கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவலைகள்

Page 1


Page 2


Page 3

owanaoayan
مفهوم به عمل. به گ
فكلم بها وؤك
32/9 ஆற்காடு சாலை சென்னை 24 தமிழ்நாடு இந்தியா

Page 4
Nithria ( Books
ISBN 1876626 21 6
Apart from any fair dealing for the purpose of Private Study, Research, Criticism or Review as Pemitted under the Copyright Act, No part may by reproduced, stored in a retrieval system, or transmitted, in any form or any means, electronic, mechanical or photocopying, recording or otherwise without prior written permission from the publishers.
Mithra Publication books are published by
Dr Pon Anura
C) K.G. Mahadeva
Publication Editor Espo
NENAIVALAIKAL Autobiography of a Journalist
By K.G. Mahadeva
Mithra Books First Edition
22 November 2003
Illustrated by Ilangainathan
fr్క も°/。X/*
\, wa *A* Mihra Arts and Creations
123 MUNRO STREET 375/8-0ARCOT ROAD EASTWOOD 222 AUSTRALIA 30 WANNAH STREET CHENNAI 600 024 INDA
Ph: (O2) 9868 2567 BATTICALOA (EP) Ph: (044) 23723182 e-mail: www.anuraatmatra.com.au SRI LANKA e-mail: www.mithragmd4.com.in
Fax: (02)986842.05 Fax ; 009[-44-24721336
மித்ர 78 முதற் பதிப்பு : 22 நவம்பர் 2003
விலை : ரூ. 70.00 பக்கங்கள் : 232
 
 

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியினால், ஈழத்தை விட்டு வெளியேறி தமிழகத்தில் கால் ஊன்றியதும், ‘எழுதவேண்டும்’ என்று கனவுகண்டேன். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ‘எழுதியே ஆகவேண்டும்’ என்ற வைராக்கியம் வந்தது. அதுவும், எனக்கு சென்னை அப்பல்லோ வைத்தியமனையில் ‘பைபாஸ்’ இருதய அறுவை சிகிச்சை செய்த உடனேயே!
வெறும் ‘பாஸ்போர்ட்', குடும்பத்துடன் நாடு விட்டு நாடு வந்ததால், குறிப்புகள் எதுவும் எழுத்தில் இருக்கவில்லை. கையில் பேனா, மனதில் பசுமையான நினைவுகள் - 'கம்ப்யூட்டர்’ வடிவில் மலர்ந்தன.
'நாலு நண்பர்களுடன் தொடர்பு கொண்டு வரலாற்றுச் செய்திகளை ஊர்ஜிதப்படுத்தி, கையில் கிடைத்த அந்தச் சில புகைப்படங்களுடன் இந்நூல் தயாரானது என்றால், நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

Page 5
படிக்கும்போதே, எழுத வேண்டும் என்று ஆசைப் பட்டேன். கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது. எழுத்து ஓங்கியது.
எனது இந்த ‘நினைவலைகள்’ நூல்; கட்டுரை மாதிரி ஆரம்பித்து, கதையாக மாறி, வாழ்க்கையாக முற்றுப் பெறுகிறது.
எனது முப்பது ஆண்டு பத்திரிகையாளனின் வாழ்க்கையில்தான் எத்தனை முயற்சிகள், சோதனைகள், ஆபத்துகள், சந்திப்புகள், பிரயாணங்கள்.
எல்லா நதிகளும் கடலில்தானே சங்கமமாகின்றன. கடலிலாவது ஆழம் தெரியும். ஆனால் மனசின் ஆழம்! கடலின் அலைகள் ஒய்வதில்லை. இது போலத்தான் நினைவலைகளும்! மன ஆசைகள், மண்ணிலிருந்து விண்ணுக்கும், விண்ணிலிருந்து மண்ணுக்குமாக 'நீச்சலடிக்கும்'; நிறைவு பெறாது. இதுமாதிரி பத்திரிகையாளன் வாழ்க்கையும் சுகமான சுமை கொண்டது. அதனை அனுபவித்து உயர்ந்து கொண்டே போவான். ஆனாலும் மூச்சு உள்ளவரை முடிவு இருக்காது.
எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் - சம்பவங்கள் - சந்திப்புகள் - சந்தோஷங்களை சுருக்கமாக, சுவைபடக் கூற முயற்சித்துள்ளேன். என்னுடன் நெருக்கமாக பழகியவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து என்னைப் பற்றியக் கதையுடன் அவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
‘ஈழநாடு’ ஒரு சகாப்தம். வரலாறு கண்டது. நல்ல தமிழ்ப் பெரியவர்களால், ஒரு நீண்டகால தொலை நோக்குடன் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய நாளிதழ். தமிழர்களுக்காக, தமிழர்களிால், தமிழ்ப் பகுதியில்
iv

ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்த முடியும் என்று ‘கே.சி. சகோதரர்களினால் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட விஷப்பரீட்சை
எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தத் தூய பணி, துணிச்சலுடன் நிறைவேற்றப்பட்டு, தமிழ் மக்களின் ஒட்டு மொத்த ஆதரவும் பாராட்டும் பெற்றது ‘ஈழநாடு’.
நான் இன்று கூறும் நிஜக்கதைக்கு அடித்தளமிட்டது ‘ஈழநாடு’தான். பல சாதனையாளர்களை உருவாக்கி சரித்திரம் படைத்த யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பற்றி நான் எழுத வேண்டியது எனது கடமை. பல உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும்; அனுபவங்கள் பேசப்படவேண்டும்; சாதனைகள் போற்றப்படவேண்டும்.
1958-ல் олтДг ஏடTக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 1961ல் தினசரியாக மலர்ந்து, வடக்கில் மட்டுமல்ல, ஈழத்தின் நாலா திசைகளிலும் தனது தேசிய செய்திச் சேவையுடன், கட்டுக்கோப்பு குலையாமல் கம்பீரமாக நடமாடிய ‘ஈழநாடு’ தனது முப்பத்து மூன்று வயதுக்குப் பின்னர், நாட்டு நடப்பால் நிலைமாறி, நான்கு முனைச் செய்திகளையும் வெளியிட்ட திசைமாறி, அச்சகமே இடம் விட்டு இடம்மாறி, சோதனைக் குள்ளானது! பயணத்தை நிறுத்திக் கொண்டது!
நாட்டின் நாலா பக்கங்களிலுமிருந்து செய்திகளைப் பெற்று ஜீரணித்த ‘ஈழநாடு' அச்சகமே, வடக்கின் சில பகுதிகளுக்கு இடம்மாற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கூடவே, ஊழியர்களும் மாற்றலாகினர்.
1990 ஆரம்பத்திலேயே முதலில் சாவகச்சேரிக்கும், அடுத்து முருகண்டிக்கும், பின்னர் புதுக்குடியிருப்புக்கும்

Page 6
அலைந்து, அவ்வப் பகுதிகளிலிருந்து ‘ஈழநாடு’ பிரசவமாயிற்று. ஆனாலும், சில வருடங்களே தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆசிரியர் பகுதி, அச்சகப் பகுதிகளின் முக்கிய ஊழியர்கள் வேறு பத்திரிகைகளை நாடவே, யாழ் ‘ஈழநாடு’ம் தனது ‘கதை’யை முடித்துக் கொண்டது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, இல. 63, சிவன் கோவில் மேற்கு வீதியிலிருந்து வெளிவந்து ஆட்சிபுரிந்த ‘ஈழநாடு’ நின்று போனாலும், அதன் பெயரில் அக்கறைகொண்ட சிலரின் முயற்சியால் ஈழத்திலும், ஐரோப்பாவிலும் தினசரியாக இன்று ‘ஈழநாடு’ வெளி யாகிக்கொண்டிருப்பது ஆறுதலளிக்கிறது.
பதினொரு வயதில் எனக்கு எழுத்துப்பசி ஏற்பட்ட போது ‘தீனி’ போட்டது யாழ்ப்பாணம், சுன்னாகத் திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழகேசரி’ வார இதழ். இதன் ஆசிரியர் திரு. இராஜ அரியரத்தினம் எனக்கு களம் அமைத்துக் கொடுத்தார். எனது சிறிய தந்தை மகாவித்துவான் வி.சீ. கந்தையாவின் எழுத்தார்வம் எனக்கு உற்சாகமூட்டியது. குருவாக செயல்பட்டார்.
இருபத்தொரு வயதில் ‘ஈழநாடு’வில் சேர்ந்தேன். இருப்பத்தேழு வயதில் மலையகத் தலைநகர் கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘செய்தி” வார இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, சில ஆண்டுகளில் மீண்டும் ‘ஈழநாடு’ வில் சேர்ந்தேன். நான் ‘ஈழநாடு'வில் செய்தி ஆசிரியரானதும், அந்த 1970களுக்குப் பின்னர் எத்தனையோ அனுபவங்கள்! ‘ஈழநாடு’ பிறந்து, வளர்ந்த கதையை சொல்ல முற்பட்டிருக்கின்றேன்.
பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் மட்டுமல்ல பட்டி தொட்டி எல்லாம், எல்லா மட்டத்திலும் ‘ஈழநாடு’
vi

அன்று கொடிகட்டிப் பறந்தது. தரம், நாணயம், நம்பிக்கை, உண்மை, பக்தி என்று எல்லாவற்றையும் ‘ஈழநாடு’ பிரதிபலித்தது. அது ஒரு வசந்தகாலம். நினைவில் நிலிைத்ததை எல்லாம் உங்களுடன் பகிர்ந்தளிக்க முயற்சித்துள்ளேன்.
எனது இந்த நூல், நான்கு பாகங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
முதலில் எனது அனுபவம். இரண்டாவது, நான் எதிர்நோக்கிய பல சம்பவங்கள். மூன்றாவது சில சந்திப்புகள். நான்காவது, எனது ‘பார்வையைச் சற்று பரவலாக்கிய “செய்தி அனுபவங்கள். எல்லாவற்றையும், சுவைகுன்றாமல் எழுதுகின்றேன். உண்மைகள் மறைக்கப்படக்கூடாது.
‘ஈழநாடு’வில் நான் பணியாற்றிய காலத்தில் பத்திரிகை நட்பு ஏற்பட்ட சில ஈழத்து தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழக தமிழ்ப் பிரமுகர்கள் பற்றிய அனுபவங்களை ‘சூடாக’ 6T(Լք:5, நாட்டு நடப்பு சட்டங்களினால் சுயதணிக்கை elp6)b ‘கட்டு’ப் போட்டுள்ளேன் என்பதையும் குறிப்பிடவிரும்புகின்றேன்.
இந்நூல் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் துணையாக இருந்தவள் - நான் மறந்து போன அந்த நாட்களை, சம்பவங்களை அச்சுப்பிசகாமல் நினைவூட்டியவள் என் துணைவியார். இதற்குப் பக்கபலமாக எனது முயற்சி திருவினையாவதற்கு ஊக்கமும், உதவியுமளித்த எங்களின் மக்கள் - மருமக்கள்; மோகன் - சாந்தா, திருத்தணி கேஸ்வரன் - சந்திரிகா, புவனச்சந்திரன் - கோவதனி, ஞானக்குமார் - வினோதினி, ராஜேந்திரன் - வியாழினி, ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
vii

Page 7
இந்நூல், குறிப்பிட்ட குறுகிய காலத்தில் வெளிவர பலவகையிலும் ஒத்துழைப்பும் யோசனையும் நல்கி, “பொன்னுரை' வழங்கிய ஈழத்தின் பெரும் படைப்பாளி, ஆர்வலர் ‘எஸ்.பொ’ அவர்களுக்கும் அவரது ‘மித்ர' வெளியீட்டாளர்களுக்கும், எனது நூலின் வெற்றிக்கு பெரிதும் துணையாக நின்ற எனது இனிய சகோதரர் ஒவியர் - நடிகர் திரு.சி. இலங்கைநாதன் அவர்களுக்கும் எனது சக பத்திரிகையாளர் திரு ஏ.வி. மாணிக்கத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
*சுப்ரபாதம்” Cمطن 奴 Gവa 5, 8வது குறுக்குத் தெரு, திருநகர், கருமண்டபம்,
திருச்சி - 620 001 தமிழ்நாடு.
viii

என்னை ஈன்றெடுத்து මෑඹීර් (DරණීI@C)ශීඝ්‍ර ථ|Iżldpආlb6\dłlඊ என் அம்மா-ஐயா திருமதி கனகம்மா-க.ஞானசெல்லம் அவர்களுக்கும் எனக்கு எழுத்துப்பசி ஏற்படுத்திய எனது அருமை சின்னம்மா க. கங்கேஸ்வரி சிறிய தந்தை வி.சீகந்தையா ඌ|6කiffඝලlbණිගlb சிரம் தாழ்த்தி இந்நூலை
ணிக்கையாக்குகின்றேன்

Page 8
எங்கள் வம்ச குல விளக்குகளாக மிளிரும் (8.Jග්r-(3uගීතීඝAlbණීභී
இந்நூல்
UGDLULJổd

முன்னிடு
ரிழத் தமிழர் வாழ்க்கையில், மிக முக்கியமான வரலாற்று நாள் 1983, கறுத்த யூலை தினம். அஃது எழுப்பும் சோக நினைவலைகள் அநந்தம். சாம்பலிலிருந்து மீள உயிர்க்கும் பீனிக்ஸ் பறவை போல, தமிழர் உணர்வும் சுதந்திர தாகமும் மறுமூர்க்கம் பெறும் என்பதை எண் பிக்கும் வாய்பினைத் தந்ததும் அந்தக் கறுத்தத் தினமே! அது சடுதியாக ஏற்பட்ட சிங்கள இனத்தின் ஆத்திரங் களுடைய விளைவு அல்ல. திட்டமிட்டு, தர்மிஷ்ட ஜெய வர்த்தன அரசினால் ஊக்குவிக்கப்பட்ட அரச பயங்கர வாதத்தின் ஒரு கோரமுகம் என அஃது அடையாளம் படுத்தப்படுதல் வேண்டும்.
இதற்கான அடித்தளம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாளன்று இடப்பட்டது என்பதைச்
சான்றாதாரங்களுடன் முன் வைக்கின்றது கேஜி மகாதேவா
xi

Page 9
வின் நினைவலைகள் என்னும் இந்நூல். இந்த நாளும் ஈழத்தமிழர் வாழ்வில் ஒரு கறுப்பு நாளே. இந்தத் தினத் லே அரசின் இரு சிரேஷ்ட அமைச்சர்களான காமினி திஸநாயக்கவும் சிரில் மத்தியூவும் யாழ்ப்பாணத்திலே நின்றமை தற்செயலல்ல.
இந்த ஒரே நாளில், கிழக்காசியாவிலேயே அதிக தமிழ் நூல்களைச் சேமித்து வைத்திருந்த யாழ் நூல் நிலையம் அரசு ஏவிய இராணுவத்தினரால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. அவ்வாறே ஈழத் தமிழ் மண்ணிலே, தமிழர் உணர்வுகளைப் பிரதிபலித்து வெளிவந்து கொண் டிருந்த முதலாவது தினசரியான ஈழநாடும் எரிக்கப்பட்டது. யாழ்நூலகமும், ஈழநாடும் தமிழர்களுடைய அறிவு முயற்சிகளின் கோயில்களாக எழுந்து நிற்பதை, இனவாதத் தீயை வளர்த்துக் கொண்டிருந்த அரசினாலே பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எனவே. மீண்டும் ஒரு லங்கா தகனம்.
யாழ்நூல் நிலையத்தின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும் பற்றிய ஆவணம் ஒன்றினை மூதறிஞர் க.சி. குலரத்தினம் எழுதியுள்ளார். இப்பொழுது, ஆறு ஆண்டுகள் கழித்து, ஈழநாடு எரியுண்ட கதை இந்த நூல் மூலம் பிரசித்தமாகின்றது.
ஈழநாடுவின் கதை - அதன் எழுச்சியும் வீழ்ச்சியும் - இதுவரை ஒரு தனிநூலாக ஆவணப்படுத்தப்பட
xii

வில்லை. ஈழத்துத் தமிழரின் தனித்துவமான கலாசார வெளிப்பாடுகளின் அடையாளமாக ஈழநாடு வெளி வந்தது. கொழும்பின் ஆதிக்கத்திலிருந்து, தமிழர் தரிசனத் தினைத் தனித்துவப்படுத்தும் சுதந்திரத்தின் குறியீடாகவும் அது வெளிவந்து கொண்டிருந்தது. காலத்தின் தேவை யாக, பிரக்ஞையின்றியே, தமிழர் தேசியத்தின் குரலாக அது ஒலித்தல் நியதியாயிற்று. அந்தக் குரலை ஒலிக்காது செய்த அரச எத்தனைங்களை ஆவணப்படும் முதலாவது நூலாக நினைவலைகள் அமைந்துள்ளது. தமிழர் தேசியம் எத்தனை அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று வீறு கொண்டு எழுந்துள்ளது என்பது பற்றிய அறிவினை வளர்க்கும் ஆவணங்களுள் முக்கியமான ஒன்றாக இஃது அமைகின்றது.
இந்த ஆவணத்தினை எழுதுவதற்கு முழுத்தகைமை பெற்றவர் கே.ஜி.மகாதேவா. மிக இளவயதிலேயே பத்திரி கைத் துறையைத் தமது பணியாகவும் ஊழியமாகவும் தைரியத்துடன் தேர்ந்தெடுத்தார். அத்துறையிலிருந்து தம்மை அந்நியப்படுத்தாத ஒரு வாழ்க்கையைத் தொடர் கின்றார். ஈழநாடு சந்தித்த பல நெருக்கடிகளிலும் அவர் ஈழநாடுவின் செய்தி பிரிவில் பணியாற்றியுள்ளார். அவர் எழுத்துப் பணி முழுவதும், பத்திரிகைத் தமிழுடன் பின்னிப் பிணைந்துள்ளது. செய்திகளை வாசகர் முன்
வைக்கும் எளிய இலகு தமிழ் அவருக்கு
xiii

Page 10
வாலாயமாயிற்று. அந்தத் தமிழிலேயே இந்த ஆவணம் நிகழ்ந்துள்ளது.
மீன்பாடும் தேனாடு தந்த பத்திரிகையாளர்களிலே, தன்னை வளர்த்த பத்திரிகையின் வரலாற்றினைப் பொறுப் புணர்ச்சியுடன் ஆவணப்படுத்தியுள்ளார். இதனால் ஈழத்துப் பத்திரிகையாளருள் ஒரு முன்மாதிரியாகவும் நிமிர்ந்து புகழ் பெறுகின்றார். ஈழநாடுவைப் போலவே, அவர் மட்டக்களப்பு வித்துவ சரிதையின் உபாசகராயும் வாழ்தலையும் இந்நூல் ஆவணப்படுத்துகின்றது.
அவருடைய இந்நூலினை தமிழ்கூறும் நல்லுலகம் உவகையுடன் ஏற்கும் என நம்புகின்றேன்.
1/727, Ž3A4rd/ iPad, Cls. Cum 2727/kک// ص42
ddia/.
fet /Wolveará er 2003
xiv

உள்ளுறை
எனது அனுபவம்
அடிகளரை சிரம் தாழ்த்தி. பதினொரு வயதில் எழுத்தார்வம் வித்துவான் வி.சீ. கந்தையா - கங்கேஸ்வரி 21 வயதில் ‘ஈழநாடு’ பிரவேசம் ‘ஈழநாடு ஸ்தாபகர்கள் ‘ஈழநாடு’ பிறந்த வளர்ந்த கதை யோகசுவாமிகள் ஆசி ஆசிரியர் ஹரன் எனது முதல்பக்க தலைப்புச் செய்தி பேனா நட்புத் திருமணம் ஐம்பது ரூபாய் சம்பளம் எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு ‘ஈழநாடு’ சூறாவளி நிவாரணம் தோளில் சுமந்து ‘ஈழநாடு விற்பனை “சற்றடே றிவியூ சர்வதேச செய்தி நிறுவனங்களுடன் மூன்றிலேயே வளையும் குழந்தைகள்
16
18
19
22
32
33
35
47
39
51
49
53

Page 11
LIT95) : 2 | g=|DI 6)Ilg,6
‘ஈழநாடு’ அரசு படையினால் எரிப்பு 65
சிறிமாவோ மறுப்புச் செய்தி 75
தனி விமானத்தில் நான் அழைப்பு 72 சிறை சென்ற ‘ஈழநாடு உதவி ஆசிரியர் 85 ‘ஈழநாடு’ செய்தி : இராணுவம் தடை! 89 கொழும்பு பத்திரிகையாளரின் விபரீத ஆசை 92 வி.என்.பி. ரசித்த வானொலி வர்ணனை 98
நடுக்காட்டில் ரயில் எரிப்பு 100 அச்சுக்கோப்பாளரின் மகாபுத்திசாலித்தனம்’ 104 செய்திப் பயமுறுத்தல் 107
தொலைபேசி மிரட்டல் 110
இளைஞர்கள் சித்திரவதை 112
எனது கன்னி கடல்பயணம் 115
பதினொரு ரூபா மினிசேலை! 117
‘அமைதி பெயரில் அராஜகம் 119 இப்படியும் நடந்தது! 121
‘ஈழநாடு' குண்டுவைப்பு 123
xvi

பாகம் : 3 சந்திப்புகள்
கலைஞர் கருணாநிதியுடன் 131
கவிஞர் கண்ணதாசனுடன் 133
சிலம்புச் செல்வர் ம.பொ.சியுடன் 138
டாக்டர் சிவந்தி ஆதித்தன் 144
'ஆவி உலகத் தொடர்பு 47
யாழ். நகரில் சிதார் இசைமேதை 154
தமிழகத்தில் ஈழத்துக் கலைஞர்கள் 159
நடிகர் நாசருடன் 168
நினைவுகள் அழிவதில்லை 174
ஹரனுடன் இறுதி நாட்கள் 176
"கலைக்காவிரி ஜோர்ஜ் அடிகள் 179
நிறைவான சந்திப்பு 182

Page 12
பாகம் : 4 செய்தி ரா.மு.நா.
நாணயத்தின் மறுபக்கம்
"செய்தி பிறந்தது
மலையக காந்தி பற்றி
ரா.மு.நா. கண்ணிர்க் கதை தமிழக கலைத்தொடர்பு அண்ணா செய்தி’க்கு எழுதிய கடிதமும் நாவலும் டி.கே.ஷண்முகம் செய்தி’க்கு எழுதிய - எம்.ஜி.ஆர் சூடுசெய்தி
Хviji
185
190
191
194
199
205
206
 
 

பாகம் ஒன்று
எழுத்து அனுபவம்

Page 13

விபுலாநந்தர் அடிகளாரை சிரம் தாழ்த்தி.
1947ம் ஆண்டு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள புளியந்தீவு ஆனைப்பந்தி ஆண்கள் பாட சாலையில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
ஈழம் கண்ட பெருந்துறவி - தமிழகம் கண்ட பேரறிஞர்முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார், இதே ஆண்டு ஜூலை மாதம் பத்தொன்பதாம் திகதி கொழும்பில் இறைவனடி சேர்ந்த துயரச் செய்தி தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் காட்டுத்தீபோல் பரவி, குறிப்பாக மட்டக்களப்பை சோகக்கடலில் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
இதே ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில்தான், தமிழ்நாடு திருக்கொள்ளம்புதூரில், கரந்தை தமிழ்ச்சங்க வெளியீடான “யாழ்நூல்' அரங்கேற்றத்தை நிறைவு செய்து விட்டு, தாயகம் திரும்பிய அடிகளாரை ஆறு வாரங்கள் முடிவடைவதற்குள்ளாகவே இறைவன் அணைத்துக் கொண்டான்.

Page 14
armamalar)Aan
எனக்குக் கிடைத்த பெரும்பாக்கியம்; அடிகளாரின் காலத்தில் வாழ்ந்ததும், அவரது முதல் ஆசிரமம் அமைந்த பாடசாலையில் கல்வி பயின்றதும், அன்னாரின் இறுதி யாத்திரையில் கலந்துகொண்டதும் ஆகும்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்ட அடிகளார் பூதவுடல் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலை மண்டபத்தில், இருபதாம் திகதி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டு, அன்றிரவே நள்ளிரவைத் தாண்டி. கல்லடியிலுள்ள “சிவபுரி” இல்லத்தின் முன்பாக அருட்சோதியில் கலந்தது.
ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையிலிருந்து அடிகளாரின் இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது, அதில் கலந்துகொண்ட நூற்றுக் கணக்கானவர்களில் நானும் இருந்தது, இன்றும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது.
இன்று வாழும், நாளை வாழப்போகும் தமிழ் மக்களுக்கு அடிகளாரை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். காரணம், பலருக்கு இத்தமிழ்த் துறவியை இன்று யார் என்றே தெரிந்திருக்காது அல்லது மறந்திருக்கலாம். நாட்டு தலைவர்களையும், அறிஞர் பெருமக்களையும் ஆண்டுக்கு ஒரு தடவைகூட நினைவு கூர்வது அரிதாகிவரும் இந் நாட்களில்; “இப்படியும் ஒருவர் வாழ்ந்தார்’ என்று நினைத்துப் பார்ப்பது நன்றி கூறுவதாகவே இருக்கும். ஒரு பெருந்துறவியை, தமிழ்கூறும் நல்லுலகு கண்ட ஒரு முதல்வனை இங்கு நான் நினைவு கூர்வது எனது நிஜக்கதைக்கு பிள்ளையார் சுழியாக இருக்கட்டும் என்று நினைக்கின்றேன். அவரின் தமிழ்ப்பயணம், மட்டக்களப்பு -
யாழ்ப்பாணம் - தமிழ்நாடு என்று பரந்து உலகளாவியிருக்கிறது

கே.வி. மகாதேவா
அடிகளர் பற்றிய இரத்தினச் சுருக்கம்
1892-ம் ஆண்டு, மட்டக்களப்பு காரைதீவில், சாமித்தம்பி விதானையார் - கண்ணம்மைக்கு புத்திரனாகப் பிறந்த இவர், மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் பின்னர், புனித மைக்கேல் கல்லூரியிலும் தனது ஆரம்ப கல்வியைப் பெற்று, புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஆரம்பித்து, 1916ல் மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து, ‘இலங்கையின் முதல் பண்டிதர்’ எனும் பெருமையைப் பெற்றார்.
தனது 25வது வயதில், யாழ்ப்பாணம் சம்பத்திரிசார் கல்லூரி விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தி லேயே லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்ட தாரியானார். பின்னர், யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபராகக் கடமையாற்றி அளப்பரிய சேவை புரிந்த அடிகளார், முப்பதாவது வயதில் சென்னை, மைலாப்பூர் இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்து துறவறத்தை ஏற்று, இரண்டு வருடங்களில் ஞான உபதேசம் பெற்று, சுவாமி சிவானந்தரால் ‘விபுலாநந்தர்’ எனும் பெயர் சூட்டப்பட்டார்.
33வயதில் இலங்கை திரும்பிய அடிகளார், யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை வைத்தீசுவர வித்தி யாலய பொறுப்பை ஏற்று, இலங்கை விஜயம் செய்திருந்த மகாத்மாகாந்தி அடிகளை, மாணவர் மாநாட்டுத் தலைவர் என்ற பெருமையுடன் வரவேற்றார்.
1931ல், தனது 39வது வயதில், தமிழ்நாடு சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரி யரான அடிகளார், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுத்துறை உறுப்பினராகி, பச்சையப்பன் கல்லூரியில்

Page 15
analoasan
நடைபெற்ற சென்னை மாகாண தமிழ்ச் சங்க சொல்லாக்க மாநாட்டுக்குத் தலைமையும் வகித்தார்.
உலகத்திலேயே, முதலாவது தமிழ்த்துறைப் பேராசிரியர் என்ற பதவியைப் பெற்ற பெருமையும் அடிகளாரையே சேரும். "இப்பதவியை அடிகளார் முறைப்படி ஏற்றபோது, அவருக்குச் சமமாக தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக் கழகத்திலும் கூட, எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைக்கென தனியான பேராசிரியர் பதவி அக்காலத்தில் இருக்கவில்லை” என்று முன்னாள் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். அடிகளாருக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய மற்றுமொரு உறவு மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தமிழ் மகாகவியின் பெருமை சிறப்புகளை அவரது செந்தமிழ், கவிதைகளின் உணர்வுகளை துல்லிய மாக வெளி உலகுக்கு பிரகாசப்படுத்தி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவரை அன்று இனம் காட்டிக் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தர் என்றால், கற்றவர் எவரும் மறுக்க முடியாது. 1937ல் திருக்கைலை யாத்திரை மேற்கொண்டு, இமாலயத்தில் வெளிவந்த "பிரபுத்த பாரத” எனும் இராமகிருஷ்ண சங்க ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த அடிகளார், 1943 முதல் ஐந்து ஆண்டுகள் இலங்கை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியராகி 1947 ஜூன் 56-ம் திகதிகளில் தமிழ்நாடு திருக்கொள்ளம் புதுரரில் “யாழ்நூலை அரங்கேற்றிவிட்டு தாயகம் திரும்பி 1947 ஜூலை 19ல் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
விபுலாநந்த அடிகளாருக்குப் பின்னர்தான் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள், அடிகளாரின் கீழ் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றினார். பேராசிரியர்
6

கே.வி. மகாதேவா
தெபொ. மீனாட்சிசுந்தரனாரும் 1944ல்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியரானார். இத்தனை தனித் தமிழ்ச்சிறப்பு அடிகளாருக்கு உண்டு.
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர்எதுவோ வெள்ளை நிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" இது, அடிகளாரின் உள்ளம் கண்ட மலர். எத்தனை காலம் கடந்தாலும், உலகத் தமிழ் நெஞ்சங்களை எல்லாம் ஒருசேர வைக்கும் ஈழத்து வீரத் துறவியின் கனவும் - நினைவும் இதுதான்.
மட்டக்களப்பு - கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய எல்லையுள் அடிகளாரின் கல்லறையின்மீது பதித்த பழிங்குக் கற்களில் மேற்படி இனிய பாடல் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்.
இந்தியாவும்; குறிப்பாக தமிழ் நாடும் ஈழமும் கலை, கலாசாரத் துறையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. தமிழ்நாட்டின் அறிஞர்கள், தத்துவ மேதைகள், ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் எழுத் தாளர்கள் என்று பலரையும் ஈழத்து மக்கள் அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு தமிழக மக்கள் ஈழத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; அறிஞர், பெரு மக்களைத் தெரிந்து கொள்ளவும் முற்படவில்லை. இந்த நிலையில்; இப்படியும் ஒரு முத்தமிழ் வித்தகர், ஈழத்தில்

Page 16
பி. சி. கந்தையா - திருமதி, கங்கேஸ்வரி
வாழ்ந்தார் - மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டி
ருக்கின்றார் என்று கோடிட்டுக் காட்டவே தவத்திரு
விபுலாநந்த அடிகளாரை இங்கு நினைவு கூருகின்றேன்.
இது, எனது சமர்ப்பணம் மட்டுமல்ல, மண்ணின்
வாசனை. இனி எனது நிஜக்கதை பயணம்.
பதினொரு வயதில் எனக்கு எழுத்தார்வம்
1951ம் ஆண்டு மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் எனது சிறிய தந்தை திரு வி சீ.கந்தையா -
சின்னம்மா திருமதி கங்கேஸ்வரி கந்தையாவுடன் வாழ்ந்த
. - காலத்தில்தான் எனக்கு எழுத்தில் ஆாமை ஏறபடடது.
- . வர்களுக்கு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர்தான் ଈଯ< இ ளு তে 政 இ கு <塾
. - குழந்தைகள் பிறந்ததால், என்னையே அவாகளது மூதத
ー。 می - பிள்ளையாக பாசத்துடன் வளர்த்தனர். சிறிய தநதை
அப்பொழுது பண்டிதர். சின்னம்மா பண்டிதை, தங்களது
8
. ܗܿܟܚܘܗܢܘܗܗ؟
 
 

கேணி, மகாதேவா
ஆசிரியத் தொழிலுடன் பத்திரிகைகளுக்கு எழுதி, இலங்கை வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணம், சுன்னாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழகேசரி வார ஏட்டுக்கு வாரம் தவறாமல் 'ஊரி' எனும் புனைபெயரில் சிறிய தந்தை "கிழக்குத்தபால்" எழுதிக் கொண்டிருந்தார். அவரைப்பற்றி நினைவு கூர்வது எனது கடமையாகும்.
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் மாணவனாக இருந்து, சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் முதலான காப்பியங் களையும், பழந்தமிழ் இலக்கணத்தையும் முறைப்படி பயின்றவர் இவர். 18வது வயதிலேயே ஆசிரியராகி, 1944ல் மதுரை தமிழ்ச்சங்க பண்டிதரான விசீ. கந்தையா அவர்கள், பாரதியின் "பாஞ்சாலி சபதத்துக்கு உரைவிளக்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியதுடன், சுமார் மூவாயிரம் பாடல்கள் கொண்ட 'கண்ணகி வழக்குரை"யும் படைத்து, 1952ல் இலங்கை பல்கலைக்கழக தமிழ் வித்துவானாகி, 1962ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்து 'பி.ஓ.எல்.’ தகைமையும் பெற்றார். 1965ல் இவரது நூலான "மட்டக்களப்பு தமிழகம் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றது. தம்மிடம் தமிழ்ப்பாடம் கற்க வந்தவர்களுக்கு நேரம், காலம் பாராமல் விளக்கமாகச் சொல்லிக் கொடுப்பதும், வேதனம் பெறாததும் இவரது தொடர் வழக்கமாகும். பண்டிதராகி, வித்துவானாகி, மகாவித்துவான் புகழையும் பெற்ற எனது சிறிய தந்தை வி.சீ. கந்தையா 1990 ஜூன் 12ல் தமது 70வது வயதில் அமரரானார். அவர் வாழ்ந்த காலத்தில் "பண்டித நடையைக் கைவிட்டு, தமிழ்வசன நடையில், படிக்கும் மக்களுக்கு, தெளிவாக புரியக்கூடிய வகையில் தமிழ்
9

Page 17
onaloonsaan
நூல்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து சாதனை பட்ைத்ததை மறைக்கமுடியாது.
மகாவித்துவான், பண்டிதர் திரு வி.சீ. கந்தையா அவர்கள் பற்றி மட்டக்களப்பு பூரீ இராமகிருஷ்ண சங்கத்தின் பொறுப்பாளர் பூரீமத் சுவாமி ஜீவனானந்தாஜி எழுதிய ஒரு குறிப்பில்; "மகாவித்துவான் விசீ. கந்தையாவின் நூல்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது மட்டக்களப்பு தமிழகம்’, ‘கண்ணகி வழக்குரை', 'மட்டக் களப்பு சைவக்கோயில்கள்’ (1-ம், 2-ம் பாகங்கள்) ஆகிய நூல்கள், முடிந்த அளவு வரலாற்றுச் செய்திகளைப் பதிந்து வைப்பதுடன், எதிர்காலத்தில் இன்னும் விரிவான ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் ஆகவும் அமைகின்றன. இவர் ஆற்றிவரும் சைவப்பணி, தெய்வசங்கல்பம் என்றே கொள்ளவேண்டும்” என்று எழுதியுள்ளார்.
பழம் பெரும் பத்திரிகையாளர் திரு.எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் பெரியார் வி.சீ. கந்தையா பற்றி எழுதிய ஒரு சிறப்புக்குறிப்பில், "மட்டக்களப்பு மாநிலத்தில், இலக்கியத்துறையில் மலர்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்ட காலகட்டங்கள் இரண்டு உண்டு. ஒன்று 1900 முதல் 1940 ஆண்டு வரையுள்ள நாற்பது ஆண்டுக்காலம். இரண்டாவது கால கட்டம் 1940 முதல் 1960 வரையுள்ள இருபது ஆண்டுக்காலம். இந்த மறுமலர்ச்சிக் கால கட்டத்துள் தோன்றியவர்களுள் மகாவித்துவான், பண்டிதர் வி.சீ. கந்தையாவும் ஒருவர். கல்வியிலும், சமயத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் இவர் ஈடுபாடுகொண்டு பல பட்டங் களைப் பெற்று, துறைதோய்ந்த அறிஞர்களுள் ஒருவராகத் தம்மை ஆக்கிக்கொண்டார். எழுத்தாற்றலைப் போலவே, பேச்சாற்றலும் உடையவர் இவர். இவருடைய மனைவியார் திருமதி கங்கேஸ்வரி கந்தையாவும், தமது கணவரைப்
10

(3a5.s.l. LD50856. In
போலவே பேச்சாற்றல் உடையவர். சமயச் சொற்பொழிவு களில் மட்டக்களப்பில் அம்மையார் ஈடும், இணையும் அற்றவராக விளங்கினார். “பண்டிதர்கள் தமிழ் எழுதப் புறப்பட்டால், படிப்பவர்கள் அகராதி புரட்டும்” காலம் ஒன்று இருந்தது. இப்படியான ஒரு நிலை மாற்றத்தைக் கொண்டு வந்து விட்ட பண்டிதர்களிடையே முதல் ஸ்தானத்தைப் பெற்றவராகிறார் மகாவித்துவான், பண்டிதர் வி.சீ. கந்தையா அவர்கள். இவர் எழுதுகின்ற தமிழ்நடை, தெளிந்த ஆற்றோட்டமான தமிழ் நடையாக மிளிர்கிறது. அதனால் அவர் எழுதுகின்ற நூல்களை மக்கள் அலுப்புச் சலிப்பின்றி, ஆயாசம் இன்றி LЈLQ-фgi இன்பம் பெறமுடிகிறது” என்று பாராட்டியுள்ளார்.
(மகாவித்துவான் வி.சீ. கந்தையா அவர்களின் ‘மட்டக்களப்பு தமிழகம்’ நூல் ஏற்கனவே பிரான்சு, ஜெர்மனி நாடுகளில் மறுமதிப்பு வெளியாகி உள்ளதும், எனது நூல் வெளியாகும் இக்காலக்கட்டத்தில் கனடாவில் உள்ள டொரொன்டோ நகரில் 'மட்டக்களப்பு தமிழகம்’ மறுபதிப்பு வெளியாகி, வெளியீட்டு விழாவிற்கு அமெரிக் காவில் உள்ள திரு. வி.சீ.கந்தையா அவர்களின் மூன்று மகன்மாரும் குடும்பத்தோடு அழைக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டிருப்பதும் அறிந்து பெருமைப்படுகின்றேன்)
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தனது பாராட்டுரையில், "வித்துவான் வி.சீ. கந்தையா, மட்டக்களப்புக்கு கிடைத்த அரும்பெருங் கலைச்செல்வம். நூலாசிரியரின் ‘கண்ணகி வழக்குரை' மூலம் மட்டக்களப்பின் வரலாற்றுப் பெருமை யையும், கலைச்செல்வங்களையும், இலக்கிய பரப்பினையும் அறியக் கூடியதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கலாசாரப் பேரவையைச் சேர்ந்த
11

Page 18
$(
திரு இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்கள், மகாவித்து வான் வி.சீ. கந்தையா அவர்களின் 'மட்டக்களப்பு சைவக் கோயில்கள்-2' எனும் நூலுக்கு எழுதிய குறிப்பில், "இருபது நூல்கள் வரை வெளியிட்டுள்ள மகாவித்து வானின் படைப்புகளில் 'மட்டக்களப்பு தமிழகம்’ சிகரம் போன்றது. பல வருட ஆராய்ச்சியில் எழுதப்பட்டது. இதே போன்று மகத்தான நூல் ‘கண்ணகி வழக்குரை'. பல ஏட்டுப் பிரதிகளை ஆராய்ந்து எழுதப்பட்டது. சுவாமி விபுலாநந்தருடன் உள்ளத்தால் பிணைப்புண்ட இவர், அவர் மறைவின்போது இயற்றிய இரங்கற்பாக்கள் உள்ளத்தைத் தொடுவன. 1990ல் மட்டக்களப்பு கலாசார பேரவை அவருக்கு ‘மகாவித்துவான்’ பட்டத்தையும் அவரது துணைவியாருக்கு, ‘இலக்கியமணி’ பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்தபோது உணர்ச்சிமயமாக காட்சியளித்த வித்துவான் அவர்கள், மலர் மாலைகள் மத்தியில் தமிழ்மலை'யாகக் காட்சியளித்தார்" என்று பெருமைப் பட்டுள்ளார்.
இவரைப்போல் எனது சின்னம்மா திருமதி கங்கேஸ்வரி கந்தையாவும் கல்வியில் சாதித்தவர்.
விபுலாநந்த சுவாமிகள் துறவறம் பூண்டு 1925ல் மட்டக்களப்பு திரும்பியதும் கையேற்றுக் கொண்ட முதல் பாடசாலை மட்டக்களப்பு, புளியந்தீவு ஆனைப்பந்தி பாடசாலைதான். இப்பாடசாலையின் பின்புறத்தே அமைந் திருந்த ஒரு அறைதான் அடிகளாரின் முதல் ஆசிரமம். இங்கு, அடிகளாரிடம் பாடம் கேட்டு தவப்பலனடைந்த திருமதி. கங்கேஸ்வரி, பின்னர் ஆசிரியர் பணியை ஆரம்பித்து, பண்டிதை ஆகி, 1950 முதல் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் இலக்கியம், இலக்கணம், இந்துசமயம்
12

(Basel. LD5TCB56T
ஆகியவற்றின் விரிவுரையாளராகக் கடமையாற்றி, இந்துமதம் சார்ந்த பல நூல்களையும், நாடகங்களையும் இயற்றியுள்ளார். இரண்டு சரித்திர வரலாறுகளைக் கொண்ட இவரது 'அரசன் ஆணையும் ஆடக சவுந்தரியும்’ எனும் நாடக நூலுக்கு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசு கிடைத்தது. 1992 மார்ச்சில் மட்டக்களப்பில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தில், “மட்டக்களப்பில் சேவை செய்த பெண்களில் முதல் பெண்மணி’ என்று பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டவர் திருமதி. கங்கேஸ்வரி dij60g5unt.
மட்டக்களப்பிலிருந்து எனது தமிழக விலாசத்துக்கு 119.1992 திகதியிட்டு எனது சிறியதாய் - சின்னம்மா திருமதி. கங்கேஸ்வரி கந்தையா அவர்கள் - நீண்டதொரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர், "மகனே. நீ எழுதப்போகும் நூல், சீரும் சிறப்புமாக, பலராலும் பாராட்டப்படுவதொன்றாக அமையும் என்பது எனக்குத் தெரியும். “சான்றோன் எனக் கேட்ட தாய்.” என்ற வகையில் பெரிதும் மகிழ்ச்சியோடு, ஆனைப்பந்தியானைப் பிரார்த்தித்து உனது புத்தகம் நன்கு நிறைவேற வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இன்று அமரராகி விட்டபோதிலும், பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது ஆசியும் வாழ்த்தும் இன்று நேரில் கிடைத்தது போல் இருக்கிறது.
இவர்களது இல்லற வாழ்வில் அடுத்தடுத்து பிறந்த பெண் பிள்ளைகள் பிஞ்சு வயதிலேயே சிவபதவி அடைந்ததால் என்னை, மூத்த பையனாக, பாசமுடன் வளர்த்தனர். இதன் பின்னர், நான்கு ஆண் வாரிசுகளும்
solo.
-3 p5 13

Page 19
ിഞ്ഞപഞഷ
மூத்த மகன் சிவகுமாரன் (எம்.எஸ்ஸி), மூன்றாவது மகன் மணிவண்ணன் (எம்.எஸ்ஸி), நான்காவது மகன் அருள்மொழி (எம்.எஸ்ஸி) ஆகியோர் கல்வி உயர்வு பெற்று அமெரிக்க மண்ணிலும், இரண்டாவது மகன் இளங்கோவன் (பிஎஸ்ஸி) பிறந்த மட்டக்களப்பு மண்ணிலும் குடும்பத்துடன் - குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்து பணியாற்றி வருகின்றனர். எனது சிறிய தந்தை கந்தையா - சின்னம்மா கங்கேஸ்வரி இலக்கியத் தம்பதிகளின் கனவுகள் நிஜமாகி ஆண்டு அனுபவித்து அவர்கள் அமரத்துவம் பெற்றுவிட்டனர்.
தமிழ்த் தினசரிகளையும் ‘ஈழகேசரி’யையும் தவறாமல் படித்துக் கொண்டிருந்த எனக்கு எழுதவேண்டும் என்று ஆர்வம் பிறந்தது.
எனது கன்னிப் படைப்புகள் ஈழகேசரி மாணவர்
பகுதியில் வெளிவரத் தொடங்கின. வாரந்தோறும் கட்டுரைகள், குட்டிக்கதைகள் எழுதுவேன். தொடர்ச்சி யாகப் பிரசுரமாவதற்குக் கைகொடுத்தவர் ஈழகேசரி’ ஆசிரியர் திரு. இராஜ அரியரத்தினம் அவர்கள்தான். "கேசரி மாமாவும் அவர்தான்.
எனது 12வது வயதில் திரு.எஸ்.வி.ஒ. சோமநாதரை அதிபராகக் கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் படிக்கும்போது நடைபெற்ற கல்லூரி பாட்டுப் போட்டியில்; ஒரு சினிமாப் பாடலைப்பாடி சில்வர் மடல் முதல் பரிசு பெற்ற நான், பின்னர் அரசினர் கல்லூரியில் பயின்றபோது திரு. கந்தையா, திரு. சிதம்பரநாதன் ஆகியோர் அதிபர்களாக இருந்த காலத்தில்; இலங்கை வானொலி நடத்திய வெண்பா அறிவுப் போட்டியில் மாநில அளவிலும் வெற்றி பெற்றேன்.
14.

கே.வி. மகாதேவா
மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் புலவர்மணி திரு. ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்தான் எனக்கு தமிழ் ஆசிரியர். கம்பராமாயணத்தை பல்வேறு கோணத்தில் சுவைபடக் கூறும் அவரிடம், அழகு தமிழ் கண்டேன். இலக்கியத்துடன் பத்திரிகை எழுத்தும் மேலும் வேரூன்றியது.
திரு.வி.கே.பி. நாதனை அக்காலத்தில் ஆசிரியராகக் கொண்ட தினகரனுக்கு நான் எழுதும்போது, “படிப்பை முடித்துவிட்டு பத்திரிகைத் தொடர்பை வளர்த்துக்கொள்’ என்பார் புலவர்மணி. ஆர்வம் எப்படி முறியும்? திரு. டேவிட் ராஜ" அவர்கள் பொறுப்பில் இருந்த ‘வீரகேசரி’ மாணவர் மலர் பகுதிக்கு இராமாயணம் சம்பந்தப்பட்ட வர்களை வெவ்வேறு கோணத்தில் வைத்து விமர்சித்து எழுதினேன்.
1958 fo ஆண்டு மட்டக்களப்பு பாராளுமன்ற அங்கத்தினராக திரு செ. இராசதுரை அவர்கள் இருந்த ஆரம்பகாலம். இவரின் எழுத்தாலும், தமிழரசுக் கட்சி மேடைப் பேச்சுக்களாலும் கவரப்பட்டவன் நான். ‘சுதந்திரன்’ பத்திரிகையிலிருந்து வெளியேறி -வெளியேற்றப் பட்டு (?) மட்டக்களப்பில் மத்திய கல்லூரி வீதியில் இளங்கோ அச்சகம் நடத்தி தமிழகம்’ எனும் பத்திரிகையை ஆரம்பித்திருந்தார். உணர்ச்சிக் கவிஞர் திரு. கா.சி. ஆனந்தன் முக்கிய பொறுப்பில் இருந்தார். உதவியாக சிறிது காலம் நானும் இப்பத்திரிகையில் கடமையாற்றினேன்.
‘தமிழகத்தை மலையகப் பகுதியிலும் அறிமுகம் செய்து, விற்பனையை ஆரம்பிக்க, நான் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. மலையகத்தில், முதல்தடவையாக கண்டி, கம்பளை, நுவரெலியா போன்ற இடங்களுக்குச் சென்று, ஏஜண்டுகளை நியமித்து ‘தமிழகம்’
15

Page 20
naabenyan
பத்திரிகையை அறிமுகப்படுத்தியது எஸ்.எஸ்.சி. படித்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்தான்,
21 வயதில் ‘ஈழநாடு பிரவேசம்
இப்படியாக வெளிவந்த பத்திரிகைத் துணுக்குகளும், குட்டிக்கதை, கட்டுரைகளும்தான், யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ தினசரி பத்திரிகையில் எனது இருபத்தொராவது வயதில் 1961ல் களம் இறங்க வழிவகுத்தது.
யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் எனது மூத்த சகோதரி திருமதி. தர்மதேவி சிறி சுப்பிரமணியம் அவர்களுடன் இருந்த ஆரம்ப காலத்தில், “யாழ். சிங்கப்பூர் பார்மஸி’ திரு. நவரத்தினம் அவர்கள் அறிமுகம் மூலமாக ‘ஈழநாடு' பிரவேசம் கிடைத்தது.
‘குழந்தைகள் இரட்சகர்’ எனும் பெயருடன் புகழ்பெற்று விளங்கிய குழந்தைகள் நல டாக்டர் திரு.கே.சி. சண்முகரத்தினம் அவர்களை சந்தித்தேன். ‘ஈழநாடு’ நிர்வாக ஆசிரியர் திரு.கே.பி. ஹரன் அவர்களைச் சந்திக்குமாறு கூறினார்.
கையில் ஒரு 'பைல்’, ‘பைல் நிறைய எனது பத்திரிகை எழுத்து ஒவியங்கள். திரு. ஹரன் அவர்களை ‘ஈழநாடு’ அலுவலகத்தில் சந்தித்து கையளித்தேன்.
"ஆசிரியர் பகுதியில் போய் அமருங்கள். உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் பத்திரிகைப் பயிற்சி நிறைய வேண்டும். திரு. கோபாலரத்தினம் உங்கள் வேலைபற்றி விபரம் சொல்வார்" என்று பச்சைக்கொடி காட்டினார்.
ஆசிரியர் பகுதி திரு. கோபாலரத்தினத்தை சந்தித்தேன். தமிழ்நாட்டிலிருந்து வரும் ஆங்கிலம், தமிழ்த் தினசரிகளை
16

Gass. Dessary
கொடுத்து "படியுங்கள்" என்றார். ‘ஈழநாடு’ ஒரு தமிழ்த் தேசிய தினசரி. 1958ல் வார ஏடாக ஆரம்பிக்கப்பட்டு, 1961-ல் தினசரியாக மலர்ந்து, கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தது. நானும் ‘ஈழநாடு’ தினசரியில் ஆரம்ப காலத்திலேயே சேர்ந்து கொண்டேன்.
இலங்கையில், தலைநகர் கொழும்புக்கு வெளியே, வெளிவந்து கொண்டிருந்த முதல்தரமான தமிழ்த் தினசரி ‘ஈழநாடு’.
வெறும் தொலைபேசி, சிலநிருபர்கள், வானொலியின் சேவையைக் கொண்டு, பல சிரமங்களின் மத்தியில் துணிச்சலுடன் சவாலாக ஆரம்பிக்கப்பட்டது ‘ஈழநாடு’. ஆரம்பத்திலேயே பல சோதனைகளை வெற்றி கொண்டது. இதன் ஸ்தாபகர்களாக கிழக்கிலங்கை தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் திரு. கே.சி. தங்கராசா, இவரது சகோதரர் டாக்டர் கே.சி. சண்முகரத்தினம் மற்றும் இவர்களது மருமகனார் திரு. பா. சிவானந்தன் உட்பட சிலர் முக்கிய பொறுப்பிலும், பங்குதாரர்களாகவும் இருந்தனர்.
எனக்கு எழுத்து, பழக்கமாக இருந்தாலும் பத்திரிகையின் ஆசிரியர் பகுதி எழுத்துப்பணி ஆரம்பம் தான். பயிற்சியாளன் என்று சொல்லலாம்.
‘ஈழநாடு’ ஆசிரியர் பீடம் வெகு கச்சிதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொழும்பு ‘வீரகேசரி’ திரு கே.பி. ஹரன் அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும், திரு.எஸ்.எம். கோபாலரத்தினம் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினர். ‘ஈழகேசரி’ ஆசிரியர் திரு. இராஜ அரியரத்தினம் ‘ஈழநாடு' வாரமலர் ஆசிரியராகவும், சிரேஷ்ட
17

Page 21
ranasons an
உதவி ஆசிரியர்களாக, திருவாளர்கள் டி.எம். முருகையா, எஸ். பெருமாள், சு. சபாரத்தினம், கா. யோகநாதன், க. கணேசலிங்கம் ஆகியோர் இருந்தனர். இவர்களில், கணேசலிங்கம் தவிர ஏனையோர் கொழும்பு ‘வீரகேசரி’ நாளிதழில் பணியாற்றியவர்கள். நான் சேர்ந்தபோதுதான் திரு.ஏ.வி. மாணிக்கமும் அமர்ந்தார். ஒப்பு நோக்காளர் திரு.சு. சபாரத்தினத்துக்கு உதவியாளராக அப்பகுதியில் பணியாற்றினார். திரு. யோகநாதன் அலுவலக நிருபராக கடமையாற்றினார்.
‘ஈழநாடு ஸ்தாபகர்கள்
கே.சி. தங்கராசா கே.சி. சண்முகரத்தினம்
18
 

(35.ed. Desross6.JIT
‘ஈழநாடு பிறந்து வளர்ந்த கதை
இக்கட்டத்தில் ‘ஈழநாடு’ பிறந்து, வளர்ந்த கதையை நான் கூறவேண்டும்.
கே.சி.ரி. என்றும், 'தங்கர்’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.கே.சி. தங்கராசா அவர்களுக்கு, தமிழ்ப் பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம் L16) ஆண்டுகளாக நெஞ்சை வருடிக் கொண்டிருந்தாலும், 1958ல் நாட்டில் தலைதூக்கிய இனக்கலவரத்துக்குப் பின்னர்தான் முளை விட்டது.
தனது தாய்மாமன் ‘இலக்கண சுவாமிகள்’ முத்துக் குமாரசுவாமி தம்பிரான் அவர்களை நினைக்கும் போதெல்லாம் திரு. தங்கராசா அவர்களுக்கு இலக்கிய வேகம் அதிகரிக்கும். இவரின் ஆர்வத்துக்கு, கலைப்புலவர் நவரத்தினம் அவர்களும் துண்ை போனார்கள். இதன் விளைவாக தமிழ்நாடு சிதம்பரத்தில் குடி கொண்டிருந்த இலக்கண சுவாமிகள் நினைவாக யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் "கலா நிலைய பதிப்பகத்தை நிறுவினார்.
வண்ணை மேற்கில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சிவன் கோவிலுக்குப் பின்புறமாக, அழகான, அமைதியான இடத்தில் கலா நிலையப் பதிப்பகம் 1958ல் நிறுவப்பெற்றது. சில மாதங்களிலேயே ‘ஈழநாடு’ எனும் ‘குழந்தை பிறந்து விட்டது. இலங்கை பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசினால் திட்டமிடப்பட்டு, மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுவரும் தமிழர்தம் மொழி, கலை, கலாசாரம், கல்வி, பண்பாடு, பாரம்பரியத்தை கட்டிக் காக்க தமிழ்ப் பகுதியில், தமிழர் நலனுக்காக, தமிழர்களால் ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆரம்பிக்கும் கே.சி. சகோதரர்களின் கனவும் நனவாகத் தொடங்கியது.
19

Page 22
Manador),Adan
1959, பெப்ரவரியில் வாரம் இருமுறை ஏடாக ஆரம்பிக்கப்பட்ட ‘ஈழநாடு’க்கு சுன்னாகத்திலிருந்து பல வருடங்களாக வார இதழாக வெளிவந்த ‘ஈழகேசரி’ இலக்கிய மலரின் ஆசிரியர் திரு. இராஜ அரியரத்தினம் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இராஜரத்தினம் எனும் பெயர், 'கல்கி’ அவர்களினால், அரிய இராஜரத்தினம் என்று புகழாரம் சூட்டப்பட்டு, பின்னர் இராஜ அரியரத்தினம் என்று புழக்கத்தில் வந்தது. பதிப்பக மனேஜராக கரம்பன் திரு.எஸ்.எம்.ஜே. வில்பிரட் பொறுப்பேற்றார். திரு.கே.சி. தங்கராசா அவர்கள், பத்திரிகை வளர்ச்சியின் முழுப் பொறுப்பையும் தனது அன்பு சகோதரர் டாக்டர் கே.சி. சண்முகரத்தினம் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தனது தொழில் நிமித்தம் கொழும்பு சென்று விட்டார்.
திரு. கே.சி. தங்கராசா அவர்கள், கொழும்பு யூனியன் பிளேசில், “சி.எப்.ரி.என்ஜினியரிங் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும், வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டே கொழும்பிலிருந்து ‘ஈழநாடு’ நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.
அச்சகத் தொழில் சம்பந்தமாக லண்டனில் பயிற்சி பெற்று வந்த கே.சி. சகோதரர்களின் சகோதரி மகன் திரு.பா. சிவானந்தன், அவசரம் அவசரமாக யாழ்பபாணம் திரும்பி ‘ஈழநாடு’ பத்திரிகை வளர்ச்சியைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ‘ஈழநாடு’ வாரமிரு முறையைத்தாண்டி வார ஏடாக பவனி வரத் தொடங்கிய காலத்தில், திரு. சிவானந்தன் ‘ஈழநாடு' அச்சக முகாமை யாளராகப் பொறுப்பேற்றார்.
20

கே.வி. மகாதேவா
வடபகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவை விரைவாகப் பெற்றுக் கொண்ட ‘ஈழநாடு’, தினசரியாக மலரும் பக்குவத்தை அடையத் தொடங்கியது.
திருகேசி தங்கராசா, டாக்டர் கேசி. சண்முகரத்தினம், ‘ஈழநாடு’ முதன்மை ஆசிரியர் திரு. இராஜ அரியரத்தினம், திரு. பா. சிவானந்தன் மற்றும் சில யாழ். தமிழறிஞர்கள் கலந்துரையாடினார்கள். ‘ஈழநாடு’ பத்திரிகையின் கொள்கை நடைமுறைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. 196ல் ‘ஈழநாடு', பத்திரிகையை தினசரியாக மாற்றுவதென்றும், ஆசிரியர் குழுவில் அனுபவம் பெற்ற பத்திரிகையாளர்களை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
‘ஈழநாடு’ நிறுவனம் வரையறுக்கப்பட்ட (லிமிட்டெட்) கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டது. ஆர்வமுள்ள பலர் பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இயக்குநர் சபை நியமிக்கப்பட்டு, சிலர் அதன் ஆரம்ப கால அங்கத்தினர் களாக தேர்வு செய்யப்பட்டனர்.
21

Page 23
Sranasonro Alan
'அன்பே சிவமான ஆசிரியர் ஹரன்
கொழும்பு ‘வீரகேசரி’ பத்திரிகையில் ஆசிரியராகக் கடமை ஆற்றிய திரு.கே.பி. ஹரன் அவர்களை அழைத்து, ‘ஈழநாடு’ நிர்வாக ஆசிரியராக நியமிப்பதென்று முடிவு செய்யப்பட்டது. பத்திரிகைத்துறையில் ஆர்வமும், தர்மமும் கொண்டு, பயபக்தியுடன் பணியாற்றிய திரு. ஹரன் அவர்கள், ‘வீரகேசரி’யிலிருந்து ‘ஈழநாடு வந்ததும், ‘வீரகேசரி’யின் ஒரு பட்டாளமே யாழ்ப்பாணம் படையெடுத்து ‘ஈழநாடு’ ஆசிரியர் பீடத்தை அலங்கரித்துக் கொண்டது. திரு. இராஜ அரியரத்தினம் 'ஈழநாடு’ வாரமலர் ஆசிரியராக இலக்கியப் பணியாற்றினார்.
ஈழநாடு அச்சகப்பகுதி முகாமையாளராக திரு. வில்பிரட்டுக்குப் பின்னர் யாழ். மார்ட்டின் வீதி - திரு. எம்.எஸ். பீட்டர் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஈழநாடு பதிப்பக வேலைகளுடன் திரு. பா. சிவானந்தன் ஈழநாடு இயக்குநர் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1961ல் ஈழநாடு பத்திரிகை தினசரியானது. தினசரிப் பதிப்பின் முதல் இதழுக்கு ஆசிபெறுவதற்காக, திரு.கே.சி. தங்கராசா, டாக்டர் கே.சி. சண்முகரத்தினம், நிர்வாக ஆசிரியர் திரு.கே.பி. ஹரன் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவினர் கொழும்புத்துறை யோக சுவாமிகளிடம் சென்றனர். எப்பொழுதும், தமாஷ"ம் தடாலடிப் பேச்சும், ஏச்சும் கொண்ட யோக சுவாமிகள் ஈழநாடு குழுவினரை வரவேற்றார். பத்திரிகையை கையில் வாங்கி, விபரம் அறிந்த அவர் முதலில் கேட்ட கேள்வி: “உழைப்பதற்கு இப்படி ஒரு வழியா?" என்பதுதான். திரு. ஹரன் தெளிவுபடுத்தினார். பக்கங்களை புரட்டிப்பார்த்த சுவாமியார்;
"ஏசுவார்கள். எரிப்பார்கள். உண்மையை எழுதுங்கள்.
22

(885.sal. LDas TC356T
உண்மையாக எழுதுங்கள்.
என்று ஆசீர்வதித்தார். ஈழநாடு குழுவினர் மனத்திருப்தியுடன் அலுவலகம் திரும்பினார்கள்.
‘ஈழநாடு’ பத்திரிகை முழுவேகத்தில் இயங்கத் தொடங்கியது. சொந்த இடம், பத்திரிகை நிறுவனத்திற் கென்றே வடிவமைக்கப்பட்ட கட்டிடம், பத்திரிகை விநியோகத்திற்கென வாங்கப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள். வாகன ஒட்டுநராக ஆரம்ப காலம் முதல் பணியாற்றிய திரு. நற்குணம், திரு. மெண்டிஸ் குறிப்பிடத்தக்கவர்கள்.
முதலில், திரு. பாமர் அவர்களும் அவரைத் தொடர்ந்து இலங்கை கவர்னர் ஜெனரலாகக் கடமையாற்றிய சேர். ஒலிவர் குணதிலகாவின் மூளை என்று வர்ணிக்கப் பட்ட மானிப்பாயைச் சேர்ந்த திரு மு. வைரமுத்து அவர்களும் ஈழநாடுவின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டனர்.
ஈழநாடு பத்திரிகையின் வடபகுதி பிரவேசம், மெல்ல மெல்ல, நாட்டின் கிழக்கு, மேற்கு, தெற்கு என்று பரவலானது. கொழும்பில், திரு.கே.சி. தங்கராசா தங்கியிருந்த 142, நியூ புல்லர்ஸ் (லேன்) வீதி வசிப்பிடத்தின் முன்பகுதி ஈழநாடு கொழும்பு தலைமைக் கிளையானது. இந்த அலுவலகத்திலிருந்துதான் ஈழநாடு பத்திரிகையின் மாகாண, மற்றும் தலைநகர் செய்திகள் - விளம்பரத்துறை செயல்பட்டன. ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பத் தைச் சேர்ந்தவர்கள்போல் இயங்கினார்கள். திரு.கே.சி. தங்கராசாவின் பூரண ஒத்துழைப்பு, ஊழியர்களை மிகவும் 261 5(565.5gg5).
கொழும்பில் திரு.கே.சி.ரி. அவர்கள் பணியாற்றினார் என்றால், யாழ்ப்பாணத்தில் டாக்டர் கேசி. சண்முகரத்தினம் அவர்கள் தனது வைத்தியப் பணியுடன் பத்திரிகைத் துறையிலும் பம்பரமாகச் சுழன்றார்கள்.
23

Page 24
SomasonoAan
1950களில் வண்ணார்பண்ணை நல்ல தண்ணிர் கிணற்றடி (வைரவர் கோவிலடியில் டாக்டர் சண்முகரத்தினம் தமது பரம்பரை ஆயுர்வேத வைத்தியத்தைத் தொடர்ந்தார். 1955ல் பிறப்பு - இறப்பு பதிவுதாரராக நியமனம் பெற்றார். டாக்டருக்கு உதவியாக திரு.கே. குப்புசாமி அவர்கள், பாடசாலைப்படிப்பு முடிவு பெற்ற சின்ன வயதிலேயே சேர்ந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். டாக்டரின் பணிமனையில் ஊழியர் - வரவேற்பாளர் - மருந்துக் கலவையாளர் எல்லாம் குப்புதான். டாக்டரின் பெரும் நம்பிக்கைக்கு பாத்திரமான குப்பு: டாக்டர் எள் என்றால் எண்ணெயாக நிற்பார். அவ்வளவு பணிவு, அடக்கம், ஒழுக்கம். டாக்டரின் நல்ல பெயரை சம்பாதித்த குப்பு, நோயாளர்களின் அன்பையும் பெற்றுக் கொண்டார். ஈழநாடு ஊழியர்கள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு ஏற்படும் இலேசான நோய்களுக்கு டாக்டர் இல்லாத நேரங்களிலும் மனம் கோணாமல், நேரம் பாராமல் குப்பு சிகிச்சை அளித்ததை மறக்க முடியாது.
கே. குப்புசாமி
24
 

டாக்டரின் பணியில் 'குப்பு
சித்த வைத்தியர் திரு.கே. குப்புசாமி அவர்கள் 1979வரை டாக்டர் கே.சி. சண்முகரத்தினத்தின் வைத்திய சாலையை நிர்வகித்து பணிபுரிந்துவிட்டு, டாக்டர் நினைவாக கொட்டடி பண்ணை வீதியில் 'சண்முக ஆயுர் வேத வைத்திய சாலை"யை நீண்டகாலம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஈழநாடு தினசரியானதும், அதன் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கானது. ஈழநாடு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது, ஊழியர்களின் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் இலவச வைத்தியம்தான். சிறிதும் மனம் கோணாமல், சிரித்த முகத்துடன் சிகிச்சை அளிக்கும் டாக்டரின் பண்பு இமயமலைக்கு உயர்ந்தது. குழந்தைகளுக்கு அவர் ஒர் "இரட்சகர்"
ஒரு தடவை, பிரபல நிறுவனமொன்று தனது ஆண்டு விழா மலருக்கென ஒரு விளம்பரம் பெறுவதற்காக டாக்டர் சண்முகரத்தினத்திடம் சென்றது.
"புனிதமான தொழில் புரியும் வைத்தியர்களுக்கு விளம்பரம் அவசியமில்லை. மக்கள்தான் அவர்களின் விளம்பரதாரர்கள்." என்று டாக்டர் புன்னகை தவழச் சொன்னதை அந்த நிறுவன ஊழியர்களினால் ஏற்காம லிருக்க முடியவில்லை. சுயவிளம்பரத்துக்காக தனது சொந்தப் பத்திரிகை ‘ஈழநாடு’வை ஒரு நாள்கூட டாக்டர் பயன்படுத்தியது கிடையாது.
ஈழநாடு மலர்ந்து எட்டு ஆண்டுகள். 1966 ஜூன் மாதம் 29ம் தேதி டாக்டருக்கு இலேசான நெஞ்சுவலி. ஆனாலும், அதனை பெரிதாக பொருட்படுத்தாமல், வைத்தியமனையில் வழக்கமாகப் பணியாற்றினார். அடுத்த நாள் அவசியம் கொழும்பு செல்ல வேண்டும்.
25

Page 25
Soomasons Aôn
ஜூன் 30ம் தேதி தனது மூத்தமகள் ஜெயந்தியுடன் பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி விமானப் பயணம் தொடர்ந்தார். கூடவே வந்திருந்த முதுபெரும் சட்டத்தரணி திரு ஜி.ஜி. பொன்னம்பலத்துடன் அளவளாவிக் கொண்டே தனது பயணத்தை மேற் கொண்டார். இவர்களின் வருகையை எதிர்பார்த்து டாக்டரின் துணைவியார் திருமதி பர்வதபத்தினி இரத்மலானை விமான நிலையத்தில் காத்திருந்தார்.
டாக்டரும் மகளும் சுகமாக விமான நிலையம் போய்ச் சேர்ந்தனர். டாக்டருக்கு மீண்டும் நெஞ்சுவலி. மார்பை இலேசாகப் பிடித்தவாறு டாக்டர் நடந்து வருவது துணைவியாருக்கு உடனடியாகப் பெரிதாகத் தெரிய வில்லை. மனைவி அருகில் வந்ததும் டாக்டர் இலேசாகத் தலை குனிந்தார். துணைவியாரின் தோள்மீது சரிந்தார். அவ்வளவுதான்! அந்த விமான நிலையத்திலேயே டாக்டரின் உயிர் பிரிந்தது. ஈழநாடுவின் ஒரு பெரிய தூண் சரிந்தது.
இதன் பின்னர் நிர்வாக முழுப்பொறுப்பும், திரு.கே.சி. தங்கராசாமீது சாய்ந்தது. ஈழநாடு டாக்டரை இழந்த போதிலும், அவர் கனவை கலைக்க முடியவில்லை. முழுக் கவலையையும் நெஞ்சுக்குள் அடக்கி, டாக்டரை தங்களின் வழிகாட்டியாக-முன்னோடியாக நினைத்து, ஈழநாடு ஊழியர்கள் உழைக்கத் தொடங்கினார்கள்.
ஈழநாடு அச்சகப்பகுதியில் ‘வீரகேசரி’யிலிருந்து வந்த நாராயணசாமி போர்மனாக ஆரம்பகாலத்தில் கடமை யாற்றி பத்திரிகையின் பக்கங்களை சாமர்த்தியமாகவும், சுறுசுறுப்பாகவும் தயாரித்தார். இவருக்கு உதவியாக கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டார். இதன் . 526ör6ğır fir
26

கே.வி. மகாதேவா
வேலுப்பிள்ளை வார மலருக்கும், மறவன்புலவு எம். பாலசிங்கம் தினசரிக்கும் போர்மன்களானார்கள். எம். பாலசிங்கம் ஆரம்ப காலம் முதல் நான் வெளியேறிய 1989 to ஆண்டு காலப்பகுதிவரை, தொடர்ச்சியாக போர்மனாக கடமையாற்றினார். இவருக்கு உதவியாக ஆரம்பத்திலும் பின்னரும் பணிபுரிந்தவர்களில், எம். ஆறுமுகசாமி, பி. பாக்கியநாதன், சி. பாலசிங்கம், சின்னையா, மார்க்கஸ், தங்கவேலு, முதலாளி செல்வரத்தினம், துரைசாமி, தேவராஜா, ஜோசப், சிவனேசன், சீவரத்தினம், சச்சிதானந்தம், சற்குரு ஆகியோர் என்னுடன் ஆரம்ப காலத்திலிருந்தே வேலை பார்த்து ஈழநாடு வளர்ச்சிக்கு துணைபோனதை இன்றும் நினைத்துப்பார்க்கின்றேன்.
ஈழநாடுவின் ஆரம்ப காலத்தில் கொழும்பு அலுவல கத்திலிருந்து சுடச்சுட செய்தி அனுப்பியவர்களில் சிங்கள பத்திரிகையாளர் திரு. காமினி நவரத்ன, திரு. மகாலிங்க சிவம் (மாலி) ஆகியோரின் அளப்பரிய பணி குறிப்பிடத் தக்கது.
பத்திரிகையின் வளர்ச்சிக்கு விளம்பரம் முதுகெலும்பு மாதிரி ஈழநாடுவை பொருளாதார ரீதியில்-விளம்பரங்கள் மூலமாக தூக்கி நிறுத்தியவர்களில் திரு. முருகானந்தம் பாராட்டப்படவேண்டியவர்.
சுறுசுறுப்பான அந்தநாள் நிருபர்களில் திரு.எஸ். திருச்செல்வம், திரு. க. கிருஷ்ணராஜா, மாவிட்டபுரம் கே. ராசலிங்கம் திரு.ஆர். சுந்தரராஜசர்மா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடன், எஸ். ஆர். ஞானசுந்தரம், ஏஎன்எஸ். திருச்செல்வம், சி.பாலசிங்கம், கே. திருலோகமூர்த்தி எஸ். தில்லைநாதன் ஆகியோர் பணி பாராட்டத்தக்கது.
ஆசிரியர் பகுதியில் 1970 பிற்பகுதியில் என்னுடன்
27

Page 26
ിഞ്ഞോക
கடமையாற்றிவர்களில் ம. மனோகரன், கொழும்பு சோவியத் ஸ்தானிகர் அலுவலகத்தில் பணியாற்றி நான் தேர்ந்தெடுத்த கவிஞர் பெரி. சண்முகநாதன் மற்றும் செல்வி குணமணி, புலவர் செல்வி பூரணம், புலவர் கனகரத்தினம், பூரீ நடராஜா, கணேசநாதன் (பின்னர் யாழ். அரசு அதிபராக கடமையாற்றினார்) ஆகியோர் திறம்பட பணியாற்றினார்கள்.
நிருபர்களில் 1962ல் மாவிட்டபுரம் நிருபராக கடமையாற்றி, பின்னர் ஈழநாடு அலுவலகரான திரு.கே. ராசலிங்கத்தின் சில துணிச்சலான கடமைகளை மறக்க முடியாது.
1963ல் இலங்கை - இந்திய கடல் எல்லையிலிருக்கும் பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் ‘கின்னஸ்’ முயற்சியில் திரு.எஸ். நவரத்தினசாமி ஈடுபட்டிருந்தார்.
அப்போது மாவை நிருபராக கடமையாற்றிய திரு. ராசலிங்கம், திரு. நவரத்தினசாமியுடன் உதவிக்குச் சென்ற சுங்கப் பகுதியினரின் படகில் சென்று இந்திய மண்ணில் கால்பதித்து, சுவைபட செய்தி அனுப்பியதை மறக்க முடியாது. தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு, பின்னர் காங்கேசன்துறை சுங்கப்பகுதியினரால் முறியடிக்கப்படும் கடத்தல் செய்திகளை ராசலிங்கம் சுடச்சுட ஈழநாடுக்கு அனுப்பி, வாசகர்களின் பசியைத் தீர்த்ததை மறக்க முடியாது.
ஈழநாடுவை, பத்திரிகைத்துறையின் ஜாம்பவான்கள் அலங்கரித்திருந்ததால் தவழ்ந்து, எழுந்து, நடந்து பழகாமல் எடுத்த எடுப்பிலேயே ஈழநாடு கம்பீரமாக ஒடத் தொடங் கியது. விடிந்தால், பலர் கைகளிலும் ஈழநாடு இருக்கும். ஏதும் புதினம் என்றால் நாளைய ஈழநாடு பார்த்தால் சரி’ என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.
28

எஸ்.எம். கோலாத்தினம்
எனது முதல் மொழிபெயர்ப்பு
ஒருநாள், திரு. கோபாலரத்தினம் 'ஹிந்து ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் தலையங்கத்தை என்னிடம் கொடுத்து, "இதனை தமிழாக்கம் செய்து நிர்வாக, ஆசிரியரிடம் காட்டுங்கள்" என்று பணித்தார்.
'ஹிந்து’ பத்திரிகையை கையில் வாங்கியதும், உடம்பே சூடேறிவிட்டது. ஆங்கில அறிவு சற்று அரை குறைதான். இதில், 'ஹிந்து’ எடிட்டோரியல் மொழி பெயர்ப்பு!
ஆங்கில - தமிழ் லிப்கோ அகராதியை கையில் எடுத்து, மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். தமிழாக்கம் விரைவாக ஓடவில்லை. ஒரு மணிநேரமாக எனது மொழி பெயர்ப்பு நீடித்தது. திரு. கோபாலரத்தினமும் இதனைக் கண்டு கொள்ளவில்லை.
வரிக்கு வரி மொழி பெயர்ப்பு. மொத்தம் பத்துப்
-4 g 29

Page 27
Soanalon.) Alan
பக்கங்கள். ஒருபடியாக முடித்து, திரு. கோபால ரத்தினத்திடம் நீட்டினேன். படித்துப் பார்க்காமல் "திரு. ஹரனிடம் கொடுங்க.’ என்றார் அவர்.
மிகுந்த தயக்கத்துடன் நிர்வாக ஆசிரியர் அறைக்குள் நுழைந்தேன். ஒரே படபடப்பு என்னுடைய தமிழாக்கத்தைப் படித்தால் நிச்சயம் வேலை காலிதான். மனசு ஆணித்தரமாகச் சொல்லியது. அதுதானே உண்மை.
"வாருங்கள் உட்காருங்கள்” என்று புன்னகையுடன் வரவேற்ற திரு, ஹரன் “என்ன கையில் பேப்பர் கட்டு?” என்று வினவினார். “ஹிந்து பேப்பர் ஆசிரியர் தலையங்கம். திரு. கோபாலரத்தினம் மொழி பெயர்க்கச் சொன்னார்." தயங்கித் தயங்கி கூறினேன்.
"என்ன. ஹிந்து பேப்பர் எடிட்டோரியலா. இதை ஏன் உங்களுக்குத் தந்தார். தமிழ்நாடு தினசரி பத்திரிகைகளில் வந்த சின்ன சின்ன செய்திகளைத்தான் மாற்றி எழுதும் படி சொன்னேன். போங்க போங்க. நான் அவரிடம் சொல்லுகிறேன்.’’ என்றார் படுவேகமாக! எனது மொழி பெயர்ப்புக்கட்டையும் வாங்கவில்லை.
மனம் நிறைந்த சந்தோஷத்துடன் நிர்வாக ஆசிரியர் அறையை விட்டு வெளியேறி, அடுத்த அறையிலிருந்த பேப்பர் கூடைக்குள் எனது மொழி பெயர்ப்புக் கட்டை நன்றாக கிழித்துப் போட்டுவிட்டு, எங்களது அறைக்குள் நுழைந்து அமர்ந்தேன். சிறிதுநேரம் கழித்து திரு கோபாலரத்தினம் "திரு. ஹரன் படித்துப் பார்த்தாரா?” என்று கேட்டார்.
"ஒம். அவரிடம் கொடுத்துவிட்டேன்” என்றேன் நான். எனது முதல் பொய் அரங்கேறியது.
ஈழநாடு பத்திரிகை கொழும்புக்கு வெளியே இருந்து ஒரு மாகாணத் தினசரியாக வெளிவந்தாலும், நாடு பூராவும் பரவலாக விற்பனையானது.
30

கே.வி. மகாதேவா
ஈழநாடுக்கு ஒரு தனி செல்வாக்கு இருந்தது. தரமான, சுடச்சுட செய்திகள். சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. திரு.கே.பி. ஹரன் எழுதிய ஆக்க பூர்வமான ஆசிரிய தலையங்கங்கள் பெரிதும் வரவேற்கப் பட்டன. பல பாடசாலைகளில் அறிவு பூர்வமாக ஏற்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அவர் தினசரி எழுதிய ‘ஐயாறன்’ பகுதியும் வாசகர்களை மிகவும் கவர்ந்தது. பக்திமயமாக இருந்தது. ஆரம்பத்தில் பத்து சதமாக விற்பனையான ஈழநாடு, விற்பனையிலும் வாசகர் தொகையிலும் ஏனைய கொழும்பு தினசரிகளை முந்தியது. வடக்கின் மூலை முடுக்கெல்லாம், கிராமம் கிராமமாக கொடி கட்டிப் பறந்தது.
எனக்கு ஆரம்பகாலம் என்பதால் ஆசிரியர் ஹரன், அடிக்கடி “வெளியிலும் சென்று செய்திகளை சேகரியுங்கள்’ என்று அறிவுரை கூறுவார்."
‘நாய் மனிதனைக் கடித்தால் செய்தி அல்ல, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி” என்று பல உதாரணங்களைக் கூறுவார்.
இந்தக்கால கட்டத்தில்தான் 1961ல் திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது.
ஈழநாடு அலுவலக நிருபர் கா. யோகநாதன் பம்பரமாகச் சுழன்று செய்திகளை சுடச்சுட சேகரித்தார். ஈழநாடு பத்திரிகையும் ஒரே நாளில் பல விசேட பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் சத்தியாக்கிரகம். மக்களின் ஆதரவு அமோகமாக சற்றும் குறையவில்ல.
31

Page 28
Sonatoryaan
திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி நடந்தது. ஆட்சியாளரின் பொலிஸ் அடக்கு முறையும் தினசரி அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவ்வப்போது அசம்பாவிதங்கள் தலைதூக்கும். அடுத்த சிலமணி நேரத்திலேயே ஈழநாடு விசேட பதிப்பு வெளிவந்துவிடும். செய்தி ஆசிரியர் கோபாலரத்தினம் இரவு பகல் பாடுபட்டு பத்திரிகையை வளர்த்தார். முதல் பக்க தலைப்புச் செய்தி எழுதுவதில் கொழும்பு பத்திரிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவருக்கு உதவியாக உதவி ஆசிரியர்கள் அனைவரும் தோள் கொடுத்தனர். சத்தியாக்கிரக செய்தி சேகரிப்புக்கு, அலுவலகத்தின் பணியிலிருந்து நானும், பல தடவைகள் விரட்டப்பட்டேன்.
அனுபவம் மெதுவாகத் தலைதுாக்க, துடிப்பும் ஆர்வமும் வளரத் தொடங்கியது. புதிதாக எதுவும் எழுதவேண்டும் என்ற துணிவு பிறந்தது.
ஒருநாள் கச்சேரிப் பகுதிக்கு வந்திருந்த மாணவர்கள் சிலரைச் சந்தித்து ஈழநாடு என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். ஒரு தனி மரியாதை. நானே புதிதாக ஒரு யோசனையை அவர்களிடம் சொன்னேன். வெகவாகக் கவரப்பட்டார்கள். அற்புதமாகச் செயல் பட்டார்கள். நான் செய்தியாக எழுதினேன். அடுத்த நாள், முதல் பக்க தலைப்புச் செய்தியாக அது வெளிவந்தது. அட்டகாசமான வரவேற்பு செய்தி இதுதான்.
"இரத்தத்தில் கையெழுத்திட்டு பிரதமர் சிறிமாவுக்கு மகஜர்! தந்தை செல்வாவிடம் மாணவர்கள் கையளிப்பு!”
ஆசிரியர் திரு. ஹரன் என்னை நேரடியாக அழைத்து "பேஷ். நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி." என்று பாராட்டினார்கள்.
32

கே.வி. மகாதேவா
இக்கட்டத்தில் எனது திருமண வாழ்க்கை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அதுவும் ஒரு த்ரில் தான். 1958 காலப்பகுதி வீரகேசரி வாரமலரில் வெளியாகும் ‘மாணவர் மலர்’ பகுதியில் அவ்வப்போது இடம்பெறும் இலக்கிய சர்ச்சைகளிலும், தினகரன் பத்திரிகையில் புதன்கிழமைதோறும் வெளிவரும் ‘புதன் மலரி'லும் நான், தாராளமாகக் கலந்து கொள்வேன். பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகும்போது எழுதியவரின் புகைப்படமும், அவர் பற்றிய விபரமும் சிலவேளை பிரசுரமாவதுண்டு.
வீரகேசரி மாணவர் மலர்' பகுதியில் ஒரு தடவை, கம்ப இராமாயணத்தில் இடம் பெற்ற பாத்திரங்கள் பற்றி சர்ச்சை எழுந்தது. 'செஞ்சோற்றுக்கடன் தீர்த்தவன்’ எனும் தலைப்பில் கும்பகர்ணன் பற்றி நான் எழுதிய கட்டுரை எனது புகைப்படத்துடன் அறிமுக தகவல்களுடன் வெளியாகியிருந்தது.
இப்படியான கட்டுரைகளைப் படிப்பதில், மலை யகத்தில் ஒரு 'கான்வென்ட்’ பாடசாலை மாணவிகள் சிலர் மிகவும் ஆர்வம் காட்டினார்கள் போலும். இவர் களில் ஒரு குழுவினர், வாரந்தோறும் கட்டுரையுடன் வெளியாகும் புகைப்படங்களுடன் driglu Col Juri விபரங்களை குறிப்பெடுத்து, மாதமுடிவில் பெயர்சீட்டுக் குலுக்கல் நடத்தினார்கள். இவ்விதமாக திருவுளச் சீட்டு நடத்தி, ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் சீட்டின் பெயர் விபரங்களை தங்கள் வசம் வைத்திருந்து, அந்த (எழுத்தாள) ஆண் நண்பருடன் கடிதம் மூலம் பேனா நட்புக் கொள்வார்கள். பேனா நட்புத் திருமணம்
ஒரு நாள், நான் உயர்வகுப்பு பயின்று கொண்டிருந்த
33

Page 29
Scroanajor) Alan
கல்லூரி விலாசத்துக்கு, எனது பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. படித்தேன். ஒரு பேனா நண்பியின் கடிதம் அது. முதன் முதலில் எனக்கு ஒரு பேனா நண்பியிடமிருந்து வந்த கடிதம். உற்சாக வேகத்தில் பதில் எழுதினேன். சில நாட்களில் பதில் வந்தது. நானும் எழுதினேன். இந்தக் ‘கடிதப் பயணம்’ சுமார் மூன்று வருடங்கள் நீடித்து நான்காவது ஆண்டு 1961ல் திருமணத்தில் முடிந்தது. அப்பொழுது எனக்கு வயது இருபத்து ஒன்று. மனைவிக்கு வயது பதினெட்டு.
திருவுளச் சீட்டு அதிர்ஷ்டம் மூலம், பேனா நட்பு வழியாக எங்கள் திருமணம் நிச்சயமாயிற்று. எழுத்துத் தொழிலுக்கு எப்படி பேனா உதவியதோ, அதே போல் வாழ்க்கைத் துணைவியைத் தேடுவதற்கும் பேனா (நட்பு) உதவிற்று.
ஈழநாடு வில் 1961ல் நான் வேலைக்கு சேர்ந்தபோது நிரப்பிக் கொடுத்த விண்ணப்பப் பத்திரத்தில் எனது கல்வித் தகைமை, எழுத்து - பத்திரிகை அனுபவம் பற்றி மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததே தவிர, திருமணமான வரா என்று வினா எதுவும் எழுப்பப்படவில்லை. நானும் இது பற்றி குறிப்பிடவில்லை. எழுதியிருந்தால் எனக்கு வேலை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். காரணம், குடும்பஸ்தருக்குரிய சம்பளம் வழங்குவது அப்போது கஷ்டமாக இருந்திருக்கும்.
திருமணமானதும் முதலில், யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் குடியிருந்த எனது மூத்த சகோதரியுடன் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். ஈழநாடுவில் வேலை கிடைத்ததும், சில நாட்களிலேயே யாழ். வண்ணார்பண்ணை மனோகரா தியேட்டர் அருகில் தனிக்குடித்தனம் சென்று விட்டோம்.
34

கே.கி. மகாதேவா
நான், மனைவி, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கோபால் ஒழுங்கையில், ஒரு வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்தோம். வாடகை இருபது ரூபாய் ஆகும். மின்சாரக் கட்டணமாக இரண்டு ரூபாய் வீட்டுக்காரருக்கு தனியாக கொடுக்க வேண்டும்.
ஈழநாடுவில் வேலை ஆரம்பித்து ஒரு மாதம் பூர்த்தியாகி, அன்று சம்பள நாள். எனக்கு அழைப்பு வந்து, நிர்வாக ஆசிரியர் திரு. ஹரன் அறைக்குள் நுழைந்தேன். ஒரு கவரை கையில் கொடுத்து, "இது உங்களுக்குரிய வேதனம். நன்றாக உழைக்க வேண்டும்” என்றார். முதல் மாத சம்பளப்பணத்தை பெருமையுடன் வாங்கி ஷேர்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டேன். வேலை முடித்து அன்று வீடு நோக்கி சைக்கிளில் புறப்பட்ட எனக்கு வழி நெடுகிலும் மகிழ்ச்சி!
‘முதல் மாத சம்பளம். வீட்டு வாடகை இருபத்து இரண்டு ரூபாய். மிகுதியில் மனைவிக்கு ஒரு சேலை. இதுபோக மீதிப்பணத்தில் சில சமையலறைப் பாத்திரங்கள், பொருள்கள். கவரில் இருப்பது எவ்வளவு பணம் என்று பார்க்காமலேயே பகல்நேர சந்தோஷக் கனவுகள்.
வீட்டுக்குள் நுழைந்ததும், "இந்தா எனது முதல் மாதச் சம்பளம்” என்று மனைவியிடம் கவரைக் கொடுத்தேன். "நீங்களே பிரித்துப் பாருங்கள்” என்றாள் மனைவி. ஸ்ரேப்லரால் ஒட்டப்பட்டிருந்த அந்தக் கவரின் பின்னைப் பிரித்து உள்ளே இருந்த நோட்டுகளை எடுத்தேன். கசங்காத ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. ஆமாம்; எனது முதல் மாதச் சம்பளம் ஐம்பது ரூபாய்! வீட்டு வாடகை இருபத்து
35

Page 30
Manadora)Adan
இரண்டு ரூபாய். மிகுதி இருபத்து எட்டு ரூபாய். மின்னல் வேகத்தில் மூளை செயல்பட்டது. மேகங்களே கருக்காமல் இடிமுழக்கம் கேட்பதுபோல் இருந்தது.
ஆனாலும், அந்த ஐம்பது ரூபாய்ச் சம்பளம் சுகமான சுமையாகவே இருந்தது. அரசின் பங்கீட்டு (கூப்பன்) புத்தகத்துக்கு இலவசமாக அரிசி மற்றும் சில உணவுப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைத்ததால் சமாளிக்க முடிந்தது. அன்று - 1961ல் ஒரு சவரின் தங்கத்தின் விலைகூட எழுபது ரூபாவாகத்தான் இருந்தது. எனது சம்பளம் ஒரு குறைவாகத் தெரியவில்லை.
ஈழநாடு ஆசிரியர் குழுவினரின் ஒட்டு மொத்த முயற்சியினால், பத்திரிகை தினந்தோறும் வளர்ந்து கொண்டே இருந்தது. வாசகர்களின் எதிர்பார்ப்பை பிரதிகளில் முழுமையாக நிறைவேற்ற ஈழநாடு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டது.
டாக்டர் சண்முகரத்தினம் அவர்கள், இரவு நேரத்தில் - அது நள்ளிரவாகவும் இருக்கலாம். அடிக்கடி அலுவலகம் வருவார். அப்படியே ஆசிரியர் பகுதியையும் பார்வையிடுவார். அவரது ஒவ்வொரு வருகையும், இரவில் வேலை பார்க்கும் உதவி ஆசிரியர்களுக்கு சிறந்த ‘டானிக்’காக இருக்கும்.
சிலகாலம் கடந்து, எனக்கு “மாணவர் மலர்’ பகுதி நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டது. 'மூளைக்கு வேலை’ எனும் புதிய பகுதியை அறிமுகப்படுத்தியதுடன், “பறக்கும் பாம்பு’ எனும் துப்பறியும் தொடர் நவீனத்தையும் ஆரம்பித்தேன். ஒரு ஆங்கில திரைப்படத்தின் உந்துதல் இது. இப்பகுதிக்கு, அவ்வப்போது, இயக்குநர் திரு. பா. சிவனாந்தன் அவர்கள் அளித்த ஊக்கம், மாணவர்,
36

கே.வி. மகாதேவா
மாணவிகளிடம் நல்ல மவுசு பெற்றதுடன், தனி முத்திரையும் பதித்தது.
ஈழநாடு சனிக்கிழமை பதிப்பு சற்றுக் கூடுதல் பக்கங்களுடன்தான் வெளிவரும். காரணம் ‘மாணவர் மலர்’ பகுதிதான். ‘மாணவர் மலர்’ பகுதி சனிக்கிழமை தோறும் தான் வெளிவரும். பல போட்டிகள் நடத்தி, பரிசுகள் பெற்றோரை அலுவலகத்துக்கு வரவழைத்து பெரும் விழாவும் கொண்டாடினேன். எனது துப்பறியும் தொடர் கூட ஐம்பத்து இரண்டு வாரங்களைத்தொட்டு விட்டது! எனக்கு அது ஒரு பொற்காலம். மற்றுமொரு சம்பவம். யாழ்ப்பாணம், மானிப்பாய், கூழாவடிப் பகுதியில் ஒரு கொலை நடந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் கடமை யாற்றும் ஒரு பிரமுகர் வீட்டில் வேலை பார்க்கும் காளிமுத்து என்பவன்தான் இக்கொலையைச் செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச்சென்று செய்தி சேகரிக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது; மற்றுமொரு புதிய அனுபவம்.
அந்த வீடு சென்று பார்வையிடும் நேரத்தில்தான் பொலிஸாரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்களுக்கு தலைக்காயங்கள். வீட்டின் சமையல் பகுதி, முன்ஹால் முழுவதும் இரத்த வெள்ளம். பாதிக்கப்பட்டவர்கள் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் பணிபுரியும் ஒரு பிரமுகரின் தாயும் சகோதரியும். குறிப்பெடுத்துவிட்டு வெளியே வந்தேன். பார்வையாளர்கள் ஒருவருக் கொருவர் தனிக்கதை. மரக் கட்டையால் தலையில் தாக்கப்பட்டு தாயார் கொலை செய்யப்பட்டதாக, அடுத்த நாள் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக எழுதினேன். அந்த விறகு கட்டை, ஒரு மரக்
37.

Page 31
Manador),Adan
காலையில்தான் வாங்கப்பட்டதென்றும், சிறு வயதிலிருந்து 6) வருடங்கள் வேலைக்காரனாகப் பணியாற்றிய காளிமுத்து, சம்பளப் பிரச்சனையால்தான் கொலை செய்யும் அளவுக்கு தூண்டப்பட்டான் என்றும் அடுத் தடுத்த நாள் முதல் பக்கச் செய்திகளாக எழுதினேன். இந்த விபரங்கள். பொலிஸாருக்கு பின்னர்தான் தெரிய வந்தது) இந்த விசேட செய்தி எல்லாம் பெறப்பட்ட இடம் ஒரு கள்ளுக்கடைதான். இங்குதான் அரசியல்வாதிகள் தனியார் பற்றி இரகசியமான, பல ருசிகரமான தகவல்கள் கிடைக்கும் என்று எனக்கு அறிமுகம் செய்தவர் எனது சக ஊழியர்தான். அது உண்மை என்பதும் பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. இக்கொலை வழக்கில் காளிமுத்து வுக்கு மரண தண்டனை கிடைத்தது.
இப்படியாக சிறப்புச் செய்திகள் வெளிவரும்போது, பத்திரிகையின் விற்பனையும் பல ஆயிரம் அதிகரித்துவிடும். ஈழநாடுவின் முதல், கடைசி பக்கச் செய்திகள் நள்ளிரவு தாண்டி, ஒரு மணிக்குத்தான் அச்சுக்குப் போகும் என்பதால், கொழும்பு பத்திரிகைகள் அடுத்த நாள் வட பகுதி வரும் பொழுது ஈழநாடு மட்டும்தான் கடைசி மற்றும் சிறப்புச் செய்திகளைத் தாங்கியிருக்கும். இந்த வரிசையில், பாராளுமன்ற பட்ஜெட் செய்திகளில் பரபரப்பான கடைசி தகவல்களை ஈழநாடு மட்டும்தான் வெளியிடும்.
இயக்குநர் திரு. பா. சிவானந்தன் சில சில சந்தர்ப்பங்களில் மிகவும் துடிப்பாகச் செயல்படுவார். "பட்ஜெட் செய்திகள் வரும்பொழுது நள்ளிரவு விசேட பதிப்பு வெளியிடலாமே” என்று யோசனை கூறுவார். ஆனால் அந்த நடுநிசியில் விற்பனை செய்வது எப்படி? நாங்கள்தான் செயல்படுத்த வேண்டும்!
38

Ges-sál. Desn'C3.56ar
தோளில் சுமந்து ‘ஈழநாடு விற்பனை
யாழ். நகரின் மத்தியிலுள்ள ஓரிரு தியேட்டர் மனேஜர்மாருடன் இரவு பத்துமணிக்குமேல் தொலைபேசியில் தொடர்புகொள்வோம். "பட்ஜெட்’ யோசனைகளை அவருக்கு இரகசியசெய்தியாகத் தெரிவித்து, இரவு இரண்டாவது படக்காட்சி முடிந்ததும் தியேட்டருக்கு வெளியே "ஈழநாடு விசேட பதிப்பு விற்பனையாகிறது" என்று தியேட்டரில், 2வது காட்சி இடைவெளி நேரத்தில் ஒரு "ஸ்லைட்” விளம் பரம் வெளியிட்டால் உதவியாக இருக்கும் என்று கோருவோம். பட்ஜெட் செய்திகள் கிடைத்த பரம சந்தோஷத்தில் "ஒ. அதற்கென்ன..” என்று பதிலளித்து விடுவார்கள்.
பிறகு என்ன? நான்கு பக்க விசேட பதிப்புடன் சில நூறு பிரதிகளை தோளில் சுமந்து, நாங்கள் சிலர் தியேட்டர் வாசலில் நிற்போம். படம் முடிவடைந்து ரசிகர்கள் வெளியேவரத் தொடங்கியதும் "சீனி. மாவு- பருப்பு. பாண் விலை அதிகரிப்பு.” என்று ஆளுக்கு ஆள் பல தடவைகள் கத்துவோம். பதினைந்து நிமிடங்களுக்குள் எல்லா பத்திரிகைகளும் விற்பனையாகிவிடும். விலை பத்து சதம்தான். இந்த பரபரப்பு விற்பனையில், என்னுடன் கடமையாற்றிய 'காம்போஸிட்டர்’ நண்பர்கள் திருவாளர்கள் சிவனேசன், ஜோசப், தேவராஜா போன்றவர்களை மறக்க முடியாது.
சத்தியாக்கிரக போராட்ட காலத்தில் ‘ஈழநாடு’ அதிகபட்ச விற்பனையைத் தாண்டியிருந்தது. இதேபோல், கோகிலாம்பாள் கொலை வழக்கின்போதும் ‘ஈழநாடு’ அதிகபட்ச விற்பனையைத் தொட்டிருந்தது. 1970 பிற்பகுதியில் - தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தின் உச்சக்கட்டத்தின்போது ‘ஈழநாடு’ பதிப்பு st LOITri இருபத்தையாயிரம் பிரதிகளையும் தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
39

Page 32
Senanasons Alan
கோகிலாம்பாள் கொலை வழக்கு
கோயிலில் பூசாரியாகக் கடமைசெய்யும் தனது கணவனை, கள்ளக்காதலன் துணையுடன் கோகிலாம்பாள் எனும் பெண் கொலை செய்து, மூவர் தூக்குத் தண்டனை பெற்றிருந்த வழக்கு வடக்கில் மட்டுமல்ல, முழு இலங்கை யிலும் பிரபல்யம் பெற்றிருந்தது.
கோகிலாம்பாள் தனது பூசாரிக் கணவன் காசிலிங்க சர்மாவை, வீட்டு அறையில் கொலை செய்து, வீட்டு வளவுக்குள்ளேயே மண்ணில் புதைத்து, அதன் மேலே மாட்டு சாணக் குவியலைப் பரப்பியிருந்தாள். இவளின் பெண் குழந்தைதான் கண்கண்ட சாட்சி. கொலை நடந்ததை வீட்டுக் கதவு சாவித் துவாரம் வழியாக அந்தக் குழந்தை பார்த்ததை யாழ். நீதிமன்றத்தில் அப்படியே கூறியது. தீர்ப்பு கோகிலாம்பாளுக்கும், வேலுப்பிள்ளைக்கும் மற்றுமொருவருக்கும் தூக்குத் தண்டனை, வேலுப் பிள்ளையுடன் மற்றொருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். கோகிலாம்பாள் பலவருடங்கள் சிறைவாசமிருந்து (பெண் என்பதால்) விடுதலையாகி தனது சொந்த ஊரில் தீவுப்பகுதியின் 6CD5 ஒதுக்குப்புறத்தில் வாழத் தொடங்கினாள்.
இந்த நீதிமன்றச் செய்திகளை வெகுவிரிவாக சாமர்த்தியமாக, எழுதி வந்தார் ‘ஈழநாடு’ அலுவலக நிருபர் திரு. கா. யோகநாதன். அவர் பொதுக் கூட்டங்களில், கருத்தரங்குகளில் செய்தி எடுப்ப தென்றாலும், அல்வா சாப்பிடுவது மாதிரித்தான். வார்த்தைகள் சிந்தாமல் சிதறாமல் சித்தரிக்கப்படாமல் எழுதிவிடுவார். இத்தனைக்கும் இவருக்கு சுருக்கெழுத்தே தெரியாது. ஏன், ‘ஈழநாடு’ பத்திரிகையில் வேலைபார்த்த எந்த உதவி ஆசிரியர் - நிருபர்களுக்குக்கூட சுருக்கெழுத்து தெரியாது. ஆனால் செய்தி தத்ரூபமாக அமைந்திருக்கும்.
40

கே.வி. மகாதேவா
இவர்களில், என்னுடன் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பணியாற்றிய திரு.டி.எம். முருகையா (டி.எம்.எம்) 'உலக மேடை’ எனும் பகுதியில் சர்வதேச செய்திகளை வானொலி மூலம் கேட்டு எழுதுவதில் தனிச்சிறப்பு பெற்றிருந்தார். விரல் நுனியில் நடப்புகளின் சரித்திரத்தை வைத்திருப்பார். செய்திகளில், சம்பவங்களுடன் பின்னணிக் கதையும் வரும்.
செய்தி ஆசிரியராக பணியாற்றிய திரு. கோபால ரத்தினத்தின் (எஸ்.எம்.ஜி) எழுத்துப்பாணி என்னை ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் கவர்ந்திருந்தது. ‘ஈழநாடு’வின் சுதந்திரமான தேசியக் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செய்திகளின் வரைமுறைகளை நாங்களே - உதவி ஆசிரியர்கள் - வகுத்திருந்தோம். எல்லை மீறி, விற்பனை நோக்கத்திற்காக, எந்த ‘பச்சை செய்திகளையும் ‘ஈழநாடு’வில் எழுதமாட்டோம். இந்த நடைமுறை, ஆரம்பகாலம் முதல் கடைசி நாட்கள் வரை ‘ஈழநாடு’வில் கடைப்பிடிக்கப்பட்டதை நான் பெருமையுடன் குறிப்பிட வேண்டும்.
திரு. கோபாலரத்தினத்தின் செய்தி கிரகிப்பு : ஞாபகசக்தி எனது கவனத்தை ஈர்த்திருந்தது. கட்டுரை களிலிருந்தும், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் முக்கிய பிரமுகர்களின் உரைகள், சந்திப்புகள், பேட்டிகள் போன்றவற்றின் வரிகள், வார்த்தைகளுக்கிடையே மறைந்துகிடக்கும் அர்த்தங்களை புரிந்து, அவற்றை ‘மாயாஜாலமா’க்கி செய்தி எழுதும் அவரின் இரகசிய நடைமுறையையும் ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றத் தொடங்கினேன். ‘ஈழநாடு'வில் இருந்த திரு. கோபாலரத்தினம் ஒய்வானதும், செய்தி ஆசிரியர் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அதன் பின்னர்தான் அந்த எழுபதுகளிலும், எண்பதுகளிலும் எத்தனை சோதனைகள்! நாட்டை விட்டு
41

Page 33
Manador)Aan
வெளியேறி கோபு தமிழகம் தங்கியிருந்தபோது அவரைத் திருச்செந்தூரில் சந்தித்தேன். அவரின் இரண்டாவது மகன் பார்த்திபனின் திருமணம் திருச்செந்தூரில்தான் நடந்தது. நானும் மனைவியும் கலந்து கொண்டு எங்களது பங்களிப்பை நிறைவேற்றினோம். கோபுவின் மனைவி குயின்ஸி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை அன்புடன் உபசரிப்பார். நான் கோபுவை கண்ட, 1961 ஆண்டு முதல், கடைசியாக சந்தித்த அவர்களது மகனின் திருமண நாள்வரை அந்த விருந்தோம்பல் பண்பு சிறிதும் மாறவில்லை. கோபுவுடனான எனது நட்பு கால்நூற்றாண்டையும் கடந்து L6U) ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது. திருச்செந்தூரில் இருந்த காலத்தில் அவரது நட்பு, கடிதம் மூலமாகவும் நீடித்திருந்தது.
எனது நட்புக்குரிய சக ஊழியர் திரு.சு. சபாரத்தினம். ‘புள்ளிகளை ஆண்ட மன்னன்’ என்று புகழப்பட்ட இவர், ‘ஈழநாடு’வில் ஆரம்பகாலத்தில் ஒப்புநோக்காளராக இருந்தபோது பல குட்டிக் கதைகளை எழுதியுள்ளார். யாழ் இலக்கிய வட்டத்தின் முக்கிய தூணாக விளங்கி இலக்கியப் பணியாற்றிய சசிபாரதி எனப்படும் இவர், சிறிது காலம் ‘ஈழநாடு’ வாரமலர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
எனது , மற்றுமொரு நீண்டகால சகா ‘ஈழநாடு’ ஊழியர் திரு. ஈ.கே. ராஜகோபால். குடும்ப பாசத்துடன் நாங்கள் பழகினோம். வல்வெட்டியிலுள்ள அவரது இல்லத்துக்குச் செல்லும் போதெல்லாம், அவரது தாயார், அன்புடன் எள்ளுப்புண்ணாக்கை தானாகவே தயார் செய்து ஆசை ஆசையாக கொடுத்து மகிழ்ந்ததை மறக்க முடியவில்லை. ராஜகோபால் என்னுடன் பணியாற்றிய காலத்தில் ‘ஈழநாடு’ இயக்குநர் திரு. பா. சிவானந்தனின் தூண்டுதலில் புதுப்புதுக் கோணங்களில் வாரமலரில்
42

கே.சி. மகாதேவா
செயல்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து பல மைல் தூரத்திலிருந்தது பருத்தித்தீவு. இந்த இடம், போக்குவரத்து பெரிதும் துண்டிக்கப்பட்ட ஒரு மர்மத் தீவாகவே இருந்தது. இப்படி ஒரு பகுதி இருக்கிறது என்பதே யாழ் மக்கள் பலருக்கும் தெரியாது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் பருத்தித்தீவு சென்று அங்கு சூழ்ந்திருக்கும் மர்மத்தை உடைத்து ராஜகோபால் தொடர்ச்சியாக எழுதிய பயணக்கட்டுரை மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. 1965ஆம் ஆண்டு யாழ் பெரியாஸ்பத்திரியில் எனது மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தபோது இரத்தம் தேவைப்பட்டது. எனது நிலை தெரிந்து 'ஓ' குரூப் இரத்தம் உள்ள ராஜகோபால் உதவிக்கு வந்து பயபக்தியுடன் இரத்ததானம் அளித்தது, எங்கள் நட்பின் - பாசத்தின் இறுக்கத்தை காட்டியது. மறக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆருடன் எனது முதல் சந்திப்பு!
தமிழக திரையுலக நடிகர்கள் யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் ஈழநாடு பேட்டி விசேடமாக இருக்கும். இவற்றில் முக்கியமாக யாழ் பாம் ஹோட்டலில் எஸ்.எஸ். ராஜேந்திரன், இலட்சிய நடிகை விஜயகுமாரி யுடன் நான் கண்ட பேட்டி மறக்க முடியாதது! இதே மாதிரி 1965 அக்டோபரில் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன், சரோஜாதேவி யாழ். விஜயமும் மறக்கமுடியாதது. பலாலி விமான நிலையத்திலிருந்து நேராக யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். இரவு நேரம், நல்ல மழை. இருவரும் மழையில் ஒரளவு நனைந்திருந்தனர். இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பைச் சேர்ந்த திரு.கே. மயில்வாகனன், என்னை அழைத்துச் சென்று எம்.ஜி.ஆர்.
43

Page 34
Manadoa) Aan
சரோஜாதேவிக்கு அறிமுகப்படுத்தினார். எம்.ஜி.ஆர். அவர்களை முதலில் நேரில் பார்த்தது இங்குதான். அந்த நேரத்தில் பேட்டி எடுக்க முடியாவிட்டாலும், தாராளமாக செய்தி எழுத எனக்கு அதிக தகவல்கள் கிடைத்தன.
சினிமா என்றால் நிர்வாக ஆசிரியர் திரு. ஹரனுக்கு அதிகம் பிடிக்காது. சினிமா நடிகர்களின் செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டால், நேரில் அழைத்து கண்டிக்காமல் விடமாட்டார்.
1967ல் திரு. எம்.ஜி.ஆர். - திரு எம்.ஆர். ராதா துப்பாக்கிச் சூடு சம்பந்தமான பரபரப்புச் செய்திகளை முதல் பக்க செய்தியாக வெளியிடுவோம். நான் இரவு நேர வேலை பார்க்கும்போது, இப்படியான செய்திகளை முதல் பக்க தலைப்புச் செய்தியாக வெளியிடுவேன். இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கியிருந்துவிட்டு காலை ஆறு மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டதும், திரு. ஹரன் அவர்களை (தினசரிப் பத்திரிகைகளை மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பார்) தாண்டியே வெளியேற வேண்டும்.
"மிஸ்டர் மகாதேவா." என்று அழைப்பார். பின்னர்; "நடிகர்களுக்கெல்லாம் முதல் பக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை உங்களுக்கு கூறுவது." என்று கண்டிப்புடன் ஆரம்பிப்பார்.
“ஸேர். வாசகர்கள் இதனைத்தான் எதிர்பார்க் கிறார்கள்” என்று பதில் கூறி முடிப்பதற்குள் இடைமறித்து, "வாசகர்களை நாங்கள்தான் உண்டாக்கின்றோம். இனிமேல் கவனமாக இருங்கள். ‘ஈழநாடு’ ஒரு கெளரவமான பத்திரிகை" என்று கடுகடுப்பார், அவர் முகத்தில் ஆயிரம் வாட் மின்சக்தி தோன்றி மறையும்.
வழக்கமான வசைதான். ஆனால் கடைசிக்காலத்தில்
44

(36.e. Desross T
திரு. ஹரன் அவர்கள் தனது 'ஐயாறன்’ தினசரிப் பகுதியில் முதலமைச்சர் திரு எம்ஜிஆர். அவர்களை, அவரது ஆட்சியை மிகவும் வாழ்த்தி பல தடவைகள் புகழ் பாடினார்.
ஈழநாடு 1958ல் வார இதழாக ஆரம்பிக்கப்பட்ட போது கொழும்புத்துறை யோக சுவாமிகளிடம், ஆசிரியர் குழுவினர் ஆசிபெற சென்றிருந்தனர். பத்திரிகையை வாங்கிக் கொண்டு, பக்கங்களை நோட்டமிட்ட சுவாமியார், "ஏசுவார்கள். எரிப்பார்கள். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள்" என்று ஆசி வழங்கினார் அல்லவா? இது பெரும் உண்மையாகிவிட்டது.
ஈழநாடு செய்திகள், விமர்சனங்களுக்கு, அவ்வப் போது குறிப்பாக அரசியல் மேடைகளில், ‘ஏச்சு’ தாராளமாக கிடைக்கும். இதே மாதிரி 1981ல் ஐக்கிய தேசியக் கட்சியின் "கமாண்டோக்"கள் ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகத்தை முழுவதுமாக தீவைத்து எரித்து நாசமாக்கினார்கள். கே.கே.எஸ். வீதியிலுள்ள கலாநிலையம் அச்சகத்திலிருந்து ‘ஈழநாடு’ மீண்டும் வெளிவரத் தொடங்கியது. பீனிக்ஸ் பறவை போல எரியுண்ட அக்கினி சாம்பலிலிருந்து மீண்டும் சுடர்விட்டது ஈழநாடு.
செங்கை ஆழியான் பிரசுரித்த
ஈழநாடு மீண்டும் வெளிவரத் தொடங்கியது. இப்படியும் நடக்கிறது’ என்ற எனது பகுதியில் "செய்தி தரும் ஈழநாடு செய்தி ஆயிற்று" என்று, எரிந்த சரித்திரத்தை முழுமையாக எழுதினேன். இவ்விபரம் ஒருவரிகூட அழிக்கப்படாமல் பிரபல எழுத்தாளர் திரு. செங்கை ஆழியானின் மாத வெளியீட்டில் இடம் பெற்றிருந்தது.
5 pë- 45

Page 35
(
செங்கை ஆழியான் அரசு படையினரால் ஈழநாடு எரிக்கப்பட்டது உலகச் செய்தியானது. தண்டனைகளிலிருந்து தப்புவதற்காக அரசு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்தது. யாழ் முன்னாள் அரசாங்க அதிபர் திரு. லயனல் பெர்னாண்டோ இந்தக் கமிஷனின் தனித் தலைவராக நியமிக்கப்பட்டதால் ஒரளவு நியாயம் கிடைத்தது.
ஈழநாடு நிர்வாகத்துக்கு சில இலட்சங்கள் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் வரை உதவியும் கிடைத்தது. ஈழநாடு நிறுவனத்தலைவர் திரு.கே.சிதங்கராசா முயற்சியினால் சில மாதங்களுக்குள்ளாகவே ஈழநாடு அலுவலகக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு சொந்த அலுவலகத்திலிருந்தே ஈழநாடு மீண்டும் வெளிவரத் தொடங்கியது.
46
 

Casel. LD5TCB56hT
ஈழநாடு பத்திரிகையில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற காலத்தில், கொழும்பு பத்திரிகையாளர்களின் பரவலான நட்பும், சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் தொடர்பும் எனக்கு கிடைத்தது. வடபகுதி, குறிப்பாக யாழ்ப்பாணம், முக்கிய செய்திகள் என்றால் ஈழநாடுவுடன் தொடர்பு கொண்டு ஊர்ஜிதப்படுத்தி செய்தி வெளியிடு வதை சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வழக்கமாக்கி கொண்டிருந்தன.
மக்கள் சேவையில் ‘ஈழநாடு’ ஆற்றிய மற்றுமொரு மகத்தான பணி “வடபகுதி சூறாவளி நிதி அளிப்பு!
1964ம் ஆண்டு வடபகுதியில் பயங்கர சூறாவளி ஏற்பட்டது! உயிர்ச் சேதத்தை விரல்விட்டுக் கூறினாலும், பொருள் சேதம், பயிர்ச் சேதம் "இமயமலையாக இருந்தது! ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. வாழை மரங்கள் ஆயிரக்கணக்கில் சரிந்தன. விவசாயிகளுக்கு பெரு நஷ்டம் ஏற்பட்டது.
யாழ்ப்பாண நகரில் மட்டுமின்றி, வடபகுதியே இருளில் மூழ்கியது! போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. பல நாட்கள் மின்சாரத் தடை ஏற்பட்டது! தொலைபேசி சேவை முற்றிலும் ஸ்தம்பித்தது! திடீரென மக்களை கலக்கிவிட்ட சூறாவளியினால் ‘ஈழநாடும் பாதிப்புக் குள்ளான போதிலும், வெளியீடு தடைப்படவில்லை!’
சூறாவளிச் செய்தி அறிந்து ‘ஈழநாடு’ எப்படி இருக்கிறது என்பதை நாடி’ பிடித்து அடுத்த நாள் காலை ஏழு மணியளவில் டாக்டர் கே.சி. சண்முகரத்தினம் ‘ஈழநாடு அலுவலகம் வந்தார். நேராக இயந்திரப் பகுதிக்குச் சென்றார். ‘ஈழநாடு’ பக்கங்கள், அச்சு இயந்திரத்தில் ஏற்றப்பட்டிருந்தன. இயந்திரப் பகுதியின்
47

Page 36
$('
முக்கிய பொறுப்பாளர் 'பாலா’, மூளையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தார். சுற்றிவர, பல பகுதியின் ஊழியர்களும் முழித்துக் கொண்டிருந்தனர். அலுவலகம் முன்பாக கேற்றுக்கு வெளியே, பத்திரிகை வரவை எதிர்பார்த்து, ‘ஏஜன்டுகளுடன் ஏராளமான வாசகர் களும் அலைமோதிக் கொண்டிருந்தனர். சிலரது 'ஐடியா வேலை செய்தது.
அச்சு இயந்திரத்தின் வலது பக்கமாக இருந்த வட்டவடிவமான உருளையின் துவாரத்தில் தற்காலிக கைப்பிடி போடப்பட்டு சுற்றப்பட்டது. "தேர்’ அசைவில், இயந்திரத்தில் போடப்பட்டிருந்த பத்திரிகைப் பக்கங்கள் உள்ள பகுதி நகரத் தொடங்கியது! ‘ஈழநாடு’வின் நான்கு பக்கங்கள் கடைசி செய்திகளுடன் அச்சாகி 'பிரசவ’ மானது! அங்கு கூடியிருந்த எல்லோர் முகத்திலும் ஆயிரம் "வோட்' வெளிச்சம் மின்னலாகத் தோன்றியது. ‘தேரின்’ வடத்தை மாறிமாறி சுழற்றியவர்கள் ஊழியர்கள் மட்டுமல்ல; டாக்டர் சண்முகரத்தினமும்தான்! நத்தை வேகத்தில் பக்கங்கள் அச்சாகி வெளியானதும், ‘சூறாவளி’ வேகத்தில் வாசகர்களுக்கு ‘ஈழநாடு’ கிடைத்தது. டாக்டருக்கு ஏற்பட்ட சந்தோஷத்தில், ஹோட்டலிலிருந்து ஏராளமான வடைகளும், தமது வீட்டிலிருந்து சுடச்சுட காப்பியும் வரவழைக்கப்பட்டு எல்லா ஊழியர்களுக்கும் வழங்கினார் டாக்டர். இந்த நிலை சுமார் ஒரு வாரம் வரை நீடித்தது. இரவில், “பெற்றோல்மாக்ஸ்’ மற்றும் பெரிய மெழுகுதிரி வெளிச்சத்தில் ஆசிரியர் பகுதி மற்றும் அச்சகப் பகுதி இயங்கியது.
தான் பட்ட கஷ்டத்திலும் பார்கக் சூறாவளியினால்
48

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘ஈழநாடு’ திட்டம் வகுத்தது. டாக்டர் கே. சி. சண்முகரத்தினம் பெருமுயற்சியினால், சில வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவுடன் ‘ஈழநாடு சூறாவளி நிதி ஆரம்பிக்கப்பட்டது. டாக்டருக்கு வலதுகரமாக செயல்பட்டவர் யாழ் வர்த்தகர் திரு.வி. வீரகத்திப்பிள்ளை அவர்கள்.
‘ஈழநாடு’வின் அபிமான வாசகர்கள் ‘சூறாவளி நிதி’க்கு பணமும், பொருளும் அள்ளி வழங்கினர். குறுகிய காலத்துக்குள்ளேயே பெருமளவு நிதி குவிந்து விட்டது.
டாக்டர் சண்முகரத்தினமும் திரு. வீரகத்திப்பிள்ளை யும் தத்தமது கார்களில் புறப்பட்டு, யாழ். குடா நாட்டில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களுக்கும் வேட்டி, சேலை, போர்வை போன்ற துணிமணிகளும்; அரிசி, பருப்பு, சீனி போன்ற உணவுப்பொருள்களும் சிலருக்கு பண உதவியும் பாகுபாடின்றி நிவாரணமாக நேரடியாக பொறுப்புடன் வழங்கினார்கள். காலத்தின் கட்டாயம் அறிந்து, குறுகிய காலத்தில் துரிதமாக உதவிகளை வழங்கிய ‘ஈழநாடு’ நிவாரணம் குறித்து வடபகுதி மக்கள் வாயாரப் பாராட்டினார்கள்! செய்திப் பணியில் மட்டுமின்றி இயற்கைப் பேரழிவு உதவிப் பணியிலும் ‘ஈழநாடு’ முந்திவிட்டதை எண்ணி வடபகுதி மக்கள் பாராட்டி வாழ்த்துகள் அனுப்பினார்கள். மக்கள் சேவையில் ‘ஈழநாடு’க்கு இது மற்றுமொரு மைல்கல்!
1983ல் "டெய்லிமிறர் ஆங்கிலத் தினசரியின் யாழ். நிருபர் பொறுப்பும், சிங்கள தினசரி ஏடான "லங்காதீய’ செய்தி ஆசிரியராகக் கடமையாற்றி தனியாக "லங்கா நியூஸ் ஏஜென்ஸி’ செய்தி நிறுவனத்தை ஆரம்பித்த திரு. பெரமுனதிலக, “அஸோஸியேற் பிரஸ்' இலங்கை
49

Page 37
5Mamajoon»Aô1
நிருபர் திரு. பட்றிக் குறுநூஸ், ‘ராய்ட்டர்’ செய்தி நிறுவன பொறுப்பாளர் திரு. டோல்டன் டி சில்வா ஆகியோரின் நெருங்கிய நட்பும் எனக்கு கிடைத்தது. நான் கொடுக்கும் அதி முக்கிய செய்திகள் 'ராய்ட்டரில் வெளிவரும்.
சர்வதேச செய்தி நிறுவனம் 'ராய்ட்டருடன் எனக்கு ஏற்பட்ட செய்திப்பணி, என்னை ஓரளவு பூரணப் படுத்தியதுபோல இருந்தது. யாழ்ப்பாணத் தொடர் பாளராக நான் 'ராய்ட்டருக்கு சேவையாற்றிய காலத்தில், நான் கொடுத்த சர்வதேச முக்கியத்துவம் பெற்ற பல செய்திகளில் அமெரிக்க அலன் தம்பதிகள் கடத்தப்பட்டு பல நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட செய்தி முதன்மை பெற்றது.
இவர்கள் விடுதலையான அடுத்த நாள் காலை, இலங்கை பாதுகாப்பு படையினரின் முழுப் பாதுகாப்பி லிருந்த பலாலி விமான நிலையம் சென்று, கொழும்பு செல்ல தயாராக நின்ற விமானத்திற்குள்ளேயே அலன் தம்பதிகளை பேட்டி கண்டு, ஈழநாடுவில் நான் எழுதியதும் அனுபவமாகத் தானிருந்தது. இப்பேட்டிச் செய்தி ஈழநாடு வில் மட்டுமே வெளியாகியிருந்தது.
கொழும்பு "டெய்லிமிறர்’ பத்திரிகையில் திரு. றெஜி மைக்கல் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், அதன் தாக்கம், குறிப்பாக ஆசிரிய தலையங்கம் விறைப்பாக இருக்கும். அதற்காகவே பலரும் "டெய்லி மிறரை’ விரும்பிப் படித்தார்கள். இதன் ஆரம்பகால நட்பு “டைம்ஸ்’ பாலச்சந்திரன் மூலமாக எனக்குக் கிடைத்தது.
1960களின் பிற்பகுதியில் ஒரு முறை, தமிழரசுக் கட்சியின் மாநில மகாநாடு திருக்கோணமலையில் நடந்தது. அந்த மகாநாட்டுக்கு, ஈழநாடு சிறப்பு நிருபராக நான்
50

கே.வி. மகாதேவா
சென்றிருந்தேன். 'டைம்ஸ் ஒப் ஸிலோன்’ ("டெய்லி மிறர்’ சார்பாகவும்) பத்திரிகையிலிருந்து திரு. பாலச்சந்திரன் வத்திருந்தார். மகாநாட்டில் கலந்து கொள்ளும் திரு. அ.அமிர்தலிங்கம்தான் கடைசி நேர பேச்சாளராக அன்று கலந்து கொண்டார். அடுத்த நாள் "டெய்லிமிறர்’ பத்திரிகையில் அமிர் பற்றி ‘பாலா’ எழுதிய செய்தி ‘சிறப்பாக வந்திருந்தது. அவ்வளவுதான். திருக்கோணமலை நகரசபை அருகில் பாலாவை சந்தித்த அமிர் படு பயங்கரமாக சொற்போர் நடத்தினார். மிகக் கேவலமான வார்த்தைகளினால் ஆட்காட்டி விரல் நீட்டி திட்டினார். பாலா சிரித்த முகத்துடன் பொறுமை காத்தார். அமிரை சித்திரிக்கும் அவரின் கடூரமான வார்த்தைகள் மீண்டும் அடுத்த நாள் "டெய்லிமிறரை’ அலங்கரித்திருந்தன. பாலாவை வார்த்தைகளால் அமிர் தாக்க முடிந்ததே தவிர, பேனாவின் வலிமையை எதிர்க்க முடியவில்லை. "டெய்லி மிறரிலும் பணியாற்ற வேண்டும் என்ற எனது ஆசை திரு. றெஜி மைக்கல் காலத்தில் நிறைவேற விட்டாலும், இருபது ஆண்டுகள் கழித்து 1983ல் திரு. எல்மோ குணரத்னா ‘டெய்லிமிறர்’ ஆசிரியராகவிருந்த காலத்தில் பூர்த்தியானது.
“சற்றடே றிவியூ" சிவநாயகம்
1982ல் “சற்றடே றிவியூ’ எனும் ஆங்கில வார இதழ் யாழ்ப்பாணத்தில் துவக்கப்பெற்று வெற்றிகரமாக வெளி யாகிக் கொண்டிருந்தது. ஆசிரியராக கொழும்பு 'டைம்ஸ் ஒவ் சிலோன்’ பத்திரிகையில் பணியாற்றிய திரு.எஸ். சிவநாயகம் இருந்தார். உதவிக்கு திரு. ஏ.ஜே. கனகரத்னா. திரு. சிவநாயகத்தின் பேனாவில் கனல் பறக்கும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செய்த - செய்யும்
51.

Page 38
Manajoonaan
தவறுகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டினார். இதன் பொதுச் செயலாளரான திரு. அ. அமிர்தலிங்கத்தை தொடர்ச்சியாக கடுமையாகச் சாடினார். இக்கால கட்டத்தில் எனது செய்திப் பணியையும் ஓரளவு பயன் படுத்தினார். திரு. சிவநாயகம். "சற்றடே றிவியூ" என்றாலே வெறுப்பாகும் திரு. அமிர்தலிங்கத்தை ஒரு தடவை பேட்டி காணச் சொன்னார். நான் சுழிபுரம், மூளாய் சென்று திரு. அமிர்தலிங்கத்தை அவரது இல்லத்தில் பேட்டிகண்டு ஒரே நாளில் “சற்றடே றிவியூவிலும் ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் வெளியிட்டிருந்தேன். மறக்க முடியாத பேட்டி அது. 1983 ஜூலை 2ம் திகதி சற்றடே றிவியூவுக்கு அரசு சீல் வைத்து மூடி விட்டது. குறுகிய காலம் என்றாலும் திரு. சிவநாயகத்தின் “சற்றடே றிவியூ" பணி, வடக்கில் மட்டுமல்ல தலைநகரத்திலும் ஆட்சியாளரை சிந்திக்க வைத்தது என்றால் அது உண்மை!
நான் படித்த காலத்தில் எட்டாவது வகுப்புக்கு ஏற்றம் பெற்ற பின்னர்தான் “லோங்ஸ்’ அணியமுடியும். அப்படி ஒரு கட்டுப்பாடு.
தமிழ்மொழியிலேயே அதிகமான பாடங்கள் கற்பிக் கப்பட்டதால் ஆங்கில அறிவு, பாடத்திட்டங்களோடு சரி. பேச்சிலோ அல்லது எழுத்திலோ சுயமாக வராது. சரளமாக பிழையின்றி எழுதும் நிலையிலும் இல்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டியதுதான்.
ஆனால் இன்றைய மாணவர்கள், குழந்தைகள். ஏன் மழலைகளுக்குக்கூட ஆங்கில அறிவு அத்துப்படி! தாய் மொழியுடன், சர்வதேச மொழியான ஆங்கிலத்தை ஆர்வமுடன் பயின்று, கூச்சமில்லாமல் எழுதுவதில் இன்றைய இளவட்டங்கள் மிகவும் திறமைசாலிகள். சர்வதேச நடப்புகளை அறிந்து கொண்டு சுய கருத்துக்களை
52

C3a5.cf. Loas (356T
வெளியிடுவதில் பளிச்சிடுகிறார்கள்.
நாட்டு நடப்பினால் உலகின் மூலை முடுக்கெல்லாம் நமது குழந்தைகள் வாழ்கிறார்கள். தாய்மொழி தமிழை மறக்காமல், வீட்டு மொழியாகக் கொண்டு, அந்தந்த நாட்டு மொழியில் தேர்ச்சிபெற்று முன்னணி வகிப்பது, ஜீரணிக்கக் கூடியதாகவே இருக்கிறது. உடையிலும் ‘ரிப்டொப்
நோர்வே, ஒலசுண்டில் வாழும் எனது மூத்த பேத்தி ஜனனி மோகன், தனது ஒன்பதாவது வயதில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு கலாசார நிறுவனத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் நடனமாடுவதையும் (பத்திரிகை புகைப்படம்); அங்கேயே கல்விபயிலும் எனது எட்டு வயது பேரன் மோகன் பிரகாஷ் அமெரிக்க - ஈராக் யுத்தம் பற்றி பத்திரிகையாளர் ஒருவருக்கு தனது சகமாணவிகளுடன் தைரியமாக பேட்டி அளிப்பதையும் (பத்திரிகை புகைப்படம்) எண்ணிப்பார்க்கும் போதும்; எனது பிரிட்டிஷ் பேத்தி தாரணி புவனச்சந்திரன் தனது நான்காவது வயதிலேயே எனக்குசுயமாக ஆங்கிலத்தில் வான் கடிதம் எழுதியதையும்; எனது பிரெஞ்சு நாட்டு பேரன் திருத்தணிகேஸ்வரன் சந்தோஷ், தனது 6 வயதில் தாய்மொழி தமிழில் நினைத்து ஆங்கிலத்தில் எனக்கு கடிதம் எழுதியதையும் நினைக்கும் போதும் பெருமையாக இருக்கிறது. மூன்றாவது வயதி லேயே கம்யூட்டர் முன்பாக உட்கார்ந்து விடும் குழந்தை களின் அறிவுத்திறன்தான் எத்தன்மை வாய்ந்தது. அதனால் தானோ, நாம் வாழ்ந்த காலத்திலேயே செவ்வாய்க்கிரகம் நம்வீட்டு ஜன்னல் பக்கமாக குழந்தைகளைப் பார்த்துச் சென்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லா பெற்றோரும் பெருமைப்படவேண்டும். (புகைப்படங்கள், கடிதங்கள் 208, 209, 210, 21 பக்கங்களில்)
1967ல் நான் ‘செய்தி” வார இதழில் பணியாற்றிய
53

Page 39
$(
காலத்தில் ஈழநாடு ஆசிரியர் பகுதியில் சிறு சிறு அசம்பாவிதங்கள் தலைதூக்கின. தொழிற்சங்கப் பிரச்சினை களும் முளை கொண்டன. ‘ஈழநாடு' விற்பனையில் திடீர்ச் சரிவு ஏற்பட்டது. செய்திகளிலும் சில சில திருத்தங்கள் வெளியிட வேண்டிய சூழ்நிலைகள்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், மாணவர்கள் அனுமதி விஷயத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக ஈழநாடுவில் வெளிவந்த செய்தி, பெரும் பிரச்னையைக் கிளப்பியதுடன் செய்திகளின் நம்பகத்தன்மைக்கும், வாசகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அலுவலக நிருபர் கா. யோகநாதன் பெயரில்தான் லஞ்ச செய்தி வெளிவந்திருந்த போதிலும், அதனை அவர் திட்ட வட்டமாக மறுத்திருந்தாராம். சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் எழுதி தனது பெயரில் இச்செய்தியை வெளியிட்டதாக யோகநாதன் குற்றம் சுமத்தினார். இதன் எதிரொலி யோகநாதனிடமிருந்து அலுவலக நிருபர் பதவி பறிக்கப் பட்டு, ஆசிரியர் பகுதி ஊழியராக்கப்பட்டார். பிரச்னை இத்துடன் விடுபட்டதாகத் தெரியவில்லை. யாழ் மத்திய கல்லூரி அதிபர் குறிப்பிட்ட செய்தி தொடர்பாக, ஈழநாடு மீது வழக்கு தாக்கல் செய்தார். செய்தியின் ஆதாரத்தை - உண்மையை ஈழநாடுவினால் நிரூபிக்கமுடியவில்லை. தவறான செய்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய பரிதாப நிலை ஈழநாடுக்கு ஏற்பட்டது. முதல் பக்கத்தில், அடுத் தடுத்த சில நாட்கள் மன்னிப்புச் செய்தியை வெளியிட வேண்டிய துர்ப்பாக்கியம் ஈழநாடுக்கு முதல் தடவை ஏற்பட்டது.
எவ்வளவோ செல்வாக்குடன் அடிமேல் அடி
54

கே.கி. மகாதேவா
எடுத்து வைத்து கம்பீரநடை போட்ட ஈழநாடுக்கு சோதனை மேல் சோதனை! விற்பனையில் ஏற்பட்ட கடும் சரிவினால் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம்கூடக் கொடுக்கமுடியாத பற்றாக்குறை. இக்கட்டத்தில் பெரியார் திரு.கே.சி. தங்கராசா அவர்கள் தனது சொந்தப்பணத்தில் ஊழியர்கள் சம்பளம் கொடுத்தார். ஈழநாடு ஆசிரியர் பகுதியில் தலை தூக்கிய சில பிரச்னைகளினால், ஆசிரியர் பகுதியிலும் தொழிற்சங்கம் உருவானது. திரு.ஏ.வி. மாணிக்கம் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செய்யாத குற்றத்துக்குத் தண்டனை கிடைக்கப்பெற்ற திரு. கா. யோகநாதன் செயலாளரானர். 1973மே மாதம் ஈழநாடு இயக்குநர் பா. சிவானந்தன் அவர்களிடமிருந்து எனது கம்பளை விலாசத்துக்கு ஒரு அவசரத்தந்தி வந்திருந்தது. உடனடியாக ஈழநாடுக்கு வருமாறு நான் அழைக்கப் பட்டிருந்தேன். மீண்டும் ஈழநாடுவில் சேர்ந்துகொண்டேன். ஈழநாடுவின் ஆரம்பகாலத்தில அலுவலக நிருபராகச் சேர்ந்த திரு. எஸ். திருச்செல்வம், தனது அனுபவத்தைக் கொண்டு, தினகரன் பத்திரிகையிலும், பின்னர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் பணியாற்றி யாழ்ப் பாணத்தில் 1980களில் வெளிவந்த ‘ஈழமுரசு’ பத்திரிகை ஆசிரியராக உயர்ந்து, நாட்டு நடப்புகளினால் கனடா சென்று தகவல் கொத்து’ இதழின் ஆசிரியராகி அங்கு செய்திப் பணியாற்றி வருகிறார். தனது ஒரே மகன் அகிலனை இயக்கமொன்றின் தோட்டாக்களுக்கு யாழ் நகரில் பலி கொடுத்தவர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உதவி நூலக ராகப் பணியாற்றிய காலத்தில் ஈழநாடுவுடன் இறுக்கமான இலக்கியத் தொடர்பு கொண்டு பல கட்டுரைகளைப் படைத்திருந்த திரு.ஏ. சிவநேசச்செல்வன், ‘வீரகேசரி’
55

Page 40
Saaaaaaan
ஆசிரியராகப் பணியாற்றி 1996ல் 'தினக்குரல்’ எனும் பத்திரிகையை ஆரம்பித்து இப்பொழுது சிறப்பாக செயல் பட்டு வருகின்றார்.
ஈழநாடுவில் தனது பத்திரிகையாளர் பயிற்சியை ஆரம்பித்து சில ஆண்டுகள் கடமையாற்றிய திரு. பிரபாகரன், ‘வீரகேசரி’யில் செய்தி ஆசிரியராக இன்று கடமையாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.
ஈழநாடு நான் சேர்ந்த 1961ம் ஆண்டு காலத்திலேயே விழுதுகள் நிறைந்த பெரும் ஆலமரமாக இருந்தது. பத்திரிகைத் துறையில் அனுபவமிக்க ஜாம்பவான்கள் இருந்தனர். புதிதாகச் சேர்ந்தவர்களும் விரைவாகவே அத்துறையிலே தேர்ச்சி பெற்றார்கள்.
1981ல் ஈழநாடு ஐக்கிய தேசிய கட்சி அரசின் கமாண்டோ படையினரால் எரிக்கப்பட்ட பின்னர், புத்துயிர் பெற்ற ஈழநாடு ஆசிரியர் பகுதியில் இளம் இரத்தங்கள்’ சேர்க்கப்பட்டனர். எனது நேரடிக் கவனத்தில் பணியில் அமர்ந்து கொண்டவர்களில் குறிப்பாக, அனந்த கிருஷ்ணன், செந்தில்நாதன், சிவகணேசன் குறிப்பிடத் தக்கவர்கள். செய்திகளை கிரகிப்பதிலும், கட்டுரைகள் தீட்டுவதிலும் கூர்மையுடன் செயல்பட்டனர். அவர்கள் இன்று பத்திரிகைத்துறையில் தனித்தன்மையுடன் செயல் படுவது, அவர்களின் தாய்வீடு ஈழநாடுக்கு பெருமை சேர்க்கிறது.
ஈழநாடு எரிக்கப்பட்டு மீண்டும் பீனிக்ஸ் பறவையாக தலை தூக்கியதும் என்னுடன் திரு. பா. அனந்தகிருஷ்ணன், 1981ஆம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றியபோது செய்திகள் மட்டு மல்லாது வாரமஞ்சரிக்கு பயனுள்ள கட்டுரைகளும்
56

கே.வி. மகாதேவா
எழுதினார். இவற்றில் 1983ஆம்ஆண்டு கிழக்கு மாகா ணத்தின் வடமுனைப் பகுதிக்குச் சென்று, திட்டமிடப் பட்ட சிங்களக் குடியேற்றம் பற்றி ஈழநாடுக்கு தொடர்ச்சி யாக எழுதியது குறிப்பிடத்தக்கது.
1988 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்துகொண்ட இவர், 1997 ஆம் ஆண்டு 'சண்டே ஒப்ஸேவர் பத்திரிகையில் செய்தி ஆசிரியராக நியமனமானார்.
1999 ஆண்டு 'நொராட்” புலமைப்பரிசில் திட்டத்தில் நோர்வே பயணமாகி, 2003ம் ஆண்டு போஜோ பத்திரிகைத்துறைப் பயிற்சி திட்டத்தின் கீழ், சுவீடனில் புலமைப் பரிசிலும் பயிற்சி நெறியும் பெற்றார். பி.பி.ஸி. லண்டன் தமிழ்ச் சேவையில், இலங்கை மடல் வானொலி உரையை 1993ம் ஆண்டிலிருந்து ஏழு வருடகாலம் பங்களிப்பு செய்த அனந்த், பாரிஸில் இருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் கொழும்புச் செய்தியாளராகவும், அவுஸ்திரேலியாவின் தேசிய வானொலிச் சேவையான எஸ்.பி.எஸ். வானொலியின் இலங்கைச் செய்தியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது தந்தையார், இலங்கை மேன் முறையீட்டு நீதிமன்றின் ஒய்வு பெற்ற தலைமை நீதியரசர் காலஞ்சென்ற கி. பாலகிட்ணர் ஆவர். மற்றுமொரு துடிப்புள்ள பத்திரிகையாளர் திரு. செந்தில்நாதன்.
1985ல் ‘ஈழநாடு’வில் சேர்ந்த இவர், 1987ல் இந்திய இராணுவ நடவடிக்கைகளின்போது கொழும்பு சென்று தாக்குதல்கள் பற்றிய புகைப்படமொன்று “டைம்’ சஞ்சிகையில் பிரசுரமாக வழிவகுத்தார்.
ஐ.பி.எஸ். போன்ற சர்வதேச செய்தி நிறுவனத்திலும், லங்கா நியூஸ் ஏஜென்ஸி போன்ற செய்தி நிறுவனங்களிலும், கடமையாற்றி ஐரோப்பாவின் பல ஊடகங்களுக்கு
57

Page 41
Somalon Aan
எழுத்தாளராக பணியாற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் அனு சரணையுடன் பதினொரு மத்திய, கிழக்கைரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட செய்தியமைப்பொன்றிற்கு இணை அமைப்பாளராகப் பணியாற்றி 2000முதல் கனடாவில் ‘உலகத் தமிழோசை" என்ற சர்வதேச தமிழ் சஞ்சிகைக்கும், கனடாவின் பிரதான நீரோட்டம்’ தொலைக்காட்சி நிலையமான 'ஒம்னி’ நிறுவனத்தின் தமிழ் நிகழ்ச்சியான 'ஆரம்’ இணைத் தயாரிப்பாளராகவும் இப்பொழுது சேவையாற்றி வருகின்றார்.
என்னுடன் கடைசிக் காலத்தில் பணியாற்றிய மற்றுமொரு இளம் பத்திரிகையாளர் திரு. ரி. சிவகணேசன். 1983ல் ஈழநாடுவில் சேர்ந்த இவர், 1996ம் ஆண்டு வரை பணியாற்றினார். நான் விலகிக் கொண்ட பின்னர் 1990ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் ஈழநாடுவில் அனைத்து கடமைகளையும் பொறுப்புடன் கவனித்தார்.
1996ம் ஆண்டு கொழும்பு வந்து 'தினக்குரல்’ பத்திரிகையில் சேர்ந்து, அப்பத்திரிகையின் ஆரம்பகாலம் முதல் பணியாற்றி வருகிறார். செய்தி, கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளதோடு தினக்குரல்’ பத்திரிகை ஆசிரிய பீடத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவற்றை எல்லாம் அசை போட்டுப் பார்க்கும் போது ஈழநாடு அத்திவாரத்தை எண்ணிப் பெருமைப் படுகின்றேன். ஈழநாடு குடும்பம் அன்றும் பெரிது. இன்று அதன் வலை விரிந்து செம்மையாக செயல்படுகிறது.
ஆரம்பத்தில் அல்லாமல் இடையில் சேர்ந்து, ஈழநாடு பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பலர் இன்று பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
58

கே.வி. மகாதேவா
திரு. கானமயில்நாதன், யாழ்ப்பாணத்தில் "உதயன்’ நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி வெளிநாடு சென்று விட்டார். திரு. ஈ.கே. ராஜகோபால் லண்டனில் ‘புதினம்’ சஞ்சிகை நடத்துகிறார். திரு. எஸ். கே. காசிலிங்கம் பிரான்ஸில் புத்தகங்கள் வெளியிடுகின்றார், திரு.எஸ். குகநாதன் பிரான்ஸில் 'பாரிஸ் ஈழநாடு’ நடத்துகிறார். திரு. இ கந்தசாமி பிரான்ஸில் ‘ஈழநாடு’வில் கடமையாற்றுகின்றார்.
திரு.கே.சி. தங்கராசாவின் சகோதரி மகனும், ‘ஈழநாடு’ இயக்குநர்களில் ஒருவருமான திரு. பா. சிவானந்தன் ‘ஈழநாடு’ அச்சகப்பகுதி பொறுப்பாளராக இருந்த காலத்திலும் சரி, தனியாக கலாநிலையம் அச்சகம் ஆரம்பித்த காலத்திலும் சரி, ஈழநாடு வளர்ச்சிக்கு மிகவும் தோள் கொடுத்தவர். புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு ‘ஈழநாடு’வை வளர்த்தவர். நாட்டு நடப்பால் அவர் கனடா புறப்பட்டது ஈழநாடுக்கு கிடைத்த பெரிய இழப்பு.
ஈழநாடு அச்சகமும், அலுவலகமும் ஐக்கிய தேசிய கட்சி அரசின் கமாண்டோ படையினரால் தீக்கிரை யாக்கப்பட்டபோது, கடமை நேரத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவன் நான். ஈழநாடு செய்தி ஆசிரியரானதும் நான் முதலில் கண்ட அக்னி பரீட்சை இது.
1970 இறுதிக் காலத்தில் ஈழநாடு ஆசிரியர் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வாரமலருக்கு பொறுப்பாக ஈழத்தின் பிரபல சிறுகதை எழுத்தாளர் திரு.அ.செ. முருகானந்தம் (அசெமு) நியமிக்கப்பட்டார். புலவர் மா. பார்வதிநாதசிவம், இலங்கை வானொலி புகழ் திரு.வி.என். பாலசுப்பிரமணியம் (வி.என்.பி) திரு. பிரபாகரன், பென்ஜமின் ராஜரத்தினம் ஆகியோரும்
59

Page 42
Manaowa).Adın
புதிதாக இடம்பெற்றனர்.
திரு.கே.பி. ஹரன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக ஒய்வுபெற்று தமிழ்நாடு திரும்பியதால் அவரது இடத்துக்கு யாழ். இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.என். சபாரத்தினம் அவர்கள் ஈழநாடு ஆசிரியராக நியமனமானார். இவரது ஆசிரிய தலையங்கங்களும் பளிச்சிட்டன!
1987ல் நான் தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு திரும்பியதும், “பெரியவர்” உடல்நலம் குன்றி இருக்கும் தகவல் கிடைத்தது. தனியார் மருத்துவமனையில் அவரைப் பார்த்தேன். 'கனவுகள் கண்டேன். கடமைகள் முடிந்து விட்டன.’ எனும் தோரணையில் விழிகள் மூடிய நிலையில் கே.சி. தங்கராசா அவர்கள் துயில் கொண்டிருந்தார்.
கிழக்கிலங்கையில் வாழைச்சேனையில் ஒரு கடதாசி ஆலை அமைக்க வேண்டும் என்று கனவு கண்டார். அன்று கிழக்கிலங்கை காகித உற்பத்தி கூட்டுத் தாபனத்தின் ஒப்பற்ற தலைவராகப் பணி புரிந்த திரு. கே.சி. தங்கராசா அவர்கள், திட்டம் வரைந்தார். அரசு பாராட்டியது. கனடா நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் அளித்து உதவியும் வழங்கியது. காகித ஆலை மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு உற்பத்தி ஆரம்பமானது. பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. நாட்டின் காகிதத் தேவையும் பூர்த்தியானது.
தமிழருக்காக, தமிழ்ப்பகுதியில் தமிழர்களினால் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கனவு கண்டார். செயல்பட்டார். பிரமாண்டமான அளவில் ஈழநாடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது. மருத்துவமனையில் நான் பார்த்த மூன்று நாட்களும்
60

கே.வி. மகாதேவா
உறக்கத்திலிருந்த பெரியவர், பின்னர் மீளாத் துயில் கொண்டார். சாதனைகள் படைத்து கடமை முடிந்து அமரத்துவம் பெற்றார். ஈழநாடு ஆசிரியர் குழு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தும் பாக்கியம் கிடைத்த எனக்கு அப்பெரியவரின் அளப்பரிய சேவையைப் பற்றி அடுத்த நாள் 'தினகரன்’ பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு கிடைத்ததும், இக்கட்டுரையை அடுத்த நாள் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் ஆசிரியர் திரு.என். சபாரத்தினம் அவர்கள் மறுபிரசுரம் செய்திருந்ததும், பெரும் கடமை ஒன்று பூர்த்தியானதாகவே அன்று கருதினேன்.
1987லிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஈழநாடுவில் பணியாற்றிவிட்டு தமிழகம் புறப்பட்டு விட்டேன்.
-6 நி 61

Page 43

பாகம் இரண்டு சம்பவங்கள்

Page 44

1981- ஆண்டு ஜூன் மாதம் முதல் திகதி இரவு நேரம். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் அருகில் அன்று நடைபெற்ற அரசியல் கூட்டம், துப்பாக்கிச்சூடு செய்தி களையும், புகைப்படங்களையும் முதல்பக்க செய்தியாக்கி, இரவு ஒன்பது மணிக்கு வரும் வானொலிச் செய்தி களுக்காக அலுவலகத்தில் காத்திருந்தேன்.
(யாழ்ப்பாணம் நகர் எல்லைக்குள்ளிருப்பதுதான் நாச்சிமார்கோவில். இக்கோவில் முன்பாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டம் நடந்தது. திடீரெனச் சம்பவம். இரண்டு பொலிஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.)
‘ஈழநாடு’ இயக்குநர்களில் ஒருவரான திரு. பா. சிவானந்தன் அன்று நடைபெற்ற சம்பவங்களினால் மிகவும்
65

Page 45
Sananasons Alan
ஈர்க்கப்பட்டு அடுத்த நாள் ஈழநாடு முழுமையான செய்திகளுடன் வெளிவரவேண்டும் என்ற அக்கறையுடன் எனது அறைக்குள் நுழைந்தார். வெளிவரப்ப்ோகும் செய்தி களை அறிந்துகொண்டு, நிறைவு பெற்ற அவர் குஷியாகி விட்டார். அலுவலகத்தின் அருகிலுள்ள இரவு (மொக்கன்) கடையிலிருந்து பிட்டும், ருசியான கறியும் பொட்டலங் களாக வரவழைத்து, அலுவலக வேலை முடிந்ததும் எல்லோரும் சாப்பிடலாம் என்று என்னுடன் கூடவே இருந்தார். துணையாக, பத்திரிகை விற்பனையை கவனித்து வரும் திரு. ஐயா சச்சிதானந்தனும் அருகிலிருந்தார்.
இரவு எட்டரை மணியிருக்கும். திடீரென மின்சார வெட்டு. அலுவலகம் முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த நடைமுறை வழக்கம் என்பதால், 'பெற்றோல்மாக்ஸ்’ விளக்கு ஒளியுடன் வேலைகள் நடைபெற்றன. இரவு ஒன்பதுமணி அகில இந்திய வானொலி ஆங்கிலச் செய்திக்காக (பாட்டரியில் இயங்கும்) வானொலியை முடுக்கி விட்டிருந்தேன்.
திடீரென அலுவலகத்தின் கீழ்த்தளத்திலிருந்த அச்சகப் பகுதியிலிருந்து “கம்போஸிட்டர்’ சிவனேசன், ஜோசப் ஆகியோர், மேல் மாடியிலுள்ள எங்கள் அறைக்கு ஓடிவந்து, "அலுவலக முன் இரும்புச்சுருக்கு) கேற்றை ஒரு ஆயுதக் கும்பல் உடைக்கிது. எல்லோருமே தடியன்கள். ஒடி வாருங்கள்." என்று அலறினார்கள்.
பதறித் துடித்துக்கொண்டு நான் கீழே சென்று, கம்போஸிட்டர்களுடன் அலுவலகத்தின் பின்பக்கமாக அடுத்த தெருவை (கொட்டடி) நோக்கி, மின்னல் வேகத்தில் வெளியேறினேன். சில நிமிடங்கள்தான் மறைந்திருக்கும். அலுவலகம் முழுவதுமே அக்கினிக்கு இரையாகிக்
66

கே.வி. மகாதேவா
கொண்டிருந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்தது. என்னுட னிருந்த இயக்குநர் சிவானந்தனும், ஐயா சச்சிதானந்தனும் எங்கே போனார்கள் என்று மனம் பதைபதைத்தது.
ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். நானும் ஜோசப்புவும் மெதுவாக நகர்ந்து அலுவலகத்தின் முன்பக்கமாகப் போனோம். முழு அலுவலகமும் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது. தீ ஜுவாலையை அணைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அந்தக் குண்டர் கும்பலும் இல்லை.
அலுவலக முன் வளவில் அப்பொழுதுதான் ஆட்கள் கூடத் தொடங்கினார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களும், திரு. சிவானந்தனின் உறவினர்களும் நிறைந்திருந்தனர். அங்கே இருவர் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் திரு. சிவானந்தனும், திரு. சச்சிதானந்தனும்தான். வாழை இலை, வாழைமடல்கள் அவர்களின் பாயாகவும், போர்வை யாகவும் இருந்தன. ・・。 குண்டர்கள் தீ வைத்தபோது, இவர்களிருவரும் மாடியிலுள்ள “பாத்ரூமில்’ ஒளிந்து கொண்டதும், பல இடங்களில் அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதும் பின்னர்தான் தெரியவந்தது.
நான் உடனடியாக அந்த இடத்திலிருந்து ஓடி தப்பித்துக் கொண்டதால் உயிர் பிழைத்தேன். சில நிமிடங்கள் தாமதித்து இருந்திருந்தால் அந்த அக்னி என்னை தீண்டியிருக்கும்.
விடிந்தது. ஈழநாடு அலுவலகத்தில் எல்லாமே எரிந்து சாம்பலாகி வெறும் கல்தூண்கள் மட்டும் அங்குமிங்கும் காணப்பட்டன. வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
67

Page 46
Solanasons Aân
ஊழியர்களின் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூடுகளாக எரிந்து காணப்பட்டன.
ஈழநாடு பத்திரிகையை முதலில் ஆசீர்வதித்த கொழும்புத்துறை யோக சுவாமிகள், "ஏசுவார்கள், எரிப்பார்கள்." என்றார். அவர் வாக்கும் பொய்க்கவில்லை. அப்பொழுது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு ஆதரவின் கமாண்டோ குண்டர்கள்தான் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையும், அதே இரவில் யாழ். பொது சன நூலகத்தையும் எரித்தனர்.
அன்றைய தினம் ஈழநாடு மட்டும் எரியவில்லை. யாழ்ப்பாணம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வெ. யோகேஸ்வரனின் வீட்டுக்கு குண்டு வைக்கப்பட்டது. நல்லூர் தொகுதி பாராளுமன்ற அங்கத்தவர் திரு. எம். சிவசிதம்பரம் வீட்டில் ஒருவர் பலியானார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் - தமிழர்தம் பொக்கிஷம் - ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்று பெருமையுடன் போற்றப்பட்ட யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சம் நூல்கள் எரிந்து போயிற்று. யாழ்ப்பாணமே அன்று எரிந்து கொண்டிருந்தது. ஈழநாடு ஆரம்ப இதழை ஆசீர்வதித்த கொழும்புத் துறை துறவி யோக சுவாமிகளின் புகைப்படத்தை, ஈழநாடு தனது அலுவலக முன் வாசலிலேயே தாங்கி, பெருமைப் படுத்தியது. அன்றிரவு ஈழநாடு எரிக்கப்பட்டு, சாம்பல் மேடாகக் காட்சியளித்த போதிலும், யோக சுவாமிகளின் கண்ணாடி பிரேம் போடப்பட்ட அந்தப் படம் மட்டும் எரிந்து போகாமல் ஈழநாடு வாசலில் அதே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. படத்தின் கண்ணாடிகூட
68

கே.கி. மகாதேவா
நொறுங்குப்படவில்லை. என்ன அற்புதம்? அவர் வார்த்தைகள் உண்மையானது. அவரை அக்னி தீண்ட முடியவில்லை.
ஆனாலும் ஈழநாடுவை அவர்களால் நிறுத்தி வைக்க முடியவில்லை. இயக்குநர் திரு. சிவானந்தனின் தீவிர முயற்சியால் - வைராக்கியத்தினால், யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியிலுள்ள அவரது கலாநிலைய அச்சகத்தி லிருந்து இரு நாட்களிலேயே மீண்டும் வெளிவரத் தொடங்கியது. எனக்கு உதவியாக யாழ் பல்கலைக்கழக ஆங்கில பீடம் திரு. ஏ.ஜே. கனகரத்னா சுயவிருப்பத்துடன் பணியாற்றினார். இதன்பின் எனக்கு உதவியாக உதவி ஆசிரியர்களாக சேர்ந்து கொண்டவர்களில் மூவர், விரைவாக எழுத்துலகில் பிரகாசிக்கத் தொடங்கினார்கள், அவர்கள் பா. அனந்தகிருஷ்ணன், செந்தில்நாதன், ரி, சிவகணேசன் ஆகும்.
★ ★ ★
1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை. மாலை நேரம் இருக்கும். வழக்கம் போல் அலுவலக வாயிலில் நுழைந்த எனக்கு இரண்டு பேர் வீடியோ கமராவுடன் ஈழநாடு அலுவலக கட்டிடத்தை படம் பிடித்து கொண்டிருந்தது ஒரு கேள்வியை எழுப்பியது. எதுவுமே பேசாமல் அலுவலகத்துள் சென்று மாடிப் படிகளில் ஏறி ஆசிரியர் பகுதியைப் பார்த்தபோது நிர்வாக இயக்குநர் திரு. ஆர். ராஜலிங்கத்துடன் இரண்டு பேர் இருந்தனர். என்னைக் கண்டதும் திரு. ராஜலிங்கம் வியப்போடு பார்த்து "உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றோம். வீட்டுக்கு ஒருவரை அனுப்பி இருந்தேனே வந்தாரா..?” என்றார். அவ்வளவுதான். ஏன் அழைத்தார்? அவருடன் இருப்பவர்கள் யார்? எந்த
69

Page 47
Solanasons Alan
விபரமும் இல்லாமல் எல்லோரும் எழுந்து வெளியேற தொடங்கினர். நானும் மாடிப்படிகளில் இறங்கி உடன் சென்றேன்.
கீழே இறங்கியதும் ஒரு வாகனம் எங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது. வாகனத்தில் ரூபவாஹினி என்று எழுதப்ப்ட்டிருந்தது. என்னை அழைத்துக்கொண்டே திரு. ராஜலிங்கம் வாகனத்தில் ஏறினார். நானும் ஏறினேன். மற்றவர்களும் ஏறினார்கள்.
கே.கே.எஸ். வீதி வழியாக கோண்டாவிலை நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தது. எனது வீட்டு விலாசத்தைக் கேட்டறிந்து நேராக வீட்டு முன்பாக வாகனம் நிறுத்தப்பட்டது. “சில உடுப்புகளை எடுத்துக் கொண்டு சீக்கிரம் வாங்க கொழும்பு செல்ல வேண்டும்" என்று திரு. ராஜலிங்கம் கூறினார்.
ஆர். ராஜலிங்கம்
70
 

(Based. Loas TC3.56
அப்பொழுதும் ஏன் என்ற விபரம் தெரியவில்லை. நான் வீடு நுழைந்ததும் மனைவிக்கும் அவசரம் புரிய வில்லை. சில உடுப்புகளை சுருட்டிக்கொண்டு அவர் களோடு கொழும்பு செல்வதாக கூறிப் புறப்பட்டேன். வாசலில் மனைவியும் பிள்ளைகளும் இனம்புரியாமல் நின்றுகொண்டிருந்தனர். வீதியில் ரூபவாஹினி வாகனம் நின்றது.
“ரூபவாஹினி" என்பது இலங்கை ー?f牙ó行 தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயர் என்பதால், ஏதோ படப்பிடிப்புக்காக நான் போகின்றேன் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள் போலும்,
71

Page 48
Mamadona).Adan
எனக்கு தனி விமான அழைப்பு
எங்கள் வாகனம் கோண்டாவில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று பலாலி வீதியை அடைந்து வடக்காக நகர்ந்தது. வாகனத்திலிருந்த யாரும் வாய் திறக்க வில்லை. என் மூளையில் மட்டும் ஆயிரம் கேள்விகள். அரை மணி நேரம் கழித்து எங்களது வாகனம் நேராக இராணுவ முகாமின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி விமான நிலையத்திற்குள் நுழைந்தது. அப்பொழுது நேரம் மாலை ஆறு மணியையும் தாண்டியது.
விமான நிலையத்தில் அதிக அளவில் இந்திய இராணுவத்தினருடன் அங்குமிங்குமாக இலங்கை இராணுவ வீரர்கள் காணப்பட்டனர். நாங்கள் இறங்கி னோம். கூடவே எங்களுடன் வந்த நான்கு பேரும் இறங்கினார்கள். எங்களை வரவேற்ற உயர் அதிகாரி ஒருவர், “ஏன் இவ்வளவு நேரம்” என்று கேட்டது மட்டுமே காதில் விழுந்தது.
அவசரம் அவசரமாக அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தில் ஏறினோம். அந்த விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது. அந்த விமானத்தில் விமானியுடன் ஒரு உதவியாளர். இவர்களுடன் நான், திரு. ராஜலிங்கம், அந்த நான்கு பேர். இவர்கள் தவிர எனது ஆசனத்தின் முன்பாக இரண்டு இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள். யாழ்ப்பாணத்தி லிருந்து வந்த அந்த நான்கு பேரில் ஒருவருடன் இராணுவ அதிகாரி, "அவரை கூட்டி வந்தாச்சா..?” என்று கேட்டதும் அதற்கு என்னை அடையாளம் காட்டி "இவர்தான்" என்று பதிலளிக்கப்பட்டதும் தெளிவாக கேட்டது. மொழி சிங்களம் என்றாலும் அரைகுறைவாக புரிந்து கொண்டேன்.
72

Case. upasпФaьємп
ஆனாலும் எனக்குப் பின்புறமுள்ள ஆசனத்தில் அமர்ந் திருந்த திரு. ராஜலிங்கம் கப்சிப்! அவருடன் பேசக்கூடிய வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை. விமானம் ஒடத் தொடங்கியது. கூடவே எனது மனசு விமான வேகத்தையும் மிஞ்சியது. ஏன், எதற்கு என்பதற்கு விடை தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் புரியத் தொடங்கியது.
என்னை ஒரு விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்று மூளை அலறியது. இராணுவ விசாரணை ஏன்? எதற்கு? விளைவுகள் எப்படி இருக்கும்?. என்பதை விசாரணை நடைபெறாமலேயே மூளை தீர்ப்புக் கூறிற்று. ;
பொதுவாக பத்திரிகைகாரர்களை இராணுவத்தினர் விசாரணை செய்தால் அது வித்தியாசமாகவே இருக்கும். எனது கைகளைப் பார்த்தேன். கைகளின் நகங்களை உற்றுப் பார்த்தேன். "கொழும்பு கோட்டையில் உள்ள நான்காவது மாடியில் நடைபெற்ற இராணுவ விசாரணையின்போது பத்திரிகையாளரின் நகங்கள் பிடுங்கப்பட்டன” என்று செய்தித்தாளில் படித்தது மின்னல் வேகத்தில் நினைவுக்கு வந்தது. இனம்புரியாத அச்சம்.
விண்ணில் ஒரு மணி நேரம் ஒடி தரையிறங்கியது எங்களது விமானம். அந்த இடம் இரத்மலானை விமான நிலையம்.
இராணுவ அதிகாரிகள் இறங்கினர். திரு. ராஜலிங்கம், அவருடன் நான், எங்களுடன் வந்த நான்கு பேர் எல்லோரும் இறங்கிக் கொண்டோம். விமான நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த ரூபவாஹினி வாகனமொன்றில் ஏறிக்கொண்டோம். அப்பொழுதும். அந்த வாகனத்தில் இருந்த யாரும் பேசவில்லை. வாகனம்
73

Page 49
Manadawa) An
க்ொழும்பு நகரை நோக்கிப் புறப்பட்டது. இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது.
வெள்ளவத்தையில் பிரதான வீதியை விட்டு, ஹமில்டன் ஒழுங்கையில் இறங்கி, திரு. ராஜலிங்கம் வீடு முன்பாக வாகனம் நிறுத்தப்பட்டது. அவருடன் நானும் இறங்கினேன்.
“காலையில் உங்கள் தலைவரைச் சந்திப்போம். நன்றி” என்று ஆங்கிலத்தில் கூறி எங்களுடன் வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு ராஜலிங்கம் வீட்டுக்குள் நுழைந்தார். திருமதி சத்தியபாமா ராஜலிங்கம் வரவேற்றார். எனக்கு ஒரு வகையில் ஆறுதலாக தோன்றினாலும் அவர்மீது கோபமாகவே இருந்தது. வீட்டுக்குள் நுழைந்து கதிரையில் அமர்ந்ததும் ஆயிரம் கேள்விகள் கேட்க நினைத்தேன். “றிலாக்ஸ்." என்று சொல்லி விஷயத்தை விளக்கத் தொடங்கினார் அவர்.
"ஈழநாடு” வில் நீங்கள் எழுதிய எதிர்க்கட்சித் தலைவி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பேட்டி பெரிய பிரச்னையை உருவாக்கிவிட்டது. "ஈழநாடு”க்கு பேட்டியே கொடுக்கவில்லை என்று அவர் மறுத்திருக்கிறார். அது மட்டுமல்ல. ஜனாதிபதி ஜே. ஆருக்கு புகார் செய்து அவர் மூலமாகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது." என்று ஆரம்பித்தார் திரு. ராஜலிங்கம்.
“எந்தப் பேட்டி" என்று நான் கேட்டதும்; "அதுதான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றியது." என்று கூறி “அந்த பேப்பரை எடுங்க” என்று மனைவியிடம் சொன்னார். ஈழநாடு பத்திரிகை வந்தது. என்னிடம் கொடுத்தார். பத்திரிகையின் முதல் பக்கத் தலைப்பு செய்தியாக திருமதி. சிறிமாவோ பேட்டி வெளிவந்திருந்தது.
74

கே.கி. மகாதேவா
"இலங்கை - இந்தியா ஒப்பந்தம்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குப்பையில் போடமாட்டோம். பூரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவி திருமதி. சிறிமாவோ பேட்டி" என்று செய்தி கூறியது. நான் சத்தமாக படித்தேன்.
“யெஸ். இதனைத்தான் சிறிமா மறுத்திருக்கிறார். ‘ஈழநாடு’க்கு இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேட்டியே கொடுக்கவில்லை என்று மறுத்து இருக்கிறார்" என்றார் திரு. ராஜலிங்கம்.
‘ஈழநாடு ரூபவாஹினி செய்தி சிறிமாவோ மறுப்பு
"அதுமட்டுமல்ல ‘ஈழநாடு’மீது நஷ்டஈடும் கோரப் போகின்றார்” என்றார் அவர்.
"இல்லை அவர்தான் பேட்டி அளித்திருக்கிறார். ‘ஈழநாடு’வில் வெளியான பேட்டி சாட்சாத் சிறிமா உடையதுதான்" - நான் வாதிட்டேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
"சும்மா சொன்னால் சரி வராது. ஃபுரூப் பண்ணியாகவேண்டும்." அடித்துக்கூறிய அவர் ஒரு பெரிய கதையை கூறத் தொடங்கினார்.
"ஈழநாடு பத்திரிகையில் வெளியான இச்செய்தி, ரூபவாஹினி டி.வி. இரவு நேர செய்தியில் முக்கியத்துவம் பெற்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழி களிலும் ஒளிபரப்பாகியிருக்கிறது. இதனைப் பார்த்துவிட்டு திருமதி சிறிமாவோ ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத் தலைவருடன் தொடர்பு கொண்டு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல, ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுடனும் தொடர்பு கொண்டு, உடனடியாக
75

Page 50
ManadaDa) Aan
மறுப்புத் தெரிவித்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார். ரூபவாஹினி ஆட்கள் ஆடிப்போய் விட்டார்கள். எப்படியோ எனது தொலைபேசி எண்களைத் தெரிந்து கொண்டு பேசினார்கள்.
"ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால் விசேட விமானத்தை ஏற்பாடு செய்வதாகவும், உடனே யாழ்ப் பாணம் சென்று ‘ஈழநாடு’ செய்தி ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, அவரையும் கொழும்புக்கு அழைத்துவந்து தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்குமாறு ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் வலியுறுத்தியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
“உங்கள் வீட்டுக்கு ரூபவாஹினி வாகனம் வரும். அதில் ஏறி இரத்மலானை விமான நிலையம் செல்லுங்கள். அங்கு விமானம் ரெடியாக இருக்கும். ரூபவாஹினி காமராமென்களும் கூடவே வருவார்கள். யாழ்ப்பாணம் சென்று உடனே கொழும்பு திரும்பி விடலாம். இது எல்லாம் ஜனாதிபதியின் உத்தரவுமீதே நடக்கிறது என்று ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் தொலைபேசியில் வலியுறுத்தினார்.
“எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ரூபவாஹினி வாகனம் வீட்டுக்கு வந்ததும் அவர்களுடன் புறப்பட்டு விட்டேன்” என்று மூச்சு விட்டார் திரு. ராஜலிங்கம்.
“ஒன்றும் யோசித்து கவலைப்படாதீங்க. ஈழநாடு செய்தி நூற்றுக்கு நூறு உண்மையானது. விளக்கமளிக்க நான் ரெடி. நீங்கள் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.” என்றேன்.
"சரி. எல்லாப் பொறுப்பும் நீங்கள்தான். நாளைக்
76

GBes.el. DesmGö6ann
காலை நான் திருமதி சிறிமாவோவையும் ரூபவாஹினி கூட்டுத்தாபன இயக்குநர் சபைத் தலைவரையும் நேரில் சந்திக்க அப்பொயின்மெண்ட் எடுத்து விடுகின்றேன். நாளைக்காலை ஒன்பது மணிக்கெல்லாம் நீங்கள் ரெடியாகி விடவேண்டும்” என்று சொல்லி, தமது வீட்டில் தங்கும்படி கூறினார்.
“வத்தளையிலுள்ள எனது மருமகள் ஜமுனா - பாலா வீட்டில் இரவு தங்கிவிட்டு காலை ஒன்பது மணிக்குள் இங்கு வந்து விடுவேன்” என்று உறுதியளித்தேன். அதற்குள் சில முன் ஏற்பாடுகளைச் செய்தோம்.
சிறிமாவோ சம்பந்தப்பட்ட ஈழநாடு முதல் பக்கத் தலைப்புச் செய்தியை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தோம். ஒவ்வொரு வசனமாக நான் வாசிக்க அதனை திரு. ராஜலிங்கம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க திருமதி சத்தியபாமா ராஜலிங்கம் ‘டைப்' செய்து பிரதிகள் எடுக்கப்பட்டன. திருப்தியான ஆங்கில மொழி பெயர்ப்பு அமைவதில் முழுக்கவனம் செலுத்தினார் அவர். திருப்தி யுடன் நான் வத்தளைக்கு புறப்பட்டேன். நம்பிக்கையுடன் ராஜலிங்கம் வழியனுப்பினார். அப்பொழுது நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் நான் தயாராகி, குறிப்பிட்ட செய்தி சம்பந்தமாக யாருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டுமோ அதனை முடித்துக்கொண்டு, நேரில் அங்கு சென்று விபரம் பெறவும் ஏற்பாடு செய்துவிட்டேன்.
சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் வெள்ளவத்தை (கொழும்பு) ஹமில்டன் ஒழுங்கையிலுள்ள திரு.
-7 p 77

Page 51
Sranasanako Alan
ராஜலிங்கம் வீட்டில் ஆஜரானேன். அவர் சிரித்த முகமாக வரவேற்றார். மிகவும் தெளிவாக, என்மீது நம்பிக்கையுடன் இருந்தார்.
"பகல் பதினொரு மணிக்கு திருமதி சிறிமாவை அவரது வீட்டில் சந்திக்கின்றோம். இரவு ஏழு மணிக்கு ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் மற்றும் இயக்குநர் களையும் சந்திக்கின்றோம். அப்பாயின்மெண்ட் எல்லாம் எடுத்தாச்சு" என்று நிம்மதியான அவர், “எங்களுடன் வேறு எவரையும் அழைத்துச் செல்ல வேண்டுமா?" என்று கேட்டார். "
"நமது கொழும்பு நிருபர் திரு. பென்ஜமின் ராஜரத்தினத்தை அழைத்துப் போவோம், ஒரு பார்வை யாளராக இருக்கட்டுமே” என்றேன்.
“காலை பத்தரை மணிக்கெல்லாம் புறப்பட்டால் சரி” என்றார் திரு. ராஜலிங்கம். கொழும்பு நிருபருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. திருமதி சிறிமாவை சந்திப்பதற்கு போதுமான அளவு நேரம் இருந்ததால் செய்திக்குரிய விளக்கத்தை திரு. ராஜலிங்கத் துக்கு தெரிவிக்க அவகாசம் இருந்தது. அவரும் ஆர்வமாக இருந்தார். நான் கூறினேன்.
"ஈழநாடு” பத்திரிகையின் சிறப்பு நிருபர் திரு. பட்றிக் குறுாஸ் எனது நெருங்கிய நண்பர். இவர் "டெய்லி மிறர்” செய்தி ஆசிரியராக பணியாற்றி விட்டு, அசோஸியட் பிரஸ் (ஏபி) பிரதம நிருபராக கொழும்பில் செயல் படுகிறார். திரு. ராஜிவ் காந்திக்கும், திரு. ஜெயவர்த்தனாவுக்குமிடையே 1987-ல் கைச்சாத்தான இலங்கை - இந்திய ஒப்பந்தம் சம்பந்தமாக அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து
78

கே.வி. மகாதேவா
பேட்டி எடுத்து இருந்தார். அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இப்பேட்டிச் செய்தியை ‘ஈழநாடு’க்கு கொடுத்திருந்தார். ‘ஈழநாடு’ சிறப்பு நிருபர் ஒருவருக்கு திருமதி சிறிமாவோ அளித்த பேட்டி என்று முதல் பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தேன். அவ்வளவு தான். இதில் தவறோ மறுப்போ கிடையாது. காலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள திரு. பட்றிக் குறுாஸின் வீட்டிற்குச் சென்று அவரையும் சந்தித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். வெளி நாட்டு செய்தி நிறுவனமான அசோஸியேட் பிரஸுக்கு அனுப்பிய அந்த பேட்டியின் நகல் பிரதியை அவர் எனக்கு தந்துள்ளார்” என்று விபரம் சொன்னேன்.
சரியாக பத்தரை மணிக்கு புறப்பட்டுவிட்டோம்: சிறிமாவோ பேட்டியின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூன்று. பிரதிகள் எனது கையில் இருந்தன. பம்பலப்பிட்டி புல்லர்ஸ் லேனிலுள்ள "ஈழநாடு” கொழும்பு அலுவலகம் சென்று அலுவலக நிருபர் திரு. பென்ஜமின் ராஜ ரத்தினத்தை அழைத்துக்கொண்டு திருமதி. சிறிமாவோ, பண்டாரநாயக்கவின் வீடு நோக்கிக் காரில் பயண மானோம்.
எனது செய்தி விளக்கம் சிறிமாவோ ஏற்றார்!
திருமதி சிறிமாவோ வீட்டு வளவின் முன் கதவு முன்பாக எங்கள் கார் நின்றது. பத்து அடிக்கும் அதிகமான உயரத்தை அந்த பிரமாண்டமான கறுப்பு நிறக் கதவு கொண்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினோம். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கதவின் சின்ன நுழைவாயில் வழியாக தலையை நீட்டி விபரம் கேட்டார். திரு.
79

Page 52
Soanalon.) Alan
ராஜ்லிங்கம் சிங்களத்தில் பதில் அளித்தார். சிறிது நேரத்தில் கதவின் ஒரு பகுதி திறக்கப்பட்டு எங்களுக்கு வழிவிடப்பட்டது. வீட்டின் முன் மண்டபத்தில் அமர்த்தப் பட்டோம். "அம்மா வருவார்” என்று அந்தப் பாதுகாப்பு அதிகாரி சொன்னார். சில நிமிடங்களில் ' எங்கள் மூவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. நாங்கள் சிறிமாவோவின் வருகையை எதிர்பார்த்து இருந்தோம்.
மாடிப்படியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி எங்கள் முன்பாக வந்து "வணக்கம்” என்பது போல இருகரம் கூப்பி வரவேற்றார் திருமதி சிறிமாவோ, எழுந்து நின்ற எங்களை அமரும்படி கூறி, அவரும் உட்கார்ந்தார்.
திரு. ராஜலிங்கம் தம்மை அறிமுகப்படுத்தி "ஈழநாடு” பத்திரிகையின் ஸ்தாபகரும், முன்னாள் கிழக்கிலங்கை கடதாசி ஆலை கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகரும் தலைவரு மாக இருந்து காலமான திரு.கே.சி. தங்கராசாவை நினைவூட்டினார். அவரது பெயரைக் கேட்டதுமே முகம் மலர சிரித்து "ஒ யெஸ். திரு. தங்கராசா. ‘ஈழநாடு’ நன்றாகத் தெரியும்" என்று கூறினார்.
திரு. ராஜலிங்கம் என்னையும் அருகில் இருந்த "ஈழநாடு" கொழும்பு அலுவலக நிருபர் திரு. பென்ஜமி னையும் அறிமுகப்படுத்தினார். கையில் இருந்த அந்த மொழி பெயர்ப்பு பிரதிகளின் ஒரு பிரதியை திரு. ராஜலிங்கத்திடம் நீட்டினேன். செய்தி விஷயத்துக்கு வந்தோம். இப்பிரதி திருமதி. சிறிமாவோவிடம் கையளிக்கப் பட்டது. அவர் படித்துப்பார்த்தார்.
“யெஸ். யெஸ்." என்ற திருமதி. சிறிமாவோ. "நான் "ஈழநாடு” நிருபரை சந்திக்கவே இல்லையே. இந்தப் பேட்டி எப்படி வெளிவந்திருக்க முடியும்.?” என்று வினவினார்.
80

(36.e. Lossose
அவரது முகத்தில் சிரிப்புடன் கலந்த கோபம் காணப் பட்டது. எனது விளக்கத்தை திரு. ராஜலிங்கம் எதிர்பார்த்தார். நான் விபரித்தேன்.
"அஸோஸியேட் பிரஸ்" (ஏ.பி) திரு. பட்றிக் குறுநூஸ் அவர்கள் உங்களைச் சந்தித்து இலங்கை - இந்திய ஒப்பந்தம் சம்பந்தமாக பேட்டி எடுத்தார் இல்லையா.” என்று ஆரம்பித்தேன்.
“யெஸ் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் பேட்டி அளித்திருந்தேன். அந்த விபரம் வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்திருக்கிறது." இது சிறிமாவோ.
"அந்தப் பேட்டிதான் ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் வெளியானது" என்று நான் கூறிமுடிப்பதற்குள்.
"அதெப்படி..? திரு. பட்றிக் குறுாஸ் என்னைச் சந்தித்தது. உங்கள் பத்திரிகையில் நான் கொடுத்த பேட்டியாக எப்படி வெளிவர முடியும்.?" திருமதி. சிறிமாவோ குறுக்கிட்டார்.
"திரு. பட்றிக் குறுாஸ்தான் ‘ஈழநாடு’வின் சிறப்பு நிருபர். அவர் கொடுத்த பேட்டிச் செய்திதான் இது.” என்று விளக்கிய நான்.
"திரு. பட்றிக் குறுாஸின் பெயரை வெளியிடாமல், செய்தி அளித்தது ‘நமது சிறப்பு நிருபர்’ என்று பிரசுரமாகி யுள்ளது” என்றேன்.
திருமதி. சிறிமாவோ ஒரு கணம் யோசித்தார். பின்னர் கலகல் என்று சிரித்துக் கொண்டே “ஒகே. ஒகே. ரூபவாஹினியில் ‘ஈழநாடு’க்கு அளித்த பேட்டி என்றுதான் ஒளிபரப்பானது. அதுதான் நான் அப்ஸ்ற் ஆனதுக்கு காரணம்.” என்று தெளிவு பெற்ற அவர், கையிலிருந்த
81

Page 53
(
‘ஈழநாடு’ செய்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பு பிரதிமீது மீண்டும் நோட்டம் விட்டார்.
"உண்மை நிலைமை புரிகிறது. ரூபவாஹினி அந்தச் செய்தியை ஒளிபரப்பியபோது ‘ஈழநாடு’ சிறப்பு நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டி என்று தெரிவித்திருந்தால் நான் சற்று யோசித்துப் பார்த்திருப்பேன். ஒகே. நோ. புரப்பிளம். செய்தியின் விளக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. தேங்ஸ்.” என்று கூறிய திருமதி சிறிமாவோ, திருப்தியுடன் எங்களை வழியனுப்பி வைத்தார். நாங்கள் நன்றி கூறி விடைபெற்றோம். அரை மணி நேரத்துக்குள் இச்சந்திப்பு முடிந்துவிட்டது.
அடுத்த கட்டம் - இதே நாள் இரவு ஏழு மணிக்கு ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத் தலைவரைச் சந்திக்கவேண்டும்.
நேரத்தைச் சரியாக கடைப்பிடிப்பதில் திரு. ராஜலிங்கம் சற்றும் சளைக்கமாட்டார். நானும் அவரும் சரியாக ஏழு மணிக்கெல்லாம் “ரூபவாஹினி” அலுவலகம் முன்பாக காரில் இறங்கினோம். பாதுகாப்புச் சோதனைகள் கடுமையாக இருந்தது. சந்திப்பு குறித்து தொலைபேசி மூலம் மட்டுமே முடிவு எடுக்கப்பட்டதால் எழுத்து மூலத்தில் கடிதம் எதுவும் கைவசம் இல்லை. எங்களின் நோக்கம் பற்றி பாதுகாப்பு அதிகாரிகள் தொலைபேசி மூலமாக விசாரணை நடத்தினார்கள். பத்து நிமிடங்களின் பின்னர் அனுமதி கிடைத்தது. பாதுகாப்பு அதிகாரி ஒருவர் முன்பாகச் செல்ல நாங்கள் இருவரும் அலுவலகக் கட்டிடம் உள்ளே நுழைந்தோம். பல படப்பிடிப்பு அறைகளைக் கடந்து இயக்குநர் சபை அறைக்குள் சென்றோம். எங்கள் வரவை எதிர்பார்த்து மூன்று பேர்
82

C3a5.e4. LD50:56T
காத்திருந்தினர். நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டதும், அவர்களும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். ரூபவாஹினி நிர்வாகிகள் சபை உறுப்பினர்கள் இருவரும், சிங்களச் சேவையின் செய்தி ஆசிரியரும் இருந்தனர். அவர்களே பேச்சைத் தொடங்கினார்கள்.
"திருமதி சிறிமாவோவை நீங்கள் சந்தித்தது பற்றி அவர் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். இந்த விஷயம் ஜனாதிபதி ஜெயவர்த்தனா கவனம் வரை சென்று விட்டதால், ஒரு பெரிய பிரச்னையாகிவிட்டது.” என்று கூறி, "ஆமா இந்தச் செய்தியை திருமதி. சிறிமாவோ ஏன் மறுத்திருந்தார்” என்று எங்களின் விளக்கத்தை விரும்பி னார்கள். நான் பதிலளிக்க வேண்டிய நேரம் இது.
ரூபவாஹினி விட்ட தவறு ‘ஈழநாடு’ மீண்டும் ஒளிபரப்பு
"பேட்டியில் எந்தத் தப்பும் இல்லை. அந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேட்டி அளித்ததை திருமதி சிறிமாவோ ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ‘ஈழநாடு’க்கு நேரடியாக பேட்டி அளித்ததாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார். இதற்கு ரூபவாஹினிதான் முழுப் பொறுப்பு” என்றேன்.
"அதெப்படி..?” அவர்கள் விழிப்புடன் கேட்டனர். திரு. ராஜலிங்கம் தனது 'பிறீவ்சூட்கேஸை திறந்து, அந்தச் செய்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பு பிரதியொன்றை அவர்களிடம் கையளித்தார். அவர்கள் வரிவரியாகப் படித்திருக்கவேண்டும்.
".செய்தி அப்படியேதான் இருக்கிறது. இதில் ரூபவாஹினி செய்தியில் என்ன தப்பு என்கிறீர்கள்?” ஒருவர் கேட்டார்.
83

Page 54
Manajana) Aan
"ஈழநாடு” என்பதற்கும் ‘ஈழநாடு சிறப்பு நிருபர் ஒருவருக்கு’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திருமதி. சிறிமாவோ இதனைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். என்றார் திரு. ராஜலிங்கம். சில நிமிடம் மெளனம் நிலவியது.
‘ஈழநாடு’ செய்தியை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தவர்கள் ‘ஈழநாடு’ சிறப்பு நிருபர் ஒருவருக்கு திருமதி சிறிமாவோ அளித்த பேட்டி என்று தெளிவாக விளக்கம் கூறுவதற்குப் பதிலாக, ‘ஈழநாடு’க்கு அளித்த பேட்டி என்று ஒளிபரப்பியதால் திருமதி சிறிமாவுக்கு ஒரு குழுப்பம் ஏற்பட்டிருக்கலாம்” என்று நான் கூறினேன். சில நிமிடங்களில் அவர்களும் புரிந்து கொண்டார்கள்.
“இன்று இரவு வெளியாகும் செய்திகளில் நீங்களே விளக்கத்தை தெரிவிக்கலாம். வாங்க படப்பிடிப்புக்கு ஸ்டூடியோ ரூமுக்கு போகலாம்” என்று அழைத்தனர். திரு. ராஜலிங்கம் என்னைப் பார்த்தார். எனது முகத்தில் பதில் தெரிந்திருக்கவேண்டும்.
“வேண்டாம் அவசியமில்லை. இன்றிரவு வெளி யாகும் ரூபவாஹினி செய்திகளில், பேட்டியில் திருத்தம் இல்லை என்றும், ‘ஈழநாடு’க்காக திருமதி. சிறிமாவோவை பேட்டி கண்டவர், ‘ஈழநாடு’ சிறப்பு நிருபர் ஒருவர் என்றும் தெரிவித்தால் போதும்.” என்றார் திரு. ராஜலிங்கம். அவர்களுக்கும் சரியாகப்பட்டது. அன்றிரவு வெளியான மும்மொழி ரூபவாஹினி செய்திகளிலும் மீண்டும் ‘ஈழநாடு’ முக்கிய இடம் பெற்றது.
‘ஈழநாடு’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தியை திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா மறுத்ததும், இது
84

கே.வி. மகாதேவா
தொடர்பாக ‘ஈழநாடு’ செய்திஆசிரியர் என்ற முறையில் நான் தனி விமானம்மூலம் அழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டதும் இதுவரை நான்கு சுவர்களுக்குள்ளாகத் தானிருந்தது. இந்த விபரத்தை இப்பொழுதுதான் நான் முதல் தடவையாக உலகுக்கு வெளியிடுகின்றேன் என்பது ஒரு நிஜமான கதை.
ஒரு பரபரப்பான பத்திரிகை செய்திக்காக அந்தப் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர், செய்தி ஆசிரியர் ஆகியோர் ஜனாதிபதி தலையீட்டில் ஒரு தனி விமானத்தில் அழைக்கப்பட்டது பத்திரிகை உலகில் ஒரு கின்னஸ் சாதனையாகத்தான் இருக்கவேண்டும்!
1981-ல் ‘ஈழநாடு’ ஐக்கிய தேசிய கட்சி கமாண்டோ படையினரால் எரிக்கப்பட்டது முதல் சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தது. இப்பொழுது இரண்டாவது.
எனது செய்தி எதிரொலி உதவி ஆசிரியருக்கு ஜெயில்
1986-ம் ஆண்டு குடும்பத்துடன் தமிழ்நாடு வந்திருந்த நான் திருச்சியில் தங்கியிருந்தேன். அப்போது, ஈழத் தமிழரின் இன்னல்கள் குறித்து மாபெரும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
மதுரையில் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாட்டுக்குச் சென்று செய்தி சேகரித்து ‘ஈழநாடு’க்கு சுடச்சுட அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். ஆந்திரப் பிரதேசத்தின் அன்றைய முதலமைச்சர் திரு. என். டி. ராமராவ் தலைமை வகித்தார்.
செய்திகளை விபரமாகத் திரட்டி கொழும்பிலுள்ள ‘ஈழநாடு’ அலுவலக நிருபர் திரு. இ. கந்தசாமி பெயருக்கு
85

Page 55
Mamadoa) Aan
அனுப்பி வைத்தேன். தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு அவசரத்தை வலியுறுத்தினேன். எனது செய்தி கிடைத்ததும் அவர் 'பிள்ளையார்’ தனியார் பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்கு சீக்கிரமாகவே செய்தியை அனுப்பி வைத்தார். ஆனால் என்ன நடந்தது?
1986-ம் ஆண்டு மே மாதம் 13-ம் திகதி இரவு வழக்கம்போல் திரு. கந்தசாமி ஒரு செய்திப் பார்ஸலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 'பிள்ளையார்’ பஸ் மூலம் ‘ஈழநாடு’ அலுவலகத்துக்கு அனுப்பினார். இந்தப் பார்ஸலில் தமிழ்நாட்டிலிருந்து நான் அனுப்பிய மதுரை மாநாட்டு செய்திக் கட்டுரையுடன், தினத்தந்தி, தினமணி, தினமலர், ஹிந்து நாளிதழ்களுடன் சில விளம்பரங்களும், செய்திகளும் இருந்தன. ஆனால் இரண்டு நாட்களிலேயே நிலைமை தலைகீழாகி விட்டது.
மே மாதம் 15-ம் திகதி காலை, கொழும்பு வெள்ளவத்தை பொலிஸார் ‘ஈழநாடு’ கொழும்பு அலுவலகம் சென்று. திரு. கந்தசாமியை கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப் பட்டு அன்றிரவுவரை விசாரணை நடைபெற்றது.
"எல்லாமே வெறும் பத்திரிகைகளும் உண்மைச் செய்திகளும்தான். ‘ஈழநாடு’ செய்தி ஆசிரியர் அனுப்பிய மதுரை மாநாட்டுச் செய்தியும் உண்மையான ஒரு தொகுப்புத்தான். இதில் இரகசியமோ கடத்தலோ இல்லை.” என்று அவர் வாதாடினாலும், பொலிஸாருக்கு திருப்தி அளிக்கவில்லை. எங்கும், எதிலும் எந்தரூபத்திலும் புலிகள்தான் நிரம்பியிருப்பார்கள் என்பது பொலிஸாரின் அன்றைய தாரக மந்திரம்.
திரு. கந்தசாமியை அடுத்த நாள் கொழும்பிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அநுராதபுரம்
86

கே.வி. மகாதேவா
பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அடுத்த மாதம் 14-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை செய்து, அன்றைய தினமே அநுராதபுரம் மாஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டார். அங்கு பொலிஸாரின் கையே ஓங்கியிருந்தது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒன்றரை மாதங்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் பின்னர் மீண்டும் நீதிபதி முன்பாக ஆஜர் செய்யப்பட்டு மேலும் ஒன்றரை மாதங்கள் போகம்பறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மே 14-ல் சிறையில் அடைக்கப்பட்ட திரு. கந்தசாமி, நான்கு மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அநுராதபுரம் பதில் நீதிபதியினால் 5000 ரூபா பிணையில் செல்ல உத்தரவிடப் பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து அரசாங்கமே வழக்கை வாபஸ் பெற்றுவிட்டது. அவரும் விடுதலை யானார். பொலிஸாரின் பொய்யான ஜோடனை விபரம் தெரிந்துவிட்டது.
அவர் அநுராதபுரம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதற்கு காரணம்; "பிள்ளையார்’ பஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அநுராதபுரத்தில்தான். அங்கு வைத்துத்தான் அவர் அனுப்பி வைத்த செய்தி பார்ஸல் பிரிக்கப்பட்டு பொலிஸாரின் சோதனைக்குட் படுத்தப்பட்டது. எனது செய்திக் கட்டுரையும் அவர்களால் படித்துப் பார்க்கப்பட்டது.
இந்த ‘கொடுமை’ குறித்து 1986ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் திகதி இராஜாங்க அமைச்சர் டாக்டர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸுக்கு விளக்கமாகக் கடிதம் எழுதி திரு. கந்தசாமி நியாயம் கேட்டிருந்தார். இதன்
87

Page 56
Manador),Adan
பின்னர்தான் நீதியும் பிறந்திருக்க வேண்டும்.
திரு. கந்தசாமி எனக்கு (தமிழ்நாடு விலாசத்துக்கு) அன்று எழுதிய கடிதத்தில்; "ஒரு பத்திரிகையாளன் சிறை செல்வது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் காரணமில்லாமலேயே நான் கடுமையாகத் தண்டிக்கப் பட்டுவிட்டேன் என்று கவலை தெரிவித்து; ‘ஈழநாடு’ நிர்வாகமும், பொலிஸார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை ஒரம் கட்டி விட்டதுதான் மிகவும் கவலை அளிக்கிறது" என்று வருத்தம் தெரிவித்திருந்தார். நியாயமான அதிர்ச்சியாகவே எனக்குப்பட்டது.
குடும்பத்துடன் தமிழ்நாடு வந்து திருச்சியில் தங்கியிருந்து இலங்கை புறப்பட நேர்ந்தபோதுதான் திரு. கந்தசாமி கைதான விபரம் எனக்குத் தெரியவந்தது.
கொழும்பிலுள்ள ‘ஈழநாடு’ நிறுவனத் தலைவர் திரு. தங்கராசாவுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விபரம் கேட்டபோது, அவர் கவலை தெரிவித்ததுடன் வழக்கு விசாரணை முடியும்வரை கொழும்பு திரும்பவேண்டாம் என்றும் கேட்டுக் Gol35ft6iatLittr.
இலங்கை திரும்பினால் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் நான் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு பின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது புரிந்து விட்டது. சில நாட்களில் குடும்பத்தினரை கொழும்புக்கு அனுப்பி விட்டு நான் மட்டும் தமிழ்நாட்டில் இருந்தேன் - திரு. கந்தசாமிமீதான வழக்கு விசாரணை முடியும் வரை. 1986 டிசம்பர் மாதம் தான் எனக்கு பச்சை விளக்கு காட்டப் பட்டது. நானும் இலங்கை திரும்பினேன்.
1970-களின் ஆரம்பத்தில் இலங்கை அரசின்
88

GBas.sál. LDasm0356Mn
பாரபட்சமான, தமிழர்களுக்கு எதிரான தரப்படுத்தல் கல்விக் கொள்கையும், சிங்களம் மட்டும் சட்டம் என்ற அரசு மொழிக் கொள்கையும், தமிழ் மக்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஒட்டுமொத்தமாகப் பாதித்த துடன், தமிழினத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார வாழ்வையும் இருளடையச் செய்தன. இதன் எதிரொலி; தமிழ் இளைஞர்களை புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது, புரட்சிகரப் பாதைக்கு முன்செல்ல நிர்ப்பந்தித்தது.
தமிழ் இளைஞர்களின் எழுச்சியை அடக்க, ஆயுதப்படைகளை தமிழ்ப் பிரதேசம் முழுவதிலும் அரசு குவித்தது.
‘ஈழநாடு’ செய்திகள் இராணுவம் கெடுபிடி
தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் பூரண இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இந்த நெருக்கடியான sfg கட்டத்தில்தான், புரட்சிகர இயக்கங்கள் உருவாகத் தொடங்கின.
வடபகுதியில் இராணுவத்தினரின் நிர்வாகத் தலைமையகம் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள குருநகரில் தொடர் மாடிக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டது.
வட பகுதியில் கைது செய்யப்படும் இளைஞர்கள், இம் முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு கடும் சித்திரவதைக்குட்படுத்தப் பட்டனர். கைது செய்யப் படுபவர்கள் விசாரணையின் பின்னர் "பயங்கரவாதிகள்’ என்ற பேரில் களுத்துறைச் சிறைச்சாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டார்கள். இக்காலகட்டத்தில்தான் கைது செய்யப்பட்ட ஒரு இளைஞர், கடும் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டு மரணமானார். இவ்விளைஞர்
89

Page 57
Manabooabaan
கிளிவெட்டியைச் சேர்ந்தவர்.
இறந்த இளைஞரின் சடலம் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியிலுள்ள பிரேத அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்தது.
இம்மரணம் சம்பந்தப்பட்ட விஷயம் யாழ். நீதி மன்ற நீதிவானின் கவனத்துக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து, அவர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டு மரண விசாரணையை ஒத்திவைத்தார். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியரும், வைத்திய கலாநிதியுமான சரவணபவானந்தன் பிரேத பரிசோதனை செய்தார். மரண விசாரணை யாழ். நீதிமன்றத்தில் நீதிவான் யோகநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
பிரபல சட்டத்தரணியும், யாழ் LDrTpb35gréF60)Lu முதல்வருமான இராஜா விஸ்வநாதன் மரணமானவரின் சார்பில் ஆஜரானர்.
பிரேதபரிசோதனை நடத்திய டாக்டர் சாட்சிய மளிக்கையில்; கடுமையான சித்திரவதையினால்தான் இவர் இறக்க நேரிட்டது என்றும், இவர் உடுத்திருந்த சாரத்தில் கூட இரத்தக் கறைகளும் மலத்துளிகளும் காணப்பட்ட தாகவும் தெரிவித்தார்.
விசாரணை முடிவில் நீதிவான் தீர்ப்பளிக்கையில் இது ஒரு கொலை என்றும், சம்பந்தப்பட்ட இராணுவத்தினர், இராணுவ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த செய்தி மறுநாள் ‘ஈழநாடு’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக முழுமையாக வெளிவந்தது. இதன் எதிரொலி அரசாங்க மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும்
90

(கே.வி. மகாதேவா
அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
‘ஈழநாடு’ செய்தி, இராணுவ தரப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இலங்கை இராணுவ முகாம் வடபகுதி பொறுப்பாள ராகவும், நிர்வாகத் தலைமைத் தளபதியாகவுமிருந்த பிரிகேடியர் ரணதுங்க ‘ஈழநாடு’வுடன் அவசரம் அவசரமாகத் தொடர்பு கொண்டார்.
எமது அலுவலக நிருபர் திரு. ஏ.வி. மாணிக்கம் நேரடியான விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனையுடன் விசாரணை யைத் தொடர்ந்தார்.
"இச்செய்தியை எப்படி பிரசுரிப்பீர்கள்?” என்ற தோரணையில் ராஜபார்வை செலுத்திய அவர் "இச்செய்தியை வெளியிட்டமைக்காக கடுமையாக எச்சரிக்கின்றேன்” என்று கூறி, இதுபோன்ற இராணுவ தரப்பு செய்திகளை தமது முன் அனுமதியின்றி ‘ஈழநாடு’வில் பிரசுரிக்கக்கூடாது என்றும், இதுவே தமது கடைசி எச்சரிக்கை என்றும் நிருபரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்களில் நடைபெறும் விசாரணைகளின்போது இறக்க நேரிடும் எவரது சடலமும் 'அவசரகால, பயங்கரவாத தடைச் சட்டம், தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்தல் சட்டம்’ என்பவற்றின்கீழ் பிரேத பரிசோதனைக்கோ அல்லது foggoor விசாரணைக்கோ அனுமதிக்கப்பட மாட்டாது என்று புதிய இராணுவ உத்தரவு பிறப்பிக்கப் ull-gil.
யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் இராணுவ
91

Page 58
Manador),Adan
முகாமை விஸ்தரித்து, புதிய அரண்களை நிறுவி, பாதுகாப்புகள் நிறைந்த ஒரு கோட்டையாக மாற்றியமைக்க இராணுவ தலைமைப்பீடம் திட்டமிட்டிருந்த வேளையில் இம்முகாம் 24, பிப்ரவரி 1984-ல் விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
கொழும்பு பத்திரிகையாளரின் விபரீத கடத்தல் ஆசை செய்திகள்
1977-ம் ஆண்டு. தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பத்திரிகையாளர்களை கடுமையாக கண்டிக்கும் ‘விசாரணை நடவடிக்கை'களில் சில இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்ட காலம் அது.
பத்திரிகையாளர்கள் ரகத்தில் அந்த இயக்கங்கள் குறி பார்த்தது; சிங்கள ஏகாதிபத்திய பத்திரிகை மற்றும் செய்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைத்தான்.
தலைநகர் கொழும்பிலிருந்து செயல்பட்டு, செய்தி சேகரிப்பதற்காக வடபகுதி, குறிப்பாக யாழ்ப்பாணம் வருகை தரும் பத்திரிகையாளர்கள்மீது அந்த இயக்கங் களின் கவனம் திரும்பியிருந்தது. சில சம்பவங்களும் நடைபெற்றன.
ஒரு நாள் ‘ஈழநாடு’ அலுவலகத்தில் கடமையிலிருந்த போது எனக்கு, கொழும்பிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"மிஸ்டர் மகாதேவாதானே பேசுறிங்க." என்று கேட்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
கொழும்பில் ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்தின் தமிழ் பத்திரிகையில் பணியாற்றும் உதவி ஆசிரியர் அவர்.
92

கே.வி. மகாதேவா
நேரில் பழகாவிட்டாலும், தொலைபேசிமூலம் கதைத்த துண்டு. அவர் பேசத் தொடங்கினார்.
". செய்திகள் விஷயமாக நான் யாழ்ப்பாணம் வர வேண்டியிருக்கிறது. ஆனால் பத்திரிகையாளர்கள் கடத்தப் படுகிறார்கள். கடுமையாக விசாரிக்கப்படுகிறார்கள் என்று பார்க்கும்பொழுது எனக்கு உள்ளூர பயமாக இருக்கிறது. நான் வந்தால் அப்படி ஏதும் நடக்குமோ." என்றார் அந்த பத்திரிகையாளர்.
"நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. அநாவசி யமாக இயக்கங்கள் எவரையும் கடத்தி விசாரணை செய்வது கிடையாது. இங்கு வந்து நன்றாக உறவாடிவிட்டு கொழும்பு திரும்பியதும் உண்மைக்கு மாறான, தமிழருக்கு விரோதமான செய்திகளை வெளியிட்டு, இயக்கங்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி கயிறுதிரிக்கும் பத்திரிகை யாளர்கள்மீதுதான் கண்ணாக இருப்பார்கள். நீங்கள் தாராளமாக வரலாம். உண்மையைத்தானே எழுதப்
போகின்றீர்கள்." என்று நான் பதிலளித்தேன்.
".ரொம்ப தேங்க்ஸ். நான் வரும்பொழுது உங்களுக்கு அறிவிப்பேன். யாழ்ப்பாணம் வந்தால்
ஹோட்டலில்தான் தங்கியிருப்பேன்." என்று கூறி அந்த பத்திரிகையாளர் நண்பர் தொலைபேசித் தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
இரண்டு தினங்களுக்குப் பின்னர் நண்பகல் நேரம் அந்தப் பத்திரிகையாளர், தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டார்.
"கொழும்பிலிருந்து காலையில்தான் ரயிலில் வந்து சேர்ந்தேன். இப்போது சுபாஸ் ஹோட்டலில் தங்கியிருக் கின்றேன். உங்களுக்கு நம்பிக்கையான நிருபர் ஒருவரை
8 pë- 93

Page 59
Manabora)Adan
y
இங்கு அனுப்பமுடியுமா..? சில விபரம் அறியவேண்டும். என்றார் அவர்.
"ஏன். நீங்கள் ‘ஈழநாடு’க்கு வரலாமே. நேரில் எல்லாம் பேசிக் கொள்ளலாம்.” என்றேன் நான்.
"பரவாயில்லை. உங்களை எப்படியும் சந்தித்து விட்டுத்தான் போவேன். நிருபரை இப்போது அனுப்பினால் உதவியாக இருக்கும்." என்று அவர் அடம் பிடித்தார். நான் சரி என்றேன்.
எனது விசுவாசத்துக்குரிய அலுவலக நிருபர் திரு.ஏ.வி. மாணிக்கத்திடம் விபரத்தைச் சொல்லி, சுபாஸ் ஹோட்டலுக்குப்போய் அந்த பத்திரிகையாளரைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டேன். எங்கள் ‘ஈழநாடு’ அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமிருக்கும் யாழ் சுபாஸ் ஹோட்டலுக்கு மாணிக்கம், தனது சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
சுமார் ஒரு மணி நேரமாகிவிட்டது. நிருபர் மாணிக்கம் திரும்பவில்லை. அவர் நண்பகல் சாப்பாட்டை முடிக்காமல்தான் புறப்பட்டிருந்தார். சுபாஸ் ஹோட்டலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பத்திரிகை யாளருடன் இருக்கும் மாணிக்கத்துடன் பேசவேண்டும் என்று கூறினேன். மாணிக்கம் கதைத்தார்.
"நான் இங்குதான் இருக்கிறேன். மத்தியான சாப்பாடு நண்பரோடுதான். அரைமணி நேரத்தில் வந்து விடுவேன்” என்றார். நான் சரி என்றேன்.
பகல் இரண்டரை மணிக்கு மாணிக்கம் அலுவலகம் வந்தார். அவர் முகத்தில் களைக்குப் பதில் கலவரம்தான் காணப்பட்டது.
94

(கே.வி. மகாதேவா
"என்ன விசேஷம்.?” என்று நான் கேட்டதும், "பெரிய பிரச்னை. அந்த ஆளுக்கு பொல்லாத ஆசை.” என்று மாணிக்கம் கடுகடுக்கவே, "விளக்கமாகத்தான் சொல்லித் தொலையும்." என்று நான் எரிச்சலடைந்தேன். மாணிக்கம், என்னருகில் நெருக்கமாக உட்கார்ந்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு பேசத் தொடங்கினார்.
"தமிழர் விரோத கொழும்பு பத்திரிகையாளர்களை இயக்கங்கள் இப்போது கடத்துகிறதல்லவா..? தம்மையும் இப்படி கடத்துமா. என்று அவர் கேட்கிறார். சுத்த பைத்தியக்காரன்." என்று வார்த்தைகளை விழுங்கினார். "மாணிக்கம் எனக்கு தலைகால் புரியவில்லை. ஒழுங்காகத் தான் சொல்லித் தொலையும்." என்றேன் நான். மாணிக்கம் மீண்டும் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு குசுகுசுத்தார்.
"கொழும்பு பத்திரிகையாளர்கள் யாழ்ப்பாணத்தில்
இயக்கங்களினால் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது கொழும்பில் “பெரிதாக கதைக்கப் படுகிறதாம். "தியாகச் செம்மல்கள்’ என்று தென்
இலங்கையில் போற்றப்படுகிறார்களாம். இப்படியாக, தாமும் கடத்தப்பட்டு பத்திரிகைகளில் செய்தி வந்தால் தமது பத்திரிகை நிறுவனத்துக்கும் நல்ல பெயர் வருவதுடன், தாமும் ஒரு ஹிரோ ஆகிவிடலாமாம்.” என்று ஆரம்பித்ததும் நான் குறுக்கிட்டேன்.
"என்ன விசர் பிடித்திருக்கிறது இந்த ஆளுக்கு. விசரணை இயக்கம் ஏன் கடத்தப்போகிறது” என்றதும், மாணிக்கம் முழுப்பூசினிக்காயையும் போட்டு உடைத்தார். "அந்த ஆள் ஹோட்டலில் இருப்பாராம். இவர் பற்றி இல்லாததை எல்லாம் ஒரு இயக்கத்திடம் நான் பற்ற வைத்து அந்த ஆளை கடத்தி விசாரணை செய்யுமளவுக்கு
95

Page 60
raaloonsaan
தூண்டி விடவேண்டுமாம். அதாவது இவர் கடத்தப்பட்டு செய்தி வருவதற்கு நான் அடியாளாக வேலை செய்ய வேண்டுமாம். அது மட்டுமல்ல; கடத்தப்பட்ட தகவலை ஹோட்டல் மனேஜர் எங்களுக்கு கூறியதும் நாங்கள் அவரின் கொழும்பு பேப்பருக்கு தெரிவிக்க வேண்டுமாம். என்ன திமிர் இந்த ஆளுக்கு." என்று குமுறினார் மாணிக்கம். எனக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. அந்தப் பத்திரிகையாளனின் இக் கற்பனையைத்தான் எப்படி எடை போடுவது!
இப்படிப்பட்டவர்களுக்கு இயக்கம் பாடம் புகட்டத் தான் வேண்டும்’ என்று எனது மனம் புலம்பினாலும், "அப்படி நடந்துவிட்டால்தான் முதல் பக்க செய்தியாகி விடுமே.” என்று அஞ்சியது. இதனைத்தானே அந்த ஆளும் விரும்புகிறார்.
"ஒகோ. இவர் இங்கு செய்தி சேகரிக்க வரவில்லை. செய்தியாக மாற வந்திருக்கிறார் போலும்." என்று மாணிக்கத்திடம் கூறிவிட்டு, "இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம், அந்த மனுஷனின் தொடர்பே வேண்டாம்." என்றேன். மாணிக்கம் தலை அசைத்துக் கொண்டார். இந்த விஷயம் எங்களிருவரையும் தவிர மூன்றாம் நபருக்கு தெரியக்கூடாது என்று இரகசியம் பேசிக் கொண்டோம்.
ஆனாலும் வேதாளம் விடுவதாக இல்லை. பகல் நான்கு மணியளவில் அந்த பத்திரிகையாளர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
"உங்கள் நிருபர் மாணிக்கத்திடம் விபரம் சொல்லி யிருக்கிறேன். உங்களுக்குச் சொல்லியிருப்பார். இன்று இரவு பத்து மணிக்குள் ஏற்பாடு செய்தால் நல்லது.” என்று
96

கே.வி. மகாதேவா
உளறினார்.
"மாணிக்கம் உங்களுடன் தொடர்பு கொள்வார்.” என்று கூறி தொலைபேசியை வைத்தேன்.
ஆசிரியர் பகுதியில் கடமையாற்றும் இரவுப் பொறுப்பாளர் லீவில் சென்றதால், நான் வீடு சென்று மாலை ஆறு மணிக்கு மீண்டும் அலுவலகம் திரும்பி விட்டேன். எனக்கு உதவியாக அன்றிரவு மாணிக்கத்தையும் கடமையாற்றச் சொன்னேன்.
அடுத்த நாள் பத்திரிகைக்கு முதல் பக்க செய்திதேடி அலைவதை விட, கொழும்பு பத்திரிகையாளரின் ‘செய்தி உத்தி நியூஸ்தான் பரபரப்பாக எனக்குப்பட்டது.
இரவு எட்டு மணிக்கு அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தொலைபேசி அலறினாலே மாணிக்கத்தின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டுவிடும். நானே "ஒ. நீங்களா. மாணிக்கம் தொடர்பு கொள்வார்." என்று பதிலளித்து தொடர்பை துண்டித்தேன்.
மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது. அவர் எங்களை விடுவதாக இல்லை. இம்முயற்சி எத்தனை பெரிய விஷப்பரீட்சை என்பது அந்த கொழும்பு பத்திரிகை யாளருக்குத் தெரியவில்லைபோலும்.
இரவு ஒன்பதரை மணிக்கு மீண்டும் தொலைபேசி “கிணிங்’ சத்தம். அவர் பேசினார். "என்ன நீங்கள். மாணிக்கத்திடம் இவ்வளவு சொல்லியும் தொடர்பு கொள்ளாமலேயே இருக்கிறார். பத்து மணி ஆகப் போகிறது." என்று துடித்தார். எனக்கு கோபம் வந்தது.
"நீங்க நினைக்கிறமாதிரி இது சின்ன விஷயமல்ல. குற்றச்சாட்டின்மீது திருப்தி இருந்தால் மட்டுமே இயக்கம்
97

Page 61
$('
ஏதோ ஒரு நடவடிக்கை எடுக்குமே தவிர உங்களின் சுயநலத்துக்காக தங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாது.” என்று கூறி தொடர்பை துண்டித்தேன்.
ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. இரவு பத்தரை, பதினொன்று, பதினொன்றரை என்று அரை மணிக்கொரு தடவை தொலைபேசி மூலம்; "பிரிண்டுக்கு நேரமாகப் போகிறது. ஆபீஸ்"க்கு செய்தி சொல்ல வேண்டும். மாணிக்கத்திடம் நான் கேட்டதை பிளிஸ் செய்யச் சொல்லுங்க." என்று மன்றாடினார்.
கடுகடுப்பான முகத்துடன் எனது அருகில் மாணிக்கம் அமர்ந்திருந்தார். இரவு பதினொன்று நாற்பதுக்கு நான் சுபாஸ் ஹோட்டலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "அந்த பத்திரிகையாளர் இனிமேல் எங்களுக்கு தொலைபேசி எடுத்தால் நாங்கள் வேலை முடிந்து போய்விட்டோம் என்று சொல்லுங்கள். எங்களுக்கு "கனெக்ஷன்’ கொடுக்க வேண்டாம்” என்று கூறினேன். இதன் பிறகுதான் மாணிக்கம் நிம்மதி மூச்சு விட்டார்.
அலுவலக வேலை முடிந்து அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வீடு திரும்பி மீண்டும் காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் வந்தேன். முதல் வேலையாக சுபாஸ் ஹோட்டலுடன் தொடர்பு கொண்டு அவர் பற்றி விசாரித்தேன்.
“காலையிலேயே ரூமைவிட்டு “யாழ். தேவி ரயில் மூலம் கொழும்பு சென்றுவிட்டார்” என்று பதில் வந்தது.
பல தினசரிகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வரும் சிங்கள பத்திரிகை நிறுவனங்களுக்கு தமிழர் பிரச்னை என்றால் வெறும் கிள்ளுக்கீரைதான். இந்த அயோக்கியத்தனம்தானே ஊழியர்களுக்கும் இருக்கும்.
98

கே.வி. மகாதேவா
வி.என்.பி. ரசித்த நல்லூர் உற்சவ வர்ணனை
பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் வருடாந்த உற்சவ காலம் அது. அன்றைய தினம் தேர் உற்சவம். இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில், தேர் உற்சவ வர்ணனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும், திரு.வி.என். பாலசுப்பிரமணியமும் வர்ணனையை ரசித்துக் கொண்டிருந்தோம். அடிக்கடி எங்கள் தொலைபேசி அலறிக்கொண்டே இருந்ததால், தொலை பேசியில் நிருபர்கள் கொடுக்கும் செய்திகளைக் குறிப்பெடுப்பதும், வானொலி வர்ணனையைக் கேட்பதுமாக இருந்தேன்.
ஒரு கட்டத்தில், திரு.வி.என்.பி. “ஹா. ஹோ.” என்று வாய்விட்டுச் சிரித்தது எனக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. பக்தி பூர்வமாக வானொலி வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர் ஏன் இப்படி சிரித்தார் என்பதை அறிய முயன்றேன். வானொலி ஒலிச் சத்தத்தை சற்றுக் குறைத்துவிட்டு அவரைப் பார்த்தேன். திரு. வி.என். பி. மீண்டும் சிரித்துக் கொண்டே கூறினார்.
". தேர் இப்பொழுது தெற்குப் பக்கமாக நகரத் தொடங்கியிருக்கிறது. பக்தர்களின் “முருகா அரோகரா" கோஷமும் கற்பூர தீபமும் விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளம் கோடிக்கணக்கில் இங்கு குவிந்து இருக்கிறார்கள். என்று வானொலி வர்ணனையாளர் கூறியிருக்கிறார்” என்று விளக்கி மீண்டும் சிரித்தார் திரு.வி.என்.பி. “ஏன். இதில் என்ன பிழையிருக்கிறது.?” என்று நான் வினவ, "அந்த டேப்பை மீண்டும் போட்டுப்பாரும்.” என்றார் அவர். வானொலி செய்திகள் எப்பொழுதும் டேப்பில் ஒலிப்பதிவு செய்யப்படுவதால் அன்றைய வர்ணனையும் ஒலிப்பதிவாகி விட்டது. நான் டேப்பை முடுக்கிவிட்டேன். திரு.வி.என்.பி. கூறிய அதே வர்ணனை வார்த்தைகள் பிசகின்றி
99

Page 62
Solanasons Aân
உச்சஸ்தானத்தில் ஒலித்தது. "இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது.” என்றேன். அவரது சிரிப்பின் ரகசியத்தை அறிய எனக்கு அத்தனை அவசர அவா.
"என்ன காணும். உமக்கு இன்னுமா புரிய வில்லை.? நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் இங்கு கோடிக் கணக்கில் குவிந்திருக்கிறார்கள் என்று வர்ணனையாளர் கூறியிருக்கிறாரே. நமது நாட்டின் முழு மக்கள் தொகையே சுமார் இரண்டு கோடிதானே.” என்று மீண்டும் சிரித்தார். நானும் வாய்விட்டுச் சிரித்தேன்.
女 ★ ★ 1986-ம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் தாவடிப் பகுதியில் விமானக் குண்டு வீச்சு நடந்தது.
இலங்கை விமானப்படையின் தமிழ்ப்பகுதிமீது முதல் குண்டு வீச்சு இது என்றும், விடுதலைப்புலிகளின் முகாம் மீது வீசப்பட்டதென்றும் பேசப்பட்டது. அப்பகுதி எங்கும் ஒரே பதற்றம். தாவடிக்கு அடுத்ததாக உள்ள கோண்டாவில் மேற்கிலும் பரபரப்பு இப்பகுதியில்தான் நாங்கள் குடியிருந்த தால் குடும்பத்துடன் கொழும்பு போய் வரலாமென்று முடிவு செய்தோம்.
மார்ச் மாதம் கடைசி வாரம். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புசெல்லும் காலை கடுகதி ரயிலில் புறப் பட்டோம். ரயிலின் எல்லா பெட்டிகளும் நிரம்பி வழிந்தன. என்றுமில்லாத பிரயாணிகள் கூட்டம் அது.
நடுக்காட்டில் ரயில் எரிக்கப்பட்டது!
ஆணைஇறவு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதும்,
வழக்கம்போல் இலங்கை ராணுவத்தினர் 'திபு திபு’ என்று ஏறினர். அசைய முடியாத கூட்டத்தின் நடுவே ஏறி
100

(Based. Desi(856) l
எல்லோரையும் நோட்டம் பார்த்துவிட்டு இறங்கிக் கொண்டனர். ரயில் நகரத் தொடங்கியது.
ஓமந்தை ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென வேகம் மெதுவாகக் குறைந்து நடுப்பாதையிலேயே ரயில் நின்றுவிட்டது. யன்னல் பக்கமாகவும், வாசல் பகுதியிலும் நின்று கொண்டிருந்த வர்கள் மட்டும் தலையை வெளியே நீட்டிப்பார்த்தனர். சில நிமிடங்கள்தான் மறைந்திருக்கும். திடுதிப் என்று பலரும் ரயிலை விட்டுக் குதிக்கத் தொடங்கினார்கள். "ஏன் இறங்குகிறீர்கள்” என்பதற்குக்கூட பதிலளிக்காமல் ரயிலை விட்டு பாய்ந்து கொண்டிருந்தனர். என்னைப் போலவே பலருக்கும், விபரம் உடனடியாகத் தெரியவில்லை. "ரயில் பாதையில் இராணுவம் குண்டு வைத்திருக்கிறதாம். மெசேஜ் பொடியன்களுக்கு கிடைத்திருக்கிறது. அதுதான்
101

Page 63
Soanalon.) Alan
ரயிலை இடைவெளியில் நிற்பாட்டினமாம்.” காரணம் காதுக்கு எட்டியதுதான் தாமதம், மளமளவென்று சூட்கேஸ"களை எடுத்துக் கொண்டு ஆட்களோடு ஆட்களாக நாங்கள் வெளியே பாய்ந்தோம், நடந்தோம்.
அது ஒரு காட்டுப்பகுதி. தலைமீது சூட்கேஸை வைத்துக்கொண்டு சுமார் ஒரு மணிநேரம் நடந்தோம். எறும்புக் கூட்டம் மாதிரி ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்து, கடைசியாக ஒரு அரிசி மில் கட்டிடம் முன்பாக நின்றோம். இதற்கு மேல் ஒரு அடி கூட நகர்த்த முடியாத உடம்பு நிலை.
கூட்டத்தோடு கூட்டமாக அங்கு நின்ற எங்களுக்கு திடீரென பேரிடிச் சத்தம் கேட்டது. ரயிலுக்கு குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாகவும், கூண்டோடு ரயில் பெட்டிகள் எரிந்து கொண்டிருப்பதாகவும் விபரம் தெரிவிக்கப்பட்டது.
வவுனியாவுக்கு வாகனப் போக்குவரத்து எதுவும் உடனடியாக தொடங்கப்படவில்லை. பசி பட்டினியுடன் மூன்று நாட்கள் அந்தக் காட்டுப் பகுதியில் வாசம் செய்து விட்டு, முதலில் லாறி போக்குவரத்து ஆரம்பமானதும் நாங்கள் (ஆறுபேரும்) ஒரு லாறியில் அடைபட்ட நிலையில் கொழும்பு புறப்பட்டோம். நான்கு மணி நேரப் பயணம் ஒரு நாளாகி, கொழும்பில் மூச்சு விட்டோம்.
★ ★ ★ ‘ஈழநாடு’ செய்திகள்மீது வாசகர்களுக்கு எவ்வளவு மதிப்பும் நம்பிக்கையும் இருந்ததோ, அதே மாதிரி ‘ஈழநாடு’ தினசரி, வாரமலரில் வெளிவரும் இராசிபலனிலும் முழு நம்பிக்கை இருந்தது.
இராசிபலன் பகுதியை ஆரம்ப காலத்தில் திருமலை
102

கே.வி. மகாதேவா
வேலுப்பிள்ளையும், அவர் காலமானதன் பின்னர் அவர் மைந்தனும் ‘ஈழநாடு’க்கு தொடர்ச்சியாக எழுதிவந்தனர்.
இப்பகுதியை வாசகர்களில், வர்த்தகப் பிரமுகர்கள் அதிகம் வரவேற்றார்கள். ஆரம்பகாலத்தில் இரண்டு வாரங்கள் முன்கூட்டியே எழுதப்பட்டு ஒழுங்காக எங்களுக்கு கிடைத்த இராசி பலன் குறிப்புகள், பின் நாட்களில் ஒரிரு நாட்கள் அல்லது முதல் நாள்தான் கைக்குக் கிடைக்கும். அபூர்வமாக சில நாட்களில் வராமலும் - தாமதித்துவிடும். எங்களுக்கு தர்மசங்கடமாகி விடும். வாசகர்களிடம் மன்னிப்பு கேட்போம்.
வழக்கமாக குறிப்பிட்ட உள் பக்கம் ஒன்றில்தான் இராசி பலன் பகுதி வெளியிடப்படும். அன்று ஒரு நாள், அச்சுக்குப் போகும் பகல் நேரம் வரை எதிர்பார்த்தேன். இராசி பலன் குறிப்புகள் வரவில்லை. குறிப்பிட்ட சோதிடருடன் உடன் தொடர்பு கொள்வதற்கு அவரிடம் தொலைபேசி வசதி இல்லை. அவர் தங்கும் இடமும் வெகு தூரம். நாளைய பதிப்பு, பலன் இல்லாமல் வெளிவர வேண்டியதுதான் என்று முடிவு செய்து, அவசர வேலை நிமித்தம் வீடு திரும்பி விட்டேன்
அடுத்த நாள் காலை ஏழு மணியிருக்கும். அலுவலகம் சென்ற நான் முதலில் ‘ஈழநாடு’ பத்திரிகையைப் படித்தேன். உள்பக்கமொன்றை பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய இராசி பலன் அழகாக, நாள் மாறாமல் ‘ஈழநாடு’ வில் வெளியாகி இருந்தது. ‘நான் வீடு புறப்பட்ட நேரம் இராசிபலன் குறிப்புகள் வந்திருக்கலாம். அச்சக போர்மேன் சிரமப்பட்டு பக்கம் பிரித்து தயாரித்திருப்பார். நல்ல முயற்சி’ என்று பாராட்டத் தோன்றியது.
இரண்டு நாட்கள் கழித்து, காலை நேரம்
103

Page 64
Sranasons Alan
தனிமையில் நான் அலுவலக அறையில் இருந்தபோது அச்சுக் கோப்பாளர் ஜோசப் என்னருகில் வந்தார்.
அச்சுக் கோப்பாளரின் மகா புத்திசாலித்தனம்!
"மகான் அண்ணன். நேற்று ஒரு சின்னத் தவறு நடந்துவிட்டது. கோவிச்சுக் கொள்ளாதீங்க." என்று ஆரம்பித்தார். -
"என்ன விஷயம்.” என்றேன். "ஆறாம் பக்கத்தில் இராசிபலன் பகுதியைப் போட்டது நான்தான்.” என்றார். "கெட்டிக்காரன். நானில்லாதபோது, அதுவும் லேட்டாக வந்த இராசிபலன் குறிப்புகளை சிரமம் பாராமல் பக்கம் பிரித்து போட்டிருக்கிறீங்க." என்று பாராட்டினேன். என்னுடைய சந்தோஷத்துக்கு ஜோசப்முகம் சந்தோஷம் கொண்டதாகத் தெரியவில்லை. கேள்வித் தொனியில் தொங்கியது.
"இல்லண்ணே. இராசிபலன் பகுதி நேற்று முன்தினம் வரவே இல்லை. முன்னர் ஒரு நாள் வெளிவந்த இராசி பலன் பகுதி டிஸ்க் பண்ணாமல் இருந்தது. நான் தான் நாளையும், திகதியையும் மாற்றி அடுத்தநாள் பதிப்பில வெளிவரச் செய்தேன். வாசகர்கள் ஏமாறக் கூடாதல்லவா. இனிமேல் இப்படி செய்யமாட்டேன்.” என்று இழுத்தார். என்னால் ஜோசப்பை கோபமாக பார்க்கமட்டும்தான் முடிந்தது. சத்தம் போட்டு கத்தமுடியவில்லை.
பத்திரிகையின் பக்கங்களைத் தயாரிக்கும் வழக்கமான போர்மென் வேலைக்கு வராவிட்டால் சிரேஷ்ட கம்போஸிட்டர்கள் பக்கங்கள் போடுவதில் ஈடுபடுவார்கள். அன்று ஜோசப்புக்கு பக்கத்தயாரிப்பு
104

(3a5.c4). LDisnr(356an
வேலை கிடைத்தது. தனது சாதுர்யத்தை இப்படிக் காட்டிவிட்டார்.
இதுவரை காலமும், எனக்கும் ஜோசப்புக்கும் தெரிந்த இந்த இரகசியம் இன்றுதான் பகிரங்கப்படுத்தப் படுகின்றது.
女 女 女
இலங்கை அரசினாலும், இராணுவத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட வட பகுதி தமிழ்மக்களின் உணர்வு பூர்வமான போராட்டம், மக்களின் அவலம், ஆஸ்பத்திரி களில் உயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் போதுமான அளவு இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பு, உணவுப்பொருள் பங்கீடு கட்டுப்படுத்தப்பட்டதால் நிலவும் விளைவுகள், எரிபொருள் தடை, விமானக் குண்டு வீச்சு, பலாலி இராணுவ முகாமிலிருந்து வீசப்படும் ஷெல் தாக்குதல் எதிரொலி போன்ற விரிவான செய்திகளை எல்லாம் ‘ஈழநாடு’ விலாவாரியாக வெளியிட்டது. இப்படி யான செய்திகளை கொழும்பிலிருக்கும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசி முலம் ‘ஈழநாடு’ உடன் தொடர்பு கொண்டு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் கொடுத்து வந்தன. இதில் எனது பங்களிப்பு முழுமையாக இருந்ததை எண்ணி பெருமைப்படுகின்றேன். தமிழ் மக்களின் அவலங்களை வெளி உலகுக்கு வெளிச்சம் காட்டியதில் ‘ஈழநாடு’ அன்று ‘முதல் நம்பர்’ பத்திரிகை யாக இருந்தது. தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களுக்குக்கூட தமிழ் மக்களின் உண்மை நிலை இப்படியாகத்தான் படம் பிடித்துக் காட்டப்பட்டது.
‘ஈழநாடு’வில் பணியாற்றிய திரு. கானமயில்நாதன் தினபதி’யில் கடமையாற்றிய பின்னர் *உதயன்'
105

Page 65
Manador),Adan
பத்திரிகையில் ஆசிரியரானார். திரு.எஸ். திருச்செல்வம் "ஈழமுரசு’ பத்திரிகையில் பணியாற்றிய பின்னர் 'முரசொலி” ஆசிரியரானார். அன்று ‘ஈழநாடு’ உடன் இந்த இரண்டு தினசரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த போதிலும், தங்களது நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் ‘ஈழநாடு’வில் வெளிவரவேண்டும் என்பதில் இயக்கங்கள், குழுக்களுக்கு அதிக ஆர்வமும் விருப்பமும் இருந்தது. விளம்பரமும் அதிகரித்தது. கூடவே விற்பனையும் பல மடங்கானது.
இரவோ, பகலோ ‘ஈழநாடு’ அலுவலகத்துக்கு பல இயக்கத்தினரும் ஆயுதங்களுடன்தான் செய்தி கொடுக்க வருவார்கள். அலுவலகத்தின் கீழ்த்தளத்தில், அச்சுக் கோர்க்கும் பகுதி மற்றும் அச்சு இயந்திரங்கள் இருந்தன. மேல் மாடியில், ஆசிரியர் பகுதி, நிர்வாகம் மற்றும் விளம்பரப்பகுதி செயல்பட்டது. திடீர் திடீரென விஜயம் செய்யும் ஆயுதத் குழுக்களினால் ஊழியர்கள் மத்தியில் ஒரு பய உணர்வு ஏற்பட்டதால், செய்திகள் சம்பந்தமாக செய்தி ஆசிரியரை சந்திப்பதற்கும், செய்திப் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு நடைமுறை வகுக்கப்பட்டது.
செய்திகளை மேல்மாடிக்கு நேரடியாக கொண்டு செல்வது தடுக்கப்பட்டு, தகவல்கள் கீழ்த்தளத்திலேயே பெறப்பட்டு செய்தி ஆசிரியரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு ஒப்பு நோக்காளராகவிருந்து அலுவலக நிருபராகப் பதவி உயர்வு பெற்ற திரு.ஏ.வி. மாணிக்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது. இதனைக் கச்சிதமாக செய்து முடிப்பார் திரு. மாணிக்கம்.
ஒரு நாள் இரவு. நான் கடமையிலிருந்தேன். மாணிக்கம் எனக்கு உதவியாக இருந்தார். வழக்கம் போல ஒரு ஆயுதக்குழு செய்தி கொடுக்க அலுவலகம் வந்தது.
106

(Basel. Des TCB56hT
மாணிக்கம் விசாரித்தார். "நாங்கள் செய்தி ஆசிரியரைத் தான் சந்திக்க வேண்டும்” என்று பிடிவாதமாக இருக்கவே, மேல்மாடிக்கு வழிவிடப்பட்டது. வந்தவர்கள் ரெலோ இயக்கத்தினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இரவு நேரத்தில் நடந்த செய்தி பயமுறுத்தல்
"ஒரு கோயில் கொள்ளை சம்பந்தமான பிரசுரம் இது. இப்படியே முழுமையாக நாளைய ‘ஈழநாடு’வில் வெளிவரவேண்டும்” என்று கூறினார்கள். பிரசுரத்தை நான் படித்தேன். அருகில் மாணிக்கம் இருந்தார்.
"செய்தியைப் போடலாம். ஆனால் கொள்ளை சம்பந்தமாக ஒரு இயக்கத்தை நேரடியாகத் தாக்கியிருக்கி நீர்களே." என்றேன் நான்.
"பிரசுரத்தில் உள்ள எந்த வரியையும் நீங்கள் அழித்து விடக்கூடாது. எல்லாம் அப்படியே வரவேண்டும்.” என்று வந்தவர்களில் ஒருவர் கூறவே, நான் சிறிது கணம் யோசித்தேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தோளில் தொங்கிய துணிப் பையிலிருந்து ஒரு பொருளை எடுத்தார். எனது மேசைமீது வைத்து அப்படியும் இப்படி யுமாக உருட்டினார். அந்தப் பொருள் "கிரைநேட்’
“நாளைய ‘ஈழநாடு’ பத்திரிகையில் இந்த துண்டுப் பிரசுரம் ஒரு செய்தியாக, அதுவும் முதல் பக்கத்தில் வெளி வராவிட்டால் இந்த அலுவலகம் நாளை இருக்காது.” என்று கூறி, கிரைநேட்டை மீண்டும் ஒரு தடவை உருட்டி, கையில் எடுத்து துணிப் பைக்குள் திணித்துக் கொண்டு, ஒரு பார்வையுடன் கீழே இறங்கி போய்விட்டார். அவருடன் மற்றவர்களும் சென்றனர். நானும், மாணிக்கமும் யோசித்தோம்.
107

Page 66
Manadawa) Aan
இந்தச் சம்பவம் எப்படித் தெரிந்ததோ அல்லது, குறிப்பிட்ட குழுவினரைப் பின் தொடர்ந்து வந்தாரோ தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் திரு. திலீபன் அவர்கள் அலுவலகம் வந்து என்னைச் சந்தித்தார். என்னிடம் எதையும் எதிர் பார்க்காமல், "அவர்கள் இங்கு வருவார்கள் என்று தெரியும். அதுதான் நான் பின் தொடர்ந்தேன். அவர்கள் கொடுத்த பிரசுரத்தை நீங்கள் அப்படியே போடுங்கோ. பரவாயில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று கூறிச் சென்று விட்டார்.
அந்தப் பிரசுரத்தை மீண்டும் படித்தேன். சில கடுமையான வார்த்தைகள், வரிகளை அழித்து, எடிட் செய்து மூன்று பத்தி தலைப்பிட்டு முதல் பக்கத்தில் வெளியிடுமாறு அச்சகப் பகுதியினருக்கு அனுப்பி வைத்தேன்.
முதல் பக்க புறுரவ் எனது பார்வைக்கு வந்தது. மூன்று பத்தி தலைப்பில் வெளிவந்திருந்த அந்த செய்தியை படித்தேன். நான் வெட்டி எடிட் செய்த வரிகள் - வார்த்தைகள் நீக்கப்படாமல் அப்படியே முழுமையாக இடம் பெற்றிருந்தன. அச்சகப் பகுதிப் பொறுப்பாளருக்கும் எனக்குமிடையே இதுபற்றி வாதம் நடந்தது. அவர்கள் பயப்பட்டிருக்க வேண்டும். என்னைச் சமாதானப் படுத்தினார்கள். "நாளைக்கு வரும் ஈழமுரசு, உதயன் பேப்பரைப் பாருங்கள். இச்செய்தி ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் வரும்." அச்சகப் பகுதியின் இரவு பொறுப்பாளர் நியாயத்துடன் பயபக்தியாகக் கூறினார். அடுத்தநாள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வரும் மூன்று நாளேடுகளிலும், ஒரே மாதிரியாக இச்செய்தி முதல் பக்கத்தில் வெளிவந்திருந்தது.
108

(85.a. LD50856. In
இலங்கை ஜனாதிபதி தேர்தல் காலம் அது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமொன்று யாழ்ப் பாணத்தில் நடந்தது. முக்கிய பேச்சாளராக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனா கலந்து கொண்டார். சுன்னாகத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா கலந்து கொண்டார். அலவலக நிருபர் ஏ.வி. மாணிக்கம் செய்தி கேசரித்தார். நான் அதை வடித்தெடுத்தேன்.
‘ஈழநாடு’ நிருபர் நையப்புடைக்கப்பட்டார்!
"மகாவலி கங்கை வடக்கே வராது" என்று திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனா கூறியதையும், "மகாவலி கங்கை வடக்கே வரும்” என்று திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க கூறியதையும், அடுத்தடுத்தநாள் ‘ஈழநாடு’ வில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டேன்.
இத்தலையங்கம் ஐ.தே. கட்சியினரை கலக்கியிருக்க வேண்டும். திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனா கிளிநொச்சி கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது, ‘ஈழநாடு’ கிளிநொச்சி நிருபர் திரு. மாணிக்கவாசகம் ஐ.தே. கட்சி முக்கிய பிரமுகர்களால் நையப்புடைக்கப்பட்டார்.
"யார் அந்த மடையன். உங்களுக்கு வேறு செய்தியே கிடையாதா. செய்திதான் போட்டீங்க, தலைப்பில் இப்படியா எழுதவேண்டும். நேரில் பார்த்துக் கொள்கிறேன்.” என்று தொலைபேசி மூலம் கிளிநொச்சி யிலிருந்து எனக்கு மிரட்டலும் வந்தது.
-9 g 109

Page 67
Somalojadn
அமிர், யோகேஸ் கொலை தொலைபேசி மிரட்டல்கள்!
தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர்நாயகம் திரு. அ. அமிர்தலிங்கம், யாழ்ப்பாணம் தொகுதி பாராளுமன்ற அங்கத்தவர் திரு. வெ. யோகேஸ்வரன் ஆகிய இருவரும் 1987ல் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட இரவுச் செய்தியை, அன்றிரவு இரவு நேரப் பொறுப்பாளராக விருந்த உதவி ஆசிரியர் திரு.எஸ். குகநாதன் ‘ஈழநாடு’ முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக, முழு அளவில் பெட்டிச் செய்தியாக கறுப்பு போடருடன் வெளியிட்டி ருந்தார்.
அடுத்த நாள் காலை ‘ஈழநாடு’ மிகுந்த பரபரப்புடன் விற்பனையாகி வாசகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறியது. வழக்கம்போல் நான் காலையில் அலுவலகம் சென்றேன்.
பகல் பதினொரு மணியிருக்கும். தொலைபேசி அலறியது. காதில் வைத்தேன்.
"யார். ஆசிரியரா.?” கேள்வி வந்தது. "இல்லை செய்தி ஆசிரியர்தான் பேசுகின்றேன்." என்றேன் நான்.
". உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே கிடையாதா. செய்திதான் வெளியீட்டீங்க. அமிர்தர், யோகேஸ் புகைப்படங்களையும் போட்டிருக்கலாமே.” கடூரமான வார்த்தைகள் இடி ஒசைபோல் கேட்டன!
"நாளை வரும் ‘ஈழநாடு’ பத்திரிகையில் முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக, அமிர்தர், யோகேஸ் கொலைக்குப் பொறுப்பானவர்களை தோலுரித்துக்காட்டும் விதத்தில் தகவல் வெளிவர வேண்டும். அதுவும் அவர்கள் இருவரின் புகைப்படங்களுடன். போட்டோ புளக்குகளை நாங்கள் அனுப்புவோம்." எச்சரிக்கைத் தொனியில்
110

(3.a.s.l. LD5TC356T
வார்த்தைகள் மழைபோல் கொட்டப்பட்டது. நான் பதிலளிக்க சந்தர்ப்பம் கொடுக்காமலேயே மறு முனையில் தொலைபேசி "டொக்' என்று வைக்கப்பட்ட சத்தம் கேட்டது.
1987 காலகட்டத்தில் வட பகுதியில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தொலைபேசிச் சேவை முற்றாக சீர் குலைந்திருந்தது. முக்கிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை அளிக்கப்பட்டது. ஆனாலும் கட்டுப்பாடு முழுவதும் யாழ் நகரில் யாழ் கச்சேரி அலுவலகத்துக்குப் பக்கத்தில் இயங்கிய இந்திய அமைதிப்படையின் பிரதம முகாமில்தான் இருந்தது.
நாங்கள் யாருக்கும் தொலைபேசி மூலம் பேசுவதாக விருந்தால், இ.அ.படை முகாமுடன்தான் தொடர்பு கொண்டு அழைப்பு கேட்க வேண்டும். இதுபோல், எங்களுக்கு வரவேண்டிய தொலைபேசி அழைப்புகளும் முகாம் ஊடாகவே வரும்.
பகல் ஒரு மணியளவில் ஒரு சிறிய பார்ஸல் ‘ஈழநாடு’க்கு வந்தது. செய்தி ஆசிரியருக்கு என்று பார்ஸலில் எழுதப்பட்டிருந்தது. பிரித்துப் பார்த்தோம். திரு. அமிர்தலிங்கம், திரு. யோகேஸ்வரன் ஆகியோரின் மார்பளவு சைஸ் புளக்குகள் அவை. புளக்குகள் கிடைத்த அரைமணி நேரத்தில் தொலைபேசி அழைப்பு பழைய இடத்திலிருந்து மீண்டும் வந்தது.
"புளக்குகள் கிடைத்ததா. புளக்குகளை வெட்டிக் கொத்தாமல் அப்படியே முதல் பக்க தலைப்புச் செய்தியுடன் போட வேண்டும்.” உத்தரவிடப்பட்டது.
ஒவ்வொரு புளக்கும் இரண்டு பத்தி, ஐந்து அங்குலம் கொண்டவை. இரண்டு புளக்குகளும் ‘ஈழநாடு’வில்
111

Page 68
Manador),Adan
அரைப் பக்கத்தை நிரப்பிவிடும். அடுத்த நாள் ‘ஈழநாடு’ இரண்டு புளக்குகளுடன் அமிர், யோகேஸ் கொலைச் செய்தியை வெளியிட்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான மற்றைய இரண்டு நாளேடுகளுக்கும் இதே நிலைதான். தொலைபேசியில் பேசியவர் யார்? யாழ். மணிக்கூட்டுக் கோபுரவீதியில் உள்ள அசோக் ஹோட்டலில் செயல்பட்ட ஈ.பி. ஆர்.எல்.எவ். அலுவலக முக்கிய பிரமுகர்தான்.
பொலிஸ் சித்திரவதை இளைஞர்களுக்கு சிறை
1983மே மாதம். எனது மகன் ஞானக்குமார் தனது நண்பனுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு தொழில் நிமித்தம் சென்றபோது, வெள்ளவத்தை இராம கிருஷ்ணா வீதியில் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டார். அப்பொழுதெல்லாம் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினராலும், பொலிஸாராலும் காரணம் எதுவும் இல்லாமல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரைவதைக்குட்படுவது வீட்டுக்கு வீடு வழக்கமான நடவடிக்கைதான். தமிழ் இளைஞர்கள் கைதானால், ஏன், எங்கு, யாரினால் என்ற விபரமே தெரியவராது. கைதானவர்கள் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்தால்தான் உயிர் நிச்சயம்.
கொழும்பு சென்ற மகன் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவரைத்தேடி கொழும்பு சென்றேன். பொலிஸார் கைது செய்ததாகத் தகவல் கிடைத்தது. ‘ஈழநாடு’ உடன் நெருக்கமான தொடர்புடைய உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. ஆர். சுந்தரலிங்கம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.
112

C3a5.e. Desmosan
கொழும்பிலுள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் அறிய முயன்றார்.
கடைசியில், வெள்ளவத்தை பொலிஸார்தான் கைது செய்த விபரம் தெரிய வந்தது. அங்கு சென்றேன். கைது செய்யப்பட்ட மகனும், நண்பனும் பொலிஸ் நிலையத்தில் 2 நாட்கள் வைக்கப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. அப்பொழுது நான், பெரியவர் கே.சி. தங்கராசா அவர்கள் வீட்டில்தான் தங்கியிருந்தேன். பலத்த சிபார்சின் பேரில் வெலிகடை சிறைச்சாலைக்கு அருகிலிருக்கும் ‘மகஸின்’ சிறை உயர் அதிகாரியைச் சந்தித்தேன். மகனைப் பார்க்க விசேட அனுமதி கிடைத்தது. காரணமில்லா மலேயே பொலிஸார் கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் அடித்து, சித்திரவதை செய்து சிறையில் வைத்திருப்பதாக LD digit கூறினான். இதுதானே, ஒவ்வொரு தமிழ் இளைஞனின் அன்றைய தலை எழுத்து!
‘ஈழநாடு’வில் மிகவும் அக்கறை கொண்ட பழம்பெரும் சட்டத்தரணி எட்மன்ட் சமரக்கொடியை சந்திக்குமாறு பெரியவர் தங்கராசா எனக்குக் கூறி அவருடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு விபரம் சொன்னார்.
கல்கிசையிலுள்ள அவரது வீட்டுக்குப் போனேன். அந்த இரவு நேரத்திலும் எதனையும் பொருட்படுத்தாமல் என்னை வரவேற்று விபரம் கேட்டார். "இதெல்லாம் (οι μπούλου πτήσότ வழக்கமான அடாவடித்தனம்தான். நீதிமன்றத்தில் பார்க்கலாம்." என்று அவர் ஆறுதல் கூறினார். இரண்டு வாரங்களின் பின்னர் சிறையிலிருந்து கல்கிசை நீதிமன்றத்தில் மகனும் அவர் நண்பனும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
113

Page 69
Swaabonsam
வழக்கம்போல், கொலைக் குற்றவாளிபோல் கையில் நீண்ட சங்கிலியால் விலங்கிடப்பட்டு, திறந்த ஜிப் வண்டியில் நிறைந்த பாதுகாப்புடன் இருவரும் கொண்டு வரப்பட்டனர். நீதிமன்றத்திற்கு நீதிபதி இன்னும் வரவில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த ஜிப் வண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்ததும், அங்கிருந்த பலரும் "கொட்டியா. கொட்டியா எனவா." என்று குசுகுசுத்தது காதில் விழுந்தது. ‘கொட்டியா’ என்றால் சிங்களத்தில் புலி. அங்கிருந்தவர்கள் அனைவரும் சிங்களவர்கள்தான்.
நீதிபதி அமர்ந்தார். எனது மகன், நண்பன் பெயர்கள் அழைக்கப்பட்டன. கை விலங்குகள் அகற்றப்பட்ட நிலையில் மகன் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டார். எனது சிரேஷ்ட சட்டத்தரணி எட்மன்ட் சமரக்கொடி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மகனும், நண்பனும் கைதானதற்கான காரணத்தை பொலிஸார் இவ்விதமாகக் கூறினர்.
"சந்தேகத்தின்மீதுதான் கைது செய்யப்பட்டனர். விசாரணை செய்ததில் எந்தக் குற்றமும் காணப்பட வில்லை. அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டது.
அன்றைய விசாரணைக்கு வந்திருந்த மாஜிஸ்திரேட் ஒரு பதில் மாஜிஸ்திரேட்
"அப்படி எல்லாம் கூறமுடியாது. கைது செய்திருக்கி நீர்கள். சிறையில் அடைத்திருக்கிறீர்கள். கைதானதற்கான காரணத்தை சொல்லியாக வேண்டும்” என்று பொலிஸாரை விழித்தார் பதில் மாஜிஸ்திரேட் எனது சிரேஷ்ட சட்டத்தரணி எழுந்து, "புலிகள் என்று அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இப்படித்தான் பொலிஸாரினால்
114

GBased. Desross6hT
சந்தேகத்தின்மீது கைது செய்யப் படுகின்றார்கள். சந்தேகத்தின்மீது கைது செய்து முழு விசாரணையில்லாமல் சிறையில் அடைப்பது கண்டிக்கப்பட வேண்டும். விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டிக்க வேண்டும். இது பெரிய கொடுமை." என்று வாதாடினார்.
மகனும், நண்பனும் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, இருவாரங்களின் பின்னர் முழு விடுதலை பெற்றனர். இதன் பின்னரே ஊர் திரும்பினோம். -
சந்தேகம், காரணம் இல்லாமலேயே கைது, பொலிஸ் நிலையத்தில் அடி, உதை, நிர்வாண சித்திரவதை!
பொலிஸாரின் கோரிக்கை ஏற்று பொய் சொல்லா விட்டால், பின்னர் சிறை, விடுதலை. இப்படியாகத்தானே ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் கொடுமைப்படுத்தப்பட்டு அன்று தீவிரவாதிகளாக மாற்றப்பட்டிருந்தனர். கசங்கி, வாடிய மலர்கள்தான் எத்தனை உயிரிழந்த தியாகச் செம்மல்கள் தான் எத்தனை!
எனது கன்னி கடல் பயணம்
1952ம் ஆண்டு நான் முதன் முதலில் தமிழக மண்ணில் கால்பதித்த காலம் அது. எனது மூத்த சகோதரியின் கணவர் திரு. தி. சிறிசுப்பிரமணியம், தமிழ்நாடு மண்டபம் முகாமில், முகாம் ஆய்வாளராக (கேம்ப் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்பொழுதெல்லாம் இந்த முகாம் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. முகாமின் நாலா பகுதிகளிலும் கட்டிடங்கள்தான். சுற்றும் சூழ ஒங்கி வளர்ந்த வேம்பு மரங்கள் எப்பொழுதும் பசுமையாக
115

Page 70
MaMajor),Adan
காட்சிதரும். கடல் உணவுக்கும் குறைவு இருக்காது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் செல்வோர் அவசியம் இந்த முகாமில் நான்கு நாட்கள் தங்கியிருந்து, மருத்துவ பரிசோதனைக் குள்ளாகி ‘காலரா’ தடுப்பு ஊசிபோட்டுக் கொண்ட பின்னர்தான் பிரயாணத்தைத் தொடரமுடியும். இது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
அன்றைய நிலையில் இரு நாடுகளுக்கு மிடையே பிரயாணம் செய்வதற்கு பாஸ்போர்ட்டோ அல்லது விசாவோ தேவை இல்லை. இருநாடுகளிலிருந்தும், வெறும் பிரயாண டிக்கட்டுடன் பயணத்தைத் தொடரலாம். ரயில்-கப்பல்-ரயில் மார்க்கமாக இந்த பிரயாணம் இருக்கும். இலங்கையிலிருந்து புறப்படுவதாக இருந்தால், ரயில் மார்க்கமாக தலைமன்னார் வந்து, கப்பலில் ஏறி தமிழ்நாட்டில் தனுஷ்கோடி துறைமுகம் வந்திறங்கி, இந்திய ரயில் பிரயாணத்தைத் தொடர வேண்டியதுதான்.
அன்று தனுஷ்கோடி. இன்று இராமேஸ்வரம், தூத்துக்குடி, தனுஷ்கோடி துறைமுகம் இன்று இல்லை. 1964ல் ஏற்பட்ட பயங்கர புயலினால் பல கட்டிடங்களும் இடிந்து ஏராளமான மக்களும் அழிந்து போனார்கள். இன்று இப்பகுதியில் சாட்சியாகக் காட்சி அளிப்பது வெறும் சுவர்களும், சில தூண்களும்தான்.
எனது கன்னி கடல் பிரயாணம். எனது மூத்த சகோதரர் டாக்டர் ஜி. கோணேஸ்வரமூர்த்தி - சந்திரா காதல் திருமணம் மைசூர் பிருந்தாவனம் கார்டனில்தான் நடந்தது. கல்யாண கோஷ்டியுடன் நானும் போயிருந்தேன். மூன்று மணிநேர கடல் பிரயாணத்தின் பின்னர் கப்பல் தனுஷ்கோடி துறைமுகத்தில் தரை தட்டியது. சிலமணி
116

கே.வி. மகாதேவா
நேரம் கப்பலிலேயே இருந்தோம். தனுஷ்கோடியைத் தரிசித்தோம்.
கடலின் கரைப்பகுதியில் சிலர் கப்பலின் அருகில் மீன்களைப் போல நீச்சலடித்துக்கொண்டு, இரண்டு கைகளையும் மேலே ஏந்தி உதவி கேட்பது. பரிதாபமாக இருக்கும். உணவுப் பொட்டலங்களை வீசினால், தண்ணிரில் விழாமலேயே லபக் என்று பிடித்துக் கொள்வார்கள். அனா நாணயங்களை வீசினால், கடல் நீரில் இஸட் வடிவில் அவை ஆடி அசைந்து கீழே தரையை நோக்கிச் செல்வதை அந்தத் தெளிந்த நீரில், ரசனையுடன் பார்க்கலாம். அதே நேரம், காந்தம் போல் சுழி ஒடி அவர்கள் அந்த நாணயங்களை பிடித்துக் கொள்வதையும் உற்சாகமாக ரசிக்கலாம்.
பதினொரு ரூபா ‘மினி சேலை
1975-76ல் தமிழ்நாடு வரும்போது, கொழும்பு - சென்னை விமான மார்க்கமாகவும், கொழும்பு திரும்பும் போது இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் வழியாகவும் பிரயாணம் அமையும். ஊர் திரும்பும்போது மதுரை செல்வேன். பூரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு ஆட்சியிலிருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் சில உணவுப் பொருள்களுக்கும், தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது. கையிலிருக்கும் மிகுதியான இந்தியப் பணத்துக்கு ஏதாவது வீட்டுக்கு வாங்கிச் செல்வேன்.
மதுரையில், கிழக்கு சித்திரை வீதியிலுள்ள, ‘ஹாஜி மூஸா ஸன்ஸ் ஜவுளிக்கடலுக்குச் சென்று நோட்டமிட விரும்பினேன். மனைவிக்கு ஒரு சேலை வாங்கினால்
117

Page 71
Soanaloryaan
பெரும் திருப்தியாகவிருக்கும் என்று நினைத்தாலும், கீையிலிருக்கும் பணமும் இடம் கொடுக்க வேண்டுமே.
குறிப்பிட்ட கடையின் முன்பாக, பெண் பொம்மை களுக்கு உடுத்தி அலங்கரிக்கப்பட்ட பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சேலைகள் கண்சிமிட்டி, என்னை விழுங்கிக் கொண்டிருந்தன. ஷேர்ட் பாக்கெட்டிலிருக்கும் சில ரூபாய் நோட்டுகள், நாணத்தினால் நெஞ்சில் உதைத்தன. ஆனாலும் அசட்டுத் தைரியம். கடைக்குள் நுழைந்தேன். 'சிலோன்காரர்கள்’ என்றால் அப்பொழுது எல்லாம் ஒரு தனி வரவேற்புதான். கடை விற்பனையாளர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.
சேலை விலைகளை விசாரித்தேன். பெரிய விலையி லிருந்து சின்ன - மினி விலை வரைக்குமுள்ள சேலை விபரங்களை அவர் பொறுமையுடன் விளக்கினார். நான் கடைசி விலை சேலைக்குத் தயாரானேன்.
“ஸார் இதைப் பாருங்க. இப்படியான தயாரிப்புகள் எங்கள் கடைக்கு மட்டும்தான் விசேடமாகத் தயாரிக்கப் பட்டு வரும். விலையும் கம்மிதான் என்றாலும் பாவிக் கலாம்.” மூச்சுவிட்டார் அவர்.
நான் புதுமை செய்தேன். அந்த சேலையின் பெயர் கிச்சன்மினி ஸாரி. விலை என்ன தெரியுமா? வெறும் பதினொரு ரூபாய் மட்டும்தான். இப்பொழுது நம்ப முடியாததுதான். ஆனாலும் அன்றும் அந்த விலையை மனைவி நம்பியிருக்க மாட்டாள். நானும் அந்த விலையைக் கூறவே இல்லை.
118

கே.கி. மகாதேவா
அமைதிப் பெயரில் நடந்த அராஜகம்!
1987 காலப்பகுதி. இந்திய அமைதிப்படை யாழ்ப் பாணத்தில் முதன் முதலில் கால்பதித்த நேரம். எந்த நோக்கத்திற்காக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, அந்தப் படையி னருக்கும் தெரியவில்லை. "ஈழத்தமிழரின் துயர்துடைக்க, அமைதி நிலைநாட்ட வந்திருக்கின்றோம்” என்று அவர்களின் செய்திகள்தான் தெரிவித்தனவே தவிர, பதிலாக புலிகளை அடக்கும் அவர்கள் நோக்கத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் அல்லலுற்றனர். தொடர்ச்சியான ஊரடங்கு சட்டத்தினால் வீடுகளில் ஒதுங்கியிருந்த தமிழ்மக்கள் பசிக் கொடுமையினால் அங்குமிங்குமாக ஒற்றைக் கதவில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கடைகளுக்குச் செல்ல வீதியைக் கடக்கும் போதெல்லாம் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களைக்கூட அப்புறப்படுத்த முடியாமல், வெறும் பனைமரத்து ஒலைகளினால் எரிக்கப்படும் அவலம். விசாரணைப் போர்வையில், பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்ட கொடுமை. மொழி புரியாமல், உயிருக்கு அஞ்சி, பதுங்குகுழிகளில் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள், குடும்பம் குடும்பமாக சுட்டுக் கொல்லப்பட்ட அட்டூழியம்! இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு, அங்கு மிங்குமாக மக்கள் நடமாடத் தொடங்கியதும், ஈழநாடு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. தினமும், இந்திய அமைதிப்படையினரின் அத்துமீறல் பற்றிய செய்திகள் வரும். விசாரணை என்று, ஒரு தொகை இந்திய அமைதிப்படையினர் கும்பலாகப் போகும்போது தமிழ் தெரிந்த - பேசும் ஒரிரு
119

Page 72
ിഞ്ഞപഞ്ചാക
தென்னிந்தியர்களே அதில் இருப்பார்கள். மற்றவர்கள் தமிழே தெரியாதவர்கள். ஈழநாடு அலுவலகத்துக்கும் வருவார்கள். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் இருப்பார்கள். பொதுமக்களின் புகார் பற்றிக் கூறும் போதெல்லாம் வெறும் மழுப்பல்தான் வரும்.
"நாங்கள் ஏன் வந்தோம் என்பது கூடத் தெரியாது! உடனடி உத்தரவு. புறப்பட்டு விட்டோம். ஏன் போகின்றோம். என்ன செய்ய வேண்டும் என்பது கூடத் தெரிவிக்கப்படவில்லை!" இப்படியாக இந்திய அமைதிப் படையின் சில தமிழர்கள் கூறியது வியப்பளித்தது! இவர்களும் “சிறுபான்மையாக இருந்ததால் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை என்றும் பரிதாபமாகச் சொன்னார்கள்.
யாழ்ப்பாணத்தில், இந்திய அமைதிப்படையின் ‘ரவுன் கொமான்டன்றி” ஆக இருந்தவர் காலோன், ஒருநாள், யாழ்ப்பாணத்திலுள்ள இணுவில் мызыны» கோண்டாவில் பகுதிகளில் நடைபெற்ற இராணுவ பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி பொதுமக்களி டமிருந்து கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் அந்த இராணுவ அதிகாரியைச் சந்திக்க ‘ஈழநாடு’ நிர்வாக இயக்குநர் திரு. ராஜலிங்கமும் நானும் யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியிலுள்ள அவர்களது முகாமுக்கு சென்றோம்.
இந்திய அமைதிப்படையின் அத்துமீறல் • அராஜகம், மானபங்க கொடுமை பற்றி பொதுமக்கள் தெரிவித்த புகார்களை அதிகாரி காலோனிடம் பட்டிய லிட்டுக் கூறினோம். எமது கவலை, பொதுமக்களின் குறிப்பாக பெண்களின் அச்சம் பற்றி விலாவாரியாக அந்த
120

கே.கி. மகாதேவா
அதிகாரியிடம் திரு. ராஜலிங்கம் விளக்கினார். உடனடி யாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளு மாறு நாங்கள் வலியுறுத்தினோம்.
ஆனால், அந்த அதிகாரியின் முகத்தில் எந்த அறிகுறியும் தென்படவில்லை, நாங்களே புகார்களை அடுக்கிக் கொண்டிருந்தோமே தவிர சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவர் கூறியது இதுதான்.
"ஆர்மி என்றால். அது இலங்கை ஆர்மி, இந்திய ஆர்மி, பாகிஸ்தான். ஏன் அமெரிக்க, பிரிட்டிஷ் ஆர்மி என்று வேறுபடுத்த முடியாது. அவர்கள் எல்லோரும் ஒரே ஆர்மிதான். கட்டவிழ்த்து விட்டால் எல்லா ஆர்மியும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். இதைத் தவிர்க்க முடியாது" என்று ஆங்கிலத்தில் கூறி கையை விரித்தார். நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டோம். இராணுவ நடிவடிக்கை என்றால் எப்படி இருக்கும், அவர்கள் எப்படி இருப்பார்கள், தட்டிக்கேட்கவே முடியாது என்பதை உணர முடிந்தது. இராணுவத்தை, இராணுவ ரீதியில்தான் சந்திக்க முடியும் என்பதும் தெரிந்தது. இந்தக் கொடுமையின் விளைவுகள் எப்படி இருந்தது என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
இப்படியும் நடந்தது!
எனது அன்றாடப் பகுதி "இப்படியும் நடக்கிறது. வாசகர்களின் பல வட்டங்களையும் கவர்ந்திருந்தது. அரசு உயர் அதிகாரிகளும் அவ்வப்போது கண்டிப்பார்கள்; பாராட்டுவார்கள்.
A
ஒரு ஆசிரிய பயிற்சிக் கல்லூரி (ஆசிரிய)
மாணவர்கள், அவர்களுக்கு நடத்தப்பட்ட பரீட்சையில்
121

Page 73
Manador),Adan
yjy
காப்பி அடித்தார்கள். ஆசிரியர்களே இப்படி என்றால். என்று ஒரு தடவை இப்பகுதியில் கண்டித்து எழுதினேன். பத்திரிகை வெளியான அன்றைய தினம் tugsai) பன்னிரண்டு மணியளவில் திடுதிப் என்று ஒரு கோஷ்டியினர் ஈழநாடு அலுவலகத்திற்குள் நுழைந்து ஆசிரியர் பகுதியில் எனக்கு முன்பாக நின்றனர். நான்தான் செய்தி ஆசிரியர்.
"இந்தத் தகவல் பச்சைப்பொய். இத்தகவல் யார் கொடுத்தார்கள். எழுதியது யார் என்று சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விடுவோம்" என்று கூச்சலிட்டனர். அச்சுறுத்தல் சத்தம் கேட்டு எனது அருகிலிருந்த சிரேஷ்ட உதவி ஆசிரியர் திரு.எஸ். பெருமாள் என்னை பரிதாபமாகப் பார்த்தார். அலுவலக ஊழியர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலையைத் தூக்கி பார்த்தனர்.
“சரியான தகவல்தான்” என்று நான் கூறினாலும், அவர்கள் விடுவதாக இல்லை. அந்தக் கோஷ்டியில் தெல்லிப்பழை பகுதியின் புளொட் இயக்க முக்கிய பிரமுகரும் இருந்தார்.
நேரம் ஒடிக் கொண்டிருந்ததே தவிர வாக்குவாதம் குறைவதாக இல்லை. ஒரு மணி நேர அவகாசம் கேட்டேன். அவர்கள் ஒன்றரை மணிக்கு வருவதாக எச்சரித்துவிட்டு போய்விட்டார்கள்.
அந்தத் தகவல் தந்த நண்பருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கினேன். உடன் வருவதாகக் கூறி, சரியாக ஒன்றரை மணிக்கு அலுவலகத்தில் ஆஜரானார். அந்தக் கோஷ்டியும், இன்னும் சற்று கோபமான முகத்துடன் ஆசிரியர் பகுதிக்குள் நுழைந்தது.
122

Gas.e4l. LD5TC356T
நண்பரைக் கண்டதும் அந்தக் குழுவினர் ஒரளவு மரியாதை கொடுத்தனர். நிலமை விளக்கப்பட்டது. அடுத்த நாள் மறுப்பு வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அந்தக் கோஷ்டியினர் கலைந்து சென்றனர். அடுத்த நாள்
இப்படியும் நடக்கிறது’ பகுதியில்;
"நேற்று இப்பகுதியில் வெளிவந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட தகவலில் அம்மாண வர்கள் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் இல்லை.” என்று எழுதியிருந்தேன். அந்தக் கோஷ்டியினரும் திருப்திப்பட்டிருக்க வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், நான் ஆரம்பத்தில், பயிற்சிக் கல்லூரியின் பெயர் குறிப்பிடாமல் தான் எழுதியிருந்தேன். பின்னர் அந்தக் கோஷ்டியின் விருப்பத்தின்பேரில் கல்லூரிப் பெயரும் போடவேண்டி ஆயிற்று. அதுவே உண்மையும் கூட! எனது அந்தத் தகவல் நண்பர் யாழ் வண்ணார்பண்ணை செட்டியார் அச்சகம் திரு. சங்கர்தான். ஈழநாடு அபிமான வாசகர்.
1988 பெப்ரவரி மாதம் 29ம் திகதி திங்கட்கிழமை பகல் சுமார் ஒரு மணி இருக்கும். வழக்கம்போல் ஈழநாடு இயங்கிக் கொண்டிருந்தது. நண்பகல் மதியபோசன நேரம் என்பதால், அலுவலகத்தின் தளப்பகுதியில் வேலை பார்க்கும் அச்சுக்கோப்பாளர்கள் பலர் வெளியே சென்றி ருந்தனர். இதுபோல், மேல்தளத்தில் கடமை பார்க்கும் பல்வேறுதுறை ஊழியர்கள் சிலரும் வெளியே போயிருந்தனர். ‘ஈழநாடு’ மீது குண்டுவைப்பு!
திடீரென ஒரு இளைஞன் மாடிப்படி வழியாக மேல் தளத்துக்கு வந்து நிர்வாகப்பகுதிக்குள் நுழைந்து "ஐந்து
123

Page 74
Soanalonyaan
நிமிடங்களில் எல்லோரும் வெளியேறி விடுங்கள். குண்டு வைத்திருக்கின்றோம்” என்று கத்தினான். நிர்வாகப் பகுதி, ஆசிரியர் பகுதி, ஒப்புநோக்காளர் பகுதி, இயக்குநர் பகுதி என்று பல்வேறு பகுதிகளிலும் அங்குமிங்குமாக அமர்ந் திருந்த பலரும் அந்த இளைஞனை நோக்கினார்கள். அவன் கையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இந்த எச்சரிக்கையை யாருமே பொருட் படுத்தாமலிருக்கவில்லை. ஆசிரியர் பகுதியில் நான், அலுவலக நிருபர் மாணிக்கம் ஓரிரு உதவி ஆசிரியர்கள் ஆகியோர் இருந்தோம். ஐந்து நிமிடங்களுக்குள் ஒடிக் குதித்து வெளியேறி, ஈழநாடு அலுவலகத்துக்குப் பின்புறமாக உள்ள கொட்டடி வீதியையும் கடந்து ஒரு வீட்டு வளவுக்குள் சிலருடன் தஞ்சமடைந்தோம். மற்றவர்களும் அவசரம் அவசரமாக வெளியேறிவிட்டனர்.
பயங்கர சத்தத்துடன் அலுவலக கட்டிடங்கள், இயந்திரங்கள், தளபாடங்கள் சின்னாபின்னமாயின.
அரைமணி நேரம் கழித்து நான், நிர்வாகப் பகுதி ஊழியர் ராஜலிங்கம் மற்றும் " சில கம்போஸிட்டர்கள் அலுவலகத்தின் முன்பக்கமாக வந்து பார்த்தோம். தீயின் ஜுவாலை அணையவில்லை. குண்டுவைத்து தகர்க்கப் பட்ட கட்டிட இடிபாடுகள் நடுவே ஒரே புகைமண்டலம். நாங்கள் போய்ச் சேர்வதற்கு முன்னரே இந்திய அமைதிப் படையினர் திடுதிப் என்று குவிந்து விட்டனர். ஈழநாடு ஊழியர்கள் எவருமே அங்கு நீடிக்க விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் கலைந்து விட்டோம்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில தினசரி ‘டெயிலி நியூஸ்’ தனது மார்ச் 2ம் திகதி இதழில் முதல்
124

கே.வி. மகாதேவா
பக்கத் தலைப்புச் செய்தியாக "ஈழநாடு பத்திரிகை நிறுவனம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது” என்று வெளியிட்டிருந்தது.
‘டெயிலி நியூஸ்’ தனது செய்தியில், "ஈழநாடு அச்சகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு பற்றி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இக்குண்டு வெடிப்பதைத் தடுக்க இந்திய அமைதிப்படை எந்தவித முயற்சியும் மேற்கொள்ள வில்லை" என்று தெரிவித்தார்.
"இப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று இந்திய அமைதிப்படையினருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்த போதிலும் பொதுமக்கள் செத்துமடிவதைத் தவிர்க்க ஒதுங்கியிருந்தனர்" என்று அந்த அதிகாரி கூறியதாகவும் செய்தி தெரிவித்தது.
கொழும்பிலிருந்து வெளியாகும் ‘வீரகேசரி’ நாளிதழ் தனது மார்ச் மாதம் 5ம் திகதி முதல் பக்கச் செய்தியில் ‘ஈழநாடு’ குண்டு வைக்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகள் தெரிவித்த சில குற்றச்சாட்டுக்களை வெளியிட்டிருந்தது.
'குற்றச்சாட்டுக்கள்’ என்று கூறி வெளியிடப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களில் ஒன்று; "இந்திய உளவு நிறுவனமான றோவுக்கு ஈழநாடு துணைபோனது."
சுமார் ஒரு வருடம் உருண்டோடியது. கடும் பிரசவ வேதனைபட்டு சுகப்பிரசுரமானது ஈழநாடு. 1981ல் ஐக்கிய தேசியக் கட்சியின் கமாண்டோ படையினரின் தீவைப்பினால் அக்னிப் பிரவேசம் கண்ட ஈழநாடு 1988ல் குண்டு வெடிப்பிலிருந்து மீண்டு 1989ல் உயிர் பெற்றது.
பெரும் பொது முகாமையாளர்களைக் கண்ட ஈழநாடு நிறுவனத்துக்கு சுன்னாகம் பட்டின சபையின் முன்னாள் தலைவரும், யாழ் உதயன் பத்திரிகையின் முன்னாள் மனேஜருமான திரு.சி.க. திருச்சிற்றம்பலம் புதிய
-10 f 125

Page 75
Manador),Adan
முகாமையாளரானார். ஈழநாடு புதிய நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி ஜெகதீசன் இந்த நியமனத்தைச் செய்திருந்தார்.
திரு. ஜெகதீசன் வளர்ந்து வரும் யாழ். சட்டத்தரணி. ஈழநாடு நிறுவன சகோதரர்களில் ஒருவரான கே. சி. சண்முகரத்தினத்தின் மூத்த பெண் ஜெயந்தியை திருமணம் செய்தவர். ஈழநாடு மீண்டும் வெளிவரவேண்டும் என்பதில் பெருமுயற்சி எடுத்தவர். பல சிரமங்களைக் கண்டவர். இதன் எதிரொலியாக தனது சொந்த பொருளாதாரச் சீர்குலைவுக்கும் உள்ளானவர்.
ஈழநாடு 1961ல் தினசரியான ஐந்து ஆண்டுகளில் கே.சி. சகோதரர்களில் இளையவர் டாக்டர் சண்முக ரத்தினம் 1966ல் காலமானார். முழுப் பொறுப்பும் மூத்தவர் தங்கராசாமீது விழுந்தது. பொது முகாமையாளர் திரு. து. சீனிவாசகத்தின் நிர்வாகத் திறமையினால் சரிவு எதுவும் ஏற்படாமல் தலைநிமிர்ந்து நின்றது. 1987ல் பெரியவர் g5/5135utstafft அமரரானதும் நிர்வாகப் பொறுப்பை திரு. ராஜலிங்கம் ஏற்றுக் கொண்டார். இவரது நேரடியான கண்காணிப்பில் பொதுமுகாமையாளர் திரு. து. சீனிவாசகம் அவர்களின் தன்னலமற்ற, தூய்மையான நீண்டகால பணியினாலும் நிர்வாகம் தொய்வின்றி நடந்தது. 1988ல் திரு. ராஜலிங்கம் ஒய்வு பெற்றதும் ஈழநாடு நிர்வாகம் சரியான பாதையில் செல்லமுடியவில்லை. ஈழநாடுக்கு புதிய இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதில் சிரமங்கள் தலைதூக்கின. ஈழநாடுக்கு கொழும்பில் சரியான தலைமையகம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் சட்டத்தரணி ஜெகதீசன் ஈழநாடுக்கு தோள் கொடுக்க முன்வந்தார்.
இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தி
126

கே.வி. மகாதேவா
லிருந்தும் நாட்டின் மற்றைய பகுதிகளிலிருந்தும் வெளியேறத் தொடங்கிய காலப்பகுதியில் ஈழநாடு மீண்டும் வெளிவரத் தொடங்கியது.
எனக்கு உதவியாக அலவலக நிருபர் கா. யோகநாதன், ரி. சிவகணேசன் ஆகியோர் நீடித்தனர். நிர்வாகப் பகுதியில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள். என்னுடன் கடமையாற்றிய பலரும் தலைமறைவாகத் தொடங்கினர். அச்சுக்கோப்பாளர்களில் சிலர் மட்டும் நம்பிக்கையுடன் கடமையாற்றினர்.
இந்திய அமைதிப்படை முற்றாக வெளியேறியதும், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படையின் அத்து மீறல்கள் மீண்டும் தலைதூக்கின. யாழ்ப்பாண நகரிலும், பிற இடங்களிலும் விமானக்குண்டு வீச்சு தாராளமாக நடந்தது. ஏற்கனவே சிதைந்துபோன தமிழ்ப்பகுதிகள் மீண்டும் மீண்டும் சின்னாபின்னமாயின.
ஈழநாடு நிர்வாக ஊழியர்கள் பலரும் படிப்படியாக கடமைக்கு வருவதைக் குறைத்துக் கொண்டனர். ஆசிரியர் பகுதியில் சிலர் மற்றைய யாழ் தினசரியில் சேர்ந்து கொண்டனர்.
எழுதுவது. குண்டுவீச்சு விமானங்கள் நகருக்குள் நுழைந்ததும், பதுங்கு குழிகளில் மறைவது. மீண்டும் எழுதுவது. ஒடி மறைவது என்று பத்திரிகை வாழ்க்கை தடுமாறியது.
1989 டிசம்பர் மாதம் அன்றைய ஈழநாடு நிர்வாகி சட்டத்தரணி ஜெகதீசன் தனது குடும்பத்துடன் யாழ்ப் பாணத்தை விட்டு கொழும்பு செல்ல வாகனத்தில் ஏறினார். அடுத்த வாகனத்தில் எனது குடும்பமும் புறப்பட்டது. அவர் குடும்பம் கனடாவில் தஞ்சம் புகுந்தது.
127

Page 76
$('
நான் தமிழகத்தில் அடி எடுத்து வைத்தேன். ஈழநாடு யாழ்ப்பாணத்தில் தனது வாரிசுகளை மட்டும் இழக்க வில்லை; நிர்வாகத்தையும் இழக்கத் தொடங்கியது.
நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய போதிலும் ஈழநாடு தடைப்படவில்லை. ஆசிரியர் பகுதியில் ரி. சிவகணேசன் மற்றும் கா. யோகநாதன் பொறுப்பேற்று நடத்தினர். அச்சகப் பகுதியில் நீண்டகால போர்மன் எம். பாலசிங்கம் மற்றும் அச்சுக்கோப்பாளர் சிவநேசன், ஜோசப், தேவராஜா போன்றவர்கள் தோள்கொடுத்து ஈழநாடு தொடர்ச்சியாக வெளிவர துணைநின்றனர். திரு.சி.க. திருச்சிற்றம்பலம் ஈழநாடு முகாமையாளர் பொறுப்பில் செயல்பட்டார். ஈழநாடு வெளிவருவதில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பல சிக்கல்கள் தலைதுாக்கின.
‘ஈழநாடு’ தனது ஊழியர்கள் சிலருடன், இயந்திர தளபாடங்கள் சகிதமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வடக்கின் சில பகுதிகளில் நடமாடி - வெளியாகி சில வருடங்களில் தனது சேவையை முடக்கிக் கொண்டது!
128

பாகம் மூன்று
சந்திப்புகள்

Page 77
‘ஈழநாடு ஊழியர்கள்
நூலாசிரியருடன் (நொலைபேசியுடன்) இடதுபக்கமாக சசிபாரதி சபாத்தினம், ஈ.கே. ராஜகோபால், எஸ். குகநாதன் மற்றும் எதிர்ப்பங்காக ரவி, மானிக்கம், கா. யோகநாதன், பா. ஆனந்த கிருஷ்ணன் மற்றும் ஈழநாடு நிர்வாகம், அச்சகப்பகுதி ஆாழியர்கள்.
130
 

- స్త్రీస్
E
助
* ** 门
لا تتنا
క్ల్లో جی بیوہ ہأ'=
N. : a as
கலைஞர் சுருனாநிதியுடன் நூலாசிரியர் (1976-ல்
1976-ல் தமிழ்நாடு சென்றிருந்த நான், கலைஞர் மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்து ‘ஈழநாடுக்கு பேட்டி
எடுத்தது, மறக்க முடியாது.
இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தி பல மாதங்கள் கழிந்திருக்கும். நான் எழும்பூரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்குள்ள பாரிடமாவது அரசியல் பேசினால் போதும்!
"மூச்." என்று என்னை மடக்கி, "இப்படி பேசினீர்
. களானால் "மிஸா'வில் உள்ளே தள்ளிவிடுவார்கள். எனறு
۔ எச்சரிப்பார்கள்! அவ்வளவு கடுமையாக இருந்தது நெருக்கடி நிலை!
131

Page 78
Solanasons Alan
தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் கலைஞரின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்தேன். முன்னேற்பாடு எதுவுமின்றி, எனது நண்பர் 'தினத்தந்தி’ பிரதம போட்டோகிராபர் கமால்தீனின் மைத்துனரான கமராமேனையும் அழைத்துக்கொண்டு கோபாலபுரம் வீடு சென்றேன்.
காலை பதினொரு மணியிருக்கும். வீட்டின் முன்பாக சிலரே காணப்பட்டது எனக்கு ஆறுதலாக இருந்தது.
உதவியாளர் ஒருவர் என்னை விசாரித்து, அமரும்படி கூறினார். அடுத்த அரைமணி நேரத்தில் கலைஞரின் மேல்மாடி அலுவலக அறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தி.மு.கழக ஆட்சிக் கலைப்பினால் 'அதிர்ந்து’ போயிருப்பார் என்ற நினைப்புடன், கலைஞரின் அறைக்குள் நுழைந்தேன்.
அவர் கம்பீரமாக தோற்றமளித்தார். இருகரம் கூப்பி என்னை வரவேற்று, அவர் எதிரே அமரவைத்து, அழகு தமிழில் பேச ஆரம்பித்தார்.
தமிழை வளர்த்தவர்கள் - வளர்ப்பவர்களில் பலரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களில் கலைஞர் ஒரு தனிரகம். அவரின் மேடைப்பேச்சு, சொல்லோவியங்கள், கட்டுரைகள், குட்டிக்கதைகள், உயிர்த்துடிப்புள்ள எழுத்துக்கள் என்று எல்லாமே பிடித்திருந்தது. தனிமையில் அவரை சந்திப்பது, ‘வாய்விட்டு’ கேள்விகள் கேட்பது எனக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதினேன். எனது நிதானமான கேள்விகளுக்கெல்லாம் விளக்கமாகப் பதிலளித்தார்.
அந்த அறையில் கலைஞரின் மேசை அருகே,
132

Case. LD50356T
பெரியாரும், அண்ணாவும் சிலை வடிவில் வரவேற்றனர்.
சுமார் அரைமணி நேரம்வரை பேட்டி நடந்தது. ஆட்சிக் கலைப்பினால் அவர் மனம் தளர்ந்தவராகக் காணப்படவில்லை. மிகவும் உறுதியாக, மனம்விட்டு பேசினார்.
"ஈழத்தமிழரின் விடிவுக்கு, தமிழக மக்கள் என்றும் பலமாக இருப்பார்கள். விடிவு ஒருநாள் வரும். தமிழையும் யாரும் அழிக்க முடியாது. தமிழனையும் ஒழிக்க முடியாது." என்றார்.
இப்பேட்டியை ‘ஈழநாடு'வில் விபரமாக எழுதியிருந்தேன். ஈழத்தின் வடிவமைப் பொன்றை கலைஞரிடம் அன்பளித்தேன்.
கலைஞரைப் பேட்டி கண்ட நான் அடுத்தநாள், கவியரசர் கண்ணதாசனை பேட்டிகாணச் சென்றிருந்தேன்.
கவிஞர் கண்ணதாசன்
133

Page 79
ിഞ്ഞപഞഷക
சென்னை தியாகராஜ நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன். அவரது மகன் என்னை வரவேற்றார். வீட்டின் முன்ஹாலில் அமரும்படி பணித்தார். சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து, கவிஞர் வீடு வந்தகையுடன் சந்திப்பும் இடம்பெற்றது.
அவரது அறையில், கட்டிலில் சாய்ந்திருந்தவாறே அளவளாவினார். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளைக் கேட்டறிந்து, மனம் நொந்து கண்டித்தார். ஈழத்து மக்களின் நலனில் தாம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக கோடிட்டுக் காட்டிய கவிஞர், ஈழத்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தாம் கனவு கண்டு கொண்டிருப்பதாக வைராக்கியமாகக் கூறினார். அது ஒரு சுகமான சந்திப்பு, ஒரு மணிநேரப் பேட்டி அது.
அவரிடமிருந்து விடைபெற்று புறப்பட்டபோது, மீண்டும் என்னை அழைத்தார். தனது மகனிடம் கூறி, ‘அர்த்தமுள்ள இந்துமதம் மூன்று பதிப்புகளை வரவழைத்து, கையொப்பமிட்டு எனக்கு வழங்கினார். அதனை ஒரு பொக்கிஷமாகவே கருதுகின்றேன்.
உலகின் பல பகுதிகளிலும் பரவலாக வசிக்கும் தமிழர்கள் வாழும் இடங்களின் பட்டிதொட்டியெல்லாம் தத்துவப் பாடல்களைக் கூறும் கவியரசர் கண்ணதாசனின் எளிமையும், ஈழத்தமிழர்களின்மீது அவர் கொண்டிருந்த பற்றும், அவரின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் எண்ணி பெருமை கொண்ட எனக்கு, கவியரசரின் அந்தக் கனவுகள்மீது ஒரு பெரிய நம்பிக்கை இருந்தது! ஆனால் கணக்குப் போட்ட காலனின் சீக்கிர முடிவினால் அந்தக் கனவுகள், கலைந்தாலும், அவரின் பாடல்களைக் கேட்கும் போது எல்லாம் அந்தப்பெரும் கவிஞரின் சந்திப்பு; மலரும் நினைவுகளாக வந்து போகிறது.
134

(36.4). LDSTC356am
1976ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசனை அவரது வீட்டில் சந்தித்து பேட்டி கண்டதன் பின்னர், இருபத்து ஏழு ஆண்டுகள் கழித்து அவரது வீட்டுக்கு அண்மையில் சென்றிருந்தேன்.
சென்னை தியாகராஜநகர் கண்ணதாசன் சாலையில் அமைந்த அதே வீடு. முன்னர் நான் சென்றபோது இருந்ததைவிட சில மாற்றங்கள் வீடு அமைப்பில் செய்யப் பட்டிருந்தன. ‘கண்ணதாசன் பதிப்பகம்’ முன்னர் வீட்டோடு, கீழ்த்தளத்தில் இருந்தது. இப்போது மாடியில் இருக்கிறது. முன்னர் சுற்றுப்புற வீட்டு மதில் சுவர் இருக்கவில்லை. இப்பொழுது எல்லாமே நெரிசலாகக்
காணப்பட்டது.
வீட்டின் மாடியிலிருந்த கண்ணதாசன் பதிப்பகத்துக்குள் நுழைந்தேன். நான் வைத்த ஒவ்வொரு அடியும் கவிஞருடனான பழைய சந்திப்பை நினைவூட்டியது.
கவிஞரின் மகன் திரு. காந்தி கண்ணதாசன் அன்புடன் வரவேற்றார். ஜனாதிபதி அப்துல் கலாமின் ‘அக்னி சிறகுகள்’ ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதை யொட்டி நடந்த விழாவில் விழா மேடையில் ஜனாதிபதி அருகிலிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், காந்தி கண்ணதாசனின் இருக்கையின் வலது புறமும், பின்புறமு மாக பளிச்சிட்டது.
நான் என்னை அறிமுகம் செய்து கொண்டதும் "ஒ. நினைவிருக்கிறது பதிப்பகம் அப்பொழுது கீழ்த்தளத்தில் தான் இருந்தது." என்று சொன்னார்.
நான் சில விஷயங்களை கேட்டேன். சந்தோஷமாகப் பதிலளித்தார். w
135

Page 80
Manabooabaan
அன்று கவிஞரை நான் பேட்டி கண்டு வீட்டிலிருந்து புறப்பட்டதும், கவிஞர் என்னை அழைத்து "சிறிது நேரம் அமர்ந்திருங்கள்" என்று கூறினார். அந்த சம்பவத்தை திரு. காந்தி கண்ணதாசன் மீண்டும் நினைவு கூர்ந்தார்.
"நீங்கள் புறப்பட்டதும், அப்பா என்னை அழைத்து ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ மூன்று எடுத்துவா. என்று கூறியதும், நான் அந்த நூல்களை அப்பாவிடம் கொடுத்ததும், அவற்றில் அவர் கையொப்பமிட்டு உங்களுக்கு கொடுத்ததும் நன்றாக ஞாபகமிருக்கிறது." என்று திரு. காந்தி கண்ணதாசன் சொன்னதும், எனக்கும் பெரும் சந்தோஷமாக இருந்தது. அந்த மாபெரும் கவிஞனைச் சந்தித்து நான் பெற்ற பாக்கியம் குறித்து மீண்டுமொரு தடவை பெருமைப்பட்டுக் கொண்டேன்.
கவிஞர் கண்ணதாசன்பற்றி தெரியாதவர்கள், தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கமாட்டார்கள். தமிழன் இருக்குமட்டும் கவிஞர் பாடல்கள், கவிதைகள் வாழும் வரம் பெற்றவை. அவர் பற்றிய சில வாழ்க்கை குறிப்புகள் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கண்ணதாசன் படைப்புகள் பற்றி பல ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளன, எழுதப்படுகின்றன. நாளைய சமுதாயத்தினருக்கு நான் கொடுக்கும் இச்சிறு புள்ளி விபரம் பயனுள்ளதாக அமையும்.
கவிஞர் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி வருடம் 246.1927 சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதியினருக்கு பிறந்த எண்மரில் ஒருவரான கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
எட்டாவது வகுப்புவரை மட்டுமே கல்வி கற்ற கவிஞரின் முதல் கவிதை 1944ல் வெளிவந்த "காலை
136

கே.வி. மகாதேவா
குளித்தெழுந்து." அது போல் அவரது முதல் சினிமாப் பாடல் 1949ல் வெளிவந்த "கன்னியின் காதலி"யில் 'கலங்காதிரு மனமே" ஆகும்.
இதே ஆண்டில் தி.மு.கழகத்தில் அரசியல் பிரவேசம் கண்டு, அடுத்த ஆண்டு பொன்னழகி, பார்வதி ஆகியோரை கரம் பிடித்து திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார். ஒன்பது ஆண் மக்களும், ஐந்து பெண் மக்களும் கவிஞருக்கு உண்டு.
1952 - 536) டால்மியாபுரம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது இல்லற ஜோதி” எனும் படத்துக்கு கதை, வசனம் எழுதினார்.
அரசியல் சும்மா விடுமா? 1957ல் பொதுத் தேர்தலில் திருகோஷ்டியூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டி யிட்டு தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து ‘மாலையிட்ட மங்கை’ ‘சிவகங்கைச்சீமை’ ‘கவலை இல்லாத மனிதன்’ ‘வானம்பாடி’ ‘இரத்த திலகம்’ ‘கருப்புப் பணம்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார்.
1960ல் தி.மு.க.விலிருந்து விலகி தமிழ்த் தேசியக் கட்சி ஆரம்பித்து 1962ல் காங்கிரசில் இணைந்தார்.
1970ல் மத்திய, மாநில அரசுகளின் சிறந்த பாடலா சிரியர் விருதுகள் பெற்ற கவிஞர், 1978ல் அரசவைக் கவிஞராகி, 1979ல் தனது 'சேரமான் காதலி’க்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். இதே ஆண்டில்தான் "சிறந்த கவிஞரு’க்குரிய அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசும் கிடைத்தது.
காவியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள், சுய சரிதம் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ள கவிஞர், ஐயாயிரம் திரைப்படப் பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார்.
137

Page 81
Somasons Aŵn
சுகத்தை மட்டுமல்ல, துயரங்களைக்கூட சுகமான சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளும் இறையனுபவத்தை கவிஞர் பெற்றிருந்தார்.
வெற்றியில் கவிஞர் எப்படி மயக்கம் கொள்ள வில்லையோ, அதே போல் தோல்வியில் துக்கமும் அவரைப் பற்றவில்லை.
உடல்நிலை காரணமாக 1981 ஜூலையில் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர், அதே ஆண்டு அக்டோபர் மாதம் பதினேழாம் திகதி அமரநிலை எய்தினார். அதே மாதம் இருபத்து இரண்டாம் திகதி கவிஞரின் பொன்னுடல் சென்னையில் அரச மரியாதையுடன் செந்தீயில் கலந்தது.
"நான் நிரந்தரமானவன். அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" - இது கவிஞர் கண்ணதாசனின் வாக்கு.
இந்தியப் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு மரணமானபோது வாய்விட்டு அழுத கவிஞர், "சாவே உனக்கு சாவு வராதா." என்று ஏக்கமுடன் பாடினார். எவ்வளவு பெரிய உண்மை! கவிஞர் கண்ணதாசன் சாகாவரம் பெற்றுவிட்டார்.
ம.பொ.சி.யின் நீண்டகால நட்பு
*சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி. அவர்களை கடைசியாக இலங்கை, கண்டி நகரில் ரா.மு. நாகலிங்கம் இல்லத்தில் சந்தித்து அளவளாவியதற்குப் பின்னர் - முப்பத்தொரு ஆண்டுகள் கழித்து - மீண்டும் சந்தித்து
138

கே.வி. மகாதேவா
-錄
ம.பொ.சி. அருகில் நூலாசிரியர். எதிரில் ரா.மு.நா. (1968-ல்
உரையாடும் வாய்ப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது.
ரா.மு. நாகலிங்கம் அவர்களுடன் சென்னை சென்றிருந்தபோது, ம.பொ.சி அவர்களையும் சந்திக்கும் திட்டம் இருந்தது.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ம.பொ.சி. இல்லத்துக்கு சென்றிருந்தோம். எங்கள் வரவு அவருக்குத் தெரிவிக்கப்பட்டு, வீட்டின் ஹால் பக்கமாக நுழைந்து, அவர் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று தன்னை தனது வெண்கலக் குரலில் நினைவூட்டியதும் ". யாரு கண்டி நாகலிங்கமா..?” என்று குரல் அடையாளம் கண்டு கலகலப்பாக வரவேற்றார். அவர் பக்கமாக இருவரும் அமர்ந்தோம். குடும்ப சேமம் பற்றி பேச்சு தொடங்கியது.
139

Page 82
Manajoonan
சில நிமிடங்களில் என்னை ஞாபக மூட்டினார் ரா.மு. நாகலிங்கம்.
"ஒ. செய்தி மகாதேவாவா நன்றாக ஞாபகமிருக்கு." என்று கூறி என்னை நோக்கி தனது வலதுகரத்தை நீட்டினார் ம.பொ.சி. நான் எனது இரண்டு கைகளினாலும் பற்றிக் கொண்டு பதிலளித்தேன். நாட்டு நடப்பு பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் அதிகம் தொடர்ச்சியாக பேச முடியவில்லை. சில நிமிடங்கள் வரை எனது கரங்களைப் பற்றிக்கொண்டு பேசிய அவருக்கு கண்பார்வை குறைந்த விஷயம் உடனடியாக எங்களுக்குத் தெரியவில்லை.
சுமார் அரைமணி நேரம் வரை இச்சந்திப்பு நீடித்திருக்கும். இலங்கை, குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்னை, கண்டி விஜயம், ரா.மு. நாகலிங்கம் வீட்டில் தங்கியது, ருசியான சாப்பாடு சமாசாரம். செய்தி தடைப்பட்ட சங்கதி . என்று பலதும் பத்தும் கேட்டறிந்த ம.பொ.சி. பழைய நினைவுகளை ஞாபகமூட்டினார். ம.பொ.சியின் “செங்கோல்’ பத்திரிகையிலிருந்தும், தனியாகவும் ‘செய்தி'யில் வெளியான கட்டுரைகள், 1966ல் கண்டியில் திரு. ரா.மு.நா. தலைமையில் ம.பொ.சிக்கு நடைபெற்ற வரவேற்புக் கூட்டம் பற்றி எல்லாம் பேசினோம். நாங்கள் விடைபெறும்போது அவர் எழுந்த நேரத்தில்தான் சற்று நிலை தடுமாறினார்.
விதி யாரை விட்டது? இந்த சந்திப்புத்தான், அவருடன் இறுதியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
140

கே.வி. மகாதேவா
தமிழ்வாணன் - சாண்டில்யன் காரமான இலக்கிய தர்க்கம்!
1976 to ஆண்டு ஏப்ரல் Loniglio என்று நினைக்கின்றேன். "வாருங்கள் ஒரு முக்கிய விழாவுக்குப் போவோம்” என்று என்னை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு போனார் 'தினத்தந்தி’ நண்பர் கமால்தீன். நாங்கள் நுழைந்த இடம் சென்னை வூட்லண்ட்ஸ் ஹோட்டல்.
வூட்லண்ட்ஸ் ஹோட்டலின் அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிறைந்த கூட்டம். எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பெருமளவில் காணப்பட்டனர். மற்றவர்கள் எல்லாம் முக்கிய பிரமுகர்கள். தினத்தந்தி நிறுவனத்தின் மாத வெளியீடான "ராணிமுத்து’ நூறாவது மலர் வெளியீட்டு விழா அது.
மண்டபத்தில் நுழைந்த என்னை, "பிரஸ்' என்று, மேடை அருகே தனியாக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்று அமருமாறு கமால்தீன் பணித்தார். அப்பகுதியில் நான் மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்தனர். எனக்கு சற்று கூச்சமாக இருந்தாலும், நிலைமையைச் சமாளித்து உட்கார்ந்து விட்டேன். நண்பர் கமால்தீன் கூட்டத்தினருடன் சேர்ந்து விட்டார்.
மேடையில், பல முன்னணி படைப்பாளிகள். ஒய்வு பெற்ற நீதிபதி மோகன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். அவரின் இரு பக்கங்களிலும் பேச்சாளர்கள். கவிஞர் கண்ணதாசன், சாண்டில்யன், ‘கற்கண்டு’ தமிழ்வாணன், சிவசங்கரி என்று சில தமிழக முக்கிய படைப்பாளர்கள் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
-11 நி 141

Page 83
Somasons Alan
கூட்டத்தினர்மீது நோட்டம் விட்டேன். முன்வரிசை யில், தமிழர் தந்தை ஆதித்தனார், தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தன், தீபம் நா. பார்த்தசாரதி என்று பலரும் இடம் பெற்றிருந்தனர். மேடையில் பேச்சாளர் மத்தியில் காரசாரமான விவாதம். ஒரு கட்டத்தில் தமிழ்வாணன்;
. இங்கு வந்திருக்கும் இவரைப் பாருங்கள். நான்கு முடிகள் மட்டும் அங்குமிங்கும் காணப்படும் வழுக்கல் மண்டை வயசும் ஏறிவிட்டது. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள். இப்படியான நிலையிலும் அவர் என்ன எழுதுகின்றார். ஒரு பெண்ணின் தொடையை நாலு பக்கங்களில் வர்ணிக்கின்றார்.” என்று சாண்டில்யனை கடுமையாகச் சாடினார். அடுத்து, சாண்டில்யன் பதிலளிக்கும் சந்தர்ப்பம் வந்தது.
"இவர் என்ன பெரிய துப்பறிவாளர் என்று நினைப்பா. சங்கர்லால் என்ற பெயரில் ஏதோ ஏதோ எழுதுகின்றார். நாட்டில் எத்தனை கொலைகளை சங்கர்லால் கண்டுபிடித்து விட்டார்? என்னத்தை கிழித்தார்.? அவருக்கு வேறு கருப்பு கண்ணாடி.." என்று தமிழ்வாணனை சீண்டினார் சாண்டில்யன்.
இருவரின் வாதமும், பிரதிவாதமும் பிரமாதமாக இருந்தது. அடுத்து, கவிஞர் கண்ணதாசன் எழுந்தார்.
“நண்பர்கள் தமிழ்வாணனும் சாண்டில்யனும் தங்களது கருத்துக்களை அனல் பறக்க வீசினார்கள். இருவரது கருத்திலும் தவறில்லை, செக்ஸ் வேறு, வாழ்க்கை வேறு என்று பிரிக்க முடியாது. அவரவரது திறமைகளை சுவாரஸ்யமாக எழுதுகின்றார்கள். மக்கள் வரவேற்கிறார்கள்." என்று கவியரசர் கண்ணதாசன் கருத்து வழங்கினார்.
142

(36.e4. Desnucksan
படைப்பாளிகளின் கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டேன். விழாவும் இனிதாக முடிந்தது.
நண்பர் கமால்தீன் என்னருகே வேகமாக வந்தார். அவசரம் அவசரமாக அழைத்துச் சென்று, தமிழர் தந்தை ஆதித்தனார், சிவந்தி ஆதித்தன் மற்றும் சில முக்கிய பிரமுகர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அன்றைய விழாவில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டும்தான் ஈழத்தைச் சேர்ந்தவன் என்று கமால்தீன் கூறினார்.
சந்திப்புகள் சில நிமிடங்கள் என்றாலும், அது ஒரு பொன்னான நேரமாகப் பட்டது. தீபம் பார்த்தசாரதி உட்பட சில பத்திரிகை ஆசிரியர்களையும், அங்கு வந்திருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரையும் கண்டியில் ‘செய்தி’யிலிருந்தபோது நான் சந்தித்திருக் கின்றேன். திரு. ஆதித்தனார் அவர்களை சந்தித்தது இதுவே முதல் தடவை. அவரது புதல்வரும், 'தினத்தந்தி’ அதிபருமான டாக்டர் சிவந்தி ஆதித்தனை சந்திப்பதும்: இதுவே முதல் தடவை.
டாக்டர் சிவந்தி ஆதித்தனுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, "நாளைக் காலை இவரை அலுவலகத்துக்கு அழைத்து வாருங்கள்." என்று திடீரென நண்பர் கமால்தீனிடம் கூறினார். நண்பர் திக்கு முக்காடிப் போனார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. நண்பரின் ஸ்கூட்டரில் ஏறி எழும்பூர் கெனற் ஒழுங்கையிலிருக்கும் எனது ஹோட்டல் அறைக்குச் சென்றோம்.
"உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்." என்று ஆரம்பித்தார் கமால்தீன்.
"ஏன் என்ன விசேஷம்." என்றேன் நான்.
143

Page 84
Solanasoproadin
"பெரியவரின் அப்பொயின்ற்மென்ட் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே. பெரிய விஷயம்" என்று கூறிய அவர்; “பெரியவர் மிகவும் பிஸியானவர். அவரைச் சந்திப்பது என்றால் இலேசில் நடக்காது. தினத்தந்தி ஊழியர்களே அவரை சுலபமாக நேரில் சந்திக்க முடியாது. இப்படியான ஒரு நல்ல சந்தர்ப்பம், அதுவும் அவராக உங்களை ஆபிஸுக்கு அழைத்திருக்கிறாரே. சந்தோஷமாக இருக்கிறது." என்று மகிழ்ச்சியை தெரிவித்தார் கமால்தீன்.
அப்பொழுதுதான் வூட்லண்ட்ஸ் ஹோட்டல் விழாமுடிவில் டாக்டர் சிவந்தி ஆதித்தன் எனக்கு அழைப்பு விடுத்தபோது நண்பர் திக்குமுக்காடிப் போனதன் அர்த்தம் புரிந்தது.
சிவந்தி ஆதித்தன் எனக்கு அளித்த அன்பான கோரிக்கை
"நாளைக் 5T669 பத்து மணிக்கு ரெடியாக இருங்கள். பெரியவர் அப்பொயின்ற்மெண்ட் கொடுத்தார் என்றால் அதில் மாற்றம் இருக்காது. அதே மாதிரி, இதனைத் தவறவிட்டால் பின்னர் நேரம் கிடைப்பதும் நடக்காத விஷயம். சந்திப்புக்கான நேரம் டாக்டர் சிவந்தி ஆதித்தன் ஒழுங்குகளை பெரியவரின் அந்தரங்க உதவியாளர் செய்து முடித்திருப்பார். நான் தொடர்பு கொள்வேன். நாளை சந்திப்போம்." என்று கூறி வீடு திரும்பினார் கமால்தீன். அடுத்த நாள் காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் நான் தயாராக இருந்தேன்.
144
 

கே.வி. மகாதேவா
சொன்னபடி காலை பத்துமணிக்கு கமால்தீன் எனது அறைக்குள் நுழைந்தார்.
தினத்தந்தி பிரதம GBunt LGBLAT 6TrTLurr திரு. கமால்தீன் என்னை தனது ஸ்கூட்டரில் சென்னை எழும்பூரிலுள்ள தினத்தந்தி அலுவலகத்துக்கு அழைத்துப் போனார். ஏற்கனவே சந்திப்பு நேரம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால், நேராக டாக்டர் சிவந்தி ஆதித்தன் அறைவரை சென்று விட்டோம். எனது வருகை அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு வெளியே நின்றார் கமால்தீன். அறைக்குள் டாக்டர் சிவந்தி ஆதித்தன் மட்டும் இருந்தார். என்னை வரவேற்று அமருங்கள் என்றார். இலங்கையின் நாட்டு நடப்பை விசாரித்தார். பத்து நிமிடங்களின் பின்னர் அவர் -
“உங்க நாட்டுக்குத்தான் இப்பொழுது எங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வருவது கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறதே. நேற்று நடந்த ராணிமுத்து விழா பற்றி உங்களால் எழுத முடியுமா..?” என்று கேட்டார்.
"தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இறக்கு மதியாகும் சில உணவுப் பொருள்களுக்கும்கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தடை, கட்டுப்பாடு விதித்திருக்கிறது." என்று விளக்கி, ராணிமுத்து நூறாவது மலர் வெளியீட்டு விழாச் செய்தியை எழுது வேன்."என்றேன் நான்.
எனது சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்திருக்கும். சந்தோஷமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.
"அடுத்த தடவை தமிழ்நாடு வந்தால் சந்தியுங்கள்."
145

Page 85
onasonsaan
என்று கூறி வழி அனுப்பி வைத்தார் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன்.
வெளியில் எனக்காக காத்துக் கொண்டிருந்த நண்பர் கமால்தீனுடன் தினத்தந்தியிலிருந்து வெளியேற முன்னர் தினத்தந்தி செய்தி ஆசிரியர் திரு.சண்முகநாதன், ராணி வார சஞ்சிகை ஆசிரியர் திரு. அ. மா. சாமி உட்படச் சில முக்கிய பத்திரிகையாளர்கள், படப்பிடிப்பாளர்களையும் அறிமுகம் செய்து அளவளாவ வைத்தார்.
நான் இலங்கை திரும்பி ‘ஈழநாடு’ சென்றதும், முதல்வேலையாக ராணிமுத்து நூறாவது மலர் வெளியீட்டு விழாச் செய்தியை பலகோண கட்டுரைகளாக எழுதினேன். தினபதி’ வார வெளியீடான “சிந்தாமணி'யில் முதல் பக்க கட்டுரையாக புகைப்படங்களுடனும், சுதந்திரன், தினகரன், ஈழநாடு பத்திரிகைகளிலும் கட்டுரைகள் வெளிவந்தன. இவற்றை டாக்டர் சிவந்தி ஆதித்தனுக்கு அனுப்பி வைத்தேன். சில மாதங்கள் கழித்து மீண்டும் தமிழ்நாடு சென்றபோது தினத்தந்தி அலுவலகத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனை மீண்டும் சந்தித்தேன்.
"நீங்கள் அனுப்பிய பத்திரிகைகள் எல்லாம் கிடைத்தன. கட்டுரைகளைப் படித்தேன். ரொம்ப நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி” என்று முகம் மலரக் கூறினார். எனது பத்திரிகைத் தொழிலுக்குக் கிடைத்த மற்றுமொரு நற்சான்றிதழாகக் கருதினேன்.
புறப்படும்போது “செய்தி ஆசிரியரைச் சந்தித்துச் செல்லுங்கள்." என்று விடை கூறினார். எனக்கு நன்றியாக ஏதாவது உதவி செய்யுமாறு டாக்டர் சிவந்தி ஆதித்தன் சொல்லியிருக்க வேண்டும்.
146

கே.வி. மகாதேவா
நண்பர் கமால்தீனுடன் தினத்தந்தி அலுவலகம் சென்றிருந்த நான், செய்தி ஆசிரியர் திரு. சண்முகநாதன் (நாதன்) அவர்களை அவரது அலுவலக அறையில் சந்தித்தேன்.
"நீங்கள் எழுதிய கட்டுரைகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். உங்களுக்கு என்ன உதவி தேவை." என்று திரு. நாதன் அவர்கள் வினா எழுப்பியதும், "இலங்கையில் சிறப்பு நிருபராக நியமியுங்கள்” என்றேன் நான். அதற்கான ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு சரிவர என்னால் இயங்க முடியவில்லை.
‘ஆவி உலகுடன் நடந்த ‘சந்திப்பு?
‘ஈழநாடு’ வாரமலர் ஆசிரியராகப் பணியாற்றிய திரு. இராஜ அரியரத்தினம் அவர்கள், 1966ல் கொழும்பு தினபதி பத்திரிகையின் வார மலர் சிந்தாமணிக்கு ஆசிரியராக கடமையாற்றச் சென்ற காலத்தில் ‘ஈழநாடு’ ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. எஸ். பெருமாள், வாரமலர் பதில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இக்கால கட்டத்தில் ஒரு புதிய ‘கேள்வி பதில் பகுதி இடம் பெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த திரு. ரவிச்சந்திரன் அவர்கள் ‘ஈழநாடு’ உடன் தொடர்பு கொண்டு சில விருப்பங்களைத் தெரிவித்தார். அவருக்கு ‘வாரமலர்’ பச்சைவிளக்கு காட்டியது.
திரு. ரவிச்சந்திரன், ஆவிஉலகுடன் தொடர்பு கொண்டு ‘ஈழநாடு’ வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பினார்.
திரு. ரவிச்சந்திரனை இங்கு நான் அதிகம் அறிமுகப்
147

Page 86
5eramayory Adam
படுத்தத் தேவை இல்லை. ஆவி உலகப் புகழ் அமுதாவுடன் திரு. ரவிச்சந்திரன் தமிழகத்தின் பல டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். தனியாகவும் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார்.
‘ஈழநாடு’ வாசகர்கள் தபாலட்டை மூலம் அனுப்பும் கேள்விகளை, அப்படியே திரு. ரவிச்சந்திரனுக்கு தபாலில் அனுப்பி வைத்து, அவர் எழுதும் பதில்களை ‘ஈழநாடு’ வாரமலரில் பிரசுரிப்போம். இக்கேள்வி பதில் பகுதி வாசகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்றிருந்ததால் பல மாதங்கள் தொடர்ந்து வெளிவந்தது.
ஆண்டுதோறும் தமிழகம் சென்று பல பேட்டிக் கட்டுரைகளை எழுதி வந்த நான், திரு. ரவிச்சந்திரனையும் சந்திக்க விரும்பினேன். 1970 பிற்பகுதியில் இச்சந்திப்பு நடந்தது.
விக்கிரவாண்டி எனும் ஊரில் ரவிச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்தேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவர், மிகவும் அன்புடனும், ஆர்வத்துடனும் என்னை வரவேற்றார். எனது, விருப்பத்தின்பேரில் அன்றைய தினமே ஆவி உலகுடன் தொடர்பு கொள்ளும் ஏற்பாட்டைச் செய்தார்.
மாலை ஐந்து மணி இருக்கும். ஒரு நண்பரின் உத வியுடன் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்ற ரவிச்சந்திரன், அந்த வீட்டு உரிமையாள பெண்ணுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். வீட்டுக்குள் நுழைந்தோம். அது ஒரு சுவாமி அறை. சுவர் முழுக்க சுவாமிப்படங்கள். அறையும் தூய்மையாக இருந்தது.
ரவிச்சந்திரன், அவர் நண்பர், நான் மூவரும் கீழே அமர்ந்தோம். "இன்று எனது நண்பர்தான் மீடியா.
148

C3a5.Ed. LEDs (56 in
அவர்தான் ஆவி உலகுடன் தொடர்பு கொள்வார். நீங்கள் விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்" என்றார் ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரனின் நண்பருக்கு வலதுபுறத்தில் நானிருந்தேன். எனது வலப்பக்கமாக ரவிச்சந்திரன் இருந்தார். எங்கள் முன்பாக ஒரு (எழுதும்) மரப்பலகை, அதன்மீது ஒரு நோட்டுப் புத்தகம். ரவிச்சந்திரனும் அவர் நண்பரும் சிலநிமிடம் கண்களை மூடிக்கொண்டு கரம் கூப்பி மெளனமானார்கள். பின்னர் ரவிச்சந்திரனின் நண்பர் தனது ஷேர்ட் பாக்கெட்டிலிருந்து ஊற்றுப் பேனாவை எடுத்து, நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து, தாளின்மீது பேனாவை (எழுதும் நிலையில்) வைத்து, சில செகண்டுகள் மீண்டும் கண்களை மூடினார். பேனா, கிறுகிறு என்று எழுத ஆரம்பித்தது. அவரின் கை, பேனா செல்லும் திசைக்கு நகர்வதை அவதானித்தேன். பேனா என்ன எழுதியது என்பதை நோட்டமிட்டேன். ரவிச்சந்திர னின் நண்பர் சொன்னார்;
"ஆவி உலகுடன் தொடர்பு கொண்டுள்ளேன். இந்தப் பேனா கிறுக்கல் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. ஆவி என்ன சொல்கிறது என்பதை எனது கை அசைவில் பேனா எழுதும். அதனை உங்களுக்கு வாசிக்கின்றேன். எனது கையையும் பேனாவையும் இப்பொழுது அசைய வைப்பதே அந்த ஆவிதான். என்று சொல்லி "வணக்கம் நண்பர்களே. உங்கள் கேள்விகளை ஆரம்பியுங்கள்." என்று ஆவி பதிலளித்ததாக அந்தக் "கிறுக்கலை’ படித்து அர்த்தத்தைக் கூறினார்.
‘ஆவி உலகச் சந்திப்பு பற்றி நான் ‘ஈழநாடு’ வாசகர்களுக்கு எழுதவேண்டும் என்பதால் பல கேள்வி
149

Page 87
Manadora)Adan
களையும் விபரமாக கேட்கத் தொடங்கினேன். எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஆவி’ பதிலளித்தது. இக்கேள்விகளில் சில, எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. வேறு சில ‘ஈழநாடு’ பற்றியது. இதற்கான பதிலோ அல்லது விளக்கமோ திரு. ரவிச்சந்திரனுக்கோ அல்லது அவர் நண்பருக்கோ தெரிய வாய்ப்பில்லை. எல்லாமே, கண் முன்பாக நம்பும்படியாக இருந்தது. எங்களது கேள்விபதில் நிகழ்ச்சி அரைமணி நேரத்துக்கும் மேலாக இடம் பெற்றது. திடீரென, நண்பரின் பேனா கை எதனையோ கிறுக்கியது. பின்னர் அவர் அந்தக் கிறுக்கலின் அர்த்தத்தை
sin póla OTnTrir.
"நேரம் அதிகரித்துவிட்டது. நான் கோவிலுக்குப் போக வேண்டும். மீண்டும் சந்திப்போம்.” என்று அந்த ஆவிகூறி விடை பெற்றதாக நண்பர் விவரித்தார்.
‘ஆவி உலகம்’ பற்றி பல வித கருத்துக்கள் நிலவி னாலும், நேரடியாக சம்பந்தப்படும்போது நம்பும்படியாகத் தான் இருக்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
★ ★ ★
எனது மூத்த சகோதரர்கள் பாலசுப்பிரமணியமும், விவேகானந்தனும் ஒரு தடவை ஆவி உலக தொடர்பு முயற்சியில் இறங்கினர். மட்டக்களப்பிலுள்ள, மெத்தை வீடு தெருவிலுள்ள எங்களது வீட்டில் இச்சம்பவம் நடந்தது.
பகல் நேரம். ஒரு வட்ட வடிவமான மேசைமீது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என்று இருபத்து 01یے
150

கே.வி. மகாதேவா
எழுத்துக்களும், இடைவெளி விட்டு வட்டமாக எழுதப் பட்டு, நடுவே ஒரு சிறிய எவர்சில்வர் டம்ளர் தலைகீழாக வைக்கப்பட்டது. எனது மூத்த சகோதரர் பாலாதான் மீடியா. அவர் அந்த டம்ளர்மீது ஆட்காட்டி மற்றும் நடுவிரலை வைத்து ஆங்கிலத்தில் ஏதோ சில வார்த்தைகள் கூறி 'ஆவியை அழைத்துக் கொண்டிருந்தார். சில செகண்டுகளில் அந்த டம்ளர் மெதுவாக நகரத் தொடங்கியது. ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்குச் செல்வதும், பின்னர் மேசையின் நடுப்பகுதிக்கு (டம்ளர் வைக்கப்பட்ட இடத்துக்கு) திரும்புவதும், மீண்டும் ஒரு எழுத்துக்குச் செல்வதுமாக இருந்தது. ஒரு வார்த்தை பூரணமானதும் டம்ளர் நடுமேசைக்கு திரும்பி விடும். இப்படியாக அண்ணன் கேட்ட முதல் கேள்விக்கு அது அளித்த பதில், வை. ஈ. எஸ். அதாவது ‘யேஸ்’. நானும் சின்ன அண்ணன் விவேயும் பார்வையாளர்களாக இருந்தோம்.
கேள்விகள் தொடர்ந்தன. அந்த டம்ளரும் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து, வார்த்தைகளைக் கோர்த்து பதிலைக் கூறிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில், விருப்பமில்லாத - காரமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. டம்ளரில் வைக்கப்பட்டிருந்த இரண்டு விரல்களையும் சடாரென எடுத்தார் மீடியா அண்ணன். "என்ன நடந்தது" என்று கேட்டதும் "ஆவிக்கு கோபம் வந்தது போலும். டம்ளர் நெருப்பாகச் சுட்டு விட்டது." என்றார். இதனை நம்பாத சின்ன அண்ணன், தலைகீழாக அந்த டம்ளரை மேசைமீது நிறுத்தி அந்த இரண்டு விரல்களையும் அதன்மீது வைத்து, ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் கூறி கோபமாக “ஏன் என் அண்ணனை சுட்டாய். என்னையும் சுடு பார்ப்போம்” என்றார். அடுத்த
151

Page 88
Manabooabaan
கணமே ஆ. ஊ. என்று விரல்களைத் தூக்கிவிட்டார்! "நெருப்பால் சுட்டதுபோல் இருக்கிறது” என்று பயந்தார். இது ஒரு அனுபவம், நினைவுக்கு வந்தது.
女 女 女
நண்பர் ரவிச்சந்திரன் போகலாமா என்ற தோரணையில் என்னைப் பார்த்தார். நேரமும் ஒடிக் கொண்டிருந்தது. மற்றைய நண்பர் விடை பெற்றுச் சென்றுவிட்டார். அந்த வீட்டு முன்வராந்தாவில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
"ஆவி உலக சந்திப்பு திருப்தியாக இருந்ததா” என்று ரவிச்சந்திரன் என்னிடம் கேட்டார். "எழுதுவதற்கு நிறைய சமாசாரம் இருக்கிறது” என்று பதிலளித்தேன். இதற்குள் எனக்கு ஒரு சின்ன ஆசை.
"அது சரி. நீங்கள் நீண்ட காலமாக ஆவிகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறீர்களே. எப்பொழுதும் ஒரே ஆவி தான் பதில் அளிக்குமா?” என்று கேட்டேன்.
"நாளையும், நேரத்தையும் அது பொறுத்திருக்கிறது. அநேகமாக ஒரே ஆவிதான் எங்களுடன், அதாவது எங்கள் கேள்விக்கு கோபப்படாமல் பதிலளிக்கும்” என்றார் ரவிச்சந்திரன்.
"ஒரு சின்ன உதவி ஆவிகளுடன் நெருக்கமாகப் பழகுகின்றீர்களே, எப்போதாவது ஆவி'யைப் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா? எடுத்திருந்தால் ஒரு புகைப்படம் எனக்கு தருவீர்களா?” என்று நான் கேட்டேன். ரவிச்சந்திரன் முகத்தில் இலேசான புன்னகை.
"நீங்கள் திடுதிப் என்று கேட்கலாம் என்று நினைத்து
w
ஒரு புகைப்படம் கையுடன் கொணர்ந்திருக்கிறேன்." என்று
152

C3as.a.l. LD50856
பதிலளித்த ரவிச்சந்திரன் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்.
"ஆவிகளுடன் நீண்டகாலமாகத் தொடர்பு கொண்டிருந்த எனக்கும் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டதுதான். ஒரு தடவை ஆவியுடன் தொடர்பு கொண்டிருந்தபோது வாய்விட்டே கேட்டு விட்டேன். 'ஆவி’யும் அதற்கு இணங்கியது. ஆனால் நிபந்தனையுடன்" என்று கூறிய அவர் மீண்டும் தொடர்ந்தார்.
"ஒரு அறை. வெளிச்சமே இருக்கக்கூடாது. அந்த நான்கு சுவருக்குள் - இருட்டறையில் நீங்கள், உங்களின் காமரா' மட்டுமே இருக்க வேண்டும். நான் கூறும் திசையில் நின்று கொண்டு, எதிர்ப்பக்கத்திலுள்ள மூன்று கோணங்களையும் ஒவ்வொரு தடவை ப்ளாஷ"டன் புகைப்படம் எடுக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் மூன்று புகைப்படங்களில் ஏதாவது ஒன்றில் நான் வந்திருப்பேன். கண்டிப்பாக இப்புகைப்படம் பிரசுரமாகக் கூடாது. பார்வைக்கு மட்டும்தான்." என்று ஆவி கூறியதாக கூறி முடித்தார் நண்பர் ரவிச்சந்திரன்.
நிபந்தனையை நானும் ஏற்றுக் கொண்டேன். சத்தியவாக்கு கொடுத்து அவர் கொடுத்த கவரை’ வாங்கிக் கொண்டேன். பத்திரமாக ஒரு புத்தகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த அந்தக் கவருக்குள் போஸ்ட்கார்ட் சைஸில் ஒரு புகைப்படம் இருந்தது. ரவிச்சந்திரன் முன்பாகவே கவரைத்திறந்து, புகைப்படத்தை பார்த்தேன். தலை, கால்கள், கைகள் இல்லாமல் வெண்ணிற மேகமாக ஒரு உருவம் தெரிந்தது. ஒரு மனிதன் தன்னை வெண் மேகத்தில் போர்த்திக் கொண்ட மாதிரி தலை, கால்கள், கைகள் தெரியவில்லை. ஆனால் கைகளை மேலே தூக்கிக்
153

Page 89
Manador),Adan
கொண்டிருப்பது போல் அந்த உருவ அமைப்பு இருந்தது.
நான் நாடு திரும்பி, ‘ஈழநாடு’வில் இக்கட்டுரையை எழுதிய நேரத்தில் சக ஊழியர்களிடம் இப்புகைப் படத்தைக் காட்டினேன். ஆனால் பிரசுரிக்கவில்லை. எல்லாம் நம்பிக்கைதானே!
þ6öðrLifr ரவிச்சந்திரனிடமிருந்து விடைபெற்று அன்றிரவு நான் சென்னைக்குத் திரும்பும்போது அவர் கொடுத்த "ஆவி புகைப்படம் மட்டுமல்ல, அவரின் நண்பர் ஆவியுடன் தொடர்பு கொண்டு எனது கேள்வி களுக்கு அளித்த பதில்கள் - அந்த கிறுக்கல்கள் கொண்ட (நோட்டுப் புத்தக) பக்கத்தாள்களும் இருந்தன. பல தடவைகள் நான், எனது சக நண்பர்கள் அவற்றைப் பார்த்தாலும் ஒரு தடவையாவது கிறுக்கல்கள் புரியவில்லை.
女 女 女
*ராம் ஏற்பாடு செய்த சிதார் இசைக் கச்சேரி
1980ம் ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அற்புதமான இசைக்கச்சேரி நடைபெற்றது. யாழ் சிக்மா பம்ப்ஸ் நிறுவனத்தின் சார்பில் எனது நட்புக்குரிய யாழ் இசைக்கலைஞர் திரு. ராம் குமாரசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். தெய்வீக மணம் கமழும் இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது தாயாரின் நினைவுக்குச் சமர்ப்பணமாக இதனை அர்ப்பணித்திருந்தார். அவரின் அழைப்பின்மீது நான் சென்றிருந்தேன்.
154

கே.கி. மகாதேவா
πώ in
சிதார் இசை மேதை பண்டிட் ரவிசங்கரின் கச்சேரிதான் அது. அல்லா ரக்கா தபேலா வாசித்தார். மண்டபம் நிறைந்த ரசிகப்பெருமக்கள், எல்லாவற்றையும் மறந்து சிலமணி நேரம் இசை வெள்ளத்தில் மூழ்கிய நாள் அது. இசைமேதை ரவிசங்கரின் இசைக்கு, அல்லா ரக்காவின் விரல்கள் தபேலாவில் நர்த்தனம் புரிந்த அந்த இனிய காட்சியைக் கண்டுகளிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். அன்று இவ்விழாவுக்கு வந்தவர்களின் பாதங்கள் நிச்சயம் நிலத்தில் இருந்திருக்காது.
இச்சந்தர்ப்பத்தில் எனது நீண்டகால நண்பர் திரு. ராம் குமாரசாமி அவர்களின் யாழ் இசைப்பங்களிப்பு பற்றி நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
யாழ் கலைஞர்களின் திறமை ஓரளவு இருட்டடிப்பு செய்யப்பட்ட கால கட்டம் அது.
1965-70 காலப்பகுதி. அப்பொழுது பிரதமராக இருந்த திரு. டட்லி சேனநாயக்க ஒரு தடவை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தபோது யாழ்ப்
155

Page 90
அந்த நாள் ஞாபகம் சென்னையில் இரைநோத திருப்பாம்பும் சுவாமிநாதபிள்ளை அவர்களிடம் இாசபயின்ற அந்த நாட்களில், திரு. சு. சத்தியலிங்கம், திரு. சீகாழி கோவிந்தராஜனுடன் திரு. ராம் குமாரசாமி முதலில் இருப்பவர்) எடுத்துக் கொண்ட படம் (1984)
பாணத்தின் சிரேஷ்ட பிரஜைகள் சந்திப்புக்கு அன்றைய யாழ் அரசாங்க அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்தின் மூத்த கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
"இவர் யாழ்ப்பாணத்தின் முன்னணிக் கலைஞர் களில் ஒருவர். சிறந்த பாடகர்." என்று பிரதமர் டட்லிக்கு திரு. ராம் குமாரசாமியை யாழ். அரசாங்க அதிபர் அறிமுகப்படுத்தினார். இச்சந்தர்ப்பத்தை "ராம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.
"இலங்கையின் கலைக்குழு பல நாடுகளுக்கும் சென்று வருகிறது. ஆனால் உங்களின் சர்வதேச கலாசார தூதுக் குழுவில் தமிழ்க் கலைஞர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறார்கள். ஊக்கமுள்ள ஓரிரு தமிழ்க் கலைஞர்களுக்காவது இடமளிக்கக் கூடாதா." என்று பிரதமர் டட்லியிடம் திரு. ராம் குமாரசாமி தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
155
 

Gril. LDIGTGGT
பிரதமர் டட்லி என்ன நினைத்தாரோ தெரிய வில்லை. தன்னுடனிருந்த செயலாளர் திரு. பிரட்மன் வீரக்கோனை அருகே அழைத்தார். "திரு. ராம் குமாரசாமியின் குற்றச்சாட்டை கல்வி அமைச்சரிடம் (திரு.ஐ.எம்.ஆர்.ஏ. இரியகொல்லவிடம்) தெரிவித்து உடன் ஆவன செய்யவும்" என்று பணித்தார்.
ஆனால் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. திரு. பிரட்மன் வீரக்கோன் மூலம் பிரதமர் டட்லி சேனநாயக்கா தெரிவித்திருந்த அந்த "யோசனைகள்' அமைச்சர் இரியகொல்ல மனதை அடிக்கடி உரசிக் கொண்டிருந்தது போலும்,
இலங்கை கலைக்கழக திரு. சு. ஞானலிங்கத்தை ஒரு தடவை தமது அலுவலகத்துக்கு அழைத்து அமைச்சர் தமது ஆதங்கத்தை வெளியிட்டார்.
"தமிழர் கலை, கலாசாரத்தை சிங்கள கலாசாரத்துடன் தயவு செய்து ஒப்பிடாதீர்கள். தமிழர் பண்பாடு, கலாசாரம் உலகளாவியது. பக்கத்து நாடான தென்னிந்தியாவில் பரந்து விரிந்துள்ளது. எங்களது கலை, கலாசாரம் அப்படியல்ல. இனிமேல்தான் தலைதுாக்க வேண்டும், தயவு செய்து இதனைக் கிளற வேண்டாம்." என்று அமைச்சர் இரியகொல்ல கேட்டுக் கொண்டார். அத்துடன் அந்த 'சப்ஜக்ட் முற்றுப் பெற்று விட்டது.
இவ்விஷயம் திரு. ஞானலிங்கம் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது! திரு. ராம் குமாரசாமியை சந்தித்து திரு. ஞானலிங்கம் அமைச்சரின் கருத்தை வெளியிட்டு, தமது கவலையைத் தெரிவித்துக்கொண்டார்.
இதற்கெல்லாம் அமைச்சர் இரியகொல்ல மனதில் ஈரம் இல்லையா? அல்லது தாழ்வு மனப்பான்மைதான் காரணமா? புரியவில்லை!
கொழும்பில் நடைபெற்ற "நவரங்கஹல" ஆரம்ப விழாவில் கலந்துகொள்ள யாழ் கலை மன்றத்துக்கு நி-12
57

Page 91
| ¿
அழைப்பு வந்தது. பிரதமர் டட்லி சேனநாயக்க கலந்து கொண்ட இவ்விழாவில் திரு. ராம் குமாரசாமியின் யாழ். கலை மன்ற நாட்டியக் குழுவினருக்கு நிகழ்ச்சி நிரலில் ஒன்பதாவது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அன்றைய நிகழ்ச்சிகளில் நான்காவது நிகழ்ச்சி வரைதான் பிரதமர் கலந்து கொண்டிருப்பார் என்று வரையறுக்கப்பட்ட நிலையில், பிரதமரின் விருப்பத்தின்மீது யாழ் கலை மன்ற நாட்டியக் குழுவினருக்கு நான்காவது நிகழ்ச்சி ஒதுக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டு, வெகுவாகப் பாராட்டும் கிடைத்தது.
திரு. ராம் குமாரசாமி 1956ம் ஆண்டில் இலங்கை வானொலியில் அடி எடுத்து வைத்து, சிறந்த பாடகர்களில் ஒருவராக கெளரவிக்கப்பட்டு, சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கலைச்சேவை புரிந்ததும், இறுதிக் காலத்தில் இலங்கை வானொலி கலைஞர் தேர்வுக்குழுவில் முக்கிய இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நூலை எழுதிக் கொண்டிருக்கும்போது சென்னையில் திரு. ராமை நான் சந்தித்தேன். மலரும் நினைவுகளாக சில குறிப்புகளைத் தெரிவித்தார்.
"யாழ் நகர மண்டபத்தில் 1958ல் யாழ் கலை மன்றம் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. திரு. வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள் இவ்வைபவத்துக்கு சமுகமளித்து கலை மன்றத்தை ஆசீர்வதித்து ஆரம்பித்து வைத்ததுடன், எனது சகோதரி கு. திரிபுரசுந்தரியின் நடனத்தையும் அவர் தலைமையில் அரங்கேற்றி வைத்ததை மறக்க முடியாது. அவரின் முதல் இலங்கை சிஷ்யையும் எனது சகோதரி தான்."
அமெரிக்க விண்வெளி வீரர்கள் இலங்கை விஜயம் செய்தபோது 'அலரி மாளிகையில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் அழைப்பின்மீது தனது தலைமையில் இயங்கிய யாழ் கலைமன்றம் பங்குபற்றி பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தியதையும், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர்
158

hits. LDIEEE
சு. வித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற வட இலங்கை சங்கீத சபையின் பிரிவது நிறைவு விழாவில் தனது தந்தை டபிள்யு. எம். குமாரசாமியின் திருவுருவப் படம் திரைநீக்கம் செய்யப்பட்டதையும், தமிழ் நாட்டிலிருந்து ராதா - ஜெயலட்சுமி சகோதரிகளின் இசைக் கச்சேரி அப்போது நடைபெற்றதையும் பசுமையான நினைவுகளாக "ராம்" கூறியபோது, அவர் முகத்தில் பூரிப்பு காணப்பட்டது. தமிழகத்தில் திரு. ராம் தங்கியிருந்தாலும், அந்த யாழ்ப்பாண நினைவுகள் அடிக்கடி நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருந்தன. அந்த மண்வாசன்ை - இசைப்பயணம், கலை" நினைவுகள் என்று எல்லாமே நெருடிக்கொண்டே இருந்தன. அவரைத் தேடி இங்கு வந்த இசை அழைப்புகள் எதுவுமே அவர் "மனதுக்கு பிடிக்கவில்லை. எதனையோ அந்த மண்ணில் இழந்து விட்டதாகவேபட்டது!
★ ★ ★
ஈழத்து ஓவியர்-நடிகர் இலங்கைநாதன்
ஈழத்தில், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு வந்தும், சென்னையில் பாச உறவு நீடித்த கலைஞர்களில் ஒவியர் - நடிகர் திரு. சி. இலங்கைநாதனும் ஒருவர்.
‘ஈழநாடு’ பத்திரிகைக்கு ஒவியம் வரைந்து தனது பிள்ளையார் சுழியை போட்டுக் கொண்ட இலங்கை நாதன், 1964ம் ஆண்டு "ஈழநாடு' நடத்திய கம்ப இராமாயணம் ஓவியப்போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றுக் கொண்டு தனது ஓவியப் பணியை ஆரம்பித்தார். 1993ல் உலக சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தென்கிழக்காசிய சுற்றாடல் பாதுகாப்புக் கழகத்தின் சின்னம் லோகோ) வரைந்து சான்றிதழும் பெற்றிருந்தார். போகசுவாமிகளின் உருவப்படத்தை "ஈழநாடுக்கு
15ց

Page 92
தத்ரூபமாக வரைந்து அதன் ஆண்டு மலரிலும் முதல்பக்க அட்டை ஓவியமாக இப்படம் இடம்பெற்று பாராட்டப் பட்டதையும் நினைத்துப் பார்க்கின்றேன்.
நண்பர் இலங்கைநாதன், மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். "ஈழநாடு' அறிமுகம் கிடைத்து முதலில் வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளுக்கு ஒவியம் வரையத் தொடங்கியவர், கதையின் சூழ்நிலையை நன்குணர்ந்து சுடச்சுட படம் வரைவார்.
அலட்டலோ பந்தாவோ இல்லாத ஒரு நல்ல ஒவியனாக எல்லோருடனும் பழகுவார். இரசனை மிகுந்த புரிந்துணர்வுமிக்க நல்ல கலைஞன் அவர்.
ஒவியத்தில் இன்று பெருமை பெற்று விளங்குவதற்கு யாழ்ப்பாணம் ஒவிய ஆசிரியரும் சிற்பியுமான திரு. செ. சிவப்பிரகாசம்தான் மூலகாரணம் என்று நன்றியுடன் கூறும்
160
 

2.-l. LD5rgi
அவர் "ஒவியத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, ஒவிய ஆசிரியர் செ. சிவப்பிரகாசம் அவர்களால் நடத்தப்பட்ட யாழ் பிரதேச கலாமன்றத்தில் இணைந்து, ஒவியம் வரையும் ஆரம்ப பயிற்சியை பெற்றவன் நான்" என்று பெருமைப்படுகின்றார்.
நாட்டின் அவல நிகழ்வுகளினால் 1999ல் தமிழ்நாடு வந்த இவருக்கு தமிழக முற்போக்கு எழுத்தாளரும், நாவலாசிரியரும், திரைப்பட படைப்பாளியுமான திரு. தங்கர்பச்சானின் அறிமுகம் கிடைத்தது ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
'பாரதியில் முதன் முதலில் நடித்த இலங்கைநாதன், தங்கர்பச்சானின் "அழகி"யில் தமிழாசிரியராக வந்து முத்திரை பதித்து "ஐஸ்" படத்திலும் தோன்றியதுடன், "தென்றல்' மற்றும் சில தமிழ்ப்படங்களிலும் நடித்து வருகின்றார். நடிப்பும், ஒவியமும் இரு கண்களாகக் கொண்ட இவர் "தினமலர்' வார இதழுக்கு பல சிறுகதை களுக்கு ஒவியங்கள் வரைந்ததுடன், இலக்கிய இதழ் 'கணையாழி மற்றும் எஸ்.பொ.வின் 'மித்ர' வெளியீடுகளுக்கு தொடர்ந்து ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்.
எப்பொழுதும் துடிப்புடன் காணப்படும் நண்பர் இலங்கைநாதனின் இளம் வயதுக் கனவுகள், தமிழகத்தில் தான் நனவாகிக் கொண்டிருப்பதை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
★ ★,★
நாடுவிட்டு நாடுவந்த எனது நண்பர்களில் நான் நெருக்கமாகவிருந்த மற்றுமொரு பிரியமான எழுத்தாளர் "யாழுர்துரை' எனப்பெயர் கொண்ட எஸ்.ஏ. தர்மலிங்கம்.
161

Page 93
Manadoa) An
யாழுர் துரை
சென்னையில் மந்தைவெளியில் தனது தாய், சகோதரியுடன் குடி கொண்ட துரை,’ எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற நட்பு மறவாத சில ஈழத்து நண்பர் களுக்கும் நல்ல நண்பராக விளங்குகிறார். அவர் வீட்டுக்குச் சென்று விருந்துண்ணாத நண்பர்கள் மிகக் குறைவு என்று சொல்லலாம்.
எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் மண் வாசனை பாராமல் உபசரிப்பதில் யாழ்ப்பாணத்தில் தனி முத்திரை பதித்த துரை எல்லோருக்கும் ஒர் அன்பனாக பழகினார். நாடகங்கள், பத்திரிகை, சிறுகதை, மேடைப் பேச்சு, திரைக்கதை என்று 'பஞ்சமுக நாயகனாக” அன்று விளங்கிய இவர்; திருவள்ளுவர் அச்சகத்திலும், யாழ் பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் நித்தம் பார்க்கலாம். எல்லோருக்கும் இனியவர்.
தமிழகம் வந்தாலும் அவர் எழுத்துப்பணியை மறக்கவில்லை. இவரின் சிறுகதைகள், வெளிநாட்டு
162
 

(85.a. DasrC356hT
சஞ்சிகைகளிலும் வந்தன. சில மறு பிரசுரம் செய்யப் பட்டன.
‘ஈழநாடு’மீது தனிப்பற்றுக் கொண்ட "யாழுர் துரையின் சிறுகதைகள், கவிதைகள், நிறைய இப்பத்திரிகை யில் வெளிவந்திருக்கின்றன.
பின்னோக்கிப் பார்க்கின்றேன். ஒரு ஞாபகம் பளிச்சிடுகிறது. 31.10.1984 இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட நாள். நான் வழக்கம்போல் அன்றிரவு கடமைக்கு வந்திருந்தேன். திருமதி இந்திரா காந்தி கொலை தொடர்பாக வந்திருந்த பல்வேறு செய்திகளையும் தொகுத்து எழுதுவதில் மும்முரமாக இருந்தேன். அடுத்த நாள் வெளிவரும் ‘ஈழநாடு’வில் கடைசி செய்திகளை (லேட்டஸ்ட் நியூஸ்) வாசகர்களுக்கு தாராளமாக கொடுக்க வேண்டுமென்பதில் முழுக்கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.
பரக்க பரக்க துரை எனது அறைக்குள் நுழைந்தார். இருங்கள் என்று கூறவும் எனக்கு நேரமில்லாத பரபரப்பு வேளை.
“LoginrGör அண்ணன். இதனை எப்படியும் ‘ஈழநாடு’வில் போடவேண்டும். அதுவும் முதல் பக்கத்தில் வெளியிடவேண்டும்” என்றார்.
அவர் முகத்தைப் பார்த்தேன். இனம்புரியாத ஆர்வம் படர்ந்திருந்தது. உடனே பதிலளிக்கும் நிலையில் நான் இல்லை. சிறிதுநேரம் கழித்து கேட்டேன்.
“என்ன விஷயம்? பரபரப்பான செய்தியா?" என்றேன். கைவசம் இருந்த பேப்பரை என்னிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். அது ஒரு கவிதை.
163

Page 94
Manadora)Adan
“என்ன துரை. செய்திகளுக்கே இடமில்லாமல் இருக்கிறது. எப்படி. இதனை வெளியிடுவது. இடப் பிரச்னைவேறு." என்று கடிந்தவாறே கவிதைமீது நோட்ட மிட்டேன். ஆனாலும் துரை விடுவதாக இல்லை.
“என்ன நடந்தாலும் பரவாயில்லை. இது நாளைய ‘ஈழநாடு’வில் வரவேண்டும்." என்று அடம்பிடித்தார். அலுவலகத்தை விட்டு போவதாக இல்லை.
நேரம் செல்ல செல்ல எனது பிடியும் (கோபமும்) சிறிது சிறிதாக தணியத் தொடங்கியது. "கவிதையில் எந்த வெட்டுக் கொத்தும் இருக்கக்கூடாது; அப்படியே வரவேண்டும்” என்று பாடாய்ப் படுத்தினார்.
“சரி” என்று கூறி, அந்தக் கவிதையை முதல் பக்கம் என்று குறியிட்டு அச்சகப் பகுதிக்கு அனுப்பும்வரை
துரை” அங்கேயே ‘தவம்’ கிடந்தார்.
அந்தக் கவிதை - திருமதி இந்திரா காந்தி கொலையுண்டதை கண்டித்து துரை’ சிந்திய கண்ணிர் அஞ்சலி. முதல்தரமானதாக வடிக்கப்பட்டிருந்தது. பாராட்டும் பெற்றது.
‘ஈழத்து சந்திரபாபு பாலா
கலைஞர், ஓவியர், எழுத்தாளர் என்று நட்புடன் நான் எழுதிக் கொண்டிருக்கும்போது; எனது மூத்த சகோதரர்கள் மூவரில் ஒருவரான அமரர் ஜி. பாலசுப்பிர மணியம் அவர்களின் கலைத்தொடர்பு நினைவுக்கு வருகிறது.
நான் எழுத்துப்பணியில் மட்டும் ஈடுபட்டிருந்தேன் என்றால்; அவர் கவிதை எழுதுவதிலும், வானொலி
164

கே.வி. மகாதேவா
நாடகங்கள் நடிப்பதிலும், இசைக்கச்சேரி நடத்துவதிலும் ஒரு "ஆல்ரவுண்ட்'டராக விளங்கினார்.
“циптаот” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர் பற்றி, இலங்கையின் பழம் பெரும் பத்திரிகையாளர், ‘கலைவாரிதி’, ‘கலைமணி’, ‘கலா
பூஷணம்’ இரா. பத்மநாதன் அவர்கள் எழுதியிருக்கும் குறிப்புகளை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். "ஈழத்து சந்திரபாபு" என்ற பெயரில் ஈழத்தில் மட்டுமல்லாமல் ஐரோப்பா நாட்டு ரசிகர்களையும் மகிழ்வித்தார் ஒருவர். இவ்வாறு அவர் குதூகலப்படுத்தியது தனது இளமைப் பருவத்திலல்ல; ஐம்பது ஆண்டுகால வயதைக் கடந்து 'பாலா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. ஜி. பாலசுப்பிரமணியம் அவர்கள்தான்.
“மட்டக்களப்புத் தமிழக மெங்கும் 'பாலா’ என்ற பெயர், பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது. 1950ம் ஆண்டு தொடக்கம் 1980ம் ஆண்டு காலம்வரை சைவக் கோவில்களிலும், பொது வைபவங்களிலும், மெல்லிசை அரங்குகளிலும் 'பாலா’வின் வெண்கலக் குரல் *கனிர்’ என்று ஒலித்தது! "பாலா மேடையில் பாடவருகிறார்" என்று அறிவித்தால் போதும்; அவருடைய இன்னிசை கானத்தைக் கேட்பதற்கு தனியானதொரு கூட்டம் கூடிவிடும்.
"கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 1970ம் ஆண்டு மத்தியில் இடம் பெற்ற ‘அப்சராஸ்” குழுவினரின் இசை நிகழ்ச்சியின்போது நிகழ்ச்சிகளை தொகுத்தளித்த அறிவிப்பாளர்; “இப்பொழுது, ஈழத்து சந்திரபாபு அவர்களை நேயர்களுக்கு அறிமுகப்
165

Page 95
Manadova) Aan
படுத்துகிறோம். அவருடைய பாடல்களுக்கு ரசிகர்களாகிய நீங்கள் நிச்சயமாக இருக்கைகளை விட்டெழுந்து துள்ளாட்டம் போடப்போகிறீர்கள்” என்று அறிவித்தார். ரசிகர்கள் ‘ஈழத்து சந்திரபாபுவை ஓர் இளைஞனாக மனதில் கற்பனை செய்து, மேடையில் எதிர்பார்த்தி ருந்தனர். ஆனால் மேடையில் ஏறிய உருவம் பார்வை யாளர் அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. அதிக உயரமோ உடல்பருமனோ இல்லாத, ஒரளவு வயதுமுதிர்ந்த ஒருவரையே அவர்கள் கண்டனர்! அவர் ஏனைய பாடகர்களைப் போல் அலங்கார உடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. வெள்ளை வேட்டியும், வெள்ளை நிற அரைக்கை சட்டையுமே அணிந்திருந்தார்.
"சந்திரபாபுவின் புகழ் பெற்ற "நடனம் ஆடினார்." என்ற பாடலை ‘கணிர்’ என்று பாலா பாடினார். இதே பாடலில் “றொக். றொக். றொக். றொக் அன்ட் றோள்" என்று துள்ளிசையும் இடம் பெறுகிறது. சந்திரபாபுவின் பாணியில் மிகச் சிறப்பாக ‘பாலா’ பாடியபோது சபையிலிருந்த அனைவரும் மெய்மறந்து கைதட்டி ரசித்து, ஆடினர்! அப்சராஸ்’ இசைக் குழுவினரின் நிரந்தர பாடகராக இடம் பெற்ற 'பாலா’ அக்குழுவினர் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தியபோது ஒரு முக்கிய பாடகராக, ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார்.
"சிறந்த முறையில் சோதிடக் கணிப்பீடுகளை துல்லியமாக கணக்கிடும் ஆற்றலைப் பெற்ற 'பாலா’ இலங்கை வானொலி பக்திப் பாடகர். நாடகங்களிலும் நடித்துள்ளார். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ‘பாலா’ அவர்கள், மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் தனது படிப்பை நிறுத்திக் கொண்ட பின்னர், தமிழ்நாட்டிலுள்ள
166

GBased. Desross6hT
மண்டபம் முகாமில் அவருடைய சகோதரி தேவியுடன் சிலகாலம் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
"இக்காலகட்டத்தில் சென்னை சென்று, அங்குள்ள ஜெமினி ஸ்ரூடியோவில் முக்கியமான பொறுப்பிலிருந்த திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் அறிமுகத்தைப் பெற்றார். பதினேழு வயதுள்ள "பாலா” வசீகரமான தோற்றமுடையவராக இருந்தார். அப்பொழுது ஜெமினி ஸ்ரூடியோவில் 'ஒளவையார்’ திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தது. இப்படத்தின் இயக்குநரான திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 'பாலா’வை அப்படத்தில் நடிக்கும்படியும், அதற்கான அனுமதியை மட்டக்களப்பில் வசித்த அவரது தாயாரிடமிருந்து பெற்றுத் தருமாறும் கோரவே: 'பாலா’ அவர்களும் தன்னுடைய தாயாருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு அனுமதி தருமாறு கேட்டுக் கடிதம் எழுதினார். ஆனால் தாயார் அனுமதி அளிக்க மறுத்ததுடன், நேரடியாகவே திரு. கொத்தமங்கலம்சுப்பு அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். "எனது மகன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் மேல்படிப்பு படிப்பதற்காக நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். தயவுசெய்து அவனை கூத்தாடியாக ஆக்கிவிடாமல் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று ‘பாலா’வின் அம்மாவின் கடிதம் இருந்தது. ‘பாலா’வின் அரிய பெரிய வாய்ப்பும் கிட்டாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார், திரு. இரா. பத்மநாதன்.
大 大 大
167

Page 96
Sranason.) Alan
நண்பர் கமால்தீன் அவரது மருமகன்-நடிகர் நாசர் குழந்தைகளுடன் நூலாசிரியர் துணைவியாருடன்
இந்நூலை எழுதிக் கொண்டிருக்கும்போது, சென்னை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னுடன் மனைவியும் வந்திருந்தாள். எனது நீண்டகால நண்பர் 'தினத்தந்தி’ கமால்தீன் அவர்களை சந்திக்க விரும்பினேன். அன்று பக்ரீத் பண்டிகை. நல்லநாள் என்று, நானும் மனைவியும் அவர் வீட்டுக்குப் போனோம். இடம் சென்னை, வளசரவாக்கம்.
இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் நேரில் சந்திக்கப் போகின்றேன். மனதில் பழைய நினைவுகளுடன் அவர் வீட்டுக்குள் நுழைந்ததும், கமால்தீனும் அவரது துணைவியாரும் முகம்மலர வரவேற்றார்கள்.
அதே குறுகுறு கண்கள். வாய் நிறைந்த சிரிப்பு. கதிரையில் அமர்ந்தவாறே எங்களை கரம் நீட்டி வரவேற்றார் கமால்தீன்.
168
 

ஐம்பது ஆண்டுகள் பத்திரிகைத்துறையில் படப் பிடிப்பாளராக 'ஒடி'ஆடி ஓய்ந்திருந்தாலும் வைரம்பாய்ந்த அந்த நெஞ்சு, எங்களது பழைய நினைவுகளை மறக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பாக பாதிப்பை ஏற்படுத்திய பக்கவாத நோய், மெல்ல மெல்ல அவரை விட்டு, மறைந்து கொண்டிருந்தது. ‘அந்தக்கால கம்பீரத் தோற்றம் அவர் உடம்பில் காணப்படவில்லை என்றாலும், ஓர் சக்தி இன்னும் சாதிக்க வேண்டும்’ என்ற பிடிப்பு அதிகமாகவே அவர் முகத்தில் இருந்தது. "என்னால் இப்பொழுது நன்றாக நடக்க முடிகிறது. கால்களை நீட்டி மடக்க முடிகிறது." என்று கூறி, அடிமேல் அடிவைத்து நடந்தும் காட்டினார். நம்பிக்கைதானே வாழ்க்கை!
"தினத்தந்தி"க்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்து, அண்மைக் காலத்தில்தான் சேவையிலிருந்து அவர் ஒய்வெடுத்துக் கொண்டார். அவரது பணிக்காலத்தில் அவரின் ‘காமரா’வில் சிக்காத அன்றைய முன்னணி நடிகர்களும் இல்லை, இன்றைய கதாநாயகர்களும் இல்லை. அசாத்தியமான காட்சிகளையும் மிகுந்த துணிச்சலுடன் தனது ‘காமரா’வில் “கிளிக்’ செய்துவிடுவார்.
ஒருநாள் கமால்தீனுடன் மைலாப்பூர் சென்றிருந்த போது தறதற’ என்று என்னை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று நான்காவது மாடிவரை ஏறவைத்து, மேலும் மேலும் கூட்டிச்சென்று அதன் மொட்டைமாடி கூரைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து கீழே தெருவைப் பார்க்கும்போது எனக்குத் தலைசுற்றும்.
"என்ன விசேஷம்" என்று கேட்டபோது, "இரண்டு ஷாட்ஸ் எடுக்க வேண்டும்" என்று நிதானமாகப் பதிலளித்தார்.
169

Page 97
împamados),An
சில நிமிடங்களில், கீழே தெருவழியாக வந்து கொண்டிருந்த ஒரு ஊர்வலத்தைப் படம்பிடிக்க கமால்தீன் தயாராகிக் கொண்டிருந்தார். நான், அடிமேல் அடிவைத்து சுவரைப்பிடித்துக்கொண்டு கீழே தெருமிது நோட்டம் விட்டேன். “கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து 63 நாயன்மார் திருஉருவ ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் படமெடுக்க வேண்டும்." என்றார் அவர். அரைகுறையாக நானும் பார்த்தேன். நாயன்மார் சிலைகளை சுமந்து கொண்டு ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. கமால்தீனைப் பார்த்தேன். வில்லாக வளைந்து, தனது உடம்பின் இடுப்புக்குமேல்) அரைப்பகுதியை, அந்தக் கட்டிடத்தின் மொட்டைமாடி கூரைச் சுவரையும் தாண்டி வெளியே வைத்துக்கொண்டு, 'பளிச், பளிச்’ என்று அந்த ஊர்வலத்தை ‘காமரா'வுக்குள் சிறைப்பிடித்தார். அவரின் அந்த நேரம் எனக்கு 'திக்திக்’ என்றிருந்தது. கீழே தலைகுப்புற விழுந்து விடப்போகின்றார் என்ற பதற்றம் எனக்கு. இந்தப் புகைப்படம் அடுத்த நாள் 'தினத்தந்தி’யில் நான்கு கலம் ஐந்து அங்குல உயரத்தில் 'பளிச்’ என்று வெளிவந்திருந்தது.
இந்தக் காமரா நிலை அவருக்கு ஆயிரத்தில் ஒன்று. கொடுக்கும் பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சின்ன வயதிலிருந்தே வளர்ந்திருக்க வேண்டும். படம் எடுப்பதில் தலைதூக்கும் பெரும் சவால்கள் எல்லாம் அவர் துணிச்சல் முன்பாக சரணடைந்து விடும்.
கமால்தீன் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போதே அவரது நான்கு பிள்ளைகளும் என்னை இனம் கண்டு அளவளாவியது சந்தோஷமாக இருந்தது. அன்று பட்டாம்பூச்சிகளாக சீருடையுடன் 'ஸ்கூல் சென்ற
170

(Based). LD5TCB56RT
கமால்தீனின் ஒரு பெண் இன்று மூன்று குழந்தைகளுக்கு தாயாகியிருந்தது, நீண்ட இடைவெளியை நினைவூட்டியது. அகமும் முகமும் மலர கமால்தீனின் துணைவியார் எங்களுக்கு காலை உணவை அளித்தார். பக்ரீத் பண்டிகை அல்லவா? சிற்றுண்டியுடன், பாயாசமும் மணக்க மணக்க இருந்தது. கமால்தீன் தனது கடந்த வருட ‘டயறி’யை படிக்குமாறு எனக்குக் கொடுத்தார். 2002ம் ஆண்டு டயறி. பல்வேறு குறிப்புகளுடன், பத்திரிகைகளில் வெளிவந்த சில அரிய புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன, பல பக்கங்களில், கவிதை மழை பொழிந்திருந்தார். ‘டயறி”யில் பத்திரிகைப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது கமால்தீன். "பத்திரிகைகளையோ, சஞ்சிகை களையோ நான் இரவல் வாங்கினால், நண்பர்கள் என்மீது கண்வைத்துக் கொண்டே இருப்பார்கள். ஏன் தெரியுமா..? எனக்குப் பிடிக்கும் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலே ‘அபேஸ்’ செய்து விடுவேன். சில நேரங்களில் அவர்களுக்குத் தெரியாமல் படங்களை கிழித்து, மேஜைக்கு கீழே விழவைத்துவிட்டு, பின்னர் மெதுவாகக் குனிந்து படத்தை சுருட்டி எடுத்து விடுவேன்.” என்று தனது பழைய கால திருட்டுத் தனத்தை சிரித்துக்கொண்டே சொன்னார். அப்பொழுதும் அவர் சிரிப்பில் குழந்தைத்தனம் குடிகொண்டிருந்தது.
மலரும் நினைவுகளைப் பேசி, மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டேயிருந்ததில் ஒரு மணி நேரம் "பொசுக்’ என்று மறைந்துவிட்டது. புறப்படத் தயாரானதும், “சற்றுப் பொறுத்திருங்கள். மாப்பிள்ளை இப்போ வந்து விடுவார்." என்று கமால்தீன் கூற; "வந்தனிங்க, அவரையும் சந்தித்து விட்டு போங்க. நானும் அவரும் நிறையத் தடவைகள் சிலோனுக்கு வந்திருக்கின்றோம். உங்க நாட்டு முன்னணி
171.

Page 98
Solanasons Alan
எழுத்தாளர்கள், படைப்பாளிகளையும் சந்தித்திருக் கின்றோம்." என்றார் கமால்தீனின் மகள்.
"தொழுவதற்குத்தான் பள்ளிவாசல் சென்றிருக்கிறார். வரும் நேரம்தான்." என்று கமால்தீன் துணைவியார் கூறினார்.
13 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இவரது மூத்த பெண் திருமணத்துக்குக்கூட எங்களால் வரமுடியாத நாட்டுச் சூழ்நிலை. அவசியம் அவரைச் சந்தித்தே செல்ல வேண்டும் என்று இருந்தோம். அரைமணி நேரத்திற்குள் கமால்தீனின் மாப்பிள்ளை வந்து விட்டார். அறிமுகம் நடந்தது. எனக்கும், மனைவிக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது! காரணம், கமால்தீனின் மாப்பிள்ளை நடிகர் நாசர்தான்! திரையில் காணும் அதே நாசர்தான்! சிவந்த மேனி. ஆஜானுபவான் தோற்றம். முகம்மலர நாசர் வரவேற்றார். பேசினார். எங்களுக்கு நிறைந்த சந்தோஷம். போதுமான அளவு எங்களைப் படம்பிடித்துக் கொண்டார் திருமதி நாசர். "இனிமேல் சென்னைக்கு வந்தால் நேராக இங்கே வந்து தங்குங்கள். மாடியில் இடம் தாராளமாக இருக்கிறது." என்று நண்பர் கமால்தீனும் நடிகர் நாசரும் எங்களை வழியனுப்பி வைத்தது நட்பின் உயர்வை படம் பிடித்துக் காட்டியது.
"நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ‘தேவர்மகன்’ நடிக்கும்போது "தேவரே" என்று சிவாஜியால் அன்பாக அழைக்கப்பட்ட நாசர் கமலஹாசனிடம் நிறைய நெருக்கமான நட்புக் கொண்டிருக்கிறார். சிவாஜி வீட்டில் நாசர் இப்போதும் செல்லப்பிள்ளைதான். நடிப்பு என்றால் காரெக்டராகவே மாறிவிடுவார். கதையுடன் வீட்டுக்கு வருவோரை அன்புடன் வரவேற்பார். கதையை வைத்து
172

GBE.e. LD50856T
விட்டுப் போங்க. நான் படித்துப் பார்க்கிறேன். என்று நறுக்குத் தெறித்தாற்போல் அவர் சொல்லி விடுவார்.” என்று தனது மாப்பிள்ளை நாசரைப் பற்றிய திரைஉலக வாழ்க்கையை கமால்தீன் நான்கு வார்த்தைகளில் கூறியது எனக்குப் புரிந்து போனாலும், கதாபாத்திரத்துடன் திரையில் சங்கமமாகிவிடும் நாசரை நேரில் பார்த்தபோது வித்தியாசம் தெரியவில்லை. முதல் சந்திப்பு என்றாலும், பழக்கப்பட்ட குடும்ப நண்பராகக் காணப்பட்டார் அந்த பண்பட்ட நடிகர் நாசர். தமிழ்த்திரை உலகம், அவரிடம் நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. பக்ரீத் பண்டிகை நாளில் ஒரு இனிமையான, பாசமிகு சந்திப்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது.
நான் முன்னர் சென்னை செல்லும் போதெல்லாம் 'தினத்தந்தி' பிரதம படப்பிடிப்பாளர் (போட்டோ கிராபர்) திரு. எஸ். கமால்தீன் அவர்களை தினமும் சந்திப்பேன். தினத்தந்தியில்’ சுமார் 50 வருட காலம் சிறப்பாகப் பணியாற்றி, கலை உலகத்தினரோடு நீண்ட காலம் அனுபவம் பெற்றிருந்தார். அவரின் 'ஸ்கூட்டரில் பல சினிமா ஸ்ரூடியோக்களையும் வலம் வருவேன். அன்றெல்லாம் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பு மிகவும் குறைவு. ஸ்ரூடியோவுக்குள்ளேயே “செட்டுகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெறும். திரு. கமால்தீனுக்கு எல்லா ஸ்ரூடியோக்களிலும் அறிமுகம் இருந்தது. “ஸ்ரூடியோ’ வாசலில் நுழைந்ததுமே, பாதுகாப்பாளரிடம் "..என்னப்பா. என்ன ஷூட்டிங் நடக்கிறது.” என்று கேட்பார். முக்கியமான நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்றால் 'ஸ்கூட்டர் உள்ளே நுழையும். அவருக்கு திருப்தி இல்லையானால் 'ஸ்கூட்டர் வேறு
-13 g 173

Page 99
Solanasons Aân
ஸ்ரூடியோவை நாடும். சில சந்தர்ப்பங்களில், நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கே முன்னேற்பாடு இல்லாமல் என்னைக் கூட்டிச் செல்வார். நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, தயாரிப்பாளர்கள், திரை உலகப் பிரமுகர்கள், டைரக்டர்கள் மத்தியிலும் அவர் ஒரு செல்லப்பிள்ளை.
1976ல் தமிழக கலை உலகத்தினரோடு நேரில் பழகும் வாய்ப்பு கிடைத்ததற்கு, திரு. கமால்தீன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
'தினகரனில் நான் எழுதிய தொடர் கட்டுரை
‘ஈழநாடு’ பத்திரிகையில் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. "சினிமா பகுதி’ என்று தனியார்வமும் காட்டப்படவில்லை. இதனால் கொழும்பிலிருந்து வெளி வரும் வேறு தமிழ்ப் பத்திரிகையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். 'தினகரன்’ பத்திரிகை ஆசிரியர் திரு. சிவகுருநாதன் எனக்கு களம் அமைத்துக் கொடுத்தார். சில முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர், நடிகைகள், திரை உலகப்பிரமுகர்கள் ஆகியோரின் பேட்டிகளை, எனது மகள் சாந்தா பெயரில் 'தினகரனில் தொடர்ச்சி யாக எழுதினேன்.
'தினகரனில்’ நான் எழுதிய மற்றுமொரு தொடர், நினைவுகள் அழிவதில்லை!"
தமிழகப் பயணத்தின்போது மதுரையில் நான் இருந்த சில நாட்களில் நண்பர் புசல்லாவை திரு. ராமச்சந்திரனின் இலங்கை தொடர்பு மீண்டும் கிடைத்தது. அந்த நேரத்தில் தான் திரு. ராமச்சந்திரன் திரு. அப்பாவு என்பவருடன் இணைந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்காக ஒரு புனர்வாழ்வு மையத்தை ஆரம்பித்திருந்தார்.
174

கே.வி. மகாதேவா
1964ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை மலையக தோட்டப் பகுதிகளிலிருந்து தமிழ்நாடு திரும்பிய அகதிகள் நலனுக்காக இந்த மையம் செயல்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்கீழ்தான், சுமார் ஐந்து லட்சம் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள், குடும்பம் குடும்பமாக இந்தியா திரும்பியிருந்தனர். இவர்களில் பலரும், தங்களது விருப்பத்துக்கு மாறாக பலவந்தப்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள் என்பதுதான் உண்மை!
திரு. ராமச்சந்திரனின் உதவியுடன் பலரை மதுரைப் பகுதிகளில் சந்தித்து, அவர்களின் அவல வாழ்க்கையை எழுதினேன். நூறு ஆண்டுகளுக்கு முன்னே பிரிட்டிஷ்காரர் களினால் எப்படி ஆசை வார்த்தை காட்டி தமிழ்நாட்டி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டார்களோ, அதேமாதிரி ஒப்பந்தம் ரீதியாக ஆசை காட்டி மீண்டும் தமிழ்நாட்டுக்கு ‘ஏற்றுமதி செய்யப் பட்டிருந்தார்கள். மதுரை மேலூரி லிருந்து திரு. ராமச்சந்திரனுடன் பல மைல் தூரம் சைக்கிளில் சென்று தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தது மறக்க முடியாது. இவர்களின் படப்பிடிப்பே ‘நினைவுகள் அழிவதில்லை" கட்டுரைத் தொடர்.
女 ★ ★
இரவு நேரத்தில் வேலை பார்க்கும்போது, முதல் பக்க, கடைசிப் பக்க செய்திகளுடன் தலைப்புச் செய்தி எழுதி, ‘பிறின்ட்டில் பார்த்து, ‘ஒகே’ தெரிவித்து, பிரசுரமாகி வரும் ‘ஈழநாடு’ பத்திரிகையுடன் அலுவலகத்தைவிட்டு வெளியேவர அதிகாலை ஒரு மணியாகிவிடும். அலுவலகத் திலிருந்து கோண்டாவில் மேற்குப் பகுதியிலுள்ள ஐந்து மைல்துார எனது வீட்டுக்கு, "சைக்கிளில் தான் செல்வேன்.
175

Page 100
Solanasons Aôn
சில நேரங்களில் என்னுடன் மேலும் ஐந்து மைல் தூரம் ஹீடு திரும்பும் ஒரிரு அச்சுக்கோப்பாளர்களும் 'சைக்கிளில் வருவார்கள்.
நள்ளிரவு கழிந்து வீடு திரும்பும் என்னை, ஒரு ஜீவன் வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டிருக்கும் 'அவர் யாழ் தட்டா தெருச் சந்திக்கு அருகில் ஒரு சிறிய கடை வைத்திருந்தார். காய்கறி, மளிகைச் சாமான்களுடன், ‘அரசு லைசன்ஸ்’ பெறாத “உற்சாகப்பான’ப் பிரிவும் அந்தக் கடைக்குள் இருக்கும். "சைக்கிளை’ விட்டு அவர் கடைமுன்பாக இறங்கியதும், "அண்ணே வாங்க." என்று பாசத்துடன் வரவேற்பார். தாவடிப்புகையிலையில் ஆசை ஆசையாக அவரே தயாரித்த சின்ன விரல் அளவு சிறிய சுருட்டு பக்குவமாக இருக்கும். அவரைப் பொதுவாக எல்லோரும் 'மீசை’ என்றே அழைப்பார்கள். நாட்டு நடப்பு மற்றும் பல்வேறு அரசியல் ‘குத்துவேட்டுகள்’ பற்றி சுவாரஸ்யமாக திடுக்கிடும் தகவல்களை அவரிடமிருந்து அறிந்து கொள்வேன்.
அவர் ஒரு செய்திப் பிரியர். பத்திரிகை விற்பனைக்கு வரமுன்னரே, அதன் "லேட்டஸ்ட் நியூஸ்” அறிவதில் அவ்வளவு ஆர்வம் அவருக்கு. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பதினைந்து நிமிடங்களில் இருவரின் தாகமும்’ அடங்கிவிடும். தினசரி அரங்கேறி வரும் ‘காட்சி’ இது! சுருட்டை சுவைத்துக்கொண்டே 'சைக்கிளில் நள்ளிரவுப் பயணம் செய்தது ஒர் அலாதியான அனுபவம்தான்.
‘ஈழநாடு’ ஆசிரியர் ஹரனுடன் அந்த இறுதிக்கால சந்திப்புகள்
‘ஈழநாடு’ நிர்வாக ஆசிரியர் திரு.கே.பி. ஹரன்
176

கே.கி. மகாதேவா
அவர்கள் ஒய்வு பெற்று மலையகநகர் கம்பளையிலுள்ள அவரது மகன்-மருமகள் வீட்டில் இருந்தபோது, அந்த இறுதி நாட்களில் நான் பலதடவைகள் அவரைச் சந்திப்பேன். ‘செய்தி’யில் பணிபுரிந்த காலத்திலும், பின்னரும் எனது குடும்பம் முதலில் கண்டி குருதெனியாவிலும், பின்னர் கம்பளையிலும் சிறிது காலம் இருந்தது. இக்காலத்தில்தான் திரு, ஹரன் அவர்களைச் சந்திப்பேன்.
மாலை நேரத்தில் கம்பளை, கண்டி வீதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து நானும் அவருமாக நுவரெலியா வீதியிலுள்ள பெரிய பாலம் வரை நடந்து சென்று, மகாவலி கங்கை நீர்வற்றி வெறும் ஒடையாக நடுவே நகர்ந்து செல்லும் கங்கையின் மணற்பரப்பில் உட்கார்ந்தி ருப்போம். நான் பயபக்தியுடன் இருப்பேன். அவர், குழந்தைபோல் சிரித்துக்கொண்டு, தனது செய்திப்பணி பற்றி பேசுவார். ‘வீரகேசரி’யில் இருந்த காலத்தில் ஏற்பட்ட சுவையான அனுபவங்களை தெளிவாகக் கூறியது எனக்கு பலனுள்ள யோசனைகளாகவே இருந்தது. இரண்டாவது உலக யுத்த காலத்தில், போர்முனைவரை சென்று செய்தி திரட்டிய அவரது அனுபவம், திகில் நிறைந்ததாக எனக்குப் பட்டது. அனுபவம் நிறைந்த பழம்பெரும் பத்திரிகையாளர் அவர்.
女 女 ★
1986ல் நான் குடும்பத்துடன் முதன் முதலில் தமிழ்நாடு வந்து திருச்சியில் 6ોઢo மாதங்கள் தங்கியிருந்தேன். பல ஊர்களுக்கும் சுற்றுலா சென்றோம். பிரசித்தி பெற்ற கோயில்களையும் தரிசித்தோம்.
ஒருநாள், ஊர் சுற்றிய களைப்பில் தேநீர் சுவைக்க
177

Page 101
Manajoonaan
ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம். "என்ன வேண்டும்?" என்று ஒவ்வொருவரிடமும் கேட்டேன். எல்லோருமே “டீ போதும்" என்று சம்மதித்த போதிலும், எனது மகள் சந்திரிகா கேட்டது சிரிப்பாகவும், வியப்பாகவும் இருந்தது. அவள் கேட்டது ‘காப்பர் டீ. சாலை ஓரங்களில் கண்ணில் பட்ட விளம்பரத்தின் எதிரொலி! அவள் சொன்னது ஹோட்டல் சர்வருக்கு தெளிவாக கேட்க வில்லை. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. (அந்த காப்பர் டீ குடும்பக் கட்டுப்பாடு சாதனம் என்பது அவளுக்குப் புரிய நியாயமில்லை) இதே மாதிரித்தான் திருச்சி நகர்வலம் வந்தபோது அவள் கேட்ட மற்றுமொரு கேள்வி "சா மில்லில்தான் கொலை நடக்குமா அப்பா?” என்பதுதான்.
சொந்த நாட்டில் ஏற்பட்ட இராணுவக் கொலை களினால் பீதியடைந்த அவள், கடைகளின் முன்பாக மாட்டப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் சா என்பதைப் படித்ததுமே நாட்டு நினைவுதான் வந்திருக்க வேண்டும்.
மரம் அரியும் ஆலை எனும் அழகான தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக ‘சாமில்’ என்று தமிழ்க் கொலை நடந்திருப்பது எங்கள் நாட்டின் நிலையையே பிரதிபலித்ததுபோலும்.
1991ம் ஆண்டு நான் மீண்டும் குடும்பத்தோடு தமிழ்நாடு, திருச்சி வந்திருந்தேன். நாட்டு நிலைமை சுமுகமாகும் வரை தமிழ்நாட்டிலேயே தங்கியிருப்பது என்று முடிவு செய்தோம். திருச்சிதான் சிறப்பாக அமைந்தது.
பரதத்தில் நாட்டம் கொண்டிருந்த மகள் கோவதணிக்கு அத்துறையில் மேலும் ஊக்கமளிக்க விரும்பினோம்.
178

கே.வி. மகாதேவா
“கலைக்காவிரி” ஜோர்ஜ் அடிகள் கலைச் சேவை
கலைக்காவிரி நாட்டியப்பள்ளி, இயல் இசைத்துறையில் தனி முத்திரை பதித்திருப்பதை அறிந்து அங்கு சென்றேன். கலைக்காவிரி நிறுவனர் - அதிபர்
வண. ஜார்ஜ் அடிகளார் அவர்களைச் சந்தித்து மகளின் ஆர்வத்தை வெளியிட விரும்பினேன்.
இந்திய முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், பலவகையிலும், குறிப்பாக கல்வித்துறையில் ஈழத்தமிழரின் தலைஎழுத்து தமிழ் நாட்டில் தலை கீழாக இருந்தது.
கலைக்காவிரி அதிபர் ஜார்ஜ் அடிகள்
179

Page 102
Manadora)Adan
“உலகத்தில், தமிழ்நாடுதான் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமா? வேறு எந்த வெளிநாட்டுக்காவது ஒடமுடியாதா. போய் விடுங்கள்.” என்று எனது மகனுக்கு நடைபெற்ற காலேஜ் அனுமதி விசாரணை ஒன்றில் உயர்பொலிஸ் அதிகாரியே எச்சரிக்குமளவுக்கு “மதிப்பு இருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான், எனது மகளின் பரத நாட்டிய வகுப்பு அனுமதி சம்பந்தமாக ஜார்ஜ் அடிகளைச் சந்தித்தேன்.
மகளுடன் கலைக்காவிரி சென்றிருந்தேன். கையிலிருந்தது ஒரே ஒரு சான்றிதழ் மட்டும் தான். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் பத்தாம் வகுப்பு படித்த கல்விச் சான்றிதழ் அது.
அது ஒர் இனிமையான காலைச் சந்திப்பு. நாட்டு நடப்பை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு அனுதாபப்பட்ட அவர், "பாரதிதாசன் பல்கலைக்கழக அனுமதி பெற்று இங்கு மூன்று வருட முழு நேர நடனப்பயிற்சி யாளராகலாம்” என்று கூறி அனுமதியும் வழங்கினார். இதன் பின்னர் அவருடனான சந்திப்புகள் அடிக்கடி கலைக்காவிரியில் நடந்தன.
ஒருவருடம் கழித்து, 1992 செப்டம்பரில் ஜார்ஜ் அடிகளாரை நான் சந்திக்க நேர்ந்தபோது ஒரு விருப்பம் தெரிவித்தார்.
"உலகின் பல மேல நாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றோம். மலேசியா செல்லவும் திட்டமுண்டு. ஆனால் தொடர்புகளுக்கு சரியான நண்பர் இன்னும் அமையவில்லை.” என்று ஆதங்கப்பட்ட அவர், ". ஆமாம் நீங்கள் உங்கள் பத்திரிகை அனுபவம் பற்றி கூறும்போது, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பற்றி சொன்னிர்கள். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. திரு. செ. இராசதுரை எனது நெருங்கிய நண்பர். அவர் இப்பொழுது மலேசியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கின்றார் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டால் என்ன.?” என்று விருப்பம் தெரிவித்தார். எனக்கு மலரும் நினைவுகளாயின.
180

Cases. LD5356T
திரு. இராசதுரை அவர்கள் மீதிருந்த எனது தமிழ்ப்பற்று, அவர் பேச்சு, எழுத்து மீதிருந்த ஈர்ப்பு, அவர் நடத்திய ‘தமிழகம்’ பத்திரிகையில் நான் பணியாற்றிய அனுபவம் எல்லாமே மின்னலாகத் தோன்றி மறைந்தன. முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் (1958-1992) மீண்டும் ஒரு மன அசைவு.
"ஒ. நன்றாகப் போய்விட்டது. நாளையே அவருக்கு நான் கடிதம் எழுதி, உங்கள் விருப்பத்தை நினைவூட்டு கிறேன்.” என்றேன்.
திரு. இராசதுரை அவர்களுக்கு அடுத்த நாளே வான் கடிதம் எழுதி, மலேசியாவுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டு வாரங்களில் அவர் எனக்கு பதில் எழுதி யிருந்தார். அந்தக் கடிதத்தில்தான் எத்தனை பாசப் பிணைப்பு - "மண்வாசனை’
High Commissioner of Sri Lanka Kualalumpur, MALAYSIA
அன்புள்ள தம்பி மகான்;
உங்கள் அன்புக்கடிதம் கிடைத்தது. பதில் எழுதுவதற்கு நாள் சென்றுவிட்டது. குறை கொள்ளற்க.
இலங்கை சென்று திரும்பினேன். இந்தியாவிற்கும் வந்திருந்தேன். அலுவலக வேலைகளும் சற்று அதிகம். அதனால் உடன் பதில் எழுதவில்லை. ஊர்ப்புதினங்கள், நம் குடும்பவிபரங்கள் எழுதியிருந்தாய். திரவிய அக்கா இங்கு வந்து போனா. எல்லா விபரங்களும் சொன்னார்கள். உங்கள் முகவரி கொடுத்திருந்தேன்.
“கலைக்காவிரி’ அதிபருக்கு கடிதம் எழுதுகின்றேன். அவர் மிகவும் நல்லவர். சிறந்த பண்பாளர். பழகுவதற்கு இனியவர். அவரோடு தாங்கள் இருப்பது மனநிறைவு தருகின்றது. உனது ԼD&air நடனம் பயில்வதாக எழுதியிருந்தாய். என்ன ஆச்சர்யம், நடனம் பயிலும் அளவு மகளா? நான் இன்னும் என் மகானாகத்தான் உன்னைப் பார்க்கின்றேன். கள்ளமில்லாத தூய்மையான சிரிப்போடு சுற்றிவரும் மகானாகத்தான் நீ எனக்கு தெரிகின்றாய்.
181

Page 103
Somasons Alan
அழகும், அமைதியும் ஆட்சி செய்யும் மட்டக்களப்பு மண், கண்முன்னே தெரிகின்றது. அம்மண்ணில் நாம் கட்டிய மனக்கோட்டைகளையெல்லாம் நிஜக்கோட்டைகளாக்கி காட்டினோம். இலங்கையிலும் பெருமையோடு வாழ்ந் தோம். இலங்கைக்கு வெளியிலும் நமது தாய்நாட்டின் புகழை உயர்த்தி வைத்தோம். அந்த இனிய நாட்கள் இனியும் மலருமா? இறைவன்மீது நம்பிக்கை வைப்போம். தூய்மையான உள்ளத்துடன் இறைவன்மீது வைக்கும் நம்பிக்கை - பிரார்த்தனை, வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும். தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் சொல்லுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவரையும் நான் பார்த்ததில்லை. இந்தியா வந்தால் அவசியம் சந்திக்கின்றேன். காவிரி கலைக் கூடத்தில் அனைவரையும் விசாரித்ததாகச் சொல்லுங்கள். அவர்கள் விஷயமாக இங்கு சிலருடன் பேசியுள்ளேன். அவர்களின் முகவரிகளை விரைவில் அனுப்பி வைக்கின்றேன். பகவான் திருவருள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கிடைப்பதாக.
2.10.1992 ஒரு நிறைவான சந்திப்பு செ. இராசதுரை
ப. திருநாவுக்கரசு, ஓவியர் ஆதிமூலம், நூலாசிரியர், எஸ்.பொன்னுத்துரை, ஒவியர் மருது, ஒவியர் இலங்கைநாதன்
 
 

பாகம் நான்கு
"செய்தி ரா.மு.நா.

Page 104
நுண்ணா சமாதி - 1975ல்
14
 

త్రొ"తాజ
டி.கே ஷண்முகம் - ரா.மு. நாகனிங்கம் (1965-ல்
நTன் கண்டெடுத்த நாணயத்தின் ஒரு பக்கம் "ஈழநாடு' என்றால், மறுபக்கம் மலையகத் தலைநகர் கண்டியிலிருந்து வெளிவந்த "செய்தி வார ஏடாகும்.
‘ஈழநாடு’ ஆரம்பிக்கப்பட்டதும் அதன் பங்குதாரர் களில் ஒருவரான திரு.ஆர்.எம். நாகலிங்கம் அவர்கள், பத்திரிகைத்துறையின் உந்துதலினால், சுயமாகவே ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்தார். "ஈழநாடு" பத்திரிகையின் மலையகப்பகுதிகளின் விநியோக உரிமை யைப் பெற்றுக் கொண்ட அவர், இதற்காகவே ஒரு விநியோக வாகனம் வாங்கி, கண்டியிலிருந்து குருநாகலை ரயில்நிலையம் சென்று யாழ்ப்பாணத்திலிருந்து அதிகாலை வரும் ‘ஈழநாடு பார்ஸ்லைப் பெற்று மலையகத்தில்
185

Page 105
Solanasons Alan
விநியோகம் செய்த அவரது முயற்சி பாராட்டத்தக்கது. நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் உழைத்த அவர் 1963-ல் ‘செய்தி” வார சஞ்சிகையை முதலில் கொழும்பிலும் பின்னர் கண்டியிலும் ஆரம்பித்தார். ஆரம்ப கால ஆசிரியராக சட்டத்தரணி பெரி. சுந்தரலிங்கமும் அதன் பின்னர், திரு.கு. இராமச்சந்திரனும் பணிபுரிந்தனர். இதனைத் தொடர்ந்து திரு. நாகலிங்கம் எனது பணியை நாடினார். ‘செய்தி'யை ஒரு தினசரியாக மலர வைக்கும் நோக்குடன் அவரது எண்ணம் விரிவுபட்டிருந்தது. ‘ஈழநாடு’விலிருந்து 1967ல் ‘செய்தி’க்கு ஆசிரியராகப் பணிபுரிய கண்டிக்கு குடும்பத்துடன் சென்றேன். அங்கே எனக்கு, பொறுப்பு மட்டுமல்ல இடங்களும் புதிதாக இருந்தன. சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பொருளாதார சூழ்நிலைகளினால் ‘செய்தி நிறுத்தப்பட்டதும் மீண்டும் ‘ஈழநாடு’ திரும்பி விட்டேன்.
‘ஈழநாடு’வில் ஒரு வட்டத்துக்குள் செயல்பட்ட எனக்கு, ‘செய்தி'யில் எனது கடமைகள் பரந்து விரிந்தி ருந்தன. திரு. ரா.மு. நாகலிங்கம் அவர்களுக்கு இருந்த கலை மற்றும் இலக்கியத் தொடர்புகள் எனக்கும் கிடைத்தது. இக்கட்டத்தில் திரு. நாகலிங்கம் அவர்களை நான் நன்றியுடன் அறிமுகப்படுத்த வேண்டும்.
சிரித்த முகம், வெண்கலக் குரல், எதையும் தாங்கும் இதயம். உடம்பின் வெளித்தோல்தான் கறுப்பு. உள்ளம், கள்ளம் கபடமற்ற சுத்த வெள்ளை. ஏமாறப்போகின்றோம் என்று மூளை எச்சரித்தாலும், எடுத்த முயற்சிகளை துணிச்சலுடன் எதிர் கொள்ளும் மனோபக்குவம். விஷப் பரீட்சைகளை தைரியத்துடன், பொறுமையுடன் சமாளிக்கும் திறமைமிக்கவர். வாழ்க்கையில் சந்தித்த தெல்லாம் சவால்கள்தான். இப்படியான பண்பாளர்தான்
186

(886.a. Das TCB56T
எனது இனிய நட்புக்கான திரு. ரா.மு. நாகலிங்கம்.
நாடகங்களா, இசை நிகழ்ச்சிகளா, இலக்கிய எழுத்தாளர்கள் சந்திப்புகளா, புத்தக வெளியீடா, பிரியாவிடை நிகழ்ச்சிகளா. மலையகத் தலைநகர் கண்டி மாநகரில் எந்தப் பொதுப்பணி என்றாலும் அங்கு ஜம் என்று இருப்பார் திரு. ரா.மு. நாகலிங்கம். அந்த அறுபதுகள் அவருக்கு ஒரு பொற்காலம்.
தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி அருகேயுள்ள பரத்தவயல் எனும் சிற்றுாரில் 1923ல் பிறந்த இவர் சிறுவயது முதலே இலக்கியம் மற்றும் பத்திரிகைகள்மீது ஆர்வம் கொண்டிருந்தார். கிராமப்புற பள்ளிப்படிப்பு மூன்றாவது வகுப்புவரைதான் என்றாலும், ஆரம்பமே அவரது சொந்த அனுபவம் -சுயமுயற்சிதான். கையிலிருந்த சில பத்து ரூபாய்களை மட்டும் மூலதனமாகக் கொண்டு, 12 ரூபாய் 50 காசு பிரயாணச் செலவு கொடுத்து, தனுஷ்கோடியில் கப்பல் ஏறி, தலைமன்னார் வந்து ரயில் ஏறி மலையகம் நுழைந்து புசல்லாவை பகுதியில் முகாமிட்டார். அது 1941 வது வருடம். பலசரக்குக் கடைகளிலும், ஜவுளிக்கடைகளிலும் விற்பனை யாளராகவும், உதவியாளராகவும் பணியை ஆரம்பித்த அனுபவத்துடன், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பெயரில் புசல்லாவை வாலிபர் சங்கத்தை ஆரம்பித்து தனது சமூகப்பணியை தொடங்கியதுடன், மலையக இளைஞர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும் வழிசமைத்தார். புசல்லாவை பகுதியிலிருந்து தோளில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு, கண்டி அருகாமையிலுள்ள குருதெனியா வந்த அவர், ஏழு வருடங்களிலேயே, சொந்தமாக ஒரு பலசரக்குக்கடையை ஆரம்பித்தார். 1949ல் 'ஜெகஜோதி” எனும் பெயரில் வியாபாரத்தைத் தொடங்கி,
187

Page 106
Manador),Adan
பஸ்ஸிலேயே, பொருள்களைக் கொண்டுசென்று விற்பனையை விஸ்தரித்தார். இக்காலப் பகுதியில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கம்பளை மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று தனது பங்களிப்பை பரவலாக்கினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது, கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.ப. ஜீவானந்தம் இலங்கை வந்து மலையகத்தில் இருந்தார். அவரை சந்தித்த திரு. நாகலிங்கம் மக்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தார். புசல்லாவை யிலேயே ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து துணிச்சலுடன் ஜீவாவை பேசவைத்தார். 1949ல் புசல்லாவை விஜயம் செய்த பூதான இயக்கத் தந்தை ஆச்சாரியார் கிருபளானி, துணைவியார் சுஜாதா கிருபளானி ஆகியோருக்கும் பெரிய ஊர்வலமே நடத்தி சிறப்பான வரவேற்பு கொடுத்ததையும் திரு. நாகலிங்கம் நினைவு கூர்ந்தார்.
தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் கண்டியிலிருந்த காலத்தில் வாரந் தவறாமல் சந்தித்து உரையாடுவார். மலையக காந்தி ராஜலிங்கத்துடன் நெருக்கமான நட்புக் கொண்டிருந்த திரு. நாகலிங்கம், மலையகத் தோட்டத் தொழிலாளர், தலைவர்கள் மத்தியிலும் அறிமுகமாகத் தொடங்கினார். இலக்கிய, பத்திரிகை கனவுகள் மெதுவாக முளைவிடத் தொடங்கின. எண்ணங்கள் சிறகடிக்க ஆரம்பித்தன.
1951ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்விழாவில் கல்கி அவர்களையும் திரு. பெரியசாமித் தூரனையும், மலையகப் பிரதிநிதியாகச் சந்தித்ததை பெரும்பேறாகக் கருதும் இவர், கல்கி அவர்களின் தனி அழைப்பின்மீது சென்னையில் 1952ல் நடைபெற்ற தமிழ் விழாவில் கலந்து
188

C3a5.cf. Desross6.T
கொண்டு திரு.வி.க, ராஜாஜி, தொ.பொ.மீ. ஆகியோரை சந்தித்து அளவளாவியதை ஆரம்ப மைல்கல்லாக நினைக்கின்றார். தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பல இலக்கிய எழுத்தாள ஜாம்பவான்களை சந்தித்த திரு. நாகலிங்கத்தை, ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்கள் இன்றும் மதிக்கிறார்கள் என்றால் அவரின் இனிய சுபாவமும் ஒரு காரணமாகும்.
ரா.மு. நாகலிங்கம் கலைத்தொடர்பு
பாவேந்தர் பாரதிதாசனுடன் ரா.மு. நாகலிங்கம்
škia
பம்பாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "பிளிட்ஸ்’ எனும் ஆங்கில வார சஞ்சிகையை மிகவும் விருப்பத்துடன் வாங்கி அன்பர்களின் உதவியுடன் செய்திகளை அறிந்து கொண்ட இவர்; பிளிட்ஸின் பக்க
-14 g 189

Page 107
Manador),Adan
அமைப்புமீது ஆர்வம் கொண்டார். இப்படியொரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன என்ற உந்துதலுக்கு ஈழநாடு மலையக விற்பனை அனுபவம் கைகொடுத்து உதவியது. இதன் வெளிப்பாடே “செய்தி
1962ல் கொழும்பு சோனகர் தெருவிலுள்ள ஒரு அச்சகத்திலிருந்து செய்தி பிரசவமானது. திரு. நாகலிங்கம் கண்ட S66)6. அன்று ஆசிரிய பீடத்திலிருந்த சட்டத்தரணி திரு. பெரி. சுந்தரலிங்கம் நனவாக்கினார். திரு. பெரி. சுந்தரலிங்கத்தின் அயராத உழைப்பினால் பிளிட்ஸ் பத்திரிகையின் வடிவமைப்பு செய்தியில் பளிச்சிட்டது. இவருக்கு உதவியாக திரு. @ இராமச்சந்திரன் பணியாற்றினார். பணத்தை பணம் என்று பாராமல் ‘செய்தி”யை அரங்கேற்றினார் திரு. நாகலிங்கம். 1963ல் செய்தி தனது சொந்த அச்சகத்தை கண்டி, கொழும்பு வீதியில் அமைத்து நாடு பூராவும் வலம் வந்தது. "செய்தி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், திரு. நாகலிங்கம் ‘மலையக காந்தி’ அமரர் கா. இராஜலிங்கத்து டனான, தனது நெருக்கமான தொடர்புகளை தொடர் கட்டுரையாக எழுதிவந்ததை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் திகதி வெளிவந்த கல்கியில் எழுத்துலக மேதை திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைந்த கா. இராஜலிங்கத்தை கெளரவிக்கும் முகமாக கல்கி இதழின் அட்டையிலேயே அவரின் புகைப்படத்தை வெளியிட்டு கட்டுரையும் தீட்டியிருந்தார்.
"தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்யச் சென்றவர்களின் மூன்றாவது
190

கே.வி. மகாதேவா
தலைமுறையில் பிறந்தவர் பூரீகே. ராஜலிங்கம். பொதுவாக இத்தோட்டங்களில் வாழும் மக்கள் முன்பாக கடவுள் தோன்றி, "உனக்கு இலங்கையில் ஒரு தேயிலைத் தோட்டமும் அதன் நடுவில் ஒரு பங்களாவும் வேண்டுமா? அல்லது சொர்க்கலோகத்தில் இடம் வேண்டுமா?” என்று கேட்டால் "சொர்க்கலோகத்தில் இடம் வேண்டாம்; இலங்கையில் ஒரு தேயிலைத் தோட்டமே போதும்" என்று தான் அநேகமாகப் பதில் கிடைக்கும். ஆனால் பூரீகே. ராஜலிங்கம் அவர்களிடம் அதே கேள்வியைக் கேட்டால் “எனக்கு சொர்க்கமும் வேண்டாம், தேயிலைத் தோட்டமும் வேண்டாம். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் ஏழைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்தால் போதும்” என்று கணமும் தயங்காமல் பதில் சொல்லுவார். தீனர்களின் தொண்டர் அவர்” என்று திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி புகழ்மாலை சூட்டியிருந்தார்.
‘செய்தி 1.4.1963 இதழில் ‘மனிதருள் ஒரு மாணிக்கம்’ எனும் தலைப்பில் திரு. நாகலிங்கம் தொடர் கட்டுரை எழுதினார்.
"1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி, மலைகளும், குன்றுகளும் நிமிர்ந்து நின்றன. அந்த சங்குவாரித் தோட்டத்தில், ஒரு வீட்டில் புதுக்குரல் ஒன்று எழுந்தது. உழைத்து, உழைத்து இரத்தம் சுண்டிப் போகும் ஏழைகளுக்காக வாதாட வந்த குரல்தான் அது. திரு. காளிமுத்து காளியம்மாள் தம்பதிகளுக்கு தலைமகனாகப் பிறந்த அவர்தான் இராஜலிங்கம்." என்று கட்டுரையை ஆரம்பித்த அவர், திரு. இராஜலிங்கத்தின் வளர்ப்பு, கல்வி, பாடசாலை, ஆசிரியர் பொறுப்பு, சரஸ்வதி வித்தியாலய ஆரம்பம், இந்திய சேவா சங்கம்,
191

Page 108
ിഞ്ഞപഞഷ
போஸ் சங்கம், இலங்கை இந்திய காங்கிரஸ் உதயம் என்று விரிவுபடுத்தி, அமரர் இராஜலிங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் அங்குலம் அங்குலமாக ரசித்து படம்பிடித்து காட்டியுள்ளார். கடவுள் பக்தி பற்றிய குறிப்பில்; "சுவாமிப் படங்களின் முன்னே பயபக்தியோடு நிற்பார். திருநீற்றுப் பைக்குள் நுழையும் ராஜா'வின் மூன்று விரல்கள், திரிபுண்டரமாக மூன்று கோடுகளை இடமிருந்து வலமாக நெற்றியில் பூசிவிடும். இமைக்கதவுகள் ஒன்றோடொன்று ஆலிங்கனம் செய்யும். இரு கரங்களும் மார்புக்கு நேரே குவியும். நெஞ்சம் இறைவனையே நினைக்க, தலைதாழ்த்தி, மெய்மறந்து மோனப்பரவசத்தில் உள்ளொடுங்கி நிற்பார். இது அவரது நாளாந்தக் கடமை. எதற்கெடுத்தாலும் தெய்வமே என்று சொல்லி மனதில் பேரின்பம் காண்பார்” என்று எழுதும் திரு. ரா.மு. நாகலிங்கம், அமரர் இராஜலிங்கத்தின் அழகுத் தோற்றத்தை வர்ணிக்கையில். "இராஜலிங்கம் பாடசாலைக்கு ஆடையணிந்து வருவதே தனி அலாதி தான். நீண்ட வெள்ளை கால்சட்டை, மேல்சட்டையோடு டையும் கட்டி வருகையில் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு urr(8grt ஒரு வெள்ளைக்காரத்துரை வருகிறாரோ என்ற எண்ணம்தான் தோன்றும். அப்படி ஆடம்பரமாக காட்சியளிப்பார்." என்று குறிப்பிடுகின்றார். இதே ஆடை விஷயம் அவருக்கே விஷமானதை திரு. நாகலிங்கம் இப்படி எழுதியுள்ளார்.
"அக்காலத்தில் தோட்ட நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் லெபர்ட் துரை என்பவரே. அவருடைய அலுவலகத்திற்கு வழக்கம் போல் ஆடம்பரமாக உடையணிந்து கொண்டு போனார் இராஜல்லிங்கம். தன்னுடைய வேலைத் தன்மையையும் தன் கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னார். துரையோ எதற்கும்
192

கே.வி. மகாதேவா
மசியக்கூடியவரல்ல, ஒரேயடியாக மறுத்து விட்டார். உன்னுடைய குறைந்த வருமானத்தில் ஏன் இப்படி ஆடம்பரமாக உடுத்துகிறாய் என்றும் கேட்டு வைத்தார். இராஜலிங்கத்திற்கு அவருடைய பேச்சும் போக்கும் அணுவும் பிடிக்கவில்லை.
"சம்பளத்தைக் கூட்டாவிடில், நான் வேலை செய்யபோவதில்லை” என்று இராஜலிங்கம் கூறியும் லெபர்ட் துரை சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ல; வந்த வழி திரும்பினார்.
"இச்சம்பவம் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதலை உண்டு பண்ணியது. உழைப்பை அடகு வைக்கும் அடிமைத் தொழில் மோகத்தை கிள்ளி எறிந்தார். தம்முடைய வாழ்நாளில் கடைசிப்பரியந்தம்வரை யாரிடமும் கை கட்டி சேவகம் செய்வதில்லை என்று சபதம் செய்து கொண்டார்.
"ராஜலிங்கம்; தந்தை காளிமுத்துவிடம் ஒன்றும் விடாமல் நடந்தவற்றை கூறி, தான் இனிமேல் யாரிடமும் வேலைக்குச் சேரப் போவதில்லை என்றும், தன்னுடைய வருமானத்தை இறுதிவரையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் சொல்லி முடித்தார்.
"அவர், அன்று முதல் ஆடம்பரமாக உடுத்தும் ஆடைக்கு முழுக்கு வைத்து கதருடையை அணிவது எனவும், பிரதிக்ஞை செய்து கொண்டார்”
இப்படியாக, ஈருடல் ஒருயிராக திரு. ராஜலிங்கத்துடன் ஒன்றிவிட்டிருந்த திரு. நாகலிங்கம் அந்த இறுதியாத்திரையை படம்பிடித்துக் காட்டும் மனப்பக்குவம் இன்று அக்கட்டுரையை படிக்கும்போதும் மெய்சிலிர்க்க வைக்கிறது, உள்ளம் நோகிறது.
193

Page 109
Somanasons Alan
"1963ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி திங்கட் கிழமை. சாரி சாரியாக மக்கள், ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தனர். கழுத்து நரம்புகள் விம்மிப் புடைக்க கை முஷ்டியை உயர்த்தி உச்சஸ்தாயில் கோஷமிட்டு செல்லும் ஆர்ப்பாட்ட ஊர்வலமல்ல அது. உரிமைக்குரல் எழுப்பும் ஆவேச ஊர்வலமுமல்ல.
"மக்கள் கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. "இமை விளிம்பில் கண்ணிர் தேங்கி திரையிட்டு பனிப்புகாருக்கு அப்பால் தெரியும் இயற்கைக் காட்சியாக தன் கண் முன்னுள்ள நிலத்தை, மரத்தை, மக்களை மங்கலாக்கி காட்டியது பலருக்கு எதிர்கால அரும்புகளை இடுப்பில் காவிக்கொண்டு தள்ளாடி நடக்கும் தாய்க் குலத்தோரின் கன்னத்தில் காணாறாய்ப் பெருகி, முத்து முத்தாய் விழிநீர் உருண்டது.
"ஜனத்திரள் அசைந்து கொண்டிருந்தது. இதயத்தின் அடிவாரத்தில் துயர அலை அடுத்தடுத்து மோத இடைஇடையே எழுந்த ஏக்கப் பெருமூச்சு நெஞ்சை மேடாக்கி நாசி துவாரத்தை விரிசலாக்கி உஷ்ண காற்றாய் வெளிவந்தது.
“நாளைய சந்ததிகள் மலர் வளையங்களை தூக்கிப் பிடித்த வண்ணம் ஏங்கி கொண்டிருந்தனர். ஏந்திய கம்பத்தில் கொடிகள் கூட பட்டொளி வீசிப் பறக்காமல் துவண்டு ஒட்டி தொய்ந்து கிடந்தது.
"ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து செல்லாமல் கூட்டம் கூட்டமாக நெருக்குண்டு மனித கணம் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒருவர் பாக்கியில்லாமல் எல்லாருடைய முகங்களிலும் சோகம் குழைந்து அப்பப்பட்டிருந்ததுபோல் துல்லியமாகத் தெரிந்தது. மெளனாஞ்சலியோடு கைவீசக்
194

கே.சி. மகாதேவா
கூட திராணியற்றவர்களாக பாதங்களில் தெம்பிழந்தவர் கள்ாக அடியெடுத்து வைத்து சோர்வுற்று நடந்தனர்.
"அந்த ஒன்றரை லட்ச ஜனசமுத்திரத்தின் மத்தியில் நானும் ஒரு துளியாக ஒடுங்கி நடந்தேன். என்னருகில் பேசமுயன்ற சிலரின் கண்டத்துள் சொற்கள் சுழியிட்டு அமுங்குவதை கண்டேன். வாடி தொங்கிய வதனத்தோடு கவலைச் சுமை மனதை அழுத்த, என் நினைவெல்லாம் அந்த ஒரு தியாகியைப் பற்றியே வலமிட்டது.
"மனித உருவில் ஒரு துறவியாக, மக்கள் தொண்டே தனது லட்சியமாகக் கொண்டு அனைவருக்குமாக வழி காட்டிய அந்த தியாகியின் வாழ்க்கை அத்தியாயம் முற்றுப் பெற்றுவிட்டது. உடற்கூண்டிலிருந்து உயிர்ப்பறவை விடுதலை பெற்று விட்டது.
"ஒவ்வொருவருடைய ஆழ்மனதிலும் தன் நினைவுச் சுவடிகளை பதிப்பித்துவிட்டு அந்த ஜிவாத்மா வானுலகம் குடிபுகுந்து விட்டது.
"தோட்டத் தொழிலாளர்களின் 66 for வாழ்வுக்காக SQL til Jnr - வேலை செய்த அந்த திருப்பாதங்கள் நீண்ட ஒய்வை பெற்றுவிட்டன. ஏழை மக்களுக்காக பரிந்து பேசிய அந்த நா இனி தழும்பாது. பாட்டாளி மக்களின் பிரச்சனைகளை பற்றி எழுதிய அந்த மணிக்கரங்கள் இனி பேனாவை பிடிக்காது. சேவையின் பந்தம் அறுந்துவிட்டது. துயருறும் மக்களுக்காக தோளோடு தோள்கொடுத்து போராடிய அந்த உருவத்தை பலர் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு போகின்றனர்.
"தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தோழனை இழந்து விட்டனர்.
“நண்பர்கள் தங்கள் நல்லாலோசகரைப் பறி
195

Page 110
Manador),Adan
கொடுத்துவிட்டனர்.
"தன்னலமற்ற தலைவனை தொழிற் சங்கப் பிரமுகர்கள் நினைத்து பரிதவிக்கின்றனர்.
“ஏழைகள் தங்களை இரவிக்கும் ஆபத்பாந்தவனை எண்ணி ஏங்கி அழுதரற்றுகின்றனர்.
“வந்தவர்களையும் வராதவர்களையும் GSyFrts 1 பிடிக்குள் சிக்கி தவிக்க விட்டுவிட்டு, அமரத்துவம் அடைந்துவிட்டார் மனிதருள் மாணிக்கமான தலைவர் கே. இராஜலிங்கம்.
"என் நெஞ்சில் பழைய சிந்தனைகள் சுழன்று சுழன்று வந்தன. என் குடும்ப நண்பனாய் கால் நூற்றாண்டு காலமாய் ஒன்றித்துப் பழகிவிட்ட அவரின் சொல்லும் செயலும் திரைப்படமாய் நெஞ்சில் ஒடிக் கொண்டிருந்தது. அவருடைய வாழ்க்கை ஒரு பயனுள்ள நூல். நெறிமாறி செல்லும் மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் - வானத்தாரகை” என்று தனது வேதனையை எழுத்துக் களால் வடித்திருக்கிறார் திரு. நாகலிங்கம்.
1951ல் கலைமகள் கி.வா. ஜகந்நாதன் அவர்களின் நட்புக் கொண்ட திரு. நாகலிங்கத்துக்கு 1953களில், கலை உலகத் தொடர்பில் டி.கே.எஸ். சகோதரர்களின் நட்பும் கிடைத்தது. 1963ல் பாவேந்தர் பாரதிதாசனை சந்தித்து நெருக்கமான தொடர்புகளை வளர்த்து, இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா இலக்கிய ஜாம்பவான் களின் நட்பையும் சம்பாதித்து, மலேசியாவில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டிலும் கலந்து கொண்டார்.
பிரபல எழுத்தாளரும், கவிஞருமான தலாத்துஒய கே. கணேஷ் அவர்களுடன் அன்று முதல் இன்றுவரை
196

கே.வி. மகாதேவா
பெருநட்பு கொண்டிருக்கும் திரு. நாகலிங்கத்தை, இந்த நூலை எழுதி முடிக்கும் நேரத்தில் சந்தித்தேன். “நல்லதை நினைத்தேன்; நல்லதையே செய்தேன். எனது சவால்களுக்கு நான் கடைப்பிடித்த பொறுமைதான் கடிவாளமாக அமைந்திருந்தது” என்று உறுதியாகக் கூறிய அவர், தன்னால் கடைசிவரை நிறைவேற்ற முடியாத ஒரு விருப்பம் பற்றியும் சொன்னார்.
"இலக்கிய விருந்தாளிகள் எப்பொழுதும் வீட்டுக்கு வருவார்கள். உதவி கேட்டும் பலர் வருவார்கள். அவர்களுக்கெல்லாம் எந்த நேரத்திலும் மனம் கோணாமல், சளைக்காமல் வயிறு நிறைய ஆக்கி (சமைத்து) போட்டிருக் கிறாள் எனது மனைவி இந்திராணி” என்று திரு. நாகலிங்கம் என்னிடம் பெருமையுடன் கூறியபோது, அவர் கண்கள் பனித்திருந்தன. அவரின் நிறைவேறாத ஆசையும் உண்டு.
95606) உலகத்தோடு தொடர்புடைய eupg55 கலைஞர்கள், அறிஞர்கள், பிரமுகர்கள் எழுதிய பல நூற்றுக்கணக்கான கடிதங்களின் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தி, முத்துக்களாகத் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. அவர் கனவு நனவாகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
எனக்கும் திரு. நாகலிங்கம் - அவர் குடும்பத்துக்கு மிடையே இன்று வரை நீடிக்கும் முப்பத்து ஆறு வருட நட்பை எண்ணி பெருமைப்படுகின்றேன்.
மலையகத் தலைநகர் கண்டியில் ‘செய்தி'யில் சிறிது காலம் பணியாற்றிய எனக்கு திரு. நாகலிங்கத்தின் 'மனிதருள் மாணிக்கம்” கட்டுரையின் சில பகுதிகளை
-15 f 197

Page 111
(
மீண்டும் இங்கு வெளியிடுவதின் மூலம் அந்த ‘மாமனிதன்’ மலையக காந்தி அமரர் இராஜலிங்கத்துக்கு நான் அஞ்சலி செலுத்துவதாகவே நினைக்கின்றேன்.
1963ல் கண்டியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது திரு. நாகலிங்கம் உபதலைவராகி, ஜெகஜோதி வியாபாரம், செய்தி பத்திரிகை சுமைகளுடன் பரவலான இலக்கியப் பணிகளையும் சிரசில் ஏற்றிக் கொண்டார். 1967ல் எழுத்தாளர் மன்ற தலைமைப்பதவி இவரை அலங்கரித்தபோது தனது தலைமையில் கண்டி நகர மண்டபத்தில் தமிழ்ச் சிறுகதை மன்னன் புதுமைப் பித்தனுக்கு விழா எடுத்தார். மகாகவி பாரதியார்மீது பற்றுக் கொண்ட இவர், பாரதியின் பேத்தி திருமதி விஜயபாரதி, கணவர் பேராசிரியர் பி.கே. சுந்தரராஜன் மற்றும் பிரபல எழுத்தாளர் திரு. கு. அழகிரிசாமி ஆகியோரை இவ்விழாவுக்கு அழைத்து கெளரவித்தார். பாரதியாருக்கு தொடர் விழாக்கள் எடுப்பதை தமிழகம் மறந்திருந்த நிலையில்; பாரதி விழாக்களை திரு. நாகலிங்கம் அன்று ஆண்டு தோறும் நடத்தியது இன்றும் மலரும் நினைவுகளாகிறது. ‘செய்தி" புதுமைப்பித்தன் மலரையும் வெளியிட்டிருந்தது.
“செய்தி’யின் ஆரம்ப காலத்தில் co) is எழுத்தாளர், கவிஞர்களின் படைப்புகள் பெருமளவில் வெளிவந்திருந்தாலும் நாடு பூராவுமுள்ள எழுத்தாளர் களுக்கும் அங்கீகாரம் தாராளமாகக் கிடைத்தது. ‘வீரகேசரி’யில் பணியாற்றிய திரு. அன்டன் பாலசிங்கம் (விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர்), ஸ்ரனி, பிரம்மஞானி பெயர்களில் தொடர்ச்சியாக மனோதத்துவ கட்டுரைகளை எழுதிவந்தார். செய்தி பதிப்பகத்தின் முதல் நூல் கவிஞர் சக்தி பாலையா மொழி பெயர்த்த திரு. சி.வி.
198

கே.வி. மகாதேவா
வேலுப்பிள்ளையின் “தேயிலைத் தோட்டத்திலே’ கவிதை நூலாகும். நாடகத்தந்தை தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு சிறப்புமலர், கி.வா. ஜகந்நாதன் மணி விழா மலர், தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வ ராசனின் தணியாத தாகம் நூல், சிலம்புச் செல்வர் ம.பொ. சி. மணிவிழா மலர், கலைப்பேரரசு சொர்ணலிங்கம் மலர் ஆகியவற்றை தனது சொந்தச் செலவில் ‘செய்தி வெளியீடாக வெளிக்கொணர்ந்ததை இன்றும் பூரிப்புடன் கூறி மகிழ்கின்றார்.
நான் ‘செய்தி'யில் பணியாற்றிய காலத்தில், கட்டடக் கலைஞர் திரு.வி.எஸ். துரைராஜா அவர்கள் ‘குத்துவிளக்கு’ எனும் தமிழ்த் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டி ருந்தார். கண்டி ஆஸ்பத்திரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியிலும் பார்மஸிஸ்ட்டாக கடமையாற்றிய அச்சுவேலி திரு. த. நமசிவாயம் எனக்கு மிகவும் நெருக்க மான நண்பர். திரு.வி.எஸ். துரைராஜாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். குத்துவிளக்கு திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகன் அந்தஸ்தில் நமசி நடித்தார். வி.எஸ்.ரி உடனான எனது சந்திப்புகள் - நட்பு கண்டியிலும், கொழும்பிலும் பின்னர் யாழ்ப் பாணத்திலும் தொடர்ந்தன. படம் வெளியானதும் வி.எஸ். துரைராஜா வின் விருப்பத்தின்பேரில் ‘செய்தி’ சிறப்பு மலர் வெளியிட்டது. மலையகத்தில் பதுளையில் வேல்ஸ் தியேட்டரில் குத்துவிளக்கு படம் திரையீடு, மலையக அறிமுக கூட்டம் - பாராட்டுவிழா என்று பல பொறுப்பு களையும் நான் சுமந்தேன். இலங்கையில் தமிழ்த் திரைப்படம் தயாரிப்பது என்பது விலாசம் காணாமற் போகும். ஒரு பரீட்சை. இதில் ‘குத்து விளக்கு’ திரு.வி.எஸ். துரைராஜா அவர்களுக்கு விஷப்பரீட்சையாக முடிந்து
199

Page 112
Siapanason.) Alan
விட்டது.
1967ல் நான் ‘செய்தி'யில் கடமையாற்றியபோது திரு.வி.என். பாலசுப்பிரமணியம் காலமான செய்தி கிடைத்தது. ‘ஈழநாடு’ வார மலரில் *வி.என்.பி பணியாற்றிய காலத்தில் பல சைவக் கோயில்களையும் தரிசித்து, அங்கிருந்தவாறே ‘ஈழநாடு’க்கு தொடர் யாத்திரை கட்டுரைகள் எழுதி வந்தார். அவரின் பிரிவுச் செய்தி கேட்டதும், செய்தியில் அந்த ‘மூன்று எழுத்து மன்னன்’ பற்றி எழுதியிருந்தேன். இதனைப் படித்த ‘ஈழநாடு’ நிர்வாக ஆசிரியர் திரு.கே.பிஹரன் அவர்கள் என்னை நன்றியுடன் பாராட்டிப் பேசியதாக நண்பர்கள் எழுதியிருந்தனர். இந்தப் பாராட்டு, நான் ‘ஈழநாடு’வில் மீண்டும் பணியாற்றத் தொடங்கிய போதும் நேரில் கிடைத்தது. திரு. ஹரன் அவர்களிடமிருந்து இப்படி சக ஊழியர்கள் மனம் திறந்து பாராட்டுப் பெறுவது. கருங்கல்லில் நார் உரிப்பது போலாகும். அப்படி ஒரு அசாதாரண சம்பவம்.
‘ஈழநாடு’வில் நான் இருந்த காலத்திலேயே ‘செய்தி’க்கு வெளிநாட்டு செய்தி விமர்சனத்தை எனது மகள் சாந்தா பெயரில் வாரந்தோறும் எழுதி வருவேன், “ஜெகஜோதி” விற்பனை 'வான்’ யாழ்ப்பாணம் வரும் போது ‘ஈழநாடு’ அலுவலக கட்டிடத்தில்தான் “வான்’ ஊழியர்கள் தங்கியிருப்பார்கள். “செய்தி’க்கு நான் எழுதும் கட்டுரைகளுக்கு மாதந்தோறும் நாற்பது ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. ‘செய்தி'யில் சில சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதி எனக்கு முன்னரே அறிமுகமான திரு.ஈ.கே. ராஜகோபால் ‘ஈழநாடு’வில் என்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார். என்னை ‘செய்தி’க்கு அறிமுகப் படுத்தியதை நான்
200

கே.வி. மகாதேவா
மறக்கமுடியாது. 1966 காலப்பகுதியில் திரு. நாகலிங்கத்தின் நேரடித்தொடர்புகள் பலப்பட ஆரம்பித்தது.
"செய்தி”யை முதலில் வாரம் இருமுறையாகவும் பின்னர் தினசரியாகவும் வெளியிட எண்ணியிருக்கின்றேன். ‘ஈழநாடு’ மாதிரி, மலையகத்திலும் ஒரு தமிழ்த் தினசரி வெளிவரவேண்டும்" என்ற தனது கனவுகளை என்னிடம் வெளிப்படுத்தினார் திருநாகலிங்கம். செய்தித்துறையில் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பினாலும், ‘செய்தி” மீது கொண்டிருந்த பற்றினாலும் நான் மலையகம் புறப்படத் தயாரானேன்.
1967ல் ‘ஈழநாடு’விலிருந்து செய்திக்குப் பணியாற்றச் சென்றபோது எனக்கு உதவியாக இருந்தவர் திரு. கு. இராமச்சந்திரன். இதற்கு முன்னரே திரு. பெரி. சுந்தர லிங்கம் தமது சட்டப்பணிகள் நிமித்தம் செய்தியை விட்டுச் சென்றிருந்தார்.
1967ல் ‘செய்தி ஆசிரியர் பொறுப்பு. வீடு குடும்பம், ஜெகஜோதி கம்பெனி இருந்த குருதெனியாவில். எனது முதல் மாதச் சம்பளம் ரூ. 200. எனக்கு பக்கபலமாக திரு.கு. இராமச்சந்திரன் இருந்தார். சிறிது காலம், வார ஏடாகவும், பின்னர் வாரம் இருமுறையாகவும் செய்தி பவனி வந்தது, அது திரு. நாகலிங்கத்துக்கு பெரிய சவாலாக அமைந்தது.
சில மாதங்களுக்குப் Sløör 60Trit நண்பர் இராமச்சந்திரனும் கொழும்பு திரும்பவே திரு.என். சுரேந்திரன், மலையக எழுத்தாளர் திரு.கே.எஸ். ராஜ", மலையக கவிஞர் மலைத்தம்பி ஆகியோரின் பணி "செய்தி'யில் ஆரம்பித்தது.
அலுவலக நிருபராக திரு. இஸட். எம். ராஸிக் சிறப்பாக கடமையாற்றினார். செய்தியின் அனுபவத்தைக்
201

Page 113
Manador),Adan
கொண்டு லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் மாநில நிருபராக கடமையாற்றுகின்றார். திரு.கே.எஸ். ராஜு செய்தியில் எனக்கு உதவி ஆசிரியராக இருந்தபோது, 'நெடுந்தூரம்’ எனும் நாவல் மூலம் தோட்டத் தொழிலாளரின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டினார்.
முற்போக்கு எழுத்தாளர் திரு. எஸ். அகஸ்தியரின் உணர்வூற்றுருவகச் சித்திரங்கள் 16) செய்தியை அலங்கரித்தன. திரு. மானா மக்கீன் 'எம்திறீ’ எனும் பெயரில் எழுதினார். திரு.எஸ். அன்ரனி ஜீவாவின் படைப்புகளும் தொடர்ந்து வந்தன. ஒரு தடவை கொழும்பில் மேடையேற்றப்பட்ட நாடகமொன்றுக்கு நான் செய்தியில் விமர்சனம் எழுதியபோது திரு.எம்.எம். மக்கீன் அவர்கள், நறுக்குத் தெறித்தாற்போல் ஒரு தபாலட்டையில், "விமர்சனம் படித்தேன். எனது கால்கள் இப்பொழுது நிலத்தில் இல்லை” என்று பாராட்டியது இன்றும் பசுமையாக இருக்கிறது.
தமிழக எழுத்தாளர்கள், அறிஞர்கள் கண்டி வரும்போது, திரு. நாகலிங்கத்தின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். அவர்கள் திரு. நாகலிங்கம் இல்லம் சென்று உணவருந்தாமல் தமிழகம் திரும்பமாட்டார்கள். செய்தி அலுவலகத்துக்கும் விஜயம் செய்வார்கள். குறிப்பாக கலைமகள் கி.வா. ஜெகந்நாதன், சிலம்புச் செல்வர் திரு.ம. பொ. சிவஞானம், எழுத்தாளர் திரு.கு. அழகிரிசாமி, தீபம் திருநா. பார்த்தசாரதி ஆகியோரின் சந்திப்பும் தொடர்பும் ‘செய்தி மூலம் எனக்கு கிடைத்தது.
திரு.கி.வா. ஜகந்நாதன் ஒரு தடவை ‘ஈழநாடு அலுவலகத்துக்கு விஜயம் செய்திருந்தார். நிர்வாக ஆசிரியர் திரு.கே.பி. ஹரன் அவர்கள் ஆசிரியர் பகுதியினரை
202

கே.வி. மகாதேவா
அறிமுகப்படுத்தி, ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார். திரு.கி.வா. ஜகந்நாதன் அவர்கள் எங்களுக்காக ஆற்றிய சிறிய உரையில். “ஒரு கிரஹப்பிரவேசம் நடக்கிறது. சரி. அது நம்ம வீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். வீட்டுக்குள் வரும் விருந்தாளியை. வாசலில் வரவேற்கும் நாம். வாங்க, வாங்க. என்று அழைத்து பாத்ரூம், டாய்லட்டையா முதலில் காண்பிப்போம்.? வந்தவரை வரவேற்று, கணபதிஹோமம் நடைபெற்ற இடம், பின்னர் பூஜை அறை, ஒவ்வொரு அறைகள், சமையலறை, மொட்டை மாடி. என்றுதானே காண்பிப்போம். அது மாதிரித்தான் பத்திரிகைகளும். எடுத்த எடுப்பிலேயே ‘அசிங்கத்தை' முதலில் வெளியிடாமல், தாமரைப்பூவின் இதழ்களை ஒவ்வொன்றாக விரிப்பது போல், நல்ல. விஷயங்களை வாசகர்களுக்கு முதல் பக்கங்களில் அளிக்க வேண்டும். கடைசியில்தான், சிறிய தலைப்புகளில் மற்றவை வரவேண்டும்." என்று அறிவுரை கூறியது செய்தியில் அவரை நான் சந்தித்தபோது நினைவுக்கு வந்தது.
தமிழகத்திலிருந்து ‘செய்தி’க்கு பலதரப்பட்ட கட்டுரைகள், செய்தித் தொகுப்பு அனுப்பியவர்களில் மணிக்கொடி காலத்தின் திரு. நாரணதுரைக்கண்ணன், திரு. சுப்பிரமணியன் மற்றும் ம.பொ.சி, கு. அழகிரிசாமி, அகிலன், மாயாவி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் திரு. நாகலிங்கம் அவர்களுக்கு கடிதங்கள் எழுதுவார்கள். இதுபோல தமிழகம், மலேசியாவிலிருந்தும் திரு. நாகலிங்கத்துக்கு கடிதங்கள் வரும். இவர்களில் குறிப்பாக நடிகர் அவ்வை தி.க. ஷண்முகம், கலைமகள் ஜகந்நாதன், தீபம் பார்த்தசாரதி, சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம், அகிலன், மாயாவி,
2O3

Page 114
naaloonsaan
கு. அழகிரிசாமி ஆகியோரின் ஏராளமான கடிதங்களை எனக்கும் படிக்க கொடுப்பார். ‘செய்தி’க்காக இவர்கள் பலரையும் பல தடவைகள் சந்தித்துள்ளேன்.
இத்தொடர்புகளில் மறக்க முடியாதது அறிஞர் அண்ணா எழுதிய அவரது முதல் நாவலை செய்தி'யில் வெளியிட்டதுதான்!
நான் ‘செய்தி'யில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில், அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்’ எனும் அவரது முதல் நாவலை செய்தி’யில் வெளியிட திரு. நாகலிங்கம் முயற்சி மேற்கொண்டார். இது சம்பந்தமாக நடிகர் திரு. தி.க, ஷண்முகம் அவர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. அந்தக் கடிதத் தொடர்பின் சில பகுதிகளை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். 02.06.1967 திகதியிட்டு திரு.தி.க. ஷண்முகம் "செய்தி’க்கு எழுதிய கடிதத்தில்.
"திரு.சி.என்.ஏ. அவர்கள் ஏப்ரல் 23ஆம் தேதிதான் வந்தார். அன்று அவர் இல்லம் சென்றேன். பெரும் கூட்டம். சந்திக்க முடியவில்லை. தாமதம் ஏற்படக் கூடாதெனக்கருதி அன்றே தங்கள் கடிதத்தையும் வைத்து அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை. பிறகு அவருடைய அந்தரங்க காரியதரிசியை சந்தித்தேன். தினமும் ஐந்நூறுக்கு மேற்பட்ட கடிதங்கள் வருவதாயும் எல்லா வற்றையும், பார்க்க முடியாமல் சிரமப்படுவதாயும் அறிந்தேன். நேற்று திரு.சி.என்.ஏ. அவர்களை கோட்டையி லுள்ள அலுவலகத்தில் சந்தித்தேன். திரு.சி.என்.ஏ. அவர்கள் அனுமதி அளித்து அவர் கைப்பட எழுதிய கடிதத்தை அடுத்த தபாலில் அனுப்புகின்றேன்" என்று
204

கே.வி. மகாதேவா
குறிப்பிட்டிருந்தார்.
1967ம் ஆண்டு ஜூன் 2வது வாரத்தில் நடிகர் ஷண்முகம் அவர்கள் ‘செய்தி’க்கு எழுதிய கடிதத்தில்; "முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அன்புக்குரிய அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய “குமாஸ்தாவின் பெண்’ என்னும் முதல் நாவலை தங்கள் ‘செய்தி வார இதழில் வெளியிட முன்வந்தமைக்கு பெரிதும் மகிழ்கிறோம். என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இக்கடிதத்துடன் தமிழக முதலமைச்சர் அண்ணா அவர்களின் அனுமதிக் கடிதமும் வந்திருந்தது. 16.1967 திகதியிட்டு அண்ணா அவர்கள் எழுதிய கடிதத்தில்;
༢༽ ཚེ་ S-:පූ عـ G6
ཐེ་ལན་པ་དུར་ ༧ a 8་ན་ཚེ་ KON -A - ( ്\
غاح یہ جیم خاص صلاحی
《༡༩ལ་ ཏན་)དུས་པ་ཙ༢
լ (Կլէ7.
ഷ്ണീ క్టీస్
88جع
அண்ணா கடிதம்
குமாஸ்தாவின் பெண்’ என்ற கதையினைத் தங்கள் "செய்தி’ எனும் இதழில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அவர் கைப்பட எழுதியிருந்தார்.
நடிகர் திரு. தி.க, ஷண்முகம் அவர்கள் திரு.
205

Page 115
$(
நாகலிங்கம் அவர்களுக்கு தொடர்ச்சியாக எழுதும் கடிதங்களில் தமிழ்நாட்டில் அவ்வப்போது கலையுலகில் தலை தூக்கும் சம்பவங்களை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுவார். நடிகவேள் எம். ஆர்.ராதா அவர்கள் திரு.எம்.ஜி.ஆர். அவர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாகவும் சுடச்சுட எழுதி இருந்தார்.
எம்.ஆர்.ராதா-எம்.ஜி.ஆர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ‘செய்தி'யில் ஆதாரபூர்வமாக செய்திகள் வெளியிட் விரும்பி திரு. நாகலிங்கம் அவர்கள் திரு.தி.க. ஷண்முகத்துடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து 19.1.1967ல் திரு. ஷண்முகம் கடிதம் எழுதியிருந்தார். கலையுலகில் இச்சம்பவம் சரித்திரம் என்பதால் அன்றைய நிலை எப்படி இருந்தது என்பதை இன்று எண்ணிப் பார்ப்பதும், காலத்தின் கட்டாய தேவை. திரு. ஷண்முகம் எழுதிய கடிதத்தில்;
எம்.ஜி.ஆரை கொலை செய்ய எம்.ஆர். ராதா சுட்டர்
"திரு. எம்.ஜி.ஆர். அவர்களை திரு. எம்.ஆர்.ராதா கொலை செய்யும் நோக்கத்தோடுதான் சுட்டிருக்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவர் இறந்து விட்டதாக எண்ணித்தான் தன்னையும் சுட்டுக் கொண்டு இருக்கிறார். எம்.ஜி.ஆர். அவர்கள் பூரணகுணமடைய இன்னும் ஒரு மாதமாகும். எனவே தேர்தல் கூட்டங்களில் அவர் வந்து கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் தேர்தலில் நிற்கிறார்.
“நான் அங்கு விசாரித்ததில் படசம்பந்தமான தகராறுகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து
206

கே.கி. மகாதேவா
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டுமென்ற வெறியினால்தான் ராதா இவ்வாறு செய்து இருக்க வேண்டும். வேறு தனிப்பட்ட முறையில் அவர்களுக்குள் விரோதம் எதுவும் இல்லை. இறைவன் திருவருள் துணை இருந்ததால் எம்.ஜி.ஆர். காப்பாற்றப்பட்டார். இன்று முற்பகல் நான் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்தேன். கழுத்தில் பிளாஸ்டர் போடப்பட்டிருக்கிறது. உடல் நலத்தோடுதான் இருக்கிறார். பேச முயன்ற அவரை நான்தான் பேச வேண்டாமென்று தடுத்துநிறுத்தினேன். பேசக்கூடாது என்பதுதான் டாக்டர்களின் முக்கியமான வேண்டுகோள். அவரை வைத்திருக்கும் அறையினுள் நடமாடிக் கொண்டுதாணிருக்கிறார். பேசவும் முடியும். உணர்ச்சி வசப்பட்டவரானதால் பூரண ஒய்வு எடுக்க வேண்டுமென்ற எண்ணத்தோடும், தாடையில் அசைவும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் டாக்டர்கள் தடுத்திருக்கிறார்கள். இன்னும் பதினைந்து நாட்களில் அவர் வீடு திரும்பக் கூடும்.
"அவரது துயரத்தினால் வருந்தும் இலங்கை ரசிகர்களுக்கு இந்த செய்தியைதாங்கள் சுருக்கமாக “செய்தி'யில் அறிவிக்கலாம். ராதாவும் பிழைத்துக் கொண்டார்” என்று கடிதத்தில் திரு. ஷண்முகம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
207

Page 116
ിഞ്ഞിപോക
Snille jenter
சர்வதேச மகளிர் தினத்தில் நோர்வே பேத்தி ஜனனி மோகன் நடனமாடிய காட்சி (செய்தி : 53ம் பக்கம்)
208
 

கே.வி. மகாதேவா
个外212002 o/ዀነጧዶ”* &ബി.
malam ( hدرج 0 ہاوالمغربمہم
18 6 ہر مہم. Act vu
'sa-raises MW
&്സ
ÉÁ(**ጥu }ካ፬,ሳነd &q &ng,
ധിman& (,
{
{{hി,
பிரெஞ்சு பேரன் திருத்தனிகேஸ்வரன் சந்தோஷ் எழுதிய கடிதம் செய்தி : 53ம் பக்கம்)
209

Page 117
  

Page 118
1940இல் மட்டக்களப்பில் பிறந்து, பதினோராவது வயதிலேயே பத்திரிகை எழுத்துத் துறையில் நுழைந்து, இருபத்தோராவது வயதில் பத்திரிகை யாளராகி, சுமார் முப்பது வருட காலம் அனுபவம் பெற்று, தாம் எதிர் நோக்கிய சம்பவங்களை - சந்திப்புகளை நினைவலைகள் மூலம் எம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கிழக்கு, வடக்கு, மலையகம் என்று பரவலாக பத்திரிகை அனுபவம் பெற்ற திரு. மகாதேவா, தமிழ்நாட்டிலும் முத்திரை பதித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஈழநாடுவில் 21 வயதில் இணைந்து உதவி ஆசிரியராகி, செய்தி ஆசிரியராகவும் உயர்ந்த இவர், கண்டியிலிருந்து வெளிவந்த செய்தி பத்திரிகை யிலும் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி uqairemtmtrrr.
பத்திரிகை உலகில் அவர் காட்டிய துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டது. ஈழ நாடு பத்திரிகை யின் தகனமும், மீளுயிர்ப்பு ஆவணப்படுத்தப்பட்டுள் ளது. நினைவலைகள் பத்திரிகையாளருக்கும் பெருமை சேர்ப்பது.
மூத்த பத்திரிகையாளர்
212
 


Page 119

ஆவணத்தினை எழுதுவதற்கு கைமை பெற்றவர் கே.ஜி.மகாதேவா.
வயதிலேயே பத்திரிகைத்
யத் தமது பணியாகவும் ாகவும் தைரியத்துடன் தடுத்தார். அத்துறையிலிருந்து
அந்நியப்படுத்தாத ஒரு கயைத் தொடர்கின்றார்
சந்தித்த பல நெருக்கடிகளிலும் ஈழநாடுவின் செய்திப் பிரிவில் ற்றியுள்ளார். அவர் எழுத்துப் பணி தும், பத்திரிகைத் தமிழுடன்
பிணைந்தது. செய்திகளை வாசகர்
க்கு வாலாயமாயிற்று
தமிழிலேயே இந்த ஆவணம்