கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அதிதீரன்

Page 1

sae
±,±,±,±),
நீரன்

Page 2

க. உமாமகேசுவரன்
அமீபனை - கலைப்பெருமனிறம் (ஐ.இ.) வெளியீடு
1999

Page 3
Bibliographical Data
Title: Athitheeran
(A Collection of Essays)
Author : K. Umamaheswaran
Address: 47/4A St. Rita Road
Mt. Lavinia
Sri Lanka Language. Thamil
Edition : First
Date of Publication : 1998. 10.03
Size of the Book: 14.85 X 21 cms (A5)
Printing Fonts used: Poopalam 10 & 12
Number of Pages: VI + 56
Publishers : Ampanai Kalai Peru Manram (UK)
13, Arcus Road, Bromley, BR1 4NN.
1 அதிதீரன்
 

பதிப்புரை
நாக. சிநீ கெங்காதரன் (அமைப்பாளர், அம்பனை கலைப்பெரு மன்றம். ஐ.இ)
அம்பனை, தெல்லிப்பளை என்கின்ற புகழுக்குரிய கிராமத்தின் ஒரு சிறு பகுதி. மகாஜனக் கல்லூரி அமைந்த அருமையான மணி. "மஹாகவி" து. உருத்திரமூர்த்தி எழுதிய "அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில்" - என்கின்ற கவிதை கால்நூற்றாண்டுகளுக்கு முன்பான காலத்தை இன்னமும் நினைவூட்டி மகிழ்விக்கின்றது. இந்த மண்ணில்தான் 10 - 15 ஆண்டுகளே செயற்பட்டாலும் அன்றைய இளைஞர்களின் தன்னலமற்ற செயற்பாட்டினால், புகழ்பெற்ற அம்பனை - "கலைப்பெருமன்றமும்"; அம்பனை - சூட்டிங் ஸ்டார் ("Shooting Star" ) விளையாட்டுக் கழகமும் உருவாயின.
வறுமை, வேலையின்மை போன்றவை இளைஞர்களின் வாழ்வுமுறையைத் திசைதிருப்பிச் சீரழிக்க வல்லன. இந்தக் காரணங்களை ஒருபுறம் தள்ளி, இளைஞர்கள், தமக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள பணிகள் செய்யமுடியும் என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள். அத்தகைய இளைஞர் கூட்டத்தில் முன்னணியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். எமது மண்ணின் அனர்த்தங்கள் 15 ஆண்டு கால வாழ்வை முழுமையாகச் சிதறடித்துவிட்டன. எமது மண்ணிலும் மக்கள் வாழமுடியாமல் சிதறிவிட்டார்கள். எம்மிற் பலரும் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிற் குடியேறிவிட்டார்கள். இங்கிலாந்து மண்ணிலும் கலைப்பெருமன்றத்துடன் தொடர்புடையவர்கள் பலர், கால்பதித்து, வெவ்வேறு அமைப்புக்களில் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களை ஒருங்கிணைத்து, எமது மண்ணிற்கும் அங்கு தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற அறிஞர்களுக்கும் - கலைஞர்களுக்கும் சந்தர்ப்பங்களைத் தருவதுதான் இந்த முயற்சி. "அதிதீரன்" என்ற கட்டுரைத்தொகுதி எங்கள் மண்ணின் மைந்தனான தமிழறிஞர் திரு உமாமகேசுவரன் அவர்களின் நீண்டகால எழுத்தின் ஒரு சிறு பகுதியே. மிகமிக அவசரமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு முயற்சி. நான் சிறுவனாகவும் - இளைஞனாகவும் இருந்த காலகட்டத்தில் அவரின் தமிழில் மயங்கி நின்றவன். அறிவுத்துறையிலும் - ஆசிரியப் பணியிலும் நீண்டகாலம் செயற்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் இவர். எமது மண்ணின் புகழுக்குரிய தமிழறிஞர் பண்டிதர் கதிரிப்பிள்ளையின் மகன்.
இவரின் கட்டுரைத்தொகுதியை வெளியிடுவதில் நாம் பெருமையடைகின்றோம். இவரின் பணி தொடரவேண்டும்.

Page 4
IW o gorff y gair
 

வாழ்த்துரை
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, D. Litt.
யாழ்ப்பாண அரசர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவன் பரராஜசேகர மன்னன். அவன் ஒரு தமிழ்ச்சங்கம் நிறுவினான். அச்சங்கத்தில் அரங்கேறியது தமிழ் இரகுவம்சம். அதனை இயற்றியவர் பரராஜசேகரனின் மருகனான அரசகேசரி,
நாவலர் வித்தியாசாலையில் ஒரு தமிழ்ச்சங்கம் உதயமானது. இது இரண்டாவது சங்கம். இதனைக் கேள்விப்பட்டு இதன் சட்டதிட்டங்களைப் பெற்று உதயமானது மதுரை நான்காவது சங்கம்.
யாழ்ப்பாணத்து இரண்டாவது சங்கத்தில் தலைமைப்புலவர் சுன்னாகம் திரு அ. குமாரசுவாமிப்புலவர் அவர்கள். இச்சங்கம் தகுதியான மாணவர்களைச் சேர்த்து, இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்பித்துப் பரீசவித்து, பரீசைஷயில் தேறியவர்களுக்கு அவர்கள் தகுதிக்குத் தக்கவாறு பாரதி, பணிடிதர் முதலிய பட்டங்களை வழங்கியது. பண்டிதர்ப் பட்டம் உயர்ந்தது.
யாழ். தமிழ்ச்சங்கத்தில் புலவர் அவர்களிடம் முறையாகக் கற்றுப் பண்டித பர்க்ஷையிற் சித்தியெய்தியவர் அமரர் திரு சி. கதிரிப்பிள்ளை அவர்கள். பிள்ளையவர்களின் சூழல் தமிழ் மயமானது.
பண்டிதர் திரு கதிரிப்பிள்ளையின் புதல்வர் திரு உமாமகேசுவரன். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உணர்டு, அவரைக் காணும்போது, இரண்டு திருக்குறள் நினைவுக்கு வருவதுண்டு.
ஒன்று.
தங்தை மகற்காற்றும் நண்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல்
மற்றையது,
மகனிறுநீதைக் கற்று முதவி விண்றுந்தை எனினேற்றாணர் கொலினுெஞ சொல்
Tipping I982.0728
அதிதீரன் W

Page 5
10
12
丑3
கட்டுரைகள்
அதிதீரன்
ஐந்தில் ஒன்று
வாழி செந்தமிழ் இலக்கிய லக்கண வரம்பு
யாதனை இதற்கு நேரா இயம்புவது?
தியாகராஜ கிருதிகளின் ரிஷிமூலம்
செந்தமிழ்மணி சில குறிப்புக்கள்
பூதராயர் - ஒரு நதிமூலம்
அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன.
தமக்குவமையில்லாத தமிழறிஞர்
நீரிலன்றி நிலத்திலும்
இராகப் பிரஸ்தாரத்துக்கு ஓர் இராஜா
அப்பா எனும் தெய்வம்
இராமன் புறமுதுகிட்டானா?
7 - 10
11
6
19
21
24
28
34
37
40
46
53
15
8
20
23
27
33
36
39
45
52
56
 

அதிதீரன்
இராமன் தலைகுனிந்து நிற்கும் இடங்களில் இரண்டு குறிப்பிடத் தக்கவை. ஒன்று வாலிவதம். மற்றையது அக்கினிப் பிரவேசம். டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் முதல் அகளங்கண் 660) வாலி வதத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனாற் சாபவிமோசனம் சிறுகதையிலே அக்கினிப்பிரவேசத்தைப் புதுமைப்பித்தன் அலசி ஆராய்ந்திருப்பது போல அலசி ஆராய்ந்தார் எவருமே இல்லை. இவற்றுக்கெல்லாம் மாற்றீடாக இராமனைக் கம்பன் எடுத்து நிறுத்தும் இடங்கள் இவையெனக் கூறிக் கம்ப ரஸிகர்கள் குதுாகலிக்கும் இடங்களும் சில உண்டு. அவற்றுள் எல்லாம் மிகவும் பிரசித்தமானதொன்று யுத்த காண்டத்திலே வருகிறது.
நிராயுதபாணியான இராவணன் தலை குனிந்து நிற்கின்றான். இன்றுபோய்ப் போர்க்கு நாளை வா என்கின்றான் இராமன்.
பேராணிமை பெண்ப தறுகணொண் நூற்றக்கா லூராணிமை மற்றத னெ.கு
என்ற திருக்குறளுக்கு உரை எழுதுகையிலே பரிமேலழகர் ஒருகணம் இந்த இராமாயண சம்பவத்தை எண்ணிப்பார்க்கிறார்; எழுதியும்விடுகிறார்.
. ஊராணிமை - உபகாரியந் தண்மை அதாவது இலங்கையர் வேந்தணி போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர்இறை மேற்செல்லது இன்றுபோய் நாணைநின் தாணையோடு வாவென விட்டாற்போல்வது
பரிமேலழகர் சொல்வதுபோல் இராமன் இராவணனுக்கு உபகாரம் ஏதாவது செய்ததுண்டா என்று நினைத்துப்பார்த்தால் திகைப்புத்தான் விஞ்சுகின்றது. இன்று போய்ப் போர்க்கு நாளை வா என்றதுதான் தாமதம் இராவணன் ஓடிவிடுகின்றான். கம்பனுக்கே இது பொறுக்கவில்லை. எவற்றையெல்லாம் போட்டுவிட்டு இராவணன் ஒடுகிறான் என்று வரிசைப்படுத்திச் சொல்ல வந்தவன் ஈற்றில் வீரமுங் களத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கை புக்கான் என்றுவேறு எள்ளி நகையாடிவிடுகின்றான். இப்படிக் கம்பனே இராவணனை எள்ளி நகையாடும்படி விட்ட இராமனை இராவணனுக்கு உபகாரியானான் என்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்ளத்தக்க கூற்று என்பதுதான் நம்முன் நிற்கும் விசுவரூப வினாப்புதிர்.
படைகளையும் படைக்கலங்களையுந் தருவி, போர் புரி என்றுகூறி உபகாரியாக இருந்திருக்கக்கூடிய இராமன் அவ்வாறு கூறாது இன்று போய்ப் போர்க்கு
事

Page 6
க. உமாமகேசுவரன்
நாளை வா என்கின்றான். சீவகன் தம்பி நபுலன் குமரன் என்பவனை எதிர்த்துப் போர் புரிகிறான். குமரனிடம் ஆயுதம் ஏதும் இல்லை அவனோடு போர்புரிவதானால் அவனுக்கு ஆயுதம் வழங்கிவிட்டே போர் புரிதல் வேண்டும். நபுலனிடம் மேலதிக ஆயுதம் இல்லை. எனவே போர் புரியாது திரும்புகிறான்.
கைப்படை ஒன்று மின்றிக் கைகொட்டிக் குமரன் ஆர்ப்ப மெய்ப்படை வீழ்த்த நாணி வேழமும் எறிதல் செய்யாணி மைப்படை நெடுங்கணர் மாலை மகளிர்தம் வனப்பிற் குழிந்து கைப்படு பொருளி லாதானி காமம்போற் காளை மீண்டாணி
விலை மகளிரைப் புணர்ந்தின்புறவெனச் செல்கின்றான் ஒருவன். அவர்களுக்குக் கொடுக்கவோ இவனிடம் பொருள் ஏதும் இல்லை. இவன் திரும்புமுன் இவன் காமமே திரும்பிவிடுகிறது. ஆயுதம் வழங்காது போர்புரியும் வாய்ப்பிலாத நபுலனும் இவ்வாறே மீண்டான் என்கிறார் திருத்தக்கதேவர். இராமன் உபகாரியாகவேண்டுமென உண்மையாகவே விரும்பியிருந்தால் ஆயுதத்தை வழங்கிவிட்டு, போர் புரிவோம் வா என்று கூறியிருக்கலாம்; கூறியிருக்க வேணடும். ஆனால் அவ்வாறு இராமன் கூறவில்லை. உண்மையில் இராவணனது மனவுறுதியைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இராமன் இன்று போய்ப் போர்க்கு நாளை வா எனக் கூறியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. நான் படைகளையும் படைக்கலங்களையும் தருவிக்கின்றேன், போரிடுவோம் என்றே கூறியிருக்கக்கூடிய இராவணனைக் கேவலம் நாவிழந்து மனவலிமை குன்றிய கோழையாய்த் திரும்பியோடும்படி செய்வதில் வெற்றிபெற்றதோடு எல்லோரது அவமதிப்புக்கும் அவனை ஆளாக்கிவிட்ட இராமன் இராவணனுக்கு உபகாரியானான் என்பதைவிட வேடிக்கை வேறேதுதான் உண்டு. V,
இராவணன் இறந்து கிடக்கின்றான். அருகிற்சென்று பார்க்கின்றான் இராமன். இராவணன் முதுகிலோ சில தழும்புகள். முதுகிலே புண்பட்டவனுடனா போர் புரிந்தேன்? என் மானம் போய்விட்டதே.
வென்றிய7 லுலக மூன்று மெய்ம்மையான மேவி னாலும் பொன்றினா னெண்று தோளைப் பெதுவுற நோக்கும் பொற்பும் குண்றிய7 சுற்ற தனிறே யிவனெதிர் குறித்த போரிற் பிண்றியாணி முதுகிற் பட்ட பிழம்புள தழும்பி னம்மா
என்று இராமன் புலம்புகின்றான். விபீஷணா, போர்ப் புறங்கொடுத்தோர்ப் போன்ற ஆண்டொழிலோரிற் பெற்ற வெற்றியும் அவத்தம் அல்லவா? என்று அலறுகின்றான். ஊண்டொழி லுகந்து தெவ்வர் முறுவலென் புகழை யுண்ண இனி நான் வாழ்வதா? என்று நாணிவேறு சாம்புகின்றான்.
K8፭እ`:›
 

அதிதீரன்
திக்கு யானைகளோடு இராவணன் போர் புரிந்தான். அவற்றின் கொம்புகள் ஒடிந்து இவன் மார்பிற் புதைந்திருந்தன. அநுமன் இவன் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அவ்வளவுதான். முதுகு வழியாகக் கொம்புகள் வெளியே வந்துவிட்டன. அவை வெளியேறிய அடையாங்களே தவிர இராவணன் புறமுதுகிட்டதால் ஏற்பட்ட புணர்கள் அல்ல இவை' என்று தேறுதல் கூறுகின்றான் விபீஷணன். இராமன் நிம்மதியடைகின்றான். அப்படியானால்,
வீரத்தைக் களத்திலே போட்டுவிட்டு வெறுங்கையனாய் ஓடிய பச்சைக்கோழையுடன் மறுநாட் போர்புரிய இராமன் தயங்கவில்லையே; நாணவில்லையே. எனவே இராமாயணத்தில் வரும் மேற்குறித்த கதாசம்பவத்தை வைத்துக்கொண்டு இராவணனுக்கு உபகாரியானான் இராமன் என்று கூறிவிடமுடியாது. இராவணனுக்குந் தனக்குந் தீராப் பழியை விளைவித்தான் இராமன் என்பதை மட்டுமே கூறமுடியும்.
அப்படியானால் ஊராண்மை மிக்க பேராண்மையாளன் என்று எவருமே, இல்லையா?
ஊரின் ஒதுக்குப்புறம். ஏனாதிநாதர் வாளும் பலகையும் (கேடயம்) ஏந்திப் போர்புரியும் குறிப்போடு நிற்கிறார். எதிரே அதிசூரன் வாளேந்திய கையனாய் வருகிறான். இது என்ன? பலகையால் நெற்றியை இவன் ஏன் மறைத்துக்கொண்டு வருகிறான்? முன்பு நடந்தவைகளை ஒரு கணம் மனதில் இரைமீட்கிறார் ஏனாதிநாதர்.
ஏனாதிநாதர் மீது அதிசூரனுக்குப் பொறாமை. அவருடைய வாட்பயிற்சிக்கூடத்திற்குத்தான் மாணவர் பலர் வருகிறார்கள். தன்னிடம் பயில யாரும் விரும்புவதில்லை என்பதுதான் ஏனாதிநாதர் மீதான அவன் பொறாமைக்குக் காரணம். ஏனாதிநாதரைத் தொலைத்துவிடவேண்டியதுதான் என்று தீர்மானித்துவிட்டான் அதிசூரன். படையுடன் வந்து தோற்றோடிய அதிசூரன் பிறரறியாது தனித்துப் போரிடவாருங்கள் என்று அழைத்தான். இதோ வருகின்றான்; சரி வரட்டும். ஏனாதிநாதர் சிரிக்கிறார்.
நெருங்கி வந்துவிட்ட அதிசூரன் திடீரென்று பலகையைப் போர் செய்தற்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறான். நெற்றி முழுவதும் ஒரே விபூதிமயம். ஒரு கணந்தான். ஏனாதிநாதர் நிலைமையைச் சீர்தூக்கிவிடுகின்றார்.
அட இவர் சிவனடியாராகிவிட்டார். இவர் வேண்டுவது என் உயிரையென்றால் அவரே அதை எடுத்துக்கொள்ளட்டும். உயிரை வழங்கிவிட்டால்மட்டும் போதுமா? நிராயுதபாணியைக் கொன்றார் என்ற பழியும் இவரைத் தொடரக்கூடாதே அடுத்த கணமே அருமையானதொரு முடிவுக்கு ஏனாதிநாதர்

Page 7
க. உமாமகேசுவரன்
வந்துவிடுகிறார். அந்நின்றதொண்டர் திருவுள்ளம் யாரறிவார்?
அறிந்தவரில் ஒருவரான சேக்கிழார் சொல்கிறார்,
கைவா ளுடன்பலகை நீக்கக் கருதியுது செய்யார் நிராயுதரைக் கொண்ற7 ரெனுந்தீமை பெய்தாமை வேணடும் இவர்க்கென் றிரும்பலகை நெய்வா ளுடனடர்த்து நேர்வார்போ னேர்நின்றார்
ஏனாதிநாதர் எதிரியுடன் போர் புரியவில்லை. புரிவதுபோல் நடிக்கின்றார். முன்னின்ற பாதகனோ (அதிசூரன்) தன் கருத்தை மிக எளிதாகவே முற்றுவித்துவிடுகிறான்.
நிராயுதபாணியைக் கொண்றான் என்ற பழி அதிசூரனுக்கு வராதபடி காத்துவிட்டார் ஏனாதிநாதர். இவரன்றோ ஊராண்மை என்ற பண்பின் கொடுமுடி கண்டவர். ஏனாதிநாதர் எங்கே? இராமன் எங்கே? நம் காவியப்பரப்பு முழுவதிலும் பகைவனுக்கும் அருளிய பண்பினை - ஊராண்மையினை - நாம் காண்பது ஏனாதிநாதர் என்ற அதிமனிதர் ஒருவரிடந்தான்.
வள்ளுவர் கூறும் ஊராண்மையென்ற உயர்ந்த பண்புக்கு இலக்கியமாக இராமனைத் தேர்துகொண்டது பரிமேலழகர் விட்ட இமாலயத்தவறு. பரிமேலழகரின் இத்தகைய சறுக்கல்களே
. சங்கரருடைய உரைக்கும் நூலுக்கும் சம்பந்தமில்லை. பரிமேலழகரைக் கிளப்பிவிட்டது சங்கரருக்குப்போல நூலின் மகிமையும் அழகிய பாஷை நடையுமே
எனச் சமயசாதகரான மகான் பொ. கைலாசபதி அவர்கள் கூறக்காரணமாக இருந்திருக்கவேண்டும். இரண்டு பண்புகளின் அடிப்படையிலேதான் பேராண்மை என்ற பண்பை வள்ளுவன் இனங்காண்கின்றான். ஒன்று ஈனஇரக்கமின்றிக் கொன்றுகுவிக்கும் தறுகணனாயிருத்தல் என்னும் பண்பு சார்ந்தது. பெரியபுராணத்தில் வரும் அடியார்பற்றித் திருக்கூட்டச்சிறப்பில் உரைக்கும் சேக்கிழார், இவர் வீரம் என்னால் விளம்புந் தகையதோ என்று கூறி விம்மிதமுறுகின்றார். எனவே பேராண்மையோடு ஊராண்மையென்ற பண்புடையராய்த் திகழ்ந்த ஏனாதிநாதரையும் வீரன் என்றுதான் சேக்கிழார் குறித்தார் என்பது தெளிவு. எனவே பேராண்மைக்கும் மேலே ஊராண்மை என்ற ஒப்பற்ற பண்புடையாரையே வீரர் என்பதோர் மரபிருந்ததோ என்பது சிந்தனைக்குரியது.
பிறன்மனை நோக்காத பண்பையும் வள்ளுவர் பேராண்மையென்றே குறிப்பர்.
பிறண்மனை நோக்காத பேராணிமை காண்றோர்க்
4 அதிதீரன்
 

கறனொன்றோ வான்ற வொழுக்கு
எனவே பேராண்மை என்ற பண்புக்கான இரண்டாவது அடிப்பன்(பிற்கிமின்ன நோக்காமை என்பது பெறப்படும்.
இனிப் பிறிதொரு காட்சி
அடியவர் ஒருவர் வருகின்றார். தூய நீறு விளங்கும் பொன்மேனி அவருக்கு. ஆனால், தூர்த்தரோ என ஐயுறவைக்கும் தோற்றம். உம்முடைய மனைவியைத் தாரும் என்று இயற்பகை நாயனாரிடம் கேட்கிறார். அடியார் கேட்பதெதையும் மறுப்பதில்லை என்ற விரதர் இயற்பகை. ஒருகணமேனும் தாமதிக்கவில்லை.
தந்தேன்' என்று கூறிவிடுகிறார்.
நீர் தந்துவிடுவீர். உமது உற்றாரும் ஊரவரும் அதை ஒப்புவார்களா? ஊர் எல்லைவரை பாதுகாப்பாக என்னை அழைத்துச்செல்லும் என்கிறார் அடியவர். இயற்பகை உடன் செல்கின்றார். உற்றார் உறவினர்கள் வருகின்றார்கள்.
இயற்பகைக்குப் பைத்தியம் என்றால் நாம் சும்மா இருந்துவிடுவோமா?’ என்று
கொக்கரிக்கின்றார்கள்; சுற்றிவந்து சூழ்கின்றார்கள். இயற்பகை அனைவரையும் கொன்றுவிடுகின்றார். திருச்சாய்க்காடு என்ற திருத்தலம் வந்துசேர்ந்ததும் மீண்டு உம் ஊர்போம் என்கிறார் அடியவர். திரும்பிப்பாராது திரும்பிவிடுகிறார் இயற்பகை. பொய்தரும் உளள்மில்லான் பார்க்கிலன் போனான் என்று அடியவராய் வந்த சிவன் மகிழ்கின்றார். எப்பொழுது மனைவியை மற்றொருவருக்கு இயற்பகை வழங்கிவிட்டாரோ அப்பொழுதே அவன் மாற்றான் மனைவியல்லவா? அவளை அவர் இனிப் பார்ப்பாரா? பிறண்மனை நோக்காமை பேராண்மையென்றால், தன் மனையைத் தானே பிறர்க்குத்தந்து பார்க்கிலன் போனானே அவனையும் அதே வரிசையில் வைத்து பேராண்மையாளன் என்பது சரியா? எனவேதான் சிவன் இயற்பகையைத் தீரன் என்றார்போலும். செயற்கரும் செய்கைசெய்த தீரனேஓலம் என்றுதான் சிவன் ஓலமிட்டு அழைத்தார் என்கிறார் சேக்கிழார். பேராண்மை, வீரம், தீரம் என்று படிப்படியான வளர்ச்சிப்படிகள் உண்டுபோலும் என்று இப்போது எண்ணத்தோன்றுகின்றது நமக்கு. அருணகிரிநாதசுவாமிகளோ, அவ்வாறு உண்டுபோலும் என்ன, உண்டேதான், அதிதீரன்தான் அடுத்த படி என்றுவேறு வலியுறுத்தியும் விடுகிறார்.
இரக்கமின்றிக் கொன்று குவிப்பவன் பேராண்மையாளன் என்றால், பகைவனுக்கு உபகாரியாகுந்தன்மை வாய்ந்தவன் ஊராண்மையாளன் - வீரன் ஆகின்றான். பிறன்மனை நோக்காதவன் பேராண்மையாளன் என்றால் தன் மனையையே பிறன்மனையாக் கருதி நோக்காத இயற்பகை தீரணி ஆகின்றான்.

Page 8
க. உமாமகேசுவரன்
அப்படியானால்.
முப்புரம் எரிசெய்த அச்சிவனி உறைரதம் அச்சது பொடிசெய்த
விநாயகன் எப்படிப்பட்டவனாய் இருப்பான். அவன் அதிதீரனாகத்தானே இருக்கவேண்டும். முப்புரம் என்பது மும்மலகாரியம் என்பர் திருமூலர். மும்மலரீக்கம் புரியும் சிவனுக்கே விநாயகன் துணை வேண்டுமானால் விநாயகன் அதிதீரனே!சந்தேகம் என்ன?
சேக்கிழார், வள்ளுவர் இருவரும் தெய்வப்புலவர் வரிசையைச் சேர்ந்தவர்கள். தெய்வப்புலவர்கள் வரிசை வேறு, கவிச்சக்கரவர்த்திகள் கவிஞர்கள் வரிசை வேறு. சொற்களைப் பிரயோகிக்கும் தனித்துவ ஆற்றலால் வரிசை அறியவைக்கும் தெய்வப்புலவர் அருளாளர் என்போர் திறனை என்னென்பது?
கலசம் 1994 தை
புகழ்ச்சோழர் சேனைகள் எதிரிகளின்மேற் செல்லுகின்றன. எதிரிகள் தலைகள் உருளுகின்றன. ஒரு பாவமும் அறியாத ஒரு அடியாரின் தலையும் சேர்ந்து உருளுகின்றது. அதைக்கண்டதும் புகழ்ச்சோழர் அந்தத் தலையைத் தம் தலைமீதேந்தி அக்கினியெழுப்புவித்து அதிற் குதிக்கிறார்.
அக்கினி எழுப்புவிக்கக்கூட நேரமின்றிப் பாண்டியன் நெடுஞ்செழியன் தேவர்கோன்தன்கோயில் நல்விருந்தாயினான்.
பழிக்கஞ்சிய புகழ்ச்சோழர், நாயனார் வரிசையில் எண்ணப்படுகின்றார் அப்படியானால், பாண்டியன் நெடுஞ்செழியன்.?
இலக்கியகலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
 

ஐந்தில் ஒன்று
பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் எழுதிய கதிர்மணி விளக்கம் என்னும் பேருரையின் ஒரு பகுதி (திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்) 1950ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது தெ. பொ. மீனாகூதிசுந்தரனார்,
திருவாசகத்திணைப்புற்றி அவர் செய்த சொற்பொழிவுகளையும், இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து' எண்டது முதலிய பகுதிகளுக்கு அவர் கூறிய நமங்களையும் கேட்டவர்கள், இவர் உரை ஒன்று எழுதி வெளியிடாரா' எண்று விரும்பிய விருப்பம் எல்லாம் இண்று நிறைவேறிவருகிறது. இது கண்டு எந்தத் தமிழன் மனந்தான் மகிழது.
என்றெல்லாம் பாராட்டினார்.
திருவாசகத்தில் வரும் திருச்சதகம், நீத்தல்விண்ணப்பம், திருவெம்பாவை எனும் பகுதிகளின் உரையாசிரியராகச் செட்டியார் ஆற்றிய பணியைப் பதினெட்டு ஆண்டுகளின் பின் மதிப்பிடும் உரையாசிரியர்கள் (முதற்பதிப்பு: 1968 ஏப்ரில்) எனும் நூலும் இருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு என்ற உவமையினை அவர் விளக்கியிருக்கும் அருமையையே பாராட்டுகிறது:
பெருஞ்சொல்விளக்கனார், முதுபெரும்புலவர் அ. மு. சரவணமுதலியார், தம் மனக்குறையொன்றை, பாவம் மெல்ல வெளியிடுகிறார்.
முதலியாரின் முறையீடு இது:
இது (மேற்படி உவமைக்கான விளக்கம்) 1937ஆம் ஆண்டு பெரியபுராண நிறை விழாவிலி என்னாற் பேசப்பெற்று, 1943ஆம் ஆணர்டு இந்திரா (செட்டிநாட்டிலிருந்து வெளிவந்த திங்கள் இதழ்) எண்னும் பத்திரிகையில் எழுதப்பெற்றதுமாகும். இதனைத் தம் கருத்தாகப் பின்னர்ச் சிலர் எழுதிக்கொண்டார்கள்:
தம் கருத்தாகப் பின்னர் எழுதிக்கொண்டவர் யார்? எப்போது தம்மிடம் அக்கருத்தை அவர் பெற்றார் என்பவற்றையெல்லாம் சூசகமாகக் குறிப்பிடவும் அவர் தவறவில்லை.
திரிசிரபுரச் சைவசித்தாந்த சபையில் நாட்டாரையா (நாவலர், பணடித நமு.வேங்கடசாமி நாட்டார்) அவர்கள் விருப்பப்படி 1936 முதல் எண்ணால்
அதிதீரன் 7

Page 9
க. உமாமகேசுவரன்
நடத்தப்பெற்றுவந்த பெரியபுராண விரிவுரையின் நிறைவிழ7 28/37இல் நடைபெற்றது. ஐயா (நாட்டார்) அவர்கள் முயற்சியில் நடைபெறுவதால் சிறந்த புலவர்கள் வரப்போகிறார்கள் என்பதையும், (காலஞ்சென்ற) மகா மகோ உபாத்தியாய பணடிதமணி மு. கதிரேசச்செட்டியார் என்னும் பேரறிஞர் தலைமை வகிக்கிறார்கள் என்பதையும் அறிந்தேன். பெரியபுராண இறுதி வெள்ளானைச் சருக்கம். அச் சருக்கத்தின் முதற் பாடலில் காலை மலர்செங் கமலக்கணி கழறிற் றறிவார் எண்னுந் தொடரிலே எண் கருத்து ஆழ்ந்தது. நுணர்பொருள் புலனாகியது; அதிலிருந்து குற்றம் நீக்கி ஆள்கின்ற பல உவமைகள் சிந்தனைக்கு வந்தன. இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து' எண்னும் திருவாசகத்திலுள்ள தொடரை அந்த இனத்திற் சேர்த்துப் பேசியகாலை, நாவலர் திருவாளர் சோமசுந்தரபாரதியார் என்னும் அறிஞர் பெருமான் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து உடலைச் சிறிது மேலே தூக்கி மூன்று முறை பேஷ், பேஷ்த் பேஷ்' என்று சொன்னார்கள்."
வெறும் வாயையே மெல்லவல்ல ஆராய்ச்சிப் பிரியர்களுக்குப் பிடி அவலாய்ச் சுவைக்க வாய்த்த இச்செய்தி இவ்வளவிலே அமைய, சோமலெ தரும் செய்தி ஒன்றைக் காண்போம்.
கதிரேசனாரும் பணடிதமணி எண்னும் பட்டத்தையே சிறப்பாக மதித்தார். மகா மகோபாத்தியாயப் பட்டம் இன்னும் பலருக்கு வழங்கப்பெற்றது; அதைப்பற்றி அவர் குறைப்பட்டதில்லை. பணடிதமண7எனற பட்டம் இலககையிற் சிலருக்கு வழககப்பெற்றபோது, எண்ண அப்பண், இலககையில் அப்பட்டத்தைத தனணிர்போல வழககிவிடுகிறார்களே/* என்று எண்னிடம் கேட்டார்கள்
பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியாரை விட்டுவிட்டு இனி நமது இலக்கிய கலாநிதியாகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைச் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
சமயம் இலக்கியம் பாஷை யாவற்றுக்கும் மூல உயிர்ப்புப் பொருள் என்ற உணர்ச்சி மிக்கவரான திரு. பொ. கைலாசபதி அவர்களின் கூட்டரவால், தாம்
மிக்க பயனடைந்ததாக மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்பவர் நம் பண்டிதமணியவர்கள்.
அதனாலேதான்,
ஆத்மீகச் செல்வர்களான உபஅதிபர் திரு. பொகை அவர்களின் சந்நிதி எண் சிந்தனைக்கு ஊற்றாயிருந்தது “
எனவும்,
* அழுத்தம் கட்டுரையாசிரியன்
 

ஐந்தில் ஒன்று இலக்கிய ரசனை உலகுக்கு திரு. வே. மகாலிங்கசிவம் என்று பெயர். சமய தத்துவ உலகுக்கு உபஅதிபர் திரு. பொ. கைலாசபதி என்று பெயர். இருவரும் இருபெருங் கற்பக தருக்கள்.
சுந்தன மரங்களுக்கு அணிமையில் நின்ற குற்றத்துக்குத் தணடனையாக சாதாரண மரமொன்றில் சந்தன நறுமணம் வருகிறதென்றால், அந்த மரம் ஆம் என்று தலையசைக்குமா? தலை குனியுமா? மரத்தின் நிலை எண்ணாகும்.
சில சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட கற்பகதருக்களை நினைவு கூர்ந்து дворя) குனிந்து, நிலத்தை நோக்கும் நிலை எண்பால் நிலைப்பதுண்டு’
எனவும் எழுதியுள்ளார்கள். இப்படி அவர்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போதே,
மூலிகைகளைக் கணட சித்தர்கள், பெரியவர்கள். அம் மூலிகைகளின் அருமை அறிந்து பயன்படுத்துகின்ற சித்த வைத்தியர்கள் அவர்களுக்கு அடுத்தபடியில் வைத்து எண்ணத்தக்க பெரியவர்கள். '
என்ற உண்மை எம் நினைவில் எழாமல் இல்லை. ஆயின் சமய சாதகரான அந்த மகான் திரு. பொ. கைலாசபதி அவர்களோ அதற்கும் மேலே போய்,
ஏதோ பொருளைப்பற்றி சிலபல நூல்களையுந் தழுவி அறிகிறதற்கு நான் முயன்றிருக்கலாம். யோசனைகள் - ஆராய்ச்சிகள் நடந்திருக்கலாம். அந்த யோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் எடுத்துச் சொல்லச் சிலர்பலர் சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த யோசனைகளை, ஆராய்ச்சிகளைச் சொல்லுகிற முறையாலே அந்த யோசனைகள் ஆராய்ச்சிகள் விருத்திப்பட, சீர்ப்படக்கூடிய முறையும் அமைந்தது. அந்த யோசனைகளை, ஆராய்ச்சிகளை எடுத்துச்சொல்லச் சந்தித்த முக்கியப்தர் ஒருவர் பண்டிதர் அவர்கள் - பணடிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள். '
என்றெல்லாம் மனமுவந்து பாராட்டுகிறார்கள். இருப்பினும் செட்டியார் அவர்களைப்போலே மூச்சுப் பேச்சற்றிருக்கப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களால் இயலவில்லை; இயலாது.
சால்பென்னும் மணிமணிடபமாக விளங்குபவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். அந்த மணிமண்டபத்தைத் தாங்கும் வயிர மணித்தூண்கள் ஐந்தில் (அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை) ஒன்று எவ்விடத்தும் மெய்ம்மை கூறல் (வாய்மை) என்ற அரிய பண்பு. அப்பண்பு ஒன்றினை மட்டுமே இங்கு நாம் கண்டானந்திக்கும் பேறு பெற்றோம்; யாரே வடிவினை முடியக் கண்டார்?

Page 10
க. உமாமகேசுவரன்
கேதெ (Goethe) பற்றிக் கூறநேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில்,
lalent alone cannot make a writer, There must be a man behind the book"
என்று எமெசன் (Emerson) சொன்னதுண்டு
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் நூல்கள் திறமையொன்றால் மட்டும் உருவாக்கப்பட்டவையல்ல. அவற்றிலே பண்டிதமணி என்ற மனிதர் - சமயி - வாழ்கிறார்; அவர் அமரர்.
குறிப்புக்கள்:
1. மு.கதிரேசச்செட்டியார், திருவாசகம் - நீத்தல்விணணப்பம் (கதிர்மணி
விளக்கம்) உரை (காரைக்குடி, 1950) அணிந்துரை, பக்.13
2. மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள் (திருத்திய இரண்டாம் பதிப்பு]
(சிதம்பரம், 1977), பக். 587-588.
3. அ. மு. சரவணமுதலியார், கட்டுரைப்பொழில் (சென்னை, 1955), பக்.57
4. மேற்படி முன்னுரை, பக்2-3.
5. சோம. லெ. இலக்குமணச் செட்டியார், பணடிதமணி (சென்னை, 1955)
பக்.173
6. சி. கணபதிப்பிள்ளை, சிந்தனைக்களஞசியம் (சுன்னாகம், 1978),
Luš. Xvii
7. சி. கணபதிப்பிள்ளை, இருவேறு உலகம். வாழ்த்து, ஈழநாடு, 1980.11.08
8. சி. கணபதிப்பிள்ளை, இலக்கியவழி (திருத்தப் பதிப்பு)
(சுன்னாகம், 1964) பக். 105
9. பொ. கைலாசபதி, பண்டிதர் அவர்கள், பணடிதமணி கணபதிப்பிள்ளை
அவர்கள் மணிவிழா மலர் (யாழ்ப்பாணம், 1959), பக். 1.
10. George Sampson (Ed.) The Works of Ralph Waldo Emerson Vol 1 (London, 1906) p. 508
பணிடிதமணி சி கணபதிப்பிள்ளை நினைவு மலர் 1989
10 அதிதீரன்
 

O 02 03 04
05
06
07 08
09
10 11 12 13 14 5 6
7 18
"வாழி செந்தமிழ் இலக்கிய லக்கண வரம்பு"
2
9Nی
அ
<
3
மூன்று நிரல்கள்; பதினெட்டு வரிசைகள். உள்ளே சில வரிவடிவக் குறியீடுகள். மூன்றாவது நிரலின் பதினெட்டு வரிசைகளிலும் குறியீடுகள் நிரம்பியுள்ளன. இரண்டாவது நிரலின் பதினெட்டு வரிசைகளிலும் வரும் குறியீடுகள் ஒரே மாதிரியானவை. முதலாவது நிரலின் பன்னிரண்டாவது வரிசைக்குரிய குறியீடு மட்டும் தரப்படவில்லை. இங்கே தரப்பட்டுள்ள குறியீடுகளின் அமைப்பையும் ஒழுங்கையும் வைத்துக்கொண்டு காணாமற் போய்விட்ட அந்தக் குறியீட்டைக் கணிடுபிடிக்க முடிகிறதா? முயன்று பாருங்கள்.
கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறமுனைபவர் தாம் அப்படிக் கூறுவதற்கான காரணங்களை முன்வைக்கவேண்டும்.
இந்தப் புதிரை விடுவிப்பதற்குத் தமிழோ தமிழிலக்கணமோ அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை. மொழி இன மத பேதங்களைக் கடந்த போட்டி இது. வெறுங் குறியீடுகளாக மட்டுமே அட்டவணையில் உள்ளவற்றைக் கருத வேண்டும். நுழைவுக்கட்டணம் இல்லை. பரிசு: தமிழ் இலக்கண நுட்பம் ஒன்றை Lós எளிதாகப் புரிந்துகொள்ள வாய்த்ததால் ஏற்படும் fuLATULJLOTTGOT மகிழ்ச்சி.
ஆறுதற்பரிசு: விடையைக் காணமுடியாது திண்டாடுவோர்க்கான விளக்கம்.
(பார்க்க: மறுபக்கம்.)
அதிதீரன் 11

Page 11
க. உமாமகேசுவரன்
புதிருக்கான விளக்கம்.
இரண்டாவது நிரல், + அ = என்ற குறியீடுகளையே பதினெட்டு வரிசைகளிலும் கொண்டிருக்கின்றது. எனவே அது பொதுவானது என வைத்துக்கொள்ளலாம். ஆனால் முதலாம் நிரலின் ஒரு வரிசையில் வரும் குறியீடு மூன்றாம் நிரலின் அதே வரிசையிலே புள்ளி ஒன்றை மட்டுமே இழந்த நிலையிற் காணப்படுகின்றது. வேறு எந்த வேறுபாட்டினையும் அந்தக் குறியீடு அடையவில்லை. மூன்றாம் நிரலின் பன்னிரண்டாம் வரிசையில் வரும் ர என்ற குறியீடு, முதலாம் நிரலின் பன்னிரண்டாவது வரிசையில் இடம்பிடிக்கவேண்டுமானால் புள்ளி ஒன்றை மட்டுமே பெறவேண்டும் என்பது தெளிவாகின்றது. பன்னிரண்டாம் மெய்க்கான குறியீடு ர்தான் என்பது உறுதியாகின்றது.
பதினெட்டு மெய் எழுத்துக்களிலேயே பதினேழு அ என்ற உயிரோடு சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் ஆவதற்காகத் தமது புள்ளிகளை மட்டும்தான் இழக்கின்றன. வேறு உருவமாற்றம் எதனையும் எய்தவில்லை என்பதைக் கண்ட பின்பும் பன்னிரண்டாவது மெய்மட்டும் ர் என்ற வடிவினது என்றும் அ என்ற உயிரோடு சேர்ந்ததும் புள்ளி இழப்பதோடு அமையாது (ா இப்படி இருக்க வேண்டியது ர் இப்படி) வடிவமாற்றமும் பெறுகின்றது என்றும் கூறுவோர் இருப்பார்களேயானால் அவர்களை அப்படி நீங்கள் கூறற்கான ஆதாரங்களைத் தயை கூர்ந்து கூறுங்கள் என்று நாம் கேட்போம். பதில் தர இயலாமையால் ர் தான் பன்னிரண்டாவது மெய்யின் வரிவடிவம் என்பதற்கான ஆதாரங்களை நீங்கள் தாருங்கள் பார்க்கலாம் என எதிர்க்கேள்வி கேட்பார்களேயானால் அவர்களுக்கெனத் தரப்படும் ஆதாரபூர்வமான விளக்கம்
இது.
இலக்கண நூல்களிலே எழுத்துக்களின் வரிவடிவம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவம் பற்றிப் பவணந்தி நன்னூலிலே கூறியுள்ளார்
புள்ளிவிட் டவிவொடு முண்ணுரு வாகியும் ஏனை உயிரே7 டுருவு திரிந்தும் உயிரண வாயதண் வடிவெழித் திருவயிற் பெயரொடு மெற்றுமுன் னாய்வரு முயிர்மெய்
இங்கே நமக்கு வேண்டிய பகுதி, புள்ளிவிட்டு அவ்வொடு முன்னுரு ஆகியும் எள்பது மட்டுமே.
12 அதிதீரன்
 
 
 

வாழி செந்தமிழ் இலக்கிய லக்கண வரம்பு
மெய் எழுத்துக்கள் அ என்ற உயிரோடு சேரும்போது புள்ளியை மட்டுமே விட்டதான அதே பழைய வடிவமாகியும் என்பதே மேலே குறித்த சூத்திரப் பகுதியின் பொருள்.
இது பற்றித் தொல்காப்பியர் என்ன சொல்கிறார்; அறிந்துகொள்ள வேண்டாமா?
புன்னி இல்லா எலிலா மெய்யும் உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும் ஏனை உயிரே7 டுருவுதிர் துயிர்த்தலும் ஆமீ ரியல உயிர்த்த லாறே
இங்கே நமக்கு வேண்டிய பகுதி,
புள்ளி இல்லா எல்லா மெய்யும் உருவுருவாகி அகரமொடு உயிர்த்தலும். எள்பதே.
மெய் எழுத்துக்கள் புள்ளியை நீங்கிய வடிவே தமக்கு வடிவமாகி நின்ற பின் அகரத்தோடு ஒலித்தலும் என்பதே மேற்படி நூற்பாப் பகுதியின் பொருள். இங்ங்ணம் தொல்காப்பியர் கூறியுள்ளதையே பவணந்தி புள்ளிவிட் டவ்வொடு முன்னுருவாகியும் என வழிமொழிந்துள்ளார் என்பது வெளிப்படை. இருவர் கருத்தும் இது விஷயத்தில் ஒன்றே.
தொல்காப்பியரும் பவணந்தியும் மெய் எழுத்து அகர உயிரொடு சேரும்போது புள்ளியை இழந்துவிடும். அதன் எஞ்சிய வடிவம் எந்த மாற்றமுமின்றி முன்னிருந்தது போலவே இருக்கும் என்றிலக்கணம் வகுத்திருப்பதைப் பார்த்தோம்.
அப்படியானால்,
அகர உயிரோடு மெய் இணைந்திருப்பதைக் குறிப்பிடும் குறியீடு ஒன்றுக்குப் புள்ளியை இடுவதன் மூலம் இணைந்த மெய்க்கான குறியீட்டைக் கண்டறிந்து விடலாம். ர அகர உயிரோடு பன்னிரண்டாவது மெய் இணைந்திருப்பதை உணர்த்தும் குறியீடு. இக்குறியீட்டுக்குப் புள்ளியிட்டதும் அது பன்னிரண்டாவது மெய்க்கான குறியீடாகிவிடும். ர் தான் பன்னிரண்டாம் மெய்க்கான குறியீடு என்பது இலக்கண நூல்களின் தீர்ப்பு. இனிச் சட்டத்தரணி எவருக்கும் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இல்லையே இல்லை; இலக்கணச் சட்டம் இடம் தராது.

Page 12
க. உமாமகேசுவரன்
எளிமைப்படுத்திய சுருக்கம்.
தொல்காப்பியமும் நன்னூலும் தமிழிலக்கண நூல்களிலே தலையாயவை. இவை அகர உயிரோடு மெய் எழுத்துக்கள் இணைந்து உயிர்மெய் ஆகும்போது அடையும் வரிவடிவ மாற்றத்தைப்பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. மெய் எழுத்துக்கள் அனைத்தும் புள்ளியோடு கூடியவை. (மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் - தொல். எழுத்து) இவை உயிர் எழுத்துக்களிலே முதலில் வரும் அ வோடு கூடினால் புள்ளியை இழப்பது ஒன்று தவிர்ந்த வரிவடிவ மாற்றம் எதனையும் அடைவதில்லை(உதாரணம் த் + அ = த) என்றிந்த இலக்கண நூல்கள் இரண்டும் உறுதியாகக் கூறுகின்றன.
பன்னிரண்டாவது மெய்யை எழுதுவது எப்படி? என்பது தான் அறிஞர் சிலரின் இடர்ப்பாடு. அதிஷ்டவசமாக பன்னிரண்டாவது மெய் அகரத்தோடு கூடியிருப்பதைக் குறிப்பிடும் ர என்னும் வரிவடிவத்திலே எவருக்கும் எந்தவிதமான கருத்து முரண்பாடும் இல்லை. (பன்னிரண்டாவது) மெய்யின் புள்ளியிழந்த கோலந்தான் அம்மெய் <9f%伊 உயிரோடு இணைந்துவிட்டதென்பதற்கு அடையாளமான குறியீடாகும் என்கின்றன இலக்கண நூல்கள். அப்படியானால் பன்னிரண்டாவது மெய்யின் குறியீடு ர் என்பதன்றி வேறெதுவாகத்தான் இருக்க முடியும். ர் + அ = ர (புள்ளி இழப்பைத் தவிர மாற்றம் வேறெதுவும் இல்லை.)
இதுவரை சுபக்கம்; இனி,
பரபக்கம்.
ர் என்ற குறியீடுதான் பன்னிரண்டாவது மெய்க்கான குறியீடு என (வெறும்) விவாதத்துக்காக வைத்துக்கொள்வோம். அப்படியானால் பன்னிரண்டாவது மெய் அகர உயிரோடு இணைந்துவிட்டது என்பதைக் காட்டும் குறியீடு எது? இலக்கண விதிப்படி இந்தக் குறியீட்டின் புள்ளி ஒன்றை நீக்கலாமே தவிர வேறெந்த மாற்றத்தினையும் செய்யக்கூடாது ர் + அ = ர என்றல்லவா ஏற்பட்டுவிடும். இனி கரகம் காகம் ஆகிவிடும். காராம்பசு காம்பசு ஆகிவிடும். சரணம் சாணம் ஆகிவிடும். அது மட்டுமா? ர என்ற குறியீடு இருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை என்றும் ஆகிவிடுமே ஐயோ! இனி சங்கரா ராமா என்று தலையில் அடித்துக் கதறவும் வழியில்லையே சங்கா ராமா என்றல்லவா எழுதித்தொலைக்க வேண்டும். விவாதத்துக்காக என்று ஆரம்பித்தே இத்துணை விபரீதமாகிவிட்டதே. உண்மையாகவே இந்தக் குறியீட்டைக் கொள்ள ஆரம்பித்தால். வேண்டாம்
"கொல்லாதீர் எம்மை விடும்!”
அச்செழுத்து வார்ப்போரால் நேர்ந்த அவலமே i என்ற குறியீடு. மிகச் சிறிய எழுத்துக்களாக வார்க்க நேர்ந்தபோது கீழே வரும் மடிப்பை உடைந்து
 

வாழி செந்தமிழ் இலக்கிய லக்கண வரம்பு
போகாமல் வார்ப்பது, அப்படி வார்த்து முடித்தாலும் உடைந்து போகாதபடி அச்சகங்களிலே வைத்துக்கொள்வது என்பதெல்லாம் இயலாது போகவே ர என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு ரகர வரிசையில் வரும் ஏனைய எழுத்துக்களின் மடிப்பைக் கிள்ளி எறிந்துவிட்டார்கள். ரகரக்தின் கீழ் மடிப்பிலே கை வைக்காதது அந்த ஒரு எழுத்தின் மீது கொண்ட "கருணையினால் அல்ல" அப்படிக் கைவைத்தால் நேரக் கூடிய விபரீதங்களை உணர்ந்தமையாலேயே ஆனால் மெய் எழுத்துக்கான குறியீட்டின் கீழ்மடிப்பை கிள்ளியதால் நேர்ந்துவிட்ட இலக்கண விநாசத்தை இவர்கள் உணரவேயில்லை. இது இடைப்பிறவரல், ர் என்ற குறியீட்டின் ரிஷி மூலம்".
இலக்கண வாடை சற்றேனும் பட்ட அச்செழுத்து வார்ப்போர் சிலர் இன்றும் ர் என்ற குறியீட்டை மட்டுமன்றி ரகர வரிசை முழுவதையுமே போஷிக்கின்றார்கள். இலக்கண இலக்கிய மரபு தழைக்க வேண்டும் என்ற தாகம் மிக்கவர்கள் இத்தகையவர்களிடமே எழுத்துக்களைக் கொள்வனவு செய்ய வேண்டும். இது கணனி யுகம். எழுத்துக்களைப் பெரிதாகவும் சிறிதாகவும் அமைத்துக்கொள்வது மிக எளிதான காரியம்; எழுத்தின் கீழ் மடிப்பு உடைந்துபோம் என்ற அச்சத்துக்கு இடமேயில்லை. இனி நம்முடைய கவனம் நம்முடைய இலக்கணம் நமது அலட்சிய புத்தியாலும் அறியாமையாலும் அநாவசியமாக உடைக்கப்படாது காப்பதிலேயே குறியாக இருக்க வேண்டும் . வாழிய செந்தமிழ்
* ரிஷிமூலத்தை விண்டுரைத்தவர் குரும்பசிட்டி அமரர் மு. சபாரத்தினம் அவர்கள்.
கலசம் 1996 ஐப்பசி
m m
பிழைகளைக் காணும் அறிஞர்கள் செந்தமிழ் முதலிய பத்திரிகைகளில் அவைகளைப் பிரகடனஞ்செய்தல் நன்று.
பிழைகூறல் அவமானஞ்செய்தலன்று. அது சன்மானமாய் நமக்கும் பயன்படும்;
கற்போர் பிறர்க்கும் பயன்படும்; திருத்தமும் பலவாகும்.
சுண்ணாகம் அ. குமாரசுவாமிப்புலவர்.
தமிழ்ப் புலவர் சரித்திரம் - முகவுரை.
அதிதீரன் 16

Page 13
யாதனை இதற்கு நேரா இயம்புவத?
மாவண்டூரிலே ஒரு கொல்லுலைக்களம். உரிமையாளன் சிங்கன். தன் தொழிலிலோ அவன் ஈடிணையற்றவன். புலவன் ஒருவனுக்கு உடனே ஓர் எழுத்தாணி வேண்டும். அவன் மாவண்டூர்க் கொல்லுலைக்களத்துக்கு விரைகின்றான். எத்துணைக்கெத்துணை தொழிலில் நிபுணனோ அத்துணைக்கத்துணை காலம் கடத்துவதிலும் சிங்கன் நிபுணன். புலவன் மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்கின்றான். காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்கான சூட்சுமந் தெரிந்தவனின் சொக்கவைக்கும் பேச்சு அது. நீண்டதொரு வரிசை நிற்கிறது. வரிசையிலே நிற்பவர் அத்தனைபேரும் கடவுளர். வரிசையின் தொடக்கத்திலே நிற்பவர் மகாவிஷ்ணு. கருடன் அவரைக் கடுகதியிற் கொண்டுவந்து சேர்த்துவிட்டதுபோலும். "சக்கரம் ஒன்று வேண்டும் என்றேனே! வேலை முடிந்துவிட்டதா? எத்தனை நாள்தான் நான் அலைவது?" - அழாத குறையாகக் கெஞ்சுகிறார் அவர். ஆழியான் ஆழி என்பானர். அடுத்து நிற்பவர் பிரமா. "அத்தனை ஜீவராசிகளினதும் தலையிலே எழுதுவதென்பது எளிதான வேலையா என்ன? போதாததற்கு எழுத்தாணியின் முனை வேறு எழுதி எழுதித் தேய்ந்துவிட்டது; எழுதவே முடியவில்லை. எழுத்தாணி ஒன்று வேண்டும் என்றேனே! ஒரு சின்ன எழுத்தாணிக்காக இப்படி அன்னந்தண்ணிர் இன்றி அன்னத்தில் ஏறி அலையவேண்டும் என்று என் தலை நான்கிலும் எழுதித் தொலைத்திருக்கிறதே!" என்று அங்கலாய்க்கிறார். 'அயனி எழுத்தாணி என்பானி'
“கிரெளஞ்சம் என்ற குண்றைப் பிளக்கவேண்டும்; அதற்கோர் வேல் வேண்டும். எத்தனை தரந்தான் நான் அலைவது; கேட்பது; அலுத்துவிட்டேன்" - சேவற்கொடியோனான குமரன் தன் பங்குக்குக் குமுறுகிறான். கோழியாணி குண்றெறிய வேலெண்பாணி' "என்றோ கொடுத்தேன் என் மழுவை; போகட்டும். இன்றைக்காவது அதைத் திருப்பித் தரக்கூடாதா? ஐயோ! எங்கே என் மழு?" என்றவாறு நெருப்புக் கண்ணான நெற்றிக் கண்ணிலும் நீர் வடியும் நிலையில் இரந்து நிற்கிறான் உருத்திரன்.
பூழியான் எங்கெண் மழுவெண்பாணி
"ஒகோ! அப்படியானால் தேவகம்மியனான விஸ்வகர்மாவினுடைய உலைக்களத்திலேதானே இப்படியெல்லாம் நடக்கிறது" என்று இடைமறித்தான் சிங்கன். "சிங்கா அங்கே போய் நிற்கத் தேவர்களுக்கென்ன பைத்தியமா? இதெல்லாம் இந்த மாவண்டூர் உலைக்களத்திலேதான்!” என்ற புலவன் பாடவே ஆரம்பித்துவிட்டான்.
 

யாதனை இதற்கு நேரா இயம்புவத? ஆழியாணி ஆழி அயனினழுத் தாணியெண்பாணி கோழியாணி குண்றெறிய வேல்எண்பாணி - பூழியாணி எங்கெண் மழுளண்பாண் எண்றுமந்த மாவணடுர்ச் சிங்கனி உலைக்கணத்தே செண்று “மாவண்டூர் உலைக்களத்தின் முன்றிலிலே மும்மூர்த்திகள். காரியம் ஆவதற்காகக் காலமெலாம் காத்திருக்கவும் அவர்கள் தயார். எப்படிப்பட்ட கைவினைஞன் சிங்கன் என்பது இப்போது புரிகிறதா?" என்று புலவன் முத்தாய்ப்பு வைத்ததும் சிங்கனுக்கு உள்ளங்காலிலிருந்து உச்சிபரியந்தந்தானா அதற்கு மேலும் குளிர்ந்துவிட்டிருக்கும். புலவனுக்கு ஓர் எழுத்தாணியை அடித்துக்கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பான் அவன் என்று சொல்லத்தேவையில்லை. தன் அலுவலை நிறைவேற்றிக்கொள்வதற்காகச் சிங்கனை உயர்த்தவேண்டும் என்ற அவசரத்திலே முருகப்பெருமானின் வேலைச் செய்தவனே மாவண்டூர்ச் சிங்கன்தானோ என்ற மயக்கத்தையே எழுப்பிவிட்டான் புலவன். இதைக் கேட்க நேர்ந்திருந்தால் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளுக்கு எப்படி இருந்திருக்குமென்று சொல்லவேண்டியதில்லை. சூரபத்மன் சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்துப் போர்புரிகிறான்; மாமரமாகி நின்று மருட்டப்பார்க்கிறான். சுப்பிரமணிய சுவாமி தம்முடைய ஒப்பற்ற படைக்கலத்தை- ஞானவேலை - பிரயோகிக்கப்போகின்றார். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் வேலைப் பற்றிப் பேசுவதற்கான மற்றொரு சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது. இந்த வேல் எப்படி உருவாயிற்று?, எந்த உலைக்களத்திலே இது தயாராயிற்று? என்று கேள்விமேற் கேள்வியாக அடுக்கிவிட்டுச் சுவாமிகள் பேச ஆரம்பிக்கின்றார்கள். பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் கிளம்பிற்று. அதை அப்படியே திரட்டிச் சிவனின் நெற்றிக்கண் நெருப்பின் வெம்மையையும் ஆற்றலையும் சிறிதே ஊட்டி, நடராஜ மூர்த்தியின் இடது திருக்கரத் தீயிலே தோய்த்து, ஒரு வேலைச் செய்திருந்தால் (அப்படி ஒரு பொருள் இல்லை. இல்லாத அந்தப் பொருளை இருப்பதாக வைத்துக்கொண்டு உவமை" ஆக்கினால்) அந்தக் கற்பனைவேல்போல இருக்கும் இந்த முருகன் கைவேல்' என ஒருவாறு தாம் வேலைப்பற்றி மிக எளிமைப்படுத்திச் சொல்லிப் புரியவைத்துவிட்ட குதூகலம் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளுக்கு. அதேவேளை, சுப்பிரமணிய சுவாமியை மாவண்டூர்ச் சிங்கன் கொல்லுலைக்களத்திலே காத்திருக்கவைத்த அந்த அசட்டுப் புலவனிடமிருந்து, நாம் காப்பாற்றப்பட்டுவிட்டதான களிப்பு நமக்கு.
விடம்பிடித் தமலணி செங்கணி வெங்கனலி உறுத்திப் பரணி இடம்பிடித் திட்ட தீயிற் றோய்த்துமுன் இயற்றி யன்ன உடம்பிடித் தெய்வம் இவ்வாறுருகெழு செலவிற் செண்று மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தனிறே/ (பாணி-கை, உடம்பிடி- வேல்) அந்தப் புலவன் தன் காரியம் ஆகவேண்டும் என்பதற்காகச் சிங்கனை
அணி இலக்கணகாரர் இதனை இலிபொருள் உவமை என்பர்

Page 14
க. உமாமகேசுவரன் உயர்த்தவேண்டும் என்று கருதினான். முருகனையே அவன் வாசலிலே காக்கவைத்தான். கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளுக்குத் தன் காரியம் எதையும் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் என்ற சுயநலம் சிறிதும் இல்லை. பிழைக்கத்தெரியாத அப்பாவி. எனவே இந்த வேலை வைத்துக்கொண்டு கந்தபுராணமாகிய சைவத்தமிழ்க் காப்பியத்திலே காப்பியகதாசம்பவத்துக்குப் புறம்பாக - இடைப்பிறவரலாக - அரியதொரு கருத்தைக் கூறிவிடலாமே என்று நினைக்கிறார். "ஆஹா இந்த வேலுக்கு நிகரானது என எதனைச் சொல்வது? யாதனை இதற்கு நேரா (நிகராக) இயம்புவது?" என்று திகைப்பது போல ஒருகணம் நமக்குப் போக்குக் காட்டுகிறார். அடுத்த கணம் தாம் அதைக் கண்டுபிடித்துவிட்டதான களிப்போடு துள்ளிக்குதிக்கின்றார். எல்லாம் வெறும் நடிப்பு ஐயா நடிப்பு. தேவர்கள் விதம்விதமான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் அல்லவா? ஆனால் அவர்கள் மணமோ வேதனையால் நிரம்பி வழிகின்றது. பேடிகை வாள் போல அவர்களது ஆயுதங்கள் பயனற்றவை. அவை வேலுக்கு நிகராவதேது? பூதனை என்ற அரக்கி திருமாலின் அவதாரமான கண்ணனைக் கொல்வதற்கெனக் கம்ஸனால் ஏவப்பட்டாள். கண்ணன் என்ற பிஞ்சுக் குழந்தைக்குப் பாலூட்டுவதாக அவள் பாசாங்கு பண்ணினாள். பாலுக்குப் பதில் நஞ்சைப் பீச்சினாள். கள்வனான கண்ணன், பால் குடிப்பதுபோல, அவள் உயிரையே குடித்துவிட்டான். அத்தகைய திருமாலையே இரத்ததானம் செய்யப்பணித்து வலி கெடுத்தவன் வைரவமூர்த்தி. பிரமாவின் தலையைக் கிள்ளித் தருக்கடக்கியவனும் அவனே! அவனுடைய சூலமல்லால் யாதனை இந்த வேலுக்கு நிகராகச் சொல்வது. முருகப்பெருமானுடைய வேல் வைரவப்பெருமானுடைய சூலத்திற்கு நிகரானது என்ற சமன்பாட்டின் மூலம் வைரவமூர்த்தி சுப்பிரமணியசுவாமி என்பதெல்லாம் ஒரே மூர்த்தியின் நாம ரூபபேதங்களே! ஒன்றே உள்பொருள். ஞானிகள் அதைப் பலவாறாகக் குறிப்பிடுவர் என்றெல்லாம் முருகன் கைவேலை வைத்துக்கொண்டே சிந்திக்கும் வேலையை நமக்கு வைத்துவிட்டார் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்.
வேதனை அகத்த ராகும் விணணவர் படைகள் தமமுள் யாதனை இதற்கு நேரா இயம்புவ தெரியிற் றோன்றி பூதனை உயிருணி கள்வணி புணர்டர் கத்தணி வண்மை சோதனை புரிந்த மேலோனி குலமே எண்ப தண்லாலி காரிய சாதகத்திற்காக மாவண்டூர்ச் சிங்கன் என்ற தொழில் வல்லுநனைப் புகழ ஆரம்பித்த புலவன் ஒருவன்” “வேல் ஒன்று கொடு" என்று குமரன் கேட்பதே சிங்கனிடந்தான் என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டான். அப்படி அநுசிதமாக அபசார வார்த்தைகளைத் தன் சுயநலத்திற்காக உதிர்க்கத்தெரியாத கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் வேலை வைத்துக்கொண்டு ஏகம்சத் விப்ரா பகுதா வதந்தி என்ற ஆப்தவாக்கியத்திற்கு அரியதொரு உரையே விரித்துவிட்டார். கந்தபுராணம் நமக்கு வாய்த்த அற்புத கற்பகம். அது கற்றனைத்தூறும் அருளமுதக் கேணி; வெறும் மணற்கேணி அன்று * கம்பணிதான் அவனென்று சத்தியம் செய்கிறது தனிப்பாடற்றிரட்டு
 

தியாகராஜ கிருதிகளின் ரிஷிமூலம்
பாரத ஒருமைப்பாடு பற்றிப் பாட எண்ணிய பாரதிக்குப் பாட்டிசைப்பதுபற்றி நினைவு எழுந்ததும் தெலுங்குதான் நினைவுக்கு வருகிறது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்' என்று அடித்துச்சொன்ன பாரதியே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்தே தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம்! எனத் தெலுங்கை நினைத்துக்கொண்டு - சுந்தரத் தெலுங்கு என்ற அடை கொடுத்து - உருகுகிறான். தியாகராஜ கிருதிகளிலே திளைத்த பாரதியின் இதயாநூபவம் அப்படியே வாய்சோர்ந்து சொல்லாகிவிட்டது.
"எவரணி என்ற தியாகையர் கீர்த்தனையை மேல் ஸ்தாயியல் பாடிக்கொண்டே அவர் (கிட்டப்பா) மேடைக்கு வந்தால் குண்டூசி விழுந்தால் சத்தம்கேக்குமே! சில சமயம் வள்ளி நாடகத்திலே 'அம்மராவம்ம என்ற கல்யாணி ராகக் கீர்த்தனையைப் பாடிக்கொண்டே வருவார். நான் சாரமதியில் கூடிாக்ஷாத்காரணி பாடிக்கொண்டே வருவேன். என்னுடைய ஸ்பெஷலே கூடிாக்ஷாத்காரணிதான். மேடையிலே என்னைக் கண்டாலே கூடிாக்ஷாத்காரணி பிளிஸ் என்று அன்பர்கள் வேண்டுவார்கள”- ஒரு பேட்டியில் K. B. சுந்தராம்பாள் சொன்னது இது. முருகனோ, வள்ளியோ, சிவனோ, யமனோ மேடைக்கு வருவதானால் தியாகராஜ கிருதி பாடிக்கொண்டு வந்தால்மட்டுமே அன்று மக்கள் ரசிப்பார்கள். தியாகராஜ கிருதிகளுக்கு இத்தகைய மாயசக்தி எங்கிருந்து வந்தது? தியாகராஜகிருதிகள் ஒவ்வொன்றும் எப்படிப் பிறந்தது என்ற ரகஸியம் தெரிந்தாலே அந்த உண்மை புலனாகும்.
திருமணம் ஒன்றிலே மணமக்களுக்குப் பரிசு வழங்கும் சமயம். மணப்பெண்ணின் தந்தையின் சீடர் வெயர்க்க விறுவிறுக்க மணப்பந்தலுள் நுழைகிறார். அவர் கையிற் பரிசுப்பொட்டலம். சம்பிரதாயப்படி அதை மணமக்களிடம் வழங்காமல் தம் குருவிடம் சமர்ப்பித்து மணமக்களிடம் வழங்குமாறு வேணிடுகிறார். குருவுக்கு என்ன தோன்றியதோ? பரிசுப்பொட்டலத்தைப் பரபரவென்று தாமே பிரிக்கிறார். உள்ளே சீதாராம பட்டாபிஷேக ஒவியம். அவ்வளவுதான் சூழலே மறந்துவிட்டது குருவுக்கு. கண்கள் பனிக்கின்றன. “ஓ ராமா என்னை ரகூஷிக்க நடந்தே வந்துவிட்டாயா?” என்று விம்முகிறார். மோஹன ராகத்தில் நன்னு பாலிம்ப நடசிவசித்திவோ என்ற கீர்த்தனையின் ரிஷிமூலம் இது. சீடர் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர். குரு தியாகராஜ ஸ்வாமிகள். இன்றைக்கும் அந்தப் பாடலைக் கேட்டு நாம் கிறுகிறுத்துப்போகிறோம் என்றால் பாடவேண்டும் என்று முயன்று பாடி, இசையமைக்கவேண்டும் என்று முயன்று இசையமைக்கப்படாத பாடல் அது என்பதுதான் காரணம். பக்தியில்லாத சங்கீதத்தால் பயன் ஏது? என்று (சங்கீதஞானமு - தந்நியாசி) கேட்ட மஹான் பக்தியால் மனங்குழைந்த போதெல்லாம் அநாயாசமாகப் பிறந்த பாடல்களே தியாகராஜ கிருதிகள் என்பதுதான் காரணம்.
அதிதீரன் 19

Page 15
க. உமாமகேசுவரன்
தியாகராஜ ஸ்வாமிகளின் கிருதிகளில் ராகபாவம் தனிச் சோபையோடு மிளிரும். சங்கதிகளை ராகபாவத்துக்காகவும் சாகித்திய பாவத்துக்காகவும் அமைத்து வழிகாட்டியவர் ஸ்வாமிகளே. தீக்ஷதருடைய 'ஸஅப்ரம்மணியாய நமஸ்தே (காம்போஜி) யில் அருமையான சங்கதிகள் வருகின்றன. ஆனால் அவற்றை அமைத்தவர் தீகூஷிதரல்லர்; மஹாவைத்தியநாதசிவன் என்கிறார் சாம்பமூர்த்தி. ஸ்வாமிகளைப் பொறுத்தவரையில் இப்படி எதுவும் காதில் விழுவதாக இல்லை.
நாஜீவா தாரா (பிலஹரி), தாரினி தெலிக கொண்டி (சுத்தசாவேரி) என்ற இரண்டு கிருதிகளும் ராகபாவ சங்கதிகளுக்குச் சிறந்த உதாரணங்களாகத் திகழ்பவை. மாருபல்க (gரஞ்சனி) காலஹரணமேலரா (சுத்தசாவேரி) இரண்டும் ஸாகித்தியபாவங்களுக்கு உதாரணமானவை. “என்ன தாமதம், என்னைப் புரக்க ஏன் தாமதம்?" என்ற ஏக்கம் கலந்த கெஞ்சல் பாவத்தைச் சங்கதிகள் மூலம் ஸ்வாமிகள் தொனிக்கும்படி செய்திருக்கும் அற்புதத்தைக் காலஹரண மேலரா கிருதியிற் கேட்டு ரஸிக்கும் பாக்கியம் படைத்தோரே பிறந்த பயனை அடைந்தவர்கள்.
கல்கியின் ஹாஸ்யம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒரு வித்துவான் கல்கியிடம் "தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனங்களைத்தானே நாங்கள் ரொம்ப அதிகமாகச் சின்னாபின்னப்படுத்துகிறோம். அதற்குப் பரிகாரமாக ஒரு வருஷம் ஒருதடவை திருவையாற்றில் ஸ்வாமிகளின் சமாதிக்கு உற்சவம் நடத்துகிறோம்" என்றாராம்.
தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடம்பண்ணுவோர் அருகிவிட்ட இந்தக் காலத்திலே கல்கி இருந்திருந்தால் பரிகாரந் தேடவேண்டிய அவசியங்கூட இன்று இல்லையே என்று எழுதியிருப்பார்போலும். ஸ்வாமிகளின் கீர்த்தனைகளிற் சில உருமாறிவிட்டன. உதாரணம்: ஞானமு ஸகராதா ஷட்விதமார்க்கினி ராகத்திலேதான் ஸ்வாமி பாடித்தந்திருக்கிறார். இப்போது பூர்விகல்யாணி ராகத்தில் அனைவரும் பாடுகிறார்கள். பழைய வழியில் இந்தக் கீர்த்தனத்தைப் பாடம் செய்து பாட வித்துவான்கள் முன்வரவேண்டும். மரிமரி நின்னே கீர்த்தனம் சினிமாவில் லாரமதி ராகத்திற் பாடப்படுகிறது. இப்படியான மாற்றங்கள் விரும்பத்தக்கவையல்ல.
ஸ்வாமிகளின் கிருதிகள் காலத்தால் அழியாதவை. இசைப் பொக்கிஷங்களான அவற்றை இன்றைய சந்ததியினர் பயின்று அடுத்த சந்ததியினருக்கு வழங்க முன்வருவது ஒன்றே ஸ்வாமிகளுக்கு நாமாற்றும் ஒப்பற்ற கைம்மாறாய் அமையும். தியாகப்பிரம்ம உற்சவங்கள் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.
26 அதிதீரன்:
 

செந்தமிழ்மணி சில குறிப்புக்கள்
இசைமேதை 'ரைகர் வரதாசாரியாரிடம் இசை பயின்றோர் பலர். ஒவ்வொருவரும் பயிற்சி முடிந்து வெளியேறும்போது சான்றிதழ் வேண்டும் என்று கேட்பார்கள். 'ரைகர் எழுதிக் கொடுத்துவிடுவார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யர் எம் டி ராமநாதனுக்குத் தாமும் ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக்கொண்டால் நல்லது என்று பட்டது. ரைகரிடம் வந்து தயங்கி நின்றார். என்னடா? என்றார் ரைகர். சர்டியிகேட் வேணும் - தலையைச் சொறிந்தார் ராமநாதன். உனக்கேண்டா அதெல்லாம்? நீதான் வாயைத் தொறந்தா ரைகர் சிஷ்யன்னு தெரிஞ்சுடுமே. அப்பறம் எதுக்கு சர்டியிக்கேட்? - சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டார் ரைகர்.
பரீசைஷ எடாத பண்டிதர், குருகவி ம. வே. மஹாலிங்கசிவம் அவர்களிடம் பயிற்சிக்கலாசாலையிற் பயின்றோர் பலர். ஆனால் பொ.கி. வாயைத் திறந்தாற் போதும். அவர் மஹாலிங்கசிவம் பண்டிதரின் மாணவர் என்ற உண்மை தெரிந்துவிடும். அதனாலேதான் பண்டிதமணி அவர்கள், மஹாலிங்கசிவம் அவர்களின் பலதுறைப்பட்ட இரசனைகளிலும் முழுகித் திளைத்து ஏப்பம் இட்டவர் பிள்ளை (வீரகேசரி -1977-01-23) எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
1927ஆம் ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிற் பிரவேசிக்கிறார் பண்டிதமணி, பயிற்சி முடித்து வெளியேறுகிறார் செந்தமிழ்மணி. "இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தி"ய சந்தர்ப்பத்தைத் தமக்கே உரிய பாணியில் இந்துசாதனம் இதழொன்றில் பண்டிதமணி விவரித்திருக்கிறார்:
அன்று மாலையில் அதிபர் அவர்கள் வசிக்கும் மணிடப முன்றிலில், பூந்தோட்ட மத்தியில் புதியவர்க்கு ஒரு தோட்ட விருந்து வழங்கப்பட்டது. விருந்தின்போது அங்கே பயிற்சி முடித்துக்கொண்ட ஒருவர் வரவேற்புரை வழங்க எழுந்தார். சங்கச் செய்யுள் ஒன்றில் சிலவரிகள் சொல்லப்பட்டன. அப்பால் வியாக்கியானம். முன்னமே பண்டித பர்க்ஷையிற் சித்தியெய்தியவன் நான். சற்றே தலை வீக்கத்துடன் அங்கு கொலுவிருந்த எனக்கு நெஞ்சு படக்குப் படக்கு என்று அடிக்கத்தொடங்கிவிட்டது. வரவேற்புரைக்குப் பதிலுரை செய்யப் பண்டிதரான என்னை எழுப்பிவிட்டால் என்ன செய்வதென்பதுதான் அந்த நெஞ்சிடி என்னை எழுப்பியிருந்தால் முழங்கால்கள் ஒன்றோடு ஒன்று மோதி வாதநோய் வந்திருக்கும்.
கரும்புச் சாற்றைத் தேனோடு கலந்து கல்லாக்காரமுஞ் சேர்த்து வரவேற்புரை வழங்கி, கலாசாலையிற் பிரவேசஞ் செய்தவர்களைக் கொள்ளைகொண்ட இனிய பண்டிதர். கற்கண்டு மனிதராய பொன். கிருஷ்ணபிள்ளையல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும்
தீரன் 21

Page 16
க. உமாமகேசுவரன்
அடுத்த நாளே நட்புக் கால்கோளானது.
நட்புக் கால்கோளாயினமைக்கு செந்தமிழ் மணியின் சொற்பொழிவுத் திறனைக் காரணமாக்குவர் பண்டிதமணியெனின் செந்தமிழ்மணியின் சொல்வன்மை எத்தகையதாய் இருந்திருக்கும்
"கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனின் ஆராமைக்குப் பாத்திரமானவர் செந்தமிழ்மணி. கி.வா.ஜ. தமது சித்திவேழம் என்ற நூலிற் புலவர் கிருஷ்ணப்பிள்ளை எனப் பெயர் குறிப்பிட்டு இவரை உளமாரப் பாராட்டியுள்ளார். செந்தமிழ்மணியிடம் கி.வா.ஜ. தமது கட்டுரைகள், கதைகள், கவிதைகள் பற்றி அவ்வப்போது உசாவுவதுண்டு. ஒருதடவை "எனது கட்டுரைகளில் தங்களை மிகமிகக் கவர்ந்த கட்டுரை எது?” என்று கி.வா.ஜ கேட்டது கேட்குமுன் ஆடும்பெருமான்' என்றார் செந்தமிழ்மணி. "அந்தக் கட்டுரை எனது மூன்று வருடகால உழைப்பு. ஆடும் பெருமானையே எனது சிறந்த கட்டுரையாக நானும் கருதுகிறேன்" என்றுகூறி அகமிகமகிழ்ந்தார் ஜகந்நாதன். தலைவியைத் தலைவன் கேட்கிறான்:
ரசிகனைப் போலநாணி
நெருங்கி வருகிறேன் நீயேன் ஒரு விமர்சகண் போல
விலகி நிற்கிறாய்
ரசிகன் விமரிசகனாக முடியாது; விமரிசகன் ரசிகனாக இருக்கவியலாது என்றதொரு கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்த புதுக்கவிதைக் கண்சிமிட்டு இது. இதற்கு விதிவிலக்காக - ரசிக விமரிசகராக - விளங்கியவர் செந்தமிழ்மணி பொன் கிருஷ்ணபிள்ளை.
பிள்ளை, 'ஆனந்தமடம் நாவலுக்கு விமரிசனம் எழுதினார். 'ஆனந்தவிகடன் ஆசிரியராய் அப்போது இருந்தவர் கல்கி. விமரிசகர் நூலின் கடைசிச் சில பக்கங்களைப் படிக்கவில்லை என்பதை எப்படியோ கல்கி ஊகித்துவிட்டார். பொ.கிக்கு இதுபற்றி எழுதினார். பொகியும் தமக்குக்கிடைத்த நாவல் பிரதியில் இறுதிப்பக்கங்கள் சில இல்லை என்பதைத் தெரிவித்தார். பிள்ளையின் நாவல் பிரதியை அனுப்பும்படி கேட்டுப் பெற்றுக்கொண்ட கல்கி, கடைசிச் சில பக்கங்களில் நாவலாசிரியர் எழுதியிருப்பதைச் சரியாகவே ஊகித்து விமரிசனம் எழுதிய பொ.கியின் ஆற்றலை வியந்தார; பரிசு வழங்கிப் பாராட்டினார்.
செந்தமிழ்மணியின் விமரிசன ஆற்றலைக் கோடிட்டுக்காட்டும் இச் சம்பவம் ஒரு நூலை மேலோட்டமாகப் பார்த்தாலும் சரியாகவே விமரிசனம் செய்துவிடக்கூடிய அவரது அநாயாசமான ஆற்றலையும் புலப்படுத்துகிறது.
 

செந்தமிழ்மணி சில குறிப்புக்கள்
ஈழகேசரியின் புத்தக விமரிசனப்பகுதிக்கு ஒரு காலத்திற் பொறுப்பாயிருந்தவர் பொ.கி. அக்காலத்தில் அவர் செய்த விமரிசனங்களை எஸ் வையாபுரிப்பிள்ளை, கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ரஸிகமணி டி.கே. சிதம்பரநாதமுதலியார் முதலியோர் பாராட்டியிருக்கிறார்கள்.
விமரிசனத்துறையில் தமக்கு ஆதர்ஸமாக விளங்கியவர் செந்தமிழ் மணிதான் என்று கணக. செந்திநாதன் ஒருமுறை குறிப்பிட்டதுண்டு. திறவாத படலை, கடுக்கனும் மோதிரமும் முதலிய நூல்கள் பொ.கியின் இலக்கியச்சோலைக் கட்டுரைகளின் பாணியிலமைந்த கட்டுரைகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பழந்தமிழ் இலக்கியங்களிற் பொ.கிக்கு நிரம்பிய புலமை உண்டு. சுவை தேர்ந்துணர்வதில் - உணர்த்துவதில் அவர் நிகரற்றவர். ஒப்பியல் நோக்கும் அவர்பால் நிரம்பியிருந்தது.
மனிதநேயம் மிக்கவரான பொ.கி மனித மேம்பாட்டினை எடுத்துக் காட்டுவனவாக - மானிட உயர்வுக்கு வித்திடுவனவாக - அமைவனவே சிறந்த இலக்கியங்கள் என்ற கோட்பாட்டினர். அக்கோட்பாட்டிற்கமைவான இலக்கியங்களை அறிமுகஞ் செய்துவைக்கும் நோக்கில் ஈழகேசரியில் அவ்வப்போது இவர் எழுதிய கட்டுரைகளிற் பதினெட்டே இலக்கியச்சோலை என்ற பெயரிற் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் அனைத்தும் வாசகனை முன்னிறுத்தி உரையாடும் பான்மையில் அமைந்தவை.
"A good critic is one who narrates the adventures of his mind among masterpieces"
எனச் சிறந்த விமரிசகனுக்கு இலக்கணம் வகுக்கிறான் அனதோல் பிரான்ஸ் (Anatole France)
கிருஷ்ணபிள்ளைக்கு அது முற்றிலும் பொருந்தும் என்கிறது இலக்கியச்சோலை,
இலக்கியச்சோலை (இரண்டாம் பதிப்பு) - 1988.
அதிதீரன் 23

Page 17
பூதராயர் ~ ஒரு நதி மூலம்
பூதராயர் வழிபாடு யாரைக்குறித்த வழிபாடு? இது சைவ சமயிகளுக்கு உரிய வழிபாடுதானா? அதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா? இல்லையேல் இது வெறும் சிறுதெய்வ வழிபாடுதானா? பூதராயர் என்ற தெய்வத்தின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? - இவை சுவாரஸ்யமான வினாக்கள்.
ராஜா என்பது ஆரியச் சொல். ராயர் என்பது அது தமிழ் உருவம் பெற்றதால் ஆன சொல் - வடசொல். எனவே பூதங்களின் தலைவர் என்பதே பூதராயர் என்ற தொடரின் பொருள்.
பூதராயர் என்ற மறக்கருணை நதியினுடைய மூலம் கந்தபுராணம் என்ற
மலையிலேதான் உள்ளது. அது இது.
@j·<头列岛k列
சிவனை வழிபடக் கயிலங்கிரி சென்றான் இந்திரன். அவனுக்கோ உள்ளங்காலிலிருந்து உச்சி பரியந்தம் அகந்தை. பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு அவர்தமை நாணி நக்கு நிற்பவன் அல்லவா சிவன். அவன் பூத வடிவம் எய்தினான், கயிலையங்கிரியின் முதற்பெருந்தோரணவாயில் முகப்பில் நின்றான்.
விரைந்து உள்ளே புகவென வந்த இந்திரன் புதியதோர் பூதம் குறுக்கே நிற்பது கண்டான். மிகுந்த அலட்சியத்தோடு, 'யார் நீ? அருள் வள்ளலாகிய சிவனைத் தொழ வந்தேன். சொல் பெருமானைத் தொழற்கான தக்ககாலம் (செவ்வி) தானே இது என்று உறுமினான். பூதமோ பதில் எதுவுமே கூறவில்லை. அளவிறந்த வன்மை படைத்தவன் தான் என்ற தருக்கினால் வச்சிராயுதத்தை ஏவினான் இந்திரன். அப் படைக்கலமோ நுண்துகள்களாகச் சிதறியது. பூதம் நின்ற இடத்திலே உருத்திரன். இந்திரனது அகந்தைத் தீயை அணைக்கவெனச் சிவன் சடைக் கங்கைதான் பிரவாகித்ததோவென உருத்திரனின் உரோமத்துவாரந்தோறும் வியர்வை பொங்கியது. இந்திரன் உயிரைக் கொள்வேன் என உள்ளுறு காற்று எழுந்ததோவென மூச்சுக்காற்றுப் புகையோடும் எழுந்தது. நெறித்த புருவங்கள் நெற்றியைச் சேர்ந்தன. மதனனை எரித்த விழித்தீ இதுதான் எனும்படி விழி சிவந்தன. உருத்திரன் நின்ற இடத்திலே அயன் முதலிய தேவர் அனைவரும் அஞ்சி நடுங்கும் வண்ணம் பேருரு ஒன்று எழுந்தது.
அஞ்சி நடுங்கிய இந்திரன் உண்மையை உணர்ந்தவனாய், அகந்தை ழிந்தவனாய், எனக்குன்மாயம் தெரியுமோ? அயனும் அரியுமே இன்னும் ரிந்திலரே மேருவை வில்லாய் வளைத்தவரே செய்பிழை பொறுத்தருள்க என்று பலவாறு துதித்தான். காலில் வீழ்ந்து கதறினான். இந்திரன் பன்முறை இவ்வாறு பணிந்தெழலும் தன் சீற்றமாகிய தீயைத் திரட்டிக் கடலிலே வீசினான்
 

பூதராயர் - ஒரு நதிமூலம்
சிவன். மேற்கிலே அஸ்தமிக்கும் சூரியனோ இதுவெனும்படி கடலிலே வீழ்ந்தது அது. 'அஞ்சல் என அன்புடன் இந்திரனுக்கு அபயமளித்து, விடையளித்து செல் என்றபின் கயிலை புக்குக் கெளரியோடும் வீற்றிருந்தான் கண்ணுதல். சிவனது சீற்றம் வருணனை அடைந்ததும் சிறுவனானது. அந்தச் சிறுவனைத் தன் திரைக்கரங்களாலே வருணன் தழுவினான், 'யான் அலாது யார் தவம் செய்தார்? என்று மகிழ்ந்தான். உலகு பேரினும் ஊழி நீ வாழ்க! என்று தன் வாயார மனமார வாழ்த்தினான். அந்தச் சிறுவனோ அழ ஆரம்பித்தான். விண், மண் எண்டிசை என்று எல்லாமே அதிர்ந்தன. செவி படைத்தவை செவிடு பட்டன. அழுகுரல் ஒசையொன்று வானளாவுகின்றதே! எங்கிருந்து இவ்வொலி வருகுவதோ என்று நூலறிவு மிக்க நான்முகனே திகைத்தான். கடலிலே இருந்துதான் இந்தக் கத்துங்குரலோசை வருகிறதென்பது புரிந்ததும் கடலை நோக்கி ஓடினான்.
கடலைப் பிரமன் அடைதலும் வருணன் மிக்க அன்போடு ஆசனம் ஒன்றை இட்டான். இவ்வாசனத்திரு பாலன் இவனைப் பார் என்றான். கையில் அச்சிறுவனை எந்தி நீட்டினான். நீட்டுதலும் பிரமன் விரைந்து வாங்கினான், மடிமீது கிடத்தினான். பிரமனின் தூய புல்லொத்த தாடிகளைக் கடலின் புதல்வன் ஒவ்வொன்றாய்த் தொடர்ந்து பற்றினான். நான்கு தாடிகளையும் நாரைத் தொடுத்ததுபோல் ஆக்கினான். அவற்றைப் பற்றித் தொங்கினான். நான்முகனின் புகழே கீழிறங்குவதுபோல அவன் கண்களினின்றும் நீர் கீழே வழிந்து பெருகியது; மற்றொரு கடலாகிக் கடலுட் கலந்தது. முக்கண்ணன் கோபம் புகுந்ததும் கடல் வெப்பமுற்று வற்றியது. நான்முகன் கண்ணிர் புகுந்ததும் தான் முன்புற்ற வறுமையின் நீங்கியது; வளமுற்றது.
சிறுவனின் கைகளினின்றும் மிகுந்த சிரமத்தின் பின் தன் தாடிகளை விடுவித்துக்கொண்டான் பிரமன். மெல்லச் சிறுவனைக் கடலுள் விடுத்தான். வருணனை நோக்கி, "கொன்றை சூடிய சிவனின் கோபத்திலே தோன்றியவன் இவன். ஒருவரையும் ஒரு பொருட்டாய் இவன் மதியான். வரபலம் என்று எதுவும் இவனுக்கு வேண்டாம். எவராலும் இவன் அழிவும் எய்தான். தீயும் நின் சேயின் வெம்மையாலே தீயும். அங்ங்ணமாயின் தேவரின் சாபம் இவனுக்கு எம்மாத்திரம். இவனை நானும் அஞ்சுவேன்; மாலும் அஞ்சும் யமனும் அஞ்சும்; உலகும் அஞ்சும். இந்திரன் முதலிய தேவர் இவன்முன் நிற்கவும் வல்லரோ? நீண்ட காலம் இவன் கொடுங்கோல் செலுத்துவான். ஈசன் அன்றி யார் இவனை வீட்டுவார்?" என்றான். பிரமன் இவ்வாறு கூறியதும், "இவனுக்கோர் பேர் சூட்டு” என்றான் வருணன். "இவன் பேர் சலந்தரன் என வழங்கட்டும்” என்றான் பிரமன். சலத்திலே (கோபம்) தோன்றியவன் இவன், சலத்திலே (நீர்) வளர்பவன் இவன் என்றெல்லாம் எண்ணித்தான் பிரமன் அவ்வாறு பெயரிட்டான் போலும்.
பாலகனான சலந்தரன் வளர்ந்தான். காளைப்பருவம் எய்தினான். உலகின் திசையனைத்தும் வென்றான். "அமராவதி (இந்திரன் நகர்) அனையதொரு நகர் அமை” எனத் தானவர் (அவுணர்) தச்சனைப் பணித்தான். தச்சனும்
அதிதீரன் 25

Page 18
க. உமாமகேசுவரன்
அமைத்தான்.
காலநேமி என்ற அவுணன் புதல்வி விருந்தை. அவள் அழகிலும் கற்பிலும் அறிவிலும் சிறந்தவள். சலந்தரன் விருந்தையைத் திருமணம் புரிந்தான். தன் தலைநகரிலிருந்து ஆட்சி புரிந்தான். தேவரை வெல்லும் ஆசை எழுந்தது. போர் புரியப் பறப்பட்டான். போருக்கு வந்தான் சலந்தரன் என்றதும் தேவர்கள் அரியேறு கண்ட ஆணையாயினர். பாற்கடலிலே துயிலும் பரந்தாமனைச் சரண் புகுந்தனர். கருடன் மீது இவர்ந்து கண்ணெதிரே தோன்றினான் கரிய திருமால்.
சலந்தரனுக்கும் ஜனார்த்தனனுக்கும் போர் தொடங்கியது. இருபதாயிரம் ஆண்டுகள் இப்போர் நீடித்தது. இத்தனை ஆண்டுகளின் பின்பும் திருமால் சலந்தரனைப் புறங்கண்டிலன். போருக்காற்றாது இளைத்துச் சலந்தரனைப் போற்றிப் புகழ்ந்தான; புறமுதுகிட்டான்.
கொண்டல் வண்ணன் கொடியவனான சலந்தரனோடு போரிடத் தொடங்கியபோதே அஞ்சிய அமரர் அனைவரும் கயிலையங்கிரிச் சாரல் புக்கு ஒளித்தனர். கற்றோரேத்துங் கயிலயங்கிரி புக்கார் தேவர் என்று அறிந்ததும் சலந்தரன் அங்கே செல்லத் துணிந்தான். சேனையோடும் இவன் எழுதலும், "வேண்டாம்! வேண்டாம் நித்தனுடன் நீ போர் செய்தால் மாண்டாய், மாண்டாய்!” என்று அவன் மனைவி விருந்தை தடுத்தாள். குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங் குறிக்கொண்டான் அல்லன் சலந்தரன்.
சோனாமாரிபோற் படைமாரி சொரிகின்ற சேனாயூகம் சூழச் சலந்தரன் தென்கயிலைப்புறம் வருதலும் இந்திரன் அஞ்சினானேனும் இவன் தன் உயிர் முடிவுறவே இங்கு வந்தானென்று எண்ணிக் களிப்பும் எய்தினான். கயிலையங்கிரியின் வாயிலை எய்தி நந்திதேவரை வணங்கித் தன் பரிதாப நிலையை உரைத்தான். நந்தி தேவர் இரங்கி இந்திரன் உள்ளேபுக அநுமதித்தார். உட்புகுந்த இந்திரன், தன் உள்நடுக்கத்தை உலக காரணனான உமாபதிக்கு உரைத்தான்.
"சலந்தரனுக்கு அஞ்சி மேருமலை புக்கேன். அங்கும் வந்துவிட்டான். திருமாலிடம் தஞ்சம் புகுந்தேன். திருமாலோ தோற்றோடிவிட்டார். ஈங்கு வந்தெய்தினேன்; இங்கும் வந்துவிட்டான். என் துயர் தீர்த்தருள்” என்று கயிலைக்கிறைவனைக் கைகூப்பி இறைஞ்சினான் இந்திரன். "உன் துயர் ஒழிதி" என்று இந்திரனுக்கு அபயம் அளித்த அரண் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தத் திருவுளம் கொண்டான்.
ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலான் குண்டிகையும் விசிறியும் கோலும் ஏந்திய முனிவனாய்க் கயிலையின் புறத்தே வந்து தோன்றினான். சலந்தரனை நோக்கி. "எங்கிருப்பவன் நீ? இங்கு நீ எய்திய காரணம் என்ன?” என்றான். "நிலத்தில் வாழ்பவன். சலந்தரன் என் பேர். தேவர் அனைவரும் தோற்றோடினர். நுதல்
 

பூதராயர் - ஒரு நதிமூலம்
விழியோனுடன் போரிடவென வந்தேன்” என்றான் சலந்தரன்.
உன்னெண்ணம் அருமையானது அற்புதமானது என்னதான் தடையிருக்கிறது இதற்கு? என்று புகழ்வதுபோலக் கூறி இகழ்ந்தான் அந்தணமுனிவனான அரன். "கயிலயங்கிரிப் பிரானோடு போர்புரியின் நீ தொலைந்தாய். வேண்டாம; மீண்டுவிடு” என்று எச்சரிக்கையும் விடுத்தான். அவ்வளவுதான்.
"எளியவன் என்றென்னை எண்ணிவிட்டீர். இன்னும் சிறிது நேரம் இங்கே நிற்பீரானால் என் வன்மை எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்வீர்” என்று நெருப்பெழச் சீறினான் சலந்தரன்.
"நானும் உன் வன்மை காணவே வந்தேன்” என்ற சிவன் தன் திருவடியினாலே சக்கரம் ஒன்றைத் தரையிலே கீறினார். "தலையினாலே இந்தச் சக்கரத்தைத் தாங்கவல்லையோ" என்று கேட்டார். "புங்கவர் யாவரையும் புறங்கண்டேன்! கங்கையை அடைத்தேன். கடலின் நடுவிலுள்ள வடவாமுகாக்கினியை அவித்தேன். அரியை வென்றேன். இந்தச் சக்கதீைதைத் தாங்குவது அரிதோ?” என்று எள்ளி நகையாடிய சலந்தரன் கனமிக்க அந்தச் சக்கரத்தைக் கைகளினால் எடுத்து மார்பிலும் புயத்திலும் பெருமூச்செறிந்து தாங்கிப் பின்பு தலையிலே வைத்தான். சக்கரம் தலையிலே ஏறியதுதான் தாமதம் உச்சிமுதல் உள்ளந்தாள் வரை அவன் உடலை இரு கூறாகப் பிளந்தது; பின் இறைவனிடம் சென்ற சேர்ந்தது. தம் விழிபொழி கனலால் அவுணன் சேனையை அழித்தொழித்த பின் தந்தொன்மைத் திருக்கோலத்தைச் சிவன் காட்டியருளினார். அரி, பரமன், இந்திரன் முதலாந்தேவர், "எம் துயர் துடைத்தாய்" என்று நெக்குருகிச் சிவனைத் துதித்தனர்.
இந்திரனது அகந்தையை ஒழிக்கவெனச் சிவன் தாங்கிய திருவுருவுே பூதராயர் என்னும் திருவடிவாம். எனவே, பூதராயர் சிவனே! சிவபூதராயர் என்ற வழக்கும் இங்கே நினைவுகூரத்தக்கது. சிவபூதராயரெனும் திருவடிவிலே எழுந்தருளும் சிவபெருமானை வழிபடும் பேறு படைத்தோர் அகந்தையெனும் ஆணவம் ஒழிந்து பேரானந்தப் பெருவாழ்வெய்துவர் என்பதே கந்தபுராணம் நமக்குணர்த்தும் செய்தியாம்.
கலசம், 1995 சித்திரை.
பண்: புறநீர்மை சம்பரர் கருவிச் சனந்தரணி வீய தழலுமிழ் சக்கரம் படைத்த எம்பெரு மானார் இமையவர் ஏத்த இனிதினங் குறைவிடம் வினவில் அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யாண்மழை பெழியும் உம்பர்கள் ஏத்தும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யுதுவே
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
அதிதீரன் 2

Page 19
அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன.
தமிழில் அர்ச்சனை செய்தல் வேண்டும் என்பது எத்துணை உயர்ந்த இலட்சியம். இதுவரை நடைமுறையில் இருந்துவரும் பூஜை முறையையே புரட்டித் தலைகீழாக்கும் புரட்சி முயற்சி அது. பிராமணரைக் கோயில்களிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளும் புனித கைங்கரியம்.
இந்தப் பவித்திரமான முயற்சியில் ஈடுபடுவோரே உண்மைச் சைவர். ஏனையோர் போலிகள். தமிழபிமானம் இல்லாத சண்டாளர். நாளையிலிருந்தே நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டிய இந்த நன்முயற்சியை எதிர்ப்போர் தமிழ்த் துரோகிகள்.
உடனடியாகத் தமிழில் அர்ச்சனை செய்வித்து மகிழ நினைத்தாற் குறுக்கே நிற்கிறார்கள் கொடியவர்கள். யார் யார் குறுக்கே நிற்கும் கொடியவர்கள் என்று தெரிகிறதா? திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சேக்கிழார் சுவாமிகள், பூனிலg ஆறுமுகநாவலர் என்று ஒரு பெரிய வரிசையே நிற்கிறது. இவர்களைப் பேட்டி கண்டுவிட்டால் என்ன?
அடடே அவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளுகிறார்களே; அதைக் கேட்டுவிடலாமே!
இதோ நாரதர் வருகிறார். எண்னவோ கலகம் பண்ணத்தான் வருகிறார். நாரதர் கலகம் நன்மையிலேதான் முடியும்; பொறுத்திருந்து பார்ப்போம்.
(நாரதர் சம்போ மஹாதேவா என்று தேவகாந்தாரி ராகத்திற் பாடியபடி வருகிறார்)
சம்பந்தர்: வாருங்கள் நாரதரே! தங்கள் வரவு நல்வரவாகுக. (அனைவரும் மகிழ்வோடு வணங்குகிறார்கள்)
நாரதர்: என்ன திவ்வியமான காட்சி. நாயன்மார்கள், தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமான், ஐந்தாங் குரவர் எனச் சைவராற் போற்றப்படும் நாவலர் பெருமான். பிறந்த பயன் அடைந்தேன்.
அப்பர்: சுவாமி தாங்கள் திரிலோக சஞ்சாரி. மூன்று உலகத்தையம் வலம் வருபவர். ஏதாவது செய்தி உண்டா?
நாரதர்: செய்திக்கென்ன பஞ்சம்? உங்கள்பாடு இனி ஆபத்துத்தான்.
 

அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன.
அனைவரும்: சுவாமி என்னவோ அணுக்குண்டோ ஹைட்ரஜன் குண்டோ என்று சொல்கிறார்களே. அவற்றையே ஒன்றாக எங்கள் தலையிலே போட்டுவிட்டீர்களே. அப்படி என்ன ஆபத்தோ?
நாரதர்: இலணிடனில் அண்மையில் முதன்முதலாகச் சைவமகாநாடு கூட்டிச் சிறப்பாக நடத்திவிட்டார்கள். அபாரம் ஐயா விழா. ஆனால் திருஷ்டி பரிகாரமாக ஒன்று நடக்காமல் விடவும் இல்லை.
சேக்கிழார்: (ஆவல் தொனிக்கும் குரலில்) சுவாமி புதிர் போடாதீர்கள், சொல்லிவிடுங்கள்.
நாரதர்: ஒன்றும் புதிய விஷயமில்லை. தமிழ்நாட்டில் வீசத்தொடங்கி இன்னும் பலமடையாத காற்று மெல்ல இலண்டனில் வீசியது. பலமாக வீச முயன்று பலவீனமடைந்துவிட்டது. ஆனால் மீண்டும் ஏதோ ஒருதிசையில் வீசாதென்பதற்கு என்ன நிச்சயம்?
நாவலர்: நானும் அந்தக் காலத்திற் பிரசங்கம் பண்ணியிருக்கிறேன். ஆனால் விஷயத்தைத் தொடங்குமுன் பிரமாதமாக ஆவலைத் தூண்டுவதில் உங்களை விஞ்ச ஆளே இல்லை. விஷயத்துக்கு வாருங்கள்.
நாரதர்: தமிழில் அர்ச்சனையென்று ஒரு புதிய குரல் கிளம்பியிருக்கிறது.
எல்லாரும்: தமிழில் அர்ச்சனையா? இதென்ன புதுக் குழப்பம்.
நாரதர்: எதையாவது புதிதாகச் சொல்லிப் பரபரப்பு ஏற்படுத்த ஒரு கூட்டம் முயல்வதும் புதிதாக ஒன்றைச் சொன்னதும் மந்தைகளாய் எந்தச் சிந்தனையுமின்றிக்குதித்துக்கூத்தாடுவதுந்தானே மனித இயல்பு. இப்போதும் அதுதான் தலைவிரித்து ஆடுகிறது.
சம்பந்தர்: இவர்கள் மூலநூல்களைப் படிப்பதேயில்லை. திருமுறைகளை அர்ச்சனைக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால் முதலிலே திருமுறைகளிலே நிரம்பிய புலமை வேண்டும். அவை என்ன சொல்கின்றன என்ற பூரண ஞானம் வேண்டுமே. அது இருக்கிறதா இவர்களுக்கு?
அப்பர்: அந்த ஞானம் மட்டும் இருந்திருந்தால் இப்படிக் கூக்குரல் இடமாட்டார்களே.
நாரதர்: இப்போது புதிர் போடுவது உங்கள் முறையாகிவிட்டதா? தெளிவாகப்
அதிதீரன் 22

Page 20
க. உமாமகேகவரன்
புரியும்படி சொல்லுங்கள்.
நாவலர்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் திருமுறைகளிலே தெளிவாக வரையறுத்துச் சொன்னவைகளை ஓதி உணர்ந்தவர்கள் இன்றில்லை. அதனாலேதான் இந்தக் குழப்பம். அதுதான் போகட்டும். நான் சொன்னவற்றை, நான் வாழ்ந்துகாட்டிய நெறியைக்கூட நான் பிறந்த நாட்டினரே மறந்துவிட்டனர் பாருங்கள். இதுதான் என் உள்ளத்தில் உதிரம் வடியச் செய்கின்றது. மூவர் தேவாரத்துக்கும் உரை சொன்னவர் சேக்கிழார் சுவாமிகள். அவர் விளக்கம் சொல்வதுதான் இப்போது பொருத்தமாயிருக்கும்.
சேக்கிழார்: திருநாவுக்கரசு சுவாமிகளின் ஆறாந்திருமுறை இருபத்துமூன்றாம் பதிகத்தின் ஐந்தாம் பாடலிலேதான் முதன்முதலிலே தமிழன் என்ற பிரயோகமே வருகிறது. அதற்கு முன் யாரும் இத்தனை உணர்வுபூர்வமாகச் சொன்னதே கிடையாது.
சிவபெருமானை அவர் ஆரியணர் கணிடாய், தமிழன் கணிடாய் என்று அந்தப் பாடலிலே போற்றுகிறார். முதலில் ஆரியன் என்று சொல்லிப் பின்தான் தமிழன் என்று சொல்லுகிறார். எனவே, இவர் தமிழ்த்துரோகி என்று சொல்லிவிடுவார்களே என்ற அச்சம் அவருக்கு ஒரு சிறிதும் இல்லை. இறைவன் ஆரியனாகவும் இருக்கிறான், தமிழனாகவும் இருக்கிறான். எனவே ஆரியன் தமிழன் என்ற பேதமே அநாவசியம் என்று அப்பரடிகள் வலியுறுத்துகிறார் என்பதுதான் நாம் மனத்திருத்தவேண்டிய செய்தி. ஆறாந்திருமுறை நாற்பத்தாறாம் பதிகத்தின் பத்தாம் பாடலிலே
செந்தமிழோ டாரியனைச் சீரியானை திருமார்பிற் புரிவெணனூல் திகழப்பூண்ட ഴുffകഞ്ഞിഞ്ഞു.
எனச் சிவனைப் போற்றுகிறார்.
இங்கே செந்தமிழை முதலிலே சொல்லிவிட்டார். எனவே அவருக்கு ஆரியம் தமிழிடையே உயர்வு தாழ்வு நோக்கில்லை; இரண்டுமே சமம் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார். திருமார்பிற் புரிவெண்ணுரல் திகழப் பூண்ட அந்தணனை எனச் சிவனைப் போற்றுகிறார். சிவனே அந்தணன் என்கிறார் அப்பரடிகள். வேதம் ஓதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை எருதேறி வருவாரெனச் சிவனை ஞானசம்பந்தர் போற்றும்போது அந்தணனாகவே காட்டுகிறார். அந்தணர் பூசை செய்வதா என்று அந்தணர்மேற் காழ்ப்புக்கொண்டு கதறுவோர் அந்தணனாகவே காட்சி தருவதாகநாயன்மார் கூறும் சிவனையும் அல்லவோ ஆலயத்தினின்றும் கூசாது அகற்றிவிடவேண்டும். ஏன் தயங்குகிறார்கள்? முதலில் அதைச் செய்யட்டும்.
 
 

அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன.
நாவலர்: இவர்கள் வெட்டும் தமிழர்ச்சனைக் கிணற்றிலிருந்து புதியதொரு நச்சுப்பூதந்தான் புறப்பட்டிருக்கிறது. நமது நாயன்மார்கள் காலத்தில் ஆலயங்களிலே தமிழே பூஜை மொழியாக இருந்தது. தமிழர்கள் யாவரும் கருவறைவரை சென்று திருமேனியைத் தீண்டிப் பூவும் நீருங்கொண்டு பூஜை செய்துள்ளனர். முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அடி குறிப்பிடத்தக்கது என்றெல்லாம் கூசாது பொய்யை எழுத்திலும் பேச்சிலும் உமிழ்கிறார்கள்.
சம்பந்தர்: அந்தக் காலத்திலும் பூஜைக்குரிய மொழி ஆரியந்தான். அப்போது தமிழிலே பூஜை நடந்ததென்று எந்த ஆதாரத்தின்பேரிற் கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அந்த ஆதாரங்களை அவர்கள் முன்வைக்காமலே இப்படிப் பிதற்றுவதெப்படி நியாயமாகும்? பூஜை மொழி ஆரியம், தோத்திர மொழி திராவிடம் என்பதாக அமைந்திருந்ததுதான் உண்மை. நானே இந்த இரண்டுவிதமாக இருக்கும் நிலையைத்தான் முதலாந் திருமுறை எழுபத்தேழாம் பதிகம் நாலாம் பாடலிலே தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற்சேர என்று பாடியிருக்கிறேன்.
சேக்கிழார்: அதுமட்டுமல்ல. மூன்றாந்திருமுறை முப்பத்தொன்பதாம் பதிகம் நான்காம் பாட்டிலே, படித்ததன் பயன் பரமனைப் பத்தி பண்ணுவதே. அதற்குத் துணைபோபவை ஆரியத்தொடு செந்தமிழ், ஆரியம் மந்திரவழி அர்ச்சனை, பூஜைக்கு. திருமுறை பூஜைவேளையிலே தோத்திரமாக அமைவதற்கென்ற பாகுபாட்டினை, அப்பாகுபாட்டால் விளையும் பயனை, அறியாதோரை மந்திபோறி றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயணி அறிகிலா அந்தகர் என்று கண்டித்திருக்கிறீர்கள். திருநாவுக்கரசு நாயனார் ஆறாந்திருமுறை பதினேழாம் பதிகம் ஆறாம்பாடலிற் சிவனை விபூதி பூசிய மேனியர், விபூதிப்பையை உடையவர், புலித்தோல் உடையினர். பொங்கிச்சீறும் பாம்பு அணிந்தவர், பூணுரல் பூண்டவர், அடியவரிடம் குடிகொள்பவர், அந்தணர் இயற்றும் வேள்வியின் ஆகுதி மந்திரமாக அமைபவர் என்றே குறிப்பிடுகிறார். அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் என்பதனாற் பிராமணர் பூஜையையே அவர் ஒப்புக்கொள்கிறார். தமிழ் அர்ச்சனைபற்றித் திருமுறைகளிற் பேச்சேயில்லை.
அதனாலேதான் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க அவதரித்தவர் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் என்று நான் பாடினேன். அவர் சரித்திரத்திலே அப்படிப் பாடினாலும் நாயன்மார் அத்தனைபேருமே அந்த நோக்கத்திற்காகவே திருவவதாரம் செய்தவர்கள் என்பதை மறக்கலாகாது.
நாவலர்: சேக்கிழார் சுவாமிகளே இன்னுமொன்றையும் நீங்கள் இச்சந்தர்ப்பத்திலே மற்றொருமுறை தெளிவு படுத்திவிடுங்கள். முன்பே அதை அழுத்தந்திருத்தமாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள். எனவே தாங்கள் அதுகுறித்துப் பேசவேண்டும்.
சேக்கிழார்: எதைப்பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பதை அறிவேன். தமிழர்கள்

Page 21
க. உமாமகேசுவரன்
பெரியபுராணத்திலே வரும் முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணத்திலே ஆதிசைவர்தான் முப்போதும் திருமேனி தீண்டி அர்ச்சிக்க வேண்டுமென்பதை விதிமுறை வழுவாமே முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர் என்று குறிப்பிட்டிருக்கிறேன். சிவார்ச்சனை சிவாசாரியர்களுக்கே ஏகபோகமானது என்பதை
".செல்காலம் நிகழ்காலம் வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன." என்று குறிப்பிட்டிருக்கிறேன். வேதத்தின் உட்பொருளான சிவனை மூன்றுகாலப் பூஜையிலுந் திருமேனி தீண்டும் மறையோரின் - வேதியரின் பெருமையையும் பேற்றையும் எண்ணி அவர் திருவடித்தாமரைகளை வணங்கிக் கசிந்துருகி,
ஆரணத்தின் உட்பொருள்கள் அனைத்தும் ஆகும் அணனலைஎன வணியகாலம் மூன்றும் அண்பினர் காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் என்று பரவிவிட்டேன்.
நாவலர்: என்பேராலும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. நான் ஒருபோதும் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமென்று எழுதியதோ பேசியதோ இல்லை. கோயில்கள்தோறும் ஒதுவார்மூர்த்திகளை நியோகித்துத் திருமுறை ஒதும்படி செய்யவேண்டுமென்றே முயன்றேன். சிவாசாரியர்களும் வடமொழியை நன்கு கற்றுத் தேர்ந்து பூஜைமுறைகளை நன்கு அறிந்து பூஜை செய்யவேணடும் என்றே வலியுறுத்தி வந்துள்ளேன். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கும் இந்தக் கருத்திலேதான் ஒதுவார்களைத் தருவித்தேன். தமிழில் அர்ச்சனை செய்ய அல்ல. அது எனக்கு உடன்பாடில்லாத கருத்து. உடன்பாடுடையதானால், ஆகம சம்மதமானதொன்றானால் எப்போதோ கூறியிருக்க மாட்டேனா? என் எழுத்துக்களைப் படித்தால் நான் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமென்று ஒருபோதும் சொன்னதில்லை, அது எனக்கு உடன்பாடான கருத்தல்ல என்பது புரிந்துவிடும்.
அப்பர்: நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம். நடுநிலை தவறோம். தமிழர்ச்சனை தேவையிலாத சலசலப்பு. அரசியல் இலாபத்துக்காகத் தென்தமிழ்நாட்டில் உருவாகியதொன்று. இதை நடைமுறைப்படுத்த முயல்வோர் திருமுறைக்குப் பெருமைசேர்ப்பதாகக் கூறிக்கொண்டு தாம் விரும்பியபடி மாற்றங்களைக் கொண்டுவர முனைந்து முயலக்கூடாது. அப்படிச் செய்வதானால் சிவனையும் அவர் தூமறைபாடும் வாயாரென்பதால் வெளியே தள்ளிக் கதவை அடைக்கவேண்டும். திருமுறைகள் வடமொழிவேண்டும்; வேதியரே பூஜை செய்யதல்வேண்டும் என்பதால் அவற்றையுந் தீயிலிட்டுக் கொளுத்தவேண்டும். இவர்கள் முதலில் அதைச்செய்யட்டும்.
 

அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன. நாரதர்; ஆரியம் வேண்டாம், சிவாசாரியர் வேண்டாம் என்று ஆரம்பித்தாற் சிவனே வேண்டாம், திருமுறைகள் வேண்டாம் என்று முடியும் என்கிறீர்கள். இனிவருங்காலத்துக்கு இவையெல்லாம் ஏன்? அப்படியே ஆக்கிவிடுவதுதான் சரி என்கிறீர்களா?
ஏனையோர்: வேறெந்த முடிவுக்குத்தான் வரமுடியும்?
நாரதர்: சேக்கிழார் சுவாமிகளிடம் ஒரு கேள்வி. சுந்தரமூர்த்திநாயனாரைப் பார்த்துச் சிவன், “அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார்” என்று பெரியபுராணத்திலே பாடியிருக்கிறீர்களே. என்ன சொல்கிறீர்கள்?
சேக்கிழார்: சிவபெருமான் அப்படி அருளிச்செய்தது சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய அருட்பாடல்களின் உயர்வைப் புலப்படுத்தவே. அந்தப் பாடல்களை அர்ச்சனைக்குப் பயன்படுத்தவேண்டும்; தமிழில் அர்ச்சனை பண்ணவேணிடும் என்பதெல்லாம் அவர் திருவுள்ளமானால் அதை வெளிப்படையாகவே அவர் திருவாய்மலர்ந்திருப்பார். யானும்,
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் தேவ ரத்தாலி அர்ச்சனை பண்ணு கென்றார் ஆரணம் பாடும் வாயார் என்றோ,
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் தமிழால் மணிமேலி அர்ச்சனை பணணு கென்றார் ஆரணம் பாடும் வாயார் என்றோ பாடியிருப்பேனே. அன்றிச் "சொற்றழிழ் பாடுகென்றார்” என்று பாடியிருக்கமாட்டேனே. எனவே எப்போதென்றாலும் அவை அர்ச்சனைக்காக உபயோகிக்கப்பட்டதில்லை. அடியார்களாற் பத்திபூர்வமாகப் பண்ணிசையாக மட்டுமே ஒதப்பட்டு வந்திருக்கின்றன. முப்போதுந் திருமேனி தீண்டுவார் என்ற புராணப் பகுதியிலேயுள்ள பாடல் மூன்றினாலுமே அர்ச்சனை பற்றய தெளிவுண்டாகும். முன்பே அதற்கான விளக்கமுந் தந்துவிட்டேன்.
நாரதர்: ஐயன்மீர் வருகிறேன். (வேண்டாம் வேண்டாம் வேதனைத்தொல்லை என்று ஆபோகி ராகத்திற் பாடியபடி வெளியேறுகிறார்)
திடுக்குற்றுக் கண்விழித்தேன். கட்டிலிலிருந்து கீழே வீழ்ந்து நல்லவேளை கால் ஒடியவில்லை. தமிழில் அர்ச்சனை செய்வதற்காகச் சிவனை என்ன திருமுறைகளையும் வீசிவிடவேண்டியதுதான்; வேறுவழி?
தமிழ் வாழ்க சைவம் வாழ்க!
கலசம் 1998 ஆடி

Page 22
தமக்குவமையில்லாத தமிழறிஞர்
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரிலே (விழிதீட்டி) ஒருவிழா. விழாவில் உரையாற்ற வந்திருக்கும் அறிஞரைத் தலைவர் அவையினருக்கு அறிமுகம் செய்கிறார்.
சுவர்க்க லோகத்திலே மன்னன் பாண்டு வீற்றிருக்கிறான். மகரிஷி நாரதர் வருகிறார். திரிலோக சஞ்சாரியான நாரதமகாமுனிவரைக் கண்டதும் பாண்டுவுக்கு அளப்பரிய ஆனந்தம்.
"தேவரீர் பூவுலகுக்கும் சென்ற பின்பே தேவலோகம் திரும்பியிருப்பீர்கள். என் புதல்வர்கள் - பாண்டவர்கள் - எப்படி இருக்கிறார்கள்?" - மிக்க ஆவலோடு கேட்கிறான் பாண்டு,
"இந்திரப்பிரஸ்த நகரில் அழகிய புதிய மண்டபம் ஒன்றைப் பாண்டவர்கள் அமைத்திருக்கிறார்கள். அந்த மண்டபத்தைப் பார்த்ததும் அதற்கிணையான மண்டபம் வேறெங்காவது உண்டா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மண்டபங்களை அவற்றின் சிறப்புநோக்கி வரிசைப்படுத்தி மதிப்பிடவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. பாண்டவர்கள் அமைத்த மண்டபமோ மணிமகுடத்தணியரங்கு. வியப்பின் விளிம்புக்கே சென்றுவிட்ட யான் அதற்கே முதலிடம் தந்தேன். முதலாவது இடம் வழங்கியமைக்கு அத்தாட்சியாக எனது இடக்கையின் இறுதி விரலையும் மடித்துவிட்டேன். பாண்டவர்களது மண்டபத்துக்கு அருகேதானும் வருவதற்கு வேறெந்த மண்டபத்துக்குத்தான் தகுதியுண்டு. விரலொன்றை மடித்த கையின் ஏனைய விரல் நான்கும் நீட்டியது நீட்டியபடியே நிற்கின்றன. மண்மிசை நால்விரல் நிற்கும் மணிமகுடத்தணியரங்கு அப்பா உன் புதல்வர் அமைத்த மண்டபம்" - மூச்சுவிடாமல் அடுக்கிக்கொண்டே போகிறார் நாரதர். பாண்டுவோ ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தாயாகிவிடுகிறான்.
"இதெல்லாம் இருக்கட்டும். இன்று நாவலர் வழிநின்று தமிழும் சைவமும் வளர்க்கும் அறிஞர்களை விரல்மடித்தெண்ணுவோம் என்று தொடங்கினால், பண்டிதமணி அவர்கள் என்று சொல்லி விரலை மடித்தபின் எஞ்சிய விரல் நான்கினையும் மடிக்கவே முடிவதில்லை. அவை நீட்டியது நீட்டியபடியே நிற்கின்றன. மண்மிசை நால்விரல் நிற்கும் மணியன்றோ நம் பண்டிதமணி" தலைவரின் வார்த்தைகள் அத்தனையையும் அகமகிழ்வோடு ஆமோதிக்கின்றனர் அவையோர் என்பதை நிமிடங்கள் பலவாகியும் நிற்காத நீண்ட கரகோஷம் நிரூபிக்கிறது.
34 அதிதீரன்
 

தமக்குவமையில்லாத தமிழறிஞர்
அன்று அவைத்தலைவராய் அமர்ந்து பண்டிதமணி அவர்களை அவையினருக்கு அறிமுகஞ்செய்த எந்தை - அமரர் பண்டிதர் திரு கதிரிப்பிள்ளை - அவர்கள், சைவத் தமிழ் உலகிலே பண்டிதமணி அவர்களுக்குப் பல படிகள் தள்ளிவைத்து எண்ணுவதற்குக்கூட ஆளில்லை என்ற உண்மையை எடுத்துரைத்தார்கள். ஆனால் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பும் - இன்றும் - அன்றவர் செய்த அறிமுகம் பண்டிதமணி அவர்களுக்கு எத்துணை அற்புதமாகப் பொருந்துகிறது. பண்டிதமணி அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு இது. அவர்கள் தாமே உவமை தமக்கு ஆனவர்கள்.
கட்டுரை என்ற உரைநடைப்பிரிவை மிகுந்த ஆற்றலோடு பயன்படுத்தியவர்கள்; வளர்த்தவர்கள் எனக் குறிப்பிடப்படும் விரல் மடித்தெண்ணக்கூடிய ஒரு சிலருள் முதன்மையானவர் பண்டிதமணியவர்கள். புதிய புதிய உத்திகளை உபயோகித்துக் கருத்துத்தெளிவுடனும் நடைச்சிறப்புடனும் அருமையான கட்டுரைகள் பலவற்றைப் படைத்துத்தந்த பெருமைக்குரியவர்கள் அவர்கள். அவர்களைப்பற்றி ஒன்றுஞ் சொல்ல முடியாது (நாவலர் நினைவு மலர், 1938) அலடினில் வராத மந்திரவாதி (தேசிகர் நினைவுமலர், 1942) உண்டிருந்து வாழ்வதற்கே உரைக்கின்நீர் உரைமீரே (வட இலங்கைத் தமிழாசிரியசங்க வெள்ளிவிழா மலர், 1950) வடுவடு நுண்ணயிர் (சிந்தனைக் களஞ்சியம், 1978) முதலிய பல கட்டுரைகள் உத்திச் சிறப்போடு கூடிய அவர்களுடைய கட்டுரையாற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவாக விளக்கும் ஆற்றல் பண்டிதமணி அவர்களுக்கு இயல்பாகவே வாய்த்ததொரு அருட்கொடை எனலாம்.
தா(ட)லை - தாள் + தலை
ட = ஸ் + த
ட் + அ = ஸ் + த் + அ
ட் - ள் + த் "இந்தச் சமீகரணத்தில் ட் என்ற மெய்யில் ள், த் என்ற இரு மெய்கள் இருப்பது மெய்யென்று அறிகிறோம். 'ள் பரமான்மா, தி ஆன்மா என்று கொள்க 'ட் ஒன்றுமல்ல" இரண்டுமன்று. அது ஏகமெனவும் அத்வைதமெனவும் கூறப்படும். ஆன்ம பரமான்மக் கூட்டரவைத் தாடலை போற் கூடியவை எனலாம்" என அவர்கள் தாடலை என்ற தொடருக்குத் தக்க விளக்கம் தந்து அத்வைதம் பற்றித் தரும் விளக்கம் எத்துணைத் தெளிவு மிக்கதாக அமைந்திருக்கிறது.
மறுவில் கற்பின் வாணுதல் கணவன் என்ற தொடருக்கு விளக்கம் தர முன்வரும்போது ஈங்கொரு தமியளாகி இருந்திடுவேனுக்கு என்று தொடங்கும் கந்தபுராணச் செய்யுட்பகுதியையும், காரணி கற்பகம்' எனவரும் திருக்கோவையார் இறுதிச் செய்யுளையும் எடுத்துக்கொண்டு தரும் விளக்கந்தான் எத்துணை அற்புதமானது.

Page 23
க. உமாமகேகவரன்
கற்பு நிலையில் மறுவில் கற்பு என்ற நிலையை அவர்கள் விளக்கியிருக்கும் அருமையைப் படித்து அநுபவிக்கக் கொடுத்துவைத்தவர்கள் பாக்கியசாலிகள். 'ஓடி மீள்கென ஆடல் பார்த்திருக்கும், தீண்டாத கற்புடைய செழுந்திரு முதலாம் எண்ணிறந்த தொடர்களுக்கு அவர்கள் தந்திருக்கும் விளக்கங்கள் ஒப்புயர்வற்றவை. பண்டிதமணியவர்கள் தமது நீண்டகால ஆராய்ச்சியின் பயனாக அரிய பல கருத்துக்களை நம்முன் வைத்திருக்கிறார்கள்.
ஜைமினி வியாசரோடு மாறுபட்டே பூர்வமீமாம்சை செய்தார் என்போர் உளர். சித்தியார் அருந்தவனாம் ஜைமினி என்கிறது. வேதபாதஸ்தவம் செய்து சிதம்பர சபாநாயகரைத் துதித்தவர் அவர் என்கிறார் நாவலர். இந்த ஜைமினி நிரீச்சுரவாதியெனல் பொருந்தாதே என்கிறார்கள் பண்டிதமணியவர்கள். கர்மகாண்டத்தில் ஈசுரன் பற்றிய பேச்சுக்கிடமேது? எனவே ஈசுரன் பற்றி ஜைமினி பேசவில்லையே தவிர அவர் பத்தரே என்பது அவரகள் தரும் விளக்கம்.
சைவம் முதல் வைரவம் இறுதியானவையே அகச்சமயங்கள் என்பது பிராசீனர் கொள்கை. நவீனர் (மாதவச் சிவஞான யோகிகள் உள்ளிட்டோர்) பாடானவாதம் முதல் சிவாத்துவிதம் இறுதியான ஆறுமே அகச்சமயம் என்பர். பாடானவாதம் முதல் சிவாத்துவிதம் இறுதியான ஆறும் சங்கற்பநிராகரணத்தில் உமாபதி சிவாசாரியாராலே கண்டிக்கப்பட்டுள்ளன. பெரியபுராணத்தில் மாவிரதி (மாணக்கஞ்சாற நாயனார் புராணம்), வைரவர் (சிறுத்தொண்ட நாயனார் புராணம்) என்போர் பற்றிப் பேசப்படுகிறது. ஆயின் பாடானவாதம் முதல் சிவாத்துவிதம் இறுதியான ஆறும்பற்றிப் பேச்சேயில்லை. எனவே பிராசீனர் கூறுபவையே அகச்சமயங்கள் எனக் கொள்ளத்தக்கவை என்பதே பண்டிதமணியவர்களின் தீர்ப்பாகும்.
இலக்கிய உலகில் கிழக்கும் மேற்கும், 'வான்மீகிதானோ, 'பிராசீனர் நவீனர் வகுத்த சமயங்கள், பூர்வமீமாம்சை உத்தரமீமாம்சை முதலிய பல கட்டுரைகளிலே பண்டிதமணி அவர்களது அரிய ஆராய்ச்சிகளின் விளைவாக மிளிரும் அற்புமான கருத்துக்களை நுகரும் பேற்றினை நாம் அடையலாம். அறிஞர் ஒருவர் படைத்துதவிய அத்தனை நூல்களையும் சீர்தூக்கி ஆராய்ந்து, அவற்றுட் சிறந்ததொன்றெனத் தாம் கருதுவதைத் தேர்ந்தெடுத்து, அவ்வறிஞரின் சிறந்த படைப்பு - மக்னம் ஒப்பஸ் (Magnam Opus) - இதுதான் என்று பாராட்டுவது மேனாட்டார் இயல்பு. பண்டிதமணியவர்கள் விஷயத்தில் இது என்றுமே பலிக்கப்போவதில்லை. அவர்கள் தந்திருப்பவை அத்தனையும் உயர்ந்த படைப்புக்களே.
ஈழநாடு 25ஆவது ஆண்டு நிறைவுமலர் 1984.02.11
 

நீரிலன்றி நிலத்திலும்.
தரையிலே எங்காவது ஆறுகள் சங்கமிப்பது உண்டா? கடலிலேதான் ஆறுகள் சங்கமிக்கின்றன. பிரயாகை என்ற புண்ணிய தலத்திலே தான் மூன்று நதிகள் சங்கமிக்கின்றன என்றெல்லாம் எண்ணுவீர்கள். அங்கே கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற புணர்ணிய நதிகள் மூன்றும் கலக்கின்றன என்பது உண்மைதான். அதனால் அந்தப் புனித சங்கமம் திரிவேணி (திரி - மூன்று, வேணி - நதி) சங்கமம் என்று வழங்கப்படுவதும் உண்மைதான். ஆனால் தரையிலே ஒன்றல்ல ஏழு இடங்களிலே மஹா புனிதமான திரிவேணி சங்கமம் நிகழ்கிறதே, அறிந்ததுண்டா?; சென்று நீராட வேண்டும் என்று ஏங்கியதுண்டா?
திரிவேணி சங்கமத்திலே செந்நிறக் கங்கை வெண்ணுரை ததும்பத் தண்ணென்று பாய்கிறது. கரிய நிறநீர் யமுனை செந்நிறக் கங்கை நீரைத் தன்னுடைய திரைக் கரங்களாலே தழுவிக் கலக்கிறது.
சரஸ்வதி ஊற்றெடுப்பதெங்கே?; ஒடிப்பின் கடலிற் கலப்பதற்தெங்கே?: கண்டார் எவருமில்லை. எனவே அந்த நதிமூலம் அறிந்தாரும் எவரும் இல்லை. சரஸ்வதி அந்தர்வாஹினியாய் - நிலத்தடி நீர்ப் பெருக்காய் - பிரயாகையிலே கலக்கிறது என்பது ஐதீகம்". ஆனால் தரையிலும் இப்படிக் கலக்கும் நதிகள் உள. அவையும் கங்கை, யமுனை சரஸ்வதியே என்று கூறினால் வியப்பாக இருக்கிறதல்லவா? இப்படிப் புதிர்மேற் புதிர்போட்டு நமையெல்லாம் கதிகலங்கும்படி செய்பவர்கள் நமக்கெல்லாம் நன்கு பரிசயமான குமரகுருபர சுவாமிகளே.
சுவாமிகளோ காசிவாசி. புனித கங்கையிலே பன்முறை நீராடும் பாக்கியம் படைத்தவர்கள். திரிவேணி சங்கமத்தையும் அவர்கள் விட்டுவைத்ததில்லை. அத்தகையவர்கள் இப்போது திருவாரூர்த் தியாகராஜப்பெருமான் சந்நிதியிலே நிற்கிறார்கள். பெருமானின் பேரழகுப் பொலிவிலே திளைத்துச் சொக்கியும் விடுகிறார்கள். தியாகேசப்பெருமானின் அருட்பிரவாகத்திலே அமிழ்ந்தியதும் ஆகா! திரிவேணி சங்கமத்திலே முழுகித் திளைப்பதாற் பெறும் ஈடிணையற்ற இன்ப அநுபவத்தையும் விஞ்சிய பேரானந்தாநூபவத்தை அல்லவா எய்திவிட்டோம் என்ற எக்களிப்பையும் எய்திவிடுகின்றார்கள்.
சரஸ்வதி, நிலத்தடி நீர்ப்பெருக்காய்த் திருவேணியிற் சங்கமிப்பதைச் செயற்கைக்கோள்கள் உறுதி செய்கின்றன.
அதிதீரன் 37

Page 24
க. உமாமகேசுவரன்
அப்பனும் அம்மையும் அவரருட் சேயாகிய சேயோனும் ஒன்றிணைந்த சோமாஸ்கந்த மூர்த்தமாகவே தியாகராஜப் பெருமானைத் தரிசித்த பேரானந்தாநூபவம் திரிவேணி சங்கமத்தை நினைவு கூர வைத்ததிலே வியப்பேதும் இல்லை. அங்ங்ணம் நினைவு கூர நேர்ந்ததற்கான ஏதுக்களைச் சுட்டிக்காட்டவும் சுவாமிகள் தவறவில்லை. சிவன் தன் திருமேனி முழுவதும் வெண்ணிற்றை உத்தூளனமாகத் தரித்துள்ளான். காடுடைய சுடலைப்பொடி பூசி எம் உள்ளங்கவர் கள்வனான அவன் திருமேனியோ செம்மேனி. எனவே வெண்ணுரை பொங்கப் பாயும் செந்நிறக் கங்கையே சிவன்.
"அருளது சத்தியாகும் அரன்றனக்கு” என்பர் அருணந்திசிவாசாரியார். அரனின் அருட்பிரவாகமே அம்மை. எனவே, கரிய (நீர்த்திரைக்) கரங்களாலே கங்கையை (சிவனை)த் தழுவும் - அரனருட்பிரவாகமாய் அவனடியார் உள்ளமெனும் பள்ளத்திலே பாயும் - யமுனையே கெளரி.
குமரன் எத்தகையன். "ஒவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி" என்பர் நக்கீரர். தொலைவிலே இடையீடுபடாது ஒளிரும் ஜோதி என்று மட்டுமே கூறியதோடு மேலே எதுவுமே பேசாது கையை விரித்துவிடுகிறார் அவர். மனம் வாக்கு என்ற எல்லைகளை எல்லாம் தாண்டி அப்பாலுக்கு அப்பால் ஆனவன் - வாக்குமனாதீதன் - குமரன். எனவே, அந்தர்வாஹினியான - உண்முகமாய் அன்றி வெளியே அறியப்படாத - வாணி (சரஸ்வதி) நதியே குமரன்.
ஆஹா ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்த சங்கமமாக - திரிவேணியாக - அல்லவோ சோமாஸ்கந்த மூர்த்தி (ச + உமா = சோமா, சோமா + ஸ்கந்தன் = சோமாஸ்கந்தன் - உமையோடுங் குமரனொடுங் கூடியவன்) எழுந்தருளித் திருவருள் பாலிக்கிறான். கிடைத்தற்கரிய இத் திரிவேணி சங்கமத்திலே தீர்த்தமாடிப் பிறவித்துயர் என்ற அழுக்கைப் போக்கித் தூயராவோம்; வாரீர். தாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற்றுவிடவேண்டும் என்ற அளப்பருங் கருணையினாலே இப்படிக் கூவியழைக்கின்றார்கள்; ஆற்றுப்படுத்துகின்றார்கள்; அருளே உருவான குமரகுருபர சுவாமிகள்.
தம்மேனி வெணிபொடியாலி தனணனியாலி ஆரூரர் செம்மேனி கங்கைத் திருநதியே- அம்மேனி மரனே யமுனையுந்த வாணிநதி யுங்குமரன் தானே குடைவேம் தனித்து.
சோமாஸ்கந்த மூர்த்தி பூமிக்கெழுந்தருளிய வரலாறு (கந்தபுராணம்கந்தவிரதப்படலம் பா 49-124) சுவையானது.
முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவேந்திரன் அழைப்பை ஏற்றுத் தேவர் உலகு சென்றான்;படைத்துணையானான். இந்திரன் பகைவர் இறந்தொழிந்தனர். இதயம்
 

நீரிலன்றி நிலத்திலும் இதயம் பூரித்த இந்திரன் “முககுந்தா நீ விரும்புவது எதுவானாலும் கேள்; தருகிறேன்" என்றான்.
திருமால் பூசித்த சோமஸ்கந்த மூர்த்தியைத் திருமாலிடமிருந்து பெற்ற இந்திரன் தினந்தோறும் பூசித்துவந்தான். அந்த மூர்த்தியின்பால் ஆராமை மிக்குத் தன்னையே இழந்துவிட்ட முசுகுந்தன் "நீ வழிபடும் சோமாஸ்கந்த மூர்த்தியே எனக்கு வேண்டும்; தருக" என்றான்.
இப்படியொரு வேண்டுகோள் முசுகுந்தனிடமிருந்து வரக்கூடும் என்று எதிர்பார்க்காத இந்திரன் மனங்கலங்கி மயங்கினான். தன் உபாசனா மூர்த்தியான சோமாஸ்கந்த மூர்த்தியைப் பிரிய அவன் மனம் இடந்தரவில்லை. எனவே ஒரு சூழ்ச்சி செய்தான். தன் வழிபடு மூர்த்தியே போன்ற ஆறு சோமஸ்கந்த மூர்த்தங்களைத் தேவ கம்மியனைக் கொண்டு அமைப்பித்தான். ஏழு திருவுருவங்களையும் ஓரிடத்திலே எழுந்தருளப் பண்ணினான். "முசுகுந்தா உனக்குப் பிரியமான திருவுரு எதுவோ அதனை நீ எடுத்துக்கொள்” என்றான்.
ஏழில் எது திருமாலும் தேவேந்திரனனும் பூசித்த திருவுரு? - முசுகுந்தன் திகைத்தான். மனமுருகிச் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியானித்த வண்ணம் ஏழு திருவுருவங்களையும் மாறி மாறி உற்று நோக்கினான்.
முசுகுந்தன் பத்திக்கிரங்கிய தியாகேசப் பெருமான் திருவிளையாடல் ஒன்றினை உன்னினான். முசுகுந்தனுக்கு மட்டும் புலப்படும்படி சமிக்ஞை செய்தான். அவ்வளவுதான். “அதோ அந்தத்திருவுருவே எனக்கு வேண்டும்" என்று உரைதடுமாற உரோமஞ்சிலிர்ப்ப மகிழ்ச்சிப் பெருக்காற் கூவியவனாய்ச் சாட்சஷாத் சோமாஸ்கந்த மூர்த்தியைத்தன் கரங்களிலே முசுகுந்தன் எழுந்தருளப் பண்ணிவிட்டான். பாவம் இந்திரன், இனி எதற்கெனக்கு எஞ்சிய திருவுருவங்கள் ஆறும் என்றெணிணி இரங்கியவனாய், “ஏனைய திருவுருவங்களும் உனக்கே; எடுத்துச்செல்" என்றான்.
முசுகுந்தன் பூவுலகுக்கு ஏழு சோமாஸ்கந்த மூர்த்தங்களைக் கொணர்ந்தான். அவற்றுளே திருமாலும் இந்திரனும் பூசித்த மூர்த்தியே தியாகேசராய் - வீதிவிடங்கராய் - திருவாரூரிலே எழுந்தருளி அஜபா நடனம் ஆடியவண்ணம் அனைத்துலகையும் ஆட்கொண்டருளி அருள்பாலிக்கிறார். ஏனைய மூர்த்திகள் திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயல், திருக்கோளரியூர், திருவான்மியூர், திருமறைக்காடு ஆகிய தலங்களிலே எழுந்தருளித் திருவருள்பாலிக்கின்றனர். இந்த ஏழு சோமாஸ்கந்த மூர்த்தி சந்நிதிகளுமே நீரிலன்றி நிலத்திலே நமக்கு வாய்த்த திரிவேணி சங்கமங்கள். இவற்றுள்ளும் ஒப்புயர்வற்ற திரிவேணிசங்கமம் திருவாரூர்த் தியாகேசர் சந்நிதியே. தியான தீர்த்தமாடித் தீர்த்தன் அருள்பெற்றுப் பிறவிப்பிணி போக்கிட முந்துவோம் என்கிறார் குமரகுருபர சுவாமிகள்.
கலசம் 1995 ஆடி.
蜀

Page 25
இராகப் பிரஸ்தாரத்தக்கு ஓர் இராஜா
விழிதீட்டி ஞானவைரவ சுவாமி கோயிலிலே அலங்கார உற்சவ காலம். பதினொரு உற்சவங்கள் வெகு விமரிசையாக நிகழ்ந்தேறிவிட்டன. அன்று நிறைவு நாள். கும்பாபிஷேகம் நிகழ்ந்த தினமும் அதுவே. மணவாளக்கோலத் திருவிழா. விழா உபயகாரருக்கு இரண்டு விஷயங்களிலேதான் கவனம்; அக்கறை. அபிஷேக ஆராதனை சிறப்பாக நிகழவேண்டும்; சுவாமி புறப்பாட்டின்போது தரமிக்க நாகசின்ன இசை ஒலிக்கவேண்டும். அபிஷேக ஆராதனைகள் வெகுசிறப்பாக நிறைவேறிவிட்டன. நாகசின்ன இசையாராதனை நிகழ்த்தவென இரண்டு வித்துவக் குழுக்கள் வந்திருக்கின்றன. மாவிட்டபுரம் இராஜா குழு ஒன்று அளவெட்டி பெரிய கணேசு குழு மற்றயைது.
இராஜா நெடிதுயர்ந்தவர். நாகசின்னத்துடன் அவர் நிற்கும் கம்பீரமே தனி அலாதிதான். அவர் மருகன் M. S. ஷண்முகநாதன் உடன் வாசிக்கத் தயாராய் நிற்கிறார். தவில் வித்துவான் இராஜகோபாலப்பிள்ளை தவிலை முழக்க ஆரம்பித்துவிட்டார். எதிரிலே திருவாரூர் இராஜரத்தினம். அவரருகில் அளவெட்டி முருகையா. பெரிய கணேசுவும் வடபாதிமங்கலம் தக்ஷணாமூர்த்திப்பிள்ளையும் தவில்களுடன் தயார். மல்லாரி வெள்ளத்தில் உள்வீதி முழுகித் திளைக்கிறது.
கோயிலுக்குத் தெற்குப்பார்த்த வாயில். சுவாமி கோபுரவாயில் வழியே தெற்குநோக்கி எழுந்தருளி மேற்கு நோக்கித் திரும்பிப் பின் வடக்கு நோக்கித் திரும்பியும்விட்டார்; வெளிவீதியில் எழுந்தருளிவிட்டார்.
மல்லாரிக்கு முத்தாய்ப்பு வைத்தாயிற்று. இராஜா ஒருதடவை தமது குழுவினரையும் மாற்றுக்குழுவினரையும் நிமிர்ந்து பார்த்துப் புன்னகையுடன் தலையை அசைக்கிறார். அடுத்த கணம் மோஹனம் அந்த இராகத்துக்கே உரிய ஜீவகளைகளோடு புங்காநுபுங்கமாய் இரசம் சொட்டப் பிரவாகிக்கிறது. மனமோஹனமான அந்தவேளை இரசிகர்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமான
 
 

இராகப் பிரஸ்தாரத்துக்கு ஒர் இராஜா வேளையாகிவிட்டது. மோஹனத்தின் திவ்விய செளந்தரிய ரூபப்பொலிவிலே திளைத்த போதையிலே இரசிகர்கள். மணவாளக்கோலத்திற் சுவாமி புறப்பாடு ஆகியிருக்கிறதே! தம்முடைய நாயகியை விட்டுவிட்டு இந்த மோஹன நாயகியையே சுவாமி மணந்துகொண்டால் என்ன செய்வது என்று இரசிகர்களிடையே ஒரு பரபரப்பு. எழுந்தருளும் பெருமான் வடுகன் (பிரமசாரி) என்பதையே இரசிகர்கள் மறந்துவிட்டார்கள் என்றால் எவ்வளவு தூரம் போதை தலைக்கேறி இவர்கள் கிறங்கியிருக்கவேண்டும்.
முகமலர்ச்சியுடன் மோஹன இராக ஆலாபனையிலே திளைத்திருந்த திருவாரூரார் கெண்டையிலே சீவாளியைப் பொருத்திவிட்டு வாயிலே நாகசின்னத்தைப் பொருத்துகிறார். பிருகாக்கள் துரிதகாலச் சங்கதிகள் என்று பொழியும் பாணி அவருடையது. மோஹனம் அந்த வழியிற் பிரவாகிக்கிறது. இரசிகர்கள்பாடு ஒரே கொண்டாட்டந்தான்.
ஆலாபனை முடிந்துவிட்டது. பல்லவியை இராஜா தொடுக்கிறார். தொடர்ந்து இருவரும் பல்லவியைப் பிய்த்துவாங்குகிறார்கள். இராஜாவை இராஜரத்தினம் பாராட்டுகிறார்; இரலிக்கிறார். இராஜரத்தினத்தை இராஜா பாராட்டுகிறார்; இரஸிக்கிறார்.
இதோ! நக்ஷத்திரப் பொறிகளாய் - பூமத்தாப்பாய் - பொறிபறக்கும் ஸ்வரப்பிரஸ்தாரம்; குறைப்பு. தொடர்ந்து இராகமாலிகை; சில்லறை உருப்படிகள். சுவாமி யதாஸ்தானத்துக்கு எழுந்தருளிவிட்டார்.
உபயகாரர் அமரர் பண்டிதர் சி கதிரிப்பிள்ளை அவர்கள் வித்துவான்களைப் பாராட்டி அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். இராஜா இராஜரத்தினத்தைப் பார்க்கிறார். "உங்கள் வாசிப்பு அபாரம். மோஹனம் உங்கள் பாணியில் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை. அதுதான் சும்மா சோதித்துப்பார்த்தேன்” என்கிறார் இராஜரத்தினம், "ஆஹா நீங்கள் சோதனை பண்ணாமே வேறை யார் சோதனை பண்றது” என்கிறார் அகமும் முகமும் மலர்ந்தவராய், அந்த நீங்கள் என்ற சொல்லுக்கு அன்று அவர் கொடுத்த அழுத்தம் இருக்கிறதே அது வித்துவானான இராஜாவை மற்றொரு வித்துவானான திருவாரூர் இராஜரத்தினம் எவ்வளவு தூரம் மதித்தாரென்பதைத் தெளிவுபடுத்தியது. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதி பாடலடிதான் அப்போது அருகிலே நிற்கக்கொடுத்துவைத்த என் மனத்தில் எழுந்தது.
பிறிதொரு சம்பவம்.
கொழுவியங்கலட்டி ஞானவைரவ சுவாமி கோயிலிலே உற்சவம். நடபைரவி இராகத்தை இராஜா விஸ்தாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார். இன்றைய பிரபல வித்துவான் இரத்தினவேலு கேதீஸ்வரன் அன்று அவர் சீடர்; உடன் ZuyyyyyyyyyyyyuyySyyyySySyySyySyyyS TTTT S YLS

Page 26
க. உமாமகேகவரன்
வாசிப்பவர். இராகம் கட்டங் கட்டமாக வளர்கிறது. இராக ஆலாபனைப்போது குறுக்கிடும் இடைவேளைகளுக்கு ஏற்றவாறெல்லாம் நாஸ்ஸுக்காகத் தவிலை வாசித்து நயமூட்டிக்கொண்டிருக்கும் தவில்மேதை P. S. இராஜகோபாலப்பிள்ளை திடீரென்று எழுந்து வெளியே போகிறார். போனவர் போனவர்தான். இராக ஆலாபனை கோபுரமாகிக் கலசம் வைக்கும் சமயம். இதோ கீர்த்தனை ஆரம்பமாகப்போகிறது. விரைந்து வருகிறார் இராஜகோபாலப்பிள்ளை. தவிலை மடிமீது வைத்து நந்திகேஸ்வராவதாரம் எடுக்கிறார். இராஜா அவர் காதருகே குனிகிறார்; நரஸிம்மாவதாரமே எடுத்துவிடுகிறார். "இடையிலே என்ன வெளியிலே போகவேண்டிய வேலை; ஒழுங்கு வேண்டாமா?”
நைச்சியமாய் இராஜகோபால் குழைகிறார். "மாமா இராக ஆலாபனையை வெளியே ஒருமுறை நின்று கேட்டுப்பார்க்கவேண்டும் என்று தோன்றியது. போனேன். பிறகு. எல்லாமே மறந்துபோச்சு. ஆஹா இராகஆலாபனை என்றால் இதுதான் மாமா!"
அதுதான் இராஜாவின் பலம். தவில் வாசிக்கும் மாமேதைகளையே மயக்கித் தொழிலையே மறக்கவைத்த ஆலாபனைக்கு நிகரேது; அந்த ஆலாபனைக்கு இனி எங்கே போவது?
மாவிட்டபுரம் முருகன் தேவஸ்தானத்திலே வேட்டைத்திருவிழா. சுவாமி திரும்பியதும், ஊடல் திருவிளையாடல் நிகழும். ஏசல் பாடப்படும். இதற்கென இரத்தினக்குருக்கள் தருவிப்பவர்கள் இருவர். வெளியே சுவாமிக்காகப் பாடுபவர் வெண்கல சாரீரம் படைத்தவர். வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையின்
அபிமானத்துக்குரியவராய் - அவர் புராணபடணம் செய்யும் வேளைகளிலே புராணம் வாசிப்பதற்கென அவரால் அழைத்துச்செல்லப்படும் பெருமைக்குரியவராய் - வாழ்ந்தவர்; இசைப்புலமை மிக்கவர். பண்டிதர்
சி கதிரிப்பிள்ளை அவர்களின் தாய் மாமனார் ஆகிய சு. கணபதிப்பிள்ளை (கணபதிச் சட்டம்பியார்) அவர்களே அவர். உள்ளே தெய்வயானை அம்மைக்காகப் பாடுபவராக அமைந்தவர் சுப்புக்குட்டி என்னும் அம்மையார். அம்மையார் இசைப்புலமையும் சாரீர வளமும் படைத்தவர். சிதம்பரத்திலே மேடைக்கச்சேரிகள் செய்து பிரபலமுற்றிருந்தவர். அந்த அம்மையாரின் அருந்தவப் புதல்வரே இராஜா.
தாய் வழிவந்த அபார சங்கீத ஞானம், சிதம்பரம் கோவிந்தசாமிப்பிள்ளை அவர்களின் சீடராகி நாகசின்னம் பயிலும் பேறு வேறு, பிரபல வித்துவானாக இராஜா மிளிர்ந்ததில் வியப்பேது?
இலங்கையிலே கர்நாடக இசையைக் காப்பாற்றியவர்கள் இசைவேளாளர்களே! இவர்களது அயராத சேவை மட்டும் இல்லையென்றால் இங்கே என்றோ கர்நாடக இசை பூண்டற்றுப்போயிருக்கும். குருகுல முறையாக அந்தக்கலை காப்பாற்றப்படுவதற்குக் காலாக இருப்பவர்களும் இவர்களே!
 

இராகப் பிரஸ்தாரத்துக்கு ஓர் இராஜா கர்நாடக இசையில் மனோதர்மம் என்ற அம்சம் மிகமிக இன்றியமையாதது. இராகம், பல்லவி, நிரவல், கற்பனாஸ்வரப்பிரஸ்தாரம் என்ற அம்சங்களே மனோதர்ம சங்கீதவிரிவுக்கு இடம் தருபவை. இராகத்தை விஸ்தரிக்கும் மரபை, கானகால பத்ததி பிரக்ஞையோடு முற்றிலும் பின்பற்றி, தூய கர்நாடக இசையை வழங்கிவந்த பெருமைவாய்ந்த வித்துவான்களின் முன்னணி வரிசைக் கலைஞராகத் திகழ்ந்ததே இராஜாவின் தனித்துவமிக்க சிறப்பு என்பேன்.
இராகத்தின் ஸ்வரூபத்தைப் படிப்படியாக விஸ்தரித்துக் காண்பிப்பது இருக்கிறதே, இது ஏதோ முன்கூட்டியே திட்டமிட்டபடி நடப்பது ஒன்றல்ல. சட்டகம் ஒன்றை வைத்துக்கொண்டு சங்கதிகளைத் திணிப்பதல்ல. வித்துவானுடைய மன நிலைக்கும் உள்ளக்கிளர்ச்சிக்கும் பாடப்படும் வேளைக்கும் ஏற்ப அவ்வப்போதே வந்தமைவது அது. இராகத்தை விஸ்தரிப்பதற்கு எல்லையற்ற கற்பனைவளம் வேண்டும். வந்த சங்கதி வராமல் இசைக்கும் பக்குவம் வேண்டும். அதனாலேதான் எத்தனை வித்துவான்கள் இருக்கிறார்களோ அத்தனை தோடியாக, அத்தனை கல்யாணியாக இப்படி ஒவ்வொரு இராகத்தையும் நம்மாற் கேட்கமுடிகிறது. ஏன், ஒரே வித்துவானே இன்று பாடும் தோடி வேறே, நாளை பாடும் தோடி வேறேதான்! இது கர்நாடக இசைக்கு மட்டுமே உரிய சிறப்பு. இத்தகைய சிறப்பான முறையிலே இசைக்கக்கூடிய கற்பனை வளம் மிக்கவராக ஒருவர் தன்னை வளர்த்துக்கொள்ளாவிட்டால் கர்நாடக இசையுலகிலே தலைநிமிர முடியாது; நிலைத்துநிற்க முடியாது.
வேளைக்கேற்ற இராகம் வாசிக்கவேண்டும். கோயில் வித்துவான் ஆரம்பித்துவைக்கும் இராகத்தையே அன்றையதினம் சமுகந்தந்திருக்கும் வித்துவான்கள் அத்தனைபேரும் வாசிக்கவேண்டும். பைரவி என்றாற் பைரவி, காம்போதி என்றாற் காம்போதி. தொடர்ந்து ஒரே இராகத்தைப் பல்வேறு வித்துவான்கள் ஒருவர்பின் ஒருவராக இசைப்பதானால் எவ்வளவு தூரம் ஒருவர் தம்மைத் தயார்செய்து வைத்துக்கொள்ளவேண்டும். தம்முடைய ஆலாபனை தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமே! இன்னாருடைய இன்ன இராகமாக்கும் நான் என்று அந்த ஆலாபனை சொல்லவேண்டுமே; சொல்லவேண்டாமா?
இராஜா இந்த விஷயத்தில் தன்னிகரற்றவர். பகல், இரவு, அந்தி, சந்திக்குரிய இராகங்களை அவ்வவ் வேளைகளில் வாசிக்கவேண்டும்; போட்டி போட்டுக்கொண்டு தம்முடைய ஆலாபனை மேலே நிற்கவும் வேண்டும் என்ற நிலைமைக்கு ஈடுகொடுக்க எவ்வளவுதூரம் உழைக்கவேண்டும். தொழில் முறையில் எக்கச்சக்கமான போட்டி வேறு மாவிட்டபுரம் உருத்திராபதி, அவர் தம்பி நடராஜா, அண்ணாசாமி, பக்கிரிசாமி, அப்புலிங்கம் தந்தை சோமாஸ்கந்தர் என்று உள்ளூரிலேயே தரம் வாய்ந்த வித்துவ கோஷ்டி, வடக்கிலிருந்து முத்துக்கிருஷ்ணன் முதலாகப் பல்வேறு வித்துவான்களின் வருகை. இவர்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து, கச்சேரி பந்தாவில் எவ்வித குறைவுமின்றி,

Page 27
க. உமாமகேகவரன்
மாவிட்டபுரம் இராஜா என்ற பெயரை நிலைநாட்டியது எப்படிப்பட்ட அசுரசாதனை. இத்தனைக்கும் அவருடைய ஞான பலமும், சாதக பலமும், அதன் பின்னணியான அயராத உழைப்புந்தான் காரணம். அத்துடன் அவருடைய நாகசின்ன இசையிலே சிறப்புற்று விளங்கிய விரலடியும் பிருகாவும் மேலதிக காரணங்கள் எனலாம்.
பல்வேறு இராகங்களை அநாயாசமாகக் கையாள வல்லவர்களான வித்துவான்களானாலும் அவரவருக்கென அபிமான இராகம் ஒன்று இருந்தே தீரும். இராஜாவுக்குச் சங்கராபரணம் என்றால் ஒரே கொண்டாட்டம்; பிய்த்துதறிவிடுவார். 'ஸ்வரராக சுதா என்ற தியாராஜஸ்வாமிகள் பாடல் மீதும் அந்த இராகத்தில் அமைந்ததென்பதாலோ என்னவோ அவருக்கு அபார பிரேமை அதேபோலக் காபி இராகத்திலே அமைந்த இந்த செளக்கிய மனினே என்ற தியாகராஜ கீர்த்தனைமீதும் இறுதிவரை அவருக்குத் தணியாத மோகம் இருந்ததென்பதைக் கேட்டுச் சுவைத்தறிந்திருக்கிறேன்.
வித்துவான் எத்துணைச் சிறப்பு வாய்ந்தவரானாலும் ஒத்திசைவு மிக்க உடன் வாசிப்பவர் (ஜோடி) அமையாவிட்டால் அவராலே இசைத்துறையிலே சிறந்தோங்கவே முடியாது. அந்தவகையிலும் இராஜா அவர்கள் அதிஷ்டசாலியே. அவர்களுக்கு வாய்த்த உடன்வாசிப்போர் குறிப்பிடத்தக்கவர்கள். திருப்புன்கூர் இராமையா, சீர்காழி S.P.M. திருநாவுக்கரசு, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி, M.S. ஷண்முகநாதபிள்ளை, அளவெட்டி சு. இரத்தினவேலு, இணுவில் (i. கந்தசாமி முதலிய பிற்காலப் பிரபல வித்துவான்கள் எல்லாம் அவருடன் உடன் வாசித்தவர்களே.
இராஜாவுக்குத் தவில் வாசித்தோர் மட்டும் என்ன சாதாரணமானவர்களா? இணுவில் சின்னத்தம்பிப்பிள்ளை, திருமங்கலம் சுந்தரேசன், திருமுல்லைவாயில் முத்துவீருப்பிள்ளை, அளவெட்டி கணேசு, வலங்கைமான் ஷண்முகசுந்தரம், இணுவில் கனகசபாபதி, வடபாதிமங்கலம் தகூஷிணாமூர்த்திப்பிள்ளை, P.S. இராஜகோபாலப்பிள்ளை, பொ. பழனிவேல் (சின்னப்பழனி), மாவை பாலகிருஷ்ணன் எனவரும் அந்தப் பட்டியலும் நீண்டதொன்றே.
வரதாசாரியார் சிறந்த இசைமேதை. அம்மாள் ஒருவர் அவரிடம் அடிக்கடி “நீ பிரம்மராக்ஷஸ் ஆகத்தான் போறே, போ” என்று கூறித் திட்டுவாராம்.
"ஏம்மா இப்படித் திட்நீங்க” என்பாராம் வரதாசாரியார்.
எந்தத் துறையானாலும் அந்தந்தத் துறை கைவந்தவன் தனக்குப்பின் தன் பெயர் சொல்லச் சீடன் ஒருவனை உருவாக்கவேணும் என்ற சாஸ்திரப் பிரமாணத்தை அந்த மூதாட்டி எடுத்துக்காட்டிவிட்டு, அப்படி உருவாக்காதவன் பிரம்மராக்ஷஸ் ஆகப்பிறப்பான் என்ற பிரமாணத்தையும் காட்டுவாராம். பிறகு, “டே நீ ஒரு சிஷ்யனையாவது தயார் பண்ணினியா?; கிடையாதே" என்று கேட்பாராம்.
44 அதிதீரன்
 

இராகப் பிரஸ்தாரத்துக்கு ஓர் இராஜா
M.D. இராமநாதன் வரதாசாரியாரிடம் சிஷ்யனாக வந்து சேர்ந்தார்; குருவுக்கேற்ற சீடரும் ஆனார். வரதாசாரியார் அந்த அம்மையாரை அழைத்தார். "டே ராமநாதா பாடு” என்றார். ராமநாதன் வாயைத் திறந்ததும் அம்மையார் அசந்துபோனார்.
வரதாசாரியார் வாயை மூடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இதோ! இராமநாதன் உருவிலே பாடுகிறாரே, அதெப்படி? கண்களில் நீர் மல்க "வரதா, நீ பிரம்ராக்ஷஸ் ஆகவேமாட்டே" என்று அம்மையார் ஆசீர்வதித்தாராம்.
பாவம் இராஜா. பிரம்மராக்ஷஸ் ஆகும் அதிஷ்டம் அவருக்கும் இல்லை. அப்புலிங்கம், M. S. ஷண்முகநாதபிள்ளை, சுந்தரமூர்த்தி, கானமூர்த்தி, சிதம்பரநாதன், கேதீஸ்வரன், செல்வரத்தினம், K. கணேசன் என்று மாவிட்டபுரம் இராஜாவுக்கு ஒரு சிஷ்யபட்டாளமே இருக்கிறது. இலங்கை இசைக் கலைஞர்களிலேயே இத்தனை சீடர்களைத் தன் பெயர்சொல்லவைத்த குருவாகும் பாக்கியம் அவர் ஒருவருக்குத்தான் வாய்த்திருக்கிறது; அவர் அமரர்.
பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து டொனால்ட்சன் (Donaldson) என்று ஒரு ஆங்கில இலக்கிய மேதை விரிவுரையாளராக வந்திருந்தார். இந்துமாமன்ற ஆதரவில் இராசாவை நாதஸ்வரம் வாசிக்க அழைத்திருந்தேன். இராசாவின் நாதஸ்வர இசை முடிந்ததும் டொனால்ட்சன் எண்ணிடம் ஓடிவந்து இராசாவைத்தான் சந்திக்கவேண்டும் என்றார். அதற்கிடையில் இராசாவின் மோட்டார்ரதம் அவரை ஏற்றிக்கொண்டு போய்விட்டது.
டொனால்ட்சன் என்னிடம், இந்த நாதஸ்வரகாரரின் சுரஞானம் அபாரமானது. அவர் விரைவாகச் சுரங்களை உருட்டுவது மிக அற்புதமாய் இருக்கிறது. மேலைத்தேயத்தில் இவ்வளவு விரைவாகச் சுரங்களை உருட்ட வல்லவர்கள் ஒருசிலரே என்று கூறினார்.
டொனால்ட்சன் ஒரு குழலிசை வல்லவர். அவர் சில மாதங்களின் பின் இராசாவின் இசையைப்போல வாசிக்க ஒரு நிகழ்ச்சியிலே முயன்றார். ஆனாற் தன்னுடைய விரலசைவுகள் அவருக்குக் கிட்டவும் நிற்காது என்றார்.
வசந்தகால மாந்தளிர்கள் தென்றலிலே ஆடுவதுபோல் இராசாவின் விரல்கள் துளைகளிலே மிகவிரைவாக நினைத்தபடி நர்த்தனம் செய்யும். மிகமிக விரைவாகச் சுரங்கள் புரளும். பிருகா அவரோடு கூடப்பிறந்தது. அதில் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. . Lo7øná Luyozó Løøízgási ás. Fjáés/7øvésøf M.Phil. (London)

Page 28
அப்பா எனும் தெய்வம்
ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனுக்குத் தலைக்கு எண்ணெய் இடுவதென்றால் ஒரே வெறுப்பு. கிழமை நாள்களிலே தப்பிவிட்டாலும் சனிக்கிழமை காலைகளில் அவன் தப்பிக்கொள்வதென்பது அரிது. அவன் தந்தை இடது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். அன்றும் ஒரு சனிக்கிழமை, கையில் எண்ணெயுடன் வந்த தந்தை, "இதென்னடா தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் காணம்போல் இருக்கிறதே உண்தலை" என்றார். பையனுக்கு ஏதோ விளங்கியது மாதிரியும் விளங்காதது மாதிரியும் ஒரு மயக்கம். ஆனால் அந்தத் தொடர் அவனுக்குப் பிடித்துவிட்டது. எண்ணெய் இடப்படுவதை அவன் மறந்துவிட்டான். "என்னப்பா சொன்னீர்கள்” என்று கதை கேட்கும் ஆர்வத்தோடு உட்கார்ந்துவிட்டான். "கார்காலத்தில் - ஆவணி புரட்டாதி மாதங்களில் - முதன்முதற் பெய்த மழையால் நனைந்த நிலம்போல உன் தலை எண்ணெய் பட்டதும் காட்சி தருகிறதடா" என்றார் தந்தை. பையனுக்கு அந்தத் தொடரில் ஏதோ கவர்ச்சி பிறந்துவிட்டது. "இது எங்கே வருகிறது” என்று கேட்டான். "திருமுருகாற்றுப்படை என்றொரு நூல், அதிலே வருகிறது" என்றார் தந்தை. "அதை நான் படிக்கவேணும்" - இது பையன். தந்தை சிரித்தார். "இப்போது உன்னால் இதைப் படிக்க இயலாது; கஷ்டம். ஆனால் அந்தப் பாடல் எப்படி வந்ததென்று ஒரு கதை சொல்கிறேன்" என்று நக்கீரர் சிறையிலிருந்த கதையைச் சொன்னார்.
எண்ணெய் இட்டுக்கொள்ளத் தயங்கிச் சனிக்கிழமை என்றொரு நாளே வாரத்தில் இருக்கக்கூடாதென்று நினைத்த பையன் அன்றிலிருந்து சனிக்கிழமைகள் எப்போது வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டான். சனிக்கிழமை காலையில் “ஏன் இன்னும் எண்ணெய் இடவில்லை" என்று கேட்கவும் ஆரம்பித்துவிட்டான். அந்தச் சிறுவண் வேறுயாருமல்லன்; நானேதான். எதையும் சுவையாகச் சொல்லி இரசிக்கச் செய்வதில் அப்பாவுக்கு நிகர் அப்பாதான். அதே வேளையிற் பெரிய நூல்களைக்கூடப் படிக்கவேண்டும் என்று சிறுவரும் ஆர்வமுறத்தக்க வகையில் அறிமுகம் செய்துவைப்பதில் அவர்கள்போற் பிறிதொருவரை நாங்கள் கண்டதில்லை.
பிறந்த நாள் கொண்டாடுவதென்பது நாங்கள் அறியாதது. ஆனால் எங்கள் பிறந்த நாள்களில் ஏதாவது ஒரு புத்தகம் எமது வயதுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றதாக வழங்குவது அப்பாவின் வழக்கம். மேமாதம் ஐந்தாம் தேதிகளில் அப்படி அவர் எனக்கு வழங்கிய புத்தகங்களை இன்று பார்க்கும்போது படிமுறையில் அவர் தேர்ந்து வழங்கிய பாங்கை எப்படிப் பாராட்டுவதென்று தெரியாமல் திகைக்கிறேன்.
46 அதிதீரன்
 

அப்பா எனும் தெய்வம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனது சைவ நற்சிந்தனை ஒன்றை ஒலிபரப்பியது. ஒலிபரப்புக்கு மறுதினம் அப்பாவிடம் சென்றேன். எடுத்த எடுப்பிலேயே “என்ன, இல்லவே இல்லேையா” என்றார். எனக்கு எதுவுமே புரியவில்லை. உரையில் இல்லவே இல்லை என்ற தொடர் இடம்பெற்றுவிட்டது என்பது தெரியவந்தது. வேடிக்கையாக "உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்” என்றேன்; தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தேன். அப்பா சிரித்தார். "சொல்லைப் பிரிபார்ப்போம்” என்றார். விழிக்கத் தொடங்கிவிட்டேன்.
தொல்காப்பிய விதியை அநுசரித்தாலும் இல்லை + ஏ என்பது இல்லையே அல்லது இல்லைவே என வருமேயன்றி இல்லவே என வருதற்கிடமில்லை. அப்படி வருவதானால் நிலைமொழி இல்ல ஆதல் வேண்டும். இல்ல என்பதொரு சொல் இல்லை; விதிமீறால் அப்படி அது ஆனதுமன்று. எனவே இல்லையேயில்லை என்பதுதான் சரியான தொடர். இப்படி நான் எண்ணியபடி நினைவுலகத்திலிருந்து நனவுலகத்துக்கு வர அப்பாவின் குரல் இல்லையேயென்னாத இயற்பகை' என்று ஒலித்தது. எந்த விடயத்தையும் நுனித்து நோக்குபவர் அவர்.
பால பண்டிதத் தேர்வுக்குத் தோற்றவேண்டும். படிப்பதற்குப் புத்தகங்களைத் தேடினால் அப்பாவின் புத்தகக் குவியலில் நான் தேடிய புத்தகங்கள் இல்லை. படிக்கவென்று நூல்களைக் கேட்போருக்கு நூல்களை உதவவேண்டும் என்பது அவர் கொள்கை. கொடுத்த புத்தகங்களிற் பல திரும்பியதில்லை. ஆனால் அது குறித்து அவர் கவலைப்பட்டதேயில்லை. எனக்கு நூல்கள் தேவைப்பட்டதும் இரவல் கொடுத்த நூல்களைப் பெற்றுத்தருமாறு வற்புறுத்தத் தொடங்கினேன். அப்பா புத்தகம் இரவல்பெற்ற தம் மாணவர் ஒருவரிடஞ் சென்றார். நூலைத் திருப்பிக்கொடுத்த அந்த மாணவர் பரீட்சை முடிந்ததும் திருப்பித் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டார். புத்தகத்தை என்னிடம் தந்து படித்து முடிந்ததும் திருப்பிக்கொடு என்றார் அப்பா. எனக்கு ஒரே ஆத்திரம். அப்பாவின் புத்தகம். திருப்பிக் கொடுப்பதாவது: கொடுப்பதில்லை எனத் தீர்மானித்துவிட்டேன்.
பரீட்சை முடிந்தது. புத்தகத்தை அலுமாரியுள் வைத்துவிட்டேன். திடீரென்று ஒருநாள் “கொண்டுவா அந்தப் புத்தகத்தை” என்றார் அப்பா. "அது எங்கள் புத்தகந்தானே” என மெல்ல முனகினேன். அதை அப்பா காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. நூலை அனுப்பிவிட்டார். "அந்த மனுஷர் ஏதோ இந்த நூலுக்கு ஆசைப்படுகிறார். வேண்டுமென்றால் நீ ஒரு புதிய புத்தகத்தை வாங்கு" என அந்த விடயத்துக்கு அந்தளவில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அப்பா.
பிறிதொரு சம்பவம். நாலடியார் படிக்கவேண்டும். நூலில்லை. அப்பா தம் மாணவர் ஒருவரிடமிருந்து

Page 29
க. உமாமகேகவரன்
நூலை இரவல் பெற்றுத் தந்தார். நூலைத்தொலைத்துவிட்டேன். "அதே பதிப்புப் பிரதியொன்றை வாங்கி உரியவரிடம் சேர்த்துவிடு” என்றார் அப்பா.
அந்த நூலுக்காக நான் படாத சிரமம் இல்லை. நாலடியாருக்கு வந்த மிகச் சிறந்த பதிப்பு அது. இந்தியா சென்ற நண்பர்களிடமும் சொல்லிவைத்தேன். மூர்மார்கட்டிலுள்ள பழையநூல் விற்பனை நிலையங்களிலும் இல்லையென்று கையை விரித்துவிட்டார்கள். அடிக்கடி அப்பா "கொடுத்துவிட்டாயா கொடுத்துவிட்டாயா" என்று கேட்டுக்கொண்டே இருப்பார். மறைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பும் கேட்டார். "இல்லை” என்றதும் "நீ என்னைப் பிசக்கிப்போட்டாய்” என்று வருந்தினார். நூலை இரவலாக உபகரித்த அந்த மாணவரும் மறைந்துவிட்டார். ஒரேயொரு பதிப்போடு நின்றுவிட்ட அந்த நூல் இனிக் கிடைத்தாலும் எப்படி எங்கே அனுப்பி அப்பாவைத் திருப்தி செய்வது என்று திணறிக்கொண்டிருக்கிறேன்.
கலாரசனையில் அப்பாவுக்கு நிகர் அப்பாதான். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு அளவுகடந்த பிரேமை. மதுரை மணிஜயர், M.D. இராமநாதன், .ெ N.B மிகமிகப் பிடிக்கும். பாலமுரளியின் மேதாவிலாசத்தைப் பெரிதும் இரசிப்பார். அரியக்குடி, செம்பை, செம்மங்குடி, மகாராஜபுரம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஆலத்தூர், D. K. ஜயராமன், D. K. பட்டம்மாள், M.S. சுப்புலக்ஷமி, M.L. வசந்தகுமாரி, M. M. தண்டபாணிதேசிகர் என அவர் இரசனைக்குரியோர் பட்டியலில் வருவோரும் சிலர் உண்டு. பிடிக்காதது கோவிந்தராஜன் பாட்டு. எனக்கு நினைவு தெரிந்த நாளில் 500 இசைத்தட்டுக்கள் வரை அப்பா வைத்திருந்தார். எத்தனையோ அதிகாலைகளிற் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை "க்ருபாலவாலகலாதர என்று கர்ஜிக்கும் ஒலி கேட்டே திடுக்குற்றுக் கண்விழித்திருக்கிறேன். அபூர்வராகங்கள் சிலவற்றின் மீது அப்பாவுக்கு அளவிறந்த பிரியம். அமிர்தவாஹினி, சுத்தபங்காளா முதலிய சில ராகங்களை அவர் மிகமிக ரசிப்பார். பூஞரீராமபாதமா, ராமபக்தி சாம்ராஜ்யம், தொலிஜேஜேஸின பூஜாபலமு முதலிய சில அபூர்வராகக் கீர்த்தனைகள் அவர் பாடக் கேட்பது அற்புதமானதொரு அநுபவம். அவ்வப்போது நல்லநல்ல மெட்டுக்களிற் கீர்த்தனங்களையும் எழுதிவைப்பார்.
அவர் பாட்டியற்றுவதைக் காண்பது பிறிதொரு சுவையான அநுபவம். பாட்டியற்ற வேண்டுமென்றால் இராச்சாப்பாட்டைச் சற்று முன்னதாகவே முடித்துக்கொண்டு படுக்கைக்குச் சென்றுவிடுவார். தலையணைக்கடியிற் காகிதங்களும் 'வயலட்' பென்சிலும் பொடிடப்பியும் தயாராக இருக்கும். கத்தரிப்பூ நிறத்தில் ஏனோ அப்பாவுக்கு ஒரேமோகம். பேனைக்கிடும் மையுங்கூட அதே நிறந்தான். இந்த நிறத்திலுள்ள மோகம் இறுதிவரை குறையவில்லை. தலைமாட்டில் தணிந்து எரியும் 'அரிக்கன்” விளக்கொன்று இருக்கும். குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும் அப்பா திடீரென்று எழுவார். தலைமாட்டில் உள்ள விளக்கைத் தூண்டுவார். காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துக்கொள்வார். சில பாடல்களை எழுதுவார். மறுபடி தூங்க
 

அப்பா எனும் தெய்வம்
ஆரம்பித்துவிடுவார். பிறகு திடீரென்று விழித்துக்கொள்வார்; எழுதுவார். இப்படிப் பொழுது விடிவதற்குள் சிலதடவை நடக்கும். விடிந்ததும் பாடல்கள் தயாராக இருக்கும். 'பிரதி செய்துகொடு" என்று யாரிடமாவது கொடுத்துவிடுவார்.
வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்திற் பண்டிதமணியவர்களின் தக்ஷகாண்ட உரை அரங்கேற்றம். பண்டிதமணி அவர்கள் இவரே அன்றையதினம் உரை சொல்லவேண்டும் என்று விரும்பினார்கள். திரு அ. பஞ்சாட்சரம் பண்டிதமணி அவர்களின் வேண்டுகோளைத் தெரியப்படுத்தினார். உரிய தினத்தன்று காலை பண்டிதமணி அவர்களின் தக்ஷகாண்ட உரைப் பிரதியை அப்பா புரட்டிக்கொண்டிருந்தார்கள். “பண்டிதமணியவர்களுக்கு முன் பயன் சொல்வதென்றதும் வியர்க்க ஆரம்பித்தவிட்டதோ?" என்று வேடிக்கையாகக் கேட்டேன். அப்பா சிரித்துவிட்டு "இன்றைக்கு அரங்கேற்றம் பண்டிதமணியவர்களின் உரைக்கே தவிர நான் கூறும் உரைக்கல்ல" என்றார்கள். அந்த விடையைக் கேட்டு நான் வியந்ததைவிட அன்று மாலை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் நான் அடைந்த வியப்புத்தான் பெரிது. அன்று காலையில் மட்டும் ஏதோ புத்தகத்தை வைத்துப் புரட்டியவர் மாலையிற் பண்டிதமணி அவர்களின் உரையை அப்படியே கூறி அரங்கேற்றியபோது பண்டிதமணி அவர்கள் நயந்து வியந்த காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது.
அப்பாவின் திருத்தம் பெற்றபின் எந்த விடயமும் பளிச்சென்று பத்தரைமாற்றுத் தங்கமாய் ஒளிரும்.
தவில்மேதை தசவிணாமூர்த்தியின் நினைவுமலர் அச்சாகிறது. காங்கேயன்துறை சந்திரா அச்சகத்திலேயே தங்கி இரண்டே நாள்களில் அடித்து முடித்த மலரது. இரண்டாவது நாள் தகூஷிணாமூர்த்தியின் படம் அச்சாகிக்கொண்டிருக்கிறது. படத்தின் கீழே வெண்பாவின் ஈற்றடி அமைப்பில் ஓரடி அமைக்க எண்ணினேன். "இறந்தாலும் வாழ்வார் இவர்” என ஒரடி அமைத்து அச்சிடும்படி கொடுத்தேன். நாதஸ்வரவித்துவான் சிதம்பரநாதன் காரில் வீடு திரும்பினேன். சிதம்பரநாதனுக்கு ஒரே குஷி, "வாத்தியார், படத்துக்குக் கீழே தம்பி ஒரு வரி போட்டிருக்கிறார். சோக்கான வரி” என்று குதூகலித்தார். “போட்ட வரியைச் சொல்லென்றார்" அப்பா; சொன்னேன். "இறந்துமிற வாதார் இவர் என்று போட்டிருக்கவேண்டும். உடனே போய் மாற்றுங்கள்" என்றார். காரிலே திரும்பி நூற்றுக்குமேல் அச்சாகிவிட்ட படங்களை ஒதுக்கிவிட்டு அப்பாவின் திருத்தத்துடன் புதிதாக அச்சிட்டோம். அப்பாவின் திருத்தத்தை முந்திய தொடருடன் இணைத்து நோக்கும்போதுதான் அவர் வாயாற் பெறும் திருத்தத்தின் அழகும் அழுத்தமும் புலப்படும்.
ஒருமுறை வெருகல் தலத்தில் எழுந்தருளும் முருகன்மீது சில வெண்பாக்கள்

Page 30
க. உமாமகேசுவரன்
பாடினேன். ஒன்றின் ஈற்றடி உருகு மோயா துளம்" என்றமைந்துவிட்டது. படித்துப்பார்த்த அப்பா, "வெருகல் வெண்பாக்கள் மிக நன்று. எங்கள் பட்டடைக்கு இழுக்கு வருமோ என்றுதான் அச்சம். உருகு + மோயா தளையென்ன? இவ்விடத்தில் ஓசை குறைவது புலப்படவில்லையா? உருகுமே ஓயா துளம் படித்துப்பார். ஒரசை குறைந்ததுதான் காரணம்" என்று எழுதியிருந்தார்.
ஆசிரியப் பயிற்சி முடிந்ததும் கிளிவெட்டி போகவேண்டுமென்று அரசாணை பிறந்தது. போகுந் தினத்தன்று போனதும் கடிதம் போடு" என்று அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். பஸ் பயணம் செய்யும்போது கடிதம் போடு, கடிதம்போடு என்று அப்பா அடிக்கடி கூறியதுதான் நினைவிற் சுழன்றது. அதன் பயனாக மனத்தில் ஒரு பாடல் உருவாகியது. அது இது.
பண்டி லக்கியத் தூது பகர்ந்தவர் வணிடு தூது வரவிடுத் தாரதைக் கண்டு யானினினி வெட்டிகணி டேனெனத் துண்டுக் காகிதத் தூதுவிட் டேனரே
இப்பாடலை ஒரு தபாலட்டையில் எழுதித் துணிடுவிடு தூது எனத் தலைப்பும் இட்டு அனுப்பினேன். மறு தபாலிலேயே அப்பாவின் பதில் வந்தது.
கர்ைடேன் கவிகொண்டேன் கணினிர்வினர் டேனினது துண்டினம் நண்கு சுவைத்து
என்ற குறள் வெண்பாவை எழுதிக் கண்டேனென்ற முதற் சீருக்கு அடையாளமிட்டு, வினையாலனையும் பெயர் என்ற அடிக்குறிப்புந் தந்திருந்தார். ஒருவரது பிழைகளைச் சுட்டிக்காட்டி அவர் திருத்தம்பெற எத்துணை அவாவுவாரோ, அத்துணை தகுதி கண்டு ஒருவரைப் பாராட்டுவதற்கும் அப்பா அவாவியவண்ணம் இருப்பார். அற்ப தகுதியாவது பெற்று இவர் பாராட்டுக்கு உரியவராகிவிட மாட்டாரா. அப்படிப் பாராட்ட வாய்த்தால் மேலும் இவர் வளரத் துணைபுரிந்ததாகிவிடுமே என்று அவாவிக் காத்திருப்பவர் அவர்.
அப்பாவுக்குச் சிலவேளைகளிற் குஷி பிறந்துவிடும். டேய் தம்பி" என்றழைப்பார்.
"புலவர் எப்படிக் கட்டளைக்கலித்துறைகளை வாய்விட்டுப் படிப்பார் என்று உனக்குத் தெரியுமே" என்றொரு கேள்வி போடுவார். மறுகணம் புலவர் அவர்கள் கட்டளைக் கலித்துறை ஒன்றைப் பாடுவார். தொடர்ந்து யாப்பருங்கலக்காரிகை உதாரணச் செய்யுள் செல்வப்போர்க்கதக்கண்ணன் புலவர் பாணியில் ஒலிக்கும்.
“டேய் வித்துவசிரோமணியின் காம்போதி இதுதான்” கந்தபுராணச் செய்யுள் ஒன்று வித்துவசிரோமணி பாணிக் காம்போதியில் ஒலிக்கும். தொடர்ந்து
 

அப்பா எனும் தெய்வம் வித்துவசிரோமணி பாணி உரை.
பெலிஉருண்டையர்' என்றொரு உரையாசிரியர். அவர் உரை சொல்லப்போகிறார் உரை ஆரம்பமாகும். விசேஷம் என்னவென்றால் மூக்கடைப்பு உடையவரான பெலிஉருண்டையர் போலவே மூக்கடைப்பு ஒலிகளுடன் அவர் பாணி உரை ஒலிக்கும். ஒருவரது குரலின் பாணியைப் பிரதிபலிக்கும் அவரது இந்த ஆற்றல் (mimicry) எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. எத்துணை இன்பமான அநுபவம் அது.
கிளிவெட்டிக்குக் கல்வித்திணைக்களம் என்னை அனுப்பி வைத்ததால் நான் அடைந்த பெரும்பேறு அப்பாவிடமிருந்து கடிதங்கள் பெற வாய்த்ததுதான். வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசாலையிற் கற்பித்திருந்தால் இந்த அரிய பேற்றினையல்லவா இழந்திருப்பேன். ஆனால் அவருக்கோ மகன் எங்கோ தொலைதூரத்தில் இருக்கிறானே என்று கவலை. முதற் கடிதத்தின் தலைப்பில் அவர் எழுதிய பாடல் இது:
எங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ எங்கே இருத்துமோ என்றறியேன் - கங்கைமதி குடினாணி தில்லையிலே தொந்தொமென நின்றுநடம் ஆடினாண் எங்கோண அருள்.
தில்லை நடராஜர் மீதுதான் அவருக்கு எவ்வளவு பத்தி. நாணயசங்கம் ஆரம்பித்தபோது அதற்குப் பெயர் சொல்லுங்கள் என்று கேட்டது கேட்குமுன் அவர் வாயினின்றும் வந்த பெயர் நடராஜவிலாச ஐக்கியநாணய சங்கம் என்பதுதான்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
இதிலேயுள்ள மைமீற்றுப் பதங்கள் நான்கிற்கும் சொல்லிலக்கணம் கூறு. கீழ்க்கோடிட்ட பதம் முக்கியம். இது 1972.03.02. இல் யான் பெற்ற கடிதம். ஆறுநாள் விடாமழை பொழிந்தால் அதைப் பீடிகையாக வைத்துக்கொண்டு கந்தபுராணச் செய்யுள் ஒன்றுக்கு அருமையாக விளக்கந் தந்துவிடுவார். கடிதங்களிற்கூட ஏற்ற சந்தர்ப்பங்களை வருவித்துக்கொண்டு எத்துணை அக்கறையோடு எப்படியெல்லாம் கற்பித்தார் அவர் என்று இன்று நினைத்துப்பார்த்து உருகுகிறேன்.
அப்பாவுக்குப் பிள்ளைகள் நால்வர். யார்மீது அவர் அதிகம் அன்புசெலுத்தினார் என்று அவர்களில் யாருக்குமே தெரியாது. ஒவ்வொருவரும் தம்மீதுதான்

Page 31
க. உமாமகேகவரன்
அப்பா அதிகம் அன்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கும்படி இருந்தது
அவர் அன்பு செலுத்திய பாங்கு. அன்பு செலுத்துவதைக் கலையாக - யோகமாக - பயின்றிருந்த அரிய மனிதர் அவர்.
அப்பாவுக்கு எப்போதாவது அபூர்வமாகக் கோபம் வரும். ஒரு உதாரணம்:
இனி எனக்குக் கடிதம் எழுதும்போது மெல்லிய சிறிய துண்டுகளிலே இரண்டுபக்கமும் கீறிக்கிழித்து அனுப்பவேண்டாம். காகிதம் தேவையானால் அனுப்புகிறேன். இன்று வந்த கடிதம் வாசிக்கமுடியவில்லை. கண் சரியில்லை. கண்ணாடியும் சரியில்லை. என்ன செய்வது.
மூப்பென்பதொன்றில்;ை பிணியென்பதொன்றில்லை; மரணமமென்பதொன்றில்லை; இளமை சாசுவதமானது; நாம் அமரத்துவம் எய்தியவர்கள் என்ற நினைவுடன் கல்வி செல்வம் என்பவற்றை எய்த இடையறாது முயலவேண்டும்.
மரணம் எந்தக் கணமும் எம்மை நெருங்கலாம். தலைமயிரிற் பிடித்திழுத்துச் செல்லக் காத்திருக்கின்றான் காலன் என்ற நினைவுடன் அன்றறிவாம் என்னாது அறஞ்செய விரும்பவேண்டும்.
अज्ञांप्रवत्प्राो 6णामर्थं च चिन्तयेत् । गृहीत । केशेर मृत्युग धीमाचरेत !!
-இவை அப்பா அடிக்கடி கூறும் அறிவுரைகள்.
நீயே என் தாய்; நீயே என் தந்தை; நீயே என் சுற்றம்; நீயே என் தோழன்; நீயே என் வித்தை, நீயெ என் பெறலருந்திரு; அனைத்தும் நீயே, நீயே என் தேவதேவன்
என்ற பொருள்தரும் சுலோகம் ஒன்றைச் சொல்லி உருகுவது அப்பாவின் வழக்கம். அப்பா எனும் தெய்வத்தை நினைக்கும்போதெல்லாம் அச் சுலோகந்தான் என் நினைவில் எழுகிறது.
त्वमेव माता च पिता त्वमेव त्वमेव धन्धुश्च सखा त्वमेव । त्वमेव विया द्रविणं तमेव त्वमेध सई मम देवदेव।
குஞசிதபதம் 1988
 

இராமன் புறமுதகிட்டானா?
போரிலே எதிரி எறிகின்ற அல்லது ஏவுகின்ற ஆயுதங்கள் தனக்கெதிரே வருகின்றபோது சுத்தவீரன் தன் கண்ணை இமைக்கக்கூடாது. போர் என்றதும் சினத்தோடு விழித்த விழிநோக்கை மாற்றவே கூடாது. அப்படி மாற்றிவிட்டால்- கண்ணை இமைத்துவிட்டால் - புறமுதுகிட்டுவிட்டதாக அர்த்தம் என்று, பண்டைத்தமிழ் நூல்கள் கூறுகின்றன.
மிகப்பழந்தமிழ் இலக்கியங்கள் எனப்படுபவை சங்க இலக்கியங்கள். கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இருபெரும் பிரிவில் அடங்குகின்றன. எட்டுத்தொகையிலே வருவதொரு நூல் புறநானுாறு. அங்கே ஒளவை பாடிய பாடல் ஒன்று வருகிறது.
அரசன் போருக்குப் புறப்படுமுன் வீரர்களோடு விருந்துண்பான். மதுவும் வழங்கப்படும். மது வழங்கப்படும்போது மிகச்சிறந்த வீரனுக்கே முதலில் வழங்கப்படவேண்டும். "இவன்தான் முதலிலே மதுவைப்பெறும் தகுதி வாய்ந்தவன்” என்று புலவர் ஒருவர் சிபாரிசு செய்யவேண்டும். இத்தகையதொரு சந்தர்ப்பத்திலே சிபாரிசு செய்பவராக ஒளவை அமைகிறார்.
"வேந்தே, கள்ளை முதலிலே இவனுக்குத்தான் வழங்கவேண்டும். நீ கூட அவன் உண்ட பின்புதான் உண்ணவேண்டும். ஏன் தெரியுமா? இவன் தந்தையின் தந்தை, நின் தந்தையின் தந்தைக்கு எதிரே வந்த வேலைக் கண் இமைக்காது நின்று ஏற்று வீரமரணம் எய்திய பெரும் புகழாளன். அவன் பெயரனாகிய இவனும் பகைவர் உன்மீது எறியும் வேலைக் கண் இமைக்காது ஏற்பான்; உண்ணைக்காப்பான்."
இவற்கித் துணிமதி கள்ளே சினப்போர் இனக்களிற் றியானை மியறேர்க் குரிசிலி நூங்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை எடுத்தெறி ஞாட்பி னிமையானி. மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும். மறைக்குவனர் பெருமநிற் குறித்துவரு வேலே
(எடுத்தெறி ஞாட்பு - படைக்கலங்களை எடுத்தெறியும் போர்)

Page 32
க. உமாமகேசுவரன்
என்று தன் சிபாரிசுக்குரிய வீரனைத் தான் சிபாரிசு செய்வதற்கான காரணத்தை ஒளவை கூறும் போது, கண் இமைக்காது படைக்கலங்களை எதிர்கொள்ளும் வீரம் ஒப்பற்ற வீரம் என்றும் அது பரம்பரையாக வருவதோர் பண்பு என்றும் வலியுறுத்தத் தவறவில்லை. புறநானுாறு இங்ங்ணம் போற்றும் இவ்வீரப்பண்பை, சுத்த வீரருக்கான இலக்கணமாகவே ஆக்கிவிட்டது திருக்குறள்.
விழித்தகணி வேலிகொன டெறிய அழித்திமைப்பினர் ஓட்டன்றே7 வணிக ணவர்க்கு
எனப் படைச்செருக்கு எனும் அதிகாரத்திலே வரும் குறளை, வேல் கொண்டடெறிய விழித்தகண் அழித்திமைப்பின் வன்கணவர்க்கு ஒட்டன்றோ எனக் கொண்டு கூட்டினால் பொருள் காணல் எளிதாகிவிடும்.
வேல்கொண்டு எறிய - (எதிரி) வேலால் எறிய, விழித்தகண்- (போர்புரியவெனச் சினத்தோடு) விழித்துப்பார்த்த கண்ணை, அழித்திமைப்பின் - (சினத்தோடு கூடியிருந்த முந்திய நோக்கை) மாற்றி இமைத்தால், வன்கணர்க்குகொடியவரான வீரருக்கு, ஒட்டன்றோ - (தாம்) புறமுதுகிட்டதாக ஆகிவிடுமன்றோ. திருக்குறள் கூறும் சுத்த வீரருக்கான இந்த இலக்கணத்தைப் பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்களில் வரும் பாத்திரங்கள் இடையேயும் நாம் காணமுடிகிறது.
வேலுங் கணையமும் விழினும் இமையார் வீரியத் தறுகணர்.
இகலிடை இமையா எரிமலர்த் தடங்கணி புகழ்வரை மார்பண்.
என்றிவ்வாறு வரும் பெருங்கதைப் பாடற்பகுதிகளும்,
ஆரமருள் ஆணிடகையும் அன்னவகை வீழும் வீரறிெ வெம்படைகள் விழ இமையானர்.
ஏந்தல்தண் கணிகள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி
நாந்தக உழவன் நாணி நக்குநீ அஞ்சல் கனடாய்
காய்ந்திலேண். என்றிவ்வாறுவரும் சீவகசிந்தாமணிப் பாடற்பகுதிகளும் அதற்கான சான்றாதாரங்களாய் மிளிர்கின்றன. ஆனால், கம்பராமாயண வீரர்களிடையே வீரர்க்கான இந்த இலக்கணம் பேணப்படவேயில்லை என்பது வியப்பாக உள்ளது.
54 அதிதீரன்
 

இராமன் புறமுதுகிட்டானா?
இராமனும் கும்பகருணனும் ஒருவரை ஒருவர் எதிர்கிறார்கள்; எதிர்க்கிறார்கள். கொடியதொருபோர் ஆரம்பமாகிவிட்டது. கும்பகருணனின் படை முழுமையாக அழிந்துவிட்டது. அவன் தனி ஒருவனாய் நிற்கிறான். ஆனாலும் தளராது போர் புரிகிறான். இராமன் விட்ட அம்பால் அவன் "வலக்கை அற்றது” அவன் கலங்கவில்லை. மாறாக "அற்று வீழ்ந்தகை அறாதவெங் கையினால் எடுத்து”க் குரங்குக்கூட்டத்தைக் குமைத்தான். இராமன் "காத்துடன்" நிற்கவும் அவன் வாணரப்படையைக் கும்பகருணன் கொன்று குமைப்பதை வியந்து உலகு நோக்கியது; அஞ்சியது.
உள்ள கையிலும் அற்றவென் கரத்தையே அஞ்சின உலகெல்லாம்
இராமன் கும்பகருணனின் எஞ்சிய கையையும் கால்கள் இரண்டையுங்கூடத் துணித்துவிட்டான். இராமனின் அம்புகள் வேகமாகவந்து தன்கைகளையும் கால்களையும் அறுத்துத்தள்ளி உடலைச் சல்லடைக் கணிகளாகத் துளைத்தபோதிலும் கும்பகருணனின் "செய்ய கண்பொழி தீச்சிகை யிருமடி சிறந்தது” என்கிறான் கம்பன். முன்பைவிட இரண்டு மடங்கு தீச்சுவாலை சிந்தக் கும்பகருணன் விழித்தான் என்றால் விழித்த கண்னை அழித்து இமைக்கவில்லை என்பது தானே பொருள். கும்பகருணன் பற்றி இப்படிக் குறிப்பாகவாவது குறிப்பிடும் கம்பன் இராமன் பற்றிக் குறிப்பாகவேனும் குறிப்பிடவில்லை. மாறாகக் கும்பகருணனோடு போர்புரியும்போது இராமன் கை நடுங்கினான் என்கிறான்.
கைகளும் கால்களும் இழந்த கும்பகருணன் அருகில் ஒரு குன்று. அதை வாயாற்பற்றிப் பறித்து இராமனை நோக்கி வீசுகின்றான். குண்றொன்று தன்னை நோக்கி வரக்கண்டதும் இராமனின் கைகள் நடுங்குகின்றன. இக்காட்சியை,
தீயி னாற்செய்த கணணுடை யானெழுஞ் சிகையினாற் றிகைதீய வேயி னாற்றிணி வெற்பொன்று நாவினால் விசும்புற வளைத்தேந்தி பேயி னாற்புடைப் பெருங்கள மெரிந்தெழ பிந்திறந்ததுபோலும் வாயி னாற்செல வீசினன் வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான்
எனக் கம்பன் விவரிக்கிறான்.
கண்களைக் கும்பகருணன் இமைக்கவில்லை. முன்பைவிட அவை சிவந்தன; ஒளிர்ந்தன. இராமனுக்கோ கண் இமைத்ததா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கையோ நடுங்கிவிட்டது என்கிறான் கம்பன்.
கும்பகருணன் இராமன் போரிலே, பழந்தமிழ் இலக்கியங்களான புறநானுாறு, சீவகசிந்தாமணி, பெருங்கதை, திருக்குறள் என்பன காட்டும் போர்
அதிதீரன் 5

Page 33
க. உமாமகேகவரன்
இலக்கணத்தின்படி இராமன் புறமுதுகிட்டவன் ஆகானா? கண்களை இமைத்துவிட்டாலே புறமுதுகிட்டதாய் ஆகும் என்றால் கையே நடுங்கிவிட்டபின்பும் புறமுதுகிட்டதாக ஆகாதா?
"ஒருமொழி ஒழிதன் இனங்கொளற்குரித்தே" என்ற விதிப்படி, சோறுண்டேன் என்றால் கறியும் உண்டேன் என்ற பொருள் பெறப்படுவதுபோல் "மலர்க்கரம் விதிர்ப்புற்றான்” என்றால் கண்ணும் விதிர்ப்புற்றதாக - இமைத்ததாக ஆகாதா? முடிவுதான் என்ன?
"காமஞ் செப்பாது கண்டது மொழிமோ!"
நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் - கலாசாரமலர் 1998
பெரிய நூல்களைப் படித்துணர்வதற்குரிய ஊக்கம் இப்போது குறைந்துவருகிறது. சொற்பொழிவுகளைக் கேட்கும் ஆர்வம் நூல்களைப் படிப்பதில் மக்களுக்கு இருப்பதில்லை. இந்தநிலை நீடித்துவருமானால் பெரியநூல்கள் படிப்பாரற்று, பதிப்பிப்பாரும் இல்லாமல் நாளடைவில் மறந்துபோகும்; மறைந்தும்போய்விடும். அந்தநிலை வராமல் இறைவன் காப்பாற்றவேண்டும்.
கி. வா. ஜெகந்நாதன் கந்தவேள் கதையமுதம் - முகவுரை, 1980.02.8
தமிழ் நாட்டில் இலக்கியம்பற்றிப் பேச தமிழ்ப்பேராசிரியர்களுக்குத்தான் தகுதி இருப்பது மாதிரி ஒருநிலை இருப்பது தெரிகிறது. சாகித்ய அகாதெமி, பெலோ ஆப் அகாதமி என்ற இலக்கிய விருதுக்கு ஜெயகாந்தன் பெயர் முன்வைக்கப்பட்டபோது, தமிழ் உறுப்பினர்கள்தான் முதலில் ஆட்சேபனை தெரிவித்தார்கள். இது மாதிரி மற்றமொழிகளில் நடப்பதில்லை
பத்மவிபூஷண் யு. ஆர். அனந்தமூர்த்தி தினமணி கதிர் பேட்டி, 1998.02.15
 

நன்றி
கட்டுரைகளை நாலுருவில் வெளியிட அநமதி வழங்கிய தமிழறிஞர் திரு க. உமாமகேசுவரன்,
கட்டுரைகள் அத்தளையையும் தேடிச் சேகரித்த கணனி எழுத்தாக்கம் செய்த வழங்கிய திரு க. ஜெகதீஸ்வரன், திருமதி சாருகேசி நற்குணதயாளன்,
புத்தக அமைப்பு, அட்டை அமைப்புச் செய்ததவிய திரு க. இளங்கோவன்,
பட அமைப்பு செய்து உதவிய திரு உ. சேக்கிழான்,
நாலை அச்சேற்றும் பணிகளில் முன்நின்றுழைத்த வை. தயாளன்,
என்போர் மீது அம்பனை ~ கலைப்பெருமனறம் (ஐ.இ.) நன்றிமிகப்பாராட்டுகிறத

Page 34


Page 35