கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும்

Page 1

6T6. செல்வராஜா

Page 2


Page 3

கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும்
என். செல்வராஜா
அயோத்தி நூலக சேவைகள்
ஆனேக்கோட்டை இலங்கை 1989

Page 4
Title :
Series :
Author :
Address :
Subject : Publishers :
Language :
Edition
Copy Right :
rinters :
rice :
Kiramiya. Noolahangalum Abi viruhiyum. (Rural Libraries and development)
Noolahaviyal Veliyeedu 4
Nadarajah Selvarajah
Librarian, Evelyn Rutnam
Institute for Inter - cultural Studies,
University Lane, Thirunelveli, Jaffna.
Library Science
Ayothy Library Services, Anaicoddai Tamil
First, October, 1989,
The Author
New Era Publications Ltd., Jaffna, Sri Lanka.
DC Class No. 020 (19th Ed )

அணிந்துரை
நல்ல நூலகசேவையும், சத்தியபூர்வமான தகவல் பேசி வர்த்தனை வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் வெறும் ஈழத் தறிவு மிக மிக ஆபத்தானது. அது ஒருவரை பாரிய வணி கஸ்தாபனங்களினதும், , அரசியல் அதிகாடிதேட்டிஷ்காரர் களதும், பாதுகாப்பற்ற, பரிதாபகரமான இலக்காக்கிவில்ே, இந்நிலைமை எமது மக்களுக்கு உண்டாகாதிருக்க எம் குழந் தைகள் மிகமிகப் பழையதும், சிரஞ்சீவியாயும் உள்ள எமது பண்பாட்டின்.அங்குரங்கள்ாக தமக்கும். உலகத்துக்கும் உரம் சேர்ப்பவர்களாக வளர, தாம் மிகவும் அவசரமாகக் கெய்து வேண்டியன இரு,காரியங்கள் உள من * * ذه
ஒன்று, எமது கல்வி வெறும் சோற்றுக்கல்வி, வியர்த் தமான அறிவுக்கல்வி என்பது மாறில் வாழ்விற்ேகல்விபர்க் மாறவேண்டும். இது மிகமிகப் பெரிய விடயம்*ஏம்மிலும் பார்க்க, தராதரமுள்ள கல்விமான்களும், தேசப் க்தியுண்ட் யோரும் ஆறஅமர சிந்திக்க வேண்டிய விடயம்.
இரண்டு, தமிழ்மொழியிலும், அதற்குப் பெரிதும் அன் னியம் இல்லாததுமாகிய வடமொழியிலும் உள்ள இலக்கிய, இலக்கண, சமய, ஞான நூல்களையும், தரமான பிறமொழி பலதுறைசார்ந்த நூல்களையும் (இவை மொழிபெயர்ப்பு நூல் களாகவும் இருக்கலாம்). நம்பிக்கை வாய்ந்த தகவல் கருவி நூல்களையும், எம்மக்களிடையே பரவலாகக் கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையினை உருவாக்குவது

Page 5
இவ்விடயத்தில் சிறியனவும் பெரியனவுமாக எம் நாட்டில் இருக்கின்ற நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் மற்றும் நூல்களில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்க்கும் உதவக் கூடிய முறையில் செயலாற்றுவதன் மூலம் எம்மிடையே உள்ள தராதரம் பெற்ற சில நூலகர்கள் சிறிய பங்களிப் சிஇன நல்கமுடியும்.
திரு. என். செல்வராஜா எழுதியுள்ள இந்நூல் பரந்த சமூகப் பயன்பாடு கருதி எழுதப்பட்டுள்ளது: கிராமிய நூலகங் "களைப் பற்றியே பெரிதும் பேசுகின்றது எனினும், இந்நூல், பாலர் நூலகங்கள், பாடசாலை நூலகங்கள் ஆகியன பற்றி யும், சில அடிப்படையான நூலகத் தொழிற்கூறுகள் பற்றியும் விளக்குவது. எம் நாட்டுக் கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டவர் கள் அனைவரும் இந்நூ&ல வரவேற்பர் என்று நம்புகின்றேன்.
யாழ். பல்கலைக்கழகம், ‘命。 முருகவேள் umýůuarsavců. 8-10-89

முன்னுரை
இலங்கையில் நவீன. நூலகங்களின் வளர்ச்சி 1925 ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபை நூலகம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆரம்பமாகின்றது என்பர் நூலக வியல் அறிஞர். அன்றிலிருந்து நூலகவியலானது பல படி கன்ாத்தாண்டி ஒரு துறையாகப் பரிணமிக்கும் அளவுக்குத் தேசிய மட்டத்தில் வளர்ந்து நிற்கின்றது,
இலங்கையில் நூலகவியல் துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, நவீனமயப்படுத்தப்பட்ட நூலகவியல் கல்வி யின் அறிமுகம் குறிப்பிடப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டள வில் இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. இதற்கான காத்திரமானதொரு பங்களிப்பை, கொழும் புத் திட்டத்தின் கீழ் இலங்கைக் கைத்தொழில் விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனம், ஆசிய நிறுவனம், கல்வித் திணைக் களம், பிரிட்டிஷ் கவுன்சில், ஐக்கிய அமெரிக்கப் பண் பாட்டு நி3லயம் போன்றவை நல்கியுள்ளன. இவற்றின் நட வடிக்கைகளின் பின்னணியில் இலங்கை நூலகச் சங்கம் 1960 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு இலங்கையில் நூலகக் கல்வியை வழங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட் நிறுவனமாகத் தன்கின நிலைநிறுத்திக்கிகாண்டது. 1961 ஆம் ஆண்டில் பல் கலைக்கழக் மட்டத்தில் நூலகவியல் கல்விக்கு முக்கியத்துவம்

Page 6
அளிக்கப்பட்டது. 1973 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் களனி வாளகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கான நூலகவி யல் வகுப்புக்கள் தொடங்கப்பட்டுப் படிப்படியான வளர்ச்சி யைக் காணத் தொடங்கியது.
1970 இல் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை யின் ஸ்தாபித்ததுடன் பாடசாலை நூலகர்கள், பொது நூல கர்கள் ஆகியோர்க்குப் பயிற்சிகளை அளிக்கும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
நூலகவியல் கல்வி, பயிற்சி போன்றவற்றை செவ்வனே நடாத்துவதற்குத் துணையாக நூலகவியல் பாடநூல்கள் வெளி வரத்தொடங்கின. இவை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் போதியளவு வெளியிடப்பட்டு வருகின்றன. நூலகவியல் சஞ்சிகைகளும் தரமான கட்டுரைகளுடன் வெளி வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை இத்துறையின் துரித வளர்ச்சிக்கேற்ற பல ஆய்வுக் கட்டு ரைகளாகும். இவையும் ஆங்கில, சிங்கள மொழிகளில் வெளி யிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்மொழி மூலம் வெளியிடப்பட்ட நூலகவியல் துறை சார்ந்த நூல்களையும் கட்டுரைகள்ையும் உற்று நோக்கும் போது நமக்கு ஏமாற்றமே விஞ்சி நிற்கின் றது. தமிழ் மொழி மூலம் கற்பிக்கும் நூலகவியலாளர்களும், கற்கும் மாணவர்களும் தமது தேவைகளுக்கு ஆங்கில மூல மான நூல்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை இங்குள் ளது. நூலகவியலில் தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவ்ே வெளிவந்துள்ளன. இந் நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தி தமிழ் மொழியில் நூலகவியல் துறையில் பல நூல்களை எழுதி வெளியிட தமிழ் பேசும் நூலக அறிஞர்கள் முன்வர வேண்டியத்வச்ய்ம். .
நூலகவியல்?’ என்ற பெயரில் தமிழ் காலாண்டுச் சஞ் சிகைஇயான்று செப்டெம்பர் 1985 முதல்"யாழ்ப்பூாண் த்தி லிருந்து வெளியிடப்பட்டு வருகின்றது:இலங்கைச்சில் இத் துறையில் வெவழிவந்த ஒரே தமிழ்த் : சஞ்சிக்ைஷம் ". இது வாகவே உள்ளது.

தமிழ்ப் பிரதேசங்களில் ஏராளமான சிறு நூலகங்கள் தோன்றுவதும், ஒரு காலத்தில் வளர்வதும் பின் படிப்படி யாக வளர்ச்சி குன்றி நூலகமே மறைந்துவிடுவதும் கண்கூடு. இந்த நிலைக்கு காரணமாக அமைவது திட்டமிடப்படாத முயற்சியும், நூலகவியல் பற்றிய போதிய அடிப்படை அறி வின்றி ஏதோ உணர்ச்சி வேகத்தில் நூலகங்களைக் கட்டி எழுப்ப முயற்சி செய்வதுமேயாகும். நூலகங்களின் ஒழுங் கான வளர்ச்சிக்கு நூலகத்துறை பற்றிய பரந்த அறிவு கொண்ட நூலகர்களில் தேவை அவசியமாகும். இந்த அடிப்ப டைக் கருத்தை மனதில் இருத்தி, கிராம நூலகங்களின் வர லாற்றினையும் அடிப்படைப் பிரச்சினைகளையும், எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய புதிய நடவடிக்கைகளேயும் ஆராயும் நோக்குடன் இக் கட்டுரைகள் எழுதப்பட்டன. இவை முன்னர் குறிப்பிட்ட 'நூலகவியல்' சஞ்சிகையில் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்டவையாகும். தேவை. கருதிச் சில கட்டுரைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இத் தொகுப்பில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. கிராம நூலக இயக்கம் பற்றிய அறிமுகக் கட்டுரை முதலாவதாக இடம் பெற்றுள்ளது. நூலக இயக்கத்தின் வரலாறும், அதன் அடிப்படையில் தோன்றிய கிராம நூலக எழுச்சியும் இன்றைய நூலகங்களில் பரிணும வளர்ச்சி முறையும் இக் கட்டுரையின் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
நாட்டின் அறிஞர்களின் அறிவுத்தேடுகைக்கு வழியமைத் துத் தருவது நூலகங்களேயாகும். தம்மை நாடிவரத்தக்க அறிஞர்களை உருவாக்கித் தருவதும் நூலகங்களின் பணியா கும். எதிர்கால அறிஞன் ஒருவன் எங்கு முதலில் உருவா கின்றன் என்று சிந்திக்கும் போது சிறுவர் நூலகங்களின் மகத்தான பணி எம்முன் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது.
சிறுவர் நூலகங்கள்ே அறிவுலகத்தின் நுழை வாயிலா கும் அத்தகைய சிறுவர் நூலகங்களை உருவாக்குவது “எமது தலையாய பணிகளில் ஒன்ருகும். எனவே தொடரும் இரு கட் டுரைகள் சிறுவர் நூலகங்களின் வரலாற்றிகனயும் அவை எதிர்நோக்கும் பிரச்சி&னகளையும் ஆராய்கின்றன. "

Page 7
நான்காவது கட்டுரை கிராம மட்டத்தில் பாலர்களுக்கான நூல்களைத் தயாரிப்பது எப்படி என்று ぶ விளக்குகின்றது. கிராம நூலகங்களில் இத்தகைய நூல்களைத் தயாரித்து அதன் மூலம் கிராம இ&ளஞர்களின் விஜனத்திற&னயும் பாலர்களின் அறிவு வளர்ச்சியையும் ஒருங்கே ஊக்குவிக்கலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.
கிராம நூலக அமைப்பில் முக்கியமான இடத்தினை வகிப் பது சனசமூக நிலையங்களாகும். அவற்றில் இயங்கும் நூலகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் ஐந்தாவது கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் "சனசமூக நிலையம்" என்ற பதம் குறிப் பிடப் பட்டிருந்தாலும் கிராம நூலகங்கள் அனைத்திற்கும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பொருத்தமானவையாக இருக்கின்றன.
ஆருவதாக இடம் பெற்றுள்ள கட்டுரை நூலகங்களில் மேற்கொள்ளப்படும் நூற்கொள்வனவு முறைகளையும் அதில் காணப்படும் குறைபாடுகளையும் .அதற்கான தீர்வுகளையும் பற்றிக் குறிப்பிடுகின்றது,
கிராம நூலக இயக்கத்தில் சிறுவர் நூலகங்களின் பங்கு
எவ்வளவு முக்கியம் என்பதை முன்னைய கட்டுரைகள் சில வலியுறுத்தியுள்ளன. சிறுவர் நூலக அமைப்பு இன்று தமிழ்ப்
பிரதேசங்களில் தனியாகச் செயற்படுவதில்லை. ஒரு நூல
கத்தின் சிறு பிரிவாகவே இயங்குகின்றன. அது கூட சில நூலகங்களில் காணப்படுவதில்லை. இந்த நிலையில் பாட் சாலைகளில் உள்ள நூலகங்களேச் சிறுவர் நூலகங்களாகச்
செயற்படவைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவ
தாக ஏழாவது கட்டுரை அமைகின்றது.
இறுதியாக எமது பிரதேசத்தின் எதிர்கால நலன் கருதி
ஆவணக் காப்பகத்தின் அவசியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இக்கட்டுரைகளின் மூலம் எமது பிரதேசத்தில் ஆரம்ப நிலையில் உள்ள பல சிறுநூலகங்களை வழி நட்த்தும்

பொறுப்பை ஏற்றிருக்கும் இளைஞர் உலகத்திற்கு நூலக வியல் பற்றிப் புதியதொரு கண்னேறட்டத்தைத் தோற்று விப்பதே எமது குறிக்கோளாகும்.
கைவசமுள்ள வளங்களைப் பயன்படுத்தி - எளியதொரு கிராமிய நூலக அமைப்பை உருவாக்குவதில் வெற்றி காண விழையும் எவருக்கும் இக் கட்டுரைத் தொகுதி ஓரளவு வழி காட்டும் என நம்புகிருேம்;
திருநெல்வேலி என். செல்வராஜா 20- 0-89

Page 8
பொருளடக்கம்
அணிந்துரை
முன்னுரை 1. கிராம நூலக இயக்கம் - ஓர் அறிமுகம். 2. சிறுவர் நூலகங்கள் - ஓர் அறிமுகமும் வரலாற்று
நோக்கும். 3. தமிழ்ப் பிரதேசங்களில் சிறுவர் நூலகங்களும் அவை
எதிர் நோக்கும் பிரச்சினைகளும், 4. பாலர்களுக்கான நூல்களையும் பிற அறிவியல் சாதனங் -
களையும் தயாரித்தல். யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களும் அவற்றின் நூலக நடவடிக்கைகளும். 6. நூலகங்களில் நூல் கொள்வனவு - சில சிந்தனைகள். 7. பாடசாலை நூலகங்களும் அவற்றின் சேவைகளும் சில
குறிப்புகள். 8. வைப்பு நூலகங்களும் ஆவணக் காப்பகமும்: தமிழ்ப்
பிரதேசங்களில் இன்றைய தேவைகள்,

கிராம நூலக இயக்கம் - ஒர் அறிமுகம்
பல்வேறு சமூக சேவைகளில் பொது நூலக சேவையும் ஒன்ருகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத் தால் சேகரிக்கப்பட்ட அறிவுச் சாதனங்களை எத்தகைய கட்டுப்பாடுகளோ, வேறுபாடுகளோ இன்றி மக்களுக்கு வழங்க வேண்டியதாக நூலகம் உள்ளது. அத்துடன் சமூ கத்துக்கோ, தனி நபருக்கோ எளிதில் கிடைக்கக்கூடிய தான முறையில் நூல்களை ஒழுங்கமைத்து வைத்திருப்பதும் அவசியமாகின்றது.
நூலகவியல் தொடர்பான சிந்தனைகள் மிகப் பழமை யானவை. மனித குலம் அச்சுக்கலையை அறிந்துகொள்ளும் முன்னரே நூலகங்கள் தமது சேவையை ஆரம்பித்துவிட்ட தற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அரண்மனை களிலும் கோவில்களிலும், மடாலயங்களிலும் நூலகங்கள் இயங்கிவந்துள்ளன. அன்று பொது நூலகச் சிந்தனைகள் உருவாகியிராமையால் புராதன நூலகங்கள் ஒரு குறிப் பிட்ட வட்டத்தினருக்கே தமது சேவையை வழங்கி வந்

Page 9
துள்ளன. அரண்மனை நூலகங்கள் மன்னர், மந்திரிகளுக்கு மட்டும் பயன்பட்டன. குடிமக்கள் நூலகங்களை நாட அனு மதிக்கப்படவில்லை மடாலயங்களிலும் கோவில்களிலும் காணப்பட்ட நூலகங்கள் ஆவணக் காப்பகங்களாகவும் மடாலயக் குருக்களுக்கு உதவும் வகையில் உசாத்துணை நூலகங்களாகவும் இயங்கி வந்துள்ளன.
நூலகங்களின் பயன்பாடு உயர்குடியினருக்கு மட்டுமே என்ற கோட்பாடு காலக்கிரமத்தில் மாறுவதாயிற்று. அச் சுக்கலையின் தோற்றம் காரணமாக ஏற்பட்ட புதிய மறு மலர்ச்சியினல் நூலகங்கள் அறிவைத் தேடும் மக்களுக்குப் பயனளிக்க வேண்டியன என்ற புதிய கருத்து உருவாயிற்று. இக் கருத்தானது காலக்கிரமத்தில் பொதுசன நூலக இயக் கம் உருவாகக் காரணமாயிற்று. ஆயினும் இருபதாம் நூற் முண்டின் முற்பகுதி வரை நகரை அண்டிய இடங்களிலேயே நூலகங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன. மாளிகைகள், உயர்குடி மக்களின் இல்லங்கள், சமய நிறுவனங்கள், பல் கலைக்கழகங்கள் போன்றவற்றில் நூலகங்கள் அமைக்கப்பட லாயின.
உலகக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வசதி வேண் டும் என்ற கோஷம் சர்வதேச ரீதிழில் எழுப்பப்பட்டதை யடுத்து நூலக சேவை, பொது நூலகசேவையாக, படிப் படியாக மாற்றம் அடைந்து பின் ன ர் எழுத்தறிவுள்ள எவர்க்கும் பயன்தரும் முறையில் நூலகசேவை விரிவு படுத் தப்படவேண்டும் என்ற கருத்து, பரவலாக வெளிப்பட லாயிற்று.
பொது நூலக இயக்கம் பற்றிய கருத்து வலுவடைந் திருந்த போதிலும் கிராம மட்டத்தில் அதன் செல்வாக்கு இருபதாம் நூற்ருண்டின் பின் அரைப்பகுதியிலேயே பரவ லாயிற்று. ஆயினும் இன்றுவரை பெரும்பான்மையான நூலகங்கள் நகரை அண்டியே காணப்படுவது குறிப்பிடத் தக்கதொன்ருகும். உலகின் சனத்தொகையில் மூன்றில் இரு

பங்கு கிராமங்களிலேயே உள்ளன. நகரங்கள், உணவு முத லிய அத்தியாவசியத் தேவைக்கு கிராமங்களிலேயே தங்கி யுள்ளன. அவ்வகையில் நோக்குமிடத்து கிராமங்கள் பொரு ளாதார ரீதியில் வளர்ச்சியடையத்தக்கதாக அறிவு பெறும் பொருட்டு நூலகசேவை கூடிய அளவு கிராமங்களை நோக்கி நகர்த்தப்படல் வேண்டும்.
1981ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கைக் குடிசன மதிப்பீட்டின்படி முழு இலங்கையிலும் உள்ள சனத்தொகையில் பாடசாலைக்குச் செல்லாதவர்களின் (எழுத்தறிவற்றவர்களின்) சதவீதம் நகர மட்டத்தில் 8.9% ஆகவும் கிராம மட்டத்தில் 14.5% ஆகவும் காணப்படுகின் றது. இவ் விகிதத்தை 1971ஆம் ஆண்டுக் கணிப்புடன் ஒப் பிடுகையில் அரைப்பங்கு குறைவாகும். 1971ஆம் ஆண்டில் நகர மட்டத்தில் 15.6% ஆகவும் கிராமமட்டத்தில் 24.6% ஆகவும் பாடசாலைக்குச் செல்லாதவர்களின் வீதம் கணிப் பிடப்பட்டுள்ளது. f
யாழ்ப்பாண மாவட்டத்துக்குரிய புள்ளி விபரங்களை உதாரணத்துக்காக எடுத்துக்கொள்வோம். 1981-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் அடிப்படை யில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் யாழ்ப்பாண மாவட் டத்துக்குள் உள்ளவர்களது எண்ணிக்கை 6, 31, 245 ஆகும். இதில் 2, 09, 889 பேர் நகரங்களை அண்டியும் 4. 21,356 பேர் கிராமங்களை அண்டியும் வாழ்கின்றனர். இந்தச் சனத்தொகையில் நகரத்தில் உள்ளவர்களில் 96% ஆனேர் (2, 01, 507 பேர்) எழுத்தறிவுள்ளவர்களாகவும் 4% ஆனுேர் (8, 382 பேர்) எழுத்தறிவற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். கிராமத்தையண்டி வாழ்பவர்களில் 92.1% ஆஞேர் (3, 88, 076 பேர்) எழுத்தறிவுடையோ ராகவும் 7.9% ஆனேர் (33, 280 பேர்) எழுத்தறிவற்ற வர்களாகவும் காணப்படுகின்றனர். ந க ரத் தி ன் சனத் தொகை வீதத்துடன் ஒப்பிடுகையில் கிராமங்களை அண்டி வாழ்பவர்களின் எழுத்தறிவின்மை வீதாசாரம் இரு மடங்

Page 10
காகக் காணப்படுவது அவதானிக்கப்படல் வே ண் டு ம். அடிப்படைக் கல்வி வசதிகள் கிராமங்களை நோக்கி நகரும் வேளையில் முறைசாரக் கல்வி முறைகளையும் அவ்வாறே கிராமங்களை நோக்கி நகர்த்தல் அவசியம். அவ்வகையில் கிராம நூலகங்களின் பங்களிப்பு இன்றைய காலகட்டத் தில் மிகவும் இன்றியமையாததாகும் நூலகம் ஒரு திறந்த பல்கலைக்கழகம் என்பர். எவருக்கும் அங்கு அறிவைப் பெற் றுக்கொள்ள வசதி ஏற்படுத்தித் தரல்வேண்டும். இன்று இராம - நகர மக்களிடையே காணப்பட்டுவரும் பொருளா தார, அறிவு ரீதியான ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையும் எழுத்தறிவின்மையேயாகும். கிராம நூலக இயக்கத்தின் மூலம் இத்தகைய எழுத்தறிவின்மையைப் பூண்டோ
ஒழித்துவிட முடியும்.
தற்கால கிராம - நகர அமைப்பில் பெரும்பான்மை யான தனவந்தர்களும், அறிஞர்களும் நகரை அண்டியே வாழ்கின்றனர். அவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்களில் திடைக்கும் செல்வங்களைத் தமது நுகர்வின் பொருட்டு இராமங்களிலிருந்து நகரத்தை நோக்கிக்கொண்டு செல் கின்றனர். கிராமத்தில் கல்வி பயின்ற ஒருவர் உயர் கல் விக்காக நகரை நாடுகின்றர். அவரது உயர்கல்வி நகரச் சூழலில் மேற்கொள்ளப்படுவதால் பின்னர் க ல் வி  ைய முடித்த பின் அவரால் மீண்டும் தன் கிராம வாழ்வுக்குத் திரும்ப முடிவதில்லை. அதனல் அவர் நகரச் சூழலிலேயே வசதிக்காகத் தங்கி விடுகிருர் . மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து சேவையாற்ற அவர் விரும்புவதில்லை. இதன் காரண மாக நகரங்களின் சனத்தொகை அதிகரிக்கின்றது. குறு கிய நிலப்பரப்பில் கூடிய சனத்தொகை காணப்படுகின்றது. கிராமங்களின் சனத்தொகை நில விகிதாசாரத்தின் அடிப் படையில் நோக்குமிடத்து ஐதாகவே காணப்படுகின்றது.
ஓரிடத்தில் பொது நூலகமொன்றை நிறுவும்போது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான காரணி களில் ஒன்று சனத்தொகை ஆகும். இன்றைய அமைப்பு முறையில் நமது பிரதேசங்களில் பெரும்பான்மையான
4

நூலகங்கள். நகரையண்டிக் காணப்படுவதற்கு இதுவே காரணம் எனலாம். நகரத்திலுள்ள சனத்தொகை விகிதத் துக்கேற்ப நூலகங்களின் தேவை உணரப்படுவதால் அங்கு குறுகிய நிலப்பரப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களிலும் இவ்வாறே சனத் தொகை விகிதாசார முறையில் திட்டமிடப்படும் போது நூலகங்களின் எண்ணிக்கை குறைகின்றது. நூலகங்களுக் கிடையே இடைவெளியும் அதிகமாகின்றது.
கிராமங்களில் பொது நூலகங்களுக்கிடையே இடை வெளி அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக ஒரு நூல கத்தின் சுற்ருடலில் வாழும் மக்களே அதன் வாசகர்க ளாக இருக்கின்றனர். சற்றுத் தொலைவில் உள்ளவர்களில் வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களே இந்த நூலகத்தை நாடி வருகின்றனர். அத்தகையவர்களிலும் பெரும்பான்மை யோர் அருகாமையிலுள்ள கிராம நூலகத்தை விடத் தொலைவிலுள்ள நகரை அண்டிய பெரிய நூலகத்தை நாடவே விரும்புகின்றனர். நூலகங்களை மக்கள் நாட முற் படாத வேளை நூலகங்கள் மக்களை நாடி நகர வேண்டு மென்ற சிந்தனை படிப்படியாக இன்று எமது கிராமங்களில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாகவே ஏற்கனவே இருந்து வந்த நூலகங்களுக்கான இடைவெளியைக் குறைக் கும் நோக்கத்துடனும், அதிகளவு மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் கிராம நூலக இயக்கம் பற்றிய சிந் த னை வளர்ந்து வருகின்றது. அண்மைக் காலங்களில் பத்திரிகை களில் காணப்படும் தகவல்களைக் கண்ணுறுமிடத்து கிரா மங்கள் தோறும் நாளாந்தம் புதிய நூலகம் அமைக்கப் படுவதாகவோ, பழைய நூலகம் புனரமைக்கப்படுவதா கவோ, நூலக வாரம் கொண்டாடப்படுவதாகவோ செய் திகள் வருவதனை அவதானிக்கலாம். இது மகிழ்விற்குரிய தொரு மாற்றமாகும்.
கிராம நூலக இயக்கம் இன்று வலுவடைந்து வருவ தற்கு மேலும் சில காரணங்களைக் கூறலாம். த க வல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின்
5・

Page 11
காரணமாகக் கிராம மக்களுக்குத் தகவல்களைத் தேடும் ஆர்வம் வளர்ந்து வருகின்றது. வானெலி, தொலைக்காட்சி சாதனங்களின் கிராம ஊடுருவல் காரணமாகக் கிராமங் களில் மக்கள் தம் அறிவை மேலும் விருத்தி செய்யவேண் டிய தேவை ஏற்பட்டு வருகின்றது. தொலைக்காட்சியில் தாம் காணும் ஒரு காட்சியுடன் அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வதில்லை. அது தொடர்பான மேலதிக தகவல்களை அவர்கள் நாடுகின்றனர். அத்தகவல்களை இலகுவில் பெற நூலகங்களை நாடவேண்டிய தேவை அவர்களுக்கு இயல் பாகவே ஏற்படுகின்றது. கிராமங்களிலிருந்து தொழி ல் வாய்ப்புக்களுக்காக அ ய ல் நா டு செல்பவர்களின் எண் ணிக்கை முன்னெப்போதுமில்லாதவாறு இன்று அதிகரித்து வருகின்றது. தன் மகன் சென்ற நாட்டைப் பற்றிய தக வலைப்பெற ஒரு அன்னை முயல்வது இயல்பே. வெளிநாடு சென்ற கிராமத்தவர் நாள் தோறும் எழுதும் கடிதங்க ளில் பல புதுத்தகவல்கள் பு ைதந்து கிடக்கும். இவை யாவற்றையும் விளங்கிக் கொள்ளும் ஆர்வம் காரணமாக இன்று நூலகங்களை நாடி மக்கள் நகரத் தொடங்கியிருக்கி றர்கள்.
அரசின் அபிவிருத்தித் திட்டங்களும் இன்று கிராமங் களை நோக்கிச் செயற்படுவதாக உள்ளன. இதல்ை கிரா மங்களின் முக்கியத்துவம் பரவலாக உணரப்படுகின்றது. விவசாயம், கைத்தொழில், கிராமியத்தொழில் நுட்பம் போன்ற துறைகளில் புதுப்புதுத் தகவல்கள் நாள்தோறும் தேடப்படுகின்றன. இதனல் இரு தலைமுறைகளுக்கிடையே பலத்த வேறுபாடு காணப்படுகின்றன. ஒரு தந்தையை விட அவரது மகன் கூடியளவு அறிவுப்பரப்பினைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இச் சூழ்நிலை காரண மாக ஏற்பட்டுள்ளது. இதனுல் நூலகங்களின் தேவை முன் எப்போதுமில்லாதவாறு கிராமங்களில் உணரப்பட்டு வகு கின்றது.
ஒரு கிராமத்தில் நூலகம் அமைக்க உத்தேசிக்கும்போது அவதானிக்கவேண்டிய முக்கிய விடயங்கள் சிலவருமாறு:-
6

1. நூலகத்தை நிர்மாணிப்பதற்கான வசதியான இடத்
தைத் தெரிவு செய்தல் வேண்டும்.
2. தேவைப்படும் நிதியைத் திரட்ட ஒழுங்குகள் செய்
தல் வேண்டும்.
3. கிராமத்தின் தேவை, அத்தேவையைப் பூர்த்திசெய் யக் கூடிய நூலகத்தின் சேவை பற்றிய உணர்வும், நம்பிக்கையும் கொண்ட அரசு அதிகாரிகளின் ஒத் துழைப்பைத் தேடிக்கொள்ளல் வேண்டும்.
4. கிராமத்தில் இது வரை கிடைக்காத அறிவுச் சாத னங்களைச் சேகரித்துக் கிராமத்துக்குக் கொண்டுவரல் வேண்டும்.
5. நூலகத் துறையில் ஒரளவு பயிற்சிபெற்ற தொண் டுள்ளம் கொண்ட ஊழியர்களைப் பெற்றுக்கொள் ளல் வேண்டும்.
இச் சந்தர்ப்பத்தில் நூலகத்துக்கும், வாசிகசாலைக்கும் இடையேயுள்ள சில வேறுபாடுகளை விளக்க வேண்டியதும் அவசியமாகின்றது. கிராமிய வழக்கில் நூ ல க ம் என்ற பதம் வாசிகசாலைகளையே குறிப்பிடுகின்றது வாசிகசாலை ஒன்றில் கிராம மக்களினல் உவந்தளிக்கப்படும் அன்றைய புதினப் பத்திரிகைகள் வைக்கப்பட்டிருக்கும். ஊரவர்கள் சுதந்திரமாக அன்ருடச் செய்திகளை வாசிப்பதற்கேற்ப வாசிகசாலைகள் சனசமூக நிலையங்களிலோ, கிராம அபி விருத்திச் சங்கங்களிலோ தனியார், பொதுக் கட்டிடங்க ளிலோ இயங்கும். சில முன்னேறிய வாசிகசாலைகளில் ஒரு சில சஞ்சிகைகளும் மேலதிகமாகக் காணப்படும். நாம் இக் கட்டுரையில் குறிப்பிடும் நூலகம் என்பது வாசிகசாலை அன்று. வாசிகசாலையை நூலகத்தின் பல சேவைகளில் ஒன் முகவே கருதுதல் வேண்டும்.

Page 12
நூலகமானது கிராமத்தின் தகவல் நிலையமாகவும்,அறிவு சாதனங்களின் களஞ்சியமாகவும் செயற்படும் ஒரு அமைப் பாகும். இங்கு நூல்களும் பிற அறிவுச்சாதனங்களும் சேக ரித்து ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தேவை யைக் கருதி அச்சாதனங்களிலிருந்து இலகுவான முறையில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கேற்ப ஒரு பகுப் பு முறையினை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் பட்டிருக்கும். அறிவை நாடி வரும் வாசகர் இலகுவான முறையில் தான் தேடும் தகவலைப் பெற்றுக்கொள்ள அங்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கும். நூலக அமைப்புத் தொடர் பான செயல் முறைகளை விளக்கும் அடுத்துவரும் தொடர் களில் நூலகம் பற்றிய மேலும் தெளிவான கருத்தினை வாசகர் பெற்றுக்கொள்ளலாம்.
கிராம நூலகங்களுக்கான பொதுவான ஒழுங்கு விதி முறைகள் எதுவும் இது வரை உருவாக்கப்பட்டிருக்கவில்லை. கிராமத்தின் வாசகர்களின் எண்ணிக்கைக்கும், நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கைக்கும், நூலகப் பொறுப்பா ளரின் அறிவுக்கும் ஏற்ப இன்று நூலகங்களுக்கிடையே இவ் வொழுங்கு விதி முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவை ஒரு பொதுவான அமைப்பு முறையாக ஒழுங்குபடுத்தப் படல் பல வகையிலும் கிராம நூலகங்களின் வளர்ச்சிக்கு உதவியாகவிருக்கும். கிராமத்தின் வரலாறு, கலாச்சார பின்னணி, புவியியல் காரணிகள், மக்களின் தொகை ஆகிய வற்றையும் கருத்திற் கொண்டு இவ்விதிமுறைகள் உருவாக் கப்படல் வேண்டும். ”
பொதுவானதொரு கிராம நூலகத்தின் நோக்கமானது மூன்று அடிப்படைகளில் அமைகின்றது.
1. கிராமத்தவரின் அறிவு வளர்ச்சிக்கும்,பொழுதுபோக் குக்குமான அறிவுச் சாதனங்களை வழங்குதல். இவை கிராமத்தின் தனிப்பட்ட நபருக்கும் சமூக அபிவிருத் திக்கும் உதவுவனவாக அமையவேண்டும்.

2。
ஒரு கிராம நூலகத்தை நிர்வகிக்கவும், தேவைப் படும் தகவல்களைத் தன் சேகரிப்பிலிருந்து தேடி எடுத் துக் கொடுக்கவும், இல்லாத தகவல்களைப் பெற்றுக் கொள்ள வாசகர்களுக்கு வழிகாட்டவும் பயிற்சிபெற்ற ஊழியர்களின் சேவை வேண்டும்.
அறிவுத் தேடலில் கிராமத்துக்குச் சகல வழிகளிலும் நெடுங்காலம் நிலைத்திருந்து உதவும் வகையில் ஒரு நூலகத்தை நிர்மாணித்தல் அவசியமாகும்.
இம் மூன்று நோக்கங்களையும் கருத்திற் கொண்டு ஒரு
கிராம நூலக அமைப்பை உருவாக்கும்போது ஏற்படும் சில தடைமுறைச் சிக்கல்களை இனி நாம் நோக்குவோம்.
.
s
ஒரு கிராம நூலகத்தில் நூல் தேர்வு செய்யும்போது உதவும் நூல் விபரப் பட்டியல்கள், வழிகாட்டி நூல் கள் போன்றவை கிராமத்தில் பெறமுடியாது போக லாம் இதனுல் நூலகர் கடின முயற்சியில் ஈடுபட்டுத் தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதன் உதவியுடன் நூல் தேர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டி நேரிடும்.
ஒரு கிராம நூலகத்தில் அங்கத்தவர்கள் சிறிய எண் ணிக்கையாகவே இருப்பர். நூலகத்துக்கெனப் பெற்ற நூல்கள் பாவித்துக் கிழிந்துபோகும் முன்னரே அவை வாசித்து முடிக்கப்பட்டுவிடும். நூலகத் தட்டுக்களில் பெரும்பாலான இடத்தைப் பயன்படுத்தப்பட்ட நூல் களே ஆக்கிரமித்து இருக்கும்.
பெரும்பான்மையான கிராமிய வாசகரின் நூற்தேர் வில் முதல்நிலை வகிப்பது ஜனரஞ்சக நூல்களாகும். ஆதலால் ஒரு சில அசாதாரண வாசகர்களைத் திருப் திப்படுத்தும் வாய்ப்பு கிராம நூலகங்களில் குறை வாகவே காணப்படும்.

Page 13
4. ஒரு நகர நூலகத்துடன் ஒப்பிடும்போது கிராம நூலக ரின் நூலக அறிவு குறைவாகவே காணப்படும் சாத் தியமுள்ளது. விஷேட நூலகர்களது தொடர் சேவை யைப்பெறும் சக்தி கிராம நூலகங்களுக்குக் கிடைப் பது அரிது. கிராம நூலகரது சேவைப்பரப்பின் விகித மும் குறைவாகவே இருக்கும். இதனுல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டும் ஒரு கிராம நூலகம் இயங்க வேண்டி ஏற்படலாம்.
5. நிதி வசதிக் குறைவு காரணமாகத் துரித முன்னேற் றம் காண்பதற்கு ஒரு கிராம மட்டத்திலான நூலகத் துக்கு இ ய லா து போகலாம். நூலக சேவையினை *"வெள்ளை யானை” என்ற அடைமொழியிட்டு அழைப் பர். ஏனெனில் அது ஒரு சேவை மட்டுமே. அதற்கு முத லீடு செய்வதன் மூலம் முதலீட்டின் வருமானம் பணப் பெறுமதியில் கிடைப்பதில்லை அதன் பயன்பாடான "அறிவுத் தேட்டத்தை' பணத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்தல் இயலாது. இது ஒரு புனிதமான சேவையாயினும் நிதி வருவாயை முக்கியமாகக் கரு தும் சில நிர்வாகங்களுக்கு இச் சேவைக்கான முதலீடு வீண் விரயமாகத் தோன்றுவதுண்டு. இதன் காரண மாக பிற சேவைகளுடன் நூலக சேவையினை ஒப்பிடு கையில் இதற்குப் பூரண ஆதரவுடன் நிதி வழங்கு பவர் அரிதாகவே உள்ளனர்.
மேற் குறிப்பிட்ட ஐந்து பிரதான சிக்கல்களும் தீர்வு காணப்பட முடியாதனவல்ல. அவற்றைத் திட்டமிட்ட அணுகுமுறைகளின் மூலம் ஓரளவுக்காவது வெற்றிகொள்ள முடியும். s
வசதிமிக்க நூலகங்கள் தமது பிரதேசத்திலுள்ள கிராம நூலகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைத்திருந்து, காலத்துக்குக் காலம் அவற்றிற்கு நூல் தேர்வில் உதவி செய்ய முடியும். பிரதான நூலகங்கள் தாம் பெறும் வர்த்
0

தக நூல் விபரப் பட்டியல்களை பிரதியெடுத்து அல்லது அவற்றில் காணப்படும் நூல்கள் பற்றிய அடிப்படைத் தக வல்களை தேர்ந்தெடுத்து அவற்றைத் தொகுத்து கிராம நூலகங்களுக்கு அனுப்பியுதவலாம்.
அனுபவம் மிக்க நூலக அறிஞர்கள் ஒன்று கூடி ஒரு கிராம நூலகம் வைத்திருக்க வேண்டிய அடிப்படை நூல் களையும் அத்தியாவசியமான ஆவணங்களையும் தொகுத்து அவற்றின் நூல் விபரங்களைப் பட்டியலிட்டு சகல கிராம நூலகங்களுக்கும் அனுப்பி உதவலாம்.
நகரத்திலுள்ள புத்தக விற்பனை நிலையங்கள் தம்மிடம் விற்பனைக்குள்ள நூல்களின் விபரங்களைத் தொகுத்து அவற்றை நூலுருவாக்கி தேவைப்படுவோர்க்கு விநியோகம் செய்து தம் வியாபாரத்தை விருத்திசெய்து கொள்வது பொதுவான ஒரு யுக்தியாகும். தமிழ்ப் பிரதேசங்களில் இன்று அத்தகைய வர்த்தக நூல் விபரப்பட்டியல்கள் அதிக மாக வெளிவருவதில்லை. அச்சிடல் தொடர்பான சிக்கல்க ளால் இத்தகைய பிரசுரங்கள் வெளியிடப்படுவதில்லை எனக் காரணம் கூறப்படுவதுண்டு இத்தகைய வர்த்தக நூல் விப ரப்பட்டியல்களை கல்லச்சுப் பிரதியாக்கம் செய்தாவது விநி யோகிப்பது நூலகங்களின் நூல் தெரிவுக்கு உதவியாக விருக்கும்,
மேற்கண்ட நடவடிக்கைகளால் கிராம நூலகங்களின் நூல் தேர்வில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க முடியும். இவை தவிர கிராம நூலகர்களும் தாம் பத்திரிகை களில் கண்ணுறும் நூல் விமர்சனங்கள். நூல்களுக்கான விளம் பரங்கள் போன்றவற்றை வெட்டி எடுத்து கோவைப்படுத்தி வைத்து தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்தலாம்
இரண்டாவதாகக் குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க வழி நூலகக் கூட்டுறவாகும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் அமைந்த கிராம நூலகங்கள் தமக்கிடையே நூல்களைக் காலத்துக்குக் காலம் மாற்றிக்கொள்ள ஒப்பந்தங்களை ஏற்

Page 14
டுத்திக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண லாம். இத்தகைய நூலகக் கூட்டுறவினை மேற்கொள்ளும் நூலகங்கள் நூற் கொள்வனவிலும் சிக்கனமுறையைக் கடைப்பிடித்தல் இயலும். நூற்கொள்வனவை மேற்கொள் ளும்போது விலை கூடிய நூல்களில் ஒவ்வொரு நூலகமும் தமக்கெனத் தனித்தனியாக பல பிரதிகளைக் கொள்வனவு செய்யாமல் ஒரு நூலகம் கொள்வனவு செய்யும் நூலைத் தவிர்த்து வேருெரு நூலை அடுத்த நூலகம் கொள்வனவு செய்துகொள்ள வாய்ப்புண்டு. இதனுல் நூலகத்தின் நிதி சிக்கலான முறையில் செலவிடப்படலாம்.
கி ரா ம நூலகங்களில் பெரும்பான்மையான நூற் சேர்க்கை ஜனரஞ்சகமான நூல்களையே கொண்டிருப்பது இயல்பாயினும் மாணவர்கள், ஆசிரியர்கள் போன்ருே ரின் தேவைக்கேற்ற பாடம் சார்ந்த நூல்களும், துறைசார் நூல் களும், ஒரு கிராம நூலகத்தில் இருத்தல் அவசியமாகும் ஆயினும் கிராம நூலகம் பற்றிய ஒரு அடிப்படைக் கருத்து இவ்விடத்தில் அவதானிக்கப்படல்வேண்டும். ஒரு கிராம நூலகமானது, நகரில் உள்ள ஒரு பொது நூலகத்துக்கோ பாடசாலையொன்றில் உள் ள வசதிமிக்க நூலகமொன் றிற்கோ போட்டியாக நிர்வகிக்கப்படுவதல்ல. கிராம மக் க%ள அறிவாளிகளாக்குவதற்கான ஆரம்ப முயற்சிகளை மேற் கொள்வதே ஒரு கிராம நூலகத்தின் அடிப்படை நோக்க மாகும். கிராமத்திலுள்ள ஒரு குடிமகனைத் தட்டியெழுப்பி அவனுக்கு அறிவின் பால் நாட்டத்தை உண்டாக்கி அதைத் தேடிச் செல்லும் ஆர்வத்தை ஏற்படுத்துவது ஒரு கிராம நூலகத்தின் கடமையாகும். அவ்வகையில் அறிவை நாடித் திரியும் அசாதாரண வாசகர் ஒருவரின் தேவையை ஒவ் வொரு கிராம நூலகமும் தீர்த்து வைப்பதென்பது இய லாத காரியமாகும். இத்தகைய வாசகர்கள் கிராம நூல கத்தை நம்பியிருப்பார் என்றும் ஏற்பதற்கில்லை. அறிவுத் தாக மேலீட்டால் அவர் தான் தேடும் நூலுக்காக நகர நூலகத்தை நாடிச் செல்வதற்கும் தயாராக விருப்பார்.
2

கிராம நூலகங்களில் விஷேட நூலகர்களின் சேவை பெறப்படுவது கடினம் என்பது ஓரளவு உண்மையாயினும், விஷேட நூலகர்களின் தேவை ஏற்படும் சந்தர்ப்பம் ஒரு கிராம நூலகத்திற்குக் குறைவாகவே காணப்படும். பகுப் பாக்கம், பட்டியலாக்சம் போன்ற சில விஞ்ஞான ரீதியி லான வேலைகளை பயிற்சி பெற்ற நூலகர்களாலேயே மேற் கொள்ள முடியும். இத்தகைய சந்தர்ப்பங்களில் மாத்திரம் அண்மையில் உள்ள வசதி மிக்க நூலகர்களை நாடி ஆலோ சனை பெற முடியும். சிக்கலான பட்டியல் அமைப்புக்கள் கிராம நூலகத்தின் சேவைகளை மேலும் சிக்கலாக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்பது அனுபவபூர்வ மான உண்மையாகும். நூலக நிர்வாகக் குழுவில் பயிற்சி பெற்ற நூலகர் ஒருவரையும் வசதியிருப்பின் சேர்த்துக் கொள்வது பயனுடையதாகவிருக்கும்.
இறுதியாகக் குறிப்பிடப்பட்ட சிக்கலானது சமூக விழிப் புணர்ச்சி தொடர்பானதாகும், நூலகத்துறையை வெள்ளை யானைக்கு ஒப்பிடுவது நூலகத்துறையின் முக்கியத்துவத் தையோ அதன் பயனளிப்பையோ முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒரு சமூகத்தின் மேலோட்டமான கருத்து வெளிப்பாடாகும். பொது நூலக சேவையை மக்களின் பொழுது போக்குச் சேவைகளில் ஒன்ருகக் கருதும் போக்கு இன்று எம்மவரிடையே காணப்படுகின்றது. அபிவிருத்தி யடைந்த நாடுகளில் பொது நூலக சேவை வித்தியாசமான பரிமாணத்தினைப் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். பொது நூலகங்களாவன, வெறும் பொழுது போக்கு மையங்களாக மட்டுமிராது கலாச்சார நிலையங்களாகவும், தகவல் நிலை யங்களாகவும், மாறி வருகின்றன. அரசின் அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பான மக்கள் தொடர்பகமாக பொது நூலகங்கள் கிராம மட்டத்திலாயினும், நகர மட்டத்தில்ா யினும் இயங்குகின்றன. மேலும் கிராம நூலகசேவை ஒரு கிராமத்தின் இதயமாகத் தொழிற்படுவதை பல அபிவிருத் தியடைந்த நாடுகளில் காண முடிகின்றது.
| 3

Page 15
இத்தகைய பயனுள்ளதும், உயர்ந்த அந்தஸ்தில் உள்ள துமான் நூலகங்களை உரிய முறையில் பயன்படுத்தாது மேலோட்டமாக அவற்றை அணுவசியமான செலவுக்கு வழி கோலும் ஸ்தாபனங்களாகக் கருதுவது கவலைக்குரியதாகும்.
கிராம நூலக உணர்வின் காரணமாக இப்போது பல கிராமங்களில் நூலகங்களை நிறுவும் ஆர்வம் காணப்படினும் இத்துறையில் முழுமையான அறிவு பெற்றவர்கள் கிரா மங்களில் காணப்படாமையால் இத்திட்டங்களை வழி நடத் திச் செல்ல வசதியின்றி அவை வெறும் ஆர்வங்களாகவே நின்று மங்கி மறைந்து விடுகின்றன.
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சில நூலகங்கள் முறை யான வழிகாட்டலைப் பெற்றுக்கொள்ள முடியாமையால் அபிவிருத்தி இன்றியும் குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் மாத்திரம் தமது சேவையை மட்டுப்படுத்திக்கொண்டும் இயங்கத் தலைப்பட்டுள்ளன.
O 0 O
இக் கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவை.
1. கமால்தீன், எஸ். எம். "நாட்டின் அபிவிருத்தியில்
நூலகங்களின் பங்கு', அறிவின் பாதையிலே, பதிப்பு.
ஈஸ்வரி கொரியா, கொழும்பு பொது நூலகம், 1980
. 4 14 سسس l39 |
2. Abeyawardana, H. A. P. "Traditional Rural Organizational Pattern with special reference to the North Central Province.' Roads to Wisdom, Ed. Ishvari Corea, Colombo Public Library, 1980: p. 287 - 298.
3. Baregu, M. L. M. “Rural Libraries in Functional literacy Campaigns ' UNESCO Bulletin for Libraries, Vol 26 (1), Jan. — Feb 1972: p, 18 — 24.
4

10.
11.
De Silva, W. A. “The Book holes of VillageModest Libraries that have disappeared.' Anuradhapura Public Library Building Souvenir, 1976: p. 147 - 149.
Fenelonov, E. A. “Libraries in Rural areas in the U. S. S. R. UNESCO Bulletin for Libraries, Vol. 26 (1), Jan. - Feb., 1972: p. 13 - 17.
Lankage, Jayasiri. “Library movement in Sri Lanka', Roads to Wisdom, Ed. Ishvari Corea, Colombo Public Library, 1980: p. 31 - 42
Mehta, J. C. "Rural Libraries in India, UNESCO Bulletin for Libraries, Vol. 26 (1), Jan, - Feb., 1972; p. 25 - 29.
Myler, Rolf. The Design of the Small Public Library. New York: R. R. Bowker Co., 1966,
Panditaratne, K. L. "'Kandy District Rural Library and Documentation. Scrvices pilot Project'', Treasures of Knowledge, Ed. Ishvari Corea, Colombo Public Library, 1985: p. 250 - 257.
Sharr, F. A. “Functions and Organization of a Rural Library System' UNESCO Bulletin for Libraries, Vol. 26 (1), Jan. - Feb., 1972: p. 1 - 7.
Vaugan, Anthony "The Library as a resource Centre'', Libraries and People, Ed. Ishvari Corea, Colombo Public Library. Commemorative Volume, . 1925 - 1975: p. 208 - 214. O
5

Page 16
2
சிறுவர் நூலகங்கள் - ஒர் அறிமுகமும் வரலாற்று நோக்கும்
அறிமுகம்
"இளமையிற் கல்வி சிலையின் எழுத்து" என்பது நம் ஆன்ருெரின் முதுமொழி. இளஞ் சிறுவர்களின் உள்ளங் களைப் பக்குவப்படுத்தி, சமூகத்தில் நல்லவராகவும், வல்ல வராகவும் வாழத் தகுந்த பாதையைக் காட்டி அறிவா ரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவுவதே சிறுவுர் நூலகங்களின் தலையாய பணியாகும்.
சிறுவர் நூலக வாசகர்களே காலக்கிரமத்தில் வளர்ந்த வாசகர்களாக உருவாகின்றனர். அறிவுத் தேடலுக்கான பாதையின் நுழைவாயில் சிறுவர் நூலகங்களாகும் என்ருல் அது மிகையாகாது. சிறுவர்களின் களங்கமற்ற பிஞ்சு உள் ளங்களில் ஏற்படுகின்ற மாசற்ற கருத்துக்களும் கொள்கை களுமே அவர்கள் வளரும் போது வலுவடைகின்றன.
6

சிறுவர்களின் உள வளர்ச்சியைப் பொறுத்த மட்டில் சகலரும் சரி சமமான நிலையினை ஒரே தருணத்தில் அடைவ தில்லை. அவர்கள் முக்கிய நான்கு பருவங்களைத் தாண்டியே முதிர்ந்த பருவத்தை அடைகின்றனர். பால பருவம், ஆரம் பப் பாடசாலைப் பருவம், காளைப் பருவத்துக்கு முந்திய இடை நிலைப் பருவம், காளைப் பருவம் ஆகியனவே அவை. மேற் குறிப்பிட்ட பருவங்களில் அவர்கள் மனதில் விதைக் கும் எதுவும் பசுமரத்தாணி போலப் பதிந்து விடும். இந்தப் பருவத்தில் நன்மை பயக்கக் கூடிய நூல்களின் தொடர்பை, நூல் நிலையத்தின் தொடர்பை அவர்கள் மனதில் ஏற்படுத் தத் தவறுவோமாயின் வாழ்க்கையின் பிற்காலத்தில் வாசிப் பினல் அடையக் கூடிய நன்மைகளை அவர்கள் பெற வழி காட்டத் தவறியவர்களாவோம்.
தகுந்த தருணத்தில் தகுந்த நூலை, தகுந்த வயதினரி டம் கொடுப்பதே நூல் நிலையத்தின் கடமையாகும். சிறு வர்களின் அறிவு விருத்திக்கும், நல்லொழுக்கத்துக்கும் நல்ல வழிகாட்டலுக்கும் ஏற்ற நூல்களைத் தேர்ந்து அவற்றையும் சிறுவர்களை கவரக்கூடிய நூலுருவிலல்லாத அறிவுச் சாதனங் களையும் ஒருங்கு சேர்த்து ஒரு சிறுவர் நூலகத்தை உருவாக் கித் தருவோமானல் சிறந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான அத்திவாரமிடப்படுவதாகவே அதனைக் கொள்ளலாம்.
சிறுவர் நூலகத்தில் ஒருவன் கற்கும் அறிவியல் நூல் கள் மட்டுமல்லாது அவன் அங்கு கற்கும் நூலக ஒழுங்கு முறைகளும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த பிரஜையாகவும் நல்ல வாசகனகவும் அவன் உருவாக உதவி செய்கின்றன.
இன்று நம் நூலகங்களில் காணும் நூற்களவு, நூல் களுக்கும் பொது உடமைகளுக்கும் ஏற்படுத்தப்படும் சேதம் போன்றவற்றை சிறுவர் நூலகங்களின் ஊடாகத் தவிர்த்து கொள்ள அல்லது குறைக்க முடியும். முறையான வழிகாட் டலையும் நூல்களின்பால் பற்றையும் சிறுவயதில் வளர்ப்ப
7

Page 17
தன் மூலம் மட்டுமே மேற்கண்ட சேதங்களேத் தவிர்க்க முடியும் என்பது உண்மையாகும்.
கடந்த தசாப்தத்தில் (எழுபதுகளில்) கொழும்பில் நடை பெற்ற ஒரு நூற் கண்காட்சியில் நூலகங்களில் சேதமாக் கப்பட்ட பெறுமதியான நூல்களின் கண்காட்சி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக் கண்காட்சியில் சேத முற்ற பல நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பங் கஸ், பூச்சிகள், எலி, மழை நீர், தீ, மனிதன் போன்ற பல காரணிகளால் பாதிக்கப்பட்ட நூல்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன, முதல் ஆறு காரணிகளால் ஏற்படும் பாதிப்பு அதிக சிரத்தை எடுத்தால் தவிர்க்கப்படலாம் என வம் ஏழாவது காரணியிலிருந்து நூல்களைப் பாதுகாப்பது தான் எப்படி என்று தெரியவில்லே என்ற கருத்துடன் சுவை யானதொரு விளம்பரம் அங்கு காணப்பட்டது. மேலும் இத்தகைய கண்காட்சிகளாவது மனிதனில் மாற்றத்தைக் கொண்டுவருமென நம்பலாமா என்றும் ஒரு வினுக்குறிப்புக் கானப்பட்டது.
இத்தகைய கண்காட்சிகளினுல் மட்டும் குறிப்பிடத் தகுந்த பலன்கள் ஏற்பட்டுவிடும் என்பது சந்தேகமே. இன் றும் அதே நூலகத்தில் நூல்களுக்கு மனிதனுல் ஊறு நேர்ந்த வண்ணம் தானே உள்ளது சிறுவர் நூலகங்களின் ஊடாக நூலகர்கள் ஆரம்பக் கட்ட வாசகர்களே வழிநடத்தும் போது திட்டமிட்டுச் செயற்படுவதன் மூலம் உளவியல் ரீதியாக நூல்களின் பால் ஒரு உறவை வலுப்படுத்தி அவர் களால் நூ ல் களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.
வரலாற்று நோக்கு
சிறுவர் நூலகங்கள் நூற்ருண்டுகளுக்கும் மேலான வர வாற்றைக் கொண்டுள்ள போதிலும் அதன் பால் அதிகள வில் அக்கறை செலுத்தப்படாமையால் சிறுவர் நூலக அபிவிருத்தி மந்த கதியிலேயே நடைபெற்று வந்துள்ளது.
 

உலகின் முதலாவது நவீன நூலகம் ஐக்கிய அமெரிக் காவில் பொஸ்டன் நகரில் 1854 ஆம் ஆண்டில் உருவா கிய தென்பது வரலாறு 1878 வரையில் சிறுவர்களுக்கான தனி நூலகமோ, ஒரு பகுதியோ ஒதுக்கப்பட வேண்டு மென்ற சிந்தனே அங்கே ஏற்படவில்லே, நவீன பொது நூலக அமைப்பு ஆரம்பமாகிச் சுமார் 33 வருடங்களின் பின்பு 187 முதல் தான் ஐக்கிய அமெரிக்காவில் பொது நூலக் இயக்கம் பற்றிய சிந்தனேயில் விழிப்புணர்வொன்று ஏற்பட ஆரம்பித்ததெனலாம். பல தனியார் நிறுவனங்கள் மட்டு மல்லாது தனி நபர்களும் பொது நூலகங்களின் பால் அக் கறை காட்ட ஆரம்பித்தனர்! நூலக வரலாற்றில் அன்ரூ கார்னகி (ATdrew Carnegie 1835 - 1919 என்பவரின் பெயர் அழியா இடம்பெற்றதொன்ருகும். பொது நூல்க சிந்தனேயில் அதிக அக்கறை காட்டிய இந்தத் தொழில் அதிபர் 1880 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் மட்டு மல்லாது பிரிட்டன், கனடா போன்ற பல இடங்களிலும் பொது நூலகங்கள் ஸ்தாபிப்பதில் ஆர்வம் காட்டியவர் ஆவார். அதற்காகத் தன தனிப்பட்ட சொத்துக்களேயே நன்கொடையாகக் கொடுத்திருக்கின்றர். இவர் தன து TTYYuDu S KKJ TeT STT TTTTTTMTSLLLHH LLLLLLCLLLLLLL00STT முதலாவது பொது நூலகத்தை ஸ்தாபித்து அளித்தார். அதைத் தொடர்ந்து மொத்தம் 2507 நூலகங்களே ஸ்தா பிப்பதிலும் நிதி உதவி வழங்குவதிலும் முன் நின்று உழைத் தார். தன் சொந்தச் செலவில் ஐக்கிய அமெரிக்காவில் 1889 நூலகங்களேயும், பெரிய பிரித்தானியா, அயர்லாந்து தேசங் களில் 660 நூலகங்களேயும் கனடாவில் 125 நூலகங்களே யும் அமைத்துத் தந்துள்ளார். இவர் நிதி வழங்கிய முறை குறிப்பிடத் தகுந்தது. இலவசமாகவே சகலனதயும் வழங்கி மக்களேச் சோம்பேறிகளாகவும் தேசப்பற்றற்றவர்களாக வும் மாற்றக்கூடாது என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அன்று கார்னகி தான் நிதி வழங்கும் முறை யில் ஆணித்தரமான கொள்கையொன்றினேக் கடைப்பிடித் தார் ஒரு இடத்தில் பொது நூலகம் அமைத்துத் தரவேண்டு மெனில் முன்னுேடியாக அப்பிரதேசத்தின் உள்ளூராட்சி

Page 18
Logir Dub (Municipal Government) sys.sbsitat fia),560.5 வழங்கவேண்டும். அத்துடன் நூல்கள் தளபாடங்களின் பரா மரிப்பிற்காக பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு தொகையை ஒதுக்குவதென்று சட்டமூலம் கொண்டுவரப் படல் வேண்டும். இவை இரண்டும் சாத்தியமாக இருக்கும் பிரதேசத்தில் கார்னகி தன் சொந்த முதலில் நூலகத்துக் கான கட்டிடம் அமைத்து நூல், தளபாடம் போன்றவை யும் கொள்வனவு செய்து கொடுப்பார். இத்தகைய தனி நபர் முயற்சிகளினலும் மக்களின் விழிப்புணர்வினலும் ஐக் கிய அமெரிக்காவில் ஏற்பட்ட நூலக உணர்வு, 1890ஆம் ஆண்டு சிறுவர் நூலகங்கள் உருவாக வழி கோரியது) சிறுவர் நூலகங்கள் என்பதை விட சிறுவர் அறை கள் என்று இவற்றைக் குறிப்பிடுவதே பொருத்தமாகும். நூலகத்தின் ஒரு ஒதுக்குப்புறப் பகுதியை சிறுவர் பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆழமான ஆய்வில் ஈடு படும் முதிய வாசகர்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிக் காத வகையில் இந்த ஒதுக்குப்புறம் தேர்ந்தெடுக்கப்பட்டது 1893-ம் ஆண்டு வரை சிறுவர் பிரிவில் நூல்கள் இரவல் வழங்கப்படவில்லை. 1893 இல் 10 வயதுக்கு மேற்பட்டவர் கள் நூல் இரவல் பெறலாம் என்ற விதி அமுலுக்கு வந்த தும் சிறுவர் நூலகம் தன் பரிமாணத்தில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்து 1910இல் சிறுவர் நூல கங்கள் முழுமைபெற்றன. 1854 இல் பொது நூலகம் உரு வாகியிருந்த போதிலும் சிறுவர் நூலகச் சிந்தனை வலுப் பெற சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டுள்ளது.
1969 இல் ஐக்கிய அமெரிக்காவில் நூலகங்களுக்கான தேசிய ஆலோசனைக் கமிஷன் (National Advisory Commission on Libraries) gair 19 milli, Gio) agu?ái) 52 lálái) Gélu, idir வாசகர்களில் சுமார் 50 - 70 வீதமானேர் இளைஞர்களும் சிறுவர்களும் என்று குறிப்பிட்டுள்ளது. சிறுவர் நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 60 வருடங்களில் அதன் தேவை தவிர்க்க முடியாதது என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
20

இலங்கையில் சிறுவர் நூலக வளர்ச்சி
இலங்கையில் நூலக வரலாறு கி. மு. 103 - 77 ஆண் டுப் பகுதியிலே கோவில் நூலகங்களாக மலர்ந்து விட்ட போதிலும், சந்தா செலுத்தும் நூலகங்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே உருவாகின. 19-ம் நூற்றண்டில் இலங்கையில் முதல் நூலகம் கொழும்பில் உருவாக்கப்பட் டது. 13-ம் ஆண்டு இராணுவத்தினரின் பாவனையின் p5 Éd sub United Services Library 67657 p. g35u Gaf306) is air நூலகமும் 1824 இல் கொழும்பு நூலகமும் 1829 இல் சட் டத்தரணிகள் சிவில் உத்தியோகத்தரின் பாவனைக்காக பெற்ரு நூலகமும் (Pettah Library) ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து இயங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரண் மாக ஐக்கிய சேவைகள் நூலகம், கொழும்பு நூலகத்துடன் 1874இல் இணைந்துகொண்டது. 1874 ஆம் ஆண்டிலிருந்து முதலாம் உலக மகா யுத்தம் வரையிலான காலப்பகுதியில் பின்னைய இரு நூலகங்களும் அரசாங்கத்தின் மானியத்தைப் பெற்று இயங்கிவந்தன முதலாம் உலக மகா யுத்தத்தை அடுத்து இந் த மானியம் நிறுத்தப்பட்டது. பெருமளவு சந்தா நிலுவை காரணமாகவும் மானிய நிறுத்தம் காரண மாகவும் இயங்கமுடியாத நிலையை அடைந்த இரு நூலகங் களும் 1924ஆம் ஆண்டில் “சேர் சந்திரசேகரா நிதியம்" என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் இந்த நிதியத்திடம் இருந்து கொழும்பு மாநகரசபை 1925 இல் மொத்தம் 20.000 நூல்களுடன் இரு நூலகங்களையும் பொறுப்பேற்றது. அன்று முதல் கொழும்பு பொது நூலகம் என்ற பெயரில் இயங்கலாயிற்று.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் 1842 ஆம் ஆண்டில் யாழ். பொது நூலகம் ஆரம்பமாயிற்று. பிரதான நீதிமன்றச் செயலாளர் எஸ். சீ. கிரீனியர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் பெரும்பாலும் சட்டத்தரணிக ளாலேயே பயன்படுத்தப்பட்டது. இன்றைய பொது நூலக அமைப்பு உருவாகியது 1933-ம் ஆண்டில் ஆகும்.
2.

Page 19
இலங்கையில் பொது நூலகம் அமைப்பதில் கொழும்பு முன்னேடியாக இருந்தபோதிலும் சிறுவர் நூலகம் பற்றிய சிந்தனையைச் செயலுருப்பெற வைத்த வகையில் யாழ்ப்பா ணப் பொது நூலகமே அகில இலங்கையிலும் முன்னுேடி யாக இருந்துள்ளது.
கொழும்பில் சிறுவர் நூலகம் 1972-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டு இறுதியில் 468 சிறுவர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர். 12,497 நூல் கள் விநியோகிக்கப்பட்டிருந்தன மும்மொழிகளிலும் சிறு வர் நூல்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் வாராந்தக் கதை நேரங்கள் சிங்கள, தமிழ் மொழிகளில் நடைமுறை யில் இருந்து வந்துள்ளன.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் சிறுவர் பிரிவு தொடர்பான சிந்தனை அறுபதுகளிலேயே மலர ஆரம்பித்து விட்டன. இதற்கு முன்னேடியாக இருந்தவர், அன்றைய யாழ்ப்பாணப் பொது நூலகர் திரு வே. இ. பாக்கியநாதன் ஆவார் ஆய்வின் நிமித்தம் யாழ் நூலகத்தின் சுற்ருட லில் அமைந்த 50 பாடசாலைகளுக்கு ஒரு கேள்விக்கொத்து அனுப்பப்பட்டது. அதற்கான பதிலைப் பொறுப்புணர்வுடன் 34 பாடசாலைகள் அனுப்பியிருந்தன. அதன்படி 1964 இன் நடுப்பகுதியில் யாழ்ப்பாணச் சுற்ருடலில் அமைந்திருந்த பாடசாலைகளில் 5 - 14 வயதுக்கு இடைப்பட்ட வயதின ரில் ஆண்கள் 7040 பேரும் பெண்கள் 7920 பேரும் இருந் துள்ளனர்.
பிள்ளைகளின் வயது ஆண்கள் பெண்கள்
05 - 07 2097 23.59 08 - ll 2820 3062
12 - 14 2 ፤ 23 24.99
7{}40 7920
இந்தத் தரவை அடிப்படையாகக் கொண்டு நூலகர் ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தார். அது 08-10-64 இல்
2. 2

பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் பொது நூலகக் கமிட்டித் தலைவர் திரு. எஸ். சி. மகாதேவா (மேயர்) ஆக இருந்தார்.
ன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக் கான நூலகத்தின் தேவையை நூலகர் சுட்டிக்காட்டியிருந் தார் நூலகத்தின் கீழ் மாடியில் சிறுவர்களுக்கான பிரிவு ஒதுக்கப்பட வேண்டுமென்று கேட்டிருந்தார். இக் கருத் துக்கு திரு. ஏ. ஜி ராஜசூரியர் ஆதரவாக இருந்தார். அவர் தமது உரையில் சிறுவர்களுக்கான நூலகத்தின் அவசி யத்தை மேலும் வலியுறுத்தினர் அந்நிலையில் எஸ். நாக ராஜா என்ற அங்கத்தவர் யாழ்ப்பாணத்தில் சிறுவர் நூல கம் அமைத்தால் அது மேல்வர்க்கக் குழந்தைகளுக்கு மட் டுமே பயன்படுமென்றும் கீழ் வர்க்கக் குழந்தைகளுக்கும் தூரத்தில் இருப்பவர்களுக்கும் பயன் தராதென்றும் கூறி யிருந்தார். நீண்டதொரு கலந்துரையாடலின் பின் தேவைப் படும் நிதி, நிலப்பரப்புப் போன்ற விபரங்களைக் கொண்ட அறிக்கை யொன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும் படி கோரப்பட்டது
அதன் பின் சில முன்னேற்றகரமான நடவடிக்கைக ளின் முடிவில் 12-05-1966 இல் மற்ருெரு நிர்வாகக் குழுக் கூட்டம் நகரபிதா திரு. அல்பிரட் துரையப்பா தலைமையில் நடைபெற்றது. அதில் சிறுவர் நூலக அமைப்புத் தொடர் பான மேலும் சில நடவடிக்கைகள் பற்றித் தீவிரமாக ஆராயப்பட்டது. நிர்வாகக் குழுவின் கணக்கின்படி ரூபா 15,000 வரையில் சிறுவர் நூலகத்துக்குச் செலவாகும் எனவும் அதற்கான நிதி திரட்டும் பணியினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது. ஆசியா பவுண்டேஷன் நிறுவனம் சுமார் 11,000 ரூபா பெறுமதி யான சிறுவர் நூல்கள், தளபாடங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர். துரித கதியில் ந  ைட பெற்ற பல நடவடிக்கைகளின் விளைவாக 1967-ம் ஆண்டு நவம்பர் 3-ம்
23

Page 20
திகதி யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் வடக்குப் பகுதி யில் சிறுவர் நூலகம் திறந்துவைக்கப்பட்டது. சிறுவர்களுக் குத் தனியானதொரு நுழை வாயிலும் அங்கு அமைக்கப்
• انتی ۔انالا
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் சிறுவர் பகுதியின் அமைப்பு பெற்றேர்கள் மத்தியிலும் சிறுவர் மத்தியிலும் பலத்த வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அப்பகுதி துரித வளர்ச்சியைக் காணக்கூடியதாக இருந்தது. 1981 இல் இனவாத உணர்வுகளின் காரணமாக எரியூட்டப்பட்ட தல்ை சிறந்ததொரு சிறுவர் நூலக அமைப்பொன்றை நாம் இழந்து நிற்கின்ருேம்.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் சிறுவர் நூலகப் பிரிவு உருவாகிய காலகட்டத்தில் தமிழ்ப் பிரதேசத்தில் இன்னும் சில நகரை அண்டிய நூலகங்களிலும் இப்பிரிவு அமைக்கப்பட்டது. சிறுவர் நூலகம் பற்றிய போதிய கருத்து வளர்ச்சி பெற்றிருமையாலும் இடப் பிரச்சினை, போதிய நூல் வசதியின்மை போன்ற நடைமுறைச் சிக்கல்களாலும் சிறுவர் நூலகங்கள் சிறந்த முறையில் அபிவிருத்தி காண முடியாதுள்ளதை இன்றும் காண முடிகின்றது.
தமிழ்ப் பிரதேசங்களில் சிறுவர் நூலகங்கள் எதிர்நோக் கும் பிரச்சனைகளை அடுத்த கட்டுரையில் ஆராய்ந்துள்ளோம்
兴 兴 兴 இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவை. 1. குலரத்தினம், க. சி. "சிறுவர் நூலகச் சிந்தனை முகிழ்ந் தது.”(யாழ்ப்பாணப் பொதுசன நூல்நிலையம், தொடர் 26) ஈழநாடு, 17-08-82.
2. செல்வராஜா, என். *சிறந்த பிரஜைகளை உருவாக்கும்
சிறுவர் நூலகங்கள்." சஞ்சீவி, 23-7-88: ப. 4.
24

Kularatne, Tilak “FHistory of Libraries in Sri Lanka’’’ Libraries and People, Ed. Ishvari Corea. Colombo Public Library, 1975; p. 194 - 202.
Lankage, Jaya siri “Library Movement in Sri Lanka”, Roads to Wisdom, Ed. Ishvari Corea, Colombo Public Library, 1980: p. 31 - 42.
Piyasena, R. H. M. “Reading a heritage and a right of man', Treasures of Knowledge, Ed. Ishvari Corea, Colombo Public Library, 1985: p. 293 - 296.
Wall Josesh F. “Carnegie, Andrew' Collier's Encyclopiedia, 1974, Vol. 5: p. 459 - 461.
25

Page 21
3
தமிழ்ப் பிரதேசங்களில் சிறுவர் நூலகங்களும் அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளும்
இலங்கையில் சிறுவர்களுக்கான நூலக சேவையை மூன்று வகையான ஸ்தாபனங்கள் வழங்குகின்றன. அவை Ei Iial 637 -
1. பொது நல சமூக ஸ்தாபனங்கள்.
2. நகர, மாநர, பிரதேசசபைகளின் கீழ் இயங்கும் பொது
நூலகங்கள்.
3. அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் என்பனவாகும்3
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பொதுநல (தர்ம) ஸ்தாபனங்கள் என்ற வகையில் முக்கிய இடத்தினை வகிப் பது இலங்கைத் தேசிய சர்வோதய சிரமதானச் சங்கமா கும். 1979-ம் ஆண்டு சர்வதேச சிறுவர் ஆண்டாகப் பிர கடனப் படுத்தப்பட்டதையடுத்து, சர்வோதயச் சங்கம்
26

யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் நாடெங்கிலும் சிறுவர் நூலகங்களைக் கிராம மட்டத்தில் நிறுவியது. வட, கிழக்குப் பகுதியில் சர்வோதய மாவட்ட நிலையங்களினூடாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது இப்பிரதேசங்களில் சிறுவர் நூலகங்கள் பல அமைய இது வாய்ப்பாயிற்று. சர்வோதய கிராமோதய நிலையக் கட்டிடங்களில் சிறுவர்களுக்கான நூலகங்கள் அமைக்கப்பட்டு படிப்படியாக கிராம மக்களின் ஒத்துழைப்புடன் வளரவாரம்பித்தன.
தமிழ்ப் பிரதேசங்களில் பொது நூலகங்களில் சிறுவர் பகுதியானது அறுபதுகளிலேயே ஆரம்பமாகியுள்ளதற்கான சான்றுகளை முன்னைய கட்டுரையில் கண்டோம். யாழ்ப் பாண்ப் பொது நூலகத்தில் தான் சிறுவர்களுக்கெனத் தனி யானதொரு பகுதி அதிக வசதிகளுடன் 1967இல் தொடங் கப்பட்டது. அதேவேளை மற்றைய நூலகங்களில் சிறுவர் களுக்கான பகுதியென சிறிய அளவில், ஒரு தொகுதி நூல் கள் மட்டும் வளர்ந்தோருக்கான பிரிவிலிருந்து வேறு படுத்தி வைக்கப்பட்டு சிறுவர்களின் பார்வைக்கென மிகுந்த கண்காணிப்புடன் வழங்கப்பட்டு வந்துள்ளன. சிறுவர்களைக் கவரவேண்டும் என்ற ஆர்வமோ, புதிய வாசகர்களை ஊக்கு விக்க வேண்டுமென்ற அவாவோ அங்கு காணப்பட்டதா கத் தெரியவில்லை. தேடி வருவோர்க்கு மட்டும் நூல்களை வழங்குதல் என்ற கொள்கையினை அன்று பெரும்பாலும் அனேகமான நூலகங்கள் கடைப்பிடித்து வந்துள்ளன. சுமார் 25 வருடங்களுக்குப் பின்பு இன்றும் இக் கொள்கை நடைமுறையில் இருந்து வருவதைக் கண்கூடாக நாம் காண முடிகின்றது.
1945-ம் ஆண்டில் இலங்கையில் இலவசக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டில் பாடசாலை நூலகங்கள் தொடர்பான முதலாவது சட்டம் ஆக்கப்பட் டது. 1967-ல் இலங்கையின் கல்வி நூற்ருண்டு நிறைவை யொட்டி நாடெங்கிலும் 100 புதிய பாடசாலை நூலகங்கள்
27

Page 22
நிறுவப்பட்டன. இது படிப்படியானதொரு வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. 1970-ம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டதொரு கணக்கெடுப்பில் 700 பாடசாலை நூலகங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1982-ல் மேற்கொள் ளப்பட்ட மற்ருெரு கணக்கெடுப்பில் இத்தொகை 3800 ஆக அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. இலங்கையின் பாடசாலை நூலக வளர்ச்சியின் வேகத்தை இக் கணிப்பில் இருந்து மதிப்பிட முடிகின்றது.
எமது பிரதேசத்தைப் பொறுத்த வரையில் பாடசாலை நூலகங்களின் அதிகரிப்பு வீதத்திற்கேற்ப அதன் சேவைத் தரம் வளர்ந்துள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டிய வர்களாகவுள்ளோம். நடைமுறையில் பல பாடசாலை நூல கங்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. நூல்கள் இருப் பினும் அவை மூடப்பட்ட அலுமாரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பல நூலகங்களில் இரவல் பெறுவ தென்பது மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இதற்கு அடிப்படையானதொரு காரணம் பாடசாலை நூல கங்களில் நூல்கள், அங்கிருக்கும் தளபாடம். பொருத்துக் கள் போன்று நிலையான சொத்துக்களாகப் பதியப்பட்டிருப் பதாகும். இன்வென்டரி ஐட்ட்ம்" என்ற மதிப்பு இங்கு நூல்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதால் அவை தொலையா மல் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்குட்படுகின் றன. பல பாடசாலை அதிபர்கள் தமது இறுதிக்காலத்தில் ஓய்வூதியம் பெறும்போது சிக்கல்களை எதிர்நோக்க விரும் பாமையால் நூலகங்களை அபிவிருத்தி செய்ய விரும்புவ தில்லை. இது ஒரு கசப்பான உண்மையாகும்
இன்று பாடசாலை நூலகங்களின் சேவை புதியதொரு கண்ணுேட்டத்தில் நோக்கப்பட வேண்டியுள்ளது. தற் போதைய கல்வித்திட்ட முறை, நூலகங்களை நாடி மாண வர்களைப் படையெடுக்க வைப்பதாக அமைகின்றது. பாட சாலை நூலகங்கள் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய் யத்தக்க அளவில் வளர்ந்திராத காரணத்தினுல் மாணவர்
28

கள் பொது நூலகங்களையும் சிறப்பு நூலகங்களையும் நாடிச் செல்ல வேண்டியுள்ளது.
சிறுவர் நூலகங்கள் எமது கிராமப் புறங்களில் இல் லாத காரணத்தால் பாடசாலை நூலகங்களே சிறுவர் நூல கங்களின் சேவையினையும் பொறுப்பேற்க வேண்டிய நிலை யில் உள்ளன. பாடசாலைக்குரிய பாட விதானத்துடன் மட் டும் தன் சேகரிப்பை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் சிறு வர்களின் பொதுவான வாசிப் புப் பயிற்சிக்கேற்றதும் பொழுது போக்கு அம்சங்கள் கொண்டதுமான சிறுவர் இலக்கியங்களையும் ஒரு பாடசாலை நூலகம் கொண்டிருத் தல் வேண்டும்.
அண்மைக்காலத்தில் வட மாகாணத்தில் குறிப்பிட்ட கல்வி வட்டாரமொன்றில் பாடசாலை நூலகம் தொடர் பான ஆய்வொன்று பல்கலைக்கழகத் தேர்வின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்டது. சில பாடசாலைகளில் இயங்கும் நூலகங்களில் இலக்கியச் சஞ்சிகைகள் கொள்வனவு செய் யப்பட்டபோதிலும் சிறுவர்களுக்கான சஞ்சிகைகள் மிகக் குறைந்த வீதத்திலேயே இருந்தமை அங்கு சுட்டிக்காட் டப்பட்டிருந்தது சஞ்சிகைகள், பாடசாலை ஆசிரியர்களுக்கு மட்டும் உரியதாக சில இடங்களில் கருதப்பட்டிருந்தன. பல்வேறு சிறுவர் சஞ்சிகைகள் இன்று சந்தையில் உள்ளன. அம்புலிமாமா, இரத்தினபாலா, பாலமித்ரா, அர்ச்சுணு போன்ற பல சஞ்சிகைகளைப் பாடசாலை நூலகங்களில் பயன் படுத்தலாம் அவை கவனத்திற் கெடுக்கப்படாதிருப்பது ஆரோக்கியமானதன்று.
சிறுவர்களின் ஆரம்பக் கல்வியை மட்டுமன்றி, சமூகத் தில் சிறந்ததோரு அறிஞனக அவனை மற்றுவதற்குரிய அடிப்படை அறிவு சார் நடவடிக்கைகளையும் ஒரு பாடசாலை நூலகம் மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறுவனச் சிறந்த வணுக்கி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவன் செல்லும் வரை அவனை நூலக உணர்வுடன் வழிநடத்திச் செல்லவும், வழிகாட்டி விடவும் வேண்டிய முக்கிய பொறுப்பினை அது ஏற்றுக்கொள்ள வேண்டும். வெறும் காகிதக் கல்வியுடன்
29

Page 23
மட்டும் நின்றுவிடாது வாழ்க்கைக்கான கல்வியைத் தேடிப் பெற அவனுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பது பாட சாலையின் சமூகப் பொறுப்பாகும்.
இன்று பாடசாலை நூலக அமைப்பு, எமது பிரதேசங் களில் அபிவிருத்தி அடைவதில் காணப்படும் மந்தகதிக்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
1. கெர்ள்வனவுக்கான நிதிப்பற் 7 க்குறையும் கொள்வனவு செய்யப்படும் காலத்தில் போதிய சிறுவர் இலக்கியங் கள் சந்தையில் இல்லாதிருப்பதும்.
2 நூலகப் பயிற்சி பெற்றவர்களைப் பாடசாலை நூலகங்
களுக்கு நியமிக்காமை.
இவற்றில் முதலாவது காரணம் எத்துறையிலும் கூறப் படுவதுதான். இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் நூலகத்துறைக்கு அரசினல் வழங்கப்படும் நிதி, மற்றைய துறைகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே. பயன்பாட் டைப் பணப் பெறுமதியில் அளவிடமுடியாத துறை இது வாகும். சமூகத்தில் சிறந்த பிரஜைகளை உ ரு வா கும் சேவையை இது வழங்குகின்றது. இத்துறைக்குத் தரப் படும் முதலீடானது வர்த்தகத்துறை போன்று லாபமீட் டாது. எனவே வெள்ளை யானைக்குத் தீனி போடுவது போல இத்துறைக்கு மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடும் வரவில் லாச் செலவாகக் கருதப்படுவதால் நிதிப் பற்ருக்குறை என். றும் நிலவப் போகும் ஒரு தொடர்கதைதான் பெற்றேர் ஆசிரியர் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் சமூக நல ஸ்தாபனங்கள் போன்றவற்றின் உதவியுடன் நிதிப் பிரச்சினையைத் தர்க்கலாம்.
கொள்வனவு செய்யப்படும் காலத்தில் சந்தையிலே போதிய நூல்கள் இல்லாமல் இருப்பது என்ற பிரச்சினையை திட்டமிடப்பட்ட நூற்கொள்வனவின் மூலம் நாம் வெற்றி
30

கரமாக எதிர்கொள்ளலாம். பொதுவாகப் பாடசாலை நூல கங்களுக்கான நூற கொள்வனவு ஆசிரியர்களாலே மேற் கொள்ளப்படுகின்றது பாடசாலை நூலகரையோ , அல்லது அண்மையில் உள்ள ஒரு நூலகரையோ கலந்து ஆலோசனை பெறுவதில்லை. இத்தகைய கலந்துரையாடல் அண்மையில் வெளிவந்த சிறுவர் இலக்கியங்கள், சிறந்த நூல்கள் பற்றிய தகவலைக் கொள்வனவு செய்ய நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழுவுக்கு வழங்கும். மேலும் சிறுவர் இலக்கியங்கள், தமி ழில் போதிய அளவு வெளிவந்திராமையால் ஒரே தடவை யில் முழுப் பணத்துக்கும் அகப்படும் நூலைக் கொள்வனவு செய்யாமல் அத்தொகையை வருடத்தின் மூன்று, நான்கு தடவைகளில் பிரித்துக் கொள்வனவு மேற்கொள்ளலாம்.
மந்தகதிக்குக் காரணமெனக் குறிப்பிட்ட இரண்டா வது விடயம், அரசினல் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நியமனங்களின் மூலம் ஒரளவுக்குத் தீர்க்கப்படும் என நம்பலாம். மேலும் நூலகப் பயிற்சி பெற்று வேலையற்றிருக் கும் பலர் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளனர். பாடசாலைக ளில், சேவைக் கட்டண வேதனத்தில் இவர்களைச் சேவைக் கமர்த்துவதன் மூலம் தற்காலிகமாகவாவது இப்பிரச்சினை யைத் தீர்த்து வைக்கலாம். சேவைக் கட்டண வேதனம் மிகச்சிறிய தொகையான போதிலும், தேவைப்படும் அனு பவத்தின் பொருட்டு நூலகவியல் மாணவர்கள் இப்பத வியை ஏற்றுக்கொள்வர். சில பாடசாலைகளில் நூலகங் களில் பழைய மாணவர்களைத் தொண்டர் அடிப்படையில் நியமிக்கும் பாரம்பரியம் ஒன்றுள்ளது. இத்தகைய மாண வர்களை அண்மையில் உள்ள நூலகமொன்றில் கிறிதுகாலம் தொழிற் பயிற்சிக்கென அனுப்பி வைத்து நூலகப் பயிற் சியை ஒரளவாவது பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கலாம்.
பொது நூலகமொன்றில் சிறுவர் பிரிவு திறமையாக இயங்க முடியாமைக்கு வேறு சில காரணிகள் உள்ளன. 1. சேவைக்கெனப் போதிய வாசகர்கள் இன்மை, போதிய
நிதி வசதியின்மை.
2. சிறுவர் பிரிவுக்கென நியமிக்கப்படும் நூலகப் பணியா ளர் அத்துறையில் பயிற்சியற்றவர்களாகக் காணப் படுதல்.

Page 24
3. மற்றைய நாளாந்த வேலைகளில் ஒரு கிறு பங்கே ஒரு நூலகர் சிறுவர் பகுதிக்கெனச் செலவிடுவதால் சிறுவர் பிரிவில் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாமை.
மேற்கூறப்பட்ட காரணிகள் ஒரளவு நியாயமாகப் பட்டபோதிலும் நூலகர்கள் சிறுவர் நூலகங்களைத் தமக்கு இருக் ம் வசதிக்கேற்பத் திறமையாகவும் புத்திசாலித் தன மாகவும் திட்டமிட்டு நடாத்துவதால் சிறுவர் நூலகத்தின் நோக்கத்தை அடையும் திசையிலாவது தமது சிறுவர் பகுதி களைக் கொண்டுசெல்ல முடியும் அல்லவா?
ஒரு சிறுவர் நூலகத்தின் அடிப்படை நோக்கம், நல்ல வாசகர்களை உருவாக்கலும் அதற்கான வழிகாட்டலும் ஆகும். நல்ல நூல்களை வழங்கி அவர்களுக்கு வாசிப்பின்பால் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்திவிட்டால் பின்னர் சிறுவர்கள் தமக்கத் தேவையானவற்றை எப்படியாவது பெற்றுக் கொண்டு விடுவார்கள். குழந்தைகளின் வாசிப்பினை நெறிப் படுத்தலில் நூலகர் கவனம் செலுத்தல் வேண்டும். ஓர் ஒழுங்கு முறையினை சிறு வாசகர்கள் பின்பற்றப் பயிற்றுதல் அவசியம். இது அவர்களைப் பக்குவப் படுத்தும் முயற்சியா கும். தன்போக்கில் ஒரு சிறுவன் வாசித்துப் பழகினல் நல்ல இயல்புகள் உண்டாகாது போகலாம் சிறுவர்களின் விருப்பு வெறுப்பினை நன்கு அறிந்து, அவர்கள் மனதில் மாறுதல் உண்டாகும் பருவத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற நூலை வழங்கவேண்டும். நடைமுறையில் இது கடினமானதொன் ருகும். சிறு வாசகர்களுடன் நெருங்கிய உறவை வளர்ப்ப தன் மூலமே இது சாத்தியமாகும் ஒருவருக்குச் சிறு வயதில் நூலகங்களின்பால் ஏற்படும் ஈடுபாடு அவருக்கு வாழ்நாள் முழுவதும் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
சிறுவர்களுக்கு வாசிக்கும் ஆர்வம், அவர்களது விளை யாட்டுப் பருவம், விளையாட்டின் மேலுள்ள ஆர்வம் அடங்
கியபின்தான் வருகின்றதென்ற ஒரு கருத்து நம்மிடையே
32

யுள்ளது.இது தவருன கருத்தாகும். தனது ஆருவது வயதில் சிறுவன் ஒருவன் நூலகத்துக்கு நுழைகின்றன். சுமார் எட்டு வருடங்களின் பின் நிறைய விடயங்களைக் கற்றறிந்தவனுக ஒரு இளைஞனுக - அவன் வெளியேறுகின்றன். அப்போது கூட அவன் விளையாட்டின் பால் மோகம் கொண்டவனுக இருக்கக்கூடும். சிறுவர்களுக்கு வாசிப்பில் ஏற்படும் ஆர்வத் திற்கும் விளையாட்டில் ஏற்படும் ஆர்வத்திற்கும் இடையே தொடர்பேதும் இல்லை.
தமிழில் சிறுவர் நூல்கள் போதிய அளவு வெளிவருவ தில்லை என்பது மற்ருெரு கருத்தாகும். இது ஓரளவு உண் மையாக இருந்தபோதிலும் சிறுவர் நூலகர்கள் இந்தக் கு  ைற  ைய வித்தியாசமானதொரு கண்ணுேட்டத்தில் அணுகவேண்டும். நூல்கள் மட்டும் தான் சிறுவர்களுக்கான அறிவு சாதனங்களா? எத்தனை மாத சஞ்சிகைகள், சிறுவர் களுக்காக வெளிவருகின்றன? பத்திரிகைகளில் சிறுவர் பகு திகள் வெளிவருகின்றன. வெட்டிச் சேகரித்து வழங்கலாம். வானெலியில், தொலைக்காட்சியில் வரும் சிறுவர் நிகழ்ச்சி களை முன்கூட்டியே அறிந்து சிறுவர்கள் அவற்றைக் கேட் கவும் பார்க்கவும் வ ச தி செய்து தரலாம். அதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டியை நூலகத்தில் கொள்வனவு செய்து வைக்கவேண்டும் என்பதில்லை. சிறுவர் பகுதியில் ஒரு சிறு விளம்பரப்பலகையை வைத்து அதில் அந்த வாரத் தில் சிறுவர் நிகழ்ச்சிகளை முடிந்தவரை எழுதி வைக்கலாம்.
சிறுவர்களில் சிலருக்கு வித்தியாசமான சில குணுதி சயங்கள் இருக்கலாம். சிலரால் சத்தமிட்டு வாசித்துத் தான் கிரகித்துக்கொள்ள முடியும். சிலர் தனியாக இருந்து வாசிக் கச் சிரமப்படுவர். குழு நிலை வாசிப்பை விரும்புவர். இத் தகைய வாசகர்கள் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்க விரும்புவர். சிறுவர் நூலகங்கள் இரவல் வழங்கும் நூலகங்களாக இருக்கவும் வேண்டும் என்ற கருத்து இங்கு குறிப்பிடத் தகுந்தது.
S3

Page 25
சிறுவர் நூலகங்களில் காலத்துக்குக் காலம் ஓவியக் கண் காட்சி திரைப்படக் காட்சி, ஒலிப்பதிவு நிகழ்ச்சிகளுக்குச் செவிமடுத்தல், சிறுவர் நூற் கண்காட்சிகளை அமைத்தல் போன்ற பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத் தல் வேண்டும். இந்த மாறுதல்கள் நூலகத்தை நாடிவரும் புதிய வாசகர்களுக்கு ஒரு மாறுதலாக அமையும்.
கட்புல, செவிப்புல சாதனங்கள், அர்த்தமற்ற சொற் களைக் குறைத்து எண்ணக் கரு ஏற்படத்தக்க அடிப்படையை அமைத்துத் தருகின்றது. மாணவர் மத்தியில் கூடிய கவர்ச் சியை ஏற்படுத்துகின்றது. சுயமாக இயங்கத் தூண்டும் ஓர் அனுபவத்தைத் தந்து ஆக்கமுறைக் கற்றலை நிரந்தரமாக்கு கின்றது திரைப்படக் காட்சிகள் தொடர்ச்சியான எண் ணத்தை ஏற்படுத்துகின்றன. விளக்கம் எழுதப்படாத சுவ ரொட்டிகள் சிறுவர்கள் மனதில் பல்வேறு சிந்தனை களைத் தோற்றுவித்துச் சிந்தனைப் பரப்பை அதிகரிக்கின்றது. திரைப்படக் காட்சிகளுக்குப் பின் கருத்தரங்குகளும் கலந் துரையாடல்களும் பயனளிக்கும் மேலும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தும்,
சிறுவர் நாடகங்களை நடிக்கச் செய்தல், அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளின் சிறுவர் நூலகச் செயற்றிட்டங் களில் இப்போது புதியதொரு விடயமாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. பலருடன் இணைவதற்கும் அந்நியத் தன் மையை மறையச் செய்வதற்கும் நூலகங்களில் நாடகப் பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. பாடசாலை நூல கங்கள் மற்றும் பொது நூலகங்களின் சிறுவர் பிரிவுகள் தமக்கு அண்மித்த பாடசாலைகளின் உதவியுடன் இத்தகைய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். எமது பிரதேசங் களில் சிறுவர் நூலகங்களுக்கான திட்டமிடப்பட்ட கட்டிட வசதி குறைவாகவேயுள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் பிரதேசங்களில் இருப்பதைக் கொண்டு சிறப்புற வாழும் வாழ்க்கை முறைக்கு எம்மைப் பழக்கியாக வேண்டும்.
அதற்காக வசதிகளை நாடிப் பெறமுயலத் தேவையில்லை
34

என்பதல்ல. வசதியில்லை என்பதால் முயற்சி எதுவும் செய்
யாமல் இராது, முடிந்த வரை இருக்கும் வசதிக்கேற்ப நமது திட்டங்களை நடைமுறைப்படுத்திச் செல்லல் பயனுள்ளது.
சிறுவர்களுக்கான நூல் தட்டுகளில் அடுக்கப்படும் முறை யில் பிரச்சினைகள் தோன்றுவது இயல்பு. பொதுவாக எமது நூலகங்களில் தூயி தசாம்சப் பகுப்பு முறையே பின்பற்றப் படுகின்றது. சகல நூல்களுக்கும் அம்முறை பின்பற்றப்படு வதால் சிறுவர் நூல்கள் பகுப்பாக்கம் செய்யப்படும்போது நீண்ட இலக்கங்கள் சிறுவர்களைக் குளப்பத்தில் ஆழ்த்தும். மேலும், சிறுவர் தாம் விரும்பும் நூலைத்தட்டில் தேடி எடுக் கும்போது ஏற்கெனவே அடுக்கியிருக்கும் இலக்க ஒழுங்கு குலையும். அது நூலகருக்கு மேலதிக வேலையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க சிறுவர் நூல்களின் பகுப்பாக்கத்தினை வேறு விதமாகத் திட்டமிடுவது பற்றிச் சிந்திக்கலாம்.
நூல்களின் பிரதான வகுப்புக்கள் பத்தாகும். அந்தப் பத்துப் பிரிவுக்கும் பத்து நிறங்களைத் தெரிவு செய்து அந்த நிறத் தாளை நூலின் முதுகுப் புறத்தில் ஒட்டி விட்டால் நூல்களை மீள வைப்பது இலகுவாகும்.மிகவும் நுணுக்கமான பகுப்பு முறை சிறுவர் நூல்களைப் பொறுத்த வரை அவசிய மற்றது.
பெல்ஜியம் நாட்டுச் சிறுவர் நூலகங்களில் ஒரு முறை அமுலில் உள்ளது. சிறுவர்களின் வயதையும் அறிவையும் பொறுத்து ஒரு நிறம் வழங்கப்படுகின்றது. உதாரணமாக 6 வயதுக்கும் 8 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவருக்கு வழங்கப் படும் வாசகர் அட்டையில் பச்சை நிறம் பூசப்பட்டிருக்கும். நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் தட்டில் பார்க்கையில், அங் கிருக்கும் நூல்களில் 6 வயதுக்கும் 8 வயதுக்கும் இடைப்பட் டவர்களுக்கான் நூல்களில் (பாலர் நூல்கள்) அதே நிறம் கொண்ட லேபல்கள் முதுகுப் புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் அங்கத்தவர்கள் தமது அட்டையில் குறிக்கப்பட்டிருக்கும். நிறத்தைக் கொண்ட நூலை இலகுவில் தெரிந்தெடுத்துச்
35

Page 26
செல்வர். இங்கு சிறுவர்களுக்கான நூல்கள், வகுப்பு வாரி யாக ஒழுங்கு படுத்தப்பட்டிருக்சவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
வேறெந்த நூலகத்தினையும் போன்றே, சிறுவர் நூலகங் களிலும், நூலகங்களிலுள்ள சிறுவர் பிரிவுகளிலும் அவற் றின் நாளாந்த நிர்வாகத்திலும், நடைமுறையிலும், பிரச் சினைகளும் சிக்கல்களும் தோன்றுகின்றன.அவற்றைத் திட்ட மிட்டு பொறுமையுடன் எதிர் கொள்வதன் மூலம் எதிர் காலத்தில் சிறந்ததொரு சிறுவர் நூலகத்தை கட்டியெழுப்பு வோமாக. s
景 兴 海
இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவை.
1. கொறயா, ஈஸ்வரி, “இலங்கையில் பொது நூலக. சேவை - புதிய கண்ணுேட்டம்' அறிவின் பாதையிலே, கொழும்பு, பொது நூலகம், 1980 ப. 253 - 262.
2. செல்வராஜா, என். “சிறந்த பிரஜைகளை உருவாக்கும் சிறுவர் நூலகங்கள்", சஞ்சீவி, 23-7-1988: ப. 4,
3. பாலசுந்தரம்,விமலாம்பிகை. கல்வி நிறுவன நூலகங்கள் ஆனக்கோட்டை, அயோத்தி நூலகசேவைகள் 1987.
4. Children's Libraries in United States', Colliers
Encyclopaedia, 1974. Vol. 14.
5. Silva, Manel “Planning a Children’s Library’’ Journal of Ceylon Library Association, Vol. 1 (2). July - Dec., 1962: p. 22 - 27.
6. Vargha, Balazs, 'New Trends in Chidren's Libraries in Hungery', UNESCO Bulletin for Libraries, Vol. 21 (1), Jan. - Feb., 1967. ܀
36

4.
பாலர்களுக்கான நூல்களையும் பிற அறிவியல் சாதனங்களையும் தயாரித்தல்
எமது பிரதேசங்களில் கிராமக் குடும்பங்களில் குழந் தைகளுக்குத் தேவையான அறிவியல் சார்ந்த வழிகாட்டல் காணப்படுவதில்லை. நகரம், நகரம் சார்ந்த பிரதேசங்களில் பாலர் பள்ளிகள், குழந்தைகள் நாளாந்தக் கவனிப்பு நிலை யங்கள் போன்றனவும், சில நூலகங்களில் அமைந்திருக்கும். சிறுவர் பகுதிகளும் இப் பிரதேசத்தில் சிறுவர்களுக்கான அறிவியல் ரீதியான வளர்ச்சியில் ஓரளவு அக்கறை செலுத்தி வரினும் பரவலாக இத்தகைய அமைப்புக்களைக் கிராமங்க ளில் காண முடிவதில்லை என்பது வெளிப்படையானது. நக ரச் சுற்ருடலில் காணப்படும் பாலர் பள்ளிகளில் எண்ணிக் கையிலும் பார்க்க சனத்தொகையில் எள்ளளவும் குறைவு படாத ஒரு கிராமத்தில் காணப்படும் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றன.

Page 27
கிராமக் குடும்பமொன்றில் குழந்தைகளுக்காக ஒரு நூலைவாங்கிக் கொடுக்கக்கூடிய பொருளாதார நிலையை அல்லது ஆர்வத்தைப் பெற்றேரிடம் காணமுடிவதில்லை. பல குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
மத்திய தரப் பொருளாதார நிலையில் உள்ள ஒரு குடும்
பத்தில் ஒரு புதினப் பத்திரிகை வாங்கப்பட்டாலும், குழந்
தைகள் அதைப் பாவிப்பதற்கு அனுமதிக்கப்படுவது அரிது. குழந்தை பத்திரிகைக்கு ஊறு விளைவிக்கும் என்பதும் அப் பத்திரிகையைப் பார்ப்பதால் குழந்தையின் அறிவு வளர்ச்சி யில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதும் அவர்களது பொதுவான கணிப்பாக உள்ளது. இதனுல் பத்திரிகை,
சஞ்சிகைகளுடனுன தொடர்பை குழந்தைகள் ஏற்படுத்து
வதைப் பெற்றேர் ஊக்குவிப்பதில்லை.
இலங்கையில் கிராமங்கள் தோறும் இயங்கிவரும் பாலர் பாடசாலைகள், குழந்தைகள் நாளாந்தக் கவனிப்பு நிலையங் கள், சிறுவர் நூலகங்கள் ஆகியவை தொடர்பான ஆய்வை 1980 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் "இலங்கைத் தேசிய சர்வோதய சிரமதானச் சங்கம்” (மொரட்டுவை) மேற் கொண்டிருந்தது. குழந்தைகளுக்கான நிலையங்களில் பயன் படுத்தப்பட்டு வந்த அறிவு சாதனங்களின் தரம் பற்றிய ஆய்வே அதுவாகும். அவ்வாய்வின் முடிவுகள் 1980 ஆம் ஆண்டு ஐப்பசி 4, 5 ஆம் திகதிகளில் நடைபெற்ற கருத் தரங்கில் முன்வைக்கப்பட்டன. அவற்றில் காணமுடிந்த சில அம்சங்களாவன.
1. குழந்தைகளுக்கான நூல்கள் அவற்றின் தரத்திலும்
கூடிய விலையைக் கொண்டுள்ளன.
2. பெரும்பான்மையான குழந்தைகள் நாளாந்தக் கவ னிப்பு நிலையங்களும், பாடசாலைகளும், நிதிவசதியின் மையால் அவற்றைக் கொள்வனவு செய்யமுடியாத நிலையில் இருக்கின்றன.
38

3. அறிவு சாதனங்களைக் கொண்டிருந்த கு. நா. க. நிலை யங்கள் பல அவற்றைப் பூரணமாகப் பயன்படுத்த முடி யாது உள்ளன. எமது கிராமச் சூழலுக்கு ஏற்ற வகை யில் அந்த நூல்கள் அமையாது, கிராமிய ஏழைக் குழந்தைகளின் மனதில் பல்வேறு கற்பனைகளையும், பொருத்தமற்ற வாழ்க்கை முறைகளையும் புகுத்தி ஒழுங் கான சிந்தனைத் தூண்டலுக்குத் தடையாகவுள்ளன.
4. குழந்தைகளுக்கான பல நூல்களில் கணிசமானவை கற்பனைக் கதைகளையே விபரிப்பனவாகவும், அறிவியல் சிந்தனைகளைக் குழந்தைகளின் மனதில் தோற்றுவிக்கும் தன்மையற்றதாகவும் அமைந்திருக்கின்றன. •
5. சிறுவர் நூலகம் என்ற பெயரில் தனியானதொரு அமைப்பு எமது கிராமங்களில் காணப்படாவிடினும் பொது நூலகங்களிற் சில, சிறுவர் பிரிவுகளைக் கொண் டுள்ளன. அங்குள்ள நூ ல் களி ல் பெரும்பான்மை யானவை வளர்ந்தோர் நூல்களாகவே காணப்படுகின் றன. வாசிப்பதில் ஆர்வமும், பழக்கமுமுடைய ஒரு சிறுவன் அங்கு சென்று தன் அறிவை வளர்க்க உதவக் கூடியதாகவே சிறு வர் நூலகங்கள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. புதியதொரு வாசகனை உருவாக்கும் சக்தி யற்றதாகவே அதிகமான சிறுவர் நூலகங்கள் காணப் படுகின்றன.
இன்று எமது சிருர்களுக்குத் தேவையானவை சிந்தனை ஒபளர்ச்சிக்கு வழிகாட்டும் சிறுநூல்களேயாகும். அவை கற் பனைக் கதைகளாக மட்டுமே இருக்கவேண்டுமென்பதில்லை, ஒரு சிறு அறிவியல் தகவலாகவும், அதைக்கூறும் வழிமுறை யில் கற்பனைக் கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டு மெருகூட் டப்பட்டதாகவும் இருக்கலாம்.
மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் நாம் எதிர் காலத்தில் கிராமிய ரீதியில் கூட்டு முயற்சியுடனும்,முழு மூச்
சுடனும் செயற்பட வேண்டியவர்களாகவுள்ளோம். எமது
39

Page 28
சூழலில் பெறக்கூடிய தகவல்களையும், மூலப் பொருட்களை யும் பயன்படுத்தி எமது குழந்தைகளுக்கென்று நாமே நூல் களையும் பிற இலகுவான எளிய முறையில் அமைந்த அறிவு சாதனங்களையும் கையெழுத்துப் பிரதியாகவே தயாரிக்க முயலலாம். இம்முயற்சியின் மூலம், YA
1. குறைந்த செலவில் நூல்கள் மற்றும் அறிவு சாத
னங்களைக் குழந்தைகளுக்கு வழங்கலாம்.
2. கிராம வளங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கு
விக்கலாம்.
3. குழந்தைகளுக்கு, சுற்ருடலுடன் இணைந்து வள
ரும் அறிவு வளர்ச்சியை வழங்கலாம்,
4. கிராமங்களில் "இலைமறை காய்"களாக இருக்கும் திறமைமிக்க கலைஞர்களின் சேவையினைப் பூரண மாகப் பெறலாம். அதனல் இவர்கள் வெளியுல கிற்கு அறிமுகமாவதற்கானதொரு வாய்ப்பினையும் அளிக்கலாம்.
பாலர் பாடசாலைகள், சிறுவர் நூலகங்கள் ஆகியவற்றை மைய நிலையமாகக் கொண்டே கிராம மட்டத்தில் குழந்தை களுக்கான நூல் தயாரிப்புப் பணியை ஆரம்பிக்கவேண்டும். கிராமத்தில் உள்ள ஒவியர்கள், பாலர் கல்வி ஆசிரியர்கள், ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள், நூலகர்கள், சமூக நலன் விரும்பிகள் போன்ருேர் கொண்ட ஒரு குழுவாக இம் முயற் சியில் ஈடுபடவேண்டும். தயாரிக்கப்படும் கையெழுத்துப் பிரதிகள் சிறுவர் நூலகம் கு.நா. க. நிலையம், பாலர் பாட சாலை ஆகியவற்றில் பாதுகாப்பாகச் சேகரிக்கப்படல் வேண்
டும்.
குழந்தைகளுக்கான அறிவு சாதனங்களை உருவாக்குவதில் பாலர் ஆசிரியர்களின் பணி மகத்தானது, அவர்களே இந்த முயற்சியில் முன் நின்று உழைப்பவர்களாக இருத்தல் வேண் டும். குழந்தையின் உளவியலும், சுற்ருடலும் அறிந்தவர்
A0

களாக இருக்கும் இவர்களது அனுபவமும் ஆலோசனையும் மதிக்கப்பட வேண்டியவை.
அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முன் நாம் மன தில் கொள்ளவேண்டியது, அவற்றின் நுகர்வோர்பற்றிய தகவல்களாகும். அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தப் போகும் குழந்தைகளின் வயது கவனத்துக்கெடுக்கப்பட வேண்டிய முதல் அம்சமாகும். பாலர் கல்வி நிலையங்களில் பயிலும் குழந்தைகள் 24 வயதிற்கும் 5 வயதிற்கும் இடைப் பட்டவர்களாவர். இவர்களால் ஒரு நூலை முழுமையாகப் படிக்கமுடியாது. இவர்களையும், நூலையும் இணைத்து வைப் பவர்கள் பாலர் பள்ளி ஆசிரியர்களாவர் பாலர்களைப் பொதுவாகக் கவர்பவை, பெரிய எழுத்துக்களும் நிறங்களு மேயாகும். பாலர் நூல் தயாரிப்பின் போது இவ்விடயத் தில் அதிக கவனம் செலுத்தல் அவசியமாகும் நிறங்களை வேறுபடுத்தத் தெரியா விடினும், தொடர்ந்து பயிற்சியளிப் பதன் மூலம் நிற வேறுபாட்டினைக் குழந்தைகளின் பால் தோற்றுவிக்கலாம். நாளாந்தம் * குழந்தைகள் காணும் மிருகங்களையும், பறவைகளையும் தமது நூலில் காண்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைவர். மிருகங்களின் பெயர்கள், அவற்றின் சிறப்பியல்புகள் என்பவற்றை நூலின் கதையுடன் பின்னி விடுவதன் மூலம் குழந்தைகளின் மனதில் பதித்து விடலாம். ஒவியங்கள், குழந்தைகளின் நூலார்வத்தை வளர்ப்பதாகவும், அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக வும் அமையவேண்டும்.சில தவறுகளுடன் படங்களை வரைந்து படத்தில் உள்ள தவறினைக் குழந்தைகளைக் கொண்டே வெளிப்படுத்தும் பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் சில நூல்களை உருவாக்கலாம். உதாரணமாக மழைபெய்து கொண்டிருக்கும் ஒரு ஓவியத்தில் மழையின் பின்னணியில் தெருவில் ஒருவர் கையில் குடையுடன் ஒடுகின்றர். குடை விரித்துப் பிடிக்கப்படாமல் அவர் நனைந்தபடி ஒடுவதாக ஒவியம் வரையப்படலாம். படத்தைப் பார்த்துக் குழந்தை தவறை அறியும் படி கேள்வியையும் அமைக்கலாம்.
41

Page 29
ஒரு கிணற்றில் நீர் அள்ளப் போகும் ஒரு பெண்ணின் படத்தைக் கீறி அப்பெண் நீர் அள்ளிப் போகின்ருளா, அள்ளிக்கொண்டு வருகின்ரு?ளா என்று படம் பார்ப்பவரை வினவலாம். பல்வேறு பொருட்களைக் கொண்ட ஒரு காட் சியை வரைதல், மற்ருெரு உதாரணமாகும். ஒரு காட்டின் பின்னணியில் பல மிருகங்கள், பறவைகள் இருப்பதாக வரைந்து, என்னென்ன மிருகம் எங்கெங்குள்ளது எனக் கேட்கலாம். இவ்வாறே, உயிருள்ள உயிரற்ற பொருட்களைக் கொண்ட காட்சிகளை வரைந்து அவற்றை வேறுபடுத்திக் காட்டும் பயிற்சியினைக் குழந்தைகள் பெறத்தக்கதான படங் களை வரையலாம்.
இத்தகைய படங்களைக் கொண்ட நூல்களின் மூலம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கான கல்வியை ஆசிரியர் கள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தலாம்.
பாலர் நூல் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அடிப்படை யான சில தகவல்களைத் தெரிந்திருத்தல் அவசியம். கதை, ஒவியம், எழுத்து. புற அமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் அவற்றைக் காண்போம்.
அ. கதையின் அமைப்பு.
1. ஒரு வேலையைத் தாமாகச் செய்ய முயலும் ஆர்வத்தை
ஊட்டும் வகையில் கதை அமைய வேண்டும்.
2. கற்பனைக் கதைகள் மட்டுமன்றி, யதார்த்தமானதும், குழந்தைகளின் நா ளா ந் த வாழ்க்கை முறைகளில் கண்டு, அனுபவிக்கும் சம்பவங்கள், பொரு ட் க ள் போன்றவற்றுடன் தொடர்புபட்டதாகவும் அவர்களது அறிவை வளர்க்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
3. தத்துவ போதனைகளை நேரடியாகக் கூறுவதை விடக்
குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு சம்பவத்தின் பின் னணியில் அப்போதனையின் கருத்தை ஊட்டக் கூடிய தான கதை அமைப்புக் காணப்படல் வேண்டும்
42

O
குழந்தைப் பராய வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகக் கதைகள் அமைதலும், மிருகங்களுடன் தொடர்புபடுத் தப்பட்ட கதைகளாக அமைதலும் நன்று.
அடிப்படை விஞ்ஞானக் கருத்தொன்றை நாளாந்த வாழ்வில் அதன் அறிமுகத்துடன் விளக்கத்தக்க கதைக ளாக அமையலாம்.
கதைகள் சுருக்கமாகவும், ஆழமான கருத்தை வெளிப் படுத்தாதவையாகவும் இருக்க வேண்டும்.
ஒரு நூலைத் தயாரிக்கும் முன்னர் அந்த நூலைப் பயன் படுத்தும் வாசகரின் வயது, கிரகிக்கும் திறன் உளவி யல் வளர்ச்சி, வாசகர் விருப்பம், நாம் என்ன தகவ லைக் குறிப்பிட்ட நூலின் மூலம் வெளியிட வேண்டும் என்ற தீர்மானம், கதை சொல்லப்படும் கால்ம், சந் தர்ப்பம் போன்றவை பற்றிய தெளிவான அ றி வ இருத்தல் வேண்டும்.
படங்களின் அமைப்பு: கூடிய படங்கள் குழந்தைகளைக் கவரும். படத்தின் அமைப்பு கவர்ச்சியாக இருத்தல் வேண்டும். கதையின் ஒரு காட்சிக்குரிய படம் அக்காட்சி சொல் லப்பட்டிருக்கும் பக்கத்திலேயே அமைதல் வேண்டும். படத்தில் உள்ள காட்சிகள் கதையின் வசனங்களுக்குப் பொருத்தமானதாக அமைதல் அவசியம். தேவைப்பட்டாலேயன்றி கதையுடன் தொடர்பற்ற ஒரு பாத்திரம் படத்தில் நுழைவது தவிர்க்கப்படல் வேண்டும்.
நூலில் கூறப்படும் ஒரு கதாபாத்திரத்தின் தோற்றம் அந்த நூலின் சகல பாடங்களிலும் ஒரே உருவ அமைப்
புடன் காட்டப்படல் நன்று.
43

Page 30
0.
ll.
12.
13.
l
முக பாவ மாற்றங்களை கண், வாய் போன்றவற்றினல் சித்தரிக்க முயலலாம்.
நூலின் முகப்புப் L#-اb அழகாகவும், கூடிய சிரத்தை
யுடனும் ஆக்கப்படல் வேண்டும். குழந்தை ஒரு நூலை முகப்புத் தோற்றத்தைக்கொண்டே “முதற் கவர்ச்சி’ கொள்ளலாம்.
அதிக நிறங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படல் வேண் டும். தெளிவற்ற வண்ணப் படங்கள், குழந்தைகளின் பார்வைச் சலிப்பிற்கு இலக்காகி விடலாம்.
கூடுமான வரை காட்சியோடு தொடர்புபட்ட படங் கள் பெரிதாகவும், துலக்கமானதாகவும் தோன் ற வேண்டும். அவற்றிற்கு ஒவியர் முக்கியத்துவம் கொடுத் தல் வேண்டும்.
வசனத்தைப் பாராமலும், படங்களை மட்டும் பார்த்தே ஒரளவு கதையைப் புரிந்து கொள்ளக்கூடியதாக படங் கள் அமைவது வரவேற்கத்தக்கது. கவர்ச்சியான படங் கள் குழந்தைகளை அப்படத்திற்குரிய வசனங்களை வாசித்தறியத் தூண்டும்.
படம் வரைய ஆரம்பிக்கும் முன்னர் ஓவியர் அதற் கான முழுக் கண்தயையும் வாசித்து அதன் தன்மை களை மனதில் பதித்துக்கொண்டு தன் முழுத் திறமை யையும் பிரயோகித்துப் படம் வரைதல் வேண்டும்.
கோட்டுச் சித்திரங்களே பெரும்பான்மையான குழந தைகளைக் கவரக்கூடியதாகவுள்ளன என்பது ஆய்வு களின் முடிவாகும்.
எழுத்தின் அமைப்பு. சாதாரண அளவைவிட சிறுவர் நூல்களுக்கான எழுத் துக்கள் பெரிதாகவும் சகல எழுத்துக்களும் ஒரே அள வினதாகவும் உறுப்பமைய எழுதப்பட்டும் அமைதல் வேண்டும்.

குறுகிய வசனங்களாகவும் சுருங்கக் கூறி விளங்க வைக் கத்தக்கதாகவும் அமைதல் வேண்டும்.
பயன்படுத்தப்படும் சொற்கள் குழந்தைகளால் இலகு வில் விளங்கிக்கொள்ளக் கூடியதாக அமையவேண்டும்.
நூலின் புறவமைப்பு சிறப்பாக மட்டை கட்டப்பட்டிருத்தல் வேண்டும். மெல்லிய மட்டை கட்டப்படுமிடத்து சிருர்கள் பாவிக் கும் போது நூல் எளிதில் பழுதடைய வாய்ப்பேற்படும்
குறைந்த எண்ணிக்கையில் பக்கங்கள் அமைவதால் சாதாரண வெள்ளை அச்சிடல் தாளைவிடத் தடிப்பான தாளை நூல் தயாரிப்பிற்குப் பயன்படுத்தலாம். பிரிஸ் டல் மட்டை போன்ற மட்டைகளினலும் நூலைத் தயா ரிக்கலாம்.
நூலின் உருவம், பொதுவாக வழக்கில் உள்ள செவ்வக உருவிலான அமைப்பில் மட்டுமன்றி பிற அமைப்பு களிலும் வடிவமைத்தல் பற்றிச் சிந்தித்தல் வேண்டும். பூனையின் முகம், மணிக்கூண்டின் முகப்பு, வீடுபோன்ற அமைப்புகளில் உருவாக்கப்படும் நூல்கள் பாலர்களைப் பெரிதும் கவரக்கூடியன.
அட்டைப்படம், கவர்ச்சிகரமாகவும் கதையின் உட் கருத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
நூலகங்களில், சிறுவர் பிரிவுகளில் இத்தகைய நூல்கள்
எவ்வண்ணம் பயன் படுத்தப்படலாம் என்பது இயல்பான தொரு சந்தேகமே. கிராம நூலகங்களில் 5 வயதிதுக்குட், பட்ட ஒருவரை எவ்வாறு அனுமதிக்கலாம் என்ற கேள்வி யும் எழலாம்.
சிறுவர் நூலகம், வளர்ந்தோர் நூலகத்திலிருந்து பல்
வேறு வழிகளில் வேறுபடுகின்றது. ஒரு சிறுவர் நூலகம்
45,

Page 31
அல்லது நூலகத்தின் சிறுவர் பிரிவு என்பது அறிவுலகத் திற்கான நுழைவாயில் எனக் கூறினல் மிகையாகாது. சிறு வர் நூலகத்தில் கற்கும் நூலக ஒழுங்கே ஒரு சிறுவன் வளர்ந்ததும் அவனை வளர்ந்தோர் நூலகத்தில் ஒழுங்காக வழி நடத்தும். நூல் களவு, நூல்களுக்கும் நூலகத்துப் பொருட்களுக்கும் மனிதனுல் ஏற்படுத்தப்படும் ஊறு, ஆகி யவை சிறுவர் நூலகங்களின் வழிகாட்டலினுல் எதிர்காலத் தில் கணிசமான அளவில் குறைக்கப்படலாம்.
兴 妾 景
எனவே சிறுவர் நூலகங்கள் எமது நாட்டில் முன்னேற வேண்டியதன் அவசியம் இன்று உற் று நோக்கப்படல் வேண்டும். நூலகங்களின் சிறுவர் பகுதிகளுக்குத் தொண் டர் அடிப்படையில் அல்லது சிறிய ஊக்குவிப்பு வேதன அடிப்படையில் பாலர் ஆசிரியப் பயிற்சி அல்லது அனுபவம் பெற்றவர்களை நியமித்து வார இறுதி நாட்களிலும், விடு முறை நாட்களிலும் சிறுவர் பகுதிகளை இயங்கச் செய்தல் வரவேற்கத்தக்கது. சிறுவர் பகுதியில், கதை நேரம், நூல் வாசிப்பு பாலர் பாடல் நேரம் போன்ற திட்டங்களை அறி முகப்படுத்தி பாலரையும் நூல்களையும்இணைத்து வைக்கலாம்
இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவை. 1. செல்வராஜா, என். பாலர்களுக்கான நூல்களையும் அறிவியல் சாதனங்களையும் தயாரித்தல். நூலகவியல்’, மலர் 3 (2), டிசம்பர் 1987, ப. 4 - 9.
2. Alfreda de Silva 'Facts and Fantasy in Children's books', in Treasures of Knowledge, Ed. Ishvari Corea, p. 65 - 73.
3. Stewig, John Warren. Children and Literature, Boston,
Houghton Mifflin Co., 1980.
46

5
யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களும் அவற்றின் நூலக நடவடிக்கைகளும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராமிய மட்டத்தில் நூலக சேவையினை வழங்குவதில் மாவட்டசபை உப அலு வலகங்களின் (பிரதேசசபை) கீழ் இயங்கும் பொதுசன நூலகங்களுக்கு அடுத்தபடியாக சனசமூக நிலையங்களே முன்னணியில் நிற்கின்றன. பெரும்பாலான சனசமூக நிலை யங்கள் புதினப் பத்திரிகைகளையும் சில சஞ்சிகைகளையும் கொண்ட வாசிகசாலைகளாக மாத்திரம் இயங்கி வருகின் றன. சில சனசமூக நிலையங்கள் வாசிகசாலையுடன் இணைந் ததாக இரவல் வழங்கும் நூலக சேவையினையும் நடாத்து கின்றன. நிதிப்பற்ருக்குறை, விஞ்ஞான ரீதியிலான நூலக நிர்வாகம் தொடர்பான அறிவின்மை, உள்ளக நிர்வாகச் சீர்கேடுகள் போன்ற காரணிகளால் சில சனசமூக நிலை யங்கள் இன்று நூலக சேவையினை திறம்பட நடாத்தமுடி யாத நிலையில் உள்ளன.
47

Page 32
சில இடங்களில் நிரந்தரக் கட்டிட வசதிகள் கொண் டுள்ள சனசமூக நிலேயங்கள், கற்ருேர் செல்வந்தர் போன் ருேர் வாழும் சூழலில் அமைந்திருந்த போதிலும் வாசிக சாலேகளாக மட்டுமே இயங்கி வருவதையும் காண முடி கின்றது.
1980 - 81 ஆம் ஆண்டுகளில் வடமாகான சர்வோதய நிலேயத்தினுல் யாழ். மாவட்ட சனசமூக நிலேயங்களுக்கு உதவி வழங்கும் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் அமுலாக்கலின் போது மேற்கொள்ளப் பட்ட கள ஆய்வில் மேற்கண்ட தகவல்களேப் பெறமுடிந்தது சர்வோதய உதவி வழங்கும் திட்டத்தில் இஃணக்கப்பட்ட சுமார் 6 ! சனசமூக நிலேயங்கள் நூலக நடவடிக்கைகள் தொடர்பாகப் போதிய அறிவைப் பெற்றிருக்காமையினுல் இத் திட்டம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லே.
சனசமூக நிலைய நூலகங்கள் சில மிகத் திறமையாக இயங்கி கிராமத்தவரின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளன. பொதுவாக நோக்குமிடத்து இத்தகைய வெற்றி வாய்ப்பினேப் பெற்றுள்ள நூலகங்கள் எண்ணிக் கையில் குறைவாகவே உள்ளன. ஒரு கிராமத்தின் முழுமை பான நிர்வாகத் திறனில் தங்கி இயங்கும் சனசமூக நிலே பங்கள், சமய நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றைச் சார்ந்த நூலகங்களின் நாளாந்த நட வடிக்கைகளில் பல சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாததே பொதுநல நோக்கத்தைக் கருத்திற்கொண்டு இத்தகைய பிரச்சினேகளே சுமூகமாகத் திர்த்துக்கொண்டு கிராமத்தவ ரின் ஒத்துழைப்புடன் நூலகத்தை நிர்வகிப்பது சிறிது கடினமாக இருப்பினும், அது இயலாத காரியமல்ல.
ஒரு சனசமூக நிலேயம் வாசிகசாலேயாக இயங்குவத குல் மாத்திரம் அதன் நோக்கம் ஈடேறிவிடுகின்றதென்று நினோப்பது தவருகும், கிராமத்தில் சிலர் தமது சொந்தப் பாவனேக்கெனக் கொள்வனவு செய்யும் தினசரிப்பத்திரிகை களேயும் சில சஞ்சிகைகளேயும் அயலில் உள்ள சனசமூக நிலே யத்திற்குத் தற்காலிகமாக வழங்கி ஒரு பொதுப்பணிக்கு
 

உதவுகின்றனர். இவற்றை நிர்வகிப்பது மட்டுமே ஒரு வாசிகசாலப் பொறுப்பாளரின் பணியாக இன்று கருதப்படு கின்றது. இது தவருன ஒரு கருத்தாகும்.
ஒரு கிராமத்தில் உள்ள மனித, பொருள் வளங்களின் அளவையும், வசதியையும் கொண்டு ஒரு சனசமூக நிலேய நூலகத்தை எளிய முறையில் இயக்க முடியும். பெருமளவு நிதி ஒதுக்கீடோ அதிக பணச்செலவோ ஆரம்ப முதலீடாக அமைய வேண்டியது இல்லே. பொதுப்பணிச் சிந்தையுள்ள சிலரின் ஒத்துழைப்பே ஆரம்ப கட்டத்தில் மிக முக்கியமான தாகும். காலப்போக்கில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு தனக் கென ஒரு முதலீட்டைக் கட்டி எழுப்பிக் கொண்டு அந்த நிதியின் உதவியுடன் எதிர்காலத்தில் நூலக சேவையின் விரிவுபடுத்திச் செல்ல முடியும்,
ஒரு சனசமூக நிலையத்தின் அல்லது கிராம நூலக மொன்றின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக ஒரு நிர் வாகக் குழு அமைத்தல் அவசியம். பொறுப்புணர்வும் கல்வி அறிவும் உள்ளவர்களாகவும், நூல் ஆர்வம் மிக்கவர்களாக வும், அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும், நாளாந்தம் தமது தனிப்பட்ட கடமைகளுடன் அப்பணிக்கு கணிசமான நேரத்தை செலவிடத் தயாரானவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.
குழுவின் செயலாளர் நூலகத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்ற வேண்டும். மாதம் ஒரு தடவை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு தடவை நிர்வாகக் குழுக் கூட்டம் சுட்டப்பெற்று அதில் தீர்மானிக்கப்படும் வேலேத்திட்டம் குழுவின் செயலாளரான நூலகப் பொறுப்பாளர் கிராம இகளஞர்களின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
அண்மைக் காலங்களில் கிராமங்களில் இளேஞர் பற்றுக் குறை கருத்திற்கெடுக்கப்பட வேண்டியதொன்கு கும். கிரா மிய சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பல கிராமங்களில்
}

Page 33
புவதிகள் சனசமூக நிலேயங்களுக்குச் சென்று பத்திரிகை வாசிப்பது அல்லது நூல்களே இரவல் பெறுவது குறைவாகக் காணப்படுகின்றது. எனவே நாம் இங்கு குறிப்பிடும் கிராம நூலகத்திட்டங்களில் கூடிய அளவு பெண்களின் பங்களிப் பும் இடம் பெறல் வேண்டும். நிர்வாகக் குழுவில் பெண் களுக்கும் போதிய இடம் ஒதுக்கப்படுவதோடு தேவைப்படின் நூலகப் பொறுப்பாளர்களாக பெண்களேயும் நியமித்தல் அல்லது இரு பாலாரையும் இணைநிலை நூலகப் பொறுப்பா ளர்களாக நியமித்தல் நன்று. இத்தகைய அணுகு முறைக ளால் சனசமூக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் நூலக நடவடிக்கைகளில் பெண்களின் ப்ங்களிப்பை கணிசமான அளவில் அதிகரிக்க முடியும்,
ஒரு சனசமூக நிலையம் தனது நூல் சேகரிப்பைத் திட்ட மிட்ட பல வழிகளில் மேற்கொள்ள முடியும். கிராமத்தில் வருடாந்தம் நூலக வாரம் ஒன்றினே ஒழுங்கு செய்து கிரா மத்தில் உள்ள வீடுகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் நூல்களே நூலகத்துக்காகப் பெற்றுக் கொள்ள முடியும், இத்தகைய நடவடிக்கைகளின் போது நூல்களேத் தேர்ந்தெடுத்தல் அவ சியமாகும். பாவனேக்கு உதவாத நூல்களே. அவை நூல் உருவில் இருக்கும் ஒரே காரணத்திற்காகச் சேகரிப்பில் ஏற் றுக் கொள்வது தவிர்க்கப்படல் வேண்டும். இதஞல் நூலகத் தட்டுக்களில், அலங்காரத்திற்காகவும் பெயரளவிலான எண் ணிைக்கையாகவும் நூல் சேகரிக்கப்படுவது தடுக்கப்படும்.
கிராமத்தில் உள்ள கற்ருேரை அணுகி மாதம் ஒரு முறை நூல் வழங்கும் படி கேட்கலாம், கிராமத்தவர் தமது பிறந்த தினப் பரிசாக ஆண்டொன்றுக்கு ஒரு நூல் என்ற ரீதியில் அவர்களுக்கு அண்மையில் உள்ள கிராம நூலகத் திற்கு அன்பளிப்பாக வழங்கலாம். சனசமூக நிலேய நூலகர் தமது நூலக அங்கத்தவர்களின் பிறந்த நாட்களே பாவிக் கப்படாத ஒரு பழைய தினக் குறிப்பேட்டில் (டயறி) பதிந்து வைத்து உரிய நாட்களுக்கு ஒரு வாரத்திற்கு முன் சம்பந்தப் பட்டவருக்கு அவருடைய பிறந்த் தாஃ நிஃனவூட்டி பிறந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினப் பரிசைக் கோரினுல் நிச்சயம் நூல் அன்பளிப்பாகக் கிடைக்கும்.
குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏன் இளேஞர்களுக் கும் கூட பிறந்தநாள் பரிசில்களாக நூல்கள் வழங்கப்படு வதை ஆதரிக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய பரி சில்கள் அவர்களே வாசிப்பின் பால் ஆர்வங் கொள்ளச் செய் வதுடன் நூல் வெளியீட்டாளர்களுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். இத்தகைய பரிசில்களே பெற்றவர்கள் தமது ஞாபகார்த்தமாகப் பின்னர் நூலகத்திற்கு அவற்றை வழங்கலாம்.
ܕ¬
நூலகர் நூல் நிலையத்தில் நூல் கொள்வனவுக்கென்று தனியானதொரு உண்டியலே வைத்தும் நிதி சேகரிக்கலாம். வருடாந்தம் உண்டியவில் உள்ள பணத்தைச் சேர்த்து நூல்களேக் கொள்வனவு செய்யலாம். இத்தகைய உண்டியல் களே நூலகத்தில் மட்டுமன்றி அண்மையில் உள்ள கோவில் கள், பாடசாலேகள், கடைகள் போன்றவற்றிலும் வைத்து நிதி சேகரிக்கலாம்.
ஊர்ப் பிரமுகர்களை அணுகி கிராம நூலகத்திற்கு நூல் களே வாங்கித் தருமாறு கோரலாம். இக் கோரிக்கை இரு வழிகளில் மேற்கொள்ளப்படலாம்.
1. தெரிவு செய்யப்பட்டதொரு நூற்பட்டியலே பிரமுக ரிடம் கொடுத்து அதில் குறிக்கப்பட்ட நூல்களே கொள் வனவு செய்து தரும்படி கேட்கலாம்.
3. நன்கொடையாக ஒரு தொகைப் பணத்தை அவ ரிடம் இருந்து பெற்று அப்பணத்திற்கு நூல்களைக் கொள் வனவு செய்து அவரது அன்பளிப்பாக அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட இரு வழிகளிலும் வேறுபல உத்தி களேக் கையாண்டு ஒரு சனசமூக நிபுழங்கிமேற்
கொள்ளலாம். ..
ثم اطلقهون النووي
岳正 طالعلام]jوقr
下、

Page 34
ஒரு சனசமூக நிலேய நூலகத்திற்கு நூல்களே புதிதாக கொள்வனவு செய்யும்போது நூல்கரே நிர்வாகக் குழுவின் பிற அங்கத்தினர்களோ திமதி தனிப்பட்ட சுவைக்கேற்ப நூற் தெரிவில் ஈடுபடலாகாது. நூற் கொள்வனவிற்கு கிடைக்கும் நிதி பெருந்தொகையாக இராது. குறைந்த பணத்தொகையுடன் கூடிய பயன்பாட்டைப் பெறக்கூடிய தீாக நூலீட்டல் அமையவேண்டும். இதனுல் நூற் தெரிவு முன் கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், சகல தரத்தில் உள்ள வாசகர்களையும் திருப்திப்படுத்தக்கூடியதாகவும் அமையவேண்டும். இதற்கு நூலகரை உள்ளி. ஒரு குழு நியமிக்கப்படல் வேண்டும். இக் குழுவில் பல்வேறு தரத்தி லும் உள்ள வாசக அங்கத்தினரின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். தமக்குத் தேவையான நூற் பிரிவினே இக்குழு முதிவில் திட்டமிடல் வேண்டும். நாற் பிரிவானது அடிப்பு டையில் பத்தாக் வகுக்கப்பட்டுள்ளது. அவையாவன திதி துவம், சமயம், சமூக விஞ்ஞானம், மொழி, துரய விஞ்ஞா னம், தொழில்நுட்பம், கலேகளும் பொழுதுபோக்கும், இலக் கியம், வரலாறு ஆகிய 9 பிரிவுகளும் இவைகளில் உள்ளடங் காத பொது அறிவுத்துறை, சஞ்சிகைகள், கலைக்களஞ்சியங் கள் போன்றவற்றைக் கொண்ட பொதுப்பிரிவு ஒன்றையும் சேர்த்து மொத்தம் பத்துப் பிரிவுகளாக வகுக்கலாம்.
சனசமூக நிலையத்தில் இப் பிரிவுகளில் எந்தெந்தப் பிரி வில் நூல்கள் குறைவாக உள்ளன. எவற்றில் மேலதிகமாக உள்ளன, என்று முதலில் அறிந்துகொண்டு, குறை நிரப்பு நோக்கில் ஒரு அட்டவனே தயாரித்துக் கொள்ளவேண்டும். வாசகர்கள் கூடிய ஆர்வத்துடன் தேடிப்படிக்கும் நூல்களுக் கும் மாணவர்களின் பாட் ங்களுடன் தொடர்புள்ள பயிற்சி நூல்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும்.
தேவைப்படும் நூற் பிரிவினை அல்லது நூல்களின் பெயர் களே தொகுத்து எழுதிக்கொண்ட் பின்னர் பகுதி வாரியாக நூற் கொள்வனவில் ஈடுபடல் வேண்டும். இருக்கும் பணத்
岳岛
 
 
 
 
 
 

திற்கேற்ப ஒரே நாளில் அனைத்து நூல்களேயும் வாங்கிவிட வாம் என்று திட்டமிடல் கூடாது. அப்படி கொள்வனவு செய்தலும் இயலாது.
சேகரிக்கப்படும் நூலின் எண்ணிக்கை சிறிதாகக் காணப் படினும் காலப்போக்கில் அது வளர்ந்து செல்லும் தன்மை கொண்டது. ஒரு சனசமூக நிலையத்தின் ஆரம்ப காலத்தில் நூல் இரவல் வழங்கலேப் பற்றிக் சிந்திக்கக்கூடாது என்பர். ஆரம்ப கால நூலகங்கள் உடன் உதவும் நூலகங்களாக மட்டுமே இயங்கல் வேண்டும். நாள்தோறும் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் நூலகம் திறக்கப்பட்டு வாசகர்களுக்கு நூல்களே வழங்கி அவர்கள் அங்கிருந்தே அவற்றை வாசிக் கும் ஒழுங்குகளே செய்து த ரு த ல் வேண்டும், நூலகம் போதிய அளவு நூற் சேர்க்கையை வளர்த்தெடுத்த பின் ன்ர் இரவல் வழங்கும் பிரிவை ஆரம்பிக்கலாம்.
பெரும்பான்மையான சனசமூக நி ல்ே ய நூலகங்கள் தமது நூற்சேர்க்கைகளே பதிவு செய்வது கிடையாது. அப் படிப் பதிவுசெய்யப்பட்டிருப்பினும் அவை ஒழுங்கான முறை யில் மேற்கொள்ளப்படாமல் பாடவாரியாக அல்லது ஏதோ ஒரு ஒழுங்கின் அடிப்படையில் வெவ்வேறு கொப்பிகளில் பதியப்பட்டிருக்கின்றன. ஒரு சேர்விலக்கம் பல நூல்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம் இதனுல் ஏற்படுகின்றது.
ஒரு நூலகத்தில் உள்ள சகல நூல்களும் ஒரு பதிவேட் டில் பதியப்படல் வேண்டியது அவசியமாகும். நூ வின் பெயர் ஆசிரியரின், ஆசிரியர்கனின் பெயர், வெளியிட்ட இடம், வெளியீட்டாளர் பெயர் பக்கங்கள், பதிப்பித்த ஆண்டு, நூலில் குறித்த விலே போன்ற தகவல்களை ஒரு சி. ஆர். பதிவேட்டில் பதிந்து வைத்தல்வேண்டும். நூல் ஒவ்வொன்றிற்கும் ஒரு தொடர் இலக்கம் வழங்கப்படல் வேண்டும். அத்தொடர் இலக்கமே நூலுக்கான பதிவிலக்க மாகும். பின்னர் எங்காவது அந்நூலின் விபரங்களே அலு வலகத் தேவையின் நிமித்தம் குறிப்பிடவேண்டி நேரு
EB

Page 35
மிடத்து இத்தொடர் இலக்கங்களை நூலின் பெயருடன் குறிப்பிடுவதன் மூலம் வீண்கால விரயத்தையும் தவிர்க்கலாம்
ஒரு நூல் பதிவு செய்யப்பட்டபின் நூலகத்தில் இருந்து தொலைந்தால் அந் நூலுக்கென வழங்கப்பட்ட தொடர் இலக்கத்தில் வேறு ஒரு நூலை புதிதாகப் பதியக் கூடாது. தொலைக்கப்படும் நூல்களை வேறு ஒரு பதிவேட்டில் பதிந்து வரவேண்டுமே யொழிய நூற்சேர்க்கைப் பதிவேட்டில் குறிப்பிட்ட நூலின் பதிவை வெட்டுதலோ அழித்தலோ éh L-sTol.
நூல்கள் காணுமல் போவதை தவிர்க்கும் நோக்குடன் காலாண்டு அல்லது அரை ஆண்டுக்கு ஒரு தடவை நூல் களின் இருப்பை கணக்கெடுத்தல் வேண்டும். குறுகிய கால இடைவெளியில் நூல் இருப்பு கணக்கெடுக்கப்படுவதால் தொலைக்கப்பட்ட நூல்களைத் தேடிப்பிடிக்க வாய்ப்பு ஏற்ப டும். சனசமூக நிலையங்களில் வாசகர்கள் நூல்களை நிலையத் தில் வைத்து வாசிக்கும் போது அவை பதியப்படல் அவசி யம். சில சனசமூக நிலையங்களில் பிறவுன், நியூ வார்க் போன்ற நவீன மயப்படுத்தப்பட்ட இரவல் வழங்கும் நடை, முறைகள் பின்பற்றப்படுகின்றனவாயினும் பெரும்பான்மை யான நூலகங்களில் இரவல் எடுத்துச் செல்லும்போது மாத் திரம் ஒரு சிறு கொப்பியில் குறிக்கப்படுகின்றது. நூல் இர வல் பதிவுகள் ஒரு நூலகத்தில் ஒழுங்சாகக் குறிக்கப்படல் அவசியம். நூலகத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய திட்டங் களைத் தீட்டுவதற்கு தேவைப்படும் புள்ளி விபரங்களை இத் தகைய பதிவுகளில் இருந்தே நாம் பெற்றுக்கொள்கிருேம். குறிப்பிட்ட நூலகம் ஒன்று ஒரு நாளைக்கு எத்தனை வாசகர் களுக்குச் சேவை ஆற்றுகின்றது. எந்த வகையான நூல் களை வாசகர் விரும்பி வாசிக்கின்றன்ர் நூலகத்தை பயன் படுத்துவோரின் அதிகரிப்பு அல்லது வீழ்ச்சிபோன்ற தக வல்களை இத்தகைய பதிவு முறைகளில் இருந்து நாம் பெற் றுக்கொள்ளலாம்.
நூல்கள் அன்பளித்தவர்களின் பெயர் விபரங்கள் ஒரு சில நூலகங்களிலே பேணப்பட்டு வருகின்றன. வேறு பல
54

நூலகங்கள் அன்பளிக்கப்பட்ட நூல்களில் மட்டும் அன்ப ளிப்பு விபரங்களைக் குறித்து விடுவதுடன் நின்று விடுகின் றன. நூல்கள் அன்பளித்தவர்களின். பெயர், முகவரி, அவர் அன்பளித்த திகதி, நூலின் பெயர், அதன் விலை (தெரிந் தால் மாத்திரம்) ஆகிய தகவல்களை தனியானதொரு பதி வேட்டில் பதிந்து வைத்தல் வேண்டும். நூலில் மாத்திரம் குறிப்பதுடன் நின்று விடலாகாது.
நூல்கள் தவிர்ந்த மேலும் பல அறிவியல் சாதனங்கள் ኣ ஒரு சனசமூக நிலைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். கிராமத்தின் சிறப்பினை வெளியாருக்கு உணர்த் தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், அல் லது அவற்றின் போட்டோஸ்ரற் பிரதிகள், சின்னங்கள் புகைப்படங்கள், மாதிரி அமைப்புக்கள் (Models) போன் றவை சேகரித்துப் பேணப்படலாம். இவை இரவல் வழங் கும் பிரிவில் அல்லாது ஆவணக் காப்பகப் பிரிவு என்று ஒரு தனியான பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாசகர்கள் பார்வையிட மட்டும் அனுமதிக்கப்படலாம். சில கிராமங் களில் பிரபல்யமானதும் அக் கிராமங்களுக்கு உரியதுமான கிராமியப் பாடல்கள், கூத்துக்கள் போன்ற நாட்டார் இலக் கிய வடிவங்களை எழுத்துருவிலும் ஒலியுருவிலும் பதிந்து வைக்கலாம். கிராமங்களில் உள்ள சிறப்பு மிக்க கோவில் சிற்ப வேலைப்பாடுகள் கலைநுணுக்கம் மிக்க கோயில் வாகனங் களின் உருவப்படங்கள், போன்றவற்றை புகைப்படமாகத் தொகுத்து வைக்கலாம். கிராம நூலகத்தின் பெறுமதியினை இவை உயர்த்தும். ஒரு சனசமூக நிலையம் தன் பிராந்தியத் தில் கலாச்சார நிலையமாகவும், ஆவணக் காப்பகமாகவும், தகவல் தொடர்பாகவும் செயற்பட வேண்டும் என்ற கருத்து இங்கு கவனத்திற்கெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
சனசமூக நிலையமானது,தான் சார்ந்த கிராமத்திலுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியலாளர்கள் மற்றும் சமூகவியலாளர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள், நாட்
55

Page 36
குறிப்புக்கள் கடிதங்கள் போன்றவற்றை வரலாற்று முக்கி யத்துவம் கருதி சேகரித்து வைக்கவேண்டும். கிராமத்தின் விரிவான வரைபடம் ஒன்றைத் தயாரித்து நிலையத்தில் வைத்திருக்கலாம். அதில் பிரதான பாதைகள் மதஸ்தலங் கள், பாடசாலைகள், சனசமூக நிலையம், மருத்துவ மனை, தபால் நிலையம், வர்த்தக நிலையம் பேரூந்து நிலையம் போன் றவை குறிக்கப்பட்டிருத்தல் நன்று. கிராமம் தொடர்பான அடிப்படைப் புள்ளி விபரங்களான சனத்தொகை பாட சாலை மாணவர்கள் எண்ணிக்கை விபரம் போன்ற தகவல் களை அவ்வூர் கிராம சேவையாளர், பாடசாலை நிர்வாகிகள் போன்றேரின் உதவியுடன் சேகரித்து வைத்திருக்கலாம். இவை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கப்படல் வேண்டும்.
கிராமத்தில் இயற்கை எய்தியவர்களின் பெயரால் வெளியிடப்படும் நினைவு மலர்கள்(சமரகவி) சேகரிக்கப்பட்டு அவர்களது பெயர் அகர வரிசை ஒழுங்கில் அடுக்கி வைத் திருத்தல் வேண்டும். கிராமத்தைப் பற்றி அல்லது கிராமத் தில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றி வெளிவரும் புதினப் பத்தி ரிகைச் செய்திகளை கத்தரித்து தனியாக ஒரு பதிவேட்டில் ஒட்டிச் சேகரித்தல் வேண்டும்.இத்தகைய பத்திரிகைச் செய் திகள் என்று, எந்தப் பத்திரிகையில், எந்தப் பக்கத்தில் வெளி வந்தது என்ற குறிப்பும் காணப்படுதல் அவசியமாகும்.
சனசமூக நிலையங்களில் பாலர்களுக்கான கதை நேரம் ஒன்றை நூலகத்தில் விடுமுறை நாட்களில் நடாத்தலாம் • கிராமத்து இளைஞர்களின் உதவியுடன் இக்கதை நேரத்தை ஒழுங்கு செய்வதன் மூலம் சிறுவர்களையும் நூல்களையும் இணைத்து வைக்கலாம். இதனல் கிராமத்தில் உள்ள சன சமூக நிலையங்கள் உயிரோட்டம் உள்ள அமைப்பாகவும் கிராமத்தவரின் ஆதரவையும் அக்கறையையும் பெற்ற ஸ்தாபனமாகவும் மாறும் வாய்ப்பு ஏற்படும்.
வாசகர் வட்டம் போன்ற அமைப்புகளை நூலக அங்கத் தவர்களிடையே ஏற்படுத்தி பழைய புதிய நூல்கள் தொடர்
56

பான விமர்சனக் கருத்தரங்குகளை நடாத்தலாம். கிராமத் தில் உள்ள படித்த வாலிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தா ளர்கள் போன்றவர்களின் உதவியை இதற்கெனப் பெற்றுக் கொள்ளலாம். கிராம இளைஞர்களினதும் மாணவர்களின தும் உதவியுடன் கையெழுத்துச் சஞ்சிகைகளை சனசமூக நிலையம் நடாத்தலாம் இக்கையெழுத்துப் பத்திரிகையின் பிரதிகளை அண்மையில் உள்ள பொது நூலகத்துக்கோ பாடசாலை நூலகத்துக்கோ அனுப்பி வைக்கலாம். கிராம நூலகங்களுக்கு இடையே கருத்துப் பரிமாற்றங்களை ஏற்ப டுத்துவதற்கு இச் சஞ்சிகைகளை ஊடகமாகக் கொள்ளலாம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சனசமூக நிலையங்கள் மேற் கொள்ளும் நூலக நடவடிக்கைகள் குடத்துள் விளக்காகவும் விரிவுபடும் வாய்ப்பு அற்றதாகவும் இருப்பதற்குக் காரணம் வேறு ஒரு நிறுவனத்துடனும் தொடர் பின்றி சிறு வட்டத் துக்குள் இயங்குவதாகும். ஒவ்வொரு நூலகமும் தனித்தனித் தீவுகளாக விளங்குவது எவ்வகையிலும் ஆரோக்கியமானது அல்ல இதன் காரணமாகவே சிறப்பாக இயங்கி வரும் சில சனசமூக நிலைய நூலகங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட் டாக தம்மை ஆக்கிக்கொள்ள முடிவதில்லை. இந்நிலை எதிர் காலத்தில் மாறவேண்டியது அவசியமாகும். ஒரு சனசமூக நிலையம் நூலகசேவையினைத் தன் கிராம மக்களுக்கு வழங் குவதுடன் மட்டும் நில்லாமல் தனது முயற்சிகளையும் அடை வுகளையும் அயலில் உள்ள சகோதர சனசமூக நிலையங்களுக் கும் பிற பொதுநல ஸ்தாபனங்களுக்கும் தெரியப்படுத்தும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். சனசமூக நிலையங் களின் ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் இத்தகையதொரு வலையமைப்பை திட்டமிட்டு மேற்கொண்டு சனசமூக நிலை யங்களுக்கு இடையே தொடர்புப் பாலங்களை அமைத்து அவற்றுக்கிடையே கூட்டுறவை வளர்க்க ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனுல் சிறு நூல கங்களுக்கு இடையேயான நூல் பரிமாற்றத் திட்டம், கூட் டுறவுக் கொள்வனவு முறை நூல் வங்கி முறை போன்ற விடயங்களைத் திட்டமிட்டு செயற்படுத்த முடியும்.
57

Page 37
இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவை:
1.
莎8
Escolar - Sobrino, Hipolito, “Audio - visual
materials and Rural libraries'', UNESCO Bulletin for Libraries, Vol 26 (l) Jan. - Feb 1972, p. 8 - 12.
Sharr, F. A. “Functions and Organisation of a rural library system, 'UNESCO Bulletin for Libraries Vol. 26 (1), Jan. - Feb , , 1972, p. 2 — 7.
Participation of youth movements in library development in Latin America.' Seminar proceedings, UNESCO Bulletia for Libraries, Vol. 20 (6), Nov. - Dec. 1966, p. 296 - 302.
Chosky, N. K. “Libraries, Reading rooms and Community Centres'. Report of the Commission of Local Government, Colombo, Ceylon Govt, press, 1955. (Sessional paper No. 33 of 1955.)
செல்வராஜா, என்: ‘மக்கள் நூலகத்தை நாடாவிடில் நூலகம் மக்களை நாடவேண்டும்.' சஞ்சீவி, 11-7-1987 Lu. 6. a
is a O A *யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களும் அவற் றின் நூலக நடவடிக்கைகளும்.” நூலகவியல், மலர் 1 (2), டிசம்பர் 1985, ப. 5 - 9.

6
நூலகங்களில் நூல் கொள்வனவு - சில சிந்தனைகள்
ஒரு நூலகத்தின் தரம் அதன் அழகான கலையம்சம் மிக்க கட்டிட அமைப்பிலும், கவர்ச்சிகரமான தளபாடங் களின் வடிவமைப்பிலும் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. தன்னை நாடிவரும் வாசகருக்கு வழங்கக்கூடிய நூல்களின் தரத்தில் தான் அந்த நூலகத்தின் தரம் தங்கியுள்ளது. மேலும் ஒரு நூலகத்தில் எத்தனை நூல்கள், சஞ்சிகைகள் இருக்கின்றன என்பது முக்கியமல்ல; அவை எத்தனை வாச கரின் கரங்களில் அடிக்கடி தவழ்கின்றன என்பதுதான் முக்கியமானது. நூல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை மட்டும் கருத்தில் கொண்டு வருடா வருடம் நூற் கொள் வனவை மேற்கொள்ளும் எந்தவொரு நூலகமும் பொது மக்களுக்கு உரிய சேவையினை சிறப்பான முறையில் வழங் கத் தவறியதாகிவிடும்.
ஒரு நூலகத்தின் நூல்கள்தான் அந்த நூலகத்தில் வாசகரின் அதிகரிப்பிற்கும், குறைவிற்கும் முக்கிய காரண
59

Page 38
மானவை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் எந்த வொரு நூலக நிர்வாகமும் நூற்கொள்வனவை அறிவு பூர்வமாகச் சிந்தித்தே மேற்கொள்ளும்.
நூற் கொள்வனவில் சிக்கனமான முறைகளைப்பற்றி நாம் அதிகளவு சிந்திக்க வேண்டியதன் காரணம் பல்வேறு துறைகளிலும் தமிழ் நூல் வெளியீடுகளின் பற்ருக்குறை யாகும், கிராம நூலகங்களில் உள்ள நூல்களில் கணிசமான அளவு, தமிழ் நூல்களாகவே இருக்கவேண்டும் என எதிர் பார்ப்பது இயல்பே. அவர்களின் தேவையை நிறைவுசெய் யத்தக்கதாக தமிழ் நூல் வெளியீடுகள், ஆங்கில நூல்களைப் போன்று அதிகளவு இல்லாமை, நூல் கொள்வனவு செய் யச் செல்பவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். நூலகங்களில் நிதிப்பிரச்சனை, தரமான நூல்களைத் தெரிவு செய்வதில் உள்ள சிக்கல்கள்,போன்ற காரணிகளுக்கிடையே நூல் கொள்வனவாளர் திட்டமிட்டுத் தன் நூலிட்டலை மேற்கொள்ள \வேண்டியதவசியம்.
பொது சன சேவையை நோக்காகக் கொண்டு இயங் கும் பொது நூலகங்கள் அனைத்தும் வருடாந்தம் நூற் கொள்வனவில் ஈடுபடுகின்றன, நூலகத்தின் வசதிக்கும், அளவுக்கும் ஏற்ப அவற்றின் நூற்கொள்வனவுக்காக ஒதுக் கப்படும் பணத்தொகையும் மாறுபடுவதுண்டு. கொள்கை யளவில் வருடாந்தம் நிதி ஒதுக்கீடு செய்யப்படினும் வருட இறுதியிலேயே தமக்கு வேண்டிய நூல்களை ஒட்டுமொத்த மாகக் கொள்வனவு செய்வதை பல நூலகங்கள் ஒரு பாரம் பரியமாகக் கொண்டுள்ளன. வருடாந்தம் ஏற்படும் நூல் களின் இழப்பினை ஈடு செய்வதற்காகவும் குறைந்து வரும் வாசகர் தொகையினை அதிகரிப்பதற்கான் நடவடிக்கையா கவும் வருட முடிவில் சில நூலகங்கள் நூற் கொள்வனவில் ஈடுபடுவதுண்டு.
பெரும்பான்மையான நூலகங்கள் வருடஇறுதியிலேயே நூற் கொள்வனவுக்கான ஆணையைப் பெறுவதால் மார்கழி முதல் சித்திரை வரை தமது நிதியாண்டின் இறுதிக்குள்
60

அவசர அவசரமாக அவை நூல் வேட்டையில் இறங்கி, கண்ணுக்கு அகப்படும் நூல்களையெல்லாம் வாங்கிச் சேர்த்து தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவிட்டு நிம்மதியை அடைகின்றன. முந்தியவர்களுக்கு நல்ல நூல்கள் கிடைக் கும். பிந்தியவர்கள் எஞ்சியவற்றை பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இந்த வழமை காரணமாக, பெரும்பான்மையான புத் தக நிலையங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை வருட இறுதியிலேயே பெறுகின்ற சாத்தியம் இருப்பதால் தமது முதலீட்டையும் வருட இறுதியிலேயே மேற்கொண்டு குறு கிய காலத்தில் தமது முதலீட்டின் லாபத்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பேற்படுகின்றது. வருடத்தின் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் நல்ல நூல்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பு நூலகர்களுக்கு ஏற்படுகின்றது.
இத்தகைய கொள்வனவானது வாசகர் பார்வையில் ஒரு வீண் விரயமான நடவடிக்கையாகும். ஏனெனில் கொள்வனவு செய்யப்படும் நூல்களின் பெரும்பகுதி நூல கத் தட்டுக்களை அலங்கரிக்கவும், நூற்சேர்க்கைப் பதி வேட்டை நிரப்பி நூலின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள் ளவும் மட்டுமே உதவும்.
மாருக நூற்கொள்வனவில் சில புதிய அணுகு முறை களை மேற்கொண்டால் நூலகத்தின் தரத்தைக் கணிசமான அளவு உயர்த்த இடமுண்டு.
தம்மால் கொள்வனவு செய்யப்படும் ஒ வ் வொ ரு நூலும் என்ன வகையிலேனும் பயனுள்ளதாக இருக்கின் றதா என்பதை நூலகர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண் டும். வாசகரின் அவாவைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும், வசதியும் நூலகருக்கு உண்டு, நடைமுறையில் நூல் கொள்வனவின் போது நூலகர் கொள்வனவுக் குழு வில் சேர்த்துக்கொள்ளப்படுவது அரிதாகவே காணப்படு
6.

Page 39
கின்றது. பாடசாலே நூலகங்களுக்கு நூல் கொள்வனவு செய்யச் செல்லும் குழுவினரில் நூலகரைக் காண முடிவ தில்&ல. பொது நூலகங்களில் அதிகாரமளிக்கப்பட்ட உத்தி யோகத்தர்களும், எழுதுவினைஞர்களுமே கொள்வனவில் முன் நிற்கின்றனர். நூலகர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சில விதிவிலக்கான நூலகங்களும் உண்டு நூல் கொள் வினவின் போது மேற்கொள்ளும் தில்லு முல்லுகளால் தமது பையினே நிரப்பிக்கொள்ள எத்தனிக்கும் சில சந் தர்ப்பவாதிகள் நூற்கொள்வனவின் போது தான்தோன் றித்தனமாக நடப்பதும் உண்டு இத்தகைய சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படவேண்டியதும், சில களே பிடுங்கல்கள் மேற் கொள்ளப்பட வேண்டியதும் அவசியமானதாகும் நூலகரே நூற் கொள்வனவின் போது மிக முக்கிய பங்காளியாகக் கணிக்கப்படல் வேண்டும். நூற் கொள்வனவை வருடத்தில் ஒரு குறித்த தினத்தில் மட்டும் மேற்கொள்ளாமல் வருடத் துக்கென ஒதுக்கப்பட்ட பணத்தில் வருடம் முழுவதும் வச திக்கேற்றபடி கொள்வனவு செய்துகொள்ள மேவிடம் அணு மதிக்கலாம். இதன்மூலம் இறுதி நேர நெருக்கடிகள் தவிர்க் கப்படுவதுடன் தரமான நூல்களே ஆராய்ந்து, rெ' னவு செய்ய வசதியும் அவகாசமும் ஏற்படும், புத்தக விற் பனே நிலேயங்களுடன் நூலகம் நெருங்கிய தொடர்பு வைத் திருந்து புதிய நூல்கள் விற்பனேக்காக வந்ததும் அறிந்து, தரமான நூல்களேத் தெரிவுசெய்து கொள்ளலாம். தினசரி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் காணப்படும் நூல் விமர்ச னங்களே, வாசித்து வைத்தும், அவற்றைக் கத்தரித்து ஒரு கோவைப்படுத்தி வைத்தும் தேவைப்படும்போது வெளியீட் டாளருடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வெளியீட் டாளரிடமிருந்து அந்த நூல்களேக் கொள்வனவு செய்து கொள்ளலாம்.
நூற் கொள்வனவினே சில நூலகங்கள் கூட்டுறவுமுறை யில் மேற்கொள்வதுண்டு. ஒரே பிரதேசத்தில் உள்ள சில நூலகங்கள் தமக்கிடையே ஒரு புரிந்துணர்வின் அடிப்படை யில் பொதுவான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வ
[ኛ (፰

தன் மூலமும், ஒரு தாய் அமைப்பின் கீழ் பல்வ்ேறு ஊர்களில் இயங்கும் கிளே நூலகங்களுக்கான கொள்வனவை அத்தாய்ச் சங்கம் மேற்கொள்ளும் வேளையிலும் கூட்டுக் கொள்வனவு முறை கூடியளவு பயனுள்ளதாக இருக்கும்.
கூட்டுமுறைக் கொள்வனவை மேற்கொள்ளும் நூலகர் கள் தமக்கிடையே நூல் பரிமாற்றம் செய்து குறைந்த நிதி வசதியிருப்பினும், கூடிய சேவையினே தத்தமது வாசகர் களுக்கு அளிக்கவும் இத்தகைய திட்டமிட்ட, கூட்டுக் கொள் வனவு முயற்சிகள் உதவ முடியும் கூட்டுக் கொள்வனவின் போது கூடியளவு பணத்தொகையில் நூல் கொள்வனவு செய்யப்படுவதால் வியாபாரக்கழிவு கணிசமான அளவு பெற வாய்ப்புண்டு. மேலும், விலேயுயர்ந்த நூல்களேக் கொள்வனவு செய்யும்போது ஒரே நூலின் பல பிரதிகள் கொள்வனவு செய்யாமல் வெவ்வேறு நூல்களேக் கொள்
வனவு செய்துகொள்ள முடிகின்றது. பின்னர் நூலகங்களுக்
கிடையே நூல் பரிமாற்றம் மேற்கொண்டு, தத்தமது வாச கர்களுக்கு தமது குறைந்த நிதிவாய்ப்புடனும் கூடியளவு
நூல்களே வழங்கமுடியும்.
நூலகர்கள் தம் நூற் கொள்வனவின்போது கவனிக்க வேண்டிய முக்கியமானதொரு விடயம் உள்ளூர் வெளியீடு களுக்கு மதிப்பும், முக்கியத்துவமும் அளிப்பதாகும். பலத்த போட்டிகளுக்கும், பல்வேறு இடையூறுகளுக்கும் மத்தியில் பிரசுரமாகும் உள்ளூர் வெளியீடுகளே நமது பிரதேசத்தி லுள்ள சகல நூலகங்களும் கொள்வனவு செய்யவேண்டியது தார்மீகக் கடமையாகும்.
சுதேச எழுத்தாளர்கள் தம் ஆக்கங்களே தமிழ் நாட்டில் பிரசுரிப்பதில் கூடிய ஆர்வம் காட்டி வருவதற்கு இந்திய அரசு அங்கு வெளியாகும் நூல்களில் ஒரு பங்கைத் தன் நூலகச் சேவைக்கென கொள்வனவு செய்வது ஒரு காரண மாகும். இத்தகைய நடைமுறை இலங்கையிலும் உள்ளூ ராட்சி அமைச்சில் கொள்கையளவில் இருப்பினும் நடை
占盟

Page 40
முறையில் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகின்றது 7 பது அனுபவபூர்வமாகக் கசப்புடன் உணரப்படுகின்றது
இத்தகைய ஒரு சூழ்நிலயில் எமது எழுத்தாளர்கள் தமது பிரசுரங்களுக்காகத் தமிழ் நாட்டை அணுகும்போது எமது பிரதேசத்து வெளியிட்டாளர்களும் அச்சகங்களும் வறுமை நிலமை எய்துவது தவிர்க்கமுடியாததாகும். இந் நிலேயினே மாற்றி உள்ளூர் தயாரிப்புகளுக்குத் தமிழ்ப் பிர தேச நூலகங்கள் இருகரம் நீட்பு வரவேற்பளித்தல் விரும் பத்தக்கது. இதன் மூலம் உள்ளூர் எழுத்தாளர்களே ஊக்கு விப்பதுடன், உள்ளூர் அச்சுக்கூடங்களுக்கும் தொழில் வாய்ப்பளிக்க முடியும்.
யாழ்ப்பான மாநகரசபை தன் கிளேகளுக்கென உள்ளூர் வெளியீடுகளே தலா 8 பிரதிகள் விதம் கொள்வனவு செய்து வருவது பலரும் அறிந்தது அதைப்போல இலங்கைத் தேசிய நூலகசேவைகள் சபை உள்ளூர் எழுத்தாளர்களே ஆனக்குவிக்கும் நோக்குடன் அவர்களது வெளியீடுகளில் சில பிரதிகளே அவற்றின் தரத்தை மதிப்பிட்டுக் கொள்வனவு செப்கின்றது. குறிப்பிட்ட நூல் அந்த வருடத்தில் வெளி யிடப்பட்டிருத்தல் வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு அங் கானப்படுவதுண்டு முன்னேய வருட நூல் அந்த 11 ܐܬܐܘ கொள்வனவுக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
தமது வாசகர்களேக் கவரும் நோக்குடன் ஆரோக்கிய மான நூற்கொள்வனவை மேற்கொள்ள விரும்பும் ஒரு நூலக நிர்வாகம், தன் நூல் கொள்வனவின்போது சில விடயங்களேக் கவனத்தில் கொள்ளல் நன்து.புதிதாக : வனவு செய்யப்படும் நூல்கள் அந்நூலக இருப்பில் ஏற்க னவே இல்லாததாக விருத்தல் வேண்டும். இதை, புதிய நூல் சுளேக் கொள்வனவு செய்யும் முன்னரே தீர்மானிக்கத்தக்க தான ஒரு ஒழுங்கை ஏற்படுத்தி வைத்திருக்கவேண்டும்.
வாசகரின் தேவையை அடிப்படையாகக் கொண்ட நூல் தெரிவையே மேற்கொள்ள வேண்டும். வாசகரின்
f壶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவையை அறிந்துகொள்ள பல வழிகள் உள. காலத்துக் குக் காலம் ஒரு கேள்விக்கொத்தை வாசகர்களுக்கு விநியோ கித்து அதன்மூலம் அவர்களது விருப்பு வெறுப்புக்களே அறிந்து கொள்ளலாம். நூலகத்தில் வாசகரின் விருப்பமான நூல்களே அவர்களே குறித்துத் தரும் வகையில் ஒரு பதி வேட்டை வைத்திருக்கலாம். அதில் வாசகர் தாம் விரும்பும் நூலின் தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டாளர், விலே போன்ற விபரங்களில் தெரிந்தவற்றைக் குறித்துத் தரலாம்.
மாதாந்தம் வாசகர் இரவல் பெறும் நூல்களின் விபரத் தைத் தொகுத்து வருடாந்தம் எத்தனே நூல்கள் என்ன நாளில் இரவல் வழங்கப்பட்டன என்ற புள்ளி விபரத்தைத் தயாரித்து வைத்தல் நூலகரின் கடமையாகும். இத்தகைய புள்ளிவிபர அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுகளுள் அடங் கும் நூல்கள் எத்தனே தடவை இரவல் பெறப்பட்டன என் பது தெளிவாகும். அதிகமாக வாசிக்கப்படும் துறைக்கு நூற் கொள்வனவின்போது முன்னுரிமை அளிக்கலாம்.
மேலும் பாடசாலே மாணவர்களுக்குரிய பயிற்சிப் புத்த கங்களில் பல பிரதிகள் கொள்வனவுசெய்து தனியான் தட்டுகளில் வைத்திருந்து உசாத்துணே நூல்களாக அவற்றை விநியோகிக்கலாம்.
நூலகரினதோ, பிற அதிகாரிகளினதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப நூல் கொள்வனவு செய்யப் படக் கூடாது.உள்ளூரில் உள்ள புத்தகப் பிரியர்களே அணுகி அவர்களது ஆலோசனைகளேக் காலத்துக்குக் காலம் பெற் றுக்கொள்ளல் நன்று. இதற்கு வழிசெய்யும் வகையில் நூல கத்தில் வாசகர் சந்திப்புக்களே ஒழுங்கு செய்தல் நன்று. இச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு முறையில் நடைபெறு மாயின் சிறந்த பல கருத்துக்களே வாசகர்களிடமிருந்தே பெற்று அவர்களுக்கான நூலக சேவையைத் திறம்பட மேற்கொள்ள முடியும்,
枋量

Page 41
இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவை:
1. Herath, Mervyn, “Book Distribution problems in South East Asia', Roads to Wisdom, Ed. Ishvari Corea, p. 43 - 63.
2. ... ... “Reading tastes and the selling of books', Libraries and People, Ed. Ishvari Corea, p. 243 - 248.
3. Sharr, F. A. “Acquisition policy for a public
1ibrary'', Libraries and People, Ed. Ishvari Corea, p. 61 - 66.
66

ア
பாடசாலை நூலகங்களும் அவற்றின் சேவைகளும் சில குறிப்புகள்
தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலை நூலகங்கள் பற்றிப் பேசும் போது ஏகோபித்த குரலில் எம்முன் வைக்கப்படும் கருத்து பெரும்பான்மையான பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை என்பதாகும். இங்கு நூலகங்கள் என்ற பதத்தின் அர்த்தம் அவரவர் கருத்திற்கேற்ப மாறுபடுகின்றது. நூல கம் என்றதும் தனியானதொரு கட்டிடத்தையும் அதில் ஒழுங்காகவும் நிரைகளாகவும் அடுக்கப்பட்டிருக்கும் நூல் களுக்குக் காவலராக அமர்ந்திருக்கும் ஒரு ஊழியரையும் (பெரும்பாலும் அப்பாடசாலையின் பழைய மாணவர் அல் லது உயர் வகுப்பு மாணவர்) மனதில் உருவகப்படுத்திக் கொள்வர். வேறு சிலர் இது ஒரு வகுப்பு அல்லது ஒரு வகுப்பறையின் மரத்தடுப்புக்கு அப்பால் அல்லது ஒரு வகுப்பறையின் ஒன்றிரண்டு புத்தக அலுமாரியில் வைக் கப்பட்டிருக்கும் நூல்களையும், சில பத்திரிகைகளையும்,
67

Page 42
சஞ்சிகைகளையும் மனதில் இருத்திக் கொள்வர். பெரும்பான் மையான பாடசாலைகளில் நூலகம் இல்லை என்று கூறப் படும் கருத்து இத்தகைய நூலக அமைப்புகள் இல்லை என்பதையே மறைமுகமாகச் சுட்டி நிற்கின்றது.
இத்தகைய நூலகங்களை சகல பாடசாலைகளிலும் நிறு வுவதானல் அது பெரும் பணச்செலவுக்கு வழிவகுப்பதாகி விடும். பாடசாலைக்கு நூலகம் அத்தியாவசியம்ானது என்று கொள்கையளவில் சகல தரப்பினரும் ஏற்றுக் கொண்டி ருப்பினும் வேறு பல அவசியங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை ஏற்படும் போது நூலகத்தின் தேவையும், அதற்கான நிதி ஒதுக்கீடும் பின் தள்ளப்பட்டு விடுகின்றன. கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலை நூலக வரலாற்றை ஆராய்ந்து பார்க்குமிடத்து இது தெளிவாகப் புலப்படும். நகரத்தை அண்டிப் பாடசாலைகள் நூலக சேவையை ஒரளவு விருத்தி செய்து கொண்டு வரும் அதே வேளை புறநகர்ப் பகுதி களிலும், கிராமப் புறங்களிலும் அமைந்துள்ள ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைகளில் நூலக வசதி என்பது கேள் விக் குறியாகி நிற்கின்றது.
பாடசாலை நூலகத்தின் முக்கியத்துவம் காலத்திற்குக் காலம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. தமிழ்ப் பிரதேசங் களில் சிறுவர் நூலகங்களின் பற்ருக் குறையை ஈடு செய் யத் தக்கது பாடசாலை நூலகங்களாகும். சிறுவர்களுக்கு ஆரம்பக்கல்வியை ஊட்டும் பாடசாலைகள் அவர்களுக்கு நூல் வாசிப்புப் பழக்கத்தையும் படிப்படியாக ஊட்டத் தக்கதாக நூலகசேவையை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். பாடவிதானத்திற்குட்பட்ட கல்வியுடன் பொது வாசிப்பும் அவர்களுக்குப் படிப்படியாக அறிமுகப்படுத்தப் படல் வேண்டும் என்ற கருத்து இன்று முன்நிலைப்படுத்தப் பட்டு வருவது கண்கூடு.
68

மாணவர்களின் பொது அறிவு விருத்திக்கும் அறிவுத் தேடலுக்கான அவர்களது ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் நூலகசேவை ஆரம்பப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப் படல் வேண்டும். நூலகம் என்பதற்கு புதியோர் அர்த்தம் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். குறிப் பாக நிதிப்பற்றக் குறையால் நூலக வசதி இல்லையென வருந்திக் கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கு இத்தகைய புதிய அணுகுமுறை மிக அவசியமாகின்றது.
இன்றைய விஞ்ஞான உலகில் நூலகம் என்ற பதம் பெளதிகக் காரணிகளால் உருவாகும் கட்டிடத்தையோ நூல்களையோ மட்டும் குறிப்பதல்ல என்ற அடிப்படைக் கருத்தில் முதலில் தெளிவு பெறல் வேண்டும். நூல்களின் சேர்க்கைகள் மட்டுமே நூலகமாகும் என்ற நிலை காலம் கடந்ததொன் ருகும். இன்று நூலகங்களில் நூல் உருவில் காணப்படாத எத்தனையோ சாதனங்கள் சேர்க்கைக்கு உட்பட்டுள்ளன. புகைப்படங்கள், திரைப்படச் சுருள்கள், கசற் ஒலிப்பதிவு நாடாக்கள், வீடியோ ஒளிப் பதிவு நாடாக்கள் ஒவியங்கள், பத்திரிகை வெட்டுத்துண்டுகள், கையெழுத்துப் பிரதிகள் இப்படி ஏராளமானவை நூலகத் தின் சேர்க்கைகளாகி விட்டன. இத்தகைய சேர்க்கைகளின் ஒரு பகுதியே நூல்கள் என்றநிலை இன்று ஏற்பட்டு விட்டது.
இந்த அபிவிருத்தியின் விளைவாக, நூல்களை வாசிக்கக் கொடுப்பதும், அதை மீளப்பெற்று வைப்பதும் தா ன் நூலகத்தின் சேவை என்ற நிலையும் மாறிவிட்டது, வாசக ருக்குத் தேவையான தகவலைக் கொடுப்பதும் அவர் ஒரு தகவலைப் பெற வழிகாட்டுவதும் தா ன் நூலகத்தின் சேவை என்ற நிலை இன்று உருவாகிவிட்டது.
இந்த நிலையில் ஒரு பாடசாலையில் நூலகவசதி இல்லை என்று கூறிக்கொண்டு நூ ல க க் கட்டிடத்தையும், நூல் பெட்டிகளையும், அதை ஒழுங்குபடுத்திக் கட்டிக்காப்பதற்கு பாதுகாவலர்களையும் எதிர்பார்த்து இன்னும் எத்தனை வருடங்களுக்குக் காத்திருக்கப் போகின்றேம்?.
69

Page 43
நூலகக் கட்டிடங்களும், நூல்களும் மட்டும் நூலக சேவையை வழங்கிவிடாது என்ற கருத்தை ஏற்றுக்கொண் டவர்க்ள் மிக இலகுவாகப் பாடசாஃலகளில் மாணவர்களின் அறிவு விருத்திக்குகந்த நூல்க சேவையினே வழங்க முடியும்.
அதை எவ்வாறு வழங்கலாம் என்பதை ஆராய்வதே இக்
கட்டுரையின் நோ க்கமாகும்.
பெரும்பாலான ஆரம்பப் பாடசாஃவகளில் வகுப்பறைத் தட்டுப்பாடு காணப்படுவது இயல்பு இத்தகைய பாடசாஃவ களில் ஒரு கரும்பலகையோ அல்லது உட்சுவரில் ஒரு பகு தியோ ஆரம்ப நூலக சேவையை வழங்கப்போதியதாகும். நூலக சேவையை வழங்குவதற்கெனத் தொண்டுள்ளம் கொண்ட ஒர் ஆசிரியர் தேவை. ஒரு பாடசாலையில் அத்து கைய ஒருவராவது இருக்க மாட்டாரா என்ன? சிறுவர் களுக்கான கவிதைகள், கதைகள், கட்டுரைகள், அறிவியல் துணுக்குகள் ஆகியவற்றைப் பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் தேடிப் பெற்றுக்கொள்வதும், சேகரித்துப் பாட சாலேயில் வைத்திருப்பதும ஆசிரிய நூலகரின் கடமையா கும். நாள்தோறும் அல்லது குறிப்பிட்டகால இடைவெளி பில் கரும்பலகையில் அல்லது சுவரின் ஒரு பகுதியில் ஒரு நாளில் அவர் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களில் சில வற்றை ஒட்டிவைத்து மாணவரின் பார்வைக்கு விடவேண் டும். சிறுவர் சஞ்சிகைகளில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டோ ஸ்ரட் பிரதி தினசரிப் பத்திரிகைகளின் வார இதழ்களில் வரும் சிறுவர் பகுதிகள், பொதுச் சஞ்சிகைகளில் வரும் சிறு வர் பகுதிகள் போன்றனவற்றிலிருந்து ஆசிரிய நூலகர் தமக்குத் தேவையான தகவல்களேப் பெற்றுக்கொள்ளலாம். தரமான சிறுவர் ஓவியங்கள், கார்ட்டூன்கள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றைத் தவிர்க்கக்கூடாது. வெறும் அறிவுத்துறைத் தகவல்களை மட்டும் வெட்டி ஒட்டி விடுவ தன் மூலம் சிறுவர்களின் நூல் ஆர்வத்தை வளர்க்க முடி யாது. பொதுவான பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்து
FI)

வழங்கினுல் தான் எமது மூல நோக்கமான சிறுவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல் என்ற இலக்கை நோக்கி முன்னேற முடியும்.
சிறுவர்களுக்கான சுவர்ப்பத்திரிகைத் திட்டத்தினேயும் இத்தகைய பாடசாலேகளில் அறிமுகப்படுத்தலாம். இத் திட் டத்தின்படி மாணவர்களின் ஆக்கங்களே கவர்ச்சியான வர் ணத்திலும், துலக்கமான எழுத்திலும் எழுதிச் சுவரின் ஒரு பகுதியில் ஒட்டி வைத்து எழுதும் ஆர்வத்தை வளர்க்கலாம். எழுத்தார்வம் மிக்கவர்கள் இத்திட்டத்தின் மூலம் தூண்டப் பட்டு ஒழுங்கான வழிகாட்டல் மூலம் எதிர்காலத்தில் சிறந்த அறிஞராக வளர அத்திவாரம் இடலாம். எழுத்தில் ஆர்வம் குறைந்தவர்களும் தம் நண்பர்களின் ஆக்கம் கண்டு தாமும் தம்மை வளர்த்துக்கொள்ள வழி அமைக்கும் இத் திட்டத்தை ஆசிரிய நூலகர் மேற்கொள்ளலாம்.
இத்தகைய இரு வழித்திட்டத்தின் மூலம், வசதிமிக்க ஒரு நூலகத்தின் மூலம் கிடைக்கக் கூடியதான சேவையை, இருப்பதைக் கொண்டே சிறப்புற வழங்க நூலக வசதி
குன்றிய ஒரு பாடசாலையாலும் முடியும்.
இனி நூலக வசதி ஒரளவு கொண்ட ஒரு பாடசாலே யைப் பார்ப்போம். இங்கு சில நூல்களும் அவற்றைப் பேணத்தக்க ஒரு அலுமாரியும் மட்டும் உள்ளனவென்று கொண்டால் இவற்றைக் கொண்டு எத்தகைய நூ ல க சேவையை வழங்கலாம் எனக்காண்போம். நூற்சேர்க்கை காலத்திற்குக் காலம் வளர்ந்து கொண்டு போவது இயல்பு. நூல் எண்ணிக்கையின் வளர்ச்சி மட்டும் கவனத்திற்கு எடுக்கப்படக் கூடாது. தரத்திலும் அவை வளர்ச்சியுற்று இருக்கவேண்டியது அவசியமாகும்.
பெரும்பாலான பாடசாலை நூலகங்களின் மொத்த நூற் தொகையின் பெரும் பங்கு ஆங்கில மொழியில் எழுதப் பட்ட நூல்களாக உள்ளன. இலவசமாகக் கிடைக்கும்

Page 44
வெளிநாட்டு அன்பளிப்புகளாலும். பெற்முேரால் வழங்கப் பட்ட நூல் அன்பளிப்புகளாலும் இவை ஏற்படுவது வழமை. தமிழ் மொழி மூலமான சிறுவர்க்குரிய நூல்களின் வெளியீடு குறைவானதால் இந்நிலைமை என்று கூறப்படுவதும் உண்டு. ஆனல் தமிழில் வெளியிடப்பட்ட அனைத்துச் சிறுவர் நூல் களும் நூலகத்தில் உள்ளனவா என்று ஆராய்ந்தால் அவை கூட முழுமையாக இல்லா திருப்பதைக் காணமுடியும். இதி லிருந்து சிறுவர் நூலகங்களுக்குரிய நூல்கள் 7 டசாலை நூலகங்களில் திட்டமிட்டுச் சேர்க்கப்படாமையின் உண்மை நிலையினைப் புரிந்து கொள்ளமுடியும்.
கொள்கையளவில் தமிழ்ப் பிரதேசப் பாடசாலை நூல கங்களில் பெரும்பான்மையான நூல்கள் தமிழ்மொழி மூலம் இருக்கவேண்டு ' என்று ஏற்றுக் கொள்பவர்கள் தமது பாட சாலையில் அத்தகைய நூல்களைப் பெற்றுக்கொள்ள வேண் டிய நடவடிக்கைகளில் திட்டமிட்டு இறங்கவேண்டும்.
ஒரு பாடசாலையில் நூற் கொள்வனவு காலத்திற்குக் காலம் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப் படுகின்றன. பல பாடசாலைகள் தனது வருடாந்த பரிசளிப்புத் தேவைக் கென நூற்கொள்வனவு செய்யும்போது வர்த்தகர் வழங் கும் கழிவினைக் கருத்திற்கொண்டும், நூற் கொள்வனவுக் கெனச் செலவிடப்படும் நேரத்தைச் சேமிப்பதைக் கருத்திற் கொண்டும் நூலகத்திற்கான நூல்களையும் ஒன் ருகவே வாங்கி விடுகின்றனர். அன்றைய தினம் நூற் சந்தையில் என்ன நூல்கள் விற்பனைக்கு இருக்கின்றனவோ அவற்றில் தான் அவர்களது தெரிவையும் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும் நூற் கொள்வனவு இத்தகைய குறுகிய நோக் கம் கொண்ட நடைமுறைகளினல் பலனற்றதும், பணவிர யம் மிக்கதுமாகின்றது.
பாடசாலை நூலகங்களில் நூற்கொள்வனவு இருவழி முறைகளில் மேற்கொள்ளப்படலாம். முதலாவது, மத்திய
72

மயமாக்கப்பட்ட நடைமுறை, இதன்படி கல்வித் திணைக் களம் அல்லது கல்வித் திணைக்களத்தினல் நியமிக்கப்பட்ட ஒரு பாடசாலையின் அதிபரின் மூலம் மொத்தமாக சகல பாடசாலைகளுக்கும் தேவையான நூல்களைக் கொள்வனவு செய்து விநியோகிக்கலாம் இந்த நடைமுறையின்படி ஆண் டுக்கு இவ்வளவு தொகை என நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப் பட்டு அத்தொகைக்குள் காலத்திற்குக் காலம் பாடசாலை நூலகங்களுக்கேற்ற நூல்களைப் பரவலாகக் கொள்வனவு செய்யலாம். வெளியீட்டாளர்களும் தங்கள் நூல்களை இலகு வில் விற்பனை செய்யும் நோக்குடன் நூற் கொள்வனவுக்கு நியமனம் பெற்ற பாடசாலையை, அல்லது கல்வித் திணைக் களத்தை நேரடியாக அணுகித் தமது நூலின் கணிசமான பிரதிகளை விற்பனை செய்யலாம். இதன் மூலம் வெளியீட் டாளருக்கும் ஒரு நிச்சயமான சந்தை வாய்ப்புக் கிட்டுவது மட்டுமல்லாது சிறுவர் இலக்கியங்களின் வெயிட்டிலும் ஆர்வம் காட்ட வாய்ப்பு ஏற்படும்.
இரண்டாவது நடைமுறை. ஒவ்வொரு பாடசாலைகளும் கணிசமானதொரு தொகையை வருடாந்த நூற் கொள்வ னவுக்கென்று ஒதுக்கி,பரவலான கொள்வனவை மேற்கொள் ளல் என்பதாகும் வருடத்தின் பல்வேறு காலகட்டங்களில் நூலகத்திற்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரியர் அல்லது நூலக ரின் உதவியுடன் சிறுவர் இலக்கியங்களையும், அறிவு நூல் களையும் கொள்வனவு செய்வதன் மூலம் தமிழ் நூல்களைச் சேகரித்துக்கொள்ள முடியும்.
நிதிப் பற்ருக்குறை காரணமாகப் பல பாடசாலைகள் நூற்கொள்வனவில் நாட்டம் கொள்வதில்லை. அன்பளிப் பாகக் கிடைக்கும் நூல்களைப் பெற்றுச் சேர்ப்பதில் மட்டும் அக்கறை காட்டுவதுண்டு:
இத்தகைய போக்குள்ள பாடசாலை நூலகங்களில் சேக ரிப்பில் உள்ள நூல்கள் காலங்கடந்தவையாகவும், பள்ளிச் சிறுவர்களுக்கு ஏற்றதல்லாதனவாகவும் இருப்பது இயல்பு.
73

Page 45
நிதிப்பற்ருக்குறை காரணமாகத் தமிழ் நூல்களைக் கொள் வனவுசெய்ய இயலாத நிலையிலுள்ள பாடசாலை நூலகங்கள் மட்டுமல்லாது மற்றைய வசதியுள்ள பாடசாலைகளின் நூல கங்களும் தமது மாணவர்களின் நலனைக் கருதி நூல்களைப் பாடசாலையிலேயே தயாரித்துக் கொள்ளலாம். பத்திரிகை களில் வரும் பல கட்டுரைகளைக் கத்தரித்து பாடவாரியாகப் பிரித்துச் சேகரித்து அவற்றைத் தனித்தனி நூல்களாக ஒட்டி நூலகத்தில் வைப்பதன் மூலமும் மாணவர்கள் பயன் பெற வழியமைக்கலாம். பாவிக்க முடியாத பழைய புத்த கங்களை எடுத்து ஒவ்வொரு புத்தகங்களின் பக்கங்களிலும் அழகாகக் கத்தரிக்கப்பட்ட சிறு கட்டுரைகளை ஒட்டி வைப் பதன் மூலம் புதிய நூல்கள் உருவாக்கப்படலாம். இதை மாணவர்களைக் கொண்டே செய்யமுடியும். இவை எளிய முறையில் தயாரிக்கப்படும் நூலாக இருப்பினும் இவற்றின் பெறுமதி அளப்பரியதாகும்.
பாடசாலைகள் தமது நூலகங்களுக்குப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கொள்வனவு செய்வதில் சிக்கனத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் அதற்குச் செலவிடப்படும் பணத்தில் நூல் களைக் கொள்வனவு செய்யலாம்.பத்திரிகைகள்,சஞ்சிகைகள் நூலகத்திற்கு இன்றியமையாதன் என்பது மறுக்க முடியாத உண்மை. உலக நடப்புக்களை உடனுக்குடன் அறியத் தருவ தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளின் பணி அளப்பரியது.
பாடசாலை நூலகங்களுக்கு தமிழ்ச் சஞ்சிகைகள் கொள் வனவு செய்பவர்கள் எத்தனை சதவீதம் சிறுவர் சஞ்சிகை களுக்கென ஒதுக்குகின்றர்கள் என்பதை உற்று நோக்குதல் அவசியம் தென்னிந்திய, இலங்கைத் தமிழ் சஞ்சிகைகளில் இன்று பல சிறுவர் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. அம்புலி மாமா, ரத்தினபாலா, கோகுலம், பாலமித்திரா, அர்ச்சுணு போன்ற சிறுவர் சஞ்சிகைகளும், முத்தாரம், கல்கண்டு, கலேக் கதிர் மஞ்சரி போன்ற துணுக்குச் சஞ்சிகைகளும் வெளி வரு கின்றன.இங்கு குறிப்பிடப்படாதவையும் இருக்கலாம். இவற்
74

றில் ஒரு பாடசாலை எத்தனை சஞ்சிகைகளை வாங்குகின்றன. நிச்சயமாக முழுவதும் கொள்வனவு செய்யப்படுவதில்லை.
பாடசாலை நூலகங்களில் குமுதம், விகடன், மங்கை போன்ற ஜனரஞ்சக சஞ்சிகைகள் அதிகம் இடம் பெறுவ துண்டு. இவை ஆசிரியர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொழுதுபோக்கு அம்சங்களாகவே கருதப்படல் வேண்டும். மாணவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைக் கூட்டும் சிறு சஞ்சி கைகள் அதிகமாகக் கொள்வனவு செய்யப்படல் வேண்டும். கொள்வனவு செய்யப்படும் பத்திரிகைகள் மாத முடிவில் அல்லது வருட முடிவில் நிறுத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். அத்தகைய நடைமுறைகள் நிறுத்தப்பட்டு பழைய பத்திரிகைகளில் இருந்து தேவையான கட்டுரைகளை வெட்டி எடுத்துப்பேணும் நடைமுறை அமுலாக்கப்படல் வேண்டும். மேலும் பத்திரிகைகளில் வார மலர்கள் தொகுக்கப்பட்டு வருடாந்தம் மட்டை கட்டப்பட்டு பேணிப் பாதுகாக்கப் படல் வேண்டும். ஏனெனில் வார இதழ்களில் நம் பிரதேசம் தொடர்பான கட்டுரைகளும், தகவல்களும் வெளிவருவது வழக்கம், இவை தொகுத்துப் பாதுகாக்கப்படுவதால் நூல கத்தின் பெறுமதி அதிகரிக்கும் என்பது திண்ணம். முழுப் பத்திரிகைகளும் சேகரித்து வைக்கப்படுதல் இடப்பிரச்சனை யைத் தோற்றுவிக்குமாதலால் வார இதழ்களை மட்டும் ஆண்டுதோறும் மட்டைகட்டிச் சேகரித்து வைக்கலாம். இத் தகைய தொகுப்புக்களில் உள்ள கட்டுரைகள், அவற்றின் ஆசிரியர், வெளியிடப்பட்ட திகதி, பக்கம் போன்ற தகவல் களைக் கொண்ட வழிகாட்டிகளைத் தயாரித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் கட்டுரையை மாணவர்களும், ஆசிரியர் களும் இலகுவில் பெற்றுக்கொள்ள வழி அமைக்க முடியும்.
சஞ்சிகைகளுக்கடுத்தபடியாக நாம் பாடசாலை நூலகங் களில் சேகரிக்க வேண்டியவை, ஞாபகார்த்த மலர்களாகும். வெள்ளிவிழா, பொன்விழா போன்ற நிகழ்வுகளின்போதும், கோவில்களில் கும்பாபிஷேகம் புனராவர்த்தனம் போன்ற வைபவங்களின் போதும் இவை வெளியிடப்படும். சிறப்பு
75

Page 46
மலர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மட் டும் மக்களின் நினைவில் நின்று பின்பு மறைந்துவிடும் இயல் புடையன. இத்தகைய சிறப்பு மலர்களைச் சேகரித்துத் தொகுத்து வைத்திருந்தால் அவை நூலகத்தின் மதிப்பை எதிர்காலத்தில் உயர்த்தும். மலர்களின் தொகுப்பிற்கு பத் திரிகைகளின் வார மலர்களுக்குச் செய்வது போல வே குறித்த துறையில் எழுதப்பட்ட கட்டுரை எந்த மலரில் உள் ளது என்ற தகவல்களைக்கொண்ட வழிகாட்டி ஒன்றினைத் தயாரித்து வைத்திருந்தால் அது வாசகரின் தகவல் தேட லுக்கு உறுதுணையாய் இருக்கும் இத்தகைய வழிகாட்டிகளை மாணவர்களின் ஒய்வு நேரத்தில் அவர்களைக் கொண்டே தயாரித்தல் எளிது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டிகளைப் பார்த்து ஆசிரியரின் வழிகாட்டுதலின் மூலம் மாணவர்கள் இதனை மேற்கொள்ள முடியும்.
ஒரு பாடசாலையின் மதிப்பை உயர்த்துபவர்கள் அப் பாடசாலையின் மாணவர்களே. சமூகத்தின் உயர் நிலையில் உள்ள மாணவர்கள் தாம் குறிப்பிட்ட ஒரு பாடசாலையின் மாணவர் என்று கூறித் தான் பெருமையடைவதும், இந்தப் பெரியார் எமது பாடசாலையின் மாணவர் என்று கூறிப் பாடசாலை பெருமையடைவதும் இயல்பு. அத் த  ைக ய பெருமை சேர்க்கும் மாணவர்களின் வாழ்க்கைச் சரிதங்க ளைத் தொகுத்து வைத்தல் பயனுடைய நடவடிக்கையாகும். தமிழ்ப்பெரியார் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை நூலுரு வாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிலர் அவர்களது வாழ்க்கைக் குறிப்புக்களைத் தேடி அலைந்து களைத்த வேளையில், அவர் ஒரு காலத்தில் அதிபராக இருந்த கல்லூரி ஒர்ளவு தகவல்களை வழங்கி அவர்களுக்கு உதவியது. எதிர் காலத்தில் ஆய்வுக ளுக்கும் உதவியளிக்கத் தக்கதாக இத்தகைய தொகுப்புக் கள் மேலும் விரிவாகச் சேகரிக்கப்படல் வேண்டும். அக் கட மையினை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட பாடசாலை களே நூலகங்களினூடாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும் தமது பழைய மாணவர்களின் இலக்கிய ஆக்கங்களை அவர்
76

களது நூல்களைச் சேகரித்து வைக்க சம்பந்தப்பட்ட பாட சாலைகள் முயற்சி செய்யவேண்டும். இதனல் எதிர்காலத்தி லாவது இத்தகைய ஆய்வுகளுக்குப் பூரணமாக உதவ முடியும்
இன்று பல பாடசாலைகள் மாணவர்களின் ஆக்கங்களைத் தொகுத்து கையெழுத்துப் பத்திரிகைகள் நடாத்துகின்றன. சில பாடசாலைகள் ஒரு படி முன்னேறி அவற்றை கல்லச்சுப் பிரதியாக்கம் செய்து விநியோகிக்கின்றன. ஒரு சில பாட சாலைகள் மேலும் ஒரு படி முன்னேறி அச்சிட்ட சஞ்சிகை யுருவில் ஆக்கங்களை வெளியிடுகின்றன. ஒரு பிரதேசத்தின் பாடசாலைகள் தங்களுக்குள் இத்தகைய சஞ்சிகைகளின் பிர திகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். முன்னணிப் பாடசாலை கள் மட்டும் தமக்கிடையே அத்தகைய பரிமாற்றங்களை வைத்துக்கொள்ளாது நாட்டமுள்ள பிற பாடசாலைகளுக் கும் தமது வெளியீடுகளை அனுப்பி அவர்களையும் ஊக்கு விக்க வேண்டும் இத்தகைய வெளியீடுகள் யாவும் பாட சாலை நூலகத்தில் ஓரிடப்படுத்தப்படல் வேண்டும்.
மேற் குறிப்பிட்டவை ஒரு பாடசாலை நூலகத்தில் சேக ரித்து வைக்கப்படக்கூடிய ஆவணங்களாகும் இவை சிக்கன மானவையும் எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியவையு மாகும் அதே வேளையில் நீண்டகாலச் சேகரிப்பில் நூல கத்தின் தரத்தினை மிகவும் உயர்த்தக் கூடியவை. இவை இரவல் வழங்கும் நூற்ருெகையுடன் அல்லாது தனியான சேமிப்புப் பகுதியில் பாதுகாக்கப்படல் வேண்டும்.
ஒரு புாடசாலை நூலகம் அன்ருடம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நூல்களை வழங்கி அவர்களது கல்வித் திட்டத்தை அமுல்படுத்த உதவுவதை மட்டுமே தன் கடமை யாகக் கொண்டுள்ளது என்ற கொள்கையிலிருந்து சற்று வேறுபட்டுச் சிறுவர் நூலகமாக இயங்கி சிறுவர்களின் பொது வாசிப்புத் திறனை அதிகரிக்க வசதியளிக்க வேண்டும் என்றும் அதற்கான எளிய நடைமுறைகளைப் பின் பற்றி சிக்கனமான சில திட்டங்களின் மூலம் அதிக பயன் பாட்
77

Page 47
டிஜனப் பெறலாம் என்றும் இவற்றை நடைமுறைப்படுத்தும் அதேவேளையில் நீண்டகால நோக்கில் ஒவ்வொரு பாடசாலை நூலகமும் ஒரு ஆவணக் காப்பகமாக மாற வேண்டும் என்றும் அதற்காக பாடசாலையின் வரலாற்றை நினைவூட் டக்கூடிய சகல வரலாற்றுக் குறிப்புகளையும் சேரித்துப் பண வேண்டும் என்றும் கண்டோம்.
嵌 景 景
கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவை:
ாலசுந்தரம், விமலாம்பிகை, கல்வி நிறுவன நூலகங் ள், ஆனைக்கோட்டை அயோத்தி நூலக சேவைகள்,
87.
a, Manil “Planning a Children's library'
rnal of Ceylon Library Association, Vol. 1 (2)
- Dec., 1962, p. 22 - 27.
7.

'
வைப்பு நூலகங்களும் ஆவணக் காப்பகமும் தமிழ்ப் பிரதேசங்களின் இன்றைய தேவைகள்
ஈழத்து நூல் வெளியீட்டுத் துறையில் முன்னெப்போது மில்லாத புதியதொரு வேகம் இன்று காணப்படுகின்றது; எழுபதுகளில் வெளிவந்த நூல்களை விட எண்பதுகளின் முன் அரைப்பகுதிகளில் அதிக நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த முன்னேற்றம் ஆரோக்கியமானது; வரவேற்கத் தக்கது. இந்த முன்னேற்றமானது புதிய வெளியீட்டாளர்களை ஊக்குவிக்கும் அதேவேளை, புதிய வாசகர்களையும் உருவாக் கும் தன்மை கொண்டது.
புதிய வெளியீடுகள் பிரசுரமாகும் இன்றைய சூழலில்
அவற்றின் பிரதிகளை ஒரிடப்படுத்திச் சேகரித்தலும் இன்றி யமையாதவொரு தேவையாகும் பேராசிரியர், க. கைலாச
79

Page 48
பதி அவர்களது கட்டுரையொன்றில் கூறிய கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது. (மல்லிகை, ஆகஸ்ட், 1982 ப. 91-95)
*யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு முத லிய பிரதான பட்டினங்களில் பொதுநூலகம், பல்கலைக் கழக நூலகம் முதலியவற்றை எழுத்தாளர், வைப்பு நூல கங்களாகக் கருதி ப் பொறுப்புணர்ச்சியுடன் பிரதிகளை வழங்கி உதவலாம். அவையும் ஈழத்து நூல்கள் அனைத்தி லும் சில பிரதிகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முன்வந்தால் இனிமேலாவது ஈழத்துத் தமிழ் நூல்கள் ஒவ்வொரிடத்திற் கிடைக்கக் கூடியதாயிருக் கும். உலகில் பல நாடுகளில் Depository Libraries எனப் படும் களஞ்சிய நூலகங்களும் (வைப்பு நூலகங்கள்) உண்டு. சட்டப்படி அவற்றிற்கு ஒவ்வொரு பிரதி அனுப்பப்படல் வேண்டும். இவைபோன்ற சட்டம் அல்லது குறைந்த பட் சம் ஒரு எழுதாச் சட்டம் தமிழ்ப் பகுதிகளில் இரண் டொரு நூலகங்கள் சம்பந்தப்பட்ட வரையிலாவது நடைமுறைக்கு வர வேண்டும், அப்போது தான் ஈழத்துத் தமிழ் நூல்களை ஒரு நூலகத்திலாயினும் முழுமையாகப் பார்த்து வாசிக்கக் கூடிய வாய்ப்பு உறுதியாக உண்டாகும். இல்லாவிடில் இலக் கிய நூல்களும் தினசரிப் பத்திரிகைகள் போல ஒரு நாள் ஒரு வார வாழ்க்கையுடன் முடிந்துவிடும் நிலைபேறற்ற நிலை நிலவும்."
தமிழ்ப் பிரதேசங்களில் இன்று வெளியாகும் நூல்களை இரு வகையாகப் பிரிக்கலாம். சிறுகதை, நாவல் போன்ற ஜனரஞ்சக நூல்கள் ஒருவகை; அறிவியல்துறை நூல்கள் மற்ருெரு வகை. அறிவியல்துறை நூல்களில் பாட நூல் களும் அடங்கும். பிரசுரமாகும் நூல்கள் அனைத்தும் ஒரு நூலகத்தினல் கொள்வனவு செய்யப்படுவதில்லை. பல்வேறு காரணிகளால் அது இயலாத விடயமாகும். யாழ்ப்பாணப் பொது நூலகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகமும்
80

ஈழத்துத் தமிழ் நூல்களைத் தேடிக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. அவை தமது சேகரிப்பினை, தம்மை நாடி வரும் வெளியீட்டாளர்கள். நூல் ஆசிரியர்கள், விதி யோகஸ்தர்கள் மூலமு ? பிறவழிகளிலும் மேற்கொண்டு வருகின்ற போதிலும், தமிழ்ப் பிரதேசத்தில் பிரசுரமாகும் நூல்கள் அ%னத்தும் இவ்வழியின் பயணுக அந்த இரு நூல கங்களையும் சென்றடைகின்றனவா என்பது கேள்விக்குரிய தாகும்.
நிதிப்பற்ருக்குறை மட்டுமல்லாது, நூற் கொள்வனவு தொடர்பான அடிப்படை விதிகள் நூல்கங்களுக்கிடையே வேறுபடலாம். பெரும்பாலும் சகல நூலகங்களிலும் தேர்ந் தெடுக்கப்பட்ட நூற் கொள்வனவு முறையே பின்பற்றப்படு கின்றது வெளிவரும் அனைத்தும் சேகரிக்கப்படுவதில்லை. சில நூல்கள் குறைவான பிரதிகள் அச்சிடப்பட்டு ஒரு வாச கர் கூட்டத்தின் இடையே விநியோகிக்கப்பட்டு விரைவில் தீர்ந்து விடுகின்றது
துந்த நிலையில் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதிப் பிர்சுரமாகும் நூல்கள் அனைத்திலும் ஒரு சில பிரதி களாவது குறிப்பிட்ட சில நா லகங்களில் வைப்பிடப் பட்டுப் பாதுகாக்கப்படல் வேண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு காலகட்டத்தில் பயணிக்கும் நாம் எமது சமகால நிகழ்வுகளின் பதிவுகளை எமது எதிர்காலச் சந்ததியி னருக்கும் தேடிப் பாதுகாத்து வைத்தல் அவசியமாகும்.
மேலும், சேகரித்து வைக்கப்படும் நூல்கள் தொடர் பான தகவல் சளை ஒரு நூல் விபரப் வட்டியலாகத் தொகுத் துக் காலத்துக்குக் காலம் வெளியிட வேண்டியதும் இன் றைய தேவைகளில் ஒன்று. தனிநபரோ, தனியொரு நிறு வனமோ இத்தகைய தொகுப்பு முயற்சியை மேற்கொள்ள முயலும்வேளை, அதற்குத் தேவையான சகல நூல்களையும் ஓரிரு நூலகங்களில் பெற முடியாது போகலாம், இதனல் இத்தகையதொரு தொகுப்பு பூரணமற்றதாகவே அமையும்
81

Page 49
இந்தக் குறை பாட்டினை நிவர்த்தி செய்து தரமான தொரு தூல் விபரப் பட்டியலைத் தமிழ்ப் பிரதேசத்தில் பிரக்ரிப்ப தென்பது வெளியீடுகளை ஒரிடப்படுத்திச் சேகரித்து வைத் திருக்கும் ஒரு ஸ்தாபனத்தின் மூலமே சாத்தியமாகும்.
இலங்கையில் வெளிய்ாகும் தமிழ், சிங்கள ஆங்கில நூல் களைப் பதிவு செய்யும் பொறுப்பு இலங்கைத் தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு சட்ட பூர்வமாக உண்டு. இலங்கையின் எப் பாகத்திலேனும் வெளியிடப்படும் நூல்களில் ஐந்து பிரதி கள் நூல் பதிவாளருக்கு அந்த நூலுடன் சம்பந்தப்பட்ட அச்சகத்தலைவர் அல்லது வெளியீட்டாளர் அனுப்பி வைக்க வேண்டும். பதிவாளர் நாயகம் அவற்றைப் பதிவு செய்த பின்னர் குறிப்பிட்ட நூலுக்கான பதிவிலக்கத்தினை அனு ப்பி வைப்பார். அவரிடம் பதிவுக்கென அனுப்பப் பட்ட நூல்களின் பிரதிகள் தேசிய நூதனசாலை, தேசிய சுவடிகள் காப்பகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலை க்கழகம், இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை ஆகிய வற்றுக்கு சேகரிப்பின் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகின் றன பதிவாளரினுல் பதியப்ப்ட்ட தகவல்களை அடிப்படை யாகக் கொண்டு இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை, “இலங்கைத் தேசிய நூல் விபரப்பட்டியல்" ஒன்றை சஞ்சி கை உருவில் வெளியிடுகின்றது. அதில் நூலின் ஆசிரியர் பெயர், வெளியிட்ட இடம், பதிப்பு விபரம், ஆண்டு, பக்கங் கள் நூலின் தொடர் விபரம், பதிவிலக்கம் போன்ற தகவல் கள் ஒவ்வொரு வகுப்பின் கீழும் ஆசிரியர் அகர வரிசைப்படி ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
இலங்கைத் தேசிய நூல் விபரப் பட்டியல் தமிழ் நூல் களுக்கான பதிவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின் றன. வெளியிடப்படும் நூல்கள் அனைத்தும் அங்கு பதிவு செய்யப்படுவதில்லை. இதற்குக்காரணம் பல வெளியீடாளர் களும், அச்சக உரிமையாளர்களும் தேசிய சுவடிகள் காப்பக த்திற்கு நூல்களை அனுப்ப வேண்டும் என்பது பற்றிய அறி
82

வைக் கொண்டிருப்பதில்லை. நூல்களைப்பதிவு செய்தல் வேண்டும் எனத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு சிலரும் அதை அக்கறையுடன் கவனத்துக்கெடுப்பதில்லை. தமக்கு ஒரு பிரதியையோ இரு பிரதிகளையோ கைவசம் அச்சகத் தேவைகளுக்கு வைத்துக்கொண்டு மிகுதியை வெளியீட்டா ளரிடம் ஒப்படைத்துவிடும் அச்சகத்தினரே நம்மிடையே அதிகமாகவுள்ளனர். தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு எமது தமிழ் நூல்களில் பெரும் பகுதி சென்றடையாமல் தேசிய நூற் பட்டியல் நமது நமிழ் வெளியீடுகளைப்பற்றிய தகவல் களைப் பூரணமாகத் தாங்கி வருவதில்லை.
நூல்களைப் பதிவு செய்யும் திட்டம் தேசிய மட்டத்தில் கண்டிப்புடன் செயற்படுத்தப்படாமையால் இந்த அக்கறை யின்மை காணப்படுகின்றது. மேலும் வருமானவரி தொடர் பான சிக்கல்களில் மா டிக்கொள்ள வேண்டி நேரிடும் என்ற பயமும் பல வெளியீட்டாளர்களிடமும் அச்சகத்தின ரிடமும் உள்ளது. இவை அனைத்தையும் விட இந்தப் பதிவு களால் ஏதும் நிதி ரீதியான நன்மை வெளியீட்டாளர்களு க்கு இல்லாமையால் இவ்விடயத்தில் அதிக அக்கறை எடுக் கப்படுவதில்லை என்பதிலும் உண்மை இல்லாமலில்லை.
தமிழ்ப் பிரதேசங்களில் பிரதேச மட்டத்தில் சில ஸ்தா பனங்களின் ஒருங்கிணைந்த சேவையின் மூலமாக ஒரு ஆவ ணக் காப்பகத்தை உருவாக்கி அதில் தமிழ்ப் பிரதேச நூல் களின் பிரதிகளைச் சேகரித்துப் பாதுகாத்து வைக்க நடவடி க்கை எடுக்கப்பட வேண்டும். அங்கு சேகரிக்கப்படும் நூல் கள், சஞ்சிகைகள் என்பவற்றைக் காலத்துக்குக் காலம் நூல் விபரப்பட்டியலாகத் தொகுத்துப் பொது நூலகங்களுக்கும் கல்வி நிறுவன நூலகங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இந்நூல் விபரப் பட்டியல் அவ்வவ் நூலகங்களில் நூற் கொள்வனவு நடவடிக்கைகளின் போது உதவியளிக்கக் கூடியதாகவிருக்கும் அதேவேளை எமது வெளியீடுகள் என் னென்ன என்பதனைப் பலரும் அறிந்து கொள்ளும் வாய்ப்
பையும் வழங்கும்.
SS

Page 50
பிரதேச மட்டத்தின் சுவடிகள் காப்பகத்தின் கடமைகளை மேற்கொள்ளக் க.டிய ஸ்தாபனங்களில் பல்கலைக்கழகங்கள், மாநகர சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் பிரதேச ஆணை யாளர் அலுவலகங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம், இவை அனைத்தும் இலங்கை நூலக சேவை வலை அமைப்பில் இடம் பெறும் நிறுவனங்களாகும்
தனியானதொரு கட்டிடத்தில் தனியொரு நிறுவனமாக ஆவணக்காப்பகமொன்றை நிறுவுவதென்பது உடனடிச் சாத்தியமானதல்ல இலகுவானதும் அல்ல. காலக் கிரமத் தில் இத்தகையதொரு தனி நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம். அதுவரை சேகரிப்புகளைப் பாதுகாக்கத் தற்காலிகமானதொரு கட்டமைப்பு அவசிய மாகும் இவ்வமைப்பின் கீழ் சேகரிக்கப்படும் நூல்கள் ஓரிட த்தில் தான் வைக்கப்பட வேண்டுமென்பதில்லை, துறைவாரி யாகப் பகுத்து பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படலாம். ஆயினும் நிர்வாக நடவடிக்கைகள் யாவும் ஒருமுகப்படுத்த ப்பட்டிருத்தல் சிக்கனமாகவும், ஒழுங்காகவும் சேகரிப்பை மேற்கொள்ள உதவும். நூல்களைப்பதிவு செய்யும் கடமை யானது ஒரு பதிவாளரினூடாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். பதிவு செய்யப்படுவதற்கெனப் பெறப்படும் நூலி ன் பிரதிகள் நூலகங்களின் வாசகர் இரவல் சேவைக்குப் பயன்படுத்தலாகாது. உசாத்துணை தேவைகளின் பொருட்டு மட்டும் மிக அவதானமாகக் கையாளப்படும் என்ற உறுதி யின் பேரில் குறுகிய நேரத்துக்கு வழங்கலாம். நீண்ட காலப் பாதுகாப்பின் பொருட்டே இந்த நூல் பெறப்படுகின்ற உண்மையைச் சம்பந்தப்பட்டவர்கள் எந்த நேரமும் மன தில் கொள்ள வேண்டும்.
நூல்களைப் பதிவு செய்வதற்கென மூன்று வழிகளினூ டாகப் பெற்றுக் கொள்ளலாம். அச்சகத்தவர், வெளியீட்டா ளர், ஆசிரியர் என்போரே அவர்களாவர். இவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு தத்தமது நூலின் சில பிரதி களைப் பதிவுக்கெனக் கோரல் வேண்டும். இலவசமாகப்
84

பெறப்படும் நூல்க்ளாதலால் அதிக,பிரதிகள் கோரப்படுவது வர்வொழுங்கைப் பாதிக்கும். ஒவ்வொரு நூலிலும் மூன்று பிரதிகள் போதுமானவை. நூலின் விபரங்கள் பதிவு செய் யப்பட்ட பின்னர் அவை வெவ்வேறு மூன்று நூலகங்களுக் குப் பாதுகாப்பின் பொருட்டு அனுப்பப்படல் வேண்டும்.
தமிழ்ப் பிரதேசங்களில் சகல அச்சகங்களும், தேசிய நலன்கருதித் தாம் அச்சிடும் நூல்களில் மூன்று பிரதிகளைப் பதிவுக்கென அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரப்படல் வேண்டும், அத்துடன் இது ஒழுங்காக நடைமுறைப்படுத் தப்படுகின்றது என்பதை ஒரு ஊழியர் மூலம் உறுதிப்படுத் தப்பட்டு வரல் வேண்டும். அச்சகங்களை மட்டும் நம்பியிரா மல் வெளியீட்டாளர்களையும், நூலாசிரியர்களையும் நாம் இத்திட்டத்தில் தொடர்புபடுத்தல் வேண்டும்.
பதிவு செய்வதற்கென நூலின் பிரதிகள் ஒழுங்காக எமக்குக் கிடைக்க வேண்டுமானுல் நாம் வெளியீட்டாளர் களேயோ, ஆசிரியர்களையோ ஏதோ ஒரு வகையில் கவர வேண்டும்.
யாழ்ப்பாண மாநகரசபை எமது பிரதேசத்தில் பிரசுர் மாகும் நூல்களில் ஆறு பிரதிகளைத் தமது கிளைகளுக்கெனக் கொள்வனவு செய்கின்றது. நூலாசிரியர்களும், வெளியீட் டாளர்களும் தமது நூலின் ஆறு பிரதிகளை நிச்சயமாக விற்பனை செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் தமது நூல் வெளிடப்பட்டதும் யாழ். மாநகர சபையை நாடுகின்றனர். இவ்வாருனதொரு நூற் கொள்வனவு முறையைப் பிற நூலக அமைப்புகளும் கூட்டாக அமுல்படுத்தலாம். அபி விருத்திச்சபை நூலகங்கள், பல்கலைக்கழக நூலகங்கள், மாநகரசபை நூலகங்கள், பாடசாலை நூலகங்கள் ஆகியவற் றுக்காக ஒரு நூலில் ஆகக் குறைந்தது முப்பது பிரதிகளா வது கொள்வனவு செய்ய முடிந்தால் நூலின் விற்பனை யாளர்கள் தாமாகவே முன் வந்து மூன்று பிரதிகளை இல வ்சமாகத் தருவர் என்பது திண்ணம்.
85

Page 51
பதிவு செய்யப்படும் நூல் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பதிவிலக்கத்தினை வழங்கிப் பதிவிலக்கம் உள்ள நூல்களை மட்டுமே பொது நூலகங்கள் கொள்வனவு செய்யவேண்டும் என்று ஒரு விதியை அமுல்படுத்துவதன் மூலமும் பதிவுக் கான நூல்களின் வருகையை உறுதிப்படுத்தலாம்.
பல்வேறு ஸ்தாபனங்களின் கூட்டு முயற்சியின் மூலம் ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரும் நூல்களைப் பதிவு செய்து பாதுகாத்து வைக்கும் திட்டமானது காலக்கிரமத்தில் தனி யொரு ஸ்தாபனமாக இயங்க ஆரம்பிக்கும் போது சேகரிப் புக்கள் யாவும் ஒரிடப்படுத்தப்படலாம்.
எமது நன்மையையும், எதிர்கால சந்ததியினரின் நன் மையையும் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் ஆக்க பூர்வமான நடவடிக்கையினை எடுப்பார்கள் என நம்புவோம்.
எமது வெளியீடுகள்
O நூற்பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூல்
வே. இ. பாக்கியநாதன் O கல்வி நிறுவன நூலகங்கள்
- வி. பாலசுந்தரம் | O நூலகவியல் தகவல் விஞ்ஞானம்
கலைச்சொற்ருெகுதி
- வி. பாலசுந்தரம் 0 கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும்
- என். செல்வராஜா
அயோத்தி நூலகசேவைகள்,
ஆனக்கோட்டை, இலங்கை,
86


Page 52


Page 53
X
நூலகவியல் வெளியீடு -