கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீட்சி 1994.05

Page 1
இதழ் 8 & 9
||ԳԱ):
ESTAT E AGENTS mwana :
三
கிழக்கு லண் லண்டனில்
ULI Sabi ho திருப் EOG (GIT
வோதம் பொறஸ்ற தமிழச் சங்க கனவு
 

49
தமிழ் தகவல் நடுவத்தின் மாதாந்த வெளியிடு
याடனில், தமிழ் இளைஞனான சகிதரன் இனவெறிக்குப் பலியானதையிட்டு | நடைபெற்ற ஆரிப்பாட்ட ஊர்வலம். படங்கள் கிருஷ்னராஜா
WI 5 TIJI கைத் தமிழர் தேசியஇனப் பிரச்சினையும்.
Ilāh Jal TGË GJITGTG0J LÍNG
" " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " * | aligiiij falso T................................
TG) 3a53 LID................................... 4.

Page 2
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் கு தமிழ் தகவல் நடுவத்தினால் சமர்பி
9 9 0. 'காலனித்துவத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தசாப்தம்' என, ஐ.நா. பொதுச்சபை 1988 நவம்பர் 22ஆம் திகதி பிரகடனம் செய்தது. ஐ.நா. சாசனத்துடன் காலனித் துவம் அதன் சகல விதங்களிலும் இணக்கமானதல்ல என, ஐ.கா. சபை மீள உறுதிப்படுத்தியது. அத்துடன் சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும், இது ஒரு தீவிர மிரட் டலாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், காலனித்துவப் பகுதிகளுக்கு மட்டும் முழுமையாக சுயநிர்ணய உரிமையை வரையறுப்பது, இப்போது ஒரு தடையாகவே தென்படுகின்றது. ஏனென்றால், சில காலனித் துவப் பகுதிகள் விடப்படும் சூழ்நிலையில், இந்த பிரகடனத் தின்படி ஏனைய தரப்பினருடைய கடமைகளை இது அமுல் செய்வதில்லை.
1990களின் ஆரம்பகாலச் சம்பவங்கள், 21ஆம் நூற் றாண்டு, பாரம்பரிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறும் நூற்றாண்டாக இருக்குமெனக் கட்டியம் கூறுவதாக வுள்ளது. மேலைத்தேய காலனித்துவத்தின் மறைவிற்கு மத்தியிலும், சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு சர்வதேச உறவுகளின் வார்த்தைப் பிரயோகங்களிலிருந்து மறைவதற்கான அடையாளங்கள் எதனையும் காண முடியவில்லை. இது சுதந்திர காடுகளுக்குள் சிறுபான்மை இனங்கள் மத்தியில் பிரதான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. பெருமளவிலான பிரதேசத் தன்னாதிக்கம், பிரதேசப் பிரிவினை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிற்கான தமது கோரிக்கைகளை கியா யப்படுத்தவே, இதனை அவர்கள் முன்வைக்கின்றார்கள்.
இந்த சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் அடிப்ப டையில்தான், இலங்கைத் தமிழ் மக்கள் யுத்தத்தில் ஈடுபட் டுள்ளார்கள். 1983ஆம் ஆண்டிலிருந்து இதற்காகவே 50,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் எற்பட்டுள்ளன. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்களவரைப் பெரும்பான்மையாகக்கொண்ட அரசாங்கங்கள் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தொடர்ந்தும் கிராகரித்தே வந்துள்ளன.
ஒரு மனித உரிமை விடயம் என்ற வகையில், குழு உரி மைகள் பற்றிய கேள்விகளுக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளுக்கும் இடையே ஒரு சாராம்சம் இருப்பது இப்போது அதிகளவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமை தொடர்பான கோட்பாடுகள் உரிய முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மக்களின் சுயநிர்ணய உரிமைகள் என்ற விடயத்தில் இரு பகுதிகள் அடங்கியுள்ளன. உள்ளுர் அம்சம், வெளி அம்சம் ஆகியனவே அவை. 1960ஆம் ஆண்டு பிரகடனம், கோட்பாட்டின் "வெளியே உள்ள விட யங்களை மட்டுமே குறிப்பிடுகின்றது. குடியேற்ற அல்லது சுய ஆட்சியின் கீழ் இல்லாத காடுகளின் சுதந்திரத்திற்கான உரிமையும் அவை தனியான நாடுகளை அமைத்துக் கொள் வதற்கான உரிமையும் காலனித்துவ மற்றும் தங்கியுள்ள மக் களைப் பொறுத்த வரையில் அவர்கள் 'புறம்பான சுய கிர்ணய உரிமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அத்துடன், இதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமையையும் கொண்டுள்ளார்கள்.
ஆனால், 'உட்புற சுயநிர்ணய உரிமையின் கோட்பாடு
 
 

ழுவின் 50வது கூட்டத் தொடரின்போது க்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கம்.
தாராள ஜனநாயகக் கோட்பாட்டிலேயே தங்கியுள்ளது. இதன் முலம் எகாதிபத்தியத்திற்கு எதிரான நோக்கம் கொண்டதாக இது உள்ளது. "உட்புற சுயநிர்ணய உரிமை ஒரு பிரதேசத்தில் அந்த மக்கள் அதன் அரசியல், பொருளா தார, சமுக, கலாசார இலக்குகளைத் தீர்மானிப்பதற்கான உரிமையாகும்.
சர்வதேசச் சட்ட நடைமுறைகளில் 'இறைமை' என்ற சொல் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளையில், நவீன சர்வதேசச் சட்டத்தில் இதன் அர்த்தம் முரண்படுவதாக உள்ளது. சர்வதேசச் சட்டம் இறைமையை இன்னும் பாது காக்கின்றது. ஆனால் இதுதான் மக்களின் இறைமை.
‘சமாதானத்திற்கான நிகழ்ச்சி நிரல்' ஒன்று 1992 ஜூனில் ஐ.நா. செயலாளர் காயகத்தினால் வரையப்பட்டது. தமிழ் மக்கள் இதனை வரவேற்றார்கள். தடை செய்யும் இராஜ தந்திரம், சமாதானத்தை உருவாக்குதல், சமாதானத்தைப் பாதுகாத்தல், பிரச்சினைகளைத் தொடர்ந்து சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் ஐ.நா. சபை செய்ய வேண்டிய முக்கிய பணிகளை இது வலியுறுத்துகின்றது.
சுதந்திர உறுப்பு நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் அதிகளவிலான கண்காணிப்புப் பணியை ஐ.நா. மேற் கொள்வதையிட்டும் தமிழ் மக்கள் வரவேற்புத் தெரிவித் துளளனா.
ஐ.கா.சாசனத்தின் கோக்கங்கள் கோட்பாடுகளுக்கமைய சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதே ஐ.நா.உறுப்பு நாடுகளுடைய கடமை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனைச் செய்யத் தவறுவது இனப்பிரச்சினைக்கும் வன் செயலுக்கும் இட்டுச் செல்வதாகவே உள்ளது.
கெடுபிடி யுத்தத்தின் முடிவு, சர்வதேச உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தைக் கொண்டு வந்தது. அத்துடன் சமாதா னத்திற்கான ஐ.நா.வின் வேலையிலும் ஒரு புதிய ஆரம்பம் தோன்றியது.
1976ஆம் ஆண்டில் முதல் தடவையாக ஈழ அரசை மீள அமைப்பதற்கான பிரகடனத்தைத் தமிழர் விடுதலைக் கூட் டணி தமிழ் பேசும் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வெளியிட்டது. இலங்கைச் சுதந்திரத்தின் முன்னர் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக உள்ளனர் என்ற அடிப்படையில் நாடு முழுவதற்குமான அதிகாரம் சிங்கள காட்டிடம் கையளிக்கப்பட்டது என இந்தத் தீர் மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை ஒரு அடிமைப்பட்ட மக்களாக மாற்றியமைத்தது.
சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்களவர் தலைமை யிலான அரசாங்கங்கள் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புடன் கூடிய தேசியவாதத்தை ஊக்குவித்துப் போஷித்து வந்துள் ளன. அத்துடன் தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்க
if - 8 & 9

Page 3
ளுக்குக் கேடு ஏற்படுத்துவதாகவே பயன்படுத்தினர். தமிழர் களின் அரைப்பகுதியினருக்கு வாக்குரிமையும் பிரஜா உரி மையும் மறுக்கப்பட்டன. இதன் முலம் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது.
திட்டமிடப்பட்ட அரசாங்க ஆதரவுடனான குடியேற்றங் களின் முலம் தமிழ் பேசும் மக்கள் அவர்களது தாயகத்தி லேயே சிறுபான்மையினராக்கப்பட்டனர். சிங்களம் மட்டு உத்தியோகபூர்வ மொழியாக மாற்றப்பட்டதன் முலம் தமிழ் இரண்டாவது தரத்திற்குக் குறைக்கப்பட்டதுடன், வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றில் தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. குடியரசு அரசியலமைப்பின் கீழ் பெளத்த மதத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டதால், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் இரண்டாவது அந்தஸ்துக்குப் பின்தள்ளப்பட்டன.
இவ்வாறான நிலைமையில், அரசாங்கக் கூட்டுறவுடன் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயுமான போராட் டங்கள், உடன்படிக்கைகள் முலமாகவும் அடுத்தடுத்து ஆட் சிக்கு வந்த அரசாங்கங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட புரிங் துணர்வுகள் பயனற்றவை என்பது கிருபிக்கப்பட்டுள்ளது. இதனால், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது சுதந்திரத்தை வெல்வதற்கான ஒரேயொரு வழியாக ஆயுதப் போராட்டத்தைத் தமிழர்கள் ஆரம்பித்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற அரசாங்கத்தின் சமுக, கலா சார, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைக் கொள்கைக ளினால் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகள் முன்று அடிப்படையிலானவையாக உருவாகியுள்ளன. இலங்கைத் தமிழர்கள் ஒரு நாடு என்பதை அங்கீகரிக்க வேண்டும், ஒரு தாயகத்திற்கான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும், சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்த முன்று கிபந்தனைகளுக்குக் குறைவான எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தமிழர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்தவொரு கிரந்தர அரசியல் தீர்வும் தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல், பொருளாதார, சமுக, கலாசார இலக் குகளை ஒரு ஜனநாயக அமைப்புக்குள் தீர்மானிக்கக் கூடிய கியாயமான அபிலாஷைகளைக் கவனத்தில் எடுப்பதாகவே இருக்க வேண்டும் எனத் தமிழர்கள் கம்புகின்றனர்.
1987இல் ஐ.கா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பான தனது முதலாவது தீர்மானத்தை கிறைவேற்றியது. தமிழர்கள் காணாமல் போவது தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் அறிக்கையைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1993 பெப்ரவரி 8ஆம் திகதி, 15 அரசு சார்பற்ற தொண் டர் நிறுவனங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. சுயநிர்ணய உரிமையும் காலனித்துவ ஆட்சியிலுள்ள மக் கள் அதனைப் பிரயோகிப்பது தொடர்பாகவுமே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. மனித உரிமைகளுக்கான ஐ.கா. ஆணைக்குழுவின் 49வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் பின்வரும் கோரிக்கைகள் இந்தத் தீர்மானத்தின் முலம் விடுக்கப்பட்டன.
(1) இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழர் 'தாயகம்' உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.
(2) வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையைக் கொண்டுள்ளவர்கள் என்பதை அங்கீகரித்தல்,
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதே இன்று பேச்சுவார்த்தைகளில் தடையாகவுள்ள முக்கிய விடயமாகும். 1993 ஜூன் 10ஆம் திகதி பாராளுமன்றத் தெரிவுக்குழு ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானத்தின் முலம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை
if - 8 & 9
 
 

கடத்த வேண்டும் எனக் கோரியது. வடக்கு கிழக்கு, தமிழர் களின் தாயகம் என்ற கோட்பாட்டை மறுதலிக்கும் கோக்கு டனேயே சர்வஜன வாக்கெடுப்பு கடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் நம்புகின்றார்கள்.
பிரஜைகள் அனைவருக்கும் சிறப்பான பாதுகாப்பை ம் வழங்கக்கூடிய நிலையில் இலங்கை அதிகாரிகள் உள்ளனர் என்றோ, வழங்க விரும்புகிறார்கள் என்றோ இந்த இடத் தில் கூறுவது சரியானதல்ல. இலங்கை தொடர்ச்சியாக பன் னிரண்டு வருட காலமாக அவசரகால நிலைமையின் கீழ் தான் ஆளப்படுகின்றது. இதன்கீழ் பல உரிமைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதுகாப்பு படைகளுக்கு அதிவிசேட அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்புக்களின் தகவலின்படி 1992 இல் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 400க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். தென்பகுதியில் காணாமல் போன 40,000 பேர் தொடர்பாகவோ, கிழக்கில் காணாமல் போன 3,000 பேர் தொடர்பாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மனித உரிமைகள் தொடர்பாகக் கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் பணிக்குழு ஒன்று 1991 ஆகஸ்டில் அமைக் கப்பட்டது. ஆனால் இது அதனுடைய பணியை நிறைவு செய்யக்கூடியதொன்றாக இல்லை என மனித உரிமைகள் அமைப்புக்கள் பலவும் கூறுகின்றன. 1992 ஆகஸ்டில் இத னுடைய முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டவர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவ தையிட்டு இதில் விபரிக்கப்பட்டுள்ளது. 1992/93 காலத்தில் காணாமற் போனதாக அறிவிக்கப்பட்ட 2,351 பேரில் 14 பேரை இவ்வமைப்புக் கண்டுபிடித்திருக்கின்றது.
w
tಣಿಹGujiéprಣಿ - - -
1993 ஆகஸ்டில், நோபல் பரிசு பெற்ற நால்வரின் புதிய சமாதானத் திட்டத்தை அரசாங்கம் கிராகரித்தது. கனடா விலுள்ள உலகளாவிய கூட்டுறவுக்கான உலக கவுன்ஸிலின் சார்பிலேயே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது. ஐ.நா. கண்காணிப்புடனான ஒரு யுத்த நிறுத்தம்; யுத்தமற்ற வலயங்களை உருவாக்குதல்; சமஷ்டி திட்டமொன்றை ஏற் றுக்கொள்ளல், ஐ.நா. கண்காணிப்புடனான தேர்தல் வடக்கு - கிழக்கில் நடைபெறும்.
ஆனால், இத்திட்டத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம், இது 'ஒரு உள்நாட்டுப் பயங்கரவாதப் பிரச்சினை' எனவும் சமாதான முயற்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முலமாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தது.
1993 ஆகஸ்டில் கொழும்பில் நடைபெற்ற "ஜனநாயகமும் இடம்பெயர்தலும் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூட இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மத்தியஸ்தத்தைப் பெறுமாறு இலங்கையைக் கோரினர்.
கடந்த வருடம் இலங்கையின் பாதுகாப்பு வரி ஒரு வீதத் திலிருந்து முன்று வீதமாக அதிகரித்தது. பாதுகாப்புச் செல வீன அதிகரிப்புக் காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட் டது. 1992இல் 16 பில்லியன் ருபா பாதுகாப்புச் செலவீன மாகச் செலவிடப்பட்டது. 1993ஆம் ஆண்டுக்கான ஆரம்பப் பாதுகாப்புச் செலவீன ஒதுக்கீடு 19.8 பில்லியன் ருபாவாக இருந்தது. ஆனால், மேலதிக 8 பில்லியன் ருபாவை பாது காப்பு அமைச்சு இப்போது கேட்டுள்ளது.
இந்தியாவுடனான உறவுகள் இப்போது மேம்பாடு அடைந்துள்ள நிலையில்கூட ஒரு மத்தியஸ்த பங்கை இங் தியா வழங்காது என்பதை அண்மைய சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. r எனவே, யுத்தத்துடன் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பின ரிடையேயும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் சர்வதேச சமுகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
O
3

Page 4
வோல்தம் பொறஸ்ற் த
Cu. (DT
திம் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, ! உலகின் பல பாகங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் பற்றித் தமிழகப் படைப்பாளி ஒருவர் இவ்வாறு x குறிப்பிட்டார்."அவர்களுடைய கலாச்சார வேர்கள் கண்முன்னே கருகுவதை, அவர்கள் பார்த்துக் கொண் டிருக்கிறார்கள். மொழியென் னும் உயிரின் விதையினை இழந்தால், கலாச்சாரத்தின் சகல அடையாளங்களும் ஒன்றன்பின் ஒன்றாய் உதிரத் தொடங்கும் என்ற தத்து வத்தின் உண்மையினை, இன்று நடைமுறையில் அவர் கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்". தமது மொழி யினை, தமது கலாச்சாரத்தைப் பாதுகாக்க எழுந்த அர சியல் போராட்டத்தின் விளைவாய் அகதியாக்கப்பட்ட மக்கள் தமது மொழி, கலாச் சாரம் தமது சொந்த வீடுகளிலேயே வேரறுந்து போவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நகை முரண்பாட்டிற்கு ஆளா கிக் கொண்டிருக்கி றார்கள். இங்கிலை காலத்தின் கீட்சியில் தொடரு மானால், புகழ்பெற்ற தொன்மையான மொழி, கலாச்சார மரபுகளைக் கொண்ட ஒர் இன மக்கள் வேரற்றவர்களாக மாறிவிடும் அபாயம் உண்டு. அவ்வாறாயின் இது ஒரு மொழியின், கலாச் சாரத்தின் தற்கொலையேயாகும்.
இந்த அவலம், அழிவு நேராமல் தம் மொழி மீதும் தம் கலாச்சாரத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள் சிறு சிறு குழுக்களாக இணைந்து தமது அடையாளங்களைப் பேணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றில் ஒன்றான வோல்தம் பொறஸ்ற் தமிழ்ச் சங்கத்தினர், தமது ஒன்பதா வது ஆண்டு நிறைவு விழாவை லொயிட் பார்க்கிலுள்ள வோல்தம் பொறஸ்ற் தியேட்டரில் 16-01-94 கொண்டா டினார்கள். இவ்விழா, மறைந்த தளபதி கிட்டுவின் ஒராண்டு நினைவாகவும் கொண்டாடப்பட்டது.
வோல்தம்ஸ்ரோவ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நீல் ஜெராட், வோல்தம் பொறஸ்ற் முதல்வர் திரு.N.மத்தாரோ ஆகியோரைச் சிறப்பு விருந்தினராகக் கொண்ட இவ்விழா, முதல்வரின் குத்துவிளக்கேற்றல், கிட்டுவிற்கான மெளன அஞ்சலி, தமிழ்ச் சங்க கீழ்ப்பிரிவு மாணவர்களது இறை வணக்கம் ஆகியவைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
மிருதங்கம், பாடல், நாட்டிய நாடகம், கிட்டு உபதேசம் என்னும் மேடை நிகழ்வு, விடுதலைப் புலிகளின் போராட்டத் திறன் கூறும் வில்லுப்பாட்டு, தமிழர் வாழ்வின் பல்வேறு நிகழ்ச்சிகளை எள்ளலுடன் கூறும் உன்னதத் தமிழன் என்ற தாள லயம் கொண்ட ஆட்டமுறை ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
மாணவர்களினால் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகள் அதற்குரிய தரத்தினையே கொண்டிருந்த போதிலும், பார்வையாளரின் கவனத்தை ஈர்த்தவையாக காட்டிய நாடகம், கிட்டு உபதே சம், உன்னதத் தமிழன் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.
காட்டிய நாடகம், மரபுரீதியான கருத்துச் சார்ந்தவை.
தர்ம வாழ்வு கொண்டோர் தம் அவலம் நீங்க தெய்வத்தின் துணையை நாடுகின்றனர். தெய்வம் இவர்கள் வேண்டுதலை
தின் குறியீடாக, அதர்மத்தின் குறியீடாக, தெய்வத்தின் குறியீடாக வந்தவர்கள் தமது பாகத்தினைச் சிறப்பாகச் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக தர்மத்தின் குறியீடாக வந்தவரின் காட்டிய அபிநயங்கள் எதிர்காலத்தில் ஒரு தேர்ந்த கர்த்தகியாக உருவாகக் கூடியவருக்குள்ள சமிக்ஞை அலைகளைக் கொண்டுள்ளார்.
4.
 
 
 

"கிட்டு உபதேசம்" அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங் களைப் பார்வையாளருக்கு வெளிப்படுத்தின. அவரின் போர்த்தந்திரம், மனிதாபிமானம், சக போராளிகள் மீதும் தமக்குக் கீழுள்ள போராளிகள் மீதும் உள்ள அக்கறைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. மேடை நிகழ்வு என்ற வகையில் ஒரு கவிதா நிகழ்வின் சாயலையே பெருமளவு கொண்டுள்ளது. மேடையில் தோன்றிய அத்தனை பேரும் கறுப்பு உடையணிந்திருந்தினர். இது கிட்டுவை இழந்த சோகத்தின் குறியீடாகப் பொருள்கொள்ளக் கூடியதாக இருந்தது.
'உன்னதத் தமிழன்’ நிகழ்வில், மேடையில் தோன்றிய அத்தனை பேரும் ஒருவித தாள லயத்துடன் ஆடிக்கொண் டிருக்கிறார்கள். ஆசிரியர் ஒருவர் அவர் முன்னின்று உன் னதத் தமிழன் பற்றிய அபிப்பிராயம் கேட்கிறார். ஒவ் வொரு மாணவனும் தாள லயம் மாறாத அதே ஆட்டத்து டன் முன்வந்து தமது கருத்துக்களைக் கூறுகிறார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையைத் தேர்தல் காலங்களில் மையமாக வைத்து தமது ஆட்சியைப் பிடித்த தமிழக அரசியலில், ஈழத்தமிழர்கள் பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பு தல், நாட்டிற்காய்ப் போராடி உயிர் நீத்த போராளிகளை மதிக்காதோர், கோவில் கட்டி உண்டியல் முலம் பணம் சேர்ப்போர் ஊழல், இங்குள்ள தமிழரின் நாகரீக மோகம், பெருமை பேசும் பத்திரிகை விளம்பரங்கள் ஆகியவற் றைப்பற்றி கிண்டலாக விபரிக்கப்பட்டு, இறுதியாய் தமது காட்டிற்காய் உயிரை மதியாது போராடும், போராடித் தம் உயிரை இழந்தவர்கள் உன்னதத் தமிழர் என்ற முடி வுக்கு வருகிறார்கள்.
இவர்கள் ஒரே தாள லயத்துடனும், ஒரே ராக முறையுடனும் வெகுநேரம் மேடையில் தோன்றியதால் பார்வையாளர்களின் கவனம் வேறு திசைகளுக்குச் செல் லக் கூடியதாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
தமிழ் மொழியின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் கொண் டிருக்கும் அக்கறையின் விளைவாய், இவ்வகையயான கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக நடாத்தி வரும் வோல்தம் பொறஸ்ற் தமிழ்ச் சங்கத்தினரின் முயற்சிகள் எதிர்காலத்தில் அதற்குரிய கனிகளைக் கொண்டிருக்கும்.
Lðf - 8 & 9

Page 5
ଅ603ରOT குடிவரவுக் ெ
மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பியரீநாடுகள்
அகதிளாகத் தமது நாடுகளுக்கு வருவோரைத் தடுப்பதற்கான பல வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்தக் கடுமையான போக்கு 1951ஆம் ஆண்டு ஐ.நா. அகதிகள் ஒப்பந்த மரபினைப் பாரிய அளவில் மாற்றியமைக்க வழிவ குத்து வருவதையும், இதனால் இம்மரபின் முக்கிய அம்ச மான “அகதிப் பாதுகாப்புரிமை” மழுங்கடிக்கப்படுவதை யும் காணக்கூடியதாக உள்ளது.
உலக நாடுகளில் அகதிகள் உருவாகுவதும் அதற்குரிய காரணங்கள் உலக நாடுகளில் அதிகரித்து வரும் அதே வேளை, இதுவரை காலமும் அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்து அவர்களைப் பாதுகாத்துப் பேணிவந்த நாடுகளின் பராமரிப்பு, விருந்தோம்பற் பண்பு போன்றவற்றில் பிர தான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக கடந்த சில மாதகாலமாக வானொலியிலும் தொலைக் காட்சியிலும் அகதிகள் விட யங்கள் அதிகரித்து வருவதாகப் பல நாடுகளிலிருந்தும் எமக் குக் கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. பிரித்தானியாவிலும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் ஏறத்தாள இருபத்தைந்துக்கும் மேலான குடிவரவு/அகதி சம்பந்தப்பட்ட செய்திகள், கருத் தரங்குகள், கேள்வி-பதில் கிகழ்ச்சிகள் வெளிவந்துள்ளன. பொதுவாகக் காலை நேரங்களில் அகதிகள் சம்பந்தமான வானொலி/தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப் படுகின்றன. இவற்றினை, புலம் பெயர்ந்து வாழும் தமிழர் களாகிய காம் அறிந்திருப்பது மிக முக்கியமானதாகும்.
ஜனவரி மாதம் 1994ஆம் ஆண்டு அமெரிக்க CNN தொலைக் காட்சிச் செய்திகள் தாபனம் தயாரித்த ஐரோப் பிய நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகள் பற்றிய விவர னத் திரைப்படமொன்று கனேடியத் தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஐரோப்பிய நாடுகள் அமுல்படுத்திவரும் மனிதாபமானமற்ற, கொடுரமான கொள் கைகள், திட்டங்கள் பற்றியும், எல்லாவற்றையும் இழந்து தமது உயிரினைப் பாதுகாக்கத் தஞ்சம் கோரி அகதிகளாக வருபவர்களை இச்சட்ட திட்டங்கள் எப்படிச் செயலிழக்கச் செய்து, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிவிடுகின்றன என் பதை விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளது. இந்தத் தொலைக்காட்சி கிகழ்ச்சி கனேடிய மக்களை வியக்க வைத் திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இங்கிகழ்ச்சி கனடா வில் ஏற்பட்டு வரும் குடிவரவுக் கொள்கை மாற்றத்தில், மேலும் அகதிகள் விடயத்திலும் கூட மாற்றம் கொணர வழிவகுக்கும் என்பதற்கு இடமில்லையென்றே அவதானிகள் கருதுகின்றனர். குடிவரவு சம்பந்தப்பட்ட, குறிப்பாக அகதிகள் விடயத்தில் கனடாவின் மிதமான கொள்கைக்கு
if - 8 8 9
 

ன்திர்ப்பு வளர்ந்து வருவதாகவும், ஒரளவுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைச் சமாளித்து வருவதாகவும், ஆனால் காலப்போக்கில் எதிர்ப்பினைச் சமாளிப்பது கடினமெனவும் கூறப்படுகிறது. குடிவரவு அமைச்சர் திரு. மார்ச்சி (March)யை அண்மையில் சந்தித்த ஒருவர், மார்ச் சிக்கு அகதிகள் விடயத்தில் பலவிதமான நெருக்கடிகள் உரு வாகி வருவதாகக் கூறியுள்ளார். மேலும், அண்மையில் முற்போக்குக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய தேர்தல் குழு (Carcus) அமைச்சரைச் சந்தித்து பொதுமக் களிடையே வளர்ந்துவரும் அரசின் மிதமான குடிவரவு/ அகதி கொள்கை எதிர்ப்பினைக் கணக்கில் கொண்டு திட் டங்களை வகுக்கும்படி எச்சரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதைவிட, பொதுவாக எல்லாப் பாராளுமன்றத் தொகுதி களிலும், அங்காட்டில் நடைமுறையிலுள்ள குடிவரவுக் கொள்கைக்கு, குறிப்பாக அகதிகள் விடயத்தில் எதிரான வாத அடிப்படையே கூடுதலாகத் தொனிக்கிறதென்றும், இதனால் பாராளுமன்ற உறுப்பினர் மத்தியில் விரக்தியும் எதிர்ப்பு மனப்பான்மையும் தீவிரமாக வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை ஆளும் கட்சியான முற்போக்குக் கட்சி பொருட்படுத்தாமல் விட முடியாதென்றும், ஆளும் கட்சியாக நிலைத்திருப்பதற்கும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் குடிவரவுக் கொள்கையில் மாற்றங்கள் சிறி தளவாயினும் எதிர்ப்பைச் சமாளிக்கக்கூடிய முறையில்
டியாக இருப்பதாகவும் அவதானிகள் கூறுகின்றனர். இத னால் திரு. மார்ச்சி சில விடயங்களில் மிகவும் கடுமையான திட்டங்களை அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தேர்தலுக்கு முதல் "குடும்பங்கள் ஒன்றுசேர்தல்” கொள்கை யில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இப்போதே சில மாற்றங் களை அரசு கொணர்ந்துள்ளதென்றும், குறிப்பாக கனேடிய வெளிநாட்டு அலுவலகங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள விதி முறைகளும் விசாரணை முறைகளும் 'குடும்பச் சேர்வை' ஐம்பது வீதமாகக் குறைத்துள்ளதாகவும் இது எல்லாத் தரப்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனநிம்மதியினையும் குடிவரவுக் கொள்கைக்கு எதிராகப் போராடி வரும் குழுக்களுக்கும் பொது மக்களுக்கும் மனக் குளிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை தமிழர் மத்தியிலும் இது ஒரு தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளதாகவும் அறிகிறோம். ஏனெனில், இலங்கைத் தமிழரே கூடிய அளவில் கனடா சென்றடைகிறார்கள். குடி வரவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படின் தாக்கம் இலங் கைத் தமிழர் மீதுதான் கூடியதாக ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Page 6
கனடாவில் அரசியல் தஞ்ச
வருடம் GøsnrrfGuntri 1984 7,100 1985 8,400 1986 23,000 1987 35,000 1988 45,000 1989 20,185 1990 36,180 1991 30,515 1992 37,720 1993 20,472
* 1993 உறுதிப்படுத்தப்பட தகவல்: கனடிய குடிவர
அதே கால அளவில் அகதி அங்கீகாரம் குறைந்த சதவீதம்
1992 - 1993
PAKISTAN 33% INDIA 4% IRAN 12% ISRAE 17% LEBANON 18% SAVADOR 14% CHINA 2% SR LANKA 18%
aIII.30DFd5 5. TIDI
ଶ୍ନରoTରnt11 - ରଥ
1993 1992 கோரிக்கை மீளப்
கிலை Dec31 பெற்றவை
1.SRI ANKA f 3773 155 2. CS/USSR 6 2104 337 3. SOMALA 2 1933 1OO 4. PAKTSIAN 3 934 319 5. IRAN 5 930 98 6. ISRAEL 12 794 226 7.LEEANON 8 695 94 8. INDA 9 692 161 9. CHINA 4 672 80 OROMANIA ar 477 45
11. PERU aso 456 24
2.EL SAVADOR 7 447 ff f OTHERS 6,467 1,770
TOTAL 20,314 3,520
1992இல் கோரப்பட்டு ஜனவரி 1993இல்
தகவல்: குடி
 
 

(5ITIS6025 1984 - 1993
%。 % அதிகரிப்பு குறைவு
18 
174 ar
52 as
29
55
79 ши
e
24
47
டவில்லை ாவு, துணைச் சேவைகள்.
எதிர்காலத்தில் நாடு கடத்தப்படுவோர் கணிப்பு (அனைத்து வகையினரும்)
GFI LibLit 1993 - 1994 gase).
COUNTRY PREMIO VALLS EL SAVADOR 700 USA 700 GHANIA 610 USSR(EX) 540 LEEANON 440 BULGARIA 390 INDA 370 PAKISTAN 350 ROMANIA 310 SRI ANKA 290 OTHERS 7,000 TOTAL 11,700
தகவல்: அகதி அலுவல்கள் பகுதி அக்டோபர் 1993
முதல் 12 நாடுகள் FILibLit 30, 1993
விசாரணை விசாரணை %ஏற்பு
மறுதலிப்பு ஏற்பு Dec31, 1992 Sep30, 1993
766 29.17 92 76 727 971 57 48 81 1873 91 91 6O7 314 56 24 261 636 75 64 392 f 16 33 16 451 255 46 32 496 157 22 19 592 134 19 17 299 208 43 43 f 12 314 68 70 419 ff f 28 17 3440 2.942 44 36 8,573 10,948 37 48
முடிவுக்காகக் காத்திருப்போரை உள்ளடக்கியது. வரவு, அகதிச் சபை ン
if - 8 & 9

Page 7
நிறவெறி எதிர்ப்புச்
6)LI துவாக சமகால ஐரோப்பிய நடைமுறையில், கிற வெறி சார்ந்த நடவடிக்கைகளை 'றேஷிஸம்" (Racism) என் றும், இனவெறி சார்ந்த நடவடிக்கைகளை “பாசிசம்' (Facism) என்றும் அடையாளப்படுத்துகிறார்கள்.
ஹிட்லரின் யூத இன எதிர்ப்புத்தன்மை, ஜெர்மானியர் அல்லாத அனைத்து இனங்களையும் பூண்டோடு அழிக்கும் தன்மை வரை போனது. கிறவெறியின் உச்சகட்ட கழிசடை கிலையாகத்தான் பாசிசம் ஐரோப்பாவில் இன்று நிலவுகிறது. பாசிச எதிர்ப்பாளர்கள் என்று சொல்லப்படுகின்ற பிற ஐரோப்பியர், அமெரிக்கர்களின் மனவுலகம் அடிப்படையில் நிறவெறி சார்ந்தது.
ஒன்றுபட்ட ஐரோப்பா, (UnitedEurope) வில் மற்ற நிற இனங்களுக்கு இடமில்லை. இது வெள்ளையர்களின் முடுண்ட, மதில் எழுப்பப்பட்ட ஐரோப்பா. ஐரோப்பிய அர சியலில் வளர்ந்து வரும் நிறவெறி, இனவெறி அரசியல் நாம் அனுபவிப்பதுதான்.
பிரெஞ்சுக்காரனுக்கு நம் மொழி “சத்தமாகவும்', கம் உணவு 'கெட்ட வாசமாகவும் சகிக்கத்தக்கது இல்லாததாகியும் விட்டது. ஜெர்மனியில் தொடங்கி சுவிஸ், கனடா, இங்கி லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா என அனைத்து வெள்ளை காடுகளிலும், கறுப்பு இன மக்களும் பழுப்பு இன மக்களும், நிறத்தின் அடிப்படையில் கொல்லப்படுகிறார்கள்; எரிக்கப் படுகிறார்கள்.
இதில் இலங்கை, இந்தியத் தமிழன் என்றோ, பாகிஸ் தான், பங்களாதேஷ் என்றோ, சோமாலியன், கானாக் குடி மகன் என்றோ, பட்டேல், சிங், செளத்ரி என்றோ வித்தி யாசமில்லை. வெள்ளை அல்லாத இன மக்கள் எல்லாருடைய அடிப்படை இருத்தலே இங்கு பிரச்சினையாகி விட்டது.
இந்த கிறவெறிக் கருத்துருவம் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும் வெளியா கிறது. அமெரிக்க இடதுசாரியான கோம் சோம்ஸ்கியின் எழுத்துக்கள், இவ்வகை ஆய்வுகளைத் தெளிவாக முன்வைக் கின்றன.
இந்த கிறவெறி, இனவெறிக்கு எதிரான படைப்பெழுச்சி இந்த நாடுகளில் வாழும் வெள்ளையரல்லாத மக்களிடம் ஏற் பட்டுள்ளது.
அமெரிக்காவில் அரசியலில் கரும் புலிகள் இயக்கம், இலக்கியத்தில் ஹெர்லம் கலாச்சார மறுமலர்ச்சி அத்தகையன. இங்கிலாந்தில் முன்றாம் உலக மக்களின் கலாச்சார முயற்சி களை மையம் கொண்டே பத்திரிகைகள் வருகின்றன.
Third Text (முன்றாம் லிபி) என்றொரு பத்திரிகை, கறுப்பு, மற்றும் ஆசிய, இலத்தீன் அமெரிக்க மக்களின் காட்சிக் கலை (VisualArts) சிறப்பிதழாக வெளியாகிறது. Third World Ouarterly, Artrage, Bazaar Guntaip agjit Liv ஆசிய இலக்கிய இதழ்கள் வெளியாகின்றன. சமீபத்தில், Values மற்றும் Vertர0 என்று இரு பத்திரிகைகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
சினிமாவிலும், அமெரிக்காவில் ஸ்பைக் லீ தொடங்கி, பிரிட்டனில் Sankotac (வேர்களுக்குத் திரும்பிப் போதல் என்று பொருள்) திரைப்பட அமைப்பு முலம் படங்கள் வெளியாகின்றன. அந்த உந்துதலில், சமீபத்தில் பிரிட்டனில்
if - 8 & 9

F60 IDT
-யமுனா ராஜேந்திரன்
வெளியாகியிருக்கும் திரைப்படம், BajiontheBeach. குரீக் தர் CCadaஎனும் குஜராத்திப் பெண்மணியால் இயக்கப்பட்ட படம். மீரா சயால் எனும் புகழ் வாய்ந்த ஆசியத் திரைப்பட நடிகை, இதற்கான கதை வசனம் எழுதியிருக்கிறார்.
இச்சூழலில் எனது கோக்கம், கிறவெறி எதிர்ப்பு சினிமா பற்றிய சில ஆரம்பக் குறிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான்.
ஐரோப்பிய நாடுகளில் கிலவும் நிறவெறியின் சில சிறப் புத் தன்மைகளை முதலில் காம் அவதானிக்க வேண்டும்.
ஐரோப்பியர்கள் பிரதானமாகத் தங்கள் கிறவெறி கடவ டிக்கைகளைக் காண்பிப்பது ஆபிரிக்க மற்றும் ஆசிய மக்கள் மீதுதான். கணக்கீடுகளின்படி கொல்லப்படுவதும், வன்முறைக்களாவதும், எரிக்கப்படுவதும் இம்மக்கள்தான்.
ஒப்பீட்டளவில் கிறவெறித் தாக்குதலுக்கு ஜப்பானியர்கள், இலத்தீன் அமெரிக்கர்கள், யூதர்கள் தற்பொழுது ஆட்படுவ தில்லை. காரணம், அவர்களது நல்ல சிவந்த நிறம். மற்றை யது கலாச்சார ரீதியில் கறுப்பு/ஆசிய இன மக்களை விட வும் ஐரோப்பியர்களுடன் உடன்படுவதும், ஒன்றுபடுவதும் தான.
ஆசியர்கள் என்று குறிப்பிடும்போது, குறிப்பாக இலங் கைத் தமிழர்கள், இந்தியர்கள், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற காட்டைச் சேர்ந்தவர்களைத்தான் சொல்கிறேன். இது இவ்வாறாக இருந்தாலும் கூட, வெள்ளையரல்லாத பிற ஆசிய/இலத்தீன் அமெரிக்க/யூத மக்களிடமும் வெள் ளையருக்குத் துவேஷம் உண்டு. இவர்களிலிருக்கும் இடதுசாரிகள் பொதுவான கிறவெறி/இனவெறி எதிர்ப்புப் போராட்டங்களில் ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்.

Page 8
இந்தப் போராட்டங்களில் முன்னணிச் செயல் வீரராகவும் சித்தாந்தியாகவும் செயல்படும் ஒரு தமிழரும் உண்டு. அவர் 'இனம் மற்றும் வர்க்கம்" (Race and Class) காலாண்டு இதழின் ஆசிரியர், ஏ.சிவானந்தன். சிவானந்தன் இலங்கைத் தமிழர். இக்பல் மதத், எட்வேட் ஸயத், சமீர் அமீன் போன் றவர்களோடு சேர்த்துச் சொல்லப்படுபவர்.
இந்தியர்கள்/இலங்கைத் தமிழர் கலாச்சாரத்தில் வேரோடி யிருக்கும் ஜாதீய மனோவியல், ஐரோப்பியச் சூழலில் வேறொரு பரிமாணத்துடன் சிக்கலான வடிவம் எடுக்கிறது. பொதுவாக, கீழ் ஜாதி மக்கள் தமது சமுகத்தில் செய்யும் தொழில்களில், 'நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட வர லாற்றின்படி ஆபிரிக்க மக்கள் செய்யும் தொழில்கள். ஒரே வார்த்தையில் அடிமையின் தொழில்கள். ஆபிரிக்க மக்க ளும் கீழ் ஜாதி மக்களும் கலாச்சாரமற்றவர்கள்; காட்டுமிராண் டிகள். எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் கலாச்சாரம்/ நாகரீகம் அவர்களுக்கு வராது. ஆபிரிக்க மக்களும் கீழ் ஜாதி மக்களும் கிறந்தில் கறுப்பர்கள்.
ஆண்டை வர்க்கமும், பிராமணியமும் ஒடுக்கு முறையும் கம் சமுகத்தில் பின்னிப் பிணைந்தவை. கறுப்பு நிறம் எமது கலாச்சாரத்தில் கெட்ட வார்த்தை, அசிங்கமான வார்த்தை. இருட்டு நிறம் கமக்குப் பேய் பிசாசு. இந்த ஜாதீய மனோ வியல் அடிப்படையிலான ஒரு இடைவெளி, கறுப்பு மக்க ளுக்கும் நமக்கும் இடையில் உண்டு.
இந்தியர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்குமான இடைவெளி யில், இந்த ஜாதீய அம்சம் தவிரப் பிறிதொரு அம்சமும் உண்டு. அது அரசியல் ரீதி யிலானது. பிரிட்டிஷ் காலனி நாடுகளில் புலம் பெயர்ந்த இந்திய மக்கள், வியாபார வார்க்கமாகக் குடியேறினார் கள், உகண்டா, தன்சானியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணம்.
அங்கு தலைமுறை தலை முறையாக வியாபார வர்க்க மாக ஆபிரிக்க மக்களை ஒப்பீட்டளவில், லாபம் சம் பாதிக்கப் பயன்படுத்திய இந்தியர்கள், கலாச்சார ரீதியில் ஆபிரிக்கர்களோடு ஒன்றுபடவேயில்லை. ஆபிரி க்க ஆணொருவன் இந்தியப் பெண்ணைக் காதலிப்பதும் மணந்து கொள்வதும் சாத்தியமேயில்லை. பொருளாதார ரீதியான கலாச்சார ரீதியான இந்தத் தன்மை கறுப்பு மக்களிடத்தில் இந்தியர்கள்பால் வெறுப்புணர்வை உருவாக்க ஆதாரமானது. 24 மணிநேர அவகாசத்தில் உடுத்திய துணி புடன் உகண்டாவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இந்தி யர்கள். இடி அமீன் அப்போது ஆட்சியிலிருந்தார். வெளி யேற்றப்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குடியேறினார்கள். மறுபடி தங்கள் வியாபார வாழ்வைத் தொடர்ந்தார்கள். இவர்களில் குஜராத்திகள், வங்காளிகள் பிரதானமானவர்கள்.
இத்தனை தன்மைகளும் கொண்டதுதான் ஐரோப்பிய நிறவெறி உலகம். இந்த உலகத்தில், பொது எதிரிக்கு எதி ராக ஒன்றுபட வேண்டிய தேவை அனைத்து ஆசிய/ஆபி ரிக்க/இலத்தீன் அமெரிக்க மக்களுக்கும் உண்டு. இந்த அணியில் பொப் டைலன் உண்டு, ஸ்ரிங் உண்டு. ரெர்ரி ஈகிள்டன் உண்டு. ரோனி பெண் உண்டு. வீலா றோபோத் தம் உண்டு. யூத சோசலிஸ்ட் அணி உண்டு. அமித்கிதாய்களும் இஸ்ரேலியத் திரைப்படக் கலைஞனும் உண்டு. தமிழரான சிவானந்தனும் உண்டு.
8
 

இந்த ஒற்றுமை நோக்கிய சிந்தனைத் தேட்டம்தான், வாழ்வியல் ஒட்டம்தான் நிறவெறி எதிர்ப்பு சினிமாவின் களம்.
D
இப்போதைக்கு நான் நான்கு படங்கள் பற்றி மட்டும் பேச கினைக்கிறேன்.
1. ByTmt smtuurfesör
“u66rólerúlu í upsnevn' (Missisipi Masala) 2. ஸ்பைக் லீயின்
'LDntsia, Lb Grieu' (Malcolm X) 3. ரிச்சர்ட் ஆட்டன்பரோவின்
'கிறை பிரீடம்" (Cry Freedom) 4. அறன் பார்க்கரின்
'L66m565 v 5 Linfafni' (Missispi Burning)
முதலில் மீரா நாயரின் மிளிவிப்பி மசாலா படம் உகண் டாவில் தொடங்கி, அமெரிக்காவில் மிஸிஸிப்பி மாநிலத் தில் கடந்து, மறுபடி உகண்டாவில் முடிகிறது.
1972ஆம் ஆண்டு இடி அமீன் ஒரு சட்டம் கொண்டு வருகிறார். அதன்படி 24 மணி நேரம் கெடு விதிக்கப்படுகிறது. அந்தக் கால இடைவெளிக்குள் சொத்து சுகம், தங்க நகை கள் அனைத்தையும் விட்டு விட்டு, உடுத்திய துணிகளுடன் இந்தியர்கள் வெளியேறிவிட வேண்டும்.
இந்தச் சூறாவளியில் உகண்டாவை விட்டு வெளி யேறும்
Na z m. குடும்பம் ஜேயினுடை யது. அவர், அவர் மகள் மினா மற்றும் அவர் மனைவி ஆகி யோர் வட அமெரிக்கா மிஸிஸிபியில் குடியேறுகிறார் கள். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், ஒருமுறை சிறையிலிருந்து கூட ஜேயை மீட்கும் அவரது வாழ்கால கறுப்பு நண்பன் ஒகேலா (Okela) சொல்வது ஜேயை உலுக்கி விடுகிறது. "ஆபி ரிக்கா, ஆபிரிக்கர்களுக்குத் தான்; கறுப்பு ஆபிரிக்கர் களுக்கு' என்கிறான் ஏகேலா,
இந்தக் கசப்பான அனுப வங்களுடன்தான் அக்குடும்பம் வாழ்கிறது. மினா ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து, சந்தர்ப்பவசமாக ஆபிரிக்கரான டெமிட்ரியஸை சந்திக்கிறாள்.
அவர்களுக்கிடையில் காதல் மலர்கிறது.
வேடிக்கை என்னவென்றால், மினாவின் நிறமும் கறுப்பு. அவள் உறவினர்களுக்கிடையில், அவள் "கறுப்பி’ என்றுதான் அழைக்கப்படுகிறாள்.
பாரம்பரிய கலாச்சார மதிப்பீடுகளுக்கிடையிலும், புதிய
அமெரிக்க இளைய தலைமுறைச் சுதந்திர வாழ்வுக்கிடையிலும் நிற்கிறாள் மினா,
மினாவும் டெமிட்ரியஸும் விடுமுறை வாசஸ்தலத்திற்கு போன இடத்தில், அறையெடுத்து தாம்பத்தியம் கொள்கி றார்கள்.
யதேச்சையாக விடுமுறையைக் கழிக்க வந்திருக்கும் மினாவின் உறவினன், டெமிட்ரியஸின் வாகனத்தைப் பார்த்து விட்டு, இருவரும் இருக்கும் அறைக்குள் நுழைகி
if - 8 & 9

Page 9
நான்.
டெமிட்ரியஸுக்கும் அவனுக்கும் கைகலப்பு நடக்கிறது. உறவினன் பொனீஸை அழைக்கிறான். பொலீஸ் மினாவையும் டெமிட்ரியஸையும் கைது செய்கிறது. குடும்பப் பெருமை போய்விட்டது என்றும், இந்தியக் கலாச்சாரம் கேவலப்பட்டு விட்டது என்றும் அரற்றுகிறான் உறவினன்.
இடையிடையே சீர் செனத்தி செய்து, வரதட்சணை கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட, இந்த உறவினன் தாம் பத்தியம் வெறுமையாக, அன்பு குன்றிக் காணப்படுவது காண்பிக்கப்படுகிறது. அவன் மனைவி, அவனோடு உடன் படுக்க மறுத்து விடுகிறாள்.
மினாவின் தாய், மகள் தங்களைக் கேவலப்படுத்தி விட் டதாகவும், கடத்தை கெட்டு விட்டதாகவும், மகளைக் கடி கிறாள். இந்தியச் சமுகம் முழுக்க வீட்டுக்கு வீடு குசு குசுப்பு நடக்கிறது. ‘எங்கள் பெண்களை விட்டு விலகி நில்' என்று டெமிட்ரியஸுக்குச் சொல்லப்படுகிறது.
இது மிகப்பெரிய ஒழுக்கப் பிரச்சினையாகவும் பேசப் படுகிறது. மீரா நாயரும், மினாவாக நடித்த சரிதா செளத்ரியும் லண்டன் வந்திருந்தபோது, மினா சில குஜராத்திப் பெண்களைச் சந்தித்தபோது, 'மினாவின் அனுபவங்கள் எங்கள் அனுபவங்கள்' என்று சொல்லியிருக் கிறார்கள்.
இந்தியப் படங்களில் கண்களின் பாஷை மட்டும்தான்; பெண்கள் முத்தமிடுதல் என்பதே இல்லை. இதில் எங்கே வாழ்க்கையும் யதார்த்தமும் இருக்கிறது? எனக் கேட்கிறார் மீரா நாயர், இயக்குநர் ஒரு பெண் என்பதால் என்னால் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது; என்னையும் அவர் சரியாகப் புரிந்து கொண்டார் என்கி றார், சரிதா செளத்ரி.
இப்படத்திற்கு லண்டனில் வாழும் குஜராத்தி சமுகத்தி னிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஒழுக்க முள்ள எந்த இந்தியப் பெண்ணும் மினா மாதிரி நடக்க மாட்டாள் என்று ஒரு குஜராத்தியப் பத்திரிகை எழுதியது.
orf.
தான் ஏதும் தவறு செய்யவில்லை. தனது சுதந்திரத்தின் படியும், தனது விருப்பப்படியும்தான் டெமிட்ரியஸை கேசித்ததாக வலியுறுத்துகிறாள் மினா.
அவள் டெமிட்ரியஸைத் தேடிப் போகிறாள். மழையும் இடியும் சேர நகருக்கு வெளியில் பழைய காஸ் (Gas) ஸ்டேசனில் சந்திக்கிறார்கள். மினாவின் தங்தை உகண்டாவில் தனது சொத்துக்கள் திரும்பத் தரப்படுவதாகக் கேள்விப்பட்டு உகண்டா செல்கிறார். அவர் கண்பனைத் தேடுகிறார். கிடைக்கவில்லை. அவர் சாலைவழி நடக்கையில் ஆபிரிக்க நடனமொன்று கடக்கிறது. அங்கு கிற்கிறார். ஒரு கறுப்புக் குழந்தையின் பிஞ்சுக் கரங்கள் அவரது கன்னத்தை வரு டுகிறது. அந்தக் குழந்தையின் பிஞ்சுக் கரங்களைக் கோதி விடுகிறார் ஜே.
மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இது இன்னொரு காதல் கதை மாதிரித்தான் தெரியும், காதல் இரு மனிதர் களுக்கிடையிலான மன நெருக்கத்தில் வருவது. மன நெருக்கத்திற்கான புறக்காரணங்கள் நிறைய. இந்தப் புறக் காரணங்கள் சிலவேளை இரண்டு மனங்களின் நெருக்கத்தை உடைத்து விடும்; தடையாக இருக்கும்.
இரண்டு இனங்களிற்கிடையிலான பொருளாதாரப் போட்டி. இரண்டு இனங்களிற்கிடையிலான அதிகாரப் போட்டி. வரலாற்று ரீதியில் இந்த இரண்டு இனங்களையும்,
if - 8 & 9

தனது வெள்ளை ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் அதிகார அமைப்பு.
இவை பற்றியெல்லாம் காதல் உறவினூடே மீரா நாயர் Guardasprint.
மினா இந்தியப் பெண்ணாயினும், அவள் இந்தியாவையே அறியாதவள். டெமிட்ரியஸ் ஆபிரிக்கனாயினும், அவன் ஆபி ரிக்காவை அறியாதவன். தலைமுறை தலைமுறையாக தங்கள் சொந்த அடையாளங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவர் கள்; வன்முறையாக அடிமையாக்கப்பட்டவர்கள், கிறவெறியால் அடக்கப்பட்டவர்கள்.
ஆயினும் இவர்களுக்கிடையிலும் அதிகாரப் போட்டி நடக் கிறது. தனது கலாச்சாரம், கிறம் மேலானவை என்கிறான் இந்தியன். எனது அதிகாரம் மேலானது என, இந்தியனை விரட்டுகிறான் ஆபிரிக்கன். 'கார்பெட் கிளினர்" ஆன டெமிட்ரியஸுக்குக் கொடுக்கும் ஆர்டரை நிறுத்தி விடு கிறார்கள் இந்தியர்கள். “நீ நல்ல பையனாக நடந்து கொள்ள வில்லை" என்று பாங்க் கடன் தவணையை நீடிக்க மறுக்கிறார் வெள்ளை பாங்க் மனேஜர். இந்தியர்கள் மீது வெள்ளை வழக்கறிஞரை வைத்து வழக்குத் தொடுக்கிறான் டெமிட்ரியஸ்.
இவர்களுக்கிடையில் இணக்கம் காண வேண்டும். இவர்கள் சிந்திக்க வேண்டும். இவர்களுக்கிடையில் சங்தேகத்தையும் அவகம்பிக்கையையும் போக்க வேண்டும். இரண்டு முறை அடையாளம் இழந்த, வேர்களை இழந்த இவர்கள், தங்கள் பொது அக்கறைகள் பற்றி யோசிக்க வேண்டும்.
எங்கேனும் தொடங்கியாக வேண்டும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன் என்கிறார், மீரா நாயர்.
இப்படம் பற்றிய மிக அற்புதமான விமரிசனமொன்று, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் Cineaste பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.
இதை எழுதியவர் சிசில் எஸ். பேர்ரி,
அவர் சொல்கிறார்:
மினாவும் டெமிட்ரியஸும் வந்தடைந்த புரிதலை விடவும் மேலான புரிதலை, மினாவின் தகப்பனாருக்கு அவரது உகண்டா விஜயம் புரிய வைக்கிறது.
அவர் தனது சொத்து வழக்கை வழக்கு மன்றத்திற்கு கொண்டு செல்ல நினைத்தாரில்லை. சட்ட விதிமுறைக்கப் பாலான நீதியைத்தான் அவர் தேடுகிறார். தனது பழைய வீட்டுக்குச் சென்று வந்தபின் இடி அமீன் ராணுவக் கவிழ்ப்
(தொடர்ச்சி 13ஆம் பக்கம்)

Page 10
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கியூயோர்க் நகரில் (UNDP)ஐ.நா.பொதுவிவகார ஸ்தாபனத்தின் 46வது மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் பேசிய ஐ.நா.பொதுக்காரி யதரிசி ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் அரசு சார்பற்ற நிறுவ னங்கள் சமுக அபிவிருத்தியில் அக்கறை காட்ட வேண்டுமென அழைப்பு விடுத்தார். ஐ.நா.வின் நடவடிக்கைகளில் சமுதாய அபிவிருத்தியே அடிப்படையானதென்றும், அதன் பிரதான நோக்கமானது குறைபாடுகளுக்குப் பரிகாரம் காணுவதே எனவுங் கூறினார். பொருளாதாரத்தில் குறைபாடு எனும் சொல் வறுமையையும், சமுகத்தில் பாரபட்சத்தையும், கலாச்சாரத்தில் சமுக அடையாளம் அற்றுப்போதலையும், அரசியலில் ஒதுக்கி வைத்தலையும் குறிக்கும் என விளக்க LD6i55ntrf.
அரசு சார்பற்ற நிறுவனங்கள் அதிக பங்காற்ற வேண்டும்
உலகின் பலபாகங்களில் இருந்தும் சமுகமளித்திருந்த பிர திநிதிகளுக்கு பின்வரும் விடயங்களை நினைவுபடுத்தினார். ஐ.நா.அமைப்பானது சமுதாய அபிவிருத்தி நோக்கிப் பணி புரிகையில் குடும்பக் கட்டுப்பாடு, குடியிருப்புக்கள், ஆராய்ச்சி, குழந்தைகள் கலம், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்றவற்றிற்கு கிதி உதவிகளைப் புரிவதுடன் தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை எய்துவதற்கும் ஆதரவு கல்க
வேண்டும்.
அரசு சார்பற்ற நிறுவனங்களின் அவசியமானது ஐ.நா. சாசனத்தில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளது. பின்வரும் விடயங்களுக்காக ஐ.நா.வுடன் பணிபுரியும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் பாராட்டப்பட வேண்டும். அவையாவன, பாதிப்படைந்தோரை நிவாரணங்கள் சென்றடையச் செய்தல், மிதமான போக்கையுடைய அமைப்பு, செயல் நோக்குடைய சேவையாளர்கள், தனியார் நன்கொடைகளுக்கு இடமளித்தல், செயல்திட்டங்களில் பொதுமக்கள் பங்களிப்பைத் திரட்டல், நிர்வாகக் கெடுபிடிகளினால் காலதாமதம் ஏற்படுவதை தவிர்த்து பணிபுரிதல் போன்றவையாகும். அரசு சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஒரு சிறு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே செயற்படுகிறது எனலாம். இவர்களின் சேவைகள் உலகில் வறுமைப்படும் 1.3 பில்லியன் மக்களுள் 20% ஆனவர்களையே சென்றடைகிறது. நிறுவனங்களுக்குக் கிடைக்கும் 7.2 பில்லியன் டொலர் நன்கொடையுள் 13 வீதமே நிதியுதவியாக வறிய நாடுகளைச் சென்றடைகிறது.
அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் நீண்ட காலமாக இணைந்து செயலாற்றுவதில் வெற்றிகண்ட UNICEF, WHO, UNHCR தொடர்ந்தும் கூடியளவில் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். இவ்வகையான இணைந்து செயல்படுதலுக்கு உறுதுணையாக அமைவன என அவர் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டார். அரசு சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய செயற்பாடுகளிலும்,
O
 

வெளிக்கள ஆய்வுகளிலும் சர்வதேச தரத்தைப் பேணல் வேண்டும். தேசிய மறுவாழ்வுச் செயற்பாடுகளில் கூடிய வெற்றியைத் தந்த கம்போடியாவிலும், பிறநாடுகளான எல் சல்வடோர், சோமாலியா, மொசாம்பிக், ஹெய்ரி போன் றவற்றிலும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் ஐ.நா.வும் கன் றாக இணைந்து செயற்பட்டதை அவதானிக்க முடிகிறது.
உளச்சுகாதாரம் பற்றிய உரிமைகள், பூர்வீகக் குடிமக்களின் உரிமைகள் போன்றவற்றில் சர்வதேசத் தரத்தை உருவாக்குவதில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் கடந்த காலத்தில் வெற்றியைக் கண்டுள்ளன. வியன்னாவில் காலில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் 162 அரசு சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டன. இம்மகாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்ற இன்னுமொரு மகாநாட்டில் 2,000 தனிநபர்கள் கலந்துரையாடித் தமது முடிவுகளை மகாநாட்டு குழுவினர்க்கும், சம்பந்தப்பட்ட அரசுகளுக்கும் எடுத்துக் கூறினர்.
இவ்வாறு பெருந்தொகையான ஸ்தாபனங்களும் தனிநபர் களும் ஒரே சமயத்தில் கலந்துகொண்டமை ஐ.நா. வரலாற் றில் இதுவே முதல்தடவையாகும்.
1995இல் கோப்பன்ஹேகனில் நடைபெறவிருக்கும் சமுதாய அபிவிருத்தி பற்றிய உச்சி மாநாடு வெற்றியளிக்க வேண்டு மெனில் அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் அடையாளங் காணப்பட்ட பிரச்சினைகளை முன்னெடுத்து நடைமுறைக்குப் பொருந்தக்கூடிய தீர்வுகளையும் காண முற்பட வேண்டும்.
தனியே பொருளாதார அபிவிருத்தி என்ற கோட்டைவிட செயல் திட்டங்கள் நடைமுறையில் தொடர்ந்தும் பேணக்கூடிய வகையில் அமைவதே பொருத்தமானது என ஸ்பெத் வலி யுறுத்தி, இக்கோட்பாடே கோப்பன்ஹேகன் மகாகாட்டில் கருத்தில் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
பேணக்கூடிய மனித அபிவிருத்தியில் மக்கள் பங்கு, மக் களை மையமாகக்கொண்ட கொள்கைகள், திறந்த சந்தைகளை யுடைய பல்வேறு காட்டைச் சேர்ந்த சுய நிர்ணய அரசுகள் என்பனவற்றில் மகாகாட்டவரிடையே கருத்தொருமைப்பாடு இருக்குமாயின் பேணக்கூடிய மனித அபிவிருத்தி வெற்றியைத் தரும். பெருங்தொகையினரான வறியவர்கள் வாழ்வில் முன் னேற்றத்தைக் கொண்டு வராத திட்டங்கள் உயிரற்றவையாகும். அதனால் இவ்வபிவிருத்தியானது வறிவர்கள் சார்பானதும், பெண்கள் சார்பானதும் இயற்கை சார்பானதும் ஆகும். இயற்கை வளத்தைக் குறைக்கும் திட்டங்கள் தொலைநோக்கு அற்றவையாகும்.
மேலும் உச்சி மகாநாடானது நடைமுறைப்படுத்தக் கூடி யவைகளைக் காலதாமதமின்றி உடனடியாகச் செயற்படுத்த
(தொடர்ச்சி 24ஆம் பக்கம்)
. [ኸfቖ፬ - 8 8 9

Page 11
தென்னாசிய மக்களும் இருதய நோயும்
TITGagain)an IIITaTID600full
இலங்கைத் தமிழராகிய நாம் தென்னாசிய நாடுகளிலி ருந்து வந்த மக்களின் வாழ்க்கை முறைகளோடு சம்பங் தப்பட்டவர்கள். அண்மைக் காலங்களில் வெளிவரும் வைத் திய சம்பந்தமான அறிக்கைகளின் முலம் இதுவரையும் தெரியப்படமுடியாமலிருந்த தென்னாசிய மக்களும் இருதய நோயும் பற்றிய எத்தனையோ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக தென்னாசிய மக்களி டையே அதிகரித்து வரும் இருதய நோய் பற்றி எத்த னையோ அறிக்கைகள் வருகின்றன என்றாலும் இன்றும் ஏன் இந்த நோய் இவ்வளவு அதிகமாகத் தென்னாசிய மக் களைப் பாதிக்கிறது என்பதற்கான தெளிவான எந்த ஆராய்ச்சியும் பெரியளவில் நடைபெறவில்லை. இப்படியான ஆராய்ச்சிகள் நடைபெறாமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஒன்று இனத்துவேசமாக இருக்க லாம், அல்லது இந்த நோய் தென்னாசிய மக்களிடையே அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வேண்டிய ஆராய்ச் சியாளர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அல்லது தென் னாசிய மக்களே இதுவரையும் அரசாங்கத்திடம் மேலதிக ஆராய்ச்சி செய்யும்படி கோராமலிருந்திருக்கலாம். எப்படியாயி ருந்தாலும் தென்னாசிய மக்களாகிய நாங்கள் இருதய நோய் ஏன் வருகிறது, அதை எப்படித் தவிர்க்கலாம், இரு தய நோய் வந்தால் எப்படிக் கவனமெடுப்பது என்று தெரிந்துகொள்வது இன்றியமையாதது.
தென் ஆசிய மக்கள் என்று குறிப்பிடுபவர்களில் இங் தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை என்ற நாடுக ளிலிருந்து வந்த மக்களும் அடங்குவர்.
ஒரு குறிப்பிட்ட மக்கள் இன்னொரு நாட்டுக்குப் புலம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இங் தியா சுதந்திரம் பெற முதல் 1900இலிருந்து இந்தியாவிலிருந்து படிக்க வந்தவர்கள், நாடு பார்க்க வந்தவர்கள், அரசியல் ரீதியாக வந்தவர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். இவ்விடம் குடிபெயர்ந்து வாழ்ந்தவர்கள் மிகக் குறைவே.
if - 8 & 9
 

ஆனால் அந்த கிலை 1948ஆம் ஆண்டுக்குப் பின் மிக வேக மாக மாற்றமடைந்து விட்டது. 1991ஆம் ஆண்டு குடிவரவுக் கணக்கின்படி பிரித்தானியக் குடியரசில் 6% ஆனவர்கள் வெளிநாட்டவர்களாகும். இதில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களாகும். இவர்களிற் பெரும்பான்மையானவர்கள் குஜராத்தியர்களாவர். அடுத்த பெரிய வெளிநாட்டு உறுப் பினர்கள் பாகிஸ்தானியர். இலங்கையிலிருந்து 70,000க்கும் அதிகமான தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்த மக்கள் இங்கிலாந்திலிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் 1958ஆம் ஆண்
யோகம் பெற்றும், படிக்கவென்றும் வந்தவர்களாவார்கள். 1983இல் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் இருந் ததாக மதிப்பிடப்பட்டது. 1983ஆம் ஆண்டுக்குப் பின் இங்கி லாந்திற்கு வந்த தமிழர்கள் பெரும்பாலும் அகதிகளே.
இருதய நோய் இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ் மக்களை வேறுபாடு இல்லாமல் தாக்குவதால் தமிழராகிய காங்களும் இருதய நோயிலிருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டிய கடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தென்னாசிய மக்களுள் 36%ஆன ஆண்களும், 46 வீதமான பெண்களும் இருதய நோயால் தாக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது வெள்ளை மக்களைவிட மிகக்கூடிய விகி தாசாரமாகும்.
இருதய நோய் வர எத்தனையோ காரணங்கள் உண்டு. 1. அதிகப்படியான மது அருந்துதல் (Alcoho) 2. புகைபிடித்தல் (Smoking) 3. அதிகப்படியான கொழுப்பு உணவு (HigherFatintake) 4. அளவுக்குக் குறைந்த உடற்பயிற்சிகளும் வேலைகளும் QéFü356ü. (Excercise)
3. அளவுக்கு அதிகமான மனத்துக்கங்கள் (Stress)
1.

Page 12
தென்னாசிய மக்களைப் பொறுத்த வரையில் மது அருங் துவது கலாச்சார ரீதியாகத் தடுக்கப்பட்டிருந்தாலும் இங்கி லாந்தில் வாழும் இளம் தலைமுறையினர் அதிவேகமாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டு வருகிறார்கள் என்று நினைக்கச் சாத்தியங்கள் தென்படுகின்றன.
கலாச்சார ரீதியாக மது அருந்துவதும் புகைபிடிப்பதும் பிழையென எடுத்துக் கொள்ளப்பட்டாலும் நிலைமை மாறிக்கொண்டிருப்பது இங்கு வந்த மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது கொஞ்ச நேர கிம்மதிக்காக மதுவை யும் புகைபிடிப்பதையும் காடுகிறார்கள்.
இளம் தலைமுறையினர், ஆங்கலேய இளம் தலைமுறை யினரைப்போல வாழ கினைப்பதால் ஆங்கலேய பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறார்கள்.
புகைபிடிக்கும், மது அருந்தும் சிநேகிதர்களை வைத்திருப்ப வர்கள் தாங்களும் தங்கள் சிநேகிதர்களைப் பின்பற்று கின்றார்கள். தமிழ் வாலிபர்களில் எத்தனை வீதமானவர்கள் இப் படிப் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறார்கள் என்று இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அகதிகளாக வந்த இளைஞர்கள் தங்கள் துயர்களை மறக்க புகைபிடிப்பதும் மது எடுப்பதும் நடக்கலாம். அவர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் அளவுக்கு மீறி மது அருந்துவதாலும் புகைபிடிப் பதாலும் வரும் என்று சொல்வது சமுக கலன் பேணும் ஸ்தாபனங்களின் கடமையாகும்.
புகைபிடிப்பதால் பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்த்மா, இருமல் என்ற கோய்களுக்கு ஆளாகின்றார்கள்.
அளவுக்கு மீறி மது குடிப்பதால் இளமையில் தங்கள் ஈரல்களை அநியாயமாக்கிக் கொள்வதில் தொகை கூடியவர்கள் தென்னாசிய மக்களாகத்தானிருக்கிறார்கள்.
இங்கு வந்திருக்கும் காங்கள் அளவுக்கு மீறி பொரித்த, தாளித்த, உணவுகளை உண்கிறோம். உடம்பில் ஒரு அளவு கொழுப்புத் தேவை. அந்த அளவுக்கு மேல் கொழுப்புக் கூடினால் இரத்த நாடி நாளங்களில் கொழுப்புத் தன்மை கூடி இரத்தோட்டம் தடைப்படும். இதனால் பிளட் பிரஷர், இருதய வருத்தம் வரும்.
தென்னாசிய மக்களுள் இருதய வருத்தத்தால் இறக்கும் தொகை வெள்ளைக்காரரை விட எத்தனையோ மடங்கு அதிகம் என்று முன்னர் குறிப்பிட்டேன். தமிழர்களைப் பொறுத்தவரையில் எத்தனை வீதமானவர்கள் இருதய வருத் தத்தால் இறக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை.
ஆனால் அண்மையில் நான் பார்வையிட்ட எத்தனையோ பத்திரிகைகளில் மரண அறிவித்தல்களில் எத்தனையோ ஆண்கள் 40-50க்கும் இடைப்பட்ட வயதில் இறந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்களையறிய எங்கள் சமுதாயம் வைத்திய நிபுணர்களின் உதவி கோருவது மிக மிக அவசரமாக மேற் கொள்ள வேண்டிய விடயமாகும்.
இருதய நோயால் இறப்பவர்களில் குஜராத்தியர்களின் தொகை கூடுதலாக இருக்கிறது. அவர்களுக்கும் தமிழ் மக் களுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் உள்ளன.
குஜராத்தி மக்களும் (பெரும்பாலானவர்) 1970ஆம் ஆண் டுகளில் அரசியற் பிரச்சினை காரணமாகக் கிழக்கு ஆபி ரிக்க நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு அகதிகளாக வந்தவர்கள். அவர்கள் இந்துக்கள். மாமிசம் பாவிக்காதவர்கள். மது அருந்தாதவர்கள், புகை பிடிக்காதவர்கள், கலாச்சாரத்தைப்
12

பேணுபவர்கள். மிகமிக அமைதியான வாழ்க்கை முறையினை விரும்புபவர்கள்.
இலங்கைத் தமிழரில் பெரும்பாலானோர் அரசியற் காரணங்களினால் அகதிகளாக வந்தவர்கள். தமிழரில் பெரும்பாலோர் இந்துக்கள், மாமிசம் சாப்பிடுபவர்கள். ஆனால் மது எடுக்கும் பழக்கமும் புகை பிடிக்கும் பழக் கமும் அதிகம் இல்லாதவர்கள். அரசியற் பிரச்சினைகளால் 'மன அமைதி”யை இழந்தவர்கள்.
இலங்கைத் தமிழரின் வாழ்க்கை முறைகள் இங்கிலாந்தில் வாழும்போது மாற்றமடைகிறது. இந்த முறை தவிர்க்க முடியாதது. ஒரு மனிதன் இன்னொரு நாட்டுக்குப் போகும்போது தன்னை மட்டுமல்லாது தன்னுடன் தனது
QUITTING IS WINNING
Quitting is winning is a London wide campaign aimed at helping adults give up smoking, organised by the Health Education Authority, Quitting is Winning will take a positive stance on no smoking, supported by Quitline, a telephone counselling service for people who want to quit and the Quit-Force,
a pan-London action group helping to stimulate local activities.
மொழி, கலாச்சாரம், கலைகள் என்பனவற்றையும் கொண்டு செல்கிறான். அவைகள்தான் ஒரு மனிதனின் அடையாளத்தை, அமைதியைக் கொடுப்பவைகளாகும்.
ஒரு தமிழன் எங்கு போனாலும் தனது மொழியைப் பேண ஆசைப்படுவதைப் போல், சமயத்தைப் பேண விழை வது போல், கலைகளை விருத்தி செய்ய விரும்புவது போல், தனக்குப் பிடித்த சாப்பாடுகளைச் சாப்பிடவும் ஆசைப்படுவான். இது இயல்பானது. மனிதரின் சாதாரண ஆசைகள் இவைகள்.
உணவைப் பொறுத்தவரையில் தமிழர்கள் சற்று அளவு மீறி கொழுப்பு, உப்பு, இனிப்பு எடுப்பதற்கான அறிகுறிகள் இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம். பேர்த்டே பார்ட்டிகளிலும், கல்யாண வீடுகளிலும், பூப்பு நீராட்ட விழாக்களிலும் எவ்வளவு இனிப்பும் கொழுப்பும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் என்று கினைக்கிறேன்.
தென் ஆசிய மக்களில் 20% நீரழிவு நோய் இருப்பதை யும் இவ்விடம் குறிப்பிடாது இருக்க முடியவில்லை.
if - 8 & 9

Page 13
புலம் பெயர்ந்த மக்கள் இவ்விடம் எத்தனையோ பிரச் சினைகளுக்கு முகம் கொடுப்பதும் அதனால் ஏற்படும் மனத்துயர்களும்(Stress) இருதய நோய் வருவதற்கும் கார ணமாக இருக்கலாம் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இது எவ்வளவு உண்மை என்று வைத்திய ரீதியாக இன் னும் பெரிய ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. மனத்து யர்களால் மிக மிகத் துன்பப்படுபவர்களில் மிக மிகக் கூடிய தொகையாக இருப்பவர்கள் தென்னாசிய காட்டைச் சேர்ந்த பெண்களாகும். 16-24 வயதிற்குட்பட்ட பெண்களில் 7% வீதமான பெண்கள் தற்கொலை முயற்சிகளை எடுத்துக் கொண்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
எங்கள் சமுதாய அமைப்பில் பெண்கள் மிக மிக அடக் கப்பட்டு நடத்தப்படுகிறார்கள். 46% பெண்கள் இருதய நோயால் இறப்பது ஒரு அடையாளமாகும். அண்மையில் கிடைத்த தகவலின்படி லண்டனில் 48 தமிழ்ப் பெண்கள் வீடுகளிலும் 32 பெண்கள் வைத்திய நிலையங்களிலும் வைத்து மனநோய்க்கான சிகிச்சை பெறுவதாக அறிய முடி கிறது. ஆண்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
பெண்களின் இந்த நிலைகளுக்கு எத்தனையோ கார ணங்கள் இருக்கலாம். இலங்கையில் நடந்த பயங்கரமான அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். அகதிகளாக வந்து கஷ்டப்படுவது காரணமாக இருக்கலாம். கண்டங்களுக்குக் கண்டம் 'கல்யாணப் பண்டங்களாய் மாற்றப்படுவதும் அத னால் வரும் துக்கமான அனுபவங்களும் காரணமாக இருக்
குடும்பப் பொறுப்புகள் பெரும்பாலும் பெண்களின் தலையில்தான் விழுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் பிள் ளைகளை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தமிழ்த் தாய்மாருக்குத் தெரியும். அத்துடன் தங்களது அகதி நிலை குறித்த பயங்கள், யோசனைகள், தோல்விகள் என்பன எவ்வளவோ மன உளைவைக் கொடுக்கும். ஆண்களாக இருந்தால் மனத்துயர் தீர்க்க வெளியே போகலாம், மது அருந்தலாம், புகை பிடிக்கலாம், ஆனால் பெண் ஆனவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து யோசித்து யோசித்துத் துக்கப்பட வேண்டிக் கிடக்கிறது. வெளியே போவதற்கு சுவாத்திய கிலையும் எதிராக இருக்கிறது. இப்படி எத் தனையோ காரணங்கள் இருதய நோயை வரப்பண்ணலாம் என விவாதிக்கப்படுகிறது.
அத்துடன் காங்கள் அதிகம் வெளியே நடந்து - உடல சைத்து வேலை செய்யாமல் பழகிக்கொண்டிருக்கிறோம். இது உடம்பில் கொழுப்புக் கூடுவதற்கு இன்னுமொரு மிகப் பெரிய காரணமாகும்.
நிறவெறி. (9ஆம் பக்கத் தொடர்சசி)
பின் பின் ‘காணாமற்போன' தனது நண்பர்களைத் தேடிப் போகிறார். அவர் முடிவுக்கு வருகிறார். தனது வாழ்வு தனது சொத்து இருக்குமிடத்தில் இல்லை, மாறாக தனது நேசத்துக் குரியவர்கள் வாழுமிடத்தில், மிஸிஸிப்பியில் இருக்கும் தனது குடும்பத்தில் இருக்கிறது.
இறுதிக் காட்சியில் உகண்டாத் தெருவில் நிகழும் ஒரு கொண்டாட்டத்தின் மத்தியில் நிற்கையில், குழந்தையின் ஆதரவான பிஞ்சு விரல் வருடல் ஆண்டாண்டு காலமாக அவருக்குள்ளிருந்த கசப்பையும் கம்பிக்கை வறட்சியையும் துடைத்தெறிந்து விடுகிறது. அந்த வருடலின் முலம், கண் ணிர் வழியும் ஜேயின் கன்னத்தில் வைக்கப்பட்ட பிஞ்சு விரல் களின் முலம், மீரா நாயர் நமக்குச் சொல்கிறார்: "ஒரு தங்தையின் இடம் மிஸிஸிப்பியில் மட்டுமல்ல, உகண் டாவிலும்தான் தேவையாயிருக்கிறது'.
13

S CashandCary என்று சொல்லிக் கொண்டு அளவுக்கு மீறி அரிசி, எண்ணெய், கோலா, இனிப்புச் சாப்பாடுகளால் குசினியை நிறைப்பவர்கள் எங்களில் ஏராளமாக இருக் கிறோம். இலங்கையில் என்றால் பெண்கள் ஓடி ஆடி வேலை செய்ய வேண்டும். நீர் எடுப்பதும், விறகு சேர்ப் பதும், ஆடு கோழி பார்ப்பதும் என எத்தனையோ வேலை களுக்குப் பழக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் உடம்பு லண்டனில் அதிகம் 'அசைக்கப்படுவதில்லை". எத்தனையோ வீடுகளில் 2-3 தமிழ்ப் படங்களை ஒரு நாளில் பார்த்து முடிக்கும் தமிழ்க் குடும்பங்களும் இருப்பதாகக் கதைகள் அடிபடுகின்றன. ஒரேயிடத்தில் அசையாமலிருந்தால் எங் கள் உடம்பின் இரத்தோட்டம் என்னவாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
இலங்கையில் எங்கள் உடம்புக் கொழுப்பு வெயிலில் நடப்பதால் வேலை செய்வதாற் கரையும். இவ்விடம் குளி ருக்கு வீட்டுக்குள் அடங்கி, சோபாவில் ஒடுங்கியிருந்து தமிழ்ப் படம் பார்க்கும்போது உடம்பில் சதை வைக்க ஏதுக் கள் கூடுமே தவிரக் குறையாது.
இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மையான ஆசிய மக்கள் கார் வைத்திருப்பதும், கடப்பதற்குச் சோர்வாக இருப்பதற்கு ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. இங்கி லாந்தில் வாழும் கறுப்பு இன மனிதர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பரந்தளவில் ஈடுபடுகிறார்கள், ஆனால் ஆசிய நாட்டாரோ மிகமிகக் குறைவாகத்தான் Sportsல் ஈடுபடுகிறார்கள்.
தமிழராகிய நாம் எங்கள் குழந்தைகள் வெளியில் விளை யாட நாங்கள் உற்சாகம் கொடுக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விடயங்களைப் பார்க்கும்போது இருதய வருத்தம் வருவதற்குரிய காரணங்களை நாங்கள் கவனமாக ஆராய வேண்டும் என்றும் இருதய நோய் வரு வதைத் தடுக்கவும் ஓரளவு முடியும் என்றும் தெரிகிறது.
புலம்பெயர்ந்த தமிழரின் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் எங்கள் மொழி, கலாச்சாரம், அரசியல், சிங் தனை என்பனவற்றை விரிவு படுத்த எவ்வளவோ முயற்சி கள் செய்கிறோம்.
எங்கள் சுகாதாரம், நோய்கள் என்பனவற்றிலும் கவன மாயிருப்பது மிகவும் இன்றியமையாதது.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' Γ
படத்தின் இறுதிக் காட்சிதான் இத்திரைப்படத்திலேயே மிக அற்புதமானது; மிக இயற்கையானது; மிகமிகச் சக்தி வாய்ந்தது.
a a w காதலர்களைப் பற்றியதல்ல. மாறாக, இனம், வர்க்கம், நிறம், பணம் போன்றவற்றால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த உலகத்தில் உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கை என்ன எனத் தீர்மானிப்பதற்குப் போராடும் ஒரு தனி மனித னின் போராட்டம் பற்றியது.
இந்த உண்மையைத் தேடிய வாழ்க்கைப் பயணத்தைத்தான் மீரா நாயர் 'சலாம் பாம்பே யை அடுத்து "மிஸிஸிப்பி மசாலா’வில் மறுபடி தொடங்கி வைத்திருக்கிறார்.
if - 8 & 9

Page 14
(LI Iர்க்கால இலக்கியம் பற்றி இன்று பரவலாகப் பேசப்படுகின்றது. போர் பற்றிய செய்திகள், அதன் விளை வுகள், மக்களிடம் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள், வாழ் முறை மாற்றங்கள், மனோபாவங்கள் படைப்புக்கள் முலம் வெளிக்கொணரப்படுவதனால் இவ்வாறு கூறப்படுகின்றனவா? ஒரு நாட்டில் ஏற்படும் பஞ்சம் பற்றியும், அதன் கோர விளைவுகள் பற்றியும் கூறும் படைப்புக்களை நாம் பஞ்ச கால இலக்கியம் என, ஏன் அழைப்பதில்லை? போர்க்கால இலக்கியத்திற்கும் ஏனையகால இலக்கியத்திற்கும் வேறு பாடுகள் உண்டா? போர்க்கால இலக்கியத்திற்கு சில விசேட, தனித்த தன்மைகள், தனித்த மதிப்பீடுகள் உண்டா?
இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனங்கள் எழுத நேர் கையில், கால வித்தியாசங்கள் உணர்த்தும் தேவை கருதி, சில பிரிப்பு முறைகளுக்கு இலக்கியம் உள்ளாவதுண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் தொடங்கி இருப தாம் நூற்றாண்டு வரை சில பிரிப்பு முறைகள் இருப்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. இதேபோன்று ரஷ்ய இலக் கியத்திலும் புரட்சிக்கு முந்திய காலம், புரட்சிக்குப் பிந்திய காலம் என நோக்குதலும் உண்டு. ஆனால் படைப்பின் தர அடிப்படையில், போர்க்கால இலக்கியத்திற்கு தனித்த மதிப்பீடுகள் உண்டா?
ஒரு நாடு, இன்னொரு காட்டினால் ஆக்கிரமிக்கப்பட்டி ருக்கும்போது, ஆக்கிரமிக்கப்பட்ட பூமியில் ஆக்கிரமிப்பா ளர்களினால் ஏற்படும் அழிவுகள், அநீதிகள் பற்றிக் கூறும் படைப்புகள், ஒரு அரசு தனது மக்கள் மீது கொண்டுள்ள ஆட்சி முறையை ஆதரித்து எழும் படைப்புக்கள், ஒரு கட்சி யின் கோட்பாடு சார்ந்த படைப்புக்கள் ஒரு அரசியல் ஆதாய உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதனால் அவற்றை ஆதரித்தும் போற்றியும் வரும் ஒரு சூழல், ஒரு மனோ பாவம் கூடவே உருவாகி விடுகின்றது. இலக்கியத்தை ஒரு சமுகப் பயன்பாட்டிற்கு மாற்ற முனையும் பலர், இக் கருத் துடன் ஒன்றுபடுவர். இவர்கள் கருத்துக்கள் சார்ந்து ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றார்களே தவிர, படைப்பாளியின் கருத்துக்களின் பகைப்புலமான அனுபவங்கள் கலையாக மாற்றம் பெற்றிருக்கின்றனவா என்பதைக் கவனத்தில் எடுப் பதில்லை. அது அவர்களுக்கு அவசியமான ஒன்றாகவும் இருப்பதில்லை. ஒரு காலத்தில் மார்க்சிய விமர்சகர்களில் சிலர், தம் கட்சி சார்ந்தவர்களையும், மார்க்சியம் சார்ந்த கருத்துக்கள் கொண்ட படைப்புக்களையும் தரம் சார்ந்த மதிப்பீடுகள் இன்றிப் பாராட்டி வந்தனர். அங்கீகாரம் அல் லது புகழ் பெற்ற இவ்விமர்சகர்களின் பாராட்டையும், அதன் முலம் படைப்பாளி என்ற அந்தஸ்தையும் பெற்று விட வேண்டுமென்ற முனைப்பில் உருவான போலிப் படைப்புக்களை, இலக்கிய உலகம் கீன்கு அறியும். இது தமிழ்ச் சூழலுக்கு மட்டும் உரிய ஒரு தனித்த போக்கல்ல. சோவியத் இலக்கியத்திலும், சீன இலக்கியத்திலும் இவ்வாறான போக்குகள் இருந்ததை அவதானிக்கலாம்.
ஒரு படைப்பு எவ்வாறு படைப்பாளியிடம் உருவாகி வருகின்றது என்பது சார்ந்த கருத்துக்களின் புரிந்துகொள்ளா
14
 

3LITi 55 TG இலக்கியம்
மையினாலோ, அல்லது புரிந்தும் ஒரு புறத்தேவையின் காரணமாக அலட்சியம் செய்யப்படுவதனாலேயோ, இவை ஏற்படுகின்றன. ஒரு நல்ல கலைஞன் படைப்பில், அவன் கால சமுக உணர்வுகள் துலங்கியே தீரும். அவை கருத் துக்களாக அன்றி, கலையாகவும் மாற்றம் பெற்றிருக்கும். காலத்தின் தேவைக்காகவோ ஒரு அதிகார அமைப்பைத் திருப்தி செய்வதற்காகவோ, அவன் படைப்புகள் உருவாகி வருவதில்லை. போராட்ட காலச் சூழலுக்கு முன் அவனது சிறந்த படைப்புக்களை உள்வாங்கிய காலம் போலவே, போராட்ட காலமும் அமையும். 'கடலும் கிழவனும்' என்ற நாவலை எழுதிய ஹெமிங்வேதான் “யாருக்காக மணி யடிக்கிறது', 'போரே கீபோ' நாவல்களையும் எழுதினார். இவை வெவ்வேறு காலங்கள் ஒரு கலைஞன் மனதில் ஏற்ப டுத்திய வாழ்வு சார்ந்த அனுபவ எதிரொலிகளும், கலை வெளிப்பாடுகளுமாகும். அவ்வாறே ஒஸ்திரோவொஸ்கியின் "வீரம் விளைந்தது' நாவல் எவ்வாறு புரட்சியின்பால் ஈடு பாடு கொண்ட ஒர் இளைஞன் நிலைகளை அற்புதமாக வெளிப்படுத்தியதோ, அவ்வாறே பாஸ்டர்காக்கின் "டொக்ரர் சிவாகோ' வும் புரட்சி ஏற்படுத்திய ஒரு பக்க விளைவுகளை அழகாகச் சித்தரித்தன. காலங்கள், நல்ல கலைஞர்கள் மன தில் ஏற்படுத்தும் கிலைகளே இவை.
கலை சார்ந்த உண்மைகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப் படாமல், அதிகாரம் சார்ந்த கட்டளை இடல், ஒர் ஆரோக் கியமான இலக்கியச் சூழலுக்கு உகந்த நிலை அல்ல. சோச லிச ரஷ்யாவில், ஸ்ராலின் காலத்தில் ஏற்பட்ட இலக்கிய விவாதங்களின் பின் சோசலிச யதார்த்தவாதக் கோட்பாடு, இறுதியில் அரசின் பொருளாதாரக் கொள்கையை ஒட்டி இலக்கியங்கள் படைக்கப்படல் வேண்டும் என்ற நிலைக்கு இறுகிப் போனது. விளைவு, தரமான எழுத்தாளர்கள் பலர் மறைக்கப்பட, போலிகள் உயர்த்தப்பட்டனர். தமது படைப் புகளுக்காகச் சிலர் தமது உயிரையும் இழக்க நேரிட்டது. இறுகிப்போன அதிகார அமைப்பினுள் சமரசம் செய்து கொள்ள முடியாமல், சிலர் தற்கொலை செய்து கொண்ட
துமுண்டு.
காலத்தின் சமுக உணர்வுகளை எதிரொலித்த படைப்புக்கள் தேவைகருதி ஒதுக்கித் தள்ளப்பட்ட போதிலும், அவை காலத்தின் தேவைகளையும் மீறி, படைப்பு நிலையிலும், உள்ளடக்கம் சார்ந்தும் தம்மை கிலைநிறுத்திக் கொண்டுள்ளன. ரோல்ஸ்ரோய் படு பிற்போக்குவாதியென, ரஷ்யப் புரட்சி வாத வரட்டு விமர்சகர்களினால் ஒதுக்கித் தள்ளப்பட்ட போதிலும், அவர் ரஷ்ய நிலவுடைமைச் சமுதாயகாலக் கண்ணாடி என லெனினால் குறிப்பிடப்பட்டார். "புரட்சியின் பின்னால் பதினொரு கத்திகள்' நூலை, லெனின் விமர் சிக்கும் போது, உள்ளடக்கம் சார்ந்து நிராகரிக்கப்பட வேண்டிடினும், அவற்றின் கலை நேர்த்திக்காக மறுபதிப்புச் செய்யலாம் எனக் கூறினார். லெனினுக்கு இருந்தது போன்ற இலக்கியப் பக்குவந்தான் ஆரோக்கியமான இலக் கியத்திற்கு வழிவிடக் கூடியது. சீனப் புரட்சிகரப் படைப் பாளிகள் சிலரது படைப்புக்களையும் விட, மாவோவின் கவிதைகள் மிகுந்த கலைத்தரம் வாய்ந்தவை என்பது
if - 8 & 9

Page 15
அறியப்பட்ட ஒன்று.
தேவை கருதிய கிர்ப்பந்தம்; இலக்கியத்தை இரு கிலை களுக்கு இட்டுச் செல்கின்றன. ஒன்று, அதிகாரத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, சமுக யதார்த்தம் புதைக்கப்பட, பொய்யான போலியான வாழ்வு நிலைகள் உருவாக்கப் படுகின்றன. வாழ்நிலைகள் ஏற்படுத்தும் உணர்வுகளுக்குப் பதிலாக, அதிகார மனநிலைகளுக்கு ஏற்ற விதமாக வாழ் கிலைகள் இருப்பதாக உருவகிக்கப்படுகின்றன. இங்கிலை சமுக ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் பாரதூரமான தலைகீழ் நிலையாகும். மற்றொன்று, அதிகார மனங்களின் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் ஆளாகிப் போகும் அபாயத் தைத் தவிர்ப்பதற்காக, பூடக இலக்கிய வகைகளைக் கை யாள்வதுண்டு. பண்டைய அல்லது காவியகாலக் கதாபாத் திரங்கள் முலம், அல்லது கர்ண பரம்பரைக் கவிதைகள் மூலம், அல்லது குறியீட்டு உருவகங்கள் முலம் உருவத்தினைப்
Erication in II Lig
SGN 352
ஈழத்துச் செட்டிப்பாளையம் இ.வ.கணபதிப்பிள்ளைப் புலவரின் நூற்திரட்டு, உரை எழுதியவர் ஈழத்துப் பூராட 6 IIT
கனடா நிழல் வெளியீடு; 1990
126பக்
பொருள்: சுயசரிதை/தமிழ் இலக்கியம்/கவிதைகள்/இங் துக் கோவில்கள்
PB
தாகம் (மாதாந்த வெளியீடு)
இலண்டன் தாகம் வெளியீடு; ஐப்பசி 1993
இதழ் 1; இல.
24பக்.
பொருள்: கட்டுரைகள்/மனித உரிமை மீறல்கள்/ இலங்கை அரசாங்கம்/விடுதலைப் போராளிகள்
SGN 354
மனோ, அல்பேட் மனோவின் மனக் குறும்புப்பா கனடா நிழல் வெளியீடு; 1992 60 fë.
பொருள்: கவிதைகள்
SGN 356
ஈழத்துப் பூராடனார்
அன்புடைத் தமிழர் அகத்தினை வாழ்க்கை எனும் ஐக் தினை நாநூறு பதிப்பாசிரியர் எட்வேட் இதயச்சந்திரா
கனடா நிழல் வெளியீடு; 1991
142LJð;
பொருள்: தமிழ் இலக்கியம்
SGN 357 செல்வராசகோபால், க.தா. ஈழத் தமிழ் அறிஞர்கள் கனடா நிழல் வெளியீடு; 1992 60பக்.
பொருள்: சுயசரிதை
SHR 3216 Journey without a destination: Is there a solution for Sr
if - 8 8 9
 

பேணிக்கொண்டு, தமது உணர்வு கிலைகளை வெளிக் கொணர்ந்து விடுகின்றார்கள். ஆயினும் இலக்கியத் தேர்ச் சியுள்ள வாசகர்களினால், அவர்கள் எங்கு கிற்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியும். சிலவேளைகளில் அதி காரத்திற்குச் சார்பான இலக்கியத் தேர்ச்சியுள்ளவர்களால் கண்டுகொள்ளப்பட்டு, முடிவில் அதுவே அவர்கள் உயிருக்குப் பகையாகவும் மாறுவிடுவதுமுண்டு.
ஆக, இலக்கியத்தை அது உருவாகிவரும் இயல்பான கோக்கிலிருந்து, தேவைகருதி சில வரையறைகளுக்கு உட் படுத்தும்போது, உண்மையான இலக்கியம் சிதைந்து, போலியும் பொய்மையும் உருவாகும். இது நல்ல கலைஞர் களைச் சிதைப்பது மட்டுமல்ல, ஒரு சமுகத்தின் இலக்கிய வளத் தினையும் வற்றப்பண்ணி விடும். இலக்கிய வளமற்ற ஒரு சமுகம் மேன்மையான ஒரு சமுகமாகக் கருதப்பட மாட் Lesgl. O
Lankan Refugees?
London: The Refugee Council 66p பொருள் இனப் பிரச்சிணை/இலங்கைத் தமிழர்அகதிகள்
SHR 3222
இன்குலாப்
இன்குலாப் கவிதைகள் பாரிஸ்: தமிழ்த்தாய் பதிப்பகம்; 1991 36Lud5. பொருள்: அரசியல் கவிதைகள்
SHR 3223
பாலசிங்கம், அன்ரன்
இரண்டு தசாப்தங்களும் புலிகளும்
தமிழீழம்: தமிழீழ விடுதலைப் புலிகள் 1992
43Lld.
பொருள்: இனப் பிரச்சிணை/போராட்ட வரலாறு/இலங் கைத் தமிழர்கள்/விடுதலைப் புலிகள்
SGN 369
ஞானமணியம்
தவத்திரு விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டுப் பாம
6
இலண்டன்: பண்டைத் தமிழ்க் கிராமிய அரசாங்கம்; 1992
23பக்.
பொருள்: கவிதைகள்/விபுலாந்தர்/தமிழ்
SHR 3224
The State Co-ordinating Committee of NGOs for Relief and Rehabilitation of Sri Lankan Refugees
Madras: TECRAS, June 1993
பொருள்: தமிழ்நாடு/இலங்கைத் தமிழர்கள்/அகதிகள்/ அரசுசார் ஸ்தாபனங்கள்/அடிப்படைத் தேவைகள்
OHR 257
Passing the Buck deficient Home Office Practice in 'safe third country" asylum cases. London: Amnesty International (British Section); July 1993
8ρ பொருள்: ஐக்கிய ராச்சியம்/தஞ்சம்/வழக்கு O
S

Page 16
ରା ଗT(16l) இனவுண
அண்மைக் காலங்களில் ஜேர்மனியில் இனவெறித் தாக் குதல்கள் துரிதமாக வளர்ந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகள் மீது, முக்கியமாக கறுத்த இன மக்கள், சிறுபான்மையின மக்கள், அகதிகள் போன்றோர் மீது இனவெறியாளர்கள் தாக்குதல் நடத்தியுள் ளனர். கட்டுமீறிச் சென்றுகொண்டிருக்கும் இனவெறித் தாக் குதல்களையிட்டு ஐ.நா. மனிதவு ரிமை ஆணைக்குழு கண்டிக்குமுக மாக, ஜேர்மனியைத் தம்முன் ஆஜாரா கும்படி கட்டளை பிறப்பித்துள்ளதென அறியப்படுகிறது.
ஜேர்மனிக்கெதிரான இனவெறிக் குற்றச் சாட்டினை அரசுகள் முறையி டாது தனிநபர்கள் பதிவு செய்திருப் பதனால் ஜேர்மன் வெளிவிவகார மந் திரி கிலோஸ் கின்கெல் (Klaus Knke) ஆணைக்குழுவின் முன் ஆஜா ராகி கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு இருப் பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆணைக் குழு எடுக்கும் முயற்சிகள் அதிகளவில் பயன்தரப் போவதாக வில்லை.
CARF என்ற ஜேர்மன் சஞ்சிகை ஒன்று, 1993ஆம் ஆண் டில் இனரீதி யான 52 கொலைகள் நடைபெற் றுள்ளதாகப் பட்டியல் வெளியிட் &:388&3:3 டுள்ளது. இதில் 41 கொலைகளில் தீவிர வலது சாரிகள் சம்பத்தப்பட்டுள்ளனர். 1992ஆம் ஆண்டு நடைபெற்ற இன வெறிக் கொலைகளுடன் பார்க்கும்போது இது இரண்டு மடங்காகும். மேலும் இத்தகைய இனவெறித் தாக்குதல்கள் கறுப்பின மக்களுக்கெதிராக மட்டுமல்லாமல் இவர்களுக்காகப் போராடும் நாட்டு மக்கள் மீதும் மற்றையோர் மீதும் நடாத் தப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒபெர்ரொப் குளிர்கால விளையாட்டரங்கத்திற்குப் (Obertof Winter Sports Center) போட்டியிட அமெரிக்காவிலிருந்து வருகைதந்த ஒரு கறுப்பு விளையாட்டு வீரர் மீது இரு நாஜிகள் (Nazis) தாக்க முயலும்போது, அவரைக் காப்பாற் றுவதற்கெனச் சென்ற சகவீரர் ஒருவர் கடும் தாக்குதலுக் குள்ளாகி மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பலரைத் திகைப்புக்குள்ளாக் கியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து பொலிசாரால் வுபெர்டல் (Wupp era), பிரண்டென்பெர்க் (Brandenburg), குலொட்ஸ் (Kotze)போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட தேடுதல் முயற் சிகள் பல நாஜி உறுப்பினரது விபரங்களையும், தொடர்புகள், மறைவிடங்கள், ஆயுதக்களஞ்சியங்கள், குறிப்புகள், பெயர்ப் பட்டியல் போன்ற முக்கிய விடயங்களையும் வெளிக்கொணர்ந் துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படியான காக்சியரின் தொடர்புகளையிட்டு ஆராயும் போது பல அரசாங்க உத்தியோகத்தர்கள், அங்கத்தவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் உதவி, ஆலோசனை, ஆசீர்வாதம், அனுசரணைகளுடன்தான் இப்படிப்பட்ட இன வெறிக் குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. இதேபோன்று ஒல்லாந்து (காட்டிலும் இனவுணர்ச்சி மனப்பான்மை மேலோங்கி வருவதை அவதானிக்கக் கூடிய தாகவுள்ளது. துவே வான் தேர் போஸ் (Douwe Mander 80s) என்றழைக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி யொருவர் தலைமையில் தேசிய பாதுகாப்புச் சேவை
16
 

ffaf LD60T LITT 6ŐT 6OLD
(National Security Service) 6Tara aspil Gib 56f(p60fpd கண்காணிப்புக் குழுவொன்று, ஒல்லாந்தில் இயங்கி வருகின் றது. இது இனவெறியர்கள் ஒழுங்கு செய்யும் கூட்டங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமுகமாகவும், முக்கிய வலதுசாரித் தலைவர்களைப் பாதுகாப்பதற்கெனவும் உருவாக்கப்பட்ட ஒரு குழுவென அறியப்படுகிறது. இது பாதுகாப்புச்
8
சேவையில் ஈடுபட்டு வருவதாகக் கூறிக்கொண்டுள்ள போதிலும், இரகசிய கண்காணிப்பு, இடதுசாரிகளின் இன வெறித் தடுப்பு முயற்சிகள், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர்புகள் போன்றவற்றிலும் அதிகளவு ஈடுபாடு கொண் டுள்ளது எனக் கூறப்படுகிறது. நேரடியாகப் பாசிச செயல் முறைகளில் ஈடுபாடுகள் காண முடியாதிருப்பினும் இவர் கள் கொள்கைகள், அபிலாசைகள், தொடர்புகள் என்று பார்க்கும்போது இவர்களும் முக்கிய பங்கை அளித்து வருகி றார்கள் என்பதில் ஐயமில்லை என்பதே அவதானிகள் கருத்து.
ஆனால் இதன் தலைவர் துவே வான் தேர் போஸ் தாம் அங்காட்டுச் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்பட்டுள்ள ஒரு குழுவெனவும், தாம் ஒரு கூலிப்படையல்லவெனவும் கூறி வருகின்றார். இது இவ்வாறிருக்க, ஒஸ்ரியாவில் (Austra) இனவெறியாளர்கள் இனவெறி எதிர்ப்புப் போராட்டங்களை கடத்துபவர்களுக்குக் கடிதக் குண்டுகளை அனுப்பி மிரட்டி வருகிறார்கள். 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இனவெறியாளர்களால் நடாத்தப்பட்ட கடிதக் குண்டுப் போராட்டத்தில் 10 இனவெறித் தடுப்பு ஆர்ப் பாட்டக்காரர்கள் படுகாயமுற்றுள்ளனர். இது தொடர்பாகப் பொலிசார் எடுத்த முயற்சியில் இந்த இனவெறியாளர் களுக்கும் ஜேர்மன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள இனவெறியாளர்களுக்கும் இடையில் பரந்த தொடர்புகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ள இனவெறியாளர்கள் டென்மார்க்கில் உள்ள ராண்டேர்ஸ் என்னுமிடத்தில் டனிஷ் தேசிய சோசலிச அமைப்பு என்று கூறப்படும் ஒரு இனவெறியமைப்பின் தபால்பெட்டி எண் ஒன்றினைப் பாவித்துத் தமக்கிடையில் ஜேர்மனியில் உள்ள இனவெறித்தடுப்பு ஆதரவாளர்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களைப் பரிமாறி வருகிறார்கள் எனத் தெரிய வங்துள்ளது. இத் தபால் QLLu9 stsor Ep60Guo “GLrf stuflsörl Merfléo (Der Einblick) என்னும் இனவெறிப் பத்திரிகை விகியோகம் செய்யப்பட்டு
if - 8 & 9

Page 17
T வருகிறது. ஏறத்தாழ 400க்கு மேற்பட்ட இனவுணர்ச்சிக்கு எதிராகச் செயற்படும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகை யாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் போன்றவர் களை உள்ளடக்கிய பட்டியலொன்றை வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் அண்மையில் ஜேர் மனியில் பொலிசாரால் நடாத்தப்பட்டு வரும் இனவெறி யாளர்கள் பற்றிய விசாரணையின்போது, ஜூன் 1993ஆம் ஆண்டிலிருந்து இனவெறியாளர் நடவடிக்கைகள் அதிகரித் திருப்பதாகவும், பிற நாடுகளில் வாழும் அங்கத்தவர்கள் முலமும், துணையாளர்கள் முலமும் பிறநாடுகளில் தீவிரமாக இயங்கிவரும் இனவெறி எதிர்ப்பாளர்கள் பெயர், விலாசம், புகைப்படம், அவர்களது மோட்டார் வண்டிகளின் பதிவிலக் கங்கள் ஆகியவற்றை ஜேர்மனியில் மெயின்ஸ் என்னுமிடத் திலுள்ள “தேசிய தொலைபேசி தகவல் பிரிவுக்கு" அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முலம் தெரிய வந்துள்ளது. இத்தகைய தகவல்களைச் சேக ரித்து வரும் தாபனம் “ஜேர்மன் தகவல் சேவை-காப்பு அமைப்புக் குழு அன்ரி அன்டிபா” (German information Service-Working Group Anti-Antifo) 6Tai il Gasniestb. g356ir தொலைபேசிச் சேவை, இத்தகைய தகவல்களை தமது தாபனத்தின் துண்டு வெளியீட்டின் முலம் பெற்றுக் கொள் ளலாம் என்று விமர்சித்து வருகிறது. இத்தகைய விபரங்களை மற்றைய இனவெறியாளர்களுக்கு அறியத்தர டென்மார்க்கில் உள்ள டனிஷ் தேசிய சோசலிச அமைப்பின் தபால்பெட்டி எண்ணும் பாவனையில் உள்ளதெனக் கூறப்படுகிறது.
இதேவேளை, அண்மையில் டென்மார்க்கிலுள்ள கோபன் கோஹன் (Copenhagen)பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையில் இருந்த கமல்டொவ்-கன்சன் (ProtGammetofHansen) என்பவரது தொலைபேசியில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்த தகவல் வெளிவந்துள்ளது. ஏழு வருடங்களாக இக்கருவி பூட்டப்பட்டு இவர் என்ன பேசுகி றார், யாருடன் பேசுகிறார் என்று தகவல்களைச் சேகரிப் பதில் உள்நாட்டுக் காவல்துறைக்கும், முன்னைய திேயமைச்சர் எரிக் நின்-கன்சன்(ErkNinn-Hansen) என்பவரிற்கும் தொடர் புள்ளதென அறியப்படுகிறது. பேராசிரியர் கமல்டொவ் - கன்சன் ஒரு முற்போக்குவாதி. இவர் டனிஷ் அகதி-சேவை என்னும் தாபனத்திற்குத் தலைவராகவும் இருந்தார். அகதி விடயங்களில் மிகுந்த ஆர்வமும், அவர்கள் உரிமைகளுக் காகத் தீவிரமாகப் போராடியும் வந்தவர். தமிழ் அகதிகள் விவகாரத்திலும் மிகுந்த ஈடுபாடுகள் உண்டு. எரிக் கின் - கன்சனுக்கும் இவருக்குமிடையில் கருத்து மோதல்கள் பல இடம் பெற்றுள்ளன. தமிழ் அகதிகள் விடயத்தில் சட்டத் திற்கு மாறாக எரிக் கின்சன் எடுத்த முயற்சிகளில் கண்ட தோல்விகளை முடி மறைக்க முயற்சித்த போதெல்லாம், பேராசிரியர் கமெல்டொவ்-கன்சன் தமிழ் அகதிகள் உரி மைக்காகப் போராடி பல உண்மைகளை வெளிக்கொணர்க் துள்ளார். இறுதியில் தமிழ் அகதிகள் விவகாரம் டென் மார்க் கொன்ஸர்வேட்டிவ் அரசாங்கத்தைக் கவிழ்த்தது. ஊழல்களை வெளிப்படுத்தி அரசாங்கத்தைத் திணறடித்துக் கவிழ்த்ததில் பேராசிரியர் கமெல்டென்-கன்சனுக்கும் பங் குண்டு. அண்மையில் வெளிவந்த பேராசிரியர் கமல்டன்கன்சன் விவகாரம் டனிஷ் மக்களைத் திடுக்கிட வைத்துள்ளது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி, குடும்பங்களையும் சினேகிதரையும் பிளவுபடுத்தி, கிரந்தரத் தொல்லையளித்து வன்முறைக்கு இட்டுச் செல்லும் இனவெறி மனப்பான்மை வளர்ச்சியைக் கண்டும் காணாததுமாகப் பல நாடுகள் இருப்பதை அங்கு நடைபெறும் சம்பவங்கள் முலம் அறிந்து கொள்ளலாம். ஒரு வழியில் சட்டதிட்டங்கள் முலம் கறுப்பின மக்கள், அகதிகளாகப் புலம் பெயர்ந்து வரு வோர் போன்றோரை வரவிடாது தடுத்து மறிக்க முயற் சிக்கும் அதேவேளை, அதில் ஏற்படும் ஆட்சிமுறைச் சிக்கல் 56061Tuyub (Bureaucratic Procedures) 5/TLDssia,6061Tujub 60.5unt ளுவதற்கு ஆட்சியாளர்கள், இனவெறியாளர்கள் உணர்ச்
血Lá一8&9

|
சிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற எண்ண மும் பலர் மத்தியில் உள்ளது.
இனவெறியாளர்களின் வன்செயல்களைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறோம் எனக் கூறிக்கொண்டு அவற்றினை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசுகள் தவறி தாமதம் காட்டி வருவதாக அவதானிகள் கூறுகிறார்கள். இனவெறி வன்முறை கறுப்பின மக்கள் மத்தியில் குறிப்பாக முன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகள் மத்தியில் பயத் தையும் பீதியையும் எழுப்பி இங்காட்டில் அவர்களுக்கு வதிய உரிமையில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, செயலிழக்கச் செய்து விரட்டியடிக்கவும், மேலதிகமாகக் குடி யேற வருபவர்களைத் தடுக்கவும் ஒரு முன் அறிவித்தலாக இருக்கவும் பயன்படுவதாக பலர் கருதுகின்றனர். இப்படியான வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருவதில் பிரித்தானிய அரசு விதிவிலக்கில்லை.
1993ஆம் ஆண்டு மட்டும் 140,000க்கு மேலான இன வெறித் தாக்குதல்கள் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரித்தானியத் தேசியக் sLá9 British National Party(BNP)) 616zitgyb 56ílu 66lygjafTfiái கட்சி முதன் முறையாக அண்மையில் டவர் ஹம்லெட் (TowerHamlet) என்னுமிடத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற டெறிக் பீகான் (DerekBeckon) ஒரு தீவிரவாதி. இவருக்குக் கிடைத்த வெற்றியைப் பலர் வரலாற்றுக்குரிய வெற்றியெனப் புகழாரம் சூட்டி வருகின்றனர். இவர் உள்ளுராட்சி அங்கத் தவராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து கறுப்பின மக்கள் மீது, குறிப்பாக பங்களாத்ேஷ மக்கள் மீது நடைபெற்ற இனவெறித் தாக்குதல்கள் 300% உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கறுப்பின மக்கள் இந்நாட்டு மக்களுக்குரிய வேலைகளைத் திருடி வருவதாகவும் இதனால் பல வெள்ளையருக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போவதாகவும், கறுப்பரை இங்கு இருக்க விட்டபோதும், இவர்கள் அரசாங்கம் கொ டுத்து வரும் சலுகை ஊதியங்களைத் திருடி வருவதாகவும் இதனால் அரசுக்குப் பணச்சிக்கல் ஏற்பட்டுள்ளதெனவும், இதனால்தான் வெள்ளையர்கள் நலமுடைய வாழ்க்கை நடாத்த முடியாதிருப்பதாகவும், பொலிசார் கறுப்பினத்த வர்களுக்குச் சாதகமாகவே இயங்கி வருகிறார்கள் என்றும், இப்படியெல்லாம் விட்டுக் கொண்டு போனோமேயானால், கறுப்பினச் சுரண்டல்காரர்கள் எம்மை முற்றாக விழுங்கி விடுவார்கள் என்று எச்சரிக்கை செய்து பொய்ப் பிரச் சாரம் முலம் இனத்துவேஷத்தை வளர்த்து வெற்றிகண்டு வருகிறார்கள். இதனைப் பிரித்தானிய அரசும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதையும் காணக்கூடியதாக வுள்ளது.
இதேவேளை, சிறுபான்மை இனத்தவர், அகதிகள் மற் றும் வடுப்படத்தக்க மக்கள் உரிமைக்காக, நீதி தேடிப் போராடுபவர்களுக்கு எதிராக, அரசு நிர்வாகங்களும், காவல்துறை அதிகாரிகளும், அரசுகளின் கொள்கைகளை மாற்றியமைக்கக் கூடிய சக்தியுடைய முக்கிய நபர்களும் இனவெறி வளர்ச்சிக்கு ஊண்றுகோலாக இருப்பார்களே யானால் எப்படி பொதுமக்களிடம் வளர்ந்து வரும் இனத்து வேஷ உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி பலரிடத்து அதிகரித்து வருகிறது. இனவுணர்ச்சியை முற் றாக அகற்றுவது கடினமாக இருப்பினும் வளர்ந்து வரும் இனவுணர்ச்சி மனப்பான்மைக்கெதிராகப் போராட வேண்டும் என்ற கருத்தும் மக்களிடையே வளர்ந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதற்கு ஆதரவளிப்பது எமது கடமை யெனக் கூறலாம்.
இனவுணர்ச்சிக்கெதிராக நடைபெற்று வரும் அல்லது கடைபெறப் போகும் போராட்டங்கள் பற்றிய தகவல்களை விரும்புவோர் தமிழ்த் தகவல் நடுவத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
17

Page 18
6) IDiffort: காயத்திரி கொன்ஸ்டன்ரைன்
இண்டனிலிருது முதன்முறையாக வெளியாகியிருக்கும் வீடியோ சஞ்சிகையான "மத்தாப்பு' வித்தியாசமான சிங் தனையாற்றல் உள்ளவர்களின் ஒரு துணிவான படைப்பு. இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை முறை, சமய வைபவங்கள், கலை கிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல சுவையான நிகழ்ச் சிகளின் தொகுப்பாக மத்தாப்பு வெளியாகியுள்ளது. மத் தாப்பை ஒகு செய்தி ஊடகமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும், இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகவும், அத்துடன் சமுதாய ஒன்றிணைப்பை ஏற்ப டுத்தும் ஒரு பாலமாகவும் விமர்ர்சிக்க முடியும். பத்திரிகை அல்லது ஒரு சஞ்சிகை வெளியிடுவதைவிட இவ்வாறான வீடியோ சஞ்சிகைக்கு அதிகளவு நேரமும் பணமும் முலதன மாயிருக்க வேண்டும். இலண்டனிலிருந்து வெளிவந்திருக்கும் முதலாவது தமிழ்க் கலாச்சார இதழாக இதைப் பார்க்கும்போது இப்படைப்பு மிகவும் அவசியமானதொன்று. இவ்வாறான முயற்சி பொருளாதார ரீதியாக எவ்வாறு சாத்தியப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். அத்துடன் இச்சஞ்சிகையில் குறிப்பிட்டபடி, முன்று மாதத்திற்கொரு முறை மத்தாப்புவை வெளியிடுவதன் முலம்தான் இச்சஞ்சிகை தனது பூரண வெற்றியை உரிமை கோர முடியும்.
பிரபல இந்திய கர்நாடக இசைக் கலைஞர் திருமதி கீதா ராஜாவின் இசையுடன் ஆரம்பமாகும் மத்தாப்புவின் பெரும்பகுதியான நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் தொகுக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிகழ்ச்சித் தொகுப்பில் நல்ல தொழில்நுட்ப நுணுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருந் தமை, முழுத்தொடருக்கும் விறுவிறுப்பை அளிக்கின்றது.
எனினும் இத்தொடரின் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட சில நிகழ்ச்சிகள் பின்னர் வந்த நிகழ்ச்சிகளைவிட தரத்தில் சிறிது குறைந்திருந்ததைக் காண முடிகிறது. உதாரணமாக மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை மாணவிகளின் அபிநயம், பரதநாட்டியம் போன்றவை கிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் சிறிது தொய்வாகக் காணப்பட்டது. எது எப்படியிருப்பினும், இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கருதுமிடத்து, இவ்வாறான நிகழ்ச்சிகளையும் இடையே புகுத்துவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகின்றது. மற்றும் சாதனா இசைக்குழுவினருடன் பாடிய கங்காவின் குரல் இனிமையாக இருந்தது.
இலண்டன் உயர்வாசல் முருகன் கீோவிலில் நடைபெற்ற தமிழகப் பேச்சாளர் திரு.சுகிசிவத்தின் கதாப்பிரசங்கம் எமது இனத்திற்கு மிகவும் பொருத்தமானதொரு தெரிவு.
"திறமையுள்ளவர்களை அங்கீகாரம் செய்யுங்கள், அல்லது அவர்களின் திறமை அநியாயமாகப் போவது மட்டுமல்லாது சமுதாயத்திற்கு எதிராகக்கூடப் போய்விடும்”என்ற மகாபாரதக்
18
 

காட்சியொன்றின் விளக்கம், எமது விடுதலை இயக்கங்களின் தலைவர்களுக்கு உணர்த்தத் தொகுக்கப்பட்டிருந்தது போலிருந் ჭანჭვნl.
இலண்டனிலுள்ள தமிழ் விற்பனை நிலையங்களைச் சுருக்கமான செய்தி அடிப்படையில் வெளிப்படுத்துவது பொருத்தமானதாகவிருக்கும். இதைவிடுத்து இதற்கு ஒருபடி மேலேயே சென்று அவர்களைப் பேட்டி காண்பது சிலவே ளைகளில் சிரிப்பிற்கிடமாகின்றது. இதில் ஒலிபரப்பப்பட்ட மீன் விற்பனைநிலைய உரிமையாளரின் பேட்டியைத் தவிர்த்து அதைப் பின்னணியில் காட்சியுடன் கூடிய ஒரு அறிவிப்பாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். Dr.சத்தியமுர்த்தியின் மாற்றீடு மருத்துவம் (Alternative Medicine) பேட்டி மிகவும் சிறந்த முறையில் விளக்கப் பட்டிருந்தது. எம்மில் பலர் அறியவேண்டிய பல விடயங்கள் அதில் கூறப்பட்டமை மிகவும் பிரயோசனமானதொன்று.
அனைத்திற்கும் மேலாக, இலண்டன் தமிழ் அவைக்காற்று கலைக் கழத்தினால் பயிற்றப்பட்டு மேடையேறிய பிறென்ற் தமிழ்ச் சங்க மாணவ மாணவியரின் காட்டிய நாடகம் ஒரு சிறந்த படைப்பு. இதன் ஒலி-ஒளி அமைப்பு வீடியோவிலேயே மிகவும் நல்ல முறையில் அமைந்திருந்தது. "வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்களைத் தொடர்ந்து இப்போது பாலேக் திராவினால் பயிற்றப்பட்டிருக்கும் ‘நம்மைப் பிடித்த பிசா சுகள்' சிறுவர் நாடகம் மீண்டும் பாலேந்திராவுக்குக் குத்தப் பட்ட ஒரு முத்திரை.
மத்தாப்பு, இல்லாத ஒரு நிறைவான கலைப் பொக் கிஷம் என்று யாரும் கூற முற்படவில்லை. இளம் கலைஞர் களை மேலும் ஊக்குவிப்பதுடன், இலண்டனில் நிகழும் கலை நிகழ்ச்சிகளை யதார்த்தமாகச் சேர்க்கும்போது, அவற்றில் சில குறைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மற்றும் மத்தாப்புக் குழுவினரின் அறிவிப்பாளர் களுக்கு போதியளவு பயிற்சி இல்லாமையை அவதானிக் கக்கூடியதாக இருந்தது. கிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் திற மையே இவ்வாறான சஞ்சிகைகளின் உயிர்காடி. அறிவிப்பாளர் களின் தரம் கட்டாயம் உயர்த்தப்படல் வேண்டும்.
இலண்டனில், நாளொரு மேனியும் பொழுதொரு வண் ணமுமாகப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தோன்றி மறை யும் இவ்வேளையில் மத்தாப்புக் குழுவினரின் இம்முயற்சி ஒரு விஷப்பரீட்சை, இது வெற்றியளிக்குமா, என்பதை வருங்காலம்தான் கூறவேண்டும். O
if - 8 & 9

Page 19
நிர்வாகத்தில் இருப்பவர்களால் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் பாராளுமன்றத்தினர் அறிந்து கொள்ளும் உரிமை இது வரை காலமும் நடை முறையில் இருந்து வருகிறது. ஜன நாயகப் பாரம்பரியத்தில் இது மிக முக்கியமானதொரு அம்சமாகும். கடந்த மார்கழி 6ஆம் திகதி பன்னிரெண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஒன்றியத்தில், இவ்வுரிமைகளில் எதிர்காலத்தில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய முடிவுகளை அமைச்சர் கள் எடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐரோப் பிய மன்றத்திற்குமெனத் தயாரிக்கப்படும் பல அறிக்கைகள், ஆவணங்கள் என்பன முழு அளவில் இரகசியமாகப் பேணப் படும். இதனால் பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ளது போன்ற இரகசியப் பேணல் முறை அமுலுக்கு வரும் அபா யம் உருவாகி விடும் என ஐரோப்பியப் பாராளுமன்றமும், சர்வதேச எழுத்தாளர்கள் தொழிற் சங்கங்களின் ஒன்றியமும், ஐரோப்பியத் தொழிற் சங்கங்களின் ஒன்றியமும் (பேச்சுச் சுதந்திரத்திற்காக உழைக்கும்) Article19 எனும் தாபனமும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இதனால் இவ்விதி சட் டமாக உருவாக்கப்படுவது தடுக்கப்பட்டு உள்மட்டத்தில் செயற்படும் ஒழுங்கு விதியாகக் கடைப்பிடிக்கப்படும். ஒன் றியத்தின் அமைச்சர்களுக்கு நீதித்துறை விவகாரத்தில் இர கசியமாக ஆலோசனை வழங்கும் விசேட தாபனமாகிய K4 வினரின் சிபாரிசின் பெயரிலேயே மேற்கண்டவாறு முடிவு மாற்றியமைக்கப்பட்டது.
இம்முடிவை டென்மார்க், ஒல்லாந்து போன்ற நாடுகள் வன்மையாகக் கண்டித்து, ஐரோப்பியக் கூட்டானது கூடிய இரகசிய முறைகளைக் கைவிட்டுப் பரந்தளவிலான வெளிப் படை நடைமுறைகளைக் கடைப்பிடித்தும், சகல தகவல்கள் பற்றித் தத்தம் நாடுகளின் பாராளுமன்றம் அறிந்து கொள் ளும் சந்தர்ப்பத்தையும் உருவாக்க வேண்டும் எனவுங் கூறி யுள்ளன. டென்மார்க், ஒல்லாந்து போன்ற நாடுகளின் எதிர்ப்பு அணியில் கிரேக்கமும் சேர்ந்து குரல் எழுப்பியும், அதிகமாக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. இவ்வொழுங்கு விதிகளின் பிரதான சூத்திரதாரிகளாகப் பின்னணியில் இருந்து செயற்படும் பிரித்தானியாவும், ஜெர்மனியும் இவ்வி திகளை இரண்டு வருடங்களுக்குக் கடைப்பிடித்த பின் மீளாய்வு செய்யலாம் என்ற முடிவுக்கு, அங்கத்துவ நாடுக ளைச் சம்மதிக்க வைத்துள்ளன.
இவ்வொழுங்கு விதியானது பொது மக்களின் கலன்களான மக்கள் பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், நாணயங்களின் ஸ்திரத்தன்மை, நீதித்துறை நடைமுறைகள், விசாரணைகளும் மேற்பார்வையும் போன்றவற்றை உறுதிப்படுத்தும் எனக் கூறப்பட்டது. மேலும் தனிநபர் பாதுகாப்பு, தனிநபர் அந்த
if - 8 & 9
 

ரங்கம் பாதுகாப்பு வர்த்தகம், தொழிற்சாலைகள் போன்ற வற்றின் இரகசியங்களின் பாதுகாப்பு, ஒன்றியத்தின் கிதி விவகாரங்களின் பாதுகாப்பு, அந்தரங்கமாகப் பேணப்பட வேண்டுமெனக் கோரும் ஒரு தனிநபரின் பாதுகாப்பு, தக வல் தந்தவர்களின் பெயரை இரகசியமாக வைத்தல், அங் கத்துவ நாடுகள் இரகசியமாகப் பேணப்பட வேண்டும் எனக் கோரிய தகவல்கள் போன்றவைக்கான பாதுகாப்புகட்கும் உறுதி வழங்குமெனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒன்றியமும், மன்றமும் நிறுவனத்தின் நலனை முன்னிட்டு இரகசியமாகச் சில தகவல்கள் பேணப்பட வேண்டுமெனக் கருதும் பட்சத் தில் அவை பற்றிய தகவல்களை வெளிவிடாது மறுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும்.
இத்தகைய மாற்றங்கள் ஜனநாயக தர்மத்திற்கு ஏற்றவை யல்ல என, சர்வதேச எழுத்தாளர் ஒன்றியத்தின் ஐரோப்பியப் பிரிவு கண்டனம் எழுப்பியதுடன் ஒரு தகவல் அல்லது அதன் ஒரு பகுதியானது ஒரு அங்கத்துவ நாடுகள் பற்றியது எனும் பட்சத்தில் அவை வெளிவராது குறிப்பிட்ட நாடு அதனை வீட்டோ அதிகாரம் முலம் தடுத்து விடும் எனக் கூறியுள்ளது. மேலும் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில் ஏதாவதொரு தகவலை இரகசியமாக வைக்கப் போவதாகத் தீர்மானமெடுக் கப்படும் முன் ஐரோப்பிய நாடுகளின் மரபுகளுக்கமைந்த 10ஆவது பிரிவில் உறுதி செய்யப்பட்டிருக்கும் பேச்சுச் சுதந்திரம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற் கெதிராக அப்பீல் செய்யும் அதிகாரம் தனிப்பட்ட எந்த ஸ்தாபனத்திற்கும் இருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.
பலரது அபிப்பிராயப்படி இப்புதிய ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் தகவல்களை கணிப்பீடு செய்யும்போது, பொலிஸ் நடவடிக்கைகள், சட்டத்துறை, குடிவரவுத்துறை, அகதிகள் விவகாரம், பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்றவைகளில் பல பாதிப்புக்களைக் கொண்டுவரக் கூடும் எனக் கூறப்படுகிறது. எவ்வாறு எந்த நாடுகள் கடந்து கொண்டாலும் ஒல்லாந்து மட்டும் தகவல்கள் தனது பாரா ளுமன்றத்தைச் சென்றடைவதைத் தொடரப் போவதாக உறுதியாகக் கூறியுள்ளது.
ஆனால் பிரித்தானியாவும் பிற ஐரோப்பிய நாடுகளும் புதிய ஒழுங்கு விதிகளை இரண்டு வருடத்திற்குப் பரீட் சித்துப் பார்க்கப் போவதாகக் கூறியுள்ளன. இதன்படி நோக் கையில் ஒல்லாந்து காட்டு மக்கள் தமது குடிமக்களைப் பாதிக்கும் சட்டத்தினைப் பற்றிய அக்கறை உடையவர்க ளாகவும், பிற நாடுகளில் உள்ளவர்களுக்குக் கிடையாத சந்தர்ப்பங்கள் இவர்களுக்குக் கிட்டியுள்ள நிலையையும் எய் தியுள்ளன எனலாம்.
O
19

Page 20
ଅRமுக ஒருங்கிணைப்பு பற்றிய உலக மகாநாடு தொடர் பான ஆரம்பக் கூட்டமொன்று சென்ற புரட்டாதி மாதம் 27ஆம் திகதி நெதர்லாந்தில் உள்ள ஹேக்கில் இடம் பெற் றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் இக்கூட்டம் நெதர்லாந்தின் சமுக நலன், கலாச்சார, சுகாதார அபிவி ருத்தி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தியா, மொரீசியஸ், பிலிப்பைன்ஸ், போலந்து, கானா, நெதர்லாந்து, மெக்சிக்கோ, ஹங்கேரி, பிரித்தானியா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த நிபுணர்களும் உலக வங்கி, (UNFSED), உலகத் தொழில் நிறுவனம், நெதர்லாந்து அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சமுகங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பிணக்குகள், விரக்தியடைந்த ஒதுக்கப்பட்ட சமுகக் குழுக்கள், வறுமை, அங்கியப்படுத்தப்பட்டவர்கள், நிலையான அபிவிருத்தி வாழ்க்கைக்குரிய உத்தரவாதமும் சமாதானமும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வோர் எனும் விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
சமுக ஒருங்கிணைப்பு இல்லாமைக்கும், சமுகங்களுக்கி டையிலான விரிவு அதிகரிப்பதற்கும் பல காரணங்கள் கூறப்பட்டன. சமுகங்களிற்கிடையே நிலவும் சமத்துவமற்ற பொருளாதார நிலைமை, வேலையில்லாப் பிரச்சினைகளால் ஏற்படும் பொருளாதார ஸ்திரமின்மை, அதி பொருளாதார வீக்கம், சமுக நலன் சேவைகள் என்பனவற்றில் ஏற்பட்ட குறைவுகள் என்பன அவற்றுள் சிலவாகும். இக்காரணங்க ளோடு சமுக ஒற்றுமையைக் குறைத்து மதிப்பிடும் திட்டங் களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கூடவே போட்டி மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளித்தல், அதன் முலம் பொருளாதார அபிவிருத்தி, தனிப்பட்டவர்களின் நன்மை என்பன போன்ற திட்டங்களும் பாதிப்பை ஏற்படுத் தியுள்ளன. இந்நிலையே இன்றைய புதிய சமுகத்தின் 'டார்வினிசமாகவும்" (Darwinism) உள்ளது. இதனால் இன்று வன்முறையும் குற்றங்களும் பரவலாகக் காணக் கூடியதாக வுள்ளன. கூடவே இனங்களுக்கிடையிலான பகைமையும், சில இடங்களில் முற்று முழுதான சமுக ஒழுங் கின் சீர்குலைவும் காணப்படுகின்றன. இங்கு புரிந்துணர்வும் மதிப்புணர்வும் அற்ற கருத்து நிலையும், சமுகங்களிடையான விரிவு நிலையை வளர்ப்பதற்கு காலாக உள்ளதையும் காம் கண்டு கொள்ள வேண்டும்.
இன்று முதலாம் உலக நாடுகளுக்கும், முன்றாம் உலக நாடுகளுக்கும் இடையிலான விரிவும் வளர்ந்து வருகின்றது.
20
 

தவிரவும், வளர்ந்து வரும் அதி வறுமையான 45 நாடுகளுள் பெரும்பான்மையான நாடுகளில் வறுமை நிலை அதிகரித்த வண்ணமாயுள்ளது. சமுக நல உதவிகள் என்பது, சத்துண வற்றுத் துன்பப்படும் ஆபிரிக்க நாடுகளில் வெறும் கனவா கவே உள்ளது. பொருளாதாரப் பொலிவு கொண்ட நாடுக ளிலிலோ வருமான ஏற்றம்-இறக்கம் பெரிதாகிக்கொண்டு வருகிறது. கொம்யூனிசத்திலிருந்து விடுபட்ட நாடுகளிலோ ஏழ்மை நிலை தாண்டவமாடுகிறது.
இங்கிலையில் என்ன செய்யப்படலாம் என்ற கேள்வியும் எழுகின்றது. பல்விதமான நிலைகளையும் கருத்துக்களையும் மிக ஆழமாகப் பரிசீலித்துப் பார்க்கும்போது, சமச்சீரற்ற நிலையில் அல்லது தனி ஆதிக்க வெறியில் ஏற்படும் சமுக ஒருங்கிணைப்பானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல என்பதைச் சரித்திரம் எடுத்துக் காட்டும். தற் கால உலகில் ஒருங்கிணைப்பானது எல்லாருக்கும் சமச்சீரான சந்தர்ப்பம் வழங்கப்படும் நிலையிலேயே ஏற்பட வேண்டும்.
ஒதுக்கப்பட்ட இனங்கள், குழுக்கள் ஆகியவற்றின் எழுச்சி, இந்தச் சமச்சீரற்ற நிலையின் தொடராகும்.
சமுக ஒருங்கிணைப்பு மேம்பாட்டிற்கான அணுகுமுறைக் கோட்பாடுகள் பற்றி விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது. பங்கீட்டுத் தாக்கமும் மீள் பங்கீட்டிற்குமிடையேயான ஒப்புநோக்கு, வேறுபடுத்தலைத் தவிர்த்தல், தன்னதிகார நிலைக்கு முன்னுரிமை, தனியார் துறையில் நிறுவன நன் மையுடன் சமுக நன்மையையும் ஒருங்கிணைத்துக் கணித் தல் போன்ற விடயங்கள் இக்கலந்துரையாடலின் அம்சமாகின. சமுக ஒருங்கிணைப்பின் முன்னெடுப்புகளின் தரப்பரிமா ணங்கள், அதனை அளவிடுதலுக்கு தடையாக உள்ளன. எனினும் சமுகத்திலிருந்து ஒதுக்குதல் உடனுக்குடன் தவ றாது கணிக்கப்படும்.
சமுக நீதியையும் சமத்துவமான ஒருங்கிணைப்பையும் பாதிக்கும் வண்ணம் இயங்கும் தேசிய அரசுகளின் கீழுள்ள மக்களுக்கு சர்வதேச ரீதியிலான சபைகள், தரக்கட்டுப்பாடுகள், வழிமுறைகள் ஆகியவற்றின் உதவியை நாடும் உரிமை உண்டு என்று இக்கலந்துரையாடலிற் பங்கு பற்றியோர் முடிவுக்கு வந்தனர். முறைகேடுகளை முடி மறைக்கும் திரை யாகத் தேசிய இறைமை இருக்கக்கூடாத அதேவேளை சமுக சீரழிவுக்கான முல காரணிகளை இல்லாதொழிப்பதற்கு சமாதான வழிகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டு
மென்றும் நிபுணர்கள் முடிவு கூறியுள்ளனர்.
[ኸLቖ] - 8 8 9

Page 21
தீக்கொழுந்து
புலம்பெயர் கவிதைகள்
புலம் பெய்ர்ந்து வாழும் ஆசிய, ஆபிரிக்கர்களால் எழுதப்பட்ட கவிதைகள் இவை.
1991ஆம் ஆண்டு லண்டனில் உள்ள Crocus பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆங்கில, உருதுக் கவிதைகளின் தொகுப்பிலிருந்து இக்கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இத்தொகுப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர் Flame 9 (5ub. இந்த ஐந்து கவிதைகளும் எழுப்பும் அனுபவங்கள், எங்களின் அன்றாட வாழ்பனுபவங்களை, படைப்புக் களத்தில்
மீளநோக்குபவை.
தாய்மண் குறித்த ஏக்கம், வந்த இடத்தில் எதிர்கொள்ளும் நிறவெறி அவலம், தனது அடையாளத்தைப் பேண வேண்டும் எனும் ஆர்வம், எதிர்ப்புணர்ச்சி போன்றவைகளை இவை முன்வைக்கின்றன.
இக்கவிதைகளை மொழிபெயர்த்தபோதும், மீள அனுபவமாக்கிப் பார்க்கும்போதும், எனக்கு முதலில் நினைவில் வந்தவள் எனது நாலு வயது மகள் ரோஸா நிர்மலாதான். அவளுக்கு இக்கவிதைகள் சமர்ப்பணம்.
அக்குழங்தை,
தனது தேர்வின்றி இங்காட்டில் பிறந்து விட்டவள். அவ்வாறாய்ப் பிறந்துவிட்ட எம் சந்ததி அனைவர்க்கும் இக்கவிதைகள் சமர்ப்பணம்.
யமுனா ராஜேந்திரன்
ÎLafi - 889
 

6)76)j55 LILILL - LI60öTL Lif
da Já
blir ஆசியப்பெண் சமுகநிலையின் கீழ்மட்டத்திலிருப்பவள் என்னையொத்த பிறரைப் போன்றே ஒடுக்கப்படுபவள் நான் வேட்டையாடப்படும் திமிங்கிலம்.
வெள்ளை நிறத்தவன் சொன்னான்:
“எமக்கு ஒரு ஆசியப்பெண் தேவைப்படுகிறாள் எமக்கு ஆசியத் தொலைநோக்குடன் பார்க்க ஒரு பெண் வேண்டும் காங்கள் எப்போதும் உங்களை கலந்தாலோசிக்கவில்லை.
நீங்கள் எங்கள் நோக்கங்களை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நான் ஆசியப்பெண் எனது குழந்தைகளை மேல்நிலைக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறவள்
பெருங்தன்மை கிரம்பிவழிபவள் எமது ஆண்களுக்கு உதவத் தயாராயிருப்பவள்.
ஆனாலும் இப்போதும் கழித்தொதுக்கப்பட்ட பண்டம்.
நான் ஆசியப்பெண் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பவள் ஒருபோதும் திரும்பப் பெறாதவள். கான் வேட்டையாடப்படும் திமிங்கிலம். என்னை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.
கறுப்பு நிறத்து ஆண்கள் சொன்னார்கள்:
ஏன் இவ்வாறெல்லாம் இருக்கிறதென்று எங்களுக்குத் தெரியும். ஆகவே நீ இங்கே வந்து கான் சொன்னதை திரும்பச் சொல்கிறாயா?
“எனது எதிரொலியாக இரு” “எனது பெருமையை வளர்த்துச் செல்” “எனது தானென்னும் நினைப்பை ஊதிப்பெருக்கு” “எனது எஜமானனாக இரு” “ஏணியில் மேலேறுவதற்கு உதவிசெய்”
ஆனாலும் இப்போதும் எனது முதுகை தனது உயர்ச்சிகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் இவர்.
இப்போதும் நான் கழித்தொதுக்கப்பட்ட பண்டந்தான்!
21

Page 22
உங்களது வலிகளுக்கு போக்கிடம்நான்
எனது இதயத்தின் ஆசையை ஒடுக்கி வாழ்கிறேன் உமது இமைகளை அழுத்திவிடுகிறேன் உமது நரம்புகளை சமனப்படுத்துகிறேன் எனது பலத்தை உமக்குத் தருகிறேன்.
இரவின் மெளனத்தில் எனது எல்லையற்ற வெளிக்கு கான் போகிறேன் வலிக்கும் உடலில் மெளன நினைவுகளாக எனது இதயம் விம்முகிறது.
நான் ஒரு சமுத்திரம் எனது விலையைக் கவனியுங்கள் எனக்குள்ளிருக்கும் வெகுமதியைப் பாருங்கள்
ஆனாலும் இப்போதும் நான் ஒரு விலக்கப்பட்ட பண்டம்.
கான் ஆசியா எனது இடத்தை நான் பிரகடனப்படுத்துகிறேன். கான் என்னைக் கண்டுகொண்டேன் நான் ஆபிரிக்கா இனி நீங்கள் என்னை உபயோகப்படுத்திக்கொள்ள (Մ)ւԴաո35].
நான் ஆசியப்பெண் சமுத்திரத்தைப் போன்று விஸ்வாசமானவள் எனது கரையை எப்போதும் கான் அடைந்தே தீருவேன் என்னை ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.
இனி ஒருபோதும்
விலக்கப்பட்டவள் இல்லைநான்.
Itail) LIT 95T6d
கென்யாவைச் சேர்ந்த ஆசியப்பெண்; ஒர் ஆண்குழந்தைக் குத் தாய் கணக்காளர்; ஆசிரியர்:சமூக சேவக; நிறவெறி எதிர்ப்பாளர்.தற்பொழுது லண்டனில் வாழ்ந்து வருகறார்.
ஹஸன் 6MD05)6) DöFT)
உங்களது வழிமுறைகளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை ஹோ அலங்கரிக்கப்பட்ட நகரமே!
உமது வழிகள் எமக்கு அன்னியமாயிருக்கின்றது உமது பூமி
உமது வானம்
உமது தெருக்கள் உமது அரையிருட்டு விடிகாலை தொடுவானங்கள் எல்லாமே எமக்கு அன்னியமாயிருக்கின்றன.
22
 

உமது நிலக்காரிகளின் மணம் உமது வசந்தகாலத்தின் காலைகேரங்கள் உமது மக்களின் வாழ்முறைகளும் அன்னியமாயிருக்கின்றன. அழகின், ஆராதனை நிறைந்த திராட்சைமது கொதிக்கும் உடல்கள் பொதுமருத்துவ விடுதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது அன்பில்லை நம்பிக்கையில்லை அக்கறையுமில்லை.
எவ்வாறாய் இதயமுள்ள மக்கள் இந்த நகரத்தில் வாழ்கிறார்கள்?
எமக்கு
உங்களது வழிமுறைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை
ஹோ நகரமே!
ᎧiᎠ6mᎠ6ᏡᎢ 6m)Ꮷ5l6iᎧ DᏧITIᎢ?
TYTTLLLLLLL LTcLtT LTTTLLLS LLLTTTTTOCC LLLLLCTTCLS LCT செஸ்ரரில் GPஆகப் பணிபுரிகறார். வர்க்கம் நிறம் இனம் கடந்து வாழும் உலகைக் கனவு காண்பவர்.
எனக்கு அவர்கள் 676) I 6ĪT60D6MTLĪ (6) LIUL Î76ŐTL அடித்தார்கள்
கவுஸர் பர்வின்
ULIllasub எனக்குச் சொல்லியிருக்கவில்லை எச்சரிக்கையாயிருக்கும்படி கூடச் சொல்லவில்லை ஆகவே கான் யோசித்திருக்கவில்லை. பெருத்த சரீரமுள்ள பையன்கள் என்னிடம் வந்தபோது கான் விளையாடிக் கொண்டிருந்தேன்
அம்மாவைபப்ாேலவே "அன்னியர்களிடம் பேசாதே" கான் பேசவில்லை. ஆறுபேரும் என்னைச் சுற்றி வளைத்தார்கள் மீதியுள்ள ஒருவன் வெள்ளைநிறப் பெயின்ரை என்மீது அடிக்கத் துவங்கிறான்
இது இரண்டாவது முறை நேர்ந்திருக்கிறது எனக்கு நேர்ந்திருக்கிறது எனக்கு மட்டும்தான் இது கேருகிறது என்பிற நண்பர்கள் எவர்க்குமில்லை அம்மாவினால் பெயின்ரை வழித் தெறிய முடியவில்லை எனது தோலை அது தணலாக எரித்தது.
எனது உடம்பை அது எரித்துக்கொண்டேயிருந்தது கான் என்னைக் கேவலாமாக உணர்ந்தேன் கறுப்பாய் இருப்பதுதான் என் குற்றம்.
கவுலர் பர்வின் முஸ்லிம் பெண்மணி. தனக்குப் பிடித்தவர் களாக மால்கம் எக்ஸ், அன்னை தெரேசா, மண்டேலா, பாப்
DTf6 GLITT6ðirm61 f356006AT JAILILIBJAn Tf.
IኽLðቸ] - 8 8 9

Page 23
ஒரு துளி இரத்தித்துக்கான அலைதல்
கைலாஸ் புரி னெது வேர்களுள்ள காட்டில் புதைப்பது ஒரு சடங்கு அல்ல கல்லறையும் இல்லை மரத்தைப்போல் இறந்தவர் எரிக்கப்படுவர் கண்ணிலிருந்து மறைவர் நினைவுகள் என்றென்றும் இருக்கும்
நான் இப்போது ஒரு புலம்பெயர்ந்தவன் தேர்ந்துகொண்ட நாட்டில் இருப்பவன புதையல் போல புதைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள் இறந்தவரின் நினைவுகளை என்றும் கொண்டிருக்க
இன்று நான் இந்த அன்னியதேசத்தில் இரண்டடி மண் உயிருடன் புதைக்கப் பெற்றிருக்கிறேன்
இறந்தவர்கள் வாழ்வுக்கு இன்னும் அர்த்தம் தந்துகொண்டிருக்கிற அந்த நினைவுகளுடன் புதைக்கப்பட
கேள்வி அது எப்போது என்பதுதான்?
இன்றிலிருந்து நான்
இந்தக் கல்லறையில் பாதி வாழ்வேன் இந்த பூமியின்மீது பாதி வாழ்வேன் எனது சொந்தமாயிருக்கிற இக்கல்லறையில் வாழ்வேன் இந்த பூமியில் நானறிய வாழமுடியாது.
பாதி அம்மணமாய் பாதி உயிருடன்
பாதி முச்சுடன்
பாதி ஆன்மாவுடன் முழுக்கவும் நான் ஜ்வித்திருப்பேன்.
இந்தக் கல்லறை எந்தவொரு பிறகல்லறையைப் போலவும் இருக்காது.
LI6DID
ன்ெனை வீழ்த்த வேகமான காற்றை அனுப்புகிறார் கான் நிமிர்ந்தவன் உயர்ந்தவன். நான் காற்றாடிச் செடி வளைவேன் விழமாட்டேன்
Îf - 8 & 9
 
 

- உனது சூறாவளிகள் ஒரு கிளையை உடைக்கலாம் ଗTୋngs! உடலைக் காயப்படுத்தி தூங்கச் செய்யலாம் ஆனால் உனது விஷம்பாரித்த இகழ்ச்சி பயனின்றிப்போகும் கான் கதறலாம் ஆனால் அழமாட்டேன்.
வாழ்வின் மதுரமான கனிகளைக்காட்டி என்னை போதையேற்றி என் பாதையிலிருந்து விலக்கு உன் தலைமை கடக்க கீ முயற்சி செய்யலாம்
கான் உனது விஷப்புன்னகையை கிராகரிக்கிறேன். என் குறி மாறலாம் இலக்குத் தவற மாட்டேன்.
OTTccOL LS LOOTO LLLLL LCLCT GcTO0S LCTTOtCCTO STLELtttLLLLLLS புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். நைஜீரியாவிலும் கானாவிலும் வாழ்ந்தவர். தற்போது லண்டனில் வசித்து 6)Id5351)|TÍ. D
சமுதாய அபிவிருத்தி... (10ஆம் பக்கத் தொடர்ச்சி) \
வேண்டும். இன்று காணப்படும் பிரச்சினைகள் தீர்வடை யாமைக்கு வளங்கள் குறைவு காரணம் என்பதைவிட அரசி யல் ரீதியான முயற்சிகள் எடுக்கப்படாமையே காரணமாகும். இராணுவச் செலவீனங்களைக் குறைப்பதுடன், ஆடம்பரத் திட்டங்களையும் கைவிட்டுச் சிறந்த வரிமுறைகளை அமுல் படுத்தினால் வறுமை ஒழிப்புடன் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடலாம். இம்மகாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று "20 - 20" என அழைக்கப்படும். இதன் பிரகாரம் அரசாங்கச் செலவில் 20 வீதமும், 20 வீதம் அபிவிருத்தி உதவி முலமும் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை வழங்குவதுடன் கடன் வசதி கிட்டவும் வசதி செய்யப்பட வேண்டும். மேலும் இம்மகாநாடு உடனடித் தீர்வுகாண முடி யாத முக்கியமான பிரச்சினைகளான வேலையின்மை, கீழ் உழைப்பு போன்றவை பற்றியும் கவனஞ் செலுத்தப்பட வேண்டும்.
வேகமாய்த் தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் பற்றி மகாகாடு சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும். நவீன தொழில் நுட்பத்தின் உபயோகத்தினால் குறைந்த தொழிலாளர்களை உபயோகித்து உற்பத்திகள் செய்யக் கூடியதாக இருப்பதனால் பலருக்கு வேலை கிடைக்காமல் போகின்ற விடயங்களும் ஸ்பெத் அவர்களினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்குரிய பரிகாரத்தை காண வேண் டுமாயின் எமது வாழ்க்கை முறை, வருமானம், வேலை பற்றிய கோட்பாடுகளில் அடிப்படையான மீளாய்வுகள் அவசியமாகும். இத்தகைய முயற்சிகளில் வெற்றியடையும் கோக்கில் UNDP ஸ்தாபனம் இறங்கி காடுகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் கொள்கைத் திட்டங்களை வகுப்பதற்கு முன் னுரிமை வழங்கி வருகிறது.
இறுதியாக UNDP நிர்வாகஸ்தர் காடுகள் மட்டத்தில் செயற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன் பேணக்கூடிய மனித அபிவிருத்தி எற்பட அரசு சார்பற்ற கிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் எடுத்துக் கூறி 60TTrf.
ஐ.நா.வின் சமாதானத்திற்கான வேலைத்திட்டங்களுக்கு அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்கள் அவசியம், பேணக் கூடிய மனித அபிவிருத்தி ஏற்படும் சூழலில் வறுமை, போர், மனித உரிமை மீறல் போன்றவை ஒழிந்து சனத்தொகை வேகமாக வளர்வதும் தவிர்க்கப்படும். D
23

Page 24
ன்னமும் பிரித்தானியாவின் சட்டபூர்வமான அரசியல் கட்சிய தொடர்வதற்காக, பிரித்தானிய அ. துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இ பூர்வமான அரசியற் கட்சியான பி மண்ணின் தொலைக்காட்சியிலேயே தடை செய்யப்பட்டுள்ளது. பிரித்த கேர்ட் அவர்களினால் 1988-09-2இ முலம் தொடர்ந்து அமுலில் இருக்கு னர்களுடன், அதிலும் குறிப்பாக தி: பிரதிகிதிகள் மறைமுகமாகப் பேச்சு டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்
பிரித்தானியாவில் அண்மைக் கா 8ா Fer இன் உறுப்பினர் களின் இத்தடைச் சட்டத்தின் விளைவே.
கிழக்கு அயர்லாங்தைப் பொறு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ள பல் வானில் தோன்றியுள்ள சமாதா கப்பட்டதாக, கிழக்கு அயர்லாந்தி
பிரித்தானிய அரசின் இப்போக் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் கிரேட் அவர்கள் BBC TV உட்பட முன்னணியை ஏற்படுத்தியுள்ளார். இ பிரதிகிதி திரு.பீட்டர் புருக் அவர்க தெரிவித்துள்ளது. இந்தத் தடை "ஓ டின் பாரம்பரிய அரசியல் ஜனகாடி லாத நிர்ப்பக்தமென" திரு. மைக் இது இப்படியிருக்க 3n Fer இன பிரித்தானியாவின் உள் விவகார பூ துள்ளார். அண்மையில் IRA யினர குண்டு வெடிப்பின் காரணத்தினால் செய்தது எனப் பரவலாகக் கருத்துத் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே எப்பட்டதாக பின்னர் வெளியாகி
மனித உரிமைகளின் சிற்பிகள் னால் மேற்கொள்ளப்பட்டுள்ள இ கொடுப்பவர்களையும், மனித உரின பிரித்தானிய அரசின் இவ்வாறான (Amnesty International) 46ar Inš45.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଅଞ 3.
WTரிரரே முer 27-B:High Street Ρίτσέρτιμ ட்ரr E* TT) Éf: 2ť) 87 5éě
ஆதிக்கத்தின் கீழ் இயங்கி வரும் வட அயர்லாந்தின் ான Shn Fer மீது விதிக்கப்பட்டுள்ள "குரல் தடை" ரசின் பிரதமர் ஜோன் மேஜர் கடுமையான விமர்சனத் ச்சட்ட முலத்தின் பிரகாரம் வட அயர்லாந்தின் சட்ட ாாFer இன் உறுப்பினர்களின் குரல்கள் பிரித்தானிய ா அல்லது வானொலியிலோ ஒலிபரப்புவது முற்றாகத் ானியாவின் வெளிநாட்டு அமைச்சரான திரு. டக்ளஸ்) ல் முதன் முதலாகக் கொண்டு வரப்பட்ட இச்சட்ட தம்போது, 8ாFen இன் முக்கிய உயர்மட்ட உறுப்பி ந. மாட்டின் மக்கின்னெஸ் உடன் பிரித்தானிய அரசின் வார்த்தையில் ஈடுபட்டது, பிரித்தானிய அரசின் இரட் ானது.
வமாக ஒலிபரப்பப்பட்ட அரசியல் பேட்டிகளின்போது, குரலுக்குப் பதிலாக கடிகர்கள் குரல் கொடுத்தது,
த்தளவில் rே Fer மீது இடப்பட்ட இக்குரல் தடை து. அண்மைக் காலங்களில் வட அயர்லாந்தின் அரசி ன மேகங்களை ஊக்கு விப்பதற்காகவே இத்தடை விலக் ன் அரசு அறிவித்திருந்தது.
கிற்காக பல பாகங்களிலிருந்தும் தற்போது எதிர்ப்புத் குறிப்பாக அலைவரிசை இன் பிரதம கிர்வாகி மைக்கள் Sky செய்தி களின் நிர்வாகிகளை அணுகி ஓர் எதிர்ப்பு இக்குழு முன்னாள் பிரித்தானியாவின் வட அயர்லாந்துப் ளை அணுகி இது தொடர்பாகத் தமது அதிருப்தியைத் ர் அவசியமில்லாத, விவேகமில்லாத செயலும், இங்காட் பகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தேவையில் கல் கிரேட் இத்தடைச்சட்ட முலத்தைச் சாடியுள்ளார். * தலைவரான ஜெரி அடம்ஸ்ட் லண்டன் வருவதை அமைச்சர் திரு.மைக்கல் ஹவாட் சட்ட ரீதியாகத் தடுத் ால் சான்கில் என்ற பகுதியில் நடாத்தப்பட்ட பாரிய தான் ஜெரி அடம்ஸ்ட் லண்டன் வருவதை அரசு தடை தெரிவிக்கப்பட்ட போதிலும், இக்குண்டு வெடிப்புக்கு இத்தடை தொடர்பாக முடிஷ் அரசினால் மேற்கொள் ய ஆவணங்கள் அம்பலப்படுத்தின.
எனத் தம்மைக் கருதிக் கொள்ளும் பிரித்தானிய அரசி வவாறான செயல்கள், மனித உரிமைகளுக்காக குரல் மகள் ஸ்தாபனங்களையும் வியப்படையச் செய்துள்ளன. T செயலை அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபை தேமை குறிப்பிடத்தக்கது.
血北
நர்கள் , சமூகத் தொண்டர்களை உள்ளடக்கிய குழுவின் IனLI
LITFi:
RoMFORD ROAD, LONDONE 126BT TEL: O81-5146390