கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எழு குரல்கள்

Page 1
எழு கு
நிலக்ஷன் சு
○g○ (' , ബ 9H限上 சன்மார்க்க சபை

曙 。 f. ரும்பசிட்டி
35

Page 2

ழு குரல்கள்
மத்திரிகையில் வுெளினுந்து செவ்விகளின்
இெர்குப்பு
நிலக்ஷன் சுவர்ணராஜா
வெளியீடு. சன்மார்க்க சபை - குரும்பசிட்டி

Page 3
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 99
பதிப்புரிமை - திருமதி. நவசக்தி பாலகுமார் அச்சுப்பதிப்பு :- வாணி கணனி அச்சிடல் நிலையம், வவுனியா. பக்கங்கள் :- 87 -- viii
விலை . :- Lunt 50.00
шебәчев авёбиші әе
- ii -

பதிப்புரை
குரும்பசிட்டி இலக்கியப் பாரம்பரியத்தின் மூன்றாவது தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலக்ஷன் சுவர்ணராஜாவின் "எழு குரல்கள்” என்ற நூலை இன்று வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
நிலக்ஷன் கலை, இலக்கியம், அரசியல், பத்தி எழுத்துக்கள் எனப்பல் துறை சார்ந்த படைப்புக்கள் பலவற்றை அசுரவேகத்தில் நேர்த்தியாகப் படைத்து தன் பெயரை நிலை நிறுத்தியவர். இவரது படைப்புக்கள் தமிழ்த் தினசரிகளிலும் சஞ்சிகைகள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன. அத்துடன் புதிய நூற்றாண்டின் தமிழ் இணையத்திலும் இவரது பல படைப்புக்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இநநூலில் "தினக்குரல்" பத்திரிகையில் நிலக்ஷன் செவ்விகண்ட பல்துறைச்செவ்விகள் ஏழைத்தொகுத்து "எழு குரல்கள்" என உங்கள் கரங்களில் தவழவிடுகின்றோம்.
இன்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்று எம் பணிக்கு ஊக்கமளிக்கும் என உறுதியுடன் நம்புகின்றோம்.
குரும்பசிட்டி, -சன்மார்க்கசபையினர் தெல்லிப்பழை.
- iii -

Page 4
பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியற்துறைப் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் வழங்கிய
முன்னுரை
பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவரும் கொழும்பு சட்டக் கல்லூரி மாணவருமான நிலக்ஷன் சுவர்ணராஜா அவர்கள் அவ்வப்போது பத்திரிகை வெளியீட்டிற்காக மேற்கொண்ட செவ்விகளில் சிலவற்றைக் குரும்பசிட் டி சன்மார்க்க சபையினர் தொகுத்து வெளியிடவுள்ளமை ஒரு புதிய பயன்தரத்தக்க முயற்சியாகும். ஏனெனில் செவ்விகள், சமூக விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் ஆய்வு அணுகு முறைகளில் ஒன்றாக இருப்பதோடு, அவை வரலாற்றைப் பதிவு செய்யும் ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இன்னொரு வகையில் செவ்விகளை ஒரு வகை இலக்கியமாகவும் கொள்ளலாம்.
மொத்தமாக ஏழு செவ்விகளை உள்ளடக்கியுள்ள இத்தொகுப்பில் நான்கு செவ்விகள் குரும்பசிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த கலை, இலக்கிய, அகழ்வாராய்ச்சி, ஆவணச் சேர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டுள்ள முயற்சியாளர்களுடனானதாகும்.
இந்நான்கு செவ்விகளிலும் அடங்கியுள்ள விடயங்களை வாசித்ததும் அவற்றிடையே ஒரு வித ஒருமைப்பாடு இருப்பது தெளிவாகின்றது. அது என்னவெனில், ஈழத்தமிழர்களின் தனித்துவமும் தொன்மையும் மறைந்து விடக்கூடாது என்ற ஆதங்கமும் ஏக்கமும் ஆகும்.
இதரிலடங்கியுள்ள முதலாவது செவ்வி, கலைஞானி அ.செல்வரத்தினத்துடனானதாகும். அரும்பொருள், தொல்பொருள் சேகரிப்பு, புகைப் படம் , ஓவியம் போன்ற துறைகளில் ஈடுபட்டுவரும் திரு.அ.செல்வரத்தினம் தமிழர்களது வரலாறு திரிபடைந்து சென்றமைக்குப் பிறர் மட்டுமல்ல தமிழறிஞர்களும் காரணம் என்று குறிப்பிட்டுள்ளமை எமது கவனத்துக்குரியதாகும். மேலும் அவரது சேமிப்புக்களில் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதையும் உள்ள சிலவும் அழியும் வாய்ப்பிருப்பதையும் இச்செவ்வி தமிழ்மக்களுக்கு எடுத்துக்கூறுகின்றது.
இரண்டாவது கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையுடனானதாகும். ஏ.ரி.பொன்னுத்துரையவர்களைப் பற்றிப் பல்வேறு நூல்களும் ஆய்வுகளும்
- V -

வெளிவந்துள்ள போதிலும், நிலக்ஷன் இச்செவ்வியினூடாக அவரது தொண்டுகளை அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். "தாளக்காவடி" என்ற கிராமியக் கலையை அழிந்து போகாது பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இச்செவ்வியினுாடாக ஏ.ரி.பொன்னுத்துரை அவர்கள் தமிழ் மக்களுக்கு எடுத்துக்கூறியிருக்கிறார்.
வேல் அமுதனுடன் நடாத்திய நேர்காணலில், நிலக்ஷன் கையாண்ட முறை விதந்து பாராட்டத்தக்கது. "இலக்கியப் படைப்புக்களால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடிந்ததா" எனக் கேள்வி எழுப்பி, ஆக்க இலக் கியங்களது நோக்கம், விளைவுகள் என்பவற்றை ஒரு எழுத்தாளனிடமிருந்தே பெற்றுக்கொள்ள முயன்றிருக்கிறார் நிலக்ஷன். அன்றைய இளைஞர்களையும் இன்றைய இளைஞர்களையும் பற்றிய கேள்விக்கு அமுதனின் பதில் கவனத்துக்குரியதாகின்றது.
குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்துடனான செவ்வியில், ஆவணங்களை அல்லது பத்திரிகை நறுக்குகளைச் சேகரிப்பதனால் எதனைச் சாதிக்கலாம் என வினவி அதற்குரிய பதிலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். உலகளாவிய தொடர்புகளைப் பேணி வரும் திரு கனகரத்தினத்தின் இம் முயற்சி உலகத் தமிழர்களால் மெச்சப்படவேண்டியதென்பதையும், எமது வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இச்செவ்வி வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்நான்கு செவ்விகளைத் தந்தவர்கள் குரும்பசிட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். நிலக்ஷனும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதும் அக் கிராமத்துக்கே இத்தொகுப்பை அவர் காணிக்கை ஆக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது அக்கிராமம் உருவாக்கியுள்ள பல்துறை சார்ந்த விற்பன்னர்களை எம்முன் கொண்டுவருவதுடன் நிலக்ஷன் போன்ற இளந்தலைமுறையினர் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் வளமாக அமையத் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையையும் ஊட்டுகின்றது.
இத் தொகுப்பிலுள்ள மற்றொரு செவ்வி ரமணி என்ற வை.சுப்பிரமணியத்துடன் நடாத்தப்பட்டது. இவரது செவ்வியும் யாழ்ப்பாணத்தில் சித்திரக்கலையின் நிலையையும், சிற்பங்கள் சிலைகள் எவ்வாறு அழிவைச் சந்தித்து வருகின்றன என்பதையும் எடுத்துக்கூறுகின்றது.

Page 5
மாவை ஆதீன கள்த்தா மகாராஜழரீ சு.து.சண்முகநாதக்குருக்களின் செவ்வி, 1985ம் ஆண்டு தொடக்கம் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளால் அங்குள்ள ஆலயங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன என்பதையும் யாழ்ப்பாணத் தில் சைவ சமயத்தின் இன்றைய நிலையையும் பதிவுசெய்துள்ளதால் இதை ஒரு வரலாற்று ஆவணமாகவே கொள்ளலாம். சைவசமயத்தைக் காப்பதற்காக இளைஞர்கள் இராணுவப்பயிற்சி பெறவேண்டும். கிராமங்கள்தோறும் சிவசேனைகளாக உருவாகவேண்டும் என்ற வடிண்முகநாதக்குருக்களின் கருத்தைப்பலர் ஏற்றுக்கொள்ளாதிருப்பினும், சைவசமயத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டம் வந்துவிட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளமை தெரிகின்றது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தில் பல பதவிகளை வகித்த எம். சுகுமாரனுடனான செவ்வி, மற்றைய செவ்விகளிலிருந்தும் பலவகைகளில் வேறுபட்டது. எனினும் தொழிற்சங்கங்களின் முக்கியத்துவமும், சமகால நிலவரங்களும் மக்களிடையே சென்றடைய வேண்டிய காரணத்தினால் அவசியமானதொன்றாக விளங்குகிறது. மக்களின் சக்தி ஒன்று திரண்டால் எவ்விதமான சூழ்ச்சிகளையும் முறியடிக்கலாம் என்பதை இச் செவ்வியினுடாகச் சுகுமாரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறாகப் பல்துறை சார்ந்தவர்களையும் சந்தித்து, மேற்சொன்ன விடயங்களைத் திரட்டித் தந்ததன் மூலம் நிலக்ஷனும், இவற்றைத் தொகுத்து வெளியிடுவதன்மூலம் சன்மார்க்க சபையும் ஈழத்தமிழருக்கு மட்டுமின்றி, உலகத்தமிழினத்துக்கு யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையைத் தெளிவாக்கியுள்ளமைக்கு நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாயிருக்க வேண்டும்.
குரும்பசிட்டி மண் பல திறமைசாலிகளை இந்நாட்டுக்கு உருவாக்கித் தந்துள்ளது என்பது நாம் அறிந்த விடயம். எனினும் இம்மரபு தொடர்ந்தும் பின்பற்றப்படுமா என்பது ஐயத்துக்குரியதாக இருந்தது. ஆனால் நிலக்ஷன் போன்ற இளைஞர்களின் ஆர்வத்தையும் முயற்சியையும் காண்கையில், இம்மரபு தளர்வின்றித் தொடரும் என்று துணிந்து கூறமுடிகின்றது.
எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அன்புடன் அம்பலவாணர் சிவராஜா அரசறிவியற் துறை, கலைப் பீடம் , பேராதனைப்பல்கலைக்கழகம், பேராதனை. O 105.999
- vi

என்னுரை
"தினக்குரல்" பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் ஸ்தாபக ஆசிரியராக விளங்கிய எனது மதிப்பிற்குரிய பொன். இராஜகோபால் அவர்கள், பத்திரிகைத்துறையில் நான் கால்பதிக்க ஊக்கமளித்து உதவினார். அன்று முதல் பல்வேறு துறைசார் ஆக்கங்களையும் எழுதி வருகையில், போரின் கொடுமையால் சீரழிந்து போன பகுதிகளின் பதிவுகளை "செவ்வி" வடிவில் பதியும் எண்ணம் ஏற்பட்டது. அவ்வகையில் என்னையின்ற குரும்பசிட்டி மண்ணே முதற்கண் என் மனதில் வந்து நின்றது. குரும்பசிட்டியைச்சேர்ந்த வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுடைய நால்வரினதும், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மூவரினதும் செவ்விகளைத் தொகுத்து, மொத்தம் ஏழு செவ்விகள் கொண்ட சிறு நூலாக இதை வெளிக்கொணரும் விருப்பத்தைக் குரும்பசிட்டி சன்மார்க்க சபையைச் சேர்ந்த திரு பொன்.பாலகுமார் வெளியிட்டபோது, நான் சற்றுக்குழப்பமடைந்தேன். நூல் ஒன்றை வெளியிடும் அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை என்பதே இதற்கான காரணமாகும்.
எனினும் எனது பேராசை, அவரது விருப்பத்திற்கு மறுப்புச் சொல்ல இடமளிக்கவில்லை. இதன் விளைவே இன்று உங்கள் கைகளில் தவழும் இச்செவ்வித்தொகுப்பு!
இச்செவ்விகளை அளிப்பதில் தமது நேரத்தை என்னுடன் செலவிட்ட துறைசார் விற்பன்னர்கள் அனைவருக்கும் செவ்விகளை வெளியிட்ட "தினக்குரல்" பத்திரிகைக்கும் இன்று நூலாக வெளிக்கொணரும் குரும்பசிட்டி சன்மார்க்க சபையினருக்கும் எனது முதல் நன்றிகள்! இந்நூலுக்குச் சிறப்பானதொரு முன்னுரையை மனமுவந்து வழங்கிய பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவராவார்.
1998ம் ஆண்டிலே நான் கண்ட ஏழு செவ்விகள் இத்தொகுப்பிலே இடம்பெறுகின்றன. இவற்றைக் குறுகியகாலத்துள் தாமதமின்றி பிரசுரித்தமைக்காகத் "தினக்குரல்" பத்திரிகையின் ஆசிரியர் திரு. சிவனேசச்செல்வன், ஆசிரிய பீடத்தினர், மற்றும் பொருத்தமாகத்தலைப்பிட்டு ஒழுங்குபடுத்தி வெளியிட்ட என் அன்புக்குரிய திரு. பாரதி, திருமதி தேவகெளரி ஆகியோர்களையும் இவ்விடத்திலே குறிப்பிட்டு நன்றி கூறுதல் 5LL-sluJLib.
- vii

Page 6
இறுதியாக என்முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருக்கும் என் குடும்பத்தினருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், என்னை இத்துறையில் ஈடுபட ஊக்குவித்த அமரர் பொன். இராஜகோபால் அவர்களுக்கு என் நன்றி கலந்த அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இச் செவ்விகள் சமுகப்பிரக்ஞையுடைய சிலரின் கவலை தோய்ந்த குரல்களாக மட்டுமன்றிச் சமகால நிகழ்வுகளின் பதிவுகளாகவும் அமையும் என்பது எனது நம்பிக்கை. இது போன்ற முயற்சிகளைத் தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நன்றி.
வனக்கம்,
அன்புடன்,
சுவர்ணராஜா நிலக்ஷன.
05, இன்னர் வன்டவர்ட் பிளேஸ்,
தெகிவளை. (5.05.1 g). "
= Wiii -

காணிக்கை
என்னுள் ஒடும் தமிழ் உணர்வென்னும் வற்றா நதியின் இளற்றி ம்
மூண்டெழுந்த யுத்தப் புயலிற் காணாமற் போன எனதருமைக் கிராமம்
"குரும்பசிட்டிக்கு.

Page 7

மறத்தமிழரின் தொண்மை மறைந்து விடக்கூடாது
/ N கலைஞானி அ.செல்வரத்தினம் அறுபத்தைந்து வயது நிரம்பிய
இம்மனிதர், யாழ்ப்பாணத்தில் தனியொருவராக நின்று அகழ்வுகள், சேகரித்தல்களை மேற்கொண்டு "அரும்பொருள் - தொல்பொருள் சேகரிப்புத்துறை” யில் தனித்துவமானவராகத் திகழ்கின்றார். கூடவே புகைப்பட, ஓவியக்கலை வல்லுனராகவும் இருக்கின்றார். ஒவ்வொரு துறைகளிலும் முற்று முழுதாகத் தம் மை அர்ப் பணித் துச் சேவையாற்றியோருக்கு 1991ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவில் வழங்கப்பட்ட "மாமனிதர்" விருதைப் பெற்றுக்கொண்ட ஒன்பது பேரில் இவரும் ஒருவர்.
* - அரும்பொருள், தொல்பொருள் சேகரிப்பு, புகைப்படம், ஓவியக்கலை என்பவற்றில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றீர்கள். தங்களுக்கு இத்துறையில் ஆர்வம் ஏற்படக் காரணமாய் அமைந்த விடயங்களையும் தங்கள் பூர்வீகத்தையும் Jia so plạULDT ?
99 - 1933ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி பிறந்த நான், ஆரம்பத்தில் குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாலயத்திலும் தொடர்ந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கல்வி கற்றேன். எனக்குச் சிறுவயதில் சித்திரம் கிற வராது. யூனியன் கல்லூரியில் சித்திர பாடத்தைப்போதித்த கந்தையா ஆசிரியர், தேங்காய் கீறும்படி சொல்ல, நான் வட்டம் ஒன்றைக்கீறி அதில் மாங்காய்க்கு இருப்பதுபோன்ற ஒரு காம்பையும் கீறிவிட்டேன். கந்தையா ஆசிரியர், துவரங்கட்டையால் எனக்கு அடித்துவிட்டு, தூரிகையைத் திரும்பத் தந்து "உனக்கும் சித்திரத்துக்கும் வெகுதூரம்" என்று கூறி வகுப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார். நான் வீட்டுக்குப்போய் கிணற்றுக்குப்பக்கத்தில் இருந்து தோண்டி ஒன்றால் நிலத்தைக் கிண்டிக்கொண்டு, கவலையுடன் இருந்தேன். அப்போது ஏதோ தட்டுப்பட, எடுத்துப்பார்த்தேன். புழக்கத்தில் இல்லாத சில நாணயங்கள் அவை. அவற்றை எடுத்துப்பத்திரமாக வைத்துவிட்டு எப்படியாவது சித்திரம் வடிவாகக் கீறவேண்டும் என்ற உணர்வுடன் மீண்டும் மீண்டும் பல்வேறு காட்சிகளைக் கீறிப் கீறிப் பார்த்தேன்.
1947 ஆம் ஆண்டு யூனியன் கல்லூரியில் "காணிவேல்" நடைபெற
இருந்தது. காணிவேலின்போது, கல்லூரி வாசலை அலங்கரிக்கப்
பொருத்தமான முகப்புத்தோற்றம் வரையும்படி கூறினார்கள். நான் வரைந்த
- 1 -

Page 8
தாஜ்மகால் போன்ற முகப்பைப் பார்த்த ஆசிரியர், மீண்டும் 4 அடி தாளில் அதனை வரையச் சொன்னார். பின் அதனையே "காட்போடில்" முகப்பாக உருவாக்கினார்கள். காணிவேலில் நடைபெற்ற பொருட்காட்சியில் நான் கண்டெடுத்த மூன்று காசுகளையும் ஒரு சங்கையும் பார்வைக்கு வைத்தேன். அதற்காக எனக்கு வெள்ளிப்பதக்கம் பரிசு தந்தார்கள். இவ்வாறுதான் எனது ஓவிய தொல்பொருள்துறை தொடர்பான வாழ்வு ஆரம்பமானது.
8.- :- தொடர்ந்து நீங்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் குறித்துச் சற்றுக் கூறுவீர்களா?
** - தற்செயலாகக் கண்டெடுத்த சில செல்லாக்காசுகள் பெற்ற முக்கியத்துவமும் அதற்காக எனக்குக் கிடைத்த வெள்ளிப் பதக்கமும் என்னை மேலும் அகழ்வுகளை மேற்கொள்ளத் தூண்டியது. தொடர்ந்து நான் இதுவரை 92 கிராமங்கள், மற்றும் காட்டுப்பிரதேசங்களில் அகழ்வுகளை மேற்கொண்டேன். இவ்வாறாக நான் சேமித்த பொருட்கள் பல தடவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. ரிவிரெச நடவடிக்கையின் முன் என்னிடம் 5 லொறிகளில் ஏற்றக்கூடியளவு பொருட்கள் இருந்தன. இன்று, அவற்றில் 10 வீதமே எஞ்சியுள்ளன. மிகுதி இராணுவ நடவடிக்கையின் போது அழிக்கப்பட்டு விட்டது. பலவேறு சிலைகள், புதைபொருட்கள் அவற்றின் பெறுமானம் தெரியாதவர்களால் சிதைப்பட்டு விட்டன. இன்று எஞ்சியுள்ள பொருட்களையாவது பாதுகாத்தலே மிகச்சிரமமான காரியமாக உள்ளது.
.நீங்கள் நடத்திய கண்காட்சிகள் பற்றி -: چ3ه
99 - 1974ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு,சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் எனது கண்காட்சி இடம் பெற்றது. இக்கண்காட்சி ஏற்பாட்டிற்கு பேராசிரியர் பத்மநாதன் உறுதுணை புரிந்தார். இக்கண்காட்சியில் எனது சேமிப்புக்களை பார்வையிட்டுச் சென்ற சென்னைப்பல்கலைக்கழக பேராசிரியர் கொடுமுடி சண்முகன் பின்னாளில் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "தனிப்பட்டவர்களின் சேகரிப்புக்கள்” என்ற வகையில் இந்தியாவில் கூட இவ்வாறான சேமிப்பை மேற்கொண்டவர்களைக் காணவில்லை எனக் குறிப்பிட்டார். 1975ஆம் ஆண்டு குரும்பசிட்டி பரமானந்த வித்தியாலய 75ஆம் ஆண்டு நிறைவு விழாவில் எனது புகைப்பட, தொல்பொருள், ஓவிய கண் காட்சி இடம் பெற்றது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் 1992ஆம் ஆண்டு நாவலர் கலாசார மண்டபத்திலும் 93ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி வித்தியாலயத்திலும் 94ஆம் ஆண்டு
- 2 -

சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் எனது சேமிப்புகள், புதைபொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
இவ்வாண்டும் எனது தற்காலிக பணிமனையில் மே மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை எஞ்சியுள்ள சேமிப்புக்களின் கண்காட்சியை நடத்துகின்றேன். இடம் பெயர்ந்து சென்று மீண்ட பின் பார்த்தபோது, மரச்சிலைகள் பல கொத்திப் பிளக்கப்பட்டிருந்தன. கற்சிலைகள் பல உடைத்து எறியப்பட்டிருந்தன. அருமையாக நான் தேடிப்பெற்ற பல
பொருட்கள் காணாமல் போயிருந்தன. எஞ்சியவையே கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
8 :- எமது நாட்டின் வரலாறு பக்கசார்பாக உள்ளதாகப் பல தமிழறிஞர்கள்
விசனம் தெரிவித்துள்ளனர். வரலாற்று ரீதியாக இந்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவற்றையேனும் நீங்கள் கண்டெடுத்திர்களா?
99 - உண்மையில் எமது வரலாறு திரிந்து சென்றதற்குப் பிறர் மட்டும் காரணமல்ல. நீர் கூறும் "தமிழறிஞர்கள்” எனப்படுவோரும் கூட இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். நான் ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன். படித்துப்பட்டம் பெறாதவன். எனது ஆய்வுகள், சேமிப்புகள் இலங்கையில் அங்கீகாரம் பெறத்தவறுவது அதனால்தான்.படித்துப் பட்டம் பெற்ற தமிழறிஞர்களோ தமது பதவிகளைத் தக்கவைப்பதிலேயே கருத் தாகவுள்ளனர்.அவர்களுக்கு வரலாறு எப்படிப் போனாலும் கவலையில்லை. தமக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் கிடைத்தாற் போதுமென்பதே உண்மை நிலையாகும். நான் யாரையும் குறைகூறவில்லை. இதுவே உண்மை நிலையாகவுள்ளது. ஆதித் திராவிடர்கள் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்ததற்கு அறிகுறியாக ஆதித்திராவிடர் இலச்சினையைக் கண்டு எடுத்திருக்கிறேன். ஆனைக்கோட்டையிலும் சில புதைபொருட்கள் இதற்கு ஆதாரமாகக் கிடைத்துள்ளன. கந்தரோடையில் நான் கண்டெடுத்த மட்பாண்டம் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த வடிவங்கள் தமிழ் பிராமி எழுத்துகளே என் பென்சில்வேனியன் சர்வகலாசாலையைச் சேர்ந்தோர் உறுதிப்படுத்தியுள்ளனர். மாதோட்டத்தில் கண்டெடுத்த புதைபொருள் ஒன்றிலிருந்த வடிவங்கள் பிராமிய எழுத்துக்கள் அல்ல என்றும், அவை ஒரு மொழியே அல்ல என்றும் அதில் காணப்பட்ட வடிவங்களைக் கொண்டு சொற்களை அமைக்கமுடியாது என்றும், கலாநிதி இந்திரபாலா மறுப்புத்தெரிவித்தார். ஆனால், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுப்பகுதி இயக்குனரான இரா.நாகசாமிக்கு நான் இது குறித்துக் கடிதம் எழுதிய
-3-

Page 9
போது அவர் இவை எழுத்துக்களே என்றும் இவை போன்ற எழுத்துவடிவங்கள் கொற்கைத் துறைமுகத்துக்கு அண்மையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், வாசித்து விளங்க முடியாதளவிற்குப் பழமை வாய்ந்தவை -3000 வருடங்கள் பழமை வாய்ந்த எழுத்துக்களே அவை என்றும் உறுதிப்படுத்தினார்.
எமது வரலாற்றுத்தொன்மையை நிரூபிப்பதில் நம்மவர் காட்டிய ஆர்வம் போதாது என்றே நான் கூறுவேன். சுயாதீனமாகச் செயற்படப் போதிய வசதிகள் இல்லாமையும் இதற்கான காரணமாய் இருக்கலாம்.
«Х» - கந்தரோடைப்பகுதியில் காணப்பட்ட அரைக்கோள வடிவங்களைக் கொண்டு அவை பெளத்த ஆலயங்கள் என்றும், வடக்கிலும் சிங்கள பெளத்தர்களே தொன்று தொட்டு வாழ்ந்தனர் என்றும் கூறப்படுவது குறித்து என்ன கருதுகின்றீர்கள்?
** - சுத்தப்பொய்! இவையெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள்.
அங்கு காணப்பட்ட வட்ட வடிவான அத்திவாரங்கள் மீது இவை பின்னாளில் கட்டப்பட்டுள்ளன. வட்ட வடிவமான அமைப்புக்கள் உண்மையில் வீரசைவமரபினரின் அடக்கங்கள் என்றே கருதப்படுகின்றன. அவ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வுகளில் எலும்புகளுடன் இலிங்க வடிவப் படிவங்கள் கண்டு எடுக்கப்பட்டன. வீர சைவ மரபினர் கழுத்தில் இலிங்கவடிவப்படிவத்தை (தாயத்து) கட்டியிருப்பார்கள். மேலும் நிலமட்டத்தின் கீழ் இக்கோளங்களின் அடியில் சுண்ணாம்பு, மண் என்பவற்றால் மெழுகிப் பின்னரே கட்டப்பட்டுள்ளன. இவை வீரசைவ மரபினரின் அடக்கங்கள் என்பது ஆதாரபூர்வமானதாகும்.
*:- வல்லிபுரத்தில் பொற்சாசனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் யாழ்ப்பாணத்தில் விகாரை ஒன்று கட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்ததாகவும் கூறப்படுவது பற்றி.
* - எங்கே அந்தப்பொற்சாசனம்? காட்டச் சொல்லும். இன்று சொல்கிறார்கள் அதைத் தொலைத்துவிட்டதாக! அதில் இருந்த உள்ளடக்கத்தின் பிரதி என்று கூறி இன்று ஒரு பொய்ச்சாசனத்தை எழுதி வைத்திருக்கிறார்கள். "நாகதீபத்தின் வடகரை அஸ்தானத்தில் ஈசுகிரி ராஜ என்ற பெளத்த தாதுகோபத்தைக் கட்டுவித்தான்” என்றவாறாக சாசனத்தில் இருப்பதாகக் கூறி, காங்கேசன் துறையில் ஈசுகிரி ராஜ விகாரை என்ற பெயரில் விகாரை ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள்.
- 4.

மூலசாசனம் எங்கே என்றால், அது தொலைந்துவிட்டது என்கிறார்கள். தட்டிக்கேட்பாரில்லை. அரசு, பெளத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கும்நிலையில் ஒரு பெளத்த ஆலயம் தொடர்பான சாசனத்தை அதுவும் சர்ச்சைக்குரிய வடபுலத்தில் அமைந்திருந்த பெளத்த ஆலயம் தொடர்பானசாசனத்தைத் தொலைத்து விட்டதாகக் கூறுவது விந்தை யில்லையா? யாரின் காதில் பூசுற்றுகிறார்கள்? எமது அறிஞர்களும் இவை தொடர்பாகக் கேள்வி தொடுக்கிறார்களா?
மேலும் கந்தரோடையில் தலையற்ற சிலை ஒன்று, அங்கி ஒன்றினால் போர்க்கப்பட்டது; போல் ஈ.பீரிஸ் அவர்களால் கண்டெடுக்கப்பட்டது. அங்கியால் போர்க்கப்பட்ட சிலையாதலால் அது புத்தர் சிலை என்று கூறிவிட்டனர். அச்சிலை, இளங்கோவடிகளின் சிலையாக இருப்பதற்கான சாத்தியமே அதிகம். காரணம் கண்ணகி சிலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது, கந்தரோடையிலும் அச்சிலை வைத்துப் பூஜிக்கப்பட்டுள்ளது. கண்ணகி சிலை பயணித்த இடங்கள் பாடல் ஒன்றில் கூறப்படுகிறது.
"அங்கண் அம்மைக்கடவை செட்டிப்புலம் அச்சூழ் ஆயதொரு வற்றாப்பளை மீதுறைந்தாய் பொங்கு புகழ் பொறிக்கடவை தங்குமே-உன் புகழை மங்காமல் ஒதவே தரணியுறை கோலங்கிராயுளுறை மாதே’ என்பதில் அங்கண் அம்மைக் கடவை கந்தரோடை ஆகும். கண்ணகியுடன் தொடர்புடைய இளங்கோவின்
சிலையே அச் சிலையாகும் தலையற்ற போதும் ,போர் க் கப்பட்ட அங்கியைக்கொண்டு அதனைப்புத்தர் சிலை என்று கூறுவது ஏற்கப்பட முடியாததாகும்.
எமது வரலாற்றுச் சின்னங்கள் பலவும் ஒழிக்கப்பட்டு விட்டன. வரலாறு திரிபுபடுத்தப்பட்டு விட்டது. தொடரும் போர் எம்மை இன்னும் பின் தங்கிய நிலைக்கே இட்டுச் செல்லப்போகிறது. கோட்டைச்சுவர்க் கற்களில் திருக்கேதீஸ்வர ஆலயம் தொடர்பானசாசனங்கள் இருந்தன. திருக்கேதீஸ்வர ஆலயத்தை உடைத்துப்பெற்ற கற்களும் கோட்டைச் சுவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.
இவை பாதுகாக்கப்பட்டபோதும் இராணுவ நடவடிக்கைகளின்போது சிதைந்து விட்டன. இனியும் நாம் கண் திறக்காது கவனயீனமாக இருப்போமானால் எமது இருப்பே இங்கு பொய்யானதென்று நிரூபிக்கப்பட்டு விடும்.

Page 10
令 一 தங்கள் எதிர்கால முயற்சிகளை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றீர்கள் என்பதைக் கூறுவீர்களா?
** :- என்னைப் பொறுத்தவரை நான் சுயாதீனமாக எவருக்கும் சார்பின்றி இயங்கிக் கொண்டிருப்பவன். திருமணம் செய்யவில்லை.குடும்பம் இல்லை. தனி மனிதனாக எனது நிலபுலன்களைக்கூட விற்று, இச்சேமிப்புகளுக்காகவும், ஆய்வுகளுக்காகவும், பராமரிப்புகளுக்காகவும் செலவிட்டுள்ளேன்.
என் உயிர் உள்ளவரை எனது சேமிப்புக்களை குழந்தைகளைப்போல் கட்டிக்காப்பேன். நிரந்தரமானதொரு இடம் இல்லாமல் ஒவ்வொரு தடவையும் இடம் மாறும் போதே பொருட்கள் பல சேதமடைந்து விடுகின்றன. எனினும் எதிர்கால சந்ததி தமது வரலாற்றை மறந்துவிடக்கூடாது. வரலாற்றை ஏனையோர் மறைக்க விடக்கூடாது. எனவே இப்பொருட்களை நிரந்தரமாக ஓரிடத்தில் வைத்துப்பேண எனக்கு உதவக்கூடிய தனிநபர்கள், தனவான்கள், அபிமானிகளை எதிர் பார்த்திருக்கிறேன். ஆலயங்களில் புதிய புதிய மண்டபங்கள்அமைக்கிறார்கள். இருக்கின்ற பெறற்கரியஇப்பொருட்களைப்பேன தரும ஸ்தாபனங்களும், உள்ளுராட்சி சபைகளும் உதவ முன்வரார்களா என்பதே எனது ஏக்கமாக உள்ளது.
"எல்லாம் அவன் செயல்" என்று தொடர்ந்தும் எனது முயற்சிகளை மேற்கொள்வேன். இது தவிர, எதிர்காலம் பற்றி எதனை நிச்சயமாகக் கூற முடியும்?
Afu)

பார்ப்போருக்குப் பயன்தரவல்ல நாடகத்தை வழங்குவதே பிரதானம்
ஏரிபி இது அவர் பெயர்ச்சுருக்கம், ஏரி.பொன்னுத்துரை இது அவரின் முழுப்பெயர், நாடக வெறியர் - இது அவருக்கு இருந்திருக்கவேண்டிய பெயர், என்கிறார் கம்பவாரிதி இ.ஜெயராஜ். எழுபது வயதைத் தாண்டி விட்ட போதிலும் "நாடகம்” என்றால் இருபது வயதுப் பையன் போல் இயங்கும் கலைப்பேரரசு ஏரி. பொன்னுத்துரை, நாடகத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டவரல்லர். இயல்பாய் ஏற்பட்ட ஆர்வத்தால் நாடகத்துறையில் நாட்டங் கொண்டவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து, பட்டம் பெற்று, ஆசிரியராய், அதிபராய் கடமையாற்றி கல்விச் சேவை புரிந்த இவர், இருபத்தைந்து நாடகங்களைத் தயாரித்திருக்கிறார். ஐநூறுக்கு மேற்பட்ட மேடையேற்றங் கண்டிருக்கிறார். 100 மாணவர் வரை நாடகத்துறையில் உருவாக்கியிருக்கிறார்.
இன்றுங் கூட நாடகப் பயிலரங்குகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கலைப்பணி புரியும், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரையுடன் Uசெவ்வி. الص
0 :- நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க கலைஞர்களுள் ஒருவராகத் தாங்கள் இருக்கின்றிர்கள். தங்கள் கலை வாழ்வின் ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?
* - 1942 ஆம் ஆண்டிலிருந்து நான் நாடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன். எனது கிராமமாகிய குரும்பசிட்டியில் ஆட்டக்கூத்து, நாடகங்கள், கோயில் திருவிழாக்களில் மேடையேற்றப்படுவது வழக்கம். எங்களுர்க் கலைஞர் கே.கே.வி.செல்லையாவின் (அறிவிப்பாளர் ரேலங்கியின் தந்தையார்) "நாட்டாமை நாகமணி" என்ற யதார்த்த சமூக நாடகத்தில் "முத்தி” என்ற பெண்பாத்திரத்தையும், லவகுச, அல்லியருச்சுனா ஆகிய இசை நாடகங்களில் சிறுபாத்திரங்களையும் தாங்கி நடித்தேன். ་་
பின் 1950 ஆம் ஆண்டில் பரமேஸ்வராக் கல்லுாரியில், பிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரின் “உலோபியின் காதல்" என்ற நாடகத்தில் உலோபியாகப் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தேன். எனது நடிப்பைக்
ج۔ 7 ۔۔۔

Page 11
கண்டு வியந்த ஆசிரியர், அதிபர் எஸ். சிவபாதசுந்தரம் அவர்கள் நாடகத்திறமைக்காக என்னை மாணவர் தலைவர் ஆக்கினார். (Prefect) பின் 1951 - 1955 வரை நான்காண்டுகள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் முதலாளி தொழிலாளி, குவேனி, ராகிமைடியர் போன்ற நாடகங்களைப் பாரதத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும் பார்க்கும் மேடையில் இயக்கிப் பாராட்டும் பெற்றேன். இவ்வாறு கற்றோரும், மற்றோரும் அளித்த ஆக்கபூர்வமான ஊக்கத்தால் கலைத்துறையில் எனது ஆர்வம் மேலும் மேலும் வளர்ந்தது. இன்றுவரை தொடர்கிறது.
*Ꭳ> :- மரபுவழி நாடகங்கள் முதன்மை பெற்றிருந்த காலத்தில் கலையுலகில் பிரவேசித்த தாங்கள், இன்று நவீன முறை நாடகங்களையும் உள்வாங்கி குறியீட்டு நாடகங்களையும் எழுதி உள்ளிர்கள். நாடக அரங்கக் கல்லூரி தாபிக்கப்பட்டபோது, ஆர்வமிகுதியால், இளைஞர்களுடன் தாங்களும் ஒரு மாணவனாக அதில் இணைந்து நவீன நாடக முறைகளைக் கற்றீர்கள். இன்று நவீன நாடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தங்களிடமிருந்து பழைய மரபுகள் சிலவற்றை அறியலாம் என நினைக்கிறேன். பிரதானமாக தாளக்காவடி" என்ற கலையில் நீங்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவராய் இருக்கிறீர்கள். தாளக்காவடி பற்றிய சுருக்க வரலாற்றை கூறுவீர்களா?
** - யாழ்ப்பாணக்குடா நாட்டில் முருகன் கோயில்கள் அதிகம். முருகன் கோயில் திருவிழாக்காலப் பகுதி என்று கூட ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி உண்டு. மாவிட்டபுரத்தில் 25நாள் திருவிழா, சந்நிதியில் 15நாள் திருவிழா, நல்லூரில் 25நாள் திருவிழா என்று ஒரு நீண்ட காலப்பகுதிக்கு முருகன் ஆலயத் திருவிழாக்கள் நடைபெறும். ཟ ཕ- རི་
தாளக்காவடி என்பதன் ஆரம்பநிலை உண்மையில் பக்திநெறியைப் பின்பற்றி எழுந்ததாகவும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கென ஆடப்படுவதுமாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முந்தியே இத்தாளக்காவடியில் பயிற்சிபெற்ற அண்ணாவிமார் இருந்துள்ளனர். இவர்களில், ஆவரங்கால் அண்ணாவி கந்தப்பிள்ளையிடம் பழகிய ஆசின்னத்துரை, கரகாட்ட வல்லுனர் வையாபுரி, நவக்கிரி நாகலிங்கம் அண்ணாவி, இணுவில் ஏரம்பு (முதலாவது நாட்டியாலயத்தை அமைத்து முதல் பரத ஆசிரியராக விளங்கிய ஏ.சுப்பையாவின் தந்தை) ஆகியோர் குறிப்பிடத்தக்கோர்.மேலும் மூளாய், சுழிபுரம், சாவகச்சேரி பகுதிகளிலும் தாளக்காவடியில் வல்ல அண்ணாவிமார் இருந்துள்ளனர். அளவெட்டியிலும் பல காவடி, கரக பயிற்றுநர்கள், இருந்திருக்கிறார்கள்.
- 8 -

இவ்வாறாக யாழ்ப்பாணப் பிரதேசத்தின் தனித்துவம் மிக்க கலைகளில் ஒன்று என்று கூறக்கூடிய அளவிற்கு, யாழ்ப்பாணப் பகுதியில்தொன்று தொட்டுத் தாளக்காவடி ஆடப்பட்டு வந்திருக்கிறது.
0 :- இந்தத் தாளக்காவடி எனும் கிராமியக்கலை, யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்குகளிலும் பல்வேறு நாடகங்களில் பயன்படுத்தப்பட்டதாக அறிகின்றேன். இவ்வகையில் நாடகக்கலைஞனுக்கும் நாடகங்களுக்கும் தாளக்காவடி வழங்கிய பங்களிப்பைப் பற்றி விபரிக்க முடியுமா?
*9 - ஒரு நடிகனுக்கு நல்ல உடல்நலம் இருக்க வேண்டும். அங்க அசைவுகளும் லயஞானமும் முக்கியமாகக் காணப்படவேண்டும். தாளக்காவடி இவற்றுக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்கிறது.
1924ஆம் ஆண்டு அண்ணாவி கந்தப்பிள்ளை, "பொற்கொடியாள்" ஆட்டக்கூத்தைக் குரும்பசிட்டியில் 6 இரவுகள் தொடர்ச்சியாகப் பயிற்றுவித்து அரங்கேற்றினார். ஆறு இரவுகள் தொடர்ச்சியாக ஆடி நடிக்குமளவிற்கு உடற்பயிற்சியைத் தாளக் காவடி மூலமே அவர் வழங்கியிருந்தார். இக்கூத்தில் நடித்தவர்களின் ஆட்ட நகள்வுகள், முண்ட நடிப்புக்கள் அனைத்துக்கும் தாளக்காவடிப் பிரயோகங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன.
நாடகங்களைப் பொறுத்தவரை, தாளக்காவடி மெட்டுக்கள், தாளக்கட்டுகள் பல நாடகங்களிலும் பிரயோகிக்கப்பட்டு இருக்கின்றன. நாடக அரங்கக் கல்லூரி மூலமாக தாசீசியஸ் அவர்கள் தயாரித்த "கந்தன் கருணை" நாடகம், ஆலயப் பிரவேசத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இங்கு ஆலயப் பிரவேசத்தில் ஈடுபடும் பக்தர்கள், "தாளக்காவடி" ஆட்ட முறையில் ஆடிப்பிரவேசிக்க, அவர்களைத்தடுக்கும் குண்டர்கள் "கதகளி" முறையில் தடுப்பதாக அமைத்திருந்தார். இது ரசனை மிக்கதாய் அமைந்தது.
0 :- *தாளக் காவடி” எனும் பெயரில் நாடகம் ஒன்றைத் தயாரித்திருக்கிறீர்கள். நூல் வடிவிலும் அந்நாடகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். இந்நாடகத்தை எழுதியதன் பின்னணியைக்கூறமுடியுமா?
99 - தாளக்காவடி என்ற கிராமியக் கலை வடிவம் அருகிக்கொண்டு வந்ததால், நாடகம் மூலமாவது அதனை, அதன் விசேட அம்சங்களைஉணர வைப்பதற்காக வானொலி நாடகப்போட்டிக்கு "தாளக்காவடி" என்னும்
- 9

Page 12
பெயரிலான நாடகத்தை எழுதினேன். அந்நாடகம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இந்நாடகம் 1973 நவம்பரில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டு பெரும் புகழ் ஈட்டித்தந்தது. வானொலி நடிகர்கள், இரசிகள்கள் வேண்டுகோளின் படி இரு வாரங்களில் திரும்பவும் ஒலிபரப்பப்பட்டது. கே. எம். வாசகள் தயாரித்த இந்நாடகத்தில் கே. கணேசபிள்ளை, சந்திரப்பிரபா மாதவன், ரி. ராஜகோபால், வித்துவான் சோதிநாதன், அமிர்தநாயகம் ஆகியோர் முக்கிய பங்கேற்று நடித்தனர். நாடகத்தின் முழுமையான வெற்றிக்காகத் தாளக்காவடி தாளக்கட்டுக்களை உச்சரிப்பதற்காக என்னையே நேரில் அழைத்தனர். நடிகமணி வீவீ. வைரமுத்து பிற்பாட்டுப்பாடி மெருகூட்டினார்.
பின்னர் மேடை நாடகமாக இதனை, மாவை ஆதீன கர்த்தா மகா ராஜழரீ சு.து.சண்முகநாதக்குருக்கள் தயாரித்து அளித்தார். அந்நேரத்தில் தாளக்காவடியை அண்ணாவியார் பழக்கும் காட்சிகள், கடைசியாக சலங்கை கட்டி ஆடும் ஆட்டம் என்பவை நடித்துக் காண்பிக்கப்பட்டன. இதன் மூலம் இளையதலைமுறைக்கும் தாளக்காவடி என்ற வடிவம் பழக்கப்பட்டது. 6, 7 தடவைகள் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. கதையில் அண்ணாவியாருக்கு முக்கிய பாத்திரத்தை வழங்கியதன் மூலம், தாளக்காவடி நுணுக்கங்கள், சிறப்புகள் நாடகத்தினூடாக வெளிக்கொணரப்பட்டன. நிலைபெற்றன.
8 :- 1978 இல் நாடக அரங்கக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டபோது அதில் இணைந்து நவீன நாடகம் பற்றியும் பயின்றிருக்கிறீர்கள். இதன் முலம் மரபு நாடகங்களுக்கும் நவீன நாடகங்களுக்குமிடையிலான ஒரு பாலமாகவும் பழைய தலைமுறைக் கலைஞர்களுக்கும் புதிய தலைமுறைக்கலைஞர்களுக்கு மிடையிலான ஒரு பாலமாகவும் விளங்குகின்றீர்கள். இவ் அரிய அனுபவத்தைச் சற்றுப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* - மரபுக் கலைஞர்கள் புதியதை ஒதுக்குவதோ, புதுமைக்கலைஞர்கள் மரபை ஒதுக்குவதோ கூடாது. பார்ப்போருக்குப் பயன்தரவல்ல நாடகத்தை வழங்குவதே பிரதானமாகும். எனவே நாம் அறிந்தவற்றைப் பிறருக்குப் பயிற்றுவிக்கும் அதே வேளை அறியாதவற்றைப் பிறரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அரங்கக் கல்லூரியில், தாசீசியஸ், குழுந்தை சண்முகலிங்கம் போன்றோரின் நெறியாள்கையில் பலமோடி நாடகங்களிலும் நடித்தேன். பல விருதுகளைப்பெற்ற தாசீசியஸின் "பொறுத்தது போதும்" நாடகத்தில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதைப்பெற்றேன்.
- 10

பிற்காலங்களில் பல சிறுவர் நாடகங்களை குறியீட்டு நாடகங்களாகத் தயாரித் துப் பாடசாலைகளிலும் பொது நிறுவனங்களிலும் மேடையேற்றுவித்துள்ளேன். பிற்காலத்தில் நான் எழுதிய "மயில்” என்ற சிறுவர் நாடகத்தில் தாளக்காவடி, வசந்தன் ஆட்ட தாளக்கட்டுக்களைப் பொருத்தமாகப் புகுத்தியிருந்தேன். சிறுவர்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டுவதும் இன அபிமானத்தை வளர்ப்பதுமான அடிப்படையில் அமைந்த இந்நாடகம் மகோன்னத வெற்றி கண்டது. 1991ல் இதனை நூல் வடிவிலும் வெளியிட்டேன். மயில்கள் கூட்டமாக ஆடுவது, அவற்றைப் பிடிக்க வேடர்களை அரசன் ஏவுவது வேடர்கள் மயிலை வேட்டையாடிப் பிடிக்க முனைவது போன்ற கட்டங்களில் ஆடல்கள் புகுத்தப்பட்டன. வேடர் ஆட்டம், மயில் ஆட்டம் என்பவற்றில் பழைய தாளக் காவடி ஆட்டங்கள் புகுத்தப்பட்டமை நாடகத்திற்கு மெருகூட்டியது.
夺:- தாளக்காவடியின் இன்றைய நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் ծռIDԱpւգակաDIT?
* :- இன்று மிகவும் அருகிப்போன கலை வடிவமாகவே தாளக்காவடி
காணப்படுகிறது. அழியக் கூடிய நிலையில் உள்ளது என்று கூறலாம். இதற்கான காரணம் யாதெனில் எமது பாரம்பரிய கலைவடிவங்களைப் பேணுவதில் நாம் அக்கறை காட்டாமையே ஆகும். அண்ணாவிமார் எண்ணிக்கை குறைந்து சென்றதும் யுத்த சூழலில் மன நிம்மதி அற்ற நிலையில் கலை வளர்க்கக் கூடிய மனோநிலையை ஏற்படுத்துதல் கடினமாகியதும், ஆங்கிலம் பேசும் மத்திய வர்க்கத்தினரின் எழுச்சியும் இக்கலை வடிவங்கள் அருகிச்செல்ல காரணமாக உள்ளன. வடமோடி, தென்மோடி நாடகங்கள் பல்கலைக்கழக ரீதியில் வளர்த்தெடுக்கப்பட்டதால், இன்றும் அவை அழியாது பேணப்படுகின்றன. தாளக்காவடி ஓர் ஆலயக் கலையாகவும் காணப்படுதால் ஆலய நிருவாகஸ்தர்களும் இக்கலையைப் பேண முன்வரவேண்டும். புதிய புதிய மண்டபங்கள் அமைத்தல், வாகனங்கள் செய்தல் என்பவற்றுக்கு பணத்தைச் செலவிடும்போது, இது போன்ற கலை வடிவங்களைப் பேணவும் அதிக முயற்சி எடுக்கவேண்டும்.
மேலும் நகர சபைகள், உள்ளுராட்சிசபைகள், கிராமிய கலைப்போட்டிகளை நடாத்தி, இக்கலைகள் அருகாது பாதுகாக்கவேண்டும்.
இவ்வாறான முயற்சிகள் இனியாவது எடுக்கப்படாவிட்டால், "தாளக்காவடி" அழிந்து விடுமோ என்ற அச்சமே எஞ்சி நிற்கிறது.
- 11 -

Page 13
争 - நாடக உலகில் தங்களால் மறக்கமுடியாத கலைஞர்களாகக் குறிப்பிட விரும்புபவர்கள் யாவரென்றும். இளைய தலைமுறைக் கலைஞர்களுக்குக் கூற விரும்புவது பற்றியும்.
* - என்னைக் கலையுலகில் வளர்த்து விட்டவர்களில் எனது மதிப்பிற்குரியவர்களான மாவை ஆதின கர்த்தா மகாராஜ ரீ சண்முகநாதக்குருக்கள், கலாஜோதி சண்முகநாதன்(சானா), பேராசிரியர். சு.வித்தியானந்தன், திரு.த.இராசரத்தினம் இவர்களுடன்1974ல் என்னைக் கலைப்பேரரசு எனப்பட்டஞ்சூட்டிக் கெளரவித்து மகிழ்ந்த கலையரசு சொர்ணலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களை விட எனது சக நடிகர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் அனைவருமே என்னைக் கைதுக்கிவிட்டனர்.
இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு என்னால் கூறக்கூடியது: சக கலைஞர்களை மதியுங்கள், சக கலைகளை மதியுங்கள், விமர்சனம் என்றபெயரில் உங்கள் அதிமேதாவித் தனத்தைக் காண்பியாது, அன்போடு தட்டிக்கொடுங்கள். "கலைஞன் - அதேவேளை பண்பாளன்" எனும் படியாக உங்கள் கலைப்பணியைத் தொடருங்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நிற
- 12

இந்து சமய மறுமலர்ச்சிக்கு இங்கும் ஒரு சிவசேனை தேவை'
("மகாராஜரீ சு.து. ஷண்முஹநாதக் குருக்கள்”- சைவத் தமிழ்) உலகில்கடல் கடந்த நாடுகளிலும் போற்றி மதிக்கப்படும் பெரியார். யாழ்ப்பாணத்தின் முப்பெரும் முருகன் ஆலயங்களில் ஒன்றான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் பிரதமகுரு. மாவை ஆதீன கர்த்தா. யுத்தத்தினால் பாரிய சேதங்களுக்குள்ளான மாவைக்கந்தன் ஆலயத்தின் நிலைகண்டு மனம் நொந்த நிலையில்,"சைவக் கலாசாரங்களை அழிக்க முயலுவோரை அழிக்கவேண்டுமெனில் சைவர்களது சிவசேனை உருவாக வேண்டியது அவசியம்” எனக் கூறுகிறார். மாவைக்கந்தன் ஆலய வருடாந்த உற்சவ காலப் பூஜைகள் நடைபெறுகின்ற வேளையில் பல்வேறு அனுஷ்டானங்களின் மத்தியிலும், நேரத்தை ஒதுக்கி இன்றைய யாழ்ப்பாணத்தின் கலாசார, சமய சூழல், சைவ சமயத்தின் இன்றைய நிலை குறித்து அளித்த செவ்வியிலிருந்து முக்கிய பகுதிகளைத்
தருகிறோம். لم ܢܠ
8 - 1995 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை முடிவுற்று ஏறத்தாழ 2% வருடங்களாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் நிலைமை வழமைக்குத் திரும்பி விட்டதாகப் பிரசாரயந்திரங்கள் கூறுகின்றன.இந்நிலையில் மதிப்புக்குரிய சமயத் தலைவர் என்ற முறையில் இன்றைய யாழ்ப்பான சூழ்நிலை பற்றிக் கூறமுடியுமா?
** - 1995இல் கார்த்திகையில் புலம்விட்டுச் சென்ற யாழ்ப்பாண மக்கள் வானொலி மற்றும் பிரசாரங்கள் மூலம் பெற்ற செய்திகளால் மெல்ல மெல்லத் தமது சொந்த இருப்பிடங்களுக்கு 1996 சித்திரையில் திரும்பினர். அதிமுக்கியமான இராணுவ வலயமாகவுள்ள வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் 1990 இல் இருந்தே அகதிகளாயினர். இப்போது தான் குடாநாட்டு மக்கள் மெல்ல மெல்லக் குடியேறுகின்றார்கள். ஆயின் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு வடக்கேயும் வடகீழ், வடமேற்குத் திசைகளிலும் இன்னும் குடியமர அனுமதிக்கப்படவில்லை. மாதகலிலிருந்து பலாலி வரையுள்ள கடற் பிரதேசத்தின் 3 மைல் தெற்கே அகலமுள்ள பிரதேசங்கள் வெறிச்சோடிக் காடு மண்டிக்கிடக்கிறது. இவை அதிமுக்கிய
- 13 -

Page 14
பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு உள்ளதால் இங்கு குடியேறுவது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும் கீரிமலை நகுலேஸ்வரம், மாவைக் கந்தசுவாமி கோவில், தையிட்டி விநாயகராலயம் என்பவற்றிற்கு சென்று வழிபாடியற்ற அனுமதி உண்டு. ஆனால் யார் யார் அங்கு செல்கிறார்கள் என்ற விபரங்கள் இராணுவத்திடம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு ஆவன செய்யப்பட வேண்டும்.
令 :一 முப்பெரும் முருகன் ஆலயங்களிலொன்றான "மாவைக்கந்தன்" ஆலயத்திற்குக் கடந்த பதினைந்தாண்டு கால யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களைச் சுருக்கமாகக் கூறமுடியுமா?
** - 15 ஆம் நூற்றாண்டில் மாவை ஆலயம் இடிபட்டது போலவே, 1987 ல் இருந்து 1990 வரை மீண்டும் இக்கோயில் பாரிய இடிபாடுகளைக் கண்டது. 11ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஏடுகள் எங்கேயென்றே தெரியவில்லை. உற்சவ விக்கிரகங்களைக் காணவில்லை. விலைமதிப்பற்ற வெள்ளிக் கொடித்தம்பம் (இலங்கையில் இங்குதான் காணப்படுவது) இருந்த இடம் தெரியாது தொலைந்து விட்டது. 1990ல் ஜனாதிபதி பிரேமதாசவிற்கு இக்கோவிலில் நடைபெற்ற இடிபாடுகள், பொருட்கள் இருக்குமிடங்கள், அவை காப்பாற்றப்பட வேண்டிய அவசியம் என்பன பற்றி சத்தியக் கடதாசி மூலம் அறிவித்தேன். இதற்குப் பதில் தரும் வகையில், மீண்டும் கட்டங்கள் சேதமாக்கப்பட்டு, அங்கிருந்த சகல புத்தகங்களும், ஏடுகளும், தளபாடங்களும் சிற்பங்களனைத்தும் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் கோடிக்கணக்கான நஷ்டத்தை வேண்டுமென்றே செய்வித்துள்ளனர் என்பது எமது சிந்தனையாகும். சைவசமயத்தை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளே இவையென்று கருதவே இடமுண்டு.
கேந்திர முக்கியத்துவமிக்க ஆலயங்களை அழித்தலானது, அங்குள்ள பொருட்களைத் திருடித் தமது வருவாய் பெருக்குவதற்காக மட்டுமன்றி, எமது சமய நம்பிக்கைகளை மக்கள் மனதிலிருந்து அகற்றி அவர்களை நிலை குலைப்பதற்காகவே, அன்று தொட்டு சமய ஊடுருவல் புரிவோரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேவகையில்தான் மாவையாலயமும் இந்நிலை கொண்டுள்ளது என்பது எமது சிந்தனை
11ம் நூற்றாண்டுக் கந்தபுராணம் உட்பட இலக்கிய ஏடுகள், மருத்துவம், சோதிடம், சிற்பம், கணித ஏடுகள், ஆகம சாஸ்திர ஏடுகள் ஆராய்ச்சிக்குரிய நூல்கள் இவ்வாறாக 200க்கு மேற்பட்ட ஏடுகளும் 3000க்கு
ܚ 14 -

மேற்பட்ட நூல்களும் காணாமல் போயுள்ளன. கோவிலின் 22 ஏக்கரினுள் இருந்த கோவிற் பொருட்கள், தளபாடங்கள், இயந்திரங்கள், பாரிய மூலிகை மரங்கள், செடிகள் அழிக்கப்பட்டுவிட்டன. தேர். மஞ்சம் ஏனைய வாகனாதிகள் மிகச் சேதமுற்றிருக்கின்றன. கட்டடங்கள் இடிபட்டாலும் செப்பனிடக்கூடிய நிலையிலுள்ளன.மிகுந்த மனவருத்தமடையக்கூடிய நிலையிலேயே மாவையாலயம் இன்று காணப்படுகிறது.
ஆலயங்கள் எமது இருதயங்கள். ஆலயங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல் செய்யப்பட்டது என்பது உலகறிந்த உண்மை. தமது இருதயத்தை இடித்து வீழ்த்தியது போன்ற உணர்வுகள் சைவமக்கள் மனதில் வேரூன்றி விட்டன. கால நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சைவ அழிபாடுகளுக்குக் காரணமானவர்கள், அதை முன்னின்று செய்தோர், ஆற்றுப்படுத்தியோர் என்ன பாடுபட்டார்கள் என்பதைக் கந்தபுராணம் நன்றாகத் தெளிவு செய்கிறது. "அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணிரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை” என்பது வள்ளுவர் வாக்கு. "தேய்க்கும் ” என்பது, "மெல்ல மெல்ல அழிக்கும்” என்பது போல, அநியாயம் செய்தவர்கள் மெல்ல மெல்லத் தேய்ந்து அழிவர். இதுதான் தண்டனை. இவ்வாறு ஆலயங்களை இடிப்பித்த மகான்கள் பெற்ற தண்டனைகளை நாம் கண்டதுதானே! இன்னும் காண்போம்!
8 :- யாழ்ப்பாணத்தில் அமைதி குலையுமுன்னர் இருந்த சூழல்களையும் பின்னரான சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, மக்களது கலாசார, பண்பாடு, சமய சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆர்வம், ஈடுபடுவதற்கேதுவான சாத்தியப் பாடுகளை ஒப்பிட்டுக் கூறுதல் முடியுமா?
* :- இராணுவ மயப்பட முன் அமைதியாக இருந்த சைவ சமுதாயம், ஆறுமுக நாவலர், நாயன்மார்கள் வழிநின்று பழமையோடு இணைந்து வந்த நற்பழக்கவழக்கங்களுடன், இல்லங்களிலும் ஊராலயங்களிலும் பக்குவமாகவேதான் செயலாற்றி இன்புற்றனர்.
அரசியல் வாதிகள் வாக்கு வங்கியை உருவாக்குதற் பொருட்டு, பல்வேறு ஒவ்வாத்தத்துவங்களையும் பேசி, கலாசாரத்தைச் சீரழிக்கும் காலத்தில், ஏழாலை மு. கந்தையா, பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதர் இ. நமசிவாயம்,ஆர். என். சிவப்பிரகாசம் போன்றோர் முன்னின்று அரசியல்வாதிகளின் கள்ளப்பாட்டை வெளிக்கொணர்ந்தனர். இராணுவ
- 15 -

Page 15
ஆக்கிரமிப்புக்களின் பின், அந்தோ நல்லூரில் ஆறுமுக நாவலரது காணியில் அவருக்கே நிறுவப்பட்ட சிலையை இரவிரவாகக் குப்பையெடுக்கும் ஊர்தியில் பெயர்த்தெடுத்துச் சென்று ஓர் மூலைக்குள் வைத்துவிட்டனர்.
பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டாடும்போது, சைவன் தனது வயதிற்கொத்த பலன் தரும் மரமொன்றை ஆலய வளவில் அல்லது சாலையோரமாக நாட்டுவதே அன்றைய வழக்கம். இன்றோ, சேட், சூட், தொப்பியையும் சூட்டி கேக்கை வெட்டி மெழுகுதிரியை வாயால் ஊதியணைத்துச் சைவப்பண்பாட்டிற்கே உதவாத செயல்களைச் செய்கிறார்கள். அந்தணர்கூட இவ்வகையிலேயே செயற்படுவது கண்கூடு.
ஆலயங்களுக்குச் சேலையுடன் மகாலஷமி போல்வரும் அன்றைய பெண் எங்கே? இன்று குழாய்ச் சட்டையோடு, மணிப்பேர்சுக்குள் சீப்பு, பவுடர், கண்ணாடி கொண்டு, திரெளபதி போல் கூந்தலை விரித்துவிட்டுப் பேய், பசாசு போல் ஆலயங்களுக்குப் பெண்கள் வருகை தருகிறார்கள்.
அந்தணக் குருமார்கள் நாய்த்தோல் பட்டி கட்டி(BELT) கூலிங்கிளாஸ், கைக்கடிகாரம், சாரவேட்டி, அமெரிக்கன் கொலர் ஷேர்ட் என்று எல்லாம் அணிந்து பஞ்சமா பக்தர்களது ஆட்டத்திற்கேற்ப பக்கவாத்தியக்காரர்களாக உலா வருகிறார்கள்.
இவற்றினை வைத்து, இன்று சைவ கலாசாரம் எந்த நிலையை நோக்கி நடைபோடுகிறது என்பதை அறியக்கூடியதாயுள்ளதுதானே?
0 - இன்றுள்ள யாழ்ப்பாணச் சூழலில் மக்கள் மன நிம்மதியோடு வழிபாடு இயற்றுதல் சாத்தியமாக உள்ளதா?
*9 - மனநிம்மதி இரு வகைப்படும். ஒன்று ஆத்மீக அமைதி, மற்றையது உலோகாயுத அமைதி. ஆத்மீக அமைதி இன்று இங்கு இல்லை. காலையில் தனது கள்ம அனுஷ்டானங்களைப் பூர்த்தி செய்து விட்டு வெளியேறினால் பாதுகாப்பு அரண்களில் அடுத்தடுத்துச் சோதனைகள்: போகும் பாதைகளில் தெருவோரக் கடைகளால் ஏற்படுத்தப்படும் அசுத்தங்கள், சுகாதார சீர்கேடுகள்: பாடசாலை சென்று வரும் மாணவ மாணவியரது குரங்குச் சேட்டைகளும், கருத்துரைகளும் - இவ்வாறெல்லாம் பக்தனது மனம் வேதனை பெறும் பொழுது அவன் தனது வீட்டிற்குப் பாவஞ்செய்த மனநிலையில் தான் திரும்புகிறான்.
- 16

உலோகாயுத நிம்மதியோவெனில், அது நன்றாகவே இயங்குகிறது! ஆலயங்களில் ஒலிபெருக்கி மூலம் சினிமாப் பாடல்களும் காட்சிகளும் மேலோங்கி நிற்கின்றன. மாணவ மாணவிகள் அதற்கேற்ப ஆடிப்பாடுவதையும் காணமுடிகிறது. மதுக்கடைகள், பஞ்சமாபாதகங்களை அதிகரிக்கக்கூடிய வஸ்துக்களை விற்பனை செய்து உழைப்பைப் பெருக்குகின்றன. வீதியோரக் கடைகளும், உல்லாசப் பொழுதுபோக்கக்கூடிய நிகழ்வுகளுக்கு ஆதாரமாகவுள்ள செயற்பாடுகளும் ஆலயங்களையே மையமாக வைத்து நிகழ்கின்றன. கோவில் பரிபாலகர்கள் கூடஇதற்குத் துணைபோகின்றமையே வருத்தத்திற்குரியது. இந்நிலையில் உள்ளன்புடன் இறைவனை வழிபடுதல் சாத்தியமாக இருக்கமுடியுமோ?
0 - இன்றுள்ள சூழ்நிலைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடத் தமிழ் மக்கள் எவ்வகையான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?
** :- இதற்கு விடையாக, காசி விஸ்வநாத ஸ்வாமியை முன் வைத்துக்காசி இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவிய பண்டித மாளவியாவின் அறிக்கையை அப்படியே கூறுதல் பொருத்தம். இந்து மதச் சீர்திருத்த மாத வெளியீடான “தொண்டன்” இதழின் முதலாம் ஆண்டு மலர் பக்கம் 67ல் உள்ளதாவது:
"மனித வர்க்கத்தோடு இந்து கலாசாரத்திற்குமி, மதத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது. இந்து மக்கள் அனைவரும் ஒரு முகமாக ஐக்கியப்பட்டுக் கிடைக்கக் கூடிய உதவிகள் சகாயங்கள் மூலம் தற்காப்புச் செய்துகொள்வதோடு சுய உரிமைகளையும் நிலைபெறச்செய்யவேண்டும். அவசரமாகவும், அவசியமாகவும் இது நிச்சயம் செய்யப்பட்டு ஒழுங்காற்றப்படல் வேண்டும். பல வருடங்களாக இந்துக்கள் தேசிய வாதிகளதும் பிற மத வெறியர்களதும் சகாயமாக மாறாமல் உண்மையை நேசித்து அஹிம்சை ஊடாகச் சாதனைகள் செய்கின்றனர். சண்டை சச்சரவுகளை வெறுத்துத் தமது மதம், கலாசாரம், பண்பாடு மூலம் சுமுகமாக வாழ முற்பட்டனர்.
ஆனால்இப்போ கோழைகளாக மாற்றப்பட்டுப் பலமிழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே பலசாலியான வீரர்களாக இந்துக்கள் மாற வேண்டும். இராணுவப் பயிற்சிகளைப் பெறல் வேண்டும். தற்காப்புக்காக மத்திய தொண்டர் படையும் நிறுவுதல் வேண்டும். சிவ சேனைகளாகக்
- 17

Page 16
கிராமங்கள் தோறும் இந்துக்களைப் பயிற்சிக்க வேண்டும்!” என்றெல்லாம் வீழ்த்தப்பட்டுள்ள இந்து சமூகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார் பண்டித LDIT6T6urIT.
எனவே எமது துன்பங்களைத் தீர்த்துச் சரி நிகராக நிமிர்ந்து நிற்க, மாளவியா கூறியது போல, “சிவசேனை’ அவசியமாகவும் அவசரமாகவும் வேணி டப் படுகிறது. சைவக் கலாசாரங்களை அழிக்கமுயலுவோரை எதிர்த்து அழிக்கச் சைவர்களது சிவசேனை கால தாமதமின்றி உருவாக வேண்டியது அவசியம். அதிலிருந்துதான், இந்து சமய மறுமலர்ச்சிக்கான சிவத்தொண்டுகளை அங்குரார்ப்பணஞ் செய்ய வேண்டும்.
"மேன்மை கொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்
Aến
- 18 -

தமிழ்ப் பாடசாலைகளின் சித்திரக் கல்வி வருந்தத்தக்க நிலையிலேயே உள்ளது
"ரமணி" என்ற புனைபெயர் கொண்ட வை. சிவசுப்பிரமணியம், ஓவிய, சிற்பத்துறைகளில் குறிப்பிடத்தக்க சிலருள் ஒருவர். கல்வித்திணக்களத்தில் யாழ்ப்பாண வலயம் 2 இன் உதவிக் கல்விப்பணிப்பாளர் (சித்திரம்) ஆகக் கடமையாற்றும் "ரமணி” அளித்த செவ்வி.
8 :- ஓவிய, சிற்பத் துறைகளில் பொழுது போக்காக ஈடுபடத் தொடங்கினிர்களா. அல்லது முறையாக இவற்றைப் பயின்றீர்களா?
* :- ஒவியத்தை நான் முறைப்படி பயின்றேன். அரச நுண்கலைக் கல்லூரியில் 1962ஆம் ஆண்டு எனது இருபதாவது வயதில் இணைந்து சித்திரம் கற்கத் தொடங்கினேன். அப்போதே "ராதா" என்ற பத்திரிகை நிறுவனத்தினர்கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது பத்திரிகையில் படவரைஞராகப் பணியாற்றினேன். தினகரன் பத்திரிகையிலும், வீரகேசரியிலும் படித்துக்கொண்டிருக்கும் போதே "துண்டு முறையில்' வரைந்தேன். 1965 களில் இராஜகோபால் வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியராக கடமையாற்றிய போது வீரகேசரியின் பிரதான ஒவியராகவும் பணியாற்றினேன். 1967 ஆம் ஆண்டு ஓவியக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து கொண்டு தேசிய நூதனசாலைத் திணைக்களத்தில் உதவி வடிவமைப்பாளராகச் சேவையில் இணைந்து கொண்டேன். இவ்வாறாக ஒவியத்தை முறைப்படி கற்று ஓவியம் சார்துறையிலேயே சேவையாற்றி வருகின்றேன்.
●:ー இதுவரை எத்தனை அட்டைப்படங்கள் வரைந்திருப்பீர்கள்?
99 - சரியான எண்ணிக்கை தெரியாது. ஆனால் 300க்கு மேற்பட்ட அட்டைப்படங்கள் வரைந்திருக்கிறேன். வீரகேசரி வெளியீடுகளிலும், ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் இந்தியாவில் பதிப்பிக்கப்படும்போது அவற்றிற்கும் அட்டைப்படங்களை வடிவமைத்திருக்கிறேன்.
0 - சிற்பத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது எவ்வாறு?
* :- நுண்கலைக் கல்லூரியில் கற்கும் காலத்தில் சிற்பத்தையும் ஒரு
பாடமாகப் பயின்றிருந்தேன். இலங்கை அரசு, சில வேலைகளுக்காக
. - ح 19 -

Page 17
இந்தியாவிலிருந்து “மணி” என்ற சிற்பியை ஒரு தடவை வரவழைத்திருந்தது. புகழ் பெற்ற இந்தியச் சிற்பி "இராவ்பகதூர்” நாகப்பாவின் மகனான மணி அவர்களிடம் சிற்பக் கலையை அக்காலப் பகுதியில் சற்று நுணுக்கமாகப் பயின்றேன். பின்னர் பயிற்சி மூலமாகச் சிற்பமும் கைவந்தது.
8 :- எவ்வகையான சிற்பங்களை உருவாக்கியிருக்கிறீர்கள்?
* :- சிற்பத்தையும் ஒரு தொழிலாகவே செய்து வந்தேன். எனவே அவ்வக் காலப்பகுதிகளில் என்னை அணுகிச்சிற்பம் அமைத்துத் தரக் கேட்போரின் விருப்பத்திற்கேற்ப நியாயாமான ஊதியத்திற்கு அமைத்துக்கொடுப்பேன்.
1975 ஆம் ஆண்டுதான் முதலாவது சிலையைச் செய்தேன். உரும்பிராயில் நிறுவப்பட்ட தியாகி சிவகுமாரனின் சிலையே அது. அச்சிலை சாய்க்கப்பட்டு சிதைக்கப்பட்டது. அமரர் வெ. யோகேஸ்வரனே அச்சிலையை நிறுவ முன்னின்று உழைத்தார். பின் 1978 ஆம் ஆண்டு மீளவும் தியாகி சிவகுமாரனின் சிலையை அமைத்தேன். அதுவும் பின் சிதைக்கப்பட்டுவிட்டது. தொண்ணுாறுகளின் நடுப்பகுதியில் சேர். பொன் இராமநாதனின் உருவச் சிலையை இராமநாதன் கல்லூரி கேட்டுக் கொண்டதற்கிணங்க வடித்துக்கொடுத்தேன். பின் திருவிலில் நிறுவப்பட்ட "போராளிகள் சிற்பத்தையும்” செய்தேன். இச்சிற்பத்தைப் பார்வையிட்ட சுவீடன் நாட்டுப் பேராசிரியர் பீற்றர் ஷோல்க் அவர்கள், இது வெறுமனே போராளிகள் சிலையல்ல இதற்கு "வீரமறவர்கள் சிலை" எனப் பெயரிடுங்கள் என்று கூறினார். மேலும் அவர் என்னைச் செவ்விகண்டு அச்சிற்பத்தையும் புகைப்படம் பிடித்து அதனை மேலைத்தேய சஞ்சிகைகளிலும் பிரசுரித்திருந்தார். இன்று அவ்வாறான சஞ்சிகைகளின் முகப்பு அட்டைகளில் மட்டும்தான் அச்சிற்பம் நிலைத்துள்ளது. மேலும் நல்லூரிலுள்ள பூங்காவில் நிறுவப்பட்ட கிட்டுசிலை, மற்றும் மில்லர் சிலை என்பவையும் சிதைக்கப்பட்டுவிட்டன.
* :- மிகவும் துன்பகரமான விடயம்தான்.ஒரு கலைஞனின் படைப்பு ஒன்று அழிக்கப்படும்போது அவனுக்குத் தனது குழந்தைகளில் ஒன்றை இழந்தது போன்ற துயரம் ஏற்படுவது உண்மை. தற்போது ஏதாவது சிலைகளை உருவாக்கியிருக்கிறீர்களா?
** - ஆம், யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்காக, பெரியகடை வர்த்தகர்கள், சிலகட்சி உறுப்பினர்களுக்காகத் தந்தை செல்வாவின் சிலையை வடிவமைத்திருக்கிறேன். சூழ்நிலைகள் காரணமாக அதன் திறப்புவிழா இன்னும் நடைபெறவில்லை.*
(*1999ம் ஆண்டு தந்தை செல்வா உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.) -20

8 - தங்களின் படைப்புகள் சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்றதாக அறிகின்றேன். அவ்வாறான சந்தர்ப்பம் எப்போது ஏற்பட்டது?
* - எனது நீள் வர்ண ஒவியங்கள் அமெரிக்காவின் “பேஸ்" சர்வ 56o Tg T606uuf6ò (PACE UNIVERSITY USA) 5600 abIl guf6ò வைக்கப்பட்டன. "நான்கு ஆசிய ஓவியர்களின் ஒவியங்கள்” என்ற தலைப்பில் இடம் பெற்ற இக்கண்காட்சியில், இலங்கையிலிருந்து எனது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இவற்றை எடுத்துச் சென்று கண்காட்சியில் வைப்பதில் திருமறைக்கலாமன்றத்தைச் சேர்ந்த வண. பிதா மரிய சேவியர் முன்னின்று உதவியமை குறிப்பிடத்தக்கது.
8 - ஒரு சித்திர ஆசிரியராகவும் நீங்கள் கடமையாற்றியிருக்கிறீர்கள். அவ்வகையில் இன்றைய ஓவியக்கலையின் நிலை பற்றிக் கூற முடியுமா?
** - 1970 ஆம் ஆண்டு சித்திர ஆசிரியராக மட்டக்களப்பு ஏறாவூர், அலிஹார் மகாவித்தியாலயத்தில் எனது சேவையைத் தொடங்கி 1991 ஆம் ஆண்டு நெல்லியடி மகாவித்தியாலயத்தில் கற்பித்து தற்போது உதவிக்கல்விப்பணிப்பாளராக இருக்கின்றேன். இக்காலப்பகுதியில் நான் அவதானித்த வரை, முறையாகச் சித்திரம் பயின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டு வந்திருக்கிறது. தற்போது பாடசாலைகளில் சித்திர ஆசிரியர்களாக சமூகக்கல்வி, சமயம், தமிழ் போன்ற ஏனைய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களையே அனுமதிக்கின்றார்கள். பலர் மாணவர்களுடன் சேர்ந்து, ஆசிரியர்களாகியதன் பின் தான் சித்திரம் வரைந்து பழகுகின்றார்கள். அறிமுறைக் கல்வியை முறையாகப் பயின்றவர்களுக்குக் கூட செய்முறைப் பயிற்சி இல்லை. மிகவும் வருந்தத் தக்க நிலையிலேயே இன்றைய தமிழ்ப்பாடசாலைகளில் சித்திரக்கல்வி உள்ளது.
9 - சிற்பக் கலை எவ்விதம் இன்று யாழ்ப்பாணத்தில் வளர்ச்சி கண்டுள்ளது? உடைக்கப்பட்ட பல சிலைகள் திருத்தப்பட்டு இருந்ததை அண்மையில் நான் அங்கு வந்திருந்த போது காணக்கூடியதாக இருந்ததே.
* :- சிலைகளாகி நிற்கும் பெரியார்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையிலேயே நிற்கிறார்கள். வேண்டா வெறுப்பாக, அவசர அவசரமாக செய்யப்பட்ட செயல்கள் தான் இந்தச்சிலை புனரமைப்பு நடவடிக்கைகள். உருவச்சிலை வடிப்பது சற்றுக் கடினமான விடயம். பாரம்பரிய கலைஞர்கள் கோவில் சிற்பங்களை வடிப்பதில் வல்லவர்கள். ஆனால், உருவச்சிலை வடிப்பதற்கு உடற்கூற்றியல் (anatomy) தெரிந்திருக்கவேண்டும். அதனை
- 21 -

Page 18
முறையாகக் கற்க வேண்டும். உடலுக்கேற்ற கண், காது, முக்கு, வாய், கை, கால்கள் அமைய வேண்டும்.
இச்சிலைகளை உடைத்தவர்கள், தமது கலாசார அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காக அவசர அவசரமாகக் கோவில் ஸ்தபதிகளையும் கொத்தனார்களையும் (Mason) கொண்டு இவற்றைப் புனரமைத்திருக்கிறார்கள்.
ஒவையார் சிலை, முன்னர் கழுத்து முறிந்து தலை தொங்கிக் கொண்டிருந்தது. தற்போது உடைந்த கழுத்துப்பகுதியில் சீமெந்தைக் குழைத்து உருட்டி வைத்துச் சரி செய்திருக்கிறார்கள். இதனால், ஒவையார் கழுத்தைச் சற்று முன்னோக்கி அந்தரப்பட்டுக் கொண்டு நிற்பதைப் பார்க்க எமக்குத் தான் கூடிய அந்தரமாக இருக்கிறது.
令 一 உண்மை. நான் கூட சங்கிலியன் சிலையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன். யாரோ கொள்ளைக் கூட்டத்தலைவன் போல் அமைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கட்டிக்காட்டுவாரில்லையா?
** - என்ன செய்வது? சங்கிலியன் சிலையில் அன்று இருந்த கம்பீரம் இல்லை! அரசதோற்றம் இல்லை. மணி முடி, போர் வீரனின் தொப்பியோ என ஐயுறும் அளவில் உள்ளது. மிக அகோரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதை விட அச்சிலையை மீள அமைக்காமலே விட்டிருக்கலாம். வீழ்ந்து கிடந்த சிலையை நிமிர்த்தி குதிரையில் பொருத்தமிலாமல் ஒரு உருவத்தை அமைத்திருக்கிறார்கள்.
சங்கிலியனின் கம்பீரமான சிலை, சிவப்பிரகாசம் ஆசிரியரால் வடிக்கப்பட்டது. அவர் தற்போது வாழகின்றார். அச்சிலையை மீண்டும் அவரைக்கொண்டே வடிவமைத்திருக்கலாம். சிலை மீள அமைக்கப்பட்டபோது, அவர் யாழ்ப்பாணத்தில் இல்லாத காரணத்தால், என்னை அணுகினார்கள். இயலுமானளவு குறைவான தொகையையே கொடுத்திருந்தேன். இப் பொறுப்பை யாழ் மாநகர சபையே ஏற்றிருந்தது. ஆனால், நான் கோரிய தொகையிலும் கால்பங்கிற்கு குறைவான தொகையையே செலவிட்டுப் புதிய சிலையை அமைத்திருக்கிறார்கள்.
செய்வன திருந்தச் செய்ய வேண்டும். மாநகர சபையிடம் பணம் , இல்லாவிட்டால் கூட பொதுமக்கள் இப்பணிக்கு, யாழ்ப்பாணச் சுதந்திரத் தமிழரசின் மன்னனான சங்கிலியனுக்கு கெளரவமான அழகான சிலையொன்றை அமைப்பதற்கு, நிச்சயமாக வாரி வழங்குவார்கள்.
-22

எனவே உடனடியாக இவ் அகெளரவம் அகோரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். கூடிய பணத்தைச் செலவிட்டாலும் முறையான சிலையை அமைக்க வேண்டும். அன்றேல் இச்சிலையை எடுத்து விட வேண்டும். "இது தானா உங்கள் மன்னன்? “ என்று மற்றவர்கள் எம்மைப் பார்த்துக் கேட்கும் நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது.
உருவச் சிலை செய்வதில் முறையாகப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு உடனடியாக இச்சிலை தனது முன்னைய கம்பீரத்திலும் கூடிய வகையில் ஜொலிக்குமாறு செய்யப்படல் வேண்டும். விழ விழ மீண்டும் கம்பீரத்துடன் எழுவோம் என்பதை சங்கிலி மன்னன் உணர்த்த வேண்டும்.
8 :- இறுதியாக தமிழ்ப் பிரதேசங்களில் சிற்ப ஓவியக் கலைகளை வளர்ச்சியுறச் செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
** - மிக முக்கியமான கேள்வி! இன்று எம்முன் உள்ள பிரச்சினை, சிற்ப, ஓவியக் கலைகள் பல்கலைக் கழக மட்டத்தில் வளர்த் தெடுக்கப்படாமையாகும். சிங்கள மொழிமூல மாணவர்கள் இதற்குப் பல வசதிகளைப் பெறுகின்றார்கள். களனிப் பல்கலைகழகத்துடன் அரச நுண்கலைக் கல்லூரி இணைக்கப்பட்டுச் சிங்கள மொழிமூல மாணவர்கள் பயனடைகின்றனர். தமிழ்க் கல்விமான்களும் முயற்சித்து தமிழ்மொழி மூல மாணவர்களுக்காகப் பல்கலைக்கழகத்தில், ஓவியம், சிற்பத்துக்கான பாடநெறிகளை முன்னெடுக்க வேண்டும். அறிமுறைக் கல்வி மட்டும் இருந்தால் போதாது. சிற்ப ஓவிய செய்முறைக் கல்வியும் புகுத்தப்பட வேண்டும். அப்படியானால் தான் தாம் தொடர்ந்து கற்க வாய்ப்பிருக்கின்றது என்ற நம்பிக்கையில் இப்பாடங்களை மாணவர்கள் உயர்தரத்திற்குத் தெரிவு செய்வார்கள். தேறுபவர்கள் பலகலைக்கழகத்தில் தொடர்ந்து பயின்று பட்டம் பெறுவார்கள். அதை விடுத்துச் சித்திரப் பாடம் போதிக்கப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தால், எங்கிருந்து சித்திர ஆசிரியர்கள் வருவார்கள்?
முறையான செய்முறைப் பயிற்சிகள் பாடநெறிகள் மூலமாகச் சிங்கள சிற்ப, ஓவியக் கலைஞர்கள், மாணவர்கள், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டும், புகழ் பெற்றும் உள்ளனர். இந்நிலைக்குத் தமிழ் மாணவர்களும் உயர்வடைய, தக்கோர், தமிழார்வலர்கள், அறிஞர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தகவுடைய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என்பதே தங்கள் பத்திரிகையூடாக நான் விடுக்கும் தாழ்மையானதும், அவசரமானதுமான வேண்டுகோள்.
Ao
-23

Page 19
இன்றைய பாதகமான சூழ்நிலையில் ஆர்வத்துடன் தமிழ்ப்பணியாற்றும் இளைஞர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது
"வே. அமுதலிங்கம்” எனும் இயற்பெயர்கொண்ட "வேல் அமுதன்" இலக்கிய உலகிற்குப் பரிச்சயமானவர். 1978ம் ஆண்டு, இவரது "மாரீசம்" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு, இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இலக்கிய அமைப்புக்களையும் முன்பு ஆரம்பித்து நடாத்தி வந்த வேல் அமுதன், பத்திரிகைகளிலும் பல்வேறு சிறுகதைகளை எழுதியுள்ளார். தற்போது திருமண ஆலோசகராகப் பணியாற்றும் இவர் அளித்த செவ்வியிலிருந்து சில பகுதிகள்.
తగ్గి -- இலக்கியத் துறையில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்படுவதற்கான அடிப்படைகள், காரணங்கள் எவையெனக் கூறுவீர்களா?
*9 - என்னை இத்துறையில் ஈடுபட ஊக்குவித்ததில் பெரும் பங்கு வகித்தவை நான் வாழ்ந்த சூழலும் கற்ற கல்லூரியுமாகும். எனது பாடசாலையாகிய தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் தெ.து. ஜெயரட்ணம் அவர்கள் அப்போது அதிபராக இருந்தார். "மகாஜனாவின் பொற்காலம்’ என்று கூறக்கூடியதான காலம் அக்காலமாகும். இலக்கியப் போட்டிகள், விழாக்கள் என்று மாணவரின் கலை ஆர்வத்தை வளர்க்கப் பற்பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதே போல எனது கிராமமாகிய குரும்பசிட்டியில், சன்மார்க்க சபையில் அனைவரும் ஒன்றுபட்டு இயங்கிய காலப்பகுதியுமாகும். சன்மார்க்க இளைஞர் சபையினர், மாதமொரு கலைநிகழ்ச்சியை நடாத்தி மாணவர், இளைஞர் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தனர். கலை, இலக்கியம் உன்னத நிலையிலிருந்தது. உலகின் எப்பாகத்திலிருந்தாவது ஒரு சிறப்புப் பேச்சாளர் இலங்கைக்கு விஜயம் செய்வாராயின், அவரது வடபுல விஜயத்தில் சன்மார்க்க சபை விஜயமும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அவ்வாறாக, புகழ்பெற்ற பேச்சாளர்கள் வந்து தமிழ் மணக்கச் செய்தனர். இவ்வாறான பண்பானதொரு சூழல் தான் எனது இலக்கிய முயற்சிகளுக்கு வித்திட்டது.
- 24

9 :- அப்படியானால், பேச்சுக்கள், கலைநிகழ்ச்சிகள் என்பவற்றைக் கேட்பதனாலும் பார்ப்பதனாறும் ஒருவன் சிறந்த எழுத்தாளனாகவோ கலைஞனாகவோ வந்து விடமுடியுமா? எத்தனையோ பேர் இவ்வாறான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.அவர்கள் எல்லோரும் இலக்கியக் கர்த்தாக்கள் ஆகிவிட முடியுமா?
99 :- நான் அப்படிக்கூற வரவில்லை. ஒரு திறமையுள்ள மாணவனுக்கு ஊக்கமும் வழிகாட்டலும் அவசியம். ஆர்வமற்றவர்கள், வெறுமனே நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் இலக்கிய கர்த்தாக்கள் ஆகிவிட முடியாது. ஆர்வமும் திறமையும் உள்ளவர்களுக்குத் தக்க வழிகாட்டல், ஊக்குவிப்பு இல்லாவிட்டால் சோர்வு ஏற்படலாம். ஆனால் எனக்குள் இருந்த ஆர்வம் குலையாது வழிகாட்டி ஊக்குவித்த கைங்கரியத்தை, எனது கிராமத்தின் இலக்கிய சூழலும், கல்லூரியின் கலைச் சூழலும், புரிந்தன. எல்லோருக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.
மேலும் இரசிகமணி கனக செந்திநாதனுடனான தொடர்பு, என்னை ஊக்குவித்தது. இரசிகமணியின் வீடே ஒரு நூலகமாக இருந்தது. நாள் முழுவதும் அவரது இல்லத்தில் பொழுதைப் போக்கலாம். இலக்கிய விடயங்களை வாசித்தும், அவரிடம் கேட்டும் அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறாகவே எனது எழுத்துத்துறை வாழ்வும் விருத்தியடைந்தது.
«» - ஒரு மானவன் என்ற நிலையில் உங்கள் கல்லூரி எவ்விதம் உங்கள் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியது என்று கூறுவீர்களா?
99 :- முன்னரே கூறியது போல, கலை நிகழ்வுகள், போட்டிகள் ஊடாக மாணவர் இத் துறைகளில் ஈடுபட நல்லூக்கம் அளிக்கப்பட்டது. அனைத்தையும் விட, எழுத்துத் துறையில் என்னை ஊக்கப்படுத்தியவை அன்றைய கையெழுத்துப் பத்திரிகைகளே. இன்று - பாடசாலைகளில் இப்பழக்கம் அருகி வந்துவிட்டது. முன்னர் படைப்புகளை உடனே அச்சேற்றும் வசதிகள் இருக்கவில்லை. இதனால் பாடசாலையில் நாம் வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள் முக்கியம் பெற்று விளங்கின. "தீபம்” என்ற "மாதாந்தப் பத்திரிகையை நான் வெளியிட்டு வந்தேன். கண்காட்சி ஒன்றில் இச் சஞ்சிகையைப் பார்வையிட்ட கவிஞர் கதிரேசர்பிள்ளை, அவர்கள், *சர்வதேச ரீதியிலான கையெழுத்துச் சஞ்சிகைக் கண்காட்சியில் வைக்கப்படவேண்டிய ஒரு சஞ்சிகை "எனக் குறிப்பெழுதிச் சென்றிருந்தார். இவ்வாறான பெரியோர் ஊக்கம் என்னை மேலும் ஆர்வத்துடன் எழுதத்
-'25 -

Page 20
தூண்டியது. "வெண்ணிலா" என்ற கையெழுத்துச் சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தேன். பாடசாலைத் தமிழ் மன்றத்திலும் பத்திராதிபராகப் பணியாற்றினேன். என் வளர்ச்சிக்குப் பாடசாலை வாழ்வு பெரும் ஊக்கத்தை அளித்தது.
* : தங்கள் படைப்புகள் பொதுவாக சமகால விடயங்கள், சாதி ஒடுக்கு TTLLLLSSSLLGLCCCL LLLLLLLlM LLTGLLLLLLL LTTTTTLLLLLLLLCLLL கருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறாக உங்களை எழுதந்தாண்டிய குறிப்பிடத்தக்க
Fiblua"Riselt gyúb gabbsetRIT?
* :- சிறு வயதில் எனக்கேற்பட்ட அனுபவம் ஒன்று, ஆழமான பதிவை என் மனதில் ஏற்படுத்தியது. அக்காலத்தில் எமது கிராமத்திலிருந்து செல்வச்சந்நிதி ஆலய உற்சவ காலத்தில் பாதயாத்திரையாகப் பக்தர்கள் செல்வார்கள். ஒரு தடவை நான் சிறுவனாக இருந்தபோது அவர்களுடன் இணைந்து நடந்து சென்றேன். வசாவிளான் கடந்து ஒட்டகப்புல வைத்திய சாலைக்கு சமீபமாக ஓர் தண்ணிப் பந்தல் இருந்தது. மிகுந்த தாகமாக இருந்த காரணத்தால், நான் ஏனையோரை விட்டு விட்டு ஓடி முதலில் சென்றேன். தண்ணிரப் பந்தலில் நின்றவர் என்னிடம், “தம்பி உள்ளேயா? வெளியேயா?" என்று கேட்டார்.எனக்கு ஏதும் புரியவில்லை. உள்ளுக்குள் வந்து குடிக்கப் போகிறேனா என வினவுகிறார் என நினைத்துக் கொண்டு “வெளியே " என்று சொன்னேன். உடனே எனக்கு சோடாப் போத்தலில் தண்ணிர் தந்தார். என்னுடன் வந்த ஏனையோர் தண்ணிர்ப்பந்தலை அடைந்ததும் அவர்களிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அவர்கள் “உள்ளே” என்றதும், மூக்குப்பேனியில் தண்ணிர் கொடுக்கப்பட்டது.
அப்போதுதான். “உள்ளே வெளியே” என்று எதைக் கூறியிருக்கிறார் என விளங்கியது. இது என் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளின் பெயரால், மகேஸ்வர சேவை ஆற்றும் போது கூட:சாதி வேறுபாடு பார்க்கும் அளவுக்கு சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் வேரூன்றியிருந்தமை என்னைப் பாதித்தது. இதுவே பின்னர் எனது எழுத்துக்களிலும் வெளிப்பீட்டிது.
* - நான் உங்களிடம் மட்டுமன்றி, ஏனைய எல்லானழுத்தாளர்களிடமும் கேட்க விரும்பும் ஒரு விடயம் என்னவென்றால் இலக்கியப் படைப்புக்களால், LTTTTL GLTTTTTTGMLLLLLL LLLL TTLCTT TLMLLLLLLLL TTTTTTLS TTTLTLG TtLLL LLLLLS TT LGLLLLLLL S S LM TM TLLL STTTSaSTTTLLLLS LL ttlLLMTTT சாதிப்பாகுபாடுகளை, கடந்த பதினைந்தாண்டு காலத்தில்:வேறு சில
a 26

நடைமுறைகளால்தான் களைய முடிந்திருக்கிறது. எனவே,எழுத்தாளர்களால் இப் பாகுபாடுகளைக்களைய முடிந்தது எனக் கூறுவது எவ்வளவு பொருந்தம்
00:- E-660)LD5T6..... எழுத்தாளர்கள் சமுதாயத்தில் சிந்தனையைத் தூண்டும் விடயங்களை எழுதினாலும், அவற்றால் மாற்றமடையக்கூடிய பக்குவப்பட்ட சமுதாயம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒரு நல்ல விதையைப் போடும் போது, அதை உள்வாங்கி வளரச் செய்யப் பண்பட்ட பாத்தி (நிலம்) அவசியம். தரிசு நிலமானால், எவ்வளவு நல்ல விதைகளை விதைத்தாலும் விளைச்சல் இராது. ஆனால், எழுத்துக்கள் வெறுமனே விழலுக்கிறைத்த நீராய்ப் போய்விட்டன என்று சொல்ல முடியாது. பாத்தி வேறு காரணிகளால் பண்படுத்தப் பட்டாலும், எழுத்தாளர்கள் இட்ட சிந்தனை விதைகள் முக்கியமானவை. குறைந்தபட்சம் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தவும் முடிந்தது. இவ்வகையில், எழுத்தாளர்கள் நிச்சயமாகச் சாதிப்பாகுபாட்டைக் களைவதில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
9 - நீங்கள் கதுவரை வெளியிட்டுள்ள எழுதியுள்ள படைப்புகள் பற்றிச் 6herdbgastaan/T?
99 :- இதுவரை அறுவடை, வைகறை, மாரீசம் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளேன். இவற்றில் "மாரிசம்" தொகுப்பிற்கு 1978ம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.
1983 கலவரங்களைத் தொடர்ந்து, ஊர் திரும்பியதால், முன்பிருந்த வேகத்துடன் எழுத முடியவில்லை. தொழில் மாற்றம், வதிவிட மாற்றம், வேலைப்பழு என்பவற்றால் எழுத்து மட்டுப்படுத்தப்பட்டது.
1996ம் ஆண்டிற்கு பின், திருவிளையாடல், காகித ஓடம், உள்ளொளி, கட்டாங்காளைகள், கிழவனும் கிழவியும், கலை உள்ளம், ஓர்மம், பிறந்தநாள் பரிசு, ஒட்டுண்ணி, உடன் கட்டை, வழித்துணை, நற்சிந்தனை, முதலும் வட்டியும், கண்கண்ட தெய்வம் ஆகிய சிறுகதைகள் தேசியப்பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இவற்றை தொகுப்பாக வெளியிடவும் எண்ணியுள்ளேன்.
LLL SS S GTTTLTTL TTT TTTTGLLLLL LLLLLLLTLL T TLLTTGttS S SLLLLLLGLLMM இயக்கங்களையும் ஆரம்பித்து நடாத்தி வருபவர் அமுதன்” என்று, கலாநிதி
• 27 سه

Page 21
லஷ்மண ஐயர் குறிப்பிட்டு உள்ளார். அவ்வாறான இயக்கங்கள் எதையாவது தற்போது நடத்தி வருகின்றீர்களா?
** - 1970 களின் முற்பகுதியில் "தமிழ்க்கலைஞர் வட்டம்" (தகவம்) என்ற அமைப்பை உருவாக்கினேன். அதன் முன்னர், இலங்கை அறிவியக்கம் என்ற அமைப்பையும் நடாத்தி வந்தேன். 1982 இல், தகவத்திலிருந்து, சில காரணங்களால் விலகி விட்டேன். 1984ல் யாழ்ப்பாணம் சென்றபின், மதி கல்வி நிறுவனம் என்ற கல்வி நிலையத்தை நடாத்தி வந்தேன். அங்கு வெறுமனே பாடப்புத்தகம் சார் கல்வியை வழங்காது, மாணவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் விதமாக "மதி கலைஞர் வட்டம்" (மகவம்), என்ற இலக்கிய அமைப்பினை நடாத்தி வந்தேன்.
அதன்மூலம் சில புத்தகங்களையும் வெளியிட்டதுடன், கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்தி வந்துள்ளேன். சூழ்நிலைகள் காரணமாக இச்செயற்பாடுகள் மந்தமடைந்து உள்ளன.
8 :- இறுதியாக, தமிழ், இலக்கிய, கலை ஆர்வத்தைப்பொறுத்தளவில் அன்றைய இளைஞர்களுக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் எவையெனக் கருதுகின்றீர்கள்? அன்றைய வேகம் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகின்றதா?
** :- இன்றுள்ள பாதகமான சூழ்நிலைகளின் மத்தியிலும், ஆர்வத்துடன் தமிழ்ப்பணியாற்றும் இளைஞர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. வேகம் எவ்வாறுள்ளது என்பது முக்கியம் அல்ல. அவர்தம் செயற்பாடுகளின் விளைவுகள், தாக்கங்கள் எவ்விதம் அமைகின்றன என்பதே முக்கியம். மொத்தத்தில், இன்றைய இளைஞர்களின் கலை ஆர்வம், வேகம் தணியவில்லை மாறாகப் பன்முகப்பட்டு அது பரந்துள்ளது என்றே கூறுவேன். தொடர்ந்தும் இவ் ஆர்வம் பெருக வேண்டுமென்பதே எனது விருப்பமுமாகும்.
நிற
- 28

"தமிழினத்தினி ஆரம்பகாலவரலாற்றைத்தானி பதிவு செய்யாமல் விட்டுவிட்டோம், நிகழ்கால வரலாற்றையாவது பதிவு செய்து எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்குவோம்.”
முற்போக்கு எண்ணம் கொண்ட இரா. கனகரத்தினத்தை எனக்குப் பல) வருடங்களாகத் தெரியும். அவரது முயற்சி வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரிதும் பயன்படும்.அவரது தொண்டினைப் பாராட்டித் தகுந்த முறையில் கெளரவிக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். அவர் முயற்சி வெல்க என வாழ்த்துகிறேன் என்று மூதறிஞர் ,தமிழரசுத் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் பாராட்டப்பட்டவர் "ஆவண ஞானி" குரும்பசிட்டி இரா. கனகரத்தினம். தனது துணைவியார் பவளராணியுடன் இணைந்து வேறெவரதும் உதவியின்றிப் பல ஆண்டுகளாக வரலாற்றுப் பதிவுகளைச் சேகரித்து வருகின்றார் கனகரத்தினம். ஏறத்தாழ நூறு வருடங்கள் பழமையான பத் திரிகைகளி, சஞ்சிகைகள், செய்திக்குறிப்புக்களைச் செவ்வனே தரம்பிரித்துக் கத்தரித்து ஒட்டி, வரலாற்றுப் பதிவுகளைச் சுமந்து நிற்கும் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்கள் கண்டி, முல்கம்பொலவில் தமது இல்லத்தில் வைத்துத்
தினக்குரலுக்கென வழங்கிய செவ்வியிலிருந்து சில பகுதிகள்.
● =
பத்திரிகைச்செய்திகளைத் தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணம், ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
* :- சிறு வயதில் படிக்கும் போது, எனது சரித்திர ஆசிரியர் அருணாசலம் அவர்கள், "தமிழர்கள் தமது வரலாற்றை ஒழுங்காகப் பதிவு செய்யாததால் வரலாறற்ற இனமாகிவிட்டார்கள்" என்று அடிக்கடி சொல்வார்கள். இது என் மனதில் ஆழப்பதிந்து இருந்தது.
1956 ஆம் ஆண்டு காலி முகத்திடல் சத்தியாக்கிரகத்தில் காடையரின் வெறியாட்டம் அரங்கேறியது. இது தொடர்பான புகைப்படங்கள் மறு நாள் பத்தரிகைகளில் வெளிவந்தன. அவற்றை நான் பத்திரமாகச்
- 29

Page 22
சேகரித்து வைத்தேன். சிறிது நாட்களின் பின், வெறுமனே புகைப்படங்களை மட்டுமன்றி, அவை தொடர்பான செய்திகளையும் ஒழுங்காகச் சேகரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அன்றிலிருந்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், புகைப்படங்கள், கட்டுரைகள் என்பவற்றை அவை சார்ந்துள்ள துறைகளுக்கேற்பத் தரம் பிரித்துக் கத்தரித்து ஒட்டிச் சேகரிக்கத் தொடங்கினேன்.
* - அப்படியானால், அதற்கு முன்னைய காலப்பகுதியைச் சேர்ந்த பந்திரிகைகள், வெளியீடுகளை எவ்விதம் பெற்றீர்கள்?
** :- நான் கண்டியில் தொழில் பார்த்தபோது, வேலை முடிந்ததும், பழைய பத்திரிகைக் கடைகளுக்குச் சென்று மொத்தமாகப் பத்திரிகைகளை வாங்கி வந்து தூசு தட்டி, அவற்றில் முக்கியமான செய்திகளைப் பிரித்தெடுத்துச் சேகரித்தேன். "இந்து சாதனம்" என்ற பழைய பத்திரிகையின் பிரதிகளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து பெற்று, போட்டோ பிரதி செய்தேன். ஈழகேசரியின் அனைத்து இதழ்களையும் போட்டோ பிரதி செய்வதற்காகக் குரும்பசிட்டி சன்மார்க்க சபையினர் தந்து உதவினர்.
இதுபோலவே தேடித் தேடிப் பழைய பத்திரிகைகளை வாங்கி, தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குக் கொண்டுவந்து சிறுகச் சிறுகச் சேகரித்தேன். அதேநேரம் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ், ஆங்கிலச் செய்தித் தாள்களையும் சேகரிக்கத் தொடங்கினேன்.
இப்போதும் இதோ (தம்மைச்சுற்றியுள்ள பத்திரிகைகளையும் கத்தரித்த துண்டுகளையும் காண்பிக்கிறார்), சலிக்காமல் பொறுமையாக ஒவ்வொரு பத்திரிகைகளாக வாசித்துத் தரம்பிரிக்கின்றேன்.
LS S S S LLLLLLTTTTTL LTLTLLTTTTLT TTLTL LTTTTLGLL LLLLLLLT TTTLLLLL நினைக்கின்றீர்கள்?
* :- நான் இவற்றைச் சேகரிப்பதைப் பார்த்து நையாண்டி புரிந்தோர், ஏளனஞ் சேய்தோர் பலர். ஆனால் இவற்றின் அருமை இன்று தெரியாவிட்டாலும் என்றோ ஒருநாள் தெரியும். நான் இல்லாத காலத்தில் நிச்சயமாக எனது சேகரிப்புகளுக்கு உரிய கெளரவம் கிடைக்கும்என்பது எனது அசையாத நம்பிக்கை. ஏனெனில் இதனை நான் உண்மையாக நேசித்துச் சேகரித்து வருகின்றேன். (Sincere)
a 30 is

நான் இவற்றைச் சேகரிப்பதன் நோக்கம், ஏனையவர்களுக்கும் ஒரு உந்துதலை அளிப்பதற்காகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பகாலவரலாற்றைத்தான் பதிவு செய்யாமல் விட்டு விட்டோம், நிகழ்கால வரலாற்றையாவது செவ்வனே பதிவு செய்து எதிர்கால சந்ததிக்கு வழங்குவோம்.
புறநானூற்றின் வீரச்செயல்கள் பற்றிக் கலைஞர் இன்றும் கட்டுரை எழுதுகிறார். ஆனால் புறநானூற்றை விஞ்சிய வீரச்செயல்கள், தியாகங்கள் இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இவை பற்றிய பூரண விபரங்கள், செய்திகளை ஆவணப்படுத்தும் நிலையில் நாம் இல்லை. எனவே, இவற்றைச் செய்ய வசதியுள்ளவர்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், ஆர்வத்துடன் இவ்வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்க முன்வரவேண்டும். இன்றேல், வரலாற்றை மறந்த, வரலாற்றை இழந்த இனமாக மாறிவிடுவோம். அந்த நிலை ஏற்படாமல் தடுப்பதே, எனது சேகரிப்புப்பணியின் நோக்கம்,
9 - உலகளாவிய ரீதியில் தங்களுக்குத் தொடர்புகள் ஏற்படக் காரணமாய் Ola Duda3 abaqab GTRIDau?
* - வணபிதா, தனிநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோரின் தொடர்புதான் எனக்கு அதிக உந்துதல் அளித்தது. தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு, சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் , 1974ல் நடைபெற்ற எனது சேகரிப்புக்களின் கண்காட்சியை வணயிதா தனிநாயகம் அடிகளே ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர்தான் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை ஆரம்பிக்க நான் முன்னின்று உழைத்தேன். தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் தொழில் நிமித்தம் குடியேறி, அந்நாட்டு பிரஜைகளாக வாழ்கின்றார்கள். காலப்போக்கில் அவர்கள் தமது மொழி, கலாசாரத் தனித்துவ அடையாளங்களை இழந்து வருவதையும் அறிந்தேன். பிஜி தீவுகள், மொறிசியஸ், சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, தென்னாபிரிக்கா என்று பல்வேறு நாடுகளிலும் அந்நாட்டுப் பிரஜைகளாக வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து அவர்களது தனித்துவத்தைப் பாதுகாத்து, அவர் தம் பிரச்சினைகளை உலகறியச் செய்ய உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கமும், அதன் மாநாடுகளும் பெரிதும் உதவின. இக்காரணத்தாலே மொறிசியஸ், மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் மக்களும் என்னை அழைத்துக் கெளரவித்தனர். அவர்களுடனும் நெருக்கமான உறவும் தொடர்புகளும் ஏற்பட்டன.
-31 -

Page 23
* :- 1994ம் ஆண்டில் உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் - ஓர் அறிமுகமீ” எனும் தலைப்பில் கண்காட்சி ஒன்றை நடாத்தி இருந்திர்கள். * உலகத்தமிழர் ஆவணக் காப்பகத்தின்” நோக்கங்கள் என்ன?
99 :- ஒரு தனிமனிதன் என்றால் என்ன ஓர் இனமாக இருந்தால் என்ன, நடந்த நிகழ்வுகளை நெறிப்படுத்தித் தொகுத்து வழங்கப்படும் சான்றாதாரங்களையே வரலாறு என்று கூறுவோம். எந்த ஒரு நிகழ்வையும் பெரிதுபடுத்தியோ மறைத்தோ இட்டுக்கட்டியோ தொகுப்பது வரலாறே அல்ல. அவற்றைப் புனைகதைகள் என்றே அழைத்துவிடலாம். எந்தவொரு இனத்தையும் தாழ்த்தியோ உயர்த்தியோ வரைபவை எல்லாம் வரலாறு ஆகிவிட முடியாது. அவை சுயபுராணங்கள் என்போம்.
துரதிர்ஷ்டவசமாகத் தமிழர்கள் தம் வரலாற்றை . அதற்கான சான்றாதாரங்களை - முறையாகத் தொகுத்து வைக்காமல் விட்டுவிட்டதனால் தமிழின எதிரிகள் குழ்நிலையைத் தமதாக்கிக் கொண்டு பல புனைகதைகளைப் புனிதமாக்கிக் கொண்டு அவற்றையே “வரலாறு" எனப் பொன்முலாம் பூச, பொதுத்தொடர்பு சாதனங்கள் அவற்றினை மேடைகளில் அரங்கேற்றம் செய்கின்றன. இன்னும் இந்தநிலை தொடர்கிறது.
இலங்கையில் மட்டுமல்ல. தமிழர் குடியேறிய நாடுகளிலெல்லாம் இந்தப் புல்லர்களின் புலுடாக்கள் வரலாறு என்ற வடிவில் கொடிகட்டிப் பறக்கின்றன.
சர்வதேச மட்டத்தில் தமிழினம் பண்பாட்டுப் பின்னணியற்றதோர் இனமாகப் பின்தள்ளப்பட்டு வருகிறது. மாறாக, புதிய பல வரலாறுகள் தமிழின வரலாற்றுப் புதைகுழிக்கு மேல் எழத்தொடங்கிவிட்டன. இந்தச் சர்வதேச வரலாற்று மோசடி தடுத்து நிறுத்தப்படத் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
மேலை நாடுகள் ஆவணக் காப்புத்துறையில் பல ஆண்டுகட்கு முன்னரே விழித்துக்கொண்டுவிட்டன. ஒளிப்பட, திரைப்படச் சாதனங்கள், பதிவுநாடாக்கள், கணனிப்பொறிகள், நுண்சுருள்கள், நுண் ஒளித்தகட்டில் பகள்ப்பு எடுக்கும் கருவிகளெனப் பலநவீன சாதனங்கள் இத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழினமும் வரலாற்றுத் தேவையுணர்ந்து இத்துறையில் விருத்திபெற வேண்டுமென்ற அவாவிலேயே "உலகத்தமிழர் ஆவணக்காப்பகம்" என்ற எண்ணக்கருவை முன்வைத்தேன்.
* இதற்கு எந்தளவு தூரம் வரவேற்பு ஆதரவு ஏனையோரின் பங்களிப்பு bdhary?
a 32

99 - எனது பாரிய கவலையே அதுதான். யாருமே இதன் அவசியத்தினை உணர்'கறார் களில் லை. உணர் நீ தவர் களும் பங்கெடுக் க முன்வருகிறார்களில்லை. என்னால் இயன்றளவு செய்கின்றேன். தனித்து நின்று செயற்பட என்னிடம் போதிய இட, நிதி வசதி கிடையாது. ஏதாவது அனர்த்தங்கள் நேரும்போது, விஷமிகள் எனது சேகரிப்புகளுக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு முன், இவற்றைப் பாதுகாப்பாக, ஒரு நிலையான ஆவணக் காப்பகம் நிறுவிச் சேகரிக்கவேண்டும். மைக்றோபிலிம்,கணனிச் சேமிப்புக்களாக இப்பழைய பத்திரிகை நறுக்குகளைச் சேகரிக்கவேண்டும். இதற்கு இயலுமான சகலரும் உதவ வேண்டுமென்பதே எனது கோரிக்கை.
தங்கள் "தினக்குரல்" பத்திரிகை மாத்திரமே எனக்கு இலவசமாகப் பிரதியொன்றை அனுப்பி வைத்து இப்பணிக்கு உதவுகின்றது. இந்நிலையில் தொடர்ந்தும் நான் இப்பணியைத்தொடரப் பத்திரிகை நிறுவனங்கள், உள்நாட்டு வெளிநாட்டுக் கலாசார அமைப்புக்கள் உதவுமா என்பதே என் ஆதங்கம்.
0 - *தினக்குரல்” ஊடாகத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் செய்திகள் என்ன?
9 - இவ்வாறான ஒரு பணி அவசியம் என்பதைத் தமிழினம்
உணரவேண்டும். ஒவ்வொருவரும் சொந்தமாகத் தம்மால் இயன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளைச் சேகரிக்கவேண்டும். இன்றில்லாவிடினும் ஒருநாள் தமிழருக்கான நிரந்தர ஆவணக் காப்பகம் ஒன்று உருவாகும்போது இத்தனிமனித சேகரிப்புகள் நிச்சயம் பயன்தரும்.
எனவே ஒவ்வொரு உணர்ச்சியுள்ள தமிழ் மகனும் இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டும் ஈடுபடுவோரை ஊக்குவித்தும் உதவவேண்டும்.
நிச்சயமாக நாம் "வரலாற்றைப்பதிவு செய்து வையகத்தில் தலை நிமிர்வோம்."
தலை நிமிர்ந்து வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இதற்குத்தக்க முறையில் உதவவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.
மேலும் வெளிவந்து நின்று போன சஞ்சிகைகள், பத்திரிகைகள், சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளின் பிரதிகளை அல்லது போட்டோப் பிரதிகளை அனுப்பி வைத்து உதவக்கூடியவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன். இதன்மூலம் எனது சேகரிப்புக்கதின் இவற்றையும் உள்ளடக்கக்கூடியதாக இருக்கும்.
Afu)
-33

Page 24
"மக்கள்சக்தியை மீறி ஒப்பந்தங்களை செயற்படுத்த plpurs"
(நாட்டின் மிக சக்தி வாய்ந்த தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கைெ வங்கி ஊழியர் சங்கத்தின் தேர்தல்கள் 1998 நவம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்றன. அந்நேரத்தில் வங்கி ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், நாட்டின் ஏனைய நடவடிக்கைகளில் வங்கிகள் செலுத்தும் செல்வாக்குகள் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் உபதலைவரும் கிளைச்சங்கத்தில் 1980 முதல் 1996 வரை தலைவர், செயலாளர், சிரேஷ்ட உபதலைவர் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவரும் சுயேச்சைக்குழுவின் சார்பில் போட்டியிட்டவருமான தொழிற்சங்கவாதி எம். சுகுமாரன் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக அளித்த செவ்வி. ノ
8 :- இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தற்போதைய தலைவர் அண்மையில் பத்திரிகைப்பேட்டி ஒன்றில், யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தல் வேண்டும் என்றும், தீர்வுப்பொதியில் இனப்பிரச்சனையைத்தீர்க்கக் கூடிய அம்சங்கள் இல் ைஎன்றும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தங்கள் சுயேச்சைக்குழு சார்பில் இது தொடர்பான தங்கள் கருத்து என்ன?
** :- இது தேர்தல்கால வாக்குறுதிகள் போல, வாய்ப்பேச்சளவிலேயே உள்ளது. கடந்த நான்கு தேசிய மாநாடுகளிலும் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என்று தீர்மானங் கொண்டுவரப்பட்டாலும் அவை வெற்றுத் தீர்மானங்களாக கோவைகளுக்குள் கிடக்கின்றன. தீவுப்பொதியில் எந்த சாதகமான அம்சமும் இல்லை என்று கூறியிருக்கும் இ. வ. ஊ. ச. தலைவர், இதுவரை காலமும் தீர்வுப்பொதியை ஆதரித்து அரசின் பிரசார மேடைகளிலும் முழங்கி வந்தமை யாவரும் அறிந்ததே! இந்நிலையில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இவர்கள் முன்வைத்துள்ள திடீர் கோஷமே இதுவாகும்.
8 :- யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்கிறீர்கள். ஒரு தொழிற்சங்கம் என்ற வகையில் எதனைப் பெரிதாகச் சாதித்திருக்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
- 34 - .

* :- வெறுமனே "யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்” என்று பிரேரணைகள் நிறைவேற்றுவதால் யுத்தம் நின்று விடுமா? யுத்தத்தைக் கொண்டு நடத்துவதில் வங்கிகள் மிகப்பாரிய பங்கை வகிக்கின்றன. யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விடுபவர்கள், யுத்தத்துக்கு பெருமளவு பணத்தை "சேவ்த நேஷன்” (SNP), "நாட்டைக்காப்போம்" என்ற நிதியத்துக்கு வங்கி ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பெற்று வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுத்தார்களா? யுத்தத்தை நடத்தத் தேவையான வளங்களைத் தங்குதடையின்றி வழங்கிக்கொண்டு யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமெனக் கோஷமிட்டு என்ன பிரயோசனம்?
8 - இலங்கை வங்கியின் நூற்றுக்கு மேற்பட்ட கிளைகள் முடப்பட உள்ளதாகவும் உலக வங்கியின் நடவடிக்கைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தலைவரும் இது தொடர்பாகக் குறிப்பிடுகையில் “அரசாங்கம் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக்” குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
99 - அரசாங்கம் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதாகக் கூறும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் இருவரும் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திட முன் அரசு, உலக வங்கி உயர் அதிகாரிகளுடனான இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு இது தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
மத்திய வங்கியாலும் உலக வங்கியாலும் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், தனியார் மயப்படுத்தப்படக்கூடிய மிகச் சிறந்த நிறுவனம் இலங்கை வங்கி தான் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான ஒப்பந்தம் ஒன்றிலேயே 16.07.98 அன்று இலங்கை வங்கி நிர்வாகிகளும் அரசாங்கப் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். இவ் ஒப்பந்தம் கைச்சாத்தாக முன் இது தொடர்பில் மறு தரப்பினருடன் உரையாடி இதன் விபரங்களை அறிந்திருந்த போதும் 1998 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற நான்காவது தேசிய மாநாட்டில் இது தொடர்பான எந்த விபரங்களையும் தெரிவிக்காமல் அங்கத்தவர்களை முற்போக்கு அணித் தலைவர்கள் ஏமாற்றி உள்ளனர். மேலும் தனியார் மயப்படுத்தலுக்கெதிரான தீர்மானங்களைக்கூட இவ் ஒப்பந்தம் தொடர்பாக நன்கு தெரிந்தும் தெரியாதவர்கள் போல இதே தலைவர்கள் எடுத்திருந்தனர்.
- 35

Page 25
27.09.98 அன்று திகதியிட்ட சுற்றறிக்கை மூலம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சுயேச்சைக்குழு அங்கத்தவர்களுக்கு இவ் ஒப்பந்தத்தின் பாரதூரத் தன்மை குறித்துவிளக்கப்பட்டது. எனினும் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம் சம்பந்தமாக ஊழியர்களுக்கு அறியத்தரும் எந்த சுற்றறிக்கையையும் விடுக்காது வங்கி ஊழியர் சங்கப் பதவிகளை வகிக்கும் முற்போக்கு அணியினர் ஏமாற்றி விட்டார்கள்.
8 :- அப்படியானால் சுயேச்சைக்குழு பதவிக்கு வரும் பட்சத்தில், இவ் வங்கிக்கிளைகள் முடப்படுவது தொடர்பிலும் தனியார் மயமாக்கல் தொடர்பிலும் என்ன நடவடிக்கைகளை எடுப்பீர்கள்? ஒப்பந்தம் ஏலவே கைச்சாத்தாகிவிட்ட நிலையில் இனி எதனைச் சாதிக்கமுடியும்?
* :- இதற்குரிய நடவடிக்கைகளை ஏலவே ஆரம்பித்துவிட்டோம். இலங்கை முழுவதுமுள்ள பிரதேச சபைகள் மாகாண சபைகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக இதன் பாதிப்பை முழுநாட்டு மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துக்கூற நடவடிக்கை எடுத்துள்ளோம். 1990 ஆம் ஆண்டு பிரதி நிதியமைச்சர் ஹரல்ட் ஹேரத் இலங்கை வங்கியும் மக்கள் வங்கியும் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்த பின்னரும் 1992 ஆம் ஆண்டு பிரதம மந்திரியும் நிதியமைச்சருமான டி.பி. விஜேதுங்க இவ்விரு வங்கிகளும் வங்குரோத்தாகி விட்டதாகவும் இவை ஒன்றில் இழுத்து மூடப்பட வேண்டும் அல்லது தனியார் மயப்படுத்தப்படவேண்டும் என்று கூறிய பின்னரும் அன்று பதவியிலிருந்த சுயேச்சைக் குழுவினர் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து இவ்வங்கிகளை தனியார் மயமாக்கலிலிருந்து பாதுகாத்ததுடன் சர்வதேச தரத்துக்கு இவ்வங்கிகளை உயர்த்துவதற்கான நிதி நிலை மைகளையும் அரசிடமிருந்து ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அதே போல மீண்டும் இவ்ஒப்பந்தத்தைத் தவிர்ப்பதற்கான முன் முயற்சிகளை எடுப்போம். நாட்டு மக்களே இவ் அரச வங்கிகளின் உரிமையாளர்கள். எனவே மக்களை ஒன்றிணைத்து ஜனநாயக வழியில் இவ் ஒப்பந்தத்தை முறியடிப்போம். மக்களினதும் ஊழியர்களினதும் நலனுக்காகத்தான் ஒப்பந்தங்களே தவிர உலக வங்கிக்காகவோ வேறு எவருக்காகவோ அல்ல. அரசுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் பலவுமே இன்று செயலற்றுப் போகச் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் சக்தியினால் இவ் ஒப்பந்தத்தை முறியடிப்பது கஷ்டமல்ல. 131 கிளைகள் மூட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிராக மட்டுமல்ல ஒரு கிளையாவது
-36 -

மூடக்கூடாது என்று பிரேரணையை முன்னெடுத்துச் சென்று போராடுவோம். உலகவங்கியாலோ சர்வதேச நாணய நிதியத்தாலோ அரசாலோ, ஊழியர்களினதும் மக்களினதும் பலத்தை மீறித் தனியார் மயமாக்கலை மேற்கொள்ள முடியாதென்ற பூரண நம்பிக்கை எனக்கு உண்டு. அதனை நாம் சாதித்துக் காட்டுவோம். முன்னரும் இதனைச் சாதித்திருக்கிறோம்.
0 - எதிர்வரும் தேர்தல்கள் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
* :- முற்போக்கு அணி வங்கி ஊழியர்களுக்குப் பல விடயங்களை ஒளித்தும் மறைத்தும் அவர்கள் நலன்களைப் பாதுகாக்கத் தவறியதால் செல்வாக்கிழந்து தோல்வியைத் தழுவுகின்ற நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காகவே இப்படியான திடீர் முழக்கங்களை அதாவது போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற கோஷங்களை முன் வைக்கின்றனர். மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்நடவடிக்கைகளைச் சிறுபான்மை இன உறுப்பினர்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள் . எனவே இத்தேர்தல்களில் நாம் நிச்சயம் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
எப்படியாயினும் தேர்தலின் பின் அனைவரும் ஒன்று சேர்ந்து வங்கி ஊழியர்களினதும் நாட்டு மக்களினதும் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்கப் பாடுபடவேண்டுமென்பதே எம் அனைவரினதும் கோரிக்கையும் விருப்பமுமாகும்.
(இலங்கை வங்கிக் கிளைகளிடையேநடைபெற்ற தேர்தல்களில்
சுயேச்சைக்குழு வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது)
Aển
- 37

Page 26

எழு குரல்களின் ஏழ்வர்
"'?'*^းညှိနှီး။
LOUIS JITyrif திரு.வை.சிவசுப்பிரமணியம் சு.து.ஷண்முகநாதக்குருக்கள் (Jш61ії)
திரு.வேல்,அமுதலிங்கம் (வேல்அமுதன்)
தோழர்.எம்.சுகுமாரன்

Page 27


Page 28
இந்நூலாசி
*,
கொழும்பு சட்டக்கல்லூரி இறுதியாக சமூக ஈடுபாடு அளப்பரியது. ச தலைவராகக் கடமையாற்றுவதுடன் பதக்கங்களை வென்றிருக்கின்றார்
கவியரங்குகள் பலவற்றிலும் கவிதைகளைப் படைத்திருக்கும் இ கவிதைத் தொகுப்பு இணையத்தில்
பல பரிசுகளைப் பெற்று பலராலும் என்ற நாடகம் உட்பட பல அ
இயக்கியுள்ள இவர் சிறந்தவோர்
தேசிய தொலைக்காட்சியில் பங்குபற்றியுள்ளதுடன் 'தினக்குரல் அரசியல் விடயங்கள் பற்றிய உண
இவரின் கன்னி வெளியீடாக "எ வெளிவருகின்றது. மேலும் பல கா தமிழுலகம் எதிர்பார்க்கலாம்.
 

景
ரியர் பற்றி.
சுவர்ணராஜா நிலக்க்ஷன் யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண் டவர். இளம் பராயக் கல்வியைக் குரும்பசிட்டி பரமானந்தர் வித்தியாலயத்திலும் பிணி னர் யாழ்ப் பானம் பரியோவானி கல்லூரியிலும் தொடர்ந்து கொழும்பு றோயல் கல்லூரியிலும் பெறறுக் கொண்டார்.
ண்டு மாணவரான இவரின் கலை, இலக்கிய, ட்டக் கல்லூரி தமிழ் விவாத அணியின் ன் பல்வேறு பேச்சுப் போட்டிகனிலும் தங்கப்
கலந்து கொண்டு உணர்வு பூர்வமான வரின் "நெஞ்சத்து நினைவுகள்" என்னும்
வெளிவந்துள்ளது.
பராட்டப்பெற்ற "கண்னிரண்டும் விற்று” அரசியல், சமூக நாடகங்களையும் எழுதி
நடிகரும் ஆவார்.
அரசியல் விமர்சன நிகழ்ச்சிகளில் ஸ்" பத்திரிகையில் கலை, இலக்கிய, சமூக, ர்வலைகளைத் தீவிரமாக எழுதி வருகின்றார்.
ழகுரல்கள்’ எனும் இச்செவ்வித் தொகுப்பு த்திரமான படைப்புக்களை இவரிடமிருந்து
க .க -உதயகுமார்
ஆசிரியர், புனிதபேதுரு கல்லூரி,
3.1999