கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீ

Page 1


Page 2


Page 3

உணர்வூற்றுருவகச் சித்திரம் (இயக்க-இயல்-தத்துவ இலக்கியம்)
எஸ். அகஸ்தியர்
பதிப்பு ஆசீர்வாதம் அச்சகம் யாழ்ப்பாணம்
1969

Page 4
முதற் பதிப்பு: 1969
உரிமை : ஆசிரியருக்கு
வெளியீடு: இலங்கை, முற்போக்கு எழுத்தாளர்
க்ட்டுறவுப் பதிப்பகம்.
4/44, தலகொட்டுவ நாரம்பிட்டி ருேட்
கொழும்பு-5

காணிக்கை
முதலாளித்துவத்தின் அகோரக் கொடு மைகளையும், அட்டூழிய அடக்குமுறைகளை யும் எதிர்த்து, வர்க்க பேதமற்ற புதிய சமுதாயத்தையும் சமாதானத்தையும் நிறு வத் தியாகம் செய்த-செய்யும் முழு உல கத் தொழிலாள வர்க்கத்திற்கு இந் நூல் காணிக்கை.
-எஸ். அகஸ்தியர்

Page 5
இந்நூலாசிரியரின் பிற வெளியீடுகள் .--ബി-
இருளினுள்ளே (குறுநாவல்கள்) எரிமலை (நாவல்) அகஸ்தியர் கதைகள் (கதைத் தொகுப்பு) சவுந்தரி (குறுநாவல்)

'உணர்வூற்றுருவகச் சித்திரம்' பற்றி
மனிதனைப் பார்க்கின்றேன்; அவன் எழுகின்றன். இயற்கை அணுக்களின் பரிணம வடிவத்தின் ஒரு ஜிவ தோற்றமாம் இந்த மனிதனை, இயற்கை வளங்கள் அறிந்துகொள்ளவில்லையாயினும், இயற்கை விதிகளை இவன் பின்பு தெரிந்துகொண்டான். இந்த இயற்கை நிகழ்ச்சிகளின் "விதிகளையும் அவற்றின் 'தன்மை’ களையும் தெரிந்துகொள்ளாத காலகட்டத்தில் அவற் றுடன் சமராடிய இந்த மனிதன், இன்று இயற்கை வளத்தின் விதிகளையும் தன்மைகளையுமே தனக்கு ஊழியஞ் செய்யும் சாதனங்களாக்கிவிட்டான்.
இத்தகைய மனிதனை உலகந் தழுவிய ஒரு பார்வையில் நிறுத்தி, ஒரு தத்துவ அலசல் செய்து அதற்கு ஓர் கலை வடிவங் கொடுத்துப் பார்க்கிற போது இவனின் 'சக்தி'யின் மகிமை தெற்றெனத் தெரிகிறது; உண்மையும் புரிகின்றது.
தத்துவம் என்பது ஒர் கருத்தாகும். மனித வாழ்வின் வளத்தையும், அவனல் ஒட்டப்படும் சரித் திர வளர்ச்சிப் பின்னணியையும் வைத்து, அந்த வளர்ச்சியையும் அந்த மனிதனையும் கொண்டு நாம் உருவாக்கிற ஓர் கருத்தும் அதைப்பற்றிப் பெறும் விளக்கமும்தான் தத்துவமாகும். 'தத்துவம் என்னும் பதம் கலை இலக்கிய உலகில் எப்பவோ ஊடுருவிய ஒன்று; கலை இலக்கியம் உட்லாயின், தத்துவம் அவற்
s:
றின் உயிராகும்.

Page 6
பூமி, வானம், சந்திரன், சூரியன், நக்ஷேஷ்திரம், நெருப்பு, நீர், ஆகாயம் ஆகிய ஜடப் பொருட்களின் இயக்க இயலையும், அவற்றின் குணும்சங்களையும் புரிந்துகொள்ளாதபோது நடுநடுங்கி அவற்றை வணங்கிய இந்த மனிதன், இவை பனைத்தும் இன்று தன்னைக் கண்டு அஞ்சவும், வணங்கவும் வைத்த தோடு அவற்றைத் தனது வாழ்க்கைக்குக் கருவியாக்கி யும் கொண்டுவிட்டான். என்னே இவன் சாதனை.
"இறைவன் மனிதனைச் சிருஷ்டித்தான்" என்கிற வனும் இவன் . 'மனிதனே இறைவனைச் சிருஷ்டித் தான்’ என்கிறவனும் இவனே. இப்பெரும் 'சக்தி' வாய்ந்த இந்த மனிதனே இன்று "எல்லாவற்றினதும் சிருஷ்டிகர்த்தா' வாய் விட்டான். இன்று இந்த மனிதனின்றி ஒர் அணுவும் அசைவதில்லை. ஆக்கல ஞகவும், அழிக்கிறவனுகவும், காக்கிறவனுகவும் மணி தன் ஓர் 'சக்தி வாஞகியிருக்கின்ருன் இவனே சிருஷ்டி கர்த்தா சர்வத்துக்கும் வல்லவன் இவனே இந்த மனிதனே ஓர் டிா'சக்தி
உலகத்துப் பொதுவான இயற்கைச் சொத்துக் களையெல்லாம் தான் தான் "தனதாக்க விழைந்த இவன், அவற்றைப் "பிரித்து", தானே தனக்கெனத் *தனியுரிமை பாராட்டக் கிளம்பியதால் பின்பு இவன் *சக்தி'யே இவனுடன் மோதலாயிற்று. அந்த மோதல் இன்றைய சகாப்தத்தோடு ஒரு ஐந்தாவது சமூக அமைப்பையே உலகில் தோற்றுவித்து விட்டது. அபகரிப்புக்கும் இழப்புக்கும் போர்; அதாவது,
2

அநீதிக்கும் நீதிக்கும் போர். இந்தப் போரானது அநியாயம் அழிந்து நியாயம் நிறுவப்படும் வரை நிகழும். அதாவது, பொதுவான இயற்கைச் சொத் துக்களை மனிதன் மனிதவர்க்கத்தின் ஒருவனுக நின்று பொதுவாக அனுபவிக்கும் வரை போர் நிகழ்ந்தே தீரும்.
பிறக்கும் போது சுதந்திரப் பறவையாகத் திகழ்ந்த இந்த மனிதன், பிறந்த அடுத்த கணமே அது இழந்து அடிமை விலங்குமாட்டப்பட்டவணுகவும் அதை மாட்டுகிறவனுகவும் இன்று ஆகிவிட்டான். தான் செய்கிற வினை தனக்கும், தன்னையன்றி அது அடுத்தவனுக்கும் இன்று ஓர் உத்தரிப்பாய் விட்டது. அடக்க ஓர் குரல் அதை மடக்க மறுகுரல், உல கெங்கணும் பெருங் கொந்தளிப்புக் கெந்தகித்துக் கொண்டிருக்கிறது. இரு கன்னைப் போரில் மனிதன் குதித்து விட்டான். மனிதன் போராடித்தான் வாழ வேண்டும் என்பது ஒர் நியதியல்ல. இயற்கையான பொதுச் சொத்துக்கள் மீது ஒருவனை விட்டு அடுத் தவன் தனி ஆதிக்கமும் தனி உரிமையும் கொண் டாளக் கிளம்பியதால் போராடி வாழவேண்டியது இன்று அவனுக்கு ஓர் நியதியாகிவிட்டது. உலகத் துப் பொதுச் சொத்துக்களை இதே உலகப் பொது மனிதன் பொதுவாக அனுபவிக்கும் வரை இந்தக் கொந்தளிப்பும் போராட்டமும் வீறுற்றுக் கொண் டேயிருக்கும். மனிதனின் உணர்ச்சிகள் மனிதன் சிருஷ் டித்த ஆயுதங்களுக்கு அடங்குபவையன்று; அவை வீறுகொள்பவை, ஆயுத பலத்தால் மனிதனின்
3.

Page 7
உண்ர்ச்சிக்ளை அடக்கலாமே தவிர, அடக்கி வைத் திருக்க முடியாது. இதுவும் ஓர் நியதி.
இத்தகைய ‘சக்தி வாய்ந்த இந்த மனிதனையும், இவன் நிகழ்த்திய-நிகழ்த்துகின்ற போராட்டங்க ளின் "தன்மை களையும், போராட்டத்தின் போது அவன் அடைந்த-அடைகின்ற ஒவ்வோர் 'உச்சநிலை" யையும், இத்தகைய போராட்டத்தின் "நியாயம் நிறைந்த்' உண்மையான சக்தியுள்ள வீரன்’ யார் என்பதையும் ஓர் தூரதிருஷ்டிக் கண்ணுடியில் வைத்து, தத்துவம் என்கிற ஓர் உரை கல்லான உலகளாவிய ஒர் பார்வையைச் செலுத்தி, அதை மெருகேற்றி ஒரு கலை இலக்கிய வடிவத்தில் கோர்த்துச் சிருஷ் டிக்க எழுந்த உந்துதலே இந்த "உணர்வூற்றுருவகச் சித்திரம்" என்னும் புதிய இலக்கிப வடிவமாகும்.
சர்வத்துக்கும் வல்ல கர்த்தாவாக விளங்கும் இந்த மனிதன், தனது சக்தி'யைத் தானே தெரியா மலும் அதை உணராமலும் இருந்தான்; இருக்கின் முன். இந்த மனித சக்தியை வீறுற இடித்துக்கூற மனிதன் எடுத்த ஆயுதங்களில் எழுத்தும்-இலக்கிய மும் ஒன்று. அந்த இலக்கிய வட்டத்துள்ளே இந்த 'உணர்வூற்றுருவகச் சித்திரம்’ ஒரு தினுசு. இதை ஒர் தத்துவப் பார்வையில் உருவாக்கி வடித்தெடுத்து, ஒவ்வோர் சமுதாய அமைப்பின் ஒவ்வோர் குறிப்பேடு களாக அமைத்து, கண்ணை மூடிக் கொண்டு பார்க்கக் கூடிய ஒரு உணர்ச்சிப் பிம்பக் காட்சியாக உருவாக்கி யதே இந்த "உணர்வூற்றுருவகச் சித்திரம்'. தமிழிலக்
4

கியப் பரப்பில் இதை ஒர் புதிராக நினைத்தவர்களுக்கு, இந்தப் புதிர் இனி விடுபடுமென்று நினைக்கிறேன்.
சிறு கதை, நாவல், நாடகம், கவிதை, குட்டிக் கதை, உருவகக் கதை ஆகிய சிருஷ்டி இலக்கியத் துறைகளில் சிருஷ்டி ஆசிரியன் களமமைத்துப் பாத்திர வாயிலாகக் கதையை-சம்பவத்தை நகர்த்தியும், பாத்திரங்களின் குண்சித்திர வார்ப்புக்களைச் சித் தரித்து அவற்றின் மூலமாகவும், தானே முன்னிலைப் பாத்திரமாகியும் ஒரு கலை உருவம் கொடுத்து வாசகர் களுக்கு உணர்வையும் உணர்ச்சியையும், தெளிவை யும் ஊட்டியிருக்கின்றன் ஊட்டுகின்றன் . இலக்கிய வடிவங்கள் பெரும்பாலும் இது காறும் இத்தகைய படிமங்களில் கையாளப்பட்ட உத்திகளாகவே திகழ்ந் தன; திகழ்கின்றன (கதை சொல்கிற உத்தியை நான் இங்கே குறிப்பிடவில்லை) இந்த உணர்வூற்றுரு வகச் சித்திரம் இவற்றை யெல்லாம் கடந்த எந்த வொரு கலை இலக்கிய வட்டாரத்திலும் கையாளப் படாத ஒரு புதிய ‘முறை'யில் அமைந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். w,
இச்சித்திரங்களின் வடிவ அமைப்பிலே, வில்லுப் பூட்டின நாணின் ஒரு விண் இழுவையில்; அந்த ஓர் நிலையில், ஒன்றுக்கொன்று தோது கூட்டும் வகை யான இணைபிரியாச் சொற்களைக் கருத்துக்குக ஏற்றி, ஒர் கவிதைப் பாணியில் தத்துவ விவகாரத்துக்குக வாக்கியங்களை இணைத்து ஒர் உணர்வு தட்டும் விண் ணகப் பூட்டி வைத்து, அந்த விற்பூட்டில் இதை
5

Page 8
ஓர் சித்திரக் காட்சிபோல் காண்பித்து, பாத்திரங் களே இல்லாமல் அதேபோழ்து பாத்திரங்களே பேசு வதுபோலவும், அப் பாத்திரங்களின் குணசித்திர வார்ப்புக்கள் தெரிவது போல ஒரு உணர்வையும் அதனடியான மனவூற்றையும் குணசித்திர பாவத் துடன் புணர்த்தி ஒரு கெந்தக உத்வேக உனர்ச் சியை வாசகனுக்கு உண்டாக்கும் வண்ணம் உருவாக் கிய ஒர் புதிய இலக்கிய வடிவமே இந்த "உணர்வூற்று ருவகச் சித்திரம்" என்பதன் உட் பொதி,
அடங்கியிருந்து உடைப்பெடுத்த பெருவெள்ளம் போல் கிளம்பி, உலகந் தழுவிய இயக்க-இயல் விளக்கப் பயிற்சியால் நான் அடைந்த போதத்தின் மூலமாகவும், பல ரக மக்களின் வாழ்க்கையுடன் பிணைந்து பெற்ற என் அனுபவ அறிவு பூர்வமாகவும் பல ஆண்டுகளாக என் நெஞ்சில் உருக்கொண்டு துடித்து வேகித்துக் கிளர்ந்த சித்திரங்களே இந்த 'உணர்வூற்றுருவகச் சித்திரங்களாகப் பின்பு பரிண மித்து வடிவமெய்ஜின.
நீ", "நானய நீ", "நீயான நீ", "நீயாயழிந்த நீ", 'நீ என்ற நீ", "நீக்குள் நீ", "நீ நீருண நீ ஆகிய ஏழு சித்திரங்களை முதற்கண் அளித்திருக்கிறேன். இம் முயற்சியின் வெற்றியைச் சொல்வது நானல்ல: அதைச் சொல்வது காலம். இந்த ஏழு சித்திரங்களும் ஏழுபோர் மண்டலத்தைச் சித்தரித்துக் காண்பித்தி ருக்கின்றன என்பது என் நம்பிக்கை. உலகந் தழுவிய பார்வையில் நோக்கியவிடத்து என் நெஞ்சினில் வித்
6

திட்டு எகிறிக்கொண்டிருந்தஇந்த "வித்து'வையே இன்று கணிகளாக்கித் தந்திருக்கிறேன். இதற்குள்ளே இவை என் உதிரத்தையும் உறிஞ்சிக் குடித்துவிட்டன. வெஸ்றைச் சிருஷ்டிக்கிறபோது எழுந்த பிரசவ வேத னையை சறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதும் போது நான் அனுபவிக்கவில்லை; இதஞல் அந்த வேதனையை வலுவாக அனுபவித்துவிட்டேன். நானே என்னுள் ப்ோர் நடத்தி, இருகன்னைகளின் 'மூளை" களாகவும் ‘முனைகளாகவும் நின்று இரண்டு விதமான இரண்டு ரக மனித உணர்ச்சிகளுக்கு என்னை ஈடு கொடுத்து இதை ஆக்கி உங்கள் முன்னே நடமாட வைத்து விட்டபின், இதனைப் பிரசவித்த நோக்காடும் இக் குழந்தையைப் பார்க்கிறபோதுமறைந்துவிட்டது.
தமிழ் இலக்கிய வட்டத்தில் இதை ஓர் புது முயற்சியாகவும், கடும் சோதனையாகவும் செய்து ஒரு கன்னிக் குழந்தையாக்கி விட்டிருக்கிறேன். இக் குழந்தை ஜனித்துப் பிறந்த போது, பிறந்த மறுகணமே அதன் பிஞ்சுக் குரல்வளையைத் திருகிக் கொல்ல, ஓரிரு விஷ நாக்குகளும், பாஷாணக் கரங்களும் கங்கணங்கட்டித் திட்டமிட்டுக் கிளம்பின. அந்தக் கபடத் திட்டங்களைச் சுக்குநூருக நொறுக்கி எறிந்து விட்டேன். அந்தக் குழந்தை இப்போது 'உங்களைத் தேடித் தவழ்ந்து, எழுந்து, வருகின்றது. அதன் எதிர்காலம் எப்படி அமையும் என்று சிருஷ்டித்த வனே அறுதியிட்டுச் சொல்வது நன்றன்று; அழகு ன்ேறு. ஏனென்ருல், காக்கைக்கும் தன் குஞ்சு பீோன்குஞ்சல்லவா ? எனக்கு இது பொன் குஞ்சு

Page 9
ஆதலால், அந்தத் தீர்ப்பை மட்டும் மக்களும், வாச கர்களும், விமர்சகர்களுமாகிய நீங்களே அளிக்க வேண்டும். காத்திருக்கின்றேன்.
இரண்டாவது சித்திரம் 'தினகரன்" இதழில் பிரசுரமாகிய போதே எழுத்தாளர் வட்டாரத்தில் இச்சித்திரம் பற்றிப் பற்பல விதமாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன; கண்டன விமர்சனங்களும் தெரி விக்கப்பட்டன.
படைப்பைப்பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், பிறந்தவுடனேயே அதன் கழுத்தை நெரிடிக்கொல்லச் சதிசெய்ய வெளிக்கிட்ட "தோழன் சூத்திரர்கள்", -
சிருஷ்டியைப் பற்றி அப்படிக் கூட ஒர் வார்த்தை தானும் சொல்லாமல், இன்றுவரை மெளனமாகவே என் கூட வாழும் சிருஷ்டி எழுத்தாளர்கள்,
படைப்பை மீட்டும் உயர்ந்த நிலையில் நின்று "குறை'யையும் " றை'ய்ையும் சொல்லி விமர்சித்த விமர்சக எழுத்தாளர்கள்,
"நான் எழுதுவது எனக்கும் புரியக் கூடாது. மற்றவர்களுக்கும் புரியக்கூடாத உணர்வூற்றுச் சித் திரம்" என்று "குறையை மட்டும் சொக்கி எழுதிய குழந்தை எழுத்தாளர்,
‘எந்தப் புதுமையான சோதனையான எழுத்தி லும் தெளிவும், வேகமும் இருக்கவேண்டும்" என்று
8

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து (சென்னை) உரிமை யுணர்வுடன் விமர்சித்து அனுப்பப்பட்ட ஒர் கடிதம்,
இப்படி எத்தனையோ ரக விமர்சனங்கள் தெரி விக்கப் பட்டன.
'நிறை யைப் பற்றிய விமர்சிப்பை எடுத்துச் சொல்லி ஒரு மகுடம் அணிய நான் விழையவில்லை; அது பண்புமன்று. 'குறை'யையும் கண்டனங்களை'யும் பற்றி மட்டும் இங்கே அப்படியே குறிப்பிடுகின்றேன். "குறைகளும் கண்டனங்களும் இவை :
"மக்களுக்காகப் படைக்கப்படுகின்ற இலக்கியங் கள், மக்கள் புரிந்து கொள்ளத்தக்கவாறு படைக் கப்பட வேண்டும். மக்களின் பரி பாஷையைப் புரிந் தும் அவர்களைப் படித்தும் கொண்டு அதற்குத்தக்க வாறு மொழியைக் கையாண்டு அவர்களின் பாஷை யில் எழுத வேண்டும். இவற்றில் அவை கையாளப் படவில்லை. அதாவது, மக்களையும் அவர்கள் இயக்கி முறைகளையும் படித்த அளவிற்கு மக்கள் இதைப் படித்துப் புரிந்து கொள்கிற மாதிரி இதை எழுத வில்லை; இந்தக் கடினமான பாஷையை மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். இது மக்களைத் தெரிந் தும் அவர்களை மறந்த ஒரு இலக்கியப் பீறல்
"உருவ அம்சத்தில் இது வெற்றி பெறவில்லை எனக் கருதுகிருேம். டால்ஸ்டாய், செகாவ், கார்க்கி, ஷோலகாவ் ஆகியோரின் எழுத்துக்களில் புதுமை யுண்டு; சோதனையுண்டு; அத்துடன் கண்ணுடிபோன்ற
9

Page 10
தெளிவும் உண்டு. இதில் அவை சரியாகத் தெரிய வில்லை."
இக் கூற்றுக்களையெல்லாம் ஒரு நன்றியறித லோடு கவனத்திலெடுக்கிறேன்! ஆனல், இக்கூற் றுக்களை ஒப்புக் கொள்ளவில்லை; சிலவற்றை ஒப்புக்கொள்கின்றேன். நான் இவ்வாறு ஒப்புக் கொள்கின்ற கூற்றையே நடைமுறையில் பார்க்கும் போது வேருகவும் மாறுபடும் என்பது என் கருத்து. ஏனென்ருல், அறிவால் பெறுகின்ற உணர்வுக்கு அக் கூற்றுக்கள் முழுக்க முழுக்கச் சரி; உணர்வால் பெறு கின்ற அறிவுக்கு இக் கூற்றுக்கள் சரியா என்பதைச் சற்று நுணுவிப் பார்க்க வேண்டும். "நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து மலட்டுத்தனம், கருத்துக்கு ஒவ் வாத நடைமுறை குருட்டுத்தனம்' என்னும் ஓர் மேதை கூற்று நினைவிற்கு வருகிறது.
மனிதனின் பரிணும வாழ்வொழுங்கை முறை யாக எடுத்துச் செர்ான்ன கார்ல்மார்க்ஸ் தொழிலாள வர்க்க விடுதலைக்கென்று எழுதிய "மூலதனம்" என் லும் நூல், உலகத்தில் வாழ்ந்த எந்தவொரு தொழி லாளிக்குமே புரியாத ஒன்று. ஆனல், அவர் அந்த நூலை முக்கியமாகத் தொழிலாளர்களுக்காகவே எழுதி ஞர்; சாதாரணப் பாமர மனிதனுக்காக எழுதி யிருந்தார். எந்தத் தொழிலாளியாவது அந்த நூல் புரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அதைப் புறக்கணித்து விடவில்லை. காரணம், அவனைப்பற்றி
0

அதில் சொல்லப்பட்டிருக்கின்றது; அவனின் விரோதி யைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே தொழிலாளி அதை வாரி அணைத்துக் கொண்டான். பின்னர் உணர்வால் அறிவு பெற்றுத் தெரிந்து கொண் டான் அறிவால் உணர்வு பெற்ருனில்லை.
இதை ஓர் எடுத்துக் காட்டுக்காகக் கூறினேன். இது ஒர் சரியான தர்க்கவாதமல்லவென்று யாரா வது அபிப்பிராயம் கூறின், கூறுகின்றவர்களுக்கு உண்மையில் நன்றியுடையவனுயிருப்பேன். ஏனெனில் அதன்பின் இதை ஓர் நீண்ட சர்ச்சையில் இறக்கி ஒப்புவிக்கவும் வாய்ப்புண்டாகுமல்லவா?
இவ்வாறெல்லாம் படைப்பை மட்டும் பார்த்துக் "குறை நிறை சொன்ன விமர்சக எழுத்தாளர்கள் இலக்கிய வளர்ச்சிக்கு உண்மையான ஆக்கல்வாதி களாயிருப்பதால், அவர்கள் கூற்றுக்குச் செவி மடுத்து அவர்களுக்காக நிகழ்ந்த ஒர் உண்மைச் சம்பவத் தைக் குறிப்பிடுகின்றேன் :
இரண்டாவது "உணர்வூற்றுருவகச் சித்திரம்' * தினகரன்’ இதழில் வெளி வந்த அன்று காலை, அறையின் கதவைத் தட்டும் ஒலியுடன், கூடவே, ** அகஸ்தியர் இருக்கிருரா?' என்று ஓர் குரலும் கேட்டது. என்னேடு காம்பராவில் இருக்கிற நண்பர் சுகந்தன் அப்பவும் அரைத் தாக்கத்திலேயே கிடந்தார்.
நான் எழுந்து, 'ஏன், என்ன விஷயம், உள்ளே வாருங்களேன்' என்று சொல்லி விட்டு எட்டிப் பார்த்

Page 11
தேன். ஜெயினூல் ஆப்தீன் என்ற தொழிலாளியும், அவர் கூடவே வேறு இரண்டு மூன்று தொழிலாளர் களும் நின்று கொண்டிருந்தார்கள்
உள்ளே வந்தவர் என்னையே ஒர் கணம் உற்றுப் பார்த்துக் கொண்டு, 'உள்ளே வாறது கிடக்கட்டும் எங்கே உங்கள் கையை ஒருக்காத் தாருங்கள்" என்ருர்
'அடடே, சாஸ்திரம் வேறு சொல்ல வெளிக்கிட் டாச்சா?" என்று நான் பகடி பண்ணிவிட்டுத் தமாஷாகக் கையை நீட்டினேன்.
அவர் உடனே பூனை எலியை அப்பினமாதிரி எனது கரத்தைத் தனது இரண்டு கரங்களாலும் இறுகப் பொத்தி இழுத்து வைத்து உணர்ச்சி ததும் பக் கொஞ்சினர்.
எனது தேகம் புல்லரித்தது; நெஞ்சில் இரக்க வூற்றுப் பாய்ந்து ஏதோ ஓர் சுமை அழுத்திற்று.
'இதென்ன இது?"என்ற என் விழிகள் பேந்த அவரைப் பார்த்தேன்.
அப்போது அவர் சொன்னுர்:
'அகஸ்தியர், நீங்க தொழிலாளியள வச்சு எழுதின எத்தினயோ கதையளப் படிச்சிருக்கேன். ஆன, தொழிலாளியப் பற்றி, நீங்க எழுதின இந்த உணர்வூற்றுருவகச் சித்திரத்தில படிச்சுத்தான் சரி
2

யாத் தெரிஞ்சுக்கிட்டன். அதான் உங்கள நேரில காட்ட இவகளையும் கூட்டிக்கிட்டுவந்தேன். தொழி லாளியப் பற்றி அறிஞ்சுகொள்ள எழுதின ஒரு ஆளுக்கு தொழிலாளியா இருக்கிற நான் நன்றி சொல்லாட்டி, அது பெரிய துரோகம் " என்று இன்னும் என்னமோ எல்லாம் உணர்ச்சிப்பட்டுக் கொண்டே சொன்னர்,
அப்படியெல்லாம் அவர் முகஸ்துதிக்காகத்தான் சொன்னரோ அதை நான் அறியேன். ஆணுல், அவ் வேளை என் நெஞ்சு மெழுகுவர்த்தியாக உருகி விட்டது; வாயில் வாக்கே வரவில்லை; என் கண்ணில் கண்ணிரே வந்தது.
நான் யாருக்காக இச்சித்திரங்களைப் படைத் தேனே அவனில் ஒருவனும் அந்தத் தொழிலாளியே அதைப் புரிந்தும் உணர்ந்தும் எனக்குச் சேட்பிக்கட்" தந்து விட்டான். இவனின் விமர்சனமும், இந்தத் தொழிலாளி தந்த சேட்பிக்கட்டும் தகுதியற்றனவா?
பலதரப்பட்ட எதிர்ப்பு என்னும் எரி நெருப்பிலே வெந்து நீருகிப், பூத்துத் துளிர்த்து எழுந்தவன் நான். அத்தகைய என் நெஞ்சை நுண்ணியமாகக் கணித்து, இது தன்னையும் மீறிய செயலெனத் தெரிந் தும் தனது ஆழ்ந்த இலக்கிய நெஞ்சத்தால் என்னை உவந்தேற்று இந்நூலைத் துணிந்து பதிப்பித்த "விவேகி" இதழ்நிறுவக அதிபரும், பண்பு செறி மாண்பு மிக்க ஆசிரியரும், "படிமுறைக் கணிதம் வரிசைநூற்களை
13

Page 12
ஆக்கியோரும், ஆசீர் வாத அச்சக உரிமையாளரு மான திரு. மு. வி. ஆசீர்வாதம், ஜே. பி. அவர் களுக்கும் புதிய சோதனை இலக்கியமான இந் நூலுக்கு மதிப்புரை எழுத முன்வந்த இலக்கிய விமர்ச கரும் கவிஞருமான திரு. இ. முருகையன், எம். ஏ. அவர்களுக்கும், இவ்வுணர்வூற்றுருவகச் சித்திரங்களைப் பல இடைஞ்சல்'களுக்குள்ளும் அவ்வப்போது பிரசு ரித்த தினகரன்', 'செய்தி", "மல்லிகை ஆசிரியர் களுக்கும் , இந் நூலை வெளியிட்ட இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டுறவுப் பதிப்பகத் தார்க்கும், இயக்க-இயல்-கலை இலக்கியத்தில் எனக் குத் தத்துவபோத மளித்து என்னை உருவாக்கிது தொழிலாள வர்க்க முற்போக்கு இயக்கச் சக்திகளுக் கும் என் நெஞ்சாழ்ந்த நன்றி.
"அன்னை இல்லம்" -எஸ். அகஸ்தியர் வலித் தூண்டல்,
கீரிமலை , '
25-3-1969

முன்னுரை
உணர்வூற்று உருவகச் சித்திரம்-அகஸ் தியர் தமக்கென உருவாக்கியதோர் இலக்கிய வடிவம். இச் சித்திரங்களுக்கு முதற் காரணமாய் நிற்பது உணர்வூற்று. அகஸ்தியரின் உணர்வூற்று, உழைக்கும் வர்க்கத்தின் உளைச்சல்களை ஆதாரமாகக் கொண்டது. உடைமையாளருக்கும் உழைப் பாளருக்குமுள்ள பேதத்தையும், அது பற்றிய போதத்தையும் ஆதாரமாகக் கொண்டது. அநீதிக்கும் நீதிக்குமிடையே நிகழும் மோதலையும், முரண்பாட்டையும் காட்டி, நீதியின் வெற்றியைக் கட்டியம் கூறி வரவேற்க முன்னிற்பது. ஆதலால், அவருடைய உணர்வூற்றும், அவற்றின் அடியாகப் பிறந்த உருவகமும், உருவகக் காட்சியாகிய சித்திரமும் வரவேற்கப்பட வேண்டியவை.
இந்த நூலிலே ஏழு உணர்வூற்று உரு வகச் சித்திரங்கள் உள்ளன. இவற்றின் பாத்திரங்கள் "நீயும் "நானுமே ! உலகம் முழுவதும் அவன், அவள் , அது என்னும் மூன்றுள் அடங்கும் என்பவர் சமயவாதி கள். அகஸ்தியரின் இலக்கியத் தேவைக்கு
15

Page 13
உலகம் முழுவதும் 'நீ-நான்" என்ற அளவிலே அடங்கி விடுகின்றது; ஒடுங்கி விடுகின்றது.
அவ்வாரு ன அடக்கத்துள்ளும், ஒடுக் கத்துள்ளும் இயங்கிக் காட்சி விரிக்கும் இச்சித்திரங்களின் தன்மை முழுவதையும் பூரணமாக விளங்கிக் கொள்ள என்னல் இயலவில்லை. அகஸ்தியரின் வசனமும், மொழியாட்சியும், அசாதாரணமானவை. சில வேளைகளிலே "லா, ச. ரா" போல, சில வேளைகளிலே 'மெளனி போல, பல வேளை களில், இவர்கள் யாருமேயில்லாத அகஸ் தியரே போல இந்நூலாசிரியர் காட்சி தருகின்ருர், உணர்வூற்று உந்தல் தூண்டி விட்ட விசித்திரங்கள், இவையெல்லாம்.
இந்நூலிலே கையாளப்பட்ட மொழி நடையும், உத்திகளும் பல வாசகர்களைத் திகைக்க வைத்தல்கூடும். அது ஒரு குறை பாடுதான். ஆனல் அது ஒன்று மட்டுமே இந்த நூலின் குறைபாடு. சொற்கள் கடுமையாக உள்ளன என்று நான் முணு முணுப்பதாக யாரும் கருதவேண்டாம், நோக்கத்தைத் திறம்பட நிறைவேற்று வதற்குக் கடுமையான சொற்கள் உதவு மாயின் அவை வரவேற்கப்படவேண்டி ᏓᎥ MᎧᏈᎠᎧbᏗ Ꭼ தாராளமாக வரவேற்கப்பட
6

வேண்டியவை. "எளிமை எளிமை" என்று வெறும் சுலோகம் போலக் கூச்சல் போடும் நண்பர்கள் கவனிக்க வேண்டிய உண்மை இது. அகஸ்தியர் இதனை நன்கு உணர்ந் திருக்கின்ருர், சொற்கள் கடுமையாக இருந் தால் அகராதிகளைப் பார்த்துக் கருத்தறி யலாம். இல்லையானல் உலகியல் வழக்கு களை நன்கு விசாரித்து விசாரித்து நம் முடைய அனுபவத்தை விசாலமாக்குவ தால், அக் கடுஞ்சொற்களின் கருத்தை அறியலாம்.
எனவே சொற்கள் கடுமையானவையா என்பதன்று, இங்கு பிரச்சினை. அச்சொற்கள் வாசகன் நெஞ்சத்திலே ஒரு திட்டவட்ட மான, வரையறையான, பயனுள்ள தாக் கத்தை உண்டு பண்ணுகின்றனவா என்பது தான் முக்கியமான கேள்வி. அகஸ்தியரின் எழுத்திலே அத்தகைய தாக்கத் தெளிவு உண்டா? இவ்வினவுக்கு விடை காணும் வாய்ப்பு வாசகர் களுக்கு இப்போது கிடைத் துள்ளது. தமது படைப்புகளை ஒருங்கே திரட்டித் தரும் அகஸ்தியர், வாசகர் களுக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கிருர் .
இ. முருகையன் கல்வயல், சாவகச்சேரி,
1969 م. 3- 29
17

Page 14

பதிப்புரை
தமிழ் இலக்கியத் துறையில் திரு. அகஸ்தியரின் 'உணர்வூற்றுருவகச் சித்தி ரம்' ஒரு புது முயற்சியாகும், கதாபாத் திரங்களின்றிக் கதையை உருவாக்கி, வாச கர்களின் மனதில் உணர்ச்சிக் குவியலைப் புகுத்துவதில் இவ் "உணர்வூற்றுருவகச் சித் திரம் வெற்றிபெற்றுள்ளதென்றே கூற லாம்.
தொழிலாளர்களதும், தாழ் த் த ப் பட்ட மக்களதும் நெஞ்சக் குமுறல்கள் பின்னிப் படர்ந்துள்ள உணர்ச்சிச் சித்தி ரமே இவ் உணர்வூற்றுருவகச் சித்திரம் என்று கூறினும் மிகையாகாது,
இந் நூலில், நீ நானுய நீ நீயான நீ நீயாயழிந்த நீ நீ என்ற நீ நீக்குள் நீ நீ நீருண நீ என்னும் ஏழு தலைப்புகளில், முதற் கண் தமது மனத்தெழுந்த உணர்வுகளை வடித்திருக்கிருர் திரு. அகஸ்தியர்.
18

Page 15
இஃது ஒரு விடப் பரீட்சை,
இப் பரீட்சையில், நூலாசிரியரின் வுெற்றியும், தோல்வியும் வாசகர்களின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன.
இந் நூலை யாத்த திரு. அகஸ்தியர் நாடு புகழும் ஒர் எழுத்தாளர். தொழி லாளரோடு ஈடுபாடுடையவர். அவர் இதனை யாத்தமை பொருத்தமுடையதே.
இத்தகைய ஒரு நூலை வெளியிடுவதி ஞல் நாம் செய்யும் சேவை தொழிலாள ருக்குச் செய்யும், பணியென்றே கருதுகி ருேம்.
'நீ க்கு ‘நான்' செய்யக் கூடிய ஓர் உதவியைச் செய்துவிட்டேன் என்பதில் எனக்கொரு திருப்தி,
இந் நூலுக்கு வாசகர் அளிக்கும் ஆத ୬୮ରy இதுபுேரன்ற பிற நூல்களை வெளிக் கொணர எமக்கு திரக்கமளிக்கும் என்பதி ஐயமில்லை.
மு. வி. ஆசீர்வாதம் ஜே. பி. 29, கண்டிவீதி, யாழ்ப்பாணம்.
5-4-59
9

நீ
நீதான?
உன் சடலம் உருக்குலைந்திருக்கிறது.
நீ, வண்டரித்த பாளை வண்ணத்தி நுகர்ந்த பூ வேடன் அடித்த புரு இல்லை, எரியும் சருகு.
நான் நாணுக, நானகியவனுக, என்னுள் என் னேடு, நிலை தெளிந்து தாமரைமேல் நீராகப் பற்றற்று நிற்கிறேன்.
虏一?
பிட்டு அவித்த ஆவியில், துளிர்த்துத் தேங்கிய தண்ணீராய்த் தளம்புபவன்.
தண்-நீர்.
அல்ல, அல்ல. தண்மைப் பெருப்பால் ஆழ் கட லுள் சடை கட்டி ஜனித்துப் பரிணமித்த பனிமலை.
u Grif? D&v.
அளவை மீறிய அமிர்தம். அது ஒரு பயங்கர விஷக் கோளம்.
குற்றுயிர்ப் புருவா?
நீ நீயாக, உன்னுள் உன்னக, நீயாகியவனுக, அலை கனன்று கக்கும் சூன்யக் கானலாய்ச் சூல் கொள்ள, சுவைத்து உறிஞ்சி வீசிய மாங்கொட்டை யென நாதியற்று, சத்திழந்து உமிந்து நிற்கிருய்.
உன் தோற்றம் இதுவே. நான் யூகித்துச் செப்புவது சரியே தான்; ஐய மின்று. இன்றேல், என் ஒளிக் கண்களில் மாலையிரங் கலா ? இருக்காது. நான் நானகவே நிற்கிறேன்.
虚一?
2.

Page 16
22 நி
நுகர்ந்த பூ
Լե!
தன்னில் மத மதர்த்து, அழகுற்றதன்பால் ஜெளனமுற்று ஈர்த்து ஆகர்ஷிக்க, மோக வெறி கிறங்கிய நிலையில் தறிகெட்டுக் கால்கள் பின்னித் தள்ளாட, தானே இச்சை நுகர்த்தி, களிப்புற்றுச் சம்பவிக்குங்கால், உறிஞ்சி எடுத்த தேனருந்தி மருண்டு மின்னிய வண்ணுத்தி, தன் மையல் தீர்த்த பின் எஞ்சும் உரிந்த நிலையா?
என் நிர்ணயிப்பு அசல்.
அடித்த புரு .
உண்மை. உன் எலும்புகள் காகக் கூட்டுச் சுள்ளித் தடிகளாகக் கூரிட்டு முறிந்து, அவல நெரி டலால் பீறிட்டு, நெக்கிழந்தும் அழகுறும் கோவை யாக, இரத்த வெடிலடியாத பிண ரூபத்தில், தோட்டத்துக் கோணங்கிப் பாவையாக உருவற்றுத் தெரிகின்றன.
உன் அகுசை, கோமாளித் தனமானது. குறுணி பொறுக்கும் குருவிகள் உன்னை ஒரு கம்பீரணுக மதித் துத் தம்முள் பீதி கொள்கின்றன.
கோணங்கிப்பாள்ை.
வாசி உனக்கா ?
வீதி விடுப்பாளர் உன்னைக் காமுற்றுக் கண் களால் கறந்து கை கொட்டி நகைக்கிருர்கள். நீ, விறகான நிலையிலும், தோட்டக் கனிகளைச் சோரர் தீண்டாது காக்கும் பணியில் எல்லை வீரனய் விளங்கு கின்ரு ய்,

23
ஆதாயம் யாருக்கு ?
உனக்கா ?
இல்லை !
குருவிகளுக்கு ?
கிடையாது.
虚一?
நீ-?
Op.
fë-?
T Go Go ,
உனக்கு எது சொந்தம் ? நீதான் சொந்தமாகினய்; சொந்தமாக்கினுயில்லை. உன் உரிமை? நீ உரிமைப் பொருளானப்; உரிமையாக்கவில்லை. நீ பூமியில் பிறந்து எங்கும் பரந்தவன். ஆனல், அகதிபோல் வெறும் பரதேசி. நீ நினைத்தால் இருள் மண்டும் ஒளி துலங்கும்;
புயல் அடிக்கும்; தென்றல் வீசும்,
இருந்தும் பூமித்தாய் உன்னைத் தன்னுள்ளே தன
தாக்கி, தானும் தாணுகாது, தன்னில் பிரேமையற்ற
தனி அபிலாகூைடிக் கொத்தடிமைக்கு இரையாக்கி
யிருக்கிறது.
இது விந்தையா ? அல்ல, கொடுமை.

Page 17
24 f
விந்தையின் இலயிப்போடு எலும்பை நொறுக்கிய உந்தலில், முரசு கரைந்து இரத்தமாக வடியும் தரி சனத்தில் நாய் பூணும் பூஜ்யக் களிப்பைப் போல, நீ, உனக்கிழைத்த கொடுமைகளைப் புலனுள்ளுணர்த் தாது உன்னைக் கேடுறவாட விட்டு விட்டாய்.
உன் வலிமையுற்ற கரங்கள் வீறு கொள்ள மறுக் கின்றன.
ஒரு தடவை-ஒரேயொரு முறை உன் கரங்களை நீதிக்காக உயர்த்து.
நீதி-?
இதன் நிர்ணயம் எவ்வாறு ?
ஒருவன் படைக்க, அடுத்தவன் அவனைச் சுரண்டிப் புசிப்பது துரோ கம்.
நீதியின் பாலான நிர்ணயிப்பு. இது சரியா?
'நற்கணி கொடாத மரங்களெல்லாம் வெட் டுண்டு அக்கினியில் இடப்படுவதாக!"
யேசுவே! ਗ குரக்ஸில் எழுந்த இந்தக் கூரிய வாள் பலே. ஆனல், இக்குரல் எழுப்பியதற்காகத் தான் உன் சடலம் ஈட்டிகளால் குத்திக் கிழிக்கப் Lull-gil. ஆனலும், உன் வாக்கியத்தில் ஒரே வஜ்ஜிரம்.
虚一?
இதற்கு மையம் வகுத்து, உன்னைத் தராசு முள்ளாக வைத்து நீதியின் பாதையைக் காட்ட வையகத்துக்கு ஒரு சட்டம், "உலகத்தை உனக்

f 25
காக்கு’ என்று "பொதுமை’க்கு நீ வித்திடுகின்ரு ய், உன் அவயவம் எதில் தொட்டாலும் தொட்டவன் பாடு வெகு நேர்த்தி.
நீ மெழுகுவர்த்தி.
அல்லது, வளையும் வில்லா !
உனக்கு உன்னைத் தெரியாத பங்கம்,
தெரிந்தால் வீறுற்றுப் பொங்கி எழு.
முடியாதா ?
* முடியாது" என்ற ஒன்றை மனித வர்க்க அகராதியிலிருந்து கிழித்து எறிந்து விடு.
நீ, ஆக்கல்காரன், அளிக்கவும் அழிக்கவும் தெரிந் தவன்.
நீ, சிருஷ்டிதாசன்,
நீயே கர்த்தா.
உன்னுல் இயலாதது என்ன? நீ சிருஷ்டித்தவை, பார் முழுதும் வசந்த காலப் புற்றரையாக-பசுமை யுணர்த்திக் கணிய வைக்கின்றன.
என் கண்களில் ஊனமில்லை; விழிகளில் தெரிவது மொழிகளாய்ப் பீறிடுகிறது. இது நிஜம். உன் உழைக்கும் சர்வாங்கத்தில் நீ நம்பிக்கையுற்று, பசப் பையும் மவுசையும் வென்று, பூமித்தாய்க்குப் பிர காசம் கொடுக்கும் ஒரே ஜீவ சூரியன் நீ.
உன் ஒளிக்கதிர்களை மறைக்க எழும் கருமதில்
களை நசுக்கிச் சக்கையாக்கி, ஒரே ஒர் ஐக்கியக் குரல் -வர்க்கக் குரல் எழுப்பும் மா பெரும் சக்தி, உன்னி டம், கள்ளியிற் பாலாய்த் தேங்கிக் கிடக்கின்றது.

Page 18
26 f
'G5IT bl'
* *gGuurt!'
'இதென்ன தொனி?"
""?r6Tub ''
'பிரளயமா அப்படியென்றல்?" 'இவ்வளவு காலமும் இருளில் மூழ்க வைத்த கோரத்தை நீக்கியபோது, 'சடக் கென நிகழ்ந்த புரட்சியின் விளைவு!"
*" என்ன நிகழ்ந்தது?"
"உசுப்பிவிட்ட எமதுநீதிக் கரங்கள்உயர்ந்தன!"
"அப்பனே, உள்ளதைச் செப்பு. நீ, யார்?"
"தொழிலாளி!'
புரட்சி வீரனே, சபாஷ்!
உழைத்த உனக்கே வெற்றி. உன் உடல் சேறு படிந்தது. ஆனல், நீயே பிரமா. உன் சக்தி ஒரு "பொதுச் சக்தி'
"நீ, இப்போது நீய்ாக நிற்கின்ரு யா??
'நான்மட்டுமன்று: எல்லோருக்கும் "சமத்துவ முள்ளவனுமாயிருக்கிறேன்!"
'அப்படியா? கர்த்தனே! உன் பாதார விந்தங் களில், என் சிரம் தாழ்த்தி வைத்து, புத்தொளி பூப்பித்த விடுதலை வீரத் தொழிலாளியான உன்னை, என் கரங்குவித்து வணங்குகின்றேன்.
ஏற்றுக்கொண்டு, வீறுறு. 女

நானுய நீ 2 நான் p பிரத்தியகூஷன். என்னுள் உலகமும், உலகினுள் நானுமாயிருக் கிறேன்.
ஆயினும், ஆணிகள் கழன்ற பாதரகூைடி, தண் ணிரில் ஒக்கித்துப் பின் இற்றுத் தேய்வுறும் தன்மை யில், நான் நாதியற்றுப் புரி பெயர்ந்த பிணைச்ச லாய்க் கிடக்கின்றேன். அசுப்பிரியாத நிலை.
"எனக்கே எல்லாம் சொந்தம்” என்று எங்கி ருந்தோ ஒரு வர்க்கத்தின் ஆவல்க் குரல் தெளி வொலியாய்க் கேட்கிறது. வாஸ்தவம்.
'எனக்கு எல்லாம் சொந்தமா?" மயக்கத்துக்கு விடுதலையாகக் கிளம்பிடும் ஐய வினு, உண்மைக்கு வழிகாணும் வித்துருவில் நெஞ்சுக் கூட்டுக்குள் பிரளய உருவெடுத்துக் கொந்தளிக்கிறது.
அது-? இருளை நீக்க ஒளி: மயக்கம் மாறுறத் தெளிவு. "எனக்கெல்லாம் உடைமையா?* ஐயப்பாடுகள் வினவாக இறுகிக் கடாவுகின்றன. சந்தேகங்களை உருவுதலானது, கல்லில் உராய்ந்து நிவிர்த்தித்துக் கொள்ளும் தராசு; அதுவே முழுப் பொலிவுற்றுக் கூராகின்றது. இதில் ஊசலாட்டமில்லை. உள்ளத்தில் ஊறுவது முரண்பாடுற்றதும், அது இரு முனைகளாகிப், பூகம்பத்திற்குப் பக்குவமாகிப், போர்க்குரல் ஜனித்துப், புரட்சி வெடித்து அதில் வேள்வி நடத்துகிறது. ஆனல், விழிகளால் ஆகர் ஷிக்க, மொழிகளில் காந்தமேற்றிப் பீறிடும் என் 27

Page 19
28 - நானய நீ
உரிமைக் கடாவுதலைக் கழுகு நோக்கில் சில சுரண்டல் சக்திகள் தன்னிச்சையின் பால் உந்தப்பட்டு, “சபாஷ், நீயே நான் என்று பாவனை பண்ணி, என்னிருதயத் துள்ளேயிருந்து, “நஞ்சு வார்த்துக் கொண்டே, போலியாய் உறவாடி, என்னைப் படு முட்டாளாக்கிப் பலவீனணுக்கப் பிரயத்தனப்படும் பசப்புக் கூத்தை, நான் வெகு நேர்த்தியாகக் கண்குத்திப் பார்க்கிறேன்.
புரட்சி-?
தானிய மணிகளை நிலத்தில் தூவி, நீர் பாய்ச்சி, பருவகால மழைக்கும், கோடை வெயிலுக்கும் தக்க வாறு அவற்றை அழுகாமலும் வாடவிடாமலும் வளர்த்தெடுத்தபோது, பக்குவமுறும் தானியப் பொத்துகள், குருத்துகளின் வட்டான நடுப் பிர தேசத்தில் வகிடு கிழித்து, வெடித்து வரும் நிலை.
இதுவே புரட்சி.
இனிப் பயன் p
அதன் அடி அறுத்தல்.
அதுவரை 'அவற்றைப் பாதுகாப்பதற்காகப் போர்குணத்தில் திண்ணிம்யுண்டாயிருப்பதைப் Lμπ ri έή கிறேன். புரட்சிகரப் பார்வையன்று; புரட்சிக்கான
If G G.
ஆனல், அதே வேளை
முதலை ஈர்த்து, அதற்கு என்னை அடிமையாக்கி, அதன் கண் இரு துருவங்களையும் ஆளும் ஒரு சக்தி, என் ஓயாக்கரங்களுக்கு மாதொரு வீறுறு புடை சூழ்ந்து, படை திரண்டு வந்து என்னை எஃகுவாக்கு கிறது.
உழைப்பின் ஒயாக் கரம்.

நானுய நீ 29
எரித்துச் சாம்பராக்கும் நெருப்பை என் கரங்கள் அணைத்து அடிமையாக்கின. அதன் வெக்கையிலும் வெண்ணுெளியிலும் பயனெடுத்தன. ஆழியை ஆவி யாக்கி, நிலத்தைப் பக்குவப்படுத்தி உணவளித்தவை இக் கரங்கள்.
இந்தக் கரங்களிலே உலகம் உறைகின்றது. கை நெகிழ்ந்தால் உலகம் அழியும். இதுவே என் கரங்களின் தாற்பரியம். ஆஞல், எனக்கு நான் யார் ? என் சக்தி? நானில் நானும், என்னில் எனதுமாயிருக்கிறேன். நான் ? நான் பாவிகளின் குரலிலிருந்தொலிக்கிறேன். ஏழைகளின் கண்ணீரில் நான். ஏங்குபவர்களின் விழிகளில் நான். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக் குரலில் நான் . உரிமைக் குரலெழுப்பும் ஆத்மாக்களில் நான் . உன்னத வாழ்வுக்கான உறுதி மிக்க போராடும் சக்திகளின் ஓங்கார ஒலிகளில் நான்.
நீதிமான்களின் இதயங்களில் நான். உலகத்தை ஒன்று சேர்த்துச் சமமாக்க விழையும் ஏகக் கொடியின் கம்பீரன் நான்.
எங்கும் வியாபித்தவன் நான். இவற்றிலெல்லாம் ஒன்றித்துச் சங்கமித்து நிற் கும் "ஜனசக்தி' நான்.
4

Page 20
30 நானுய நீ
நான் இங்ங்ணம் பரந்திருப்பது தன்னிச்சைக் காரர்களுக்கு ஓர் இடியேறு.
ஆனல், அடுத்த கூட்டம்? ?זו6 מ60é חj_ן இருந்தும் இல்லாதவர்களான நாதியற்ற சபலங்கள்.
ஏழைகள்-? கடலில் நீரூற்றியதுபோல் விரயகித்து, வாழ் நாள் முழுதும் உழைத்தும், உழைத்த உபகரணங் களில் எவ்விதப் பாத்தியதையும் இல்லாததால், செய்வதறியாது கதி கலங்கும் அம்பு பாய்ந்த மான்கள்.
ஏங்குபவர்களின் விழிகள்-? கையிலிருக்கும் அப்பத்தைக் கொத்திக் கொண்டு பறக்கும் காகத்தை அண்ணுர்ந்து பார்க்கும் சிறுவ னின் ஏக்கக் கண்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் ? உரிமையோடு பிறந்து, உரிமை இழந்ததன் பால் உரிமை க்ோரி வேதனையுறும் ஜீவன்கள்.
உரிமைக் குரல் எழுப்பும் ஆத்துமாக்கள்-? இரம்மியமான காட்சிக்கென்றழைத்து, ஆசை யைத் தீயாய் மூட்டிவிட்டுக் கண்களைக் கட்டிவிட்ட கோரம். கட்டிய கட்டை உடைத்தெறியக் கோஷ மிடும் தொனியிலே உரிமையின் வேலம்பு,
உன்னத வாழ்வு-? எல்லாம், எங்கும், எல்லாமாயிருந்து, எல்லார்க் கும் இன்பமுற வைக்கும் நிலை.
நீதிமான்களின் இதயம்-?

நானுய நீ 3.
உழைப்பின் பயனை உழைத்தவன் அனுபவிப்பது நீதி. உழைக்காதவன் உழைத்தவனின் உதிரத்தை உறிஞ்சுவது அநீதி.
ஏகக்கொடி-?
"நான்’ என்பதழிந்த, 'நாம்" என்னும் ஒரு சமத்துவச் சின்னம்.
ஜன சக்தி- ?
அழிவின் மீட்பரும், ஒளியின் மூலருமான ஒரே கர்த்தா.
நான் கர்த்தா!
இதுவே நான் என் நிலை இதுவே,
இந்த நிலைக்கு ஈடாட்டமிட, நீ ஒரு கொடிச் சுவால் சாத்தானுய் நெருப்புக் கொள்ளி ஏந்தி, என்னை அழிப்பதற்கு ஆவேசமாய் ஓடி வருவதைச் சகல புலன்களையும் அடக்கியபடி பார்க்கிறேன்.
என் புலனடக்கத்தில் உன் உரிந்த வேஷம் தெரிகிறது.
நான் நாதியற்றவனுயினும், நாலாதிக்கும் பரந் திருக்கும் சக்தியுள்ளவனதலால், உன் தலைவீக்கக் கொடுமுடிப் போக்கு என்னில் பலிக் காது.
ஏனெனில், நான் உழைப்புச் சக்தியால் கோப்பி சம் கட்டுபவன். ஆனல், நீ அதன் கேடயங்களை உடைக்கப் பார்ப்பதற்குப் பக்குவம் பார்ப்பவனுயி ருக்கிருய்.
தான் ஆக்கலன்.
நீ அழிவின் ஒலன்.
நான் ஒத்த டன்.

Page 21
32 நானுய நீ
நீ ஒற்றன்.
நான் வேந்தன்.
நீ வெகுளி,
நான் வெகுளியை வென்றவன். ஆனல், நிலை பெயர்ந்து உஜ்ப்சலாடுகிறேன்.
இந்த ஒரே ஓர் அடித்தளமற்ற நிலை கண்டு, வஞ்சக விஷம் நிறைந்த உன்வாதுறு கொடிய கண் கள், பஞ்சமா பாதகங்கள் புரியப் பார்க்கின்றன. பொதுமையின் வாழ்வை விடத் தனிமையின் புகழுக்கு நீ மாய்வதால், உண்மையைப் புறக் கணித்து விட்டு, தலைக்கணம் கொண்டு, வெறும் வார்த்தைக்கு 'நுணுக் கம் தேடி, சுத்திகரிப்பு வேலையில் பத்தினி வேஷத் திலீடுற்று, கல்லுப் பொறுக்க அரித்தட்டு ஆட்டி விளையாடுகிருய், ‘கருங்கல்' என்று நீ உன் மனதி லுற்று என்மீது எறிந்த விஷத்தூள் என்னிடம் வந்து இலவம் பஞ்சாகிறது.
ஆமான உன் அடி, ஒரு சுழிவிட்டு, அகண்டு பரந்து ஆயிர வித்தை விதைக்கவல்ல பலத்தை எனக்கு அளிக்கிறது. எனவே, பொருதும் போரைப் *ಿಞ್ಞ:: கட்டும் ஆளைப்பிடித்துச் ‘சரிக் கட்டி"ச் செய்யாமல், ஸ்ன் நெற்றிக்கு நேரே ஏறுற்று of
உனக்கு நெஞ்சுரம் உண்டா ? மருந்துக்கும் இல்லை. நீ ஏவு குள்ளன். நீ ஆசாரம் பண்ணி அபகடம் செய்பவன். நீ கோழை. ஆட்டுக் கடாக்களை முடுக்கி விட்டு, அதன் மோத லின் நடுவே குந்தியிலிருந்து இரத்தம் குடிக்கப் பார்க் கும் குரூர நரி நீ. w

நானுய நீ
உனையறியாதோர் மாள்வர்; அறிந்தோணுய நான் மாளேன்.
கொச்சைப் புகழ் பூண்டு, இரவல் திறத்தைக் கவசமாக்கிக் கொண்டதாக, தனி மனித அபிலாகை; யின்பால் என்மீது தாக்கீது செய்து குடுறச் சாடு வோனே கேள்.
நீ, மனிதத் தலைகளை வேள்வி வைக்கும் வேட்கை யில், செட்டை கட்டிப் பறக்கும் அவாவுற்று, காலா வதியான உன் புகழுக்குப் பூச்சிட்டுப் புதுக் கோப்பி சம் கட்டப்பார்த்துப் படுதோல்வியுறுவதால், மேலும் நாகச் சீற்றத்துடன், கள்ளத்தனத்தை மறைக்க, சுரண்டிய நீ, சுரண்டப்படும் என்மீதே 'கள்வன்" என்று பத்திரம் வாசித்துப் பழிசுமத்திச் சூன்யக் கீச்ச முறுகின்ரு ய். எனினும், உதற்கு என் தலை மடங் காது. ஏனெனில், நான் எல்லோர் உள்ளத்தினுள்ளே யும், நீதிமான்களின் வாக்கியங்களிலும், பொதுமை விழைவோரின் ஓங்கார சத்தியிலும், மிளிர்ந்து வியா பித்திருக்கிறேன். ‘. . .
இதோ உனக்கு ஒரு சவால்,
ஏற்கிருயா?
'ஹி ஹி அற்பனே, என் கொத்தடிமையான நீ, அண்ட கோளத்தையும் ஆட்டிப் படைக்கும் எனக்கு, இத்தனை வீரேறுற்றுச் சவாலிட, நாதியற்ற உன்னிடம் என்னவக்கு இருக்கிறது?’’
'சக்தி!'
'ஆ என்ன சக்தி?'
'ஜன சக்தி?'
**ஜனசக்தியென்ருல்-?"
* உன் வர்க்கத்தின் வைரி!'
'நான் யார் தெரியுமா?"
**ஆம்; நீதிமிரன்!"
**அப்படியானல் யார் நீ?"
'நான் தொழிலாளி!' YA

Page 22
நீயான நீ 3 if ?
"ஏன்?" எனக் கடாவின், ‘இன்னது" எனப் பதி லிறுக்காது, அங்ங்னம் வினவிய வனையே சுரீரித்துச் சாடும் வீணன்.
s$.. ?
பொதுமை காண, ஐக்கிய வீறேற்று, ஒக்கலித் தியங்கிய மாதொரு குழாத்துள் குழாத்த வணுக வேஷமிட்டு, அதனுள் ஊடுருவிய ஒரு சூத்தைப் Լվ(ԼՔ .
சூத்தைக் குள்ளாக்கும் கேடுற்ற கைங்கரியத் துக்கு, நீ, "வீரத்துவம்' என்ற ஜால வர்ணம் பூசி, உண்மைக்கும் பொய்க்குமிடையில் ஒரு "மயக்கப் பொடி' யை, என் கண்கள் கெடத் தூவி விட்டாய்.
பயன் உனக்கா?
உனக்கென்றே நீ நிர்ணயிக்கின்ரு ய்,
உன் வாயால், உனக்கே நீ நாச வித்திட்டிருக் கின்ருய். உன் வாள் வீச்சு உன்னை உய்விக்காது; உன்னை அரித்து அழிக்கும்.
நீயே நீயனிப் இருக்க விழையும் பேராவல், அங் ங்னம் தூவலில் உன்னிை இறக்கி விட்டிருக்கிறது.
நீயே உனக்கு இரை.
நீ தூவிய அந்த விஷத்தூளின் அரிப்பில், "அந்தகோ எனக் குமுறும் ஆத்துமாக்களை நீ பார்த்து, நீயே கெக்கலி கட்டிச் சிரிக்கின்ருய்.
உது சிரிப்பன்று.
உந்தச் சிரிப்பு, சிறு நரியின் சதையுண்ணும் வேட்கையில், சிறுத்தைக்கெழும் ஒரு கோர எக்
frr GMT DIT GOTI .
34

நீயான நீ 35
உன் சிரிப்பின் ஒலியும், அது உனக்குக் கிளர்த் திய உணர்வும் உன் கண்களில் கன்னிரைத் துருத்து கின்றன.
அது உருகு கண்ணிரன்று; உன் ஆனந்த சாகரக் கண்ணிார்.
ஆனல், அந்தக் கண்ணிரே உன் நரித் தந்திரத் திற்கு உறுதுணையாகி, வாசியாகின்றது.
செவிப் புலனலாய நீ, பின், உன் கட்புலனிலுறுத் திப் பார்க்கின்ருய்.
உன் நிர்ணயிப்பை, உன் நெஞ்சுக்கூடு, தராசு முள்ளாக்கி ஆடிக் காட்டுகின்றது.
“எது சரி' 'எது பிழை" என்பதை நீயே கேட்டு, நீயே நிர்ணயிப்பதில் சூன்யனுகின்ருய் என்பதை உணராத உன் ஜடனக மனம், உன்னுள்ளேயே ஊனித்திருந்து மாயை புரிகின்றது.
சர்வானுகூலஞன எனக்கு உன் அகங்கார நுணு வல் தெற்றெனத் தெரிகிறது.
ஆயினும், நான் கண்கள் கட்டியபின் காட்சி பார்க்க வந்த நுணுக்களுயிருக்கிறேன். ஆனல், மண்டி யிருப்பது கசை இருள்.
உதிரம் பீறிடும் வேட்கை எழும்புகிறது. *வேட்கை"யிருப்பினும் என் உடம்பு உன் ஆகொடிய சுரண்டற் பிடியில் கட்டுண்டுகிடக்கின்றது. ஆணுல், நீயோ உனக்குகுத்த அவ்வானந்தக் கண்ணிரின் வெதும்பலை மரண ஒப்பாரிக்கு ஒப்பிட்டு, அதன் கண்ணே, அது உன்னுடம்பாலிரங்கி உகுத்த தென்று ஒப்புவிக்கின்ருய்.

Page 23
36 நீயான நீ
உன் ‘குருக்குத்தி மூளையில் பாகாய் அப்பிய சாகச நஞ்சு எனக்குச் சூன்யமாயிருந்தவரை, நீ ஓர் ஆடலரம்பன்தான் என்பதை என் உட் புலனுணர்த்தி, நீக்கமற ஒப்புக் கொள்கிறேன். w
ஆணுல், நாளை விடியும். அப்போது உன் பாவைக் கூத்துக் கணிந்த செம் மணிச் சோடனைகள் கழற்றப்படும்.
அப்பால் ? - நீ, நின்னில் நீயானவனுய், நீயே நீயில் உரு வகித்து, அகிலம் பரந்தொக்க ஜெகஜீவன்போல் விளங்கி விகர்சித்த "நாம் என்னும் நாணுய என்னைத் தனி இராஜதானக் கோலேற்ற, கொற்றவனின் திடும்புப் பார்வையில் ஏறு கண்ணிடுகின்ருய். உன் ஞல் உன் எறிகண் கொண்டு என்னை வெருட்ட (Մ)ւգ-նաn 5l.
ஏகப் பிரபுத்துவணுகச் சுரண்டற் கலையைக் கை யாண்டதின்கண் ஜன வெள்ளத்தில் தனிமையான நீ, தகைமையற்றதினுல் பீதியுற்று, விழி மறைக்கும் இரும்புக் கவச இருப்டடிப்பை மேற்கொண்டும் பார்த்தாய். ஜனக்குரலான நான் உன் கபடப் பிடியில் இறுங்கவில்லை.
அதனல் நீ என்னை இடியப்பம் பிழிகின்ரு ய், நான் பிதுங்குகின்றேன். என் உருவம் என்னேடு இருக்கவில்லை. அது, நாளைக்கு, உலகத்தை ஒரு கொடிக் கீழாளத் துடிக் கும். கோடானுகோடி, ஜன, வெள்ளத்திலொன்ருன சிறு கூர்த் துரும்பாயிருக்கின்றது.

நீயான நீ 37
அவ்வீரேறு சோபித உலகம் வேகமுற்ருேடி வரு வதைக் காட்ட, இதோ எண்ணற்ற செந்நிறப் பூக்கள் சொரிந்து கட்டியம் கூறி நிற்கின்றன.
அவ்வுலகில் என் சூரியப் பிரகாசக் கதிர்க்கண்கள், உன் கறை படிந்த இருட்டடிப்புக் கேடயச் சூத்திரத் தைத் துரந்து பிடிக்கும். அவ்வேளை, என் மாணித ஜன சக்தி, உன் கூத்து மேடைக் கொலுவைக் கழற்றி, நிர்த்துரளியாக்கி, உன்னை நிர்க்கதியாக்கும்.
நீயோ சிரிக்கின்ருய். ஆணுல், உன் ஆணவ நகைப்பும், திடும்பான நினைவும், அக்கினியிற் சூரணமாகும்.
நான் என்னுலானவனல்லன்; என்னுருவாய ஒரு *ழனுக்குலச் சக்தி'யாலானவன்.
நான் இறப்பினும், நானுய ஜன சக்தி ஒரு போதும் இறக்காது.
ஆனல், நீ மரணமாவாய். நீ மரணிக்கின், உன் அக்கிரச் சிரிப்பு உன்ஞேடு அழிந்தொழிந்து நீருகும்,
ஏனெனில், நீ, "நீயே" என்று, நின்னை உருவ கித்து நீ"யில் அடங்கின, நீ.
நீ, "தனிமை” வாதி, நான், "பொதுமை" வாதி. நீ "ஒருமை” வாதி. நான், "உலக" வாதி. உன் சுரண்டற் கோரங்கூட விந்தையானது. குண்டூசிகள் பார்வைக்கு.அழகானவை. அவற்றை நிமிர்த்தி ஒரு வேடிக்கை காட்டுவதாக இலக்கிய

Page 24
38 நீயான நீ
மொழியில் நீ செப்பிய கிள்ளைப் பேச்சில் நான் சொக்கிப்போயிருக்கிறேன். அவ்வேளை, நீஉன் இலாபத் தைக் கணிக்கின்ரு ய். அங்கே உன் இலாபம் கேடுறு கிறது. நீ, சீறுகின்ருய். பூன்ையா கவன்று; நாகபாம் பாக. உன் சீற்றத்தின் பணியாக அக் குண்டூசிகள் விசையாகி, என் நடு விழிகளில் உனது குரூரக்கரங் களால் ‘படாரென்று குத்தப்படுகின்றன.
இரத்தத்திற்குப் பதில், உன் நிஷ்டூரத்தால், என் கண் விழிகளிலிருந்து செவ்வூனம் பீறிடுகிறது.
அந்தச் செவ்வூனம் p என் வறண்டு வரும் தசைச் சோணங்கள், குழை யுடன் சாறு போல் என்புகளோடு சங்கமித்து ஒட்டி வலித்திருப்பதால், நீ, என்னை ஓர் உலுப்பு உலுப்பி விடலாம் என்று உனக்கு ஒர் இறுமாந்த எண்ணம் ஊறுறுகிறது. தத்தாரியான நீ, இரும்புச் சுவடணிந்த கபாடத்தால், என்னை நெட்டி நசுக்கும் கைங்கரியத் தில் ஈடுபட்ட தின்கன், ஈற்றில் நீ கண்டது நீ காண விழைந்தவை யன்று.
நீ, உன் நெஞ்சில் த்ட்டிப் பார்த்துச் சொல் ? நீ, நேசன? நீ, வீரனு ? நீ உன்னை நினைத்து, என்னுடன் சமருக்கு வந்தா யானுல் நீ சுத்த வீரனெனப் புகழ்வேன். ஆனல், நீயோ, உன் பணப் பொக்கிஷத்தையும் வெடி மருந்து டப்பாக்களையும் நினைவிற் கணித்தே என்னுடன் வீரம் பேசுகின்ருய்.
நான் "மக்கள் சக்தி'யால் ஈர்க்கப்பட்டதன் கண், ஆக்கம் பற்றிப் பேசுகின்றேன்.

நீயான நீ 39
நீ, வெறுங் குடம். நான், முட்டுக் குடம். நீ, அழிவைக் காட்டிப் பயமுறுத்துகின்ருய். நான் , ஆக்கத்திற்குரமிடுகின்றேன். குத்தூசிகளாக விளாசும் உன் அக்கினிப் பார்வை, நெருப்புத் துண்டுகளான உனது வெக்கைக் கண்களில் கதிர் பிரித்து, என் கோழிக்குஞ்சு நெஞ்சகச் சோணத்தில் குறிவைக்கின்றது. அந் நிஷ்டூரப் பெர்றி நோட்டம், என் நெஞ்சினுள்ளே புழுக்குத்தி அரிப் பான் வேலை பார்த்து, என்னை ஒரு நோஞ்சனுக்கி, உனக்கு அடிபணிய வைக்கலாம் என்று மனத்தினி லுள்ளூறித் திடும்புறுகின்றது.
வாய் சமைத்த நோஞ்சற் பிராணிமீது, நீ கோலோங்கும் விறுத்தம் அசலாய்த் தெரிகிறது.
ஆஞல், உந்தத் தனிக் கோலோங்கும் இராஜ தான அசுர மகுடி என்னிற் பலிக்கவே மாட்டாது. ஏனெனில், நான், ‘நான்’ என்ற வெடி நெஞ்சன யிராது, சர்வானுகூலப் பார்வையுடன், உலக மனத்தும் ஒக்கலித்திருக்கின்றேன்.
நீ எதைக் கண்டு அருவருத்து முகம் சுளிக்கின் முயோ, அதுவே என் மனமுவற்றலுக்காளாயிருக் கின்றது.
அதன் வாழ்வுக்காகவன்று; அது அங்ங்னமாக் கப்பட்ட பரிதாபத்திற்காக
நீ எவனைக் கண்டு சாத்தானென வெறுக்கின் ருயோ, அவனே என்னுயிர்த்தோழனுயிருக்கின்றன். ஏனென்றல், 'அவனும் நானும் மாணிதவாதிகள்.

Page 25
40 நீயான நீ
உனக்கு எது பிடிக்கவில்லையோ, அதுவே எனக் குப் பிடித்தமாயிருக்கின்றது.
நீ, உன் ‘சிந்தனையை வைத்து உலகத்தைப் பார்க்கிறேன்" என்கின்றவன்.
நான், "உலகத்தை வைத்தே என் சிந்தனை தூண்டப்படுகிறது" என்கிறவன்.
நீ, "சிந்தனையிலிருந்து 'மூளை"யை வகுக்கிறேன்" என்கின்றவன்.
நான், "மூளையிலிருந்தே சிந்தனை" உதயமா கிறது" என்கின்றவன்.
pë, கற்பனவாதி.
நான், லோகாயத வாதி.
நீ, சமுசயன்.
நான், தீட்கூடிண்யன்,
நீ உன்னிலில்லாத உன்னவன்.
நான், என்னிலுள்ள எல்லோரானவன்.
நீ, "உன்னைக் கணித்து உலகத்தைப் Luirriták கின்றவன்.
நான் உலகத்தைக் கணித்து என்னைப் பார்க் இன்றவன்.
நீ, அணையப் போகும் ஒளியிலிருந்து இருளைப் பார்க்கிறவன்.
நான், மீளும் இருளிலிருந்து அணையா ஜோதி யைப் பார்க்கின்றவன்.
**த்கு *
*என்ன இரைச்சல்* gar sust?'"
"நாகமன்று: நானே: ஈழுந்தருளி வந்தேன்!"

நீயான நீ 4
'ஒ நீயா?"
**ஆம். நான்தான்!"
'ஏன் வந்தாய்'
* 'இத்தகைய வியத்தகு பராக்கிரமஞன உன்னே, 'யார்?" என வினவி, ஏக வந்தேன்."
*" வினவவஈ? வினையத்திற்கா?"
"" அல்ல அப்பனே, அல்ல!"
'உண்மையாகத்தான் கேட்கின்ருடிபு:ஈ?"
**அஃதே. அப்பனே, விரைவில் பதிலிறு; நீ gjigjjr ?” ”
'யார் நாணு ?"
"ஆமாம் நீதான் ?"
'நான் ஒரு தொழிலாளி!"
'ஆ ! நீயா?*
* "ஆமாம். நான் ஒரு தேசாபிமானி'
*தொழிலாளித் தேசபக்தனே ! உன்னை நான் வணங்குகின்றேன். என நீயேற்று, நீக்கடிறப்பற்றி, உன்னிதயத்தில், என்னை வை'

Page 26
நீயாயபூழிந்த நீ 4.
நீ p
உனக்குள்ளே உன்னணுய், நின்னிலே "நீயே யென, நின்னையே நீயனுக்கி மமதையானதால் அக விகாரஞ்கி, சர்வானுதேசக் கண்ணுாடுருவலைத் தறி கெட இராட்டினமாட்டிக் கை நெகிழ்ந்ததால், தனித்துவ வணக்கத்துக்குச் சாமரை ஏந்தும் ஏவல ணுகி விட்டாய் என்பதை உனது குமுழழிந்துான முற்றுக் கிழி சதையான கூழ்க் கண்கள் கட்டியங் கூறுகின்றன:
ஆனல், உன் செவிப்புலனே, தொலையினின் றெழும் கூக்குரலை, குண்டுக் கோப்பையில் விழுந் தொலிக்கும் சங்கூசிக் கிரணமாகச் சுவீகரித்துக் கவ்வவல்லது.
நச்சுவாயனுன நீ, கழல்வதெல்லாம் கழலலாகாத தாயிருக்க அதன் பால் அது சுரீரித்துப் பீறல் கொண் டதனல் விகார மேனியனகினய். களிகூரும் விழிகளில் கருணை மண்ட உன்னினில் எஞ்சித் துளிர் விடுவது உன்னின் நீறுற்ற ஊறு கண்.
உன் ஏறெ கண்ணில் நீ பசுமை தீட்ட, உன் எக்களைப்பையினில் விஷமிறக்கிவிட்டு வேங்கை நினை விருத்திக் குக்கலாய்ப் பதுங்குகின்ருய்.
உது பதுங்கலன்று பாய்ச்சலுக்குக்குறி பார்க்கும் LDrr u.1 LDGg5 Lq?-.
உன்னினது நாக்கு, பூச்சி விழுங்க, தேரை நீட்டும் பாக்ஷாண நன்னி.
உது தீயன்று தீய்ந்த சவ்வு.
4罗

நீயாயபூழிந்த நீ 43 、
இவ்வாறமைந்த விறிசுகளால் அட்டாளத் தேசி மனைத்திலும் கொடி கட்ட, உன் புலுணி நெஞ்சு உன் புலுட்டை மேனியை உசுப்பி விட்டதினல், உன் அட்டகாசம் அடங்காததிர்கின்றதை எனது தெளிவூற்றுக் கண்களால் பார்க்கின்றேன்.
உது வெடியன்று; வெறும் சூரணம். உன்னையே உன்னணுய், உனக்கே உன்னதாய், உனக்காக உனதனய், உன்னனே உன்னுய், உன்னற்ற உனதாய் ஊறிளைத்துருஞ் சானகி, வெறுங் கொட்டில் பறையடிக்கும்உன் செப்படி வித்தையை அறியார், அறி யாரே. ஆனல், உந்தப் புலுமாசுகளை நான் அறிவேன். உரு வழிந்துாணுன உன் பாஷாணக் கரத்தின் பஞ்சாடை விரிப்பால், தமதுறு கரங்கள் போன்றன வென விஸ்வசித்த தேசமதாகிகளை மலைக்க மயக்கி விட்டதாக, நீ, உன்னுள் இறுமாறுகின்ருய்.
ஆனல், நீ என்றே ஒரு கால் நீ புகுந்த இருட் குகையகல, வெளியினில் வருவாய்.
அப்போது உன்னை நான் அலகையென அலற வைப்பேன்.
இருட்டின் கவசம் வெளிச்சத்தில் துகள் பறக்கும்: உலகேகரை இரத்தம் பிழிந்த உன் பாக்ஷாண நெஞ்சினில், நீ கக்கிய விஷத்தையே.ஊசிகளிலூற்றி அவற்ருல் குரூரமாக்கப்படும்.
நீ அழிவாய். உன் கோபுரக் கோட்டைகள் குறுணியாகும்,
உன் கிரீடம் கீலமாகும்.

Page 27
44 நீயாயபூழிந்த நீ
தீட்கூடிண்ய வாக்கினில் எழும் என் ஒருக்கலிப் புக் குரல் ஏகவுலகின் மணி நாக்காய்க் கணிரிடும்.
எமது கொடியின் ஆலவட்டம் அவனி காண, நீ அடிபெயர்ந்த மர வீழ்வில் பொடியாவாய்.
இது என் தீர்க்கதரிசனம்.
'ஏன், எவ்வாறு?*
"சட்டென நீ ஏறு நெற்றி சுருக்கிக் கணை ஏற்றி வினவுகிருய். உன் கடுமுடுக்கு அகத்தி லெழுந்து முகத்தினில் வடு வைத்துப் படர்கிறது. நெரிடி வறுக்கும் உன் கரி கண், முறு குற்று வெறுப் பதை நான் வஜ்ஜிரித்துப் பார்க்கிறேன்.
உது ஒரு ‘டூப்."
அறைந்து கிடக்கும் என் வீறு கரங்களிலிருந்து ஆணிகள் கழற்றும் காலம் இதோ அண்மி வருகிறது.
அந்த ஓங்கார மணி நாதம் கேட்கின்றது.
வேள்விக்கன்று என் விடுதலைக்கு.
''ggil என்ன்?"
விழுந்த வகத்தியில் அணிற் குஞ்சு பதகளித்துக் , சுேரும் பாவனையில் உன் வினவல் இருஞ்சுகிறது.
உனக்குப் புளியேவறை எனக்குப் பசித்திக்கல்.
நீ ஊனக் கண்ணன்.
நான் உறு கண்ணன்.
நீ கழி சதையன்.
நான் உறை சட்லன்.
நீ நாறலன்

நீயாயழிந்த நீ 4莎
நான் நண்ணன்.
நீ விஹாரன்.
நான் விறலன்
நீ பாக்ஷாணன்.
நான் மானிதன்.
நீ விஷமி.
நான் விருதன்.
நீ உன்னன்.
நான் உலகோன்.
நீ பொய்யன்.
நான் மெய்யன்,
நீ புளுகன்.
நான் பூரணன்.
நீ ஊனி.
நான் உரைகல்.
நீ தீய்ந்தவன்.
நான் தீக்ஷண்யன்,
நீ டூப்பன்.
நான் தூர்ப்பன்.
உன் உரி சிரிப்பு என் அசையா மேனியைக் குரூர மாய் ஹருமித்து விடுமென நீ உன்னினில் திளைந்து திணைகின் ரூய்.
என் ஊனங் குடிக்க உன் வேகெறு நாவினிலுாறும் கழி நீர் புரைத்து, நுரை கக்கி வீணிட, அகமுலுப் பிக் கண நேத்திரங்களால் என்னை நீ நுணுவுவது என் துலங்கு கண்களில் விழுதாகிறது.

Page 28
46 ܗܝ நீயாயழிந்த நீ
உன் அடங்காவவா உன்னைக் கிறக்கித்துக் கேடு றச்செய்த வித்தை, உனக்குச் சூத்திர நூலுருவமா கத் துலங்குகிறது.
ஆகாயத்தையுமுடமையாக்கும் உன் தன்னிச்சை நினைப்பு, உன்னை உன்னணுக்கி விடாது, உனக்கும் உனக்காகாதவளுக்கி விட்டிருக்கிறது.
இதால் உன் அடி மனம் "கிடுக் கிட்டாடுவதை நீ உன்னினுள்ளுணர்த்திய வேளை, உன்னிலிருந்து கிளர்வது, நீ கிளர்த்த விழைந்ததன்று.
என்னை அழிக்க நீ இடுக்கி எடுத்த வாளே, 'சடக் கிட்டொடிக்க, ஏகாந்தக் குரலஞன எனக்கு ஒர் மேரு சக்தி வீறுற்ருேங்காரனக்குவதை ஊனித் துப் பாஷாணித்த உன் விஷக் கண்களாலுற்று நோக்க மாட்டாதணி என்பதை நான் நீக்கமறவறி வேன்.
ஆனல், என் சடலம் நெருப்பில் ஸயனமாக என் இருதய வேக நாடி குற்றுாசிகளால் குத்தப் பட்டு, இறுகக் கட்டிய கண்களோடு திக்குமுக்காடு கிறது.
கண்டங் கயிருளில் அடைபட்டு நெக்கிடும் என்னை, உன் நாசினி ஊசிகள் குரூரமுறக் குற்றி இரத்த வடுக்களாலழகொழிக்கப் பார்க்கின்றன.
இருளெனையண்ட, நீ, உன் நிஷ்டூர நகங்களால் என் சடலத்தை வறுகி ரணமாக்கியபடி எனையுறுத்தி நீவுகின்ருய்
நீவிய உன்னுான விழிகள் எனை நோக்கி, "எப் படி, செளக்கியமா ?’ என வினவி நளிக்கின்றன.
நான் என்ணினுள் சிரிக்கின்றேன்.

நீயாயNந்த நீ 47
இரத்தவூனம் எனது கண் பிரிப்புகளினூடாகக் கரித்துறைகிறது.
நீ ஓங்கியெறிந்த ஈருளியீட்டி, என் நெஞ்சுக் குமிழியில் வேகித்தேறி நின்முடுகிறது.
அவ்வீட்டி என்னையறுக்க முறுகி, அது தன் னையே மழுக்கிக் கொண்டதை என் விறல் நெஞ்சினி லொழுகும் இரத்தப் புரை, உனக்கு விகாரித்துணர்த் துகிறது.
உனக்காக உன்னினை நீ வேகித் தெறியும் எதை யும், எனக்காகவன்றி, என்னினை ஈய்த்து, நான்
உன்னுடன் சமரிடச் சவாலிடுகிறேன்.
என்னிடம் ஏகாந்தமாய வீரேறு சக்தி பூதித்து விட்டதால், நான் ஒரு 'மெளனி'யாயிருக்கிறேன் என்பதை நீ அறிவாயாக.
நான் எரிமலை.
நான் ஏகஞனவன்.
நான் நானநிக்குமான வன்.
'நான் செத்த நான், "நான்' என்ற உன் மமதை படக்கி, நாளைக்காய உலகம் சமைப்பேன்.
அன்று இருளகலும்.
எனக்கிட்ட விலங்கொடியும்.
நீ மடிவாய்.
இங்கே பார் .
பூமாதேவி எனக்களித்த மா சக்தி வீரேறுற்று, முறுகி, நெகிக்கிறது.

Page 29
48 நீயாயபூழிந்த நீ
"நறுக் !"
**ஆ-? அந்தோ !'
அட்டாளத்தரசனகி என்னை அலறவைத்த உன் அகங்கார வாய், இது கண்டலறுவது விந்தையன்று.
'ஹே நிஷ்மானிஷா கழல்க, நீ யார் ?"
'நான் தொழிலாளி!'
'ஆ . ?"
"ஆம், நான் ஒரு பூமா தேவன்!"

நீ என்ற நீ 5
நீ.
உன்னை வனன்று. "என்"னில் நானனவன்” எனக் கழலும் உன் எத்தனத்துக்கு, நீ, உண்மை விளம்புவதை
விடுத்து, சட்ட நுணுக்க லோ'வனக ஆதாரம் தேட நப்புகிருய். அரசன் வருகை வழி மொழியும் கட்டியகாரன் லேஞ்சி உன்னிடம் விசும்புகிறது.
நின்னது நெஞ்சு நாக விஷப் பானத்தை வாரித்த தீ நீறு.
ஆனல், நி, உன்னை, "எஃகு "வென்று உவமிக்கி ருய். உனது உந்தப் புலுடா, ஒடு நெரிந்த நத்தை என்பதை அவர்கள் அறியாதவரை உனக்கு வாசி தான்; ஐயமின்று.
அதன்பால், நீ, முடுக்கிய பாவைபோல் துள்ளு கிருய்.
நின்னினது நெரி நெஞ்சு விறலிழந்த சணற் கூடென்பதை அவர்கள் நெகிழ்வதால் நீ நரியனு யிருக்கிருய், பேட்டுக் கொக்கரிப்பான உன் கேளிக் கையைச் சேவற் கூவலாக நினைத்து அவர்கள் விடி வுக்குக் கார்க்கிருர்கள்.
விழித்தால் கண்னைக் கண் நுணவாக் கவ்விருள் குழும் என நினைக்கின்ற உனக்கு, உன் ஜாலத்தில் ஒரு குஷி கிள்ளையாய்க் கெந்துகிறது.
ஆயினும், உலகாஸ்திகளை உன் நரித் தந்திர ஜால வித்தை மாயத்தால் ஏகேறரை அபினுாணி களாக்கி விட்டதில், நீ, நருடி இறும்பூ தெய்து கின்ருய்.
49

Page 30
50 நீ என்ற நீ
அதன்கண் கானலில் விடாயாற்ற அவர்கள் விழைந்து விரைந்தோடுகிற கோலம், அணுப்பிய உனக்கு "ஐஸ்" வைக்கிறது. அவர்களைச் சாறு பிழிந்த நீ, உன் குடுவை இடிநெஞ்சால் அக மகிழ்கிருய்.
உன் முகச் சோணையில் வீம்பு கெம்புகிறது. நீ, உன் ஊறு பார்வையில் நீறு கக்குகிருய். இதால் விரையமாவது அவர்கள் சக்தி மட்டு மன்று; சுரந்த இரத்தவூனமுமாகும்.
இக லோக அபகரியான நீ, அங்கதம் குலுங்கச் சிரிக்கின்ருய்.
லோக சம்பத்துக்கள் நின்னல் வஞ்சித்து உன் குடைக் கீழாக்கப்பட்டதின் கண் உனக்கொரு எக்கா ளம்; அவர்களுக்கோ முழியாட்டம்.
ஆனல், நீ, 'ஏழைகளே பாக்கியவான்கள்; மோக்ஷ ராஜ்ஜியத்துட் பிரவேசிப்பவர்கள்" எனக் கழல்கின்ருய்.
உன் காஞ்சுரங் காய் வாக்கு, தே மா பா வென உமிழ்வதாக, அஷ்ர்கள் ဒု-ဓါr சொற்குத் தட்டேந்து கிருர்கள்.
இத் தட்டளித்த இடைத் தட்டுவாணியான நீ, அவர்களையே வெறுந் தட்டுவாணரிகளாக்கி, அந்தக் கறுமத்தை அவர்கள் தலையில் போட்டதில் புன்னகைக் கின்ருய்.
இதுக்கு, நீ, 'சாணக்கியம்' என்ற பதப் புகைஞ் சான் காட்டித் தொழுகை நடத்துவதிலும், தொழு விப்பதிலும் சம்பூரணனகினய் என்பதும் வாஸ்தவம்.

நீ என்ற நீ 5.
சடாரென்று ஜனநாயகக் கணிப்பீட்டில் கருட னய் இருஞ்சுகிருய்.
உறு கரங்களன்று; வெறுந் தலையாட்டிகளே உன் *மஜோரிட்டி".
நினது சொல், விறல் செத்த கீறல்; வீர கோள மழிந்தது. அது ஒரு கால் கனிந்து புரைந்து மகுடி ஊதுகிறது.
உன் வஞ்சகச் சொற் கனிவின் அப்பல், அவர்கள் ஹிதயங்களில் ஊனித் துறைந்த வேளை, பாக்கியவான்களுக்குப் பாத்திரவான்களாகும் வேக வேணவா சிப்பிலி ஆட்டி அவர்களை உலைக்கிறது.
தரிக்காது ஒடுகிருர்கள். ஆற்றிலும் தண்ணிர் நக்கும் நாய்களாக அவர் 5ள் நக்கிகளானதில், நீ, லாபம் பார்க்கிருய்.
இருப்பினும், "நாங்களே மோகூடி ராஜ்ஜியத் துக்குப் பாத்திரமான பாக்கியவான்கள்’ என்னும் குதூகலம்,அலைந்த நெஞ்சுகளிலுறுகின்றது.
ஆனல், "யாருக்கு அந்தப் பாக்கியம்?' என்பதை நீ மறைக்கிற உசுப்பல் அவர்களுக்குத் தெரியாத வரை நீ காரிய காறன்தான்.
"யாருக்கு அந்தப் பாக்கியம்?" வினவுதலில் நீ போட்ட முடிச்சு வலுவாகச் சிக் குகிறது.
'ஏழைகளுக்கு!" கொடூரமான வஞ்சிப்புக்கடிகோலி இ 3 மா த ப் பகர்கின்ருய்.

Page 31
52 நீ என்ற நீ
வடி நீரூற்றுத் தெளிவின் அகத்தியில் உன் வில்லு விடை கமறி வருகிறது. ஆனல், அது கூடிணத்தில் இருள் நீவிப் பிரிகின்றது.
கூட்டுக் கிளிக் குஞ்சுகளை உன் வல்லூறு இருஞ் சும் விகர்ப்பம் தொனித்து விளாசும்போது அவர்க ளிடம் மிஞ்சுவது ஏகாந்தம்.
பார்க்கிற அவர்கள் கண்களில் ஊனம் கெம்பு கின்றது.
சர்வாங்கமடங்கலும் அசுப்பிரியாப் பூட்டுக்கள்.
வீறு கரங்கள் சர்வாங்க முறுகலில் 'சடக் கிடு கின்றன.
விளைவு?
தோல்வி; அசல் சைபர். உன் ஒரவாங்கிஷம், வெடித்த மத்தாப் பூக் கண மின்னலாய் அவர்களை ஆகர்ஷித்து மயக்கிறதை நீ கணிக்கிருய்.
அவர்கள் ஜீதிகின்ற ஒட்டமே அவர்களை உப் பித்து விடுமெனவுணர்ந்து நீ, நரிடிச்சிரிக்கிருய்.
திரித்த உன் அலகால் வடிவது "ஒரேஞ்பழச்சாரு, காஞ்சுரங் காயா என்பதை நிர்ணயிக்க முடியாத தவிப்பு, சூல் கொண்டு தவிக்கிறது. அதனல் அவர்
ளுக்கு நாய் அலைவு.
தும்பி பிடிக்கும் சிறுவர்களாக ஓட்டம். நீ சொன்ன நற்புத்தி", அவர்கள் தம்ம்ை மறந்த சுரீரிப்புக்குள்ளாக்கிற்று என்ற கணிப்பு உன் கமண் டலத்தில் அச்சாணியாகிறது.

நீ என்ற நீ 53
நீ, சும்மா போட்ட ஒரு சொல், அவர்களை மந்த மாக்கி, அதன் அர்த்தத்துக்கு நிகண்டு தேடி அலைக் கழிக்க ஏதுவாகிறது.
உனக்கு உது சுளு; அவர்களுக்கு ஊன வடிப்பு. நீ சில்லிடச் சிரிக்கிருய். "வெறும் பேயர்கள்" என்ற எக்காளத் திடும்பு உன் நரகல் வாயில் கொப்பளிக்கிறது.
உன்னையாட்கொண்ட உன்னிதான Ф-6йт வாரிப்பை, அவர்கள் தறி கெட விட்ட சங்கடம், உலை மூட்டுகிறது.
அவர்களின் ஊனித்த சர்வாங்கங்களில், வறை கிண்டும் உன் அகப்பைச் சூத்திரம், அவர்கள் ஏங்கு கண்களில் மிளகாய்த் தூள் எற்றினதை, நீ, நீக்க மறவுணர்கின்ரு ய் என்பதும் அவர்களுக்குச் சூன்யம் தான.
இதன்கண் ஏக தீர மமதையில், நீ, கள்ளுண்ட மூச்சாணனகிருய். உனக்கு, ‘மேதை" என்ற திடும் பான ஒரு துரு துடுக்கு. பசி பிடித்த அரிசல் மூளை களுக்கு, உன் குரூரச் சூறணமே புலனுகாத அவல நிலை.
நாய் கெளவிய இறைச்சியாக அவர்கள் உன் வாயில் திணிந்திருக்கிருர்கள் என்ற நினைப்பில், நீ, நின் வாயில் வீணிர் வடிக்கிருய்.
"உப்புப் பாளத்தை ஆற்று நீரில் ஒளித்துக் கொள்' என்னும் தோரணையில், 'நல்லாலோசனை" நீ சொல்லுகின்ருய். அதன் கண் அவிர்கள் சாமரை ஏந்தும் பரிதாபம், அவர்கள் கண்களில் ஊசி ஏற்றும் வாதை எனவுணர்கின்ற நீ, மேலும், "விதியே மணி

Page 32
54 நீ என்ற நீ
தன் வாழ்வு’ எனக் கற்பித்து, அந்தப் புலுமாசை நீயே பரிகசிக்கின்ரு ய்.
நீ, உன் அகட+ விகட+நகிட+ சகட+ பகட+ பாவனையில், அவர்களை அண்டம +ருண்டுபு+ரண்டுஉ +ருண்டுவெ+ருண்டுடச் செய்வதாக உனக்குள் இறு மாறுகின்ருய். ۔
ஆனல், அவர்கள் அட்டதிக் கதிரினும் துட்டர் படை வருகினும் துஞ்சா துண்ணியர்கள்.
‘உழைப்பவன் ஏழ்மையாகி, அவனே மொக்க ஞயுமிருப்பது வாழும் சம்பத்து' என்பது உன் கணிப்பு. ஆனல், இதோ அண்ட கோளமதிரத் திரண்டு திரும்புகின்றர்கள்.
தேடி அலைந்தவர்கள் முனை திரும்பும் வேக வருகை. உன்னைத் "திடுக்கிடுத்துகிறது.
அவர்கள் திமிறுகிறபோது நின் நெஞ்சில் பீதி வெம்புகிறது.
"ஹே, என எதிர்க்க நீங்களா?" சர்க்கஸ் காரின் சிங்கக் கூண்டினில் தரித்து, தன் ள் நெய்யும் மன ஊறு, உன் கடி வினவுதலுள்
கக்கி, உன்னை நீயற்றவனுக்குகின்றது. 'எதிர்க்கவன்று நீயிட்ட விலங்கை நீருக்க" பிரளயத்துக்கு, ஜனக் குரல் உன்னேடு சவாலிடு கிறது.
நீ சிரித்த நின் வாய், "நீ அழிந்து இளிக்கிறது. மலையை இடித்து மண்ணில் தைலம் வடிக்கும் எஃகுக் கணங்களாக அவர்கள் கரங்கள் வீரேறுறு
கின்றன.

நீ என்ற நீ 55
வளைந்த வில் அசுப் பிரிகிறது. நீ, உன் ராஜ மகுடத்தை விழா தழுத்துகின்ருய். லோக வஸ்துவைப் பொதுவாக்கிய ஜனத் திணைக் கெம்பல் ஒடிக்கும் அடிமை விலங்குகள் துகள் பறக் கின்றன :
"நறுக்!" 'ஹோ ** தொம் . இதோ பிரளயம், “‘<鸟, ஹே 9 **ம், நொறுக்கு" வெடித்த பிரளயம் அட்டதிக்கதிருகிறது. 'அந்தோ அழிந்தேன்!" உன்னை நீ சரித்த கோலம். உன் தலைமேல், குருவி, சா எச்சமிடுகிறது. ஆணவமறுந்த நீ, ஈனக் குரலில் கேட்கிருய்: 'ஹே, "சக்தி வான்களே. நீங்கள் யார்?" ' 'utsi, 5Tsä 56TIT?'” "ஆம், நீங்கள்தான்' "நாங்கள் தொழிலாளிகள்!' ''g, 2 "ஆமாம்!" 'ஹே, சர்வோதிகளே, எனை அழிக்காதீர்" நீ அழிந்த நீ, கெண்டைக் கால் மடக்கி அவர் களைத் தெண்டனிடுகிருய்,
'நாம் அழிப்போரல்லர் ஆக்கலர்!" 'ஆஹ் நீங்கள் தெய்வங்கள்" * 'இல்லை; தொழிலாளிகள்!' நீ, உன் கொடி முடிச்சவிழ்த்த பின் மறைகிருய். நீ என்ற உன் அவாவுக்கு, நீ இரை. 女

Page 33
'நீக்குள் நீ 6
நின்னில், நினக்கு, நின்னினது ஆளல் வெறி அகோரிக்கிறது.
நீ, நின்னில், நீயனகி "நீயேகதி யென உலகாந்தி கள் தஞ்சமுறவேணுமென்பதால் நின் ஆசிர்வதிப்புக் கரங்களைப் பரப்புகிருய்
உது ஆசிர்க் கரமென்று அவர்கள் நின்னை ஸ்தோத்திரிக்கிற வேளை, நீ அதிலுள்ள நிஷ்டூர ஊசிகள் கிளம்பாது, பஞ்சு குவித்து, கண்ணுெளி முன் மோக்ஷ விருந்திடுகிருய் என்பதில் உன் ஜாலம் சரி.
நீக்குள் நீயான நீ, ஏகத்வ வே குற்று, அகில மளாவ நின்னில் வாஞ்சிக்கிறதால், நீ, ஒரு கருட நெருடலனகிருய்
உது, நின்னை அறியா நின் கோலம்.
மமதை ஏறிய நின் மண்டைக் குழியில் உது ஓர் தடுக்கேணி. உன் அழிவுக்கு உன்னை அறியாது, நீயே எடுத்த சுருக்குதடமிதென்பதை, நீ புரியாதனி urtuiu இருப்பதால், லகாந்திகளும் அவ்வாறே என, நீ இறுமாந்து திடுமீபுகிருய்.
நீ, உனக்குள், நின்னை நிர்ணயித்து, நீயே நின் னில் உனதாக்க அவாவுற்றதன் கண், நீ ஒரு அகங் காரியாகிருய்.
உலகம் வறுக, உன் நெஞ்சு நெக்கிக் கெந்தகிக் கிறது.
நின் வறுகு இருஞ்சலை மறைக்க, நீ, "கிங்' Bத்துக் குழலோசை இசைத்து ஒலி பரப்புகிருய். நின்னிவ் வொலி, "மரண ஒலத்தின் ஒத்திகைச் சுரி என்பதை 56

நீ"க்குள் நி 57
ஊர்க் குஞ்சுகள் அறியாத வரை, உன் அப்பலுக்கு வலுக் கூடுகிறதாக, நீ, நின்னிற் புளதித்து நினைவூறு கிருய்.
அதை, "வேய்ங்குழலோசை"யென யூகித்து, கறுமங்கள் மேலே அண்ணுர்கிருர்கள். அப்புகிற வாக்கில், நீ, உலகளாவ வட்ட மிடுகிருய்.
அணுப்பும் உனக்கு, இது கண்டு விண் மண் தெரியாத புளுகம் கனிந்து, அது நின் தலைக்கேறு கிறது.
அதே போழ்து, அதுகள் மூளை சுரீரிட, உன் வட்ட ஒட்டத்தில் அழகு பார்த்து, லயிக்கின்றன. அதால் குறுணி கொத்த அவைகள் மறக்க, 'அந்த மறதியே அவர்களைப் பலவீனர்களாக்குகிறது" என்னும் நின் உள்ளுபாயம் உனக்குத் தெரிந்த அளவு, நின்னுள், நீ, "அவர்கள் ஒன்றும் அறியார்கள்" என்று எண்ணி இறுமாறுறுவதும் வாஸ்தவமே,
நீ கமறிக் கெம்பி ஆலவட்ட மிடுகிருயாயினும், நின்னது உந்தக் கமறு கெம்பல், "அவர்கள் ஏகேறுக் கமறலில் பொடி சூரணமாகும்" என, நீ, நின்னில் நினைக்க, அதுவே நின் தொண்டை நரம்பற "ணக்" கிட்டு விக்கலெடுக்கிறது.
விறல் மாண்ட நீ, நின்னை நீக்குள் வீர வேக வானகக் கணிப்பதில், ஈரமற்ற உர நெஞ்சினன கின்ரு ய், - -
உந்த உன் திடும்பு, உன் சதிரம் வீங்க வழியாகும் என்பதுன் கணிப்பு. எனினும், நீவின நின் சடலம், அண்டகோளமதிர்ந்து பொடிப்பொடியாகுமென, நீ,

Page 34
あ& - நீக்குள் நீ
நினைமறந்து எண்ண, அது 'புறுஸ் வெடியாகிறதாக உன் ஹிதயத் தடத்தில் ஒரு இடியேறுகிறது.
நீ, நின் அப்பிற கரத்தில் ஏக வலுவேற்ற 'ஜன நாயகக் குரலிடுகின்ற வேளை, அது குரூரமழிந் தொலிக்க வேணுமென நீ விழைந்து, "மனிதனைப் படைத்தவன் மனிதனை ஆட்டிப்படைக்கிருன். ஆக, அமைதியுறுக’ என்று "போதி’க்கின்ரு ய், இதனல் ஜனசக்திக்’ குழாம் தும்பிபிடிக்க மாயும் குழந்தை களானதைக் கண்டு, உன் எரி சூறணம் வேலை செய் கிறதாக யூகித்து, நீ, நின்னில் ஊனிக்கின்ரு ய்,
நின் ஊனவாய் பூவிதழென அவர்கள் கணித்தே மாறி, அதில் தாம் நுகர வருவார்கள், அப்பி விழுங் கலாமென நீ நினைத்து, நின்னுள் ஏமாறுறுவது நினக்கே தெரியாத கோலம்.
நின் ஏமாற்றம் நின்னல் வரிக்க, நீ நிலையிழந்து நின்னில் விறும தடியணுகி "நறுமுறுக்கின்ருய். ஆயினும், வாசி கருதி, நின் நறுமலுக்கு நீயே புனுகு தடவி விடுகின்ரு ய்,
இடையிடை அதன் கோரநாக்குகள் நினை மறந்து பீறிடும் வேளை, நீ, உன்னலான மட்டும் உள்ளிழுக்க அதனுடன் மாரடிக்கிருய்.
பிணங்கள் தின்ற கழுகின் சுவடாக, நின் வாயில் இரத்த வெடிலடிக்கிறது.
வெறி பிடித்த பசியில் நறுமுகிருய். "ஜனநாயகம்" ஜெபித்த உன் வாயில், ஜனக் குருதி வடிகிறதால், அவர்கள் மிரண்டு பிரளயிக் கிருர்கள்.

நீ"க்குள் நீ M 59
நீ, நின் கோட்டை நொறுங்காதிருக்க, பிரளய மாகும் குழாத்துக்கு, மயக்க மாத்திரையளித்துத் தறிகெட வைக்கப் பக்குவமாகின்றவேளை, அவர்கள், நிர்வாணிகளாகி விட்டதில் நீ நேத்திரம் ஏற்றிப் புள கித்துக் கொள்கிருய்.
"அச்சா இதுவே தருணம்’ என்று திரும்பி உடனே ஒரு 'சுருக்கு தடம்" உலகளாவ எறிகிருய்.
அத்தடத்தில் வேதம் கீதிக்கிறது. வாய் போதிக்கிறது. கிரிகை சுவீகரிக்கிறது. "இதால் உலகளாவிகள் ஏமாறுகிருர்கள்" என்னும் உண்மை, நின் சிகரத்திற் தட்ட, நினக்கு அளப்பிலாக் குதூகலம் பிளிறித் துன்னுகிறதை, நீ, நின் ஆக்கிர நெஞ்சால் அளக்கிருய்.
உனது கெந்தகக் கண்கள் உலகைத் துழாவு கின்றன.
மனிதக் குரல்கள் ஜீவ களை அறுந்து கறுமுகின் றன. அது உனக்கு வாசியாகிறதென நினைப்பதில் நீ கறுவுகிற கறுவல், உலகவறுவலுக்கென்பதை அவர்கள் அறியார்.
மேலும் நின் கண்ணெறிந்து நுணுவுகிருய் உலகளாவு கோடி கோடி ஜனக் குழாம். அங்கே வறுமை, வெகுளிக்கிறது. சாவு, பிரளுகிறது.

Page 35
60 நீ"க்குள் நீ
பசி, நசிக்கிறது.
பிணி, மூடமிடுகிறது.
கொலை, கோரமிடுகிறது.
களவு, களமமைக்கிறது.
ஆண்மை, அழிகிறது.
பெண்மை, விலையாகிறது.
இருள், மண்டுகிறது.
குரல், ஈனிக்கிறது.
நெரிசல்; நெரிசல்; ஜன நெரிசல்.
கண்கள் பேந்த, கால்கள் சூம்பிண, தேஹங்கள் குல்லிட, எலும்புகள் குரு விட, இருளடர்ந்த ஜனக் குகையில் வேகித்து, அவர்கள் நெக்கிக் குரலிடுகி றதை ,உன் அக்கிரக் கண்ணெறிந்து, நீ நோக்கும் வேளை, அக் கண்களில் ஊறுகிற சூறைப் பசி உன் நினை வைத் தடுமாறுற்று, நின்னை, நீ யற்றவனுக்கி, நின் சடலத்தில் குருதிப் பீறல் பீறிட்டு அவாவுறுகிறது.
நீ, நின்னுள் திளைத்துத் திடுமலனகிருய்.
உன் கோலங் கண்டர் அவர்கள் நெஞ்சம், கெந் தகித்துக் கனன்று, நீறு கக்கி, வேகிக்கிறது.
உலகோளம் இடிந்து பொடியுண, தம் எகிறு சடலங்கள் திணறிட, அது கண்டு "உலகாளும் நின் 'தனித்வக் கொடு முடி பறக்குமா? வென, நீ, நின் னுள் ஒரு தராசு பிடிக்கிருய்.
உலகச் சொத்தை வறுகி நினதாக்க, நீ க்குள் நீ மாயும் நின் நெஞ்சுக் குழியில், ரத்த நரம்புகள் கறுவி ஒரு சேர முறுகிக் குபிரிக்கின்றன.

நீ"க்குள் நீ - 6.
"தனியுடமை தகர்த்துப் பொதுவுடமை சமைப் போம்" என உலகு விண்ணிட்டதிர ஒரு ஜனக் குழாத் துக் குரல் கேட்க, நின் செவிச் சவ்வுகள் வெடிக்கின் றன.
உடனே கரம் இறுக்கித் தடுக்கப் பார்க்கிருய். ஜனக் குரல்களோ நின் நெஞ்சில் ஈட்டிகளாய்ப் பாய்ச்சுகின்றன.
**உலகச் சொத்து ஒருவனுக்கில்லை." * ஒருவனுக்கின், உடைத்தெறி, பகிர், அதை'
"உலகச் சொத்து, உலகோர் சொத்து' "ஒருவனுக் கானல், உடை, தகர், எகிறு, ஏறு' "ஒருவனளின், நிறுதுளி செய், அதை' 'வஞ்சித்தவனை வஞ்சித்தறு' 'அடிமை விலங்கை அறு, ஒடி. போரிடு” *"புரட்டு உலகை, புது உலகாக்கு" **வீறுற் றெகிறு, வேகுறு, விறலுறு' 'விடிமை காண, அடிமை விலங்கொடி" "சடலம் முறுக்கு, குருதிக் கொடி எடு' 'பேதம் உடைத்தெழு, ஒருவர்க்கமாகு" "தனிமுடி தகர்த் தெறி, செங்கொடி யேந்து’’ 'உலகமளாவ, ஒரு குரல் இடு எடு' 'உறுபடை குமுறினும், கமறி எஃகுறு" பூமாதேவியின் இவ்வேகத் தொனி, பிரளய உரு வெடுத்து வருவதாக, நீ, நின்னில் நண்ணுகிற வே%ள நின் நெஞ்சு பிணைகிறது.

Page 36
62 நீக்குள் நீ
நின் மண்டைக் கர்வத்துக்கு இவ்வண்ட கோள வாதிகளால், மரணக்குழி தோண்டப் படுவதாக நீ நினைக்க, நின் ஆவலளாவு நெஞ்சு பதறுகிற விறுத் தம், நின் புலனுக்கே புலனு காத நிலையில் 'திக் கிட்டுத் தவிக்கிருய்.
நின் தனிக்கொலு ஈடாடி நொறுங்குவதாக, நீ, நின்னுள் ஐயுறுங் காலை, நின் இருஞ்சு கண்களில் உலகளாவிய ஜீவ கொடி, "ஜெக ஜோதி யென, வான் முகடுறக் கிளம்புவதாக உணர்கிருய்.
சடல நடுக்கம் கமண்டலம் வரை குருக்குத்து கிறது.
உலகந் தழுவ ஒன்றன “சக்தி", நின் ஊனக் கண்ணில் பட்டதும் நீ ஒட எத்தனிக்கிறதே, நீ, நின்னைத் தனி இச்சைப்படுத்தியதன் கோலம் என்பதை, இன்னும் உணராதவனுயிருக்கிறதால், எதையோ இழப்பதாக, நீ, நின்னுள் வெதும்புகிருய்.
நின் ஆவல் உனக்கே சத்துரு. அதுவே உனக்குக் குழி. நின் தணியாங்வா, நின்னை நீறணுக்கி, நின்னையே தனியணுக்கி. நின்னை "நீ யற்றவனுக்கி, நீ, நீ"க்குள் நீயானதாகவே, நின் நிகண்டில், நீ கட்டியம் கூறி யிருக்கிறதைப் பிசகென இறுதியில் கூற வாய் வரினும் நின் ஆசை, நின்வாயை நீக்குள் அடக்கி, நின் சுதந் தரத்துக்குள், நின்னை நீயே மண்ணிட்ட விந் தையை, நீ, நீவிப் பார்க்கிருய்.
ஆயினும், நின் வஞ்சிப்பு நின்னையே வஞ்சிக்க வருகிறது.

நீ"க்குள் நீ 63
நீ எறிந்த நின் ஈட்டி, நின் நெஞ்சிலேற வரு கிறது.
அதோ அந்தப் பூகம்பத்தொனி நின் செகிடற விறலுற்று இடித்து, ஒரு யுகப் பிரளயத்'துக்கு அடி கோலி ஓங்காரித்துக் கெம்புகிறது.
**உலகளாவிய சக்தி’க்கு, தனி மனிதனிறுக்கின சங்கிலியை நொறுக்குவோம்"
இம்முழக்கம் கேட்டதும், நின் முழி நின்னில் இல்லை; அது பிதுங்க, நின் வாய் சனியனுட்டம் அலறுகிறது:
**இந்த அண்ட கோளமதிர இப்படி இடிக்கிறது UrTsi?'
உன் வினவல், விடை கேட்கவன்று; விறேருன *சக்தி'யை மழுங்கடிக்கவென நீ எறிந்த பாஷாணம் என்பதை, அவர்கள் அறிவார்கள்.
"பதில் சொல்லோம்" "ஆ, நீங்களா !?' "
நின் வினவலில் சாகஸ் விஷம்.
பீரங்கி வில்லில், நீ, நின் கரங்களை அழுத்தி, வீழு வேச நெஞ்சுகட்குக் குறி வைத்த அந்தச் கூடிணமே, "டபார்’ என்று நின்னையே துகளாக்கிற எரிமலை வெடிக்கிறது.
நீ, திணறுகிருய்
'ஹே சக்தி, எகிறி எழு!"
'ஆ அந்தகோ?"

Page 37
64 நீக்குள் நீ
நீக்குள் நீ’யான நீ, நின் இறுதிக் குரலிட்டுச் சரியும் வேளை, நின் எதிரில் அதே "சக்தி'யைப் பார்க்கின்ரு ய்,
இறுகக் கட்டிய நின் கொடுவிலங்குகள் "நறுக்" கிட்டு ஒடிகின்றன.
'ஆ இதென்ன சக்தி?" நின் வாய்க்குள், நினை அறுத்தே எழுகிறது வாககு.
'மனித சக்தி!" 'நானும் மனிதன்தானே?" 'அல்ல; நீ, நீ"க்குள் நீ யான வெறும் நீறு." 'நீங்கள் . . 17 "நாங்கள் தொழிலாளிகள்!' 'ஆ ! ? "நீ"க்குள் நீ யான நீ, நீயாகவே அழிந்தாய். சக்தி எழுகிறது. நீ. .? 女

நீ நீருண நீ 7
நீ, உன்னை உன்னக்கி, உன்னினை உன்னுள் வாக்தி, உன்னில் நீறு கக்கி, உன்னினுள்ளே வேகித்து எகிறி உருக்கேற்றினும், உன்னில் நீயே உருகி உமிழ் கின்ரு ய்,
பூமாதின் கண்ணில் மா கருணையானவனுய்த் தோன்றவென நீ கையாண்ட குயுக்தி, நின் வழக்க அடக்கத் திடும்பலால், நின்னுள் நின்னை நீ ஏமாற்றி எற்றி வெளிக்காட்டுகிறதை, நீ அறியாக் கோலம், நின் முக வாளிப்பில் நெளிந்து உருகி நைகிறது.
அண்ட கோளத்தையாளக் கெந்தகித்துக் கெந்து மகுடி ஊதி நீ நெடு முடி அணியக் கொடி எடுக்கின்ற விறுத்தத்தில் வண்டனங்காளர் ஏமாறு கிறது, நெகிழ்ந்தவோர் பச்சாத்தாபத்திற்குரியதாயினும், நீ, அதையே உன் விண் நண்ணலுக்குத் தூண்டிற் புழுவாக்கிருயெனினும், நின் நீறுற்ற எரி நெஞ்சு, குரீரித்து, வேகி, வெம்பி, உறுமுவதையே நான் காண்கின்றேன்.
அவ்வேளை நீ என் நெற்றித் திலகத்தில் ஒலி யொளி கூட்டுகிறதாகச் செய்யும் சாகஸம், நீ தீய் கிற கோலத்தில் நீ நன்னி நுணுவ, நின்னை நீ, எஃகு ஆக்க வேண்டிற்று.
நீ, நின் எஃகு சடலம் உலுப்பி வலு வேக வீறுற்று, சிலுப்பி விறல்த் திணை கொண்டு துவழகி னும், நீ, நின்னை நின்னுள் சிங்கேறென நினைத்துவ மித்து, நரி இதய ஜாலக்கார நர மாமிச வெறிப்பித் தனய் விளங்குவதை, அக்ஷரம் பிசகாது நுண்ணிக்
65

Page 38
66 நீநீருண நீ
கணிக்கின்றதில், நான் நிபுணன் என்பதை நீ அறி யாயென நான் அறிவேன்.
நின் ஆக்ரோஷப் பாஷாண விஷ விகார நெஞ்சை, பஞ்சினிழையாக்கிக் காண்பிக்க நீ, "சமா தானம் - ஜனநாயகம்" எனக் கோஷித்து மூச்சினிலிடு கின்ற மேரையை, நின் ஜக நீறு ஜலக் குண்டில், * சங்காரித்துக் கொல் - பணவாதிக்கக் கொடி ஏர்" என்னும் நர ரத்த வெடிலடிப்பது நீக்கமறத் தெரி கிறது.
நீ நின் ஜெக ஜால மாயா வித்தைகளில் விஸ் வசித்து, எக்காளமிட்டுச் சிரிக்கின்ரு ய். அது பூக்கள் சொரிவதாயொக்குமென நீ நின்னுள் நினைத்து, "ஆ, ஆ" என அண்ட கோளமதிரக் கனைக்கின்ருய் நின் எரி சிரிப்புச் சீறுவாணமாகிக் கிளம்ப, அதுவே நர ரத்த வடுக்கள் நிறைந்திருக்கிறதை நீமறைக் கினும், நான் காண்கின்றேன்.
நின் ‘சமாதான வாக்கிலே’ நர பலி ரத்த வெறி நிறைந்தாழ்ந்திருக்கும் கோரக் கோலமே அதன் *நல்வாக்கை "ப் புடினுக்க போதுமானது.
"ஜனநாயகம் செதீத நீ, "ஜனநாயகம்" என் னும் ஆசு வாக்கையே மாசு படுத்தி, "ஜனநாயர்களை" ஒர் தனியாதிக்க வாத ஏகாதிபத்தியத்திற்கு அடிமை களாக்க, நீ, நின்னுள் எடுத்த அடிமைச் சங்கி என் ஏறு கண்ணில் நீருகிறது.
நீ, நின் நிலை குலைந்து நடுங்குகிருய். "சமாதானம்" ஜெபித்த நீ, நின்னில் ஜலவாயு எரி அணுக்குண்டால் ஜெகத்தை அழிக்க நினைத்து, நின்னுள் குமுறுகின்ரு ய்,

நீ நீருண நீ 67
உன்னுல் சிமிக்கினுமல் உசிப்பிவிட்ட அது, அண்டமதிர உறுமுகிறது.
நெரிடி முறுகின்ற நின் சடலம் எக்காளத் திடும் போடு திமிறுகிறவேளை, திமிறலின் இறுக்கக் குறு கலிலே ரத்த வெடிலடிக்கிறதை நுகர்கின்றேன்.
நீ, நின் இமை நீவிக் கண்ணுறுத்தி முடுகி நோக்கு கின்ருய்.
நினது ஏக பட்டாளம் நின் கூலியமர்த்தலால் நோஞ்சலாகித் தனது ஜீவனுக்கு உறுதுணையற்று, நீ இடும் பிச்சைப் படிக்காக வீர கோஷ வேஷமிடு கின்றதை , நீ, நின் நீறு நெஞ்சால் உணருகின்ற போது, நின்னுள் நீ திடுமுகின்ருயெனில், 'ஜெக வெற்றி நமதே என வானளாவ நீ வாயாட்டுங் கோலத்தில் ஈயாடாநிலை நிதர்ஷிக்கிறதை , நீ, நீக்கமற உணர்கிருய்.
பணப் பெருக்கின் ஏக நோக்கில் பிணந் தின்ன வீணிரூற்றும் நின் அவா, உலகளாவிக் கொள்ள நீவு கிறதை உலகோர் உணரின், பேரிடி நின் கொடி முடியிலாகும் என நீ நின்னுள் கணிப்பதால், தனிவு டமை ஆதிக்க நரவெறிக்குத் தங்க முலாம் பூசி "ஜனநாயகம்" என்னும் பணநாயகத்திற் கதிபதியா யோரின் கைப் பொம்மையாகிப் பம்பரமாடுகின்ற கோலத்தை, விடுமை காண அடிமை விலங்கொ டிக்க எகிறி எழும் பூமாதின் வீராவேச விறற் சக்தி கள். தீக்ஷண்யமாய்க் கெந்தகித்துக் கெம்புகின்றன.
நீ பதறுகிருய், நின் கொலுக் கழன்ற முகரக் கட்டை, சிலும்பல் அடித்து, நின் மூளையைச் சிப்பிலியாட்டுகின்றது.

Page 39
68 நீ நீருண நீ
நீ சபிக்கப்பட்ட பசாசுபோல், 'கோ'வென்று யுத்தக் குரலிடுகின்ரு ய்,
நின் நினைவுக் கோட்டை தவிடுபொடியாகுமென நீ உணர்வதால், நின் சித்தங் கலங்கிய பித்தவெறி, கெடுபிடி யுத்த கோஷமிட்டுக் கொண்டே, "ஜன நாயகத்தைக் காக்கப் போர்" என்னும் பழைய உக்கல் °றைக்கோட்" தகட்டைப் போடுகின்ருய்.
நின் கூலிச் சைனியங்கள் கிலி கொண்டு கொலு விட்டு அலறுகின்றன.
நீ, நின்னில் நெக்குருகி நெகிழ்வதை, நின் நீறு கண்ணுல் நின்னுள் நுணுவுகிருய்.
அங்கே
ரத்த பாசவுணர்வான வீறேறு சக்திவான்கள் சிங்கேறெனச் செங்கேறு கொடி ஏந்தி, ஆரவாரித்து ஆர்த்தெழுந்து, நின் உறு பிடியாம் அடிமைச் சங்கிலியை நிறுதுளியாக்க உறுமி வெகிறித் துடிப்பது தெற்றெனத் தெரிகிறது.
நின் கடைக்க்டல் ல்க்கு விட்டுக் கரியாக உப்பு கிறது.
க்ஷண மெளனம்.
எனினும், நின்னுள் அஃது எரிகோளமென எழு தெகிறும் கடலுறுமியாக, உக்கிர அலை அடித்து, நின் நெஞ்சுப் பூணுரத்தை நொறுக்குகிறது.
மறுகணம் அங்கதம் சிலிர்க்க, நின் நேத்திர விழியுருட்டி மல்லாந்து நோக்குகின்ரு ய்,

நீ நீருண நீ 69
அவ்வேளை பீதி அதீதித்து ஊனிக்கும் நின் சடல ஊனம், நின்னுள் உருகி நைகிறதை , நின் ஈறு நெஞ்சு "திடுக்"கிட்டு உணர்கிறது. м
பூமாதோர் மீது நீ தொடுத்த தட்டுவாணித்தன அபகடப் போர், நாய்த் தொண்டை முள்ளாயிற் றென நீ நின்னுள் கணித்தும், நீ, நின்னுள் நின் வீழுய்ப்புத் திடும்பலை அடக்கிறதாயில்லை.
நின் கசடான விகடக் கபட நெஞ்சு, நின்னுள் நெக்கி அகோரித்து. வெக்காள வெகுளிப்பினில், நின்னை நீறு பூத்த நெருப்பணுக்கிய கெந்தகக் கோலம், நின் விறலிழந்த ஈறு சடலத்தில் கட்டியம் கூறி நிற் கிறது.
நின் அகங்கார விகார நெஞ்சு "படபட"க்கிறது. நின் இதய நாள இழைக் கொடிகள் முறுகிப் பர தவிக்கின்றன.
நீ பதகளிக்கின்ரு ய், நின் முழியாட்டம், நினது குமிழ்க் கூழ்க் கண் ணில் தரிக்க, ஜல வாயு அழிகுண்டு பிரசன்னிக்கிறது. நின் புரி மீறற்கரம், அழி குண்டில் தாவுகிறது. ‘பூமாதோரை நீருக்கி அடிபணிய வைக்கும் மாதொரு விறற் சக்தியிது என, நீ, நின்னுள் நிர் ணயிக்கிற வேளை, நின் நர வெறி நெடில் வாயால் அவா வீணர் வடிகிறது.
பூகோள மண்டலமழிக்க நின் ஏவாயுத எரி குண்டு காட்டி மிரட்ட நினைக்கிற வேளை, பூகோள மண்டல மதிர பூமாதோர் தொடுத்த சமர், பரிணமித்து, எஃகுவாக விறேறுற்று விறலுறுகிறது.
அதோ.

Page 40
70 நீ நீருண நீ
சமுத்திர உறுமல், அடி அலையாக எகிற வேகித்து, மூசிச் சீறி, புது யுகசக்தி” எழுகிறது.
நின் வெடுக்கு வாயில், நரபலி ரத்தம் மூச்சா ணித்த நாறல், இடுக்கி அடிக்கிறது.
நீ வேகித்து வெகுளிக்கிருய்.
நின் வெகுளித்த முகம், வெதும்பல் மாங்காயா கப் பொம்மித்திருக்கிறது. அதை உணரா , பம் மாத்துக் காட்டுகின்ருய்.
நீ, நின்னுள் கெக்கலி கட்டி நகைத்தபடி யுக சக்திவான்களை அடக்க, திடும்புற்று விசும்பு காட்டி, ஈற்றில் ஏவு கணைகளில் தாவுகின்ருய்.
உந்தப் புலு மாசு அண்டகோளம் திரண்டெழும் பூமாதேவர்களுக்கு வெறுந் தூசானதை, நீ தெரியா நின் கோலம், நின்னைச் சிப்பிலி ஆட்டினும், என் நேத்திரங்களுக்கு நின் நீறன இதயம் வாருய்த் தெரிகிறது.
அச்சா, ஆஹாஹோ அதோ urTri.
i.
அடைப் புடைத்த வெள்ளமென, எரிசரக் கோள மாக அகோரித்து விறலிேறுவாதிகள், கடலேறென பூமியதிரப் புடை- சூழந்து, படை திரண்டு, விடுத இலக் கோஷமிடுகிருர்கள்:
'எறி ஏவுகணையையும் எகிறி எதிர்ப்போம்"
கோடை இடியாக நின் நெஞ்சில் ஊடுருவும் அக் கோஷம், நின்னைப் பிய்க்கிறது.
நாய் உள்ளெடுத்த தொண்டை முள்ளாக, நின் உடல், அங்கிங்கிலாமல் 'திக் கிட்டு அலங்கோலிக்கி

நீ நீருண நீ 7
றது.எக்காளமிட்ட நீ, வெக்காள வீரம் பேசுகிற விறுத் தத்தில் இறங்கிவிட்டாய்.
எனினும், தனியாதிக்க வெறிபிடித்து உலகாள எழுந்த நின் வேணவா, நின்னுள் பிணைந்து சினைக் கிறது.
* யுத்தம்!" *ரணகளம்!" *நரபலி!” V நின் மனம் இம் மூன்று மந்திரங்களை ஜெபிக்க, நினது மூளை அழுகிக் கூழாகிறது.
வேங்கையென நீ நின்னுள் உவமித்து, நினக்குள் விருய்த்து விசும்புகிருய்.
நின் வக்கணை வாய் "ஜனநாயகம்" செப்ப, நீ நின் கொடி ஏற்ற, நரி நெஞ்சால் நினைக்கிற வேளை, நினது நெக்கு கரங்கள் நெடிதுயர்ந்து எழுகின்றன. ‘வெற்றி நமதே என எக்காளமிட்டுத் திடும் பும் நின் சடலம் இறுமாறுகிறபோது, நீ, நின்னை மறந்த கோலத்தில் நிற்க, நின் காதுச் சவ்வுகள் வெடியுண அண்டகோளமதிரும் ஒலி வெடிக்கிறது:
**ஏஹே தோழா, எஃகுவாகு' 'ஆஹா, ஈதோ" "வேகேறுற்று, எகிறி வீறுறு' "ஆஹா, ஈதோ' **செங்கொடி ஏந்தி, ஜெகத்தினுக்காக்கு’’ 'ஆஹா, ஈ தோ" "அண்டமதிர, ஆகாவென்றேறெழு"

Page 41
72 நீ நீருண நீ
'ஆஹா, ஈதோ **வெருளாதடர்ந்து, வேகுற்றெகுறு"
'ஆஹா, ஈதோ" 'பொருது பெரும் போர், பொடி சூறணமாக்கு 'ஆஹா, ஈதோ"
"டொம்!"
* Go) Ll-Irpinji!”
"டொக்!" நீ, நின் கரிக்குடல் கரைய ஒடுகிருய். நின் கோட்டைகள் நொறுங்கிப், பொடிப்
பொடியாகித், தூளாய்ப் பறக்கின்றன. நின் பண நாயகம், மரணிக்கிறது. முகங் கொடுக்க முடியாத தத்தளிப்பில், நீ, நெகிழ்ந்து அழிகிருய்.
உன் அழி கண்ணில், செங்கொடி எழுந்து, கம் பீரித்துத் தெரிகிறது.
அடுத்த சுஷண்மே நின் தனித்வக் கொடுமுடி 'சடக்"கென்று விழுந்தது.
நீ நீருண நீ, நின் ஈனக் குரலில் ஈற்றில் வினவு கின்ரு ய் :
'ஆஹே , இம் மேரு "சக்தி'யான நீங்கள் யார்?' "நாங்கள் தான் தொழிலாளிகள்!" YA


Page 42


Page 43
எணர்வூற்று உருவி, ரித்திரம்-அகஸ்தியர் தமக்ெ உருவாக்கியதோர் இலக் வடிவம், உடைமையாளருக் உழைப்பாளருக்குமுள்ள "பே தையும், அதுபற்றிய "போ, தையும் ஆதாரமாகக் கெ டது. அவருடைய 2 வினர் றும் அவற்றின் அடிய பிறந்த உருவகமும், Pă i காட்சியாகிய சித்திரமும் வே ற் கப்பட வேண்டிய இவற்றின் பாத்திரங்கள் " முழுவதும் அவன், அவள் = கும் என்பர் சமயவாதிகள் தேவைக்கு உலகம் முழுவது அடங்கி ஒடுங்கி விடுகின்ற, மொழியாட்சியும் அசாதா கையாளப்பட்ட மொழி 1
ܩܐܷ
வாசகர்களே த் திை தக்க ைேவ திறம்பட நிறைவேற்றுவத. உதவுமாயின் அவை இர இதனை அகஸ்தியர் நன்கு க3ள ஒருங்கே திரட்டி வா

கச்
* :T
கிய கும் த'த் த'த்
ஆற் ாகப்
3 கிக்
வர
|-ի ելք ,
நீ'யும் "நானு'மே. உலகம் அது என்னும் மூன்றுள் அடங்
அகஸ்தியரின் இலக்கியத் ம் நீ-நான் என்ற அளவிலே து. அகள் தியரின் வசனமும் ரணமானவை. இந்நூலிலே நடையும், உத்திகளும் பல |த்தல் கூடும். நோக்கத்தைத் ற்குக் கடுமையான சொற்கள் வேற்கப்பட வேண்டியவை. உணர்ந்து தமது படைப்புக் சகர்களுக்குத் தந்திருக்கிருர் .
-இ முருகையன்