கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூலியல் பதிவுகள்

Page 1

-
--

Page 2

நூலியல் பதிவுகள்
என். செல்வராஜா
இணை வெளியீட்டாளர்கள்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம்.
சிந்தனை வட்டம் இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா.
சிந்தனை வட்டத்தின் 212வது வெளியீடு

Page 3
நூலியல் பதிவுகள்
ஆசிரியர் :
பதிப்பு :
இணை வெளியீடு :
அச்சுப்பதிப்பு :
அட்டை வடிவமைப்பு : ISBN :
பக்கங்கள் :
விலை :
Nooliyal Pathivukal
என். செல்வராஜா முதலாம் பதிப்பு - நவம்பர் 2005 அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம்.
சிந்தனை வட்டம். 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, பூரீலங்கா.
சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா.
எஸ். கெளதமன்
955-8913-28-6
104
200/- E 5.00
Subject : Selected eleven articles on book publishing industry, copy editing, ISBN allocation, Book Depositories, and about various publishing histories of
Sri Lankan Tamils at home and abroad,
Title : Author : Printers & Publishers:
Co. Publishers:
Edition: Language : Cover Design : ISBN : Pages :
Price:
Nooliyal Pathivukal Nadarajah Selvarajah. Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. Ayothy Library Services Luton, United Kingdom: 1st Edition, November 2005. Tamil
S. Gauthaman
955-893-28-6
104 s
200/- E 5.00
C. N.Selvarajah, 2005
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission
of the author.

பதிப்புரை
சிந்தனை வட்டத்தின் 200 வது நூல் வெளியீட்டு விழா கடந்த 2005 செப்டெம்பர் 11-ம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றபோது ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களை சர்வதேசமட்டத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறைகள் பற்றியும், அதேபோல சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களின் உணர்வுபூர்வமான ஆக்கங்களை ஈழத்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன. இந்த அடிப்படையில் கடந்த செப்டெம்பர் 18-ம் திகதி முதல் தேசிய பத்திரிகையான ‘நவமணி'யில் "கடல் கடந்த ஊடகங்களில்’ எனும் களத்தினை ஆரம்பித்து மேற்குலக நாடுகளின் தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான உணர்வுபூர்வமான ஆக்கங்களை மறுபிரசுரம் செய்து வருகின்றேன்.
இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் தரமான நூல்களை இலங்கையில் வெளியிடவும் ‘சிந்தனை வட்டம்” முடிவெடுத்துள்ளது. இதனி முதற்படியாக ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் "அயோத்தி நூலக சேவைகள்’ அமைப்புடன் இணைந்து பரிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும் , பனினூலாசிரியருமான திரு எண். செல்வராஜா அவர்களுடைய நூலியல் பதிவுகள்’ எனும் நூலினை சிந்தனை வட்டத்தின் 212 வது வெளியீடாக வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்நூல் தனிப்பட்ட முறையில் நூலாசிரியரின் 15 வது நூலாகும்.
என். செல்வராஜா 03

Page 4
எழுத்தியல் வித்தகர் எண். செல்வராஜா அவர்கள் நூலகவியல்’ துறையில் விசாலமான பணியினை ஆற்றிவருகின்றார். கிராம நூலகங்களின் அபிவிருத்தி, நூலகப் பயிற்சியாளர் கைநூல், கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான கைநூல், நூலகர்களுக்கான வழிகாட்டி, ஆரம்ப நூலகர் கைநூல், யாழ்ப்பாண பொதுநூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு போன்ற நூலகவியல்’ தொடர்பான பல அரிய நூல்களைத் தந்துள்ள இவர் நூலியல் சம்பந்தமாக நூல்தேட்டம்’ எனும் தலைப்பில் மூன்று நூல்களை எழுதி ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள மூவாயிரம் நூல்களை ஆவணப்படுத்தி தமிழ் இலக்கிய வரலாற்றில் அழியாத சுவட்டினைப் பதித்துள்ளார்.
நூலியல், நூலகவியல் தொடர்பான இவரினி அனுபவத்துடன் இணைந்த பயனுள்ள தகவல்களைத் தருவதாக “நூலியல் பதிவுகள்’ எனும் இந்நூல் அமைகின்றது. நூல்களை வெளியிடக் கூடிய வெளியீட்டாளர்களுக்கும், நூல்களை எழுதவுள்ள எழுத்தாளர்களுக்கும், நூலகங்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அவசியமான கையேடாக இது திகழும் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்நூலியல் பதிவில் மொத்தமாக பதினொரு கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கட்டுரைகளும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ்மொழி ஊடகங்களில் இடம் பெற்றவையாகும்.
இந்த அடிப்படையில் இந்த நூலினை “சிந்தனை வட்ட வெளியீடாக வெளியிடுவது குறித்து மிகவும் பெருமையடையும் அதே நேரத்தில் சிந்தனை வட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு வாசக நெஞ்சங்களாகிய நீங்கள் தரும் ஆதரவினை இந்நூலுக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்.
அன்புடன் உங்கள்
கலாபூஷணம் புனினியாமீனி
முகாமைத்துவப் பணிப்பாளர் சிந்தனை வட்டம் 14, உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை.
炽2005。
04 நூலியல் பதிவுகள்

முன்னுரை
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் பதினொரு கட்டுரைகளும் புகலிடத்தின் பல்வேறு ஊடகங்களிலும் அவ்வப்போது பிரசுரமானதும், வானலைகளில் ஒலிபரப்பானதும், கருத்தரங்குகளில் உரைக்கப் பெற்றதுமான எனது படைப்புக்களில், நூலியல் தொடர்பானவை என்று நான் கருதியவற்றில் தேர்ந்ததொரு தொகுப்பாகும்.
தொழில்துறை ரீதியாக, நூலகதகவல் தொழில்நுட்பத்துறையிலே கல்வி பயின்று நூலகராகப் பணியாற்றிய காலந்தொட்டே வெளியீட்டுத்துறையுடனும், நூலியல் துறையுடனும் என்னிடம் ஒரு உள்ளார்த்தமான ஈடுபாடு இருந்து வந்துள்ளது. நான் அறியாமலேயே என்னை அது ஈழத்து எழுத்தாளர்களுடனும், வெளியீட்டாளர்களுடனும் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தத் தூண்டிவந்துள்ளது. அவர்களது கஷ்ட நஷ்டங்களைக் கூர்ந்து அவதானித்து அத்துறையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்ள மறைமுகக் காரணியாகவும் அது இருந்து வந்துள்ளது.
பின்னாளில் நானே வெளியீட்டுத்துறையில் ஈடுபட்டு அந்த அனுபவங்களை சுவாரஸ்யமாக ஏற்றுக்கொண்டு, துவளாது படியேறவும் எனக்கு அந்த நூலியல், வெளியீட்டுத்துறை பற்றிய ஆழ்ந்த ஈடுபாடு கைகொடுத்து வந்துள்ளது.
இதிலுள்ள பதினொரு கட்டுரைகளும் நூலியல் துறையில் என்னால் உள்வாங்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. புகலிட வாழ்வியல் சூழலில் எழுதப்பட்டனவாகையால் ஆங்காங்கே சில கட்டுரைகளில் எனது உதாரணங்களில் சில தாயகம் சார்ந்ததாக இராமல் போகலாம். ஆனாலும் நாம் எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைகளின் அடித்தளம் ஒன்றேயாகும் என்ற வகையில் அவை எவருக்கும் பொருந்துவனவாகும் என்று திடமாக நம்புகின்றேன்.
இத்தொகுப்பிலுள்ள ஈழத்துத் தமிழ்ப் படைப்புகளில் நூலியல் அம்சங்கள், புகலிட வெளியீடுகளில் நூலாசிரியர்களும், நகலாசிரியர்களும் ஆகிய இரு கட்டுரைகளிலும் நூல் வெளியீட்டுத்துறையில் எம்மவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டுள்ளன. சில இடங்களில்
என். செல்வராஜா 05

Page 5
பிரச்சினைகளை எடுத்துக்காட்ட உண்மைச் சம்பவங்களை நேரடி உதாரணங்களாகப் பயன்படுத்தியிருக்கின்றேன். அந்த உதாரணங்கள் எனது கருத்துக்கு வலுச்சேர்ப்பதற்காகவேயன்றி எந்தவொரு நிறுவனத்தையோ தனி நபர்களையோ சாடுவதற்காகவல்ல என்பதையும் இங்கு வெளிப்படையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
எம்மிடையேயுள்ள கல்வெட்டுப் பாரம்பரியம் பற்றிய கட்டுரையும், வாழும் போதே கெளரவிப்போம் என்ற கட்டுரையும் தாயக வெளியீடுகளுக்கு புலம்பெயர்ந்ததமிழர் எவ்வாறு உதவலாம் என்ற சிந்தனையை புகலிடத்தில் தூண்டும் நோக்கில் எழுதப்பட்டது. இக்கட்டுரையின் தாக்கம் ஆரோக்கியமான பின்விளைவுகளை எம்மவரின் மத்தியில் எழுப்பியமையை இங்கு அவையடக்கத்துடன் பதிவு செய்ய வேண்டியதும் எனது கடமையாகும்.
வடபுலப்பெயர்வும் அது தொடர்பான இலக்கியங்களும், ஈழநாடு என்ற ஆலமரம், அயோத்தி நூலகசேவையின் நூலியல் பணி, மலேசிய நூல் வெளியீட்டில் எம்மவரின் பங்களிப்பு ஆகிய கட்டுரைகள் வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் எம்மவரின் படைப்பிலக்கிய முயற்சிகளை பதிவுசெய்யும் நோக்கில் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச தராதர நூல் எண் வழங்கல், சட்ட வைப்பகங்கள் ஆகியவை தொடர்பான இரு கட்டுரைகளும் பொதுவாக நூல்வெளியீட்டாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விடயங்களைக் கூறுகின்றது.
இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும், இன்றைய தினத்தில் வெளியீட்டாளர்களாகவும், நூல் வடிவமைப்போராகவும், படி திருத்துனராகவும், பதிப்பாளராகவும், முதலீட்டாளராகவும், விநியோகத்தராகவும் பல்வேறு பொறுப்புக்களையும் தானே தனிமரமாய்த் தாங்கி நிற்கும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களை மனதில் நிறுத்தியே நூலுருவில் ஒருங்கு திரட்டித் தரப்பட்டுள்ளன.
உடத்தலவின்னை, சிந்தனைவட்டம் வெளியீட்டகத்தின் தாபகர் நண்பர் பீ.எம்.புன்னியாமீன் அவர்களின் அயராத உழைப்பினால் இன்று இது நூலுருவாகியுள்ளது. சிந்தனை வட்டத்தின் 212 வது நூலாக இது உங்கள் கரங்களை வந்தடைகின்றது. அவருக்கு எனது நன்றிகள்.
என்.செல்வராஜா நவம்பர் 05, 2005
O6 நூலியல் பதிவுகள்

görsonraffuj ugibgö
நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் பணியொன்றினை, தமிழரான தனியொருவரால் மேற்கொள்ளவும் முடியும் என்பதை செயலில் காட்டி சாதனை படைத்து வருபவர் மூத்த நூலகவியலாளரான திரு. எனி.செல்வராஜா அவர்கள். ஈழத்தவரின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியை 1990இல் தொடங்கி 2005 வரை மூன்று தொகுதிகளை, ஒவ்வொன ரிலும் ஆயிரம் நூலகளாக ‘நூல்தேட்டம்' எனிற பெயரில் இவர் வெளியிட்டுள்ளார்.
1970களில் இலங்கை நூலகச் சங்கத்தினி நூலகவியல் நூலக விஞ்ஞானத் துறையில் டிப்ளோமா பயிற்சி பெற்ற இவர், சுன்னாகம் இராமநாதன் பெணிகள் கல்லூரி, சர்வோதய யாழ். மாவட்ட நூலகம் ஆகியவற்றில் பணியாற்றிய பின்னர் இலங்கை உள்ளுராட்சி அமைச்சின் நூலகர் பதவியை ஏற்று சிலகாலம் திருமலை மாவட்டத்திலும் பதவி வகித்தார்.
1981 பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபையினர் UNDP Volunteer Project இன் கீழ் இந்தோனேஷியாவிற்கு கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகச் சென்று, அங்குள்ள பணிடுங் மாநிலத்தில் கிராம நூலகத் திட்டமொன்றை வெற்றிகரமாக அறிமுகம் செய்து வைத்தார்.
1982இல் நாடு திரும்பிய பின்னர், இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்தின் யாழ். மாவட்ட மத்திய நூலகப் பொறுப்பாளராகப் பதவியேற்று 12“கிளை நூலகங்களை’ UNESCO திட்டத்தின் உதவியுடன் உருவாக்கியிருந்தார். 1983 இல் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகப் பொறுப்பாளர் பதவியை ஏற்ற இவர் குடாநாட்டின் போர்ச் சூழலால் 1990இல் கொழும்பிற்கு குடும்பத்துடன் guld6)UUj65.stj. 9s.Jgth International Centre for Ethnic Studies, 963) சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் நூலகப் புனரமைப்பைப் பொறுப்பேற்று அந்நிறுவன வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருந்தார்.
என். செல்வராஜா 07

Page 6
யாழ்ப்பாணப் பொதுநூலக ஆலோசனைக் குழு உறுப்பினர், இலண்டன் தமிழர் தகவல் நிலைய நூலக சேவைகளின் ஆவணக் காப்பகப் பிரிவின் இயக்குநர், ஜேர்மனியிலுள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் சங்க ஆலோசகர், ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கக் காப்பாளர், அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகர்-நிர்வாக இயக்குநர் என்னும் பல பதவிகளை சமூக நோக்குடன் வகித்துவந்துள்ள திரு. செல்வராஜா, நூல்தேட்டம் 4வது தொகுதியின் தொகுப்புப் பணியினையும், ஈழத்தமிழரின் ஆங்கில நூல்களைப் பட்டியலிடும் பணியினையும், மலேஷிய எழுத்தாளர் சங்கத்துக்காக, மலேசிய நூல்தேட்டம் ஒன்றினைத் தொகுத்து வெளியிடும் பணியினையும் தற்போது மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் IBC அனைத்துலக ஒலிபரப்புச் சேவையில் வாராந்த “காலைக் கலசம்” இலக்கியத் தகவல் திரட்டினை 2002 முதல் வழங்கி வருகிறார். தாயகத்திலும் புகலிடத்திலும் ஊடகங்களில் பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். அவற்றின் தேர்ந்த ஒரு தொகுப்பாக இந்நூலிலுள்ள கட்டுரைகள் அமைகின்றன.
நூல்தேட்டம் (மூன்று தொகுதிகள்), உருமாறும் பழமொழிகள், கிராம நூலகங்களின் அபிவிருத்தி, நூலகப் பயிற்சியாளர் கைநூல், கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான கைநூல், நூலகர்களுக்கான வழிகாட்டி, சனசமூக நிலையங்களுக்கான கைநூல், ஆரம்ப நூலகர் கைநூல், யாழ்ப்பாணப் பொது நூலகம்- ஒரு வரலாற்றுத் தொகுப்பு, மலேசியத் தமிழ் இலக்கியம் (தேசம் (food).55g), A select Bibliography of Dr. James T. Rutnam, Rising from the Ashes, ஆகியவை திரு செல்வராஜா அவர்களால் யாழ்ப்பாணத்திலும் இங்கிலாந்திலும் எழுதி வெளியிடப்பட்ட நூல்களில் சிலவாகும்.
திரு செல்வராஜாவின் ஈரலக சேவை, எழுத்துப்பணி, வெளியீட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கெளரவிக்கும் வகையில் 2004இல் கனடாவின் “தமிழர் தகவல்” சிறப்பு விருதும், 2005இல் இலங்கையில் சிந்தனை வட்டம் “எழுத்தியல் வித்தகர்’ விருதும் வழங்கப்பட்டன.
தற்போது தமது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வரும் இவர் பிரித்தானியாவின் (Royal Mal) தபால்துறையின் அந்நிய நாணயப் பிரிவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.
சட்டத்தரணி ஏ.எம். வைஸ் தலைவர் மத்திய இலங்கை தகவல் பேரவை கணிடி .
08 நூலியல் பதிவுகள்

O.
O2.
O3.
04.
OS.
06.
07.
08.
09.
10.
11.
உள்ளே.
ஈழத்துத் தமிழ்ப்படைப்புகளில் நூலியல் அம்சங்கள் ஈழத்தின் நூல்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டுப் பாரம்பரியம்.
ஈழத்தின் வடபுலப்பெயர்வும், அது தொடர்பான இலக்கியங்களும். ஈழநாடு என்றோர் ஆலமரம். புகலிட வெளியீடுகள் நூலாசிரியர்களும், நகலாசிரியர்களும். மலேசியாவில் தமிழ்நூல்கள்: ஆவணப்படுத்தல் பற்றியதொரு தேடல் மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழரின் பங்களிப்பு நூலியல் - நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி. தமிழ்நூல் வெளியீடுகளும் சட்ட வைப்பகங்களும் தமிழ்நூல் வெளியீடுகளும் - அவற்றுக்கான சர்வதேச தராதர நூல் எண் (ISBN) வழங்கலும். வாழும் போதே கெளரவிப்போம்.
என். செல்வராஜா 09

Page 7
நூலாசிரியருடனான சகவித தொடர்புகளுக்கும்.
SW. Selvarajah 48 Halluvicks Rpad. C'UqO9No (Bedfordshire СU 2 9 (BH United Kingdom
Telephone : 0044 - 1582 703 786 E-mail:selvan(antl world.com
O நூலியல் பதிவுகள்

ஈழத்தத் தமிழ் படைப்புக்களில் நாலியல் அம்சங்கள் சில அவதானிப்புகள்
வளர்ந்து வரும் எமது ஈழத்துத் தமிழ் நூலியல் முயற்சிகள் பல, சர்வதேச அரங்கில் தனித்துவம் பெற்று போற்றப்பட்டு வருகின்றன. சர்வதேச ரீதியில் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் பெரும் பங்காற்றும் ஒரு வரலாற்று முக்கியத்துவமான காலகட்டத்தில் நாம் இன்று இயங்குகின்றோம். சமகாலத்தில் தமிழில் போரிலக்கியம் படைக்கும் ஒரேயொரு இனமாக இன்று ஈழத்தமிழர்களான நாம் தான் வரலாற்றில் பதிவுபெற்றுள்ளோம். இந்நிலையில் அந்த வரலாற்றைப் பதிவாக்கும் முன்னெடுப்பில், நூலியல் துறையில் நாம் அறிந்தோ அறியாமலோ விட்டுச்சென்ற தவறுகளை இனம் கண்டு முடிந்தவரையில் திருத்திக் கொள்ள இச்சிறு கட்டுரை உதவலாம் என்று நம்புகின்றேன்: أم.
முதலாவதாக நான் சுட்டிக்காட்ட விரும்புவது, சர்வதேச தராதர நூல் எண் ISBN வழங்கும் விடயமாகும். இந்த எண் வழங்கலை ஈழத்திலிருந்து அண்மைக்காலங்களில் வெளிவரும் பெரும்பான்மையான நூல்கள் கடைப்பிடிப்பது ஆரோக்கியமான விடயமாகும். இங்கே கவலைக்குரிய விடயமென்னவென்றால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழக நூல் வெளியீட்டாளர்களின் மூலம் தம் நூலைப் பதிப்பிக்கும் எம்மவர்கள் இவ்விடயத்தில் அக்கறைப்படுவதில்லை. உதாரணமாக தமிழகத்தின் மணிமேகலைப் பிரசுரத்தினர் எம்மவரின் நூல்களை அதிகம் பிரசுரிக்கின்றார்கள். அவர்கள் இந்த நூல் எண் வழங்கலில் ஆர்வமற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். ஐ.எஸ்.பீ.என். வழங்குவதன்
என். செல்வராஜா 11

Page 8
மூலம் எழுத்தாளர் தனது நூலை சர்வதேச அரங்கில் பதிவுசெய்யும் வாய்ப்பை இலவசமாகப் பெறுகின்றார். இந்த எண்ணை நாம் வாழும் நாட்டிலுள்ள தேசிய நூலகத்திடம் விண்ணப்பிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நூலுக்கு வழங்கப்படும் 10 இலக்கம் கொண்ட இந்த எண்ணை நூலின் விபரங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் நூலின் தலைப்பின் பின்பக்கத்திலும் (2ம் பக்கம்), பின் அட்டையின் இடதுபக்க கீழ் மூலையிலும் 14 பொயின்ட் அச்சில் குறிப்பிடல் வேண்டும் என்பது பொது விதியாகும்.
அடுத்ததாக, பதிப்பு விடயம் தொடர்பான ஒரு முக்கிய குறிப்பை வழங்க விரும்புகின்றேன். ஒரு நூலை வெளியிடும் ஆண்டும், பதிப்பு விபரங்களும் ஒரு நூலின் தலைப்பைப் போன்று முக்கியமான அம்சங்களாகும். ஒரு நூலை வெளியிடுபவர் இந்தத் தகவலை தலைப்புப் பக்கத்தின் பின்பக்கம், அதாவது வேர்சோ Verso என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற நூலின் இரண்டாம் பக்கத்தில் விபரமாக வெளியிடுவதன் மூலம் நூலின் பிறப்பையும் பிற பதிப்புகளின் வரலாற்றுக் குறிப்புகளையும் பதிவு செய்கின்றார்.
இந்தத் தகவல், ஒரு நூலகரின் பார்வையில் கையிலுள்ள நூலின் பதிப்பை அதே நூலின் முன்னைய பதிப்பிலிருந்து வேறுபடுத்துவதற்கும், வாசகரின் பார்வையில் ஒரு நூலின் அண்மைக் காலப் பதிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வெளியீட்டாளரின் பார்வையில் தன் நூலின் முன்னைய பதிப்புகளிலிருந்து இந்தப்பதிப்பு எந்த வகையில் வேறுபடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டவும் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு நூலின் முதற் பதிப்பு விற்றுத் தீர்ந்ததும் பெரும்பாலும் ஒரு நூலின் முக்கியத்துவம் கருதி அந்த நூலை மறுபதிப்பிடுவதற்கு ஆசிரியரோ வெளியீட்டாளரோ முன்வருவது இயற்கை. இரண்டாம் பதிப் பினை மேற்கொள்ளும் போது நிச்சயம் அதன் முதற்பதிப்பு பற்றிய தகவலை பின்னைய பதிப்புகளில் குறிப்பிடுவது வெளியீட்டாளரின் தார்மீகக் கடமையாகும். பலவருடங்கள் கழிந்து ஒரு நூலின் பல பதிப்புகளைப் பார்வையிட நேரும் ஒருவரின் மயக்கத்தைத் தெளிவு படுத்தும் பதிவு இதுவாக அமையும். நூலகப் பட்டியல்களில் பதிப்பு விபரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வழங்குவார்கள்.
12 நூலியல் பதிவுகள்

பலஸ்தீனக் கவிதைகள். ஈழத்துக் கவிஞரும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான எம். ஏ. நுஹற்மான் அவர்கள் தொகுத்து கல்முனை வாசகர் சங்க வெளியீடாக நவம்பர் 1981இல் முதற் பதிப்பாக வெளிவநீத நுால இது. இதில் ஒன்பது பலஸ்தீனக் கவிஞர்களின் 30 மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுக்கப்பட்டிருந்தன. இதே தலைப்பில் மீண்டும் பலஸ்தீனக் கவிதைகள் 2வது பதிப்பாக கொழும்பு மூன்றாவது மனிதன் வெளியீடாக சென்னையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அட்டையின் புற வடிவமைப்பும் மாற்றப்பட்டு பதிப்பு விபரம் இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தமையால் இரண்டாவது பதிப்பை வேறுபடுத்திப் பார்க்க வாசகர்களால் முடிந்தது. இரண்டாவது பதிப்பில் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. உண்மையில் இந்தப் பதிப்பு இரண்டாவது திருத்திய பதிப்பு என்றிருந்திருக்க வேண்டும். காரணம் இங்கே நூல் இரண்டாவது தடவை உள்ளது உள்ளபடி அச்சிடப்படவில்லை. முதற்பதிப்பில் 56 பக்கங்களாக வெளிவந்த இந்தக்கவிதைத் தொகுதி இரண்டாவது பதிப்பில் 162 பக்கங்களாக விரிவடைந்திருந்தது
ஒரு நூல் முதலாவது பதிப்பாக வெளியிடப்படும் போது, முதற் பதிப்பு, சித்திரை 2002 என்றோ முதற்பதிப்பு, 2002 என்று ஆண்டை மாத்திரம் குறிப்பிட்டோ பதிவு செய்வது வழக்கம். இரண்டாவது பதிப்பில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்பட்டிராத போது அதை இரண்டாம் பதிப்பு என்று வெறுமனே குறிப்பிடுவது பொருந்தும். முன்னர் இதை மீள்பதிப்பு என்று (Reprint) குறிப்பிட்டார்கள். அப்படியல்லாது ஏதும் புதிதாக விபரம் சேர்க்கப்பட்டிருந்தால் அதை திருத்திய இரண்டாம் பதிப்பு என்று குறிப்பிட்டு மாற்றத்தை தெளிவாக்க வேண்டும். முன்னுரையில் இதைக் குறிப்பிடுகின்றோம் தானே என்று இவ்விபரத்தை குறிப்பிடாமல் பேசாமல் விட்டுவிடுவது தவறாகும். நூலின் பதிப்புரையில் அதைத் தெளிவாகக் குறிப்பிட்ட போதும் இரண்டாம் பக்கத்தின் பதிப்பு விபரத்தில் அதை சுருக்கமாகத் தெளிவு படுத்த வேண்டும.
புதிய பதிப்பாக நவம்பர் 2000 இல் வெளியிட்ட வேளை, நூலின் இரண்டாம் பக்கத்தில் முதற்பதிப்பு நவம்பர் 1981, திருத்திய இரண்டாம் பதிப்பு நவம்பர் 2000 என்று இரு பதிப்பு விபரங்களையும் குறிப்பிட்டு நூலின் பதிப்பு விபரத்தை தெளிவு படுத்தியிருக்க வேண்டும். இந்தப் பதிப்புப் பிரச்சினை பேராசிரியர் கைலாசபதியின் நூல்களை அண்மையில் நான் நூல்தேட்டம் பதிவுக்காகத் தேடிக்கொண்டிருந்த வேளை பெரும்
என். செல்வராஜா 13

Page 9

தமிழர் நலன்புரிச்சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘கண்ணில் தெரியுது வானம்' என்ற நூலும், திரு. நற்குணதயாளன் அவர்களால் அதே காலத்தில் இலண்டனில் வெளியிடப்பட்ட ‘மண்ணில் தெரியுது வானம்' என்ற நூலும் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. இதில் இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற பெயரில் பிரான்சிலிருந்து அருள்செல்வம் நவரத்தினம் அவர்களின் நூல் 1987இல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது என்பதாகும். நூலின் தலைப்பைத் தேர்வதில் தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுவது புதிய விடயமல்ல. இது பெரும்பாலும் தற்செயல் நிகழ்ச்சிகளாகவே அமைந்து விடுகின்றன.
‘ஒரு கூடைக் கொழுந்து' என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் என்.எஸ்.எம். இராமையாவினால் மலையக இலக்கியமாக வெளிவந்தது. இது யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 1980இல் வைகறை வெளியீடாக வெளிவந்திருந்தது. எழுத்தாளர் செ.யோகநாதன் அவர்கள் சென்னையில் 1994இல் வெளியிட்ட இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் என்ற தொகுதிக்கும் “ஒரு கூடைக் கொழுந்து” என்ற பெயரையே தெரிவு செய்திருக்கின்றார். எதிர்காலத்தில் நூலகப்பட்டியலில் ஒரு கூடைக் கொழுந்தைத் தேடினால், இராமையாவும் வருவார். செ.யோகநாதனும் வருவார்.
ஐரோப்பிய நூல்கள் அச்சிடப்படும்போது ஒரு பொது விதி முறையைப் பின்பற்றுவார்கள். காங்கிரஸ் நூலகத்துடன் அல்லது பிரித்தானிய நூலகத்துடன் தொடர்பு கொண்டு, நூலகத்தினரின் உதவியோடு நூல் அச்சிடும் போதே அதற்கான நூல் விபரப்பட்டியலை தயாரித்துக் கொள்வார்கள். நூலின் தலைப்பு, உப தலைப்பு, பதிப்பு விபரம், பக்க விபரம், ஆசிரியர், தொகுப்பாளர், வெளியிட்டாளர் விபரம், நூல் பற்றிய சுருக்கக் குறிப்பு என்பன போன்ற முக்கிய நூலியல் விபரங்கள் பதியப்பட்டு அந்த நூல் குறிப்பிட்ட நூலின் இரண்டாவது பக்கத்தில் அச்சிடும் வேளையிலேயே அவை சேர்க்கப்பட்டு விடும்.
ஏற்கெனவே வேறொருவர் தேர்ந்தெடுக்காத மாறுபட்ட தலைப்புகளை தேர்ந்தெடுக்க இது பெரிதும் உதவும். இருவர் ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கும் அசம்பாவிதம் அங்கு தோன்றாது. காரணம் காங்கிரஸ் நூலகத்தினர் தமது பட்டியலில் ஏற்கெனவே அந்தத் தலைப்பில்
என். செல்வராஜா 15

Page 10
நூல் இருக்கின்றதா என்று இனம்காட்டி விடுவார்கள். மேலும் பதிப்பு விபரங்கள் பற்றிய மயக்கத்தை உரிய ஆலோசனைகளை வழங்கி gift UG55ulb 6 (66. Tjab6ft. Library of Congress cataloguing data 6T6ip இத்திட்டம் போல எமது ஈழத்துத் தமிழ் நூல்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட பட்டியல் பதிவுகள் நிச்சயம் தேவை. இவை பல சிக்கல்களை, தவறுகளை, முளையிலேயே சுட்டிக்காட்டக் கூடியவை. பதிவு செய்த பின்னர், நூல் வெளிவந்த பின்னர் திருத்துவது இயலாது. இது தொடர்பான இலவச ஆலோசனைகளை நூல்தேட்டம் வெளியீட்டகத்தின் வாயிலாக நான் வழங்கி வருகின்றேன். புதிய நூலொன்றை அச்சிட விரும்பும் எவரும் என்னுடன் தொடர்புகொண்டால் தரமான நூலியல் பதிவுகளை மேற்கொள்ள ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கியுதவ முடியும். (noolthetamG2ntworld.com)
இன்று புலம் பெயர் நாடுகளில் வெளியாகும் எம்மவர்களின் நூல்களை இங்குள்ள தேசிய நூலகங்களில் வைப்பிலிட நாம் முன்வரவேண்டும். இது சட்டமூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு அம்சமாகும். ஒரு நாட்டில் விநியோகிக்கப்படும் அச்சிடப்பட்ட ஆவணங்களில் ஒரு பிரதி அந்நாட்டுத் தேசிய நூலகத்தில் வைப்பிலிட வேண்டும். இது மொழிரீதியாக வரையறுக்கப்பட்டதொன்றல்ல. எனவே தமிழ் நூல்களும் இந்த சட்டவிதிக்குள் உள்ளடங்குகின்றன. ஆண்டாண்டு காலம் உங்கள் நூல்கள் இவர்களின் நவீன காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் காவிச்செல்லப்படுகின்றன. அத்தகைய நிலையில் பிறமொழிநூல்களின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கக் குறிப்பினை அந்நாட்டுத் தேசிய நூலகப் பதிவாளர் அறியவிரும்புவார். இதற்கு ஏதுவாக நூலின் இரண்டாம் பக்கத்தில் நூலியல் விபரம் வழங்கும் இடத்தில் சுருக்கமாக அந்த நூல் என்ன சொல்கின்றது என்பதை அந்நாட்டுத் தேசிய மொழியிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. இலங்கையில் தமிழில் வெளியிடப்படும் பல ஆய்வு நூல்களில் இந்தக் குறிப்பு ஆங்கிலத்தில் வெளிவருவதை அண்மைக்காலத்தில் நாம் காணமுடிகின்றது. இது இலங்கைத் தேசிய நூலகத்தின் பதிவுக்குத் துணைசெய்கின்றது.
தாயக மண்ணிலோ புகலிட மண்ணிலோ, ஈழத்தமிழர்களின்
நூல்களை ஒன்று திரட்டி நாம் ஈழத்தமிழ்த் தேசிய நூலகம் ஒன்றினை நிறுவும் போது ஒருங்கிணைந்த நூலியல் தகவல் மையங்களை
16 நூலியல் பதிவுகள்

உருவாக்குவது மிகவும் எளிதாகி விடும். இன்றுள்ள நிலையில ஒவ்வொரு எழுத்தாளர்களினதும் தனிப்பட்ட அக்கறையிலேயே இந்தநூலியல் தரவுகள் தொங்கி நிற்கின்றன. ஒவ்வொரு நூலிலும், முடிந்த வரை நூல் பற்றிய நூலியல் தகவல்களை தெளிவாக வழங்குவது பற்றி நாம் உடனடியாகச் சிந்திக்க வேண்டும்.
நூலிற்கு வழங்கப்படும் பிரதான தலைப்பு மேலட்டையிலிருந்து மாறுபடக் கூடாது. அட்டையிலும், தலைப்புப் பக்கத்திலும் தலைப்புப் பின்பக்கத்திலும் ஒரே தலைப்பே இடம்பெற வேண்டும். அழகியல் காரணங்களுக்காக முன்னட்டையில் தலைப்பைச் சுருக்குதல் கூடாது. நூலின் தலைப்பினை நூலின் முதுகுப்பக்கத்தில் பொறிக்க விரும்புவோர், அந்த நூல் மேசையில் கிடையாக வைக்கப்படும்போது நேராக வாசிக்கக் கூடியதாக அமைகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நூலை மேசையில் வைக்கும் போது முதுகுப்புறத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் தலைகீழாகத் தெரிவது தவறான பதிப்பின் விளைவினாலாகும்.
இறுதியாக நூலாசிரியர் குறிப்பு பற்றிய ஒரு கருத்தையும் குறிப்பிட வேண்டும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஈழத்துத் தமிழ் நூல்களே ஆசிரியர் பற்றிய விபரங்களை அவர்களது புகைப்படங்களுடன் கொண்டிருக்கின்றன. உண்மையில் ஒரு நூலைக் கையிலெடுத்ததும் அதன் ஆசிரியர் யார் என்ற கேள்வி அனைவரின் மனத்திரையிலும் தோன்றும். அந்த ஆசிரியர் பற்றிய ஒரு பக்கக் குறிப்பு நிச்சயம் ஒவ்வொரு நூலிலும் காணப்பட வேண்டும். இது தற்புகழ்ச்சியாக அமையாது. அவ்வாசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள், பிற இலக்கிய முயற்சிகள் கல்விப் பின்புலம் என்று பல்வேறு தகவல்களையும் வழங்கி முதலில் வாசகருடன் ஆசிரியர் அறிமுகத்தைச் செய்து கொள்ள வேண்டும். நான் எழுதும் புத்தகத்தை நீர் வாசிக்க வேண்டும் ஆனால் என்னைப் பற்றிய, இந்நூலை எழுத எனக்குள்ள தகுதி பற்றிய செய்தி உமக்குத் தேவையில்லாத ஒன்று என்ற போக்கில் ஈழத்து வெளியீடுகளைப் படைக்கக்கூடாது. எழுத்தாளர் பிரபல்யமானவராக இருந்தாலும் அவரது நூல் அவரைப் பற்றிய அடிப்படைக் குறிப்புகளை, தற்புகழ்ச்சி அல்லாமல் ஆவணப்படுத்தும் நோக்கில் அமைந்ததாக அவரது புகைப்படத்துடன் நூலின் பின்னட்டையில் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
நன்றி: "நமது இலக்கு" (சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், ஜேர்மனி) 2005
என். செல்வராஜா 17

Page 11
ஈழத்தின் நால்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டுப் பாரம்பரியம்.
கல்வெட்டுக்கள் என்பன அரசர் முதலானோர் பெற்ற வெற்றி, அளித்த கொடை முதலியவற்றைக் குறித்துப் பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகங்களாகும். இங்கு நாம் குறிப்பிட முனைவது, இந்துக்களில் ஒருவர் இறந்த முப்பத்தொன்றாம் நாள் சமயச்சடங்காக இடம்பெறும் அந்தியேட்டிக் கிரியைகள் முடிந்து சபிண்டீகரணம் நடைபெறும் போது சபையோர் கேட்கப் பாடப்படும் சரமகவி என்ற இரங்கற்பாவைத் தாங்கி வரும் சிறு நூல்களையாகும்.
சரமகவிப் பாரம்பரியம் சங்கப் பாடல்களிலிருந்தே ஊற்றெடுத்தது என்று கருதலாம். இறந்தவரின் பெயரும் பீடும் பொறித்த கல்வெட்டுப் பாரம்பரியம் epitaph) இலக்கிய வடிவமாக முகிழ்க்கும் போது சரமகவியாகி விட்டன. தன்னுணர்ச்சிப்பாடல்களின் அடியாகத் தோன்றிய சரம கவிப்பாரம்பரியம் இன்று கல்வெட்டு என்ற பெயரிலே தொடர்கின்றது.
ஈழத்தின் புகழ்பூத்த கல்விமான்கள் பலர் அன்று சரமகவி பாடி உள்ளனர். தம்முடன் நெருங்கிய தொடர்புடையோரின் பிரிவுத்துயர் தாங்காது அவர்கள் பாடிய இரங்கற்பாக்கள் இன்றும் நினைவு கூரப்பட்டு வருகின்றன.
ஆறுமுக நாவலர் இறந்த போது உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், சி.வை. தாமோதரம்பிள்ளை இருவரும் பாடிய சரமகவி, ஆசுகவி கல்லடி
18 நூலியல் பதிவுகள்
 

வேலுப்பிள்ளை தன் மனைவி ஆச்சிக்குட்டிப்பிள்ளையின் பிரிவில் பாடிய ”நாயபிரலாபம்”, அதே ஆச்சிக்குட்டிப் பிள்ளையின் பேரில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை ஆகியோர் பாடிய இரங்கற்பாக்கள், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் தந்தையார் பண்டிதர் த.பொ.கார்த்திகேசு பேரிலும் வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர் கா.சூரன் பேரிலும் நாடக கவிமணி எம்.வீ.கிருஷ்ணாழ்வார் (கரவெட்டி ஆழ்வார்ப்பிள்ளை) பாடிய சரமகவிகள் போன்றவையும் குறிப்பிடத்தகுந்த சிலவாகும். உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், கரவெட்டி கிருஷ்ணாழ்வார் போன்றோர் அக்காலத்தில் பிரபல சரமகவிகளாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பது அக்கால கட்டத்தில் வெளிவந்த கல்வெட்டுக்களின் இலக்கிய நயத்திலிருந்து புலனாகும்.
பொதுவாக சரமகவிகள் ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக்கியிருக்கும். வழிபாடு, கடவுள் துதியோடு தொடங்கும் சரமகவியில் இறந்தவரின் கிராமப்பின்னணி, முன்னோர்கள், குடும்பநிலை, சமூக அந்தஸ்து, உறவினரின் பெயர், தொழில், சிறப்புத் தகைமைகள் முதலானவை கவிஞரின் இலக்கியப் புலமைக்கேற்பவும் கிராமத்துடனும் குடும் பத்துடனுமான அவரது தொடர்பின் ஆழத்திற்கேற்பவும் வெண்பாவரியில் காணப்படும்.
அடுத்த பகுதியான திதி நிர்ணய வெண்பாவில் இறந்த ஆண்டு, மாதம், திதி, முதலான அம்சங்கள் வாய்ப்பாட்டுத் தன்மை கொண்டமையக் குறிப்பிடப்படும். மூன்றாம் பகுதி மரபு கிளர்த்தல் எனப்படும். இது கழிநெடிலடி ஆசிரியர் விருத்தத்திலேயே பாடப்படும். சிலசமயங்களில் கவிஞரின் கவியாற்றலுக்கேற்ப அறுசீர், எண்சீர் விருத்தங்களிலும் பாடப்படுவதுண்டு. பெயர்ப்பட்டியலாக அமையும் இப்பகுதியில் கவித்துவ ஆற்றலை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாகும்.
நான்காவது பகுதியான புலம்பல் அல்லது பிரலாபத்தில் இறந்தவரின் வயது, தகுதி, பொறுப்புகள், பெருமை, இறப்பு நிகழ்ந்த முறைமை முதலானவற்றை உள்வாங்கிப் புலம்பலை அமைத்துக் கொள்வர் மனைவி புலம்பல், மக்கள் புலம்பல் என்று உறவு முறை வாரியாக இது நீண்டு செல்லும்,
சரமகவியின் இறுதிப்பகுதி தேற்றம் எனப்படும். துயரத்தைத்
என். செல்வராஜா 19

Page 12
தொடராது ஆறதல்பெறும் வகையில் வாழ்க்கையின் நிலையாமையை வலியுறுத்தி ஆன்மீக வழிமுறையில் உற்றார் உறவினருக்குத் தேறுதல் வழங்கும் அம்சமான இப்பகுதி விருத்தப்பாங்கில் அமைகின்றது.
கல்வெட்டியலின் இப்பாரம்பரிய படிமுறை மாற்றத்தின் இன்னொரு கட்டமாக அமைந்தது மறைந்தவரின் நினைவாக நூலொன்றை வெளியிடுவதாகும். பாரம்பரிய சரமகவிமுறையிலிருந்து விலகி, முற்றிலும் மாறுபட்ட சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக அமையும் இம்முயற்சி ஈழத்து வெளியீட்டுத்தளத்துக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. இவ்வகையில் தமது விருப்பத்துக்குரியவர் பற்றிய நினைவுகளின் பதிவுகளாகவோ, அவரது விருப்பத்துக்குரிய ஒரு துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாகவோ, சிறுவர் இலக்கியமாகவோ, சமய இலக்கியமாகவோ அந்த மலர் வெளியாகியது.
என் அப்பாவின் கதை என்ற என். சண்முகலிங்கன் அவர்களது நூலின் (தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு,1988. 40 பக்கம்). முன்னுரையில் பேராசிரியர் வித்தியானந்தன் தெரிவித்துள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.
'தன் அப்பாவின் (அமரர் க. நாகலிங்கம்) கதையை இலக்கியமாக்கும் மகன் சண்முகலிங்கனின் இந்த நூல் அவர் தந்தையாரின் 31ம் நாள் நினைவுடன் வெளியாகின்றது. கல்வெட்டு மரபினின்றும் விலகி ஆக்க இலக்கியங்களையும் பயனான பிரசுரங்களையும் தரத் தொடங்கியுள்ள புதிய மரபினிடை சண்முகலிங்கனின் 'என் அப்பாவின் கதை"யும் ஒரு புதிய தொடக்கம்.”
இந்தப் புதிய கல்வெட்டு மரபினைத் தீவிரமாகப் பின்பற்றியவர்களில் மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஒருவராவார். அவரின் முயற்சியினால் அரிய பல நூல்கள் கல்வெட்டுக்களாக மலர்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
அவரது முயற்சியில் பல சிறுவர் நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தன. சிறுவர் இலக்கியத்துக்கு இருந்த தட்டுப்பாட்டை ஓரளவு இத்தகைய கல்வெட்டுக்களால் தீர்க்க முயன்ற அவரது முயற்சியின் வெளிப்பாடாக இன்றும் நினைவுகூரப்படும் சில நூல்கள் உள்ளன. கூடல்
20 நூலியல் பதிவுகள்

மழலைகள் (இளவாலை: மயிலங் கூடல் பிள் ளையரினார் தெய்வானைப்பிள்ளை நினைவு வெளியீடு, மார்ச் 1991, 16 பக்கம்) இதில் புலவர் ம். பார்வதிநாதசிவம், ஆடலிறை, பாரதி பார்வதிநாதசிவம், பா. மகாலிங்கசிவம், பா. பாலமுரளி, ந.திருச்செந்தூரன், வே.செவ்வேட்குமரன் ஆகிய ஏழு கவிஞர்களின் சிறுவர் பாடல்கள் அடங்கியிருந்தன. இவ்வகையில் சின்ன வண்ண மலரே (சுதுமலை: திசைவீரசிங்கம் சியாமினி நினைவு வெளியீடு, மே 1981, 20 பக்கம்,) சிறுவர் கவிமலர் (இணுவில் திருமதி சரஸ்வதி சோதிப் பெருமாள் நினைவு வெளியீடு, டிசம்பர் 1988. 30 பக்கம்.) சிறுவர்க்குப் பாரதியார். (மாவிட்டபுரம் கருகம்பனை சிவகாமசுந்தரி சிவசம்பு நினைவு வெளியீடு, செப்டெம்பர் 1982, 38 பக்கம்) அன்னை நினைவழுதம். (ஆனைக்கோட்டை தென்மயிலை சின்னப்பிள்ளை செல்லத்துரை நினைவு வெளியீடு, மார்ச் 1987, 22 பக்கம்) ஈழத்துச் சிறுவர் கதைப்பாடல்கள். (நாயன்மார்கட்டு: திருமதி பத்மாவதி கணேசமூர்த்தி நினைவு வெளியீடு, 1986) ஆகிய குழந்தைப்பாடல்கள் தொகுப்புகளை உதாரணத்திற்குக் குறிப்பிடலாம்.
கல்வெட்டுப் பாரம்பரியத்தினூடாகப் பயன்பெற்ற மற்றுமொறு துறை மீள்பதிப்புக்களாகும்.முத்துராச கவிராசரின் கைலாயமாலை மயிலங்கூடலூர் பி. நடராஜனை பதிப்பாசிரியராகக் கொண்டும் இராஜராஜேஸ்வரி கணேசலிங்கம் அவர்களை உரையாசிரியராகக் கொண்டும் யாழ்ப்பாணம்: சுழிபுரம் வள்ளியம்மை முத்துவேலு ஞாபகார்த்த வெளியீடாக 60 பக்கங்களுடன் 1987இல் வெளிவந்தது. முத்துராசர் கவிராசர் இயற்றிய கைலாயமாலை முதன்முதலாக 1906ம் ஆண்டு த.கயிலாசபிள்ளையால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. கைலாயமாலைக்குப் புதிய ஒளி என்ற தலைப்பில் பதிப்பாசிரியரின் முன்னுரையும் பின்னிணைப்பாக கைலாயமாலையில் கூறப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் பண்டிதை திருமதி இ.கணேசலிங்கம் அவர்களின் குறிப்புரையும் கைலாயமாலையின் ஆங்கில மொழி பெயர்ப்பாக திரு.அ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கட்டுரையும் அதில் இடம் பெற்றுள்ளன.
மாவை சின்னக்குட்டிப் புலவரின் தண்டிகை கனகராயன் பள்ளு.காங்கேசன்துறை: தமிழ் மன்றம், மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தினுாடாக நவம்பர் 1983 இல் வெளியிடப்பெற்றது. 81 பக்கங்களுடன் கல்லூரியின் ஆசிரியர் ஆ.ஞானசுந்தரம் அவர்களின்நினைவு வெளியீடாக வந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில்
என். செல்வராஜா 21

Page 13
வலிகாமப் பகுதியில் அதிகார முதலியாகத் தெல்லிப்பழையில் இருந்த தண்டிகைக் கனகராய முதலியாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு. அவரால் ஆதரிக்கப்பட்டவரான மாவை சின்னக்குட்டிப் புலவரால் இயற்றப்பட்டதே தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந்தமாகும். கி.பி.1792 ஆண்டளவில் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 1932இல் தெல்லிப்பழை வ.குமாரசுவாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. முன்னைய பதிப்பிலுள்ளது போன்று நாற்றுநடுகை வரையிலான 153 பாடல்களே இப்பதிப்பிலும் காணப்பட்டன.
திருக்கோணமலை வரலாறு என்ற நூல் GP தோமஸ் அவர்களின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கமாகும். கி.முரளிதரன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இவ்வரிய நூல் ஜேர்மனியில் கிளிவ் நகரில் வாழும் அகராதியியலாளரான கனகசபாபதி சரவணபவன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்று 2004 இல் வெளியிடப்பட்டது. பிரித்தானிய இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் GP தோமஸ் 1940இல் திருக்கோணமலை கடற்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். ஆரம்ப காலம், ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கள், கி.பி.1500, பிரித்தானிய ஆட்சியின் நிறுவுகை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழி , திருக்கோணமலையின் மூலவேர்களையும் 3000 ஆண்டுகளுக்கான வரலாற்றின் ஆவணங்களையும் இந்நூல் ஆராய்கின்றது. நகரத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கு மிகப்பழமைவாய்ந்த “குளக்கோட்டன் கம்பசரித்திரம் ’ என்னும் புராண நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திருக் கோணமலைப் புராணம் ஆகிய மரபுவழியான புராணக் கதைகளையும் இலக்கியங்களையுமே நம்பியிருக்க வேண்டியிருந்த போதிலும் பின்னைய வரலாறுகளுக்கு பிரித்தானிய நிர்வாக ஆவணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளமை இந்நூலின் முக்கியத்துவமாகும். மொழிபெயர்க்கப்பட்ட இப்பதிப்பு வரலாற்றுத்துறை மாணவர்களின் பயன்கருதி பதிப்பாசிரியரின் தந்தையார் அமரர் வல்லிபுரம் கனகசபாபதி அவர்களின் (14.2.192116.12.2003) நினைவஞ்சலி மலராக வெளியிடப்பட்டது.
திரு.க சொக்கலிங்கம் அவர்களைத் தொகுப்பாசி ரியராகக் கொண்டு வெளிவந்த பாரதியின் சக்திப்பாடல் கள என்ற யாழ்ப்பாணம்: கல்வியங்காடு, திருவாட்டி உமையவல்லி சேதுராசா நினைவு வெளியீடு, (1982, 44 பக்கம் ) சொக்கனின் சக்தி வழிபாடு பற்றிய முன்னுரையுடன் பாரதியின் சக்திப்பாடல்களின் தொகுப்பாகும். 22 நூலியல் பதிவுகள்

ஈழத்தில் சிவ வழிபாடு, ப.கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பெற்று யாழ்ப்பாணம்: கதிரவேலு கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு வெளியீடாக, ஒக்டோபர் 1989இல் 22 பக்கங்களுடன் வெளிவந்தது. சிவவழிபாடு வரலாறு கடந்தது. அதன் தோற்றுக்காலம் அறுதியிட்டுக் கூறமுடியாதது இநீதியாவிலேயே பெருஞ் சிறப்படைந்திருந்த சிவ வழிபாடு இலங்கையிலும் தனக்கேயுரித்தான புராதன வரலாற்றைக் கொண்டு மிளிர்கின்றது. இது அத்தகைய ஒரு வரலாற்றுப்போக்கினை எடுத்துக்கூறும் சிறு நூலாகும்.
பரமலிங்கம் நித்தியானந்தன் நினைவு மலர் நித்தியானந்தம. ஜூலை 1987 இல் 80 பக்கங்களுடன் வெளிவந்தது. இதில் கவிஞர் சத்தியசீலன், வ.இராசையா, யாழ்.ஜெயம், வளவை வளவன், த. துரைசிங்கம் ஆகிய ஈழத்துக் கவிஞர் ஐவரது 77 கவிதைகள் அடங்கியிருந்தன.
குரு சி. மாணிக்கத்தியாகராஜ பண்டிதரின் வண்ணைச் சிலேடை வெண்பா. வண்ணார் பண்ணை மா. குமாரசுவாமி அவர்களால் 1989இல் வெளியிடப்பட்டது. 42 பக்கங்களில் பெரியார் மாணிக்கத்தியா கராஜ பண்டிதரின் வாழ்க்கை வரலாறும் அவர் இயற்றிய வண்ணைச் சிலேடை வெண்பாவும் அன்னாரின் நினைவு மலராக வெளியிடப் பெற்றுள்ளது.
சி.சதாசிவம் அவர்களின் தொகுப்பான பணி டிதமணி நினைவாரம், திருநெல்வேலியில் ஏப்ரல் 1986இல் 52 பக்கங்களுடன் வெளிவந்தது.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களது அமரத்துவம் கருதி வெளியிடப்பட்ட இந்த நினைவஞ்சலி மலரில் பண்டிதமணி பற்றிய நினைவுக்குறிப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தம் ஆக்கங்களின் சிறு பட்டியலும் தொகுக்கப்பட்டிருந்தன.
அண்மையில் லண்டனில் வெளிவந்த அர்ச்சனை மலர்கள் என்ற வெளியீடு, அமரர் தம்பாபிள்ளை சிவசம்பு ஞாபகார்த்த மலராக 6JJJs) 2000 g6) Transnews International, P.O. Box 895, Harrow, Middx, HA2OYU என்ற முகவரியிலிருந்து 64 பக்கங்களுடன் வெளியிடப்
என். செல்வராஜா 23

Page 14
பட்டிருந்தது. யாழ் சுதுமலை, அமரர் தம்பாபிள்ளையின் ஞாபகார்த்தமாக வெளியான இந்த நினைவு மலர் புலம்பெயர் தமிழரின் பன் முகப்பார்வையின் பதிவுகளான பலவினக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது
ஒரு தனி மனிதனின் நினைவை அவனது வாழ்வை அவனது பிரிவை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம், அவனது வம்ச விருட்சத்தினூடாக அவனது பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் வாய்ப்பு இத்தகைய கல்வெட்டுகளின் வாயிலாக வெளிக்கொணர முடிந்தது. காலக்கிரமத்தில் கல்வெட்டு வெளியிடுவது பரம்பரைக் கெளரவத்தைப் பேணும் ஒரு அம்சமாக எமது சமூகத்தில் உணரப்பட்டது. இன்று ஈழத்திலும், இங்கு புலம்பெயர்ந்த மண்ணிலும் இத்தகைய புலமைமிக்க சமரகவிஞர்கள் இல்லாத நிலையில் நினைவஞ்சலி என்ற பெயரில் தேவார திருவாசகங்களுடனும் அனுதாபச் செய்திகளுடனும் இரண்டு தலைமுறை வம்சாவளியுடனும் சிறு நூலுருவிலி வெளியிடும் நடைமுறை காணப்படுகின்றது. சில கல்வெட்டுக்கள் மேற்கூறிய ஐந்து அம்சங்களில் ஒரு சிலவற்றை மாத்திரம் தாங்கியும் வெளிவருவதுண்டு. தன்னுணர்ச்சிப்பாடல்களாக அல்லாது அஞ்சலியுரைகள் மாத்திரம் சில மலர்களில் காணப்படுகின்றன.
கல்வெட்டாக வெளிவந்த மலர்களில் பெரும்பாலானவை, அன்றாடம் சமய அனுட்டானங்களுக்குத் துணையாக அமையும் வழிபாடுகளையும் தகவல்களையும் தாங்கிய பிரசுரங்களாகவே காணப்படுகின்றன. அபிராமி அந்தாதி என்ற பிரசுரம் இதற்கு உதாரணமாகும். சைவசமயத்தில், உமாதேவியாரின் வேறோர் வடிவமான அன்னை அபிராமியைத் தொழுது வணங்கி, அபிராமிப்பட்டர் அருளிய இந்தச் சமய இலக்கியம் காரைநகர்:திருமதி நாகேஸ்வரி ஜெகநாதன் நினைவு அஞ்சலி மலராக வெளிவந்தது (1987,20 பக்கம்)
கல்வெட்டுப்பாரம்பரியத்தின் மற்றுமொரு வளர்ச்சிப்படியாகவே ஞாபகார்த்த மலர்களையும் நாம் கொள்ள வேண்டும். சமயக்கருத்துக்களை வெளிக்கொணரும் பிரசுரங்களாக அல்லாது, முற்று முழுதாக ஒருவரின் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பிரதிபலிக்கத் தக்கதான இத்தகைய வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகள் காலம் கடந்தும் நினைவில் நிற்பவையாகும். அமரத்துவம் அடைந்த ஒருவர் பற்றிய
24 நூலியல் பதிவுகள்

மனப்பதிவுகளைத் தாங்கி வெளிவரும் இத்தகைய மலர்களில் கல்வெட்டு இலக்கியத்தின் இடைக்கால சரமகவிப்பாரம்பரிய இலக்கியப்பண்புகள் காணப்படாத போதும், அதன் அடிப்படை நோக்கம் இத்தகைய நினைவுமலர்களின் வாயிலாகப் பதியப்பெறுகின்றது.
கல்வெட்டுக் கள் போன்றே திருமண வைபவங்களை நினைவுகூரும் வகையிலும் சிறுநூல்கள் எழுந்துள்ளமை இங்கு கவனிக்கப்படல் வேண்டும். தமிழர் திருமணம் என்ற தலைப்பில் சி.அப்புத்துரை, மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகியோர் இணைந்து எழுதி, தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களத்தின் வாயிலாக ஆகஸ்ட் 2001இல் ஒரு நூல் வெளிவந்திருந்தது. இளவழகன்- விமலினி தம்பதியினரின் திருமணநாள் வெளியீடாக 24.08.2001இல் வெளியிடப்பட்ட இந்நூலில் தமிழர் திருமணம் (சி. அப்புத்துரை), பழந்தமிழர் திருமணம் (மயிலங்கூடலூர் பி.நடராஜன்), வரலாற்று நோக்கில் திருமண நடைமுறைகள் (சி.அப்புத்துரை), ஆகிய மூன்று கட்டுரைகளும், அனுபந்தங்களாக அருந்ததி வரலாறு, பெறவேண்டிய 16 பேறுகளின் பட்டியல் என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன
“மணவினை முறைமைகள்: வைதீகத் திருமணமும் தமிழர் திருமணமும்” என்ற நூல் தங்கராசா சிவபாலு அவர்களால் எழுதப்பெற்று, கனடாவிலிருந்து திரு. திருமதி ஞானகுமாரன்-கவிதா திருமண நினைவு வெளியீடாக மார்ச் 2003இல் வெளியிடப்பட்டிருந்தது. பொருட் தெளிவின்றி வெறும் சடங்குகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வைதீகத் திருமணங்களின் உள்ளார்த்தங்களைப் புரியவைக்கும் முயற்சியாக வெளியான இந்நூலும் புலத்தில் நிகழ்ந்த திருமணச் சடங்கொன்றின் நினைவாக 29.3.2003அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
எழுத்தாளரும் வைத்திய கலாநிதியுமான முதுபெரும் இலக்கியவாதி பேராசிரியர் நந்தி ( செ.சிவஞானசுந்தரம்). அவர்களின் ஊர் நம்புமா? என்ற நூல் யாழ்ப்பாணம்: நண்பர்கள் வெளியீடாக, ஜூலை 1966இல் வெளியிடப்பட்டிருந்தது. "டொக்டர் நந்தி’ அவர்களுக்கு அவரது நண்பர்கள் வழங்கிய திருமணப்பரிசாக அமைந்த இந்நூலில் நந்தி அதுவரை எழுதியிருந்த 25 சிறுகதைகளில் தேர்ந்த 12 சிறுகதைகள் அடங்கியிருந்தன. திருமணப்பரிசாக ஒரு நூ அச்சிட்டு வழங்கும் ஒரு வழக்கின் முன்னோடியாக இதைக் தீ 6) Tub.
A 3.
என். செல்வராஜா 25

Page 15
கல்வெட்டுக்களாக மலர்ந்த ஒரு பாரம்பரியம், சரமகவியாகத் தழைத்து, காலப்போக்கில் இன்று நினைவஞ்சலி மலர்களாக மாறி நிற்பதைக் கண்டோம். இன்று புலம்பெயர் நாடுகளில் இயந்திரகதியில் இயங்கும் வாழ்க்கை முறைகளில் சிக்குண்ட கல்வெட்டுப்பாரம்பரியத்தின் பின்பற்றல்கள் சரமகவிப்புலமையின்மையால் அதன் பாரம்பரிய நெறிகளிலிருந்து வழுவி பெரும்பாலும் உள்ளுர் அச்சகங்களின் உதவியுடன் அவசர அவசரமாக உருவாகி சபிண்டீகரண நிகழ்வில் விநியோகிக்கப்பட்டு ஒரு நாளில் மறைந்தொழிந்து விடும் நிலைமையே காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டுக்களை முறையாகத் தொகுத்து வெளியிடும் போது அது தாங்கிய செய்தி காலம் கடந்தும் பாதுகாக்கப்பட்டு வாழும் நிலை ஏற்படும்.
கல்வெட்டுப் பாரம்பரியம் தாயகத்தில் மற்றொரு படிநிலைக்குத் தன்னை ஏற்கெனவே மாற்றிக் கொண்டு விட்டது. அம்முறையை எதிர்வரும் காலத்தில் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர் பின்பற்றி, இன்று அச்சு வாகனம் ஏறக் காத்திருக்கும் எத்தனையோ ஆக்க இலக்கியங்களுக்கு உயிர் கொடுக்க முன்வரவேண்டும். கல்வெட்டுக்களை, நினைவஞ்சலி மலர்களை வெளியிடுவதைத் தம் தொழிலாகக் கொண்ட அச்சகங்கள் இந்த மாற்றத்துக்குத் துணைபோக முன்வரும் பட்சத்தில் இது எளிதாகும்.
நன்றி : பூபாளராகங்கள், 2005
யாழ். கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவனி பாடசாலை பழைய மாணவர் சங்கம், இலண்டன் 2005
26 நூலியல் பதிவுகள்

ஈழத்தின் வடபுலப்பெயர்வும் அத தொடர்பான இலக்கியங்களும்
ஈழத்தின் வடபகுதியில் தளம்கொண்டுள்ள பலாலி இராணுவ முகாமிலிருந்து பெருமெடுப்பில் வலிகாமம் பிரதேசத்தை நோக்கிய படைநகர்வொன்றை நடத்தத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு முகம்கொடுக்க இயலாமல் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பகுதியிலிருந்து மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த வீடுவாசல்களையும் தேடிய தேட்டங்களையும் கைவிட்டு பயத்தோடும் பரிதவிப்போடும் குடாநாட்டைவிட்டு பாரிய இடப்பெயர்வொன்றை மேற்கொண்டார்கள். உலகின் எந்தவொரு இனத்திற்கும் வரலாற்றில் ஏற்பட்டிராததும் பாரிய எடுப்பில் இடம்பெற்றதுமான இந்த அவல நிகழ்வில் ஏறத்தாள ஐந்து இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் மக்கள் கையில் எடுக்கக்கூடிய பொருட்களுடன் குடும்பம் குடும்பமாக ஒரே நாளில் புறப்பட்டு சேரிடம் அறியாது மூன்று நாட்களாக உண்ண உணவின்றி மரநிழல்களில் தங்கிக் கூட ஒய்வெடுக்கும் வாய்ப்பின்றி ஒருவழிப்பயணத்தை மேற்கொண்ட அந்தக் கையறுநிலை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் மாத்திரமன்றி ஏராளமான கல்வியியல் நிறுவனங்களும் கூட இந்தப் புலப்பெயர்வால் கைவிடப்பட்டு பாரிய பாதிப்புக்குள்ளாயின. படைப்பாளிகள் பலர் தமது படைப்புக்களையும் சேகரித்துக் காத்து வைத்த நூல்களையும் இக்காலகட்டத்தில் பெருமளவில்
என். செல்வராஜா 27

Page 16
இழந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆயிரம் ஆவணங்கள் இவ்விடப்பெயர் வின் பயனாகக் கவனிப்பாரற்று கறையான்களின் பசிக்கு உணவாகி அழிந்தொழிந்து விட்ட செய்தி மனதை வருத்துவதாகவுள்ளது. கிராமம் தோறும் கட்டிக்காத்த சனசமூக நிலையங்களில் நூலகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட நூல்களின் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த வரலாற்று அவல நிகழ்வையும் அதற்கு முன்னரும் பின்னருமான வேறும் பல தமிழரின் முடிவில்லாத இடப்பெயர்வுகளையும் ஈழத்து இலக்கியங்களாக நம்மவர்கள் பதிவுசெய்துவைத்துள்ளார்கள். போரின் விளைவாக ஏற்பட்ட இந்த உள்ளக இடப்பெயர்வுகளினைச் சித்திரிக்கும் ஈழத்து இலக்கியங்கள் சிலவற்றைப் பற்றிய குறிப்புரையாக இக்கட்டுரை அமைகின்றது.
1995இன் பாரிய இடப்பெயர்வினைப்பற்றிய முதல் நூலாக எம்மை வந்தடைந்தது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். வசந்தராஜா அவர்கள் இலண்டனிலிருந்து Tamil Exodus and Beyond என்ற பெயரில் எழுதி வெளியிட்ட அந்த நூல் இலங்கையின் தேசியப் போராட்டம் குறித்த பகுப்பாய்வுக் கண்ணோட்டமாக அமைந்திருந்தது. இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்தின் உயரதிகாரியாக இருந்த வேளையில் சேகரித்த பல தகவல்களின் அடிப்படையில் இவர் இந்நூலைத் தயாரித்திருந்தார். இந்த நூல் பின்னர் 1996இல் ‘தமிழர் வடபுலப் பெயர்ச்சி: அவலமும் அதற்கு அப்பாலும்." என்ற பெயரில் எஸ்.சங்கரமூர்த்தி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு இலண்டன் வாசன் அச்சகத்தில் SÐěéÁLŮILJI' (6 GQ6u6ńluîILŮJLJÜL-gl. (London N19 3TY: Rajah Publishers, 56 Iberia House, New Orleans Walk). 180 Luistsb Gastó06 L Sgbbits) 6 fourt GOT முறையில் தமிழர் புலப்பெயர்வினையும் அதன் பின்னணியையும் அரசியல்ரீதியில் அலசி ஆராய்வதாக அமைந்திருந்தது.
“யாழ்ப்பாண இடப்பெயர்வு” என்ற மற்றுமொரு ஆய்வு நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்துறையைச் சார்ந்த கார்த்திகேசு குகபாலன் அவர்களால் எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் குடித்தொகைக் கல்வியில் சிறப்புப்பட்டம் பெற்றவர் கலாநிதி குகபாலன். தனது முதுகலைமாணி, கலாநிதி, முதுகலைமானி டிப்ளோமா பட்டக்கல்வி ஆகியவற்றில் குடித்தொகைக்கல்வியை, குறிப்பாக இடப்பெயர்வு சம்பந்தமான ஆய்வினையே தொடர்ந்தும் 28 நூலியல் பதிவுகள்

மேற்கொண்டவர் என்றவகையில் கலாநிதி குகபாலனின் இந்நூல் மிக ஆழமான ஆய்வுநூலாக இன்றுவரை கருதப்படுகின்றது.
கொழும்பில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை வெளியீடாக நவம்பர் 1996 இல் வெளியிடப்பட்ட இந்நூல் 160 பக்கங்களைக் கொண்டது. 1995ம் ஆண்டு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நிகழ்ந்த மக்கள் இடப்பெயர்வு பற்றிய இந்த நூலினை யாழ்ப்பாண இடப்பெயர்வு பற்றி குடிப்புள்ளியியல் ரீதியாக மட்டுமின்றி சமூகவியல் கண்ணோட்டத்திலும் குகபாலன் ஆய்வுசெய்துள்ளார். 10 நாட்களுக்குள் இடம்பெற்ற இந்த இடப்பெயர்வு 5இலட்சத்து 25 ஆயிரம் மக்களது பாரிய இடப்பெயர்வாகும். இவ்விடப்பெயர்வின் அடிப்படைக்காரணி அரசியலாக இருப்பினும், இந்நூலின் அடிப்படை நோக்கம் கருதி அதற்கு முக்கியத்துவம் வழங்காது, ஆய்வுத்தேவை கருதி இடப்பெயர்வினால் மக்கள் அனுபவித்த, அனுபவித்துவரும் சமூக, பொருளாதார கலாச்சாரப் பிரச்சினைகளைப் பற்றியே விரிவாக அலசப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணத்தில் அந்த ஆறுமாதங்கள் ” என்றொரு நூல் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது. நவம்பர் 1997இல் இந்நூல் யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மணிஓசை அச்சகத்தினால் அச்சிடப்பெற்று 90 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
1995இல் வலிகாமத்தில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு இந்த நுாலிலும் பதிவுக் குள் ளாகின்றது. பிறந்த மணி னில் ஆழ வேரோடியிருந்ததால் வலிகாமத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வில் பங்கேற்காது யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்டவகையில் அங்கு எஞ்சியிருந்த 2000 பேரில் அராலியுர் சுந்தரம்பிள்ளையும் அவரது மனைவியும் அடங்குவர். அவர்களது அந்த ஆறுமாத வெளி உலகத் தொடர்பற்ற வாழ்க்கை அனுபவம் இங்கு பதிவாகியிருக்கின்றது. பாரிய இடப்பெயர்வை வித்தியாசமான பார்வையில்- அணுகும் அனுபவம் இந்நூலாசிரியருக்குக் கிடைத்த தனித்துவமான வாய்ப்பாகும். காலத்துக்குக்காலம் இவர் கொழும்பு, வீரகேசரி பத்திரிகையில் எழுதிய தனது அனுபவக்குறிப்புகளையே இங்கு “யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள்” என்ற நூலில் தொகுத்திருக்கின்றார்.
“யாழ்ப்பாணத்தார் கண்ணீர்” என்ற கவிதை நூல் முதுபெரும்
என். செல்வராஜா 29

Page 17
எழுத்தாளர் வரதர் அவர்களால் யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடாக, ஜூன் 1997இல் வெளிவந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்ட 32 பக்கம் மட்டுமே கொண்ட இச்சிறு நூல் உருவில் சிறிதாயிருந்தபோதிலும், காட்டமானதொரு புதுக்கவிதைநூலாக அமைந்துள்ளது. பதினான்கு ஆண்டுக்காலக் கண்ணிர்க் கடலிலிருந்து ஒரு சிறு துளி என்ற குறிப்புடன் வெளியாகிய புதுக்கவிதை இது. வீரகேசரி வார இதழில் 26.5.1996 அன்று முதலில் வெளியாகியது.
1995 ஒக்டோபர் 30ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின் அவலங்களை “யாழ்ப்பாணத்தார் கண்ணிர்” என்ற இந்நூலில் ஆசிரியர் ஒரு கண்ணிர்க் கவிதையாக்கியுள்ளார். சத்திய ஆவேசம் கொண்ட ஒரு கவிஞனின் ஆழ்மனத்தில் உறங்கிக் கிடந்த மானிட நேயம் இங்கு கவிதாபுலம்பலாக விரிந்துள்ளதை அவதானித்து ரசிக்கமுடிகின்றது. ஒவ்வொரு வரியும் தாம் அனுபவித்த அவலத்தினையும் இழப்புக்களையும் ஏமாற்றங்களையும் எடுத்துக்கூறுகின்றது. இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள செங்கை ஆழியான் அவர்களது உரையின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன்.
“அந்தச் சோக நாடகத்தின் சமூகப் பயன் ஈழத்து வரலாற்றில் ஒரு கறை. கட்டியெழுப்பிய சுதந்திர மாளிகையின் தாங்குநிலையை ஐயறவைத்துள்ள பூகம்ப அலை. ஆயிற்று. அந்த சோகநாடகம் ஆரம்ப கட்டத்திற்கே திரும்பவும் மீண்டுவிட்டது. இந்த நாடகத்தில் நடித்த இலட்சோபலட்சம் மக்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள். இழந்துவிட்ட சொர்க்கத்திற்கு மீண்டுவந்த உணர்வு செத்துப் பலகாலமாகின்றது. எல்லாமிருந்தும் எதுவுமேயில்லாத உணர்வு. இந்த நாடகத்தின் ஒவ்வொரு அசைவிலும் மனுக்குலம் அகெளரவப்படுகின்றது. இடிபடுகின்றது. மனுக்குலத்தின் இருதயம் குத்தப்பட்டுக் குருதி வடிகின்றது. ஒடியபோது இருந்த பயமும் பரிதவிப்பும் திரும்பி வந்தபோது பயமும் அவமானமுமாக மாறி விட்டன. வீடுகளுக்குள் முடங்கிச் சிறைப்படுத்திக் கொள்வதன் மூலம் வீதிகளில் சந்திக்கின்ற அவமதிப்புக்களையும் மனக்காயங்களையும் குறைத்துக்கொள்ளும் தந்திரோபாயத்திற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் வந்துவிட்டனர்”.
இப்படியாக ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களால் 1997 ஏப்ரலில் எழுதப்பட்ட இந்த முன்னுரை புலப்பெயர்வின் வடுக்களை உணர்வுபூர்வமான பதிவுகளாக்கியிருக்கின்றது. 30 நூலியல் பதிவுகள்

தமிழரின் பாரிய புலப்பெயர் வின் அவலத்தைப் பதிவுசெய்துள்ள சிறுகதைகள் ஏராளம் வெளிவந்திருக்கின்ற போதிலும் சிலவே தனித் தொகுப்புக்களாக்கப்பட்டுள்ளன. வேறும் பல சிறுகதைகள் அவற்றின் ஆசிரியர்களின் சிறுகதைத் தொகுதிகளுக்குள் இரண்டறக் கலந்து தனித்துவமான அடையாளத்தைப் பெறத் தவறிவிட்டன. இவற்றில் சில கதைகள் வலிகாமம் இடப்பெயர்வில் பங்கேற்காது புகலிடத்தில் இருந்தவண்ணம் கற்பனையில் ஊற்றெடுத்து எழுதப்பட்டபுனைகதை களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தவிர்த்து உண்மைநிலையினை உணர்ந்து அனுபவித்த எழுத்தாளர்களின் புலப்பெயர்வு அவலங்களை கதைக்களமாகக் கொண்டு வெளிவந்த சிறுகதைகள் தாயகத்தில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படவேண்டும்.
*யாழ்ப்பாணம்” என்ற தலைப்பில் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை அவர்கள் 1999இல் மற்றொரு நூலை சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணம்: மேனகா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட 110 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இதுவாகும். ஈழத்து சிறுகதை வரலாற்றில் சமகாலச்சூழலைப் பிரதிபலித்து இலக்கியம் படைத்தவர்களில் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை முக்கியமானவர் என்று அடையாளம் காணப்பட்டவர் . வாசகர்களோடு நேரடியாக உறவைக்கொள்ளும் எழுத்துநடையில் மெல்லிய கிண்டல் ஊடுபரவ, சமகால வாழ்க்கையனுபவங்களையும் அவலங்களையும் தக்க விவரணப்பாங்கில் இவர் படைத்துவந்துள்ளார். 60 கதைகள் வரையில் எழுதியிருந்தும் , நூலுருவில் இவர் வெளியிட்ட ஒரேயொரு சிறுகதைத்தொகுதி “யாழ்ப்பாணம்’ என்ற நூலாகும். சமகால நிகழ்வுகளைப் பகைப்புலமாகக் கொண்ட 10 கதைகள் இதில் உள்ளன. வன்னி, மலையகம், யாழ்ப்பாணம், கொழும்பு என்று இவரது கதைத்தளங்கள் விரிகின்றன. இதிலுள்ள யாழ்ப்பாணம் என்ற கதை இன்றைய கட்டுரைக்கு முக்கியமானது. 1995 இடப்பெயர்வுக்குப் பிந்திய யாழ்ப்பாணச் சூழலை இந்தத் தலைப்புக் கதை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. அக்காலகட்டத்தில் அவரது வாழ்ந்துபட்ட அனுபவங்கள் இக்கதையில் தரிசனத்திற்குள்ளாகின்றது.
*அழுவதற்கு நேரமில்லை” என்று மற்றொரு சிறுகதைத் தொகுதியும் அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளது. தாமரைச்செல்வி என்ற ஈழத்தின் குறிப்பிடத்தக்கவொரு வன்னி எழுத்தாளர் எழுதிய
என். செல்வராஜா 31

Page 18
சிறுகதைகள் இவை. பரந்தன்; குமரபுரம், சுப்ரம் பிரசுராலயம் டிசம்பர் 2002 இல் கிளிநொச்சி. நிலா பதிப்பகத்தின் வழியாக பதிப்பித்துள்ள 96 பக்கம் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு முற்று முழுதாக 1995இன் பாரிய இடப்பெயர்வின் அவலங்களையே சித்திரிக்கின்றது. “அழுவதற்கு நேரமில்லை” கதைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒரு சிறுகதை தவிர மற்றைய 11 கதைகளும் இடப்பெயர்வின் பின்வந்த நாட்களில் எழுதப்பட்டவை என்பதால் அதன் கதைக்களங்கள் அந்த நிகழ்வின் அவலங்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. 1995இல் ஏற்பட்ட வடபுலப்பெயர்ச்சி-வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரில் பின்னாளில் ஏற்படுத்தியது. இதனூடாகவும் இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை அங்கு மோசமடைந்து மிக உக்கிரமான நிலையை தாயகத்தில் கண்டிருந்தது. இந்தப் புதிய நிலைமையைச் சுட்டிக்காட்டும்வகையில் இதிலுள்ள அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. 11 சிறுகதைகளும் ஒருங்கு சேர வாசிப்பவர்களுக்கு 1995இன் வடபுலப்பெயர்வின் அவலத்தை மாறுபட்ட கோணங்களில் தொடர்ச்சியாகத் தரிசிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியிருப்பதுடன், அனுபவப்பகிர்வாக வெளியான கதாசிரியரின் வார்த்தை ஜாலமற்ற வசன அமைப்புக்கள், போன்றவற்றால் வாசகர்களை தாயகத்தில் அந்த நீண்ட பயணத்தில் நீண்டநேரம் ஆத்மார்த்தமாகச் சஞ்சரிக்க வைப்பதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்.
நாவல்களைப் பொறுத்தவரை இலங்கையின் பிரபல படைப்பிலக்கிய வாதியான செங்கை ஆழியான் அவர்கள் எழுதிய ‘போரே நீ போ” என்ற நாவல் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகம், ஜூன் 2002 இல் கொழும்பு சக்தி என்ரர்பிரைசஸ் மூலம் அச்சிட்டு இந்நூலை வெளியிட்டுள்ளார்கள். 194 பக்கம் கொண்ட இந்நூல் தாயகத்தின் சமகாலப் பிரச்சினைகளை ஒரு பாமரக் குடிமகனின் பார்வையில் கூறும் நாவலாகும். 1995இல் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வுகளின் போது, இடம்பெயர்ந்த மக்களையும் இடம் பெயராத மக்களையும் இணைத்த ஒரு நூலாக - நாவலாக இது அமைகின்றது மானிட வாழ்வின் பெறுமதி வாய்ந்த உயிர்களையும் இளமைக் கனவுகளையும் போரும், அதன் வெளிப்பாடாயமைந்த புலப்பெயர்வும் எவ்வளவுதூரம் நாசப்படுத்தி வருகின்றதென்ற அவலநிலைகளை “போரே நீ போ’ சித்திரிக்கின்றது. யாழ்ப்பாணம், உதயன் பத்திரிகையில் தொடராக இது வெளிவந்தபோது மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டது.
32 நூலியல் பதிவுகள்

தாயகத்தில் இடம்பெற்ற 1995இன் பாரிய இடப்பெயர்வினைப்பற்றிய இலக் கியங்கள் ஈழத்து இலக் கியப் பரப் பிலி , குறிப் பாக ஈழவிடுதலைப்போராட்ட இலக்கியங்களுக்குள் தனித்துவ மானதொரு இடத்தினை வகிக்கும் என்பது நிச்சயம். ஈழத்து எழுத்தாளர் தேவகாந்தன் ஏற்கெனவே ஈழத்து இலக்கியத் தளத்தில் அண்மைக் காலத்தில் நன்கு அறியப்பட்டவர். அவரது நிலாச்சமுத்திரம், விதி, உயிர் ப் பயணம் , ஆகிய மூன்று நாவல கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. ‘ஒரு விடுதலைப் போராளி' என்ற உரை வீச்சும் திசைகள், எழுதாத சரித்திரங்கள் என்ற தலைப்புக்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு குறுநாவல்களைக் கொண்ட இரு குறுநாவல் தொகுதிகள் தமிழகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் காலக்கனா, நெருப்பு, இன்னொரு பக்கம் ஆகிய தலைப்புக்களில் வெளியாகியுள்ளன. இவற்றை எல்லாம் வெற்றிகரமாக எழுதித்தந்த தேவகாந்தனின் “கனவுச்சிறை” என்ற மகாநாவல் ஐந்து தொகுதிகளில் வலிகாமத்தின் பாரிய இடப்பெயர்வின் பின்னர் வெளிவந்திருக்கின்றது.
“கனவுச்சிறை: திருப்படையாட்சி”, “வினாக்காலம்”, “அக்னி திரவம்”, “உதிர்வின் ஓசை’,“ஒரு புதிய காலம்” என்று ஐந்து பாகங்களாக இந்த நாவல் விரிந்துள்ளது. ஈழத்து வரலாற்றின் 1981 முதல் 2001 வரையிலான சுமார் இருபதாண்டுகளைக் கொண்ட ஒரு காலப்பகுதியை வெட்டியெடுத்து அதன் யதார்த்தப் பாத்திரங்களைச் செழுமைப்படுத்தி இந்த மகாநாவல் உருவாக்கப்பட்டுள்ளது. 1981இன் ஆனி மாதத்து ஓர் அதிகாலையில் நயினாதீவு மண்ணில் தனித்துவம் மிக்கதாக விளங்கிநிற்கும் நாகபூஷணிஅம்மன் ஆலயத்தில் கோவில்மணி ஒலிப்பதோடு இந்த நாவல் தொடங்குகின்றது. 1981இல் அக்கினிப் பொறிபோன்ற மையச் சம்பவமொன்றின் உந்திப்புடன் ஆரம்பிக்கும் இந்த நாவலில், 1983 கறுப்பு ஜூலை, உள்ளகப் புலப்பெயர்வுகள், தேசம் தாண்டுதல்கள், அகதி முகாம் அவலங்கள், மேற்குலகின் அடையாளச் சிக்கல்கள், சமூக நிலை மாற்றங்களும் தேசமளாவிய கருத்துருவின் புத்தாக்கமும் என்று வியாபிக்கும் சரித்திர வெளியில் இன்னொரு சரித்திரம் இங்கே சொல்லப்பட்டிருக்கின்றது.
ஒரு சின்னத் தீவான ஈழத்தோடு இணைந்த ஒரு மிகமிகச் சின்னத் தீவான நயினாதீவின் வடகரையிலிருந்து துவங்குகின்றது கதை.
என். செல்வராஜா 33

Page 19
கட்சிப்பூசல்கள், கூட்டணி அமைப்பு, தமிழீழத்தின் தத்துவார்த்த உதயம், போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி என்பனவற்றின் இலக்கிய சாட்சியமாய் நிமிர்ந்து நிற்கிறது “கனவுச்சிறை’ நாவல். 2001இல் ஒரு காலையில் நல்லூர் கந்தசாமி கோவிலில் எழும் மணிநாதப் பெருக்கோடு அந்த நாவல் முடிவடைகின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் உள்ள ஓர் இருபதாண்டுக்காலத்தின் அவலம், அழிவு, துக்கம், சிதைவு, மரணம், துரோகம். சந்தர்ப்பவாதம், ஆகியவற்றின் முடிவுறலுக்கான ஒரு நம்பிக்கை இலங்கைத் தீவடங்கிலும் வியாபிப்பதாக கதை முடிகின்றது. இந்த நாவல் தொகுதி பரவலாக விநியோகிக் கப்படாதது ஈழத்து இலக்கியத்துறைக்கு ஒரு கவலையான விடயம் என்றே கருதுகின்றேன்.
“உதிர்வின் ஒசை” என்ற நூல் கனவுச்சிறை நாவல் தொகுதியின் நான்காம் பாகமாகும். இதன் ஆசிரியர் தேவகாந்தன் அவர்கள் சென்னை பல்கலைப் பதிப்பகத்தின் வாயிலாக டிசம்பர் 2001 இல் இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்திருக்கிறார். சென்னை, அலைகள் அச்சகம் இந்நா வலைப் பதிப்பித்திருக்கின்றது. கனவுச்சிறையின் நான்காவது பாகம் 1995-முதல் 1999 வரையான காலப்பகுதிக்குரிய கதைக் களம் கொண்டதாக விரிவு பெறுகின்றது. 1995 பாரிய இடப்பெயர்வு கதையோட்டத்துடன் இழையோடிச் செல்கின்றது.
“உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற கவிதைத் தொகுதி சு.வில்வரத்தினம். அவர்களால் தமிழ்நாட்டிலிருந்து கோயம்புத்தூர் விடியல் பதிப்பகத்தின் வாயிலாக 432 பக்கங்களைக் கொண்ட பாரிய தொகுதியாக வெளிவந்துள்ளது. ஏற்கெனவே சு.வில்வரத்தினத்தின் நான்கு கவிதைத் தொகுப்புக்கள் இலங்கையிலிருந்து வெளிவந்துள்ளன. அகங்களும் முகங்களும் (1985), காலத்துயர் (1995), காற்றுவழிக்கிராமம் (1995), நெற்றிமண் (2000) ஆகிய இந்த நான்கு தொகுப்புக்களையும் இதுவரை வெளிவராத 2000 வரையுள்ள தன்னுடைய பிற கவிதைகளையும் உள்ளடக்கியதாக முழுமையான இத்தொகுப்பு முதன் முறையாகத் தமிழகத்திலிருந்து வெளிவருகின்றது. கவிதைகள் காலவரிசைப்படி -தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியரின் 30 ஆண்டுக்காலக் கவிதைப் படைப்புகளின் ஒருமித்த தொகுப்பு என்ற வகையில் ஈழப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியை இக்கவிதைகள் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதிலுள்ள “காலத்துயர்” என்ற கவிதை இங்கு குறிப்பிட த்தகுந்ததாகும்.
34 நூலியல் பதிவுகள்

*காலத் துயர்” என்ற கவிதைநூல் சு.வில் வரத்தினம் , அவர்களால் திருக்கோணமலை: வி.ஜெ.வெளியீடாக 1வது பதிப்பு, 1995 இல் வெளியாகியிருந்தது. தெகிவளை: டெக்னோ பிரிண்ட் அச்சகத்தில் அச்சிடப்பெற்ற இச்சிறு கவிதைத் தொகுப்பு அக்டோபர் 1992 இல் யாழ்ப்பாணத் தீவுகள் சிறைப்பிடிக்கப்பட்டது முதல் - தன் குடும்பத்தாரிடமிருந்து துர்அதிர்ஷ்டவசமாகப் பிரிக்கப்பட்ட ஆசிரியர் வில்வரத்தினம் அவர்கள் தன் குடும்பத்துடன் இணையத்துடித்த அந்த எட்டு மாத காலத்துயரினை பதிவுசெய்கின்றது. தமிழ்பேசும் மக்களின் சமகாலத் துயர்களையும், வடபகுதி மக்களின் புலப்பெயர்வின் அவலங்களையும் தொடரும் இன்னல்களையும் கவித்துவத்தோடு இந்நூலில் சொந்த அனுபவங்களின் துணையோடு உயிரோட்டமாகப் பதிவு செய்துள்ளார். இந்த நூலும் “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற முற்சொல்லப்பட்ட பாரிய கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
“செம்மணி” என்ற தலைப்பில் 24 ஈழத்துக்கவிஞர்களின் கவிதைகள வெளிச்சம் இதழின் வெளியீடாக செப்டெம்பர் 1998ல் புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ. சங்கப் பதிப்பகத்தின் வழியாக வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக் கழகத்தின் நடுவப் பணியகம், 2வது பதிப்பினை நவம்பர் 1999 இல் வெளியிட்டிருந்தது. 48 பக்கம் கொண்ட இந்நூல் யாழ்ப்பாணத்தில் இராணுவ முற்றுகையின் போது கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு வதையின் பின் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கானகவிதைகள் இவை என்ற காணிக்கையுடன் வெளிச்சம் வெளியீட்டுத் தொடரின் 3வது நூலாக வெளிவந்திருந்தது.
1995இல் ரிவிரச என்ற யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போரின்பின், புலம்பெயர்ந்து தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் தஞ்சமடைந்த தமிழ்மக்களை மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கைமூலம் சிறைப்படுத்திச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அக்காலகட்டத்தில் சிங்கள இராணுவம் அவர்களை யாருங்காணாமற் பிடித்துச் சென்று படு கொலை செய்து செமீ மணியிற் புதைத் த வஞ்சகச் செயலை அம்பலப்படுத்தும் பதிவுகளாக இவை அமைகின்றன. கெஜிம்னிப் புதைகுழிகள் எம்மக்களிடையே ஏற்படுத்திய கொதிப்புணர்வின் அடையாளமாகவே இக்கவிதைகள் அமைகின்றன என்றும் கூறலாம்.
என். செல்வராஜா 35

Page 20
“தாய்நாட்டு அகதிகள் ” என்ற நூல் மாரிமுத்து யோகராஜன் அவர்களால் அக்கரைப்பற்று 8: விழுதுகள் வெளியீடாக, ஜனவரி 2000 இல் வெளியிடப்பட்டிருந்தது. அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஒப்செட் பிரிண்டர்ஸ், அச்சிட்டுள்ள இந்நூல் 48 பக்கங்களைக் கொண்டது தொன்னூறுகளின் பின்னரான அரசியல் நெருக்கடி காரணமாக ஏற்பட்ட ஈழத்தமிழர் இடப்பெயர்வுகளும், அகதி வாழ்வும் இக்கவிதைகளில் முதன்மை பெற்றுள்ளன. கவிதா உணர்வு தீவிரமாகவும் இயல்பாகவும் கவிதைக்குரிய செறிவுடன் வெளிப்படுகின்றன. வளரும் கவிஞனான அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் யோகராஜன், 1992முதல் 2000வரை தான்வடித்த கவிதைகளில் தேர்ந்து இத்தொகுப்பை ஆக்கியுள்ளார்.
“போரும் பெயர்வும்” என்ற கவிதை நூல் திருக்கோணமலையின் எழுத்தாளர் தாமரைத்தீவான் அவர்களது பதிவாகும். சோ.இராசேந்திரம் என்ற இயற்பெயரைக் கொண்ட தாமரைத்தீவான் திருக்கோணமலை: அருள் வெளியீட்டகத்தினால் ஜூலை 1999 இல் வெளியிட்ட இக்கவிதைத் தொகுதியும் போரினால் புலம்பெயர்ந்த மக்களின் அவலங்களை- குறிப்பாகக் கிழக்கின் அவலங்களைச் சொல்கின்றது. 10 அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ள இந்நூலில் மொத்தம் 133 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகள் பல்வேறு பாவகைகளில் வேறுபட்ட சந்தங்களைக் கொண்டவையாக யாக்கப்பட்டுள்ளன. அழிவுப்பத்து தொடக்கம் நகர்ப்பத்து ஈறாகவுள்ள கவிதைகள் யாவற்றிலும் போரின் நிகழ்வுகளும் புலப்பெயர்வுகளால் மக்கள் அனுபவித்துள்ள இன்பதுன்பங்களும் மிகச் சிறப்பாக நெஞ்சை உருக்குவதாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
இதுவரை தாயகத்தின் உள்ளகப் புலப்பெயர்வுகளின் இலக்கியப் பதிவுகளாக இன்று காணப்படு வதாக நான் கண்ட சில நூல்கள் பற்றிய மேலோட்டமானதொரு கண்ணோட்டத்தினை பதிவுக்குள்ளாக்கியுள்ளேன். ஈழத்தமிழரின் புலப்பெயர்வுசார்ந்த இலக்கியப்படைப்புக்கள் இன்றும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவை எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் போராட்ட இலக்கியத்தின் ஒரு கூறாகத் தனியாக ஆய்வுக்குட்படுத்தப்படும் என்பது தவிர்க்க முடியாததாகும்.
நன்றி : ஞானம் (கொழும்பு) 2004 பூவரசு (ஜேர்மனி) 2004
36 நூலியல் பதிவுகள்

ஈழநாடு என்றோர் ஆலமரம்.
கே.சி. தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்துான்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக ‘ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துள்ளது.
1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
ஈழநாடு தன் இயக்கத்தைத் தாயக மண்ணில் நிறுத்திக் கொண்டாலும் அதன் பெயர் இன்றும் தாயகத்திலும், புலத்திலும
என். செல்வராஜா " . 37

Page 21
பத்திரிகைகளாக நின்று நிலைத்தவண்ணமே இருக்கின்றது. ஈழநாடு வளர்த்து விட்ட பத்திரிகையாளர்கள் காலத்துக்குக்காலம் தமது மலரும் நினைவுகளில் ஈழநாடு காலத்தை நினைவுகூர்ந்தவணினமே இருக்கின்றார்கள்.
அவ்வகையில் மிக அண்மைக்கால வெளியீடாக எனக்குக் கிடைத்த ஒரு நூல் பற்றி இங்கு முதலில் குறிப்பிட வேண்டும். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தற்போது தமிழகத்தில் வாழும் ஈழத்துப் பத்திரிகையாளர் திரு. கே.ஜி. மகாதேவா அவர்கள் எழுதிய “நினைவலைகள்” என்ற நூலே அதுவாகும். 1940இல் மட்டக்களப்பில் பிறந்த மகாதேவா தனது பதினொராவது வயதிலேயே ஈழகேசரியின் வாயிலாகத் தனது எழுத்துக்களைப் பதியம் வைத்தவர். இவரது சிறிய தந்தையாரான வித்துவான் அமரர் வீ.சீ.கந்தையா அவர்களது வழிகாட்டலில் இவர் தன் எழுத்துத் துறையை விரிவுசெய்து கொண்டிருக்கின்றார். தனது 21வது வயதிலேயே, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழநாடு’ பத்திரிகையில் அதன் ஆரம்பக் காலத்திலேயே இணைந்து, அதன் உதவி ஆசிரியராகி, பின்னர் படிப்படியாக வளர்ந்து, செய்தி ஆசிரியராகி நீண்டகாலம் பணியாற்றியவர்.
பத்திரிகையாளர் கே.ஜி. மகாதேவா அவர்கள், தனது 30 ஆண்டுக் காலப் பத்திரிகைத் துறை அனுபவங்களை தமிழகத்திலிருந்து புத்தக உருவில் அண்மையில் கொண்டுவந்திருக்கின்றார். தமிழ்நாட்டிலிருந்து மித்ர வெளியீட்டகத்தின் 78ஆவது நூலாக “நினைவலைகள்” என்ற இவரது படைப்பு வெளிவந்துள்ளது. ஈழநாட்டு அனுபவங்களையும், சிறிது காலம் அதைப் பிரிந்திருந்த வேளையில் மலையகத்தில் நடத்திய “செய்தி” பத்திரிகை அனுபவங்களையும், பத்திரிகையாளராகத் தான் பெற்ற அனுபவங்களையும் இந்நூலில் விரிவாகத் தொகுத்தளித்திருக்கின்றார். தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மனதை விட்டகலாத சம்பவங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்கள் என்று இவர் தனது மலரும் நினைவுகளை “நினைவலைகள்” என்ற இந்நூலில் பதிவுசெய்திருக்கின்றார்.
இன்று தாயகத்திலும், புகலிடத்திலும் நிலைகொண்டு வெற்றிகரமாக இயங்கிவரும் பல ஈழத்துப் பத்திரிகையாளர்களை உருவாக்கிவிட்ட பெருமையைத் தன்னகத்தே கொண்ட ஈழநாடு பத்திரிகையின் வளர்ச்சி, அதன் எரியூட்டல் காலம், மீளத் தழைக்க எடுத்த முயற்சிகள், பத்திரிகைச்
38 நூலியல் பதிவுகள்

சுதந்திரத்தை பாதுகாக்கும் பணியில் அது அடைந்த இன்னல்கள், துக்ககரமான இறுதிக்காலம் என்று ஒரு பத்திரிகையின் சிக்கல் மிக்க பூரணமான வாழ்க்கையையும் இந்த “நினைவலைகள்” நூலின் வாயிலாக ஆங்காங்கே வாசகர்கள் ஒரளவு அறிந்து கொள்ள முடிகின்றது.
ஈழநாடு பத்திரிகை தமிழர் தாயகத்தில் செழிப்புற இயங்கிவந்த வேளையில், அதனை வளர்த்தெடுத்ததுடன், அதனூடாகத் தாமும் வளர்ந்த பத்திரிகையாளர்கள் பலர். இவர்கள் அனைவரும் இன்று திக்கெட்டும் பரந்து சிறப்பாக வாழ்கின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் பத்திரிகையாளர்களாகவே வாழ்கின்றார்கள் என்பது மற்றொரு அம்சம். அனைவரும் தமது ஈழநாட்டு நினைவுகளை நெஞ்சில் சுமந்த வண்ணமே நிச்சயம் இயங்குகிறார்கள். வாழ்கிறார்கள். இவர்களில் சிலர் திரு மகாதேவா போன்று தமது ஈழநாட்டு நினைவுகளை நூலுருவிலோ கட்டுரைத் தொடரிலோ பதிவுசெய்த வண்ணமே இருக்கிறார்கள்.
ஈழநாடு பத்திரிகையின் வரலாற்றினை ஆங்காங்கே பதிவுசெய்து வைத்திருக்கும் சில வெளியீடுகளை நாம் இனிச் சற்று ஆராய்வோம்.
"ஈழநாடு 25வது ஆண்டு நிறைவுமலர்" 1984ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டதொரு ஆவணமாகும். 56 பக்கம் கொண்ட இப்பிரசுரம், ஈழநாடு பத்திரிகையின் அளவில், அதிகமான பக்கங்களுடன் தனியாகப் பிரசுரிக்கப்பட்டது. 11.2.1984 இல் யாழ்ப்பாணத்து ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தின் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப் பிரசுரம், ஈழநாடு பத்திரிகையின் சுருக்க வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், சமய, கலை, இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்திருந்தது. இன்றைய தினம் வரையில் ஈழநாடு பற்றிய விரிவான வரலாற்றுத் தகவல்களைத் தாங்கியதாக வேறெந்தப் பிரசுரத்தொகுப்பும் இதுவரை வெளிவரவில்லை என்று நம்புகின்றேன். இந்த மலரில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் "ஈழநாடும் அதன் தொடர்பு நிலை வலுவும்: விரிவான ஒரு ஆய்வுக்கு ஆதாரமான சில குறிப்புகள்" என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். ஈழநாடு பத்திரிகையின் வரலாற்றை எழுதமுனைபவர் களுக்கு இந்தக் கட்டுரை அத்திவாரமாக அமையலாம். சி.இரத்தினசபாபதி, சி.கணபதிப்பிள்ளை, சு.சபாரத்தினம், கே.சி.தங்கராஜா, புலவர் பார்வதிநாதசிவம், பி.எஸ்.பெருமாள், கே.ஜி.மகாதேவா, சு.வித்தியானந்தன்,
என். செல்வராஜா 39

Page 22
ஈ.கே.ராஜகோபால், எஸ்.ஆர்.ஞானசுந்தரம் போன்ற பலர் இதில் தத்தமது கட்டுரைகளை வழங்கியிருந்தார்கள்.
அடுத்ததாக நாம் அறியவருவது, "அமரதீபம்" என்ற தலைப்பில் செட்டியார் அச்சகத்தின் வாயிலாக அச்சிடப்பட்ட மற்றொரு நூலாகும். 76 பக்கம் கொண்ட இந்நூலில், புகைப்படங்களின் துணையுடன் ஈழத்தின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் முதலாவது தமிழ்த் தினசரியான ஈழநாடு பத்திரிகையை ஆரம்பித்துத் தமிழ் வளர்த்த பெரியார் அமரர் கே.சி.தங்கராஜா (20.6.1907, 20.7.1987) அவர்களின் வாழ்வும் பணியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பல்வேறு சமூகப் பிரமுகர்களின் இரங்கலுரைகள், நினைவஞ்சலிக் கட்டுரைகள் என்பவற்றைக் கொண்டதாக ஈழநாடு ஊழியர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த மலர், 19.08.1987 அன்று இடம்பெற்ற அமரர் கே.சி.தங்கராஜா அவர்களின் சிரார்த்த தினத்தினையொட்டி வெளியிடப்பட்டது.
”என்னுள் என்னோடு. என்ற நூல் எஸ்.கே.காசிலிங்கம் அவர்களால் பிரான்ஸ்: முகுந்தன் வெளியீட்டகத்தின் வாயிலாக ( 45 Allee Du Moulin Bois, 95470, Vemars, France) LDITJà 2002 Q6ù வெளியாகியிருந்தது. 256 பக்கங்களுடனும் அரிய பல புகைப்படங்களுடனும் இந்நூல் வெளிவந்திருந்தது, பத்திரிகையாளர் திரு காசிலிங்கம் அவர்கள் தன் அனுபவங்களை பத்திரிகை அனுபவங்கள், அரசியல், புலம்பெயர் வாழ்வியல் என்ற மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார். தனது "ஈழநாடு’ பத்திரிகை அனுபவங்களை முதற்பாகத்திலும், இலங்கையில் 1948ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளின் ஆய்வை இரண்டாவது பாகத்திலும், ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர் வாழ்வியல் முறைமைகளையும் வளர்ந்துவரும் தமிழெழுச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த கட்டுரைகளை மூன்றாவது பாகத்திலும் தான் கண்டு கேட்ட விடயங்களையும் பத்திரிகையாளரின் அனுபவத்திற்கூடாகத் தொகுத்தளித்திருந்தார்.
"பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்ற தலைப்பில் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் எழுதிய மற்றொரு நூலும் சில காலத்திற்கு முன்னர் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகத்தின்
40 நூலியல் பதிவுகள்

வாயிலாக நவம்பர் 2003இல் வெளிவந்த இந்த நூலிலும், ஈழத்தில் அனுபவம் மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்ற வகையில் தனது பத்திரிகைத் துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தவகையில், ஈழநாடு சார்ந்த அண்மைக்கால வெளியீடாக கே.ஜி. மகாதேவா அவர்களின் நினைவலைகள் என்ற நூலும் அமைந்துள்ளது. இந்த நூலிலும், ஏற்கெனவே மேலே குறிப்பிட்ட மற்றைய நூல்கள் போன்றே நூலாசிரியரின் சொந்த அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்ததாக ஈழ நாடு வரலாறு சொல லப் பட்டுள்ளது. பத்திரிகையாளருக்கேயுரிய சரளமான மொழிநடையில் ஏராளமான தகவல்களைச் சுவைபடக் கூறியுள்ளார்.
ஈழநாடு பத்திரிகை பற்றிய ஆக்கங்கள் வேறும் சில மலர்களில் வெளிவந்திருக்கின்றன. மெளனகுரு, சித்திரலேகா அவர்கள் எழுதிய ”ஈழத்தில் பத்திரிகைத்துறையும் இலக்கிய வளர்ச்சியும்” என்ற கட்டுரை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம், வைரவிழா மலரில் (1975; 2ப.) காணப்படுகின்றது. இக்கட்டுரையில் ஈழநாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உதவி நூலகராகவும் இருந்த ஆ.சிவநேசச்செல்வன், “இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், சில குறிப்புகள்”, என்ற தலைப்பில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள, (1974; 345-354) மலரில் வரைந்த மற்றொரு கட்டுரையிலும் யாழ்ப்பாணத்து ஈழநாடு பற்றிய பின்புலங்கள் காணப்படுகின்றன.
ஈழநாடு பத்திரிகையாளர் எஸ். பெருமாள், ‘ஈழநாடும் பண்டிதமணி ஐயா அவர்களும்”, என்ற கட்டுரையில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் ஈழநாடு பத்திரிகைக்கும் இடையே உள்ள தொடர்பினை விபரித்திருக்கிறார். இது பண்டிதமணி நினைவு மலர, (1989: 195-196) என்ற மலரில் காணப்படுகின்றது.
என். செல்வராஜா . 41

Page 23
ஈழநாடு பத்திரிகையால் வளர்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பலர் தத்தம் பாணியில் தத் தமது பார் வைக் கோணத்தில் , தமது வாழ்வனுபவங்களினூடாக அதை எழுதி வந்திருக்கிறார்கள், இனியும் எழுதுவார்கள். இது அவரவர் பார்வையில் எழுதப்பட்டதால் அனுபவங்கள் தாம் சார்ந்த கொள்கைகளுக்கும், அணிகளுக்கும் ஏற்ப சுயதணிக்கை செய்யப்பட்டவையாகவே காணப்படுகின்றன. புலம்பெயர்ந்து வந்து விட்ட இவர்களால் இந்த ஆலமரத்தின் இறுதிக்காலத்தை சரிவரப் பதிவாக்க இயலாமல் போயுள்ளது. மேற்கூறிய நூல்கள் ஒவ்வொன்றும் ஈழநாடு என்ற ஒரு பெருவிருட்சத்தின் ஒவ்வொரு கிளைகளின் கதைகளாகவே அமைகின்றன. இவை அனைத்தும்ஒன்று சேரும்போது ஒரு வேளை அந்த ஆலமரத்தின் கதை பூரணமாக வெளிவரலாம்.
இன்றைய நிலையில் ஈழநாடு பத்திரிகையின் முழுமையான கதை, அதன் பிறப்பு, எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சி என்பன இன்று வரை முறையாகவும் முழுமையாகவும் தொகுக்கப்படாதது ஒரு பெரிய குறையாகும். தாயகத்தின் முன்னோடிப் பத்திரிகையொன்றின் வரலாறு ஆவணமாக்கப்படல் வேண்டும் என்ற சமூக அக்கறையை முன்வைத்து, ஈழநாடு வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து, இம்முயற்சியை முன்னெடுக்க வேண்டும். தம்மை வளர்த்துவிட்டு இன்று வரலாறாகிவிட்ட நமது மண்ணின் நாளிதழுக்குச் செய்யக்கூடிய கடமை இதுவாகும்.
நன்றி: BC காலைக்கலசம் வானொலி உரை 15-05-2005
42 நூலியல் பதிவுகள்

புகலிட வெளியீடுகள் நாலாசிரியர்களும் நகலாசிரியர்களும்
வளர்ந்து வரும் எமது ஈழத்துத் தமிழ் நூலியல் முயற்சிகள் பல சர்வதேச அரங்கில் தனித்துவம் பெற்று போற்றப்பட்டு வருகின்றன என்று நாம் பெருமிதம் கொள்ளும் அதே வேளை பல அறிமுக எழுத்தாளர்களின் வெளியீடுகள் எழுத்தாளர்களின் கவனக்குறைவினாலும், அவர்கள் நாடிச்செல்லும் பதிப்பகங்களின் அக்கறையின்மையாலும் சர்வதேச மட்டத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை தரக்குறைவாக மதிப்பிட வழியமைப்பதாகவும் அமைந்து விடுவதை நாம் அனுபவ வாயிலாக அறிந்தும் வருகின்றோம்.
சர்வதேச ரீதியில் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் பெரும் பங்காற்றும் ஒரு வரலாற்று முக்கியத்துவமான காலகட்டத்தில் நாம் இன்று இயங்கிவருகின்றோம். இந்நிலையில் நூலியல் துறையில் நாம் அறிந்தோ அறியாமலோ விட்டுச்சென்ற தவறுகளை இனம் கண்டு முடிந்தவரையில் அவற்றைத் திருத்திக் கொள்ள இந்தக்கட்டுரை உதவலாம் என்றே நம்புகின்றேன். இங்கு உதாரணத்துக்கு எடுக்கப்படும் நூல்கள் விமர்சன நோக்கில் அல்லாது தவறுகளைத் திருத்திக் கொள்ள வழியமைக்கும் மாதிரி உருக்களாகவே முன்வைக்கப்படுகின்றன என்பதை ஆரம்பத்திலேயே கூறிச் செல்வது நல்லது என்று கருதுகின்றேன்.
புகலிட அறிமுக எழுத்தாளர்களின் நூல் ஆர்வத்தை வர்த்தக நோக்கில் தமக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தி உழைக்கும் வெளியீட்டாளர்கள் சிலர் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதாகக் தறி
என். செல்வராஜா .

Page 24
அவர்களின் ஆக்கங்கள் அனைத்தையும் எவ்விதமான பரிசீலனையுமின்றி வெளியிட்டு வருவதை நாம் அறிவோம். ஒரு தரமான நூல் வாசகர் கையில் சென்றடையும் முன்னதாக அதன் கையெழுத்துப் பிரதியைத் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பு அதன் ஆக்கியோனுக்கு உரியது.
ஒரு தரமான வெளியீட்டகம் இந்த வடிகட்டலைத் தாமே மேற்கொள்வதை நாம் அவதானிக்கலாம். பிரபல்யமான ஐரோப்பியப் பதிப்பகங்கள் தமக்கு எழுத்தாளர்களிடமிருந்து வரும் கையெழுத்துப் பிரதியை அத்துறை சார்ந்த வல்லுநர் கொண்ட குழுவிடம் சமர்ப்பித்து அவர்களின் சிபாரிசின் பின்னரே அந்நூலை அச்சிடும் பொறுப்பினை ஏற்கின்றது.
அவர்களைப் பொறுத்த வரையில் நூல் வெளியீட்டின் முழுப்பொறுப்பும் பதிப்பகத்திற்குரியதாகக் கணிக்கப்படுகின்றது. ஆக்கியோனுக்கு அவர் வழங்கும் கையெழுத்துப் பிரதிக்கான ஒரு குறித்த தொகையை அல்லது விற்பனையில் ஒரு குறித்த சதவிகிதத்தை ரோயல்ட்டியாக வழங்கி கையெழுத்துப் பிரதியை முழுமையாகப் பொறுப்பேற்கின்றது. அது வர்த்தகரீதியில் செயற்படுவதால், தான் எழுத்தாளனுக்கு வழங்கிய பணம் உள்ளிட்ட நூலின் வெளியீட்டுச் செலவின் முதலீடை மீளப் பெறும் வாய்ப்பையே குறியாகக் கொண்டிருக்கின்றது. இதனால் பெளதிக அமைப்பில் கவர்ச்சியையும் உள்ளடக்கத்தில் உயர்ந்த தரத்தையும் ஒரு ஐரோப்பிய வெளியீட்டகம் பேண முடிகின்றது. அந்நூலின் சந்தை வாய்ப்பை கணிப்பிடுவதும் இத்தகைய நூல் மதிப்பீட்டின் நோக்கமாகின்றது.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில் நிலைமை தலை கீழாக உள்ளது. பதிப்பகத்திற்கு நூலை வழங்குவதுடன் அவரது கடமை முடிந்துவிடுவதில்லை. அதை அச்சிட எழுத்தாளரே பணம் செலுத்த வேண்டியும் ஏற்படுகின்றது. அத்துடன் பதிப்பகம் அச்சிட்டு முடிந்ததும் அதன் விநியோகத்திலும் ஒரு பங்கை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை சிலருக்கு ஏற்படுவதுமுண்டு.
தமிழகத்துப் பதிப்பாளர்கள் - இவர்களில் பெரும்பாலானவர்கள் பதிப்பாளர்கள் என்ற பதத்திற்கே உரியவர்கள் அல்லர். இவர்களை
44 நூலியல் பதிவுகள்

அச்சகத்தினர் என்று தான் குறிப்பிடுவது பொருந்தும். தமிழகத்திலுள்ள பல சிறு அச்சகங்களே தம்மை பதிப்பகம் என்றும் சில சட்டம் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகப் பெயரிட்டுக் கொள்கின்றன.
தமிழகத்தில் 1640 முழுநேர நூலகங்களும் 800 பகுதி நேர நூலகங்களும் இன்று இயங்கி வருகின்றன. இவற்றுக் கான நூல்கொள்வனவை மாநில அரசு மேற்கொள்கின்றது. அரச நூலகங்களின் பாவனைக்கென சகல பதிப்பாளர்களிடமிருந்தும் 850 பிரதிகளை அரச நூலக அமைப்பு கொள்வனவு செய்து வந்தது. அண்மைக்காலமாக அதன் எண்ணிக்கை 500 ஆகக் குறைந்து விட்டது. இந்த 500 பிரதிகளை விற்பனை செய்வதன் மூலமும் மற்றும் புத்தக நிலையங்கள், வர்த்தகக் கண்காட்சிகள் மூலமும் மேலும் சில பிரதிகளை நிறுவனங்களுக்கு விற்பனை செய்தும் 1000 பிரதிகள் வரையில் மிக எளிதாக அந்தப் பதிப்பகங்கள் விற்பனை செய்து லாபமீட்டிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. மேலும் புகலிடங்களில் நூல் அறிமுகம் என்ற பெயரில் தமிழகப் பதிப்பகங்களுக்கு நம்மவரே களம் அமைத்துக் கொடுத்து அப்பாவி எழுத்தாளர்களின் குறுகிய சந்தைக்குள்ளும் அவர்கள் ஊடுருவ வழியமைத்துக் கொடுத்து விடுகின்றார்கள். அந்தப் பதிப்பகங்களைப் பொறுத்தவரையில் எம்மவரின் நூல்களை விற்பதில் பெற்றுக்கொள்ளும் வருவாய் நிகர லாபமாகின்றது. இவ்வளவு வாய்ப்புகளுக்கும் பிரதிபலனாக எம்மவர்களுக்குக் கிடைப்பது, புகலிட எழுத்தாளர்களுடைய நூல்களுக்கு உலகளாவிய அறிமுகம் பெற்றுத்தரப்படும் என்ற வாக்குறுதியேயாகும். இத்தகைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்ற களஆய்வில் எமது எழுத்தாளர்கள் இறங்கித் தேடலில் ஈடுபடும் போது இந்த உறுதிமொழிகளின் யதார்த்தநிலை அறியப்படும்.
இந்நிலையில் எமது அறிமுக எழுத்தாளர்களும் அனுபவ எழுத்தாளர்களும் நூலின் தரம் பற்றிய எண்ணக் கருவை வளர்த்துக்கொள்ளும் அவகாசத்தை பதிப்பகங்கள் ஏற்படுத்தத் தவறி விடுகின்றன என்றே நான் கருதுகின்றேன். அந்த விடயத்தைத் தொடக்கினால் தமக்கு இன்று புகலிடத்திலிருந்து மடை திறந்த வெள்ளமாக வரும் கையெழுத்துப் பிரதிகளுக்குத் தடை ஏற்பட்டு விடும் என்ற கவலையும் இதற்கு ஒரு காரணம் எனக் கருதுகின்றேன்.
இந்நிலையில் புகலிடத்தில் நூல் வெளியிடும் எழுத்தாளர்களின்
என். செல்வராஜா 45

Page 25
கடமை பற்றிய சிந்தனையை நாம் இவ்வேளையில் தூண்ட வேண்டியது அவசியமாகின்றது. நாம் எழுதும் ஒரு விடயம் அது நூல் உருவில் ஆக்கம் பெறும் முன்னதாக இரண்டாம் பேர்வழி ஒருவரால் வாசிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நாம் மதிக்க வேண்டும். இந்த இரண்டாம் பேர்வழி பெரிய அறிவாளியாக இருக்க வேண்டிய தேவை இல்லை. ஒரு நண்பராகக் கூட இருக்கலாம். நல்ல வாசகராக இருக்க வேண்டும் அது முக்கியம்.
இந்த இடத்தில் தான் கொப்பி எடிட்டர் (Copy Editor) என்ற நபர் நம் பார்வைக்கு வருகின்றார். ஒரு பதிப்பகத்தில் கொப்பி எடிட்டர் என்ற பதவியில் இருப்பவர் பதிப்புலகில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். தமிழ் எழுத்துலகில் இவர் என்றோ காணாமல் போய்விட்டார் என்பது விடயம் தெரிந்தவர்களின் கணிப்பாகும்.
ஒரு எழுத்தாளரின் நூலினை அது அச்சுக்குப் போகும் முன்னதாக வாசித்து அதில் காணப்படும் சொற்பிழை கருத்துப்பிழை பதப்பிழைகளைக் கண்டறியும் பொறுப்பு இந்த கொப்பி எடிட்டருக்கே உரியது. இவர் பிழை திருத்தும் ஆசிரியராகவோ புரூப் ரீடராகவோ அல்லாது கருத்துக் கூறும் மந்திரியாகவே இருப்பார். கொப்பி எடிட்டரை நாம் தமிழில் பதிப்பாசிரியர் என்று கூற முடியாது. பதிப்பாசிரியரின் கடமை வேறுவகையானவை. நகலாசிரியர் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரையின் தேவை கருதி நகலாசிரியர் என்ற பதத்தையே தொடர்ந்தும் குறிப்பிட விரும்புகின்றேன்.
மொழியை வளமைப்படுத்துவதில் நகலாசிரியருக்கு கணிசமான அளவு பங்குள்ளது. கையெழுத்துப் பிரதியை கவனமாக வாசித்து அதில் காணப்படும் எழுத்துப் பிழைகள் விபரப் பிழைகள் தேவையற்ற இடைவெளிகள் சொன்னதையே திரும்பக் கூறிடும் தவறுகள் அந்த இடத்தில் தேவையில்லாமல் தரப்படும் தகவல்கள், வாக்கிய அமைப்பில் எந்தச் சொல்லை எந்தச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம் போன்ற விடயங்களைக் கண்டு அவற்றை செப்பனிடுவது ஒரு நகலாசிரியரின் பணியாகின்றது. இதன் மூலம் நூலாசிரியரின் மூலக்கருத்தில் கை வைக்காமல் அத்திருத்தங்களை ஆசிரியருக்குச் சுட்டிக்காட்டி அவரது அங்கீகாரத்துடன் இந்தத் திருத்தங்களை மேற்கொள்வது நகலாசிரியரின் 35L60)LDuJIT(5b.
46 நூலியல் பதிவுகள்

எமது சகோதர எழுத்தாளர்கள் எவ்வளவு திறமையுள்ளவர்களாக இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட பிழைகளை விடுவது சகஜம் என்பதை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் எழுதுகின்ற விடயம் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருந்தாலும் கூட. அதை எழுதும் போது தாங்கள் சொல்வதைச் சரியாகச் சொல்கின்றோமோ என்ற ஒரு பதற்றம் அவர்களுக்கு இருக்கலாம். சிலருக்கு தாம் எழுதியதை சரிபார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லாமலும் இருக்கலாம். இவை எல்லாம் அவரவர் குணாம்சங்களாக இருந்தாலும், எப்பொழுதும் தனது ஆக்கம் நூலுருவில் ஆவணப்படுத்தப்பட்டு 500-1000 பேர் பார்வைக்கு முன்வைக்கும் போது கணிசமான பொறுப்புணர்வுடன் தமது நூலை முன்வைக்க வேண்டும்.
சில காலங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து இலக்கிய நண்பர் புத்திசிகாமணி அவர்களுடன் தொடர்பாடலை மேற்கொண்டிருந்த வேளை, அவரது “சொர்ணம்மா’ என்ற நாவல் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிட்டியது. அந்த நாவலில் பக்கத்துக்குப் பக்கம் எழுத்துப் பிழைகள் மலிந்து காணப்பட்டதையும், ஈழத்து பேச்சு வழக்கில் எழுதப்பட்ட அவரது நாவல் வரிகள் புரியாத பல சொற்களால் குழம்பிக் கிடந்ததையும் காண நேர்ந்ததையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவரது நாவலை வெளியிட்ட தமிழகத்து வெளியீட்டு நிறுவனம் தாமே அந்த நாவலை தட்டச்சுப் பிரதியாக்கம் செய்தமையும் அதைச் செய்த தமிழகத்துத் தட்டச்சாளருக்கு ஈழத்து பேச்சு வழக்குத் தொடர்பான எவ்விதமான அறிவும் இல்லாதிருந்தமையும் அறிய முடிந்தது.
இந்த இடத்தில் அந்தப் பதிப்பகம், சொர்ணம்மா என்ற நூலின் முன்னிலைப் படியை ஆசிரியருக்கு அனுப்பி வைத்து அச்சிடலுக்கான அங்கீகாரத்தைப் பெறத்தவறியது மாபெரும் குற்றம் என்றே கருதுகின்றேன். அதை விட ஒரு புகலிட ஈழத்து இலக்கியவாதியின் ஆத்மார்த்தமான இலக்கிய வடிவம் ஒன்றை தமிழகத்திலுள்ள ஒரு ஈழத்து நகல்ஆசிரியர் மூலம் மீள்பார்வை செய்திருந்தால் இன்று சொர்ணம்மா கம்பீரமாக புகலிடமெங்கும் வலம் வந்திருப்பாள். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்தத் தமிழகத்துப் பதிப்பகங்கள் இத்தகைய ஈழத்து இலக்கிய நூல்களுக்கான உற்பத்திச் செலவை (தபால் செலவு உட்பட) எழுத்தாளர்களிடமே அறவிட்டு லாபத்தை தாம் அறுவடை செய்வது தான். இங்கே நூலின் தரம் என்பதும் எழுத்தாளனின் உணர்வுகள்
என். செல்வராஜா 47

Page 26
என்பதும் அவர்களின் அக்கறைக்கு அப்பாற் பட்டதாகி விடுகின்றது. இதனால்பாதிக்கப்படுபவர் யாரென்று ஆழ்ந்து பார்த்தால், எழுத்தாளரும், அவர்கள் சார்ந்து நிற்கும் ஈழத்து படைப்பிலக்கியத் தளமும் படைப்பின் தரமும் தான்.
தமது ஆக்கம் தாம் விரும்பிய தரத்தில் இல்லாதவிடத்து பதிப்பகத்தை ஒதுக்கி விட்டுப் புதிய பதிப்பகத்தை நாடும் வழக்கம் இன்று நம்மிடையே காணப்படுகின்றது. இது தவறாகும். முடிந்த வரை அந்தப் பதிப்பகத்துடன் போராடி தமது உரிமைகளை வென்றெடுக்க காயப்பட்ட எழுத்தாளர்கள் முன்வரவேண்டும். முடியாத பட்சத்தில் அவர்களது தவறுகளை ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி புதிதாக அவர்களை நாடிச் செல்ல முற்படும் பிற எழுத்தாளர்களை எச்சரிக்க முன்வர வேண்டும. அண்மையில் ஐரோப்பிய தமிழ்ப் பெண் எழுத்தாளர் ஒருவர் தனது நூலை அச்சிட்ட தமிழகத்துப் பதிப்பகம் ஒன்று பதிப்புரிமையை தனதாக்கும் வகையில் ஆசிரியரின் அனுமதியின்றியே நூலில் பதிப்புரிமை தமக்கென்று குறிப்பிட்டிருந்தமையை எதிர்த்துப் போராடி, அவர்களது தவறைத் திருத்தி நூலை எழுத்தாளர் விரும்பியவாறாக மீள்பதிப்புச் செய்து வெற்றிகண்டதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
மற்றொரு புகலிடக் கவிஞரின் நூலொன்றை அச்சிட்டு விநியோகிக்க ஒப்புக்கொண்ட தமிழகத்துப் பதிப்பகம் ஒன்று, அச்சிடல் பணிகள் பாதியில் இருந்த வேளை, அது தீவிர தமிழீழ அரசியல் சார்பான கவிதைகள் என்றும் அதை வெளியிட்டால் தமிழகத்தில் தமக்குப் பாதகமாக ஏதும் நிகழலாம் என்றும் காரணம் காட்டி முழு நூற்பிரதியையும் புகலிடக் கவிஞருக்கே அனுப்பி வைத்து அதற்கான தபால்செலவையும் பின்னர் பறித்துக் கொண்ட கதையும் நான் அறிய முடிந்தது. இந்த இடத்தில் கவிஞருடன் நூல் வெளியீட்டு விநியோகத்துக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளும் முன்னர் பிரதியைப் பார்வையிடத்தவறியது வெளியீட்டகத்தின் குற்றம். ஒப்புக்கொண்ட பணத்தொகைக்கு மேலாக ஒப்பந்தத்தில் குறிப்பிடாத தபால்செலவை அறவிட்டது நியாயமா என்பன போன்ற கேள்விகள் எழுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. எழத்தாளர்களின் குறைகளைக் கேட்டு அதற்காகப் போராடும் வகையில் எழுத்தாளர் ஒன்றியங்கள் பரவலாக இல்லாததும், இதற்குக் காரணம் எனலாம்.
48 நூலியல் பதிவுகள்

இலக்கிய உலகில் ஏற்படுத்தப்படும் இத்தகைய தவறுகள் கூட எழுத்தாளர்களின் முன்ஜாக்கிரதை, மற்றும் படைப்புலகத்திற்கும் அப்பால் வெளியீட்டுலகம் பற்றிய பிரக்ஞை என்பனவற்றின் மூலம் தவிர்க்கப்படலாம்.
அத்துடன் இனி வரும் காலத்திலாவது எமது புகலிட ஈழத்தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாக வளரும் எழுத்தாளர்கள் தமது படைப்பிலக்கியங்களை தங்களுக்கு அறிமுகமான தகுதியான நண்பர்களை நகலாசிரியர்களாக வரிந்து அவர்களிடம் தங்கள் கையெழுத்துப் பிரதியை வழங்கி உரிய திருத்தங்களைச் செய்து பிரசுரத்திற்கு அனுப்பி நூலாக்குவதன் மூலம் எண்ணிக்கையிலல்லாது, தரமான ஈழத்து இலக்கியங்களை தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும்.
நன்றி: தேசம் (இலண்டனி) 2004
என். செல்வராஜா 49

Page 27
மலேசியாவில் தமிழ் நால்கள்: ஆவணப்படுத்தல் பற்றியதொரு தேடல்
நூல்கள் எமது இனத்தின் பண்பாட்டை, கலாசார விழு மியங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தை, அறிவின் தேட்டத்தை எமது தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தன. இத்தகைய பதிவுகள் நாகரிகம் மிக்க ஒவ்வொரு இனத்திற்கும் மிக அவசியமானதாகும். நேற்றைய பதிவுகள் இன்றைய வரலாறு. இன்றைய பதிவுகள் நாளைய வரலாற்றாசிரியர் களுக்கு ஆதாரங்களாக இருக்கப்போகின்றன.
ஒரு நாட்டின், ஒரு தேசியத்தின் அறிவேடுகளைப் பதிவுசெய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்டவையே உலகநாடுகளில் இயங்கி வருகின்ற ஆவணக் காப்பகங்களும், தேசிய நூலகங்களுமாகும். உலக நாடுகளைப் பொறுத்த வரையில் தத்தம் தேசிய இனங்களின் அறிவுத்தேட்டத்தை பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றைப் பதிந்து கொள்ளவும் அதிகாரபூர்வமான இத்தகைய நிறுவனங்களை நிறுவி, அதற்கான சட்டப் பாதுகாப்பையும் வழங்கி, தத்தம் தேசிய இனத்தின் அறிவேடுகளை ஆண்டாண்டு காலமாகப் பேணி வருகின்றன. தமிழர்களான எம்மைப் பொறுத்தவரை எமக்கென்றொரு நாடின்றி உலகமெல்லாம் குடியேறிப் பரந்து வாழும் இனமாக எம் மை அடையாளப் படுத் திக் கொண்டிருக்கின்றோம். எமது அறிவியல் வளங்களைப் பேண நாம் சார்ந்துள்ள நாடுகளின் பிரதான தேசிய இனங்களின் நிழலில் இத்தகைய
50 நூலியல் பதிவுகள்
 

சட்டப்பாதுகாப்புடன் கூடிய அமைப்புக்களின் வாயிலாக எமது ஆவணங்களைப் பதிவுசெய்யவும் பாதுகாக்கவும் முயல்கின்றோம். அத்தகைய ஒரு வரலாற்றுப் பதிவை, தமிழ்த் தேசியத்தின் அறிவுத்தேட்டத்தின் கனதியை, பதிவாக்கும் முயற்சிகள் மலேசியத் தமிழர்களிடையே எவ்வளவு தூரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பதை அறியும் தேடலின் விளைவே இக்கட்டுரையாகும்.
LD (36) flu (85 flu bltp uli gu6) T607g5I (Malaysian National Bibliography), 1966ம் ஆண்டு நூல் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் (Book Preservation Act 1966) பெர்புஸ்த்தகான் நெகரா மலேசியா (Perpustakaan Negara Malaysia) 6T6ip6opaisabi'uluGub LD(36udau (35äu நூலகத்தின் இருப்புக்களை தொகுப்பதன் மூலம் 19 6 இல் பருவ வெளியீடாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1986 ல் இயற்றப்பட்ட 606 Lusselas(65dd5|T60T F-55661 Jast Jib (The Deposit of Library Material Act 1986) ) அதன் ஆவணக் காப்பகத்திற்கு சட்டபூர்வமாக பதிப்பகங்களினால் வழங்கப்படும் வைப்பக நூல் பிரதிகளையும் உள்ளடக்கியதாக 1987 ம் ஆண்டு முதல் விரிவான முறையில் தொகுக்கப்படுகின்றது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் தேசிய நூற்பட்டியல் போலவே மலேசிய தேசிய நூற்பட்டியலும் முழுமையான மலேசியத் தமிழ் நூால களை பதிவுக் குள் ளாகி குவதில் சிக் கல களை எதிர்நோக்குகின்றன. அரசாங்க வெளியீடுகள், பல்கலைக்கழக வெளியீடுகள் ஓரளவு சுவடிகள் காப்பகத்திற்கு ஒழுங்காக அனுப்பி வைக்கப்பட்டாலும், வர்த்தக நோக்கில் தனிப்பட்ட வர்களால மேற்கொள்ளப்படும் நூலாக்கங்கள் அனைத்தும் மலேசிய தேசிய நூலகத்தை அடைந்து நூற்பட்டியலில் இடம்பெறுவதில்லை. இதற்கு அடிப்படையான ஒரு காரணம் என்னவென்றால் மலேசிய தமிழ் நூல்களில் பெரும்பாலானவை மலேசியாவுக்கு வெளியே தமிழகத்தில் அச்சிடப்படுவதாகும். இதை விட பதிப்பகங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தவறுவதும் இதற்கோர் காரணமாகும். இந்நிலையில் மலேசிய தமிழ்நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும், தமிழறிஞர்களும் தத்தமது வசதிக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப இறங்கியுள்ளமையை இங்கு அவதானிக்க முடிகின்றது.
என். செல்வராஜா 51

Page 28
பிரித்தானியரின் ஊடுருவல் மலேயா மண்ணில் ஏற்பட்ட 1874க்குப் பின்னர் இந்தியப் பெருங்கண்டத்திலிருந்து தமிழர்கள் இரப்பர், எணி ணெய் மரப் பயிர் ச் செயப் கைகளுக்காக மலேயாவுக் கு அழைத்துவரப்பட்டுக் குடியேற்றப்படும்போதே தமிழ் இலக்கியமும் அவர்களுடன் நுழைந்துவிட்டது. மலேசிய நூல்வெளியீட்டுத்துறையைப் பொறுத்தவரையில் தமிழகம், இலங்கை ஆகிய நாடுகளின் தமிழ் நூல்வெளியீட்டுத் துறைவளர்ச்சியுடன் ஒப்பிடும் போது பாரிய பாய்ச்சலை வெளிப்படுத்தியிருப்பதை அண்மைக்கால அறுவடைகளைக் கண்ணுறும் போது தெளிவாக அறியமுடிகின்றது. தரமான பதிப்புத் தொழில்நுட்ப வளர்ச்சியின் துணையுடன் இங்கு அழகியல் நோக்குடன் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பெருமிதம் கொள்ளத்தக்க இந்த வளர்ச்சி துர்அதிர்ஷ்டவசமாக தமிழ்நூல் விநியோகமுறைகள் சர்வதேச மட்டத்தில் வளர்ச்சியுறாதமையால் வெளியுலகிற்குத் தெரியாத நிலையில் குடத்துள் விளக்காக உள்ளது. மலேசிய மண்ணில் கால்பதிக்கும் அண்டை நாட்டுத் தமிழர்கள் எவரும் இதனைத் தெட்டெனப் புரிந்துகொள்ள முடிந்தாலும், எத்தனைபேர் இத் தகவலை வெளியுலகிற்கு எடுத்துச் செல்லும் பாங்குடன் செயற்படுகின்றார்கள் என்பது சிந்தனைக்குரிய கேள்வியாகும்.
மலேசிய மண்ணில் பிறந்த முதலாவது தமிழ்நூல்பட்டியல் என்றவகையில் 1969ம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் நூலக வெளியீடாக இராம சுப்பையா அவர்கள் தொகுத்திருந்த தமிழ் LD(36)éust 601st (Tamil Malaysiana: a checklist of Tamil Books and Periodicals published in Malaysia and Singapore) 616 p (T6) அமைகின்றது. மலேயா நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் நிதியத்தின் பண உதவியுடன் இந்நூல் 77 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. அமரர் இராம சுப்பையா அவர்கள் 1964ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடங்களாகப் பல இடங்களுக்கும் திரிந்து தேடித்தொகுத்த இந்த நூலியல் பதிவு முயற்சி அவர் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தபின்னர் இன்றுவரை எவராலும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. இந்நூற்பட்டியலின் பதிவுகள் மூன்று பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளன. முதற்பிரிவில் 1968 வரை வெளியான 401 தமிழ் நூல்களின் நூலியல் விபரங்கள் ஆசிரியர் பெயர் ஒழுங்கில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியிட்ட இடம், வெளியிட்ட ஆண்டு, பக்கங்களின் எண்ணிக்கை ஆகிய அடிப்படை
52 நூலியல் பதிவுகள்

நூலியல் தகவல்களைக் கொண்டுள்ளன. இரண்டாவது பகுதியில் மலேசிய மண்ணில் முளைவிட்ட 271 தமிழ் சஞ்சிகைகள் (Periodicals) பற்றிய பட்டியல் சஞ்சிகையின் பெயர் ஒழுங்கில் தரப்பட்டுள்ளது. இங்கு சஞ்சிகையின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியிட்ட இடம், ஆண்டு என்பன தரப்பட்டுள்ளன. பன்மொழிச் சஞ்சிகையாயின் அது பற்றிய குறிப்பும், பருவக்குறிப்பும் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பிரிவில் (பின்னிணைப்பாக) பல்வேறு நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைச் செய்திகளில் காணப்பட்ட 25 படைப்பாளிகளின் 51 மலேசிய நூல்கள் பற்றிய வெளியீட்டுச் செய்திகளிலிருந்து தொகுத்த விபரங்களைக் கொண்ட ஒரு பட்டியல் காணப்படுகின்றது.
மலேசிய தமிழ் நூல்களின் வெளியீட்டு வரலாறு இன்றைய சிங் கப் புரினி (1965 வரை மலேசிய எழுத்தாளர்களாக இனம்காணப்பட்டவர்கள்) தமிழ் படைப்பாளிகளையும் இணைந்ததாக இருக்கின்றது. மலேசிய மண்ணில் வெளியான முதல் நூலாக க.வேலுப்பிள்ளையின் ‘சிங்கை முருகேசர் பேரில் பதிகம்” என்ற நூலை அடையாளம் காண தமிழ் மலேசியானா உதவுகின்றது. சிங்கப்பூரில் 1893இல் வெளியான இச்சிறுநூல் 12 பக்கங்களைக் கொண்டது. அமரர் இராம சுப்பையாவின் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதிவுகள் மலேசியத்தமிழர்களால் மலேசிய மண்ணிலேயே வெளியான நூல்களை மாத்திரம் கொண்டிருக்கவில்லை. சிங்கை,மலேசியத் தமிழர்கள் இந்தியாவில் வெளியிட்ட நூல்களும், இந்திய இலங்கைத் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூரில் வெளியிட்ட நூல்களும் இடம்பெற்றுள்ளன. அரசாங்க வெளியீடுகளும், சிறப்பு மலர்கள், நிறுவனங்களின் அறிக்கைகள் என்பன தவிர்க்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் ஜூலை 1984இல் உருவான மற்றுமொரு நூற்பட்டியல் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். தமிழ் நூல்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டிராத போதிலும் Indians in Peninsular Malaysia: A Study and Bibliography 6T6örp b|T6) மலேசிய நூாலியல் பதிவில் ஒரு தனித்துவமான இடத்தினை வகிக்கின்றது. ராஜகிருஷ்ணன் இராமசாமி, ஜே.ரவீந்திர டானியல் ஆகிய இருவரும் இணைந்து தொகுத்த இந்நூல் மலாயாப்பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் மற்றொரு நூலியல்துறை வெளியீடாகும். அக்காலகட்டத்தில் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராக
என். செல்வராஜா 53

Page 29
பேராசிரியர்' தேவபூபதி நடராஜா அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார். மலேயாவில் வாழும் இந்திய சமூகத்தவரின் 19ம் 20ம் நூற்றாண்டுக்காலத்து வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், அரசியல், கல்வி, பண்பாட்டு விழுமியங்கள், குடித்தொகைப்பரம்பல், மொழி, இலக்கியம், சுகாதாரம் பற்றிய விடயங்களைத் தாங்கி சர்வதேச அறிஞர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மலேசியாவில் பதிப்பிக்கப்பட்டு வெளியான படைப்புக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வெளியிடப்படாத (கையெழுத்துப்பிரதியாக பல்கலைக்கழகங்களுக்குச் சமர்ப்பித்த ஆய்வுகள்) ஆய்வேடுகள், தனிநூல்கள், பத்திரிகை, சஞ்சிகைகள், ஆய்வு நிறுவனங்களின் ஏடுகள் போன்றவற்றில் இடம்பெற்ற ஆங்கிலக் கட்டுரைகள் என்பன பற்றிய நூலியல் விபரங்கள் இவ்வரிய நூலில் தேடித் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அரங்கில் உலகளாவிய அளவில் ‘மலேசியவியல்’ தொடர்பான நூல்கள், ஆய்வுகள், அறிவியல் ஏடுகளில இடம்பெற்ற கட்டுரைகள் என்பன இலங்கை, இந்திய ஐரோப்பிய நாடுகளில் வெளியாகியுள்ளன. இந்திய ஆய்வியல துறை இத்தகைய தகவல களை பணி னாட்டு நூலியலாளர்களுடனும் பல்கலைக் கழகங்களுட னும் இணைந்து ஒரு தொகுப்பு முயற்சியை மேற்கொள்ளலாம். 1984இல் வெளியான Indians in Peninsular Malaysia: A Study and Bibliography 66ip Sibgs T6560, இரண்டாம் பாகத்தை வெளியிட நிறுவனரீதியில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்வது பயனுள்ளதாகவிருக்கும்.
மலேசியத் தமிழரின் இலக்கிய வரலாற்றை இலக்கியக்குரிசில் மா. இராமையா அவர்கள் 1978இல் தொகுத்து அப்பெயரிலேயே ஒரு நூலாக்கி வெளியிட்டிருந்தார். பின்னாளில் அதன் திருத்திய விரிவான பதிப்பினை மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்ற பெயரில் தமிழகத்தின் சேலம் புரட்சிப்பண்ணையின் வாயிலாக 1996இல் வெளியிட்டுள்ளார். 1946க்கு முன்னைய படைப்புக்கள், 1946க்குப் பின்னைய படைப்புக்கள் என்று மலேசிய தமிழ் நூல்களை வகைப்படுத்தியதுடன், முடிந்தவரை சிறுகதை, நாவல், கட்டுரைகள் என்று பட்டியலாகவும் தந்திருக்கின்றார். மலேசிய தமிழ் இலக்கியத்துறையில் பரவலாக விதந்துரைக்கப்பட்ட குறிப்பிடத்தகுந்த நூல்களைப் பற்றிய தகவல்களையும் அந்நூல்களின் தலைப்பில் இந்நூலில் பதிந்துள்ளார். மலேசிய தமிழ் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள்
54 நூலியல் பதிவுகள்

பற்றிய குறிப்பும், அவர்களது முகவரியும் இந்நூலில் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டிருப்பதை நூலின் சிறப்பம்சமாகக் கொள்ளலாம். நூலின் தலைப்புகளைப் பட்டியலிடும் வேளை, அகரவரிசை ஒழுங்கிலோ ஆண்டு ஒழுங்கிலோ பதிவதில் அக்கறை காட்டப்படாதது ஆய்வாளர்களை சற்று சங்கடப்படுத்தக் கூடுமாயினும் மலேசிய தமிழ் நூலியல் தேவைக்கான ஒரு உசாத்துணை நூலாக இது நிச்சயம் வரவேற்கப்படுவதாக அமையும்.
மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம், என்ற தொகுப்பு நூல் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறனைத் தலைமை தீ தொகுப்பாசிரியராகக் கொண்டும் தமிழ்நாடு, தமிழவேள் பேராசிரியர் இராம. சுப்பிரமணியனை தலைமைப் பதிப்பாசிரியராகவும் கொண்டு மலேசியா, சிலாங்கூர் அருள்மதியம் பதிப்பகத்தினால் 1997இல் வெளியிடப்பட்டது. இப்பாரிய தொகுப்பில் 1887 முதல் 1987 வரையிலான நூற்றாண்டுக் காலத்திற்குரிய சிங்கப்பூர் மலேசிய தமிழ்க்கவிதைகளில் தேர்ந்தெடுத்த அறுநூற்றைம்பது கவிதைகள் இடம்பெறுகின்றன. மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் போது சிங்கப்பூர் எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகளும் அங்கு இணைந்தே ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய தவிர்க்கவியலாத சூழல் காணப்படுகின்றது. இவ்விரு நாடுகளும் இன்று புவியியல்ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும், 1965ம் ஆண்டு வரை ஒரே காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றன. அதுவரையில் தமிழ் இலக்கியமானது மற்றைய மலேசிய மொழிகளைப் போன்று ஒரே தமிழ் இலக்கியப்பாரம்பரியத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளமை இங்கு அவதா னத்துக்குரியது.
கவிதைகளுக்கு நிகராக மலேசிய தமிழ் கவிதை இலக்கியம் பற்றிய ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளும் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலின் இறுதியில் 895ம் பக்கம் முதல் 945ம் பக்கம் வரை தொகுக் கப் பட்டுள்ள நுாற் பட்டியல் குறிப்பிடத்தகுந்ததாகும். இதில் 1887-1987 காலப்பகுதியில் சிங்கப்பூர்மலேசியாவில் வெளிவந்த கவிதை நூல்கள் பற்றிய நீண்டதொரு பட்டியல் காணப்படுகின்றது. 142 கவிதை நூல்கள் மலேசியாவிலும், 33 கவிதை நூல்கள் சிங்கப்பூரிலும் வெளிவந்திருப்பதை அறிய முடிகின்றது.
என். செல்வராஜா 55

Page 30
”விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் நாவல்கள்’ என்ற நூல் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை தலைவராகத் தற்போது பணியாற்றும் டாக்டர் சபாபதி வேணுகோபால் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உமா பதிப்பகத்தினால் 1995இல் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் 19571981 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மலேசியதமிழ் நாவல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சியும் போக்குகளும் பற்றிய தன் ஆய்வில் டாக்டர் சபாபதி வேணுகோபால் பின்வருமாறு கூறுகின்றார்.
’மலேசியாவில் தமிழில் நாவல் இலக்கியம் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தது. மலேசியத் தமிழ்ச் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாறுதல்கள், தமிழ்ப்பத்திரிகைகள், தமிழகத் தாக்கம் ஆகியன இங்கு நாவல் இலக்கியம் தோன்றுவதற்குரிய சூழலை உருவாக்கின. தொடக்கத்தில் தமிழகத்திலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்து இங்கு குடியேறியவர்களே தமிழில் நாவல்களை எழுதினர். ”
இந்த நூலில் ஆய்வாளர், மலேசியத் தமிழ் நாவல்களை விரிவாகப் பட்டியலிட்டதுடன் ஒவ்வொரு நாவலையும் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்துமுள்ளார். குறிப்பிட்டதொரு வரலாற்றுக் காலகட்டத்தின் மலேசியத் தமிழ் நாவல்கள் பற்றிய வரலாற்றைக் கூறும் ஆவணமாக இந்நூலை நாம் கொள்ளலாம்.
தமிழகத்திலிருந்து வந்த ம.மதியழகன் என்ற ஆய்வாளர் ’மலேசியத் தமிழ் நாவல்கள்-ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வுநூலையும் 1988இல் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காரைக்கால் ப்ரீத் வெளியீட்டகம் அதனை வெளியிட்டுள்ளது.
மலேசியத் தமிழ்க்கவிதை நூல்களில் யாப்பமைதி ஒரு கண்ணோட்டம் என்ற ஒரு திறனாய்வு நூல் பாவலர் டாக்டர் இரா. சண்டமாருதம் என்ற புனைபெயரில் கவிஞர் டி.வி.இராகவன்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு சிலாங்கூர் முத்தமிழ் வெளியீடாக வெளியிடப் பட்டுள்ளது. இச்சிறு நூல் இன்றைய மலேசியக் கவிதைகளில் காணப்படும் குறைபாடுகளை விமர்சிப்பதாக அமைந்திருந்தாலும், நூலில
56 நூலியல் பதிவுகள்

அவர் திறனாய்வுக்குட்படுத்திய நூல்களின் விபரங்கள் முழுமையான நூலியல் தரவுகளுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இலண்டனில் இருந்து வெளியாகும் தேசம் என்ற கலை இலக்கிய சமூகவியல் சஞ்சிகையின் ஆதரவில் மிக அண்மைக்காலத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய கருத்தரங்கும் மலேசிய நூல்கள், சஞ்சிகைகளின் கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இலண்டன் ஸ்ட்ரட் போர்ட் (Stratford Library) நூலகத்தில் 5.4.2003இல் இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் சர்வதேச தமிழ் சமூகத்திலுமிருந்து இலக்கியவாதிகளும் ஆய்வாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது தேசம் சஞ்சிகையின் சிறப்பிதழாக “மலேசியத் தமிழ் இலக்கியம்” என்ற மலரும் வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில் மலேசிய இலக்கியம் தொடர்பான கட்டுரைகளுடன் கண்காட்சிக்கு வைக் கப்பட்டிருந்த சுமார் 100 மலேசிய தமிழ் நூல்களின் விபரங்களைக்கொண்ட குறிப்புரையுடன் கூடிய நூற்பட்டியல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை ஆரம்பித்து வைத்த பெருமை மாத்திரமல்ல, பல்வேறு தமிழியல் முயற்சிகளுக்கும் அடித்தளமாகி நின்றுள்ள பெருமை இந்த மலேசிய மண்ணுக்கு உரியது. மலேசியாவில் தமிழ் வளர்க்கும் தகைமையாளர்கள் அவ்வப்போது தோன்றி, தமிழ் மக்களிடையே தமிழுணர்வையும் இன உணர்வையும் வளர்த்துவந்திருக்கிறார்கள். உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு விழா, உலகத்திருக்குறள் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு, உலகத் தமிழ் எழுத்தாளர் தினம் என உலகளாவிய நிலையில் சிந்திப்பதற்கும் சந்திப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் முதல் கால்கோள்விழாவை மலேசிய மண்ணில் இடம்பெறச்செய்த மலேசியத்தமிழர்களின் இலக்கிய வளத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை உலகத் தமிழர் அனைவருக்கும் உள்ளது.
இலக்கிய வளங்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியில் ஒருசில ஈழத்தமிழர்கள் ஏற்கெனவே பங்காற்றியுள்ளார்கள் என்பது இனிப்பான செய்தியாகும். தனிநாயகம் அடிகள் தொடக்கிவைத்த இந்த தமிழியல் பாலத்தை அண்மையில் மாத்தளை சோமு அவர்கள்
என. செல்வராஜா 57

Page 31
மீள்நினைவுகூரவைத்துள்ளார். மலேசியச் சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து நூலுருவில் அவர் வெளியிட்டிருக்கின்றார். அண்மையில் மலேசியச் சிறுகதைகள் சிலவற்றைத் தேர்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து சர்வதேச சமூகத்துக்கு மலேசியத் தமிழ் நாவலிலக்கியத்தின் நுகர்வின்மூலம் மலேசிய மண்ணின், அதன் மக்களின் வாழ்வியல் கோலங்களை அறியும் வாய்ப்பு சர்வதேச சமூகத்திற்கு இந்த ஆங்கில நூலின் வாயிலாகக் கிட்டியுள்ளது.
இன்றைய நிலையில் கடலெனப் பெருகிவரும் மலேசிய தமிழ் நுால கள் பற்றிய விபரங்கள் வரலாற்றுத் தேவைகருதிப் பதிவுசெய்யப்படவேண்டும் என்ற கருத்து மலேசியத் தமிழ் ஆர்வலர்களிடையே மேலோங்கி வருவதும் ஆரோக்கியமான தொரு சமிக்ஞையாகக் காணப்படுகின்றது. அத்தகைய ஒரு முழுமையான மலேசிய தமிழ் நூல்களுக்கான நூற்பட்டியல் ஒன்றின் தேவை பற்றிய சிந்தனை மேலும் விரிவாக வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். அதற்கு மலேசிய தமிழ் ஊடகங்களின் பணி அவசியமாகின்றது. அச்சில் வெளியிடப்பட்ட மலேசிய தமிழ் நூல்கள் அனைத்தினதும் தொகுப்பொன்றை அமரர் இராம சுப்பையாவின் பணியின் தொடர்ச்சியாக மேற்கொண்டு, அதன் மூலம் இன்று மலேசியாவுக்குள்ளும், வெளியிலும் மலேசியத் தமிழர்களால் பெருமளவில் பிரசுரமாகும் நூல்கள் அனைத்துக்குமான பதிவை மேற்கொள்ள இலண்டனில் இருந்து என்னால் * நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிக்கு உதவும் கரங்கள் அனைத்தும் அன்புடன் வரவேற்கப்படுகின்றன. மலேசிய எழுத்தாளர்கள், உலகின் எப்பாகத்திலும் தாங்கள் வெளியிடும் நூல்கள் பற்றிய விபரங்களுடன் தொடர்பு கொண்டால் இப்பணி விரைவில் கைகூட வாய்ப்பேற்படும்.
நனிறி: *மலேசியத் தமிழ் இலக்கியம்’, தேசம் சிறப்பிதழ், ஏப்ரல் 2003.
58 நூலியல் பதிவுகள்

மலேசிய தமிழ் நால் வெளியீட்டில்
ஈழத்தமிழர்களின் பங்களிப்பு
ஒரு வரலாற்றப்பதிவு.
தாயகத்திலிருந்து மலேயாவுக்குப் பொருளாதார நோக்கில் புலம்பெயர்ந்த நிகழ்வினையே நாம் ஈழத்தமிழரின் முதலாவது புலப்பெயர்வாகக் கருதுகின்றோம். 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்புலப்பெயர்வு இரண்டாவது உலகமகா யுத்தத்துடன் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகின்றது. இப்புலப்பெயர்வின்போது அங்கு சென்று பணியாற்றியவர்களின் இலக்கிய முயற்சி பற்றிய தேடலை நான் தொகுத்துவரும் ‘நூல்தேட்டம்” என்ற பெயர்கொண்ட ஈழத்து எழுத்தாளர்களின் நூற்பட்டியலுக்காக மேற்கொண்டிருந்த வேளையில் அதிசயிக்கத்தக்க அவர்களது பங்களிப்புகள் பல வெளிச்சத்திற்கு வந்தன. பொருளாதாரக் காரணிகளின் பின்னணியில் எம்மவரால் மறக்கப்பட்டுவிட்ட இந்த யாழ்ப்பாணத்து மலாயன் பென்சனியர் சமூகத்தின் புகலிடத்து இலக்கியப் பங்களிப்பு, மலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாததாகியுள்ளது. இன்றைய நிலையில், புலம்பெயர் வாழ்வியலில் அவர்களது இலக்கியப் பங்களிப்புப் பற்றி நான் தேடித் தொகுத்த சில தகவல்களையாவது வாசகர்களுடன் பரிமாறிக்கொள்ள விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவே இக்கட்டுரையாகும்.
இது மலேசிய இலக்கியத்திற்கு எம்மவரின் பங்களிப்பைப் பற்றிய தரும் முழுமையானதொரு ஆய்வல்ல. அத்தகையதொரு முழுமையான ஆய்வினை நோக்கிய ஒரு சிறு காலடித்தடம் என்று வேண்டுமானால் இக்கட்டுரை முயற்சியைக் கருதலாம். இக்கட்டுரையின் விரிவஞ்சி ஈழத்தமிழர்களின் முழுமையான இலக்கியப்பணிகள் விபரிக்கப்படவில்லை
என். செல்வராஜா 59

Page 32
தற்போது சிங்கப்பூரில் நிரந்தரப் பிரஜைகளாகி வாழும் ஈழத்தமிழர் சிலரின் இலக்கியப்பணியும், போதிய தொடர்பின்மையால் இக்கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஈழத்தமிழரின் மலேசிய- சிங்கை இலக்கியப்பணிகள் பற்றிய ஆய்வுகள் விரிவான முறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உணர்வினை இக்கட்டுரை நிச்சயம் வாசகர் மனதில் ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
மலேயாவில் ஈழத்தமிழர் புலப்பெயர்வு
சோழர் காலம் முதலாக (கி.பி. 846-1279) மலேசிய மண்ணில் தமிழரின் கால் பதிந்த வரலாற்றுத் தடங்கள் காணப்படுகின்ற போதிலும், 1786-ல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தபிறகே, தமிழர்களின் பாரிய குடியேற்றங்கள் அங்கு ஏற்பட்டுள்ளன. மலேசியக் குடியேற்ற வரலாற்றில் மலேசிய நாட்டை வளப்படுத்த நான்கு கட்டங்களில் அண்டைநாட்டு மக்களின் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
முதலாவது கட்டக் குடியேற்றமாக மலேயர்வின் கரும்புத் தோட்டங்களிலும், பொதுப்பணித் துறைகளிலும் பணியாற்றவெனக் குடியேற்றப்பட்ட தொழிலாளர்கள் அடங்குகின்றனர்.
இரண்டாவதாக, இந்தியாவிலிருந்து தமிழர்கள் இலங்கையின் மலையகத்திற்கு அழைத்துவரப்பட்டது போல, கங்காணி முறையில் தமிழ் நாட்டின் கிராமங்களில் தொழிலாளர்களைத் திரட்டுவதன் மூலம் வேலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் அடங்குகின்றனர். இந்தியாவில் அக்காலகட்டத்தில் நிலவிய ஜமீன் அடக்குமுறைகளினாலும் கொத்தடிமைக் கொடுமைகளினாலும் சாதீயத்தினாலும் பாதிக்கப்பட்ட இந்திய ஏழைத்தொழிலாளர்களுக்கு இந்தத் தொழில்சார் புலப்பெயர்வு மிகுந்த எதிர்பார்ப்பைத் தந்திருந்தது. அப்போதைய நாகபட்டினம் துறைமுகம் இந்தத் தொழிலாளர்களை ஏற்றி வருவதற்கு மிகவும் பயன்படுத்தப்பட்ட இடமாகும்.
மூன்றாவதாக, பிழைப்பு நாடிச் சுயமாக மலேயாவுக்கு வந்தவர்கள் இடம்பெறுகின்றார்கள். மலேசிய மண் சற்று வளமுற்று வர்த்தகம் பெருகிய காலகட்டத்தில் செட்டியார்கள், முஸ்லீம் வணிகர்கள், சீக்கியர்கள்,
60 நூலியல் பதிவுகள்

சிந்திக்காரர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற பிரிவினரும், அதற்கும் பின்னர் சற்றே ஆங்கிலம் கற்றிருந்த இலங்கைத் தமிழர்களும் குடி யேறினார்கள்.
இலங்கைத் தமிழர்களில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களே இங்கு ஆங்கிலேயர்களால் குடியேற்றப்பட்டிருந்தனர். வண்ணார்பண்ணை, சுழிபுரம், வயாவிளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களிலிருந்து பெருமளவில் இங்கு தபால், கச்சேரி, கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அரசாங்க சேவைகளில் இடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றவென்று யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஆரம்பத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தியத் தொழிலாளிகளுக்கும், ஆங்கிலத் துரைமாருக்கும் இடையில் மொழிவழி இணைப்பாளர்களாக இவர்கள் பணியாற்றியதாக வரலாறுண்டு. மொழிவழியால் தமிழராக இருந்தபோதிலும், மலேசியாவில் குடியேறிய இந்தியத் தமிழ்த் தொழிலாளிகளிடையே யாழ்ப்பாணத் தமிழர் கள் குட் டி அடக் குமுறையாளர் களாகவும் , ஆங்கிலத் துரைகளினி செல்வாக்கைப்பெறும்நோக்கில் அவர்களின் நலன்பேணுபவர்களாகவுமே விளங்கியுள்ளனர். பின்னாளில் மலேசிய மண்ணில் மலர்ந்த இலக்கியங்கள் பலவற்றில் எம்மவர்கள் இத்தகைய குட்டி அடக்குமுறையாளர்களாகவே இனம்காணப்பட்டுள்ளார்கள். .ܝܙ.*
மலேசியமண்ணில் மலர்ந்த கவிஞர்களுள் மூத்த முதுபெரும் மலேசியக் கவிஞர் ந. பழநிவேலு இயற்றிய ‘கவிதை மலர்கள்” (1947) என்ற நூலில் ”சித்தப் போக்கு’ என்னும் தலைப்பில் வரும் பாடல், அக்காலப் பாடுபொருளின் பட்டியலாகவே விளங்குகின்றது.
அயலானர் ஒருவன் என்னை அடிமை இந்தியனே' என்று அழைக்கும் பொழுதும் அதே அடிமை இந்தியன் என்னைத் தாழ்ந்த குலத்தான்’ என்று சாற்றும் பொழுதும் அடிமையின் பயங்கரத் தளையைக் காணும் பொழுதும்
.என் மனம் துடிக்கிறது!
வாணிநேசன் (க.சுப்பிரமணியம், 1971) எழுதிய ‘நானும் வரமுடியாது தான்’ என்ற சிறுகதை யாழ்ப்பாணத் தமிழர்கள் மேலாளர்க
என். செல்வராஜா 61

Page 33
ளாக இருந்து செய்த கொடுமைகளுக்கு மற்றொரு இலக்கியச் சான்று (பார்க்க: வேரும் வாழ்வும் தொகுதி 2)
அண்டைநாட்டு மக்களின் மலேசியக் குடியேற்றங்களில் நான்காவது கட்டம், 1802-ம் ஆண்டில் தமிழ் நாட்டில் போர்க்கைதிகளாகப் பிடிபட்ட தமிழர்களை பினாங்கு தீவை வளப்படுத்தும் நோக்குடன் ஆங்கிலேயர்கள் நாடுகடத்தியபோது ஏற்பட்டது என்று, கர்னல் வெல்சின் "ராணுவ நினைவுகள்” என்ற நூலினை ஆதாரம் காட்டி மலேசிய எழுத்தாளர் பீர் முகம்மது அவர்கள் குறிப்பிடுகின்றார். மருது பாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளுடன் பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட விபரங்கள் அதில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
1921-ல் நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி அங்கு குடியேறிய தென்னிந்தியர்களில் 387,509 பேர் தமிழர்கள், 39,986 பேர் தெலுங்கர்கள், 17,790 பேர் மலையாளிகள் இருக்கக் காணப்பட்டனர். தோட்டப்புறங்களிலும் மற்றும் ரயில்வே, சாலை, மின்சாரம், நீர் விநியோகத் துறைகளிலும் தமிழர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இங்கும் ஆங்கில வழி கல்விகற்ற யாழ்ப்பாணத் தமிழர்களும், மலையாளிகளும் தமிழர்களுக்கு அதிகாரிகளாகப் பணியாற்றும் நிலை உருவாகியது.
மலேயாவில் தமிழ்நூல் வெளியீடு
மலேசிய தமிழ்மொழிக்கல்வி 1816 இல் முதலில் பினாங்கிலேயே தொடங்கப்பட்டது என்று அறியப்படுகின்றது. மலேசிய மண்ணில் பிறந்த முதலாவது தமிழ்நூல்பட்டியல் என்றவகையில் 1969ம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் நூலக வெளியீடாக இராம சுப்பையா அவர்கள் Qg5T(555.cbbgs g5ufip LD(36) durf60TT (Tamil Malaysiana: a checklist of Tamil Books and Periodicals published in Malaysia and Singapore) என்ற நூல் அமைகின்றது. இந்நூலில் 77 பக்கங்களில் 1968 வரை வெளியான 401 தமிழ் நூல்களின் நூலியல் விபரங்களும், மலேசிய மண்ணில் முளைவிட்ட 271 தமிழ் சஞ்சிகைகள் (Periodicals) பற்றிய பட்டியலும் காணப்படுகின்றன.
மலேசிய தமிழ் நூல்களின் வெளியீட்டு வரலாற்றை நாம்
62 நூலியல் பதிவுகள்

ஆராயும் போது, இன்றைய சிங்கப்பூரின் (1965வரை மலேசிய எழுத்தாளர்களாக இனம்காணப்பட்டவர்கள்) தமிழ் படைப்பாளிகளையும் இணைத்தே பார்க்கவேண்டியதாக இருக்கின்றது. சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களின் பங்கு மலேயாவின் நுாலியல் வரலாற்றிலி பிரித்துப்பார்க்கமுடியாதபடி இரண்டறக்கலந்து நிற்கின்றது.
வண்ணை அந்தாதி, வண்ணை நகர் ஊஞ்சல், சிங்கைநகர் அந்தாதி என்ற தலைப்பில் மூன்று சிறு நூல்களை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலிருந்து புலம்பெயர்ந்த சி.ந.சதாசிவ பண்டிதர் சிங்கப்பூரில் எழுதி 1887 இல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் பற்றிய செய்தியை இராம சுப் பையா தனது நுால் விபரப்பட்டியலில் பதிவுசெய்திருக்கின்றார். மலேயாவில் வெளிவந்ததாகப் பதிவுபெற்ற முதல் தமிழ் நூல் இதுவாகவே இன்றைய நிலையில் கருதப்படுகின்றது.
மலேயாவின் முதல் தமிழ் சஞ்சிகை, பினாங்கிலிருந்து 1876இல் ‘‘தங்கை நேசன்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (மா.இராமையா, மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்). இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களில் இலக்கியதாகம் கொண்ட சிலரின் கூட்டு முயற்சியினால் தங்கை நேசன் வளர்த்தெடுக்கப்பட்டது.
மலேசிய மண்ணில் வெளியான மற்றொரு ஆரம்பகால வெளியீடான யாழ்ப்பாணத்தவரான க.வேலுப்பிள்ளையின் "சிங்கை முருகேசர் பேரில் பதிகம்” என்ற நூலை அடையாளம் காண தமிழ் மலேசியானா உதவுகின்றது. சிங்கப்பூரில் 1893இல் வெளியான இச்சிறுநூல் 16 பக்கங்களைக் கொண்டது.
சிங்கை முருகேசர் பேரிலி பதிகம, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை ரீ வி. முருகேசபிள்ளையும் சிங்கப்பூரிலிருக்கும் சில நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகளும் கேட்டுக்கொண்டபடி, யாழ்ப்பாணம், வயாவிளான் க. வேலுப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு, வட்டுக்கோட்டை ச.பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் சிங்கப்பூரில் தீனோதய வேந்திரசாலையில் ஜனவரி 1893இல் அச்சிடப்பட்ட நூலாகும். சிங்கப்பூரில் நாட்டுக்கோட்டைச் செட்டிகளால் தோற்றுவிக்கப்பட்ட முருகன் திருத்தலத்தின் பேரிற் பாடப்பெற்ற 10 பதிகங்களும், திருவூஞ்சல்,
என். செல்வராஜா 63

Page 34
கீர்த்தனம், பதம், ஜாவளி என்பனவும் இச்சிறுநூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் பிரித்தானிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. பதிவிலக்கம் 14170 d 36(2))
மலேசியாவின் தமிழ்நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்
இன்று இலங்கையின் இனவன்முறைக்கு முகம்கொடுக்கமுடியாது உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நூல்வெளியீடுகள், தத்தமது வரலாற்றுப்பாரம்பரியப் பதிவுகளாகவும், மலரும் தாயகத்து நினைவுகளாகவும் பதியப்படுவது போலவே அன்று பொருளாதாரக் காரணிகளால் மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் தமது தேசநினைவுகளை முன் நிறுத்திப் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். தாயகத்தின் நினைவுகளை இன்று கவிதைகளாக வடித்துப் பதிவாக்கும் புலம்பெயர் தமிழர் போன்றே தமது பாரம்பரிய நிலப்பரப்பில் கோயில்கொண்டெழுந்த ஆலயங்களின் மேற் பாடப்பெற்ற பாடல்களாக மலேயா மண்ணில் உருவாகிய ஆரம்பகால ஈழத்தமிழர்களின் நூல்கள் பல அமைந்திருக்கின்றன.
‘சந்திரமெளலிசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகமும் உரையும்” என்ற மற்றொரு நூலையும் இங்கு உதாரணத்திற்குத் தரலாம். ம.க.வே.பிள்ளைப் புலவர் அவர்களது மூலநூலுக்கு, ந.சபாபதிப்பிள்ளை அவர்கள் உரை எழுதி, கோலாலம்பூர், ச. இரத்தின சபாபதி அவர்களால் 1951 இல் கோலாலம் பூர், இந்தியன் அச்சியந்திரசாலையில் 202 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
சைவோபநிஷத்து, சிவாகமம், தக்ஷிணகைலாச மான்மியம், வான்மீகம் முதலிய சம்ஸ்கிருத நூல்களின் உதவியுடன் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தலபுராணம், முதலாய திராவிடநூல்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தி ஈழமண்டலத்தின்மீது பாடப்பெற்ற சதகமும் அதற்கான உரையும் இந்நூலில் அடங்கியுள்ளது.
“கும்பழாவளை விநாயகர் தோத்திரப் பிரபந்தத் திரட்டு” என்ற மற்றொரு நூல் யாழ்ப்பாணத்து க.வே.கந்தையாபிள்ளை அவர்களால், பினாங்கு: கணேச அச்சியந்திரசாலையில் 1933 இல் அச்சிடப்பெற்று 50 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
64 நூலியற் பதிவுகள்

சைவசித்தாந்தம் முதலான இந்து நெறிகளில் தீவிர பிடிப்புள்ளவர் களாக அங்கு குடியேறிய ஈழத்தவர்கள் இருந்துள்ளனர். மலேயா மணி னில் தம் மை உயர் குலத்து சைவ வேளாளர்களாக அடையாளப்படுத்தவதற்கு இத்தகைய இலக்கியப் பதிவுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. “ஆன்மநாயகன் அருள்வேட்டல்" என்ற நூல் சாஸ்திரி ஏ.ஆறுமுகனார் அவர்களால் கிள்ளானில் வெளியிடப்பட்டுள்ளது. முதற்பதிப்பு 1941இல் முதல் வெளியீடு கண்ட இந்நூலின் 2வது பதிப்பு 1984 இல் செலாங்கூரில் வெளியிடப் பட்டுள்ளது. சிங்கப்பூர் ‘தமிழரசு’ பத்திரிகையின் ஆசிரியராயிருந்தவரும், இயற்றமிழாசிரியருமான யாழ்ப்பாணம் ஏ. ஆறுமுகனார் அவர்கள் இந்நூலாசிரியர். இந்நூலிலுள்ள பாடல்கள் தமிழ்மறையான தேவார திருவாசகங்களிலிருந்து தொகுக்கப்பெற்றவை. அகச்சுத்தி, புறச்சுத்தி, புறப்பாடு, தேற்றரவு, மயானம், தீயணைவித்தல், அறவுரை என்று ஏழு பகுப்பில் 84 பாடல்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.
சைவசமய சார சங்கிரகம் என்ற நூல் தி.க.கந்தையாபிள்ளை அவர்களால் கோலாலம்பூர்: மலாயன் அச்சுக்கூடத்தில் தை 1941 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புலோலி ரீலறி தில்லைநாத நாவலரவர்களின் மருகரும் மாணாக்கருமாகிய தமிழ்ப்பண்டிதர் தி.க.கந்தையாபிள்ளை அவர்கள் மலாயாவிலிருந்து சேர். பொன். அருணாசலம் அவர்களின் ஞாபகார்த்தமாக அர்ப்பணம் செய்து வெளியிட்டுள்ள நூல் இதுவாகும். பரம ஐஸ்வர்யங்களாகிய விரத வரலாறுகளின் இலக்கணங்களையும், வருஷப் பிறப்பு முதலிய நற்கருமங்களையும் இன்னும் சில சமய, வரலாற்று விளக்கங்களையும் இந்நூல் வழங்குகின்றது.
“பண்மணிக் கோவை’ என்ற மற்றொரு நூல் ம.ஆறுமுகம் என்பவரால் சிங்கப்பூர்: இலங்கைத் தமிழர் சங்கத்தின் வாயிலாக செப்டெம்பர் 1937 இல் 144 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மனநோயாளர் வைத்தியசாலைத் (Mental Hospital) தலையெழுத்தாளர் ப. கந்தையா அவர்களுக்குச் சமர்ப்பணமாக்கப்பட்ட இந்நூல், பண்டைத் தமிழகத்தின் பழம்பெருமை தொடங்கித் தமிழ் இலக்கியம் , தமிழறிஞர் தம் செம்மொழிகள் , அவற்றால் இந்தியவுலகமடைந்த நலம், சைவசித்தாந்தச் சிறப்பு, கிறிஸ்தவ, என். செல்வராஜா 65

Page 35
இஸ்லாமிய மதங்களின் சாரம், சமயங்களின் சமரச நோக்கம், சாதி மற்றும் சீதனக் கொடுமைகள், மகாத்மா காந்தி முதலான பெரியோர் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள், நட்பு, நன்றி, இல்லற மாண்பு ஈறாகப் பல்வேறு தலைப்புக்களில் பல கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன.
Analysis of the Unseen 6f 6f p grasslaugs g5606) LL60, வெளியாகியுள்ள தத்துவ ஆராய்ச்சி' என்ற வி.எஸ். பூரீபதி அவர்களது T6) draisiuj M.Mohamed Dulfakir, Book Seller 6 Isrufourts 1933 g6) வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் நூலாசிரியர் தனது தாயார் மாது யூரீ பாலாம்பிகை அம்பாள், செல்வாம்பாள் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்படுவதாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் சரமகவி என்ற கல்வெட்டுப் பாரம்பரியத்தின் மற்றொரு பரிமாணமாக இந்நூல் அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
நூலாசிரியர், இலங்கையில் யாழ்ப்பாணம். வண்ணார்பண்ணை களட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்வாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து மலேயாவுக்குச் சென்று குடியேறியவர். இவர் எழுதிய ‘தேகத்தைப் பக்குவமுடைத்தாக்கல்’ என்ற மற்றொரு நூலும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. கிள்ளானில் 1933 இல் வெளியிடப்பட்ட இந்நூலில், மலேயாவில் பத்துபகாட் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் சங்கத்தில் ரீபதி அவர்கள் செய்த உடற்பயிற்சி பற்றிய உபந்நியாசம், தேகாப்பியாச விளக்கப்படங்களுடன் 38 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. தங்களது மேடைப் பேச்சுக் களை, உரைகளை நுாலுருவில் பதிவாக்குவதில் ஈழத்தமிழர்கள் மலேயாவில் வாழ்ந்திருந்த வேளையில் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்கள் என்று நம்பமுடிகின்றது.
முன்னைய நூல் போன்றே, “பார்ப்பது எதை” என்ற மற்றொரு நூலும் இதற்கு உதாரணமாக அமைகின்றது. கா.இராமநாதன் அவர்கள் எழுதி, கோலாலம்பூரில் ஏப்ரல் 1960இல் வெளியிடப்பட்ட இந்நூலில், புதுவயல் சரஸ்வதி சங்கத்தின் வெள்ளிவிழாவின்போது விஞ்ஞானி சா. கிருஷ்ணன் தலைமையிலும், யாழ்ப்பாணம், வறுத்தளைவிளானில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் பிரம்மறி சி.கணேசையர் தலைமையிலும் “பார்ப்பது எதை” என்ற தலைப்பில் கா. இராமநாதன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் இரண்டும் இடம்பெறுகின்றன.
66 நூலியல் பதிவுகள்

சிவயோகத்தில் அமர்ந்து சைவாகமங்களின் பொருட்களை அடக்கி ஆண்டுக்கொன்றாகப் பாடியருளிய திருமூலரின் திருமந்திரப் பாடலொன்று விரிவாகப் பல உதாரணங்களுடன் இவ்வுரையில் விளக்கப்பட்டுள்ளது. அரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் பல இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டு ஐம்பொறிகளில் ஒன்றாகிய கண்களினால் நல்லதும் கெட்டதுமான பல காட்சிகளைப் பார்க்கின்றோம். அப்படிப் பார்ப்பதில் பார்க்கத்தக்கது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக இக்கட்டுரை தருகின்றது.
ஆன்மீகம், இலக்கியங்களுடன் மாத்திரம் அவர்களது நூல் வெளியீடுகள் நின்றுவிடவில்லை. மலேயாவின் பண்டைய, சமகால வரலாறுகள் தமிழில் பதியப்படவேண்டும் என்ற உரத்த சிந்தனை கொண்டவர்களாகவும் ஈழத்தமிழர் அந்நாளில் புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்த வேளையில் விளங்கியுள்ளனர். பண்டைய ஈழத்தின் வரலாறு இலக்கியங்களாகவன்றி, அறிவுபூர்வமாக, முறையாகப் பதியப்படாத ஏக்கம் மலேயாவின் சமகால வரலாற்றுப் பதிவின்மேல் அவர்களின் அக்கறை தீவிரமாக உதவியிருக்கலாம்.
“மலாய மான்மியம்” என்ற மலாயாவின் வரலாறு கூறும் முதல் தமிழ் நூல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்துப்பிள்ளை முத்துத் தம்பிப்பிள்ளையவர்களால் சிங்கப்பூர் விக்டோரியா அச்சகத்தில் அச்சிடப்பட்டு மே 1937இல் முதலாவது பாகம் 247 பக்கங்களிலும், ஜனவரி 1939 இல் இரண்டாவது பாகம் 172 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மகுடாபிஷேக (Coronation) ஞாபகார்த்தமாக இந்திய இலங்கை மக்களின் சார்பாக ஆசிரியரால் வெளியிடப்பட்ட முதலாவது பாகத்தில், நூலாசிரியர் தான் மலாய் நாடுகள் பலவும், சேய்கூன், கம்போஷா, அங்கோர்வாட், சீயம், யாவா முதலிய நாடு முழுவதும் திரிந்து திரட்டிய குறிப்புக்களையும், மலாய் தொடர்பாக இதுவரை வெளியான சுமார் 16 நூல்களையும் ஆராய்ந்து இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார். முதற்பாகத்தில் முதல் 55 பக்கங்களிலும் மலாயாவின் வரலாறு பதிவுக்குள்ளாகியுள்ளதுடன், மலாயா வரலாற்றில் பதியப்படவேண்டும் என ஆசிரியர் கருதிய பல்வேறு பிரமுகர்களது புகைப்படங்கள் சகிதம் அவரவர்களது வாழ்க்கைக்
என். செல்வராஜா 67

Page 36
குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் சாதகமும், நூலாசிரியரின் சாதகமும், அவற்றின் பலன்களும், ஆதாரக் குறிப்புக்களுடன் எஞ்சிய பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. 8வது எட்வார்ட் இளவரசர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுடன் மலாயாவில் வாழும் இந்திய இலங்கைப் பிரமுகர்களின் புகைப்படங்களுடனான அவர்களின் வாழ்க்கைக்குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
முதலாம் தொகுதியின் 1-55ம் பக்கம் வரை விரிந்த மலாயாவின் வரலாற்றுப்பதிவின் தொடர்ச்சி, இந்நூலின் இரண்டாம் தொகுதியின் 632 பக்கங்களில் இடம்பெறுகின்றன. 33ம் பக்கத்திலிருந்து 168ம் பக்கம்
பிரமுகர் களின் உருவப் படங்களுடன் அவர் களது சீவிய சரித்திரக்குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் பிரித்தானிய நூலகத்தில் இன்று பார்வையிடப்படக்கூடிய நிலையில் பேணப்பட்டும் வருகின்றன. (பதிவிலக்கம் 14171 df 44)
“யாழ்ப்பாணக் குடியேற்றம்: பாகம் 1.” என்ற தலைப்பில் சிவானந்தன் என்பவர் 1933இல் எழுதி, கோலாலம்பூர்: ஆர்ட் பிரின்டிங் வேர்க்ஸ் வழியாக அச்சிட்டு வெளியிட்ட நூலொன்று பற்றிய தகவலும், இராம சுப்பையாவின் தமிழ் மலேசியானாவில் காணக்கிடைக்கின்றது.
மலேயாவின் படைப்பிலக்கியம்
மலேசியாவில் தமிழ் இலக்கியம் கிட்டத்தட்ட 118 ஆண்டுகளை இன்று எட்டிப்பிடித்திருக்கின்றது. இந்த நாட்டில் குடியேறிகளாக கொண்டுவரப்பட்ட காலத்திலேயே தங்களுடைய மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேறிய தமிழ் மக்கள் தத்தமது நாட்டு இலக்கிய உணர்வுகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டுதான் வந்தார்கள்.
மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் கால இடைவெளிகள் ஏற்பட்டுள்ளதை மலேசிய இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவெளிகள் இரு முறை ஏற்பட்டுள்ளன. 1918முதல் 1931 வரை 12 ஆண்டுகளும், 1938முதல் 1948 வரை 10 ஆண்டுகளும் இலக்கியத்திலும், நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் இருண்ட ஆண்டுகளாகவே காணப்படுகின்றன. இவற்றுக்கு அன்றைய காலத்தில் நிலவிய போர்க்காலச் சூழலே காரணம் என்று குறிப்பிடப்
68 நூலியல் பதிவுகள்

படுகின்றது. இரண்டாம் உலக மகாயுத்தம் மலேசிய மண்ணில் ஜப்பானியரின் ஆதிக்கத்தை தோற்றுவித்தது. அக்காலகட்டம் இலக்கியத்துறைக்கு இருண்டதொரு காலகட்டமாக அமைந்துவிட்டது. சப்பானியரின் (நிப்பானியர் என்று மலேசியத் தமிழர்கள் றிப்பிடுகின்றார்கள்) பிரச்சாரத்திற்காக ஒரிரு ஏடுகள் அக்காலகட்டங்களில் நடாத்தப்பட்டன. சீரான வளர்ச்சி கண்டு வந்த கல்வி, தொழில், பொருளா தாரம் அனைத்தும் 5 வருடகாலப் பின்னடைவைக்கண்டு தேக்கமடைந்தது. இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களில் பெரும்பங்கினர் ஒய்வுபெற்று தாயகம் நோக்கிய தமது மீள் குடியேற்றத்தை மேற்கொண்டனர். சிலர் மட்டுமே தம்மை மலேசியப் பிரஜைகளாக்கிக் கொண்டு மலேசிய மண்ணிலேயே தங்கி விட்டனர்.
31.8.1957ல் மலேசியா ஆங்கிலேய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்றது. விடுதலைக்குப் பின் மலேசிய இலக்கியம் வீறுகொண்டெழுந்து பன்முக வளர்ச்சி கண்டது. இதற்குப் பின்னரே மலேசியத் தமிழர்கள், மலேசியாவே தங்கள் நாடு என்ற உணர்வுடன் தங்களுக்கே உரித்தான, தனித்துவமான கலை இலக்கியத்தைப் படைக்கத் தொடங்கினர். இந்திய இலங்கைத் தமிழர்களின் ஆதிக்கம் அங்கு படிப் படியாகக் குறைந்தது. பல வேறு வாழ் வியல் பிரச்சினைகளையும் இயற்கை, காதல், இனவுணர்வு, மொழியுணர்வு, நாட்டுப்பற்று, போன்றனவற்றையும் பாடுபொருளாகப் புனைந்து மலேசியத் தமிழ்க் கவிதைகள், நாவல்கள், உரைநூல்கள், அறிவியல் நூல்கள் என்று பெருகத் தொடங்கின. இன்றுவரை வீறுடன் மண்ணின் இலக்கியங்களாக வளர்ச்சி கண்டு வருகின்றது.
ஆரம்பகால இலக்கியங்களில் ஈழத்தமிழர்
ஆரம்பகால மலேசிய இலக்கியங்களில் ஈழத்தவரின் பங்கு மலேசிய இலக் கிய வரலாற்றுடனர் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளது. 1910ம் ஆண்டுக்கும் 1920ம் ஆண்டுக்குமிடையே மலேசியா தனது முதல் நாவலைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் இரு நாவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதிய கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி என்ற நாவல் 1917இலும், புலோலியூர் க. சுப்பிரமணியம் என்ற ஈழத்தவர் எழுதிய பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் என்ற நாவலின்
என். செல்வராஜா 69

Page 37
இரண்டாம் பாகம் 1918இலும் வெளியாகின. மலேசிய நாவல் இலக்கியத்தின் முன்னோடியாகக் காணப்படும் இரண்டு நூல்களும் இவ்விரு பாகங்களைக் கொண்டன.
ஈழத்தவரின் நாவலின் இரண்டாம் பாகமே 1918இல் வெளியாகி யுள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது. இதன் முதலாம்பாகம் பற்றிய தகவல் இல்லாதிருப்பதால், 1917இல் வெளியானதும் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதியதுமான ‘கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி” என்ற நாவலே முதல் நாவலாக இன்றுவரை வரலாற்றில் பதிவில் உள்ளது. என்றாவது இந்த நாவலின் முதற் பாகம் ஆவணக்காப்பகங்களில் இருந்து எமது கண்களை எட்டினால், மலேசிய தமிழ்நாவல் இலக்கிய வரலாறு மீளவும் திருத்தி எழுதப்படலாம்.
புலோலி க. சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்ட * பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம்” என்ற நாவலின் இரண்டாம் பாகம், பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு அவர்களால் 1918இல் பினாங்கு, எட்வார்ட் பிரஸ் வாயிலாக 183 பக்கங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டிருந்தது. மலேசியாவில் Krian Licensing Board இல் அங்கத்தவராயிருந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர். மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலின் இரண்டாம் பாகம் 22ம் அத்தியாயத்திலிருந்து 36ம் அத்தியாயம் வரை கொண்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மலாயா நாடு இந்நாவலின் கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப்பரம்பல், இலங்கை. இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சி 'நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு” என்ற மற்றொரு நாவலாக (1923) அமைந்துள்ளது. மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது.
70 நூலியல் பதிவுகள்

சாம்பசிவம். ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம என்ற நாவல் அ. நாகலிங்கம் அவர்களால் 1927இல் எழுதப்பட்டது. இது 343 பக்கம் கொண்டது. 29.02.1901 இல் பிறந்த இந்நூலாசிரியர், 1917இல் மலேயாவுக்குச் சென்று அங்கு கோலாப்புலாவில் 22 வருடங்கள் திறைசேரியில் தலைமை இலிகிதராக(Clerk) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது 26வது வயதில் எழுதிய நாவல் இதுவாகும். மலேயாவில் இவர் உத்தியோகம் பார்த்த கோலப்புளாவில் முழுவதும் விற்றுத் தீர்க்கப்பட்ட நாவல் இதுவாகும்.
கோரகா நீ தனி அலி லது தென் மலாயா கிரியிலி வட இலங்கைத் துப்பாளி. என்ற நாவல் மு.சீ. செல்வத்துரை அவர்களால் எழுதப்பட்டு கோலாலம்பூர் பத்து பகாட், எம்.எஸ்.சுப்பையா அவர்களால் 1934 இல் 326 பக்கம் கொண்ட நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. ஈழத்தமிழரின் இந்நாவல் துப்பறியும் நாவலாக மட்டுமல்லாது, வாசகர்களுக்கு நல்ல அறிவுரை கூறுவதாகவும் எழுதப் பட்டுள்ளது. மலேசிய தமிழ்ச்சமுதாயத்தில் தென்னிந்திய சீர்திருத்தவாதிகளின் கருத்துக்கள் ஊடுருவியிருந்த காலகட்டத்தில் உருவான நாவல் இது. கொள்ளையர் கூட்டமொன்றைச் சேர்ந்த கோரகாந்தன் என்பவனைப் பிடிக்க முயற்சிக்கும் துரைராசா என்ற துப்பறிவாளர் பற்றிய கதை. யாழ்ப்பாணத்திலிருந்து மலாயாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற நூலாசிரியர் இலங்கைத் தமிழர் மலாயாவுக்கு வந்து குடியேறியதையும், இவ்விரு நாடுகளுக்குமிடையே இருந்த தொடர்புகளையும் சமகாலத்தில் மலாயாவில் வாழ்ந்த மலாய்க்காரர் பற்றியும் இந்நாவலில் விபரித்திருக்கின்றார்.
"நேசமலர் அல்லது கற்றோரின் கனா’ என்ற மற்றொரு நாவல், செ.சிவஞானம் அவர்களால் சிங்கப்பூர் ஈஸ்டேர்ன் பிரிண்டிங் வேர்க்ஸ் , வாயிலாக 1936 இல் 110 பக்கம் கொண்டதாக வெளியிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சுழிபுரத்திலிருந்து மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த நூலாசிரியர் எழுதிய சமூகநாவல் இதுவாகும். யாழ்ப்பாணத்தினை கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளதுடன், அக்காலகட்டம் வரை மலேசிய தமிழ் நாவல் வரலாற்றில் உண்மைக் காதலை நயம்படஉரைப்பதுடன் காதல் உணர்வை ஆழமாகவும் வேகமாகவும் வெளிப்படுத்தும் சிறந்த நாவல் என்று புகழப்பெற்றது. மணியம் மகாலிங்கர் என்பவர் தனது மகள் நேசமலரை விஜயரத்தினம்
எனி. செல்வராஜா 71

Page 38
என்ற வக்கீலுக்கு 70000 ரூபா வரதட்சணை வழங்கித் திருமணம் முடித்துவைக்க நிச்சயிக்கிறார். நேசமலரோ வக்கீலின் துர்நடத்தைகளை அறிந்து அவரை ஒதுக்கி ஏழைத் தொழிலாளியின் மகனான நேசகமலனை பலத்த எதிர்ப்புக் கிடையே மணம் முடிக்கிறாள். வரதட்சணை, கல்வி, ஆலயங்களில் உயிர்ப்பலி, விலைமகளிர், அரசியல், சாதிப்பிரச்சினை என்று பல செய்திகளை இந்நாவலில் தூவியிருக்கிறார்.
* அழகானந்த புஷபம் .’’ என்ற நாவல் , மற்றொரு இலங்கையரான க.டொமினிக் அவர்களால், சிங்கப்பூர் விக்டோரியா பிரஸ் வாயிலாக 1936 இல் வெளியிடப்பட்டது.
பழமையில் ஊறிக்கிடக்கும் கிராமவாசிகளுக்கும், நாகரீக முதிர்ச்சிபெற்ற நகரப்புறவாசிகளுக்கும் இடையே ஏற்படும் சில சிக்கல்கள் இந்நாவலில் சித்திரிக்கப்படுகின்றன. உயர்கல்வியும் ஆங்கில மோகமும் கொண்ட செல்வத்துரையின் வாழ்வு அவனது துர்நடத்தை காரணமாக திசைமாறிச் சீரழிவதாகவும், ஏழைக்குடியானவனான அழகானந்தன் சுயமுயற்சியால் வாழ்வில் முன்னேறிச் செல்வதாகவும் கதை நகர்த்தப்படு கின்றது. சுகாதாரம், கல்வி, அறம், சமுதாய இன்னல்கள், பெண்களின் நிலை, ஆங்கில மோகம் போன்றவற்றைப் பற்றிய அறிவுரைகள் நாவலின் கதாபாத்திரங்களின் வழியாக உபதேசிக்கப்படுகின்றது. விடுதலைக்கு முந்திய மலேசியத் தமிழ் நாவல்களிலேயே இந்நாவல் ஒன்றில் தான் ஏராளமான பாடற் பகுதிகளும் பழமொழிகளும் கையாளப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழோடு இலக்கியத் தமிழும் இந் நாவலில் உரையாடல்களாகின்றன. இராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக அன்றைய மலாயாவில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்க ளின் நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. இது இந்நாவலுக்கு மலேசிய மணி வாசனையைத் தந்துள்ளது. மற்றெந்த இலக்கியத்திலும் இல்லாதவகை யில், இந்நாவலில் ஆசிரியர் யாழ்ப்பாணத்துத் தமிழர்களை மலாயா வராது தடைசெய்து தத்தமது சொந்த ஊரிலிருந்தே நல்வாழ்வு வாழும் படி அறிவுறுத்துகின்றார் . இது மலேயாவுக் கான யாழ்ப்பாணத்தவரின் புலம்பெயர்வில் திருப்புமுனைக் காலகட்டம் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.
மலேசிய மண்ணில் விளைந்த ஈழத்தவரின் மற்றொரு நாவலான “சயம்புநாதனும் சன்னாசியாரும் அல்லது அறிவாளி” என்ற நாவல்
72 நூலியல் பதிவுகள்

பற்றிய குறிப்பொன்றை மலேசிய இலக்கிய வரலாற்று நூல்களில் காணமுடிகின்றது. 1935இல் கதிரேசம்பிள்ளை அவர்கள் எழுதியதாகக் கருதப்படும் இந்நாவலும், ஏற்கெனவே குறிப்பிட்ட, “பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம்” முதலாவது பாகம் போன்றே காணக்கிடைக்காத நூலாகிவிட்டது.
மலேசிய மண்ணுக்குரிய இலக்கியத்தின் மலர்வு
மலேசிய இலக்கியத்தின் மீள்பிறப்புக் காலமாக 1946 கருதப்ப டுகின்றது. பிரித்தானிய- ஜப்பானிய போர் அழிவுகளிலிருந்து மலேசிய மக்கள் மீண்டு மூச்சு விட அரம்பித்த காலகட்டத்தின் தொடக்கம் இதுவாகும். இந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழராகத் தம்மை இனம்காட்டி இலக்கியம் படைத்தவர்கள் தாய்நாடு திரும்ப, மலேசிய மண்ணின் இக்கியத்தில் ஈழத்தமிழரின் பங்கு கணிசமாகக் குறைய ஆரம்பித்தது. அந்த இடத்தை, மலேசிய மண்ணின் மைந்தர்களான மா.இராமையா, சி.வீ. குப்புசாமி, சுப. நாராயணன், பைரோஜி நாராயணன், பி.ஏ.கிருஷ்ணதாசன், அ.இராமநாதன் போன்றோர் நிரவி முழுமையான மண்வாசனை கொண்ட மலேசிய இலக்கியங்களை மலேசிய மண்ணைக் கதைத்தளமாகக் கொண்டு படைக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இன்று ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது. மு.அன்புச் செல்வன், முல்லை இராமையா, வே. சபாபதி, என்று ஒரு படையணியே மலேசிய தமிழ் இலக்கியத்தை நகர்த்திச் செல்கின்றது.
மலேசியாவில் ஈழத்தமிழர்களின் தற்கால இலக்கியப்பணி
மேற்சொன்ன மலேசியத் தமிழ் இலக்கியகர்த்தாக்களிடையே, ஈழத்தமிழர்களைப் பிரித்து நோக்கும் வாய்ப்பு இல்லாத போதிலும், தவத்திரு தனிநாயகம் அடிகளின் தமிழாய்வுப்பணியின் பங்களிப்பை அங்கு போற்றிவரும் பாங்கு கானப் படுகின்றது. மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர்களாகவிருந்த இரண்டாம் தலைமுறை ஈழத்தவர்களான தேவபூபதி நடராஜா, திலகவதி, போன்றவர்கள் அறிவார்ந்த படைப்பிலக்கியப் பணிகளையும், ஆன்மீகத் துறை வெளியீடுகளையும் காலத்திற்குக் காலம் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில், ஈழத்து
என். செல்வராஜா 73

Page 39
இலக்கியங்களுக்கென்றொரு தனியான இடம் இந்திய ஆய்வியல் துறைத் தலைவராகவுள்ள பேராசிரியர் வே.சபாபதி அவர்களின் நேரடிப் Gumpus) 6f 6Tg5. (Associate Professor Dr. V.Sabapathy, e-mail: SabavenuGum.edu.my)
முதலாவது மலேசிய திருமந்திர மாநாடு பற்றிய தொகுப்பு நூலொன்று தேவபூபதி நடராஜா அவர்களால் கோலாலம்பூர், மலேசிய இந்து சங்கத்தின் வாயிலாக மார்ச் 2000 இல் வெளியிடப்பட்டிருந்தது. 118 பக்கம் கொண்டதும், வண்ணத் தகடுகள் நிறைந்ததுமான இம்மலரில், மலேசியா, கோலாலம்பூரில் 10.3.2000 தொடக்கம் 12.3.2000 வரை நடந்தேறிய முதலாவது மலேசியத் திருமந்திர மாநாட்டு நிகழ்வுகள், கட்டுரைகள் அடங்கியிருந்தன.
மாத்தளை சோமுவின் பங்களிப்பு
இலங்கையின் பிரபல மலையக இலக்கியவாதியான மாத்தளை சோமு அவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். அவரது இலக்கியப் பங்களிப்பு இன்றைய காலகட்ட மலேசிய இலக்கியத்துடன் இணைந்ததாக அமைந்துள்ளது.
“மாத்தளை முதல் மலேசியா வரை” என்ற அவரது பிரயாண இலக்கிய நூல் திருச்சி தமிழ்க்குரல் பதிப்பகத்தின் வாயிலாக உறையூரில் மார்ச் 2000 வெளியிடப்பட்டிருந்தது. 126 பக்கங்கள் கொண்ட இக்கட்டுரைத் தொடரில் மலேசிய நாடு பற்றியும், மலேசிய மக்கள் பற்றியும், மலேசியத் தமிழர்களின் கலை இலக்கிய பத்திரிகைத்துறை முயற்சிகள் பற்றியும் பல அரிய தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தனது மலேசிய இலக்கியப்பயணத்தின் போது கண்டு கேட்டு அனுபவித்த தகவல்களின் தொகுப்பாக இப்பயணக்கட்டுரை அமைந்திருந்தது.
ஏற்கெனவே மலேசிய தமிழ் உலகச் சிறுகதைகள், என்ற தலைப்பில் மாத்தளை சோமு அவர்கள் 1995ஆம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 14 மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கியிருந்தன. பின்னிணைப்பாக மா. இராமையா, இலங்கைகுன்றின் குரல் டிசம்பர் 1992 இதழுக்காக எழுதிய மலேசிய தமிழ் இலக்கியம் - ஒரு நினைவோட்டம் என்ற கட்டுரையும் இடம் பெற்றிருந்தது.
74 நூலியல் பதிவுகள்

மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பாடப்புத்தகமாகவும் வைக்கப்பட்ட சிறப்பு இந்நூலுக்கு உண்டு.
அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தனி நூலாகவும் வெளியிட்டிருந்தார். இதன்மூலம் சமகால மலேசிய மண்ணின் படைப்பிலக் கிய கர்த்தாக்களின் மண்வாசனைமிக்க படைப்புக்கள் சர்வதேசஅரங்கில் எடுத்துச் செல்லப்படும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
மலேசிய நூல்தேட்டம்
இலண்டனில் 1997முதல் வெற்றிகரமாக வெளிவந்து கொண்டி ருக்கும் ‘தேசம்’ என்ற கலை இலக்கிய சமூகவியல் சஞ்சிகையின் வெளியீட்டாளர்களின் அனுசரணையுடன், 05.04.2003 அன்று இலண்டன் Stratford Library Hall இல் மலேசிய தமிழ் இலக்கிய நிகழ்வும், மலேசிய தமிழ் நூல்கண்காட்சியும் நடத்தி வைக்கப்பட்டன. மலேசிய மண்ணுக்கு வெளியே ஐரோப்பிய தேசமொன்றில் இடம்பெற்ற முதலாவது மலேசிய இலக்கிய விழா இதுவேயாகும். ஈழத்தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பல மலேசிய எழுத்தாளர்களின் தொடர்பு ஐரோப்பிய ஈழத்தமிழ் எழுத்தாளர்களுக்கும், இலக்கியப் பிரமுகர்களுக்கும் இந்நிகழ்வின் போது கிட்டியது. அத்தருணம் ‘மலேசியத் தமிழ் இலக்கியம்: தேசம் சிறப்பிதழ்’ என்ற மலர் ஒன்றும் என்.செல்வராஜா, த.ஜெயபாலன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு 48 பக்கங்களில் வெளியிடப்பட்டது. இவ்விதழில் மலேசிய இலக்கியம் பற்றிய ஈழத்து, மலேசிய எழுத்தாளர்களின் ஆக்கங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மலேசிய சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றின் விபரங்கள் கொண்ட மலேசிய நூல்தேட்டம் பதிவுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை பதிவுசெய்யும் முயற்சியும் இலண்டனில் முன்னெடுக்கப் பட்டுள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினதும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையினதும், தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தினதும் ஆதரவுடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமரர் இராம சுப்பையா அவர்கள் 1969இல் தொகுத்திருந்த
என். செல்வராஜா 75

Page 40
‘தமிழ் மலேசியானா'வின் அடியொற்றி விரிவான முறையில் தயாராகும் இந்த நூற்பட்டியலின் வெளியீட்டுடன், மலேசிய நூலியல் முயற்சிகளில் ஈழத்தமிழரின் பங்களிப்பு மேலும் ஒரு படி நெருக்கமடையும்.
(ԼՔ էգ 6765» Մ
மலேசியாவில் தமிழ் வளர்க்கும் தகைமையாளர்கள் அவ்வப்போது தோன்றி, தமிழ் மக்களிடையே தமிழுணர்வையும் இன உணர்வையும் அவ்வப்போது வளர்த்து வந்துள்ளார்கள். ஏதாவது ஒரு புதுமை என்றால் அது மலேசிய மண்ணில் தான் நிகழ்கிறது என்ற கருத்து இன்று வலுவாகி வருவதற்கு அங்கே நிகழ்ந்து முடிந்த பல முதல் மாநாடுகள் சான்றாக அமைகின்றன. முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு விழா, உலகத்திருக்குறள் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு, உலகத் தமிழ் எழுத்தாளர் தினம் எனப் பட்டியல் நீளும்.
இத்தகைய விடயங்களை உலகளாவிய நிலையில் சிந்திப்பதற்கு, சந்திப்பதற்கு செயல்படுத்துவதற்கு முதல் கால்கோள்விழாவை மலேசிய மண்ணில் மலேசியத் தமிழர்கள் தான் செய்கின்றார்கள். இருந்தும் மலேசிய இலக்கியங்கள் குடத்துள் விளக்காகவே நீண்டகாலம் ஒளிபாய்ச்சி வந்துள்ளன. இவ்விளக்கை குன்றின் மீது ஏற்றி வைக்கக் கை கொடுப்பதற்கு மலேசிய இலக்கியவாதிகள் அண்மைக்காலம் வரை பெருமளவில் நம்பியிருந்த தமிழகத்தின் படைப்பிலக்கிய உலகம் முன்வரவில்லை. இன்று வெறும் ஆலோசனைகளையும், அறிவுரைக ளையும் மலேசிய படைப்பிலக்கிய கர்த்தாக்கள் எதிர்பார்க்கவில்லை. தம்முடன் தோள்கொடுத்து, மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகறியச் செய்வதற்கான துணையையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதை மானசீகமாக உணர்ந்தவர்கள் ஈழத்துத் தமிழர்களே என்ற கருத்தும் மலேசிய இலக்கியவாதிகளிடம் மேலோங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் படைப்பிலக்கியங்களுக்கும், அவர்களது அண்மைக்கால புலப்பெயர்வு வரை இத்தகைய நிலைமையே காணப்பட்டு வந்துள்ளது.
மலேசிய மண்ணில் இன்று மலேசியாவின் அடையாளச் சின்னமாக நிமிர்ந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள் கூட, யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேயாவுக்குச் சென்றடைந்தது
76 நூலியல் பதிவுகள்

இன்று மலேசியாவின் பெற்றோலியத் துறையின் பெரும் பங்காளராக இருக்கும் இலங்கைத் தமிழர் ஒருவருக்கே உரியது என்ற செய்தியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மலேயாவுக்கு பொருளாதார வளம் நாடிக் குடியேறிய யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் மேலாதிக்கப் போக்கினால் தமது மூதாதையர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மனக்காயங்கள் நடந்து முடிந்த வரலாறாகியுள்ள இன்றைய நிலையில் நவீன ஈழத்தமிழர்களின் தாயக மீட்பும், புலம்பெயர்வாழ்வும் மலேசியத் தமிழர்களிடையே புதியதொரு பார்வையை அக்கறையை ஈழத்தமிழர்களின் பால் ஈட்டியுள்ளது. இதற்கு ஆதாரமாக பல விடயங்களை அந்த மண்ணில் காண முடிகின்றது.
கோலாலம்பூரிலிருந்த ‘செம்பருத்தி’ என்ற மாத இதழ் நீண்டகாலமாக வெளிவருகின்றது. ஈழத்தமிழரின் ஆதரவுக் குரல்கள் அதில் வெளிப்படையாக ஒலிக்கின்றன. பெ.கோ. மலையரசன் அவர்கள் 2003இல் பாய்புலி பிரபாகரன் பிள்ளைத்தமிழ், என்ற இலக்கியத்தை கோலாலம்பூரில் படைத்துள்ளார். அந்நூல், விடுதலைப்புலிகளின் போர்ப்பரணியாக மலேசியத் தமிழர்களின் கரங்களில் தவழ்கின்றது. இந்தப் பட்டியல் முடிவில்லாது நீண்டு செல்கின்றது.
நன்றி: ‘தமிழர் தகவல் 14வது ஆண்டு மலர் 6)UUj6f 2005
என். செல்வராஜா 77

Page 41
நாலியல்-நாலகவியல் தங்றைகளில் அயோத்தி நாலக சேவைகள் அமைப்பின்பணி
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகவியல்துறையின் வளர்ச்சிப்போக்கில் முக்கியமானதொரு காலகட்டமாக எழுபதுகளின் நடுப்பகுதி கருதப்படுகின்றது.
அக்காலகட்டம் வரையில் உள்ளுராட்சி சேவையில் நூலகர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு கல வித் தரம் அக் கறையுடன் எதிர்பார்க்கப்படவில்லை. பெருமளவில் கிராமசபை, நகரசபை சிற்றுாழியர்களாக இருந்தவர்கள் பதவி உயர்வு கணி டு நூலகப்பொறுப்பாளர்களாக நியமனம் பெற்றார்கள். கிராமசபை நிர்வாக ஊழியர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் நூலகத்தையும் மேற்பார்வை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். உயர்தர பாடசாலைகள் தவிர்ந்த பெருவாரியான தமிழ்ப் பாடசாலைகளில் நூலகச் சிந்தனை அக்கால கட்டங்களில் முகிழ்த்திருக்கவில்லை. நூலகரின் கடமையை நூலகம் பற்றிய எவ்வித அறிவுமற்ற ஆசிரியர்களும், வசதிக்கட்டணத்தில் நியமிக்கப்படும் பழைய மாணவர்களுமே பூர்த்திசெய்து வந்திருந்தார்கள்.
இலங்கை உள்ளுராட்சி சேவைகள் நூலகர் தரம் 3 என்ற பதவியை உருவாக்கிய பின்னர் தான் 1976களுக்குப் பின்னர் படிப்படியாக உள்ளுராட்சி சேவைகளுக்குட்பட்ட நூலகர் பதவிகளுக்கு நூலகவியல் கல்வி கற்றவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பாடசாலைகளிலும், பாடத்திட்டங்களின் மாற்றங்களால் பாடநூல்களுக்கு அப்பால் பரந்த வாசிப்பிற்கான அறிவுத்தேடலுக்கு மாணவர்கள் ஊக்கமளிக்கப்பட்டார்கள். இத்தகைய
78 நூலியல் பதிவுகள்
 

மாற்றங்கள் ஈழத்தின் நூலகவியல் துறைக்கு சாதகமானவையாக அமைந்தன.
எழுபதுகளின் நடுப்பகுதிகள் வரையில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் கல்விச்சேவை தமிழ்ப் பிரதேசங்களில் பாரிய விஸ்தரிப்பு எதனையும் மேற்கொள்ள முயற்சிக்கவில்லை. 70களின் நடுப்பகுதியில் உள்ளுராட்சி சேவையில் ஆட்சேர்ப்பிற்காக நூலகக்கல்வி பெற்றவர்களுக்குத் தான் முன்னுரிமை கிட்டியது. அதன்பின்னர் நூலகக்கல்வியில் இளைஞர்களிடையே படிப்படியாக ஆர்வம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரியக் கல்வியமைப்பில் ஊறியிருந்த இளைஞர்கள் இத்துறையில் படிப்படியாக ஈர்க்கப்பட்டதால் ஆண்டுதோறும் இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாம் இரண்டாம் வகுப்புகளிற்கான பயிற்சிநெறிகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் நூலகரான திரு. மாணிக்கவாசகர் ஒருங்கிணைப்பாளராகவிருந்து இந்தப் பயிற்சிநெறியை இலங்கை நூலகச் சங்கத்தின் சார்பில் நடத்திவந்தார். கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் விரிவுரையாளர்கள் வந்து இந்த வகுப்புகளை நடத்தினார்கள். வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலிருந்தும் நூலகர்கள் யாழ்ப்பாணம் வந்து நூலகக் கல்வியைக் கற்றார்கள். எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து 80களின் ஆரம்பம் வரை இந்த வளர்ச்சி மிக ஆரோக்கியமாக இருந்தது.
ஆரோக்கியமான வளர்ச்சிகண்ட நூலகவியல்துறையின் போக்கில் சடுதியான பாய்ச்சல் 1981இல் யாழ் நூலகம் எரியுண்டதையடுத்து ஏற்பட்டது. பொதுப்படையாக அரசியல்ரீதியில் ஈழத்தமிழர்களில் இதுவொரு பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், புத்திஜீவிகளிடம் அறிவியல்ரீதியாக ஆழமானதொரு அபாய அறிவிப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது. யாழ்ப்பாண நூலகம் மாத்திரமல்லாது, ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை என்பனவும் அன்றையதினம் அரசின் திட்டமிடலின் பிரகாரம் கைக்கூலிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. தமிழரின் அறிவுற்றுக்களின் மீது இனவாதம் கைவைத்த அந்தச் செயலானது அதுவரை ஈழப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிப் பார்வையாளர்களாகவிருந்த பல புத்திஜீவிகளை போராட்டப் பாதையை நோக்கித் தள்ளியது. இது வெறும் நூலக எரிப்பு என்ற கருத்தியலிலிருந்து விலகி மிக ஆழமாகத் தமிழரிடம் வேரூன்றியிருந்த கல்விப்பாரம்பரியத்தை அழிக்கும் திட்டமிட்ட முயற்சி என்ற கருத்து மேலோங்கியது.
என். செல்வராஜா 79

Page 42
யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் மானிப்பாயப் மண்ணிலிருந்து தனது இளமைக் காலத்திலேயே வேரோடு பெயர்ந்து கொழும்புக் கறுவாக்காட்டுச் சமூகத்துடன் ஒன்றியிருந்த ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்ததுடன் தன்னுடையதும், நூலக எரிப்பில் அதிர்ந்திருந்த மற்றைய தென்னிலங்கை புத்திஜீவிகளினதும் நூல்களைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் ஒரு நூலகத்தைக் கட்டியெழுப்பி யாழ்ப்பாண சமூகத்துக்கு அதை மனமுவந்து வழங்க வைத்தது. மேலும், யாழ்ப்பாணப் பொது நூலகம் 1984இல் மீண்டும் இயங்கத் தொடங்கிய போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் மாத்திரம் அங்கத்தவரைத் தேடாது முழு மாவட்டத்திற்கும் தனது அங்கத்துவத்தை விரிவாக்கியது.
அயோத்தி நூலக சேவைகள்
தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு அக்கால கட்டத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் தமிழர் தாயக மண்ணில் இருந்திருக்கவில்லை. இந்நிலை பற்றி ஈழத்தின் தமிழ் நூலகத்துறையின் முன்னோடிகளாக அந்நாட்களில் இருந்த கலாநிதி. வே.இ.பாக்கியநாதன், எஸ்.எம்.கமால்தீன், இ.முருகவேள் போன்றோருடன் இக்கட்டுரையாளர் நீண்டகாலமாக கலந்துரையாடித் திட்டமிட்டு வந்திருந்தார். இதன் விளைவாக அறிஞர்களின் ஆசியுடன் 1985இல் அயோத்தி நூலகசேவைகள் என்ற நிறுவனம் யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என்.செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதற்கும், நூலகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை நிறுவனரீதியில் வழங்குவதுமாகும்.
இத்திட்டத்திற்கு அடிப்படையாக நூலகவியல என்ற காலாண்டு சஞ்சிகை செப்டெம்பர் 1985இல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நுால கங்களுக்கும் , தமிழ் நூலகர் களுக்கும் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனம், யாழ் மாவட்ட உள்ளுராட்சி சேவைகள் அலுவலகம், யாழ்
80 நூலியல் பதிவுகள்

மாவட்ட கல்வி நிறுவனங்கள் என்பன ஆர்வத்துடன் இவற்றை விநியோகிக்க ஒழுங்குசெய்திருந்தன. தமிழ்மூலம் நூலகவியல் கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கும், சுயம்புவாக நூலகத்துறையில் ஈடுபட்டுவந்த பல தராதரப்பத்திரமற்ற நூலகர்களுக்கும் நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
நூலகவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் திரு சி.முருகவேள், வே.இ.பாக்கியநாதன், இ.பாலசுந்தரம், திருமதி ரூபா நடராஜா, திருமதி ரோ.பரராஜசிங்கம், திரு. எஸ்.எம்.கமால்தீன், திரு.செ.கிருஷ்ணராஜா ஆகியோர் பணியாற்றினார்கள். 1991 வரை தடங்கலின்றி வெளிவந்த நூலகவியல் சஞ்சிகை, அதன் ஆசிரியர் என். செல்வராஜா புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதோடு வெளிவராது நின்றுபோயிற்று. தபால் போக்குவரத்து, மற்றும் போர்ச்சூழல் காரணமாக நூலகவியல் மீண்டும் வெளிவருவது நீண்டகாலம் தடைப்பட்டுள்ளது.
நுால கவியல் சஞ்சிகை, வெளியீட்டுப் பணியையும் இக்காலகட்டத்தில் மேற்கொண்டு வடக்கு, கிழக்கு, மலையகத்திலிருந்து நூலகவியல் துறையிலும், நூலியல் துறையிலும் அக்கறைகொண்ட பலரை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தது. இதனால் அயோத்தி நூலகசேவை, போர்க்காலச் சூழலிலும் சக்திமிக்கதொரு நூலக அமைப்பாகத் தேசிய ரீதியில் வளர்ச்சிகண்டது.
அயோத்தி நூலகசேவை அக்காலகட்டப் போர்ச்சூழலில் மிக முக்கிய சமூகத் தேவையாகவிருந்த முதல் உதவிச் சிகிச்சைக் கைநூல் ஒன்றுடன் தன் வெளியீட்டுப் பணியை 1985இல் ஆரம்பித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூக மருத்துவபீட விரிவுரையாளராகவிருந்த வைத்திய கலாநிதி ந.சிவராஜா அவர்கள் எழுதிய ‘முதல் உதவி' என்ற நூலே முதல் வெளியீடாயிற்று. காலக்கிரமத்தில் நூலகத்துறை, மற்றும் நூலியல் துறைகளுக்கான வெளியீட்டுப் பணிகளில் அயோத்தி நூலக சேவைகள் நிறுவனம் ஈடுபடலாயிற்று. நூலகவியல் துறையின் முதலாவது நூலாக ‘நூற்பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூலி” அமைந்தது. நூலகவியல்துறை விரிவுரையாளராகவிருந்த கலாநிதி வே.இ.பாக்கியநாதன் அவர்களால் எழுதப்பட்டு ஜூலை 1986இல் இந்நூல் வெளியாயிற்று. நூலகங்களில் நூல்களைப் பகுப்பாக்கம் செய்வதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் டுவி தசாம்சப் பகுப்பு முறையின் 19ம் பதிப்பின் என். செல்வராஜா 81

Page 43
சுருக்கப் பிரிவினை இந்நூல் தமிழில் கொண்டிருந்தது. டுவி தசாம்சப் பகுப்பு முறையில் பகுப்பாய்வு செய்வதற்குப் பயிற்சி பெற்றிராத தமிழ் நூலக ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் எளிய உதாரண விளக்கங்களும் இந்நூலில் காணப்பட்டிருந்தது. இந்நூலின் முக்கியத்துவம் கருதி இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 1989இல் வெளியிடப்பட்டது. இடையில் நூலாசிரியரால் இந்தியாவிலும் காந்தளகம் வெளியீட்டகத்தின் வாயிலாக இந்நூல் மீள்பிரசுரம் கண்டிருந்தது.
“கல்வி நிறுவன நூலகங்கள்” என்ற நூல் நூலகத்துறையின் மூன்றாவது வெளியீடாக 1987இல் மலர்ந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த திருமதி விமலாம்பிகை பாலசுந்தரம் அவர்கள் எழுதிய இந்நூலில் ஆரம்பப் பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்களான தொழில்நுட்பக் கல லுTரிகள் , ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு ஆய்வகங்கள் ஆகியவற்றில் இயங்கும் நூலகங்களின் நூற்சேகரிப்பு, நூலகங்களின் பயன்பாடு, நூலக சேவைப் பகுதிகள் முதலியன இந்நூலில் விபரிக்கப்பட்டிருந்தன. இந்நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், அவற்றை நிவர்த்தி செய்ய நூலகர் கையாளக்கூடிய வழிமுறைகள் என்பனவும் அதில் ஆராயப்பட்டிருந்தன.
1989இல் விமலாம்பிகை பாலசுந்தரம் தொகுத்த மற்றொரு நூல் “கலைச்சொற்றொகுதி நூலகமும் தகவல் விஞ்ஞானமும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அயோத்தி வெளியீட்டின் 3வது நூலாக அமைந்த இது நூலக, தகவல் விஞ்ஞானத்துறையில் பயன்படுத்தப்படும் சுமார் 1500 ஆங்கில கலைச்சொற்களுக்குரிய தமிழ்ப்பதங்களைக் கொண்டிருந்தன. இலங்கையில் இத்துறையில் தமிழில் வெளிவந்துள்ள முதலாவது கலைச்சொற்றொகுதி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1989இலேயே “கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும்” என்ற பெயரில் நான்காவது நூல் அயோத்தி நூலக சேவைகள் நிறுவனத்தின் இயக்குநரான என்.செல்வராஜா அவர்களினால் எழுதி வெளியிடப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களை மையப்படுத்தி கிராம நூலக இயக்கம், சிறுவர் நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், பாலர்களுக்கான நூல்களைக் கிராமமட்டத்தில் தயாரித்தல், சனசமூக நிலையங்களின்
82 நூலியல் பதிவுகள்

நூலக நடவடிக்கைகள், நூல் கொள்வனவு போன்ற விடயங்களை விளக்கும் கட்டுரைகளைக் கொண்டது இந்நூலாகும்.
செல்வராஜாவின் மற்றொரு நூலான ஆரம்ப நூலகர் கைநூல், செப்டெம்பர் 1991இல் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தது. சிறு நூலகமொன்றின் செயற்பாடுகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்நூலில் நூலகத்துறையைத் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு நூலகமொன்றின் அன்றாட நடவடிக்கைகள், மற்றும் நிர்வாக அறிவுரைகள் விரிவாக வழங்கப்பட்டிருந்தன.
இலங்கை தேதசிய நூலக சேவைகள் சபையின் உதவி இயக்குநராகவிருந்த நூலகவியலாளர் எஸ்.எம்.கமால்தீன் அவர்களது நூலகவியல் கட்டுரைகளைத் தாங்கிய “நூலும் நூலகமும்” என்ற நூல் செப்டெம்பர் 1992இல் கொழும்பில் வெளியிடப்பட்டது.
“யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூல் என்.செல்வராஜா அவர்களால் ஐக்கிய இராச்சியத்திலிருந்து அயோத்தி நூலகசேவைகளின் வாயிலாக ஜூன் 2001 இல் வெளியிடப்பட்டிருந்தது. இலண்டன்: வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு புலத்திலிருந்து வெளியிட்ட முதலாவது நூலகத்துறை சார்ந்த நூலாக அமைகின்றது. ஜூன் 1, 1981 இல் இலங்கை அரசபடையினரால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றைக் கூறக்கூடிய பத்திரிகைச் செய்திகள், சஞ்சிகைகள், நூல்கள், இணையத்தளங்கள், போன்றவற்றில் வெளியான தகவல்களையும், துண்டுப்பிரசுரங்கள், சிறு நூல்கள் போன்றவற்றையும் தொகுத்து ஆண்டுவாரியாக ஒழுங்கு செய்து, யாழ். நூலகத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகளுடன் சேர்த்து படங்களுடன் நூலுருவாக்கப் பட்டது.
அயோத்தி நூலக சேவையின் மிக முக்கியமான நூலியல் பங்களிப்பாக அமைவது 'நூல்தேட்டம்" என்ற பாரிய தொகுப்பு முயற்சியாகும். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடனானதொரு நூல் விபரப்பட்டியல நூல்தேட்டமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு துவிதசாம்சப்
என். செல்வராஜா 83

Page 44
பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப் பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதிவும் தொடர்இலக்கமிடப்பட்டுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பன நூலின் சிறப்பம்சமாகக் காணப்படுகின்றன. நூல்தேட்டம் முதலாவது தொகுதி ஜூன் 2002இலும், 2வது தொகுதி ஜூன் 2004இலும் 3வது தொகுதி ஆகஸ்ட் 2005இலும் வெளிவந்து ஈழத்தமிழர்களின் 3000 நூல்களைக் குறிப்புரையுடன் பதிவுசெய்துள்ளது. தொடர்ந்தும் இத்தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் வெளியீட்டு முயற்சிகளை பரந்த அளவில் பதிவுசெய்து வைக்கும் முதல் முயற்சி இதுவாகும்.
அயோத்தி நூலக சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட 1985ம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்த நூலகவியல், நூலியல் முயற்சிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றொரு அம்சம் இவ்வமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்குகளாகும். யாழ்ப்பாணம் இவ்லின் இரத்தினம் பல் லினப் பணி டபாட்டியல் நிறுவனத்தில் நூலகர் ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து நடத்தி, தமிழ்ப் பிரதேச நூலகர்களையும், அப்பிரதேசங்களில் நூலகங்களைத் திட்டமிட்டு வழிநடத்தும் நிர்வாகிகளையும் ஒரே கூரையின் கீழ் சந்திக்கவைத்து, எப்போதுமே கேட்கப்படாதிருந்த நூலகர்களின் குரலைக் உரத்துக் கேட்க வைத்த பெருமை இவ்வமைப்பையே சாரும். அன்றைய காலகட்டத்தில் ஈழநாடு
வழியாகவும் இம்முயற்சிக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தது. இவ்வமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளின் பாதிப்பினால் பின்னாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஓரிரு நூலகவியல் கருத்தரங்குகளை ஏற்பாடுசெய்ய நேர்ந்தது.
யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் 300க்கும் அதிகமான சனசமூக நிலையங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கி கிராமிய மட்டத்தில் நூலக. வாசிகசாலை சேவையினையாற்றி வந்தன. இச் சமூக அமைப்புகளை பாரிய அளவில் ஒருங்கிணைத்து சனசமூக நிலைய நூலகர்களுக்கான 6 நாள் பயிற்சியும் சான்றிதழ் வழங்கலும் ஐப்பசி 1989இல் அயோத்தி நூலகசேவை நிறுவனத்தால் சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் கொட்டடிப்பகுதியில் அமைந்திருந்த சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.
84 நூலியல் பதிவுகள்

தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகத்தின் 960p607(3uffal) (Coordinating Secretariat for Plantation Areas, Kandy) as600TL புஷ்பதான மாவத்தையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் 1990 ஏப்ரல் 6-8ம் திகதிகளில் மலையக நூலக அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கொன்று அயோத்தி நூலக சேவைகளினால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இலங்கையின் பிரபல நூலகர்களை இக்கருத்தரங்கில் ஒரே மேடையில் இடம்பெறச்செய்தமை இந்நிகழ்வின் முக்கிய வெற்றியாகும்.
மாநகரசபைகளின் வேண்டுகோளின் பேரில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினர் பிரதேசரீதியில் உள்ளுராட்சி நூலகங்களுக்கான நூலகவியல் கருத்தரங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். சண்டிலிப்பாய், உடுவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள கிராமிய நகர நூலகர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஜூன் 1986 இல் மானிப்பாய் நூலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் ஆதரவுடன் திருகோணமலை மாவட்ட நூலகர்களுக்கான கருத்தரங்கும் இருநாள் பயிற்சியும் நவம்பர் 1989இல் இடம்பெற்றது.
சமூக அமைப்புகளின் நிதிவளத்தை அதிகரிக்கவும், நூலக விழிப்புணர்வினை அப்பிரதேச மக்களிடையே ஏற்படுத்தவும் அயோத்தி நூலக சேவை அமைப்பு தோள் கொடுத்து வந்துள்ளது. நவாலி வை.எம்.சீ.ஏயுடன் இணைந்து நூலக வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு கிராம விழிப்புணர்வை ஊட்டியதுடன் நவாலியில் வை.எம்.சீ.ஏ நூலகத்துக்கு நூல்களும் நிதியும் திரட்டியுதவினர். புங்குடுதீவு சர்வோதய அமைப்பினரின் கிராம நூலகத் திட்டங்களுக்கு ஆலோசனையும் பயிற்சிகளும் வழங்குவதில் அயோத்தி நூலக சேவை இன்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஸ்கொட்லாந்தின் Books Abroad நிறுவனத்தின் வாயிலாக தாயகத்தின் நூலக அபிவிருத்திக்கான நூல் உதவித் திட்டங்களை தற்போது முன்னெடுத்து வரும் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் நூலகவியல் மற்றும் நூலியல் பணிகள், போர்க்காலச் சூழலில், நூலகத்துறையின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிராதவொரு வேளையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததென்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.
நன்றி : நூல்தேட்டம்: தகவல் கையேடு - 2005
என். செல்வராஜா 85

Page 45
தமிழ் நால் வெளியீடுகளும் ~ சட்ட வைப்பகங்களும்
உலகெங்கும் வெளியிடப்படும் நூல்கள் பற்றிய தகவல்கள் அந்தந்த நாடுகளில் பேணப்படுவது வழக்கம். இச்செயற்பாட்டை ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கும் தேசிய நூலகங்கள் மேற்கொள்ளுகின்றன. ஒரு நாட்டின் தேசிய நூலகம் அந்நாட்டின் நூலக சேவையினை நெறிப்படுத்தும் தலைமை நிலையமாகும். அங்கு வெளியிடப்படும் அச்சிடப்பட்ட ஆவணங்கள், நூல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்ற அனைத்தையும் மொழிவேறுபாடின்றிச் சேகரித்து வைக்கும் பொறுப்பு அவற்றுக்குண்டு. இச்செயற்பாட்டை அவை செவ்வனே நடாத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு நாட்டிலும் சட்டபூர்வமான ஆதரவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய நூல்சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் தேசிய நூலகத்தின் பிரிவுக்கு சட்ட வைப்பகம் என்று பெயர். இதை ஆங்கிலத்தில் Legal Depository என்பார்கள்.
ஒரு நூலை ஒரு நாட்டில் வெளியிடும் அல்லது விநியோகிக்கும் ஒவ்வொரு வெளியீட்டாளரும் தமது வெளியீடுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகளை அந்த நாட்டிலுள்ள தேசிய நூலகத்தின் சட்ட வைப்பகத்துக்கு இலவசமாக அனுப்பி வைக்க வேண்டியது சட்டபூர்வமான கடமையாகும். இச்செயலை அந்நூலை அச்சிடும் அச்சகம் செய்ய வேண்டும் என்பது இலங்கையில் உள்ள நடைமுறை விதியாகும். வெளியீட்டாளர் அல்லது விநியோகஸ்தர் இச்செயற்பாட்டை மேற்கொள்ள 86 நூலியல் பதிவுகள்
 

வேண்டும் என்பது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சட்ட விதியாகும். 1911ம் ஆண்டின் பதிப்புரிமைச்சட்டத்தின் கீழ் இது இங்கே சட்டபூர்வமாக் கப்பட்டுள்ளது.
ஈழத்துத் தமிழ் நூல் வெளியீடுகளைப் பொறுத்த வரையில் வெளியீட்டாளர், விநியோகத்தர் இருவரும் எழுத்தாளர் என்ற நபருக்குள் ஐக்கியமாகி விடுவதால் ஒரு தமிழ் நூலை ஆக்கும் எழுத்தாளர்கள் இந்த நடைமுறை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சட்டபூர்வமாக எமது நூலின் ஆறு பிரதிகளை ஆவணக் காப்பகத்துக்கு அனுப்புவதால் சட்டச்சிக்கல்களிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ள முடிவதோடு எமது நூல்கள் நீண்டகாலம் பிரித்தானிய ஆவணக்காப்பகங்களில் பேணப்படும் என்ற ஆத்மதிருப்தியும் ஆக்கியோனுக்கு ஏற்படும். நான்கு நூற்றாண்டுக்காலமாக சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வரும் நூல்களஞ்சியங்களுடன் தமிழ் வெளியீடுகளும் இன்னமும் பிரித்தானிய சுவடிக்காப்பகங்களில் பேணப்பட்டு வருவதைப் பலரும் அறிவோம். இவற்றுடன் எமது நவீன வெளியீடுகளும் சேர்வது நல்லதல்லவா? நவீன வெளியீடுகள் என்று நான் குறிப்பிட்டது, அச்சிடப்பட்ட அனைத்து ஆவணங்களையுமாகும். இவற்றுள் சீடி, ஒடியோகஸட்டுகளும் சிறு சஞ்சிகைகள் புதினப்பத்திரிகைகள் ஆகியனவும் உள்ளடங்கும்.
இதைவிட எமது வெளியீடுகளின் விபரம் உலகெங்கும் உள்ள நூலகங்களின் நூற்சேர்க்கைக்கான நூல் கொள்வனவுக்கு வழிகாட்டியாக அமையும் உசாத்துணைச்சாதனமான பிரித்தானிய தேசிய நூற்பட்டியலில் (British National Bibiliography)ug56is(56irst Teg, b. JT656f 6fuji,605 ஆங்கிலத்தில் நூலின் தலைப்புப்பக்கத்தின் பின்புறத்தில் அச்சிடத்தவறும் வெளியீட்டாளர்கள் அந்நூல் பற்றிய சுருக்கக்குறிப்பொன்றை, நூலை சட்டக்காப்பகத்துக்கு அனுப்பும் போது இணைக்கத் தவறாதீர்கள். இது நூல் தொடர்பான அதிகாரபூர்வமான தகவலை அவர்கள் உங்கள் குறிப்பிலிருந்து பெற்றுக்கொள்ள உதவும்.
பிரித்தானியாவின் சட்ட வைப்பகத்துக்கு ஆறு பிரதிகள், அந்நூல் வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது ஒரு விதியாகும். அவற்றில் ஒன்று Legal Deposit Office, The British Library, Boston Spa, Wetherby, West Yorkshire, LS237BY
என். செல்வராஜா 87

Page 46
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும. இந்நூல் பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்பில் வைக்கப்படும். மற் றைய ஐந்து பிரதிகளையும் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்து பிரதான தேசிய BITsuasia,6TT607 The Bodleian Library, Oxford, Cambridge University Library, The National Library of Scotland, Edinburgh; The Library of Trinity College, Dublin; The National Library of Wales, Aberystwyth ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை தனித்தனியாக அனுப்பி வைக்காமல் ஐந்து பிரதிகளையும் Copy Right Libraries Agency, 100 Euston Street, London NW1 2HQ 66ip 6 sort giggs) அமைந்துள்ள பிரதிநிதிக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் உரிய தேசிய நூலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
எம்மொழியில் வெளியான நூல்களையும் இங்கு அனுப்பி வைக்கலாம். சட்ட வைப்பகத்தில் மொழிவாரியான வேறுபாடு கிடையாது. எமது வெளியீடுகளில் ஒரு சிலவே ஐக்கிய இராச்சியத்தில் அச்சிடப்படுகின்றன. பல இந்தியா போன்ற பிற நாடுகளில் வெளியாகின்றன. இந்நிலையில் இங்குள்ள சட்ட வைப்பகங்கள் இதை ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழலாம். இந்தியாவில் அல்லது பிறிதொரு நாட்டில் வெளியான நூலாயினும், அது ஐக்கிய இராச்சியத்தில் விற்பனை அல்லது விநியோகம் செய்யப்படுமானால் அவை காப்பகத்தில் வைப்பிலிடத் தகுதி உடையனவாகும். இந்திய வெளியீட்டாளர்களிடம் நூல்களை அச்சிடக் கொடுக்கும் எம்மவர்கள் தமது நூலின் பிரதிகள் அந்த நூல் வெளியிடப்படும் நாட்டிலும் இத்தகைய சட்ட வைப்பகத்தில் வைப்பிடப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. அதை மேற்கொள்வது வெளியீட்டாளரின் கடமையாகும். இதன் மூலம் எமது நூல்கள் பற்றிய தகவல் அந்த நாட்டின் தேசிய நூல்விபரப்பட்டியலில் இடம் பெறவும் , நூலகங்களின் நூல் கொள் வனவின் போது இனம்காணப்படவும் வாய்ப்புள்ளது.
சஞ்சிகைகள் பத்திரிகைகளைப் பொறுத்தளவில் பிரித்தானிய நூலகம் மாத்திரம் தனியான ஒரு பிரிவை காப்பகச் சேர்க்கைகளுக்காக 60)655.cbdd56örpg). Newspaper Legal Deposit Office, The British Library, Unit 3, 120 Colindale Avenue, London NW95LF 616tp முகவரிக்கு பிரதிகளை அனுப்பி வைக்கலாம்.
நன்றி: தேசம் (லண்டனி) 2005
88 நூலியல் பதிவுகள்

தமிழ் நால் வெளியீடுகளும் ~ அவற்றக்கான சர்வதேச தராதர நால்எணர் (ISBN) வழங்கலும்
இன்று நாம் வாழும் ஐரோப்பியச் சூழலில் வெளியிடப்படும் பல நூல்களின் பின்னட்டையிலும், உட்புறமும் காணப்படும் பத்து இலக்கத் தொடரையே சர்வதேசத் தராதர நூல் எண் அல்லது International Standard Book Number (ISBN) 6T 6ði gol (g5 gólů îG68É6ơi G3MOT Ló. எழுபதுகளுக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி, உலகெங்கும் அந்தந்த நாட்டுத் தேசிய நூலகங்களாலும், வெளியீட்டு முகவர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் மொழிவழியாகவன்றி, இலக்கங்களால் ஒரு நூலின் குறிப்பிட்ட சில வர்த்தகத் தகவல் களைப் பதிவு செயப் துவைப் பதன் மூலம் அனைத்துலகரீதியாக மொழித்தடையைத் தாண்டி ஒரு நூலியல் தகவலைப் பரிமாறிக்கொள்ள முடிகின்றது.
சர்வதேச தராதர நூல் எண் பற்றிய விபரங்களையும் பயன் பாட்டையும் வெளிப்படுத்துவதும்; அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் வெளியீடுகளுக்கு இந்த ISBN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி என்பது பற்றிய தகவல்களை வழங்கி எழுத்தாளர்களையும், வெளியீட்டாளர்களையும் ஊக்குவிப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
என். செல்வராஜா 89

Page 47
சர்வதேச தராதர நூல் எண் வழங்கும் முறையானது ஜெனி வாவிலுள்ள சர்வதேச தராதர நிறுவனத்தினால் International Standard Organisation (ISO) 1972ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நூல் வெளியீட்டகங்கள், தமது வெளியீடுகளை இலகுவில் இனம் கண்டுகொள்ள அவற்றுக்கு ஓர் ஒழுங்கில் இலக்கங்களை வழங்கி வந்துள்ளன. நிறுவனங்களுக்கிடையே இவ்வகையான இலக்கம் வழங்கும் முறையில் இருந்த வேறுபாடுகள், நூலிட்டல் கடமைகளில் ஈடுபடும் நூலகர்களுக்கும், புத்தகவிற்பனையாளர்களுக்கும் பல நடைமுறைச் சிக்கல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வந்துள்ளன.
1960களின் பிற்பகுதியில் கணனியின் பாவனை நூல் வர்த்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து நூல்வெளியீட்டு நிறுவனங்கள் தமது நூலியல் தரவுகளைக் கணனி மயப்படுத்ததுவதில் ஈடுபட்டனர். அவ்வேளையில் குறியீடு எண் வழங்கலில் பொதுவானதொரு முறை பின்பற்றப்படவேண்டும் என்றும் கருதினர்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்தாபனமே இத்தகைய குறியீட்டு இலக்கங்களை வழங்க அதிகாரமளிக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டதன் பயனாக ஜெனீவாவில் 1972ஆம் ஆண்டு சர்வதேச தராதர ஸ்தாபனம் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஐக்கிய இராச்சியத்தில் 1967 ஆம் ஆண்டுகளில் விட்டேக்கர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த நூல்களுக்குக் குறியீட்டு எண் வழங்கும் முறையினை சில மாற்றங் களுடன் சர்வதேசதராதர நூல் எண் வழங்குதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச தராதர நூல் எண் நான்கு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி நூல் வெளியிடப்பட்ட நாட்டைக் குறிக்கும். மற்றது அந்த நூலின் வெளியீட்டாளரைக் குறிக்கும். மூன்றாவது பகுதி நூலின் தலைப்பைக் குறிக்கும். இறுதிப்பகுதி பரிசோதனை இலக்கம் எனப்படும். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு தொகுதிகளையும் உள்ளடக்கிய சர்வதேச தராதர நிறுவனத்தின் பிரதிநிதியாக விளங்கும் தேசிய நூலகத்தினால் மட்டுமே வழங்கப்படும்.
ஜெனீவாவில் இயங்கும் தலைமை நிலையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஓர் இலக்கம் வழங்கப்படுகின்றது. அதுவே
90 நூலியல் பதிவுகள்

அந்த நாட்டுக்குரிய தனித்துவ எண்ணாகக் கருதப்பட்டு சர்வதேச தராதர நூல் எண்ணில் முதலாவது பகுதியில் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை 1986ம் ஆண்டு நடுப்பகுதியில் சர்வதேச தராதர நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு வழங்கப் பட்டுள்ள தனித்துவ எண் 955 என்பதாகும். இலங்கையில் வெளியாகும் நூல்கள் அனைத்தினதும் தராதர எண் 955 இல் ஆரம்பமாகும்
இரண்டாவது பிரிவு இலக்கமான வெளியீட்டாளர் குறியீடு ஒரு குறித்த நாட்டில் பதிவு பெற்ற வெளியீட்டாளருக்கு வழங்கப்படும் தொடர் இலக்கமாகும். தமது வெளியீட்டு நிறுவனத்தை அல்லது தம்மை ஒரு வெளியீட்டாளராகப் பதிவு செய்து கொள்வது சிரமமானதொரு காரியமில்லை. முதலில் ISBN நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு விண்ணப்பப்படிவத்தைப் பெற்று அதனைப்பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. அவ் விண்ணப் படிவத்தில் வெளியீட்டாளரின் பெயர், முகவரி, கடந்த காலங்களில் வெளியிட்ட நூல்கள், திட்டமிடப்பட்டுள்ள நூல்கள் போன்றவை தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும். வெளியீட்டாளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு நிரந்தர தொடர் இலக்கம் வழங்குவதற்கு 70 பவுண்கள் (விற்பனை வரி நீங்கலாக) பிரிட்டனில் அறவிடப்படுகின்றது. மற்றைய நாடுகளில் அமைந்துள்ள தேசிய நூலகங்களில் அந்தந்த நாட்டுச்செலவீனங்களைக் கேட்டறிந்து கொள்ள முடியும். (இலங்கையில் இத்தகைய பதிவு இதுவரை இலவசமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது) வெளியீட்டாளர் பட்டியலில் ஒரு தடவை பதிவுசெய்யப்பட்டதும் எத்தனை நூல்களுக்கும் அவர் இலக்கத்தைக் கோரலாம்.
ஒரு வெளியீட்டாளர் தனது தலைமை அலுவலகம் இயங்கும் நாட்டிலேயே தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். நூல் எங்கு அச்சிடப் படுகின்றது அல்லது எங்கு சந்தைப்படுத்தப்படுகின்றது என்பது இங்கு முக்கியமல்ல. சர்வதேச தராதர எண், வெளியீட்டாளரை முதன்மைப் படுத்தியே வெளியிடப்படுகின்றது. ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, ஒரு எழுத்தாளர் தானே நூலை எழுதி வெளியிடுவதாலும், முதலீட்டைத் தானே மேற்கொள்வதாலும் தம்மை வெளியீட்டாளராகப் பதிந்து கொள்ள உரித்துடையவராவார். ஜேர்மனியில் இருக்கும் ஒரு எழுத்தாளர் தனது சொந்தப்பணச்செலவில் ஒரு நூலை பிரித்தானியாவில் அச்சிட்டு வெளியிடுவாராயினும் அவர் ஜேர்மன் வெளியீட்டாளராகவே
என். செல்வராஜா 91

Page 48
கருதப்படுவார். அவரது நூலுக்கான தராதர எண் ஜேர்மனியிலுள்ள தராதர எண் வழங்கும் நிறுவனத்திடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
இதுவரை தமிழகத்தில் வெளிவந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களில் ISBN எண் குறிப்பிடப்படாதமை சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்தியாவுக்குரிய எண் 81. இவ்வெண் பெறப்படாதவிடத்து எதிர்காலத்தில் தமது நூலை இந்தியாவிலோ, புலம்பெயர் நாடுகளிலோ எளிதாகச் சந்தைப்படுத்துவதில் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம். இந்திய நூல்களில் தராதர எண் பரவலாகப் புழக்கத்தில் உள்ளதால் நூலிட்டலில் தராதர எண் வழங்கப்படாத நூல்கள் ஓரங்கட்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கையில் வெளியாகும் பல தமிழ் நூல்கள் இவ்விலக்கத்தைத் தாங்கி வருவதும் கவனிக்கப்படல் வேண்டும்.
வெளியீட்டாளர்களுக்குப் பதிவிலக்கம் வழங்கப்பட்டதும் அப்பதிவுகள் யாவும் காலத்துக்குக் காலம் வெளியீட்டாளர் வழிகாட்டி (ஆண்டு நூல்) நூலில் பிரசுரிக்கப்படும். அதே வேளையில் அந்த ஆண்டு நூலின் பிரதிகள் அங்கத்துவ நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஜெனீவாவில் வெளியிடப்படும் சர்வதேச வெளியீட்டாளர் வழிகாட்டியில் காலத்துக்குக் காலம் இவை சேர்த்துக்கொள்ளப்படும். குறிப்பிட்டதொரு வெளியீட்டாளருக்கு வழங்கப்பட்ட இலக்கம் எக்காரணம் கொண்டும் அந்நாட்டில் மற்றொரு வெளியீட்டாளருக்கு வழங்கப்பட மாட்டாது. வெளியீட்டாளர் தான் ஒரு நூலை வெளியிடத் தீர்மானித்ததும் அச்சகத்துக்குக் கையெழுத்துப் பிரதியை அனுப்பும் முன்னர் நூலின் விபரத்தை அதற்கென இருக்கும் ஒரு படிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.
சில நூல்கள் நூலகப்பதிப்பு, சாதாரண பதிப்பு என்று இருவகையில் வெளியிடப்படுவதுண்டு. ஒரே நூலின் சாதாரண பதிப்புக்கும் நூலகப் பதிப்புக்கும் வெவ்வேறு சர்வதேச தராதர நூல் எண்கள் வழங்கப்படும். ஒரு நூல் வெளியிடப்பட்டு சிலகாலங்களின் பின் அதன் இரண்டாவது பதிப்பு மாற்றமெதுவுமின்றி மறுபிரசுரமாக வெளியிடப்பட்டால் (Reprint) முதலாம் பதிப்புக்கு வழங்கப்பட்ட நூல் இலக்கத்தையே மறுபதிப்பு நூலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் மாற்றங்களுடன் திருத்திய பதிப்பாக (Revised Edition) வெளியிடப்படுமேயானால் இது இரண்டாவது பதிப்பு
92 நூலியல் பதிவுகள்

என்று கணக்கிடப்பட்டுப் புதிய தராதர நூல் எண் வழங்கப்படும்.
ஒரு வெளியீட்டாளர் பதிவுசெய்யும் நூல்கள் தொடர்இலக்க ஒழுங்கில் பதியப்படும். அந்தத் தொடரிலக்கம் சர்வதேச தராதர நூல் எண்ணின் மூன்றாவது பிரிவில் தரப்படுகின்றது.
சர்வதேச தராதர நூல் எண் பின்வரும் உருவ அமைப்புள்ள வெளியீடுகளுக்கு வழங்கப்பட மாட்டாது. நாட்குறிப்புகள் (Diaries) கலண்டர்கள், விளம்பரப் பிரசுரங்கள், நாடக கலை நிகழ்ச்சி நிரல்கள், நிறுவன வழிகாட்டல்கள் (Prospectus) தலைப்புப்பக்கம், விளக்கம் போன்றவற்றைக் கொண்டிராத படங்கள், ஒலி, ஒளிப்பதிவுகள் மற்றும் ஆண்டு மலர்கள், ஒரினப்பொருள் பற்றிய நூல்வரிசை ஆகியன தவிர்ந்த சஞ்சிகை, பருவவெளியீடுகள் ஆகியனவும் சர்வதேச தராதர நூல் எண் பெறத் தகுதியற்றவையாகும். சஞ்சிகைகளைப் பொறுத்த மட்டில் சர்வதேச பருவ வெளியீட்டுத் தராதர எண் (ISSN) வழங்கும் திட்டம் அமுலிலுள்ளது.
ஒரு வெளியீட்டாளர் தனது வெளியீடொன்று ச.த.நூ எண் வழங்கப்படுவதற்குத் தகுதியானதாவென்பதை முன்கூட்டியே தராதர எண் வழங்கும் நிறுவனத்திடமிருந்து தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்ட நூலொன்றுக்கு ச.த.நூ எண் கோரி விண்ணப்பிக்கக் கூடாது. குறிப்பிட்ட நூலை மறுபிரசுரம் செய்ய முற்படும்வேளையில் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்.
தராதர இலக்கத் தொகுதியின் இறுதிப்பிரிவு (நான்காவது பிரிவு) பரிசோதனை இலக்கமாகும். முன்னைய மூன்று பிரிவு இலக்கங்களும் சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை ஒரு கட்டளை விதி (Formula) மூலம் அறிந்து கொள்வதற்காக இப்பிரிவு இலக்கம் பயன்படுத்தப்படும். இவ்விலக்கம் எப்போதும் ஒரு தான இலக்கமாகவே காணப்படும்.
சர்வதேச தராதர நூல் எண் வழங்குவதால் ஒரு ஈழத்து ஆசிரிய, வெளியீட்டாளருக்கு என்ன நன்மை கிட்டப்போகின்றது என்று சிந்திக்கக் கூடும். சர்வதேச தராதர நூல் எண்ணைப் பெறுவதால் நவீனமயப்படுத்தப் பட்டு வரும் தேசிய நூல்வெளியீட்டாளர் வரிசையில் எம்மவரும் இடம்பெற்று விடுகின்றனர்.காலத்துக்குக் காலம்வெளியிடப்படும் சர்வதேச
என். செல்வராஜா . 93

Page 49
வெளியீட்டாளர் வழிகாட்டியில் எம்மவரின் பெயரும் இடம்பெறுமாகையால் காலக்கிரமத்தில் சர்வதேச மட்டத்தில் அனைவரும் அறிமுகமாவது சாத்தியமாகின்றது. நூலகங்களில் நூற் தேர்வு நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் இவ்வேளையில் இத்தகைய வழிகாட்டி நூல்களில் இடம்பெறுவதால் எமது வெளியீட்டாளர்கள் தமது வெளியீடுகளை சந்தைப்படுத்த மிகநல்ல வாய்ப்பும் கிட்டுகின்றது.
சர்வதேச தராதர நூல் எண் பெற்றதும் அவ்விலக்கத்தை நூலின் பின்புற அட்டையில் தெளிவாக அச்சிடல் வேண்டும். இதை நூலின் அடிப்பகுதியில் (10 பொயின்ட் எழுத்தில்) அச்சிட வேண்டும் என்பது விதியாகும். மேற்குறிப்பிட்ட இடத்தில் அச்சிட முடியாமல் போகுமிடத்து தெளிவாகத் தெரியக் கூடியவாறு மட்டையின் வேறொரு பகுதியிலும் அச்சிடலாம். மேலும் இவ்விலக்கம் நூலின் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்திலும் (Verso) அச்சிடப்படல் வேண்டும். ISBN என்ற நான்கு ஆங்கில பிரிவுகளையும் வேறுபடுத்தத் தக்கவாறு குறுக்குக்கோடிட்டு அச்சிட வேண்டும். நூலுக்கு மேலுறை (Jacket) இடப்பட்டு விற்பனை செய்யப்படுமிடத்து அந்த மேலுறையிலும் இவ்விலக்கம் பொறிக்கப்படல் வேண்டும்.
ஐக்கிய இராச்சியத்தில் சர்வதேச தராதர நூல் எண் வழங்கல் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. ISBN Agency Woolmead House West, Bear Lane, Farnham, Surrey, GU97LG Telephone 01252742590, Fax 01252 742526 E-mail: ISBNG)whitaker.co.uk.
இலங்கையில் சர்வதேச தராதர நூல் எண் வழங்கல் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
NATIONAL LIBRARY AND DOCUMENTATION SERVICES BOARD NO 14 INDEPENDENCEAVENUE, COLOMBO - 07 T.P. OO94. 112698847 / 1268597 E-mail: natlibG)slt. Ik URL.http://www.slt.lk/nli
நன்றி வடலி (லண்டனி) டிசம்பர் 2001
94 நூலியல் பதிவுகள்

வாழும் போதே கெளரவிப்போம்.
இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர் புலவர் மணி அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள். இவரின் வெளியீடுகளான நெஞ்சே நினை, இவ்வழிச்சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை தெரேசா, மடுமாதா காவியம், அன்னம்மாள் ஆலய வரலாறு ஆகிய நூல்கள் ஈழத்துத் தமிழ்மக்களின் இல்லம் தோறும் வலம் வந்து மனதைத் தொடும் வசனங்களாலும் மரபுக்கவிதைகளால் இலக்கிய மணம் பரப்பி வருகின்றன.
அமுதுவின் கவிதைகள் என்ற நூல் அண்மையில் இலண்டன் கிரீன்போர்ட் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டிருந்தது. வெரித்தாஸ் வானொலி மூலம் எமக்கு அறிமுகமாகியிருக்கும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளாரினால் இந்நூல் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது
இந்நூலில் அவரது முதற்பதிப்பிற்கான முன்னுரையில் சில வரிகள் என் மனதை நெருடின. அவற்றை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமாகவிருக்கும். அவர் தாயகத்தை விட்டுப் புறப்பட்ட அந்த இறுதி நிமிடங்களை இவ்வரிகளில் பதிவு செய்திருக்கிறார்.
“வீட்டிலும் நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற வேருக்கே கோடரி வைக் கப்பட்டது. இடம் பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு
என். செல்வராஜா 95

Page 50
வந்தால், இடையேயுள்ள இருபது தடை முகாம்களிலும் ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான் நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும் எனது கவிதைக் கோவைகளையும் என் இல்லத்தில் பக்குவமாய் வைத்துவிட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்றபோது அங்கே சுடுகாட்டின் மெளனம் தோன்றியது. கடுகுமணி ஒன்றைக் கண்டெடுத்தாலும் காகிதத் துண்டு ஒன்றைக் காண முடியவில்லை. திருடர்கள் திருவிழா நடந்திருக்க வேண்டும். வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன.” இது அமுதுப்புலவரின் முகவுரை வரிகள் இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் மட்டும் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் என்று தான் நான் கருதுகின்றேன்.
இழப்புகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் செல்கின்றன. இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா.ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருந்திருக்கின்றார். அதை முதற்பதிப்பின் முன்னுரையில் நினைவு கூர்ந்திருக்கிறார். அந்தக் கவிதைகளுடன் மேலும் புதிய பல கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக மலர்ந்துள்ளது. இப்படியாக அழிவுக்குள்ளான பல படைப்புகளில் சில எங்கோ எவரிடமோ இருக்கத் தான் செய்கின்றன. சில சமூக அக்கறை கெர்ணடவர்களால் அவை வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டுக் கொண்டு தான் உள்ளது.
ஈழத்திலிருந்து அணி மைக் காலங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் பல தமிழ் நூல்களின் முன்னுரைகளில் கூட அந்த நூலாசிரியர்களின் வரிகள் பொதுவான ஒரு செய்தியை எமக்குத் தருகின்றன. அதாவது, அவர்கள் காலம்காலமாக எழுதிக் குவித்த ஆக்கங்கள் பாதுகாப்பற்ற தாயகச் சூழலில் குறுகிய ஆயுளுடன் அழிந்து போகின்றன என்பதே அந்தச் செய்தியாகும்.
“எவளுக்கும் தாயாக’ என்ற சிறுகதைத் தொகுப்பில் அமரர் எஸ்.அகஸ்தியர் அவர்கள் ஒரு செய்தியைத் தன் முன்னுரையில் சில காலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
96 நூலியல் பதிவுகள்

15 கதைகள் வீதம் 25 சிறுகதைத் தொகுப்புக்களை ஒரே எடுப்பில் வெளியிடப் போதுமான அவரது சிறுகதைகள் இலங்கை, இந்தியப் பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் 1983 ஜூலை இனக்கலவரத்தின் போது எனைய நூல்களையும் படைப்புக்களையும் சொந்த மண்ணில் இராணுவம் சூறையாடியது அதனால் அவற்றை நூல்களாக்கும் சகல வாய்ப்புக்களையும் இழக்க நேரிட்டமை அவருக்கு நேர்ந்த ஒரு சோக அனுபவமாகும். இது 1994இல் வெளியான அமரர் அகஸ்தியரின் முதலாவது சிறுகதைத் தொகுதியில் காணப்பட்ட செய்தி. இதை விட அவரது நூலை வெளியிடுவதாகக் கூறி கையெழுத்துப் பிரதிகளைப் பெற்றுச்சென்றவர்கள் சிலர் இறுதிவரை அவருக்கு அதை நூலாக்கித் தராமல் கையெழுத்துப் பிரதியையே தொலைத்த சம்பவங்களும் இருந்திருப்பதை அவரது முன்னுரைகளில் அறியமுடிகின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான கவிஞர் முருகுவின் “மனிதர்கள்” என்ற கவிதைத் தொகுதியிலும் கூட இத்தகைய செய்தியொன்றே காணப்பட்டது.
யாழ் கோட்டை முற்றுகை காரணமாக 1990இல் ஏற்பட்ட இடப்பெயர்வு, இந்திய அமைதிப்படையின் வரவால், நகர்வால், 1987இல் ஏற்பட்ட இடப்பெயர்வு, 1995-10-30இல் ஏற்பட்ட வலிகாம மக்களின் தென்மராட்சியை நோக்கிய மாபெரும் இடப்பெயர்வு ஆகியவை காரணமாக அவரது பாதுகாப்பில் இருந்த ஆக்கங்களில் கணிசமான ஒரு பகுதி அவரது கைநழுவிப் போய்விட்டமையும் அவரது முன்னுரையில் கவலையுடன் நினைவுகூரப்பட்டிருந்தது.
எமது தாயகத்துப் படைப்பாளிகளின் சோக வரிகளும் இன்று இளவாலை அமுதுவின் முன்னுரை வரிகளும் எமக்கு ஒரு அவசியத்தை வலியுறுத்துவதை நாம் தட்டிக்கழித்துவிட முடியாது.
இன்று தாயகத்தில் பாதுகாக்க முடியாத படி அழிந்து வருகின்ற படைப்புக்களை நாம் பாதுகாக்க எம்மால் இயலுமான நடவடிக்கைகளை புகலிடத்திலிருந்து எடுக்க வேண்டும்.
அந்த ஆக்க இலக்கியங்களுக்கு அழியாத வாழ்வு தர முன்வரவேண்டும். இன்று தாயகத்தில் நமக்கு அறிமுகமான பல
என். செல்வராஜா 97

Page 51
எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களது ஆக்கங்களை நூலுருவில் கொண்டு வந்து தரத் தாயகத்திலேயே தரமான அச்சகங்கள் உள்ளன. பொருளாதார உதவியை மாத்திரம் அந்தப் படைப்பாளிகளுக்கு நாம் வழங்குவதன் மூலம் அவர்களது ஆக்கங்களை மேலும் அழியாது பாதுகாக்கலாம். புகலிடத்திலுள்ள நாங்கள் இரண்டு வெவ்வேறு பெரிய தளங்களில் இயங்குவதாக நான் உணர்கிறேன். சமூகப்பிரக்ஞையுடன் பல நல்ல நூல்களை வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கும் எழுத்தாளர்கள் உள்ளது ஒரு தளம். இவர்களிடம் சிந்தனை வளம் உண்டு, சமூகப் பிரக்ஞை உண்டு ஆனால் நிதி வசதி விநியோக வசதி இவர்களிடம் இருப்பதில்லை. மற்றொரு தளத்தில் இருப்பவர்கள், புகலிடத்திலிருந்து வந்த எமது மக்களுடன், மக்களாக இருந்து வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் வர்த்தகப் பிரமுகர்கள். இவர்களது தளத்தில் பெரும்பாலும் இலக்கியத் தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்துவருகின்றது. ஆனால் பொருளாதார வசதி நிறைய அவர்களிடம் இருக்கின்றது. இந்த இரண்டு தளங்களையும் இணைக்கும் முயற்சிகள் ஆரோக்கியமானதாக முன்னெடுக்கப்படுவதில்லை. இந்த இரு தளங்களும் இணையும் வேளை நான் முன்னர் கூறிய வெளியீட்டு முயற்சிகள் இலகுவானதாக அமையும். -Sponsorship என்று இதைக் கூறுவோம்புகலிட வர்த்தகப் பிரமுகர்களை அனுசரணையாளராகக் கொண்டு இலக்கியங்களைத் தேடி எடுத்துப் பதிப்பிக்கும் ஒரு நிலையை நாம் எட்டும் போது நமது எழுத்துக்கள் புத்துயிர் பெறும் என்பதை மறுக்க
(ԼՔlգեւIITՖl.
வர்த்தகர் அல்லாதவராக இருந்தாலும் இருவரோ சிலரோ இணைந்து பணத்தை ஒதுக்கிச் செலவிட்டு தாயகத்தின் ஒரு இலக்கியத்துக்கு உயிரூட்டுவதுடன், அந்த இலக்கியவாதிக்கு ஆத்மார்த்தமான பக்கபலத்தை வழங்குவதன் மூலம் மேலும் பல அழியா இலக்கியங்களை அவர்கள் படைத்தளிக்க உதவிசெய்ய முடியும். இதற்கான உந்துதலைத் தருவதற்கு வயது வேறுபாடு இன்றி எவராலும் முடியும் என்பதே எனது கருத்தாகும். அதற்கு ஆழமான சமூக உணர்வு கொண்ட இணைப்பாளர், தொடர்பாளர் ஒருவர் மட்டுமே தேவை.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டதாரி மாணவர்களின் சிறப்புத் தேர்விற்காக ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுவது ஒரு தேவையாகும். இவ்வாய்வுகள் பின்னர் பல்கலைக்கழகத்தின்
98 நூலியல் பதிவுகள்

அவ்வத்துறைகளில் பாதுகாக் கப்படுகின்றன. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் இரண்டிலும் தமிழ் மூல ஆய்வுகள் நிறைய உள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இப்படிச் சேகரிக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த 1987இல் அழித்தொழிக்கப்பட்டன என்பது கசப்பான வரலாறு. அப்படியும் அங்கு சில கையெழுத்துப் பிரதிகள் இன்னமும் எஞ்சியுள்ளன. இப்பொழுதும் ஆய்வேடுகள் உருவாகிக் கொண்டுதான் வருகின்றன. தமது பல்கலைக்கழக வாழ்வின் போது ஆய்வு செய்து உருவாக்கிய கையெழுத்துப் பிரதிகளை பரீட்சைக்கு மட்டுமே என்று தயாரித்தவர்களை விட்டு விடுவோம். ஆத்மார்த்தமாக தம் ஆய்வேட்டை அதீத சிரத்தையுடன் பல்கலைக்கழக வரையறைகளுக்குள் தயாரித்தவர்கள் பலர் பல்கலைக்கழக வாழ்வின் பின்னர் அதே ஆய்வை மீளாய்வு செய்து தரமான நூலாக வெளியிட்டுத் தமது ஆய்வேட்டிற்கு உயிர் கொடுக்க விரும்புவதையும் நாம் அறிவோம். இவர்களுக்கு உதவுவதன் மூலம் இவர்களின் ஆக்கத்தை உலகம் காண உதவ முடியும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களால்- குறிப்பாக வடக்கு கிழக்குப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளர்களால் காலத்துக்குக்காலம் எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகள் பல்கலைக்கழகச் சஞ்சிகைகளையும் சிறப்பு மலர்களையும் அலங்கரித்துள்ளன. சில, தேசிய, பிராந்திய பத்திரிகைகளின் வாரமலர்களிலும் வெளிவருகின்றன. குறுகிய பிராந்திய எல்லைக்குள் விநியோகிக்கப்படும் இவை அனைத்தும் உலகளாவிய பரந்த தமிழ் வாசகர் வட்டத்தினை அடையும் வாய்ப்பை இழந்து விடுகின்றன. இத்தகைய அறிவியல் தொகுப்புகளை நுாலுருவாகக் கொணர் டு வரும் 85 – 6). LC) அவ்வப் பல்கலைக்கழகங்களுக்கே உரியது என்று நாம் பேசாமல், கண்டும் காணாமல் இருந்து விடுகின்றோம். பொருளாதார வளம், மற்றும் உள் வீட்டுப் புசலி களால பல தரமான படைப் புக் களர் இந்தப்பல்கலைக்கழகச் சஞ்சிகைகளுக்குள்ளேயும் ஊடகங்களின் பதிப்புகளுக்குள்ளேயும் முடங்கி விடுகின்றன. இவை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இவற்றை புலம்பெயர்ந்து வாழும் நாம் நிதிவசதிகளை ஏற்படுத்தி பதிப்பிக்க முன்வர வேண்டும். அல்லது அப்படிப் பதிப்பிக்க முன்வருவோருக்கு ஆதரவை நல்க வேண்டும். பதிப்பினை மேற்கொள்ளத் தாயகத்தில் பல பதிப்பகங்கள் உள்ளன. பல்கலைக்கழக
என். செல்வராஜா 99

Page 52
அறிஞர்களே இதை முன்வந்து பதிப்பிக்கத் தயாராக உள்ளனர். நான்
அறிந்த வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. சிவலிங்கராஜா அவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டுழைக்கின்றார். இவர்களைப் போல இன்னும் பலர் உள்ளார்கள். அவர்கள் வேண்டுவது தேவையான நிதி உதவியை வழங்க முன்வரும் உரிய புகலிடத் தொடர்புகளைத் தான். இதற்கு நாம் முன்வரும் பட்சத்தில் தமிழ்மொழியில் மேலும் அறிவியல் நூல்கள் வெளிவர வாய்ப்பு ஏற்படுத்தப்படலாம்.
அமுதுவின் கவிதைகளைத் தந்த இளவாலை அமுது பற்றிய தகவல்களை தேடிய வேளையில் அமுதுப்புலவர் அவர்கள் தன் வாழ்க்கை வரலாற்றை இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள் என்ற தலைப்பில் தொடராக எழுதுவதாகவும் அறிந்து கொண்டேன். இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் என்ற இலவச இருவார இதழில் அவர் எழுதுகின்றதாக ஒரு தகவல் உண்டு. குறுகிய சுற்றுக்குள் வலம்வரும் புதினப்பத்திரிகைகளில் எழுதப்படும் இத்தகைய வாழ்க்கை வரலாற்றுத் தொடர்கள் நிச்சயம் பின்னாளில் நூலுருவில் வெளியிடப்பட வேண்டும் என்பது எம் அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கும். ஈழத்துத் தமிழ் அறிஞர்களை வாழும்போதே கெளரவிக்க வேண்டிய கடமை உணர்வைக்கொண்டவர்கள் இத்தொடர் நூலுருவில் வெளிவர உதவ வேண்டும்.
பொதுவாக எம்மத்தியில் ஒருகாலத்தில் பிரபல்யமாகி இருந்தவர்கள், பலராலும் அறியப்பட்டவர்கள், படிக்கப்பட்டவர்கள் இன்றைய புகலிடவாழ்வியல் சூறாவளியில் சிக்குண்டு உலகில் எங்கெங்கோ எல்லாம் அள்ளுண்டு ஏதோ ஒரு நாட்டில் ஒதுங்கிக் கொண்டார்கள். பலர் ஈழத்திலேயே தம்மைச்சுற்றி ஒரு சுவரை எழுப்பிக்கொண்டு அஞ்ஞாதவாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிக்கண்டறிந்து அவர்களது வாழ்வையும் பணியையும் மீண்டும் ஒரு தடவை எம்மக்கள் மத்தியில் மலரும் நினைவுகளாக்கித் தருவதற்கு ஊடகங்களின் வாயிலாக அவர்களைச் சார்ந்தவர்கள், அவர்களது
அறிஞர்களை அவர்களது பணிகளை காலத்தால் அழியாதவாறு பாதுகாக்க வேண்டுமானால், அவர்களது வாழ்வும் பணிகளும் தொகுக்கப்படல் வேண்டும்.
100 நூலியல் பதிவுகள்

திருக்குறளை அறிந்த அளவு அதை எழுதிய திருவள்ளுவரை உலகம் அறிந்திருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஒரு அறிஞனின் பன்முகப்பட்ட நோக்குகளையும் எதிர்கால சமுதாயம் அறிந்து கொள்ள வழிவகை செய்து கொள்ள வேண்டும். அவனது படைப்பின் வழியாக அவனை அறிந்து கொள்ள முயலவதால் அந்த இலக்கியவாதியின் ஒரு பக்கத்தையே உலகில் நிலைநிறுத்தி வைக்க (LyDL9 uLLD.
நன்றி : ஐ.பீ.சி. காலைக்கலசம், வானொலி உரை 20.04.2003
எனி. செல்வராஜா . 101

Page 53
پینے کیا۔
சிந்தனை வட்ட வெளியீடுகள்
கையிருப்பில் உள்ளவை.
இரட்டைத் தாயினி ஒற்றைக் குழந்தை (கவிதைத் தொகுதி) இரண்டாம் பதிப்பு கலைமகள் ஹிதாயா ரிஸ்வி /மஸிதா புன்னியாமீன் 100/-
சுவடு (சிந்தனை வட்ட 100வது வெளியீட்டினி வெளியீட்டு விழா நிகழ்ச்சித் தொகுப்பு) எம்.ஆர்.எம். ரிஸ்வி 100/-
நிஜங்களினி நிழல் (கவிதைத் தொகுதி) த. திரேஸ்குமார் 80/-
ஆப்கானி மீதான அமெரிக்கத் தாக்குதல்(ஆய்வு) புன்னியாமீன் 100/-
புதுப்புனல் (கவிதைத் தொகுப்பு) நாச்சியாதீவு பர்வீன்/ பஸ்மினா 100/-
திசைமாறிய தீர்மானங்கள் (சிறுகதைத் தொகுப்பு) சுலைமா சமி இக்பால். 100/-
எண்ணச்சிதறல்கள் (கவிதைத் தொகுப்பு) சுமைரா அன்வர் 100/-
தங்கப்பாளம் (கவிதைத் தொகுதி) மூதூர் கலைமேகம் 60/-
நெற்றிக் கணி (கவிதைத் தொகுதி) நாகபூஷணி கருப்பையா 100/-
வாழ்க்கை வணிணங்கள் (சிறுகதைத் தொகுதி) கலாபூஷணம் நயீமா சித்திக் 120/-
102
நூலியல் பதிவுகள்
 
 

米 இலங்கை முளப்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களினி விபரத்திரட்டு - தொகுதி 1
கலாபூஷணம் புன்னியாமீன் 200/-
米 இலங்கை முளப்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களினி விபரத்திரட்டு - தொகுதி 2 கலாபூஷணம் புன்னியாமீன் 200/-
米 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களினி விபரத்திரட்டு - தொகுதி 3 கலாபூஷணம் புன்னியாமீன் 200/-
米 மலைச் சுவடுகள் (கவிதைத் தொகுதி)
மாரிமுத்து சிவகுமார் 120/-
米 நவீன பொது அறிவுச் சுடர்
எஸ்.எல்.எம். மஹற்ரூப் 260/-
米 அடையாளம் (கவிதைத் தொகுதி)
செல்வி எஸ். சுதாகினி 70/-
米 புலமை தீபம் (2ம் பதிப்பு)
புன்னியாமீன் மஸிதா புன்னியாமீன் 260/-
米 நூலியல் பதிவுகள் (ஆய்வுக் கட்டுரைகள்)
என். செல்வராஜா 200/-
米 இரணிடாவது சுவடு (சிந்தனைவட்ட 200வது
வெளியீட்டினி வெளியீட்டு விழா நிகழ்ச்சித் தொகுப்பு)
மஸிதா புன்னியாமீன் அச்சில்
ஹட்ஜ் வாசிகசாலைகளுக்கு 25% விசேட கழிவு
தொடர்புகளுக்கு The Secratary
C.V. PUBLISHERS (PVT) LIMITED 14, Udatalawinna Madige, Udatalawinna -20802
恕总
ಟ್ಜಲ್ಲಿ,
எனி. செல்வராஜா . 103

Page 54
CVPUBLISHERS (PWT) LTD.
(sDrinter & (Dubliuluer 14, Udatalawinna Madige, Udatalawinna. 20802
Tel: 081-2493746, 081-2493892, Fax: 081-2497246 e-mail:puniyameGstinct.lk
 


Page 55
卤 பெரும்பனிெ மேற்கொள்ள #II#66୩୩ uଷ୍ଟ திரு. என். ! நூல்களை தொடங்கி ஒவ்வொன்றி என்ற பெயரி
கல்லூரி, ஆகியவற்றில் பணியாற்றிய பின்னர் இலா பதவியை ஏற்று சிலகாலம் திருமலை பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தோனேஷியாவிற்கு கிராமிய பொது அறிமுகம் செய்து வைத்தார்.
1982இல் நாடு திரும்பிய பின்னர் இ யாழ். மாவட்ட மத்திய நூலகப் பொறுப்பாள UNESCO திட்டத்தின் உதவியுடன் உருவா அமைக்கப்பட்ட ஈவ்லின் இரத்தினம் பல்வி நூலகப் பொறுப்பாளர் பதவியை ஏற்ற இவர் கொழும்பிற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்: Ethnic Studies, இந்து சமய கலாசார அ சங்கம் ஆகியவற்றின் நூலகப் புனரமைப்பை பெரும்பங்காற்றினார்.
யாழ்ப்பாணப் பொதுநூலக ஆ6ே நிலைய நூலக சேவைகளின் ஜேர்மனியிலுள்ள் சர்வதேச புலம்பெயர் எழு எழுத்தாளர் சங்கக் காப்பாளர். அயோத் இயக்குநர் என்னும் பல பதவிகளை ச செல்வராஜா. நூல்தேட்டம் 4வது தொகு தமிழ் எழுத்தாளரின் ஆங்கில நூல்களைப் SEGÚ சங்கத்துக்காக, மலேசிய நூல்ே பணியினையும் தற்போது மேற்கொண்டுள்ளார்
இங்கிலாந்தின் லண்டனிலிருந்து ஒலிபரப்புச் சேவையில் வாராந்த "காலைக் 2002 முதல் வழங்கி ಖ್ವ.: தாயகத் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக 蠶 இந்நூலிலுள்ள கட்டுரைகள் அமைகின்றன் எழுத்துப்பணி. § *ကြီးဖြုံ့ဖြို 2004இல் கனடா "தமிழ் தகவல்"சிறப்பு வட்டம் "எழுத்தியல் ನಿ
தற்போது தமது குடும்பத்துடன் புல
இவர் பிரித்தானியாவின் (Royal Mal) தபால் அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய யான்றினை. தமிழரான தனியொருவரால் Tவும் முடியும் என்பதை செயலில் காட்டி டத்து வருபவர் முத்த நூலகவியலாளரான் செல்வராஜா அவர்கள். ಙ್ಗೇ; தமிழ் ஆவணப்படுத்தும் யை 1990இல் 2005 வரை மூன்று தொகுதிகளை லும் ஆயிரம் நூல்களாக"நூல்தேட்டம்" ல் இவர் வெளியிட்டுள்ளார்.
10களில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலக விஞ்ஞானத்துறையில்டிப்ள்ேமா இவர். சுன்னாகம் இராமநாதன் பெண்கள் சர்வோதய யாழ் மாவட்ட நூலகம் ங்கை உள்ளுராட்சி அமைச்சின் நூலகர் மாவட்டத்திலும் பதவி வகித்தார். 1981 UNDP Molunteer project 35i atë நூலகத் திட்டமொன்றை வெற்றிகரமாக
லங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்தின் ராகப் பதவியேற்று 12கிளை நூலகங்களை க்கியிருந்தார். 1983இல் திருநெல்வேலியில் னப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு , குடாநாட்டின் போர்ச் ஆழலால் 1990இல் T. gilgiri International Centre for லுவல்கள் அமைச்சு கொழும்புத் தமிழ்ச் 醬 நீரீ:
பாசனைக் குழு உறுப்பினர். இலண்டன் ஆவணக் காப்பகப் பிரிவின் இயக்குநர். ந்தாளர் சங்க ஆலோசகர் ஜேர்மன் தமிழ் 蠶 நூலகசேவையின் ஸ்தாபகர்நிர்வாக கநோக்குடன் வகித்துவந்துள்ள் திரு. பின் தொகுப்புப் பணியினையும், ஈழத்துத் பட்டியலிடும் பணியினையும், மலேஷிய நட்டம் ஒன்றினைத் தொகுத்து வெளியிடும்
ஒலிபரப்பாகும் IBC அனைத்துலக கலசம்" இலக்கியத் தகவல் திரட்டினை லும் புகலிடத்திலும் ஊடகங்க்ளில் பல ன்றார்.அவற்றின் தேர்ந்த ஒரு ಖ್ವ.: ாதிரு.செல்வராஜாவின் நூலக சேவை, ပ့်မျိုမြို့နှီးမြို့ கெளரவிக்கும் வகையில் விருதும் 2005இல் இலங்கையில் சிந்தனை
ELLLLE
ம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வரும் நுறையின் அந்நிய நாணயப் பிரிவில் உயர்
ISBN: 955-393-8-