கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீட்சி 1993.09

Page 1
இதழ்: 5 செப்ரெம்பர் 1993
பிரித்தானிய அரசின் புதிய அதிவேக விண்ணப்பு
l. அரசாங்கம் 2.0.92இல் தஞ்சம், கு
தொடர்பான மேன்முறையீடு மசோதாவை வெளி இம்மசோதாவை பல சமுக தாபனங்கள், மனிதவுரிை னங்கள், அகதி தாபனங்கள் உட்பட பலர் எதிர்ப்புத் ே தனர். ஆனால் பாரிய எதிர்ப்புக்களிடையும் பிரித் த பாராளுமன்றம் தஞ்சம், குடிவரவு மேன்முறையீடு தொட புதிய சட்டத்தை ஜூலை 25ஆம் திகதி 1993ஆம் ஆண்டு படுத்தியது. இப்புதிய சட்டத்தின் விளைவுகளில் முக்கியமாக கருதப்படுவதில் ஒன்று தஞ்ச விண்ணப்பங்களை "ஆதா விண்ணப்பங்கள் என கிராகரித்து துரிதமாகக் கையாளும் யெனக் கூறலாம்.
இதன் தாக்கத்தை இன்று பல தமிழர்கள் நேரடியாக வித்து வருகிறார்கள் என்று அறிந்திருப்பது அவசியம்.
பிரித்தானிய அரசாங்கம் இத்தகைய விளைவுகளைக் கொடு மசோதாவை அமுல்படுத்த முயற்சிக்கும்போது எதிர்க்க மு தவறிய தமிழர்கள் இன்று அதன் விளைவுகளின் பாதிப்புக்கு அங்குமிங்கும் ஓடி அனைவதைக் கானக்கூடியதாக இருக்க
ஆதாரமற்ற விண்ணப்பங்க3
ஐ.நா.ஒப்பந்த மரபுகளுக்குக்கீழ் அடங்கும் பிரித்தானி அமைகிற பொப்பானவையும், சர்ச்சைக்குரியவையுமென பங்களை வேகமாகக் கையாள இச்சட்டம் வழி ஏற்படுத்
பாதுகாப்பான ஒரு 3ஆம் நாட்டிலிருந்து வந்தோரும் , னால் அதிகமாகப் பாதிக்கப்படுவர்.
துரிதமாகக் கையாளல் முறைக்கு ஆளாகும் முவகை - இறங்குதுறை விண்ணப்பங்கள்
- கனவாக நாட்டிற்குள் நுழைங்தோராக் கண்டுபிடிக் - கட்டுப்பாட்டு விலக்கல் மறுக்கப்பட்டு நாடுகடத்த
துழைவு அனுமதி வழங்கப்பட்டு இருக்கும் தஞ்சம் சுே
ஆதாரமற்றதெனக் கணிக்கப்பட்டு துரிதகதிக் கையாள மிகவும் குறுகலானவை. விண்ணப்ப நிராகரிப்பு இறங் கையளிக்கப்பட்டால் மேன்முறையீட்டுக்கான அறிவித்தல் தகைய கடைமுறைக்குட்படுத்தப்படுவோர் அநேகமாக த வழங்கப்பட்டோர் விசாரனைக்காக இறங்கு துறைக்கு அ6 கிக் கையளிக்கப்படலாம். இச்சந்தர்ப்பங்களில் இவர்களு
 
 

தமிழ் தகவல் நடுவத்தின் மாதாந்த வெளியீடு
1ப் பரிசீலனைக் கொள்கை
-
ஆண்டுள்ள Pன்வரத் நள்ளாகி கின்றது.
ளை அதிவேகமாகக் கையாளல்
யாவின் கடமைப்பாடுகளுக்கு ஒத்திசைவாகாத வகையில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் கருதுகிற விண்ணப் ந்தியுள்ளது.
ஆதாரமற்றதாகக் காணப்பட்ட விண்ணப்பதாரிகளும் இத
விண்ணப்பங்களாவன:
சுப்பட்டோர் ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டோர்.
ாரியவர்க்கு துரிதகதிக் கையாளல் முறை அமைவாகாது.
லுக்குள்ளாகும் விண்ணப்பங்களுக்கென கால அவகாசங்கள் த துறையிலேயே எடுக்கப்பட்டு நேரடியாக அகதியிடம் இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத் டுத்து வைக்கப்பட்டோராகவிருப்பர். தற்காலிக நுழைவு ழைக்கப்படுமிடத்து சிலவேளைகளில் நிராகரிப்பு நேரடியா }க்கும் துரிதகதிக் கையாளல் முறை செல்லுபடியாகும்.

Page 2
SSSS அநேகமாக விண்ணப்பதாரி தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் 2 நாள் அவகாசமானது, அவருக்கும் அவரது ஆலோசகருக்கும் பெரும் இக்கட்டான நிலையை உருவாக்குகின்றது. அக திக்கு மொழியும் நடைமுறையும் தெரியாதிருக்கலாம்; சட்ட ஆலோசகருக்கும் கிடையாமலிருக்கும். ஆலோசகர் இருங் தாலும், மொழிபெயர்ப்பாளரை அமர்த்த(தேவைப்படின்) மேன்முறையீட்டுக்கான காரணங்களை இனங்காண 48 மணித்தியாலம் போதுமாகாது. மேன்முறையீட்டு அறிவித்தல் தடுத்து வைத்திருப்பவரைச் சந்தித்து அவரது கையொப் பத்துடனேயே இருக்க வேண்டும் என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். மேற்முறையீட்டு உரிமையை இச் சிக்கலான சூழலிற் பாவித்தல் பலருக்கும் பெரும் இடைஞ் சலை ஏற்படுத்தும்.
மேன்முறையீடு கிடைத்த 3 தினங்களுக்குள் விசாரணைக் கான திகதியைத் தீர்ப்பளிப்பவர் அறிவிக்க வேண்டும்.
ga galā ar
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அக
1982இல் ஆரம்பிக்கப்பட்ட இச் செயல்திட்டம்
பல்வேறு பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை கிர்ப்பந்தத்தினால் குடி பெயர்ந்த அகதிகள் ஆய்வுகள் செய்யப் பயிற்றுவித்து வரு கிறது. இத்திட்டத்தின் முலம் மேற்படி துறை சம்பந்தப்பட்ட பிரசுரங்கள் வெளிவர உதவி வருவதுடன், கருத்தரங்குகள், விரிவுரைகள், மகாநாடுகள், பயிற்சிக் களங்கள் போன்ற வைகளைச் சர்வதேச ஸ்தாபனங்களுடன் இணைந்து கடாத்தி வருகிறது. அத்துடன் அகதி கலன்சார் கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு கல்விமான்கள், கொள்கை வகுப்போர், அதிகாரிகள், சர்வதேச ஸ்தாபனங்கள் அகதி கள் போன்றோருடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
நுழைவுத் தகைமைகள்:
இவர்களுடைய பல செயல்திட்டங்களுள் ஒருவர் எதைத் தேர்ந்தெடுப்பாரோ அதைப் பொறுத்தே தகைமைகள் அமையும். இருப்பினும் பட்ட மேற்படிப்பினைத்தவிர ஏனை யவை அகதித்துறையில் ஆர்வமுள்ளோர் யாவரும் கற்கக் கூடியதே.
இலவச வாராந்தக் கருத்தரங்குகள்:
கிர்ப்பந்தத்தினால் அகதியாக்கப்பட்டவர்கள் பற்றிய கொள்கைத் திட்டங்களையும், கடைமுறைகளையும் அகதிகள் கல அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்ட ஆய்வாளர்கள் வராக்தரக் கருத்தரங்குகளில் படித்து விவாதிப்பர். இக் கருத்தரங்குகளில் அகதிகளும் பங்குபற்றி நேரடியாகத் தமது கிலைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்க இக்கருத்தரங்குகளுக்கு கட்டணமெதுவும் அறவிடப்பட Lonll-sigil.
புலமைப் பரிசுகளும் நிதி உதவிகளும்
பட்ட மேற்படிப்புக் கற்கைநெறிகளும், குறுங்காலப் பயிற்சி நெறிகளுக்கும் பெருக்தொகையான பணம் கட்டணமாக அறவிடப்படுகிறது. இருப்பினும் அவற்றைக் கட்டுவதற்கு வசதியற்றவர்கள் தகைமைகள் கன்கு பரிசீலிக்கப்பட்டு இருப்பிட வசதிகள் உட்பட நிதி உதவிகள் வழங்கப்படலாம்.
குறுங்காலப் பயிற்சி நெறிகள்:
() "ஐரோப்பிய காடுகளில் அகதிகளை ஏற்றுக்கொள்ளுதல்
 
 

மேன்முறையீட்டு அனுமதி கிடைத்து 7 நாட்களுக்குள் விசா ரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆதாரமற்றது என்பதைத் தீர்ப்பளிப்பவர் ஏற்காதவிடத்து விண்ணப்பம் மீண்டும் உள்நாட்டுச் செயலரிடம் அனுப்பப்படும். தீர்ப் பளிப்பவர் பாதகமான தீர்ப்பை வழங்கினால் நீதிமன்ற மீளாய்வு ஒன்றே இதன்மேல் செய்யக்கூடிய ஒன்றாகும்.
3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்குவதே அரசின் இலக் காக இருந்தாலும் ஆதாரமற்றது எனக் கணிக்கப்படும் அகதி விண்ணப்பங்களைத் தீர்மானிக்க ஒரு சில மணித் தியாலங்களே போதுமென்பது தெளிவு. இரண்டு கிழமை களுக்குள் மேன்முறையீடு உட்பட்ட சகல விதிமுறைகளும் சில அகதிகளையிட்டு நிறைவேற்றப்படலாம். இவ்வாறான துரிதகதிச் செயல்முறை காரணமாக நீதித்தவறுக்கு இலக்காகி அகதிகள் பேராபத்தானதும் பாதகமானதுமான விளைவுகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
திகள் பற்றிய கல்விச் செயல்திட்டம்
பராமரித்தல் பற்றிய கொள்கை அபிவிருத்தி” 6 நாள் கருத் தரங்கு, 6-11 December 1993
இரண்டாவது மகாயுத்த முடிவிலிருந்து சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா பிளவுபட்டது வரை ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் சம்பந்தமான கொள்கைகளில் ஏற் பட்டு வரும் மாற்றங்கள் பற்றியும் சர்வதேச நிறுவனங்கள், சட்ட ஆக்க வல்லுனர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் போன்றவைகளும் ஆராயப்படும்.
கட்டணம்: E250. (“எதிர்காலப் பிரச்சினைகளும் கிர்ப் பந்தக் குடிபெயர்வும்” எனும் பயிற்சிக் களம் உட்பட, திகதி 11 December 1993)
(2) நெருக்கடிநிலையும் மனிதநேய நன்கொடைகளும், 5 நாள் கருத்தரங்கு September 5-9 1994 ஐ.நா.வின் மறுவாழ்வுத் திட்டங்களும் சர்வதேசச் சட்ட விதிகளால் ஏற்படும் முரண்பாடுகளும், இராணுவச் சட்டவிதிகளால் சர்வதேச ஸ்தாபனங்கள் மறுவாழ்வளிப்பதில் எதிர்நோக்கும் சிக்கல்களும் இங்கு ஆராயப்படும்.
கட்டணம் E330.
LILL GDjibLI g LILLI LI u fijdf 6b għaj56ħ :
(1) சர்வதேசச் சட்ட ஒழுங்குகள்:
மனித உரிமைகள், கிர்ப்பந்தக் குடிபெயர்வு. (2) நிர்ப்பந்தக் குடிபெயர்வினால் ஏற்படும் உளவியல்
ரீதியான கலாச்சார மாற்றங்களும், கலாச்சார இசைவாக்கங்களும், (3) அகதிகளும் சர்வதேச உறவுகளும் (4) மனித உரிமைகளும் அகதிச் சட்டங்களும்.
கருத்தரங்குகள், குறுங்காலப் பயிற்சி நெறிகள் பட்டப்பின் படிப்புகள் புலமைப் பரிசில்கள் போன்றவை சம்பந்தமான மேலதிகமான விபரங்கள், விண்ணப்பப் படிவங்கள் தேவைப் படுவோர் உடனடியாகப் பின்வரும் முகவரிக்கு எழுத்து முலம் விண்ணப்பிக்கவும்.
Refugee Studies Programme,
Oueen Elizebeth House, 21, St. Giles, OXFORD OX1 3LA, U.K.
Tel: O865 270722
Fax. O865 270721
Îf - 63Fů6 JDL JÍ 1993

Page 3
தார்சி வித்தாச் ஒரு மனிதநேயப்
,புகழ்பெற்ற இலங்கைப் பத்திரிகையாளரும் نسيمهمة எழுத்தாளருமான தார்சி வித்தாச்சி, கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரில், தனது 72ஆவது வயதில் காலமானார். 1958இல் இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றிய நூலை வெளியிட முயன்றபோது அவசரகால விதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் அங்நால் வெளிவருவதைத் தடை செய்தது. ஆயினும் முயற்சியில் தளராது, இலண்டனுக்கு வந்து அங்குரலை வெளியிட்டார். ஆனால், இலங்கையில் அங்நால் தடைசெய்யப்பட்டது. 1958 நவம்பரில் வெளியிடப்பட்ட அந்நூல் ஒருமாத காலத்திற்குள் முழுப் பிரதிகளும் விற்பனையாகிவிடவே,அநேகரின் வேண் டுகோளுக்கிணங்க டிசம்பர் மாதம் இரண்டாவது பதிப்பு வெளிவந்து பெருமளவு விற்பனையைப் பெற்றது. SWR.D. பண்டாரநாயக்கா, சிறிமாவோ ஆகியோரின் அரசுகள் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு நெருக்கடிகளைக் கொண்டுவர, அதனை அவர் காரசாரமாகக் கண்டித்து எழுதியமையினால், 1960களில் வெளிநாடுகளிலேயே வாழவேண்டிய கிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.
தார்சி வித்தாச்சி, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஹொரண எனும் இடத்தில் உள்ள தக்சில வித்தியாலயத்தின் தலைமை யாசிரியராகப் பணியாற்றிய பின், இலங்கை வங்கியின் கணக்காளராகவும் பணி புரிந்தார். மேற்படி பதவிகள் எதி லும் தனது திறமைகளை வெளிக்கொணர முடியாது என உணர்ந்து, தனக்குப் பொருத்தமான துறை எது எனும் தேட லில் ஈடுபட்டார். அக்காலகட்டத்தில் லேக் ஹவுஸ் நிறுவ னத்திற்குப் பத்திரிகைத் துறையில் பணியாற்ற விண்ணப்பஞ் செய்திருந்தார்.
அக்காலத்தில் பிரபல ஆங்கிலப் பத்திரிகையாசிரியரான எஸ்மன்ட் விக்கிரமசிங்க லேக் ஹவுஸ்ஸுக்கு வந்த விண்ணப் பங்களைப் பரிசீலிக்கையில், தார்சி வித்தாச்சியின் விண்ணப்பம் அவரது கவனத்தையீர்க்கவே, வித்தாச்சியை உடனடியாக அழைத்து லேக் ஹவுஸ் பத்திரிகைக் குழுவில் எழுத்தாளராகச் சேர்த்துக் கொண்டதுடன் தனக்குக் கீழ் சிறிது காலம் கேர டிப் பயிற்சியையும் கொடுத்தார். வித்தாச்சியின் திறமைகள் கிருபணமாக, 32 வயதிலேயே ஒப்சேவர் பத்திரிகையின் பிர தம ஆசிரியர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
துடிப்பான இளைஞரான வித்தாச்சி தனது கவர்ச்சிகரமான எழுத்துக்கள் முலம், பாரிய அளவில் வாசகர்களைக் கவர்ந் ததுடன், ஞாயிறு ஒப்சேவர் எப்போது வரும் என அவர்க ளை ஆவலுடன் காத்திருக்கும் வகையில் எழுதி வந்தார். அவரது அரசியல் சமுகப் பிரச்சினைகள் பற்றிய விமர் சனங்கள், Fly by Night என்ற புனைபெயரில் எழுதிய Bambalawatte Boys எனும் படைப்பு வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டன.அவை தவிர The Brown Sahib, The Brown Sahib Revisited legiu distaid,6061Tuyub Qaj6tf யிட்டார். ஒப் சேவர் பத்திரிகையில் பல்வேறு கட்டுரை களையும், பிற நூல்களையும் அவர் எழுதியிருந்தாலும் Emergency 58: The Story Of Ceylon Riots 67 g/Lib DistGa) அவருக்குச் சர்வதேசப் புகழை ஈட்டிக் கொடுத்தது.
அந்நூல், 1958 மே-ஜூன் மாதங்களில் ஊரடங்குச் சட்
மீட்சி - செப்ரெம்பர் 1993
 

自
பத்திரிகையாளர்
J.6)3FT356öT
டம் அமுலில் இருந்த இரவுகளில் கிடைத்த ஓய்வு நேரங் களில் எழுதப்பட்டது. பிறப்பால் சிங்களவரான வித்தாச்சி, எதுவித பாரபட்சமுமின்றி சிங்கள, தமிழ்த் தலைவர்கள் கடந்துகொண்ட முறைகள் கலவரத்திற்குக் காரணமாக இருந்தமை, கலவரத்தில் பெளத்த மதவாதிகளின் பங்கு, பாதுகாப்புப் படைகளின் பொறுப்பற்ற செயல்களால் கலவரங்கள் வேகமடைந்தமை, இலங்கையின் ஒவ்வொரு மாகாணங்களிலும் கலவர காலங்களில் இடம்பெற்ற நிகழ்ச் சிகள் என்பனவற்றையும் மிகுந்த சிரமத்துடன் தொகுத்து அந்நூலில் வெளிப்படுத்தியுள்ளமை மிகவும் பாராட்டைப் பெற்றது.
மரபுவழியாக இருந்து வருகின்ற சமுக, பொருளாதார முறைகளும், காட்டு மக்களுக்கிடையிலான உறவுகளும் மாற்றங்களைத் தழுவுதல் ஒர் இன்றியமையாத விடயமாகும் என்பதை நூலில் ஒத்துக்கொண்டுள்ளார். 1948இல் அமைதி முறையில் இலங்கை சுதந்திரமடைந்ததும், உலகில் ஜனநாயக மரபுகளுக்கு இலங்கை ஒர் எடுத்துக்காட்டாக இருக்கப் போகிறது என அக்காலத்தில் அறிஞர்கள் எதிர்பார்த்ததாகவும், மேற்கூறப்பட்ட மாற்றங்களையும் ஒர் நாகரிகமான முறையிலேயே இலங்கை எய்தும் என அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசியல் லாபம் கருதிய படித்த சிங்களத் தலைவர்களதும் பிக்குமார் களதும் அவசர புத்தியே 58 கலவரத்தை ஏற்படுத்தி மனித இழப்புகளையும் சொத்து காசத்தையும் ஏற்படுத்தி விட்டன எனக் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.
பாகிஸ்தான், இந்தியா, பர்மா போன்ற நாடுகளில் இனக்கலவரங்கள் கடந்துகொண்டிருக்கும் வேளைகளில் அங்கு வறுமையுடன் தொடர்பான பொருளாதாரக் கார ணங்களே முக்கிய பங்கை வகிக்கின்றன, ஆனால் இலங்கை மேற்படி காடுகளைவிட, பொருளாதாரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் சுதந்திரத்தின் பின் நல்ல நிலையில் உள்ளமை யாலேயே இங்கு மேற்படி அனர்த்தங்கள் ஏற்படாதென எதிர்பார்த்திருந்த வேளையிலேயே இவ்வனர்த்தம் கடந்து அவரைத் திகைப்படையச் செய்தது. மனித வர்க்கம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒர் இனப்படுகொலை நிகழ்ச்சி இது என வர்ணித்துத் தமிழ் மக்கள் இனித் தொடர்ந்தும் ஒரு காட்டினராக வாழமுடியாத காலம் உருவாகி விட்டதா என வும் அந்நூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
1958களைத் தொடர்ந்து இலங்கையில் இன்றுவரை கடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை ஆய்ந்து வரும் சர்வ தேச, இலங்கை அறிஞர்கள் மேற்படி நூலைத் தமது ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி வருவதிலிருந்து இந்நூலின் முக்கியத்துவம் சகலருக்கும் புரியும் எனலாம். நூலின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் கலவரச் சம்பவங்கள் வெகு நுட்பமாகக் கையாளப்பட்டு இருந்தாலும், கொடுமைகள் தர்மாவேசத்துடன் கண்டிக்கப்படுகையில் ஆசிரியரின் மனித நேயம் புலப்படுகிறது. பல இடையூறுகளையும் தாண்டி இந்நூலை ஆசிரியர் வெளியிட்டமையால் இலங் கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை சர்வ தேச சமுகத்திற்கு வெளிக்கொணரப்பட்டதுடன் அத்தகைய கொடுமைகளைக் கண்டிக்கும், அருவருப்புடன் நோக்கும் (தொடர்ச்சி1ஆம் பக்கம்)
3

Page 4
தமிழ் அகதிகளும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணைக்குழுவும்
g காட்டில் இருந்து தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புதல் 1992 ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பித்ததில் இருந்து, ஐ.நா.அகதிகள் உயர் ஆணைக்குழு தமிழ் அகதி கள் விடயத்தில் பங்கேற்றது. 1992 நவம்பர் மாதம் வரை ஏறத்தாழ 30,000 தமிழர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப் பப்பட்டுள்ளனர். 1992 நவம்பர் மாதத்தில் இடைநிறுத்தப்பட்ட இத்திட்டம், 1993 ஒகஸ்ட் 13ஆம் திகதி மீண்டும் தொடங் கப்பட்டது. ஒகஸ்ட் மாதம் முடிவுவரை சுமார் 4,500 அகதி கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் கிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமை குறித்து ஐ.நா. அகதிகள் உயர் ஆணைக்குழு 1992 மே மாதத்தில் இந்தியப் பிரதமருக்கு அதன் கவலையைத் தெரிவித்திருந்தது. எனினும், இலங்கையின் கொந்தளிப்பு நிலை தணியாதபோதும், அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தில் தான் பங்கேற்பதாக இந்திய அரசுடன் ஜூலை மாதம் 28ஆம் திகதி கடிதங்களைப் பரிமாறிக்கொண்டது. தொடரும் யுத்த கிலையிலும், வலுக்கட்டாயப்படுத்தும் வகையில் மீளக்குடியமரும் வாய்ப்பற்ற கிலையிலும், இவ்வாறான நடவடிக்கையில் ஐ.நா.அகதிகள் உயர் ஆணைக்குழு தலையிடுதல் பற்றி அரசு சார்பற்ற நிறுவனங்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தின.
(2) வலுக்கட்டாயப்படுத்தி திருப்பியனுப்பும் முயற்சிகள் பற்றி ஆதாரம் உள்ளது. 50% அகதிகளையே தம்மால் கண் காணிக்க முடிந்ததென்பதையும் உயர் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அரசு சார்பற்ற நிறுவனங்கள் அகதி முகாம்களில் நுழைவதை 1993இல் தமிழக அரசு தடை செய்துள்ளது. அகதிகளை காடு திரும்ப இணங்க வைப் பதில் காவல்துறையினரின் பயமுறுத்தலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
(3) காடு திரும்பிய அகதிகள் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவியலாது பல இடங்களில் முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். உயர் ஆணைக்குழு நீண்டகால இருப்பினை எதிர்நோக்கி சில முகாம்களை நிர்வகித்து வருகின்றது. அதன் பேசாலை முகாமிலிருந்து .ெJ.ஆனந்த் கைதாகி கொழும்பு மகசீன் சிறையில் இன்றும் வாடுகின்றார். நாடு திரும்பியK.மகேந்திரன் வேறு அறுவருடன் தெகிவளையில் கைதானார். பேசாலை முகாமிலிருந்த 18 பேர் தள்ளாடி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு இன்னும் களுத்துறைச் சிறையில் உள்ளனர். இதேபோன்று R.சந்திரசேகரனும் பேசாலையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி, இன்னமும் மகசீன் சிறையில் காலம் கழிக்கிறார். ஜூலை 4இல் இந்த முகாமைச் சேர்ந்த கால்வர் பஸ் தரிப்பு கிலையத்தில் கைது செய்யப்பட்டபின் காணாமற் போயுள் ளனர். அகதி முகாம் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திச் சிலர் காயப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஒகஸ்ட் மாதத்தில் முதல் 24 நாட்களும் ஐ.கா.அகதிகள் ஆணைக்குழுவின் ஆசிக்குளம், வேப்பங்குளம் ஆகிய முகாம்களுக்கு உணவு கிடையாமற் போனது.
ஐ.கா.அகதிகள் ஆணைக்குழு கிர்வகிக்கும் உப்புவெளி முகாம் பொலிசாரின் சோதனைக்கு உள்ளாயிற்று. 7ஆம் திகதி கப்பலில் வந்திறங்கியோரே இவ்வாறான நிலைக்குத்
4.

UNHCR gargi
தள்ளப்பட்டனர். ஐ.நா.அகதிகள் உயர் ஆணைக்குழு அதி காரிகள் இதனை வெகுவாக கண்டித்தபோதும் சோதனை கைவிடப்படவில்லை. 5 தினங்களுக்கு முன்னர் ரமேஷ் என்ற 16 வயது இளைஞர் அரசை ஆதரிக்கும் தமிழ்க்குழு ஒன்றினால் எடுத்துச் செல்லப்பட்டார். உயர் ஆணைக்குழு அதிகாரிகள் தமது எதிர்ப்பைக் காட்டியபோது, அவரின் தடுப்புப்பற்றிய கடிதம் அதிகாரிகளுக்குக் கையளிக்கப்பட்டது.
(4) தமிழகத்து அதிகாரிகள் வலுக்கட்டாயப்படுத்தி திருப்பியனுப்பப்படுவதுடன் உயர் ஆணைக்குழு துணை போவது அதன் கடப்பாட்டுக்கு விரோதமான செயலாகும். அகதிகளின் பாதுகாப்பை பேணவேண்டிய உயர் ஆணைக்குழு தினமும் மரணங்கள் விளையும் இடங்களுக்கு அவர்களை இட்டுச்செல்ல வழிகோலுகின்றது. உண்மையில் மேற்கத்தைய நாடுகளில் இருக்கும் அகதிகளைத் திருப் பியனுப்ப முன்னோடியாகவே தமிழகத் திருப்பியனுப்பலில் உயர் ஆணைக்குழு தன் பங்களிப்பை வழங்குகின்றது.
சென்றமாத ஆரம்பத்தில் இலங்கை அரசு விதித்த கடல் வலயக் கட்டுப்பாட்டினால் 100,000 குடும்பங்கள் தம் சீவ னோபாயத்தை மேற்கொள்ள முடியாமலுள்ளது.
(5) இலங்கையிலுள்ள நிலைமையை நன்கு அறிய முடி யாத தனது கிலைப்பாட்டை உயர் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ள அதேவேளை மற்றைய நாடுகளில் விண்ணப்பித்து கிராகரிக்கப்பட்ட அகதிகளை இலங்கையின் தென்பகுதிக்கும் மத்திய பகுதிக்கும் பாதுகாப்பாகவும் மதிப்புடனும் அனுப் பலாமென 92ஆம் ஆண்டு ஜூன் 25இல் சிபார்சு செய் துள்ளது. இதனையடுத்து சுவிஸ், டென்மார்க், நோர்வே அரசுகள் தமிழ் அகதிகளை திருப்பியனுப்ப யோசித்து வரு கின்றன. தனது சிபார்சினை உயர் ஆணைக்குழு 93 ஜூனில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
(6) கொழும்பிலுள்ள மேற்கத்திய ராஜதந்திரிகள் 92 கவம்பர் மாதம் கூடி தமிழ் அகதிகள் திருப்பியனுப்பல் பற் றிய வேலைத்திட்டம் ஒன்றை அங்கீகரித்தனர். இதில் ஈடு படவும் உயர் ஆணைக்குழு இணங்கியுள்ளது. சுவிஸ் அரசு ஒக்டோபர் மாதமளவில் இதனை நடைமுறைப் படுத்தவுள்ளது. திருப்பியனுப்புதலைச் சிபார்சு செய்த உயர் தானிகராலயம்
(தொடர்ச்சி7ஆம் பக்கம்)
lift í: - (old [16] [i:Lili 1993

Page 5
ର)ର0öTLଭ011କରି)
JõgT TTID3TL)
(p. 6i? ILI JT3g6öT
因。 ராமசாமி, கவீன தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாளி. தொ.மு.சி.ரகுநாதனின் சாந்தி இதழ் முலம் நவீன இலக்கியத்துள் அடிவைத்த இவர் சிறுகதை, குறுநாவல், கவிதை, காவல், நாடகம், விமர் சனம், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு துறைகளுக்கும் தன் ஆளுமைச் சிறகை விரித்துக்கொண்டார்.
இவரது சிறுகதைகள் அக்கரைச் சீமையில், பிரசாதம், பல்லக்குத் தூக்கிகள், பள்ளம் ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. (இக்காலு தொகுதிகளின் சிறுகதைகளையும் தொகுத்து சுந்தர ராமசாமி சிறுகதைகள் என்ற பெயரில் கிரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.) இவரது ஆரம்பகாலச் சிறுகதைகள் மிக நேர்த்தியான யதார்த்தவாதப் படைப்புகளாக இன்றுவரை கணிக்கப் படுகின்றன. பிரசாதம் தொகுதிச் சிறுகதைகள் இன்று உள்ள ஆளுமையும், கலை ஆற்றலுமிக்க சு.ரா.வைச் சுட்டும் சமிக்கைகளாக இருந்தன. பிற்பட்டகாலக் கதைகள், கோட்பாட்டுச் சப்பாத்துக்களின் கீழ் மனித உணர்ச்சிகளை கசித்துவிடாது, வாழ்க்கை சார்ந்த அனுபவ விசாரணைகளாகவும், உள்மனத் தேடல்களாகவும் விளங்கு கின்றன.
1966இல் வெளியான முதல் காவலான ஒரு புளியமரத்தின் கதை, வெளிவந்த காலத்திலேயே சமுகப் பிரச்சினை மிக்க ஒரு வித்தியாசமான காவலாகக் கருதப்பட்டது. இவரது இரண்டாவது நாவலான ஜே.ஜே.சில குறிப்புகள் நவீன தமிழ் இலக்கியக் களத்தில் மிகுந்த வாதப் பிரதிவாதங்களை எழுப்பியது; இன்னும் தொடர்கிறது. புதுமைப்பித்தனைக் கணக்கிலெடுக்காது தமிழ்ச் சிறுகதைகள் பற்றி எவ்வாறு ஒருவர் பேசமுடியாதோ அவ்வாறு ஜே.ஜே.சில குறிப்புகளை கணக்கில் எடுக்காமல் காவல் பற்றிப் பேச முடியாது என்ற நிலை ஆகிற்று.
பசுவய்யா என்ற பெயரில் இவர் எழுதிய கவிதைகள் கடுகிசி காய்கள், யாரோ ஒருவனுக்காக எனும் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சு.ரா.கட்டுரைகள், பிச்சமுர்த்தியின் கலை - மரபும் மனிதநேயமும் ஆகிய நூல்களினதும் ஆசிரியரான இவர் தகழி சிவசங்கரம் பிள் ளையின் செம்மீன் மலையாள நாவலை சாகித்திய அகட
ta - GJ GJD i 1993

மிக்காக தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார். தனித்துவம் மிக்க காலச்சுவடு காலாண்டு இதழின் ஆசிரியர் இவ ரால் தொகுக்கப்பட்ட புதுமைப்பித்தன் கினைவு மலர் மிகுந்த கவனத்தைப் பெற்ற ஒன்று.
மிகுந்த மொழி ஆளுமை கொண்டவர். அவை கேர்த் தியானதும் கவித்துவத்தன்மையும் வாய்ந்தவை. பாரதி, புது மைப்பித்தன் போல் தனக்கேயான தனி மொழி வளம் கொண்டவர்.
இலக்கியத் தலைமுறை இடைவெளிகளைத் தாண்டிய சு.ரா. ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியத் தளத் தில் தீவிரமாக இயங்கியவர். ஸ்ராலினின் எதேச்சாதிகாரப் போக்கினால் விலகினார். தமிழ் மனங்களின் மேன்மைக்கு, நவீன சிந்தனைகளின் சகல வீச்சுகளும் தமிழில் வந்துசேர வேண்டும் என ஏங்கும் சு.ரா. வணிக இலக்கியத்திற்கும், ரொமான்ரிசப் போக்கிற்கும் கடுமையான எதிரியுமாவார்.
சமீபத்தில் லண்டன் வந்திருந்த திரு. சுந்தர ராமசாமி அவர்கள், 17.09.93 அன்று லண்டன் தமிழ் ஸ்தாபனங்களால் ஒழுங்கு செய்யப்பட்டு, லண்டன் பல்கலைக்கழக கீழைத்தேய ஆபிரிக்கக் கல்வி நிறுவனத்தின் விரிவுரை மண்டபத்தில் கவீன தமிழ் இலக்கியத்தின் போக்குகள் என்ற தலைப் பில் உரையாற்றினார். இதன் பின்னர் 19.09.93இல் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினரால் வோல்தம்ஸ்ரோ வில்லியம் மொறிஸ் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.
நவீன தமிழ் இலக்கியத்தின் போக்குகள் பற்றி உரை யாற்றும்போது 20ஆம் நூற்றாண்டில் பாரதிக்கும் தமிழுக்கும், பாரதிக்கும் காலத்திற்குமான உறவை ஒரு நவீன எழுத் தாளன் செம்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும். 1905 ஆம் ஆண்டு, அப்பொழுது பாரதிக்கு வயது 24 அல்லது 25 இருக்கலாம். அப்போது தமிழில் வசனம் சார்ந்து எழுதப் படுபவை இலக்கியமா என்ற சங்தேகம் இருந்தது. புதுக் கவிதைகளில் இருக்கக்கூடிய சிறிய வழுக்களை எடுத்துக்காட்டி அவை கவிதையாக ஏற்றுக்கொள்ள முடியாது என அறி ஞர்கள் கூறிக்கொண்டிருந்த காலம், கவிதைக்குப் புதிய
5

Page 6
SS பொருள் வரும்பொழுது இது மரபு சார்ந்த பொருள் அல்ல. ஆகவே இது உயர்வான கவிதையாக இருக்க முடி யாது எனத் தமிழ்நாட்டுப் புலமை சார்ந்த அறிஞர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வேளையில் புதிய பொருளைக் கவிதைக்குக் கொண்டுவந்து, சர்வதேச இலக் கியத்திற்கு ஈடான கவிதைகளை உருவாக்கித் தன்னுடைய சிந்தனைகளை, பத்திரிக்கைத் தொழில், சமுக இயல், இசை, பெண்கள் பற்றிய சிந்தனைகள் என்று எல்லா முனைகளிலும் வளர்த்துக்கொண்ட விதத்தில் அவர் இயங் கிய பத்து ஆண்டு காலத்தில் தமிழுக்கும் சர்வதேச காலத் துக்குமாக இருந்த பிரமாண்டமான இடைவெளியை அவர் அற்புதமாக நிரப்பினார். இந்த நிகழ்ச்சிகளிலிருந்து பெற்ற அதிர்வுகள்தான் இன்றுவரை தமிழின் உந்து சக்தியாக வந்து கொண்டிருக்கிறது.
இதன் பின்னர் 1922, 23வாக்கில் வ.வே.சு.ஐயர், முதன் முதலாக தமிழ்க் காப்பியங்களை சர்வதேசக் காப்பியங்களுடன் ஒப்பிட்டு, குறிப்பாக கம்பராமாயணம், உலகத்தில் இருக் கக்கூடிய மிகச்சிறந்த காப்பியங்களுக்கு நிகரான காப்பியம் என்று காவியம் சார்ந்த அடிப்படைகளை அறிந்து நுட் பமாக எடுத்துச் சொன்னார். அது தமிழனால் சர்வதேச அளவில் ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ப தற்கு ஒரு புறவயப்பட்ட சான்று.
1932, 33 அளவில் மணிக்கொடி தோன்றுவதற்கும் அதைச் சுற்றி பல்வேறுபட்ட எழுத்தாளர் தோன்றுவதற்கும் இந்த இரண்டு விசயங்கள் ஒரு அடிப்படையை உருவாக்கி இருக்கக்கூடும் என்று, அந்த விளைவுகளைத் திரும்பிப் பார்க்கும்போது கமக்கு ஏற்படு கிறது. இந்த வ.வே.சு.ஐயர்தான் தமிழ்ச் சிறுகதையின் உரு வத்தை ஒரளவு அறிந்திருக் கிறார் என தமிழ்நாட்டு விமர் சகர்கள் கூறுகிறார்கள். என்ன ளவில் அக்கூற்று சற்று மிகை யாகவே தெரிகிறது என்றாலும், அவரது குளத்தங்கரை அரச மரம் சிறுகதையைப் படிக்கும் போது, சிறுகதை சம்பந்தப்பட்ட பிரக்ஞை, முக்கியமாக சிறுகதை சம்பந்தப்பட்ட தொனியில் ஆழ்ந்த நுட்பமாகச் சிறுகதை களைப் புரிந்துகொண்டிருக்கி றார் என்ற எண்ணம் ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் பி.எஸ் ராமையா எழுதிய கட்சத்திரக் குழந்தைகள்தான் தமிழின் முதல் சிறுகதை; தமிழன் சிறு கதையை வென்றதற்கான முதல் அடையாளம்,
பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமுர்த்தி, கு. பா.ரா., சி.சு.செல்லப்பா, மெளனி இவர்கள் எல்லோரும் சராசரி இலக்கியத் திறனைத் தாண்டிச் சென்றவர்கள். ஆங் கில இலக்கியத்தின் முலம் சிறுகதை வடிவத்தை அறிந்தவர்கள்; ஒவ்வொருவரும் வெவ்வேறு உலகத்தைப் படைத்திருக் கின்றார்கள். இதுபோல் ஒரு சிறு பத்திரிகையைச் சுற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் கூடிவருவதும் அவர்கள் செயல் படுவதும் உலக இலக்கிய வரலாற்றில் அபூர்வமாக நிகழக் கூடியது என நான் நினைக்கிறேன்.
இந்தவேளை பாரதிக்கு நிகராகப் புதுமைப்பித்தன் என்ற மேதை தமிழ் வசனத்தை படைப்பிற்குரிய நவீன சாதன மாக்கிக் காட்டினார். பாரதி தமிழை எப்படி கவிதைக்குரிய நவீன சாதனமாக்கிக் காட்டினாரோ, கவிதை நீங்கலான ஏனைய உருவங்களுக்கு ஏற்ற மொழி இதுவென்ற கிரு பணம் புதுமைப்பித்தன் முலம்தான் உறுதியாயிற்று. இவர்
6
 

1940 - 44க்கும் இடையில் பத்துப் பதினைந்து அற்புதமான சிறுகதைகளை - உலக இலக்கியத்திற்கு நிகரான கதை களை எழுதியிருக்கவில்லையென்றால் அவர் பெயரை இன்று நினைவுகூரவேண்டிய அவசியமில்லாமல் போயிருக் கலாம். இதேபோல் இன்னொரு தளத்தில் இயங்கியவர் மெளனி, 1942ஐ ஒட்டிய காலப்பகுதிகளில் வெளிவந்த க.நா.சு.வின் பொய்த்தேவு நாவல் முலம், காவல் என்ற இலக்கிய வடிவம் தமிழனுக்குக் கைகூடி வரக்கூடியதுதான் என்று ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மிகச்சிறந்த எழுத்தாளர்கள் சிறுகதை ஆசிரியர்களாக, நாவலாசிரியர் களாக, கவிஞர்களாகத் தொடர்ந்து வந்திருக்கின்றார்கள். இந்தவொரு ஜீவநதியின் போக்கானது, 1903இலிருந்து 1993 வரை தொடர்ந்து பல்வேறு கிளைகளைப் பரப்பி, பல்வேறு சாயல்களைக் காட்டிக்கொண்டு வந்திருக்கின்றன.
இதற்கு மாறாக, இன்னொரு போக்கானது மனித மனங் களைச் செம்மைப்படுத்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்று எழுதுவதற்கு அப்பால் வியாபாரக் கூறுகள் அடங் கிய, மனித வாழ்வு பற்றி எந்தவிதமான சிந்தனையுமில்லாத, சுவாரசியம் ஒன்றே அடிமுச்சாகக்கொண்ட, பாலுணர்வுகளை, வன்முறைகளை மறைமுகமாகத் தூண்டக்கூடிய, மோஸ்தர் வாழ்க்கை என்று கம்பக்கூடிய, கனவுகளில் வாசகர்களை ஆழ்த்தக்கூடிய ஒரு போக்கானது 1942இல் இருந்து இன்று வரை ஒரு விஷவிருட்சமாகக் கிளை பரப்பி தமிழர் வாழ்வை மிக மோசமாகச் சீரழித்துக்கொண்டு வருகிறது என நான் கம்புகிறேன்.
எல்லாச் சமுக அமைப் புகளிலும் இவ்வாறு இருவித போக்குகளும் இருக்கின்றன. ஆயினும் மற்றைய சமுகங்க ளில் இந்த வணிகநெறி சார்ந்த தரக்குறைவிற்கும், மற்றைய வாழ்க்கைநெறி சார்ந்த படைப் பாளிகள் முன்வைக்கும் மதிப் பீடுகளுக்குமிடையே பிரித்துப் பார்க்கக்கூடிய பார்வை யானது, பிற சமுகங்களில் மிகத் தெளிவாக இருக்கிறது. இந்தத் தெளிவானது தமிழ் சமுகத்தில் இல்லாமல் இருக் கிறது. இது தமிழகம் சார்ந்த ஒரு பிரச்சினை மட்டுமே. இந்த இழிவு, இந்தச் சமுக அகோரம் தமிழகத்தில் மட்டும்
தான் உள்ளது.
இன்று பல்வேறுபட்ட சமுக நெருக்கடிகளினால் தமது மண்ணைவிட்டு வெளியேறி, சர்வதேசியளவில் பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளவும் அக்கலாசாரத்தின் எளிமை, உழைப்பு, சாதனை, வாழ்க்கையை நெறிப்படுத்தும் விதம், மனித ஆளுமைக்கு அவர்கள் தரும் இடம் இது போன்ற பல்வேறுபட்ட விடயங்களைக் கண்கூடாகப் பார்க்கக்கூடிய தமிழர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்க் கலாசாரத்தைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதுதான் எனது அடிப்படைக் கேள்வி. இதிலிருந்து மேற்கொண்டு சிந்தித்து, தமிழ்நாட்டிலிருக்கும் தீவிரமான எழுத்தாளர்களும் மற்ற தேசத்தில் வாழக்கூடிய தீவிரமான எழுத்தாளர்களும் தமிழ் வாழ்வு மேன்மையடைய வேண்டும் உயர்வடைய வேண்டும் என்ற கம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஒரு கல்லுறவை ஏற்படுத்தி, கருத்துப் பரிமாற்றத்தை ஏற் படுத்தி தமிழ்நாட்டிலிருக்கக்கூடிய அவலத்திலிருந்து தமி ழனுடைய வாழ்க்கை சார்ந்த நெறிகளைத் தனியாகப் பிரித்து உறுதிப்ப்படுத்த முடியுமா என்பதுதான் எனது சிங் தனையாயிருக்கிறது என்று கூறித் தனது உரையை முடித் துக் கொண்டார்.
baf - Gld GLi 1993

Page 7
SSSSSS
இதன் பின்னர் ஈழத்து இலக்கியம் பற்றியும், வணிக இலக்கியம் பற்றியும், கள இலக்கியம் பற்றியும், ஜே.ஜே. சில குறிப்புகள் காவல் பற்றியும் அவையிலிருந்தோர் கேள்விகள் கேட்டார்கள். அவற்றிற்கு திரு. சு.ரா. பதில ளித்தார்.
ஆனால் தமிழ்நாட்டின் இலக்கிய அவலத்திலிருந்து அதை மீட்டு தமிழ் வாழ்வு மேன்மையுற என்னென்ன செய் யவேண்டும் என்ற அவர் முக்கிய கூற்றின் அடிப்படையில் எந்தவிதமான கேள்வியும் எழுப்பப்படவேயில்லை.
19.09.93இல் நடந்த கலந்துரையாடலின்போதும் தமிழ் நாட்டின் மதிப்பீடுகள் சார்ந்து மிக மோசமான நிலை, எந்த மதிப்பீடுகளைப் போற்ற வேண்டும் எந்த மதிப்பீடுகளை விமர்சித்து ஒதுக்க வேண்டும் என்ற தெளிவில்லாத நிலை பற்றிக் கூறி இந்த மொத்தச் சூழலில் வெளிப்படுகின்ற எழுத் துக்களை முன்று விதமாகப் பிரித்தார். 1. வணிக எழுத்து, 2. எழுத்தாளர் இயக்கம், 3. கலைஞருடைய படைப்புகள்.
வணிக இலக்கியம்: வாசகர் சங்தையை நுட்பமாகவும் திறமையாகவும் சுரண்டி, சஞ்சிகை விற்பனைக்கான சரக் காக இதைத் தயாரித்து விற்பனையைப் பெருக்குதல். இது போன்ற படைப்புகளில் ஒரு ஆழமான பார்வையோ, தமிழ் வாழ்க்கை சார்ந்த விமர்சனமோ இல்லை.
எழுத்தாளர் இயக்கம்: இவர்கள் சமுக அக்கறையுள்ளவர் கள் சமுகத்தில் ஒரு மாற்றம் கிகழவேண்டுமென நம்புபவர்கள்; தங்கள் எழுத்துக்கு உண்மையாக இருக்கக்கூடியவர்கள். ஒரு புதிய தத்துவத்தைக் கற்றுக்கொண்டு அதன் முலம்
தமிழ் அகதிகளும். (4ஆம் பக்கத் தொடர்ச்சி)
அவர்களின் பாதுகாப்பிற்குத் தாம் பொறுப்பல்ல என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அகதிகளின் குறைபாடுகளிருக்குமிடத்து அதனை இலங்கை அரசுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் அறிவிப்பதை மட்டும்தான் செய்யமுடியுமெனக் கூறியுமுள்ளது. ஆகஸ்டு 93இல் சுவிஸ் அரசின் குழுவொன்று கொழும்பு சென்று நிலைமையை அவதானித்துள்ளது. முதற்கட்டமாக 400 அகதிகள் திரும்பலாம் என ஊகிக்கப்படுகிறது.
(7) கொழும்பில் தமிழர் பாதுகாப்புப்பற்றி வெளியுறவு அமைச்சின் அறிக்கை கிடைக்கும்வரை அகதிகள் பற்றிய முடிவுகளை, டென்மார்க் 0/09/92இலிருந்து இடை நிறுத்தியது. உயர் தானிகராலயத்தின் முற்கூறிய சிபாரிசின் அடிப் படையிலேயே இந்த முடிவும் எடுக்கப்பட்டது. 23/09/92இல் உத்தியோகப் பற்றற்ற முறையில் மேற்கத்திய நாடுகள் நடத்திய ஜெனிவாக் கூட்டத்தில் நாடு திரும்பலுக்கு அதி காரிகள் பச்சைக்கொடி காட்டியதாக அறிக்கைகள் கூறு கின்றன. இதே கூட்டத்தில் உயர் தானிகராலயம் மேலோட் டமான தனது முறையிடும் பணியைச் செலுத்த மீண்டும் இணங்கியதாகவும் நம்பப்படுகின்றது.
(8) கொழும்பில் மேற்கத்தியத் தூதுவர் நடத்திய கூட்டத் திற்கான பூர்வாங்க நடவடிக்கையை நோர்வேதான் எடுத் துள்ளது. கோர்வே அரசு அதிகாரிகள் கணிப்பின்படி அங்கு வந்தடையும் தமிழ் அகதிகள் பத்துப்பேரை எடுத்தால் எட்டுப் பேர் “போலியானவர்கள்",
(9) கடற்படைத் தளபதி, லலித் அதுலத்முதலி, பிரேம தாச ஆகியோரின் கொலைகளின் எதிரொலியாக கொழும் பிலும் தெற்கிலும் நூற்றுக்கணக்கான தமிழர் கைதாகினர். இதில் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களும் பெண்களும் அடங்கினர். தினமும் 100 தமிழர் கைதாவதாகவும் சில அரசுசார்பற்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வழக்குத் தாக்கலாகாமல் 2,3 வருடங்களாகச் சிறைவாசம் செய்யும் தமிழரும் உள்ளனர். (ஆட்கொணர்வு மனுக்களுக்கு ஏற் படும் பெரும் செலவு காரணமாக ஒரு சிலர் பற்றியே
மீட்சி - செப்ரெம்பர் 1993

வாழ்க்கையை மாற்றலாம் என கம்புபவர்கள் பெரும்பாலும் எதார்த்தத் தளத்தில் இயங்கக்கூடியவர்கள் வாழ்க்கையின் நெருக்கடிகள் படைப்புகளில் வெளிப்பட வேண்டும். அந்த நெருக்கடிகளுக்குப் படைப்புகளிலேயே தீர்வுகாண வேண்டு மென்று நினைப்பவர்கள்.
கலைஞர்கள் வாழ்க்கையின் சாராம்சங்களை கலைப்
படைப்புகளில் மிகச் செம்மையாகவும் ஆழமாகவும், தங்கள் அனுபவங்களைக் கலையாக மாற்றுவதன் முலம் ஆழ்ந்த பாதிப்பை காலத்தின் நீட்சிக்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.
என்னுடைய அக்கறை என்பது இந்த எழுத்தாளர்களாக இருக்கக்கூடியவர்கள் தங்கள் சுயபடைப்புக்கள் சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும் என்னென்ன சிந்தனைகளுக்கு ஆட்பட் டால கலைஞாகளாக மாறுவாாகள எனபதுதான எனறும கூறி முடித்தார்.
சு.ரா.வின் எழுத்தாளர், கலைஞர் பிரிப்புமுறை பலவித மான கேள்விகளுக்கு உள்ளானது. ஆயினும் அவற்றிற்கு அவர் தனது இலக்கிய அனுபவங்கள் சார்ந்து பலவித உதா ரணங்களுடன் விரிவாக விளக்கினார். அவற்றை ஒப்புக் கொள்ளாவிடினும், பரிசீலனை செய்து பார்ப்பதற்குரிய பதில்கள் அவை.
மொத்தத்தில் சு.ரா.வின் லண்டன் வருகை இலக்கிய ஆர்வலர்களுக்கு நவீன இலக்கியத்தின் அடித்தளங்களையும், புதிய சிந்தனை முறைகளையும் அறிந்து கொள்ளவும், அவை பற்றிச் சிந்திப்பதற்கும் வழிகோலியிருக்கும். ()
இம்மனுக்கள் தாக்கலாயின.) கைதானோரில் பலரும் காணாமற் போயுள்ளனர். பிரதமருடன் தமிழ்க் கட்சிகள் கண்டபடி கைதுகள் பற்றிய நடவடிக்கைகள் சில ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும் அவை நடைமுறைப்படுத்தப் படவில்லை. பெருக்தொகையான மலையகத்தவருக்கு அடை யாள அட்டை வழங்கப்படாதிருந்தும் அடையாள அட்டை யில்லாத காரணத்தின் பேரில் பலரும் கைதாகியுள்ளனர்.
(10) மலையகத்திலும் தமிழர் கைதாகியிருக்கின்றனர். தமிழன் என்றாலே சங்தேகத்திற்கிடமானவர் என்ற பிரமையுடன் புலிகளின் ஊடுருவல் பற்றிய கொழும்புச் செய்தியேடுகள் அடிக்கடி தரும் தகவல் காரணமாகவும் தமிழருக்கெதிரான வெறுப்புணர்ச்சி வளர்க்கப்படுகின்றது.
மேற்கத்திய நாடுகளிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட அக திகள் பலர் காணாமற் போயுள்ளனர்; கைதானோர் பல ரும் உள்ளனர்.
(1) இப்படியான நிலையிருந்தும் அகதிகள் உயர் ஆணைக்குழுவின நிலைப்பாட்டில் எதுவித மாற்றமுமில்லை. சுமுகத் தீர்வு வரும்வரை திருப்பியனுப்புதலைக் கைவிட இலங்கை இந்திய அரசுகளுக்கு எடுத்துரைக்கும்படி தமிழர் தகவல் நடுவம் 92 நவம்பர் 18இல் வேண்டுதல் விடுத்தது. இதுபற்றி ஆலோசிக்க மற்றைய அரசு சார்பற்ற நிறு வனங்களுடன் நடுவமும் அழைக்கப்பட்டது. 93 பெப்ரவரி 11இல் ஜெனீவாவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரச்ச னையின்(Complex) வடிவம் காரணமாக மேலும் ஒரு முழு நாள் ஆலோசனை தேவையென உயர் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டது. எனினும் பிரித்தானிய அகதிகள் சபைக் குப் பின்னர் எழுதிய கடிதத்தில் சுவிஸ் அகதிகள் நாடு திரும்பிய பின் இக்கூட்டத்தை வைத்தல் சிறந்தது என அறிவித்துள்ளது. நாடு திரும்பும் அகதிகளின் பாதுகாப்புப் பற்றிய தமது அச்சத்தை அரசு சார்பற்ற நிறுவனங்கள் உயர் ஆணைக்குழுவிற்கு எடுத்துரைத்துள்ளன. ஏசியா வோச் நிறுவனம் தனது ஆகஸ்டு 93 அறிக்கையில் இங் தியாவிலிருந்து திருப்பியனுப்பும் நடவடிக்கையைக் கைவிடும்படி கோரியுள்ளது.
7

Page 8
குடிவரவு, தஞ்சம் பற்றிய மக்கள் விசாரணை மன்று
குடிவரவுச் சட்டவாக்கம் அநீதியைத் مسابقه وو Il தன் னகத்தே கொண்டதோடு இனவாதமுடையதுமாகும். மேன் முறையீட்டுரிமை, சட்ட ஆலோசனை பெறுமுரிமை, குற்ற வாளியாகத் தீர்மானிக்கப்படும்வரை நிரபராதியாக இருக்கும் உரிமை என்ற அடிப்படை சிவில் உரிமைகள் இடையீடின்றி மீறப்பட்டுள்ளன. தனிப்பட்ட குடிவரவு அதிகாரிகள் மனோ கிலைக்கும், அரசின் நியாயமற்ற கொள்கைகளுக்குமேற்ப, குடிவரவுகள் பற்றி முடிவுகள் எடுக்கச் சட்டவாக்கம் இட மளிக்கிறது. இம்முடிவுகளும் நடவடிக்கைகளும் பற்றி எந்த ஒரு பாரபட்சமற்ற அவையும் கண்காணிக்கவோ கட்டுப்படுத் தவோ முடியாத நிலையே இப்பொழுது உள்ளது.
மேலும் இச்சட்டவாக்கத்தில் பாதிக்கப்படும் நபர்களையோ அல்லது சமுகத்தினரையோ காம் ஆராய்வோமானால், பிரித்தானியக் குடிவரவுச் சட்டம், இனவாத அடிப்படை யிலேயே உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே தடுத்து வைத்தல், நாடு கடத்தல் என்பவற்றிற்கு ஆளாவோரின் நிலையில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப் போராடுவது, ஒரு முழுமையான போராட்டமாகாது. குடிவரவு சட்டவாக்கக் கட்டமைப்பின் முழுமை வெளிக்கொணரப்பட்டு, அதுபற்றி நீதி விசாரணை கடத்தப்பட்டு, சட்டவாக்கத்தின் கீதியற்ற, மனிதாபிமானமற்ற இனவாதத் தன்மைகளை விமர்சித்து, அவற்றினை அகற்ற முயற்சிப்பதே முழுமையானதும் முறையானதுமான போராட்டமாகும்.
பிரித்தானிய அரசின் குடிவரவுச் சட்டம் எவ்வாறு மனித வுரிமை, சிவிலுரிமை போன்ற ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதென ஆராயும் நோக்குடனும் அவற்றினை எடுத்துக்காட்டும் கோக்குடனும் பல கறுப்பின சமுக தாபனங்கள், புலம்பெயர்ந்த சமுகத்தின் பிரதிநிதிகள், அகதி தாபனங்கள் ஒன்றுகூடி ஒரு மக்கள் விசாரணை மன்று (Peoples Tribunal) அமைத்து விசாரணை நடத்த கட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரித்தானிய அரசின் குடிவரவுச் சட்டத்திற்கு எதிராக கடத்தப்படவுள்ள விவாதத்தினை, பாதிக்கப்பட்ட சமுக த்தினரைப் பிரதிநிதிப்படுத்தும் தாபனங்களாலும் பாதிக்கப்பட்ட தனிநபர்களாலும் முன்னெடுத்து வைக்கப்படும். நேரடியாகப் பாதிக்கப்பட்டவரின் சாட்சியம், அவரின் அநுபவம் என்ப வற்றின் அடிப்படையில் வாதங்கள் அமையும்.
மக்கள் மன்றில் பங்கு பற்றுவோர், சட்டவாக்கமும் அதன் செயற்பாடும் எவ்வாறு மாற்றப்படவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பர். இக்கோரிக் கைகளின் அடிப்படையில் இனவாதக் குடிவரவு, அகதிச் சட்டவாக்கங்களுக்கு எதிரான பயனளிக்கும் மக்கள் பிரச் சாரம் கட்டியெழுப்பப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப, பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப் படவுள்ளன:
(அ) குடிவரவு, புகலிடச் சட்டங்களின் அடிப்படையில் சிறையிலும், தடுப்பு முகாம்களிலும் உள்ள சகலரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்;
(ஆ) இப்போது தடுப்புக்காவலில் இருப்பவர்களினதும், முன்பு பலாத்காரமாகத் திருப்பியனுப்பப்பட்டிருப்பவர்க
8
 

ளினதும் மனிதவுரிமை மீறல்களைப் பொது விசாரணைக் குட்படுத்தி, அவர்களுக்கு ஏற்பட்டதுன்பங்களைக் கண்டறிந்து, அவை சம்பந்தமான அதிகாரிகளுக்கெதிராக வழக்குத் தொடர முயற்சியெடுக்க வேண்டும்;
(இ) நாடு கடத்தப்படுவோர் மீது பாவிக்கப்படும் விலங் கிடும் முறையினை உடனடியாக தடையுத்தரவிட வேண்டும்.
(ஈ) நாடுகடத்தல், தடுத்து வைத்தல் என்பவற்றில் காவல் துறையினர், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் ஈடுபடுத்தலை முற்றாக நிறுத்துதல் வேண்டும். மேலும் தற்போதுள்ள இதற் காான விசேட குழுக்களை உடன் கலைக்கப்படல் வேண்
டும்.
சிவில் உரிமை மீறல்
இதைவிட மக்கள் மன்றில் பின்வரும் விடயங்களும் விவாதத்திற்குள்ளாக வேண்டுமென்ற கோரிக்கை பலரிடம் உள்ளது. அதாவது:
குற்றவாளியாகக் காணப்படும் வரை ஒருவர் நிரபராதியே என்ற பொதுவான சட்டவிதி குடிவரவு, தஞ்ச சட்டவாக்கத்தின் கீழ்வரும் தஞ்ச விண்ணப்பதாரிகளுக்கும் ஏற்புடையதாக விடுத்தல் வேண்டும். ஒருவர் குற்றவாளி என்று கிருபிக்கும் சுமையை வெளியுறவுச் செயலாளரே ஏற்க வேண்டும்.
எல்லா விண்ணப்பங்களையிட்டும் தற்காலிக நுழைவு அநுமதி(Temporary Admission) என்ற சட்ட இயல்பு இருத் தல் வேண்டும்.
எல்லாத் தீர்ப்புகளும், நடவடிக்கைகளும் பாரபட்சமற்ற முன்றாமவரினால் பதிவு செய்யப்படல் வேண்டும். காடுகடத் தலுக்கெதிரான மேன்முறையீட்டு உரிமை முழு அளவில் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதேநேரம் அநுமதியற்ற நுழைவுக் குற்றச்சாட்டுகளையிட்டு ஒருவர் வெளியேற்றப்படு முன்னர், மேன்முறையீட்டு உரிமையும் உருவாக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டப்பட்டவருக்குத் தன்னைப் பிரதிநிதித் துவம் செய்வதற்கு ஏதுவாகச் சட்ட நடவடிக்கை உதவித் தொகையும் இருத்தல் வேண்டும்.
ஐரோப்பியச் சமுகத்துக் குடிகளுக்கு உள்ளதுபோலவே பிரித்தானியக்குடி ஒருவரையோ அல்லது இங்கு குடியமர்ந்த வரையோ மணமுடிக்கும் எவருக்கும், எதுவிதக் குடிவரவுச் சோதனைகளுமின்றி உரிமை வழங்குதல் வேண்டும்.
காவல்துறையையும் குடி வரவு அதிகாரிகெைTயும் கண்காணிக்கும் பொறுப்பு
புதிய அகதி விண்ணப்பங்கள், தடுப்புகள், நாடுகடத்தல் பற்றி அகதிச் சமுகத்தினருக்கும் அகதி உதவித் தாபனங் களுக்கும் அதிகாரிகள் அறியத்தரும் ஏற்பாடு ஒரு ஆக்கபூர் வமான செயலாகும், தேவையுமாகும். இதன்முலம் சட்டப் பிரதிநிதிகளும் சுயேட்சையான தாபனங்களும் வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பதிவுகள் முறையாக அமையவும் மனித உரிமைகள் பேணப்படவும் உதவியாகவிருக்கும். அதேவேளை, அகதி விண்ணப்பதாரரின் அடையாளம் ரகசியமாகப் பேணப்படல் அவசியம். மேலும் தஞ்சம் கோருவோருக்கும் தடுத்து வைக்கப்பட்டோருக்கும் அறிவுரைகள், உதவிகள் கிடைக்கும் வண்ணம் அவரவர் சமுகத்தினரின் தொடர்புகளை ஏற்படுத்த அதிகாரிகள் வழி சமைத்தல் வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைக்க வழி அமைக்கும் அதேவேளை அது வலுக்கட்டாயமாக ஒரு வர் மேல் திணிக்கப்படக்கூடாது.
(தொடர்ச்சி1ஆம் பக்கம்) či - QJ JOJ ILI i 1993

Page 9
LIL/id,6ir: 1. Welcome to Canada
(கனடாவுக்கு உம் வரவு கல்வரவாகுக!)
2. A Paper Wedding
(ஒரு காகிதக் கல்யாணம்)
3. The Escape (தப்பித்தல்)
முதலிரண்டு படங்களும் கனடியத் திரைப்படங்கள். முன்றாவது படம் துருக்கிய / சுவீடியத் திரைப்படம்.
கனடாவின் மொன்றியல் நகருக்கு 2000 மைல் தொலைவிலிருக்கும் கனடியத் தீவு ஒன்றை கோக்கி, காற் றில் அடித்துச் செல்லப்படும் படகு திரையில் வருகிறது; ஓங்கி ஓங்கி வீசியெழும் அலைகள்; பனிக்காற்று; கைந்த மனிதத் தலைகள்.
படகு கரை ஒதுங்குகிறது. தீவைச் சேர்ந்த மக்கள் ஒடோடி வருகிறார்கள். முன்று இளைஞர்கள், ஒரு முதிர்ந்த பெண், அவரது பேரன், ஒரு வயது முதிர்ந்தவர், இறந்து விட்ட அவரது மகளின் சடலம்.
வயது முதிர்ந்தவர் தனது நினைவுகளை படம் முழுதும் கண்ணிரோடுதான் சொல்கிறார். இந்துமதச் சடங்குகளின் படி இறுதி மரியாதை கடக்கிறது.
மிகமிக ஆழ்ந்த புரிதலுடனும், மக்களின் மீதான அன்பு டனும் எடுக்கப்பட்ட படம், கனடாவுக்கு உம் வரவு கல் வரவாகுக!
படத்தின் வடிவம் பிரச்சினைக்கொப்ப, ஒரு கதைப் படம் போலல்லாது டொக்குமென்டரியும் (விவரணமும்) கதையும் இணைந்த ஒரு படமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த மக்களின் கதை இரண்டு விதமான பரிமாணங்களோடு சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று, இந்தப் பிரச்சினையின் வரலாற்று ரீதியான துயரம் காட்சியாகிறது. மற்றது மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மானுட அன்பு சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படம் 1989இல் எடுக்கப்பட்டது. இருவேறு காட் சிகள் மாறிமாறி வருகின்றன. வடக்கு இலங்கையில் தமிழ் மக்களின் வீடுகளும் கோயில்களும் இடிந்துபோய்க் கிடக்கின்றன. சாவுச் சடங்கு கடக்கின்றது. தேவாரப் பாடலொன்று கேட்கின்றது. அடுத்த காட்சி தமிழ் அக திகள், கனடியத் தீவு மக்களின் பல்வேறு குடும்பங்களில் தனித்தனியே பராமரிக்கப்படுவது காட்டப்படுகிறது.
அடுத்த காட்சியில் தென்னிலங்கையில் வறுமையும் அரசியல்வாதிகளின் சொற்பொழிவுகளும், தெருக்களில் கிடக்கும் பிணங்களும், சோகமயமான சிங்களப் பாட
லொன்றும் இழைந்து வருகின்றன.
அடுத்த காட்சியில் தமிழ் அகதிகள் தத்தமது சோகங்களைச்
if - 6f 6 JDL JÍ 1993
 

சொல்கிறார்கள். தமிழ்ச் சிறுவன் கனடியச் சிறுவர் சிறுமி யருடன் பனியில் விளையாடப் போகிறான்.
குங்குமமும் திருநீறும் பற்றிய தொடர்புகள் சமயத் தன்மையோடு முதாட்டியால் கனடியக் குடும்பத்திற்கு விளக்கப்படுகிறது.
காதைப் பிளக்கும் சத்தத்தோடு ராணுவ வாகனங்கள் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன. காட்டுத்தனமாகக் கத் திக்கொண்டு சிங்கள ராணுவம் மனிதர்களை வேட்டை யாடித் திரிகிறது.
மெல்ல மெல்லத் தமிழ் அகதிகள் அந்தத் தீவு மக்களின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளுக்குள் இருத்திக்கொள் ளப்படுகிறார்கள்.
இந்தக் காட்சிகள் இரவும் பகலுமாக நிஜமும் கதையுமாக மாறிமாறிச் சொல்லப்படுகின்றன.
குடியேற்ற அதிகாரிகளுக்குச் செய்தி தெரிவிக்கப் படு கிறது. குடியேற்ற அதிகாரிகள் அங்கு வந்து, கனடாவில் அத்தமிழ் அகதிகள் வாழ்வதற்கான உரிமையை அங்கீ கரிக்கிறார்கள்.
அந்தத் தீவின் தேவாலயத்தில், இறந்துவிட்ட தமிழ்ப் பெண்மணியின் இறுதி மரியாதை தமிழ்ச் சமயப் பண் பாட்டு அடிப்படையிலும், கிறிஸ்தவ மத கம்பிக்கைகளும் இணைந்ததொரு நிகழ்வாக நிறைவுறுகிறது.
இறுதியில் அகதிகள் அந்தத் தீவு மக்களிடமிருந்து விடைபெற்று, அந்தத் தீவிலிருந்து மொன்றியலுக்கு கட லில் தமது இன்னொரு பயணத்தைத் தொடர்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை மறுபடிமறுபடி பார்க்கிறபோது அதிகம் அதிகமாகக் கண்ணிரோடுதான் பார்க்க முடிகிறது. காரணம் மனிதர்களுக்கிடையிலான அன்பு இப்படத்தில் சொல்லப்பட்ட விதம். மனிதர்களின் துயரை மறற மனி தர்கள் புரிதலுடன் ஏற்கும்போது ஏற்படும் மனவிகசிப்புத்தான் அதன் காரணம்.
அந்தத் தீவு மக்கள் ககரமயமான ஆடம்பர வாழ்வுக்கு ஆட்படாதவர்கள்; படாடோபமும் பொறாமைகளும் அற்ற மக்கள். தேவாலயமும் கடலும் பணி வெளியும், உள்ளுர் ஒன்றுகூடலும்தான் அவர்கள் வாழ்வு.
இப்படம் என்னை மிகவும் பாதித்ததற்கான காரணம் மனிதர்களுக்கிடையில் அன்பை மிக அற்புதமாக விளக்கி யிருக்கிறது என்பதுதான். மேலாக இயக்குநரின் பிரச் சினை பற்றிய புரிதல், ஆழ்ந்த மனிதநேய உணர்வு. இதுவே, இப்படத்தை படைப்பு நிலைக்கு உயர்த்தி விடுகிறது.

Page 10
இரண்டாவது படம், கன்டாவின் நகரப்புறத்திற்குள் நுழைகிறது. பிரெஞ்சு மொழி பேசும் மொன்றியலுக்குள் நுழைகிறது.
இங்கே வெளிப்படும் கனடியச் சித்திரம் முற்றிலும் வே றானது. கனடாவின் அரசியலை, குடியேற்றக் கொள்கைகளின் மாற்றத்தை விமர்சிப்பது.
கதை இதுதான். இலத்தீன் அமெரிக்க நாடான சிலியிலிருந்து அரசியல் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த முன்று சிலி நாட்டவர்களின் விசா நாள் முடிந்து விடுகிறது.
ஒரு இறைச்சிச் சாலையில் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் அம்முவரும். குடியேற்ற அதி காரிகள் திடீர்ச் சோதனைக்காக வருகின்றார்கள். முன் றுபேரும் பின்வாசல் வழியே தப்பித்து ஒடுகிறார்கள். இருவர் பிடிபடுகிறார்கள், முன்றாமவர் தப்பிவிடுகிறார். அவர்தான் கதையின் நாயகன்.
ஒரு வேலைநிறுத்தத்தை அரசுக்கெதிராக ஏற்பாடு செய்ததற்காகச் சிலிச் சிறையில் வைக்கப்படுகிறார். அங் கிருந்து தப்பிக் கனடாவிற்கு வந்தவர் அவர்; அநாதை; மிகுந்த சித்திரவதைக்கு ஆளாகி உடல் முழுதும் ரணத் துடன் கடமாடுபவர்.
அவருக்காக வாதாடுகிறார் ஒரு பெண் வழக்குரைஞர். அவர் மேசைமீது ரஷ்யப் புரட்சிக்காரன் லெனினது மார்பளவு சிலை படத்தில் குளோசப்பில் காண்பிக்கப் படுகிறது. அவ்வழக்கறிஞரின் குணசித்திரத்திற்கு இது போதுமானதாகி விடுகிறது. இவரின் முத்த சகோதரி ஒரு கல்லூரி விரிவுரையாளர்; எழுத்தாளர்; ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பவர்.
இந்தக் கல்லூரி விரிவுரையாளர் அதே கல்லூரியில் வேலை செய்யும் மற்றொரு ஆண் பேராசிரியருடன் உடல்ரீதியிலான உறவு கொண்டிருக்கிறார். அந்த ஆண் ஏற்கனவே மணமானவர். ஆண் விரும்பியும், கல் யாணத்தை உடைப்பதற்கு மறுக்கிறார் பெண் பேரா சிரியை. இவர்களுக்கு இடையிலான உறவு, அடிப்ப டையில் மனரீதியிலானது என்பதை விடவும் அதிகமாக உடல்ரீதியானது.
சிலவேளை முகங்களைப் பார்த்துக் கொள்ளாதுகூட உடல் உறவு கொள்வதைப் பற்றி நினைவுகூர்கிறார் பெண் விரிவுரையாளர்.
சிலி அகதியின் பெண் வழக்குரைஞர் ஒரு காகிதக் கல்யாணத்தை ஏற்பாடு செய்கிறார். அம்மாதிரிக் கல் யாணம் கனடாவில் அகதியை கிரந்தரமாகத் தங்க வைக்கும். அதற்காகத் தனது 40 வயது பேராசிரியை அக்காவை உதவி கேட்கிறார். முதலில் மறுக்கும் பேராசிரியை, ஒருவார காலத்துக்குள், ஒரு கேரடி குடியேற்ற அலுவலக விசாரணையின் பின், இது முடிவுக்கு வந்து விடும் என்ற உத்தரவாதத்தின் கீழ் ஒப்புக் கொள்கிறாள்.
கல்யாணம் பதிவுத் திருமண அலுவலகத்தில் கடப் பதற்காக திருமண அலுவலகத்திற்கு வருகிறார்கள் மணமக்கள். குடியேற்ற அதிகாரிகள் புயல்வேகத்துடன் நுழைந்து அவர்களைத் துரத்துகிறார்கள்.
அங்கிருந்து தப்பித்து ரக்ஸியில் விரையும் மணமக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். தாயைத் தொலை பேசியில் அழைத்து சேர்ச்சில் கல்யாணத்தை நடத்துகிறார் வழக்குரைஞர்.
குடியேற்ற அதிகாரிகள் துரத்திக்கொண்டே இருக்கின்
O

றார்கள்.
மணமகள் தன் வீடு செல்கிறார். மணமகன் தன் கண் பன் தங்கியிருக்கும் இலத்தீன் அமெரிக்க உணவு விடு திக்குத் திரும்புகிறான்.
வீடு திரும்பும் மணமகளைத் தேடி வருகிறார் பேரா சிரியர். அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, குடி யேற்ற அதிகாரிகள் கதவை இடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
இது காகிதக் கல்யாணம்தான் என்பதை உறுதிப்படுத் திக்கொண்டு, தங்கள் கண்காணிப்பை இரவும் பகலும் அந்த வீட்டின்மீது செலுத்துகிறார்கள்.
நெருக்கடி வருகிறது. வழக்குரைஞரின் ஆலோசனை யின்படி அகதி, பேராசிரியையின் வீட்டில் தற்காலிகமாகக் குடியேறுகிறார்.
குடியேற்ற அலுவலக விசாரணைக்கான நாள் குறிக் கப்படுகிறது.
விசாரணையின் தன்மை இதுதான்: இருவரும் பரஸ் பரம் எந்தளவு தமக்குள் புரிதலுடன் இருக்கிறார்கள், காதலிக்கிறார்கள் என்பதுதான்.
இதற்காக பூர்வாங்கமாக ஒரு மாதிரி வினாத்தாள் தயாரித்து அக்காவிடம் தருகிறார் வழக்கறிஞர்.
நடைமுறைப் புரிதலுக்காக பேராசிரியையும் அகதியும்
Tafi - QafQ Th. If 1993

Page 11
கொள்ளத் தொடங்குகின்றார்கள்.
கதை இங்குதான் மையம் கொள்கிறது. காதலற்ற தனது தனிமை, இரவைக் கண்ட தனது பயம், தங்தை யின் மீதான தனது தீராத அன்பு போன்றவற்றைச் சொல்கிறாள் Gugntóforføpuu.
தனது தாயை இழந்த சோகம், தான் அரசினால் பட்ட சித்திரவதைகள், தனது கவிதை மனம், அன்பு தேடும் தனது இதயம் பற்றிச் சொல்கிறான் அகதி,
அவளுக்காக இலத்தீன் அமெரிக்கச் சமையலைச் சமைத்துத் தருகிறான். அவளுக்குப் பிடிக்காதென்பதால் மாடி முற்றத்தில் நின்று சிகரெட் புகைக்கிறான்.
பரஸ்பரம் புரிதலில் அன்பு கிளை விடுகிறது. குடி யேற்ற அதிகாரிகள் இவை எல்லாவற்றிற்கும் வெளியில் கிர்வாகக் கண்களுடன் அவள் அறையின் ஜன்னலுக்கு வெளியில் காரில் முடுண்ட கண்ணாடிக்குள் காத்திருக் கின்றார்கள்.
விசாரணை நாள் வருகின்றது. விசாரணை நடக்கிறது. நாற்காலியில் இருக்கும் அவன் கரத்தை மெல்ல அழுத்துகிறது அவள் கரம்.
விசாரணை அதிகாரி குடியேற்ற அதிகாரியைப் பார்த்துச் சொல்கிறார்: “ரொம்பச் சொந்த விஷயம் மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் காத லிக்கிறார்கள் என்று உண்மையில் நான் நம்புகிறேன். கனடியப் பிரஜைகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது நான் கொஞ்சம் நிதானத்துடன்தான் நடந்துகொள்ள வேண்டும்”.
கதவு முடப்படுகிறது. முடப்பட்ட கதவு மறுபடி திறக்கப்பட்டு மற்றொரு அதிகாரி குடியேற்ற அதிகாரியை நோக்கிச் சொல்கிறார்: “தேர்தல் வருகிறது”.
இருவரும் அற்புதமாக நடித்ததற்காக இருவருக்கும் நன்றி தெரிவிக்கிறார் வழக்குரைஞர் பெண்மணி. இரு வருக்கிடையில் மெளனம். மெளனம் மட்டும்தான் பதில், காதல் பூ மெல்ல மலர்ந்திருக்கிறது. அதை வழக்குரைஞர் அறியமாட்டார்.
பேராசிரியையின் அறைக்கு வரும் அகதி தனது உடைமைகளை ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல சேகரித் துக்கொண்டு, நிதானமாக அவளுடன் பிரிவுக்காக விடைபெறவென கைகுலுக்கக் கை கீட்டுகிறான். பதில் பேசாது அவன் தோளைப் பற்றிப் பிடித்துக் காருக்குக் கூட்டிச் செல்கிறாள் அவள்.
கார்க் கதவைச் சாத்தும் பேராசிரியையின் கைமீது அன்புடன் பரவுகிறது அவன் கரம், கார் விரைகிறது.
அறைக்குத் திரும்பும் பேராசிரியை அவன் தங்கியிருந்த அறைக்குள் சென்று அவன் படுத்திருந்த படுக்கையின் தலையணையில் முகம் புதைத்து முத்தமிட்டு அழுந்துகிறாள். முதுகு குலுங்குகிறது.
கதவு மணியொலிக்கிறது. பேராசிரியர். பேச்சில்லை. அடுத்த காட்சியில் அந்த அகதி தங்கியிருக்கும் இலத்தீன் அமெரிக்க உணவு விடுதி முன் நிற்கிறது கார், அவளது முடிவுக்கு வாழ்த்துக்களைக் கூறி சங்தோஷமாய் இருக்கும்படி சொல்கிறார் பேராசிரியர். அவ்வாறே அவரது சங்தோ ஷத்திற்கும் வாழ்த்துகிறாள் அவள்.
கதவைத் திறந்து உணவு விடுதிக்குள் கால்கள் மெல்ல நுழைகிறது. விடுதி முடப்படும் கேரம். தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறான் பணியாள். அவள் அவனிடம்
DJ - Qafo y bluff 1993

x
அகதியின் இருப்புப் பற்றிக் கேட்கிறாள்.
வெளியில் போயிருப்பதாகச் சொல்லி எப்போது வருவான் என்று தெரியாது என்கிறான் பணியாள். "கான காத்திருக்கிறேன்' என்று ஒரு காற்காலியை இழுத்துப்போட்டு மெல்ல அமர்கிறாள் பேராசிரியை.
அவன் வருகைக்காக அவள் காத்திருக்கிறாள்.
முன்றாவது படமான 'தப்பித்தல்' பற்றியும், மொத் தமாக இம்முன்று படங்கள் பற்றிய எனது எதிர்வினை களையும், அரசியல் விமர்சனத்தையும் முன்றாவது கட்டுரையில் எழுதுகிறேன்.
தொடர்ந்து 'நிறவெறி' பற்றிய திரைப்படங்கள் பற்றியும் 'அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்' பற்றிய திரைப்படங்கள் பற்றியும் எழுதுவேன்.
தார்சி வித்தாச்சி. (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
மரபும் இலங்கையில் ஏற்படுத்தி வைக்கப்பட்டதாயினும் அது வளர்ச்சியடையவில்லை என்பதையே இன்றைய
நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.
பண்டாரநாயக்கா அரசு காலங்களில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியதால், அவர் மேற்கு காடுகளில் வாழ கோங் தது. அக்காலகட்டங்களில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் UNICEF, UFPA போன்ற நிறுவனங்களில் பல உயர் பதவி களை வகித்ததுடன் நியூஸ்வீக் சஞ்சிகையில் தனது பத்திரி கையாளர் பணியையும் செய்துகொண்டிருந்தார். அவரது திறமையிலும் நேர்மையிலும் கம்பிக்கை கொண்டிருந்த பலர், 1983 இனக்கலவரத்தைப் பற்றியும் ஒரு நூலை வெளி யிடும்படி வேண்டினர். அவர் இலங்கை திரும்பி கொழும்பு பல்கலைக்கழகத்தின் 'அபிவிருத்திப் பத்திரிகைத்துறை எனும் பிரிவின் தலைவர் பதவியை ஏற்று இளம் பட்ட தாரிகளைப் பயிற்றுவிக்கும் திட்டத்துடன இருந்த காலத் திலேயே ஒக்ஸ்போர்ட் நகரில் அவரின் மரணம் சம்பவித்தது. அவரது இழப்பு இலங்கைக்கு மட்டுமல்ல, சர்வதேச மட்டத் திலும் ஒர் பேரிழப்பாகும். இத்தகைய ஒரு மனித கேயப் பத்திரிகையாளர் தமிழர் துயரை சர்வதேச ரீதியில் பரப் பியமையாலும், 38 காலத் துயர நிகழ்ச்சிகளைச் சேகரித்து, தொகுத்து வெளியிட்டமையாலும் சகல தமிழ் மக்களும் அவரது இழப்புக்கு அஞ்சலி செலுத்துவோமாக.
(d5 26) I T6). . .18ஆம் பக்கத்தொடாச்சி)
தடுத்துவைக்கப்பட்டிருந்த எவரும் மரணிக்குமிடத்து, இயல்பாகவே பொதுவிசாரணைக்கு உட்படுத்தப்படும் நிலையமைய வேண்டும். விசாரணை நடவடிக்கைகள், அறிக்கைகள் பதியப்பட்டு அவை மரணித்தவரின் உறவினர் பார்வைக்குக் கிடைக்கும்படி செய்யப்படல் வேண்டும். மேலும், மரணித்தவரின் உறவினருக்கோ, சிநேகிதருக்கோ உண்மையறிவதற்கான முறைமன்றத் தேர்வாய்வினைக் (Inquest) கவனிக்கவும் வழிவகுத்துக் கொடுத்தல் வேண்டும். தேவையெனில் சட்ட நடவடிக்கை உதவித்தொகை (Legal Aid) பெற வழிசமைத்தல் வேண்டும்.
இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து இன வாதத்தையுடைய பிரித்தானியக் குடிவரவுச் சட்டத்தை கல்ல முறையில் மாற்றியமைக்கப் பல சமுகங்கள் முனைகி ன்றன. இம்முயற்சிகளில் ஈழத் தமிழராகிய நாமும் பங்கு பற்றி ஒரு கல்ல திருப்பத்தை ஏற்படுத்த உதவுவது எமது கடமையில் ஒன்று. இது சம்பந்தமான மேலதிக விபரங்களை தமிழ் தகவல் நடுவத்தினரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

Page 12
லண்டனில் இருந்து வாரந்தோறும் வெளியாக இலட்சக் கை TMEOUTசஞ்சிகையில் வெளி வந்த பேட்டியின் தமிழாக்
)ெண்டன் வாழ்க்கைகள்:
அகதி சுபா பத்மநாதன்
17. சுபா 1991இல் தனது தாயுடனு
தந்தையும் பாட்டனும் இலங்கையில் கொல்லப்ப துன்புறுத்தல் காரணமாக 1983இல் உள்நாட்டு யுத் தொடர்கிறது.
"கான் பழகிய இடத்தையும் மனிதரையும் 6 பீதியடைந்தேன். எனக்குத் தொலைவிலுள்ள லண் விமானப் பயணம் முன்னர் செய்யாததால் பயண சண்டைப் பிராங்தியத்திலிருந்து விடுபடுவதால் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றை வைத்திருந்தார் அவர் வீதியில் எதிர்ப்பட்ட கூட்டத்தினரால் கொை உடுப்புடன் ஒடி, 15 தினங்கள் ஒரு முகாமில் தஞ் திலிருக்கும் பாட்டன் பாட்டியிடம் எம்மை அணு பாட்டனாரும் போரினால் உயிரிழந்தார். பாட்டன அப்போது காமிருவரும் அழுதபடியே இருந்தோம்.
அகதியாக பிரித்தானியா வந்த எமக்கு மாமிெ யிற்று. கட்விக் விமான நிலையத்திலிருந்து எம்மை வீடு கிடைக்கும்வரை பராமரித்தார். இங்கு வந்து ஆங்கில மொழி சிறிது கற்றுத் தந்தார்.
மொழிப் பரிச்சயம் இல்லாததால் இங்கு எனது வந்த முன்று கிழமைகளில் வைற்பீல்ட் பள்ளியில் சே வகுப்பறை எது என்று தெரியாது அழுதபடி நிை நான் இச்சூழலுக்குச் சரிசெய்து கொண்டேன். கண கணக்காளராக வர விரும்புகிறேன். சாதாரணதரப் வகுப்புக்குச் சென்று படிப்பைத் தொடரவுள்ளேன
கேரமுள்ளபோது தாயாருக்கு வீட்டுவேலைக்கு லுக்குச் செல்வோம். கோயிலில் வழிபடுவது இந்து எனது மாமியார் இங்குள்ள முக்கிய இடங்களை மத்திய லண்டனுக்குச் செல்லவில்லை. பிக்காடிலி பார்க்காத சில. அண்மையில் தம்பியுடன் "ஜுன
கோடைகால விடுமுறைக்கு எமது குடும்பம் வே களும் இலங்கையை நினைவூட்டி, இலங்கையை
1996இல் முடிவடையும் எனது விசா நீடிக்கப்படு நிலையில் வாழ்வது கடினமாகவுள்ளது. எதிர்காலத் சூழலுக்கு மீண்டும் செல்ல விருப்பமில்லை. தற்ே நேரலாம் என்பதே."
பேட்டி ஜேன் பார்ட்லட்
நன்றி: TIMEOUT சஞ்சிகை
- − f பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், பல்துறை அ
ஒரு சுயேட்சைக்
GQafi
TAMIL INFORMATION CENTRE, THAMIL HOUSE, 720 I
சந்தா (12இதழ்கள்): U.K.
 

ம்
ம் தம்பியுடனும் லண்டன் வந்தடைந்தார். சுபாவின் ட்டனர். பெரும்பான்மைச் சிங்களவரின் தொடர் $தம் அங்காட்டில் ஆரம்பமாயிற்று. அது இன்றும்
விடுத்து லண்டன் செல்லவிருப்பதை நினைத்துப் டன் பூதாகரமான நகரமாக மனதிற் தோன்றியது. த்தின்போதும் பீதியுடன்தானிருந்தேன். என்றாலும் ஒரு திருப்தியும் மனதில் இருந்தது. எனது தங்தை . 1983இல் நடைபெற்ற கலகங்களின் எதிரொலியாக லயுண்டார். எனது தம்பியுடனும் தாயுடனும் உடுத்த ந்சம் கிடைத்தது. பின்னர் வடக்கு யாழ்ப்பாணத் வப்பி வைத்தனர். நான் 12 வயதாகவிருந்தபோது ார் உயிரிழந்ததை நானும் தம்பியும் கண்ணுற்றோம். ஆனால் நாம் தைரியமடையவும் வேண்டியிருந்தது.
யாருவர் இங்கு வெம்பிளியில் இருந்தது வசதியா ) அவர் கூட்டிச்சென்று கிறிக்கிள்வூட்டில் கவுன்சில் சேர்ந்த முதல் சில நாட்களில் எனது மாமனார்
முதற் பள்ளி நாள் பெரும் சோதனையாக இருந்தது. ார்ந்தபோது கான் ஒருவரையும் அறிந்திருக்கவில்லை. ன்றேன். மிக விரைவாகக் கற்க வேண்டியிருந்தும் ரிதம் எனது விருப்புப் பாடம். நன்றாகப் படித்துக் பரீட்சைக்கு எட்டுப் பாடங்கள் எடுத்தேன். உயர்தர
உதவி புரிவேன். வெள்ளிதோறும் ஆச்வேக் கோயி க்களாகிய எமது வாழ்க்கையில் ஒரு தேவையாகும். எனக்குக் காட்டியிருந்தாலும் இதுவரையில் கான் சேர்க்கஸ், கொவன்ட் கார்டின்ஸ் என்பன கான் ரசிக் பார்க்' என்ற திரைப்படம் பார்த்தேன்.
ல்ஸ் சென்றிருந்தது. அங்குள்ள குன்றுகளும், மலை
விட்டு வந்ததையிட்டு மனம் வாட வைத்தது.
மென எதிர்பார்க்கிறேன். என்றாலும் நிச்சயமற்ற தையிட்டு ஆறுதலடைய முடியாதுள்ளேன். போர்ச் பாது எனக்குள்ள பெரும் பீதி திரும்பிச் செல்ல
帕: 1றிஞர்கள் , சமூகத் தொண்டர்களை உள்ளடக்கிய குழுவின் படைப்பு
„LT6IŤ: OMFORD ROAD, LONDON E 12 6BT TEL: 081-54 6390 6.00 ଗରାଗୀlist(}ଅର୍ଗାt: $10.00