கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீட்சி 1993.07

Page 1
ரித்தானியாவின் கடற்படையும் (Royal Navy) இரா OTTTTT S SLLLLLLLL LLLLHHLS S TL TLTS S SYT TTTTT SZTTL கண்காட்சி எதிர்வரும் புரட்டாதி மாதம் 5ஆம் திகதி யிலிருந்து 10 ஆம் திகதிவரை Aldershot என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது. பிரித்தானிய அரசின் பாதுகாப்பு ஆயுத ஏற்றுமதிச் சேவை ஸ்தாபனம் (Defence Export Service Organisation) இக்கண்காட்சியை ஒழுங்கு செய்துள் ளது. ஓராண்டில் இராணுவமும் மறு ஆண்டில் கடற் படையும் என ஒன்றவிட்ட ஒரு வருடம் தனித்தனியாக ஈடாத் திவந்த கண்காட்சி இம்முறை முதற் தடவையாகக் கூட்டாசு நடைபெறவிருக்கின்றது. பிரித்தானியாவில் இயங்கிவரும் 200 முதல் 300 வரையிலான ஆயுத உற் பத்தி நிலையங்களின் போர்த்தளவாடங்கள் இங்கு பார் வைக்கு வைக்கப்படுமென மேலும் அறியப்படுகின்றது. பாதுகாப்பு விற்பனை ஸ்தாபனம் (Defence Sales rெganisation) என்ற பெயரில் 1966ஆம் ஆண்டு தொழிற் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்தாபனத்தின் இலண்டன் தலைமைக் காரியாலயத்தில் தற்போது 250 GluffalyGAMIT LI Gxxi?? Lyrf7f553 gyswrf. Stuart House, Scho Square, London N1 என்ற முகவரியில் இயங்கிவரும் இந்த ஸ்தா பனம் தமது டேவடிக்கைகளை மிகவும் இரகசியமாகவே நடாத்திவருகிறது. அதுமட்டுமல்லாமல் DESOவின் காரி யாலயங்கள் அவுஸ்திரே லியா, இந்தியா, இந்தோ னேஷியா, குவைத், மலேசியா, சவூதி அரேபியா, தென் கொரியா, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன. இவ்வாறு உலகம் பூராவும் பெரிய அளவில் தமது வியாபார நிலையங்களை நிர்வகித்து வரும், இலண்டன் தலைமைக் காரியாலயத்தின் வெளியில் பெயர்ப் பலகையோ அன்றி எதுவித அறிவிப்போ இல் லாமலிருப்பது இங்கு கவ னிக்க வேண்டிய தொன்றா கும். பிரித்தானியாவில் உற் பத்தி செய்யப்படும் ஆயுதங்க ளை உலகம் பூராவும் சங்தைப் படுத்துவதை முக்கிய நோக் கமாகக் கொண்டு இயங் கிவரும் இந்த ஸ்தாபனத்தின் இயக்குனராக அலன் தோமஸ் அவர்கள் பணி புரிகின் றார். இவரின் 1992க்கான சம்பளம் 123,220. இதற்கு மேலாக $30,000 வரை வியா இ: பார நிலமையைப் பொறுத்து ஊக்குவிப்புப்பணம் வழங் கப்படவிருந்தது.
இவ்வாயுதக் கண்காட்சிக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் தகவல் நடுவூத்தின் மாதாந்த வெளியீடு
ானிய அரசின்
ஆயுதக் கண்கTட்சி
உலகின் முலைமுடுக்குகளிலிருந்து மொத்தமாக 20,000 பேர்வரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படு கின்றது. இதில் கலந்துகொள்பவர்களின் பெயர்சு ளையோ அல்லது எதுவித விபரங்களையோ பிரித்தா னியஅரசு வெளியிட மறுத்து வருகின்றது. எது எப்படி இருப்பினும் காலப் போக்கில் இங்கு உள்ள பத்திரிகைகள் இதில் கலந்து கொள்ளுபவர்களின் விபரங்களைப் பெற் றுக்கொள்ளுமென பரவலாக நம்பப்படுகிறது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கும் இந்தக் கண்காட்சியில் ரீலங்கா அரசின் பிரசன்னமும் நிச்சயமாக இருக்குமென தமிழ் தகவல் நடுவம் கருதுகிறது. பிரித்தானிய அரசின் இவ் வராஜகப் போக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவர மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சங்கங்களும் ஆயுத விற்பனைக்கெதிராக செயற்படும் ஸ்தாபனங்களும் இன்னும் பல பிரசாரக் குழுக்களும் இக்கண்காட்சியை ஊடகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
இன்று தமிழீழத்தில் ரீலங்கா அரசினால் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் இராணுவ நடவடிக்கைகளில் பிரித்தானியாவில் உற்பத்தியாகும் போர்த்தளவாடங்கள் பெருமளவில் உபயோகிக்கப்ப |டுகின்றன. எனவே பிரித்தானிய அரசின் இப் போக் கைக் கண்டிக்குமுகமாகவும், ஆயுத விற்பனை தொடர்பாக | இங்குள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் தவும், இங்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களும் தமிழ் தாபனங்களும் கண்காட்சிக்கு எதிராக நடைபெறவிருக்கும் எதிரிப்பு ர்ஸ் பங்களில் கிந்ெது காண்டு, தமிழ் பேசும் மக் ளின் அவலநிலையை உல குக்குனர்த்த முன்வருவது அவசியம்.
இக்கண்காட்சிக்கு எதி ரான எதிர்ப்பு நடவடிக்கை கிள் வருமாறு:
3.9.93 ஞாயிறு காலை next sig, Adershot BR station முன்பிருந்து எதிர்ப்பு
ஊர்வலம் புறப்படல்,
பி.9.93 திங்கள் பகள் 2மணி வரை பாதுகாப்பு ஆயுத ஏற்றுமதி சேவை "l'ğ5 TLu &w LÉi { DES0) yp6zir lu rTa9, நியல் போராட்டம்.
மேலதிக விபரங்களுக்குத் மிழ் தகவல் ஈடுவத்துடன் தாடர்பு கொள்ளுங்கள். தாலைபேசி: 08-814 839)

Page 2
Canada
and the O United States அகதிக் கொள்கை:
கனடாவும்
ஐக்கியஅமெரிக்காவும்
பதிப்பாசிரியர்: Howard Adelman
Edited by Howard Adelman
1990s, யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது முன்வைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இது கனடாவினதும் ஐக்கிய அமெ ரிக்காவினதும் அகதிக் கொள்கைகளைக் ஒப்பீடு செய்கிறது. அகதி ஆய்வில் முன்னணியில் திகழும் வட அமெரிக்க ஆய்வாளர்கள் பலரின் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் அகதிக் கொள்கையின் வரைமுறை, அரசியல் அம்சங்கள் பற்றியும் மூல காரணிகள், அகதி நிவாரணமும் அபிவிருத்தி உதவியும், அகதிச் சட்டமும் நடைமுறையும் மற்றும் மீளக் குடியமர்த்தல் கொள் கைகள் ஆகியன பற்றியும் அத்தியாயங்கள் உண்டு. அகதி இலக்கியத்திற்கு இந்நூல் சிறப்பான பங்களிப்பாகும். ஏனெனில் அகதிக் கொள்கைகளை விரிவாகப் பகுப்பாய்வு செய்யும் முதல் நூல்களில் இது ஒன்று என்பதோடு, கன டிய-ஐக்கிய அமெரிக்க அகதிக் கொள்கைகள் பற்றிய ஆய்வுத்துறையில் வெளிவந்துள்ள மிகவும் விரிவான ஆய் வுகளில் இதுவும் ஒன்றாகும்.
அகதிப் பிரச்சினையில் அரசாங்கங்களுக்கு இடையேயான வருங்காலக் கூட்டுறவில், இங்தோ-சீன அகதிகளுக்கான விரிவான வேலைத் திட்டத்தினை முன்மாதிரியாகக் கொள்ளும் அரசின் நோக்குநிலையின் பொது மதிப்பீட்டுடன் நூல் விரிகிறது. பரிவு, அனுமதிக் கட்டுப்பாடு ஆகிய இரண்டுக்கும் இடையேயான சரியான சமநிலையின் தேவை பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளதோடு, அகதிகள் இடப்பெயர்வினைக் கையாள்வதில் ஐக்கிய காடுகள் அக திகள் உயர் ஸ்தானிகராலயத்தின் கம்பகத்தன்மை, வளங் கள் பற்றி ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் இடப் பெயர்ச்சியைத் தோற்றுவிப்பதிலும் எதிர்கொள்வதிலும் அரசின் பங்கு பற்றிய கோட்பாட்டு ரீதியாக ஆராயும் பகுதி ஒன்றும் உள்ளது. வெளிகாட்டு அகதி நிவாரணம் பின்னர் ஆராயப்படுகிறது; சர்வதேச அகதி நிவாரணத்திலும் பார்க்க மீளக்குடியமர்த்தலுக்கும், நீண்டகால அபிவிருத்தி உதவியிலும் பார்க்க நெருக்கடி நிலைத் தேவைக்கும் முன்னுரிமை கொடுப்பது பற்றிய விமர்சனங்கள் முன்வைக் கப்பட்டுள்ளன. அகதிச் சட்டமும் கொள்கையும் பற்றிய பல அத்தியாயங்கள் உள்ளன. 1980களில் கனடா விலும் ஐக்கிய அமெரிக்காவிலும் அனுமதி மற்றும் தஞ்சக் கொள் கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், தடுப்புக் காவல் நடைமுறையைக் கைக்கொள்வதன் முலம் தஞ்சம் கோருவோர் வருவதில் தயக்கத்தை ஏற்படுத்தல், ஐக்கிய அமெரிக்காவில் தஞ்சம் தொடர்பிலான தீர்மானித்தலை அரசியல்
2
 

மயப்படுத்தல், ஐக்கிய அமெரிக்க அகதிச் சட்டத்தில் 'அடக்குமுறை அட்டூழியங்களுக்குள்ளாதல்' என்ற பதத்தின் பிரயோகம் பற்றிய விவாதங்கள் ஆகியன மேற் படி அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, கட்டுரையாளர்கள் பலர் மீளக்குடியமர்த்தலும் அதனோடு இணைந்த பிரசிசனைகளும் பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று அகதிக் கொள்கை பற்றி எழுதும் எந்தவொருவரும், கையெழுத்துப் பிரதியைப் பதிப்பாளருக்கு அனுப்பிய சிறிது காலத்துக்குள்ளேயே அது காலங்கடந்த ஒன்றாக (பழையதாகிப்) போகும் ஆபத்துக்கு உள்ளாகக்கூடும் கிலையினை எதிர்கொள்ள நேரிடும். அதன் காரணமாக, பின்னால் எழக்கூடிய அபிவிருத்திகளை முன்னோக்கும் ஒரு பகுதியையும் சேர்த்துக்கொள்வது அனேகமாகப் பய னுள்ளதாக இருக்கும். இதுபோன்றே, அகதி மற்றும் தஞ் சக் கொள்கைகள் பற்றிய வட அமெரிக்காவின் தீர்மானங் கள், அத்லாந்திக் காடுகளில் நிகழும் அரசாங்கங்களுக் கிடையேயான விவாதங்கள், உடன்படிக்கைகளினால் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன என்ற உண்மை யினையும் கட்டுரையாளர்கள் போதுமானளவு கணிப்பில் எடுத்துக்கொள்வதில்லை. மேற்கு ஐரோப்பா அதன் அக திப் பிரச்சினையைத் தீர்க்கும் விதம், நிச்சயமாக எஞ்சிய தொழில்மயப்பட்ட நாடுகளின் தஞ்சம் மற்றும் அகதிக் கொள்கைகளையும் பாதிக்கவே செய்யும். ஒப்பு நோக்குடன் கூடிய முழுமையானதொரு நூல் இது. மேலும், பெரும் பாலான வாசகர்கள், ஆகக் குறைந்தது சில அத்தியாயங் களாவது, அவர்களது பணிக்கு அல்லது ஆய்வுக்குப் பயன் படும் என்பதை உணர்வார்கள்.
ASYLUMLAN 2 . . . இPRROTC ஐரோப்பாவிலும்
EUROPE d MND NORTH AMERICA வட அமெரிக்காவிலும்
565&ff f(p) 560)L(p60) pub:3f 69 i06i LI(ğ5I LI TTuil6)
பதிப்பாசிரியர்கள்: Jacquel in Bhabha Geoffrey Coll
回。 துறையில் அனுபவமும் சிந்தனையும் மிக்க பலரின் கட்டுரைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. தஞ்சச் சட்ட இயல் ஒப்பீடு, அகதி ஒப்பந்தங்களின் பிர யோகம், அகதி நெருக்கடிச் சவால் ஆகியன பற்றிய பொது மதிப்பீட்டினை, இந்நூல் அதன் முதல் முன்று அத்தியாயங்களிலும் கொண்டுள்ளது. அடுத்து வரும் அத் தியாயங்களில், அடக்குமுறை அட்டூழியங்களுக்கு உள் ளாகக்கூடும் என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பயம் (well-founded fear of persecution), F(p535 (5Qg a guilrfalud, (அகதி ஒருவர்) தஞ்சமடைந்த முதல் காடு பற்றிய பிரச்சினைகள், தடுப்புக்காவல் ஆகியன பற்றி, ஐரோப் பாவிலும் வட அமெரிக்காவிலும் நிலவும் விளக்கங்களின் ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. டப்ளின் ஏற்பாடு (Dubtin Convention) பற்றிய ஒரு தனி அத்தியாயமும் உண்டு. ஒவ்வொரு அத்தியாயத்திலும், முன்மாதிரி வழக்குத் தீர்ப்புத் தொடர்பிலான மேற்கோள்களும் துணை நூல்களும் விரிந்தளவில் தரப்பட்டுள்ளன. வழக்கறிஞர் களுக்கும், தஞ்ச விவகாரங்களில் அக்கறை கொண்ட எவருக்கும் இந்நூல் பயன்படும் என்பதோடு, பாடநூலாகவும் கைக்கொள்ளக் கூடியது.
- Andrew Schaknove
- 966 1993

Page 3
(3)
மேற்கில்
அகதிகளின் திரிசங்கு நிலை
பதிப்பாசிரியார்: Gil Loescher
,தூண்டும் இக்கட்டுரைத் தொகுதி مراسم صاصول அகதிகள், தஞ்சம் கோருவோருக்கான “புதிய உலக ஒழுங்கு' (New orld order) என்பதன் பொருளை ஆராய் கிறது. எதிர்காலத்தில் கொள்கை வகுப்பதில் ஏற்படக்கூடிய அவற்றின் தாக்கங்களை உணர்த்தும் வகையில், கடந்தகால அனுபவத்தையும் இன்றைய பிரச்சினைகளையும் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல்.
கடந்தகாலக் கட்டுப்பாடுகள், பனிப்போர் காலகட்டத்தில் மேற்கத்தைய ஜனநாயக காடுகளினால் வளர்த்துவிடப்பட்ட ‘சர்வதேச அகதிகள் சமுக அமைப்பு' என்பனவற்றின் பின்னணியிலேயே, அகதிகளின் வருகையைத் தடுக்க இன்று உருவாக்கப்பட்டு வரும் “கோட்டை' பற்றி ஆழ்ந்து ஆராயப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த சிறிய எண்ணிக்கையிலான அதிருப்தியாளர்களை மீளக் குடியமர்த்துவதற்கும், மூன்றாம் உலக நாடுகளில் அகதி நிவாரணத்திற்கும் பழக்கப்பட்ட சர்வதேச ஸ்தா பனங்களின், இன்றைய அகதிப் பிரச்சினைகளைக் கையா ளும் திறன் பற்றி ஐயம் கொண்டுள்ளனர் இந் நூலாசிரி யர்கள். பழைய, புதிய உலக ஒழுங்குகளுக்கு இடையேயான முனைப்பான ஒற்றுமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன: காடுகள் தொடர்ந்தும் வன்முறைகளைக் கையாளும் என் பது அநேகமாக உறுதி; அதனால் மரணங்கள் தொடரும்; மேலும் இடப்பெயர்ச்சி நிகழும்; புலம்பெயர்வினால் ஏற் படும் தாக்கங்களைக் கருத்திற் கொள்ளாது, பனிப்போரின் போது தோற்றுவிக்கப்பட்ட தொடர்ந்த முரண்பாடுகள் மற்றுமோர் தொடர்ச்சியே.
தஞ்சம் கோருவோர், அகதிகள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவினதும் கனடாவினதும் கொள்கையும் ஆராயப் பட்டுள்ளது. சேகன், டப்ளின் ஏற்பாடுகளை (Shengen and Dubtin Conventions) நடைமுறைப்படுத்துவதன் மூலம், பாதுகாப் பினைக் குறைத்து, தஞ்ச உரிமைகளை மட்டுப்படுத்தும் கோக்கில் ஐரோப்பாவில் மேற் கொள்ளப்படும் திட்டமிட்ட "கூட்டுத் தடை முயற்சிகள், ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் அகதிகள் வருகையை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இது, கனடியர் கொள்கையில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதோடு, மேற்கு காடுக ளிலேயே சாதகமிக்க தும் ஆகக்கூடிய திறந்த கொள்கைகளும் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமை அற் றுவிடும். ஐரோப்பா அதன் பொறுப்புகளைக் கைவிடுதல், (அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்த முனையும்) "பாதுகாப் புக் கூட்டுடன் கனடாவும் இணைந்து கொள்வதற்கே வழி வகுக்கும்.
நூலாசிரியர் Git Loescher நூலின் முன்னுரையில் கூறி யிருப்து போல், நூலின் முலம் கூற முயன்ற 'படிப்பினை' இதுதான் ‘புலம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானவர் களுக்கு எதிராகச் சுவர்கள் எழுப்புவது தீர்வல்ல. அக திகளையும் புலம் பெயர்வோரையும் தோற்றுவிக்கும் நிலைமைகளைக் கருத்திற் கொள்வதே, இப்பிரச்சினையை அணுகுவதற்கான பயனுள்ள வழியாகும்'. இக்காரணிகளைக் கவனத்தில் எடுக்கத் தவறின், அது வெளிநாட்டுக் கொள் கையிலும் சர்வதேச ஸ்திரத்தன்மையிலும் பெரும் பாதிப் பினை ஏற்படுத்தும். பெறுமதிமிக்க இத்தொகுதி, அறிவுபூர் வாமான கொள்கை உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது
Jo Ann McGregor
saró: Refgugee Participation Network
மீட்சி - ஜூலை 1993
 

அரசியல் அடைக்கலம்:
அமெரிக்காவின்
அமெரிக்காலினுள் சட்டவிரோதமாக நுழையும் வெளி காட்டவர்களைத் தடுப்பதற்காக அமெரிக்க அரசு பல் வேறுவிதமான வழிகளைக் கையாளத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கிளின்ரன் அண்மையில் நிகழ்த்திய தனது உரையில் இக்கடும் வழிமுறைகளைப் பற்றிக் கூறி உள்ள தன் முலம் தனது காட்டின் புதிய போக்கினை வெளிப் படுத்தியுள்ளார். “எமது நீதியான போக்கினையும் அயல வர் மீதான பரிவினையும் பயன்படுத்தித் தமது சுயலாபத் திற்காக மனிதர்களைச் சரக்குகளைக் கொணர்வதுபோல் எமது கரைகளில் கொண்டுவந்து இறக்குவதனையும், அத் துடன் களவாக உள்நுழையும் இவ் அயலவர்களால் எமது மக்கள் பயமுறுத்தப்படுவதையும் நாம் அனுமதியோம். எமது கதவுகள் சட்டரீதியாக உள்நுழைவோருக்கு எப் பொழுதுமே திறந்திருக்கும். எமது சட்டங்களை மதிப்பவர்கள் அதன் முலம் வேலை வாய்ப்பினைப் பெற்று, தமது அமெ ரிக்கக் கனவினை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என கிளின்ரன் கூறியுள்ளார்.
கெயிற்றி காட்டிலிருந்து பெருங்தொகையான மக்கள் படகுகள் முலம் அமெரிக்கக் கரையினை வந்தடைந்த போது அவர்களுக்கு அரசியல் அடைக்கலம் கொடுக்காது திருப்பி அனுப்பப்பட்டனர். சென்ற மாதம் நூற்றுக்கணக் கான சீனர்கள் நியூயோர்க்கிற்கு அண்மையிலும் கலிபோர் னியாவிற்கு அண்மித்த கடலிலும் வைத்துப் பிடிக்கப்பட் டனர். இவர்கள் எல்லாரும் அமெரிக்காவினுள் களவாக நுழைய எத்தனித்தவர்கள். சென்ற மாசி மாதம் உலகவர்த் தக நிலையத்திற்கு வெடி வைத்தவர்களெனக் கைது செய் யப்பட்டுள்ள அராபியர்களும் அமெரிக்காவில் சட்டபூர்வ மற்ற முறையில் வசித்தவர்களே. இவ்வாறானவர்களைத் தடுப்பதற்காகவே புதிய வழிமுறைகளைக் கொண்ட இரு சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இச்சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இறங்கு துறையில் அரசியல் அடைக்கலம் கோருபவர்களின் விண் ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். இதனால் அரசியல் அடைக்கலம் சம்பந்தப்பட்ட சட் டங்களைத் துஷ்பிரயோகம் செய்வது நிறுத்தப்படுவ தோடு, விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்படும்வரை காலவ ரையறையற்று அமெரிக்காவில் வசிக்க அனுமதிப்பதும் இல்லாமலாக்கப்படும். ஒருவரது அரசியல் அடைக்கல விண்ணப்பமானது நிருபிக்கப்படாத வேளையில் அவ்விண் ணப்பதாரர் உடனடியாக அவரது சொந்த காட்டிற்கு அனுப்பப்படுவதற்கும் இச்சட்டம் அனுமதிக்கின்றது.
இரண்டாவது சட்டத்தின் கீழ் அயலவர்களை அமெரிக் காவிற்குக் கொண்டுவரும் "கடத்தல்காரர்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் மீது விதிக்கப்படும் மறியற் தண்டனை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது உடைமைகளை பறிமுதல் செய்தல் உட்பட பல்வேறு விதமான விசாரணை முறைகளை இச்சட்டம் அறிமுகப்படுத்துகின்றது.
இப்புதிய சட்டங்களை அமுல்படுத்துவதற்காக 172.5 கோடி டொலர்களை வழங்குமாறு கொங்கிரசைக் கேட்க வுள்ளார் ஜனாதிபதி கிளின்ரன்.
3

Page 4
சித்திரவதை பற்றிய செயலமர்வு
சித்திரவதை பற்றிய செயலமர்வு ஒன்று 1993 ஆகஸ்ட் 22 முதல் 27ஆம் திகதி வரை ஹங்கேரிய நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலகக் குற்றவியல் கழகத்தில் நடைபெறவுள்ளது.
பின்வரும் கருப்பொருள்கள், முன்னுரிமை அடிப்ப டையில் கவனத்திற் கொள்ளப்படும்:
* குற்றம் புரிந்தவரின் நடத்தை விளக்கங்களும் வாக்கு
முலங்களும்; * குற்றம் புரிந்தவர், பார்வையாளர்கள், சித்திரவதைக்குட் பட்டவர் ஆகியோரது உணர்வதிர்ச்சிப் பின்விளைவு; * குற்றப் பரிசீலனையும் குறுக்கு விசாரணையும்; மித மான உடல் தாக்கமா அல்லது சித்திரவதையா?; * சித்திர வதைக்கும் பலாத்கார மறைவுக்கும் இடை
யேயான தொடர்பு; * கம்யூனிச ஆட்சியில் சித்திரவதை; * எதிரணி இயக்கங்களினதும் அரசு சார்பற்ற நபர்
களினதும் சித்திரவதை, இன மோதல்களின்போது சித்திரவதை * சித்திரவதைக்கு எதிரான மனித உரிமைப் போராட்
டங்களின் தாக்கம்; * காவல் துறையினர் பாதுகாப்புப் படையினர்
பயிற்சியும் சித்திர வதைக்கெதிரான பாதுகாப்புக்களும். மேலதிக தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
P100M/LISWO, Leiden University, Wassenaarseweg52,2333AV K/LeidenTHENETHERLANDSFax:-317-273619 Phone:-3171 - 273848
பிள்ளைகளின் எதிர்கா
மெல்பன் கலை வட்டம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கருத்தரங் கொன்றை இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நடாத்த எண்ணியுள்ளது.
அங்கிய தேசத்தில் வந்து குடியேறியுள்ள காம், எமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் போதியளவு சிந்தித் துள்ளோமென்று கூறமுடியாது.
எமது அடுத்த தலைமுறையினர் நிற பேதத்தையும், நிறப் பிரச்சினையையும் எவ்விதம் எதிர்கொள்வார்கள்? கலாசாரம், மொழியறிவு, சமயம் ஆகிய விஷயங்களில் அவர்களுக்கு எத்தகைய வழிநடத்துதலை நாம் வழங்கலாம் அல்லது வழங்குதல் சாத்தியம்? புதிய தலைமுறையினருக்கும் எமக்குமிடையே வயதினால் மட்டுமின்றி, பண்பாடு, பழக் கவழக்கங்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றினாலும் எழப் போகும் பெரிய இடைவெளியை நாம் எப்படிச் சங் திக்கலாம்.
இந்தக் கேள்விகளுக்கும், இவை போன்ற மற்றக் கேள்
 

சித்திரவதை மரபு ஒப்பந்தத்தை இலங்கை ஏற்கும்
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மரபு ஒப்பந் தத்தை இலங்கை ஏற்றுக் கைச்சாத்திடும் என ஜனாதிபதி ஆலோசகர் பிரட்மன் வீரக்கோன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரிய வியன்னா நகரில் ஜூன் மாதத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் மகாநாட்டை மீளாய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உரையாலோசனையின்போது பேசிய திரு.வீரக்கோன் "பலவந்த மறைவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிக்கும் பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதையும் இலங்கை வரவேற்கிறது என்று மேலும் கூறினார்.
கூட்டத்திற்கு தலைமை வகித்த ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைப் பிரதிநிதி ஜெ.கே.ரொ பர்ட் இங்கிலாந்து பேசுகையில், தேசிய இறைமை, சர்வ தேசக் காரணப் பொறுப்புடமை ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகள் பற்றியும், அனைத்துலக உயர்தகவு, சர்வ தேச சமுகத்திற்கிடையில் கலாசார ஒப்பீட்டுக் கோட்பாடு பற்றியும் இந்த சித்திரவதை மரபு ஒப்பந்தம் எடுத்துரைக்கிறது என்று கூறினார்.
இவ்வாறு இலங்கை அரசு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளபோதிலும், கடைமுறையில் இந்த ஒப்பந்தத்தை மீறமாட்டாது என்பது ஐயத்திற்குரியதே!
இச்சந்தர்ப்பத்தில் பிரதான மனித உரிமை ஆவணங்க ளைக் கொண்ட நூல் தொகுப்புகள் தமிழிலும் சிங்களத் திலும் வெளியிடப்பட்டன.
லம் பற்றிய கருத்தரங்கம்
விகளுக்கும் காம் விடை காண வேண்டியது முக்கியம். எமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை பற்றிய மன அங்கலாய்ப்பும், சிலவேளைகளில் ஒருவித பயமும் எம்ம வரிடையே காணப்படுகின்றன. எனினும், எமது சமுகத்தில் இவ்வித விஷயங்களைப் பற்றிய சரியான அறிவோ, போதிய பிரக்ஞையோ இருப்பதாக நாம் கருத முடியாது. இவற்றை முன்னிலைப்படுத்திய முறையான ஆய்வுகளும் போதியளவில் நடைபெறவில்லை.
இப்பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றைக் காண மெல் பன் கலை வட்டம் ஆய்வுக் கருத்தரங்கொன்றை கடத்த உத்தேசித்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பாகக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவோ அல்லது கலந்துகொள்ளவோ விரும்புபவர்கள் பின்வரும் முகவரியுடன் தொடர்புகொள்ள வேண்டப் படுகின்றனர்.
Melbourne KalaVattam, P.O. Box 113, Clayton, Victoria 3168, Australia.
மீட்சி - ஜூலை 1993

Page 5
தமிழகத்தில் இலங்கைத் த\Sy göLf p35 29 Jafir öFTTİLİ)) 6İn
அகதிகளின் இநலன்ஜ் பேணுவதிலும் ாதுகாப்பதிலும் தொண்டர் ஸ்தாபனங்களி
கொண்டுவருவதில் தொண்டர் ஸ்தாபனங்களு பண்பு ஆகும். வறுமையும், அதிேயும் தணிக்கப் அவர்கள் தீவிர கம்பிக்கை கொண்டவர்கள்.
:செய்யும் முயற்சிகளில் அரசு, அரசுகளுக்கு { அரசு சார்பற்ற ஸ்தாபனங்களிலேயே தங்கி காரணங்களுக்காக - குறிப்பாக அரசி ஸ்தாபனங்களின் சேவைகளைத் தடை செ அகதிகளுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படு ஆதரிக்கும் நாடு காட்டு மக்களுக்கும் இடை
தொண்டர் ஸ்தாபனங்கள், தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதி முகாம்களுக்குள் செல்வதும் அகதிகளுக்கு உதவி வழங்குவதும், தமிழ் நாடு அரசின் மே மாதம் 27 ஆம் திகதிய ஆணை ஒன்றின் முலம் தடை செய்யப் பட்டுள்ளது. உதவிகளைத் தடுத்து நிறுத்துவதன் முலம் அகதிகள் அவதிக்குள்ளாகித் தாமாகவே இலங்கைக்குத் திரும்ப நிர்ப்பந்திப்பதே தமிழக அரசின் நோக்கமாகும்.
தமிழ் நாடு அரசின் இச்செயலினால், அகதிகளுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராய, இலங்கைத் தமிழ் அகதிகளின் மனிதாபிமானத் தேவைகளில் அக்கறைகொண்ட தமிழகத்தின் பிரதான தொண்டர் ஸ்தாபனங்களின் கூட் டமொன்று சென்னையில் கூடியது. ஜுன் மாதம் 3, 4ஆம் திகதிகளில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அகதிகள் சமுகப் பிரதிநிதிகள், அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், சிரமங்கள் பற்றி விரிவாகக் கூறியதோடு உதவி கோரி வேண்டுகோளும் விடுத்தனர்.
அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் Lut - L-627
1) அரசு சார்பற்ற ஸ்தாபனங்களின் உதவி
"புனர்வாழ்வு முயற்சியில் பல்வகைப்பட்ட பணிகளும் உதவியும் அவசியம் என்பதாலும், அத்தகைய சேவைக ளையும் உதவியினையும் அரசு மட்டுமே வழங்க முடியாது என்பதாலும் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளுக்கான சேவைகளை வழங்குவதனைப் பகிர்ந்து கொள்ள அரசு சார்பற்ற ஸ்தா பனங்களுக்கு அரசு ஊக்கமும் உதவியும் தர வேண்டும். மேலும், அவ்வாறு அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் அக திகளுக்கு சேவைகளும் உதவிகளும் வழங்குவதில் ஏற்படும் தடைகள் அரசினால் அகற்றப்படல் வேண்டும்".
2) கல்வி
AA
கல்வி ஒரு அடிப்படை உரிமை, அகதிகளுக்குக் கல் வியை மறுப்பது, அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும். பாடசாலைகள், கல்லூரிகள், தொழில் ரீதியான தொழில் நுட்பக் கல்வி வாய்ப்புகள் 1984 - 1991 காலப்பகுதியில் அகதிகளுக்கு வழங்கப்பட்ட நிலைக்கு மீளனிக்கப்பட்டுத் தொடர வேண்டும்”.
Baf - g96oo6a) 1993
 
 
 
 
 
 
 
 
 

அகதிகளுக்கான உதவி தாபனங்களின் சந்திப்பு
அவர்களின் உரிமைகளைப் ன் பங்கு இன்றியமையாதது. மாற்றங்களைக் க்குள்ள அர்ப்பணிப்பு, அவர்களின் பிரதான: பட்டு, அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்பதில்
இடையேயான ஸ்தாபனங்கள் பெருமளவுக்கு புள்ளன. ஆனால், அதேவேளை, பல்வேறு யல் காரணங்களுக்காக தொண்டர்: ய்யும் அரசுகள் சிலவும் உள்ளன. இது, த்துவதோடு, அகதிகளுக்கும், அகதிகளை யேயான கல்லுறவினையும் சிதைத்து விடும்.
3) வதிவிடம்
* அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தற்காலிக இருப்பிடங்கள், 1990ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டனவையாகும். கடந்த 2,3 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான காற்றினாலும் பருவ மழையினாலும் மிகவும் பழுதடைந்த நிலையிலிருப் பதால், அங்கு வாழும் அகதிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதோடு, குழந்தைகளும் அடிக்கடி சுகவீனம் அடை கிறார்கள். எனவே அந்தத் தற்காலிக இருப்பிடங்கள் பழு துபார்க்கப்பட வேண்டும், புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது புதிதாகக் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்".
4) மனித உரிமைகள்
*அரசின் செயல்கள், கட்டளைகளினால் அகதிகளின் அடிப்படை மனித உரிமைகள் திட்டமிடப்பட்டோ அல் லாமலோ மீறப்பட்டிருக்கின்றன.அகதிகள் வெளியே செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், அவர்கள் முகாம்களுக் குள்ளேயே முடங்கியிருக்க நேரிடுகிறது என்பதோடு, தகுந்த காரணங்களுக்காகவும் வெளியே செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. அடிக்கடி அடையாள அணிவகுப்புகளை நடாத்துவதனாலும், கைரேகைப் பதிவினைப் பெறுவ தனாலும், அதிகாரிகள் சிலரது முரட்டுத்தனமானதும் அநாகரிகமானதுமான நடத்தையினாலும் பெரும் துயருக்கும் மனவேதனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே, அகதிகளின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதும், மற்றும் எல்லா வகையான மீறல்களும் நிறுத்தப்படுவதும் அவசியம்".
5) உதவிப் பணமும் உணவுப் பங்கீடும்
* முன்று வருடங்களுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட உத விப் பணத்தொகை, வாழ்க்கைச் செலவு உயர்வு காரண மாக அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கே போதுமானதாக இல்லை. பெரும்பாலான அகதிகளுக்கு மேலதிகமான ஊதியம் இல்லாதிருப்பதனால் உதவிப்பணமும், உணவுப் பங்கீடும் அதிகரிக்கப்பட்டு இரு வாரங்களுக்கு ஒரு தடவை தவணை தப்பாமல் வழங்கப்படல் வேண்டும்".
6) சுகாதார சேவைகள்
*இலகுவில் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களான அகதி சமுகத்திற்கு, அடிப்படை சுகாதார பராமரிப்பு சேவைகள் உடனடித்தேவையாகவுள்ளன. ஆகவே, தொலைதூரத்தி
S

Page 6
லுள்ள முகாம்கள் உட்பட்ட அனைத்திற்கும், மருத்துவ உதவி கிடைக்கும் வண்ணம் செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பை, அரசு ஏற்க வேண்டும்”
7) (LITFTig5
“இலங்கையிலிருந்தபோது, நீண்டகாலமாக உணவு போசாக்கு பற்றாக்குறைக்கு உட்படுத்தப்பட்டதால் பாதிப் பிற்காளாகக்கூடிய நிலையிலுள்ள பலர், இலகுவில் நோய் வாய்ப்படுகின்றனர். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார், குழந்தைகள், சிறுவர், வயோதிபர், பலவீனமுற்றோர் ஆகிய இவ்வகையினருக்கு போசாக்கு மட்டத்தினை மேம் படுத்தும், பொருத்தமான பரிகாரத்திற்கு வழிவகுத்தல் வேண்டும்.
8) குளியலறைகளும் கழிவறைகளும்
"ஏற்ற வகையில் அமைக்கப்படாத குளியலறைகள், கழி வறைகள் காரணமாக, நோய்கள் பரவுவது உட்படப் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதோடு, கழிவறைகள் இல்லாத சில முகாம்களில் பெண்களுக்கு ஏற் படும் அசெளகரியமும், கழிவறைகள் உள்ள சில முகாம் களில் கழிவறை நிரம்பி வழிந்து சுகாதாரக் கேடுகளை உண்டு பண்ணுவதாலும், அத்தகைய வசதிகள் உடனடியாக வேண்டப்படும் அகதி முகாம்களில் பொருத்தமான குளி யலறைகளும் கழிவறைகளும் அமைக்கப்படல் வேண்டும்"
பிரித்தானியாவில் அகதிக ஆய்வு உண்மைகள்
அகதிகள் புனர்வாழ்வைப் பற்றிய சரியான ஆய்வுகளோ, தகுந்த திட்டங்களோ வகுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது அகதி ஸ்தாபனங்கள் சுமத்தி வந்துள்ளன. இக்குறை பாட்டை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக 1992 இல் உள்நாட்டு அலுவலகம் (Home office), சல்போட் பல் கலைக்கழகத்தின் (SatfordUniversity) உதவியுடன் அகதிகள் மத்தியில் ஒர் ஆய்வினை மேற்கொண்டது. சொந்த காட்டுடனான தொடர்புகள் தடைப்பட்ட பின், பிரித்தானியாவில் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயுமுகமாகப் பல்வேறு காட்டு அகதிகள் மத்தியில் பேட்டிகள் முலம் பெறப்பட்ட தரவுகளிலிருந்து ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் பின்வரும் விடயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
பெரும்பாலோர் தமது தாய்நாட்டின் நகரப் புறங்களில், சிறந்த கல்வித் தரமுடையவர்களாக வாழ்ந்தமையை அகதிகள் பற்றிய கணிப்பீடு வெளிக் கொணர்ந்துள்ளது. இவர்களில் முன்றில் ஒரு பிரிவினர்க்கு தொழில்சார் கல்விச் சான்றிதழ், அல்லது பல்கலைக்கழகப் பட்டம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் யாவரும் ஆங்கில அறிவின் அவசியத்தை வலியுறுத் துகின்றனர். ஆங்கிலத்தில் சிறப்பு நிலைபெற ஆங்கிலம் பேசப்படும் சூழல் அவசியமானது என்பது ஒர் உண்மையாகும். ஆனால் அத்தகைய இடங்களில் வேலை பெற்றுக்கொள்ள ஆங்கிலம் ஒர் முன்நிபந்தனை யாக இருந்து சிக்கலைத் தோற்றுவிக்கின்றது என்ற கருத்தை ஒரு சிலர் வெளிப்படுத்தினர்.
தொழில்துறை பற்றிய தரவுகளில் 22% ஆனோர் இங்கு வந்த காலம் முதல் வேலையற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 44% ஆனவர்கள் வேலை பார்த்துள்ளமையும், இவர்களில் சிலருக்கு பிற்காலத்தில் வேலை இல்லாது போனமையும் தெரியவந்துள்ளது. முன்றில் ஒரு பகுதியினர்

GT
9) குடிநீர்
“குளியல் நீருக்கும் குடி நீருக்குமாக ஏற்படுத்தப்பட்ட குழாய்க் கிணறுகள் பலவும் செயல்படாமையால் நீரின்றி அகதிகள் அவதியுறுகின்றனர். இதனை நிவர்த்திக்கும் வகையில் தற்போதுள்ள குழாய்க் கிணறுகள் திருத்தப்பட்டு அல்லது வேண்டுமிடத்து புதியன நிர்மாணிக்கப்பட்டும் அகதிகளின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட வேண் டும்”.
மேற்படி தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், உரிய அதிகாரிகளைச் சந்திப்பதற்கும், மேலதிக அரசு சார்பற்ற ஸ்தாபனங்களை அகதிகளுக்கான சேவைகளில் ஈடுபடுத்தவும், சகல ஸ்தாபனங்களையும் ஒருங்கிணைக்கவும் அறுவர் அடங்கிய குழுவொன்று, கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
அக்குழுவில் அங்கம் வகிப்போர்: 1.வண. டாக்டர் கம்பர் மாணிக்கம் (குழுத்தலைவர்), 2. டாக்டர் ஏ.சி.கமிலஸ் (புது டில்லி கரிடாஸ் இந்தியா), 3. வண. ஜேக்கப் பெல்லி (சென்னை டெக்ராஸ் நிர்வாக இயக் குனர்), 4. சி.அமல்ராஜ் அடிகள் (திண்டுக்கல் யேசு அக திகள் சேவை), 5. டாக்டர் ஜெயபெளலன் (சென்னை CS1CTWT இயக்குனர்), 6. என்.சி.சந்திரகாசன் (சென்னை OFERR).
கிரந்தரத் தொழில்துறையிலும், ஏனையோர் பகுதிநேரத் தொழில், தற்கா லிகத் தொழில்துறை போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். சுமார் 7 விகிதத்தினர் சமுக ஸ்தாபனங்களில் தொண்டர் அடிப்படையில் கருமமாற்றி வருவதும், இன்னுமொரு 7 விகிதத்தினர் கல்வி கற்கும் மாணவர்களாகவும் காணப்படுகின்றனர்.
அகதிகள், காட்டில் அனுமதிக்கப்படும் அந்தஸ்துப் பற்றிய முடிவுகள் நீண்டகால தாமதத்திற்குப் பின்னரே எடுக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இம்முடிவுகளைப் பெற, சிலர் 16 மாத காலமும், சிலர் 2 1/2 வருடங் களும் காத்திருந்துள்ளனர். ஒரு நபருக்கு இம்முடிவு 6 வருடங்களுக்குப் பின்பு கிடைத்த அனுபவமும் உண்டு. வீட்டு வசதிகள் பற்றிய தரவுகளில் பெரும்பான் மையோர் இது ஒர் பிரச்சினை என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். கால்பங்கு நபர்கள் வீடற்றவர்களாக இருந்து வாழ்ந்த விபரம் வெளிவந்துள்ளது. சிலர் கண் பர்கள், உறவினர்கள், சமுக ஸ்தாபனங்கள் போன்ற வற்றில் வீட்டு வசதிக்காகத் தங்கியிருந்தமையை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகையோர் இட நெருக் கடியுள்ள வீடுகளில் கூடிய நபர்களுடன் நீண்டகாலமாக அதிக சிரமத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
1990 இல் தமிழ் தகவல் நடுவமும் ஏறத்தாழ இதே போன்ற ஒர் ஆய்வினை நியூஹாம் பகுதியில் கடத்தியது. அது கூடியளவுக்கு இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பற்றியது. உள்நாட்டு அலுவலகம் நடத்திய ஆய்வுத் தரவுகளிலிருந்து பெறப்பட்ட முடிவுகளில் பல தகவல் நடுவத்தினரின் ஆய்வு முடிவு களுடன் ஒத்தனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் இளைஞர்களின் கல்வியறிவு, தொழில், ஆங்கில அவசியம் போன்ற விடயங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். உள்நாட்டு அலுவலக ஆய்வின் முழுமையான விவரங்களை இன்னும் சிறிது காலத்தில் வெளியிட வுள்ளார்கள்.
மீட்சி - ஜூலை 1993

Page 7
பலாத்கார மறைவினை விளங்கிக் கொள்ளல்
9. அதிகாரிகளோ அவர்களது பிரதிநிதிகளோ ஒருவரைக் கைது செய்த பிறகு அவர் தம்மிடம் இல்லை யென மறுப்பது "பலாத்கார மறைவு ஆகும். பலாத்கார மறைவுக்கு ஆளானவர்கள், சட்டத்திற்கு மாறாக கைது செய்யப்பட்டிருக்கலாம்; சித்திரவதைக்குள்ளாகியிருக்கலாம்; அல்லது அவர்களது கைது மறுக்கப்பட்டிருக்கலாம். சில வேளைகளில் இரகசியத் தடுப்புக்காவலில் இருக்கும்போது சித்திரவதை காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம்
மீட்சி - ஜூலை 1993
 

அல்லது சிறைப்படுத்தப்பட்டிருக்கும்பொழுது வேறுமுறை யாகக் கொல்லப்பட்டிருக்கலாம். குறிப்பிட்ட நபர் தம் கைவசம் உள்ளார் என்பதை அரச அதிகாரிகள் ஒப்புக் கொள்வதன் முலமோ அவரை விடுதலை செய்வதன் முல மோ பலாத்கார மறைவு என்ற பிரச்சினை தீர்க்கப்படலாம், ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட கபர் தம்மால் சிறைப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை அரச அதி காரிகள் மறுத்து விடுவது வழக்கம்.
"பலாத்கார மறைவு' ஒரு புதுவகை அடக்குமுறையல்ல. இதற்கான உதாரணங்களில் இரண்டாவது உலக மகா யுத் தத்தின்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது முதன்மை எனக் கூறலாம். அன்றைய “பிரான்ஸ் எதிர்ப்பு அமைப்பை” அழிக்கும் முயற்சிக்குப் பொறுப்பாயிருந்த ஜேர்மனியப் படைத்தளபதி ஒருவர் "இரவும் முடுபனியும்” என்ற ஒரு ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இந்த ஆணை முலம், பிரான்சிய எதிர்ப்பு அமைப்பின் அங்கத் தவராகச் சங்தேகிக்கப்படுபவர்கள் இரவோடிரவாக சந்த டியின்றி இரகசியமாகக் கைது செய்யப்பட்டு உடனடியாகப் பிரான்சிலிருந்து ஜேர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மறைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நிச்சயமாகத் தெரிவதை விட, இந்த நிச்சயமற்ற மறைவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதுபற்றி எந்தவொரு தகவலின்மையும், எதிர்ப்பு அமைப்பின் அங்கத்தவர்களின் மனோவலியைத் தளரச் செய்து பீதியை உண்டாக்குவதற்குப் பெரும் காரணமாக இருந்தன.
முப்பது வருடங்களுக்குப் பிறகு தென் அமெரிக்காவில் கெளத்தமாலா, பிரேசில், ஆர்ஜென்டீனா, சிலி ஆகிய காடுகளில் இந்த “இரவும் முடுபனியும்” முறை, "பலாத் கார மறைவு”என்ற பேரினைப் பெற்றது. இன்று இலங்கை உட்பட பல காடுகள் இத்தகைய கொடுர முறையைப் பின்பற்றுகின்றன.
ஒரு அரசு தனது அதிகார வலிமை பற்றிச் சங்தேகமும் கிச்சயமின்மையும் கொண்டிருக்குமிடத்துத்தான் "பலாத்கார மறைவுகள்' நடைபெறுவது வழக்கம். ஏனெனில் அநேக வேளைகளில் ஜனநாயக வழியில் செல்லாது வன்முறையினால் அரசைக் கைப்பற்றியிருப்பின் இவ்வாறு கடக்கக்கூடும். வன்முறையினாலும் அச்சுறுத்தலினாலும் ஆட்சியில் நிலைத் திருப்பது முன்மாதிரியாகக் கொள்ளப்படுகிறது. இது, தவிர்க்கவியலாதபடி, மனிதாபமானமற்ற கொள்கைகளுடன் கைகோர்த்துச் செல்லும். அரசின் கொள்கை, செய்முறை ஆகியவற்றை விமர்சிப்போர் ஆபத்தானவர்கள், சமுதா யத்திலிருந்து நீக்கப்படவேண்டியவர்கள் எனக் கருதப்படு கின்றனர். இதன்பின் சடுதியாக ஆயிரக்கணக்கானோர் இரகசியமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குள் எாாக்கப்பட்டு சட்டத்திற்கு மாறாகக் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் குடும் பத்தினர் தவிக்க நேரிடுகிறது. "பலாத்கார மறைவுகள் யுத்தங்களின்போதும் நடைபெறுகின்றன. இத்தகைய மறை வுகள் யுத்தத்தின் தீவிரத்தோடு தொடர்பு கொண்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.
பலாத்கார மறைவுக்கு உள்ளானோர்களில் மிகப் பெரும்பாலானோர் எவ்விதக் குற்றத்தோடும் தொடர்பு இல்லாதவர்களே என்று மனித உரிமை நிறுவனங்களினதும் மனித உரிமை மேம்படுத்தலிலும் பாதுகாப்பிலும் ஈடு பட்டோரினதும் அனுபவங்களிலிருந்து தெரிய வருகின்றது. கொடுமையான ஆட்சியினால் மனக் குழப்பமடைந்த
7

Page 8
இவர்கள், அரசுக்கெதிராக ஊக்கமாக, ஆனால் வன்முறை யின்றிச் செயலாற்றியிருக்கலாம். மேலும் அரசியற் தீவிர வாத சந்தேக நபர்களின் மனைவிமார், கணவன்மார், பிள் ளைகள், நண்பர்கள் ஆகியோரே அதிகமாகப் பலாத்கார மறைவுக்கு உள்ளாகின்றார்கள் என்று தெரிய வருகின்றது.
இத்தகைய கைதுகளில் அநேகம் சட்ட விரோதமானவை என்பதனால் அவை இரகசியமாகவும் திடீரெனவும் நிகழ் கின்றன; இரவினில் அவர்களின் வீடுகளில் அல்லது வேலைத்தலங்களில் அல்லது வீதிகளில் நடைபெறுகின்றன. கைது செய்பவர்கள் சீருடையின்றி அடையாளம் எதுவுமின்றி வருபவர்களாகவிருப்பார்கள். தமிழ்ப்பிரதேசங்களில் பிரதா னமாக வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இத்தகைய நிகழ்வுகளைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இப்பகுதிகளில் பதிவு எண் எதுவுமில்லாத வெள்ளை வான்களில் வரும் இனங்தெரியாத நபர்களினால் கடத்தப்படுபவர்கள் என்னவானார்கள் என் பது பிறகு தெரியாமலிருக்கின்றது.
கைது செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்ட கணம் முதல் (முழுமையாக உதவியற்ற) அகாதரவான நிலைக்குத் தள்ளப்படுவதோடு, அவர்களது குடும்பங்கள், நண்பர்கள், பரிச்சயமானவர்கள் ஆகியோர் பற்றிய தக வல்களை அவர்களிடமிருந்து வலிந்து தருவிக்கச் சித்திர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை காம் உணர்ந்து கொள்வது மிக முக்கியம், அபூர்வமாக அவர் கள் விடுவிக்கப்படலாம். ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்படுகின்றனர்.
பலாத்கார மறைவுகளுக்கு அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்
பலாத்காரமாக ஆட்கள் மறைவதை கற்பனை செய்து பார்ப்பது கடினம். தற்காலத்தில் திடீரென்று ஒருவர் காணாமற் போவது இலகுவல்ல. ஒருசில அபூர்வமான விபத்துக்களைத்தவிர, காணாமற் போனவர் எங்கிருக்கிறார் என்பது யாராவது ஒருவருக்குத் தெரிந்திருக்கும். யாராவது ஒருவரின் உத்தரவின்றி, யாராவது இன்னொருவரின் செயலின்றி எவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டோ இரகசியமாகச் சிறையிலடைக்கப்பட்டோ அன்றிக் கொல்லப் பட்டிருக்கவோ முடியாது. கைது செய்யப்பட்டவர் யார், அவர் எங்கிருக்கிறார், அவர் எதற்காகக் கைது செய்யப் பட்டார் என்பது யாருக்காவது தெரிந்திருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்டவர் இச்சம்பவத்திற்குப் பொறுப் பானவர் என்பது மிக முக்கியம். பலாத்கார மறைவுக்குப் பொறுப்பானவர்கள் அநேகமாக ஒன்றில் அரச பாதுகாப்புப் படையினராய் இருப்பார்கள் - இராணுவம் அல்லது (இரகசியப்) பொலிஸ் அன்றேல் ஏதோ ஒரு வகையில் அரசின் சார்பில் இயங்கும் துணைப்படையினராயும் இருக்கக்கூடும். எனவே, படையினரின் சட்டவிரோத கட வடிக்கைகள் அனைத்திற்கும் அரசே பொறுப்பு என்பது ஏற்கப்பட்ட ஒன்று.
ஆயினும் அரசுக்கெதிரான சில குழுக்கள் ஒர் அரசின் குணாம்சங்களைப் பெற்று இதேமாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய குழுக்கள் மனித உரிமைகளுக்குப் புறம்பான செயல்களில் பெருமளவில் ஈடுபட்டிருப்பதையிட்டு சர்வதேசச் சமுகத்தின் கவலை அதிகரித்து வருகின்றது. நீதியான உரிமைக் கோரிக்கை விடுத்து, நசுக்கப்பட்டு வாழும் மக்களுக்குச் சுதந்திரம் பெறப் போர் புரியும் அதேவேளையில், இக்கு ழுக்கள் சர்வதேசச் சட்டத்திற்கிணங்கச் செயலாற்றி ஜெனிவா சட்ட மரபுகளைப் பின்பற்றுவதற்கு எல்லாவித முயற்சிகளையும் எடுப்பது முக்கியமானதாகும். சர்வதேச மனித உரிமை நியமங்களைப் பின்பற்ற வேண்டியது அரசுகள் என்றாலும், இத்தகைய குழுக்களும் இங்கியமங் களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென சர்வதேசச் சமுகம்
8

எதிர்பார்க்கின்றது. இல்லாவிடின், சர்வதேச மதிப்பை இக்குழுக்கள் இழந்து "பயங்கரவாதிகள்” எனக் கருதப் படுபவர்; அப்படிக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதியான போராட்டம் பலவீனப்படுத்தப்படும்,
பிள்ளைகளின் பலாத்கார மறைவு
பலாத்கார மறைவின் மிகச் சோகமான, வருத்தத்திற்குரிய அம்சம் பிள்ளைகளின் மறைவாகும். பெற்றோருடன் கடத் திச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பிள்ளைகள், பாட சாலைகளிலிருந்து அபகரித்துச் செல்லப்பட்ட வாலிபப் பருவத்தினர், தாய்மார் சட்ட விரோதமாகக் கைது செய் யப்பட்ட பின் சிறையில் அல்லது தடுப்புக்காவல் முகாம்க ளில் பிறந்த குழந்தைகள் ஆகியோர் பற்றி ஏராளமான அறிக்கைகள் வெளிவந்துள்ளன. பலாத்கார மறைவுக்கு ஆளானவர்கள் தங்களுடைய கைக்குழந்தைகளிடமிருந்தும் இளம் பிள்ளைகளிடமிருந்தும் கொடூரமான முறையில் பிரிக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டதைப் பற்றியும் அறிக்கைகள் உண்டு. உலகத்திலேயே முற்றிலும் மோசமான பயம், தம் குழந்தைகளைப் பற்றிய பயமே. பெற்றோரிட மிருந்து தகவலைப் பெறுவதற்காக அவர்களின் முன் னிலையிலேயே கடத்தப்பட்ட பிள்ளைகள் பயமுறுத்தப் படுவதுண்டு. ஒடுக்கல் முறையின் ஒரு கருவியாகக் குழங் தைகள் பயன்படுத்தப்படுகின்றார்கள்.
செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி இவை முலம் பெற்றோரும், பெற்றோரின் பெற்றோரும் தம் குழந் தைகளை விடுவிக்குமாறு உணர்ச்சிகரமான வேண் டுகோள் விடுப்பது உலகின் பலபாகங்களிலும் வழமை யானதொன்றாக ஆகிவிட்டது.மேன்முறையீடுகளும், குழங் தையகங்கள், அநாதை இல்லங்கள், மருத்துவ மனைகள், நீதிமன்றங்கள், அரச அலுவலகங்கள், இராணுவ முகாம்கள், ஊர்காவல் நிலையங்கள், பிரார்த்தனை நிலையங்கள் இவற்றுக்குச் சென்று பார்த்தலும் காணாமற்போன பல குழந்தைகளின் இருப்பிடங்களைத் தெரிந்து கொள்வதில் பலனளிப்பதில்லை.
குடும்பங்களுக்கான பாதிப்பு
பலாத்கார மறைவினால் குடும்பங்களுக்கேற்படும் பாதிப்பினை விபரிக்க முடியாது. தனது உறவினர் மறைந்து போனார் என்பதைக் கேள்வியுற்றவுடன் குடும் பத்தினர், ஆழமான அதிர்ச்சியும் பயம் கலந்த குழப்ப நிலையும் அடைகின்றனர் என்று "பலாத்கார மறைவை' எதிர்நோக்கி அனுபவங்கொண்டோர் கூறுகின்றனர். பலாத் கார மறைவினால் குடும்பத்தினருக்கு ஏற்படும் துன்பநிலையும் மனவலியும் இடைவிடாது தொடர்கின்றன. நிலைகுலையச் செய்யும் நிச்சயமின்மை, உண்மையுரு வற்ற தன்மை ஆகி யவற்றைச் சமாளித்து மனோதிடம் கொள்வது முடியாத தொன்று. ஒரு தகவலும் தெரியா தவிடத்து நிச்சயமில்லாத சாவுக்காக மனம்வருந்துவது முடியாத காரியமாகும். அந்த மனவருத்தத்தைக் காலவரையின்றித் தள்ளிப்போட வேண்டி யதாகி விடுகின்றது. தம் குடும்பங்களில் "பலாத்கார மறைவை அனுபவித்தவர்களுக்கு, இது ஒரு கொடிய உளச் சித்திரவதையாக அமைந்து விடுகிறது.
அதிகமான சந்தர்ப்பங்களில் தமதன்பிற்குரியவர் மறைந்து விட்டார் என்பதை குடும்பத்தவர்கள் கம்புவதில்லை. அவர் எங்கோ உயிருடன் வாழ்கிறார் என்று வலிந்து கம்ப முனைவது இயல்பு. இத்தேடலின் மனச்சோர்வும் உடற் சோர்வும் ஒரு மனிதனை அழியும் நிலைக்குக் கொண்டு வருவதுடன் முழுக்குடும்பத்தையுமே சிதறடித்து விடுகின்றன. ஒருவரது மரணம் பற்றிய தகவல் கிடைத்த பிறகும்கூட பல சந்தர்ப்பங்களில் அவருடைய சாவின் காரணங்களையும் அவரின் உடல் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தையும் அறிந்து கொள்ளும் பொருட்டு குடும்பத்தினரின் முயற்சி தொடர்கிறது. ஊர்காவல் நிலையங்கள், தடுப்புக்
மீட்சி - ஜூலை 1993

Page 9
காவல் முகாம்கள், மருத்துவ மனைகள், அரச அலுவலகங்கள் ஆகியவற்றிற்கும் செல்வதிலும் அங்கு காத்திருப்பதிலும்; அதிகாரிகள், நீதி மன்றங்கள், முக்கியமான இராணுவ, அரச அதிகாரிகள் ஆகியோரிடமும் தேசிய, சர்வதேசிய மனித உரிமை, மனிதநேய தாபனங்களிடமும் வேண்டுகோள் அல்லது முறையீடு செய்வதிலும், குடும்பத்தினர் நாள் முழுவதையும் கழிப்பதையும் நாம் காணக்கூடியதாகவிருக்கும். தகவல் அறிந்த எவரையாவது சங்திக்கமாட்டோமா என்ற குருட்டு நம்பிக்கையில் அலைந்து திரிவர். அதன் முலம் முழுச் சமுகமுமே இன்னலுக்குள்ளாகிறது.
குடும்பங்கள் பெரிதளவும் பாதிக்கப்பட்ட நிலையில், வயதடைந்த பிள்ளைகள் தங்களுடைய தங்கை தம்பிகளை பெற்றோராக இருந்து பராமரிக்க வேண்டிய நிலை ஏற் பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. குடும்ப வாழ்க்கையின் சாதாரண லயம் மாறுபட்டு எதிர்கால கம்பிக்கைகள் இரு ளடிக்கப்படுகின்றன. தம் பெற்றோர் இருவரையுமோ ஒரு வரையோ, பலாத்கார மறைவு முலம் இழந்து போன மையினால் அவதிப்படுகையில் பிள்ளைகளின் வாழ்க்கை நிச்சயமற்றும் அச்சமுட்டுவதனாலும் அவர்கள் மற்றைய சிறுவர்களுடன் விளையாடக்கூட முடியாத நிலைக்கு ஆளாகின்றார்கள். தனது கணவன் பலாத்கார மறைவுக்கு ஆளானதையும் இனிமேல் அவனைக் காணமுடியாமலே போகலாம் என்ற நினைவும் மனதில் பெரும் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கும்போது தாய்க்குரிய கடமைகளை ஒரு பெண்ணால் செய்ய இயலாது போய்விடுகிறது. கண வனின் மறைவு பிள்ளைகளுக்குத் தெரியாதிருக்கப் பகீ ரதப் பிரயத்தனம் எடுக்கவேண்டியிருக்கிறது. தனது வீடு கள் அந்நியரால் ஆக்கிரமிக்கப்பட்டு, குடும்ப ஆதனங்கள் காசமாக்கப்பட்டு, பெற்றோர் தாக்கப்பட்டுக் கடத்தப் படுவதைப் பார்க்கும் குழந்தைகளின் மனோநிலை ஆழ்ந்து நிரந்தரமாகப் பாதிக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் தனிமை, கைவிடப்பட்ட நிலை, பாதுகாப்பின்மை, அச்சம் இவற்றினால் பாரதூரமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
அறுசுவை உண்டி அன்புடன் ஊட்டினும் ဒြို ့်
( அணிகலன் ஆடை அழகுடன் குட்டினும் ; நறுமணப் பூங்கா கனிமலர் காட்டினும் ...:::::::::::::
நிலமுட்ை வீணை கயமுடன் மீட்டினும் விழிப்பு சிலை மொழியுடன் *、*、・・・・、 சென்ற தந்தை என்று வருவார் மறும்ொழி யாது மழலைக்கு அறியேன்
மயக்கும் எனக்கோ மனதில் கலக்க
சிறுமி
மனதில் துயரம் அனைத்தும் புட்
te: மகளே தங்தை மாற்றிடம் சென்ற தினமும் உன்னிடம் திகட்டிடக் களிக்க
ஐ திங்களி ரண்டில் திரும்புவார் என்று
பொய்யை எப்படிச் சொல்வேன்,
என்றும் திரும்பார் இறைவர் என்று இஎனது பொய்யை எப்படிச் சொல்வேன்
"பலாத்கார மறைவு' முலம் அங்கத்தினரை இழந்த குடும்பங்களின் துன்பத்தைப் புரிந்து அத்துன்பத்தில் பங் கெடுப்பது சமுகத்தினரின் கடமையாகும். அத்தகைய குடும்பத்தினரும், தமது துன்பங்களைக் குறைக்கும் பொருட்டு சமுக மட்டத்தில் செயல்கள், முறையீடுகள், திட்டங்கள் ஆகியவற்றில் பங்குகொள்வது மிக முக்கி யமானதாகும்.
பலாத்கார மறைவும் சட்டமும்
1978ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி, 33/173 வது தீர்மானத்தின் முலம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை
Bf - 396)) I 199:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

". . . . . . . . . சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் அல்லது பாதுகாப்புப் படையினரின் அதிகாரம் மீறிய நடவடிக் கைகளினால், நபர்களின் பலாத்கார அல்லது தன்னிச்சைuற்ற மறைவுகள் தொடர்பாக உலகின் பல பாகங்களிலிருந்தும் அறிக்கைகள் . * கிடைத்திருப்பதையிட்டு சர்வதேச சமுகத்தின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டது. 1980ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை "பலாத்கார அல்லது தன்னிச்சையற்ற மறைவுகள் மீதான செயற்குழு" ஒன்றை ஏற்படுத்தியது. இச்செயற்குழு இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்தும் கிடைக்கப் பெறும் பலாத்கார மறைவுகள் தொடர்பான முறையீடுகளைப் பரிசீலனை செய்கின்றது. “பலாத்கார மறைவுக்கு மிக முக்கியத் தொடர்புடையதாகிய" உறவினர்களின் கதியைத் தெரிந்துகொள்ளக் குடும்பத்தி னருக்குள்ள உரிமை பற்றி “பாகுபாட்டைத் தடை செய் வதற்கும், சிறுபான்மை சமுகத்தினருக்குப் பாதுகாப்பு அளிப்பதுக்குமான ஐ.நா.சபையின் உதவி ஆணைக்குழு" 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் திகதி 15 (XXXIV) தீர் மானத்தில் அறிதியிட்டுக் கூறியது. ஜெனிவா மரபு விதி களின் 1ஆம் செயலேற்பாட்டின் 32வது சரத்து இவ்வுரி மையை அடக்கியுள்ளது.
"பலாத்கார மறைவு' என்பது சர்வதேசச் சட்டத்தின் தெளிவான மீறலாகும். பொதுப்படையாகப் பார்த்தால், *மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனம்”, முன்றாம் சரத்தில் சுதந்திரத்திற்கும் தனிமனிதப் பாது காப்பிற்கும் உடைய உரிமையை எடுத்துக் கூறுகிறது. 9 ஆம் சரத்து, தன்னிச்சையான கைதுக்கு எதிரான உரிமை பற்றி எடுத்துரைக்கிறது. இவ்வுரிமைகள் மீறப்படுமிடத்து, அதற்குரிய நிவாரணங்கள் பற்றி 8ஆம் சரத்து இயம் புகிறது.
*குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச விதியுரைப்பு" இவ்வுரிமைகளை மீண்டும் வன்மையாக உறுதிப்படுத்துகின்றது. "கைதிகளை நடத்தும் முறை பற் றிய ஐக்கிய நாடுகளின் ஆகக்குறைந்த நியம விதிகளில்" மேலும் பாதுகாப்புகள் தரப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, வழக்கிடப்படாத கைதிகள் தமது சிறைபற்றிக் குடும்பத்தி னருக்கு உடனடியாகத் தெரிவிக்கும் உரிமையை 92ஆம் நெறி உறுதிப்படுத்துகின்றது. கைதிகளின் விபரங்களை ஒரு புத்தகத்தில் பதிவு செய்யவேண்டிய அரச அதிகாரிகளின் கடப்பாடு பற்றி 7ஆம் கெறி உறுதி செய்கின்றது. அதா வது குடும்பத்தினர் தமது உறவினரின் கதியை அறிந்து கொள்ள உரித்துடையவராவர்.
ஒரு நபர் "பலாத்கார மறைவுக்கு உள்ளாகும்போது மேலதிக மனித உரிமை நியமங்கள் மீறப்படுவதாகக் கூற லாம். சர்வதேசப் பிரகடனத்தின் 5ஆம் சரத்திற்கு மாறாக அவர் சித்திரவதைக்குள்ளாகலாம். அல்லது 3ஆம் சரத்திற்கு எதிராக அவர் கொலை செய்யப்படலாம். சித்திரவதை முறைப்பாடுகளுக்கு விசாரணை நடாத்தி சித்திரவதைக்குப் பொறுப்பானவரைத் தண்டிக்காவிடில் ஐக்கிய நாடுகளின் இன்னுமொரு பிரகடனம் மீறப்படுகின்றது. இது “சித் திரவதைக்கும் மற்றைய கொடுரமான மனிதா பிமானமற்ற அல்லது இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைக்கும் உட்படுத்துவதிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிக்கும் பிரகடனம்" ஆகும். மேலும் பல நெறி களைத் தொகுக் கும் புதிய விதியுரைப்பு ஒன்று ஐ.நா. பொதுச்சபையின் அனுமதிக்காகக் காத்துள்ளது. இது, "எவ்வகைப்பட்ட தடுப்புக்காவல் அல்லது சிறையிலுள்ள அனைவருக்கும் பாதுகாப்பளிக்கும் விதியுரைப்பு” ஆகும். தடுப்புக்காவலில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டவுடன் தம் குடும்பங் களுக்குத் தெரிவிக்க உரிமையுடையவர்கள் என்பதனை இவ்விதியுரைப்பு முக்கியமாக உள்ளடக்கியுள்ளது. எங்கும் அதிகளவில் பரவும், அதிகாரத்திலுள்ளோரின் இந்த அடக்குமுறைக்கெதிராக இந்தப் பிரகடனங்கள், விதி யுரைப்புகள் எதுவுமே முழுமையாகப் பலனளிக்கவில்லை.

Page 10
இன்றும்கூட ஆசிய, ஆபிரிக்க, தென்அமெரிக்காவிலுள்ள பல நாடுகளில் ஒருவரின் கைதுபற்றி குடும்பத்தவரோ, சட்டப்பிரதிநிதியோ அறிவிக்கப்படுவதில்லை. உள்ளுர் நகர்காவல் நிலையத்திலோ தடுப்புக்காவல் முகாம்களிலோ தாமாகவே சென்று விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண் டிய நிலை இங்குள்ளது. சில சந்தர்ப்பங்களில் தேடப்படும் நபர், தம் சிறையில் உள்ளார் என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொள்ளக்கூடும். ஆனால் வேறு சந்தர்ப்பங்களில் எவ்வித பதிலளிப்பதற்கும் அவர்கள் மறுக்கக்கூடும், அல்லது கைது செய்ததையே மறுக்கவும் கூடும் அல்லது கைது செய்ததை முதலில் ஒப்புக்கொண்டு பிறகு மறுக் கக்கூடும். இது இலங்கையில் வழக்கமாகி விட்டது.
எதுவித விதிமுறையுமின்றி மக்கள் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக சிறையில் எவ்வித வெளித்தொடர்புமின்றி அடைத்து வைப்பதற்கு சில நாடுகளின் சட்டங்கள் அனு மதிக்கின்றன. உதாரணமாக தென் ஆபிரிக்காவின் பயங் கரவாதச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டவர் எங்கு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரிகள், குடும்பத்தினருக்கு அறிவிக்கத் தேவையில்லை. ஆனால் பொதுவாக, ஒரு நபர் தம் கைவசம் சிறையிலிருப்பதை ஒப்புக்கொள்வார்கள். தென்னாபிரிக்காவின் இச்சட்டம், "பலாத்கார மறைவைச் செயற்படுத்த உதவியாக இருந்து வருகிறது. இதைப்போலவே இலங்கையின் பயங் கரவாதத் தடைச் சட்டம் அவசரகால விதிகள் ஆகியன வற்றின் கீழ், ஒரு நபரை நீண்ட காலத்திற்கு பாதுகாப்புப் படையினர் சிறையில் எவ்வித தொடர்புமின்றி வைத் திருக்கலாம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்படத் தேவையில்லை. அத்துடன் அவர்கள் எவ்விதத்திலும் சிறை வைக்கப்படலாம். இதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. மேற்பார்வைக்காக நியமிக்கப்பட்ட மனித உரிமை செயற் படையும் பேரளவில் மட்டுமே இயங்குகிறது. மனித உரிமை மீறலுக்கு எவ்வித கட்டுப்பாட்டையும் இதனால் கொண்டுவர முடியவில்லை. இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் பலாத்கார மறைவுக்குப் பெருமளவில் உதவியுள்ளது.
இலங்கையில் "பலாத்கார மறைவு
இலங்கையில் முதன்முறையாக பலாத்கார மறைவு பற்றி சர்வதேச சமுகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 1971ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்ன ணியின் (JVP) கிளர்ச்சியின் போதாகும். 1979ஆம் ஆண் டும் பலாத்கார மறைவு பற்றி முறையீடுகள் செய்யப்பட்டன. 1984ஆம் ஆண்டு பிற்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் பலாத்கார மறைவுகள் அதி கரிக்க ஆரம்பித்தன. அதன் பிறகு பலாத்கார மறைவுகள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங் களுக்குப் பரவி முழுத் தமிழ்த் தாயகத்தையும் பாதித்தன; பலாத்கார மறைவுக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் தமிழ் இளைஞர்கள் ஆவர். எவ்வாறாயினும், 1984, 83, 86ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும், கொழும்பைச் சுற் றிய புற நகர்களிலும் சிங்களவர் பலாத்கார மறைவுகள் பற்றிய அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. பலாத்கார மறைவை எதிர்த்துச் சர்வதேச சமுகம் அதி தீவிரமாக வழி களை மேற்கொண்ட போதும், அந்நடைமுறை தொடர்ந்தது; இன்றும் தொடர்கின்றது.
தென்பகுதியில் 1987-1989 ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணி (JVP)யின் இரண்டாவது கிளர்ச்சியின்போது மிகப்பெருமளவில் சிங்கள வாலிப, யுவதிகள் பலாத்கார மறைவுக்கு உள்ளாகியிருக்கின்றனர். தென்பகுதியில் 40,000 க்கு மேற்பட்டோரும் தமிழ்த் தாயகத்தில் 10,000 க்கு மேற்பட்டோரும் அரச படையினரின் நடவடிக்கைகளில் மறைந்து போயிருக்கலாமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த முன்று வருடங்களில் மட்டும் 5,000க்கு மேற்பட்டோர்
10

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மறைந்து போயுள்ளனர். இம்மாவட்டத்தில் பலாத்கார மறைவுகள் இன்னும் தொடர்கின்றன. இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து விடுதலைப் புலிகளினால் பலர் நீதிக்குப் புறம்பான கிலையில் கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட் டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனை, சர்வதேச மன்னிப்புச்சபை கண்டித்து அறிக்கைகள் விடுத்துள்ளன. இப்படிக் கொல்லப்பட்டவர்களில் பெருந்தொகையான சிங்கள, முஸ்லிம் மக்களும் துரோகிகள்' என்று கருதப் படும் தமிழரும் அடங்குவர். இப்படிக் கொண்டு செல்லப் பட்டோர் விடுதலைப் புலிகளினால் “பலாத்கார மறைவுக்கு” உட்பட்டிருக்கிறார்கள் என்றும் அறிக்கைகள் தெரிவிக் கின்றன. இதில், சிறையெடுக்கப்பட்ட பொலிசாரும், அரச ஊழியரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள் கைகளுக்கு விரோதமானவர் என்று கருதப்பட்ட தமிழரும் அடங்குவர்.
இதேபோல அரசுடன் கூடி இயங்கிவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) பலரைக் கடத்திச் சென்றதாகவும், அவர்களில் சிலர் மறைந்து விட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இலங்கை ராணுவத்துடன் கூட்டாக இயங்கிவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TEL0) போன்ற தமிழ்க் குழுக்களும் இவ்வாறான "பலாத்கார மறைவுகளுக்கு கார ணமாக இருந்து வருகின்றன எனவும் அறிக்கைகள் கூறு கின்றன. இதுபோலவே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், இந்திய ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் இருந்த காலத்தில், பலரைக் கடத்திச் சென்று ‘பலாத்கார மறைவுக்கு"க்கு காரணமாக இருந்தார்கள் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஈழப்புரட்சி அமைப்பும் (EROS) இதற்கு விலக்கல்ல. உதா ரணமாக, தமிழ் தகவல் நடுவம், தமிழ் அகதிகள் புனர் aim pays sp35lb (TRRO) Lofgrub SATURDAY REVIEW, gaps' வார இதழ்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட Ne Era Publishers ஆகிய ஸ்தாபனங்களின் ஸ்தாபகரான திரு.கந்தசாமியின் பலாத்கார மறைவுக்கு ஈழப் புரட்சி அமைப்பே பொறுப்பு என அறிக்கைகள் முலம் அறிகி Gpmrub.
பலாத்கார மறைவை எதிர்த்துப் போராடல்
மக்களின் மனச்சாட்சி காரணமாக, கொடுரமான பலாத்கார மறைவுக்கு எதிராக, பலவித ஆலோசனைகளும் திட்டங்களும் உலகெங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை எமக்கும் பொருந்துமென உணர்ந்து, அவற்றின் பயன்பாட்டினை அறிந்து எம்மால் இயன்றளவில் எமது பிரதேசங்களில் "பலாத்கார மறைவுகளை குறைக்கவும், முடியுமெனில் அடியோடழித்திட முயற்சிகளெடுப்பதும் முக்கியமாகும்.
தடுப்புக்காவலில் நபர்கள் உள்ளனர் என்பதை அரசும், அரச நிறுவனங்களும், குழுக்களும் ஒப்புக்கொள்ளாதிருப்பதே காம் எதிர்கொள்ளும் பெரும் இடையூறாகும் எனினும், போராட்டத்தினையோ முயற்சிகளையோ கைவிட அது ஒரு காரணமாகாது. மாறாக, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிகளைக் கண்டறிய அதிக முயற்சிகளைத் தூண்டிவிட வேண்டும்.
தமிழ் தகவல் நடுவத்திடம் பலாத்கார மறைவுகள் தொடர்பான பல 'மாதிரி நிகழ்வுகள்' (Case Histories) உள்ளன. ஓர் திடமான செயல் திட்டத்தை உருவாக்க இவை உதவும். 'பலாத்கார மறைவு' மனிதருக்கு எவ்வாறு தாங்க முடியாத துயரைத் தருகின்றது என்பதை நாம் ஒவ் வொருவரும் மனதில் கொண்டோமானால் நிச்சயம் எம் மால் "பலாத்கார மறைவுகளுக்கு" முற்றுப்புள்ளி வைக்க | pտպծ.
fas) - g960a) 1993

Page 11
நூற்சேர்க்கைப் பட்டி
SHR3006
CWGAL
The Human Right Situation in Sri Lanka by The Country WorkingGroup on SriLanka Geneva:UNHCR; February-March 1993. 10p.
பொருள்: மனித உரிமை மீறல்கள் / ஐ.கா. மனித உரிமை ஸ்தாபனம் / இலங்கை அரசாங்கம்/ விடுதலைப் புலிகள் / சிபாரிசு.
SHR3183
மனித உரிமையும் எமது போராட்டமும்
யாழ்ப்பாணம்: மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்; 15 பங்குனி 1993, 39 பக்.
பொருள்: இனப்பிரச்சினை/ பாரபட்சம்/ விடுதலைப் புலிகள்/ இலங்கை அரசாங்கம்/ இந்திய சமாதானப்படை/ மனித உரிமை மீறல்/ போர்.
B
The thatched patio
Sri Lanka: International Centre for Ethnic Studies; Novemberand December 1992
Vol. 5; No.6; 63p.
பொருள்: வரலாறு/ இலங்கை/ இலக்கியம்/ தமிழ்.
OHR230
I am a refugee, Stories of Refugees in Britain Today.
London: Asylum Rights Campaign; November 1991. 20p.
பொருள்: அகதிகள்/ ஐக்கிய ராச்சியம்/ உதாரண
• ||6 لائی
OHR231 Newham Monitoring Project: Annual Report 92/93. London:NMP; 1993.52p.
பொருள்: இனப் பாகுபாடு/ ஐக்கிய ராச்சியம்/ தொந்தரவு.
SHR3128
Refugee Situation in Tamil Nadu Madras: Pro TEG; 9 February 1993 3p.
பொருள்: அகதிகள்/ இலங்கைத் தமிழர்/ தமிழ் நாடு.
SGN 347
அமரசிங்கம், த. (தொ.ஆ.)
திரு.பொ.கங்தையா அவர்களின் 75 ஆவது பிறந்த தின வைர விழா மலர் 19-12-1992.
திருகோணமலை: காந்தி மாஸ்டர் வைரவிழா மலர் குழு; மார்கழி 1992
பொருள்: சுயசரிதை
B
SAARCLINK:quarterlynewsletter
Sri Lanka: South Asian Human Rights ActionProgramme, 1993 10p; No. 1.
பொருள்: மனித உரிமை மீறல்கள்/ தடுத்து வைத்தல்/ பேச்சுச் சுதந்திரம் / விடுதலைப் புலிகள்/ போசாக்கின்மை / சிறுவர்கள் / இலங்கை/ மாலைதீவு/ பூட்டான்/ பாகிஸ்தான்/ பங்களாதேஷ் / கேபாளம்/ இந்தியா.
மீட்சி - ஜூலை 1993
 
 

BB
மெளனம் (கலை இலக்கியக் காலாண்டு இதழ்)
பிரான்ஸ்: பு. விக்னேஸ்வரன்; மே, யூன், யூலை 1993. 44 Luš.
பொருள்: தமிழ் / இலக்கியம் / கலை.
SHR3181
Varatharajah, S. Sinhalese Colonization in Tamil Lands; a perspective. France: Tamil Co-ordinating Committee;
12-04-92 12p. பொருள்: தமிழர் தாயகம்/ குடியேற்றங்கள்/ சட்டங்கள்.
SHR3182
தாய் நிலத்து வீரர்: மாவீரர் கினைவுகள்.
நோர்வே: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு; கார்த்திகை 1992. 75 us.
பொருள்: விடுதலைப் புலிகள்/ தற்கொலைப்படை/ விடுதலைப் போராளிகள்.
SGN 340
பொன்னம்பலம், மு. விடுதலையும், புதிய எல்லைகளும். புங்குடுதீவு: சுயம் வெளியீடு; மார்கழி 1986 84 பக். பொருள்: அரசியல்/ தமிழ்/ கவிதைகள்.
SHR3131
Christians Aware
"Out of the Depths': Struggle and Hope in Sri Lanka.
Dorset: Greeds the Printers; December 1992 108p.
பொருள்: வரலாறு/ புள்ளி விபரம்/ பெண்கள்/ அரசியல் கவிதைகள்/ யாழ்ப்பாணம்/ நேரடி அறிக்கை/ தடுத்து வைத்தல்/ விடுதலைப் புலிகள்/ அன்னையர் முன்னணி/ கொலை/ மனித உரிமை நடவடிக்கையாளர்கள்/ எழுத்தாளர்கள்/ அகதி முகாம்/ மனித உரிமை மீறல்கள்/ இலங்கை அரசாங்கம்/ தென் பகுதி/ தமிழர் தாயகம்/ இலங்கை.
SHR3195
Sri Lanka: an assessment of the Human Rights situation: report of a fact finding mission visiting Sri Lanka from 9th to 24th January, 1993.
Danida: Ministry of Foreign Affairs; April 1993. 76p.
பொருள்: வரலாறு/ இனப்பிரச்சினை/ இலங்கைத் தமிழர்/ மனித உரிமை மீறல்கள்/ அவசரகாலச் சட்டம்/ சமாதான முயற்சி/ விடுதலைப் புலிகள்/ இலங்கை அரசு/ அரசியல்/ முஸ்லிம்கள்/ நேரடி அறிக்கை/ வெளிநாட்டுக் தூதுக்குழு.
SHR3194
AnassessmentoftheParliamentary SelectCommittee (PSC) its scope and limitations. Sri Lanka:EPRLF;20th March 1993. 28p.
பொருள் தெரிவுக் குழு/ சமாதான முயற்சி/ இலங்கைத் தமிழர்கள்.

Page 12
நீதிமன்றத்தினை அவமதித்த குற்றவாளியாக கெனத் பேக்க
d பிரபுக்கள் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் முன்னாள் செயலாளரான கெனத் பேக்கர் நீதிமன்றத்தின காணப்பட்டுள்ளார். இத் தீர்ப்பானது சட்டத்துறையி: ளிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அர அரசின் மந்திரிமார்கள் சட்டத்தினை மீறமுடியாதவாக தீர்ப்பிற்கும் கட்டுப்பட்டவர்கள். இதனையே இவ்வழக்கி
ஐந்து சட்டப் பிரபுக்களினால் வழங்கப்பட்ட தீர்ப்பு வல்களுக்கெதிராக நீதிமன்றம் ஒன்று தடை உத்தரே கூடவே தேவையெனில் ஒறுத்தலையும் அமுல்படுத்த களினால் ஒத்து எடுக்கப்பட்ட இத் தீர்ப்பானது முன் மீறுவதாய் அமைகின்றது.
இவ்வழக்கில் முடிக்கு எதிராகத் தடை உத்தரவிை தெனவும் அதனால் அவ்வாறான தடை உத்தரவினை பு நத்தினை அவமதித்த குற்றவாளியாகக் காண முடியா வாதாடினர். இவ்வாதத்தினை நீதிமன்றம் ஏற்கவில்லை சட்டத்திற்கு பணிவது அத்தியாவசியமாக இருக்காது லேயே பணிவதாக இருக்கும். இச்செயலானது புத்தத்தின் பாராளுமன்றமே அதி உயர்ந்த ஸ்தாபனம் என்ற அமைந்துவிடும்." இவ்வாறாக ரெம்பிள்மன் பிரபு
இவ்வழக்கானது ஷையர் நாட்டைச் சேர்ந்த ஒரு இங்கிலாந்தில் அரசியற் தஞ்சம் கோரியமை பற்றியதா இவ்விண்ணப்பதாரரின் கோரிக்கை உள்நாட்டு அன சரினால் நிராகரிக்கப்பட்டதன் பின்பு விண்ணப்பதார சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை மீளாய்வுக்க விண்ணப்பத்தினை சமர்ப்பித்தார். இவ்விண்ணப்பம் முத கிராகரிக்கப்பட்டது. எனினும் புதிய விண்ணப்பம் சட் தரணியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்விண்ணப்பத் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த வேளை விண்ணப்பதாரரை உள்நாட்டு அலுவலகம் କଇl; காட்டிற்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட 19ஆம் ஆண்டு வைகாசி 1ஆம் திகதியன்று விண்ணப்பதா முதலில் பரிசுக்குக் கொண்டு செல்லப்பட்டார். பரி, விண்ணப்பதாரி இருந்த வேளையில், வழக்கினை விசாரி ரீதியரசர் காாளண்ட் அவ்விண்ணப்பதாரரைத் திரு இங்கிலாந்திற்குக் கொண்டுவரச் சொல்வியிருந்ததை அறி ருந்தும் விண்ணப்பதாரர், குடிவரவு உத்தியோகத்தர்களின ஷையர் காட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதேநேரத்தில் ரீதியரசர் காாளண்ட் அவ்விண்ண தாரரைக் கட்டாயமாக இங்கிலாந்திற்குக் கொண்டு வேண்டுமென்ற கட்டளையை உள்நாட்டு அலுவல் செயலாளர்மீது பிறப்பித்தார். இக்கட்டளையின் ஷையரில் இறங்கியிருந்த விண்ணப்பதாரரை திருட இங்கிலாந்திற்குக் கொண்டுவர ஏற்பாடுகள் ே கொள்ளப்பட்டன. எனினும் திடீரென உள்நாட்டு تھ آئی۔[
பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், பல்து
ஒரு சுயேட்ை
ଜୀବାଶୀ
TAMIL INFORMATION CENTRE, THAHL HOUSE, 72 சந்தா (12 இதழ்கள்): U..

* Patாடிமி பூசா 2ஃசோழர் Street P: Pardari E73 (JAT) ᎢᏋfᎦ Ꭴ20 84ᏑᎥ
T
படி உள்நாட்டு அலுவலகத்தின் 1ன அவமதித்த குற்றவாளியாகக் ல் மட்டுமல்லாது பொது மக்க சு சட்டத்திற்கு கட்டுப்பட்டது. ள்ே மட்டுமல்ல, நீதிமன்றத்தின் ன் தீர்ப்பு இடித்துரைக்கின்றது.
பின்படி முடியின் (Crown) அலு வான்றினை வழங்க முடியும், முடியும். ஐந்து சட்டப் பிரபுக் னைய நீதிமன்றத் தீர்ப்புகளை
ன நீதிமன்றம் வழங்க முடியா றுேம் மந்திரிமாாகளை நீதிமன் தெனவும் அரச வழக்கறிஞர்கள் . "இதனை ஏற்றால் நிர்வாகம் ; ஒருவித இரக்கத்தின் பேரி முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
கிலையினை மாற்றுவதாக நனது தீர்ப்பில் கூறினார்.
வர் லகச் செயலாளர் கெனத் பேக்கர் ரீதியரசரின் கட்டளை தமி. தம்மைக் கட்டுப்படுத்தாதென அவருக்கு வழங்கப்பட்ட மச் சட்ட ஆலோசனையை அடுத்து, அக்கட்டளையை மீறி ரின் விண்ணப்பதாரரை திருப்பி இங்கிலாந்திற்கு கொண்டுவரும் ான முயற்சிகளை ரத்துச் செய்யும்படி கூறினார்.
டத் இச்செயலே நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக தின் கருதப்பட்டு கெனத் பேக்கருக்கு எதிராக விண்ணப் பில் பதாரரால் வழக்குத் தொடரப்பட்டது. முதலில் உள்நாட்டு யர் அலுவலகமோ அன்றி செயலாளரோ நீதிமன்றத்தினை து. அவமதித்தனர் எனக்கருதத் தமக்கு ஆதிகாரமில்லை என ாரா நீதியரசர் சைமன் பிறவுண் கூறியபோதும் மேன்முறையீட்டு சில் ரீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு எதிராக கெனத் பேக்கர் 'த்த நீதிமன்றத்தினை அவமதித்த குற்றவாளியாகத் தீர்ப்பு ப்பி அளிக்கப்பட்டது. இங்கீதிமன்றத்தில் கெனத் பேக்கர் க்தி தனிப்பட்ட முறையில் குற்றவாளியாகக் காணப்பட்டார். ாள் எனினும் சட்டப் பிரபுக்களினால் எடுக்கப்பட்ட இறுதி முடிவின்படி கெனத் பேக்கர் தனிப்பட்ட ரீதியில் குற்ற வாளியாகக் காணப்படாது, உள்நாட்டு அலுவலகச் ப்ப செயலாளர் என்ற ரீதியிலேயே குற்றவாளியாகக் கானப் வர பட்டுள்ளார். இவ்ரீதியில் அவர் தண்டனை செலுத்தும்படி கீசி கேட்கப்படாது வழக்கின் செலவு தொகையினை மாத்திரமே படி கட்டும்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற ம்பி இராணி வழக்கறிஞர் மைக்கேல் வெலோவ் என்பவரின் மற் கூற்றுப்படி இங்நாற்றாண்டில் சந்தித்த மிக முக்கியமான துவ அரசியல் சட்ட வழக்கு இதுவாகும்.
լիլ քլ:
1ற அறிஞர்கள், சமூகத் தொண்டர்களை உள்ளடக்கிய
சக் குழுவின் படைப்பு.
fl LI ILITATT:
L LLLLLL LLLLLLLLS LLLLLLL L 0K L0LS S LLLSS LLa 0Y LLL00u
E 5. CID lil I ITI TTG JITT: £ 1 (C), III C)