கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீட்சி 1993.08

Page 1
圆。 குடிவரவு மேன்முறையீடு தொடர்பான புதிய சட்டம் 26.7.92இல் அமுலுக்கு வந்தது. தஞ்ச விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலிக்க இப்புதிய சட் டமும் நடைமுறையும் உதவுமென உள்நாட்டு அலுவலகம் எதிர்பார்க்கின்றது.
இப்புதிய கொள்கைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட் டுள்ள முக்கியமான மாற்றம், அரசியல் தஞ்சக் கேள்விக் கொத்தினை (PoliticalAylum puellore-PA) சுயமாகப் பூர்த்தி செய்து அனுப்புவதற்கு இதுவரை காலமும் கொடுக்கப்பட்டிருந்த இரண்டு மாத காலக்கெடுவினை, நாலு வாரங்களாகக் குறைத்துள்ளமையாகும். இது, ஜூலை 28 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங் கப்பட்ட அரசியல் தஞ்சக் கேள்விக்கொத்துகளுக்குப் பொருந்தும். தகுங் காரன மின்றி, வாரங்களுள் G.
JÍlá JÍ alÍM புதிய நடை
விக்கொத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பத் தவறுமிடத்து, புதிய குடிவரவு விதிகளின்படி, விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். படிவம் வழங்கப்பட்ட பின் பதிலளிக்கத் தவறின், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்ற எச்சரிக்கைக் கடிதம் ஒரு தடவை மட்டுமே அனுப்பப்படும் என்றும் உள்நாட்டு அலுவலகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் தகவல் நடுவத்தின் மாதாந்த வெளியிடு
அரசியல் தஞ்ச விண்ணப்பம் ஒன்றினைப் பதிவு செய்த பின்னரே, தஞ்சம் கோரும் ஒருவருக்கு அரசியல் தஞ்சக் கேள்விக்கொத்து வழங்கப்படும் அல்லது அனுப்பப்படும். தஞ்சக் கோரிக்கையின் முக்கியமான அம்சம் கேள்விக் கொத்தினைச் சரிவரப் பூர்த்தி செய்தல் ஆகும். தஞ்சம் கோருவோர். அவரது தஞ்சக் கோரிக்கைக்கான விரிவான விளக்கத்தை அளிப்பதற்கு கேள்விக்கொத்து இடமளிக்கிறது. தமது நாட்டைவிட்டு ஏன் வெளியேற கேர்ந்தது என்பதற் கும், மீண்டும் அவரது காட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு ஏன் அச்சம் கொண்டுள்ளார் என்பதற்குமான ஆகக்கூடிய தகவல்களைக் கேள்விக்கொத்தில் கொடுக்க வேண்டும். கேள்விக்கொத்தினைப் பூர்த்தி செய்வதில் விண்ணப்பதாரர் பிறரிடம் உதவி பெறுவது மிகவும் அவசியம். 1951ஆம் ஆண்டின் ஐ.நா. ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் தஞ்சம் பெற் றிருக்கக்கூடிய பலரின் விண்ணப்பங்கள் ஏற்றவகையில் அமையாததால் நிராகரிக்கப்பட்டதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. தஞ்ச விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதில், தஞ்சம் கோருவோருக்கு ஆலோசனை வழங் கியும், அவர்கள் சார்பில் பிரதிநிதித்துவம் செய்தும் உதவும் சமுக ஸ்தாபனங்கள் மற்றும் அகதி ஸ்தாபனங்கள், சட்டத்தரணிகள் ஆகியோரது உதவியினைத் தஞ்சம் கோருவோர் நாடலாம்.
கேள்விக்கொத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல் களையும் அளிப்பதற்கு காலு வார காலம் போதுமானது என உள்நாட்டு அலுவலகம் கூறுகிறது. எல்லாத் தகவள் களையும் 4 வாரங்களுக்குள் அளிக்கத் தஞ்சம் கோருபவ ருக்கு இயலாதிருக்கக் கூடும். சில தகவல்களையோ, துனை ஆவணங்களையோ வழங்க முடியாதவிடத்து, இருக்கும் தகவல்களைக் கொடுத்து, எஞ்சிய தகவல்களை ஏன் கொடுக்க முடியாதிருக்கிறது என்பதை விளக்குவது மிகவும் முக்கியம், கேள்விக்கொத்தினைப் பூர்த்தி செய்து அனுப்புவதுடன் விண்ணப்பம் முழுமையடைந்து விடுவதில்லை என்று உள் நாட்டு அலுவ வகம் கூறுகிறது. கேள்விக் கொத்தின் அடிப் * படையில் மேலும் D G5T T TGO விளக்கங்கள் தேவைப் படின், குறிப்பாகத் தஞ்ச விண்ணப்பங்கள் கிராகரிக்கப்படக்கூடிய சாத் தியமிருப்பின், கேர்முகப் பரீட் சைக்கு அழைக்கப்படுவர் என்று உள்நாட்டு அலுவலகம் கூறுகிறது. தஞ்ச விண்ணப்பம் தயாரிப்பதென்பது இலகுவான காரியமல்ல. சிறந்த விண்ணப்பம் ஒன்றைத் தயாரிக்க, நிறைந்த அறிவும் விளக்கமும் பெருமுயற்சியும் வேண்டும். கேள்விக்கொத்தினை உரிய காலத்தில் பூர்த்தி செய்து அனுப்புவது அதன் முதற்படி,

Page 2
இலங்கையின்
ஆசிரியர்
நூல்: வெளியீடு: கிடைக்குமிடம்: விலை:
ந்நூல் பேராசிரியர் செல்லத்துரை மனோகரனின் Ph.D. பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வின் வெளிப் பாடாகும்.
குடியேற்ற நாட்டு ஆதிக்கங்களிலிருந்து சுதந்திரமடைந்த உலக நாடுகளுள், அறிவுத்துறையைச் சார்ந்தவர்களின் கவ னத்தையீட்டுவதில் இலங்கை அதிக பங்கைப் பெற்று வரு கிறது. இச்சிறிய நாடு பல தசாப்தங்களாகச் சந்தித்து வரு கிற மாற்றங்கள் சர்வதேச சமுகத்தினரால் வியப்புடன் அவ தானிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆரவாரம் எது வுமின்றி அமைதியாகச் சுதந்திரமடைந்தமை, பின்பு பாரா ளுமன்ற ஜனநாயகப் பாதையைக் கடைப்பிடித்தமை, குடி யேற்ற நாட்டாதிக்கக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முடி யாத பெருங்தோட்டப் பயிர்ச்செய்கையில் இன்றும் தங்கி யுள்ளமை, பிற்காலத்தில் இனரீதியான பேரினவாதத்திற்கு ஆட்பட்டமை, இனவாதத்தினால் ஜனநாயகவழி சீரழிக்கப் பட்டமை போன்ற விடயங்களை, இலங்கை பற்றிய ஈடு பாடுடைய சர்வதேசப் புகழ் பெற்ற சமுக விஞ்ஞானத் துறைசார் அறிஞர்கள் இதுவரை எழுதி வெளியிட்டுள்ளனர். அத்தகைய ஆராய்ச்சித் தொடரில், இந்நூலாசிரியரின் படைப்பானது அண்மைக்காலத்துக்குரிய பல புதிய விட யங்களை உள்ளடக்கியதுடன், இனரீதியான உறவுகள், தனி நாட்டுக் கோரிக்கையின் தோற்றம், தமிழ்ப் போராளிகளின் தோற்றம், ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளது.
தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றத்தினைப் புதிய அணு குமுறையில் நோக்கியதினாலேயே, மனோகரனின் இந்நூல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இத்தேசியவாதம் தோற்றம் பெறுவதற்குப் பின்புலமான தமிழ் மக்களின் பொருளாதார அமைப்பும், சமுகப் பின்னணிகளும் இந்நூலில் திறம்பட அலசி ஆராயப்பட்டுள்ளன. இவைகளைக் கண்டறியத் தனக்கு இருக்கும் விசேட திறமையான மானிடப் புவியிய லைப் பயன்படுத்திய மனோகரன், பல நூற்றாண்டுகளாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக் களின் பொருளாதாரப் புவியியல், நிலப்ப யன்பாடு, வாழ்க்கை முறை, தொழில் போன்ற அம்சங்களை ஆழ்ந்து நோக்கி, அவற்றின் பிரதான அம்சங்களை நூலில் வெளிப் படுத்தியமை இவரது சிறந்த பங்களிப்பாகும். மேற் கூறப் பட்ட அமைப்புக்கள் இலங்கை சுதந்திரமடைய முன்பு எவ் வாறு காணப்பட்டன, சுதந்திரத்தின் பின், குறிப்பாக 1950 களில் ஏற்பட்ட திடீர்ச் சனத்தொகை அதிகரிப்பின் பின்பு எவ்வாறு மாற்றமடைந்தன, அதன் விளைவாக அரசியல், பொருளாதார நிலைமைகள் மாற்றமடைந்தமை, அதன் பெறுபேறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக் களின் அமைதி வாழ்வு சீர்குலைந்தமை போன்ற விடயங் கள் தர்க்கரீதியாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.
குடியேற்றத் திட்டங்கள் பற்றி மனோகரனால் பல புதிய உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. குடியேற்றத் திட்டங்களினால் தமிழ் மக்களின் சனத்தொகையில் ஏற் பட்ட விகிதாசார மாற்றங்களும், பாதிப்புகளும், சிங்கள மக்கள் சார்பாகத் தீட்டப்பட்ட திட்டங்களும், அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் பாதிப்புக்களும் பற்றித் திறம்படச் சுட்டிக் காட் டியுள்ளார். குடியேற்றத் திட்டங்கள் எந்த நாட்டில் இடம் பெற்றாலும், அங்காடு பொருளாதார மேம்பாட்டை
2
 
 
 

இன முரண்பாடும் அதற்கான தீர்வும்
C. Manoharan
ETHNIC CONFLICT AND RECONCILATION IN SRIANKA University of Hawaii Press, Honolulu, U.S.A., 1987 Dillons, 82, Gower Street, London WC1
f 24.00
அடைவது உண்மையே. ஆனால் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஒரு பிரதேசத்தில் இன்னொரு இனத்தவரான சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டமை, ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த இனவெறி நெருப்புக்கு எண்ணை ஊற்றி வளர்த்து, நீண்டகால அமைதியின்மையை இப்பிரதேசங்களில் தோற்றுவித்து விட்டது என வாதிட் டுள்ளார். தனது புவியியல் அறிவினைக்கொண்டு இலங்கை அரசின் குடியேற்றத் திட்டங்கள் இனப் பாரபட்ச கோக் கிலேயே உருவாக்கப்பட்டன எனத் திறமையாக கிரு பித்துள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்த பின் ஆட்சிக்கு வந்த அர சாங்கங்கள் எவ்வாறு தமிழ் மக்களைப் பாரபட்சமாக ஒதுக்கி வந்தன என்கிற விடயங்களை, அரசாங்கப் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி கிருபித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இதற்காக பின்வரும் விடயங்கள், சிங்கள-தமிழ்ப் பிரதேசங்களின் ஒப்பீட்டு அடிப்படையில் காட்டப்பட்டுள்ளன. அவையாவன: அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை களான கைத்தொழில் அபிவிருத்தி, நீர்ப்பாசனத் திட்டங் கள், விவசாயத் திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் போன்ற வைகளாகும். தொடர்ச்சியான அரசின் பாரபட்சமான கொள்கைகளினால், 1980 அளவில் ஏற்கனவே மெதுவாக அதிகரித்துவந்த தமிழ் இளைஞர் வேலையின்மை உச்சகட் டத்தை அடைந்தது. இதன் விளைவுகளே பிற்காலத்தில் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய கிர்ப்பந்தத்திற்குத் தள்ளியது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையிலான ஒரு பொறுப்பாட்சியே, தமிழர்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வினைக் கொண்டுவரும் என்ற கருத்தினை மனோகரன் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆனால் கடந்த காற்பது ஆண் டுகளாக, தன் மத்தியில் அதிகாரத்தைக் குவித்து வைத் திருக்கும் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களக் கல்விமான்கள் குழாமும் (Elites) , சிங்களப் பொதுசன அபிப்பிராயமும் இவ்வாறான அதிகாரப் பகிர்வை ஒத்துக் கொள்ளப் போவதில்லை எனக் கூறி, 1980இல் மிகுந்த சிரமத்தின் மத் -சிலே குறைந்தளவு அதிகாரங்களைக்கொண்ட மாகாண அபிவிருத்திச் சபையைக் கொண்டுவர முடிந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1986, 87களில் இடம்பெற்ற தீவிரமான சம்பவங்களைப் பற்றிய விபரங்களைத் தனது ஆரம்ப உரையில் தொகுத் தளித்தமை மூலம் புதிய பல தகவல்கள் எழுத்து வடிவில் பதிவுபெற உதவியுள்ளார். உணவுப் பொட்டலங்ளை இக் திய விமான முலம், போடும் சம்பவத்தோடு இந்நூல் நிறை வு பெறுகிறது. அச்சம்பவத்தின் விளைவாக எமது போராட் டம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றமையையும் சுட்டிக்காட்டத்
நூலின் உட்பொருளை இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் புள்ளிவிபரப் பட்டியல்கள், விளக்க வரைபடங்கள், நிலப்படங்கள் பல தரப்பட்டுள்ளமை மெச்சப்படவேண்டிய விடயங்களாகும். இந்நூலில் இலங்கை இனப்பிரச்சினை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகப்பட்டுள்ளது. கம்ப காரமான தகவல்களையும், புதிய நோக்கினையும் இந்நூல் கொண்டிருப்பதனால், இதுவரை இலங்கையைப் பற்றி வெளிவந்த நூல்களில் இது தனக்கென்று ஒரு தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளது என்பதில் எதுவித ஐயமுமில்லை.
Ibang): Journal of South Asia
மீட்சி - ஒகஸ்ற் 1993

Page 3
ரசியல் நெருக்கடிகளும்
"ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் 6T வேட்டையும், தாயகத்தையும் வரிட்டு ஒ
தள்ளப்படுகிறானோ, அந்நாள் முதல் அவ
நா சந்திக்கும் ஆபிரிக்க இன மக்கள் யாவரும்
ஒரே இனத்தவர்கள் என்ற எண்ணம் ஒர் தவறான கருத் தாகும். அவர்களுள்ளும் வெவ்வேறு காட்டைச் சேர்ந்தவர்களும், பல்வேறு வகைப்பட்ட மொழி, கலாச்சாரங்களையும், சமயப் பின்னணிகளையும் உடையவர்கள் இருக்கிறார்கள். இங்காட்டில் நாம் சந்தித்த ஆபிரிக்கர்களில் பலர் அடிப்படைச் செல்வமும், வளமும் மிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களாகும்.இவர்களில் சிலர் அரசியல் காரணங்களினால் ஏற்பட்ட அரசியல் உயிராபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இங்கு வந்தவர்களாகும். அத்தகையவர்களில் ஒரு பிரிவினரே ஷையரைச் (ZARE) சேர்ந்த ஆபிரிக் கர்களாகும்.
மத்திய ஆபிரிக்க நாடான ஷையரில் 38 மில்லியன் மக்கள் காணப்படுகின்றனர். சுமார் 400 மொழிப் பிரிவுகள் காணப்படினும் பிரதான மொழிகளாக 4 மொழிகளும், அரசகரும மொழியாக பிரெஞ்சு மொழியும் இடம்பெற்றுள்ளது. ஷையர் மக்களில் பெரும்பாலோர் கத்தோலிக்க சமயத்திலும், ஒரு சிலர் புரட்டஸ்தாந்து மதத்திலும் ஏனையோர் மரபுவழி ஆபிரிக்க மத கம்பிக்கைகளையும் உடையவர்களாக உள்ளனர்.
இந்நாட்டை ஆரம்பத்தில் பெல்ஜியம் கொங்கோ என அழைத்தனர். 1885 முதல் 1908 வரை இது பெல்ஜிய அரசனின் குடும்பச் சொத்துக்களில் ஒன்றாகவிருந்தது. பின்பு பெல்ஜியம் குடியேற்ற நாடுகளை அமைக்கத் தொடங்கியதும் இதுவும் பெல்ஜியத்தின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாகியது.
இங்காடு விலையுயர்ந்த கணிப்பொருட்களையும், மிகுந்த மண்வளத்தினையும், நல்ல மழை வீழ்ச்சியுடைய கதிகளையும் கொண்ட ஒரு முலவள நாடாகும். இங்கு செம்பு, கோபோல்ற் (உலக ரீதியான மொத்த வளத்தில் 65 வீதம் இங்குள்ளது.) மங்கனிஸ், தங்கம், கைத்தொழில் பாவனைக்குரிய பெறுமதிமிக்க வைரம் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பெற்றோவியத்தில் தன்னிறைவு கண்டுள்ளதுடன், ஏற்றுமதி வருவாயில் 20 வீதத்தினை இதன் முலம் ஈட்டி வருகிறது.
இவ்வளவு வளங்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததனால் மேற்கு காடுகளின் தலையீடு இக்காட்டில் தொடர்ந்து இருந்து வந்தது. 1959 வரை சுதந்திரம் அடைவதற்கான போராட்டங்கள் நகரப்புறங்களில் உக்கிரமாக நடைபெற்றன. அப்போராளிகளுக்கு மேற்கு நாடுகள் மறைமுகமாக ஆதரவை நல்கி வந்தன. போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்து 1960இல் ஷையர் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே போராளிகளுக்கு உதவியென்ற போர்வையில் பல மேற்கு நாடுகளும் காட்டின் அரசியலில் ஊடுருவி இருங் தமையால் சுதந்திரம் கிடைத்ததும் ஸ்திரமற்ற ஆட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டது. அடிக்கடி தொடரும் இராணுவச் சதியினால் ஆட்சி கவிழ்ப்புக்களும், சர்வாதிகாரப் போக்குடைய பிரதேச ரீதியான அரசுகளும் தோன்றிக் கலக நிலை உருவாகியது. இராணுவ அதிகாரப் போட்டியின் ஒரு கட்டத்தில் தேசியவாதியும், மேற்கு நாடு களின் பொருளாதார நலன்களுக்கு ஒத்துப் போகாத வருமான லு மும் பா கைது செய்யப்பட்டு1961இல் கொலை செய்யப்பட்டார்.
மீட்சி - ஒகஸ்ற் 1993
 
 
 

ன்றுமே திட்டமிட்டிருக்காத நிலையில் தன் L (6) 6Tg LL 5ieri (pgQ di 35 66p னுக்குப் பெயர் அகதி". - J. Clifford
NIGERIA
CemTRA AFRICAN
REPUBLC SUDAJI
CAMEROON
b
oüaToRÁ
GUIPACA || L.
sÁဝီ၊Ot
botance
8fasetawikie
2tik Mkwaw
1962 இல் கிளர்ச்சி மோசமான நிலையையடைய ஆட்சியில் இருந்தவர்களின் கோரிக்கையின் பெயரில் ஐ.நா. சமாதானப் படை வந்து கலகத்தை அடக்கியது. இருப்பினும் அங்கிய நாடுகளின் தலையீடுகளினால் 1964 வரை பல அரசியல் குழப்பங்கள் இடம் பெற்று கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. 1965 இல் மொபுட்டு இராணுவச் சதி முலம் ஆட்சியைக் கைப்பற்றி இதனை “இரண்டாவது குடியரசு" என அழைத்து 1967 இல் ஒரு அரசியல் யாப்பினையும் உருவாக்கினார். 1970 இல் மொபுட்டு ஜனாதிபதியாக தேர்ந் தெடுக்கப்பட்டு 7 வருட காலத்திற்குப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 1971 இல் ஷையர் குடியரசு என புதிய பெயரை இங்காட்டிற்குச் சூட்டிக் கொண்டார். 1972 இல் புரட்சிகர மக்கள் முன்னணி (MPR) என்ற அமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்து, அயல்நாடான அங்கோல விடுதலை இயக்கங்களானFNLA, MPLA போன்றவற்றிற்கு ஆதரவுகளை வழங்கி தனது செல்வாக்கைப் பலப் படுத் தினார். 1978 இல் கொங்கோலிய தேசிய விடுதலை முன்னணி (FNLC) கெரில்லாக்கள் அங்கோலப் பிர தேசத்திலிருந்து இரு தடவைகள் கடத்திய படை எடுப்பை இவரது இராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
606)gulf
மக்களின் அனுபவங்கள்
இங்ங்கழிச்சிகளைத் தொடர்ந்து அங்கோலாவுடன் கல்லுறவு ஒப்பந்தத்தை வளர்த்துக் கொண்ட மொபுட்டு இரு காடுகளும் கெரில்லாக்களுக்கு இடமளிப்பது இல்லை என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். மேலும் உள் காட்டளவில் பல சீர்திருத்தங்களையும் கொண்டுவந்து

Page 4
அரசியல் கிளர்ச்சிகள் வரவிடாது தடுக்கும் உபாயங் களைக் கையாண்டார். 1977 இல் மீண்டும் 7 வருட காலத்திற்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து பல வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருக்கையில் இவர்களது ஆதரவாளர்களும், இவரும் பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு வளரத் தொடங்கி முற்போக்கு சமுக ஜனநாயக முன்னணி (UDPS) எனும் அமைப்பும் வலுவடைய ஆரம்பித்தது. இவ்வமைப்புடன் கொங்கோலிய ஜனநாயக முன்னணியும் (FCD) இணைந்து கொண்டது. நாட்டில் எதிர்ப்புக்கள் வலுவடைய கொடிய அடக்குமுறைச் சட்டங்கள் முலம் இவை அடக்கப்பட்டன.
இவ்வடக்குமுறையால் கல்விமான்கள், மாணவர்கள், நகரப்புறத்து மக்கள் பெருந்துன்பம் அனுபவித்தனர். இதனால் ஆபிரிக்க நாடுகளும், பெல்ஜியம் உட்பட மேலை நாடுகளும் ஷையரைக் கண்டிக்க ஆரம்பித்தன. சர்வதேச மன்னிப்புச்சபையின் கடும் கண்டனத்துக்கும் ஷையர் இலக்காகியது.
இராணுவக் கொடுரத்திலிருந்து அகதிகளாகத் தப்பியோடியவர்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள், சித்திரவதைகள், கொலை செய்யப்படும் விதங்கள் பற்றிக்கூறி அதற்கு மேற்கு நாடுகள் ஆதரவு வழங்கி வருவது பற்றியும் எடுத்துக் கூறினர். இதனால் மேற்கு நாடுகள் ஷையர் மீது பொருளாதார நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 1990 இன் பின்பு பல கட்சி முறை ஆட்சி ஏற்படும் வகையான சீர்திருத்தங்கள் பல கொண்டு வரப்பட்டன.
இத்தகைய இடர்களில் தப்பியோடுபவர்கள் தங்கள் குடியேற்ற நாடான பெல்ஜியத்திற்குப் போனால் மொழிப் பிரச்சினையிருக்காது. அல்லது அயல் காடுகளான ரவுண்டா, புருண்டிக்குப் போனாலும் சிக்கல்கள் அதிகம் இருக்காது. ஆனால் இங்கு செல்ல இம்மக்கள் விரும்பாததற்கு ஒரு முக்கிய காரணம் ஷையர் ஜனா திபதியின் வெளிநாட்டு உளவுப் பிரிவினரான SE இங்காடுகளில் ஊடுருவியுள்ளதனால், இவர்களின் தலையீடு காரணமாக இவர்கள் ஷையர் திருப்பி அனுப்பப்பட்டு உயிர் பறிபோகும் ஆபத்து உண்டு என்பதாலாகும்.
கடந்த 1980 - 1992 வரை காலப்பகுதியில் மட்டும் 10,137 ஷையர் அகதிகள் பிரிட்டனில் தஞ்சம் கோரியுள் ளனர். பிரிட்டனில் அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சினையானாலும் SE உளவுப்பிரிவினரின் கெடுபிடிகளி லிருந்து தப்பும் கோக்குடன் ஷையரிலிருந்து உகண்டா வந்தடைந்து அங்கிருந்து அடிக்கடி விமானங்கள் பிரிட்டனை வந்தடைவதனால் LU 6) ஷையரிகள் பிரிட்டனை நாடுகின்றனர். இவர்களில் பலர் பிரித்தானிய குடிவரவு அதி காரிகளினால் கடும் விசாரணைக்கு உட்படுத்தித் தடுப்பு முகாம்களில் பல மாதங்களாக தடுத்து வைக்கப் படுவதும் உண்டு.
இத்தகைய செல்வ வளமுள்ள ஷையரில் இருந்து அமைதி வாழ்க்கை வாழமுடியாது அகதிகள் என்ற பட்டத் துடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையிலுள்ள ஷையர் மக்களைப் பற்றி பிரித்தானிய டெலிவிஷன்களும், பத்திரிகைகளும் உண்மை நிலையைத் தெரிவிக்கின்றனவா? இல்லை. மாறாக, பொருளாதார அகதி என் றும், இக்காட்டில் வளமாக வாழ வந்தவர்கள் என்றுமே கருத்தைத் தெரிவிக்கின்றன. இத்தகைய போக்கு நீங்க மாற்று வழியுண்டா? ஆம், நாம் ஒவ்வொருவரும் பிறநாட்டு அகதிகளின் பிரச்சினையைக் கேட்டு அறிந்து, அவர்களது பிரச்சினைகளுக்கு அனுதாபங்காட்டி சகல அகதிகளும் ஒரு சகோதரத்துவத்தை வளர்ப்போமாயின் நிச்சயம் எமது உரிமைப் போராட்டத்தில் வெற்றி காண்போம் என்பதில் ஐயமில்லை.
4

நூல்: புத்தளம் வரலாறும் மரபுகளும் (ஆய்வு), ஆசிரியர்: ஏ.என்.எம்.ஷாஜஹான், கிடைக்குமிடம்: 20/4A, காஸிம் ஒழுங்கை, புத்தளம், இலங்கை. விலை: குறிப் பிடப்படவில்லை.
நூல்: நாட்டார் இசை இயல்பும் பயன்பாடும் (ஆய்வு), ஆசிரியர்: கலாநிதி இ.பாலசுந்தரம், வெளியீடு: நாட்டார் வழக்கியல் கழகம், யாழ்ப்பாணம். விலை: ருபாய் 90.00
நூல்: நாடக அரங்கியல் - பழையதும் புதியதும் (கட்டுரைகள்), ஆசிரியர்: கலாநிதி சி. மெளனகுரு, வெளியீடு: விபுலம் வெளியீடு, மட்டக்களப்பு, இலங்கை. விலை: ரூபாய் 60.00
நூல்: மொழிபெயர்ப்பியல் - கோட்பாடுகளும் உத்திகளும் (ஆய்வு), ஆசிரியர்: டாக்டர் சேதுமணி மணியன், வெளியீடு: செண்பகம் வெளியீடு, பிளாட் எண் 4, முவேந்தர் நகர், விசுவநாதபுரம், மதுரை - 14, தமிழ்நாடு. விலை: இந்திய ருபாய்: 23.00
நூல் : இன்றைய உலகல் இலக்கரியம் (கட்டுரைகள்), ஆசிரியர் இ.முருகையன், வெளியீடு: சென்னை புக்ஸ், 6, தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை 600002 விலை: இந்திய ரூபாய்: 14.00
நூல்: மக்கத்துச்சால்வை (சிறுகதைகள்), ஆசிரியர்: எஸ்.எல்.எம்.ஹனிபா, தொடர்பு: 'ஷனூபா மன்ஸில்', முன்றாம் வட்டாரம், ஒட்டமாவடி, கிழக்கு மாகாணம், இலங்கை. விலை: ரூபாய்: 40.00
நூல்: கதைக் கனிகள் (பரிசு பெற்ற மலையகச் சிறுகதைகள்), தொகுப்பு: எஸ்.எம்.கார்மேகம், வெளியீடு: குறிஞ்சி வெளியீடு, 129/25, ஜெம்பட்டா வீதி, கொச்சிக்கடை, கொழும்பு - 13, இலங்கை, விலை: இந்திய ருபாய்: 20.00
நூல்: தகவம்-பரிசுக் கதைகள்- தொகுதி - 1 (1975 - 1979 ஆண்டுப் பகுதியில் வெளிவந்து பரிசுபெற்ற சிறு கதைகள்) வெளியீடு: தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம். கிடைக்குமிடம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, Trust Complex, 340, செட்டியார் தெரு, கொழும்பு - 13, இலங்கை, விலை: ருபாய்: 30.00
நூல்: நொறுங்கல் (சிறுகதைகள்), ஆசிரியர்: பூமணி, வெளியீடு: க்ரியா, 268, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை 60004, தமிழ்நாடு, விலை: இந்திய ருபாய்: 22,00,
மீட்சி - ஒகஸ்ற் 1993

Page 5
பிரித்தானியக் குடி வரவுக் கட்டுப்ப (3.Jf5 TT UT LI LI (6N) ULITT 6OT (32g 17
arter~ வாழ்வு, அரசியல் ஸ்திரத்தன்மை அல்லது கூடிய பாதுகாப்புத் தேடி, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்வது ஒருவரது உரிமையாகாது. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நாடுவிட்டு நாடு குடிபெயரும் உரிமை என்று ஒன்று இல்லை. அதுபோலவே, சர்வதேச ஏற்பாடுகள் எதிலும், நிலையான காட்டுரிமை - அதாவது, குறித்தவொரு நாட்டுரிமையையே என்றென்றும் ஒருவர் கொண்டிருக்க வேண்டும் - என்றும் இல்லை.
குடிவரவுக் கட்டுப்பாடுகள் எதுவுமே வேண்டியதில்லை என, ஒரு சிலரே வாதிடக்கூடும். எனினும், ஏன், எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மனித உரிமைகள் பணி யாளர்கள், வழக்கறிஞர்கள், சமுக அமைப்புகள் சார்ந்தோர், மற்றும் மனித உரிமைகளில் ஈடுபாடுடையோர் ஆகியோர் அக்கறை கொண்டுள்ளனர்.
தமிழர்களைப் பொறுத்தளவில், குடிவரவுக் கட்டுப்பாடுகள் நடைமுறை முக்கியத்துவம் உடையவை. எனவே, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மதிக்கப்படுவதுமான மனித உரிமைகளை மீறும் வகையிலும், மக்களிடையே பாகுபாடு களைக் காணும் வகையிலும் செயற்படும் அரசுகளைப் பொறுப்புடன் செயலாற்ற வேண்டி, ஸ்தாபனங்களும், சமுகங்களும் மேற்கொள்ளும் நியாயமானதும் சட்டரீதி யானதுமான நடவடிக்கைகளில் காம் விடாப்பிடியாகத் துணை நிற்றல் வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்ப ரிப்பது உண்மையெனில், விசனத்துக்குரிய நிகழ்வுகளின் போதும், மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றிருப்பதாக நம்பத்தக்க குற்றச்சாட்டுக்கள் எழும்போதும், தமது உள் நாட்டுக் கொள்கைகளைச் சுதந்திரமான பரிசீலனைக்கு உட்படுத்தத் தயாராக இருத்தல் அவசியம் என்பதனை அர சாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜோய் கார்ட்னரின் மரணம் எங்கள் எல்லோருக்கும் ஒரு படிப்பினை என்பதால், தமிழ் மக்களின் கவனத்திற்குரிய விஷயமே.
பிரித்தானியக் குடிவரவு மற்றும் JTEGT60) Ipdf JFL Lib:
தழ்நிலைப் பொருத்தம்
கறுப்பினப் பிரித்தானியப் பிரஜைகளின் பிரித்தானிய வருகையையும், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியையும் எதிர்கொள்ளும் முகமாகவே, இரண்டாவது உலகப் போரின் பின்னான குடிவரவு, நாட்டுரிமைச் சட்டவாக்கம் உருவானது. 1948இன் முன்னர் ஐக்கிய ராச்சிய மக்களுக்கெனத் தனியான நாட்டுரிமை இருக்கவில்லை. 1940களிலும் 1950களிலும் கொன்சவேட்டிவ் கட்சி, தொழிற் கட்சி அர சாங்கங்கள் இரண்டுமே குடிவரவினை விரும்பின. பொரு ளாதாரம் செழிப்படைந்தமையால், தொழிலாளர் தேவைப் பட்டனர். தொழிலாளர்களைத் திரட்டுமுகமாக, வேலை வழங்குவோரும், அரசாங்கங்களும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் விசேட குழுக்களை அனுப்பினர். எவ்வாறா யினும், அதற்கு முன்னரும் குடிவரவுக் கட்டுப்பாடுகள் இருக்கவே செய்தன. 1919ஆம் ஆண்டின் வெளியார் சட் டம் (AlenSAct) யூத அகதிகளின் வருகையைத் தடுக்கவென
மீட்சி - ஒகஸ்ற் 1993

Tடுகளுக்குக்
LI J5 TT fifi 6OT fif
உருவானது. நாசிகளின் அட்டூழியங்களிலிருந்து தப்பி, பிரித்தானியா வருவோரைத் தடுப்பதே அதன் நோக்கமாகும்.
காலப் போக்கில் இங்கு வரும் கறுப்பினப் பிரித்தானியக் குடிமக்களின் வருகை காட்டிற்கு ஒரு சுமையாகக் கருதப் படவே, குடிவரவைக் கட்டுப்படுத்துவதற்கான கிர்ப்பந்தம் எழுந்தது. அதுவே இன்றைய கட்டுப்பாடு வடிவத்திற்கு வழி கோலியது. இந்த நிர்ப்பந்தம், குடிவருவோரின் எண் ணிக்கையின் அடிப்படையில் அல்லாது, நிறத்தின் காரணமே என்பது தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருந்தது. கரிபியன் தீவுகள் போன்றவற்றிலிருந்து வரும் ‘விரும்பத்தகாக குடிவருவோரை புறந்தள்ளக்கூடியதானதும், கடின உழைப்புக்கென ஆண்டுதோறும் இங்கு வரும் 60,000 ஐரிஷ் மக்களையும் 'தெளிவான திட்டம் எதுவுமின்றி அதிர்ஷ்டத்தினை மட்டும் கம்பி, பழைய பொதுநலவமைப்பு காடுகளிலிருந்து வரும் மக்களையும் பாதிக்காத வகையிலுமான குடிவரவு “வாய்ப்பாடு" (tomula) ஒன்றினைக் காண, 1953இலும் 1954இலும் அமைச்சரவைக் குழுக்கள் முயன்றன.
கறுப்பின மக்களின் வருகையைத் தடுக்கும் அதேவேளை, 'அவ்வாறு தடை செய்வதினை உணராவண்ணமும்', ஐக்கிய ராச்சிய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசப் பிரகடனங்களின் இயல்புக்கு முரணானது என்ற கண்டனம் எழா வண்ணமும் சட்டவாக்கத்தைக் காண்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது.
மனத்தால் உணரப்பட்ட (கறுப்பினப்) பிரச்சினையை இலக்காகக்கொண்ட குடிவரவு, நாட்டுரிமைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட ஒரு வகைமாதிரி (pattern) தோன்றியது. பிரித்தானியாவினுள் யாரை அனுமதிப்பது என்பது குறித்த தெளிவான கொள்கை நோக்கங்களிலிருந்து செயற்படுவதற்கு பதிலாக, அநேக சந்தர்ப்பங்களில் அவசரமாகவும் எப்போதுமே எதிர்கடவடிக்கையாகவும், மக்களைத் தடுக்கவே அச்சடடங்கள் நிறைவேற்றப்பட்டன.
1962ஆம் ஆண்டின் 'ரோறி” (Tory) அரசாங்கத்தின் குடிவரவுச் சட்டம் குறிப்பாக வெள்ளையரல்லாதோரை இலக்காகக் கொண்டதே. அப்போதைய தொழிற்கட்சித் தலைவரான Hugh Gatskel "கொள்கையளவில் எதிர்த்த தோடு, தொழிற்கட்சி அரசு அமைந்தால் ‘விரும்பியபடி நாட்டினுள் வர நிபந்தனையற்ற உரிமையை மீட்டுத் தரும் என்றும் வாக்குறுதி அளித்தார். எனினும், 1964இல் தொழிற் கட்சி அரசாங்கம் அவ்வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. மாறாக, இனவாதத்திற்கு, குறிப்பாக 1964இல் பேர்மிங்காமிற்கு அருகில் ஸ்மெத்விக்கில் (Smethwick) நடைபெற்ற உபதேர்தல் சமயத்தில் வெடித்த இனவாதத்திற்குச்
சரணடைந்தனர்.
“கறுப்பினத்தவர் ஒருவர் உங்கள் அயலவராக வரு வதை விரும்பினால் தொழிற் கட்சிக்கு வாக்களியுங்கள்" PN எ ன் ற சுலோக

Page 6
த்தினை “ரோறி” ஆதரவாளர்கள் பற்றிக் கொண்டார்கள். "குடிவரவு தொடர்பான அரசாங்கத்தின் பார்வை குறித்து ஐயப்படத் தேவையில்லை. பயன்மிக்க கட்டுப்பாடு இன்றிய மையாததே" என, புதிய தொழிற் கட்சி அரசாங்கம் வாக் குறுதி அளித்தது.
1968இல் மற்றுமொரு இனவாதப் பயமுறுத்தல் ஏற்பட்டது. இம்முறை கென்யாவைச் சார்ந்த ஆசிரியர்கள் பிரித்தானிய வருகை மீதானது. பதட்டமுற்ற தொழிற் கட்சி அரசாங்கம், அவர்கள் வருகையைக் கட்டுப்படுத்த, புதிய குடி வரவுச் சட்டம் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் ஒரே நாளில் நிறை வேற்றியது.
இப்போது, பிரித்தானியாவுடன் நெருங்கிய உறவு கொண்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேறு வார்த் தைகளில் கூறுவதானால், தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த வெள்ளையர் ஒருவர் அவரது பெற்றோரின் பெற்றோர் ஒருவரேனும் பிரித்தானியாவில் பிறந்திருப்பின், ஐக்கிய ராச்சியத்திற்கு வங்து வசிக்கலாம். ஆனால், இந்தியா போன்று பொதுநலவமைப்பு நாடுகளிலிருந்தோ அல்லது கரிபிய நாடுகளிலிருந்தோ பிரித்தானியக் கடவுச் சீட்டு உடைய கறுப்பின மக்கள் அவ்வாறு செய்ய முடியாது.
அத்தகைய சலுகைகள் இனவாதம் வளர்வதைத் தடுக்கும் என, தொழிற் கட்சி அரசியல்வாதிகள் வாதிட்டதற்கு மாறாக, இனவாதத்தை ஊக்குவிக்கவே உதவின. சில வாரங்களுள் பாராளுமன்ற உறுப்பினரான ஈனொக் பவல் (Enoch Powel) கறுப்பின மக்களின் குடிவரவைக் கண்டனம் செய்து அவரது புகழ்பெற்ற "இரத்த ஆறுகள்” (Rivers of Blood) உரையை நிகழ்த்தினார். நாடெங்கிலும் உள்ள இனவாதிகளுக்கு, ஒழுங்கமைத்துச் செயற்படும் தன்னம் பிக்கையை ஏற்படுத்தியது. ஈனொக் பவல் பிரபலமடைந் ததோடு, உண்மையான அரசியல் மேதையாகவும் கருதப் ul-ITIf.
அதே முன்மாதிரி திரும்பவும் நிகழ்த்தப்பட்டது. 1971ஆம் ஆண்டின் "ரோறி அரசாங்கத்தின் குடிவரவுச் சட்டம், பிரித்தானியாவில் ஏற்கனவே அவர்களது குடும்பங்கள் இருந்தால் அல்லாது, கறுப்பின மக்களதும் ஆசியரதும் சட்டபூர்வமான குடிவரவை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1974இல் தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும் மேற்படி சட்டத்தினைப் பேணியது; மேலும் கட்டுப்பாட்டினைப் பிரேரித்தன. திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருங்காலக் கண வன்மார்களுடன் சேர்ந்துகொள்ள என இங்கு வரும் இந் தியப் பெண்களின் கண்ணிமை குறித்த இழிவுமிக்க பரிசோ தனையையும் அறிமுகப்படுத்தியது.
1978இல் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றின்போது, அப் போதைய உள்நாட்டுச் செயலாளர் கூறிய பதில் ஒன்று சுவையானது. "உண்மையில், கறுத்த இனத்தவரது வரு கையைத் தவிர்க்கும் ஒரு உபாயமாகவே குடிவரவுக் கட்டுப் பாட்டினைக் கருதுகிறீர்கள் அல்லவா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆம், அதுவேதான்” என்றார். குடிவரவுக் கட் டுப்பாடு என்பது இயல்பில் இனவாதம் உடையது என்றும் இதன்முலம் உறுதியாகிறது. பிரித்தானியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு காட்டிற்கோ மக்கள் தொழில்கள் தேடியே வருகிறார்கள் என்றே அடுத்தடுத்து வரும் அர சாங்கங்கள் எண்ணுகின்றன.
1955இல் 'ரோறி" அமைச்சரவையின் அறிவிப்பு ஒன்றினைக் கவனிப்பதும் பயன் உள்ளதே. பிரித்தானியாவில் நிலவும் முழுமையான வேலை வாய்ப்புச் சூழல் குடிவருவோரை ஈர்க்கிறது; அதனால் 'பெருந்திரளாக மக்கள் குடிவருகிறார்கள் எனக் கூறினர். ஆனால் 'ரோறி’க் கட்சியினர் வாதிட்டதுபோல 'பெருந்திரளாக' மக்கள் வரவில்லை. மாறாக, 1901 - 1961 காலகட்டத்தில், பொதுகலவமைப்பு காட்டினர் எவரும் பிரித்தானியாவிற்கு வந்து வாழும் இயல்பான உரிமை

உடையவராகவிருந்தும், பிரித்தானியாவை வந்தடைந்தவரிலும் பார்க்க, இங்கிருந்து வெளியேறியோரின் தொகை இருபது லட்சம் கூடுதலாக இருந்ததென, பதிவுக் குறிப்புகள் காட்டு கின்றன. குடிவரவுக் கட்டுப்பாடுகள் என வந்தவுடன், “சட்ட விரோதமாய் குடிவருவோர், 'காலங்கடந்து தங்குவேர்ர்", 'குற்றவாளிகள்' மற்றும் மிருகத்தனமான இனவாத நடை முறைகளைச் செயற்படுத்தல், நாடுகடத்தல் என்பன தொடரவே செய்யும். அவை குடும்பங்களை அழிக்கும்; மக் களைப் பயங்கரமான நிலைமைகளைத் தாங்கிக்கொள்ள கிர்ப்பந்திக்கும்; சிலரைத் தற்கொலை செய்யத் தூண்டும். இப்போது ஜோய் கார்ட்னரின் மரணத்துடன், முன் எப் போதும் கண்டிராத வகையில் அபாயகரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் புதிய திருப்பத்தினைக் குடிவரவுக் கட் டுப்பாடுகள் எடுத்துள்ளமையை மக்கள் பார்க்கத் தொடங் கியுள்ளனர். அரசாங்கங்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்குமா எனில், இல்லை என்பதே பதில், ஏனெனில், (அ) மனித உரிமைக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காது, கறுப்பின மக்களின் குடிவரவைக் கட்டுப்படுத்தும் உத்வேகமே, பிரித்தானியக் குடிவரவுக் கட்டுப்பாட்டு அமைப்புமுறை வளர்ச்சியின் அடிப்படைக் கோட்பாடாகத் தொடர்ந்து இருப்பதும், (ஆ) குடிவரவுக் கட்டுப்பாட்டில் நேர்மைக்கும் நீதிக்கும் இடமளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதனை, மனித உரிமைப் பிரச்சினையாகக் கரு தாது, ஒரு பிரிவினருக்குரிய அல்லது இன உறவுப் பிரச் சினையாகக் காண்பதுமே, ஆகும்.
Gg Tulil J5 İTİL6OTIT?6ör DT600Th
40 வயதான திருமதி ஜோய் கார்ட்னர் (Joy Gardiner), மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜமேக்காவைச் சேர்ந்தவர். ஆறு மாத காலத் தங்கும் உரிமையுடன் விருந்தினராக 1987 இல் ஐக்கிய ராச்சியத்திற்கு வந்தார். விசாக்காலம் முடிவ டைந்தபோதிலும், அவர் காடு திரும்பவில்லை; சட்ட விரோதக் குடிவரவாளராக இங்கேயே தங்கினார். 1990இல், சட்டபூர்வமாகத் தங்கும் உரிமை கோரி உள்நாட்டு அலுவலகத்திற்கு (Home Office) விண்ணப்பித்தார். திரும ணம் செய்து கொண்டார்; எனினும் அவ்வுறவு நீடித்து கிலைக்கவில்லை. எனவே, கார்ட்னரின் விண்ணப்பத்தை அவர் கணவர் ஆதரிக்க மறுத்துவிட்டமையால், விண்ணப் பம் நிராகரிக்கப்பட்டது. "காடு கடத்தும் எண்ணம் பற்றிய அறிவித்தல்' கார்ட்னருக்கு அனுப்பப்பட்டது. அதனையடுத்த இரண்டு வருடங்களாக, அவரை ஜமேக்காவிற்குத் திருப்பி அனுப்பக்கூடாதென்பதற்கான "வலுவானதும் இரக்கம் காட்டப்பட வேண்டியதுமான சூழ்நிலைகள்' இருப்பதாக, அவரது சட்டத் தரணிகள் உள் நாட்டுச் செயலாளருக்கு எடுத்துக் காட்டினர். எனினும், அம்முயற்சி வெற்றியளிக் கவில்லை. கார்ட்னருக்கு, இங்காட்டிலேயே பிறந்து இங்கேயே பள்ளி செல்லும் ஐந்து வயது மகன் ஒருவன் உள்ளான். அவரது தாய் மீர்னா சிம்சன் (Myrna Simpson), தொழில் தேடி 30 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவிற்கு வந்தவர். வேலைக்கு ஆட்களைச் சேர்க்கவென, முதலா ளிகளும் அரச பிரதிநிதிகளும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று வந்த காலம் அது. கார்ட்னரின் சகோதரி ஒருவரும் நீண்டகாலமாக இங்கு வசித்து வருகிறார்.
1992 ஏப்ரலில் நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், குடிவரவு அதிகாரிகளினால் கார்ட்னரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அது தெரிய வந்ததும், அவரது நாடுகடத்தலுக்கான ஏற்பா டுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என, ஜூலை 26, 27ஆம் திகதிகளில் இரு கடிதங்கள் முலம் கார்ட்னரின் சட் டத்தரணிகளுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டது.
ஜூலை 28 காலை 7.30 மணிக்கு - மேற்படி கடிதங் கள் கிடைப்பதற்கு இரண்டரை மணி நேரம் முன்பாகவே - ஸ்கொட்லண்ட் யாட் பொலிசாரின் நாடு கடத்தும் பிரிவு அதிகாரிகள் முவரும், சீருடையணிந்த உள்ளுர் பொலிசார்
மீட்சி - ஒகஸ்ற் 1993

Page 7
இருவரும், குடிவரவு அதிகாரி ஒருவரும், உள்நாட்டு அலுவலகத்தின் நேரடி உத்தரவுடன் Hornseyஇல் உள்ள கார்ட்னரின் வீட்டை அடைந்து, கதவினை உடைத்தும் பாதுகாப்புச் சங்கிலியை வெட்டியும் பலவந்தமாக வீட்டினுள் நுழைந்தனர்.
உள்ளே, முன் அறையில், கார்ட்னர் தனது ஐந்து வயது மகன் கிறகமுடன் (Graham) பேசிக்கொண்டிருந்தார். காடு கடத்தல் உத்தரவைத் தான் வழங்குவதாக, குடிவரவு அதி காரி உரத்த குரலில் அறிவித்தார். பின், சட்ட விரோதமாக நாட்டினுள் தங்கும் ஒருவரைக் கைது செய்யும் வழமை யானதொரு சம்பவமாக இருந்திருக்க வேண்டிய நிகழ்வு, திடீரென வன்முறைச் சம்பவமாக மாறிற்று.
༧.8ኣዩ'
ta
Y
துப்பறியும் சார்ஜன்ட் லின்டா இவான்ஸ் தலைமையில் கைதுசெய்ய வந்த அக்குழு மேற்கொண்ட பரிதாபத் திற்குரிய, உயிராபத்தை விளைவிக்கும் நடவடிக்கை ஒன்றினாலேயே கார்ட்னர் கொல்லப்பட்டார் என்று கூறப் படுகிறது. கைகளினால் குத்தியும், பற்களால் கடித் தும் கார்ட்னர் அடம்பிடித்த வேளையில், அதனைத் தடுக்கும் வகையில், பழைமை வாய்ந்த தோல் பட்டி ஒன்றினை (சேணம்போல) அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்; இடுப்
if - FQJ56ňDh 1993
 

பைச் சுற்றிக் கட்டிய அப்பட்டியில் பொருத்தியிருந்த உருக் குக் கைவிலங்கினுள் கார்ட்னரின் கைகளைச் செருக முனைந்தனர். அத்தோடு அவர் கூச்சவிடாதிருக்க, பிளாஸ்ரர் துணியுடன் பொருத்தப்பட்ட மென்மையான பொருள் ஒன் றினை அவரது வாயினுள் திணித்து பிளாஸ்ரர் துணிகொண்டு வாயை ஒட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இவ்வாறு கூச்சலிடுவதைத் தடுத்தபோது கார்ட்னர் பிராணவாயு போதாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது. அவர் அமை தியடைந்தது கண்டு, அவர் முச்சு கின்றுபோனதையும் உடல் தளர்ச்சியுற்றதையும் பொலிசார் உணர்ந்துகொண்டனர். பின் விட்டிங்ரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டபோது, எல்லா உணர்ச்சிகளும் அடங்கிப்போன 'கோமா' (Coma) நிலைக் குள்ளாகி இருந்தார்; நாலு நாட் களின் பின்னர் கார்ட்னர் மரணமானார். சிறுநீரகச் சீர ழிவும், "சுவாசமின்மையால் முளைப்பாதிப்பும் மரணத்திற்குக் காரணங்கள் என, மருத் துவ அறிக்கை கூறியது. முச்சுத் திணறலை மருத்துவ மொழியில் கூறுவதானால், 'சுவாச மின்மையால் முளைப் பாதிப்பு' என்றே கூறுவர்!
கார்ட்னர் இறந்த செய்தியை அறிந்ததும், தலைநகரப் பொலிஸ் ஆணையாளரான (Metropolitan Police Commissioner) போல் கொண்டொன், கலகம் எதுவும் தோன்றாமல் தடுக்குமுகமாக, ஸ்கொட்லண்ட் யாட் அதிகாரிகள் முவரி னதும் சேவையை இடைநிறுத்தம் செய்தார். இடைநிறுத்தம் சரியான நடவடிக்கைக்குரிய ஒரு படிதான் என்றாலும், கார்ட்னரின் மரணத்தின் மர்மத்தினைத் துலக்கப் போது மானதல்ல என்றே பலரும் கருதுகின்றனர். கார்ட்னரின் மரணத்திற்கான உண்மைக் காரணங்களைக் கண்டறியவும், ஒருவேளை கார்ட்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்பதைக் கண்டறியவும், பொது விசாரணை ஒன்று கடாத் தப்பட வேண்டும்.
மனித உரிமைச் சேவையில் ஈடுபட்டுள்ளோர், சட்டத் தரணிகள், சிறுபான்மைச் சமுகங்களின் கலன்களில் அக் கறை கொண்டோரின் கவலை வெறுமனே பொலிசாரின் மிருகத்தனம் பற்றி மட்டுமல்ல; குடிவரவுப் பிரச்சினை ஒன்றினை அதிகாரிகள் கையாண்ட விதமும், குடிவரவுக் கட்டுப்பாட்டின் கொடுரங்களும் பற்றியும்தான்.
முற்றாக வெள்ளையரைக் கொண்ட விசேட குழுவொன்று லண்டன் முழுவதும் சுற்றிவந்து, ஜமேக்காவிற்கோ அல்லது ஆபிரிக்காவிற்கோ அனுப்பு முன்னர், காடு கடத்தப்படும் கறுப்பினத்தவரை முன்னர் குறித்த பழைமையான தோல்பட்டி கொண்டு கட்டியும், விலங்கிட்டும், வாயையடைத்தும் கொடுமைப்படுத்துவது என்பது, இனங்களிற்கிடையேயான நல்லுறவினை ஏற்படுத்தவே குடிவரவுக் கட்டுப்பாடுகள் என்று கூறப்படும் நோக்கத்திற்கெதிரான வெறுக்கத்தக்க செயலாகும்.
உள்நாட்டுச் செயலாளரின் வேண்டத்தகாத காரியங்களில் தமது உத்தியோகத்தரை ஈடுபடுத்த பொலிஸ் உயர் அதி காரிகள் விரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் நாடு கடத்தவேண்டிய 9,000 வரையில் சிறை களிலும் பிற தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டிருந்தனர்; 850 சங்தர்ப்பங்களில், ஏதோ ஒரு வடிவத்தில் அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. குடிவரவுக் கட்டுப் பாட்டின் முக்கியமான குழப்பமளிக்கும் அம்சம், கார்ட்னர்மீது பாவிக்கப்பட்ட மத்தியகால வகையிலான தோல் சாதனம், ஸ்கொட்லண்ட் யாட் அதிகாரிகளினாலேயே உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதும் அது பல சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுமாகும். எவ்வாறாயினும், வாயை அடைப்பதற்கான மென்மையான பொருளுடன் கூடிய அகலமான ஒட்டும் பிளாஸ்ரர் சாதனம் அப்பிரிவினாலேயே தயாரிக்கப்பட்டது என்பது அநேகமாக உறுதியானது; 1988 இல் இருந்தே பாவனையில் உள்ளது!

Page 8
OI 3j5g5 J5 6iT LI ) ĵLLI elp6
ଶ]]
TU GJITLULWIJS சூழலில், நிறவெறி மற்றும் அகதிகள் பிரச்சினையைத் தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நிறவெறியும், அகதிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ் வியஸ் பிரச்சினைகளும் ஒன்றினைந்தவை
சமீபத்தில் கான் பார்த்த அகதிகள் பற்றிய முன்று திரைப்படங்கள், என்னுள் எழுப்பிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்
. இலத்தீன் அமெரிக்க நாடான சிலி () காட் டிவிருந்து கொடுங்கோலன் பினோசெட் ) இன் வேட்டையாடுதளிளிருந்து தப்பி வெளியேறிய ஒரு அகதியின் காதலனுபவம் பற்றிய ஒரு கனடியத் திரைப்படம்
2. தமது நிலத்தையும் காஸ்ாடைகளையும் விற்றுவிட்டு வெள்ளைச் சொர்க்கம் நோக்கிப் போகும் ஒரு துருக்கியக் குடும்பத்திள், அக்குடும்பத்தின் பிஞ்சு மகன் ஒருவனின் மரணம் ஏற்படுத்தும் சோகம் பற்றி விவரிக்கும் ரே தப்பித்தல் எனும் ஸ்விடியதுருக்கியத் திரைப்படம்
8. ஈழத் தமிழ் அகதிகளின் படகு கடலில் முழ்கியபே தப்பித்த தமிழ் அகதிகளின் சோகத்தைச் சொல் ' () கனடாவுக்கு உம்வரவு மீள்வரவாகுக! எனும் கனடியத் திரைப்படம்.
இத்திரைப்படங்களின் புரிதலுக்குப் பின்னுள்ள அரசியலைச் சிறிதளவு விளக்கிவிட்டு, திரைப்படங்களின் கதைச் சுருக் கத்திற்கும், அவை எழுப்பும் அனுபவங்களுக்கும் போவோம்
இலத்தீன் அமெரிக்காவின் தேசீய விடுதலைப் போராட் டமானது, எகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கமும், அதன் உள்ாட்டு ஏவல் நாய்களான ராணுவச் சர்வாதிகாரிக எ எதிரான போராட்டப் பாரம்பரியமும் கொண்டது.
கியூபாவைத் தொடர்ந்து எள்ளள்வடோ, நிகரகுவா சிலி, பெரு, கொலம்பியா, பொலிவியா எனத் தொடர் வது இது.
 

கியூபாவை அடுத்து எள்வடோர் அண்டேயின் தலிை பைபிள் அமைந்த, மகாகவி பாப்லோ நெருடாவின் பங்கு பற்றுதலில் உருவான, தேர்தல் முனமான னாயக் அரசை இரத்த வெள்ளத்தில் முழ்கடித்துவிட்டு, ராணுவச்சதி மும், சினியில் ஆட்சிபீடம் எறினான் பினோசெட் ஆட்சிபீடம் ஏறியதும், கலைஞர்களையும் எழுத்தாளர்களையும், இடது சாரிகளையும் வேட்டையாடினான் பினோசெட்
நம் சமகாலத்திள் இசபெல் அண்ைடே எனும் பெண் எழுத்தாளர் சினி காட்டின் துயரம் பற்றி நிறைய எழுதி வருபவர். அந்த வேட்டையாடுதவில் இருந்து தப்பி விண் டனில் வாழ்ந்துவரும் இன்னொருவர் கவிஞர் யெவ்ஜினியா மரியா பிறேவோ எனும் பெண்மணி. தற்பொ பிரித் தானியா அகதிகள் மன்றத்தின் ர்ே ஜே பார்) கள்விபதிகாரியாகச் செயலாற்றி வருகிறார். இவரின் கவி தைகள் பல, தமிழின் முக்கியமான கவிஞரான சிவசேகரம் மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டு, பிரசுரமாகியுள்ளன.
அவ்வாறு தப்பிய ஒருவர். அரசியல் அகதியாக கனடா வில் தஞ்சம் கோருகிறார். அங்ாட்டின் அகதிகள் சட்டம் எந்த ஐரோப்பிய நாட்டையும்போல, அவருக்கு ஏற்படுத்தும் பிரச்சினைகளைச் சொல்லும் படமே, முதலாவது திரைப்படம்
துருக்கியும், ராணுவ அடக்குமுறைக்கும் சர்வாதிகாரத் திற்கும் பெயர்போன ஒரு நாடே மார்க்சியத்தைத் தத்துவ அடிப்படையாகக்கொண்ட இடதுசாரி அமைப்புக்களை இன்றுவரை சட்டபூர்வமான தடையின்கீழ் வைத்திருக்கும்
ாடு அது.
சிம் ஹிக்மத் போன்ற மகத்தான கவிஞர்களையும், இல் மஸ் குனே போன்ற திரைப்பட மேதைகளையும் சிறையி எடைத்துக் கொடுமை செய்த நாடு துருக்கி. இம்மக்கள் முன்று விதமான மக்கள் கூட்டமாக, துருக்கியைவிட்டு மேற்கு காடுக ருக்குப் புலம் பெயர்ந்தார்கள்
வறுமையில் வாடிய விவசாயிகள் விருந்தினர் வேலை பாளர்களாக ( I பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற காடுகளுக்குப் புளம் பெயர்ந்தார்கள். மனசாட்சி
மீட்சி - ஒகஸ்ற் 1943

Page 9
TTTT இழக்க விரும்பாத கவிஞர்கள் காட்டிலிருந்து தப்பித்து வெளியேறினார்கள். தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், உயிர் வாழ்தலுக்காக வெளியேறினார்கள்.
தடைசெய்யப்பட்டதுருக்கிய இடதுசாரி அரசியலாளர்கள் பலர் தற்பொழுதும் லண்டனில் வாழ்கிறார்கள். மற்றொரு முக்கியமான சமுகப்பகுதி, இனக்கொலைக்கு ஆளான குர் திஸ் மக்கள். இவர்கள் பெருமளவில் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
வறுமையின் காரணமாக தமது கால்நடைகளையும் நில புலன்களையும் விற்றுவிட்டு, துருக்கி ஏஜென்டுகள், ஸ்வீ டிய, லஞ்ச அதிகாரிகள் ஆகியோரின் கைகளுக்குள் விழுந்து, பனிமழையினூடே மலைகளில் பயணம் மேற்கொள் ளும் மக்கள் படும் வதையைச் சொல்லும் படம், இரண்டா வது திரைப்படம்.
முன்றாவது படம், நடுக்கடலில் படகினில் இறக்கிவிடப் பட்டு, படகு முழ்கும்போது கனடாவின் கரையோரத்தில் ஒதுங்கிய ஈழத்தமிழ் அகதிகள், கனடிய மக்களால் அன்பு டன் உபசரிக்கப்படுவதையும், தமிழ் மக்களின் சோகத்தையும் மரணத்தையும் சொல்லும் படம்.
இந்த முன்று படங்களுக்குள்ளும் பொதுத் தன்மைகள் உண்டு. இந்தத் திரைப்படங்களில் வரும் புலம் பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரே விதமானவைதான்.
கொடிமலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நூற்றுக்க ணக்கில் தமிழர் தொடர்ந்தும் முறையின்றிக் கைதாகி வரு கின்றனர். இதையிட்டு சர்வதேச மன்னிப்புச்சபை தனது கவலையை ஜூலை 21ஆம் திகதி அறிக்கை முலம் தெரியப் படுத்தியுள்ளது. அடையாள அட்டை இல்லாது வெளிகா டுகளிலிருந்து விருந்தினராக இலங்கை செல்லும் தமிழரும், புதிதாகக் கொழும்பு செல்லும் தமிழ்ப் பயணிகளும் பொலி சாரால் தடுக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்படுவது கொழும்பில் ஒரு சாதா ரண நிகழ்வு. அத்துடன் விடுதலைக்காக கொழும்பு வரும் தமிழர்களிடம் பொலிசார் பணம் கேட்பது பற்றிய முறைப் பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு உடங்தையாகத் தமிழ் இளைஞர்கள் சிலரும் இருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீண்டகால வதிவிற்கும் தொழிலுக்கும் சான்றுகள் உள்ளபோதும் அடையாள அட்டை, பிற ஆவ ணங்கள் உள்ளபோதும், கைதானோர் பற்றிய முறைப்பாடுகள் பலவுள்ளன. இதனைச் சர்வதேச மன்னிப்புச்சபையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜூன் மாதத்தில் 8,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொழும்பில் கைதாகி, 2,500 பேர்வரை தடுத்து வைக்கப் பட்டதாகவும் வேறு அறிக்கைகள் புலப்படுத்துகின்றன. வீதிகள், வீடுகள், விடுதிகள், அலுவலகங்கள் எங்கும் இக் கைதுகள் இடம்பெறுகின்றன. இரவில் பெண் பொலிசா ரின்றி வீடுகளிலிருந்து பெண்கள் கைதானதை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். நிலைமை சீர்திருத்தப்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
மீட்சி - ஒகஸ்ற் 1993
 

முன்றாம் உலக நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு வரும் மக்களைத் தடுத்து நிறுத்தி அல்லது வெளியேற்றி, வெள்ளைக் கோட்டைச் சுவர்களை எழுப்புவதற்கான சட் டங்களை உருவாக்கும், அவர்களின் நிறவெறி மனப்பான் மையை இப்படங்கள் சுட்டுகின்றன.
உண்மையில் உயிராபத்து இவர்களுக்கு இல்லை; பொருளாதாரக் காரணங்களுக்காகத்தான் இவர்கள் மேற்கு நாடுகளுக்கு வருகிறார்கள் என, இப்படத்தில் வரும் குடி யேற்ற அதிகாரிகள் (Immigration Oரிcers) தங்களுக்குள் உரையாடுகிறார்கள்.
அகதி மக்களின் துயரங்களை, இந்த அரசுகள் எவ்வளவு கொச்சையாக மதிப்பிடுகின்றன என, இப்படங்கள் காட்டு கின்றன. எவ்வாறு இம்மக்கள் காய்களைப்போல, பொலி சாரால் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதை, இப்படங்கள் காட்சிருபமாக்கிக் காட்டுகின்றன.
இத்திரைப்படங்களின் இயக்குங்ார்களிலே கூட நிறவெறி இயக்குநரையும், மனிதாபிமானமுள்ள இயக்குநரையும் நம்மால் இனம் காண முடிகிறது.
இனி, கதைச் சுருக்கமும் அவை எமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் இரண்டாவதும் இறுதியுமான கட்டு ரையில் பேசுவோம்.
A இன்னும் வரும்
உறுதியளித்த பின்னரும் அடாத்தான கைதுகள் தொடர் கின்றன. நாடாளுமன்றத்தில் ஜூலை 17ஆம் திகதி உரை யாற்றிய சுதந்திரக்கட்சி உறுப்பினர் லக்ஷமண் ஜயக்கொடி, கைதாகி இடுப்புவரை ஆடை களையப்பட்டுப் பின்னர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டோரில் டாக்டர்கள், பொறியியலாளர்கள், வங்கி உத்தியோகஸ்தர்கள் ஆகி யோரும் அடங்குவர் என்றார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்த மதகுருவான ஒரு தமிழரும் கைதா னார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ச.செல்லச்சாமியின் கூற்றுப்படி, மலையக மக்களில் பாதிக்கு மேலானோருக்கு, விண்ணப்பித்து, பல வருடங்களாகியும் அடையாள அட்டைகள் வழங்கப்பட வில்லை. தொடர்துயரளிக்க கொழும்புத் தமிழ் சமுகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் எதுவித ஐயப் பாடுமில்லை. அவசரகால விதிகளின்படி ஒவ்வொரு குடி யிருப்பாளரும் வதிவாளர்களைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். ஆனால் சிங்களக் குடியிருப் பாளர்கள் பதிவதுபற்றிக் காவல் துறையினர் அலட்டிக் கொள்வதில்லை. மேலும் தமிழர் பதிவதற்குப் போதிய படி வங்கள் வழங்கப்படுவதுமில்லை என்ற குற்றச் சாட்டுமுள்ளது. கிரந்தர வதிவாளர் மட்டும் பதிய வேண்டுமா அல்லது அவசரகால விதிகள் சுட்டுவது வடக்கு கிழக்கிலிருந்து வந்தவரை மட்டுமா என்பதும் புதிராகவேயுள்ளது. பொலிசாரும் விளக்கமளிக்க முடியாத நிலையிலுள்ளனர். ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தான்தோன்றித்தனமாகச் செயல் படுவதால் குழப்பநிலை வலுவடைகின்றது. சிங்களக் குடி யிருப்பாளர் வீடுகளில் வதியும் தமிழர் கைதானபோதும்,

Page 10
பொலிசில் பதியாததற்காகச் சிங்களக் குடியிருப்பாளர் கை தாவதில்லை. கடும் தேடல்களும் வகைதொகையற்ற கை துகளும் தமிழரை, முக்கியமாகத் தமிழ் இளைஞர்களை, இலங்கையில் சிங்களப் பகுதிகளில் எவ்விடத்திலும் வசிக்க முடியாமலாக்கின்றன என்பதையும், தமிழ் இளைஞர்கள் தேடுதல் என்ற பாவனையில் பலவித துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்றும் சுயேட்சையான அறிக் கைகள் முலமும், பத்திரிகைகள் முலமும் தெளிவாகின்றன. அடையாள அட்டைகள் வைத்திருக்கும் இளைஞர்கள் கூட மிருகத்தனமாகவும், மிகவும் இழிவான முறையிலும் நடாத் தப்படுகின்றனர் எனத் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான செய்கைகள் தமிழ் மக்களின் போக்கினை மேலும் ஒருமுகப் படுத்தி ஆயுதப் போராட்டத்தைத் தூண்டுமேயன்றிச் சுமுக மான உடனடித் தீர்வுகளுக்கு வழிகோலாதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளே இவை என அரசு கூறிக்கொண்டு அரச பயங் கரவாதத்தினை தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்டு, தமிழ் மக்களை இழிவுபடுத்தும் நோக்குடனும், பயமுறுத்த லுக்குட்படுத்தவும், திட்டமிட்டுக் கையாளும் முறைகள், ஒரு இனப்படுகொலைக்கு இட்டுச்செல்லுகின்றதென்ற கருத்து வலிமையடைந்து வருவத னையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இப்படியான நெருக்கடியைத் தமிழ் சமுகம் எதிர்நோக்கி வரும்போதும், ஜூலை 16 அன்று ஐ.நா. அகதிகள் ஆணைக் குழு வெளியிட்ட அறிக்கையில், ஒராண்டிற்கு முன்னைய கிலைப்பாடான கிராகரிக்கப்பட்ட அகதி விண்ணப்பதாரிகள் அந்தந்த காடுகளிலிருந்து கொழும்பிற்குத் திருப்பியனுப்பப் படலாம் என்ற முடிவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிடும் என்று எண்ணுவதற்கு எதுவித சாதகமான அறிகுறிகளும் இல்லையென்பதையும், இலங்கை நிலைமையினை சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய வகையில் உள்காட்டில் தம்மால் செயல்பட முடியவில்லை என்பதையும் அகதிகள் ஆணைக்குழு தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன் திருப்பியனுப்பும் நாடுகள் தினமும் மாறுபடும் இலங்கையின் பாதுகாப்பு/ பாதுகாப்பற்ற பகுதிகளை மனதிற்கொண்டே அவ்வாறு திருப்பியனுப்ப வேண்டும் என்ற ஒரு உபதேசத்தையும் செய்கின்றது. திருப்பியனுப்பப்படுவோர் இலங்கை சேர்ந்ததும் எதிர்நோக்கவேண்டிய பீதிகளை இது குறிக்கின்றது.
மேலும் சர்வதேசப் பாதுகாப்புத் தேவைப்படாதவர்கள் பற்றியும் அகதிகள் ஆணைக்குழு தொடர்ந்து கருத்து வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றது. பெரும்பாலான அகதிகளுக்கு ஏதோ ஒருவித அந்தஸ்து அந்தந்த நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது என தமிழ் தகவல் நடுவம் எடுத்துக்காட்டிய பின்பும் “பாதுகாப்புத் தேவைப்படாதவர்கள்” என்ற பாகு பாட்டை எவ்வாறு அகதிகள் ஆணைக்குழு ஏற்படுத்து
10
 

கின்றதென்பதற்கு விளக்கம் தரவில்லை. ஏதோ ஒரு அங் தஸ்து வழங்கப்பட்டமை அவர்களுக்கு சர்வதேச பாதுகாப்புத் தேவையென்பதையே சுட்டுகின்றது என்பதற்கு அகதிகள் ஆணைக்குழு மெளனம் சாதிக்கின்றது. ஜெனிவாவில் அகதிகள் ஆணைக்குழு பெப்ரவரி 11இல் ஏற்பாடு செய்த அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் கூட்டத்தில் தமிழ் தகவல் நடுவம் பிரித்தானியாவில் 10,700க்கும் மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கான வதிவிட அந்தஸ்து (ELF) வழங்கப்பட்டதை எடுத்துக்காட்டி, இவர்களும் நிராகரிக்கப்பட்ட அகதி விண்ணப்பதாரிகளே என்று கணிப்பதுபற்றி முறையிட்டது. இதற்கு இன்றுவரை அகதிகள் ஆணைக்குழு பதிலளிக் கவில்லை.
திருப்பியனுப்பப்படுவோருக்கான பொறுப்பினைத் தான் ஏற்க முடியாது என்று அகதிகள் ஆணைக்குழு வலியுறுத் துகின்றது. அதேவேளை தான் “மிதமான கண்காணிப்பில்” ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளது. மிதமான கண்காணிப் பென்பது திருப்பியனுப்பப்பட்டவரின் பாதுகாப்பிற்குப் பங்கமேற்படுமிடத்து அரசு அதிகாரிகளிடம் விசாரிப்பதே என்று விளக்கம் கொடுக்கின்றது. திருப்பியனுப்பப்படுதல் இரு அரசுகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட விடயமாகும் என்று அகதிகள் ஆணைக்குழு தெளிவாக்குகின்றது. மிகக் கவனமாகப் பாவித்துள்ள சொற்பிரயோகங்களின்படி ஆணைக் குழு அனுப்பும் நாட்டிலும், இலங்கையிலும் தனது பொறுப் பின்மையை காப்பாற்றிக்கொண்டுள்ளது. வேறுவிதமாகச் சொல்வதானால், தமிழரை அகதிகள் ஆணைக்குழு கொலையாளி கையில் கொடுத்து தஞ்சம் கோருவோரைக் கைகழுவி விட்டுள்ளது. என்றாலும் இதனையே "சர்வதேச பாதுகாப்பு”க் கடப்பாடு என்று இலக்கணமிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் கைதாகியும் கீழ்த்தரமாக நடாத்தப் பட்டும் வரும் இவ்வேளையில், ஐ.நா.ஆணைக்குழு மேலே குறிப்பிட்ட அறிக்கையை 16.07.93 அன்று வெளியிட்டதற்குக் காரணமுண்டு. சுவிஸ் அரசு தமிழரைத் திருப்பியனுப்ப வழி சமைக்க ஏதுவாக இது இருக்கும் என்பதே அந்தக் காரணி. சுவிஸ் அரசின் வழிகாட்டலைத் தொடர மற்றைய மேற்கத்தைய அரசுகள் தருணம் பார்த்திருக்கின்றன. சுய விருப்பமற்ற திருப்பியனுப்பலை சுவிஸ் ஆரம்பித்ததும் தாமும் அதைச் செய்யப்போவதாக டென்மார்க்கும் கோர் வேயும் விருப்பு வெளியுட்டுள்ளன. இப்பின்னணியில் தமிழ் நாட்டிலிருந்து சுயவிருப்பமின்றித் திருப்பியனுப்புதல் ஆணைக் குழுவிற்கு ஒரு தேவையாகவுள்ளது. தமிழக அரசும் அக திகளைத் திரும்பிச் செல்ல வற்புறுத்தும் வகையில் 27.03.93 முதல் அகதி முகாம்களுக்கு நிவாரண உதவி வழங்கிய உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள் அவ்வாறு உதவக்கூடாதென உத்தரவிட்டுள்ளது. ஐ.நா. அகதிகள் ஆணைக்குழு அகதி முகாம்களுக்குள் செல்லும் அனுமதி இன்றுவரை வழங்கப் படவில்லை. அப்படியிருந்தும் சுயவிருப்பமற்ற திருப்பி யனுப்பலை முன்னெடுக்க இரு கப்பல்களை ஆணைக்குழு ஒழுங்கு செய்கின்றது.
அகதிகள் ஆணையாளரின் குழப்பகரமான முரண்பாடான நிலையினைக் கண்டித்து, ஒரு மாற்றத்தை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். இதைத் தமிழர்களாகிய நாம் இச்சந்தர்ப்பத்தில் செய்யத் தவறினால் மற்றைய சமுக அக திகளும் வருங்காலங்களில் பாதிக்கப்படுவர் என்பதில் ஐய மில்லை. பிரித்தானியாவில் தமிழ் அகதிகள் நலன் கருதி செயல்படும் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் அண்மையில் ஒன்றுகூடி ஐ.நா. அகதிகள் ஆணையாளரின் போக்கினை, அகதிகள் உரிமைகளைப் பேணும் கோக்குடன் செயற்படும் சர்வதேச ஸ்தாபனங்கள், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றைய அகதிச் சமுகங்களுக்குத் தெரியப்படுத்தும் நோக் குடன் ஒன்றிணைந்த பிரச்சாரக் குழுவொன்றை அண்மையில் ஆரம்பித்துச் செயற்படுத்தி வருகின்கின்றனர். இக்குழுவினை ஊக்குவித்து செயற்படச் செய்வது வெளிநாடுகளில் வாழும் தமிழரினதும், தமிழ் அகதிகளினதும் ஒரு முக்கிய கடமை աn (ծմ),
மீட்சி - ஒகஸ்ற் 1993

Page 11
கணணியினால் விளையும் பாதிப்புகள்
ணயப் பொறிப்பு இயந்திரம் (Stampir கவலையெல்லாம், தற்போது கணணி உபயே வேலைநாட்களும், தினமும் 8 மணி நேரம் தலையிடி, பின்புற நோவு, குமட்டல் : முதுகுப்புறத்தில் ஏற்படும் சிறு வீக்கங்கள், பாதிக்கின்றது. கனணியின் வெவ்வேறு நம்பப்படுகிறது. பலருக்கு கணணித் திரையின் கணணி இயந்திரத்தின் உட்புறத் திலிருந்து ெ இயக்குபவரைத் தாக்குகின்றது.
இவ்வாறு கணணி இயந்திரத்திலிருந்து ே பாதிப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆத இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக க கவலையளித்து வருகின்றது. இதனால் சில ே உடைகளை வேலையாட்களுக்கு விநியோ தொடர்பு ஸ்தாபனத்திற்கு எதிராசு (British பிரித்தானியத் தொலைத்தொடர்பு ஸ்தாப ஆரோக் கியம் பாதிக்கப்பட் டுவிட்டதாக தப்பட்ட ஊழியர்களுக்குச் சாதகமாக அ வைத்துள்ளது.
இந்தக் குழப்பமான கிலையைச் சாதகமாக
கதிர்களை வெளியேற்றும் கணணி என வி விற்பனை செய்து அதிக லாபம் பெறுகின்
இவ்வருடத்திவிருந்து ஐரோப்பியச் சட்ட உபகரணங்களும் இவ்வொளிக்கதிர்ப் பாதிப் பல வழிகளிலும் திருப்தியளிக்கும் செய்தி
பொதுவாக RS என அழைக்கப்படுகி வரையுறுத்தித் தடுக்க முடியாது. ஒரேமா செய்பவர்களை இங்நோய் தாக்குவதற்கு அ; இங்கோய், வயது அதிகரிக்க ஆபத்தாக ! ஏற்படுகின்ற கோவு, இதன் விளைவே. இதன நோய்களை ஆரம்பத்திலிருந்து கவனிப்பத
கணணியின் முன் பெருமளவு நேரம் இ
* வெளியிலிருந்து வருகின்ற இயற்ை யில்பட்டுத் தெறிக்காத வண்ணம் இ
* நேராக முதுகைச் சாய்ப்பதற்கு வச
* கணணியை உபயோகிப்பவர் சாவி
அமரக்கூடாது. கை நேராகச் சாவித
* இயந்திரத்தின் முன் தொடர்ச்சிய மணித்தியாலமும் 10 நிமிடம்வரை து
* அறையினுள் இயன்றளவு காற்றோட
கோய் வந்த பின் கவனிப்பதைவிட, ! கல்வதல்லவா?
பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், பல்துை ஒரு சுயேட்ை
(IGNIT TAMIL INFORMATION CENTRE, THAMIL HOUSE, 7. சந்தா (12 இதழ்கள்): U.K.

* Trgதி Iyer" 27-3தழரிStre Fair Carrıfürı "EI3 (217) Tel (220 84FI 5636
g Machines) பரவலாக உபயோகத்தில் இருந்தபோது இல்லாத ாகிக்கும்போது பலருக்கு ஏற்படுகின்றது. தொடர்ச்சியாக ஐந்து கனணியின் முன் இருந்து வேலை செய்பவர்களுக்கு கண்வலி, உணர்வு மற்றும் கைக ளின் பின்னால், உள்ளங்கையில்,
நாளடைவில் சிலரை வேலையே செய்ய முடியாதளவிற்குப் பாகங்கள் இங் நோய்களுக்குக் காரணம் எனப் பரவலாக பிருந்து வெளியாகும் ஒருவித ஒளிக்கதிர்கள் கவலையளிக்கின்றது. வளியாகும் சில கதிர்கள் திரையினூடாக ஊடுருவி, கனணியை
வெளியேறுகின்ற ஒளிக்கதிர்கள், கனணியை இயக்குபவரைப் ாரம் இல்லாவிடினும், இக்கதிர் களால் கர்ப்பிணிப் பெண்கள் ருதப்படுகின்றது. இவ்விடயம் தொழில் அதிபர்கள் பலருக்குக் வேலை யிடங்களில் இக்கதிர்களைத் தடுக்கக்சுடிய சக்திவாய்ந்த கம் செய்கின்றனர். அண்மையில் பிரித்தானியத் தொவைத் TelசCOா) அதன் ஊழியர்கள் தாக்கல் செய்த வழக்கொன்றில், னத்தில் கணணியில் வேலை புரிந்த ஊழியர்கள் சிலர், தமது BT ஐ குற்றம் சாட்டியிருந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு, சம்பங் புளிக்கப்பட்டமை, பல தொழில் அதிபர்களைச் சிந்திக்க
ஈப் பயன்படுத்தும் கணணி உற்பத்தியாளர்கள் சிலர் குறைவான விளம்பரம் செய்து, சுடிய விலையில் தமது இயந்திரங்களை *றனர்.
த்திற்குட்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து கணணி புகளுக்கு அப்பாற்பட்டவை என அறிவிக்கப் பட்டுள்ளது. இது பாக இருக்கின்றது.
ண்ற (Repetive Strain rury) கோயை எந்தச் சட்டத்திலும் திரியான தொழிலைத் தொடர்ச்சியாக ஒரே அங்கத்தால் திசு சந்தர்ப்பம் இருக்கின்றது. இளமையில் சிறிதாக இருக்கும் இருக்கும். வயோதிபர்கள் பலர் முறையே கைமொளிகளில் ால், கை விரல்கள் மடிக்க முடி யாமல் இருக்கும். இவ்வாறான ன் மூலம் இதன் பிற்கால விளைவுகளைத் தடுக்கலாம்.
ருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்:
கயான ஒளியோ அல்லது மின்சார வெளிச்சமோ திரை யந்திரத்தை வைக்க வேண்டும்.
தியான இருக்கையில் அமர வேண்டும்.
த்தட்டுக்கு (key Board) பதிவாகவோ அல்லது உயரமாகவோ நீதட்டைத் தொடக்கூடியதாக இருக்க வேண்டும்.
ாக வேலை செய்பவர், ஆகக் குறைந்தது ஒவ்வொரு ஓய்வு எடுக்க வேண்டும்.
ட்டம் இருக்க வேண்டும்.
நோய் வருவதைத் தடுப்பதற்கான வழிகளைக் கையாள்வது
if:
நற அறிஞர்கள், சமூகத்தொண்டர்களை உள்ளடக்கிய
சக்குழுவின் படைப்பு
" Li L LITT TT:
20 ROMFORD ROAD, LONDON El2 6BT. TEL; 081 5146390
E 5.00 (FIETETT Gf GT: E10. COC)