கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்

Page 1


Page 2


Page 3

நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
6)é5íTg5U U(Té°rf°uUff:
இ
ሀ0NMቧበዐ)õዞዚዘጻ∂ለቦU
2011/1, ரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி: 320721 E-Mail: panthalasltnet.lk

Page 4
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
முதற் பதிப்பு ஜுலை - 2002 உரிமை பதிவு,
6606): 150/=
கணினி அச்சமைப்பு எஸ். சித்திராங்கனி அட்டை வடிவமைப்பு: எஸ். திவாகரன்
ISBN: 955-8250-20-1
அச்சிட்டோர்: யு. கே. பிரிண்டர்ஸ், 98 A விவேகானந்த மேடு, கொழும்பு ~ 13. 65.7606. (Jd: 34.4046, 074-6 I4153

பதிப்புரை
ஆரம்ப காலங்களில் வீதி வீதியாகச் சென்று மல்லிகை ஆசிரியர் மல்லிகை இதழ்களை விற்று வந்த தெரு வோரக் காட்சி. அன்று அவரால் பிரபலமாக அறிமுகப் படுத்தப் பட்ட
ஹொட் டன் ஹோல் “ சைக் கிளும் இதுவேதான்.
தொ ண னு று க ள ல’ மல்லிகையின் இருபத்தைந்தாவது ஆணி டுச் சிறப்பு மலர் வெளிவந்து, பலராலும் விதந்து பாராட்டப் பெற்றது.
இந்த ஆணர் டு மலரின் வெளியீட்டு விழா யாழ்ப் பாணத்தில் நாவலர் மண்டபத்தில் வெகு கோலாகலமாக நடந்தேறி முடிந்தது.
இலங்கையின் பல வேறு பிரதேசங்களில் இருந்தெல்லாம் படைப் பாளிகள் , தரமான சுலைஞர்கள் இவ விழாவில கலந்து சிறப்பித்தனர்.
இலக்கிய உலகில் அன்று விதந்து பேசப்பட்ட சம்பவங்களில் இதுவுமொன்றாக விளங்கியது.
இலக் கரியச் சிற் றேடான மல் லரிகை தனது
இருபத தைந்தாவது ஆணி டு மலரை வெளியிட்டு விழா

Page 5
நடத்தியதைப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
சிற்றிலக்கிய ஏட்டின் சிறப்பு இதுவெனப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இதன் காரணமாக ஒரு புதிய உற்சாகமான சூழ்நிலை வட பிரதேசத்து எழுத்தாளர்கள் மத்தியில் நிலவி வந்தது. அந்த மனோபாவத்தைத் தன்னம்பிக்கை மனோபாவம் என்று கூட வர்ணிக்கலாம்.
அந்தச் சிறப்பு மலரில், வரதர் அவர்கள். தான் ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்த, மறுமலர்ச்சி சஞ்சிகை பற்றி ஒரு கட்டுரை வரைந்திருந்தார்.
அதே மலரில் கலைச் செல்வி மாசிகை பற்றிச் சிற்பி சரவணபவன் அவர்களும் ஆய்வுக் கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தார்.
இந்த இரு கட்டுரைகளையும் சேர்த்துப் படித்த போது அந்தச் காலத்திலேயே என் நெஞ்சில் ஒரு சிறு பொறி தட்டியது. மெல்ல மெல்ல அக் கினிக் குஞ்சாக என் நெஞ் சில் அது கனன்று கொண்டேயிருந்தது.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தெல்லாம் பல வகைப் பட்ட சிற்றிதழ்கள் வகை தொகையாகத் தோன்றித் தோன்றி, மறைந்து, மறைந்து வந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய ஆர்வமும், உழைப்பும், அர்ப்பணிப்பு நோக்கமும் கொண்ட நம்மவர்களால் இந்த மண்ணில் அழகாக வேர் பதித்துச் சென்ற ஒரு சில சஞ்சிகைகள் சிற்றேடுகள் பற்றி ஆய்வு ரீதியாகத் தகவல்கள் திரட்டப் பட்டு அவை சம்பந்தமான நூல்கள் இதுவரை வெளிவரவில்லையே என்ற ஏக்கம் எனக்கு ஏற்கனவே உண்டு.
இது ஒரு பாரிய வேலை என்பதும் எனக்குத் தெரியும். வெறும் வார்த்தைகளால் இதைச் சாதித்துவிட முடியாது என்பதும் எனக்கு விளங்கும்.
இநத மண்ணின் கற்பனையையும் மொழியையும் செழுமைப் படுத்திச் சென்ற நூற்றாண்டில், பலரின் அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிக் கொணரப் பட்ட சிற்றேடுகள் ஒரு சிலவற்றைப் பற்றியாவது வெகு நிதானமாக, பொறுப்புணர்ச்சியுடன், எந்த விதமான சார்பு நிலையும் எடுக்காமல், நடுவு நின்று, ஆய்வு செய்து ஒரு நூலை நமது மண்ணைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எழுதி வெளியிட்டால் என்ன எனப் பல தடவை யோசித்துப் பார்த்துமிருக்கிறேன்.

வருங்கால இலக்கியத் தலை முறையினருக்கு இது ஒரு ஆவணமாகப் பயன்படும் எனவும் கருதியிருக்கிறேன்.
நேர்ப் பேச்சில் பலர் இதில் அக்கறை காட்டி வந்துள்ளனர். பலர் இதைப் பற்றிச் சிந்திக்கின்றனர் என்பதையும் அவர்களுடன் உரையாடிப் பார்த்த போது உணர்ந்தேன்.
ஆனால், இந்தப் பாரிய வேலையைப் பொறுப்பெடுத்துச் செய்யப் பலரும் தயங்கித் தியங்கினர். இவர்களில் இரண்டு படைப்பாளிகள் மீது எனக்கு நம்பிக்கை பிறந்தது. ஒருவர் மலையகத்தைச் சேர்ந்தவர். மற்றவர் வடபுலத்தில் பிறந்தவர். இருவரும் படைப்பாளிகள். நாடுதழுவிய அங்கீகாரம் பெற்றுக் கொண்டவர்கள். ஒருவர் பெயர் தெளிவத்தை ஜோசப், மற்றவர் பெயர் செங்கை ஆழியான்.
இந்த இருவருடைய ஒத்துழைப்பும் எனக்கல்ல, மல்லிகைக்குக் கிடைத்தது.
பொருளாதார, மற்றும் ஆய்வு வசதிகள் நிரம்பப் பெற்ற நிறுவனங்கள் தான் இந்த வேலைகளைச் செய்து முடிக்க முடியும்.
தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சிற்றேட்டினால் மாத்திரம் இந்த வேலையை ஒப்பேற்றி விட முடியாது.
இதை முழு மனசாக ஒப்புக் கொள்ளும் என்னால் நாளைய பூரண ஆய்வு நூலுக்காகக் காத்திருக்க முடியவில்லை.
ஏதோ என் வரைக்கும் கிடைத்த தகவல் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலை வெளிக் கொணர ஆவன செய்துள்ளேன்.
எனக்கு நன்றாகவே தெரியும் - இது ஒரு பூரண ஆய்வு நூலல்ல. ஒரு சில சஞ்சிகைகளைப் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட நூலே இதுவாகும்.
இந்த நாட்டின் நல லிலக் கரிய வளர்ச்சிப் போக்கை நேசிப்பவர்களுக்குப் பெரிய பொறுப்பொன்றுண்டு. சும்மா படித்துப் படித்துச் சுவைப்பதை விடுத்து. சும்மா வாய்வலிக்கப் பேசிக் களிப்பதை விடுத்து. இந்த நாட்டின் கிழக்குப் பிரதேசத்து மண்ணில், வன்னிப் பிரதேசத்தில், மலையகத்தில், தென்னிலங்கையில், குடாநாட்டுப் பகுதிகளில் இதுவரை தோன்றி ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்த இலக்கியச் சிற்றேடுகள் பற்றி வருங்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளத் தக்கதான தகவல்களை ஆவணப் படுத்தி எழுத்துருவில் எழுதி வெளியிட்டு வைக்க வேண்டும் என்பதே அந்தப் பொறுப்பாகும்.
இந்த நூலில் அப்படிப் பாரிய அடித்தள வேலையைச்
iii

Page 6
செய்துள்ளேன் என நான் உரிமை கொண்டாடவில்லை.
மல்லிகை மலர்களில் இதுவரை வந்துள்ள இது சம்பந்தமான ஒரு சில கட்டுரைகளையும் மற்றும் என் கைவசம் வைத்திருந்த சில கட்டுரைகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு நூலாக வெளிக் கொணர்ந்திருக்கிறேன்.
எதிர்காலத்தில் சிற்றிலக்கிய ஏடுகள் சம்பந்தமாக ஆய்வு செய்ய முன்வருபவர்களுக்கு இது பெரிதும் உதவக் கூடும் என நியாயமாக நம்புகின்றேன்.
இதில் அடங்கியுள்ள பல கட்டுரைகள் எதிர்கால உயர் கல்வி மாணவர்களுக்குப் பெரிதும் பயன் படும். மற்றும் இலக்கியத் துறையில் வளர்ந்து வரக்கூடிய இளந் தலைமுறையினருக்கு இது வரையும் நாம் ஓடி வந்த பாதையின் அடிச் சுவடுகளை அடையாளம் காட்டக் கூடியதாகவும் அமையக் கூடும்.
இந்தத் தேசத்தில், இதுவரை தமிழில் வெளிவந்த, மறைந்துபோன அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் சகல சஞ்சிகைகளைப் பற்றிய ஆய்வு நூலல்ல இது. ஆய்வு நூல்கள் அப்படிச் செய்யப் பட வேண்டும் என ஆசைப்படுபவர்களின் ஆவலைத் தூண்ட வைக்கும்
சிறு நூலே இதுவாகும்.
மறுமலர்ச்சி பற்றியும் கலைச் செல்வி பற்றியும் தங்களது" அநுபவங்களை வெள்ளி விழா மலரில் எழுதிய வாதர், சிற்பி ஆகியோருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். கிழக்கிலங்கைச் சிற்றேடு பற்றி எழுதியுள்ள திரு செ.யோகராசா அவர்களுக்கும் ஈழகேசரி பற்றி மல்லிகை மலரில் எழுதிய செங்கை ஆழியான் அவர்களுக்கும், பல நீண்ட கட்டுரைகளை எழுதி உதவிய சகோதர எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இதன் அட்டையை வடிவமைத்துத் தந்த திரு எஸ்.திவாகரன் அவர்களுக்கும் படிகளை ஒப்பு நோக்க உதவிய திரு மா. பாலசிங்கம் போன்றவர்களுக்கும் எனது நன்றிகள் உரியவை.
டொமினிக் ஜீவா 2002 -- 05 سنس- 22
IV

மறுமலர்ச்சியும் நானும்
வரதர்
னிதப் பிறவி எடுத்தவர்கள் எல்லோரும் எந்நேரமும் எதையாவது, சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிகழ் காலத்தைப் பற்றிய சிந்தனை நிச்சயமாக எல்லோருக்கும் இருக்கும்.
சிலர், நிகழ்காலத்தோடு கடந்த காலத்தைப் பற்றியும் இரை மீட்டுக்
கொடிருப்பார்கள். மற்றும் சிலரோ நிகழ் காலத்தோடு, வருங்காலத்தைப் பற்றிக் கனவுகள் கண்டு கொண்டிருப்பார்கள்.
நான் இரண்டாவது விதம். எனக்கு வருங்காலத்தைப் பற்றிய சிந்தனைகளே உண்டு. கடந்த காலத்தைப் பற்றி நான் திரும்பிப் பார்ப்பதில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அது சரியான ‘இறந்த காலம். என்னுடைய இந்த இறந்த காலத்துக்கு உயிர் கொடுத்து, 'மறுமலர்ச்சிக் காலம் பற்றி எழுதுமாறு நண்பர் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) கேட்டிருக்கிறார். உயிர் கொடுப்பது என்னைப் பொறுத்த மட்டில் வில்லங்கமான விஷயம். ஆனால், அதைவிட வில்லங்கம் ஜீவாவுக்குக் கட்டுரை கொடுக்காமல் தப்புவது. எனவே, இறந்த காலத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் பல உதவிகளோடு இறங்கியிருக்கின்றேன்.

Page 7
நான் ஒல் பிறவி எழுத்துப் பைத்தியம், பிறவி என்ற சொல்லை, ‘என்னுடைய நினைவு தெரிந்த நாளிலிருந்து' என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
ஈழகேசரி இளைஞர் சங்க வெளியீடான ‘கல்வி அனுபந்தம்’ சஞ்சிகையில் என்னுடைய முதல் எழுத்து வெளியாயிற்று. அப்போது எனக்குப் பதினைந்து வயதிருக்கலாம். அதற்கு முன்பே நான் சில கையெழுத்துப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறேன். எங்கள் பொன்னாலைக் கிராமத்தில் 'சமூகத் தொண்டுச் சங்கம்' என்ற கை எழுத்துப் பத்திரிகைக்கு நான் தான் பத்திராதிபர். நான் படித்த மூளாய் சைவப் பிரகாச வித்தியாசாலையின் மாணவர் தேர்ச்சிச் சங்கக் கையெழுத்துப் பத்திரிகைக்கும் நானே பத்திராதிபர்.
‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் 1943 ஜூன் மாதத்தில் இளம் எழுத்தாளர்களால் ஆரம்பிக்கப் பட்டபோது 'மறுமலர்ச்சி' என்ற பெயரில் ஒரு சஞ்சிகை வெளியிடுவதென்று தீர்மானமாயிற்று. ஆரம்பத்தில் மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகையாக அமைந்தது. அதற்கும் நான் தான் ஆசிரியர். சிறு வயதிலிருந்தே, எழுதுவதைப் போல, ‘ஓவியம் வரைவதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நான் பத்திராதிபராக இருந்த கையெழுத்துப் பத்திரிகைகளில் என்னுடைய ஒவியத் திறமையையும் காட்டியதாக நினைவு.
'மறுமலர்ச்சியைப் பற்றி எழுதாமல் என்னைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பதாக வாசகர்கள் நினைக்கக் கூடும். நான் இல்லாமல் மறுமலர்ச்சி இல்லை என்பதை இவ்வாறு சற்றுத் தலைக் கனத்துடன் சொல்லிக் கொள்கிறேன். அதனால் தான் மறுமலர்ச்சியைப் பற்றி எழுதும் போது ‘நான் அவசியமாகிறது.
ஈழகேசரிப் பத்திரிகைக் குழு இளைஞர் சங்கம்’ என்ற gy(5. அமைப்பை நடத்தியது. அதில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் ‘கல்வி அனுபந்தம்' சஞ்சிகைக்கு விஷய தனம் செய்யலாம். இந்தச் சங்கம் ஒரு முறை யாழ் - வைதீஸ்வரா வித்தியாலயத்தில் ஒரு பேச்சுப் போட்டி நடத்தியதும், அதில் நானும் பங்குபற்றிப் பேசியதும் நினைவு வருகிறது. (நான் இப்போதுதான் 'மெளனி அப்போது பெரிய பேச்சாளன்!) ፩
இந்த ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் என்னைத் தவிர, கனக செந்திநாதன், அ. செ. முருகானந்தன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, ச. பஞ்சாட்சர சர்மா, நாவற் குழியூர் நடராசன் மற்றும் பலரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். எப்படியோ எனக்கும் அளவெட்டி இளைஞர்களான அ. செ. மு. அ. ந. க., உருத்திரமூர்த்தி (மகாகவி)
2

முதலியோருக்கும் சற்றே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இடையில் ஒரு விஷயம் நினைவு வருகிறது. ஈழகேசரி இளைஞர் சங்கத்திடமிருந்து எனக்கு ஒரு முறை ஒரு பாராட்டுக் கடிதமும், இரண்டு நூல்களும் பரிசாகக் கிடைத்தன. ஒன்று “பொம்மையா, மனைவியா? என்ற நாடக நூல். இப்சன் எழுதிய நாடகத்தைக் க. நா. சு. மொழி பெயர்த்தது. மற்றது ‘புதுமைப் பித்தன் கதைகள்’. நாடக நூல் என்னை அப்போது அவ்வளவாகக் கவரவில்லை. ஆனால் புதுமைப் பித்தன் ஒரேயடியாக என்னைப் பிடித்துக் கொண்டார். நான் புதுமைப் பித்தன் ‘விசிறியாக மாறியிருந்தேன். இது இருக்க, எழுத்தாளர்கள், இலக்கிய ரசிகர்களை ஒன்று சேர்த்து ஒரு சங்கம் அமைக்க வேண்டுமென்ற பெரு விருப்பம் என் மனத்தில் முளை கொண்டது. எனக்குள்ளே இப்படி ஏதாவது முளை கொண்டு விட்டால் அதை `ஒரு கை பார்க்காமல் அப்போதும் எனக்குத் தூக்கம் வராது. சங்கத்தைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கி அதற்கான பெயரையும் தீர்மானித்து விட்டேன். ‘புதுமைப் பித்தர்கள் சங்கம்! ஆகா, ஓகோ என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொண்டு செயல்பட்டேன்.
அளவெட்டி நண்பர்களுக்கும், வேறு சிலருக்கும் அழைப்புகள் அனுப்பி, ஈழகேசரியில் ஒரு அறிவித்தலும் வெளியிட்டு, 13-06-1943-ல் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். இடம் - யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியிலுள்ள ஒரு விட்டு விறாந்தை. பெரிய விறாநதை. அநத விடு ரேவதி குப்புசாமி என்ற சிற்பக் கலைஞருக்குச் சொந்தமானது. அவரும் ஒரு இலக்கிய ரசிகர். சுமார் பதினைந்து பேர்கள் வரை கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அன்றைய கூட்டத்தில் சங்கத்துக்குப் பெயர் சூட்டும் தீர்மானம் வந்த போது, நான் ஏற்கெனவே உருப்போட்டு வைத்திருந்த புதுமைப்பித்தர்கள் சங்கம்' என்ற பெயரைச் சொன்னேன். மிகக் கடுமையான எதிர்ப்பு புதுமைப் பித்தர்கள் தொடங்கியிருந்த கூட்டத்திலே அவர்களிலும் தொகையில் கூடிய, வாய் வல்லமை மிக்க பல கட்டுப் பெட்டிகளும் வந்து விட்டார்கள்! காரசாரமான விவாதம் நடந்தது.
இதென்ன பெயர்? நாளைக்கு றோட்டால் போகும்போது "இதோ ஒரு பித்தன் போகிறான்' என்று மக்கள் பகிடி பண்ணுவார்கள்” என்று கூடச் சொன்னார்கள். வாக்கெடுப்பு நடந்தது. ‘புதுமைப் பித்தர் சங்கம் போயே போய் விட்டது `தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்’ என்ற கற்புள்ள பெயர் சூட்டப் பட்டது. என்னுடைய கோட்டை சரிந்து விட்ட நிலையிலும் நான் விலகி ஓடி விடவில்லை. மறுமலர்ச்சி' என்ற சங்கத்தின் பத்திரிகைக்கு நான் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டேன்.
மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகை மாறி மாறி ஆர்வமுள்ள

Page 8
இளைஞர்களIல் படிக்கப் பட்டது. அது கையெழுத்துப் பத்திரிகையாக எத்தனை இதழ்கள் வந்ததென்பது நினைவில்லை. என்னுடைய பத்திரிகை வெறி கையெழுத்துப் பத்திரிகையோடு அடங்கி விடுவதாக இல்லை.
தமிழ் நாட்டிலிருந்து வரும் சஞ்சிகைகளைப் பார்க்கும் போதெல்லம், யாழ்ப்பாணத்திலிருந்து அப்படி ஒரு சஞ்சிகையை வெளியிட வேண்டுமென்று கனவு காணத் தொடங்கினேன். மறுமலர்ச்சியை அச்சுப் பத்திரிகை ஆக்க வேண்டுமென்பது என்னுடைய பெருந் தாகமாயிற்று. அச்சுப் பத்திரிகை என்பது பணத்தோடு சம்பந்தப் பட்ட விஷயம். நாங்களெல்லாம் சாதாரண குடும்பங்களிலிருந்து வந்த வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். பத்திரிகையை அச்சில் போடுவதற்குப் பணத்துக்கு எங்கே போவது? ஆனாலும், நான் இரவு பகலாகச் சிந்தித்தேன். "மனம் உண்டானால் மார்க்கம் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு மார்க்கத்தைக் கண்டு பிடித்தேன்.
ஐந்து பேர் சேருவது. ஆளுக்கு ஐம்பது ரூபா (அடேயப்பா ஐம்பது ரூபா) போடுவது அந்தப் பணத்தைக் கொண்ட பத்திரிகையை தொடங்க வேண்டியது. பத்திரிகையைத் தொடக்கி விட்டால், பிறகென்ன - அந்த இதழ் விற்ற பணத்தைக் கொண்டு அடுத்த இதழை அச்சிட்டு விடலாம்! சரிதான். ஆனால் அந்த ஐந்து முதலாளிகளை எங்கே தேடிப் பிடிப்பது? அவர்களையும் ஒரு ம்ாதிரிக் கண்டு பிடித்தேன்.
ஒன்று: நான் (எப்படியோ கடனோ உடனோ பட்டு ஐம்பது ரூபா கட்ட வேண்டியது தான்!)
இரண்டாவது: தமிழாசிரியராக இருந்த எனது ஊர் நண்பர் திரு. க. சா. மதியாபரணம்.
மூன்றாவது: நாவற்குழியூர் நடராசன்
நான்காவது: பண்டிதர் பஞ்சாட்சர சர்மா.
ஐந்து: திரு. க. இ. குமாரசாமி (கவிஞர் சாரதா - க. இ. சரவணமுத்துவின் தமையனார்) இருவரும் ஒரு தமிழாசிரியர்.
இந்த ஐந்து பேரும் ஆளுக்கு ஐம்பது ருபா முதல் பேட்டு பங்கு வியாபாரத்தை ஆரம்பித்தோம். நடைமுறை விதிகளைப் பற்றியெல்லாம் தீர்மானித்துக் கொண்டோம். நான்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. நாங்கள் எல்லோரும் நகரத்துக்குப் புதியவர்கள், விபரம் தெரியாதவர்கள். எல்லாவற்றையும் கற்பனையில் உருவாக்கிப் பெரிய பெரிய கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருப்பவர்கள். நாவற்குழியூர் நடராசன்

அப்போது இந்துசாதனம் இதழில் துணை ஆசிரியராக இருந்தார். அவர் தான் இந்த நடைமுறை விஷயங்களில் எங்களுக்குச் சற்றே உதவியாக இருந்தார் என்று சொல்ல வேண்டும்.
மறுமலர்ச்சி அச்சிடுவதற்கு யாழ். ஆஸ்பத்திரி வீதியில், ஆஸ்பத்திரிக்கு முன்பாக இருந்த பூரீ பார்வதி அச்சகத்தைத் தெரிவு செய்தோம். (அந்த அச்சகம் இப்போதும் அதே இடத்தில் இருக்கிறது) அதன் முதலாளி திரு. சிவஞானபோதம் என்பவர். நல்ல மனிதர். அந்த அச்சகத்தில் மூன்று பேர் வேலை செய்தார்கள். அவசியமெனில் முதலாளியும் வேலை செய்வார். திரு. இராஜகோபால் என்ற ஒரு நல்ல தொழில் விற்பன்னரும் இவர்களுள் இருந்தார்.
மறுமலர்ச்சியில் முதல் இதழ் 500 பிரதி அச்சிடப் பட்டதென்றும், அதற்கான செலவு ரூபா 125/= என்றும் ஒரு நினைவு. நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. மறுமலர்ச்சியின் மேலட்டை கவர்ச்சிகரமாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். டிசைன் வரைவிப்பது, புளொக் செய்விப்பது எல்லாம் தெரியாத வித்தைகள். நாவற்குழியூர் நடராசன் திரு. துரையப்பா என்ற ஒரு கலைஞரை அறிமுகப் படுத்தினார். துரையப்பா ஒரு பிறவிக் கலைஞர். ஏதாவது ஒரு படத்தைக் கொடுத்து அதைப் புளொக் செய்து தரும்படி கேட்டால், அந்தத் தகட்டில் படத்தை காபன் பிரதி செய்து, பின்னர் சிறு சிறு ஆயுதங்களின் உதவியோடு அருமையாகப் புளொக் செய்து விடுவார். சில நுட்பமான ரேகைகள் கொண்ட படத்தைக் கூட அவர் அச்சொட்டாகப் புளக் செய்து தந்தது நினைவிருக்கிறது. புளொக் செலவு பெரும் பாலும் அதன் அளவைப் பொறுத்தது. இரண்டு ரூபாவிலிருந்து மிஞ்சியது பத்துப் பதினைந்து ரூபாவுக்குள் தான் வரும். மறு மலர்ச்சியில் வந்த போட்டோ புளொக்கள் தவிர்ந்த லைன் புளொக்குகள் எல்லா வற்றையும் திரு. துரையப்பாவே செய்து தந்தார்.
மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சாகி முடிந்த சமயத்தில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தாருக்குள்ளே இரண்டு நகரத்து நண்பர்கள் இருந்தார்கள். 'மறுமலர்ச்சி சஞ்சிகை சங்கத்துக்கே உரியதென்றும், தனிப்பட்ட ஐந்து பேர் கூடி அந்தப் பெயரில் சஞ்சிகையை அச்சிடுவது சட்ட விரோதமென்றும் நீதிமன்றில் வழக்கொன்று தொடர்ந்து ஒரு தடை உத்தரவும் பெற்றுவிட்டார்கள். அச்சிட்டு முடிந்த பிரதிகள் யாவும் அச்சகத்திலிருந்து நிதி மன்றத்துக்குப் போய் விட்டன. எனக்குத் தலையும் தெரியவில்லை, வாலும் தெரியவில்லை. நீதிமன்றம், வழக்கு, சட்டத்தரணி - இவையெல்லாம் எனக்குச் சற்றும் பழக்கமில்லாத பொருள்கள்.

Page 9
நாவற் குழியும் நடராசன் தான் முன் ரிைன் று, யாரே ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்து, நிதிபதிக்கு நிலைமையை விளக்கிக் கூறி, பிரதிகளை மீட்டுக் கொண்டுவர உதவி செய்தார். பிறக்கும் போதே மறுமலர்ச்சிக்கு இப்படி ஒரு கண்டம் சில உயிரினங்கள் தாமும் தின்னாது, மற்றவர்களையும் தின்ன விடாது. போகட்டும்! மறுமலர்ச்சி மிக்க உற்சாகமாக வெளிவந்தது. என் கால்கள் நிலத்திலில்லை! ஆகாயத்தில் பறப்பது போன்ற மகிழ்ச்சி
மறுமலாச்சி வேலைகள் பெரும்பாலும் ரீ பார்வதி அச்சகத்திலேயே நடக்கும். நானும் எந்நேரமும் அங்குதான் இருப்பேன். எனினும் மறுமலர்ச்சிக்கு ஒரு தனியான அலுவலகமும் இருந்தது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை விதியில், பூரீ சுப்பிரமணியம் புத்தகசாலைக்கு எதிராக உள்ள ஒரு ஒடையில் வரிசையாகச் சில அறைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அந்த அறைகளில் ஒன்றுதான் மறுமலர்ச்சியின் அலுவலகம். அந்த அறைக்கு வாடகை ரூபா மூன்று. நாளாந்தம் அல்ல. ஒரு மIத வாடகை ரூப முன்று. அந்த அறையில் ஒரு சிறிய மேசை, ஒரு கதிரை, ஒரு வாங்கு இவைதான் அலுவலகத் தளபாடங்கள்.
நான் நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா, க. சி. சரவணமுத்து, அ. செ. மு. அ. ந. க., மஹாகவி, சு. வே. சொக்கன், சோ. தியாகராசா (சோதி), சு. இராசநாயகன், கு. பெரிய தம்பி, க. சி. குலரத்தினம் முதலிய பலர் அவ்வப்போது மறுமலர்ச்சியின் முக்கிய எழுத்தாளர்களாக இருந்தோம்.
இந்திய எழுத்தாளர்கள் சிலரும் - வல்லிக் கண்ணன், ப. கோதண்டராமன் போன்றோர் இடையிடையே “விஷய தானம் செய்தார்கள். அப்போது எங்களில் பலருக்கு காண்டேகர் பைத்தியம். T0 00TTAL TLrrTASL HH TTTTCAS 00 SLS0aGGGk0k0StLGSSS JSSS SSS S S LLLLLLLT மொழிபெயர்த்துக் கலை மகளில் வெளியிட்டு வந்தார். எப்படியோ அவருடன் தொடர்பு கொண்டு. மறுமலர்ச்சிக்கும் காண்டேகருடைய கதை ஒன்று தரும்படி கேட்டோம். அவரும் சம்மதித்து ஐம்பது ரூபா அனுப்பி வைக்கும் படி அறிவித்தார். கஷ்டத்தின் மத்தியிலே அவர் கேட்ட ஐம்பது ரூபாவை அனுப்பி வைத்தோம். பணத்தைப் பெற்றுக் கொண்ட கா. பூரீ. பூரீ. கதையை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கதையின் பெயர் பெண் வண்டி’ என்றும் ஒரு அஞ்சலட்டை எழுதியிருந்தார். நாங்களும் அந்தப் பெரிய எழுத்தாளர் சொல்லை நம்பி, காண்டேகரின் ‘பொன்வண்டி மறுமலர்ச்சியில் விரைவில் வெளிவரும் என்று விளம்பரம் செய்தோம். மோசம் போனோம். பொன்வண்டி இருப்பை விட்டுக் கிளம்பவேயில்லை. இளம் வயது முதலே எழுத்தாளர்கள் என்றால் உயர்ந்த மனிதர்கள் என்று நம்பிக்

கொண்டிருந்த எனக்கு முதலில் கிடைத்த அடி அந்தப் பொன்வண்டிக் கதை. அதனால் அது மிக ஆழமாக மனதில் பதிந்து இன்னமும் நினைவில் இருக்கிறது. இது போன்ற பல சம்பவங்கள் மறுமலர்ச்சிக் காலத்தில் நடந்திருக்கலாம் - நடந்திருக்கும். ஆனால், அவையெதுவும் இப்போது நினைவில் இல்லை.
மறுமலர்ச்சி இதழ்களில் வர்த்தக விளம்பரங்களும் அவ்வப்போது வெளிவந்தன. சில அபிமானிகள் விளம்பரங்கள் தந்து உதவினார்கள். அவர்களில் மிக முக்கியமாக ஒருவரைக் குறிப்பிட வேண்டும். அப்போது யாழ்ப்பாணத்தில் நகை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள் *எல். கே. எஸ். லெப்பை பிறதேஸ் என்பவர்கள். அவர்களுடைய நிறுவனத்தின் பெயர் ‘தங்கமாளிகை’ எல். கே. எஸ். என்ற பெயரே பிரபல்யம், அந்த நிறுவனத்தில் மீரான் சாகிப் என்ற இளைஞர் ஒருவர் இருந்தார். அவர் மிகுந்த ஆர்வத்தோடும் அபிமானத்தோடும் விளம்பரங்களைத் தந்தார். மறுமலர்ச்சியின் மேலட்டையின் பின் பக்கத்தில் அவர்களுடைய விளம்பரம் இருக்கும். மாதா மாதம் மனம் கோணாமல் இருபத்தைந்து ரூபா தருவார்கள். இன்றைய கடதாசி விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது இன்று ரூபா ஆயிரத்துக்கும் மேலாகவே இருக்கும்!
1946 மார்ச் மாதத்திலிருந்து 1948 ஒக்டோபர் வரை இருபத்தி நான்கு இதழ்கள் வெளிவந்தன. அந்த இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், கதைகள், கவிதைகள் இவற்றை எழுதிய எழுத்தாளர்கள் - எல்லாவற்றையும் நன்கு அலசி ஆராய்ந்து எனது மதிப்புக்குரிய நண்பர் சொக்கன் அவர்கள் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். அது தினகரன் வார மஞ்சரியில் 1980 யூலை தொடக்கம் நவம்பர் வரை தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது.
தமிழில் புதிய இலக்கிய முளைகொண்டு வளரத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியமை குறித்து இப்போது நான் நல்ல மன நிறைவு அடைகிறேன் - பெருமைப் படுகிறேன்.

Page 10
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் ஈழகேசரியின் பங்களிப்பு
செங்கை ஆழியான்
வார ஏடு வெளிவரத் தொடங்கியது. ஈழத்தின் அரசியல்,
சமூக, பொருளாதார, இலக்கிய வளர்ச்சியில் மிக்க அக்கறையோடு இருபத்தெட்டாண்டுகள் தொடர்ந்து வெளிவந்த ஏடு ஈழகேசரியாகும். நவீன இலக்கியத்தின் கருக்கட்டல் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான தளமும் தடமும் அமைத்துக் கொடுத்ததோடு ஆக்கவிலக்கிய கர்த்தாக்களை இனங்கண்டறியத் தந்த பெருமையும் ஈழகேசரிக்குரியது. ஒரு காலகட்டத்தின் இலக்கிய சக்தி ஈழகேசரியெனின் அது ஒரு போதும் குறைவான மதிப்பீடன்று.
193 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் திகதி ‘ஈழகேசரி’ என்ற
1.ஈழகேசரியின் தோற்றம்
ஈழகேசரிப் பத்திரிகையின் பிதாமகரான குரும்பசிட்டி நா. பொன்னையா ஈழத்துப் பிரமுகர்கள் வரிசையில் மிக முக்கியமானவர். ஈழகேசரிப் பத்திரிகை மூலம் தனது சமூகத்திற்கு அளப்பரிய தொண்டாற்றிய இப் பெரியார் 1926-ல் சுன் னாகத்தில் ஒரு புத்தகசாலையையும், 1928-ல் திருமகள் அச்சகத்தையும் ஆரம்பித்தார். நல்லதொரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற வேணவாவின்
8

பயனாக ஈழகேசரியைத் தொடங்கு. ,டடம் வகுக்கப் பட்டது. டொனமூர் அரசியற் திட்டம் நடைமுறைக்கு வந்த காலம். தமிழ் மக்களுக்குப் பாதகமான நடைமுறைகளை விமர்சிப்பதற்கும், மக்கள் முன் அக்கருத்துக்களைக் கொண்டுவருவதற்கும், ஒரு பத்திரிகை அவசியமென உணரப்பட்ட வேளை, பொன்னையா அவர்கள் ஈழகேசரியை ஆரம்பித்தார். சர்வதேச வாக்குரிமை கிடைக்கவிருக்கும் தருணத்தில் ரு தேசிய வெளியீட்டின் முக்கியம் உணரப் பட்டதாகப் பொன்னையா றிப்பிடுகிறார். அரசியல் அடிமைத் தனத்திற்கும் அந்நிய மோகத்திற்கும் திராக மக்களின் கருத்தினை உருவாக்க வேண்டிய அவசியமிருந்தது.
ஈழகேசரி முதலாவது இதழ் தன் குறிக்கோளைப் பின்வருமாறு
சிரியத் தலையங்கத்தில் கூறுகின்றது. அடிமைக் குழியிலாழ்ந்து စွီ சமயமிழந்து, சாதிப்பேய்க்கு ஆட்பட்டு, சன்மார்க்க நெறியிழந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டு உறங்கி வாழ்தலே ண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தான்றினும் மிகையாகாது”.
குரும்பசிட்டி நா. பொன்னையா ஆரம்பித்த இப்பத்திரிகைக்கு ஈழகேசரி எனப் பெயர் வைக்கப் பட்டமைக்கான காரணம் மிகத் தெளிவானது. சேர். பொன்னம்பலம் இராமநரதன் அவர்களின் நினைவாக அவர் உயிர் வாழும் காலத்திலேயே இப்பெயர் சூட்டப் பட்டது.
“எமது தேச நன்மை கருதித் தமது தள்ளாத கிழப்பருவத்தில், தம்மாற் செல்லுதற்கியலாத நிலையிலும், மனைவி மக்களைத் துணைகொண்டு. சாகரங் கடந்து, எங்களை ஆள்பவர்களிடம் எங்கள் 5றைகளை நிவர்த்திக்க வேண்டிச் சென்றிருக்கும் எங்கள் தாத்தாவும், னக்கென வாழாப் பிறர்க் குரியாளனுந் தயாளவள்ளலும், அருட் கொடை அண்ணலும், அன்னை பணியினரிய சிங்கேறுமாகிய இலங்கைச் சிங்கம் (ஈழகேசரி) கெளரவ சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் பாரி சமேதராய் இங்கிலாந்து சென்றதற்கறிகுறியாகவே "ஈழகேசரி என்னுந் திருநாமம் புனைந்து இந்த வெளியீட்டை அன்னாருக்கு அர்ப்பணஞ் செய்து வெளியிட்டுள்ளோம் என ஈழுகேசரியின் முதலாவது இதழ் பேசுகிறது.
ஈழகேசரி தொடர்ந்து 1958 ஜூன் 06 ம் திகதி வரை வெளிவந்தது. ஈழகேசரியின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும், ஆரம்பத்தில் அமரர் நா. பொன்னையா விளங்கினார். நான்காண்டுகளின் பின்னர் திரு. சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அ. செ. முருகானந்தம் சிலகாலமும், அவரினை அடுத்து இராஜ அரியரத்தினமும் ஈழகேசரியின் ஆசிரியர்களாகக் கடமை ஆற்றினர். அமரர் நா. பொன்னையாவின் மரணத்திற்குப் பின்னர்

Page 11
வெளியிட்டாளராக முத்தைய சபாரத்தினம் என்பவரும், ஈழகேசரியின் இறுதிவரை இராஜ அரியரத்தினம் அவர்களும் ஆசிரியராக விளங்கியுள்ளனர்.
2. ஈழகேசரியின் இலக்கியப் பணி
நமது பழந்தமிழ் இலக்கியங்களை வாரி வழங்கியதோடு நவி இலக்கியத்தின் வருகைக்கும் செழுமைக்கும் ஈழகேசரி தன் கதவுகை அகல மாகத் திறந்து விட்டிருந்தது. ஒரு பக்கம் பண்டிதர்களு வித்துவான்களும் இலக்கியத்தின் பழைமையைப் பேணும் கட்டுரைகை எழுதிக் குவிக்க, மறுபுறம் நவீன புனைகதையாசிரியர்களும் கவிஞர்களும் தம் பங்களிப்பினைக் குறைவின்றி வழங்கி வந்துள்ளனர். மகாவித்துவான் சி. கணேசையர், சு. நவநீத கிருஸ்ண பாரதியார், சுவாமி ஞானப்பிரகாசர், வே. மகாலிங்கசிவம் புலவர் மு. நல்லதம்பி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முதலானோர் இலக்கிய கட்டுரைகளைச் சுவைபடத் தந்தனர். மறுபக்கம் நூற்றுக்கணக்கா நவீன இலக்கியப் படைப்பாளிகள் தம் ஆக்கங்களை ஈழகேசரியில்
தவழவிட்டனர்.
தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் இலக்கியப் பாலமிட்ட சேவை ஈழகேசரிக்குரியதாகும். ஈழகேசரி ஆசிரியர் பொன்னையா அவர்கள் இந்தியா சென்று அங்குள்ள அரசியற் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் நட்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். ராஜாஜி இராஜகோபாலச்சாரியார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன், தினமணி சொக்கலிங்கம் முதலான தமிழறிஞர்கள் ஈழகேசரிக்கு ஆதரவளித்து வந்தனர். ஈழகேசரியின் தலையாய சேவையைப் பாராட்டி வந்துள்ளனர். தமிழகக் கவிஞர்கள், கழுத்தாளர்கள். ஆகியோபின் படைப்புக்களும் ஈழகேசரியில் வெளிவந்தன.
3. ஈழகேசரியின் பணிகள் பத்திரிகைச் சிறப்புகள்
3.1 ஈழகேசரி 1930 இலிருந்து தெளிவான ஓர் அரசியற் கொள்கையை முன்னெடுத்துள்ளது. சேர். பொன். இராமநாதன் அரசியற் கருத்துக்களையும் காந்தியக் கருத்துக்களையும் அது முன்னெடுத்துள்ளது.
3.2 தமிழ் சமூகத்தில் சாபக் கேடாகக் கவ்வியிருக்கும் மூடநம்பிக்கை களுக்கு எதிராகவும், சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகவும்,
O
 
 
 
 

கட்டுரைகளையும், சிறுகதைகளயும் வெளியிட்டுள்ளது. குறிப்பாகச் சாதிய அடக்கு முறைக்கு எதிராகக் குரல் தந்துள்ளது. ஆலயப் பிரவேசம் , சமகல்வி வாய்ப்பு என்பனபற்றி, 1930-40 களில் முற்போக்கான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றது.
3.3 பழந்தமிழ் இலக்கியத்தைத் தக்கவாறு மக்களுக்குச் சுவைபடக்
ebl-G660)Jcbbli li ebŮ U60) L-ibgbibili bli bl.
3.4 ஈழகேசரிக் காலகட்டத்தில் வெளிவந்த சகலதுறை சார்ந்த நூல்களையும், ஈழகேசரி மக்களுக்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளது. ஒவ்வொரு இதழிலும் ‘நமது வாசிகசாலை’ என்ற பகுதிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தது. தக்க அறிஞர்களால் நூல்கள் மதிப்புரை செய்யப்பட்டுள்ளன. ஈழகேசரியின் பணிகளில் நூல் அறிமுகம் பிரதானமானதென நான் கருதுகிறேன். ஈழத்தில் வேறெந்தப் பத்திரிகையும் இவ்வாறு ஒழுங்காகவும் இடையறாதும் நூலறிமுகம் செய்தது கிடையாது.
3.5 ஈழகேசரி ஆரோக்கியமான கல்வியை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளது. கல்வி அனுபந்தம் ஒன்றினை ஒவ்வொரு வாரமும் பிரதான பத்திரிகையுடன் இணைத்து வழங்கி வந்துள்ளது. அதில் வெளிவந்த ஆக்கங்கள் உண்மையில் மாணவருலகிற்குப் பெரும் துணையாக இருந்துள்ளன. ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் கல்வி அனுபந்தத்தில் தான் எழுதிப் பழகினார்கள்.
3.6 யாழ்ப்பாணச் சுப்பிரீம்கோர்ட் வழக்குகளைச் சுவைபட அக்காலத்தில் வழங்கிய பெருமை ஈழகேசரிக்குள்ளது. பிரபல கொலை வழக்குகள், பெண் கடத்தல் வழக்குகள் என்பன ஈழகேசரியில் முக்கியம் பெற்றிருந்தன. சுப்ரீம் கோர்ட் வழக்குகளிற் சாதிப் பெயர்கள் அப்படியே பயன்படுத்தப் பட்டிருப்பது ஈழகேசரிக்கு ஒரு கரும்புள்ளியாக இருக்கின்றது.
3.7 மேலைத் தேய அக்கரை இலக்கியங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு ஈழகேசரியில் வெளியிடப் பட்டிருக்கின்றன. நாடகங்கள் . சிறுகதைகள் , நாவல் களர் அவி வாறு வெளிவந்திருக்கின்றன. இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்துள்ளனர்.
3.8 நவீன ஆக்கவிலக்கியத்திற்குக் களம் அமைத்த பெருமை ஈழகேசரிக்கேயுரியது. நூற்றுக்கணக்கான புனை கதாசிரியர்களை ஈழகேசரி தமிழுலகிற்குத தந்துள்ளது. இபபணி சற்று விரிவாக நோக்கப்பட வேண்டும். நோக்குவோம்.
11

Page 12
4. ஈழகேசரியும் புனைகதைத் துறையும்
ஈழகேசரியில் பல தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வடிவில் நாவல்களாகவும் சில குறுநாவல்களாகவும் இருக்கின்றன. ஈழகேசரியில் வெளிவந்த முதலாவது தொடர்கதை "அருணோதயம் அல்லது சிம்மக்கொடி என்பதாகும். இது 1934-களில் தொடராக வெளிவந்துள்ளது. இக்கதையின் தலைப்பு அக்காலகட்டத்து முதல் தமிழ் நாவலாசிரியர்களுக்குரியதாக விளங்கியது. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதைநாயகி அம்மாள் ஆகியோரின் நாவல்களின் தரத்தினை ஒத்தது. தலைப்பிலும் சரி, விடயப் பரப்பிலும் சரி இந்த மண்ணிற்குரியதாக சிம்மக்கொடி அமையவில்லை. இதனை எழுதியவர் வரணி ஈ. எஸ். இராசையா என அறியப்படுகின்றது. இவரால் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்' என்றொரு நாவலும் எழுதப்பட்டுள்ளது என்பதை ஈழகேசரியில் வெளிவந்த ஒரு விளம்பரத்திலிருந்து அறியமுடிகின்றது.
அருணோதயம் அல்லது சிம்மக்கொடி என்ற தொடர்கதையைத் தொடர்ந்து கே. வி. செல்லத்துரை என்பவர் எழுதிய சுசீலா (1939), வில்லன் என்பவரின் 'மல்லிகை (1940), க. சச்சிதானந்தன் எழுதிய * அன்ன பூரணி (1942), வரதர் எழுதிய 'ட்ராம் விபத்து' ( 1944), சம்பந்தன் எழுதிய “பாசம் (1947), சொக்கன் எழுதிய மலர்ப்பலி (1947), பரணி எழுதிய `அஸ்தமன வேளை (1947), கசின் எழுதிய சகட யோகம் (1949), உபகுப்தன் (கனகசெந்திநாதன்) எழுதிய விதியின் கை (1955), வ. அ. இராசரத்தினம் எழுதிய 'கொழுகொம்பு (1955), தேவன் - யாழ்ப்பாணம் எழுதிய கண்டதும் நடந்ததும் (1956) முதலான தொடர் கதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. இவற்றில் அன்னபூரணிை, பாசம், கொழுகொம்பு, கண்டதும் நடந்ததும் ஆகியன விதந்துரைக்கத் தக்க நாவல்களாம். அக்காலகட்டத்தில் இவற்றின் ஆகி கதி திறனும் , இந்த மணி சார்ந்த பிரச்சனைகளைக் கருப்பொருட்களாகவும் இவை கொண்டிருந்தமையால் பலராலும் dalon délibábüuüL60T. w
ஈழகேசரியில் வெளிநாட்டு கழுத்தளப்கள் சிலரின் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. தோமஸ் ஹார்டியின் ‘வெறுங்கனவு தான் என்ற நாவல் இலங்கையர் கோனால் தமிழாக்கம் செய்யப்பட்டது. (1939), ரவீந்திரநாத் தாகூரின் அறுந்த தளைகள் என்ற நாவல் ரவீந்திரன் (சி. வைத்தியலிங்கம்) என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட்டது. (1939), ஜவான் டேர்சினோவ் என்ற நாவல் இலங்கையர் கோனால் மொழிபெயர்க்கப்பட்டது. (1940). இந்த ருசிய எழுத்தாளரின் இன்னொரு நாவலான ‘மாலை வேளையில்
12

என்பதும் இலங்கையர் கோனால் மொழிபெயர்க்கப்பட்டது. (1941). ஜேர்மனிய எழுத்தாளரான தோமஸ் மானின் மனவிகாரம் என்ற நாவல் சோணாசலம் (சோ. சிவபாதசுந்தரம்) என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவந்தது. (1945). நம்நாட்டு ஆங்கில எழுத்தாளரான ஜே. சி. எதிர்வீரசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட சரித்திரக் கதையான ‘தங்கப்பூச்சி என்பது இராஜ அரியரத்தினத்தால் தமிழாக்கப் பட்டு வெளிவந்தது. (1948). எனவே ஈழகேசரி பிறநாட்டு இலக்கியங்களை நமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்த இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், இராஜ அரியரத்தினம் ஆகியோரின் புனைகதைகளில் உருவமும் உள்ள க்கமும் ஏனைய ஈழத்து எழுத்தாளர்களிலும் பார்க்கச் சிறப்பாக அமைந்தமைக்கு அவர்களின் ஆங்கிலப் புலமையும் பிறமொழி இலக்கியப் பரிச்சயமும் மிக முக்கியமான காரணிகளாக இருந்துள்ளன எனத் துணியலாம்.
5. ஈழகேசரிச் சிறுகதைகள்
1930 - 1958 காலகட்டத்தில் ஈழகேசரியில் 513 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. இச்சிறுகதைகள் சுட்டி நிற்கின்ற பொதுப் பண்புகள் அல்லது இச் சிறுகதைகளின் சார்பாக எடுக்கக்கூடிய தகவல்கள் பின்வருவனவாம்.
5.1 இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை சமூகச் சிறுகதைகளாகவும், பதினெட்டுச் சிறுகதைகள் வரலாற்றுச் சிறுகதைகளாகவும் புராணச் சிறுகதைகளாகவும் இருக்கின்றன. இவற்றில், பல சிறுகதைகள் என்ற வரையறைக்குள் அடங்காதவை.
5.2 ஈழகேசரியில் ஆரம்ப ஆண்டுகளான 1930, 1931, 1933 ஆகிய ஆணர்டுகளில இப் பத்திரிகையில் ஒரு சிறுகதை தானும் வெளிவரவில்லை. ஈழகேசரியின் முதலாவது சிறுகதை 1933-ம்அண்டு ஜூலை மாதத்தில் வெளிவந்தது. அளவெட்டி த. சிவலிங்கம் என்பவர் 'பறைச்சேரியில் தீ விபத்து அல்லது வேதாந்த ஐயங்கார் என்ற சிறுகதையை எழுதியிருந்தார். ஈழகேசரியின் முதலாவது சிறுகதை எழுத்தாளர் இவரே.
5.3 ஈழகேசரியின் எல்லா இதழ்களிலும் சிறுகதைகள் வெளியிடப் படவில்லை. சராசரியாக ஆண்டொன்றிற்குப் பத்துச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. எனினும் ஆண்டிற்கு மூன்று சிறுகதைகளிலிருந்து முப்பத்தெட்டுச் சிறுகதைகள் வரை வெளிவந்திருக்கின்றன என மதிப்பிடலாம்.
5.4 ஈழகேசரியின் ஆயுள் காலத்தில் மொத்தமாக வெளிவந்த 513
1.
13

Page 13
சிறுகதைகளை 158 சிறுகதை எழுத்தாளர்கள் ஆக்கியுள்ளனர். இவர்களில் சுயா (சு. நல்லையா) 38 சிறுகதைகளை எழுதி அந்தவகையில் முதலிடம் பெறுகின்றார். அடுத்து வ. அ. இராசரெத்தினம் (28), கே. டானியல் (19), அ. செ. முருகானந்தன் (18), புதுமைலோலன் (15), க. சிவருகுநாதன் (கசின்) (14), சொக்கன் (13), வரதர் (13). பவன் (12), சு. வே. (11), சி. வைத்தியலிங்கம் (11), இ. நாகராஜன் (13), இலங்கையர் கோன் (10), ஆனந்தன் (19), எஸ். பொன்னுத்துரை (8) எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈழகேசரிப் பண்ணையில் முகிழ்ந்தவர்கள் எனக் கொள்வதில் தவறில்லை.
5.5 ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குரிய முன்னோடி எழுத்தாளர்களான ஆனந்தண் , சுயா, பாலன் , அ. செ. முருகானந்தன், சி. வைத்திய லிப் கம், சம்பந் தன் , இலங்கையர் கோண் , ராஜ. அரியரெத்தினம், சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் ஈழகேசரியில் சிறுகதை எழுதியுள்ளனர். இவர்களின் காலடியைப் பின்பற்றிச் சொக்கன், சு. வே. கனகசெந்திநாதன், (யாழ்ப்பாடி), கசின், வ. அ. இராசரத்தினம், புதுமைலோ லன், பரணி, இ. அம்பிகைபாகன் முதலானோர் தம படைப் புக் களை ஈழகேசரியில பதிவு செய்திருக்கின்றனர்.
5.6 இன்று கணிப்பிற்குரிய எழுத்தாளர்களாக விளங்குகின்ற எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், சிற்பி, டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், மகன் (நந்தி), குறமகள், இ. நாகராஜன், அ. ந. க., கலைப்பித்தன் (சோமகாந்தன்) ஆகியோரின் ஆரம்ப எழுத்துக்கள் ஈழகேசரியில் தான் வெளிவந்துள்ளன. இந்த எழுத்தாளர்களின் ஆரம்ப எழுத்துக்களுக்கு ஈழகேசரி தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. எனவே ஈழகேசரியில் மூன்று தலைமுறை எழுத்துக்கள் இடம் பிடித்துள்ளன.
5.7 ஈழகேசரியில் நமது நாட்டு எழுத்தாளர்களுடன் தமிழ் நாட்டு எழுத்தாளர்களும் சிறுகதைகள் எழுதியிருக்கின்றனர். ரெ. திருமலை ஐயங்கார், சுத்தானந்தபாரதி, பி. கோதண்டராமன், திருச்சி. என். நாராயணன், எம். எஸ். கமலா, கா. மு. ஷெரிப், அகிலன், நீலா, ராமமூர்த்தி, ரி. பி. குஞ்சிதபாதம், மாயாவி, ஜி. கே. பொன்னம்மாள், திண்டுக்கல் ரங்கராஜன் ஆகியோரின் சிறுகதைகள் ஈழகேசரியில் வெளியாகியுள்ளன.
5.8 இனங்காண முடியாத புனைப் பெயர்களில் எழுதப்பட்ட பல சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. பரிதி, சமாதி, ரத்னா, எண்விலி, கற்பனை, மனி, சூதன், என். எம். ஏ. தச்சி தூமகேது, புவனஜோதி, பாணன், நாதம், பிரகஸ்பதி, மக்னில், பவன்,
14

காளிபுத்திரன், நட்சத்திரம், செந்தில், ஒலன், வடிவு, ச. மு. பகம், தும்பிழகன், காவ், உமா, ஈசன், நாதன், லேகினி, வேம்பு, சரஸ்வதிதாசன், ரா. க. கா. க. கா., மதிமுகன், மின்மினி, கஜமுகன், சரஸன், பூபால், விஜயன், சிலம்பன், ஆரூரன், எஸ்.கே.ஆர். துளசி, எஸ். பிரி, கடோற் கசன், சச்சி என்பன இனங்காண முடியாத புனைப் பெயர்களாகவுள்ளன. நிச்சயமாக இவை ஈழகேசரிப் பண்ணையின் பிரபலா களாகத்தான் இருக்க வேண்டும்.
5.9 ஈழத்தின் உன்னதமான தமிழ்ச் சிறுகதைகள் எனத் தெரிவு செய்யப் படக் கூடிய ஏழு சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. நமது இலக்கிய இருப்பினை இவை சுட்டி நிற்கின்றன. ஆனந்தனின் தண்ணீர்த் தாகம் (1939), நவாலியூர் சோ. நடராஜனின் கற்சிலை ( 1941) அ. செ. முருகானந்தனின் வண்டிச் சவாரி (1944), இலங்கையர்கோனின் வெள்ளிப் பாதசரம் (1944), இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் (1945),கனகசெந்திநாதனின் ஒரு பிடிசோறு (1945), வ. அ. இராசரெத்தினத்தின் தோணி (1953) எனும் ஏழு சிறுகதைகளும் ஈழத்திற்குப் பெருமை சேர்க்கும் உன்னதமான சிறுகதைகளாம்.
5.10 ஈழத்தின் சிறந்த சிறுகதைகளாக ஈழகேசரியில் வெளிவந்த பரிதியின் எதிர்பாராதது (1941), சி. வைத்தியலிங்கத்தின் நெடுவழி (1942), சம்பந்தனின் கலாஷேத்திரம் (1942), சோ.சிவபாத சுந்தரத்தின் பொன்னர் செத்த கதை (1945), மயில்வாகனனின் ஏழையின் கொடை (1946), பவனின் ஆசைச்சட்டம்பியார் (1946), சு. வே. யின் பாற்காவடி (1947), சில்வரம்புலியின் தெளிவு (1947), அழகு சுப்பிரமணியத்தின் சேதுப்பாட்டி (1949), தியாகராஜனின் நல்ல மாமி (1949), கே. டானியலின் வானம் வெளுத்தது (1958) என்பனவற்றினைக் குறிப்பிடலாம்.
5.11 ஈழகேசரியில் பெண் எழுத்தாளர்கள் பலர் தம் படைப்புக்களைத் தந்துள்ளனர். அவர்களில் லலிதா சாவித்திரி, ராஜேஸ்வரி, வஸந்தா, லேகினி, எம். எஸ். கமலா, பிரேமா, கமலம், கோணேசபிள்ளை, குறமகள், செல்வி எஸ். தியாகராஜா, நீலா ராமமூர்த்தி, ஜி. கே. பொன்னம்மாள் என்போராவர். இவர்களில் தமிழகத்தினைச் சேர்ந்த எம். எஸ். கமலா என்பவர் ஈழகேசரியில் ஏழு சிறுகதைகளை எழுதியுள்ளார். ஏனையோர் ஓரிரு சிறுகதைகளையே எழுதியுள்ளனர்.
5.12 நவாலியூர் சோ. நடராஜன், நவாலியூர் சத்தியநாதன் என்ற புனைப் பெயரிலும், சோ. சிவபாதசுந்தரம், சோ. சி. - சிவம் என்ற புனைப் பெயர்களிலும், இராஜ அரியரத்தினம் - அரியம், அரியரத்தினம், சில்வரம்புலி ஆகிய புனைப் பெயர்களிலும், க. சச்சிதானந்தன்
15

Page 14
ஆனந்தன், பண்டிதப் என்ற புனைப் பெயர்களிலும், சி. வைத்தியலிங்கம் - ரவிந்திரன் என்ற புனைப் பெயரிலும், தி. ச. வரதராசன் - வரதர், வரன் என்ற புனைப் பெயரிலும், ஈழத்துறைவன் என்று அறியப்பட்ட வை. ஏரம்பமூர்த்தி - பரணி மூர்த்தி என்ற புனைப் பெயரிலும், கனகசெந்திநாதன் யாழ்பாடி என்ற புனைப் பெயரிலும், சம்பந்தன் - அருட்செல்வன் என்ற புனைப் பெயரிலும், ஈழகேசரியில் சிறுகதைகளை எழுதியுள்ளனர். ஈழகேசரியில் ஆசிரியர் பொறுப்பில் இருந்த சோ. சிவபாதசுந்தரம், அ. செ. முருகானந்தன், இராஜ அரியரத்தினம் ஆகியோர் பத்திரிகையினி தேவை கருதி வேறும் பல புனைப்பெயர்களில் ஈழகேசரியில் எழுதியிருப்பதாக அறிய வருகின்றது.
5.13 மூத்த எழுத்தாளர் சொக்கன் ஈழகேசரியில் பல சரித்திரக் கதைகளை எழுதியுள்ளார். கனவுக்கோயில் (1947) என்ற வரலாற்றுக் கதையுடன் ஈழகேசரியில் அறிமுகமாகும் சொக்கன் அதனைத் தொடர்ந்து கவிஞன் பலி, ஞாபகச் சின்னம், தீர்ப்பு, கற்பரசி முதலான சரித்திரக் கதைகளையும் தந்துள்ளார்.
5.14 சிறுகதை எழுத்தாளராகத தமமை இனங்காட்டிக கொண்ட சானா, நாவற்குழியூர் நடராஜன், து. ருத்திரமூர்த்தி (துரு - மகாகவி) ஆகியோர் பின்னர் வேறு துறைகளில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர்.
5.5 இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஈழகேசரியில் 1938 ஆம் ஆண்டு. வெளிவந்த ஆண்டுமலரில் ஐயோதிர்மகிஷம் சாதேவசாஸ்தரியார் என்ற புனைப் பெயரில் நவபாரதம் என்றொரு சிறுகதை, நெடுங்கதை எழுதியுள்ளார். ஆசிரிய கலாசாலையையும் அதன் நடவடிக்கைகளையும் வைத்துக் குறியீடாக இச் சிறுகதை எழுதப்பட்டிருக்கின்றது. அக்கால யாழ்ப்பாணப் பிரமுகர்களின் முகமுடிகள் இச் சிறுகதையில் கிழிக்கப் பட்டிருக்கின்றன. பிற்க லத்தில் கே. டானியலும் இவ்வகையான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
5.16 ஈழகேசரியின் சிறுகதை இலக்கிய வரலாற்றில் குறித்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்புக்கள் முனைப்புப் பெற்றிருப்பதைக் காணலாம். 1936-ம் ஆண்டிலிருந்து 1957-ம் ஆண்டுவரை சுயா என்பவர் தொடர்ந்து சிறுகதைகளை எழுதிக் குவித்துள்ளார். 1936 - ல் அன்னையின் கட்டளையும் அதுதான் என்ற சிறுகதையுடன் ஈழகேசரிக்குள் பிரவேசிக்கும் சுயா, 1957-ல் எறிமாடன் என்ற சிறுகதையுடன் வெளியேறுகிறார். 1938-லிருந்து 1944 வரை ஆனந்தனின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சி. வைத்தியலிங்கம் 1939-லிருந்து 1956-வரை ஈழகேசரியில் சிறுகதைகளை
16

எழுதியுள்ளார். அ. செ. முருகானந்தன் 1940-ல் ‘பூரீராமானுஜம் என்ற சிறுகதையுடன் ஈழகேசரியில் எழுதத் தொடங்கி 1957-ல் ‘பரிசு பெற்ற கதை’ என்ற சிறுகதையுடன் நிறைவு பெறுகிறார். வ. அ. இராசரெத்தினம் 1950-ல் இதயதாபம் என்ற சிறுகதையுடன் ஈழகேசரியில் எழுத ஆரம்பித்து 1957 வரை இருபத்தெட்டுச் சிறுகதைகளைத் தந்துள்ளார். ஈழகேசரித் தளத்தைத் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டவர் இவராவர். ஈழகேசரிச் சிறுகதைப் பகுதியை 1953, 1954 ஆகிய காலகட்டத்தில் ஆக்ரமித்தவர் புதுமைலோலன் ஆவார். இந்த இரு ஆண்டுகளில் அன்னாரின் பதினைந்து சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. 1953-ல் ‘புத்தன் பரிசு என்ற சிறுகதையுடன் ஆரம்பித்த புதுமைலோலனின் ஈழகேசரிப் பிரவேசம், 1954-ல் ‘கெளதமி’ என்ற சிறுகதையுடன் நிறைவு பெறுகின்றது. 1955, 1957 காலகட்டத்தில் ஈழகேசரியைத் தக்கவாறு கே. டானியல் பயன்படத்திக் கொண்டார். இக்காலகட்டத்தில் அவரின் பத்தொன்பது சிறுகதைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன.
5.17 ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் அதிகம் பேசப்படுபவர்கள் சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், இராஜ. அரியரத்தினம், வரதர், கனக செந்திநாதன், சொக்கன், சு. வே. வ. அ. இராசரெத்தினம் என்பவர்களாவர். முதலிரு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்களுடன் நிச்சயமாக ஆனந்தன், சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர். 1939 இலேயே மிக முற்போக்கான சிந்தனையோடு சாதியப் பிரச்சினையின் ஒரு பக்கத்தினை நன்கு படம் பிடித்துக் காட்டியவர். அவரின் ‘தண்ணீர்த் தாகம் என்ற சிறுகதை இத்தொகுதியின் முதலாவது சிறுகதையாக அமைந்துள்ளது. நான் நினைக்கின்றேன் இந்த மண்ணின் பிரச்சினையை மண்வாசனையோடு சிறுகதையின் சரியான வடிவத்தில் முதன் முதல் எழுதியவர் ஆனந்தன் என. ஈழகேசரியில் அவர் எழுதிய 'ஹரிஜனங்களின் கண்ணிர்’, ‘நான் அசுரனா? நீங்கள் அசுரரா? என்ற படைப்புக்கள் சிறுகதை வடிவத்தினை மீறியிருந்தாலும் அவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் சமூகச் செய்தி ஆனந்தனின் புரட்சிச் சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது.
6, ஈழகேசரியில் குறிப்பிடத்தக்க சிறுகதைகள்
ஈழகேசரியில் ஐந்நூறிற்கு மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ள போதிலும் ஐம்பத்தினான்கு சிறுகதைகள் பின்வரும் குறிகாட்டிகளின் அடிப்படையில் என்னால் விதந்துரைக்கப் படுகின்றன.
6.1 உருவம், உள்ளடக்கம், உத்தி, பாத்திரவார்ப்பு, கலையழகு
7

Page 15
முதலான அம்சங்களில் மேம்பட்டு நிற்கும் சிறுகதைகளாக ஆனந்தனின் தண்ணிர்த் தாகம், அ. செ. முருகானந்தனின் வண்டிற் சவாரி, கனக செந்திநாதனின் ஒருபிடி சோறு, இலங்கையர் கோனின் வெள்ளிப்பாதசரம், வ. அ. இராசரெத்தினத்தின் கற்சிலை, இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் ஆகிய ஏழு சிறுகதைகள் மிக உன்னதமான சிறுகதைகளாக விளங்குகின்றன. (ஆனந்தன் என்ற புனைப் பெயரில் ஈழகேசரியில் ஒன்பது சிறுகதைகள் எழுதிய க. சச்சிதானந்தன் சிறுகதையுலகில் அதிகம் கவனிக்கப் படாமலுள்ளார். சச்சிதானந்தன் ஒரு முதுகலைமாணி, பண்டிதர், ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் மிக்க பான2த்தியம் உடையவர். கவிஞர் அண்மையில் கூட, இவரின் யாழ்பபாணக் காவியம் என்ற நூல் வெளிவந்துள்ளது)
6.2 உருவத்தில் சிறு கதைக்குரிய அம்சத்துடன் வலுவான சமூகச் செய்தியைக் கருவாகக் கொண்ட நல்ல சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. சமூக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சிறு கதைகளாகவும், வாழ்க்கையில் பற்றுதலை, பிடிமானத்தை ஏற்படுத்தும் சிறுகதைகளாகவும், இவை விளங்குகின்றன. மனிதமிருகம் (சு. வே.), புஞ்சிமெனிக்கா (செ. நடராசா), கொள்ளிவாய்ப் பேய்கள் (துரை), சவுக்குமரத்து முனி (சுயா), வாழ்வளித்த விலங்கு (இ. நாகராஜன்), என்பன இவ்வகையான சிறுகதைகளாம்.
6.3 சிறந்த உள்ளடக்கத்தோடு சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிரா கக் குரல் தரும் சிறுகதைகள் பல ஈழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. வர்க்கியம், சாதியம், பெண்ணியம் சார்ந்த பிரச்சனைகளை யதார்த்தமாகவும் தெளிவாகவும் இச்சிறுகதைகள் அணுகுகின்றன. விபச்சாரி (வரதர்), செல்லி (ந. பாலசுப்பிரமணியம்), பாற் காவடி (சு.வே.), தெளிவு (சில வரம்புலி), இதயத்துடிப்பு (இராஜநாயகன்), இலட்சியத் தொகுப்பு (என். கே. ரகுநாதன்). வானம் வெளுத்தது (கே. டானியல்) என்பன் இவ்வகைச் சிறுகதைகளாம்.
6.4 படித்து முடிந்ததும் மனதில் நெகிழ்ச்சியான ஓர் உணர்ச்சியை எஞ்சி நிற்க வைக் கும் சிறுகதைகள் பல ஈழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. அவ்வகையில் எதிர்பாராதது (பாரதி), கலியானமும் கலாநிதியும் (வரன்), மறுபிறப்பு (சொக்கன்), வேலை நிறுத்தம் (ராதாகிருஷ்ணன்), துள்ளிய உள்ளம் (ச. குமாரசுவாமி), பொன்னர் செத்த கதை (சோ. சிவபாதசுந்தரம்), ஏழையின் கொடை (மயில்வாகனன்), மன்னிப்பு (தியாகராஜன்), சிதைந்த வாக்கு (நடனம்), அறுவடை (வ. இராசரெத்தினம்), விடிவு (எஸ். கே.), கடற் கரைக்கிளிஞ்சல் (இலங்கையர்கோன்), ஆசைமுகம் (தியாகராஜன்), அமர உறவு (பரணி), பத்மா (புதுமைலோலன்), மாமி (நாவற்குழியூர்
- 18

நடராஜன்), நழுவியபழம் (இ. அம்பிகைபாகன்), நிலவில் நடந்தது (எஸ். பொண்ணுத்துரை), செய்ந்நன்றி (கசின்), முதலியன அவ்வகையான சிறுகதைகளாம்.
6.5 கடந்த தலைமுறைக்காலத்து வாழ்வையும் கலாச்சாரத்தையும் உயிர்ப்போடு பதிவு செய்திருக்கும் சிறுகதைகளாக ஏற்கெனவே குறித்துள்ள சிறுகதைகள் விளங்குகின்றன. இவை அனைத்தும் அவ்வாறான சமூகப் பதிவுகளாகவும், அம்மண்ணின் பகைப்புலப் பதிவுகளாகவும் விளங்குகின்றன. அவற்றினோடு அழகு சுப்பிரமணியத்தின் சேதுப்பாட்டி, பவனின் ஆசைச்சட்டம்பியார் ஆகிய இரு ஈழகேசரிச் சிறுகதைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இவை அனைத்தும் இந்த மண்ணில் கால் பதியாது கற்பனா லோகத்தில் சஞ்சரிக்கவில்லை என்பது இவற்றின் பலமாகும்.
6.6 கம்பீரமானதும் சுவை பயப்பதுமான உரைநடையையும் ஆத்ம விசாரணையில் தோய்ந்து நிற்பதுமான சில சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. கலாஷேத்திரம் (சம்பந்தனி ), மாயை (அருட்செல்வன்), கெளதமி (புதுமைலோலன்), நெடுவழி (சி. வைத்தியலிங்கம்), ஆகியவை அவ்வாறானவையாம்.
6.7 இன்று ஈழத்தின் சிறுகதை எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் கதைகள் சில ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. குருட்டு வாழ்க்கை (அ. ந. கந்தசாமி), போலிக்கெளரவம் (குறமகள்), தேர்தல் விழா (டொமினிக் ஜிவா ), பழக்கமில்லை (சிற்பி) ஆகியவை நமது இன்றைய எழுத்தளர்களின் அக்காலச் சிறுகதைகளாம்.
7. ஈழகேசரிச் சிறுகதைகளின் இலக்கியப் பங்களிப்பு
நமது பழம்பெரும் இலக்கியப் பாரம்பரியங்களைப் பேணி, புதுமை இலக்கியத்தினை வளர்த்தெடுப்பதில் ஈழகேசரி தனது பணியை நன்கு நிறைவேற்றியுள்ளது. ஈழகேசரியின் மகுடவாசகம் முதலில் எவ்வுயிர்க்கும் அன்பாகவிரு’ என்பதாக விளங்கியது. 1940-களில் ஈழகேசரியின் மகுடவாசகம் ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதாக மாறியது. மகுட வாசகத்தின் மாற்றத்திற்கேற்ப ஈழகேசரியில் வெளிவந்த நவீன இலக்கிய வடிவங்களும் தம்பொருளாக அவற்றினைப் பிரதிபலித்தன. 1939-ல் ஆனந்தனின் தண்ணிர்த் தாகம் என்ற கதையிலிருந்து 1958-ல் கே. டானியல் எழுதிய வானம். வெளுத்தது சிறுகதை வரை இவ்வாறான போக்கினைக் காணலாம். சமூக அநீதிகளுக்கெதிராக ஈழகேசரிச் சிறுகதைகள் குரல் தந்தன. இத்தொகுதியின் முதற் கதையாக அமைந்த தண்ணிர்த் தாகத்திற்கும்
19

Page 16
இறுதிக் கதையான வனம் வெளுத்ததற்குமிடையில் கருப்பொருளில் ஓர் ஒற்றுமையைக் காணலாம். இத்தொகுப்பில் இது தற்செயலாக அமைந்த இணக்கப் பாடாகும். முதல் சிறுகதையில் 1939-ல் வைக்கப் பட்ட சாதியத்திற்கெதிரான கருத்துநெறி, இறுதிக் கதையான வானம் வெளுத்தது 1958-ல் வெளிவரும் வரை மாறவில்லை என்பதை இக்கதைகள் நிரூபிக்கின்றன. அடக்கியொடுக்கப் பட்ட மக்களின் துயரங்களுக்கு விடிவு கிட்டவில்லையென்பதை இச்சிறுகதைகளின் கால இடைவெளி நிரூபிக்கின்றது.
ஈழகேசரிப் பண்ணையில் ஒன்று சேர்ந்த எழுத்தாளர்களுக்குப் புத்திலக்கியம் பற்றிய தெரிவும் நவீன இலக்கியவகைகளும் தெரிந்திருந்தன. அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து 1942 களில், மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியதன் மூலம் இலக்கியம் பற்றிய பொதுக் கருத்திற்கு அவர்கள் வந்துள்ளனர் எனக் கொள்ளலாம். அவர்களது எழுத்துக்களைப் பார்க்கும் போது அவர்கள் இலக்கியத்தை ஒரு சமூகச் சக்தியாகக் கருதிச் செயற்பட்டிருக்கின்றனர். சாதியக் கொடுமைக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கெதிராகவும் அவர்கள் தம் எழுத்துக் களில் போர்க் குரல் தந்துள்ளனர். அவர்களது படைப்புக்களில் ஜனரஞ்சகத்தன்மை கூடுதலாகவிருந்தாலும் அவர்களில் எத்தனை படைப் புக் கள் தேறின எனப் பார்க்கும் போது கவலையுண்டாகிறது. இலக்கியமென்பதன் சித்தாந்தங்களையும், எழுத்துப் பட்டறைகளையும் வழிகாட்டிகளாகக் கொண்ட காலகட்டத்தில், அதாவது 1953-இன் பின்னர் ஈழத்தின் உன்னதமான சிறுகதைகள் எத்தனை மலர்ந்துள்ளன எனப் பார்க்க வேண்டும். ஈழத்துத் தமிழிலக்கியம் ஈழத்தின் மண்வாசனையைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஈழகேசபிப் பண்னை எழுத்தாளர்களுக்குத் திடமான தெளிவிருந்துள்ளது. 1954 - களில் மண்வாசனை புனைகதைகளில் ஒரு முக்கிய அம்சமாக வலியுறுத்தப் படுவதற்கு முன்னரே அவர்களின் எழுத்துக்களில் மணி வாசனையும் , யதார் தி தப் பணி புகளும் விர வி வந்திருக்கின்றனவென்பதற்கு நான் விதந்துரைக்கும் ஐம்பத்து நான்கு இச்சிறுகதைகளும் சான்றாகின்றன. விமர்சகர்கள் பொதுவாகக் கூறுவதுபோல, அவர்கள் கற்பனை ரதத்தில் பயணம் செய்து தமக்குப் பரிச்சயமில்லாத மெரினாக் கடற் கரைகளைத் தம்படைப்புக்களில் சித்திரிக்க வில்லை. தாம் வாழ்ந்த பிரதேசத்தினைக் களமாகவும் தம்மைச் சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொருளாகவும் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர்.
காலகட்டத்தினை மனதிற் கொண்டு ஈழகேசரிச் சிறுகதைகளைக்
கணிக்கும் போது தரமான தமிழ்ச் சிறுகதைகளுக்கு நிகரான நல்ல சிறுகதைகள், தரமான சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன.
20
Her

அந்தத் தரமான சிறுகதைகளை மிஞ்சிய ஒரு பாய்ச்சலைக் கொண்ட சிறுகதைகள் ஈழகேசரிக் காலத்திற்குப் பின்னர் ஈழத்தில் எதிர்பார்த்தளவு வெளிவந்துள்ளனவென்று கூறுவது முற்றிலும் சரியான கணிப்பீடன்று. புனைகதைகளைப் பற்றி ஈழகேசரிப் பண்ணை எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் விளக்கத்திற்கு அப்பால் இன்று ஈழத்தில் பிரபல்யமான எழுத்தாளர்கள் எவ்வித மாற்றத்தையும் செய்துவிடவில்லை. ஈழத்தின் உன்னதமான தமிழ்ச் சிறுகதைகள் பதினைந்தினைத் தேர்ந்தெடுக்கில் நிச்சயமாக அதில் ஏழு சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்தனவாகவே அமையும். தண்ணிர்த்தாகம் (ஆனந்தன்), வண்டிச்சவாரி (அ. செ. மு.), ஒருபிடி சோறு (கனகசெந்திநாதன்), வெள்ளிப்பாதசரம் (இலங்கையர் கோன்), தோணி (வ. அ. இராசரெத்தினம்), ஆகியவை அந்த ஏழு சிறுகதைகளாம். இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார்’ என்ற சிறுகதையின் தலைப்பு. பின்னர் அவரால், வெள்ளம் என மாற்றப் பட்டு சிற்பி வெளியிட்ட ஈழத்துச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம் பிடித்தது.
ஆனந்தனின் தண்ணிர்த் தாகம் சாதிய அடக்கு முறை அவலத்தையும் மானிட நேயத்தையும் சித்திரிக்கின்றது. அ. செ. மு.வின் வண்டிச் சவாரி யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறையையும் , புகழ்ச்சிக்காகவும், போட்டிக்காகவும் சொத்துக்களையும் இழக்கும் அவலத்தையும் காட்டுகின்றது. செல்வச்சந்நிதியின் பகைப்புலத்தில் ஒரு பிடி சோற்றிற்காகப் பரதவிக்கும் வறிய மக்களையும் அவர்களை அவமதிக்கும் வசதி படைத்த மக்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. கனகசெந்திநாதனின் ஒருபிடி சோறு, இலங்கையர் கோனின் வெள்ளிப் பாதசரமும், வ. அ. இராசரெத்தினத்தின் தோணியும் கலாபூர்வமான சிருட்டிகள். முன்னது வல்லிபுரக் கோயில் பின்னணியில் காதலையும் உடலையும் மானுட ஆழ்மனதைத் தொடும்படியாகச் சித்தரிக்க, பின்னது மீனவத் தொழிலாளி ஒருவனின் தோணி ஒன்றைச் சொந்தமாகப் பெறும் கனவினை விபரிக்கின்றது. நவாலியூர் சோ. நடராஜனின் கற்சிலை ஒரு கவித்துவப் படைப்பாகும். இராஜ அரியரத்தினத்தின் வெள்ளம் சொல்லப் பட்ட விதத்தால் கலாபூர்வ வெளிப்பாடாக அமைந்துவிட்டது. இச் சிறுகதைகளில் பாசாங்கற்ற சகாயமான மொழி கையாளப் பட்டிருக்கின்றது. சமூக முரண்பாடுகளையும் சமூக அவலங்களையும் அனுபவ ரீதியாக இந்த ஆசிரியர்கள் சித்தரித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக இச்சிறுகதைகளிலிருந்து அவற்றின் படைப்பனுபவத்தினை நாம் தரிசிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இச் சிறுகதைகளைப் படிக்கும்போது நாம் வெறும் வாசகநிலையிலில்லாமல், அக்கதா மாந்தரோடும், களத்தோடும்கலந்து, கதாசிரியரின் படைப்பனுபவத்தின்
பங்களிகளாக மாறிவிடுகின்றோம்.
لمقط=

Page 17
சI 1ை1 வின் " நாட்டியப் பெண் , 1941 கால கட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. இந்தியாவிலிருந்து அக்காலகட்டத்தில் நடனமாட அழைத்துவரப்பட்ட மங்கையிடம் மனதைப் பறிகொடுத்துத் தவிக்கும் ஒரு அப்பாவியின் பாத்திர வார்ப்பு நன்குள்ளது. நல்லதொரு சிறுகதையின் உருவம் ஏற்றவாறு அமைய வேண்டுமென்பதற்குத் தக்க உதாரணமாகும் சிறுகதை இதுவாகும். பரிதி என்பவரின் எதிர்பாராதது சிறந்த உத்தி முறைக்கான உதாரணச் சிறுகதையாகும். வரன் (வரதர்) எழுதியிருக்கும் கல்யாணமும் கலாநிதியும் என்ற சிறுகதை யாழ்ப்பாணக் குடும்பத்தில் அற்ப காரணத்திற்காக வாக்கு வாதப்பட்டுப் பிரிந்துவிடும் மச்சான்மார் பின்னர் சடங்கொன்றில் ஒன்று சேர்ந்து உறவாடும் இயல்பு நிலையைச் சித்திரிக்கின்றது. ஆற்றொழுக்கான நடை.
பிரிந்து செல்லும் கணவன் இறந்து விட்டான் என்ற நிலையில் பிறிதொருவனுடன் வாழ்வை நடாத்தும் பெண்ணையும், பின்னர் இறந்து விட்டதாக எண்ணப்பட்ட கணவன் திரும்பிவரும் பொழுது ஏற்படும் சிக்கலையும் கருப்பொருளாகக் கொண்டு பலர் படைப்புக்களைத் தந்துள்ளனர். மாப்பாசானின் கருப்பொருள் இது. சி. வைத்தியலிங்கத்தின் நெடுவழி, பொ. பாலசிங்கத்தின் மன்னிப்பு ஆகிய சிறுகதைகள் இத்தகையன, வெவவேறு பகைபபுலங்களில் இறுக்கருப் பொருளை வைத்து இச்சிறு கதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. மஹாகவி ருத்திரமூர்த்தி கூட இவ்வாறான கருப்பொருளை வைத்துக் கவிதை நாடகம் ஒன்றினைப் படைத்திருக்கிறார். தன்வயித்துக்கு ரெண்டு பணம் சம்பாதிக்கத் தெரியாத மாப்பிள்ளைக்கு வீட்டில் என்ன வேலை? என்று கேட்ட மனைவியின் சுடுசொல்லால் வீட்டைவிட்டுக் காணாமல் போகிறான் நெடுவழியில் கணவன். டேவிட் சிங்கோவுடன் மனைவி வாழும்போது திரும்பி வருகிறான். மலாயாவுக்குத் தொழில் தேடிச் சென்ற கணவன் கப்பலில் திரும்பும்போது (அது யுத்தகாலம்) கப்பல் குண்டு வீச்சிற்குள்ளாகின்றது. அதை நம்பிய அவள் அவனுடைய நண்பனுடன் வாழத் தொடங்குகிறாள். கணவன் திரும்பி வருகிறான், மன்னிப்புச் சிறுகதையில். நெடுவழியின் கம்பிரமான உரைநடைக்காகவும், மன்னிப்பின் ஆவணமாகும், தகவலுக்காகவும் இச்சிறுகதைகள் வாசிக்கப் uL(56).j606igubo)6).
முற்போக்கு அணியின் மூத்தவரான அ. ந. கந்தசாமி எழுதிய குருட்டு வாழ்க்கை அவர் எழுதிய முதற் சிறுகதையாகும். அது ஈழகேசரியில் வெளிவந்தது. குருட்டு நிலையில் தான் மணந்த பெண், தன்னால் காதலிக்கப் பட்டவள் என நம்பி வாழும் ஒருவனுக்குக் கண் திரும்பியதும் தான் மணந்த பெண் வேறொருத்தி எனத் தெரிய வந்தபோது தன் கண்களை மிண்டும் குருடாக்கிக் கொள்கிறான். அவளை நேசிப்பதற்கு அதுதான் தக்க உபாயமென அவன் கருதுகிறான்.
22

நல்லதொரு சினிமாப் பாணிக்கதை. படித்து முடித்ததும் உள்ளத்தில் வலி ஏற்படுகிறது. அ.ந.கந்தசாமியை ஈழகேசரிப் பண்ணைக்குரியவராகவும், மறு மலர்ச்சி எழுத்தாளராகவும் விமர்சகர்கள் சிலர் இனங் காண்கன்றனர். மறுமலர்ச்சியில் ஒரு கடிதத்தைத் தவிர அவர் வேறெதுவும் எழுதவில்லை. இந்த நிலையில் இக் கருத்து எள்ளளவும் பொருத்தமானதன்று.
வரதரின் விபச்சாரி என்ற சிறுகதையில் முற்போக்கான எண்ணங்கொண்ட ஓர் இளைஞன் அவளுக்கு வாழ்வளிக்க முன் வருகிறான். அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மரபு மீறிய சிந்தனையின் தடம் இச் சிறுகதையில் பதியப்பட்டிருக்கின்றது. சு. வேலுப்பிள்ளையின் இரண்டு சிறுகதைகள் இத்தொகுயில் இடம் பிடிக்கின்றன. ஒன்று மனித மிருகம். மற்றையது பாற் காவடி, கோயில்களில் பலியிடுதலுக்கு எதிரான குரலை 1944 களில் சு. வே. தந்துள்ளார். மனிதமிருகம் என்ற சிறுகதையில் பாற் காவடி விதந்துரைக்கத் தக்க ஒரு சிறுகதையாகும். ஆண்டவனுக்கு ஆடம்பரமாகக் காவடியெடுக்கும் ஒரு பணக்காரக் குடும்பத்தையும், பாற்காவடி எடுக்கும் ஒரு ஏழைப் பெண்ணையும் ஒப்பிட்டு சமூக ஏற்றத்தாழ்வின் இழிவு நிலையை நன்கு சித்திரிக்கிறார். வாழ்வின் நேரடிக்காட்சிப் பதிவுகளாக இச்சிறுகதை விளங்குகின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியக் கொடுமையைக் கருப் பொருளாகக் கொண்ட சிறுகதைகளாக ஏற்கெனவே விதந்துரைத்த ஆனந்தனின் தண்ணீர்த் தாகம், ந. பாலசுப்பிரமணியத்தின் செல்லி, என். கே. ரகுநாதனின் இலட்சிய நெருப்பு, டொமினிக் ஜீவாவின் தேர்தல் விழா, கே. டானியலின் வானம் வெளுத்தது ஆகிய சிறுகதைகள் விளங்குகின்றன. பாலசுப்ரமணியத்தின் செல்லி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த படைப்பாகும். ஒரு சமூக மாற்றத்தை எளிதாகச் சித்திரிக்கின்றது. என். கே. ரகுநாதனின் இலட்சிய நெருப்பு என்ற சிறுகதை, சி. வைத்தியலிங்கத்தின் உள்ளப் பெருக்கு என்ற சிறுகதைக்கு எதிர்க் கருத்தாக எழுதப்பட்டது. அடக்கப்பட்ட மக்கள் தம் வாக்குகளை தேர்தலில் சரியாகப் பயன் படுத்தி, சாராயப் போத்தலுக்கும் காசுக்கும் வாக்குகளை விலைபேசியவர்களை மண் கவ்வ வைக்கிறார்கள் என்பதை டொமினிக் ஜீவாவின் தேர்தல் விழா சித்திரிக்கின்றது. இப்படி வாழ்கின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டுமென்று கரிசனை பார்வை இச்சிறுகதையிலிருக்கின்றது. மனித உணர்வையும் மேவி நிற்கின்ற சாதித் தடிப்பினைக் கே. டானியலின் வானம் வெளுத்தது விபரிக்கின்றது. உண்மையில் அச்சிறுகதையில் வானம் வெளுக்கவில்லை. அச்சிறுகதையின் உச்சம், மிண்டும் இருண்டு விடுகின்றது.
فقسطسط=

Page 18
ஈழகேசரியில் சிங்கள, தமிழ் காதலினைச் சித்திரிக்கின்ற சிறுகதைகளாக செ. நடராசாவின் புஞ்சிமெனிக்கா, எஸ். கே.யின் விடிவு, ஆகிய சிறுகதைகள் விளங்குகின்றன. புஞ்சி மெனிக்காவில் காதல் நிறை வேறாததால் சிங்களப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். விடிவில், தமிழர் சிங்களவர் என்ற பேதம் ஒழிய வேண்டுமென்றால் கலப்பு மணம் சட்டப்படி கட்டாயமாக்கப் படவேண்டும் என்கிறான், 1947-ம் ஆண்டுக் கதாநாயகன். இவ்வாறான சிந்தனைப் போக்கு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பலரால் பேசப்பட்டது
மாத்திரம ல ல, இலக கரிய கி கருப் பொருளாகப் LJ 6) புனைகதையாசிரியர்களால் எடுத்தாழப் பட்டு 'முள்ளது. கலங்கிய குட்டையாக மாறிவிட்ட இன்றைய இலங்கையில் சிங்கள - தமிழ்
ஐக்கியத்திற்கு ஆட்சி அதிகாரக் கதிரைக்கான அரசியல் போட்டி நிலவும் வரை தெளிவதற்கு வாய்ப்பில்லை. நல்லுறவுக் கயிறு பலவிடங்களில் அறுந்து போய் முடிச்சுக்களைக் கொண்டிருக்கிறது.
பவன் என்பவர் எழுதியுள்ள ஆசைச் சட்டம்பியார், சிலவரம்புலி எழுதியுள்ள தெளிவு, அழகு சுப்பிரமணியத்தின் சேதுப் பாட்டி, தியாகராஜனின் ஆசைமுகம், எஸ். பொன்னுத்துரையின் நிலவில் நடந்தது ஆகிய சிறுகதைகள் வாழ வின் நேரடி அனுபவப்பதிவுகளாக விளங்குகின்றன. ஆசைச் சட்டம்பியார் ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண ஆங்கில மேல்மட்ட சமூகத்தின் வாழ்வுப் பின்னணியும் கல்வி முறையையும் நன்கு சித்திரிக்கின்றது. சில்வரம்புலியின் தெளிவு ஒரு வித்தியாசமான எதிர்வு கூறல் கதை. ஆலயப் பிரவேசத்தினை மையக் கருவாகக் கொண்டாலும் அக்காலச் சமூகத்தின் பல்வேறு தகவல்களைக் கலை அழகோடு ஆவணப்படுத்துகின்றது. சேதுப்பாட்டி, ஆசைமுகம் ஆகிய இரண்டும் மானுட நேயத்தின் சிறப்பினை எடுத்து விபரிக்கின்றன. ஆசைமுகத்தில் ஆசிரிய - மாணவி உறவின் உளவியற்றன்மைகளைத் தியாகராஜன் கத்தியில் நடப்பது போல வெகு நளினமாகவும், பிசிறின்றியும், சித்திரிக்கின்றார். எஸ். பொ. வின் நிலவில் நடந்தது கிழக்கிலங்கைப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. ஒழுக்கப் பாரம்பரியத்தினைப் பேணுகின்றது.
மயில்வாகனனின் ஏழையின் கொடை, நடனத்தின் சிதைந்த வாக்கு, தியாகராஜனின் நல்லமாமி, புதுமைலோலனின் பத்மா, சொக்கனின் மறுபிறப்பு ஆகிய சிறுகதைகளைப் படித்து முடிந்ததும் மனதில் ஏற்படுகின்ற உயர்ச்சி தவிர்க்க முடியாது. இவை எதிர்பாராத திடீர் முடிவினைக் கொண்ட சிறுகதைகளல்ல. மனிதனை அப்படியே சில கனங்கள் நெகிழவைக்கும் இயல்பினை ஏற்படுத்தும் பாங்கானவை. அறிவியலுக்கு ஒவ்வாத பேய், பிசாசு, முனி மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் சிறுகதைகளாகத் துரையின் கொள்ளிவாய்ப் பேய்களும்,
24

சுயாவின் சவுக்கு மரத்து முனியும் அமைகின்றன. அவை வெளியான காலகட்டத்தின் மூடநம்பிக்கைக்கு இவை ஆப்பாகின்றன. சொக்கனின் கனவுக் கோயிலும், புதுமைலோலனின் கெளதமியும் கற்பனாவாதச் சிறுகதைகளாகும். கெளதமியில் வித்தியாசமான நடைப்பாங்குள்ளது.
எனவே ஈழகேசரிச் சிறுகதைகள் நமது ஒரு காலகட்டத்து இலக்கிய இருப்பினை அறிய உதவுகின்றன. நமது இருப்பு ஆரோக்கியமானதாகும். ஆனால், ஈழகேசரிக்குப் பின்னர், இன்னும் செழுமையான சிறுகதைகள் நிறைய வெளிவந்திருக்க வேண்டும். அரைத்த மாவை அரைப்பது போல புதிய பொருள், புதிய சொல், புதியவடிவம் இன்றி நிறையச் சிறுகதைகள் இங்கு வெளிவருகின்றன. சிறுகதை பற்றி நமது முன்னோர் கொண்டிருந்த விளக்கத்திற்கு அப்பால் நாங்கள் அதிக மாற்றங்களைச் செய்து கொள்ளவில்லை. போர்ச் சூழலில் நித்தம் அவலங்களைச் சந்தித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்திற்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும், எவ்வாறான சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தத்துவப் புரிதலையும் சுட்டிக் காட்டத் தக்க சிறுகதைகள் தேவைப் படுகின்றன. மானுடப் போராட்டம் இந்த மண்ணில் வாழ்ந்து முடிப்பதற்காகவும் மனித ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரானதாகவும் நிகழ வேண்டும். பேரினவாதம், வகுப்புவாதம், சாதியக் கொடுமை, வர்க்கச் சுரண்டல், பாலியல் ஏற்றத்தாழ்வு, அரசியல் அயோக்கியத் தனம், பிரபஞ்சமளாவிய சூழற் பாதிப்புப் போன்ற பல்வேறு அநியாயங்களுக்கும் எதிராகச் சிறுகதைகள் குரல்தர வேண்டிய காலமிது. இலக்கியம் மனித சமூகத்தினைச் சென்றடையும் ஒரு ஊடகம் எனில் இவ்வாறான சமூகச் செய்திகள் விரவி வர வேண்டும். கலைக் காகவும் பொழுது போக்கிற்காகவும் சிறுகதை படைக்கின்ற காலச் சூழலை நாம் கடந்து இந்த மண்ணில் ஏற்றத் தாழ்வற்ற சகல சுதந்திரங்களையும் அனுபவிக்கும் மானிட இருப்பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைகதைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பிரபஞ்ச முன்னேற்றத்திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணைந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்த தத்துவப் புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் கொண்டிருக்கின்றது. அதற்கும் அப்பால், புதிய ஒழுக்கப் பாரம் பரியத்துடனும், தடையிலாச் சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் மனிதகுலம் வாழப் புதிய வழிமுறைகளுக்கான தத்துவச் சிந்தனைகள் நமக்குத் தேவைப் படுகின்றன.
25

Page 19
மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து வெளியான முதற் சஞ்சிகையான பாரதி ஓர் அறிமுகம்.
Cf. (éuIIbJIJI
ழத்துச் சஞ்சிகைகள் பற்றிய தேடல் மிகுந்தவர், நாற்பதுகளின் பிற்கூற்றில் (கொழும்பிலிருந்து) வெளியான (1946) ஈழத்தில் முதல் முற் போக் குச் சஞ்சிகையான ‘பாரதி பற்றி நன்கறிந்திருப்பர். எனினும், அதே காலப் பகுதியில் மண்டுரிலிருந்து (மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள புகழ்மிகு கிராமம்) வெளிவந்த பாரதி சஞ்சிகை பற்றி அறிந்தோர் மிகச் சிலரேயாகும். இப்பாரதி பற்றிச் சுருக்கமாக அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாரதி சஞ்சிகை ஏறத்தாழ பத்து இதழ்களுக்கு மேல் வெளிவந்துள்ளதாகத் தெரிகின்றது. முதல் இதழ் 1949-ல் பிரசுரமாயிருக்க வேண்டும். ‘தேசிய மாத இதழ் ஆக வெளிவந்த பாரதி சஞ்சிகையின் பதிப்பாசிரியர் ம. நாகலிங்கம். நிர்வாக ஆசிரியர் க. சபாரெத்தினம். பிரசுரகர்த்தா கு. த. மூர்த்தி. ஒவ்வொரு இதழும் பதுளை, கொழும்பு, கண்டி என வெவ்வேறு இடங்களிலுள்ள பிரஸ்களில் அச்சிடப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. ஓரிதழின் விலை 30 சதம். வருடாந்தச் சந்தா (தபாற் செலவு உட்பட) நான்கு.
குறிப்பிட்ட இலட்சியங்களுக்கு அப்பால் ஆர்வம் காரணமாகவே
26

பாரதி சஞ்சிகை வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலுங் கூட, (நேரடித் தகவல்) ஆழமானதொரு சமூக நோக்கு பாரதிக்கு இருந்துள்ளமையை சஞ்சிகையின் மகுட வாசகத்தின் மூலம் அறியமுடிகின்றது. 'சாதிச் சண்டை போச்சோ உங்கள் சமயச் சண்டை போச்சோ' என்ற பாரதியின் பாடலடிகளே அம்மகுட வாசகமாகிறது. சமகால உலக, இலங்கைச் செய்திகள், இலங்கையின் சமூக, அரசியல் பிரச்சனைகள் என்பன ஆசிரியர் பக்கங்களுடாகவும் அவ்வப்போது படைப்புக்களுடாகவும் வெளியிடப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகிறது.
ஆசிரியர் பக்கங்களில் இடம் பெற்றுள்ளனவற்றுள் குறிப்பிடத் தக்கதாகத் தொடுவிடயம், மதுபானப் பாவனை அவ்வேளை முதன்மை பெற்றிருந்தமையும், மது ஒழிப்புக்கான பிரசாரங்களும் பற்றியது. இத்தகைய சமயப் பிரச்சினைகளை விட முக்கியமான மூன்று அரசியற் பிரச்சினைகளையும் இனங்காண முடிகிறது.
மேற்கூறியவற்றுள் ஒன்று, மலையக மக்களது பிரஜாவுரிமை பற்றியது. இவ்விடயம் உணர்ச்சி மீதுர எழுதப்பட்டுள்ளது.
மற்றொன்று, சமஷ்டி அரசியல் பற்றியது. பாரதி சஞ்சிகை தோன்றிய வருடத்திலேயே சமஷ்டிக் கட்சி (தமிழரசுக் கட்சி)யும் உதயமானது. இத்தகைய சூழ்நிலையில் இதிலிடம் பெறும் பின்வரும் செய்திக் குறிப்பு முக்கியமானது. சர்க்கார் கட்சியார் தமிழ்ச் சாகியத்தாரின் விடாப்பிடியான வேண்டு கோட்கியைந்து கிள்ளி வைக்கும் எச்சில் உணவை நம்பி ஏமாந்து போகக் கூடாது. இந்தியச் சகோதரர் இன்று மண்டையில் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கு அந்த அடி எமது மண்டையிலும் தான். எனவே நாம் கைகட்டிக் கொண்டிருக்கச் சமயமில்லை. போரிடுவோம் வாருங்கள் என்று அறை கூவுகின்றனர். தோழர்கள் செல்வநாயகம் M P. வன்னியசிங்கம் M P, Dr. நாகநாதன், செனட்டர் அமிர்தலிங்கம், 8. A. சமஷ்டி அரசியல் பற்றிய பொது மக்கள் அபிப்பிராயமாகவும், தமது அபிப்பிராயமாகவும் பாரதி முன்வைக்கும் கருத்துக்களும் சிந்தனைக்குரியவை.
பிறிதொரு விடயம் இலங்கையின் தேசியக் கொடி தொடர்பான சர்ச்சைகள் பற்றியதாக அமைகின்றது. (இன்றைய சுதந்திரப் பொன்விழா சூழலில் இது பற்றிய தேடல்கள் பயனுள்ள சுவையான தகவல்களைத் தரக்கூடும்) w
பாரதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் எப்பொருள் பற்றியன? கலை (எ-டு லலித கலைப் படிப்பு - ஆசிரியர் மு. கணபதிப்பிள்ளை, இவர் சித்திரலேகாவின் தந்தை), இலக்கியம் (தலைவனைத் தொடர்வது தருமந்தானே - மயிலன், கலித்தொகைப் பாடல் நயம்), விஞ்ஞானம் (அணு-கோ. கோணேசப்பிள்ளை), சமூகம் (திண்டாமையின் திருநடனம்
-ത്സ 2

Page 20
- DT செல்வநாயகம்) பெரியார் வாழ்க்கை (செகசிற்பியாரும் அவர் பிறப்பிடமும் லண்டனிலிருந்து சு. வித்தியானந்தன்) முதலாகப் பல்வேறு துறை சார்ந்துள்ள பாரதியார் பற்றிய கட்டுரைகளும் சில விதந்துரைக்கப் பட வேண்டியன. (எ-டு. பண்டிதர் வி. சி. கந்தையா எழுதிய பாரதியின் திறமை என்ன?) இத்தகைய கட்டுரைகள் பல்வேறு அறிஞர்களினால் எழுதப்பட்டுள்ளமை நினைவு கூரத் தக்கது. அன்றைய சூழலில் மிகுந்த சிரமங்களின் மத்தியில் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. (எ-டு. லண்டனிலிருந்து கலாநிதிப் பட்ட ஆய்வு செய்து கொண்டிருந்த சு. வி. யின் கட்டுரை).
மேற்குறித்தவற்றுள் இரு கட்டுரைகள் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம். ஒன்று திண்டாமையின் திருநடனம் என்ற தலைப்பில் D.T.செல்வநாயகம் (பின் அருள் செலவநாயகம்) எழுதியது. இக்கட்டுரையினூடாகச் சமகாலத் திராவிடக் கழகச் சிந்தனைகள் அவ்வேளை இலங்கை எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம் வெளிப்படுகின்றது எனலாம்.
இன்னொரு கட்டுரை நாவற்குழியூர் நடராசனின் ‘பாரதியின் திறமை என்ன? என்பது. பாரதியாரின் கவிதை பற்றி மிக ஆழமாக விமர்சனம் செய்வது இக்கட்டுரை. (குறைகள் பெருமளவு சுட்டப்படுகின்றமை கவனிப்பிற்குரியது) இவ்விதத்தில் யானறிந்த வரையில் இதுவே முன்னோடிக் கட்டுரையாகலாம். எனவே இனிவரும் பாரதியப் பற்றிய கட்டுரைத் தொகுப்புக்களில் இது இடம் பெறுவது அவசியமாகும்.
பாரதியில் வெளியான சிறுகதைகளுள் கணிசமானவை காதல் பற்றியமைந்தவை. வித்தியாசமான உள்ளடக்கம் கொண்டவை எனும் விதத்தில் புதுயுகம் (பாஞ்சாலி), சதிகாரி (எம். எம். சாலிஹற்) ஆகியன குறிப்பிடத் தக்கன. முன்னையது தனக்குச் சம்பள உயர்வு கிட்டியுள்ளதாக தொழிலாளி ஒருவன் மகிழ்ச்சி அடைவதும், முடிவிலே அது கனவென்று அறிந்து கொள்வதும் பற்றியது. மற்றையது ஒரு வயோதிபனுக்கு வாழ்க்கைப் பட்ட இளம் முஸ்லிம் பெண்ணொருத்தி அவனைக் கொலை செய்வது பற்றியது. முதற் குறிப்பிட்ட காதல் கதைகளில் இடம் பெறும் அந்தஸ்து வேறுபாடு காரணமாகப் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றது. இத்தகையவற்றுள் 'மங்கியதோர் வெளிச்சம் பாராட்டத்தக்க சிறுகதை. (எழுதியவர் S. M. ராஜ). கு. பரா.வின் சிறிது வெளிச்சம் என்ற கதையை ஓரளவு ஒத்துள்ளது. இப்படைப்பின் வெற்றி அச்சிறுகதையின் செல்வாக்கு இதில் படிந்தது காரணமாக ஏற்பட்டிருக்கலாமோ தெரியவில்லை.
பொதுவாகப் பாரதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில் இலங்கை மக்களது பிரச்சினைகள் இடம் பெற்றன என்பதற்கில்லை. அக்காலச் சூழலில் அதனை எதிர்பார்ப்பதற்குமில்லை. எனினும் சிறுகதைப்
28

போட்டியொன்றினைப் பாரதி நடாத்தியுள்ளமை அன்றைய சூழலில் முக்கியமானதொரு விடயமாகப் படுகிறது.
சமகால எழுத்தாளர் பற்றிப் பாரதியில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் பக்கக் குறிப்பொன்று இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது. சற்று நீண்டதாயினும் முழுமையாக அக்குறிப்பினை இங்கு எடுத்தாள்வது பொருத்தமுடையது. அது இதுதான்.
“எழுத்தாளன் உலகிற்குச் செய்யும் தொண்டு அளவிடற்கரியது. அதேவேளை சில ஊதாரி எழுத்தாளர்கள் நாட்டுக்குச் செய்யும் தீமைகளையும் எண்ணிப் பார்க்காதிருக்க முடியாது. அவர்களை எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுவதைவிட வேஷதாரி எழுத்தாளன் என்று குறிப்பிடுவது மேலாகும். பக்கத்து வீட்டாருக்கும் தன் வீட்டு அம்மாவிற்கும் இடையில் ஏதும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டதென்றால் நாளைக்குப் பொய்யும், புளுகும் சேர்த்து தட்டுத் தடுமாறி ஏதோ சொல்லுருவங்கட்கு மத்தியில், அடுத்த வீட்டார் பெயர்களையும் புதைத்து ஒரு கதையைச் சிருஷ்டித்து விடுகிறார் அந்த வேஷதாரி எழுத்தாளன். கபடமறியாத பத்திராசிரியரும் பிரசுரித்து விடுகிறார். அந்தக் கதையால் வீணான புரளி ஒன்று உருவாகிறது. வஞ்சத்தைத் தீர்க்க வழியறியாத சில பேடிகள் எழுத்தாளர் உருவம் பூண்டு உண்மையான எழுத்தாளர்களுக்குத் தோஷத்தை உண்டு பண்ணுகின்றனர்.
இப்படிப்பட்ட நபர்கள் உயரப் பறந்து தங்கள் மனத்தைக் காற்றில் துாற்றி, விடுவதைப் பார்க்கிலும் ஏதும் அரபுக் கதைகளை வாசித்துக் கொண்டிருத்தல் நல்லதென நினைக்கின்றோம். ஈழத்தச் சிறுகதை வளர்ச்சிப் போக்கு பற்றிச் சிந்திப்போர்க்கு இது பயனுடைய 6Lud6)6)6.ufl.
பாரதியில் இடம் பெற்றுள்ள கவிதைகள் தமிழ் (மூலக்கானா), தமிழர் கடமை (கோஸ்), ஏழ்மை எழுத்து முயற்சி முதலியன பற்றி அமைகின்றன. ஏழ்மை பற்றிய இதுவா பொங்கல்' (கவி G. M. செல்வராஜ்) குறிப்பிடத் தக்கதொரு முயற்சியாகும். முதல் கவிதை பின்வருமாறு அமைகின்றது.
'ஏழைகளைக் கூப்பிட்டு ஏசிப் பேசி ஏலாத வேலைகளைச் செய்து விட்டு நாளை வா கூலிதர வென்று சொல்லி நாட்டாண்மை காட்டி யெந்நாளும் தங்கள் பேழையிலே நிரப்பிவிட்ட பணத்தைக் கொண்டு பெருமையுடன் ஊரறியப் பொங்கலிட்டு
LSSLSLSLSLS هdس

Page 21
வாழையிலை வெட்டியதில் புக்கை கட்டி வறியவர்க்கு வழங்குவதும் பொங்கலாமோ?
பின்னர், முக்கியமான கவிஞராகிவிட்ட பரமஹம்சதாசனின் பல கவிதைகள் பாரதியில் வெளியாகியுள்ளன. இவ்விடத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயமொன்று உள்ளது. பாரதியில் வசன கவிதை முயற்சியும் இடம் பெற்றுள்ளமையே அதுவாகும். ‘வசன கவிதை' என்ற மகுடமிட்டுக் கற்பனைக் காதலிக்குக் கலைக் கடிதம் என்ற தலைப்பில் எஸ். கே. ராஜ எழுதிய ஆகிதம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
அருமைக் காதலிக்கு
1. தளிர்க்கரங் கொண்டு தங்கத் தாளில்
களிப்புடன் எழுதிய கடிதம் கிடைத்தது" விழிப்புடன் இருந்து மீண்டும் மீண்டும் சலிப்படையாத படித்துப் பார்த்தேன் படித்துப் பயன்என் பதில் வேண்டாமோ கண்ணே மணியே கனியே என்றெழுத எனக்குத் தெரியாது
2. அம்புலி கண்டு அல்லலுற்றேன் என்றாய்
எங்கள் ஊர் சந்திரனுள் நீயே இருக்கின்றாய் நினைக் காண நெருங்கி வந்தேன் என்னைப் பார்க்க மனமில்லாத ஏன் முகிலுள் மறைந்தாய். சமகால ஈழகேசரி, பாரதி (கொழும்பு) என்பவற்றிலே வரதர் அ. ந. கந்தசாமி, சோதி முதலானோரின் வசன கவிதைப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்ததை இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டும். பாரதியார் பற்றிய குறிப்பிடத்தக்க கவிதைகள் எழுதிய சுத்தானந்த பாரதியார், ஏ. சி. அன்புதாசன், பரமஹம்சதாசன், எஸ்.சோமசுந்தரம்பிள்ளை ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள்.
தவிர, பாரதியில் இளைஞர்களுக்காக - இளைஞர் பகுதி, சிறுவர்களுக்கான பாலர் பகுதி, பெண்களுக்கான மங்கையர் மன்றம் என்பன இடம் பெற்றுள்ளன. சிலவேளைகளில் பக்க அளவிற்கேற்ப இவற்றுள் ஓரிரு பகுதிகள் அவ்வப்போது இடம் பெறாது போவதுமுண்டு.
ஒரு சில இதழ்களிலே மொழிபெயர்ப்பு முயற்சிகளும் தலைகாட்டியுள்ளன. கோல்ஸ்மித் என்பாரின் பட்டு வியாபாரி, (கு. த. மூர்த்தி) என்ற நெடுங்கதை இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கதொரு முயற்சியாகின்றது. (எனினும் கட்டுரை எனும் தலைப்பிலே இது வெளியாகியுள்ளதன் காரணம் புரியவில்லை.)
30.

விளம்பரங்களும் பாரதியில் காணப்படுகின்றன. இவற்றுள் ஒரு சில புதுமையானவை. தையற் கலை நிலையம் ஒன்று பற்றிய விளம்பரம், மதிப்புரை என்ற பெயரில் இடம் பெறுகின்றது. அதற்குரியவரான தையற் கலைஞரது நன்றி தெரிவிக்கும் வாழ்த்து ‘ஜெய்ஹிந்த்' என ஆரம்பிக்கின்றது. (
மேலும் சமகாலத்தில் வந்த, முல்லையிலிருந்து வெற்றிமணி என்ற சஞ்சிகையும், சைனாபேயிலிருந்து சேவைமணி என்ற சஞ்சிகையும் (இச் சஞ்சிகையின் அட்டையில் அறிஞர் அண்ணா) மட்டக்களப்பிலிருந்து லங்கா முரசு என்ற சஞ்சிகையும் வெளிவருவது பற்றிப் பாரதியில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் ஈழச் சஞ்சிகைகள் பற்றிய ஆய்வாளரது கவனத்தை வேண்டி நிற்கின்றன.
அன்றைய சூழலில் மண்டுரிலிருந்து பல்வேறு சிரமங்கள் மத்தியில் பாரதி வெளிவந்தமைக்கு முதற்குறிப்பிட்ட ஆசிரியர் குழுவினர் மட்டுமே பொறுப்பானவரல்லர். பண்டிதர் சந்திரசேகரம் (பின்னாள் பேராசிரியர்), கு. பெரியதம்பிப்பிள்ளை (பின்னாள் புலவர்மணி), எஸ். டி. சிவநாயகம், செ. இராசதுரை, இராசமாணிக்கம் (பின்னாள் எம். பி.), எம். எல். பாலு, முதலான பலரது ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் போதியளவு கிடைத்துள்ளமையும், அதற்குக் காரணமென்று அறிய முடிகின்றது. (நேரடித் தகவல்) பாரதி சஞ்சிகை பற்றிய ஆய்வு ஏற்படுத்திய சிக்கலொன்றுண்டு. (இது பழைய ஏனைய சஞ்சிகைகளுக்கும் ஏற்புடையது) சொந்தப் பெயரிலோ, புனை பெயரிலோ எழுதியோருள் பலரை இன்று இனங்காண முடியாதுள்ளமையே அதுவாம்.
ஆயினும் ஏனைய சஞ்சிகைகள் போன்று பாரதியும் நீண்ட ஆயுள் கொண்டிருக்கவில்லை. எனினும் இதற்குப் பொருளாதார நெருக்கடி முக்கிய காரணமென்று கூறமுடியவில்லை. மட்டக்களப்பில் அச்சக வசதியின்மை பாரதி எதிர்கொண்ட முக்கிய பிரச்சனையாகின்றது என்று அறிய முடிகின்றது. தவிர, பாரதி ஆசிரியர் குழாத்தினர் பாடசாலை ஆசிரியராக இருந்தமை காரணமாக அவ்வப்போது இடமாற்றங்களுக்கு முகங் கொடுக்க வேண்டியிருந்தமை அவர்கள் தொடர்ந்து இயங்க பிறிதொரு தடையாகின்றது. (நேரடித் தகவல்)
ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் பாரதிக்குரிய இடம் யாது? அதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளா? கவிதைகளா? ஆசிரியர் பக்கங்களா? அன்றேல் மட்டக்களப்பு பிரதேச சஞ்சிகை வளர்ச்சிக்கு பாரதி ஏற்றதொரு தடம் அமைத்துக் கொடுத்தமையா? பாரதியின் முழு இதழ்களும் கைக்கெட்டும் போதுதான் இவற்றிற்குத் தகுந்த பதில் கிடைக்கலாம்!
31

Page 22
“கலைச் செல்வி’யின் இலக்கியப் பவனி
fibî
நம்பியிருக்க முடியாது. ஈழத்திலேயே புதிய பத்திரிகைகள்
உதயமாக வேண்டும். பத்திரிகைகளை வெளியிடுவதற்கான செலவு இங்கு அதிகம் என்பது உண்மைதான். பாடப் புத்தகங்களைச் சிறந்த முறையிற் குறைந்த செலவில் வெளியிட முடியுமானால், ஏன் பத்திரிகையொன்றை வெளியிட முடியாது? பாடப் புத்தகங்களை வாங்குவோரின் தொகை அதிகம் என்று சிலர் வாதாடலாம். அப்படியானால், பத்திரிகை வாங்குவோரின் தொகையையும், அதிகரிக்கலாமே, தரமான விஷயங்களை நிரந்தரமாக வெளியிடுவதன் மூலம்?. இங்கே தலைசிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தனவந்தரான தமிழன்பர்கள் இருக்கின்றனர், திறமை இருக்கின்றது, ஆவல் இருக்கின்றது, ஆர்வம் இருக்கின்றது, அப்படியானால் என்னதான் இல்லை? - அதுதான் தெரியவில்லை!
9. லங்கை எழுத்தாளர்கள் என்றுமே இந்தியப் பத்திரிகைகளை
முப்பத்தொரு ஆண்டுகளின் முன்னர் - 1958-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாந் திகதியிட்ட 'ஈழகேசரி’ வார இதழில் இந்தியப் பத்திரிகைகளும் ஈழத்து எழுத்தாளர்களும்' என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை இவ்வாறு முடித்திருந்தேன்.
32

பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிக்கும் பழக்கத்தை மிகச் சிறு வயதிலேயே மேற்கொண்டிருந்த நான், எனது அயலூராகிய கன்னாத்திலிருந்து வெளி வந்துகொண்டிருந்த ‘ஈழகேசரி' யை வாரந்தோறும் வாசிக்கத் தவறியதேயில்லை. நல்ல தரமான இலக்கிய ஆக்கங்களை உருவாக்குகின்ற எழுத்தாளர் பலர் இந்நாட்டில் இருக்கின்றனர் என்ற உண்மையை "ஈழகேசரியில் வெளியான ஆக்கங்கள் மூலம் உணர்ந்தேன். கரவைக் கவி கந்தப்பனார் என்ற புனை பெயரில் கனக செந்திநாதன் வாரந்தோறும் எழுதிய 'ஈழத்துப் பேனா மன்னர்கள்’ என்ற விமர்சன - அறிமுகத் தொடர் அந்த உண்மையை உறுதிப்படுத்தியது. புதிய எழுத்தாளர் பலரின் ஆக்கங்களைச் சுதந்திரன் வெளியிட்டு அவர்களின் திறமையைப் பகிரங்கப் படுத்தியது, அக்காலத்திலேயே பிரபலமாகிவிட்ட வரதர், அ. செ. முருகானந்தன், ச. ப. சர்மா, கனக செந்திநாதன், மஹாகவி போன்றவர்கள் இலக்கியப் பிரக்ஞையுடன் நடத்திய மறுமலர்ச்சி மாத இதழின் தொகுப்பை வாசித்துப் பார்க்கும் நல்வாய்ப்பு1955-ம் ஆண்டில் எனக்குக் கிடைத்தது. இவையனைத்தும் ஈழத்து எழுத்தாளர்களிடம் என்னை ஈடுபாடு கொள்ளச் செய்தன. அவர்களுடைய ஆற்றலும் திறமையும் மேலும் வளரவும். அவர்களுடைய திறமான புலமையினை வெளிநாட்டாரும் அறிந்து வணங்கவும் என்னால் ஏதும் செய்ய முடியாதா? என ஏங்கத் தொடங்கினேன்.
இந்தப் பின்னணியிலேதான் மேற் சொன்ன கட்டுரையை "ஈழகேசரியில் எழுதினேன். கட்டுரை சிறியதாக இருந்தாலும், தமிழகப் பத்திரிகைகளில் இடம் பெற்ற நம் நாட்டு எழுத்தாளர்களின் விபரங்களையும், பத்திரிகை முயற்சிகள் பற்றிய பல தகவல்களையும் நான் வெளியிட்டிருந்தேன்.
இவ்வேளையில் ‘சோமு (மீ. ப. சோமசுந்தரம்) தொகுத்த 'சிறுகதை மஞ்சரி சென்னையிலே வெளியானது. தமிழக எழுத்தாளர் பலரின் தரமான சிறு கதைகளைக் கொண்டிருந்த அத் தொகுப்பிலே ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கம் எதுவும் இடம் பெறவில்லை. ’தமிழகம் எங்களைப் புறக்கணித்து விட்டதே? இது தகுமா? எனக் கூட்டம் போட்டுக் கூச்சலிட்டுக் கொண்டிராமல், இங்குள்ளவர்களின் கதைகளைத் தொகுத்து, இதே போன்ற நூலை வெளியிட்டு, எம்மவரின் பெருமையை எங்கணும் பரப்பவேண்டும் என விரும்பினேன்.
சிறு வயதில் எனக்குத் தமிழ் கற்பித்துப் பல துறைகளில் என்னை ஊக்குவித்த என் ஆசிரியர் சி. பொன்னம்பலம் (ஆதவன்), பழம் பெரும்
33

Page 23
எழுத்தாளர் அ. செ. முருகானந்தன் முதலியோரின் ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் பன்னிரண்டு எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்துச் சென்னையிலுள்ள 'பாரி நிலையம் மூலம் வெளியிட்டேன். 'ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற இந்நூலே, ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் பலரை ஒன்றாகச் சேர்த்த முதலாவது தொகுப்பு நூலாகும்.
வரலாற்றுப் புகழ்மிக்க சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் சேலையூர் மண்டபத்தில் முதன் முதலாக 'இளந் தமிழன்’ என்ற சஞ்சிகையை அச்சிட்டு வெளியிட்டதும், 'ஈழத்துச் சிறுகதைகள்’ தொகுப்பை வெளியிட்டு, எம் நாட்டவரின் பெருமையைப் பன்னாட்டிலும் பரப்பியதும், இணுவை மூர்த்தி (க. வை. அநவரத விநாயக மூர்த்தி)யை ஆசிரியராகக் கொண்டு கொழும்பு - வத்தளையிலிருந்து வெளியான "உதயம் மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான் முதற் பரிசு பெற்றதும், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள ஒளவை தமிழ்ச் சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றதும், இராமநாத புரம் ராஜாவால் சிறந்த தமிழ் மாணவனுக்கென வழங்கப்படும் "ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தை நான் பெற்றுக் கொண்டதுமான, தன்னம்பிக்கையையும், செயலூக்கத்தையும் என்னுள்ளே ஏற்படுத்தியிருந்த அவ்வேளையில், களுத்துறைத் தமிழ்க் கழகத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன், உதயணன் ஆகிய எழுத்தாள நண்பர்கள் என்னைச் சந்தித்தனர். தமிழ்க் கழக வெளியீடான ‘ஈழதேவியை 1958 - ஆம் ஆண்டு ஆடியில் நடைபெற்ற இனக்கலவரம் காரணமாகத் தொடர்ந்தும் களுத்துறையிலிருந்து வெளியிட முடியாததால், அச்சஞ்சிகையின் சகல பொறுப்புக்களையும் ஏற்று, யாழ்ப்பாணத்திலிருந்து அதை வெளியிடுமாறு என்னைக் கோரினர். ஏற்கெனவே இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபட வேண்டும் என மூண்டிருந்த ஆர்வத் தியினுக்கு இவர்களின் கோரிக்கை நெய்யூற்றியது. நீண்ட கலந்துரையாடலின் முடிவில், 'ஈழதேவி என்ற பெயரைக் 'கலைச்செல்வி' என மாற்றி யாழ் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் மாதந்தோறும் அதை வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டது. தமிழ்வேள், சிற்பி ஆகியோரை இணையாசிரியர்களாகவும், தமிழ்ச் செல்வன், ஈழத்துச் சோமு ஆகியோரைத் துணையாசிரியர்களாகவும், சு. இராஜ நாயகனைப் பதிப்பாசிரியராகவுங் கொண்டு 1958-ம் ஆண்டு ஆடி மாதம் ‘கலைச் செல்வி வெளிவரத் தொடங்கியது.
‘ஈழத்துத் தமிழன்பர்களிடம் நல்ல கதைகள், கட்டுரைகளை எழுதவேண்டும் என்ற ஆர்வமும், படிக்க வேண்டும் என்ற துடிப்பும் இருக்கின்றன. ஆனால், நமது தனித்தன்மையை நிலைநாட்டி, நம் கலைத்திறனையும், கற்பனை வளத்தையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டி எல்லோர்க்கும் மகிழ்வூட்டக் கூடிய கலைத் தூதன் இங்கு
34

இல்லை. மற்றவர்கள் செய்ய மறுத்ததை மனத்துணிவுடன் செய்யத் தொடங்குகின்றோம் நாம். தேமரத் தமிழோசை உலகமெலாம் பரவவேண்டும்.தமிழனின் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றிற்கு, அவற்றின் தொன்மை மணம் குன்றாது, புதுமை மெருகேற்ற வேண்டும். இவைதான் கலைச் செல்வியின் நோக்கங்கள் என முதலாவது இதழிலேயே நான் குறிப்பிட்டதற்கிணங்க, ஈழத்தின் தனித்துவம் மிளிரும் தமிழ் இலக்கிய மலராகக் கலைச்செல்வியை வெளிவரச் செய்வதில் நான் கண்ணும் கருத்துமாக இருந்தேன்.
"வாசகர்கள் எவற்றை விரும்புகின்றார்கள் என்பதிலும், அவர்களுக்கு எவை தேவை என்பதே முக்கியமானது. எழுத்தாளன் தெரிவிக்க விரும்பும் செய்தி, - அவன் அழுத்த விழையும் உண்மை கசப்பானதாக இருக்கலாம். வாசகன் உடனடியாகவோ, காலப் போக்கிலோ அதை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது தள்ளலாம். ஆனால், அவனுடைய சிந்தனையைத் தூண்டிச் செழுமைப் படுத்தும் வகையில், அவனுடைய இதயத்தைத் தொட்டு, உசுப்பி, நல்லுணர்ச்சிகள் கிளர்ந்தெழச் செய்யும் வகையில், கலைநயத்துடன் அச்செய்தி சொல்லப்பட வேண்டும். இலக்கியத் தரம் என்பதற்கு நான் கொண்டுள்ள கருத்து இதுதான். இந்த அளவு கோலைக் கொணி டே, 'கலைச் செலவியில வெளியிடுவதற்குரிய ஆக்கங்களை நான் தெரிவு செய்தேன். இலக்கியத் தரமான ஆக்கமெனில, அதை எழுதியவரின் பின்னணிகளை அவருடைய அரசியற் சார்பு, இலக்கிய அணி, வாழும் பிரதேசம், கல்வித்தரம், சாதிப்பிரிவு, சமய நம்பிக்கையை நோக்காமல் அதை வெளியிடுவதே கலைச் செல்வியின் சீரான மரபாக இருந்தது, என்பதை 'கலைச்செல்வி எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்ப்போர் ஒப்புக் கொள்வர்.
தரம் வாய்ந்த, பிரபலம் மிக்க அனைத்து எழுத்தாளர்களுடனும் கலைச்செல்வி நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது. ஆக்கங்கள் மிக நுணுக்கமாகப் பரிசீலனை செய்யப்பட்டன. கடிதப் பரிமாற்றம் மூலம் கருத்துப் பாமாற்றம் நடைபெற்றது. சிறு திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததால், அவை சம்பந்தமான ஆலோசனைகளைக் குறிப்பிட்டு, எழுத்தாளர்களைக் கொண்டே அம்மாற்றங்களைச் செய்வித்தேன். பிரபல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தரக் குறைவானதெனக் கருதப்பட்ட வேளைகளில், பண்பான முறையில் அது சுட்டிக் காட்டப் பட்டுப் புதிய ஆக்கங்கள் பெறப்பட்டு வெளியிடப்பட்டன. எழுதியவர் பற்றிய சுருக்கமான - பொருத்தமான அறிமுகக் குறிப்புகளுடன், கதை, கவிதை, கட்டுரை போன்றவை
35

Page 24
வெளியிடப்பட்டன. தாம் கணிக்கப் படுகின்றோம், கெளரவிக்கப் படுகின்றோம், என்ற உணர்வு எழுத்தாளர்களுக்கு உற்சாக மூட்டியது.
பழைய, பிரபலமான எழுத்தாளர்களை எழுத வைத்ததுடன், ஆற்றல் வாய்ந்த புதியவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு ஊக்கமும் - உற்சாகமுமுட்டி அவர்களை வளர்த்தெடுக்கும் பணியையும் கலைச் செல்வி செய்தது. முன்னோக்கையும் ஆக்கச் சிந்தனையையும் பிரதிபலிக்கின்ற வளரும் எழுத்தாளர் என்ற பெயரால் அவர்கள் சுட்டப் பட்டனர். தமிழ்ச் சஞ்சிகைகளின் வரலாற்றிலே, வளரும் எழுத்தாளர்களுக்கென முதன் முதலில் ஒரு மலரை வெளியிட்ட பெருமை 'கலைச் செல்விக்கே உரியது.
ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்ட கலைநயம் மிக்க ஆக்கங்களால், ஈழத்துத் தமிழிலக்கியத் துறையைச் செழுமைப் படுத்தி லரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ்நங்கை, ச. வே. பஞ்சாட்சரம், பெனடிக்ற் பாலன், சாந்தன், வே. குமாரசாமி, மயிலன், பொ. சண்முகநாதன், மு. பொன்னம்பலம், தி. ஞேைசகரன், மு. ககைராஜன், ப. சத்தியசீலன், தெவிையான், மட்டுவிலான், கவிதா, பாமா ராஜகோபால், கானமயில்நாதன், து. வைத்திலிங்கம், வி. க. இரத்தினசபாபதி, இமையவன் முதலியோர், 'கலைச்செல்விப் பண்ணையில் வளர்ந்தவர்களே. அமரர்களான செ. கதிர்காமநாதன், முனியப்பதாசன், க. பரராஜ் சிங்கம், மணியம், முகிலன், பெரி. சண்முக நாதன் ஆகியோரும் குறிக்கத் தக்கவர்கள். இவர்களுடன் பலர் கலைச்செல்வியிலேயே முதன் முதலாக எழுத ஆரம்பித்தவர்கள். சிலர் தம் கன்னிப் படைப்பை வேறு பத்திரிகைகளில் வெளியிட்ட போதிலும், கலைச்செல்வி அளித்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி * கலைச்செல்வியில் அடிக்கடி எழுதி, அதன் வளர்ச்சியுடன் தம் வளர்ச்சியையும் பிணைத்துக் கொண்டவர்கள். 'கலைச்செல்வியில் முதன் முதலாக எழுதி, நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களாக விளங்கிய லதிகா, ராஜவதி, இரா. இளஞ்செழியன், இரா. சிவச்சந்திரன், செந்தாரகை, உய, மதி, வே. தனபாலசிங்கம், முல்லைச் சிவன், கா. சிவபலசிங்கம், வீரையா, கனகராஜன், நித்திலன் போன்றோர் என்ன காரணத்தாலோ, இலக்கிய உலகிலிருந்து இப்போது ஒதுங்கியிருக்கிறார்கள். கோவை மகேசன் , எஸ் . திருச் செல்வம் ஆகியோர் ஆற்றல் மிகு பத்திரிகையாளர்களாகப் பரிணமிக்கக் கலைச் செல்வி வழி வகுத்தது. ஐ. தி. சம்பந்தன் நல்ல பிரசுரகர்த்தாவாக உருவாகியுள்ளார்.
எழுத்தாளனை, அவனுடைய ஆக்கங்கள் மூலம் தரிசிக்கும் வாசகர்கள், அவனுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களையும்

அவன் எழுத்தாளனாகப் பரிணமித்த கதையையும் அவன் வாயிலாகவே அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதுண்டு. இந்த ஆர்வத்தை ஆரோக்கியமான முறையிலே திருப்திப்படுத்தும் வகையிலே புதுமையான சில பகுதிகள் காலத்துக்குக் காலம் கலைச் செல்வியில் இடம் பெற்றன. இலக்கிய உலகில் ஏலவே அழமாகக் கால் பதித்து விட்ட சோ. சிவபாதசுந்தரம் , இலங்கையர்கோன், சம்பந்தன், சி. வைத்தியலிங்கம், கனக செந்திநாதன், இளங்கீரன் முதலியோர் எழுத்துலகில் நான் என்ற :: தம்மைப் பற்றிய பயன்மிக்க, புதுமையான பல தகவல்களைச் சுவையான முறையில் எழுதினர். அவர்களுடைய எழுத்துலக அனுபவங்கள் ஏனைய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டக் கூடியவையாக இருந்தன. இத்தொடரிலிருந்து சற்று வேறுபட்டதாகத் தமிழ் நாட்டு எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் ‘கிராம ஊழியனில் நான்’ என்ற கட்டுரை அமைந்திருந்தது. தன்னைப் பற்றிய தகவல்களுடன், தன்னுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ் நாட்டு எழுத்தாளர்களைப் பற்றியும், ‘கிராம ஊழியன் மூலம் தமிழ் நாட்டு வாசகர்களின் மத்தியிற் பிரபலம் பெற்றுவிட்ட ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றியும் வல்லிக்கண்ணன் எழுதினார்.
ஈழத்தின் இரண்டாந் தலைமுறை எழுத்தாளர்கள் எனச் சொல்லத் தகுந்த தேவன் யாழ்ப்பாணம், சொக்கன், இ. நாகராஜன் , புதுமைலோலன், டொமினிக ஜீவா, அன்பு மணி, டானியல, நாவேந்தன், பவானி, உதயன், மு. தளையசிங்கம் முதலியோர் ‘என்னை உருவாக்கியவர்கள் என்ற தலைப்பில் எழுதினர்.
முருகையன், அம்பி, நீலாவணன், திமிலைத்துமிலன், தில்லைச்சிவன், முதலிய கவிஞர்களின் என்னைக் கவர்ந்த என் கவிதை” சுய அனுபவ * சுய மதிப்பீட்டுக் கலவையாகச் சுவையூட்டியது.
"ஏன் மறைத்தேன் என் பெயரை?’ என்ற தலைப்பிலே உதயணன், அன்புமணி, செங்கைஆழியான், செம்பியன் செல்வன், யாழ்நங்கை ஆகியோர் தங்கள் புனைபெயர்களின் விளக்கத்தையும் வரலாற்றையும் கூறியது பலரைக் கவர்ந்தது.
எழுத்தாளர்கள் தமக்கிடையே எழுதிக் கொள்ளும் கடிதங்கள், சில சமயங்களில் இலக்கிய மடல்களாக அமைவதுண்டு. விமர்சனக் கருத்துக்கள், பாராட்டுக்கள், கண்டனங்கள், இலக்கியக் கோட்பாடுகள், ஆலோசனைகள் போன்றவற்றை இக்கடிதங்களிற் காணலாம். பிரசுர நோக்கம் சிறிதுமின்றிப் பரிமாறப்படும் இக்கடிதங்களிலே எவ்வித ஒளிவும் மறைவுமற்ற ஒரு ' சுயம்’ பளிச்சிடும். எழுத்தாளனின் விசேட
37
حیح

Page 25
சேமிப்பிலிருந்த இத்தகைய சில கடிதங்களைப் பெற்று இலக்கியக் கடிதங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டேன். வ. அ. இராசரத்தினம், டானியல், செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, வரதர், ஈழத்துச் சோமு, இலங்கையர்கோன், அப்துஸ்ஸமது ஆகியோரின் கடிதங்கள் அவற்றுட் சில.
இலக்கிய வடிவங்களுட் கவிதையே அதிக சக்தி வாய்ந்ததென்பர். பெரும்பாலான மொழிகளின் ஆரம்பகால இலக்கியங்கள் அனைத்தும் கவிதையாகவே இருந்தன. கவிதையின் வரைவிலக்கணமே இலக்கியத்தின் வரைவிலக்கணமாகவும் அமைந்தது. சாதாரண சொற்களுக்கு, வைப்பு முறையால் மந்திர சக்தியூட்டி வாசகர்களின் இதயத்தைச் சுலன்டியிழுக்கும் சக்தி வாய்ந்தவன் கவிஞன். ቃዘ ቃll, இலக்கியங்கள் எனப் போற்றப்படுபவையெல்லாம் கவிதைகளாக இருப்பதைக் காணலாம். எனினும், இப்போதைய வாசகர்களுட் பெரும்பாலானவர்கள் கவிதைகளை வரவேற்று வாசிப்பதில்லை என்ற காரணத்தைக் கூறி கவிதைக்குரிய முக்கியத்துவத்தைப் பெரும்பாலான சஞ்சிகைகள் கொடுப்பதில்லை. ஆனால், கலைச்செல்வி ஆரம்ப காலந்தொட்டே கவிதை வளர்ச்சிக்குக் கணிசமான பங்கை அளித்தது. தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களின் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்திச் சிறந்த கவிதைக்குத் தங்கப் பதக்கம் வழங்கவிருப்பதாகக் கலைச்செல்வியின் முதலாவது இதழிலேயே "வரதர் அறிவித்தார். "மயிலன்' என்ற கவிஞர் இப்போட்டியில் முதற் பரிசைப் பெற்றார்.
அன்றைய முன்னணிக் கவிஞர்களுட் சிறப்பிடம் வகித்த பரமஹம்ஸதாசன், முருகையன், தான்தோன்றிக் கவிராயர், நீலாவணன், மஹாகவி ஆகியோர் தம் இலட்சியங்களை விளக்கிப் பாடிய கவிதைகள் கலைச்செல்வியின் முதலாவது ஆண்டு மலரில் வெளியாகின. அதிக பக்கங்களை விழுங்கிவிடுமே என்ற கவலை சிறிதுமின்றி தரமானவற்றை வாசகர்களுக்கு விருந்தாக்க வேண்டும் என்ற விருப்புடன் நீண்ட கவிதைகளையும், காவியங்களையும் “கலைச் செல்வி வெளியிட்டது. முருகையனின் தேமதுரத் தமிழோசை, பாரதி வகுத்த பாதை, கம்பன் கவித்துவம், மஹாகவியின் கல்லழகி, திமிலைத்துமிலனின் ‘சித்தத்தே ஏற்றுக் கொள், பா. சத்தியசீலனின் விழி திறப்பு, ச. வே. பஞ்சாட்சரத்தின் ‘அன்பின் வெற்றி, வ. கோவிந்தபிள்ளையின் வாழும் காதல்’ போன்றவை இவற்றுள் அடங்கும்.
சஞ்சிகைகளில் வெளியாகும் அம்சங்களுள் அதிக அளவிலான வாசகர்களைச் சிறுகதைகளே கவர்கின்றன. சிறுகதைகளுக்குக்
38

'கலைச்செல்வி' என்றுமே சிறப்பிடம் அளித்து வந்தது. எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் ‘கலைச்செல்விச் சிறுகதைகளைக் கருத்தூன்றிப் படித்தார்கள் என்பது பெருமைக்குரியது. முதலாவது இதழில் நான் எழுதிய 'ஏன் படைத்தாய்? என்ற சிறுகதை பலரின் பாராட்டைப் பெற்றதுடன் சில புதிய எழுத்தாளர்களைப் படைத்தும் விட்டது! ‘ஏமாற்றுக்காரி என்ற தலைப்பிலே அக்கதையைத் தொடர்ந்து எழுதினார் கொழும்பு - சிவம். 'ஓடிவா உயிர்காக்க' என அழைப்பு விடுத்தார் சோமசுந்தரன், (மட்டக்களப்பின் இப்போதைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்). காவலூர் அம்பி என்பவர் 'உங்களுக்கு மட்டும்' எனப் பதிலளித்தார். பிரபல எழுத்தாளர் வரதர் “இன்பம் சிரிக்கிறது என இத் தொடருக்கு முத்தாய்ப்பு வைத்தார். எவ்வித முன்னேற்பாடோ கலந்துரையாடலோ இன்றி உருவான இப்புதுமைத் தொடர் கதாசிரியர் - பத்திராசிரியர் என்ற வகையில் எனக்கு ஓர் இனிய, எழுச்சி மிக்க அனுபவமாக அமைந்தது.
1958-ஆம் ஆண்டு ஆவணி இதழில் சு. இராஜநாயகனின் ‘நாகதோஷம் வெளியானது. ‘பிடிக்காத கதையிலே குற்றம் இருந்தால், இருந்து தொலையட்டும். நல்ல கதையில் காணும் குறைகள் மனத்தை என்னவோ செய்கின்றனவே!’ என்ற முகவுரையுடன் இக்கதை பற்றி எழுதினார் வரதர். கதையின் கரு, கருத்து, நடை, தாக்கம் ஆகிய அனைத்தம்சங்களையும் பறறி விரிவாக ஆராய்ந்து குறைகளையும் நிறைகளையும் சுட்டிக் காட்டி ஒரே வரியில் சொல்லும் படி கேட்டால், ‘நல்ல கதை, எனக்குப் பிடித்திருக்கிறது என்றுதான் சொல்வேன்' என முடித்திருந்தார். ‘நாகதோஷம் வெளியானபோது அதை வாசிக்கத் தவறியவர்கள், இவ்விமர்சனம் வெளியானபின், அதைத் தேடிப் படித்தனர். இத்தகைய விமர்சனங்களில் வரதர் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தால் ஈழத்தின் மிகச் சிறந்த 'சிறுகதை விமர்சகன்’ என்ற பெயர் அவருக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.
1958 புரட்டாதி இதழில் டொமினிக் ஜீவா இந்நாட்டு மன்னர் என்ற கதையை எழுதினார். பல்கலைக் கழக மாணவர்களைப் பற்றித் தவறாகக் கருதக்கூடிய வகையிற் சில சம்பவங்கள் அமைந்திருப்பதாக மாணவர் வட்டாரம் குமுறியது. அதன் பிரதி பலிப்பாக ‘அவர்க்கும் உண்டு இதயம்' என்ற கதையை எம்ரியெஸ்' (மு. தளையசிங்கம்) எழுதினார்.
'கற்பு நிலை பற்றிப் பேசவந்தார். இரு கட்சிக்கும் அ.தைப் பொதுவில் வைப்போம்’ எனப் பெண்ணின் உரிமைக் கும் பெருமைக்குமாகப் பாடியவர் பாரதியார். 'கல்லானாலும் கணவன்,
39

Page 26
புல்லானாலும் புருஷன் என்ற அடிமை மனப்பான்மையிலிருந்து பெண்களை மீட்டெடுக்கும் கதையொன்றை வரதர் எழுதினார். 'கலைச்செல்வி ஆண்டு மலரில் (1959) வெளியான அவருடைய புதுயுகப் பெண் ஒரு புரட்சிக் கதையாகவே அக்காலத்திற் கருதப்பட்டது.
இதைவிடப் பல படிகள் மேலே சென்ற கதை ‘பவானியின் "மன்னிப்பாரா? பெண் சமநிலைவரம் பற்றிய பல கருத்துக்கள் பரவியுள்ள இருபதாம் நூற்றாண்டின் இக்கடைக் கூற்றில், பலரால் வரவேற்கப் படாவிட்டாலும், ஆக்ரோஷமான கண்டனத்துக்கு உள்ளாகாமலிருக்கக் கூடிய இந்தச் சிறுகதை அக்காலத்திற் பெரும் புயலையே கிளப்பிவிட்டது. கதாநாயகியின் முடிவைப் பலர் வரவேற்கமாட்டார்கள் எனத் தெரிந்திருந்தும், கதை நயமாகச் சொல்லப்பட்ட கார600த்தல், அது வெளியிடப்பட்டது. கதாநாயகியின் முடிவை எதிர்த்துக் கதையை வேறு விதமாக மாற்றிக் கவிஞர் எஸ். எம். சவுந்தரநாயகம் எழுதிய கதையும், அவளுடைய முடிவை ஆதரித்து அவளைப் புரட்சிப் பெண்ணாகக் கொண்டு ‘செந்தாரகை எழுதிய கதையும் ‘மன்னிப்பாரா? என்ற அதே தலைப்பிலேயே அடுத்த சில இதழ்களில் வெளியிடப்பட்டன.
தென்னிந்தியா - கோவையிலிருந்து வெளியாகும் ‘கலைக்கதிர்’ என்ற அறிவியற் சஞ்சிகை. ஆசை அருமையாகத்தான் சிறு கதைகளை வெளியிடுவதுண்டு. ஏதோ ஒரு வகையிற் தனித்துவத்துடன் விளங்கும் கதைகளையே அதிற் பார்க்கலாம். அன்பு மணி எழுதிய ‘மாமாங்கம் தீர்த்தம் என்ற சிறுகதை, "கலைக்கதிர் சஞ்சிகையில் வெளியாவதற்கு முன்னரே கலைச் செல்வியில் இடம் பெற்றுவிட்டது. இதை மறுபிரசுரம்" என்று சொல்வதற்கில்லையாயினும், கலைக்கதிரின் தெரிவைக் கலைச் செலவி மணி னதாகவே நடத்தி விட்டது எனி பது பெருமைக்குரியது. f
1962-ம் ஆண்டிற் கலைச்செல்வி நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியிற் செம்பியன் செல்வன் ‘இதயக் குமுறல' முதற் பரிசையும், யோ. பெனடிக்ற் பாலனின் மெழுகுவர்த்தி இரண்டாம் பரிசையும், எம். எம். மக்கினின் ரிவொலுஷன் மூன்றாம் பரிசையும் பெற்றன. மூன்று கதைகளும் முத்தான கதைகள்.
ஈழத்தின் சிறுகதை வளர்ச்சி பற்றி மதிப்பீடு செய்ய விழையும் எந்த நடுநிலை விமர்சகனாலும் ‘கலைச்செலவிச் சிறுகதைகளைப் புறக்கணிக்க முடியாது.
‘உருவகக் கதை' என்றவுடன் ‘சு. வே. யின் பெயரே இலக்கிய அன்பர்களின் நினைவில் எழும். தமிழ் நாட்டிலும் இத்துறையிலே “சு.வே."
40

யை விஞ்ச எவருமிலர். இவர் எழுதிய ‘மணற்கோவில்' என்ற உருவகக் கதை 1958 - கார்த்திகை இதழில் வெளியானது. இக் கதையை வாசித்த மூதறிஞர் ராஜாஜி, ‘கடந்த சில வருடங்களில் நான் படித்த கதைகளுட் சிறந்த கதை ‘மணற் கோவில்', ‘நீயும் படித்துப் பார்’ என நீ. ப. சோமசுந்தரம் (சோமு) அவர்களிடம் கூறினார். சென்னையில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மகாநாட்டிற்கு இலங்கையின் பிரதிநிதிகளாகச் சென்ற சம்பந்தன், சு. இராஜநாயகன் ஆகியோரிடம் ‘சோமு அவர்களே இத் தகவலைத் தெரிவித்தார். இச் செய்தியைக் கேள்விப்பட்டு ஈழத்து, இலக்கிய உலகமே தலை நிமிர்ந்து நின்றது. அரசியல், சமூகம், சமயம் பற்றி ஓயாது சிந்தித்து, எழுதிச் செயற்பட்டும் வரும் உலகப் புகழ் பெற்ற ராஜாஜி அவர்கள் கலைச்செல்வி’யைக் கருத்தூன்றிப் படிப்பதுடன் மற்றையோருக்கும் அதைப் பற்றிக் கூறுகின்றார் என்ற செய்தி எனக்கும் பெருமையைத் தந்தது!
சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது, நாவலிலக்கிய வளர்ச்சிக்கு 'கலைச்செல்வியின் பங்களிப்புக் குறைவு என்றே சொல்ல வேண்டும். உதயணன் எழுதிய ‘இதய வானிலே', 'மனப்பாறை' நான் எழுதிய ‘உனக்காக, கண்ணே!? ‘சிந்தனைக் கண்ணிர்’, ‘அன்பின் குரல்" ஆகிய நாவல்கள் கலைச்செல்வி'யில் தொடராக வெளியிடப் பட்டன. அகிலன் முன்னர் நூலுருவில் வெளியிட்ட 'சந்திப்பு, கலைச்செல்வியில் மறுபிசுரம் செய்யப்பட்டது. மு. தளையசிங்கம்டி நூலுருவில் வெளியிடுவதற்காக எழுதிக் கொண்டிருந்த ‘ஒளி பிறந்தது' என்ற நாவலில் ஓர் அத்தியாயத்தை வெளியிட்டு நாவலாசிரியர்க்கு உற்சாகமூட்டி வாசகர்களின் ஆவலைக் கலைச்செல்வி தூண்டிவிட்டது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் முதன் முதலாகக் கலைச்செல்வி நடத்திய ஆயிரம் ரூபா நாவல் போட்டியில் மு. தளையசிங்கம் எழுதிய ‘ஒரு தனி வீடு முதலாம் இடத்தையும், மன்னவன் எழுதிய 'காலடியிலே இரண்டாம் இடத்தையும், செ யோகநாதன் எழுதிய ஞாயிறும் எழுகிறது மூன்றாம் இடத்தையும் பெற்றன. பரிசுத் தொகையின் அரைவாசியை அன்பளிப்பாக வழங்க இலக்கியத் தம்பதிகளான கந்தையா - சகிதேவி ஆகியோர் முன்வந்த போதிலும், ‘கலைச்செல்வி'யின் சொந்த நிதி நிலைமை மோசமாகி, தொடர்ந்து அது வெளிவருவது கேள்விக் குறியாக வளைந்துவிட்ட நிலையில், பரிசளிப்பு விழாவை நடாத்தாதது துரதிர்ஷ்டமே. செம்பியன் செல்வன் எழுதிய “கர்ப்பக் கிருகம்' என்ற நாவலும் முழுமையாகத் தொடரவில்லை.
இலக்கிய வளர்ச்சியில் விமர்சனத்திற்குரிய இடம் என்ன என்பதைப் பற்றிய திட்டமான வரையறையைக்கொண்டிருந்தி:தந்லுைத்திசத்வி,
41
PEREK

Page 27
ஆக்கபூர்வமான, ஆழமான விமர்சனங்களை வெளியிடுவதில் என்றுமே முன்னணியில் நின்றது. ‘புத்தக விமர்சனம்' என உருவாகி, ‘வளரும் தமிழ்' ஆக வளர்ந்து ‘இலக்கிய மணி மண்டபம்' ஆக விமர்சனத் துறை விரிந்தது. ஆசிரியர்களைத் திருப்திப் படுத்தும் நோக்கம் சிறிதுமின்றி, நூல்களும், சஞ்சிகைகளும் மிகவும் விரிவாக ஆராயப்பட்டுக் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. விமர்சனம் சம்பந்தமாக கலாநிதி கைலாசபதி, கே. எஸ். சிவகுமாரன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள். 'நான் நினைப்பவை என்ற தொடரில், உருவகக் கதைகள், சரித்திரக் கதைகள், முற்போக்கு, பிற்போக்கு, உருவம், உள்ளடக்கம் முதலியவை பற்றி எஸ். பொன்னுத்துரை எழுதிய கட்டுரைகள் - வ. நடராஜனின் "எமது இலக்கிய பரம்பரை' - அ. ஸ. அப்துஸ் ஸமதுவின் 'ஈழத்து முஸ்லிம் கவிஞர்கள்' என்ற தொடர் - முற்போக்கு இலக்கியம் பற்றி கலாநிதி கா. சிவத்தம்பி, மு. தளையசிங்கம், நவாலியூர் சோ. நடராஜன் முதலியோரின் கருத்துக்கோவை போன்றவை இலக்கிய விமர்சனத்தில் நம்மவர் கொண்டுள்ள புலமைக்கும், திறமைக்கும், அக்கறைக்கும் சான்றாக விளங்குகின்றன. 'நம் நாட்டு வாசகர்’ என்ற தலைப்பிலே வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனப் பாங்கிலே அமைந்தன. 'மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்'என்ற ஈழத்துச் சோமுவின் கட்டுரை தமிழகச் சஞ்சிகையொன்றில் மறுபிரசுரஞ் செய்யப்பட்டது. சஞ்சிகைகள், பத்திரிகைகளில் ஈழத்து எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் ‘மாதச் சிறுகதைகள் என்ற தலைப்பில் விரிவாக விமர்சிக்கப் பட்டன. இத்தகைய முயற்சியின் முன்னோடியாக விளங்கியது 'கலைச்செல்வியே.
ஆளுக்கொரு தொப்பி, இலக்கியக் கணைகள், திருடாதே - போன்ற அம்சங்கள்,எழுத்தாளர் - வாசகரிடையே பரபரப்புக் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எழுத்தாளர்களின் தில்லுமுல்லுகள், திரைக்குப் பின்னாற் செய்யப்படும் தகிடுதத்தங்கள் போன்றவை அம்பலப்படுத்தப் பட்டதுடன் காரமான விமர்சனக் கருத்துக்கள் தெரிவிக்கவும் பட்டன.
பண்டிதமணியின் தலைப்பட்டாள் தங்கை, வித்துவான் க. வேலன் எழுதிய ‘அண்ணாமலை நகரிலே, பேராசிரியர் க. த. திருநாவுக்கரசுவின் ‘தென்னிந்தியாவும் தென்னிலங்கையும்', கலாநிதி கைலாசநாதக் குருக்களின் கலைகளின் உறைவிடங்கள், க. இராசரத்தினத்தின் ‘ஓவியக்கலை', கனக செந்திநாதன், வித்துவான் எப். எக்ஸ். சி. நடராசா ஆகியோரின் கனகிபுராண அறிமுகம், தாண்டவக்கோனின் பட்பட் பதில்கள் ஆகியவை வாசகர்களின் பாராட்டைப் பெற்ற ஏனையவற்றுட் ઈી6o. -
நமது நாட்டவர்களிடம் நகைச்சுவையுணர்வு குறைவு என
42

வித்துவான் வேலன் அடிக்கடி கு(றை)றிப்பிடுவதுண்டு. நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நகைச்சுவை அம்சங்களுக்குக் கலைச் செல் வி’ முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்றுமே பின்னிற்கவில்லை. ஈழத்தில் முதன் முதலாக நகைச்சுவைக் கட்டுரைப் போட்டியைக் 'கலைச்செல்வியே நடத்தியது. ரீ.பாக்கியநாயகம் (அகில இலங்கைப் பாதசாரிகள் சங்கம்), க. பரராஜசிங்கம் (என் மாஜிக் காதலிக்கு) ஆகியோர் இப்போட்டியில் முதலிடம் பெற்றனர்.
எழுத்தாளர்களை மட்டுமின்றிப் பேச்சாளர்களையும் வளர்த்தெடுக்கக் கலைச்செல்வி முயன்றது. பாரதி தினத்தையொட்டி வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மேற் பிரிவில் எஸ். சிவசத்திவேல் மத்திய பிரிவில் சி. குணசேகரம், கீழ்ப்பிரிவில் ச. மரியநியூமன் ஆகியோர் முதலிடங்களைப் பெற்றுத் தங்கப் பதங்கங்களைப் பரிசாகப் பெற்றனர்.
அரசியல் இலக்கிய, சமயத்துறைகளில் அக்காலத்தில் முன்னணியில் இருந்த பல பேச்சாளர்களைப் பற்றிப் புதுமைலோலன் பயன்மிக்க கட்டுரை ஒன்றை எழுதினார்.
'கலைச்செல்வியின் சில ஆசிரியத் தலையங்கங்களும் கட்டுரைகளும் சுதந்திரன், வீரகேசரி, தினகரன் முதலிய இலங்கைப் பத்திரிகைகளிலும், எழுத்து, உமா போன்ற தமிழகப் பத்திரிகைகளிலும் மறு பிரசுரஞ் செய்யப்பட்டன.
அகிலன், 'கலைமகள்', கி. வா. ஜ, நா. பார்த்தசாரதி, சாலை இளந்திரையன், மானாமதுரை இளஞ்சோழன், திருமழபாடி கைலாஸம், அழ. சிதம்பரம், 'அன்புப்பழம் நீ, டாக்டர் கமில் ஸவெலபில் ஆகியோர் கலைச் செல்வியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு ஆக்கமும், ஊக்கமும் அளித்த வெளிநாட்டவருட் சிலராவர்.
எழிலோடும் எழச் சியோடும் எட்டாண்டுகள் நடைபெற்ற 'கலைச்செல்வியின் இலக்கியப் பணி, இடையிலே தடைப்பட்டதேன்? என்ற கேள்விக்கு திறமையற்ற நிர்வாகம்' என்ற ஒரேயொரு காரணத்தையே கூறமுடியும். உண்மையும் அதுதான்! எழுத்தாளன் எழுதவேண்டும். இலக்கிய ஆர்வமுடைய செல்வந்தர் யாராவது வெளியிட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும். இருசாராரும் இணைந்து செயற்பட்டால், ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகைகளின் எதிர் காலம் பிரகாசமானதாக அமையும்.

Page 28
சிரித்திரனும் சுந்தரும்
செங்கை ஆழியான்
ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்ச் சஞ்சிகை 196 உலகத்துக் குப் புதுமை சேர்ப்பதாகவும், ஈழத்
தமிழகத்திற்குப் பெருமை கூட்டுவதாகவும் சிரித்திரன் சஞ்சிகையின் உதயம் நிகழ்ந்தபோது, தமிழுலகு தன்னை ஒரு கணம் சிலிர்த்துக் கொண்டது. தமிழுலகிற்குச் சவாரித் தம்பர் கார்ட்டுன் மூலம் தினகரனுTடாக ஏற்கெனவே நன்கு அறிமுகமான சி. சிவஞானசுந்தரம் என்ற சுந்தர் அதன் ஆசிரியராக விளங்கியமை, குறை ஆயுளோடு, மரித்துவிட்ட நல்ல பல சஞ்சிகைகளின் வரலாறு தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதென்ற நம்பிக்கையைத் தந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
சிரித்திரன் தனது இலக்கிய யாத்திரையை எதுவிதமான இடையூறுமின்றி, இந்திய அமைதிப்படை 1987-ல் ஈழத்து மண்ணில் தன் பாதங்களை வலுவாக அழுத்தும் வரை ஆரோக்கியமாகவும் துணிவோடும் தொடர்ந்தது. இந்திய அமைதிப்படையின் அன்னிய அனுமதியுடன் இந்த் மண்ணில் சஞ்சிகையை வெளியிடச் சுந்தரின் தன்மானம் இடம் தரவில்லை. இந்த 24 ஆண்டுகளில் மூன்று நான்கு இதழ்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிவராது போயிற்று. சிரித்திரன், சுந்தர் என்ற ஆளுமை கொண்ட தனிமனிதரின் சஞ்சிகை,
44

அவருடைய மறைவுடன் அச் சஞ்சிகை மறைந்து போனமை தவிர்க்க முடியாத இயல்பு நிலைதான் என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். சிரித்திரன் 32 பக்கங்களில் குறைந்தது 16 பக்கங்களில் சுந்தரின் கைவண்ணப் படைப்புக்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு புனை பெயர்களில் நிறைந்திருக்கும். சுந்தரின் கார்ட்டுன்களுக்காகவும் அவரது நகைச்சுவைப் பகுதிகளுக்காகவும் விற்பனையாகிய பத்திரிகை சிரித்திரன் என்ற உண்மையை ஈழத் தமிழகத்தில் அனைவரும் தெரிந்திருப்பர். அதனால், ஆசிரியருக்குச் சுகயினம் ஏற்பட்ட காலங்களில் சஞ்சிகை இதழ் வெளிவரவில்லை, அல்லது தாமதப்பட்டது. 1971களில் சிரித்திரனின் கொழும்புப் பணிமனையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றிக் கொண்ட போது மூன்றிதழ்கள் வெளிவராது போயின.
1990களில் இந்திய இராணுவத்தினரின் வெளியேற்றத்துடன் சிரித்திரன் மீண்டும் வெளிவரத் தொடங்கி, 1995-ன் மாபெரும் இடப்பெயர்வு வரை வெளிவந்தது. எனினும் அக்காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வெளிவரவில்லை. காரணங்களில் மிக முக்கியமானது - சுந்தரின் வலக்கரம் செயலற்றுப் போனமை, கார்ட்டுண் உலகிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக அமைந்தது. இடக்கரத்தால் அந்த மாமனிதர் தன் எண்ணக் கருக்களுக்கு ஒவிய வடிவம் தர முயன்றார் என்பது சிரித்திரனின் நிறைவு இதழ்களில் காணமுடிந்தது. எவ்வாறாயினும் சிரித்திரனின் முழு ஆயுட்காலமென 28 ஆண்டுகளையே கருதலாம். சிரித்திரனின் அஞ்ஞாதவாச காலத்தையும் சேர்க்கில் சிரித்திரனின் அகவை 32 ஆக விரியும். எனது கணிப்பீட்டின் படி எல்லாமாக 318 சிரித்திரன் இதழ்கள் வெளிவந்துள்ளன. அவை சஞ்சிகை உலகில் மட்டுமன்றி, கார்ட்டுன் துறையிலும் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளன.
சிரித்திரன் என்ற சஞ்சிகை - சுந்தர் என்ற தனிமனிதன் தனது துணைவி திருமதி கோகுலம் என்ற மாதரசியுடன் இணைந்து நடத்திய சஞ்சிகை. ஆசிரியர், ஒவியர், புரூவ் றீடர், விளம்பரம் சேகரிப்பாளர், விநியோகத்தர் முதலான பல்வேறு பணிகளையும் பதவிகளையும் சுந்தர் தனித்துச் செய்த ஒய்வில்லாத உழைப்பின் விளைவாக ஒவ்வொரு மாதமும் சிரித்திரன் வெளிவந்தது. அந்த மனிதரின் உழைப்பின் பயனாக ஒவ்வொரு மாதமும் எண்ணற்ற வாசகர்கள் சிரித்தனர், சிந்தித்தனர்.
சிரித்திரன் ஆசிரியர் சுந்தரை நான் முதலாவதாக 1966-ம் ஆண்டு, கொழும்புப் பல்கலைக் கழகத்தின் உதவி விரிவுரையாளராக இருந்த காலத்தில் சுதந்திரன் வார இதழின் பணிமனையில் அதன் துணை ஆசிரியராக விளங்கிய சங்கரால் அறிமுகப் படுத்தி வைக்கப் பட்டேன். சுந்தரின் படைப்புக்களை ஏற்கெனவே சுவைத்து வியந்தவன். சுந்தரை
45

Page 29
ஆவல் ததும்ப ஏறிட்டேன். தீட்சண்யமும் கலைத்துவமும் நிரம்பிய விழிகள் மூக்குக் கண்ணாடியுள் புதையுண்டு மிளிர்ந்தன. ஏறிட்ட நெற்றி அவரது ஞானவிலாசத்தைச் சுட்டியது. மெலிந்து உயர்ந்த அவரது தோற்றம் பார்ப்போரை அவர் மீது பற்றுக் கொள்ள வைக்கும் பாங்கானது. தான் வரித்த இலட்சியத்திற்காக வகித்த பதவிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் கைவிட்டு வெறும் திறன், முயற்சி, நம்பிக்கை என்பவற்றினை மூலதனமாகக் கொண்டு தமிழ் மக்களின் உயர்விற்காகப் புதுமையான வழியில் பணிபுரிய வந்திருக்கும் அவரை முதல் சந்திப்பில் நான் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு இன்றும் புலனாகின்றது. அவர் எண்ணியிருந்தால் இலங்கையின் மிகப் பெரிய கட்டடக் கலைஞனாக வந்து வாழ்க்கையின் சுகபோகங்களை எல்லாம் சுகித்து வெறும் சிவஞானசுந்தரமாக மரித்திருக்க முடியும். ஆனால் அவர் அவை அனைத்தையும் தட்டிவிட்டு இலட்சியத் தியாகவேள்வி ஒன்றில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட மேதாவித் தனத்தின் விஸ்வரூபத்தினை நான் கொழும்பில் அவரை முதலில் சந்தித்த போது உணர்ந்து கொள்ளவில்லை. 1971 களில் சிரித்திரன் பணிமனை யாழ்ப்பாணத்திற்கு மாறியபோது, தன் குடும்பத்தாருடன் சுந்தர் நான் வசிக்கும் பிறவுண் வீதிக்கு இடம் பெயர்ந்து குடியேறிய போது அவருக்கும் எனக்குமிடையிலான இலக்கிய உறவு வலுவடைந்தது. அவருடைய ஆற்றலையும் வரையறுக்க முடியாத அறிவுத்திறனையும் புரிந்து கொண்டேன். அவருடைய மேதாவித் தனத்தின் விஸ்வ ரூபத்தினைக் கண்டு வியப்படைந்தேன்.
சிரித்திரன் என் படைப்புகளுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுத்தது. சுந்தரை நானும் சிரித்திரன் என்னையும் நன்கு பயன்படுத்திக் கொண்டோம். விவேகி சஞ்சிகையில் முதல் முதலாக வெளிவந்து பின்னர் நூலுருப் பெற்ற ஆச்சி பயணம் போகிறாள்' என்ற எனது நகைச்சுவைத் தொடர் சிரித்திரனில் மீளவும் பிரசுரமாகியது. அதனைத் தொடர்ந்து ‘மயான பூமி (பிரளயம் என்ற எனது நாவல்) கொத்தியின் காதல்', 'கங்கைக் கரையோரம்', 'வாழி நீ வழுக்கியாறு, முதலான நாவல்களும் குறுநாவல்களும் சிரித்திரனில் வெளியாகின. வெவ்வேறு புனைபெயர்களில் சிறுகதைகளையும் சிரித்திரனில் எழுதினேன். எனது வாசகப் பரப்பை விரிவாக்கிய பெருமை சிரித்திரனுக்குமுரியது என்பது நினைவிலிருந்து அழியவில்லை. சுந்தரின் மனைவியார் கோகுலம் அவர்களால் தெரிவு செய்யப்படும் இளம் எழுத்தாளர்களின் சிறு கதைகளைப் பலகாலம் நான் திருத்தி, புதுப்பித்துக் கொடுத்துள்ளேன் என்ற இலக்கிய உண்மையை இங்கு சொல்லியே ஆக வேண்டும். யாழ்ப்பாணத்திற்குச் சிரித்திரன் வந்ததன் பின்னர் புனைகதைத் துறையில் சிரித்திரன் முக்கிய கவனமும் பங்களிப்பும் செய்தமைக்கு நானும்
46

ராதேயனும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆலோசனை கூறித் துணை நின்றுள்ளோம் என்பதும் ஒழிக்கக் கூடிய சங்கதியன்று. என்னுடைய நான்கு நூல்கள் சிரித்திரன் பிரசுரம் என்ற முத்திரையைத் தாங்கி வெளிவந்துள்ளன. அலைகடல் தான் ஒயாதோ?, சித்திரா பெளர்ணமி, நடந்ததாய் வாழி வழுக்கியாறு, முற்றத்து ஒற்றைப்பனை ஆகிய நூல்களே அவையாம்.
எங்களது இலக்கிய உறவில் விரிசலைச் சற்று ஏற்படுத்திய இரண்டு நிகழ்ச்சிகள் நினைவில் அழியாதுள்ளன.
1. 1973-ன் பிற்கூற்றில் நான் எழுதிய 'அலையின் கீதம்' என்ற தொடர் நாவல் ஒன்றினைச் சிரித்திரனில் வெளியிடுவதற்காகச் சுந்தர் விரும்பி வாங்கிக் கொண்டார். அந்த நாவலை பிரசுரமாகாத நிலையில், சிரித்திரன் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்த கவிதை எழுதும் சண்டியன் ஒருவர் வாசிக்க நேர்ந்தது. இந்த நாவலை சிரித்திரனில் வெளியிட்டால் சந்தியில் வைத்து சிரித்திரனைக் கொளுத்துவேன்' என அறைகூவல் விடுத்தார். இந்த விடத்தில் தான் சுந்தரின் துணிவே துணையில் எனக்கு ஐயப்பாடு எழுகின்றது. சுந்தரும் துணைவியாரும் பயந்து விட்டனர். கொலைக் குற்றம் ஒன்றின் ஐயப் பாட்டில் விளக்க மறியலில் இருந்து வெளிவந்திருக்கும் கவிதைக்காரனின் வெருட்டல் அவர்களைக் கிலி கொள்ள வைத்தது. என்னிடம் கலக்கத்துடன் விடயத்தைக் கூறி நாவலைத் திருப்பித் தந்தனர். பிரசுரமாகாத ஒரு நாவலை வாசிக்கக் கொடுத்த பத்திரிகா தர்மத்தை என்னால் மறக்க முடியவில்லை. அந்த நாவல் பின் வாடைக்காற்று என்ற பெயரில் வீரகேசரி வெளியீடாக வெளிவந்தது. சுந்தர் அது வெளிவந்ததும் எனக்கு எழுதுகிறார். 'அலையின் கீதம் (வாடைக்காற்று) மிகச் சிறந்த முறையில் வெளிவரவேண்டுமென்றே நாம் விரும்பினோம். எதை நாம் விரும்பியும், செய்யமுடியாத நிலையில் இருந்தோமோ! அதை ஒருவரும் நினைக்க முடியாத படி எதிர்த்தவர்கள், தலை நிமிர முடியாதபடி வெளியிட்டுவிழா நடத்தியது எனக்குப் பெருமகிழ்ச்சி” அக்கடிதம் இன்றும் என்னிடம் இருக்கின்றது. அதன் பிறகு எனக்கும் சுந்தருக்கமிடையிலான உறவில் மாற்றமேற்படவில்லை. அடிக்கடி அதனை நினைவு படுத்தித் தன் துயரத்தினைப் பகிர்ந்து கொள்வார்.
2. கொழும்பிலிருந்து வெகு தரமாக வெளிவந்த மாணிக்கம் என்ற சஞ்சிகை நூல் வெளியீட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, சிரித்திரனில் வெளிவந்த ‘கொத்தியின் காதல்’ என்ற நகைச்சுவை நாவலைத் தம் வெளியீடாக வெளியிட முன்வந்தது. நான் வெளியிடும் உரிமையை வழங்கிவிட்டேன். கொழும்பில் பெரியளவில் வெளியீட்டு
47

Page 30
விழா நடந்தேறியது. அதன் பின்னர் சுந்தரைச் சந்தித்தேன். அவர் முகத்தில் சற்று வாட்டம் தெரிந்தது. ‘கொத்தியின் காதல்’ சிரித்திரனில் வெளிவந்தது. நாங்கள் நூலாக வெளியிட எண்ணியிருந்தோம் என்று கூறியபோது உண்மையில் நான் துயரத்துடன் தவறிழைத்துவிட்ட நிலையில் திக்குமுக்காடிப் போனேன். அதைவிடும் ஆழியான்’ என்று என்னைச் சமாதானப் படுத்தியமை இன்றும் நினைவில் இருக்கிறது.
இந்த இரு நிகழ்ச்சிகளைத் தவிர எனக்கும் சிரித்திரன் குடும்பத்திற்குமிடையிலான இலக்கிய உறவில் என்றும் கருத்து வேற்றுமையோ கோபதாபமோ இருந்ததில்லை.
சிரித்திரனை வெறுமனே ஓர் இலக்கிய சஞ்சிகை என்று குறுகிய ஒரு வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. சுந்தரின் படி அழகு நகைச் சித்திரங்கள்,ஆனந்தத் துணுக்குகள், இனபப் பதில்கள், ஈடிலாக் கதைகள், உளம் மகிழ் கவிகள் என்பவற்றினைக் கொண்ட தமிழ்க் கார்ட்டுன் சஞ்சிகை என வரையறுத்துக் கொண்டால் அதுவும் சிரித்திரன் பற்றிய மதிப்பீட்டிற்கு முழுமையாகாது. சிரித்திரன் ஓர் அரசியற் சஞ்சிகை, சிரித்திரன் ஒரு சமூகச் சஞ்சிகை, சிரித்திரன் ஒரு பொருளாதாரச் சஞ்சிகை, சிரித்திரன் ஓர் இலக்கியச் சஞ்சிகை. ஆம்! சிரித்திரன் அரசியற் - சமூக - பொருளாதார இலக்கியச் சஞ்சிகை.
சுந்தரின் சிரித்திரன் சஞ்சிகையின் அரசியல் சமூக - பொருளாதார இலக்கிய முக்கியத்துவத்தின் வரலாற்றினை நோக்குவோம்.
1. 1963 - லிருந்து 1995 - வரையிலான 32 வருட காலகட்டத்தில் 28 ஆண்டுகள் சிரித்திரன் சஞ்சிகை 318 இதழ்களாக வெளிவந்தது. தமிழில் வெளிவந்த ஒரேயொரு கார்ட்டுன் சஞ்சிகை தமிழ் கூறும் நல்லுலகில் இதுவொன்றே என்ற பெருமைக்குரியது.
2. ஆரம்பத்திலிருந்து 1970 ஆவணி மாதம் வரை சிரித்திரன் பண்டாரநாயக்க வீதியிலுள்ள சுதந்திரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. 1970 புரட்டாதியிலிருந்து டாம் வீதியிலுள்ள குமரன் அச்சகத்தில் அச்சிடப் பட்டு விெளிவந்தது. கொழும்பில் அச்சிடப்பட்டபோது சிரித்திரனின் பணிமனை சென்பெனடிக்ற் வீதியில் இருந்துள்ளது. 1971 ஏப்ரல் மாதம் வரையில் குமரன் அச்சகமே சிரித்திரனை அச்சிட்டு வழங்கியுள்ளது. 1971 ஜூன் மாதம் சிரித்திரன் 67 பிறவுண் வீதி யாழ்ப்பாணத்திற்கு மாறியதும் பூரீ லங்கா அச்சகத்தில் அச்சிடப் பட்டுள்ளது. 1971 நவம்பர் மாதத்திலிருந்து சிரித்திரனுக்குச் சொந்தமான கவின் அச்சகத்தில் அச்சாகத் தொடங்கியது. 1974 ஆரம்பத்தில் பிறவுண் வீதியிலிருந்த பணிமனை நாவலர் விதிக்கு மாறியது. பின்னர் காங்கேசன்துறையிலுள்ள
48

சொந்த வளவிற்கும் கட்டிடத்திற்கும் மாறியது. இந்திய இராணுவத்தினரால் சேதமாக்கப் படும் வரை - 1987 வரை இவ் விடத்திலிருந்தே சிரித்திரன் வெளிவந்துள்ளது. 1990 களில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அவர்களுக்குரிய அச்சகத்தில் அச்சிடப் பட்டு வெளிவந்துள்ளது. 1995 இடப் பெயர்வுடன் சிரித்திரன் சஞ்சிகை தன் பணியினை முடித்துக் கொண்டது. யாழ்ப்பாணத்திலிருந்து சுந்தர் குடும்பம் அவர்களின் பிறந்தவுரான கரவெட்டிக்கு மாறியது. அங்கு தன் சொந்த மண்ணில் 02.03.1996 இல் சிரித்திரன் சுந்தர் காலமானார்.
3. சிரித்திரன் சஞ்சிகையில் அரைப்பங்கு விடயங்கள் சுந்தரின் கைவண்ணமாகும். கார்ட்டுண்கள், நகைச் சுவைப் பகுதிகள், நிலைக்கண்ணாடி (ஆசிரியத் தலையங்கம்), மகுடி (கேள்வி பதில்), சிரித்திரன் அகராதி, முன்சிரிப்பு (முதற்பக்க நகைச்சுவைத் துணுக்குகள்), பின்சிரிப்பு,கதைத்தேன் (குட்டிக் கதைகள்) முதலானவை அவர் படைப்புக்களாகச் சிறப்புத் தந்தன. சுந்தர், மாயன், பாணன், அதிமதுரம், ஜோக்கிரட்டீஸ், சிவா, சிவாஜி, மகுடி, தேனுகா முதலான பல்வேறு புனைப் பெயர்களில் அவரது படைப்புக்கள் இடம் பெற்றன. அவரது புகழ் பெற்ற கார்ட்டுண்களின் பாத்திரங்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தார், மிஸிஸ் டாமோதரன், என்பவர்களோடு யாழ்ப்பாணத்தின் பல்வேறு மாந்தர்களும் கருத்தோவியங்களாகவும் சமூகத்தின் வகைமாதிரிப் பிரதிநிதிகளாகவும் தோன்றிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர்.
4. கார்ட்டுன்களுக்கு அப்பால் சிரித்திரனின் முக்கியமான பகுதியாகவும் பலரைக் கவர்ந்ததாகவும் மகுடி என்ற கேள்வி பதில் அமைந்தது. வாசகர்களின் வினாக்களுக்கு சுந்தர் வழங்கிய நகைச்சுவைப் பதில்கள் சாதாரணமானவையல்ல, என்பதை மகுடியை வாசித்தவர்கள் உணர்வர். எவரையும் பின்பற்றாத தனித்துவமான சிந்தனைச் சிதறல்கள் அவர் பதில்களில் தொக்கி நின்றன. மகுடியின் பதில் தரும் முறையைப் பின்பற்றிப் பலர் இன்று முயன்று வருகின்றார்கள்.
5. சிரித்திரன் குட்டிக் கதைகளுக்குத் தனித்துவமான பரிமாணம் ஒன்றினைத் தந்துள்ளது. ஆரம்பத்திலிருந்து 'மாத்திரைக் கதைகள் என்ற தலைப்பில் காசி ஆனந்தன் தொடர்ந்து குட்டிக் கதைகளை எழுதி வந்தார். அவரின் இந்திய இடப் பெயர்ச்சி அம்முயற்சிக்குத் தடையாக, அவ்விடயத்தை ‘கதைத்தேன்’ என்ற தலைப்பில் தேனுகா
49

Page 31
என்ற புனைபெயரில் சுந்தர் நிறைவு செய்து வந்தார். கருத்தாழம் மிக்க செய்திகளை அவர் குட்டிக் கதைகளாக்கி மாதாமாதம் வழங்கி வந்துள்ளார்.
6. சிரித்திரன் சிறுகதை இலக்கியத்திற்கு அளித்திருக்கின்ற பங்களிப்பு தனித்து ஆராயப்பட வேண்டியது. 1971-ன் பின்னர் சிரித்திரனின் ஒவ்வொரு இதழிலும் மணியான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் பிரபலமான எழுத்தாளர்களிலிருந்து, சிரித்திரன் மூலம் சிறுகதைத் துறைக்கு வந்த பலரும் சிரித்திரனில் சிறுகதைகள் எழுதியுள்ளனர். என். எஸ். எம். ராமையா, செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப், எஸ். அகஸ்தியர், கனக செந்திநாதன், நெல்லை க. பேரன், து. வைத்திலிங்கம், க. பாலசுந்தரம், சுதாராஜ், கே. ஆர். டேவிட், திக்குவல்லை கமால், அப்பாச்சி மகாலிங்கம் முதலான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைக்குப் பங்களிப்பு செய்தவர்களும், குப்பிளான் ஐ. சண்முகம், என்.வி.நடராஜன், நெய்தல் நம்பி, மல்லிகை சி. குமார், எஸ் பி. கிருஷ்ணன், யோகேஸ் ஐயாத்துரை, வே. கோபால கிருஷ்ணன், வடகோவை வரதராஜன், எஸ் எச். நிட்மத் என்போர் உட்பட சி. மகேஸ்வரன், ரேணுகா, மாதவி, கனக. மகேஸ்வரன், எஸ். பிரியா, கடலூர் சாந்தன், சரோஜினிதேவி, தெய்வீகன், கீதபொன்கலன், செந்தாரகை, பதுளை ராகுலன், மு. இரத்தினம், ஆ. த. சித்திரவேல், பைரவி, கதிர், ந. சிகரன், எஸ். கே. விக்னேஸ்வரன், நாக பத்மநாதன், பால அசோகன், நா. மகேசன், ரி. எஸ். சிவகுமார், ரூபதர்சினி, எஸ்.பி.ஞானப்பிரகாசம், சிவசக்தி, சந்திரபோஸ், சசி கிருஷ்ணமூர்த்தி, கே. பெனடிக்ற் முதலானோர் குறிப்பிடத்தக்க தரத்தில் சிரித்திரனில் சிறுகதைகள் எழுதியவர்கள். ஈழத்தின் பெருமையை உலகறிய வைக்கும் தரமான சிறுகதைத் தொகுதியொன்றினை இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துவிட முடியும். மிகச் சிறந்த சிறுகதை கிடைத்த போது சுந்தர் அதற்கு கதை அமுதம் என்றோ மகுடக் கதை என்றோ முத்திரை பதித்து வெளியிட்டார்.
7. சிரித்திரனில் நாவல், குறுநாவல் ஆகிய துறைகளுக்குப் பெருமை சேர்க்கும் புனை கதைகள் பல வெளிவந்துள்ளன. அ.ந. கந்தசாமியின் நடுநிசிப் பிசாசு, சி. கே. சிவாவின் நடுநிசி, செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள், மயானபூமி, கொத்தியின் காதல், கங்கைக் கரையோரம், நடாந்தாய் வாழி வழுக்கியாறு, கே.ஆர். டேவிட்டின் பாலைவனப் பயணிகள் முதலானவை சிரித்திரனில் வெளிவந்தவை. ஈழத்தின் முதல் இரண்டு நகைச்சுவை நாவல்களான ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல் என்பன சிரித்திரனில் வெளியாகின.
50

8. சிரித்திரனின் சிறப்பான அம்சமாகக் கருதப்பட்டது சிரிகதைகளாம் சற்குணம் (செங்கைஆழியான்), திக்கவயல் சி. தர்மகுலசிங்கம், எம். எஸ். பசுபதி, கா. யோகராசா, கே. எஸ். பாலச்சந்திரன், பொ.சண்முகநாதன், க. பரராஜசிங்கம் (துருவன்), முதலானோர் சிரித்திரனில் சிரிகதைகளை எழுதியுள்ளனர். இவர்களில் திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் குறிப்பிடத்தக்கவர். சிரித்திரனோடு தன்னைப் பூரணமாக இணைத்துக் கொண்டவர். V
9. சிரித்திரனில் காலத்திற்குக் காலம் புதுமையான அம்சங்களைச் சுந்தர் அறிமுகப் படுத்தி வந்தார். அப் பகுதிகளுக்கு அவர் இடுகின்ற தலைப்புக்கள் தனித்துவமானவை. சிரித்திரன் அகராதி, தத்துவ முத்துக்கள், செய்திச் சோடி, பள்ளிப் பகிடி, நகைத்தேன். கதம்பவனம், இலக்கியச் சிமிழ், தேன் பொழுது என அத்தலைப்புகள் விரியும். இலக்கியச் சிமிழ் என்ற இலக்கியப் பகுதியை அகளங்கன் தொடர்ந்து எழுதி வந்தார். பண்டைத் தமிழ் இலக்கியத்தின் சுவையான பகுதியை அறிமுகப் படுத்தி வைத்தார். சிரித்திரனின் பணியில் தேன்பொழுது குறிப்பிடத்தக்க தென்பேன். ஈழத்தில் இலைமறை காயாக விளங்கிய கலைஞர்களை மாதாமாதம் பேட்டி கண்டு அவர்களின் புகைப்படத்துடன் மக்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். மூத்த கலைஞர்களும் இளங்கலைஞர்களும் இப்பகுதியில் அறிமுகமாயினர். இந்தப் பகுதியை பொன். பூலோகசிங்கமும் கனக சுகுமாரும் இணைந்து எழுதி வந்தனர்.
10. சிரித்திரனின் ஆண்டு மலர்கள் விசேடமானவை. கருத்தோவியப் பொக்கிசமாக அவை திகழ்ந்தன. 1971 - ல் வெளிவந்த எட்டாவது ஆண்டு மலர் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது. கனக செந்திநாதன், து. வைத்திலிங்கம், தே. பெனடிற், க. பாலசுந்தரம் ஆகியோரின் மணியான சிறுகதைகள் நான்கு அதில் இடம் பிடித்திருந்தன. க. பரராஜசிங்கம், பொ. சண்முகநாதன், திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் அம்மலரில் தான் வெளிவந்தன. 'ஆழியான், இம்முறை ஆண்டு மலருக்குப் புதுமையாக நீர் எழுதித் தர வேண்டும்' என்ற சுந்தரின் கட்டளையை நான் நிறைவேற்றி வைத்தேன். காணாமற் போன சவாரி மாட்டினைத் தேடி, ஐந்து நாடகக் கலைஞர்களுடன் வழுக்கியாறு உற்பத்தியாகின்ற இடத்திலிருந்து கடலோடு கலக்கும் இடம் வரை நடந்தோம். கதையும் பிறந்தது. வழுக்கியாற்றின் வளமும் தெரிந்தது.
11. சிரித்திரனின் அட்டைப் படம் தன் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டு. மாதம் ஒரு கருத்தோவியம் அட்டைப் படத்தில் அலங்கரிக்கும். படிப்பவர்
உள்ளத்தில் படிந்து சுருக்கென இதயத்தைத் தைப்பதுபோல அக்
51

Page 32
கார்ட்டுன் விளங்கும். சிலவேளைகளில் அட்டைப் படக் கார்ட்டுனின் இடத்தினை முக்கியமான சிலரின் படங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எகிப்திய நாசர் இறந்தபோது அவர் படமும், குத்துவிளக்கு திரைப்படம் ஈழத்தில் தயாரிக்கப் பட்டு வெளிவந்தபோது அதில் நடித்த இரத்தினத்தின் படமும், பேராசிரியர் கைலாசபதியின் மறைவின் போது அவர் படமும் அட்டையை அலங்கரித்துக் கொண்டன. பெரும்பாலும் கார்ட்டுன்களே அட்டையைப் பிடித்திருந்தன. சிரித்திரனின் தனி முத்திரையாக அது இருந்தது.
இவை சிரித்திரனின் பொது அம்சங்கள், ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரிச் சிரித்திரன் கார்ட்டுன் சஞ்சிகை மட்டுமன்றி அரசியல், சமூக, இலக்கிய சஞ்சிகையாக விளங்கியது. ‘சிரித்திரனில் வெளிவரும் கேலிச் சித்திரங்கள் மிக அற்புதமானவையாக இருக்கின்றன” எனக் கூறும் அந்த வார்த்தைப் பிரயோகத்தினை சுந்தர் எப்பொழுதும் விரும்பவில்லை. கார்ட்டுனைக் கேலிச் சித்திரம் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவற்றினை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல கார்ட்டுன் என்றோ தமிழில் கூறுவதாயின் கருத்துச் சித்திரங்கள், கருத்தூண் என்றே குறிப்பிட்டார். ‘கார்ட்டுன் என்பது மொழியில்லாக் கலைக் கோலம் என்றார். கார்ட்டுன் என்பது சிறுமையை நளின நையாண்டியுடன் பூதாகரமாகப் படம் வரைந்து காட்டும் வித்தகம்' என்பது சுந்தரின் வாதம். 'கார்ட்டுன் என்னும் கிண்டல் கலை சமுதாயத்திலுள்ள களைகளைக் கிண்டி எடுப்பதற்கேயல்லாது, பயிரைக் கிண்டி எடுப்பதற்கல் ல’ என அடிக்கடி கூறுவார். அனைத்தும் சமூக மேம்பாட்டிற்காகவென்பது நம்பிக்கை.
சிரித்திரன் சுந்தர் கார்ட்டுனிஸ்டாக உருவாக்கப் பட்டவரல்லர். அக்கலை பிறப்பிலிருந்தே அவரிடம் உறங்கிக் கிடந்ததென்பேன். அதனை வெளிக் கொணர்ந்த நிகழ்ச்சிகள் சில அவரை நிகரில்லாத கார்ட்டுனிஸ்ட்டாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளன. மொடல் ஸ்கூல் என்ற நெல்லியடி மகா வித்தியாலயத்தில் அவர் தன் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மாணவராகத் திகழ்ந்தார். அவ்வேளை அவருக்குப் பத்து வயது. பருத்தித் துறையில் எழுத்தாளர் கல்கியையும் மாலி என்ற அற்புதமான கார்ட்டுன் ஒவியரையும் சந்திக்க நேர்ந்தமையைத் தன் வாழ்வின் ஒரு திருப்பமாகச் சுந்தர் குறிப்பிடுவார். கூட்ட மேடையில் வைத்திருந்த கரும்பலகையில் அநாயாசமாக மாலி வரைந்து தள்ளிய கருத்துச் சித்திரங்கள் அவர்மீதும் அக்கலை மீதும் அவரைப் பிணைத்துவிட்டன. பம்பாய்க்குக் கட்டிடக் கலைத்துறையில் கற்க அனுப்பப் பட்ட சுந்தர், அங்கு கார்ட்டுன்களைப் பம்பாய் ஆங்கிலப் பத்திரிகைகளில்
52

வரைந்தமை தற்செயலான நிகழ்ச்சிகளல்ல. பம்பாயிலிருந்து அவர் கார்ட்டுன் ஒவியராகவே திரும்பி வந்தார். இந்த நாட்டின் அரசியல் அயோக்கியத் தனங்கள், இனவாதங்கள், சமூகத்தில் வேரூன்றிக் கிடந்த அறியாமைகள், மூடநம்பிக்கைகள், தமிழ்ப் பற்றின்மை, அடக்கு முறைகள் என்பன அவருக்கென ஒரு கடமை சமூகத்தின்பால் இருப்பதை உணர்த்தின. ஆரம்பத்தில் பாணன் என்ற பெயரில் சுந்தர் அரசியல் கார்ட்டுன்களை வரைந்தார். அவை பெரிதும் வரவேற்கப் பட்டன. பின்னர் தினகரன், வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் சமூக கார்ட்டுண்களை வரைந்து தன் கருத்து நிலையைத் தெள்ளெனப் புரிய வைத்தார். அவை எவர்களை அடைய வேண்டுமோ அவர்களைத் தங்கு தடையின்றிச் சென்றடைந்தன. அவருடைய அரசியல் கார்ட்டுன்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் நெஞ்சினைக் கூர்மையான ஊசிகளாகத் தாக்கியிருக்கும். 1983-களில் யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் கட்டுக் கடங்காது மக்களைச் சுட்டு, சொத்துக்களை அழித்து யாழ்ப்பாணத்தின் நூலகத்தையும் தீயிட்ட போது அவற்றினைக் கண்டு அவரால் பொறுக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் நாட்டி வைக்கப்பட்டிருந்த பெரியார்கள் சிலைகள் கூட இந்த இனவெறியர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. மகாத்மா காந்தியின் சிலையும் தாக்குதலிற்குள்ளானது. உடைக்கப் பட்ட காந்தியின் சிலையின் காலிற்கும் கரத்திற்கும் முதலுதவிக் கட்டிட்டு தருமம் ஒழிந்து நிற்பதுபோல மொழியில்லாத கார்ட்டுன் வரைந்தார். ஓராயிரம் வார்த்தைகளால் சொல்லிக் குமுற வேண்டிய சங்கதியை ஒரு படத்தின் மூலம் சுந்தர் சுட்டிக் காட்டினார். இப்படி உதாரணங்கள் ஏராளம் காட்டிவிட முடியும். 'இலங்கைக்கு சுதந்திரக்கனி வழங்கப்பட்டிருந்தது. ஆம். பெரும்பான்மை இனத்திற்குச் சுளையும். சிறுபான்மை இனத்திற்குக் குந்துமாக வழங்கப்பட்டிருந்தது' என்று அவர் ஒரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். 1971 களில் கொழும்பு வாழ்க்கையைத் துறந்து அவர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியமை கூட இவ்வாறான சிந்தனையின் விளைவு பேரினவாதத்தின் எழுச்சியால் தமிழ் மக்கள் கொழும்பில் அகெளரவப் படுவதை அவர் வெறுத்தார்.
சிரித்திரன் சமூகப் பார்வை மிகுந்த அவதானிப்புத் திறன் கொண்டது. சிறிய விடயங்களையும் மிக நுட்பமாக அவர் அவதானித்துக் கார்ட்டுன்களாக்கினார். இனவாதப் பாதிப்பு, வீடு தேடும் படலம், வாடகை வீட்டில் அழுந்திய படலம், பாடசாலையில் இடம் தேடும் படலம், சமூகச் சின்னத்தனங்கள் அனைத்தும் அவர் கரங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கார்ட்டுன்களாகின. சமூகத்தின் சிறுமைகளை நவீன நையாண்டியுடன் சுட்டிக் காட்டினார். அதற்கு அவர் பல பாத்திரங்களைக் கருவியாக்கிக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் சமூகப்
53

Page 33
பிரதிநிதிகளாகச் சவாரித் தம்பர், சின்னக்குட்டி, மெயில்வாகனத்தார் என்போரும் அவருடன் சேர்ந்தோரும் அமைந்தனர். சுந்தருக்கு மிகுந்த புகழினைத் தேடிக் கொடுத்த சமூகக் கார்ட்டுன் சவாரித்தம்பர் ஆகும்.
பேராசிரியர் க. கைலாசபதி தினகரனின் ஆசிரியராக விளங்கிய காலகட்டத்தில் தினகரனின் தினசரியில் சவாரித்தம்பர் தொடர்ந்து வெளிவந்தது. சுந்தரைக் கைலாசபதியும் தினகரனைச் சுந்தரும் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டனர். தினகரனின் விற்பனை படிப்படியாக அதிகரித்தமைக்குச் சவாரித்தம்பர் ஒரு காரணம் என்பது ஒப்புக் கொள்ளப் பட்ட உண்மை. இன்றைய இளைஞர்களின் மனநிலையை மைனர் மச்சான் பிரதிபலித்தது. கொழும்புப் பெண்களின் ஆங்கில மோகத்தையும் தமிழ் அறிவின்மையையும் சுட்டிக் காட்ட அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் மிஸிஸ் டாமோதரனும் மிஸ்ரர் டாமோதரனுமாவார்கள். இவை வகை மாதிரிப் பாத்திரங்களாகவே அமைந்தன. சமூக மாந்தரின் திருந்த வேண்டிய அம்சங்களை சுந்தர் தன் கார்ட்டுன்களில் சுட்டிக் காட்டினார். எவரது மனதையும் நோகச் செய்வதற்கு அவர் தன் கார்ட்டுன்களைப் பயன்படத்தவில்லை என்பது முக்கியமாக நோக்கத் தக்கது. அவருடைய சமூகம் நோக்கிய கொதிப்புக் கார்ட் டுனி களாக மட்டும் வெளிவரவில் லை. ஆங்காங்கு கருத்துக்களாகவும் சொற்களில் பாய்ந்தன. “சிரிக்கத் தெரிந்தவன் மனிதன்' என்றார். கல்விக்குப் பணம் இறைக்கும் மனிதர் கலைக்குக் கிள்ளியும் தெளிப்பதில்லை' எனக் கவலைப் பட்டார். 'உத்தியோகத்தனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவே கல்வி நிலையங்கள் செயற்படுகின்றன. பூரண மனிதனை உருவாக்குவது அவற்றின் இலட்சியமாகவில்லை' என வேதனையோடு எடுத்துரைத்தார். “எமது சமுதாயம் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. சமுதாயத்தை பிள்ளைகளின் உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைக்கப்படும் இடுகாடென்றே கூற வேண்டும்.’ எனப் பொருமினார். இப்படிப் பலபல கருத்துக்களைச் சுந்தர் கூறிச் சென்றுள்ளார். சமூகத்தினை இரக் கத்தோடு அவர் தன் கார்ட்டுண்களாலும் எழுத்தினாலும் சாடினார். சமூகத்தின் போலித்தனங்களையும், சின்னத் தனங்களையும் அவர் சிந்தித்துத் திருந்துமாறு தன் படைப்புக்களில் கொண்டு வந்துள்ளார்.
சிரித்திரனின் அரசியல் பணி, சமூகப் பணி என்பவற்றுடன் அதன் இலக்கியப் பணியும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிரித்திரனில் வெளிவந்த ஆச்சி பயணம் போகிறாள், மயான பூமி (பிரளயம்), கொத்தியின் காதல், கங்கைக் கரையோரம் என்பன நூலுருப் பெற்றிருக்கின்றன. தேன்பொழுது, மகுடி, நடந்தாய் வாழி வழுக்கியாறு,
54

அலைகடல் தான் ஓயாதோ? சித்திரா பெளர்ணமி, முற்றத்து ஒற்றைப் பனை முதலான நூல்கள் சிரித்திரனின் பிரசுரமாக வெளியிடப் பட்டிருக்கின்றன. குறிப்பாகச் சிரித்திரன் சிறுகதைத் துறைக்கு ஆற்றிய பணி முக்கியமானது. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு சிரித்திரன் சிறுகதைகள் ஒரு தொகுதியாக வெளிவரில் புதியதொரு பரிமாணம் நிச்சயம் சேரும். என்.எஸ்.எம். ராமையா (நிலவைப் பிடித்து.) கண்க செந்திநாதன் (பெரிய மீன்.), செங்கை ஆழியான் (நிலமகளைத் தேடி), தெளிவத்தை யோசேப் (தீட்டு ரொட்டி.), க. பாலசுந்தரம் (மனித தெய்வம்), நெல்லை க. பேரன் (மொட்டை மரம்), து. வைத்திலிங்கம் (ஆலடி வயிரவர்), யோகேஸ் ஐயாத்துரை (பேதம்), என்.வி. நடராஜன் (இருள்), மல்லிகை சி. குமார் (புகுந்த வீடு), மாதவி (நெருப்பில் ஒரு செந்தாமரை), செந்தாரகை (நீ போனால் இன்னொன்று), சுதாராஜ் (தயவு செய்து கை போடாதீர்கள்), சாந்தன் (மீறல்), திக்குவல்லைக் கமால் (ஒரு பிழைப்புப் புனிதமாகிறது), சந்திரபோஸ் (நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்), வடகோவை வரதராஜன் (நாளை வரும் திருநாள்), இளவாலை விஜேந்திரன் (எங்கள் வலை), மருதூர் அலிகான் (சபலங்கள்), பால அசோகன் (வளைகோடுகளும் நேர்கோடுகளும், ஆகியோரது சிரித்திரன் சிறுகதைகள் சிரித்திரனின் சிறுகதைப் பங்களிப்புக்கு ஏற்ற உதாரணங்களாகும், இவை தொகுக்கப் பட்டுத் தொகுதியாக வெளிவரில் புனைகதைத் துறைக்குப் புதிய பங்களிப்புகளாக அமையும். இன்னொரு சங்கதியையும் சிரித்திரன் சுந்தரின் இலக்கியப் பங்களிப்பாகக் கருத முடியும். சிரித்திரனில் அரும்பு என்றொரு சிறுவர் பகுதியைச் சிலகாலம் நடத்தி வந்தார். அதில் பொச்சம் தீராது போனவிடத்து, 'கண்மணி" என்றொரு சிறுவர் சஞ்சிகையை ஆரம்பித்தார்கள். மூன்றிதழ்கள் வரை வெளிவந்து தொடர முடியாது நின்று போனது.
சிரித்திரன் சுந்தர் தமிழ் சஞ்சிகை உலகிற்கு அளித்த பங்களிப்பு என்றும் நினைவில் வைத்திருக்கப் படும். ஈழத்தமிழுலகின் கார்ட்டுன் உலகிற்கு அவர் என்றும் முடிசூடாத மன்னர். அவரிடத்தினை இன்றும் எவரும் நிரப்பவில்லை என்பேன். "எவன் தனது இயல்பான வல்லமையை அறிந்து அயராது ஆர்வத்துடன் உழைக்கிறானோ அவனே மேதையாகிறான்' என்பது சிரித்திரன் சுந்தரின் வார்த்தைகள். அந்த மணிவாக்கு அவருக்கே மிகவும் பொருத்தமானது. ஏனெனில் எங்களிடையே வாழ்ந்து, தன் அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கும் கலாமேதை அவர்.
55

Page 34
ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு
வித்திட்ட ‘பாரதி'
-தெளிவத்தை ஜோசப்
தமிழிலக்கிய வளர்ச்சியும்' என்பது பற்றிய ஒரு வரலாற்று நோக்குக் குறிப்பெழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
3. லங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின்
1946-ல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தோர் அக்காலத்தில் , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக விருந்த கே.ராமநாதன், கே.கணேஷ் ஆகியோரே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும் ஆற்றுப் படுத்தலையும் அடிக்கல்லாகக் கொண்டு இந்தியாவில் கே.ஏ.அப்பாஸ் முதலியோரின் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று ராமநாதனும் கணேஷம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர். (புதுமை இலக்கியம் தேசிய ஒருமைப் பாட்டு மாநாட்டு மலர் - 1975) இதே 1946-ல், இதே கே.கணேஷம், ராமநாதனும் கூட்டாசிரியராக இணைந்து ‘பாரதி' சஞ்சிகையை வெளியிட்டனர்.
‘விஞ்ஞான முடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்தி போல், தமிழ் மொழிக்குப் புதுமைப் போக்களித்த மகாகவி பாரதியின் பெயர்
56

தாங்கி வருகிறது இந்த இதழ். மகாகவி பாரதி தமிழுக்குப் புது வழி காட்டியது போலவே எமது பாரதி இதழும் 'கண்டதும் காதல் கதைகள் மலிந்து விட்ட இன்றைய தமிழிலக்கியப் போக்கிற்கும் புதுவழி காட்டும்.
* ஏகாதிபத்தியத்தை அழிக்கக் கவிபாடிய பாரதியார் முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமையான ஒப்பில்லாச் சமுதாயத்தை ஆக்கவும் கவி பாடினார். அவர் காட்டிய அந்தப் பாதையில் பாரதி யாத்திரை தொடங்குகிறது. இந்தப் பணிக்கு வேண்டியது தமிழர் ஆதரவே' என்னும் தலையங்கத்துடன் 1946-ம் ஆண்டு தை மாதம் 'பாரதி முதல் இதழ் வெளிவந்தது. ஆண்டுச் சந்தா ஆறு ரூபாய். தனிப் பிரதி அரை ரூபாய் என்னும் அறிவிப்புடன் எழுத்தாளர்களுக்கான ஒரு வேண்டுகோளும் இருக்கின்றது. ‘கட்டுரை, கதை - கவிதை, ஒவியங்களை பாரதி வரவேற்கிறது. பிரசுரிக்கப் படுவனவற்றிற்குச் சன்மானம் வழங்கப்படும். ‘எழுத்தாளர்களைக் கனம் பண்ண வேண்டும் என்னும் இலக்கியச் சிற்றேடுகளின் குறிக்கோளைப் பாரதி' தனது முதல் இதழிலேயே ஆரம்பித்து வைத்துள்ளமை இதிலிருந்தும் புலனாகிறது.
முதல் இதழின் அட்டையை அலங்கரிப்பது களத்து மேட்டில் நெல்லிடிக்கும் காட்சி. பாரதி என்னும் பெயருக்குப் பொருத்தமான 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இந்தப் படத்தை "லங்கா சிங்கள மாசிகை தந்துதவியதாகவும் ஒரு குறிப்பு போட்டுள்ளார்கள்.
முதல் இதழில் எழுதியுள்ள எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகக் குறிப்பும் ஒரு முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இந்த இதழில் அ.ந.கந்தசாமியின் வழிகாட்டி’ என்னும் சிறுகதையும் மார்க்சிம் கார்க்கியின் 'கோமாளி' என்னும் மொழி பெயர்ப்புக் கதையும் இடம் பெற்றுள்ளன.
இசை மன்னன் லுட்விக்வொன் பெதோவன் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சி. ஆர். கே. மூர்த்தியின் கட்டுரையும் கொடிய நோயான குஷ்டரோகம், ஏன், எப்படி உண்டாகிறது, பரவுகிறது. இந்நோய் ஒருவனைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் என ன? என்பது போன்ற பயனுள்ள தகவல்களைத் தரும் நீரா.ழரீனிவாசனின் ‘பெருநோய்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையும், ‘புதிய மலாயா' என்னும் ராமசாமியின் கட்டுரையும் இதழுக்கு அணி செய்யும் அருமையான விஷயங்கள்.
இசை மன்னன் பற்றியும் பெருநோய் பற்றியும் எழுதியுள்ள இருவரும் பெங்களுர் ‘டாடா' விஞ்ஞானக் கழகத்தில் ஆராய்ச்சி நடத்தும் இளம் விஞ்ஞானிகள் என்று எழுத்தாளர் அறிமுகப்பகுதி கூறுகிறது.
57

Page 35
சென்னைக்குக் கிழக்கே சுமார் 1500 மைல் தூரத்தில் மலாயா இருக்கிறது. கிழக்காசிய மக்களை உய்விக்க வேண்டுமென்று ஜப்பான் அடிக்கடி கூறுகிறதல்லவா. அதே கிழக்காசியாவில் தான் மலாயாவும் இருக்கிறது. மூன்று பக்கம் கடலும், நான்காவது பக்கமான வடக்கே தாய்லாந்தின் எல்லைப் புறத்தையும் உடைய ஒரு அழகான தீபகற்பம் இது. சுமார் 500 மைல் நீளமும் 250 மைல் அகலமும் கொண்ட இந்தப் பிரதேசம் முழுதுமே கொழுத்துச் செழித்த பூமி. எந்தப் பக்கம் திரும்பினாலும் ரப்பர் மரங்களும், செடி கொடிகளுமாக கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி தரும் பூமி. காடுகளும் மலைகளும், ஆறுகளும் அருவிகளும் இந்நாட்டை வளம்படுத்துகின்றன’ என்று ஆரம்பித்து சுவையாகச் செல்கிறது புதிய மலாயா கட்டுரை.
‘ஹோட்டல்கள் - சினிமாக்கள் - ஒட்டை டிராம்கள் முதலியவற்றையே பிற நாடுகளில் காணும் கட்டுரை ஆசிரியர்களையே வாசித்து புளித்துவிட்ட தமிழர்களால் வெ.ராமசாமியின் புதிய மலாயா உற்சாகத்துடன் வரவேற்கப்படும் என்று நம்புகிறோம்.
இந்த மூன்ற கட்டுரைகளைத் தவிர்த்து, ‘வாழத்துணிந்தவன்' என்னும் தலைப்பில் நவயுக எழுத்தாளன் ‘ரால்ப் பாக்ஸ்' பற்றிய வாழ்க்கைக் குறிப்பை 'கிருபா’ என்னும் புனைபெயருக்குள் இருந்து எழுதியுள்ளார், கே.ராமநாதன். பேனை பிடித்த கரங்களிலே போர்க் கருவி ஏந்தி போர் முனையின் தீப்புயலில் கருகி மாய்ந்த பாக்ஸைப் பற்றிய வீரவரலாறு இந்தக் கட்டுரை.
'கலாநேசன்' என்னும் பெயரில் கே. கணேஷ் எழுதியுள்ள பாரதியார் கவிதையும் யோகி சுத்தானந்த பாரதியார் எழுதியுள்ள ‘குயிலிசை என்னும் கவிதையும் இந்த முதல் இதழில் வெளியாகி இருக்கின்றன.
‘தமிழ் தமிழுக்காகவே என்று தம் கூட்டத்திற்குள்ளேயே மொழியைச் சிறைப் படுத்திக் கொண்ட பண்டிதர்களின் இரும்புப் பிடியினின்று அதனை மீட்டு மக்கள் சொத்தாக்கினான் பாரதி. பாரதி பரம்பரை நாங்கள் என்று இன்று ஐம்பமடிக்கும் எழுத்தாளர் கோஷ்டி கலை கலைக்காகவே என்று அதே பல்லவியை வேறு இராகத்தில் பாடுகிறது. தமிழைச் சிறைமீட்ட பாரதியார் செய்த சேவையே இந்தப் பாரதியின் இலட்சியமும் என்னும் இந்த முதல் இதழ் தலையங்கத்தின் மூலம் பாரதி எந்தவிதமான இலக்கியக் கொள்கையுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது என்பதை கே. ராமநாதனும் கே.கணேஷம் ஒளிவு மறைவின்றித் தெளிவுபடுத்தி விடுகின்றனர். இதைக் கூறும் போது எனக்கு ‘சரஸ்வதி நினைவும் வருகிறது.
‘என் பெயருக்கு இருக்கும் அரசியல் வர்ணம் எனது பத்திரிகைக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே கொஞ்சம் அரசியல் பூச்சுத்
58

தெரியாத பெயராக இருக்கட்டும் என்று ‘சரஸ்வதி என்ற பெயரை எனது பத்திரிகைக்குத் தெரிவுசெய்தேன்’ என்று விஜயபாஸ்கரன் கூறியுள்ளார்.
ஆனால் பாரதியின் ஆசிரியர்களோ அந்தப் பூச்சுப் புலப்படவே பத்திரிகையை நடத்திக் காட்டினர்.
இலக்கிய ஆர்வம் என்பது மட்டுமின்றி இலக்கிய நோக்கம் பற்றிய சிந்தனையுடனும் வெளிவந்த பாரதி பற்றி ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களும் விமர்சகர்களும் ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டது வியப்பாகவே இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் கருத்துப் புரட்சியைக் காண விரும்பிய ப.ஜீவானந்தம் அவர்களின் நெருங்கிய தோழரும் சிறந்த பேச்சாளரும், ஜனசக்தியின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான ஐ.மாயாண்டி பாரதி திரு. கே.கணேஷின் ஆப்த நண்பர். ஜனசக்தியில் கே.கணேஷின் படைப்புக்கள் வெளிவந்தன. ஒரு தமிழ்ப் பண்டிதராவதற்காகத் திரு.வி.க. விடம் தமிழ் படிக்கச் சென்ற இவருக்கு இடதுசாரிகள் பலருடன் பழகவும் கலந்துரையாடவும், எழுதவுமே பிடித்திருந்தது.
கே.ராமநாதன், மாயாண்டி பாரதி, சக்திதாசன், சுப்பிரமணியம் ஆகியோர் சேர்ந்து சென்னையிலிருந்து வெளியிட்ட 'லோக சக்தி' முதல் இதழிலேயே கே. கணேஷின் படைப்பு வெளிவந்திருந்தது. கே. ஏ. அப்பாஸ், முல்க்ராஜ்ஆனந்த், பிரேம்சந்த் போன்றோர்களுடனும், தமிழ் நாட்டின் பழம் பெரும் எழுத்தாளர்கள் சகலருடனும் புதுமைப் பித்தன் உட்பட பழகியவர் கே. கணேஷ். இந்தப் பழக்கத்தின் நெருக்கம் காரணமாக அங்கேயும் அப்பாஸ் முதலியோருடன் சேர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார். பெரும்பான்மையான நாடுகளுக்குச் சென்றுள்ள திரு.கே.கணேஷ் அந்த நாட்டின் எழுத்தாளர்கள், இலக்கியங்கள் இவற்றுடனேயே கூடுதலான தொடர்பு கொள்பவர். தமிழ்ப் பண்டிதர் ஆகாமலே இலங்கை திரும்பிய கே.கணேஷ் தனது வெளிநாட்டு எழுத்தாளர் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளாது வைத்துக் கொண்டே இருந்தார்.
அப்போது நியூ ரைட்டிங்ஸ் என்ற வெளியீடு பென்குயின் புக்ஸ் வெளியிட்டாளர்களால் வெளியிடப்பட்டது. ஒர் ஏழு இதழ்களே வெளிவந்த இந்தப் ‘புது எழுத்துக்கள்’ பாசிஸ் எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தன. நியூ ரைட்டிங்ஸ் முதல் இதழில் இத்தாலிய எழுத்தாளர் இக்னேசியஸ் சிலோனியினுடையதும் முல்க்ராஜ் ஆனந்தினுடையதும் படைப்புக்கள் வெளிவந்திருந்தன. நியூ ரைட்டிங்ஸ் கணேஷைத் தேடிவரும் போது நாமும் ஏன் இதுபோல். எனும் ஒர் உந்துதல் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால், அப்போது இலங்கையில்
59

Page 36
இருந்த கே.ராமநாதனுடன் கலந்தாலோசனை செய்தார். அப்போது இலங்கையில் ஏற்பட்டிருந்த மலையாள இலக்கியத்தின் தாக்கமும், உத்தம பாளையம் நண்பர் ரா. நாராணயசாமி 1930 களில் நடத்திய பாரதி இதழின் நினைவும், எல்லாமாகச் சேர்ந்து 1946 தை பிறந்தவுடன் கே. கணேஷ், கே.ராமநாதன் வெளியிட்ட ‘பாரதி க்கான வழியும் பிறந்துவிட்டது.
முதல் இதழின் அட்டைப் படத்தை, பாரதிக்கு வழங்கிய, "லங்கா சிங்கள் இதழின் ஆசிரியராக அப்போது இருந்தவர் திரு.ஆனந்த திஸ்ஸ டி. அல்விஸ் அவர்கள் தான் என்பதும் குறிப்பிடக் கூடியதே.
கலாநேசன் என்னும் பெயரில் கே. கணேஷ் எழுதியுள்ள கவிதை புதுமைக்கவி பாரதி உதித்த காலத்தை நினைவு படுத்துகிறது.
தாய்மொழி என்றொரு மொழியும் உண்டோ என்று தமிழ் மக்கள் ஐய முற்றிருந்த காலம் பேயரசார் கொடுஞ்செயல்கள் தமை எதிர்த்தப் பேசுதற்கும் ஆண்மையற்றிருந்த காலம் இப்படி இருந்த தமிழ் மக்களையும் புலவர்களையும், உரிமை உணர்வளித்தவரை விழிக்கச் செய்து போர் செய்யும் திற னளித்த ஊக்குவித்த புலவர் பிரான் பாரதியார் நாமம் வாழி'
என்கிறார் கவிஞர்.
இராகம் - பேஹாக், தாளம் ஆதி. என்னும் குறிப்புடன் வெளிவந்திருக்கும் யோகி சுத்தானந்தா பாரதியின் ‘குயிலிசை என்னும் கவிதை யோகியார் பாரதிக்கென்றே எழுதிய கவிதையாகும்.
‘மானிட வாழ்வினிலே வானமுதம் பொழியும் ஆனந்தப் பண்ணொலிப் பாய் - குயிலே
60

அன்பான கண்மணியே என்று ஆரம்பிக்கும் தன் கவிதையை 'நெஞ்சினிலே வஞ்சமின்றி நேர்மை கடைப்பீடித்தே அஞ்சாத சுதந்திரத்தில் - குயிலே ஆடிக்களித்திடுவோம். சத்திய யுகம் வர
ஈமரச நிலைபெற. சத்த சக்தி ஓம் என்றே - குயிலே சுதந்திரமாய்ப் பாடுவோம்’
என்று முடிக்கிறார் அரவிந்தாசிரமத்தில் யோக சாதனையில் ஈடுபட்டிருக்கும் சுத்தானந்த பாரதியார். நமது ‘பாரதியிலும் பங்கு பற்றிக் கவிதை ஒன்று உதவியாயிருக்கிறார் என்னும் குறிப்பும் இருக்கிறது.
புதுமை இலக்கியத் தந்தை ரஷ்யப் புரட்சி அளித்த இலக்கியக் கொடை . மார்க்ஸிம் கார்க்கியின் கதை, முற்போக்கை முழுமூச்சாகத் தழுவிக் கெண்ட அ. ந. கந்தசாமியின் கதை, ஸ்பெயினில் பாசிஸத்தை எதிர்த்து வீரப்போரிட்டு மரணம் ஏந்திய நவயுக எழுத்தாளன் ‘ரால்ப் பாக்சைப் பற்றிய கே. ராமநாதனின் கட்டுரை ஆகியன, பாரதி இதழின் இலக்கியக் கோட்பாட்டை, முதல் இதழிலேயே உறுதிப் படுத்துகின்றன.
“பாரதி இரண்டாவது இதழ் மாசி மாதமே வெளிவந்திருக்கின்றது. (1946-ல் தை முதல் இதழ் - மாசி இரண்டாவது இதழ்)
முதலாம் இதழுக்குத் தமிழ் மக்கள் அளித்த வரவேற்பு இரண்டாம் இதழினை உற்சாகத்துடன் கொண்டு வரத்தூண்டு கோலாக இருந்தது. அரை ரூபாவிலை அதிகம் என அன்பர்கள் குறை கூறியுள்ளார்கள். அச்சுச் செலவு அதிகமான தனி காரணமாகவே அவ் விலை நிர்ணயிக்கப்பட்டது. மேல் வரும் இதழ்களை அதிக பக்கங்களுடன் , படங்களுடன், உயரிய காகிதத்திலும் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். என்று ஆசிரியக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனாலும் பாரதி கடைசி இதழ் வரை நாற்பது பக்கத்துக்கு மேல் செல்லவில்லை. உயரிய காகிதத்தில் அடிபடவில்லை. படங்கள் கூடுதலாக இடம் பெறவில்லை. இதிலிருந்தே இருந்திருந்து கிடைத்த கடைசிப் பக்க ஒரே விளம்பரத்துடனும், அரை ரூபா விலையுடனும்
ー"

Page 37
அச்சுச் செலவு இத்தியாதிகளைச் சமாளிக்க முடியாமலே பாரதி வந்து கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது.
இரண்டாவது இதழின் அட்டையை அலங்கரிப்பவர் புரட்சி வீரர் பகவத் சிங். அட்டைப் படக் கட்டுரையை எழுதியிருக்கிறார் கே.கணேஷ்.
வெறும் விவாத சபையாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திரம் கேட்கும் ஸ்தாபனமாக 1928-ல் கல்கத்தாவில் நடந்த மகாநாட்டில் மாறியது. குடியேற்ற நாட்டு அந்தஸ்துக் கேட்டு, அது கிடைக்காமல் போகவே சுதந்திரமே இலட்சியம் என்று கொடி உயர்த்தியது. அரசியலில் தீட்சண்யமுள்ள வாலிபர்கள் பலர் தொழிற்சங்கம் ஏற்படுத்தித் தொழிலாளர் உரிமைக்காகப் போராடினர். இவர்களின் சுதந்திர உணர்வை மழுங்கடிக்கும் எண்ணத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் இங்கிலாந்தின் பிரபல வழக்கறிஞர் சைமன் பிரபுவைத் தலைமையாகக் கொண்ட ஒரு கமிஷனை அனுப்பியது. கொதித்தெழுந்த பொதுமக்கள் சைமனே திரும்பிப்போ’ என்று ஒன்று பட்டுக் கறுப்புக் கொடி காட்டினர். 1928 அக்டோபர் 30-ம் திகதி இந்தக் கமிஷன் பாஞ்சாலத் தலைநகரான லாகூரை அடைந்தது. அச்சமயம் எதிர்ப்புக் கோஷ்டிக்குத் தலைமை தாங்கியவர் லாலாலஜபதிராய். பொலிசாரின் தாக்குதலுக்குள்ளான லாலாஜி இரண்டு வாரத்தின் பின் மரணமானார். இவரின் மரணத்தால் கொதித்தெழுந்த பாஞ்சால யுவர்களில் பகவத்சிங்கும் ஒருவர். அவர் செய்த விரப் புரட்சிச் செயல்களை சுவைபட ஒரு வீரக்கதை போல் தந்திருக்கின்றார் கணேஷ்.
லாகூர் சதி வழங்குச் சட்டம் என ஒன்றைச் சிருஷ்டித்து வக்கில்கள் ஆஜராகாமலே வழக்கை விசாரித்துத் தண்டனையளிக்கவும் விசாரணைச் சபைக்கு உரிமையளித்தது அரசாங்கம். 1930 -ம் வருடத்தில் லாகூர் சதி வழக்குச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்பட்ட பகவத்சிங் 1931 - மார்ச் 23-ம் திகதி தூக்கிலிடப்பட்டார்.
சாவதற்கு முன் பகவத்சிங் தனது தம்பிக்கு எழுதிய கடிதத்தில் நான் இறப்பதைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னதமான இலட்சியத்துக்காக உயிர் விடுகிறேன்’ என்று கவலையை மறந்து மக்களுக்குச் சேவை செய்வதையே உன் கடமையாகக் கொள் என்று எழுதினார்.
இது அவர் தம்பி குல்தார் சிங்கிற்கு மட்டும் கூறியதல்ல என்று கட்டுரையை முடிக்கிறார் ஆசிரியர்.
வீரர் பகவத்சிங் போன்றவர்களின் படத்தை அட்டையில் போடவும் ஓர் இலக்கியத் துணிவு வேண்டும்.
'திரண்டு வரும் புரட்சிச் சக்தியின் முன்னறிவிப்பே இது என்று
62

வாக்குமூலம் கொடுத்து மரணத்தை ஏற்றுக் கொண்ட வீரர் பகவத் சிங்கின் வீர வரலாறு சகலரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றே.
மக்களுக்கு சேவை செய்வதற்காக மரணத்தையும் துச்சமெனக் கருதி ஏற்றுக் கொண்ட வீரர்கள் இருவரைப் பற்றி முதல் இதழில் கே.ராமநாதனும் இரண்டாவது இதழில் கே.கணேஷம் எழுதியுள்ளார்கள்.
கவிதைப் பகுதியில் இலங்கையின் உயர்வையும் உயர்வற்றதையும் காட்டும் ‘எங்கள் இலங்கை க.இ.சரவணமுத்துவின் ‘எங்கள் பாரதி” சோ.நடராஜனின் பாதகாணிக்கை அடிமைத்துவத்தின் சின்னங்கள் என்னும் சிப்பியின் கவிதை, பண்டிதரின் ‘மாரி எனும் வர்ணனைக் கவிதை என்று ஐந்து கவிதைகள் இந்த இரண்டாவது இதழில் வெளியாகி இருக்கின்றன. இத்தனை கவிதைகளுமாகச் சேர்ந்து இந்தப் பாரதியை ஒரு கவிதை மலராகவே செய்து விட்டன என்று கூறியுள்ளார்கள் கூட்டாசிரியர்கள்.
அட்டைப் படத்தைக் கொஞ்சம் கூர்மையாகப் பாருங்கள். பாரதியின் ‘பா’வுக்கு முன்னே ஒரு கம்பிரமான பாரதியின் முகம் தெரிகிறதல்லவா!
பாரதி எழுத்துடன் அந்த முகத்தையும் வரைந்து முகப்போவியத்தை அமைத்துக் கொடுத்தவர் ஓவியர் ஆர். எஸ். ஆர். கந்தப்பா! யார் இந்த ஆர்.எஸ்.ஆர்.கந்தப்பா!
பாரதி இதழ்களின் முகப்போவியத்துடன் அட்டை அமைப்புக்களையும் அழகாகச் செய்தவர். 'கிறாண்ட்’ அட்வர்டைசிங் முதல்வர் ரெஜி கந்தப்பா அவர்கள் தான்.
முதல் இதழில் ஆரம்பமான டாக்டர் நீ. ரா. ரீனிவாசனின் பெருநோயும், வெ. ராமசாமியின் புதிய மலாயாவும் இந்த இரண்டாவது இதழில் நிறைவு பெறுகின்றன. கதைகளை மட்டுமே தொடரும் என்று போட்டு, அதுவும் திடுக்கிடவைக்கும் ஓர் இடத்தில் தொடரும் என்று போட்டு வாசகனை அடுத்த இதழை வாங்கப் பண்ணும் ஒரு யுக்தியைக் கடைப்பிடிக்கும் சராசரி பத்திரிகை எண்ணங்களைக் கைவிட்டு, அறிவியல் கட்டுரைகளை, வாசிப்பதன் மூலம் வாசகன் பயனடையும் கட்டுரைகளையும் தொடரும் போட்டு அடுத்த இதழில் முடிக்கும் துணிவை பாரதியில் காணக் கிடைக்கிறது.
முதல் இதழில் ‘இதழுக்கு எழுதியவர்கள்’ என்ற மகுடத்தின் கீழ் எழுத்தாளர்களைப் பற்றிய சின்னச் சின்ன அறிமுகங்கள் இடம் பெற்றன. இரண்டாவது இதழிலிருந்து இந்தப் பகுதி இந்த இதழில்’ என்று மாற்றம் பெற்றிருக்கிறது. இந்த இதழில் பகுதியில் இவ்விரு கட்டுரைகளும் இந்த இதழில் முடிகின்றன. இந்த நண்பர்களின் உபயோகமான கட்டுரைகள் பாரதியில் அடிக்கடி இடம் பெறும் என்பதைத்
63

Page 38
தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறிவைக்கிறார்கள் ஆசிரியர்கள்.
வளரும் தமிழ் இலக்கியத்திற்கு நிறையவே செய்ய வேண்டும், அதுவும் நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்னும் நம்பிக்கையும் ஆசையும் இந்தத் துணிச்சல் முயற்சிகள் மூலம் பிரகடனப்படுத்தப் படுகின்றன.
மலாயா மக்களில் சீனர்கள், இந்தியர்கள் மலாய்க்காரர்கள் ஆகியோரின் அபிலாஷைகளைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்தி வரும் போராட்டத்தின் தன்மையை உணர்ந்து கொள்ளுவதற்கும் மலாயாவின் மக்களையும் அவர்களது சமுதாய அமைப்பு முறைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். மலாயாவில் சீனர்களின் ஜனத்தொகை சுமார் 25 இலட்சம். ஈயச் சுரங்கங்களில் தொழில் செய்வோர் அனைவருமே சீனர்கள். கப்பல்களில் சாமான் ஏற்றுவது இறக்குவது, கப்பல்களை மராமத்துச் செய்யும் பகுதியில் தொழில் செய்வது அனைவரும் சீனர்கள். மலாயாவின் ரப்பர் தோட்டங்களில் 25 சதவிதமான சீனத் தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். இந்த ரப்பர் தோட்டங்களில் பெரும்பாலானோர் இந்தியர்களே. அதுவும் கூடுதலாக இந்தியத் தமிழர்களே. வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான இந்தப் பெரிய ரப்பர் தோட்டங்களில கூலி வேலை செய்யும் இந்தியர்கள் மீது தமிழர்கள் மீது வெள்ளைக்காரர்களுக்குப் பிரியும் அதிகம். தமிழர்கள் புத்திசாலிகள் என்பதால் அல்ல. என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் பேசாமல் சகித்துக் கொண்டு காலுக்குச் செருப்பாய்க் கிடப்பார்கள் என்பதால்தான். இதைக் கேட்கும் போது நமது மலையகத்துத் தேயிலை, ரப்பர் தோட்டத்து மக்களினது நினைவும் வரத்தான் செய்கிறது. இவர்களும் அவர்களைப் போலத் தானே! தங் களது முதலாளிமார்களுக்குக் காலுக்குச் செருப்பாய்.
பத்துக்கு ஒன்றாய் மிகச் சொற்ப அளவில் இந்த ரப்பர் தோட்டத்திலே வேலை செய்யும் சீனர்களை வெள்ளைக் காரர்களுக்குப் பிடிப்பதில்லை. காரணம் அவர்கள் சொன்னபடி கேட்பதில்லையாம். மலாய்க்காரர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், மீன் பிடிப்பவர்களாகவுமே இருப்பார்கள். ரப்பர் தோட்டங்களிலும், ஈயச் சுரங்கங்களிலும் தொழில் செய்யும் மலாய்க் காரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், காரணம் கூலித் தொழிலை அவர்கள் விரும்புவதிலலை.
இப்படியே மலாயாவை வெகு இயல்பாக, அறிமுகப்படுத்தி வைக்கிறார் வெ. ராமசாமி அவர்கள். பெரும் பாலானவர்கள் இன்றெழுதும் பயணக் கட்டுரைகளுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உன்ைடு.
இந்த இரண்டாவது இதழில் இன்னொரு விசேஷமான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. அதுவும் ஒரு யாத்திரைக் குறிப்புத்தான். என்றாலும்,
64

ஒரு முக்கியமான சர்வதேச சம்மேளனத்தில் முதன் முதலாக இலங்கை கலந்து கொண்டது பற்றிய கட்டுரை இது!
1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலகத் தொழிற் சங்க சம்மேளனம் பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஆரம்பமானபோது, இலங்கைத் தொழிலாளரும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த சம்மேளனத்தில் பங்குபற்ற விரும்பினர்கள். சிலோன் டிறேட் யூனியன் பெடரேஷன், டாக்டர் எஸ்.ஏ.விக்கிரம சிங்கவையும், நா.சண்முகதாசனையும் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து அனுப்பி வைத்தது. உலகத் தொழிற் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய திரு. நா.சண்முகதாசனே இந்த யாத்திரைக் குறிப்பை 'பாட்டாளி பாரீசிலே’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
சம்மேளனக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகத் தான் கண்ட பாரீஸைப் பற்றியும் பாரிஸைப் பற்றி நினைக்கும்போது எழும் பாட்டாளி மக்கள் புரட்சிகள் பற்றியும் தான் கலந்து கொண்ட ஓரிரு கூட்டங்கள் பற்றியுமே இந்த இதழில் எழுதியுள்ளார் திரு.சண்முகதாசன்.
இந்தக் கட்டுரை பற்றி 'இந்த இதழிலே’ பகுதியில் இதன் தொடர்ச்சியான கட்டுரை அடுத்த இதழில் இடம்பெறும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் பிந்திய இதழ்களில் இந்தக் கட்டுரைத் தொடர் வந்ததாகத் தெரியவில்லை.
இந்த இதழிலும் இரண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மறுமலர்ச்சிக் குழு எழுத்தாளர் அ. செ. முருகானந்தனின் உழவு இயந்திரம் என்ற சிறுகதையும் அ.ந.கந்தசாமியின் ‘உதவி வந்தது என்ற சிறுகதையும் இந்த இதழ்ச் சிறுகதைகள்.
பாடுபடும் பாட்டாளியின் விழிப்பில் தான் இருக்கிறது உலகின் பிரகாசமான எதிர்காலம் என்பதைக் கூறுகிறது "உழவு இயந்திரம்.
சீனாவின் ஒரு கோடியில் லெயாங் நகரில் நடந்த உண்மைச் சம்பவம் பற்றியது ‘உதவி வந்தது. சீன உள்நாட்டுப் போரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைக் கதையாகப் பின்னியுள்ளார் அ. ந. கந்தசாமி.
இதழின் கடைசி இரண்டு பக்கங்களின் கடை அங்கம் என்னும் ஒரு புதுப் பகுதி இந்த இரண்டாவது இதழில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த கடை அங்கம் அடுத்த அடுத்த இதழ்களில் “பலகணி’ என்று பெயர் மாற்றம் கொண்டுள்ளது.
இந்த கடை அங்கம் பகுதியிலே அமெரிக்காவின் நிறத் துவேஷம் பற்றிய துணுக்குச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. மாதிரிக்கு ஒன்றைத் தருகிறேன்.

Page 39
‘வாஷிங்டனில் ஒரு அந்தஸ்துள்ள வெள்ளை மது ஒரு நீக்ரோ வேலைக்காரியோடு ஒரு சமயம் சாப்பிட்டாள். அதன் பயன் அவளை அறிமுகம் செய்து வைக்கும் போது ஹோட்டலின் சமையல்காரி என்று அறிமுகம் செய்தாராம் ஒரு மரியாதையான கனவான்.
பாரதி சஞ்சிகையின் கொள்கைப் பிரகடனம் போல் வெளிவந்துள்ளது 9(5 சின்னஞ்சிறு கவிதை. கவிதையின் தலைப்பு அடிமைத்துவத்தின் சின்னங்கள். கவிதை எழுதியவர் “சிப்பி’.
இதுதான் கவிதை
உள்ளத்திலே தயக்கம் செயலில் சோர்வு, பயத்திலே மிதத்தல் பலவீன உணர்வு தன்னால் ஏதும் ஆகுமோ என்று எந்நேரமும் நீள சந்தேகங் கொண்டு வாழுதல் வாய் நீள வழுவழாப் பேச்சு: அடிமைத்தவத்தின் அறிகுறி இவையாம்.
சமுதாயத்தில் அரித்துக் கொல்லும் அழுக்குகளை, படம் பிடித்துக் காட்டி மனித நல்வாழ்வுக்கு வழிதேடும் வகையில் வெளிவந்த ஒரு புத்தொளிச் சஞ்சிகை பாரதி என்பதை ஒவ்வொரு இதழும் இனம் காட்டியே நின்றது.
இலக்கியத்தின் போக்குகளை ஒரு கணிசமான அளவுக்கு நிர்ணயிக்கும் சக்தி பத்திரிகைக்கு உண்டு. பத்திரிகையின் இலட்சியங்களும், பத்திரிகைக்காரர்களின் கொள்கைகளும் அந்தந்தப் பத்திரிகையில் வெளிவரும் படைப்புக்களிலும் பிரதிபலிக்கவே செய்யும். அரசியல் பற்றிய தங்களது கொள்கைகளைப் பரப்புவதற்கெனவே தோன்றிய பத்திரிகைகள் கூட இலக்கியத்தின் வளர்ச்சிக்குச் சேவை செய்துள்ள செய்திகளை அனுசரித்துச் செய்யப்படுபவை. அரசியல் கலவாத இலக்கியத்துக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப் பட்ட இதழ்கள் கூட நாளடைவில் அரசியல் விமர்சனங்கள் எழுதத் தொடங்குவதும் அரசியல் கேலிச் சித்திரங்கள் போடத் தொடங்குவதும் காலத்தின் தேவை கருதித்தான்.

ஏகாதிபத்தியத்தை அழிக்கக் கவி பாடிய பாரதியார் முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமையான ஒப்பில்லாத சமுதாயத்தை ஆக்கவும் கவி பாடினார். அவர் காட்டும் அப்பாதையில் பாரதி யாத்திரை தொடங்குகிறது, என்ற தனது கோட்பாட்டைத் துல்லியமாகவே கூறிக்கொண்டு வந்தது ‘பாரதி. அந்த 1940 களில் முற்போக்கு அரசியல் இயக்கமே பொதுமக்களிடையே பிரபல்யம் பெறாமல் இருந்த நிலையில் முற்போக்கு இலக்கியத்தையும் சேர்த்து வியாபிக்கச் செய்ய ‘பாரதி ஏடு எடுத்துக் கொண்ட முயற்சி தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஒரு நல்ல சகுனமாக, நம்பிக்கையாகத் திகழ்ந்தது. 1946 மார்ச்சில் வரவேண்டிய 'பாரதியின் மூன்றாவது இதழ் ஏப்ரல் இறுதியிலேயே வந்தது.
‘பாரதி - புதுமை இலக்கியப் பேரிகை. (3-4) பங்குனி - சித்திரை என்னும் குறிப்புகளுடன் இரண்டு மாதங்களுக்குமாக ஓர் இதழ் வெளிவந்தது. •
இலக்கியச் சிற்றேடுகள் இப்படி "மாதமொன்று என்று கிளம்பி இரண்டு மாதத்துக்கொன்று என்று வருவதும், திடீரென வராமல் போய்விடுவதும் புதுமையல்ல.
1970 ஜனவரியில் ஞானரதம் சஞ்சிகையை வெளியிட்ட ஜெயகாந்தன் முன் அட்டையில் ஞானரதம் ‘1’ என்று மாத்திரமே போட்டுக் கொண்டார். மாதமோ வருடமோ போடவில்லை. உள்ளே முதற் பக்கத்தில் 1,1970 என்று போட்டு ஆண்டைக் குறிப்பிட்டுக் கொண்டார். மாதத்தைப் போடவில்லை. பிறகு ஓர் இதழ் ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் வந்தபோது இப்படி ஒரு குறிப்பும் இருந்தது. ‘சென்ற மாதம் ஏன் ஞானரதம் வரவில்லை என்னும் கேள்வியுடன் இருப்பவர்களுக்கு ஒன்றைக் கூறிவைக்கிறோம். இது ஞானரதத்தின் சென்ற இதழுக்கு அடுத்த இதழ். அவ்வளவுதான். மாதந்தோறும் இத்தனையாம் திகதியில் வரும் என்று நாங்கள் கூறவில்லையே' என்பதுதான் அந்தக் குறிப்பு. இது ஒரு கெட்டிக்காரத்தனமான சமாளிப்புத்தான் என்றாலும் தொடர்ச்சி விட்டுப் போவதும் ஓர் இலக்கியத் தரத்தையே நிர்ணயிக்கிறது.
பாரதியின் மூன்றாவது இதழ் அட்டையை அலங்கரிக்கும் படம் சோவியத் நாட்டின் தொழில் வளர்ச்சியையும் விவசாயப் பெருக்கத்தையும் கலையுருவில் சித்திரிக்கும் ஒவியம். இந்த ஒவியத்தைச் சிருஷ்டித்த கலைஞர் வே. ராமகிருஷ்ணாவுக்கு 1939-ல் இந்த அரிய சிருஷ்டிக்காக ஸ்டாலின் பரிசு கிடைத்தது. சுத்தியல் தொழில் வளர்ச்சியையும் அரிவாள் விவசாயத்தின் அறுவடையையும் குறிக்கிறது. இந்த ஒவியத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் பாரதி இவ்வோவியத்தைத் தனது அட்டையில் தாங்கி வந்தது. இதே படம் தாமரையில் 1974 நவம்பரில்
67

Page 40
அட்டைப் படமாக வெளியிடப் பட்டது என்றாலும், தாமரையில் வந்ததை விட பாரதியின் படமே தெளிவாக இருக்கிறது.
மூன்றாவது இதழ் பாரதி வந்த போதுதான் 'மறுமலர்ச்சி முதல் இதழ் வந்தது. அதாவது மார்ச் 1946-ல் இலக்கிய ரசனையின் அடிப்படையில், அடிக்கடி சந்தித்து ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் நாவல்கள் பற்றிப் பேசி, விவாதித்து, வியப்புற்று அந்த ஆர்வத்தால் ஒரு சங்கம் அமைத்து, சங்கத்தின் இதழாக மறுமலர்ச்சி என்னும் கையெழுத்துப் பிரதியை வெளியிட்டனர். இதே மறுமலர்ச்சி அச்சு வாகனம் ஏற. ஏறத்தாள நான்கு ஆண்டுகள் பிடித்தன. 'மறுமலர்ச்சி இயக்கத்துக்கும், இதழுக்கும் மூல காரணமாய் இருந்தவர்களில் குறிப்பிடக்கூடிய சிலர், தி.வரதராசன், அ.செ. முருகானந்தன், நாவற்குழியூர் நடராஜன், அ.ந. கந்தசாமி ஆகியோர் அந்தக் காலத்தில் இருந்து வந்த பண்டிதர்களின் செல்வாக்கையும் அவர்களது கொடுந் தமிழ் ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்துப் போராடும் பொறுப்பை ஏற்றிருந்தது மறுமலர்ச்சி.
அச்சு வாகனமேறிய முதல் மறுமலர்ச்சி இதழ் தன்னுடைய தலையங்கத்தைக் கீழ்க் கண்டவாறு திட்டியிருந்தது.
‘தமிழ்ப் பூங்காவில் உள்ள மறுமலர்ச்சி இலக்கியச் செடியிலே இன்று ஒரு புதுமலர் பூத்திருக்கிறது.தமிழன்பர்களின் இதயங்களுக்கு இந்த மலரைச் சமர்ப்பிக்கின்றோம். இதயத்தைக் கவரும் மணத்தினாலும், அழகு மிக்க தோற்றத்தினாலும் அன்பர்களை இந்த மலர் திருப்திப்படுத்தும் என்று நம்புகின்றோம்.
எழுத்தாளர்களும் இரசிகர்களும் சேர்ந்து ஆரம்பித்த பத்திரிகை இது. இதனுடைய வளர்ச்சி இலக்கியத்தின் வளர்ச்சி. இதனுடைய இதயத்துடிப்பு தமிழ் இலக்கியம் தான்.
அரசியல், சமூக விஷயங்களைக் குத்திக் கிளறுவதற்காகவே ஒரு புதுமையன இலக்கியத்தை 'மறுமலர்ச்சி சிருஷ்டிக்கப் போவதில்லை. ஆனால், இலக்கியத்தின் வளர்ச்சியிலே சமூகத்தின் வளர்ச்சி பின்னி வரும் என்பதை மறுமலர்ச்சி நிருபிக்கும்.
மிகவும் கஷ்டங்கள் நிறைந்த சமயத்தில் இந்த இதழ் வெளியாகிறது.’ என்று இந்த முதல் இதழ் தலையங்கம் ‘முகத்துவாரம் என்னும் தலைப்பின் கீழ் தொடர்கிறது.
அரசியலை இழுத்து இலக்கியத்தில் போடமாட்டோம் என்று திட்டவட்டமாகவே மறுமலர்ச்சி தனது முதல் இதழிலேயே கூறிவிட்டது. இது பிடிக்காத முற்போக்கு எழுத்தாளர் அணியினர் மறுமலர்ச்சி பற்றிக்
68

கூறும்போதெல்லாம் ‘இலக்கிய நோக்கமின்றி குறிக்கோளின்றி வெறும் இலக்கிய ஆர்வத்தால் மட்டுமே தாபிதமாகி, பின்னாள் வாழ்ந்து மறைந்தது என்றும் ‘நவீன இலக்கிய வகைகளினால் கவரப்பட்ட மறுமலர்ச்சிக்காரர்கள் இலக்கிய இலட்சியங்கள் பற்றி ஆழமான மதிப்பீடு எதுவும் இல்லாது இணைந்திருந்தனர். அதன் காரணமாக நாவல் சிறுகதை போன்ற நவீன இலக்கிய வகைகளை ஈழத்தில் ஜனரஞ்சகப் படுத்தினர் என்றும், ஈழகேசரி இவர்களுக்குச் சரியாகப் பிரசுர களம் அமைத்துக் கொடுத்திருந்தால் 'மறுமலர்ச்சி ஏடு தோன்றியிருக்காது என்றும், பலப்பல கூறி வந்துள்ளனர். தங்களின் இலக்கியக் கோட்பாட்டுடன் ஒத்துவராத 'மறுமலர்ச்சி பற்றி இப்படி எல்லாம் கூறி வந்த முற்போக்கு அணியினர் தங்களுடைய கொள்கைகளுக்கு அனுசரணையாகவும் இன்னும் அழுத்திச் சொல்லப் போனால் ‘அதற்காகவே என்றும் வெளிவந்த 'பாரதி இதழ்கள் பற்றி ஒன்றுமே பேசாதது பெரும் வியப்பானதே! ஒரு வேளை கே. கணேஷ் என்ற மலையகத் தமிழரும், கே.ராமனாதன் என்ற இந்தியத் தமிழரும் கூட்டாசிரியர்களாக இருந்து கொழும் பிலிருந்து பாரதியை வெளியிட்டதால் அவர்களது மேலான பார்வைக்கு பாரதி கிடைக்காமல் போயிருக்கலாம். இருப்பினும் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் பரம்பரைக்கு வித்திட்ட ஏடு இந்தப் 'பாரதி' என்பதை ஒத்துக் கொள்ளவே வேண்டும்.
உண்மைகளை உண்மைகளாக ஒத்துக்கொள்ளும் மனம் படைத்த முற்போக்கு எழுத்தாளர் அணியில் பெரும் பான்மையினருள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவரான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜிவா, கே. கணேஷின் படத்தை அட்டையில் பிரசுரித்த மல்லிகை இதழில் எழுதியுள்ளதையும் நன்றியுடன் நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.
‘மலையகம் தந்த கலைப்புதல்வர்களில் ஒருவர் திரு.கே.கணேஷ். பழம்பெரும் எழுத்தாளர். கவிஞர். ஐக்கியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கலாசாரப் பிரிவின் தலைவர்.
ஈழத்தில் ஆரம்ப காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இலக்கிய மன்றங்கள் செயல்படுவதற்கு முன் நின்று உழைத்தவர்களில் முக்கியமானவர், திரு. கே.ராமநாதனும், இவரும் சேர்ந்து பாரதி என்றொரு முற்போக்குச் சஞ்சிகையை வெளியிட்டார்கள். இம்மாசிகையில் பல புதுமைகளைச் செய்ததுடன் ஈழத்து முற்போக்கு இலக்கிய பரம்பரைக்கு வித்திட்டு வைத்த பெருமையும் இதையே சாரும்.(மல்லிகை ஏப்ரல் 1971)
பாரதி மூன்றாவது இதழ் தாமதமாகி விட்டதற்காக ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றனர். பாரதி நேயர்களே இந்த இதழ் மிகவும் காலம் தாழ்த்தி வெளிவந்திருக்கிறது.
69

Page 41
மன்னிப்பீர்களாக அடுத்த இதழைக் கூடிய விரைவில் கொண்டுவர முயல்கின்றோம். கால தாமதமானாலும் கலை மணம் குன்றாது பாரதி மூன்றாவது இதழை நேயர்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். இலக்கிய ரசனை மிகுந்த அன்பர்களின் சிந்தனையைக் கிளறும் கட்டுரைகள் இதிலே இடம் பெற்றுள்ளன என்று ‘இந்த இதழ்’ பகுதியில் குறிப்பிடுகின்றது பாரதி.
மறுமலர்ச்சி முதல் இதழில் பாரதி பற்றிய ஒரு சிறு அறிவிப்பு இருக்கிறது. இது விளம்பரம் அல்ல என்பதை ”வரப்பெற்றோம் எனும் தலைப்பு கூறுகிறது.
பாரதி மாதவெளியீடு, கூட்டாசிரியர்கள் கே. ராமநாதன், கே.கணேஷ். காரியாலயம் றொட்னி பிளேஸ் கொட்டாறோட், கொழும்பு என்பதே மறுமலர்ச்சியில் காணப்படும் குறிப்பு. பாரதி மூன்றாவது இதழில் விமர்சன விதி என்னும் பகுதியில் மறுமலர்ச்சி முதல் இதழ் பற்றியும் எழுதியுள்ளார்கள்.
'மறுமலர்ச்சி மாதவெளியீடு. விலை . 30 சதம். 288, ஹொஸ்பிடல் றோட், யாழ்ப்பாணம். ஆசிரியர்கள் தி.ச.வரதராசன், அ.செ.முருகானந்தன்.
பாரதி நேயர்களை ஆசிரியர்களாகக் கொண்டு மலர்ந்துள்ள மறுமலர்ச்சி முதல் இதழ் கிடைக்கப் பெற்றோம். இலங்கையர்கோனின் கட்டுரை சிந்தனையைக் கிளறுகிறது. வண்டிக்காரர்களுக்கு வந்த சண்டைக்கால யோகத்தை வைத்து அ.செ. மு. பின்னியுள்ள சிறுகதை யதார்த்த சித்திரம். எழுத்தாளர்களும் இரசிகர்களும் சேர்ந்து ஆரம்பித்துள்ள இப்பத்திரிகைக்கு எமது வாழ்த்து. எழுத்தாளர் பேனா தயக்கமின்றி ஓடவும் இரசிகர்கள் ரசனை காயாமல் இருக்கவும் வேண்டுகின்றோம்.
இதே பகுதியில் இன்னும் இரண்டு விமர்சனங்கள் வந்திருக்கின்றன. சென்னையிலிருந்து கே. எஸ். வெங்கடரமணி வெளியிடும் பாரதமணி பற்றியது ஒன்று. அ.சிதம்பரநாத பாவலர் இயற்றி இலங்கையில் வாடும் இந்தியர்’ எனும் நூல் பற்றியது மற்றது.
'பாரத மணி' பற்றிக் கூறும் போது ‘ரீராமன் கே.எஸ். வெங்கட ரமணியை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதென்பது அதிக பிரசங்கித்தனம். ஆங்கில தமிழ் எழுத்துக்கள் மூலம் நாட்டில் பிரபலமடைந்த எழுத்தாளர் இவர். தனது பாரதமணி இதழ்களை பாரதிக்கு விமர்சனத்துக்காக அனுப்பியுள்ளார். விஞ்ஞானக் கட்டுரைகளுடன் சரித்திரக் கதைகளும் வேறு சமூக சம்பந்தமான கதைகளும் பிரசுரமாகி இருக்கின்றன. தமிழ் நாட்டைப் பிடித்துள்ள கதை வியாதியின் காற்றுப் பாரதமணிக்கும் அடித்திருக்கிறது.
70

கவி.அ.சிதம்பரநாத பாவலரின் ‘இலங்கையில் வாடும் இந்தியா என்னும் பாட்டுப் புத்தகம் தோட்டத்து மக்களின் துயர் பற்றியது. சிதம்பரநாத பாவலர் நமக்குப் புதியவர் அல்லர். பாமர கவியாக பத்திரிகை உலகு பலகாலமாக அறிந்தவர் இவர். தேயிலைத் தோட்டத்து மக்களுடன் வாழ்ந்தவர், பழகியவர். ஆதலால் அவர்களின் வாழ்க்கை முறைகளைச் சித்திரிப்பதில் நிபுணர். இந்த நூலில் பதின்மூன்று பாடல்கள் உள. பாரதியாருடைய பாடல்களின் சந்தத்தை அமைத்துப் பாடியிருக்கிறார். தொழிலாளர் துயர், பெண்கள் படும் துயரங்கள், துரோகிகளுக்குச் சாட்டை, புதுயுகம் பூக்குமா என்னும் ஏக்கம், ஆகிய பல பல சிந்தனைச் சிதறல்களைப் பாட்டாக வடித்திருக்கிறார். பாமர ரஞ்சிதமான பாடல்கள். உள்ளமுருக்கும் கருத்துக்கள். ஆனாலும் இந்தியத் தொழிலளர்களின் உண்மை விரோதியான ஏகாதிபத்தியத்தைப் பற்றிக் கவி விரலசைக்கவில்லை. அச்சுப் பிழைகளும் ஏராளம்.
மறுமலர்ச்சி முதல் இதழ், பாரதமணி மாதப் பத்திரிகை, இலங்கையில் வாடும் இந்தியர் கவிதைப் புத்தகம் ஆகியன பற்றிய விமர்சனத்தை எழுதியுள்ளவர் கே.ராமநாதன். இவருடைய கவிதையின் வருங்காலம் என்னும் கட்டுரையும் இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.
குற்றங்கள் எதிலிருந்து பிறக்கின்றன? வறுமை, பசி, சுரண்டல், கொடுமை, ஆதிக்கப் போராட்டம், பெண்ணடிமை, நிறத்திமிர், கோணல், சமூக அமைப்பு இவைகளிலிருந்தே குற்றங்கள் பிறக்கின்றன. எந்த நாட்டில் குற்றங்கள் இராது. அல்லது குறைவாக இருக்கும். அப்படியானாதொரு சமூக அமைப்பு இந்த நாட்டில் உருவாக வேண்டும் என்னும் ஆவலில் உருவாக்கிக் காட்டுவோம் என்னும் துடிப்புடன், அதற்கான இலக்கு நோக்கி படிப்படியாகக் காலூன்றி நடந்த பத்திரிகை, ‘பாரதி. ஒரு விடுதலைக்கான வேகம் இலக்கியத் தளத்திலிருந்தும் கிளம்ப வேண்டும் என்னும் நோக்கமே ‘பாரதி.
‘கவிதையின் வருங்காலம்' என்னும் கே.ராமநாதனின் விமர்சனக் கட்டுரை பற்றிக் கொஞ்சம் விரிவாகவே எழுத வேண்டும்.
கவிதை மலர்ந்தது எப்படி? அதன் பரிணாமத்தின் கதை என்ன? சமுதாய வளர்ச்சிக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு என்ன? அழியாத கவிதை எது? என்னும் பலவாறான கேள்விகளுக்கும் பதில் கூறும் வகையில் தான் எழுத இருக்கும் கட்டுரைகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு முன்னோட்டம் என்று கூறியுள்ளார் கே.ராமநாதன்
முதலாளித்துவ சமுதாயத்தில் கவிதை கவிஞர்களின் வாழ்க்கைப் படி மாறுதல் அடைந்தது. ஷேக்ஸ்பியர் பிரபுத்துவ சமுதாயத்தில் வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர். மில்டன் போன்றவர்கள் பூர்ஷவா
7

Page 42
சமுதாயத்தில் இருந்தனர். ஆனால், இங்கிலாந்தில் யந்திரப் புரட்சி நிகழ்ந்த பின் பிரபுத்துவ கலாசாரத்தின் சுவடே இல்லாமல் போய்விட்டது. முதலாளித்துவ சமுதாயத்துக்குக் கவிதை ஆர்வம் குன்றியதும் சிலகாலம் கவிதை அநாதையாகக் கிடந்தது. மத்தியதர வர்க்கத்திடம் அடைக்கலமாயிற்று. மத்தியதர வர்க்கம் மேல் வர்க்கத்தால் உதாசீனம் செய்யப்பட்டாலும், பாட்டாளி வர்க்க முகாமில் குதிக்காமல் எட்டி உதைப்பவர்களைக் கட்டி எழுப்புவதிலேயே காலம் தள்ளும் ஒரு வர்க்கம், அவர்கள் கையில் விழுந்த கவிதை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையில் இருந்தது.
சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே கவிதையின் மூலம். ஆனால், தனித்தன்மை என்னும் போதை கவிதையிலே ஏறி மூலஸ்தானத்திலிருந்து கவிதையைப் பிரித்து வேரிலே காய்ந்த மரம் போலாகிவிட்டது.
உலகத்தை இருட்டடிக்க வந்த பாசிஸப் பேயே உண்மைக் கவிதையின் விரோதி. எனவே உலகிருட்டை ஒட்டி உன்னத வாழ்வை உலக மக்கள் அனைவரும் பெற உழைப்பதே உண்மைக் கவியின் உயிரான பணி என்பதைப் பலவித உதாரணங்களுடன் நிறுவுகிறது இக்கட்டுரை.
டேமின் ஆப் தஷ று. ‘டெம்பெஸ்ட் மெர்சண்ட் ஆப் வெனிஸ் போன்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் சோவியத் நாட்டில் வரவேற்கப் படுகின்றன. மனிதஜாதியிடம் அனுதாபமும், மனிதன் என்னும் பண்பும், மனித இதயத்தின் அடிநாதமும் அவருடைய நாடகத்தில் (BTL) படும் அனுபவங்கள். ஷேக்ஸ்பியர் தனிநபர்களையே வர்ணித்தார். ஆனாலும் அவர் தனிமனித ஆணவ மயக்கத்தில் ஆழ்ந்து ஆன்மாவைப் பறிகொடுக்கவில்லை. உலகத்தில் உள்ள உன்னத இலக்கியங்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்னும் கருத்தில் சோவியத் நாட்டு மக்கள் ஷேக்ஸ்பியரை அனுபவிக்கின்றனர். ஆனால் நாமோ பரீட்சை எழுதவும் பாஸ்மார்க் வங்கவுமே ஷேக்ஸ்பியரைப் படிக்கின்றோம் என்று குத்திக் காட்டுகிறது. "சோவியத்தில் ஷேக்ஸ்பியர்’ என்னும் கட்டுரை.
இந்த மூன்றாம் நான்காம் இதழில் பலகணி என்னும் பகுதி தொடர்கிறது. தேசிய சர்வதேசிய, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் குறிப்புகள் எழுத வேண்டும் என்று அன்பர்கள் பாரதிக்கு விடாமல் கடிதங்கள் எழுதுகிறார்கள். கட்டுரைகள் கதைகளில் பிரதிபலிக்கும் ஆதர்சத்தைக் கொண்டு பாரதியின் லட்சியப் பாதையைப் புரிந்துகொள்ளலாம். இருந்தாலும் வெட்டொன்று துண்டிரண்டாகப் பட்டவர்த்தனமாக் பிரகடனப் படுத்த வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அன்பர்களின் ஆசையை நிறைவேற்றவே பலகணி என்ற
72

இந்தப் பகுதியை தொடங்கியுள்ளோம். இதில் பாரதி வாசகர்களும் எழுதலாம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்தப் பலகணியில் 'இலங்கை வாழ் இந்தியருக்கு ஒட்டுரிமையும், பிரஜா உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் இலங்கை இந்தியக் காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சிங்களத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொள்ளச் செய்திருக்கும் முடிவு பற்றியும், சில உள்நாட்டு அரசியல் போக்கு பற்றியும் எழுதப்பட்டுள்ளது. v
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்தின் ‘புரட்சி வீரன்’ என்னும் நீண்ட சிறுகதை இந்த இதழுக்குக் கனம் சேர்க்கிறது. திருமதி சுப்புலக்ஷமி", "லாகூர்மண்” எனும் சிறுகதையை எழுதியுள்ளார். கடமைக்காக உயிரைப் பணயம் வைத்த காதலனையும் காதலனுக்கு வாழ்வின் இண்பங்களைப் பணயம் வைத்து சேவை செய்யும் காதலியையும் உயிரோட்டத்துடன் காட்டுகிறது லாகூர் மண்.
இந்த இதழிலும் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1941-ல் கேரளத்தில்
கய்யூர் என்ற கிராமத்தில் விவசாயிகள் மகாநாடொன்று நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் பொதுமக்களுக்கும் நகர்க் காவலர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு காவலன் இறக்க நான்கு விவசாயத் தோழர்களைக் குற்றவாளியாக்கித் தூக்கிலிட்டது அரசாங்கம். உயிர்த் தியாகம் செய்த அப்பாட்டாளித் தோழர்களுக்கான நினைவுக் கவிதை ஒன்று தோழர்கள் என்னும் மகுடத்தில் பிரசுரமாகியுள்ளது.
அன்னியர்கள் ஆட்சி கெட
ஆசையோடு நாம் மூட்டும்
நன்நெருப்புக்கு அவர் நினைவு
நறு நெய்யாம் தீ வளர்க!
என்று முடிகிறது கவிதை. வங்காள மாணவர் சம்மேளனத்தின் வீரச்செயல்களுக்கு வணக்கம் செய்யும் வங்கக் கவிஞர் கெளதம சட்டோ பாத்யாயாவின் கவிதையின் மொழிப்பெயர்ப்பும் வந்துள்ளது.
தேயிலைத் தோட்டத்திலே துயரம் தோய வாழும் தொழிலாளத் தாயின் மனதைப் படம்பிடித்துக் காட்டும் கவிதை தேயிலைத் தோட்டத்திலே அ.ந.கந்தசாமி கவிந்திரன்’ என்னும் பெயரில் இந்தக் கவிதையை எழுதியுள்ளார்.
*மனிதனின் மிகவும் அருமையான பொருள் வாழ்க்கை. அது அவனுக்கு ஒரு தரம் கிட்டுகிறது. ஆனபடியால் அவன் அதை வீணாக எவ்வித நோக்கமும் அற்றுக் கழிந்துபோன வருடங்களுக்காக உள்ளம் புண்பட வேண்டிய அவசியம் இல்லாதபடி வாழட்டும். கோழைத்தனமும் சிறுமையும் நிறைந்த ஒரு வாழ்வின் அவமானம் உள்ளத்தை வருத்தும்
73 -

Page 43
நிலை ஏற்படாதபடி வழட்டும். சIகும்பொழுது என்னுடைய முழுவாழ்வும் முழுப் பலமும் உலகத்திலேயே மிகவும் சிறந்த ஒரு காரணத்திற்குச் செலவிடப்பட்டது. மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டத்திலே கழிந்தது என்று கூறிக்கொள்ளக் கூடியதாக வாழட்டும் இது லெனினின் கூற்று.
லெனினுடன் பழகிய வில்லியம் கலச்சர் எழுதிய ஜனநாயகம் என்றால் என்ன? என்னும் நூலை கவிந்திரன் மொழிபெயர்ப்பில் தமிழில் பாரதி பிரசுரம் வெளியிடப் போவதாக பின் அட்டையில் ஓர் அறிவிப்பு இருக்கிறது. −
பாரதி பிரசுரம் என்று நூல்கள் வெளியிடும் எண்ணமும் பாரதிக்கு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
பாரதியின் ஐந்தாவது இதழும் ஆசிரியர்களின் உறுதிமொழிகளை எல்லாம் தூசியாக்கி விட்டு ஜான் மாதமே வந்திருக்கிறது மூன்றாவது இதழ் மார்ச்சில் வரமுடியாமல் ஏப்ரலில் வந்தபோது அடுத்த இதழைத் தாமதமின்றிக் கொண்டுவந்து விடுவோம் 61ன்று உறுதி கூறியிருந்தனர். ஆனாலும் அடுத்த இதழும் மே-ஜூன் என்றே வந்தது.
‘இந்தத் தடவையும் பாரதிக்கும் லங்கா பிரசிற்கும் ஏழாம்; பொருத்தம்தான். எனவேதான் இந்த இதழும் தாமதித்து விட்டது.) நேயர்கள் பொறுப்பார்களாக அச்சாபீசில் ஏற்பட்டுள்ள எழுத்துப். பஞ்சத்தைத் தீர்த்துவிட தீர்க்கமான முடிவை மனேஜர் எடுத்து விட்டார். ஆதலால் கவலை வேலன்டாம்' என்று மறுபடியும் ஓர் உறுதிமொழி.
இந்த இதழில் வந்திருக்கும் மூன்றுகவிதைகளில் ஒன்றை எழுதியிருப்பவர் முற்போக்கு எழுத்தாளர் அணியின் முத்தவர்களில் ஒருவரான இளங்கீரன், 'ஏழ்மையின் சிந்தனை என்னும் இக்கவிதை உழைக்கும் மக்களின் உழைப்பின் பயனை இன்னொருவன் அனுபவிக்கும் சமுதாயக் கூனலைப் பற்றிக் கூறுகிறது.
இந்த இதழில் என்னும் பகுதியிலும் இளங்கீரன் கவிதை பற்றி உத்வேகமூட்டும் புரட்சிப்பாடல் என்ற குறிப்பிட்டுள்ளார்கள்.
மணிக்கொடிக்குப் பிறகு தோன்றிய இலக்கிய சிற்றேடுகளில் கலாமோகினிக்கு ஒரு சிறந்த இடம் உண்டு. கலாமோகினி ஆசிரியர் வி. ராஜகோபாலன நல்ல கவிஞர். சிறுகதை நாடகம் ஆகியவைகளையும்' திறமையுடனேயே கையாண்ட இவர் ஒரு துணிச்சலான விமர்சகரும் ஆவார். எதையும் புதுமையாகவே செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் உடைய வி.ரா. ராஜகோபாலன், சாலிவாஹனன், விக்ரமாதித்தன் என்னும் புனை பெயர்களிலும் எழுதினார்.
ரசிகமணி டி.கே.சி., புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்ற பெருந் தலைகளைக் கூட தனது கலாமோகினியில் இவர் வாட்டி எடுத்த
74

கதைகளை வல்லிக்கண்ணன் சுவையாக எழுதியுள்ளார் தனது சரஸ்வதி, காலம் நூலில்,
இதே சாலிவாஹனன் தனது கலாமோகினியில் பாரதி இதழைப் பாராட்டி உற்சாகமூட்டியதையும் 'இந்த இதழில் பகுதி மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்ளுகிறது.
நவசக்தி இதழ் திரு.வி.க. தொடங்கியது. அடிமைப் பட்டுக்கிடக்கும் மக்களின் விடுதலையே நம் முதல் லட்சியம். இரண்டாவது லட்சியமும் அதுவே. இறுதி லட்சியமும் அதுவே. மக்கள் அரசியல் விடுதலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அது ஒன்றினால் மட்டும் மக்களின் வாழ்க்கை முறை உயர்ந்து விடாது. பொருளாதார விடுதலையும் வேண்டும். சமூக விடுதலையும் வேண்டும்” என்று உரத்துக் கூறிய இதழ் நவசக்தி.
அ. மாதவையா, வ.வே.சு. ஐயர் போன்றவர்களிலிருந்து கல்கி, புதுமைப்பித்தன் போன்ற சகலரும் எழுதிய பத்திரிகை இது.
ஈழத்தில் பாரதி வெளிவந்து கொண்டிருந்த போது நவசக்தியின் ஆசிரியராக இருந்தவர் திரு. சக்திதாசன் சுப்பிரமணியம். இந்த நவசக்தியும் பாரதிக்கு மதிப்புரை எழுதி பாரதியின் வரவு பற்றி மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
தாமதமாக வெளிவருவதில் உண்டான தாபத்தை இது போன்ற பாராட்டுரைகள் தீர்த்து வைக்கின்றன என்று ஆசிரியர் குழு ஆறுதல் கொள்வதும் புலனாகிறது.
பாரதியின் ஐந்தாவது இதழ் அட்டையை அலங்கரிப்பது சோவியத் நாட்டின் கூட்டுப் பண்ணை ஒன்றைப் பற்றிய படம். உலகமெல்லாம் பஞ்சம் பஞ்சம் எனப் பாமர மக்கள் ஆலாப்ப் பறக்கும் போது பஞ்சத்துக்குப் பஞ்சம் ஏற்படுத்திய கூட்டுப் பண்ணையின் விவசாய மாண்பை விளக்கும் அட்டைப் படக் கட்டுரையும் இந்த இதழுக்கு: அணி செய்கிறது.
சோவியத் விவசாயத்தின் மகத்தான வெற்றிக்குக் காரணமே இந்தக் கூட்டுப் பண்ணை முறைதான் என்பதைச் சோவியத் விரோதிகளும் ஏற்றுக் கொள்வர். இந்தக் கூட்டுப் பண்ணை முறை என்பதுதான் என்ன? அதன் தோற்றமும் வளர்ச்சியும் யாவை?
ஜார் ரஷ்யாவில் 28 ஆயிரம் நிலப் பிரபுக்கள் இருந்தார்கள். அவர்கள் கையில் 16 கோடி 70 இலட்சம் ஏக்கர் நிலம் சிக்கிவிட, எஞ்சியிருந்த ஒருகோடி விவசாயிகளில் 30 சதவீதம் பேருக்கு எவ்விதமான விவசாயக் கருவிகளும் இருக்கவில்லை. 15 சதவீதம் விவசாயிகளுக்குப் பயிர் செய்ய நிலமே இருக்கவில்லை. இதன்
75

Page 44
காரயைாக ஒரு விவசாயி, ஒரு குதிரையே, ஓர் ஏர்க்கருவியே, கொஞ்சம் நிலமோ, தேவைப்பட்டால், நிலப் பிரபுக்களிடம் போக வேண்டும். வட்டிக்குப் பணம் கேட்டுப் பெறவேண்டும். வாழ்நாள் முழுவதும் பணமுட்டைகளிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், 1971-ல் தொழிலாளி விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திலே புது வாழ்வு பூத்தது, நிலச் சொத்துரிமை இரத்தாக்கப் பட்டது. எல்லா நிலமும் தேசத்தின் நிலம் என்று பிரகடனப் படுத்தப் பட்டது. இதனி மூலம் விவசாயிகளினி விடுதலைக கு அடிகோலப்பட்டதுடன் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கும் சாவு மணி அடிக்கப் பட்டது. இங்ங்னம் தேசிய மயமாக்கப் பட்ட நிலம் நிலமில்லாத விவசாயிகளுக்குப் பங்கிடப்பட்டது. இதன் மூலம் விவசாயியின் ஒரு கனவு பூர்த்தி ஆயிற்று. காணி நிலம் வேண்டும் என்னும் அவா நிறைவேறிற்று.
ஆனால் விவசாய வளர்ச்சி இதனால் மட்டும் ஏற்பட்டு விடுமா? விவசாயப் பெருக்கம் ஏற்பட்டு நாடு செழிக்க வேண்டுமானால், விஞ்ஞான ரீதியான யந்திர ரீதியில் வேலை செய்வதற்குப் பிரமாண்டமான வயல்வெளிகள் வேண்டும். சாதாரண விவசாயி ஒருவனின் நிலப்பங்கில் ட்றக்டர் போன்ற யந்திரங்கள் வேலை செய்ய இடம் காணாது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிதான் என்ன? கூட்டுப் பண்ணை முறை இப்போதுதான் ஜனன மாயிற்று. தங்கள் நிலங்களை ஒன்று சேர்த்து ஒரு பிரமாண்ட வயல் வெளியை ஏற்படுத்த கிராமம் தோறும் ஏராளமான விவசாயிகள் முன் வந்தனர். நிலத்தில் உழக் குதிரைகhே 6.கு கருவிகளோ இல்லாதவர்களே இதில் முதலாவதாக ஆர்வத்துடன் சேர்ந்தனர். இப்படி பொட்டுப் பொட்டாகச் சேர்ந்து பிரமாண்டமான வயலானதும் அதில் வேலை செய்ய பெரிய ட்றக்டர் வந்தது. தூரத்தில் இருந்தெல்லாம் டிறக்டர் தரிசனத்துக்குக் கட்டுச்சாதத்துடன் விவசாயிகள் வந்தனர். ரஷ்ய நாடோடிக் கதை ஒன்றிலே ஒரு மாயக் குதிரை வருகிறது. அதன் எஜமானனான குடியானவன் சொற்படி எல்லா வேலைகளையும் அது உடலுக்குடன் செய்து முடிக்கும். இந்த டிறக்டர் யந்திரமும் இவர்களுக்கு அந்த மாயக் குதிரையைத் தான் நினைவுபடுத்தியது. எ.குக் குதிரை என்று பெயரும் சூட்டிக் கொண்டார்கள். இதற்கு, கூட்டுப் பண்ணை பற்றிய பிரசாரத்துக்கு ட்றக்டர்களே பிரசாரக்கருவியாக அமைந்துவிட்டன. இதன் மூலம் அதிகரித்த வருவாயும் ஓய்வும் இருப்பதைக் கண்ட மற்ற விவசாயிகளும் இதில் பங்குபற்ற முன்வந்தனர். கூட்டுப் பண்ணைகள் வளர்ந்தன. விவசாயம் விருத்தியடைந்தது. நாடு வளம் பெற்றது.
இதுவே கூட்டுப் பண்ணை தோன்றிய வரலாறு. மக்கள் விரும்பி வாசிப்பதையே அவர்களுக்குத் தருகிறோம் என்று போட்டி போட்டுக்
76

கொண்டு பத்திரிகைகள் காதல் கதைகளையும், பொழுதுபோக்குச் சமாசாரங்களையும் தந்து அவர்களுடைய சிந்தனையை மழுங்கடித்துக் கொண்டிருக்கையில் 'பாரதி மக்களின் சிந்தனையைத் துண்டும் விதத்தில் பயனுள்ள கட்டுரைகளைத் தந்து கொண்டிருந்தது. விற்பனை அல்ல பாரதியின் நோக்கம்.
இந்த இதழின் தலையங்கமும் குறிப்பிடக்கூடிய ஒன்று. யார் கவி? என்பதே தலையங்கம். 'பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும் என்றான் பாரதி. பாரினை இயக்கும் சக்தி . ஆளும் திறன் பாவலனுக்குண்டு. கவி சிருஷ்டிப்பவன்! சரக்கு விற்பவன் அல்ல. சமூகக் கோரங்களை ஒழிப்பதற்கும், மனித சாதி சரி நிகர் சமானமாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்களைச் செப்பம் செய்வதற்கும் உத்வேகத்தோடுமுன்வருபவனே கவியாகிறான். பவளமீன் தன் வயிற்றிலே பவளத்தைப் பேணி வளர்த்து உயிரைத் தியாகம் செய்து உலகத்தில் பவளத்திற்குச் சிறப்புத் தேடுகிறது. சமுதாயத்தின் சுமையாக வரும் சில கவிகள் பவளம் போன்றவர்கள். சமுதாயம் அவர்களைப் போற்ற வேண்டும். பெருமைப் படுத்த வேண்டும். பண முடிப்புக்கள் பரிசளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் சமுதாயத்துக்கு உருப்படியான சேவை செய்ய வேண்டும் என்பதை மட்டும் ஏனோ மறந்து விடுகிறார்கள்.
‘நமக்கு தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று கம்பீரமாகக் கூறி, பாரதியின் பெயரைக் கொண்டு வெளிவந்த பாரதி ஏடும் கவிதைக்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றிக் கவிதை எப்படி இருக்க வேண்டும், கவிஞன் என்பவன் யார் என்பதிலும் ஒரு நேரான கொள்கையுடனேயே பணியாற்றி வந்தது.
இந்த இதழிலும் இரண்டு ‘பாரதி பப்ளிஷர்ஸ் வெளியீடு பற்றிய அறிவித்தல்கள் வந்திருக்கின்றன. தேயிலைப் புதர்களிலே தங்கம் விளைகிறது என்று ஆசைவார்த்தை காட்டி அடிமைப் படுத்தப் பட்ட ஒருவன். தோட்டத்துரைமாரின் துராக்கிரமிப்பை எதிர்த்துச் சங்கமூலம் திரண்டு சாவை வெல்ல முன் வந்தான்! அசாமில் உள்ள தோட்டத் தொழிலாளரின் வாழ்வைச் சித்தரிக்கும் முல்கராஜ் ஆனந்தின் நாவல் இரண்டு இலை ஒரு மொட்டு’ கே.ராமநாதன் மொழி பெயர்ப்பில் பாரதி வெளியீடாக விரைவில் வெளிவருவதாக ஓர் அறிவிப்புக் கூறுகிறது.
ஸ்டாலின் பரிசு பெற்ற எழுத்தாளர் இலியா எஹற்ரென்பர்க், தயவு தாட்சண்யமின்றிக் கண்ணிலே விரலை விட்டு ஆட்டுகிற மாதிரி எழுதுபவர் இவர். தமது நாவல்களில் வரும் பாத்திரங்களில் வரும் வர்ணனை மூலமே பேசவைக்கும் திறமை கொண்டவர். தேசபக்தி உணர்ச்சியின் தீப்பொறியும் - மனித ஜாதியைப் பாதுகாக்க எழும்

Page 45
ஆர்வமும் பெருவெள்ளமும் இவரது எழுத்திலே துள்ளும். அவரது பேனா முனையில் இருந்து எழும் இலக்கியத் தேனை - உயிர் துள்ளும் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளை பாரதி நேயர்களுக்குப் புத்தக ரூபத்தில் விரைவில் தருவோம்” என்பது மற்ற அறிவிப்பு.
லெனினுடன் பழகிய பிரிட்டிஸ் கம்யூனிஸ்ட் தலைவரும் பாராளுமன்ற அங்கத்தினருமாகிய வில்லியம் கலச்சருடைய “ஜனநாயகம் என்றால் என்ன”? என்னும் நூலையும் பாரதி வெளியீடாகத் தரப்போகும் அறிவிப்பு ஒன்று சென்ற இதழிலேயே இருந்ததையும் முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
தமிழ் நாட்டின் சில இதழ்கள் (சக்தி, லோகசக்தி - முல்லை போன்றவை) நூல் வெளியீட்டிலும் பங்கு கொண்டதுபோல் பாரதி ஆசிரியர்களுக்கும் பாரதி பப்ளிகேசன் மூலம் நல்ல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்னும் ஆசை கட்டு மீறியே இருந்ததை இவ்வறிவுப்புகள் காட்டுகின்றன. ஆனால், அடுத்தடுத்த இதழ்களில் இவ்வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகளைக் காணவில்லை. ‘பாரதி பப்ளிகேஷன்' நூல்கள் ஏதும் வெளியிட்டதாயும் தெரியவில்லை.
பாரதி காலத்தில் கூட்டாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத புத்தக வெளியிட்டு ஆசையை பிறகு தனியாகச் செய்து ஆத்ம திருப்தி பெறுகின்றார் திரு. கே. கணேஷ். ஹோ சி மின் சிறைக் குறிப்புகள் கவிதைத் தொகுதியை 1973-ல் வெளியிட்டார் கணேஷ். கலைகள் எல்லாம் ஓவியம் உட்படப் போர்முனைதான். எழுத்தாளர்களும் ஓவியர்களும் அம்முனையில் போரிடும் வீரர்களே என்று கூறிய ஹோ சி மின் பிரிசின்டைரிக்குப் பின் வேறு இலக்கியங்கள் ஏதும் படைக்கவில்லை. போர்முனைகளே கவிகளாகி விட்டன. அவருடைய ஒரே படைப்பான இச்சிறைக் குறிப்புகளை அழகான கவிதை நூலாகத் தந்துள்ளார் திரு.கணேஷ். ரெயின் போ அச்சக ஆர்.கனகரத்தினம் அவர்கள் ஒரு நல்ல. தரமான இலக்கிய வாசகர் - ரசிகர். அவருடைய உதவியும், நுடலை அழகுற ஆக்கியிருக்கிறது.
இந்தக் கவிதை நூலைத் தொடர்ந்து அந்த கானம் (குறுநாவல்) லூசூன் கதைகள் ஆகிய நூல்களையும் கணேஷ் வெளியிட்டுள்ளார்.
பாரதி பப்ளிகேஷனாக அறிவிக்கப் பட்ட நூல்கள் வராத குறையை கே.கணேஷ் இப்படி நிறைவுபடுத்திக் கொண்டதும் ஈழத்து இலக்கிய உலகுக்கு நன்மையையே செய்திருக்கிறது.
இந்த ஐந்தாவது இதழில நான்கு சிறு கதைகள் வெளிவந்திருக்கின்றன. முல்க்ராஜ் ஆனந்தின் விஜயன், கிருபா என்னும் புனைபெயரில் கே.ராமநாதன் எழுதியுள்ள "பேபி நோனா, அப்துல் லத்திப் எழுதியுள்ள “பாசம்’, எஸ். பி. அமரசிங்கம் எழுதியுள்ள
78

ரெண்டுருவாக்காக ஆகிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் உயர்ந்து நிற்கின்றன. சீதேவி என்னும் நளப்பெண் நான்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பிறகு ஐந்தாவது பிரசவத்துக்காக, யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்துவதில்லை என்ற முடிவுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்று பிரசவிப்பதையே எஸ்.பி. அமரசிங்கத்தின் கதை அருமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பாரதியுடன் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்ட அ.ந.கந்தசாமி இந்த இதழில் ஒரு சினிமா விமர்சனம் எழுதியுள்ளார். ‘பெட்டில் ஷிப் பொடம்கின் (பொடம்கின் என்னும் சண்டைக் கப்பல்) என்னும் புரட்சிப் படம் பற்றியது இவ்விமரிசனம். 1925-ல் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கொந்தளிக்கும் கடலில், அநீதியான அதிகாரிகளுக்கெதிராகக் கொதித்தெழும் மாலுமிகளின் புரட்சியைக் காட்டுவது. புழுநெளியும் உணவை உண்ணமாட்டோம். மனிதர் உண்ணக் கூடிய உணவு வேண்டும் என்னும் மாலுமிகளின் ஏகோபித்த போராட்டம், உப்புத் தண்ணிரில் அலசிவிட்டு உண்ணுங்கள்’ என்னும் அதிகாரிகளின் அசட்டை, ஒன்றுபட்ட மாலுமிகள் ஆயுதங்களை அதிகாரிகளுக்கெதிராக உயர்த்தினார்கள். மாலுமிகளின் சொந்தக் கொடி பாய்மர உச்சியில் ஏறுகிறது. இது படத்தின் ஆரம்பம். ஒடோசோவில் பொது மக்கள் புரட்சிக்கார மாலுமிகளை ஆதரித்து, துறைமுகத்துக்கு வந்து உணவும் உற்சாகமும் அளிக்கிறார்கள். மிலேச்சர் ஜார் மன்னனின் மிருகத்தனம் பட்டாள ரூபத்தில் வந்து மக்கள் மேல் பாய்கிறது. ஓடெசா துறைமுகத்தின் படி எல்லாம் மக்களின் பிணம். மாலுமிகளைக் கொல்ல கடற்படை மாலுமிகளும் அதிகாரிகளின் அட்டகாசமான சவுக்கடிகளுக்கு ஆளாகிறவர்கள் தானே. 'தோழா சுடாதே சுடுவாயோ?” என்கின்றனர் புரட்சிக்கார மாலுமிகள்.
முதலில் திகைத்தாலும் பிறகு ‘தம்மைப் போன்ற அந்த மாலுமிகளுக்காகத் தோழமைக் கரத்தை நீட்டுகின்றனர். கடற்படையின் மாலுமிகள்.
இதுதான் படக்கதை.
உணர்ச்சியைத் தூண்டும் கலைரசம் ததும்பும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. புழு நெழியம் உணவைப் பூதக்கண்ணாடி காட்டும் கோலம், ஜன சமுத்திரத்தை பட்டாளத்தார் சுட்டுத் தள்ளும் பயங்கரம், துறைமுகப்படியில் உருண்டு வரும் தள்ளுவண்டிச் சிறுமியின் பரிதாபம் என்பன உள்ளத்தில் நீங்கா இடம் பெறுகின்றன.
இந்தப் படத்துக்கு எத்தனையோ நாடுகளில் தடை விதிக்கப் பட்டிருந்தும் கொழும்பில் ‘பிலிம் கிளாப் மூலம் ஆர்ட்கலரியில் காட்டப்
79

Page 46
பட்டது. இது சங்கீதம் இல்லாத மெளனப் படம்தான். தகுந்த மண்டபம் திரைவசதி இல்லாத இடத்தில்தான் காட்டப் பட்டது. இருந்தும், மந்திரத்தால் சுட்டுண்டது போல் மனதை ஆகர்ஷிக்கும் சக்தி கொண்ட கலைப் படைப்பு இது. மலர்ந்து வரும் புதுயுகத்தில் சிரஞ்சீவியாய் விளங்கப் போகும் சினிமாக் கலையின் வாடாமல்லிகை இத் திரைப்படம் என்று எழுதுகிறார் அ.ந.கந்தசாமி.
அற்ப ஜீவிகளான கறையானின் வாழ்வைப் பற்றிய கட்டுரை கறையான் சமுதாயம்,
பூமிக்கடியில், மண் குன்றுகளில், உக்கிப் போன விட்டங்களில் பங்களாக்கள் கட்டி வாழும் இந்தக் கறையான் இனம் மனித இனம் தோன்றுவதற்குப் பத்துக் கோடி வருஷங்களுக்கு முன் தோன்றியது. ஆதிகாலத்தில் மாவிட சாதி பொதுவுடைமை வாழ்வில் திளைத்திருந்ததாக இதிகாசம் உரைக்கிறது. ஆனால் அதை எல்லாம் பின்னோடச் செய்யும் புதுமையான சமுதாயம் கறையான் சமுதாயம்.
தனித்தன்மை இல்லாத சமூக வாழ்வு. கூட்டுறவினால் மலர்ந்த வாழ்வு. புழு உலகிலேயே ஒரு புதுமை இந்தக் கறையான் சமுதாயம். இவைகள் அல் பாயுசுகளாய் இல்லாமல் பூர்ணாயுசுடன் வாழத் தொடங்கியிருந்தால் உலகமே கறையானுலகமாக மாறிப்போயிருக்கும். மனிதப் பிராணிக்கு இடமிருந்திருக்காது என்று முடிகிறது இந்தக் கட்டுரை.
அருமையான தலையங்கம் ஐந்து கவிதைகள் சிந்தனைக்கு விருந்தளிக்கும் கட்டுரைகள். நான்கு சிறுகதைகள் ஒரு சினிமா விமர்சனம் ஆகியவைகளுடன் அரை ரூபாய் விலையில் இந்தப் "பாரதி” இதழ் ஒரு பொக்கிஷமாகவே திகழ்கிறது.
1946 ஜனவரியில் வெளிவரத் தொடங்கிய பாரதி இதழுக்கும் அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னதாக 1943 ஆகஸ்டில் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரத் தொடங்கிய கிராம ஊழியனுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது.
பாரதி கட்டிய வழியைப் பணிவுடன் பின் பற்றித் தொன்ைடு செய்வதையே சபதமாகக் கொண்டு விட்டான் ஊழியன் என்ற அறிவிப்புடன் தான் அது தன் இலக்கியப் பணியினைத் தொடங்கியது. கு-ப-ரா-மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டுழைத்த கிராம ஊழியனில், மற்றப் பத்திரிகைகள் ஏற்கமறுத்த கு-பா-ராவின் சிறுகதைகளும், கவிதைகளும் நிறையவே பிரசுரமாயின. பாரதியின் சிரார்த்த தினம் கொண்டாடப் படுவதை வன்மையாகக் கண்டித்த கிராம ஊழியன் பாரதிக்குச் சிரார்த்த தினம் வேண்டாம், அவர் பிறந்த பொன்னாளை நன்னாளாகக் கொண்டாடுவோம்” என்று தலையங்கமே திட்டியிருந்தது.
80

பாரதியின் ஆறாவது இதழ் ஆகஸ்டில் வந்தது. (மாதம் ஓர் பாரதியின் ஆறாவது இதழ் ஆகஸ்டில் வந்திருக்க வேண்டும். மூன்றாவதும் நான்காவதும் என்று போட்டுக் கொண்டு ஓர் இதழ் வந்ததால் ஆகஸ்டில் வந்த இதழ் 6 என்று இருந்த போதும் ஐந்து இதழ்களே வெளிவந்திருந்தன. எட்டு இதழ்கள் வரவேண்டிய நேரத்தில் ஐந்து இதழ்கள் வந்துள்ளன) இந்த ஆறாவது இதழ் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவு மலராக வெளிவந்துள்ளது. "மலர்’ என்றதும் வழமையான இதழ்களில் இருந்து வேறுபட்ட தடித்த, அழகான ஆர்ட் கடதாசி அட்டையுடன் கூடியதாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதிலும் தவறில்லை. ஆனால், பாரதியின் இந்த தாகூர் நினைவு மலர் மற்ற இதழ்களைப் போலவேதான் இருந்தது. அட்டைப் படம் கவியரசர் ரவீந்திரநாத் தாகூருடையது. இந்தப் படத்தைப் பாரதிக்கு வழங்கியுள்ளது 'நவலோகய என்ற சிங்கள மாசிகை. இந்த ‘நவலோகய மாத இதழுக்கும் பாரதிக்காரர்களுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்தது ‘பாரதி போல் ஒரு சிங்கள மாசிகை நவலோக. ஆசிரியர் ரணங்கர தேரோ என்று முந்திய இதழ் ஒன்றில் நவலோகய பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. சாந்தி நிகேதனில் இருந்தவரான சரணங்க தேரோ வெளியிட்ட இந்தச் சிங்கள மாசிகையே பாரதியின் இந்த இதழுக்கான அட்டைப் படத்தை உதவியிருக்கிறது. 'கவியரசர் பாதையிலே' என்பதுவே இந்த இதழத் தலையங்கம்.
புதியதோர் உலகம் பூத்தலையும், பொல்லாத கெட்ட உலகம். வேருடன் சாய்வதையும் காணத் துடிப்பவர் தாகூர் - சமூகக் கோரங்களை எதிர்த்துப் போரிடக் கிளம்பிய அவர் தமது நவீனங்கள் மூலம் வங்க சாகித்தியத்திலே ஒரு புதிய வனப்பை விளைவித்தார்.
தந்தக் கோபுரத்தில் ஏறி அமர்ந்துகொண்டு தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிக் கவலைப் படாமல் அவரால் இருந்திருக்க முடியும். ஆனால், அவரது முற்போக்கு எண்ணம் இந்தக் கவிக்குகை வாழ்க்கைக்குள் அவரை இருக்கவிடவில்லை. நாட்டை அலைத்த பிரச்சினைகளில் அவர் கருத்தைச் செலுத்தினார். சொந்த மக்களின் சிறப்போங்கத் தன் கடமையைச் செய்யத் துணிவு கொண்டார். அவரது வழியைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் பின்பற்றுவார்களா? என்கிறது இவ்விதழின் தலையங்கம்.
ரவீந்திர சித்திரங்களின் புதுமை புரியாமல் மலைக்கும் வாசகர்களுக்கு அவற்றின் கலையுள்ளத்தைத் திறந்து காட்டகிறார் அபநிந்திரநாத் தாகூர் தனது 'ரவிந்திரக் கலை’ என்னும் கட்டுரையில்.
பிரபல எழுத்தாளரும், சிந்தனையாளரும், விஞ்ஞான ரீதியில் கருத்துக்களைச் செப்பஞ் செய்த அறிஞருமான எச்.ஜி.வெல்சைப் பற்றி
8

Page 47
“பலகணிையில் குறிப்பிடுகிறது இந்த இதழ். "தமது 79 - ஆம் வயதில் எச்.ஜி. வெல்ஸ் மறைந்தார் - இயற்கை விஞ்ஞானத்தில் பெரும் நம்பிக்கை கொண்டு அதுவே வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கும் என நம்பினவர் வெல்ஸ். முதலாளித்துவ யந்திரத்துக்குள் புகுந்து அதன் அறிவால் தத்துவாசிரியராக மலர்ந்தவர். அவரது சரித்திர நூல்களில் எத்தனையோ உண்மைகளை எடுத்துக் காட்டி இருக்கிறார். ஆனால், அவற்றிலிருந்து ஒரு பொதுவான சித்தாந்தத்தைப் பிழிந்தெடுக்க அவரால் முடியவில்லை
• உலகத்திலே நலன்கள் புரிவதெல்லாம் ஒரு சில சிந்தனையாளராலும் வசதி கிடைத்த வர்க்கத்தினாலும் தான் என்பது அவருடைய கருத்து. ஞான சக்தியிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கையற்று உலகத்தில் புதியதோர் புரோகித ஜாதியை ஏற்படுத்தி முதலாளித்துவத்தின் மோட்சத்துக்குப் புதிய வழிகாட்ட முனைகிறார் வெல்ஸ் என்று குறிப்பிடுகிறது. ‘வெல்ஸ் மறைந்தார்’ என்னும் இந்தப் பலகணி.
1954 முதல் பாரிய வேகத்துடன் பணியாற்றத் தொடங்கிய இலங்கை முற்போக்கு ஏழுத்தாளர் சங்கம் தனது குறிக்கோள்களையும் அமைப்பு விதிகளையும் சிறு கைந்நூலக 25-10-1954 அன்று வெளியிட்டது. அவ்வெளியீட்டில் காணப்படும் முதல் மூன்று பந்திகளையும் மீண்டும் பார்த்துக் கொள்வது பயன் தருவதாகும் என்று கா. சிவத்தம்பி அவர்கள் தனது ஈழத்தில் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.
‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலே இல்லாருமில்லை உடையாருமில்லை” என்னும் முற்போக்கு எண்ணம் கொண்ட சகல எழுத்தாளர்களையும் ஓர் அணியில் திரட்டி மக்கள் கலாசாரம் உயர்ந்த மனித வர்க்கத்துக்குமான இலக்கியம் படைப்பதும் சம அடிப்படையில் சகல தேசிய இனங்களின் மொழி கலாசார முன்னேற்றத்துக்காக 2D - 68o Up Li L u ġb) Lö எழுத்தாளர்களினி நலனி களுக் காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபடுவதும் சங்கத்தின் நோக்கமாக இருக்கும்.
சங்கத்தைப் பரவலாக்கும் முயற்சியும் எழுத்தாளர்கள் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியும் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. 1004-55-இல் வெளியிடப் பட்ட ‘ எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை என்ற துண்டுப் பிரசுரம் சர்வதேசிய நிலையிலும் அன்று நிலவிய அபாயகரமான ஆபத்தான கட்டங்களை விளக்கி, இறுதியில் எனவேதான் உங்களைச் சகோதர பாசத்துடன் நெருங்குகின்றோம். காலத்தின் பொறுப்பை உணர்ந்து கடமை உணர்வுடன் அணுகுகிறோம். இலங்கை முற்போக்க எழுத்தாளர் சங்கத்தின் கொடிக்குக் கீழ் (அதே நுல் பக்கம் 41:42)
இந்த வேண்டுகோளை 1946 ஆகஸ்ட் இதழ் பாரதி கவிதை மூலம் தருகிறது.
82

‘முன்னேற்றச் சேனை ஒன்று முன்னேற்றச் சேனை ஒன்று மூவுலகம் வாழ்ந்திட மூடத்தனம் யாவும் நிர் மூலமாகி வீழ்த்திட
முன்னேறிச் செல்கின்ற
முகூர்த்தமிது தோழர்காள். இத்தருணம் எழுந்திடுக எங்கள் சேனை சேர்த்திட எங்கும் அடிமை சுரண்டல் எனும் பிசாசு தீய்ந்து மாய்ந்திட இவ்வுலக மக்களெல்லாம் ஒருசமானமாகினால் தங்கமான எம்படையின் வெற்றியதுவாகுமே தகளில்லாத புது உலகம் தோன்றல் வேண்டும் என்போம்: கடமை தாங்கி எழுந்து செல்லும் சேனைதன்னை வாழ்த்துவோம். காளையீர் நீரும் அந்தச் சேனையோடு சேருவீர்!
இந்தக் கவிதையின் அழைப்பும் நாம் மேலே கணிட எழுத்தாளர்களுக்கான பிந்திய அழைப்பும் ஏறத்தாள ஒத்திருக்கின்றன. ஆகவே முற்போக்கு இலக்கியப் பரம்பரைகட்கு அப்போதே பாரதி வித்திட்டிருக்கிறது என்பது புலனாகிறது.
முன்னேற்றச் சேனையிலே சேர வாருங்கள் என்ற கவிதை மூலம் அழைப்பு விடுத்தவர் அ.ந.கந்தசாமியே தான்.
வங்கக் கவிஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய ஓர் உயர்கவி. சோஷலிஸ் ஆதர்சமுள்ள நவயுக எழுத்தாளர். அவரது நாடகங்கள் வாழ்க்கையின் வண்ணப் படங்கள் "காவலன் தீபம்’ என்னும் அவருடைய நாடகத்தின் ஒரு பகுதியை தொழிலாளியாகப் பிற என்னும் தலைப்பில் இந்த இதழ் தருகிறது. இராணுவச் சட்டப் படி தூக்குத் தண்டனைகள் தான் நாடகத்தின் சுருக்கம். ஒரு வர்த்தகன், ஒரு கவிஞன், ஒரு தொழிலாளி ஆகியோரே அம்மூவர். சமூகத்தின் ஏணிப் படியில் வேறு வேறு பதவியிலிருப்பவர்களின் மனோபாவத்தை இது காட்டுகிறது. `கவிஞனே நீ மீண்டும் ஜனிப்பாயாகில் ஒரு தொழிலாளியாகவே பிறந்து நமது கோடி கோடி சகோதரர்களை எல்லாம் அக்கொடியின் கீழ் திரளச் செய்' என்று முடிகிறது சம்பாஷணை.
இந்த இதழிலும் நான்கு சிறுகதைகளும் ஆறு கவிதைகளும் பல அறிவியற் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன.சோவியத் நாட்டின் புதுமை எழுத்தாளர் இலியன்ரன்பெர்க் குபேர நாடு என்று வர்ணிக்கப் படும் அமெரிக்காவுக்குச் சென்று வந்த தனது அனுபவங்களை ‘குபேர நாட்டில் என்னும் கட்டுரை மூலம் பாரதி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். எதையும் ஒளிவு மறைவோ, தயவு தாட்சண்யமோ இன்றிப் பட்டவர்த்தனமாகக் கூறிவிடுகிறவர் இலியா.
83

Page 48
உலகெங்கும் சுற்றுப் பயணம் செய்துள்ள சோவியத் எழுத்தாளர் இலியா ஏரன்பர்க்.
பிரேசில் பத்திரிகையாளர் ஒருவர் இலியாவைப் பற்றிக் கூறும் போது ஏரன்பார்க்கின் உழைப்பாற்றல் அதிசயமானது. மாஸ்கோவில் அவருடைய நூல்கள் பத்துத் தொகுதிகளாக இரண்டு இலட்சம் பிரதிகள் வெளியிடப் பட்டுள்ளன. இவை அவர் எழுதியவற்றில் பத்தில் ஒரு பங்கே ஆகும். பல்வேறு துறைகளைப் பற்றி நூறு நூலகள் எழுதியுள்ளார். அவரது நூல்களின் கதாபாத்திரங்களைக் கணக்கிட்டால் ஒரு சிறிய நகரத்தின் ஜனத்தொகை ஆகிடும். 1910-1920 ஆம் ஆண்டுகளில் அவர் கவிதை எழுதினார். இலியா ஏரண்பார்க்கின் பத்திரிகைக் கட்டுரைகள் மட்டுமே பதினைந்து தொகுதிகளுக்குச் சேரும். அவர் நாள் முழுவதும் எழுதிக் கொண்டே இருப்பார். அவருடைய அறை ஒரு மியூசியம் போல் இருக்கும். பிக்காசோவின் ஒவியங்கள், சோவியத் ஒவியங்கள், பழைய சிற்பங்கள், போலந்து நாட்டுக் கம்பளம் என்று எடுத்தெடுத்துக் காட்டுவார், இலியா என்கிறார் அந்த பிரேசில் பத்திரிகையாளர். ஏரன் பர்க்கைப் பேட்டி காணுவதற்காகவே அவருடைய அறைக்குப் போனாராம். எப்படி இருக்கிறீர்கள்’ என்பது முதல் கேள்வி. அதற்கு இலியாவின் பதில் ‘எப்படி இருக்கிறேன், எல்லாக் கிழவர்களும் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறேன். நான் சொல்வது உங்களுக்குப் புரியாது. காரணம் நீங்கள் இன்னும் கிழவராகவில்லை. உங்கள் புதிய புத்தகத்தில் என்ன எழுதப் போகிறீர்கள்.
நான் ஓரளவு மூட நம்பிக்கை உள்ளவன். செய்யாத காபியங்களைப் பற்றிப் பேசுவது எனக்குப் பிடிக்காது.
“நீங்கள் எப்போது எழுதுவீர்கள். காலையிலா? இரவிலா?”
“இரவில் துங்கவே விரும்புகிறேன். பகல் முழுவதும் ஏழுதுவேன்”.
‘நீங்கள் சிக்கலான தன்மையுள்ளவர் என்று மக்கள் கூறுகிறார்கள். உங்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?”
"சிக்கலான தன்மை என்று கூறுவானேன். மோசமானவன் என்றே கூறலாமே. மோசமானவன் என்றாலும் நல ல காரியங்களும் செய்திருக்கிறேன்’.
“உங்களுக்குப் பிடித்தமானது எது? புனைகதையா, கவிதையா, கட்டுரையா?”
‘நான் ஒரு மனிதன். மனிதத் தன்மை உள்ள எதுவும் எனக்குப் புறம்பானதல்ல”.
பிரபல சோவியத் எழுத்தாளரான இலியா தனது அமெரிக்க விஜயம்
84

குறித்து குபேர நாட்டில்’ என்று எழுதிய கட்டுரை இந்தப் பாரதி சஞ்சிகையின் ஆறாவது இதழில் இருக்கிறது.
‘நான் விமானத்திலிருந்து இறங்கியதும் பத்திரிகைக்காரர்கள் என்னை வளைத்துக் கொண்டு அமெரிக்க எழுத்தாளர்கள் பலர் சோவியத் நாட்டிற்கு வரும்போது எங்கள் நாட்டைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதித் தயார் செய்து கொண்டு வருவதுலன்டு. நான் அப்படியல்ல. காண்பன எல்லாம் கண்டு உணர்ந்து போகவே வந்தேன். கண்ணிலே எண்ணெய் போட்டுக் கொண்டு கருத்தாகச் சோதனை செய்யும் சுங்க அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவா? கண்மூடித்தனமாகக் கேள்வி கேட்கும் பத்திரிகை நிருபர்களைப் பற்றிச் சொல்லவா. கறுப்புத் தோலை உடையவர்கள் மனிதர்கள் அல்லர் என்று ஒதுக்கி வெறுக்கும் நிறத்தினைப் பற்றிச் சொல்லவா?” என்று தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார் இலியா, தனது அமெரிக்கப் பயணத்தின் அனுபவங்களை.
ஒருவன் பூரண வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் குறைந்த பட்சம் முந்நூறு வருசமாவது வாழ வேண்டும் என்று அபிப்பிரயப்பட்டவர் ஜோர்ஜ் பேர்னாட்ஷா.
‘வாழ்வது எப்படி என்று தெரியாத காரணத்தால் நாம் சாக வேண்டியிருக்கிறது. வேண்டாத சாவுப் பழக்கங்களால் நம்மை நாமே சாகடித்துக் கொள்ளுகிறோம். சாவு இயற்கை. தவிர்க்க முடியாதது என்று எண்ணுவது சரியல்ல. கொலை, தற்கொலை, விபத்துக்கள் ஆகியவைதான் மரணத்துக்கு முலமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். தொண்ணுாறு வயது நிரம்பிய ஷா, தொண்ணுாறு வயதிலும் துள்ளும் இளமையின் தெம்போடு அவர் இருக்கிறார். `நம்முடைய குணங்கள் வெறும் அனுபவத்தால் செப்பம் செய்யப்படுவன அல்ல. எதிர்நோக்கும் ஆதர்சங்களால் ஆக்கப் படுபவை. எனவே பாடிக் குதிக்கவே ஒருவனுக்கு எழுபது வருஷம் வேண்டும். முழு வாழ்க்கைக்கும் முந்நூறு ஆண்டுகளாவது வேண்டும். வயதாக ஆக என்னுள்ளே என் பழைமை கலைந்து கொண்டே வருகிறது. நித்தம் கழற்றி எறியும் சட்டைபோல்”.
வாழ்வாவது மாயம். மண்ணாவது திண்ணம் என்ற வேதாந்தச் சிமிழிலே மனித ஜாதி அடைபடாமலிருக்க மார்க்கம் சொன்ன பேர்னாட்ஷாவைப் பற்றி ‘சாக மறுக்கும் ஷா என்னும் கட்டுரையும் இந்த இதழில் பிரசுரமாகி இருக்கிறது.
பாரதி ஐந்தாவது இதழில் வெளிவந்த கறையான் சமுதாயம் போலவே இந்த ஆறாவது இதழில் ‘கொட்டும் தேள் பற்றியதொரு கட்டுரை வெளிவந்துள்ளது. தேளின் அதிசய ரீதியான வாழ்வைச் சுவையாகக் கூறுகிறது இக்கட்டுரை.
85

Page 49
தேள் நண்டின் குலத்தைச் சேர்ந்ததல்ல. ஆனால், சிலந்தியின் பரம்பரையைப் பேணிப் பிறந்தது. அதன் கொடுக்குகள் கால்களல்ல. உதடுகளின் விசித்திரப் பரிமானங்கள். குட்டிகள் எல்லாம் தாயின் முதுகில் ஏறிக் கொண்டிருக்கும் இருக்க இடம் போதாமல் மற்றவைகளால் தள்ளப் பட்டு கீழே விழுந்து விட்டால் - தான் பெற்ற குட்டி என்று கூடப் பார்க்காமல் தாய்த் தேள் அதைப் பிடித்துத் தின்று விடுமாம். ஆகவே தேள் குட்டிகள் மிகவும் ஜாக்கிரதையாகத் தாயின் முதுகில் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும். நினைவு தெரிந்ததும் தாயின் முதுகில் இருந்து தாவிக்குதித்து அதன் கண்களில் படாமல் ஒரே ஓட்டமாக ஒடித் தப்பித் தானாகப் பிழைத்துக் கொள்ளுமாம்.
பெற்ற தாயிடமிருந்தே தப்பியோடி விடுதலை வாழ்வு தேடிக் கொள்ளும் தேளின் வாழ்க்கை விசித்திரமானது தான்.
தப்பிக்க வழியில்லாத விதத்தில் எங்காவது மாட்டிக் கொண்டால் தேள் தன்னைத் தானே கொட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளுமாம்,
தாய்மை என்னும் பாசம் இல்லாத தேளின் விசித்திரமான வாழ்வைச் சுவைபடச் சித்தரிக்கிறது இந்தக் கட்டுரை.
யுத்த காலத்திலே விஞ்ஞானப் புதுமைகள் பலகண்டு பிடிக்கப் பட்டன. ராடர்’ என்று கூறப்படும் ரேடியோ ஒளி. இது நெடுநாளைய ஆராய்ச்சியின் முடிவாகப் பிறந்தது. முந்நூறு கோடி டாலர் செலவில் பெருவாரியான விஞ்ஞானிகளின் முழுநேர உழைப்பில் கண்டு பிடிக்கப் பட்டது. "ராடர்’ என்பது என்ன? அது எதற்காக எப்படிக் கண்டு பிடிக்கப் பட்டது என்பது போன்ற விபரங்களைத் தரும் ஒரு விஞ்ஞானக் கட்டுரையும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.
முன்னேற்றச் சேனையிலே சேர வாருங்கள் என்னும் கவீந்திரனின் கவிதையைத் தவிர்த்து இன்னும் ஐந்து கவிதைகள் இந்த இதழில் இருக்கின்றன.
வேலை நிறுத்தம் என்றொரு கவிதை எழுதியவர் “வித்யா என்றிருக்கிறது. முன்னேற்றச் சேனையிலே என்று அழைப்பு விடுக்கும் கவிதைக்குச் சற்றும் சளைக்காதது இது.
அப்பா வேலைக்குப் போகவில்லை. வேலை நிறுத்தமாம். தினசரி கருங்காலிகளைத் தடுக்கத் தொண்டர் படையிலே நின்றுழைக்கிறார்.
86

அம்மா கவலையால் கண்ணிர் உதிர்க்கிறாள். தொண்டர் முகாமில் தாய்மார்கள் எத்தனை பேர் கஞ்சி காய்ச்சுகிறார். தவையல் அரைக்கிறார். தீபாவளி கொண்டாடாவிடில் போகட்டும். தீரட்டும் இந்த அடிமைத் தனம் என்று முழங்குகிறார். தனி மரம் தோப்பாகுமா. நமக்குள்ள செல்வமெலாம் தொழிலாளர் கட்டுப்பாடே. ஐக்கியமிருந்தால் ஐயமேன். w
ஜெயந்தான். என்று போகிறது கவிதை.
முந்திய கவிதைக்குச் சற்றும் சளைக்காத இந்தக் கவிதையும் முற்போக்குப் பிரசாரக் கவிதை தான் “வித்யா' என்ற பெயரில் ராமநாதனே இதை எழுதியிருக்கலாம்.
திரு.ராமநாதன் இந்த இதழில் மூன்று கவிதைகளும் (மூன்று வெவ்வேறு பெயர்கள் - விஜயன், ராம், வித்யா) கிருபா என்ற பெயரில் ஒரு சிறுகதையும் எழுதியிருககிறார்.
‘ஒரு சிறிய சம்பவம்' என்னும் சிறுகதை முல்க்ராஜ் ஆனந்தால் எழுதப் பட்டிருக்கிறது.
கே. ஆனந்த சுப்பிரமணியம் என்பவர் “பாசம்' என்னும் சிறுகதையை எழுதியிருக்கிறார்.
சகோதர பாசத்தை - ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகும் தம்பியைக் காப்பாற்ற முடியாத அண்ணனது பாசத்தின் ஏக்கத்தை அழகாகச் சித்திரிக்கிறது இந்தச் சிறுகதை.
வழமை போலவே நாற்பது பக்கத்தில் வந்திருக்கும் இந்த இதழின் பெரும்பான்மையான விஷயங்கள் கே. ராமநாதன், அ.ந.கந்தசாமி ஆகிய இருவராலேயே எழுதப்பட்டிருக்கின்றன. கூட்டாசிரியர் கே. கணேஷ் என்று இருந்தாலும் திரு. கணேஷின் எழுத்துக்கள் எதுவும் இந்த இதழில் இல்லை. ஒரு வேளை கே. கணேஷ் அவர்களுக்கும் இந்த இதழ் தயாரிப்புக்கும் சம்பந்தமில்லாமலும் இருந்திருக்கலாம்.
aTLTTTkLT TLmS seCCTTlLS seTTTkTTLTLSS LaLaLHkeMT TTC CTT 0CMk0CLLLLL LLLLLB அம்சங்களை விடத் துணுக்குத் துணுக்காகவும் நிறையச் செய்திகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன.
“உயர்வும் தாழ்வும்எனத் தலைப்பிட்டு, பின்வரும் செய்தி வெளியாகி இருக்கிறது. உபாத்தியாயர்கள் உத்தமமான சேவையைச் செய்து வரும்
87

Page 50
உயர்ந்த மனிதர்கள். உன்னதம160 இலட்சியங்களை உடையவர்கள். அவர்கள் தாழ்மையான செயல்களிலே ஈடுபடக் கூடாது என்று கல்வி மந்திரி கன்னங்கரா கூறுகிறார். உரிமைக்காகப் போராடும் ஆசிரியர்களின் எழுச்சியைத் தான் தாழ்மையான செயல் என்கிறார்கள். இந்த உயர்வு தாழ்வைப் பற்றி உபாத்தியாயர் ஒரு பழங்கதையைக் கூறினார். ஒரு பிராமணனும் வண்ணானுமாகச் சேர்ந்து ஒரு பசுவை வாங்கினார்கள். வண்ணான் சொன்னான். வேதமோதும் பெரியவர் நீங்கள். உயர்ந்தவர். எனவே பசுவின் முன் பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சாணி, மூத்திரம் ஆகிய கீழான பின்பகுதியைத் தாழ்ந்வனான நான் வைத்துக் கொள்ளுகிறேன் என்று. அதன் பிரகாரம் பிராமணன் புல், தவிடு, தண்ணிர், பிண்ணாக்கு எல்லாம் கொடுக்க வேண்டும். வண்ணான் பால் கறந்து கொள்வான். இந்த வண்ணான் வாதத்தைத்தான் மந்திரி வெளுத்து வாங்குகிறார். இந்த இலட்சணத்தில் "டானா டாவண்ணா என்று தொண்டை கிழிய பசங்களைக் கட்டி மாரடிப்பதை விட மஹநுவர பஸ் சர்வீசில் கண்டக்டர் வேலை செய்யலாம் என்று வாத்தியார் பலர் அபிப்பிராயப் படுகின்றனர்.
இது ஒர் அரைப் பக்கச் செய்தி. இதைப் போலவே இன்னும் நெஞ்சு பொறுக்குதில்லையே, சம்பூர்ணக் கலைஞன். கொள்ளை போவது கண்டு கொதிக்கிறோம்' என்ற சின்னச் சின்ன அரைப்பக்க விஷயங்கள் ஆறேழு இந்த இதழில் வந்திருக்கின்றன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. நச்சு இலக்கியத்தை எதிர்த்தல் - நல்ல இலக்கியத்தை . மக்களுக்கு நலம் பயக்கும் இலக்கியத்தை வளர்த்தல், என்னும் பணியில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை. அவர்களது அரசியல் சார்பு யாதாகிலும் ஓரணியில் திரட்டிய பெருமை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு உரியது. இச் சங்கத்தின் கொள்கை, வேலைத்திட்டம், வெளியிட்டுள்ள மலர்கள் இவற்றை ஆராய்வோருக்கு இவ்வுண்மை புலனாகும். தேசிய மரபுக்கேற்ப முற்போக்கு இலக்கியத்தை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்கு இ. மு. எ. சங்கம் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்று மகிழ்வுடன் எழுதியுள்ளார். இந்திய இலக்கிய விமர்சகர் தி. க. சி. (மல்லிகை ஆண்டு மலர் ஆகஸ்ட் 84)
எந்த ஒரு மாறுதலும் திடீரென்று ஓர் இரவில் நடந்து விடுவடுவதில்லை என்பதையும், உலகில் நிகழும் எல்லாக் கர்மங்களும் ஒரு வரலாற்றின் நீட்சியே என்பதையும், நாம் ஏற்றுக் கொண்டால் இந்திய முற்போக்கு விமர்சகர் ஒருவரே பூரித்தப் போகும் அளவுக்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் முன்னேற்றமடைந்துள்ள
88

இன்றைய செயலுக்கு அன்றைய ‘பாரதி ஏடுகள் ஆற்றிய பணியின் சிறப்பையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது.
இன்று நடப்பவைகளைக் காணும் ஒருவருக்கு நேற்று என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளுவதன் மூலமே நாளைக்கான செயல்பாட்டுக்கு ஒரு தீர்மானம் கிடைக்கிறது.
1946 ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் ஐந்து பாரதி இதழ்களை திருவாளர்கள் கே. கணேஷ"ம், கே. ராமநாதனும் கூட்டாசிரியர்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் பொருளாதாரச் சுமைகள் சிறுகச் சிறுக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளமையை ஓர் இதழுக்கும் அடுத்த இதழுக்குமுள்ள இடைவெளி துல்லியமாகக் காட்டுகிறது.
பாரதியில் விளம்பரங்கள் இல்லை. பணத்துக்காக அலைகிற பலவீனம் பத்திரிகையின் தரத்தையோ குறிக்கோளையோ சிதறடித்துவிடலாம் எனினும் சிந்தனையால விளம்பரத்துக் காக அலைவதைப் பாரதிக்காரர்கள் விட்டிருக்கலாம். அதுவே சஞ்சிகை வெளியிட்டுத் துறைக்கு ஒரு சவாலாகப் போய்விட்டது.
கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அட்டைப் படத்தடன் ஆகஸ்ட் மாதம் 1946-ல் வெளிவந்த இதழுக்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளியின் பின் ஏழாவது இதழ் 1948 ஜனவரியில் வெளிவந்திருக்கிறது.
ஏறத்தாழ ஒருவருட இடைவெளிக்குப் பிறகு (பதினைந்து மாதங்கள்) பாரதியின் ஏழாவது இதழ், சோவியத் நாட்டின் புதுமை எழுத்தாளர் மார்க்ஸிம் கோர்க்கியின் அட்டைப் படத்துடன் வெளிவந்தது. பாரதியின் ஆசிரியர்கள் இரண்டாண்டுக்கு முன்னர், 1946-ல், தங்களது முதல் . இதழிலேயே கோர்க்கியின் சிறுகதையை வெளியிட்டு மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் புதுமை இலக்கியத் தந்தை மார்க்ஸிம் கோர்க்கி ரஷ்யப் புரட்சி தந்த இலக்கியக் கொடை. இப்பேரறிஞர் பற்றிய கட்டுரை பாரதியில் விரைவில் வெளிவரும், என்று எழுதியுள்ளமை இப்போது நினைவு கூரத் தக்கது.
முதல் இதழில் கூறியதைத் தங்களது ஏழாவது இதழில் நிறைவேற்றியுள்ளனர். முன் அட்டையில் கோர்க் கி. உள்ளே கோர்க்கியின் வாழ்க்கைக் குறிப்பு - ஆண்டுவாரியாக, அதாவது 1868ம் வருஷம் மார்ச் மாதம் 28-ம் திகதி பிறந்தார். 1878 முதல் 1884 வரை தொழில கள தேடித திரிநதார். சப்பாததுக் கடையில சமையல்காரனுக்குச் சிற்றாள் வேலை. ரொட்டிக் கடையில், நூல் நிலையத்தில், என்று பல தொழில்கள் புரிந்தார். 1898 புரட்சி இயக்கத்தவர்களின் நட்பு கிடைக்கிறது. விவசாயிகளிடையே புதிய
89

Page 51
என்ை0ை1ங்களைப் பரப்ப முயன்று கைது செய்யப் படுகிறார். 1892 மார்க்ஸிம் கோர்க்கி என்னும் புனைபெயரை ஏற்று முதல் சிறு கதையை வெளியிடுகிறார் என்பது போன்ற 1936 ஜூன் 8-ம் திகதி மாஸ்கோவில் சதிகாரணமாக மரணமானது வரையிலான வாழ்க்கைக் குறிப்புகளை ஆண்டுவாரியாகத் தந்துள்ளார்கள்.
‘புதுமை எழுத்தாளர்” என்னும் தலைப்பில் கோர்க்கி பற்றிய கட்டுரை ஆகிய அனைத்துடனும் ஏழாவது இதழ் "பாரதி ஒரு மார்க்ஸிம் கோர்க்கி மலர் போலவே திகழ்கிறது.
கோர்க்கியின் முயற்சியின் பேரில் மாஸ்கோ இலக்கியக் கழகம் அமைக்கப் பட்டது. இந்த நிறுவனம் பல துறைகளிலும் ஆற்றலுடைய எழுத்தாளர்களை மிக அதிகமாகவே உருவாக்கியிருக்கிறது. மார்க்ஸிம் கோர்க்கி இலக்கியத்தின் எதிர்காலம் பற்றிக் காட்டி வந்த இடையறாத சிரத்தை, ஆரம்ப எழுத்தாளர் ஒவ்வொருவரின் நிலைமை குறித்தும் அவர் அனுசரித்த ஆதரவான மனோநிலை, அவருடைய அதிசயிக்கத்தக்க வற்றாத சக்தி, திறமையைக் கன்ைடு பிடித்து அது முன்னுக்கு வருவதற்கு உரியமுறையில் உதவுகின்ற அவருடைய ஆற்றல் ஆகியவற்றை யாரும் மறக்க முடியாது. வேறு எவரையும் போலல்லாது ஆரம்ப எழுத்தாளர்களுக்கு அவர்களின் எழுத்துத் தொழிலின் ஆரம்ப நிலையில் தரப்படுகின்ற ஆதரவின் தோழமை நிறைந்த உதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த மகா மனிதர் 96) ff.
‘இலக்கியப் பயிற்சிகள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதற்குத் தானே ஆசிரியராக இருந்து தனது அந்நியநாள் வரை அதிகமான சிரத்தையும் இயக்கபூர்வமான சக்தியையும் செலுத்தி வந்தார். அனுபவத்தில் முதிர்ந்த எழுத்துலகத் தோழர்கள் அளிக்கக் கூடிய நம்பிக்கை நிறைந்த ஓர் இன்சொல்லும் அன்பான ஆதரவும் ஆரம்ப எழுத்தாளனுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதைத் தனது சொந்தக் கசப்பான அனுபவத்தால் நன்கு உணர்ந்தவர் கோர்க்கி. அந்நாளைய இளம் இலக்கியத்தின் எழுச்சிக்கு அவருடைய ஒத்துழைப்பு எல்லையற்றதாய் இருந்தது. திறமை வெற்றி அடைவதற்கு ஊக்கம் அளிப்பதில் அவர் தாராளமாக இருந்தார். அலட்சிய மன நிலையைக் கண்டபோது அவர் கடுமையாகவும் கண்டிப்புடனும் நடந்து கொண்டார்.
கோர்க்கி ஒரு யதார்த்தவாதி. ஆகவே வாழ்க்கையை விட்டு விலகிச் செல்ல வேண்டாம் என்றும் புதிய சமுதாயம் அமைவதற்கான போராட்டத்தின் ஒரு வகையாகவே எழுத்தைக் கருத வேண்டும் என்றும் இளம் எழுத்தாளர்களுக்கு வற்புறுத்திக் கூறிய மார்க்ஸிம் கோர்க்கி பெரும் திறமையாளர். நாவலாசிரியர். நாடகாசிரியர். விமர்சகர், இலக்கிய
90

வரலாற்று அறிஞர், ஆவேசப் பிசரங்கி ஆகிய எல்லாமாகத் திகழ்ந்த அன்னாரின் உருவப் படத்தை அட்டையிலும் அவரைப் பற்றிய கட்டுரைகளை உள்ளேயும் கொண்டு வெளிவந்த ‘பாரதி இதழும் புதுமை இலக்கியத்துக்கும் தனக்கும் உள்ள தொடர்பின் நெருக்கத்தை உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தது.
இந்த ஏழாவது இதழே ‘பாரதியின் கடைசி இதழ் 61ன்பது அன்றைய பாரதி வாசகர்கள் பெரும்பாலானவர்களுக்குமே தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆகஸ்ட் 1946-ல் வந்த ரவீந்திரநாத் தாகூர் மலரே கடைசி இதழ் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். 15 மாதங்களுக்குப் பிறகு இன்னோர் இதழ் வரும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாததுதான். ஏதோ இரண்டு மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு அடுத்த இதழ் வந்துள்ளது போல ஆசிரியத் தலையங்கத்தில் டிசம்பர் - ஜனவரி, கூட்டுமலராக இந்த இதழ் விரிகின்றது. காத்திருந்து கண்பூத்துப் போன கலை அன்பர்களுக்குக் கொடுத்த வீண் சிரமத்துக்கு மன்னிப்புக் கோருகிறோம். தாமதத்தினால் ஏற்பட்ட தாகத்தினைத் தீர்க்கும் முறையில் பாரதியின் உள்முறை திகழ்கின்றது” என்று எழுதியுள்ளார்கள்.
1948-ம் வருஷமே வா! வா! உன் வரவு நல்வரவாகுக! என்று 1948-ம் வருஷத்துக்கு வரவேற்பும் இந்த இதழில் கூறப்பட்டுள்ளது. ‘உலகில் சமாதானமும் மனிதரிடையே நல்லெண்ணமும் மலர வேண்டுமென்று ஏசுவின் திரு அவதாரம் தொட்டு உலகத்தில் வந்த எலி லா தீ தீர்க் கதரிசிகளும் ஞான சிரியர்களும் ஒங் கி உரைத்திருக்கிறார்கள். அத்தகைய வாழ்வுக்கு அரண் செய்யும் முறையில் 1948 பிறப்பதாக! என்ற பாரதி நேயர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்தும் கூறப்பட்டுள்ளது.
ஹிந்தி எழுத்தாளர் பிரேம் சந்தின் இலக்கியச் சாதனைகள் பற்றி பிரேம்சந்தின் குமாரர் அமிருதாய் எழுதியிருக்கும் கட்டுரை முன்ஷி பிரேம் சந்த் என்னும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது. பிரேம்சந்தின் நூல்கள் தமிழில் அதிகம் இல்லை. என்றாலும் தமிழ் வாசகர்களால் அதிகமாக அறியப்பட்ட ஹிந்தி எழுத்தாளர் அவர் - அவருடைய சிறுகதைகளை வெளியிடாத தமிழ்ப் பத்திரிகைகளே இல்லை எனலாம். இந்தியாவின் பல மொழிகளிலும் பிரேம்சந்தின் படைப்புக்கள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவருடைய படைப்பின் மகத்துவம் பற்றி ஹிந்தியில் பல விமர்சன நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
சிறந்த முற்போக்கு எழுத்தாளரான பிரேம்சந்தைப் பற்றிய
கட்டுரையை அவருடைய மகனைக் கொண்டே எழுதி,ஒடுத் ஆம் பிரசுரித்துள்ளமை மிகவும் குறிப்பிடக் கொஆகிே 懿

Page 52
இந்த இதழில் உள்ள இன்னொரு விசேஷமான கட்டுரை ‘கார்ல்மார்க்ஸின் நடை' என்பது. சமூக பூகம்பங்களுக்கும் தனியுடமைப் பேயின் சர்வ நாசத்துக்கும், காரணகர்த்தரான கார்ல்மார்க்ஸின் நடையைப் பற்றி விமர்சனம் செய்துள்ளவர் பிரபல நாவலாசிரியையான பமேலா ஜோன்சன் என்பவர்.
'கார்ல்மார்க்ஸின் நூல்களைப் படித்தவர்கள் அவரது இலக்கியச் சாதனைகளை அறிந்திருப்பார்கள். இரசனையும் மேதையும் இலக்கியச் சுவையுடன் தளும்புவதைக் கண்டிருப்பார்கள். அவரது நூல்களிலிருந்து சில பகுதிகளை இங்கே தந்து, அதன் மூலம் அவரது இலக்கியச் சாதனைகளை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்’ என்று தன்னுடைய கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார் பமேலா எச். ஜோன்சன்.
‘’ அவரது மகத்தான சாகித்தியங்களில் அங்க சம்பூர்ணமான ஆராய்ச்சியோ ஜேர்மன் பாஷையில் தெளிவான அறிவோ எனக்கு உண்டு என்று நிான் பெருமை கொள்ள முடியாது. ஆயினும் விமர்சனத்தில் ஆர்வமுள்ள மாணவி என்ற முறையில எனது கருத்துக்களைத் திரட்டி உருவகப் படுத்தியிருக்கிறேன்.
மூலதனம்’ என்னும் தனது நூலின் முன்னுரையில் மார்க்ஸ் கூறுகின்றார் ஜேர்மனியில் நீசமான பொருளாதாரத்தின் வழவழவென்று உளறும் வாயர்கள் எனது புத்தகத்தின் நடையைப் பற்றியும் விளக்க முறையைப் பற்றியும் குறை சொன்னார்களாம். மூலதனத்தின் இலக்கியக் குறைபாடுகள் பற்றி எல்லாரையும் விட நான் மிக நன்றாக உணர்கின்றேன். இருந்தாலும் இந்தக் கனவான்களின் நன்மைக்காகவும் தமாஷ"க்காகவும், ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் விமர்சனத்தைத் தருகின்றேன். சட்டர்டே றிவியூ என்னுடைய அபிப்பிராயத்துக்கு முற்றிலும் மாறுபட்டாலும், 616ன் புத்தகத்தைப் பற்றி கூறுவதாவது ‘இந்த விஷயத்தை எடுத்து விளக்கி இருக்கும் முறை வறண்ட பொருளாதாரப் பிரச்சினைக்கும் கூட ஒரு வேடிக்கையான மெருகு கொடுத்திருக்கிறது.
மூலதனம் நூலைப் பற்றி இந்த மதிப்புரை போதும். மார்க்சின் நையாண்டி மிகவும் தொந்தரவு கொடுப்பது. சுற்றி வளைத்து முளைப்பதல்ல. ருசிக்குறைவால் பிறப்பதல்ல. கோபத்தியால் கனிவது. மனித ஜாதியினை வாட்டும் வேண்டாத கொடுமைகளைக் கண்டு பொங்கி எழும் ஆத்திர நெருப்பு.
மார்க்ஸ் ஏராளமான நூல்களைக் கற்றவர். அவர் கொடுக்கும் விமர்சனங்கள் கணக்கிலடங்காதவை. அவரது வசனம் சூரியனின் பரப்புப் போல பரந்து, உருண்டு, இரும்பு போல் உறைந்து எதிர்பாராத அக்கினிப் பிழம்பு போல் ஆக்ரோஷம் செய்வது. அன்பு நிறைந்தது. ஆத்திரம் கொதிப்பது. ஹாஸ்யம் கொட்டுவது.
92

தெருவலையும் காடைக் கூட்டத்தை “ஆபத்தான வர்க்கம். சமூகத்தின் குப்பை, பழைய சமுதாயம் விட்டெறிந்த அழுகிக் கிடக்கும் சகதி" என்று சித்திரிக்கின்றார்.
மார்க்ஸ் அஞ்சாத அமரன். பெரிய தத்துவாசிரியர் மாத்திரமல்ல. ஒரு சாகித்திய சிற்பி, என்றெழுதுகின்றார் ‘பமேலா ஜோன்சன்
மார்க்ஸ், 1883 மார்ச்சில் காலமான போது லண்டன் இடுகாட்டில் "பிரட்றிக் ஏங்கல்ஸ் ஆற்றிய உரையின் சில வரிகளையும் தன்னுடைய கட்டுரையின் முடிவுரையாகத் தந்துள்ளார் கட்டுரையாசிரியர்.
"மார்க்ஸ் ஒரு புரட்சியாளர். முதலாளித்துவ சமுதாயத்தையும் அது கொண்டுள்ள அரசாங்க அமைப்புக்களையும் துர்க்கியெறிந்து ஏதாவதொரு வழியில் நவீன கால பாட்டாளி வர்க்கத்தின் விமோசனத்திற்காகப் பாடுபடவேண்டும் என்பதே அவரது வாழ்வின் லட்சியம். போராட்டம் அவரது உடன் பிறப்பு. அவர் எவ்வளவு பேராவேசத்துடனும் பிடிவாதத்துடனும் வெற்றிகரமாகப் போராடினாரோ அவ்வாறு ஒரு சிலரால் தான் முடியும். இதன் விளைவாக அவர், அவர் காலத்தில் எல்லோரையும் விட மிக அதிகமாக வெறுக்கப் பட்டார். அவதூறு செய்யப் பட்டார். எதேச்சாதிகார அரசாங்கங்களும் குடியரசு அரசாங்கங்களும் அவரைத் தத்தம் பிரதேசங்களில் இருந்து நாடு கடத்தின. அபாண்டங்களைச் சுமத்தின. இவற்றை எல்லாம் வெறும் ஒட்டடை என்று ஒதுக்கி மார்க்ஸ் அசட்டை செய்தார். தவிர்க்க முடியாத அவசியம் நிர்ப்பந்தித்த போது மட்டும் பதிலளித்தார்.
அவர் இறந்த போது சைபீரியச் சுரங்கத்திலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா, அமெரிக்காவின் சகல பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கில் புரட்சிகரமான சக ஊழியர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தித் துக்கம் அனுஷ்டித்தார்கள்.
அவருக்கு எத்தனையோ எதிரிகளிருந்தாலும் சொந்த விரோதி என்று எவரும் இல்லை என்று துணிந்து கூறுவேன். அவரது பெயரும் சேவையும் யுக யுகாந்திரங்களுக்கும் நிலைத்து வாழும் என்பதே ஏங்கல்ஸ் ஆற்றிய உரையின் சில வரிகள்.
உலக ஆதிக்கப் பேராசையில் அமெரிக்க டாவர் ஸ்தாபித சதி பற்றி ‘டாவர் ராஜ் என்னும் கட்டுரையும் இந்த இதழுக்குக் கனம் சேர்க்கும் ஒரு ஆக்கமே.
ஐயோ பட்டினியாகக் கிடக்கின்றீர்களே. வியாபாரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறதே. உற்பத்தி தேய்ந்து வருகிறதே. கவலையே படாதீர்கள். நானிருக்கின்றேன், என்று உதவ ஓடி வரும் அன்னதாதா - பணத்தாதா யார் என்று கேட்கின்றீர்களா? அவர்தான் அமெரிக்காவின் டாவர்
93

Page 53
மன்னன். என்று ஆரம்பித்து பற்ற நாடுகளின் அரச, சமூக, பொருளாதார விஷயங்களில் தலையிடும் அமெரிக்கச் சதிகள் பற்றிக் கிண்டலும் கேலியுமாக எழுதுகின்றார் கே. ராமநாதன்.
‘விஞ்ஞான முறையில் கல்வி என்னும் கட்டுரையைப் பேராசிரியர் ஜே. டி. பொனால் என்பவர் இந்த இதழில் எழுதியுள்ளார்.
கல்வியின் இலட்சியங்களில் கருத்துச் செலுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சமுதாயத்தில் பெரும்பாலான மக்களுக்குப் பயன்படும் முறையில் கல்வி அமைய வேண்டும். இரண்டாவது கல்வித் திட்டத்தின் அச்சானியாக விஞ்ஞானக் கல்வி இடம் பெற வேண்டும்.
விஞ்ஞானக் கல்வி என்பது வானையும் மீனையும் அளப்பது பட்டுமல்ல. விஞ்ஞானிகள். பூமிசாஸ்திர நிபுணர்கள் ஆகியோரை உருவாக்குவது மட்டுமல்ல. வாழ்வின், சமுதாய லெளகீகத் துறைகளோடும் பிறகலைகளோடும் இணைந்தும் பிணைந்தும் நிற்கும் விஞ்ஞான அறிவை வளர்ப்பதே.
சம்பிரதாயக் கல்வி முறைக்கும் விஞ்ஞானக் கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்வதுடன் விஞ்ஞானக் கல்வி முறையின் அவசியம் பற்றியும் அந்த 48 லேயே அறை கூவல் விடுத்துள்ளார் பேராசிரியர் ஜே.டி.பெர்னால், எப்.ஆர்.எஸ்.
ரே. மலாத்ரா என்பவர் ஒரு இந்தியர். பஞ்சாப்பின் ஒரு மூலையில் ஜிலால்பூர் என்னும் இடத்தில் காலையில் மாடு மேய்த்து விட்டு மாலையில் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய பதினைந்தாவது வயதில் காஷ்மிரத்துக்குக் கல்வி பயிலச் சென்று இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு அடிபட்டுச் சிறை சென்று மீண்டார். தொழில் கல்வி நிமித்தம் அமெரிக்கா சென்று எஞ்ஜினியர கிச் சோவியத் நாட்டுக்குச் சென்று ஒரு பெரிய தொழிற்சாலையில் தலைமை ஏஞ்ஜினியராகிப் பிறகு சோவியத் பிரஜையானவர்.
அமெரிக்காவில் கல்வி பயில்கையில் முதலாளித்துவ நாடுகளில் கல்வி, கலை, அறிவுக் கூர்மை, ஆகிய அனைத்துமே சந்தைப் பண்டங்கள் தான். சமூகச் சேவைக்கான சாதனங்கள் அல்ல என்பதைக் கண்டுணர்ந்து சோசலிசப் புரட்சி கண்ட சோவியத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து மாடுமேய்க்கத் தொடங்கிய ஒரு சிறுவன் இரு பெரும் கடல்களைக் கடந்து செய்துள்ள சாதனைகள் முயற்சியின் வெற்றிக்கு ஒரு உதாரணம்.
’பாட்டாளி ஆட்சியில்' என்னும் தனது கட்டுரை மூலம் இரண்டு
94

நாடுகளிலும் தான் வாழ்ந்த போது கண்ட வித்தியாசங்களைச் சுவைபடக் கூறியுள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் கல்வி கற்று சோவியத்தில் பணிபுரியும் சோவியத் பிரஜையான ரே மலாத்ரா.
பாரதியின் இந்தக் கடைசி இதழில் ஆறு அருமையான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வாசகர்களுக்குப் படிக்கக் கொடுக்கும் விஷயங்கள் முலமாகவே ஒரு ஏடு அறியப் படுகின்றது. வெறுமனே வாசிக்கவும் கொஞ்ச நேரம் மகிழவும் பிறகு மறந்து விட்டுத் தூக்கி எறிந்து விடவுமே லாயக்கான ஜனரஞ்சக விஷயங்கள் பாரதியில் வரவில்லை என்பதனை இந்தக் கட்டுரைகள் பறைசாற்றி நிற்கின்றன. இந்த இதழில் இரண்டு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. முதல் இதழில் ‘வாழாவெட்டி என்னும் கவிதையை எழுதியிருந்த டாக்டர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சமுதாயத்தின் சகல துறைகளிலும் உதயமாகி மேற்கிளம்பியுள்ள உரிமைப் போர் முரசைத் தனது வசனகவிதை மூலம் காட்டுகிறார் இந்தக் கடைசி இதழில்.
கவிதையின் தலைப்பு "உதயம்.
சீனாவின் சியாங்கை ஷேக்கின் ஆட்சியை எதிர்த்துச் சீனமானவர்களும் வாலிபர்களும் எழுகின்றனர். மக்களின் உரிமைகளைப் பலிகொடுத்து சீனாவை ஆதிக்க வெறியர்களின் கைகளில் அடகு வைக்கத் துணிந்த சியாங்கின் ஆட்சிக் கொடுமைகளை எதிர்க்கும் சிந்தனைகளைக் காட்டும் கவிதை மற்றது. யான் சிங் சர்வகலாசாலைப் பத்திரிகையில் இருந்து எடுத்துப் பிரசுரித்துள்ளார்கள் பாரதிக்காரர்கள். ‘சியாங் ஆட்சி என்பது கவிதைத் தலைப்பு.
முந்திய இதழ்கள் ஒவ்வொன்றிலும் ஐந்நூறு கவிதைகள் இடம் பெற்றே வந்துள்ளன. பாரதி என்னும் மகாகவியின் பெயரைத் தாங்கி வந்த ஏடு கவிதைக்கும் முக்கியத்துவம் கொடுத்தே வந்துள்ளது. ஆனாலும் இந்த இதழில் இரண்டே கவிதைகளுடன் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
மூன்று சிறுகதைகள் இந்த இறுதி இதழில் வெளியிடப் பட்டுள்ளன.
கே.ராமநாதன் எழுதியுள்ள “மண்வெட்டிச் சிப்பாய், கீதா என்னும் புனைபெயரில் அவரே எழுதியுள்ள அகதி என்னும் சிறுகதை ஆகிய இரண்டும் சிறுகதை என்னும் மகுடத்தின் கீழ் பிரசுரிக்கப் பட்டிருந்தாலும் கட்டுரைகளாகவே இருக்கின்றன.
இந்தியாவில் நடந்த இந்து முஸ்லிம் கலகத்தால் அகதியான ஒரு பெண் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்தால் உருவான தொழிலாள வர்க்கச் சமாதானப் படையின் உதவியுடன் அச்சம் தவிர்ந்து அகதி என்னும் நினைவு நீங்கியதைக் கூறுகிறது ‘அகதி.
95

Page 54
யுத்தத்தின் போது இராணுவத்தில் சேர்ந்த சிப்பாய் வீரக்கோன் யுத்தம் முடிந்து திரும்பியதும் தன்னுடைய உடையும், மெடலும். பிரமோஷனும் தனது குடும்பத்துக்கு சோறு போடாது என்பதை உணர்ந்து 'றிலிப்ஸ்கீம்' என்னும் பிரிவில் சேர்ந்து மற்றப் பட்டாளத்து வீரர்களைப் போல மண் வெட்டுகின்றான்.
மண் வெட்டிக் கூலிதின்னவாச்சே என்னும் மனக்குமுறலுடன் வீரக்கோன் என்னும் அவன் விரம் கூனாகி விரக்கூனாகிவிட்டான். ஜனசக்தி மனது வைத்தால் தொழிலாள வர்க்கம் தி முண்டு எழுந்தால் இது போன்ற ஆயிரக்கணக்கான மண்வெட்டி சிப்பாய்களுக்குக் கதியுண்டு என்று தனது கதையை முடிக்கின்றார் ஆசிரியர்.
பதினெட்டு வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் தேசாபிமானியின் ஆசிரியராகக் கடமையாற்றிய கே. இராமநாதன் குறிப்பிடத்தக்க பத்திரிகையாசிரியராவார். அவரது கட்டுரைகள் தாம் சார்ந்த கொள்கைகளைத் தெளிவாக விளக்கின. இளைஞர் மத்தியிலே போராட்ட ஆர்வத்தினையும் தியாக சிந்தனையையும் வளர்த்தன. இலக்கிய வளர்ச்சி கருதி 1946-ம் ஆண்டிலே ‘பாரதி” என்னும் பத்திரிகையை நடத்தினார். தற்போது அவரது திறமையை தென்னகத்திலிருந்து வெளிவரும் ஜனசக்தி பயன் படுத்துகின்றது என்று கனகசெந்திநாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
* இலங்கை இடதுசாரி இயக்கங்களுடன் ஒத் துழைத் த கே.இராமநாதன், கே.கணேஷ், எம்.பி.பாரதி போன்றோரால் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தாபிக்கப் பட்டது. அவர்களால் நடத்தப் பட்ட பாரதி என்னுஞ் சஞ்சிகை இலக்கியத்துறையில் மார்க்சிச கண்ணோட்டத்தை அறிமுகப் படுத்தியது என்று குறித்திருக்கின்றார் ரசிகமணி கனகசெந்திநாதன். (ஈழத்து இலக்கிய வளர்ச்சி - பெப்ரவரி 1964: பக்கற் 171 : 179)
இந்த இதழில் வெளிவந்திருக்கும் மற்றச் சிறுகதை டாக்டர் முல்க்ராஜ் ஆனந்தின் அபிலாஷை என்பதாகும்.
சண்டைக் கப்பலில் வேலைசெய்யும் முஸ்தபா என்னும் இளைஞன் தாய் நாடு திரும்பும் அபிலாஷையுடன் தனது சண்டைக் கப்பல் அனுபவங்களை ஒரு சிறு குழந்தையின் வெள்ளை மனதுடன் தனது தந்தைக்குக் கடிதம் மூலம் எழுதுகின்றான். அவனுடைய அபிலாஷையை இக்கடிதம் மூலம் காட்டுகின்றார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் முல்க்ராஜ்.
முல்க்ராஜ் ஆனந்தின் சிறுகதைகள் பாரதி இதழ்களில் கூடுதலாகவே
96

வெளிவந்துள்ளன. மொத்தமாக வெளிவந்த ஆறு இதழ்களில் இவருடைய மூன்று சிறுகதைகள் என்பது கூடுதல்தான்!
இவருடைய நாவலொன்றும் பாரதிப் பப்ளிகேஷன் மூலமாக வெளிவரப் போவதாக விளம்பரங்கள் வந்திருந்தன பாரதி இதழ்களில்,
பாரதியின் இந்தக் கடைசி இதழிகளிலும் கூட ஆண்டுச் சந்தா ஆறு ரூபாய். தனிப் பிரதி அரை ரூபாய். பாரதியின் எழுத்தாளர்களுக்குச் சன்மானம் வழங்கப் படும் என்னும் அறிவிப்பு பிரசுரமாகி இருக்கிறது. இதுவே பாரதியின் கடைசி இதழாக இருக்கப் போகிறது எனபது அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை.
மனிதனுடைய சாதனைகள் அனைத்தும் அவனுடைய சிந்தனையின் தெளிவையும் போக்கையும் குறித்தே வெளிப்படுகின்றன. தெளிவடைந்த சிந்தனையிலிருந்தே வாழ்க்கையின் வளம் பெருகுகின்றது. சிந்தனை வளர்ச்சிக்கும் தெளிவுக்கும் பரவலான அறிவு தேவைப் படுகிறது. பரவலான அறிவுக்குப் பல விஷயங்களைத் தெரிந்தெடுத்துத் தனது வாசகர்களுக்குத் தருவதில் பாரதி என்றுமே முன் நின்றிருக்கிறது என்பதற்கு பாரதியில் வெளியான பல வேறு ஆக்கங்களே உதாரணமாகின்றன.
தமிழ்ச் சமுதாயத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் பாரதிகாரர்களுக்கு
கண்டிருக்கலாம்.
ஆனாலும் பொருளாதாரச் சுமை அவர்களை அழுத்திக் கொண்டே இருந்தது. இருந்தபோதும் பொருளாதாரம் பலவீனமடைகிறது. உங்கள் இலட்சியப் பத்திரிகையான பாரதியை நிறுத்திவிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சு கிறோம் என்பது போன்ற அறிவிப்புக்குளோ சந்தாக்களை உடனே அனுப்பி வையுங்கள்’ என்பது போன்ற வேண்டுகோள்களோ பாரதியில் இடம் பெறவில்லை.
இரண்டாவது இதழில் மட்டும் ஒரு குறிப்பு இருந்தது. அரை ரூபாய் விலை அதிகம் என்று அன்பர்கள் சிலர் குறை கூறி எழுதி இருந்தார்கள். அச்சுச் செலவு அதிகமானதன் காரணமாகவே அவ்வாறு விலை நிர்ணயிக்க வேண்டியிருந்தது.
இதைத் தவிர தங்களுடைய பொருளாதாரப் பிரச்சினைபற்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் பாரதி தன் வாசகர்களுடன் பேசியதில்லை.
தமிழ்ப் பத்திரிகை உலகில் காலம் காலமாக இருவேறு உலகங்கள் இயங்கி வருகின்றன எனப்பது கண்கூடு.
97

Page 55
பொழுதுபோக்கல், ஜனரஞ்சகம், வெறுமனே வியாபர நோக்கம் என்ற காரணங்களுக்காக ஒரு உலகமும், இலக்கியம், இலக்கியச் சோதனைகள், கலாச்சாரத் துறைகளின் நவீனத்துவம், சமுதாய முன்னெடுப்பு போன்ற காரணங்களுக்காக இன்னொரு உலகமும் இயங்கி வந்திருக்கின்றன. இயங்கி வருகின்றன.
மற்றப் பிரிவாகிய இலக்கியப் பத்திரிகைகளைப் பொறுத்த மட்டில் அரசியல் கொள்கைகள், சமூகக் கோட்பாடுகள், தத்துவம், மானுடவியல், சரித்திரம், விஞ்ஞானம் என்று பலவிதமான பத்திரிகைகள் தோன்றுகின்றன. ஆகவே சிறுசஞ்சிகைகள் எண்ணிக்கையில் கூடுதலாகத் தோன்ற வேண்டிய சூழ்நிலையும் அவசியமும் ஏற்படுகின்றது.
1926-ல் தோன்றிய ஆனந்த விகடனும் 1941-ல் தோன்றிய கல்கியும் இவையிரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய குமுதமும், இன்ன பிற ஜனரஞ்சக ஏடுகளும் அதே ரீதியில் எதுவிதத் தடங்கலுமின்றி அதே ஆனநீ தவிகடன் , கல கி, குமுதங்களாக வந்து கொண்டிருப்பதற்கும்
1933-ல் தோன்றி 36-ல் நின்று 1937-ல் மறுபடித் தோன்றி 39-ல் நிறுத்தப் பட்ட மணிக்கொடி, அதைத் தொடர்ந்து வந்த, சூறாவளி, கலா மோகினி, கிராம ஊழியன், முல்லை, சந்திரோதயம், சிந்தனை, தேனி, காதம்பரி, மனிதன், சாந்தி, சரஸ்வதி, எழுத்து என்றும் ஹனுமான், காந்தி, சுதந்திரச் சங்கு, சக்தி என்றும் 1955-க்குள் எத்தனை எத்தனையோ சிறு சஞ்சிகைகள் தோன்றி மறைந்து விட்டமைக்கும் இவைகளின் நோக்கங்களே காரணமாகின்றன.
எதுவிதமான சமுதாய நோக்கமோ, இன்ன பிறவோ இன்றி மக்களின் ரசனையை மழுங்கடித்து, வியாபாரம் ஒன்றையே நாட்டமாகக் கொண்டுள்ள பத்திரிகைகளுக்கு அரையிலும் குறையிலும், நிறுத்தப் பட வேண்டிய அவசியம் இருப்பதில்லை.
அவர்களுடைய இலக்குப் பணம். இலக்கை நோக்கிய பயணத்தில் இடையே வரும் தடைகளை உடைத்தெறியப் பணத்தால் முடியும்.
மற்றவர்களின் இலக்குப் பணம் அல்ல. ஒரு தர நிர்ணயம். இவர்களது இலக்கு நோக்கிய பயணத்தில் முதலில் குறுக்கிடும் தடையே பணம் தான்.
சில நேரங்களில் பணத்தால் இலட்சியங்களை உடைக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களிலுமே இலட்சியங்களால் பணத்தை உடைக்க முடிவதில்லை. ஆகவே ஏதாவதொரு இலட்சியத்துக்காக ஒரு ஏட்டை ஆரம்பிக்கின்றவர்கள் இடையில் குறுக்கிடும் பணத்துடன் 0ோதிப்
98

பார்த்து, முடியாமல் தோற்றுப் போவதுண்டு. இந்தத் தோல்வியே, பெருமைக்குரியதுதான்.
‘எழுதத் தெரியாதவன் எல்லாம் எழுத்துலகில் போற்றப் படுகின்றான். இன்னும் இன்னும் எழுதிக் கொண்டே இருக்கின்றான்.
"பேப்பர் நடத்தத் தெரியாதவன் எல்லாம் நடத்திக் கொண்டே இருக்கின்றான்.
இருக்கின்றான்.
இவர்களுக்கு ஒரு எதிர்ப்புக் குரல் கூட நாம் கொடுக்காவிட்டால் நாமும் இவைகளை ஏற்றுக் கொண்டவர்களாகி விடுகின்றோம் என்று கூறிக்கொண்டு வெளிவரத் தொடங்கும் ஒரு சிற்றேட்டின் இலக்கு பணம் அல்ல. இத்தனை சீரழிவுகளையும் அழித்தொழித்து விட்டு தன்னுடைய இலக்கை அடைந்து விடுவதென்பது சாத்தியமான தொன்றுமல்ல. ஆனாலும், அவர்களுடைய நோக்கம், நாம் வாழும் காலத்தில் நடக்கும் இந்த அநீதிகளுக்கு நாமும் உடந்தையாகி விடக் கூடாது என்னும் விழிப்புணர்வு போற்றுதலுக்குரியது.
தமிழ் நாட்டிலும் சரி, இங்கும் சரி இலக்கியச் சிற்றேடுகளின் தோற்றம் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத் தகுந்த மாறுதல்களை நிகழ்த்தி இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
1930 ஜூனில் தொடங்கிய ஈழகேசரி, 1946 ஜனவரியில் தோன்றிய ‘பாரதி, 1946 மார்ச்சில் தோன்றிய மறுமலர்ச்சி, 1958 ஜூலையில் தோன்றிய கலைச்செல்வி போன்றவற்றைத் தொடர்ந்து அறுபதுகளின் பின் தோன்றிய தேனருவி, மரகதம், மல்லிகை, தாயகம், குமரன், விவேகி. பூரணி, தீர்த்தக் கரை, சிரித்திரன் என்று தொடர்ந்து சிற்றேடுகளும் தம்மாலான பணிகளைச் செய்தே வந்துள்ளன.
*கண்டதும் காதல் கதைகள் மலிந்து விட்ட இன்றைய இலக்கியப் போக்கிற்குப் புதுவழி காட்ட முன்வருகிறது பாரதி' என்னும் அவர்களது முதல் இதழ் தலையங்கமே தமிழ்ப் பத்திரிகை உலகின் இரு பெரும் பிரிவுகளில் எந்தப் பிரிவைச் சார்ந்தது பாரதி, என்பதற்கான சான்று.
கலை கலைக்காகவே என்று கூறி, மொழி வளர்ச்சியைக் கட்டுப் படுத்தும் கலைஞர்களுக் கெதிராகவும், ஏகாதிபத்தியத்திற் கெதிராகவும், பாசிசத்துக்கெதிராகவும், முதலாளித்துவத்துக் கெதிராகவும் குரல் எழுப்பப் பாட்டாளி வர்க்கத் துணையுடன் பொதுவுடைமைச் சமுதாயத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய முதல் தமிழ் ஏடு பாரதி என்பது குறிப்பிடத் தக்கது.

Page 56
உலகளாவிய ஒரு விரிந்த பார்வையுடன் அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுக்கக் கிளம்பிய பாரதி பணபலத்துடன் ஆரம்பமாகவில்லை என்பதை முதல் இதழ் தலையங்கத்தின் கடைசி வரிகள் நிரூபிக்கின்றன.
“காகிதக் கட்டுப்பாடு, அச்செழுத்து இறக்குமதிக் கட்டுப்பாடு, ஆகியவற்றினுடாகத் திணறிக் கொண்டு வெளிவரும் பாரதி முதல் இதழை எதிர்பார்த்த அளவு சிறப்பாகக் கொண்டு வரமுடியவில்லை. நேயர்கள் மன்னிக்க. மேல்வரும் இதழ்கள் சீர்திருந்தும். என்று முடிகிறது தலையங்கம்.
1946 ஜனவரியில் தோன்றிய ‘பாரதி ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் ஐந்து இதழகளை வெளியிட்டுப் பிறகு 1948 ஜனவரியில் ஆறாவது இதழை வெளியிட்டதுடன் ஒய்ந்து விட்டது.
ஒரு முற்போக்கு இலக்கிய ஏடாக ஆரம்பமாகி இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சமமான இடமளித்து வந்த ‘பாரதி மூன்றாவது இதழுக்குப் பிறகு இலக்கியப் பகுதிகள் குறைந்து ஒரு அரசியல் ஏ டாகவே தனி னை இனம் காட் டிய மையும் பொதுவான வாசகர்களிடமிருந்து இந்த ஏடு அந்நியப் பட்டுப் போனதற்கான ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
அப்போதைய ஈழத்தின் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் பாரதியைத் தங்களுக்கான ஒரு இலக்கியக் களமாக்கிக் கொள்ளாமல் விட்டு விட்டது வருந்தக் கூடியதே.
அ.ந.கந்தசாமியைத் தவிர்ந்து மற்ற எவரும் பாரதியில் முழு முச்சாகப் பங்கேற்றதாகக் கானவில்லை. அ.செ.முருகானந்தன் ஒரே ஒரு கதையையும், அபுதாலி அப்துல் லதிப் ஒரே ஒரு கதையையும் எழுதி உள்ளனர். நாவலாசிரியர் முற்போக்குச் சிந்தனையாளரும், பத்திரிகையாளருமான இளங்கிரன் கூட ஒரு கவிதை தான் எழுதியுள்ளார் பாரதியில்.
முப்பதுகளிலேயே எழுதிப் புகழடைந்திருந்த ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் கூட ஆனந்தவிகடன், கலைமகள், கிராம ஊழியன் போன்றவற்றில் எழுதினார்களே தவிர, 'பாரதியில் எழுதக் காணோம்.
பாரதியின் திவிரமான முற்போக்குச் சிந்தனைகள் அரசியல் கொளர் கை களர் போன் றவை பெரும் பாலாக ஈழத் து எழுத்தாளர்களிடமிருந்தும் பாரதியை அந்நியப் படுத்தியே வைத்திருந்தமை இதனாலும் புலனாகிறது.
நமது நாட்டைப் பற்றி, நம் நாட்டு மக்கள் பற்றி, எழுத்தாளர்கள்
100

பற்றி, இலக்கியம் பற்றி ஒன்றும் பேசாமல், சோவியத் பற்றியும், சோவியத் நாட்டு மக்கள் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் அளவுக்கதிகமாகப் பேசப் புகுந்தமை நம்மவர்களுக்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். இந்த எரிச்சலும் நியாயமானதுதான்.
இந்தக் குறைகளை ஒரளவுக்கேனும் நிவர்த்தி செய்திருந்தால் பாரதி இன்னும் கொஞ்சக் காலம் ஜிவிதம் கொண்டிருக்கலாம்.
குறைகள் எதுவாக இருப்பினும் ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டு வைத்த பெருமை பாரதிக்கே உண்டு.
பின்னுரை
இலங்கை வானொலியின் சேவை ஒன்று 19-ம் நூற்றாண்டினதும் 20-ம் நூற்றாண்டினதும் ஈழத்துத் தமிழ் சஞ்சிகை வளர்ச்சி என்னும் தலைப்பில் இரண்டு அரை மணிநேர உரைகள் ஆற்றுமாறு 1980 பெப்ரவரியில் என்னைக் கேட்டிருந்தது. அந்த உரையில் பாரதி சஞ்சிகை பெயரளவில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்ததை சுட்டிக்காட்டி பாரதியைப் பற்றி இன்னும் சற்று விரிவாகக் கூறியிருக்கலாமே என்று குறைபட்டார் திரு. பி.ராமநாதன் அவர்கள். வெறுமனே குறைபட்டு மட்டும் கொள்ளாமல் இதோ பாருங்கள் பாரதி இதழ்களை என்று பாரதியின் ஆறு இதழ்களையும் எனக்குக் கொடுத்துதவினார். அவ்விதழ்களைப் படிக்கும் போதே பாரதியின் பணிபற்றி விரிவாக எழுதவேண்டும் என்னும் எண்ணம் என்னுள் எழுந்தது.
1980-ல் எழுந்த இவ்வெண்ணம் 1984. இறுதியில் செயற்பட்டது. ‘ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட ஏடு பாரதி' என்னும் கட்டுரை செப்டம்பர் 84 - லிருந்து நவம்பர் வரை தொடர் கட்டுரையாகத் தினகரனில் வெளிவந்தது.
ஆறு வருடங்களின் பின் ஈழத்து இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய மல்லிகைப் பந்தலில் படரும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டது இக்கட்டுரை. இதழ்களைத் தந்த திரு. பி.ராமநாதனுக்கும், கட்டுரையை வெளியிட்ட தினகரனுக்கும், மல்லிகைப் பந்தலில் கோர்த்துக் கொண்டதன் மூலம் ஒரு அழியா இடம் பெற்றுக் கொடுத்துள்ள திரு டொமினிக் ஜீவாவுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
101

Page 57
மலையகச் சஞ்சிகை வரலாற்றின்
தீர்த்தக்கரை
தெளிவத்தை ஜோசப்
லையக மக்களிடையே அரசியல் - சமூக உணர்வுகளை உருவாக்குவதில் படித்த மலையக இளைஞர் இயக்கங்களே பெரிதும் பங்காற்றின.
மலையகம் என்கின்ற கோஷததை முன்வைத்து, இம் மக்கள் குழுவினருக்கு ஒரு அடையாளத்தைத் தேடித்தர முயன்றன.
1960-களில் தோன்றிய மலைநாட்டு நல் வாழ்வு வாலிபர் சங்கத்திலிருந்து, மலையக இளைஞர் முன்னணி (1970) மலையகம் (1978) என்று இந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்த இயக்கங்களிலும் படித்த இளைஞர் என்ற வரையறையிலிருந்து சமூகத்தின் பலதரத்தினரையும் உள்ளடக்குகின்ற ஒரு வளர்ச்சிப் போக்கினையும் அவதானிக்க முடிகிறது.
மலையகத்தின் கலை இலக்கிய முயற்சிகளை ஊக்குவித்து வளர்த்தெடுக்கவும், இதுபோன்ற இளைஞர் இயக்கங்களே வழிசமைத்தன. மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் நாடக விழாக்கள், கலை விழாக்கள், கல்வி மாநாடுகள், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்,
102

வீரகேசரியுடனிணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிகள், புதுமைப் பித்தன் விழா குறிஞ்சி மலர் வெளியீடு, மலையகக் கலை இலக்கியக் கருத்தரங்குகள், நூல்வெளியீடுகள் போன்றன புதுப் புதுத் திறமைகளை வெளிக்கொணர்ந்தன.
அந்த வகையில் தீர்த்தக் கரை இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகள் புதிய சிந்தனைக6ை1 மக்களிடம் கொ60ண்டு செல்லும் முயற்சிக6ை முன்னெடுத்தன. v •
மலையக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையும், ஒரு புதிய எழுச்சியை உருவாக்குவதில் ஆர்வமும் கொண்ட மலையத்தின் புத்திஜீவிகளான இளைஞர்கள் சிலரின் செயற்பாட்டில் உருவான இவ்விலக்கிய வட்டம், தனது செயற்பாடுகளின் விஸ்தரிப்புக் காரணமாக தீர்த்தக்கரை” என்னும் இலக்கிய சஞ்சிகை வெளியீட்டில் இறங்கியது.
மனித சமுதாயத்தின் சிகரத்தை எட்டிப் பிடிக்கத் தக்க கடின உழைப்பை மேற்கொள்ளும் இலக்கிய வாதிகளின் அழகும், வீச்சும் மிக்கப் படைப்புக்கள் உருவாக நாம் களம் அமைப்போம் என்னும் பிரகடனத்துடன் இல. 55 செமிட்றி றோட். மஹியாவ, கண்டி. என்னும் முகவரியிலிருந்து 1980 ஜூனில் ‘தீர்த்தக் கரை முதல் இதழ் வெளி வந்தது.
எல்.சாந்திகுமாரைப் பிரதம ஆசிரியராகவும், எஸ்.நோபட், எம்.தியாகராம், எல்.ஜோதிகுமார் ஆகியோரை ஆசிரியர் குழுவாகவும். பி.சுதந்திரராஜ், எம்.பாக்கியநாதன், எஸ்.சிவப்பிரகாசம். எம்.சிவராம், டி.பாலேந்திரன் ஆகியோரை ஆலோசகர்களாகவும் கொண்டு இயங்கிய ஒரு காலாண்டு இதழ் இது.
வணிக நோக்கு விளம்பரப் பற்று ஆகியவை இன்றியும், வாசகனின் ரசிப்புத் தன்மையை விலை பேசாமலும் வியாபாரம் செய்யாமலும், தங்களது கோட்பாட்டை முதன்மைப் படுத்தும் படைப்புகளுக்கும் புதிய எழுத்தாளர்களின் அத்தன்மையான படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவைகளுமே ஒரு சிறு சஞ்சிகையின் தோற்றத்துக்கான முக்கிய காரணிகள்.
தீர்த்தக் கரை முதல் இதழ்த் தலையங்கமே இதை ஊர்ஜிதப் படுத்துகிறது.
*சிந்தனை பேதங்களுக்கெல்லாம் அப்பால் நின்று இலக்கியம் படைக்கும் நவீனக் கம்பர்கள் ஒரு புறமும், இளம் காலையின் கதகதப்பு எமக்குத் தேவை இல்லை. நெருப்பைத் தாருங்கள் என்று யதார்த்தத்தை மறந்த நக்கீரர்கள் ஒரு புறமும் நின்று விரிந்து கட்டிக் கொண்டு மகத்தான கூப்பாடுகள் போடுகையில் இவற்றினிடையே அல்லலுறும்
103

Page 58
இளம் எழுத்தாளர்களைப் பார்த்தும் வந்து குவியும் மூன்றாம் தரச் சஞ்சிகைக் குவியலில் புதையுண்டு கிடக்கும் பல தரமான வாசகர் கூட்டத்தைப் பார்த்துமே நாம் எம்மை இந்தப் புதிய அக்கினிப் பரீட்சையில் இறக்கிக் கொள்ள நேரிட்டது.
தீர்த்தக் கரையின் ஊற்றுக் கண்ணைத் தொட்டுக் காட்டுகிறது இந்த ஆசிரியத் தலையங்கம். அதே நேரம் இலக்கிய கங்கையாகப் பிரவாகம் கொள்ளத் தேக்கம் கொண்ட பல முயற்சிகளை வெறும் வாய்க்கால்களாக மாற்றிவிட்ட பெருமை நிதிப்பிரச்சினைக்கு உண்டு என்று அச்சமும் கொள்கிறது.
அந்த அச்சம் நியாயமானதே!
1980 ஜூனில் ஆரம்பமாகி 1982 அக்டோபரில் வெளிவந்த ஐந்தாவதே இதழுடன் தனது இலக்கியப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கொடுத்தது அந்த நிதிப் பிரச்சினையே தான்.
பெருவாரியான வாசகர்களைக் கவரவேண்டும், வியாபார ஸ்தாபனமாக உயர வேண்டும் என்னும் நினைவுகள் அற்று, படிப்பறிவு கொண்ட ஒரு பகுதியினருக்குப் புதிய சிந்தனைகளை எடுத்துக் கூறி, அவர்கள் மூலமாக மக்களிடையே ஒரு எழுச்சியை உருவாக்குவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்ததால் சந்தாதாரர்கள் தயவிலேயே தங்கள் பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு அற்ப ஆயுளில் மறைந்தும் விட்டது தீர்த்தக் கரை.
அந்தச் சொற்ப காலத்தினுள்ளும் அது பதித்துச் சென்றுள்ள சுவடுகள் ஆழமானவை. ஏற்படுத்திய பாதிப்புக்கள் பலமானவை.
1980 ஜூனில் ஆரம்பமான இக்காலாண்டிதழ் 1980-ல் இரண்டு இதழ்கள் 1981-ல் ஒரு இதழ் 1982 ஒக்டோபர் வரை இரண்டு இதழ்கள் என்று ஐந்து இதழ்களுடன் தனது இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டது.
இந்த ஐந்து இதழ்களிலும் ஆனந்த ராகவன், கேகாலை கைலைநாதன், பிரான்சிஸ் சேவியர், ஏ.எஸ். சந்திரபோஸ், ஜானகி சுந்தர், எஸ். கிருஷ்ணவேணி, வல்வை மனோகரன், ஜே. சரோஜினி ஆகியோரின் பதினைந்து சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இந்தப் பதினைந்துக் குள்ளும் ஆனந்த ராகவன், கேகாலை கைலைநாதன், பிரான்சிஸ் சேவியர், ஏ.எஸ்.சந்திரபோஸ் ஆகிய நால்வரினதும் படைப்புக்கள் அற்புதமானவை. அநேகரின் கவனத்தையும் ஈர்த்தவை. தமிழின் சிறு சஞ்சிகைகள் பற்றி எழுதிய வல்லிக் கண்ணன் "மலையக மக்களின் வாழ்க்கையையும் உர்ைவுகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக் கரையில் வெளிவந்தவை. திறமையுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அவை என்று குறிக்கின்றார்.
104

முதல் இதழில் ஆனந்த ராகவனின் 'உதய காலத்து ஜனனங்கள் கேகாலை கைலைநாதனின் ‘தண்ணீர் வற்றிடும் குளங்கள். பிரான்சிஸ் சேவியரின் எதிரொலி ஆகிய மூன்று சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. நாக சேனை தோட்டத்து நரசிம்மன் கங்காணி என்னும் உரைச் சித்திரத்தினையும் இவ்விதழில் எழுதி இருக்கின்றார், ஆனந்தராகவன்.
இரண்டாவது இதழில் பிரான்சிஸ் சேவியரின் ‘விடியாத இரவுகள் ஆனந்தராகவனின் சரிதையின் ஒரு பக்கம் என்னும் சிறுகதைகளும் மூன்றாவது இதழில் கேகாலை கைலைநாதனின் மீண்டும் வசந்தம் வரும் ஏ.எஸ். சந்திரபோசின் என்று தணியும் இந்த.’ என்னும் சிறுகதைகளும், நான்காவது இதழில் ஆனந்த ராகவனின் நண்பனே என்றும் என் நினைவாக..?, கேகாலை கைலைநாதனின் ‘காதலிலே இரு கண்கள், பிரான்சிஸ் சேவியரின் தடம் மாறும் சுவடுகள் என்னும் மூன்று சிறுகதைகளும்
ஐந்தாவது இதழில் ஆனந்தராகவனின் "வினையை மீறும் விரல்கள்’ என்னும் ஒரு கதையுமாக இந்த ஐந்து இதழ்களிலும் இந்த நான்கு எழுத்தாளர்களின் பணி னிரணி டு சிறந்த சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் தங்களது இடத்தை பதிப்பித்துக் கொள்ள முயன்ற இச்சிறுகதைகளை நாம் இப்படி அட்டவணையிடலாம்.
ஆனந்தராகவன் :-
உதயகாலத்து ஜனனங்கள் சரிதையின் ஒரு பக்கம் நண்பனே என்றும் உன் நினைவாக விணையை மேவும் விரல்கள
கேகாலை  ைகலைநாதன் :-
தண்ணிர் வற்றிடும் குளங்கள் மீண்டும் வசந்தம் வரும் காதலிலே இரு கண்கள்
பிரான்சிஸ் சோவியர்:
எதிரொலி
விடியாத இரவுகள் தடம் மாறும் சுவடுகள்
ஏ.எஸ்.சந்திரபோஸ் : ܚ-ܚܝ ܫ
என்று தணியும் இந்த.

Page 59
தீர்த்தக் கரையின் இந்தச் சிறுகதைகளே இச் சஞ்சிகையின் நோக்கங்களுக்கான சாட்சியங்களாகத் திகழ்கின்றன.
இப்படைப்பாளிகள் தங்களது அனுபவத்தின் மூலம் தாங்கள் உணர்ந்து கொண்டதை வாசகருடன் பகிர்ந்து கொள்ளும் விதம் அற்புதமாக இருக்கிறது. வாழ்வின் யதார்த்தங்களினூடாக உண்மையை நோக்கும் அல்லது தேடும் விதம் ஒவ்வொரு படைப்பிலும் மிக நேர்த்தியாகப் பதியப் பட்டுள்ளன.
இது நான் மேற் குறிப்பிட்டுள்ள தீர்த்தக் கரையின் அத்தனை கதைகளுக்குமே பொருந்தும் என்றாலும் ஆனந்த ராகவனின் கதைகளில் இவை சற்றுத் தூக்கலாகவே இருக்கின்றன.
எழுத்தைக் கலையாக்கும் சக்தி எல்லா எழுத்தாளர்களிடமும் இருப்பதில்லை. அந்தச் சக்தி ஆனந்த ராகவனிடம் இருப்பதை அவருடைய படைப்புக்கள் சில ஊர்ஜிதம் செய்கின்றன.
உயர்ந்த சிந்தனைகளை அவைகள் சிறுகதை என்னும் வடிவுக்கு எத்தனை தான் சவாலாக இருந்தாலும், உரை நடைகள் அத்துமீறிப் போய்விடாமல் கைதேர்ந்த பாத்திரப் படைப்பின் மூலம் வண்ணம் சிதறாமல் வார்த்துத் தரும் படைப்பாளி இவர்.
முதல் இதழில் ‘நாகசேனை தோட்டத்து நரசிம்மன் கங்காணி" என்னும் தலைப்பில் ஒரு உரைச் சித்திரத்தையும் ஆனந்தராகவன் தந்துள்ளார்.
நரசிம்மன் கங்கEை என்னும் ஒரு 55 வயதுப் பாத்திரம் இந்தக் கால வித்தியாசங்களை ஒரு ஏக்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் உரைச்சித்திரம் இது. அவரின் ஏக்கம் இப்படி முடிகிறது. 'ரெண்டொரு படிச்ச நம்ம பயலுகளப் பாக்கையில பயம்மாகக் கொட இருக்கு. படிச்சு கொஞ்சம் தலையை வெளியே காட்டுண ஒடனே டவுணுகாட்டு குட்டிகளை இழுத்துக்குட்டு போயிறுணுகளே பெறகு திவாளியோ, பொங்கவோன்னு தேவா தேவைக்குத் தலையைக் காட்டுவானுக. என்னும் அங்கலாய்ப்புடன் இந்த உரைச் சித்திரம் முடிகிறது.
பிரான்சிஸ் சேவியர் - வல்வை மனோகரன் - என்னும் இரண்டு பெயர்களில் பிரான்சிஸ் சேவியரின் படைப்புக்கள் தீர்த்தக் கரையில் இடம் பெற்றன.
இலங்கையின் வடகிழக்குத் தமிழ் மக்களின் உக்கிரமான தேசிய இயக்கத்தின் முதற் கட்ட திச் சுவாலைகளைப் பிரதிபலித்தன இவருடைய தீர்த்தக் கரைக் கதைகள்.
இன அடக்கு முறைக்கு எதிராக ஒரு தேசிய இயக்கம் கருக்கட்டிய
106.

போது “அதன் மீதான மக்களின் எண்ணங்கள், வியப்புக்கள், ஆசீர்வாதங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றுடன் அரசின் எதிர்ப்புக்கள், இன அடக்குமுறைகள், அராஜகங்கள் ஆகியன பற்றியும் ஒரு தேசிய இயக்கமானது குறுகிய வரையறைகளை மீறி ஒர் உயர் வீச்சை அடைதல் வேண்டும் என்னும் நம்பிக்கைகளையும் இவருடைய எழுத்துக்கள் சுட்டி நின்றன.
சிங்களக் கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டத் தமிழ் மக்களும் கிராமத்துச் சிங்கள மக்களும் அன்னியோன்யமாகவும் மிகுந்த செளஜன்யத்துடனுமே இருந்தனர்.
இன அரசியலின் பின்னணி இந்த நல்லுறவை நாசம் செய்து விட்டது. எழுபதுகளின் பின் நஞ்சுற்ற இவ்வுறவுகள் பற்றியும் தோட்ட மக்களின் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட வன்முறைகளின் பின் சிறிது சிறிதாக துளிர்க்கத் துடிக்கும் நம்பிக்கை பற்றியும் கேகாலை கைலை நாதனின் கதைகள் துல்லியமாகப் பேசுகின்றன.
கரை கடந்த காவியங்கள்’ என்னும் தலைப்பின் தரமான பிறநாட்டு இலக்கியப் படைப்புக்களின் மொழி பெயர்ப்புக்களும் தீர்த்தக் கரையின் இன்னொரு விசேஷ அம்சமாகும்.
ஒரு மொழியானது வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றைப் பெறுவதற்கு முன்பு வாய் மொழியாக வழங்கி வரும் ஒரு நீண்ட வரலாற்றினை உடையது நாட்டுப் பாடல்கள்.
கூட்டு வாழ்வோடும், கூட்டுழைப்போடும் நெருங்கிய தொடர்பு கொண்ட நாட்டார் பாடல்களே. தங்கள் மீது அளவுக்கதிகமான சுமைகளை அழுத்தும் வர் கி கதி தினருக்கு எதிரான ஒரு எதிர்ப்பிலக்கியமாக மலையகத்தில் தோன்றத் தொடங்கியது.
‘ரப்பரு மரமானேன் நாலு பக்க வாதமானேன் இங்கிலீசு காரணுக்கு ஏறிப்போக காருமானேன்’
என்னும் பாடல் தன்னகத்தே எத்தனை ஆழங்களைப் புதைத்து வைத்துள்ளது. நாட்டார் இலக்கியம் என்னும் மண்ணில் இருந்தே இலக்கியம் என்கின்ற செடி வளரத் தொடங்கியது என்று கூறுகின்றனர் நாட்டாரியல் ஆய்வாளர்கள்.
மலையக இலக்கியமும் அந்த மண்ணின் செழுமையிலிருந்துதான் வளரத் தொடங்கியுள்ளது.
107

Page 60
மலையகத்து மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த இப்பழைய பாடல்களில் அக்கறை கொண்டு அவைகளைத் தேடி அவை பற்றி எழுதி அவைகளைத் தொகுத்தும் காட்டியவர் மலையக இலக்கிய முன்னோடி சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள்.
"ஏட்டில் எழுதா இதயத்து ராகங்கள் என்னும் தலைப்பில் ஒவ்வொரு தீர்த்தக்கரை இதழிலும் இந்த நாட்டார் பாடல்கள் இடம் பெற்றன.
மலையகத்தின் மூத்த தலைமுறையினர் ட்மேன்மையும் உண்மையும் மிக்க இவ்வரிகள் மூலம் ஒரு வரலாற்றுச் செழுமையினை இன்றைய தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளனர். அந்தப் பாரம்பரியத்தை மேலும் வலுவுடன் இட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுடையது என்றும் அவைகள் சொல்லாமல் சொல்லுகின்றன. ஒரு வலுவான தொடர்ச்சிக்கு ஆரம்பங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் ‘இந்த ஏடேறாத இதயத்து ராகங்கள் என்னும் திர்த்தக் கரையின் பணி ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொள்கிறது.
குதிர வாறதப் பாருங்கடி குதிர குனிஞ்சு வாறதப் பாருங்கடி குதிர மேலே வாற சின்ன தொரய கூப்பிட்டுச் சம்பளம் கேளுங்களடி.
காரோடப் பாதைகள் போடப்படாத அந்தக் காலத்தில் துரைமார்கள் குதிரைகளைத் தான் பாவித்தார்கள் என்ற உண்மைகளையும் குதிரையிலோடும் சின்னத் துரையை வழிமறித்தாவது உழைப்பிற்கான கூலியைப் பெறவேண்டும் என்னும் வீரத்தினையும் இவ்வரிகள் காட்டுகின்றன.
*சம்பளம் சம்பளம் சனிக் கெழ0 சம்பளம் செக்குறோலை போயிப் பாத்தா முக்காபேரு சம்பளம்
என்னும் பாடல் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாத உண்மையையும் முழுநாள் வேலை செய்தும் முக்கால் நாளுக்கான சம்பளமே தரப்படுகின்ற சுரண்டல்களையும் துல்லியமாகக் கூறுகின்றன.
ஏடேறாத இந்தப் பாடல்களை இளைய தலைமுறையினருக்கு ஏட்டிலேற்றிக் காட்டிய தீர்த்தக் கரையின் பணி விதந்துரைக்கக் கூடியது.
இவ்விதழ்களில் இதழாசிரியர் எல். சாந்திகுமார் மலையகம் பற்றிய ஆய்வு ரீதியான கட்டுரைகளைத் தெடர்ந்து எழுதி வந்தார்.
108

‘மலையகம் சில குறிப்புகள்’, ‘மலையகத்தின் வரலாறும் சமூக
உருவாக்கமும் என்னும் தலைப்புக்களினால் இக்கட்டுரைகள் மலையக
மக்கள் பற்றிய விமர்சனப் பூர்வமான, ஆய்வு பூர்வமான அறிமுகங்களை ஆழமாகச் செய்திருந்தன.
மாறிக் கொண்டு வரும் மலையகத்தின் வளர்ச்சி பற்றி ‘மலையகம் ஒரு யதார்த்தமாகிக் கொ60ண்டு வருகிறது. நயது விருப்பங்கள், வசதிகள் தேவைகள் ஆகியவற்றை மீறின ஒரு வளர்ச்சி இது. இதை அங்கீகரிப்பது தேசியத்துக்கு எதிரானது அல்ல. மாறாக தேசிய சிறுபான்மை இனங்களின் எழுச்சி என்ற யதார்த்தத்தில் வேரூன்றித் தேசிய அமைப்பில் காலடி எடுத்து வைப்பதே ஆரோக்கியமானதாகும். இதற்குப் பெருந்தேசிய மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் சமூக அமைப்புக்களையும் அறிந்திருப்பது அவசியம்.
மலையகச் சமூக உருவாக்கம் பற்றிப் பேசும் போது ‘எங்கிருந்தோ !
வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புக்களை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்ல மலையக மக்கள். எந்த ஒரு நாகரீக சமுதாயத்தினதும் உருவாக்கத்தின் மூலத்தைப் போலவே காடுகளை
அழித்து, நிலத்தை வளமாக்கி புதியதொரு பொருளாதாரத் துறையை
அடைந்தவர்கள். இவர்கள் அமைத்த இப் பொருளாதாரத் துறையும் அதைச் சார்ந்த அமைப்புக்களும் இன்னும் இந்நாட்டின் ஆதாரமாக இருக்கின்றன. இந்த மக்களின் வரலாறும் உருவாக்கமும் சகலரையும்
போலவே இவர்களும் இந்த மண்ணின் மக்களே என்பதை ஆதாரப்
படுத்துகின்றன. நமது வரலாறு குறித்த கண்ணோட்டம் நம்மிடையே தன்னம்பிக்கையையும் உறுதியினையும் வளர்க்க உதவும் என்று குறிப்பிடுகின்றார்.
ஆக்க பூர்வமான இலக்கியக் கருத்துப் பரிமாற்றத்துக்குத் தளம் அமைக்கும் பகுதி இது என்னும் குறிப்புடன் தீர்த்தக் கரையின் ஐந்து இதழ்களிலும் ‘குருஷேத்திரம்' என்னும் பகுதி இடம் பெற்றது. இந்தப் பகுதியில் வெளிவரும் கருத்துக்கள் அனைத்தும் தீர்த்தக் கரையின் கருத்துக்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இந்த இதழில் வந்திருக்கும் கருத்துக்கள் குறித்து வாசகர்கள் தங்களது கருத்துக்களை எழுதலாம். என்று கூறுகிறது இந்தப் பகுதி.
விமர்சனமும் வேண்டுகோளும் என்னும் தலைப்பில் குமரன் சஞ்சிகையின் சிறுகதைகள் பற்றிய விமர்சனம் ஒன்றை சிவாராமநாதன் முதல் குருஷேத்திரத்தில் தந்திருந்தார்.
இதற்கான பதில் விமர்சனங்கள் இரண்டாம் இதழில் இடம் பெற்றன.
ராஜ்கபூர், சந்திரமோகன் ஆகியோரின் இந்தப் பதில் விமர்சனங்
09.

Page 61
களுக்கான தனது பதிலையும் இலங்கையின் முற்போக்கு இலக்கியப் போக்குகள் குறித்து என்னும் கட்டுரையையும் சிவா ராமநாதன் இரண்டாவது இதழில் எழுதினார்.
மக்களுடைய வாழ்வை வாழ்ந்து, மக்களின் துன்பங்களால் துன்புற்று, அவர்களது இன் பத்தில் இன்பமடைந்து அவர்களது கவலைகளையும், தேவைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எழுத்தாளன் வாசகனின் உண்மையான உணர்ச்சித் துடிப்பினை ஏற்படுத்தும் நூலினை இயற்ற முடியும் என்னும் மைக்கல் ஷோலக்கோவின் வரிகள் நமது எழுத்தாளர்களில் எத்தனை பேருககுப் பொருந்தி வருகிறது என்னும் கேள்வி எழுப்பி இருந்தார் சிவா ராமநாதன்.
ஜெயகாந்தனின் 'ஊருக்கு நூறுபேர்’ என்னும் நாவலைப் பற்றி வேலுச் சாமியும் ' எங்கெங்கு காணினும் நாவலைப் பற்றி பாலசுப் பிரமணியமும், மூன்றாவது இதழ் குருஷேத்திரத்தில், விமர்சித்திருந்தனர்.
ஊருக்கு நூறு பேர் மூலமாக ஜெயகாந்தனை விமர்சித்த க. வேலுச்சாமி பேராசிரியர் கைலாசபதி ஜெயகாந்தன் தொடர்பாகக் கூறிய கருத்தையும் மேற்கோளுக்காக எடுத்துக் காட்டுகின்றார்.
சமூகத்தின் கிழ்மட்டத்தில் உள்ள மக்களைத் தம் எழுத்தில் சித்தரிக்க முற்பட்ட இவர்கள் அப்பாத்திரங்களைத் தனிப்பிறவிகளாகக் கண்டனரேயன்றி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவராய்க் காணவும் இல்லை. காட்டத் துணியவுமில்லை. இதன் விளைவாகக் காலப் போக்கில் இந்த தனி மனித வாதத்துக்கு ஆளாகிச் சமுகப் பார்வை குறைந்த வராய்ச் சில சர்ச்சைக்குரிய விவகாரங்களைப் பற்றி எழுதுபவராய் மாறி விட்டனர். இது கைலாசபதியின் கூற்று.
* புரட்சியைப் பற்றி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் போதுமான அளவு இல்லை என்றால் அந்த இடங்கள் காலியாகவே இருக்கட்டும். நாளை நிரப்பப் படுவதற்காக அவற்றை நாம் பாதுகாப்போம் என்று தனது கட்டுரையை முடிக்கின்றார் வேலுச்சாமி.
‘எங்கெங்கு காணினும் என்னும் படைப்பு மூலம் ஜெயகாந்தனை விமர்சிக்க முனைந்த பாலசுப்பிரமணியமோ தனது படைப்புக்கள் மூலம் தமிழ் இலக்கியத் துறையில் முற்போக்கான சிந்தனை ஓட்டங்களை, கதையம் சங்களை, பாத்திர வார்ப்புக்களை நிலைநாட்டியவர் ஜெயகாந்தன். ஆன்மீக உலகில் இருந்து தனது மீள் பிரவேசத்தைப் பிரகடனப் படுத்திக் கொள்ள எங்கெங்கு காணினும் என்கின்ற ஒரு கற்பனை முயற்சி தேவையற்றது. அது இல்லாமலும் ஜெயகாந்தனை தமிழிலக்கிய உலகம் அறியும், மதிக்கும், என்றெழுதுகின்றார்.
10

அறந்தை நாராயணனின் ‘ஒரு கவிதை புதுக்கவிதை' என்னும் நாவல் பற்றிய இரண்டு விமர்சனங்கள் நான்காவது இதழில் பிரசுரம் பெற்றுள்ளன.
ஐந்தாவது இதழில் 'மார்க்சியத்தின் சமகாலத் தத்துவார்த்த ஸ்தாபனப் பிரச்சினைகள் குறித்து எல்.சாந்திகுமார் எழுதி இருக்கின்றார். இலங்கையின் அனுபவங்களையே பிரதானமாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரை பலருக்கு எம்மீது சீற்றத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனாலும் அந்தச் சீற்றம் வெறுமனே ஒரு உணர்ச்சி வெளிப்பாடாகக் கிளம்பி அப்படியே அடங்கி விடாது காத்திரமான சிந்தனை வடிவம் பெற்று இப்பகுதியை மேலும் ஆரோக்கியமாக்க வேண்டும் என்பதே எமது அவா’ என்று குறிக்கின்றார் தீர்த்தக் கரையின் ஆசிரியரும் இந்தக் கட்டுரையின் ஆசிரியருமான எல். சாந்திகுமார்.
இந்த ஐந்தாவது இதழுடன் தீர்த்தக்கரை நின்று போனது எத்தனை பெரிய இழப்பு!
தீர்த்தக்கரை, கவிதைக்கான தனது பங்களிப்பினையும் செய்தே இருக்கிறது.
முருகையன், மு.மேத்தா, சாருமதி, ஆதவன், கல்வயல் வே. குமாரசாமி, திருக்கோணமலை கவிராயர், கணபதி கணேசன், மலையாள மோகன், இரணியன் என்று எத்தனையோ கவிஞர்கள்.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கு பற்றித் திரும்பிய (ஜனவரி 04-10-1981) கவிஞர் முருகையனின் அங்கதச் சுவைக் கவிதை 1981 பெப்ரவரியில் வந்த மூன்றாவது தீர்த்தக் கரை இதழில் வெளிவந்தது.
சேற்றிடையே மாக்கோலம் என்னும் அந்தக் கவிதையின் சில வரிகள் இவை.
‘.மூக்குத்தி மின்ன முகம் மலர்ந்தாய் என்றாலும் காஞ்சீபுரம் சேலம் கனகமணி உள்ளவள் நீ ஊஞ்சலில் ஆடுகிற உல்லாசி ஆனாலும் உன் வீட்டுக் கோடி ஒரே குப்பை உன் தங்கை கந்தை உடுத்தகிறாள் கஞ்சியன்றி வேறறியாள்!
111

Page 62
முற்ற மெல்லாம் சேறடியே மூக்குத்தி மின்னி என்ன!
மு. மேத்தாவின் புதுக்கவிதைகள் சில முதல் இதழில் வெளி வந்திருந்தன.
‘என்னுடைய சம்பள நாளில் எண்ணி வாங்குகின்ற பள பளக்கும் நோட்டுக்களில் எவரெவர் முகமோ தெரியும் என் முகத்தைத் தவிர
என்பது மேத்தாவின் கவிதைகளில் ஒன்று.
சில நாட்டுக் கவிதைகள் சிலவற்றினை தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருந்தார் ஆதவன்.
1980-ம் ஆண்டின் மதியப் பகுதியில் மலர்வு கொண்ட தீர்த்தக் கரை தனது ஐந்தாவதும் இறுதியானதுமான இதழை 1982-ன் இறுதிப் பகுதியில் வெளியிட்டது.
இக்குறுகிய வாழ் வெல்லையில் அனேகரின் கவனத்தை ஈர்த்த இதழாகத் திகழ்ந்த தீர்த்தக் கரையின் இலக்கியப் பிரவாகம் நின்றதாக இல்லை.
தீர்த்தக் கரையைச் சார்ந்த சில இளம் எழுத்தாளர்கள் தீர்த்தக் கரையின் தொடர்ச்சியாக 1992-ல் நந்தலாலா என்னும் காலாண்டு சஞ்சிகையை வெளிக்கொணரத் தொடங்கினார்கள்.
நந்தலாலாவும் நந்தலாலா வெளியீடுகளாக வந்திருக்கும் “A HISTORY OF THE UPCOUNTRY TAMIL PEOPLE IN SRI LANKA' 66 gub எஸ். நடேசனின் மலையக மக்களின் வரலாற்று நூலும்
‘தீர்த்தக் கரைக் கதைகள்’ என்னும் தீர்த்தக் கரை நந்தலால சிறுகதைகளின் தொகுப்பு நூலும் தீர்த்தக்கரை என்னும் மலையக சஞ்சிகையின் வரலாற்றுச் சுவடுகளை ஆவணப் படுத்துகின்றன.
ஈழத்துச் சிறு சஞ்சிகை வரலாற்றில் தீர்த்தக்கரையின் இடம் அழிக்க முடியாத ஒன்றாகவே திகழ்கிறது.
-112

மல்லிகைப் பூ
டொமினிக் ஜீவா
-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் திகதி மல்லிகை இதழ்
1966 முதன் முதலில் வெளிவந்தது. அதுதான் முதலாவது இதழ்! கஸ்தூரியார் வீதி, 60 எண் கடை, அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்ற ஜோசப் சலூன்’ என வழங்கப் பட்டு வந்தது. அங்கு தொழில் செய்து வந்தவன் தான் நான். ‘இது சவரக் கடையல்ல. எனது சர்வகலாசாலை!’ எனச் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றுத் திரும்பும் வேளை, யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வைத்துப் பெருமையுடன் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தவன் நான். அந்தச் சலூனின் பின் பகுதியில் மல்லிகைக் காரியாலயத்தை அமைத்துக் கொண்டேன். அந்த முகவரியில் இருந்து தான் மல்லிகை முதன் முதலில் வெளிவர ஆரம்பித்தது. உலக வரலாற்றில் சலூனுக்குள் இருந்து வெளிவந்த ஒரேயொரு சஞ்சிகை மல்லிகையேயாகும். ஒரு சலூன் தொழிலாளியால் ஆரம்பிக்கப் பட்ட ஒரே இதழும் இதுவேயாகும்!
முகப்பில் ஆசிரியர் டொமினிக் ஜீவா எனப் பொறித்துக் கொண்டேன். அந்தப் பதிவே இன்றுவரை தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. அது என்னுடைய தன்னம்பிக்கையைக் குறிக்கும் குறியீடாகும்.
"வரன்’ என்பவர் தான் அட்டைப் படத்தை வரைந்திருந்தார். பச்சையும் மஞ்சளும் கலந்த இரு நிறங்களில் மல்லிகைக் கொடி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் காட்சியே அட்டையை
113

Page 63
அலங்கரித்த காட்சியாகும்.
மனைவியினுடைய காப்பை முன்னர் அடைவு வைத்திருந்தேன். அதை மீட்டு விற்றேன். 360 ரூபா கிடைத்தது. தோழர் அரியரத்தினம் 40 ரூபா அன்பளிப்புச் செய்தார். பூபாலசிங்கம் 25 ரூபா தந்துதவினார். துணிச்சலுடன் செயல்பட்டேன். முதல் இதழை வெளிக் கொணர்ந்தேன்.
இதுதான் மல்லிகையின் ஆரம்ப மூலதனம்.
நான் பணத்தைப் பற்றி என்றுமே அச்சப் படுபவனல்ல. திட்டமும், ஆத்ம சுத்தியும், செய்யும் தொழிலில், கவன ஆழ்ந்த ஈடுபாடும் இருந்தால் பணம் தானாகவே வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். அது நடைமுறை உண்மையாகும்.
முதல் இதழின் விலை முப்பது சதம். பக்கங்கள் 48. காங்கேசன் துறை வீதியிலுள்ள 'நாமகள் அச்சகத்திலிருந்துதான் மல்லிகை அச்சியற்றப் பெற்றது. 500 பிரதிகளே அச்சாகின. 500 பிரதிகளுக்கும் அடக்கச் செலவு ரூபா 250. அந்தக் காலத்தில் அது பெரிய காசு!
விந்தன் பிரபல எழுத்தாளர். ‘மனிதன்' என்றொரு சஞ்சிகையை ஆரம்பித்தார். ஒரு சில வருடங்களில் அது நின்று போனது. ரகுநாதன் ‘சாந்தி’ என்றொரு இலக்கிய இதழைத் துவங்கினார். அதுவும் நின்று நிலைக்கவில்லை. இங்கும் வரதர் 'மறுமலர்ச்சி' என்றொரு இதழை ஆரம்பித்தார். அது பிற்காலத்தில் மணிக்கொடி மாதிரிப் பேர் சொல்லியதே தவிர, தொடர்ந்து வெளிவரவில்லை. "சிற்பியை ஆசிரியராகக் கொண்டு 'கலைச் செல்வி’ மாத இதழ் வெளிவந்தது. தரமான இளந் தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்கியது அது. ஆனால் அதுவும் நின்று நிலைக்கவில்லை.
இது ஏன்? ஏன்? என்றொரு கேள்வி என் நெஞ்சை இந்தக் காலத்தில் குடைந்து கொண்டேயிருந்தது.” ஏன்? என்ன காரணம்?-
இங்கு தான் ஆனந்த விகடன் வாசனுடைய அனுபவம் எனக்குக் கை தந்து உதவியது. பிரதிகளைத் தோளில் சுமந்து வீதி வீதியாக விற்கத் தொடங்கினேன். விற்க என்பதை விட, திணிக்கத் தொடங்கினேன் என்பதே சரியானதாகும். பிரதிகள் சீக்கிரமே விலைப்பட்டு விட்டன. ஆனால் ஆண்டுச் சந்தா தந்துதவ நெருங்கியவர்களே பஞ்சிப் பட்டனர். வருடச் சந்தா ரூபா 4 (தபாற் செலவுடன்)
‘நந்தி, சிவா சுப்பிரமணியம், வே. தனபாலசிங்கம் ஆகியோரின் சிறுகதைகளும், ஆண்டன் செகாவின் மொழிபெயர்ப்புக் கதையுமாக நான்கு சிறுகதைகளும், நீலாவணனின் கவிதையும், அகஸ்தியரின் உணர்வூற்றுச் சித்திரம் ஒன்றும், மூன்று கட்டுரைகளும், யாழ்ப்பாணக்
14

கவிஞர் என்று அழைக்கப் பட்ட பசுபதியின் அஞ்சலிக் குறிப்பும், பலதிலும் பத்து என்ற இலக்கியக் குறிப்பும், வணக்கம் என்ற ஆசிரியத் தலையங்கமும், கொடி - 1, மலர் 1 என்ற தலைப்புக் குறிப்புடன் அந்த முதல் இதழில் வெளிவந்தவையாகும். தயாரிப்பு எளிமை. உள்ளடக்கமோ - காத்திரம்.கனதி!
பல்லிகை வெளிவந்த பின்னப் காதுகளை வெகு கூப்பைய:க வைத்துக் கொண்டு, மிக மிக அவதானமாகத் தகவல்களைக் கிரகித்துக் கொண்டிருந்தேன். நாடு பூராவும் சுற்றி வந்தேன், பத்து நாட்களுக்கு மேலாக,
பல்வேறு மட்டங்களில் இருந்து கருத்துக்கள் சொல்லப் பட்டன. வரதர், சிற்பியை விடவா இவர் பெரிய கொம்பன்? என்று கூடச் சிலர் அபிப்பிராயப்பட்டனர். ‘ஒரு சலுானுக்குள்ள இருந்தா இலக்கியச் சஞ்சிகை! என்று கூட யாழ்ப்பாண மண்வாசனையுடன் வேறு சிலர் கதைத்தனர். சாதி, குலங் கோத்திரத்துடன் சேர்த்துத் தமிழையும் பாதுகாக்க முன் வந்த பழம் பஞ்சாங்களினால் இதைச் சீரணிக்க இயலவில்லை! இந்த விமரிசனங்களுக்கு நான் பதிலேதும் சொல்லவில்லை. ‘இது ஜிவா! என்று மட்டும் மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். சாதனையில் பதில் சொல்ல விரும்பினேன். என்னை நானே உலகிற்கு உணர்த்த உழைக்க முனைந்தேன்.
“அவனுக்கென்னப்பா! ரஷ்யக்காரனுடைய காசிலை மல்லிகை நடத்திறான். அவனுக்கு மாஸ்கோவிலிருந்துதான் காசு கிடைக்குது!” இப்படியாகப் பலர் எனக்குப் பின் நக்கலாகச் சொல்லிச் சிரித்ததையும் நான் அறியாதவனல்ல.
அதற்குக் காரணமும் உண்டு. அந்தக் காலத்தில் மல்லிகையில் வெளி வந்த சோவியத் சார்பான கட்டுரைகளின் பக்கம் நிரப்பல்கள்!
சென்னையில் ‘சோவியத் நாடு அலுவலகத்தில் சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரன் தமிழ்ப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ரகுநாதன், தி.க.சி, போன்றோர் அங்கு கடமை புரிந்தனர்.
எனக்குக் கத்தை கத்தையாக மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். எனக்கோ ஆரம்ப காலக் கட்டுரைப் பஞ்சம். சுலபமாகக் கைக்கு வரும் இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எடுத்துப் பிரசுரித்து வந்தேன். அத்துடன் சர்வ தேசமெங்கும் மாஸ்கோ பீகிங் எனக கன்னை பிரித்து திவிரப் பிரசாரம் செய்து கொண்டு வந்த உயர் அழுத்தப் பிரசார அரணுக்குள் மல்லிகையும் சிக்குப் பட்டுக் கொண்டுவிட்டது. தவிர்க்க முடியாத சிக்குப் பாடு இது!
காரணம் நான் மாஸ்கோ பிரிவை முழு மனசாக ஆதரித்து வந்தவன்.
15

Page 64
இந்தப் பின்னணியில் எனது உழைப்பும் இலக்கிய நேர்மையும் பின் தள்ளப் பட்டு, எனது அரசியல் சார்புநிலை கவனத்தில் கொள்ளப்பட்டு விட்டது. அதையொட்டித்தான் இந்த ரஷ்யப் பணப்பிரசாரம்.
இத்தனைக்கும் கொழும்பு கொம்பனி வீதியிலுள்ள பீப்பிள்ஸ் பப்ளிஸிங் ஹவுஸ் என்ற இடதுசாரிப் புத்தக சாலை விளம்பரமாக எனக்குக் கிடைத்தது ரூபா 150= தான்.
எந்த அவதூறுகளைப் பற்றியும் நான் சட்டை செய்யவில்லை. செய்வதுமில்லை. இந்த இலக்கிய வாழ்வில் நான் கேட்டிராத அவதூறுப் புலம்பல்களை வேறு எந்த எழுத்தாளனுமே செவிமடுத்திருக்க முடியாது. அத்தனை வார்த்தைக் கல்லெறிகள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த அச்செழுத்துத் தாக்குதல் தான் என்னை மக்கள் மத்தியில் அதிகமாகப் பிரபலப் படுத்த கட்டம் கட்டமாக பெரும் உதவி செய்து வந்துள்ளது.
சாதாரண ஒருவன் எனப் பகிரங்கப் படுத்தித் திரியும் ஒருவனை இத்தனை படித்தவர்கள் எனச் செல்பவர்கள் இத்தனை மோசமாகத் தாக்குவதானால் அவனிடம் மெச்சத் தக்க ஏதோ குணமொன்று இருக்கத்தானே வேண்டும் என நினைத்த பலர், என்னைப் பூராவாகத் தெரிந்து கொள்ள மெல்ல மெல்லமாக மல்லிகை மூலம் நாடி வரத் தொடங்கினர். எனது அறிவுச் சாதனையால் வந்த புகழை விட, என்னை முறைக்கு முறை திட்டித் தீர்த்தவர்களால் எனக்குக் கிடைத்த புகழே அதிகம்.
சின்ன வயசிலிருந்தே மெல்லிய ஓர் உள்ளுணர்வு என் நெஞ்சுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. ”நீ சாமானியன் அல்ல. சாதிக்கப் பிறந்தவன்ரா நீ! என அந்த உணர்வு சிறு பொறியாக என்னுள்ளே கனன்று வந்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பிப் பார்க்கின்றேன். எனக்கே என் செயலில் பிரமிப்பு முதல் இதழை அச்சுக் கோர்த்த திரு. சந்திரசேகரமே இன்றைய மல்லிகையின் அச்சுக் கோப்பாளர். சிற்றிலக்கிய ஏடொன்றுக்குத் தனிக் காரியாலயமே வைத்துக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தனித்துவமாக இயங்கி உழைத்து வரும் சரித்திர வரலாறு, மல்லிகைக்கு மட்டும் தான் உண்டு.
எதிர்கால ஆய்வுகள் இதனை நிரூபிக்கவே செய்யும்.
ωρ6ύ6ύ60)Φ - Φ6))ώδυή - 1999.
O
6.

மல்விகையைச் சுமந்து
தெருத் தெருவாக விற்றுத் திரிந்த அந்தச் சுகமான நாட்கள்
டொமினிக் ஜீவா
ன்னால் இன்று நம்பமாட்டீர்கள். தோள்மீது அந்தப் பூரிப்புப்
G புத்தகச் சுமையுடன் தெருத்தெருவாக் வீதிகளில் நான் நடந்து
திரிந்த அந்தக் காலத்தை இன்று எண்ணிப் பார்க்கும் போது,
அந்த இலக்கியச் சுமையே என் நெஞ்சில் பசுமையான பல நினைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
நீண்ட காலமாகத் தாய்மைப் பேறடையாமல் தவிப்புடன் பரிதவித்திருந்த மங்கையொருத்தி, தனது முதற் சிசுவை வயிற்றுப் பாரச் சுமையின் நோக்காடுகளை எத்தனை தூரம் சகிப்புத் தன்மையுடன் சகித்துக் கொண்டு கற்பனைக் கனவுகளுடன் வலம் வருவாளோ, அத்தகைய பூரிப்புடன் தான் நான் மல்லிகையைச் சுமந்து சென்று தெருத் தெருவாக விற்று வரத் தொடங்கினேன்.
வீதி உலா வந்த அந்தக் காலகட்டத்தில் தெருக்களில் பல ஆச்சரியமான சம்பவங்கள் இடம் பெற்றதுண்டு. கண்கள் நிறைய
117

Page 65
அன்பு கொண்டவர்களின் சந்திப்புகளும் நிகழ்ந்ததுண்டு. அன்று மல்லிகையின் விலை முப்பது சதங்களே. என்னை விதிகளில் திடுகூறாகச் சந்திக்க நெருங்கும் சில நண்பர்கள் நேருக்கு நேர் சந்திப்பைத் தவிர்க்கும் முகமாகப் பக்கத்தே உள்ள குச்சொழுங்கையூடாகத் தப்பித்துச் சென்றதையும் நான் அவதானித்துள்ளேன். என்னை நேரிடையாகச் சந்தித்து விட்டால் முப்பது சதம் கொடுத்தே தீரவேண்டும் என்ற பொருளாதாரப் பயம், அச்சம் அவர்களுக்கு.
இத்தனைக்கும் நான் பணம் தரவேண்டும் என நேரடியாகக் கேட்பதில்லை. காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பின்னர் தந்து கொள்ளலாம். ஆனால், மல்லிகையை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே மனசார விரும்பினேன், நான்.
ஒரு நாள் கஸ்தூரியார் வீதியிலுள்ள குளத்தருகே நான் சென்ற சமயம், ஒருவர் வாகனத்தில் வந்து இறங்கினார். எனது பழைய நண்பர். உயர் உத்தியோகஸ்தர், கலை இலக்கியத் துறையில் ஆர்வம் கொண்டவர். நான் அவரைப் பார்த்ததும் மெல்ல அவரிடம் நெருங்கி மல்லிகையை அவர் முன் நீட்டினேன்.
“எடேயப்பா! உனக்கு இடம் நேரமெல்லாம் தெரியாதா?’ என எடுத்தெறிந்து பேசினார். நானவரிடம் பணம் கூட எதிர்பார்க்கவில்லை. சஞ்சிகையைப் பெற்றுக் கொண்டால் போதும் என்ற மனப்பான்மையுடன் நானொரு நண்பனைப் போல அவரை நெருங்கினேன். சஞ்சிகையை நீட்டினேன். உண்மையில் அதுதான் எனது நோக்கம்.
அவர் நண்பனாக நடந்து கொள்ளவில்லை. ஓர் இலக்கிய ரஸிகனாகவும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவுமில்லை. ஓர் உயரதிகாரியைப் போல, அலட்சியமாக எனது உழைப்பை அவமதித்துவிட்டார். எனது ஆத்மாவில் ஆணியடித்த அந்தத் தழும்பு இன்னமும் இருக்கிறது. அதன் வலி தொடருகிறது.
பின்னர் பல தடவைகள் நேரிலும், இலக்கிய விழாக்களிலும் சந்தித்திருக்கின்றேன். ஆனால், சஞ்சிகையைப் பெற்றுக் கொள்ளும்படி எந்தக் கட்டத்திலும் நானவரைக் கேட்டு, என்னை நானே தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
இருந்தும், அவர் இன்று வரைக்கும் எனது இலக்கிய நண்பர் தான்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுழைப்பவர்கள் எந்த விதமான கோபதாபங்களுக்கும் ஆட்பட்டுவிடக்கூடாது, மனிதர்களை அவசரப் பட்டு வெறுத்து விடக்கூடாது. துவேஷிக்கவும் கூடாது என்பதை என்னை
18

எனது இளம் பருவத்து வாழ்க்கையில் நெறிப்படுத்திய சான்றோர்கள் சொல்லக் கேட்டுப் பக்குவப்பட்டவன் நான். எனக்கென்று ஒரு வாழ்வு நெறியை வகைப்படுத்தி ஒழுகி வருபவன் என்ற முறையில், நான் இந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன்.
ஆனாலும், இடையிடையே ஞாபகத்துக்கு வருகிறது.கனவுகளை வாழ்வுப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு உலவித் திரிந்த அந்த இனிமை கலந்த நாட்களை இன்று இரை மீட்டிப் பார்க்கின்றேன்.
என்னை நானே மறுவரைவு செய்து கொண்ட நாட்கள் அவை,
ஒருநாள் ஒருவர் என் பக்கத்தே தனது காரைச் சட்டென்று நிறுத்தினார். நான் ஓரமாக ஒதுங்கிக் கொண்டேன். இது நடந்தது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி விதியில் ஒதுங்கிப் போய் நின்ற என்னை எனது பெயர் சொல்லி அழைத்தார் ஒருவர். காரைவிட்டு இறங்கினார்.
இவரும் ஓர் அரசாங்க ஊழியர் தான். என்மீது தனிப் பற்றும், மல்லிகை மீது தனிப் பாசமும் கொண்டவர். உரும்பராயைச் சேர்ந்தவர்.
`என்னை மன்னிக்க வேண்டுமடாப்பா! வழி தெருவிலை உன்னை மறிச்சுக் காசு தாறதற்காக என்னை மன்னிச்சுப் போடு. மல்லிகைக்கு வந்து போக எனக்கு நேரமில்லை. வந்தாலும் உன்னைக் கண்டுபிடிக்க ஏலாது. இப்படி வழி தெருக்களிலை உன்னைக் கண்டுபிடிச்சால் தான் சரி. இந்தா பிடி காசை!” எனச் சந்தாப் பணத்தை எடுத்து நீட்டினார்.
அது பெரிய தொகை. என்னிடம் மாற்றிக் கொடுக்கப் பணமில்லை. சற்று யோசித்தேன். “சரி சரி மிச்சக் காசு இருக்கட்டும். பேந்து பாப்பம். இப்ப காசைப் பிடி. அப்ப நான் வாறன்’. கார் புறப்படும் ஓசை கேட்டது. அவர் போய்விட்டார்.
அரசியல்வாதிகளுக்கு நிரந்தர நண்பர்களுமில்லை. நிரந்தர விரோதிகளுமில்லை' என்றொரு புதுமொழி சமீப காலமாகத் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ளது. அதைப் போலவே இலக்கியக்காரர்களுக்கும் எனச் சொல்லிக் கொள்வார்கள் சிலர்.
ஆனால் , எனக் கோ மனிதர்களே நிரந்தர நண்பர்களாக நெடுங்காலமாகவே விளங்கி வருகின்றனர். நேசிப்பதைவிட, நேசிக்கப் படுவது எத்தகைய மகத்துவமானது என்பதை எனது இலக்கிய வாழ்வில் பல தடவைகள் நான் உற்றுணர்ந்துள்ளேன். அதனால் மனித நேயத்தைச் சுவாசிக்கக் கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தைக் கற்றுத் தந்ததே மல்லிகைதான்.
9

Page 66
மல்லிகையை ஆரம்பித்த அந்தக் காலத்திலேயே எனக்கு மனப் பயம் இருந்ததுண்டு.
நான் அந்தக் காலத்தில் ரொம்பவும் மதித்த விந்தன் என்பவரின மனிதன்' என்ற சஞ்சிகை இடையில் நின்று போனது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றோர் எழுதி வந்த "சரஸ்வதி பிரசவத்தை நிறுத் திக் கொணர் டது. ரகுநாதனின் ச1ந் தி தொடர்ந்து வெளிவரவில்லை. க.நா.சு.அவர்களினது பல சஞ்சிகைகள் நிறுத்தப் பட்டன. இப்படிப் பல முன்னுதாரணங்கள் என் முன்னால் விரிந்து போய்க் காட்சி தந்தன.
இந்த முன் தோல்விகளைக் கண்டு ஆரம்பத்தில் நான் மனசுக்குள் ஆடிப்போனது என்னவோ உண்மைதான். அதற்காக எனது நோக்கத்தை நான் விட்டுவிடவில்லை. எனக்கு அடிக்கடி கனவுகள் தேவைப்பட்டன. ஊதிப் போன தன்னகங்காரர்களும் பிதுங்கிப் போன பார்வைக் கோளாறு பிடித்த மேட் டிமைச் சாதி அகங்காரக் கனவான்களும் கடந்த காலங்களில் என்னையும் எனது எழுத்துக்களையும் தாறுமாறாகக் கிழித்துக் குதறச் செய்திருந்த சூழ்நிலையில், நான் மாசிகை ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுச் செயலாற்றத் தொடங்கினேன். எனது சொந்தக் குரலில் எனது கருத்துக்களைப் பதிய வைக்க விரும்பினேன்.அதற்காக என்ன விலை கொடுக்கவும் ஆயத்தமானேன்.
இலக்கிய எதிரிகளால் அளவுக்கு அதிகமாகத் திட்டு விமரிசனம் பெற்றே நான் வளர்ந்து வந்திருக்கிறேன். மக்களினது பார்வைக்கு வந்திருக்கிறேன். கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது மாத்திரம் எனது வேலையாக இருந்துவிடவில்லை. அதற்கான பதிலையும் ஆக் கபூர்வமாகக் கண் டடைய வேண்டுமென இராப் பகலாக யோசித்தேன். 6 னது நிஜ முகத்தைத் தேடினேன். வணிக நோக்கத்திற்காகத் தமிழை வட்டிக்கு விட்டுப் பிழைக்கும் நோக்கம் எனக்கு அறவே இருந்ததில்லை. உரிமை மறுக்கப் பட்டவர்களின் மூடுண்ட வாழ்க்கை பற்றி ஏற்கெனவே எனக்கு நன்கு தெரியும். ஏனெனில் நானும் அவர்களில் ஒருவன் என்கின்ற முறையில் எனது சொந்தக் குரலில் என் கருத்துக்களைப் பதிய வைக்க விரும்பினேன். இந்த மண்ணின் ஆத்மாவை எழுத்தில் வடிக்க முயன்றேன்.
அந்தக் காலகட்டத்தில் எனக்கு இரண்டு குழந்தைகள். எனது ஒரே மகன் திலீபன் கருக்கொண்டிருக்கவில்லை. பொருளாதார ரீதியாக வசதியாக இல்லாது போனாலும், குடும்பம் சோற்றுக்கும் சேலைக்கும் பஞ்சமில்லாமல் நடந்து வந்தது. எனது கைத்தொழில் வருமானத்தால் தினசரி வாழ்வு ஓரளவு ஓடிக் கொண்டிருந்தது.
20

என் முன்னால், பூதாகரமாக ஒரு கேள்வி எழுந்து நின்றது. எழுத்து, குறிப்பாகச் சஞ்சிகை வாழ்வு குடும்பத்திற்குச் சோறு போடுமா? தொழிலா அல்லது எழுத்தா? மல்லிகையா? ஏதோ ஒரு வகையில் விலை கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நின்று வானத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. நான் வாழ்வு பற்றி யோசித்தேன்.
தலை நிமிர்ந்து நடைபயிலும் வார்த்தைகளை, எழுத்தில் எழுதிவிடலாம். ஆனால் வாழ்க்கையை வார்த்தைகளால் மாத்திரம் வாழ்ந்து விட முடியாது - இயலாது. இதா? அல்லது அதா? முடிவெடுக்கக் கூடிய காலகட்டத்தை நான் தள்ளிப் போடவில்லை. போட வேண்டிய மனப்பயமும் எனக்கு இருக்கவில்லை.
முடிவெடுத்த பின்னர் நான் சும் மா முடங்கிப் போய் இருந்துவிடவில்லை. எனக்குள் நானே ஆய்வொன்றை நடத்தி முடித்தேன். தெளிவாக எதிர்காலம் பற்றிச் சிந்தித்தேன்.
ஆரம்பகால ஆனந்தவிகடன் ஆசிரியர் வாசன் என்னுள் வந்து வந்து போனார். பெரியார் குடியரசுப் பத்திரிகையை நடத்தப் பட்ட சிரமங்களை எழுத்தில் எனக்குக் கற்றுத் தந்தார். வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் தமது வெற்றிக்குக் கொடுத்த விலைகளின் பெறுமதி பற்றிக் கூர் குறிப்பாகப் படித்து மனசில் படிய வைத்துக் கொண்டேன். நானும் தகுந்த விலை கொடுக்க ஆயத்தமானேன்.
இந்த அனுபவங்களின் வெளிப்பாடுதான் என்னை வீதிக்கு இறங்க வைத்தது. செயலாற்றத் தூண்டியது. இந்தக் கட்டத்தில் ஒன்றைத் தெளிவாக நண்பர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
உலக வரலாற்றிலேயே நடந்திராத ஒரு புதுச் சம்பவம், எந்தவொரு முன்னேறிய ஐரோப்பிய நாட்டில் கூட நடைபெற்றிருந்திராத நிகழ்ச்சி. நல்லை நகர் நாவலர் பிறந்த மண்ணில் நடந்தேறியது. ஒரு சலூனுக்குள் ஓர் இலக்கியச் சஞ்சிகை ஸ்தாபிதமானது. அதன் ஆசிரியர் அந்தச் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் முடி அலங்கரிப்புச் செய்துவந்த கலைஞர் ஒருவர். இது யாழ்ப்பாண வரலாற்றிலே ஒரு புதுத் திருப்பம்.
ஒவ்வொரு சிற்றிலக்கிய ஏட்டிற்கும் இலக்கியப் பதிவு இருக்கலாம். ஆனால், எல்லாவற்றினாலும் வரலாறு படைத்து விட முடியாது. அதற்கென்று ஒரு கனதி தேவை. மல்லிகை இதழ்களைச் சுமந்து கொண்டு மாசாமாசம் ஒழுங்காகத் தெருக்களில் வலம் வரத் தொடங்கினேன். கண்டவர். தெரிந்தவர்களுக்கெல்லாம் விற்பனை செய்தேன். இது எனக்கு ஒரு புது அனுபவம். சிற்றிலக்கிய ஏட்டின் வெளியிட்டாளனாகிய எனக்கு இது புதிய பயிற்சிக் களம்.
21

Page 67
என்னையொரு தெருவோரப் பிச்சைக்காரனாக மதித்தவர்களுமுண்டு. பணம் பண்ணுவது எனது நோக்கமல்ல. ஒரு காலத்தில் தேசாபிமானி என்ற கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையைத் தெருத் தெருவாக, பஸ் நிலையங்கள் உட்பட விற்பனை செய்தவர்கள் இடது சாரி அரசியல் கர்மயோகிகள். மாஸ்டர் கார்த்திகேசன், வைத்தியலிங்கம், பூபாலசிங்கம், ராமசாமி ஐயப் , எம்.சி.சுப்பிரமணியம், போன்றவர்களின் முன் உதாரணங்களைப் பின்பற்றி வந்தேன். அந்தப் பேப்பரின் விலை ஐந்து சதம், மிகப் பெரும் கல்விமான்கள் என மதிக்கப் பட்டவர்கள் மகத்தான நோக்கத்திற்காக விதி வீதியாகத் திரிந்து பத்திரிகை விற்று வந்தனர். அவர்களுடன் நானும் கூடச் செனறு விற்றிருக்கிறேன்.
அந்த உந்துதல் சக்தி 5160 க்குக் கை தந்து உதவியது. காந்தியடிகளும் நாலு முழத்துண்டு, கையில் ஒரு கைத்தடியுடன் வெகு எளிமையாகவே காட்சி தந்தார்.
தெருவோரப் பிச்சைக்காரனும் இதே கோலத்துடன் தாண் காட்சி தருவான். இரண்டுமே ஒரே எளிமையல்ல.
ஒன்று எல்லாவற்றையும் துறந்த ஞான எளிமை. மற்றது ஒன்றுமே, கிடைக்காத வக்கற்ற எளிமை. எனது எளிமையைக் காந்திய எளிமையாக உள்வாங்கிக் கொண்டு செயலாற்றி வந்தேன்.
தோலவி கண்ட சிறறிலக்கிய ஏட்டாளர்கள் என்னைப் போல வீதிக்கு வந்திருந்தால் அவர்களால் வெளியிடப் பெற்ற பல சிற்றேடுகள் வெற்றி பெற்றிருக்கலாமோ? என நான் அடிக்கடி என்னுள் நினைத்துப் பார்ப்பது வழக்கம்.
சஞ்சிகையைத் தயாரிக்கும் போதுதான் நான் அதன் ஆசிரியர். அதன் முகப்பில் விலை பதிக்கப் பட்டவுடனேயே அது ஒரு விறபனைப் பண்டம். விற்பனைப் பொருளை விலை கூறி விற்பதுதான் எனது பிரதான வேலை . தொழில்! அந்தத் தொழிலைச் செவ்வனே செய்து முடிக்க நான் விதிக்கு இறங்கினேன். வாசனும் பெரியாரும் கற்றுத் தந்த பத்திரிகை விற்பனவுத் தந்திரத்தைச் சிக்காராகப் பற்றிப் பிடித்தவண்ணம் செயலில் இறங்கினேன்.
யாழ்ப்பாண நகரத்தைத் தாண்டியும் போய்வரக் கூடிய சாத்தியப்பாடு தென்பட்டது. எனது விற்பனைப் பரப்பளவைச் சற்று வியாபித்துக் கொண்டேன். விரிவுபடுத்தினேன்.
அதற்கு வாகனம் ஒன்று தேவைப்பட்டது. சைக்கிள் ஒன்றை வாங்கிச் சொந்தமாக்கிக் கொண்டேன். அதற்குப் பெயர் கூடச் சூட்டி மகிழ்ந்தேன்.
22
ം ബ

‘ஹொட்டன் ஹோல்' என்பது அதன் திருநாமம். அந்தக் காலத்தில் இலங்கைக் குதிரைப் பந்தயத்தில் தொடர்ந்து மற்றவைகளுடன் சமமாக ஓடி வரும் அக்குதிரை வெற்றிக் கம்பத்தை அண்மித்ததும் மூக்கை நீட்டி வெற்றியைத் தட்டிக் கொள்ளுமாம். அதன் வெற்றி யுக்தி என் மனசுக்குப் பிடித்துப் போனது. எனவே, என் சைக்கிளுக்கு அதன் நாமத்தைச் சூட்டி மகிழ்ந்தேன்.
ஹொட்டன் ஹோலில் சவாரி செய்த வண்ணம் குட்ா நாட்டிலுள்ள முக்கிய ஊர்களுக்கெல்லாம் சென்று வரத் தொடங்கினேன். ஊர் ஊராகத் திரிந்தேன். வெகு சன மக்களினது மனத் தத்துவம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடத் தொடங்கியது.
மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்து அமரும் நுணுக்கத்தை நான் கற்றுக் கொண்டது எம். ஜி. ஆர் அவர்களிடமிருந்தே. அந்த மனத்தத்துவ அணுகுமுறை தான் அவரை ஒரு சினிமா நடிகரான அவரை தமிழகத்தின் முதல்வராகப்ள பாமர மக்களின் தலைவராக ஆக்கியது என்ற யதார்த்த உண்மையை ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தேன். தமிழகத்தில் சமீப காலங்களில் நடந்த அரசியல் புதுமைகளில் இதுவும்
ബി[].
திரும்பத் திரும்ப மக்களின் மனசில் படும்படி ஒரு பொருள் தெரியும்படி காட்ட வேண்டும். பெயர் உச்சரிக்கப் பட வேண்டும். கெக்கறாவ என்ற சிங்களக் கிராமத்தில் சலூன் ஒன்றின் மேசையில் மல்லிகை சஞ்சிகையைப் பாாக்கும், அதன் பெயரை வாசிக்கும் இலக்கிய ரசனை மிக்க ஒரு முஸ்லிம் இளைஞனின் இதயக் கற்பனையில் என்ன தோன்றும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதுபோலவே பசறையிலும், காத்தான் குடியிலும், திக்குவல்லையிலும்.
ஈ.வே.ரா. பெரியார் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களைத் தளமாகக் கொண்டுதான் தனது குடியரசுப் பத்திரிகையை வளர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மலேசியாவில் நீண்ட காலம் தொழில் செய்து வந்த எனது இனத்தவர் எஸ். வி. தம்பையா சொன்ன ஒரு சம்பவம் ஒன்றை என்றும் ஞாபகத்தில் வைத்துள்ளேன்.
பெரியார் மலேசியாவுக்கு வந்த சமயம் அவருக்குப் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றதாம். அதில் ஒரு சலூன் தொழிலாளியை அவருக்கு அறிமுகப் படுத்திய போது ‘ஆமா. ஆமா நம்ம பிள்ளையஸ்! நம்ம நம்ம பிள்ளையஸ். ஆரம்ப காலங்களில் குடியரசுப் பத்திரிகையை வளர்த்த பிள்ளையஸ்!” என்று பாராட்டினாராம். அவரைப் பக்கத்தே
23

Page 68
அமர வைத்தாராம். முதுகைத் தட்டிக் கொடுத்தாராம்,
பெயர் சிறுகச் சிறுக, மக்களின் அடி ஆழ நெஞ்சில் அவர்களை அறியாமலே பதிந்து போய் ஒன்றிவிடும். இது எம்.ஜி.ஆர். கையாண்ட மனத்தத்துவ டெக்னிக்’.
இன்றும் குடாநாட்டு யாழ்ப்பாணத்தான் சொல்வான் A40 கார், ரலி சைக்கிள், சிங்கர் மெஷின், முதலை மார்க் மன்ைவெட்டி, சன்லைற் சோப், ரொபின் நிலம் என ஞாபகப் பெட்டகத்தில் இந்தப் பெயர்களை அவன் சேமிப்பில் வைத்துள்ளான். இந்தப் பாவனைப் பொருட்களுக்கு மாற்றாக எத்தனை சிறந்த பொருட்களாக இருந்தாலும் அவனது மனசு அவைகளை மறுதலிக்குமே தவிர, ஏற்றுக் கொள்ளாது. இவைகள் அவனது பாமர மனசு ஏற்றுக் கொண்ட பாவனைப் பொருட்களின் நாமங்களாகும். பதிவுகளாகும்.
இந்த மனத் தத்துவ உத்தி முறையையே மல்லில3கயைட் பொறுத்தவரை நான் கையாண்டு வந்தேன். "மல்லிகை என்ற பெயரே மிகவும் எளிமையானது. சாதாரண குடும்பத்துப் பெண்கள் விரும்புவது. பூக்களில் மென்மையானது. சுலபமாகக் கிடைக்கக் கூடியது. யாவரும் சகல வைபவங்களிலும் விரும்பக் கூடிய தன்மையுடையது. மனசுக்குகந்த சுகந்த மணம் பரப்புவது. ஒவ்வொருவர் வீட்டுத் தோட்டத்திலும் மலர்வது.
என்னால் வெளியிடப் பெறும் மாசிகைக்கு மல்லிகை என நாமகரணம் சூட்டப் பெற்றதே நான் செய்த ஆரோக்கியமான வேலைகளில் மிக முக்கியமான ஒன்றெனக் கருதுகின்றேன். y
லாப-நட்டம் ஏற்படுகின்றதோ இல்லையோ, அச் சஞ்சிகை மக்களின் பார்வையில் அடிக்கடி தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அதன் பெயர் சொல்லப் பட வேண்டும்.
இதற்காகவே குடாநாட்டுச் சிற்றுார்களுக்குச் சென்று வந்தேன்; அத்துடன் இலங்கையின் தலைநகர் சார்ந்த பட்டினங்களுக்கும் மாச1 மாசம் பிரயாணம் போய் வந்தேன்.நல்ல ஆர்வம் மிக்க சுவைஞர்களை நேரில் பார்த்துப் பழக்கம் கொண்டேன். நட்பையும் தொடர்புகளையும் வலுப்படுத்தி வந்தேன்.
நானொரு மக்கள் விரும்பும் பேச்சாளனும் கூட. எனவே பல பிரதேசங்களில் இருந்தெல்லாம் அழைப்புக்கள் கிடைத்தன. அடிக்கடி இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். இதனால் மல்லிகைச் சஞ்சிகை தூர இடங்களிலும் பற்றிப் படரும் சாத்தியப் பாடுகள் வெகு சுலபமாகக் கைகூடி வந்தது.
24

நாடு பூராவும் சென்று வந்த வேளைகளில் முக்கியமான ஊர்களிலுள்ள சலூன்களினது முகவரிகளைச் சேகரித்து விடுவேன். நமது குடாநாட்டைச் சேர்ந்த நமது இனத்தவர்களே அங்கெல்லாம் சலூன்கள் தொடங்கி நடத்தி வந்தனர். தொழில் செய்தவர்களும் நமது ஊரவர்களே. அநேகமாக இங்கு தொழில் பார்க்கும் பலர் என்னைத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். நேரில் தெரிந்திராத போதிலும் கூட, எனது பெயரைக் கேள்விப் பட்டவர்களாக இருப்பார்கள். இது ஒரு சாதகம்.
இலங்கையில் இன்று வாழ்ந்து வரும் எழுத்தாளர்கள் பலருக்கு இல்லாத ஓர் அசாதாரண வாய்ப்பு வசதி எனக்குண்டு. தேசம் பூராவும் பரவியுள்ள சிகை அலங்கரிப்புக் கலைஞர்களின் தொடர்பு மேலும் மேலும் அதைத் தொடர்ந்து பேணி வளர்க்க விரும்பினேன்.
இது எத்தகைய பெரிய பலம் என்பது எனக்குத்தான் தெரியும். மல்லிகையின் இன்றைய பிரபலத்திற்கு நான் கையாணி ட வழிமுறைகளில் இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதைச் சிலரே அறிவர்.
தேசம் பூராவும் சேகரித்த சலூன் முகவரிகளுக்குத் தொடர்ந்து சஞ்சிகையை அனுப்பி வந்தேன். ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகைகளே புகுந்து செல்ல இயலாத பிரதேசங்களுக்கெல்லாம் மல்லிகை வழிகோலிக் கொண்டு புகுந்து சென்று வியாபித்தது. வேர் பாய்ச்சியது.
சிங்கள மக்களால் சூழப்பெற்ற முஸ்லிம் கிராமங்களுக்கும் மல்லிகை அறிமுகமானது. அங்கு வாழ்ந்து வந்த படித்த, சிந்திக்கத் தெரிந்த, சிருஷ்டி ஆர்வம் நிரம்பிய, புத்திஜீவிகளான முஸ்லிம் இளைஞர்களையும் யுவதிகளையும் சென்றடைந்தது. அவர்களிடம் தனது பெயரைப் பதிவு செய்து, அறிமுகப் படுத்திக் கொண்டது. அவர்களை மல்லிகையின் பால் நெருங்கி வரவைத்தது. அவர்களது இலக்கிய நெஞ்சங்களில் வேர் பாய்ச்சி வளர்ந்தது.
எங்கேயோ உள்ள தூரந் தொலைவான திக்வல்லைக் கிராமத்தை இலக்கியப் பதிவேட்டில் பெயர் பதிய வைத்ததன் பின்னணி இதுதான். மல்லிகை திக்வல்லை இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்டதன் வரலாறும் இதுவேதான். அது போலவே அன்று நீர்கொழும்புச் சிறப்பிதழ் வெளியிட்டதன் பின்னணியும் இதுவேதான்.
மல்லிகையின் சாதனைகளைவிட, அதன் இலக்கியப் பிரபல்யம் பிரமாண்டமானது. மலைக்க வைப்பது, முன்வரலாறு இல்லாதது. தனித்தன்மை வாய்ந்தது.
125

Page 69
மல்லிகை தொடர்ந்து வெளிவருவதை மாத்திரம் சாதனையாகக் கணித்து விடக் கூடாது. அதன் பரிணாம வளர்ச்சியாக மல்லிகைப் பந்தல் வெளியீட்டு நிறுவன ஸ்தாபிதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து முப்பதுக்கு மேற்பட்ட தரமான நூல்களை இதுவரை மல்லிகைப் பந்தல் வெளியிட்டு வைத்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
தொடர்ந்து சிற்றிலக்கிய ஏட்டை வெளியிட்டு வருவதுடன் நூல்களைப் பதிப்பித்து வருவதும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பதித்து வைத்திருக்கக் கூடிய தகவலாகும்.
எனக்கென்றொரு கொள்கை உண்டு. அது என் இறப்புக்குப் பின்னரும் தொடர்ந்து வரும். அதே சமயம் யார் மீதும் அதைத் திணிக்க நான் தெண்டித்ததேயில்லை. இலக்கியத்தை - மானுடத்தை - நேசித்த சகலரையும் நேசித்தவன் நான். மல்லிகை இதழ்களைத் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்குத் தெரியும். நான் சொல்லத் தேவையில்லை. சகலரையும் அரவணைத்துச் சென்றவன் நான். இலக்கியத் துறையில் நமது படைப்பாளிகள் சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும். சிருஷ்டி வரலாற்றில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் விதந்து பேசப்பட வேண்டும். அதற்கான பங்களிப்பை யார் செய்தாலுமே அவர்களுக்குத் தலை தாழ்த்தி வணங்குகின்றேன்.
35-வது ஆண்டு - மல்லிகை.
26

மணிக்கொழக் காலத்தைப் போவ மல்விகைக் காலமும் ஆராயப் படBவண்டும்
தெளிவத்தை ஜோசப்
6 லைச் செல்வியின் இலக்கியப் பயணம் ஏன் தடைபட்டது? எனும் d கேள்விக்கு ‘சிற்பி கூறினார். ‘எழுத்தாளன் எழுத வேண்டும். இலக்கிய ஆர்வமுடைய செல்வந்தர்கள் வெளியிட முன்வர வேண்டும். எழுத்தாளனே இரண்டாகவும் இருக்க வேண்டிய நிலைமைகள் தான் இதுபோன்ற தடங்கல்களுக்குக் காரணம்' என்று.
எதுவித தடங்கல் களுமின்றி எழுத்தாளனே பத்திரிகை வெளியீட்டாளனாகவும் இருக்கலாம், என்பதைத் தனது மல்லிகை வெளியீட்டின் மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர் டொமினிக் ஜீவா.
‘2002-ம் ஆண்டு ஜனவரி மாதம்” என்று அட்டையில் பொறித்துக் கொணி டு அலங் காரமாகவும் , இலக் கியக் கனதியுடனும் வெளிவந்திருக்கிறது, மல்லிகையின் 37 வது ஆண்டு மலர்.
ஓர் இலக்கியச் சிற்றேடு 37 வருடங்களைத் தாண்டியும் விமரிசையாகத் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் ஆசிரியரின் இலக்கிய ஈடுபாடும் அர்ப்பணிப்புடனான உழைப்புமே காரணம் என்று நாம் கருதும் அதே நேரம், மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா என்ன கருதுகிறார் என்று பார்ப்போம்.
'இதுவரை காலமும் மல்லிகையைப் பாதுகாத்து, வளர்த்து
127

Page 70
வந்துள்ள சுவைஞர்களினதும் , ஆர்வலர்களினதும் , படைப்பாளிகளினதும், கரங்களில் இந்த ஆண்டு மலரைச் சமர்ப்பித்து மகிழ்கின்றேன். இந்த நீண்ட வருஷ இடைக்காலங்களில் மல்லிகையை மனமார நேசித்தவர்களையும் அதனி வளர்ச் சிக்காக உழைத்தவர்களையும் தமது உரிய படைப்புக்களால் அதன் பக்கங்களை செழுமைப் படுத்தியவர்களையும் நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.”
ஜீவாவின் வெற்றி ரகசியங்களில் இது முக்கியமானது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியையும் குறிப்பாக முற்போக்கு இலக்கியத்தின் வளர்ச்சியை அறியப்படுவதையும் அதற்காக உழைப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு, 1966 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட ஏடு மல்லிகை. மல்லிகையின் முதல் இதழ் ஆகஸ்ட் 15-ல் வெளியிடப் பட்டது. மல்லிகை, இதயம், கமலம், மலர், செந்தாரகை, கலைஞன் எண் னும் பெயர்கள் பிரேரிக் கப் பட்டு வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு ஜீவாவுக்குப் பிடித்ததும், தூய்மையானதும் எளிமைக்குப் பெயர் பெற்றதுமான 'மல்லிகை’ என்னும் பெயரே சஞ்சிகைக்கு இடப் பட்டது.
முதல் இதழில் சிவா சுப்பிரமணியத்தின் உடையார் பரம்பரை, நந்தியின் ‘பச்சைப் பூக்கள், அன்டன் செக்கோவ்வின் ‘அடக்கம் ஆகிய மூன்று சிறுகதைகளுடன் அகஸ்தியரின் ‘நான் என்ற நீ" உணர்வூற்றுருவகச் சித்திரமும் இடம் பெற்றுள்ளன.
நீலாவணன், பெரி.சண்முகநாதன், வே.தனபாலசிங்கம் ஆகியோரும் இந்த முதல் இதழ் மல்லிகையின் படைப்பாளர்களாகத் திகழ்கின்றனர்.
கவிஞர் பசுபதி, கவிஞர் டி.ஆர்.பெரியசாமி ஆகியோரின் மரணங்களும் இந்த முதல் இதழில் அஞ்சலியுடன் நினைவு கூரப் பட்டுள்ளன.
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்” என்பதை முதல் வாசகமாகக் கொண்டிருப்பது மல்லிகை.
மல்லிகையின் ஜீவநாடியாகத் திகழும் ஜீவா, சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து இச்சமூகக் கொடுமைகளையும், அடக்கு முறைகளையும் கண்டு, அனுபவித்து, கோபித்து, கொதித்தெழுந்தவர். துடிப்பும் ஆற்றலும் இலட்சிய வெறியும் கொண்ட ஒருகடின உழைப்பாளி 96).
மல்லிகையை ஆரம்பித்த புதிதில் ‘வெகு விரைவில் வாடிவிடும் என்று ஆரூடம் சொன்னவர்களும் வரட்டுமே எத்தனை காலத்துக்கு
128
error

வரும்? என்று பார்ப்போமே என்று வயிற்றெரிச்சல் பட்டவர்களும், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இது ஒரு குறுக்குப் பாதை என்று புறம் பேசித் திரிந்தவர்களும் என்று எத்தனை அனுபவங்கள். மல்லிகை வாடிப்போய்விடவில்லை. தெருத் தெருவாக, வீடு வீடாக, ஊர் ஊராக மல்லிகை இதழ்களைத் தூக்கிச் சென்று விற்று முப்பது முப்பது சதமாகச் சேர்த்த அனுபவங்கள் எதிர் காலம் அவ்வளவு இருட்டானதல்ல என்பதை உணர்த்தியது என்கின்றார் ஆசிரியர் டொமினிக் ஜீவா.
(முதலாவது ஆண்டு மலர் தலையங்கம்)
முற்போக்கு வாதமும் அணி சார் ஆதரிப்பும் உச்சத்தில் இருந்த ஒரு காலகட்டததில் முற்போக்கு அணியினருக்காகவென்றே ஆரம்பிக்கப் பட்ட மல்லிகை, அந்த அடிமைத் தன்மையிலிருந்து தன்னை மெதுமெதுவாக இளக்கிக் கொண்டது. ஜிவா என்பவரின் இந்த அணிசாரா மனப்பக்குவம் மல்லிகையின் வெற்றிக்கான இன்னொரு காரணம் எனலாம்.
இலக்கியவாதிகளாக இனங் காணப்பட்ட ஈழத்தின் அனைத்து எழுத்தாளர்களினதும் தொண்ணுாற்றொன்பது வீதமானவர்கள் - ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் மல்லிகையுடன் தொடர்பு கொண்டிவர்களாக இருந்திருக்கின்றனர். பிறகு பிறகு முரண்பட்டவர்கள். கோபித்துக் கொண்டவர்கள் உட்பட, மல்லிகையின் அட்டைப் பட முகங்களே இதற்கான தகுந்த சான்றாகும். தேசிய இலக்கியம், மக்கள் இலக்கியம், மன்ை வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம் போன்றவைகளை அவை யவைகளின் அர்த்தப் பாட்டுடன் முன்னெடுத்துச செல்லும் பணியினை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது மல்லிகை.
ஈழத்து இலக்கியப் பரப்பில் மல்லிகையின் காலமும், பணியும், ஆளுமையும், மணிக்கொடிக் காலம், சரஸ்வதிக் காலம் என்று ஆராயப் பட்டதைப் போல் விரிவாக ஆராயப் படவேண்டிய ஒன்றாகும்.
நவீன இலக்கியத்தின் பன்முக வளர்ச்சிக்கு மல்லிகையின் பணி மகத்தானது.
சிங்கள இலக்கியம், சிங்களச் சிறுகதைகள், சிங்கள எழுத்தாளர்கள் போன்ற அறிமுகங்களை வேறெந்த ஏடும் செய்யாத அளவுக்கு மல்லிகை செய்துள்ளது. அதே போல் வேறெந்த பத்திரிகையிலும் எழுதாத அளவுக்கு முஸ்லிம் எழுத்தாளர்கள் மல்லிகையில் எழுதியுள்ளனர்.
கலை இலக்கிய மாத இதழ் என்று அட்டையில் குறித்துக் கொண்டேதான் முதல் இதழ் வெளிவந்துள்ளது. 1966 ஆகஸ்டில் முதல் இதழ், செப்தெம்பரில் இரண்டாவது இதழ், ஒக்டோபரில் மூன்றாவது
129

Page 71
இதழ் என்று மாதம் தவறாமல் வரத் தொடங்கிய ஏடு மல்லிகை. அப்படியென்றால் 37-வது ஆண்டு மலர் எத்தனையாவது மல்லிகை என்பதை நாமே கணித்துப் பார்க்கலாம்.
மல்லிகையின் 37-வது ஆண்டுமலர் (ஜனவரி 2002) 276-வது இதழ் என்று குறிக்கின்றது.
ஆகவே, இடைக் கிடை மல்லிகையின் வெளியீட்டில் தடங்கல்கள் ஏற்பட்டிருப்பது ஊர்ஜிதமாகின்றது. இத்தடங்கல்களுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். மல்லிகை ஆசிரியரின் வெளிநாட்டுப் பயணம், இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள், இனப் போராட்டச் செயற்பாடுகள் என்று எதுவாகவும் இருக்கலாம். ஆனால், மல்லிகை அறுபட்டதில்லை.
இருந்தும் தொடர்கதை போன்ற தொடர் அம்சங்கள் மல்லிகையில் ஏனோ இடம்பெறவில்லை.
அழகு சுப்பிரமணியத்தின் "மிஸ்டர் மூன் தொடர் நாவல் - மொழி பெயர்ப்பு, ராஜழரீகாந்தன், பேராசிரியர் கைலாசபதியின் ‘நவீன இலக்கியத் திறனாய்வில் க. நா. சு.வின் பாத்திரம் - தொடர் கட்டுரை, மல்லிகை ஆசிரியர் ஜீவாவின், எழுதப் படாத கவிதைக்கு வரையப் படாத சித்திரம், சுயசரிதைத் தொடர், பேராசிரியர் நா. சுப்பிரமணியத்தின் 78-ன் பின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், தொடர் கட்டுரை, செங்கை ஆழியானின் நானும் எனது நாவல்களும் என்று ஒரு சிலரைத் தவிர. ஆகஸ்டில் ஆரம்பித்த மல்லிகை ஆரம்ப காலங்களில் தனது ஆண்டு மலர்களை ஆகஸ்டுகளிலேயே வெளியிட்டு வந்தது.
அண்மைக் காலங்களில் மல்லிகையின் ஆண்டு மலர்கள் ஜனவரியில் வெளியிடப் படுகின்றன.
மல்லிகையின் 254 -வது இதழ் (மே. 1997) கொழும்பிலிருந்து வெளிவந்த முதல் இதழாகும். அதன் தலையங்கத்தில் ஜீவா இப்படி எழுதுகின்றார்.
1995 அக்டோபர் மாதம் தான் உங்களை மல்லிகை யாழ்ப்பாணத்தில் இருந்து சந்தித்தது. கிட்டத் தட்ட ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஏறத்தாழ ஒரு முப்பதாண்டு காலம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை 1997 மேயிலிருந்து கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கியது.
மல்லிகையின் ஒவ்வொரு இதழும் ஆண்டு மலர்களும் அவை கொண்டுள்ள காலத்தோடொட்டிய இலக்கியப் படைப்புக்களுக்காக இலக்கியச் செய்திகளுக்காக, தகவல்களுக்காக கட்டுரைகளுக்காக பாதுகாத்து வைக்கப் படவேண்டியவைகளே.
130

ஒரு உதாரணத்துக்காக மல்லிகை மூன்றாவது இதழைப் பார்ப்போம். மல்லிகையின் மூன்றாவது இதழ் வேந்தனார் ஞாபகார்த்த இதழாக மலர்ந்துள்ளது.
யார் இந்த வித்வான் வேந்தனார்? ஈழத்து இலக்கியத்துக்கான அவரின் பங்களிப்பு என்ன? போன்றவைகளை அறிந்து கொள்ள, வரலாற்றில் அவை இடம்பெற அந்த இதழ் பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். அதே போல் இலங்கையர்கோன் இதழ், பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றாண்டிதழ் மலையகச் சிறப்பிதழ், முல்லைச் சிறப்பிதழ், கிளிநொச்சி மாவட்டச் சிறப்பிதழ், நீர்கொழும்புச் சிறப்பிதழ், மாத்தளை மாவட்டச் சிறப்பிதழ், திக்குவலைச் சிறப்பிதழ், பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழ், கைலாசபதி சிறப்பிதழ் என்று அத்தனையத்தனையும் வருங்கால புதிய சந்ததியினருக்கு ஒரு இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை.
நான் முன்பே கூறியது போல் மல்லிகையின் பெரும்பாலான ஆண்டு மலர்களும் விசேஷமானவை. தனித்துவமானவை. ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் மலரும் இவ்வாண்டு மலர்கள் சாதாரண மல்லிகை இதழ்களின் அளவில் கூடுதலான பக்கங்களுடன் வெளிவந்தவைகளே.
1967-ல் மல்லிகை வெளியிட்டிருந்த சோவியத் குடியரசின் யுகப் புரட்சி இதழும், 1990-ல் வெளிவந்த வெள்ளிவிழா மலரும், 2000, 2001, 2002 -ம் ஆண்டுகளின் ஜனவரியில் வெளியிடப் பட்ட 35-ம் , 36ம், 37-ம் ஆண்டு மலர்களும், 2000-ம் ஆண்டு வெளியிடப் பட்ட அவுஸ்திரேலிய மலரும் வெரிய அளவில் வெளியிடப் பட்டுள்ள மலர்களாகும்.
மல்லிகை தொடங்கி இருபது ஆண்டுகளின் பின் ஒரு இருபது வயது இளைஞனின் உத்வேகத்துடன் மல்லிகை தனது இலக்கியப் பணியின் அடுத்த கட்ட நகர்வுக்குள் பிரவேசித்தது.
அதுதான் மல்லிகைப் பந்தல் வெளியீடு. 1986-ல் மல்லிகைப் பந்தலின் முதல் நூல்வெளியாயிற்று. 35 ஈழத்து பேனா மன்னர்களைப் பற்றிய ரசமான குறிப்புக்கள் - தகவல்கள் என்னும் குறிப்புடன் அட்டைப் பட ஒவியங்கள்’ என்னும் மல்லிகைப் பந்தலின் முதல் நூல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சோமகாந்தனின் ஆகுதி’ சிறுகதைகள், வாசுதேவனின் ‘என்னில் விழும் நான் கவிதைகள், மல்லிகைக் கவிதைகள், ஆப்டீனின் ‘இரவின் ராகங்கள் சிறுகதைகள், தூண்டில் மல்லிகைக் கேள்வி பதில், சுதாராஜின் ஒருநாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள் சிறுகதைகள், என மூன்று ஆண்டுகளுக்கு ஏழு நூல்களை வெளியிட்டுக் காட்டியது மல்லிகைப் பந்தல்.
இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன் நான் மல்லிகையைத்
13

Page 72
தொடங்கிய போது என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தவர்கள் உண்டு. நான் அப்படி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. என்று மல்லிகைப் பந்தலின் முதல் நூலின் பதிப்புரையில் கூறுகின்றாா ஜிவா.
37-வது ஆண்டினையும் கடந்து மல்லிகைச் சிறப்பிதழ் வெற்றி நடைபோடுவது போல் மல்லிகைப் பந்தலும் தனது 5-வது ஆண்டில் 33 நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளது. டொமினிக் ஜீவா, சோமாகாந்தன், சுதாராஜ், ஆப்டீன், ச.முருகானந்தன், பித்தன் கதைகள், நாகேசு தர்மலிங்கம், மு.பஷர், திக்குவல்லை கமால், தெணியான், தில்லைச் சிவன், கெக்கிறாவ சஹானா, சாந்தன், முனியப்பதாசன் என்று சிறுகதைத் தொகுதிகளையும் பல்துறை நூல்களாக தேவகெளரியின் "மல்லிகை விமர்சனங்கள் மற்றும் மல்லிகை தலையங்கங்கள். எங்கள் நினைவுகளில் கைலாசபதி, செங்கை ஆழியானின் ‘நானும் எனது நாவல்களும், சிரித்திரன் சுந்தரின் 'கார்ட்டுன் ஒவிய உலகில் நான், ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல், எஸ்.வீ.தம்பையாவின் நினைவின் அலைகள் என்பவையும் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளாக வந்துள்ளன. தன்னுடைய 75 வயதிலும் ஒரு இளைஞனின் மனவேகத்துடன் இயங்கும் மல்லிகை ஜீவா அவர்களின் இலக்கிய அர்ப்பணிப்பும், இலக்கிய உழைபயும, ஜீவா என்கின்ற மனிதரின் ஒரு சில சிறு சிறுபலவீனங்களையும் மீறி மேவிப் பாராட்டப் படவும், கெளரவிக்கப் படவும் வேண்டிய உயர்ந்த பணிகளாகும். நாண் மல்லிகை வாசிப்பதில்லை. மல்லிகைக்கு எழுதுவதில்லை என்றெல்லாம் பேசுகின்ற இலக்கிய நண்பர்களை நான் கண்டிருக்கிறேன்.
எழுத்து, இலக்கியம், வாசிப்பு என்பவற்றால் இணைக்கப் பட்ட நண்பர்கள் நாங்கள்.
அவர்களுக்கு நான் சொல்வதுண்டு "மல்லிகை வாங்குவதும், மல்லிகைக்கு எழுதுவதும் உங்கள் சொந்த விஷயம் தான். ஆனால், மல்லிகை வாசிப்பதில்லை என்பதும் உங்களது சொந்த விஷயம் தானா என்பதை சற்றே ஆரஅமரச் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். முதலிரண்டினாலும் இருவருக்கும் நஷ்டமேதுமில்லை. ஆனால் மூன்றாவதால் உங்களுக்குத்தான் நஷ்டம்' என்று.
கே! ய எப் சுவாமிநதனுக் குப் பிறகு சுபமங்கள11 வம் , சிவஞானசுந்தரத்துக்குப் பிறகு சிரித்திரனும் வெளிவரமுடியாமற் போன நிலைமைகள் மல்லிகைக்கும் வந்துவிடக் கூடாது என்பதே எனது s).6J.T!
நனறி: தினகரனர் வாரமஞ்சரி. O
132

V27ܓܠ ሀ]Nለ፴በ0)d፩፱Lዘጂ∂ለቦW!
201-1/1, பூரீ கதிரேசன் வீதி, ell: 320721 கொழும்பு-13 E-Mail: panthal(Q)Sltnet. Ik வெளியீடுகள்
பித்தன் கதைகள் - (சிறுகதைத் தொகுதி) - கே.எம்.எம்.ஷா
மல்லிகை முகங்கள் - டொமினிக் ஜீவா (85 தகைமை சான்றவர்களின் அட்டைப்படத் தகவல்கள்)
3. அந்நியம் - (சிறுகதைத் தொகுதி) - நாகேசு. தர்மலிங்கம்
தலைப் பூக்கள் - டொமினிக் ஜீவா (55 மல்லிகைத் தலையங்கங்களின் தொகுப்பு நூல்) விடை பிழைத்த கணக்கு - திக்குவல்லை கமால் - (சிறுகதைத் தொகுதி) மாத்து வேட்டி - (சிறுகதைத் தொகுதி) - தெணியான அநுபவமுத்திரைகள் - டொமினிக் ஜீவா - (வாழ்க்கை அநுபவங்களின் தொகுப்பு) ஈழத்திலிருந்து ஒா இலக்கியக் குரல் (பல்வேறு பேட்டிகள்) – 6lul/rtBAofaö ağa6au/K
மீறல்கள் - மு. பஷீர் - (சிறுகதைத் தொகுதி)
. எங்கள் நினைவுகளில் கைலாசபதி - டொமினிக் ஜீவா
(தொகுப்பு நூல்) எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் - ம. தேவகௌரி (விமர்சன நூல்)
டொமினிக் ஜீவா - சிறுகதைகள் (தேர்ந்தெடுக்கப் பெற்ற 50 சிறுகதைகளின் தொகுப்பு)
. ஒரு தேவதைக் கனவு
flap 3,605; Gigits) - clasödsyssey Asa's stats
pi குதி)
. 86u - (சிறுகதைத் தொகுதி) - முல்லையூரான்

Page 73
15. உணர்வின் நிழல்கள்
(சிறுகதைத் தொகுதி) - யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 16. தூண்டில் - (கேள்வி - பதில்) - டொமினிக் ஜீவா 11. அந்தக் காலக் கதைகள் - (நடைச் சித்திரம்) - தில்லைச் சிவன் 18. டொமினிக் ஜீவா கருத்துக் கோவை19. பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் - (தொகுப்பு நூல்) 20. முன்னுரைகள் - சில பதிப்புரைகள் - டொமினிக் ஜீவா 2. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
(சுயவரலாறு 2ம் பதிப்பு) - ólu-ubafá a3ajt 22. நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழியான் 23. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - சிரித்திரன் சுந்தர்' 24.எழுதப்பட்ட அத்தியாயங்கள் - சாந்தண்
5. கிழக்கிலங்கைக் கிராமியம்
(நாட்டார். இயல்) - நமீஸ் அப்துல்லாஐந்
26. மண்ணின் மலர்கள் - (18 யாழ் பல்கலைக் கழக மாணவர் சிறுகதைகள்) 21 முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் .
(ஐரோப்பியப் பிரயாணக் கட்டுரை.) -ollívubafái a3ay(v 28. மல்லிகை ஜீவா - மணிவிழா மலர் 29. நினைவின் அலைகள் - எஸ்.வீதம்பையா
(தன வரலாறறு நூல) 30. இப்படியும் ஒருவன் - (சிறுகதைத் தொகுதி) - மா. பாலசிங்கம் 31. மனசின் பிடிக்குள் - (ஹைக்கூக் கவிதைகள்) - பாAரஞ்சனி 32 பாட்டி சொன்ன கதைகள் - (சிறுவர் இலக்கியம்) - முருகபூ பத 33. முனியப்பதாசன் கதைகள் - 34. மல்லிகைச் சிறுகதைகள் - தொகுப்பு செங்கை ஆழியானர்
35. நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு:
சிடாமினிக் ஜீவா
36. கூடில்லாத நத்தைகளும்
ஒடில்லாத ஆமைகளும் - சிசங்கை ஆழியான்.
3l dse-Hü"L6UDLÜ LULIÈĴé956.ir - olulAruĉa faš aĝa2u/w - (கட்டுரைத் தொகுதி)

ஒரு தொடர் அநுபவப் பார்வை
-டொமினிக் ஜீல
இலக்கியச் சிற்றேடொன்றை ஆரம்பிப்பதும். பின்னர் தொடர்ந்ததை வெளிக் கொணர்வதுமான சிரமத்தை அந்த இலக்கியச் சிற்றேட்டை நடத்துபவர்களே பூரணமாக உணர்ந்து கொள்வார்கள்.
போதிய பண வசதி இருக்கலாம். சொந்தமான அச்சக வாய்ப்பு வசதிகள் கூடக் கைவசம் வைத்திருக்கலாம் பக்கம் பக்கமாகத் துணைக்கு ஆட்பலமும் இருக்கலாம்.
இவைகள் அத்தனையும் ஒருங்கு சேர இருந்த போதிலும் கூட. ஓர் இலக்கிய ஏட்டைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்து விட இயலாது. அதற்குப் போதியளவு மண்ணில் விழைந்த மக்களைப் பற்றிய நுண்ணறிவு தேவை. அவர்களது விருப்பு வெறுப்புக்கள். மனோதர்மங்கள். அபிலாஷைகளை நன்கு தெரிந்த விசாலமான மனப்பக்குவம் வேண்டும் அர்ப்பணிப்பு. உழைப்பும், மன ஓர்மம் மிக்க சகிப்புத் தன்மை மிகுதியாகத் தேவைப்படும்
நமது நாட்டில் - நமது நாட்டில் மாத்திரமல்ல. தமிழக மண்ணிலும் கூட. வெகுசன மக்களால் அங்கீகரிக்கப் பெற்ற பிரபல எழுத்தாளர்களில் பலர் கடந்த காலங்களில் பல் வேறு மாவட்டங்களில் பலப் பல வடிவங்களில் பல்வேறு நாமங்களுடன் சிற்றேடுகளை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்த எத்தனித்து வந்துள்ளனர்.
இவைகள் அனைத்துமே பலவித உள்ளடக்கங்களுடன் பல வடிவ அமைப்புக்களுடன் வெளிவந்த சஞ்சிகைகள் தான்.
ஆனால். இவைகள் அத்தனையுமே தொடர்ந்து நின்று நிலைக்க இயலவில்லையே!
காரணம் மீளாய்வுக்குரியது.
இலட்சக்கணக்கில் எனச் சொல்லிக் கொள்வது மிகைப் படுத்திச் சொல்வதாகக் கூட இருக்கலாம். ஆனால், சில ஆயிரக் கணக்கான தரமான இலக்கியச் சுவைஞர்கள் இந்த மண்ணில் இல்லாமல் இல்லை.
135

Page 74
அறுபது எழுபதுகளை விட, சென்ற நூற்றாண்டின் கடைசிக் கால கட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வோமானால், இன்று இலக்கியச் சுவைதேடும். தேடல் முயற்சியில் தம்மை அர்ப்பணித்து ஈடுபட்டு இயங்கிவரும் தரமான இலக்கியச் சுவைஞர்கள் பலர் பரந்து பட்டுக் காணப்படுகின்றனர்.
"தொலைக்காட்சி வந்தது. வாசிக்கும் பழக்கத்தை ரொம்பவும் மட்டுப் படுத்தி, சீர்குலைத்து விட்டது! எனப் பரவலாகத் தவறாகக் கணிப்பிட்டுப் பேசப் பட்டு வந்துள்ளது.
ஆனால், ஆய்வுகள் இந்தக் கருத்தைப் பொய்ப்பிக்கின்றன. ஆய்வின் முடிவுகள் இத்தகைய கருத்துக்களை முற்றாக நிராகரிக்கின்றன.
சமீபத்தில் நடந்த ஆய்வின்படி இன்று தமிழ் நூல்களின் வரவும் தரமும் வேறெந்தக் காலங்களையும் விட, அதிகரித்தது மாத்திரமல்ல, வெளியீட்டாளர்களை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்திற்கும் உட்படுத்தியிருக்கின்றது. விற்பனவுச் சந்தை உயர்ந்துள்ளது.
இப்படியான யதார்த்த நிலையைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் இந்தப் பரந்து பட்ட தரமான வாசகர் வட்டத்தை நம்மில் பலர் சரியாக இனங் கண்டு கொள்ளவில்லை என்பதே சரியான கணிப்பீடாகும். இதைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் தான். பலர் தமது சிற்றேடுகளைத் தொடர்ந்து நடத்தி வரும் முயற்சியில் தோற்றுப் போய் விட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. இதன் அடிப்படையிலேயே நோக்கினால் இவர்களது அயராத உழைப்பினால் வெளியாகி வந்த ஆரோக்கியமான உள்ளடக்கங்களைக் கொண்ட சிற்கேடுகளும் நின்று நிலைத்தன. பின்னர் இயல்பாகவே இளம் பிள்ளை வாத நோய்க்கு உட்பட்டு வயசு வருவதற்கு முன்னரே மரித்துப் போய் மறைந்து விட்டன.
காரணம், சிற்றிலக்கிய வெளியீட்டாளர்கள் மக்களிடம் வேர் பாய்ச்சி இந்த மண்ணில் சிக்காராக நிமிர்ந்து நிற்கவில்லை என்பதே சரியான கணிப்பாகும். இவர்கள் தெருவிலிறங்கி மக்களிடம் செல்லவில்லை.
நானறிந்த யாழ்ப்பாண நகரில் பெரிய கடைப் பகுதி என அழைக்கப்படும் பஜார் ஏரியாவில் தெருத் தெருவாக வாகனத்தில் பாதசாரிகளுக்கு மத்தியில் சிகரெட்டுக்களை வீதியின் இருமருங்கும் வீசிச் செல்வார்கள். கொழும்புப் பிரபல சிகரெட் கம்பெனிகள். அதே போல தேயிலைக்குப் பெயர் போன நாடு சிலோன். இதே கால கட்டத்திற்குச் சற்று முன், பின்னாகக் கூட இருக்கலாம். தேநீரை முறையாகத் தயாரித்து கடைத் தெருவிலுள்ள கடை ஊழியர்களுக்குச் சுடச் சுட தேநீரைத் இலவசமாகத் தினசரி விநியோகித்து வந்துள்ளன. சில மலையத்துத் தேயிலைக் கம்பெனிகள்.
அந்தச் சிகரெட்டுகளில் சிலவற்றை நானும் பொறுக்கியிருக்கிறேன். அந்தத் தேநீரையும் சுடச் சுட நான் அருந்தி மகிழ்ந்திருக்கிறேன்.
அந்தக் காலத்து யாழ்ப்பாணத்துப் பெரிசுகள் தீவிரமான சுருட்டுக்
136

குடிமன்னர்கள். இந்தச் சுருட்டுப் பிடிக்கும் தொடர் வழக்கத்தை மாற்றித் தமது சிகரட்டுக்கு மார்க்கெட்டுத் தேடுவதற்காகச் சிகரட் கம்பெனிகள் கையாண்ட வியாபார உத்தி முறைகளை அவதானித்துள்ளேன். எனது இளம் வயசில் எனது மனசில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டேன்.
எந்தத் தொழிலும் வேர் பாய்ச்சி வளர அர்ப்பணிப்பு உழைப்பு வேண்டும் அதிலும் இலக்கிய முன் முயற்சிகளுக்கு இடையறாத உழைப்பும் மக்கள் தொடர்பும் அதிகமதிகமாகத் தேவைப்படும். W
இதில் எழுத்து செல்லப்பா குறிப்பிடக் கூடியவர். அவர் தனது எழுத்துச் சஞ்சிகையை அல்ல. தனது பிரசுர நூல்களைத் தோளில் சுமந்த வண்ணம் கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கி விற்று வந்தவர்.
நானோ சஞ்சிகையை வீதி வீதியாகச் சென்று தனித் தனியாக மக்களை இனங்கண்டு தெருவில் வைத்தே இலக்கிய வியாபாரம் செய்து மக்களின் மனோபாவத்தைக் கற்றுத் தெளிந்தவன்.
நான் வெறும் சஞ்சிகை வெளியிடுபவனாக இருந்து நூல் வெளியீட்டாளனாக பின்னர் மலர்ந்தவன். பலர் சஞ்சிகை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு தோற்றுப் போய் மக்களைக் குறை கூறித் திரிந்த வேளையில், நான் வெற்றிகரமாகத் தெருத்தெருவாகச் சுற்றி வியாபாரம் செய்து வெற்றி பெற்றதையடுத்து அடுத்த கட்ட நகர்வாக மல்லிகைப் பந்தல் பிரசுர நிறுவனத்தை மகிழ்ச்சிகரமாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருபவன்.
இதிலும் எனக்கோர் பெரிய அநுபவம்.
யாழ்ப்பாணத்திலிருந்து சகலவற்றையும் இழந்து 360 ரூபாய் காசுடனும் இரண்டு சோடி உடுப்புகளுடனும் கொழும்பில் காலடி வைத்தேன்.
1996-ம் ஆண்டு ஜூன் மாசம்.
நல்ல வேளையாக நான் முன்னரே புத்தகமாகத் தயாரித்த மல்லிகை முகங்கள்’ நூலுருவில் என் கைவசம் கிடைக்கப் பெற்றது.
இந்தப் புத்தகத்தைத் தினசரி தெருத் தெருவாக விற்றுத் தான் எனது ஒரு நாள் சீவியம் நடந்தேறி வந்தது. ஒரு நாள் நண்பர் ஒருவரிடம் ஒரு பிரதியைக் கொடுத்து. வெள்ளவத்தையிலுள்ள நான் மதிக்கும் விமரிசன கல்விப் பிரமுகரிடம் நூறு ரூபாவை அவரிடம் வாங்கி வரும்படி அவரிடம் கேட்டுக கொண்டேன். அதன் விலை 120/- நண்பருக்காக நான் விலை குறைத்துக் கடிதம் கொடுத்து விட்டேன். நண்பரின் பணத்தை எதிர்பார்த்திருந்தேன்
வறுமையின் உச்ச நிலையில் நான். தினசரி மத்தியானம் சோறு சாப்பிடுவதற்குத் தான் இந்தப் பணம் பயன் பட்டது. அதுதான் அன்றைய
என் நிலை தினசரி புத்தகம் விற்றுத் தான் வயிற்றுப் பசிபூேத்துதித்திக்

Page 75
இன்று வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பணம் இன்னமும் என் கைக்கு வந்த பாடாகத் தெரியவில்லை.
இன்னுமொரு சுவையான இலக்கிய அநுபவம் எனக்கு ஏற்பட்டது. மல்லிகைக் காரியாலயம் கொழும்பில் இயங்கத் தொடங்கிய காலமது. நான் கொழும்பு செட்டித் தெருவால் நடந்துபோய்க் கொண்டிருக்கிறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒய்வு நாள். என் அருகே ஒரு பெரிய படகுக் கார் ஊர்ந்து ஊர்ந்து வந்து நின்றது. உள்ளே எம்.ஜி.ஆர் பாணியில் கரம் கூப்பி வணங்கிக் கொண்டு. கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் சிரித்துக் கொண்டே சைகை காட்டினார்.
எனக்கோ அதிசயம் என்னை நோக்கிக் கொழும்பில் படகுக் காரில் கை கூப்பி வணங்குகிறாரே என்ற அதிர்ச்சி வேறு யாராக இருக்கம் இவர்? இவர் ஞாபகத்தில் தட்டுப்படவில்லை.
கார்க் கதவு திறக்கப் பட்டது. கறுப்புக் கண்ணாடி கழற்றப்பட்டது. ஒ இவரா? என்றது என் உள் மனம் ஒரு காலத்து மேடைப் பேச்சாளப் பிரமுகர். கலாசார உயர் மட்டப் பதவி வகித்தவர். அரசியல்வாதி
"ஜீவா நாளைக்கு நான் மலேசியா போறன் கண்டது மெத்தச் சந்தோஷம் உம்மைப் பற்றிப் பேப்பரிலை படிச்சனான். ஏறும் காரிலை. உம்மிட கந்தோர் எங்கை இருக்கு? வாரும் நீர் போட்ட எல்லாப் புத்தகமும் எனக்கு அவசியம் தேவை. மல்லிகை மலர்களும் முக்கியம் தேவை. வாரும். வாரும்."
எனக்கோ மனம் கொள்ளாத சந்தோஷம்! அவரைக் காரில் இருக்க வைத்து விட்டு மல்லிகைக்குச் சென்று மாடியேறி என்னால் வெளியிடப் பெற்ற அத்தனை நூல்களின் ஒவ்வொரு பிரதியையும் சேர்த்தெடுத்து இரண்டு பார்சலாகக் கட்டி பில்லின் படி 4331/= ரூபா பணத் தொகையையும் போட்டு. இரண்டு பொதிகளையும் சிரமப் பட்டுத் தூக்கிச் சுமந்து காரடிக்குக் கொண்டு வந்து சேர்ந்துப் பெருமூச்சு விட்டேன். இரண்டு பொதிகளும் க்ார் டிக்கிக்குள் அடைக்கலமாகின. பில்லைக் கொடுத்தேன். அந்தப் பிரமுகர் ஒரு தடவை அலட்சியமாக அதைப் பாாத்துவிட்டு. "ஜிவா! நான் நாளைக் காலை மலேசியா போறன். அங்கை உனக்கு அவசியம் ஒரு மார்க்கெட் பிடிச்சுத் தாறன். இந்தப் பில்லுக்குரிய பணத்தை நான் மலேசிய வெள்ளியில் உனக்குக் கிடைக்கக் கூடியதாகச் சீக்கிரம் அனுப்பி வைக்கிறன்!”
படகுக்கார் புறப்பட்டு விட்டது. நான் எனது உழைப்பில் மலர்ந்த பூக்களின் விலைக்கான பணம் வரும் வரும் என இன்றுவரையும் காவலிருக்கிறேன். காத்திருக்கிறேன்
இப்படியாகச் சஞ்சிகை அநுபவங்களல்ல, புத்தக வெளியீடு அநுபவங்களும் இன்று என் நெஞ்சில் நிறைந்துள்ளன. நிழலாடுகின்றன.
3S


Page 76


Page 77
அந்தக்கத்தில் அதிர்விக்ந்
இத்தேர்ந்திரான்பு : ஆசிரியரிடம் நிறைந்து காண்ட்வின் ஆவர்.அந்த இாகப்படுத்தி வந்த ராபர் தோல் சிக்கிருன்தடுத் தயாராகிக் காண்டிருக்கிறார்
ஜீதை ஆசிரியர்
I
SEN555-1
99.55 Sil 523
 

,
A
,
(
|
“