கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கருத்துரைக் கோவை

Page 1


Page 2

கருத்துரைக் கோவை
Lu 6aire 5777 g. F3 IT dollb, M. A. (Cey.) D. Phil. (Oxon)
தமிழ் விரிவுரையாளர், '
இலங்கைப் பல்கலைக்கழகம்.
விலை ரூத2

Page 3
முதற் பதிப்பு : 1959 உரிமை ஆசிரியர்க்கு.
பிற நூல்கள்: தமிழ் இலக்கிய வரலாறு (அச்சில்)
காக்ஸ்டன் அச்சகம், 41, சின்னதம்பி தெரு, சென்னை 1.

அணிந்துரை
அறிஞர் ஆ. சதாசிவம் அவர்கள் எழுதிய கருத்துரைக் கோவையினை ஒதும் பேறு பெற்றேன். மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. பலவகையான பொருள்களைப் பற்றிய கட்டுரைகளை இங்கே காணலாம். பழமை, புதுமை, இலக்கியம், பயணம், இன்றைய குறிக் கோள், நாடு, மொழி, வாழ்க்கை முதலியவற்றைப் பற்றிய கட்டுரைகள் மாணவர் கற்கவேண்டியவை. மாணவர்கள் எளிதிலுணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் இனிய நடையில் உள்ள இந்நூல் நம் கருத்தினைக் கவர்கின்றது. உயர்நிலைப் பள்ளியின் முடிவில் கற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும்
இதனைக் கற்பது நல்லது.
மேலும் பல நூல்களை நண்பர் சதாசிவம் எழுதித்
தமிழை வளர்ப்பாராக.
தெ. பொ. மீனுட்சிசுந்தரன், அண்ணுமலைப் பல்கலைக் கழகம்,

Page 4

முன்னுரை
செய்யுள் இலக்கியம் நம் உள்ளத்தில் உணர்வையும் இன்பத்தையும் ஊட்ட வல்லது. உரைநடை அறிவின் நுட்பச் செய்திகளை அறிய உதவுவது. ஒரு மொழியில் உரைநடை வளர்ந்தால்தான் விஞ்ஞானம், கலை என்பனவும் வளரும். உரைநடை இலக்கியமாக அமைவதோடு உலகச் ச்ெய்திகளை அறியக் கருவியாகவும் அமைகிறது.
கருத்துரைக் கோவை என்னும் இவ்வுரைகடை நூலில்
இலக்கியம்,விஞ்ஞானம்,பெரியோர் வாழ்க்கை, தமிழ்நாட்டின்
பெருமை, சமுதாயம், இன்றைய உலகச்செய்திகள் முதலிய
பொருள்களை விளக்கும் பத்துக் கட்டுரைகள் இடம் பெறு
கின்றன. ஈழத்தோடு தொடர்புடைய இலக்கிய வரலாற்றுச்
செய்திகள் இந்நூலில் தனி இடம் பெறுகின்றன. கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் இதன் தமிழ் நடையும்
கருத்துக் கோவையும் அமைந்துள்ளன.
நூல் எழுதும் இத்துறையில் என்னை ஊக்கிய என் பேராசிரியர்கள் க. கணபதிப் பிள்ளை, வி. செல்வநாயகம் அவர்களுக்கு எனது நன்றி உரியதாகுக. இந்நூற் கையெ ழுத்துப் பிரதியினைப் பார்வையிட்டுத் திருத்தங்கள் பல

Page 5
νi
செய்தும், நூல் அச்சாகுங்கால் அச்சுப் பிழைகள் திருத்தி யும் உதவிய என் நண்பரும் சென்னை பச்சையப்பன் கல்லூரி உதவித் தமிழ்ப் பேராசிரியரும் ஆகிய ரா. சீனிவாசன் அவர்களுக்கு யான் மிக நன்றியறிதலுடையேன். இங் நூலுக்கு அணிந்துரை ஒன்று அன்போடு அளித்துதவிய பன்மொழிப் புலவரும், அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியருமாகிய தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர் அவர்களுக்கு யான் மிகக் கடமைப்பட்டுள்ளேன். தக்க முறையில் குறுகிய காலத்தில் அச்சிட்டுக் கொடுத்த, காக்ஸ்டன் அச்சகத்தினர்க்கும் எனது நன்றி.
தமிழுலகம் இந்நூலை ஆதரித்து மேலும் இத்துறையில் என்னை ஊக்குமாறு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.
அராலி }
22-6-59 ஆ. சதாசிவம்.


Page 6
பொருளடக்கம்
பக்கம்
1. ஈழமும் தமிழும் 德姆爱龟 I 2. வினுேபாவின் கனவு ... 15 3. வானவெளிப் பயணம் ... 28 4. ஏடு காத்த கிழவர் ... 4 1 5. எனது மேல்நாட்டனுபவம் ... 56 6. பறம்புமலேப் பாவலன் ... 7O 7. இயற்கையின் விந்தை ... 82 8. வித்துவக் காய்ச்சல் ... 93 9. தத்துவஞானி சுவைச்சர் ... 105
10. தமிழிலக்கியமும் மக்கள் வாழ்க்கையும் . 118

1. ஈழமும் தமிழும்
ஈழ நாட்டில் பண்டுதொட்டுத் தமிழ்மணம் கமழ்ந்து வருகின்றது. ஈழத்தில் தமிழ் வழங்கத் தொடங்கிய காலம் இதுவென இன்று திட்டமாகக் கூற முடியாது. நிலத்தைக் கடல் சூழ்ந்திருந்து காப் பாற்றுகின்றதெனினும், காலத்துக்குக் காலம் கடல் நிலப்பரப்பின் பகுதியை விழுங்கிய வரலாறு சரித் திரத்தில் கூறப்படுகின்றது. இதனைக் கடல்கோள் • என்பர். சரித்திர காலத்துக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் நாடு இப்போது காணப்படுவதைவிட மிக நீண்டு. பரந்து இருந்த தென்றும், அது காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடல்கோள்களால் விழுங்கப்பட்டு இப்போது உள்ள அளவுக்குச் சுருங்கிவிட்ட தென்றும் வரலாறு கள் கூறும். தமிழ் நாட்டின் தென்பாகத்தைக் கடல் கொண்ட போது, எஞ்சிய நிலப்பகுதியே ஈழ நாடு என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழை வளர்த்த முச்சங்கங்களின் பிறப்பிடமாகவும் இருப் பிடமாகவும் விளங்கும் பாண்டி நாட்டின் அண்மை யில் ஈழ நாடு உள்ளமையின் பாண்டி நாட்டைப் போன்று ஈழத்திலும் செந்தமிழ் மணம் வீசுகின்றது.

Page 7
2
ஈழ நாட்டில் பல பாவலர்களும் நாவலர்களும் தோன்றினர்கள். தமிழ் அன்னையின் வாழ்விற்காகத் தம்வாழ்வை ஈடுவைத்த பல பெரியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு மிளிர்வது ஈழத்துத் தமிழ் வரலாறு ஆகும். மதுரையில் வீற்றிருந்த கடைச்சங்கப் புலவர்கள். நாற்பத்தொன்பதின்மருள் ஒருவர் ஈழத்துப் பூதந்தேவனுர் என்பவர். இவர் ஈழ நாட்டிலிருந்து மதுரைக்குச் சென்று வாழ்ந்தவ ரென்றும், இவரது கல்வி கேள்வியைப் பாராட்டிய பாண்டிய மன்னன் இவரையும் சங்கப் புலவராக நியமித்தான் என்றும் கொள்ளப்படுகிறது. இவர் இயற்றிய பாடல்கள் ஏழு. இந்த ஏழு பாடல்களும் சங்கத் தொகைநூல்களாகிய நற்றினே, குறுங் தொகை, அகநானூறு என்பனவற்றிற் காணப்படு கின்றன. இப்பாடல்கள் எல்லாம் சுவை நிரம்பிய அகத்திணைப் பாடல்களாகும். 参
ஈழத்துப் பூதந்தேவனுர் காலமாகிய இரண்டாம் நூற்றண்டிலிருந்து பதினன்காம் நூற்ருண்டுவரை ஈழத்தில் தமிழை வளர்த்த பெரியார் வரலாறுகள் ஒன்றும் இப்போது கிடைக்கவில்லே. பதினை காம் நூற்ருண்டிலே சோழ நாட்டிலிருந்து வந்து நல்லூரி லிருந்து அரசாண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்தி காலம் முதல் இந்நூற்றண்டுவரை ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் வரலாற்றைக் கூறும் நூல்கள் சில உள்ளன. இம் மன்னன் பதினன்காம் நூற்றண்டில் யாழ்ப்பாணத்திலே தமிழ்ச் சங்கம் ஒன்றை அமைத் தான் என்றும், இச்சங்கத்தை வளர்ப்பதற்காக யாழ்ப் பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் தமிழ் நாட்டி லிருந்தும் பல புலவர்களே அழைத்தான் என்றும்

3
அறியக்கிடக்கின்றது. இந் த யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்கப் புலவர்களால் ஆக்கப்பட்ட நூல்களெல் லாம் சரசுவதி மகாலயம்" என்னும் நூல்நிலையத் திற் சேர்த்து வைக்கப்பட்டன. தென் ஈழத்திலிருந்து வட ஈழத்திற்கு வந்த படையெடுப்பு ஒன்றன் காரண மாகச் சரசுவதி மகாலயம் தீக்கிரையாயிற்று என்று யாழ்ப்பாண வரலாறு கூறுகின்றது. சிங்கையாரியச் சக்கரவர்த்திக்குப் பின் ஆண்ட யாழ்ப்பாண மன்னர் களுள் குறிப்பிடத் தக்கோர் செகராசசேகரன், அரச கேசரி என்போர் ஆவர். இவருள் செகராசசேகரன் யாழ்ப்பாணத்திலே புதியதொரு தமிழ்ச் சங்கத்தை நிறுவினன். அத்துடன் முன் தீக்கிரையான சரசுவதி மகாலயம் என்னும் நூல்மிலேயத்தைப் புதுக் குவித் தான். புலவர்களைக் கொண்டு பலவகை நூல்களைச் செய்வித்தான். அவர்களுக்குப் பரிசுகள் நல்கித் தமிழை ஆதரித்தான். இவனல் ஆக்குவிக்கப்பட்ட நூல்களுள் ஒன்று செகராசசேகரமாலையாகும். அரச கேசரி என்பவன் வடமொழியையும் தமிழையும் நன்கு கற்றவன். வடமொழி இரகுவமிசம் ' என்னும் நூலை இவன் தமிழில் மொழிபெயர்த்தான்.
போர்த்துக்கேயர் ஈழத்தை ஆண்ட காலத்தில் எழுந்த சிறந்த தமிழ் நூல் கதிரை மலேப் பள்ளு ? என்னும் பிரபந்தம் ஆகும். இது பதினரும் நூற்றண் டில் எழுந்ததாகக் கருதப்படுகிறது. இதனை இயற் றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கதிர்காமத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனின் பெருமையைப் பள்ளிகள் வாயிலாக இது எடுத்து விளக்குகின்றது. இந்நூலில் வரும் பள்ளன், மூத்தபள்ளி என்போர் ஈழ காட்டவர். இளேய பள்ளி தமிழ் நாட்டிலிருந்து

Page 8
4.
வந்தவள். ஈழ வளநாட்டின் இயற்கை வருணனை, மகாவலிகங்கைச் சிறப்பு என்பன இந்நூலில் இடம் பெறுகின்றன.
ஒல்லாந்தர் ஈழத்தை ஆண்ட காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் கூழங்கைத் தம்பிரான், மயில் வாகனப் புலவர், வரத பண்டிதர், சின்னத்தம்பிப் புலவர் முதலியோர் முக்கியமானவர் ஆவர். இவர் களுள் கூழங்கைத் தம்பிரான் என்பவர் தமிழில் உள்ள "சூடாமணி நிகண்டு என்னும் அகராதியைப் புதுக்கினர் ; தாம் பாடிய பாடல்கள் பலவற்றைச் சேர்த்து நூலைச் செப்பனிட்டார். மாதகல் என்னும் இராமத்தில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் யாழ்ப் பாண வைபவ மாஃல என்னும் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்று நூலே எழுதினர். பிற்காலத்தில் யாழ்ப் பாணச் சரித்திரத்தை எழுதுவதற்கு இந்நூல் பெரிதும் ஆதாரமாய் இருந்தது. வரத பண்டிதர் (1656- 1716) என்பவர் சுன்னகத்தில் வாழ்ந்தவர். தமிழிலக்கண இலக்கியம், சோதிடம், வேதாந்த சித் தாந்தம் என்பனவற்றை நன்கு கற்றவர். இவர் வாழ்த்துக்கவியும் வசைக்கவியும் பாட வல்லவர். வாழ்த்துக்கவியாவது ஒருவரை நீண்ட ஆயுள் பெற்று வாழும்படி வாழ்த்திப் பாடும் பாட்டு ஆகும். ஒரு வரைக் கெட்டுப் போகும்படி சபித்துப் பாடும்பாட்டுக் களேயும் ஒருவரின் இழிகுணங்களை எடுத்துக் கூறும் பாட்டுக்களேயும் வசைக்கவி என்பர். இவர் இயற்றிய நூல்கள் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், கிள்ளைவிடு தூது, பிள்ளையார் கதை முதலியன. இவை யெல்லாஞ் செய்யுள் நூல்கள். இவற்றுள் கிள் ஆள விடுதூது என்பது ஒரு சுவையுள்ள இலக்கியமாகும்.

さァ
காங்கேசன்துறை குருநாத சுவாமி கோயிலில் வீற்றி ருக்கும் கடவுள் மீது கிளியைத் தூதனுப்பியதாகப் பாடப்பட்ட தூதுப் பிரபந்தம் இது. சிவபிரான் சுந்தரர்க்குத் துரதுபோன கதை, கண்ணபிரான் பாண்டவர்க்குத் தூதுபோன கதை, அனு மா ன் இராமருக்குத் துTதுபோன கதை, நளன் இந்திரற்குத் தூதுபோன கதை முதலிய சுவையான நிகழ்ச்சிகள் இந்நூலில் கூறப்படுகின்றன.
ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களுள் கற்பனையாற்ற லும் இயற்கைப் புலமையும் படைத்த புலவர்திலகம் சின்னத்தம்பிப் புலவர். (1716-1780) இவர் நல்லூரில் வாழ்ந்தவர். ஒல்லாந்த அரசினரின் வேண்டு கோட்படி "தேசவளமை" என்னும் சட்ட நூலைத் திருத்தியமைத்த வில்லவராய முதலியாரின் புதல்வர். இளமையில் ஒருநாள் இவர் மாடு மேய்க்கும் சிறுவர்க ளுடன் தெருக்கரையே விளேயாடிக்கொண்டு கிற்கும் போது, பிற ஊரிலிருந்து வந்த ஒருவர் வில்லவராய முதலியாரின் வீடு எது என்று கேட்டார். விளையாடிக் கொண்டு நின்ற சின்னத்தம்பி என்னும் பையன், கொன்றைமரம் நிற்கும் தம் தந்தையாரின் வீட்டு வாசலைச் சுட்டிக்காட்டி,
பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும் கன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம்-மின் பிரபை வீசுபுகழ் கல்லூரான் வில்லவரா யன் கனக வாசலிடைக் கொன்றை மரம் என்ற வெண்பாவைப் பாடிப் பாட்டிலேயே மறுமொழி சொன்னுன். இவ்விதம் பல சந்தர்ப்பங்க்ளில் இவர் பாடிய பாடல்கள் பல. இளமையில் இவருக்கிருந்த புலமையை இவை காட்டுகின்றன. இவர் நான்கு

Page 9
6
சிறந்த செய்யுளிலக்கியங்களை இயற்றித் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்திருக்கின்ருர், மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பருளே விநாயகர் பள்ளு என்பன அந் நூல்கள். இவற் றுள் மறைசை அந்தாதி என்பது வேதாரணியத்தில் வீற்றிருக்கும் கடவுள் மீது பாடப்பட்ட நூல். இது அந்தாதியாக அமைந்துள்ளது. அந்தாதி என்பது ஒரு பாட்டின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்த பாட் டின் முதலாக வர எல்லாப் பாட்டுக்களையும் அமைத் துப்பாடுவது. மறைசை அந்தாதியில் நூறு பாக்கள் உள்ளன. கல்வளை அந்தாதி என்பது யாழ்ப்பாணத் துச் சண்டிருப்பாயிலுள்ள கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட நூல். பருளாய் (பருளை) என்னும் ஊரில் இருக்கும் விநாயகர் மீது பாடப்பட்ட நூல் பருளே விநாயகர் பள்ளு. "பள்ளு என்பது வயலில் வேலை செய்யும் தொழிலாளர் பாட்டு. இந் நூலிலே தொழிலாளர் விநாயகரின் புகழைப் பாடுகின்றனர். கரவை வேலன் கோவை என்பது கரவெட்டி என்னும் ஊரில் வாழ்ந்த வேலாயுதம் பிள்ளை என்னும் பிரபு வைப் புகழ்ந்து பாடிய கோவைப் பிரபந்தம். கோவை என்பது அகத்திணேத் துறைகளே அமைத்துப் பெரும் பாலும் நானூறு பாடல்களில் பாடுவது. இந் நூலில் நானூற்றிருபத்தைந்து பாடல்கள் உள. வேலாயுதம் பிள்ளையின் பெயரும் புகழும் சுட்டும் வரிகள் இந்நூற் செய்யுட்களில் வருகின்றன. இங்ங்ணம் சிறந்த தமிழ்ப் பிரபந்தங்களைச் செந்தமிழ் நடையிலே புனைந்து ஈழத்
துத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உதவி புரிந்த சின்னத்
தம்பிப் புலவரின் பெயர் என்றென்றும் தமிழ் நெஞ்
சத்தை விட்டு அகலாது.

7
ஆங்கிலேயர் ஈழத்தை ஆண்ட காலத்தில் தமிழிலக்கியம் வெவ்வேறு வழிகளில் கிளைத்து வளரத் தொடங்கியது. இக்காலத்தில் அச்சியந்திரத்தின் உத வியை மக்கள் நன்ருய் அறிந்திருந்தனராகலின், ஏடு களில் இருந்த நூல்கள் பல புத்தகவடிவிற் கொண்டு வரப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப் புலவர்கள் ஈழத்தின் வட பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு புரிந்தனர். இவர்களுள் சிறப்பா கக் குறிப்பிடத் தக்கோர் சிவசம்புப் புலவர், ஆறுமுக நாவலர், குமாரசுவாமிப் புலவர், சி. வை. தாமோதரம் பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், சுவாமி விபுலாநந் தர் முதலியோர். இவர்கள் ஆறு பேரும் ஆறு வழிகளில் தமிழை வளர்க்க அரும்பாடுபட்ட வரலாற்றை இனிக் காண்போம்.
ஈழத்துத் தமிழ்ப் புலவரெவரினும் அளவு மிக்க பிரபந்தங்களையும் தனிச் செய்யுட்களையும் பாடியவர் சிவசம்புப் புலவர். இவர் பருத்தித் துறையைச் சேர்ந்த உடுப்பிட்டியிற் பிறந்தவர். இளமை தொடங்கிப் பொழுது போக்காகக் கவி பாடியவர். கடல் கடந்து சென்று தமிழ் நாட்டிலே தமது புலமையின் வன் மையை கிலே நாட்டியவர். மதுரையின் நான்காம் தமிழ்ச் சங்கத்தை வளர்த்து வந்த பாஸ்கர சேதுபதி மகாராசாவின் பேரில் மூன்று நூல்களும் தனிப்பாடல் களும் பாடிச்சென்று மகாராசாவின் வித்துவான்கள் முன்னிலேயிற் பாடி அரங்கேற்றினர். அங்ங்னம் செய்து மகாராசாவின் மதிப்பும் பரிசில்களும் பெற்றர். வித்துவான்களின் பொருமையையும் பெற்ருர், ஈழ நாட்டிலுள்ள தலங்கள் மீது கவிதைகள் பாடினர். யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் வாழ்ந்த புரவலர்

Page 10
8
பலரின் புகழ்மாலைகளைப் பாடினர். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்பது போன்று சிவ சம்புப் புலவரைச் சார்ந்திருந்த அவர் நண்பர் பலரும் பாடும் புலமை பெற்றனர். இவருடைய பாடும் வன்மை குறித்துப் புலவர்" என்னும் பட்டத்தை ஆறுமுக நாவலர் இவருக்குச் சூட்டினர்.
ஈழ நாட்டிலே 'நாவலர் என்ருல் அது ஆறுமுக நாவலரை மாத்திரமே சுட்டும் என்பது பள்ளிக்கூடப் பிள்ளைக்குங் தெரியும். தமிழ் மொழிக்காக வாழ்க் கையை அர்ப்பணஞ்செய்தவர் நாவலர்.இவர் 1822-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து நல்லூரிற் பிறந்தார். ஐம்பத் தைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இவர் ஈழத்துத் தமிழ்மக்களிடையேயும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் தமிழார்வத்தைத் தூண்டிவிட்டார். சமய சம்பந்தமான விஷயங்களைப் பொருளாகக் கொண்டு கோயில்களிற் பிரசங்கஞ் செய்யும் பழக்கத்தை முதன் முதலில் தொடக்கிவைத்தவர் நாவலரே. துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மக்களிடையே பரப்பி அவர்தம் அறிவை வளர்க்க நாவலர் அரும்பாடுபட்டார். பாடசாலேப் பிள் ளேகள் படிப்பதற்கெனப் பால பாடங்களே எழுதினர். சைவ சமயத்தவர் படிப்பதற்கெனத் திருவிளே யாடற்புராணம், பெரிய புராணம் முதலியவற்றை இனிய உரைநடையில் எழுதி உதவினர். இலக்கண இலக்கிய நூல்களைப் பிழையின்றிப் பதிப்பித்தார். இவற்றுட் சிறந்தது இன்று பாடசாலேகளில் மாணவர் கள் கற்கும் நன்னூற் காண்டிகையுரை. நன்னூல் படிக்கத் தெரியாதவருக்கு இலக்கணச் சுருக்கம்" என்னும் நூலே எழுதினர். எழுத வாசிக்கத் தெரியாத வர்களைக் கோயிலுக்கு அழைத்து அவர்கள் முன்

9
பிரசங்கஞ் செய்து கேள்; இவு மூலம்*வர்களைத் திருத்தினர். திருந்தியமுேறையிெேத்மிழ் உரை நடையை எழுதி மற்றவர்கள் வழிகாட்டி னர். சுருங்கக் கூறுமிடத்து ஈழத் த் தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றண்டை ‘நாவலர் காலம்" என்று அழைக்கலாம்.
குமாரசுவாமிப் புலவர் 1850-ஆம் ஆண்டு சுன்னு கத்திலே பிறந்தார். இவர் வடமொழியையும் தமிழை யும் நன்கு கற்றவர். பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கடமையாற் றினர்; தமிழில் பல நூல்களைத் தாமே எழுதியும், பழைய நூல்களைப் பதிப்பித்தும், அவற்றிற்குப் புத்துரை எழுதியும், வடமொழி நூல்களேத் தமிழில் மொழி பெயர்த் தும் தந்துள்ளனர். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய சிறந்த தொண்டு யாதெனில் கல்லூரி மாணவரும் பிறரும் எளிதில் அறிந்துகொள்ளத் தக்கதாகத் தமிழிலக்கண இலக்கியங்களுக்கு எழுதிய புத்துரையே யாகும். யாப்பருங்கலக் காரிகை, தண்டி யலங்காரம், அகப்பொருள் விளக்கம் என்பனவே இவர் சிறந்த உரை எழுதிய இலக்கண நூல்கள். இவர் எழுதிய சுவையுள்ள தமிழ் உரைநடை நூல் "சிசுபால சரிதம்' என்பது. வடமொழிக் கதையைத் தழுவியே தமிழில் இந்நூலே எழுதினர். இவையன்றிப் பல செய்யுள் நூல்களேயும் 'இலக்கிய அகராதி ஒன்றையும் இவர் எழுதினர். தமிழ் மொழியின் ஆக் கங்கருதிச் செய்யுள், உரைநடை, மொழிபெயர்ப்பு, அகராதி, நூல பதிப்பித்தல் முதலிய பல துறைகளில் உழைத்த ஈழத் துத் தமிழ்ப் புலவர்களுள் குமார சுவாமிப் புலவர் முத்ன்மையானவர் ஆவர்.

Page 11
1 O
பழந்தமிழ் நூல்களை நெருப்புக்கும் கறையா னுக்கும் பூச்சிக்கும் இரையாகாமல் பாதுகாத்த பெருமை சி. வை. தாமோதரம் பிள்ளைக்கு உரியது. "ஏடுகாத்த கிழவராகிய உ. வே. சாமிநாதையர் தமி ழேடுகளைத் தேடித்திரிந்த காலத்தில் தாமோதரம் பிள்ளையும் தேடித் திரிந்தமையின் இருவரும் உற்ற நண்பராயினர். இவர்களிடையே ஏற்பட்ட நட்பைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று சாமிகாதையர் எழுதிய "என்கதை' என்னும் அவர் வாழ்க்கை வரலாற்று நூலிற் காணப்படுகின்றது. தாமோதரம் பிள்ளை 1832-ல் புத்தூரைச் சார்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரிற் பிறந்தார். வட்டுக்கோட்டைக் கல்லூரி யில் கல்வி கற்றுப் புலமை எய்திய இவர் சென்னைக்குச் சென்று 'தினவர்த்த மனி" என்னும் பத்திரிகையின் ஆசிரியரானுர். பின் சென்னைப் பல் கலைக் கழகத்தாரால் நடத்தப்பட்ட கலைமாணித் தேர் வில் (பீ.ஏ.) தேறினர். முதலில் வழக்கறிஞராகவும் பின் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், ஒய்வு நேரங்களையெல்லாம் தமிழாராய்ச்சியிற் கழித்தார். தொல்காப்பியம், இலக்கண விளக்கம் முதலிய பல நூல்களை ஆராய்ந்து அச்சிலே பதிப்பித்தார். இருபது இருபத்தைந்து ஏட்டுப் பிரதிகளே ஒப்பு நோக்கிச் சரியான பாடம் எதுவெனக் கண்டு தெளிவது கடின மான வேலை. உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்ற காலத்தில் ஒய்வெடுக்காது தமிழேடுகளத் தேடி எடுத்து ஒப்புநோக்கிச் சரியான பாடங்கண்டு பதிப் பித்த சி. வை. தாமோதரம் பிள்ளையைத் தமிழ் பேசும் நல்லுலகம் பாராட்டியது. சென்னை அரசாங்கத் தாரும் "ராவ் பகதூர் என்ற பட்டத்தை இவருக்கு

11
நல்கி இவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையைப் போற்றினர்.
சுவாமி ஞானப்பிரகாசர் 1875-ஆம் ஆண்டு மானிப்பாயில் பிறந்தார். நல்லூரில் வாழ்ந்து கத்தோ லிக்கக் குருவாகக் கடமை யாற்றிய இவர் தமிழ் மொழியின் பெருமையை ஈழத்திலும் பாரத நாட்டி லும் பரப்பியது மட்டுமன்றி ஆங்கிலநாடு, ஜெர்மனி முதலிய மேலை நாடுகளிலும் பரப்பினர். இவர் தமிழ் மொழி ஆராய்ச்சியிலே காலத்தைக் கழித்தார். சமஸ் கிருதம், பாளி, சிங்களம், தெலுங்கு, கன்னடம், மலே யாளம், இந்தி, போர்த்துக்கேயம், ஆங்கிலம்,ஜெர்மன், இலத்தீன் முதலிய பல மொழிகளைக் கற்று அவற் ருேடு சுவை பயக்கும் செந்தமிழை ஒப்பிட்டு ஆராய்க் தார். இவ்வாறு செய்த மொழியாராய்ச்சியின் பய ஞக அ, இ, உ, எ என்னும் நான்கு எழுத்துக்களே அடிப்படையாகக் கொண்டே தமிழில் உள்ள எல்லாச் சொற்களும் பிறந்தன என்பதை எடுத்து விளக்கினர். உலகத்திலுள்ள மொழிகளுள் காலத்தால் முந்தியது தமிழ் மொழியே என்பதை மேல்நாட்டுப் பத்திரிகை கள் வழியாக உலகுக்கு எடுத்துக் காட்டினர். தமிழ்ச் சொற்களின் தோற்றத்தை ஆராய்ந்து 'தமிழ்ச் சொற் பிறப்பு ஆராய்ச்சி என்னும் அரிய நூலையும், சொற். பிறப்பு அகராதி ஒன்றையும் எழுதினர். பண்டைத் தமிழர் எங்கிருந்து வந்தனர், அவர் பண்பாடு யாது: என்பன பற்றிச் செந்தமிழ்ப் பத்திரிகையில் எழுதி ஞர். சுருங்கக் கூறுமிடத்துத் தமிழ் மொழியின் பெரு மையை உலக அரங்கில் முழக்கஞ் செய்தவர் சுவாமி ஞானப்பிரகாசர் என்று கூறலாம்.
ஈழ நாட்டின் கீழ்மாகாணத்திலுள்ள மட்டக்களப்

Page 12
12
பினைச் சார்ந்த காரைதீவு என்னும் ஊரில் 1892-ஆம் ஆண்டு சுவாமி விபுலாநந்தர் தோன்றினர். அப்போது இவரது பெற்றேரால் இவருக்கு இடப்பட்ட பெயர் மயில்வாகனன் என்பது. இளமையில் ஆங்கிலக் கல்வி கற்றுப் பின் பல கல்லூரிகளில் ஆசிரியராகக் கடமையாற்றினர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித பரீட்சையிலும், லண்டன் பல்கலைக் கழக பி. எஸ்சி. பரீட்சையிலும் தேறிப் பின் தமது முப்பதாம் வயதில் சென்னை இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து துறவு பூண்டார். துறவின்போது விபுலாநந்தர் என்னும் பெயரைப் பெற்றர். அதன்பின் இலங்கைக்கு வந்து இராமகிருஷ்ண மடத்தினரால் நடத்தப்பட்ட பாட சாலேகளின் பொறுப்பை ஏற்று நடத்தினர். சுவாமி விபுலாநந்தர் ஈழ நாட்டின் பல பகுதிகளிலுஞ் சென்று செந்தமிழ் மழைமாரி பொழிந்தார். பாரத நாட்டிலும் ஈழ நாட்டிலும் இவர் தலைமை தாங்கிய கூட்டங்கள் பல. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலும் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகக் கடமை யாற்றிய சுவாமி விபுலாநந்தர், நூற்றுக் கணக்கான மாணவர்களுக்குத் தமிழறிவைப் புகட்டினர். ஆங்கில நாடகத்தின் பண்பையும் வடமொழி நாடகத்தின் பண்பையும் ஆராய்ந்து, 'மதங்க சூளாமணி என்னும் நூலே எழுதினர். பண்டைத் தமிழரின் இசையைப் பற்றியும் அவர்தம் இசைக் கருவிகளைப் பற்றியும் விபுலாநந்த அடிகள் பதினு று வருடங்களாக ஆராய்ச்சி செய்து “யாழ் நூல்" என்னும் அரிய நூலை 1947-ல் உலகுக்கு அளித்தார். இங்ங்னம் தமிழ் இயல் இசை நாடக வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய சுவாமி விபுலாநந்தர் 1947-ஆம் ஆண்டு மறைந்தார்.

13
இருபதாம் நூற்றண்டில் ஈழத்தில் வாழ்ந்து தமிழ் மொழிக்குச் சிறந்த தொண்டாற்றிய பெரியோர் களுள் நவாலியூர் சோமசுந்தரப் புலவரையும் வித்து வான் கணேசையரையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். இவருள் சோமசுந்தரப் புலவர் இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவர் பல செய்யுள் நூல் களையும் தனிப்பாடல்களையும் பாடியுள்ளனர். பனை மரம், சிறுவர்செந்தமிழ் முதலிய சில நூல்களே இது வரை அச்சில் வெளிவந்தவை. இவர் எழு திய உயிரிளங் குமரன் என்னும் நாடக நூல் இவர் புலமைக் கும் ஆற்றலுக்கும் எடுத்துக் காட்டு ஆகும். நல்லூர் ஆறுமுக நாவலரைப் பற்றி உருக்கமாக இவர் பாடிய பாடல்களுள் ஒன்று பின்வருமாறு:-
பார்மதித்த செந்தமிழ்நூ லேடுகளை
யாராய்ந்து பதிப்பித் தோர்கள் ஆர்பதிப்பித் தாலுமங்கே பிழைநுழைத
லுண்டாகு மவைக ளின்றிச் சீர்பதித்த நற்பதிப்பு நாவலர்தம்
பதிப்பென்று செப்பு மேன்மைப் பேர் பதித்த பெருங் கல்விச் செல்வனிரு
சேவடிகள் பெரிதும் வாழி. வித்துவான் கணேசையர் தமிழிலக்கண இலக்கியங் களில் சிறந்த அறிவு படைத்தவர். ஈழத்தில் இன்று தமிழ் மொழிக்கு அரிய தொண்டாற்றிவரும் பண்டித, வித் துவான்களுள் பலர் கணேசையரின் மாணுக்கர் ஆவர். இவர் தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூலே நன்கு ஆராய்ந்து பதிப்பித்திருக்கிருர். சங்க இலக்கியமாகிய அகநானூற்றுக்கு உரை எழுதி முடிப் பதற்குள் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவர்கள்

Page 13
4.
காட்டிய வழியைப் பின்பற்றி இன்று பல அறிஞர் தமிழாக்கங் கருதி உழைத்து வருகின்றனர். தமிழை வளர்க்குஞ் சங்கங்கள் ஈழத்தின் எல்லாப் பகுதி களிலும் தோன்றியுள்ளன ; தோன்றிக் கொண்டே வருகின்றன. காட்டில் தோன்றி வளரும் தினத் தாள்களும் வார இதழ்களும் தமிழை வளர்த்து வருகின்றன.

F 「○ * ኢተላ ተነBሽ - 1 ಇಲ್ಲ' ،J A. " . . :لاپنی "... sp.), AA W . الألم أظ ترجم 58. *ارکانN';AA' ,)
॥"
2. வினுேப்ாவின் கனவு
பாரத நாடு ஒரு புண்ணிய பூமி, கிருஷ்ணர், புத்தர், காக்தி முதலிய மகான்கள் காலத்துக்குக் காலங் தோன்றிப் பாரதத்தின் பெருமையை உலகுக்கு எடுக் கக் காட்டினு 'கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்த்த இவர்கள் கடவுள் கிலேயை எய்தி மக்களின் இதயங்களில் இடம் பெற்றுவிட்டனர். இதற்கு அறி து மியா 5 இனர்களின் உருவங்கள் தாங்கிய கோயில் கள் பாரத நாட்டில் மட்டுமன்றி உலகின் பல பாகங் களிலுங் காணப்படுகின்றன. இவர்கள் செய் தி அற் புதங்தான் என்னே ? கோடிக்கணக்கான மக்கள் வாழும் ப" தி நாட்டில் பஞ்சமும் பிணியும் கவலேயும் இருக் 5 தாம் செய்கின்றன. ஆண்டுதோறும் மக்கள் பெருகிக் கொண்டு போகப் போகத் தேவைகளும் பெருகிக் கொண்டே போகின்றன. இவர்கள் தேவை களே பார் கிறைவு செய்வது ? பணம் பெருகிய நாடு கள் இன்று பாதை மாறிப் போகின்றன. அறிவுச் செல்வம் பெருகிய நாடுகள் உன்னத இலட்சியங்களே உலகுக்கு எடுத்துக் காட்டும் உயர்ந்த பண்பாடுடைய காடுகளாக உலக மக்களால் போற்றப்படுகின்றன. மனிதனின் கடமை, பொறுப்பு. உரிமை இவையென விளக்கினர் கிருஷ்ண பெருமான் ஒழுக்கமே மனித னின் உயர்வுக்குத் தாழ்வுக்கும் காரணம் என்பதை விளக்கினர் புத்தர். மனிதனின் ஆத்ம ஈடேற்றத்
S SLS SLS

Page 14
1 6
திற்குப் பிரார்த்தனை அவசியம் என்பதையும், மனித குலம் தழைப்பதற்கு ஒற்றுமை அவசியம் என்பதை யும் மகாத்மாகாந்தி எடுத்துக் காட்டினர். ” இம் மூவருஞ் சென்ற பாதையிலே இன்று ஒரு பெரியார் சென்றுகொண்டிருக்கிருர், அவர் பெயர் வினேபா.
வினுேபாவை ஒரு முறையாவது காணுதவர் அவரைக் காணுவதற்காகப் பல மைல் தூரஞ் சென்று அலேய வேண்டியதில்லே. வினேபா கட்சிக்கு எளிய வர். கடந்த எட்டு ஆண்டுகளாக வினுேபாவுக்குத் தனி யாக வீடில்லே. அவர் பாரத நாட்டைச் சுற்றிப் பாத யாத்திரை செய்துகொண் டிருக்கிருர், “ பாத யாத் திரை " என்பது மோட்டாரிலே பிரயாணஞ் செய்யா மல், புகைவண்டியில் பிரயாணஞ் செய்யாமல் காலால் நடந்து ஊரூராகப் பிரயாணஞ் செய்தல் ஆகும். சாதாரணமாக ஒருவர் முப்பது காற்பது மைல்கள் நடந்தால் கால்கள் மகோகும் : அடிக் காலில் கொப்பளங்களும் உண்டாகி விடும். ஆனல் வினுேபா இதுவரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மைல் தூரத் தைக் கால் நடையாற் கடந்து சென்றிருக்கிருர், அவர் இன்னுங் களைக்கத் தொடங்கவில்லே. ஆனல், வரவர அவருக்கு ஊக்கமே பிறக்கிறது. பாரத நாட்டின் தெருவீதிகளிற் சென்றுகொண் டிருக்கும் வினே பாவைச் சந்திக்க விரும்புவோர் தம் வீட்டு வாசலில் வந்து நின்ருல் மாத்திரம் போதும் ; வினேபா கட்டா யம் அவ்வழியேயும் வருவார். இவ்விதம் தெருத் தெருவாய் அலேந்து திரியும் இப்பெரியார் அரையில் ஒரு துண்டு உடுத்திருக்கிறர். தோளில் ஒரு சிறிய சால்வைத் துண்டு தொங்கும். கண்களில் இருக்கும் மூக்குக் கண்ணுடி அவரின் வயது மூப்பைச் சுட்டிக்

17
காட்டிக்கொண்டிருக்கும். நீண்டு தொங்கிக்கொண் டிருக்கும் பழுக்க நரைத்த அவர் தாடி மயிர் அவர்தம் ஆழ்ந்த அறிவின் ஞாபகச் சின்னமாக விளங்கு கின்றது. இந்தக் கிழவரைச் சுற்றி ஒரு கூட்டம் பின் சென்றுகொண்டிருக்கும்; திடீரென ஒரு மரத்தின் நிழலிலே எல்லோரும் உட்கார்ந்து விடுவர். அங்கு வந்திருப்போருக்கு வினுேபா போதனை செய்வார். பாம்பாட்டியின் மந்திரத்தால் கட்டுப்பட்ட பாம்புகள் அசையாது அவனேச் சுற்றியிருப்பது போல் இந்த மந்திரவாதியாகிய வினுேபாவின் போ த ஃன யால் மயங்கிய அன்பர் கூட்டம் அசையாதிருக்கும். தாம் எடுத்துக் காட்டும் நியாயங்களினுல் எல்லோரையும் தம்பக்கல் இழுக்கும் ஆற்றல் வாய்ந்த இந்தக் கிழவர் வினுேபா யார் என்பதையும், இவர் ஏன் இப்படித் தெருத் தெருவாய்ப் போய்க்கொண்டிருக்கிருர் 6T687 ן_{ தையும் இனிக் காண்போம்.
இவர் 1895-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத் தைச் சேர்ந்த மகாரl oxyர தேசத்தில் ககோடை என்னுங் கிராமத்திலே பிறந்தார். இவர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாய்மொழி மராட்டி, தந்தையார் ஒரு புடைவைத் தொழில் நுட்பு அதிகாரி. இவர் இளமையிலே பாடசா லேக்குச் சென்று கல்வி கற்றுப் பதினெட்டாம் வயதில் மற்றிக்குலேசன் தேர்வில் சித்தியெய்தினர் : தொடர்ந்து உயர்தரக் கல்வி கற்க இவர் விரும்பவில்லை. புத்தகப் படிப்பில் இவருக்கு நம்பிக்கை வரவில்லை; இவர் தம் இருபத் தோராம் வயதில் ஒரு நாள் தம் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கையில் எரியும் விளக்கின் பிழம்பில் சில கடு தா சிக ளே எரித்துக்கொண் டிருந்தார்.
2

Page 15
18
தாயார் இவர்பக்கம் திரும்பி, "என்ன செய்கிருய்? என்று கேட்க, ‘அம்மா, நான் சித்தியெய்திய சோதனை" நற்சாட்சிப் பத்திரங்க%ள எரிக்கிறேன்' என்ருர், தாயார் காரணங் கேட்டபோது வினுேபா தாம் படிப் புக்கு முற்றுப்புள்ளியிட்டுவிட்டதாகக் கூறினர். பின் சில நாட்களில் வீட்டைவிட்டுப் புறப்பட எண்ணிப் புகைவண்டி மூலம் காசி நகாக்குச் சென்ருர், "காசிப் பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தி பாரதநாட்டு இளவரசர்களுக்குச் செய்த சொற்பொழிவின் அச்சிடப்பட்ட தாள் ஒன்று இவர் கைக்கு எட்டியது. அதனை வாசித்த தம் மகாத்மாவைக் கண்டு பேச வேண்டுமென்று ஆவல் கொண்டார். தம் விருப் பத்தை மகாத்மாவுக்குக் கடிதமூலம் தெரிவித்தார். வினுேபாவைத் தம்மிடம் வரும்படி மகாத்மாவும் கடிதம் அனுப்பினர். அவ்விதமே இருவரும் சந்தித் தனர். மகாத்மாவுடன் தொட்ர்பு வைத்துக்கொண்ட வினேபா இரண்டு கற்பழக்கங்களே அவரிடமிருந்து கற்றர். ஒன்று ஆத்மீக வாழ்க்கையைப் பற்றியது; மற்றது தேசத்தொண்டிற்காக மனிதன் தன்னைத் தியாகஞ் செய்யவேண்டுமென்ப து)
மனிதன் சிந்தனை யாற்றல் ப்டைத்தவன். காலை யில் நித்திரை விட்டெழுந்த நேரங்தொடங்கி இரவு நித் திரைக்குப் போகும்வரையும் அவன் எண்ணிறந்த உலகச் செய்திகளிலே தன் உள்ளத்தைப் பறிகொடுக் கிருன்; உணவைப் பற்றி, உடையைப் பற்றி, உற்றர் உறவினரைப் பற்றிச் சிந்திக்கிருன்; சிற்சில வேளை களிலே, தீர்க்கமுடியாத இடர்களுள் நுழைந்து பின் வெளியே புறப்படமுடியாது நின்று தவிக்கிருன். கிலே " யற்ற உடம்பு நிலையானதெனக் கருதி, அவன் ஆடை

19
அணிகளிலும் உணவுஉண்டிகளிலும் தன் கவனத்தைச் செலுத்துவதினுல், மறு பிறப்பைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ சிந்திக்க நேரங் கிடைப்பதில்லை. எனவே, மனித ஈடேற்றத்தின் நிமித்தம் ஒருநாளில் ஒருமணி நேரமாவது பிரார்த்தனைக்கு உரிய நேரம் என ஒதுக்கி வைக்க வேண்டுமென்பது மகாத்மா விடமிருந்து வினுேபா கற்ற பாடம் ஆகும். பிரார்த்தனை மூலம் மனஞ் சாந்தியடைகிறது; மனம் பண்படுத்தப் படுகிறது. எடுத்துக்கொண்ட ஒரு கருமத்தில் முனைந்து நின்று ஈடுபடுவதற்கு இங்ங்ணம் பணபடுத்திய மனம் உதவுகிறது. பிரார்த்தனே மூலம் மனத்தை வெற்றி கொண்டவர்களுள் மகாத்மாவும் வினுேபாவும் முக்கிய மானவர்கள். மகாத்மாவை முதன் முதற் சந்தித்த வருடமாகிய 1916 முதல் இன்றுவரை ஒருநாளாவது தான் பிரார்த்தனை செய்யத் தவறியதில்லை யென்று வினுேபா கூறுகின்றர். படுக்கையிலே வருத்தமாய்ப் படுத்திருந்த நாட்களிலே கூடத் தான் எழுந்திருந்து பிரார்த்தனை நடத்தியதாக அவர் கூறுகிருர், இங்ங்னம் மனத்தைப் பண்படுத்தி வெற்றிகண்ட வினுேபா வருங்கால இந்தியாவை உருவாக்கும் வேலேயில் ஈடு படலானுர், மகாத்மா நடத்திய சுதந்திரப் போர்களி லும் சத்தியாக்கிரகங்களிலும் ஈடுபட்டு வினுேபா சென்ற சிறைச்சாலைகள் பல. இவரது சிறைவசம் இவர்தம் பிற்கால வாழ்க்கைக்குப் பல வழிகளில் உதவி புரிந்துள்ளது. உதாரணமாக 1940-ல் சத்தி யாக்கிரகத்தின்போது மூன்று ஆண்டுகாலம் சென்&னச் சிறைச்சாலையில் வினுேபா அடைக்கப்பட்டார். பல மொழிகளே ப் பேசும் மக்கள் ஒன்ருகச் சிறையில் வாழ்ந்தனராதலின் அவர் உதவிகொண்டு தமிழ்,

Page 16
2O
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் வினுேபா பேசவும் எழுத வும் கற்றுக்கொண்டார். வட இந்தியாவிலுள்ள சிறைச்சாலைகளில் வாழ்ந்த காலங்களில் குயராத்தி வங்காளி முதலிய மொழிகளையும் கற்றுக்கொண்டார். சுருங்கக் கூறுமிடத்து, சிறைவாசத்தின் பயனக வினுேபா பன்மொழிப் புலவராக மாறினர் எனலாம். 1948-ஆம் ஆண்டிலே மகாத்மா மறைந்ததும் மகாத்மாவின் நண்பர்கள் ஒன்று கூடி இனிச் செய் வது யாதென ஆலோசிக்கலாயினர். மகாத்மா தனி யொருவராய் கின்று நடத்திய வேலைகளை அவர் நண் பர்கள் பங்கீடு செய்துகொண்டனர். கிழக்கு வங்கா ளம் பிரிந்து சென்றபோது அங்கிருந்து இந்தியாவுக் குட் புகுந்த கதியற்ற மக்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி வினுேபாவின் நண்பர்கள் அவரைக் கேட்டுககொண்டனர். வினுேபா தான் பொறுப்பேற்ற வேலையைச் செவ்வனே செய்து முடித்தார். உடை யின்றி வந்தோருக்கு உடையும், ஊண் இன்றித் தவித்தோர்க்கு ஊணும், வசிக்க வீடின்றி இருந் தோர்க்கு வீடும் கொடுத்து ஏழைகளின் அன்பைப் பெற்ருர், そ
1951-ஆம் ஆண்டு ஏப்பிரில்மாதம் 18-ஆம் தேதி பாரதநாட்டின் சரித்திரத்தில் ஒரு கன்னுள் ஆகும். அன்றுதான் வினேபா முதன் முதல் பூமிதானம் பெற்ருர், "பூமிதானம்' என்பது இப்போது சரித்திரப் புகழ்பெற்ற ஒரு சொல்லாட்சியாய் வி ட் ட து. பூமியைத் தானமாகக் கொடுத்தல் என்பது இதன் பொருளாகும். வினுேபா தெலுங்கு நாட்டிலே சுற்றுப் பிரயாணஞ் செய்துகொண்டிருந்தபோது சில தீண்

21
டாத வகுப்பு மக்கள் அவரிடம் வந்து தாங்கள் குடி யிருப்பதற்கு நிலமில்லை யென்று முறையிட்டார்கள். சாதாரணமாக அரசியற்றலைவர்களாய் இருந்தால் ‘இதை நான் கவனத்தில் வைத்துக் கொள்ளுகிறேன்" என்று கூறிவிட்டுப் போய்விடுவார்கள். மக்களும் நம்பி ஏமாற்றம் அடைவார்கள். ஆனல் வினுேபா இந்தப் பிரச்சினையை உடனே தீர்த்துவைக்க வழி தேடினர். (குடிநிலம் இல்லாத அந்த ஏழை மக்கள் வாழும் கிராமத்துக்குச் சென்று கூடிய நிலப்பரப்புள் ளோருக்கு உபதேசஞ் செய்தார். எதிர்பாராத வகை யில் அவர்கள் எல்லோரும் வினுேபாவின் வேண்டு கோட்கு இணங்கினர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வைத்திருந்த நிலங்களில் ஒவ்வொரு பகுதியைத் தானமாக வினுேபாவிடம் ஒப்படைத்தனர். இது அவ ருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. எந்தவிதமான பொருளும் பெருமல் எவராவது தங்கள் நிலங்களைப் பிறருக்கு இனமாகக் கொடுக்க முற்பட்டதை இது வரை ஒருவரும் கேள்விப்பட்டதில்லை ; வரலாற் றிலும் இத்தகைய நிகழ்ச்சி கூறப்பட்டதில்லை. ஒரு வர் செய்வதைப் பார்த்து எல்லோரும் பூமிதானஞ் செய்தனர். இங்ங்ணம் விைேபா இரண்டு மாதங்க ளாகத் தெலுங்கு நாட்டிலே தெருத்தெருவாய்ச் சுற் றுப் பிரயாணஞ் செய்து ஏழை மக்களின் சார்பில் 12,000 ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்ருர், சில நாட்களில் இச் செய்தி பாரதநாடு முழுவதிலும் பரவியது. பாரதப் பிரதமர் நேருவுக்கும் இது வியப் பைக் கொடுத்தது. உடனே நேரு வினேபாவை டெல்லி நகருக்கு வரும்படி அழைத்தார். அவரும் தெலுங்கு நாட்டிலிருந்து கால்நடையாகவே வடஇந்தியாவிலுள்ள

Page 17
22
டெல்லி நகரை நோக்கிப் பிரயாணஞ் செய்தார். இத்தூரத்தைக் கால் நடையாகக் கடந்து செல்ல ஏறக்குறைய இரண்டு மாதங்கள்வரை சென்றன. வினுேபா நடந்துசென்ற பாதையோரங்களில் பொது மக்கள் கூட்டங் கூடி அவரை வரவேற்றனர். அவர் கேட்பதற்கு முன்னரே, தாங்கள் வைத்திருந்த நிலப் பரப்பில் ஒரு பகுதியைத் தானமாகக் கொடுத்தனர். டெல்லி நகரை அடைவதற்கிடையில் வினுேபா 18,000 ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்றர். டெல்லி நகரில் பிரதமர் நேருவைச் சந்தித்துப் பூமிதானத் தைப் பற்றிய தம் கருத்துக்களைச் சமர்ப்பித்து விட் டுப் பாரத நாட்டின் பல பாகங்கட்குச் சுற்றுப் பிர ய்ாணஞ் செய்தார். 1955-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் கும் வந்தார். தமிழ் மக்கள் அவரை வரவேற்றுப் பூமி தானஞ் செய்தனர். இங்ங்னம் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களே ஏழைமக்கள் சார்பில் தானமாகப் பெற்றுக்கொண்ட வினுேபா, அந்நிலங்களே எவ்வாறு பங்கீடு செய்வதென இன்று ஆராய்ந்து வருகிருர், எல்லோருடைய மனநிறைவுக்கும் ஏற்பப் பங்கீடு செய்வது எளியதன்று.
பாரத நாட்டிலே பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் பணக்காரர் கள் பலர் வாழ்கிருரர்கள். அதே நாட்டிலே, ஓர் இரவு துரங்க இடமின்றி, புகைவண்டி கிலேயங்களிலும் தெரு வோரங்களிலும் உள்ள ஒதுக்கிடங்களில் பனியிலும் மழையிலும் படுத்துத் துரங்கும் ஏழை மக்களும் வாழ் கிருர்கள். கடவுள் படைத்த மக்களுள் ஏற்றத்தாழ்வு எதனுல் ஏற்பட்டது, இதற்கு யார் பொறுப்பு, இவ் வேற்றத்தாழ்வு எப்போது அகல்வது, இதனை யார்

-w
.2
*
அகற்றுவது, என்றெல்லாம் பல வினக்களை எழுப்பி விடை காண முற்படுகிருர் வினுேபா. பிறப்பினுலே ஒருவர் உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் சொல் லிக்கொள்ளும் வழக்கம் இருந்தாலும், பணத்தைத் தெய் வமாகப் போற்றும் இப்போலி உலகத்திலே பணமே சமுதாயத்தின் அடிப்படையான பிரிவுகளுக்கெல்லாம் மூல காரணமாகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருள் ஒருவன் தன் சொந்த முயற்சியினல் உயர்தரக் கல்வி கற்று உயர்ந்த உத்தியோகம் வகிக்கத் தொடங் கியதும் அவனது குலத்தைப் பற்றி மக்கள் பேசுவது குறைந்து விடுகிறது. எனவே, மக்களில் பணக்காரர் என்றும் வறியவ ரென்றும் இருவகுப்பினர் இருப் பதை ஒழித்தால் மனிதனின் ஏ ற் ற த் தாழ்வும் குைಇಂತಿಷ್ಠಿ விடுமென வினுேபா கருதுகிருர். இங்கி லாந்து, அமெரிக்கா முதலிய மேல் நாடுகளில் இருக் கும் ஜனநாயக ஆட்சிமுறையில் வினுேபா குறை காண்கிருர், கட்சி பேதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தில் ஒரு கட்சி அதிகாரத்துக்கு வந்ததும் எதிர்க்கட்சி அதனை வீழ்த்தக் கையாளும் முயற்சிகளெல்லாம் ஈற்றில் நாட்டின் பொது நலனுக் குக் கேடாகி விடுகின்றன என அவர் கருதுகிருர், அன்றியும், எதிர்க்கட்சி அங்கத்தினர்கள் அங்கத்துவம் வகிக்கும் தொகுதியில் வாழும் மக்களின் தேவைகள் பெரும்பாலும் ஆளுங்கட்சியால் கவனிக்கப்படாமலே இருக்கின்றன. இக் காரணங்களால் இப்பொழுது நடை முறையில் இரு க் கும் மக்களாட்சிமுறை பாரத நாட்டுக்குப் பொருந்தாது என்பது வினோ வின் கருத்து. மற்று, ரூசியா, சீன முதலிய நாடு களில் இருக்கும் பொதுவுடைமை அரசாங்கத்திலும்

Page 18
24
வினுேபாவுக்கு விருப்பமில்லை. அரசாங்கமே கடவு ளெனக் கருதும் பொதுவுடைமை நாடுகளில் தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது ; அவன் குரல் அவன் நாட்டு அரசாங்கத்தின் காதில் விழுகிற தில்லை; எனவே, பொதுவுடைமை ஆட்சியும் பாரத நாட்டுக்குப் பொருந்தாது என்பது வினுேபாவின் கருத்து. ஆகவே, அவர் கற்பனை செய்யும் அரசாங்கம் இவற்றிலும் வேறுபட்டதொன்று. சுய ஆட்சி நடத் தும் கிராமங்களின் இணைப்பாகப் பாரத அரசாங்கம் அமைய வேண்டுமென்று வினுேபா கருதுகிருர், மகாத்மா காந்தியும் கிராமச் சுதந்திரத்தையே வற் புறுத்தினர். பாராளு மன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்பும் பிரதிநிதிகளின் செல்வாக்குக்கு உட்பட்டன வாகக் கிராமங்கள் இருக்கக்கூடாது என்றும், நகரத் துக்கும் கிராமத்துக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு அகல வேண்டுமென்றும் வினுேபா எண்ணுகிருர். இதனை எப்படிச் செய்து முடிப்பது என்ற வினவிற்கு விடை யாக வினுேபாவின் " கிராம தானம் அமைகிறது
கிராம தானம் என்பது பூமிதானத்தோடு தொடர்புடையது. தான் எந்தெந்தக் கிராமங்களி லிருந்து பூமிதானம் பெற்றரோ, அந்தந்தக் கிராமங் களிலுள்ளவர்களுக்கு அப்பூமியைப் பங்கீடு செய்ய வேண்டு மென் கிருர் வினுேபா. அன்றியும், கிராமத் தில் ஏராளமான நிலம் உள்ளவர்கள் தங்கள் நிலத்தைக் கிராமத் தலைவர் ஒருவரைத் தெரிந்து அவரிடம் ஒப் படைக்க வேண்டும். சொற்ப நிலம் உள்ளவர்களும் தங்கள் நிலம் முழுவதையும் கிராமத்தின் பேரில் தலைவரிடம் ஒப்படைத்து விடவேண்டும். கிராமத் தலைவர் கிராம நிலம் முழுவதையும் அந்தக் கிராம

25
மக்களிடம் சரியாகப் பகிர்ந்து கொடுத்து விடுவார் : கிராம மக்களின் ஒத்துழைப்பு இயக்கங்கள் மூலம் கிராமத்திலே கமச் செய்கை நடக்கும். சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, உழுந்து, பயறு, காய்கறிவகைகள் எல்லாம் நிலத்தின் பண்பிற்கேற்றபடி கிராமத் தில் மக்கள் விளைவிப்பார்கள். அத்துடன் கிராமத்துக்கு வேண்டிய பொருட்களைச் செய்வதற்குக் கைத்தொழில் கள் விருத்தி செய்யப்படும். இவற்றின் வெற்றி மக்களின் ஒத்துழைப்பிலேயே தங்கி யிருக்கிறது. மூளையின் திறமை கொண்டு நாற்காலியில் இருந்து உத்தியோகம் பார்க்கும் அரசாங்க வகுப்பினர் என்ற ஒரு வகுப்பு வினுேபா கற்பனை செய்யும் கிராமத்தில் கிடையாது. அதுபோன்று உடல் வன்மை கெர்ண்டு நிலத்தை வெட்டி உழைக்கும் தொழிலாளி வகுப்பினர் என்ற ஒரு வகுப்பும் வினுேபா கற்பனை செய்யுங் கிராமத்திற் கிடையாது. மூஃளயின் தி ற னே க் கொண்டு செய்யும் வேலேயையும் உடல் வலிமை யைக் கொண்டு செய்யும் வேலையையும் ஒருவரே செய்யவேண்டும். வினுேபா பின்வருமாறு கூறு கிருர்-" நான் கற்பனை செய்யுஞ் சமுதாயத்தில் பிரதம மந்திரிகூட நான்கு மணிநேரம் சரீர உழைப்புச் செய்த பின்னர் நான்கு மணி நேரம் மந்திரி வேலை செய்வார். நான்கு மணி நேரம் நிலத்திற் பாடுபட்டால் அவருக்கு என்ன ஊதியம் கிடைக்குமோ அதே ஊதியம் மந்திரி வேலை பார்க்கும் மற்ற நான்கு மணி நேரத்திற்கும் கொடுக்கப்படும். *
பாரத நாட்டிலே உள்ள கோடிக் கணக்கான கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்வார்களேயானுல் அரசாங்கத்

Page 19
26
திடமிருந்து ஒன்றையும் எதிர்பார்க்க வேண்டியதில்லே. பிறநாட்டுத் தொடர்பு காரணமாக வரும் வேலைகளை மாத்திரம் பாரத மத்திய அரசாங்கம் கவனித்துவரும். மக்கள் தங்களுக்குள்ளே ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ளாது எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை நம்பி யிருப்பதனுலேயே தாங்கள் தெரிவுசெய்த அரசாங் கத்துக்கு மக்கள் அடிமைகளாகி விடுகின்றனர் என்று வினுேபா கருதுகிருர். இவ்வாறு கருதும் வினுேபா இன்று கிராமத் சுதந்திர இயக்கங்களே ஏற்படுத்த முயலுகிறர். (* உன்னுடைய சொந்தத் தேவையை நீயே பூர்த்தி செய், பிற கிராமங்களை உன் தேவை களுக்கு எதிர்பாராதே" எனக் கிராமங்களுக்குப் போதனை புரிந்து வருகிருர் ) மக்கள் பூமிதானம் செய்ய முன்வந்தது போல் கிராமதானமும் செய்ய முன் வருவார்களென வினுேபா எதிர்பார்க்கிருர், கிராம நிலங்கள் கிராமத்தவரிடையே பங்கீடு செய் வதற்கு முழுக் கிராமத்தவரின் ஒத்துழைப்பும் தேவை. கிராமத்தில் வாழும் சில மக்கள் வி னே பா வின் கொள்கையை எதிர்த்தால் கிராமச் சுதந்திரம் ஏற் படாது. இனி, இப்பொறுப்பை அரசாங்கம் ஏற்று நடத்துவதாக இருந்தால் மறுப்பவர்களைத் தண்டிக்கச் சட்டங்கள் இயற்றப்படும் : மக்கள் வழக்கு மன்றங் களிற் சென்று வழக்காடினுல் வழக்குகளைத் தீர்த்து வைக்கக் குறைந்தது பத்து வருடங்கள் செல்லும். அதற்கிடையில் நாட்டிலே பலவித குழப்பங்கள் ஏற் பட்டுவிடும். எனவே, சட்ட மூலம் மக்களைத் திருத்த வினுேபா விரும்பவில்லை. மக்கள் தங்கள் மனத்திலே புரட்சி செய்ய வேண்டுமென்கிருர் வினுேபா. வறிய வர்கள் பணக்காரருக்கு எதிராக நாட்டிலே புரட்சி

27
செய்து இரத்தக்களம் ஏற்படுத்தும் நிலையை உண்டு பண்ண வினுேபா விரும்பவில்லை. அப்படியான நிலைமை வருமாயின், வழிந்தோடும் இரத்த வெள்ளத் தில், பாரத நாடு போற்றிக் காக்கும் பண்பாட்டின் சின்னங்கள் அமிழ்ந்துவிடும். எனவே, மக்களின் கருத்துப் புரட்சி மக்களோடு நி ன் று விட வேண்டும். நிலமில்லாத ஏழைகளின் சார்பில் நிலம் உள்ளவர்கள் பலர் பூமிதானஞ் செய்தது போன்று, கிராமங்களில் உள்ள எல்லா நிலமுள்ளவர்களும் ஒருங்கே ஒத்துழைப்பார்களேயானல் வினுேபாவின் கனவு நனவாகிவிடும். பூமிதானம் பெறும் முயற்சி யில் வினுேபா ஒரளவு வெற்றி பெற்று உலக மக்க ளின் மனத்தைத் தம் க்கம் இழுத்துக் கொண்டார். இனி, கிராமதான மூலம் கிராம மக்கள் அத்துணைப் பேரின் ஒத்துழைப்பினலும் ஒற்றுமையிலுைம் கிராமச் சுதந்திரத்தை எதிர்பார்க்கிருர், போதனேயினல் மக்கள் மனத்தில் புரட்சியை உண்டுபண்ண இன்று பாரத நாட்டுத் தெருவிதிகளில் பாதயாத்திரை செய்து கொண்டு போகிருர், மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்குமாயின் வினுேபாவின் கனவு நனவாகும்.

Page 20
3. வானவெளிப் பயணம்
மனிதன் சிந்தணு சக்தி படைத்தவன். கற்கள்மீதும் முட்கள்மீதும் காலேவைத்து நடந்து அல்லற்பட்ட ஆதி மனிதன், நீர்க்கரையிலிருந்து நீருள் ஒடித்திரியும் மீன்களே நோக்கினன். நீரின் அடித்தளத்தில் மீன்கள் ஒடித்திரியாமல் மேற்றளத்தில் மிதந்து திரிவது அவனுக்கு ஒரு விக்தைய க இருந்தது. மீன்களின் உடம்பில் பொருந்தியிருக்கும் செதிள்களே அவதானித் தான். செதிள்களின் உதவியினலேயே மீன்கள் நீந்துகின்றன என்பதைக்கண்ட அவன் தன் கைகளை யும் செதிள்களாக்க முற்பட்டான். நீரில் இறங்கினன் : கைகளைச் செதிள்களாகக்கொண்டு நீரில் அடித்து நீந்தத் தொடங்கினுன் ; வெற்றியும் கண்டான். கிலத் திலும் நீரிலும் தனது ஆட்சியைச் செலுத்திய மனி தன் வானவெளியிலும் தன் ஆதிக்கத்தை நிக்லநாட்ட முயன்ருன். அவன் வானத்திற் பறந்து திரியும் பறவைகளே அவதானித்தான். பறவைகளும் மீன் களேப் போல் இறகு வைத்திருப்பதைக் கண்ணுரக் கண்ட மனிதன் பலவித கற்பனைகளைத் தன் சிங் தனக்கு விருந்தாக்கினன். இறகை விரித்து அடிப்ப தணுலேயே பறவைகள் நிலத்திலே விழாமல் பறக்க முடிகின்றது என அவன் எண்ணின்ை. தானும் தன் கைகளை விரித்து ஆட்டிப் பறக்கமுடியுமோ என முயன்று பார்த்தான். அவனல் பறக்க முடியவில்லை;

29
பின்னர் மரங்களின் கிளைகளில் ஏறியிருந்துகொண்டு கைகளை ஆட்டியவண்ணம் பறக்க முயன்றன் : பறக்க முடியாது நிலத்தில் விழுந்து நொறுங்கினன். இங்ங்னம் பல நூற்ருண்டுகளாக மனிதன் பறப்ப தற்குச் செய்த முயற்சிக ளெல்லாம் தோல்வி யாயின. எனினும், அவன் சலிக்கவில்லை. சீவக. சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் மயிற் பொறி ஒன்றைத் தன் கற்பனையில் கண்டார். கம்பர் புட்பகவிம!னம் ஒன்றைக் கற்பனை செய்தார். இவை கள் எல்லாம் கற்பனை யளவில் கின்றுவிட்டன. புல வர்கள் கண்ட கனவையெல்லாம் விஞ்ஞானிகள் நன வாக்க முற்பட்டனர்.
பதினைந்தாம் நூற்றண்டில் இத்தாலி தேசத்தில் வாழ்ந்த வின்சி என்பவர் பறக்குங் கலேயைப்பற்றிப் பலவித ஆராய்ச்சிகள் நடத்தினர். வெளவாலின் உடலமைப்பை நன்கு அவதானித்த அவர், அதே அமைப்பில் வானில் மிதக் குங் கருவி ஒன்றைக் கண்டு பிடித்தார். அத்துடன், மனிதன் வானவெளியிலிருந்து நிலத்தில் காயமடையாமல் மெதுவாக இறங்க உதவி செய்யும் 'பாரசூட்டைக் கண்டு பிடித்தார். 'பார சூட்டு" என்பது விரித்த ஒரு குடையின் வடிவம் போன்றது. வின்சி நடத்திய ஆராய்ச்சிகளின் பின் பதினெட்டாம் நூற்ருண்டு வரை இத்துறையில் பெரிய முன்னேற்றமெதுவும் நடக்கவில்லே. அந்நூற். ருண்டில் வானிற் பறந்து செல்வதற்கு இருவித கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று காற்றிலும் லேசானது ; மற்றது காற்றிலும் பாரமானது. முதன் முதலில், சூடான காற்றுச் சாதாரண காற்றை விடப் பாரங் குறைந்ததெனக் கண்டு, அதனைப்

Page 21
---س
O V
பலூனில் அடைத்து வானவெளியில் அனுப்பினர். பலூன் பாரமற்றதாகையால் அது காற்றல் உந்தப் பட்டு மேல்நோக்கிச் சென்றது. இந்த வெற்றியைக் கண்ட மனிதன் கை தட்டிச் சிரிக்க ஆரம்பித்தான். எனினும், காற்றினூலே தள்ளப்பட்டுச் செல்லும் பலூன் மனிதன் விரும்பிய திசையிற் செல்லாது காற்று அடிக்கு பக்கஞ் சென்றது. ஆகவே, மனிதன் தான் விரும்பிய திசையிற் செல்லக்கூடியதும் வேக மாகச் செல்லக் கூடியதுமான பொருளொன்றைக் கண்டுபிடிக்க முயன்றன். காற்றிலும் பாரமான பொருள்தான் அவ்வாறு செல்லக்கூடும் என்பதை அறிந்தான். 1852-ஆம் ஆண்டில் ஒரு பிரஞ்சு அறிஞர் ஒரு சிறிய இயந்திரமொன்றைப் பலுனிற் பொருத்தி அதனே மேலே பறக்கவிட்டார். பலுரனில் இயந்திரம் இனேக் கப்பட்டதால் பலுT&னத் திருப்பியும் பூமிக்குக் கொண்டுவர முடிந்த த. விஞ்ஞானிகள் தொடர்ந்து 5 டத் தி ய ஆராய்ச்சிகளின் பயனுக 1903-ஆம் ஆண்டிலே பறக்கும் இறகையும் வேக மகச் செல்வதற்கேற்ற சக்தி உண்டாக்கும் இயங் திரத்தையும் இனத்து ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தனர். ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்பட்டபின் உலகத்தின் ஒரு பாகத்திலிருக்து மற்றப் பாகத்துக்கு மக்கள் வானவெளியே பிரயாணஞ் செப்ப முடிந்தது : காகிதங்கள் அனுப்பப்படலாயின. மனித சரித்திரத் தில் இது ஒரு பெரிய வெற்றியாகும். எனினும், மனித ஆ ைஇதனுடு கின்று விடவில்லே.
இரண்டாம் உலக மகாயுத்தம் ஏற்பட்ட காலத்தில் விஞ்ஞானிகள் ஆகாய விமானத்தின் அமைப்பில் பலவித மாற்றங்களேக் கொண்டு வந்தனர். இதுவரை

3.
இறகுடன் பறக்கும் விமானமே பறந்து சென்றது. இப்போது இறகில்லாமற் பறக்கும் விமானத்தையும் கண்டுபிடித்தனர். இதற்கு "ஜெட் விமானம்' என்பது பெயர். இந்த ஜெட்விமானத்தினுள்ளே உள்ள இயக் திரத்தினுள் இரசாயன எரிபொருள் வைக்கப்பட்டிருக் கும். வெளி பில் உள்ள காற்று இயக்திரத்தினுள் இழுக்கப்பட்டு அங்குள்ள எரிபொருளுடன் சேர்ந்து எரியும். அப்போது வெப்பம் அதிகரிக்கிறது. வெப்ப மான காற்று பாரங் குறைந்ததாகையால் வெளியே செல்ல முயல்கிறது. இயந்திரத்தின் முன்பக்கம் மூடப்பட்டிருப்பதால் காற்று முன்பக்கமூடியை மிகுந்த வலிமையுடன் தள்ளுகிறது. இந்தத் தள்ளுதலினுல் ஏற்பட்ட விசை விமானத்தை முன்நோக்கிச் செலுத்து கிறது. இந்த ஜெட் விமானம் வந்ததன்பின் உலகப் பிரயாணத்தின் தேரம் சுருங்கிவிட்டது. ஏனெனில், ஆகாய விமானத்தைவிடப் பன்மடங்கு வேகமாகச் செல்லக்கூடியது ஜெட் விமானம், இது கண்டுபிடிக்கப் பட்டபின், அமெரிக்காவிலே கியூயோர்க் பட்டினத்தில் வசிக்கும் ஒருவர் காலேயில் சாப்பிட்டுவிட்டு, ஜெட் விமானமூலம் அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து லண்டன் நகரத்திற்கு வந்து தன் கங்தோர் வேலே களேச் செய்து முடித்துவிட்டுப் பின் மாலேயே அமெரிக்காவுக் குத் திரும்பிப்போய்த் தன் மனேவி மக்களேச் சக்திக்க முடிகிறது.
மனிதன் ஜெட்விமானத்தைச் செலுத்தி அதனிற் பெற்ற அனுபவத்தைக்கொண்டு இராக்கெட்டைக் கண்டுபிடித்தான். இராக்கெட்டு என்பது ஜெட்விமா னத்திலும் சிறிது வேறுபட்டது. வெளியிலிருந்து வரும் க ச ற் று இயக்திரத்தினுள் நுழைவதால்

Page 22
32
எரிபொருள் எரிந்து ஜெட்விமானம் முன்செலுத்தப் படுகிறது. ஆணுல் இராக்கெட்டு காற்றின் உதவியும் இல்லாமல் இயங்குவது. அதாவது, இயந்திரத்தினுள் இருக்கும் இரசாயனப் பொருள்கள் எரிந்து விரிவடை வதால் உண்டாகும் சூட்டினுல் இராக்கெட்டு செலுத் தப்படுகிறது. எனவே, இராக்கெட்டின் இயந்திரத் தினுள் எரியும் பொருளும் அதனே எரியச் செய்யும் பொருளும் வைக்கப்படும். இதனே இன்னும் விரித்து விளக்கலாம். ஜெட்விமானத்தினுள் இருக்கும் இயந் திரத்தினுள் இரசாயன எரிபொருள் வைக்கப்பட் டிருக்கும். இது திரவமானது. வானில் உள்ள காற் றிலே கலந்திருக்கும் எரிக்குங் தன்மையுள்ள பிரான வாயு, இயந்திரத்தினுள் இருக்கும் எரிபொருளே எரிப் பதணுலேயே ஜெட்விமானஞ் செலுத்தப்படுகிறது. ஆணுல் இராக்கெட்டு மிக விசையாக, காற்றில்லா உப த த் தி ற் கும் செல்லக்கூடியதாகையால் எரி பொருளே எரிக்க உதவிசெய்யும் பிராணவாயுவை அது பெறமுடியாது. எனவே பிராணவாயுவைப்போல் எரிக்குக் தன்மையுள்ள திரவப்பொருள் ஒன்று இராக் கெட்டின் இயக்திரத்தினுள் இருக்கும் எரிபொருளாகிய இரசாயனப் பொருளுடன் வைக்கப்படும். இதனுல், வெளிக்காற்றின் உதவியின்றியே இராக்கெட்டின் இயந்திரம் தொழிற்பட முடிகிறது. காற்றில்லா உயரத்திலும் பறந்து செல்லும் இந்த இராக்கெட்டுக் களே இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர் மானியர் கண்டு பிடித்தனர். ஆகாய விமானங்களில் குண்டுகளே ஏற்றி ஜெர்மனியிலிருந்து பறந்து சென்று லண்டன் பட்டினத்துக்குமேல் வீசியபோது, விமான ஒலியை முன்னரே கேட்ட மக்கள் ஒதுக்கிடங்களில்

33
ஒடி உயிர்தப்பினர். எனவே, ஒலிகேளாத விமானம் ஒன்றை ஜெர்மானியர் அமைக்க முயன்றதன் விளேவா லேயே இராக்கெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதி லிருந்து ஒர் உண்மையையும் அறியலாம். அதாவது, ஆகாயவிமானத்தின் வேகம் ஒலி செல்லும் வேகத் திலும் குறைவாய் இருப்பதனுலேயே விமானச் சத்தம் முதலிற் பூமியை அடைகிறது. ஒலியின் வேகத்திலும் கூடிய வேகத்துடன் விமானம் பறக்தால் விமானத்தின் வருகையைப் பூமியில் முதலில் அறியமுடியாது. இராக் கெட்டுக்களின் வேகம் ஒலியின் வேகத்தினும் மிகக் கூடியது. எனவே இராக்கெட்டுக்களே ஓர் இடத்தி லிருந்து இன்னுெரு இடத்திற்கு அனுப்பினுல் அவை நிலத்தில் விழுந்து வெடித்த பின்பே சத்தம் கேட்கும். இதனுல் ஒருவரும் இராக்கெட்டுக்குப் பயக்கு முன்னரே தப்பி ஒதுங்கிவிட முடியாது.
இராக்கெட்டின் வளர்ச்சி சரித்திரத்திலே மிக முக்கியமானது, இதுவரை மனிதன் வான வெளியிற் பறந்து சென்றன். ஆணுல் இப்பொழுது இசாக்கெட்டின் மூலம் வானவெளியை ஊடறுத்துச் சென்று அப்பால் இருக்கும் உலகங்கள் எவை என அவன் அறிய முற்படு நிறன். திருவிழாக்காலங்களில் விடும் வாணவெடி நிலத்திலிருந்து விரைவில் மேற்கிளம்பி ஆகாயத் துக்குச் செல்வது போல் இராக்கெட்டும் செல்கிறது. இராக்கெட்டு பெரிய இயந்திரத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதனுல் வாணவெடியை விட ஆயிரம் மடங்கு வேகமாகச் செல்கிறது. எனவே இந்த இராக் கெட்டின் உதவியினுல் வான் வெளியிற் பயணஞ் செய்து ஏனே உலகங்களுக்குப் போப் அங்கு வாழும் மக்களோடு அளவளாவலாம் எண் மனிதன் கற்பனே
3

Page 23
34
செய்கிறன். இதனே நனவாக்க இன்று விஞ்ஞானிகள் முயன்றுகொண் டிருக்கின்றனர்.
சூரியனேச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வெவ்வேறு பாதைகளில் இயங்கிக்கொண் டிருக்கின்றன என் பதை வானநூலறிஞர் கூறியிருக்கின்றனர். புதன், வெள்ளி, பூமி, சென்னாப், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளோட்டோ என்பனவே அக்கிரகங்கள். இவை கிரகங்கள் என அழைக்கப்பட்டாலும் பூமியைப் போன்ற உலகங்களேயாகும். சூரியனே அடுத்துச் சுற்றி வருவது புதன் பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் அமைந்திருப்பது போல் புதனேச் சுற்றி அமைபவில்லே. புதனின் ஒருபக்கமே குரியனே எதிர் நோக்கியிருக்கிறது. எனவே சூரியனேச் சுற்றிப் புதன் திரியும்போது புதனின் ஒரு பக்கத்தில் மட்டும் கிரணங் கள் விழுவதால் அப்பக்கம் மிக்க சூடு உள்ளதாக இருக் கிறது. பூமியின்மேல் விழும் சூரிய கிரணத்தின் வெப் பத்தைக் குறைப்பது காற்றுச் சூழல். காற்றுச் சூழல் இல்லாத புதனின் உலகத்தில் விழம் சூரிய கிரணம் நெருப்புப்போல் எரிந்து கொண்டிருப்பது இயற்கையே. அதனுல், விஞ்ஞானிகள் புதின்போன்ற சில கிரகங் களுக்கு மனிதனே அனுப்பிவைத்தாலும் அங்கு அவனே வாழவைக்க இயலாது. ஏனெனில் அங்கு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மனிதன் விழுந்து இறந்து விடுவான். பூமிக்கு அண்மையில் உள்ள உலகம் சந்திர உலகம். இவ்விரண்டிற்கும் இடைத்துராம் 2,4,000 மைல்கள். இந்தச் சந்திர உலகத்தின் அமைப்புப் பெரும்பாலும் இப்பூவுலகத்தைப் போன்றது. ஆகவே விஞ்ஞானிகள் சந்திரனே எப்படி அடைவதென்பதைப் பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

35
1957-ஆம் ஆண்டில் ரூசிய விஞ்ஞானிகள் ஒரு செயற்கைச் சந்திரனேச் செய்து வான வெளிக்கு அனுப்பினர். அதன் பின்னர் தொடர்ந்து இருமுறை செயற்கைச் சந்திரனே அனுப்பி வெற்றி கண்டனர். உலகம் முழுவதும், குசிய விஞ்ஞானிகள் செய்த இந்த அற்புதச் செயலே மெச்சுகின்றது. இச்செயற்கைச் சந்திரன் மூன்றும் இன்றும் வான வெளியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன ; பூமியைச் சுற்றி வந்து கொண் டிருக்கின்றன. மனிதன் அமைந்து வர ஒ வெளிக்கு அனுப்பிய சந்திரன் அங்கு இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கைச் சந்திரனினின்றும் வித்தியாசமானது என் பதைக் காட்டச் "செயற்கை" என்னும் அடைமொழி யைச் சேர்த்துச் செயற்கைச் சந்திரன் என அழைக்கப் படுகிறது. இச்செயற்கைச் சந்திரன் பூமியைப் போல் வட்டவடிவ முடையது. இதற்குள் பலவகை உபகர னங்கள் வைக்கப்பட்டுள்ளன. முதலாம் செயற்கைச் சந்திரனின் விட்டம் 23 அங்குலம் அதன் கிறை 184 இருத்தல். இது அலுமினிபம், செம்பு, வெள்ளி என்பனவற்ருற் செய்யப்பட்டது. இச்செயற்கைச் சந்திரன் மணிக்கு 18,000 மைல் வேகத்திற் சென்று கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 560 மைல் உயரத் திற்குச் சென்று 95 கிமிடங்களுக்கு ஒருமுறை பூமி யைச் சுற்றி வருகிறது. இதனுள் ஒலியைப் பதிவு செய்யுங் கருவி, ஒலிபரப்புக் கருவி, வாயுவின் அமுக்கங்காணுங் கருவி முதலிய பலவகை உபகரணங் கள் வைக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து 560 மைல் களுக்கு அப்பாற் சென்றும் இச்செயற்கைச் சந்திரனி லுள்ள ஒலிபரப்புரேடியோ ஒலிபரப்பிக் கொண்டே யிருந்தது. ருசிய விஞ்ஞானிகள் இந்த ஒலிபரப்புக்

Page 24
3G
களிலிருந்து பெற்ற செய்திகளே ஆராய்ந்து, மேலே போகப் போக வாயுவின் அமுக்கம் எப்படி இருக்கின்ற தென்றும், சூரியகிரணத்தின் சூட்டின் அளவு எவ்வளவு எனறும கனடனா.
முதலாம் செயற்கைச் சந்திரனிலிருந்து பெற்ற செய்திகளேக் கொண்டு ரூசியர்கள் அமைத்த இரண் டாம் செயற்கைச் சந்திரன் முன்னேயதைவிட மிகப் பெரியதும் பாரமானதுமாகும். இதன் நிறை அரைத் தொன். இதற்குள் அதிக விஞ்ஞான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. வட்ட வடிவமான இச்செயற் கைச் சந்திரனின் நடுவில் ஓர் அறை கட்டி அதற்குள் லெய்கா " என்னும் பெயருடைய காயையும் வைத்து வானவெளிக்கு அனுப்பினர். லெய்கா, ரூசிய விஞ் ஞானி ஒருவரின் வீட்டு வளர்ப்பு காய். அது மிக அழகுள்ளது ; அறிவும் உள்ளது; மனிதனின் சொற் கேட்டு நடக்கக்கூடியது. ரூசிய விஞ்ஞானிகள் லெப் காவை இதற்கு முக்தியும் இரண்டொரு முறை வானத் திற் சிறிது தூரத்திற்கு அனுப்பி மறுபடியும் பூமிக்கு வரவழைத்திருக்கின்றனர். லெய்காவின் அமைதியான குணத்தைக் கண்டு, நன்றியுள்ள இம் மிருகமே மனிதன் பிரயாணஞ் செய்யப்போகும் வானவெளிக்கு முதலிற் போகத்தக்கது என்று எண்ணி அதைச் செயற்கைச் சந்திரனுள் வைத்து அனுப்பினர். லெய்கா சுவாசிப்ப தற்கேற்ற பிராண வாயுவைப் பெட்டியில் அடைத்து ஒரு மெல்லிய குழாய் மூலம் அதை அதன் முக்கோடு தொடுத்து விட்டனர். பல மாதங்களாக லெய்கா பிர யாணஞ் செய்ய வேண்டியிருத்தலால் அதற்குப் போதிய உணவு தேவையல்லவா ? ரூசிய விஞ்ஞானி கள் நல்ல சத்துள்ள உணவைத் திரவமாக்கிக் குழம்பு

37
போற் செய்து, அதனேயும் லெப்காவுக்கருகில் ஒரு பெட்டியில் வைத்தனர். இக்குழம்புச் சத்து ஒரு குழாய் மூலம் கொஞ்சங் கொஞ்சமாக லெய்காவின் வயிற்றிற்கு அனுப்பப்பட்டது. லெப்கா ஒரு சிறிய மெத்தைமேல் படுக்கவைக்கப்பட்டது. செயற்கைச் சந்திரனில் அடைக்கப்பட்ட இக்காய்தான் உலக சரித் திரத்தில் முதன்முதல் வானவெளிப் பயணஞ்செய்த உயிருள்ள பிராணி. எனினும், இது அதிக காலம் உயிருடன் வாழவில்லே, வாணவெளிக்குப் போன இரண்டொரு மாதங்களில் இதன் உயிர் போய்விட்ட தென ரூசிய விஞ்ஞானிகள் உலகுக்கு அறிவித்தனர். இச்செய்தி உலகமக்கள் பலரைத் துக்கத்தில் ஆழ்த்தி பது. லெப்கா இறந்துவிட்டபடியினுல் வானவெளி இன்னும் மனிதனின் பிரயாணத்துக்கு உகந்ததன்று என்னும் முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கின்றனர்.
இனி, வட்டமான இச்செயற்கைச் சந்திரன் எவ் விதம் வானவெளிக்கு அனுப்பப்பட்டதென்பதைக் காண்போம். இராக்கெட்டின் கூரிய நுனியில் செயற் கைச் சந்திரனேப் பொருத்தி, இராக்கெட்டை மிகவேக மாக மேலே செலுத்துவதணுல் செயற்கைச் சந்திரன் விசையாக வானவெனிக்குத் தள்ளப்படுகின்றது. இந்த இராக்கெட்டு மூன்று பகுதிகளேயுடையது. செயற்கைச் சந்திரனேப் பூமியிலிருந்து 36 மைல் களுக்கு உயர்த்தியதும் இராக்கெட்டின் ஒரு பாகம் கீழே விழுந்துவிடுகிறது. மேலும் 140 மைல்களுக்கு அதைச் செலுத்தியதும் இராக்கெட்டின் இரண்டாம் பாகம் பூமியில் விழுகிறது. மேலும் அதை 300 மைல் களுக்கு உயர்த்தியதும் இராக்கெட்டின் மூன்றும் பாக மும் கீழே விழுந்து விடுகிறது. காற்றற்ற மண்டலத்தில்

Page 25
38
இராக்கெட்டால் தூக்கி எறியப்பட்ட இச்செயற் கைச் சந்திரன், மேலோ கீழோ ஒன்ருலும் தள்ளப் படாமையாலும், வாயுவின் அமுக்கம் இல்லாத இடத் தில் உலவுவதாலும் கீழே விழாமல் பூமியைச்சுற்றி வருகிறது. இராக்கெட்டு மேலே உயர உயர ஏன் அதன் பாகங்கள் கழன்று விழுகின்றனவெனக் கேட் பின், இராக்கெட்டு மிகப் பாரமுடையதணுலேயே அங் ங்ணம் கழலுகின்றதென்று சொல்லலாம். வாயுவின் அமுக்கம் மேலே எறியப்பட்ட பொருளேக் கீழே இழுக் கிறது. ஆணுல் இராக்கெட்டின் வேகம் அதனே வாயு வின் அமுக்கத்திற்கு எதிரே மேலே செலுத்துகிறது. பூமியை நெருங்க நெருங்க வாயு அமுக்கம் கூடிக்கூடி யும், மேலே போகப்போக அது குறைந்து குறைந்தும் சென்று வானவெளியின் மேற்பாகம் வாயுவே இல் லாத இடமாகிறது. எனவே, இராக்கெட்டு மேலே உயர உயர அதன் ஒவ்வொரு பாகமும் கழன்று விழா விட்டால் இராக்கெட்டின் பாரத்தால் செயற்கைச் சக்தி ரன் தேவையில்லா உயரத்திற்கு உயர்த்தப்பட்டுவிடும். அன்றியும், இராக்கெட்டின் வேகத்தைக் கொடுக்கும் சக்தி இராக்கெட்டிற்குள் இருக்கும் எரிபொருளாலும் எரிக்கப்படும் பொருளாலுமே உண்டாக்கப்படுகின் றது. ஓரளவு எரிக்கப்படும் பொருளே வைக்கவே இராக்கெட்டினுள் இடம் உண்டு. எரிக்கப்படும்பொருளே அதிகம் நிரப்பினுல் இராக்கெட்டின் பாரம் மிகக் கூடி விடும் : கூடினுல் இராக்கெட்டு விசையாகச் செல்லமாட் டாது. எனவே, செயற்கைச் சந்திரன் வானவெளிக்கு உயர்த்தப்படுவதற்கு இராக்கெட்டின் பாரமும் வேக முமே முக்கியமானவை.
செயற்கைச் சந்திரனே வானவெளியிற் பயனஞ்

39
செய்ய அனுப்பி வெற்றிகண்ட மனித இனம் இன்று குதூகலங்கொள்கிறது. செயற்கைச் சந்திரனே அனுப் பிப் பெற்ற செய்திகளே ஆதாரமாகக் கொண்டு இயற் கைச் சந்திர உலகத்தின் தன்மையை நிச்சயிக்க முற் படுகிறர்கள் விஞ்ஞானிகள், பூவுலகத்தைப் போன்றே அதற்கு அணித்தாகவுள்ள சந்திர உலகத்திலும் உயிருள்ள பிராணிகள் இருக்கின்றன என விஞ் ஞானிகள் கருதுகின்றனர். இயறகைச் சந்திர உலகத் துக்கு மனிதன் பிரயாணஞ் செய்வதாக இருந்தால் அங்குப் போன பின் திரும்பிப் பூவுலகத்துக்கு வரும் வகையையும் முன்னமே யோசிக்கவேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் அங்குச் செல்லும் மனிதன் நண்பர்க ளின்றித் தவிக்கக்கூடும் : சிற்சில வேளேகளில் அவ னுக்கேற்ற உணவு கிடைக்காது. எனவே, வானவெளிப் பயணத்தின் முத்கிய தடை மனிதன் அங்கு வாழ முடியாமையே &லப்கள் என்னும் நாய் சில நாட் களுக்கு மத்திரமே உயிருடன் இருந்ததாகையால், மனிதனின் உடல்நிலபும் மேலே போகப்போகக் கெட்டு விடும். ஆஞல் தைரியமுள்ள அமெரிக்க ரூசிய வாலி பர்கள் பலர் தங்களேச் செயற்கைச் சந்திரன்மூலம் மேலுலகத்துக்கு அனுப்பும்படி விஞ்ஞானிகளே இன்று கேட்டுக்கொண் டிருக்கின்றனர். விஞ்ஞானிகள் எப்படி இணங்குவர் ? இயற்கைச் சந்திரனில் உள்ள சீதோஷ் னகிலே மனித வாழ்க்கைக்கு உகந்ததா என்பதை அறியும்வரையும் மேலே போனவர் திரும்பிவரும் வழி யைக் காணும்வரையும் மனிதனின் வானவெளிப் பய னம் தடைப்பட்டே நிற்கும். ஆரைல், இது ஒரு முடியாத காரிய மன்று. நம்பமுடியாத பல புதுப்புதுச் செய்திகளேக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சந்திர

Page 26
40
உலகத்துக்குச் செல்லும் வழியையும் விரைவில் கண்டு பிடிப்பார்கள் என இன்று உலக மக்கள் எதிர்பார்க் கின்றனர்.

4. ஏடு காத்த கிழவர்
ஏட்டு வடிவில் இருந்த தமிழ் நூல்களைப் புத்தக வடிவில் கொண்டுவந்த தமிழ் ப் பெரியார்களுள் உ. வே. சாமிநாதையர் முக்கியமானவர். ஏடுகள் கறையானுக்கும் பூச்சிக்கும் இரையாகாமல் அவற்றை ஊரூராய்ச் சென்று தேடிப் பாதுகாத்த இப்பெரியாரை "ஏடுகாத்த கிழவர்' எனத் தமிழுலகம் அழைக்கின்றது. (இவர் 1885-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத் தெரின்பதாம் தேதி சோழநாட்டிலுள்ள உத்தமதான புரம் என்னும் சிற்றுாரிலே பிறந்தார். இவர்தம் ஐந்தாம் வயதில் ஊரிலுள்ள திண்ணேப் பள்ளிக்கூடம் ஒன்றில் கல்வி கற்ருர். தமிழ்நாட்டில் இப்போது உள்ள பாடசாலேகளைப் போலவே அக்காலத்திலும் இருந்தன. எனினும் திண்ணேப் பள்ளிக்கூடங்களுக் குச் சென்று பாடங்கேட்கும் முறையே பெருவழக்கா யிருந்தது. ஆசிரியரின் வீ ட் டி ன் முன்பக்கத்தில் அமைந்த திண்ணேயையே பள்ளிக்கூடமாக அமைத் துக்கொண்டதால் இவற்றைத்திண்ணைப்பள்ளிக்கூடம் என வழங்கினர். அக்காலத்தில் ஆசிரியர் கணக்காயர் என அழைக்கப்படுவர். அதிகாலேயில் நாலு மணிக்கு மாணவர்கள் நித்திரைவிட்டு எழும்பிக் கணக்காயர் வீட்டுக்கு வருவர் ; வந்து கணக்காயர் முன் விழுந்து வணங்கிவிட்டு அவரின் ஏவல் கேட்டு நிற்பர். அவரும் வயதுவந்த மானுக்கர்களைக் கொண்டு பாரதம், இரா

Page 27
42
மாயணம் முதலிய நூல்களிலிருந்து பாடல்களே மன தில் நெட்டுருப் பண்ணுவிப்பர். கணக்காயர் ஒருமுறை சொல்லிக்கொடுத்ததை மாணவர் திருப்பித் திருப்பிச் சொல்லுவர். ஒருவர் பாட்டின் ஒருவரியை மறந்து விட்டால் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டுச் சரியான பாடத்தை ஞாபகப்படுத்திக் கொள்வர். கணக்காய ரின் மாணக்கருள் அறிவாலும் வயதாலும் மூத்தவ ராகவும் அவர் அன்புக்குப் பாத்திரமானவராகவும் உள்ள மாணவர் " சட்டாம் பிள்ளே " என அழைக்கப் படுவர். எல்லா மாணவருக்கும் பாடஞ் சொல்வது கணக்காயரால் முடியாது ஆகையால் சிறுவர்களுக்குப் பாடஞ் சொல்லும் பொறுப்பைக் குட்டிக் கணக்காய " ராகிய சட்டாம்பிள்ளேயிடம் கணக்காயர் விட்டு விடுவர். ι
காலே ஆறு மணிவரை பாடங்கிேட்ட பின் மாண வர்கள் எல்லோரும் கூட்டங் கூட்டமாக ஆற்றங்கரை யையோ குளக்கரையையோ நோக்கிச் செல்வர். அங்கே காலேக்கடனை முடித்துவிட்டுப் பல் துலக்கி முகங் கழுவியபின், சிறுவர்கள் தம் முன்சீலை மடிப்புக்குள் வெண்மணலை அள்ளிப் போட்டுக்கொண்டு வருவர். கணக்காயரின் வீட்டுக்கு வந்ததும் மாணவர்கள் வெண் மணலேத் தம் இருப்பிடங்களுக்கு முன் பரப்பி நெடுங் கணக்கையும், சொற்களையும் எழுதிப் பழகுவர். அக் காலத்திலே " சிலேட்டு" "பென்சில்" என்பன கிடையா. மணலில் எழுத்துக்களை எழுதிப் பழகியபின் மாண வர்கள் ஏட்டுக்கல்வி கற்பர். ஏடு தயாரிக்கத் தெரிந் தவருக்கே ஏட்டுக் கல்வி கற்பிக்கப்படும். மாணவர்கள் பனையோலையின் இதழை நன்ருக வார்ந்து நீரால் கனைத்து அதனை மெதுவாக்கிச் சட்டம் சட்டமாக

43
வெட்டுவர். வெட்டிய துண்டுக்குச் சுவடி என்பது பெயர். இச்சுவடிகளைப் பூச்சியோ கறையானே அரிக்கா வண்ணம் மஞ்சள், ஊமத்தையிலைச்சாறு முதலியன தயாரித்து அவற்றின்மேல் தடவிவிடுவர். எழுதுவதற்கு உபயோகிக்கும் ஏட்டுச்சுவடிக் கட்டின் மேலும் கீழும் வெறும் ஒஃலகள் சேர்த்துக் கட்டப்படும். உள்ளே உள்ள சுவடிகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அழிவுபடாமல் இருப்பதற்காகவே மாணவர் இவ்வித வெற்றேடுகளே வெளியிற் சேர்த்துக் கட்டுவர். ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதுவர். அக்காலத்தில் ஏடு களே மாணவர்களின் புத்தகங்களாய் இருந்தன.
திண்ணேப் பள்ளிக்கூடத்தில் பாட ங் கேட்ட சாமிநாதையர் நல்வியில் ஆர்வமும் ஊக்கமும் காட் டியபடியால் இவரைச் சிறந்த வித்துவானிடம் கல்வி கற்க அனுப்பவேண்டுமென்று தந்தையார் வேங்கட சுப்பையர் ஆவல் கொண்டார். அக்காலத்தில் இலக் கண, இலக்கிய, சாஸ்திர அறிவுகளெல்லாம் நிரம்பப் பெற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது அரிது. ஒவ்வொரு வித்து வானும் ஒவ்வொரு நூலிற் புலமை பெற்றவ ராய் விளங்கினர். திருவாவடுதுறை என்னும் ஆதீனத். தில் மகாவித்துவானுக விளங்கிய மீனுட்சிசுந்தரம் பிள்ளை என்பவரே அக்காலத்தில் இலக்கண இலக்கிய அறிவிலும் சாஸ்திர அறிவிலும் சிறந்த வித்துவானப் விளங்கினர். வேங்கட சுப்பையரும் தம் ம க னை மீனுட்சிசுந்தரம் பிளளே யிடம் அழைத்துச் சென்று "என் மைந்தனுக்குக் கல்வி கற்பித்து முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் ' என்று கூறி அவரிடம் ஒப்படைத்தனர். அப்போது சாமிநாதையருக்கு வயது பதினேழு ஆகும்.

Page 28
圣垒
ஏழு வருடங்களாக மீனுட்சிசுந்தரம் பிள்ளேயிடம் கல்வி கற்ற சாமிநாதையர் தமிழிலக்கண இலக்கியங் களில் நிரம்பிய அறிவு பெற்றர். அத்துடன் ஆசிரியரி டம் கல்வி கற்ற ஏஃனய வித்துவான்களோடும் அறி முகமானுர் : ஆசிரியர் சொற்படி திருவாவடுதுறை, தருமபுரம் முதலிய ஆதீனங்களுக்குச் சென்று ஏடுகள் தேடினுர் ஆசிரியர் பாடும் நூல்களே அவர் முன்னிலே யில் இருந்து ஏட்டில் எழுதினுச். எனவே சாமிநாதையர் கல்வி கற்ற காலத்தில் அவருக்குத் தமிழேடுகளுடன் பெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கல்வி கற்று முடிக் ததும் கும்பகோணம் அரசினர் கல்லுரரியிற் தமிழ்ப் பண்டிதரானுர் : ஆசிரியராகக் கடமை ஆற்றிவரும் தாளிலும் ஏடுகளேப் பற்றிய ஞாபகம் அவரைத் தொடர்ந்தது. ஆசிரியரிடம் கற்காத வேறு பல நூல் களேக் கற்க ஆசை கொண்டார் ; ஆணுல் நூல்கள் எழுதப்பட்ட பல ஏடுகள் அழித்தொழித்தன ; பழைய தமிழ் நூல்கள் அழித்து போனமைக்குக் காரணங்கள் Lal: 3.12)&l).T. r.
ஒரு நூலே ஏட்டில் எழுதுவதென்ருல் பல நாட்கள் செல்லும். பாரதம், இராமாயணம் முதலிய நூல் களே ஏடுகளில் எழுதி முடிக்கப் பல ஆண்டுகள் செல் லும், வேறு துறையில் வருமானம் உள்ளவரே பழைய ஏடுகளேப் புதுக்கி எழுத முடியும். ஏட்டில் விரைவாக எழுதப் பயிற்சி பெற்றவர் கூடச் சில மணி கேரங்கள் எழுதிய பின் களேத்து விடுவார் : கை விர லில் இருந்து இரத்தம் கசியத் தொடங்கினுல் பின் அவரால் எழுத்தாணி கொண்டு எழுத முடியாது. இக் காரணங்களால் பழைய ஏடுகள் பல புதுக்கி எழுதப் படாமல் அழிந்து போயின. அன்றியும் ஒருவர் ஏடுகளே

نت له
அதிக காலம் தம் வீட்டில் வைத்திருக்க முடியாது. ஏனெனில் நூறு, இருநூறு வருடங்களில் ஏடுகள் துகள் துகளாக கொறுங்கிவிடும். ஏடு கிலே கெடுமுன் அதனேப் பார்த்துத் திருப்பிப் புதிய சுவடி ஒன்றில் எழுதிக் கொள்வர். எழுதிக் கொண்ட பின் பழைய ஏடு மனிதனின் காலின் கீழ் அகப்படக் கூடாது என்ற காரணத்தால் கெப் பூசிய அவ் வேட்டை ஓம குண்டத் துள் போட்டு எரிக்கும் வழக்கம் பண்டு தொட்டுத் தமிழ் காட்டில் நிலவி வந்தது. பழைய ஏட்டை நெருப் பிலே போட்டு எரிக்குங் காரணத்தை அறியாத பிற் காலத்தார் தத்தம் வீடுகளில் சேர்த்து வைக்கப்பட் டிருந்த பழைய ஏடுகள் அத்துனேயையும் நெருப்பிலே போட்டு எரித்து விடவேண்டு மென்று நம்பி ஆகம விதிப்படி எரித்து விட்டனர். இக்காரணத்தால் புதி தாகப் பிரதி செய்யப்படாத பல பழைய ஏடுகளும் அழிக்தொழிந்தன. தீக்கு இரையாக்காது பழைய ஏடு களே ஆற்றில் மிதக்கவிடும் வழக்கமும் தமிழ் நாட்டிலே பண்டு தொட்டு நிலவியது. வருடா வருடம் ஆடி மாதம் பதினெட்டாங் தேதி பழைய ஏடுகள் தேர் வடி வில் அலங்கரிக்கப்பட்டு அவற்றை மக்கள் கூட்டத்தின் நடுவே தெருத் தெருவாய்க் கொண்டு சென்று இறுதி யில் ஆற்றில் மிதக்க விட்டனர். இவ்வைபவம் ஒரு விழாவாக நடத்தப்பட்டது. பழைய ஏடுகளேப் பிரதி செய்த பின் அவற்றை ஆற்றில் மிதக்க விடும் வழக் கம் பண்டைய தமிழ் காட்டில் நிலவ, அக்காரனத்தை அறியாத பிற்காலத்தார் தமக்குப் பயன்படாத ஏடு கள் எல்லாவற்றையும் ஆற்றில் மிதக்க விட்டனர் இக் காரணத்தாலும் ஏட்டு வடிவிலிருந்த தமிழ் நூல்கள் பல அழிக்தொழிந்தன.

Page 29
46
கறையானுக்கும், பூச்சிக்கும், நெருப்புக்கும், நீருக் கும் அழியாது எஞ்சியிருந்த தமிழ் ஏடுகள் புத்தக வடிவில் பதிப்பிக்கப்பட்டால் அவை உயிர் வாழும் எனச் சாமிகாதையர் நம்பினர். பழைய தமிழ் நூல் களுள் எதனை முதன் முதற் பதிப்பிக்கலாம் என எண்ணிக்கொண் டிருக்கையில் ஒரு நாள் சேலம் இராமசுவாமி முதலியார் ஐயர் வீட்டுக்கு வந்தார். ஐம் பெருங் காப்பியங்களுள் ஒன்ருகிய சீவகசிந்தா மணியை ஐயரிடம் பாடங் கேட்க விரும்புவதாகக் கூறித் தாம் கொண்டுவந்த பிரதியை நீட்டினர். ஏட் டில் இருந்த நூலைப் பார்த்துக் க கிதாசிகளில் பிரதி செய்யப்பட்ட நூலாக அது இருந்த த. ஐயர் வேறு தமிழ் நூல்களிற் புலமை படைத்த ராய் இருந்தாரே அன்றிச் சிந்தாமணியைக் கற்கவில்லை; அந்நூற் பெய ரையும் கேட்டதிலலை எனவே, தாம் முதலில் நூலேப் படித்துப் பின் முதலியாருக்குப் படிப்பித்தார்; ஐயரும் முதலியாரும் சிந்தாமணிய கிய காவியச் சோலே யினுட் புகுந்த பின் அதனை விட்டு வெளியே வர விருப்பமில்லாதவராய்ப் பல நாட்களைப் போக்கினர். ஐயர் நூலைப் படித்து வருகையில் பல இடங்களில் முரண்பாடான கருத்துக்கள் இருத்தலைக் கண்டார். இன்னெரு பிரதி கிடைத்தால் தாம் வைத்திருந்த பிரதி பாடம் சரியோ என்பதைப் பார்க்கலா மென்று முதலி யாரிடம் ஐயர் கூறினர். அவ்விதமே சிந்தாமணிப் பிரதியைத் தேடிய ஐயருக்கு ஒரு பிரதி கிடைத்தது. இரண்டு பிரதிகளையும் ஒப்பு நோக்கினர் ; ஒரு பிரதி யில் உள்ள சொற்கள் சில மற்றையதில் மாறியும் குறைந்தும் காணப்பட்ட்ன ; எனவே இரண்டு பிரதி களை ஒப்பு நோக்கியும் சிந்தாமணியின் பொருளை

ஐயரால் செவ்வனே அறிந்து கொள்ள முடியவில்லை : " ஐயரின் மனத்தைக் கவலை தொட்டது ; அக்நேரத்தில் இராமசுவாமி முதலியார் ஐயரைப் பார்த்து, " நீர் பிந்தாமணியை ஆராய்ந்து பதிப்பித்தால் தமிழுலகம் படித்துப் பயனடையும். ஏடுகள் ஒன்றற்கு ஒன்று முரணுய்க் காணப்படுதலால் சிந்தாமணியை எவரா லும் முழுமையும் அனுபவிக்க முடியாது. ஆகவே, நீரே இந்தப் பொறுப்பை ஏற்று கடத்தும். இதற்குச் செலவாகும் பொருளை யானே தருகிறேன் " என்ருர். ஐயரும் அவர் கூற்றை ஏற்றுச் சிந்தாமணியைப் பதிப் பிக்க இணங்கினர். வேறு பல பிரதிகளைத் தேடி ஊரூராய்த் திரிந்தார். ஏடுகள் எங்கெங்குக் கிடைக் கும் என்பதை நண்பர்வாய்க் கேட்டறிந்து அவர்கள் சொன்ன ஊர்களுக்குப் போய்த் தேடினர். அக்காலத் தில் ஒருவர் தாம் வைத்திருக்கும் அரிய ஏடுகளைப் பெரும்பாலும் பிறருக்குக் கடன் கொடுக்க விரும்ப மாட்டார். நூல் அச்சில் வந்தால் அது எல்லோருக் கும் பயன்படும் என்பதை உணராத சில அறிவிலிகள் ஐயரைத் தம் இடத்திற்கு வரும்படி அழைத்துவிட்டுப் பின் ஐயர் வந்த நேரத்தில் நூலேக் காணவில்லை என்பர். சிலர் ஐயர் தம் வீட்டுக்கு வ ரு கி ரு ர் என்பதைக் கேள்விப்பட்டதும் தெரு வாயிற் கதவை அடைத்து விடுவர். ஐயரும் கதவைத் தட்டிப் பார்த்து விட்டுப் போய் விடுவர். சில வேளைகளில் ஐயர் பல மைல் தூரம் கால் நடையாற் பிரயாணஞ் செய்து ஏட்டுப் பிரதி கிடைக்காமல் ஏமாந்து திரும்பு வர் ; இருட்டிவிட்டால் மனித [5LLDITL LLID sbsp காட்டுப் பாதையில் நடப்பதற்கு அஞ்சிப் பாதை யோரத்தில் அகப்படும் வீடு ஒன்றிற்குப் போய்ப்

Page 30
48
படுத்துத் துரங்குவர். இவ்விதம் உணவு இன்றியும் துரங்க இடமின்றியும் பல நாட்களாக ஏடு தேடி அலேந்து திரிந்து அவர்தம் கால்களும் அலுத்தன. சிந்தாமணியைப் பதிப்பிக்கும் ஆசை ஒன்றே ஐயரை ஊரூராய் அலேய வைத்தது.
ஒருமுறை, தஞ்சாவூரில் பெரிய செல்வராக இருந்த விருஷபதாச முதலியார் என்பவர் வீட்டிலே சிந்தா மணி ஏடு இருக்கின்ற தென்பதைக் கேள்விப்பட்டு அங்கே சென்ருர். அப்பெரியார் சமண சமயத்தவர். சிந்தாமணியும் சமணசமய நூலாதலால் அதனைவைத் துப் பூசைசெய்து வந்தார். ஐயர் அவ்வேட்டைத் தரும்படி கேட்டபோது, பூசையிலிருந்து தாம் அதனை எடுக்கப்போவதில்லை என விருஷபதாச முதலியார் கூறினர். இவ்வேடு அச்சில் வந்தால் பலருக்கும் பயன் படும் என்றும் அதனைத் தந்து விடும்படியும் ஐயர் இரந்து கேட்க, “ சமண மதத்தினருக்குக் கொடுப் பேனே யன்றிப் பிற மதத்தினருக்குக் கொடுக்கமாட் டேன். எவ்வளவோ இரகசியங்கள் பொருந்திய சிந்தா மணியை நீங்கள் வெகு சுலபமாகப் படிக்க முடியாது. அன்றியும் அன்னிய மதத்தினராகிய உங்களுக்குக் கொடுப்பேனேயானுல் பாவம் என்னை வந்தடையும் ” என்றுகூறி ஏட்டைக் கொடுக்க மறுத்து விட்டார். ஐயர் மனம் நொந்தார் ; செந்தமிழ்த் தீஞ்சுவைக் காவிய மாகிய சிந்தாமணி ஒரு மதத்தினருக்கே உரியநூல் என்றும், ஏனைய மதத்தினர் படித்துப் பயன் பெறக் கூடாதென்றும் இவர் ஒளித்து வைத்திருக்கிருரே ! இப்படியான சமயப் பகைகளினல் எண்ணிறந்த நூல் கள் பிறருக்குப் பயன்படாது அழிந்து போயினவே ! என்று எண்ணி எண்ணி மனங்கலங்கினர். ஏட்டுப்

49
பிரதியை. விட்டுவிட்டு வீடு திரும்ப ஐயர் விரும்ப வில்லை. விருஷபதாச முதலியாரின் நண்பர் ஒருவ ரிடம் சென்று நடந்ததை முறையிட்டார். அந்நண்பர் சமண சமயத்தவராகையின் தாம் வந்து ஒருமுறை கேட்பின் முதலியார் இணங்குவரென எண்ணி ஐயரை யும் அழைத்துக்கொண்டு முதலியார் வீட்டுக்கு வந் தார். ஏட்டுப் பிரதியைத் தந்து விடும்படி கேட்ட போது, முதலில் முதலியார் மறுத்தனரேஜழ் இறுதி யில் இணங்கி ஏட்டுப் பிரதியைக் "శ్లో விட்டார். ஏட்டுப்பிரதியைப் பெற்ற ஐயரும் தம்ழ்க்ண்பருக்கு வணக்கஞ் செலுத்திவிட்டு விரைவில் ஷி திருழ்கினர். இவ்விதம் ஏட்டுப் பிரதிகளைத் தேடி லத்தில்த்ாம்
பட்ட அல்லல்களை ' என் சரித்திர என் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் ஐயடும்னம் நொந்து கூறுகிருர்,
சாமிநாதையர் சிந்தாடிீயின் Nடுப் பிரதி களைத் தேடி ஊரூராய்த் தீர்ந்து இடுத்து மூன்று பிரதிகள் பெற்றதும் அவற்றை ஒப்புநோக்கி ஆராய முற்பட்டார். சில ஏடுகளில் எல்லாப் பாடல்களும் அகப்படவில்லை. சில ஏடுகள் உரையில்லாதிருந்தன ; சில ஏடுகள் கறையானல் அரிக்கப்பட்டிருந்தன; சில ஏடுகளிற் காணப்பட்ட சொற்களும் சொற்ருெடர்களும் ஏனைய ஏடுகளில் மாறியிருந்தன. இருபத்து மூன்று ஏடுகளையும் தம்முன் பரப்பி வைத்துவிட்டு இராப்பக லென எண்ணுது அவர் உறக்கம் கொள்ளாதிருந்து ஆராய்ந்த நாட்கள் பல. ஏடுகளே ஒப்புநோக்கிச் சரி யான பாடம் எதுவெனக் காண்பது மிகக் கடினமாகும். பழைய ஏடுகளைக் கூர்மையான கண் கொண்டு பார்த் தால்தான் வாசிக்கமுடியும் ; சில ஏடுகளில் உள்ள
4.

Page 31
.www.
O
சொற்களில் இது கொம்பு, இது சுழி என்று பிரித் தறிய முடியாது; மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது; ரகரத்துக்கும் T - க்கும் வித்தியாசமே இராது; நரகம் நாகம் ஆகவும் நாகம் நரகம் ஆகவும் தோன்றும். குருதி என்பது குந்தி எனத் தோன்றும். இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் வித்தி யாசம் தெரியாமல் இருக்கும். இவ்வித இன்னல்களுக் கிடையே இருபத்து மூன்று சிந்தாமணிப் பிரதிகளை யும் ஒப்புநோக்கிச் சரியான பாடங்கண்டு காகிதத்தில் நூலே எழுதினர்.
சிந்தாமணியை அச்சிடக் கொடுப்பதிற் கிடையில் ஒருநாள், தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதையே தம் தொழிலாகக் கொண்ட சி. வை. தாமோதரம்பிள்ளை சாமிநாதையர்வீட்டுக்கு வந்தார். சிந்தாமணி விஷய மாகப் பதிப்பாசிரியராகிய இவர்கள் இருவருக்கு மிடையே வெளிப்பட்ட கருத்து வேறுபாட்டினைப் பின் வரும் உரையாடலின் மூலம் அறியலாம். தாமோ : நீங்கள் சீவகசிந்தாமணிப் பிரதி ஒன்று சிறந்த குறிப்புக்களோடு வைத்திருக்கிறீர்கள் எனக் கேள்விப்பட்டேன். நான் சீவக சிந்தாமணி யைப் பதிப்பிக்கலாமென எண்ணி யிருக்கிறேன். கொழும்பிலுள்ள கனம் இராமநாதன் துரை அதற் காகும் பதிப்புச் செலவைத் தருவதாகக் கூறி யிருக்கிருர். தங்கள் பிரதியை என்னிடம் கொடுத் தால் என் பிரதியோடு ஒப்பிட்டுச் சிந்தாமணி யைப் பதிப்பிப்பேன். சாமி : நான் பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுச் சிந்தா மணியை ஆராய்ந்து வைத்திருக்கிறேன். அதனை நானே அச்சில் பதிப்பிக்கப் போகிறேன். ஆன

a
51
படியால் அதனை உங்களிடம் தர எனக்கு மனம் வரவில்லே. தாமோ : நூல் பதிப்பிக்கும் விஷயத்தில் உங்களுக்கு அதிக அனுபவம் இல்லை; நான் நன்ருக அனு பவப் பட்டவன். கும்பகோணத்தில் நீங்கள் படிப் பித்துக்கொண்டு சென்னையில் நூலை அச்சிற் பதிப்பிப்பது உங்களுக்கு மிகச் சிரமம். ஆனபடி யால் பிரதியை என்னிடம் கொடுத்து விடுங்கள். மூன்று மாதத்தில் நூலேப் பதிப்பித்து உங்கள் கையில் முந்நூறு பிரதிகள் தருகிறேன். சாமி : இதற்குமுன் நான் இங்கிருந்தபடியே சென் னையில் நூல்களை அச்சிட்டிருக்கிறேன்; அங்கே இருக்கும் என் நண்பர் இராமசுவாமி முதலியார் எனக்கு உதவி செய்வார். தாமோ : நீங்கள் முன் பதிப்பித்த நூல்களைப் போன்ற தன்று இந்நூல். இதனைப் பதிப்பிக்கும் முறையே வேறு. சென்னை அச்சு கிலேயத் தலைவர் ஒருவர் என் நண்பர். நானே இந் நூலை அச்சாக்குகிறேன். நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். சாமி : நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக் கும் நூலை நானே பதிப்பிப்பேன். உங்களிடம் நூலைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை; அப் படிக் கொடுத்தால் என் உழைப்பு வீணுய் விடும். தாமோ : ஏன் வீணுகும் ? உங்கள் ஆராய்ச்சிக் குறிப் புக்களை என் பதிப்பில் சேர்த்துக் கொள்கிறேன். உங்கள் பெயரையும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் நூலில் உங்களைப்பற்றி நீங்கள் கூற முடியாது. நான் இந்நூலைப் பதிப்பித்தால் உங்களைப் பற்றிச்

Page 32
52
சிறப்பாகக் குறிப்பிடுவேன். சாமி எனக்குப் புகழ் வேண்டாம். உலகம் என்னேப் பாராட்ட வேண்டு மென்றும் நான் எதிர்பார்க்க வில்லே. ஆனுல் நான் சிரமப்பட்ட வேலேயை நானே முடிக்கவேண்டும். தாமோ : கீங்கள் இதுவரை மிகக் கஷ்டப்பட்டு விட் டீர்கள். இனிமேல் அப்படிக் கஷ்டப்பட வேண்டா மென்றே கான் கேட்கிறேன். நான் இதுவரை பல நூல்களேப் பதிப்பித்த படியால் என்னேத் தமிழுலகம் கன்கு அறியும். சிந்தாமணி என் பதிப்பாக வந்தால் அதன் மரியாதை வேறு; உங் களுக்கும் புகழ் வரும். சாமி! நீங்களும் நூலேப் பதிப்பிக்கத் தொடங்கிய காலத்தில் என்னே ப் போலத்தானே இருந்திருப் பீர்கள். நான் நூலேப் பதிப்பித்த பின்பே என்னே உலகம் மதிப்பதும் மதிக்காததும் தெரிய வரும். இவ்வாறு கீண்ட நேர உரையாடலுக்குப் பின் தாமோதரம்பிள்ளே சாமிநாதையரின் மனத்தைஇளகச் செய்து அவரிடமிருந்து சித்தாமணிப் பிரதியைப் பெற்று வீடு சென்ருரர். பிரதியைக் கைவிட்டதும் ஐயரின் மனகிலேயிற் குழப்பம் ஏற்பட்டது. தாம் இது வரை பட்ட இன்னல்களே எல்லாம் நினேந்து ஏங்கிக் கொண்டிருக்கையில் வெளியேசென்ற அவர் தந்தையார் விடு திரும்பினுர், மகனின் மனம் குழப்பமடைந்ததன் காரணத்தைத் தந்தையார் வினவினுர். ஐயரும் கடந்ததை விவரமாகக் கூறினர். தந்தையார் அவரைப் பார்த்துத் தாமோதரம்பிள்ளேயின் வீட்டுக்கு விரைந்து சென்று சிக்தாமணிப் பிரதியைத் திருப்பிப் பெற்று

53
آ வரும்படி கட்டளேயிட்டார். ஐயரும் விரைந்து சென்று தாம் முன் கொடுத்த சிந்தாமணிப் பிரதியைப் பெற்று வீடு திரும்பினுர், தாமே சிந்தாமணியை முதன் முதல் பதிப்பித்து மக்களின் நன்மதிப்புக்கு ஆளாக வேண்டு மென மனப்பால் குடித்துக்கொண்டிருந்த தாமோதரம் பிள்ளே பிரதியைக் கைவிட்டதும் கவசீலக்குள்ளானுர், ஆணுல் ஐயரோ சிந்தாமணியை விரைவில் நூல்வடிவிற் கொண்டுவர ஆவன செய்தார். சில மாதங்களில் நூலும் வெளிவந்தது. சிறந்த உரைக் குறிப்புக் களுடன் முதன் முதலில் சீவக சிங்தாமணி புத்தக வடிவில் வெளிவந்ததைக் கண்ட தமிழுலகம் சாமி காதையரைப் போற்றியது : புகழ் மாலே சூட்டியது.
சிந்தாமணியைப் பதிப்பித்துவிட வேண்டு மென்று சாமிநாதையர் கொண்ட ஆசை பிற தமிழ் நூல்களேயும் அச்சிற் கொண்டுவர அவரைத் தூண் டியது. ஏட்டு வடிவிலிருந்த சிறந்த நூல்கள் எவை யென அவச் தேடினுர், சிந்தாமணி ஏட்டுப் பிரதிகளின் அடிக் குறிப்புக்களில் பழைய தமிழ் நூல்கள் பல வற்றின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்ததை அவதானித் தார். பத்துப்பாட்டு, புறநானூறு, அகதா னு று, சிலப்பதிகாரம், மணிமேகலே முதலிய ப்ெயர்கள் அவற் றுட் சிலவாகும். ஆணுல் அந்நூல்கள் அகப்படவில்லே. எவ்விதம் பாடுபட்டும் சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்க வேண்டு மென்று ஆசை கொண்டார். ரடுகள் தேடி உ'குராப்த் திரிந்தார். சிலப்பதிகாரப் பிரதி காரண மாக எத்தனே காட்கள் மழையில் கனேந்தார் ! எத்தனே நாட்கள் வெயிலில் காய்ந்தார் சிலப்பதிகாரம், சிலப் பதிகாரம் என்று உச்சரித்துக் கொண்டு எத்தனே பேர்களின் வீட்டு வாசல் சென்ருர் 1 சலியா ஊக்கத்

Page 33
54
துடன் உழைத்த உழைப்பினல் பெற்ற பிரதிகளை ஒப்பு நோக்கிச் சரியான பாடங்கண்டு சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்தார். பின் மணிமேகலையைப் பதிப்பித்தார். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங்காவியங்களுள் தாம் பதிப்பிக்காத இறுதி இரண்டு நூல்களையும் பதிப்பிக்க ஆசைகொண்டு ஏடுகள் தேடினர். மீனுட்சி சுந்தரம் பிள் ஃளயிடம் கல்வி கற்ற காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தாம் கண்ட 'வளேயாபதி ஏட்டைத் தேடி அங்குச் சென்ருர். ஆனல் அங்கு ஏட்டைக் காண வில்லை. தாம் ஆராய்ச்சியில் ஈடுபடாதிருந்த காலத் திலே தம் கண்ணுற் கண்ட ஏடு பின் தேடிச் சென்ற காலத்தில் காணுதது சாமிநாதையருக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது. தமிழ் நாடு முழுமையும் ஊரூராய்ச் சென்று வளையாபதி ஏட்டைத் தேடினர். ஓர் ஏடு கூட அகப்படவில்லை. முன் கண்ணிற் கண்டது அவர் கைக்கு எட்டாமற் போயிற்று. இவ் விதம் தமிழ் நாட்டில் அழிந்தொழிந்த நூல்கள் எத்தனை யோ! பூச்சிகளும் கறையான்களும் சுவைபார்த்த தமிழேடுகள் மனிதனுக்கு அகப்படாமற் போயினவே ! பழந்தமிழ் நாட்டில் இருந்த தமிழ் இசைநூல்கள் எங்கே? நாடக நூல்கள் எங்கே? பெருங்கதை என்னும் ஒரு காவியத்தின் முற்பகுதியும் பிற்பகுதியும் அகப் படாது விட்டபோதும் நடுப்பகுதியை அச்சிற் பதிப் பித்தார். பாவம் ! அவர்தாம் என் செய்வார் ! தமிழேடுகளைத் தேடிப் பாதுகாப்பதற்காகவே பிறக் தார். தம் வாழ்நாள் முழுவதையும் ஏடு தேடுவதி லேயே கழித்தார். கறையான்களோடும், பூச்சிக ளோடும், நெருப்போடும், நீரோடும், பொருமை பிடித்த

ó5
வரோடும் போட்டி போட்டுத் தமிழேடுகளுள் பல வற்றை அழியாமற் காத்தார். தம் வீட்டில் ஏடுகளைக் கொண்டுவந்து அடுக்கி மகிழ்ந்தார். அவற்றுள் ஐம்பது நூல்கள் வரை அச்சில் பதிப்பித்தார். இவர் தமிழ் நூல்களை அழியாமற் பாதுகாத்த பெருமையைப் பாராட்ட இந்திய அரசாங்கமும் பல்கலைக் கழகங்களும் ஆதீனங்களும் முன்வந்தன. 'மகாமகோபாத்தியாய, 'திராவிட வித்யா பூஷணம், 'தாட்சிணுத்ய கலாநிதி" முதலிய பட்டங்களைச் சூட்டித் தமிழ்ப் பெருங் கிழவரைப் பாராட்டின. ஏடுகாத்த கிழவர் 1942-ஆம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்து தமிழ் ஏடுகளைப் பதிப் பித்தார். அவரால் பதிப்பிக்கப்படாது அவரில்லத்தில் குவித்து வைத்திருந்த தமிழேடுகள் 'அடையாறு” என்னும் இடத்தில் அவர் பெயரால் அமைந்த நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Page 34
5. எனது மேல்நாட்டனுபவம்
ஆங்கில நாட்டுக்குச் சென்று இரண்டு ஆண்டு கள் உயர்தரக்கல்வி கற்கும்படி நான் கடமையாற்றும் இலங்கைப்பல்கலைக் கழகத்தினர் என்னைப் பணித்த னர். பிரயாணஞ் செய்வதற்கேற்ற ஆயத்தங்களே நானும் செய்தேன் ; புறப்படும் நாளும் கிட்டியது. 1954-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புப் புகையிரத கிலேயத்தை அடைந்த யாழ்ப் பாண ப் புகைவண்டியிலிருந்து இறங்கி, துறைமுகத்தை நோக்கி நடந்தேன். எனது உடுப்புப் பெட்டிகளும் புத்தகப் பெட்டிகளும் இதற்கு முன்னரே துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு விட் டன. கப்பலில் ஏறுவதற்கு இன்னுஞ் சில மணி நேரங்கள்தாம் இருந்தன. நாற்காலி ஒன்றில் உட் கார்ந்திருந்த என் மனநிலையிற் குழப்பம் ஏற்பட்டது. மேல்நாட்டுக்குச் சென்று உயர்தரக் கல்வி கற்கப்போகி றேனே என்ற பெருமிதம் இதுவரை என் மனத்தைச் சூழ்ந்திருந்தது. என்னைப்போன்ற பாக்கியசாலி இவ் வுலகத்தில் வேறு யார் இருக்கின்ருர் எனச் சிற்சில வேளேகளில் எண்ணி இறுமாந்திருந்திருப்பேன். இந்த எண்ண அலைகள் என் மனத்தில் வற்றியதும், புது அலைகள் கொந்தளிக்கத் தொடங்கின. என் நாற் காலிக்கு அருகில் இருந்தோரின் முகங்களெல்லாம் புது முகங்களாயிருந்தன. நீலவானம் என் கண் முன்னே

57
குறுக்கிட்டுக்கொண் டிருந்தது. என் பெற்ருேரைப் பற்றிய நினைவுகள், நண்பர்களைப் பற்றிய நினைவுகள் மனத்தை அலசிக்கொண் டிருந்தன. கண்களினின்றும் நீர் அரும்ப ஆரம்பித்தது. பிரிவுணர்ச்சி உள்ளத் தைக் கொள்ளை கொண்டது. சோகக்கடலில் மூழ்கி யிருந்த என்னை முதுகிலே தட்டிய நண்பர், " என்ன யோசித்துக் கொண்டிருக்கிருப் ? கப்பலுக்கு நேரமாய் விட்டது. புறப்படுவோம் " என்ருர், என் மனநிலையை அவரினின்றும் மறைத்துக்கொண்டு தோற்பையும் கையுமாகக் கப்பலுக்குச் செல்லும் மோட்டார்ப் படகிற் குள் ஏறினேன். சில நிமிடங்களில், முகத்துவாரத் துக்கு வெளியே நின்ற கப்பல் என் வீடாயிற்று. எனக்கென ஒதுக்கிவைக்கப் பட்டிருந்த கப்பலறையில் என் தோற்பையை வைத்துவிட்டுக் கப்பலில் அங்கு மிங்கும் உலாவிக்கொண்டு திரிந்தேன். மணியோசை ஒன்று கேட்டது ; காரணம் என்ன என்பது புலப்பட வில்லை. கப்பல் நகர ஆரம்பித்ததும் அதற்காகத்தான் மணி அடிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டேன். இருபத்திரண்டு நாட்களிற் கப்பல் லண்டன் துறைமுகத்தை அடைந்தது. அங்கிருந்து புகையிரத மார்க்கமாக ஒக்ஸ்போட் நகரத்திற்குச் சென்று, பின் மோட்டார் வண்டி மூலம் பேலியல் கல்லூரிக்குச் சென்றேன். கல்லூரி வாசலில் என்னுடைய உடுப்புப் பெட்டிகளையும் புத்தகப் பெட்டிகளையும் இறக்கி. வைத்துவிட்டு, நான் வசிக்கப்போகும் அறை எதுவென மேலதிகாரிகளிடமிருந்து அறிந்து கொண்டேன். பின் என் பொருட்களே அறைக்குத் தூக்கிச் செல்வதற்காக "போட்டர் ஒருவரைத் தேடினேன்; அக்கம் பக்கலில் ஒருவரையும் காணவில்லை. சிறிது நேரத்தில், என்

Page 35
58
னைப்போலப் புதிதாக வந்த ஆங்கில மாணவர் ஒருவர் நான் ஏதோ தேடுவதைப் பார்த்துவிட்டு "என்ன தேடு கிறீர்?" என வினவினர். " நான் போட்டரைத் தேடு கிறேன்" என்றேன். " அதோ கத்தோரில் இருக்கி ருர்’ எனச் சுட்டிக் காட்டிவிட்டு அவர் சென்றுவிட்டார். கங்தோருக்குள் எட்டிப் பார்த்தேன். கூலியாட்கள் போன்ற ஒருவரையும் அங்கே காணவில்லை. ஒரே ஒருவர் மாத்திரம் அங்கே இருந்தார். அவர் காற்ருடி யின் கீழ் உள்ள மேசையின் அருகேயிருந்த நாற் காலியிலிருந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவ ருடைய தோற்றத்தையும் உடையையும் கண்ட நான் அவர் கல்லூரி அதிகாரியாக இருக்கவேண்டுமென்று எண்ணினேன். பின் அவர்முன் சென்று மரியாதை செய்து 'எனக்கு ஒரு போட்டர் தேவை என்று தாழ் மையான குரலிற் கேட்டேன். அவர் சிரித்துவிட்டு ஒன்றும் பேசாதிருந்தார் ; காரணம் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. திரும்பத்திரும்ப யோசித் துப் பார்த்தேன்; என்னல் ஒன்றையும் எண்ணிக் கொள்ள முடியவில்லை. அறைக்கு வெளியே வந்து யாராவது என் உதவிக்கு வருகிறர்களா என்று எண்ணி அங்குமிங்கும் பார்த்த வண்ணம் நின்றேன். எதிர்பாராத விதமாக என் இலங்கை நண்பர் மூவர் கல்லூரி வாசலுக்கு வந்தார்கள். என்னைக் கண்டதும் "என்ன தேடுகிறீர்?" என்று கேட்டார்கள். "இந்தப் பொருள்களே என் மேன்மாடி அறைக்குத் தூக்கிக் கொண்டு போக ஒரு போட்டரைத் தேடுகிறேன்" என் றேன். ' இது இலங்கையல்ல ; இது இங்கிலாந்து ; விஷயங் தெரியாமற் கஷ்டப்படுகிறீர் : வாரும், நாம் எல்லோருமாகத் தூக்கிக்கொண்டு போவோம் ?

59
என்று கூறினர்கள். பின் எல்லோருமாகத் தலே களில் புத்தகப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு மூன் ரும் மாடியில் உள்ள என் அறையை அடைந்தோம். அறைக்குட் சென்றதும் பாரங்களைக் கீழே போட்டு விட்டு உட்கார்ந்தோம். வியர்வை உடலே நனைத்தது.
இலங்கையில் இருக்கும்போது எந்தப் பெரிய பொருளேயாவது என் தலையிலே தூக்கி வைத்தறி யாத நான், சுமக்க முடியாத பாரத்தைப் படிவழியே மேல்மாடிக்குச் சுமந்து செல்ல வேண்டி வந்ததை எண்ணி எண்ணி நொந்தேன். ' காசு கொடுத்தாலும் போட்டர்கள் அகப்படுகிருர்களில்லையே; காசு இருந் தும் என்ன பயன் ? என்று நான் கூறுவதற்கிடையில் என் நண்பருள் ஒருவர் பின்வருமாறு சொன்னர்: "நீர் இதுவரை படித்தது புத்தகப்படிப்பு: புத்தகப் படிப்பு வேறு, உலகப் படிப்பு வேறு. உமக்கு உலகக் தெரி யாது. 1946-ஆம் ஆண்டில் ஆங்கில நாட்டிலே தொழிற் கட்சி அதிகாரத்துக்கு வந்ததும் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாட்டைக் குறைக்குஞ் சட் டங்கள் பலவற்றை இயற்றிவிட்டது. தனிப்பட்ட மனிதரின் செல்வாக்கிற்குப் பயந்து கூலிவேக்ல செய்யும் வழக்கம் ஆங்கில நாட்டிற் குறைந்து கொண்டே வருகின்றது. ஒருவன் பிறப்பினுல் முதலாளியும் தொழிலாளியுமாகப் பிறக்கிருணு ? இல்லை. பணமே மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக் கும் காரணம். இலங்கையிலே மிகப் பெரிய பணக் காரனும் இருக்கிருன் ; உணவுக்காக்த் தெருவிலே திண்டாடித் திரியும் பிச்சைக்காரனும் இருக்கிருன், இலங்கையிலே பணம் படைத்தவன் கதிரையில் ஆடிக் கொண்டிருந்தபடியே பத்துக் கூலியாட்களே வீட்டில்

Page 36
6 O
வைத்து வேலை செய்விக்கலாம். அந்தச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த நீர் இந்த நாட்டிலே கஷ்டப்படுகிறீர். இந்த நாட்டிலும் சில வருடங்கட்கு முன் தொழிலாளி களின் நிலைமை பரிதாபகரமாகத்தான் இருந்தது. இப் போது திருந்தி விட்டது. இன்னும் கேளும் ! இங்கு எவரைப் பார்த்தாலும் தங்கள் வேலையைத் தாங் களே செய்து கொள்கிருர்கள். ஒரு குடும்பத்தவர் தம் வீட்டு மலகூடத்தைத் தாமே கழுவிக் கொள்கிருர், அப்படிச் செய்வதிற் பெருமையுங் கொள்கிறர். ஆங்கிலேயரிடமிருந்து இலங்கையர் கற்க வேண்டிய ஒரு சிறந்த பாடம் இது ' என்று என் நண்பர் ஒரே பிரசங்கமாரி பொழிந்தார்.
பணமே பெரிது என்றும், பணத்தைக் கொண்டு எதையுஞ் செய்து முடித்து விடலாம் என்றும் இது வரை நினைத்துக்கொண் டிருந்த நான், ஆங்கில நாட்டுக்குச் சென்ற அன்றே என் எண்ணக் கருத்தை மாற்றிக் கொண்டேன். 'போட்டர்" என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளையும் என் நண்பர்வாய்க் கேட் டேன். இலங்கையில் புகையிரத நிலையங்களிலும் கல்லூரி விடுதிச் சாலேகளிலும் மற்ற இடங்களிலும் பாரத்தைத் தூக்கிக் கொண்டு போகும் கூலியாளேயே போட்டர் என்று அழைப்பது வழக்கம். அதையே நான் அறிந்திருந்தேன். ஆனல் "ஒக்ஸ்போட் நகரத் திலே போட்டர்" என்ற சொல் கூலியாளேச் சுட்டாது கல்லூரிகளிற் கடமை பார்க்கும் பொறுப்பு வாய்ந்த ஒர் உத்தியோகத்தரைக் குறிக்கிறது. என் பொருள் களேத் தூக்கிச் செல்வதற்கு ஒரு போட்டர் தேவை யென்று முன் நான் ஒரு அதிகாரியைக் கேட்டபோது, அவர்தாமே போட்டராக இருந்ததனுற் சிரித்துவிட்டு

6 I
என் கேள்விக்கு மறுமொழி கூருது விட்டதைப் பின்னர் உணர்ந்தேன். என் அறியாமையை நினைந்து வெட்கம் அடைந்தேன். இலங்கைக் கல்லூரிகளிற் படிப்பிக்கும் ஆசிரியரை " மாஸ்டர் " என மாணவர் அழைப்பது வழக்கம், ஆனல் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் இச்சொல் இப் பொருள்படுவதில்லை. கல்லூரி அதிகாரியையே "மாஸ்டர் என அழைப்பர். இங்ங்ணம் நான் கல்லூரியை அடைந்த நாட்களில் பல ஆங்கிலச் சொற்களின் புதுப் புதுப் பொருள்களை அறிய வேண்டியதாயிற்று. ஆங்கில நாட்டிலே பிறந்த ஆங்கிலச் சொல் உலகின் பல்வேறு பாகங் களில் நுழைந்தமையின், பேசும் மக்களைப் பொறுத்து மொழியும் வெவ்வெறு கருத்துக்களே ஏற்கின்றதென் பதை உணர்ந்து கொண்டேன்.
கல்லூரி வாழ்க்கையில் நான் முதற்கிழமை பெற்ற அனுபவத்தை மறக்கவே முடியாது. கலலூரி விடுதிச் சாலை மாணவனுகச் சேர்ந்தேன். என்னை யாரென்று தெரியாத ஆட்களிடமிருந்து தினமும் கடிதங்கள் வந்து குவிந்து கொண்டேயிருந்தன. தேநீர் விருந்துகளுக்கு வருமாறு என்னை அழைக்குங் கடி தங்களே அவை. நானும் அழைப்பை ஏற்றுக் குறித்த நேரத்துக்கு விருந்துக்குச் செல்வேன். நான் யாரென்று என்னை விருந்தினருக்கு அறிமுகப் படுத் தியதும், அவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் வணக்கஞ் செலுத்திவிட்டு என்னே உள்ளே அழைத்து ஆசனத்தில் இருத்துவர். அவர் என் மீது காட்டும் அன்போ அளவிடற்கரியது. கல்லூரியில் உள்ள வகுப்பறைகளைப் பற்றியும், விரிவுரைகளைப் பற்றி யும், விரிவுரையாளரைப் பற்றியும் மற்றும் நான்

Page 37
62
தெரிந்துகொள்ள வேண்டியவற்றைப் பற்றியும் எடுத்துச்சொல்லி மறுமுறையும் வருமாறுகூறி என்னை வழியனுப்புவர். இப்படியே பிற நாடுகளிலிருந்து புதிதாக வரும் மாணவரோடு ஆங்கில மாணவர் அன்பாக நடப்பர் என்பதை முதற் கிழமையிலேயே அறிந்து கொண்டேன்.
விடுதிச் சாலையைப் பற்றிய இன்னெரு சம்பவம் என் ஞாபகத்திற்கு வருகிறது. அது என் உணவைப் பற்றியது. நான் மாமிசம் புசிப்பதில்லை : குடிப்ப தில்லை ; புகைப்பதில்லை. கல்லூரி விடுதிச் சாலைக் குச் சென்ற முதல்நாள் இரவு என் சாப்பாட்டு மேசை யில் மீன் வைக்கப்பட்டிருந்தது. அதன் மணத்தை என்னல் பொறுக்க முடியவில்லை ; கோப்பையைத் தள்ளி வைத்தேன். சாப்பாட்டுக்குப் பொறுப்பாளி யாகவுள்ள ஒருவர் இதைப் பார்த்துவிட்டு என்னிடம் வந்து " ஏன் அதைத் தள்ளுகிறீர்?" என்று கேட்டார். * நான் மீன் சாப்பிடுவதில்லை" என்றேன். "அப்படி யாயின் நாளே முதல் உமக்கு இறைச்சி தரலாம்" என்ருர், " நான் இறைச் சியும் சாப்பிடுவதில்லை : மரக்கறி மட்டுந்தான் சாப்பிடுவேன்" என்று கூறி னேன். இந்நாட்டில் மரக்கறிகள் அதிகம் இல்லையே; மீனையும் இறைச்சியையுமே இக்காட்டவர் சாப்பிடு கிருர்கள். கல்லூரி யில் உள்ள அறுநூறுபேரும் அவற்றைத்தாம் சாப்பிடுகிருர்கள். நீர் என்ன செய் யப்போகிறீர்?" என்று அந்த ஆங்கிலேயர் கேட்டார். என்னல் ஒன்றும் பேசிக்கொள்ள முடியவில்லே. சிறிது நேரம் பொறுத்திருந்து விட்டுப் பின் வெளியே போனேன்; மனத்தில் கல்க்கம் ஏற்பட்டது. நிலைமை இதுவாயின் எவ்வாறு இரண்டு வருடங்களை இங்கே

63
கழிக்கப் போகிறேன் என்று யோசித்துக்கொண்டு என் அறைக்குச் சென்றேன். இதே பல்லவியைப் பாடிக்கொண்டு என் இந்திய நண்பர் ஒருவர் என் அறைக்கு வந்தார். இருவர் வயிற்றிலும் பசி அதிகரித் தது. என் அறையில் இருந்த பழங்களே அவருக் கும் கொடுத்து நானும் உண்டேன். பழங்களைச் சாப் பிட்டுப் பசி ஆறுவதா ? அடுத்த நாளே எங்கள் கல் லூரித் தலைமையாசிரியரிடம் சென்று முறையிடுவ தாக இருவரும் தீர்மானித்தோம். அப்படியே அடுத்த நாள் காலையில் தலைமை ஆசிரியரின் அறைக் குச் சென்று அவரிடம் முறையிட்டோம். " நாங்கள் பிறந்தநாள் முதல் மாமிசம் சாப்பிடாதவர்கள். இடத்திற்கேற்ப எங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களில் இருந்தும், உணவு விஷயத்தில் மாற்றஞ் செய்ய எங்களால் முடியவில்லையே ; நாங்கள் என்ன செய்யமுடியும் ? என்று அவரிடம் முறையிட்டோம். அவரும் அன்பாகச் செவிசாய்த்தார். நாங்கள் சரியென மேற்கொள்ளும் பழக்கத்தை ஒருபோதும் கைவிடக் கூடாதென்றே அவரும் புத்திமதி கூறி, எங்களுக்கு அன்றுமுதல் விடுதிச் சாலேயில் தாவர உணவு கிடைக்குமெனக் கூறினர். நாங்களும் அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு அறைக்குச் சென்ருேம். அன்றுமுதல் எங்கள் இருவருக்கும் சிறந்த தாவர உணவு அளிக்கப்பட்டது. அறுநூறுபேர் கல்விகற்கும் ஒரு கல்லூரியிலே இரு மாணவரின் நன்மைக்காக ஒரு வ  ைக உணவைச் சமைக்க ஏற்பாடு செய்த கல்லூரித் தலைமையாசிரிய ரின் பெருந்தன்மையை நினைத்து வியந்தேன். தனிப் பட்ட மனிதனின் சுதந்திரத்திற்கும் அவன் உரிமை

Page 38
لـ 5}
கதிரக்கும் மரியாதை செலுத்துவது ஆங்கிலநாடு என் பதை கான் கன்ருக அறிந்துகொண்டேன்.
இங்கனம் என் கல்லூரி வாழ்க்கையில் கான் பெற்ற அனுபவங்கள் பலவாகும். அவ்வனுபவங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் இங்குக் கூற இடமின் மையின் கூருது விடுகின்றேன். கல்லூரியிற் கற்றுப் பரீட்சையிலே தேறியதும் பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டேன். விழா மண்டபத்தின் நான்கு பக்கங் களிலும் ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர். பட்டம் பெறும் மாணவர்களாகிய நாங்கள் மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்தோம். விழாதொடங்கும்போது ஒர் அதிகாரி எழுந்து நின்று ஒரு சொற்பொழிவு ஆற்றினூர், அவர் என்ன பேசுகிருர் என்பதை என்னுல் விளங்கிக் கொள்ள முடியவில்லே. சிறிது நேரஞ் சென்ற பின், அவர் பேசிக்கொண்டிருந்தது ஆங்கில மொழி யன்று இலத்தீன் மொழி என்பது தெரிய வந்தது. வழக்கிறந்த மொழியாகிய இலத்தீன் மொழியில் எவ்வளவு சாதுரியமாகப் பேசினுர் ! நம்முடைய நாடு களில் சமஸ்கிருதம் ஒரு வழக்கிறந்த மொழியாகக் கருதப்படுகிறது. அது அந்தணர்களால் கோயில்களில் மாத்திரமே உபயோகிக்கப்படுகிறது. ஆணுல் ஆங்கி லேயர் தங்கள் தாப்மொழியாகிய ஆங்கிலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, வழக்கிறந்த மொழியாகிய இலத்தினே ஏன் ஒக்ஸ்போட் பல்கலேக் கழகப் பட்ட மளிப்பு விழாவில் பேச்சு மொழியாகக் கொள்கிமூர்கள் என்பதன் காரணம் பின் தெரியவந்தது. ஆங்கிலேயர் பழமையிற் பெருமை கொள்பவர்கள். விஞ்ஞான வளர்ச்சியினுல் ஏற்பட்ட புது மாறுதல்களே அவர்கள் விரைந்து ஏற்றுக்கொண்ட போதும், தம்முடைய

பண்பாட்டின் அறிகுறியான சின்னங்களே அவர்கள் கைவிடவில்லே. இப்பல்கலேக் கழகத்தின் கட்டிடங்களே ஒருமுறை கோக்குவார்க்கு ஆங்கில மக்களின் குனுதி சயங்கள் சில தென்படும். பல்தலேக் கழகத்தின் பெரும் பாலான கட்டிடங்கள் பதின்மூன்று பதினுன் காம் நூற் ருண்டுகளிற் கட்டப்பட்டவை; எனினும் அவை காலத் துக்குக் காலம் புதுப்பிக்கப்பட்டவை. பல்கலைக் கழகத் தினர் கட்டிடங்களேப் புதுப்பிக்கும் நேரங்களில் கட்டி டங்களின் உட்புறத்தைச் செவ்வனே வெள்ளேயடித்து அலங்காரஞ் செய்துவிட்டு, வெளிப் புறத்தைப் பாசி படர விடுகின்றனர். தெருவீதியிற் செல்பவர்கள் கட்டி டங்களே நோக்கும்போது அவை பழைய கட்டிடங்கள் போற் காட்சி அளிக்கின்றன. பாசிபடர்ந்த கட்டிடங் களேப் பார்க்கும் ஆங்கில மாணவனுக்கு அவன் நாகரி கத்தின் பழமை, கண்முன் கின்று ஆடுகின்றது : மனத் தைத் தொடுகின்றது. அத்தகைய உணர்ச்சி மக்களேத் தூண்டிவிட்டதனுலேயே ஆங்கிலேயர் கடல் கடந்து சென்று உலகம் முழுவதையும் ஆண்டனர். சிறந்த அறிவு படைத்த விஞ்ஞானிகளாய்ப் புதுப்புது விஷ யங்களேக் கண்டு பிடித்தனர் : இப்பொழுதும் கண்டு பிடித்துக் கொண்டே யிருக்கின்றனர். மனத்தின் பண் பாடே மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரண மாகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது.
என் தாய்காடாகிய இலங்கையின் அருமை பெருமை களேயும் தமிழ் மொழியைப் பேசும் கம் பண்பாட் டின் பெருமைகளேயும் ஆங்கில காட்டில் வாழ்ந்த காலத்திலேயே கான் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கி னேன். ஆங்கிலேயர் தங்கள் காட்டைப் பொன்னுக அல்லவா மதிக்கிருர்கள். இலங்கையானது அழகிலும்

Page 39
66
இயற்கை வனப்பிலும் ஆங்கில நாட்டை விடச் சிறந் தது. இலங்கையின் சுவாத்தியம் கடலால் மட்டுப் படுத்தப்பட்டுக் கரையிலிருந்து உள்நாட்டுக்குப் போகப் போக மாறிக் கொண்டு போகின்றது. பிற நாடுகளிலே கடற்கரை சூடு குறைந்த பூமியாய் இருக்க, உள்நாடு சூடு கூடியதாய் இருக்கும். ஆணுல் இலங்கையின் மத்தியில் மிக உயர்ந்த மலே களிருப்பதால் கரையோரத்தைப் பார்க்க மத்தியநாடு குளிர் கூடியதாக இருக்கிறது. இவ்விதம் இலங்கை யைப் பற்றிய எத்துணேயோ சிறப்புக்கள் இலங் கையை விட்டுப் புறப்பட்ட பின்பே எனக்குத் தெரிய வந்தது.
ஆங்கில நாட்டிலே நான் வாழ்ந்த காலங்களில் என் தாய் மொழியைப் பேசுவதற்கு எனக்கு அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை : இலங்கையிலுள்ள என் வீட்டிலும் தோட்டத்திலும் கிணற்றடியிலும் நின்று தமிழ்ப் பாடல்களைப் பாடி இன்பங் கண்ட நான், ஆங்கில நாட்டில் அதனே மறந்து வாழமுடிய
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே " என்றும்,
* யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபேர்ல்
இனிதாவ தெங்குங் காணுேம் " என்றும் சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாடற்பகுதி களின் பொருளே மேல் நாடு சென்ற பின்பே நான் உணர்ந்தேன். என் நண்பர்கள் எல்லோரும் ஆங்கில, அமெரிக்க நாட்டவர். கித்தமும் அவர்கள் ஆங்கிலப் பாட்டைப் பாடுவதைக் கேட்க எனக்கு மனவருத்த

67
மாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. இக் குறையைத் தீர்க்க ஒரே ஒரு வழிதான் இருந்தது. நல்ல ஒரு வானெலிப் பெட்டி வாங்கினல் இந்தியத் தமிழ் நிகழ்ச்சி களைக் கேட்கலாம் என்று யோசித்தேன். ஆகவே ஒரு வானெலிப் பெட்டியை வாங்கினேன். அதனை என் அறைக்குக் கொண்டு போய் வைத்ததும் என் பிற வேலைகளை விடுத்து, வானெலிப் பெட்டியின் அருகே உட்கார்ந்து, சென்னை, திருச்சி, டெல்லி நிலையங்களி லிருந்து ஒலிபரப்பாகும் செய்திகளைக் கேட்க முயன்றேன். தமிழோசையொன்று வானெலிப் பெட்டியைப் பீறிக் கொண்டு வந்தது. அப்பொழுது நேரம் இரவு 1-15 மணி. அமைதியான நடுச் சாமத் திலே, மக்கள் எல்லோரும் துயில் கொண்டு புரண்டு படுக்கும் நேரத்திலே, மூன்ரும் மாடியில் உள்ள என் அறையில் திருமதி சுந்தராம்பாள் பாடிய ஞானப் பழத்தைப் பிழிந்து " என்று தொடங்கும் பாட்டு ஒலித்துக்கொண் டிருந்தது. என் மனம் அந்நேரத்தில் எந்நிலையில் இருந்ததென்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. ஒரே இன்பம்! ஒரே குதூகலம் !! நிகழ்ச்சி முடிவில் இப்பாட்டு எங்கிருந்து வருகின்ற தென்பதை அறிய வானெலிப் பெட்டி அருகில் காதை வைத்துக் கொண்டிருந்தேன். டெல்லியிலிருந்து கிழக்காசிய மக்களுக்கெனக் காலே 5-45-மணிக்கு ஒலி பரப்பப் படும் தமிழ் நிகழ்ச்சி என்பதை அறிந்தேன். ஆங்கில நாட்டிலே நான் வாழ்ந்த காலங்களில் இத்தமிழ் நிகழ்ச்சியே எனக்கு ஆறுதலேக் கொடுத்தது. இதனைக் கேட்பதற்காக விழித்திருந்து விட்டுத் தினமும் விடியற் காலை 2-15 மணிக்கே கித்திரைக்குப் போவது எனக்கு வழக்கமாகி விட்டது. நித்திரையைப் பற்றிய கவலை

Page 40
68
எனக்குக் கிடையாது. ஒரு நாள் ஒரு தரமாகிலும் தமிழோசையைக் கேட்க வேண்டுமென்ற என் ஆசை நித்திரைக்குப் பங்கம் விளேத்தது. தமிழ் மொழியைப் பேசாத நாட்டில் வாழ்ந்தபோதே தமிழின் இனிமையை உணர முடிந்தது.
இங்ங்னம் மேல்நாட்டில் நான் பெற்ற அனுபவங் கள் பல. என் கல்வி கற்கும் காலம் முடிந்ததும் வீடு திரும்பும் நாளே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னுடைய உடையையும் உணவையும் யான் பேசுந் தமிழ் மொழியையும் மறந்து இரண்டு. ஆண்டுகளாகப் பிற நாட்டில் வாழ்ந்த நான், என் தாய்நாடு திரும்பும் நாளே எதிர்பார்ப்பது இயற்கைதானே ! 1956-ஆம் ஆண்டு யூலை மாதம் பத்தாந் தேதி காலே பத்து மணிக்கு நான் ஏறிய கப்ப லும் லண்டன் துறைமுகத்தை விட்டு நகரத் தொடங்கி யது. கப்பலில் ஏறியதும் ஒரே சந்தோஷமும் சிரிப்பு மாய் இருந்தது. கொழும்புக்குக் கப்பல் வரும் நாளே எண்ணிக் கொண்டே யிருந்தேன். கப்பலில் இருக் கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் போல் இருந் தது. ஒவ்வொரு துறைமுகத்திலிருந்தும் வீட்டுக்குக் கடிதங்கள் போட்டுக் கொண்டேயிருந்தேன். கப்பலும் வந்து கொழும்புத் துறைமுகத்துக்கு வெளியே நங் தரம் போட்டு நின்றது. நேரமோ நடுச்சாமமாய் இருந்தது. காலேயிலேதான் கப்பலிலிருந்து கரைக்கு இறங்கலாம் எனக் கப்பற்றளபதி கூறினர். கப்பலில் பொறுமையாக இருந்துகொள்ள என்னுல் முடிய வில்லை; மேல் தளத்தில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டே யிருந்தேன். கொழும்புத் துறைமுகக் கட்டிடங்களிலிருந்து வெளிச்சம் நீருள் பாய்ந்து

69
கொண் டிருந்தது. கப்பலில் வரும் கீழ்நாட்டுப் பிரயாணிகளுக்குப் பொருள்கள் விற்பதற்காக வியா பாரிகள் தோணிகள் மூலம் கப்பலே நோக்கி வந்து கொண் டிருந்தார்கள்: காகங்களும் கரைந்து, ஆதவன் உதயமாவதற்கு இன்னுஞ் சிறிது நேரந்தான் இருக் கின்றது என அறிவித்தன. கப்பலில் அடிக்கப்படும் மணியின் ஒசையும் என் காதுகளில் “கணிர், "கணிர்’ என்று விழுந்தது. தோற்பையுங் கையுமாகப் பிர யாணிகள் கப்பலிலிருந்து கீழ் இறங்குவதை அவ தானித்தேன். யானும் அவர்களுடன் சேர்ந்து கரைக்கு வந்து என் பொருள்களை மோட்டரத மூலம் கொழும்புப் புகையிரத கிலேயத்துக்கு அனுப்பினேன். அங்கு எனது தோற்பெட்டிகளுக்கெல்லாம் யாழ்ப்பாணம் ” என்னும் முத்திரை பொறிக்கப்பட்டது. அன்றுமாலை புறப்பட்ட யாழ்ப்பாணப் புகையிரதமூலம் என் இருப்பிடம் வந்து சேர்ந்தேன்.
பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும் கற்றவ வானினும் கனிசிறந்தனவே.

Page 41
6. பறம்புமலைப் பாவலன்
கடைச்சங்க காலத்தில் தமிழ் நாட்டில் கொடை யிற் சிறந்த ஏழு வள்ளல்கள் வாழ்ந்து வந்தனர். ஓரி, பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, பேகன் ஆகிய இவ் வெழுவரும் கடையெழு வள்ளல்கள் " என அழைக்கப் பட்டனர். குறுநில மன்னராகிய இவர்கள் சேர, சோழ, பாண்டியராகிய பெருகில மன்னரைப் போன்று தமிழ்ப் புலவர்களே ஆதரித்து வந்தனர். இவர்களின் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தது. வறுமையால் வாடிய புலவர்கள் தம் சுற்றத்தினரையும் அழைத்துக் கொண்டு தாம் பொருள் பெற விரும்பும் மன்னவனின் நாட்டை நோக்கி நடப்பர். அவர்கள் போகும் வழியில் ஆறுகளையும் மலைகளையும் கடக்கவேண்டி யிருப்பதால் பல இரவுகள் வழியில் தங்கிப் பின் தம் பயணத்தைத் தொடர்ந்து நடத்துவர். மன்னனே அடைவதற்கிடை யில் பசியால் வாடி உயிர் துறந்தோர் பலர். தன்னைப் பாடிவந்த புலவரையும் அவர் சுற்றத்தினரையும் மன்னன் சில நாட்கள் தன் அரண்மனையில் தங்கும் படி செய்வன் ; அவர்கள் விரும்பும் உணவை உண் ணக்கொடுத்து, வறுமையால் வாடிய அவர்கள் உடம் பைச் செழிக்கச் செய்வன் ; உடுப்பதற்குப் பட்டாடை களையும் பூண்பதற்குப் பொன் னுபரணங்களேயும் நல்கி யானையின்மீது அவர்களை ஏற்றி அவர்தம் ஊர் களுக்கு வழியனுப்புவன். புலவரும் அவர் சுற்றத்

71
தினரும் மகிழ்ச்சியோடு பாதையில் வருவதைக் கண்ட பிற புலவர்கள் அவர்களே நிறுத்தி, அவர்கள் பொருள் பெற்று வரும் மன்னனின் பெயர், ஊர் இன்ன பிற வற்றை விசாரிக்கப் பொருள்பெற்றுத் திரும்பும் புலவர் “ஆற்றுப்படை என்னும் செய்யுளில் அவர்கள் செல்ல வேண்டிய வழி, பரிசில் தரும் மன்னன் பெயர், அம் மன்னவனின் புகழ் என்பன கூறிவிடுவர். அதைக் கேட்ட புலவர்களும் விரைந்து அம்மன்னனே அடைந்து அவன் புகழைப் பாடிப் பொருள் பெற்று இன்பமாக வீடு திரும்புவர்.
இங்ங்ணம் புலவர்களை ஆதரித்த கடையெழு வள் ளல்களுள் ஒருவன் பாரி ஆவான். இவன் பறம்பு எனப் பெயரிய மலைநாட்டையும் அதனை அடுத்துள்ள முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தான். பாண்டி நாட்டில் இன்று பிரான்மலை " என அழைக்கப்படும் மலையையே பறம்புமலே எனக் கருதுகின்றனர். இப் பறம்புமலையைச் சிறப்பாகப் பாடிய காரணத்தால் சங்கப் புலவராகிய கபிலர் பறம்புமலைப் பாவலன்" என அழைக்கப்படுகிறர், கபிலர் பறம்பு மலேயைப் பாடியதிலிருந்து பிறமலேகளை அவர் பாடவில்லை என் பது கருத்தன்று. மலையும் ம்லேசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தை வருணிப்பதில் கபிலருக்குத் தனிப் பட்ட ஆற்றல் உண்டு. சங்ககாலத்தில் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடிய புலவர்களுள் கபிலரே முதன்மையானவர். இவர் பாடிய குறிஞ்சிப் பாடல்கள் தொகை நூல்களின் சிறப்பை மிகுவிக்கின்றன. பத்துப்பாட்டுள் ஒன்ருகிய குறிஞ்சிப்பாட் டைப் பாடியவரும் கபிலரே. இக்குறிஞ்சிப்பாட்டைக் கபிலர் பாடியதற்குக் காரணம் ஒன்று கற்பிப்பர் வரலாற்று

Page 42
72
ஆசிரியர். ஆரிய அரசனகிய பிரகத்தன் என்பான் தமிழ்நாட்டில் சிறையாக வைக்கப்பட்ட காலத்தில் தமிழ் மொழியைக் கற்றன் : தமிழில் ஈடுபட்டான். தமிழை மேலும் மேலும் கற்க ஆவல் கொண்டான். அவனுக்குத் தமிழ் மொழியின் சிறப்பையும் வளத்தை யும் எடுத்துக் காட்டுவதற்காகவே கபிலர் இப்பாட் டைப் பாடினர். இப்பாட்டில் தமிழ்மக்களின் காதல் வாழ்க்கையும், அதற்கு அடிப்படையான களவு ஒழுக் கங்களும், அவ்வொழுக்கங்கள் நடைபெறுவதற்குச் சிறந்த இடமெனக் கருதப்பட்ட மலைநாடும் கபிலரால் வருணிக்கப்படுகின்றன. இக்குறிஞ்சிப் பாட்டைக் கபிலர் பாடக்கேட்ட ஆரிய அரசன் தமிழிலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற ஐந்தினை வகுப்பைப்பற்றி ஆராய்க் தான் என்றும், அங்ஙனம் ஆராய்ந்து சென்றவன் தமிழையன்றி வேறென்றைப் பற்றியும் கினையாத வாறு தமிழ்ச்சுவை அவனே மயக்கி விட்டதென்றும் வரலாறுகள் கூறும்.
சங்கநூல்களில் இடம் பெற்ற கபிலரின் குறிஞ் சிப் பாடல்களே ஒருசேர வைத்து ஆராயுமிடத்து மலே நாட்டு மக்களின் இன்ப வாழ்க்கைமுறை மனக்கண் முன் நிற்கின்றது. கருக்கொண்ட மேகங்கள் மலே யால் தடுக்கப்பட்டு மழையாக மாறி மலைமேல் பெய் கின்றன ; ஆறுகள் ஊற்றெடுத்து மலேயிலிருந்து சரிந்து கீழ்நோக்கி ஓடுகின்றன. பள்ளங்களில் வீழ்ந்த மழைநீர் சுனைகளில் தங்கி நிற்கின்றது. அதிக மழை பெறும் இடமாதலால் மலையில் மரங்கள் நெருங்கி வளர்கின்றன. சூரியனுடைய கிரணங்களே நுழைய முடியாத நெருக்கமான மரக்காட்டில் பலவித மிருகங் கள் உயிர் வாழ்கின்றன. மரங்களின் பழங்களேப்

Z3
பிடுங்கித்தின்று பின் சுனைகளில் நீரைக்குடித்து மந்தி கள் துள்ளித்துள்ளி மரங்களில் தாவித் திரிகின்றன. நன்ருகப் பழுத்த பலாப்பழங்களின்மேல் ஏறி உட் கார்ந்திருந்து அவற்றின் சுளேகளே ஒவ்வொன்ருகப் பிடுங்கி விதைகளே வேருக்கி உண்ணும் மந்திகள் வயிறு நிரம்பியபின் அம்மரங்களிலேயே தூக்கங்
கொள்கின்றன. வேங்கை மரங்களின் பூக்கள் குறவர்
கள் கட்டிய சிறு குடிலின்மேல் விழுந்து குடிலென்று
தெரியாவகை பரந்து மூடியிருக்க, அவ்வழியே செல் லும் யானையானது தன்னுடைய பகையாகிய வேங்
கைப் புலியென மயங்கி வெருட்சிகொண்டு ஒடுகின்
றது. ஒட்டத்தின் வேகத்தினுல் அருகே நின்ற மரங்
கள் யானையால் முறிக்கப்பட்டுக் கீழே விழுந்து ஒடும்
ஆற்றுநீரால் ஒசையுட்ன் இழுக்கப்படுகின்றன. கருக்
கொண்ட முகிலேக்கண்ட மயில்கள் மகிழ்ச்சிமிக்குத்
தம் தோகைகளை விரித்து ஆடுகின்றன. இடியோசை
கேட்ட பாம்புகளோ மலைக்குகைகளை நோக்கி ஓடுகின்
றன. மலேயின் நடுவில் உள்ள தட்டையான நிலப்
பரப்பில் அங்குவாழும் குறவர்கள் தினையை விளைவிக் கின்றனர். ஆண்கள் காலேயில் வேட்டையாடச்
சென்று மாலையில் திரும்பி வரும்பொழுது தாம்
கொன்ற புலியின் பல்லேக்கொண்டு வந்து தம் மனைவி
யருக்குக் கொடுக்க அவர்கள் அதை அணிந்து கொள்
கின்றனர். இளமங்கையர் தினைப்புனங் காக்கின்ற
னர். தினையைக் கொய்யவரும் கிளிகளை ஒட்டுவதற்
காகத் தம்மால் அமைக்கப்பட்ட பரணின் கீழ் இருந்து
கூவிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கின்றனர்.
இடையிடையே தினைக்காவலே விட்டு இருவர், மூவரா
கச் சேர்ந்து மலர்க்காவினுள் நுழைந்து சுனையாடியும்

Page 43
74
பூக்கொய்தும் மகிழ்கின்றனர். மலையில் தாமாகவே பழுக்கும் பலாப்பழங்களையும், மரங்களில் விளையும் தேனையும் பெற்று உண்டு இங்கு வாழும் மக்கள் உணவைப்பற்றிய அச்சமின்றி இன்பவாழ்க்கை நடத்துகின்றனர். ஆண்கள் பறை முழக்கப் பெண் கள் கைகோத்து வேங்கைமர நிழலில் நின்று ' குரவை" என்னும் பெயரிய கூத்தை ஆடுகின்றனர். இங்ங்னம் மலர் கொய்தும்,சுனையாடியும்,குரவையாடியும் வாழும் குறிஞ்சிநில மக்களின் இயற்கை எழில்நலனைக் கபிலர் தம் பாடல்களில் அழகுற எடுத்துக்காட்டுகிறர்.
பறம்புமலை நாட்டு மன்னனகிய பாரியின் புகழும் கபிலருக்கு எட்டியது. ஒருமுறை பாரி தன் பரிவாரங் களுடன் வேட்டையாடக் காட்டுக்குச் சென் ரு ன். திரும்பி வரும்பொழுது பாதையருகே படர்தற்குக் கொழுகொம்பு அகப்படாமல் தவித்துக்கொண்டிருந்த முல்லேக் கொடியைக் கண்டான். அதன் வருத்தத்தைப் போக்க நினைத்த பாரி உடனே தேரினின்றும் இறங்கி முல்லைக்கொடி படர்ந்தேறுவதற்காக அத்தேரை அதன் அருகே விட்டுவிட்டுக் கால்நடையாக அரண்மனை சேர்ந்தான். இச்செய்தி தமிழ்நாடெங்கும் பரவியது. இதனைக் கேள்விப்பட்டதும் கபிலர் பாரியின் அரண் மனைக்குச் சென் ரு ர். புலவர் பெருந்தகையைத் தூரத்தே கண்ட் பாரியும் அளவிலா மகிழ்ச்சி மிக்கவ னுய் அவரைக் கட்டித் தழுவி உயர்ந்த ஆசனத்தில் இருத்தினன் ; புலவர் பெருமானைத் தன்னுடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். புலவரும் பாரி யின் அன்பையும் அவன் அறிவையும் உணர்ந்து அவ னுடைய அரண்மனையிலேயே அன்றுதொட்டு வாழ்ந்து வந்தார். புலவரும் புரவலனும் ஒன்ருகக் கூடி அள

75
வளாவும் நேரங்களில் செந்தமிழ்க் கவிதைகளின் தீஞ் சுவையை நுகர்ந்து அச் சுவையில் திளைப்பர். பாரி தன் அரண்மனைக்கு வரும் தமிழ்ப் புலவர்களே ஆத ரித்து அவர் பாட்டைக் கேட்டு உளம் மகிழ்ந்தான். அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் பட் டாடைகளையும் கொடுத்து வழியனுப்பினன் ; சிலருக் குப் பொன்னபரணங்களையும் யானைகளையும் பரிசி லாகக் கொடுத்தான். இவனுடைய கொடை வண்மை யைக் கேள்விப்பட்ட மக்கள் தமிழ்நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் பறம்புநாட்டை நோக்கி வருவர். பாதையில் யாழ் வாசித்தும் முழவு கொட்டியும் பாரி யின் புகழைப் பாடிக்கொண்டு வருவர். புலவர்களேயும் இரவலர்களையும் பாரி போற்றிப் பேணுவதைப் பார்த் துக் கபிலரின் நெஞ்சு பாரியை நினைந்து உருகும் ; பாரியின் புகழைச் செந்தமிழ்க் கவிதைகளில் அவர் வியந்து பாராட்டுவர்.
u mrtf? Li mtiif? Guu 6örgy Lu 6v 6rgög? ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் " மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே என்னும் பாட்டில் பாரியையும் மாரியையும் ஒப்பிடு கிருர், பறம்புமலைக் காவலனுகிய பாரியின் பெயரை உச்சரித்துக்கொண்டு புலவர்கள் வருகின்றனர். பாரி ஒருவன்தான இந்த உலகத்தைப் பாதுகாப்பவன் ! இல்லை உலகைக் காப்பதற்கு இங்கு மழையும் உண்டு என்கிறர். இச் செய்யுளில் ஆசிரியர் பாரியைப். பழித்து மாரியாகிய மழையைப் புகழ்வது போல் காட்டினுலும் உண்மை அப்படியன்று. ஆசிரியர் பாரி யையே புகழ்கிருர், புகழ் பெறுவதற்குத் தகுதியுடைய

Page 44
76
மன்னரை மாத்திரமே பாடும் புலவரின் நா செங்கா " எனச் சிறப்பிக்கப் படுகிறது. பரந்த நெடிய இவ் வுலகில் புலவர்கள் எல்லோரும் ஏன் பாரி பாரி என்று பாடுகிறர்கள் எனக் கபிலர் தம்மனத்தில் ஒரு வினுவை எழுப்புகிருர் ; விடையையும் காண்கிருர், பாரியைப் போன்ற கொடைவள்ளல் வேறு ஒருவரும் தமிழ்நாட் டில் இல்லாமையினலே புலவர்கள் பாரி பாரி என்று பாடுகின்றனர் எனக் கபிலர் கருதுகிருர், மேகமும் கைம்மாறு கருதாமலே உலகுக்கு மழையைக் கொடுக் கிறது. மழை பெய்வதனலேயே மக்கள் உலகில் வாழ முடிகிறது. இதனுல் பாரி கைம்மாறு கருதாது கொடுப் பதுபோல மழையும் கொடுக்கின்றது என நயம் தோன்ற ஆசிரியர் எடுத்துக் காட்டுகிருர், உலகு தொடங்கியநாள் முதல் உயிர்வாழ் பிராணிகளைப் பாதுகாக்கும் மழையுடன் பாரியை ஒப்பிட்டு அவன் உயர்வை எடுத்துக் காட்டுகிருர் கபிலர்.
மன்னனின் ஈரநெஞ்சத்தையும் அவன் அறிவின் ஆழத்தையும் அறிந்த கபிலர் அவனுடன் வாழ்ந்து வரும் நாளில் அடிக்கடி பறம்பு மலைக்குச் செல்வர். பறம்பின் இயற்கை அழகில் ஈடுபட்ட அவர் உள்ளமும் கவிதை பிறப்பதற்கேற்ற விளைநிலமாயிற்று. மலர்க் காவருகே சென்று மலர்களைத் தம் கையால் பற்றி மூக்கினருகே வைத்து முகர்வர். சுனேயருகே இருந்து அதன் ஆழத்தையும் அமைதியையும் ஆழ்ந்து நோக் குவர் ; நீரினுள் இறங்கி மூழ்குவர். மரங்களோடும் இயற்கை எழிலோடும் இயைந்து உள்ளம் ஒன்றி நிற்பர். இங்ங்ணம் பறம்புமலையில் தம் இன்ப நேரங் ளேக் கழித்த கபிலர்பெருமானுக்கு அம்மக்லமேல் ஈடு பாடு ஏற்பட்டு விட்டது. பறம்புமலே கபிலரின் மனத்

தைக்
77
கொள்ளை கொண்டது போல் தமிழ்நாட்டு
மூவேந்தரின் மனத்தையும் கொள்ளே கொண்டது. பறம்பு மலையின் வனப்பையும் பாரியின் கொடை வண்மையையும் அதனுல் அவனடைந்த புகழையும் கேள்விப்பட்டுப் பொருமை கொண்ட மூவேந்தரும் பறம்புமலைமீது படையெடுத்து வந்தனர். மலேயைச் சுற்றி நாற்றிசையிலும் சேனைகள் முழங்கின. பாரியும் தன் சேனை வீரர்களுடன் போருக்குப் புறப்பட்டான். அவன் புறப்படுமுன் புலவர் பெருமானுகிய கபிலர் மூவேந்தரை அணுகி அவர்கள் முன்னின்று கூறு
கிருர்
"பாரியது பறம்புமலை கைக்கொள்வதற்கு அரியது.
பெருமை பொருந்திய முரசினையுடைய நீவிர் மூவிரும் எத்தனை காலம் முற்றுகையிட்டாலும் வெற்றிபெற மாட்டீர். பறம்புநாட்டில் உள்ள வர்களுக்கு உணவுப் பஞ்சமே கிடையாது. மூங்கில் நெல்லும், பலாப்பழமும், வள்ளிக்
கிழங்கும் தேனும் ஆகிய நான்கு உணவுகளை
மிகுதியாக உடையது பறம்புமலே. மனிதனின் உழைப்பு இன்றியே இக்நான்கு உணவுப் பொருள்களும் விளைவன. ஏர்கொண்டு உழும் உழவர்கள் போர் முனைக்கு ஏ கி ன லும் பறம்புமலை மக்களுக்கு உணவு ஈயவல்லது. எண்ணிறந்த யானை தேர்களைக் கொண்டுவந்து நீங்கள் போர்செய்தாலும் அரனேக் கைப்பற்ற மாட்டீர். பறம்புமலேயைப் பெற உங்களுக்கு ஆசையிருந்தால் அதனைப் பெறும் வழியை நான் சொல்லுவேன். நீங்கள் பாணரைப் போல வும் விறலியரைப் போலவும் வேடம் பூண்டு.

Page 45
78
ஆடியும் பாடியும் அவன் புகழைச் சிறப்பித்துக் கூறி இரந்து கேட்பீராயின் அவன் பறம்பு நாட்டையும் மலையையும் பரிசிலாகத் தருவன். பறம்புநாடு முந்நூறு ஊர்களேயுடையது. இந்த முந்நூறு ஊர்களேயும் பரிசிலர் பாடிப் பெற்று விட்டனர். இப்பொழுது பறம்பு மலேயையும் பாரியையும் எம்மையும் பரிசிலாகப் பெறலாம். இவையே எஞ்சியிருப்பவை." இவ்வாறு கபிலர் கூறியதும் மூவேந்தர் பாரியை வெல்வது அரிது என எண்ணிப் பின்வாங்கிவிட்டனர். எனினும் மண்ணுசை அவர்களை விட்டுவிடவில்லே. சிறிது காலத்தின்பின் அவர்கள் மாறுவேடம் பூண்டு பாரியை வஞ்சனையாற் கொன்று அவன் நாட்டைக் கைப்பற்றினர். இதை அறிந்த கபிலர் கலங்கினர். பாரியில்லா நாடு ஒரு சுடுகாடு போன்று அவருக் கிருந்தது. மக்களின் உயிரைப் பாதுகாத்த மன்ன ஞகவும் தன் உயிர்த் தோழனுகவும் விளங்கிய பாரி மடிந்தபின் வாழ விருப்பமில்லாத கபிலர் தம் உயிரை எவ்வகையிலும் மாய்க்கக் கருதினர் ; எனினும் பாரி யின் பிரிவைத் தாங்கமுடியாது ஏங்கிக் கலங்கிய பாரி மகளிர் இருவரும் இந்நானிலத்தில் வாழ வழிதெரி யாது தவிக்கப் போகிருர்களே என எண்ணி அவர் களைப் பாதுகாக்கும்பொருட்டு உயிருடனிருக்க முடிவு கொண்டார். பாரியில்லா நாட்டில் இனி வாழ்வதாற் பயனில்லே எனப் பாரிமகளிர் இருவரையும் கூட்டிக் கொண்டு நகரைவிட்டு நீங்கும்போது கண்கலங்கிப் பிரிந்தார். வாழ்க்கையில் பின்னெருமுறை பார்க்க முடியாத பறம்புமலேயை ஒருமுறை திரும்பிப் பார்த் தார். பழமும் தேனும் நெல்லும் தந்து நாட்டைப்

79
புரந்த பறம்புமலையை இரண்டாழ் முடிைற்Rதிரும்பிN பார்த்தார். அவர் மனத்தில் உணர்ச்சி பெருகிக் கவி தையாக மாறியது. a
கட்டனை மன்னே முன்னே இனியே பாரி மாய்க்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேம் தொழுதுகிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே !
* ஏ பறம்பு மலேயே முன்னே நீ எங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தந்து எங்களு டன் நட்புப் பூண்டாய் (நட்டன). இப்போது பாரி உயிர் நீத்து விட்டானக (மாய்ந்தென). யாம் அவனை நினைந்து கலங்கிச் செய்வதின்ன தென்று தெரியாமல் செயலற்று (கையற்று) அழுத கண்களுடன் உன்னை விட்டுப் பிரிந்து செல்கிருேம் (சேறும்); உன்னைத் தொழுகின்ருேம்; உன்னை வாழ்த்துகின்ருேம் (பழிச்சி). நீ நெடுங்காலம் வாழ்வாயாக!” எனப்பாடி அழுது செல்கிருர் பாவலர் : துக்கத்தில் ஆழ்ந்து பறம்பு மலேக்குப் பிரியாவிடை கூறுகிறர். துக்க நிலையில் உணர்ச்சி வயப்பட்ட போது உயிரில்லாப் பொருட் களும் உயிருடையனவாகவே புலவர்களுக்குக் காட்சி யளிக்கின்றன.
பறம்பு மலைக்குத் தன் துயரத்தைச் சொல்லி அழுது புலம்பிவிட்டுப் பர்வலர் பாரிமகளிர் இருவரை யும் முன் நடத்திக் கொண்டு செல்கிருர். அவர்கள் செல்லும் பாதையில் ஒரு சிறிய குடிசை குறுக்கிடு கிறது. அதனைச் சுற்றி முள் வேலிகள் இருக்கின்றன. வீட்டின்மேல் பீர்க்கங் கொடி படர்ந்திருக்கிறது.

Page 46
8O
விட்டின் அருகே உள்ள குப்பை மேட்டில் கீரை வளர்க் திருக்கிறது. குப்பையின்மேல் ஏறி நின்று பாரிமகளிர் இருவரும் தெருவழியே போகும் உப்பு வண்டிகள் எத்தனை யென்று கைவிரல் விட்டு எண்ணுகின்றனர். இதைழ் பார்த்துக் கொண்டு நின்ற க்பிலரின் கண் களினின்று நீர் ததும்புகிறது. ஏன் ? பாரி உயிரு டன் வாழ்ந்த காலத்தில் அவன் டோருக்குப் புறப் படும்போது அவனே எதிர்த்து நிற்கும் மன்னர்களின் குதிரை வரிசைகள் எத்தனை யென்று அரண்மனை மாடி யில் நின்று பொழுதுபோக்காக எண்ணிக் கொண்டு நின்ற பாரிமகளிர், பெற்று வளர்த்த தங்தை மடிய அரண்மனை வாழ்க்கையைத்துறந்து குடிசையில் தங்கிக் குப்பை மேட்டின்மேல் ஏறி நின்று, வரிசையாகச்செல் லும் உப்பு வண்டிகளே எண்ணுகிருர்களே என்பது தான் அவர் கவலே.
பாரி மகளிரைக் கைப்பிடித்துக் கொண்டு செல் லும் பாவலர் அடிமேல் அடி பெயர்த்து வைத்து நடந்து விச்சிக்கோன் என்னும் குறுநில மன்னனின் அரண் மனைக்குச் சென்ருர், பாரியின் பிரிவை நினைந்து வருந்தி வாழ வகைதெரியாது அல்லற்படும் அவன் புதல்வியர் இருவரையும் அந்தணனுகிய தாம் கொடுக்க விச்சிக்கோன் ஏற்று மணந்து கொள்ளுமாறு வேண்டி னர். விச்சிக்கோன் பாரியின் பகைவனுய் இருந்த காரணத்தினலோ பாரிமகளிர் ஏழைகளாய் இருந் மையினுலோ அவர்களே மணக்க மறுத்து விட்டால் மறுத்து விடவே, கபிலர் இருங்கோவேள் என்னும் குறுநில மன்னனை அடைந்தார். தன் தோழனின் புதல்வியர் இருவரையும் அந்தணனுகிய தான் கொடுக்க ஏற்று மணந்து கொள்ளுமாறு அவனைக்

S I
கேட்டார்; அவனும் மறுத்து விட்டான். பரந்த பெரிய உலகில் வாழும்வகை காணுது தவித்துக்கொண் டிருந்த அந்தப் பெண்கள் இருவரையும் வாழவைக்க வேண்டு மென்று முனைந்து நின்ற பாவலனின் நெஞ்சம் துடி துடித்தது. பின்னும் பலரை இரந்து செல்ல அவர் விரும்பாதவராய் ஓர் அந்தண குடும்பத்தில் அப்பெண் கள் இருவரையும் அடைக்கலமாக விட்டுவிட்டு வடக்கு நோக்கியிருந்து தம் உயிரையே மாய்த்துக் கொண் டார் எனக் கருதப்படுகின்றது. f
தமிழிலக்கியத்தில் கபிலர் அழியா இடம் பெற்று விளங்குகிருர், பறம்பு மலைக் காவலனைப் பாடிய இப் பாவ்லரின் பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்று விளங்குகின்றன. பாரி வளமாக வாழ்ந்த காலத்தில் இயற்கையில் தேர்ய்ந்து இன்சுஃனயாடி மகிழ்ந்த அவர் உள்ளம் இன்பக் கவிதை யாத்தது. அதே கபிலர் பாரி மாய்ந்த காரணத்தால் மனம் நொந்து கலங்கிக் கை யற்றுப் பாடிய பாடல்கள் சோகத்தை ஊட்டி நெஞ்சை உருக்குகின்றன. இன்பச் சுவையும் சோக உணர்வும் பொருந்திய அவர் பாடல்கள் அவர் இறந்தும் கால வெள்ளத்தில் இறவாமல் பாரியின் வாழ்வையும் அப் பாவலரின் புலமையையும் எடுத்துக்காட்டி அழியிர்க் சொல்லோவியங்களாக விளங்குகின்றன.

Page 47
7. இயற்கையின் விந்தை
இந்த உலகில் எத்தனையோ அதிசயங்கள் உண்டு. ஆனல் மனிதன் அவற்றைப் பற்றிப் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. தாவரங்கள் விலங்குகள் எல்லாம் மனிதனைப்போல் உயிருள்ளனவே. மனி தன் தனக்குத் தான் பகுத்தறிவு உண்டென்றும் ஏனையவநிற்றிற்குப் பகுத்தறிவு இல்லையென்றும் கருதுகிறன். இதனல், தாவரங்கள் விலங்குகள் எல்லாம் தன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே உலகில் பிறந்திருக்கின்றன என அவன் மனப்பால் குடித்துக்கொண் டிருக்கிருன், இறைவனல் கொடுக்கப்பட்ட வலிமையைக் கொ ண்டு தாவரங்களையும் விலங்குகளையும் கொன்று புசித்துத் தன் வயிற்றை நிரப்புகிறன். தான் எவ்வளவு தூரம் பிறவற்றிற்கு அடிமைப்பட்டு வாழ்கின்றன் என மனி தன் ஒருபோதும் உணர்வதில்லை. இயற்கையன்னை யானவள் மனிதப் படைப்பில் தன் கருத்தைச் செலுத் தியது போன்றே விலங்குகளையும் தாவரங்களையும் படைத்த்போதும் செலுத்தி யிருக்கிருள். இதை ஊன் றிச் சிந்தியாத பலர் இயற்கையன்னையானவள் L_וfrת பட்சமாக நடந்துகொண்டாள் என்றும் மனித இனத் துக்குச் சாதகமாகவே அவள் படைப்பு அமைகின்ற தென்றும் கருதுகின்றனர். உயிர்களின் படைப்பை பற்றி ஊன்றிச் சிந்திக்கு மிடத்து எத்தனையோ புதுப் புதுக் கருத்துக்களை அறிந்துகொள்ள முடிகிறது.

83
முதலாவதாகத் தாவரங்களின் வாழ்க்கை முறை யினை எடுத்துக்கொள்ளலாம். தாவரங்கள் பரோப காரிகள். மக்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாய் அமைந்து அவற்றின் நன்மைக்காகத் தங்கள் வாழ்க் கையை அர்ப்பணஞ் செய்கின்றன. இவ்விதம் தியா கஞ் செய்ய மனிதனல் முடியுமா ? முடியாது. மனி தர்களைப் போன்றே தாவரங்களும் வாழ்கின்றன என் பதை அவை சமையல் செய்யும் முறைகொண்டு அறிய லாம். வேரில்விட்ட தண்ணிர் என்ன ஆகிறது ? நரம்புகளினூடே சென்று மேற்கிளேயை அடைகிறது. நிலத்தில் உள்ள சத்துக்களோடு நீர் கலந்தபின் அவை குழம்புச் சத்தாக மாறுகின்றன. இக்குழம்பு மரத்தின் இலையை அடைகிறது. இலேயே தாவரங்கள் சமையல் செய்யும் அடுக்களே ஆகும். சமையல் செய்வதற்கு நெருப்பு வேண்டுமல்லவா? அது எங்கிருந்து பெறப்படு "கிறது? தாவரங்கள் நெருப்புக் குச்சியை உபயோகித் துத்தீயை உண்டாக்குகின்றனவா? இல்லை. பகற்பொழு தில் வரும் சூரிய கிரணத்தின் சூடு இலேயிற் பட்டதும் இலையை அடைந்த சத்துத் தண்ணிராகிய குழம்பு கொதிக்க ஆரம்பிக்கிறது. தேவையான சூடு வந்ததும் குழம்பு சரியாகச் சமைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படு கிறது. பின் அது நரம்புக்குழாய்களின் மூலம் மரத் தின் பல பாகங்களுக்குஞ் சென்று மரத்தைத் தழைக் கச் செய்கிறது. இச் சமையல் வேலை பகற்பொழுதில் மாத்திரமே நடைபெறுகிறது. மரங்கள் தாம் உண்டு எஞ்சிய சத்தை இரவில் ஆவியாக வெளிவிடுகின்றன. இவ்விதம் மரங்கள் இராக்காலங்களில் மூச்சு விடும் போது கரிகாமில வாயுவை அப்புறப்படுத்துவதன லேயே மரங்களின் அடியில் இராக்காலத்தில் மனிதர்

Page 48
84
நித்திரை செய்யக்கூடாது என்ற வழக்கம் நாட்டில் நிலவி வருகிறது. மனிதர்களைப்போல் தாவரங்களும் தினமும் சமையல் செய்து உண்டு களித்து உறங்கி மூச்சுவிட்டு உயிர் வாழ்வதை ஊன்றி நோக்கு மிடத்து அற்புதமாகவல்லவா இருக்கிறது !
தங்கள் சொந்த முயற்சியினல் சமையல் செய்து உண்டு உயிர்வாழும் தாவரங்கள் மனிதர்களைப்போல் தாங்களும் இந்த உலகில் தம் சந்ததியைப் பெருக்கிப் பாதுகாக்கவே விரும்புகின்றன. இன விருத்தியின் பொருட்டுச் சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளை, ஊதா முதலிய பலவித நிறமுள்ள மலர்களே அவை சுமந்து நிற்கின்றன. உலகில் வாழும் உயிர்கள் யாவும் தன் இன்பத்துக்காகவே இறைவனுல் படைக்கப்பட் டன என எண்ணும் மனப்பான்மை கொண்ட மனித வர்க்கமானது செடிகள் அழகிய மணமுள்ள பூக்களைச் சுமந்து நிற்பது, தான் பார்த்தும் மணந்தும் இன்புறு வதற்காகவே என எண்ணுகிறது. உண்மை அப்படி யன்று; வர்க்க விருத்தியே பூக்களின் நிறபேதத்துக்குக் காரணம் ஆகும். இடம்விட்டு இடம் பெயர்ந்துபோய்த் தன் துணையை நாடக்கூடிய மனித இனமோ விலங் கினமோ போன்று தாவரங்கள் இல்லாமையால், ஆண் மரத்திலுள்ள மகரந்தத்தைப் பெண் மரத்திற்குச் சுமந்து செல்ல வண்டையும் பூச்சியையும் இறைவன் தூதுவர்களாக நியமித்திருக்கிருன், வண்டுகளும் பூச்சி களும் எல்லாப் பூக்களையும் நாடுகின்றனவா ? இல்லை. மனிதருக்குள் ஒருவருக்குச் சிவப்பு நிறத்திலும், மற் ருெருவருக்கு வெள்ளே நிறத்திலும் விருப்பம் இருப்பது போல் வண்டு, பூச்சி இனங்களுள்ளும் ஒவ்வொரு வகையானவை ஒவ்வொரு நிறத்தில் அதிக விருப்பம்

85
உடையனவாயிருக்கின்றன. எனவே தம் இன விருத் திக்கு உதவி செய்யும் தூதுவர்களாக வண்டுகளையும் பூச்சிகளேயும் எதிர்பார்க்கும் பூஞ்செடிகள் அவை விரும் பும் நிறப் பூக்களைக்கொண்டு விளங்குகின்றன. என்னே படைப்பின் அதிசயம்! இரவில் தேன் எடுக்கும் வண் ஞத்திப் பூச்சிகளின் உதவியை நாடும் பூமரங்கள் இரவில் பிரகாசமாய் விளங்கக்கூடிய வெண்மை நிற மும் நறுமணமுமுடைய பூக்களைத் தாங்கி நிற்கின்றன. மாலையில் மலரும் முல்லை மல்லிகை முதலியன வெண்மை நிறப்பூக்களைக் கொண்டு விளங்குகின்றன. பகற்காலத்தில் நடமாடும் வண்டுகள், தேனிக்கள் என்பனவற்றின் உதவியை நாடும் பூமரங்கள் பகற் காலத்தில் பிரகாசமாய்த் தெரியக்கூடிய சிவப்பு, ஊதா முதலிய நிறமுள்ள பூக்களை மலர்விக்கின்றன. தாமரை, ரோசா முதலியன காலேயில் மலருவதற்குக் காரணமும் இதுவே. இத்தகைய பூக்களின் நிறபேதங் களேயும் அவை அவ்வாறு அமைந்திருப்பதன் கார ணத்தையும் ஆராயுமிடத்து இயற்கையன்னே படைப் பிற் காட்டிய திறமை விளங்குகின்றது.
இன விருத்தியின் பொருட்டு வண்டுகளையும் பூச்சிகளையும் துணைகொண்டபோதும் தாவரங்கள், விலங்குகளினின்றும் மனிதரினின்றும் தம்மைப் பாது காத்துக்கொள்ள சில தற்காப்புக்களைக் கொண் டுள்ளன. மனிதனின் பிடியிலிருந்து விடுபடவும் விலங்குகளின் கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள் ளவும் அவை முட்களையும், நச்சுத் திரவத்தையும் தற்காப்புக்காகப் பெற்றுள்ளன. ரோசாச் செடி கண்ணேக் கவரும் அழகிய நிறமுடைய நறுமணம் வீசும் மலர்களே உடையது. மலரைப் பறிக்க வரும்

Page 49
86.
மனிதனின் கையைக் கிழிக்கவல்ல முட்களை ரோசாச் செடி தற்காப்புக்காகக் கொண்டிருப்பதனல் அதனுட் புகுந்து மலர்களைப் பறிக்க யாரும் அஞ்சுவர். ரோசா வைப் போன்றே விளா, இலங்தை, கருவேலம் என்பன முட்களைக் கொண்டுள்ளன. சில தாவரங்கள் உரோமங் களின் உதவியினல் எதிரிகளிட மிருந்து தங்களைப் பாதுகாக்கின்றன. காஞ்சூரி என்னும் செடியின் இலை களின்மேல் உரோமங்கள் நிறைய உள்ளன. உரோமங் களின் தடித்துக்காணப்படும் அடிப்பாகத்தில் ஒரு சுரப்பி இருக்கின்றது. அதிலிருந்து சுரக்கும் நீர் உடம் பிலே பட்டவுடன் ஒருவித சுணேப்பை உண்டுபண்ணு கிறது. எனவே ஒருமுறை காஞ்சூரியை அணுகிய மனிதனே மிருகமோ பின் ஒருபோதும் அதை அணுகு வதில்லே.
தாவரங்களுள் ஒருவகையானவை புலால் உணவை உண்டு உயிர் வாழ்கின்றன. இவற்றிற்குப் புலால் உணவைக் கொடுப்பவர் யார்? இயற்கையன்னையே தன் படைப்பின் திறமையினல் இவை புலாலுணவைப் பெறத்தக்க வழிகாட்டியிருக்கிருள். 'திரோசிரா" என்ற செடி புலாலுணவை விரும்பும் வகையைச் சேர்ந்தது. இதன் இலைகளின் மேற்பரப்பில் சுரப்பிகளையுடைய உரோமங்கள் உள்ளன. இவற்றில்ருந்து தேன் போன்ற ஒருவித திரவம் ஊறிக்கொண்டிருக்கின்றது. இந்த இலைகளின்மேல் உட்காரும் பூச்சிகள் திரவத் தோடு ஒட்டிக்கொள்ளும். உடனே இலேயின் எல்லா உரோமங்களும் அப்பூச்சியை நோக்கி வளைந்து அதை அழுத்திக் கொன்றுவிடும் ; கொல்வதற்கேற்ற நச்சுப் பொருளும் அந்தத் திரவத்தில் உள்ளது. பூச்சி இறக் ததும் இலேயில் உள்ள ஒருவகை அமிலச் சத்தினுற்

S 7
கரைக்கப்பட்டு அது தாவரத்தின் உணவாய் இலையில் சுவறுகிறது. புலாலை உண்ணும் இந்தத் திரோசிராச் செடியின் வாழ்க்கை அற்புதமாக இருக்கிறதல்லவா?
சில தாவரங்கள் நிறத்தாலும் உருவத்தாலும் விலங்குகளை ஒத்திருக்கின்றன. இதல்ை தாம் ஒத்திருக்கும் விலங்குகளின் பகை விலங்குகள் தம்மை அணுகாதவாறு அவற்றைப் பயப்படுத்தியும் ஏமாற் றியும் வாழ்கின்றன. இலேயன்சு" என்ற காட்டுக் கொடி மற்ற மரங்களைத் தழுவிப் படர்ந்தே வாழ்கின் றது. ஒரு மரத்திலிருந்து மற்ற மரத்தைத் தாவி அதன்மேல் ஏறுகின்றபோது பாம்புபோற் காணப் படும். இதனை முன் பார்த்திராதவர் முதன்முதற் காணும்போது பாம்பு எனப் பயந்து ஒடுவர். இலே யன்சு போன்ற பல காட்டுக்கொடிகள் இவ்விதம் தம்மை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. தாவ ரங்களின் வாழ்க்கை முறை, அவை இனவிருத்தி செய்தல், அவை எதிரிகளிடமிருந்து தம்மைத் தப்ப வைத்துக் கொள்வதற்காகக் கொண்டுள்ள தற்காப் புக்கள் என்பனவற்றைப்பற்றி ஆராய்ந்து பார்க்கும் போது நாம்வாழும் இந்த உலகம்' எவ்வளவு புதுமை யுடையதாக இருக்கின்றதென்பது தெரிய வருகின்றது.
தாவரங்களின் வாழ்க்கை முறையிற் காண்பது போன்று விலங்குகளின் வாழ்க்கை முறையிலும் பல புதுமைகளைக்காணலாம். பறவைகளும், விலங்குகளும் பகுத்தறிவு அற்றனவா ? இல்லை. அவற்றிற்கும் பகுத்தறிவு உண்டு. 'மனிதர்களுள் ஒருவர் இன்னுெரு வரோடு பேசிப் பழகுகிருர், ஒன்ருகப் பழகிய இருவர் பேசும்போது ஒருவருடைய மொழியை மற்றவர் விளங் கிக்கொள்ள முடிகிறது ; ஆணுல் தமிழைப் பேசும்

Page 50
88
ஒருவர் யப்பானிய மொழிபேசும் ஒருவரோடு பேசி அவர் கூறுவன இவை என விளங்கிக்கொள்ள முடி யாது. இரண்டுபேரும் தனித்துப் பழகுவார்களே யானுல் கைவிரலாற் சுட்டுதல், மூக்கைச் சொறிதல் முதலிய சைகைகளின் உதவியினல் ஒருவர் கருத்தை மற்றவர் அறிவர். எனினும் ஒருவர் கூறுவதன் முழு விளக்கத்தையும் மற்றவரால் பெற முடியாது. மனிதர்களுக்கிடையே ஒருவர் பேசுவதை மற்றவரால் விளங்கிக்கொள்ள முடியாதபோது மிருகங்களும், பறவைகளும், வாய்பேசாதன என மனிதன் தள்ளிவிட முடியாது. மிருகங்களும் பறவைகளும் வாய் பேசக் கூடியனவே. உதாரணமாக மாட்டு இனத்தை எடுத் துக்கொள்ளலாம் : எருத்து மாடு பசுவுக்கும் கன்றுக் கும் தன் கருத்தைப் புலப்படுத்துகின்றது. கிளி ஒன் ருேடு ஒன்று பேசுகின்றது. அவற்றின் பேச்சை மனிதன் விளங்கிக்கொள்ளா விட்டால் விலங்குகளும் பறவைகளும் தன்னிலும் குறைந்தன என்ருே வாய்பேசத் தெரியாதன என்ருே மனிதன் கருதுவது பொருந்தாது.
தேனி கட்டும் கூட்டை நோக்குபவர் அதற்குப் பகுத்தறிவு இல்லையெனக் கூறமுடியுமா? எவ்வளவு விசித்திரமான அறைகளைக் கொண்டுள்ளன. அக் கூடுகள் மழைக்காலம் வந்ததும் ஒதுக்கிடம் தேடி நம் வீடுகளின் மூலைகளில் கூடுகள் கட்ட எத்தனிக்கும் பறவைகள் மூளே யற் றன எனக் கூறமுடியுமா ? கூட்டை எவ்வளவு அழகாக அவை கட்டுகின்றன ! வீட்டு வாயில்களை வட்டமாக அமைக்காமல் நேர் " நான் மூலே வடிவாக அமைக்கின்றன. உலர்ந்த களி மண்ணே நீர்கொண்டு ஈரமாக்கும் அப்பறவைகள்

89
நீரர்ல் களிமண் இளகும் இயல்பை அறிந்தமையின லல்லவா அவ்விதம் செய்கின்றன ! அவற்றின் கூடா கிய மாளிகையின் தரையில் அவை பாசிகொண்டும் தும்பு இறகு என்பன கொண்டும் மெல்லிய படுக்கை செய்தல் தம் குஞ்சுகள் குளிர்பிடியாது இன்பமாகத் தூங்குவதற்காம் என்ற அறிவை முன் பெற்றதனல், அல்லவா ? சுள்ளித் தடிகளினற் கட்டிய கூட்டில் படுத் தால் உடம்பு உறுத்தும் என்பதனுலேயே மனிதன் மெத்தையில் படுப்பதுபோன்று பறவைகளும் தும்பு மெத்தையில் படுக்கின்றன. கூட்டினுள் தும்பினல் மெத்தை அமைத்துப் படுக்கவேண்டுமென்று பறவை களுக்குக் கற்றுக்கொடுத்தவர் யார்? பறவைகளின் செய்கை விநோதமாகவே இருக்கின்றது.
பூனையின் வாழ்க்கை முறையில் எவ்வளவு புதுமை கள் காணப்படுகின்றன ! வீட்டில் களவு செய்த பூனையைக் கட்டிக்கொண்டு போய்ப் பல மைல் தூரத் துக்கு அப்பால் விட்டபோதும் பூனே முகர்ந்து முகர்ந்து இறுதியில் தான் முன்னிருந்த வீடுவந்து சேர்கிறதல் லவா ! பூனை தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண் டிருப்பதை மனிதர் கவனிக்கிருர்கள் என்று அப்பூனை கண்டபோது வெட்கமிகுதியினல் அது மறைவான இடத்திற்கு ஒடிப்போய் அங்கிருந்து குட் டிகளுக்குப் பால் கொடுக்கிறது. பூனைக்கு இவ் வெட் கத்தைக் கற்றுக் கொடுத்தவர் யார்? மனிதர்களே வெட்கத்தை இழந்துவிடும் இந்நாளில் பூனையிட மிருந்து அவர் படிக்கவேண்டிய ஒரு சிறந்த நற்பழக்க மல்லவா இது! தெருவருகிலும் மக்கள் நடமாடும் இடங் களிலும் ஆறறிவுபடைத்த மனிதன் மலசலங் கழித்து விட்டுச் செல்கிருன், தான் அப்படி நடப்பது தன்

Page 51
9
O
இனத்தவரால் விரும்பப் படாதது என்பதை மனித்ன் அறிந்தும் தன் சோம்பல் மிகுதியினுல் செய்யத் தகா தது செய்கிறன். பகுத்தறிவில்லாதது என மனிதன் கருதும் பூனேயானது கெளரவமாக அல்லவா நடந்து கொள்கிறது ! நிலத்தைக் கிளறி மண்ணைக் கிளப்பி அக் கிடங்கிற்குள் மலங்கழித்துவிட்டுப் பின் அதனை மண்ணுல் மூடிவிட்டல்லவா பூனே செல்கிறது ! செல் லும்போது கூட, தூரத்தில் நின்று தான் மண்ணுல் மூடியது சரியாய் மூடப்பட்டு விட்டதா என்பதைத் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டுச் செல்கிறது. பூனைக்கு இப்பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தவர் யார் ?
நாயின் வாழ்க்கை முறையிலும் எத்தனையோ புது மைகள் காணப்படுகின்றன. நாய் ஒரு நன்றியுள்ள மிருகம். ஒரு நாளாவது தனக்கு உணவு கொடுத்த ஒருவர் எப்படித்தான் அடித்தாலும் நாய் பொறுமை யாக இருக்கிறது; நிலத்தில் படுத்திருந்து தன் வாலே ஆட்டி நன்றியறிதலைத் தெரிவிக்கிறது. வீட் டருகே பாம்பைக் கண்டதும் அது தன் தலைவனைக் கடிக்கப் போகிறதே என்று பயந்து குரைத்துப் பாம்பைக் கலைக்கிறது. பாம்பு திரும்பியோடாது தலைவன் படுத்திருக்கும் இடத்தை நோக்கி வந்தால் நாயானது அவன் படுக்கை யருகே சென்று குரைத்து அவனே எழுப்புகிறது ; எழுப்பி என்ன செய்கிறது ? பாம்பு வந்த இடத்தை நோக்கித் தலைவனைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுகிறது. இந்த அறிவு நாய்க்கு வந்தது எவ்வாறு? இரவில் வீட்டிற்குக் கள்ளர் வருவார் கள் எனத் தான் தூங்காது விழித்திருந்து பகற் பொழுதில் நாய் தூங்குகின்றது. தலைவன் நித்திரை கொள்ளத் தான் விழித்திருந்து கடமை செய்யும் நாய்

9
பகுத்தறிவு அற்றதா ? தன் தலைவன் தினமும் பகல் ஒரு மணிக்கு உணவு அருந்துகிருன் என்பதை அவ தானிக்கும் நாயானது தான் எங்கே திரிந்தாலும் உணவுநேரம் சரியாகக் கண்டு தவருது வந்துவிடு கிறது. மணிக்கூடின்றிச் சரியான நேரம் அறியும். அறிவை நாய்க்குக் கற்றுக்கொடுத்தவர் யார்? ஒரு நாள் தலைவன் சிறிது முன்னதாகச் சாப்பிட்டு விட்டால் காயானது பிந்தி வழக்க நேரப்படியே சாப்பாட்டுக்கு, வருகிறது ; தான் நேரங்கழித்து வந்துவிட்டதென் பதைக் காட்டுவதற்காகப் பலமுறை வாலைக்குழைத்து ஆட்டிக்கொண்டு அங்குமிங்கும் ஒடித் தன் வருகை யைத் தெரிவிக்கிறது. நாயின் இன்னெரு செய்கை யையும் அவதானிக்கலாம். தலைவன் ஓர் இடத்தி லிருந்து இன்னுேர் இடத்திற்குப் போகும்போது காய் வழிகாட்டிச் செல்கிறது. பாதை மூன்று கிளே களாகப் பிரிந்து செல்வதைப் பார்த்த நாய் முதலாம் பாதைவழியே சிறிது தூரஞ் செல்கிறது; பாதை சதுப்பு நிலம் எனக் கண்டவிடத்துத் திரும்பி ஓடி வந்து இரண்டாம் பாதைவழியே செல்கிறது ; பின் மூன்ரும் பாதைவழியேயும் செல்கிறது. மூன்று பாதைகளிலும் எது நல்லது எனக் கண்டபின் திரும்பி வந்து நல்ல பாதை பிரிந்து செல்லும் இடத்தில் நின்று தலைவனை அவ்வழியே வரும்படி வாலாட்டி அழைக் கிறது. இங்ங்ணம் கருத்துக்களைப் பிரித்துநோக்கு தலும், பொருத்தி நோக்குதலும் நாய்க்கு ஏற்பட்டது எதல்ை? அதன் கடன் தலைவனது காவலேயே கருது தல் எனவும் தனது சிறுச்சிறு நன்மைகளைக் கருது வது அன்று எனவும் தெரிகிறது.
இறைவன் படைப்பில் இன்னும் எத்தனையோ

Page 52
32
புதுமைகளும் அதிசயங்களும் உள்ளன. கோடிக்கணக் கன புல் பூண்டுகளும் மரஞ் செடிகளும் தினமும் இவ் வுலகில் தோன்றுகின்றன; ஒரு காலனல்லேயில் அழிந்து விடுகின்றன. பறவைகளும் விலங்குகளும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மடிந்துவிடுகின்றன. இவற்றின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வைப்பார் யார் ? ஒருவருமில்லை. எனவே இவற்றின் வாழ்க்கை யில் உள்ள புதுமைகளை ஒருவர் நேரிற் கண்டு உணரலாமே தவிர வரலாறுகளின் மூலம் அறிய முடியாது. ஆனல் மனித வர்க்கமோ தன் வரலாற்றைச் சரித்திர வாயிலாகவும் இலக்கிய வாயிலாகவும் பாது காத்து வருகிறது. மனித வாழ்க்கையிற் காணப்படும் புதுமைகளும் அதிசயங்களும் புலவர்களால் காலத் துக்குக் காலம் கூறப்படுகின்றன. அவை கலைஞர் களால் ஒவியத்திலும் சிற்பத்திலும் பொறிக்கப்படு ஃகின்றன.

8. வித்துவக் காய்ச்சல்
வித்துவக் காய்ச்சல் என்பது கல்வியால் உயர்ந் தவர் இருவரிடையே ஏற்படும் பொருமையாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் வளர்ந்துவரும் தமிழ் மொழியின் வரலாற்றை ஆராயுமிடத்து இடைக்காலத் தில் ஒரு சில தமிழ்ப் புலவர்களிடையே செருக்கும் போட்டியும் இருந்ததாக அறியக் கிடக்கின்றது. சமு: தாயத்தில் பலரால் மதிக்கப்படும் புலவர்களே செருக் குடையவர்களாய் இருந்தால் படியாத ஏழை களிடையே செருக்குமனப்பான்மை வ ரா மற். போகுமா? கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு " என்பதை உணராமல் எல்லாம் கற்று விட்டோம், எம்மைவிடப் பெரியவர் ஒருவரும் இல்லே " என்று இறுமாப்புக் கொண்ட சில புலவர்கள் தம் ஆணவம் அடங்க அவமானப்பட்ட நிகழ்ச்சிகளைத் தனிப்பாடல்களும் புராணக் கதைகளும் கன்னபரம் பரைச் செய்திகளும் சுவைபடக் கூறுகின்றன.
பன்னிரண்டாம் நூற்ருண்டில் தமிழ் நாட்டை ஆண்ட சோழ மன்னனுகிய இரண்டாம் குலோத்துங் கனின் அவைக்களப் புலவராய் விளங்கியவர் ஒட்டக் கூத்தர் என்னும் புலவர். புலவர்களுக்குள் தலே சிறந்து விளங்கிய இவர் “ கவிச் சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயரும் பெற்றிருந்தார். குலோத்துங்க

Page 53
9.
சோழன் சிறந்த தமிழ்ப் பற்று உடையவனகையால் தமிழ்க் கவிதை பாடி வருவோர்க்கு மதிப்பும் பரிசிலும் நல்கி வந்தான். புலவர்கள் பலர் மன்னனின் மதிப் பைப் பெறுவதை அவைக்களப் புலவராகிய ஒட்டக் கூத்தர் விரும்பவில்லை. புலவர்கள்மேல் பொருமை கொண்ட அவர் புலவர்கள் பாடி வரும் பாடல்களில் குற்றங்காண முற்பட்டார். மன்னனைத் தம் வய மாக்கிய ஒட்டக்கூத்தர் அவனே நாடிவரும் புலவர்களைத் தண்டித்தார். மன்னனுக்குப் பொய்க் காரணங்கள் கூறிப் புலவர்களேச் சிறையில் அடைப்பித்தார். சிறைச்சாலையும் கிரம்பியது. கலைமகள் கொலு வீற் றிருக்கும் நவராத்திரி தினத்தில் விசயதசமியன்று சிறைச்சாலேயிலிருந்த புலவர்களே இருவர் இருவராக வெளியே வரவிட்டு இருவரின் உச்சிக் குடுமியையும் சேர்த்துக் கட்டினர். தேவிக்கு முன் குனிந்து நிற்கும் படி விட்டு வாள்கொண்டு அவர்கள் தலையை அறுப் பித்தார் ; பலியாக்கினர்.
செருக்குக் கொண்ட ஒட்டக்கூத்தரின் இழி செயலைப் பற்றிக் கேள்விப்பட்ட புகழேந்திப் புலவர் சோழனுடைய அவைக்கு வந்தார். ஒட்டக்கூத்தர் அவரையும் சிறையில் அடைப்பித்தார். புகழேந்திப் புலவர் தம் சிறைவாசத்தைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை. சிறையில் இருந்த ஏனையோருக்குக் கல்வி கற்பித்து அவர்களைச் சிறந்த புலவர்களாக் கினர். அவர்களுள் ஐவரைத் தெரிந்து, ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் வெட்கிப் போகப் பாட் டிலேயே விடையிறுக்கும்படி கற்பித்தார். விசயதசமி நாளும் வந்தது. ஒட்டக்கூத்தர் கலைமகள் கொலு வீற்றிருக்கும் மண்டபத்திற்கு வந்து மன்னனருகே

95
தனி ஆசனத்தில் அமர்ந்தார். 'படித்த கடாக்களை" ஒவ்வொருவராக வெளிவிடும்படி சிறைச்சாலை அதி காரிக்குக் கட்டளையிட்டார். தாம் கேட்கும் கேள்விக்குச் சரியான பதில் கொடுக்காதவரின் தலையை அறுப் பதற்காகக் கத்தியை உருவி வைத்திருந்தார். சிறைச் சாலையின் கதவும் திறக்கப்பட்டது. புலவர் ஒருவர் ஒட்டக் கூத்தரின் முன் வந்து நின்ருர், "இயல் இசை, நாடகம் என்னும் முத்தமிழாகிய மும்மதங்களேப் பொழிகின்ற கவியானைக்கு முன்னே வந்து நின்றவன் யார் " என்னும் பொருளமைய,
* மோனை முத்தமிழ் மும் மத மும்பொழி ஆனை முன்வந் தெதிர்த்தவ னுரடா ?” எனக் கோபத்தோடு கேட்டார். புலவரோ சிறிதும் பயப்படாமல் நிமிர்ந்து நின்று, "தற்புகழ்ச்சியாக யானை என்று சொல்லுகின்ற உன்னுடைய மதத்தை அடக்குகின்ற அங்குசம் தாங்கிய யானைப்பாகன் " என்னும் பொருள்பட, ܪܬ
* கூனை யுங்குட முங்குண்டு சட்டியும்
பானை யும்வனையு மங்குசப் பையல் யான் " என விடை கூறினர். (குசப் பையல் என்பது, குடம், பானை, சட்டி என்பன வனையும் குயவ வகுப்பைச்சேர்க் தவன் என்ற பொருளில் வரும்). இதனைக் கேட்ட ஒட்டக்கூத்தரோ திகில் அடைந்தார். செந்தமிழ்க் கவிதையில் மறுமொழி கொடுக்கும் இவனே எப்படி வெட்டுவது, இது நீதியாகாதே என எண்ணிப் புல வரை அருகில் நிறுத்தி விட்டு மற்றப் புலவரை வின வினர்; அவரும் ஒட்டக்கூத்தர் வெட்கம் அடையத் தக்க வகையில் மறுமொழி கொடுத்தார். மன்னனின் முன்னிலையில் அவமானப்பட்ட ஒட்டக்கூத்தர் இனி

Page 54
95
மேல் கவிவாணரைச் சிறையில் அடைப்பதில்லே எனத் தீர்மானித்து எல்லோரையும் சிறையிலிருந்து விடுவித்தார். குலோத்துங்க சோழனும் தன் அவைப் புலவராகிய ஒட்டக்கூத்தரின் செருக்கடங்கிய மன நிலே கண்டு உவகை கொண்டான். புகழேந்திப் புல வரும் ஒட்டக்கூத்தரின் செருக்கு அடங்கியது கண்டு தமிழ்ப் புலவர்கள் பிழைத்தார்கள் என மனம் மகிழ்ந் தார்.
நாயக்க மன்னர் தமிழ்நாட்டை ஆண்ட காலமாகிய பதினுறு பதினேழாம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பலரிடையே வித்துவக் காய்ச்சல் மிகப் பரவியிருக்தது. தமிழில் பாரதத்தைப் பாடியவர் வில்லிபுத்துTரர். இவர் கவிபாடுவதில் தன்னேவிடச் சிறந்தவர் ஒருவரும் இல்லே என்று செருக்குக் கொண்" டிருக்தார். ஊரூராகச் சென்று பல புலவர்களே வாதுக்கு அழைத்துத் தோற்கடித்தார். ஊரின் மத்தியில் பொது மக்கள் கூடும் இடத்தில் போட்டி கடக்கும். ஒருவர் கேட்டுக்கொண்ட நிபந்தனைப்படி மற்றவர் பாடவேண் டும். வென்றவர் தன் கையிலுள்ள குறடு என்னும் ஆயுதத்தால் தோற்றவரின் காதை வெட்டி விடுவர். காது அறுக்கப்பட்ட புலவர் வெட்க மிகுதியினுல் பின் ஒருபோதும் வித்துவான்கள் கூடும் சபைகளுக்குச் செல்லமாட்டார். வில்லிபுத்துரார் பல வித்துவான் களின் காதுகளே அறுத்து அவர்களே வெட்கம் அடை பும்படி செய்திருக்கிருர், வில்லிபுத்துரரசின் இக்கோரச் செயலேக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் வில்லிபுத் தூருக்கு வந்து அவருடன் போட்டியிட்டார். ஏராள மான மக்கள் போட்டியைப் பார்ப்பதற்காக வந்திருங் தனர். அருணகிரிகாதர் . தாம் நூறு பாடல்களேப்

9.
பாடுவதாகவும் வில்லிபுத்துTரரைப் பொருள் கூறும்படி பும் சொன்னர்; அவரும் இணங்கினுர். பொருளேச் சரி பாகக் கூறிமுடித்தால் வில்லிபுத்தூசர் அருணகிரி நாதரின் காதை அறுக்க வேண்டும் பொருள்கூற முடியாது இடர்ப்பட்டால் அருணகிரிநாதர் வில்லிபுத் தூரரின் காதை அறுக்க வேண்டும். இதுவே போட்டி பின் நிபந்தனேயாகும். அருணகிரிகாதர் கந்தரங்தாதி என்னும் நூலேப் பாட ஆரம்பித்தார். பாடல் ஒவ் வொன்றுக்கும் வில்லிபுத்துரார் சிறந்த முறையில் பொருள் கூறிக்கொண்டு வந்தார். ஐம்பத்து நான்காம் பாடலாகிய திதத்தக் . என்று தொடங்கும் பாட லுக்குப் பொருள் கூற வில்லிபுத்துTரரால் முடிய வில்லே. வெட்கமடைந்த அவர் குறட்டை அருணகிரி காதரின் கையில் கொடுத்துத் தமது காதை அறுத்து விடும்படி கேட்டார். அருணகிரிநாதரோ போட்டியில் தோற்று வெட்க மடைக்திருப்பவரின் மனத்தைப் பின்னும் புண்படுத்த விரும்பவில்லே. அவரது காதை அறுக்காது குறட்டைத் திருப்பியும் அவர் கையில் கொடுத்து இனிமேல் ஏழைப் புலவர்களேத் தண்டிக்க வேண்டாமென்று புத்திமதி கூறிச் சென்ருர், வில்வி புத்துரார் அன்று முதல் மதமடங்கிய பாஃன போல் செருக்கடங்கியவராய் வாழ்ந்தார் என வரலாறுகள் கூறும்.
திருமலேராயன் என்னும் நாயக்கமன்னன் தமிழ் காட்டை அரசாண்ட காலத்தில் அவன் அவைக்களப் புலவணுப் விளங்கியவன் அதிமதுரகவி என்பவன். 'இனிமையான பாடல்களேப் பாடவல்லவன்' என்பது இவன் பெயரின் பொருள். இவன் திருமலே ராயனின் அறுபத்து கான்கு தண்டிகைப் புலவர்களுக்குத்
7

Page 55
98
தலைமை தாங்குபவன். மன்னனின் அன்புக்கு உரிய வராய் அவன் வேலையாட்களால் தண்டிகைகளில் வைத்து மேள வாத்தியங்கள் புடைசூழ ஊரூராகத் தூக்கிச் செல்லப்படும் புலவர்களே தண்டிகைப் புலவர் எனப்பட்டனர். இத்தண்டிகைப் புலவர் கூட்டத்திற்கு அதிமதுரகவி தலைமை தாங்கியமையின் அவன் கொண்ட கர்வத்துக்கு அளவேயில்லை. அக்காலத்தில் சிறந்த நகைச்சுவைப் புலவராய் விளங்கிய காள மேகப் புலவர் இறுமாப்புக் கொண்ட புலவர் பலரை அடக்கி வந்தார். ஒருநாள் தண்டிகைப் புலவர் அறு பத்து நான்கு பேரும் புடைசூழ அதிமதுரகவி பவனி வருவதைக் கண்ட காளமேகம் அக்கூட்டத்தினிடையே புகுந்தார். அனைவரும் "அதிமதுரகவிராய சிங்கம் பராக் என்று உரத்துச் சொல்லிக் கொண்டே வந்தனர். காளமேகம் மாத்திரம் அங்ங்னம் சொல்லாது, இறு மாப்போடு வந்தார். இவரின் போக்கைக் கவனித்த பலர் இவர்மீது கோபங் கொண்டனர். திருமலை T (Tul u6ofa5T அரண்மனையைத் தண்டிகைப்புலவர் கூட்டம் அடைந்ததும் அதிமதுரகவி சேவகர்களை அழைத்துப்பாதையில் தன் புகழ்கூற மறுத்த புலவன் யாரென்று விசாரித்து அவனே அழைத்து வருமாறு அனுப்பினன். சேவகர்கள் காளமேகத்திடம் வந்து நீ யார் ? உன் பெயர் என்ன ? என்று கேட்டனர். காள. மேகம் அவர்களைப் பார்த்து "நான் வாயாற் சொன் ல்ை என்பெயரை உங்களால் ஞாபகத்தில் வைத் திருக்க முடியாது. இதோ எழுதித் தருகிறேன்" எனக் கூறி ஒரு சீட்டுக்கவி (நினைத்த மாத்திரத்திற் பாடும் பாடல்) பாடிக் கொடுத்தார். அப்பாடலின் ஒரு பகுதியும் அதன் பொருளும் பின்வருமாறு :

99
சீதஞ்செ யுந்திங்கண் மரபின னிடுபுகழ்
செய்யதிரு மலைராயன்முன் சீறுமா ருகவே தாறுமா றுகள்சொல்
திருட்டுக் கவிப் புலவரைக் காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக் கதுப்பிற் புடைத்து வெற்றிக் கல்லணையி னெடுகொடிய கடிவாள மிட்டேறு
கவிகாள மேக நானே.” "குளிர்ச்சி பொருந்திய சந்திர குலத்தில் பெருமை யுடன் விளங்கும் மன்னனுகிய திருமலைராயனின் சபை யில் பொய் பேசி வாழும் திருட்டுப் புலவர்களேப் பிடித்து அவர்களின் காதுகளே அறுத்துக் கன்னத்தில் புடைத்துச் சவுக்கால் அவர்களே அடித்து அவர்கள் வாயில் கடிவாளம் பூட்டிச் செலுத்திச் செல்லும் புலவன் காளமேகம் நான்."
சேவகர்கள் காளமேகம் கொடுத்த பாடலே அதி மதுரகவியிடம் கொடுத்தனர். பாடலே வாசித்ததும் அவன் முகம் கறுத்தது; கோபம் பொங்கியது. ‘என்னை யும் என் புலவர்களையும் திருடர்கள் என்று ஏசி இந்த ஓலையை எனக்கு அனுப்பக்கூடிய தைரியம் இவனுக்கு வந்துவிட்டதே ; இவனே மானபங்கப் படுத்தவேண் டும் ; அல்லாவிடின் எங்கள் மதிப்புக் குறைந்துவிடும்? எனத் திருமலைராயனின் முன்கின்று கூறினன். பின் மன்னனின் உத்தரவு பெற்றுச் சேவகர்களே அழைத் துக் காளமேகத்தைப் பிடித்து வரும்படி அனுப்பினன். அவர்களும் ஒடிப்போய்க் காளமேகத்தின் கையைப் பிடித்து அவரைத் தம்முடன் வருமாறு அழைத்தனர். காளமேகம் தம் கையை விட்டுவிடும்படியும் தாமே வருவதாகவும் கூறிவிட்டு அவர்கள் முன் நடந்தார்.

Page 56
OC)
வரும்பாதையில் கடை யொன்றிற்குச் சென்று ஒரு எலுமிச்சம்பழம் வாங்கிக்கொண்டு வந்தார். இதற் கிடையில் காளமேகம் வந்தால் மன்னனுவது புலவர் களாவது எழவோ மரியாதை செய்யவோ கூடாது என்று அதிமதுரகவி சபையில் அறிவித்திருந்தான். காளமேகம் மன்னனின் சபைக்கு வந்தபோது உள்ளே கால் எடுத்து வைக்க முடியாதபடி சபையோர் ஈபுக இடமின்றி நெருங்கியிருந்தனர். ஒருவரும் எழுந்து அவரை வரவேற்கவில்லே. வெளியே நின்ற காளமேகம் தன் தையிலிருந்த எலுமிச்சம் பழத்தை மன்னனை 5ோக்கி நீட்டினர். புலவனுெருவன் செய்யும் உபசாரத்தை ஏற்காது விடுவது மரபு அன்று என மன்னன் எண்ணித் தன் ஆசனத்தில் இருந்த படியே கையை நீட்டினன். மன்னனின் குறிப்பைக் கண்ட அவைப் புலவர்களும் உடனே அவருக்கு வழி விட்டு மரியாதை செய்தனர். அதுவே அவருக்கு அளித்த வரவேற்பாக அமைந்துவிட்டது. மன்னஜன அடைந்ததும் அவர் எலுமிச்சம்பழத்தை அவன் கையில் கொடுத்தார். மன்னன் காளமேகம் அமருவ தற்கு ஆசனம் கொடாது பேசாதிருந்துவிட்டான். காள மேகம் சபை நடுவே நின்றபடியே, நினைத்த இடத்தே நினைத்தவற்றைக் கொடுக்கும் கலேமகளை நினைந்து, * வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்பணி பூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னச் சரியா சனத்துவைத்த தாய்." எனப் பாடினர். கலேமகளின் அருளால் மன்னன் வீற்றிருந்த ஆசனமானது நீண்டு இடங்கொடுத்தது. காளமேகமும் மன்னன் பக்கலில் அமர்ந்தார்.

O1,
காளமேகம் மன்னனின் பக்கலில் சிரித்த முகத் துடன் அமர்ந்திருப்பதைக் கண்ட சபையோரெல் லோரும் இமைகொட்டாது அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதை அவதானித்த காளமேகம் 'நீங்கள் யார்! ஏன் என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். "நாங்கள் கவிராயர் என்று புலவர் கள் எல்லோரும் ஒரேமுகமாகக் கூறினர். காளமேகம் இவர்களின் செருக்கை அடக்க எண்ணினர். " புவி மன்னர்கள் புகழும் உங்களை நீங்களே " கவிராயர்" எனச் சொல்லிக் கொண்டால் குரங்குகளாகிய உங் களின் வால் எங்கே? நீண்டு வளர்ந்த நகங்கள் எங்கே? நான்கு கால்கள் எங்கே ! பீழை வடிந்த கண்கள் எங்கே 1 என்னும் பொருளமைய,
வாலெங்கே நீண்டெழுந்த வல்லுகிரெங் கேநாலு காலெங்கே யூன் வடிந்த கண்ணெங்கே - சாலப் புவிராயர் போற்றும் புலவர் காள் ! நீங்கள் கவிராய ரென்றிருந்தக் கால் ! என்னும் வெண்பாவைப் பாடினர். புலவர்கள் தங் களைக் கவிகளுக்குத் தலைவர் என்று பொருள் படும்படி கவிராயர் என்று கூறிக்கொண்டனர். கவி என்பது குரங்கு என்று பொருள்படும் வட மொழிச் சொல்லாகிய " கபி " என்பதன் திரிபாகக் கொண்டால் கவிராயர் என்பதற்குக் குரங்குகட்குத் தலேவர் என்ற பொருளும் படும். கவிராயர் என்ப தற்கு வேண்டுமென்றே குரங்குத் தலைவர் என்ற பொருளே வற்புறுத்தி அவர்களைக் குரங்குகள் என்று நயமாகக் கூறி அவர்கள் செருக்கை அடக்கி விட்டார்.
காளமேகம் புலவர்களேக் குரங்குகள் எனக் கூறி அவமதித்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள

Page 57
102
முடியாது கோபாவேசத்தில் வாயில் வந்தபடி யெல் லாம் பேசினர். அவரின் வித்துவத் தன்மையைக் கண்டு நெஞ்சம் புழுங்கிய அதிமதுரகவி கோபங் கொண்டவனுய் “நீ யாரடா செருக்கோடு பேசுகின்ருய் உன்னைக் காட்டிலும் வேறு புலமை மிக்கோர் இல்லே யெனக்கருதுகிருய் போலும்; எங்கே அரிகண்டம் பாடு பார்ப்போம் " என்ருன். காளமேகம், “நீ கருதும் அரி கண்டந்தான் என்ன ? தெளிவாகச் சொல் " என்றர். அதற்கு அதிமதுரகவி கழுத்தில் கத்தி கட்டிக் கொண்டு எதிரி கொடுக்கும் நிபந்தனைக் கேற்பப் பாடு வதுதான் அரிகண்டமாகும். பாடும்போது தவ றிழைத்தால் அந்தக் கத்தியினல் வெட்டுண்டு இறக்க வேண்டும் " என்ருன், காளமேகம் இதுதான அரி கண்டம் " எனக் கூறிவிட்டு, ' இதைப் பாடுவது மிக எளியது. எங்கே நீ யமகண்டம் பாடு பார்ப்போம் ? என்ருர். அதிமதுரகவி “நீ கூறும் யமகண்டம் என்ன என்பதைத் தெளிவாகச்சொல் " என, காளமேகம் பின்வருமாறு கூறினர்: "பதினறடி நீளம், பதினறடி அகலம், பதினறடி ஆழமான கிடங்கு ஒன்று வெட்ட வேண்டும். கிடங்கின் நான்கு மூலைகளிலும் நான்கு இரும்புக் கம்பங்களை நட்டு, அந்நான்கையும் தொடுத்து அவற்றின்மேல் இரும்புச் சட்டங்களைப் பரப்ப வேண் டும். சட்டங்களில் கட்டிய உறி ஒன்றைக் கிடங்கின் மத்தியில் தொங்கவிட வேண்டும். கிடங்கிற்குள் மரக் கட்டைகள், சாம்பிராணி, அரக்கு, மெழுகு என்பன வற்றைப் போட்டு எண்ணெய் ஊற்றி நெருப்புக் கொளுத்த வேண்டும். நெருப்பு சுவாலைவிட்டு எரியும். இரும்புக் கம்பங்களில் நான்கு யானைகள் கட்டப்பட் டிருக்கும். பாகர் அவற்றின்மேல் உட்கார்ந்திருப்பர்.

1 O 3
யானைகளின் துதிக்கையில் சங்கிலி இருக்கும். இச் சங்கிலி கிடங்கின்மேல் உள்ள உறியில் தொங்கவிடப் பட்டிருக்கும். யமகண்டம் பாட ஒப்புக்கொண்ட புலவன் கம்பத்தின் வழியாய் மேலே ஏறி உறியினுள் உட்கார்ந்திருப்பன். அவன் கழுத்தில் நான்கும் அரை யில் நான்குமாக எட்டுக் கூர்மையா னகத்திகள் கட்டப் பட்டு முன் தொங்கவிட்ட சங்கிலியோடு பொருத்தி விடப்படும். உறியில் ஏறி இருக்கும் புலவன் வெளியி லிருந்து யார் யார் என்ன என்ன நிபந்தனைகள் விதிக் கிருர்களோ அவற்றின்படி பாட வேண்டியதுதான். பாடும்போது ஏதாவது தவறு இழைத்தால் எதிரி யானைப் பாகனுக்குச் சாடை காட்டுவன். பாகன் அங்குசத்தால் யானேயைக் குத்த, அது வெருட்சியி ணுல் கையில் இருக்கும் சங்கிலியைப் பிடித்து இழுக் கும். சங்கிலி இறுக்கி இழுபடவே உறியிலிருந்து பாடும் புலவனின் கழுத்திலும் அரையிலும் கட்டப் பட்ட கத்திகள் அவனுடலேக் கூறுகூருக வெட்டும். வெட்டுண்ட உடற்கூறுகள் கீழேயுள்ள கிடங்கில் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பினுள் விழுந்து கருகிச் சாம்பலாகும். இதுதான் யமகண்டம்.
காளமேகம் யமகண்டத்தைப் பற்றிக் கூறியதும் அதிமதுரகவி திகைத்து விட்டான். பின் எவ்வாறு காளமேகத்தைக் கொண்டே யமகண்டம் பாடும்படி செய்து நெருப்பில் வீழ்த்தி வதைக்கலாம் எனத் திரு மலேராயனேடும் தண்டிகைப் புலவர்களோடும் ஆலோ சிக்கலானன். அவன் "காளமேகத்திடம் சென்று நீ புத்திமான்; உன் பெயரென்ன என்று கேட்டு வரும்படி என் ஏவலாளர்களை அனுப்பியபோது உன் செருக்கைக் காட்டுவதற்காகவே ஆசுகவிபாடி அனுப்பினுய். எங்கே

Page 58
1 O4.
நீ பிரமாதமாகப் பேசிய அந்த யமகண்டத்தை இப் போது பாடு பார்ப்போம் ? என்ருன். காளமேகப்புல வர் புன்சிரிப்புச் சிரித்துவிட்டு அவனை நோக்கி 'உன் போன்ற போலிப் புலவர்களால் யமகண்டம் பாடமுடி யாது. இதோ நான் பாடிக் காட்டுகிறேன் என்ருர், உடனே மன்னனின் ஏவற்படி யமகண்டம் பாடுவதற் கேற்ற குழி வெட்டுதல் முதலிய ஆயத்தங்கள் செய் யப்பட்டு விட்டன. காளமேகமும் எல்லாம் வல்ல கலேமகளைத் துதித்துக்கொண்டு, எரியும் சுவாலேயின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் உறியின்மேல் ஏறி உட்கார்ந்தார். வெளியே நின்ற புலவர்கள் தாம் விரும்பிய நிபந்தனைகளை எல்லாம் கொடுத்தார்கள். காளமேகமும் அவர்கள் கேட்டவற்றைத் தங்கு தடை யின்றிப் பாடி முடித்தார். அவிர்களுள் ஒருவர், ஒன்று முதல் பதினெட்டு எண்களை முறையே அடை சொல் இல்லாமல் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடவேண்டும்" என்ன,
ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு வேழெட்டு ஒன்பது பத்துப் பதினென்று - பன்னி ரண்டுபதின் மூன்றுபதி ஞன்குபதி னந்துபதி ஞறுபதி னேழ்பதினெட் டு. என்று காளமேகம் பாடி முடித்தார். பாடி முடித்ததும் காளமேகம் வெளியே இறங்கி வந்தார். பொருமை கொண்ட அதிமதுரகவியாவது தண்டிகைப் புலவர் களாவது காளமேகத்தை உபசரிக்கவில்லே ; அவருடன் வாய்திறந்து பேசவுமில்லை. அவர்களின் நிலையைக் கண்ட காளமேகம் மனம் நொந்தார். திருமலைராயனின் பட்டணம் மண்மாரியால் அழியும்படி வசைக்கவி பாடி விட்டு நாட்டைவிட்டுப் புறப்பட்டார்.

9. தத்துவஞானி சுவைச்சர்
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்துவரும் இன்றைய உலகப் பெரியார்களுள் ஒருவர் தத்துவஞானி சுவைச்சர். இவர் 1875-ஆம் ஆண்டு ஐரோப்பாக் கண்டத்தில் ஜெர்மனிய நாட் டிலே பிறந்தார். இவரது தகப்பனர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார். தாயின் தகப்பனர் ஒரு இசைக் கலைஞர். சமய அறிவும் சங்கீத ஞானமும் நிரம்பிய இந்தக் குடும்பத்தில் பிறந்த சுவைச்சருக்கும் குடும்பத்தின் வாசம் வீசத் தொடங்கியது. இவர் இளம் வயதில் சமயநூல்களைக் கற்பதில் பேரார்வம் காட்டினர். அத் துடன் தம் இல்லத்தில் இருந்த இசைக் கருவிகளின் துணேகொண்டு அவற்றிற் பயிற்சி பெறலானர்.
பாடசாலைக்குச் செல்லும் நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சுவைச்சர் இசை பயில்வதிலும் தெருவருகே மாணவர்களுடன் விளையாடுவதிலும் காலத்தைக் கழித்து வந்தார். ஏனைய மாணவர்கள் தம் முழுக் கவனத்தையும் விளையாட்டிற் கழிக்க, சுவைச்சர் தெருவழியே பாரஞ்சுமந்து செல்லும் ஏழை மனிதர்களே நோக்குவார். அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துவதுகுறித்து இரங்குவார். இறைச்சிக் கடைக்குக் கொண்டு போகப்படும் ஒரு முதிய குதி ரையை இருவர் அடிப்பதைக் கண்டுகொண்டிருந்த சுவைச்சர் அவ்விலங்கின் மீது கருணை கொண்டார். தாம் பெரியவராக வளர்ந்த பின்னர் மனிதரும்

Page 59
1 06
விலங்குகளும் இவ்விதம் அல்லற் படாமலிருத்தற் கேற்ற வழிவகைகளை வகுக்க வேண்டுமென எண்ணி ஞர். இளகிய நெஞ்சு படைத்த இந்த இளஞ்சிறுவனின் மனத்தில் எழுந்த இவ்வித கருத்துக்கள் பசுமரத் தாணி போல் பதியலாயின.
சுவைச்சரின் அறிவு நுண்மையையும் கல்வி ஆர்வத்தையும் அறிந்த அரசாங்கத்தார், அரசாங்க நன்கொடை பெற்று உயர்தரக் கல்வி கற்கும் மாண வர்களுள் ஒருவராக இவரைத் தெரிந்தெடுத்தனர். இவரும் "ஸ்டாஸ்பேர்க்கு என்ற பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவ தத்துவங் கற்கலானர். மூன்று ஆண்டுகள் கல்வி கற்றபின் அவர்தம் இருபத் தோராம் வயதில் அப் பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரிவுரை யாளராகக் கடமை யாற்றிவரும் நாளில் மனித சமு தாயத்தைப் பற்றியும் மக்களின் இன்னல்களைத் தீர்க் கும் வழிகளைப் பற்றியும் சிந்திப்பதில் கழித்தார். ஒருநாள் பல்கலைக் கழக மைதானத்து மரகிழல் ஒன்றன்கீழ்ப் படுத்திருந்து பின்வருமாறு சிந்திக்க லானர். "நான் பணக்காரப் பெற்ருேருக்குப் பிள்ளை யாகப் பிறந்ததனுல் எவ்வளவு பாக்கியசாலியாக இருக்கிறேன். எவ்வளவு இன்பமாக வாழ்க்கையைக் கழிக்கிறேன் ! ஆனல் என்னுடன் கல்வி கற்ற நண்பர் கள் எல்லோரும் வயிற்றுப் பிழைப்பில் இறங்கிவிட்ட னரே! அவர்கள் இந்த வயிற்றை வளர்ப்பதற்காகப் பலவித இன்னல்களுக்கிடையே அல்லற்பட, நான் மாத்திரம் ஏன் இன்பமாக வாழ வேண்டும் ! என் இன்பத்தை ஏன் மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளக் கூடாது? யாம் பிறக்கும் போது எம்முடன் எதையும்

1 O7
கொண்டு வரவில்லை ; இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை ; அப்படியாயின் நான் ஏன் மற்றவர்களின் இடரைக் களைந்து அவர்களையும் இன்ப மாக வாழ வைக்கக் கூடாது " இவ்வாறு சிந்தித்த சுவைச்சர் வாழ வழியின்றித் தெருவழியே திரியும் பிச்சைக்காரரைச் சீர்திருத்த எண்ணங் கொண்டார். தம் முன்னே காணும் பிச்சைக்காரரைக் கூப்பிட்டு அவர்கள் சக்திக்கேற்ற உழைப்பைக் காட்டிவிட எத் தனித்தார். சிறையிலிருந்து வெளிவந்தோருக்குப் புத்திமதி கூறி அவர்களேச் சீர்திருத்த முற்பட்டார். பிச்சைக்காரர், சிறையிலிருந்து விடுபட்டோர் என் போரின் தொகை கணக்கிலடங்காததாய் இருந்தமை யின் அவர்களின் பொறுப்பைக் கவனித்தற்குத் தனிப் பட்ட சங்கங்களே தக்கவை எனவும் தாமே தனித்து இவ்வித வேலையைச் செய்ய முடியாது எனவும் கண்டு தம் மனத்தைப் பிற சீர்திருத்த வழிகளைச் சிந்திப்ப தில் ஈடுபடுத்தலானர்.
ஒரு நாள் ஒரு நூல் நிலேயத்திலிருந்து பத்திரிகை. வாசித்துக்கொண் டிருந்த சுவைச்சர் பாரிஸ் நகரத் திலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றில் தாம் விரும்பிய செய்தி ஒன்றைக் கண்டார். பிரான்சியரின் ஆட்சிக்குட்பட்ட ஆபிரிக்க நாடுகளில் கடமையாற்று வதற்கு வைத்திய நிபுணர்கள் தேவை என அச் சஞ்சிகையில் விளம்பரப்படுத்தப்பட் டிருந்தது. இவ் விளம்பரத்தை வாசித்ததும் சுவைச்சரின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது; இன்பம் பூத்தது. இதுவே நான் விரும்பும் வேல்ை " என எண்ணினர்.
இதுவரை ஒரு கிறிஸ்தவ போதகராகவும் பல் கலேக் கழக தத்துவ விரிவுரையாளராகவும் இசைக்

Page 60
1 O8
கலேஞராகவும் விளங்கிய சுவைச்சர், " தாம் ஒரு வைத்திய நிபுணராக வரவேண்டு மென்றும் ஆபிரிக்க நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்றும் உறுதி கொண்டார். பல்கலைக் கழகத்தில் வைத்திய மாணவனுகச் சேர்ந்து ஏழு வருடங்கள் கற்றர். டாக்டர் " பட்டம் பெற்றதும் தன் வாழ்க்கை யின் இலட்சியத்தை நடைமுறைக்குக் கொண்டு வருங் காலம் சமீபித்துவிட்டதென்று குதூகலங் கொண்டார். தான் இனி வாழப்போகும் நாடு ஆபிரிக்கா ஆகை யின் அங்காட்டில் விசேஷமாக ஏற்படும் கொள்ளை, மஞ்சட் காய்ச்சல் முதலிய நோய்களைப் பற்றிச் சிறப் :புப் பயிற்சி பெறுவதற்காக பாரிஸ் நகரம் சென்றர். அங்கே ஓர் ஆண்டு கற்றுத் தேறியபின் பாரிஸ் நகரத் தில் உள்ள பிராஞ்சிய-ஆபிரிக்க கிறிஸ்தவ சங்கத் துக்கு மனுப் பண்ணினுர்; சங்கத்தவரும் சுவைச்சரை ஒரு வைத்திய நிபுணராகத் தெரிந்தெடுத்தனர். ஆபிரிக்க நாட்டுக்கு அனுப்பப்படும் வைத்திய நிபுண ராகச் சுவைச்சர் தெரிந்தெடுக்கப்பட்டதும் அவர் தம் பயணத்திற்கு வேண்டிய ஆயத்த்ங்களைச் செய்யத் தொடங்கினர்.
1912-ஆம் ஆண்டில் சுவைச்சருக்குத் திருமணம் நடந்தேறியது. அன்புக்குரிய அவர் மனைவியாரும் தம் கணவர் மேற்காபிரிக்காவுக்குச் செல்ல விருப்பதை அறிந்து அவருக்கு உதவி அளிக்கும் மருத்துவத் தாதி யாக மாறினர். தம் மனைவியார் தாம் செல்லும் நாட் டுக்கு வந்து தமக்கு உதவியளிக்க முடிவு செய்திருப் பதை அறிந்த சுவைச்சரின் மனம் அளவிலா இன்பம் அடைந்தது. உடனே அவர் எழுபதுவகையான மருங் துகளை வெவ்வேறு பெட்டிகளில் அடைத்தார். சத்திர

1 O9
சிகிச்சைக்கு ஏற்ற கருவிகளை ஒன்று சேர்த்துக் கட்டி னர். தம் வாழ்க்கையின் இலட்சியங்கள் எல்லாம். அன்றே கைகூடிவிட்டன போற் கருதிய சுவைச்சர் தம் மனைவியாரை ஒரு கையாற் பிடித்துக் கொண்டு, மற்றக் கையில் தம் உள்ளங் கொள்ளை கொண்ட சங்கீதக் கருவியாகிய யாழைத் தூக்கிக்கொண்டு கப்பr லில் ஏறினர் ; மருந்துப் பெட்டிகள் எல்லாம் கப்பலில் ஏற்றப்பட்டன. பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பலும் பல நாட் பிரயாணத்தின்பின் அத்திலாந்திக் சமுத். திரத்தைக் கடந்து சென்று மேற்காபிரிக்கத் துறைமுக மொன்றைச் சேர்ந்தது. சுவைச்சர் தம்பதிகள் தம் பொருட்களைத் தோணியில் ஏற்றிக் கொண்டு * இலாம்பறேன் ? என்னும் இடத்தை அடைந்தனர்.
இலாம்பறேன் என்பது பிராஞ்சியரின் ஆட்சிக் குட்பட்ட கொங்கோ நதிக் காட்டிலுள்ள ஒரு சிறிய கிராமம். சுவைச்சர் சென்ற காலத்தில் இங்கு மக்கள் நடமாட்டம் இல்லை; தெருவீதிகள் கிடையா. செறிந்த மரக்காடுகள் இவ்விடத்தை அழகு செய்தன. குரங்கு களும் கரடிகளும் குடியிருந்த இந்தக் காட்டின் மத்தி யில் சுவைச்சர் ஒரு வெளியான இடத்தைக் கண்டு அங்குத் தம் சுமைகளை இறக்கிவைத்தார். மனைவியும் தாமும் வாழ்வதற்கு ஒரு வீடு கட்ட ஆரம்பித்தார். மரங்களைத் தறித்து அவற்றின் கிளைகளை வெட்டி அவற்றை நிலைகோல்களாக நிலத்தில் கட்டுக் கொம்பு களைக் குறுக்கே கட்டிக் குழைகளால் வேய்ந்து வீடு கட்டினர். இச்சிறு குடிசை சுவைச்சர் தம்பதிகள் தங்குவதற்குப் போதியதாய் இருந்தது. ஆனல் நுளம்புகளின் கடியிலிருந்து விடுவிக்க அவர்களால் முடியவில்லை. இரவு முழுவதும் நுளம்புகளின் ரீங்கா

Page 61
I 1 O
ரத்தோடு துரங்க வேண்டிய நிலைமையில் அவர் வாழ வேண்டி யிருந்தது. -
சுவைச்சர் தங்கிய கிராமத்திலிருந்து இரண்டு மூன்று மைல்களுக்கப்பால் ஆபிரிக்க மக்கள் வாழும் கிராமங்கள் இருந்தன. காட்டின் நடுவே வெளிச்சத் தையும் ஆரவாரத்தையும் கண்டுங்கேட்டும் நீக்கிரே, மக்கள் மரங்களுக்கூடாக நுழைந்தும் தவழ்ந்தும் சுவைச்சர் தங்கிய இடத்திற்கு வரத்தொடங்கினர். சுவைச்சரும் தம் குடிசையின் வெளியே வந்து நீக்கிரோ மக்களுடன் பேச முயன்ருர். அவருக்கு ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளே தெரிந்திருந்தன. நீக்கிரோ மக்களுக்கு இம்மொழிகள் தெரியா. எனவே சுவைச்சர் ஒரு மொழிபெயர்ப்பாளரைத் தேடவேண்டி யிருந் தது. பிரெஞ்சு மொழியும் நீக்கிாோவரின் மொழியும் பேசத்தெரிந்த ஒருவர் அகப்பட்டார். அவரின் பெயர் யோசேப்பு என்பது. யோசேப்பின் உதவியினுல் நீக்கிரோ மக்களின் வருத்தங்கள் இவை இவை என அறிந்து அவற்றிற்கு மருந்து செய்ய முற்பட்டார். மருந்து செய்வதற்கேற்ற வைத்தியசாலை யில்லை. எனவே கோழிக்கூடு போன்ற வீடொன்றை அங்குக் கட்டி மருந்துகளே வைத்தார். தூக்குப்படுக்கை ஒன்றை அருகில் வைத்து நோயாளியைப் படுக்க வைத்தார். நோயாளிகளைப் பார்வையிடும்போது தாம் அணிந்து கொள்வதற்காக வெள்ளே நிறமுள்ள மேலங்கி ஒன்றையும் அங்கு வைத்திருந்தார்.
காலை 8.30 மணிக்கு ஆஸ்பத்திரியில் வேலை தொடங்கும். வைத்தியராகிய சுவைச்சரைத் தவிர மொழிபெயர்ப்பாளர் மாத்திரமே அங்குக் கடமை யாற்றுவர். பலவித வருத்தங்களோடு கூடிய நீக்கிரோ

I 11
மக்கள் அதிகாலேயிலேயே அங்கு வந்து பற்றைகளுக் கருகில் காத்திருப்பர். வைத்தியர் நோயாளியைப் பரி சோதித்து அவன் உடம்பின் நிலை எப்படி இருக்கின் றது எனக் கேட்கும்போது ஒருவன் தன் காலில் பூச்சி இருக்கிறது என்பான் ; மற்றவன் வயிற்றில் கெட்ட பிசாசு நடமாடுகிறது என்பான். இப்படியே உடலில் ஒருவித வருத்தம் இருக்க, நோயாளி தன் வாயில் வந்தவற்றையெல்லாம் கூறிப் பிதற்றுவான். சுவைச் சரோ வருத்தத்துக் கேற்ற குடிமருந்தையோ பூச்சு மருந்தையோ அவர்களுக்குக் கொடுத்துவிடுவர். அம் மருந்துகள் எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டு மென் மொழி பெயர்ப்பாளர் நோயாளிக்குப் பலமுறை விளங்கப்படுத்துவர். நோயாளிகளும் ஒம், ஒம் " எனப் பணிவுடன் கூறிவிட்டுத் தத்தம் கிராமங்களுக் குச் செல்வர். வீட்டுக்குச் சென்றதும் தம் வருத்தம் விரைவில் மாறவேண்டுமென்ற ஆசையால் ஒரு கிழ மைக்குக் குடிக்கக் கொடுத்த மருந்தை ஒரே முறையில் விழுங்கி விடுவதும் உண்டு. இதனுல் வருத்தம் அதி கரிக்கவே நோயாளி மறுபடியும் வைத்தியரிடம் வந்து முறையிடுவான், வைத்தியர் அவன் அறியாமையை நினைந்து இரங்கி வருத்தத்தை மாற்ற மருந்து கொடுப் பர். சத்திர சிகிச்சை செய்யும்போது நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து அவனே அசைவற வைப் பதை அருகில் இருப்போர் பார்த்துக்கொண்டிருந்து விட்டு " வைத்தியர் நோயாளியைச் சாகக் கொல்கிருர்; பின் வருத்தத்தை மாற்றுகிருர் ; பின் அவனை எழுப்பு கிருர் " என ஆச்சரியத்தோடு கூறுவர். நீக்கிரோ மக்கள் கல்வியறிவு அற்றவராயிருந்தபோதும் தம் உயிரைக் காப்பாற்றும் வைத்தியராகிய சுவைச்சருக்

Page 62
112
குத் தக்க மரியாதை செய்தனர். அவர் கூறும்போ தெல்லாம் அவர்முன் வாய் புதைத்து நின்று வணக் கஞ் செலுத்தினர். சுவைச்சரும் நீக்கிரோ மக்களிட மிருந்து பணமோ கைம்மாருே வேண்டாது அவர் களுக்கு மருந்து செய்து அவர்கள் வருத்தங்களைப் போக்கினர். ஆபிரிக்காவுக்கு வந்தது முதல் ஒன்பது மாதங்களில் ஈராயிரத்துக்கு மேற்பட்ட நோயாளி களுக்குச் சுவைச்சர் சிகிச்சை செய்தார்.
1914-ஆம் ஆண்டில் உலகயுத்தம் தொடங்கிய தும் பிராஞ்சிய ஆபிரிக்காவில் கடமையாற்றிய ஜெர் மானியராகிய சுவைச்சர் பிராஞ்சியரால் சிறையில் வைக்கப்பட்டார். சில காலத்தின் பின் அவர் பிரான்சு தேசத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு அனுப்பப் பட்டார். தாம் ஜெர்மானியர் என்ற ஒரே காரணத் திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டதைக் குறித்துச் சுவைச்சர் மனம் நொந்தார். தாம் ஏழை மக்க ளுக்குச் செய்து வந்த வைத்தியம் தம் சிறைவாசத் தால் தடைப்பட்டதே என அவர் கலங்கினர். அவர் கெஞ்சம் துடிதுடித்தது; பதைபதைத்தது. உயர்ந்த பணக்காரக் குடும்பத்திலே பிறந்து இன்பமாக வாழ்ந்த சுவைச்சர் ஐரோப்பிய நாகரிக வாழ்க்கையை விட்டு ஆபிரிக்கக் காட்டுள் சென்று சாதிமத வித்தியாசமின்றி மனித சமுதாயத்தை வாழவைக்கும் நோக்கமொன்றே கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தார். அங்கும் தடை ஏற்பட்டதை நினைந்து சிறைச் சாலேயிலிருந்து மனம் உருகினர். சிறையிலிருந்து விடுபட்டதும் சுவைச்சர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தன் ஆபிரிக்கப் பிரயாணத்தைக் குறித்து விளங்கப்படுத்தி ஞர். ஆயிரக்கணக்கான நீக்கிரோ மக்கள் நோயால்

பீடிக்கப்பட்டதும் மருந்தின் உப்யோகம் தெரியாமை யால் மண்ணுேடு மண்ணுய் மடிவதைப்பற்றி நாக ரிகத்தில் உயர்ந்தபடியில் கிற்கும் ஐரோப்பிய மக்க ளுக்கு எடுத்து விளக்கினர். சுவைச்சரின் பிரசங்கங் களால் மனமுருகிய மக்கள் பலர் தங்களால் இயன்ற பொருளுதவி செய்தனர். தாம் திரட்டிய பணத்தின் உதவிகொண்டு ஏராளமான மருந்துகளே வாங்கினர். தமக்கு உதவியாகப் பிற வைத்திய நிபுணர்களையும் கூட்டிக்கொண்டு தன்னை முன் உதறித்தள்ளிய ஆபிரிக் காவை நோக்கி மறுமுறையும் பிரயாணஞ் செய்தார்.
சுவைச்சர் தம் நண்பர்களேயும் அழைத்துக் கொண்டு இரண்டாம் முறையாகத் தாம் முன் வைத்தி யஞ் செய்த இடத்தை நோக்கிப் போனுர், தாம் முன் விட்டுச் சென்ற ஆஸ்பத்திரியை எங்குங் கண்டிலர். அது இருந்த இடத்தில் மரங்கள் வளர்ந்திருந்தன. அம்மரங்களைத் தறித்து வீழ்த்தி அவ்விடத்தில் பெரிய ஆஸ்பத்திரி கட்டினர். இம்முறை இரும்புகளின் உதவி கொண்டு கிலேத்து நிற்கக்கூடிய பெரிய கட்டிடங்களை எழுப்பினர். தம்முடன் வந்தோரை வைத்தியர்களாக நியமித்தார். ஆபிரிக்க மக்களும் திரள் திரளாக வந்து நோய்க்கு மருந்து செய்வித்தனர்; அதே ஆஸ்பத்திரி யில் இன்னும் மருந்து செய்வித்துக் கொண்டு வரு கின்றனர். முப்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஆஸ்பத்திரி இன்று பலவாகக் கிளைத்துப் பெருகிப் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் உயிரைப் பாதுகாக்கும் இடமாக விளங்குகின்றது. இன்றும் சுவைச்சரும் அவர் நண்பர்களும் இந்த ஆஸ்பத்திரியி லிருந்து வைத்தியஞ் செய்துகொண்டே வருகின்றனர். இன்று சுவைச்சருக்கு வயது எண்பத்து நான்கு

Page 63
I 14
ஆகிறது. இவர் மனித வர்க்கத்துக்குச் செய்துவரும் கைம்மாறு கருதாத தொண்டை மெச்சி 1953-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் தேதி, உலகத்தின் சமாதானத்தை நாடும் சிறந்த உலக மேதாவிக்கு அளிக்கும் பரிசை இவருக்கு அளித்து உலகமக்கள் புகழ்ந்தனர். தம்மைப்பற்றி எவரும் அறிய வேண் டியதில்லை எனக்கருதி எவரும் அறியா ஆபிரிக்கக் காடுகளில் வாழ்ந்து ஏழைகளின் நோயை மாற்றிய இவரின் பெயர் சடுதியில் உலகமக்கள் மனத்தில் நின்று தாண்டவமாடத் தொடங்கியது. ' உலகத்து மேதை" என்றும், ' இருபதாம் நூற்றண்டைய உத்தமபுருடர்" என்றும், கலியுகக் கடவுள் " என்றும் பலப்பல பட் டங்களை உலகமக்கள் இவருக்குச் சூட்டியுள்ளனர்.
ஒரு கிறிஸ்தவப் பாதிரியாராகவும், பல்கலைக் கழக விரிவுரையாளராகவும், சங்கீத கலாநிதியாகவும் வைத்திய நிபுணராகவும் வெவ்வேறு துறைகளில் நின்று வாழ்க்கையை அனுபவித்து வரும் தத்துவ ஞானி சுவைச்சர் பல நூல்களின் ஆசிரியராகவும் விளங்குகிறர். இவர் எழுதிய நூல்களுட் சிறந்தது * இந்திய எண்ணக் கருத்துக்களும் அவற்றின் வளர்ச்சியும் " என்பது. இந்நூல் தமிழ் மக்களையும் அவர்தம் தமிழ் மறையான திருக்குறளின் பெருமை யையும் எடுத்துப் புகழ்வது. இந்தியாவில் எழுந்த தத்துவ நூல்களை நன்கு ஆராய்ந்து அவற்றுள் எவை கூறும் தத்துவங்கள் மன்ரித வாழ்க்கைக்கு இன்றியமை யாதவை என்பதை எடுத்துக் காட்டுகிருர் தத்துவ ஞானி சுவைச்சர். வடமொழியில் எழுதப்பட்ட மனு தர்ம சாஸ்திரம் என்னும் நீதி நூல் சாதிப் பிரி வினையை அடிப்படையாகக் கொண்டதென அந்நூலில்

1 15
குறை காண்கிருர் பகவத்கீதை என்னும் வடமொழித் தத்துவ நூலேத் தமிழ் மறையாகிய திருக்குறளோடு ஒப்பிட்டுத் திருக்குறள் மிக உயர்ந்ததெனக் காட்டுகிருர் : திருக்குறளைப் போன்ற சிறந்த நூலொன்றை இந்தியாவில் மட்டுமன்றி உலகத்தில் யாண்டும் காணவில்லை என்கிருர் ஜெர்ழனிய நாட்ட வரும் உலக மேதாவியுமாகிய தத்துவஞானி சுவைச்சர். திருக்குறளின் பெருமைக்குரிய காரணங்களே அவரே கூறி விடுகின்ருர், திருக்குறள் சாதி மத எல்லையைக் கடந்தது; பிறப்பளவில் உயர்ந்தவனென்றும் இழிந்த வனென்றும் மனிதன் இருவகையாகான் எனச் சாதிப் பது; ஒழுக்கத்துக்கும் கடமைக்கும் சிறப்புக் கொடுப்பது ; மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையினை எடுத்துக் காட்டுவது. திருக் குறளின் பெருமைக்குரிய இன்னுேரன்ன காரணங் களே விருப்பு வெறுப்பற்ற தத்துவஞானி எடுத்துக் கூறுவதைக் கேட்ட உலக மக்கள் இன்று அதனை மிக மிகப் போற்றிப் படிக்கின்றனர்.
தத்துவஞானி சுவைச்சரின் வாழ்க்கை மிக அற் புதமானது ; உலக மக்களால் பின்பற்றத்தக்கது. துன்பத்தை வெறுத்து இன்பத்தை விரும்புவது மனித இயல்பு. ஆனல் வாழ்க்கையில் இன்பத்தை நாடு பவர் துன்பத்தையும், துன்பத்தை நாடுபவர் இன்பத் தையும் அடைகிறர். உலகத்தில் சிறந்த நாடெனப் புகழ் பெற்று விளங்கும் ஜெர்மனிய காட்டிலே பணக் காரக் குடும்ப மொன்றிலே பிறந்த சுவைச்சர் இன்ப மான வாழ்க்கையை வெறுத்தார். தான் துன்பப்பட்டு மற்றவர்களே வாழ்விக்க விரும்பினர். நாகரிகம் படைத்த மனிதன் வாழ்வதற்கு விரும்பாத ஆபிரிக்கக்

Page 64
1 I6
காட்டில் வாழ விரும்பிக் கடல் கடந்து வந்தார். உற் ருர் உறவினரையும் நண்பரையும் வெறுத்து யாரும் அறியாத ஆபிரிக்க நாட்டு நீக்கிரோவரோடு தோழமை கொண்டு அவர்கட்கு அன்பு காட்டினர். வாழ்வதற்கு நல்ல வீடோ மருந்து செய்வதற்கு நல்ல ஆஸ்பத்திரி யோ இல்லாத, நுளம்பு குடி வாழும் நுண்மரக் காட்டி னிடை வாழ்ந்து வாழ்க்கையில் இன்பங்காணச் சுவைச் சரைத் தவிர வேறு யாரால் முடியும் ? நோயாளிகள் கல்வியறிவு அற்றவர்கள்; பணமில்லாதவர்கள்; வருத் தம்வந்தால் இறப்பதே நியதி என்று கருதுபவர்கள் ; மருந்தைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் : சத்திர சிகிச்சை என்ருல் என்ன என்று விளங்கிக் கொள்ளாத வர்கள் ; இந் நீக்கிரோ நோயாளிகள் பரிசுத்த மன முடைய கடவுளின் குழந்தைகள். இவர்கள் சிரித்த முகத்துடனும் மாறிய வருத்தத்துடனும் வீடு திரும்பு வதைப் பார்க்கையில் சுவைச்சரின் மனம் இன்ப எல்லே கண்டது. கைம்மாறு கருதாத தம் கடமையைச் செவ்வனே செய்து விட்டதாகச் சுவைச்சர் கருதுவர். பகலில் சூரிய வெப்பத்தைத் தாங்கமாட்டாது களைக்கக் களைக்க வைத்தியம் செய்தும், இரவில் நுளம்புக் கடி தாங்க மாட்டாது கித்திரையின்றிப் படுக்கையில் பன்முறை புரண்டும் வாழ்ந்து வரும் சுவைச்சர் "என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறர். மனிதன் மனித வர்க்கத்தை நேசிக்கப் பழக வேண்டும் ; ஒருவர் பிறப் பினல் உயர்வையோ தாழ்வையோ அடைய முடியாது; அவர் தம் செய்கையினலேயே உயர்ந்தவராகவோ இழிந்தவராகவோ கருதப்படுகிருர் ; கடமையைச்செய் யும்போது மனிதன் சலிப்பு அடையக்கூடாது. பிறர்க்

117
காகத் துன்பம் எய்துவோரின் வாழ்க்கைப் பாதை ஈற்றில் இன்ப நிலை காட்டும் ; இன்னுேரன்ன சிறந்த படிப்பினைகளை எடுத்துக் காட்டுவது உலக மேதை யாகிய தத்துவஞானி சுவைச்சரின் வாழ்க்கை.

Page 65
10. தமிழிலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்
இலக்கியம் மனித வாழ்க்கையையும் வாழ்க்கை யைப் பற்றி மனிதன் கொண்டுள்ள கருத்துக்களையும் பொறித்துக் காட்டும். உலகில் நாளும் மனிதர்கள் பிறக்கிருர்கள் ; வாழ்கிறர்கள் ; பின் இறக்கிருர்கள். அவர்கள் எல்லோருடைய வாழ்க்கை வரலாறுகளையும் எவராலும் எழுதிக்கொண்டிருக்க முடியாது. மக்களின் தலைவர்களாய் விளங்கிய மன்னர் நடத்திய போர்கள், அவர்கள் செய்த அருஞ்செயல்கள் என்ப்ன பற்றிய குறிப்புக்கள் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டு வருகின்றன. இலக்கிய ஆசிரியர்கள் தம் காலத்து மன்னரின் அருஞ்செயல்களை மாத்திரமன்றி, மக்கள் வாழ்க்கை முறைகளையும் தம் கற்பனை ஆற்றல் கொண்டு இலக்கியத்தில் புனந்து காட்டுகிருர்கள். ஒரு நாட்டில் காலத்துக்குக் காலம் தோன்றும் புலவர் கள் தங்கள்காலச் சமுதாயத்தைத் தாம் எழுதும் இலக்கியங்களில் படம் பிடித்து விடுகின்றமையின் அங் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைபற்றிய தொடர்ச்சி யான வரலாறுகளை அறிய இலக்கியம் உதவுகின்றது.
தமிழ் மக்களின் வாழ்க்கையைத் தமிழிலக்கியம் சித்திரித்துக் காட்டுகிறது. தமிழில் எப்போது முதன் முதல் இலக்கியம் தோன்றிற்று என இன்று கூறமுடி

1 19
யாது. இப்போது உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலா கும். இது ஏறக்குறைய கி. மு. மூன்றம் நூற்றண்டில் எழுந்ததாகப் பலரால் கருதப்படுகிறது. இந்நூல் எழுவதற்குமுன் தமிழில் பல இலக்கிய நூல்கள் இருந்தனவென இந்நூற் சூத்திரங்கள்கொண்டு அறிய முடிகிறது. எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் என் பன மாத்திரமன்றி மக்கள் வாழ்க்கையைப் பற்றிய பொருளிலக்கணம் பற்றியும் தொல்காப்பியம் கூறும். தொல்காப்பியத்தை அடுத்துத் தமிழில் எழுந்த நூல்கள் சங்க இலக்கியங்களாகும். கி. மு. இரண்டாம் நூற்ருண்டு தொடக்கம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு வரை தமிழ்நாட்டின் பற்பல பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதிகளே சங்க இலக்கியங்கள் என அழைக்கப் படுகின்றன. பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறை, அவர்கள் ப்ண்பாடு என்பன பற்றி அறியத் தொல் காப்பியமும் சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.
ஆதிகாலத்தில் தமிழர்கள் மலைகளிலும், கடற் கரை ஒரங்களிலும் வாழ்ந்து வந்தார்கள். இவ்விரு பகுதிகளிலும் மனிதன் தான் விரும்பிய உணவைப் பெற முடிந்தமையின் அங்கு வாழ விரும்பினன். மலேக்குகை மனிதனின் வீடாயிற்று. வெயிலிலிருந் தும் மழையிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்வதற்கு உகந்த இடம் மலேக்குகை என ஆதிமனிதன் அதை நாடினன். தனது மனைவி மக்கள் வாழும் மலேக்குகை யின் வாயிலைக் கல்லால் அடைத்துவிட்டு ஆண்மகன் விலங்குகளே வேட்டையாடச் சென்ருன். அம்பும் வில் லுமே அவன் ஆயுதங்களாயிருந்தன. வேட்டையாடிக்

Page 66
12O
கொன்ற விலங்குகளின் இறைச்சியை எல்லோரும் உண்டு உயிர் வாழ்ந்தனர். இரண்டு கற்களை ஒன்ருக உராய்ந்து ஆதி மனிதன் நெருப்பை உண்டாக்கினன். இந்நெருப்பில் விலங்குகளின் இறைச்சியைச் சுட்டுப் பதமாக்கினுன். மலேயின் மரக் கொம்புகளில் தான கவே விளைந்த தேனைப்பெற்று உண்டான். சுனைகளில் தேங்கி நின்ற இனிய நீர் அவன் குடிக்க உதவிற்று. நூலேயோ சேலையையோ அவன் கண்டறியான் ; மரத் தழைகளால் தன் அங்கங்களை மறைத்தான் ; இலைகளை ஒன்ருகப் பொருத்தி அரையில் அணிந்து கொண் டான். உணவு தேடுவதும் உண்பதும் உறங்குவதுமே ஆதி மனிதனின் முக்கிய தொழில்களாய் இருந்தன. தழையாகிய உடை அணிந்து இறைச்சி தேன் ஆகிய உணவுகளை உண்டு மலைக்குகையாகிய இல்லத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர் கவலையற்ற இன்ப வாழ்க்கை நடத்தினர்கள். ஆண்மகன் தான் மணக்க விரும்பும் பெண்ணுக்குத் தன் அன்பின் அறிகுறியாகத் தழை உடையையும் தான் கொன்ற புலியின் பல்லேயும் கொடுத்தான். அவற்றை ஏற்றுக்கொண்ட பெண் தழை உடையை உடுத்துப் புலிப்பல்லேத் தாலியாகக் கட்டிக்கொண்டாள். இத்தகைய வாழ்க்கையே ஆதி காலத்துத் தமிழரின் வாழ்க்கையாக இருந்திருக்க வேண்டுமென்பது பிற்காலத்துச் சங்க இலக்கியங் களைக்கொண்டு ஒரளவு அறிய முடிகிறது.
வாழ்க்கை முறையும் வாய்ப்புக்களும் வளரத் தொடங்கின. சங்க காலத்தில் மக்கள் ஐவகை நிலங் களில் வாழ்ந்து வந்தனர். குறிஞ்சி, முல்லே, மருதம், நெய்தல், பாலே ஆகிய ஐந்துவகை கிலங்களில் வாழ்ந்த மக்கள் நில அமைப்பிற்கும் சூழ் நிலைக்கும் ஏற்ப

121
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துவந்தார்கள். மலேயும் மலேசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் வாழ்க் தோர் தினையை விளைவித்தனர் : மலேயில் விளையும் தேனையும் மா, பலா, வாழை என்பனவற்றின் பழங் களையும் வயிருர உண்டனர் : பூக்கொய்தும் சுனே யாடியும் முழவு கொட்டிக் கூத்தாடியும் வாழ்க்கையில் இன்பங் கண்டனர். காடும் காடு சார்ந்த இடமு மாகிய முல்லை நிலத்தில் வாழ்ந்தோர் மந்தை மேய்க் கும் இடையராவர். இவர்கள் வேட்டையாடியும் பால் நெய் முதலியன விற்றும் வாழ்க்கை நடத்தினர். வய லும் வயல்சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழுதொழில் செய்து வாழ்க்கை நடத் தினர். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தில் வாழ்ந்தோர் கடலில் பிடித்த மீனையும், விளைந்த உப்பையும் ஏனைய நிலப்பகுதிகளில் வாழ்க் தோருக்கு விற்று அவர்களிடமிருந்து பெற்ற பொருள் கொண்டு வாழ்க்கை நடத்தினர். வறண்ட பாலே நிலத்தில் வாழ்ந்த மக்கள் வேட்டையாடியும் வழிப் போக்கரின் பொருளைக் கொள்ளை யடித்தும் வயிற்றை வளர்த்தனர். இவ்விதம் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையினைச் சங்க இலக்கியங்கள் எடுத் துக் கூறுகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து இன் பமாக வாழும் காதல் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டும் இலக்கியங்கள் அகத்திணை இலக்கியங்கள் எனப்பெயர் பெறும். ஒத்த அன்புள்ள தலைவன் தலை விக்கிடையே ஏற்படும் காதலுறவைச் சித்திரித்துக் காட்டும் இவ்வகத்திணே நூல்களை அன்பின் ஐந்திணை நூல்கள் " எனவும் கூறுவர். W
வீட்டுக்கு வெளியே சென்று ஆண்மகன் நடத்தும்

Page 67
122
போர் முதலியவற்றைச் சித்திரித்துக் காட்டும் இலக் கியங்கள் புறத்திணை இலக்கியங்கள் எனப்படும். புற நானூறு போன்ற புறத்தினே இலக்கியங்களில் சங்க காலத்தில் நடந்த போர்களும், அக்கால மன்னரது படைக்கலங்களும் மன்னரது கொடைச் சிற பு, வீரம் என்பனவும் வருணிக்கப்படுகின்றன. அக்காலத்தில் தமிழ்மக்கள் ஞாயிறு, திங்கள், சிவன், முருகன், திருமால், கொற்றவை முதலிய தெய்வங்களை வழி பட்டனர். மரணத்தின் பின் மனிதன் அடையும் மோட்ச உலகங்களைப்பற்றி எண்ணுது இந்த உலகில் இன்பமாக வாழும் வழிவகைகளேயே எண்ணினர். இப்பிறப்பில் பிறர்க்கு நன்மை செய் தோர் மறுபிறப்பில் இன்பமாக வாழலாம் என்றும், இப்பிறப்பில் கொடுமை செய்தோர் நரகத்தை அடைய வேண்டுமென்றும் நம்பினர். பிற உயிர்களைக் கொலே செய்வது தகாது என்றே, கொன்ற அவ்வுயிர்களின் உடலேப் புசிப்பது கூடாது என்ருே அவர்களுள் பலர் நம்பியதாக இலக்கியங்களிலிருந்து அறிய முடிய வில்லே. இசை, கூத்து முதலிய துறைகளில் சங்க கால மக்கள் மிக வளர்ச்சி பெற்றவர்களாய் இருந்தன ரென்பதைச் சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்ட இசை முழவுக் கருவிகளின் பெயர்கள் கொண்டும் பண் வகுப்பு, தாளவறுதி என்பன கொண்டும் அறியலாம். சாதி சமயப் பிணக்குகளோ பிரிவினைகளோ சங்க கால மக்களிடையே இருந்தனவாகத் தெரியவில்லை. மதுரை, உறையூர், தொண்டி, வஞ்சி, காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்களில் உள்ளோர் பெரிய மாட மாளிகை களில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மரக்கலங்கள் ஒட்டுவதில் வல்லுநராய் இருந்தனர் : உரோம கிரேக்க

123
நாட்டவர்களோடு வாணிபம் நடத்தினர். இம் மேலே நாடுகளிலிருந்து போர் வீரர்களே வரவழைத்துத் தம் வீடுகளுக்குக் காவற்கார ராக்கினரென இலக்கியங்கள் கூறுகின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற உளக்கோட்பாட்டோடு அவர்கள் வாழ்ந்து வந்தனர். சுருங்கக் கூறுமிடத்து, பண்டைத் தமிழ் காட்டில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனரெனச் சங்க இலக் கியங்கள் கூறுகின்றன எனலாம். இச்சங்க இலக் கியங்கள் சித்திரித்துக்காட்டும் காலத்து மக்கள் பண்" பாட்டையே சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ்க் காப் பியமும் சித்திரித்துக் காட்டுகின்றது.
சங்க காலத்தை அடுத்த காலப்பகுதியில் எழுந்த தாகக் கருதப்படும் திருக்குறள் மக்கள் எவ்விதம் வாழ வேண்டுமென்பதை எடுத்துக் கூறுகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றைப்பற்றியும் வள்ளு வர் தம் நூலில் விரிவாக வகுத்து ஆராய்கிருர், இல் லறத்தில் வாழவிரும்புவோர் செய்யவேண்டிய கடமை கள் இவை என்பதையும், இல்லறத்தை விரும்பாது துறவு வாழ்க்கையைக் கைக்கொள்ள விரும்புவோர் செய்யவேண்டிய கடமைகள் இவை என்பதையும் அறத்துப் பாலில் தெளிவாகக் காட்டுகிருர். இல் வாழ்க்கையா துறவா எது நல்லது எனக் கேட்பார்க்கு வள்ளுவர் கூறும் விடை இதுதான் உலக வாழ்க்கை யில் விருப்புக்கொண்டோர் துறவு பூணவேண்டிய தில்லை. இல்லிலிருந்தே ஒருவன் துறவியாக வாழ லாம். துறவு என்பது பெண்ணேத் துறப்பதன்று. மனத்தின்கண் ஒருவர் கொண்டுள்ள தீய குணங் களாகிய மாசுகளைக் களைந்தெறிவதே துறவு என வள்ளுவர் அழுத்தத் திருத்தமாகக் கூறுகிருர்,

Page 68
24
* அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன் ' வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் " என்னுங் குறள் வெண்பாக்களில் வள்ளுவர் வாழ்க்கை யைப்பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கள் தெளிவாக விளக்கப் படுகின்றன. ஒருவன் இல்வாழ்க்கையில் கின்று அறவழியே நடப்பானுயின், அவன் அதனை விடுத்துத் துறவியாய்ப் புறத்தே போய்ப் பெறும் பயன் யாதுமில்லை ; இல்வாழ்க்கையே போதுமானது. இல்வாழ்க்கையில் நின்று முறைதவருது வாழ்பவன் தன் செய்கைகளின் பயனுய் அடுத்த பிறவியில் மேலு லகத்துக் கடவுளரோடு ஒருசேர வைக்கப்படுவான் என்கிருர் வள்ளுவர். ஒருவன் இல்வாழ்க்கையில் புகுந்த பின்பே மனைவி மக்களின் சேர்க்கையினுல் அன்பு என்னும் பண்பு அவனை அடைகிறது. அன்பே இல்வாழ்க்கையின் அடிப்படையான தத்துவமாகும். 'அன்பினது விரிவு அருளாகும். வீட்டுக்குவரும் விருந் தினர்மீதும் ஏனையோர்மீதும் ஒருவன் காட்டும் அன்பு அருளாக மாறுகிறது. இதுவே வள்ளுவர் போதிக்கும் தமிழ் மறையாகும். வள்ளுவர்நூலில் வாழ்வாவது மாயம் ' என்ற தத்துவத்துக்கு இடமேயில்லே.
கி.பி. இரண்டாம் நூற்றண்டு முதல் ஆரும் நூற் ருண்டுவரை தமிழில் எழுந்த நூல்களுள் பெரும் பாலானவை சமண பெளத்த நூல்கள். நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய சமண நூல்களும் மணி மேகலை முதலிய பெளத்த நூல்களும் இல்லறத்தை இகழ்ந்து துறவறத்தைப் போற்றுவன. யாக்கை நிலை யாமை, இளமை கிலேயாமை, செல்வ நிலையாமை

25
முதலியனவற்றை எடுத்து விளக்கும் இந்நூல்கள் வாழ்க்கையைத் துறந்த துறவிகளால் இயற்றப்பட்ட மையின் இல்லறவாழ்க்கையின் பெருமையைப் பற்றி இவற்றிற் காணமுடியாது. எனினும் ஒழுக்கத்துக்கு இவை முக்கியத்துவம் கொடுக்கின்றன. மக்களுள் ஒருவர் உயர்ந்தவராகவோ இழிந்தவராகவோ பிறக்க முடியாது. பிறந்தபின் அவர் பழகிக்கொண்ட பழக் கத்தினலேயே உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் கருதப்பட வேண்டுமென இந்நூல்கள் கூறுகின்றன. நாட்டிலே மதக்கருத்துக்களைப் பரப்பும் நோக்கமாக இயற்றப்பட்ட இச்சமண பெளத்த நூல்கள் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை எனக் கூறமுடியாது. இவற்றை எழுதிய புலவர்களின் உள்ளக் கிடக்கையையே இவை புலப்படுத்துகின்றன. ஆரும் நூற்றண்டு முதல் பத்தாம் நூற்ருண்டு வரை தமிழில் எழுந்த நூல்களுள் பெரும்பாலன பக்தி இலக்கியங்கள். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய சைவ நாயன்மாராற் பாடப் பட்ட தேவார திருவாசகங்கள் சைவ இலக்கியங்க ளாகும். பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தங்கள் வைணவ இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்களெல்லாம் அக் காலத்துத் தமிழ் மக்களின் சமய வாழ்க்கையை எடுத் துக் காட்டுகின்றன. கோயில் வழிபாடு சமய வாழ்க் கையின் சிறப்பான பகுதியாக இருந்தது. தமிழ்நாட் டின் நாணு பக்கங்களிலு மிருந்த கோயில்களையும் அங்கு வீற்றிருக்கும் கடவுளரையும் பொருளாகக் கொண்டு பாடப்பட்ட இப்பாடல்கள் அக்காலத்தில் கோயில் வழிபாடு மக்களிடையே பரவியிருந்தமையை

Page 69
26
எடுத்துக் காட்டுகின்றன. மக்கள் சமய வாழ்க்கையி லும் கோயில் வழிபாட்டிலும் ஈடுபடுவதற்குக் காரண ராப் இருந்தவர்கள் சம்பந்தரும் அப்பரும் ஆவர். வாழ்க்கையின்பத்தை வெறுத்துப்பாடி கிலேயாமையை மக்களிடையே பரப்பிய சமணரின் போத&னயுள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகச் சிவன் மீதும் திருமால் மீதும் பாடல்கள் பாடி மக்க ளும் அப்பாடல்களே ப் படிக்கும் வண்ணம் செய்த னர் ; கோயில்கள் பல கட்டுவித்தனர் : இக்கோயில் களே வலம்வந்து பதிகங்கள் பாடினர். இவர்கள் சென்ற வழியே மக்களும் செல்லலாயினர். தமிழ் நாட்டை ஆண்ட பல்லவ மன்னர் பலரும் க பன்மார் ஆழ்வார்களே ப் போன்று கோயில்கள் பலகட்டுவித்துச் சமயத்தை வளர்த்தனரென இலக்கியங்கள் கூறும்.
பத்தாம் நூற்குண்டு முதல் பதினுன்காம் நூற் ருண்டுவரை தமிழிலெழுத்த இலக்கியங்கள் மக்கள் என். வாறு இன்பமாக வாழ்ந்தனரென்பதைக் காட்டுகின் றன. திருத்தக்க தேவர், கம்பர், சேக்கிழார் முதலிய பெரும் புலவர்களாற் பாடப்பட்ட காவியங்கள் உலக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. அக்காலத்தில் தமிழ்நாட்டைச் சோழமன்னர் ஆண்ட GINTI. 33) j iiijiir ... ji i OT, DIGITALJAT முதலிய நாடுகளே பெல்லாம் அடிப்படுத்தி ஆண்டனாகையின் ஆக்நாடு களிலிருந்து பெற்ற பொருளே யெல்லாம் தமிழ் கட் டின் கமச் செய்கையின் பொருட்டும் பிற விருத்தி களின் பொருட்டும் செலவழித்தனர். எனவே மக்க னின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது; செல்வம் பெருகி யது. காட்டில் இருந்த செல்வப்பெருக்கை அக்கால இலக்கியங்க ளெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன.

?27
* பொற் சிறு * தேர்மிசைப் பைம்பொற் போதகம்
நற்சிறர் ஊர்தலின் கங்கை மார்விரீஇ உற்றவர் கோழிரேஸ் எறிந்த ஒண்குழை மற்றத் தேர் உருள்கொடா வன்மை சான்றவே"
எனச் சிங்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காட்டு மக்களின் செல்வ கிலேயை எடுத்துக் காட்டு கிருச். பெண்கள் தம் வீட்டுக்கு முன்னே உள்ள முற்றத்தில் கெல்லே விரித்துக் காய வைத்துக்கொண் டிருக்கிருச்கள். கோழி ஒன்று அந்த நெல்லேத் தின்னு கிறது. இதப் பார்த்த ஒரு பெண் தன் காதில் இருகத காதணியைக் கழற்றிக் கோழியின் மீது எறி கிருள். கோழி ஓடி விடுகிறது. வீட்டில் விளேயாடிக் கொண்டிருந்த சிறுவன் தேரை உருட்டிக் கொண்டு அ0 (Uறத்திற்கு வருகிமூன்; அத்தேரின் சில்லானது பெண் முன் கழற்றி எறிந்த பொன்னுலாகிய காதணி யாற் தக்குண்டு அப்பாற் செல்ல முடியாதிருக் கின்றது. இதுவே மேற்காட்டிய பாடலின் கருத்தாகும். காட்டின் வனத்தை விக்க வந்த புலவன் பெண்கள் கோழியை ஒட்ட எறிந்த காதணிகள் நிலத்தில் சிறுவர் கள் தோருட்டி விளேய டா வண்ணம் தேர்ச்சில்லே மீறித்து விடுகின்றன எனக் கூறுகிருன். பெண் பிளுக்கப் டென்னின் மீது அதிக ஆசை இருக்கவில்ஃப், ஏனெனில் காட்டில் பொன் அதிகம் இருந்தது ; 8 இனவே பெண்கள் கோழியைக் கல்லால் எறிவதை விட்டுப் பொன்னுல் எறிகிருர்கள் எனப் புலவன் புனேக் துரைக்கின் மூன். சோழ காட்டின் வளத்தை விளக்க வந்த கம்பனும் நாட்டில் கொடுப்பவர்கள் ஒரு
* நேர்மிகாரப் பேம்போற் போதகம் - நேர்மீது உய்ா பாஃா போ ಕHg
&q.fli:

Page 70
28
வரும் இல்லை என்கிறன் ; ஏனெனில் அங்கு இரப் பவர்கள் இல்லை; இதன் பொருள் யாதெனில் நாட்டில் எல்லோரும் செல்வர்களாக வாழ்ந்தார்கள் என்பது. சோழர் கால இலக்கியங்கள் மக்கள்தம் குதூகல வாழ்க்கையையும் அவர்தம் உயர்ந்த பண்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. சோழப் பெருமன்னரின் ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்கள் வாழ்ந்த வகையைக் கண்ணுடி போல் அவை காட்டுகின்றன.
பதினேந்தாம் பதினரும் நூற்றண்டுகளில் எழுந்த தமிழிலக்கியங்கள் வறுமை நிரம்பி யிருந்த ஒரு சமு தாயத்தைப் படம் பிடிக்கின்றன. காளமேகப்புலவர், இரட்டைப் புலவர் முதலியோர் பாடிய பாடல்கள் கொண்டு ஆராயுமிடத்து அக்காலத்து மக்களின் வாழ்க்கையில் உன்னத இலட்சியங்கள் இருந்தன வாகத் தெரியவில்லை. பொருட் பிணியும் மனத் துயரும் நிரம்பிய மக்கள் பலர் இல்வாழ்க்கை நடத்த வழி காணுது பரத்தையரைச் சென்றணேந்து இன்பம் பெற்றமையை அருணகிரிகாதரின் திருப்புகழ் முதலிய நூல்கள் காட்டுகின்றன. போலிப் புலமையும் பொரு மையும், வித்துவக் காய்ச்சலும் நிரம்பியிருந்த சமு தாயத்தை அக்காலத் தமிழிலக்கியங்கள் படம் பிடித் துக் காட்டுகின்றன.
ஐரோப்பியர் தமிழ்நாட்டை ஆண்ட பதினெட் டாம் பத்தொன்பதாம் நூற்ருண்டுகளில் எழுந்த இலக்கியங்கள் மக்கள்வாழ்க்கையில் ஏற்பட்ட மாறு தல்களுக்கு ஏற்ப அமைந்த மறுமலர்ச்சி இலக்கியங்க ளாகும். ஆங்கிலக் கல்வி நாட்டில் பரவியதன் காரணமாகத் தமிழ் மக்கள் மேல்நாட்டு நூல்களைக் கற்கத் தொடங்கினர் ; விஞ்ஞானத்தின் வளர்ச்சி

129
யினுல் மேல் நாடுகளில் ஏற்பட்ட மாறுதல்களே அந் நூல்களில் கண்டனர். பெண்கள் ஆண்களைப்போன்று உயர்தரக் கல்வி கற்கவும் தொழில் கிலேயங்கட்குச் சென்று தொழில் செய்யவும் மேல் காடுகளில் உரிமை பெற்றிருந்தமையை ஆங்கில நூல்களிற் கண்ட தமிழ் நாட்டு அறிஞர் தமிழ்ப் பெண்களின் உரிமைக்காகப் பாடுபட முனைந்து நின்றனர். வேதநாயகம் பிள்ளை என்பார் தாம் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி, பெண்மதிமாலே என்னும் நூல்களில் பெண்களின் உரிமைப் போரைத் தொடக்கி வைத் தார். அவர்தம் நூல்கள் நாட்டின் பல பாகங்களில் நுழைந்ததும் தமிழர்சமுதாயம் விழிக்கத் தொடங் கியது. பெண்ணுரிமைக்காக வாதாடப் பலர் வெளியே வந்தனர். இவர்களுள் முக்கியமானவர் சுப்பிரமணிய பாரதியார். V
பாரதியார் தாம் பாடிய நூல்களின்மூலம் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சியை உண்டாக்கினர். வங்காள நாட்டில் தாகூரின் சுதந்திரப் பாடல்கள் மக்கள் காது -களில் ஒலிக்கையில், தமிழ்நாட்டில் பாரதியார் சுதந் திரப் பாடல்களைப்பாடி மக்களுக்கு ச் சுதந்திர தாகத்தை ஊட்டினர். ஆங்கிலேயர் தமிழர்களே அடி மைப்படுத்தி உரிமைகளைப் பறித்துவிட்ட அக்காலத்து நாட்டின் சூழ்நிலையைப் பற்றிப் பாரதி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினர். பெண்கள் ஆண்களுடன் தோளோடு தோள் நின்று நாட்டின் உரிமைக்காகப் பாடுபட வேண்டுமென்று வற்புறுத்தினர். பாரதத்தில் உள்ள "பாஞ்சாலி துகிலுரிதற் சருக்கத்தை விரித்துப் "பாஞ்சாலி சபதம்’ என்ற காவியத்தை எழுதினர். இந்நூலில் பெண்களின் உரிமை காலத்துக்குக் காலம்

Page 71
፲ 3û]
தாக்குண்டமையை எடுத்துக்காட்டி இனிமேல் பெண் கள் உரிமையை இழந்துவாழ இணங்கமாட்டார்கள் எனப் பாஞ்சாலியின் வாயிலாகவே எடுத்துக் கூறி ஞர். காட்டில் மக்களுக்கிடையே கிலவிய பகையும் பினக்குமே பிரதாட்டவர் தமிழ்காட்டில் கால்வைக்க ஏதுவாயிருந்ததெனக் கண்டு, பாரதியார் சாதிவேற் றுமையை ஒழிக்கக் கங்கணங் கட்டினர். சமுதா யத்தில் வாழும் மக்களுள் ஒரு பகுதி பி ன ர் மற்றப் பகுதியினரைத் தாழ்த்தப்பட்டவராக்கிப் பிறப்பினுல் உயர்வு காட்டும் பேதைமையை நிஜனந்து நெஞ்சங் கலங்கினுர், பொதுமக்கள் கல்வி யறிவு பெறின் அவர்கள் தம் கிலே மை யை உணர்ந்து கொள்வார்கள் எனக்கண்டு பழத் தமிழில் தம் நூல்களே எழுதினூர். ஓரிரண்டு ஆண்டு கல்வி கற்றேரும் இலக்கியத்தின் பயனே நுகரவேண்டு மென்று எளிய தமிழில் அரிய கருத்துக்களே உணர்த்தி ஞர். பேச்சு நடைச் சொற்களேக் கலந்து இலக்கியங் களே எழுதினூர். இவ்விலக்கியங்களில் பாரதநாட்டில் கிலவிவரும் மூடப்பழக்க வழக்கங்களே எடுத்துக்காட்டி மக்கள் அவற்றை அகற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். பாரதியாரின் பாடல்களேப் படித்துச் சுவைத்த ச்முதாயம் விழிப்புணர்ச்சி பெற்று இழந்த தன் உரிமையை மீண்டும் பெற விழைந்தது. பாரதி கண்ட கனவு கனவாயிற்று. ஆங்கிலேயரும் இந்திய காட்டைவிட்டு ஓடும்படியாயிற்று. இலக்கியம் மக்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களே உண்டு பண்ணி 3,205 புதிய சமுதாயத்தையே படைக்கும் என்பதற்குச் சான்றகச் சுப்பிரமணிய பாரதியாசின் நூல்கள் விளங்குகின்றன.

3
இருபதாம் நூற்ருண்டில் எழும் இலக்கியங்களுள் பல, பிரசார கோக்கத்தை அடிப்படையாகக் கொண்
Jā7 îGJY. இக்காலத்திய செய்யுளிலக்கியங்களும் Il T ᏯlᎰᏍiᎼ முதலிய *] - 6፲]ያTJLüü}L - இலக்கியங்களும்
எழுந்தாளனின் எண்ணக் கருத்துக்களே மக்களிடையே திணிக்கும் கோக்கமாக எழுபவையென வெளிப்படை 1ாகக் காட்டுகின்றன. பொதுவுடைமை, சமவுடைமை முதலிய தத்துவங்களே வளர்க்கும் நோக்கமாகப் பல நூல்கள் இன்று எழுதப்பட்டு வருகின்றன. தீண் டாமை விலக்கு, ஆலயப் பிரவேசம், முதலாளி தொழி லாளி என்ற வகுப்பு வேறுபாடின்மை முதலிய கொள்கைகளே இக்கால நாவல்கள் எடுத்துக் கூறு கின்றன. பிரசார கோக்கங்கொண்டு எழும் நூல்கள் மக்களிடையே பரபரப்பை உண்டுபண்ணி விடுகின் றண்வேனும் இவை காலவெள்ளத்தைக் கடந்து கிற்கக் கூடியவையல்ல. தமிழ் மீக்களின் பண்டைய பெரு மையை உணரவைத்தவர் உ. வே. சாமிநாதையராவர். ஏடுகளில் இருந்த சங்க இலக்கியங்களே அச்சிற் பதிப்பித்து நாட்டுமக்களிடையே இவர் பரப்பினர். பண்டைத் தமிழரின் உன்னத இலட்சியங்களேயும் உயர்ந்த வா ழ்க்கைப் பண்பையும் எடுத்துக் கூறும் இச்சங்க இலக்கியங்களேக் கற்கும் மக்கள் இழந்து போன தம் பழம்பெருமையை மீண்டும் பெற விழைகின்றனர். மக்கள் ஆழ்ந்து சிந்தித்து நல்வழி யில் கடக்கவும், ஆக்க வேலேகளில் ஈடுபடவும் இவ்விலக் கியங்கள் உதவுகின்றன. புலவன் நூலே எழுதுவதன் கோக்கம் பிரசாரத்திற்காகவன்று, கலேவாழ்வுக்காகவே என்ற உண்மையைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

Page 72
132
இதுகாறும் கூறியவற்றிலிருந்து, காலத்துக்குக் காலம் தமிழ் மக்களுடைய வாழ்க்கை எவ்வெந் நிலை யிலிருந்தது, எவ்வெவ் வழிகளில் மாறிக் கொண்டு சென்றது என்பனவற்றை அறியத் தமிழிலக்கியம் உதவுகின்ற தென்பது தெரிகின்றது. இலக்கியம் மக்களின் வாழ்க்கைப் படம் அல்லது சமுதாயச் சித்திரமாகும். சமுதாயத்தை அது படம் பிடித்துக் காட்டுகின்றது. காலத்துக்குக் காலம் சமுதாயத்தில் நிலவிய ஊழல்களை அது எடுத்துக் காட்டுகின்றது. நம் மூதாதையர் கடைப்பிடித்த உயர்ந்த பண்பாடு களையும் அவர்கள் கொண்ட சிறந்த இலட்சியங்களே யும் நாம் அறிந்து நம் வாழ்க்கையைச் செவ்வனே திருத்தி அமைக்கத் தமிழிலக்கியம் வழி காட்டு கின்றது.


Page 73


Page 74