கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்

Page 1


Page 2


Page 3

წჭაბჭ
。"リア、クー تک <ق

Page 4


Page 5

எங்கள் பாரதியார்
ஆய்வும் தொகுப்பும் : t தமிழ்மணி Lonsorn'' ( இலங்கை )
பதிப்பாசிரியர் : இலக்கியச் சிந்தனாமணி ல்ேனா தமிழ்வாணன், எம்.ஏ.
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447, 4, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. ஃபோன் 4342926. ஃபேக்ஸ் : 044 - 4346082.

Page 6
நூல் விபரம்
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு பதிப்பு விபரம்
உரிமை
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
நூலின் விலை
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம்
வெளியிட்டோர்
இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்
தமிழ்மணி மானா தமிழ்
1997
முதல் பதிப்பு
மணிமேகலைப் பிரசுரம்
11.2 கி.கி
கிரெளன் சைஸ் 12x18 செமீ
10 புள்ளி
88 பக்கங்கள்
e5. 17.00
எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர் . ஜோதி ஆப்ஸெட் சென்னை-14
தையல்
மணிமேகலைப் பிரசுரம் சென்னை-17.

ബയത - -
جی ـــــــــــــــ سب سے ح~~~~--سحصہ۔ سلسے
به حساحه ح نه به نیتز
っーて *Aత్త e. :ܢܔܒܕܐ (ஒரு வித்தியாசிமானபிறந்தநாள்புரித)
ーアーエg -------------ه -- ---- ‘எங்கள் பாரதியார் இன்று இருந்தால் வூயூது 15 ! 1882, டிசம்பர் 11ல் அவர் பிறப்பு. அதைக் கொண்டாட இந்த ஆண்டு இறுதி வரையில் அவகாசம் இருக்கிறது.
ஆனால் நினைக்க மறந்த நெஞ்சங்கள் நிறைய இருக்கும் பொழுது கொண்டாடக் கொஞ்சப்பேர் தான் தேறுவார்கள்.
எங்கள் பதிப்பகம் அந்தச் சிறு எண்ணிக்கையில் ஒன்றாக இருக்க விரும்பி இந்த நூலை பிறந்தநாள் பரிசாக வழங்குகிறது.
சற்று வித்தியாசமான பரிசு பாடல் தொகுப்போ, பாட்டு ஆராய்ச்சியாகவோ அல்லாமல், ஆறே ஆறு ஆண்டுகளில் அறுபதாண்டு இதழியல் சாதனை புரிந்ததை விளக்கும் ஒரு முயற்சி
ஒரு மகாகவி, ஒரு மாபெரும் இதழாளராகவும் இருந்திருக் கிறாரே என்ற வித்தியாசமான பார்வை.
அந்தவகையில், எங்களுக்கு உதவக்கூடிய எழுத்தாளர் இலங்கை மானா’ என்று நினைத்தோம். இவரிடம் உள்ள ஒரு தனிச்சிறப்பு, எந்தக் கன மானதையும் கைக்கு இலகுவாகத் தூக்க வைத்து விடுவார். தூக்கம் வராதபடி பார்த்துக் கொள்வார்
இனி, பக்கங்களைப் புரட்டுங்கள். ஒத்துக்கொள்வீர்கள்.
-லேனா தமிழ்வாணன் 14-04-1997 சித்திரைப்புத்தாண்டு - ஈஸ்வர

Page 7
0இந்தியா(சென்னை)
போலபாரதா (சென்னை)
இந்தியா’ (புதுவை)
விெஜயா’ (புதுவை)
ܢܠ
'ேசுதேச மித்திரன்(சென்னை)
சேக்கரவர்த்தினி (சென்னை)
1904, நவம்பர் மத்தியிலிருந்து 1906 ஆகஸ்ட் இறுதிவரை. துணை ஆசிரியர். (ஈராண்டுக்கு இரு மாதங்கள் குறைவு)
1905, ஆகஸ்ட், ஆசிரியர். (ஓராண்டும் ஒருமாதமும்)
1906, Gun. ஆசிரியர்.
1906, நவம்பர். ஆசிரியர்.
1908, அக்டோபர். ஆசிரியர்
1909, செப்டம்பர்
சிரியர். لـ راگے
 

so “கர்மயோகி (புதுவை)
தேர்மம் (புதுவை)
போலபாரதா (புதுவை)
சூரியோதயம் (புதுவை)
19'சுதேசமித்திரன்’ (சென்னை)
1910, ஜனவரி
ஆசிரியர்.
1910, ஜனவரி,
ஆசிரியர்.
1910. (எந்த மாதம் என்பது
ஆய்வுக்குரியது)
ஆசிரியர்.
1910. (எந்த மாதம் என்பது ஆய்வுக்குரியது)
ஆசிரியர்
1920 நவம்பர்
துணை ஆசிரியர்.

Page 8
  

Page 9
  

Page 10
o : ( )
--------------------------------------------------- *玖
圈!|- , ! |-|×
ae|-|-|- |-|--- ■■■T---------|- ( )|× ( )|- -|-啊--| 「 「|- :· ·......f)|-----sae!-------------------------------- **): |-|×|- -----::::::| ---- ! ±『T-T|- |--------|× ± ≠ ≠ ≠ ≠ |-sae.----|-|-■|-- - - -.|-*-|--------
- - -默-!-----
。 -- - - - ----■
 
 
 
 
 
 

Lilirsı'nırlı rit:44
mm mm
Pinilai ra I FI LMI i . Li - L*. 4, IJI TF — fi L. B*" iHt բույկի - ?+ pri
LLL LLLLTTT S S AALLTTS L TAAA AAAA A AAAA ATSS
ந்தியா
சனிக்கிழமைதோறும் வெவயாகும்
tttSLA Ate T tLLt A AA eSLLLLSAS TLTTTTTTTA AAA
". . . . === + || ##|="#" = :=
TAALA LAALeTLAAMAT TAL MELS L S LALAALLLLLAL AM LLTLT TLS LALkMT MLMLL CMTLeLLkLkLA
s - - ட் KS S S LL LLLLL LL LLLLSL L L L LS LLSLLLL S MT LLSAS SALATLA T AA T TLLLLL فید نق#ں۔
. . . . . . . Frg - it

Page 11
ஆங்கிலேயர்கள் வருஷத்துக்கு 45 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து
உறிஞ்சி விடுகின்றனர்! (8-9-1906 ல் "இந்தியா’ பத்திரிகையில் வெளியான கார்ட்டூன்) (-ப.ர்)
 


Page 12
பின்னிணைப்பு எண்: 32 விளக்கம் : ப. 35)
ዄቋጃ‛ክ የ፶፰*..
a. ళీ
a 1 ينز، ومن خن :
'. . ."له سبع ه " * * * བཙགས་ , з క్ష్ష్ట్రా
蔷 ፷ዳwኻ፧ ES * ** ** @還リS リ
苓火
ଝମ୍ପ n“. سدسه. Arr3 મ૮ . C'Æ fl (g . ... . . Ya' : franaw sa る料リ%グダと交リ క్ష్యీప్టాప్టన్లెఫ్లక్ష & بتسی
e ". هر؟
لا ؟. 畿 V
.. w:'.
he w{l} A highly ... ... g. Wve kan anta the tal faneer.
of the New Movement 66 'rho spiritual faalsof h**: , Ney stovesent ... s. the Yet Bಲಿ'... ..: ji The olú nr«ler changerti o . şte:tlık İı:3ça to new .ܪ .ܐ National terresentation in . . . !iነ፡፥ia . . . 8s at 8 as ... ha
به: . . , :: htv امنا)؛ “፤ኳ ፣ ::\ ~ዃ ክ '{hዮ Nኮነ!ሶwጻ' Avዮaኳ¢ኅi •ã istuክ .
s
or ile *1 lor grass . · · · ჩ* ? 'teal sitely, با ، ، ، ، ... , f۹۵ 'e is a lar literal tyre... ... 4
Tilvikel i tot the yon to : :S 3ლუჯ3\ჭ|| 1 "ჯამბულზ ბt \virit To .. '';წ||||}}, {{k; я
阁 يهية リ幸\至 Ptრstlჯო ” ... „... ... "ኗኛ;
* از: ܕ݁ܶܐܙ،)܉ ܐܶ... .. , rw ክ‛ቦl}!ነא 14rg $.ל. 方\ ;تب N7, ',
ኳ፤atá ... � ト。
ky Nita Altis zitorial Notc . "... „ ia. } }
· ·.. ጳቧ ክኋ. ! '” '
3y S't Piriiti: And tiensa a Mk6r & Min, : జాకుజదళాక్షాణాrrరాజా శాr .ܝܗܿ܀ > -ܝ̈ܝܗܗܝܼܪ ***ܐ2 - ܀ܬܿ ܙ ܪܚܝܿܚܝ̈ܝܪ* ܫܢܝܐ܇ܫrܝܫ ܕ݁ܬ݁ܐ܆܀
. a SLLALLALAALMLSLYLLLLLL0LLLLLLLLTA LLL0LYLLLLLzLL SLLSLLLALALLAALLLLLASALLSLLGLALLS SASEE 0MAASLALALAA AAAAALAEMESLLLLLAALTA S LLLSAAAA LLSLLLASLLALLYLALALLS
4.
பாலபாரத ~மேலட்டை (ஜனவரி, 1908)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ነ
ነ ---
r Ma c܂ ܕܠܐ
199 CC 853. Registered rvz. 7o.
r-* is ré6ox-r-s
چھٹقييمه
rease عـــــــــیہ
sys 3- ==2= O
ܠܐܲܐܼܵ
坠
魯
{ LLLLYLLLLLLLS LLLL LSL 0LEL0E0 LLLLS SLLLLLS S LL0L0LSL 0S LLLLLLLLYY つり O Yo Wesse 4 ***
} W6. I
MAR&H en 9 ce
This Riparier 领 The Decadence op uveps s
he shadow and the sols.
stance of the gangposs it What to sube gela
, , Oerales
rhdia yn gosb aedaho
Wards Marapa Pia XF St Pas 7heus p Patriebsfism w
馬 ---.حــــــــــــــــــ-.ա. ,محسيستم 2
M e o Ethtes es the Carnopsis
spie thauhts for the Yowns At
TRe Provni situshtar
A est ta per tria
பாலபாரத ~மேலட்டை (மார்ச், 1908)

Page 13
尊 gallas, ar...*onarÜu arar : 33 da.
feesdattaa, urt atë, MAI T4
ra-aras -- Bass Sarov riss. کtس مشate - M.sassass-u farses
is ideawanatase w , ganap sa , جبهشتم قومی و همه نوین sås' iliwn* så १३ kagus sees f': 'بیوہجولائ� جsم=بوجعت نہ
' r *w --8am--awasawww.
இந்தியன் ப்ரின் .ர்ஸ்ள ஜென்ஸி சென்னை
Å Roen to Printersika egitality el porlatintorea'''
§ wdarafę stast- - loiglio, to-max types iisa. å! *zyktiwiwiti
split tigil sa Pisa a smanisas ! * KaMa fiska are fee · o 's' on-leriško jo s glors :
im. łMes traese, iuko,° * ***?storio di Bimaro
Stationery. We fi tistra ssir , 14:t*riala ke is stro
Apply tes : 'hodin Frientors’ Agiunser ca. # *apidas lez:
'. kairęs.
ser ta hak P. MAE neyGo, Industriak
ls Hسج asa, s
lğ

Page 14
/
ஆரிய சர்மம், பாபர் ATTTTTTL LTtTTLTS TATATTTLLLLLLLLS LLLLLLTTTTTTTS LLLLkLLLLSL சங்கர், இராஜாங்க் விநேரங்க்ள் முதல் அவற்திை யெவரராம பற்றி
شوفه به لاه ஒர் மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை,
மார், கூகி. சுப்பிரமணியபாரதி. பத்திராநிபர்.
Ա* :(சஞ்சிகை اماتونه ، புதுகர் க. பொம்பு நிதிய ;یا n-h pm
و عقلا و
மஹாசக்திக்கு விண்ணப்பம்.
----- تة سراة بنو * "تيجة لها بالدعمعة بين 8 مارس
I'r draffu Lu a'r S? Hwyl Gristir. I'r
A III infri; . Fu - H", iku
سد الس، قال: لقد تدل R1 هو عاليا ومتا Fr : ŵr i alw'r fr-a-fi. * نه به تاسو .
asb. n. l. i artimi ---- Il-Fanfar sr | Fni rat il-griet Ir
ஆசிரி سل په ميړه تا م ز د م یا آیت یم
T v rd bürub parvu Limi ry',
 
 


Page 15
*ginosaesondgīņæ ovo oasis •øg igraeg Hiņas so qise șor,(podfil-qirao urwogę
oorsĩro sofy er sıgironog, s’n vres'?--
—丁人心浏洪源闵中八>十十
(、と好
ggsー*ら**・ミgs* ******ミ *ミs、、、3、『「う、:、ミrg
op to twoorno sé 常
 
 

„æg): vuo,ogtregorse) opgę „rago vrnigo» (oostựrodņ51 0160
* -æraeg seo ar æs' ** ''"haee !! !!

Page 16
விற்பனையாகும் இந்நூலாசிரியரின் இதர நூல்கள்!
முஸ்லிம் டைஜஸ்ட் (உலகளாவிய தகவல் மஞ்சரி). 24.00 பேனா முனையில் அரை நூற்றாண்டு. 26.00 (திருச்சி குலாம் ரசூலின் வாழ்க்கை வரலாறு)
என்னைக் கேளுங்கோ! 15.00
(திருச்சி குலாம் ரசூலின் பரபரப்பான கேள்வி - பதில்கள்) இளைய தலைமுறையினருக்கு -
இனிக்கும் இஸ்லாமியக் கதைகள் . 20.00 விற்பனையாகும் இதர நூல்கள்! * பாரதியாரின் நரல்கள் -
Books of Bharathi < மகாகவி பாரதியின் கவிதை வரிசை :- −
தெய்வீகப் பாடல்களும், தத்துவப் பாடல்களும் . 10.00 பாஞ்சாலி சபதம் -- 7.50 தனிப்பாடல்கள் 5.50 கண்ணன், கண்ணம்மா, குயில் பாட்டு. 6.25
மகாகவி பாரதியின் கதை வரிசை :- வேடிக்கைக் கதைகள் 11.25 தந்திரக் கதைகள் 7.25 சந்திரிகையின் கதை 8.50 சிறுகதைகள் 10.50
மகாகவி பாரதியின் கட்டுரை வரிசை :- கட்டுரைக் குவியல் 11.00 கட்டுரைப் புதையல் ... 9.25 கட்டுரைக் கோவை 9.50
மகாகவி பாரதியின் உரைநடை வரிசை :- தராசு 5.00 ஞானரதம் 6.25 சிந்தனைகள் 8.75 மொழிபெயர்ப்பு 10.00 பாரதி ஊட்டிய தேசிய உணர்வும் வீர உணர்வும். 9.00 பாரதி ஊட்டிய பக்தி உணர்வும் காதல் உணர்வும். 10.00
பாரதியும் பெண்மையும் 10.50
 

இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்
01. இலை மறைத்த கனி
"டத்திரிகைz/7ள7ர7கிய எங்களுக்கு விடுதலைப் பே7ர7ட்டத்திலிருந்து விலக்கு தருகிறீர்களே7, ந7ங்கன் திம/7கம் செம்/ ம7ட்டே/7ம் என்டது
ഉമ്മണ ഞെീഞ7/07?' "அப்ட்டியில்லை. டத்தி/?கைகளில் நீங்கள் பணி 4/7வதேதிய7க வாழ்க்கை த7ன்.அதன7ல்த7ன் விதிவிலக்கு/”
لر
மேலே படித்த கேள்வியைக் கேட்டவர்கள் இந்நூற்றாண்டின் துவக்ககால நிருபர்கள். பதில் அளித்தவர், பாரததேசப்பிதா மகாத்மா.

Page 17
28 இதழியல் முன்னோடி
அண்ணல் காந்தியிடமிருந்து அப்படிப் பதில் வருவதற்கு அவர் காலத்திலேயே வாழ்ந்த இதழாளனாகிய சுப்ரமண்யம் என்ற ஒரு சுப்பையாவும் காரணமாக இருந்திருக்கலாம்.
வரலாற்றைப் புரட்டுகையில் தென்படுகிறது!
அவனைப் பாட்டுக்காரன்’ என்று மட்டும் நினைத்தது சரிய்ல்ல என்பதும் புலப்படுகிறது.
அவன் முப்பத்தொன்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தான். தெரிந்த உண்மை.
ஐந்தாம் பிராயத்திலேயே, கணக்குச் சொல்லிக் கொடுத்த தந்தைக்குக் கவிதையிலே, “கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு” என அடுக்கி, கணக்கிலே விருப் பின்மையைத் தெரிவித்தவனும் அவனே!
அதுவும் அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால், அந்த மிகமிகக் குறுகிய வாழ்நாளுக்குள்ளே ஒரு தலைசிறந்த தமிழ் இதழாளனாகப் பறந்து திரிந்த செய்தி (சென்னை-புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை) பலரும் அறியாமல் போன ஒன்று
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்வுற்ற ஓர் அற்புதத்தை இப்பொழுது - அந்த நூற்றாண்டே அஸ்தமிக்க இன்னும் மூன்றே ஆண்டுகள் இருக்கிற பொழுதில் - பாட்டுக் காரன் மட்டுமல்லன் பாரதி' எனச் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது
அது, காலத்தின் கட்டாயம்

எங்கள் பாரதியார் 29
வெட்கம் பார்த்தால் வெளிச்சம் கிடைக்காது
அன்றைய அந்த சென்னப்பட்டணத்தின் வயது குறைந்த தமிழ் இதழாளன் அவன்.
இருபத்து இரண்டே வயது 'சுதேச மித்திரன்’ துணை ஆசிரியன்- 1904, நவம்பர்.
எற்கெனவே பாட்டுத்திறத்தால் 'பாரதியாகிப் போயிருந் தான் அவன் - பதினோராம் வயது. எட்டையபுரம்.
அவனை வெறும் கவிஞனாக மட்டும் பார்க்காத சுதேச மித்திரன்’ ஆசிரியர்,நிறுவனர்,ஜி.சுப்பிரமணிய அய்யர் (பின்னாளில் இதழியல் குரு), வடபகுதி காசியில், பதினைந்திலிருந்து பத்தொன்பது வரையில், உலக மகாகவிஞன் ஷெல்லியின் கவிதைகளைக் கரங்களில் ஏந்திக்கொண்டு சிட்டுக்குருவி யாகக் கங்கைக்கரையில் பறந்து திரிந்த ஓர் ஆங்கில அறிவாளி யாக எடைபோட்டுப் பார்த்தார். அவனுக்கு இந்தியும், சமஸ் கிருதமுங்கூட தெரிந்திருந்தது இதழ் வளர்ச்சிக்குத் துணை போகும் எனச் சரியாகக் கணக்கிட்டார்.
*இளசைச்சுப்பிரமணியன்’ தன் தொழிலை ஒரு யாகப் பணியாகவே ஆக்கிக்கொண்டான்.
وليك
அண்ணல் காந்தி நிருபர்களுக்குக் கூறிய பதிலை நூறு விழுக்காடு உண்மையாக்கினான் அவன்.
அவன் பிறந்ததிலிருந்து (1.12.1882). இறுதியாத்திரையில் இருபது பேரையே கண்டு மகிழ்ந்தது வரையில், இந்த 1997-ன் முற்பகுதியோடு கணக்கிட்டுப்பார்த்தால் ஒரு நூற்றாண்டும் பதினைந்து ஆண்டுகளும் ஆகியிருப்பது புரியும்,

Page 18
30 இதழியல் முன்னோடி
இதில், இதழாளன் பாரதியாகப் பரிணமித்தது பதினேழு ஆண்டுகள். (1904 - 1921).
இக்கணக்கிலுங்கூட சிறிது இடைவெளி உண்டு.
இதழாளர் என்ற வகையில் அவர் ஒரு மேகம் மறைத்த நிலா"
மகாகவி, மகா கவி' என்றே மகுடம் சூட்டி மதிமயங்கிப் போன கூட்டத்தினர் நாம்,
அவர், வாழ்நாளில் பெரும்பகுதியிலும் - இளம் வாலிபத்தை இருபது வரையில் சேர்க்காது பார்த்தால் - ஒரு சிறந்த தமிழ் இதழாளராக மிளிர்ந்துள்ள பேருண்மை புரியும்.
உண்மை சரியாக வெளிச்சமிடப்படவில்லை.
*இளசை என்ற பெயர் எட்டையபுரத்தைக்குறிக்கும். அங்கு உள்ளோர் தங்களை இப்படிக் குறித்துக்காட்டுவதில் பெருமை கொள்கின்றனர்.

எங்கள் பாரதியார் 31
02. ஒர் அபூர்வ இதழாளர்
“பத்திரிகையாளன் ஆவதற்கு தனியாக ஜர்னலிசம் கோர்ஸ் தேவையில்லை. மனத்தில் நினைத்ததையோ
அல்லது நேரில் பார்த்ததையோ அல்லது பிறர் சொல்லிக் கேட்டதையோ எளிய நடையில் எழுதத் தெரிந்தால் போதும்”
இது, தமிழ் இதழாளர்களின் தந்தை' எனப்படுகின்ற தினத் தந்தி சி.பா. ஆதித்தனாரின் வார்த்தைகள்.
இதையுங்கூட, இதழாளர் பாரதியை மனத்தில் வைத்துச் சொல்லியதாகக் கொள்ளலாம்.
பாரதி இதழியலில் அடியெடுத்து வைத்த அந்த 1904-ல் ஜர்னலிசம் கோர்ஸ்' என்பது தமிழ் இதழாளன் அறியாத சங்கதி.
மனத்தில் நினைத்தது -
நேரில் பார்த்தது -
பிறர் சொல்லிக் கேட்டது - என்ற ஆதித்தனாரது மூன்று மந்திரங்களுமே பாரதி வாழ்க்கையில் கைக்கொள்ளப்பட்டன.
அதே நேரத்தில்
அந்த இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம், பாரதத் தாயை ஆவேசப்படுத்திய காலகட்டம்.
எங்கெங்கு நோக்கினும் விடுதலை வேட்கை.

Page 19
32 இதழியல் முன்னோடி
ஆங்கில ஏகாதிபத்தியத்திலிருந்து அன்னை பாரதம் விடுதலை பெற வேண்டும் என்ற வெறி.
இதனை, மற்றவர்களையும்விட பன்மடங்கு எண்ணித்துடித்த இளைஞன் இளசைச்சுப்பிரமணியனே!
நேரில் கண்டு கரங்களைப் பிசைந்து நின்றவனும் அவனே! 7
பிறர் சொல்லக்கேட்டுப் பித்துப்பிடித்தவன் போலானவனும் அவனே!
ஆக, எந்தவிதமான முன் அனுபவம், பயிற்சி இல்லாமலேயே ஆரம்பித்தது இதழியல் வாழ்க்கை.
அதற்குத் தெளிவான பட்டியல் உள்ளது: O'சுதேசமித்திரன்’ (சென்னை) - 1904, நவம்பர் மத்தியில் இருந்து 1906, ஆகஸ்ட் இறுதிவரை துணை ஆசிரியர், (ஈராண்டுக்கு இரு மாதங்கள் குறைவு) O'சக்கரவர்த்தினி (சென்னை)-1905, ஆகஸ்ட், ஆசிரியர், (ஒராண்டும் ஒரு மாதமும்) O இந்தியா' (சென்னை) 1906, மே, ஆசிரியர். O 'பாலபாரதா (சென்னை) 1906, நவம்பர். ஆசிரியர். 9ே இந்தியா’ (புதுவை) 1908, அக்டோபர், ஆசிரியர் O விஜயா (புதுவை) - 1909, செப்டம்பர். ஆசிரியர். O “கர்மயோகி’ (புதுவை)
1910, ஜனவரி, ஆசிரியர்.
O தர்மம் (புதுவை) - 1910, பிப்ரவரி ஆசிரியர். O சூரியோதயம் (புதுவை) - 1910. ஆசிரியர். 0 பாலபாரதா (புதுவை) - 1910, ஆசிரியர்.
0 சுதேசமித்திரன் (சென்னை)- 1920,
துணை ஆசிரியர்

எங்கள் பாரதியார் 33
இந்த இதழ்களில், 'சுதேச மித்திரன்’ தினமும் காலையில் சென்னையில் தென்பட்டான். விஜயா’வோ மாலையில் மலர்ந்தாள், புதுச்சேரி என்ற புதுவையில்.
இந்தியா' - சூரியோதயம் - பாலபாரதா முதலியன வாராந்தம். (பின் 1907ல், பாலபாரதா மட்டும் மாத இதழ்).
‘சக்கரவர்த்தினி' - “கர்மயோகி' - 'தர்மம்' ஆகியன மாத இதழ்கள்.
1904-1905களில் ஒரே சமயத்தில் இரு இதழ்களில் கடமை புரிந்த இதழாளனாகப் பாரதி திகழ்ந்தான். (சுதேச மித்திரன்’ ‘சக்கரவர்த்தினி’ இரண்டும் ஒரே அச்சகத்திலிருந்து வந்ததும் வாய்ப்புக்கு ஒரு காரணம். என்றாலும் துணை ஏடு அன்று) இதே போல, இந்தியா' - விஜயா’ புதுவையிலிருந்து.
மேலும், தமிழ் இதழ் ஒன்றுக்கும், ஆங்கில இதழொன்றுக்கும் (இந்தியா’ - பாலபாரதா") ஒரேசமயத்தில் (1906) ஆசிரியராக இருந்த அபூர்வப்பிறவியும் அவனே. இரண்டுமே துணை ஏடுகள்.
பாரதிக்கு எந்த இதழையும் சொந்தமாக நடத்தக்கூடிய பொருளாதார பலம் இருக்கவில்லை. இறுதிக்காலங்களில் முயன்றும் முடியாமலாயிற்று.
அதேபோல, "ஆசிரியர்’ எனப் பகிரங்கப்படுத்திக் கொள்ளக் கூடிய பாக்கியத்தைக் கூட முழுதுமாகப் பெறக்கூடிய வாய்ப்பையும் அந்நிய ஆதிக்கம் அமுக்கி விட்டது.
அன்று யாரும் அறிந்த பகிரங்க ரகசியம் அது 'ஆரியர் - 'துணை ஆசிரியர் என்ற நிலைக்கு முன்னும் பின்னும் வெளி எழுத்தாளராகக் (Freelance Journalist) கூட அவர் பரிணமித்தது உண்டு. அவரது கனல் பறக்கும் கட்டுரைகளையும்,

Page 20
34 இதழியல் முன்னோடி
செய்திகளையும் தாங்கி 'விவேகபாநு’ - ‘சர்வ ஜனமித்திரன்’ (1904), ஞானபாநு' (1913 - 15) காமன்வீல் (1915) ஆகியவை வந்துள்ளன.
அவரை இலக்கியக்காரராகக் காட்டும் வகையில், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் இடம்பெற்ற இதழ்களையும் இங்கு நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்:
O “ஆர்யா (1915) O “மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் - (1915) 9ே 'நியூ இண்டியா (1916) O “பெண் கல்வி (1916)
O 'கலைமகள்' (1916)
0 ‘தேசபக்தன்' (1920) 9 கதா ரத்னகாரம் (1918-21)
★ ★ 次

எங்கள் பாரதியார் 35
03. சக்தி மிக்க சக்தி தாசன்'
“சொல்லடி சிவசக்தி! எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
இந்தவரிகள் வெறும் வார்த்தை ஜாலங்கள் அன்று என்பதைப் பாரதியைப் புரிந்தோர் அறிவர்.
என்றாலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் - 1904ல் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பதினேழரை ரூபாய் சம்பளத்தில் தமிழாசிரியராக இருந்த ஒருவர் சொன்னால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். w
ஆனால், சொல்லவே செய்தான் இளசைச்சுப்பிரமணியன் என்ற இளம் ஆசிரியன். அதனால்தான் மூன்றே மாதங்களில் சுடர் மிகு அறிவுடைய அவன் மதுரையிலிருந்து சென்னப்பட்டணம் கொண்டுபோகப்பட்டான். 'சுதேச மித்திரனில் ஒரு துணை ஆசிரியர் ஆனான்.
தொடக்கத்தில் மெய்ப்புத் திருத்தல் (Proof Reading) பணி. பின், செய்தி மொழிபெயர்த்தல். இன்றைக்கு நடக்கிறதே முழி பெயர்ப்புகள் அது, அந்த இருபத்தியிரண்டு வயது இளைஞனுக்கு கை வராத கலை
ஆங்கிலேய ஆட்சியின் அறிக்கைகள் என்ன, ராய்ட்டர் செய்திகள் என்ன, அனைத்தும் அத்துப்படி
காசி வாசத்தில் புடமிடப்பட்ட ஆங்கிலப்புலமை அற்புதமாக வேலை செய்தது.
ஆனால், மானுடம் பயனுற வாழ, தன்னை அர்ப்பணிக்கப் புறப்பட்ட அவனுக்குக் கிடைத்தது என்ன?

Page 21
36 இதழியல் முன்னோடி
விவரத்தை ஆராயுமுன் பாரதத்தாயின் நிலையையும் இரண்டே வார்த்தைகளில் தெரிவித்துவிட வேண்டும்.
அவள் அடிமை.
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அடிமை.
ஒரு வங்காளத்தை ஒர் ஆங்கிலேய வைஸ்ராய் - ராஜப் பிரதிநிதி - கர்ஸன் பிரபு” இரண்டாகப் பிரித்துத் துண்டாடிய பொழுது அங்கே மூண்ட எதிர்ப்பலை தென்னிந்திய வாசலையும் தொட்டது. W
இதழியல் துறையில் ஒருசில மாதங்களையே கழித்திருந்த இளசைச்சுப்பிரமணியன், தனக்கு மிகமிகப் பழக்கமான காசி நகரத்தில் காங்கிரஸின் எதிர்ப்புக் கூட்டம் நடந்தபொழுது ஆர்வமுடன் கலந்து கொண்டான். கூட்டம் முடிந்து சென்னை வந்து பேனாவைப் பிடித்தபொழுது, 'மித்திரன்’ இதழ்மித்திரனாக இல்லை!
அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாத நிறுவனத்தினர், “நன்றாகவே ராய்ட்டர் மொழிபெயர்ப்பு செய்” என்றே பணித்தனர்.
ஏமாற்றம், விரக்தி இரண்டும் ஒன்றுசேர வெறும் இயந்திர வேலையையே தொடர வேண்டியதாயிற்று.
அதிசயம் ஒன்றும் நடந்தது அவர் ஆத்திரப்பட்டு உடனே வெளியே வந்துவிடவில்லை!
கிட்டத்தட்ட ஓராண்டுக்குமேல் நின்று தாக்குப் பிடித்தார்!
*இவனைப்பற்றிய விளக்கமான குறிப்புகள் இன்னொரு
பக்கமொன்றில் தரப்பட்டுள்ளன.

எங்கள் பாரதியார் 37
அதற்குப்பிறகு நட்பு காத்து மிகமிக சுமூகமான சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு வெளியேறினார்.
நல்ல இதழாளராகத் தலையெடுத்த ஒரு தமிழ் இளைஞனை இரண்டாண்டுக்கும் குறைவான காலத்தில் இழந்தது 'சுதேச மித்திரன்’ (1904, நவம்பர் -1906, ஆகஸ்ட்).
அப்படி வெளியாவதற்கு ஓராண்டுக்கு முன்னர் (1905ஆகஸ்ட்) சக்கரவர்த்தினி' என்ற பெண்கள் மாத இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் பெற்று ஒரு நல்ல
பங்களிப்பை வழங்கினார்.
சென்னை, மறைமலையடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்படும் அதன் இதழ்களில் ஒன்றினைப் புரட்டினால், முதல் பக்கத்தில் முதலில் தெரிவது பெரிதாக "CHAKRAVARTINI" என்ற ஆங்கிலப்பதம் தான். அதை தொடர்ந்து, "A TAMIL MONTHLY DEVOTED TO THE ELEVATION OF INDIAN LADIES" GTGirp ஆங்கில வரிகள். இவற்றுக்குக்கீழே, சக்கரவர்த்தினி' எனத் தமிழில் போட்டு, ஆங்கிலத்தில் என்ன போட்டிருந்தாரோ அதிலிருந்து ஒரு சொல் மட்டும் வேறுபட்டு, “தமிழ்நாட்டு மாதர் களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்திரப் பத்திரிகை “எனக்குறிப்பு. அதாவது, ஆங்கிலத்தில், இந்திய மாதர்கள்’ என்றும், தமிழில் தமிழ்நாட்டு மாதர்கள்’ என்றும் உள்ளது. (காண்க : முன் பக்க பட அனுபந்தத்தில்)
இதே காலகட்டத்தில் இரங்கூன் - பர்மாவிலிருந்து வந்து கொண்டிருந்த 'சுதேச பரிபாலினி’ என்ற தமிழ் நாளேட்டில்,

Page 22
38 இதழியல் முன்னோடி
ஜனவரி சக்கரவர்த்தினிக்கு ஒரு மதிப்புரையும் வந்திருந்தது இப்படி:
“ஒவ்வொரு தடவையிலும் இதில் எழுதப்படும் வியாசங்கள் ஒன்றையொன்று மிஞ்சுபவையாக இருக்கின்றன.'
“இந்தப் பிரதியில் பத்திராதிபரால் (சி.சுப்பிரமணிய பாரதி) எழுதப்பட்டிருக்கும் பாரத குமாரிகள்' என்ற வியாஸம் படிப்போர் கருத்தைக் கவருந் தன்மையாயமைந்தி ருக்கிறது.'
“நம் ஜென்ம பூமியாகிய பரத கண்ட மாதாவின் துக்கத்தையும் அந்த துக்கத்திற்கான காரணங் களையும் பற்றி எழுதியிருப்பவை நேர்த்தியாக இருக்கின்றது”. ஆக, ‘சு.மி. யில் ஊன்றி எழுத முடியாதுபோன பேனா, பெண்களுக்காக வந்த இதழில் துள்ளி விளையாடிய தென்பது புரிகிறது.
“பென்மை யறிவோங்கப் பீடுயரும் பெண்மைதான் ஒண்மையுற வோங்கும் உலகு”
என்று பாரதி ஆக்கிய புதிய குறட்பாவும் இதழை அதிசயப்பட வைத்தது!
1995-ல் 8-வது உலகத்தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடாக வந்த முனைவர் பா. இறையரசனின் ஓர் ஆய்வு நூலில், பத்தாம் பக்கத்தில் இவ்விதழ்பற்றிச் சொல்லப்பட்டுள்ளது:

எங்கள் பாரதியார் 39
'.இளமை மணம், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம், வரதட்சணை, கைம்பெண் கொடுமை ஆகியவற்றைஎதிர்த்தும்,பெண்கல்வி,பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளியிட்டார். 'சுதேச மித்திரனில் எழுத முடியாத நீண்டகட்டுரை,கவிதை ஆகியவற்றை எழுதச் சக்கர வர்த்தினி பாரதிக்குப் பயன் பட்டது. ஆசிரியர் பொறுப்பில் பாரதி முழுமையாக ஈடுபட்டுப் பட்டறிவு பெறச் சக்கரவர்த்தினி உதவியது”.
உண்மைதான். முதன் முதலாக உலகுக்குப் பாரதியை இதழாசிரியராக அறிமுகப்டுத்திய பெருமையை சக்கரவர்த்தினி தான் பெறுகிறாள்.
ஆனால், அது எத்தனை காலத்திற்கு? ஒராண்டும் ஒரு மாதமுமே
இது, எம்மை ஆதங்கப்படச் செய்தாலும் அடுத்து அவர் எடுத்த விசுவரூபம் எப்படியெப்படி எல்லாமோ பரவசப்படுத்துகிறது.
★ ★ ★

Page 23
40 இதழியல் முன்னோடி
04. இலங்கை இந்து சாதனம் புகழ்ந்த இந்தியா
“எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்
93
என்றவன் பாரதி.
தன் எழுத்து தனி சக்தி வாய்ந்தது என்பதனை, சக்தியை உபாசித்த சக்திதாசன்’(புனைப்பெயர்களுள் ஒன்று) துல்லியமாக உணர்ந்திருந்தான்.
அதுமட்டுமல்ல, வேறொரு வகையிலும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டான்.
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” எனவும் சொல்லியிருக்கிறான்.
அவனதுநாட்டுப்பற்றும்,மொழிப்பற்றும்நாடறிந்தவை. அவன் தனி மனிதனைப் பற்றிச் சிந்தித்தான். சமுதாயக் கேடுகளைச் சாடினான். ஆன்மீகத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தான். மத ஒற்றுமையை வலியுறுத்தினான்' - என ஒரு கட்டுரையில் வலியுறுத்துகிறார் வழக்கறிஞர், இலக்கியச்சுடர், திரு. த. இராமலிங்கம்.
இப்படி, பாரதி துலங்குவதற்கு, அடிநாதமாக விளங்கியது ஓர் இந்தியா'
இங்கே, இந்தியா என்பது பாரதமல்ல. தமிழ் இதழ்! தன் சேவைக்கு மாத வேதனமாகப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்த தொகை ரூபாய் ஐம்பது

எங்கள் பாரதியார் 41
ஏன் அந்தப்பெயர் சூட்டப்பட்டதென்பதற்குப் பதில் தந்திருக் கிறான் பாரதி
“ஆதியிலே நமது பத்திரிகையைத் தொடங்கும் காலத்தில் இதற்கு 'வந்தே மாதரம்' என்று பெயர் வைத்து விடலாமென்று ஆலோசித்தோம். தேச மாதாவை வணங்குகிறேன்' என்ற கருத்துடைய மேற்படி மந்திரத்தை பெயராக வைத்திருப்பதைக் காட்டிலும், மாதாவின் பெயரையே நமது பத்திரிகைக்கு சூட்டி விடுதல் பொருத்தம் என்று பிறகு ஒரு யோசனையுண்டாயிற்று. அதற்கிணங்கவே நமது பத்திரிகைக்கு “இந்தியா' என்ற பரிசுத்த நாமம் அளிக்கப் பெற்றது."
(ஆனால், அவன் 'வந்தே மாதரம் என வைக்காவிட்டாலும் கல்கத்தாவிலே திலகர் கட்சியிலிருந்த விபன சந்திர பாலர் அந்தப் பெயரிலே இதழ் துவங்கி அரவிந்தரால் நடத்தத் தலைப்பட்டார். இதை அறிந்த பாரதி, உடனேயே, “மாதா (இந்தியத்தாய்) நன்கு ஆசீர்வதித்து நெடுங்காலம் பெரும் புகழுடன் வாழுமாறு அருள் புரிவாளாக” என வாழ்த்துக்கட்டுரை எழுதியதுண்டு).
தேசிய இதழாக தன்னை வரித்த இந்தியா', 4-05-1906ல் அறிமுகமானது. அப்பொழுதும், அதன் பின்னும் அவர் மறைமுக ஆசிரியர்'தான். (திரைக்குப் பின் நின்றியக்கும் நாடிக நெறி யாளருக்கு ஒப்பிடலாம்.)
இந்தியா வெளியான அந்த மே மாதத்தில், அவர் 'சுதேச மித்திரனிலும், சக்கரவர்த்தினியிலும் பணியாற்றிக் கொண்டு இருந்ததனால் அவ்விரண்டையும் விட்டு நீங்க சில மாதங்கள் பிடித்தன.
ஏற்கெனவே நாம் அறிமுகப்படுத்திக்கொண்ட முனைவர் பா. இறையரசன் தன் நூலின் பதினைந்தாம் பக்கத்தில்,

Page 24
42 இதழியல் முன்னோடி
“1906 நவம்பருக்கு முன் எப்போது இந்தியா’வில் பணி யேற்றார் என்பது ஆய்வுக்குரிய செய்தி” என்கிறார், அவரே மற்றொன்றும் சொல்கிறார்:
“சுதேச மித்திரன்’, ‘சக்கரவர்த்தினி ஆகிய இதழ் களிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் விலகி 1906 செப்டம்பர் மாதம் முதலாகப் பாரதி இந்தியா இதழில் ஆசிரியப் பொறுப்பேற்றார் எனக்கருத இடமிருக்கிறது”
இந்தியா' இதழுக்கு இரு பிறப்புகள் உண்டு.
ஒன்று : பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னப்பட்டணத்தில், 1906 - மே. மற்றது: ஃபிரெஞ்சுப் புதுச்சேரியில் (புதுவை). 1908-அக்டோபர்.
இந்தியா கட்டுரைகளைத் தொகுத்தோருள் ஒருவர் எட்டையபுரம், இளசை மணியன் என்ற அன்பர்,
"இந்திய விடுதலை இயக்கம் விரிந்து, விகசத்துப் பரவிய காலத்தில், இந்தியா வெளியிடப்பட்டதால் விடுதலை இயக்கத்தைப் பற்றிய பல விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. பாரதி அவ்வப்போது தேசிய இயக்கம் பற்றிக் குறிப்பாக அன்னாளில் வங்கத்தில் கொதித்தெழுந்த விடுதலைப் போர் பற்றி, மிக விரிவாக எழுதி உள்ளார். அதுமட்டு மல்லாமல், தேசிய கல்வி, தேசிய ஒருமைப்பாடு, சங்கீதம் மற்றும் நானாவித விஷயங்கள் பற்றியும் பாரதி விரிவாக எழுதியுள்ளார். இதில் மிகவும் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில் சமயம்

எங்கள் பாரதியார் 43
வாய்க்கும் பொழுதெல்லாம் ருஷயப்புரட்சி பற்றிய செய்திகளையும், கட்டுரைகளையும் பாரதி இந்தியா வில் வெளியிட்டார்”
என்கிறார். அவர், இன்னும் இரண்டைச் சேர்க்க மறந்தார் என நினைக்கிறேன். இந்தியாவில் இலக்கியம் தவறாத பகுதியாக இருந்தது. அதுபோலவே கைத் தொழிலும் விவசாயமும்.
அனைத்துடனும், முதல் தடவையாக அரசியல் கூடார்த்த சித்திரங்கள் (கார்ட்டுன்) வெளியான தென்னாட்டு முதல் தமிழ் இதழ் 'இந்தியாவே
இந்தக்கூடார்த்த சித்திரங்கள் ஏகாதிபத்தியவாதி களைப் பிழிந்தெடுத்தன., நையாண்டி மேளமாக ஒலித்தன. அவர்களுக்கு வால்பிடித்த இந்தியர்களைச் சாடின. சுதேசியத்தை வளர்த்தன. தேசப்பற்றை ஊக்குவித்தன.
இதோ, பாரதிதாசன் கூறுகிறார்:
“.படத்தை வெட்டி ஒட்டி வீட்டுச் சுவரில் தொங்கவிட்டு வைப்பார்கள். ஒவ்வொரு படமும் இங்கிலீஷ்காரனுக்கும் இந்தியனுக்கும் உள்ள சம்பந்தத்தை, இங்கிலீஷ்காரனிடம் இந்தியன் அனுபவிப்பதை குத்தலாக எடுத்துக்காட்டுவது தான் இப்பத்திரிகையிலேயே சுவையான பகுதி. அந்தச் சித்திரம் தான் முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று”.
பாரதி ஆய்வாளர்களுள் ஒருவரான திரு. பெ.சு.மணியின் வரிகள் இப்படிப் பேசுகின்றன:

Page 25
44 இதழியல் முன்னோடி
“.தமிழ் இதழ்களில் கேலிச்சித்திரங்கள்’ என்னும் தனி ஆய்வு வெளிவந்தால், அதில் பாரதியாரின் பங்களிப்பு ஒரு வரலாற்றுச் சாதனையாக விளங்கும். அதிலும், அரசியல் கேலிச் சித்திரம் பாரதியிட மிருந்தே தொடங்கியது என்னும் வரலாற்று உண்மையும் வெளிப்படும்”. (காண்க கார்ட்டூன் - ஆரம்பப்பக்கமொன்றில்) சித்திரங்கள் அப்படியென்றால், எழுத்துக்கள் எப்படி? ஒருபதச்சோறாகப் பார்ப்பதற்கு எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதில் தடுமாற்றம் யாருக்கும் வந்தே தீரும் !
இருந்தபோதிலும்‘இந்தியா' வெளியான ஆரம்ப ஆண்டாகிய 1906-ல், மாமன்னர் அக்பருக்கு விழா எடுக்க வேண்டுமெனப் பதித்த எழுத்துக்கள், பாரதி என்ற ஒரு தூய்மையான இதழாளனின் பங்களிப்பை அற்புதமாகப் படம்பிடித்துக்காட்டுகிறது.
எழுத்துக்களைக் காணுமுன் அதுபற்றியத் தகவல்: அப்பொழுது வட இந்தியாவின் பல பாகங்களிலும் சிவாஜிக்கு விழா எடுத்தார்கள். அதில் சில முஸ்லிம்களுக்கு வெறுப்பு, தன் இனத்திற்கு விரோதமானவனுக்கு விழாவா என்ற கோணத்தில் ஏற்பட்டது. இந்துக்களும் விட்டுக்கொடுக்கவில்லை. இரு இனமுமே வாதம் செய்து கொண்டார்கள். இத்தகைய ஒரு சூழலில் இந்தியா உண்மைகளை வெளிச்சமிட்டது. அது இன்றைக்கும் பொருந்தக் கூடியது.
இதழாளன் பாரதி அன்று, 1906 - ஜூன் 23ல் இப்படி எழுதினான்:
"இந்தியாவின் வருங்காலப்பெருமைக்கும், சிறப்புக்கும், இத்தேச ஜனங்களில் பெரும்பாலார்
ஹிந்துக்கள், மகமதியர் ★

எங்கள் பாரதியார் 45
எனஇரண்டுபகுதிப்பட்டுநிற்பதுபெரும் தடையாகவே இருக்கிற தென்பதை ஒளித்து வைத்து பிரயோஜன மில்லை. தென்னிந்திய கிராமாந்திரங்களிலே மகமதியர்களும், ஹிந்துக்களும் தமக்குள்ள வேறு பாட்டை மறந்து, மகமதியர்களும், ஹிந்து ஜன சமூகத்தில் ஒரு கிளையாராகவே கருதப்படு கிறார்கள் என்பது வாஸ்தவமென்றபோதிலும், பொதுவாக இம்மாகாணத்திலும் வட இந்தியா விலுள்ள முக்கிய நகரங்களில் ஹிந்து, மகமதியர்கள் ஒருவிதமான பரஸ்பர துவேஷம்கொண்டவர் களாகவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் மகமதிய ஆட்சியில் ஏற்பட்டதுவேஷமே.
“இந்த விரோதங்களை நீக்கி இந்த இரண்டு
ஜாதியாருக்குள்ளே சினேக உணர்ச்சியும், சகோதரப்
பான்மையும் ஏற்படுத்துவது இத்தேசாபிமானிகளின்
முக்கிய கடமையாகும், ஆனால் ஒரு நோயைத்
தீர்க்க விரும்புவோன் அந்த நோயே இல்லை யென்று பிரமாணம் செய்து விடுதல் மிகவும் சிறப்பான உபாயமில்லை.ஹிந்து, மகமதியருக்குள்ளேவிரோதங்
களைத்தீர்க்க விரும்புவோர், மேற்படி விரோதங்களே
இல்லையென்று சாதித்து விடுதல் சரியான
பாதையாக மாட்டாது. V
*மகமதியர் : இது தவறான பதம். இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவோர் முஸ்லிம்களே. மகமதியர் அல்லர். பாரதி பின்னர் வருந்தியதுண்டு.
*இம்மாகாணத்திலும்: பாரதி இப்படிக் குறித்திருப்பது அன்றைய சென்னை மாகாணத்தைக் கருத்தில் கொண்டே. முழுத்தமிழ் நாடுமாகாது.

Page 26
46 W இதழியல் முன்னோடி
“கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும் நடக்கு மானால் எதிரிக்கு எப்பொழுதும் சந்தோஷமே யல்லவா? இதற்காக, நம்மவர்கள் பெரும்பாடுபட்டு ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் இடையே யுள்ள பகைமையாகிய கழியை கடக்க முயல வேண்டும்.
“பாரதமாதாவின் வயிற்றிற் பிறந்த சகோதரர் என நமக்குள் சிறு சச்சரவுகளை கிஞ்சித்தேனும் நினையாமல் நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்றுசேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது மகமதிய சகோதரர்களுக்கு காரியத்தில்காட்ட அக்பர் போன்ற மகமதிய மகான் களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு முழு நம்பிக்கையும் ஏற்படும்”
அன்றைய இந்த எழுத்துக்களுக்கு இன்றைய வயது தொண்ணுாறு. இப்பொழுதும் இத்தகைய எழுத்துக்களின் அவசியம் பரந்த பாரதத்தில் மிகவாகத் தேவைப்படுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது
மிக முக்கியமாக அமைதிப்பூங்காவான தமிழ் நாட்டிற்கும் அவசயமாகிவிட்டதே!
இந்தியா' வார இதழ் ஆரம்பித்த நாளிலிருந்து காங்கிரஸ்
கொள்கைகளுக்கும் இயக்கத்திற்கும் துணை போனது. அப்பொழுது கட்சியில் ஒரு புதிய போக்கும் சிந்தனையும் வேண்டு

எங்கள் பாரதியார் 47
மென்று கிளர்ந்தவர்களுள் லோகமான்யத் திலகர் முதன்மை யானவர். அவரைச் சார்ந்தோர்’ ‘புதுக்கட்சியினர்’ என வர்ணிக்கப்பட்டனர். அதில் பாரதியும் அடையாளம் காணப்பட்டார் அதன் குரலாகவே இந்தியாவும் இயங்கத்தொடங்கியது.
ஆனால், அவரை இதழாளனாக ஆசி வழங்கி வளர்த்துவிட்ட 'சுதேசமித்திரன்’ இந்தப் புதுக்கட்சியைப்பற்றி மெளனம் சாதித்த பொழுது ,
'சுதேசமித்திரன் பத்திரதிபர் இந்தப் புதியகட்சி ஏற்பட்ட நாள் முதலாக இதைப்பற்றி ஒன்றும் எழுதாமல்சாமர்த்தியமாக இருந்து வருகிறார்”
என்று, 1906, அக்டோபர் 13ஆம் இதழில் - அதாவது, வார ஏடு தொடங்கிய அடுத்தடுத்த மாதங்களில் - பேனாவை ஊன்றிப் பிடித்தார்!
அன்றைய இளைய தலைமுறை இதழாளன் சுப்பிரமணிய பாரதியிடம் முற்றும் முழுதுமாக வியாபித்திருந்தது தீவிரமான சுதந்திரப் போராட்ட உணர்வும், பழைய முறைமைகளிலே வெறுப்பு
DT(öLD.
ஆனால் சாத்வீகவாதியாக, கொலை மார்க்கத்தை விடுதலைக்குக் கருவியாகப் பாவிக்க விரும்பாத தமிழ் எழுத்தாளனாக இதழ் நடத்தினான்.
நூற்றாண்டு கண்ட இலங்கை மாதமிருமுறை இதழான
“இந்துசாதனம்’ (1889) தனது 1906 ஆம் ஆண்டின் பிரதி ஒன்றில் இந்தியாவுக்கு சூட்டியுள்ள புகழாரம் பின்வருமாறு:
*புதுக்கட்சியினர் : இன்றைக்கும் இதே காட்சி காங்கிரஸில்

Page 27
48 இதழியல் முன்னோடி
இந்தியா - இது சென்னை பிரமவாதின் அச்சியந்திர சாலையில் வாரத்துக்கொரு முறை 16 பக்கங்கள் கொண்ட 'கிறெளவ்ன் போலியோ சயிஸ் காகிதத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும் ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிகை, பெரிய இங்கிலீஷ் பத்திரிகைகளில் என்னென்ன விஷயங்கள் எழுதப்படுகின்றனவோ அந்த விஷயங்களெல்லாம் இந்தப் பத்திரி கையிலும் எழுதப்பட்டு வருகின்றன. இதனை வாசிப் போருக்கு இராஜாங்க விஷயங்களில் நல்லறிவும் தேசாபிமானமும் உண்டாகும்.'
அவர், பேனாமுனையில் ஆற்றிய அரசியல் பணியை விளக்கிட தனியாகவே ஓர் ஆய்வு அவசியம்.
ஆகவே, இங்கு நாம், அரசியல் எழுத்துக்களைத் தொடாமல் வேறு பல விஷயங்களில் முத்துக்குளித்தால் வைரமுத்துக்கள் பலவற்றைப் பார்த்துப் பரவசமடையலாம். எனினும், அங் கொன்றும், இங்கொன்றும் ஒரு துளி அளவு இங்கே!
மனித நேயம்
லார்டு கர்ஸன் இந்தப்பெயரை முன்னும் ஒரு தடவை குறித்துள்ளேன். அக்காலத்தில் இந்திய மக்களை வெறிகொள்ளச் செய்த பெயர். 1899 - 1905களில், பாரதத்தின் பிரிட்டிஷ் ராஜப் பிரதிநிதி (வைஸ்ராய்). ஒவ்வொரு இந்தியக் குடிமகன் நெஞ்சத் தையும் குத்திக்கிழித்த வங்கப் பிரிவினைக்குக் காரணமாக யிருந்த மனிதன். அந்தக் கொடுரனின் போக்கினாலேயே “வந்தே மாதரம்” பாடல் தேசிய இயக்ககீதமாகப் பட்டிதொட்டி எங்கிலும் ஒலித்தது. இவன், பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சிக்காரன்.
இந்த மனிதனுக்கும் ஒரு மாபெரும் துயரம் ஏற்பட்டது. அவனது மனைவியின் மரணம் அது. அப்பொழுது கல்கத்தாவில்

எங்கள் பாரதியார் 49
தேசிய இயக்கத்திற்கு வலிமை சேர்த்த அமிர்த பஜார் பத்ரிகா' மரணத்திற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் பாணியில் ‘தெய்வத் தண்டனை' என வர்ணித்தது.
இதைப் படித்த பாரதியின் பேனா, 1906 - ஜூலை 28ம் இதழில் கனல் கக்கியது. பொங்கி எழுந்தது.
“தேசாபிமானத்திற்கும் நல்லறிவுக்கும் பெயர் படைத்ததாகிய கல்கத்தா 'அமிர்த பஜார் பத்திரி கையைப்பற்றி கண்டன வார்த்தை எழுதும்படி நேர்ந்து விட்டது பற்றி வருத்தமடைகிறோம். ஆனாலும் கூடப்பிறந்த சகோதரனாயிருந்தாலும் அவனுடைய குணங்களை மறைத்து வைப்பது அழகாக மாட்டாதல்லவா? லேடி கர்ஸன் சென்ற வாரம் இறந்து போய் விட்டதைப்பற்றி இப் பத்திரிகை எழுதி வரும் பொழுது இந்தியர்களை லார்டு கர்ஸன் கஷ்டப்படுத்தியதன் பொருட்டாக அவருக்கு இவ்வளவு பால்யத்தில் இவ்வளவு சிறந்த மனைவி இறந்து போய்விட்டது சரியான தெய்வ தண்டனையென்று கூறுகிறது. இது சிறிதேனும், கவுரவமற்ற மனிதர்கள் பேசுவது மாதிரியாக இருக்கிறதல்லவா? நமது பரம சத்ருவாக இருந்தபோதிலும் அவனுக்கு மனைவி இறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும் பொழுது நாம் அவன் செய்ததீமைகளை எடுத்துக் காட்டிசந்தோஷ மடைவது பேடித்தனமான செய்கை, லார்டு கர்ஸன் நமக்குச் செய்த தீமைகளின் பொருட்டு அவரை வேண்டிய மட்டும் கண்டனை புரியலாம். அவரைத் தக்கபடி சிஷை புரியாமல் நம்மை இம்சித்ததின் பொருட்டு மரியாதை செய்யும் பிரிட்டிஷ் கவர்ன்

Page 28
50 இதழியல் முன்னோடி
மெண்டாரை கண்டனை செய்து பேசலாம். அதை விட்டுவிட்டு, “ஏ.ஏ.லார்டு கர்ஸன் நீ என்னைத் தொந்தரவு செய்தாயல்லவா, அதற்காகத்தான் உன் மனைவி செத்துப் போனாள்” என்று குழந்தைத்தனமாக 'அமிருத பஜார் பேசுவது அதன் பெருமைக்கு முற்றிலும் விரோதமாகும்" இந்த எழுத்துக்கள் பற்றி ஆய்வாளர் பெ.க.மணி தன் நூலொன்றில் இவ்வாறு சிலாகித்திருப்பதும் அபிமானிகள் பார்வைக்கு:
“பாரதியாரின் இந்த விமர்சனம் மிக முக்கியமானது. பத்திரிகை ஆசிரியர் காட்டவேண்டிய, அரசியல் வேற்றுமைக்கு அப்பால், மனிதாபிமானத்தை பாரதியார் எடுத்துக்காட்டியது மிக முக்கியமானது”.
பத்திரிகை அடக்குமுறைக்கு எதிர்க்குரல்
இன்றைக்கு இதழியல் அடக்குமுறை பற்றி நிறையப் பேச்சுக்கள். குரலும் எழுப்புகிறோம். இளைய தலைமுறை இதழாளர்கள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுகிறார்கள். ஆங்கில ஏடுகளில், நிறையவே! இலங்கையில் சிங்கள இதழ்களும் சளைக்காமல் சாடுகின்றன.
இதிலுங்கூட தன் பங்களிப்பைச் செய்யத் தவறாத ஓர் இதழாளன் இளசை பாரதி.
இந்தியாவுக்கு ஓராண்டான சமயத்தில், லாகூரிலிருந்து வெளியான பஞ்சாபி மீது தொடுக்கப்பெற்ற அடக்குமுறை அவர் பேனாவுக்குள் அகப்பட்டுக்கொண்டது கனல் கக்கியது எழுது கோல். அதன் வழக்குகள் பற்றி விரிவாகவே எழுதினார்.
“பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களால் மக்கள் எழுச்சியே கூடுதலாகும்’ என்பது அவர் கொண்டிருந்த ஆணித்தரமான கருத்தாகும்.

எங்கள் பாரதியார் 51
ஹிந்தி மொழிக்குப் பச்சைக்கொடி
இன்று, தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு என்பது உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கு உறுதுணை நிற்கும் ஒன்று
அன்று, இவ்விடயத்தில் பாரதி எழுதிய எழுத்துக்களும் முடிவு களும் வித்தியாசனமானவை. இப்பொழுது அதிர்ச்சியைத் தரக் கூடியவை!
'இந்தியா வரத்தொடங்கிய சுமார் ஏழு மாதகாலத்தின்பின் 15.12.1906 ல் அப்படியொரு எழுத்துப் பிரசுரமாயிற்று
“இந்தப்பக்கத்திலே ஹிந்தி பாஷையிலிருந்து சில விஷயங்கள் எழுதி அதை மொழிபெயர்த்துக் கொண்டுவர வேண்டுமென்று எண்னம் கொண்டிருக் கிறோம். தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும், முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். இங்கிலீஷ் பாஷையே பொது மொழியாகிவிடக் கூடாதோயென்றால் அது அசாத்தியமும், மூடத் தனமுமான நினைப்பாகும். இங்கிலீஷ் பாஷை அன்னியர் உடையது. நமது நாட்டிற்குச் சொந்தமான தன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினர்களுக்கும் ஸ்திரமாகப் பதிந்துவிடும் இயற்கையுடையதன்று”
இப்படி இன்னும் பல வரிகளை எழுதிய பாரதி. ஹிந்திப் பக்க மென்று மூன்று பத்திகளை ஒதுக்கி, பிரதாபசிங் மஹாரானாவின் சரித்திரத்தை எழுதி 'ஹிந்திப்பாடம் நடத்த ஆரம்பித்தார்!
இந்த நூற்றாண்டின் ஆரம்பகாலத் தமிழ் மக்கள் இந்த மொழி கற்பித்தலை வரவேற்றார்களா என்பதையும், ஜீரணித் தார்களா என்பதையும் யாரும் ஆய்ந்ததாகத் தெரியவில்லை.

Page 29
52 இதழியல் முன்னோடி
இருந்தாலும், எங்கேயும் எந்தக்குரலும் எழும்ப வழி யில்லாமல், ஆங்கிலேயரை விரட்டிவிட்டுத் தான் மறுவேலை என்பது போல மக்கள் மனநிலை இருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, அன்றைய சூழ்நிலையில், வடபாரதத்த வருடன் ஓர் அன்புப்பாலம் அமைக்கவும், மனித நேயம் பேணவும் ஹிந்தி உதவும் என்ற கோணத்தில் பாரதி பலமாக சிந்தித்தி ருக்கவேண்டும். அவ்வாறே வாசகர்களையும் தூண்டியிருக்க வேண்டும்.
ஆனால், நூற்றாண்டின் இந்த இறுதிப் பொழுதுகளில் விசித்திரமான காட்சி தமிழகத்தில் உள்ளது!
அதாவது, ஹிந்திக்கு வெளியில் பலமான எதிர்ப்பு, உள்ளேயோ தங்கள் செல்வங்களுக்குக் கற்பிப்பு
நல்லவேளை பாரதி நம்மிடையே இல்லை!
அவன் காலத்தில் சூழ்நிலையைக்கருதி பாஷைப்பக்கம் என்று பாடம் நடத்தினாலும், தமிழ் மொழி இனிமை - தென்ற லுடன் பிறந்த பாஷை என்றெல்லாம் உணர்ச்சி பொங்க எழுதி, “தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என நெஞ்சு நிமிர்த்தி, மீசையை முறுக்கிவிட்டுப் பலதடவை சொன்னான். எழுதினான்.
"தென்றலுடன் பிறந்த தமிழ்மொழியின் இனிமையைப்பற்றி டாக்டர் ஜி.யு.போப் என்னும் புகழ்பெற்ற விற்பன்னர் கொண்டிருக்கும் மதிப்பைக் கண்டு மகிழத்தக்கதாக இருக் கின்றது. ஆங்கிலப் பெண்களின் இதழ்நயத்திற்கும்

எங்கள் பாரதியார் 53
செவி நுட்பத்திற்கும், அதிருசிக்கும் தமிழைப் போன்ற பொருத்தமுடையது வேறெந்த பாஷையும் கிடையாது’ என்று போப் கூறுகின்றார்”
-"இந்தியா', 1906, ஆகஸ்ட் 4.
சோதனை ஆண்டு - 1908
1908ம் ஆண்டில் இந்திய அரசியல் தீவிரமிக்கதாக இருந்தது.
பாரதிக்கும் அது சோதனை ஆண்டு.
அக்டோபர் மாத இறுதிப்பொழுதுகளில் இதழ்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நியர் ஆட்சி முடிவு செய்து விட்டது. பல கட்டுரைகளை அரசுக்கு எதிரானதெனப் பட்டியலிட்டார்கள்.
முக்கியமாக இந்தப்பாடல் :
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெமதன்னை கைவிலங்குகள் போகும்? என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
‘இந்தியா’வில் வெளியான இப்பாடல், தலையாய ராஜதுவேஷம் எனப்பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் இது, சென்னை, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் அருகிலிருந்த ஒர் அங்காடியில் (மூர் மார்க்கட்டில்) பெருந்திரளாக மக்கள் கூடி இருந்தபொழுது பாரதி அரங்கேற்றியது. (இப்படியெல்லாம் அரங்கேற்றம் செய்வது அவனுக்குக் கைவந்த கலை!)
அப்பொழுது ஒரு மாலை நேரம்.

Page 30
54 இதழியல் முன்னோடி
இந்தியா’ அலுவலக மேல்மாடியில் ஏறிக்கொண்டிருந் தான் ஒரு போலிஸ் காவலன். எதிரே இறங்கிக்கொண்டிருந்தார் பாரதி
கைது உத்தரவைக்காட்ட, “இது எனக்கு இல்லையே!” என்றார் பாரதி. உண்மை அவர் பெயரில்லை அதில் சட்டபூர்வ மான ஆசிரியராக 'வெறுமனே பதியப்பட்டிருந்த எம். சீனிவாசன் பெயரே இருந்தது. அவனை வெகு அநாயாசமாகத் தாண்டிப் போய் விட்டார் பாரதி
ஆனால், எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் இந்த நாடகம்?
நண்பர்களுடன் கலந்ததில் எங்காவது பத்திரமான இடத் திற்குப் போய்விட்டால் கைதிலிருந்து தப்பலாம்,"இந்தியா'வையும் தொடர்ந்து நடத்தலாம் என்ற முடிவு பிறந்தது.
‘சென்னப்பட்டணத்தைப் பிரியும் காலமும் நேரமும் வர, ஃபிரெஞ்சுப் புதுச்சேரி வரவேற்றது. (1908 - ஆகஸ்ட் 26). அதன் பின்னும் இந்தியா’ இரு இதழ்கள் சென்னையில் வெளியாகி செப்டம்பர் 05-ல் தற்காலிகமாக குரலை அடக்கியது
பாரதியின் புதுச்சேரி இதழியல் வாழ்க்கையையும் பங்களிப்பையும் பார்ப்பதற்குக் கொஞ்சம் தாமதிப்போம்.
நமக்கு இன்னொரு தலையாயப்பணி எப்பொழுதிருந்தோ காத்தவண்ணம்
பாரதியின் ஆங்கில இதழியல் புலமை
ஆம் ஆங்கில இதழாளனாகவும் அவன் அடையாளம் காட்டினான், முத்திரை பதித்தான்!
நம்மில் பலருக்குத்தான் அது தெரியாது

எங்கள் பாரதியார் 55
1906 - ல் இந்தியாவின் துணை ஏடாகவே வந்தது அந்த பால பாரதா ஒரு சில மாத இடைவெளியில் இரண்டும் வெளியாகின.
முதலில், இந்தியா'வைப்போல ஓராண்டுவரை வார ஏடு. அதன்பின் மாத இதழ். 1908-ல் பாரதி சென்னையை விட்டு அகலும் வரையிலும், பிறகு புதுவையிலும் வெளியானது.
இந்த ’பால பாரதாவுக்கு ஓர் உந்து சக்தியாக ஐரிஸ் மாது ஒருவர் அமைந்தார். மார்க்கிரட் ரிச்மண்ட் என்ற அந்த நங்கை, சுவாமி விவேகானந்தரது சிஷ்யையாக கல்கத்தா வந்து (1898 ஜன. 28) பின்னாளில் சகோதரி நிவேதிதை ஆனாள். (1898 LDITris.11)
இந்த நிவேதிதையை கல்கத்தாவிலேயே பாரதி கண்டதும் (1905) கடிதத்தொடர்புகள் கொண்டதும் பின்னாளில் அவரையே ஆத்மீக குருவாக வரித்ததும் வரலாறு
ஒரு தமிழ் எழுத்தாளன் - ஒரு தமிழ்க் கவிஞன் ஆங்கிலத் திலும் புலமை பெற்றதற்கு அந்தச் சகோதரியும் ஒரு காரணமெனச் சொல்வதில் தவறில்லை.
ஆய்வாளர் முனைவர் பா.இறையரசன் சொல்கிறார்:
“பாரதியின் ஞானகுரு நிவேதிதா தேவி இவ்விதழின் (பால பாரதா) அமைப்பு, வெளியீடு பற்றி அடிக்கடி பாரதியோடு மடல் தொடர்பு கொண்டதோடு பெயரிடாமல் கட்டுரைகளும் எழுதினார்”.
ஆய்வாளர் திரு. ரா. அ. பம்பநாபன் ஆங்கிலத்தில் தந்தி ருக்கும் குறிப்பும் இதனையே ஊர்ஜிதப்படுத்துகிறது.

Page 31
56 இதழியல் முன்னோடி
அவர், பாலபாரதா'வைப் பற்றி தன் கண்ணோட்டத்தை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுது,
'பாலபாரதா அரசியலிலும் வேறுவிடயங்களிலும் ஆழ்ந்து சென்று தீவிர இதழாக இயங்கியது. அதன் கருத்துக்களிலும் கட்டுரைகளிலும் தகவல்களும் அருமையான வசன அமைப்பும் இருந்தது. ஆசிரியரது கைவண்ணம் பலவிடங்களிலும் காணப்பட்டது. தேசிய நலனில் அக்கறையும், மற்றவர் குறைகளைப் பெரிது படுத்தாத போக்கும், நகைச்சுவை உணர்வும் விரவிக்கிடந்தன.
'ஆன் லுக்கர் என்பவரால் ‘ஸ்ட்ரே தாட்ஸ்" என்று எழுதப் பட்ட பத்தியில் பாரதியே நினைவில் வரு கிறான். இந்தத்தலைப்பு அவனுக்கே சொந்தம். அதே தலைப்பில் புத்தகமாகவும் பின்னர் வந்தது.
“இதழின் தரமிக்கதாகவும், கவிஞன் பாரதி தன்னை ஒரு முதல் தரமான திறமைமிகு ஆங்கில இதழாசிரியனாகவும் அடை யாளம் காட்டவும் செய்தான்”.
பாலபாரதாவில் பரவலாக அரசியல் தூவப்பட்டிருந்தாலும், தாய்மொழிப்பற்று' பற்றியும், தாய்மொழி வழிக்கல்வியைப் பற்றியும் பாரதி பல இடங்களில் எழுதியுள்ளார்.
இதற்கு ஓர் உள்நோக்கம் இருந்திருக்கிறது அவருக்கு

எங்கள் பாரதியார் 57
அதாவது, ஆங்கிலக்குஞ்சுகள் ஆங்கிலத்தில் எப்படித் தான் நீச்சலடித்தாலும் தன் தாய்மொழியை மறந்துவிடலாகாது. தாய் மொழிக் கல்வியைப் புறக்கணித்துவிடலாகாது என்பதை அன்றைக்கே அவர்களுடைய ஆங்கிலத்திலேயே அடித்துச் சொல்லி விட்டார்!
அதுவும், இலங்கையில் அன்னிபெசன்ட் அம்மையார் ஆற்றிய பேருரை, 1908 - பிப்ரவரியில் அப்படியே பிரசுரிக்கப் பட்டுள்ளது!
"Loyalty To The Mother Tongue" (5tti Guomiurbo) என்ற தலைப்பில் பிரசுரமாகி, இறுதியில் பாரதி தன் அடிக்குறிப் பொன்றையும் அச்சிட்டுள்ளார்.
அதில் இவ்வரிகள் உள்ளன:
“பள்ளி செல்லும் ஒவ்வொரு பையன் - பெண் மனத்தில் தாய்மொழிப்பற்று தோன்றுமாறு தேசிய மேடையில் பேசுவோர் பேச வேண்டும்”
(இந்தத் தமிழாக்கம் திரு பெ.க.மணியுடையது)
'எடிட்டோரியல் நோட்ஸ்' என வந்த பகுதியிலும் தாய்மொழிப் பற்றை எடுத்துக்காட்டியிருக்கிறார் பாரதி.
".தனது தாய் மொழியில் சிந்திக்கப் பயிற்சியில்லாத தலை சிறந்த மனிதன் என்றும் இருந்ததில்லை.
நோய்க்கான மூலக்கூறுகளை அறிய முற்படுவது போல, நாம், நமது சிந்தனையிலே குழப்பத்தைக்

Page 32
58 இதழியல் முன்னோடி
காணும்பொழுது, அதற்குரிய காரணங்களைத் தேட வேண்டும்.”
“.தொடக்கத்திலேயே அமையும் தெளிவான கருத்தமைப்புகள்தான் மானுட முயற்சியின் ஒவ் வொரு துறையிலும் நிகழும் அனைத்து உயர் சாதனைகளின் இரகசியமாகும்.”
பாலபாரதாவில் சுவாமி விவேகானந்தருக்கு மிக முக்கிய இடமளித்தார் பாரதியார். ‘எழுமின் விழிமின் இலக்கை அடையும் வரைநில்லன்மின்! “என்ற அவரது முழக்கம் பாலபாரதாவின் முகப்பில் காணப்பட்டது.
அவ்விதழின் சந்தாதாரர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் “கொழும்பு முதல் அல்மோரா வரையிலான சொற் பொழிவுகள்” என்ற நூல் சலுகை விலையில் வழங்கப்பட்டதுண்டு.
* RISE AND STOP NOT TILL THE GOAL S REACHED"

எங்கள் பாரதியார் 59
05. மீண்டும் மறுபிறவியான இந்தியா'
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
- என்ற பாரதியின் பாடல் பெரும் அர்த்தமுடையது
என்பதை நாம் அறிவோம். அவரது இதழியல் வாழ்க்கை வளமும் பலமும் பெறத் தனக்காகவே இயற்றிக் கொண்ட ஒரு பாட்டாக இது இருக்குமோ என ஐயுற வேண்டியிருக்கிறது!
எந்தக் காலகட்டத்தில் இயற்றப்பட்டது என்ற ஆய்வில் நுழையப் பொழுதில்லை.
என்றாலும், இதழ்களுக்கென்றே பாரதி கழித்த காலத் திலேயே பிறந்திருக்க வேண்டும்
சென்னையில், 'சுதேச மித்திரன்! - சக்கரவர்த்தினி இந்தியா’ என்ற மூன்று தமிழ் ஏடுகளிலும், பாலபாரதா ஆகிய ஆங்கில இதழொன்றிலும் இதழாளராகப் பரிமாணம் கண்டதை முன் அத்தியாயங்களில் கண்டோம்.
முன்பின் தெரியாத புதுச்சேரிக்கு வந்தபொழுது நண்பர்கள் என யாருமேயில்லை.
அவரது புதுவை வாசம் 1908 செப்டம்பரிலிருந்து 1918 நவம்பர்வரை. சரியாகப் பத்தாண்டு, இரண்டு மாதங்கள்.
அக்காலத்தில் மறுபிறவி எடுத்த இந்தியாவோடு, விஜயா','தர்மம்' - சூரியோதயம் - “கர்மயோகி’ என்றெல்லாம் இதழ்கள் பளிச்சிட்டன.
பத்திரிகாசிரியர் ஆனார்!

Page 33
60 இதழியல் முன்னோடி
முதலில், இந்தியாவின் (மறு) பிறப்பையும், இறப்பையும் பார்ப்போம்.
அந்த இதழைச் சென்னையில் பிரசவித்துக் கொண்டிருந்த இயந்திரத்தை ஒரு சில வாரங்களில் புதுச்சேரிக்குக் கொண்டு சேர்த்தார், மண்டையம் பூரீநிவாசச்சாரியார் என்ற அன்பர். புதுச்சேரியில் ஒருவருக்கு விற்பது போல ஒரு நாடகம் நடந்து வெற்றிகரமாக முடிந்தது!
1908 - அக். 10ல் மீண்டும் 'உயிரானபொழுது, அண்ணல் காந்தி தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந் தார்.
வையத்தை வாழ்விக்கவந்த கரம்சந்த் காந்தி அப்பொழுது தென்னாப்பிரிக்காவில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். வெள்ளையர் ஆட்சி சிறை வைத்தது. பரபரப்பான செய்திகள் போட்டு பக்கம் பக்கமாக பாரதி உழுதார் - எழுதுகோலால்
பாரிஸ்டர் எம்.கே.காந்தி’ என்ற ஓர் இளைஞர், தன்னைப் போன்றே சத்தியத்திற்காகவும், தர்மத்திற்காகவும், அஹிம்சைவாதி யாகப் போராடி வருவதைப் பார்த்த அவரது பேனா மெய் சிலிர்த்தது.
ஆனால், அந்த மகாத்மாவை நேருக்குநேர் தரிசித்தவர் அல்லர். (அது, பின்னர் பதினொரு ஆண்டுகளுக்குப்பிறகு தான் சென்னையில் நடந்தது - 1919).
மேலும், தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, பிஜித்தீவிலும் இந்திய மக்கள் படும் துயர் கண்டும் பாரதி கண்ணிர் வடித்தான். சென்னைப் பதிப்பைப் போலவே, முன்பக்கத்தில் அரசியல் கூடார்த்த சித்திரம், (கார்ட்டூன்) உள்ளே பல அரசியல் விஷயங்கள், காரசாரமாக - முன்னையும்விட - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தாக்கிக் கட்டுரைகள் அனைத்தும் இருந்தன.

எங்கள் பாரதியார் 61
அதே சமயத்தில், முன் எப்படி பலதரப்பட்ட விடயங்களிலும் சிந்தனையோட்டங்கள் ஓடினவோ, அவை அப்படியே புதுவை யிலும் அரங்கேற்றமாயின.
இங்கேயும் ஒரு பதச்சோறாக இரண்டொன்று: தர்மமும் ஜாதியப் பெருமையும்
“தர்மமே ஒரு ஜாதிக்கு பீரங்கிகளைக் காட்டிலும் அதிக பலமாகும். அதர்மம் எவ்வளவு பலமுள்ள ராஜ்யத்தையும் அழித்து விடும். இவ்வுண்மைக்கு உலக சரித்திரம் ஸாகூS. இதைச் சில ஆங்கிலேய விற்பன்னர்கள் மறுக்க முயலுதல் க்ஷேம: குறியன்று. நாம் 'ஸ்பெக்டேடர்" பத்திரிகையின் அபிப்பிராயத்தை ஓர் பொருட்டாக எண்ணி இந்த நிபந்தமெழுதவில்லை. சென்னப் பட்டணத்தில் நம்மவர்களால் நடத்தப்பெறும் பத்திரிகைகளிலே தலைமை யுடையதாகிய ஹிந்து பத்திராதிபர் அந்த அன்னியக் கோட்பாட்டை அங்கீகாரம் செய்து ஆமோதித்திருப்பதே நமக்கு வருத்த முண்டாகிறது. 'ஹிந்து பத்திராதிபர் சொல்லுகிறார், “நமது ஆரீய ஜாதியார் புராதன தர்மங்களையும் ஆத்ம சக்தியையும் இழந்துவிட்ட காரணத் தாலேயே இப்போதுள்ள தாழ்ந்த ஸ்திதிக்கு வந்தவிட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று” என்று சொல்லிவிட்டு அதற்கு மேற்குறிப்பிட்ட லண்டன் அபிப்பிராயத்தை மேற்கோளாகக் காட்டுகிறார்.

Page 34
இதழியல் முன்னோடி
'ஹிந்து பத்திராதிபர் “ஸ்பெக்டேடர்" படிப்பதை நிறுத்தி விட்டுச் சிறிதுநேரம்ராமாயணம்.மஹாபாரதம் படிப்பதிலே செலவிடுவாரானால் அவருக்கு நன்மையுண்டு.
ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை இழந்ததனால்,
அறிவை அபிவிருத்தி செய்தல் பல்லாயிர வகைப் பட்ட சாஸ்திரங்கள், அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை அஞ்சாது போதனைசெய்தல் முதலிய பிராமண தர்மங் களையும், வீரத் தன்மையைப் பரிபாலித்தல் முதலிய கூடித்திரிய தர்மங்களையும், வியாபாரங்கள், கைத் தொழில்கள் என்ற வைசிய சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்துவிட்டோம்.
வர்ணாசிரம விஷயங்களும், அனாவசியச் சண்டை * களும் வளர இடங்கொடுத்து முக்கிய தர்மங்களை மறந்து விட்டோம். இதுவே நமது வீழ்ச்சியின் காரணம்.
இனி நாம் கடைத்தேற வேண்டுமானால் அவர வருக்குத் தெய்வீகமாக வாய்த்துள்ள பலங் களையும், தர்மங்களையும் பிரகாசப்படுத்த வேண்டும். "நான்ய: பந்தா வித்யதே. வேறு வழி கிடையாது”
இந்தியா, புதுச்சேரி, 29-5-1909

எங்கள் பாரதியார்
யாழ்ப்பாணத்தில் சீதன வழக்கத்தின் கெடுதி
“சிலோன் நாட்டு, கொழும்பு நகரத்து நோறிஸ் றோட்டு 68 நெ. வீடு பூரீ க.ண.கோபாலப் பிள்ளையவர்கள் எழுதியுள்ள விளம்பரம் நமது பார்வைக்கு வந்தது. அதில் சீதன வழக்கத்தால் உண்டாகும் கெடுதிகளைப் பல யுக்தி அனுபவங் களால் விளக்கிக் காட்டியிருக்கிறார். இந்த வழக்கத்தால் பெண்கள் கற்புக்கும் புருஷன் ஊக்க முயற்சிக்கும் வெகு சுலபமாய்க் கேடுகள் உண்டா கின்றன என்று நாட்டியிருக்கின்றார். இந்த வியாஸம் 22 பாராக் களில் அடங்கியிருக்கிறது இதை அவசியம் யாழ்ப்பானவாசிகள் கவனித்து நடந்தால் மெத்த நலமே.”
63
புதுவை இந்தியா, 31-7-1909
தாய்மார்களின் கடமை
“நமது தேசம் வரவர எல்லா விஷயங்களிலும் தாழ்ந்த நிலைமையிலிருக்கிறது. உலகத்திலே வேறெந்த நாட்டிலும் இல்லாத கொடிய தரித் திரமும் கோரமான வியாதிகளும் நம் தேசத்தில் குடியேறி விட்டன. மற்ற நாகரிக தேசங்களில் ஆண்
பெண் எல்லோரும் கல்வி கற்றுத் தீரவேண்டு
மென்று இராஜாங்கத் தார் பலவந்தமான விதி ஏற்பாடு செய்து, ஏழைக் குழந்தை களுக்குத் துணியும் உணவும் கொடுத்து இனமாகப் படிப்புச் சொல்லிக் கொடுத்து வருகின்றார்கள். நம்

Page 35
64 இதழியல் முன்னோடி
தேசத்திலோ அம்மாதிரி விதியில்லாததால் முக்கால் வாசிக்கு மேலான ஜனங்கள் பிறப்பு முதல் மரணம் வரை அரிச்சுவடியைக் கண்ணாலே பார்ப்பதற்குக் கூடக் கிடைக்காமல் அழிகிறார்கள். ஆண் பெண் ஆகிய மனித உயிர்களெல்லாம் குழந்தைப் பிராயத் திலே யார் வசத்தில் இருக்கின்றன? தாயார் வசத்தில் ஆகவே, குழந்தைகள் அறிவாளிகளாகவும் அல்லது மூடர்களாகவும், குணசாலிகளாகவும் அல்லது தீயோராகவும், பலவான்களாகவும் அல்லது நோயாளிகளாகவும், லோகோபகாரிகளாகவும் அல்லது சுயநலம் தேடும் கழுகுகளாகவும் ஆவதற்கு தாய் கொடுக்கும் பயிற்சியே முக்கிய ஆதாரமென்பதில் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. “தாயைப் போல பிள்ளை” என்ற பெரியோர் வசனத்திற்குப் பழுதுண்டோ?
புதுவை, இந்தியா, 12-5-1910. இவ்வாறெல்லாம் எழுத்துக்கள் பலவற்றைத் தாங்கி வந்த புதுச்சேரி 'இந்தியா, தன் முன்பக்கத்தில் தமிழிலும் ஃபிரெஞ்சிலும்
* ஸ் வ த ந் தி ர ம் * ஸ ம த் து வ ம் * ஸ கோ த ரத்து வம் என்ற முப்பெரும் ஜனநாயக முழக்கங்களை அமைத்துக் கொண்டது. இது, ஃபிரெஞ்சுப் புரட்சியின்பொழுது ஒலித்தவை.
இதழ், இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்தபொழுது - 1909, அக்டோபர் - தனது முகப்பொலிகளைப் பின்வருமாறும் வர்ணித்தது:

எங்கள் பாரதியார் 65
'நமது இந்தியா தேவியானவள் சூடிய சத் - சித் - ஆனந்தமான ஸ்வதந்திரம் - ஸ்மத்துவம் - ஸஹோதரத்துவம் ஆகிய தத்வத்ரயங்களை இந் நாடு முழுவதும் பிரசாரம் செய்து அதைத் தனது முப்பது கோடி மக்களும் அனுஷ்டிக்குமாறு அவைகளுக்கு இருப்பிடமான நவபுரமென்னும் இப்புதுவை மாநகரின் கண் வீற்றிருந்து வருகிறாள்"
(இதில், பாரதிக்குத் தெரிந்திருந்த சமஸ்கிருதம் துள்ளி விளை
யாடுகிறது) -
ஆனால், புதுவையிலிருந்து அச்சிடப்பட்டு ஆங்கில ஏகாதிபத்திய பாரதத்திற்குள் நுழைந்த இந்தியா'வைத் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்ட ஆங்கிலேயர் இறுதியில் தம் இலக்கை அடையவே செய்தனர்.
முதலில், ஃபிரெஞ்சு இந்திய ஆளுநரின் ஒத்துழைப்பை நாடிப் பார்த்தனர். ஏமாற்றம்
அதன்பின், அஞ்சல்துறை ஆணையருக்கு, இந்தியா ‘சூரியோதயம்’*-*இதழ்களை பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் நுழையவிடாமல் அஞ்சல் அலுவலகங்களிலேயே முடக்கிவிட வேண்டும் என அரசாணை இடப்பட்டது. பாரதிக்குக் கிடைக்க வேண்டிய காசுக்கட்டளைகள், தபாற்கட்டளைகளையும் வழங்காது விட்டது. இதனால், பெருமளவு தென்னாட்டு வாசகர்களை நம்பி நடந்த இதழ்கள் பொருளாதாரப் பாதிப்பால் நொடித்துப் போயின.
*இந்தப் பெயரிலும் ஒரு வார இதழ் 1910-ல் பாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளியாயிற்று.

Page 36
66 இதழியல் முன்னோடி
இதைப் பற்றி, பாரதியை இதழியல் குருவாக வரித்தவரும், அவருடன் புதுவையில் ஒன்றிக்கலந்திருந்தவரும், ஒரு காலத்தில் இலங்கை 'வீரகேசரியில் (1935) ஆசிரியராகக் கடமையாற்றிய வருமான ராமசாமி என்ற“வரா”அவர்கள் கவலையுடன் பதித்துள்ள வரிகள் இப்படி:
“இந்தியா’ பத்திரிகை புதுச்சேரியிலிருந்து சரிவர வெளியூர்களுக்குப் போய்ச் சேராது. இந்தியா காரியா, லயத்துக்கு வந்து சேர வேண்டிய பணம் சரிவர வந்து சேராது, தபாலாபிசிலும் சதா சில்லறைத் தகராறுகள் நேர்ந்து கொண்டிருந்தன. ஆக மொத்தம் பாரதியார் பட்டினி",
எனவே, 10-10-1908ல் மறுபிறவி பெற்ற இந்தியா', 18-03-1910ல் அகால மரணத்தைத் தழுவியது.
கூடவே, வாரம் ஒருமுறை வந்த இன்னொரு துணை இதழும் இறப்பு
இவ்விரண்டுடன், விஜயா’ நாளிதழுங்கூட நலிந்து போயிருக்க வேண்டும். ஆனால், அது, ஆய்வாளர் பெ.சு.மணியின் தகவலின்படி, சற்று தாமதித்து ஏப்ரலில் உயிர் நீத்தது. அவளையும் சற்றுப் பார்ப்போம்:
தமிழ் இதழாளர்கள் மறக்க முடியாத விஜயா
‘சக்கரவர்த்தினி, மாத இதழ் ஆசிரியராக பாரதியை வரித் திருந்தாள் என்றால், விஜயா நாள்தோறும்
அதற்கு 'இந்தியா' இதழிலே வந்த விளம்பரமே ஒரு தனிரசம் அதில்,

எங்கள் பாரதியார் 67
பாரதமாதா - 'வந்தே மாதரம் என்பன நாகரி எழுத்துக்களில் அச்சிடப்பெற்றிருந்தன. ஒரு பக்கத்தில் உருதுமொழி வாசகம். இந்தியா படத்தில் நான்கு கைகள். நான்கு குழந்தைகளை அனைத்தவாறு பாரதமாதா நிற்பதுபோல் அச்சுப் பதிவு இரண்டு கொடிகள், ஒரு கொடியில் தமிழில் "த்வேஷம் வேண்டாம்” என்றும், அதன்கீழ், இந்து - முஸ்லிம் இணைந்து நிற்பதோடு ஒரு குதிரையின் படம். மற்றொரு கொடியில் தெலுங்கு மொழி வாசகம். இதன்கீழும் இந்து - முஸ்லிம் இணைந்து நிற்பதுடன் ஓர் அன்னத்தின் படம். அடியில் பின்வரும் வாசகங்கள்: "விஜயாவென்ற பெயர் கொண்ட - தினசரிப் பத்திரிகை அரிய பெரிய விஷயங்களிலும், உலக வர்த்தமானம் முற்றும் அடங்கிய விவசாயக் குறிப்புகள், கைத்தொழில் குறிப்புகளடங்கியதும். செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கிருஷ்ண ஜயந்தியன்று துவங்கி வெளியாகும்.
விஜயா’வும் இந்தியாவைப் போலவே தீவிரவாத தேசியப் பத்திரிகை என்பது தெளிவாயிற்று. எக்ஸ்ட்ரீமிஸ்ட் பேப்பர்’ (தீவிரவாத இதழ்) எனப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முத்திரை குத்தியது.
ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இந்த இறுதிப் பொழுது களில் பாரதத்தின் அத்தியாவசியத் தேவையாகிப் போன இந்துமுஸ்லிம் ஒருமைப்பாட்டுக்கும் மனிதநேயத்திற்கும் அன்றே-87 ஆண்டுகளுக்குமுன் குரல் கொடுக்கத் தொடங்கிய இலட்சிய நாளேடாக மிளிர்ந்தது.
நாள்தோறும் செய்திவிளக்கச் சித்திரங்கள் பதித்த இதழும் அதுவே. தமிழ்நாட்டவர்க்குப் புதிய அறிமுகம்.

Page 37
68 இதழியல் முன்னோடி
முதிய பாரதி ஆய்வாளர் ரா.அ.ப. அவர்களுக்குக் கிடைத்த இரு இதழ்களிலொன்றில் பாரதியின் ஆவேச தாண்டத்தை ஒரு கட்டுரையில் கண்டு அச்சம் உண்டாகிறது.
அதில், தன் நன்றிக்குரியவராகவும், அன்பான நண்பராகவும் இருந்தவரை ஒருபிடி பிடிக்கிறார்.
“வி. கிருஷ்ணஸ்வாமி ஐயரை நேராக விளித்துச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறோம். காங்கிரஸ் ஓர் ஆலயத்தைப் போன்றது; என்ன வரினும் எவ்வளவு தேசாபிமானிகளை எதிர்த்தும், நாம் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிச்சயத் துடன் இருந்தீர். ஐயோ, இரண்டு வருஷங்கூட ஆக வில்லையே. அதற்குள் காங்கிரஸ் சபை கள்ளுக் கடையைப் போலநிஷித்தமானது,அதில் காலெடுத்து வைக்கலாகாதென்று சொல்லும் கூட்டத்தாருடன் சேர்ந்துவிட்டீர். திலகர் கூட்டத்தார் காங்கிரஸ் சபையிலிருக்கலாகாதென்று கூத்தாடினிரே, நீர் இப்போது காங்கிரஸ் சபையில் இருக்கலாமா! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்தது போல நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படியாயிற்று, சொல்லுகிறேன் கேட்கிறீரா? வஞ்சனை, நடிப்பு, ஏமாற்று, பாவனை, வேஷம், பொய். ஸ்வதந்திர தாகந்தான் இப்போது உம்மை ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலையை ஒப்புக்கொள்ளும்படி தூண்டி விட்டதோ? .ஐயோ வி. கிருஷ்ணஸ்வாமி ஐயரே, என்ன ஜன்மம் எடுத்துவிட்டீர்”
1909 - அக், 05 விஜயாபதித்த இந்தத் தலையங்கத்தைப் பார்த்த பிறகு யாருக்கும் “பாரதி பாட்டால் உயர்ந்தானா,

எங்கள் பாரதியார் 69
உரைநடையால் உயர்ந்தானா’ எனப்பட்டிமன்றம் அமைக்க துடிதுடிப்பு ஏற்படும் நடந்துமிருக்கிறது தமிழகத்தில்
ஆச்சரியமென்னவென்றால், இக்கண்டனக் கட்டுரை வரு வதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் (1907) இந்த விகிருஷ்ணசாமி பாரதிக்குச் செய்த உதவி பெரியது. பாரதியின் பாடலை யாரும் வெளியிட முன்வராதபொழுது, தாமே வலிய வந்து பொருளுதவி அளித்து நான்கு பக்கங்களில் பாடல்களைத் தொகுத்து அனைத்துப் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் பாரதியை அறிமுகப் படுத்திய புரவலர் அவர்.
அப்படிப்பட்ட மனிதர், காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்து, வெள்ளையருக்கு வால்பிடித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வுபெற்று இந்திய மக்களையே கேவலப் படுத்திய பொழுது அமைதியாக இருக்க முடியவில்லை அவரால். எழுதுகோலால் குத்திக்குதறிவிட்டார்!
அதுமட்டுமன்றி, பாரதி ஆய்வாளர் ரா.அ.ப. குறிப்
பிடுவது போன்று,
“பாரதியின் களங்கமற்ற தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு அருமை நண்பராயினும் தவறு தவறே என்று காரசாரமாய் விளாசியிருப்பது Lחנgg8 6תחbt சுபாவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு”.
ஆகவே, இதுபோன்ற பல எழுத்துக்களுக்குப் பிறகு, அந்த 1910 பிப்ரவரியில், விஜயாவைப் பறிமுதல் செய்யவும், ராஜ துரோகக் கட்டுரைகள்' எனத் தரம்பிரித்துத் தடைசெய்யவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முனைந்துதான் இருக்கும்.
முனைந்தது, முடித்தது!

Page 38
70 இதழியல் முன்னோடி
மூச்சு நின்ற மூன்று இதழ்கள்
1910களில், இப்படி தீவிரவாத இதழ்களாகப் புதுவையில்
அச்சிட்டு தமிழ்நாட்டுக்குள் வந்த மேலும் மூன்று இதழ்களை
முடக்கி விட்டனர் அந்நியர்.
அவை: கர்மயோகி' - தர்மம்' - சூரியோதயம்
இம்மூன்றுக்கும் முத்திரை குத்தப்படாத ஆசிரியப் பெரு மகனார் சி. சுப்ரமண்ய பாரதியே என்பதனைச் சொல்லவும் வேண்டியதில்லை!
துரதிர்ஷ்டவசமாக அவை இன்று கிடைக்காமல் உள்ளன. கிடைத்தது கூட அபூர்வமாக ஓரிரு பிரதிகளே!
“கர்மயோகி’ (1910) பிப்ரவரி பிரதி, பிரபல ‘குமரிமலர்’ ஆசிரியர், காலஞ்சென்ற ஏ.கே. செட்டியார் அவர்களுக்கும், மே பிரதி, ஆய்வாளர் பெ.சு.மணிக்கும் கிடைத்துள்ளன!
அரசியலுடன் ஆன்மீகம்
அந்தப் பிப்ரவரி இதழில், முன்பக்கத்தில், “மஹா சக்திக்கு விண்ணப்பம்” என்னும் தலைப்பின்கீழ், “அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி என்ற பாடல் சி.சுப்பிரமணிய பாரதி' என்ற பெயரில் உள்ளது. (காண்க : முன்பக்க இணைப்பில்)
தமிழ் இலக்கிய உணர்வுகளை அரசியல் கட்டுரைகளில் அவர் வெளிப்படுத்தியதுபோல, ஆன்மீகக்கட்டுரைகளிலும் அளித் திருப்பது அற்புதம்!
அறத்தையும் இன்பத்தையும், காளியும் காமனுமாக உருவகப் படுத்தி, காளியும் காமனும் என்றே போட்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியுடன் போராடிய பிருத்திவி ராஜனையும் சம்பந்தப்படுத்தி ஒரு கட்டுரை, அதற்கொரு முகவுரை:

எங்கள் பாரதியார் 71
“காமனுக்கும் காளிக்கும் ஒரேவிதமான பக்தியைக் கொடுத்துவிட்டான் (பிருத்விராஜன்). இன்பத்தையும், அறத்தையும் ஒன்று போலவே வணங்குவானாயின். அறத்தால் வருமின்பத்தை மாத்திரமே கொண்டிருப்பது பிழையன்று. இவன் அங்ங்ணம் செய்யவில்லை. இன்பங்கண்டபோது அறத்தை மறந்து விடுவான். காமன் இராகுவால் விழுங்கப்பட்ட வீரியப் பரிதியென்று பிருத்வி ராஜனை உவமிக்கலாம். இதுபற்றியே காமனும் காளியும் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.”
இதுபோல், இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் பகவத் கீதையின் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியிருக்கிற சாதுர் யத்தையும் புத்திக்கூர்மையையும் கிடைத்துள்ள மே மாதப்பிரதியில் பார்க்கிறோம் கவிதை வடிவத்தில்.
இதோ. இங்கொன்று :
“ஆதலின் எழுகநி! பெரும்புகழடைக! செறுநரை வென்று செழிப்புயரசின் போகநீ பெறுக, பூர்வமே யிவரையான் உயிர்கொடு தீர்ந்தமையுணர்க. ஊன்செகுப்ப நீ வெறுமே நிமித்தமா மேவுதி கானாய்’
இதன் உரைநடை
“ஆதலால் நீ எழுந்து நில், புகழெய்து, பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய் விட்டது. இடக்கை வீரா (இது பார்த்தன் பெயர் - பாரதியே போட்டுள்ள அடிக்குறிப்பு) நீ வெளிக்காரணமாக மட்டும் நின்று தொழில் செய்.”

Page 39
72 இதழியல் முன்னோடி
“கர்மயோகியின் பங்களிப்புப் பற்றி ஆய்வாளர் பெ.சு.மணி கருத்துக் கூறுகையில்,
“அரசியல் கொந்தளிப்புகள் இல்லாமல் ஆன்மிக அமைதியுடன் பத்திரிகை ஆசிரியராகப் பணி யாற்றும் வாய்ப்பைப் பாரதியாருக்கு அளித்தது” என்கிறார். இந்த “கர்மயோகி' யைப்பற்றி இன்னொரு முக்கிய தகவல் மகான் அரவிந்தர் கல்கத்தாவில் “கர்மயோகின் ” என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டதை வைத்து, அதைப் போலவே தமிழிலும் ஏடு வரவேண்டும் என்ற உந்தலில் வெளியான ஒன்றே!
'தர்மம் தர்மமாகவே கொடுக்கப்பட்டது!
அரவிந்த மகானது மற்றுமொரு இதழான 'தர்மா'வை அடியொற்றி தர்மம் தலைகாட்டியது! இது, தர்ம(இலவச) மாகவே கொடுக்கப்பட்டது! நன்கொடை மட்டும் ஏற்கப்பட்டது. புகழுக்குரிய அறிஞர், எழுத்தாளர் வ.வே.சு.ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி முதலியோர் பக்கபலமாக நின்றுதவினர். ஆனால் பதிவுகளில் பெயர்கள் காட்டப்படவில்லை. இதனுடைய ஒரு பிரதிகூட இன்று வரை கிடைக்காத துர்ப்பாக்கியத்தால் பங்களிப்புப் பற்றி யாருக்கும் ஆய்வுசெய்யவியலா நிலை!
பட்டொளி வீசிப் பளிச்சிட்ட சூரியோதயம்
‘சூரியோதயத்தின் மூன்று இதழ்கள் (1910, பிப். 13-20-27) மட்டும் அலைகடலுக்கு அப்பால் ஃபிரான்ஸ் நாட்டில் இருப்பதாக அங்கு வதியும் திரு. எஸ். ஆர். சுப்பிரமணியம் தமிழக ஆய்வாளர் களுக்குத் தகவல் அளித்துள்ளார்.

எங்கள் பாரதியார் 73
இதுபற்றி, திரு ரா. அ.ப. போன்ற ஆய்வாளர்கள் குறிக்கையில்,
“பழைய பொக்கிஷங்கள் வெகுநாள் மறைந்திருந்து திடீரென்று ஒருநாள் கிடைப்பது சகஜம்” என நம்பிக்கையூட்டுகின்றனர்.
நல்லதே நடக்குமாக கிடைத்துள்ள சூரியோதயம்’ இதழ்களின் முதல் பக்கத்தைப் பார்த்தால் வைத்த கண்ணை எடுக்கத் தாமதப் படும்!
அந்தக்காலத்தில் இதழ் தலைப்பு அத்தனை அருமையாக கைவினைஞர் வேலைப்பாட்டுடன் வந்ததில்லை.
ஃபிரெஞ்சு மொழியில் பெரிய எழுத்தில்,
"L'AU RORE"
-என உள்ளது. உலகப்புகழ்பெற்ற ஃபிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின்,
"LE PROGRESS EST EN MARCHE RIEN NE L. ARRETERA"
என்ற இலட்சிய வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.
“சுதந்தரம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை” என்பது அதன் தமிழ். எத்தகையதொரு ஆயிரத்திலொரு வார்த்தை .
“மக்கள் உணர்ச்சியை, அரசியல் விழிப்பிற்குத் திருப்பி விடுவதில் சூரியோதயம் கையாண்ட முறைகளில் ஒன்று தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியதாகும்”

Page 40
74 இதழியல் முன்னோடி
என்று சொல்லுவார் பிரபல பாரதி ஆய்வாளர் பெ.க.மணி மேலும் அவரே இப்படிக் குறிப்பிட்டு விளக்குகிறார்:
“நவம்பர் 11, 1909ல் சூரியோதயம் தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியது. பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை நரகாசுரனுக்கும் அவனைக் கொன்ற பூரீ கிருஷ்ணரை சுதந்திரதேவிக்கும் ஒப்பிட்டது. அந்நியப் பொருள்கள், அந்நியக்கல்வி முதலான வற்றைப் பொடிப் பொடியாக்கச் சுதந்திரதேவி, அவளது திருக்கரங்களில், “பகிஷ்காரம்”, “தேசியக்கல்வி" என்னும் தெய்வீகப் போர்க் கருவிகளை ஏந்தியிருக்கிறாள் என்று குறிப்பிட்டது”
 

எங்கள் பாரதியார் 75
06. நாட்டுப்பற்றுமிக்க இதழளான்!
“தமிழா! வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், சட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது, பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.”
என்று ஒருமுறை பாரதி சொன்ன வார்த்தைகளை இவ்வாய்வின் இறுதிக் கட்டத்திலே, முத்தாய்ப்புப் பகுதியிலே பதிக்கின்றேன்.
மகிழ்வுடன் பதிப்பவை என எழுதமாட்டேன்!
இந்த நூற்றாண்டின் தமிழ் இதழியல் முன்னோடி ஒருவர், அடுக்கடுக்காக அடைந்த சோதனைகளை ஆய்ந்து பார்த்ததில் நெஞ்சம் கனத்துப்போன நிலையில், அந்த இதழாளன் இன்றிருந் தால் என்ன சொல்வான் என எண்ணி, இதைத்தான்,மீண்டும் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு உபதேசிப்பான் என மேலே வார்த்தைகளைப் பதித்துள்ளேன்.
1904-ல் அவன் இதழியலுக்குள் தள்ளப்பட்டான். அவ்வாறு ஆனதால்தான் உரைநடை வீச்சுடன் கவிமழையும் நிறைய நிறையப் பொழிய முடிந்தது. ஆறே ஆண்டுகளே பங்களிப்பு அதற்குள் அறுபதாண்டு சாதனை. தனது இதழியல் பணியின் மீது ஒன்றன்பின் ஒன்றாக ஏவி விடப் பட்ட ஏவுகணைகளால் சோர்ந்து விடவில்லை. இன்னுமின்னும் முயன்றான். அனைத்து

Page 41
76 இதழியல் முன்னோடி
இதழ்களும் முடங்கிப்போன நிலையிலுங் கூட, புதிது புதிதாக சஞ்சிகைகள், நாளேடுகள் தொடங்கவே நினைத்தான்.
ஆனால், அள்ளிக்கொடுக்கும் கரங்களை எங்கே கண்டு பிடிப்பான்?
1910 முதல் 14 வரையில் வறுமை, படுபயங்கரமான வறுமை. அந்த வறுமைக்கு மத்தியிலும், சிறுசிறு எழுத்துக்கள் புதுவையில் வெளியான சில இதழ்களில் வந்தன. ஆங்கிலத்திலும் ஆக்கங்களைப் படைத்தான். ஆசிரியருக்குக் கடிதம் கூட அவனது படைப்புகளே! அவன் எழுத்துக்களும் மூன்று, நான்கு நூல்களாக வந்தன.*
எனினும், சென்னை இதழ்கள் எழுத்துக்களை வெளியிட அஞ்சிப்போயின - 'சுதேச மித்திரனைத்தவிர!
அந்த நாளேடு - 1915ல் - பாரதியாரின் இதழியல் குரு ஜி. சுப்பிரமணிய அய்யரிடமிருந்து கைமாறிப் போனபொழுது, அவர், பாரதியின் எழுத்துக்களைப் பிரசுரிக்க முன்வந்தார்.
ஆனால், “அரசியல் கலப்பில்லாத கட்டுரைகளும் கவிதை களும்” என்ற கண்டிப்பான நிபந்தனை
கூடவே, “எழுதினாலும் எழுதாவிட்டாலும் முப்பது ரூபாய் மாதா மாதம் வீட்டுச் செலவுக்கு அனுப்புகிறேன்” என்ற மனிதாபி மான குறிப்பும்
நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும்படுவேக மாக எழுத்து இயந்திரம் இயங்கத் தொடங்கியது.
* 1912 - ல், "பாஞ்சாலி சபதம்’ - “குயில்” - “பகவத்கீதை ” மொழிபெயர்ப்பு - “கண்ணன் பாட்டு” முதலிய நான்கு நூல்கள். இதில், "பாஞ்சாலி சபதம்” முதல்பாகம் மட்டும் பாரதியின் சொந்தச் செலவில் வந்தது - ஆய்வாளர் ரா.அ.ப.தகவல்.

எங்கள் பாரதியார் 77
புதுவையில் வறுமைக்கு மத்தியில் வாழ்ந்தவாறே நடந்தது.அது 1918 வரையில் எழுதப்பட்ட எழுத்துக்களால் தமிழுக்கு நல்ல நல்ல நடைச்சித்திரங்கள் * கிட்ைத்தன. (பின்னர் தராசு என்ற பெயரில் ஒரு தொகுப்பு நூலாகவும் வந்தது.) -
அவ்வாண்டின் நவம்பர் பதினோராம் நாளில், புதுவையை விட்டு இந்தியப்பகுதிக்குக் காலடி பதித்த மறுகணமே,வில்லியனூர் என்ற ஊருக்கு அருகில் கைது பின், இருபத்து நான்கு நாட்கள் சிறை சு.மி.யைப் புதிதாகப் பொறுப்பெடுத்திருந்த ஏ. ரங்க சாமியே, சி.ஆர்.சீனிவாசனுடன் சேர்ந்து வெளியில் கொண்டு வந்தார். −
அப்புறம் அவர், 'ஊர் சுற்றி கடயம் - எட்டையபுரம் - காரைக்குடி - கானாடுகாத்தான் - திருநெல்வேலி - திருவனந்தபுரம் மற்றும் சில இடங்களில் தங்கியிருந்தார்.
அங்கெல்லாம் நூல்கள் வெளியிடும் முயற்சியையும், அமிர்தம்’ என்ற பெயரில் புதிதாக இதழ் தொடங்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டார். அனைத்திலும் தோல்வியே!
திடீரென்று, 1919 - மார்ச்சில், யாருமே எதிர்பாரா நிலையில் சென்னை மண்ணை மிதித்தார். மகாத்மா காந்தியைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார். ‘வாழ்க நீ எம்மான்’ எனப் பின்னர் பிரபலமான பாடல் அன்றுதான் திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் அரங்கேறியது.
* ஆரம்பகாலத்தில் பாரதியின் எழுத்து நடையை விமர்சித்த கல்கி'ரா.கிருஷ்ணமூர்த்தி, அவரது பிற்கால நடைச்சித்திரங்களைப் படித்துவிட்டு அதன் தாக்கத்திற்குள்ளானார். அதே பாணியில் அவரும் நடைச்சித்திரங்கள் எழுதிப் பிரபலமானார்

Page 42
78 இதழியல் முன்னோடி
தொடர்ந்து சென்னையில் தரிக்கவில்லை. - அடுத்தாண்டு (1920)நவம்பர் 15ம் தேதி மீண்டும் 'சுதேச மித்திரனில் துணை ஆசிரியராகக் கடமைக்கு வரும்வரை அவர் சென்னைப் பக்கமே வரவில்லை.
கடமை எற்பதற்கு சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்னர் கூட சொந்த இதழ் நடத்துவதிலேயே குறியாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்தக்கடிதம் சான்று:
ஓம் சக்தி
கடையம் 26 - ஆகஸ்ட் - 1920 ழரீமான் - பூரீநிவாச் வரதாசார்யனுக்கு நமஸ் காரம். மாதா சக்தி அமரத்தன்மை தருக. “அமிர்தம்” பத்திரிகை 1921 ஆம் வருஷம் ஜனவரி மாஸம் முதல் தொடங்கும். மூலதனத்துக்கு வஸரல் தீவிரமாக நடத்தி வருகிறேன். தயவுசெய்து தங்களால் இயன்ற தொகையை தாங்கள் சொல்லிய படி, சொத்தை விற்றேனும் கொண்டு வரக்கூடிய தொகையைக் கொண்டு இவ்விடயத்திற்கு உடனே வந்து சேரும்படி ப்ரார்த்திக்கிறேன்”, ஆனால், மகாகவியின் கனவு நனவாகவேயில்லையே! அவர் உபாசித்த மஹா சக்தி' யானவள், அந்த சக்தி தாசனுக்கு எழுத்துக்களுக்கே வல்லமை கொடுத்திருந்தாளே யொழிய இதழ் நடத்த அல்ல!
ஆக - எந்த இதழ் மூலம் தன் இதழியல் வாழ்க்கையைத் தொடங்கினாரோ, அந்த இதழிலேயே மீண்டும் ஓர் அங்கமாகி,
*இந்த உருக்கமான கடிதம் முழுமையாக பாரதியின் கையெழுத்திலேயே உள்ளது. இந்நூலின் ஆரம்பப் பக்கமொன்றில் உள்ளது.

எங்கள் பாரதியார் 79
அரசியல் கலப்பில்லாத செய்திகளையும், கட்டுரைகளையும், கவின்தகளையும் படைக்கத் தொடங்கினார்
னால், தாயக விடுதலை வேட்கை, மறைமுகமாகவும், சில நேரங்களில் வெட்டவெளிச்சமாகவும் பளிச்சிடவே செய்தது. அந்த 1921 - செப். 11ஆம் தேதி மாலை தமது காலம் நெருங்கி விட்ட நேரத்திலும், அன்பர் நீலகண்ட பிரம்மச்சாரியிடம், “அமானுல்லா கானைப் “பற்றி ஒரு கட்டுரை எழுதி நாளை ஆபீசுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்”
என்று சொன்ன, கடமை தவறாத, நாட்டுப்பற்று மிக்க இதழாளனே மகாகவி பாரதி
விடியவே கூடாத பொழுது விடிந்தது. நள்ளிரவு சுமார் ஒன்னரை மணிக்கு பாரதியாரின் உயிர் பிரிந்ததாக திருவல்லிக்கேணி ஹைரோட்டில் (இப்பொழுது காயிதே மில்லத் பெருஞ்சாலை) கடைகளில் காப்பி குடிக்க வந்தவர்களும், சாயா பருகிக் கொண்டிருந்தவர்களும் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், அவர்களுள் எத்தனைபேர் இறுதி ஊர்வலத்தில் அவருக்குத் துணையாக இடுகாடுவரை சென்றார்கள்?
சாமான்யர்களை விடுவோம், இதழாளர்கள் கூடியதாகக்கூடப் பதிவில்லையே!
இருபதோ இருபத்து மூவரோ தானே இருந்தவர்கள்? இதற்குமேலும் இந்த ஆய்வுக்கு அவசியம் இல்லாதபடி என் கண்கள் பனிக்கின்றன.
மன்னியுங்கள்!
ஓம் சக்தி ஓம் சக்தி
*அமானுல்லாகான் பிரிட்டிஷ்காரர்களின் பரமவிரோதி. ஆப்கானிஸ்தானத்தை ஆண்ட அரசன். துணிச்சலுக்கு மறுபெயர்

Page 43
80
இதழியல் முன்னேரடி
(சிலவரிகளில் பெரிய தகவல்கள்)
“பாரதியாரது இலக்கிய ஆவேசத்தையும் ஆத்ம பக்குவத்தையும் அவரது கவிதைகளே திறம்படக் காட்டுவனவாயினும் பாரதி யாரது எண்ணக்குவியல்கள், சிந்தனைத்துளிகள், உணர்ச்சிப் பொறிகள், ஆசாபாசங்கள், முரண்பாடுகள் முதலியவற்றை அவரது
வசனப்படைப்புளே தெளிவாகக் காட்டுகின்றன, காட்ட முடியம்
- அமரர், பேராசிரியர் க. கைலாசபதி, (இலக்கிய விமர்சகர், இலங்கை) “. ‘செந்தமிழ் (1926), தமிழ்ப்பொழில் (1928), போன்ற சில
புதுமை இதழ்களையும், சில சாதி, மத நிறுவன இதழ்களையுந் தவிர, இயக்க, இலக்கிய முயற்சிகளுக்குக் களனாக விளங்கிய
இதழ்கள் யாவற்றுக்கும் பாரதியே ஆதர்சமாக விளங்கினான்.”
- கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி - (இலக்கிய விமர்சகர், இலங்கை) “பாரதியார் புரிந்த பத்திரிகைப் பணியே அவரை ஒரு தேசியக் கவியாக்கியது. பாரதி காலத்திய தேசிய விநாயகம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்றோர் குழந்தைப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த நேரத்திலே, கம்பராமாயணத்திற்குப் பொருள் விளக்கங்கள் கூறிக்கொண்டிருந்த காலத்தில், பாரதியின் குரல் தேசவிடுதலைக்காக இருந்ததற்கு அவர் ஆற்றிய பத்திரிகைப்பணி ஒரு இன்றியமையாத காரணமாகும் என்பதையே இந்த வங்கமே வாழிய கவிதை உணர்த்துகிறது”
-திரு. சேது பாண்டியன் (ஆய்வாளர்) “பத்திரிகைக் உணர்வு என்பது அவருடைய கவிதை உணர்வுக்குச் சமமாககொலுவீற்றிருந்தது’-
- திரு பெ.சு.மணி (ஆய்வாளர்)

எங்கள் பாரதியார் 81
* “இந்தியா’பத்திரிகை பிரபலபட்டபொழுது அதுமிகவும் உக்கிரக வாசகமுள்ளதாயிருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்பட லானது. அந்த அம்ஸம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றென்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய் சட்டவரம்புக்கு உட்பட்டு நடக்கும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரின் எழுதுகோல் பழையபடியே இருந்தது.”
- திரு. எஸ்.ஜி. இராமாநுஜுலு நாயுடு.(பத்திரிகையாளர்)
* “திரு சுப்பிரமணிய பாரதியின் வசன நடை அவர் என்ன மாறு பெயர் வைத்து எழுதிய போதிலும் கண்டுகொள்ளக்கூடிய மகத்துவமுள்ளது. அவருடன் அவரது நடை இறந்த மாதிரிதான். நேருக்குநேர்பேசுவதுபோலகுத்தலும்கிண்டலும்கலந்தநையாண்டி
நடையை'இந்தியாவில் மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார்.”
- திரு. எஸ்.ஜி.இராமாநுஜுலு நாயுடு(பத்திரிகையாளர்) * “தொடக்கத்திலும் இறுதியிலும் பணியாற்றிய 'சுதேச மித்திரனில் பாரதி உருவாக்கிய நடைச்சித்திரமும் எளிய தமிழ் நடையும்'இந்தியா'இதழில் காட்டிய அரசியல் விழிப்புணர்ச்சியும் கடுமையான சாடல் நடையும் தமிழ்நாட்டில் பல இதழ்கள், இதழாளர்கள், இதழாசிரியர்கள் உருவாகக் காரணம் ஆகும்' - முனைவர் பா. மறையரசன்
本 本 本
* “ஆங்கிலம், ஃபிரெஞ்சு, இந்தி முதலான மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்து இந்தியாவில் செய்திகளையும், கட்டுரைகளையும் பாரதியார் மொழிபெயர்த்து வெளி யிட்டுள்ளார். மொழிபெயர்ப்பில் தமிழ்மொழியின் மரபையும், பிரயோகங்களையும் கைவிட்டு அந்நிய மொழிகளின் பிரயோகங் களை தமது தமிழ்நடையில் பாரதி அனுமதிக்கவில்லை”
- திரு. பெ.க.மணி (ஆய்வாளர்)

Page 44
82
இதழியல் முன்னோடி
“சித்ராவளி’என்றசித்திர இதழைத்தொடங்கமுயற்சிசெய்ததும் உண்டு. இந்தத்திட்டமே பிற்காலத்தில் ‘விகடன்’ என்னும் இதழ்கள் தோன்றக்காரணமாகும். இந்தியாவின் ஒவ்வொரு இதழிலும் மூன்றுக்குக் குறையாத கருத்துச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) இருந்தன. சில இதழ்களில் ஏழு “சித்ராவளி’யில் நிறைவேற்றயிருந்த ஆசையையே பிற் காலத்தில் “சுதேச மித்திர”னில் நகைச்சுவை நிரம்பிய சொற் சித்திரங்களை எழுதித் தீர்த்துக்கொண்டார்”
- முனைவர் பா. மறையரசன்.
9
“ஓயாமல் குலைத்துக்கொண்டிருக்கும்’-“கூனிப்பத்திரிகை ‘வஞ்சக்கிழவிப் பத்திரிகை” - “ஜீரணம் ஆவதற்கே தெருத்திண்ணையில் உட்கார்ந்து வீண்வாதம் பண்ணும் சோம் பேறிகள்” “எவ்விதமாக ஊளையிட்டபோதிலும்”“சூரியனைப் பார்த்து நாய்கள் குலைத்தல்” - “கோழைத்தனமான ராஜ தந்திரிகள்’-"மூடர்கள்’-“கோழைகள்’துரோகிகள்’-“ருத் ராக்ஷடம்”முதலான நெருப்புச் சொற்கள்'மிக இயல்பாக பாரதி யாருக்குச் கைவரப்பெற்றிருந்தன.
இதழியலில், தமிழ் ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றை முதன் முதலாகக் குறித்தவர் பாரதியே! அதுமட்டுமின்றி, இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வந்த அவர், முஸ்லிம் ஆண்டு, மாதம் நாள் முதலியவற்றையும் இந்தியாலில் குறித்துள்ளார். புதுவை இந்தியா' இதழிலும், விஜயா இதழிலும் பக்க எண் களைத் தமிழெ ண்களில் தந்தவரும் அவரே இப்பழக்கத்தையே வ.வே.சு. ஐயர் தன் பால பாரதியில் (1924) கைக்கொண்டார்.
வார இதழாக வந்து கொண்டிருந்த இந்தியாவை வாரம்
இருமுறை இதழாக மாற்றப் போவதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது.

எங்கள் பாரதியார் . 83
* பி.பி.சுப்பையா-ஹரிஹர சர்மா - என். நாகசாமி - வ.ரா.
என்கிற வ. ராமசாமி
- இந்தப்பெயர்கள் எல்லாம் பாரதியின் துணையாசிரியர்களாகப் பணியாற்றியோரைக்குறிக்கும்.இதில்,"வரா’பல இதழ்களின் ஜாம்பவான். 1935-ல் இலங்கை ‘வீரகேசரிக்கு ஆசிரியர்.
* பாரதி நடத்திய 'இந்தியா’ என்ற பெயரில் கனக சங்கர கண்ணப்பர் என்பாரை ஆசிரியராகக் கொண்டு ஓர் இதழ் 1931ல் வந்துள்ளது. பின் 1934ல் இவ்விதழ், தினமணியுடன் இணைந்தது.
* காந்தியடிகள் கூட, பிற்காலத்தில். பாலபாரதா என்ற பெயரை
ஒட்டி"யங் இந்தியா” வெளியிட்டார்.
* பாரதி புதுவையில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே, சென்னையில் அவரது பெயரில் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் ஓர் இதழ் நடத்தியதுண்டு. ஆண்டு : 1916.
* பாரதியார் பெயரில்அவரது மறைவுக்குப்பின் வந்த இதழ்
களின் தொகை : 11
பாரதி வெற்றி (1924) - பால பாரதி (1924) - பாரதி (1927) பாரதி (1929) - நவீன பாரதி (1930) - ஜயபாரதி (1933) சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் (1935) - பூரீபாரதி' (1945) - பாரதி (1946 - இலங்கை) - பாரதி (1948) - பால பாரதி (1953 - சிறுவர் இதழ்).
* இளசைச் சுப்பிரமணியன்’ என்று முதன்முதலாக 241.1897 ல் எழுதுகோல் பிடித்து சீட்டுக்கவி எழுதிய பாரதி, பின் 1904ல் “விவேகபாநு’ இதழில் வெளியான கவிதையில் எட்டையபுரம் ஸி.சப்பிரமணிய பாரதி எனக் குறித்துள்ளார். பின், சி. சுப்பிரமணி பாரதி' 'சி.சு.பாரதி' என்றும், குறித்துள்ளார். அவரது புனைப் பெயர்கள் : “வேதாந்தி” - “நித்திய தீரர் “உத்தம தேசாபிமானி” - “ஷெல்லிதாஸ்” -
32 ές
*ராமதாஸன்” “காளிதாஸன்” “சக்தி தாஸன்” “சாவித்திரி”

Page 45
84
★
இதழியல் முன்னோடி
1909 - ல் இந்திய காங்கிரஸுக்குள் பிளவு வலுக்கு முன்பேயே,
தென் ஆப்பிரிக்காவில் சாத்விகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பாரிஸ்டர் காந்தியை காங்கிரஸ் மகா சபைக்குத் தலைவராக்கலாம் என்ற யோசனையை, பாரதி, புதுவை இந்தியா தலையங்கமொன்றில் (1901 ஆகஸ்ட் 21 இதழ்) வற்புறுத்தினார். காந்தியடிகளின் அறப்போர் முறையினை ஆரம்பகாலத்திலேயே உணர்ந்தவருள் பாரதியும் ஒருவர்!
‘தேசத்துரோகம் நாச்மே விளைவிக்கும் என்ற கருத்தைப் புகட்டும் ஒரு கட்டுரை புதுவை இந்தியாவில் 1910 மார்ச் 12ந்தேதி இதழில் (அதாவது, இறுதியான இதழில்) வந்தது. அதில், திருவாங்கூரில் (திருவனந்தபுரம்) முன்பு வாழ்ந்த வேலுத்தம்பி என்ற தளவாயின் வரலாற்றைக் கூறி, அவனை விட தேசத்தை காட்டிக் கொடுக்க மறுத்துப் போரில் உயிர் விட்ட திப்பு சுல்தான் மேலானவர் என்று எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் அரசனை அவர் பேனா மிகவும் உயர்த்தியுள்ளது.
நிருபர்களை நியமித்து, அவர்கள் அனுப்பும் செய்திகள் பிரசுரமானால் சன்மானம் கொடுப்பதே இன்றும் நடைமுறையில் உள்ள விஷயம். ஆனால் 88 ஆண்டுகளுக்கு முன் வாசகர்கள் அனுப்பும் செய்திகளுக்குக் கூட பணம் அனுப்புவோம் என அறிவித்தது பாரதியே! (இந்தியா' 1908 - ஏப்ரல் 18)
பாரதியாருக்குத் துப்பாக்கிச் சுடவும் தெரியும். அதைப்பழக்கி யவர் அறிஞர் வ.வே.சு. அய்யர். ஆனால் விளையாட்டுக் காகவேனும் அதனைப்பாவித்தவர் அல்லர்.
புதுவையில் பாரதியாரும் அரவிந்தரும் தங்கி இருந்தபோது, அவர்களை எப்படியாவது புதுச்சேரியிலிருந்து கிளப்பி அயல் நாடுகளுக்கு அனுப்பிவிடப் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம்

எங்கள் பாரதியார் 85
மிகவும் முயன்றது.அப்போது புதுச்சேரியில் மேயராக இருந்தவர் ‘ஆல்பர்ட் கேப்ளே' என்ற பிரெஞ்சுக்காரர் இவர் 1907 முதல் 1925 வரையில் புதுச்சேரி மேயராக இருந்து வந்தார். இவருக்கப் பாரதியாரிடமும், அரவிந்தரிடமும் அளவற்ற அன்பு பாரதியையும் அரவிந்தரையும் வட ஆப்பிரிக்காவுக்கககோ பிஜி தீவுக்கோ அனுப்புவதற்காக பிரிட்டிஷார் முயன்ற முயற்சிகளை யெல்லாம் நிறைவேறாமல் தடுத்தவர் கேப்ளேதான்.
* ஆரம்பித்தில் ஆண்டிகளை பரதேசிகளைக் கண்டால் பாரதிக்குப் பிடிக்காது; பழைய சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது.ஆனால் பின்னாளில் அவருக்கு இந்த நம்பிக்கையை உண்டு பண்ணியவர் 'குள்ளச் சாமியார் தான். பிறகு சாதுக் களிடம் வாரதியார் மிகவும் மரியாதை காட்டி வந்தார்.
* பாரதியார் நிகழ்த்திய முக்கிய சொற்பொழிவுபற்றிப் பலருக்குக் தெரிந்திராது. காசியில் அவர் தங்கி இருந்தபோது, பூரீ சீதாராம சாஸ்திரி என்பவரின் தலைமையில், பெண்களுக்குக் கல்வி அவசியமா என்பதுபற்றிப்பேசினார். தலைமை வகித்த சாஸ்திரி அதை எதிர்த்து கண்டித்தும் பேசினார். பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. “பெண்களுக்குக் கல்வி அளிக்காமல் தேசம் முன்னுக்கு வரமுடியாது”என்று சொல்லிஎழுந்துபோய்விட்டார்.
女 ★ ★

Page 46
86
இதழியல் முன்னோடி
( உதவிய துண நூல்கள் )
01. “பாரதி மறைவு முதல் மகாகவி வரை”
02"இரு மகாகவிகள்”
03."பாரதி பன்முகப்பார்வை'
04."மகாகவி பாரதியார்”
05."மகாகவி பாரதி - சில
புதிய உண்மைகள்”
06.“இதழியல்’
07:"முற்காலத் தமிழ் இதழ்கள்"
-ஓர் அறிமுகம் -
08.“தமிழ் இதழியல் வரலாறு” 09."இதழாளர் கையேடு”
10.“தமிழ் இதழ்கள்
தேர்ற்றம் வளர்ச்சி”
1"தமிழ் இதழ்கள்” 12"தமிழ்ப்பத்திரிகைகள்”
13."மகாகவி பாரதி”
கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி (இலங்கை) அ.மார்க்ஸ்
கலாநிதி க.கைலாசபதி (இலங்கை)
க.தணிகாசலம், சோ.தேவராசா.
வ.ரா.(வ.ராமசாமி)
வல்லிக்கண்ணன்.
έl. Επιτεπιτ.
மா.ரா. இளங் கோவன்.
மா.சு.சம்பந்தன்
அ.மா.சாமி
y
சோமலெ
க.குளத்தூரான்
எஸ்.எம்.ஹனிஃபா (இலங்கை)

எங்கள் பாரதியார் 87
14.“பத்திரிகையாளர் பாரதியார்” - பெ.சு.மணி. 15."இதழாளர் பாரதியார்” - பா இறையரசன் 16.“பாரதி தரிசனம்” - ஸி.எஸ் சப்பிரமணியன்!
இளசை மணியன்.
17.‘புதுவையில் பாரதி” ப. கோதண்டராமன்.
பாரதி ஆய்வாளர் அறிஞர் திரு ரா.அ.பத்மநாபன் நூல்கள்
01."வ.வே.ஸு. ஐயர்” 1981 -ܝ 02.“பாரதியின் கடிதங்கள்” - 1981 03:“பாரதி புதையல் பெருந்திரட்டு” - (up(g6DLDLT60T தொகுப்பு.
1982,
சஞ்சிகைகள் / மலர்கள்
01'தினமலர்' ஞாயிறு வெளியீடு - “வாரமலர்” 02'தினகரன்’ (தமிழ்நாடு) 03.தினமணி - "சுடர்” (ஞயிறு மலர்)
"வசந்தம்” (ஞயிறு மலர்)
04:தாமரை - பாரதி நூற்றாண்டு விழாச்
சிறப்பிதழ் 1981.
ஆய்வுக்கு உதவிய நூலகம்
மறைமலையடிகள் நூலகம் ` - சென்னை.
大 大 大

Page 47
88
விற்பனையாகும் இதர நூல்கள்
disrud (p65TG60 ppb - Village Development
கிராம முன்னேற்றத்திற்கான வழிகள். 2500 தமிழகக் கிராமங்களில் பெண் சிசுக்கொலைகள் - தீர்வுகள். 42.00 பஞ்சாயத்து ராஜின் தோற்றமும் வளர்ச்சியும் . 15.00 பஞ்சாயத்து பற்றிய புதிய சட்டங்களும் நிர்வாக முறைகளும் . 27.OO சாண எரிவாயு தயாரித்துப் பயன்படுத்துவது எப்படி? 8.50 அடுப்புக்கரி தயாரிப்பும், கருவேல் மர வளர்ப்பும் . 21.50
9IUS, 6S50p60psoi - Govt. Procedures
என்ன செய்யவேண்டும்? அரசாங்க அலுவலக விதிமுறைகள்)
பாகம் 1 பாகம் 2. பாகம் 3 .
12.00 32.00 8.00
9|Us; Braunsub - Govt. Administration நகராட்சி. மாநகராட்சிச் சட்டங்கள்.- 44.00 (புதிய சட்டத் திருத்தங்களும். பேரூராட்சி சட்டங்களும் சேர்ந்தது) தலைமைச் செயலகம் இயங்கும் விதமும், நாம்
தெரிந்துகொள்ள வேண் "ப ^ஷயங்களும் . 14.00 அரசுப் பணிகளுக்கான டெண்டர் விதிமுறைகள் . 5.00 ஆட்சிச் சொல் அகராதி 19.00 தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளும், ஒழுங்கு
நடவடிக்கை முறைகளும் . 6.00
96LD5urgOT GUITpa - Peaceful Living வாழத் தெரிய வேண்டாமா?. 7.00 மனக் கவலைக்கு மருந்து 12.50 மன நிம்மதிக்குச் சில யோசனைகள். 17.00
góllalės 5' (66MITG56řT - Boosting Essays வேலையின்றி வேதனைப்படுகிறீர்களா?. SSLSSSS LSLSLSSSLSSSLSSSMSSSSSSS LSSSLSSSSSSSLSLSSSLSSLSLSSLSLSSSSSSL SSLSLSSSLSSSSSSSLSLLSSLLSSSLLSSLS 2.00 மற்றவர்களைக் கவர்வது எப்படி?. 15.00 வாழ்க்கை கசந்தாவிட்டது? 13.50
சரியான முடிவுக்கு வரமுடியவில்லையா? . 1 100
 
 
 
 
 
 
 
 
 
 


Page 48


Page 49
என் புஇ
"கடவுளின் திருவிளை
ஒர் ஆத்மா இவ்வுலக
சொற்ப காலம் 画
காரியங்களைச் செய்து
போய்விட
கட்டளையின் படி
ஜனித்து, செய்ய காரியங்களை அவச செய்துவிட்டு காலம்
இறப்பதும் ஒரு
கடமையாகக் கொண்
செய்து முடித்தார்"
மலர் பிரி
 

யாடலில் இப்படி
கத்திற்கு ஜனித்து,
ங்கி, சிற் சில
துவிட்டு திரும்பப்
வேண்டுமென்ற
ான் புருஷனும்
வேண்டிய
ரம் அவசரமாகச்
சமீபித்தவுடன்,
அவசரமான
ாடு, அதனையும்
ண்டர்ஸ், சென்னை 34 மீ 3224803