கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனவுங் கலைந்தது, காலையும் புலர்ந்தது!

Page 1


Page 2


Page 3

後須%須 後徐影影形後
22.2 2 %ク %
2/
須須須須須
"frtgarnt sITaTrr"
ஊரெழு கதிரமலையான், பி. ஏ.
கதிரமலை பதிப்பகம்
15- K, பாரதிதாசன் காலணி கே. கே. நகர், சென்னை-78

Page 4

சமர்ப்பணம்
என் தாய் மாமனும், எமது வாழ்க்கை முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை உடையவரும், மலேசியாவில் உத்தியோகம் வகித்தவரும், எமது குடும்ப விளக்காக திகழ்ந்தவருமான அமரர் குழந்தைவேலு செல்லையா அவர்களின் கமல பாதங்களில் இந்நூலைச் சமர்ப்பித்து நன்றிக்கடன் செலுத்தி வணங்குகின்றேன்.
5FIT. AIT60T IT

Page 5
முதற்பதிப்பு: மே 1997 பதிப்பாசிரியர்: சபா மகேஸ்வரன்
உரிமை : திருமதி மகேஸ்வரி கதிரவேலு

அகத்தின் அழகு மகத்தில் தெரியும். வீட்டின் அழகும் முற்றத்தில் தெரியும்.படை வீரர் ஒருவர், மீன் ஒன்றை வாங்கி, பொரிப்பதற்காகக் கொண்டுவந்தார். ‘நாம் மீன் சாப்பிடுவதில்லைபொரித்துத் தரமுடியாது என மறுத்தோம். அவர் முற்றத்திலே போடப்பட்டிருந்த கோலத்தையும் பார்த்துத் தலையை அசைத்துவிட்டு, ஒயூ பண்டிட் என்று சொல்லி விட்டுப்போய்விட்டார். முற்றத்திலே போட்ட கோலம் செய்த உதவி படைவீரன் ஆயினும் என்ன பண்பாடு
1987 இல் நடைபெற வேண்டிய பிரசவம் நூல் வெயியீடு, எட்டு வருடங்கள் பிந்தி விட்டது. குறித்த ஆண்டு, ஜனவரி 25 ஆம் திகதிக்கும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் உருவானதே இந்நூல்.
உள்ளக் குழுறலும், உடற்சோர்வும், உணர்வு முரண்பாடும் ஒன்றை ஒன்று நெருங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியைஇ இந்நூலை எழுதுவதிலும், மனோன் LD600f அந்தாதியைப்பாடுவதிலும் செலவு செய்து திருப்தி அடைந்து கொண்டேன்.
மனோன்மணி அந்தாதி 88 இல் வெளிவந்து விட்டது இதற்குரிய காலம் இப்போதுதான் கனிந் திருக்கிறது போலும்.
திரு முருகாற்றுப் படையயைப்பாடிய நக்கீரனுக்குக் கிடைத்த விடுதலை போல அந்தாதி பாடிய கதிரமலை யானுக்கும் விடுதலை கிடைத்தது.

Page 6
4
அவனைப்பாடினால் என்ன? அவனைப்பெற்ற அன்னையைப்பாடினால் என்ன?
தும்பங்கள்-கஷ்டங்கள் வரும் போது தானே மனிதன் கடவுளை நினைக்கிறான், அவருக்குக் கிட்டப் போகிறான். பழைய பசிபட்டினி, பிரச்சனை பற்றிச் சிந்திக்கிறான், தன்னை - தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறான் நிறுத்துப் பார்க்கிறான். பிறருக்குத் தன்னால் ஏற்பட்ட - ஏற்படக்கூடிய இன்னல்களை எடை போடுகிறான். நண்பர்கள் போல் நடித்தவர்களில் எத்தனை பேர் நரி போல் ஆகிறார்கள். காகம் போல் எத்தனை?
இப்படி எத்தனையோ படிப்பனைகள், இதற்குமேல், இதயத்தை கல்லாக்கிக் கொள்கின்ற ஒரு திண்மையும் ஏற்படுகிறது.
இப்படியான நிகழ்ச்சியைச் சொல்வதே இந்நூல், இந்த வாய்ப்பினை அடியேனுக்கருளிய முருகப் பெருமான் ஒரு சிலலை அவர்களுக்கே தெரியாமல் கருவியாகப்பயன் படுத்தினார் போலும்.
அடியேனைத் தடுத்து ஆட்கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை, இதுவாகும் என்பதே என் அடி உள்ளத்தின் கருத்தாகும்.
வாழ்க்கை என்பது பஞ்சணை மெத்தையன்று தாமரையாகவும் இருக்கலாம். முள்ளு ரோசாவாகவும் இருக்கலாம், கல்லும் முள்ளும், புதரும் புற்றும், சோறும் சகதியும், சேர்த்ததே, முள்ளு மிரிதடி போலவும் இருக்கலாம். முள்ளுக் குற்றாத செருப்பாகவும் இருக்கலாம் முருக்கம் பூப்போலவும் தெரியலாம்.

5
எப்படியாயினும் வாழ்கை வாழ்வதற்கே. அதற்குக் கருவியாக இருந்தவர்களை நமஸ்கரித்து அப்பால் செல்வோம்.
நாம் எத்தனை எத்தனை இன்பங்கள். எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றோம். உண்பதில், உறங்குவதில் , உடுப்பதில் , குடிப்பதில், ஆடுவதில், சல்லாபம் செய்வதில்,கூடி ஊடுவதில்இவ்வாறு அடுக்கலாம். மேலும் மேலும் உயரப்பறக்க மகிழ அனுபவிக்கவே விரும்புகின்றோம். ஏகாந்தம் இனிது ஞானம் இனிது என்பவர் எத்தனைபேர்
புலி கலைக்கிறது பாண்கிணற்றில் விழுந்து கீழே போய்க்கொண்டு இருக்கிறான். பாம்புகள் தொங்கு கின்றன ஒரு மரவேரை எலி ஒன்று வெட்டிக் கொண்டு இருக்கிறது, கீழே முதலை பூஒன்றில் உள்ள தேன்துளி அவன் நாவில் விழுகிறது. ஆகா என்ன சுவையான தேன் இன்பம் சொட்டுகிறது.
பாலுக்குக் கற்கண்டு இல்லை குடிக்கக்கூழ் இல்லை கூழுக்கு உப்பில்ல, காலுக்குச் செருப்பில்லை பஞ்சணை மெத்தைக்கு மேலே மலர்விரிப்பு இல்லை, சந்திர மண்டலம் போய் வர ரொக்கேட் இல்லை அப்படிக் கவலைகள் எல்லாருக்கும் ஒரே வகையான துன்பங்களே,
எல்லாத்துன்பங்களையும் மொத்த இன்பங்களையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் சமமமாகவே இருக்கும், பொருள் வைத்த தராசுத்தட்டு பதிந்து இருந்தால் நல்லது என்று நாம் விரும்புகின்றேன்.
இது பொது நியதி, பலருக்குப் பொருந்தக்கூடியது. ஒன்றிரண்டு மாறாகவும் இருக்கும். அனுபவம் இப்படித்தான் சொல்கிறது. அனுபவமே வாழ்க்கை வாழ்க்கையே அனுபவம்.

Page 7
6
நல்லவர்கள் இருவவர் நடந்து போகின்ற பொழுது இருவருமே வழி விலகி, விட்டுக் கொடுத்து, ஒதுங்கிபோகிறார்கள், அப்போது மூன்று பாதை அமைகிறது. ஒரு நல்லவனும், 905 கெட்டவனும் போகின்றபோது கெட்டவன் தான் வந்த அதே பாதையில் நேராக வந்து கொண்டிருப்பான். நல்லவன் ஒரு பக்கமாக ஒதுங்கி வழி விலகிச் செல்கிறான். அப்போது இரண்டு பாதை அமைகிறது. அதே பாதையில் இரண்டு முட்டாள்கள் வருகிறார்கள். அப்போது ஒருவரும் வழிவிலக விரும்பவில்லை இருவருமே மோதுப்படடு மூக்கை உடைத்துக் கொள்கிறார்கள்.
தனி வாழ்விலும், சமுதாய வாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஏன்? ஆன்மிக வாழ்விலும் கூட இப்படியான மோதல்களையும் அமைதியயையும் கண்டு அனுபவித்து அப்பாறசெல்வது மனிதனுக்கு ஆண்டவன் தந்த வாய்ப்பு, ஒரு கணனியை எடுத்து ஒவ்வொரு துறையிலும் கிடைத்த வெற்றி தோல்வி, இன்ப துன்பம், இலாப நட்டம் என்பவற்றைக் கூட்டிக்கழித்து நிறுத்துப் பார்த்தால் ஒவ்வொரு உயிரிக்கும் சமமான இன்பத்தையும் துன்பத்தையும் இறைவன் தந்திருக்கிறான் என்பதை நாம் அறிந்து எங்களுக்கு சரியான பங்கு கிடைத்திருக்கிறது என்பதில் திருப்திப்படலாம்.
மேலும் நாம் நன்றி பாராட்டுபவர்களாக வாழ்ந்து பழகினால் நமக்குத் திருப்பித சாந்தி சமாதானம், இன்பம் என்பவற்றின் கதவு எந்த நேரமும் திறந்திருக்கும்,
இப்போது நீங்கள் கதவைத் திறவுங்கள்.
வணக்கம்.
PT6s 6

14.
15。
16.
படலை திறந்தால்
திறவுகோல்
சித்தத்தில் குடிகொண்ட சித்தர் தாமரை பூத்த தடாகத்திலே
பாலப்பருவம்
கல் விக் கழகம் மெல்லச் செல்லும் பள்ளிப்
பிள்ளை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஊரில் ஒருவனே தோழன் பணம் சம்பாதிப்பது எப்படி?
பனிப்போரும் பயிற்சிக் கல்லூரியும் உத்தியோகம் புருஷ லட்சணம் தேன் பாய மீன் பாடும் தமிழகம் கற்கை நன்றே கற்கை நன்றே யாழ்விவசாயிகளிற் பொற்காலம்
வன்னி ராச்சியம்
கூடாரம் பேசுகிறது கனவுங் கலைந்தது காரிருள் அகன்றது.

Page 8

( 1. திறவுகோல்)
1987 ஜனவரி 23 ஆம் நாள் மாலை கதிரமலையில் வழக்கமாகக்கூடுபவர்கள் கலைந்து விட்டார்கள். விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு இரவு உணவு வழங்கும் நாள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டார் வழங்க வேண்டுமென்று கிராம மக்கள் எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
குழல் பிட்டு, கிழங்குக் கறி, தக்காளிச் சொதி தயார் செய்யப்பட்டன. 55 முட்டைகள் அவித்து ஓடுநீக்கப்பட்டது. நாம் தாவர உணவு உண்பதால் போராளிகளுக்கு மாமிசஉணவு வழங்க முடிய வில்லையே என்று மன வருத்தம். போராட்ட வீரர்களுக்கு தாவர உணவு கொஞ்சம் மந்தம் . இரவு 8 மணி ஆகிவிட்டது, தொண்டர்கள் ஐந்து, ஆறு பாத்திரங்களில் உணவைச் சுமந்து கொண்டு வடக்கு நோக்கிச் செல்கிறார்கள். ஐம்பத்தைந்து போருக்கு பிட்டு அவித்தகளைப்பினால், வேர்த்து வடிந்த வியர்வையினால், நனைந்த உடையுடன் ஒரு தட்டிலே உதிர்ந்த பிட்டு, என்றவுடன், வைகை நதிக்கு அணை கட்டுகின்ற பொழுது செம்மணச் செல்வியார் கூலியாளாக வந்த சிவபெருமானுக்கு கொடுத்த உதிர்ந்த பிட்டின் ஞாபகம் தான் வரும். அதில் இரண்டு கையைக் கிள்ளி வாயில் போட்டு சுவைத்துக் கொண்டிருந்தேன். பிட்டும் சொதியும் நல்லாய் இருக்கப்பா என்று சொல்லி வாய் மூடுவதற்குள், ஒரு பெரிய வண்டி படலைக்கு முன்னால் பிரேக் போட்ட சத்தம் கிறீச்

Page 9
10
என்று கேட்டது . திரும்பிப் பார்த்தேன். சாதாரண உடை அணிந்த ஐவவர் வாகனத்தில் இருந்து கொஞ்சம் உசாராக இறங்கினார்கள். ஐயா நிற்கிறாரா? என்று வினவிக்கொண்டு வருகிறார்கள்.
ஆம் நிற்கிறேன்.
தேனிரும் வழங்கப்பட்டது பிட்டின் கதையும் முடிந்தது,
“ஐயா “பெரியவர் உங்களை உடனடியாக வரட்டாம்.
பதினைந்து நிமிடத்தில் திருப்பிக் கொண்டு வந்து, விட்டு விடுவோம்; வாருங்கோவன்?” என்ற குரல் ஒருவரிடமிருந்து மிகக் கனிவாக வெளிவந்தது.
ஏன்? என்னை அழைக்கிறார் என்னை அவருக்குத் தெரியாதே எனக்கும் அவரைத் தெரியாதே'
சரி பிழை ஒன்றும் தெரியவில்லை. பயப்படவும் இல்லை. பயப்படவேண்டிய தேவையும் இல்லை. சந்தோஷமும் வரவில்லை. அவர்கள் சொல்வதை செய்வதுதான் அந்தக் காலகட்டத்தின் மரபு அவர்களின் சொல்லைத்தட்டுபவர்கள் யாரும் கிடையாது. காலத்தின்மரபுக்கேற்ப நானும் தலையை அசைத்தேன்.
பழைய வாத்தியார் சட்டையையும் தூக்கிப் போட்டேன். பராமாஸ் சால்வை தோளில் தொங்கியது. வாகனத்தின் முன் ஆசனம் கிடைத்தது. இரு மருங்கிலும் இரண்டு வீரர்கள், பின்புறத்திலும் சில வீரர்கள் வண்டி மிக வேகமாக ஓடுகிறது.
திருநெல்வேலிச் சந்தி வந்து விட்டது. வண்டி வலப்பக்கமாகக் திரும்பியது.
“ ஏன் தம்பிமார் நல்லூர் போவதற்கு இங்கு போகிறீர்கள்?
* இங்கு தான் ஐயா கொண்டு போகச் சொன்னது.”

11
அப்போதுதான் எனக்கு கொஞ்சம் தலை வேலை செய்தது. இதற்குள் ஏதோ மர்மம் இருக்கிறதே? என்ற உணர்வும் வந்தது. வண்டி வண்ணார் பண்ணை மேற்கு சாவற்காடு கூடாரத்திற்குச் சென்றது. அதுதான் யான் சிறைப்படுத்தப்பட்ட
குகை.
“முருகா” என்று நினைத்துக் கொண்டு இறங்கினேன்
. இருபத்தைந்து, இருபத்தாறு விடுதலை வீரர்கள் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக ஒடியாடித் திரிந்தனர். ஆங்காங்கே மூலைகளில்ஈட்டி, வாள், துவக்கு இப்படி பல ஆயுதங்கள் பரவிக் கிடந்தன. சின்னச் சின்னப் பந்துகள் போல பொருட்களும் தீப்பெட்டி போல பொருட்களும் ஆங்காங்கு இருந்தன. உயர்ந்த வாட்ட சாட்டமான அழகான ஒருவரே கூடாரத்தின் பொறுப்பாளி. என்னை அழைத்துச் செல்ல வந்தவர்களில் அவரும் ஒருவர். அந்த வீரர்களிடம் பண்பும், பணிவும் நிறையஉண்டு. எனக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அந்தக் கூடாரத்தின் தலைவன், “கட்டிலை பெரியவருக்கு ஒழுங்கு செய்து கொடுங்கோடா என்று கட்டளை இட்டார்."
நாலைந்து வீரர்கள் நீ பிடி நான் பிடி என்று எல்லாம் உதறிப்போட்டு படுக்கையும் விரித்து விட்டார்கள்.
முதல், அதில் குந்தினேன். சிந்தனை அலைகள் சிறகடித்துப்பறக்கத் தொடங்கின. மெல்லச்சரிந்தேன் எனது நாடு, கிராமம், பாலியம், இளமைச் செயல்கள், வாலிபக் குறும்புகள், குடும்ப வாழ்க்கை, வாழ்க்கையின் வளர்ச்சி, ஆன்மிகச் சிந்தனை இவைபற்றிய கடந்த காலநினைவலைகள் ஒளிப்பேழையில் ஒடுவது போல என் கண்முன் புலனாகிறது.

Page 10
12
எதிர்கால கற்பனையும் அங்கு தெரிந்தது, எங்களுடைய ஊரின் தெற்கு எல்லையில் “காட்டு வைரவர் கோயில் நாலா பக்கத்தில் இருந்ததும் பலிக்கடாக்கள் அழகான மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள தாளங்களுடன் அழைத்து வரப்படுவதுண்டு. போகும் பொழுது அந்தக் கடாக்கள் கம்பீரமாகப் போகும். அவை திரும்பிவருவது இல்லை. இப்படியும் ஒரு நினைவு. இப்படிப் பல.
ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் தமிழ்வருடப் பிறப்பிற்கு முதல் ஒரு சனிக்கிழமை ஒரு வேள்வியும், அடுத்த சனிக்கிழமை எட்டாம் மடையும் நடைபெறும். பலிக்கடாக்கள் பெரிய கத்தியினால் ஓங்கி வெட்டப் பட்டு தலை வேறு உடல் வேறு ஆக்கப்படும். நாங்கள் பத்தடி இருபதடி உயரத்தில் மரங்களுக்கு மேலே இருந்து பார்த்து கை கொட்டுவோம். நல்ல கொழுத்த கடாவின் இரத்தம் ஐந்து, ஆறு உயரத்திற்கு பூ விசிறி போல பாயும், கடா வெட்டிய நிலம் இரத்த வெள்ளக்காடாக இருக்கும். கூடாரத்தில் ஒடி ஆடித் திரிந்த துள்ளு, வரதன், ரஞ்சன், ஈ. பி, பாபு இப்படிச் சில வீரர்கள் பெயரை அன்றே அறிந்து கொண்டேன். எனக்கு வேண்டிய உதவிளை செய்வதற்கு துள்ளு நியமிக்கப்பட்டார்.
துள்ளு எனக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்வார். தயிர், பால் , பழம் என்பனவும் வாங்கித் தருவார். தேவையான உதவிகளைச் செய்யும் படி கூடாரத் தலைவன் சுதன் உத்தரவிட்டு இருந்தாராம்.
செய்வது எது என்பது தெரியவில்லை, தலை சுற்றுதோ, உலம் சுழலுகிறதோ என்பதும் தெரியவில்லை.

13
நீண்ட நேரம் இருக்கவும் முடியவில்லை. படுக்க விருப்பமும் இல்லை தூக்கமும் வரவில்லை. மூன்றெழுத்துமந்திரத்தை வாய் முணுமுணுத்தது.
புதிய அனுபவத்தின் முகை ஒன்று மொட்டானது. முன்பின் அனுபவிக்காத, நேரே காணாத, புத்தம் புதிய அனுபவத்தின் அரும்பு. வாழ்க்கை இங்கேயா? அங்கேயா? என்ற இடி முழக்கம், இடி எங்கும் விழலாம் எப்போதும் விழலாம்.
இமைகள் மூடிவிட்டன. கண்மூடவில்லை. உள்ள இயந்திரம் மிக வேகமாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறது. கனாவா? நனவா? என்பதம் தெரிய வில்லை, போகக் போகக் கனவு போலத்தான் தெரிகிறது. கனவில், பெரிய திரையில் நீண்ட நேரத்துக்கு தெரிகிறது.

Page 11

15
2. சித்தத்துள் குடி கொண்ட சித்தர்
கட்டிலில் சரிந்து விட்டேன்- கதவு பூட்டப்பட்டது.
எண்ண அலைகள் அடுக்கடுக்காக கருக்கட்டின. நெஞ்சத்துடிப்பு அதிகரித்தது. சின்ன இடிமுழுக்கம் போல் இருந்தது, நெஞ்சுவெடிக்குமோ என்ற பயம், எண்ணக் கருக்களின் முதல் கருவிலே தவத்திரு தந்தையார் சுவாமியார் (குடைச்சுவாமியார்) தென்பட்டார்.
நான் கண்ட முதற் சித்தர், என் தந்தையார்
யாழ்ப்பாணக்கடை வீதியில் எனக்குக் காட்டித்தந்த குடைச்சுவாமியார். அடுத்த சித்தர் யோகர் சுவாமிகள். என்னுடன் நேரடியாகப் பழகியவர் குடைச்சுவாமியார்.
அவர்கள் சிலசமயம் வீட்டுக்கும் வருவார். வீதியிலும் திரிவார். அவரின் கையிலே, கக்கத்திலே குடை இருக்கும் . காசுகையில் பட்டறியார்.
பல சந்நியாசிகளும் சுவாமிமார்கள் என்று சொல்லிக் கொள்கிற ஆசாமிகளும் சிவனடியார் வேடத்தை உழைக்கும் ஒரு சாதனமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள், ஆசாபாசங்களைத் துறந்து சமுதாயசேவைசெய்வதாகவும், சிவ வழிபாடு செய்வதாகவும், சமய உபதேசம் செய்வதாகவும் காட்டிக் கொண்டு கோடிக்கணக்கான பணத்தை சம்பாத்தியம் செய்து, அந்தப்பணத்தை பல தீய வழிகளில் பயன்படுத்துகின்ற

Page 12
16
ஆசாமிகளை இங்கு பரவலாகக் காண முடிகிறது. சித்தர் பரம்பரையில் நாம் அறிந்த முதல் சித்தர் என்று கருதப்படுகிற திருமூலர் தொடக்கம் இன்று வரையுள்ள பலரும் இந்தப் பணத்தினால் பாதிப்பு அடையாத பெரும் மனசு படைத்தவர்கள் ஆவர்.
குடைச்சாமியார் படுக்கையில் படுத்தறியார். நாகதாளி பற்றைக்கு மேலும் கொதிக்கும் வெய்யிலிலும் குடையைப் போட்டுவிட்டு அதற்கு மேல் படுத்துவிடுவார். குடை எல்லாரையும் காக்கும் திருவருள் ஆகும்.
அந்தச் சீவன் முத்தர் நடமாடும் தெய்வம். சில சமயம் எனது வீட்டிற்கும் வருவார். அவருக்கு என்னை அதிகம பிடிக்காது. எனது மனைவியை அழைத்து பேசுவார். பலாக்கொட்டை சுட்டுக்கொடுத்தால் சாப்பிடுவார். இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருக்கால் ஐந்து, ஆறு சோற்று அவிளும் சாப்பிடுவார்.
அவர்கள் சமாதியடைந்த பின்பு ஆசைப்பிள்ளை ஐயா தலைமையில் கோண்டாவிலில் அவருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டு நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கதிர், கடைச்சாமியாரைப் பற்றி ஒரு நூல் எழுதப்பா
என்று கவிஞர் முருகவேள் பரமநாதன் அடிக்கடி சொல்லுவார். திருவருள் கைகூடவில்லை. எழுதிய குறிப்புக்களும் கதிரமலையில் அடைபட்டு இருக்கின்றன.
கதிர மலையில் ஒரு முழு உருவப்படம் தான் வைக்க முடிந்தத.
கவமியாருக்கும் உலகத்தாருக்கும் உள்ள தொடர்பும்,

17
கதைகளும் அனந்தம் செய்த அற்புதங்கள் பல. பூர்வ புண்ணியம் உடையவர்கள் அறிந்து கொண்டார்கள், அனுபவித்துக் கொண்டார்கள்.
என்னுடைய வாழ்க்கையில், சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் இந்தத் திரையில் ஓடின.
எனக்கு ஏதாவது துன்பங்கள் நிகழ்கிறபொழுது பிரச்சினை வருகிறபொழுது அவரை நினைத்தால், அல்லது அவரைக் கண்டால் அது உடனடியாகத் தீர்ந்து போகும். சில சமயங்களில் குறுக்க மறுக்க வருவார். அப்போது நல்ல கருமம் நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரிந்து விடும்.
என்னுடைய மகளுக்கு ஒரு விவாகப்பேச்சு, பணம் இல்லாத காரணத்தினால் அதற்கு ஊறுகாய் போட்டேன். சுவாமியார் காலையில் வந்தார். மனைவியை அழைத்ார். “அந்த மடையன் எங்கே?’ என்று உரத்த குரலில் வினவினார்.
கடலுக்குள்ளாலே பணம்மிதந்து வருகிறது. எம்பெருமானுக்கு தந்திகொடுத்து இருக்கிறேன் என திருவாய் மலர்ந்தருளினார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே தலைச்சுற்று. ஏதோ நல்ல கருமம் நடக்கப்போகிறது. நன்மை கிடைக்கப்போகிறது என்பதுமாத்திரம் தெரியும். ஒரு திருப்திகரமான உள் உணர்வும் ஏற்பட்டது. வெளிச்சமாயும் இருந்தது. அன்றைய பொழுதும் விடிந்தது. பாரியாரின் மாமனார் திருநாவுக்கரசு ஓடி வருகிறார். * நான் இப்பதான் மலேசியாவில் இருந்து வந்தேன் . அத்தானை, வந்த கலியானத்தை செய்யச் சொல்லுங்கோ. பணவிடயத்தை நான் கவனிக்கிறேன்.” என்ற செய்தியைத் தந்தார். இந்தச் செய்தி எனது அம்மான் செல்லையாவின் மகன்

Page 13
18
மகாதேவனிடம் இருந்து வந்தது. அவர் எங்கள் குடும்பத்தில் ஒரு நல்ல எண்ணம் படைத்த கனவான், அம்மான் செல்லையா எங்கள் வளர்ச்சியில் கண்ணுங் கருத்தமாய் உள்ளவர் என் * தாயாரின் அண்ணன். மலேசியாவில் உத்தியயோகம் பார்த்தவர்.
ஒரு பூவும் இல்லாமல் மாலை கட்டத்தொடங்கிய எனக்கு கொஞ்சம் பூ கிடைத்தால் எப்படி? மனம் குளிர்ந்தது. அந்த நேரம் பார்த்து பெரிபய விதானையார் என்றால் அ. க. த. கிருஷ்ண ராசா. சின்ன விதானையார் வே. சின்னத்துரை . புத்தியில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விஞ்சியவர்கள். தோற்றத்தில்தான் சின்னதும் பெரிதும். எனக்கு மிக வேண்டியவர்கள் எனது இன்பதுன்பத்தில் நம்பிக்கைகையாக கருமம் ஆற்றுபவர்கள். கதையை பெரியவருக்குச் சொன்னேன். “ அண்ணே போனால் ஒரு மயிர், வந்தால் ஒரு மலை போய் பார்” என்று உசார் படுத்தினார்.
எனது பழைய சையிக்கிள் கட்டையில் ஏறி போனேன்; பார்த்தேன்; மாலை கட்ட ஆரம்பித்தாயிற்று செய்தி அறிந்த நண்பன் மா.ஆ பாலசுப்பிரமணியத்தின் பாரியார் திருமதிபுனித வதியும் கொஞ்சப்பூக்கள் கொண்டு வந்து தந்தார். மாலையைக் கட்டி முடிப்பதற்கு இன்னும் கொஞ்ச மலர் தேவை என்று விழித்துக் கொண்டு நின்ற நேரத்தில் செல்லப்பா முதலாளி தந்து உதவினார்.கலியாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
சுவாமியார் தந்தி கொடுத்தது இவர்களுக்குத்தான்! எனக்கு பின்பு தான் புரிந்தது.
சில உறவினர்கள் டாம்பீகமாக கலியாணத்தை நடாத்த வேண்டுமென விரும்பினார்கள். “ தொஞ்ச மாட்டிற்கு ஒரு குஞ்சமா?”

19 சாதாரணமான முறையிலே செய்வ்திற்கே ஆஷ்டழாக இருக்கிற பொழுது ஆயிரக் கணக் கானவர்களை வ்ற்ேறு உபசரித்து திருமணவிழா நடத்துவது எப்படி?
நமது கையிருப்பு-வருமானம் இவற்றிக்கு தக்கதாக தானே செலவு செய்ய முடியும் ஆனால் முதலில் அதிகம் செல்வழித்து மானம் அழிந்து மதிகெட்டு விடுவதிலும் உள்ளதற்கு வல்லிசாய் நடந்து கொள்வது நல்லது தானே.
இன்னொரு சம்பவம், எனது மகன் வளவன் பாடம் கேட்கச் செல்கிறான், வழியில் லாரி ஒன்று அவனை மோதி விழுத்தி விட்டது. சிறிய காயங்கள். அவன் பயணத்தை தொடர்ந்து விட்டான்.
“பெரிய பூதமாய் வந்தது எம்பெருமான் வந்து பூதத்தை கலைத்துவிட்டார். பிள்ளைக்கு ஒன்றுமில்லை” என்ற குரல் வீட்டு வாசலில் கேட்டது.
குரலைக் கேட்ட எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சில விநாடி கழித்து பக்கத்துத் தோட்டத்தில் இருந்து காசிலிங்கம் வருகிறார். “ஞானசம்பந்தரின் குரல் மாதிரி ஒன்று கேட்டது. போய்ப்பார்த்தேன், தம்பி விழுந்து கிடந்தான். தூக்கி துடைத்துவிட்டேன். ஆள் எங்கே?”
அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது. அவன் படிக்கப்போய்விட்டான். நாங்கள் துடித்துக்கொண்டு இருந்தோம் சாமியார் வந்ததும் சொன்னதிலும் ஓரளவு திருப்தி. இன்னொருநாள், மிகுந்த பணக்கஷ்டம். மனைவியின் கழுத்தை விட்டு இதுவரை கழற்றாத தாலிக் கொடியை கையில் எடுத்துக்கொண்டு அடைவு வைத்து பணம் எடுப்பதற்கு முயற்சி

Page 14
20
செய்தேன். கிடைக்கவில்லை. நேரமோ மதியமாய் விட்டது. பசி ஒரு புறம். சையிக்கிள் ஓடிய களை மறுபுறம். சாமியாரை வழி தெருவில் காணவில்லை என்ற எண்ணமும் வரத்தான் செய்தது. திரும்பி வரும் வழியில் கோண்டாவில் சந்திக்கு அண்மையில் ஒரு குரல் கேட்டது. “ போடா வீட்டிற்கு போ” திரும்பிப் பார்த்தால் அவர் என்னைப் பார்க்காமலே நடந்து செல்கிறார்.
சாமியாரைக் கண்டால் நல்ல கருமங்கள் நடப்பது வழக்கம். அவருடைய நினைவு வந்தாலே நல்லது. வழியிலே அவரைக்கண்ட காட்சிகள் நமக்கு பல நன்மைகளையும் தந்த அனுபவம் உண்டு.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே. நலமிக்க நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே. நல்லாருடன் இணங்கி இருப்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே. நா வரட்சி சற்று மாறியது; உடல் வெப்பம்கொஞ்சம் தணிந்தது; உள்ளம் குளிர்ந்தது; நம்பிக்கை ஒளிபிறந்தது.
வழியில் ஆசிரியர் பஞ்சாட்சரம் சந்திக்கிறார். “ நிமிர்ந்த பார்வையும் நேரிய போக்கும் குனிந்து காணப்படுகிறதே என்ன சங்கதி?”
தயங்கித் தயங்கி விடயத்தைச் சொன்னேன். “ வீட்டிற்குப் போங்கோ மூன்று மணிக்கு நான் வருகிறேன்.”
காது இனித்தது. மணி மூன்று ஆகிவிட்டது. பணம் வந்தது. பணத்தேவை நிறைவேறியது.

21
யாழ்ப்பாணக் கலாசாரப்படி ஒரு பெண் பிள்ளையை விவாகம் செய்து கொடுக்கும்பொழுது ஒரு வீடும், சில நகை நட்டுகளும் கொடுப்பது மரபு. மூத்தவனின் விஷயம் நிறைவேறிவிட்டது. இளைய வளுக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு வெளிக்குந்தில் இருந்தேன். அப்போது அங்கே காட்சி தந்த சுவாமியார்.
“ அடே நாளைக்கு நிலத்தாலே வருகிறது” என்று சொல்லிக்கொண்டுபோய் விட்டார். இந்தக் குறிப்பைப் பார். என்னுடைய பெடியனுக்குச் சரிவருமே பாப்பம்.
இப்ப எங்களிடம் கொஞ்சம் வசதிக் குறைவாக இருக்கிறது பாத்து என்ன ஐயா செய்கிறது. “ இப்ப உன்னுடைய வசதியைப்பற்றியும் கொடுக்கல் வாங்கல் பற்றியும் ஆர் கேட்டது? குறிப்பைப்பார்” பார்த்தேன் . அது பொருத்தமாக இல்லை. அவனுக்கு வேறு இடத்தில் விவாக ஒழுங்கும் அமைந்து விட்டது. அந்தச் சபையில் வைத்து, என்னுடைய அடுத்த சம்பந்தி அங்கே நிற்கிறார் பார் என்று சொன்னார். எனக்கு விஷயம் புரிந்து விட்டது . சில நாட்களில் தன்னுடைய அடுத்த மகனுக்கு என் மகளை விவாகஞ் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார். சாமியார் இப்ப நிலத்தாலே வருகிறது’ என்றது மிகப் பிந்தித்தான் புரிந்தது.
என் மனைவிக்கு நீண்ட நாள்களாக வயிற்றில் சுகமில்லை. இவளைக் கொண்டு போய் சத்திரத்து வீதியில் உள்ள பரியாரி வீட்டில் நரமாமிச சிகிச்சை செய் என்பார். எனக்கு இதை விளங்கிக் கொள்ள முடியவில்லை . சில மாதங்களின் பின் யாழ்பாணம் அரசினர் வைத்தியசாலையில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சையின் பின் நோய் குணப்பட்டது. அப்போது ஒரு நாள்

Page 15
22
வந்து “அவளை அங்குகொண்டுபோய்வைத்தியம் செய் என்று எத்தனை தடவை சொன்னேன் கேட்டியா?” என்றார்.
அப்போது தான் அவரின் கருத்து எனக்குத் தெரிந்தது.
எனக்கே இப்படிப் பல. உலகில் எத்தனை ஆயிரம் ஆயிரம்.
அந்த மகான் இன்று இந்தச் சிறையில் என் முன் தோன்றவில்லையே. தோன்றவும் ஆள் இல்ல்ையே என்பது பெரிய வாட்டம், என்றாலும் அந்தச் சித்தரின் சிந்தனை மனத்தில் தோற்றம் பெற்றமையால் நிச்சயமாக நன்மை உண்டு என்ற உணர்வும் ஏற்பட்டது.
குகையின் முதல் இரவில் தெரிந்த முதல் படம் இதுவே. சிலப் பலபடங்கள் ஓடின.இடையிடையே மூன்று எழுத்து மந்திரமும் ஒதப்படும்.
அப்பரின் உபதேசங்களும், அவர் வாய் மொழிகளும் அடிக்கடி தோன்றும்.
நான் பிறந்த ஊரும் அங்கு பிறந்து வளர்ந்து புகழீட்டித் தந்த அறிஞர்கள் பற்றியும், அவர்களின் படைப்பாற்றல்களைப் பற்றியும் பார்க்கமுடிந்தது.

23
3. தாமரை பூத்த தடாகத்திலே
“ஏறின் திமிரடக்கி ஏருழுத வாழ்வுக்காய் பாறை பிளந்து பயன் கண்ட என்னுரை, நாச்சியார் பிரித்த நடு உச்சி போல நாப்பண் பிளக்குதம்மா நல்லதெரு வீதியது, பேச்சுத்தான் நீ- நான் என்றாலும் மூச்செல்லாம் ஒன்றாய் முயங்கிடுவரன்றோ, மேற்கும் கிழக்கும் மெத்த நல்ல சனக்கூட்டம் ஊற்றப் போனவாய் உளறுவார் ஒன்றிரண்டு, கோயில் காளாஞ்சி கொடுக்கும் போதெல்லால் ஆயுள் நாளில் ஆங்கில்லை சண்டைகளே, கள்ளுத்தேனை கறந்தளிக்கும் பனங்கூடல் வெல்லப் பதனிரும், வேட்கைமிகு பனங்காயும் அள்ளிப்பிடிக்கில் ஆசை அடங்காதே, வாழைத்தோட்டமும் வளமான மாமரமும் கூழன் பலாவும் குந்தில்லா வருக்கையுமே மீளாத சுவையல்லோ மெத்த நல்ல ருசியல்லோ, குங்குமஞ் செய்யும் கொழுமண் என்றாலும் இங்கிதமாய் நாம் வாழ இனித்த மண்ணல்லோ,

Page 16
24
செம்பாட்டின் வாழ்வுக்கே மெழுகுவர்த்தியே, எழுரின் நடுவிலே எழுச்சிப் பேரூராய்,
(கனகி - களஞ்சியம்)
விளங்குவதே என் ஊர், அதுவே தாமரைத் தடாகம், “பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” எனப்பாடினால் போதுமா? பெற்றதாய்க்கு ஒரு வேளை உணவு போடாதவர் பலர். உடுக்க ஒரு துணி வாங்கிக் கொடுக்காதவர் சிலர். மனைவிக்குத் தெரியாமல் கிள்ளித் தெளிப்பவர் சிலர். கணவன் அறியாமல் அள்ளிக் கொடுப்பவர் சிலர். நாகரிகம், உடை, நடை பாவனை, போ தாது என்று பெற்ற தாயை, அழைத்துச் செல்ல மறுப்பவர் சிலர். தன்னைப் பெற்ற ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்க, கும்பகோணத்தில் கோதானம் செய்யும் தம்பியர் சிலர். பிறந்த பொன்னாட்டின் பெயர் சொல்லாத ஒரு கூட்டமும் உண்டு. ஊரைச் சொல்லாதவர் -சொல்ல விரும்பாதவர் சிலர். எதிரிகளினால் தாக்கப்பட்ட நேரத்தில் மாத்திரம் ஊர் பெயர் சொல்பவர் சிலர். அடிபோடும் போது யாழ்ப்பாணம் சொந்த ஊராகி விடும். சில நாட்களால் திரும்பவும் சிங்கள நாட்டிற்கு போனவுடன் சொந்த ஊர், சொந்த பிரதேசம் அந்நிய நாடாகி விடும். இலையானைக் கலைக்க கொஞ்ச நேரத்தில் போவது போல கலைக்கும் போது போகிறவரும் பின்னர் திரும்புபவர்களும் ஒரு கூட்டம். இப்படி உலகம் பலவிதம். ஊர்ப்பற்று, நாட்டுப் பற்று, இனப்பற்று, மொழிப் பற்று, சமயப் பற்று என்பன ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியதே.

25
ஆனால் அது வெறியாகக் கூடாது.என் ஊர்பற்றிய சிந்தனை, கனகி காவிய ஆசிரியரின் கவிதையின் ஒரு பகுதியை முன் நிறுத்தியது.
பற்று- ஆசை என்பது மனித வாழ்வின் எழுச்சிக்கு ஆதாரமானது. மனித வளர்ச்சிப் பாதையில் ஆசை ஒரு சிக்கலான இடத்தை வகிக்கிறது. ஆசை இல்லா விட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆசை வைத்தாலும் பிரச்சினையாகி விடுகிறது. அது தனி மனிதனையும் வளர்க்கிறது. குடும்பத்தையும் வளர்க்கிறது. அதே நேரத்தில் தனி மனிதனையும் கெடுக்கிறது. குடும்பத்தையும் கெடுக்கிறது. அதற்கப்பால் சமுதாயத்தையும் அழிக்கிறது. அதே பற்று- ஆசை அளவுக்கு அதிகரிக்கும் போது - வெறியாக மாறுகிறபோது மனித சமுதாயத்தையே கெடுத்து விடுகிறது.
“அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சு” என்பதுஅதுவே, குளத்தில் தாமரை வளர்வது இயல்பு. அத்துடன் குவளை, அல்லி, ஆம்பல், நெய்தல் என்பனவும் வளரும்.
“பூவினிற் கருங்கலம் பொங்கு தாமரை” குளத்தில் எத்தனை வகைப் பூக்கள் இருந்தாலும் தாமரை இருந்தால் அது தாமரைக் குளம்,
குளத்தில் நீர் வற்றினால் அங்குள்ள பறவைகள் ஓடி விடும். மீன்களும் இறந்து விடும். கொட்டியும், குவளையும், ஆம்பலும், நெய்தலும், ஒடிவிடா அழிந்து விடா. அவை குளத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும். தாமரையின் கொடி உயிரோடு இல்லாவிட்டாலும் அதன் கிழங்கு சேற்றினுள் புதைந்து

Page 17
26
இருக்கும்.திரும்பவும் வெள்ளம் வரும்போது முளைத்து, வளர்ந்து வெள்ளத்திற்கேற்ப தண்டு உயரும். மலர் நீர் மட்டத்திற்கு மேலேயே மலரும்.
நமது கிராமமும் தாமரை பூத்த தடாகமே. அறிவுத் தாமரை அறிவுக் கண்ணோட்டம் நிரந்தரமாகவே நீண்டு வருகிறது.
புலமைக்கொடி ஒன்று தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
பூப்பறிக்க வருகிறவர்கள் சில சமயங்களில் கொடிகளைச் சேதப்படுத்தினாலும் திரும்பவும் அவை கிழங்கில் இருந்து உற்பத்தியாகி விடும்.
பத்திராதிபர் என்று சிறப்பாக அழைக்கப்ப்ட்ட ச. சரவணமுத்துப்புலவர். (1848-1916) வசன நடை கைவந்த வல்லாளன் என்றும்,ஐந்தாம் சமய குரவர் என்றும் அழைக்கப்பட்டவருமான ஆறுமுக நாவலரின் ஞானப் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவர்.
ஊரெழு சுப்பிரமணியம் பிள்ளையின் மகனான இவர் நாவலரிலும் இளைஞர் ஆவர். நாவலர் காலத்திலும் காலத்திற்குப் பின்பும் நாவலர் பாணியில் கருமங்கள் ஆற்றியவர் ஆவார். சரவணமுத்துப் புலவர் இளமையில் ஆங்கிலமும் கற்றுக் கொண்டார். சைவ சித்தாந்த நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். இவர் சிறந்த கண்டனக்காரராகவும் எழுத்தாளராகவும், பத்திராதிபராகவும், சமயப் பிரசங்கி ஆகவும் நாவலர் பாணியில் தொண்டாற்றினார். இந்தியாவில் தமிழ் நாட்டின் சிதம்பரம், கும்பகோணம், சென்னை, திருப்பத்தூர் முதலிய இடங்களில் மதிக்கப்பட்ட தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றினார். சுன்னாகம்

27
இலக்கணக் கொட்டர் முருகேச பண்டிதரிடம் இலக்கணம் கற்றார்.
சிறந்த கவிஞரான இவர், தேர் வெண்பா பாடி இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பரிசும், பாராட்டும் பெற்றார்.
பூரீலழரீ ஆறுமுக நாவலர் அவர்கள் அமரத்துவம் அடைந்தபோது புலவர் அவர்கள் மனமுருகிப் பாடிய பாடல்களில் இரண்டு கீழே
தரப்படுகிறது.
அருமறையாகமமுறைகளுலகி லோங்க வடியனுளத் தஞ்ஞான திமிர நீங்கப் பெருமையொடு தவவிரத முலகோர் தாங்கப்
பீடில்பர சமய குழா மிரிந்தே யேங்க வொருமையொடு நல்லைநகருதித்தே வந்த வுத்தமறல் லாறு முகப் பெம்மா னேறின் னிருமைபெறு திருவாக்கினருமை தன்னை யின்பமுடன் கேட்பதினியெந்த நாளே. சிவம்பழுத்த செழுஞ்சுவையே தேனே பாகே
தெவிட்டாத தெள்ளமிர்தந் திரளே மேலாந் தவம்பழுத்த தனிவடிவே திருவெண் ணிறு தயங்குதிருமேனியுடைக் குருவே மிக்க வவம்பழுத்த புறச்சமய திமிர மோட்டி
யத்தவித சுத்தசிந்தாந் தத்தினுண்மை நவம்பழுத்த பொருள்காட்டிச் சைவ நாட்டு
நாவலனே நினைக்கானு நாளெந் நாளே.

Page 18
28
1880இல் சைவ உதயபானு என்னும் பத்திரிகையை தொடங்கி நடாத்தினார். அப்பத்திரிகை மதுரையிலும் யாழ்பாணத்திலும் ஏக காலத்தில் வெளியிடப்பட்டது.
1884 மே மாதம் 5ஆம் திகதி மதுரையில் இருந்து வெளிவந்த பத்திரிகையில் கீழ்கண்டவாறு எழுதினார்,
“ நமது தமிழ்ப்பாசையை விருத்தியாக்கத் துணிபவர் ஒருவரை நான் காணவில்லை. நமது தமிழர்களிலே பணம் வந்தவுடன் கல்வியை இகழ்ந்து தள்ளி விடுவது வழக்கம். தங்கள் பிள்ளைகளை யாதல் படிப் பிக்கிறார்கள் இல்லை. சொல்வதற்கு அஞ்சு வானேன், பெரும்பான்மை செல்வப் பிரபுக்கள் எல்லாம் கல்வி அறிவில் சூனியம்தான். பின்னர் அவர் கல்வியை விருத்தியாக்குவது எவ்வாறு? பத்திரிகையே வாசிக்க நேரமில்லை என்கிறார்கள். தாசிகளின் நடன சங்கீதங்களை கேட்க மாத்திரம் நேரமுண்டு. பத்திரிகைக்கு கொடுக்க பணம் இல்லை. அவர்களுக்கு கொடுக்க பணமுண்டு.” இவர் விதியிருந்தபடி என்னையோ uub அறிவோம்”
இவர் கூற்றுகளில் நாவலர் தொனி இருப்பதைக் காணலாம். சுப்பிரமணியம்பிள்ளை சரவணமுத்துப் பிள்ளை, புன்னாலைக் கட்டுவன் கதிர்காம ஐயரிடம் இலக்கண இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவர்.
கதிர்காம ஐயர் ஊரெழு மயில்வாகனப் புலவரிடம் பாடம் கேட்டவர். ஈழத்தமிழ்ப் புலவர் சரித்திரம் இந்த வரலாற்றை நமக்குத் தருகிறது. தடாகத்தில் மலர்ந்த முதல் மலர் மயில்வாகனப் புலவர் ஆவர். அந்த புலமையின் வழியாக சரவணமுத்துப் பிள்ளை காணப்படுகிறார்.

29
புலமைக் கண்ணோட்டம் - அறிவு மரபு தொடர்ந்து வளர்ந்தே வருகிறது. இக்காலத்திலும், எதிர்காலத்திலும் இந்த அடிச்சுவட்டில் சிலரைக் காணலாம். எதிர் காலம் கணிக்கக் கூடிய சில புலமைச் செடிகள் வளர்ந்துள்ளன. பல முளைத்துள்ளன. அவைகாலப்போக்கில் வளர்ந்து மலர்ந்து நறுமணம் கமழும்.
தமிழ்ப்புலமையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்ற வரிசையில் வித்துவான் வேலன், கதிர மலையான், ஆழ்கடலான், துரை மனோகரன் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
வித்துவான் வேலன் எனப் புகழ்பெற்ற டாக்டர் க.ந. இரத்தினவேல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப்பட்டம் பெற்ற புலவர் ஆவர். சித்தாந்தத்தில் டாக்டர் பட்டம் பெற்றவராவர். ஞானசாகரம் என்ற சிறப்பும் பட்டமும் பெற்றவர். உலகில் உள்ள சிறந்த தமிழ் மேடைப் பேச்சாளர்களில் ஒருவர் ஆவர். கேட்போர் பிணிக்கும் வகையாக பேசுபவர். தெளிவாகவும், சுவையாகவும், ஆணித்தரமாகவும் மேடையில் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர். சிறந்த கவிஞரும் ஆவார். அவர் இந்தச் செந்தமிழ் குளத்தில் முளைத்து மலர்ந்த நல்ல மலராகும். “ இன்று அரும்பிய அரும்பு, என்று நறுமணம் கமழும் நற்றேன்பிளிற்றும், மலராகுமோ” என்று சிறுவயதிலே எழுதியவர்.
1956ஆம் ஆண்டில் திரிகோண மலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் அவர்கள் உரையாற்றியபோது, தேசியத்துக்கும், சர்வ தேசியத்துக்கும் உலக தொடர்பை விளக்குவதற்காக “சிந்துநதியின் மிசை நிலவினிலே”. என்ற பாடலைப் பாடி பேசி முடித்த பொழுது சபையில் எவருமே இல்லாத அளவு நிசப்தமாக இருந்தது. கரகோசம் வானைப்

Page 19
30
பிளந்தது. திருமலைப் பேச்சே வேலவனுக்கு இலக்கிய அந்தஸ்தையும் மேடை பேச்சு பட்டயத்தையும் வழங்கியது.
(மேடைக்கு ஒர் வேலன் என்ற கனவு இவரைப் பற்றி விபரத்தைச் சொல்லுகிறது).
20ஆம் நூற்றாண்டின் படைப்பாற்றலை மேடைப் பேச்சின் மூலம் வெளிக் கொணரத்தக்கவர்களில் வித்துவான் வேலன் நம் நாட்டின் முதல்வர் ஆவர்.
கதிரமலையான் இந்த வரிசையில் வருபவர்களில் ஒருவராவர். பயிற்றப்பட்ட ஆசிரியரும் பேராதனை பல்கலைக்கழக B.A. பட்டதாரியும் ஆவார். பக்தி இலக்கிய கவிஞரும் ஆவார். பத்துக்கு மேற்பட்ட கவிதை நூல்கள் இயற்றியுள்ளார். சில வெளி வந்துள்ளன. சில ஆன்மிகக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். முருகனைப் பாடுவதில் நாட்டமுடையவர்.
மீனாட்சி தோத்திரம், வீரகத்தி விநாயகர் பாமாலை மனோன்மணி அந்தாதி, முருகானந்தம், மதுரை மீனாட்சி ஊஞ்சலும் போற்றி திரு அகவலும், முருகன் துதிமஞ்சரி என்பன சிலவாகும்.
ஆழ்கடலான் பெருங் கவிஞராவர். இயற்கையை பற்றியும், இறைவனைப் பற்றியும் சொற்சுவையும், பொருட்கவையும் நிறைந்த பலநூறு பாடல்களை இயற்றியுள்ளார். முருகவேள் பரமநாதன் என்ற இயற் பெயர் கொண்ட இவர் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரும் ஆவார். வல்லிபுரத்தானைப்பற்றிப்பாடுவதில் மிகவும் நாட்டம் கொண்டவர். சரவணமுத்துப் புலவர் குடும்பத்தில் பெண் எடுத்த பெருமை இவருக்குரியது. ஆழ்கடலான், சிங்கையாழியான் என்ற புனை பெயரில்

31
முருகவேள் பரமநாதன் பக்தி இலக்கியங்களை எழுதி வெளியிட்டுள்ளார். திருமால் அடியாரான அவர்கள் வல்லிபுரக் கடவுளைப் பற்றி பாடுவதிலும், எழுதுவதிலும், எழுதுவிப்பதிலும் மிகுந்த ஆர்வமுடையவர். வல்லிபுரக்கோவில் வரலாறு, எங்கள் குருநாதன் (திருவாசக சுவாமிகள்) வல்லிபுரத்தான் தலபுராணம், வல்லிபுரத்திருவந்தாதி, வல்லிபுர ஆழ்வார் திருவடிப்புகழ்ச்சி, மீனாட்சி, திருப்பதிகம், மீனாட்சி பாமாலை, என்பன இவர் எழுதி அச்சிட்ட நூல்களிற் சிலவாகும். அறிஞர்களைக் கொண்டு சில நூல்களை எழுதி வெளியிட்டும் இருக்கின்றார். ஏழாலை கந்தையாப் பண்டிதரால் எழுதப்பட்ட வல்லிபுரத்தான் பிள்ளைத் தமிழும், கலாநிதி இ. பாலசுந்தரத்தால் எழுதப்பட்ட வடமராட்சி, தென்மராட்சி இடப்பெயர் ஆய்வும் இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல்கள் ஆகும்,
இவற்றை விட இயற்கையைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் பல நூறு பாடல்களைப் பாடியுள்ளார்.
அருச்சுனா என்ற இதழில் இவர்களின் பல சின்னக் கதைகளும் இலகுவான பாடல்களும் வெளி வந்துள்ளன. அவர்களின் சிந்தனையைப் புலப்படுத்தும் கவிதை ஒன்று கீழே தரப்படுகிறது.
சிந்தனை ஆயிரம் மலரட்டுமே
சீரிய வாழ்வு அலரட்டுமே வந்தனை எங்கும் வலுக்கட்டுமே
வாதனை என்றும் ஒழியட்டுமே.
மனிதரின் உள்ளங்கள் குளிரட்டுமே

Page 20
32
மாநிலம் எல்லாம் செழிக்கட்டுமே புனிதரின் வாக்குகள் பலிக்கட்டுமே பூவென இதயம் கமழட்டுமே. ஒன்றிய உலகம் உதிக்கட்டுமே
உத்தம வாழ்வு பதிக்கட்டுமே கன்றிய காயம் ஆறட்டுமே
கண்ணிய நேயம் சீறட்டுமே. போரினை உலகம் வெறுக்கட்டுமே போதனை சாதனை ஆகட்டுமே ஏரினைப் போற்றி ஏற்றட்டுமே
எண்ணங்கள் திண்ணமாய் அமையட்டுமே. பெண்மையும் மாண்மையும் பெருகட்டுமே பேதமை யாவர்க்கும் அருகட்டுமே திண்மையும் திறமையும் சேரட்டுமே
திவ்விய வாழ்வு சொலிக்கட்டுமே. தேவாரத் திருவாசகங்களை மனமுருகிப் பாடி, கேட்போர் உள்ளத்தை உருகச் செய்வதில் வல்லவராவார்.
துரை மனோகரன் கலா நிதிப் பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழக சிரேட்ட விரிவுரையாளர். நாவல், சிறுகதை கட்டுரைகள், கவிதைகள் என பல உருப்படிகளைத் தந்துள்ளார். பாவையின் பரிசு என்ற நாவலும், தமிழ் இலக்கியப் பார்வையும் பதிவும் நூலும் வரவேற்புக்குரியன. சங்க இலக்கியம் சில அறிமுகக் குறிப்புகள், கமலாம்பாள் சரித்திரம் - சில அறிமுகக் குறிப்புகள், தமிழ் இலக்கியத்தின் திருப்பு முனைகள்.

33
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ஒருநோக்கு, மலையகக்கலை இலக்கியப் பாரம்பரியம், பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சமூக நாடகங்கள் ஒரு நோக்கு, சிலப்பதிகாரத்தில் சிறு பாத்திரங்கள், சுவாமி விவேகானந்தரும் பெண்களும், இந்துமதமும் இருவகை வழிபாடும், திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒரு நோக்கு இப்படிப் பல அரிய கட்டுரைகளை வரைந்துள்ளார்.
வைரத்தோடு, ஊமைகள், ஒரு அறையும் ஒரு நிலவும், புதிய சுவடுகள், ஒரு மனிதர் பிரமுகராகிறார். என்பன இவரின் சிறுகதை ஆக்கங்களில் சிலவாகும்.
அன்புக்காக, இருளில் தேடும் ஒளிகள், சமுதாய விலங்கு, நெஞ்சைக் கேள், ஒரே இரத்தம் என்பன இவரின் நாடகங்களில் சிலவாகும்.
பண்டிதர் சீ. முருகேசு ஐயர், குமாரசாமி புலவரின் மாணவராவர். இலக்கண இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தவர். விமர்சனம் சொல்வதிலும், கண்டனம் செய்வதிலும், மகா சமர்த்தர். தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த செந்தமிழ் பத்திரிகையில் நல்ல சில கட்டுரைகள் எழுதியுள்ளார். சுதேச நாட்டியத்திலும் சில கண்டனங்களும், விமர்சனங்களும் எழுதியுள்ளார். ஆசகவி கல்லடி வேலுப்பிள்ளையுடன் சேர்ந்து சில கண்டனத் துண்டு பிரசுரங்களும் கண்டனப் பாடல்களும் ஆககி வெளியிட்டுள்ளார். எப்பொழுதும் சிலேடையாகவே பேசுவார்.
கிராமத்தை 20 ஆம் நூற்றாண்டில் சிறப்பித்தவர்களுள் ச. சோமசுந்தரக் குருக்கள், ச.பாரசுந்தரக் குருக்கள் என்போர் தமிழும், கிரந்தமும் அறிந்தவர்கள். கந்தப் புராணம், திருவாதவூர்

Page 21
34
அடிகள் புராணம் என்பனவற்றிற்குப் பயன் சொல்லக் கூடியவர்கள். கோயில் நித்திய நைமித்திய கிரிகைகைள அடியார் களின் மனம் ஈர்க்கத்தக்க வகையில் சிறப்பாகச் செய்யத்தக்கவர்கள்.
வே. சிவஞான ஐயரும் சிலபாடல்கள் பாடியுள்ளார். அவர் சோதிட நூல் கற்றவர். க. வைத்தியலிங்கம் பேர் பெற்ற சோதிடராவர். இவர்கள் ஊருக்கு புகழிட்டித் தந்தவர்கள்.
கா.வை. தனேஸ்வரன் எழுதவும், சிறு கவிதைகள் புனையவும் வல்லவர். சில தமிழ் நாடகங்களை ஆக்கியுள்ளார். திறம்படி நடிக்கத் தக்கவர். யாழ்ப்பாணத் தேவன் என்ற எழுத்தாளனும் நடிகனுமான மகா தேவனுடன் சேர்ந்து சில நாடகங்கள் நடித்துள்ளார். அருமையான ஒலிபெருக்கி அமைப் பாளரும் விளையாட்டுத் துறை ஆசிரியருமா வார். மேடையில் அழகாகப் பேசுவார். தேவனும் நமது கிராமத்தல் பெண் எடுத்த பெருமைக் குரியவர்.
யாழ்பாணம் தேவன் என்ற பெயரில் சிறுகதைகளும் நாவல்களும் படைத்துள்ளார். அவருடைய படைப்புகளில். சுற்றவாளி என்ற மர்ம நாவல் பிரசித்தமானது.கண்டதும் கேட்டதும் வான வெளியினிலே என்பனவும் அவரின் சில படைப்புகளாகும். ஒலிபெருக்கி பேச்சையும், அழைப்புகளையும் ஒரு கலையாகக் கொண்டவர் அவருக் கென்றே ஒரு தனிப் பாணி உண்டு. எழுதுதல், பேசுதல், நடித்தல் போன்ற பல துறைகளிலும் வல்லவர்.
திருவாளர்கள் ந.கந்தசாமி ஐயர் சில கணித நூல்களை ஆக்கித் தந்துள்ளார். ச. வடிவேலு சிவ நூல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் அறுபதில் அறுபது என்ற நூலும் ஒன்றாகும்.

35
திரு. க. முத்துக்குமாரசாமி சமூகம் தொடர்பான பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
திரு. ப. பால நடேசர் (சின்னப்பாலன்) இளையவன் என்ற பெயரில் சில கதைகளும், கவிதைகளும் எழுதியுள்ளார்.
விஞ்ஞானம், பொருளியல் போன்ற துறைகளில்
தேர்ச்சியடைந்து வெளி நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாக சிலர் கடமை யாற்றுகின்றார்கள். இந்த வரிசையில் திருவாளர்கள் த. பத்திருநாதன். து. திரு. ராமச்சந்திரன், ந. வேத வியாசர். சி. நடராசா என்போர் இடம் பெறுவர்.
சக்திதரன் போன்ற இளைஞர்களும் நல்ல கதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்துள்ளார்கள். திரு. நா.இராசையா அவர்கள் இந்தச் செந்தமிழ்த் தடாகத்தில் மலர்ந்த முதல் தமிழ் பயிற்றப்பட்ட ஆண் ஆசிரியர் ஆவார். (தமிழ் ஈழ மண்ணுக்காக தன் மைந்தனை தானம் பண்ணிய பெருமைக்குரியவர்.)
மேலும் சில இளைஞர்கள் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் முளைத்து வளர்ந்து வருகிறார்கள். காலப் போக்கில் இவர்களும் கணிக்கப்படும் செந்தமிழ் கமழும் மலர்களாகவும், மரபு வழி வந்த புலவர்களாகவும், அறிஞர்களாகவும் திகழ்வார்கள். இவர்களே தடாகத்தின் எதிர்காலக் தாமரைகளாவர்.

Page 22

37
4.பாலப்பருவம்
“கத்திக் கதறிக் கைப்புறத்தில் ஏந்தும் கவலைப்பருவமே பருவங்களில் முதற்பருவம் ஆகும்” என ஒரு மொழி பெயர்ப்புப் பாடலை அரை நூற்றாண்டுக்கு முன் படித்த நினைவு வருகிறது. சவலை முதிர்ந்து பாலை ஆகிறது. கட்டிலில் சரிந்த என் உள்ளத் திரையில பாலப் பருவ நிகழ்ச்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஓடத் தொடங்கின.
தாமரைக்குள காட்சிகளோடு சேர்ந்தும், பிரிந்தும் திரையில் ஓடின. 65 வருடங்களுக்குப் பின்பு 2,3,4 வயதில் நடந்த நிகழ்ச்சிகளின் படத்தைப் பார்க்க முடிந்தது.
அம்மா சோற்றினுள் கொஞ்சம்கீரைக்கறி போட்டு குழைத்து எடுத்த சில உருண்டைகளை ஊட்டிய சம்பவம் தான் பாலப்பருவ நிகழ்ச்சிகளில் மிக மூத்ததாக இருக்கலாம்.
எனது சிறிய தாயாரின் கணவர் ஏரம்பு. நான் அவரை அம்பியப்பு என்றுதான் அழைம்பேன். அவர் குளித்து தியானம் முடித்துக் கொண்டு சாப்பிடு வதற்காக வடகிழக்கு மூலைதிண்ணைக் குந்தில் சம்மாணம் கொட்டிக்கொண்டு இருப்பார். சாப்பாடு தயாராகி விடும். புழுதி விளையாடிக் கொண்டிருக்கும் என்னை சாப்பிட அழைப்பார். யான் போகும் வரை பூனூலை தடவிக் கொண்டு கூந்தலையும் விரித்துக் கொண்டு இருப்பார். எவ்வளவு நேரம் போனாலு அவர் சாப்பிடமாட்டார். சிலர் காகத்திற்கு சோறு வைத்தபின் தான்

Page 23
38
சாப்பிடுவார்கள், இவரோ என் வாய்க்குள் ஒரு வாய் சோறு வைத்தபின் தான் சாப்பிடுவார்.
நாங்கள் குடியிருந்த வீடு பெரிய மண்வீடு சாணியும், முருக்கம் இலைச் சாறும், கரியும் போட்டு மெழுகி இருக்கும். கருங்கல்லால் உரோஞ்சி தேய்த்து விட்டால், இந்தக் கால “தெரோசோ”மாதிரி இருக்கும்.
அதில் படுப்பதற்கு பாயும், துண்டும் தேவையில்லை. “ குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலேயே குழந்தைப் பருவத்தில் ஆரம்பித்த கொண்டாட்டம் வயதான பின்பும் நீடித்தது. குழந்தையின் உள்ளம் மிகவும் பரிசுத்தமானது. கள்ளங்கபடமற்றது. தீய எண்ணங்கள் இல்லாதது. யார் எவர் குழந்தையை அணைத்து அன்பு பாராட்டி மகிழ்வித்து நடாத்துகிறார்களோ அவர்களைக் குழந்தை தழுவிக்கொண்டும் வட்டமிட்டுக் கொண்டும் இருக்கும். இறைவனை முழுதாக நம்பி அவரை மறக்காது, தொடர்ந்து உள்ளத்தில் இருத்திக் கொண்டால் இறை அருள் கிட்டுவது நிச்சயம்.
99
ஒரு கையால் துகிலைப் பிடித்துக் கொண்டு நின்ற பாஞ்சாலி கடைசிநேரத்தில், நடப்பது நடக்கட்டும் இறைவா நீயே துணை என்று நம்பி இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ண பரமாத்மாவை வணங்கினாள். துகில் நீண்டது. மானங் காப்பாற்றப்பட்டது. நம்பிக்கை வீண்போகவில்லை.
எனது தாயாரும் சகோதரிகளும் ஒரே வீட்டில் தான் குடியிருந்தார்கள், வெளியில் உள்ள கொட்டில்களில் சமைத்துவிட்டு திண்ணைக்கு கொண்டு வந்து ஒவ்வொரு ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குடும்பங்கள் இருந்து சாப்பிடுவார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் தான்

39
சின்னப்பிள்ளை. வயதில் மூத்தவனும் நானே. இதனாலோ என்னவோ சிறிய தாய்மாரும் அம்மன்மாரும் சாப்பிடும்போது தவறாமல் என்னை அழைப்பார்கள், எல்லாரிடமும் போய், ஒவ்வொரு வாய் வாங்கி சாப்பிடுவேன் இதில் அநேகமாக அம்பி அப்பு முந்திக் கொள்வார்.
அடி வளவில் நாலைந்து பனைமரங்கள் இருந்தன. அதில் அப்பாவின் அன்புக்குரிய சின்னான் கள்ளுச் சீவுவார். அதில் ஒன்று ஆண் பனை. அந்த மரக்கள்ளை சீவி இறக்கி பக்கத்தில் உள்ள பூவரசமரக்கெட்டில் முட்டியுடன் தூக்கிவிடுவது வழக்கம். கள்ளுமுட்டியைத் தூக்க முன் “டேய் புளியங்காய் சிரட்டையைக் கொண்டு வா” என்று ஒரு சத்தம் கேட்கும். சிரட்டையையும் கொண்டு போவேன். அவர் முட்டியைச் சரித்து வாயால் ஊதிவிட்டு கஞ்சல் கருக்கல் இல்லாமல் சிரட்டையில் கொஞ்சம் கள்ளு வார்ப்பார். ஒரு பக்கத்தில் வாயை வைத்து நல்லதோ, கூடாதோ என்று பார்த்தது போல் கொஞ்சம் குடித்துப் பார்த்துவிட்டு எனக்குத் தருவார். நான் அதனை மண்டிக்கொண்டு வீட்டிற்குப்போவேன்.
தங்கம்மா, பரமேஸ்வரி இருவரும் என் அம்மான் மாாரின் பெண் குழந்தைகள். என்னிலும் பார்க்க ஒரு வயது இளையவர்கள். இவர்களுடன் மண் விளையாடு வேன். வீட்டிற்கு முன்னே ஒரு கொட்டில் அதில் நிறைய புழுதி. அந்தப் புழுதியில்தான் மண் விளையாட்டு நடக்கும். மண்ணில் வீடு கட்டியும், ஈர்க்கில் புதைத்தும் விளையாட்டு நடக்கும். சண்டை வந்தால் ஆளுக்கு ஆள் புழுதி அள்ளி எறிபடும்.
நாலு தென்னங் குரும்பைகளை எடுத்து அடியிலே வைத்து நாலு ஈர்க்குகளை அதிலே குத்தி மேலேயும் ஒரு குரும்பையைக்

Page 24
40
குத்திவிட்டால் அது தேராகிவிடும். தேர் விளையாட்டும் நடைபெறும். அந்தக் காலத்தில் எந்த விளையாட்டுக்கும் செலவு இல்லை.
உள்ளக விளையாட்டும் சரி, வெளியாக விளையாட்டும் சரி, செலவு இல்லாத முறையில் தான் நடைபெறும். மண் விளையாட்டு, தேர் விளையாட்டு பாண்டிக் குண்டு விளையாட்டு, தாயம், கொக்கான் விளையாட்டு என்பவை உள்ளக விளையாட்டுக்கள். வார் ஒட்டம், கிளித்தட்டு, கெந்தல், கிட்டி அடித்தல், ஊஞ்சல் இப்படிப் பல வெளியக விளையாட்டுகள் இவை மகிழ்ச்சிகரமானவை.செலவும் இல்லாதவை.
தகப்பனார் எனக்கு கொடி கட்டி முச்சையும் போட்டு தருவார். கொடிக்கு குஞ்சம் கட்டப்படும். அம்மா எனக்கு மேலே ஒரு பெனியன் போட்டு விடுவா. கீழே ஒன்றும் இராது. சங்கிலியும் அட்சரமும் ஆடிக்கொண்டிருக்கும். வெள்ளைக்கல்லு தோடும் மின்னிச் கொண்டு இருக்கும். கொடியைக் கொண்டு ஒடுவேன். எப்ப நான் திரும்பிப் பார்த்தாலும் அந்தக் கொடி பறந்ததை மட்டும் காணவில்லை. அது நிலத்திலே இழுபடும்.
அந்த காலத்தில் பட்டம் கட்டிப் பறக்க விடுவது யாழ்ப்பாணத்தில் ஒரு கலை. பிள்ளைகள் வளர வளர பட்டத்தின் தரமும், பருமனும் வளரும். பல கற்பனைகளுக்கு பட்டம் ஏற்றுதல், அடித்தளம். கற்பனையில் இருந்துதான் உண்மை பிறக்கிறது. எட்டு மூலை, சீனத்தான் பாம்பன், கொக்கு, பருந்து இப்படியான பல பட்டங்கள் கட்டி பொருத்தமான கயிற்றில் ஏற்றப்படும். வால் கட்டாத பட்டங்கள் கட்டி ஏற்றுவது மிகவும் சிரமம்பட்டங்களுக்கு விண் பூட்டப்படும்.

41
பிரம்பிலோ அல்லது பனைநாரிலோ வளர்ந்து வார்ந்து எடுக்கப்பட்ட நாண் இழுத்து வளைக்கப்பட்ட பட்டத்திலே, பூட்டப்படும். கொடி மேலே ஏற ஏறக் காற்றுப்படப்பட வீணை போல பாடிக் கொண்டே இருக்கும்.
பக்கத்து வீட்டில் கலியாணம் அங்கு போன இடத்தில் ஒரு பெட்டியில் சீனி அரியதரம், பால்ரொட்டி, முறுக்கு, பயற்றம் பணியாரம் ஆகிய பணிகாரங்களை வைத்தார்கள். ஏழு எட்டை எடுத்து அமுக்கிவிட்டேன் என்னைத் தேடி வந்த அம்மா அங்கு வந்து சேர்ந்தா.வீட்டிற்கு இழுத்துக் கொண்டுபோய் இரண்டு மூன்று ஈர்க்குகளை எடுத்து நல்ல சாப்பாடு. இந்தக் கோவத்தில் கழுத்திலே தொங்கிய அட்சர கூடு கடித்துத் துப்பப்பட்டது.
வளர்ந்த புளியங்காய் கதிர்காமக் கந்தனுக்கு நேர்ந்தது அப்பாவும், அம்மாவுமாய் என்னை அழைத்துக் கொண்டுபோய் கதிர்காமத்தில் வைத்து புளியங்காயை இறக்கி மொட்டை அடித்தார்கள். மாணிக்க கங்ககையில் தோய்ந்தபின் ஒரு பச்சை, சிவப்பு கரை தாங்கிய மாறுகரை வேட்டி ஒன்று இடுப்பில் கட்டி அதற்கு மேல் பச்சை சால்வை கட்டி விட்டார்கள். காவடி தூக்கித் தோளில் வைத்தால் நல்ல ஆட்டம் பக்கத்தில் பலர் கூடி தாளம் போட்டார்கள். வெள்ளை அப்பமும் வாங்கித் தந்தார்கள்.
வீட்டிற்குப் பக்கத்தில் வீரகத்தி விநாயகர் கோயில் வீட்டிற்கும் கோயிலுக்கும் இடையில் பூசகர் கார்த்திகேசு ஐயர் வீடு. மணிச்சத்தம் கேட்கும்போது நான் கோயிலடிக்குப் போவேன்.திரும்பி வரும் போது இலட்சமி அம்மா எனக்கு ஒரு புக்கை துண்டு ஒன்றும் தருவது வழக்கம். அவர்களுடைய மல்லிகைப் பந்தலுக்கு கீழே வைத்து அவற்றை சாப்பிட்டு விடுவேன். சில சமயங்களில் நான் போகாவிட்டால் அந்த அம்மா

Page 25
42
முந்தானையில் கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து எனக்குத் தந்து விட்டு சொக்கில் ஒரு கிள்ளும் கிள்ளி விட்டுப்போவா.
நல்லூர் திருவிழாவிற்குப் போனபோது தகப்பனார் எனக்கு ஒரு அழகான மண் குதிரைக்குட்டி வாங்கித் தந்தார். வீட்டிலே அதை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது விழுந்து உடைந்துவிட்டது. அம்மா அகப்பைக் காம்புங்ம எடுத்துக் கொண்டு அடிப்பதற்கு ஓடி வந்தா. அப்பர் அவரைத் தடுத்து நிறுத்தி, அகப்பைக் காம்பையும் பறித்து வீசி விட்டார். “ இது உடையக் கூடிய பொம்மை.இதை இப்படிப் பெலத்துடன் வீசக் கூடாது பக்குவமாகக் வைத்து விளையாடவேணும். நான் தேருக்குப் போகிறபோது இன்னொரு குதிரைக்குட்டிவாங்கித் தருகிறேன்.” என்று கனிவாகச் சொன்னார்.
இது ஒரு சிறிய நிகழ்ச்சி ஆனாலும் அதன் தத்துவம் நான் அகநூல் படித்த பின்பே எனக்குப் புரிந்தது. தகப்பனாரின் வார்த்கைகளினால் எனக்குத் தெரியாமலே என் உள்ளத்திலே ஒரு தெம்பு ஏற்பட்டது நான் செய்யும் சரி, பிழைகளை உள்ளபடியே சொல்லலாம் என்பதே ஆகும் 2,3,4 ஆம் வயதுகளிலேயே குழந்தை களிற் சிலர் பொய் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
உண்மையைச் சொன்னால் தண்டனை கிடைக்கும் என்று குழந்தை பொய் சொல்ல முயற்சிக்கும். குழுந்தை உண்மை சொல்கின்ற பொழுது குழுந்தையை அணைத்து, ஆதரித்து, ஞாயத்தைச் சொல்லி, சாமாதானப் படுத்தினால் குழந்தை தொடர்ந்தும் உண்மையே சொல்லும்,
பெற்றாரின் வளர்ப்புமுறையும், அவர்கள் குழந்தையிடத்தில்

43
காட்டும் அன்பும்பரிவும் குழந்தையின் உண்மையான வளர்ச்சிக்கு அடித்தளம் இடுவது என்பதை நாம் மறந்து போவது உண்டு.
யாழ்ப்பாணமக்கள் - சிறப்பாகக் குழந்தைகள் எப்போ வருஷம்பிறக்கும், ஆடிப்பிறப்பு வரும் தீபாவளி வரும், தைப்பொங்கல் வரும் என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டு இருப்பார்கள். வருஷப் பிறப்பு வந்தால் நல்ல பலகாரம் சாப்பிடலாம். ஆடிப்பிறப்பு வந்தால் பனங்கட்டிக் கூழுங்குடித்து கொழுக்கட்டையும் தின்னலாம். தீபாவளி வந்தால் புதுப்புது ஆடைகள் அணியலாம். தைப்பொங்கல் வந்தால் வெடியும் கொளுத்தலாம். பொங்கலும் சாப்பிடலாம் என்பதே காரணம்.
என்னுடைய அம்மான், கு.செல்லையா மலேசியாவில் புகையிரதப் பகுதியில் வேலை செய்தவர். எங்களுக்கு ஒவ்வொரு தீபாவளிக்கும் உடுப்புகள் வாங்கி அனுப்புவார். எனது புளியங்காய்வெட்ட முன்பே வந்த தீபாவளிக்கு எனக்கு ஒரு பியூச்சி வேட்டியும் சின்னப்பச்சை நிறப்பட்டுச் சால்வையும் வாங்கி அனுப்பியிருந்தார். ஒரு பெனியனும் கூட வந்தது. அம்மா வேட்டியை உடுத்து இறுகக் கட்டி அதற்கு மேலே பெனியனையும் போட்டு பச்சைப் பட்டுச் சால்வையும் இடுப்பிலே கட்டி முடிந்துவிட்டா. நான் அந்த உடுப்பைக் காட்டுவதற்காக அக்கம் பக்கம் உள்ள வீடுகள் எல்லாவற்றிக்கும் போய் வந்தேன்.
பாலப்பருவம் மிகவும் பிஞ்சு உள்ளம், நல்லதும் கெட்டதும் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் ஏறி விடும், குழந்தை வளர்ப்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலங்களில் பாலப்பருவம் முதற் பகுதி எதிர்காலப் பிரசைகளான குழந்தைகளை நற்பிரசை களாக்குவதில் பெற்றார்கள் இடும்பசளை உண்மையும். கனிவுமாகும்

Page 26

45
5. கல்விக் கழகம் மெல்லச் செல்லும் பள்ளிப் பிள்ளை
குழந்தையை மனிதப் பிண்டமாக மாத்திரம் உருவாக்கினால் பூரணமாகாது. ஐஸ்வரியம் வீரியம், புகழ், திருஞானம் நிறைந்த மனிதப் பண்பாடு, அதற்கு அப்பால் ஆன்மிக கரு என்பன எல்லாம் அமையக் கூடிய வகையில் உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான நல்ல கருமத்தை தந்தை தாயார் செய்து வைக்கிறார்கள். ஒரு குழந்தையை பண்பட்ட மனிதராக்கும் வகையில் தாய், தந்தை, குரு, பாடசாலை, ஆசிரியர், நண்பர்கள், சூழல், என்ற பல வகையான அங்கங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. இதற்காகத் தான் முற்கால இலக்கியங்களில் குழந்தையை சற் குருவிடம் ஒப்படைத்தார்கள். இக்காலத்தில் நல்ல பாடசாலையை கல்லூரியைத் தேடி அலைகிறார்கள்.
மகன் பள்ளிக்குச் செல்லப் போகிறானே என்று அப்பருக்கும் அம்மாவுக்கும் ஒரே ஆனந்தம். மலாயன் பெஞ்சனியர் அப்புக்குட்டி சைவமும், தமிழும் தெரிந்தவர். அவருடைய வீட்டிலே வித்தியாரம்பம், ஊரெழு கணேச வித்தியாசாலையை ஆரம்பித்த முன்னோடிகளில் அவரும் ஒருவர். மோதகம், கற்கண்டு, வாழைப்பழம் எல்லாம் படையல் செய்து வித்தியாரம்பம் ஆனது. அவர்தான் அரிவரி “அ” சொல்லித் தந்தவர். நெல்லைப்பரப்பிகையைப் பிடித்து அதிலே “அ”எழுதி விட்டார். இந்த நிகழ்ச்சி இப்பொழுதும் பசுமரத்து ஆணிபோல இருக்கிறது.

Page 27
46
ஊரெழு கணேச வித்தியாசாலையில் நான் சேர்ந்த காலம் தான் அப்பள்ளியின் ஆரம்ப காலம் ஆகும். சிவப்பிரகாசம், மார்க்கண்டு, பசுபதி, அரியகுட்டி இவர்களைப் போல் பலர் என்னுடன் மாணவர்கள்.
இன்று கட்டப்பட்டிருக்கும் இடத்தில் பாடசாலை அமைய முன்பு சில நாட்கள், திருவாளர்கள் சிற்றம்பலம், பேரம்பலம் என்பவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் பாடசாலை நடந்தது. குப்பிளான் திரு. ந. கந்தையா தலைமை ஆசிரியர். அவர் இளைப்பாறும் வரையும் அங்கேயே குந்தி விட்டார். பவளக்கா, பொன்னமாக்கா, இராஜசிங்கம் வாத்தியார், மந்துவில் வாத்தியார், மட்டுவில் வாத்தியார் இவர்கள் ஆரம்பகால ஆசிரியர்கள், பின்னர் திருமதி ராணி நாயகம், பண்டிதர் தங்கசாமி ஐயர் எனப்பலர்.
ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் திருமதி தர்மலிங்கம் படிப்பித்த டாஞ்யூப் நதி, ரையின் நதி இப்பவும் முன்நின்று ஒடுகிறது. பிள்ளைகள் இப்ப ஜேர்மன், பிரான்சு என்று போய் அந்த நதிகளிலே நீச்சல் அடிக்கிறார்கள்.
தங்கசாமி ஐயர் பாடமாக்கச் செய்த நன்னூற் காண்டிகைச் சூத்திரங்கள் பிற்காலப் படிப்பிற்கும் படிப்பித்தலுக்கும் பெரும் உறுதுணையாக இருந்தன.
மந்துவில் வாத்தியாருடைய (சதாசிவம்) படிப்பித்தல் முடிய பாடசாலை விடுகிற மணி அடித்தபின் குறைந்தது 5 நிமிடமாவது செல்லும்,
கல்விக் கந்தோரில் இருந்து கல்வி அதிகாரிகள் வருகிறார்கள் என்று அறிவித்தால் மனேஜர் தம்பையா விடிய 6 மணிக்கு ஒவ்வொரு தூணுக்கும் ஒவ்வொரு பூச்சட்டியும்

47
வைத்து பூக்களும் வைத்து விடுவார். அதிகாரி படியில் ஏறும்பொழுது நாங்கள்
எல்லோரும் எழுந்துநின்று பெரிய சத்தத்தில் “நமஸ்காரம்” சொல்லி கும்பிடு போடுவோம்.
கணேச வித்தியாசாலையில் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழா நடைபெறும். பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்பவர்க்கு கொடுக்கிற பரிசுகளில் முதல் பரிசு எனக்குக் கிடைக்கும். தேர்ச்சியில் 1ஆம் 2ஆம் பிள்ளையாய் வருபவர்களுக் குரிய பரிசு சில சமயம் கிடைக்கும். பரிசாகக் கிடைத்த நாலைந்து சருவச்சட்டிகள், குத்து விளக்கு, சில புத்தகங்களும் நீண்ட காலம் வீட்டில் இருந்தன. i
பாலர் கீழ்ப் பிரிவில் எழுத்துக்கள் சொற்களுடன், நீதி மொழிகள் கற்பிக்கப்பட்டன. 1ம், 2ம், 3ம், 4ஆம் வகுப்பு புத்தகங்களின் கடைசிப்பக்கத்தில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, வாக்குண்டாம் என்ற நீதி இலக்கியங்கள் இருக்கும். நாம் அவற்றை இரவு பகலாகப் பாடமாக்கி விடுவோம். ஒரு சூட்டில் 2 புறா விழும். எழுத்தும் அறிமுகப்படுத்தப்படுகிறது. மனனமும் செய்யப்படுகிறது.
அறஞ்செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத் திகழேல்.

Page 28
48
ஏற்பது இகழ்ச்சி.
ஐயம் இட்டு உண்.
ஒப்புர வொழுகு.
ஒதுவ தொழியேல்.
ஒளவியம் பேசேல்.
அஃகம் சுருக்கேல்.
என்பன ஆத்திசூடிப் பாடல்கள்.
ஆத்திசூடி அமர்ந்த தேவனை,
ஏத்தித் ஏத்தி தொழுவோம் யாமே.
என்பதுதான் அரிவரியின் முதன் முதல் பாடமாக்கிய கடவுள் வணக்கம்.
5ஆம் வகுப்பு முடிய சிலர் பாடசாலையை விட்டு விலகி விட்டார்கள். பலர் ஆங்கிலப் பாடசாலைக்குப் போய் விட்டார்க ள். அந்தக் காலத்தில் ஆங்கில பாடசாலையில் படிப்பதற்கு பணம் கட்ட வேண்டும். 7, 8 பேர்தான் 6ஆம், 7ஆம் வகுப்புகளில் மிஞ்சினோம்.
குடியிருப்பு “வேலகத்திற்கு' மாறினாலும் மாலையில் கதிரமலைக்கு நித்திரைக்கு வருவேன். குஞ்சியம்மா தனியாகி விட்டா. அவவுக்கு ஒரு ஆறுதல். அவவோ பரம சைவம். ஆனால் இரண்டு சதத்திற்கு இறால் வாங்கிப் பொரித்து சோற்றை அதற்குள் போட்டு பிரட்டி வைப்பா. நான் போனதும் அந்தப் புலால் அகப்பையை கையில் படாமல் ஒரு இலைத் துண்டால் சுற்றிக் கையில் பிடித்துக் கொண்டு அள்ளிப் போட்டு சாப்பிடத் தருவா. பக்கத்தில் சீனி அம்மா குடியிருந்தா. அவவிடம் இறால் போட்டு சமைத்த மரவள் எரிக் கிழங்குக் கறியும் மாங்காய்க்

49
குழம்பும் வாங்கித் தருவா. வெறும் மாங்காய் கொத்திப் பொரித்து ஒரு குழம்பு வைத்தால் இறால் குழம்பு தோற்றுப் போய்விடும். காலை எழுந்தவுடன் 2 சதம் கொடுத்து பக்கத்து ஆச்சியிடம் 2 அப்பம் வாங்கித் தருவா. அதனையும் சாப்பிட்டு விட்டு கொண்டுபோன சிலேற்-புத்தகம் என்பனவற்றையும் கொண்டு வீடு வருவேன். பாடசாலை இல்லாத நாட்களில் கொஞ்ச நேரம் கூடுதலாக நின்று விளையாடிக் கொண்டிருப்பேன். இரண்டு, மூன்று பூவரசமிலையும் பிடுங்கிக் கொண்டு வரும்படி இராசம்மா மாமி கூப்பிடுவா. அவர்கள் சுத்த சைவம்,7,8 மரக்கறி போட்டுக் குழைத்த பழைய சோற்றுருண்டையைக் கை இலையிலே எனக்கு முதலில் வைப்பா. பிறகுதான் அம்மானுக்கு வைப்பா. அப்பத்துக்கு மேலே அதையும் சாப்பிட்டு விட்டால் சோறு மூக்குக்கு வந்துவிடும்.
வருஷப் பிறப்பு வந்துவிட்டால் 2-3 ரூபா “கைவிசேஷம் சேரும் அம்மான்மார், சிறிய தாய்மார் எல்லாரும் ஆளுக்கு 2530 சதம் தருவார்கள். சீனியப்பர் ஒரு வெற்றிலையில் 25 சதக்குத்தி ஒன்றும், இரண்டு மூன்று நெல்லும், ஒரு மஞ்சள் துண்டும் வைத்துத் தருவார். நெல்லின் தொகை ஒற்றையா, இரட்டையா என்று எண்ணுவோம், ஒற்றை என்றால் நல்லது என்று ஒரு மகிழ்ச்சி. இரண்டாம், மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது மயில் இறகு குஞ்ச பொரிக்க வைப்பது அந்தக் காலத்திலே ஒரு கலை. ஒரு மயில் இறகை புத்தகத்தில் வைத்து மடித்து விடுவோம். மறுநாள் அதனை எடுத்து விரித்துப் பார்ப்போம். பொரிக்காததைக் கண்டு மனம் உடைந்துபோம். எழுதுகிற பென்சிலைக் கொடுத்து மயில் இறகு வாங்கி அப்பரிடம் அகப்பட்டுக் கொண்டேன். 2 நாள் செல்ல அவர்

Page 29
50
என்னுடைய மயில் இறகைத் தேடிக் கண்டுபிடித்து, அதனை சிறிதும் பெரிதுமாக இரண்டாக்கி விட்டார். இதை நான் பள்ளியிலே கொண்டு போய்க் காட்டி பெரிய மகிழ்ச்சி அட்டகாசம் செய்தேன். எனது மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கண்ட அப்பருக்கு ஒரே ஆனந்தம்.
கணேச வித்தியாசாலையில் வருஷம் பிறந்த பின் நாள்பாடசாலை தொடங்கும். அன்று “போர்த் தேங்காய்” அடிக்கப்படும். போட்டி தனியாட்களுக்கிடையேயும் நடைபெறும். இல்லங்களாகப் பிரித்தும் நடைபெறும். எவருடைய தேங்காய் உடைபடாமல் இருக்கிறதோ அந்தக் கட்சிக்கு வெற்றி, சில மாணவர்கள் காலிப்பகுதியிலிருந்து வருவித்த நல்ல தேங்காய்களைக் கொண்டு வருவார்கள். அப்படியான காய் 20, 25 தேங்காய்களை உடைக்கும். அதனை உடைப்பதும் கஷ்டம். போர்த் திறனையும், கைக்காயை எடுத்து அடிப்பவருடைய கெட்டித் தனத்தையும் பொறுத்தது. கட்டுப்பாடும்,ஒழுங்கும், துணிவும் மாணவர்களிடையே வளர்வதற்கு போர்த் தேங்காய் அடி ஒரு ஆரம்ப கால பயிற்சியாகும்.
இந்தக் காலத்தில் ஒரு கிரக மாற்றம் போல கதிர மலையை விட்டு தற்காலிகமாக வேலகம் புகுந்தாயிற்று. கதிரமலை எங்களைக் கைவிட்டுப் போய்விட்டது. வேலகம் தெருவோரத்தில் இருந்து கொஞ்சம் தூரம் கணேச வித்தியா சாலைக்கு அண்மையில் ஆகும்.
நீஆ செல்லத்துரை ஒடியல் கூழ் குடிப்பதற்காக வீட்டிற்கு வந்தார். நல்ல கருவாட்டு முள், மீன் தலை, பலாக்காய், பயற்றங்காய், மரவள்ளிக்கிழங்கு எல்லாம் போட்டு அம்மா ஒடியல் கூழ் காய்ச்சினார். பெரிய சட்டியில் முற்றத்தில் கொண்டு வந்து

51
கூழைக் குடிப்பதற்கு ஆளுக்கு ஒரு பலா விலையும் எடுத்துக் கொண்டு வட்டமாகக் குந்தினோம், (பலாவிலை, பனுவில் என்பனதான் அந்தக் காலத்தின் கூழ் குடிக்கும் கரண்டி) சப்பியும், துப்பியும் பக்குவமாகக் கூழ் குடித்துக் கொண்டு இருக்கையில் குசலமும் விசாரிக்கப்பட்டது. அப்போது நான் 7ஆம் வகுப்புச் சித்தியடைந்துவிட்டு இருக்கிறேன். என்னாலே அப்புவும், அம்மாவும் அடிக்கடி சண்டை”எங்கேயாவது கடை கண்ணியில் பிடித்துக் கொண்டு போய் விட வேண்டும். அல்லது யாருடனாவது ஏதும் தொழில் துறை பழக்கி விட வேண்டும்” என்பது அம்மாவின் விருப்பம். அப்பர் இதற்கு உடன்பாடு இல்லை. இந்த நேரம் பார்த்துத்தான் என் தலைவிதியை நிர்ணயிப்பது போல நீ.ஆ.செ.யும் வந்தார். “நீ, புதன்கிழமை புன்னாலைக் கட்டுவன் ஆயாக் கடவைக்கு பக்கத்தில் இருக்கிற பாடசாலைக்கு வா. வருகிறபொழுது பாடசாலை விட்ட சேட்டிப்பிக் கேற்றும் கொண்டு வா. நான் அங்கு நிற்பேன்’ என்று கட்டளை இட்டார். அம்மாவுக்கு கொஞ்சம் கவலை. அப்பு தப்பி விட்டார். இருவரும் கொதித்தாறிய தண்ணிர்மாதிரி இருந்தார்கள். ஆங்கிலப் பாடசாலைக்குப் பணம் கட்டி அனுப்ப முடியவில்லையே என்று கவலைப்பட்ட அப்பருக்குக் கொஞ்சம் நிம்மதி. - *
நீ.ஆ.செல்லத்துரை மாதனையில் பிறந்து நீர் வேலியில் வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு அரசினர் பாடசாலைகளில் பரத நாட்டிய ஆசிரியராகப் பணி புரிந்தவர். அவர்தான் அரசினர் பாடசாலைகளில் முதல் நடன ஆசிரியரும் ஆவார். மிகவும் கடுமையான குரல். வெண்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி இருக்கும். ஆனால் சங்கதிகள் சரியாக

Page 30
52
இருக்கும். செய்யுள் இயற்றுவதில் வல்லவர். இலக்கணத்தை இலக் கியத்துடன் தொடர்புபடுத்திக் கற்பித்தலில் அவருக்கு நிகரானவர்கள் குறைவு.பால பண்டித பரீட்சையிலே சித்தியடைந்துள்ளார், சிறந்த அண்ணாவி கூத்துகள் பழக்கி மேடை ஏற்றுவதில் வல்லவர். இயற்கையாகவே கலைக் குடும்பமாகவே வளர்ந்தவர்.
இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு யாழ்ப் பாணத்தில் இருந்த பாடகி கன்னிகா பரமேஸ்வரி. அந்தக் காலத்திலே கோயில்களிலும், கூத்து மேடைகளிலும் அந்த அம்மையார் தோன்றினால் ஏகப்பட்ட கூட்டம். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் கொடுமையைப் பற்றி நீ.ஆ.செ. இயற்றிய
“அந்தோ ஜேர்மன் படைகள் செய்யும்
அநியாயம் பாரீர்.”
என்று தொடங்கம் பாடலை உச்ச ஸ்தாயியில் பாடி முடித்து நிறுத்தும்போது அந்தச் சபையில் ஒரு குண்டுசி விழுந்தாலும் சத்தம் கேட்கும்.
பாட்டின் இறுதியில்,
“நீர்வையூர் செல்லத்துரையின் நேர்தமிழ்பாடி,
ஐயா செல்லத்துரையின் நேர்தமிழ்பாடி,
ஐயா நேர்தமிழ்பாடி,
ggu JFT UTy.
என்று முடிக்கும்போது கரகோசம் பாடசாலைக்கு வாரத்தில் ஒ ரு நாளைக்கு வருகிறபொழுது எங்களுக்கு இலக்கியம் படிப்பிக்கத் தவறமாட்டார். சிலேடைப் பாடல்களையும், நயம்படச் சொல் லித் தருவார்.

53
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைப் போக்கீரேல் தேடேன், பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே. இது அவர் சொல்லித் தந்த பாடல்களின் ஒன்று. விடுதலை நாட்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் நீ ஆ. செ. வசிக்கும் நீர்வேலி வீட்டிற்குப் பாடம் கேட்கச் செல்வேன். என்னையும் நா. தம்பிராசாவையும் சேர்த்து இலக்கண இலக்கியம் சொல்லித் தருவார். வேறுசிலரையும் அழைத்து இலவசமாக பாடம் சொல்லிக் கொடுப்பது அவரது தொண்டாகும். சில சமயங்களில் நான் வீடு திரும்பாமல் நீர் வேலியில் தங்கி விடுவதும் உண்டு. அவருடைய சகோதரி திருமதி பாக்கியம் சின்னத்துரை அன்பும் சுவையும் கலந்த மொட்டை கறுப்பரிசிகலந்த நெல்லரிசி சோறும் கடா இறைச்சிக் கறியும் போட்டு நிறையத் தருவா. சில நாட்களில் தம்பிராசாவின் சிறிய தகப்பனார் தம்பர் வீட்டிலே தங்குவேன். அங்கு அந்த அம்மையார் மிகவும் சுவையான அமுதும் பலவகை கறிகளும் கட்டித் தயிரும் படைப்பா. நீர்வேலியில் ஒருநாள் படுத்து நித்திரையாக இருக்கும்போது திடீர் என்று பெரிய சத்தமாக எல்லாரும் அன்று சிரித்து கைகொட்டி ஆரவாரித்தார்கள். நித்திரை கலைந்து என்ன என்று வினாவிய போது, “ மல்லிகையே வெண்சங்காய் வண்டுத” “நாற்குணமும் நாற்படையலை;', என்ற பாட்டையும் திருப்பித் திருப்பிக் கனாவிலே உரத்து படித்ததாக சொல்லிச் சிரித்தார்கள்.
நினைவு கனவாக மாறுகிறது.

Page 31
54
இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இலவசக்
கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஆரம்பித்து வைத்தவர் ஊ.று.று. கன்னங்கரா என்ற அமைச்சராவர். அரசினர் பாடசாலைகளில் இலவச மதிய போசனமும் அறிமுகப் படுத்தப்பட்டது. எங்களுக்கு மதிய உணவாக சோறு வழங்கினார்கள். பாடசாலை அதிபர் முருகேசு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வருவார். மாணவனுடைய தட்டிலே இருக்கிற கீரைக்கறி கொஞ்சம் வாயில் போடுவார். “ஆகா, என்ன தேவாமிர்தம் போல இருக்கிறதே” என்று சொல்லி ஒரு சிரிப்பும் சிரிப்பார். அந்தச் சிரிப்பு சோற்றுக்கு குழம்பு விட்டது போல் இருக்கும்.
முதலித்தம்பி, இராஜரத்தினம், குமாரசாமி போன்றவர்கள் என்னுடன் படித்தவர்கள்.
கனகசபாபதி அந்தக் காலத்தில் மிகச் சிறந்த சித்திராசிரியர் ஆவர். தம்பியப்பா தொழில் பயிற்சி ஆசிரியர் ஆவர். யுத்த காலத்திலே குண்டுக்கு தப்புவதற்காக w வடிவத்தில் ஆங்காங்கே கிடங்குகள் வெட்டப்படும். A.R.P. என்ற அமைப்பில் இதனைக் கவனித்தவர் தம்பியப்பா ஆசிரியர்தான். விமானம் வருவதைக் கண்டால் ஒரு வகை குழல் ஊதப்படும். அந்தச் சத்தம் கேட்டவுடன் இந்தக் கிடங்குகளுக்குள் போய் பதுங்கிக் கொள்ளுவோம். பிற்காலத்தில் விடுதலைப் போரை எதிர்த்து போடும் குண்டுகளுக்கு நாம் தப்புவதற்கு இப்பயிற்சி ஆரம்பமாக இருந்தது.
பாடசாலைக்கு முன்னே உள்ள மடத்திலே
தொல்காப்பியத்திற்கு உரை செய்த வித்துவான் கணேசையரைக் காணலாம். சில சமயங்களில் நாம் அவருடன்

55
ஏதும் கதைப்போம்.1937ஆம் ஆண்டு கனிஷ்ட கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோன்றிச் சித்தியடைந்தேன். அந்தக் காலத்தில் அது அரசாங்கப் பொதுப் பரீட்சை. மேலும் ஒரு வருஷம் இங்கு படித் தேன்.
நீ.ஆ.செ என்னை திருநெல்வேலியில் படிக்கும்படி வற்புறுத்தினார். நான் அங்கே போய்ச் சேர்ந்தேன். அப்பாடசாலை வீட்டில் இருந்து 4 கல் தூரம். சக மாணவர்களுடன் சேர்ந்து நடந்துதான் போய் வருவேன். மதிய உணவுக்காக அம்மா 5 சதம் தருவா. 3 சதத்திற்கு 3 தோசையும், 1 சதத்திற்கு சுண்டலும், 1 பேணி தேனிரும் சாப்பிடுவேன்.
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலை அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய தமிழ்மொழிப் பாடசாலையாகும். S.S.C. என்று சொல்லப்படும் 10 ஆம் வகுப்பில் 6 பிரிவுகள் இருந்தன. இடைக்காடு முருகுப் பிள்ளை தலைமை ஆசிரியர். இடைக்காடு செல்லத்துரை கணிதமும், விஞ்ஞானமும் கற்பிப்பார். வெண்கட்டியை எடுத்துக் கையிலே பிடித்தாராய் இருந்தால் அவர் சொல்வதும் எழுதுவதும், ஒரே வேகமாக இருக்கும். கணிதப்பாடம் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் கடித்தது போல இனிக்கும்.
நீ.ஆ.செ.யால் விதைக்கப்பட்ட இலக்கிய விதை என் நெஞ்சில் சீராக முளைப்பதற்கு பண்டிதர் இராசையா ஊட்டிய இலக்கிய மழை பெரிதும் உதவியாக இருந்தது. இவ் இலக்கியச் செடி பிற்காலத்தில் பண்டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை, பண்டிதர் சி. முருகேசு ஐயர் என்பவர்கள் இட்ட இலக்கிய பசளையால் மேலும் வளர்ந்தது. பண்டிதர் துரைசிங்கத்திடம்

Page 32
56
இலக்கணம் படித்தேன், பண்டிதமணி கணபதிப்பிள்ளை பக்கத்தில் உள்ள பயிற்சிக் கலாசாலைக்கச் சென்று விட்டார். இடைக்கிடை அவரிடமும் ஏதும் கேட்போம். முத்துத்தம்பி வித்தியாசாலையில் படித்த மாணவர்களில் 90 வீதத்தினர் பயிற்சி பெற்ற ஆசிரியராகவும், பட்டதாரிகளாகவும், பண்டிதர் களாகவும் வளர்ந்து விட்டார்கள். வித்துவான் வேலன் (டாக்டர் க.ந. இரத்தினவேல்) உடன் படித்தவர் ஆவார். அங்கே நான் 1942ളൺ 10 ஆம் வகுப்பு சித்தி யடைந்தேன்.
முத்துத்தம்பி வித்தியாசாலை தமிழ்மொழிக் கல்வியின் மாபெரும் நிலைக்களனாக விளங்கியது. ஒரு பெரிய ஆசிரிய சமுதாயத்தையே உருவாக்கியது. பக்கத்தில் உள்ள சைவ அனாதைகள் விடுதியில் உள்ளவர்களும் அங்கே படித்து பயன் பெற்றவர்கள்.
ஒர் எட்டில் பழுக்காத பழக்கமும், ஈர் எட்டில் படிக்காத படிப்பும். மூ வெட்டில் பண்ணாத மணமும் நா எட்டில் பெறாத பிள்ளையும். ஐ எட்டில் உழைக்காத உழைப்பும். ஆறு எட்டில் பங்கிடாத சொத்தும், ஏழு எட்டில் செய்யாத யாத்திரையும், எண் எட்டில் பண்ணாத தவமும். இப்படி ஒரு தொடரை நீ.ஆ.செ. சொல்லுவார். அவர் என்னைப் பிடரியிலே பிடித்துத் தள்ளிக் கொண்டு போய் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் H.S.C. வகுப்பில் சேர்த்து
விட்டார்.

57
தமிழ் மொழி மூலம் 10 ஆம் வகுப்பு சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வகுப்புத் தொடங்கப்பட்டது. அந்தக் காலத்தில் அரசினர் பாடசாலைகளில் ஆங்கிலம் படிப்பிக்கும் பெரிய பாடசாலைகளில் இது ஒன்றாகும். அடிப்படை ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக தமிழ் படித்த மாணவர்களுக்காக விசேட வகுப்புகள் இங்கே நடைபெற்றன. இந்த வகுப்பில் மாத்திரம் 300 மாணவர்கள் படித்தார்கள். பல துறைகளிலும் சிறந்த ஆசிரியர்கள் போதனா ஆசிரியர்களாகச் சேர்க்கப் பட்டர்ர்கள்.
இங்கே கொஞ்சம் ஆங்கிலம் படிக்க முடிந்தது. நாக்கு வளைவது கஷ்டமாகத்தான் இருந்தது. இந்தக் காலத்தில் தான் ஆங்கிலம் ஆங்கிலம்- தமிழ் என்ற அகராதி ஒன்றையும் வாங்கினேன். ஏழு எட்டு வருடம் சென்ற பின்பும் அகராதி பார்ப்பதை என் தந்தை கண்டால் “ என்ன மகனே! இந்தப் புத்தகம் இன்னும் படித்து முடியவில்லையா?” என்று கேட்பார்.
ஸ்ரான்லி கல்லூரியில் எனக்கு ஒரு மாணவர் தலைவன் வேலை கி டைத்தது. அந்த நேரத்தில் அது கொஞ்சம் சந்தோஷமாகவும், பெருமை போலவும் இருந்தது. ஆனால் எனது படிப்பைக் குழப்பி விட்டது. இடாப்புக்களை சரி, பிழை பார்க்கவும், வழங்கவும், பா ண்கணக்கு பார்க்கவும், கொடுக்க வாங்கவும் நேரம் சரியாகி விட்டது. இந்த வேலை 5-6 ஆங்கிலச் சொற்களைக் கூடுதலாக அறிகின்ற வாய்ப்பைக் கெடுத்து விட்டது.
இங்கே முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் என்னுடன் படித்த என் வயது மாணவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியர்களாகவும், அரசாங்க

Page 33
58
உத்தியோகஸ்தர்களாகவும் இருந்தார்கள். ஆசிரிய சேவையில் நான் சேர்ந்தவுடன் எங்கே போனாலும் இவர் களிற் சிலரைச் சந்திக்க முடிந்தது. இதனால் எனது சொந்தக் கருமங்களையும், பொதுக் கருமங்களையும் செய்வது இலகுவாக இருந்தது.
என் தம்பியாரான சண்முகநாதனுக்கும், மகேஸ்வரனுக்கும் ஆங்கிலப் பாடசாலையில் போய் ஆங்கிலம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை எழுத்துக்களை அவர்களிடம் கேட்பேன். எனது தகப்பனாருக்கு இது விசயம் ஒரு சிக்கல். இது அவருக்குக் கெளரவப் பிரச்சனை. “என்ன மகனே! நீ முந்தி இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாய். இப்ப அவர்களிடம் நீ கேட்டு படிக்கிறாயா? “ என்று கேட்பார்.
திரும்ப அவரே விடையும் சொல்லுவார். முருகனே தந்தைக்கு குருவாக வரவில்லையா? யாரிடம் கேட்டால் என்ன? அறிந்தால் என்ன?
கல்வி என்பது - அறிவு என்பது- கற்றால் அறிந்தால் தெரிவதுதான். அல்லது அனுபவத்தால் பெற வேண்டும். வயது எதுவாக இருந்தாலும் குறிக்கப்பட்ட பொருளைப் பற்றி படிக்காதவர், அறியாதவர், அனுபவிக்காதவர் அதனை அறிவுறுத்த முடியாது. கடலைக் காணாதவர் கடலின் அனுபவங்களைப் பற்றியும், மலையைக் காணாதவர் மலை ஏறும் முறை பற்றியும் சொல்வது கடினம். இல்லறத்தை அனுபவிக்காதவர் இல்லறத்தைப் பற்றிச் சொல்ல முடியாது.
மலையிலே எப்படி வீடு கட்டுவது என்பதை மலையின் படத்தைக் கீறி இப்படித்தான் என்று எனக்கு ஆசிரியர் சொன்னார். அவர் எனக்கு சொன்ன முறை அந்த வீடு கட்டி

59
முடிய முன்பு சரிந்து விடும் போல் எனக்குக் தெரிந்தது. “அது எப்படி ஐயா உப்படி நிற்கும்?” என்று கேட்டபோது பாவம் இந்த ஆசிரியருக்கு அதனைப் புரிய வைக்கத் தெரியவில்லை. என்னை அமர்த்தி விட்டார். அவரும் அமர்ந்து விட்டார். பல வருடங்கள் கழித்து நான் பதுளைக்குப் படிப்பிக்கப் போனபோது தான் மலைச்சரிவின் ஒரு பகுதியை மட்டப் படுத்தி நிலைக்குத்தாக வீடு கட்டுவது என்ற உண்மை தெரிந்தது. இப்படி அனந்தம்.
புலிக்குட்டிக்கு பாய்ச்சலும், மீன் குஞ்சுக்கு நீச்சலும் யாரும் கற்று க் கொடுப்பதில்லை. மலையகப் பையன் மலைநாடு, அப்பிரதேசப் பயிர் அது வளரும் முறை மலையில் வீடு கட்டும் முறை, அங்குள்ள கால நிலை என்பன பற்றி இயற்கையாகவே அறிந்து கொள்கிறான்.
கடற்கரையில் வசிப்பவன் கடலில் நீந்தவும், மீன் பிடிக்கவும், கடல் அலையில் துள்ளி விளையாடவும், வள்ளம் ஒட்டவும் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்கிறான்.
ஒரு மேள வாத்தியக்காரனின் பிள்ளை பாலகனாக இருக்கும்போதே தட்டிப் பழகிக் கொள்கிறான்.
ஒரு சிற்பியின் சிறுவன் சின்னஞ்சிறு வயதிலே உளியை எடுத்து சிற்பத்தை செதுக்கிக் கொள்கிறான்.
இயற்கையாகவே பிள்ளையினுடைய பார்வையும் சூழலும் பயிற்சியும் இதனை ஆக்கிக் கொடுக்கிறது. வயது மாத்திரம் ஆக்கிக் கொடுக்காது.
சில பெற்றோர்கள் கதைப்பதை, செய்வதை நடைமுறைப் படுத்துவதைத் தம்மை அறியாமலேயே பிள்ளைகள்

Page 34
60
அவதானிப்பார்கள். அதனை அப்படியே செய்யப் பழகி விடுவார்கள்.
ஸ்ரான்லிக் கல்லூரியில் இலக்கியச் சங்கத்தில் பேசுவதற்கு என்று மேடை ஏறினேன். சொல் ஒன்றும் வரவில்லை, கேலிக் கைதட்டல் மாத்திரம் கிடைத்தது. இராம இராவண யுத்தத்தில் “வெறுங்கையோடு திரும்பிய இராவணனைப் போல” இறங்கிக் குனிந்து செல்ல வேண்டியதாயிற்று.
5, 6 வருடங்களின் பின் கண்டியிலே ஒரு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிவிட்டு இறங்கியவுடன் 5, 6 நண்பர்கள் வந்து என்னைப் பாராட்டி ஸ்ரான்லிக் கதையையும் ஞாபகப் படுத்தினார்கள். பக்கத்தில் நின்ற வயது முதிர்ந்த ஆசிரியர் பின்வரும் பாடலைப் பாடிக் காட்டினார்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்த தொருகல்வி மனப்பழக்கம்- நித்தம் நடையும் நடைப் பழக்கம் கொடையும் தயையும் பிறவிக் குணம். 6, 7 ஆம் வகுப்புகளிலும் பின்னரும் நான் படிக்கும் காலத்தில் எனது தகப்பனாரின் பேச்சிலும் செயலிலும் சிறிய சிறிய வேறுபாட்டின் வளர்ச்சியைக் காண முடிந்தது. அடிக்கடி” தோளுக்கு மிஞ்சினால் தோழன்”என்று சொல்லுவார். நான் போகும் போக்குகளில் தலையிடுவதைக் குறைத்துக் கொண்டார், நாங்கள் கூடுகிற இடத்திற்கோ விளையாடுகிற இடத்திற்கோ அதிகம் வரமாட்டார். நன்மை தீமைகளுக்கு தனக்குப் பதிலாக என்னையே அனுப்பிக் கொள்ளுவார். அப்போது அதன் உண்மை எனக்குப் புரியவில்லை. அவர்கள்

61
என்னை ஒரு தோழனாக வளர்த்துக் கொள்ள முயன்ற நடவடிக்கையே இது என்பது, மிகவும் பிந்தியே எனக்கு விளங்கியது.
எனது மூத்த மகன் 12 ஆம் வகுப்பு பரீட்சை எழுதிய பின் லண்டன் செல்ல விரும்பினான். அப்போது கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தைத் தாயார் மூலம் என்னிடம் சமர்ப்பித்தாள். நான் அதை அலட்சியம் செய்து விட்டேன். முதல் முறை மறுத்தால் திரும்ப அப்பீல் செய்வது குடும்ப வழக்கமில்லை. இவன் இரண்டாம் முறையும் எனக்கு மேல் முறையீடு செய்த போது எனக்கு ஒரு வகை ஞானம் பிறந்தது. அப்போதுதான் அவன் இப்போது குழந்தை அல்ல தோழனாக வளர்ந்துவிட்டான். சிந்திக்கத் தொடங்கி விட்டான் என்ற அறிவு எனக்கு வந்தது.
'சரி நீ போய் சின்னையாவிடம் கலந்து பேசிக் கொண்டு
வா'
என்று சொல்லிக் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த என்னுடைய தம்பி சண்முகநாதனிடம் அனுப்பினேன். அவன் 'நீ போவதாக இருந்தால் இப்பவே போ' என்று சொல்லி லண்டன் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கான ஆயத்தங்களையும் செய்ததுடன் கொழும்பிலேமகன் ஆங்கிலம் படிக்கத் தக்கதான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தான். இப்போது நானும் சிந்தித்தேன். அவன் தோளுக்கு மிஞ்சித் தோழனாகி விட்டான்.தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரைப் பற்றியும் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவனாகி விட்டான் என்ற நினைந்து தலையிலே குட்டிக் கொண்டேன். என் சிந்தனாசக்தியின் குறைவையும் உணர்ந்து கொண்டேன்.

Page 35
62
பிள்ளைகள் வளர்ந்து படித்து தொழில் செய்து விவாகஞ் செய்து தனிக் குடும்பமாக வாழத் தொடங்கிய பின்பும் அவர்களின் தனிப்பட்ட தேவையையும் வாழ்க்கை முறையையும் சிந்திக்காது குறுக்கே நிற்கின்ற பல பெற்றோர்களைக் காண முடிகின்றது. ஏன் பேரனையே காண முடிகிறது. இதனாலேயே பலவகைக் குடும்பப் பிரச்சனைகள். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையும் ஆகும்.
எனது தகப்பனாரின் படிப்படியான படிப்பித்தல் எனக்கு நல்ல படிப்பினையானது. எனது மகனின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் மந்திரமாக அமைந்தது.
எனது இரண்டாவது மகன் ஒரு டாக்டராக வருவான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவன் தன் கவனத்தை வேறு துறைகளில் திருப்பிக் கொண்டான். இதைப் பற்றிப்பலர் எனக்கு முறைப்பாடு சொல்லுவார்கள். மூத்தவனிடம் நான் பெற்ற அனுபவம் இவனோடு என்னைப் போராடாமல் நிறுத்தி வைத்தது. காலங்கள் மாற மாற சந்ததி, கால இடைவெளி சில மாற்றங்களைச் செய்யத்தான் செய்யும். அதற்கு நாம் மிகப் பெரிய அணை கட்ட முடியாது. படிப்பில் மாத்திரம் அன்றி வாழ்க்கைத் துணை நலத்தை தேடுவதிலும் அவன் தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக் கொண்டான். சில குடும்பங்களில் இப்படியான நிகழ்ச்சிகளால் பெரிய போராட்டங்களும் கொலைகளும் நடப்பதுண்டு. இவற்றில் நின்று நாம் விலகிக் கொள்வது அவசியம்.
எனது இளைய மகன் ஒரு நியாயவாதியாக வர வேண்டும் என விரும்பினேன். அவன் கணக்காளராக வரவேண்டும் என விரும்பினான். காலப் போக்கில் நான் விரும்பிய துறைக்குக்

63
கிட்ட மாறிக் கொண்டு வருகிறான்.உலகத்தில் இப்படிப் பல பிள்ளைகள் வளர்ந்து அவர்களுடைய சிந்தனா சக்தியும் அறிவும் முதிர்ச்சி அடைந்த பின்னும் அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராகப் பெரிய அணைகளைக் கட்ட நாம் முற்படக் கூடாது.
தோளுக்கு மிஞ்சினால் தோழன். அவர்களை 18, 20 வருஷத்திற்கு முன்பு தூக்கி மடியில் வைத்த பாலன் என்று நினைத்தல் தவறாகும்.

Page 36

65
6. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
“தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை” (கொன்றை வேந்தன்) என்று பாலர் வகுப்பில் மனனம் செய்தோம். காலப்போக்கில் இவற்றின் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது.
எங்கு எதைப் படித்தாலும் உலகப்படிப்பின் குருவாக என்னுடைய தந்தையாரே விளங்கினார். அவரிடம் இருந்து படித்த படிப்பு இன்று வரை வாழ்க்கையில் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவருடைய நடைமுறையும், சொல்லும், சொற்களின் பொருளும் மிகவும் அடக்கமானவை. பொருள் பொதிந்தவை.
குறைவாகவே கதைப்பார். அன்பாகவும், பண்பாகவும் உரையாடுவார். கலை, கற்பனை, ஆன்மிகம், வாழ்க்கை நெறி பற்றியும், நீதி நியாயங்கள் என்பன பற்றியும் சுருக்கமாகச் சொல்லுவார். சிறிய கதைகளும் சொல்லுவார்.
கட்டளைகளை அவதானிக்கும்படி செய்தபின் ஒரு முறைதான் சொல்லுவார். இரண்டாவது முறை சொல்வது மிகவும் குறைவு. அவரின் கட்டளையை நாம்

Page 37
66
மேற்கொள்வதுதான். அவர்களின் கட்டளைக்கு முன்பே நாம் ஏதாவது வேண்டுகோள் விடுத்தால் அவர் அதை பெரும்பாலும் ஏற்றக் கொள்ளுவார். இதனால் எங்களுக்குள் எதிர் வார்த்தைகள் ஏற்படுவதில்லை.
எங்கேயாவது போவதாக இருந்தால் கொடை கொண்டு போக வேண்டும், அல்லது கோள் கொண்டு போக வேண்டும், என்பார். இறைவனிடத்து ஏதும் கேட்க வேண்டுமானாலும் நாம் ஏதும் அன்பாகக் கொடுத்துத் தான் கேட்க வேண்டும். நாலைக் கொடுத்து மூன்றைக் கேட்ட ஒளவையின் பாடலை நீ படிக்கவில்லையா என்று கேட்டு.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு மிவை
நாலும் கலந்துணக்கு நான் தருவேன்கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
என்ற பாடலைச்சொல்லுவார். கோளை எடுத்துக் கொண்டு போகும் பழக்கம் தீயது என்பார்.
உணவு விடயத்தில் அம்மா ஏதாவது கட்டுப்பாடு வைத்தால் அது அவருக்குப் பிடிக்காது. “எப்ப சாப்பிட்டாலும் அவன்கள் தானே சாப்பிடுவது? கொடு; திண்டிட்டுப் போகட்டும்” என்று சொல்லுவார். சாப்பிட மறுத்தால் “ பசித்தால் தின்பான்கள் தானே' என்பார்.
அம்மாவிடம் ஏதாவது கருத்து வேறுபாடு வந்தால் “காண்டாமிருகக் குட்டி” என்று சொல்லுவார். நாம் ஏதாவது பிழை விட்டால் ‘பேய்த்தம்பி’ என்பார்.

67
பின்வரும் தொடர்கள் அடிக்கடி அவர் வாயிலிருந்து
வெளிவரும்.
1.
“அ, தெரியாமல் அப்பால் போக முடியாது. (கல்வியின் அடிப்படை விளங்க வேண்டும்) “முதற் கோணல் முற்றும் கோணல்” (ஒரு கருமம் ஆரம்பத்திலேயே பிழைத்தால் அதன் முடிவும் பிழையாகி விடும்.) “ இறைவனை நம்பு வெடிமருந்தை நனைய விடாதே.” (கடவுளை நாம் முழுதாக நம்புதல் வேண்டும். அதே சமயம் நாம் செய்யும் கருமங்களை ஒழுங்காகச் செய்தல் வேண்டும்.) “மலை விழுங்கி மகாதேவனுக்கு (கதவு) ஒரு பப் படம்.” (பெரிய கருமங்களைச் செய்யத் தக்கவனுக்கு சில கருமங்கள் மிக இலகுவானது) “எடுத்தடி மடக்காய் பேசாதே.” (அவசரப்பட்டுக் கதைக்காதே.) “சோழியன் குடுமி சும்மா ஆடாது.” (செயல்கள் யாவும் நோக்கம் உடையன.) “கூரை மேல் ஏறி கோணல் சுரைக்காய் அறுக்காத, குருக்களா, நாளை வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டப் போகின்றார்.” (சிறிய காரியத்தை செய்ய முடியாதவர் மிகப் பெரிய காரியத்தைச் சாதிக்க முடியுமா.)

Page 38
9.
10.
11.
12.
13.
68
நல்லவரை கெட்டவருக்கு ஒப்பிட வேண்டியிருந்தால் “சீதேவியார் பிறந்த திருப்பாற்கடலிலே தான் மூதேவியாரும் பிறந்தார்’ என்ற கருத்து வெளிவரும். “பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவிலே எருமை மாடு தெரியுமா”
(எருமை புகை நிறம் பசு வெள்ளை நிறம்) வெளிப்படையாக தெரிவதையே அறிய முடியாதவர் மறைமுகமாக அல்லது ஆழமாக உள்ள பொருளையோ, காட்சியையோ எவ்வாறு அறிய முடியும்.
'பழ மாங்காயை பழுக்க வைக்க வேண்டும். புளி மாங்காயைக் கறிக்குப் போட வேண்டும்.” (தேவைக்கு ஏற்றவாறும் பொருளின் தகைமைக்கு ஏற்றவாறும் பயன்படுத்த வேண்டும்.)
“ஆமை பிடிப்பவர் மல்லாத்துவர், நாம் அதைச் சொன்னால் பாவம்’
(சொல்லவும் வேண்டும் சொல்லவும் கூடாது) “பனையிலே படவாள் பார்த்த மாதிரி’
(கிடைக்காத பொருளை இல்லாத இடத்தில் பார்ப்பது)
பனைமரம் உயர்ந்து நேரே வளர்வது. படவாள்
என்பது கலப்பையின் ஒரு உறுப்பு. ‘ட’ வடிவானது. அது பனையில் எடுக்க முடியாது. “மொட்டைக்கும் மொட்டைக்கும் முடிச்சு” (எவ்வித உண்மைகளும் இல்லாமல் பொய்களைச் சொல்லி எதிரிகள் ஆக்கி விடுவர்)

14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
69
“நெய் தடவிய வழுக்கல்” (ஆபத்தான நேரத்தில் -உதவ வேண்டிய நேரத்தில் மெதுவாக கழுவி விடுதல்) “முழங்கையில் பிடித்தல்” (விருப்பமில்லாத கேள்வி - சாட்டுக்குக் கேட்டது.) “மேய்கிற மாட்டை நக்கிற மாடு கெடுத்தல்” (முயற்சியாளனை சோம்பேறி சேர்ந்து கெடுத்தல்) 'நண்டின் காலை நண்டு அறியும்” “வெங்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி” “அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” “குட்டக்குட்ட குனிபவன் மடையன்’ “எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவான்” “குரங்கு அப்பம் பகிர்ந்தது போல” “நூற்றுக்கு மேற்பட்டால் ஊற்று” “பாவல் போட்டால் சுரை முளைக்குமா” “குருணி சேர்த்துத்தான் கப்பலுக்கு ஏற்றுவது” “வண்ணா துறை முயல் போல” “பாம்பின் குட்டி பாம்பு அதன் குட்டி நட்டுவக்காலி’ “யானைக்கும் அடி சறுக்கும்” “ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்” “குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு”
“எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி”

Page 39
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
70
“குரங்கின் கை பட்ட பூமாலை” “மாப்புளிப்பது அப்பத்திற்கு நல்லது” “வாங்கிறவனுக்குத்தான் விற்கலாம்” “விற்பவனிடத்தில் வாங்கலாம்” “ஊதிக் கெடுக்காதேசங்கை” "துறைமுகம் எத்தனை கப்பலைக் கண்டது,
கப்பல் எத்தனை துறைமுகம் கண்டது” ‘துறைமுகத்திற்கு கப்பல் வருவதோ துறைமுகம் கப்பலுக்குப் போவதோ” “ஈர உழவும் இரண்டுரில் வேளாண்மையும் தாரம்
இரண்டும் தனக்குப் பகை” “தொஞ்சமாட்டிற்குக் குஞ்சம் வேண்டுமா” “நக்கினார் நாவிழந்தார்” “வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா” “இரவல் புடவையிலே இது நல்ல கொய்யகமாம்” “எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” “நல்ல மாட்டிற்கு ஒரு சூடு - நற்பொண்டாட்டிக்கு ஒரு வார்த்தை” “பட்டடை வாய்த்தால் தான் பணி வாய்க்கும்” “ஏமாற்றவும் கூடாது. ஏமாறவும் கூடாது.” “ஒரு நாணயத்திற்கு இரு பக்கம்”

A9.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
6,
62.
63.
64
71 “அறிவாளிகள் எல்லாரும் பெரும் பதவிக்கு வந்ததும் இல்லை. பெரிய பதவிக்கு வந்தவர்கள் அறிவாளிகளும் அல்லர்” “இரக்கப் போனாலும் சிறக்கப் போ” “கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து” “பிள்ளையார் பிடிக்க பூதம் ஆதல்” “ஒதுங்க வந்த கிடாரி ஊர் கிடாரியை இடித்தது” “தட்டினால் திறபடும்” “பாம்பு தின்னுகிற ஊர் போனால் நடுமுறி நமக்கு” “மழை விட்டும் தூவானம் போகவில்லை” “மந்திரம் அறியாதவன் பூசை அந்திபடும்” “வெண்ணையைத் தின்று சாம்பலைப் பூசாதே’ “சப்பிக் குடிக்க வேணும் அல்லது துப்பிக் குடிக்க வேணும்.” “சாத்திரம் பொய் என்றால் கிரணத்தில் பார். வாகடம் பொய் என்றால் வானத்தைப் பார்” “வீடு கொளுத்துகிற இராசாவுக்கு நெருப்புக் கொடுக்கிற மந்திரி” “இலைக்கறிச் சட்டியில் இடி விழுந்தமாதிரி” “ஆத்திர காரணுக்குப்புத்தி மத்திபம்” "ஆசாரி விடை கொடுத்தாலும் பூசாரி விடை

Page 40
72
கொடுக்க மாட்டான்” 65. “பாவியார் போகும் இடம் பள்ளமும் திட்டியும்” 66. “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது” 67. “வால் இல்லாத நாய்க்கு மனத்தில் புழுகம்’ 68. “செருப்பைக் காலிலே போட வேண்டும்,
தொப்பியைத் தலையிலே போட வேண்டும்” 69. “செருப்பாய் இருக்கும் வரை பிரச்சனை இல்லை
முடியாய் வந்தால் தான் பிரச்சனை’
சில சமயங்களில் காகத்தின் தந்திரம் நரியின் தந்திரம் இவை பற்றிய கதைகளையும் சொல்லுவார். சித்தர் பாடல்களைப் பாடிக் காட்டுவார். பட்டினத்தார் பாடல். சிவவாக்கியர் பாடல், மஸ்தான்சாகிப் பாடல். பேய்ச் சித்தர் இவர்களின் பாடல்களைப் பாடியும் காட்டுவார்.
“தன் வினை தன்னைச் சுடும் ஒட்டப்பம் வீட்டைச் சுடும்” என்றும் “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்றும் அடிக்கடி சொல்லப்படும் பின்வரும் சம்பவத்தையும் கேட்கலாம்.
பட்டினத்தடிகள் ஒரு கிராமத்தின் ஊடாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது மக்கள் கூடி அழுது கொண்டிருந்தார்கள். இறந்த ஒருவரின் கவலையைத் தீர்க்க அழுதுகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தார். சற்றுத் தூரம் போய் கையாலே தனது கண்களை மூடிக்கொண்டு உரத்துக் கதறி அழுதார். மரண வீட்டில் அழுது

73
கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தார்கள். நீங்கள் இறந்த சீவனுக்காக அழுகிறீர்கள். நான் இறக்கப் போகும் சீவனுக்காக அழுகிறேன் என்றார்.
ஆன்மிகக் கருத்துக்கள் ஒன்றும் அப்போது புரியாது. 50 வருடங்களுக்குப் பிறகுதான் சில கருத்துகள் விளங்கின.
“மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை’ இத்தொடரும் அடிக்கடி தொடரும். அவருடைய தலைமாட்டில் சில்லறைக் கோவை என்ற நூல் எப்போதும் இருக்கும்.
ஏறக்குறைய 700 பக்கங்களைக் கொண்ட சில்லறைக் கோவை பாடல்களை மனனமாகச் சொல்லுவார்.
“சர்க்கரைப் பொம்மை’ ஒரு ஊரிலே படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். அவர் தன்னடைய பிள்ளைகளுக்கு சிறிய கதைகள் சொல்லுவது வழக்கம். அவருடைய ஒரு மகன், நல்லவர்கள் அல்லாதவர்களுடன் தொடர்பு கொள் வதைத் தந்தை கவனித்தார். இரண்டு மக்களையும் அழைத்து, இரண்டு கண்ணாடிப் பேழைகளில், சுத்தமான தண்ணிர் கொண்டு வரும்படி பணித்தார். தண்ணிர் கொண்டு வந்தார்கள். இருவரையும் பக்கத்தில் இருக்கச் செய்தார். கைப்பையிலிருந்து ஒரே மாதிரியான இரண்டு பொம்மைகளை எடுத்தார். அதில் ஒன்று மண்ணால் செய்யப்பட்டது. மற்றது சர்க்கரையால் செய்யப்பட்டது. தனித்தனியே இரண்டு பேழைகளில் போட்டார். இரண்டும் கரைந்தன. மண் பொம்மை கரைந்த நீரைக் காட்டி

Page 41
74
இதைக் குடிப்பீர்களா? என்று கேட்டார். இரண்டு பிள்ளைகளும் மறுத்துவிட்டனர். சர்க்கரைப் பொம்மை கரைத்த தண்ணிரைக் குடிப்பீர்களா? என்று கேட்டார் . ஆம் என்று பதில் அளித்தார்கள்.
பார்த்தீர்களா இரண்டு பொம்மைகளையும் நல்ல தண்ணிரில்தானே கரைத்தேன். நீங்கள் ஏன் குடிக்க மறுக்கிறீர்கள்? என்று கேட்டார்.
இது மண் தண்ணிர் அல்லவா, எப்படிக் குடிப்பது என்று ஒரு பையன் கேட்டான்.
ஆம் பார்த்தீர்களா. நல்ல தண்ணிராக இருந்தும் கரைத்த பொருளின் வேறுபாட்டினால் நல்ல தண்ணிரும் பழுதடைந்து விட்டது.
நீங்களும் நல்லவர்களுடன் சேர்ந்து பழகினால் தான் நல்ல மனிதர்களாகவும், சமுதாயத்திற்கு உதவக் கூடியவர்களாகவும் வளருவீர்கள். இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருங்கள் என்று சொன்னார்.
“நரிக் குணம்” ஒரு நரியும் ஓநாயும் நண்பர்கள். ஒருநாள் ஓநாய் இரண்டு முயல்களைக் கொண்டு வந்து நரியிடம் கொடுத்து “இவற்றை வடிவாகச் சமைத்து வை. நான் போய் என்னுடைய நண்பன் கரடியையும் அழைத்து வருகிறேன்” என்று சொல்லி விட்டுப் போனது. முயற்கறி சமைத்துமுடிந்தது. கறிவாசம் நரியை விட்டு வைப்பதற்கில்லை. ஒவ்வொரு துண்டு துண்டாக நரி எடுத்து சாப்பிட்டத. ஒரு முயல் முடிந்தது.
ஒநாய் வரவில்லை. நாக்கு ருசியோ நரியைச் சாப்பிடச்

75
சொல்கிறது. மெல்ல மெல்லமாக அடுத்த முயலையும் சாப்பிட்டு முடித்து விட்டது.
ஒநாய் திரும்பி வந்தது. முயலைச் சிறு துண்டாக வெட்டி சாப்பிடுவதற்காக பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு போய் தூரத்திலுள்ள மரத்திற்குக் கீழே உள்ள தீட்டுக் கட்டையில் தீட்டியது. அப்போதுதான் கரடி அங்கு வந்தது.நரியைப் பார்த்து “கரடி எங்கே? என்று ஓநாய் கேட்டது.
நரி கரடியின் காதோடு காதாய் “உன்னுடைய இரண்டு காதையும் வெட்டுவதற்காக அந்தா அந்த மரத்திற்குக் கீழே இருந்த கத்தியை தீட்டுகிறது” என்று சொன்னது. கரடி பயத்திலே வந்த வழியே திரும்பி ஓடியது.
ஒநாய் கரடி வந்து விட்டதா? என்று கேட்டுக் கொண்டு கத்தியுடன் வந்தது. ஒமோம் கரடி வந்து இரண்டு முயல்களையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறதே என்று நரி சொன்னது.
ஒநாய் மெய்தான் என்று நம்பி தீட்டிய கத்தியுடன் கரடியை பின் தொடர்ந்து” ஒன்றையாவது தந்து விட்டுப் போ” என்று உரத்துச் சத்தம் போட்டுக் கொண்டு ஓடியது. தன்னுடைய காதைத்தான் ஓநாய் கேட்கிறது என்று நினைத்த கரடி மிகவும் வேகமாக தப்பி ஓடியது. நரிக்குணம் ஒநாயை தோற்கடித்து விட்டது.
“காகத்தின் தந்திரம்" ஒரு மரத்தின் கொப்பிலே காகம் கூடு கட்டி முட்டை இட்டது. மர த்தின் அடியில் உள்ள புற்றிலே பாம்பு ஒன்று இருந்தது. இந்தப் பாம்பு காகத்தின் முட்டைகளை குடித்து வந்தது. காகம் புத்தியைப் பயன்படுத்தியது.

Page 42
76
ராஜகுமாரி குளித்துக் கொண்டு இருக்கும்போது அவளுடைய முத்து மாலையை தூக்கிக் கொண்டு வந்து அந்தப் புற்றிலே போட்டது. காகத்தைக் கலைத்துக் கொண்டு வந்த வேளையாட்கள் புற்றிலே போட்ட முத்துமாலையைத் தேடுவதற்காக அந்தப்புற்றை வெட்டினார்கள். அப்போது பாம்பு சீறிக் கொண்டு வந்தது. உடனே அவர்கள் பாம்பை அடித்துக் கொன்றார்கள்.
புத்தியைத் தீட்டு, கத்தியைத் தீட்டாதே
எங்களுடைய வீட்டுக்குப் பின்புறத்தில் அடுத்த வளவின்
எல்லைக் கரையில் ஒரு வேப்பங்கன்று வளர்ந்து வந்தது. பக்கத்து காணிக்காரன் முத்து ஒரு வில்லங்கப் பேர்வழி. பாதைக்கே முள்ளுவைத்துக் கட்டுபவர். அவர் இந்த வேப்பமரத்தின் மேற்பக்கத்தை இழுத்துதன்பக்கமாக கட்டுவார். அவரின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை.
அந்த வேப்பங்கன்றை வெட்டி விடுவோம் என்று கத்தியை எடுத்துத் தீட்டினேன். இதைக் கண்ட தகப்பனார், என் அறியாமையை உணர்ந்தார். “டே பேய்த் தம்பி கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டு. மரந்தான் எங்களுக்கு வராவிட்டாலம் நிழலாவது நமக்குக் கிடைக்குந்தானே” என்று அறிவுறுத்தினார். மரம் தறிபடலம் நின்றது. காலகதியில் மரம் மாத்திரமல்ல. அந்த நிலம் எங்களுக்குச் சொந்தமாய் விட்டது.
அந்த வேம்பு பெரிய விருட்சமாகி இன்று நல்ல நிழல் தந்து கொண்டிருக்கிறது.
நாம் எப்போதும் நல்லதைத்தான் செய்ய வேண்டும். அதனால்தான் நல்ல விளைவு ஏற்படும். தினை விதைத்தால் தினை அறுக்கலாம். வினைவிதைத்தால் வினைதான்

77
அறுக்கலாம். தென்னைக்கு அடியிலே தண்ணீர் பாய்ச்சுகிறோம். அது நல்ல சுவையான இளநீரைத் தருகிறது.
“ எந்த எதிரிக்கும் தருமத்தின் வழியில் நீதியாகவும், உண்மையாகவும் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்று சொல்லி பாரதத்தில் சகாதேவன் கதையைத் தகப்பனார் சொல்லுவார்.
பாரத யுத்தம் தொடங்கப் போகிறது. யுத்தத்திற்கு முதல் நல்ல சுபமுகூர்த்தத்திலே களப்பலி பூட்டுவது வழக்கம். பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் மகா சோதிடர். கெளரவர் தலைவனான துரியோதனன் சகாதேவனிடம் சென்று களப்பலி பூட்ட நல்ல நேரம் பார்த்துச் சொல்லும்படி கேட்டான். சகாதேவனோ, துரியோதனன் தம் எதிரி என்று பாராது, நல்ல முகூர்த்தம், அமாவாசை தினத்தில் கொடுத்தார். துரியோதனனுக்குச் சோதிடம் பார்த்துக் கொண்டிருக்கையில் கிருஷ்ண பகவான் வந்தார். அவருக்குக் கோபம் வந்தது. “போரிலே பாண்டவர் வெல்வதற்காக நான் எவ்வளவோ முயற்சிகளைச் செய்கிறேன். பாண்டவரில் ஒருவனான சகாதேவனோ, எதிரி துரியோதனனுக்கு நல்ல வேளை பார்த்துச் சொல்கிறான்” என்று சொல்லிக் கொண்டுமாடிக்குப் போய் விட்டார். தருமர் வந்தார். கிருஷ்ணன் கோபித்துக் கொண்ட போனதையும், சகாதேவன் வெல்லும் தினத்தை துரியோதனனுக்குத் தெரிவுசெய்த கொடுத்ததையும் அறிந்தார். தருமர், சகாதேவனைக் கட்டி தழுவினார். “நீ தான் என் தம்பி, தருமம் எமது பக்கம், வெற்றியும் நமதே” என்று சொல்லி எதிரிக்கும் நல்லன செய்யும் தன் தம்பியின் நற்பண்பை எண்ணி ஆனந்தக் கண்ணிர் வடித்தார்.

Page 43
78
தகப்பனார் பெரும் புகையன். சுன்னாகச் சந்தைக்கப் போனால் புகையிலை வாங்கத் தவற மாட்டார்’ மலப்பை உணர்த்தும், அச்செழு உணர்த்து அல்லது தாவடி உணர்த்தும் பார்த்துவாங்குவார். ஒரு பிணையல் (50 இலை சேர்த்துக் கட்டிய முடிச்சு) சுருட்டுப் புகையிலையும், ஒரு பிணையல் வாய்க்குப் போடுகிற புகையிலையும் வாங்கி வருவார். எந்த நேரமும் வாய்க்குள் ஒரு துண்ட புகையிலை இருக்கும். தினசரி நாலு, ஐந்து சுருட்டாவது சுற்றிப்பத்துவார். மாரி காலமாய் இருந்தால் இரண்டு, மூன்று சுருட்டு மேலதிகமாகப் புகைக்கப்படும். ஆனால் நாம் புகைக்காமல் எங்களைக் காப்பாற்றிக் கொண்டார்.
இயற்கை வைத்தியம் பற்றியும், இலை, கறி உணவு பற்றியும் அடிக்கடி சொல்லுவார். மாரி காலத்தில் வீட்டைச் சுற்றி பலவிதமான பூண்டுகளும், மூலிகைச் செடிகளும் முளைத்திருக்கும். அவற்றைக் காட்டி இது குப்பைமேனி. வெட்டுக் காயத்திற்கு நல்லது. இது சீதேவியார் செங்கழுரீைர் மருத்து நீருக்குச் சேர்க்கலாம். இப்படி அறிமுகப் படுத்துவார். வீட்டைச் சுற்றி தூதுவளை, பிரண்டை, முல்லை, முசுட்டை, கொவ்வை ஆகிய செடி கொடிகளை வளர்ப்பார். இயற்கையாகவே கிடைக்கக் கூடிய இந்த இலை வகைகளைச் சாப்பிடும்படி எங்களைத் தூண்டுவார்.
கையான் தகரை, சுட்ட கடுக்காய், உப்பு, பாக்கு என்பவற்றைச் சேர்த்து இடித்த பற்பொடி பல்துலக்கத் தரப்படும். நோ என்றால் தூத்துமக் கொத்தன், தேங்காய்ப்பால், பச்சை அரிசி, முட்டை என்பன சேர்த்து ஒருவகை புக்கை செய்து கொடுப்பார். சிறிய நோவாய் இருந்தால் பிள்ளைக் கற்றாளை

79
ஒரு மடல் எடுத்து, இரண்டாகக் கீறி விரித்து மஞ்சள் மாப்போட்டு நல்லெண்ணையில் பொரித்துக் கட்டப்படும். நோ பறந்து விடும். இப்படிப் பல இயற்கை வைத்தியங்களும் நடைபெறும். இவற்றைப் பற்றி மிகவும் பொறுமையாக எங்களுக்குச் சொல்லுவார்.
தமிழ் வருடப்பிறப்பு அன்று அதிகாலையில் எழுந்து மருத்து நீர் வைத்து தோய்ந்தபின் அவருடைய ஒற்றைத்திருக்கல் வண்டியில் மாட்டைப் பூட்டி என்னையும் அழைத்துக் கொண்ட மருதடிக்குப் போவார். ‘விகட ராமன் குதிரை மாதம் போகும் காதவழி” என்ற மாதிரி போகும். வெயில் வந்தால்மாடு விழுந்து விடும். வாலை முறுக்கி மாட்டை எழுப்பினால், அது தொட்டவர் மேல் கழியும்.
ஒரு மாதிரிமருதடிப்பிள்ளையாரிடம் போய்விடுவோம். இது வருடா வருடம் நடக்கும் காட்சி. விநாயகப் பெருமான் தேரிலே வரும் திருக்கோலத்தைக் கண்டு களித்தபின் இருவருமாக அவரின் சிறிய தகப்பனார் வீட்டிற்குச் செல்வோம். அங்கே உணவருந்திய பின் மாலையில் வீட்டிற்கு வருவோம். திரும்பி வரும்போது மாத்திரம் மாடு படுக்காது.
மாடு, ஆடு வாங்குவதில் அப்பர் ஒரு விண்ணன், 10 ரூபாவுக்கு ஒரு எருது வாங்கினால் 2 வருடம் வளர்ந்தபின் 8 ரூபாவுக்கு விற்பார். அதற்கிடையில் வீட்டிலே உள்ள சவர்க்காரங்கள், பழைய உடுப்புக்கள் எல்லாவற்றையும் மாடு சாப்பிட்டு விடும். எங்களுடைய புத்தகங்களையும் சாப்பிட்டு
விடும். K-.. .
ஆட்டுக் கடாக் குட்டிகள் வாங்கி வருவார். ஆறு மாதம் அழகாக குழை -புல்லு போட்டு வளர்த்தும் வருடப்பிறப்புச்

Page 44
80
செலவுக்கு விற்கப்படும். ஏறக்குறைய வாங்கிய விலைக்குத்தான் விற்கப்படும். அதுவும் கடனுக்குத்தான் போகும். அவரின் ஆடு, மாட்டு வியாபாரம் இப்படித்தான்.
நல்லூர் தேர் திருவிழாவிற்கும், குதிரை வாகனத் திருவிழாவிற்கம் போகத் தவறமாட்டார். தேர்த் திருவிழாவிலே என்னைத் தூக்கித் தோளிலே வைத்து விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பார். குதிரை வாகனங்களின் அம்சங்களைப் பற்றியும் அமைப்பைப் பற்றியும் ரசிப்பார். எனக்கும் சொல்லுவார். சில சமயங்களில் தீர்த்தத் திருவிழாவிற்குப் போனால் அடுக்கடுக்காக அங்கே வரும் காவடி ஆட்டத்தைப் பற்றிச் சொல்லுவார்.
போகிற வழியில் அடியார்களுக்கு தாக சாந்தி செய்வதற்காக தண்ணிர்ப் பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். எலுமிச்சம் பழம், மோர், ஊறுகாய் என்பன கரைத்துக் கொடுப்பார்கள். நான் ஒவ்வொரு பந்தலிலும் ஒரு பேணியாவது வாங்கி அடித்துக் கொண்டு போவேன்.
போகும்போது தான் நடைபாதையாக கதிர்காமம் போன கதை சொல்லுவார். ஐந்து முறை நடந்து கதிர்காமம் போயிருக்கிறார்.
யாழ்பாணத்திலும், வடபகுதியின் ஏனைய பகுதியிலும் உள்ள அடியார்கள், வைகாசி விசாகத்தன்று முல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளை அம்மன் கோயிலில் கூடுவார்கள். விசாகத்திலன்று அங்கே பெரிய பொங்கல் விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். பொங்கல் விழா முடிந்ததும் கதிர்காமம் செல்லும் பக்தர்கள் ஒன்று சேருவார்கள். அவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் ஊடாக நடந்து

81
கதிர்காமம் செல்வார்கள். முள்ளியவளை, தண்ணிர் ஊற்று, வற்றாப்பளை ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு குமிழமுனை, வெலி ஒயா வழியாக புல் மோட்டைப் பகுதியைக் கடந்து திருகோணமலை, தம்பலகாமம், வாகரை, வாழைச்சேனை, மட்டக் களப்பு, கல்முனை, திருக் கோயில் வழியாக கதிர்காமம் செல்வார்கள்.
இவர்கள் செல்லும்பாதை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைந்த பகுதிகள் ஆகும். போகும்வழியிலே திருகோணமலை கோணேஸ்வரர் கோயில், தம்பலகாமம் சித்திர வேலாயுதசாமி கோயில், வாகரை கந்தசாமி கோயில், சித்தாண்டி கந்தசாமி கோயில். கொக்கட்டிச் சோலை தான் தோன்றி ஈஸ்வரன் கோயில், மண்டூர், கந்தசாமி கோயில், திருக்கோயில் கதிர் வேலாயுதசுவாமி கோயில், ஆகிய தலங்களைத் தரிசித்துச் செல்வார்கள். வழி நெடுகிலும் இந்த அடியார்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் இலவச உணவு, உடுப்பு, படுக்கை வசதி என்பன வழங்குவார்கள். பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்து வந்த யாத்திரை நிகழ்ச்சி இது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் ஏறக்குறைய 500 கிலோ மீற்றர் இருக்கும். இந்தத் தமிழ் அடியார்கள் செல்லுகிற பாதை முற்று முழுதாக தமிழர் பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தை தமிழ் மக்களிடமிருந்த அபகரிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் அனந்தம். வெலி ஓயாத் திட்டம். கந்தளாய் குடியேற்றம், கல்லோயாத் திட்டம் போன்றவை இம் முயற்சியே.
இவ்வாறு யாத்திரை செய்யும் அடியார்கள் சிலர் வழியிலே தவறி விடுவதும் உண்டு. காட்டிலே உள்ள விலங்குகளுக்கு இரையாவதும் உண்டு வழிமாறிசெல்வதும் உண்டு தான் வழி

Page 45
82
மாறிய சமயத்தில் முருகப்பெருமான் வந்து தன்னை வழிகாட்டி அழைத்துச் சென்றதாக தகப்பனார் கூறுவார்.
ஒவ்வொரு முறையும் கதிர்காமம் போய் வந்தபின் பூசை கொடுக்கப்படும். யாழ்ப்பாண மக்களின் மரபு வழி வந்த சம்பிரதாயங்களில் ஒன்றாகும்.
கதிர்காமம் உலக பிரசித்தி பெற்ற முருக தலங்களில் ஒன்று. இலங்கையின் தென்பகுதியில் உள்ளது. இலக்கியம் பேசுகின்ற முல்லையும், குறிஞ்சியும் மயங்கிய பிரதேசமாகும். தமிழ் பேசும் வேடுவர் வசித்த பிரதேசமாக இது இருந்தது. வேடுவர் குலத்திலே வள்ளி பிறந்ததாகவும், முருகப் பெருமான் சாதி வேறுபாடு பாராது விவாகம் செய்து கொண்டதாகவும் கதை.
கதிர்காமக் கோயிலிலே முருகன் தான் தெய்வம். ஆனால் பிரதான கோயிலில் கருப்பக் கிரகத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. முருகன் படம் போட்ட பெரிய திரை இருக்கும். “கப்புறாளை”என்று சொல்லப்படுகின்ற பூசகர்கள் கருமங்களைச் செய்வார்கள். வீதி வலம் வரும் நிகழ்ச்சியில் உள்ளுக்கு இருந்து ஒரு பெட்டி கொண்டு வந்து யானையின் மேல் ஏற்றப்படும். அந்தப் பெட்டிக்குள் வேல் இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்தப் பெட்டியுடன் தான் யானை வீதிவலம் வரும். அப்பொழுது வேட்டுவர் சம்பிரதாயப்படி சில நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பக்கத்தில் உள்ள தெய்வானை அம்மன் கோயிலில் வடமொழியில் மந்திரங்கள் சொல்லப்பட்டு பூசை நடைபெறும். வள்ளியம்மன் சந்நிதானத்தில் வேட்டுவமுறைப்படி நிகழ்ச்சிகள் நடைபெறும். முத்துக்குமார சுவாமி சந்நிதியும் உண்டு. இஸ்லாமிய பள்ளிவாசல் அமைக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்தில்

83
புத்த கோயில் இருக்கும் இடம் முன்னர் சூரன் கோட்டை என அழைக்கப்பட்டது.
இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு அங்கே அரசினர் தமிழ் பாடசாலை இருந்தது. சிவதொண்டன் செல்லத்துரை அவர்கள் தலைமையாசிரியராக இருந்தார். கோயிலுக்குப் பக்கத்தில் 10 ற்க்கும் மேற்பட்ட பெரிய மடங்கள் இருந்தன. இலங்கையின் பல்வேறு பகுதியிலும் இருந்து செல்லுகின்ற யாத்திரிகர்கள் அங்கி தங்கிச் செல்வர். இரவு பகல் என்ற வேறுபாடின்றி அன்னதானம் வழங்கப்படும். தாகசாந்தி செய்யப்படும். தமிழ்ப்பிரதேசங்களைச் சேர்ந்த சன்னியாசிகளும் பக்தர்களும் இந்த மடங்களை நடாத்தினார்கள்.
இராமகிருஷ்ண சபையார் பெரிய பணச் செலவில் மடம் ஒன்றை அமைத்து நல்ல முறையில் பேணி பாதுகாத்து 24 மணி நேரமும் ஆயிரக்கணக்காண மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். படுக்கை இருக்கை வசதிகளும் கொடுத்திருந்தார்கள். கதிர்காமத்தை புனித நகராக்குவது என்ற திட்டத்தில் அங்கள்ள மடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தமிழருடைய ஆதிக்கம் குறைக்கப்பட்டது. தமிழ் 'அரோகரா’ சிங்கள“அரோகரா’வாக மாறியது. தமிழ்மயில் தோகை காவடி கடாதாசி காவடியாக உருமாறியது.
கதிர்காமத்திற்குப் போகும் அடியார்கள். கதிர மலைக்கு ஏறவும், செல்லக் கதிர்காமம் செல்லவும், தவறுவதில்லை. செல்லக் கதிர்காமம் போய் அங்குள்ள முருகன் கோயில், பிள்ளையார் கோயில், வள்ளி கோயில் இவற்றை தரிசித்து பொங்கலும் பொங்கி வருவார்கள். தமிழர் பாணியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Page 46
84
அதிகாலையில் எழுந்து மாணிக்க கங்கையில் நீராடி விட்டு கதிரமலையில் ஏறுவோம். படிக்கட்டுகள் இல்லாத அந்தக் காலத்தில் வேர்களும், கற்களும் இடற மிகுந்த களைப்புடன் கதிரமலைக்கு ஏற வேண்டி இருக்கும். வழியிலே கோடாலிச் சாமியார் தண்ணிர் பந்தல் அமைத்து வைத்திருப்பார். தமிழ் சந்நியாசிகள் அவருக்கு உதவியாக இருப்பார்கள். அவர் இறந்த பின்பு செல்லையா சாமியார் அந்த தண்ணிர் பந்தலை நடாத்தினார். கதிரமலைக்கு ஏறிய பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்த பின்பு கொண்டு சென்ற அவலையும், சர்க்கரையையும், தேனையும் குழைத்து அடியார்களுக்கும் கொடுத்து சாப்பிடுவார்கள். இயற்கையின் அழகை கண்டு வியப்பார்கள். முருகப் பெருமான் எவ்வாறு இயற்கையோடு இணைந்து கலந்து காட்சியளிக்கிறார் என்பதையும், இயற்கையே முருகன் என்பதையும், இயற்கையின் இயல்பே அவன் திருவருள் என்பதையும் கதிரமலையில் ஏறியவர்கள் உணருவார்கள்.
இப்பொழுது கதிரமலைக்கு செல்ல வேண்டுமாய் இருந்தால், புத்த குருமாரின் ஆசியுடனும் உத்தரவுடனும் தான் செல்ல முடியும். கதிரமலைப் பிரதேசம் கை மாறியது. போல இலங்கையின் பல பகுதிகளிலும் பல தமிழ் பிரதேசங்கள் நிலை மாறியுள்ளன.
தந்தையின் நற்சிந்தனைகளும், சிந்தனையில் தோன்றிய சொற்களும், சொற்களுக்குரிய செயற்பாடுகளும், செயல்திறனை உருப்படியாக்கிய நம்பிக்கையும், நம்பிக்கையுடன் பின்னிப் பிணைந்த பிரார்த்தனையும் வீண் போகவில்லை. இவை எல்லாம் சேர்ந்து, தன் மக்களை சான்றோர் ஆக்க

85
வேண்டும் என்ற கருத்து உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களது கடமையை அவர் பூரணமாக நிறைவேற்றியுள்ளார். நமது வாழ்க்கையிலும் அவர்களுடைய முன் மாதிரியை பின்பற்றி ஒரளவு வெற்றி காண முடிந்தது.

Page 47

87
7. ஊரில் ஒருவனே Ba
நான் 10ஆம் வகுப்பில் சித்தியடைந்த காலத்தில் தான் என் நண்பர் இராசையாவும் சித்தியடைந்தார். அவர் சுன்னாகம் மயிலனி சைவ வித்தியாசாலையில் படித்தவர். என்னிலும் இரண்டு வயது மூத்தவர், அவரின் தந்தையார் வத்து காமத்தில் பெரும் வணிகர் ஆவார்.சிங்கள தமிழ் கருத்து வேறுபாட்டால் பெருந் தொகையான பொருள் பண்டங்களை இழந்து 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஊருக்கு திரும்பி விட்டார். அவரின் தாயார் கணவனையும் நண்பன் இராசையாவையும் ஊரிலே விட்டு விட்டு ஏனைய பிள்ளைகளைப் பார்க்க மலேசியா சென்றுவிட்டார்.
அவர் என்னுடைய ஒரே ஒரு நண்பன். எங்கள் வாழ்நாளில் நாம் கருத்து வேறுபட்டது கிடையாது. எனதும் எனது குடும்ப விடயங்களும் பெரும்பாலும் அவர் கைப்பட்டே ஆகும். அவரும் அவ்வாறே. நான் ஒன்றைச் சொல்லி விட்டால் அது அவருக்கு தேவவாக்கு, அவர் ஒன்றைச் சொன்னால் அது எனக்கு அமுத வாக்கு. யார் எதை முதல் சொல்லுகிறோமோ அது தான் தீர்மானமும் தீர்ப்பும் அதற்காக கொஞ்சம் எண்ணித் துணிவதும். சொல்லுவதும் வழக்கம்.
நட்பைப் பற்றி வள்ளுவர் சொன்ன 10 குறளும் எங்களுக்குப் பொருந்தும், அந்த குறள் பாக்களை படிப்பதற்கு முன்பே நாம் நண்பர்களாய் விட்டோம். அந்த நட்பு வளர்ந்து ஒரு பெரிய ஆலமரமாகவே இன்றும் நிழல் கொடுக்கிறது.

Page 48
88
நட்பு என்பது மனசுத்தத்துடனும் சுயநலம் இல்லாமலும் கள்ளம், கபடம் இல்லாமலும், உள்நோக்கம் எதுவும் இல்லாமலும் வளர வேண்டிய ஒன்று.
மிகவும் நேர்மையான பேர்வழி. கோபக்காரன் என்று சிலர் சொல்லுவார். உண்மையில் அவர் கோபக்காரன் இல்லை. அவருடைய தொனியும், துணிவும், முகபாவனையும் மற்றவர்களுக்கு அப்படியான ஒரு எண்ணத்தைக் கொடுக்கிறது.
“ஒருவர் பொறை இருவர் நட்பு” என்ற தத்துவத்தை நாம் இருவரும் 100 வீதம் மதித்து இருக்கிறோம்.
“உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கண் இடுக்கண் களைவதாம் நட்பு”
என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக என்றுமே நடந்து கொண்டோம்.
நான் விவாகம் செய்த போது எனக்குப் பெண் பார்க்க கூட வந்தவரும் அவரே. தோழியாக வந்தவளும் அவர் மனைவி பர்வத பத்தினியே.
என்னையும் அவரையும் இரட்டையர்கள் ஆக பேசுவாரும் உளர்.
அவருடைய சொந்த வாழ்க்கையில் சில சம்பவங்களை அவரைக் கேளாமலே நான் முடிவுசெய்து விடுவேன். அவர் ஒரு நாளாவது சினந்ததே கிடையாது. இதற்குள்ளே ஏதோ நியாயம் இருக்கிறது என்று எண்ணி நியாயம் கண்டு பிடித்து விடுவார். சமூக சேவை சம்பந்தமான விடயங்களில் நாம் இருவரும் ஒன்றாகச் செயல்படுவது வழக்கம் தனிப்பட்டவர்களுக்கு ஏதும்

89
உதவி செய்யும் போதும் என்னை வந்து அழைத்துச் சொல்வார். நானும் அவரை அழைத்துச் செல்வேன்.
நாங்கள் முனைந்த கருமங்கள் என்றும் வெற்றி பெறுவது இயற்கை, ஊரிலே, அயலிலே உள்ளவர்கள், இருவரும் சேர்ந்து கருமம் ஆற்றியவுடன் “ அது வெல்லும் கருமம்” என்று தீர்மானித்து விடுவார்கள்.
எமது கிராமத்தில் வடக்கையும், தெற்கையும் இணைக்க வீதி இல்லாமல் இருந்தது. அப்போது அவர்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக இருந்தார். யான் உபதலைவர். அந்த காலத்திலே தான், அவர்களுடைய EY2158 இலக்கமுடைய கார் ஒடி அந்த பணினயை நிறைவேற்றியது. பலரின் விவாகங்களை முன்னின்று நடாத்திய பேர்வழி. எனது கலியாணத்திற்கு தாலியும், கூறையும் வாங்கிக் கொடுத்தவரும் அவரே, இப்படி எனக்கல்ல. பலருக்கு துணிவுடன் உற்ற நேரத்தில் உதவுகின்ற பழக்கம் அவருடன் இருந்து வந்தது. துணிவும் கருணையும் ஒன்றையொன்று முந்திக் கொண்டு ஒடும்.
சிறு பராயத்தினிலும் வளர்ந்த பின்பும் வீட்டிற்கு சற்று தூரத்திலுள்ள வீதியோர கல்லில் இருந்து மணித் தியாலக்கணக்கில் பேசுவோம். பகிடி, வம்பு தும்பு கதைப்பது கிடையாது. ஏதாவது ஆய்வாக அல்லது மற்றவர்களுக்கு செய்யும் உதவியாக அல்லது சமூக சேவையாகத்தான் அந்த கதையும சிந்தனையும் இருக்கும்.
என்னுடைய 21 ஆம் வயதில் முதன் முதலாக தமிழ் நாட்டிற்கு போகின்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

Page 49
90
நண்பனின் தந்தையார் மலேசியாவிற்கு போகப் புறப்படும் போது, அவருக்கு கொஞ்சப் பணம் கொடுத்துவிட்டு போனார். நானும் தகப்பனாரிடம் சிறிய தொகை பணம் பெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.சுன்னாகத்தில் புகைவண்டி ஏறி தலைமன்னாரில் வந்து இறங்கி ஆளுக்கு ரூ 13 கொடுத்து சிதம்பரத்திற்கு 3 ஆம் வகுப்பு ரிக்கேற் எடுத்துக் கொண்டோம். கப்பலுக்கு ஒரு ரூபா சேதுக் கரைக்கு போய் இராமஸ்வரம் போனோம்.
அந்தக் காலத்தில் கடலுக்குள் வீசுகிற ஐந்து சதத்தை சுழியோடி உயிர் பிரிவதையும் கவனிக்காமல் எடுத்துக்கொண்டு வருவதற்கு ப ல இளைஞர்கள் ஆரவாரித்துக் கொண்டு இருப்பவர்கள். இது எங்களுக்குப் பயங்கரமான காட்சி.
இராமேஸ்வரம் பெரிய கோயில் அது முற்று முழுதாக பிராமணர்களின் ஆட்சியில் இருந்தது. ஒரு வழிகாட்டி எங்களைக் கொண்டு போய் ஒரு புரோகிதர் வீட்டில் விட்டார். அவர் எங்களைக் கூப்பிட்டு இங்கு தீர்த்தங்கள் 25 இதற்கு மேல் இருக்கிறது. இவற்றில் நீராடவேண்டும். ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் நீராட ஒவ்வொருவரும் 16 அணா வைத்து சங்கற்பம் செய்ய வேண்டும் என்று பிரசங்கம் வைத்தார்.
தீர்த்தத்தையும், அனாவையும் பெருக்கி பார்த்தால் எங்களுடைய பணம் இராமேஸ்வரத்திலே சரியாகி விடும் போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் நாங்கள் வெளியே வந்த போது 69(5 சிறு பையன் எங்களைப் பார்த்து “ சார் தீர்த்தம் ஆடப் போறிங்களா? நான் எல்லாத் தீர்த்தங்களையும் காட்டிவிடுகிறேன். 25 பைசா கொடுங்கே” என்று கேட்டான். புரோகிதரை விட்டு நழுவி வெளியிலே வந்து எல்லாத்தீர்த்தங்களிலும் நீராடி தரிசனம் செய்து கொண்டோம்.

91
பையனுக்கு 25 பைசாவும் கிடைத்தது. அந்தக காலத்தில் ராமேஸ்வரத்தில் முருங்கைக்காய் தொடக்கம் வாழைக்காய் வரையும் வற்றல் தான் கிடைக்கும்.
தொடர்ந்து மதுரை மீனாட்சி சுந்தரேசரை தரிசனம் செய்தோம். இராமேஸ்வரம் பெரிய கோயில் என்று ஏங்கிய நாங்கள் 12 கோபுரங்களைக் கொண்ட மதுரை மீனாட்சியைப்பார்த்து பிரமித்து விட்டோம். மதுரை பாண்டிநாட்டின் தலைநகரம். வைகையால் வளம் பெற்ற நாடு. செந்தமிழ்நாடு பிட்டுக்கு மண் சுமந்த கதை படிக்கிற காலத்தில் வைகை ஆற்றை பார்க்க வேண்டும் என்பது ஒரு விருப்பம். அதனைப் பார்த்ததும் நீராடியும் களித்தோம். மதுரை தூங்கா நகர், பல பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் சாமம், ஏமம் என்று இல்லாது வந்து போவார்கள். மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையையும் தெப்பக் குளத்தையும் பார்த்தோம்.
திரு முருகாற்றுப் படையைப் படித்தபொழுது, திருப்பரங்குன்றத்தையும், குளத்தையும், அரச மரத்தையும் பார்த்தால் என்ற எண்ணம் வந்தது. அதற்கும் திருப்பரங்குன்றத்தான் அருள் புரிந்தான். நாம் பார்த்த காலத்தில் இலச்சுமி தீர்த்தத்தையும் சுற்றி மதில் கட்டப் படவில்லை. முன் மண்டபங்களும் இல்லை. மதுரையை விட்டு சிதம்பரம் வந்தோம். சிதம்பர தரிசனம் அந்தக் காலத்தில் சைவ மக்களுடைய மிக புண்ணிய கருமமாக கருதப்பட்டது.
இறைவனை பஞ்ச கிருத்தியத்தின் கர்த்தாவாக்கி, அவரை. ஆடும் சிவன் ஆக்கி, நடேசப்பெருமான் ஆக்கி, வழிபடுகிற தலம் சிதம்பரம் ஆகும். அங்கு அன்று தொடக்கம் இன்று வரை தினமும் பள்ளியறையில் இருக்கும் சிவன் அதிகாலையில்

Page 50
92
திருக்கோயிலுக்கு எழுந்து அருளுவார். அப்போது எழுச்சி ஒதப்படும் .
அந்தணர்கள் சிதம்பர இரகசியத்தைக் காட்டுவார்கள். வானவெளியைக் காட்டி தெரியிதோ, தெரியிதே என்று கேட்பார்கள். நாமும் அப்போது தெரிந்தவர்கள் போல தெரியுது, என்று சொல்லிக் கொள்வோம்.
அண்மைக் காலத்தில் சிதம்பரம் சென்று இருந்தேன். திரும்பி வந்த போது ஆன்மிகம் கற்றுத் தெரிந்த அன்பர் ஒருவர் சிதம்பர ரகசியம் பார்த்தாயா? என்று கேட்டார் ஆம் என்றேன். என்ன பார்த்தாய்? வினாவிய பின் சிறிய விளக்கம் ஒன்றும் தந்தார். சித்தம் இறைவன் உறையும் இடம் சித்தமே பெருங்கோயில். அதே நேரத்தில் இறைவன் எங்கும் நிறைந்தவராகவும், எல்லாம் வல்லவராகவும், மாபெருங் கொடையாளியாகவும் காணப்படுகிறார். எங்கும் நிறைந்த இறைவனை பஞ்ச பூதங்களாகவும் காண்கின்றோம். சிதம்பரம பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தை அறிவுறுத்தும் புண்ணிய ஸ்தலமாகும். ஆனால் இறைவனின் பஞ்சகிருத்திய நடத்தை நமது புலன்களை வெளியே பரப்பாது உள் நோக்காக நெஞ்சுள்ளே செலுத்தியே அறிதல் வேண்டும். இதற்குமிகுந்த மெய்ஞ்ஞானம் வேண்டும். .
சிதம்பரத்தில் ஒரு நாள் குளத்திலே முழுகிக் கொண்டு இருந்தோம். எனக்கோ நீந்தத் தெரியாது. நண்பர் நீந்துவார். சற்று நேரத்தில் நான் சேற்றில் புதைந்து போனேன். நண்பர்கை கொட்டி சிரித்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு விடயம புரியவில்லை . 10-12 யார் தூரத்தில் அ. பொன்னுத்துரை நீந்திக்கொண்டு இருந்தார். அவர் நிலையைப் புரிந்து

93
கொண்டார். அவர் ஒரு நீச்சல் மன்னன். அசுர வேகத்தில் நீந்தி வந்து என்னை இழுத்துக்கொண்டு போய் வெளியிலே போட்டுகாலாலும், கையாலும் மிதிக்கிறார். அப்போதுதான் வாயில் நுரையும் சற்றும் அறிவும் வந்தது.
நண்பருக்கு நிலைமை தெரிந்தது. நானும் மரணத்தில் இருந்து தப்பிக்கொண்டேன்.
மரணம் என்பது இலகுவாக நடக்கக்கூடிய சம்பவம் அன்று. அதற்குரிய காலம் வர வேண்டும். “பருவத்தால் அன்றிப்பழா”
நான் பவமுறை மரணத்தின் வாயிலில் இருந்துவிடுபட்டு இருக்கிறேன். நக்கீரர் கதை, சத்தியவான் சாவித்திரி இப்படியான கதைகள் இந்த நேரத்தில் உண்மையாகப் புலப்படும்.
இயமதர்மராசா ஒரு விவாகத்தில் கலந்து கொள்வதற்காக பூலோகத்திற்கு வந்தார். மண்டபத்தில் அவர் நுழையும் போது கதவுக்குப் பக்கத்தில் ஒரு கண்டெலி பதுங்கிக் கொண்டு இருந்தது. அதனைக் கண்ட தர்மராசா ஒ! நீ இங்கேயா இருக்கிறாய் என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டார். திரும்பி வரும் வழியில் அந்த சுண்டெலியைப் பார்த்தார் காணவில்லை. பக்கத்திலே ஒரு பருந்து இருந்தது. அது அவரைப்பார்த்து இங்கே ஒரு சுண்டெலி இருந்தது. ஐயோ,பாவம் அதனுடைய நடுக்கத்தைப் பார்த்து அதற்கு உதவி செய்வதற்காக நான் அதை தூக்கி கொண்டுபோய் அந்தப்பெரிய மலை உச்சியிலே ஒரு பாறாங்கல் பொந்தினுள் பக்குவமாக ஒளித்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன் என்றது.
அப்படியா அந்த எலி இப்பொழுது 5 வினாடிகளுக்கு முன்பாக ஒரு பாறாங்கல் விழுந்து மரணமாக வேண்டும் என்பது நியதி. அது எப்படி இங்கே வந்திருக்கும். இங்கே எப்படி

Page 51
94
பாறாங்கல் விழப்போகிறது என்று யோசித்தேன். இப்போது எலி மோட்சம் போயிருக்கும் என்று சொல்லி முடித்தார். பருந்து வேகமாகப் போய் பார்த்தது. எலி மோட்சம் அடைந்துவிட்டது.
எலி பயந்ததும் பருந்து அதற்கு உதவியதும் அதன் மரணத்திற்கே ஏதுவாயிற்று. மரணம் என்பது இப்படித்தான் பிறந்தவர்கள் எல்லாரும் தவறாது செய்ய வேண்டிய நற்கருமம் ஒன்று உண்டு. அது உரிய நேரத்தில் வகுத்த முறைப்படி நடந்தே ஆகும். கதை அல்ல சொந்த அனுபவமும் இதுவே.
விடியற்காலை 5 மணிக்கு காவேரி ஆற்றில் குளிப்பதற்கு ஆண்கள், பெண்கள் எல்லாரும் சென்றார்கள். பிராமணப் பெண்கள் சற்று அதிகமாக இருக்கும்.அந்த நேரம் பார்த்து நாங்களும் ஆற்றுக்குப்போவோம். அப்பொழுது திரும்பி வருகிற பெண்கள் சூத்திரன் வாராண்டி என்று திட்டுவார்கள். அந்தக் காலத்தில்தான் தமிழ் நாட்டில் பெரியார். தலைமையில் திராவிடக் கழக இயக்கம் ஆரம்பமானது. ஒவ்வொரு பிள்ளையார் சிலையையும், திருமால் சிலையையும் தி.க. தொண்டர்கள் வீதி வீதியாகச் சென்று பொல்லுக்கொண்டு போய் அடித்து நொருக்குவார்கள். அந்தப் பெரியார்தான் வடவர் ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் வித்திட்டவராவர்.
20 நாட்கள் தென்னாட்டில் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, இந்த யாத்திரையைத் தொடர்ந்து இன்று வரை பலமுறை இந்தியப் பிரயாணம் மேற்கொள்ளப்பட்டது. எத்தனை நாட்கள் பிரயாணம் செய்தாலும் இந்தப் பென்னம் பெரிய இந்தியாவை பார்த்து முடிக்க இயலாது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பிரயாணம் செய்தாலே எத்தனையோ

95
புதிய அனுபவங்களைப் பெறமுடியும். 25க்கும் மேற்பட்ட நாடுகளும், பதினைந்து பெரும் பெரிய மொழிகளும், 500 க்கு மேற்பட்ட சிறிய மொழிகளும் கொண்டது; பாரதநாடு, விதம் விதமாதன வேறுபட்ட மக்கள் சட்டம், கடும் வெயில், கடும் குளிர் பாலைவனம் , பசும் புற்றரை மிக உயர்ந்த மலை, தாழ்ந்த பள்ளத்தாக்கு, ஆற்றிடைமேடு, அழகான பூஞ்சோலை, சந்தன மரக்கூட்டம் என்று ஒவ்வொரு அறையிலும் எதிரும் புதிருமாக ஆயிரககணக்கான அம்சங்களை உலகத்திலே இந்த நாட்டில் தான் காணலாம்.
இந்திய நாட்டைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டால் அது உலகத்தின் பல பகுதிகளைப் பார்ப்பதற்கு ஈடாகும். ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல தீதும், நன்றும் நிறைய உண்டு ஆனால் பாரதப்பண்பாடு என்ற ஒன்று முழு இந்தியாவையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறது. மிகச் சிறிய நாடுகளிலேயே ஒரு முகப்படுத்தப்பட்ட கலாசாரம் பேணிப்பாதுகாக்க முடியாமல் இருக்கிறது. பாரத நாட்டிலே பல ஆயிரம் வருஷங்களாக இந்தியப் பண்பாடு மக்களையும். பிரதேசங்களையும் பிணைத்து வைத்திருக்கிறது என்பது ஒரு மாபெரும் சிறப்பாகும்.
சிதம்பரம் புகையிரத நிலையத்தின் மறுபக்கம் அண்ணாமலை நகர் ஆகும். அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலைச் செட்டியாரால் தமிழ் உலகத்திற்கு கொடுக்கப்பட்ட பெரும் வித்தியாலயம் ஆகும்.
வித்தியாலயம், தொழில் ஆலயம், தேவ ஆலயம் என்ற மூன்று ஆலயங்களில் வித்தியாலயம் பணி தொடரவாய்பு பெற்றவர் பெரும் புண்ணியவான் ஆவார்தானங்களில் சிறந்த

Page 52
96
தானம் வித்தியாதானம் ஆகும். இங்கு நிறுவப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ்மொழி, தமிழிசை, நாடகம் ஆகிய பல துறைகளிலும் மாணவர்கள் பெரும் அறிஞர்களாக வளர உறுதுணையாக அமைத்தது. காலப் போக்கில் விஞ்ஞானம், வைத்தியம், தொழில் துறைக் கல்வி என்பவற்றிலும் இத்தாபனம் முன்னேறி இன்று பாரத நாட்டிலுள்ள பெரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
எனது, நண்பர் வித்துள்ரன் வேலன், இசைப்புலவர் ஆ. நமசிவாயம் போன்றவர்கள் அப்பொழுது அங்கு படித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு கலைக் கோயிலில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எண்ணி கொட்டாவி விட்டோம் அண்ணாமலை நகரில் ஒரு அணாக் கொடுத்து ஒரு ஆச்சாரியிடம் நல்ல சுவையான சோறு, கறி சாப்பிட்ட ஞாபகம் எனக்கு எப்போ தும் நினைவில் மலருகிறது.
இரண்டு சந்ததி காலமாகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற எமது நட்பும் ஆலமரத்தின் விழுதுகள் போல எங்கள் பிள்ளைகளால் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி இருவருக்குமே மிகவும் மகிழ்ச்சியானதாகும்.
ஒரு உண்மையான நண்பன் இரத்தத் துடிப்புள்ள உடன் பிறப்பாளனின், உயர்ந்தவன் ஆவான்.

97
8. பணம் சம்பாதிப்பது எப்படி?
“பணம் என்றால் பினமும் வாய் திறக்கும் “ என்பார்கள் இது உண்மைதான், பணம் பத்தும் செய்யும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் பணம் எல்லாவற்றையும் எப்பொழுதும் செய்து முடிக்கும் என்றும் சொல்ல முடியாது.
“அருள் உடையார்க்கே அவ்வுலகம்
போல பொருள் உடையார்க்கு
இவ்வுலகம் ஆகும்” இதனாலே எப்படியும் யாம் திரைகடலோடியும் திரவியம் தேட வேண்டியவர்களாக இருக்கின்றோம். உண்டு உடுத்து, உறங்கி, மகிழ்வதற்கு பணம் ஏதுவாக இருக்கின்றது.இதற்கு மேல் பிள்ளைகள், அதற்கு மேல் கொள்ளுப்பேரன்கள்இவர்களுக் கெல்லாம் சம்பாதித்து வைக்க வேண்டும் என்று முனைபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியாயினும் பணம் சம்பாதிக்க முயற்சி வேண்டும். அதற்கு அப்பால் அதிர்ஷ்டமும் வேண்டும்.
“ தம்பி எங்கேயாவது காசு கண்டு பிடியடா’ என்று பஞ்சத்தில் வாடிய பாரதியார் சொன்னார்.
இடைக்காலத்தில் வீட்டிலும் கொஞ்சம் தொய்வு ஒப்பந்தம் எடுத்து வெளியூரில் வேலை செய்யப்போன தந்தையார் நஷ்டப்பட்டு பொருள் பண்டங்களை இழந்து விட்டார். வயிற்றுச் சோற்றுக்கு வழி கண்டு பிடிக்க வேண்டிய அவசியமும்

Page 53
98
ஏற்பட்டது. அம்மா தோட்ட வேலைகளில் நல்ல பயிற்சி உள்ளவர். அப்பருக்கு அது கொஞ்சம் குறைவு.
இந்தக் காலத்தில் நாம் புதுத்தோட்டம் என்ற நிலத்தில் சிறிய அளவில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு இருந்தோம்.
சாஸ்திரியார் செல்வரத்தினம் பக்கத்துத் தோட்டக்காரன்.
பயிருக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக துலாமிதிக்கிற
கூலியாளுடன் என்னையும் அழைத்துக்கொண்டு அம்மா தோட்டம்போவா, நீர் பாய்ச்சுவ்தற்காக நான் தோட்டத்தின் தொங்கலுக்குப்போய்விடுவேன். அம்மாவும் கூலியாளுமாக பட்டையின் மூலைகளைச் செப்பனிட்டு பட்டையைத் துலாக் கொடியில் கட்டி துலாவிற்குக் கல்லுக்கட்டி நீர் இறைக்கப் பதினைந்து இருபது நிமிடம் எடுக்கும் தொங்கலுக்கு போனயான், வாய்க்காலில் படுத்து நித்திரையாகிவிடுவேன். வாய்க்காலில் தண்ணிர் வந்து நனைந்த பின்தான் திடுக்கிட்டு எழும்பிப் பயிருக்கு நீர் பாய்ச்சுவேன்.
தினை பயிரிடும் காலம் வந்தது. நிலத்தைச் செப்பனிட்டுத் தினையை விதைத்து வாய்க்கால் போட்டு பாத்தியாக்கி அதற்குள் மரவள்ளிக்கட்டையும் நாட்டி நீர் பாய்ச்சவேண்டும். உழுத நிலத்தில் தினை விதைத்தாயிற்று மிகுதி வேலைகளைச் செய்வதற்குப் பொருந்திக் கொண்டவர் வரவில்லை. மழையோ வரப்போகிறது. மழைவந்தால் மிகுதி வேலை செய்ய முடியாது. என்ன செய்வது என்று திண்டாடினோம். அம்மா சொன்னா"நீ ஆண் பிள்ளையல்லவா? இது மண் தானே, கயிற்றை எடுகட்டு, வாய்க்காலைப் போடு, துண்டம் போடு நான் காட்டித் தருகிறேன்” என்று உசார்படுத்தினா.மண் வெட்டியை எடுத்துப் பிடித்தேன்.

99
வாய்க்கால், துண்டம்,வரம்பு என்பன எல்லாம் போடப்பட்டது. அம்மா கையாலே செய்ய வேண்டிய திருத்தங்களைச் சரிப்பண்ணினா, வேலை முடிந்தது. அதற்குக் கொடுக்க வேண்டிய கூலி ரூபா 5,- அதுவும் எமக்கு மிகுதியாற்று. இது எனது முதல் உழைப்பு. 5 ரூபாவல்ல முக்கியம் 5 ரூபா சம்பாத்தியம் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற வினாவிற்கு விடையாக அமைந்தது.
தோட்டத்தில் உதவி செய்பவரின் மகன் கந்தையா எப்படி பணம் உழைக்கலாம் என்று இரண்டு பேரும் கதைப்போம். தொழில் துறை செய்யத் தெரியாது. வியாபாரம் மாதிரி செய்வது என்றால் முதல் வேண்டும் அத்துடன் நாங்கள் சிறிய பிள்ளைகள். எங்களை நம்பி, சிலர், சில கருமங்களைத் தரமாட்டார்கள்.
ஆச்சி ஒருவர் வேப்பமரம் ஒன்று பட்டுக் கொண்டு போகிறது, அதை விற்க வேண்டும் என்று கந்தையாவிடம் சொன்னா. அதை வாங்குவோம் என்று கந்தைகயா எனக்கு அறிவுறுத்தினார் நாம் இருவருமாக போய் ஆச்சியிடம் 28 ரூபா விலை பேசி அந்த மரத்தை வாங்கினோம். இருவருமாய் அதை வெட்டத் தொடங்கினோம். எங்களுடைய பரிதாபத்தைப் பார்த்துவிட்டு ஆச்சி இடைக்கிடை தேனீரும் வைத்துத் தருவா. வெட்டிய விறகுகளை 4 ரூபாவிற்கு விற்றோம். ஆளுக்க இரண்டு இரண்டு ரூபாவாக எடுத்துக் கொண்டோம். மரத்தை வெட்டி வீழ்த்தினால் அதிலே எவ்வித பழுதும் இல்லை. அதிர்ஷ்டம் என் பக்கம் 100 ரூபாவிற்கு விற்றோம். முதலைக் கொடுத்துவிட்டு மிகுதியைப்பகிர்ந்து கொண்டோம் இது இரண்டாவது சம்பாத்தியம் ஆகும் இந்த நிகழ்ச்சி எம்மை மேலும்

Page 54
100
தூண்டியது. இது தொடர்நிகழ்ச்சியாக, வருமானமாக மாறியது. பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி வேண்டும். பணம் சேருவதற்கு அதிர்ஷ்டமும் வேணும். முயற்சிதரக் கூடியது கூலியே அதிர்ஷ்டம் மேலதிக லாபத்தையும் தரும். "ஏற்றிய நறுணெய் வீசி இந்தனம் அடுக்கினாலும் காற்று வந்துறாத போதும் கடுங்கனல் கதுவல்லற்றோ” விறகை அடுக்கி எண்ணெய் ஊற்றி தீயை மூட்டினால் அது லேசாகப்புகைந்து கொண்டோ, எரிந்து கொண்டோ இருக்கும். காற்று வீசினால் மாத்திரம் பெரிதாகச் சுவாலைவிட்டு எரியும். அப்படித்தான் மனித வாழ்க்கையிலே அதிர்ஷ்டம் என்பது.
செட்டியார் ஒருவரிடம் ஒரு பையன் போய் உதவி கேட்டான். உனக்கு நல்ல உடம்பு இருக்கிறது. இந்த உலகத்திலே போதியளவு நிலம்இருக்கிறது. நீ இங்கே ஏன் வருகிறாய் என்று திட்டிய பின் பக்கத்திலே இறந்து போன எலியைக்காட்டி நீ வாழ்வதற்கு இந்த எலி போதாதா என்று மிரட்டினார். பையன் அந்த எலியை வாலிலே பிடித்துத் தூக்கிக்கொண்டு போனான், பூனைக்கு சாப்பாடு வாங்கப்போன ஒருவர் வழியிலே அவனைச் சந்தித்தார். அந்தப் பணத்தை அவர் அவனுக்கு கொடுத்துவிட்டு எலியை வாங்கினார். பையன் அந்தப் பணத்தை அடிப்படையாக வைத்துச் பெருக்கி தொழில் செய்து பெரும் வணிகனாகி விட்டான் ஒரு நாள் தன்னுடைய செல்வத்தின் ஊற்றுப்பற்றி யோசித்தபோது செட்டியாருக்கு நன்றிசொல்ல வேண்டும் போல இருந்தது. அவன் அந்த எலியைப் போல தங்கத்திலே ஒரு எலியைச் செய்து கொண்டு போய் செட்டியாருக்குப் பரிசாகக்

,101
கொடுத்தான். அவனைத் தழுவி அனைத்து அவனது முயற்சியைப் பாராட்டிய செட்டியார் தனது மகளையும் அவனுக்கு விவாகம் செய்து கொடுத்தார். இது ஒரு கதை.
சில ரூபாக்களை சேர்க்கும் மட்டுந்தான் சிரமம். ஒரு அளவு சேர்த்துவிட்டால் அது பெருகும். இதனைத்தான் “நூற்றுக்கு மேற்பட்டால் ஊற்று”என்பார்கள். ஒரு நூறு ரூபாய் சம்பாதித்து விட்டால் அது பல நூறு ரூபாவாக பெருகும். அது நம்மை அறியாமலே பல லட்சம் ரூபாவாகிவிடும்.
பணம் சேருவதற்கு இன்னும் ஒரு முக்கிய விடயம் கவனிக்கவேண்டும், அது உழைப்பிலே மாத்திரம் வருவாயில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. செலவிலே தான் தங்கியிருக்கிறது. ஆயிரம் ரூபாய் மாத வருமானம் பெறுபவர் 1200 ரூபாய் செய்து 200 ரூபாய் கடனாளியாகிறார். ரூ600,- சம்பளம் பெறுபவர் ரூ 400,செலவு செய்து ரூ200,- மிச்சம் பிடித்துக் கொள்கிறார் சில காலத்தில் குறைந்த வருமானம் பெற்றவர், பெரியபணக்காரனாகிவிடுகிறார். அதிகம் உழைத்து வருவாய்க்கு மேல் செலவு செய்தவர் ஏழையாகி விடுகிறார்.
“மானமழிந்து மதிகெட்டு போனதிசை
எத்திசைக்கு கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயானாய் ஆகிவிடுகிறார்.” இதனால்தான் ஊதாரித்தனம்இருக்கக்கூடாது என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
சமையல்காரனாக வாழ்க்கை ஆரம்பபித்தவர்கள் பெரும் கோடீஸ்வரனாக மாறியுள்ளார்கள், கப்பலிலே கூலி வேலை

Page 55
102
செய்தவர்கள் பெரிய கப்பல் கொம்பனிகளின் உரிமையாளர் ஆகியிருக்கிறார்கள். முயற்சி மெய் வருந்தக் கூலி தரும். கூலி எப்போதும் வயிறு வளர்க்க மாத்திரமே போதியதாக இருக்கும். மேலதிகமாக உழைத்தால்தான் சில காசுகளைச் சேர்க்கலாம். கோடிக்கணக்கான முதலீடு செய்து தொழில் தொடங்கிய பலர் ஆண்டியாகி - பிச்சைக் காரனாக மாறிய வரலாறுகளையும் நாம் அறிய முடிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும் பான கதையாகிறது.
ஒரு ஏழை வீதி வழியே நடந்து செல்கின்றான் . அவன் போகிற பொழுது இறை வன் ஒரு தங்கப்பொதியை வழியிலே போடுகிறார்.அந்தப்பொதி இருந்த இடத்திற்கு அண்மையில் போன ஏழை பொதிக்குக்கிட்டப் போகும் பொழுது எனக்குக் கண் தெரியாவிட்டால் நான் இப்படித் தானே போவேன் என்று தடியால் தட்டித் தட்டி போகிறான். பொதிக்குக் கிட்ட போனபோது கண்மூடி இருந்த படியால் அவன் தங்கப் பொதியைக் காணவில்லை. இவன் பொல்லும் பொதியைத் தட்டவில்லை .அப்பால் போய்க் கண்ணை விழித்துக் பார்க்கிறபோது, பின்னால் வந்த குதிரை வீரன் இறங்கித் தங்க நாணயங்கள் நிறைந்த பொதியை எடுத்துச் செல்கிறான்.
வருகிறபொழுது இடித்துக் கொண்டுவரும். கூரையைப் பிய்த்துக் கொண்டு வரும் என்பது இதனைத்தான்.
பணம்- செல்வம், செல்வம் செல்வோம். என்று சொல்லிக்கொண்டிருக்கும். நிலையாய் இருக்காது. எந்த நேரம் செல்லுமோ தெரியாது வருகிற வேகத்திலும் பார்க்க விரைவாகவும் போய்விடும். நல்ல வழியில் - தரும சிந்தனையுடன் சேர்ந்த செல்வமாயின் கொஞ்சம் தயங்கித்

103
தயங்கிப் போகும் அடாவடித் தனமாகச் சேர்த்த செல்வம் மிக விரைவாகக் கரைந்து விடும்.
செல்வம் கரைய முன்- நிலை குலைய முன் நல்ல கருமங்களைச் செய்யவேண்டும். நீண்டகாலம் பயன்தரக்கூடிய வங்கி ஒன்று உண்டு. அதில் சேமிப்பது மேலானது. பசிப்போரின்வயிறுதான் அந்த வங்கி
வங்கியில் இருப்பு செய்ய முன் சம்பாதிக்கும் பணத்தைத் தரும வழியில் சேர்க்கவேண்டும். தரும வழியில் வரும் செல்வம், மேலும் பல நன்மைகளைச் செய்யும்.
ஒரு மூதாட்டி நடுநிசியில் ஆபிரகாம் லிங்கனின் கடைக்கு தேயிலை வாங்கப் போனார்.நித்திரைத் தூக்கத்தில் 1.5 இறாத்தல் தேயிலை கொடுத்துவிட்டார்.
லிங்கள் விடிய எடுந்து பார்த்தபோது தராசில் 15 இறாத்தல் படி இருந்தது. காசுப் பெட்டியில் ஒரு இறாத்தலுக்குரிய காசு இருந்தது. மறுநாள் அந்த மூதாட்டியைத் தேடித்திரிந்த லிங்கன் மேலும் 1.5 இறாத்தல் கொடுத்துவிட்டார். இவர்தான் பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி. நேர்மையாகவும்,தரும சிந்தனையுடனும் சம்பாதிக்கும் பணம் செல்வத்தைச் சேர்த்துத் தருவதோடு கூடுதலான காலம் நிலைத்திருக்கச் செய்யும், அதற்கு அப்பால் அந்த உழைப்பாளியின் கெளரவத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தியும் வைக்கும்.
எவ்வாறாயினும் திருவினை ஆக்கித் தரக்கூடிய சக்தி முயற்சிக்கே உரியது. முயற்சி இல்லாதவன் சோம்பேறியாகி, சோற்றுக்கும் வழியில்லாமல் திரிய வேண்டியதே.உழைப்பாளி உயர்ந்து விடுகிறான் உழைப்பின் மகத்துவமும், யோக்கியமும் ஒருவனை உலகத்தில் பெரியவனாக்கி விடுகிறது.

Page 56
104
இன்னும் சில சம்பவங்களை மறந்து விடக்கூடாது நெல்லு மூட்டை வீட்டில் மலை போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இவனுக்கு “ சோறு உண்ணக்கூடாது.” என்பது டாக்டரின் கட்டளை. ஆட்டுப்பண்ணையில் நல்ல கடாக்கள் வளர்கின்றன. சிறு வயதில் மூளைப்பொரியல், ஈரல் பொரியல், பிரட்டல் , அவியல், கால்சூப்பு, தலைச்சூப்பு இப்படிச் சாப்பிட்டான். பணமும் வளர்ந்து " ஆட்டுக் கறியை முகர்ந்தும் பார்க்க கூடாது” என்பது டாக்டரின் கட்டளை.
இளம் பராயத்தில் வீட்டில் பஞ்சம். விரும்பிய மீனோ இறைச்சியோ, இனிப்புப் பண்டங்களோ கிடைப்ப தில்லை. வாங்கப் பணம் மலையாகிவிட்டது. அப்பாலும் நாற்பது வருஷம் வாழ்கிறான் நாற்பது வயதிலிருந்தே நோய். அவன் உழைத்த உழைப்பிலிருந்து விரும்பிய பண்டங்களை வாங்கி உண்ண முடியவில்லை.
இளம் பராயத்தில் உண்ண உணவு இல்லை. ஒரு நாளைக்காவது மாமிசம் வாங்கிச் சாப்பிடவேணுமென்ற ஆசை. பணம் இல்லை. வயதாகி விட்டது -எல்லாப்பிள்ளைகளும் நிறையப் பணம் அனுப்பு கிறார்கள். மாமிசத்தை வாங்கிச் சுவைத்து உண்ணப்பல் இல்லை .இப்படிப்பல . உழைத்தால் மட்டும் போதாது, கஞ்சத்தனம் பண்ணி பணத்தைச் சேர்த்து வைத்தால் போதாது.
நாளைக்கு என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது. அளவாக உழைத்து தானும் அளவாக உண்டு உடுத்து. பசிப்பவர்களுக்கு வழங்கி தானதருமங்களைச் செய்து சேமித்து வைத்துக்கொள்ளுதல் மிக அவசியமாகும் . சிலரின் மோசடி செய்த சம்பாத்தியம் அவரின் காலத்திலேயே அழிந்து விடுகிறது

105
ஓரளவு நிதானமாகவும், அறவழியிலும் ஈட்டிய பணம் இரண்டு மூன்று சந்ததி காலத்திற்கு ஆவது நிலைக்கும். எனவே பணச் சம்பாத்தியத்தில் மாத்திரம் கவனமாக இருந்தால் போதாது, செலவைக் குறைத்து மிச்சம்படுத்தினால் மாத்திரம்போதாது. அளவுக்கு மிஞ்சி உண்டு உடுத்தி ஆடம்பரமாக வாழ வேண்டுமென்றும் இல்லை நாம் உழைத்த பணத்தை நாமும் அனுபவித்து உற்றார் உறவினருக்கும் வழங்கிப் பசிப்பிணி போக்கி வாழப்பழகிக் கொள்ளல் வேண்டும்.
தேனீக்கள் அலைந்து திரிந்து புதுப்புதுப் பூக்களைக் கண்டு தெரிந்து தேனைத் தாமும் உண்டு களித்து ரீங்காரம்பாடி மீதித் தேனை சேமித்துச் வைக்கின்றன. தேவையான நேரத்தில் தாமும் உண்ணும். பிறர்க்கும் வழங்கும், பணத்தையும் அறவழியில் சம்பாதித்து அனுபவித்துச் சேமிக்கவும்.

Page 57

107
9.பனிப்போரும் பயிற்சிக் கல்லூரியும்
10 ஆம் வகுப்பு படிக்கிற காலத்திலேயே உலகப்போர் ஆரம்பித்து விட்டது. இலங்கை முழுவதும் ஒரே நடுக்கம், ஜேர்மனி, இத்தாலியப்பான் Tsiru Gor சேர்ந்து உலகத்தைக்கலக்கிக் கொண்டிருந்த காலம் கிழக்கும்மேற்கும் போர் மேகங்களின் பரவல், யப்பானிய விமானங்கள் திருகோணமலையிலும், கொழும்பிலும் குண்டு வீச்சு. மக்களின் பாதுகாப்பிற்காக ஹ.சு." என்ற அமைப்பு கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டது. குண்டு வீச்சு விமானங்கள் வரும் போது ஒரு வகைச் சங்குஊதப்படும். நாங்கள் ஒடிப்போய் று வடிவில் அமைக்கப்பட்ட அந்த கிடங்கிற்குள் பதுங்கி விடுவோம். நாட்டிலே பஞ்சமும், பசியும். ரேசனுக்கு அரைக்கொத்து அரிசி, இந்த நிலையில் எந்த நேரமும் வயிறு கடித்துக் கொண்டே இருக்கும். யாழ்ப்பாணமக்களுக்கு அந்தக் காலத்தில் பணம் பண்டமும், மரவள்ளிக் கிழங்கும் கைகொடுத்து உதவியது.
ஸ்ரான்லி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னை நீ, ஆ சே பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கத்தூண்டினார். வயது குறைந்த காரணத்தினால் பயிற்சிக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படவில்லை அந்த நேரத்தில் பலாலியில் பெரிய இராணுவத்தளம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்கிலத் தளபதிகளும் உலகத்தின் பல பாகத்திலும் இருந்து, கொண்டு வரப்பட்ட படை வீரர்களும் அங்கு முகாமிட்டிருந்தனர்.

Page 58
108
பலவிதமான தொழில்துறைகளுக்குத் தினமும் ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். போனால் ஒரு 2ளூபா 05 சதம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை எனக்கும் வந்தது. விடியப்போய் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். போனவர்களுடன் சேர்ந்து நானும் போனேன். முதலில் ஏதாவது லிகிதர்வேலை கிடைக்குமா? என்று பார்த்தேன். அங்கே என்னை விசாரித்தவர், ஆங்கிலத்தில் வினவிய வினாக்களுக்கு நான் ஆங்கிலத்தில் அளித்த பதில் அவருக்கு சிங்களம் போல் புரிந்தது. ஒடு என்று கலைத்து விட்டார். *
சற்றுத்தூரத்தில் அடுத்த வரிசை இருந்தது. அங்கே போனேன்.அங்கே போலிங்டன் என்ற தளபதி நேர்முகத் தேர்வு நடத்திக் கொண்டு இருந்தார். அவர் என்னுடைய கையை விரித்துப்பார்த்தார். உனது கை மிகவும் மிருதுவாக இருக்கிறதே ஒடிப்போ வீட்டிற்கு என்று சொல்லிபிடரியில் ஒருதட்டும் போட்டு விட்டார். அதையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.
மிகுந்த சோகத்துடன் வீடு வந்து சேர்ந்தேன். 2ளூபா 05 சதம் மகன் உழைக்கப்போகிறானே என மகிழ்ச்சி அடைந்த அம்மாவுக்கு ஒரே கவலை.நீ போக முன் எங்களைப் பிடித்த சனியன் முன்னுக்குப் போய்விட்டது. என்று அம்மா திட்டினா,
* இல்லை , இல்லை பலாலியில் குண்டு விழப்போகிறது போல பிள்ளைக்கு நல்ல காலம் என்று சொல்லி தகப்பனார் தேற்றினார்.”
எவர் ஒருவருக்கும் தீமை போல நன்ழை வரும். நன்மை போலத்தீமை வரலாம். சிறிய தடைகள் அல்லது சிறிய துன்பங்கள் பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தலாம். லாபம் என்று

109
நினைத்துச் செய்கின்ற கருமங்கள் நஷ்டம் லாபத்தை ஏற்படுத்தலாம் தடைகளோ தாமதங்ளோ உயிரையே காப்பாற்றலாம்.
கேகாலையில் பஸ் வண்டிக்காக காத்து நின்றேன். வேன் ஒன்று வேகமாக வந்தது. முன்னுக்கு ஒரு ஆசனம் காலியாக இருந்தது. வாகனம் வந்த வேகத்தில் அது எனக்குக்கிட்ட நிற்கவில்லை. ஒரு 20 யார் தூரத்திலே போய் நின்றது. அதிலே நின்ற சிங்கள ஆசிரியர் ஒருவர் அதில் ஏறி அமர்ந்து கொண்டார். ஒடிப்போன நான் அணிலை ஏறவிட்ட நாய் மாதிரி நின்று விட்டேன். பின்னால் பஸ் வண்டி ஒன்று வந்தது. அதில் ஏறி பிரயாணத்தைத் தொடர்ந்தேன். 10 கல்தொலைவில் அந்த வாள் புரண்டு முன் ஆசனத்தில்இருந்தவர்களின் தலை வேறு, உடம்பு வேறாகப் போயிருப்பதைக் கண்டேன். சாரதி பாவம் என் காலைடக் கட்டிப்பிடித்து அழுதார்.
வேன் ஏற்றாமல் வந்து விட்டதே என்று கவலைப்பட்ட யான் இறந்தவர்களுக்காக வருந்தினாலும், நான் தப்பி விட்டேனே என்று மகிழ்ந்தேன்.
அடியேனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள், தோல்விகள்,சிறுதுன்பங்கள் யாவும் முன்னேற்றமாகவும் நன்மையாகவும், லாபமாகவும் உயிர் காப்பாகவும் தான் முடிந்தது.
தடைகளைக் கண்டோ, மற்றவர்கள் கொடுக்கும்
துன்பத்தைக் கண்டோ, பிறர் செய்யும் தீமைகளைக் கொண்டோ அவசரப்பட்டு முடிவுக்கு வரக்கூடாது, எனது நண்பர் கிருஷ்ணராசா சொல்லுவார். ஆரம்பத்தைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. முடிவைக்கொண்டுதான் முடிவு செய்யலாம்.

Page 59
110
சில சோதனை ஊசிகள் போடுவது போல் மாபெரும் நன்மைகள் வரமுன்பு சிறிய தடைகள், பிரச்சனைகள் வரலாம். அவற்றைக் கண்டு கலக்கமடையத் தேவையில்லை. கொஞ்சம் பொறுத் திருந்து பார்க்கவேண்டும்.
இப்படியான பிரச்சனைகள், தடைகள், கலக்கம். பாதிப்பு எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை. முள்ளுச்செடியில் தான் றோசா மலர்கிறது. மலரைக் கொய்யும் போது முள்ளிடம் குத்து வாங்க வேண்டி வரும். தேன் எடுக்கும் போது தேனி கொட்டத்தான் செய்யும்.
பலன் இவ்வளவுதான் “ ஏழுமாடத்து நடு மாடத்தில் இருந்தாலும் எனக்குத் தலையில் ஒழுக்கு விழுவது பலன்” என்று அன்பர் குமரேசையா அடிக்கடி சொல்லுவார்.
10 ஆம் வகுப்புப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் பயிற்சிக் கல்லூரி படிப்பு முடியும் வரையும் ஒரு புதுயுகம், படிப்பு, பட்டினி, பயம், பயிற்சி என்பன ஒன்றோ டொன்று போட்டி போட்டுக் கொண்டு இருந்தன. எல்லாவற்றையும் பல்லைக்கடித்துக்கொண்டு சமாளிக்க வேண்டி இருந்தது. இந்தக் காலப்படிப்பும், பயிற்சியும், பயநீக்கமும், பட்டினிப் பழக்கமும் வாழ்க்கைக்குப் பலமான அத்திவாரமாக இருந்தது. எண்பதுகளில் விமானக்குண்டு வீச்சுக்கு ஓடிவங்கர் இடையே ஒளிப்பதற்கும் 45களிலேயே பயி ற்சி பெற்றுவிட்டோம். வித்தியாசம் ஒன்றுதான். விமானங்கள் குண்டு பொழியப்போகின்றன, பாதுகாப்புத்தேடி ஒடுங்கள் என்று அரசஅலுவலர் அமைப்புக்கள் அப்போ அறிவிக்கும். இப்போது அவர்களே குண்டு வீசுவார்கள்.
ஆசிரிய பயிற்சிக் கல்லூரி என்று சொல்லாமல் மனித

111
பயிற்சிக் கல்லூரி என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும்.ஒருமனிதன் தன்னைப்பூரண மனிதனாக்கிக் கொள்வதற்குப் பயிற்சிக் கல்லூரியில் இடம் பெறும் பயிற்சி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை என்றால் அது மிகையாகாது, சமாதானமும், சக வாழ்க்கையும், சுகமும், சுகாதாரமும், ஒழுங்கும், கட்டுப்பாடும் கொடுக்கக்கூடிய பயிற்சி ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவசியமாகும்.
ஐந்து மணிக்கு நித்திரை விட்டு எழுந்து படிப்பறைக்குச் செல்ல வேண்டும் ஆறு மணிக்குத் தேகாப்பியாசம். எட்டு மணிக்குள் குளிப்பும், உணவும். 8 மணிக்கு விரிவுரை பகல் விரிவுரை முடிய மாலை விளையாட்டு, தோட்ட வேலை, பிரார்த்தனை என ஒழுங்காகப் போகும். இப்படிக் காலையும் மாலையும், பகலும் இரவும் குறிக்கப்பட்ட நேரத்தில் குறிக்கப்பட்ட கருமங்கள் செய்தே ஆகவேண்டும். அத்துடன் தனது சொந்தக் கருமங்கள் யாவற்றையும் தானே செய்து பழகிக் கொள்ளவேண்டும். ஒரு ஆறுமாத காலம் இந்த ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். பின்னர் ஆழ்கடலில் செல்கின்ற கப்பல் போல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும். எந்தச் சோம் பேறியும் திருந்தித்தான் ஆகவேண்டும்.
சில சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பழகவும், சுயமாகக் கருமங்களைச் செய்யவும், கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும். சொந்தத் தகைமைகளை மட்டிடவும் விடுதி வாழ்க்கை மிகுந்த பயனுடையதாகும்.
வீட்டிலே அப்பர் இழுத்துக் கொண்டு போய் தூரத்தில் உள்ள எலுமிச்சை மரத்திற்குத் தண்ணிர் போகும்வரை குளிக்க

Page 60
112
வார்த்து விடுவார். அம்மா பின்புறமாக எண்ணையைக் கொண்டு வந்து தேய்த்து விடுவார். சிறிய தாயார் உடுப்புகளைத் தோய்த்து உலர்த்தி விடுவார்கள் தம்பிமார் பாயைச் சுற்றிப்படுக்கை விரிப்புகளை மடித்து வைப்பார்கள். பிற்காலத்தில் இப்படியான கருமங்களை எல்லாம் பாரியார் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்தக் பழக்க வழக்கத்துடன் சில காலம் பொதி சுமந்த கழுதை போல மிகவும் நெளிந்தேன். காலப்போக்கில் எல்லாம் சரிவந்தது.
“தாரமும் குருவும் தலைவிதி” நல்ல மனைவி கிடைத்த அன்றே அவன் வாழ்க்கை தழைக்க
ஆரம்பித்துவிடும். தக்ககுரு கிடைத்தால் வாழ்வு செழிக்க ஆரம்பித்துவிடும்.
அதிபர் சண்முகரத்தினம் ஒரு தராசு. அனைத்து செயல்களுமே நீதியாகவும், நியாயமாகவும் தர்மம் தப்பாமலும் நடந்து கொள்ளும் ஒரு தருமர். பொய் சொல்லுபவனும், களவு எடுப்பவனும் அவருடைய நேர்மைக்கும், யோக்கியத்திற்கும் மிகுந்த பயபக்தி, அதனாலே அவருக்கு கிட்டப் போக முன்பே நடுக்கம் தொடங்கி விடும். அவர் கண்டு பிடித்துவிடுவார். அதனால் பிழை செய்த யாரும் அவர் முன்னிலையில் போக அஞ்சுவார்கள். அவர் அளவியல் படிப்பிக்கவந்தால் சொல்லாராய்ச்சியில் தொடங்கி உலக ஆராய்ச்சியில் முடியும். இசை ஞானம் மிகுந்தவர், ஆனால் குரல் வளம் இல்லாதவர். "கதிரவேலு, ஆண்டவன் எங்களை கழுதையாய் படைக்காமல் மனிதனாய்ப் படைத்ததே போதும் . அடுத்த பிறப்பிலே நல்ல குரல்வளம் தரும் படி பிரார்த்திப்போம் " என்பார்.

113
பண்டிதர் பொன்-கிருஷ்ணபிள்ளை எனது தமிழ் ஆசான். அவர் பெரும் இலக்கிய ரசிகன். இலக்கிய ரசனையை எனக்கு அள்ளி வழங்கியவர். அவர் என் மீது மிகுந்த அன்பு உடையவர். எனக்குப் பேச்சு வராது. கொன்னை என்பதை விரைவிலே கண்டு பிடித்துவிட்டார். அதனாலே எனக்கு ஒரு பட்டமும் சூட்டிவிட்டார்,
“டேகொ”என்றுதான் அழைப்பார். சில சமயங்களில் வந்து முதுகில் சுரண்டி விட்டுப்போய் விடுவார். அவரைத் தொடர்ந்து போனால் பலவிதமான கறிகளும் சோறும் போட்டுக் குழைத்து உருட்டித் திரட்டித்தருவார் பூம்பந்து போல் இருக்கும்.
வி. கந்தப்பு சகலகலா வல்லுனன். படிப்பித்தல் முறையைப் பற்றி சொல்வதில் மகா சமர்த்தன். சொற்கள் ஆற்று நீர் போல அழகாக அணி அணியாக போய்க் கொண்டு இருக்கும். வாழ்க்கை நுட்பங்களை எல்லாம் கதையோடு கதையாகப் படிப்பித்தலாடு படிப்பித்தலாகச் சொல்லிவிடுவார்.
கனகலிங்கத்திடம் கணிதமும், முத்துவேள் பிள்ளையிடம் விஞ்ஞானமும் கேட்டோம். கனகசபை வரலாறு, புவியியல் சொல்லித்தருவார்.
பயிற்சிக் கல்லூரிக்காலம் நாட்டில் பெரும் பஞ்சகாலம்.இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடையும் நேரம், எங்களுக்கு பேய்ப்பசி பசிக்கும். எத்தனை முறை என்னத்தைப் போட்டாலும் எல்லாம் வயிற்று நெருப்பில் எரிந்து கணப்பொழுதில் சாம்பலாகிவிடும்.
“மானங் குலம் கல்வி வன்மை அறிவுடைமை.
பத்தும்பசி வந்திடப் பறந்துபோகும்”

Page 61
114
என்ற பாட்டையும் அடிக்கடி சொல்லிக் கொள்வோம்.
விடுதியில் காலையில் ஒரு ரூபாய்க் குத்தியளவு 3 பிட்டுக்கட்டியும், பன்னாடை போல இரண்டு ரூபாய்க்குத்தி அளவில் இடியாப்பமும் கிடைக்கும். இது எந்த மூலைக்கு? மத்தியானம் ஒரு அளவு சோறும் மிகுதிக்கு மரவள்ளிக் கிழங்கும் கிடைக்கும். உண்மையில் இவ்வளவும் கிடைப்பதே பெருங்காரியம்.ஆனால் யானைப் பசிக்கு அரிசிப் பொரி போட்டு ஆகுமா. எனக்கு மாலை 5-5.5 மணி அளவில் எனது சிறிய தாயார் அல்லது சிவப்பிரகாசம் சோற்றுப் பார்சல் கொண்டு வருவார்கள் . நானும் பொன்னம்பலமுமாய் விஞ்ஞான கூட விறாந்தையில் வைத்துச் சாப்பிடுவோம். காலையில் பொன்னர் நித்திரையால் எழும்பிவேலியால் பாய்ந்து வெளிச்சந்திக்குப் போய் எனக்கும் ஐந்து தோசை வாங்கி வருவார்.
எதைச்சாப்பிட்டாலும் எந்த நேரமும் பசிக்கும் காரணம் ஒன்று வயதுக் கோளாறும், பருவமும், மற்றது இல்லை என்ற எண்ணம் ப சியைத்துாண்டும். அடுத்தது உண்மையாகவே விடுதியில் கொடுக்கிற சாப்பாடு எங்களுக்குப் போதாது. பயிற்சிக் காலத்தில் நாம் ப டித்த உளவியல் மிகவும்சுவையானது.நமது உள்ளத்தைப் பற்றியும், மற்றவர்களின் உள்ளத்தைப் பற்றியும் அறியவேண்டியதுதான் மனித ஊக்கங்களைப் பற்றியும், தூண்டுதலைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டியது. ஒருவனுடைய ஆளுமை எப்படியானது. என்ன செய்யும் என்பது படித்து அறிய வேண்டியது. இந்தப் பாடம் ஒரு மாணவன் உலக சமுதாயத்தில் பூரண மனிதனாக வாழ உதவியது.

115
பயிற்சிக் கல்லூரிக் காலத்தில் யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள ஏறக்குறைய எல்லாக் கிராமங்களுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாத் தீவுகளுக்கும் சென்றேன்.
பிற்காலத்திலும் இப்படியான வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது. யாழ்ப்பாணக் குடாநாடு அண்ணளாவாக 500 சதுர மைல்இருக்கும். தென்மேற்குப் பக்கத்தில் சில தீவுகளும் உண்டு சிறிய பிரதேசமாகஇருந்தாலும் அதற்குள்ளும் வேறுபாடுகளும் உண்டு. பொதுப் பண்புகளும் நிறைய உண்டு. எல்லாக் கிராமங்களிலும் வீட்டைச் சுற்றி வேலி போடப் பட்டிருக்கும்.
பச்சை மரங்கள் தளிர்த்திருக்கும். மட்டக்களப்புப் பகுதியில் பொரும்பாலும் பட்ட மரங்களினாலே வேலி அமைக்கப்படும். யாழ்ப்பாணக்குடாநாட்டில் மரத்திற்கு மேலே தென்னோலையில் பிணைக்கப்பட்ட கிடுகு அல்லது பனையோலை அல்லது அலம்பல் வைத்து அடைத்து இருப்பார்கள். அதிகமான வளவுகளில் கிணறு இருக்கும் சுண்ணாம்புக்கல் பாறைகளின் கீழ் அமைந்த கிணற்று அடிநீர் குடாநாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் முதுமொழியை முன்னமே அறிந்திருக் கிறார்கள் போலும் . கோயில் இல்லா ஊர் கிடையாது, ‘ ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்” என்ற பழமொழி யாழ்ப்பாண விடயத்தில் பொய்த்து விட்டது.
குடா நாட்டை வடமராட்சி, தென் மராட்சி, பச்சிலைப் பள்ளி வலிகாமம் வடக்கு, கிழக்கு, மேற்கு, தீவுப்பகுதி இப்படிப்பிரித்து நோக்குவதுண்டு.
வடமராட்சிப் பகுதியில் கிணறுகள் ஆழம், பயிருக்கு நீர் பாய்ச்சுவது மிகுந்த சிரமம். பட்டை துலாவில் இறைக்கிற

Page 62
116
காலத்தில் மூன்று பேர் துலா மிதிக்க வேண்டும். ஒருவர் இறைக்க வேண்டும் இன்னொருவர் நீர் பாய்ச்சவேண்டும். மொத்தம் ஐவர் தேவைப்படுவர். இதனால் பயிர் செய்யும் நிலத்தின் அளவு குறைவு மக்கள் கொஞ்சம் கட்டுமட்டாக வாழ்க்கையை நடாத்திக் கொள்வார்கள், போதிய மூளைப்பலம் உள்ளவர்கள் அரசாங்கத் துறை உத்தியோகங்களையும் , ஆசிரியத் தொழிலையும் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகப் பிடித்துக் கொண்டார்கள்.
பருத்தித் துறை, வல்வெட்டித்துறை இரண்டும் இந்தப்பிரதேசத்திலுள்ள சிறிய துறைமுகங்களாகும். கரையோர மக்கள் இரு மணித்தியாலங்களில் அயல் நாடாகிய இந்தியாவுக்குச் சென்று வந்து விடுவார்கள். வல்வெட்டித்துறை மக்கள் பல நூறு வருடங்களுக்கு முன்பே சிறந்த மாலுமிகள் ஆவர்.
தென் மராட்சிப் பச்சிலைப் பள்ளியில் போதியளவு நிலமுண்டு. மணல் பிரதேசம் அதிகம். வயல்களும் உண்டு. கிணற்று நீர் மேலாக உள்ளது. பனை, தென்னை, மா, பலா போன்ற மரங்களும் அதிகம் நிலத்தின் இயல்புக்குத் தக்கதாக வாழ்க்கை முறையிலும் சிறிய மாற்றம்.
வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி பெரும்பாலும் கொழுத்த செம்மண் பிரதேசம், தோட்டப் பயிருக்கு மிகவும் வாய்ப்பானது, மா, பலா, வாழை போன்ற முக்கனிகளும் மிகவும் சுவையானவை. கிணற்றடி நீரும்12-15 அடி ஆழத்தில் கிடைக்கும். இதனால் தோட்டப்பயிர்ச் செய்கை இலகுவாக நடைபெறும்.
வலிகாமம் மேற்குப் பகுதி நிறைய வயல் வெளிப்பிரதேசம். நிலம் ஈரலிப்பான இருவாட்டி மண்ணாகும் வயல்கள் கொஞ்சம்

117
பள்ள நிலம். மழைநீர் தேங்கி நிற்கக்கூடியது. ஒரு அளவு மழை பெய்தாலே அங்குள்ள வயல்கள் விளைந்துவிடும், மக்களும் மென்மையான போக்கு உடையவர்கள்.
தீவுப்பகுதியில் ஏழு தீவுகள் உண்டு. காரை தீவு மண்டை தீவு, லயிடன் தீவு, புங்குடு தீவு, அனலை தீவு, நயினாதீவு, நெடுந்தீவு என்பன இவை,
நெடுந்தீவுக்கு அப்பால் உள்ளதுதான் கச்சத்தீவு அங்கு குடிகள் இல்லை. தீவுப் பகுதிகளை கடல் சூழ்ந்திருக்கிற காரணத்தினால் கடல் படுதிரவியம். அங்கு முக்கியமான பொருளாகும். குறைந்த அளவு பயிர்ச் செய்கையும் உண்டு. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு இந்த நாலு தீவுகளையும் விட ஏனையன குடாநாட்டோடு பாலத்தால் இணைக்கப் பட்டு உள்ளன. தீவுப்பகுதி மக்களுக்கு பிரயாணக் கஷ்டம். பலர் இலங்கையின் பல பகுதிகளிலும் தகுந்த வியாபாரிகளாகத் தொழில் செய்கிறார்கள். வெளியூர்ச் செல்வம்தான் அவர்களை வாழ வைக்கிறது என்று சொன்னால் தப்பில்லை.
செந்தமிழ் மொழியும், சைவசமயமும் யாழ்ப்பாணமக்களின் இரண்டு கண்களாகும். எங்கே போனாலும் எந்தக் காலத்திலும் இவற்றைக் காப்பாற்ற முயல்வது மரபாகும். இன்றும் பிறமொழிக் கலப்புக் குறைந்த தமிழ் பேசுபவர்களும், எழுதுபவர்களும் இலங்கைத் தமிழ்ர்களே, சைவசமய அனுட்டானங்களை முறையாக அனுசரித்துக் கொள் வார்கள். கோயில் அமைப்புகளும், ஆசாரங்களும் தென்னாட்டுக் கேரளாவை ஒத்தாக இருக்கும். 50 வருடங்களுக்கு முன்பு ஒற்றைத் திருக்கல் வண்டிலும் இரட்டை மாட்டு வண்டிலும் யாழ்ப்பாணத்தின்

Page 63
118
பிரதான வாகனங்களாகும். விவாகச் சடங்குகள் போன்ற பெரு நிகழ்ச்சிகளில் இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட குதிரை வண்டி பயன்படுத்தப்படும். சிலர் குதிரை வண்டிப் பிரயாணமும், வக்கிக்கரத்தைப் பிரயாணமும் செய்வர். எனது சின்ன அம்மாள் இரண்டு வெள்ளைக்குதிரை பூட்டிய வண்டியில் திருமணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வந்ததை என் குழந்தைப் பருவத்தில் பார்த்தேன் . இப்போது லொறிகள் செய்யும் வேலையை வடக்கன் மாடு பூட்டப்பட்ட வண்டிகள் செய்யும். கிறிஸ்தவ மிசனரிமார் செய்த உபகாரத்தால் குடாநாடு கல்வியில் மேம்படும் வாய்ப்பைப் பெற்றது.
மிசனரிமாரினால் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆங்கிலப்பாடசாலைகள் யாழ்ப்பாண மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தது.இதனால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏராளமான யாழ்ப்பாணத்தவர் இலங்கையின் பல பாகங்களிலும் பெரிய, சிறிய அரசாங்க உத்தியோகங்களில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தபோது 75 வீதமான அரசு உத்தியோகங்கள் தமிழர் கையில் இருந்தன. அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளில் 90 வீதம் ஆசிரியர்களாகத் தமிழர்களே இருந்தார்கள்.
இந்தச் சம்பவம் சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஒரு வாய்ப்பாக முடிந்தது. எல்லாத்துறைகளிலும் தமிழர்கள் முன்னே நிற்பதை அவர்களால் பொறுக்க முடியவில்லை ஆட்சி அமைப்பதில் வெற்றி பெறுவதற்கு தமிழ்ர்களை மட்டம் தட்டுவதை ஒரு காரணியாகக் கொண்டார்கள். அரசாங்க உத்தி யோகங்கள், அரச செல்வாக்கு, தமிழர்களின் தலைமைத்துவம் என்பனவற்றையும் இல்லாமல் செய்ய வேண்டும் என

119
விரும்பினார்கள். இதற்காகத் தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியைக் கட்டுப்படுத்தினார்கள். மட்டுப்படுதினார்கள். தரப்படுத்தினார்கள். தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உயர் பதவி வழங்குதலைக் குறைத்தார்கள் பெரும் பான்மை மக்களுடன் சரிசமமாகத் தமிழ்மக்கள் அனுபவித்து வந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் சிங்களவரும், தமிழர்களும் ஆங்கிலேயருக்கு அடிமைகளே. எவன் கெட்டிக் காரனாகவும், பணிவாகவும் கடமை செய்கிறானோ அவனை ஆங்கில எஜமான் உயர் பதவிகளுக்கு உயர்த்தினான். அரச ஊழியன் சமுதாய வேறுபாடு இன்றி எல்லாராலும் மதிக்கவும் பட்டான். அதிகாரம், செல்வாக்கு, பணம், படிப்பு, பண்பாடு என்பன எங்கு இருந்தாலும் அது மதிக்கப்படுவது வழக்கம்.
கெட்டித்தனமும், விவேகமும் உள்ள பல தமிழ் அரசாங்க உத்தியோகத்தர் இலங்கையின் பல பாகங்களிலும் மக்களிடம் நன் மதிப்பையும் பெற்றிருந்தார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு தமிழ் மக்கள் உயர்ந்த பதவிகளிலும் அந்தஸ்துகளிலும் இருப்பதைப் பொறுக்க முடியாத அரசியல்வாதிகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களை மட்டந்தட்டுவதில் ஒன்றுபட்டார்கள். அன்று தொடக்கம் இன்று வரை அவர்கள் தமிழர்களை மட்டந்தட்டுவதில் மிகவும் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.
சேர்பொன் இராமநாதன் அவர்கள் சிங்கள, முஸ்லீம்
கலவரத்தின் போது சிங்கள மக்களுக்கு உதவுவதற்காக லண்டன் போய் வந்த நேரத்தில் அவரைக் குதிரை வண்டியில்

Page 64
120
இருத்திச் சிங்களத் தலைவர்களே கையால் இழுத்துச் சென்றார்கள் அந்த நிலைமை மாறிக் காலப்போக்கில் தமிழர் என்றால் கணிப்புக் குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.
சூதுவாது அற்ற, பண்பான பெரும் பான்மை இன மக்கள் அரசியல் வாதிகளினால் பிழையாக வழி நடத்தப்பட்டார்கள். இப்படியான கருத்துப் புரட்சிக்குத் தமிழ் மக்கள் அரசாங்கத் துறையில் வகித்த உத்தியோகம் தான் காரணம்.
இந்தக் காழ்ப்புணர்ச்சி இலங்கையின் அரசியல் வரலாற்றைமாற்றி ஒரு அமைதியற்ற சூழ் நிலைக்கம் வித்திட்டுவிட்டது. எந்தக் கல்வி தமிழ் மக்களை மேம்படுத்தியதோ அதே கல்வியால் ஏற்பட்ட வளர்ச்சி பிற்காலத்தில் அவர்களின் சந்ததியருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்குக் காரணமாகும், “எந்த ஒரு சாம்ராச்சியத்தின் வளர்ச்சியுடனும் அதனுடைய வீழ்ச்சியும் சேர்ந்து வளருகிறது”என்பது ஒரு வரலாற்று நியதி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவ மிசனரிமார்களின் கல்வியினால் ஏற்பட்ட தமிழர்களின் வளர்ச்சியுடன் தமிழர்களின் வீழ்ச்சிக்கான காரணியும் சேர்ந்து வளர்நதுள்ளது என்றும் சொல்லலாம்.
சிங்கள அரசியல்வாதிகள். தமிழர்களின் உரிமைகளை மறுப்பதில் எப்பொழுதுமே ஒருமைப் பாடு உடையவர்கள். ஆனால் தமிழ் அரசியல் வாதிகளோ தமிழரின் உரிமைகளைப் பெறுவதில் என்றுமே ஒரே குரலில் குரல் எழுப்பியது கிடையாது. சுதந்திரம் அடைய முன்பும் தமிழ்ப்பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் ஒரே குரலில் ஒற்றுமையாகப் பேசியது கிடையாது. சேர் பொன் இராமநாதன் தானே சிங்கள

121
மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எஜமான் என்றே நினைத்து விட்டார். அந்தத் தலைமைத்துவம் தமிழர் சமுதாயத்திற்கு நிரந்தரமாக இருக்கும் என்றும் நினைத்துவிட்டார். தமிழர் என்ற பெயரில் முதன் முதலில் அரசியல் போர்க்கொடி உயர்த்திய சேர் பொன் அருணாசலத்தின் கருத்து எடுபடவில்லை .இப்படித் தொடர்ந்து தமிழ் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கருத்து வேறுபாடு உடையவர்களாக இருந்தார்களேயன்றி, ஒருமித்து எக்கருமமும் செய்தது கிடையாது. -
1815ஆம் அண்டு இலங்கை முழுவதும் பிரித்தானியரின் ஆட்சியில் வந்தது. இதன் பின்பு சிறுபான்மையினரின் பிரச்சனைகளை விசாரணை செய்வதற்காக கோல்புரூக் கொமிசன், டொனமுர் கொமிசன், சோல்பரிக் கொமிசன் இப்படியான எத்தனையோ விசாரணைச் சபைகள் அமைக்கப் பட்டன. ஒரு சபைக்காவது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏகோபித்துக் கருத்துப் பரிமாறியது கிடையாது. பச்சையாகச் சொன்னால் அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையையும் கொழும்பு நகர வாழ்க் கையையுமே எதிர்பார்த்தார்கள்.
சுதந்திரத்தின் பின்பு பண்டா- செல்வா, டட்லி- செல்வா ஒப்பந்தம் என்பவற்றைக்கூட சுய நலத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை செல்வநாயம். மாத்திரமே ஓர் அளவு அர்சியலை ஏற்படுத்த முயன்றார். தமிழரின் ஒற்றுமைக்குறைவும், சிங்கள அரசியல் வாதிகளின் அடக்குமுறையும் அதனையும் கெடுத்தது.
சட்டசபைக் காலத்திலேயே கருத்து வேறுபட்ட தமிழ் பிரதிநிதிகள் நாடு சுதந்திரம் அடைந்த போதாவது ஒன்றுபட்டு

Page 65
122
தமிழர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்கவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக அவர்கள் தங்களுக்குள் நடந்து கொண்டார்கள். யார் பெரியவர்? யார் கெட்டிக்காரன்? யாரால் நடந்தது? என்ற வாதம்தான் அவர்களிடம் இருந்தது.
நல்லுணர்வும், ஒற்றுமையும் தமிழ்ப்பிரதிநிதிகளிடம் இருந்து இருந்தால் இவ்வளவு படிப்பும், அரசாங்கச் செல்வாக்கும் உள்ள தமிழ் சாதி இந்த இழிவுநிலைக்குத் தள்ளப்படவேண்டியதில்லை. மலையக மக்களின் பிரஜா உரிமையை நிறுத்தித் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் கொண்டு வந்த சட்டத்தை, தமிழ்ப் பிரதிநிதிகள் ஏகோபித்து எதிர்க்கவில்லை. தமிழர்களின் வாக்குப் பலத்தை குறைப்பதற்கு அரசு எடுத்த முதல் பெரிய அடி இதுவாகும். இதனைக் கடுமையாக ஏகோபித்து எதிர்க்காதது இலங்கைத் தமிழ் மக்கள் செய்த பாரதூரமான தவறுகளில் ஒன்றாகும்.
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்த காலத்திலும், அதற்கு முன்பும் இலங்கையின் வடபகுதியும் வடமேற்கு, கிழக்குக் கரையோரங்களும் தமிழ் இராட்சியத்தின் ஆதிக்கத்தில் இருந்தன.
1213இல் இலங்கைக்கு வந்த சீன யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்குப் போவதற்கு ஆரியச் சக்கரவர்த்தியின் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றதாக கோட்டகம கல்வெட்டில் எழுதப் பட்டிருக்கிறது.
சில நூறு வருடங்கள் ஐரோப்பியரின் அடிமைகளாய் இருந்த தமிழ்மக்களின் சுதந்திர உணர்வு, நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகளினாலே கட்டி எழுப்பப்படவில்லை. “ஜின்னா’போன்ற ஒரு மாபெரும் தலைவர்

123
தேவைப் படவில்லை. சுயநலமற்ற ஒரு தமிழ்த் தலைவன் வழி நடாத்தி இருந்தால் 47இல் தமிழ் மக்களும் விடுதலை பெற்றிருப்பார்கள். அப்போதே ஈழம் மலர்ந்திருக்கலாம். அரசியல் தீர்க்க தரிசனம் இன்மை, சுயநலப் போக்கு. ஒற்றுமையின்மை என்பன இத்தோல்விக்குக் காரணமாகும்.
யாழ்ப்பாணத் தலைவர்களும், உத்தியோகத்தர்களும் தாங்கள் தொடர்ந்து சிங்கள மக்களுக்கு எஜமான்களாக இருக்க முடியாத காலம் ஒன்று வரும் என்பதை உணரவில்லை. சிங்களப் பெண்கள் ஆயாக்களாகவும் அந்த மக்கள் எங்களுக்கு வேலையாட்களாகவும் தொடர்ந்து இருப்பார்கள் என்ற பிழையான எண்ணமும் இருந்தது. தமிழர்களின் தனித் துவத்தைப் பேண அயல் நாடுஉதவுமென்றும்,போரிடுமென்றும் நீண்டகாலமாக தமிழ் அரசியல்வாதிகள் எதிர்பார்த்தார்கள். நாட்டைப் பிளப்பது அயல்நாட்டின் ஆட்சிக்கு இடையூறு விளைவிக்குமென்பதை அயல் நாட்டவர் உணர்ந்திருப்பார்கள் என்பதைப் பலகாலமாக இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் உணரவில்லை.
எண்பதுகளின் பின்னர் யார் தலைவர் என்பதற்காக தமிழ்த்தலைவர்கள் கட்சி சேர்த்துக் கொண்டார்கள். தமக்குள் போட்டி போட்டுக் கொண்டார்கள்.
அரசியல் காரணிகளுக்கு அப்பால் எங்களிடமும் சமுதாயக் குறைபாடு இருந்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். சமுதாய ஏற்றத் தாழ்வுகள் இரத்தத்தில் ஊறித் தடித்த ஒன்றாகவே இருந்தது. சாதாரணமாக ஒரு யாழ்ப்பாணி இன்னொரு யாழ்ப்பாணியை அறிய வேண்டுமாய் இருந்தால் அவருடைய சாதி என்ன என்பதை அறிவதற்காக 5-6

Page 66
124
வினாக்கள் வினவுவார்.
தம்பி நீ எந்த ஊர்?
நான் மானிப்பாய்
மானிப்பாயில் நீ எவடம்?
நான் இந்துக் கல்லூரிக்குக் கிட்ட
அங்கே எவடம்?
பாடசாலையின் கிழக்கு ஒழுங்கையில்.
ஓ பிரக்கிராசியார் வீட்டுக்கும் பக்கத்திலோ?
இல்லை அதற்கு கொஞ்சம் கிழக்கே.
இப்படிக் கேட்பவர், அவர் போன பிறகு மற்றவரைப் பார்த்துச் சொண்டைச் சுளிப்பார். அவருடைய கருத்து அதுதான். இதை அறியத்தான் கேட்டவர். இது அநேகமான யாழ்ப்பாணிகளுக்குக் கை வந்த கலை.
80களில் இயக்கங்கள் வேரூன்றிய பின் சமுதாய
வேறுபாடுகள் பெருமளவு அழித்தொழிக்கப்பட்டது.
கையால் கிழிக்கிற பனங்கிழங்குக்கு ‘ஆப்பும் வல்லிட்டுக் குத்தியும் கொண்டு போவது போல” என்பது பழமொழி ஒரு பனைவிதை முளைத்துக் கிழங்காக வந்த நேரத்தில் அந்த பீலியை பிடித்து இரண்டாக கிழித்து விட்டால் இரண்டு சமபாதியாகி விடும். அது வளர்ந்து வடலியாகி பெரிய பனைமரமாகி விட்டால் அதைத் தறித்து விழுத்துவதற்குக் கோடரி வேண்டும். விழுத்திய பனையை இரண்டாகப் பிளப்பதற்கு இரும்பு ஆப்பும் ஆப்பை அடிப்பதற்குப் பெரிய வல்லிட்டுக் குத்தியும் வேண்டும். உரிய காலத்தில் சந்தர்ப த்தைத் தவற விட்ட எங்கள் நிலை இதுவாகும். இன்னொரு

125
வகையாகச் சொன்னால் கிரந்தி முற்றிப் பெளவுந்திரம் ஆகிவிட்டது.
இது எங்கள் கன்மவினையின் பலனோ தெரியாது. கூட்டுக் கன்மமாகவும் இருக்கலாம். நூற்றாண்டின் முற்பகதியில் எங்கள் அரசியல்வாதிகளும் நாட்டு அரசியலாரும் நாமும் செய்த தவறினால் விரக்தியடைந்த எங்கள் பிள்ளைகள் பேச்சு வார்த்தைகள், விசாரணைகள், சத்தியாக்கிரகங்கள் சரிவராது என்ற முடிவுக்கு வந்தபின் போராட்டத்தின் வடிவத்தை மாற்றியமைத்துக் கொள்ள நேரிட்டது. 40 வருடங்களுக்கு மேலாக எடுத்த அரசியல் முடிவுகள் தமிழர் பிரச்சனையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டிய நிலை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
20 ஆம் நூற்றாண்டு முழுவதுமே தமிழர்கள் நடாத்தி வந்த அரசியல் போராட்டத்தை ஒட்டு மொத்தமாகக் கணக்குப் பார்த்தால் தமிழ்மக்கள் மேலும் மேலும் தங்கள் அரசியல் பலத்தையும் பிரதேச பலத்தையும், மொழிப் பலத்தையும், சமயப் பலத்தையும் இழந்தே வந்திருக்கிறார்கள். இதற்குமேல் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் நாட்டில் உள்ள இன்னோர் சிறுபான்மையினம் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தித் தனது சமுதாய, அரசியல், பிரதேசம் கல்வி என்பனவற்றில் பயனை அதிகரித்து வந்துள்ளது.
பயிற்சி முடிகின்ற நேரத்தில் பனிப்போரும் ஒய்ந்தது. முதல் அணுகுண்டு யப்பான் நாட்டில் வீசப் பட்டது.

Page 67
126
பயிற்சியின் இறுதித் தேர்வுக்கு முதல் நாள் எனது தாயார் அமரத்துவம் அடைந்து விட்டார். மரணச் சடங்கிற்கு வந்த GUUTafarfurf வந்து பரீட்சைக்குத் தோற்றம்படி வற்புறுத்தினார்கள். துக்கம் தோய்ந்த முகத்துடன் சென்றாலும் தேர்வில் தேறிச்சியடைந்து விட்டேன். 1946ஆம் ஆண்டும் பூர்த்தியாகிவிட்டது.
யாழ்ப்பாணத்தின் “கற்பகதரு’ பனைமரமாகும். சிங்கள நண்பர்கள் யாழ்ப்பாணியைப் பனங்கொட்டை என்று பகிடி செய்வதுமுண்டு. நாங்கள் பதிலுக்குப் பலாக் கொட்டை என்று சொல்லுவோம். எங்களுக்கு பனை எவ்வளவு முக்கியமோ அவர்களுக்குப் பலா அவ்வளவு முக்கியம்.
நல்லோருடைய உறவுக்குப் பனையை உவமையாகச் சொல்வதுண்டு. எவ்வித முயற்சியும் இல்லாமல் தண்ணிரே ஊற்றாமல் பயன் தரக் கூடியது.
வடலி வளர்ந்து பனையாகும். முது பனையாக 20-25 வருடங்களாகும் . அதுவரை தண்ணிரோ, பாதுகாப்போ, பசளையோ கிடையாது.
பனம் விதையில் பாத்தி போடலாம், அது முளைத்து வரும்போது கி ழங்காகும். கிழங்கு சுவையானதும் நல்ல உணவுமாகும். கிழங்கை அவித்துக் காயப் போட்டால் அது புழுக் கொடியல் ஆகும். அவிக்காமல் காய வைத்தால் ஒடியல் எனப்படும். ஒடியல் மா பிட்டு அவிக்கவும் கூழ் காய்ச்சவும் உதவும்.
கிழங்கு வளர்ந்து வடலியாகும். வடலி வளர்ந்து பனையாக 15-20 வருடம் செல்லும். வடலி ஒலை வெட்டி வேலி அடைப்பார்கள். மட்டை விறகாகும். பனை பூக்கும். அப்போது

127
அது ஆண் பனையா? பெண் பனையா? என அறிந்து கொள்ளலாம். ஆண், பெண் வேறுபாடு காட்டும் தாவரம் பனையாகும். இரண்டு பனையிலும் கள், பதநீர் என்பன எடுக்கலாம். இந்தக் கள்ளைப் பருகுவதற்கென்றே தென்னிலங்கையில் இருந்து வரும் நண்பர்கள் அதிகம். சிறப்பாக ஆண் பனைக் கள்ளுக்குக் கிராக்கி அதிகமாகும். பனஞ்சாறு முட்டியில் சேரும்போதே சுண்ணாம்பு இடப்பட்டால் அது பதநீர் ஆகும். பதநீரைக் காய்ச்சி பனங்கட்டி, கல்லாக்கா ரம் என்பன செய்யலாம்.
பெண் பனை காய்க்கும்; இளங்காய் நுங்கு என்று அழைக்கப்படும்.மிகவும்சுவையானது. குளிர்மையானது. நுங்கு சற்று முற்றினால் அது சீக்காய் எனப்படும்.
நுங்கைக் குடித்த கோம்பை, மிருகங்களுக்கு உணவாகும். நுங்கு முற்றினால் பனங்காய் ஆகும். பனங்காய் பழுத்து விழும். வெளியே கறுப்பு நிறமாக இருக்கும். பனம்பழத்தின் உள்ளே இருக்கும் சாறு சாப்பிடக் கூடியது. மாம்பழம் போல நிறமானது. மிகச் சுவையானது. பனங்களி பிழிந்து எடுத்து வடித்து பாயிலே பரவிக் காயவிட்டால் பனாட்டு ஆகும். ஒரு வருடத்திற்குக் கெடாமல் இருக்கும். பனாட்டுக்கு மேலும் சுவையூட்டினால் பாணிப்பனாட்டு ஆகும்.
எல்லாப் பருவத்திலும் எல்லாக் காலங்களிலும் எல்லா உறுப்புகளும் பயன்படக்கூடிய ஒரே ஒர மரம் பனைமரமாகும். யாழ்ப்பாண வீடுகள் எல்லாம் பனை மரத்தால் கட்டப்பட்டவையே. -
கிணற்றுக்குத் துலாவாகவும், தொட்டிலுக்குச் சட்டமாகவும், துலாவுக்கு அச்சுலக்கையாகவும். ஆடுகாலுக்குப் பேணாகவும்

Page 68
128
பயன்படுவது இந்தப் பனைமரமே,
கற்பகதரு, காமதேனு என்பன தேவலோகக் கதை. இவை கேட்டவற்றைக் கொடுப்பன. பூலோகக் கற்பகதரு பனை' கேளாமலே கொடுப்பது. எண்ணைச் செலவு இல்லாத பிள்ளை வளர்ப்பு. குளிப்பு முழுக்கு இல்லாத குழந்தை வளர்ப்பு.
ஊர்வன, பறவைகள், விலங்குகள், மனிதர் என்ற பல வகையினருக்கும் தேவையான பல பயன்களைப் பனை கொடுக்கிறது. மனிதனின் அத்தியாவசியமான தேவைகள் அனைத்தையும் தருகிறது.
பருகுவதற்குப் பானம், உண்பதற்கு உணவு, உறங்குவதற்குப் பாய், குடியிருக்க வீடு, பொருட்களைக் கொண்டு செல்லப் பெட்டி, கடகம், கூடை ஆடுமாடு கட்டக் கயிறு, வீடு வேய, குடில்வேய, வேலி அடைக்க ஒலை இப்படி உதவுவதை “கற்பகதரு'என்று சொல்வதில் எவ்வளவு மகிழ்ச்சி தேவலோகக் கற்பகதரு கற்பனை மரம். யாழ்ப்பாணக் கற்பகதரு உண்மை மரம்.

129
10. உத்தியோகம் புருஷலட்சணம்
தொழில் தேடும் படலம் ஆரம்பம், பயிற்சி பெற்ற பல ஆசிரியர்கள் சில வருடங்களாகக் காத்திருக்கிறார்கள். திடீர் என்று எனக்குப் பருத்தி ஆடையாகக் காய்க்கிறது. இந்து போட் இராஜரத்தினமும், இடதுகைக் கந்தையா என்ற அன்பர் ஒருவரும் மோட்டார் வண்டியில் வீட்டிற்கு வந்தார்கள். கார் மட்காட்டில் வைத்தே மனேஜர் ஒரு கடிதம் எழுதித் தந்தார். மறுநாளே போவதற்கான நியமனக் கடிதம் அது எனக்கு பெரும் மகிழ்ச்சி ஆசிரிய உலகத்திற்குப் பெரிய ஆச்சரியம், அவருடைய முகாமையின் கீழ்ப் படிப்பிற்கும் ஆசிரியர்கள் சால்வை எடுத்து இடுப்பிலே கட்டும் காலம், வெட்கப்படுகிறவர்கள் சால்வை போடுவதை விட்டு விடுவார்கள். இப்படியான கால கட்டத்தில் மனேஜர் என் வீட்டிற்கு வந்து நியமனக் கடிதம் வழங்குவது என்றால் எப்படி இருக்கும்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது"
என்பது தெரிந்ததே.
அடுத்த 4-6 மாதங்களில் நடைபெற இருக்கும்
பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப் போகின்றார்; என்பதே இந் நியமனத்தின் உள்நோக்கம், கந்தையா என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த நியமனம் உதவும்ான்று நினைத்துவிட்டார்.

Page 69
130
சில மாதத்தின் பின் நடந்த தேர்தலில் தோற்றும் விட்டார். கிடைத்த நியமனமும் மாற்றப்பட்டது.
நான் நெடுந்தீவில் உள்ள பாடசாலைக்கு அனுப்பப் பட்டேன். நெடுந்தீவுக்கு வள்ளத்தில் போவது என்பது பெரிய பயங்கரமான சம்பவம். கடல் அலை வள்ளத்தை ஒரு பனை உயரத்திற்குத் தூக்கியடித்து எறியும். தொழில் முதுகில் பிடித்துத் தள்ள, பயம் நெஞ்சில் பிடித்து பின்னே தள்ள நெடுந்தீவுக்குச் சென்று விட்டேன். நெடுந்தீவு மக்கள் மிகவும் உபசரிப்பார்கள். எல்லா இடங்களிலும் நல்ல தண்ணிர் கிடைக்காது. சிலருடைய வீட்டு முற்றத்தில் பானையில் பனங்கள்ளு இருக்கும். விரும்பினால் வார்த்துக் குடிக்கலாம். நான் சொல்லுவது ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முந்திய கதை. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. எட்வேட் நவரத்தின சிங்கம் என்ற மகாவித்தியாலய அதிபர் என்னை வரவேற்று ஆதரித்தார். பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு மாதத்தைக் கழித்தேன். கொண்டு போன பணமும் முடிந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீடு திரும்பினேன். மறுநாள் காலை நானும் என்னுடைய நண்பனுமாக இந்துப் போட் இராஜரத்தினம் வீட்டிற்குச் சென்றோம். அங்கே முற்றத்தில் ஒரு பெரிய ஆசிரியர் கும்பல் நிற்கிறது. நாங்கள் சற்று முன்னேறி விறாந்தைக்குச் சென்றோம். இளம் கன்று பயம் அறியாது என்பதுதான் அதற்கு காரணம்.
என்னுடைய ஒப்பாரியை மனேஜர் கேட்பார் என்று நினைத்தேன். அவர் அதற்குத் தயாராக இல்லை. ஒரு சாக்குப் பையும் 5ரூபா பணமும் தந்து கல்வியங்காட்டுச் சந்தைக்குப் போய் நல்ல குத்தரிசி வாங்கி வரும்படி பணித்தார். ஆள்

131
உள்ளுக்குப் போய்விட்டார். எனக்கு இது ஒரு பெரிய கெளரவப் பிரச்சனையாக இருந்தது. சாக்கையும், பணத்தையும் விறாந்தையில் வீசி விட்டு சையிக்கில் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். அங்கு கூடியிருந்த வயதான ஆசிரியருக்கு இச்செயல் யுகாந்த கால அழிவு மாதிரித் தென்பட்டது. யாழ்பாணப் படிப்பித்தலில் முதல் கட்டம் முடிந்தது. வீட்டிற்குப் போய்க் கொஞ்சம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டேன். இடைக்கிடை விறகு வியாபாரமும் செய்வேன்.
திருவாளர் மு. நாகலிங்கம் அந்த நேரத்தில் பதுளையில் கல்வி அதிகாரியாக இருந்தார். என்னுடைய பரிதாபத்தை அறிந்த அன்னார் உடனே வரும்படி தந்தி அனுப்பியிருந்தார். யாழ்ப் பாணத்திலிருந்து 29 மணித்தியாலம் பிராயாணம் செய்தால்தான் பதுளையைப் போய் அடையலாம். மலைநாடும், குளிரும், சிங்களமும் எனக்கு மிகவும் புதியவை. அவ் வாறிருந்தும் துணிந்து புறப்பட்டு விட்டேன்.
இராமபிரானை விஸ்வாமித்திரர் யாகங்காக்க அழைத்துக் கொண்டு போனபோது தசரதனும், தாய்மாரும் அடைந்த துயரந் தான் எங்கள் வீடு. ஆனால் அதே நிகழ்ச்சிதான் இராமபிரானுடைய மேன்மையையும், புகழையும் உலகுக்கு அறிவிக்க ஏதுவாக இருந்தது.
அஹிகயல சிங்கள மகாவித்தியாலயத்தின் தமிழ் பிரிவின் பதில் தலைமை ஆசான் ஆக நியமனம் பெற்றேன்.
சிங்கள மக்களோடு பழகவும், சிங்களம் படிக்கவும், மலை நாட்டையும் அதன் இயற்கை வளங்களையும் அறியவும் முடிந்தது.

Page 70
132
தேயிலைத் தோட்டம், இறப்பர் தோட்டம் என்பனவற்றையும் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. தேயிலைத் தொழிற்சாலை, இறப்பர்த் தொழிற்சாலை என்பனவற்றை முதன் முதலாகப் பார்த்தேன்.தெமதுள புகையிரதப் பாதை ஒன்றுக்கு குறுக்காய் அதே பாதை அமைந்திருப்பதைக் கண்டு அசந்து போனேன்.
ஒரு புதிய உலகில் வாழ, பழக, அறிய வந்திருப்பதான ஒரு உணர்வு. இப்பொழுதுதான் உலகப் பல்கலைக் கழகத்தின் புதுமுகத் தேர்வில் சித்தியடைந்திருப்பது போன்ற உணர்வு.
சிங்கள மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கம். தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களிலும் பார்க்கச் சற்று வேறுபட்டது. எந்த மக்களையும் அன்பாய், ஆதரவாய் உபசரிப்பார்கள். இனிமையாகப் பேசுவார்கள். சுதந்திரமாகப் பழகுவார்கள். யாழ்ப்பாண மக்களைக் கண்டால் ஆசிரியர்களைக் கண்டால், குருமாரைக் கண்டால் கதிரைக்கு ஒரு வெள்ளைப் புடவை போட்டு இருக்கச் செய்து வரவேற்று உபசரிப்பார்கள். தேனிரோ, தாம்பூலமோ வழங்குமுன் துப்பல் படிவம் பக்கத்தில் வந்து விடும். சிங்கள சித்து மினு கோடிய மூன்றாம் புத்தகத்தில் முதலாவது பாடத்தில் ஒரு அழகான சிங்களத் தொடர். அதன் பொருள்’விருந்தாளிகளை உபசரிப்பது சிங்கள மக்களின் உத்தம குணமாகும்” என்பதே.
அரசியல்வாதிகள் தாங்கள் வாக்குப் பெறவும், தேர்தல்களில் வெற்றி பெறவும், சொந்தச் சம்பாத்தியம் செய்யவும், வாயில் வந்தபடி கருத்துக்களைப் பரிமாறி மக்களைக் குழப்பிக் கொண்டதாலும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மனமுவந்து வழங்காமையாலும் நாடு இரத்தக் களரியில் மிதக்க வேண்டியுள்ளது. மரகதத் தீவு என்று புகழப்பட்ட இலங்கைத்

133
தீவின் பச்சை, சிவப்பாக மாறி வருகிறது.மலைநாட்டுத் தமிழர்கள் படும் இன்னல்கள் இதற்கு முன் எங்கள் கண்ணில் படாதவை. காலை 6 மணிக்கு கொழுந்து பறிக்கப் புறப்பட்டு விடுவார்கள். ஆளுக்கு 2 ரொட்டித் துண்டு கொண்டு செல்வார்கள். மாலை 6 மணிக்குத் திரும்புவார்கள். நெற்றியிலே தொங்க விட்டு முதுகில் மிதந்த கொழுந்துக் கூடையுடன் மலைகளிலே உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஏறி இறங்கி கொழுந்து பறிப்பதும், கொண்டு செல்வதும் எத்தனை கஷ்டம்.
“லயம்” என்று சொல்லப்படுகின்ற ஒரு அறை கொண்ட சிறிய வீடும் வழங்கப்படும். ஐந்தாறு பிள்ளை குட்டிகள் உள்ளவர்களும் அதற்குள்ளேதான் சீவியம். ஊதியமும் மிகக்
குறைவு.
நான் பதுளையில் இருந்த காலப்பகுதியில் சிங்கள அரசினால் கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமைச் சட்டத்தினால் மலைநாட்டுத் தமிழ் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்கு இலங்கை அரசு முதன் முதல் கையாண்ட பலத்த அடி இதுவாகும். ஏழு, எட்டு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்ட நிலை இல்லாமல் போய் விட்டது. காலப்போக்கில் பெருந்தலைவர் தொண்டமான் தலைமையில் மலையகத் தமிழ் மக்கள் ஒன்று கூடியதால் ஒரளவு உரிமைகளை வெல்ல முடிந்தது. சுத்தமான கரங்களும், நேரிய போக்கும், செயல் திறமையும் உள்ள பெருந்தலைவர் தொண்டமான் ஆவர். -
இவரை ஒத்த இராசதந்திரமும், திறமையும், நேர்மையும், தீர்க்க தரிசனமும் உள்ள தலைவர் ஒருவர் இலங்கைத் தமிழர்

Page 71
134
எல்லாரையும் ஒன்றுபடுத்தக் கூடிய தலைவர் ஒருவர் கிடைத்திருந்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனை பல ஆண்டுகளுக்கு முன் தீர்ந்திருக்கலாம்.
இங்கிருந்து கண்டிக்கு இடமாற்றம் பெற்றேன். கல்கின்ன சிங்களவர் மத்தியிலுள்ள முஸ்லீம் கிராமம். மிகக் கண்ணியமான மக்கள் எல்லாரும் ஒரு சிறிய துண்டுத் தேயிலைத் தோட்டமாவது வைத்திருந்தார்கள்.
அத்துடன் 90% மக்கள் வியாபாரிகள் ஆவர். கண்டி, மாத்தளை நகர்களில் உள்ள வியாபாரத் தலங்கள் பல. கல்கின்னை, அக்குறணை முஸ்லிம் மக்களுக்குரியனவாகும். சிலருக்கு குருநாகல், கெப்பிட்டிப் போல பகுதிகளில் போதிய அளவு வயல் நிலம் உண்டு. அந்த வயலை விவசாயம் செய்யும் சிங்கள மக்கள் அறுவடை முடிந்ததும் பொதி மாடுகளிலும், பெண்களின் தலைச் சுமையிலும் நெல்லைக் கொண்டு வந்து முஸ்லிம் முதலாளிகளின் வீட்டில் சேர்த்து வணக்கம் செய்து போவார்கள்.
மத்திய மாகாணத்தில் கம்பளைக்குத் தெற்குப் பக்கத்தில் தமிழர்களின் கடைகளும், நில புலன்களும் கம்பளைக்கு வடக்குப் பக்கத்தில் முஸ்லிம் மக்களின் நிலங்களும் கடைகளும் ஏராளமாக இருந்தன. அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விவசாயச் சட்டத்தினால் பலரின் நிலங்கள் கை மாறின. இலங்கையிலே கண்டிப் பகுதியைப் போல ஒரு அழகான இடத்தை வேறு எங்கும் காண முடியாது. மட்டான மகிழ்ச்சியான கால நிலை, அழகான மலை, நாலா பக்கமும் மலைச்சாரல், பூத்துக் குலுங்கும் பூமரங்கள் சலசலவென்று ஒடும் அருவிகளும், ஆறுகளும், கதைத்துக் கதைத்து சிரித்துச்

135
சிரித்து நீராடும் ஆண்களும் பெண்களும் கண்டிப்பிரதேசத்தை மேலும் அழகு செய்வனவாகும். கண்டியைச் சுற்றி இலங்கையின் பெரிய நதியாகிய மகாவலி கங்கையும் அதன் பல கிளைகளும் ஒடுகின்றன.
கண்டி என்றால் எல்லாருடைய ஞாபகத்திற்கும் வருவது கண்டிப் பெரஹரவாகும். சாதாரணமாகச் சொல்லுவார்கள். கண்டி பாராதவன் பண்டி, இலங்கையில் மக்கள் மிகுதியாகக் கூடுகின்ற ஒரு நிகழ்ச்சி கண்டிப் பெரஹரவாகும். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், பிற நாட்டவர்கள் எல்லாருமே கூடிக் கண்டு களிப்பார்கள்.
வருடம் ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்ச்சி சிங்கள மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான சம்பவமாகும். கண்டி தலதா மாளிகை என்பது புத்த பகவானின் பல்லொன்றை வைத்த பேழை வைக்கப்பட்ட புனிதத் தலமாகும். தலதா மாளிகையை மையமாகக் கொண்டு பெரஹர நடைபெறும். தலதா மாளிகைக்கு அண்மையில் உள்ள “கணபதி தெய்யோ' கோயிலில் இருந்து பெரஹர நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.
முதல் நாள் 3 அல்லது 5 யானைகள் ஊர்வலத்தில் பங்கு கொள்ளும். தினசரி ஊர்வலத்தில் பங்கு கொள்ளும் யானைகளின் எண்ணிக்கைகள் வளர்ச்சியடைந்து இருபதாம் நாள் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் பங்கேற்றுக் கொள்ளும். இது ஒரு கண் கொள்ளாக் காட்சியாகும். கண்டி நகரும், அயல் புறங்களும் ஒரே சன சமுத்திரமாகக் காட்சியளிக்கும். ஊர்வலத்தில் வாண வேடிக்கைகளும் பலவகைப்பட்ட வாத்தியங்களும் மிகுந்த சுவையூட்டுவனவாகும்.
இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் கண்டிப்

Page 72
136
பெரஹரவையும், வெசாக் நிகழ்ச்சிகளையும் பார்க்க விரும்புவார்கள். கண்டிப் பகுதியில் உள்ள அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் அவர்களுக்குப் பெரு விருந்தாகும். றம்பொட, லக்ஸபான, ஆபடின், துன்கிந்த இப்படியான சிறிய, பெரிய பல நீர்வீழ்ச்சிகள் மலைநாட்டுப் பகுதியில் உண்டு.
கண்டியிலிருந்து தெல்தெனியா, ஊறுகல, உண்ணாஸ்கிரிய ஊடாக மகியங்கனை செல்லுகின்ற ஒரு வீதியுண்டு. 28 பயங்கரமான வளைவுகள் இவ்வீதியில்உண்டு.உண்ணாஸ்கிரியாவில் அடிக்கின்ற காற்று வீடுகளின் கூரையைக் கொண்டு போய் விடும். ஊறுகலவிற்கு அண்மையில் முருகா மலை என்ற இடத்தில் முருகன் கோயில் ஒன்று உண்டு. இது இப்போது மொறகாமற எனப் பெயர் மாறிவிட்டது. முருகா மலைக்கோயிலுக்கு முன்பக்கமாக மகாவலி கங்கையின் சிறிய கிளை ஒன்று ஒடுகிறது. அந்த கிளை நதியில் நீராடிக் கொண்டே முருகா மலை முருகனுக்கு தீபாரதனை நடைபெறுவதைப் பார்க்க முடியும். அது கண்டியை ஆண்ட பூரீ விக்கிரமராஜசிங்கன் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
முருகாமலைக் கோயிலில் இருந்து ஒரு மைல் தூரத்தில் ரச்சுறு அல்லயுத்தன (ராசாவைப் பிடித்த இடம்) என்ற கிராமம் இருக்கிறது. இங்கே தான் 1815 இல் பூரீ விக்கிரமராஜசிங்கன் கைது செய்யப்பட்டான். இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்று அந்த இடத்தில் இப்போதும் இருக்கிறது.
கண்டியில் யான் இருந்த காலத்தில் இலங்கை அரசினர் பாடசாலைகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசினர் பாடசாலை தமிழர்

137
ஆசிரிய சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இது ஒரு இனவழித் தொழிற் சங்கமாகும். அரசு, தமிழர் ஆசிரியர்களின் தகைமை சேவை மூப்பு என்பனவற்றை புறக்கணித்து முஸ்லிம் ஆசிரியர்களுக்குச் சலுகை வழங்கியது. இதற்கான போராட்டத்தி ற்குக் கொடுத்த வடிவமே இந்தச் சங்கம். திருவாளர்கள் சந்திரசேகரி, சபாபதிப்பிள்ளை டேவிட், கந்தப்பு, பண்டிதர் சாமிநாதன், ஐ.ஏ. ராமசாமி பண்டிதர் வீரகத்தி போன்றவர்கள் இந்த அமைப்பின் முன்னோடிகளாக இருந்தார்கள்.
இந்த அமைப்பு ஆரம்பத்தில் இரண்டு கிளைகளாகக் கொண்டதாக இருந்தது. மலை நாட்டுக் கிளையில் யான் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். இந்நிகழ்ச்சி என் வாழ்க்கையின் ஒரு படிக்கல்லாகும். காலப் போக்கில் பல ஆயிரம் தமிழ் ஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சிங்கள ஆசிரியர்களையும், அமைச்சர்களையும் சந்திக்கவும், பேசவும் வைத்தது. கல்விக் கந்தோரில் அதிகாரிகள் முன்னிலையில் நின்று கொண்டு கதைத்த ஆசிரிய இனத்தை நாற்காலியில் அமர வைத்தது. பொ. சந்திரசேகரியும், சபாபதிப் பிள்ளையும், இவர்களைப் போன்ற சிலருமாவர்.
பொ. சந்திர சேகரி ஒரு செயல் வீரன். போராட்டக்காரன், பண்டார வன்னியனின் கருத்தில் திகழ்ந்தவர். கண்டியில் ஆசிரிய சங்கத்தில் பெற்றுக் கொண்ட பங்கு ஏறக்குறைய 30 வருடங்கள் அதில் பல்வேறு பதவிகளில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்தது. அரசினர் ஆசிரிய சங்கத்தின் இறுதிக்கால தலைவராகவும், தமிழ் ஆசிரியர் சங்கம், அரசினர் ஆசிரிய சங்கம் இரண்டும் இணைக்கும் செயலாளராகவும் பணிபுரியும்

Page 73
138
வாய்ப்பையும் பெற்றேன். இவை இரண்டையும் இணைந்ததே இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகும்.
ஆசிரிய சங்கங்கள் இரண்டும் இணைந்த போது அதன் தலைவர் பதவியை D.S. வனசிங்கா ஏற்றுக் கொண்டார். யான் பிரதித் தலைவராகப் பணி புரிந்தேன். எந்த ஒரு பதவியையும் ஏற்பது போல தேவைப்படும்போது அதை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருக்கவேண்டியது அவசியமாகும். முடிசூட்டுவதற்கு தயாரான இராமபிரானை காட்டுக்குப் போகும்படி கைகேயி பணித்தாள். அப்போது அவரின் திருமுகம் “அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா’ எனக் கம்பர் கூறுவது நோக்கத் தக்கது.
ஒட்டிக் கொள்ள வேணும் என்ற மோகம் விட்டுக் கொடுக்க வேண்டியதாகும். பதவி, அல்லது அதிகாரம் கையிலே இருக்கும் போது தேவையானவர்களும் தேவைப்படும் என்று நினைப்பவர்களும் பின் தொடர்வார்கள். இதனால் பதவிகளைப் பெற்றவர்கள் அதனை உதறித்தள்ள விரும்புவது குறைவு.
இரண்டு ஆசிரிய சங்கங்களின் இணைப்பு அந்தக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடையே இருந்த இரண்டு அரசியல் கட்சிகளான தமிழ் அரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் இரண்டையும் இணைக்கும் ஒரு கால் கோள் விழாவாக அமைந்தது.
யாழ்ப்பாணம் மலாயன் பெஞ்சனியர் மண்டபத்தில் நடந்த இணைப்பு கூட்ட அறிக்கையில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் எழுதப்பட்ட வாசகம் பின்வருமாறு: நாம் இன்று இங்கு கூடி இரண்டு ஆசிரிய சங்கங்களையும் இணைக்க வேண்டும் என்று

139
தீர்மானிப்பது தமிழர் ஆசிரியர்களினது உரிமைகளை வென்றெடுப்பதற்காக மட்டுமன்று. இரண்டு கிளைகளாக எதிரும் புதிருமாக ஒடிக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து இணைத்துத் தமிழ் மக்களிடையே உரிமை களை வென்றெடுப்பதற்கேயாம்.
இத் தீர்மானத்தின் பிரகாரம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடனும் ஆசிரிய சங்கங்கள் இணைக்கப் பட்டன. யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெளரவக்கல்வி மந்திரி பதியுதீன் முகமட் அவர்களின் ஆசீர்வாதத்துடன் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளரான பாஸ்கரலிங்கம் முன்னிலையில் சம்பிரதாய முறைப்படிச் சங்கங்கள் இணைக்கப்பட்டன.
அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் கணிசமான அளவு அரசியலை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து தமிழ் அரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் இணைந்து தமிழர் கூட்டணியாக மாறியது. என்றாலும் சுட்ட மண்ணும் பச்சை மண்ணுமாக இருந்தன வேயன்றி ஒட்டிக் கொள்ளவில்லை.
சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரையிலும் கண்டிப்பகுதி வாழ்க்கை மிகவும் பிரகாசமானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் இருந்தது. அன்பர் பண்டிதர் குமரேசையா அங்கே என் அன்பரானார். அவர் நான் கண்ட மனிதப் பண்பாளர்களில் மிகவும் சிறந்தவர். தமிழ் இலக்கணங்களை ஐயந்திரிபறச் சொல்லத்தக்கவர். வீரசோழியம், தொல்காப்பியம், திருக்கோவையார், புறநானூறு, அகநானூறு போன்ற நூல்களைக் கற்றுக் கொடுத்தவர் அவரே.

Page 74
140
யாப்பிலக்கணத்தையும் அவர்கள் சொல்லித் தந்தார்.அந்தக் காலத்தில் அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர் AS.நல்லையா. அவருடைய மனைவி சொர்ணாம்பாள் எட்டாம் வகுப்புக் கல்வியுடன் அங்கே வந்தவர். அவர்கள் தன்னுடையச் சுயமுயற்சியினால் பல கல்விப் படிகளைத் தாண்டி பயிற்சி ஆசிரியர் ஆனார். அதற்கப்பால் B.A., M.A.M.Lit, என்ற பலப் பட்டங்களையும் பெற்றார். சுவையாகச் சமைப்பார் எழு எட்டுப் பிள்ளைகளையும் பெற்றுவளர்த்து உருப்படியாக்கவும் இறைவன் ஆசியைப் பெற்றுக் கொண்டார். கணவனையும் மேன்மேலும் படிக்கப் பண்ணி கல்வியதிகாரியாக்கினார்.
முயற்சி திருவினையாக்கும் என்பதற்குப்பிரத்தியட்சமாகக் கண்ட ஒரு காட்சியாகும். மனித சக்தி எவ்வளவோ பெரியது. அது மிகப் பெரியப் பலமுடையது. மனித சக்தியினாலே செய்ய முடியாத காரியங்கள் எதுவும் இல்லை.
கண்டியில் நான் இருந்த காலத்தில் எனக்கு
உறுதுணையாக இருந்தவர்களில் திருமதி சின்னத் தங்கம் முதல்வராவர். அவருடைய மகள் இரண்டாம் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். இறகு முளைக்க ஆரம்பித்த தாரா போல உருவம், கட்டையாக வெட்டப்பட்ட கூந்தலுடன் என்னுடனும், பொன்னம்பலம், செல்வநாயகம் ஆகியோருடனும் போகுமிடம் எல்லாம் வருவாள். சின்னத்தங்கம் அம்மா தேவையான நேரத்தில் வேண்டிய உணவும், பணமும் தந்து உதவுவார்.
கடவுள் மனிதனைப் படைத்தான். அதே மனிதன் சில gLDurájönfláb elnepsituJb sbilléképTát,
“ baiTGever Luton Grudtr Lunch uuirm) Tibeġ

141
தெரிவதில்லை” என்று அடிக்கடி சொல்லுவார் அருள்பிரகாசம்,
கல்கின்னையில் யான் இருந்த காலத்தில் எனது வாழ்க்கைத் துணைநலம் என்னைச் சேர்ந்தது. எனது மூத்தமகள் வாசுகி அங்கே தான் தவழ்ந்தாள். வாழ்க்கை அங்குதான் ஆரம்பமானது. சுடர் விட்டு எரியத் தொடங்கியது. "வாழ்வது ஒரு கலை” என்பதையும் புரிந்து கொண்டேன்.
கண்டிப் பகுதியை விட்டு நீங்கினாலும் அப்பிரதேசக் குடிமக்களின் அன்பான அரவணைப்பும், இலகுவான வாழ்க்கை முறையும், பலாக்காய் அவியலும், பிஞ்சுப் பலாக்காய் (பிளஸ்) கறியும் என் நெஞ்சில் இடம் பெற்றுக் கொண்டன.

Page 75

143
11. தேன் பாய மீன் பாடும் தமிழகம்
கல்கின்னையில் இருந்து மட்டக்களப்பு முதலைக் குடா அரசினர் பாடசாலைக்கு மாற்றப்பட்டேன். மட்டக் களப்பைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை ஆண்டவன் நிறைவேற்றித் தந்தான். இலங்கையிலே தமிழர் வாழும் பிரதேசத்தை மூன்று பெரும் இலக்கியமாகப் பகுத்து நோக்கலாம். ஒன்று ஈழத்துப் பாண்டிநாடு (வடபகுதி) இரண்டு ஈழத்து சோழம் (கிழக்கு மாகாணம்) மூன்று ஈழத்துச் சேரம் (மலைநாடு).
மட்டக்களப்பு இயற்கை எழில் மிகுந்த மருதமும், நெய்தலும் மயங்கிய பிரதேசம், முல்லையைச் சார்ந்ததாகும். தேனும், பாலும், மீனும், இறைச்சியும், அரிசியும், நெய்யும் ஆனந்தமாகக் கிடைக்கும். இந்தத் தேனையுண்ட மீன் மகிழ்ச்சி மிகுதியால் பாடுவதாகச் சொல்லுவார்கள். பெரிய நீண்ட வயல் வெளிகள் உண்டு. ஆயிரக்கணக்கான எருமைகளையும், பசுக்களையும் வைத்து பராமரித்துப் பால் எடுக்கும் பண்ணையாளர்களைக் காணலாம். “தயிர் பிசைந்துகை நொந்தது”என்று சொன்னது மட்டக்களப்புத் தயிரைத்தான். அந்தப் பிரதேச மக்களுடைய போக்கு அவர்களுடைய இயற்கை கொடுத்த செல்வத்திற்கு அமைவாகவே இருக்கிறது.
எங்கே பார்த்தாலும் குடாக் கடலும், குளங்களும், சதுப்பு நிலங்களும் காணப்படும். தாழை, தாமரை,அல்லி, குவளை, ஆம்பல், செடி, கொடிகளும் படர்ந்திருக்கும். தேனும், பாலும்,

Page 76
144
தயிரும், சீனியும் சேர்த்து உண்டு மகிழும் வாய்ப்பு அவர்களுக்கும், அவர்களால் உபசரிக்கப்படுகிறவர்களுக்கும் உரியது.
நிலச்சுவாந்தர்களும், பண்ணையாளர்களும் போடியார் என்று அழைக்கப்படுவார்கள். வயலிலே தங்கி இருப்பதற்கு அமைக்கப்படும் இருக்கைக்கு வாடி என்று பெயர்.
வயல் வெட்டிச் சூடுமிதித்த பின், ஒய்வு காலத்தில் கூத்தாடுவார்கள். கூத்து வடமோடி, தென்மோடி என இருவகையாகும். இங்கே வடமோடி கூத்துகளே இடம் பெறும். மண்ணிலே பெரிய உயரமான மேடை அமைக்கப்படும். கூத்திலே தோன்றுகின்ற எல்லாப் பாத்திரங்களும் தங்கள் தங்களுக்குரிய உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு மேடையில் வந்து நிற்பார்கள். உரிய நேரம் வரும்போது மேடையின் நடுப்பகுதியில் தோன்றிப் பாடி ஆடி நடிப்பார்கள். மக்கள் வட்டமாக நாலு பக்கமும் இருந்து பார்ப்பார்கள். விடிந்த பின்பும் கூத்து நடைபெறும்.
கொம்பு விளையாட்டு மிகுந்த சுவையானது, ஊரவர்கள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து கொம்பு கட்டி இழுப்பார்கள். அவை வடசேரி, தென்சேரி எனப்படும். கொம்பை முறிப்பவர்கள் வெற்றி பெற்றவர்களாவர். எந்தப்பக்கம் போனாலும் லைகூன் இருக்கும்.
அதனால் எந்த நேரமும் மீன் கிடைக்கும். மேற்குத் திசை படுவான்கரை, கிழக்குத் திசை எழுவான் கரை படுவான் கரையில் தான் வயல்கள் நிறைய உண்டு. மேற்கே செல்லச் செல்ல காட்டுப் பிரதேசமாகும். காட்டு மிருகங்கள் இறைச்சிக்காகக் கிடைக்கும். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

145
திருகோணமலை, அம்பாறை என மூன்று மாவட்டங்களை அடக்கியதாகும். இலங்கையின் கிழக்குப்பகுதி ஐந்தில் இரண்டு பங்கு கரை ஓர நீளத்தைக் கொண்டது. கிழக்கு மாகாணத்தின் வட மாவட்டம் திருகோணமலையாகும். திரு கோணமலை ஒரு இயற்கைத் துறைமுகம். திருகோண மலை மக்களின் பழக்க வழக்கம் மட்டக் களப்பு மக்களதும், யாழ்ப்பாண மக்களதும் பழக்க வழக்கங்களுடன் கலந்த ஒன்றாகும். புகழ்பெற்ற கோணேஸ்வரர் ஆலயம் திருகோணமலை நகரில் கடற்கரைக் கற்பாறையில் அமைந்திருக்கிறது. வெந்நீர் ஊற்றுக்கள் (7 கிணறுகள்) கன்னியாவில் அமைந் திருக்கின்றன. இந்தக் கிணற்று நீர் ஒவ்வொன்றும் வெவ்வேறு தரமான சூடு உடையனவாகும்.
கிழக்கு மாகாணம் முழுவதும் பிட்டுக்குத் தேங்காய்ப் பூ
போட்டது போல முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் கலந்தே வாழ்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் இப்போது கணிசமான அளவு சிங்கள மக்களும் குடியேறி விட்டார்கள். முன்னர் பொலனறுவா மாவட்டம்பறிபோனது போல அம்பாறை மாவட்டமும் தமிழர் கையில் இருந்து நழுவி வருகிறது.
DS சேனநாயக்காவின் கல்லேயாத் திட்டத்தால் கிழக்கு மாகாணத்தின் தென்பகுதி சிங்களக் குடியேற்றத்தால் கபஸ்ரீகரம் செய்யப்பட்டது. தமிழர்களின் பிரதேச பலத்தைக் குறைப்பதற்குத் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவது ஒரு திட்டமிட்ட செயலாகும்.
இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ்ப் பிரதேசங்கள் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளன.

Page 77
146
இலங்கை ராசரட்டை, மாயரட்டை, ருகுண என வகுக்கப்பட்டு ஆளப்பட்ட காலத்திலும், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் எனப்பகுக்கப்பட்ட காலத்திலும் மட்டக்களப்புப் பகுதி மக்கள் மாயரட்டை இராச்சியத்துடனும், கண்டி இராச்சியத்துடனும் அதிகம் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். பொல நறுவாவைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசு ஆட்சி நடத்திய காலத்தில் கிழக்கு மாகாணப் பகுதி சோழ அரசுடன் சேர்ந்ததாக இருந்தது.
வடக்கும், கிழக்கும் தமிழர் பிரதேசமாக இருந்தாலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இரண்டு மாகாணங்களாக வகுக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத் தேசவழமைச் சட்டத்தைப் போல் மட்டக்களப்பு பகுதியாருக்குப் புறம்பான சில வழமைச் சட்டங்கள் உண்டு.
அரசியல் ரீதியாக வடக்கும் கிழக்கும் பாவற்காய் போலவே இருந்தது. தமிழரசக் கட்சி இரண்டு மாகாணங்களையும் இணைத்துச் சமஷ்டிக் கொள்கையைப் பரப்புவதில் ஓரளவு முன்னேற்றம் அடைந்தது.
1956ஆம் ஆண்டு களனி மகாநாட்டில் “சிங்களம் மாத்திரம்”சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் பேசும் மக்களை இரண்டாந்தாரப் பிரஜைகள் ஆக்கக்கூடிய நிலையை இச்சட்டம் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்த்து ஏற்பட்ட கசப்பு உணர்வினால் கல்லேயாப் பகுதியில் தமிழ் சிங்கள மக்களிடையே இனக் கலவரம் ஏற்பட்டது. பல தமிழர்களும் சிங்களவர்களும் கொல்லப்பட்டார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின் முதன் முறையாக ஏற்பட்ட பெரிய சிங்கள -தமிழ் இனக்கலவரம் இதுவாகும்.

147
தொடர்ந்து தமிழ் மக்கள் கொழும்பிலும் ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் பல சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சிங்களம் அரச மொழிச்சட்டம் ஆக்கப்பட்டதை எதிர்த்து தமிழ் மக்கள் எடுத்த அமைதி எதிர்ப்புகளை விரும்பாத அரசியல் கட்சிகளும் சில பொது மக்களும் சேர்ந்து 1958இல் கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் இனக்கலவரங்களை ஏற்படுத்திப் பல கொலைகளையும், பாரிய கொள்ளைகளையும் நடத்தினார்கள்.
சிங்களம் மாத்திரம் சட்டம், மாணவர்களைத் தரப்படுத்துதல் ச ட்டம், சிங்களக் குடியேற்றம், இனக்கலவரம் இவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல்வாதிகள் எடுத்த நடவடிக்கைகளும், பேச்சு வார்த்தைகளும், ஒப்பந்தங்களும், பயனற்றுப் போயின.
ஒரு சந்ததி காலத்திற்கு மேலாகப் போராடித் தோல்வி கண்ட பிரஜைகளின் குழந்தைகள் மெல்ல மெல்லமாக வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.
பிரச்சனையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்காக ஆளும் கட்சி, ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்தால் ஆட்சிக்கு வர இருக்கிற கட்சி அதனைக் குழப்பி விடும். பண்டார நாயக்கா -செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் இப்படிப் பல. கிழித்தெறியப்பட்டன.
காலத்திற்குக் காலம் சில தமிழ் அரசியல்வாதிகளும் ஒப்பந்தங்களைக் கிழித்தெறிவதற்குச் சேர்ந்து கொள்வார்கள். 1815இல் இலங்கை முழுவதையும் ஆங்கிலேயர் கைப்பற்றியபின் ஏற்படுத்தப்பட்ட எந்த ஒரு விசாரணைக்

Page 78
148
கமிஷன் முன்னிலையிலும் தமிழ் மக்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ கருத்து ஒருமித்துச் சாட்சியம் அளிக்கவில்லை. கோல்புறுக் கொமிஷன் தொடக்கம் சோல்பரிக் கொமிஷன் வரையும் இதுதான் நிலை.
சுதந்திரத்தின் பின்பும் தமிழ் மக்கள் பற்றிய சட்டங்களையோ, ஒப்பந்தங்களையோ ஒரு கூட்டம் எதிர்த்துக் கொண்டே இருந்தது.
எல்லாம் சேர்ந்த விரக்தி மனப்பான்மை பிள்ளைகளை வன்முறைப் பாதையில் இறக்கியது. குட்டக் குட்ட குனிபவனும் மடையன் என்ற கருத்து வலுப்பேற்றது.
மட்டக்களப்பில் யான் வசித்த காலம் மிக மனோரம் யமானது. படுவான் கரையில் செழிப்பையும், வாழ்க்கை முறையையும் அறியவும், அனுபவிக்கவும் முடிந்தது. ஆசிரியர் செல்வநாயகமும், அவருடைய குடும்பத்தாரும் மாமனார் சிவ சுப்பிரமணியமும் இரண்டு சந்ததி காலத்தின் பின்பும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து எம்முடன் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மட்டக் களப்புப் பகுதி உணவு முறைக்கும், யாழ்ப்பாணப் பகுதி உணவு முறைக்கும் சிறிது வேறுபாடு, பொதுவாகப் பார்த்தால் சோறுகறிதான். சபைகளிலே பலர் இருந்து சாப்பிடும் போதும், உபசரிக்கும் போதும் அந்த வேறுபாட்டை அறிந்து கொள்ளலாம். யாழ் பகுதியில் பெரிய வாழை இலையில் 8-10 காய்கறி, பொரியல் வகை, குழம்பு, பாயாசம், வடை, பருப்புக்கு நெய், வாழைப்பழம் என்பன பரிமாறப்படும். யாழ்ப்பகுதி உணவு ஓர் அளவு காரமாகவும் கறிகள் கட்டிச் சுவையாகவும் இருக்கும்.

149
மட்டக்களப்புப் பகுதியில் சில காய்கறிகளுடன் பெரும்பாலும் மாமிசமும் பரிமாறப்படும். பச்சை வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு என்பனவும் வைக்கப்படும். சோற்று அரிசி பச்சைக்கும், புழுங்கலுக்கும் இடையிலான ஒரு வெண்பதமாக இருக்கும். வைத்த சோற்றை இரண்டாகப் பிரித்து முன் பக்கத்தை வைத்த கறிகளுடன் சாப்பிடுவார்கள். அப்போது மறுபக்கத்தில் போதிய கட்டித்தயிர் வைத்து அதற்குமேல் தேன் ஊற்றப்படும். சீனி அல்லது கருப்பட்டியும் வைப்பார்கள். சில இடங்களில் நல்ல கட்டித் தேங்காய்ப்பாலும் வைப்பார்கள். முதன் முதல் இதை நான் சாப்பிடும் போது கதைகளில் படித்த தேவாமிர்தம் என்பது இது தானோ என்றும் நினைத்ததுண்டு, அத்துடன் இனிமையான பண்பான உபசரிப்பும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?
சில யாழ்ப்பாண மக்கள் மட்டக்களப்புப் பகுதிக்குப் போனால் இந்த இனிமையான உபசரிப்பிலே மருண்டு விடுவார்கள். இதைத்தான் “பாயோடு ஒட்டிக் கொள்வது” என்று கேலி பண்ணுவது, “தேன்பாய மீன் பாடும் நாடு” என்றது அப் பிரதேசத்திற்கு முற்றிலும் பொருந்தும்.
படுவான் கரைக்குப் போகும் எந்த அதிகாரியும் ஒருவர் வீட்டில் சாப்பிடாமல் திரும்புவது என்பது கிடையாது. மீன் வேட்டை பற்றிப் புறநானூற்றில் படித்த பாட்டு ஒன்று எப்போதும் என் ஞாபகத்தில் இருந்தது. அந்த எண்ணம் நிறைவேறும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழமான குடாக்கடலில் தோணியின் முன் பகுதியில் ஒரு பெரிய விளக்குக் கட்டப்பட்டிருக்கும். தோணி மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும். அப்போது பெரிய பாலை மீன்கள் கடலில் மிதந்து பாய்வது தெரியும். தோணியில்

Page 79
150
இருப்பவர் கையில் “மண்டா” என்ற ஆயுதம் வைத்திருப்பார். (இரும்பால் செய்து நீளமான மரப்பிடி போடப்பட்டிருக்கும்) 7-8 யார் தூரத்தில் இருந்தபடியே மண்டாவினால் இலக்காக எறிவார். அது நேராகப் பெரிய பாலை மீனின் தலையில் ஆழமாகக் குத்திக் கொள்ளும், கடலில் இரத்தம் சிந்தியபடியே மண்டாவையும் இழுத்துக் கொண்டு மீன் வேகமாக ஒடிக் களைத்து விடும். சில சமயம் இறந்தும் விடும். வள்ளத்தில் கலைத்துக் கொண்டுபோய் மீனைப் பிடித்து விடுவார்கள்.
மழை காலத்தில் வெள்ளம் கடலுக்கும் பாய்ந்து கொண்டு இருக்கும். அப்போது சிறிய மீன்கள் நீர்ப்பாய்ச்சலுக்கு எதிராக வந்து கொண்டிருக்கும். பொருத்தமான இடத்தில் அத்தரங்க (தேயிலை வடிபோல் பெரியது) போல ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மீன்கள் அதற்குள் விழுந்தவுடன் தூக்கி எடுத்துக் கூடைக்குள் போடப்படும். பெரும்பாலும் கெளுத்தி மீன் அகப்படும்.
கடல் வற்றுகிற நேரத்தில் குட்டைக் கற்களும், சிறிய பாறைகளும் உள்ள கடலில் வேட்டைக்குப் போவதுண்டு. யாழ் தீவுப்பகுதிகளிலும் இந்த முறை உண்டு. ஒரு கையில் 3-4 அடி நீளமான கூரிய வாள் இருக்கும். மறுகையில் துலக்கமான “டோச்லைற்” இருக்கும். மீனின் கண்ணில் வெளிச்சம் பட்டவுடன் கண் நல்ல வெளிச்சமாய்த் தெரியும். ஒரே வெட்டு. கூடை ஒன்று அரையில் கட்டப்பட்டிருக்கும். மீனை அதற்குள் தூக்கிப் போட வேண்டியதுதான். h−
அனலை தீவுக்கடலில் யானும் ஒரு நாள் போய் விழுந்தெழும்பி வந்தேன்.
இவற்றைவிட கரப்புக்குத்தல், தூண்டில் போடல் எனப் பல

岱1
சிறிய முறைகளும் உள.ஆண்களும், பெண்களுமாகக் கடலில் வட்டமாக நிற்பார்கள். மெல்லிய கம்புகளினால் செய்யப்பட்ட 3 அடி உயரமான கூடைகளைக் கையில் வைத் திருப்பார்கள். அந்த வட்டத்திற்கு இடையில் இறால் சிறுமீன்கள் என்பன வரும்போது கூடையில் அவற்றை அகப்படுத்திக் கொள்வார்கள். கூடையின் மேற் பக்கத்தில் இருக்கும் வாய்க்குள்ளே கையை விட்டு அந்த மீனை எடுத்துக் கொள்வார்கள்.
தூண்டில் போடுவது என்பது எல்லா இடங்களிலும் தனி நபரினால் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முறையாகும். இதைப் பலர் மாலை நேரப் பொழுது போக்காகவும் செய்வதுண்டு. சில சமயங்களில் தூண்டிலில் ஒர் பெரிய மீன்களும் சிக்கிக் கொள்ளும்.
சிவ சமய மரபுகளை பேணுவதிலும் தமிழ் மொழியைக் காப்பாற்றுவதிலும் கண்ணும் கருத்தும் உடையவர்கள். விவாகம், மரணம், திருவிழாக்கள் போன்ற சடங்குகளில் யாழ்ப்பாண மக்களோடு ஒட்டிப் பார்க்கும் போது மிகச் சிறிய வேறு பாடுகளையும் காணலாம். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட குரவை கூறும் வழக்கத்தையும், பூப்பு நீராட்டு விழாக்களில் மஞ்சள் நீர் தெளிக்கும் வழக்கத்தையும் யான் அங்கு கண்டேன். கிழக்கு இலங்கைச் சூழ்நிலையும் வாழ்க்கை முறையும் தொழிலும் நட்புறவுகளும் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

Page 80

153
12. கற்கை நன்றே கற்கை நன்றே
எண்ணெழுத்து இகழேல் கணிதத்தையும் மொழியையும் குறைத்துப் பேசக் கூடாது. அவை மிக முக்கியமானவை.
ஒதுவது ஒழியேல்
தொடர்ந்து படித்துக் கொண்டே இருத்தல் வேண்டும். இளமையில் கல் இளம் வயதில் கற்க வேண்டும். நூல் பல கல். பல துறை நூல்களையும் கற்றுக் கொள். (ஆத்திசூடி) “எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்" கணித பாட அறிவும் மொழி அறிவும் ஒரு மனிதனுடைய இரண்டு கண்களையும் ஒத்தனவாகும்.
“கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி’
கையிலே உள்ள பொருட்செல்வத்தைக் காட்டிலும் உண்மையான செல்வம் கல்விச் செல்வமாகும்.
“நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை”படித்த கல்விக்கு அழகு படித்தவாறு ஒழுகுதல்.
“நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு”

Page 81
154
நல்ல நூல்களைப் படித்து அவற்றைப் பின்பற்றிப் பயன் பெற வேண்டும்.
“ஒதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்” நல்ல நூல்களைப் படிக்காதவர்களுக்கு நல் உணர்வுகளோ நல்ல ஒழுக்கங்களோ உண்டாவது இல்லை.
(கொன்றை வேந்தன்) கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
(வெற்றி வேற்கை) பிச்சை எடுப்பது மிகுந்த இழிவான செயல் என்பது பலரது கருத்தாகும். ஒரு பிச்சைக்காரன் எவ்வளவோ கோணிக் குனிந்து, தன்னை ஒடுக்கிப் பிச்சை எடுக்க வேண்டியவன் ஆகின்றான். “தொய் தாம் திரணத்தின் வெண் பஞ்சின் நொய் தாம் இரப்போன்.”
பிச்சைக்கரான் உள்ளம் காற்றிலே பறக்கக்கூடிய ஒரு துரும்பிலும் பார்க்க நொய்தது, துரும்பைக் காட்டிலும் மென்மையான பஞ்சிலும் பார்க்க பிச்சைகாரனின் உள்ளம் நொய்தது ஆகும்.
அப்படியான உள்ளத்திற்குரிய தொழிலான பிச்சையைச் செய்தாலும் கல்வியைக் கற்று முன்னேறினால் அவன் பெரியவன் ஆகிறான்; அறிஞன் ஆகிறான் ஞானி ஆகிறான்; தேவன் ஆகிறான்; இறைவன் ஆகிறான்.
சிவனே மண்டையோட்டில் பிச்சை எடுத்த கதை படித்திருக்கிறோம்.

155
கீழ் வகுப்புகளில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் வெற்றிவேற்கை போன்ற நூல்களில் கல்விப் பற்றி சொல்லி த்தந்த தொடர்களின் கருத்து மேலே வளர்ந்து செல்ல, வாக்குண்டாம்; நாலடியார்; திருக்குறள் போன்ற நூல்கள் துணை புரிந்தன.
குண்டுக்குப்பயந்து பொருள் பண்டங்களை விட்டு ஒடுகிறபொழுது எங்களுடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வமே,
கள்வனால் திருட முடியாமல் இலகுவாக பாதுகாப்பு அளிக்கக் கூடியது கல்விச் செல்வமே,
அனைத்து உலகிலும் அகதிகளாக அலைந்து திரியும் நம்மவர்க்கு சோறு போடுவதும் அவர் கற்ற கல்வியே.
பத்துக் குறள்ளைப் பாடிய வள்ளுவருக்கு மனம்
அடங்கவில்லை. கல்விக்கு அப்பால் ஒரு அதிகாரத்தைச் சேர்த்து கல்லாமை என்று பெயரிட்டு 10 குறள்கள் பாடினார்; அப்போதும் அவர் திருப்பிதப்படவில்லை. கேள்வி என்ற அதிகாரத்தையும் பின்னே வகுத்து மேலும் 10 பாக்களைப் பாடிக் கல்விக்கு அரண் செய்தார்.
கற்றால் மட்டும் போதாது. கற்றபடி வாழவேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக.
என்பது முதற்குறள்.
வெட்டியும் ஒட்டியும் சொல்வதில் வள்ளுவர் கை தேர்ந்தவர்.
கண் என்றால் கல்விக் கண், சாதாரணக் கண்களை

Page 82
156
வள்ளுவர் கண்ணாகக் கருதவில்லை, அறிவுக் கண்ணையேஞானக் கண்ணையே, உண்மைக் கண்ணாக உயர்த்துகின்றார். ஊனக் கண்ணோடு ஞானக் கண்ணும் ஒன்று படும் போது தான் கண். கண்ணாகிறது
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்திலிரண்டு புண் உடையார் கல்லாதவர். இந்தப் பிறவிக்கு மாத்திரம் அல்ல, நாம் திரும்பத் திரும்ப பிறக்க இருக்கும் பிறவிகளுக்கும் கற்ற கல்வி பயன் தரக்கூடியது.
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. செல்வம் உடையவர்களுக்குத் தன் ஊரில் -செல்வத்தோடு இருக்கிற தன்னுடைய நாட்டில் தான் ஓரளவு பெருமையும் சிறப்புமாகும். கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்புண்டு. “மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கில் மன்னனில் கற்றோனே சிறப்புடையன் -மன்னர்க்கு தன் தேசம் அல் லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாஞ்சிறப்பு”
வவுனியாப் பகுதியில் சேவை செய்த காலத்தில் மகாவித்தியாலயத்தில் ஒருவர் எனக்கு அதிபராக அகப்பட்டார். அவர் ஆங்கில மோகம் கொண்டவர், ஒரு நாள் விடுப்பு வழங்கும்படி ஒரு கடிதம் எழுதிக் கொடுக்க, அவர் மறுத்துவிட்டார். எனக்கும் கொஞ்சம் கோபம் வந்து விட்டது. அந்தக் காகிதத்தைக் கசக்கி அவர் முன்னிலையில் எறிந்து விட்டு நான் போய்விட்டேன். சிலதினங்களின் பின் உப அதிபர் மூலம், தான் விடுப்பு வழங்காத செய்தி பற்றியமன வருத்தத்தை

157
அதிபர் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் வேறு சில நல்ல கருமங்களுக்கு என்னைப்பயன் படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொண்டார். இந்தச் சம்பவத்தைச் சக ஆசிரியர்களுடன் கலந்து உரையாடிய போது உண்மை தெரியவந்தது. அவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப்பிடிக்காது. தமிழ் மொழி பேசுவதும் பிடிக்காது என்பதே அது. இதே காலத்தில் யோசப் என்ற என்னுடைய சக ஆசிரியர் ஒருவர் BA படித்துக் கொண்டிருந்தார். அவர் என்னையும் தூண்டினார். அதிபரின் செயல் என் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. படிப்பைத் தொடர்ந்து எனத தகைமையைக் காட்ட வேண்டுமென்ற மன வைராக்கியமும் தோன்றியது.
வார இறுதி நாட்களில் வழமை போல வீட்டிற்குச் சென்றேன். கடுமையான சுகவீனம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனது தம்பி மகேஸ்வரன் என்னைப்பார்க்க வந்திருந்தான். அவனிடம் வாசிக்க ஏதாவது ஒரு புத்தகம் கொண்டு வா என்றதும் அவன் பக்ககத்துக் கடையில் பொருளியல் தத்துவம் என்ற நூலை வாங்கி வந்து தந்தான். கதை வாசிப்பது போல அந்த நூலை வாசித்தேன்.சில பகுதிகள் எனக்கு விளங்கின. நூலைப்படிக்க முன் முகவுரையைப்படிக்கவேண்டும்.அதுதான் படித்தல் முறை. நான் தப்பாக இறுதியாகத்தான் படித்தேன். கீழ்க்காணும் வாக்கியம் அதிலே எழுதப்பட்டிருந்தது. எனக்கு ஒரு வகை புத்துணர்வை ஏற்படுத்தியது. B.A. வகுப்பில் பொருளியல் படிக்கும் மாணவர்கள் இந்நூலைப்பாடப்புத்தகமாகப் பயன்படுத்தலாம். நோய் சுகப்பட்டு வீட்டிற்குப் போயாயிற்று. B.A. படிப்பைப் பற்றி பல ஆசிரியர்கள் உசார்ப் படுத்தினார்கள். வெளிவாரி

Page 83
158
மாணவனாகச் சேர்ந்து படிப்பதற்கு யானும் சில ஆசிரியர்களும்போராதனைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
வீட்டிலே குடும்பப் பாரம் சாப்பிடவேண்டும்.ஐந்து பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவேண்டும். சுற்றம் சூழலில் செய்ய வேண்டிய கடமைகள், காரியங்கள் செய்யவேண்டும் நானும் படிக்கவேண்டும் என்றால் பணம் கண்டு பிடிப்பது என்பது மிகுந்து சிரமமான காரியம்.பிச்சை எடுத்தாலும் படிப்பது என்று தீர்மானித்தாயிற்று படிப்புத் தொடங்கிவிட்டது. படிக்கும் கூட்டமும் ஒன்று சேர்ந்து விட்டது.
தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்த பின் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாலை நேர வகுப்பில் சேர்ந்து கொண்டேன். ஆசிரியத் தொழில், தோட்டத் தொழில், ஆசிரிய சங்க வேலைகள், சமூக சேவை தொடர்பான வேலைகள் இவற்றுக்கெல்லாம் நேரமும், பணமும் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமாகத் தான் இருந்தது. வீட்டிலும் கொஞ்சம் தட்டுப்பாடுதான் பாடசாலை முடிந்ததும் பஸ் வண்டியில் வட்டுக் கோட்டை செல்லவேண்டும். வீடு திரும்ப இரவு 10.30 மணியாகும். சில சமயம் அதன் பின் எழுத்து வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். அதிகாலை 3.30, 4 மணிக்கு பாரியாரைத் தட்டி எழுப்பிக் கொண்டு தோட்டம் பே2ாக வேண்டி யிருக்கும். தொடர்ந்து சந்தைக்குப் போக வேண்டி யிருக்கும். மணிக்குப் பாடசாலைக்குச் செல்ல வேண்டும். அதற்கிடையில் பலருடன் பேசவேண்டிருக்கும். சில கருமங்கள் செய்ய வேண்டியிருக்கும் சில்லாம் இயல்பாகவே நடந்தது. துரைச்சாமி என்பவர் இவை எல்லாவற்றுக்கும் உதவியாக இருந்தார்:

159
யான் அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்பும் போது பிள்ளைகள் விழித்தெழமாட்டார்கள். திரும்பிவரமுன் அவர்கள் நித்திரையர்ய் விடுவார்கள். அவர்களைக் காண்பதும், பேசுவதும், மழலை பொழிவதும். கூடி ஆடுவதும் மிகவும் அருமை. வீட்டுக் கருமங்கள் அத்தனையும் துணைவியர்ா பொறுப்பாகும். படலை திறந்து போனால் இரண்டே இரண்டு வேலையிருக்கும், ஒன்று சாப்பிடுவது, மற்றது கதைப்பது.
வட்டுக் கேட்டைக் கல்லூரியில் உடன் படித்தவர்களில் என் போன்ற குடும்பஸ்தர்களில் அ. முதலித்தம்பி, எச், எம். றகீம், அப்துல்கையூம் என்பவர்களும், இளைஞர்களில் B.பீற்றரும் நெருங்கிப் பழகியவர்கள்.
B.A. படிக்கும் காலத்தில் விடுமுறை நாட்களில் பேராதனைப்பல்கலைக் கழகத்திற்குச் செல்வோம் அங்கு தங்கி நின்று எனக்குகுரிய பாடங்களைக் கற்கும் மாணவர்களின் குறிப்பை வாங்கிப் பிரதி செய்து கொள்வோம். அவர்களிடம் பாடம் கேட்போம்.
விளங்காதவற்றை அங்குள்ள பேராசியர்களிடம் கேட்போம். இந்த வகையில் என்னிடம் படித்த மாணவர்கள் (அப்போது அதிலே படித்துக் கொண்டிருந்தவர்கள்) பெரிதும் உதவினார்கள்.
தங்கராசா, குழந்தைவேலு, பஞ்சாட்சரம், பேரின்பநாயகம், தட்சணாமூர்த்தி, சிதம்பரநாதன் பக்கபலமாக இருந்தார்கள். சன்னராசா பேருதவி அளித்தார். போராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையிலேயே மலைநாட்டுப்பகுதியில் மகாவலி கங்கைக் கரையில் அமைந்துள்ளது. மகிழ்ச்சிகரமான சூழ்நிலை. எப்பொழுதுமே நல்ல கால நின்ல, பக்கத்தில்

Page 84
160
பேராதனைப் பூங்கா, நடுவில் குன்று ஒன்றின் மேல் குறிஞ்சிக்குமரன் கோயில், மகாவலிகங்கை நிறைந்த நீருடன் சல சல என்று ஒடிக்கொண்டே இருக்கும். அழகான கட்டட வசதிகள் ஒவ்வொரு துறைக்கும் தேவையான உபகரணமும், நூல் நிலையமும் போதிய அளவு உண்டு. இது மாதிரிப் பல்கலைக்கழகம். இலங்கையின் சகல மாணவர்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழி மூலம் படிக்கத்தக்க வாய்ப்பு இருந்தது. இந்த அமைப்பையும், அழகையும், நடைமுறையையும் பார்ப்பதற்குக் கொடுத்து வைக்கவேண்டும்.
பொருளியல் இந்திய வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களைப் படித்து கூடி.ஹ. பொதுப் பரீட்சையில் சித்தியடையும் வாய்ப்புக் கிடைத்தது.
வட்டுக்கோட்டைக் கல்லூரியில் பேராசியர் சண்முகதாஸ் இடம் தமிழ் கேட்டேன். (பிற்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத் தமிழ் பேராசிரியர்) டாக்டர் வன்னிய சிங்கத்திடம் பொருளியல் படித்தேன். பேராசிரியர் சிவச்சாமி,பேராசியர் சீலன் கதிர்காமர் என் போரிடம் வரலாறு கற்றேன்.
கிழக்கு உலகத்திற்கு வந்த மிஷனரிமார், வட்டுக் கோட்டையில் யாழ்ப்பாணக் கல்லூரியைக் கட்டி எழுப்பியமை, வடபிரதேச மக்களின் கல்வி வரலாற்றில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்காத வாய்ப்பு அப்பகுதி மக்களுக்குக் கிடைத்தது. கிழக்கு உலகத்திலேயே மிஷனரிமார்களினால் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கல்லூரிகளில் இது முதன்மையானது. யாழ்ப்பாணப்பகுதி கல்வியில் முன்னேற இக் கல்லூரி முக்கிய காரணியாக இருந்தது. இன்று வரை முதல்

161
தர தனியார் கல்லூரியாய் விளங்குகிறது.இலங்கைப் பல்கலைக்கழகப்பட்டப்படிப்பிற்கும், லண்டன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்கும் தயார் செய்யும் சேவை மனப்பான்மை கொண்ட ஒரு நிறுவனமாகும்.
பல்கலைக்கழகத்தில் நிகழ்வது போலவே வகுப்பறைப் படிப்புகளும், உபநியாசங்களும், செயல் முறைப்படிப்புக்களும், விழாக்கள் விருந்துகளும், பட்டமளிப்பு விழாவும் நடைபெறும். இக்கல்லூரியில் உள்ள நூலகம் கிழக்கு உலகில் உள்ள சில பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.
வட்டுக்கோட்டைக்கல்லூரிப்படிப்பும், பேராாதனைப் பல்கலைக்கழகப் பழக்கமும் B.A தேர்வும் ஒரு முக்கிய விஷயத்தைத் தெளிவாக்கியது.அது எப்படிப் படிக்க வேண்டும் என்பதுதான். தொகையாய்ப் படித்தது என்பது அல்ல. படிப்பின் அரிவரி இதுதான் என்று சொன்னாலும் தகும். எதைப் படிக்கவேண்டும். எப்படிப்படிக்க வேண்டும் என்பதை அறிய முந்தது. படிக்கதொடங்குவதற்கு இது ஒரு அத்தி வாரமாகும்.
வரலாற்றுப் பாடத்தில் ஒரு வினாவுக்கு விடை எழுதிக் கொண்டு போய்ப்பேராசியருக்குக் காட்டினேன். அது இருபது (20) பக்கம். பேராசிரியர் அதைப்படித்தபின் பதினைந்து (15) வரியிலே எழுதிய இன்னொரு மாணவனின் விடையயை எனக்குக் காண்பித்தார். இங்கேபார் இது விடைநீ எழுதியது ஒரு புத்தகம். அதற்குள் விடையும் இருக்கலாம். நீந்திச் சுழியோடிப் பிடிக்கவேணும். அவனுக்கு 75 புள்ளிகள் போட்டிருக்கிறேன். உனக்கு 25 புள்ளிகள் வழங்குகின்றேன் என்றார்.

Page 85
162
ஒருநாள் பொருளியல் தத்துவத்தில் ஒரு வினாவுக்கு விடை எழுதும் போது அதனை விளக்கக்கூடிய ஒரு வரைபடத்தை மாத்திரம் வரைந்து கொத்தேன். சிலர் பக்கக் கணக்காக விடை எழுதியிருந்தார்கள். இந்த வரைபடத்தைச் சுட்டிக்காட்டி இது விடை. இதற்கு 100 புள்ளிகள் வழங்குகின்றேன். என்று சொல்லி ஒரு பிரசங்கம் செய்தார்.
நமக்குக் கொஞ்சம் தேங்காய்ப்பால் தேவை. அதற்காக ஒரு உரிக்காத தேங்காயைக் கொண்டு வந்தால் கத்தி தேடி, தேங்காய் உரித்து, மட்டைவேறு, தேங்காய்வேறு ஆக்கி, பின் தேங்காயைத் துருவி, சட்டி ஒன்றை எடுத்துத் தேங்காயைப் பழிந்து வடிதட்டில் போட்டு வடித்து, பிழிந்த பூவைப் பிரித்துப்பால் எடுக்கவேண்டும், தேங்காயைச் கொண்டு வந்து பால் எடுப்பதற்கும், நேரே பால் கொடுப்பதற்கும். வித்தியாசத்தைப் பார்த்தீர்களா?
எழுத்தும், பேச்சும் எப்பொழுதும், இரத்தினச் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் அவசியமாகும். பொருள் நேரடியாக விளங்கக் கூடியதாகவும், உள்ளம் விரைவாக ஏற்க்கூடியதாகவும் இருத்தல் அவசியமாகும். முரண்பட்ட கருத்துகளையும், அரைகுறை விளக்கங்களையும் உடையனவாக இருத்தல் ஆகாது. இது படித்தல் படிப்பித்தல் என்பவற்றிக்கு மாத்திரமன்று. முழு வாழ்க்கைக்குமே தேவைப்படுவதாகும். இனியனவும், ஏற்புடையதுமான கருத்துகளையும், சொற்களையும் பேசுவதும், எழுதுவதும் வாழ்வின் உயர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் வேண்டுவன. இனியன இருக்க இன்னா சொல்லல், எழுதல் கனியிருக்கக்காய் உண்டாது போல் ஆகும்.

163
13. யாழ்ப்பாண விவாசாயிகளின் பொற்காலம்
யாழ்ப்பாணப் பகுதியில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டோர் வாழ்க்கை முறை படிப்படியாக மாறியது. நிலத்தைப் பண்படுத்தல், பசளை இடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல் ஆகிய பல துறைகளிலும் பலநூறு வருடங்களாக இருந்த முறை 20 ஆம் நூற்றாண்டில் மெல்ல மாறுதல் அடைந்தது . இம் மாற்றங்கள் மெல்ல பயிர்ச் செய்கையில் ஒரளவு புரட்சியை ஏற்படுத்தியது. பெரு நில விவசாயத்திற்கு யாழ்ப் பாணப்பகுதியில் வசதி இல்லையானாலும், பயிர்ச் செய்கை முறைகளில் மாற்றம் ஏற்படத்தான் செய்தது.
கால காலமாக கிணற்று அடி நீரை பனை ஓலைப்பட்டையில் அள்ளி இறைத்து நீர்பாய்ச்சினார்கள். துலாக்கொடியில் மூலைப் பட்டையைக் கட்டி ஒருவரையோ, இருவரையோ துலா மிதிக்க வைத்து மிதியில் ஒருவர் நின்று தண்ணிரை அள்ளி இறைக்க வேண்டும் ஒருவர் தோட்டத்தில் நின்று சிறிய பாத்திகளுக்கு நீர் பாய்ச்சுவார். தண்ணீர் வாய்க் கால் வழியே மெதுவாகச் செல்லும்,
20 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதி முடிவில் சிலர் வாளிச்சூத்திரத்தை அமைத்தார்கள். இரண்டு பெரிய வாளிகளைக் கீழும் மேலும்மாகப் போகச் செய்து தண்ணிரை வெளியே கொண்டு வருவதற்கு வழிசெய்தார்கள்.சிறிய வாளிகளையும் பயன் படுத்தினார்கள். சங்கிலியில்

Page 86
164
கொழுவப்பட்டிருக்கும் வாளியையும், தண்ணிரையும் வெளியே கொண்டு வருவதற்கு மாடு பயன் படுத்தப்படும். இதனை மாட்டுச்சூத்திரம் என்று சொல்வார்கள் பட்டை இறைப்பிலும் பார்க்க இது முன்னேற்றமாக இருந்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் நீர் இறைக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. நூற்றாண்டின் பின் அரைப்பகுதியின் ஆரம்பத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப்பயன்படுத்தும் பழக்கம் தொடங்கியது. மின்சாரம் வந்த பின்பு மின்சார மோட்டர்களைக் கொண்டு நீர் இறைக்க முடிந்தது.
நீண்ட காலமாகக் கலப்பையில் மாட்டைப் பூட்டி நிலத்தை உழுத கமக்காரர் நவீன இயந்திரங்களைப் பயன் படுத்த ஆரம்பித்தார்கள். நிலத்தை ஆழ உழவும், மென்மையாக்கவும், சமப்படுத்தவும் பெரிய, சிறிய இயந்திரங்களைக் கையாண்டார்கள்.
மாட்டுச் சாணியும் உக்கவிட்ட இலை குழைகளுமே நீண்ட காலமாக இடப்பட்ட பசளையாகும். மாடுகளைத் தோட்டத்திலேயேதொட்டில்வைத்துக்கட்டி விடுவார்கள். தொட்டிலுக்கு மேலே மாடுகளின் பாதுகாப்புக்காக பனை ஒலையிலே செய்யப்பட்ட வட்ட வடிவமான குடிலும் அமைக்கப்பட்டிருக்கும். வசதிபடைத்தோர் கூட்டம் கூட்டமாகச் செம்மறி ஆடுகளைத் தோட்டத்தில் பசளைக் காகப் பட்டி அடைப்பார்கள். செய்ற்கை உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றினால் அதிக அளவு பரப்பில் பயிரிடவும் கூடிய விளைச்சலைப்பெறவும் முடிந்தது.
மேற்கூறிய மாற்றங்கள் கூடிய நிலப்பரப்பில் பயிர் செய்யவும், அதிகப்படியான மகசூலைப்பெறவும் வாய்ப்பளித்தது. இதே

165
காலப்பகுதியில் வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், மிளாகாய், உருளைக் கிழங்கு போன்ற உப உணவுப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டன.
யாழ்ப்பகுதியில் இவ் உணவுப் பொருள்கள் பயிரிடப்பட்டு கொழும்புச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. உள்ளூர்ச் சந்தைகளிலே இவற்றை விற்றுப் பொருள் சம்பாதித்த யாழ்ப்பாண விவசாயிகள் மேலும் அதிகமாகப்பயிரிட்டு வெளியூர்ச் சந்தைகளைக் கைப்பற்றிக் கொண்டனர். தினை, குரக்கன். மரவள்ளி போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்பிப் பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். இதுவரைகாலமும்வெளிநாட்டு உத்தியோகத்தர்களிடமும், படித்தவர்களின் குடும்பங்களின் கையிலு மேகாசு இருந்தது. சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளில் உத்தியோகம் பார்த்தவர்களின் குடும்பங்களும் இலங்கையின் பல பகுதிகளில் அரச உத்தியோகம் பார்த்தகுடும்பங்களுமே கல்வீடு கட்டி வாழ்ந்தனர்.
விவசாயப் புரட்சியினால் மெய்வருமானம் அதிகரித்தது. கமக்காரர்கள் பெரிய கல்வீடுகளைக் கட்டினார்கள். தங்கள் பிள்ளைகளை முன்னரிலும் பார்க்கக் கூடுதலாகப் படிப்பித்தார்கள். வெளி நாடுகளுக்கும் அனுப்பினார்கள்.
இது காலம் வரை வடக்கன் மாட்டு வண்டி செய்த வேலையை லொறிகள் செய்யத் தொடங்கின. சாதாரணமக்களுக்கும் மோட்டார் வண்டி வைத்து ஒட்டும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறிய பல தொழிற் சாலைகளும் ஆரம்பமாயின.

Page 87
166
கூட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு பிரகாசமான செல்வச் சூரியன் வடக்கே உதயம் செய்தான். ஆனால் நாட்டில் ஏற்பட்ட குண்டுப்புரட்சி எல்லாவற்றையும் அழித்துவிட்டது.
விளை நிலங்களைத் திருத்த முடியவில்லை, பண் படுத்த முடியவில்லை, நீர் இறைக்க எண்ணெய் இல்லை, மின்சாரம் இல்லை. பொருள்ட்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்பும் இல்லை. இவ்வாறான பல காரணங்களால் கமக்காரர்களின் நிலை பல ஆண்டுகள் பின் நோக்கித் தள்ளப்பட்டது, வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் கொண்டுபோய்விட்டது.
இந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாண விவசாயிகளின் பொற்காலம் என்ற நிலையும் மாறியது.
இந்த வகையால் ஏற்பட்ட வருவாயில் பங்கு எனக்கும் கிடைத்தது. காலத்தின் கோலத்தால் அதுவும் மாறியது;
பயிர்ச் செய்கையினால் போதிய வருமானம் கிடைத்த காரணத்தினால் வரண்ட நிலங்களினதும்,தரிசு நிலங்களினதும் விலை அதிகரித்தது. நிலம் செல்வத்தின் ஊற்று ஆக ஆக விலையும் உயர்ந்து கொண்டே போனது, அணையும் விளக்குச் சுடர் விட்டு எரிந்தது போல ஆகிவிட்டது.
இன்றும் பலவகைப்பட்ட துன்பங்களுக்கிடையே வாழும் யாழ்மக்களுக்கு அங்குள்ள பனையும், தென்னையும் நிலத்தில் கிடைக்கின்ற கல்லடி ஊற்றும், பிரதேசத்தில் விளையக்கூடிய மரவள்ளி, வாழை, கிழங்கு வகை போன்றவையும் உயிர்ப்பிச்சையாக அமைந்து மக்களை வாழவைக்கின்றன.
வீடில்லாமல்- இருக்கை அழிந்து தவிக்கின்ற மக்களுக்கு அங்குள்ள பெரு மரங்களின் நிழல் வீடாகவும் கிணற்று நீர் உணவாகவும் ஆங்காங்கு தோட்டங்களில் கிடைக்கக் கூடிய கீரை, தொய்யில், பயிரி என்பன கறியாகவும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் காலம் மாறும்.

167
14. வன்னி ராச்சிய்து
அரசினர் பாடசாலை ஆசிரியர்கள் மூன்று நாலு வருடத்திற்கு ஒரு முறையாவது இடம் மாற்றப் படுகிறார்கள். நான் வவுனியா மாவட்டத்திற்கு இடம் மாற்றப்பட்டேன். அக்காலத்தில் வவுனியா,முல்லைத் தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகளுக்குப் போகின்ற வாய்ப்புக்கிடைத்தது. சோழர் காலத்திலும், ஆரியச் சக்கரவர்த்தி காலத்திலும் இவற்றுக்குப் பின்னும் வன்னிப் பகுதியில் சிற்றரசுகள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. இவர்கள் அடிக்ககடி கிளர்ச்சி செய்தார்கள், இதனால் “ அடங்காத் தமிழர், எனவும் அழைக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில அரசிற்கு எதிராகப் புரட்சி செய்த பண்டார வன்னியனும் குடும்பத்தாரும் வவுனியாப் பகுதியைச் சேர்ந்தவர்களே.
ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு குளத்தின் பெயரால் அழைக்கப்படும். நெல், பயறு, உழுந்து என்பன இப் பிரதேசத்தின் முக்கிய பயிர்களாகும். அரிசி ஆலைகளும் நிறைய உண்டு. மாங்குளம், புளியங்குளம். வேலங்குளம், பூவரசங்குளம், பாவற்குளம்,சாளம்பைக்குளம், நொச்சிக் குளம், செட்டிகுளம், பெரியகுளம் இப்படிப் பெயர்கள் அமைந்திருக்கும். சில குளங்களைச் சுற்றியுள்ள கிராமங்கள் மிகச் சிறியவை. ஆயினும் அரசு அந்த அந்தப் பகுதி மாணவர்களின் ஆரம்ப கல்வியைப் பூர்த்தி செய்வதற்காக வசதிகளுடன் கூடிய பாடசாலைகளை அமைத்திருக்கிறது.

Page 88
168
அன்பர் சிவ சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆரம்பபாட சாலைகள் புதிதாக அமைக்கப் பட்டன. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் பொ. சந்திரசேகரி ச.சிவக்கொழுந்து பாராளுமன்ற உறுப்பினர் இவர்களுடன் இந்தக் குளங்களுக்கு போகத்தக்க வாய்ப்புக் கிடைத்தது.
இந்தக் காலப்பகுதியில் ஆசிரிய சங்க கடமைகளுக்காக இதற்காகப்பால் மன்னார்ப் பகுதியில் பல இடங்களையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்கு முன்பிருந்த இடங்களில் பெறாத புதிய அனுபவங்களை வவுனியாப் பகுதியில் பெறமுடிந்தது.
சில பகுதிகளில் யானை குறுக்கே வரும். வேறு சில சந்தர்ப்பங்களில் கரடி புலியும் சந்திக்கும் இப்படிப்பட்ட கொடிய மிருகங்களிடம் இருந்து தப்பிக் கொள்ள வேண்டும். பாதையிலுள்ள மிருகங்களின் சுவடு, காட்டுக்குள் உள்ள புல், செடி, கொடி என்பவற்றின் சரிவுமிருகங்களின் மணம் இவற்றை அறிந்து கொடிய மிருகங்களில் இருந்து தப்பும் வழியை வன்னி மக்கள் சொல்லித் தருவார்கள்.
வேட்டையாடுவது ஒரு கலை, முற்காலத்தில் அரசர்கள் பரிவாரங்களோடு யானை, குதிரை தேர் என்பனவற்றில் ஏறி வேட்டைக்குச் சென்றதாகச் சிறுவயதில் படித்திருந்தேன். அப்பொழுதே இந்த வேட்டைக்கு நானும் போனால் என்ன என்ற எண்ணம் உண்டாது. அதற்கான சந்தர்ப்பத்தை வன்னிப் பகுதி
தந்தது.

169
ஒருவர் இருவர் துவக்குடன் வருவார்கள். இரண்டு மூன்று பேர் கத்தியுடன் போவார்கள். இரண்டு மூன்று மணித்தியாலம் நடந்து கட்டையும் குட்டையும் இடற நடுக்காட்டுக்குச் செல்வோம்.ஒருவரும் வாய் திறந்து பேசமாட்டோம். கீழே நிலத்திலே இருந்து பார்த்தால் ஒரு மைல், இரு மைல் தூரத்திற்கு சோலைக்காடு தெரியும். கீழே நல்ல பசும் புற்றரையாக இருக்கும். மான், மரை போன்ற மிருகங்கள் தங்கங் இயல்பான நிலையில் மேய்ந்து கொண்டு இருக்கும். படக்கென்று வெடி விடும் வெடி வாங்கிய மிருகம் இரத்தம் சொட்ட சொட்டக் கொஞ்சத்துTரம் போய்விழும். நாங்கள் போய் அதைக்காவிக் கொண்டு வருவோம்.
இப்படியான கஷ்டமான, பயங்கரமான கருமத்திலும் நாம் ஒரு சந்தோஷத்தை அனுபவிக்கின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளம் உண்டு அந்தப்பகுதியில் செழிப்பான வயல்கள் உண்டு. மன்னார் பகுதியில் பாடல் பெற்ற திருத்தலமான திருக் கேதீஸ்வரம் அமைந்திருக்கிறது. பக்கத்தில் பாலாவி.
வரலாற்றுக்காலத்தின் முற்பகுதியில் மாந்தை இலங்கையிலே பெருந்துறைமுகமாக இருந்தது. கிழக்கு மேற்கு உலக மக்கள் பண்டமாற்று வியாபாரம் செய்யும் மத்திய சந்தையாக மாந்தை விளங்கியது.
ஏழாலைப்பண்டிதர் மு. கந்தையா அவர்கள் எழுதிய திருக்கேதீஸ்வரமானியம் என்ற செய்யுள் இலக்கியம் திருக்கேதீஸ்வர ஆலயம் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது. வறுத்தலை விளான் பண்டிதர் கந்தையா ஆச்சாரியார் திருக்கேதீஸ்வரம் பற்றியும் மாந்தை சமுதாய

Page 89
170
அமைப்பும் பற்றியும் தமிழர் தாலி பற்றியும் பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
அரசியல் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் நிறைந்த காலப்பகுதியில் பெரிய கோயில்கள் கட்டப்படுவது வரலாறு கண்ட உண்மை. செந்தமிழ் மன்னர் சிங்காசனத்திலிருந்து செங்கோல்ஒச்சிய காலத்திலேயே தமிழ் நாட்டில் மாபெருங்கோபுரங்களும், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பல கோயில்களும் கட்டப்பட்டன. பெருங்காப்பியங்களும் சோழர் காலத்திலே தான் தோற்றம் பெற்றன கிழக்கு உலகத்திலும் பல சைவக் கோயில்களும் கட்டப்பட்டன. செல்வச் செழிப்பை இச் செயல் எடுத்துக் காட்டுவதாகும்.
இவ்வரலாற்று நியதி திருக்கேதீஸ்வரம் கோயில்
நிர்மாணத்தையும் மாந்தை அரசின் சிறப்பையும் அக்காலச் சமுதாயச் செழிப்பையும் தொடர்புறுத்துகிறது.
- போர்த்துகீசராலும், ஒல்லாந்தராலும் இடித்துத் தள்ளப்பட்ட திருககேதீஸ்வர ஆலயம் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நித்திய, நைமித்திய கிரிகைகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
மாந்தை, இராட்சியத்தின் தலைநகரம் இருந்த காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த கம்மாளர் சமுதாயம் மிகவும் செல்வந்தர்களாகவும்,வல்லமை உள்ளவர்களாகவும், ஏற்றுமதிஇறக்குமதியாளர்களாகவும் இருந்தார்கள், கம்மாளர் பரம்பரையைச் சேர்ந்த துவட்டா மன்னனே திருக் கேதீஸ்வர ஆலயத்தை முதன் முதலில் கட்டி னான் என்று சான்றுகள் பகருகின்றன. இன்றும் துவட்டாபெயரில் திருக்கேதீஸ்வரத்தில் மடம் ஒன்று இருக்கிறது.

171
இவன் விஸ்வப்பிரம குலத்தவனான மயன் என்பவனின் வழித்தோன்றல் ஆவான்.ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் வியாபாரப் பொருட்களும் மாந்தை துறைமுகமாக இருந்த காலத்தில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. புறநானூறு இதைப் பற்றிக் கூறுகிறது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது முஸ்லீம்களே கணிசமான அளவு வாழ்கின்றார்கள். தமிழ் மக்களில் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் கூடிய பகுதி ஆவார்.
வவுனியா மாவட்ட வாழ்க்கை காட்டுப் பிரதேசங்கள் பற்றியும் குளங்ககளைச் சேர்ந்த குடியுருப்புகள் பற்றியும், வயல் நிலங்களைப் பற்றியும் படிக்கப் பெரிதும் உதவியது. எஸ். எம், ஈ, யோசப், சுந்திரலிங்கபம் ஆறுமுகம் போன்ற ஆசிரியர்கள் இக் காலப்பகுதியில் மிகுந்த உதவியாக இருந்தார்கள்.
இலங்கைக் கல்வி முறையிலே மாற்றங்கள் செய்யப்பட்டன. எல்லாப் பாடசாலைகளும் அரசாங்கத்தினால் சுவீ கரிக்கப்பட்டன. இலவச பாட நூல்களும் வழங்கப்பட்டன. வளர்ச்சி அடைந்து வரும் நாட்டில் இந்த மாதிரியான கல்வி மாற்றம் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. சகல இன மக்களும் ஏழை, பணக்காரர் எல்லோருமே கல்வி அறிவு பெற முடிந்தது எழுதத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
ஆசிரியர்களும் சலுகைகள் பெற்றனர். சகல ஆசிரியர்களும் அரசாங்க உத்தியோகத்தர்களாகக் கணிக்கப்பட்டார்கள்.
யாழ்ப்பாணப்பகுதியில் அரசாங்க பாடசலைகள் குறைவு தனியார் பாடசாலைகள் தான் அதிகம். அரசாங்கத்தால் பாடசாலைகள் சுவிகரிக்கப்பட்ட பின் எனது வீட்டுக்கு அண்மையில் சேவையாற்ற முடிந்தது. இதனால் திரும்பவும்

Page 90
172
யாழ்ப்பாணப்பகுதியில் சேவையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
யான் சேவையில் இருந்து கொண்டே B.A. பட்டதாரிப்பரீட்சையில் சித்தியடைந்தேன். இவ்வாறு சித்தியடையவர்களுக்குச் சேவை மூப்பைப் பார்த்துப் படி உயர்வுடன் சம்பளம் வழங்கம் முறை திடீர் என்று நீக்கப்பட்டது. ஆயினும் இலங்கை பாடசலைகளின் அதிபர்கள் தரத்திற்கான தேர்வில் யான் தெர்வு செய்யப்பட்டேன். இதனால் எனது உண்மையான விருப்பத்திற்கு மாறாக இந்தச் சேவைக்குத் தள்ளப் பட்டேன்.
ஆசிரியத் தொழில் மகிழ்ச்சிகரமானது. சாதாரண மனிதர்களுடனும்படித்தவர்களுடனம், அறிஞர்களுடனும் கலந்துநெருங்கிப் பழகத் தக்கது. எதிர்காலச் சந்ததியை உருவாக்கத்தக்கது. தினமும்படிக்கவும், வாசிக்கவும். எழுதவும், ஆராய்ந்து அறியவும் வாய்ப்பைத் தருவது, கற்றறிந்த ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலோ மேடையிலோ நிற்கும் போது அவர் வாய்ச் சொற்கள் சரளமாக ஒடிக்கொண்டு இருக்கும். சொற்கள் பசுமரத்தானிபோல் மாணவர் உள்ளத்தில் பதியும். நல்லாசிரியனாகவும் சொற்பஞ்சம் அறிவுப் பஞ்சம் இல்லாதவராகவும் இருந்தால் அந்தத் தொழில் சர்க்கரைப்பந்தலில் பொழிந்த தேன் மாரிநாவில் பட்டது போல் இருக்கும் அதிபர் வேலையை அப்படிச் சொல்ல முடியாது.
உரும்பராய், புன்னாலைக் கட்டுவன் ஊரெழுவில் உள்ள பாடசாலைகளில் அதிபராக வேலை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. புன்னாலைக் கட்டுவன் மகா வித்தியாலத்தில் திரு மு. சின்னையா பிரதி அதிபராகக் கடமையாற்றினார். திருமதிதிவ்வியராணி சிதம்பர நாதன் விஞ்ஞான

173
ஆசிரியையாகப் பணிபுரிந்தார். அவர் சகல துறைகளிலும் வல்ல ஒரு நல்லாசிரியையாவர், இலங்கைத் திறந்த வெளிப் பல்கலைக் கழகத் தி ல் உதவிப் பணிப் பாள ராக இப் போது கடடையாற்றுகிறார்.
ஊரெழு கணேசாவில் திரு சி. பாலசுப்பிரமணியம் உதவி அதிபராக இருந்தார். அவரும் குடும்பத்தினரும் நமக்குப் பல வழிகளிலும் உதவியாக இருந்தார்கள். ஊரெழு கணேச வித்தியாசாலைக்குப் போவதற்கான ஒழுங்கையும் செய்தவர் அவரே.
1982 யூன் 19 ஆம் திகதி முதல் சேவையில் இருந்து இளைப்பாறினேன். மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு உலக நாடுகளுக்குச் சுற்றுலா போகின்ற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. சிங்கப்பூர் கிழக்கு உலகத்தின் பொன்வீடு. மலேசியாவும் கிழக்கேயுள்ள செழிப்பான நாடுகளில் ஒன்று இரண்டு நாடுகளலும் தமிழுக்கு உத்தியோக மொழிஅந்தஸ்து உண்டு. எந்த அலுவலகத்திலும் தமிழிலே கருமங்கள் செய்யலாம். பெயர்ப்பலகைகளும், விளம்பரப்பலகைகளும் தமிழில் கிடைக்கும். வாடகை வண்டிகளில் “ மேலதிக பொதிகளுக்கு 10 சதம் அறவிடப்படும்” என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும். உணவு விடுதிகளில் “இலைச் சாப்பாடு இங்கே கிடைக்கும்” என்றும் எழுதப்பட்டுருக்கும்.
“இவ் உப அஞ்சல் அலுவலகம் உதவி அமைச்சர் தேவர் நாயர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது”என்ற தமிழைக்கூட அங்கு பார்த்தேன்.
இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் காண முடியாத அழகான தமிழ்ச் சொற்களின் பிரயோகத்தைச் சிங்கப்பூர் மலேசியாவில்

Page 91
174
காணலாம். மயிர்புனை கூடம் மதுபாணன் கடை, சைவ உணவு திருக்கோயில், அஞ்சல் அலுவலகம் இப்படியான பல சொற்களையும் சொற்றொடர்களையும் காணலாம்.
மலேசியா நாட்டின் தெற்கே இருந்து வடக்கே புகை வண்டியிலோ மோட்டார் வண்டியிலே பிரயாணம் செய்தால் ஏதாவது ஒரு கோயில் முடி அல்லது கோபுரம் கண்ணுக்குத் தென்பட்டுக் கொண்டே இருக்கும்.
வடக்கு மலேசியாவில் “பினாங்” என்ற தீவு இருக்கிறது. அங்கேயுள்ள மலை உச்சியில் அழகான ஒரு முருகன் கோயில் இருக்கிறது. “பினாங்” மாபெரும் சுற்றுலா மைதானம். மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அண்மையில் * பத்துமலை” என்ற ஒரு மலைக் குகை உண்டு. அங்கேயும் அழகான முருகன்கோயில் இருக்கிறது. சமய வேறுபாடின்றி எல்லாரும் இக் கோவிலில் காவடி எடுப்பார்கள்.
சிங்கப்பூரிலும் பல சைவ சமய கோவில்கள் இருக்கின்றன. கோயில்கள் மிக அழகானவை. குறிக்கப்பட்ட நேரத்தில் நித்திய நைமித்திய கிரிகைகள் நடைபெறும்.
சிங்கப்பூர் ஒரு சிறிய தீவாக இருந்தாலும் செல்வம் கொழிக்கும் நாடு. ஏற்றுமதி, இறக்குமதியாளருக்கு மிகவும் வாய்ப்பாகச் சிங்கப்பூர்த் துறைமுகம் அமைந்திருக்கின்றது. மலேசியாசிங்கப்பூரில் பிரயாணம் செய்வதற்கென்று என் மைத்துனன் மகா தேவன் ஒரு ஹொண்டாக்காரையும் தந்து எனது அடுத்த மைத்துனரும் அவரின் தம்பியுமான சிவலிங்கதைச் சாரதியுமாகத் தந்தார். அவரும் சில சமயங்களில் எங்களுடன் வருவார். வேறு சில சந்தர்ப்பங்களில் மைத்துணி திருமதிதுரைசிங்கமும், சுசீலாவும் வருவார்கள். ஈப்போ, பினாங்

175
மலாக்கா, தஞ்சமாலிம், பகான், சிறம்பான், கிளாவ், போட்டீக்சன், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கெல்லாம் மோட்டார் வண்டியிலேயே சென்றோம். எனது மாமன் செல்லையா நீண்ட காலமாக வேலை செய்ததும், வசித்ததும் போட்டிக்சனே அது ஒரு கடற்கரை வாசஸ்தலமாகும்.
1985 இல் பாரியாருடன் இலண்டன் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இலண்டனைப் பற்றியும் கிறீன்விச் நெடுங்கோடு பற்றியும் புலியியலில் படித்த காலத்தில் இலண்டளைப்பார்ப்போம் என்றுக் கனவுகூட கண்டறியேன். ஆனால் அது உண்மையாகி விட்டது.
இலண்டனிலும், இங்கிலாந்திலும் உள்ள வாழ்க்கை முறையும் வீடுகள், கட்டடங்கள், கடைகள் என்பவற்றின் அமைப்பும் மிகவும் வேறுபட்டது.ஒரு வீதியில் காணப்படும் வீடுகள் எல்லாம் ஏதோ ஒரு குறிக்கப்பட்ட பாணியில்தான் அமைந்திருக்கும்.ஏனைய கட்டடங்களும் அப்படியே. தெருவெல்லாம் ஒலி பெருக்கிகளின் குரலே கேளாாது. கடைகளில் விற்பனையாளர்கள் குறைவு வாங்குவோர் தேவையான பொருள்ட்களை எடுத்துக் கொண்டு வந்து சிட்டை போடு வித்துப்பணத்தைக் கொடுத்துவிட்டுப்போக வேண்டியது தான்.
கிறீன் விச் மணிக்கூட்டைப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் 85 இல் நிறைவேறியது. புவியியலில் நெடுங்கோட்டின் (0) பாகைதான் கிறீன்விச் கோடு, கிறீன்விச்சை மையமாக வைத்துக் கொண்டுதான் மேற்கு, கிழக்குப்பகுதிகளுக்குரிய நேரம் கணிக்கப் படுகிறது. கிறீன்விச் கோட்டிற்குக் கிழக்குப் பக்கமாக ஒவ்வொரு பாகைக்கும் 4 நிமிடம் கூட்டப்படும்.

Page 92
176
கிறீன்விச்சிற்கு மேற்குப் பக்கமாக ஒவ்வொரு பாகைக்கும் 4 நிமிடம் கழித்துக் கணக்கிடப்படும்.
இலண்டனில் உள்ள மிருகக்காட்சிச் சாலை புது மாதிரியானது. கொடிய மிருகங்கள் எல்லாம் இஷ்டம் போல் நடமாடும். காவலர் பலமான இரும்புக் கூடுகளுக்குள் துவக்குடன் நிற்பர்ர்கள் பார்வையாளர்கள் செல்லும் மோட்டார் வண்டியின் கதவை இறுக்கி அடைத்து விட்டு கண்ணாடிக்கு ஊடாகப் பார்த்துக் கொண்டு போவார்கள்.
உலகத்தில் உள்ள பெரும் தலைவர்களின் உருவங்களை அவர்களின் அளவிலும், நிறத்திலும் அழகாகச் செய்து அவர்கள் தானே என்று ஐயம் ஏற்படத்தக்கதாக ஒரு இடத்தில் அமைந்திருக்கிறார்கள். இந்த இடத்திற்கு பெயர்மடம்ரூஸ்சோ.
இலண்டனில் சைவக் கோயில்களும் உண்டு முருகன் கோயில், பிள்ளையார் கோயில் என்பன சிறப்பாக அமைந்திருக்கின்றன. இலண்டனில் இருந்து ஏறக்குறைய 250 மைல்களுக்கு அப்பால் உள்ள வேல்ஸ் இல் முருகன் கோயில் இருக்கிறது. அதிலே பல வேல்ஸ் மக்கள் அடியார்களாகத் தொண்டாற்றுகிறார்கள். கோயிலுக்குச் செல்லுகின்ற அடியார்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்படும்.
இலண்டன் நகரை விட்டு அப்பால் சென்றால் பச்சைப்பசேல் என்ற கோதுமை வயல்கள் தெரியும்.பல மைல் நீளமான இவ்வயல்கள் பச்சைக்கடல் போல் இருக்கும். குளிர் காலத்தில் பனிக்கட்டிகளும் “ தொம் தொம்” என்று விழும். சில சமயங்களில் பனிப் படலம் வீதியை மூடியிருக்கும். கோடை காலத்தில் வீசுகினற் அனலும் மிகக் கடுமையாக இருக்கும்
ஏழு, எட்டு மணித்தியாலங்களாக கண்ட காட்சிகள்

177
அரைகுறையாகவும் முழுமையாகவும் கண்ணுக்குப் புலப்பட்டன. சில சமயங்களில் புலம்பலும் நடந்தி ருக்கலாம். நிகழ்ச்சிகள் திரையில் ஒடியிருக்கலாம். திருப்பி நினைத்துப்பார்த்தால், அப்பாடா இவ்வளவு காட்சிகளையும் கண்டேனே என்று ஏங்க வேண்டியதாயிற்று. மறுகணம் இவ்வளவு சம்பவங்களும் திரும்ப நினைவூட்டப்பட்டதே என்று ஒருவகைத் தெம்பும் பிறந்தது.
சிறு நீர் கழிப்பதற்காக எழுந்து வெளியே சென்றேன். விடிவெள்ளி தெரிந்தது என்ற ஒரு பெருமூச்சு.

Page 93

179
15. கூடாரம் பேசுகிறது
கண்விழித்தது. முதல் இரவு கழிந்தது. பொழுது புலர்ந்தது. தங்கள் கடமைகளுக்குச் சென்று திரும்பிய தேனீக்கள் நித்திரை விட்டு எழவில்லை. தம்பி,தம்பி என்று ஒரு குரல் கேட்டது. பக்கத்துவீ ட்டுக்கார அம்மா ஒரு பேணி தேனிர் கொண்டு வந்து வைத்துக் கொண்டு கூப்பிட்டிருக்கிறா. நேரம் ஆறு மணி இருக்கும். துள்ளு எழுப்பிப்போனான்.” பெரியய்ாவுக்குத் தேனீர்”என்ற சத்தம் கேட்டது. கூடாரத்தை மேற்பார்வை செய்ய பெரியவர் ஒருவர் வந்திருக்கிறார். என அந்த அம்மா நினைத்திருக்கிறார் போலும். பையன்கள் எழுப்பித்தேனீர் தயார் செய்ய இரண்டு, மூன்று மணித்தியாலம் செல்லும் அதற்கிடையில் பெரியவருக்குத் தேனீர் கொடுப்போம் என்ற எண்ணம் வந்து விட்டது. முன்பின் தெரியாத அந்த அம்மையாரின் பண் பாடுதான் என்ன?
நேரம் எட்டு மணியாயிற்று. இடியப்பப் பார்ச்சலும், சம்பலும், தேனீர்ச்சாயமும் வந்தது. நானும் துள்ளுவுமாகச் சாப்பிட்டோம் வீரர்கள் வந்து குசலம் விசாரிப்பார்கள்.பிட்டுச் சாப்பிட்ட பூனை போல தறு புறு என்று விழித்துக் கொண்டிருப்பேன்.
பக்கத்து அறையில் சில போர்க்கருவிகள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சத் தூரத்தில் இருந்த படியே அதைப்பார்ப்பேன். கிட்டப்போகப்பயம். தொழிற் சாலையில் செய்யப்படும் போர்க்கருவிளைக் கொண்டு வந்து சேகரித்து வைக்கும் இடமும் இது தான் என்று பின்னர் தெரிந்தது. மதிய

Page 94
180
போசனத்துக்குரிய பார்சலும் வந்தது. மாலைத் தேனீரும் கிடைத்தது. இரவு தோசைப்பார்சலும் வந்தது. சாப்பிட்டாயிற்று.
இரவு எட்டு மணியாயிற்று. இடைநிலைத் தரத்திலுள்ள இரண்டு வீரர்கள் நான் இருந்த கட்டிலுக்கருகில் வந்தார்கள். ஒருவர் கட்டிலிலேயே இருந்தார். மற்றவர் ஒரு பெட்டிக்கு மேல் இருந்தார். ஒருவர் நெட்டையர். மற்றவர் கட்டையர். இருபத்திரண்டு, இருபத்திமூன்று வயது இருக்கும். கட்டையர் விறுவிறுப்பாக சில கேள்விக்கணை தொடுத்தார்.நெட்டையர்அமைதியாகவும் ஆறுதலாகவும் சில வினாக்களை வினாவினார்.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
ஐந்து
அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
லண்டன்
நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறீர்கள்?
பணமாக இல்லை. தங்கமாகக் கொடுத்திருக்கிறேன்.
ஏன் ஆளுக்கு ஐந்தாக இருபத்தைந்து கொடுத்தால் என்ன?
அவர்களில் நால்வர் விவாகஞ் செய்து தனித்தனி குடித்தனம் நடத்துகிறார்கள்.
நான் எப்படிப் பணம் கொடுப்பது?
நீங்கள் சொன்னால் தருவார்கள் தானே.
உங்களுடைய பெற்றோர் சொன்னவாறு நீங்கள் செய்தீர்களா? அவர்களைக் கேட்டுத்தான் இந்த பணியில்

181
சேர்ந்தீர்களா?நெட்டையர் கொஞ்சம் யோசித்தார். சரி சரி இப்படிக் கேள்வி வேண்டாம் என்று மற்றவருக்குச் சைகை காட்டினார். அவரோ தொடர்கிறார். நீங்கள் ஐ.தே. கட்சியில் உறுப்பினராமே? இல்லை. பல ஐ.தே. கட்சி அமைச்சர்களைத் தெரியுமாமே? தெரிந்தால் என்ன? அவர்களுடன் எப்போது பழகினிர்கள்? நீங்கள் பிறக்க முன்பே பழகினேன். வேறு எந்தக் கட்சி அமைச்சர்களைத் தெரியும்? சுதந்திரக் கட்சி அமைச்சர்களைத் தெரியும். இவர்களை எப்படி உங்களுக்குத் தெரியும்? சிங்களப் பகுதிகளில் பத்து வருடங்களுக்கு மேல் படிப்பித்ததாலும், ஆசிரிய சங்கக் கடமைகளாலும் தெரிய வேண்டி வந்தது.
நீங்கள் தமிழ் காங்கிரசில் உறுப்பினராக இருந்தீர்களா? இல்லை. அப்ப. எந்தக் கட்சிக்காக நீங்கள் உழைத்தீர்கள்? தமிழரசுக் கட்சிக்காக உழைத்தேன். தமிழர் கூட்டணியை ஆதரித்தேன்.
தமிழரசுக் கட்சி பற்றிய உங்கள் கருத்தென்ன? அந்தக் காலகட்டத்தில் ஏனைய தமிழ் கட்சிகளிலும் பார்க்க 1.அவர்கள் பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீர்வு காண

Page 95
182
முனைந்தமை 11.தமிழர் பிரதேசங்களை ஒன்றிணைக்க முயன்றமை.
இப்போதும் சில யூ.என்.பி காரர்களுடன் தொடர்பாக இருக்கிறீர்களாமே?
ஆம். நாற்பது, ஐம்பது வருஷமாகப் பழகினவர்களைக் கண்டால்மூஞ்சியை திருப்பி வைத்துக் கொண்டு போகலாமா? உங்களுக்கு யான் தப்புச் செய்திருந்தால், அல்லது உங்களுடைய போராட்டத்துடன் தொடர்புடைய விஷயமேதும் இருந்தால் கேள். மற்றபடி நீயே பிறக்க முந்தி நடந்த சங்கதிகளைக் கேட்டு என்ன பிரயோசனம்.
கட்டையர் கேட்டுக் கொண்டு போன வினாக்களை அவதானித்த நெட்டையர் அவரை கடுந்தொனியில் நிறுத்து போதும் என்று எச்சரித்தார்.
அப்போதே எனக்கு இரண்டு சம்பவம் புரிந்தது. 1. கட்டையரை விட நெட்டையர் உயர்ந்த தர வீரர் II. கட்டையர் என்னைக் கூடாரத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்த பிரதேசப் பொறுப்பாளரின் கையாள் என்பது.
யான் எப்படியும் அவர்களால் போடப்படும் ஒருவன் தானே ஆனபடியால் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லி விடுவோம் என்ற ஒரு முரட்டுத் துணிவு ஏற்பட்டது. அணையும் விளக்குக் கொஞ்சம் வேகமாகச் சுடர்விடும். பயம் அதிகரித்து விட்டால் பாய முடியாத வேலியையும் பாய்ந்து விடுவான். தாண்ட முடியாத கிணற்றையும் தாண்டி விடுவான். இதுதான் என் நிலை.
கூடாரத்தில் உள்ள படுக்கை வசதி, உணவு வசதி,

183
உடுப்பு வசதி என்பன பற்றி நெட்டையர் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் விசாரிப்பார். குடும்பச் சூழ்நிலை பற்றியும், எனது வயது, தொழில், பிள்ளைகளின் தொழில் என்பன பற்றியும் விசாரித்து அறிந்தார். இடைக்கிடை மேலும் கீழுமாக தலையை அசைத்துக் கொள்ளுவார். உங்களுக்கு ஏதும் தேவை ஏற்பட்டால் இந்தக் கூடாரத்துக்குப் பொறுப்பாளியைக் கேளுங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
இந்தக் கூடாரத்தில் இருந்த இருபத்து மூன்று நாட்களில் செய்யப்பட்ட விசாரணை இது ஒன்றுதான். நாட்கள் ஒடத் தொடங்கின. பொழுதோ போகுதில்லை. முன்னுக்கு சண்செட். அதன் கீழ் ஒரு குந்து என்னுடைய பரிதாப நிலையைப் பார்த்த கூடாரப் பொறுப்பாளி சில நூல்களைக் கொண்டு வந்து எனக்குத் தந்தார். சேகுவரா. கியூபாப்புரட்சி, பிடல்கஸ்ரோ, சீனப்புரட்சி, மாசேதுங், கோசிமென், ஸ்ராலின், மார்க்சிசம் இப்படிப் பல நூல்கள். இவை யான் முன்னால் படித்தவையே. சேகுவரா பற்றிய நூலைத்திரும்பவும் படித்து விபரத்தை மனதில் பதித்துக் கொண்டேன்.
சில வீரர்கள் இந்த நூல்களில் என்ன இருக்கிறது. எங்களுக்கும் சொல்லுங்கள் என்று கேட்பார்கள் முன்பே அவற்றைப் படித்த ஞாபகத்தில் இருந்து சில சம்பவங்களைச் சொல்லுவேன். என்ன ஐயா. இவ்வளவு விரைவாகப் படித்து விட்டீர்கள் என்று சொல்லி ஆச்சரியப்படுவார்கள்.
இரண்டு, மூன்று நாட்கள் செல்ல மனோநிலையில் பெரிய மாற்றம். என்ன செய்வது என்பதில் திக்குத்திசை தெரியவில்லை. ஏதாவது எழுதலாம் என்றால் பேனா, கடதாசி

Page 96
184
இல்லை. என் தெய்வம் முருகனைப் பற்றியும் எழுத மனம் வரவில்லை. இவன் ஏன் இப்படிச் செய்தான்? இங்கே ஏன் கொண்டு வந்தான்? இவனைப் பற்றி யான் ஏன் பாட வேண்டும்? என்ற அறியாமையின் வளர்ச்சி.
சரி இவனைப் பாடாவிட்டாலும் இவனைப் பெற்ற தாயைக் கேட்போம். தாய் சொன்னால் மகன் கேட்பான் தானே. அவளைப் பாடிப்பார்ப்போம். என்றாலும் எனது ஆணவத்துக்கும் அந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கும் இடையில் கடும் போட்டி, எது எவ்வாறாயினும் முதலில் அன்னையைப் பாடுவோம் என்ற துணிவு பிறந்தது. சிறைக்கு வெளியே போய் சிந்திப்போம் என்ற துணிவும் ஏற்பட்டது. சிறுவயதிலே என் பேரனும் அம்மாவும் தோட்டம் செய்த கிளானைப் பதியில் எழுந்தருளிய பர்வதப்பத்தினி என்று சொல்லப்பட்ட மனோன்மணி அம்பாள் பெயரில் அந்தாதி மாலை பாடத் தொடங்கினேன். சோறு, இடியப்பம், சாப்பாடு கட்டிக் கொண்டு வரும் கடதாசிகள் தான் எழுதக் கிடைத்தன. பேனா, பென்சிலும் கிடைத்தது. அந்த வெளிக் குந்தில் இருந்து எழுதிக் கொண்டிருப்பேன். பார்ப்பவர்களுக்கு நான் சிறைப்பட்டிருப்பதாகத் தெரியவே தெரியாது.
பாடுந் தொழில் நடந்து கொண்டிருக்கும். அதே வேளை, எனது கூடார வாழ்க்கையைப் பற்றியும் இடைக்கிடை எழுதுவேன். வீரர்கள் என்ன எழுதுகிறேன் என்பதைப் படித்துப் பார்ப்பார்கள். இந்தப் புத்தகத்தில் எங்களுடைய பெயரும் இடம் பெறுமா என்று வினவுவார்கள். ஆம் என்ற விடையைக் கேட்டு மகிழ்வார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல வீரர்களுக்கு என்மீது மிகுந்த

185
அன்பும், அனுதாபமும் ஏற்பட்டது. ஆயுதசாலையின் திறப்பையே என்னிடம் தந்து விட்டுச் சென்று விடுவார்கள். என்னை யாராவது பார்க்க வந்தால் அவர்களுக்கு அந்த ஆயுதங்களை எல்லாம் காட்டுவார்கள். பார்ப்பவர் சிலர் நடுங்குவார்கள்.
நாலு , ஐந்து நாட்கள் கழித்து என்னை ஏற்றி இறக்கத் துணிந்தவர் ஒரு கொக்கோ கோலாப் போத்தலுடன் வந்தார். நான் நினைத்தேன் இன்றைக்கு வேள்விதான். பக்கத்துக் கதவில் அடித்து போத்தலின் மூடியைத் திறந்தார். அதைக் குடிக்கும்படி நீட்டினார். மறுத்தேன். “ஏன் நஞ்சு போட்டுத் தந்து விடுவேன் என்று பயப்படுகிறீர்களா?
ஆம், ஏன் போட மாட்டாய்? அப்படி எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். உன்னுடைய தலைவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை ஆனால் நீ செய்வாய். இல்லை இல்லை நானும் அப்படிச் செய்ய மாட்டேன்.
ஒரு 15 நிமிட வாதாட்டம். அப்படியானால் நீ முதலில் குடி, அவர் அரைவாசியை பருகிவிட்டு மிகுதியை நானும் குடித்தேன். வயிறும் குளிர்ந்தது. உள்ளமும் குளிர்ந்தது.
பலதும் பத்துமாக நீண்ட நேர உரையாடல். அதுவும் இதுவும் பேசினோம். பல புதினங்கள் வெளிவந்தன.
நீ ஏன் என்னை இங்கே கொண்டு வந்தாய்?
அது மேலிடத்து உத்தரவு.
எவர் அந்த மேலிடம்?
விடை வரவில்லை.
அப்படியான இரகசியங்கள் சொல்வதில்லை. மேலிடத்து உத்தரவு ஒன்றும் இல்லை என்று நான் அறிகிறேன். உனது

Page 97
186
கீழ்த்தரமான செயல் புனிதமான காரியம் செய்ய வந்திருக்கின்ற நல்லவர்களை ஊறுபடுத்துகிறது. மெளனம் பதிலாக இந்தச் செய்தி பற்றி என் மனைவி மேலிடத்திற்கு எழுதிக் கொடுத்த விண்ணப்பத்தைக் காட்டினார்.
இந்த விண்ணப்பம் என் மனைவியின் உடையதே. இது எப்படி உனக்கு வந்தது? மேலிடம் அனுப்பி யிருக்கிறது.
இல்லை, இது மேலிடத்திற்குப் போகவில்லை. உனது கையாட்கள் இடைவழியில் வைத்து, மேலிடத்திற்கு கொடுப்பதாக வாங்கி அங்கே கொடுக்காமல் உனக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விண்ணப்பம் மேலிடத்திற்குப் போயிருந்தால் நீ இப்போது இருட்டறையில் இருப்பாய். முன்னர் ஒரு வாரம் இருட்டறையில் இருந்ததை மறந்து விட்டாயா?
நான் காரசாரமாகக் கதைத்தது அவருக்கு மலைப்பாக இருந்தது. அதனைக் கேட்டுக் கொண்டு நின்ற வீரர்கள் திகைத்துப் போனார்கள். அந்தக் காலத்தில் அவர்களுடன் இப்படிக் கதைப்பவர்கள் மிகக் குறைவு. அக்கம் பக்கத்தில் நின்றவர்களுக்கு மேலும் மலைப்பு.
நீங்கள் என்னுடைய குருதானே. விரும்பிய வண்ணம் சொல்லுங்கள் நான் கேட்பேன். நீ ஏன் என்னை இங்கே கொண்டு வந்தாய்? அது மேலிடத்து உத்தரவு என்று முன்பே சொன்னேனே.
பொறுப்பும் வீரமும் உள்ள உன் தலைவர்களில் பலரை நீ அறிவதற்கு முன்பே எனக்கு தெரியும் என்பது உனக்கு தெரியுமா? அப்படியென்றால் நீ பொறுப்பாக உள்ள கூடாரத்திற்குக் கொண்டு போயிருக்கலாமே? விடையில்லை.

187
எல்லாவற்றையும் விட்டு நியாயம் இருந்தால் நீ சொல்லு, இந்தச் சங்கதி பற்றிச் சொல்லுவதற்கு எனது மனைவி உங்கள் அலுவலகம் சென்றபோது உன் குட்டித் தலைவர் ஒருவரைப் பார்க்க உன்னுடைய கையாட்கள் விடவில்லையாமே.
அவர் அங்கே இல்லாமல் இருக்கலாம். இலலை, அவர் விறாந்தையின் சாரத்துடன் நின்றவர்.
மெளனம்,
சரி, அது போகட்டும். கொண்டு வந்த காரணத்தை சொல்லு,
நாங்கள் பலிக்கடாக்கள் தானே. இன்னும் எத்தனை நாட்களுக்கோ தெரியாது. அதற்கிடையில் இப்ப்டியாவது ஒரு கருமத்தைச் செய்வோம்.
அதற்கு நான் தான் வசதியாக அகப்பட்டேனா? ஆம், ஊரிலே உள்ள பெரிய மனிதனைத்தானே இவ்வாறு செய்ய வேண்டும். அப்போதுதானே நாலு பேருக்குத் தெரியும். ஏன் என்னைவிடப் பெரியவர்கள் இல்லையா? யார் இருக்கிறார்கள்? நான் எப்படி பெரியவன். ஐம்பது வருடமாக எங்கள் கிராமத்தில் ஒரு சிற்றரசனாக இருக்கிறீர்கள். நீங்களும் உங்களது சகோதரர்களும் நல்ல அந்தஸ்தில் இருக்கிறீர்கள். உங்கள் இடத்தில் போதிய படிப்பு, அதிகாரம், அரசியல் செல்வாக்கு என்பன இருக்கின்றன. நிறைய பணம் இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற்று நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இப்படி வேறு யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம். இப்போது சாதாரண

Page 98
188
காலமாக இருந்தால் என் கதி என்ன என்பது எனக்குப் புரியும்.
சரி வேறு என்ன? நீங்கள் வீரகத்தி விநாயகர் தோத்திரம் நூல் வெளியீட்டு விழா மிகவும் விமரிசையாக கொண் டாடினிர்களே. உங்களைப் பற்றிக் குறை சொல்லித் திரிந்தவர்களையும் அழைத் திருந்தீர்கள். நானும் ஒருத்தன் ஒரு அந்தஸ்தில் ஊரிலே இருக்கிறேன் என்று நினைத்து என்னை அழைத்தீர்களா?
உன்னிலும் பார்க்க அதிகாரம் மிக்க ஊரவனான அரசியல் பொறுப்பாளனையே அழைக்கவில்லை. நீ எம்மட்டு? கவிதையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருடைய தகப்பனை அழைத்திருந்தீர்களே. ஆம், அவர் ஒரு ஆசிரியன், என்னுடைய நண்பன். அந்த இடத்தை உன்னுடைய தகப்பனுக்குக் கொடுக்க முடியுமா?
என்னுடைய தகப்பனாரை குடிகாரன் என்று ஏசினீர்களாமே?
அவ்வாறு சொல்லி இருக்கலாம். நாங்கள் எல்லாம் காட்டு வைரவர் கோயிலுக்கு வளர்க்கிற கிடாக்கள் என்று உங்கள் வீட்டிலே திட்டினார்களே.
கோபம் வந்தால்- மனம் வருந்தினால் கடுமையான வார்த்தைகளும் வருவது இயல்புதானே.
இந்த நேரம் பார்த்துச் சிவபூசைக்குள் புகுந்த கரடி போல தம்பி நடராஜன் வந்தான். அவரும் இவருமாகப் பேசத் தொடங்கினார்கள். நீண்ட நேரம் பேசினார்கள். நான் விலகிக் கொண்டேன்.

189
நாம் இருவரும் கதைத்த தொனியும் நடந்து கொண்ட விதமும், கூடாரத் தலைவனுக்கும் மற்றையோருக்கும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்தக் காலத்தில் அவர்களுடன் எதிர்த்துக் கதைப்பவர்கள் - வாதிடுபவர்கள் கிடையாது என்பது யாவரும் அறிந்ததே. அவர் போன பின்பு கூடாரத் தலைவன் என்னை அணுகி சில வினாக்களையும் வினாவினார். சில விடயங்களும் சொன்னார்.
அவர் எனது பாடசாலை மாணவன் என்றும் 10 ஆம் வகுப்பில் ஒரு பாடம் மாத்திரம் சித்தி எய்தியவர் என்றும் வைத்தியக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர் என்றும் கூடாரத் தலைவன் அறிந்து கொண்டார்.
இவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுங்கோ. பாதுகாப்புத் தேவைப்படாது. நீங்கள் இல்லாத நேரத்திலும் கூடாரத்தை விட்டு விலகுவார் என்று நினைக்கத் தேவையில்லை. இப்படிச் சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிந்தது.
யான் சிறைப்பட்டிருந்த காலத்தில் நண்பர்கள் போல் நடித்தவர்கள் பலரும், உறவினர்கள் பலரும் என்னை வந்து பார்க்கப் பயப்பட்டார்கள். சிலர் இத்துடன் இவருடைய சரித்திரம் சரிதானே. போய் பார்த்தும் பயனில்லை என்று நினைத்திருக்கலாம். ஒரு சிலர் பல மாதங்களாக ஒரு முறையாவது என்னை ஏற்றி இறக்க வேண்டுமென்று இந்தக் குட்டித் தலைவனுக்கு கோள் சொல்லியிருக்கிறார்கள் என்ற விஷயமும் உரையாடலின் போது வெளி வந்தது.
இப்படியாக உலகம் நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில்

Page 99
190
என்னைப் பார்க்க வந்த அன்பர்களையும்,நண்பர்களையும் நான் மறக்க முடியாது. இவர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டே ஆக வேண்டியுள்ளது. வே.சின்னத்துரை, க, கணநாதன், சி. சிவசுப்பிரமணியம், திருமதி கணநாதன், திருமதிS. பாலசுப்பிர மணியம், வ. அன்பழகன், அ. கணபதிப்பிள்ளை, 69. சந்திரசேகரம், வி. உதயச்சந்திரன், சங்கானை செல்லை யாவும் பிள்ளைகளும், S. சுந்தரலிங்கம் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். திருமதி சற்குணா கண்ணனும் உரிய நேரத்தில் உதவினார்கள்.
சிறைவாசத்தில் ஒருநாள் தன்னந்தனியே இருந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன். அப்போது எட்டுப் பத்து விமானங்கள் நல்லூரில் குண்டுமாறி பொழிந்தன. குண்டுகள் என் தலைக்கு மேலே போவது போலத் தெரிந்தது. நாலா திசைக்கும் சென்ற போராளிகள் கூடாரத்தை நோக்கி ஓடி வருகின்றார்கள். அமைதியாக இருந்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப் பட்டார்கள்.
கொஞ்ச நேரத்தால் சின்னத்துரை விதானையார் அவரின் பாரியார் சுட்டுக் கொடுத்த நெய்த் தோசையுடன் வருகிறார். குண்டு பொழியும் பொழுது அவர் வழியில் நின்றிருக்கிறார். கொண்டு வந்த தோசைப் பார்சலை அவிழ்த்துச் சில வீரர்களுடன் பகிர்ந்து கொண்டேன். பின்னர் அவர் வரும்பொழுது கூடுதலான எண்ணிக்கையில் தோசை கொண்டு வருவார்.
இரண்டு நூல்களும் வளர்ந்து கொண்டு போகின்றன. மனோன்மணி அந்தாதியில் எண் பத்தைந்து பாடல்கள் எழுதியாயிற்று. மாவட்டத் தளபதி நாளைக்கு கூடாரத்திற்கு

191
வருகிறார் என்ற செய்தி அடிபட்டது. கூடாரமும் வளவும், இருக்கைகள், ஆசனங்கள் என்பனவும் சுத்தம் செய்யப்பட்டன. எனது படுக்கைக்கும் புதிய விரிப்பும் போடப்பட்டது. ஆனால் வரவில்லை. என்னைச் சிறைக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்தவரின் கூடாரத்திற்குச் சென்று அவருடன் பேசிவிட்டுத் திரும்பி விட்டார் என அறிந்தேன். எனது பாரியாரின் மனு தளபதியின் கைக்குக் கிடைத்தவுடன் அவர் உடனேயே விசாரணை நடத்தத் தொடங்கி விட்டார் என்றும் அறிந்தேன். தப்புத் தவறுகளும் வழிமறிப்பு:இடைத்தடுப்பு எல்லாம் கீழ் மட்டத்திலேதான் மேலே செல்லச் செல்லப் பரிசுத்தம்.
பாரியார் அங்கும் இங்கும் ஒடித் திரிகையில் ஒரு சத்தியாக்கிரகியி டம் போய் முறையிட்டிருக்கிறா. அவன் மறுமொழி சொன்னான். மாமாவையா? நீங்கள் போய் வீட்டிலே இருங்கள். மாமி இங்கும் அங்கும் அலைய வேண்டாம். பிழை இருந்தால் அவர்கள் போடட்டும். பயப்படவேண்டாம்.
மாமியால் இதற்கு மேல் எதுவும் பேசமுடியவில்லை. மனோன்மணி அந்தாதி 35ஆம் பாடலை எட்டிப்பார்க்கிறது.
இங்கிதமாய் நிழலூட்டும் இலுப்பைமரச் சோலையிலே இசைந்தாய் தாயே பங்கமுறு வேங்கைமிகு பந்தர்க்கீழ் சிறையாகப் பயந்தேன் யானே அங்கமெலாங் குளிர்ந்தோடி அரவணைப்பார்
ஆக்கமிலா அபலை தன்னை எங்கே நீ சிறை மீட்பாய் எழுந்தருள
ஏறிலையோ ஒரு சொல் ஒதாய். (88)

Page 100
192
ஒடுகின்ற விடைதானே ஒதுதர்ம
வடிவாக ஒன்றி யோடி நாடுகின்ற கதிரவனை நண்ணிவந்தே
மீட்காயோ நலமே பேணிக் கூடுகின்ற விருப்பிலையோ கோமளமே
மீட்டெடுத்து கூட்ட வாராய் பாடுகின்ற பாவினிக்கேல் பர்வதமே
பக்த னொடு பகடி பேசேல். (89)
பேசாமல் திரிகின்ற பெருந்தெய்வம்
நீயிலையா பெம்மான் பாகாய் ஏசாத ஏச்செல்லாம் ஏசிடினும்
எம்மவர்க்காய் என்றும் பேசி மாசானார் பூச்சுக்கோ மறுவானோர்
பொட்டுக்கா மகிமை காட்டாக் காசான கண்மணியே காருண்யப்
பார்வதியே காப்ப தெப்போ, (90)
எப்பொழும் உன்னுருவே என்னுள்ளே ஊறுபொருளாய் ஏத்தல் உண்மை இப்பொழுதே வந்தென்னை இடர்காப்பாய் தனித்திருக்க இசைவான் எம்மான் முப்பொழுதும் நான் வேண்ட முன்னின்ற
மூதாட்டி முடிவில் ஏனோ அப்பாலாய்ப் போகின்றாய் அருள்கூட்டிப்
பழவினையை அகற்றுஞ் சித்தே (91)

193
இந்த நேரத்தில் ஒரு பச்சைச் கொடி காட்டப்பட்டது. அதே நேரம் எனக்கு இயற்கையாகவே உள்ள நீரழிவு நோய் சற்று அதி கரித்தது. மயக்க நிலை. கூடாரத் தலைவர். டாக்டர் சிவபாதசுதந்தரத்திடம் அழைத்துச் சென்றார். என்னை யாழ் வைத்திய சாலையில் சேர்க்கும்படி கட்டளையிட்டார்.
வைத்தியம் தொடர்ந்தது. உதவியாளனாகவும், காவலாளியாகவும் வரதன் நியமிக்கப்பட்டான். ஒரு வாரம் வைத்தியசாலையில் கழிந்தது.
வைத்திய சாலையில் E.K. நாகராசா, திருமதி நாகராசா, S. பத்மநாதன் J.P.S. சிவபால சிங்கம் J.P. ஜெயரட்ணம் ஆகியோர் வந்து விசாரிப்பார்கள்.
6ம் நாள் வைத்திய சாலையில் இருந்து வெளியேறும் அனுமதி கிடைத்தது. வைத்தியசாலை செலவுகள் முழுவதையும் என்னைக் கொண்டு சென்ற பயில்வானே கொடுத்தான். ஒரு அழகான மோட்டார் வண்டியில் என்னை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் தொடர்ந்த கதையில் இருந்து யான் சிறையில் இருந்து விடுபட இருக்கும் செய்தியை அறிந்து கொண்டேன். மறுநாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோயில் தேர். அந்தத் தேருக்கு இரண்டு பேருமாய்ப் போய் இரண்டு பக்கத்தில் வடம் பிடித்து இழுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வண்டியும் நகர்ந்து கூடாரத்திற்குச் சென்றது. அங்கே இருந்த எனது உடுப்பு, மருந்து என்பனவற்றை எடுத்துக் கொண்டேன். வண்டி மானிப்பாயை நோக்கிப்புறப்பட்டது. அன்று புதன்கிழமை வளர்ந்து நீண்டு இருந்த முடியை திருத்தி அமைத்து அழகாகக் கொண்டு போவம் என்று விரும்பிய பயில்வானின் முயற்சி நிறைவேறவில்லை. ஏறக்குறைய இரவு ஏழு அரை மணிக்கு வீடு

Page 101
194
நெருக்கமாகப் பல கதைகளையும் உண்மைகளையும் அவரிடம் இருந்து அறிந்து கொண்டேன்.
திரைமறைவில் நடைபெற்ற சதி பற்றியும் இரகசியங்கள் பற்றியும் அறிய முடிந்தது.
செருப்பாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை. முடியாக வந்தால் தான் பிரச்சினை என்று தகப்பனார் சொல்வதன் கருத்தையும் புரிந்து கொண்டேன்.

195
16. கனவுங் கலைந்தது, காரிருளும் அகன்றது
கனவு கலைந்தது. நனவு பிறந்தது. சிந்தனை தெளித்தது. அச்சம் நீங்கியது. ஆனந்தம் அரும்பியது. காலண்டரில் திகதியும் மாறியது.
மானிடப் பிறவி அரியது. கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் மிக அரிது. எவ்வாறாயினும், கற்று அறிந்து, கேட்டு அறிந்து, ஆய்ந்து அறிந்து அறிஞர்களாக வருதல மிகமிக அரிது.
அறிஞனாக - மனிதனாக வளர்ந்தவன் தேவன் ஆகிறான். அவ்வாறில்லாதவன் மனிதனாகவும் இல்லாமல் நரகர் ஆகிவிடுகிறான்.
விலங்காக இருந்தாலும் - குரங்காக வாழ்ந்தாலும் நல்ல அறிவை வளர்த்துக் கொள்கிறபோது-பண்பாட்டை வளர்த்துக் கொள்கின்றபோது குரங்கும் மனிதனுக்கப்பால் தேவன் ஆகி விடுகிறது. விலங்கு தெய்வம் ஆகி விடுகிறது. வணக்கத்திற்குரியதாகிறது.
கோபம் வருகிறபோதுநல்லவர்களின் வாயில் இருந்து வரும் மாடே, எருமையே, தேவாங்கே என்பதன் கருத்து, மனிதன் இழிநிலைக்குப் போய் விடுகிறான் என்ற வருத்தமே.
நல்ல கருமங்களைச் செய்ய வேண்டிய மனிதன் சில

Page 102
196
சமயங்களில் கெட்டவர்களும் இகழத்தக்க அளவுக்கு இழிவான கருமங்களைச் செய்கிறான். அதற்கப்பால் தான் செய்த தவறை உணரவும் மாட்டான். ஒத்துக் கொள்ளவும் மாட்டான்.
ஒரு பன்றி நாலு குட்டிகளை ஈன்று வளர்த்து வந்தது. அவை வளர்ந்து வெளியே போய் உலாவி வரத் தொடங்கின. ஒரு நாள் நாலும் நாலு திக்காகப் போய் புதுத்புது அனுபவங்களுடன் திரும்பி வந்தன.
முதலில் வந்த குட்டி தாயிடம் போய் அம்மா, அம்மா நான் இன்றைக்குக் கடற்கரைக்குப் போனேன். அழகான கடல் அலைகள் அடித்து வருவதையும் கரைக்கு வந்து திரும்பு வதையும் கண்டேன். என்ன ஆனந்தம் தெரியுமா? அந்தக் கடற்கரை மணலில் விழுந்து புரண்டால் என்ன மகிழ்ச்சி அம்மா நான் தினமும் கடற்கரைக்குப் போய் வரப் போகிறேன்.
அதற்கென்ன மகனே நீ கடற்கரைக்குப் போய் உலாவி வா! என்றது தாய்ப்பன்றி.
அம்மா நான் இன்றைக்கு பூஞ்சோலைக்குப் போனேன். என்ன அழகான வண்ண வண்ணப் பூக்கள். வண்டுகள் பாடும் சின்னச் சின்னப் பாட்டுக்கள் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன தெரியுமா? அந்தப் பூக்களிலிருந்து வெளியே வருகின்ற நறுமணம் எவ்வளவு நல்லாய் இருக்கிறது என்பது தெரியுமா? நான் ஒவ்வொரு நாளும் அந்தப் பூஞ்சோலைக்குப் போய் வரப் போகிறேன், என்றது; இரண்டாவது பன்றிக்குட்டி, அதற்கென்ன போய்வா என்றது தாய்ப்பன்றி.
மூன்றாவது குட்டி திரும்பி வந்தது. அம்மா நான் அந்த வீதி ஒரமாய் போய் நின்றேன். நல்ல அழகான வடக்கன் மாடுகள் சதங்கை ஒலியுடன் கம்பீரமாக நடந்து போகின்றன. அழகான

197
பஸ் வண்டிகள் அங்கு ஓடுகின்றன. நான் ஒவ்வொரு நாளும் போய் அவற்றைப் பார்க்கப் போகிறேன் என்றது. பஸ்சோ, காரோ வந்து மோதிக் கொள்ளாமல் ஒரமாக நின்று பார் என்றது நாட்டையும் விட்டு ஓடி விட்டான்.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு. நூற்றுக்கு நூறு திறம்பட அமைய முடியாது. இலையும் பழுப்பும் இருக்கவே செய்யும். எல்லாம் தேங்காய்கள் அல்ல. குலையில் ஒன்று இரண்டு ஒல்லிகள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க
முடியாதது.
தனி வாழ்க்கைக்கும் பொதுமைக்கும் இந்த நியதி பொருந்தும்.
ஆனால் பாரிய கருமங்களைச் செய்கின்ற பொழுது நாலுக்கு ஒன்ற என்று இருப்பதே எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறது. ஒரு குடம் பாலை ஒரு துளி விஷம் நஞ்சாக்கி விடுகிறது. அப்போது பாலே உலகத்திற்கு நஞ்சாக மாறி விடுகிறது.
தமிழர் வரலாற்றில் உடன் பிறந்த நஞ்சினால் ஏற்பட்ட வினைகளும் விளைவுகளும் அனந்தம்.
பேர் அரசுகளின் வளர்ச்சியுடன் வீழ்ச்சியும் சேர்ந்து வளர்வதென்பது, ஒரு வரலாற்று நியதியாகும். தமிழர்களின் வீழ்ச்சி இரண்டாயிரம் வருட வரலாற்றை உடையது. இதனைத் தெரிந்துதானோ என்னவோ, இலங்கைத் தமிழர் வரலாற்றைப் பற்றிய வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக் கொள்ளத்தக்க வகையில், ஒரு நூல் எழுதப்படவில்லை. சிங்கள மக்களதும், புத்த சமயத்தினதும் வரலாற்றைக் கூற மகாவம்சம் இருப்பது போலவோ சூளவம்சம், தீபவம்சம் என்று தொடர்வது போலவோ

Page 103
198
கிடையாது.புத்த சமயம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட போது, பிராமண மதம் அநுராதபுரத்தில் இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அந்தக் காலத்தில் அவர்கள் தமிழர்களின் முன்னோர்களாகத்தான் இருப்பார்கள். அதனை நிரூபிக்கக் கூடிய வரலாற்றுக் காரணிகள் அரிது. கி.மு.1ஆம், 2ஆம் நூற்றாண்டளவில் மாந்தை இராட்சிய காலத்தில் ஆண்டவர்கள் தமிழர்களே என்பதற்கு சான்று உண்டு. பெளத்தம் வந்த காலத்தில் அநுராத புரத்தில் இருந்தவர்களும் ஆண்டவர்களும் தமிழர்களே.
ஆரியரின் பரவல் காலத்தில் இலங்கையை அரசாண்ட இராவணன் சைவன் - சிவபக்தன், என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால் அவன் ஒரு தமிழன் என்பதை ஏற்றுக் கொள்ளச் சிலர் தயங்குகிறார்கள். தமிழ்ச் சாதியை, அன்று தொடக்கம்பிரித்து வைத்துத்தான் பிறர் கருமம் பார்க்கிறார்கள். இந்த இனத்திடம் உள்ள ஆற்றலும், துணிவும் மற்றவர்களின் நயவஞ்சகத்தில் மாட்டித் தவிக்கிறது.
இராம, இராவண யுத்தத்தில் விபீடணன் வேறு படுத்தப்பட்டான். (இன்றும் அப்படியே) தென்நாட்டு திராவிட மக்களையே குரங்குப் பட்டம் சூட்டி, சைவத்திற்கும் தமிழுக்கும் எதிரான போர் நடாத்தப்பட்டது. தமிழனைக் கொண்டே தமிழன் அழிக்கப்ட்டான். சிவசமயத்தவனைக் கருவியாகக் கொண்டே சிவசமயத்தவன் அழிக்கப்பட்டான். சைவ சமய அழிப்பு விளையாட்டும் தமிழர் அழிப்பும் இன்றும் பல வடிவங்களில் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
தமிழர் வரலாற்றை எழுதி வைக்காத குற்றத்திற்கு அன்று தொடக்கம் இன்றுவரை உள்ள ஒவ்வொரு தமிழனும்

199
பொறுப்பாவான்.
இன்று கூட விடிவெள்ளிகள் உதயமாகும்போது உள்காரணிகளும், புறக் காரணிகளும் அவற்றைத் தவிடுபொடி ஆக்கி விடுகின்றன.
இந்த நீண்டகால இழிவு நிலை மாறி எங்கள் கனவு எப்போதுதான் நனவு ஆகப் போகிறதோ,
மனிதன் மனிதத் தன்மையை மேலும் மேலும் வளர்த்து, உருவத்தளவில் அல்லாமல் உயர்ந்த குண நலனிலும் மனிதனாகிறபொழுது சகல கனவுகளும் நனவாகிறது.
பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உயர்ந்தவன் மேலும் வளர்ந்து தேவனாக - அமரனாக உயர வேண்டியவனாகிறான். ஒரு பெரியார் தான் விலைக்கு வாங்கிய நிலத்தில் தங்கப் புதையல் ஒன்றைக் கண்டு எடுத்தார். அந்த நல்லவர், நான் நிலத்தைத்தானே வாங்கினேன். தங்கப் புதையலுக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று சொல்லி, அந்தப் புதையலை முன்னைய நில உரிமையாளரிடம் கொண்டுப் போய்க் கொடுத்தார். நான் நிலத்தைத் தானே விற்றுப் பணம் பெற்றுக் கொண்டேன். எனக்கு அந்த நிலத்தில் இருந்த புதையல் தேவையில்லை என்று அவர் மறுத்துவிட்டார். இருவருமாக ஒரு மகா ஞானியிடம் போனார்கள். அந்த மகா ஞானியின் அறிவுரையின்படி விற்றவரின் மகளுக்கும் வாங்கியவரின் மகனுக்கும் திருமணம் நடந்தது. புதையலும் அவர்களுக்கானது. இருவர் மனமும் குளிர்ந்தது.
மனிதக் கனவு நனவாகிறது. மனித சமுதாய வளர்ச்சி அமரத்துவம் அடைகிறது. அப்போது அமைதியும் சமாதானமும், நல்லுறவும் வளர்ந்து ஆனந்தம் பொங்குகிறது.

Page 104

201
* எழுதும் பணிக்கு வழிப்படுத்திய
கவிஞர் முருக வே. பரமநாதன்.
* பண்டிதர் திரு. சங்கர குமரேசையா.
* திருமதி காராளசிங்கம் (ராணி)
* இந்நூல் கையெழுத்துப் பிரதி சரி
செய்வதில் உதவிய தமிழ் செல்வி.
* இந் நூலை அச்சிட்டு செம்மையுற வெளிக் கொணர்ந்த மைத்துனர்
திரு. சுப்பிரமணியம்.
* இந்நூலைஅச்சிட்டJOBPRINTSவடபழனி.
திருமதி. மகேஸ்வரி கதிர்வேலு

Page 105


Page 106


Page 107
"சானா
ஊரெழுகதி
பண்ணுமுருகன் பாத் என்னுமுயர் நாலை இ கதிர மலையான் கவின் விதுர னென வாழ்க வி
கவிஞர் கதிரமலையா கவிதைகள் மரபுநெறி மிகுந்து சுடர்கிறது.
 

கானா" கிரமலையான்
துதி மஞ்சரி இயற்றினான்- என்றும்
பாணன் ஓங்கி
பியந்து
கிருபானந்த வாரி
ன் நல்ல கவிஞர். இவர்தம்
சீதையாது, மொழிவளம்
t
உவமைக் கவிஞர் சுரதா