental Supplies
AGINCOURT PARTY RENTALS
4445 Sheppard Ave. E Scarborough. ON, M S 3G9
(416) 291 - 1919 (476) 297-1337
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -79

Page 82
வேதம்
அசை சி ஒரு சிறு
இந்தியாவின் ஆதிக் குடிகள் ஆரியர்களை விடவும் நாகரீகத்தில் பின்தங்கியிருந்தார்கள் என்பது ஒரு பொதுவான கருத்து. ஆரியர்களினால் தாசர்கள் அல்லது அடிமைகள் என்று மிகவும் கீழ்த்தரமாகக் கருதப்பட்ட இவர்கள் கரிய நிறமுடையவர்கள் என்றும் சப்பையான மூக்கையுடைய காட்டுமிராண்டிகள் என்றும் அதேவேளை ஆரியர்கள் வெள்ளை நிறத்தோலையுடையவர்கள் என்றும் இருக்கு வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுவார்கள். இதில் எவ்வளவுதூரம் உண்மை இருக்கிறது? வேதத்திற்கு ஆரியர்கள் சொந்தக்கார்களா? ஆதிக்குடிகள் உண்மையிலேயே காட்டுமிராணி டிகளா? இந்தியாவின் பண்டய நாகரீகங்களான ஹரப்பா, மொஹங்சதரோ நாகரீகங்கள் ஆரியர் களின் படையெடுப்பினால்தான் அழிந்தனவென் பதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கிறது?
இந்தியாவின் ஆதிக் குடிகள் திராவிடர் என்றும் ஆரியர்களின் வருகையால் இவர்கள் கரையோர பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டனரென்றும் ஆரி யர்களின் வருகையினால்தானி இந்து மதம் இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் ஆரிய, திராவிட விற்பன்னர்கள் பலரும் பல வகையான கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆனால் மொகஞ்சதரோ, ஹரப்பா நாகரீகங்களை ஆராய்ந் தவர்கள் சிலரின் கருத்துப்படி இந்தியாவின் ஆரிய வருகையும் அதன் தாக்கங்கள் பற்றியும் பல புதிய கேள்விகள் எழுகின்றன.
சிந்து நதிப்பள்ளத்தாக்கு மக்களின் வெளியேற்றம் கி. மு. 4000 ஆண்டு காலத்தளவிலேயே ஆரம்பித்திருக்கலாம் என்று இந்திய தேசிய ஆவணக்காப்பக வைப்புகளின் தரவுகள் கூறினா லும் சரியான கால நிர்ணயம் பற்றிய சந்தேகங்கள் இன்னும் இருக்கின்றன. ஆகக் குறைந்தது கி. மு. 2000ம் ஆண்டென்று
-8O- வாழும் தமிழ் 2000 காலம் - 3

- Upd
வதாசன்
விவாதம்
அண்மைப்படுத்தினாலுங் கூட ஆரியர் வருகைக் கும் இந்நாகரீக அழிவுகளுக்கும் தொடர்பு இருப்ப தாக நம்புவதற்கான ஆதாரங்கள் இல்லையென்றே கூறலாம்.
கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்க ளைப் பற்றிய அறிவு இந்தியாவுக்கு எட்டியிராத காலத்திலேயே பஞ்சாப், சிந்து மற்றும் இந்திய பிரதேச மக்கள் கொண்டிருந்த நாகரீகம், பழக்க வழக்கங்கள் மிகவும் மேன்மையுடையதாயிருந்தன என்பதற்கு அகழ்வாராய்சித் தரவுகள் சான்றாக விருக்கின்றன. இருப்பினும் இந்த இடிபாடுகளில் காணப்படுகின்ற பொருட்களின் கலாச்சாரப் பின்னணியை ஆராயின் பின்னால் வந்ததாகக் கூறப்படும் ஆரியர்கள் தங்களுக்குச் சொந்த மெனக் கருதுகின்ற வேத இலக்கியங்களின் பாவ னைக்கான ஆதாரங்கள் நிறையவிருப்பதை எப்படி விளக்கிக் கொள்ள முடியும்? அதை விடவும் இருக்கு வேதத்தின் காலம் ஆகக் குறைந்தது கி. மு. 5000 ஆண்டுக்கு முற்பட்ட தென்று நிரூபணமாகியிருக்கிறது.
அப்படியாயின் ஒன்றரை மில்லியன் சதுர கிலோ மீட்டர்களைப் பரப்பளவாகவும், ஈரானிலிருந்து கிழக்கு உத்தரப் பிரதேசம் வரையிலாக பரந்திரு ந்த இந்த ஹரப்பா நாகரீகத்திற்கு சொந்தக் காரர்கள் யார்? இந்தளவு பாரிய பிரதேசம் சடுதியாகவும் ஏக காலத்திலும் அழிந்து போகக்
காரணம் என்ன?
சிந்து வெளிப் பள்ளத்தாக்கின் அகழ்வாய்வு வல்லுனரான எஸ். ஆர். ராவ் அவர்களின் கணிப்பின்படி ஹரப்பா நகரத்தின் பல களங்கள் கி. மு. 1900 காலப்பகுதியிலேயே அழியவாரம் பித்துவிட்டன. இக்களங்களில் வதிந்த குடிமக்கள் குழுக்கள் குழுக்களாக மிக்க அவசரமாக யமுனை நதியோரமாகவும் மொஹஞ்சதரோ களமக்கள்

Page 83
சவுராதிர ஒரப்பகுதிகளை நாடியும் அகதிகளாக ஒடியிருக்கின்றனர்.
ஒரு பரந்த பிரதேசத்தை விட்டு இந்த மக்கள் விரைந்தோடுவதற்கான காரணம் என்ன? ஆரியர்களின் திடீர் படையெடுப்பே இதற்குக் காரணமென்று சரித்திர நூல்கள் கூறுகின்றன. இக் கூற்றில் உணர்மையில்லையென்றும் இது ஐரோப்பிய அரசியல் தந்திரத்தின் ஒரு அங்கமே என்றும் தற்கால ஆய்வுகள் நிரூபிக்க முயல் கின்றன. ஏறத்தாள ஒன்றரை மில்லியன் சதுர கி. மீ பரப்பளவுள்ள பிரதேசத்தில் பரந்து வாழ்ந்த மக்கள் ஏக காலத்தில் அதுவும் சடுதியாக நாடோடிக் கூட்டங்களான ஆரியர்களினால் துரத்துப்பட்டிருப்பது இயலக்கூடிய காரியமா? இதை விடவும் ஹரப்பா அகழிவின்போது கிடைத்த பலி பீடங்கள் போன்ற சான்றுகள் வேதகாலத்து பழக்க வழக்கங்களைக் காட்டுபவை யாகவும் உள்ளன. சில வேளைகளி ஹரப்பா மொஹஞ்சதரோ நாகரீகங்களின் அழிவுகளுக்கு இயற்கையே காரணம் என்றும் அடிக்கடி ஏற்பட்ட வரட்சியும் வெள்ளப்பெருக்கு போன் றவை காரணமாக மக்கள் குழுக்களாக ஒடத் தலைப்பட்டிருக்கலாமென்றும் வல்லுனர்கள் நம்புகின்றனர். சமீபத்திய அகழ்வாய்வுகளின் படியும், விண்கோள் படப்பிடிப்பு கருவிகளின் உதவியினாலும் கிடைக்கப்பட்ட தரவுகளின்படி ஹரப்பா, மொஹஞ்சதரோ நகர அழிவுகளின் முடிவில் நைல் நதிப்பள்ளத்தாக்கிலும் சீனாவின் யங்சி நதிப் பள்ளத்தாகிலும் பேரழிவுகள் ஏற்பட்டதாக நிரூபணமாகியிருக்கிறது. இந்தியா வில் மட்டுமல்லாது எகிப்திலும் மெசோபொட்டே மியாவிலும் ஏற்பட்ட பேரழிவுகள் சமகால நாகரீகங்களை முடிவுக்குக் கொண்டுவந்திருக் கின்றன.
மெசோபொட்டேமியாவில் பிரெஞ்சு - அமெரிக்க கூட்டு முயற்சியினால் சமீபத்தில் கைக்கொள்ளப் பட்ட பெருமளவிலான அகழ்வு முயற்சியின்போது கிடைக்கப்பட்ட தரவுகளின்படி கி. மு. 2200 ஆண்டளவில் ஆரம்பித்த வரட்சி ஏறத்தாழ 300 வருடங்களுக்கு நீடித்ததாகவும் இதனால் இந்திய எல்லைக்கு அண்மையில் வாழ்ந்த அக்காடியன் நாகரீக மக்கள் பெரும் பாதிப்புள்ளானார்கள் எனவும் நம்பப்படுகிறது. அக்காலத்தில் நிகழ்ந்த பாரிய எரிமலை வெடிப்புகளே இந்த வரட்சிக்குக் காரணம் என்று இவ்வாய்வுகள் கருதுகின்றன. இவ்வழிவுகளுக்கு கூத்தாடிப் பிழைக்கும்

பருத்தியில் நெய்த ஆடைகளை அணியும் பழக்கம் இந்து வெளி
நாகரீகத்தில் அப்போதே இருந்து வந்திருக்கிறது. இந்தப்பழக்கம் மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தப்
பட்டது ஏறத்தாழ இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே.
நாடோடிக் குழுக்களான ஆரியர்கள் காரணமெ ன்பது விசித்திரமானதே. (ஆரியர் கூத்தாடினா லும் காரியத்தில் கண்ணுடையவர்கள் என்ற பழங்கூற்று நினைவு கூறப்பட்ட வேண்டியது)
மொஹஞ்சதரோ ஹரப்பா பிரதேச மக்கள் கணிதத்தில் வல்லுனர்களாயிருந்திருக்கிறார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. மொஹஞ்சதரோவின் பிரமிப்பூட்டும் குளியலறை யும், ஹரப்பாவின் சிறந்த காவலரணும் இப்பிரதேச மக்களின் நகர் நிர்மாணத் திறமையினை வெளிக்காட்டுகின்றன. இவர்க ளுக்கு அடுத்ததாக நகர் நிர்மாணத் துறையில் இந்தளவு பாண்டித்தியம் பெறுவதற்கு 2000 ஆண்டுகளின் பின்னர் வந்த உரோமர்களினா லேயே முடிந்தது. கணிதம், இயந்திரக்கலை, கட்டடக்கலைகளில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் படைத்த ஹரப்பா, மொஹஞ்சதரோ மக்கள் இந்த அறிவை எங்கிருந்து பெற்றிருக்க முடியும்? இவர்களால் கட்டப்பட்ட அதிசயிக்கத் தக்க காவலரணிகள் வெறும் மணி குடிசைகள் என்று பிற்கால வேதவிற்பனினர்களால் ஒதுக்கப்பட்டிருப்பினும் அக்காலத்து போர்க்கருவி களும் செப்பு, வெண்கலம் போன்ற உலோகப் பாவனைப் பொருட்களும் இந்து வெளி நாகரீகத்தின் சிறப்பினைப் பறைசாற்றுபவையாக உள்ளன. இந்து வெளி நாகரீக சமுதாயம் சீரமைக்கப்பட்ட நகரமைப்புக் கொண்டதாயும் விவசாயமும் வர்த்தகமுமே அவர்களது பொருளிட் டும் முறைகளாயும் இருந்ததெனவும், கோதுமை, பார்லி, பேரீச்சம் பழம் ஆகியன வரத்தகப் பயிர்களாவும் இருந்திருக்கின்றன. எருது, எருமை, செம்மறியாடு, பன்றி, நாய், யானை, ஒட்டகம் ஆகிய மிருகங்களை வீட்டு மிருகங்களாக்கிய இந்த நாகரீகத்தில் சில்லுகளைக் கொண்ட வண்டிகள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதை விடவும் முக்கியமாக பருத்தியில் நெய்த ஆடைகளை
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -8-

Page 84
கி. மு. 2000 ஆண்டிற்கு முன்னதாக ஏற்பட்ட கொடும் வரட்சியின் காரணமாகவே மொஹஞ்சதரோ ஹரப்பா நாகரீகங்கள் அழிந்தனவென்பதும் அதுவே வேத காலத்தின் முடிவு என்பதும் சந்தேகமற முடிவாகிறது.
அணியும் பழக்கம் இந்து வெளி நாகரீகத்தில் அப்போதே இருந்து வந்திருக்கிறது. இந்தப்பழக்கம் மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது ஏறத்தாழ இரணிடு அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே. நவீன முறைகளுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு திறமையாக வடிவ மைக்கப்பட்ட குளியலறைகளும், கழிவு நீர் போக்கிகளும் சாதாரண நகர வாசிகள் வச தியான வாழ்க்கை முறைகளை அனுபவித்திருக் கின்றனர் என்பதைக் காட்டுகிறது. மதத்தைப் பொறுத்த வரையில் சிவன் வழிபாடும் சக்தி வழிபாடும் இந்து வெளி நாகரீக மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறது. பிற்கால வேத இலக்கிய விதிமுறைகளுக்கமையக் கட்டப்பட்ட பலி பீடங்களும் ஒம குண்டங்களும் அப்போதய மக்களுக்குத் தெரிந்திருந்ததென்றால் மொஹஞ்சதரோ, ஹரப்பா நாகரீக காமும் வேதகாலமும் ஒன்றே என்றுதான் கருத வேணர்டியிருக்கிறது.
அப்படியாயின் ஹரப்பர்களுக்குத் தேவையான அறிவை வேத இலக்கியங்களினால் மட்டுமே தந்திருக்க முடியும் என்று கருத முடியாதா? வேத இலக்கியத்தில் காணப்படும் சுல்ப சூத்திரங்கள் எனப்படும் கணித சூத்திரங்கள் பலி பீடங்களை நிர்மாணிப்பதற்குப் பெரும்பாலும் பாவிவிக்கப் பட்டிருக்கின்றன என்றும். இதே சுல்ப சூத்திரங்கள்தான் எகிப்பதிய, பபிலோனிய கணிதசாஸ்திரங்களுக்கு மூல சூத்திரங்களாக அமைந்தனவென்று அமெரிக்க கணித வல்லுனர் ஏ. சீடன்பேர்க் கூறுகிறார். எகிப்தின் கணித சாஸ்திரத்தின் வயதை கி. மு. 2000 ஆண்டென்று கணிக்கிறார்கள். இநத்தியாவின் கணித வல்லமை கி. மு. 2000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட தென்றும் இக்காலகட்டத்திலேயே ஹரப்பா நாகரீகம் உச்ச நிலையிலிருந்ததென்றும் வேத இலக்கியத்தின் சுல்ப சூத்திரங்களே ஏனைய நாகரீகங்களின் கணித வல்லமைக்கு முன்னோடி
-82- வாழும் தமிழ் 2000 காலம் - 3

யென்றும் மறுப்பின்றி நிரூபணமாகிறது. வேத கிரியைகளுக்குத் தேவையான பீடங்களைக் கட்டுவதற்கென உபயோகப்பட்ட கைநூலான கல்ப சூத்திரத்தின் கூறுகள் தான் சுல்ப சூத்திரங்கள் என்பர். இதே வேளை, ஹரப்பா நகரத்தில் இப்படிப் பலவிதமான பீடங்கள் நிர் மாணிக்கப்ட்டிருந்தமை அகழ்வின்போது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. ஆரியர்களின் படை யெடுப்பினால் ஹரப்பா அழிந்திருக்குமானால் இக்கட்டிட அமைப்புகள் பீடங்கள் அவர்களின் கைவண்ணமாக இருந்திருக்க முடியாது மட்டுமல்ல வேத இலக்கியங்களுக்கு ஆரியர்கள் சொந்தக் காரர்களாகவும் இருந்திருக்க முடியாது. வேத இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட கிரியா - கணித சாஸ்திரங்களே ஹரப்பா நகர நிர்மாணத்திலும் துறைமுக நிர்மணத்திலும் பெரும்பங்கு வகித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
கி. மு. 2000 ஆண்டிற்கு முன்னதாக ஏற்பட்ட கொடும் வரட்சியின் காரணமாகவே மொஹஞ்சதரோ ஹரப்பா நாகரீகங்கள் அழிந்தனவென்பதும் அதுவே வேத காலத்தின் முடிவு என்பதும் சந்தேகமற முடிவாகிறது. அப்படியாயின் இந்நாகரீகத்தின் ஆரம்பம் எப்போது? இருக்கு வேதத்தில் காணப்படும் வானசாஸ்திர வாக்கியங்களின்படி கி. மு. 6500ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னதாக ஆய்வாளர் குறித்துள்ளார்கள். ஹரப்பா களவாய்வுத் தரவுகளின்படி சில சான்றுகள் கி. மு. 7000 ஆண்டிற்கு முற்பட்டதெனினும் பிரெஞ்சு வன்கோளான ஸ்பொட்ஸி மற்றும் இந்தோ - பிரெஞ்சு கூட்டு முயற்சி ஆய்வுகளின் படி வேத காலத்து இந்தியா நிச்சயமாக கி. மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென அறுதியாகச் சொல்ல முடிகிறது. அதே வேளை விவிலிய நூலில் சொல்லப்பட்ட வெள்ளப்பெருக்கு கி. மு. 2000த்திற்கும் இடையில் நிகழ்ந்ததாகக் கருதப் படுகிறது. இருக்கு வேத வாக்கியங்களின்படி இந்தியாவின் பெரியதும் அதி புனிதமானதுமான ஆறு கங்கையல்ல சரஸ்வதி தான் என்பதும் அது வரட்சியினால் வற்றிப் போனதே கங்கை முன்னிலைக்கு வருவதற்குக் காரணமென்றும் ஆய்வாளர் கருதுகின்றனர். டாக்டர் வாக்கனகார் அவர்களின் ஆய்வுப்படி சரஸ்வதியாறு பலதடவைகள் திசைமாறியபின்னர் கி. மு. 1900ம் ஆண்டு காலப்பகுதியில் முற்றாக வரணிடு போனது என்றும் அறியப்படுகிறது. ஆனால்

Page 85
மலை முதல் கடல் வரை ஒடியதாக இருக்கு வேதம் சொன்ன சரஸ்வதியாறு கி. மு. 3000 ஆண்டு காலத்துக்கு முன்னதாகவே வற்றிப் போய் விட்டதாக வான்கோள் மற்றும் அகழாய்வு தரவுகள் சான்று தருகின்றன. வான்கோள் படங்களின் உதவியினோடு இந்தோ - பிரெஞ்சு ஆய்வாளர்கள் எடுத்த முடிவுகளின்படி இருக்கு வேதகாலத்து சரஸ்வதியாறு 7 கி. அகலமாகவிருந்ததென்வும் அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல நதியோர நகரங்களின் இடிபாடுகள் வேதஇலக்கியத்தின் கூற்றுகளை நிரூபிப்பதாகவும் அறியப்படடுகிறது.
இதை விடவும் கி. மு. 8000ம் ஆண்டிளவில் பனிகாலம் முடிவுற்றதெனவும் அப்போது உருகிய பனி மூடிகள் அடுத்த பலவாயிரம் ஆண்டுகளுக்கு வட இந்தியாவெங்கும் நீர்ப்பாசன வசதிகளை அளித்த படியால் பின்னர் வரண்டு பாலையாகிப் போன ராஜஸ்தான், சிந்து, பலூச்சிஸ்தான் போன்ற இடங்கள் மிகவும் செழிப்புற்று விவசாயத்துக்கேற்ற வகையில் இருந்தனவென்றும் இதுவே இருக்கு காலத்து ஆரியருக்கு மிகவும் பயன் தந்ததெனவும் கூறுகிறார்கள். பனிக்கால முடிவைத் தொடர்ந்து வந்த சுவாத்திய மாறுபாடு கி. மு. 2200 ஆண்டளவில் கொடிய வரட்சியாக மாறி புராதன உலகத்தின் பல நாகரீகங்களின்
HOGAN CHW (
Ratnam
New, Used and Leasing
ரட்ணம் ( Tel: (416) 291-5054 F
Hogan Che
5000 Sheppari Scarborough, O

அழிவுக்கு ஏதுவாக ஆயிற்று. வேத இலக்கியங்களில் கூறியபடி சத்ய, திரேத, துவாபர, கலி யுகங்களின் காலவெல்லைகளை அவதா னிக்கும் போது கலியுகத்தின் ஆரம்பம் கி. மு. 3102ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி ஆரம்பமானது என்றால் ஹரப்பா நாகரீகத்தின் அழிவில் கலியுகம் ஆரம்பித்திருக்கிறது.
முடிவில், வேத காலத்தின் தோற்றமும் முடிவும் பற்றிய பல சந்தேகங்களை விஞ்ஞானம் துலக்கியிருக்கிறது. ஹரப்பா நாகரீகத்தின் முடிவே வேதகாலத்தின் முடிவு. பனி உருகியதால் பெருமளவில் கிடைத்த நீர்ப்பாசனம் வேத காலத்து வாழ்வை வளமாக்கியது. அடுத்த ஐயாயிரம் ஆணர்டுகள்தான் வேதத்தின் பொற்காலம். தொடர்ந்த வரட்சி ஹரப்பாவின் முடிவோடு வேதம் முடிந்தது. ஆரியர் வருகைக்கு முன்னரே இந்தியா நாகரீகமடைந்து விட்டது. பணி டய கிரேக்கத்தை எப்படி இலியட்டும் ஒடிசியும் வளம்படுத்தினவையோ அதுபோல்தான் வேதங்கள் இந்தியாவை வளம்படுத்தின. ஆரியர்களுக்கும் வேதங்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. வேறுவிதமான கருத்துக்கள் இருப்பின் விவாதத்தை ஆரம்பிக்கலாம்.
DLDSLIMINTED
Ganesh
Sales Representatives
கணேஷ்
Pager: (416) 937-5985
V Olds Ltd.
d Avenue East Ttario M1S 49
வாழும் தமிழ் 2000 காலம் - 13 --

Page 86
۶ باروق یا ۱)
s291-anzees
2 ሠርI Sግ
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து அன்போடும் பணிபோடும் வாழ்ந்து வந்த இலங்கை இப்போது யுத்த மேகங்களாற் சூழப்பட்ட பூமியாகக் காட்சி தருகின்றது. மூவின மக்களும் தத்தம் மொழியை யும் பணி பாட்டையும் பேணி வாழ்வோடும் வளத்தோடும் அமைதியாக வாழ்ந்து வந்த பூமியிலே அவலவாழ்வு அனைவரையும் அனைத்துக் கொண்டிருக்கின்றது. ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஆரம்பித்த இனரீதியான கலவரங்கள் இப்போது யுத்தங்களாகி நாடு பலவழிகளாலும் அவதியுறுகின்றது. யுத்தம் நடைபெறுகின்ற பிரதான களம் வடக்கு, கிழக்கை உள்ளடக்கிய தமிழர் வாழும் பிரதேசங்களே என்பதால் யுத்தத்தின் கொடுமைகளை நேரடியாக அனுபவிப்பவர்களும் தமிழ் மக்கள் தான். கடந்த அரை நுாற்றாண்டுக் காலமாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்த யுத்தத்தின் கொடுமைகளை நேரடியாக அனுபவிப்பவர்களும் தமிழ் மக்கள் தான். இம்முடிவுறாத யுத்தம் தொடர்கதையாக நீண்டு கொண்டிருப்பதால் விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்ட மக்கள் ஈழத்து வாழ்வு என்பது இனி இந்த அவல வாழ்வு தான் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாது தான.
விரக்தியுற்ற மக்களின் சிந்தனைகளை இலக்கிய ங்கள் எவ்வாறு பிரதிபலித்தன என்பதை நிகழ்காலத்தில் விரிவாக ஆய்வு செய்வது சாத்தியமற்ற ஒன்று தான். எனினும் அண்மைக் காலத்தில் வெளிவருகின்ற சில கவிதைகளை மையமாகக் கொண்டு ஈழத்து வாழ்வு பற்றிய சிந்தனைகளை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஈழத்தமிழர்களின் வாழ்வு இரண்டு விதமாக அமைந்துள்ளது. ஒன்று, ஈழ மண்ணிலேயே
-84- வாழும் தமிழ் 2000 காலம் - 3

کھنچوآسیح 22 = tضلعA(tعے لڑچڑھیعیا۔
ம. இரகுநாதன் - யாழ். பல்கலைக்கழகம்
வாழ்கின்ற வாழ்வு. இரண்டாவது, ஈழமணிணில் உறவுகளை வைத்துக் கொண்டு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற வாழ்வு. ஈழமண்ணிலே வாழ்கின்றவர்கள் கூட தமது சொந்த இருப்பிடங்களை விட்டுப் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். எவ்வாறாயினும் இவர்கள் ஈழமணிணில் வாழ்பவர்கள் என்பதால்
இவர்களின் பிரச்சினைகள் பொதுவானவை.
பொதுவாக மனிதர்கள் மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. சுடுகாடு அச்சத்தைத் தருகின்ற ஒன்றாகவே இருந்து வந்தது. இத்தகைய பண்பாட்டுச் சூழலில் பார்க்குமிடமெல்லாம் துாக்குமரங்களாகவும் சுடுகாடாகவும் மாற்றமுறும் போது மனித மனம் விரக்தியுறுவது சாதாரணமானது. இந்த விரக்தி புதிய வாழ்வுக்குப் பழக்கப்படும் வரை மனித மனங்களை வதை செய்வதாகவே இருக்கும். இதனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்கள்,
இத்தயக்கம் கவிதைகளிலும் தெரிகிறது.
துரக்குமரம்
Géz5/7 6o! - //7aio கொத்தளம் பார்
அன்று ஆசிரியர் சொல்லி வர அணர்னாந்து பார்த்தேனர் நான்/ துரக்குமரங் கணர்டு துணுக்குற்றது நெஞ்சு/ தொங்கும் மனித உடல் தோன்றியது கனவில் இனிறே7
மினர் கம்பம் துரக்குமரமாகிய விந்தை காண உறங்காதென கணி

Page 87
மலிவு விற்பனை
லாபாய் லாபாய்! மனித உயிரெலாம் மலிவு விற்பனை! மொத்தமாகவும் சில்லறையாகவும் மனித உயிரிங்கு மலிவு விற்பனை! தெருத் தோறும் வாசல் தோறும் தினமும் எங்கள் டெலிவரி நடக்கும் லாபாய் லாபாய்
லாபாய் லாபாய்!
(சோ.பத்மநாதன், மல்லிகை 234 மே 1992)
பார்க்குமிடமெல்லாம் மனித உயிர்கள் அழிக்கப் படுவதைக் கண்ட கவிஞன் மனிதமே இப்பூமியில் தொலைந்து விட்டதாகப் பாடுகின்றான்.
“யாரைத் தேடுகிறாய்? எதைத் தேடுகிறாய்? தேடு தேடு தேடிக்கொண்டே இரு இரத்தக் கறை படிந்த இந்தத் தேசத்தில் தேடிக் கொண்டே இரு
உரம் உள்ள வரை எங்கும் தேடிப்பார் வீட்டில் . வீதியோரத்தில் . மணர்ணில் . மாளிகையில் . என்ன . நின்று விட்டாயா? ஏன்? வாயைத் திறந்து சொல்! .மனிதனா
அட பைத்தியமே மனிதமே தொலைந்த தேசத்தில் மனிதனைத் தேடுகிறாயா?
(எஸ்.குணேஸ்வரன். தேடல் 1999)
மற்றொரு கவிஞர்

“கடைத்தெருவில்
ഞകള கணி முன்னே கற்பழிப்பு கழுத்துறையில் சிறை வைப்பு கரையேற வழியில்லை கலங்குகிறது மனிதம்
(கே.அரசேஸ்வரன். சஞ்சீவி 6.299)
அநியாயமாக உயிர்கள் அழிக்கப்படுவதும் மனிதமே தொலைக்கப்படுவதும் சாதாரண வாழ் வின் அம்சங்களாகி விட்டால் அவற்றை விதி என்று ஏற்றுக் கொள்வதுதானே வழக்கம். இதைத் தானி ச. குணாளினியின் கவிதை தெரியப் படுத்துகின்றது.
"தின்னச் சோறில்லையா-தெருவில் போனமகன் திரும்பலையா? மன்னன் தொலைந்தானா-மகனை நேற்றுமுதல் காணலையா? என்ன கத்தி ஆவதென்ன?
இனி இதெல்லாம் விதி மகளே! “
(சஞ்சீவி 6299)
போர்க்காலச் சூழலால் பெரிதும் பாதிக்கப் படுபவர்களில் இளைஞர்கள் முக்கியமானவர். அவர்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்க முடியாத வர்கள். வீதிக்கு வந்து தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள். வீதிக்கு வரும போது அவர்களுக்குப் பாதுகாப்புத்தர மறுப்பது அவர்களின் இளமைத் தோற்றம். இதனால் இளமையின் மீதே ஒருவிதமான வெறுப்பு ஏற்படுகின்றது. முதுமைக்குரிய அடையாளங்களை மூடி மறைத்த காலம் மாறி அவற்றை விரும்பி ஏற்கின்ற நிலை உருவாகின்றது. இதனை சோ.ப.வின் கவிதையில் காண முடிகின்றது.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -85

Page 88
நரை
நீ எட்டிப் பார்த்த போது நான்
அஞ்சினேன். அருவருப்படைந்தேன்! பகலிரவாய் உனையொழிக்கப் பாடுபட்டேன்! ஆனால்
நீயோ
என்னைக் கடவைகளிலும் காவற் கூடங்களிலும் காத்து வருகின்றாய்!
(மல்லிகை 234, மே 1992)
அடுத்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்துத் தமிழர்கள் பற்றியும் தாய் நாட்டிலுள்ள அவர்களது உறவுகள் பற்றியும் ஈழத்திலேயே வாழ்கின்ற தமிழ் மக்களின் உணர்வு நிலைப் பாடுகளை நோக்கலாம். பெரும்பாலும் ஈழ மணர்ணிலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெ யர்ந்தவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த வர்களே. தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்கள் அவர்களுக்கு தொழில் கிடைக்க வேண்டும். கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைக்க வேண்டும். மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் படாமல் இருப்பதை உறுதிப் படுத்த அகதி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்றெல்லாம் அவதியுறுவது இயல்புதான். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் இலங்கை யில் யுத்தம் தொடர்கின்றது. அங்கே எமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை புலம் பெயர்ந்தவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதனால் இவர்களும் இவர்களது ஈழத்து உறவு களும் யுத்தத்தை விரும்புகின்றார்களோ என்ற ஒரு சந்தேகமும் ஈழமணர்ணில் வாழ்பவர்களுக்கு எழுந்திருக்கலாம். இதனால் பிள்ளைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பி விட்டு வெறும் வாய்வீரம் பேசி நிற்கும் அவர்களின் உறவுகளின் மீது வெறுப்பு ஏற்படுகின்ற நிலை உருவாகின்றது. இதனை சோ.ப.வின் கவிதை காட்டுகின்றது.
-86- வாழும் தமிழ் 2000 காலம் - 3

வீரம்
"அப்புவுக்கு
வீரம் அதிகம்!
அறுபதிலும்
எப்படித் தீர்க்க இவர் பேகின்றார்!
ஆம்,
போர்முனைக்குக் கூடப் போய் விடுவார் போலிருக்கே! மறந்திட்டன் மூத்த மகன் ஜேர்மனியிலையாம்! மற்றொருவன் கனடாவில்! மகள் நோர்வே போய்விட்டார்! பொக்கெற்றில் குறிப்பு பொருத்தம் சில பார்க்க! அப்புவுக்கு வீரம் அதிகம் அறுபதிலும் கொப்புளிக்குதெண்ன குறை!
(மல்லிகை 234, மே 1992)
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமக்குள் ஒன்று சேர்ந்து கலை நிகழ்ச் சிகள் பலவற்றை அந்நாடுகளில் நடாத்தி வருகின்றனர். எங்கிருந்தாலும் தமது கலாசாரத் தைப் பேண வேண்டும் என்ற பெருவிருப்புட னேயே இவற்றைச் செய்வதாகவும் இவர்கள் கூறுவதை ஈழ மண்ணில் வாழ்கின்றவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றார்களா என்ற வினாவுக்கு சிவகாமியின் கவிதை பதில் தருகிறது,
வெளிநாட்டுக் கடிதங்கள்
ஒடிய நீங்கள் கலாச்சாரத்தைப் பற்றி எப்படிக் கதைப்பீர்கள்? பேணுங்கள் நன்றே கலாச்சாரத்தை அங்கு உயிர்களைக் காக்கப் போராடும் எமக்கு நீங்கள் கூறும் கலாச்சாரம் வெறுப்பைத் தான் தருகிறது. நாமும் ஒருகாலம்

Page 89
நடனங்கள் ஆடினோம் பாடல்கள் பாடினோம் இப்பவும் கூட ஆடவும் பாடவுமே எமக்கு
அதிக நாட்டம் என்றாலும் இவற்றுக்கெல்லாம் இது வேளையல்ல இம்மணிணையும் மக்களையும் பேணுவதற்காய் மாய்கின்ற வேளை ஆடலுக்கும் பாடலுக்கும் நேரம்தான் ஏது?
(தாயகம் 21, ஜனவரி-பெப்ரவரி 1990)
புலம்பெயர்ந்தவர்களின் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு சோ.ப. வின் கவிதையிலும் தொபிகின்றது. 1980 களிலும் அதன் பின்பும் குடாநாட்டையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் இணைக்கும் பிரதான பாதையாக கிளாலிக் கடலே விளங்கியது. இப்பாதையால் பிரயாணம் செய்தவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏற்பட்ட உயிரழிவுகள் உலகம் அறிந்தவை. எத்தனை துயரங்களின் மத்தியிலும் உயிரைப் 605 வைத்து தத்தம் அவசர தேவைகளுக்காக அன்றாடம் பிரயாணம் செய்பவர்கள் பலர். யார் யாருக்காக இரங்குவது என்று தெரியாத பிரயாணம். உதவத்தான் முடியாவிட்டாலும் மனித உணர்வு 5F55 பிரயாணிக்காக இரங்குகிறது. ஆனால் மறுகணம் அந்த இரக்கம் வெறுப்பாக மாறுகிறது. காரணம் அவர்கள் ஊரை விட்டு வெளிநாட்டுக்கு ஒடுபவர்கள் என்பது தான்.
கடலேரி ஊடு ஒரு பயணமும் மூன்று காட்சிகளும்
எண்பதோ முன்பின் இரண்டொன்றிருக்கலாம் தென்னிலங்கை நோக்கிப் பயணம் தளர்ச்சி உடல் எங்கும்
ஆறாக வியர்வை
மனையாள் தோளில் தொங்கித் தயங்கி தொடர்ந்து நடைபயிலும் இந்த மனிதர்க்காய் இதயம் நெகிழ்கிறது

"யாருக்கு இரங்குகிறாய்? யார் பொருட்டு நோகின்றாய்? வேரடியின் மண்ணை உதறித் தன் பிள்ளைகளைப் போக்கடித்து மேற்கே புகலிடங்கள் தேடுதற்கு ஈடுவைத்தும் கையில் இருந்த முதல் தொலைத்தும் வீடு விற்றும் தாலிக் கொடி விற்றும் தம் முன்னோர் தேடி வைத்த செல்வம் தொலைத்தன்றி வேறேதும் செய்தறியாச் சென்மத்துக்கா, நீ இரங்குகிறாய்? மெய்விழும் போதும் வெளிநாடு மேல் என்னும் பொய்யருக்காகப் புலம்பல் தவிர் கெளந்தேய! மாதவன் என்றன் மயக்கம் ஒழித்திடுவான் கீதை புதிது மொழிந்தான் தெரிந்தேன் நான்!
(மல்லிகை 249, ஜனவரி 1995)
ஒருபுறத்தே புலம்பெயர்ந்தவர்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படுகின்ற அதேவேளை மறுபுறத்தில் இந்த மணிணின் மீதே வெறுப்புற்று நாமும் இந்த மணிணை விட்டு வெளியேறி விடுவோம் என்ற குரலும் கேட்கிறது. சிவபூமி மரணங்கள் மலிந்த பூமியாகி விட்டதால் இனி இந்த நாடு உருப்படாது எனக் கருதியவர்களின் பரிதாபகரமான குரல் இது. இக்குரல் புலம்பெயர் ந்தவர்களின் நிலையை நியாயப்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது. எனினும் இது ஒங்கி ஒலிக்க
முடியாத ஈனக்குரல்தான் என்பதில் ஐயமில்லை.
பூக்கலாம் புதிசாய்!
நாளையை நினைத்து வேகும் நாட்களும் ஒழியர் நாடொறும் வீழும் பிணங்கள் தொகை இனியும் குறையா
குண்டடி பட்டெங்கள் குருதிப் பாய்வு நிற்கா குழிகளும் எங்கள் உடலம் தேடும் நிலையும் ஒழியா! விடிவிலை இனி எமக்கென முடிவாயில் வேறென்ன! பேசுபவர் பேசட்டும் முட்டி மோதட்டும் விட்டு விலகிடுவோம் மூச்சு விட்ட எங்கள் மணிணை கூடிக் குலாவிய வீட்டை ஆடிப்பாடிய பள்ளியை
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -87.

Page 90
போம் வழியில் வினை சூழ்ந்தால் என் விதிவசத்தால் செத்தாலென்
விட்டுப் போவோமிந்த வினை சூழ்ந்த மணிணை!
(தாயகம் 33, அழபகிரதன் மே 1997)
“தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்” என் பது பழமொழி. தமிழக வரலாற்றில் சோழப் பேரரசின் சிதைவுக்குப் பின்னர் தமிழகம் முஸ்லீம்களதும் மராட்டியர்களதும் GBL untri uj. பந்தாட்டக் களமாக திகழ்ந்த வேளையில் அங்கு தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரனாகவே இருந்தான். இன்றைய ஈழ மண்ணிலும் இதே நிலைதான் தோன்றி விட்டதாக நெடுந்தீவு லக்ஸ்மனின் அங்கலாய்ப்பு உணர்த்துகின்றது.
6.
9 it in
திருநாவுக்கரசு அண்றைக்குச் சொன்னார்
sgy.(p.
வடக் (
சிறுகதை
விலை
The Hindu Lugg.f605uSai (1.1298)
The author has a unique, inimitable style. He has writers. He describes events with a leisure and a ri find anywhere in Tamil writing. He manipulates the ing envy in other practitioner
கிடைக
மணிமேகலைப் பிரசுரம் த.பெ.எண் 1447 4 தணிகாசலம் சாலை தி.நகர் சென்னை 600017, 4342926
-88- வாழும் தமிழ் 2000 காலம் - 3

o நாம
யார்க்கும் குடியல்லோம்" என்று .
இன்று
அப்பு
திருநாவுக்கரசு அங்கலாய்க்கிறார் “நாம் யாருக்குக் குடியானோம்" என்று .
(தாயகம் 21, ஜனவரி-பெப்ரவரி 1990)
முடிவாக, இன்றைய ஈழத்து வாழ்வு மரணங்கள் மலிந்து மனிதம் தொலைந்த அவல வாழ்வுதான் என்பதையே இக்காலக் கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. என்றோ ஒருநாள் இந்த வாழ்விலும் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கை பொய்யாகி
விடக் கூடாது.
த்துலிங்கம் "ழுதிய
கு வீதி
தத் தொகுப்பு
ரூபா 4 0.00
வெளிவந்த விமர்சனத்தின் ஒரு பகுதி
a gestalt sense of humour that is not often seen in Tamil tual and shows such passion for details that one does not 2 language that is at once arresting and capable of creat'. His observations are breathtaking.
குமிடங்கள்:
திலிப்குமார் 216-10 ஆர்.கே.மத் ரோடு, மைலாப்பூர் சென்னை 600004 தொலைபேசி 4952217

Page 91
எதிர்க் காற்றில் அ6 தேசியவாதம், புல தொலைபுலத்து
The Tamit Diaspora and Long Distance Nationalism
Øivind Fuglerud
அறிமுகம்:
தேசியவாதம் பற்றிய மரபான ஆய்வுகளும் கருத்துக்களும் இன்று தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. புலம்பெயர்ந்து வாழும் சமூகங்களிடையே எழுகிற தொலைபுலத் தேசியவாதம் பற்றிய வரண்முறையான ஆய்வுகள்
 
 
 
 
 

லையும் வாழ்க்கை: ம்பெயர்வு மற்றும் த் தேசியவாதம்
சேரன் வை. இரவீந்திரன்
பொதுவாகவே தேசியவாதம் பற்றிய ஆய்வுகளி லிருந்து பிரிக்கப்பட முடியாததாக உள்ளது. ஏனெனில் தேசியவாதப் போராட்டமும் புலம் பெயர்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போலவே உள்ளன.
ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு பல தளங்களிலும் முக்கியமாகப் பேசப்படுகிற ஒரு சமூக அரசியல் நிகழ்வாக உள்ளது. யுத்தம், சுற்றுச் சூழல் பிரச்சினைகள், பஞ்சம் போன்ற பல காரணிகளால் மக்கள் புலம் பெயர்வது வரலாற்றில் ஒன்றும் புதுமையானதல்ல. எனினும், ஈழத்தமிழர் களின் புலம்பெயர்வைப் பொறுத்தவரை ஒரு குறிப்பான அவதானத்தை ஆய்வாளர்கள் முன் வைக்க முடியும். தொடர்ச்சியாகவும் அதேநேரம் மெல்ல மெல்ல உக்கிரம் பெற்று வந்த இனப்படுகொலைகள் 1983 ஜூலையின் பிற்பாடு பரந்த அளவிலான யுத்தமாகவே மாறிவிட்டது. படுகொலைகளும் யுத்தமும் தான் 1983 க்குப் பிற்பாடான ஈழத் தமிழர்களின் கட்டாயப் புலம்பெயர்வைத் துரிதப் படுத்திற்று. இப்புலம் பெயர்வின் விளவாகவே அகதிகளாகவும் அர சியல் தஞ்சம் கோருபவர்களாகவும் பூமிப்பந்து எங்கனும் ஈழத் தமிழர்கள் பெருமளவில் சிதறுண்டார்கள். ஒரு சிறு தொகையான முஸ்லீம் மக்களும் 6GL) is மக்களும் இந்தப்
புலம்பெயர்வுள் அடங்குகிறார்கள்.
வரலாற்று ரீதியாகப் பார்க்கிறபோது, ஈழத் தமிழர்களுள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருந்த யாழ்ப்பாணக் குடா நாட்டுத் தமிழர்கள் நீண்ட காலமாகவே மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பொருளாதாரக் கார னங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளனர். ஆசிரி யர்கள், புகைவண்டி நிலைய அதிகாரிகள்,
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -89

Page 92
ஈழத்தமிழ்த் தேசியத்தின் மூன்றிலொரு பங்கினர் புலம்பெயர்ந்து விட்டனர் அல்லது "ஈழத் தேசியத்தின் நிலவரையறைகளுக்கு அப்பாலே இருக்கின்றனர்” என ஒருவர் வாதிட முடியும்.
அஞ்சலக அதிகாரிகள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், மருத்துவர்கள் என்று இந்தப் பட்டியல் நீளும். இவ்வாறு புலம்பெயர்ந்தவர் களுள் மிகப் பெரும்பாலானோர் யாழ்ப்பா ணத்தின் மேலோங்கித் தமிழர்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் காலநிலை, வறட்சி, நிலப்பயன்பாட்டின் எல்லைப்பாடு போன்ற காரணங்கள் தீவுப்பகுதிகளிலிருந்தும் குடாநாட் டிலிருந்தும் வன்னிநோக்கியும் தெற்கு நோக்கியும் உள்ளகப் புலப்பெயர்வையும் வரலாற்று ரீதியாக ஏற்படுத்தியுள்ளன. எனினும் இப்போது இடம் பெற்றுள்ள அல்லது இடம் பெற்று வருகிற புலம்பெயர்வே அளவிலும் பரிமாணத்திலும் பாரியதாகும். இப்புலப்பெயர்வின் பரிமாணமும் அதனால் ஈழத்தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக, உளவியல், பொருளாதாரத் தாக்கங்களும் பற்றிய அக்கறையும் ஆய்வுகளும் எம்மிடம் கவலைதரக் கூடிய அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளன.
இன்றைய புலம்பெயர்வின் பயங்கரப் பரிமாணத்தை எடுத்துக் கொள்வோம். 1981 இல் இருபது லட்சமாக இருந்த ஈழத் தமிழரின் தொகை யில் பெரும் பங்கினர் ஒன்றில் புலம்பெயர்ந்து விட்டனர் அல்லது உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்தும் விட்டனர். இவர்களின் 320,000 பேர்வரை ஐரோப்பாவிலும் கனடாவிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை 500,000 வரை இருக்கலாம் என்று வேறு ஆய்வுகள் பருமட்டாகக் கணக்கெடுக்கென்றன. கனடாவில் மட்டுமே 150,000 - 200,000 வரை ஈழத்தமிழர்கள் வாழ் கின்றனர் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இத்தகையதொரு பாரிய புலம்பெயர்வு பற்றியும் தேசியவாதங்கள், வன்முறை, வன்முறை அரசியல் பற்றியும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இரண்டு முக்கிய நுால்களைப் பற்றிய ஒரு திறனாய்வுக்
-90- வாழும் தமிழ் 2000 காலம் - 13

கட்டுரையே இது. தமிழ்த் தேசியவாதத்தைப் புரிந்து கொள்வதற்கு எவ்வகையில் இந்த நுால்கள் உதவுகின்றன என்ற கேள்வியை நாம் எழுப்ப விரும்புகின்றோம். முதலாவது நூல் Life on the Outside. The Tamil Diaspora and Long Distance Nationalism ( வெளியில் வாழ்வு: தமிழர் புலம்பெயர்வும் தொலைபுலத் தேசியவாதமும்). இதனை எழுதியிருப்பவர் Olivind Fugerud எனும் நோர்வேஜிய மானுடவியலாளர். இரணடாவது நுாலை Charred Lullabies. Chapters in an Anthropography of Violence (so-du g/Tait Giss6i. வன்முறையின் மானுடப்பணி பியல் பற்றிய அத்தியாயங்கள்) இலங்கையில் பிறந்து இப்போது அமெரிக்காவில் வாழும் வலென்டைன் ஈ டானி யல் எனும் மானுடவியலாளர் எழுதியுள்ளார். இந் நூலில் புலம்பெயர்வு ஒரு முக்கிய அம்சமாகப் பேசப் படவில்லை. என்றாலும் நுாலின் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றான Suffering Nation and Alienation (GSpirogy Lib தேசியமும் அந்நியமும்) என்பது ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வைப் பற்றி விரிவாகவே பேசுகிறது. இவ்விரு நுால்களையும் எமது ஆய்வுக்கெடுத்துக் கொள்கிற இக்கட்டுரை புலம்பெயர்வு, ஈழத்தமிழர் வாழ்வில் புலம்பெயர்வு ஏற்படுத்திய சமூக, அரசபியல், பண்பாட்டுத் தாக்கங்களைப் பற்றிய எமது ஆய்வுக் குறிப்புக்களையும் ஆங்காங்கே எடுத்துத்
தரும. -
புலம்பெயர்வும் தொலைபுலத் தேசியமும்
ஒய்வின்ட் ஃபிக்லறுாட் எழுதியுள்ள நுால் மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவ்வளவு கவர்ச்சி தருகிற ஒரு நுால் அல்ல. எனினும், ஈழத் தமிழரின் புலம் பெயர்வு தொடர்பாக காத்திரமான சவால்களை எழுப்புகிற நுாலாக இது அமைந்துள்ளது.
இலங்கையின் இனத்துவ முரண்பாடுகள், சமகாலத் தமிழ் அடையாளம், புலம்பெயர்வு போன்ற அம்சங்களை இந்த நுால் விரிவாக ஆய்வு செய்கிறது. நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைப் பற்றியதே ஆய்வு எனினும் நுாலின் வீச்சும் பொருத்தப்பாடும் நோர்வேயைத் தாண்டியும் வலுவாக உள்ளது.
ஒரு காலத்தில் 950,000 என்பதாக இருந்த வடபுலத்தின் சனத்தொகையில் 400,000 பேர்,

Page 93
1995 அளவில் புலம்பெயர்ந்து விட்டனர். ஈழத்தமிழ்த் தேசியத்தின் மூன்றிலொரு பங்கினர் புலம்பெயர்ந்து விட்டனர் அல்லது “ஈழத் தேசியத்தின் நிலவரையறைகளுக்கு அப்பாலே இருக்கின்றனர்” என ஒருவர் வாதிட முடியும். இத்தகையதொரு பாரிய புலம்பெயர்வும் அதனு டைய துயரம் செறிந்த தொடர் நிகழ்வுகளும் தான் நுாலின் முக்கியமான உள்ளீடாகும். ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் மேலை நாடுகளில் எவ்வாறு அந்த நாடுகளில் இணக்கப்பாடு, ஒருமைப்பாடு என்பவற்றை ஈழத்தமிழர்கள் பேணுகிறார்கள் அல்லது இவற்றைப் பேணுவதிலுள்ள பிரச்சினைகள் பற்றியதோ அன்றியும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் எவ்வாறு பாரபட்சத்தை அனுபவிக்கிறார்கள் என்பதோ நுாலின் மையம் அல்ல. மாறாக, புலம்பெயர்ந்த வாழ்வினதும் அடையாளத்தினதும் “தேசங்கடந்த” (Transnational ) இயல்பைப் பற்றியே நுால் கவனம் கொள்கிறது. பிறந்த இடத்துக்கும் புலம்பெயர்ந்த இடத்துக்கும் இடையிலான சிக்கல்கள் நிறைந்த உறவே நுாலில் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதே பொருத் தமான கூற்றாகும். (பக்.4) இந்த அம்சத்திலேயே நுாலாசிரியர் கவனம் செலுத்துவதால் ஈழத்தமிழர் புலம்பெயர்வு பற்றி மட்டுமன்றி யாழ்ப்பாணத் தமிழர் வரலாறு, பண்பாட்டு அம்சங்கள், தமிழ்ப் போராளி இயக்கங்கள், வன்முறை போன்ற பல அம்சங்கள் குறித்தும் நுாலாசிரியரால் ஆழமாகப் பேச முடிகிறது.
நுாலின் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவெனில் தமிழ்த் தேசியவாதம், அடையாளம் பற்றிய வழமையான கதையாடலான சிங்களபெளத்த பேரினவாதமும் அதற்கு எதிர்வினையாக எழுந்தது தமிழ்த் தேசியவாதம் என்பதை நுால் திருப்பித் தருவதில்லை என்பதாகும். இதற்குப் பதிலாக, தமிழ்ச் சமூகத்தின் உள்ளேயும் தமிழ்ச் சமூகத்தின் வேறுவேறு அடுக்குகளுக்கு இடையே யும் தொழிற்படுகிற முரண்பாடுகள், காரணங்கள் பற்றி நுாலாசிரியர் கவனமெடுக்கிறார். அவருடைய துறையான மானுடவியலின் அக்கறைகளுக்கு இணக்கமானதாகவே இந்த அணுகுமுறை
உள்ளது.
நவீனமயமாக்கலை நோக்கிய முன் நோக்கிய நடையின் போது தமிழ்ச் சமூகம் எதிர் கொள்ளும் மாற்றங்களின் பின்னணியிலேயே மேற்கூறிய அம்சங்களை நுாலாசிரியர் ஆய்வு செய்கிறார்.

எனவே, சாதியம் என்பது முக்கியமானதாகவும் மேலாட்சி பொருந்தியதாகவும் இருந்த ஒரு சூழலில் இருந்து எல்லா உள்ளக முரண்பாடுகளையும் மீறித் தேசியவாதமே மேலெழுகிற ஒரு சூழல் உருவாவதைப் பற்றி ஆசிரியர் கவனம் எடுப்பது (பக்.5) ஆச்சரியம் தருவதல்ல. நவீனத்துவமும், தேசியவாதத்தின் மேலெழுகையும் பழமைபேணும் வெள்ளாள மேலாதிக்கம் கொண்ட யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தை எவ்வாறு அதிர்வுக்குள் ளாக்குகிறது என்பதும் நுாலில் கவனங் கொள்ளப்படுகிறது.
நுாலின் முதலாவது அத்தியாயம் தமிழர்களுடைய வரலாறு பற்றியும் தமிழ்ப் போராளி இயக்கங்களின் எழுச்சி பற்றியும் ஒரு அறிமுகத் தைத் தருகிறது. பெருமளவுக்குச் சின்னப்பா அரசரெத்தினம்(1982, 1994), பிறையன் பஃபண்பேகர் (1982) ஆகியோரின் கருத்துக்களையும் தகவல் களையும் அடியொற்றி வழிமொழிவதற்காகவே இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. காலனியா திக்கம் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பில் பெருமளவுக்கு மாற்றம் எதனையும் கொண்டு வரவில்லை என்னும் சின்னப்பா அரசரெத்தி னத்தின் கருத்தை நுாலாசிரியரும் முன்வைக்கிறார். யாழ்ப்பாணச் சமூகத்தின் அதிகார அடுக்குகளையும் அதிகாரப் படிநிலை முறையில் எண்ணிக்கையில் அதிகமான வெள்ளாளர் வகித்த பலம் வாய்ந்த மேலாட்சியையும் சுட்டிக் காட்டுகிறார் நுாலாசி ரியர். கூடவே, இலங்கை அரசுகள் யாழ்ப்பாண சமூக அமைப்பை ஜனநாயகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை (இவற்றின் நோக்கமும் பின்னணியும் விவாதத்துக்குரியன) வெள்ளாள மேலாதிக்கம் எவ்வாறு மூர்க்கத்தனமாக எதிர்த்தது என்பதும் கூறப்படுகிறது.
இனத்துவ முரண்பாடுகள் எப்படி வர்க்க முரண்பாடுகள் என்ற வகையில் பார்க்கப்பட முடியும் என்று சிறிதளவு கோடிட்டுக் காட்டும் நுாலாசிரியர் இது தொடர்பான விவாதத்துள் இறங்காமல் புத்திசாலித்தனமாகத் தப்பி விடுகிறார். யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் காணப்பட்ட பல முரண்பாடுகள், போராட்டங்களின் வடிவ மாகவே ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் தோன்றியமையையும் இம் முரண்பாடுகள், போராட்டங்கள், பலவேறு இயக்கங்களிடம் பிரதிபலித்தமையும் நுாலாசிரியர் குறிப்பிடுகிறார். நுாலாசிரியரைப் பொறுத்தவரை
“இம்முரண் பாடுகளின் நேரடியான
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -9-

Page 94
அமிர்தலிங்கம் படுகொலை பற்றி நூலாசிரியரின் சமூகவியல், உளவியல் அவதானத்தை இப்போது நாம் கவனத்துக்கு எடுக்கலாம். "ஆங்கிலம் கற்ற, வெள்ளாளத் தமிழ் மேலோங்கி களின் பிரதிநிதியாகக் கொள்ளப்படத் தக்க" அமிர்தலிங்கத்தின் கொலையை சிக்முன்ட் ஃபிராய்ட் என்கிற உளப்பகுப்பாய்வு அறிஞர் முன் வைத்த ஈடிபஸ் சிக்கல் என்னும் கோட்பாடு மூலம் மீள்வாசிப்புச் செய்கிறார் நூலாசிரியர். இது ஒரு விசித்திரமான மீள் வாசிப்பு.
தொடர்ச்சியாகவே இயக்கங்களின் தோற்றத்தையும் அவற்றுக்கிடை யேயான முரணி பாடுகளையும் பார்க்க முடியும்” (பக்.35)
என்பதாகும்.
“பாரம்பரியமான வெள்ளாள மேலாட்சிக்கு எதிரான கரையாரின் போராட்டங்களும், கரையார் சமூகத்தினரை முக்கியமான தலைமைப் பொறுப்புக்களில் கொண்ட விடுதலைப் புலிகளின் மேலெழுகையும் பாரம்பரியமாக இடம்பெற்ற வந்த சாதிப் போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் தமிழ்த் தேசியத்தின் எல்லாப் பிரிவினரையும் இணைக்கும் ஒரு புரட்சிகரமான அரசியலாகவும் கொள்ளப்படலாம்” என்பது நுாலாசிரியரின் வாதமாகும்(பக்.88). ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களின் மேலெழுகையையும் ஈழப் போராட்டத்தின் சமகாலத் தன்மையையும் சாதிய அடிப்படையிலும் சாதிப் போராட்டங் களின் அடிப்படையில் மட்டுமே விளங்கிக் கொள்வதும் விளக்குவதும் பிரச்சினையில் பரிமானங்களை மிகவும் குறுக்குவதாகும். மேலைநாட்டு ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் 'இராஜதந்திரிகள்” மத்தியில் பரவியிருக்கும் ஒரு மலினத்துவமான சமூக ஆய்வு தான் போராட்டத்தையும் சாதியத்தையும் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலப்பது. Dagmar Hellman-Rajanayagam (1994), Peter Schalk(1992) மற்றும் சீரிய ஆய்வாளரான Brian
-92- வாழும் தமிழ் 2000 காலம் - 3

Pfafenberger கூட இத்தகைய கருத்தையே வலியு றுத்துவது மிகுந்த விவாதத்துக்கு உரியதாகும்.
ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால முன்னோ டிகளான சிவகுமாரன் போன்றவர்கள் வெடிகுண்டுத் தயாரிப்பு, ஆயுதப்பாவனை என்பனவற்றிற்கு அறுபதுகளின் பிற்கூற்றில் சாதி ஒழிப்புப் போராட்டங்களில் தீவிரமாக முன் நின்றவர்களிடமே ஆதர்சமும் உதவியும் பெற்றிருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் எண்பதுகளின் நடுப்பகுதியில் எழுந்தமைக்கான காரணங்களை 83க்குப் பிற்பாடான ஆயுதப் பயிற்சியின் அபரிமிதம், இந்தியத் தலையீடு, ஈழப் போராட்டம் பற்றிய ஒரு தீவிரமான மனோர தியப் பாதிப்பு போன்ற வேறுபல காரணிகளாலும் விளக்கப்பட முடியும். எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து 80களின் ஆரம்பம் வரை குறைந்த எண்ணிக்கையான இளைஞர்களே இயக்க அரசியலுள் இருந்தனர். அச்சூழலில் ஆட்சேர்ப்பு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மத்தியிலேயே மிகவும் நெருக்கடியான சூழலுள்ளேயே நடந்தது. தமிழ் மக்களும் பரந்த அளவில் இயக்கங்களுக்கு ஆதரவாகவும் இருக்கவில்லை. எனவே, அக்கால கட்டத்தில் பிரதேசம், உறவுமுறை, சாதி என்பவற்றின் அடியில் இயக்கக் கருக்கள் உருவானமையைப் புரிந்து கொள்ள முடியும். எனினும் 83க்குப் பிற்பாடு இந்த அம்சங்கள் பெருமளவுக்கு உடைந்து விட்டன. சாதியம் என்பது போராட்ட இயக்கங்களுள் ஒரு அம்சமாகத் தொழிற்படவில்லை என்று முற்று முழுவதாகக் கூறிவிட முடியாது. எனினும் சாதியமும் ஈழத் தேசியப் போராட்டமும் தொடர்பான பலமான ஆய்வுகள் இல்லாமல் மேலெழுந்தவாரியாக ஒருவர் முடிவுக்கு வர
முடியாது.
அமிர்தலிங்கம் படுகொலை பற்றி நுாலாசிரியரின் சமூகவியல், உளவியல் அவதானத்தை இப்போது நாம் கவனத்துக்கு எடுக்கலாம். "ஆங்கிலம் கற்ற, வெள்ளாளத் தமிழ் மேலோங்கிகளின் பிரதிநி தியாகக் கொள்ளப்படத் தக்க” அமிர்தலிங்கத்தின் கொலையை சிக்முன்ட் ஃபிராய்ட் என்கிற உளப்பகுப்பாய்வு அறிஞர் முன் வைத்த ஈடிபஸ் சிக்கல் என்னும் கோட்பாடு மூலம் மீள்வாசிப்புச் செய்கிறார் நுாலாசிரியர். இது ஒரு விசித்திரமான மீள் வாசிப்பு. “தமிழீழம்” என்ற தாயை அடைவதற்காக அமிர்தலிங்கம் என்ற தந்தையைக்

Page 95
கொல்கிறார் பிரபாகரன்” (பக். 153) என்பது நுாலாசிரியரின் கூற்று. பிரபாகரனதும் விடுதலை இயக்கங்களினதும் பலமான மேலெழுகை தமிழ் அரசியலில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த மேலோங்கித் தமிழர்களின் பிடியை உடைத்தெறிந்து தலைமையை யாழ்ப்பாணத்துக்கு மாற்றி விட்டது என்பதைத்தான் ஈடிபளில் உருவகத்தின் மூலம் நுாலாசிரியர் சொல்ல வருகிறார். பழைய சமுதாயத்தில் இருந்து புதிய சமுதாயம் பிறக்கிறபோது மருத்துவிச்சியாகத் தொழிற்படுவது வன்முறை தான் என்ற மார்க்சின் கூற்றை இங்கு நினைவு கூர முடியும். எனினும் பாரம்பரியமான மேலோங்கித் தமிழர் தலைமை என்ற வட்டத்துக்குள் அமிர்தலிங்கத்தை உள்ள டக்க முடியுமா என்பது சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் விவாதத்துக்குரிய ஒரு விடயமாகும். அமிர்தலிங்கம் கொழும்புத் தமிழ்த் தலைமை வட்டத்துக்குள் வராதவர். செல்வநாயகத்திடம் இருந்து அமிர்தலிங்கத்திடம் தலைமை மாறியமை யையே நாங்கள் கொழும்பு வட்டத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தமிழ் அரசியலின் மையம் மாறுகிறது என்று கொள்ள முடியும். செல்வ நாயகத்துக்கோ, ஜி. ஜி. பொன்னம்பலத் துக்கோ அல்லது முதிருச்செல்வத்துக்கோ இருந்த அளவு கொழும்புப் பலம் அமிர்தலிங்கத்துக்கு இருந்த தில்லை. அந்த வகையில் கொழும்புத் தமிழ் மேலோங்கி (Colombo Tamil Elite) 6T6oigby அமிர்தலிங்கத்தை வரையறை செய்ய இயலாது.
குமார் பொன்னம்பலத்தினதும் நீலன் திருச் செல்வத்தினதும் படுகொலைகளுக்குப் பிற்பாடு நுாலாசிரியரின் தர்க்கம் மேலும் வலுவிழந்து போகிறது. இவ்விருவருமே கொழும்புத் தமிழ் மேலோங்கிகளது அசலான பிரதிநிதிகள். எனினும் படுகொலையின் பிற்பாடு குமார் பொன்னம்பலம் “மாமனிதராக" தமிழ்த் தேசியக் கதையாடலுள் ஒரு தமிழ்ச் சிற்றுாழியனாக இணைத்துக் கொள்ளப்படுகிற அதேவேளை இதே கதையாட லில் நீலன் திருச்செல்வம் துரோகியாக இனங் காணப்படுகிறார். எனவே, கொழும்புத் தமிழ் மேலோங்கி என்கிற வர்க்க நிலைப்பாடு மட்டுமே ஒருவரைத் தமிழ்த் தேசியவாதத்தின் இன்றைய கதையாடலுக்குள்ளிருந்து வெளித்தள்ளப் போது மானதல்ல. தமிழீழத்தின் தந்தை என்ற உருவகம் அமிர்தலிங்கத்துக்குப் பொருந்தி வருகிற மாதி ரியான சூழல் முன்பும் இருக்கவில்லை. செல்வநாயகத்தையே தந்தை என்கிற போக்குப் பரவலாக இருந்தது. தமிழீழ விடுதலை இயக்கம்

வெலிக்கடையில் 19836 படுகொலை செய்யப்பட்ட தங்கத்துரையையே “தேசபிதா” என்று வழங்குகிற பாரம்பரியத்தைப் பேணி வந்தது. கூட்டணியின் அரசியல் சொல்லாடலிலும் அமிர்தலிங்கம் “தளபதி'யாகவே வர்ணிக்கப் பட்டார். அறிவுக் கோட்பாடுகளின் மீதான அபரி மிதமான மோகம் சிலவேளைகளில் விசித்திரமான ஊகங்களுக்குக் கூட இட்டுச் சென்று விடமுடியும்.
Semantics of Terror 6Taoi p 51st 65aoi gy(Sggs அத்தியாயமே மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த அத்தியாயத்தில் நுாலாசிரியர் எழுப்புகிற வாதம் முக்கியமானதாகும். சிரச்சேதங்கள், குழந்தை களைப் படுகொலை செய்தல், கர்ப்பிணிப் பெணி களைப் படுகொலை செய்தல், கொலையுண்ட வர்களைச் சிதைப்பது போன்ற வன்முறையின் கோரமானதும் வக்கிரமானதுமான அம்சங்களை, வன்முறையின் உடனடியான விளைவாகவும் வெறுமனே வன்முறை மட்டுமே என்பதாகவும் விளங்கிக் கொள்ளவும் முடியாது என்கிறார் நுாலாசிரியர். இத்தகைய வன்முறைக்கு, பண்பாட்டு அல்லது தேசியவாத உரிமை கோரல்களும் உந்துதல்களும் இருக்க முடியுமா என்பதே இங்கு கேள்வியாகிறது.
தேசத்தையும் தேசியத்தையும் பிரித்தெடுப்பதற்கான ஒரு குறியீடாகவே இத்தகைய துண்டாடல்கள் இடம்பெற முடியும் என்கிறார் நுாலாசிரியர். “வெளிக்குள் மக்களை மீள ஒழுங்குபடுத்துவதும் மக்களது மனதுக்குள் ‘வெளியை மீள ஒழுங்கு செய்வதுமே இது” என்கிறார் ஆசிரியர். (பக்.40)
“இலங்கையின் யுத்தம் ஒரு கலாசார மீயுயர் மொழியாகவே நிகழ்த்தப்படுகிறது. உடலைத் துண்டாடுவது என்பது அந்த உடலை அரசின் உடலிலிருந்து துணிடாடுவது என்பதாகவும். இத்தகைய துண்டாடுதல் மூலமே புதிய அடையாளம் உருவாக்கப்படுகிறது.” (பக்.43) என மேலும் எழுதுகிறார் ஆசிரியர். இத்தகைய துணி டாடல்கள் அரங்கச் செயற்பாடுகள் போல தமிழ்-சிங்கள “எல்லை"ப் புறப் பிரதேசங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
நோர்வேக்குத் தமிழர் புலம்பெயர்ந்தமை பற்றி நான்காம் அத்தியாயத்தில் விவரிக்கிற ஆசிரியர் அதற்கடுத்த மூன்று அத்தியாயங்களையும் புலம்பெயர்ந்த தமிழர் அடையாளம் மற்றும்
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -93

Page 96
அனுபவங்கள் பற்றி எழுதுவதற்கு ஒதுக்குகிறார். "புலம்பெயர்வு என்பது ஒரு சுற்றுச் சூழலில் இருந்து இன்னொரு சுற்றுச் சூழலுக்கு விரும்பியோ, விரும்பாமலோ பெயர்வது. புலம் பெயர்வின் மூலம் மக்கள் தமது கலாசாரம், பணிபாடு என்பவற்றை இழந்து ஆட்சிபெற்றுள்ள ஒரு கலாசாரத்துள் கரைந்து விடுகிறார்கள் அல்லது தமது அடையாளத்தையும் கலப்பின் மூலம் பேணுகிறார்கள்” என்ற வழமையான அணுகு முறைகளுக்கு அப்பால் நாம் போக வேண்டியிருப்பதன் அவசியத்தை இந்த அத்தி யாயங்களில் நுாலாசிரியர் வலியுறுத்துகிறார் (பக்.82). நோர்வேயில் குடிவரவுப் பொறுப்பு அலுவலர்களுக்குப் புலிகளே நீண்ட காலமாக ஏகபோகமாகப் பணியாற்றி வந்துள்ளமையைக் குறிப்பிடுகிற நுாலாசிரியர் (பக்.82) “தேசங்கடந்து” வந்தாலும் பழைய தேசத்தின் அரசியல், சமூகப் பிடிக்குள்ளும் பிடிப்புக்குள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிக்குண்டிருப்பதை Transnational எனச் சுட்டிக் காட்டுகிறார். இந்த அத்தியாயங்களில் நோர்வேக்குப் புலம்பெயர்ந் துள்ள தமிழ் அகதிகளின் அனுபவங்களையும் கதைகளையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் நுாலாசிரியர்.
தேசியத்தின் வன்முறையில் கருகிய தாலாட்டுக்கள்
வலண்ரைன் டானியலின் நுால் ஏழு அத்தியா யங்களைக் கொண்டது. ஏற்கெனவே ஆய்வு மாநாடுகளிலும் பல்கலைக் கழக ஆய்வு சார்ந்த இதழ்களிலும் இடம் பெற்ற கட்டுரைகளை இறுக்கமாகத் தொகுத்து நுாலாக்கி இருக்கிறார் டானியல், அரசியல் வன்முறை, பயங்கரம், இடப்பெயர்ச்சி, மலையக மக்களின் வாழ்வனுப வங்கள் ஆகியவற்றின் மானுடப் பணிபியலைப் பற்றிப் பேசுகின்றன இந்த அத்தியாயங்கள். மானுடவியல் (Anthropology) 6T6of fabastida) மானுடப்பண்பியல் (Anthrpography) என்பதையே டானியல் கருத்தியல்ரீதியாகப் பயன்படுத்துகிறார். மனிதப் பணிபுக்கும் வன்முறைக்கும் இடையே இருக்கக் கூடிய உறவு பற்றிய ஒரு “பற்றற்ற" ஆய்வு என்று இந்த நுாலைக் குறிப்படுவது ஒருவகையில் பொருத்தமானதுதான்.
அரசியல் வன்முறை பற்றி எழுதுகிறபோது ஏற்படக் கூடிய மெய்யியல், கருத்தியல் பிரச்சினைகளைப் பற்றித் துல்லியமாகவே
-94- வாழும் தமிழ் 2000 காலம் - 13

கணிப்பிட்டிருக்கிறார் நுாலாசிரியர். வன்முறை பற்றிய புலமைசார் எழுத்துக்கள் பல தளங்களில் வன்முறை பற்றி எழுப்பும் கேள்விகளைப் பார்ப்போம்.
வன்முறை என்பது பழிக்குப் பழியாகவா இடம்பெறுகிறது? பொதுமன்னிப்பு என்பது சாத்தியமா? அல்லது எந்த அளவில் சாத்தியம்? வன்முறைக்கூடாகச் சென்றவர்கள் மற்றும் வன்முறையின் பயங்கரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைதலுக்கான வழி முறைகள் என்ன? இத்தகைய “குணமடைதல்” என்ற நடைமுறையில் தண்டனை வழங்குவதும் அல்லது பெறுவதும் இடம்பெறுமா? வன்முறை யின் பயங்கர அனுபவங்களை எவ்வாறு அல்லது எவ்வாறாயினும் பகிர்ந்து கொள்ளுதல் சாத்தி யமா? ஆகிய பல கேள்விகளுக்கான பதிலை அறிவுச் சமநிலையுடனும் உணர்வுப் பரிமாற்றத்து டனும் அணுக முயல்கிறார் டானியல். இத்தகைய கேள்விகளுக்கான முற்றிலும் வெற்றிகரமான பதில்களை ஒருவரும் தந்துவிட முடியாது. “அந்த வகையில் 'இந்த நுால் ஒரு தோல்வி” என்று கூறுகிற ஆசிரியர் ஒன்றுமே செய்யாமல் “சும்மா” இருப்பதை விட முயற்சி செய்து தோல்வியடைதலைத் தனது தர்மமாகக் கொள் கிறார். டானியல் தன்னடக்கத்துடன் கூறுவது போல நுால் முற்றிலும் ஒரு தோல்வி அல்ல. நுால் இறுக்கமாக எழுதப்பட்டுள்ள அதேநேரம் சிறந்த கவிதை அளவுக்கு வீச்சான மொழியும் நுாலின் பரிமாணங்களுக்கு மேலும் ஒரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. சமூக விஞ்ஞானங்களிலும் ஆய்வுகளிலும் இந்த இணைவு அரிதாகவே சித்திக்கிறது.
C.S. Pierce எனும் அறிஞரின் குறியீட்டறிவியல் (semiotics) டானியலின் பகுப்பாய்வுகளுக்குப் L6) )IT6ös உறுதுணையாக அமைந்துள்ளது. வன்முறை பற்றிப் பேசுகிறபோது, கோட்பாடு என்பது வன்முறையின் பயங்கரமான யதார்த்தத்தின் முன்நிலையில் பலமிழந்து போகிறது. எனவேதானி வன்முறை பற்றிய கோட்பாட்டு ரீதியான புரிந்து கொள்ளல்களையும் அறிதலையும் வன்முறையின் யதார்த்தத்துக்குப் பிரதியீடாக நாங்கள் கொள்ள முடியாது. கோட்பாடுகள் என்பன நடைமுறை யதார்த்தத்தையும் கிளப்புகிற சிக்கல்களையும் புரிந்து கொள்ள வழிவகுப்பதன் மூலம், இத்தகைய சிக்கல்களுக்கான தீர்வு வழிமுறைகளைச் சுட்ட

Page 97
முயல வேண்டும். அத்தகைய ஒரு நிலையில் தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கும் உதவக் கூடிய சூழலை நாங்கள் உருவாக்க முடியும். இந்த வகையில் டானியலுடைய ஒரு அவதானம் முக்கியமானது. “எனது அத்தியாயங்களில் கோட்பாடு என்பது யதார்த்தத்தின் கீழ் புதைந்து கொள்ளவில்லை. யதார்த்தத்திலிருந்து விலகித்தான் அது நிற்கிறது’ (அதன் மூலம் நடைமுறை யதார்த்தம் பற்றிய ஒரு பற்றற்ற பார்வையைத் தருகிறது).
6.16oicp6opuSaoi gaOtahuaorasugi (Enthnography of Violence) என்று தனது நுாலை அழைப்பதை டானியல் வன்மையாகவே மறுக்கிறார். (பக்.7) இது மிகவும் நியாயமானது. இலங்கையில் நிலவுகிற அரசியல் வன்முறை மற்றும் பயங்கரங்களைப் பற்றிப் பேசுவதை ‘இனவரைவியல்' என்று அழைப்பது வன்முறையின் பயங்கரங்களைக் குறித்த ஒரு நாட்டுக்கு அல்லது குறித்த ஒரு மக்களுக்கு மட்டுமே உரிய ஒன்று என முத்திரை குத்துவதாகும். இத்தகைய ஒரு பார்வையே மேற்கு நாடுகளின் பத்திரிகைகளிலும் அவற்றின் ஆசிரியர் தலையங்கங்களிலும் நாம் அன்றாடம் காணர்கிறோம். ' மேலைத்தேய ஜனநாயக’’ நாடுகள் இத்தகைய வன்முறைப் பயங்கரங்களிலிருந்து எப்போதோ விடுபட்டவை என்பதும் இந்த நாடுகளில் அரசியல் வன்முறை என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்பதே இந்தக் குறும்பார்வையின் உட்கிடை பொஸ்னியா, சேர்பியா, கொசோவா, வட அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற சமகாலஉதாரணங்களைக் கூட இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள் என்றால் நாளமி ஜேர்மனியையும் முஸோலினியின் இத்தாலியையும் பற்றி இவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
டானியலுடைய நுாலின் ஆறாவது அத்தியா யமான துயருறும் தேசியமும் அந்நியமும் (Suffering Nation and Alienation ug. 154-193) என்பதே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வைப் பற்றியும், புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் ஈழத்தமிழர்கள் பற்றியதாகவும் அமைகிறது என்பதால் இந்த அத்தியாயத்தையே நாங்கள் விரி வான ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.
டானியல், தனது நுாலின் ஆரம்பத்திலேயே தனது “இடம்” தனது “நிலைப்பாடு” என்ன என்பதைத்

இலங்கையில் நிலவுகிற அரசியல் வன்முறை மற்றும் பயங்கரங்களைப் பற்றிப் பேசுவதை "இனவரைவியல்" என்று அழைப்பது வன்முறையின் பயங்கரங்களைக் குறித்த ஒரு நாட்டுக்கு அல்லது குறித்த ஒரு மக்களுக்கு மட்டுமே உரிய ஒன்று என முத்திரை குத்துவதாகும். இத்தகைய ஒரு பார்வையே மேற்கு நாடுகளின் பத்திரிகைகளிலும் அவற்றின் ஆசிரியர் தலையங்கங்களிலும் நாம் அன்றாடம் காண்கிறோம்.
தெளிவாகச் சொல்லி விடுகிறார் (பக்.9), “எனது அப்பா ஒரு தமிழர். அம்மா ஒரு பகுதி சிங்களவர். மறுபகுதி ஐரோப்பியர். சிங்கள மொழியே பெரிதும் பேசப்படும் தென்பகுதியிலும், தேயிலைத் தோட்டங்களிலும் வளர்ந்தேன். எனது அப்பா தோட்டத் தொழில் வேலை செய்ய வில்லை. எனினும் அவர் தோட்டத் தொழிலா ளர்களைச் சேர்ந்தவர் தான்.” டானியல் நான்கு வருடங்கள் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவர். “குறுகிய காலம் எனினும் யாழ்ப்பாணத் தமிழர்களுடனான எனது இடைத்தாக்கம் மிக நெருங்கியதாக இருந்தது.’ (பக்.10) அதேநேரம் சிங்கள மொழி நன்றாகத் தெரிந்தமையால் சிங்கள மக்களுடனும் நெருங்கிப் பழக முடிந்தது என்கிறார். “தமிழர்களை விட மிக இலகுவாகச் சிங்கள மக்களுடன் பழக என்னால் முடிந்தது (பக்.10) என்று கூறுகிற டானியல் யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர், சிங்களவர் ஆகிய மூன்று வகை மக்களுடனும் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக தான் இருந்து வந்தமையால் இலங்கையின் பிரச்சினைகள் குறித்த ஒரு விசேட பார்வைக் கோணம் தனக்குக் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். (பக்.10)
நுாலில் ஏதாவது மெல்லிய “பக்கச் சாய்வுகள்” இருக்குமானால் அது மலையக மக்கள் பக்கமாகத் தான் இருக்கும் என்று தெரிவிக்கிறார் நுாலாசிரியர். சிங்கள, தமிழ்க் கதையாடல் களுக்குள் ‘காணாமல் போய்’ விட்ட மலையக
மக்களின் பலவகைக் குரல்களைச் சுட்டிக்
வாழும் தமிழ் 2000 காலம் - 3 -Q5

Page 98
காட்டுவதற்காகவே இந்த மெல்லிய பக்கச் சாய்வு என்று டானியல் கூறுவதை முற்றாகவே ஏற்றுக் கொள்ளலாம். எனினும், மலையக மக்களின் பரிமாணத்துாடாக அல்லது அவர்களின் உணர்வுத் தாக்கத்திலிருந்து தான் எல்லா அத்தியாயங்களும் முற்றாக எழுதப் பட்டுள்ளன என்று கூற முடியாது. பாரம்பரியமும் வரலாறும் (Heritage and History), ahl6aicp60p அளவும் அளவான வன்முறையும் (Violent Measures, Measured Violence) ஆகிய அத்தியாயங்களில் மலையகத் தமிழர்கள் விரிவாகப் பேசப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் தான் இந்த அத்தியா யங்களின் மையம் என்றாலும் மிகையாகாது. நாடற்றோர் பிரச்சினை, “தாயகம்” திரும்பிய மலையகத் தமிழரின் அடையாளச் சிக்கல்கள், மலையகத் தமிழரின் குடியுரிமைப் பிரச்சினை களும் அவை அடையாளத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் நான்காம் அத்தியாயமான, மனோநிலை, மணித்துளி, மனம் (Mood, Moment and Mind) என்பதில் சீராக விவரிக்கிறார். தமிழர் புலம்பெயர்வு தொடர்பான அவருடைய முக்கியமான அத்தியாயத்தில் தமிழ்த் தேசியவாதம், யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர் போன்ற உட்பிரிவுகளில் ஏற்படுத்தியிருக்கிற மாற்றங்களையும் இப்போது எவ்வாறு ‘தமிழர்’ என்ற பொதுவான அடையாளம் உருவாவதற்கு இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகப் புரிந்து வரும் வன்முறையும் காரணமாகிறது என்பதை விளக்குகிறார். (பக்.164)
இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய அவருடைய கள ஆய்வின் விளைவானதே ஆறாம் அத்தியாயம். இனப்படுகொலைகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த உயர்வர்க்க “உயர்குலத் தோர் குழாம்” முதலாவது கட்டப் புலம்பெயர்வா ளர்களாகவும் அவர்களைத் தொடர்ந்து கல்வி காரணமாகப் புலம்பெயர்ந்தோரை-பெருமளவுக்கு மாணவர்களை- இரண்டாம் கட்டப் புலம் பெயர்வாளர்களாகவும் 83 ஜூலைப் படுகொலை களுக்குப் பிறகு பாரிய அளவில் அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்களை மூன்றாம் கட்டமாகவும் வகுத்து ஆய்வு செய்கிறார் டானியல். இந்த மூன்று கட்டத்தினரின் வாழ்க்கை முறை, சிந்தனைகள், அரசியல் நோக்கு உட்பிரிவுகளை நுணுக்கமான அவதானத்துடன் பதிவுசெய்தி ருக்கிறார். இந்த அவதானங்களுக்குத் துணை செய்வதாக நீண்ட நேர்முகங்களையும் நிகழ்த்தித் தனது அவதானங்களுக்கு ஆதாரம் தருகிறார்.
-96 வாழும் தமிழ் 2000 காலம் - 3

எனினும், இந்த அவதானங்கள் “பொதுப் புத்தி” மட்டத்தில் தெரிய வருகிற அவதானங்களுக்கு அப்பால் ஆழமாகச் செல்லவில்லை. உதாரணமாக, மூன்றாம் கட்டப் புலம்பெயர்வா ளர்கள் (அகதிகள்) &ռւգա அளவுக்கு அரசியல்மயப்பட்டவர்கள் என்றும் முதலாவது கட்டப் புலம்பெயர்வாளர்கள் மிகப் பெருமளவுக்கு உயர்குழாத்தினர் என அவர் எழுதுவதும் ஏற்கெனவே பெருமளவுக்குத் தெரிந்த அம்சங்கள் தான். இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்துள்ள இரண்டாம், மூன்றாம் கட்டத் தமிழர்கள், மலைகயத் தமிழர்கள் பற்றிய அவதானங்களும், ஏனைய தமிழர்களோடு அவர்களுடைய இடைத்தாக்கங்கள் பற்றிய குறிப்புக்களும் (பக்.161-165) விவாதத்துக்கு உரியன. குறைந்த எண்ணிக்கையிலேயே மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்திருப்பதையும் அப்படிப் புலம்பெயர்ந்தவர்கள் மலையகத் தமிழர்களுள்ளும் உயர்குழாத்தினர் என்பதையும் சரியாகவே இனங்கண்டு கொள்கிற டானியல், பிரித்தானியச் சூழலில் இவர்கள் நெருங்கிப் பழகுகிற மக்கள் குழுக்கள் எனப் பின்வருவோரை வரிசைப்படுத்துகிறார்:
* தமக்குள்ளே (மலையகத் தமிழர்-மலையகத்
தமிழர்)
* சிங்களவர்
* தமது சாதியைச் சேர்ந்த இந்தியத் தமிழர்
* ஏனைய இலங்கைத் தமிழர்
பிற இந்தியத் தமிழர்கள்
இத்தகைய ‘தெரிவை புலம் பெயர்ந்த மலையகத் தமிழர் மேற்கொள்கிற போது மொழி, மதம் ஆகிய முக்கியமான காரணிகள் இனத்துவத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு ஆற்றுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள மொழி-மதம் சாரா பண்பாட்டு அம்சங்கள் மேல் வருகின்றன எனத் தெரிவிக் கிறார். உதாரணமாக, உணவுப் பழக்க வழக்கம், கறிக்குத் தாளிக்கும் போது பயன்படுத்துகிற பொருட்கள், எப்படிச் சாப்பிடுவது போன்ற அம்சங்கள், கறித்துாள் தயாரிப்பதிலும் அதற்குப் பயன்படுத்தும் மிளகு, சீரகம், மிளகாய், போன்ற பொருட்களின் வகைப்பாடு போன்றவையும் முக்கியமானவை என்று டானியல் கருதுகிறார். குறிப்பாக, சாம்பார், ரசம் என்பன வைக்கும் முறையிலேய்ே கூட மலையகத் தமிழர்கள் வேறுபடுகிறார்கள் எனச் சுட்டிக் காட்டுகிறார். இந்த வேறுபாடுகளின் அடிப்படையில் மலையகத் தமிழர் தமது அரசியல் தெரிவுகளை மேற்

Page 99
காள்வதில்லை என்பதை உரிய முறையில் தெளிவுபடுத்துகிற டானியல், இந்த வேறுபாடுகள் தான் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்துள்ள மலையகத் தமிழர், தாம் நெருங்கிப் பழகத் தெரிவு செய்யும் இனத்துவக் குழுமத்தை தீர்மானிக்க உதவுகின்றது என்று சொல்வது பலவீனமான வாதம் என்பது எங்கள் கருத்து. இந்தப் பலவீனம் டானியலின் கள ஆய்வின் பலவீனமாகும். எவ்வளவு காலம், எத்தனை நேர்முகங்கள் என்ற ஆய்வுமுறைத் தகவலை டானியல் தரவில்லை. ஆங்காங்கே இடைச் செருகல்களாகத் தரப்படுகிற நேர்முகக் குறிப்புக்களிலிருந்தும், இந்த அத்தியா யத்தின் முக்கியமான எந்த முடிவையும் டானியல் ஆதாரப்படுத்துவது சிரமமாகவே இருக்கும். கள ஆய்வின் போதாமை என்பதைத் தனது கோட்பாட்டு விரிவாலும், மானுடவியலின் கற்பனைப் படிமங்களாலும் நிறைவு செய்ய முயல்கிறார் டானியல். அவை மிகுந்த சுவாரசியம் தருவனவாகவும் சீரான ஆற்றொழுக்குப் போல இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் வாத வலுவை மட்டுமல்ல ஏற்றுக் கொள்ள வைக்கும் இயல்பையும் இழந்து விடுகின்றன.
ஆய்வின் முடிவுரையாக டானியல் எழுப்புகிற சில கேள்விகளையும் தெரிவிக்கும் கருத்துக்களையும் இந்தப் பின்னணியிலேயே நாம் பார்க்க வேணர்டி இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களின் “தேசம்’, ‘தேசியம்’, பற்றிய கதையாடல்களைப் பற்றி அவர் பேசுகிற போது (பக்.175-180, 192193) தேசியம் என்பது எவ்வாறு புலம்பெயர் சூழலில் மாறுகிறது; கட்டமைக்கப் படுகிறது அல்லது கற்பிதம் செய்யப்படுகிறது என்பவை தொடர்பாக டானியல் சொல்லும் கருத்துக்களில் துாக்கலாக இருப்பது தேசியத்திலிருந்து அந்நியமாதலே பெருமளவுக்கு இப்புலம்பெயர் தமிழர்களிடம் நிகழ்வதாகும் என்பது. ஆனால் புலம்பெயர்ந்த சூழலில் வெளிவருகிற ஏராளமான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், புலம்பெயர் தமிழர்களின் விழாக்கள், விடுதலைப் புலிகள் இத்தமிழர்கள் மீது செலுத்தி வருகிற அரசியல், கருத்தியல் மேலாட்சி என்பனவற்றின் சூழலைத் தொடர்ந்து அவதானிக்கிற எவரும் தேசியத்திலிருந்து அந்நியமாதல் நிகழ்கிறது எனச் சொல்ல மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும். இந்த அவதானம் இன்மை என்பது டானியலின் கட்டுரையின் இன்னொரு பலவீனம்.
தொறன்ரோவின் புலம்பெயர்ந்த தமிழரின்

ஆனால் புலம்பெயர்ந்த ஆழலில் வெளிவருகிற ஏராளமான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், புலம்பெயர் தமிழர்களின் விழாக்கள், விடுதலைப் புலிகள் இத்தமிழர்கள் மீது செலுத்தி வருகிற அரசியல், கருத்தியல் மேலாட்சி என்பனவற்றின் சூழலைத் தொடர்ந்து அவதானிக்கிற எவரும் தேசியத்திலிருந்து அந்நியமாதல் நிகழ்கிறது எனச் சொல்ல மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும். இந்த அவதானம் இன்மை என்பது டானியலின் கட்டுரையின் இன்னொரு பலவீனம்.
வாழ்வைப் பெருமளவுக்கு நெறிப்படுத்துவது தேசியம்தான். அந்நியம் அல்ல. புலம்பெயர்வு என்பதையே தேசியத்தின் மீதான ஒரு விமர்சனமாக நாங்கள் கொள்ள முடியும் என்பதும் ஒரு நீண்ட காலக் கண்ணோட்டத்தில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் தேசியம்’ ஈழத் தேசியத்திலிருந்து அந்நியமாகி வேறுவேறான தேசியங்களாக அல்லது தேசியங் கடந்ததாக உடைவு பெற முடியும். எனினும் இன்றைய கணம் பெருமளவுக்குத் தேசியத்தின் கணமாகவே இருக்கிறது என்பது மட்டுமல்ல இந்தத் தேசியம் புலம்பெயர்ந்த சூழலில் ஆணாதிக்கம் சார்ந்ததா கவும் பழமை பேணுவதாகவும், பிற்போக்கா னதாகவும் பொற்காலக் கனவுகளில் சுகிப்பதா கவும் துார இருந்து யுத்தத்தையும் வீரத்தையும் கொண்டாடுவதாகவும் உள்ளது. இந்த அம்சங்கள் டானியலின் ஆய்வில் கண்டு கொள்ளப்படவே இல்லை என்பது மிகுந்த துரதிர்ஷ்டமானது.
அகதி அனுபவங்கள், புலம்பெயர்ந்த அனுபவங்கள் என்பன வெறுமனே ஒரு தளப்பட்ட அனுபவங்களல்ல. அகதிப் பெணி களின் அனுபவங்கள் மிகுந்த வித்தியாசமானவை. இதுவரை காலப் புலப்பெயர்வு ஆய்வுகள், அகதி நிலை தொடர்பான ஆய்வுகள், பெணி நிலை
வாழும் தமிழ் 2000 காலம் - 13

Page 100
அனுபவங்கள், பால் சார்ந்த அனுபவங்கள் (gendered experience) என்பவற்றைக் கணக்கிலெடுக்க வில்லை. டானியலும் இந்த அடிப்படைக் குறைபாட்டிலிருந்து விடுபடவில்லை.
நுாலின் ஆறாவது அத்தியாயமான Embodied Terror என்பதில் டானியல் ஆய்வுக்கு எடுக்கிற விடயமும் முக்கியமானதாகும். ஒரு பண்பாட்டில் அழகியல் என்பது எவ்வகைகளில் இயங்குகிறது என்பது பற்றிய ஒரு மெய்யியல் விசாரணையில் இலங்கை அனுபவங்களின் வழியாக இறங்குகிறார் டானியல், அழகியல் என்பதை களிப்பு, சுவை, இன்பம் போன்றவற்றோடு மட்டும் தான் இணைக்க முடியுமா? வலி, வன்முறை என்பவற்றையும் களிப்பு, சுவைப்பு, இன்பம் என்பவற்றோடு தொடர்பு படுத்த முடியாதா? என்ற ஒரு முக்கியமான வினாவை ஆய்வு செய்கிறார். ஒய்வின்ட் ஃபுக்லறுாட் கூறுகிற வன்முறையின் அரங்கியல் வெளிப்பாடுகள் என்பதை அரங்குநிலையில் ஒத்ததே இக்கேள்விகளும் எனலாம். சித்திரவதை செய்வதிலேயே பழகிப்போனவர்களுக்கு அது இன்பத்தையும் நிறைவையும் தருகிறது அல்லவா என்று ஒருவர் வாதிட முடியும். இலங்கையில் இடம்பெறும் அரசியல் வன்முறைகள், சித்திரவதை என்பவற்றின் பின்னணியில் இந்தக் கேள்விகளை பயனுள்ள ஆய்வுக்கு உட்படுத்துகிறார் டானியல். அரசியல் வன்முறையின் பாதிப்புகளிலிருந்தும் எதிர்வினையாகவும் வெளியாகியிருக்கிற கலை இலக்கியப் படைப்புக்களைப் பற்றி செல்வி, சிவரமணி ஆகியோரின் கவிதைகளுக்கூடாகப் பொருத்தமான முறையில் குறிப்பிடுகிற டானியல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கலை, இலக்கிய மரபைப் பற்றி மேலெழுந்தவாரியாக எழுதிவிட்டுப் போகிற குறிப்பு ஒன்றை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
“தமிழ்ப் பிரிவினைவாதத்தின் மையமாக இன்று விளங்கும் யாழ்ப்பாணக் குடாநாடு, முப்பது வருடங்களுக்கு முன்பு சங்கீதமும் கவித்துவமும் அற்ற மூலையாகவே இருந்தது. கவிதைகளும் வசன எழுத்துக்களும் பெருமளவில் இருக்கவில்லை என்பதோடு, இருந்தவையும் சராசரித்தனமானவையாகவே இருந்தன.” இந்தக் கூற்றுக்கு டானியல் எந்த ஆதாரத்தையும்
-98- வாழும் தமிழ் 2000 காலம் - 13

தருவதில்லை என்பது மட்டுமல்ல ஈழத்தமிழிலக்கிய வரலாறு மற்றும் அறுபதுகளில் அதில் ஏற்பட்ட முக்கியமான தரமாற்றங்கள், தளமாற்றங்கள் பற்றி ஏதும் குறிப்படாமலே மேலோட்டமாக இந்த அவதானத்தைத் தருவது பலவீனமாக உள்ளது. “மருத்துவர்கள், சட்டத்தரணிகள், அரசியல் வாதிகள், பொறியியலாளர்கள், கணிதவியலாளர்கள், கிளாக்கர்மார் போன்றவர்களை உருவாக்கும் துறைகளோடு மட்டுமே கணினும் கருத்துமாக இருக்கிறது யாழ்ப்பாணம். எனவே கலைத்துறை, சமூக விஞ்ஞானத்துறை, இலக்கியத்துறை என்பவற்றில் அங்கிருந்து ஒன்றுமே உயர்தரமானதாகக் கிளம்ப முடியாது என்ற தர்க்கத்தின் அடிப்படையாகவே டானியல் நாம் மேலே குறிப்பிட்ட கருத்தை முன்வைக்கிறார் என்று உய்த்துணர முடிகிறது.
fyp& தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரைகுறிப்பாகக் கவிதைகளைப் பொறுத்தவரைஅறுபதுகளில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்க ளுள் ஒன்று, கவிதைகள் யாப்பினர் இறுக்கத்துாடாக யாந்திரிகத்தனமான வெளிப்பாடுகளாக இருக்கும் போக்கை மாற்றி, எளிமைப்படுத்தப்பட்ட அதேநேரம் ஒத்திசையின் வீச்சையும் கட்புலப் படிமங்களையும் பலமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு வந்தமை ஆகும். இந்த மாற்றம் தான் பாரதிக்குப் பிறகு பிச்சமூர்த்தி வழியாகத் தமிழ் நாட்டில் ஏற்பட்ட புதுக்கவிதை இயக்கத்தின் பலவீனங்கள் ஏற்படாமல் மஹாகவி, முருகையன், நீலாவணன், நுஃமான், சண்முகம் சிவலிங்கம் வழியாக ஈழத்து நவீன கவிதையைப் புதிய பாய்ச்சல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த முக்கியமான அவதானத்தை டானியல் கருத்தில் எடுக்க வேண்டும். இத்தகையதொரு அவதா னத்தை நாவல், சிறுகதைகள், நாடகம், விமர்சனம் தொடர்பாகவும் நாம் முன்வைக்க முடியும்.
முடிவுரையாகச் சில குறிப்புக்கள்
இன்று ஈழத் தமிழர்கள் மிக அதிகளவில் வாழ்கிற நகரம் யாழ்ப்பாணம் அல்ல தொறொன்ரோ தான். அந்த வகையில் தொறொன்ரோ மாந– கரத்தின் புலம்பெயர்ந்த தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாட்டு வாழ்வை ஆய்வு செய்து வருபவர்கள் என்ற முறையில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம்.

Page 101
முக்கியமான இந்த இரண்டு நுால்களிலும் காணப்படுகிற வெற்றிடங்கள் யாவை?
அகதி நிலையில் புலம்பெயர்ந்தவர்களுக்கும் புதிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் தேடிப் புலம் பெயர்ந்தவர்களுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகள், வேறுபாடுகள் என்பன காலகதி யில் எவ்வாறு அற்றுப் போகின்றன என்பது ஒரு முக்கியமான விடயமாகும். கனடாவைப் பொறுத்தவரை அகதிநிலை பெற்றுவிட்டவர்கள் நிரந்தர வதிவிட உரிமையுள்ளவராகவும் பிற்பாடு கனடியப் பிரஜையாகவும் மாறுவது இலகுவான காரியமாகும். இந்த வாய்ப்பு ஐரோப்பாவில் மிகவும் குறைவு. அந்த வகையில் கனடியப் பிரஜையாக மாறி விடுகிற ஒரு ‘தமிழ் அகதி" யின் வாழ்க்கை, சமூக-உளவியல் நிலை, அரசியல் நிலைப்பாடுகள் என்பன எவ்வாறு மாற்றமுறு கின்றன என்பது ஒரு முக்கியமான அம்சம். இந்த மாற்றம் பற்றிய அவதானங்களை இரு நுால்களும் கவனத்திலெடுப்பதில்லை. ஆய்வுக்கு நுாலாசிரி யர்கள் தெரிந்தெடுத்துள்ள களங்கள் (இலண்டன், நோர்வே) இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் லண்டனைப் பொறுத்தவரை இத்தகைய மாற்றங்களை டானியல் பதிவு செய்திருக்கலாம்.
விடுபட்டுப் போகிற இன்னொரு அம்சம் என்னவெனில் இப்பாரிய புலப்பெயர்வினுாடாக உயர்தர வர்க்கத்தினர் மட்டுமல்லாமல் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினரும் ஏராளமாக வெளியேறியுள்ளனர் என்பது. உல்லாசப் பயணிகளாக மேலை நாட்டினர் மட்டுமே பல இடங்களையும் சென்று பார்க்கிற ஒரு பாரம்பரியத்தை மீறி ஒரு கீழோங்கிப் பயணி யாகவும் கீழோங்கிப் புலம்பெயர்வாளர்களா d56th (subaltern migrants) gifypigs6i LDIT ppGpp றிருப்பது எவ்வகையில் சமூக இயங்கியலைப் பாதிக்கிறது என்கிற கேள்வி சுவாரசியமானது மட்டுமல்லாமல் முக்கியமானதுமாகும்.
பாரம்பரியத்துக்குத் திரும்புதல், பழமைபேணுதல், பிரதேசவாதங்களின் மீள் வெளிப்பாடு, ஆணாதிக்கம் ஆகிய அம்சங்கள் பற்றிய கவனம் இரு நுால்களிலும் இல்லை என்பதே மிக முக்கியமான வெற்றிடமாகும். புலம்பெயர்வு அனுபவங்களும் புலம்பெயர்வும் பால்சார்ந்த அனுபவங்களாகவே (gendered experience) உள்வாங்கப்படுகின்றன. புலம்பெயர்வுச் சிக்கல்

களை ஆணிகளும் பெண்களும் எதிர் கொள்வது ஒரேமாதிரியாக அன்று. இந்த முக்கியமான அம்சமும் நுாலாசிரியர்களின் கவனத்தில் இருந்து தப்பி விட்டமையையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது €ቌò கோட்பாட்டு வெற்றிடமாகும்.
LIFT5, மிமர்களின் தேசியவாதப் இறு தமிழ
போராட்டங்களும் புலம்பெயர்வும் தோற்றுவித்திருக்கிற பெருந்துயரம், உயிரிழப்பு என்பன பற்றி இந்த நுால்கள் எனின சொல்கின்றன?
ஒன்றுமில்லை.
இந்த இடத்தில்தான் நவீன சமூக விஞ்ஞானங் களில் அறிவோடு, பட்டறிவும் உணர்வும் இணைய வேண்டிய தேவை உள்ளது என்பதை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது.
உசாத்துணை
Arasaratnam S (1982) The Historical Foundations of the Economy of the Tamils of North Sri Lanka, Jaffna. Thanthai Chelva Memorial Trust.
Arasaratnam S. (1994) "Sri Lanka's Tamils: Under Colonial Rule' in Manogaran C. and Pfaffenberger, B (eds) The Sri Lankan Tamils. Ethnicity and Identity, Boulder:Westview Press.
Daniel E Valentine (1996) Charred Lullabies: Chapters in an anthropography of Violence, Princeton, N.J: Princeton University Press.
Fuglerud Oivind (1999) Life on the Outside. The Tamil Diaspora and Long Distance Nationalism. London: Pluto Press.
Hellman Rajanayakam D (1994) "The groups' and the rise of militant seccessionism' in Manogaran C. and Pfaffenberger, B (eds) The Sri Lankan Tamils. Ethnicity and Identity, Boulder:Westview PreSS.
Pfaffenberger B (1982) Caste in Tamil culture. The Religious foundations of Sudra Domination in Tamil Sri Lanka, Syracuse: Maxwell School of Foreign and Comparative Studies.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 -99

Page 102
கனடாத்
d6606)
கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேல் கனடா வில் தமிழர்களின் குடியேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாள ஒன்றரையில் இருந்து இரணர்டு இலட்சம் தமிழர்கள் வரையில் குடியேறி விட்டதாக பல ஸ்தாபனங்கள் பலவாறாகக் கூறுகின்றன.பிறந்த மணினுக்குச் சற்றும் பரிச்சயமில்லாத கலாச்சாரம், சீதோஷ்ண நிலை நில அமைப்பு போன்ற முற்றிலும் மாறுபட்ட சூழலிலும் அயராத உழைப்பும் விடாமுயற்சியுமாக தமிழர்களின் வாழ்வு முன்னோக்கி நகர்கின்றது.
ஈழத்தமிழர்கள் எப்போதும் தாங்கள் படிக்கா விட்டாலும் தங்கள் பிள்ளைகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்கிற ஆழ்மன உணர்வு கொணர்டவர்கள். அதற்கமையவே இங்கும் குழப்ப சூழ்நிலையால் தங்களுக்குக் கிடைக்காத கல்வி தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி கற்றவர்களாக ஆக்குவதற்கு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள கல்வி முறை வித்தியாசமானது. பிள்ளைகளை அடித்து மிரட்டி முதலாம் பிள்ளை இரண்டாம் பிள்ளை என்று பிள்ளைகளைப் பிரித்து அந்த மாதிரியான சமாச்சாரங்கள் எல்லாம் கிடையாது. மாணவர்க ளுடைய ஊக்கமும் பெற்றோர்களுடைய ஒத்துழை ப்பும் மிக அவசியம். மற்றும்படி பாடசாலைகளில் சகல வசதிகளும் செய்து கொடுக்கிறார்கள். இதை விட இப்போது இங்கே தமிழர்கள் தனியார் ரியூசன் நிலையங்களும் பரவலாக ஆரம்பித்திருக் கிறார்கள். அதில் கனடிய பாடத்திட்டத்திற்கு அமைய பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அதைவிட பாடசாலைகளில் கொடுக்கப்படும்
- OO- வாழும் தமிழ் 2000 காலம் - 13

தமிழரும் களும்
குமார் முர்த்தி
வீட்டுப்பாடங்களுக்கும் உதவுகிறார்கள்.
இதில் கூடவே ஒரு பிரச்சினையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தாய் நாட்டைப் போலவே இங்கும் மூலைக்கு மூலை ரியூட்டரிகளை வைத்துப் பணம் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் கலாச்சாரத்தை இங்கும் தொடங்கி விட்டார்கள் என்பது சிலரின் குற்றச்சாட்டு. (சீனர்களும் இதைச் செய்கிறார்கள்) கனடியர்கள் புதுமுறை களில் கல்வி புகட்டப்பட வேண்டும் என்பவர்கள் வித்தியாசமான கல்விபுகட்டலுக்காக இதைச் செய்கிறார்கள். அவை ரியூட்டரிகள் போன்றவை அல்ல. பாடசாலைகளில் கற்பிப்பதையே திரும்ப வும் திருப்பிக் கற்பிப்பதில்லை. இலங்கையில் ரியூசன் ஒரு ஃபாசனாகி பின் பாடசாலையில் படிப்பிக்கும் ஆசிரியர்களே பாடசாலையில் சரியாகப் படிப்பிக்காமல் அதே மாணவர்களை ரியூட்டரிகளுக்கு வரச் சொல்லி பணம் வாங்கி வகுப்பெடுத்தார்கள். அப்படியான ஒரு நிலைமை இங்கு இல்லை. இங்குள்ள ஆசிரியர்களும் பாடசாலைகளும் தங்கள் கடமைகளையும் வழிமுறைகளையும் சரியாகத்தான் செய்கிறார்கள். இங்த வழிமுறைகள் எல்லாம் இங்கு ஆரம்பத்தில் இருந்தே கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குச் சரியாக இருக்கலாம். கல்வியைப் பாதியில் தொலைத்து விட்டு இங்கு வரும் தமிழ் மாணவர்களுக்கு மொழி மட்டும் அல்ல மற்றைய பாடங்களும் பிரச்சினையாகவே இருக்கின்றன. இதற்கு உதவுவதற்கு பெற்றோர்களால் முடியாது. ஏனெனில் அவர்களும் கல்வியைத் தொலைத்த வர்கள் தானே. எனவே, தனியார் கல்வி நிலையங்களை நாடவேண்டியது அவசியமா கின்றது, உழைக்கக்கூடிய வசதியிருப்பதால் நாம்

Page 103
கஸ்ரப்பட்டாவது பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடவேண்டும் என்ற என்கிற மனப்பான்மை இருக்கின்ற படியால் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தனியார் கல்வி நிலையங்களை நாடுகின்றனர். இந்தத் தனியார் கல்வி நிலையங்களில் பள்ளிப்பாடங்கள் மட்டுமல் லாது வாய்மொழி இசை, பியானோ, வயலின், மிருதங்கம், நாட்டியம், கொம்யூற்றர் போன்ற வகுப்புகளும் நடைபெறுகின்றன. பல பெற்றோர் கள் இந்த வகுப்புக்களுக்கும் தங்கள் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட இங்குள்ள வெளிச்சூழல் இளம் மாணவர்களைப் பலவிதமான பழக்கவழக்கங்களுக்கு இழுத்துச் செல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் வெளியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. புகைப்பது, குடிப்பது இன்னபிற சமாச்சாரங்களை யாரும் கண்டு கொள்ளவும் மாட்டார்கள். ஊரில் போல் சொந்தம், பந்தம் கண்டு வீட்டுக்குச் சொல்லி விடுவார்கள் என்கிற பயமும் இங்கு இல்லை. எனவே, பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் வெளியில் உலவும் இளம் மாணவர் கள் நானாவித பழக்கங்களுக்கு இலகுவில் அடிமையாகி விடுவது ஆங்காங்கே காணக்கூடி யதாக இருக்கின்றது. எனவே, பல பெற்றோர்கள்
இவைகளைத் தவிர்ப்பதற்காக பிள்ளைகளை ரியூச னுக்கு விடுவது, இசை, நடனம், விளையாட்டுப் போன்ற துறைகளில் பயிலவிடுவதும் காணக்
கூடியதாக உள்ளது, மாணவர்களைக் கண்காணிப்
 

புக்குள் வைத்திருப்பதற்கு இது ஒரளவு உதவுகி ன்றது எனப் பல பெற்றோர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இருந்தும் பத்துக்கு ஒன்று பழுது என்பது மாதிரி இளம் தமிழ் மாணவர்கள் சிலர் பாடசாலைகளிலும் வெளியிலும் கோஷ்டிச் சண்டை பிடிப்பது, துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களைப் பாவிப்பது புகைத்தல், குடித்தல், போதை வஸ்து பாவித்தல், மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுதல், பெண் பிள்ளைகளைத் தொந்தரவு செய்தல், போன்றவற்றிலும் சட்டத்தை மதிக்காமல் வேகமாக வாகனங்கள் ஒட்டுதல், விபத்துக்களை உருவாக்குதல், (பலர் இறந்துள் ளனர்) என்று பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், பெரும்பாலான மாண வர்கள் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி கல்லுாரிகள், பல்கலைக் கழகங்கள் என்று படிப்பைத் தொடருகின்றனர். பலர் கல்வியை முடித்து நல்ல வேலை வாய்ப்பையும் பெற்று ள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த நிலை இன்னும் அதிகரிக்கும் என்றே நம்ப இடமுண்டு.
தமிழீழச் சங்கம் பீ.ஏ. வகுப்புக்களை தமிழகப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகி றார்கள். அதில் கல்வி கற்பிப்பவர்களின் தகுதி
பற்றிய கேள்விகளைச் சிலர் வைத்துள்ளனர். அதால் கிடைக்கும் சான்றிதழ் பற்றியும் கேள்விகள் எழுகின்றன.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 - Ol

Page 104
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முதுமொழி உண்டு அதை அச்சொட்டாக நிறைவேற்றிக் கொணர்டிருப்பது நிச்சயமாக கனடாத் தமிழராகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சாதாரண கடை கணிணி திறப்பது போன்று அகப்பட்ட இடமெல்லாம் கோயில் திறக்கிறார்கள். பூணுால் போட்ட ஒரு ஆசாமி ஒருவர் அகப்பட்டால் போதும். அடுத்தது கோவில் தான். கோயில் இப்போது நல்ல வருமானம் தரக்கூடிய வியாபாரமாகி விட்டது. கோயில் தொடங்கி கொஞ்ச நாட்களுக்குள் சொந்தமாகக் காணி வாங்கி கோயிலைக் கட்டப் போகிறோம் என்று தொடங்கி விடுவார்கள். இருக்கவே இருக்கின்றன வானொலிகள், பத்திாபிகைள், தொலைக்காட்சிகள், யார் எப்போ கோயில் திறப்பார்கள் என்று நேர்முக வர்ணனைகள், பூசை, புனஸ்காரம் பற்றி அறி வித்தல்கள் என்று அமர்க்களப்படுத்தி விடுவார் கள். பிள்ளையார் கதை தொடங்கி நாயனார் குருபூசை ஆழ்வார் குருபூசை என்று முப்பது நாளும் பூசைகள் இருந்து கொண்டே இருக்கும். பக்த கோடிகளுக்கும் அவர்கள் கோயிலுக்குப் போகும்போது ஏதோ ஒரு பூசை இருந்தால் போதும். ஐந்து, பத்து டொலர் என்று அர்ச்சனை செய்து புணர்ணியத்தை வாங்கி கட்டிக் கொள்வார்கள். தாய்நாட்டு ஏக்கம், g உளைச்சல், பாரம்பரிய வழிபாட்டு முறை என்று வயது முதிர்ந்தவர்களும் நடுத்தர வயதினரும் கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவது காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அடுத்த இளம் தலைமுறையினர் கோயிலை நாடுவது மிகக் குறைவுதான். ஏனென்றால் நவீன உலகம் அவர்கள் முன் விரிந்து கிடக்கிறது. பாரம்பரிய வழிபாட்டுமுறை, தாய்நாட்டு ஏக்கம் போன்ற உணர்ச்சிமயமான பிரச்சினைகள் அவர்களைப் பொறுத்தவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. அதுவும் தவிர, திருமண உறவு முறைகள், குடும்ப உறவு முறைகள், பலமான கேள்விக்குள்ளாகிக் கொண்டு வரும் இந்த மேற்கு நாடுகளில் வசிக்கும் இந்த இளம் தலைமுறையி னருக்கு கடவுள் கோயில் என்பதெல்லாம் மனதிலோ வாழ்க்கையிலே பெரிய இடத்தைப் பிடித்து விடுவது சாத்தியமில்லை. அதைவிட இங்கு வளரும் தலைமுறையினர் பணத்தைக் கையாளும் விதமும் முதிய தலைமுறையினரை விட மிகவும் வித்தியாசமாகமாக இருக்கின்றது. தங்கள் கையில் இருந்து பணம் வெளியேறும்போது அதற்காக பெறுமதியை எடைபோட்டு பார்க்கிறார்கள்.
- O2- வாழும் தமிழ் 2000 காலம் - 3

ஆனால் இந்த முதியவர்கள், நடுத்தர வயதினர் கோயில் காரியம், ஊர்க்காரியம் என்றால் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். எனவே தான், பத்து இலட்சம் பதினைந்து இலட்சம் என்று கோயில் கட்ட முனைந்துள்ளனர். இன்னும் பலர் கோவில் கட்டுவதற்கு ஒடுப்பட்டுக் கொண்டு திரிகின் றார்கள். இவர்களுக்கு முன்னாலுள்ள பிரச்சினை என்னவென்றால் என்ன பெயரில் கோயில் தொடங்குவது என்பது தான். ஏனென்றால் ஊரில் உள்ள எல்லாக் கடவுள் பெயரிலும் இரணர்டு இரண்டு வீதம் தொடங்கியாகி விட்டது. அதை விட எல்லாக் கோயில்களிலும் வஞ்சகம் இல்லா மல் எல்லாக் கடவுள்களுக்கும் குட்டி குட்டியாக சின்னப் பிரகாரமும் உண்டு. ஒரு கோவிலுக்குச் சென்றால் மொத்தமாகவும் சில்லன்றயாகவும் வேண்டும் வரத்தைப் பெற்று ஏகலாம் என்ற நிலை இருக்கின்றது. இருந்தாலும் கோவில் தொடங்குபவர்களின் முயற்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்ற்து. “போனால் கிடையாது. பொழுதுபட்டால் கிட்டாது” என்பதுபோல் இந்த முதிய நடுத்தர வயது தலைமுறையினரின் காலத்துக்குள் கோவிலைக் கட்டி நாலு காசு பார்த்தால் தான் உண்டு. அதற்குள் தப்பித்தவறி இலங்கைப் பிரச்சினை தீர்ந்து விட்டால் கணிசமான முதியவர்கள் ஊர் போய்ச் சேர்ந்து விடுவார்கள். அந்தச் சிக்கலையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த இளம் தலைமுறையினரைக் கவருவதற்கு தள்ளுபடி(Sale) அல்லது ஒன்று வாங்கினால் 696igpi g)607 tib (buy one, get one free) Gut6igpi கவர்ச்சிகரமாக ஏதாவது செய்தால் வந்து அர்ச்சனை செய்துவிட்டுப் போவார்களோ என்னவோ? ஏனென்றால் இந்த நாட்டில் அது ஒரு பழக்கமாகவே போய்விட்டது. எது எப்படியோ இங்கே கட்டப்படும் கோவில்களுக்கு அடுத்த தலைமுறையினரால் பெரிய வருமானம் எதுவும் கிடைத்து விடாது. போனால் அந்தக் கோவில்களின் நிலை சிக்கல் தான். இங்கும் சேர்ச்சுக்களுக்கு இளம்தலைமுறையினர் செல்வது கணிசமான அளவு குறைந்து விட்டது. அதனால் பல சேர்ச்சுக்கள் வாரத்தில் ஒருநாள், இரண்டு நாள் திறப்பது என்றாகி வருகின்றது. இருந்தாலும் அரச, திருச்சபை உதவிகளால் அந்த சேர்ச்சுக்கள் தொடரக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் தமிழ்க் கோயில்களுக்கு அந்த உதவிகள் கிடைப்பது சந்தேகம் தான். அதைவிட பென்டிக்கோஸ்ற், யெஹொவாவின் சாட்சி போன்ற மதப்பிரிவினர்

Page 105
இங்குள்ள தமிழர் மத்தியில் மிகக் கடுமையாக பிரச்சாரம் செய்து பல தமிழர்களை மதம்மாற்றி வருகிறார்கள். ஈழத்தில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து பல போதகர்கள் அடிக்கடி வருகிறார்கள். பிரச்சாரம் பணிணுகிறார்கள். அதில் சோதனை யான விடயம் என்னவென்றால் இந்து சமயத் தைப்பற்றி தரக்குறைவாகவும் கேலியாகவும் விமர் சித்து இங்குள்ள சாதாரண தமிழர்களை மனம் மாற்றுவதுதான் அதற்கு இலகுவாக எல்லா வியாதிகளையும் சொஸ்தமாக்குகிறோம். பேர்வழி கள் என்று கொஞ்சம் வியாதி உள்ளவர்கள் வீடுகளுக்குள் (மனிதன் என்றால் ஏதோ ஒரு வியாதி இருக்கத்தானே செய்யும்) புகுந்து விடுகிறார்கள். பின் அந்தக் குடும்பம் சொந்தம் பந்தம் என்று விரிவடைந்து செல்கின்றது. “ஒரு மனிதனுக்கு அவன் தான் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அவனுக்குத் தான் உண்டு” ஆனால் அவனது பலயினமான காரணங்களை உணர்வு பூர்வமாக துாண்டி அவனைத் தங்கள் பால் ஈர்ப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்து சமயத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இன்று நேற்றல்ல. ஆயிரம் வருடங்களாக தொடர்வது தான். நவீன யுகத்தில் வாழும் நாம் இந்த மூட நம்பிக்கைகளைக் களைவதற்கு பதிலாக அதை வேறொரு வடிவத்தில் மனித மனங்களில் புகுத்துவது எந்தவிதத்தில் நியாயம் உலகத்திலேயே அதிகபட்ச மருத்துவ வசதி கொண்ட நாடு கனடா அதைவிட இங்கு அனைத்து மருத்துவ வசதியும் இலவசம் இருந்தும் இலங்கையில் இருந்தும் பல போதகர்கள் இங்குவந்து “எல்லாவிதமான பொருட் களும் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் மலிவுவிலையில் பெற்றுக் கொள்ளலாம்” என்று வியாபாரிகள் விளம்பரம் பண்ணுவது மாதிரி இங்கே வாருங்கள் எல்லாவியாதிகளையும் மொத்த மாக சொஸ்தமாக்குகிறோம் என்று தொடர்புச் சாதனங்களில் அடிக்கடி விளம்பரப்படுத்தி மக்களைக் கூப்பிட்டுகிறார்கள். எண் சிற்றறிவுக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. அநியாயத்துக்கு இலங்கையரசினர் அக்கிரமத்தையும் மருந்துத் தடையும் தாங்கி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் ஈழத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் வியாதிகளைச் சொஸ்தமாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. ஆனால் அந்த மக்களுக்கு அதுதான் விதி என்று அந்த ஆண்டவனே சொல்லி விட்டானாக்கும் என்று மனதையும் தேற்றிக் கொள்ளுவேன்.

இப்போது இங்கே சங்கங்களின் திருவிழா சீசன். ஈழத்தில் உள்ள பாடசாலை, பெயரில், ஊர் பெயரில் பழைய உத்தியோகத்தர் பெயரில் என்று ஏகப்பட்ட சங்கங்கள். அவர்கள் ஒன்றுகூடல்கள், கலைநிகழ்ச்சிகள் இராப்போசன விருந்துகள் என்று சமர்வந்து விட்டால் ஒரே அமர்க்களம் தான். ஆனால் எல்லாச் சங்கங்களின் மேடைக ளிலும் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போது தானி ஈழம் கிடைக்கும் என்று ஞானம் புகட்டுவார்கள். பின் அந்தச் சங்கங்களே இரண்டாகப் பிளந்து ஆளுக்காள் வசைபாடு வார்கள். போட்டிச் சங்கம் உருவாக்குவார்கள். இப்படித்தான் நிலைமை போய்க் கொணர்டி ருக்கின்றது. இங்கும் தலைவர்கள் தயார். சங்கம் தானி இல்லை. இல்லை என்றால் பெயர் தட்டுப்பாடு. அதுதான் ஐயா பிரச்சினை. (இதோ என்னால் முடிந்த உதவி. ஒ.எல் தேறியவர்கள் சங்கம், ஏ.எல் தேறியவர்கள் சங்கம், முன்னாள் திருடர்கள் சங்கம், முன்னாள் கார் வைத்திருந் தோர் சங்கம், கல்விடு வைத்திருந்தோர் சங்கம், இன்னும் பல கைவசம் இருக்கின்றன) ஆனால் சங்கங்களால் தீமைகள் என்று நான் சொல்லவில்லை. நன்மைகளும் நிறைய உண்டு. ஒரு சிறு சமூகத்திற்குள் பிரிவினை மேலும் ஆழமாகிக் கொண்டே வருவது தான் கவலைக்கு ரியது. இந்த ஒன்றுகூடல்கள், கலை விழாக்கள், மொழி, கலாச்சாரம் போன்ற பாரம்பரிய வழிமுறைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகின்றார்கள் என்பது நல்ல விடயம்தான். ஆனால் அதுவே ஆகக் குறுகிய வட்டங்களாக மாறிவிடக் கூடாது. அல்லது பகைமை உணர்வாக மாறி விடக் கூடாது என்பது தான் கவலை. எனக்கு தெரிந்தவரையில் ஊர்ச் சங்கங்களில் உறவுகளும் சொந்தங்களும் அதிகமா கக் காணப்படுவார்கள். சங்கத்தில் ஏற்படும் பிரச்சினை நாளடைவில் சொந்தப் பிரச்சினை யாக மாறிவிடும் நிலை பல சங்கங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. இதனால் காலப் போக்கில் இளம் தலைமுறையினர் தங்கள் உறவுகளையே அடையாளம் காண முடியாத நிலைக்கு பிளவுகள் உருவாக வாய்ப்புக்கள் உண்டு. இந்த நாட்டில் ஒருவரை அல்லது ஒரு சமூகத்தை நம்பி மற்றவர் வாழ வேண்டிய தேவை அல்லது நிலை இல்லாதபடியால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீவாக மாறி தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விடும் அபாயம் அதிகமாக உள்ளது.
வாழும் தமிழ் 2000 காலம் - 3 - O3

Page 106
பொதுவாக ஈழத் தமிழர்கள் தமிழ் மொழியையே தங்கள் தேசிய அடையாளமாக முதன்மைப்படுத்து கின்றனர். எனவே, மொழியை அடுத்த தலைமு றையினருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தான் தமிழ்த் தேசியம் தனி சுயத்தை அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலை முறை தமிழை எந்தளவு துாரத்துக்கு பயன்பாட்டு மொழியாக உபயோகிப்பார்கள் என்பது சந்தே கத்துக்குரிய ஒன்றுதான். ஏனென்றால் அவர்கள் வாழும் நாட்டுப் பொதுமொழி தான் எல்லாவற் றிற்கும் பயன்படுத்தப்படும். ஆக வீட்டிலும் உறவுகளுடனும் தான் தமிழ் பயன்படுத்தப்படும். அதுவும் அடுத்த தலைமுறையினருக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தால்தான் இது சாத்தியம். ஆனால் கனடாவில் வளரும் இளம் தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய வார்த்தைகளே தெரியுமளவிற்கு நிலைமை இருக்கின்றது. ஒரளவுக்கு படித்த பெற்றோர்கள் அவர்கள் வீடுகளிலும் ஆங்கிலத் தையே உபயோகப்படுத்துவதால் அவர்கள் பிள்ளைகள் தமிழ் மொழியின் அரிச் சுவடி கூடத் தெரியாமல் வளர்கின்றார்கள். ஆனால் கல்வி யறிவு குறைந்த சாதாரண தமிழ் மக்கள் வீட்டுப்பாவனைக்கு தமிழைப் பயன்படுத்துகி றார்கள். இதனால் இவர்கள் பிள்ளைகள் வீட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக இருக்கின்றது.
அதைவிட இங்குள்ள கல்விச் சபைகள் வாரத்தில் ஒரு சனிக்கிழமை அல்லது பாடசாலை நாளாக இருந்தால் இரண்டு நாட்கள் தாய் மொழிக் கல்விக்கு ஒதுக்கி அதற்காக அந்தந்தச் சமூகத்தில் உள்ள ஆசிரியர்களையும் நியமித்து கற்றுக் கொடுக்க வழி செய்துள்ளார்கள். அதில் தமிழும் ஒன்று. இப்படித் தமிழ் கற்க கணிசமான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கிறார்கள். இதிலும் சாதாரண பெற்றோர்கள் தான் அதிகமாக அக்கறை எடுத்து பிள்ளைகளை அனுப்புகிறார்கள். பொதுவாகவே இளம் பிராயத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்பது பெரிய கஸ்ரமான விடயமல்ல, ஆனால் அதை இலகுவாக்கிக் கற்பிக்கும் வழிவகைகளை ஆசிரியர்களும் பாட நுால்களை தயாரிப்போரும் செய்ய வேண்டும். இலகுவான பாடநூால்கள் தமிழில் இல்லாத பெருங்குறையே. இன்னும் ஆத்திசூடியும் கொன்றைவேந்தனுமா எமக்கு வேண்டும். அதில் உள்ள சொற்கள் பல
- O4- வாழும் தமிழ் 2000 காலம் - 13

வழக்கிழந்தவை. ஒளடதம், உண்டி போன்றவை உதாரணங்கள். தமிழ் மொழி என்ற அந்தஸ் திலிருந்து கீழிறங்கி இரண்டாவது மொழியாக இறங்கியதற்காக மார்பில் அடிக்கத் தேவையில்லை. இரண்டாம் மொழியாகவாவது படித்தால் போதா தா? எம்மில் பலர் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகத்தான் பயின்று 6 பெரிய உத்தியோகங்களை இன்று பார்க்கின்றனர்.
அதைவிட இங்கு வளரும் பிள்ளைகள் இருவகை யான கலாச்சார சூழலில் வளர்கிறார்கள். வீட்டை விட்டு வெளியில் கால் வைத்தால் அந்தந்த நாடுகளில் உள்ள பொதுக் கலாச்சார மொழிக்கு தங்களை மாற்ற வேண்டும். வீட்டுக்குள் வந்தவு டன் தமிழ் கலாச்சாரத்திற்கு மாற வேண்டும். வீட்டில் இருக்கும் நேரத்திலும் ரிவி, கொம்யூற்றர் போன்றவை பொதுக் கலாச்சாரத்தையே கொடுக் கின்றன. எனவே, மிகக் குறைந்த நேரத்தில் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய சூழலில் இங்குள்ள இளம் தலைமுறை யினர் இருக்கின்றனர். இவர்களுக்கு உரல், உறி, ஒளடதம் என்று தமிழ் நாட்டுப் புத்தகங்களைக் காட்டினால் எப்படிச் சுவாரசியம் வரும். ஆனால் சங்கம் வைத்து தமிழை வளர்க்கிறோம் என்று சொல்கிறார்களே ஒழிய இப்படியான பிரச்சி னைகளுக்கு தீர்வு காண்பதற்கு உருப்படியான செயல்களைச் செய்வதில்லை. படித்த கோட் சூட் போட்டவர்கள் சன்கம் வைத்து டமில் வலர்க்கி றார்கள். சாதாரணமானவர்கள் சங்கம் வைக்கா மலே தங்களுக்குத் தெரிந்த தமிழை வளர்க்கி றார்கள். இது தான் இங்குள்ள நடைமுறை.
புலம்பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை மறந்து விடும். பிஜி, கயானா, தென்னா பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆகி விடுவார்கள் என்று சிலர் கூப்பாடு போடுகிறார்கள். அதில் அதிக அர்த்தம் இருப்பதா கத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் இருந்து அன்று சென்ற அந்தத் தமிழர்களுக்கும தமிழ் நாட்டுக்கும் தொடர்பு முற்றாக அறுந்து போய் விட்டதால் அடுத்தடுத்து வந்த தலைமுறைகளுக்கு தமிழைப் பேண முடியாமற் போய் விட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ், கட்டைபிராய் சந்தியில் நடக்கும் கடையடைப்பு கால் மணி நேரத்தில் கனடா ஸ்காபரோவில் கதையாகப் பரவிவிடும். பளையில் விளைந்த பனங்கிழங்கு தோலோடு இங்கு கிடைக்கின்றது. ஆக தாய் நாட்டுடன் ஆன தொடர்புகள் மணத்தியால

Page 107
இடைவெளிதான். விடுமுறைகளுக்கும் நன்மை தீமைகளுக்கும் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஈழத்துக்கு போய் வர முடியாத யுத்த சூழல் ஒன்று இப்போது இருக்கின்றபடியால் இளம் தலைமுறையினர் தங்கள் பெற்றோர், பாட்டன் பிறந்து வளர்ந்த தங்கள் வேர் மணிணைப் பார்க்க முடியாத அந்தக் கலாச்சாரம், மொழி அவல நிலை உள்ளது. அந்த நிலை மாறியதும் (ஒரு நம்பிக்கை தான்) அங்கு போய் வாழ்வார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் வருடத்தில் ஒரு தடவையாக போய்வர வாய்ப்புணர்டு. அத்துடன் இங்குள்ள தமிழ் தொடர்புச் சாதனங்கள் - ரி.வி, றேடியோ- இளம் தலைமுறையினருக்காகச் சில நிகழ்ச்சிகளைச் செய்கின்றார்கள். பத்திரிகைகளும் சிறுவர்களுக் கான பகுதிகளை வெளியிடுகின்றன.
அதைவிட தமிழ் நாட்டில் இருந்து வரும் சினிமாப்பாடல்கள், நடனங்கள், சிறுவர் இசை நிகழ்ச்சிகள், என்பனவும் இளம்தலைமுறையினரை வசீகரித் திருக்கின்றன. ஆனால் இந்தப் பார்த்தல், கேட்டல் என்ற ஊடகங்களூடாக வளரும் வேகத்தில் பத்தில் ஒரு பங்குகூட எழுதல், வாசித்தல் போன்றவற்றில் தமிழ் வளரவில்லை என்பது கவலைதான். பல புத்தகக் கடைகள், புத்தகக் கண்காட்சிகள் என்பவற்றில் தாராளமாகப் புத்தகங்கள் கிடைத்தாலும் மேற்சொன்னபடி இலகுவான கற்பித்தல் முறை இல்லாததால் சிறார்கள் மத்தியில் ஆர்வத்தைத் துாண்ட முடிவதில்லை. இப்போது எல்லார் வீடுகளிலும் கொம்யூற்றர் இருக்கின்றது. கொம்யூற்றர் மூலம் தமிழ் கற்பதற்கு ஒரளவு வசதிகள் இருக்கின்றன. அதை உபயோகித்தால் எழுதல், வாசித்தல் இன்னும் வேகமாக வளரச் சாத்தியம் உணர்டு
இப்போது கனடாவில் தமிழ்த் தொடர்புச் சாதனங்கள் பல்கிப் பெருகி உள்ளன. தினமும் தோன்றிக் கொண்டும் இருக்கின்றன. தொலைக் காட்சி (இது வாரத்தில் ஒருசில மணித்தியா லங்கள்) வானொலி (அதுவும் அனேகமானவை இருபத்து நாலு மணிநேரம்) பத்திரிகைகள் (அனேகமானவை இலவசம்), சஞ்சிகைகள், இணையம், மின் அஞ்சல் என்று சகலவிதமான தொடர்பூடகங்களும் உள்ளன. இவற்றின் ஊடாக செய்திகள், சினிமாப் பாடல்கள், இலக்கியங்கள், விஞ்ஞானம், கொம்யூற்றர் சம்பந்தமான தகவல்கள் எல்லாவற்றையும் தமிழ் மக்கள் பெறக்கூடியதாக

இருக்கின்றது. பெரும்பாலான தொடர்புச் சாதனங் களில் பெரும்பான்மையாக ஈழத்தில் நடக்கும் போராட்டம் பற்றியும் நிதி சேகரிப்பு பற்றியும் தான் ஆக்கங்கங்களும் நிகழ்ச்சிகளும் இருக் கின்றன. இது தவறென்று சொல்லாவிட்டாலும் அளவுக்கதிகமாக இருப்பது அவ்வளவு இரசிக் கத்தக்கதாக இல்லை. ஈழச் செய்திகள் இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள் இவற்றினுாடாக உடனடியாக அறியக் கூடியதாக உள்ளது. (சுடச் சுட, சொட்டச் சொட்ட, முந்தி முந்தி என்று சொல்லிச் செய்தி வாசிக்கும்போது தான் மன சுக்கு ரொம்பக் களில்ரமாக இருக்கும்) அனேகமான வானொலி ஒலிபரப்புக்களெல்லாம் நேரடி தொலைபேசி உரையாடல்மூலம் நேயர்களின் கருத்துக்களை வானலையில் கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக CTBC என்கின்ற வானொலி நிலையத்தினர் முதி யோர் அரங்கம் என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் இங்குள்ள முதியவர்களுடன் உரையாடுகின்றனர். தனிமையும், ஊரையும், மண்ணையும் பிரிந்தி ருக்கும் ஏக்கமும் உற்ற சுற்றத்தை இழந்த தவிப்பும், குடும்ப கசாமுசாக்களின் மனச் சோர்வும் என்று முதியவர்களின் நிலை சோகமா னது. முதியோர் அரங்கத்தின் மூலம் இவர்களுக்கு சற்று ஆறுதல் கிடைப்பது பாராட்டப்பட வேணர்டிய விடயம்.
பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் பொறுத்தவரை முக்காலே மூணுவீசம், ஈழப்போராட்டம் பற்றியதான செய்திகள், கட்டுரைகள், கதை, கவிதை என்று ஒரே கோஷமயம் (மரத்துக்குக் கீழ், பங்கருக்குள்ளே, குணி டுச் சத்தத்துக்குள் இல்லாமல், பசி, பட்டினி, ஆமி கெடுபிடிக்குள் அகப்படாமல், சயன, போசன, விருத்தி என்று எல்லா செளபாக்கி யங்களோடும் இருக்கின்ற படியால் துணிவோடு வீரம் கொப்பளிக்க எழுதும் எழுத்தாளர்கள் நிறையவே இருக்கிறார்கள்) மற்றும்படி இங்குள்ள வாழ்க்கைச் சூழல், இன முரண்பாடு, குடும்ப உறவு, வேலை நிலை ஏனைய சமூகத்தவர்களின் பார்வை போன்றவைகளைக் கருப்பொருட்களாகக் கொண்ட இலக்கியப் படைப்புக்கள் மிகச் சொற்பமே வெளிவருகின்றன. புலம்பெயர்ந்த இலக்கியத்தில் தமிழ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அச்சுப்பதிப்பு, வடிவமைப்பு போன்றவைகளில் இங்குள்ள பத்திரி
கைகள் நல்ல முன்னேற்றம் கணிடுள்ளன.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 - O5

Page 108
ஆனால் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழை கள், சந்திப் பிழைகள் தான் சகிக்க முடியவில்லை. தொலைக்காட்சி பற்றி பெரிதாக ஒன்றும் சொல்தற்கில்லை. அரைமணி நேர நிகழ்ச்சியில் சினிமாப்பாட்டுக்கு ஆட்டம், நடனம், பேட்டி அல்லது கோவில் திருவிழா பற்றியது போன்றவற்றுடன் முடித்துக் கொள்வார்கள்.
வாழ்வியல், குடும்பப் பாரம்பரியம், பெறுமதிகள் போன்றவை பற்றிய ஒரு ஆழமான ஆய்வு 5. It தமிழ்ச் சமூகத்திற்கு அவசியம் தேவைப்படுகின்றது. ஏனென்றால் குடும்பம், கூட்டுக் குடும்பம், உறவு வட்டம், ஊர் வட்டம் என்று ஒரு படிமுறையின் கீழ் தாய் நாட்டில் வாழ்க்கை முறை அமைந்திருந்தது. அதைவிட, ஒன்றில் ஒன்று தங்கி வாழும் பொருளாதார முறைமையும் அமைந்திருந்தது. இதனால் மனித ருக்குள் ஏற்படும் உள்ளார்ந்த பிணக்குகளான கணவன், மனைவி சச்சரவு, சகோதரச் சண்டைகள், பெற்றோர் பிள்ளைகள் பிணக்குகள், உறவுக்காரர்களோடு ஏற்படும் உரசல்கள் அனேகமானவை பெரியவர்களாலும் சுற்றத்த வர்களாலும் முடிவுற வைக்கப்படுகின்றன. இளம் தலைமுறையினரை பெற்றோர்களைத் தவிர உற்றாரும் ஊராரும் கூட கண்காணிக்கின்றனர். அத்தோடு தாய்நாட்டில் பெரும்பாலானவர்கள் கிராமிய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டவர்கள், யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து முன்னேறிய நாட்டின் பெரிய நகரத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்ப தனால் ஒப்பீட்டு ரீதியில் ஏற்படும் குழப்பங்கள் மனித உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், மனங்க ளில் ஏற்படும் மாற்றம், பொருளாதாரத்தில் ஏற்படும் வீக்கம் போன்றவைகளுக்கு முகங்கொ
டுக்க வேண்டியவர்களாகின்றார்கள்.
பெருநகரங்களில் சமூகங்கள் சிதைந்து தனி மனிதனே சமூகமாகிறான். இதனால் தனிமனித 3. சுதந்திரம் நிறையவே கிடைக்கின்றது. இங்கும் தனிமனித சுதந்திரம் அதிகபட்சமாகவே இருக்கி னிறது. அத்துடன் பொருளாதார வசதியும் இருக்கின்றது. இது பல தமிழ்க் குடும்பங்களில் உள்ளக முரணி பாட்டைக் கூர்மையடையச் செய்கின்றது. பெரும்பாலும் தாய் நாட்டில் ஒரு ஆணாதிக்க சமூகநிலைப்பாடே நிலவி வந்தது. பாரம்பரியமாக வந்த இந்த ஆணாதிக்க நிலையை இங்கும் ஆணர்கள் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள் அல்லது அவர்களை அறியாமலே
- OÓ- வாழும் தமிழ் 2000 காலம் - 3

அவர் எண்ணங்களில் அது ஊறியுள்ளது. மற்றப் பக்கத்தில் பொருளாதாரம் சமூகம் கலாச்சாரம் என்ற தளைகளுக்குள் திணறிக் கொண்டிருந்த பெண்கள், இங்குள்ள பொருளாதாரச் சுதந்திரம், பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம், பெண்க ளுக்கான அரச உதவி போன்றவற்றை நுகரத் தொடங்கியதும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கட்டுமானமும் மதிப்பீடுகளும் உடையத் தொடங்குகின்றன. அதேநேரத்தில் இங்குள்ள பெரும்பாலான ஆண்கள்(தமிழ்) இந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு தங்களை மறுபரிசீ லனை செய்யவோ முன்னேறிய உலகத்தின் சமூக மாற்றம் பற்றி அறிந்து அதற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ளவோ முயலுவதில்லை. இதற்கு அவர்களையும் முழுஅளவில் குறைசொல்ல முடி யாது. ஏனென்றால் முதலாவது மொழிப்பரிச்ச மின்மை அடுத்தது ஏகப்பட்ட கடன் தொல்லை கள், ஆள் எடுப்பு என்பன போன்ற சுமைகள் இருப்பதால், வேலை, வேலை என்று முழுநே ரத்தையுமே செலவிடுகின்றனர். அதைவிட தங்கள் சொற்படியே மனைவியும் பிள்ளைகளும் நடக்க வேணர்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். மறுபக்கத்தில் பெண்களின் (தமிழ்) மதிப்பீடுகள் வேகமாக மாறுகின்றது. உணர்மையாகவே இருக்கும் அடக்குமுறைைையச் சகிக்க முடியாமை, அரசின் வசதிவாய்ப்புக்களை சாதகமாக்கி முரண்படுதல் என்று முரண்பாடு கூர்மையடை கின்றது. இதன் அடுத்த கட்டமாக சிறிய அளவி லான அல்லது பெரிய அளவிலான வன்முறை கள் அடித்தல், துன்புறுத்தல் என்று தொடங்கு கின்றது. மனைவியோ, பிள்ளைகளோ, பக்கத்து வீட்டுக் காரரோ காவல்துறைக்கு அழைப்பு விடுப்பார்கள். பெற்ற பிள்ளையாயினும் கையை உயர்த்தக் கூடாது என்பது சட்டமாகையால் மறியல், வழக்கு என்று சகல சம்பிரதாயங்களும் நடக்கும். இந்த வகையான நடைமுறைகளால் கால்வாசிக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் நிரந்தரமாகப் பிரிந்தும் வாழ்ந்து கொண்டிருப் பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்க ளின் பிரிவு பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும்பாதிப்பைக் கொடுக்கின்றது. இங்குள்ள சமூக நிலை ஒற்றைப் பெற்றோர் (single parent) என்பதற்கு அங்கீகாரம் கொடுத்துள் ளது. எனவே, சமூகத்தில் வாழும் தமிழர்களுக்கும் இந்நிலையில் ஒரு பரிசோதனையும் பரிச்சியமும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. சட்டப்படி திரு மணம் செய்யாமல் இணைந்து வாழ்வது பிரிந்து வாழ்வது

Page 109
மறுமணம் செய்து கொள்வது ஒருபால் தம்பதிகளாக வாழ்வது போன்ற கனடாச் சமூகத்தின் சாதாரண நடைமுறைகளும் தமிழ்ச் சமூகத்திற்குள் ஒரளவு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அடுத்தது, இங்கு வந்துள்ள முதியவர்கள் நிலை. எங்குமே ஒரு சோகம் அப்பியதாகவே இருக்கின்றது. யுத்தக் கெடுபிடிகள் இல்லாமை, அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காத நிலையில் இருந்து மீண்டது, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இணைந்தது போன்ற மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் இருந்தாலும் முற்றிலும் வேறுபட்ட சீதோஷ்ண நிலை, மொழி, கலாச்சாரம், போன்ற சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ‘ஒற்றை வேட்டி யுடன் அல்லது சேலையுடன் வேகிற வெயிலிலும் வியர்க்க விறுவிறுக்க சுதந்திரமாக கைவீசி நடந்தவர்கள் இங்கு உடுப்புக்கு மேல் உடுப்புக் கள் மாட்டி பாரமான வின்ரர் சப்பாத்தையும் போட்டு வீதியில் இறங்கி நடப்பதே ஒரு சித்திரவதைதான். இதற்குப் பயந்து பெரும்பாலா னவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் மன உழைச்சல், உடல் உழைச்சல் போன்றவற்றால் இலகுவில் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். ஊரில் இருந்து நல்ல திடகாத்திரமாக வந்தவர்கள் கூட சிறிது காலத்தில் நோய்வாய்ப்பட்டவர்களாக மாறி விடுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அடுத்து, முதிய பெற்றோர்கள் பிள்ளைகளால் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது பாராமுகமாக நடத்தப்படுகிறார்கள் என்கிற சர்ச்சை இங்கு பரவலாக எல்லோராலும் பேசப்படுகின்றது. வானொலி, பத்திரிகைகளிலும் இந்த விவாதங் களைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இங்குள்ள் முதியவர்கள் பெரும்பாலானவர்களுக்கு வயது முதிர்ந்தவர்களுக்கான அரச உதவிப்பணம் (Old Age Security Pension) faoi-g glaoi, pg. அப்பணத்தைப் பங்கீட்டுக் கொள்வதிலேயே பிள்ளைகள் குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுக 'கள் உள்ளன. இதனால் ஏற்படும் பிணக்குகளால் பல முதியவர்கள் முதியவர் இல்லங்களில் (Seniors' Home) சென்று தனித்து வாழ்கிறார்கள். பொது வாக மேற்கு நாட்டு கலாச்சாரத்தில் பதினாறு வயதுக்கு மேற்பட்டால் பிள்ளைகள் பெற்றோர் களில் தங்கி வாழ்வதும் மிகக் குறைவு. அதேபோல பெற்றோரும் பிள்ளைகளிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் தமிழ்க் கலாச்சாரத்தில் பெற்றோரின் முழுச் சக்தியுமே

பிள்ளைகள் மேல் செலுத்தப்படுகின்றது. ஆரம்பத் தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், பின் குழந்தைப் பராமரிப்பு என்று இவர்களின் நீண்டு கொண்டே போகும். அதற்கு பிரதி யுபகாரமாக அவர்கள் எதிர்பார்ப்பது கடைசி காலங்கள் வரை பிள்ளைகள் தங்களை மதிப்பது, பராமரிப்பது. இறந்தபின் செய்யப்படும் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றுவது போன்ற ஆத்மார்த்த மான விடயங்களைத்தான். இது நீண்ட காலமாகத் தாய்நாட்டில் இருந்து வரும் ஒரு பாரம்பரிய முறைதான். ஆனால் இந்த மதிப்பீடுகள் மேற்கு நாட்டின் இயந்திர வாழ்க்கை முறையும் எப்போதுமே தேவைப்பட்டுக் கொண்டிருக்கும் பணத்தின் தேவைகளாலும் திடீர் மாற்றமடை கின்றன. படிப்படையான மாற்றங்களைச் சந்திக்காமல் எந்தவித முன் அனுமானமுமின்றி வந்திறங்கி இருக்கும் இந்த முதியவர்களுக்கு இந்த மாற்றம் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இந்த முரணிகள் கூர்மையடையும் போது உடல், உள உழைச்சல், தனித்துப்போதல், மீண்டும் தாய் நாட்டுக்குத் திரும்புதல் (ஒரிரு தற்கொலைகள்) போன்றவைகள் இடம்பெறு கின்றன. இதற்கு இப்பொழுது அரசின் கீழ் செயல்படும் முதியவர்கள் நலன் பிரிவு ஒருசில தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து, ஆலோ சனை, உதவி போன்றவைகளை வழங்கி வருகின் றன. ஆனால் இவை மிகச் சிறிய அளவில்தான் நடைபெறுகிறபடியால் பரவலான பலன் ஏற்பட இன்னும் சிலகாலம் தேவைப்படும். ஆனால் தாய் நாட்டின் நிலை சீரடைந்ததும் உடனே சென்று விடுவோம் என்று சொல்லும் முதியவர்களையே அதிகமாகக் காண முடிகிறது.
(கனவுகள் தொடரும்)
விரைவில் சேரனின் கவிதைகளில் உருவான எங்கள் மண்ணும் இந்த நாட்களும் மண்சுமந்த மேனியர் நாடகத்துடன் மேடையேற்றப்பட்ட
கவிதாநிகழ்வுப் பாடல்கள் அடங்கிய லேசர் இசைத்தட்டு
தொடர்புகளுக்கு
அருவி வெளியீட்டகம்
75 Brimley Road, Scarbrough, ON M1M3H7 Canada
(416) 264-6567 www.aruvi.com info@aruvi.com
வாழும் தமிழ் 2000 காலம் - 13 - O7

Page 110
ஆர் ஜி கல்வி நின் RG Education C
• கணித, விஞ்ஞானப் பாடங்கள் ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் Basic Programming D 6T6s L. lususing Q
• பியானோ, வயலின், மிருதங்கம், கர்நாடக கராத்தே, பரதநாட்டியம்
விபரங்களுக்கு:
S. SELVARETNEM
3852 Finch Ave. E, Suite 401 Scarborough, ON M1T 3T9 e.mail:rgeduoglobalserve.net
ஓம் சிவாஸ் றேடி
சகல இலங்கை இந்திய உணவு வை எம்மிடம் பெற்
3852 Finch AVe, EC SCCrbOr
(416) 3.
- O8- வாழும் தமிழ் 2000 காலம் - 3

லையம்
enterS
காம்பியூட்டர் கல்விநெறிகள்
சங்கீதம்
416) 609-9508
www.rgeducation.com
ங் கோ. லிமிடெட்
ககளும், சரக்கு வகைகளும் மலிவாக றுக் கொள்ளலாம்.
st (Kennedy & Finch) Ough, ON
22739

Page 111
FАмLY
MEDICAL CENTRE
Doctor's Office Dr. Rajes Logan (MBBS, MID, CCFP)
உங்கள் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட குடும்ப வைத்திய நிலையத்தில் சந்தியுங்கள்
பெண்களுக்கான நவீன சிறப்ப பரிசோதனைகள்
சிறுவர்களிற்கான பரிசோதனைகள், தடுப்பூசிகள்
பூரண உடற்பரிசோதனை
பொதுவான மருத்துவ பரிசோதனை
FOR APPOINTMENT PLEASE CALL (4 6). 293-77OO
(9O5) 944-OT OO
88O Ellesmere Rd., #2O1 (2nd Floor), Scarborough, Ont. M1P2W6 (Kennedy & Ellesmere)

AL INSURANCE & FINANCIAL SERVCES
AUTO LIFE RRSP HONMAE BUSINESS
CHILDREN EDUCATION FUND
| LOGALN LKANALPA \ | | | (AGENT)
TEL: (416) 396-1313 TEL: (416) 288-1416 PAGER: (416) 339 4329 TEL: (416) 296 1 O4O FAX: (416) 296 O868
88O ELLESMERE ROAD, UNIT 201A SCARBOROUGH, ONTARIO MlP 2W6
வாழும் தமிழ் 2000 காலம் - 13 - O9

Page 112
காலம் ெ
ஒரு சுய
g அதிகாலைை
முகம் தேடும்
நீலவாணன் நி சிதைவுகள் (மொழி குழந்தைகளிடம் பொய் சொல்
5வது தடவையாக வாழும் விற்பனையும் நடந்துள்ள ஊக்குவிப்பதற்கும், உருவாக்கு
தமிழ் இளம் தலைமுறைக்கு
படுத்துவதற்கும் அதன் மூ6 தேடலை உண்டுபண்ணவும்
கொணி
6Jլքո:6ն:
AAS Y R
1 AKE (OUT
108O Victoria Park
Tel: (416
- O- வாழும் தமிழ் 2000 காலம் - 13

வளியீடுகள் .
தரிசனம் ஆனந்த பிரசாத் உள்ளொலி என். கே. மகாலிங்கம் யத் தேடி செழியன் ) மனிதன் குமார் மூர்த்தி னைவுகள் எஸ். பொ. பெயர்ப்பு) என். கே. மகாலிங்கம் லாதீர்கள் செழியன்
O O. O.
தமிழ் புத்தக கண்காட்சியும் து, தமிழில் தீவிர வாசிப்பை வதற்கும் கனடாவில் புலம் பெயர் தமிழ்ப் புத்தகங்களை அறிமுகப் லம் ஒரு பிரஞ்ஞை பூர்வமான
தொடர்ந்து ‘காலம் முயன்று டிருக்கிறது
து சுவை
SAURAN
& CATERING
Ave. Scarborough, ON
) 752-0510

Page 113
தமிழ் الام6 سے உலகத் தமிழ் இ
உலகத் தமிழ் இலக்கிய அரங்கு உலக கிடக்கும் தமிழ் வாழ்க்கை இந்த நூற்றாண்ட விட்டது. நவீன யுகத்தின் பண்பாட்டு, அரசு ளால் தமிழ்ச் சமூகம் பல அதிர்வுகள் கொண்டிருகிறது. புதியதொரு நூற்றாண்டு சென்ற நூற்றாண்டில் நம்முடைய பயணங்க களை அடைவதற்கான ஒரு ஆயத்தமாகு பிரதேசங்களில் வாழும் தமிழ்ப் படைப்பாளி நிகழ்வு தமிழ்
Qaf'GJub i 2000, 6
தொடர்பு επε P.O. EBO 5O9 St. C
TOrOnt M6C
Can
பெற்றுக் ெ
øOñazG
தொடர்ட "கா P. O. BC 5O9 St. C TOrOn M6C
Can

6of 20 OO
இலக்கிய அரங்கு
வரைபடத்தின் பெரும் பகுதியில் சிதறிக் டில் எண்ணற்ற புதிய முகங்களை அடைந்து சியல், பொருளியல், வரலாற்றுக் கேள்விகளையும், உடைவுகளையும் சந்தித்துக்
துவங்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து ளை மதிப்பிட்டுக் கொள்வது புதிய திசைகும். அந்த நோக்கில் உலகின் பல்வேறு களும், அறிஞர்களும், சந்திக்கும் மாபெரும் p-இனி 2000
சென்னை, தமிழ்நாடு
களுக்கு
Suo b'
X 73O5
air Ave. W
o, ON 1CO
ada.
காள்ளலாம்
O
புகளுக்கு 6bub' DX 73O5
air Ave. W to, ON 1CO
ada.
வாழும் தமிழ் 2000 காலம் - 13 - -

Page 114
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே
-பாரதி
ரி2தர்
இல, 19/04, 01/01 நாவல வீதி நுகேகொட
தொலைபேசி 814859, 815003, 815004 e.mail sarini(a).sltnet.lk
மனவெளி கலையாற்றுக் குழு வழங்கும்
ஏழாவது
அரங்க
2000 ஜூலை 23 ஞாயிறு, மாலை 6:30 மணி MARKHAM THEATRE (WARDEN 8. H8W 7) (416) 269-0078, (416) 429-8854, (416) 264-6567 www.manaveli.cjb.net
- 2- வாழும் தமிழ் 2000 காலம் - 3

ğudy GİDöğDgGIGI da DDULÜ Gigliği) 1வது ஆண்டுப்பு நிகழ்வுகள்),
நினைய நிரஞ்றி
நேற்றைய நேற்றுறி
de aris ududi 81616ie.,,
u g gusgdö GGÜT Loftoftholin fãGêui Uö5 f ÖGMUITGFİÖ.
July 1st 2000 சனிக்கிழமை மாலை 6.00 மணி
YORK WOODS LIBRARY HEATRE 1785 FINCHAVE WEST
(Keele/Finch)
BA6AWp aan sampa:Auswv aYawumb
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய பொது நூல்கள்
தமிழ்மொழியில் இயற்ற வேண்டும்
- LunjUgé)
அறிவியல் சஞ்சிகை
9 Rosseter Road, Markham, ON L3S2P3 Canada. www.nudpam.com

Page 115
Sales Repre (416) 28
 


Page 116
,"" : "مائير
(II) கனடியத் தமிழ் ஒலிபரப் (46)
 

யான நட்பு க் கூட்டுத்தாபனம் (CTBC)
29-222