கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூலும் நூலகமும்

Page 1


Page 2


Page 3

நூலும் நூலகமும்
எஸ். எம். கமால்தீன் B. A, (Cey), B. Ed. (Toronto), Dip. Lib (Cey.)
அயோத்தி நூலக சேவைகள் ஆனைக்கோட்டை. 1992

Page 4
Title
Language
Author
Copy Rights
Publishers
First Edition
Printers
Subject
Class No.
SBN
Priece
Bibliographic Data
Noolum Noolahamun (Book and the Library)
Tami
S M Kamaldeer B. A, (Cey), B. Ed. (Tor,) Dip. Lib. (Cey).
(C) 1992 S. M. Kamaldeen,
Ayothy Library Services, Anaicoddai, sJaffna
Sept., 1992
Linraj's Printers 282115, Dam Street, Colombo - 12.
Library Science
(D. D. C.) O2O.04
955-95418-1-1

வெளியீட்டுரை
நூலகவியல் துறையில் தமிழில் நாம் இதுவரை வெளியிட்ட பல நூல்களுக்கும் நாடளாவிய ரீதியில் பலத்த ஆதரவு கிட்டியுள்ளமை இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்குக் கிடைத்த பச்சை விளக்குச் சமிக்ஞை என்று கருதுகின்றோம்.
நூல்பகுப்பாக்கம், கல்வி நிறுவன நூலகங்கள் கிராமிய நூலகங் களும் அபிவிருத்தியும், நூலகவியல் தகவல் விஞ்ஞான கலைச் சொற் றொகுதி, ஆரம்ப நூலகர் கைநூல் ஆகிய நூல்களுக்கும். நூலகவியல் நூல்தேட்டம் ஆகிய சஞ்சிகைகளுக்கும் நீங்கள் காட்டிய வரவேற்பு எம்மை இந்த நூலை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வெளியி டும் ஆத்ம பலத்தை வழங்கியுள்ளது.
தொடர்ந்தும் எமது நூலகவியல் வெளியீடுகளுக்குத் தங்கள்
மேலான ஆதரவினை வழங்கி நூலக வளர்ச்சிப் பணிகளைத் தீவிர மாக மேற்கொள்ள உதவுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
அயோத்தி நூலக சேவைகள் என். செல்வராஜா ஆனைக்கோட்டை நிர்வாக இயக்குனரி
10-9-92

Page 5
பாயிரம்
தன்னுடைய ஆசிரியனது நூலுக்குப் பாயிரம் எழுதும் பணிவுசேர் பெருமை எல்லோர்க்கும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பேறு அன்று. அந்தப் பெரும் பேறு எனக்கு மூன்றாவது தடவையாக இப் பொழுது கிடைத்துள்ளது.
இம்முறை நான் எழுதும் இந்த முன்னுரை எனது கடமையுமா கின்றது. ஏனெனில் எனது இந்த ஆசிரியர் தன்னைத்தான் என்றும் பின்னுக்கே வைத்துக்கொண்டிருப்பவர். இந்த நூலும் முக்கியமான தொன்று, இதன் நூலாசிரியரும் முக்கியமானவர். முதலில் நூலாசிரி யரைப் பற்றிக் கூறுவது அவசியமாகின்றது. இலங்கைப் பல்கலைக்கழ கத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுள் ஜனாப் எஸ். எம். கமால்தீனும் ஒருவர். விபுலானந்தர், கணபதிப்பிள்ளை, செல்வ விநாயகம், வித்தியானந்தன், குலரத்தினம் ஆகியோரிடத்துக் கல்வி பயின்றவர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மறக்காத மாணவர்.
இவர் பட்டப் பேற்றின் பின்னர், ஸாஹிறாக் கல்லூரி ஏ. எம். ஏ அஸிஸின் தலைமையின் கீழ் பொன்னொளி பரப்பி நின்ற காலத்தில் உயர் வகுப்புக்களில் தமிழ் பயிற்றும் ஆசிரியராக இருந்தவர். அவ ரிடத்துத் தமிழ் பயிலும் வாய்ப்புப் பெற்றோர் பலர். தினகரன் சிவகுருநாதன், சட்ட வல்லுநர் சிவராஜா, கல்வியாளர் சமீம் எனப் பலர், அவர் மாணவர். அந்தத் திருக்கூட்ட மரபினுள் நானும் ஒரு வன். சில காலங்களின் பின்னர் ஜனாப் கமால்தீன் கொழும்பு பொது நூலக உதவி நூலகராகச் சென்றார். அஸிஸ் அவர்களின் ஆசியுட னேயே அப்பதவியை ஏற்றார்.
அப்பதவியை ஏற்ற காலம் முதல் ஜனாப் கமால்தின் அவர்கள் நூல்களையும், நூலகங்களையுமே தமது பிரதான சிரத்தைப் பொருட்களாகக் கொண்டார்.
இலங்கையின் நூலகத் துறையில் தமிழ் மொழி நூல்கள் பற்றிய சிரத்தை கொண்ட பயிற்சி பெற்ற நூலகர்களுள் இருவர் முக்கிய மானவர்கள் - ஒருவர் பொன் கந்தையா மற்றவர் எஸ். எம். கமால்தீன். பொன். கந்தையா பல்கலைக்கழக உதவி நூலகராக விருந்து அரசியலுட் சென்றவர். ஜனாப். கமால்தீன் நூலகராகவே விளங்கியவர். இன்றுள்ள மற்றைய நூலகர்கள் இவர்களுக்குப் பின் வந்தவர்களே.

ஜனாப் கமால்தீனின் சிறப்பு அவர் தமிழில் நூலக வளர்ச்சி பற்றியும் நூலகங்களில் தமிழின் விருத்தி பற்றியும் மிகுந்த சிரத்தை காட்டியமையாகும்.
ஈழத்துத் தமிழிலக்கியம் பற்றிய முன்னோடி நூல் தொகுப்பு ஒன்றினை (பர்பரீன் - 1974) ஜனாப் கமால்தீன் வெளிக் கொணர்ந் தார். தமிழ் சார்ந்த தொழிற்பாடுகளில் இந்தப் பெயர் பல்லாண்டு காலம் வழங்கி வந்துள்ளது. மேலும் பல்லாண்டு காலம் வாழ்க.
ஜனாப் கமால்தீன் அவர்கள் எனது ஆசிரியர். ஸாஹிறாக் கல் லூரியில், பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் என் ஆசிரியராகவிருந்த வர். கமால்தீன் அவர்களிடம் படிப்பது என்பது மாணவன் தன் னைத்தானே கண்டறிந்து கொள்வதற்கான (self discovery) ஒரு நடைமுறையாகும். வகுப்பிலும் சரி வெளியேயும் சரி சினத்துக்காளா காதவர். மாணவர்களின் திறன்களை வெளிக்கொணருவதைத் தன்பணியாகக் கொள்ளும் பண்பாளர்.
ஸாஹிறா. எங்களுக்கு, நம்மிற் பலர் தமது பிற்கால வாழ்க்கை நெறியாகக் கொண்ட தமிழ் யாத்திரைக்கான ஆரம்ப ஆவலையும்" பயிற்சியையும், அந்த யாத்திரைக்கான தன்னம்பிக்கையையும் தந்தது. அஸிஸ் வழியாகக் கிளம்பிய அந்தப் பிரவாகம் கமால்தீன் எனும் வாய்க்கால் வழியே எம்மிடத்தில் பாய்ந்தது.
அன்று கிட்டிய வளம் இன்றும் பச்சைப்பசேல் என்று நம் மன துள் ஈரம் கலந்து குழைந்து வளர்கின்றது.
அந்தத் தமிழ் தொடர்புக்காக அவரது மாணவராகிய நாம் என்றும் அவரை மறக்கமாட்டோம்.
தனது மாணவனின் முன்னேற்றத்தில் தான் மனம் நிறைவுறும் உதாரண ஆசிரியர் இவர். அதற்கான நன்றிக்கடன் என்றும் நெஞ்சில் நிற்கும்.
நல்லாசிரியன், தமிழ் நெஞ்சினன் ஆகிய நூலாசிரியரின் இந்நூல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
தமிழில் மேலும் வளர வேண்டிய ஒரு துறை பற்றிய அறிமுக நூல் இது.
தமிழில் வளர வேண்டிய புத்தகப் பண்பாடு (Book culture) பற்றி இந்நூல் பேசுகின்றது. நம்மிடையே கல்விச் சிரத்தையுண்டு. ஆனால் ஒரு புத்தகப்பண்பாடு குறைவென்றே கூறவேண்டியுள்ளது:

Page 6
புத்தகப் பண்பாடு என்பது புத்தகத்தைப் பண்பாட்டுச் சாதன மாகப் போற்றுவது. அறிவுப் பகிர்வை தங்கு தடையின்றி கொடுத் தும் வாங்கியும் வளர்ப்பது. ஆசிரியனைப் போற்றுவது. வாசகனை வளர்ப்பது,
நம்மிடையே சில பாரம்பரிய மட்டங்களிலே புலமை என்பது தரவுகளின் தாராள சுற்றோட டத்தை தடை செய்வதாகவும் இருந்து வந்துள்ளது. சில நவீனர்களோ வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறாது பெற்ற தகவலைத் தாம் கண்டறிந்த ஆய்வுப் பேறா கக் கூறும் தன்மையுடையோராகவுள்ளனர். ஏடு பற்றிய பாரம்பரிய உடைமைப் பிடிப்பு நூல்களின பரவலையும் தடைசெய்துள்ளது.
நூல்கள் அறிவைத் தரும். அறிவைப் பரப்ப நூல்கள் பரவ வேண்டும். நூலகம் அந்தப் பரம்பலுக்கான தளத்தையும் களத்தை பும் அமைத்துக் கொடுக்கின்றது. நூலகங்கள் நிறைந்த பண்பாடு அறிவுப் பகிர்வை அச்சாணியாகக் கொண்ட ஒரு பண்பாடாகும் நூலகம் வாசிப்புணர்வை மாத்திரமல்லாது பகிர்வுணர்வையும் வளர்ப்பது.
நூலகர் அந்த நிலையத்தின் மையம் ஆகின்றார். தன் ஆளு மையை வாசகர்கள் மீது திணிக்காது. வாசகர்களின் தனித்தனி ஆளுமை விருத்தியே தனது பிரதான பணியாகக் கொள்ளும் நூலகரே உண் மையான நூலகப் பணிக்கேற்ற நூலகர். ஜனாப் கமால்தீன் அத்தகைய ஒரு நூலகர்.
நூலகங்கள் பற்றி அவர் எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது. ஏறத்தாழ நாற்பது வருடகால அனுபவத்தின் பல் வேறு படி நிலைகளிலிருந்து எழுதப்பட்டவை இவை. இக்கட்டுரை களில் இழையோடி நிற்கும் அறிமுகத்தொனி ஆசிரியரின் ஆர்வத் இதையும் அறிவுப் பரப்பையும் ஆழத்தையும் காட்டுகின்றன. நூல் கள் என்னும் தொடாபுச் சாதனததின் வளர்ச்சி மிகத் துல்லி யமாக இந்நூலின் வழியே தெரிகின்றது. ஆளுமை வளர்ச்சியில் வாசிப் பின் முக்கியத்துவம் அழுத்தம திருத்தமாகக் கூறப்படுகிறது.
நூலகங்களின் பண்பும் பரப்பும் கிடைக்கப் பெறுகின்றன. ஆசரி பரின் பரந்த அறிவும், தன் துறையில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாடும் துல்லியமாகத் தெரிகின்றன.
இந்த நூல் ஆசிரியர்கள் ஒவ்வொருவராலும் வாசிக்கப்பட வேண் டியது. மாணவர்களால் தவறவிடப்படக்கூடாதது. நூலகங்களில் முக்கிய இடம் பெற வேண்டியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கார்த்திகேசு சிவத்தம்பி
திருநெல்வேலி தமிழ்ப்பேராசிரியர் 15-7-92

அறிமுகம்
முப்பது ஆண்டுகளுக்கு மேல் நான் நூலகத்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய காலத்தில் நூலகவியல் நகவல், விஞ் ஞானம் பற்றிய அறிவேடுகளையெல்லாம் ஆங்கில மொழி மூலமே அணுகவேண்டியதாயிருந்தது. தமிழ்மொழியில் நூலகவியல், தகவல் விஞ்ஞானம் பற்றிய அறிவேடுகள் இலங்கையைப் பொறுத்தளவில் மிகவும் அரிதாகவேயிருந்தது. இன்றும் கூட இத்துறையிலான தமிழ் அறிவேடுகள் விரல்விட்டு எண்ணக்கூடியதாகவேயுள்ளது. தமிழ் நாட் டில் வெளியாகும் ஒரு சில நூல்கள் தானும் இலங்கை வாசகர்க ளுக்குக் கிட்டுவதில்லை.
இந்நிலையில், இலங்கையில் தமிழ்மொழி மூலமான நூலகவியல் திசுவல் விஞ்ஞான வகுப்புக்களை 1963 ஆம் ஆண்டில் இலங்கைநூலகச் சங்கத்தின் மூலம் நான் ஆரம்பித்தபோது தமிழில் இத்துறையிலான நூல்களின் பற்றாக்குறை பெரிதும் உணரப்பட்டது. இருந்த போதி லும் அந்நூல்களின் ஆக்கத்திற்கான வாய்ப்புக்கள் இதுகாறும் திருப் திகரமாக அமையவில்லை. வருங்காலத்தில் இவ்வகையான முயற்சி யில் இலங்கைத்தேசிய நூலகச் சேவைகள் சபையும் இலங்கை நூலகச் சங்கமும் ஈடுபட்டுழைக்குமென்று நம்புகிறேன்.
நான் நூலகத்துறையில் நேரடியாக கடமையாற்றிய காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழில் எழுதிய இத்துறையிலான கட் டுரைகள் பலவாகும். இவற்றுள் முக்கியமான சிலவற்றையேனும் தொகுத்து வெளியிடவேண்டுமென்று அடிக்கடி எனது மாணவரும் நூலகவியல் சஞ்சிகையின் ஆசிரியரும், எவ்வின் றட்னம் பல்விப் பண்பாட்டியல் நிறுவன நூலகருமான திரு. என். செல்வராஜா அவர்களும் நூலகவியல் தகவல் விஞ்ஞானப் பாடநெறிப் பயிற்சி மாணவர்களும் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே இத்தொகுப் பினை வெளியிடுகிறேன்.
இத்தொகுப்பிலுள்ள "நூலின்வரலாறு" வளர்மதி சஞ்சிகை
யில் 1974 ஆம் ஆண்டில் வெளிவந்ததாகும். "அச்சுக்கலையின் தோற்றம்" "அச்சுக்கலையின் பரம்பல்" ஆகிய இரு கட்டு அரகளும் இலங்கை வானொலியில் (1989) ஒலிபரப்பானவைகளாகும்.
"சிறுவர்களின் நூலார்வம்" கல்வி சஞ்சிகையிலும் (1970) கல்வித்துறை யில் பொது நூலகங்கள்" தினகரனிலும் (1972)" "பாடசாலை நூல

Page 7
கங்கள்" சிந்தாமணியிலும் (1967) 'நாட்டின் அபிவிருத்தியில் நூலகங் கள்’’ தினகரனிலும்(1974) வெளியிடப்பட்டவைகளாகும் 'இலங்கைத் தேசிய நூலகம்' இலங்கைத் தேசிய நூலக ஞாபகார்த்த மலரில் (1990) வெளியிடப்பட்டதாகும். இந்த நூலிலுள்ள கட்டுரைகளின்நோக்கம் நூலகவியல் தகவல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் ஒரு சில அம்சங்களுக்கோர் அறிமுகமாக அமைவதேயாகும்.
எனது கட்டுரைகளைத் தங்கள் இதழ்களில் வெளியிட்டுதவிய தினகரன் ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்களுக்கும், சிந்தா மணி ஆசிரியர் திரு. எஸ். டி. சிவநாயகம்அவர்களுக்கும் இலங்கைத் தேசிய நூலகப் பணிப்பாளர் திரு எம். எஸ். யு. அமரசிரியவர்களுக்கும் மற்றும் கல்வி, வளர்மதி ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்நூலுக்கு சிறந்ததொரு பாயிரம் வழங்கியுதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்க ளுக்கு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகும்.
இந்நூலின் வெளியீட்டிற்கான முழுப்பொறுப்பையுமேற்று உதவிய திரு. என். செல்வராஜா அவர்களுக்கு நான் என்றும் கடப்பாடுடை யேன் தமிழ் மொழியில் நூலகத்துறை சார்ந்த அறிவேடுகளைப் பெருக்க வேண்டுமெனற பேரார்வத்தோடு உழைத்து வரும் செல்வராஜா அவர்களின் முயற்சிகளை இச்சந்தர்ப்பத்தில் நான் போற்றாமலிருக்க முடியாது. துரித வளர்ச்சி கண்டு வரும் இத்துறை தமிழிலும் வளர்ந் தோங்கவேண்டுமென்று உழைத்துவரும் ஒரு சிலருள் திரு செல்வ ராஜா குறிப்பிடத்தக்க முன்னோடியென்றே கூறவேண்டும். அவர்தம் தூண்டுதலும் ஒத்துழைப்புமின்றி இந்நூல் வெளிவந்திருக்கவே முடியாது.
நூலின் வரலாற்றின்மீதும் பாடசாலை நூலகம் முதல் தேசிய
நூலகம் வரையிலான நூலகப் பெரும் பரப்பின் மீதும் வாசகர் தம் சிந்தனையைத் தூண்ட இவ்வறிமுகம் உதவுமென்று நம்புகிறேன்
கொழும்பு-8 எஸ். எம். கமால்தீன் 9-9-92

பொருளடக்கம்
Gaafu 6svny
9
Lu Tuirŭo
அறிமுகம்
நூலின் வரலாறு
அச்சுக்கலையின் தோற்றம்
அச்சுக் கலையின் பரம்பல்
சிறுவர்களின் நூலார்வம்
கல்வித்துறையில் பொது நூலகங்கள்
F6) நூல்நிலையங்கள்
நாட்டின் அபிவிருத்தியில் நூலகங்கள்
இலங்கைத் தேசிய நூலகம்
சமுதாயத்தின் தகவல் தேவைகள்
10 முஸ்லீம்களின் நூலகப் பாரம்பரியம்
s
olani-lui-b
இலங்கைத் தேசிய நூலகத்தின் முகப்புத் தோற்றம்
15
20
32
37
42
49
58
65

Page 8

1.
நூலின் வரலாறு
இன்றைய அறிவுலகில் அரசோச்சிவரும் அச்செழுத்தின் தோற் றத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தன் கருத் துக்களை எழுத்துக்களில் வடிக்க ஆரம்பித்துவிட்டான். அறிவினைப் பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் இவ்வெழுத்துக்கள் வலிமை மிக்க னவாகும். "யுனெஸ்கோ’ வின் முன்னைநாள் நெறியாளர் றேனே மாஹியூ எழுத்தின் வலிமையைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளார். * 'பல்லாயிரம் ஆண்டுகளாக எழுத்துருப்பெற்ற சொற்களும் பன்னுர றாண்டுகளாக அச்சுருப்பெற்ற சொற்களும் அறிவினைப் பாதுகாத் துப் பரப்புவதில் மகத்தான பணியாற்றி வந்துள்ளன. இவை மணி தன் தன் சிந்தனைகளை நெறிப்படுத்துவதற்கும், சுயாதீன நிலையை எய்துவதற்கும் உறுதுணையாய் உதவி வந்துள்ளன.”*
எண்ணத்தை எழுத்தில் வடித்தல்
சிற்சில கலாசாரங்கள் வாய்மொழியினாலும், சமிக்ஞையினாலு மான அறிவுப் பரிமாற்றத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டபோதி லும் இவை எழுத்தினைத் துணைகொள்ளாவிடின், இன்றைய நவீன உலகில் தொடர்ந்து நிலைக்கவோ, அன்றி வளர்ச்சியடையவோ
(pL-UTSI
கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும், துணியிலும், ஒலைகளி லும், உலோகத்தகடுகளிலும், மரப்பட்டைகளிலும், மிருக எலும்பு களிலும் மனிதன் தன் கருத்துக்களைக் குறியீடுகளினாலும், எழுத்து களினாலும் என்று பதிவு செய்ய ஆரம்பித்தானோ அன்றே அவன் காலத்தை வென்றுவிட்டான் என்பதில் ஐயமில்லை. மேலும் மனித சிந்தனைத் திரட்டான இலக்கியமும் அன்றே தோன்றிவிட்டது என்று நாம் கூறலாம்.
எண்ணத்தை எழுத்திற் பதித்து மனிதன் காலத்தை வெற்றி கொண்டபோதிலும் அவன் ஆரம்பத்தில் படைத்த அறிவேடுகள் நில வெளியைத் தம் ஆதிக்கத்துக்குட்படுத்த முடியவில்லை. மற்றும்

Page 9
அவன் கண்ட இலக்கியமும் நிலவரம்பை வெற்றிகொள்ள முடிய வில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் படைத்த அறிவுப் பதிவேடுகள் காலத்தை வென்று இன்றும் உலக நாடுகளின் தொல் பொருட்சாலைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதன் படைத்த இலக்கியத்தை நிலவரம்பு கடந்து உல கெங்கும் பரவச் செய்தவை நூல்களேயாகும்.
மனித நாகரீகத்தின் பதிவேடுகள் பலதரப்பட்டனவென்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இவற்றுக்கும் இன்று நம்மிடையே வழங்கும் நூல்களுக்குமிடைப்பட்ட காலம் பல்லாயிரம் ஆண்டுகளா கும். இக்காலப்போக்கிலே உலகின் பல்வேறு பாகங்களிலும் ஏற்பட்ட அவ்வொழுக்க மாற்றங்களும், வளர்ச்சியும் வளமானதொரு வரலாற் றுத் திரட்டாகும். நூல் வளர்ந்த இச்சுவைமிக்க வரலாற்றை இங்கு கவனிப்போம். f
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மத்திய கிழக்கிலெழுந்த பபிலோனியா நாகரீகம் தோற்றுவித்த பல அரிய நூலகங்கள் களி மண் தகடுகளினாலான ஆயிரக்கணக்கான 'நூல்களை"க் கொண் டிருந்தன. 10ரப்பலகைகளினாலான "" நூல்கள்** கிரேக்க நாட்டிலும் இந்தியாவிலும் வழங்கிவந்துள்ளன. துருக்கிஸ்தானில் கலாநிதி அவு றல் ஸ்ரைன் பலகையினாலான நூல்களைக் கண்டுபிடித்துள்ளார்.
காகித உற்பத்தியின் வரலாறு
நைல் நதிக்கரையிலே நாகரீகம் கண்ட எகிப்தியர்கள் கி.மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெபைரஸ் புல்லினைப்பக்குவப்படுத்தி அதனைத் தமது எழுது பொருளாகக் கொண்டனர். கிரேக்க மொழி யில் "பிப்லோஸ்” என்று நூலினைக் குறிப்பிடும் சொல் பெபைரஸ் போன்ற நாணல் வகைகளின் உற்பட்டையைக்குறிப்பதாகும். இதைப் போலவே இலத்தீன், ஆங்கிலம், ஜெர்மனியம் ஆகிய மொழிகளில் முறையே 'லைபர்” “ ‘புக்' 'புக்’ என்று நூலினைக்குறிக்கும் சொற்கள் எழுது பொருளாகக் உபயோகிக்கப்பட்ட மர உறுப்புக்க களோடு தொடர்புடையனவாகும்.
மத்தியதரைக் கடலையடுத்த பல நாடுகள் தோலை எழுது பொரு ளாகக் கொண்டன. இவ்வகையில் பெரும்பாலும் ஆட்டுத்தோலே பயன்படுத்தப்பட்டது. எனினும் பின்னர் ஆட்டுத்தோலைவிடக் கன் றுக்குட்டியின் தோல் சிறப்புடையதெனக் கண்டு கையாளப்பட்டது. கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகட்கு முன்பே தோல் எழுது பொருளா கக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. புகழ்பூத்த பெர்கமம்
- 2 -

நகர் மக்கள் தோலைப்பதனிடுவதில் நிபுணத்துவம் பெற்று அந்நகரை இவ்வெழுதுபொருளுக்கான பெருஞ்சந்தையாக்கினர். இந்நகரின் பெயரடியாகப் பிறந்ததுதான் ""பார்ச்மண்ட்' எனும் சொல்.
பண்டைய சீன நாட்டிலே துணியும், மூங்கிற் பத்தைகளுமே நூலின் முன்னோடிகளாய் அமைந்திருந்தன. எழுத்துக்கள் பொறித்த மூங்கிற் பத்தைகளை ஒருங்கு சேர்த்து அவற்றின் ஒரு முனையிலே துளையிட்டு கயிற்றினால் கட்டியவிடத்துஇன்று நம்மிடையே வழங்கும் நூலின் ஆதியுருவம் நமக்கு அறிமுகமாகிறது.
தென் இந்தியாவிலும், இலங்கையிலும் எழுந்த தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளிலேயே பதிவாகியுள்ளன. மிகவும் அண்மைக்காலம்வரை இவ்விருநாடுகளிலும் சிறுவர் சிறுமி யர்க்கு ஆரம்ப எழுத்தறிவு ஒலைச்சுவடிகளின் மூலமே வழங்கப் பட்டது
இப்படியாக உலகில் பல பாகங்களிலும் நூலின் ஆரம்ப உரு வின் விரிவினை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இந்நிலையிலிருந்து படிப்படியாக வளர்ச்சியுற்று வந்த மனித நாகரீகம் அறிவுத்துறை யிலே மிகப் பெரும் மாற்றத்தை வேண்டி நின்றது. அத்தகு புரட் சியினை விளைத்தற்குத் தோன்றியத்ே காகிதம் ஆகும்.
இதுகாறும் அறிவுப் பதிவேடுகளாக பயன்படுத்தப்பட்ட பொருட் களனைத்தும் எளிதிற் பெறுதற்கு அரியனவாகவும் பரந்த உபயோ கத்திற்கு எட்டாதவாறு விலையேற்றம் பெற்றனவாகவும் இருந்து வந்தன. எனவே இவற்றின் உபயோகம் மிகவும் குறுகிய எல்லைக்கு உட்பட்டதாகவேயிருந்தது. இதுபற்றியே, மனிதன் எழுத்தின் மூலம் காலத்தை வென்றபோதிலும், அவ்வெழுத்தை தாங்கும் சாதனங்களின் தன்மையினால் நிலவெளியை வெற்றி கொள்ள இயலாதவனாக இருந்தான் என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டினோம். காகி தத்தின் தோற்றத்தோடு இந்நிலையில் அடிப்படையான மாற்றம் ஆரம்பமாகிவிட்டது.
காகித உற்பத்தியின் வரலாறு மிகத் தொன்மையானதொன் றாகும். முதன்முதலில் காகித உற்பத்தி சீனாவில்தான் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கி.பி 2ஆம் நூற்றாண்டளவில் காகித உற்பத்தி ஆரம்பமாகியிருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை அவுறல் ஸ்ரைன் சீனத் துருகிஸ்தானில் கண்டெடுத்துள்ளார். சீன நாட்டில் கி.பி 105 இல் சாய்லுன் என்பவர் காகிதம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.
حصد 3 ست

Page 10
காகித உற்பத்தி முறை கி.பி 8 ஆம் நூற்றாண்டளவிற்றான் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் அரேபியர்கள் மூலம் பரவியது. அரேபியர்கள் சமர்க்கந்தைக் கைப்பற்றியபோது (கி.பி. 704) காகிதம் செய்யும் முறையினை அந்நகரிற் கண்டறிந் தனர். அவர்கள் அம்முறையைத் தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட நாடு களுக்கெல்லாம் அறிமுகப்படுத்திவைத்தனர். இஸ்லாமியப் பேரரசின் தலைநகர்களும், கலாசார கேந்திரங்களுமான பக்தாத், திமிஷ்க் முதலிய நகரங்களிலே பெரும் காகித உற்பத்திச் சாலைகள் நிறுவப் பட்டு அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் காகித ஏற்றுமதி செய் யப்பட்டது,
பின்னர் முஸ்லிம்கள் ஸ்பெயினில் காகித உற்பத்தியை ஆரம்பித்து வைத்தனர். வெலன்சியா, ஸத்தீவா, தொலிடோ முதலிய நகர் கள்தான் உற்பத்திக் கேந்திரங்களாய் இருந்தன.
மிகத் தொன்மையான பல அரபுமொழி ஆவணங்கள் காகிதத் திற் பதிவானவைகளாகும். கி.பி. 866 இல் எழுதப்பட்ட "கரீபுல்" உறகீத்’ எனும் நூல்தான் காகிதத்திற் பதிவான மிகப் பழைய விேக்சியம் என்று கருதப்படுகின்றது, நபிகள் நாயகத்தினதும் அவர் *9?-! சகாபாக்களினதும் அறிவுரைகளிலுள்ள அரிய நுட்பமான சொற்களைப்பற்றியது இந்த நூல். அரேபிய மருத்துவர் ஒருவரால் கி. பி. 960 இல் ஆக்கப்பட்ட நூலொன்றும் காகிதத்திலேயே எழு தப்பட்டுள்ளது. உடம்பின் பல்வேறு உறுப்புக்களுக்கான போஷாக்கு பற்றியது இந்நூல். இவ்விரண்டு அரிய நூல்களும் முறையே லீன் பல்கலைக்கழக நூலகத்திலும் பிரித்தானிய அரும்பொருட்சாலையிஇP
66.
காகித உற்பத்திமுறை 15ஆம் நூற்றாண்டளவில் காஷ்மீர் பாது ஷா மன்னர் மூலம் இந்தியர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. சமர்க்கந்திலிருந்து சில காகித உற்பத்தியாளர்களை கொணர்ந்து பாதுஷா மன்னர் இக்கலையை இந்தியாவிலே பரப்பி யதாகக் கூறப்படுகின்றது.
இதுகாறும் நூலின் உட்பொருளாகிய எழுத்தினைத் தாங்கிவந்த பெபைரஸ் பதனிடப்பட்ட தோல் முதலியன, காகிதத்தின் வருகை யோடு மறைந்தொழிந்தன. பல வகைகளிலும் சிறந்த எழுதுபொ ருளாக நிலை பெற்ற காகிதம் நூலின் வரலாற்றில் மாபெரும் திருப் பத்திற்கு அடி கோலியது. காகிதத்திற் கையெழுத்தினாலாக்கப்பட்ட நூல்களும், மர அச்சுப் படிமையினாலான நூல்களும் தோன்றிய போதும், கலைக்கக் கூடிய அச்சின் மூலமே நூலின் வரலாறு வளம் பெறக் கூடியதாக இருந்தது.

* புத்தகப்புரட்சி" என்ற நூலிலே அறிஞர் ரொபர்ட் எஸ்கார்பிட் என்பார் நூலின் வரலாற்றிலே அச்சுக்கலையின் தோற்றத்திற்கு முற் பட்ட இரு நிலைகளை மிகத்தெளிவாக விளக்கிக்கூறியுள்ளார். அவற்றை இங்கு சுருக்கமாகக் குறிப்பிடவிரும்புகின்றேன்.
பெபைரஸ் துண்டுகள்
கிரேக்க, உரோம நாகரிகங்கள் சிறப்புற்றிருந்த காலத்தே எழுது பொருளாகவிருந்த 'பெபைரஸ்' துண்டுகள் ஒன்றோடொன்று பொருத்தப்பட்டுத்தொடர்பான சுருள்களாக்கப்பட்டன."வால்யூமென் என்றழைக்கப்பட்ட இச்சுருளைகள்தான் அக்காலத்து இலக்கியப் பதி வேடுகளாக, நூல்களாக விளங்கின. இச்சுருளை நூலின் பிரதிகளை எழுதுவோரின் தொழிற்கூடங்கள் பல உரோமாபுரியிலும், ஏதன் சிலும் இருந்தன. இக் கூடங்களை நாம் தற்கால வெளியீட்டு நிறு வனங்களின் முன்னோடிகள் எனலாம். Na
இவ்வகைச் சுருளைகளின் உபயோகம் மிகவும் குறுகிய எல்லைக் குட்பட்டதாகவே இருந்தது. ஆரம்பத்தில் செல்வர்கள் இலக்கியப்புலவர் கள் மத்தியிலும், பிற்காலத்தில் மாணாக்கர்கள் மத்தியிலுமே இவை வழங் வந்தன. புராதன நகர்களில் வாழ்ந்த சிறு சிறு சமூகத்தினரி டையே நூல்களின் வெளியீடென்பது அவற்றைப் பொதுத்தலங்களிலே பகிரங்கமாக வாசித்தலாகவே இருந்தது. சிறிய அளவிலான பத்திரன் களைப் பொறிக்க மெழுகுத் தட்டுக்களும் , நாளாந்த தேவைகளுக்கான எழுது பொருளாக தோற்பட்டைகளும் , கி. மு. மூன்றாம் நூற்றாண் டளவிலிருந்தே வழங்கிவந்துள்ளன .
பெபைரசைவிட விலை மலிவான ஆனால் உறுதிமிக்க தோலின் வழியாகவே நாம் நூலின் அடுத்த வளர்ச்சிப்படியைக் காண்கின் றோம் .
*கோடெக்ஸ்’ கையெழுத்து நூல்கள்
தோலினைச் சம அளவிலான துண்டுகளாக வெட்டி அத்துண் டுகளை ஒருங்குசேரத் தைத்து ஆக்கப்பட்ட நூலின் முன்னோடி ** கோடெக்ஸ்" என்பதாகும். இது தற்கால நூலினைப்போன்று பக்க ஒழுங்கினைக் கொண்டது. " கோடெக்ஸ்' " " கோடெக்ஸ் சுருளை களை' விடப் படிப்பதற்கு மிகவும் வசதியானதாகும் சுருளைகளிற் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் தொடர்ச்சியாக அமைவதால் எந்த வொரு பகுதியையும் உடனடியாகப் படிப்பது சிரமமான காரிய மாகும்.
நூலின் வரலாற்றிலே "கோடெக்ஸ்’ வழங்கிய காலத்தைப்பற்றி எஸ்கார்பிட் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக் கதாகும்.
- 5 -

Page 11
**இலக்கிய ஈடுபாட்டைவிட ஆரசியற் பாதுகாப்பு, சமய வளர்ச்சி புராதன அறிவைப் பேணுதல் ஆகியவற்றில் அக்கறை கொண்ட ஒருநாக ரீகத்திற்கு ஏற்றதாகவே 'கோடெக்ஸ்’ அமைந்திருந்தது. கி.பி. நான் காம் நுாற்றாண்டு முதல் சுமார் ஆயிரம் ஆண்டுகள்வரை எழுத்துக் கலைஞரின் கைகளிலே தவழ்ந்த 'கோடெக்ஸ்’ கையெழுத்து நுால் களே அறிவுப் பாதுகாப்புக்கும் பரிவர்த்தனைக்குமான பிரதான மார்க்கமாக இருந்து வந்துள்ளன."
உலக வரலாற்றின் மத்திய காலங்களிலே நூலினை ஆக்கும் பணி மிகப் புனிதமானதாகக் கருதப்பட்டது. ஒரு நுாலினைப் பிரதி பண்ணுதல் அல்லது அந்நூலினை அலங்கரித்தல் அதி உன்னதமான கைங்கரியமாகக் கொள்ளப்பட்டது. கையெழுத்து நூல்களின் பிரதி களை நூலகங்களிலே இட்டுவைத்தலும் அவற்றைத் தேவாலய மடங்களிலே சேகரித்தலும் அக்காலத்தே இன்றியமையாத பணி களாக இருந்து வந்தன. கலைவளம் பொருந்திய இவ்வரிய நூல் களைத் தவிர புராதன பல்கலைக்கழக மாணாக்கரின் தேவைக்கான வ்கையிற் குறைந்த செலவிலான சாதாரண நூல்களும் ஒரளவு தயா ரிக்கப்பட்டு வந்தன.
இவ்விதமான நூலாக்க முயற்சிகள் எவ்வளவுதான் வளர்ச்சி யடைந்த போதிலும் கையெழுத்திலான நூல்கள் பரந்த உபயோ கத்திற்கு ஏதுவாக அமையமாட்டா என்பது மறுக்க முடியாத உண்மையாகும். காலப்போக்கில் வளர்ந்து வந்த வாசகர்களின் தேவைகளை இதுகாறும் வழக்கிலிருந்து வந்த அறிவேடுகளினால் நிறைவு செய்ய முடியாது போய்விட்டது.
அச்சுக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்
பதினான்காம் நூற்றாண்டு முதல் அறிவு பரவுவதற்கு ஆக்க பூர்வமான சாதனத்தின் அவசியம் பெருகி வந்தது. இந்த நிலையில் தான் அறிவுலகில் அற்புதமான புரட்சியைப் புகுத்திய அச்சுக்கலை தோன்றியது.
ஐரோப்பாவின் முதலாவது அச்சுக்கலைஞர் எனக் கருதப்படும் ஜோஹான். குதென்பார்க் 1456 ஆம் ஆண்டில் அச்சிட்ட பைபிளின் தோற்றத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவில் அச்சுக்கலை ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முன்பாக மர அச் சுப்பலகையினால் நூலாக்கும் முறை சீனாவில் வழக்கிலிருந்து வந் திது. w
மர அச்சுப் படிமைகள் போன்ற அச்செழுத்தின் முன்னோடிகள் பலவாகும். மர அச்சு முதல் கல்லச்சுவரையிலான அச்சு முறைகள்
- 6 -

யாவும் நூல்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான முயற்சி களின் தொடரேயாகும். இந்த முறைகளெல்லாம் மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையின்போதுதான் அச்சுக் கலை காகிதத்தோடு இணைந்து இன்று நமக்கறிமுகமாகியுள்ள நூற் புரட்சிக்கு வழிவகுத்தது. இத்தொடர்பை எம். எஸ். சம்பந்தன் அவர்கள் தமது 'அச்சுக்கலை’ என்ற நூலில் பின்வருமாறு அழ குற எடுத்துரைக்கின்றார்.
'காகித வருகையினால்தான் அச்சுப் பொறி கண்டுபிடிப்பது அவ சியமாயிற்று. அச்சுக் கண்டு பிடிப்பால்தான் காகிதம் பொது வழக் கிற்கு வர முடிந்தது. இப்படி ஒன்றுக்கொன்று அவை நீங்காத் தொடர்புள்ளவையாக மாறிவிட்டன."
இந்த உண்மையோடு இன்னுமொரு விடயத்தை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அச்சுக்கலை மனித நாகரீகத்திலே மகத்தான செல்வாக்கை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் அக்கலை அதற் கேற்ற காலம் மலர்ந்தபோதுதான் தோன்றக்கூடியதாயிருந்தது.
காகிதம் அரேபியரால் மேலைநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப் பட்டதுபற்றி முன்னர் நாம் கூறினோம். 'காகத்" என்ற அரபுச் சொல்லிலிருந்தே காகிதம் என்ற சொல் தோன்றியது. காகித உற் பத்தி ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த காலத்தில் அதற்கு அதிக வரவேற்புக் கிட்டவில்லை. அதன் பரந்த உபயோகத்திற்கு அதிக காலம் பிடித்தது. ஆனால் அச்சுக்கலையின் ஆதிக்கம் மிகக் குறை வான காலத்திற்குள் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் அறிவேடுகளுக் கான சமூகத் தேவை அந்த அளவிற்கு அப்போது வளர்ச்சியடைந் திருந்தது. இதிலிருந்து எந்தவொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பும் அதற்கான சமூகத்தேவை ஏற்படுங்காலத்துத்தான் தகுந்த வளர்ச்சி காண முடியும் என்ற உண்மை தெளிவாகின்றது.
ஐரோப்பாவைப் பொறுத்த அளவில் அச்சுக்கலையின் தோற்றம் அங்கே பொருளாதார, கலாசார வளர்ச்சி கண்ட நாகரீகங்கள் உருவாகிவிட்ட நிலையில்தான் ஏற்பட்டது. எனவே அக்கலை துரிதி மாகவும் பரந்த அளவிலும் அங்கு வளர்ச்சிபெறலாயிற்று. ஐரோப் பாவில் மட்டும் கி. பி. 1500 இற்கு முன் 20,000,000 நூல்கள் பிரசுரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஐரோப்பாவில் அச்சுக்கலை தோற்றி ஒரு நூற்றாண்டுக்குள் இயேசு சபையைச் சேர்ந்த போர்த்துக்கேயக் குருமார் அதனை இந் தியாவிற் புகுத்தினர். முதலாவது அச்சுப்பொறி கோவாவில் 1556 இல் நிறுவப்பட்டது. ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலத்தே
حسن 7 سس۔

Page 12
தேசாதிபதி வொன் இம்ஹொஃப் அவர்களின் நிர்வாகத்தின்போது (1736 - 1740) அச்சுயந்திரம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முதலாக 1737இல் அச்சிடப்பட்டது ஒரு சிங்கள பிராத்தனை நூலாகும். கப்ரியேல் ஷேட் என்பவரால் இந்நுால் அச்சிடப்பட்டது
அச்சுக்கலை பரவியதோடு நுாலின் வளர்ச்சி துரித முன்னேற்றம் கண்டது. இந்த வளர்ச்சிக்கு நுாலுலகின் பல அங்கங்கள் உறுதுணை யாய் இருந்து வருகின்றன. அவற்றின் விரிவினை இங்கெடுத்து விளக்குவது அசாத்தியமெனினும், அந்த முக்கிய அங்கங்கள் எவை என்பதை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஒரு நுாலை ஆக்குவதிலும் அதனைப் பரப்புவதிலும் நுாலாசிரியர், நுாலை அச் சிடுவோர், பிரசுரிப்போர், விற்பனை செய்வோர், நுாலகர்கள் என் பவர்கள் ஈடுபட்டுழைக்கின்றார்கள்.
தற்காலத்தில் வானொலி, திரைப்படம் போன்ற வெகுசன அறி வுச் சாதனங்கள் பல, மக்களைக் க வர் வ த ற காக நுால்க ளோடு போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் இச்சாதனங் களின் தாக்கத்தினால் நுாலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எனவே நுாலின் வளமான வரலாறு வருங்காலத்தி லும் தொடருமென்று நம்பலாம்.

அச்சுக் கலையின் தோற்றம்
நூலின் வரலாறு மனித நாகரீகத்தின் வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு உள்ளதாயிருக்கின்றது.
* காகித வருகையினால்தான் அச்சுப் பொறியைக் கண்டுபிடிப்பது அவசியமாயிற்று. அச்சுக் கண்டுபிடிப்பால்தான் காகிதம் பொதுவழக் கிற்கு வர முடிந்தது. இப்படி அவை ஒன்றுக்கொன்று நீங்காத தொடர்புள்ளவையாக மாறிவிட்டன'
அச்சுக்கலை மனித நாகரீகத்தில் மகத்தான செல்வாக்கை ஏற் படுத்தியது உண்மைதான். ஆனால் அச்சுக்கலை அதற்கேற்ற காலம் மலர்ந்தபோதுதான், அதாவது காகிதம் பரவலான உபயோகத்திற்கு வந்த போதுதான் அறிவுப் புரட்சியைத் தோற்றுவித்தது, பதி னான்காம் நூற்றாண்டு முதல் அறிவு பரவுவதற்கு ஆக்கபூர் வமானதொரு சாதனத்தின் அவசியம் பெருகி வந்தது. இந்த நிலை யில் தோற்றியதுதான் அச்சுக்கலை.
ஒரு மூல உருவத்தில் இருந்து அதே போன்ற பல படிவங்களை ஆக்கிக் கொள்வதே அச்சுக்கலையாகும். நாம் வழக்கமாக இக்கலை யின் பெறுபேறாகக் கருதுவது நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் பல உதிரியான வெளியீடுகளுமேயாகும். மேலும் சித்திர வேலைப்பாடமைந்த துணி, சுவரொட்டிக்காகிதங்கள், பீங்கான் ஆகி யவற்றையும் குறிப்பிடலாம்.
காகிதத்தின் உற்பத்திக்கும் அச்சுக்கலையின் அடிப்படைத் தொழில் நுட்பத்திற்கும் சீனாவே தோற்றுவாயாக இருந்தது. அதே போல் காகித உற்பத்திமுறை கி. பி. 8ஆம் நுாற்றாண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் அரேபிய முஸ்லிம்கள் மூலம் தான் அறிமுகம் ஆகியது.

Page 13
* Tழுதுவினைஞர்கள் ஒரே மூலத்தில் இருந்து பார்த்தெழுதும் பிரதிகளில் பிழைகளும் மாற்றங்களும் ஏற்படக்கடுமெனினும் அதே மூலத்தை அச்சிடுவதன்மூலம் எவ்விதமான மாற்றமோ தவறுகளோ இல்லாதவாறு பிரதிகளைப் பெறலாம்.
இக்காசலாந்தையொட்டியே கன்பூவியளின் கிரந்தங்களை கி.பி இரண்டாம் நாற்றாண்டில் சுல்லில் பொறித்தார்கள். ஒர T30ரவர்தர் இக்கிரந்தங்களின் பிரதிகளைப் பெறுவதற்கு அக்கல்லில் காகிதத்தை அழுத்திப் பிரதியாக்கம் செய்து கொண்டார்கள் இப்பழக்கத்தைத் தோடர்ந்து வேறு சீன சமயத்தவர்களும் தமக்குரிய சமய மூலங் சுனைப் பிரதியாக்கம் செய்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடலுTசீனர், தாவோ (TA8ேM) சமயத்தவர்கள் தங்கள் சமயச் சுலோகங்களை மரக்கட்டைகளினாலான முத்திரைகளாகச் செதுக்கி ேேAL)ே அவற்றின்மீது மையிட்டு கிதத்தில் பதித்துக் கொண் டார்கள். இம்முறையினாலேயே அவர்கள் திமக்குத் தேவையான பிரதிசுனாப் பெற்றுக்கொள்ளக் Lly தாயிருந்தது.
f
ழரஈச்சுக் கலை , ,
*சிரீ கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பே த்த மடாலயங்கள் கல்விச்சுக்கள் மூத்திரைகள் போன்ற பிரதியாக்கச் difrTd5 gaTřárammiri காணும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன. இத்தோட்டத்தின் விளைவா கனே எட்டாம் நூற்றாண்டின் மூ ற்பகுதியில் முறையான மரவக்சு மூஅைதோன்றியது.உண்மையில் air LAJENJë asalasamav (BLOCK PI RINTING) தாம் முன்னர் கூறிய முத்திரைப் பதிவர்சின் விரிவாக்கமேயாகும்.
இம்மரவச்சின் தயாரிப்பு சிறையைச் சுருக்கமாகக் கூற விரும்புகின்றேன்,
அஒரு துண்டு மரப்பலகையின்மீது அசிசிப்பசையை சீடரி சமண் செய்து கொள்ளப்படும். அடுத்து பிரதியாக்கம் செய் ப்ேபடவேண்டிய மூலம் ஒரு மெதுவான துளில் மைகொண்டு எழு தப்படும். பின்னர் அத்தித்தாள் பசை பூசிய பலகையில் குப்புறப் பதிச்சுப்புட்டு வெய்யிலில் உலர்த்தப்படும். நன்கு உலர்ந்த பின் அத் நீரின் பிரித்து அகற்றப்படும், அப்போது எழுத்துக்கள் மாத்திரம் அப் சிசி பூசிய பலகையில் பதிந்திருக்கும். பதித்துள்ள எழுத்துக்களைத் #விர்த்தி ஏனைய பகுதிகளை ஒராவு வெட்டி அப்புறப்படுத்தியவிட த்து எழுத்துக்கள் மாத்திரம் பலகையினின்று உயர்ந்து நிற்கும். இவ் *ாது தயாரிக்கிப்பட்ட அச்சேட்டு மூலத்திலிருந்து தேவையான அளவு
= 10 -

பிரதிக்ள்ை க்ாகித்த்தில் பதிவு ச்ெய்து கொள்ளி முடியும். அதாவது மரவச்சின் மீது மைதடவி அதன்மேல் காகிதத்ை தக்கிடத்தி அழுத்தம் கொடுப்பதன் மூலம் பிர்தியாக்கம் செய்து கொள்ள முடியும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆக்கப்பட்ட அச்சுப் பிரதிகள் இன்றும் காண்க்கூடியனவாக உள்ள்ன. இக்கால கட்டத்தில் ஜப்பரி னிய மகாராணி ஷோடோகு (SHOTOKU)இம்மரவச்சு முை நயின் மூலம் பெளத்த சுலோகம் ஒன்றின் ஒரு மில்லியன் பிரதிகள்ை செய்வீத்த் தாகக் கூறப்படுகிறது. ஒன்பதாம் நுாற்றாண்டனர்வில் oarda" சமயத்தினரும் பொத்த சமயத்தினரும் பெருமளவில் இம்பூர்வச்சு முறையைக் கையாண்டுள்ளார்கள்
இடம் பெயர் அச்செழுத்துக்கள்
இனி, தனி அச்செழுத்து முறையின் தோற்றத்தைக் ஆங்னிப்பேரிம் *Q'ನ್ತಗ್ಗP SHENG)எனும் சீனர் பதின்ொன்றாம் நூர் ற்றாண்டில் தனித்தி எனியாள் அச்சுக்களாக மெதுவான க்ளிமண் தட்டிலிருந்து வெட்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டா, இவ்துச்சுக்கண்ணி அrவில் சுட்டெடுத்து மெழுகுப்பசை தடவிய ஓர் இரும்புத் தகட்டில் Jäł பொருத்தினார். இவ்வாறு தயாரிக்க்ப்பட்ட அச்சுத்தட்டிலிருந்தே பிரதியாக்கம் செய்யக்கூடியதாக இருந்தது. இம்முறையே இடம் Qu೮ಕೆ: அச்செழுத்துக்களின் முன்னோடி முயற்சியாகும்.
ஐரோப்பிய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்குமிடையே அச்சுக்கலையிலான தொடர்பினைப்பற்றி உறுதிப்படுத்திக்கூறமுடிய தெனினும் சீனாவில் கையாளப்பட்ட மரவச்சு முறை (BL9kே PRINTING) ஐரோப்பாவிலும் பதின்மூன்றாம் பதினான்காம் நூர்த்
றாண்டள்வில் காணப்பட்டது.
இவ்விரு திச்ை நாடுகளிலும் இம்ம்ரஸ்ச்சு முறை தோற்றுவதற்கு உந்துகோலாக அமைந்தது கான்த உற்பத்தியேயாகும். மேலும் இவற்றினிடையிலான அச்சுக்கலை வளர்ச்சியில் ஒரு முக்கியம்ானி அம்சத்தை இங்கு நாம் கவனிக்கவேண்டும். அதுதான் சீன எழுத்துக் களுக்கும் ஐரோப்பிய எழுத்துக் களுக்குமிடையிலான வித்தியாசம். ஒரு சீன எழுத்து ஒரு சொல்லினைக் குறிக்கும். எனவே மிகப் பெருந் தொகையான எழுத்து அச்சுக்கள் சீன மொழிக்கு அவசியமாகின்றத் ஆனால் ஐரோப்பிய மொழிகளில் எழுத்துக்களில் இந்த நிலை இல்லை ஆங்கில அரிச்சுவடியில் 26 எழுத்துக்கள் மிட்டுமே உள்ளன. ளின்துே
t
. - 11 - س "

Page 14
தான் ஐரோப்பாவில் இடம் பெயரக்கூடிய 'தனி' அச்செழுத்துக்கள் அச்சுக்கலைக்குப் பொருத்தமுடையதாயிருந்தது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் நவீன அச்சுக்கலை துரிதமாக வளர்ச்சியுற ஏதுவாயிருந்தது.
அடிப்படைத் தேவைகள்
எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் இரண்டு அடிப்படைத் தேவைகள் அவசியமாகின்றன. ஒன்று அந்தக் கண்டுபிடிப்பை வேண்டி நிற்கும் ஒரு சமுதாயம். மற்றையது அந்தக் கண்டுபிடிப்பை செயற்படுத்துவ தற்கான தொழில்நுட்பமும் சாதனங்களும், இவ்வகையில் ஐரோப்பா வில் பதினைந்தாம் நுாற்றாண்டளவில் தக்கதொரு சமுதாயம் உண்டாகியதற்கு வரலாறு சான்று கூறுகின்றது. தொழில்நுட்பம். சாத னங்கள் என்ற வகையில் அப்போதிருந்த நிலையைக் கவனிப்போம்.
1. பதினைந்தாம் நுாற்றாண்டளவில் கையெழுத்துப் பிரதியாக் கத்திற்குக் காகிதம் போதியளவு கிடைக்கக் கூடியதாக இருந்தது.
2. மையைப் பொறுத்தவரையில் சீனர்கள் தண்ணிர் கலந்த ஒரு வகை மையை உபயோகித்து வந்தனர். இது உலோகத்தோடு ஒட் டிப் பிடிப்பதற்குஉகந்ததன்று. ஐரோப்பிய ஒவியர்கள் எண்ணெயுடன் கலந்த மையினை 12ஆம் நூற்றாண்டளவிலேயே உபயோகித்து வந் தனா.
3. ஐரோப்பியருக்கு அழுத்தகமும் ஏதுவாக அமைந்தது. தனி அச்செழுத்துக்களை சமநிலையில் வைத்துப் பிரதியாக்கம் செய்வதற்கு மரவச்சுப் பிரதியாக்கம் செய்யும்முறை பொருத்தமானதன்று. எனவே தனி அச்செழுததுக்களை இறுகப் பிணிக்கக்கூடிய அழுத்தக்கருவி அத் தியாவசியமாகிறது. ஏற்கெனவே காகித உற்பத்தியிலும், திராட்சை ரசம் பிழிந்தெடுப்பதிலும் அழுத்தக் கருவிகளை ஐரோப்பியர் உப யோகித்து வந்துள்ளனர். எனவே இலகுவாக இக்கருவிகளை அச்சுத் தொழிலுக்கு ஏற்றதாக மாற்றியமைக்கக் கூடியதாகவிருந்தது.
V
மற்றும் உலோக வேலைத்திறனும் ஐரோப்பியரிடம் காணப்பட் டது. சிறிய அளவிலான அரிச்சுவடி எழுத்துக்களை உலோகத்திலி ருந்து வார்த்துக் கொள்வது சாத்தியமாயிருந்தது. இவ்வகையில் பதி னைந்தாம் நூற்றாண்டளவில் பல உலோக வேலைத் திறன் படைத் தோர் அங்கு செயலாற்றி வந்தனர்.
- 12 -

இதைத்தவிர இன்னும் இரண்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருந்தது.
முதலாவது, தனி அச்செழுத்துக்களைப் பெருந்தொகையாக உற் பத்தி செய்வது. மற்றது பிரதியாக்கம் செய்வதற்கு ஏதுவாக இத்தனி அச்செழுத்துக்களை ஒருங்கு பிணித்தல். இவ்வாறு பிணித்த அச்செழுத். துக்களை அச்சிட்ட பிறகு கலைத்து விட்டுத் தேவையான வகையில் மீண்டும் பிணித்து உபயோகிக்கக் கூடியதாகச் செய்தல்.
இவ்விரு பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலமும், நாம் முன்னர் கூறிய வசதிகளைப் பெறுவதன் மூலமுமே இன்று நாம் காணும் நவீன அச்சுக்கலையை ஐரோப்பாவில் தோற்றுவிக்கக் கூடியதாயிருந்தது.
ஜொ ஹான் குத்தன்பெர்க்
நவீன அச்சுக்கலையின் வரலாறு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோ ஹான் குத்தன்பர்க் (Johan Gutenburg) என்பவரிலிருந்து ஆரம் பமாகிறது. இவர் ** மெயின்’ நகரில் 1398 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் ஆரம்பத்தில் "ஸ்றா ஸ்போ’ நகரில் அரசியல் அதிகாரியாக இருந்தபோது தட்டாரத் தொழில் பயின்று அதன் பயனாக உலோகத் சீகடுகளில் முத்திரைகள் செதுக்கப் பயின்றார். அங்கே அச்சுக்கலை யின் மீது அவரது கவனம் திரும்பியது. தங்கம், வெள்ளி, ஈயம் ஆகியவற்றை உருக்கும் வகையினையறிந்த குத்தன்பெர்க் உலோகத் தில் இருந்து தனி அச்செழுத்துக்கனை வார்ப்பது பற்றியும், அவற்றை ஒருங்குகூட்டி அச்சிடுவது பற்றியும் சிந்திக்கலானார். ஏற்கெனவே களி மண் தகட்டில் இருந்து அச்செழுத்துக்களைச் செய்துகொள்ளும் முறை ஐரோப்பாவில் வழக்கிலிருந்து வந்தது. இவ்வச்சுக்கள் அளவில் பல தரப்பட்டவையாகவும் எளிதில் பழுதடையக் கூடியனவாகவும் இருந் தன. எனவே உலோகத்தில் இருந்து அச்செழுத்துக்களை வார்ப்பதே சிறந்த முறையெனக் கண்டு அவர் இவ்வகையில் பரீட்சார்த்தமாகச் செயலாற்ற முற்பட்டார். இதற்காக அவர் திராட்சைப் பழம் பிழி யும் அழுத்தக் கருவி ஒன்றினை வாங்கி அச்சுத் தொழிலுக்கு ஏற் றதாகவே அதனைத் திருத்தி அமைத்து ஆரம்ப முயற்சியில் ஈடு Lul L-ITIt.
பின்னர் குத்தென்பர்க் 1444 ஆம் ஆண்டளவில் மெயின்ஸ் நக ருக்குத் திரும்பி வந்து சிரமமான அச்சுத் தொழிலை மேற்கொண் டார். இம்முயற்சிக்குத் தேவையான பணவசதியின்மையால் ஜொ
- 13 -

Page 15
ஹான் பஸ்ட் (Johan Fust) என்பவரிடம் க்டன் வர்ங்கி அலுர்ோடு கூட்டாகத் தொழில் செய்யலானார். இறுதியில் இவ்வகையில் நஷ் டமடைந்து தமது அழுத்தக் கருவிகளிலும் அச்செழுத்துக்களிலும் பெரும் பகுதியை அவர் இழந்துவிட்டார், எஞ்சியவற்றைக் கொண்டே அவர் உலகப் பிரசித்தி பெற்ற குத்தென்பர்க் பைபிளை (Gutenburg Bible) sy& GALLrrrf.
குத்தென்பர்க் பைபிள் 1456ஆம் ஆண்டளவில் வெளியிடப்பட் டது. இதன் ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் உள்ளன. இதுவே குத்தென்பர்க் அச்சகத்தில் இருந்து வெளியான பிரதான நூலாகும்.
அச்சுக்கலை புதிய நுட்பங்களில் துரித வளர்ச்சியடைந்து 1480 ஆம் ஆண்டளவில் ஐரோப்பாவின் பிரதான நாடுகளிலெல்லாம் பரவலா யிற்று. அக்காலகட்டத்தில் 350க்கும் மேற்பட்ட அச்சகங்கள் ஐரோப் பிய நாடுகளில் இயங்கி வந்தன.

அச்சுக் கலையின் பரம்பல்
ஆரம்பத்தில் அச்சுத்தொழில் பெரும்பாலும் ஜர்மனியரின் ஏக போக உரிமையாகவே இருந்தது. ஐரோப்பாவின் ஏனைய நாடுக ளுக்கு இக்கலையை ஜர்மனியர்களே கொண்டு சென்றார்கள். இது ஸ்டெயின்பர்க் (Steinburg) என்பார் பின்வருமாறு குறிப்பிடு றார்.
*இடம் பெயரும் அச்செழுத்துக்களைக் கொண்டு அச்சிடும் முறையை ஜர்மனியரே கண்டுபிடித்ததனாலும், அக்கலை மெயின்ஸ் நகரிலேயே முதலில் வழிக்கில் இருந்ததனாலும் ஜர்மனியரே ஐரோப் பாவின் எல்லா நாடுகளுக்கும், அமெரிக்காவின் சில பாகங்களுக்கும் இக்கலையை அறிமுகப்படுத்தினர். எனவே குத்தென்பர்க்கின் கண்டு பிடிப்பு இவ்வுலக நாகரீகத்துக்கு ஜர்மனி வழங்கிய அதிமுக்கிய புள் களிப்பு என்று கூறுவது மிகைக் கூற்றாகாது"
இனி இக்கலையின் பரம்பலைக் கவனிப்போம்.
இத்தாலிதான் முதன் முதலில் ஜர்மனியரின் இத்தனி உரிமைக்குப் போட்டியாக வந்தது. ஆனால் இங்கும் ஆரம்பத்தில் ஜர்மனியரே இத்தொழிலை அறிமுகப்படுத்தினர். இத்தாலியில் இக்காலத்தே அறிவு வளர்ச்சி பெருமளவில் ஏற்பட்டிருந்ததால் அச்சுக்கலையும் துரித வளர்ச்சி கண்டது. ஆரம்பத்தில் பெரும்பாலான அச்சகத்தினர் தன வந்தர்களின் ஆதரவை நாடி நின்றபோதிலும் வெனிஸ் நகரைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலமுதல் இத்தொழில் வர்த்தக ரீதி யாகவே நடைபெற்றது. வர்த்தக வளமிக்க வெனிஸ் இதற்கு ஏது வாகவிருந்தது.
ஓர் இத்தாலியரால் அச்சிடப்பட்ட முதலாவது நூல் வெனிஸ் நகரில் 1471 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை அச்சிட்டவர் கிளமண்ட் என்னும் இத்தாலியப் பாதிரியாவார். அறிவுத்துறை யிலே மறுமலர்ச்சி கண்டதும் கிறிஸ்தவ நாகரீகத்தின் மத்திய தல மாகியதும், வர்த்தகத் துறையில் வளர்ச்சி கண்டதுமான இத்தாலி அச்சுக்கலையில் துரித முன்னேற்றம் கண்டதில் வியப்பில்லை. இத் தாலிய அச்சுத் தொழிலில் மிகப் பிரபல்யம் வாய்ந்தவர் அல்டஸ்

Page 16
மனுரடியஸ் (Adus Manutius) ஆவார். மேற்கத்திய அச்சுக்கலையின் அடிப்படை அம்சங்களான ரோமன் இத்தாலிக் என்ற இருவகை அச் செழுத்துக்கள் இத்தாலியில்தான் உருவாகின.
பல்கலைக்கழக ஆதரவு
பிரஞ்சு நாட்டிலும் ஆரம்பத்தில் ஜெர்மனியரே இத்தாலிய அறி ஞர்களுடைய ஆதரவில் அச்சுத்தொழிலில் ஈடுபட்டனர். முதலில் ஜொஹான் ஹெய்வின், கில்லோம் பிஷெட் (Johan Heynlin ) Kilom Bishet ) என்ற இரு அறிஞர்கள் மூன்று ஜெர்மானிய அச் சுக்கலைஞரை பிரான்ஸுக்குக் கொண்டுவந்து இத்துறையில் ஈடு படுத்தினர். தொன்மை வாய்ந்த பாரிய சோர்டோன் பல்கலைக்கழ கத்திலேயே அவ்வறிஞர்களது நேரடி மேற்பார்வையில் நூல்கள் அச் சிட்டு வெளியிடப்பட்டன. அவர்கள் அங்கு உரோம அச்செழுத்துக் களையே உபயோகித்தனர். பெரும்பாலும் பாடநூல்களே அச்சிடப் ul-L-GT. gausibilgit 14726i Gius.' TriG-T Leib Gof (Leanardo Bruni) என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட பிளேட்டோவின் கடிதங்கள் குறிப்பிடத்தக்கதாகும்.
1473ஆம் ஆண்டில் ஜெர்மனிய அச்சுக்கலைஞர்களுக்கு ஆதரவ ளித்த இரு பல்கலைக்கழகத்து அறிஞர்களும் பாரிஸை விட்டு வேறிடங்க ளுக்குச் சென்றுவிடவே அவ்வச்சுக்கலைஞர்கள் நாட்டில் பெரும்பாலும் விரும்பப்பட்ட ஜெர்மனிய கொதிக் (Gothic) அச்செழுத்துக்களைக் கையாளலாயினர்.பாரிஸ், லயன்ஸ் ஆகிய நகரங்கள் அச்சுத் தொழி லுக்குப் பிரதான தளங்களாக விளங்கின.
ஹாலந்தில் ஆரம்பத்தில் கொஸ்டர் (Coster) என்பவருடைய நா மத்தோடு தொடர்புடையதாகவுள்ளது. ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஜெர்மனிய அச்சுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பதினைந் தாம் நூற்றாண்டில் இப்பிரதேசம் பெருந்தொகையான நூல்களை ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வெளியிட்டு இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
ஸ்பெயினில் அச்சுத்தொழிலை ஆரம்பித்த ஜெர்மானியர் வெனிஸ் பாஸல், லயன்ஸ் போன்ற இடங்களில் இருந்தே அச்செழுத்துக்களைத் தருவித்துக் கொண்டனர். ஆனால் இதற்கு முற்பட்ட காலத்து அச் செழுத்துக்கள் ஸ்பானிய முறையில் அமைந்தனவாகும். காலப்போக் கில் வெளிநாட்டு அச்சுக்கலைஞர்களும் ஸ்பானிய முறையினைத் தழுவி அந்நாட்டுக்கே சிறப்பான அச்செழுத்துக்களை ஆக்கிக் கொண் டனர். செவில் ,சலமன்கா,சரகோசா,வெலன்சியா,பார்சிலோனா முத லிய நகரங்களிளே 15 ஆம், 16 ஆம்நூற்றாண்டுகளில் அச்சுத் தொழில் பிரபல்யமடைந்திருந்தது.
- 16 -

ஆங்கில நூல் வெளியீடு
ஆங்கிலத்தில் வெளிவந்த முதலாவது அச்சிடப்பட்ட நூல் பெல் ஜியத்தில் உள்ள புருகெஸ் (Bruges) என்ற நகரில் தயாரிக்கப்பட்ட தாகும், 1474 ஆம் ஆண்டில் வில்லியம் கக்ஸ்டன் என்ற ஆங்கிலப் புடவை வியாபாரி அவ்வூருக்குச் சென்றிருந்தார், அங்கே அவர் ஆங் கில நூல்களை அச்சிடுவதில் ஆர்வங்கொண்டார். ஆனால் அங்கு ஆங்கில அச்செழுத்துக்கள் கிட்டாமையால் தாமே அவ்வெழுத்துக் களைத் தயாரித்துக் கொண்டார்.
கக்ஸ்டன் இங்கிலாந்திற்குத் திரும்பி வந்து வெஸ்மினிஸ்டர் தே வாலயத்திற்கு அருகே ஓர் அச்சகத்தை நிறுவி இங்கிலாந்திலும் முதன் முறையாக ஆங்கில நூல்களை வெளியிடலானார். அவரது முதலாவது அச்சிட்டநூல் 1477ல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மர ணிக்கும்வரை சுமார் 90 நூல்களை வெளியிட்டார். அவற்றுள் 74 நூல்கள் ஆங்கில நூல்களாகும். ஆங்கில நூல்களுள் 20 நூல்கள் அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த நூல்களாகும். ஆங்கில உரை நடை இலக்கியத்துறையில் அவருக்குத் தனியிடமுண்டு.
கக்ஸ்டனுடைய உதவி அச்சுக்கலைஞர் விங்கின் டிவோர்ட் (Wynkyn de Worde) என்பவராவார். கக்ஸ்டனுக்குப்பிறகு அவர் சுமார் 800 வெளியீடுகளை அச்சேற்றினார். மற்றும் ரிச்சேட் பைஸன் (Richard Pyson) 6úsi) Gó) Luluh Lurriaŕv (William Fawkes) arcir Guntaith இங்கிலாந்தின் அச்சுக்கலைத் துறையில் முக்கியமானவர்களாவர்.
இந்தியாவில் அச்சுக்கலை
மூதன்முதலாக அச்சு இயந்திரம் இந்தியாவிற்கு 1556 ஆம் ஆண் டில் எதிர் பாராதவிதமாகக் கொண்டு வரப்பட்டது. போர்த்துக்கேய ஜெஸுயிட் (Jesuit) பாதிரிமார் இதனை அபிஸினியாவிற்கெனவே எடுத்து வந்தனர். இறுதியில் இந்த அச்சு இயந்திரம் கோவாவில் நிறு வப்பட்டது. இங்கு ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் பெரும் பாலும் போர்த்துக்கீசிய மொழியிலான சமய நூல்களேயாகும். இந்திய மொழிகளிலான அச்சிடப்பட்ட நூல்கள் முதலில் கொல்லத்தில் (Oபinton) இருந்துதான் வெளிவந்தன. வண. பாரியார் என்ற கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரே தமிழ் அச்செழுத்துக்களை அறிமுகப்படுத்தினார். அச்சிடப்பட்ட முதலாவது தமிழ் நூல் 1578 ல் வெளிவந்தது. கொல் லத்தில் இருந்து அச்சுக்கலை கொச்சினுக்குப் பரவியது. தரங்கம்பாடி, தஞ்சாவூர், வேப்பேரி ஆகியவிடங்கள் அச்சுக்கலை வளர்ச்சியில் முன்னோடிகளாகத் திகழ்ந்தன. தரங்கம்பாடியில் ஸைகன் பல்கி (Zeigenbag) பாதிரியாரும், வேப்பேரியில் பப்ரீஸியஸ் (Fabricius) பாதி ரியாரும் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர்,
-۔ 17 -۔

Page 17
தெலுங்குபோன்ற ஏனைய மொழிகளில் அச்சுக்கலை 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் தோன்றியது.
இந்தியாவில் ஆரம்பகால அச்சுத்துறையிலான முயற்சிகள் கிறிஸ் தவப் போதகர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக அவர்களால் வெளியிடப்பட்ட பெரும்பாலான நூல்கள் சமய நூல் களாகவே இருந்தன. மேலும் அச்சுக்கலைத் துறையில் அரசினரின் கட்டுப்பாடுகளும் பரவலான நூல் வெளியீட்டிற்குத் தடையாயிருந் தன. இவ்விதமான கட்டுப்பாடுகள் 1837 ஆம் ஆண்டில் தளர்த்தப் பட்டதிலிருந்து நூல் வெளியீடு வளர்ச்சியடையத் தொடங்கியது. 1850 ஆம் ஆண்டு முதல் நூல் வெளியீட்டுத் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது.
இலங்கையின் பங்கு
பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இலங்கைக்கு அச்சுக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. தேசாதிபதி பாரன்வொன் இம்ஷெஃப் (Baronvon lmhoff) அவர்களது காலத்தில் 1736 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட சிங்கள மொழியிலான பிரார்த்தனைப் புத் தகமாகும். இது கப்ரியேல் ஷேட் என்பவரால் வெளியிடப்பட்டது. தேசாதிபதி இம்ஷேனின் நிர்வாகத்தின் இறுதிக்கட்டத்தில் மற்று மொரு அச்சு இயந்திரமும் ஒல்லாந்தரால் நிறுவப்பட்டது.
தமிழ் மொழியிலான ' சமய வினா விடையும் செபங்களும்' எனும் நூல் 1739 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல சமய நூல்கள் ஒல்லாந்தரால் வெளியிடப்பட்டது.
இலங்கையில் கொழும்பில் 18 ஆம் நூற்றாண்டில் வெளியிடப் பட்ட சில தமிழ் நூல்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஏ . கிராமார் அவர்கள் தமிழாக்கம் செய்த சாந்த மத்தியூவுடைய சுப செய்தி 1740 ஆம் ஆண்டிலும், பழைய ஏற்பாட்டின் வரலாறு 1747 ஆம் ஆண்டிலும் வணக்கத்துக்குரிய புரோன்ஸ் வோல்ட் (Rev Bronsvold) தமிழாக்கம் செய்த கிறிஸ்தவ சமயச் சுருக்கம் 1754 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.
avasorá5ášgág5fiu 9. 19. u9 filoňolo (Rev P. de Vriest) 5L6yprá கம் செய்த பதினாறு போதனைகள் 1753 ஆம் ஆண்டிலுமாக மற் றும் பல சமய நூல்கள் இதே கால கட்டத்தில் வெளிவந்தன.
நல்லூரில் நிறுவிய அச்சகம்
19 ஆம் நூற்றாண்டில் தேசாதிபதி எட்வர்ட் பான்ஸ் அவர்க ளின் காலத்திலே அதாவது 1820 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க
ܒܚ- 8 1 -ܚ

மிஷனுக்காக ஹறட் என்பவர் இலங்கைக்குக் கொண்டு வந்த அச்சுயந் திரத்தை நிறுவுவதற்குத் தேசாதிபதி அனுமதி வழங்காததினால் அமெரிக்க செர்ச் மிஷன் அதனைப் பொறுப்பேற்று நல்லூரிலேயே நிறுவியது.
ஈழத்தின் வடக்கே நிறுவிய முதலாவது அச்சுயந்திரம் இதுவே யாகும். இங்கே ஜோஷப் நைட் முத்தி வழியை அச்சிட்டார்.
அமெரிக்க மிஷன் பின்னர் அனுமதி பெற்று 1834ஆம் ஆண்டில் மானிப்பாயில் அச்சகம் ஒன்றை நிறுவினர். கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத் துக்கு இது உதவியது. மற்றும் மானிப்பாய் அகராதி, சூடாமணி நிகண்டு ஆகியனவும் வைத்திய கலாநிதி கிரீன், ஜே. ஆர். ஆர்னல்ட், வில் லியம் நெவின்ஸ், கரல் விஸ்வநாதன் ஆகியோருடைய நூல்களும் மானிப்பாயிலிருந்து வெளிவந்தன. இந்நிலையில் சைவசமயப்பணி யையும் கல்விப் பணியையும் முன்னிட்டு 1849ஆம் ஆண்டில் ஆறு முகநாவலர் பெருமான், வித்தியானுபாலன அச்சியந்திரசாலையை நிறுவினார்.
இதுவரை நாம் ஜெர்மனியில் மெயின்ஸ் நகரில் தோற்றிய அச்சுக்
கலை உலகளாவப்பரவிய வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைத் தோம்.
- 19 ܚ

Page 18
4
சிறுவர்களின் நூலார்வம்
ம்ேமிடையே வழங்கி வரும் இளமையிற் கல், பருவத்தே பயிர் செய், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா, தொட்டில் பழக் கம் சுடுகாடுமட்டும் என்பன போன்ற பழமொழிகள் இளமைப்பரு வத்தின் அதியற்புதமான ஆற்றல்களைச் சுட்டுகின்றன.
ஒரு குழந்தையின் மனம் களங்க மற்றது ; தூய்மையானது, அது பல்வேறு விதமான அனுபவங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு பதிவேடாக உள்ளது. இன்று உலகில் நாம் அறிந்த பெரியோர்கள் இளமைப்பருவத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத் தினாலேயே தங்கள் பிற்கால வாழ்க்கை நெறிப்படுத்தப்பட்டதை எமக்கெடுத்தியம்புகின்றனர். சிறுவர்களின் உள்ளத்தே பதியும் எந்த வொரு விஷயமும் நிலைத்து நிற்கக் கூடியதாக இருக்கும் என் பதனாலேயே இப்பருவத்தில் நற்பழக்கங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்படுகின்றது. துவ்வகையில் இன்று நமது இந் தனைக்குரிய வாசிக்கும் பழக்கமும் இப்பொது நியதிக்கு புறம்பான தன்று.
மக்களின் அறிவு வளர்ச்சிக்கான சாதனங்களின் அணியிலே முன் நிற்பது நூல்களேயாகும். புதின ஏடு, வானொலி, தொலைக்காட்சி போன்ற வெகுசன அறிவுச் சாதனங்கள் (Mass Media) பெருகி யுள்ள இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கூட நூல்கள் தங்களுடைய அறிவூட்டும் ஆற்றலை இழந்துவிடவில்லை. எல்லா அறிவுச் சாதனங் களிலும் நிலைeானதாக நின்று நூல்கள் உதவி வருகின்றன. ஒரு வரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் பேணுவதில் நுால்களுக்கு இணையான சாதனம் ஒன்று இல்லையென்பதை எமது தற் கால அனுபவம் தெளிவு படுத்துகின்றது. வெகுசன சாதனங்களின் மூலம் மக்களின் தனித்தன்மையும் ஆளுமையும் பாதிக்கப்படுவதை சர்வாதி கார ஆட்சிமுறை நிலவும் நாடுகளில் பெருமளவு காணக்கூடியதாக இருக்கின்றது. ஏன் சனநாயகம் நிலவும் நாடுகளில் கூட வெகுசன சாதனங்களின் வலிமையை நாம் மறுப்பதற்கில்லை. இன்  ைற ய திரைப்படம் ஒன்றே இது வரை நான் கூறியதற்குப் போதிய சான் றாகும.

சிறுவர்களின் மீது நூல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ரிச்சர்ட் பெம்பேர்கர் (Richard Bamberger) பின்வருமாறு விபரித்துள்ளார். "ஓர் இளம் பிள்ளையின் வளர்ச்சியில் நூல்களின் தாக்கம் மிகவும் திட்டவட்டமானதாகும். அதன் உள்ளம் எனும் கோயிலைக்கட்டி பெழுப்ப உதவும் கற்கள் நூல்களாகும், அவை ஒருவரின் கற்பனா சக்தியை விரிவடையச் செய்வதோடு உணர்ச்சிகளைப் பண்படுத்தி மனதை நெறிப்படுத்துகின்றன. மற்றும் நூல்கள் சிறுவர்களினதும் இளைஞர்களினதும் அறிவை வளப்படுத்தித்தார்மீகத்துறையிலும் உல கியல் துறையிலும் தீர்வுகாண உதவுகின்றன.
இப்படியான அளவற்ற நன்மைகளைப் பயக்கும் நுால்களைப் படித்தறியும் வாய்ப்பினை நாமும் நமது பிள்ளைகளும் இழக்க முடி யுமா? எனவேதான் நுால்களின் உறவை நம் சிறாருக்கு நல்ல முறை யில் ஏற்படுத்திவைக்க வேண்டிய கடமை எம்மைச் சார்கின்றது.
இனி சிறுவர்கள் நுால்களை வாசிப்பது பற்றிய சில உண்மை களைக் கவனிப்போம். வளர்ந்தவர்கள் நுாலை வாசிப்பதற்குப் பல பொது ஏதுக்களும் அடிப்படைகளும் இருந்த போதிலும் இங்கு சிறுவர்களுக்குரிய சிறப்பு நிலைகள் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். இவ்வகையில் வளர்ந்தோர்க்கும் சிறுவர்களுக்கு மிடையேயுள்ள சில அடிப்படையான வித்தியாசங்களை நாம் முதற் கண் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
தாம் வாசிக்கும் விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான வாழ்க்கை அனுபவம் வளர்ந்தவர்களுக்கு நிரம்ப உண்டு. மேலும் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளும் வாசிக்கும் விஷயங்களின் மீது படர்ந்துவிடுகின்றன. பெரும்பாலானோருடைய த னித் தன்  ைம ஆளுமை ஆகியனவும் வாசிக்கப்படும் பொருள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவர்கள் தாம் வாசிக்கும் விஷயங்களி னால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் சிறுவர்கள் விஷயத் தில் நிலைமை பெருமளவு மாறுபட்டதாக இருக்கின்றது. அவர்களது உள்ளங்கள் நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் கறைபடாதவை, அனுபவத் தாக்கம் மிகக்குறைந்தவை. ஒரு நுாலை வாசிக்கும்போது அவர்கள் தங்கள் சூழலை மறந்து அந்த நுாலினோடு ஒன்றிவிடும் தன்மையுடையவர்கள். வளர்ந்தோர்களைவிட நுாலினை ஊன்றி வாசிக்கும் தன்மையும் நுாலிலுள்ள பாத்திரங்களோடு ஒன்றிவிடும் தன்மையும் சிறுவர்களிடத்தேதான் காணப்படுகின்றது. இவ்விதமான தன்மைகள் சிறுவர்களிடத்தே மிகுந்திருப்பதனாலேதான் அவர் களுக்கு நாம் வழங்கும் நுால்கள் பற்றிய பிரச்சினையில் வி ஷே ட கவனம் செலுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

Page 19
நமது கவனத்தைப் பெறவேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் வாசிக்கும் ஆற்றல் பற்றியதாகும். வாசிக்கும் ஆற்றல் இயல்பாகவே ஒருவரிடம் காணப்படுவதில்லை. நீந்துவதற்கோ, பந்தடிப்பதற்கோ " வாகனங்களை செலுத்துவதற்கோ எவ்வளவு பயிற்சி அவசியமோ அதேபோல் வாசிப்பதற்கும் பயிற்சி அவசியமாகும். நீடித்த சிரம மான பயிற்சியின் மூலமே வாசிக்கும் ஆற்றலைச் சிறுவர்கள் பெற முடியும். ஒரு பிள்ளை சுமார் ஐந்து வயதில் இருந்தே தொடர்ச் சியாக வா சிக் கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் பிற்காலத்தில் அப்பிள்ளையிடத்தே நூலார்வம் தரித்து நிற்கு ம் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஒரு பிள்ளையிடத்தே வாசிக்கும் பழக்கத்தையும் வாசிக்கும் ஆரிவத்தையும் ஏற்படுத்துவதில் முதற்கண் பெற்றோர்களும் அடுத்து ஆசிரியரும் அடுத்து நூலகரும் கடமைப் பாடுடையவர்களாகின்றார்கள்,
இலங்கை போன்ற ஒரு நாட்டில் கல்வி வளர்ந்துவரும் இந்த வேளையில் இத்துறையில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தாலும் கூட மிகவும் குறைவாகவே இருந்து வருவது கண்கூடு. திருப்திகரமான அளவிற்கு நூல்களை வாங்கி வீடுகளில் வைப்பதற் கான வசதி பெரும்பாலான பெற்றோர்களிடத்தில் இல்லை. எனவே வாசித்தல் பழக்கத்தை தூண்டுவதில் பாடசாலைகளினதும், நூல் நிலையங்களினதும் பொறுப்பு கூடுதலாக உள்ளது. இ தி லி ரு ந் து பெற்றோர், பாடசாலை, பொது நூல் நிலையம் ஆகிய மூன்று பிரி வினரும் தொடர்புடையவர்களாகின்றனர். சிறப் பாக பாடசா லைக்கும் பொது நூல்நிலையங்களுக்கும் இடையில் நெருங் கி ய தொடர்பு இருக்க வேண்டியதன் அவசியமும் உணரப்படுகின்றது.
பாடசாலையில் நூல் நிலையம் ஒன்று இருக்கும்போது பொது நூல் நிலையத்தில் சிறுவர்களுக்கான நூல் நிலையம் அவசியம். தானா என்ற ஐயப்பாடும், ஏன் சில சந்தர்ப்பங்களில் - போட்டி நிலையுங்கூட - ஏற்பட எதுவிருக்கின்றது. இந்தப் பிரச்சினையில் தற்பொழுது நாம் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன். ஆனால் இவ்விரண்டுவகை நுால் நிலையங்களுமே அவசியம் என்பதையும், இவற்றின் கூட்டு முயற்சியால் பெறக்கூடிய நன்மைகள் மிகப் பல என்ற உண்மையையும் மாத்திரம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
பெற்றோரின் நிலை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டேன். இனி ஒரு பிள்ளையின் வாசிக்கும் ஆற்றல் வளர்ச்சியில் பாடசாலை ஆசிரி யரின் பங்கைப் பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன்.
- 22 -

வாசிக்கும் பழக்கத்தை பின்ளைகளிடத்தே வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் ஒரளவு உதவ முடியும், என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் வாசிப்பதில் ஆர்வம் உள்ள பிள்ளைகள் தாமாகவே மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆசிரியரின் சாதனை ஒப்பாகமாட்டாது, என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் கூறுவதால் கடமை யில் கருத்துள்ள ஆசிரியர்கள் பிள்ளைகளிடத்தே வாசிக்கும் பழக் கத்தை "ஏற்படுத்துவதில் பெறக்கூடிய பலன்களைக் குறைவு படுத்திக் கூறுவதாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் தாமாகவே இப்பழக்கத் தில் நாட்டம் கொள்ளக்கூடிய பிள்ளைகளைவிடத் தூண் டு த  ைல வேண்டி நிற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையே மிகப் பெரிதாகும். எனவே பெரும்பாலானோர் சம்பந்தப்பட்டமட்டில் ஆசிரியர் பணி இன்றயமையாததாக விருக்கின்றது.
சிறுவர்களிடத்தே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதில் ஆசிரி ர்கள் ஆற்றக்கூடிய பணி மிகச் சிறப்பானதாகவிருப்பதால் இப் பணிக்கு ஆசிரியர்களின் தகைமையைப்பற்றியும் இங்கு நாம் குறிப் டிட வேண்டியது அவசியமாகின்றது. நல்ல நூல்களைப் பெருமளவில் வாஒக்கும் ஆசிரியர்கள் நிச்சயமாகத் தமது மாணாக்கரிடையே நூலார்வத்தை ஏற்படுத்த முடியும். இன்று எமது ஆசிரியர் கள் பெரும்பாலானோரிடத்தில் வாசிக்கும் பழக்கம் எந்த நிலையில் உள் ளது என்பது கேள்விக்குரிய விஷயமாகும்.
பாடசாலையில் மாணவர்களிடத்தே வாசிக்கும் பழக்கம் சிறப் பாக வளர்வதற்கு ஆசிரியர்கள் அவதானிக்க வேண்டிய சில முக் கியமான விஷயங்களை இனிக் கவனிப்போம்,
முதலாவதாக, சிறுவர்களை நாம் வாசிக்கத் தூண்டுவதன் பிர தான நோக்கம் அவர்கள் தங்களைப் பிற்கால வாழ்க்கைக்குத் தகுதி யுடையவர்களாக்கிக் கொள்வதற்குத் தான் என்ற கருத்து முற்றாகப் பொருந்துவதாக இல்லை. அதே போல பொது நூலகங்களில் கடமை யாற்றும் சிலர் எண்ணுவதுபோல் பாடசாலைகளில் வாசிக்கும் பழக் கத்தை ஏற்படுத்துவது பொது நூல் நிலையங்களுக்கான வாசகர்களை உற்பத்தி செய்வதற்குத்தான் என்ற கருத்தும் ஏற்புடையதன்று. இக் கூற்றுக்கள் ஓரளவு புரட்சிகரமானவையாகத் தோற்றக் கூடுமெனி னும், வாசிக்கும் பழக்கத்தின் விருத்திக்கான ஏதுக்களைச் சரிவரப் புரிந்து கொள்கின்றவர்களுக்கு இவற்றின் தன்மை நன்கு புலனாகும். எனினும் சிறியதொரு விளக்கத்தை இங்கு தருவோம். சிறுவர்களின் வாசிப்பதற்கான காரணங்களுள் பிற்கால வாழ்க்கைக்கான அறிவுத் தேட்டம் முக்கிய மானதெனினும் அவர்களுடைய உடனடித்தேவை கள் பல உண்டு. இதனை நாம் பொருட்படுத்தவில்லையெனில் அவர்
ー 23 ー

Page 20
களிடத்தே வாசிக்கும் பழக்கத்தை நிலைபெறச் செய்வது அசாத்யதி மாகிவிடும். சிறுவர்கள் வாசித்தலில் பெரும் இன்பம் காண்கின்றார் கள். பொழுது போக்காகவும், கற்பனையுலகில் நிலவுவதற்காகவும். ஏன் வெறும் விநோதத்திற்காகவும் வாசிப்பதில் அவர்கள் சலிப் படைவதில்லை. எனவே இத்தகைய வாசிப்பைத் தடுப்பது ஒரு பிள்ளையின் நூலார்வத்தைப் பாதிப்பதாயிருக்கும். இந்த உண்மையை எமக்கு மெக் கொல்வினுடைய 'நூல் நிலையங்கள்" பற்றிய பின் வரும் கூற்று தெளிவுபடுத்துகின்றது. "சிறுவர் நூல் நிலையங்களின் பிரதான நோக்கம் அந்நூல் நிலையங்கள் தற்சமயமே உபயோகித்து உடனடியாக இன்பமும் நன்மையும் பெறும் வாசகர்களை உருவாக்கு வதேயாகும் அவர்கள் நூல் நிலையங்களின் மூலம் நிகழ்காலத் திலேயே ஊக்கமும், உற்சாகமும், மனநிறைவும் பிரதிபலனும் பெறு வார்கள். இந்த நிலைக்த நாம் அவர்களை ஆளாக்கிவிட் டால் எதிர்காலத்தைப்பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை! இதை நாம் வற்புறுத்திக் கூறுவதற்கான காரணம் என்னவென்றால் பலரின் மனத்தே பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையொன் றினைத் தவிர வேறெதுவும் இடம்பெறுவதில்லை. ஆனால் பிள்ளை களோ தற்காலத்தை, தங்களைச் சூழ்ந்து நிகழ்வதையே நாடுகின்றார் கள். அவற்றைப் பற்றி வாசித்து மகிழ விழைகின்றார்கள். எனவே நாம் அவர்களுடைய உடனடியாக விருப்பங்களுக்கு வழிவகை செய் தால் வருங்காலம் தானாகவ்ே சிறப்புற அமைந்துவிடும். பொது நூலகங்களுக்கான வாசகர்களும் குறைவின்றித் தோற்றுவிக்கப்படு வார்கள்.
அடுத்தபடியாக நாம் சிறுவர்களுடைய மனோநிலை விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றைப்பற்றியும் அறியவேண்டியது அவசிய மாகிறது. சிறுவர்களின் இயல்பூக்கங்களை நாம் அறிந்தால் DinTAS திரமே அவர்களிடையே வாசிக்கும் பழத்தைச் சீராக ஏற்படுத்த முடியும். ஒரு பிள்ளை வாழும் சூழல் அதிக விரிவானதொன்றன்று. தான் வதியும் வீடு, செல்லும் பாடசாலை, விளையாட்டுத்திடல் என்பன போன்ற ஒரு சில இடங்களே அதன் அறிவுக்களமாகின்றது. அறியாத, தனது அனுபவத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை நூல் களை வாசிப்பதன் மூலமே சிறுவன் அறியவேண்டியவனாயிருக்கிறான். நூல்களின் மூலம்ே அவனது அறிவு விசாலிக்கப்படுகின்றது. எனவே சிறுவர்களுக்குத் தரப்படும் நூல்களும் இதற்கேற்ப அமைதல் வேண் டும்.
அடுத்து ஒரு பிள்ளையின் வளர்ச்சி படிப்படியாகவே ஏற்படுகின் றது. எனவே அதன் அனுபவங்களும் இந்த வளர்ச்சிப் படிகளுக்கு றற்றதாகவே அமைகின்றன. இந்த நிலைபற்றியே நூல்களும் ஒரு பிள்ளையின் ஆற்றலுக்கும் அநுபவத்திற்கும் ஏற்றதாக இருத்தல் வேண்டும்.
- 24 -

களும் உண்மையாய் இருத்தல் வேண்டும். உண்மையை திரித்துக் கூறும் ஓர் ஆசிரியர் குழந்தைகளின் உள்ளத்தைக் கவர முடியாது: தவறான தகவல்கள் எப்போதும் நுாலின் தரத்தையும் பிரயோசனத் தையும் பாதிக்கும், சிறுவர்களுக்கான நுால்களின் பண்புகளைச் சுருங் சக் கூறின் அவை இலக்கியத்தரமுடையனவாயும், சிறுவர் தேவை களையும் விருப்பங்களையும் திருப்திப்படுத்தக் கூடியனவாயும், சில கல்வி இலக்குகளை அடைய உதவக் கூடியனவாயுமிருத்தல் வேண்டும்.
இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து சிறுவர்களின் தன்மையையும், அவர்களுக்காக எழுதப்படும் நுால்களின் சிறப்பம்சங்கள் சிலவற்றை யும் கண்டோம்; நுால்களைப் பொறுத்த அளவிலே நாம் கூறியுள் ளவை அவற்றின் உட்பொருள் பற்றியனவேயாகும். ஆனால் பிள்ளை கள் அவற்றை வாசிக்கத் தூண்டுவதற்கு அவசியமான புறநிலை களைப் பற்றியும் இங்கு நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
சிறுவர் நுால்கள் கண்களைக் கவரும் அழகிய தோற்றமுடையன வாய் இருத்தல் வேண்டும். நுால்களின் உறை கண்கவர் வர்ணச் சித் திரங்களைக் கொண்டிருத்தல் அவசியமாகும். பெரியதும் தெளிவானது மான அச்சு எழுத்துக்களைக் கொண்டனவாயும், கதைகளையும் விஷ யங்களை விளக்கும் சித்திரங்களைக் கொண்டனவாயும் அவை இருத் தல் வேண்டும். அழகிய தோற்றமுடைய நுால்களை வாசிப்பதற் கான இடங்களும், நல்ல வெளிச்சம், காற்றோட்டம் ஆகியவற்றோடு, மனதிற்கு இன்பமூட்டக்கூடிய சூழலை உடையனவாயிருத்தல் வேண்டும். இந்த வகையில் பாடசாலை நுால் நிலையங்களையும் பொது நுால் நிலையங்களையும் நாம் அமைத்துக் கொள்ள வேண் டியது அவசியமாகும். நல்ல நுால்களையும் மனதிற்கு உக ந் த சூழலையும் ஏற்படுத்திக் கொண்ட பிறகு அடுத்துக் கவனிக்க வேண் டியது, நுால்களையும் சிறுவர்களையும் இணைக்கும் கருமமாகும். அதாவது நுால்களைப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி வாசிக்கத் தூண்டுதல். இங்குதான் ஆசிரியர்களோ அல்லது நூலகர்களோ மிக வும் சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின் றார்கள். பிள்ளைகளை வாசிக்கத் தூண்டுவதில் நூலகர்களின் பங் கையும் இவ்விடத்தில் உடன் சேர்த்துக்கொள்வோம். இந்த முயற் சியில் மிகச்சிறந்த முறை சிறுவர்களை நேரடியாக இன்ன இன்ன நுால்களைப் படிக்க வேண்டுமென்று விதிக்காமல் மறைமுகமாக அவர் கண் நுால்களில் ஈடுபடச் செய்வதேயாகும்.
ஆரம்பத்தில் ஓர் ஆசிரியர் பரவலாக நுால்களைப் படித்தவரா னால் பிள்ளைகளிடத்தே சிறப்பாகநூ-ால் ஆர்வத்தை ஏற்படுத்த முடியுமென்று நான் குறிப்பிட்டேன். இதனை விளக்கும் முகமாக
- 25 -

Page 21
பி. ஜி. ரால்ஃப் (B. G. Ralph) அவர்களின் பின்வரும் கூற்றை எடுத்துரைப்பது இங்கு பொருந்தும். ஆசிரியர் தமது பாடத்தின் போது இடையிடையே நுால்களைக் குறிப்பிட்டுப் பேச வேண்டும் அந்நூ ல்களில் உள்ள காட்சிகளையும் பாத்திரங்களையும் குறிப்பிட்டு பேச வேண்டும். நல்ல கருத்துக்களை மேற்கோள்களாக எடுத்தாள வேண்டும். தமது பாடத்தின்போது உருசிகரமான பகுதிகளையும், உருக்கமான பகுதிகளையும் எடுத்து வாசித்துச் சிறுவர்கள் தாமாகவே அப்பகுதிகளைத் தொடர்ந்து வாசிக்கக் கூடிய ஆர்வத்தை கிளறிவிட வேண்டும். இது போன்ற மறைமுகமான வழிகளில் ஆசிரியர் பிள்ளை களின் நுாலார்வத்தைத் தூண்டுவதே முதன்மையான உபாயமாகும். ஆசிரியர் பிள்ளைகளை நுால்கள் தரும் இன்பத்தின் பொருட்டும் வாசிக்கத் தூண்டவேண்டும். ஆனால் அதே சமயம் பிள்ளைகள் வாசிப்பதை நிதானமாக வரையறைப்படுத்தவும் வேண்டும். ஏனென் றால் அநேகம் பிள்ளைகள் கண்டபடி, குறிக்கோள் அற்ற முறையில் அளவுக்கு அதிகமாக வாசிக்கத் தலைப்பட்டு விடுகின்றனர். இந்த விதி ஆசிரியர்களுக்குச் சிறப்பாக அமைகின்றது. ஏனெனில் பிள்ளை கள் பாடசாலைக்கு செல்வதன் நோக்கம் அவர்களது வாசிக்கும் பழக்கத்தோடுபெருமளவுக்கு ஒன்றியிருத்தல் அவசியமாகும். இந்த விஷயத்தில் பொது நூலகங்களில் நிலைமை வேறுவிதமாக அமைகின் றது. ஆசிரியரோ வகுப்பில் தேவைகளுக்கு ஏற்றதாகவும் அதே சம யம் அவர்களின் சுய விருப்புக்கு இடமளிக்கும் வகையிலும் பிள்ளை களை நெறிப்படுத்த வேண்டியவராகிறார். பொதுவாகக் கூறுமிடத் துப் பிள்ளைகள் நல்ல நூல்களை வாசித்துப் பழக்கப்பட்டு விட்டார் களென்றால் அவர்களுடைய மனம் அதே வழியில் படர்ந்து செல் லும் என்பது அனுபவ உண்மையாகும், இந்த நிலையை அவர்களி டத்தே நாம் ஏற்படுத்தி விட்டால் எதை வாசிப்பது என்ற விஷயத்தில் அவர்களின் சுதந்திரத்தைப்பற்றி நாம் கவலைகொள்ள வேண்டி யதில்லை.
மறைமுகத் தூண்டலையும், நுால்களைத் தெரிவு செய்தலில் சுதந்திரத்தையும் பற்றி ஸ்ரான்லி ஜாஸ்ற் (Stanley Jast) என்பார் பின்வருமாறு கூறுகின்றார். " மக்களின் ஒழுக்கத் துறையிலாயினும் சரி அரசியல் துறையிலாயினும் சரி அறிவூட்டும் முயற்சியிலாயிலும் சரி நேர்முகமாக தாக்குதல் எப்போதும் தோல்வியில்தான் முடியும். தான் விரும்பியதைத் தெரிவு செய்து கொள்ளும் சுதந்திரத்தை (Freedom of Choice) நான் எப்போதும் வற்புறுத்தி வந்துள்ளேன். வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒரு பிள்ளை வளர்ந்தவரொருவருடைய நிர்ப்பந்தத்தின் மேல் மிகச் சிறந்ததொரு நுாலை வாசிப்பதைவிடச் சுயமாக ஒரு தரக்குறைவான நுாலை வாசிப்பது மேலானதாகும்;
- 26 -

பிள்ளைகளிடத்தில் நுாலார்வம் ஏற்படுவதற்குச் சூழல் மிகவும் முக்கியமானதாகும். வீடுகளிலே பலவிதமான நுால்கன் நிறைய இருக் குமானால் அதை விடச் சிறந்த நுால்கள் இருக்க முடியாது. ஆனால் அந்த நிலை நமது நாட்டில் இருக்குமென்று எதிர் பார்க்க முடியா தல்லவா? எனவே பாடசாலையிலே, வகுப்பறையிலே, நுால்நிலை யங்களிலே மற்றும் சனசமூக நிலையங்களிலே, கோயில்களிலே பள்ளிவாயில்களிலேயெல்லாம் நூால்கள் நிறைந்த சூழல் வாய்க்குமாயின் அதுவொன்றே பிள்ளைகளை வாசிப்பதற்குத்தூண்டுமென்பதில் ஐய மில்லை. இந்த உண்மையை வசதியுள்ள வீடுகளிலுள்ள பிள்ளைகளின் கூடுதலான நுாலார்வத்திலிருந்து நாம் அறிய முடியும் இனி சிறுவர்களைத் தூண்டுவதற்கான மேலும் சில வழிகளை இங்கு கூறுவோம்.
இயல்பாக வாசிப்பதில் நாட்டமில்லாத பிள்ளைகளுக்கு உதவும் முகமாக பாடசாலைகளில் நூல்களைப்பற்றிய விவாதங்கள் உரக்க வாசித்தல், கதைகள் சொல்லுதல், கூட்டாக ஒரு நூலை வாசித்தல் போன்ற வகுப்பறைப் பயிற்சி முறைகளை ஆசிரியர்கள் கையாளலாம். மேலும் மெளனமாக ஒரு நூலை வாசிப்பதற்கான வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
சிறுவர்கள் தாங்கள் வாசிக்கும் நூல்களைப்பற்றி ஏனைய பிள் ளைகளிடத்தே செய்யும் பிரசாரம் ஒரு முக்கியமான சாதனமாகும் தங்கள் சொந்த நூல்களையும், சக மாணவரிடையே காட்டி அவர் களிடையே சதா நூல்கள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவது ஊக்கு விக்கப்பட வேண்டியதொன்றாகும். இந்த முயற்சிகளிலெல்லாம் சிறு வர்கள் சுயமாக இயங்க இடமளிக்க வேண்டுமென்று நாம் கூறிய போதும் எப்போதும் ஆசிரியர்களின் மறைமுகமான மேற்பார்வையின் அவசியத்தை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும் தரமான இலக் கியங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வழிகாட்டிகளாக ஆசிரி யர்கள் இருத்தல் வேண்டும். இந்நிலையின்றேல் மாணவர்களிடையே திருப்திகரமானதும் பூரணத்துவமுடையதுமான வளர்ச்சியை நாம் காண முடியாது.
ஆசிரியர்களின் முயற்சிகளைப்பற்றிய சில கருத்துக்களை இது வரை நாம் கூறிவந்தோம். வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டுவதற்கான வகையில் அமையும் பாடசாலை நூல் நிலையங்களையும் அந்நூல் நிலையங்களில் சேகரிக்கப்படும் நூல்களையும் பற்றிச் சில உண்மை களை இங்கு கூறுவது பொருத்தமாகவும், உதவியாகவும் இருக்கு மென்று கருதுகின்றேன். ஆரம்பத்தில் மாணவர் வாசிப்பதன் நோக் கம் என்னவென்பதைக் கூறினேன். அந்த விளக்கத்திலிருந்து மான வரை எவ்வாறு வாசிக்கத் தூண்டலாம். என்ற கேள்விக்கும் விடை
- 27 -

Page 22
காண்பதற்கு ஏதுவாயிருந்தது. அதே போலவே பாடசாலை நூல்
நிலையத்தில் நோக்கத்தையும் நாம் அறிந்தால் பிள்ளைகளை வாசிக் கத் தூண்டும் முயற்சிக்கான ஏதுக்களைக் காணலாம்.
ஒரு பாடசாலை நுால் நிலையத்தின் பிரதான இலக்குகளை கீழே தகு கின்றேன்.
1. வகுப்பறை வரம்புகளை நீக்கி, சுய விருப்பிற்குச் சுதந்திரமளித்து வாசிக்கத் தூண்டுதல்.
2. ஆசிரியரின் தலையீடின்றித் தாமாகவே நூல்களிலிருந்து கற்றுக்
கொள்ளும் ஆற்றலை விருத்தி செய்தல். 3. பாடவிதானத்தில் காணப்படும் பலவிதமான பாடங்களுக்கிடையே காணப்படும் செயற்கைப் பிரிவினையைத் தளர்த்தி இயல்பான தொடர்புகளை உணர்த்தல். 4. பிள்ளைகளைச் சமூகப் பொருத்தமுடையோராகச் செய்தல்.
இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ப்னிபுரியும் ஆசிரிய நூலகர் மாணவர்களை வாசிக்கத் தூண்டுவதற்கான வழி வகைகளையும் இந்நோக்கங்களிலிருந்தே எளிதில் கிரகித்துக் கொள்ள முடியும். உதாரணமாக புவியியல் பாடத்தில் ஆபிரிக்கக் கண்டத் தைப்பற்றிய பாடம் நிகழும்போது அந்த நாட்டுக்கதைகள், அந்நாட் டுப் பிரயாணக் கட்டுரைகள், விலங்கினங்கள் பற்றிய நூல்கள் முத லியவற்றை மாணவர் விரும்பிப் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை நூல கர் ஏற்படுத்தித் தரலாம். அண்மையில் நிகழ்ந்த சந்திர மண்டல யாத்திரை விஞ்ஞான நவீனங்களில் மாணவரிடையே ஏற்படுத்திய ஆர் வத்தை நாம் அறிவோம். திரைப்படங்களாக்கப்படும் கதைகளை வாசிப்பதில் ஏற்படும் உற்சாகமும் இந்த வகையினைச் சார்ந்ததே யாகும். எனவே சூழலுக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற வகையில் நாவல்களைத் தொடர்புபடுத்துவதன் மூலம் வாசிக்கும் ஆர்வத்தை பெருமளவில் வளர்க்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.
பாடசாலை நூலக நோக்கங்களோடு, நூல்களைத் தெரிவு செய் வதிலுள்ள நுட்பங்களும் வாசினைப் பழக்கத்தைத் தூண்ட முற்படு வோருக்கும் பல வழிகளில் உதவுகின்றன. பொது நூலகங்களிலுள்ள சிறு பகுதிக்காயினும்சரி பாடசாலை நூலகங்களுக்காயினும் சரி நூல் களைத்தெரிவு செய்வதில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டி யதன் அவசியத்தை முன்னரே நான் சுட்டிக்காட்டியுள்ளேன். சிறுவர் சளிடையே வாசிக்கும் பழக்கம் சிறப்புற வளர்வதற்கு இந்தக் கடமை செம்மையாக நிகழ வேண்டும். எனவே நூல்களைத் தெரிவு செய்வதில் அனுசரிக்கப்பட வேண்டிய சில முக்கிய விதிகளை இங்கு
- 28 eum

கூற விரும்புகின்றேன். இந்த விதிகள் சரிவர உணரப்படாவிட்டால் ஒரு பாடசாலை நூலகர் சிறுவர்களிடையே நூலார்வத்தைப் பெருக் குவதில் நிச்சயமாக வெற்றிகாண முடியாது.
நான் கூற விரும்பும் விதிகளுள் முதன்மையானது, நூலகத்துக்கு தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு நூலும் அதன் உபயோகம் கரு தியே ஏற்கப்பட வேண்டும் என்பதாகும் அதாவது ஒரு நூலைத் தெரிவு செய்யும்போது அந்த நூலை யார் வாசிக்கப் போகிறார்கள் என்ன காரி யத்துக்காக வாசிக்கப்போகிறார்கள். பாடசாலையில் கல்வித்திட்டத் தோடு இந்நூல் எவ்வாறு பொருந்துகின்றது. என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை நூலகர்கள் காண வேண்டும் . இது மாத்திரமன்று. சிறுவர்கள் தங்களுடைய வகுப்பறைச் சூழலைக் கடந்து பரவலான அனுபவத்தைப் பெற வேண் டியவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே அந்தத் தேவையையும் அநுச ரித்தே நூல்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும். சுருங்கக் கூறுவோமா யின் சிறுவர் நூல்கள் அவர்களுடைய உணர்ச்சி, சூழல் ஆகிய அணு பவங்களை ஒட்டியவைகளாய் அமைதல் வேண்டும்.
நூல் தெரிவின் அடுத்த விதியாவது, நாம் தெரிவு செய்யும் நூல் கள் பல் வேறு துறைகளையும் அளாவி நிற்றல் வேண்டும். பாடத் தேவைக்கான நூல்கள் என்றும் பொழுதுபோக்குக்கான நூல்கள் என்றும் பிரிக்கும் பழக்கம் எம்மிடையே பரவலாகக் காணப் படுகின்றது. இதனால் பெருமளவு தீமையேயன்றி நன்மை விளை யாதென்பதை இங்கிலாந்தில் பாடசாலை நூல் நிலையங்கள் பற் றிய அறிக்கையொன்று மிகவும் வற்புறுத்திக் கூறுகின்றது.
அடுத்த படியாக நாம் கவனிக்க வேண்டிய உண்மையென்ன வெனில் எங்கெங்கு கற்பித்தல் தொழில் உயிருள்ளதாக இருக்கின்ற தோ அங்கெல்லாம் அறிவுக்கான நூல்கள், பொழுதுபோக்கிற்கான நூல் கள் என்ற பிரிவினை அர்த்தமற்றதாகி விடுகின்றது. கற்பிக்கும் போது பெரும்பாலான செயல்முறைத்திட்டங்களை (projects) பரந்த அடிப்படையில் அமையாத நூல்நிலையங்களின் உதவியால் நாம் கையாள முடியாது. மேலும் இவ்விதமான நூல் நிலையங்கள் மாண வர்களின் ஆதரவைப் பெறத் தவறிவிடும். சிறப்பாக சிறுவயதினர் இத்தகு நூல் நிலையங்களினால் ஈர்க்கப்படமாட்டார்கள்.
இனி நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விதியைப் பற்றி ஏற்கனவே பரவலாகக் கூறியுள்ளோம். எனினும் இது பற்றிய கருத் துக்களை இங்கு மீட்டல் நன்மை பயக்கும், சிறுவர்களுக்கான நூல் களைத் தெரிவு செய்யும்போது அவர்களுடைய இயல்பான விருப்
ー 29 ー

Page 23
பங்களை அநுசரித்தல் அவசியமாகும். சிறுவர்களின் நூல் சார்பை வயதினோடு இணைத்து அவதானித்த சில ஆங்கிலேய அறிஞர்கள் பின்வரும் தகவல்களை உதவியுள்ளார்கள். இந்த விபரங்கள் நாடு கலாச்சாரம் சூழல் பொது அறிவு நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடக்கூடும் எனினும் சில அடிப்படையான உண்மைகளை சுட் டுவது ஓரளவு உதவுமென்று நம்புகின்றேன். எனவே அவற்றைக் கீழே தருகின்றேன்.
ஒரு பிள்ளை ஆரம்பத்தில் இயல்பாகவே விரும்பக் கூடியவை சித்திரங்களுடனமைந்த பாலர் கதைகளும், பாடல்களுமேயாகும். இந்த நிலையிலிருந்து அப்பிள்ளை கற்பனைக் கதைகள், புராணக் கதைகள், இயற்கை வளம், விலங்கியல் பற்றிய கதைகள் ஆகிய வற்றை விரும்பிப் படிக்கின்றான். சுமார் ஏழு அல்லது எட்டு வய துவரை இந்த ஆர்வம் பெருகி வளர்கிறது. அதே சமயம் சித்திரங்க ளுடன் கூடிய நூல்களில் அவனது ஆர்வம் தேய்கிறது. எட்டு அல் லது ஒன்பது வயதில் சிறுவனுடைய வாசிக்கும் ஆர்வம் உச்சக்கட் டத்தை அடைகின்றது. விலங்கியல் பற்றிய கதைகளிலும் இயற்கை பற்றிய கதைகளிலும் சிறுவனின் கவனம் ஈர்க்கப்பட்டு வந்தபோதி லும் இக்கட்டத்தில் யதார்த்த இலக்கியத்தில் அவனது நாட்டம் செல்கிறது, தீரமிக்க செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைப் பற்றியும், விளையாட்டுக்கள், போட்டிகள், பந்தயங்கள் பற்றிய கதைகளும் சிறுவனின் கவனத்தைப் பெறுகின்றன, வீரர்களைப் போற்றவும் முன் மாதிரியாகக் கொள்ளவும் இந்நிலையில் சிறுவன் முற்படுகின்றான். இதன் வழியாக சரித்திரத்திலும், புவியியலிலும் தொடர்புள்ள பல கதைகள் அவனுடைய விருப்புக்கு இலக்காகின்றன. பத்து வயதி லிருந்து பதினோரு வயதுவரை சிறுவர் சிறுமியரிடம் வாசிக்கும் ஆர்வம் உன்னதமாகத் தலைதூக்கி நிற்கின்றது. பலதரப்பட்ட நூல் களை வாசிக்க இவர்கள் முற்படுகின்றார்கள். பொதுவாக இவர்கள் கற்பனைக் கதைகளை விரும்புகின்றார்கள். வியப்பு அதிர்ச்சி மர்மம் ஆகிய தன்மைகள் நிரம்பிய நூல்களில் சிறுவர், சிறுமியர் இந்தப் பருவத்தில் மிகுந்த நாட்டம் கொள்கின்றார்கள். இதே கட்டத்தில் திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள் முதலியனவும் அவர்களின் வாசிப்பிற்குத் திசைகாட்டத் தலைப்படுகின்றன. பதினொன்று அல் லது பன்னிரெண்டாம் வயதில் இறுவர் சிறுமியரிடையே வாசிப்புத் திசையில் பிரிவு, அதாவது அடிப்படையிலான வித்தியாசம் ஏற்ப டுத்தும் பிரிவு, ஓரளவு தெளிவாக அவதானிக்கக் கூடியதாயிருக்கின் றது. பன்னிரெண்டு வயதிலிருந்து சிறுவரிடையேயும், சற்றுப் பிந்திச் சிறுமியரிடையேயும், வாசிக்கும் ஆர்வத்தில் சோர்வு தலையெடுக் கின்றது. இந்த நிலை தொடர்ந்து சென்று 14 முதல் 17 ஆம் வயது வரை மிகவும் குன்றிய நிலையை அடைகின்றது. இதற்குப் பல
- 30 -

காரணங்கள் கூறலாமென்றும் பொதுப்படையாக நாம் கூறக்கூடியது இந்தப்பருவத்தில் பிள்ளைகளின் ஆர்வம் பல துறைகளில் விரிவ டைந்து செல்வதேயாம். மேலும் பரீட்சைக்கான படிப்பில் பாரமும் அவர்களுடைய வாசிக்கும் ஆர்வத்துக்குத் தடையாகக்கூடும். ஆனால் 14 வயதளவில் வாசிப்பதில் திடமான ஆர்வம் காட்டும் பிள்ளை கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
இந்தப்பருவத்தை எட்டியவர்கள் பொது நூலகங்களின் பணிக்குப் பாத்திரமாகிறார்கள். இதுவரை நாம் கூறிய சிறுவர் நூாலார்வ மதிப்பீடு எல்லா நிலைக்கும் திட்டவட்டமாகப் பொருந்தக் கூடியது என்பது எமது துணிபன்று. எனினும் நூலார்வத்தைச் சிறுவரிடத்தே ஏற்படுத்துவதற்கும் இந்தக் கண்ணோட்டம் ஓரளவு உதவுமென்பதற் காகவே இதனைக் கூறினேன்.
இறுதியாக நூல்களைத் தெரிவு செய்வதில் நாம் கவனிக்க வேண் டிய முக்கியமான பண்பு நாம் தேர்ந்தெடுக்கும் நுால்கள் பிள்ளை களின் இலக்கிய இரசனையை வளப்படுத்துவனவாயிருக்க வேண்டும். ஆனால் இந்த முயற்சி மிகவும் சாதுரியமாகவும், நிர்ப்பந்தத்திற்கிட மின்றியும் மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கடமையில் ஈடுபடும். ஆசிரியர் அல்லது நூலகர் மிகுந்த பொறுமையும் பரந்த மனப் பான்மையும் உடையவராயிருத்தல் வேண்டும்.
ஒர் ஆசிரியர் தமது பிள்ளைகளுக்கு வாசிப்பில் எவ்விதமான துணையும் புரியாமல் அவர்கள் போக்கிற்கு விட்டுவிடுவாராயின் அவர் தமது கடமையில் தவறியவராவார். அதே சமயம் ஒரு பிள் ளையின் மன நிலையை அறியாது நுால்கள் என்ற காரணத்தை முன் வைத்து அப்பிள்ளையின் மீது திணிக்க முயல்வாராயின் அப்பிள்ளை யின் வாசிக்கும் ஆர்வத்தை அவர் முற்றாக நசித்து விடுவார் எனவே தான் நாம் மேலே கூறிவந்த வழிகளையும் விதிகளையும் நன்கு உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டியஅவர் மீதுதங்கியிருக்கின் றது. இதே விதிகள் ஒரு பிள்ளையிடம் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டவிழையும் நூலகர், பெற்றோர் ஆகியோருக்கும் பொருந் துவதாகும்.
இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து சிறுவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கான வழிவகைகளை ஒரளவு அறிந்தோம் இந்த முயற்சிகளில் நாம் பிரதானமாகக் கவனிக்க வேண்டியது மறை முகத் தூண்டலின் வலிமையினைத்தான். தரமான நுால்கள் நாட்டில் குறைந்த நிலையில் பரவுவதற்கான வழிவகைகளிலும் நமது கவனம் செலுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் இன்று இலங்கையி லுள்ள நிலையில் நுாலகங்களில் எண்ணிக்கையும் தரமும் வளர்ந்தால் தான் சிறுவர் இலக்கிய வளர்ச்சி ஏற்படும். சிறுவர் நுால்களை எழுத முன் வருவோர் இத்துறையில் தொடர்ந்து பணியாற்ற ஏதுவாகும். நல்ல நுால்கள் பெருகுமிடத்து வாசிக்கும் ஆர்வமும் பெருகும் என் பதில் ஐயமில்லை.
Π )
- 31 -

Page 24
கல்வித்துறையில் பொது நூலகங்கள்
கல்வியின் நோக்கம் பற்றி மக்களிடையே பலவாறான கருத்துச் கள் நிலவி வருவதை நாம் அறிவோம். இதுபற்றி நூலகங்களும் சமூகமும்’ என்ற நூலின் ஆசிரியர் ஜி. ஜெஃபர்சன் பின்வருமாறு கூறுகிறார்.
** ஒவ்வொரு சமூகத்திலும் அதனதன் விழைவுகளுக்கும் இலட்சி பங்களுக்கும் ஏற்பவே கல்வியின் நோக்கங்கள் மாறுபடுகின்றன. மேலும் பொதுவாக கல்விச் செய்முறைகளையும் ஒப்பியல் அடிப்ப டையில் பல்வேறு நாடுகளில் கல்விமுறைகளையும் ஆராய்ந்து வரும் உளவியல், பொருளியல் சமூகவியல் அறிஞர்கள் கல்விக் கொள்கை களைத் தமது ஆய்வுக்கு உட்படுத்தும்போது கல்வியின் நோக்கங்கள் பற்றிய கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்!ட ஏதுவாகின்றது. இவ்வி தமாகக் கல்வித்துறையில் நிகழும் நோக்கத்திரிபுகளை எல்லாம் அளாவி நிற்கும் இரண்டு அடிப்படையான பண்புகளை இங்கு நாம் சுட்டுதல் எமது கவனத்தைப் பெறும் விடயத்திற்கு மிகவும் பொருத் தமானதாய் இருக்கும்.
அறிவுப் பாரம்பரியம்
முதன்மையாகத் தனிபொருவர்மீது கல்வியின் தாக்கம் காணும் பண்பு அவரது ஆளுமையின் முழுமையான மலர்ச்சியாகும். அடுத் தபடியாகச் சமூகத்தின் அளவில் கல்வியின் பெறுபேறாய் அமைவது தலை முறை தலைமுறையாக ஆற்றொழுக்குப் போன்று வரும் அறிவுப் பாரம் பரியமாகும். இப்பண்பே சமூகத்தின் மேம்பாட்டுக்கு அத்தி வாரமாய் அமைவது.
கல்வியின் இவ்விரு சிறப்பியல்புகள் அதாவது தனித்துவ சமூக நிலைகள் ஒன்றோடோன்று பின்னிப் பிணைந்து நிற்பதை இங்கு நாம் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் தனியொருவரது கல்விப் பயிற்சிக்குச் சமூகப் பின்னணி இன்றியமையாத ஒன்றாகும், ஒரு சமூகத்தின் நம்பிக்கைகள் மதிப்பீடுகள் உள்ளிட்ட பாரம்பரிய அடிப்படையின் மீதுதான் தனியொருவரின் கல்விப்பயிற்சி சிறப்பாக நிகழமுடியும். இவ்விரு வகையான நிலைகளுக்குமே பொதுவானதாக,

இன்றியமையாததாக இருந்து வருவது நூலகங்களின் பணியாகும். இவ்வடிப்படை உண்மையைத் தான் பொது நூலகங்களின் கடமை களை விளக்க வந்த அமெரிக்க நூலகச் சங்கக் குழு ஒன்று பின்வரு மாறு உறுதிப்படுத்தியுள்ளது.
தற்காலப் பொது நூலகம் தனது பணியின் எல்லைக்குட்பட்டவர் களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கூட்டான வாழ்க்கைக்கும் அவசி யமான அச்சிடப்பட்ட அறிவேடுகளையும், கட்புல, செவிப்புல சாத னங்களையும் திரட்டுவதைத் தனது கடமையாகக் கொண்டுள்ளது.
இக்கூற்றில் பொது நூலகங்களின் தனித்துவ சமூகக் கடமைப் பாடுகள் தெளிவாகின்றன. அறிவுத்துறையில் நூலகங்களின் பணி ஒன்வரும் சில முக்கியமான ஏதுக்களின் மீதே நிகழ்ந்து வருகின்றது.
நூலகங்களின் பணிகள்
(1) அறிவைக் கிரகிப்பதற்கும் அதன் ஒப்புமை வேற்றுமை காண் பதற்கும் வாசிக்கும் திறன் மிகச் சிறந்த சாதனமாக உள்ளது. வாசித் தலின் வழியாகவே ஒவ்வொருவரிடத்தும் மன வளர்ச்சியும் கற்ப னைத்திறனும் ஏற்படுகின்றன.
(2) நூல்களிலும் இதர அறிவேடுகளிலும் பொதிந்துள்ள அறிவினை கைப்படுத்தி வழங்குவதன்மூலம் நூலகங்கள் சிறந்த அறிவுக்கூடங் களாகத் திகழ்கின்றன. நூலகங்களைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியின் மூலம் ஒருவர் அறிவார்வத்தையும் ஆய்வு முனைப்பையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
(3) ஒரு சமூகத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பிரதான சாத னங்களுள் நூலகமும் ஒன்றெனும் வகையில் கல்விப்பயிற்சிக்கு நூல கம் இன்றியமையாததாகினறது.
(4) துரிதமாக விரிவடைந்து வரும் அறிவின் எல்லைக்கோடுகளை ஒருவரது ஞாபக சக்தியின் ஆட்சிக்குட்படுத்துவது அசாத்தியமாத லின் கல்விப்பயிற்சி முறை பிலும் படிப்படியா ? அவசியமானவற்றை மட்டுமே தேர்ந்து தெரிந்து கிரகிக்கும் நிலை ஒங்கி வருகின்றது, எனவே அறிவுத் தேட்டத்தில் ஞாபக சக்தியைவிடக் காரண காரியத் தெளிவே முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது பாடங்களை மனனஞ்செய்யும் நிலையைக் கடந்து அறிவு பூர்வமான விளக்கத்தையே போற்றும் மனப்பான்மை வளர்ந்து வருகின்றது. இதுபற்றியே தத்துவ (25T Gof Gubg96ör L p3Fői gyalis(ez5 lib A man is equal to that which he understands, அதாவது ஒரு விடயத்தில் மனிதனுடைய ஆற் றல் அவன் கல்வி விஷயத்தைத் தெளிந்து கொண்டஅளவிற்குச் சம மாய் இருக்கும் என்று கூறியுள்ளார்.
- 33 -

Page 25
இதுவரை நாம் கூறியவற்றின் அடிப்படையில்தான் கல்வித் தேட் டத்தில் நூல்களின் சிறப்பிடத்தை நாம் சரிவர உணர்ந்து கொள்ள முடியும். இப்பின்னணியுடனேயே நாம் கல்வித்துறையில் பொது நூல கங்களின் பணியைச் சுருக்கமாக விளக்குவோம்.
கல்வித்துறையென்று நாம் இங்கு குறிப்பிடுவது பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி நிலையங்கள் அனைத்தையும் உள்ளடக்கியேயாகும். இதுதவிரச் சுபமாகவே பயின்று தமது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோரும் எமது கவனத்திற்குரியவர்களாவர்.
நூலக வசதிகளின்மை
பாடசாலைகளின் மட்டத்தில் பொது நூலகத்தின் பணி இலங்கை போன்றதோர் அபிவிருத்தி அடையும் நாட்டில் மிகவும் முக்கிய மானதொன்றாகும். நமது நாட்டில் இலவசக்கல்வியின வளர்ச்சியோடு எமது பாடசாலை நூலகங்களின் வளர்ச்சியும் இணைந்து செல்ல வில்லை என்பதை நாமறிவோம். எனவே நகர்ப்புறங்களில் உள்ள ஒரு சில பாடசாலைகளைத் தவிர நாட்டில் பரவலாக இயங்கிவரும் பெரும்பாலான பாடசாலைகளில் நூலக வசதி இல்லாமல் இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்நிலையில் உள்ளூராட்சி மன் றங்களினால் நடத்தப்பட்டுவரும் பொது நூலகங்கள் சிறுவர்க்கான பொது நூலகங்களை மாத்திர மன்றி பாடசாலைகளில் பயிலப்படும் பாடத்தேவைகளுக்கு அநுசரணையாக நூல்களையும் கூட உதவ வேண்டிய ஒரு நிலை இருந்து வருகின்றது.
நூலக வசதி பெற்றுள்ள பாடசாலைகளுக்குக்கூட பொது நூல கத்தின் பணி இன்றியமையாததென்பதை நாம் இங்கு மறந்துவிடக் கூடாது. எந்தவொரு பாடசாலையிலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நூல்களையே வைத்திருக்க முடியும். மேலும் பொது நூலகத்தினர் உதவக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், பொது நூல்கள், பல்பொருள்சார்ந்த பருவ வெளியீடுகள், விலையுயர்ந்த உசாத்துணை நூல்கள் போன்றவை சாதாரணமாகப் பாடசாலை நூலகங்களின் நிதி வரம்பிற்கு அப்பாற்பட்டனவாகவே இருக்கும். எனவே, பாட சாலை நூலகங்களுக்குப் பொது நுாலகங்கள் பல்வேறு வகைகளில் உதவக்கூடிய வாய்ப்புண்டு. இவ்விரண்டு நிறுவனங்களினதும் நெருங் கிய தொடர்பு கல்வித்துறையில் பெரும் பலனளிப்பதாயிருக்கும்.
பொது தூலகங்கள் சிறுவர்களிடையே நூலார்வத்தை வளர்ப் பதில் பாடசாலைகளுடன் சமபங்கு கொண்டிருக்கின்றன. வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளின் ஆளுமையை வளர்த்து அவர்களைச் சமூகப் பொருத்தமுடையவர்களாக்குவதனால் இப்பழக்கத்தை அவர்களி டையே பெருக்குவதற்குச் சிறு பருவம் முதலே கதை சொல்லுதல் கவிதை வாசித்தல், நுால் காட்சிகள் போன்ற பல ஊக்கிகளைப்
- 34

பொது நுால் நிலையங்கள் கையாண்டு வருகின்றன. மேலும் முன் னேற்றம் அடைந்துள்ள பல மேற்கத்திய நாடுகளில் பொது நுால கங்களே பாடசாலைக்குக் கிரமமாக நுால் தொகுதிகளை இலவச மாக வழங்கும் திட்டங்களை அனுசரித்து வருகின்றன. இது தவிர பொது நுாலகங்களின் நிருவாகத்தில் உள்ள சங்கம நூலகங்கள் (mobile Libraries) பெரும்பாலும் பாடசாலை மாணவ மாணவி யரைத்தான் தமது வாசகர்களாகப் பெற்றுப் பணிபுரிந்து வருகின்றன.
கல்வி நிலையமும் நூலகமும்
அடுத்தபடியாக உயர்தரக் கல்வி நிலையங்களுக்கும் பொதுநூால கங்களுக்கும் இடையிலான தொடர்பைக் கவனிப்போம். இந்தப் பிரிவில் பல்கலைக்கழகங்களும் மற்றும் தனிப்பட்ட உயர்நிலைக் கல்வி நிறுவனங்களும் வளர்ந்தோர்க்கான முழு நேர பகுதி நேரக்கல்வி நிலை யங்களும் அடங்கும். எமது பாடசாலைகளில் உள்ள நிலை போலன்றிப் பல்கலைக்கழகங்களில் சுமாரான அளவு நுாலக வசதியுள்ள போதிலும் அண்மைக்காலத்தில் எமது பல்கலைக்கழகங்களில் பயில்வோரின் எண் னிக்கை பெருமளவில் பெ ரு கி வி ட் டு ள் ள தால் அவற்றின் நுாலகங்கள் மாணவரின் தே ைவ களு க் கு ஈடுகொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் நாட்டம் பொது நுாலகங்கள் மீது என்றுமில்லாத அள விற்குச் செலுத்தப்பட்டு வருகின்றது. வளம்படைத்த நாடுகளிலும் கூட உயர்நிலை மாணவர்களின் புகலிடமாகப் பொது நுாலக கள் விளங்கிவரும்போது நம்மிடையேயுள்ள பொது நுாலகங்களின் பொறுப்பு நாம் கூறாமலே விளங்கும்,
பொது நுாலகங்கள் மக்களின் பல்கலைக்கழகங்கள் என்பது சாதாரண வழக்கில் உள்ள சொற்றொடராகும். நாம் மேலே நிறு வன அடிப்படையில் பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையி லானோரின் கல்வித்துறையில் பொது நுாலகங்களின் பங்கைக் குறிப் பிட்டோம். ஆனால் நிறுவன அடிப்படையில் அன்றிச் சுயமாகவோ அஞ்சல் முறையிலோ, வேறு வழிகள் மூலமோ கல்விபயில்வதில் ஈடு பட்டுள்ள எண்ணற்றவர்களுக்குப் பொது நுாலகமொன்றே உறு துணையாக விளங்கி வருகின்றது.
கல்வித்துறையில் பொது நுாலகத்தின் பங்கைப்பற்றிப் பேசும் போது அண்மையில் இலங்கையில் இத்துறையில் ஏற்பட்டு வரும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாம் இங்கெடுத்துக் கூற வேண்டிய தவசியமாகும்.
கல்வி முயற்சிக்குத் துணை
ஒரு நாட்டின் கல்வித்துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் நுால கங்கள் கல்வி முயற்சிகளோடு இணைந்து நிற்பது கண்கூடு. எனவே
- 35 -

Page 26
கல்வித் துறைக்கும் நூலகங்களுக்கும் ஆக்கபூர்வமான ஒருமைப்பாடு அத்தியாவசியமாகின்றது. இவ்வகையில் இலங்கையில் நூலகங்களின் பணியை ஒருமுகப்படுத்துவதற்கான நூலகச்சட்டம் அண்மையில் செயற்பட ஆரம்பித்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் இலங்கை நூலக சேவைச் சபை பாடசாலை நூல்களினதும் பொது நுாலகங்களினதும் நடவடிக்கைகளைப் பயனுள்ள வகையில் இணைக் கவும் அவற்றின் வளர்ச்சிமூலம் எமது நாட்டில் சுயமொழிகளில் அறி வேடுகளின் வெளியீட்டைப் பெருக்கவும் திட்டமிட்டுச் செயலாற்ற (மற்பட்டுள்ளது.
எமது நாட்டின் நுாலக வரலாற்றில் இம் முயற்சிகள் ஒரு புதிய திருப்பம் என்றே நாம் கூற வேண்டும்.
கல்வி அனைவரதும் பிறப்புரிமை என்ற அடிப்படையில் அவ்வு ரிமையை வழங்க அரசினர் இலவசக் கல்வித் திட்டத்தை செயற் படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படை உரிமையை முழுமைப்படுத் தவும் நிறுவன அடிப்படையிலான கல்விப் பயிற்சியின் எல்லையை யும் கடந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதையும் அளாவி நிற்கும் வகையில் அறிவுப் பணியாற்றவும் கூடியன எமது பொது நூலகங்கள். அவற்றின் வளர்ச்சியில்தான் நாம் எமது வாழ்வின் மலர்ச்சியைக் காண முடியும், என்பது மிகைக் கூற்றாகாது.
- 36 -

6.
பாடசாலை நூல்நிலையங்கள்
எங்கும் காதைத் துளைக்கும் இரைச்சல், எவ்விதமான சுவர் களே ஏனைய மறைப்புக்களோ இல்லாத திறந்த வகுப்பறைகள் பிள்ளைகளுடைய கூச்சலுக்கு மேலாகத் தம்முடைய குரலை உயர்த் தப் போட்டியிடும் ஆசிரியர்கள்; இப்படியான சூல்நிலையிலே எங் கேயோ ஒரு மூலையில் ஒரு சில நூல்களைத் தாங்கி நிற்கிறது ஒரு அலுமாரி. அதுவும் நன்றாகப் பூட்டப்பட்டிருக்கிறது. இதுதான் நம்மில் பெரும்பாலானோர் அறிந்த பாடசாலை நூல்நிலையம். பாவம் அந்த ஆசிரியர்தான் என்ன செய்வார்? புத்தகங்கள் காணாமற்போய் விட்டால் வகை சொல்ல வேண்டுமே. எனவே அலுமாரியை இறுகப்பூட்டிவிட்டால் பிரச்சினைக்கு இடமில்லை அவருக்கும் நிம்மதி. இது ஒரு வகை.
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பாடசாலைகளில் நம் கண் களில் பதிவது வேறு விதமான ஒரு காட்சி. ஒதுக்கமான பாதுகாப்பு நிணறந்த ஒரு தனி வகுப்பறையில் அழகான அலுமாரிகள் பல வரி சையாக அணிவகுத்து நிற்கின்றன. புத்தகங்களும் சுமாரான அளவில் காணப்படுகின்றன. அமைதியாக இருந்து வாசிப்பதற்கும் ஏதுவான மேசைகளும் நாற்காலிகளும் காணப்படுகின்றன. இதுவும் ஒரு நூல் நிலையம்தான். ஆனால் பெயரளவிலும் தோற்றத்திலும் மட்டும் அறிவின் பல வேறு துறைகள் பற்றிய நூல்கள் அந்தந்தப் பிரிவில் கிரமமாகச் சேர்த்து வைக்கப்படவில்லை. மேற்பார்வையாளராய்க் கடமையாற்றும் ஆசிரியருக்கோ, சிரேஷ்ட மாணவருக்கோ எந்தத் தரமான நூல்கள் பொருத்தமாகும் என்பது தெரியாது. அதுபோ லவே பாடவிதானத்தில் உள்ள விஷயங்களோடு நூல் நிலையத்தில் உள்ள நூல்களைத் தொடர்பு படுத்துவது எப்படி என்று தெரியாது. ஒவ்வொரு பிள்ளையின் தனிப்பட்ட ஆற்றலையோ குறைபாட்டையோ அறிந்து அதற்கேற்ப உதவியளிப்பதற்கான தகுதியோ, ஆர்வமோ அவர்களிடம் கிடையாது. பிள்ளைகளின் நிலையும் வருத்தத்திற்குரி யதாகும். எந்த நூலை எங்கு தேடிப் பிடிக்கலாம். என்பது பற் றிய விபரம் அவர்களுக்குத் தெரியாது. புத்தக விவரணியை உபயோ கிக்கும் முறையோ அவர்களுக்கு ஒரு பெரும் புதிர். வகுப்பறையில்

Page 27
எழும் கேள்விகளுக்கு எங்கே விடை காணலாம். என்பதும் அவர்க ளுக்குத் தெரியாது இப்படியாக நூல்கள் நிறைய உள்ள ஒரு நூல் நிலையம் அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு சூன்யம்தான்.
ஒர் உண்மை
நாம் மேலே கூறியவற்றிலிருந்து ஒரு முக்கியமான உண்மை பெறப்படுகிறது. பெருந்தொகையான நூல்களும் வசதியான தள பாடங்களும் கட்டடங்களும் சேர்த்து ஒரு நூல் நிலையமாகிவிட மாட்டாது. நூல் நிலையம் என்ற அமைப்பு மூன்று பெரும் அங்கங் களைக் கொண்டதாகும். 1. நூல்கள் 2. வாசகர்கள் 3. நூலகர் அதா வது நூல் நிலைய மேற்பார்வையாளர். ஒரு நூல்நிலையத்தால் அதனை உபயோகிப்போர் பயனடைய வேண்டுமாயின் அங்குள்ள நூல்களையும் வாசகர்களையும் இணைத்து வைப்பதற்கான தகை மையும் பயிற்சியும் உள்ள ஒருவர் அத்தியாவசியமாகும். எனவே நூல் கள் ஒரு புறத்திலும் வாசகர்கள் மறறொரு புறத்திலுமாக இடையில் இருந்து கடமையாற்றுபவருடைய பொறுப்பு மிகப்பெரிதாகின்றது. வாசகர்களின் தேவையும் தரமும் நூல்களின் தரமும் பரப்பும் அறிந்து கடமையாற்றும் ஒருவரின்றேல், ஒரு நூல் நிலையத்தின் இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.
ஒரு நூல் நிலையத்தின் பணி பின்வரும் வகையில் அமைகிறது. அறிவு பதிவாகியுள்ள எல்லாவிதமான ஏடுகளையும் ஒருங்குதிரட்டி அவற்றை அறிவின் பல்வேறு துறைகளையொட்டிப் பிரிவுபடுத்தி நூல்களைத் தேடி வருவோருக்கு அவர்கள் கேட்கும் சரியான நூலை மிகவும் குறுகிய காலத்திற்குள் கொடுக்க ஏதுவான நிருவாக அமைப்பை உடையதாக நூல்நிலையம் இருத்தல் வேண்டும்.
அறிவேடுகளைத் திரட்டுதல், ஒழுங்காகப் பிரிவுபடுத்தி நூற்பட் டியல் செய்தல், எளிதிலும் சீக்கிரமாகவும் வாசகர்களுக்கு நூல்களை உதவுதல் ஆகிய இந்த மூன்று காயரிங்களையும் முன்நிறுத்தி நாம் சிந்தனை செய்தால் நுாலகப்பணியின் முழுப்பரப்பினையும் ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.
இன்றைய நிலை
நமது நாட்டில் கல்வி மிகப் பரவலாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலகட்டத்தில் நாளுக்கு நாள் நாம் நூல் நிலையங்களின் இன் றியமையாத தன்மையை உணர்ந்து வருகின்றோம். கல்வித்துறையில் பெரும் மாற்றங்கள் இப்போது நிகழ்ந்து வருகின்றன. எனவே எமது பாடசாலை நூல் நிலையங்கள் மீது எமது கவனம் பெருமளவில் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- 38 -

வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் அத்திவாரமிடப்படுவது எமது பாடசாலைகளில்தான் என்பதை நாம் அறிவோம், நூல்க ளைப் படிக்கும் பழக்கமும் இதற்கு விதிவிலக்கானதன்று. அறிவுத் தேட்டம் ஒருவரின் வாழ்க்கை முழுவதிலும் நிகழ்வதாகும். எனவே அத்தகையதொரு துறைக்கான பழக்கத்தைப் பிள்ளைகள் பாடசா லைகளில்தான் பெறுகிறார்கள். எனவேதான் எமது பாடசாலை நுால் நிலையங்கள் கல்வித் துறையில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. ஒரு பாடசாலையில் நிகழும் பயிற்றல், கற்றல் ஆகிய அனைத்துக்கும் மத்திய தளமாக விளங்குவது, உயிர் நாடியாகத் திகழ்வது நூல் நிலையங்கள்தான் என்று நாம் கூறினால் அது மிகை யாகாது. இதனையறிந்தே 1961 ஆம் ஆண்டில் வெளியானதொரு தேசியக் கல்வி விசாரணைக்குழுவினரின் அறிக்கையில் பின்வரும் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.
**ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு நூல் நிலையம் நிறுவப் பட வேண்டும். என்று நாங்கள் சிபாரிசு செய்கின்றோம். கனிஷ்ட பாடசாலைகளில்தான் நூல் நிலையங்கள் கூடுதலாகத் தேவைப்படு கின்றன.
ஏனெனில் சிரேஷ்ட பாடசாலைகளின் கல்வித் தரத்திற்குப்போ துமான அளவு நூல்கள் தக்க தரமுடையனவாகவும் பெருந்தொ கையாகவும் அவசியமாகின்றன.
சிரேஷ்ட பாடசாலைகளுக்கு நூல் நிலையத்திற்கான புறம்பான கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் கனிஷ்ட பாடசா லைகளில் இரண்டொரு வகுப்பறைகளை நூல் நிலையத்திற்காக ஒதுக்கினால் போதுமாகும் என்பது எமது அபிப்பிராயமாகும்.
வித்தியாசம்
பாடசாலை நூல்நிலையங்கள் ஏனைய நூல் நிலையங்களிலி ருந்து பலவகைகளில் வித்தியாசப்பட்டனாவாயுள்ளன. முதலாவதாக சிறுவர்க்கான ஒரு பொது நூல்நிலையத்தை எடுத்துக் கொள்வோம் அந்த நுால் நிலையம் நுால்களை வாசிப்பதில் ஆர்வமும் திறமையும் உள்ள சிறுவர் சிறுமியருக்குப் பணியாற்றுவதையே பிரதானமாகக் கொண்டிருக்கும். ஆனால் பாடசாலை நூல் நிலையமோ நாம் குறிப் பிட்ட ஆர்வமும் திறமையும் உடைய பிள்ளைகளுக்கு மாத்திரமன்றி வாசிப்பதில் ஆற்றல்குறைவான பின்தங்கிய பிள்ளைகளுக்கே உதவக் கூடியதாக இருக்க வேண்டும். இக்காரணத்தைக் கொண்டே. பாட சாலை நூல் நிலையங்களில் புத்தகங்களைத் தவிர கட்புல செவிப் புலக் கல்விக்கான சாதனங்களும் பெருமளவில் வைக்கப்பட வேண் டியது அவகியமாகின்றது. மேலும் பிள்ளைகள் வாசிப்பதில் ஆர்வம்
-- 39 -س

Page 28
கொள்வதற்கான பல உபாயங்களை ஆசிரியர்களும் நுாலக அதிகா ரிகளும் கையாள வேண்டியதாயிருக்கின்றது. பாடசாலை நூால் நிலையத்தின் மற்றுமொரு சிறப்புத் தன்மையையும் இங்கு நாம் கூற வேண்டும். பாடசாலையில் உள்ள அனைவரையும் அங்கு நிகழும் எல்லாக் காரியங்களோடும் தொடர்பு படுத்திய பாடசாலைச் சீவி யத்தின் முழுமைத்தன்மையையும் நற்பயனையும் ஈட்டிக் கொடுக்கக் கூடியது பாடசாலை நூல் நிலையம். எனவே வகுப்பறையில் பயி லும் சரித்திரம், பூகோள சரித்திரம், கணிதம், இலக்கியம் என்பன எல்லாம் தனித்தனியான தொடர்பற்ற விஷயங்களல்ல என்பதையும் அவை எவ்வாறு ஒன்றோடொன்று பிணைந்து வாழ்க்கையோடு இணைந்துள்ளன என்பதையும் பாடசாலை நூல் நிலையம் தெளிவு படுத்த வேண்டும். அறிவின் முழுமைத் தன்மையைப்பிள்ளைகள் உணர்ந்து பயனடையச் செய்வதே நூல் நிலையத்தின் தலையாய சேவையாக உள்ளது.
பாடசாலைக்கும் வெளி உலகிற்கும் இடையே மிகவும் அவ ஒயமான தொடர்பை நூல் நிலையம் ஏற்படுத்தி வைக்கிறது. வெளி யுலகம் என்று நாம் இங்கு குறிப்பிட்டதில் அடங்கியுள்ள ஒரு முக்கிய அம்சம் நூல் நிலையம். அதாவது பொது நூல நிலையங்களுக்கான வாசகர்களை உற்பத்தி செய்வது பாடசாலை நூல் நிலையங்கள் தான். ஒரு நூல் நிலையத்தை எவ்வாறு உபயோகிக்க வேண் டும் என்பதை அறியாத வாசகர்களினால் ஏற்படும் தொல்லை களையும் நஷ்டங்களையும் பொது நூல் நிலைய அதிகாரிகள்தான் அறிவார்கள். ஒரு பொது நூல் நிலையத்தில் புத்தகங்களுக்கு ஏற் படும் சேதங்களும், திருட்டுக்களும் பாடசாலை நூல் நிலையங்கள் போதிய அளவில், தக்க வகையில் நாட்டில் இயங்கவில்லை என்ப தையே சுட்டிக்காட்டும், சான்று பகரும். எனவே பொது நுால் நிலைய வாசகர்களின் பயிற்சிக்காலம் பாடசாலை நூல் நிலையம் தான் என்றும் கூறலாம்.
இறுதியாகப் பாடசாலை நுால்நிலையங்கள் திட்டமான கல்வி நோக்கோடு அமைந்தவை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்
ஆசிரியர்களின் பங்கு
ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலை நுால் நிலையங்களின் நோக்கங்கள் பற்றித் தெளிவான அறிவுடையவர்களாயிருக்க வேண் டும். அப்போதுதான் பிள்ளைகளைத் தக்க வழியில் செலுத்தவும் அவர் களிடையே நூல்கள்மீது ஆர்வமும், சுய முயற்சியாக நூல்களின் உதவிகொண்டு விஷயங்களை அறிவதில் ஊக்கமும் உண்டாகும்படி செய்யவும் முடியும். ஆர். ஜி. ரால்ப் என்பவர் பாடசாலை நூல் நிலை யங்களின் நோக்கங்களை நான்காக விவரித்துள்ளார்.
- 40 -

1. பிள்ளைகளிடத்தே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கு வித்தல்
2. ஆசிரியரின் உதவியின்றி சுயமாகவே நூல்களிலிருந்து விஷ யங்களைக் கற்றுக் கொள்ளும் ஆற்றலை அபிவிருத்தி செய்தல்,
3. பாடவிதானம் வெவ்வேறு பாடவிஷயங்களுக்கிடையே ஏற் படுத்தும் செயற்கைப் பிரிவினையைத் தளர்த்தி அறிவை அதன் முழுமைத் தன்மையோடு பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துதல்,
4. பிள்ளைகளைச் சமூகப் பொருத்தமுறச் செய்தல். அதாவது பாடசாலைச் சூழலோடும் அதற்கப்பால் நகரத்தோடும், நாட்டோ டும், உலகத்தோடும் அவர்களை ஒன்றுபடுத்துதல்.
மேலே கூறிய நோக்கங்கள் யாவும் இதுவரை பாடசாலை நூல்நிலையங்கள் பற்றி நாம் பொதுவாகக் கூறிவந்த கருத்துக்கள் அனைத்தையும் விரவி நிற்றலைக் காணலாம்.
எழுத்துலகம்
இறுதியாக இன்று கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரது கவனத்தையும் பெற்றுவரும் ஒரு விஷயத்தைக் கூறி அமைவோம். இன்று எழுத்துலகம் மின் வேகத்தில் முன்னேறிக் கொண்டு செல்கிறது. நாளுக்குநாள் எண்ணற்ற நுால்களும் புத்தகச் சந்தையில் வந்து குவிந்த வண்ணமாக இருக்கின்றன. இந்த நிலையில் வர்த்தக நோக்கமொன் றினையே முன்வைத்துப் பெருந்தொகையான நூல்களையும், சஞ்சி கைகளையும், பலர் வெளியிட்டு வருகின்றார்கள். சிறுவர்கள் இவ் வகையான நூல்களையும் சஞ்சிகைகளையும்தான் அதிகம் விரும்புகி றார்கள் என்ற ஒரு தவறான எண்ணமும். பலரிடம் இருந்து வருகி றது. உண்மை இது அன்று. பாடசாலைகளில் ஆசிரியர்கள் தரமான நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கிரமமாக நூல் நிலையங்களின் மூலம் ஏற்படுத்தி விடுவார்களாயின் பிள்ளைகள் தீமைதரும் நூல் களை நாடிச் செல்லமாட்டார்கள்.
பாடசாலை நூல் நிலையத்திற்கான நூல்களைத் தெரிவுசெய் யும்போது நாம் பின்வரும் விஷயங்களை மனதிற் கொள்ளவேண்டும். லயன்ஸ் மெக்கொல்வின் என்ற நூலகக் கலை நிபுணர் குறிப்பிட் டுள்ள நூல் தெரிவிற்கான ஆலோசனைகள் பின்வருமாறு.
'பள்ளிச் சிறுவன் முதற்கண் தனது பாடசாலை, வீடு, கிரா மம் ஆகிய சூழலையே அறிகிறான். எனவே அவனுக்குத் தரப்படும் நூல்களும் இந்த அடிப்படையிலேயே அமைய வேண்டும். பிள்ளை களின் வளர்ச்சி படிப்படியாக நிகழ்வதொன்றாகும். எனவே நூல்
- 41 -

Page 29
கள் அவர்களுடைய வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு பிள்ளை மற்றொரு பிள்ளையிலிருந்து மாறுபட்டதாயிருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவை ஒரே வகையில் அமையமாட்டா. எனவே நூல்களும் அந்த வித்தியாசங்களை அனுசரித்தே தெரிவு செய்யப்படல் வேண்டும்.
இதுவரை பாடசாலை நூல் நிலையத்தின் சிறப்புத் தன்மை நோக்கங்கள் என்ற வகையில் கல்வித் துறையில் இன்றியமையாத ஒர் அங்கமாகிய நூல்நிலையத்தைப்பற்றிக் கூறினோம். இன்று நாட் டில் பெருகி வரும் மாணவர் சமூகம் நூல் நிலையத்தைப் பொறுத்த அளவில் எம்மீது பெரும் கடமை ஒன்றினைச் சுமத்துகின்றது. அறி வொளி பெற்ற ஒரு சமுதாயத்தைக் காணவேண்டிய நாம் பாட ாலை நூல்நிலையங்கள் சிறப்புற இயங்க எம்மாலான உதவிகளை அளிக்க வேண்டும்.
is a
- 42 -
 

7.
நாட்டின் அபிவிருத்தியில் நூலகங்கள்
எமது நாட்டின் நலன் கருதும் அனைவரது சிந்தனைகளும் எமது பொருளாதார அபிவிருத்தியின் மீதே தற்பொழுது செலுத்தப்பட்டு வருகின்றன. உணவு உற்பத்தி ஆலைத் தொழில் அபிவிருத்தி, கால் நடைகளின் பெருக்கம், அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் பாரம் பரியப் பொருட்களைப் பெருக்குவதோடு, புதுத்துறைகள் கண்டு அவற் றையும் அபிவிருத்தி செய்வது போன்ற காரியங்களில் அரசாங்க நிறுவ னங்களும் தனியாரும் தீவிரமாக ஈடுபட்டு வருவது கண்கூடு.
ஒரு நாட்டின் அபிவிருத்தியைப் பற்றி நாம் குறிப்பிடும்போது பொதுவாகப் பொருளாதாரத் துறையே எமது கவனத்தில் மேலோங்கி நிற்பது இயல்பெனினும் மக்களின் கல்வி அறிவின் வளர்ச்சியும் அதன் வழி நிகழும் ஆளுமை அபிவிருத்தியும் எமது சகல விதமான முன் னேற்றங்களுக்கும் அடித்தளமாக அமைவதை யாவரும் ஒப்புக் கொள் வர். அறிவு வளர்ச்சியும் ஏனைய துறைகளிலான வளர்ச்சியும் ஒன் றோடொன்று இணைந்து செல்லும் தன்மையனவாம்.
நவீன உலகில் மனித வாழ்க்கை துரிதமான மாற்றங்களுக்குட் பட்டு வருவதை நாமறிவோம். விஞ்ஞான முன்னேற்றம் பெருகி யுள்ள மேற்கத்திய நாடுகளில் அறிவின் வரம்புக் கோடுகளின் விரி வினோடு மனித வாழ்க்கை முறை, உறவு முறை, சமூக அமைப் புக்கள், மதிப்பீடுகள் அனைத்திலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. பொருளாதாரத் துறையிலும்கூட கொள்கை க்ளிலும் அமைப்புக்களிலும் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டு a! []; கின்றது.
மக்களின் அறிவு வளர்ச்சி
இந்நிலையில் இலங்கைபோன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வளர்ச்சியும் இந்நாடுகளில் வதியும் மக்களின் அறிவு வளர்ச்சியை ஒட்டியே நிகழ முடியும் என்ற உண்மை பரவலாக உணரப்பட்டு வருகின்றது. இலங்கையில் நூலகங்களின் முக்கியத்து வத்தை விளக்க வந்த யூனெஸ்கோ நூலகப் பிரிவின் முன்னைநாள் இ க்குனர் சி. வி. பென்னா அவர்களின் பின்வரும் கூற்று கவனிக் கீத்தக்கதாகும்.

Page 30
தேசிய, பல்கலைக்கழக நூலகங்கள் ஒரு நாட்டின் புலமைக்கு அளவுகோலாயின் பொது நூலகங்கள் அதன் பொதுவான பண்பாட் டிற்கு அளவு கோலாகும். புலமையும் பண்பாடும் தேசிய வளத்தின் பெறுமதிவாய்ந்த கூற்றுக்களாகும். இக்காரணத்தையொட்டியே சமூக பொருளாதார அபிவிருத்தியை ஊக்கும் ஒவ்வோர் ஆக்கத் திட்டத் திலும், கல்வித் திட்டத்திலும், ஒருவரின் கல்வியும் பயிற்சியும் அத்தியாவசியமானவையெனக் கொள்ளப்படுகின்றது. அறிவாற்றலும் பண்பாடும் வாய்ந்த மக்களை உருவாக்குவதற்கு அவசியமானவற்றுள் பயன்மிக்க கல்வித்திட்டமும் ஒன்றாகும். அத்தகைய திட்டத்தின் இயக்கத்திற்கும் கிரமமான வாகினைப்பழக்கம் அவசியமாகும். அவ் வாறு வாசிப்பதற்கு நூல்கள் இன்றியமையாதனவென்பது நாம் கூறாமலே விளங்கும். சகல மக்களும் வாசித்துப் பயன்பெறுவதாயின் நூலகங்கள் அத்தியாவசியமாகும். நுாலகங்களின்றித் தகுதிவாய்ந்த ஆரம்பப்பாடசாலைகளோ உயர் நிலைப் பாடசாலைகளோ பல்க லைக்கழகங்களோ இருக்கமுடியாது. மேலும் வளர்ந்தோருக்கு அறிவூட்டக்கூடிய வாய்ப்பும் கிட்டமாட்டாது.
தேசிய கல்வித் திட்டத்தோடு இணைந்து அதன் வழி, சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களோடு ஒருமித்துத் திறமையாக இயங்கும் ஒரு நூலக அமைப்பு கல்விக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் செலவிடப்படும் நிதிகள் தக்க பயனை அளிக்கும் என்பதற்கோர் உத்தரவாதமாகும். எனவே நூலகங்களுக்காகச் செலவிடப்படும் நிதி கல்விக்காகச் செலவிடப்படும் நிதியைப்போன்று ஒரு மூலதனமென்று கருதப்பட வேண்டுமேயன்றி நுகர்வுப் பொருள்களின் மீது செலவிடப் படும் நிதியாகக் கருதப்படக்கூடாது.
நூலக சேவைப் பிரச்சினை
பெரும்பாலான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நூலக வளர்ச்சியுடன் தொடர்பான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றுள் நாம் பிரதானமாகக் கருதக்கூடியவை,
(அ) தொழிற்றிறன்வாய்ந்த ஆட்பலப்பற்றாக் குறை,
(ஆ) மூலதனப் பற்றாக் குறை
(இ) உள்நாட்டு நுால் வெளியீட்டுப் பற்றாக்குறை
(ஈ) உடனடியான பிரச்சினைகளில் சிக்குண்டு, தூரதிருஷ்டியான
சிந்தனைகளில் போதிய கவனம் செலுத்தாக்குறை. (உ) தகவல்களைப் பெறக்கூடிய சாதனங்களின் குறைபாடு.
இத்தகைய பிரச்சினைகள் அபிவிருத்தியை ஆசித்து நிற்கும் இலங்கையின் நூலகத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை அறிவோம். ஆனால் இதையொட்டி எமது நாட்டவருக்கு அறிவு
- 44 -

வளர்ச்சியில் அக்கறை இல்லையென நாம் கொள்ள முடியாது. இலங் கையில் 1945 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டுவரும் இலவசக் கல் வித் திட்டம் எம்மவரி ையே நுாற்பசியைப் பெருமளவில் தூண் டிவிட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது, இன்று இலங்கையின்சின்னஞ் சிறு கிராமசபை முதல் மாநகரசபை வரை நூலகங்களை நிறுவு வதில் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு ஆர்வங்காட்டி வருகின்றன,
தாட்டின் அபிவிருத்தியை முன்வைத்து எமது நூலக சேவை கனிள விரிவுபடுத்த வேண்டுமாயின் நாம் எம்மிடையேயுள்ள வளங் களுக்கேற்ற முயற்சிகளில் ஈடுபடுதலே உசிதமானதாகும். இவ்வகை யில் மேற்கு ஆஸ்திரேலியாவில் நுாலக சேவைகளை முன்னேற்று வதற்காக அமைக்கப்பட்ட நூலக சபையின் பிரதம நெறியாளர் பிரான்சிஸ் ஏ ஷார் அவர்களின் அனுபவ வழிப்பிறந்த பின்வரும் கூற்று எமது மனதிற் கொள்ளத்தக்கதாகும்.
நூலகர்கள் பற்றாக்குறை
"மேற்கு ஆஸ்திரேலியாவில் நூலகங்கள் வழங்கும் தகவல் சேவைகளுக்கான தேவை, அத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற் கற்ற வசதிகள் உள்ளவிடத்துப் பிரமிக்கத்தக்க வகையில் பெருகி 4ள்ளது. ஆனால் நாட்டின் நிலையை உத்தேசிக்குமிடத்து நூலக சேவை வழங்குவதில் மிகுந்த சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண் டியது தெளிவாகின்றது. நூலகங்களுக்குக் கிட்டும் நிதி நிலையும் பயிற் றப்பட்ட நுாலகர்களின் பற்றாக்குறையும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். இதனையொட்டி நுாலக சேவை பற்றிய நூலகவியல் சார்ந்த விதிகளையும் நாம் புனர் மதிப்பீடு செய்ய வேண்டியவர்களாயுள்ளோம். எமது நூலக சேவைகள் நாட்டின் பொழுதுபோக்குக்காகவும் பொதுவான கலாச்சாரத் தேவைகளுக்கா கவும் செயற்படுவதைவிடக் கூடுதலாக பொருளாதார, தொழில்நுட்ப கல்வித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இயங்கினால்தான் மக்களின் ஒப்புதலையும் ஆதரவையும் பெறக்கூடியதாயிருக்கும். இந்த உண்மையை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நூலக சேவைகள் பற்றி ஆலேசனை கூறவரும் முன்னேற்றமடைந்த நாடுகளைச் சேர்ந்த நூலகவியல் நிபுணர்கள் சில வேளைகளில் மறந்துவிடுகிறார்கள். உலக நாடுகளிடையே அறிவைப்பரப்பும் நவீன சாதனங்களும் துரிதப் போக்கு வரத்து வசதிகளும் முன் எப்போதுமில்லாத அளவிற்கு ஒருமைப்பாட் டை ஏற்படுத்தியுள்ளன. அறிவுத்துறையில் ஒருவரை யொருவர் பரஸ் பரம் நம்பி வாழ வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது,இந்நிலையில் உலக நாடுகளிடையே பரிமாறப்பட்டுவரும் அறிவுத்தொகையினைத் தாங்கிச் செல்லும் கருவிகளுள் நூல்கள் முன்னிலையில் நிற்கின்றன.
நீர்வளத்தை அபிவிருத்தி செய்வதில் நிகரற்ற சாதனையைத் தனதா 5 கிக்கொள்கிறது ஒரு நாடு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் வெற்றிகாண்கிறது மற்றெரு நாடு. மருத்துவத்துறையில் மாபெரும் முன்
- 45 -

Page 31
னேற்றம் அடைகிறது ஒருநாடு. இப்படியாக மனித வாழ்க்கையின் சிறப்பிற்கு மகத்தான சாதனைகளைப் புரியும் நாடுகளிலிருந்து சகோ தர நாடுகள் நுால்களின் மூலம் பெருகிவரும் புதுமைகளை எல்லாம் அறியக்கூடியதாக உள்ளது. அத்தகைய அறிவின் மூலமே அவைகளும் தத்தம் அபிவிருத்திக்கான முயற்சிகளில் ஈடுபட ஏதுவாகின்றது. எமது நாட்டில் முன்னேற்றம் கருதி உழைத்துவரும் ஆசிரியர்கள், விஞ்ஞா னிகள், நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் , பொறியியலாளர்கள், திட் டத்துறை நிபுணர்கள் போன்ற ஆராய்ச்சியாளர்கள், பல்துறை சார்ந்தவர்களுக்கும் இயக்க சக்தியை அளிக்கவல்லது நூலகமென்றால் அது மிகையாகாது.
தேச விருத்தியும் நூலகமும்
விஞ்ஞான வளர்ச்சியோடிணைந்த இன்றைய தொழிற்றுறைகள் யாவும் மென்மேலும் கூடிய அளவு அறிவு படைத்தோரையே வேண்டி நிற்கின்றன. எந்தவொரு துறையிலும் சிறப்புப்பயிற்சி அவ சியமாகி வருகின்றன. ஒருசலவைத் தொழிலாளி பல மணிநேரம் செலவிட்டுச் செய்யும் வேலையோ அல்லது கோடரி தாங்கிக் காடு வெட்டும் ஒரு தொழிலாளி செய்யும் கணக்கற்ற மணித்தியால வேலையோ இன்று கணப்பொழுதில் இயந்திரங்களின் உதவி கொண்டு செய்து முடிக்கக் கூடியதாயுவளது.
எமது கழனிகளில் பாரம்பரிய உழவுமுறைகள், இயந்திரங்களுக்கு வழிவிட்டு மறைந்துவருவது இன்றெமது நாட்டின் அன்றாடக் காட்சி யாய் உள்ளது.
இந்த நிலையில் எமது இளஞ் சந்ததியினர் புதியதோர் உலகை நோக்கிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றனர். அத்தகைய உல கத்திற்கு ஏற்றதோர் இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எமது அறிவுக் களஞ்சியங்களாகிய நுாலகங்கள் பெருகுவதோடு அவற்றின் உள்ளடக்கமும் சேவையின் தன்மையும் காலத்திற்கேற்ப மாற வேண்டும், பொருளாதார அடிப்படையில் வளங்காணுவதோடு மனிதப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் நுாலகங்கள் அத்தியாவசியம் என் பதை மறந்துவிட முடியாது. எனவே மக்களின் பூரண வாழ்விற்கு இன்றியமையாத துறைகளையெல்லாம் அளாவி நிற்கும் அறிவுச் சாதனமாகும் நூலகங்கள் எமது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்க ளில் அவற்றிக்குரிய இடத்தைப் பெறச் செய்வது எம் அனைவரதும் கடமையாகும்.
இவ்வகையில் இலங்கைத் தேசிய நுாலக சேவைகள் சபையின் பணியினைச் சுட்டுவதற்கு அச்சபையின் தலைவரது விளக்கம் போது மாயிருக்கும் என்று நம்புகிறேன்.
- 46 -

"எமது நாட்டில் கல்வி நிலையங்களிலும் அரசாங்க திணைக்களங் களிலும் கூட்டுத்தாபனங்களிலும் உள்ளூராட்சி நிறுவனங்களிலும் ஏதாவதொரு வகையான நூலகங்கள் இருந்தே வந்துள்ளன. இவற் றைத் தனித்தனியாகக் கருதுமிடத்து ஒரு சில நூலகங்களைத் தவிர ஏனைய நூலகங்கள் எல்லாம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்து வந்துள்ளன. இவை நாட்டில் பெருகி வரும் கல்வியறிவு படைத்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியனவாக அமையவில்லை. சிறப்பாக விஞ்ஞான அறிவு பெற்றவர்களின் தேவைக்கு ஏற்றவையாக இந்த நூல்கள் வளரவில்லை, எனவே தற்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த நூலகங்களில் இலக் கிய வளத்தைப் பெருக்கி, கூட்டு முயற்சியினாலும் நூலகத் தொழிற் துறையிலாற்றுப் படுத்தலினாலும் வளர்ந்து வரும் வாசகர் வட்டத் துக்கு உதவி அளிப்பதே இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை யின் பணியாகும்.
கண்டி முன்னோடித் திட்டம்
இலங்கைத் தேசிய நூலக சபையினால் 1972 ஆம் ஆண்டில்
யுனெஸ்கோ நிறுவனத்தின ஆதரவோடு மேற் கொள்ளப்பட்ட கண் டிப் பிரதேச நூலக அபிவிருத்திக்கான முன்னோடித்திட்டம் இலங் கையில் நூலக வளர்ச்சிக்கான ஆக்க வேலைகளில் ஈடுபட்டுள்ளோ ருக்குச் சிறந்ததொரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இத்திட்டத் தின் கீழ் கிராமப்புரங்களில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பாட சாலை நூலகங்களும், பொது நூலகங்களும் அபிவிருத்தி செய்யப் பட்டன. இத்திட்டம் பற்றி அண்மையில் நூலக சபைக்கு ஆலோ சனை கூறுவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த நுாகை நிபு ணர் கே. சி. உறரிசன் அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்து gp6s2 6MTf|Tf|Tf5 6MT.
**கண்டி பிரதேச முன்னோடித் திட்டத்திற்குட்பட்ட 22 நூல கங்களைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதிலிருந்து எனது தீர்க்கமான முடிவு தேசிய நூலக சபை நுாலக அபிவிருத் தியில் நேரான திசையில் சென்றுகொண்டு இருக்கிறது. இம்முன் னோடித் திட்டம் ஏனைய பிரதேசங்களின் நூலக அபிவிருத்தி பற் றிய ஆர்வத்தைப் பெருமளவில் தூண்டியுள்ளது. தனித்தியங்கும் சிறு சிறு நூலகங்களைப் பெருக்குவதைவிட நூல்வளம் மிக்க பெரிய நூலகங்களைப் பிரதேச அடிப்படையில் ஏற்படுத்துவதே நலமாகும். அவ்விதமான மத்திய நூலகங்களை வளம்படுத்துவதனால் கூட்டுறவு முறையிலான தொழில் நுட்ப உதவிகளினாலும் நூல் பரிமாற்றத் தினாலும் மிக்க பயனுள்ள வகையில் நுாலக சேவையை விரிவுபடுத்த (Մ.ւգսյւb.
திரு உறரிசன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்திற்கேற்ப மாவட்ட ரீதியிலான மத்திய நூலகங்களை வளப்படுத்துவது சபையின் நூலக அபிவிருத்தித் திட்டத்தில் தற்போது முக்கிய இடத்தைப் பெற்று
- 47 -

Page 32
வருகிறது. அத்துடன் இச்சபை நூலக அபிவிருத்திக்கு அடிப்படைத் நூலகப் பயிற்சி பெற்ற நூலகர்களைத் தோற்றுவிப்பதற்கான பயிற் சித் திட்டங்களில் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றது.
யுனெஸ்கோவின் திட்டம்
1972இல் அனுசரிக்கப்பட்ட சர்வதேசப் புத்தக ஆண்டின்போது நூலக சேவைகளை வளம்படுத்துவதற்காக யுனெஸ்கோ நிறுவனம் வகுத்துள்ள செயற்திட்டம் சிறப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் உடனடியான கவனத்தைப் பெற வேண்டியது அவசிய மாகும். அத்திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
தேசிய திட்டங்களில் ஓர் அங்கமாக நூலபிவிருத்தியோடு நூலக வளர்ச்சித் திட்டத்தை இணைத்தல்
0 பொது நூலகங்களில் தகவல்களையும் கருத்துக்களையும் தாங் கிவரும் பல்வேறு உருவிலான அறிவுச் சாதனங்களை உபயோகத் திற்காகச் சேகரித்தல்
0 நூலகர்களைத் தொழில் நுட்பங்களில் பயிற்றுவிப்பதோடு சமூகவியல், உளவியல் ஆகிய துறைகளிலும் பயிற்றுவித்தல். சிறப் பாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் புதிய நூலகங்களை நிறு வுவதோடு நூலகர்களின் பயிற்சியும் இணைந்து செல்ல வேண்டும்.
0 பாடசாலை நூலகங்களைக் கலாசார நிலையங்களாக இயக் குதல்
0 சமூகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் நூலகத்தில் பிரதி நிதித்துவம் வழங்குதல்.
0 நூல் வெளியீட்டாளருக்கு வாசகர்களின் தேவைகள் பற்றியும் இரசனைபற்றியும் தகவல் வழங்குதல்.
0 தேசிய அடிப்படையில் நூல் விவரணப் பட்டியல்களை ஒரு முகப்படுத்துதல்.
இதுபோன்ற முயற்சிகள் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இன் றியமையாத நூலக சேவைகளை வளம்படுத்த வழிவகுக்கும். நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட உள்நாட்டு நூல் வெளியீடுகளின் பற்றாக் குறை நீங்குவதற்கான மார்க்கமும் எமது நூலகங்களின் பெருக்கத் திலேயே தங்கியுள்ளதென்பதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும் புகிறோம். இதிலிருந்து எமது தேசிய நூல் அபிவிருத்திச்சபையின் பணியும் நூலக வளர்ச்சியோடு பிணைந்து நிற்பது தெளிவாகின்றது. எனவே இலங்கையின் சுபீட்சத்தை விழையும் நாம் அனை வரும் எமது நூலகங்களில் கிரமமான வளர்ச்சிக்கு உதவ வேண் டியது அத்தியாவசியமாகும்.
- 48 -

இலங்கைத் தேசிய நூலகம்
பொதுவாகக் கூறுமிடத்து ஒரு நாட்டின் தேசிய நூலகமென்பது அந்நாட்டின் அனைத்து அறிவுப்பதிவேடுகளையும் ஒருங்கு திரட்டி, அந்நாட்டு மக்களுக்கும், அவர்தம் சந்ததியினருக்கும் பயன்படும்வகை யில் பாதுகாக்கும் ஒரு நிறுவனமாகும்.
*"ஒரு தேசிய நூலகத்தின் முக்கியத்துவம் என்னவெனில், அந் நூலகம் எவ்வித சந்தேகத்துக்குமிடமின்றி நாட்டில் உள்ள ஏனை நூலகங்களுக்கெல்லாம் தலையாய நூலகமாகத் திகழ்வதுதான் இந்த உயர் நிலைக்கான காரணம். அந்த நூலகத்தின் அறிவேடுகளின் பரப்பும், பன்முக உள்ளடக்கமுமேயாகும். மேலும் அவ்வறிவேடுகள் வெவ்வேறு வகைப்பட்டனவாயிருத்தலோடு நூலகத்தின் பலதரப் பட்ட விசேஷப் பகுதிகளிலும் காணப்படும்"
தேசிய நூலகங்ளை அமைத்து நூலக இயக்கத்தை முன்னேற் றுவது நவீன அரசுகளின் இன்றியமையாத கடமையாகும். இதற் கான செலவினம் மத்திய அரசின் பொது நிதியத்திலிருந்து பெறப்ப டுவதாயிருக்கும். ஒரு நாட்டின் நூலகத்துறைக்குச் செலவிடப்படும் நிதியம் அந்தநாட்டின் சமூக, கலாசார, பொருளாதார சுபீட்சத் திற்கான மூலதனமாகக் கருதப்படவேண்டியதாகும். மற்றும் நூல கப்பராமரிப்புக் கடப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பெரும்பா லான அரசுகள் நூலகச் சட்டங்களை இயற்றிக் கொண்டுள்ளன.
பெரும்பாலான வளர்முக நாடுகள் சுதந்திரமடைந்த பின் தமது பின் தங்கிய நிலையிலிருந்து விடுபட்டுச் சமூக, கலாசார பொருளாதார முன்னேற்றம்காண முற்பட்டுள்ளன, இவ்வகையிலான முயற்சிகளும் நூலக ஆவண சேவைகளின் முக்கியத்துவம் நாம் கூறாமலேயே விளங்கும். எனினும் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்களை உருவாக்கி அவற்றைப் பயன்மிக்க வகையில் நிறைவேற்றுவதற்கு நூலக சேவையின் இன்றியமையாத் தன்மை இன்னமும் போதுமான அளவு வளர்முக நாடுகளில் உணரயப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவேதான் துரிதமான அபிவிருத்தியில்

Page 33
நாட்டங் கொண்டுள்ள எமது நாட்டின் அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சிக்கான சமாதான நூலக சேவைகளில் கூடுதலான கவனஞ் செலுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது. இந்த முயற் சியில்தான் எமது தேசிய நூலகம் தலைமை தாங்கி வழிகாட்டக் கூடியதாயிருக்கும்,
இலங்கையில் நூலக சேவைகளின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் ஏதுவான ஒர் அடித்தளம் ஏற்கெனவே இருந்து வருவதை இங்கு நாம் குறிப்பிட வேண்டும். பெருமைப்படத் தக்கதோர் அறிவுப் பாரம் பரியம் இந்நாட்டிற்குண்டு. எமது பெளத்த மடாலயங்களிலும் கோயில்களிலும், மத்ரஸாக்களிலும் அறிவேடுகள் மிகுந்த கவனத் தோடு பாதுகாக்கப்பட்டும், பயிலப்பட்டும் வந்துள்ளன. இருந்த போதிலும் கடந்த நூற்றாண்டில்தான் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் நவீன முறையிலான நூலக சேவையின் வளர்ச்சி அரும்பலாயிற்று.
இந்நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப்பிரிவில் மேல் நாட்டு முறையிலான கல்வித்திட்டமும் பொது நிருவாக அமைப்பும் நடைமுறையிலிருந்து வந்ததன் காரணமாகவும் அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வியின் பெறுபேறாகவும் மக்க ளிடையே அறிவார்வம் பெருகியுள்ளதோடு நூலக ஆவண வளங் களை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான முனைப்பும் ஏற்பட்டுள்ளது.
தேசிய நூலக சேவையென்பது நவீன காலத்தில் உருவாகிய தொன்றென்பது அத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அருண்டேல் எஸ்டெயில் என்பாருடைய கூற்றாகும். அவர் 1934ஆம் ஆண்டில் தேசிய நூலகம்பற்றிக் குறிப்பிடும்போது அது ஒரு நவீன யுகத்துச் சாதனமாகுமென்று கூறியுள்ளார். தேசிய நூலகம் பற்றிய கொள்கை கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவும், அதனைச் சரி யாகக் கணிப்பதாயின் அதற்கு மேலாகவும் விரிவடைந்து வருவதொன் றாகும். இக்கொள்கை காலப்போக்கில் அறிவேடுகளின் பெருக்கத் தையொட்டியும் தன்மையினையொட்டியும் மாற்றமடைவதற்கு இட (тройя (6).
தேசிய நூலகங்கள் பல வகைப்பட்ட அடிப்படைகளில் தோன்றி யுள்ளன. ஒரு சில தேசிய நூலகங்கள் தற்போது அவை இயங்கி வரும் அடிப்படையிலேயே தோற்றின. மற்றும் சில தனிப்பட்டவர் கள் பெருமளவில் சேகரித்த நூல் தொகைகளினடியாகத் தோன் யுள்ளன. இவ்வகையில் உலகின் பிரதான தேசிய நூலகங்களுள் ஒன் றாகிய 'பிரிட்டிஷ் மியூசியம்' ஸர் உறான்ஸ்ஸ்லோன்ஸ் என்பா ருடைய பெறுமதிவாய்ந்த நூற்தொகையை அதன் ஆரம்ப காலத்தில் பெற்றது. ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகம் அந்த நாட்டுப்
- 50 -

பாராளுமன்றத்துக்கான நூலகத்தின் அடியாகத் தோன்றியுள்ளன. அவை எவ்வகையில் தோற்றினாலும், 'தேசிய நூலகங்கள் அவற் றின் ஆரம்பத்தில் இருந்தோ அல்லது பிற்பட்ட காலங்களிலோ ஒவ் வொரு நாட்டு மக்களினதும் அறிவாற்றலின் வெளிப்பாடுகளடங்கிய பதிவேடுகளின் இயல்பான பாதுகாப்பகங்களாகும்'
தேசிய அறிவேடுகளைச் சேகரித்துப் பாதுகாப்பதோடு தேசிய நூலகங்கள் தம் நாட்டு மக்களின் வாழ்வையும், சுபீட்சத்தையும் வளப்படுத்தக்கூடிய ஏனைய நாட்டவரின் பல்துறைப்பட்ட அறிவாக் கங்களையும் சேகரித்துக் கொள்ள வேண்டிய கட்டுப்பாடுடையனவாக உள்ளன. எனினும் பிறநாட்டு அறிவேடுகளைச் சேகரிப்பது என்பது எந்தளவு சாத்தியமாகுமென்பது கேள்விக்குரியதொன்றாகும். இது பற்றி 1968 ஆம் ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற ஐரோப்பிய தேசிய நூலகங்கள் பற்றிய கருத்தரங்கில் பின்வரும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
* ஒரு நாட்டினோடு நேரடியான தொடர்பற்ற வெளியீடுகளைப் பொறுத்த மட்டில் சாத்தியமான ஒரே வழி நூலகங்களின் நூலிட் டலை தேசிய மட்டத்தில் ஒருமுகப்படுத்தலேயாகும். தேசிய நூல கங்களும் இம்முறையையே விரும்புகின்றன’’.
நடைமுறையில் அவசியமான இந்த ஒருமுகப்பாட்டின்மூலம் பாவனையாளர்கள் பயனடைவதோடு தேசிய நூலகங்களின் நூற் றொகையும் வளம்பெறும். மேலும் ஏனைய நூலகங்களின் வளர்ச் சியையும் ஊக்குவிப்பதாகும். இருந்த போதிலும் ஒரு தேசிய நூல கம் தனது நாட்டிற்குத் தேவையான பிறநாட்டு அறிவேடுகளைச் சேகரிக்க வேண்டிய பொறுப்பினை ஏற்க வேண்டும் என்ற கருத்து வற்புறுத்திக் கூறப்பட்டது. இந்த வகையிலுங்கூட தேசிய நூலகங் களுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் பெறுமதி வாய்ந்ததென்று கூறப்பட்டது. தேசிய நூலகத்தின் சர்வதேச மட்டத்திலான நூல் பரிமாற்றத்தையை இக்கூற்று வலியுறுத்துகின்றது,
எமது நாட்டில் தேசிய நூலகம் பற்றிய சிந்தனை இந்நூற்றாண் டின் பிற்பகுதியிலேயே வலுவடைந்துள்ளது.
கொழும்பு மாநகரசபை நகராதிபதியின் 1951 ஆம் ஆண்டிற் கான நிர்வாக அறிக்கையில் கொழும்பு பொது நூலகத்தின் பிரதம நூலகர் டி சி. ஜி. அபயவிக்கிரம நாட்டின் அபிவிருத்திக்குத் தேசிய நூலகத்தின் அவசியத்தையும் அந்நூலகம் ஆற்றக்கூடிய பணிகளை யும் விளக்கியுள்ளார்.
- 51 -

Page 34
லங்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் மீதான விசாரணைக் குழு (1955) தனது அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளது.
* "நாம் எய்த விழையும் முன்னேற்றத்திற்கான வழி ஒரு தேசிய நூலக சேவையின் தோற்றமும் வளர்ச்சியுமாகும். இதன் சாராம்சம் என்னவெனில், எந்தவொரு சிறிய உள்ளூராட்சி மன்றத்தில் வதி யும் வாசகராயினும் தான் படிக்க விரும்பும் ஒரு நூல் தமது உள் ளூர் நூலகத்தில் கிடைக்காவிடின் அந்நூலைக் கூட்டுறவு முறையின் மூலம் தேசிய நூலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும், இங்கிலாந்தில் இந்த முறை தற்போது நடை முறையில் இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டில் கொழும்பு பொது நூலகத்தின் மீதான திரு. பி. கந்தையா அவர்களின் அறிக்கையில் ஒரு தேசிய நூலகத்தின் அவசியத்தைப் பின்வருமாறு அவர் வற் புறுத்தியுள்ளார்.
"ஒரு தேசிய நூலகத்தை அமைப்பது எமது கலாசார அபிவி ருத்தியில் முதன்மையானதொரு இடத்தைப் பெற வேண்டிய விஷ யமாகும் துரதிர்ஷ்டவசமாக இவ்விஷயத்தில் கவனம் செலுத்தப்ப டாமல் மிகுந்த காலம் கடந்து விட்டது. இத்தகைய ஒரு நூலகத் தைக் கட்டிச் சேவையினை ஆரம்பிப்பது மேலும் காலம் தாழ்த் தாது மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பது எனது உறுதி யான கருத்தாகும்.
மேலும் திரு. கந்தையா அவர்கள் இலங்கைத் தேசிய நூலகத் திற்கான மூலநூல் தொகைகளாக அரசாங்க சுவடிச்சாலை அரும் பொருட்காட்சிசாலை நூலகம் , றோயல் ஏஷியடிக் சொசைடி (இலங் கைக்கிளை) ஆகியவற்றின் அறிவேடுகளை ஒருங்குதிரட்டிச் சேகரிக் கலாம் என்றும் அபிப்பிராயம் கூறியுள்ளார்.
இலங்கைத் தொல்பொருட்கள் பற்றிய விசாரணைக்குழு (1959) தமது அறிக்கையில் தேசிய நூலகத்தினைப்பற்றியும் குறிப்பிட்டு அதற்கான மூல நூற் தொகையாகக் கொள்வதற்குக் கொழும்பு அரும்பொருட்காட்சிசாலையின் நூலகத்தில் உள்ள நூல்கள் மிகச் சிறந்தவை என்று கூறியுள்ளது.
இலங்கைத் தேசிய நூலக சேவைகளின் முன்னைநாள் பணிப் பாளர் திரு. கே. டி. சோமதாஸ் அவர்கள் அரசாங்க கீழைத்தேய நூலகம் (1870) இலங்கையின் முதலாவது தேசிய நூலகமாகக் கருதப்படக்கூடியதென்று கூறியுள்ளார். இந்நூலகம் 1877 ஆம் ஆண் டில் கொழும்பு அரும்பொருட்காட்சிசாலை ஆரம்பிக்கப்பட்டபோது
- 52

அதன் நூலகத்தோடு இணைக்கப்பட்டது. "1885 ஆம் ஆண்டில் அச் ஒடுவோர், வெளியீட்டாளர் சட்டத்தின்கீழ் (இலக்கம் -1 - 1885) கொழும்பு அரும்பொருட்காட்சிசாலை நூலகம் இலங்கையின் வெளி பீடுகளுக்கான வைப்பு நூலகங்களுள் ஒன்றாகியது. அதன் பிறகு கொழு பு அரும்பொருட்சாலையின் நூலகப்பகுதி ஒரு தேசிய நூல கத்தின் சில தன்மைகளைப் பெறலாயிற்று'.
மேலே நாம் கூறியவற்றில் இருந்து எமது தேசிய நூலகம் பற் றிய முன்னோடியான கருத்துக்களும் அந்நூலகம் எத்தன்மையான தாயிருக்க வேண்டும் என்ற ஆலோசனைகளும் காலத்துக்குக்காலம் இந்த நாட்டின் அறிவார்ந்த மக்களின் எண்ணத்தில் இடம் பெற்று வந்துள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இக்கருத்துக்களின் திரட்சியாகவும் பெறுபேறாகவும் உருவாகிய இலங்கையில் முதலாவது முக்கிய நூலகச்சட்டமே இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபைச்சட்டமாகும். இச்சட்டம் பாராளுமன்றத்தில் 1970 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் திகதி 17 ஆம் இலக்க சட்டமாக நிறைவேறியது. இச்சட்டத்தின் ஆக்கத்திற்கு உடனடி யாக வழிகோலியது. 1969 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் யுனெஸ்கோ ஸ்தாபனம் நடத்திய நூலக நிபுணர்களின் மாநாடாகும். இம்மாநாட்டில் ஆசிய நாடுகளின் தேசிய நூலகங் களை அமைப்பதன் மூலம் ஆசிய நாடுகளின் நூலக சேவைகளை அபிருத் திசெய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இவ்வாறாக இயற்றப்பட்ட நூலகச்சட்டத்தின் மீது 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சி இலங்கையின் நூலக இயக்க வளர்ச்சி யில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பமாகும்.
எமது தேசிய நூலகத்தின் தன்மையினையும் பணிகளையும் பற் நிக்கூறுமுன் ஒரு தேசிய நூலகத்தின் பொதுவான பணிகள் பற்றி ஆசியாவிலும் பசுபிக் பிராந்தியத்திலும் தேசிய நூலகங்களின் அபி விருத்திபற்றிய கருத்தரங்கொன்றில் (மணிலா, பிலிப்பீன்ஸ் 1954) பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை இங்கு கவனிப்போம்.
*முதன்முதலில் ஒரு தனிப்பட்ட தேசிய நூலகத்தின் பணிகள் பெரும்பாலும் சமூக, கலாசார, பொருளாதார புவியியல் நிலைக ளைப் பொறுத்ததாகவே இருக்கும், இருந்த போதிலும் குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்ள வேண்டியது அந்நூலகத்தின் இன்றி யமையாத பொறுப்பாயிருக்கும். பொதுப்படக்கூறுவதாயின் அவை பின்வருவனவையாகும்.
- 53 -

Page 35
- நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் தலைமைத்து
வம் வகித்தல்
- நாட்டின் அனைத்து வெளியீடுகளுக்கும் ஒரு நிரந்தர வைப்
பாகப்பணி புரிதல்
- வேறு வகையான அறிவேடுகளையும் சேகரித்தல்.
- நூற்பட்டியல் சேவைகளை வழங்கல்.
- நூலகக் கூட்டுறவு நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தும் மத்திய
நிலையமாகச் செயற்படுதல்.
ட அரசாங்கத்திற்குத் தேவையான சேவைகளை வழங்குதல்.
இனி இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையினது சேவை களை அதற்கான சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு காண்போம். இதில் இச்சபைக்கு நாட்டில் உள்ள பொது, பாடசாலை, பல்கலைக்கழக, அரசாங்க, விசேஷ நூலகங்களுக்கு உதவியளித்து முன்னேற்றுவதற் கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இதுகாறும் அரசாங்க, நூலக ஆவ ன சேவைகள் ஒருமுகப்படுத்தப்படாமலும் , பல வகைகளிலும் விரயத்தை ஏற்படுத்துவனவாகவுமே இருந்துவந் துள்ளன. எனவே தேசிய நூலக அமைப்பின் மூலம் எமது பொரு ளாதார நிலைக்கேற்றவாறும் , மற்றும் எமது அவசர நூலகத் தேவைகள் வளங்களின் நிலை, நிதிநிலை ஆகியவற்றுக்கேற்றவாறும் நூலக சேவைகளை நாம் அபிவிருத்தி செய்ய முடியும். இதனையொட் டியே இச்சட்டத்தின் 14 ஆம் பிரிவில் எமது தேசிய நூலகத்தை ஏற் படுத்துவது சபையின் தலையாய ஒரு பணியாகக் கூறப்பட்டுள்ளது. தேசிய நூலக சேவைகள் சபையின் அதிகாரங்கள் சட்டத்தில் பின் வருமாறு தரப்பட்டுள்ளது.
1. பொதுவாக நூலக சேவைகளின் அமைப்பிற்கும் அபிவிருத் திக்குமாகத் திட்டமிட்டு உதவுதல்
2. தேசிய நூலகத்தை நிறுவிப் பராமரித்தல்.
3. பொது நூலக சேவைகளை ஊக்குவித்து அபிவிருத்திக்கான ஆலோசனைகளும் உதவியும் வழங்கல்.
4. பாடசாலை நூலகங்களை ஊக்குவித்து அபிவிருத்திக்கான ஆலோசனைகளும் உதவியும் வழங்கல்.
5 அறிவேடுகளின் வெளியீட்டிற்கும், கட்புல செவிப்புல சாத னங்களின் உற்பத்திக்குமான ஆலோசனைகளும் உதவிகளும் வழங் குதல்,
- 54 -

6. பல்கலைக்கழக, கனிஷ்ட பல்கலைக்கழக நூலகங்கள் தொழில் நுட்பக் கல்லூரிகளின் நூலகங்கள், ஆசிரியர் கல்லூரிகளின் நூலகங் கள், அரசாங்க அலுவலகங்களின் நூலகங்கள், மற்றும் ஏனைய விசேஷ நூலகங்கள் ஆகியவற்றை ஒருமுகப்படுத்துவதற்கான ஆலோ சனைகளும் உதவியும் வழங்கல்
7. நூலக சேவையில் கடமைபுரிவோரின் கல்வித் தராதரம், தொழில்வழித் தராதரம் ஆகியவற்றை நிர்ணயிப்பதில் அரசாங்கத் திற்கு ஆலோசனைகளும் உதவியும் வழங்கல்.
8. நூலகவியற் கல்வியையும், பயிற்சியையும் அபிவிருத்தி செய்தல் 9. பொதுவாக நூலக சேவைகளின் அபிவிருத்திக்குத் தேவை
யான ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
நூலக சேவைகள் சபையின் மேற்கூறிய பணிகளுள் தேசிய நூல கத்தை நிறுவிப் பராமரிப்பதுதான் முதன்மையானதெனிலும் அதன் பணிகளாகக் கூறப்பட்ட ஏனைய துறைகளிலான பணிகள் தேசிய தூலக சேவையினோடு நெருங்கிய தொடர்பு உடையன என்பதி னாலேயே சட்டத்தில் காணும் அனைத்துப் பணிகளையும் இங்கு எடுத்து கூறினோம். மேலும் இத்துறைகளிலான வளர்ச்சியினை யொட்டியே தேசிய நூலகத்தின் வளமும் வளர்ச்சியும் உறுதியான வகையில் ஏற்பட முடியும்.
எமது தேசிய நூலகத்தின் பணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிப் பேராதனைப் பல்கைலக்கழகத்து முன்னை நாள் பிர தம நூலகரும் இந்நாட்டின் தலைசிறந்த நூலகருமாகிய திரு. இயன் குணதிலக்க அவர்கள் கூறியுள்ளவற்றைச் சற்று விரிவாக வழங்க விரும்புகின்றேன்.
'நூலக சேவைகள் என்ற கட்டுக்கோப்புக்குள் அமைவதாகத் தேசிய நூல 1ம் ஆற்ற வேண்டிய பணிகளாவன:
கல்வித்துறையிலும் ஆராய்ச்சித் துறையிலும் பயன்படக் கூடியன வாகிய இலங்கையின் வரலாறு நாகரீகம் ஆகியன பற்றிய தேசிய அறிவேடுகளோடு, வெளிநாடுகளில் எழுதப்பட்ட அல்லது வெளியிடப் பட்ட அத்தகைய நூல்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் பிற சாதனங்களையும் மற்றும் வேறு நூல்களையும் கையெழுத்துப் பிர திகளையும், நூலகச்சாதனங்களையும் சேகரித்துப் பாதுகாத்து ஒழுங் குபடுத்தி உபயோகத்திற்கு உதவுவது.
- 55 -

Page 36
சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம், நீதிபரிபாலனம், ஆகியவற் றுக்கும் பொறுப்பாக அரசாங்கப் பிரிவுகளுக்கும் மற்றும் பொதுக் கூட் டுறவுத் தாபனங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஏனைய அமைப்புக்க ளுக்கும் தேசிய உசாத்துணை தூலகமாகப் பணியாற்றுவது அச்சேவை யின் பிரதான நோக்கம் இறுதி நிலையில் நாடி வருவோருக்குப் பூர ணத்தவம் வாய்ந்ததோர் உசாத்துணை நூலகமாக இயங்குவதாகும்.
நாட்டில் உள்ள ஏனைய நூலகங்களுக்கும் தரவுத் திட்டங்க ளுக்கும் உதவுமுகமாக திறமையானதொரு மத்திய நூல் இரவல் வழங்கும் நூலகமாகவும் பிரதியாக்க சேவையாகவும் இயங்குதல்.
இச்சேவைகள் தவிர இலங்கைத் தேசிய நூலகம் ஆற்ற வேண் டிய மற்றும் பலபணிகளையும் திரு. குணத்திலக்க விளக்கியுள்ளார். அவற்றுள் நடைமுறையில் உள்ள அறிவேடுகளுக்கான பொருள் வழி காட்டிகளையும் சுட்டிகளையும் நூல் விவரணப்பட்டியலுக்கான தர நிர்ணயங்களையும் வழங்குதலும், இலங்கையில் தற்போது உயர் நிலை நூலகங்களால் பெறப்படும் வெளிநாட்டு நூல்கள், பருவ வெளி யீடுகள், பத்திரிகைகள் ஆகியன கிடைக்கக்கூடிய நூலகங்கள் பற்றிய விவரணங்களை வழங்குதலும் அடங்கும்.
இலங்கைத் தேசிய நூலகத்தின் மற்றுமொருமுக்கியமான பணி எமது தாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமான தாகும். இந்நாட்டின் விவசாயம் ஆலைத் தொழில், தொழில் துட் பம் ஆகிய துறைகளில் இயங்கிவரும் விசேஷ நூலகங்களின் ஆவணங் களை ஒருமுகப்படுத்தி அவற்றுக்கான உதவிகளை வழங்குவதும் தாட்டின் அபிவிருத்திக்கான சிறப்புப் பணியாகும்.
நூல் பட்டியலாக்கத்துறையில் தேசிய நூலகத்தின் பணி பலத ரப்பட்டதாகும். எனினும் பிரதானமான சில பட்டியல்களை மட்டும் இங்கு குறிப்பிடுவோம். இவற்றுள் அதிமுக்கியமானதாகக் கருதப்ப டக்கூடியன இலங்கைத் தேசிய நூற்பட்டியலும், இலங்கைப் பருவ வெளியீடுகளின் சுட்டியும், புதின ஏடுகளின் சுட்டியும் தெறிகாட்டி யுமாகும். இவை தவிர இலங்கை நூலகங்களில் சேகரிக்கப்படும் பிற நாட்டுப் பருவ வெளியீடுகள், புதிய ஏடுகள், பட்டப்பின்படிப்பில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள், ஒலைப்பதிவேடுகள் ஆகிய வற்றுக்கெல்லாம் பட்டியல் தயாரித்து வழங்குவதும் தேசிய நூலகத் தின் பணிகளாகும்.
இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை 1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதல் சபையின் தேசிய நூலகப் பணிகளுட் சில படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் இப்
- 56 -

பணிகள் விரிவடைந்து எமது தேசிய நூலகம் முழுமைத்துவம் அடை யுமெனலாம்.
இனி நூலக சபையின் தேசிய நூலகப்பிரிவு இதுகாறும் மேற் கொண்டுள்ள பணிகளைக் கோடிட்டுக்காட்டுவது நூலகத்தின் தற் போதைய நிலையையும் விரிவாக்கம் பெறவேண்டிய துறைகளைப் பற்றியும் நாம் உணர உதவியாயிருக்கும்.
தேசிய நூலகப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தற்போ தைய பணிகளுள் முக்கியமானவை சில பின்வருமாறு:
- தேசிய நூலகத்திற்கான பிரதான நூற் சேகரிப்பு
- சட்ட வைப்புக்கான வெளியீடுகளின் சேகரிப்பு.
(1885 ஆம் ஆண்டு இயற்றப்ப்ட்ட அச்சிவோர் வெளியீட்டாளர் சட்டத்தின் 1976 ஆம் ஆண்டுத் திருத்தத்திற்கேற்ப நாட்டில் வெளியி டப்படும் ஒவ்வொரு அறிவேட்டினதும் பிரதியொன்று தேசிய நூல கத்தில் வைப்பிடப்படவேண்டும்.)
- இலங்கையின் நாடோடி இலக்கியச் சேகரிப்பு.
இத்திட்டத்தின்கீழ் பல்வேறு கிராமியக் கவிதைகளின் கையெ ழுத்துப் பிரதிகள் நாடோடிக் கலாசாரம் பற்றிய அச்சிட்ட சாத னங்கள், ஏட்டுச் சுவடிகள், பதிவு நாடாக்கள், ஒலித்தட்டுக்கள் நுண் பொருட்கள், நிழற்படங்கள் ஆகியவற்றின் சேகரிப்பு அடங்கும்.
- யுனெஸ்கோ வெளியீடுகள் சேகரிப்பு.
தேசிய நூலகத்தின் யுனெஸ்கோ பகுதி இந்நாட்டின் தலையாய சர்வதேச நிறுவனங்களினதும் நூல் வைப்பகமாகத் திகழ்கிறது. இங்கு யுனெஸ்கோ வெளியீடுகளும் பிற சர்வதேச தாபனங்களின் வெளியீ டுகளும் சேகரிக்கப்படுகின்றன.
- மற்றும் அரசாங்க வெளியீகள், நூலகவியல் சார்ந்த வெளியீடுகள் புதின ஏடுகள் ஆகியனவும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைத் தேசிய நூற் பட்டியலானது 1974ஆம் ஆண்டில் இருந்து தேசியச் சுவடிகள் திணைக்களத்தினால் நூலக சேவைகள் சபையின் பொறுப்பில் விடப்பட்டது. தற்போது இப்பட்டியல் காலாண்டு வெளியீடாக மும்மொழிகளிலும் இச்சபையினால் வெளி யிடப்படுகின்றது. இது சட்டவைப்பு நூற்சேர்க்கையின் அடியாகத் தயாரிக்கப்படுகின்றது. இது தவிர காலத்தால் முற்பட்ட (1885 - 1962) நூற்பட்டியல் ஒன்றையும் தேசிய நூலக சபை தொகுத்து
- 57 -

Page 37
வருகின்றது. மற்றும் இலங்கைப்பருவ வெளியீடுகளின் சுட்டிகளையும், மத்திய நூற்பட்டியலையும் தயாரிக்கும் சேவையையும் மேற்கொண் டுள்ளது. 1962ஆம் ஆண்டில் இருந்து 1973ஆம் ஆண்டு வரையி லான நூற்பட்டியல் தேசிய சுவடிச் சாலையினால் வெளியிடப்பட்
-gid.
தற்போது தேசிய நூலகம் ஆற்றிவரும் பணிகள் பெரும்பாலும் ஆரம்ப நிலையிலேயே இருந்து வருகின்றன. அடுத்து வரும் ஆண் டுகளில் இந்த நூலகப் பணிகள் சிறப்பாக விரிவடையுமென்று நாம் எதிர்பார்க்கலாம்.
இதுவரை நாம் சுருக்கமாக எடுத்துக்கூறிய பல்வேறு அறிவுத் துறைகள் சார்ந்த பணிகளோடு தேசிய நூலகத்தின் சேவை நூலகவி யல் சம்பந்தப்பட்ட வேறு துறைகளிலும் தனது கவனத்தைச் செலுத் தவேண்டியது அவசியமாகின்றது. ܫ
இல்வகையில் இலங்கையில் உள்ள நூலகங்களினால் அனுசரிக்கப் படும் செய்முறைகளைப்பற்றிய தகவல்களைத்திரட்டி மதிப்பீடு செய் வதும், தொழில் வழியிலான அபிவிருத்திக்கேற்ற தர நிர்ணயம் செய்வதும், நூலகத்துறையில் பிற நாடுகளில் ஏற்படும் மாற்றங்க ளையும் முன்னேற்றங்களையும் அவதானித்து அவற்றின் வழி காலத்துக்குக் காலம் எமது நூலக சேவைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதும், மற்றும் நூலகவியல் சார்ந்த வெளியீடுகளை ஊக் குவிப்பதும் நூலகவியற் கல்வியை முன்னேற்றுவதும் தேசிய நூல கத்தின் பொறுப்புக்களாய் அமையும்.
இதுகாறும் நாம் கூறியவற்றில் இருந்து எமது தேசிய நூலகத் தின் பாரிய பொறுப்புக்களை நாம் உணர முடியும். இப்பொறுப்புக் களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது இந்நூலகத்தின் சேவையினால் பயன்பெறவுள்ள மக்களைப்பற்றியும் சில முக்கியமான விஷயங்களை மனதிற் கொள்ள வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சமயம், மொழி, கலாசாரம் ஆகியவற் றைக்கொண்ட எமது நாட்டில் இந்த, வேற்றுமைகஒளுள் ற்றுமை காண வேண்டியது எம் அனைவரது முன்னேற்றத்திற்கும் நாட்டின் சுபீட்சத்திற்கும் இன்றியமையாததாகும். இந்த இலட்சியத்தைஅடை வதில் எமது தேசிய நூலகத்திற்கு முக்கியமானதொரு பங்கு உண்டு என்பதை நாம் வலியுறுத்திக்கூற வேண்டியுள்ளது. தேசிய நூலகமானது எமது அனைத்து மக்களினது பாரம்பரியத்தையும், சமய, கலாசார, மொழி வளங்களையும் அளாவி நிற்கும் ஒரு பொதுக் களஞ்சியமாகத் திகழவேண்டும். எமது மக்களின் கூட்டுமொத்தமான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் அது தனது கோட்பாடுகளை அமைத் துக் கொள்ள வேண்டும்.
- 58 -

S).
சமுதாயத்தின் தகவல் தேவைகள்
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் நீர்வளம் நிலவளம் போன்ற இயற்கை வளங்கள் எவ்வளவு அத்தியாவசியமோ அதேபோன்று தகவலும் இன்றியமையாததாகும். இங்கு நாம் தகவல் (Information) என்று குறிப்பிடுவது அறிவுச் செல்வத்தையேயாகும். (Knowledge)
ஒரு நாட்டின் நூலகங்களில் தேங்கிக் கிடக்கும் அறிவுச் செல்வம் பலதரப்பட்டதாகும். சாதாரண வாசகர்கள் முதல் உயர் நிலை அறி ஞர், ஆய்வாளர் வரையிலான அறிவுத் தேட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவர்க்கும் உதவும் நூலகங்கள் நாட்டிற்கு வலிமையையும் வனப் பையும் ஊட்டுவனவாகும்.
பல இயற்கை வளங்களைப்போன்று அறிவு வளமும் ஒருமுகப் படுத்தப்பட்டுக் கிரமமாக வளர்ச்சியடைந்தான்றி அது தக்க பயன ளிக்காது வீண் விரயமாகிவிடும்.
முன்னேற்றமடைந்த சமூகங்களில் அவற்றின் கலாச்சாரங்களில் பெரும்பகுதி பதிவு செய்யப்பட்ட அறிவேடுகளாகத் தலைமுறை தலை முறையாக வழங்கி வருகின்றன. இவ்வறிவேடுகள், நூல்கள், சஞ்சி கைகள் மற்றும் பல ஆவணங்களாகவும் உள்ளன. மற்றும் கட்புல , செவிப்புல சாதனங்களாகவும் வழங்கி வருகின்றன. இவைதவிர தற் காலத்தில் கம்ப்யூட்டர்களில் உபயோகிக்கப்படும் தகவல் பதிவுகளாக வும் "அறிவு" சேகரிக்கப்படுகிறது. ஒரு சமுதாயத்தின் அறிவு நிலை உயர்வடையும்போது அறிவுப் பதிவேடுகளின் எண்ணிக்கையும் பெருக் கமடையும்.
ஒருங்கு திரட்டப்பட்ட அறிவேடுகளின் துணையின்றி எந்தவொரு சமுதாயமும் குறிப்பிட்ட ஓரளவிற்கு மேல் முன்னேறிச்செல்ல. முடி யாது. அதேபோல் முன்னேற்றம் அடைந்த ஒரு சமுதாயம் அதன் அறிவேட்டு வளத்தினை தக்கபடி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் திராவிடின் அச்சமுதாயம் பின்தங்கிவிடும் என்பதிலும் ஐயமில்லை.
தனிமனிதனுடைய முன்னேற்றத்திற்கும் தேசிய அளவிலான வளர்ச் சிக்கும் எளிதாகவும் தடைகளின்றியும் பெறக்கூடிய தகவல் இன்றிய மையாததாகும்.

Page 38
தேவைப்படும் வேளையில் தேவைப்பட்ட இடத்தில் தேவைப் பட்ட உருவத்தில் கிடைக்கக்கூடிய சரியான தகவலின் உதவியோடு தனியொருவர் அல்லது ஒரு வர்த்தக நிறுவனம் அல்லது அரசாங்க நிலையம் அல்லது வேறு வகையான நிறுவனம் அறிவார்ந்த தீர் மானங்களை மேற்கொள்ளவும் குறிப்பிட்ட குறிக்கோள்களை அடை யவும் கூடுமாயிருக்கும்.
அறிவு அல்லது தகவல் தேட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொரு வரும் தனிப்பட்ட தகவல் தேவைகளையும் கல்வித்துறை சார்ந்த அறிவுத்தேவைகளையும் உளவியல்சார்ந்த அறிவுத் தேவைகளையும், மற்றும் சமூகம் சார்ந்த அறிவுத் தேவைகளையும் நாடியவர்களா யிருப்பார்கள். உதாரணமாக தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்ப் படும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக்கான அறிவினை ஒருவர் வேண்டி நிற்கக்கூடும். மற்றொருவர் தமது கல்விப் பயிற்சி யில் தொடர்ந்து முன்னேற, தொழில்சார்ந்த அறிவினை நாடக் கூடும்.
இது தவிர ஒருவருக்குப் புத்திகூர்ந்த நுட்ப (Intellectual) அறிவு தேவைப்படக்கூடும். அதாவது தமது வாழ்வை வளப்படுத்தும் கலை விஞ்ஞான, மானிதம் ஆகியவற்றை தக்கவாறு புரிந்து கொள்ளக்கூடிய அறிவை அவர் வேண்டக் கூடும். மற்றும் வாசித்தலுக்கும், செவி மடுத்தலுக்கும் அல்லது கண்ணால் கண்டறிதலுக்கும் தகுந்த காரணி கள் பல உண்டு, அவற்றுள் முக்கிய மானவை மனமகிழ்ச்சிக்காக வாசித் தல், புதுமையானதொரு எண்ணத்தைத் தொடர்தல், ஆய்வு நோக் கோடு கூடிய மன நிறைவுக்கான தேட்டம் என்பனவாகும்.
மேலும் ஒழுக்கரீதியான, சமயரீதியான, தத்துவரீதியான உளத் தெளிவு பெறுவதற்கான தேவையினையும் மக்களிடையே நாம் காண GonTuh.
தனிமனிதரைப்போல் நிறுவனங்களும் அறிவையும் தகவலையும் நாடுகின்றன. வர்த்தக நிறுவனங்கள், விற்பனைச் சந்தைகளின் நிலை யைக் கணிக்கவும், புதிய பொருட்களை உற்பத்தி செய்யவும், புதிய தொழில் நுட்பங்களைக் கையாளவும் உதவும் விவரங்களையும், அடிப் படைத் தகவல்களையும் வேண்டி நிற்கின்றன.
பாடசாலைகளுக்குப் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்து விரிவுபடுத்த ஏதுவான தகவல் தேவையாகவுள்ளது. ஆராய்ச்சி நிலை யங்களுக்குத் தமது ஆக்கபூர்வமான சேவைசளுக்கு ஏதுவாக ஏற்கென வே தெரிந்துகொண்டுள்ள விஷயங்களோடு புதிய தகவல்களைப்பெற்று அவற்றைத் தொடர்பு படுத்திக் கொள்வதற்கான தேவை உள்ளது
- 60

ஒர் அரசாங்கம் ஒவ்வொரு மட்டத்திலும் திட்டமிடவும் தீர்மா னங்களை மேற்கொள்ளவும் பிரச்சினைகளை எதிர்பார்த்துத் தீர்ப்ப தற்கும் தகவல் அத்தியாவசியமாகவுள்ளது.
நாம் இதுவரை கூறியவற்றில் இருந்து சமூகத்தின் எல்லாமட் டங்களிலும் தகவல் தேவைப்படுவதை உணரக்கூடியதாக உள் ளது. இத்தேவை ஒருவர் தங்கியிருக்கும் இடம், அவரது சமூகநிலை அவரது அறிவாற்றலின் தரம் என்பனவற்றில் தங்கியிருக்க வில்லை என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். எந்த நிலையிலுள்ள ஒருவராயினும் அவரது முன்னேற்றத்திற்கு தகவல் தேவை நிறைவு பெற வேண்டும் என்பதை நாம் வற்புறுத்திக்கூற வேண்டும்.
ஒருவகையில் நூலகங்கள் எப்போதுமே தகவல் சேவைகளாகவே இருந்து வத்துள்ளன. 'தகவல்' என்ற சொல் விரிவான பொருளு டையதாகும், பிறருக்குக் கிரமமான முறையில் அறிவை வழங்கும் ஒருவரைத் "தகவல் அதிகாரி" என்று அழைப்பது வழக்காயிருந்து வருகிறது.
ஒரு தகவல் சேவையின் சமூகப்பணி என்னவெனின் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப்பற்றி அறியப்பட்டுள்ள விஷயங்களைத் திரட்டி, தகவல் உசாவி வருகிறவருக்குத் தேவையான அளவில் அவரது அறி வுத் தேவையை நிறைவுபடுத்தக் கூடிய வகையில் வழங்குவதேயாகும்.
தகவல் சேவையின் தராதரம் அல்லது மட்டம்
தகவல் சேவையின் தராதரம் அல்லது மட்டம், அச்சேவைக்குட் பட்ட தகவல்களின் தன்மையைப் பொறுத்துள்ளது. எனவே தகவல் சேவை பலதரப்பட்டதாயிருக்கும். இதனையொட்டியே உயர்மட்டத் தில் இயங்கிவரும் சில தகவல்சேவைகளைச் சேர்த்தவர்கள் விஷேச மாக விஞ்ஞானத்துறைசார்ந்த சேவையாளர்கள் தம்மை நூலகர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புவதில்லை, மற்றும் பிரதானமாக விஞ் ஞான தொழிற்றுறை ஆராய்ச்சியில்தான் 'தகவல் சேவைகள்", அல் லது, 'தகவல் நிலையங்கள் விசேஷமான வளர்ச்சி அடைந்துள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டு நூலகத்துறையில் பல திருப்பங்க ளைக் கண்டது. இதன் விளைவாக இங்கு நூலக சேவைகளில் நாம் காணும் அமைப்புக்களும் தோற்றலாயின. இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம், தொழிற்றுறை ஆகியவற்றைச் சார்ந்த அறிவுத்துறைச் சங்கங்கள் (Learned Societies) நிறுவப்பட்டன. இவற்றின் அங்கத் தவர்கள் தமது ஆராய்ச்சி முடிவுகளையும் அனுபவத்தையும் வெளி யீடுகளின் மூலம் சக ஆய்வாளர்கள் அறிந்துகொள்ளச்செய்தனர். இத்தகைய முயற்சிகன் காலப்போக்கில் சிறப்பு நூலகங்களின் தோற் றத்திற்கு வழி வகுத்தன.
- 61 -

Page 39
முதலாம் உலக யுத்தத்தின்போது விஞ்ஞானத்துறையிலான ஆராய்ச்சி துரித வளர்ச்சி பெற்றது. இந்தக் காலத்தே தோன்றிய ஆராச்சிக் கழகங்களும் நிலையங்களும் விஞ்ஞான ஆய்வு சார்ந்தவெளி யீடுகளைச் சேகரித்துத் தகவல்வழங்குவதற்கான நூலகங்களையும் அமைத்துக் கொண்னட,
இத்தகைய நூலகங்கள் விஞ்ஞானத் துறையிலான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிறுவனங்களில் மாத்திரம் தோற்றவில்லை. எனினும் இத் துறையில்தான் நூலக சேவையின் புதியதொரு சேவைக் கோட்பாடு உருவாகியது. அக்கோட்பாடு என்னவெனில் ஆய்வாளர்கள் தகவல் கேட்கும்வரை காத்திராமல் அவர்களுக்கு உதவக்கூடிய பொருத்த மான தகவல்களைத்திரட்டிக் கொடுத்து உதவுவது. இப்படியான சேவைக்கு விஞ்ஞானத்துறை நூலகங்களில்தான் பொருத்தமான சமூ கநிலை காணப்பட்டது. இந்நூலக சேவைக்கு ஏதுவான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:-
1. விஞ்ஞானத்துறையிலான வெளியீடுகளின் பெருக்கம். ஓர் ஆய்வாளர் தமது பாரிய வேலைகளுக்கிடையே, பெருவாரியான வெளியீடுகளைப் படித்துத் தமக்குத் தேவையான தகவல்களை அவற் றில் இருந்து பெறுவது அசாத்தியமாகும். -
2. இந்த வெளியீடுகளை மற்றுமொருவர் படித்துத் தகவல்க ளைத் தேர்ந்து உதவுவது விஞ்ஞானத்துறையிலான ஆராய்ச்சிக்கு ஏற்புடையதாகவுள்ளது; எளிதாகவும் உள்ளது.
3. தொழிற்றுறையில் பரவலாக விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இட மளிக்கப்பட்டது. இது இத்துறையிலான தகவல் சேவைக்கும் நூலக வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது,
கல்வித்துறையிலான தகவல் சேவை:
சிதப்பு நூலகங்களில் வழங்கப்படுவதுபோன்ற தகவல்கள் வேறு வகையான நூலகங்களிலும் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழக நூலகங்கள் அங்கு போதிக்கப்படும் பாடங்களுக்குத் தொடர்பான நூல்களை லழங்குவதோடு அங்கு மேற்கொள்ளப்படும் விசேஷ ஆராய்ச்சிகளுக்கு உதவக்கூடிய நூல்களையும் வழங்குகின்றன. பல் கலைக்கழகங்கள் பெருந்தொகையான நூல்களைத்திரட்டி வைத்திருக் கின்ற போதிலும் ஒரு தொழில்துறை நூலகத்தில் உள்ளது போன்ற தகவல் சேவைக்கான அடிப்படை அம்சங்கள் அங்கிருப்பதில்லை. தொடர்பான திட்டவட்டமான சேவையும் விசேஷமாக நூற்தகவற் பொறுப்பும் பல்கலைச்கழகங்களில் கிட்டுவதில்லை.
- 62 -

இதைப்போலவே பொது நூலகங்களில் உள்ள வாசகர் தகவற் சேவையும் சிரமமான பயிற்சித் திட்டங்களைப்பின்பற்று வோருக்கான விசேஷத் தகவல்களை வழங்குவதன்மூலம் கல்விச்சேவை புரிந்துவரு கின்றது. ஆனால்தொழில் துறையில் உள்ள நூலகங்களில்உள்ளது. போன்ற விஷேட தகவல் அமைப்பை நாம்பொது நூலகங்களில் காண முடியாது பொதுவாகக் கூறுவதாயின் பொதுநூலகங்களிலுள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட ஒரு பொருளைப்பற்றியும் அது சம்பந்தப் பட்ட அறிவேடுகளைப் பற்றியும் ஆழமான அறிவு உடையவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அறிவேடுகளை மதிப்பீடு செய்தல் பொது நூலகங்களுக்குப் பொருத்தமானதே. ஏனெனில் கல்வித்துறையில் ஈடுபடுகிறவர்கள் நூல்களைத் தெரிவு செய்வதில் நூலகர்களின் உதவிகனைக் கோருவார் கள். இங்கு நாம் ஆராய்ச்சியாளர்களுக்கான சேவையைக் கருத வில்லை. நூலகர் தமது சொந்த அனுபவத்தில் இருந்து அதாவது உசாத்துணைச் சேவைத் துறையில் இருந்து பெற்ற அனுபவத்தைக் கொண்டு நிபுணர்கள் அல்லாத பிற வாசகர்களுக்கு அவசியமான அறிவேடுகளைப் பற்றி ஆலோசனை வழங்கலாம்.
தொழில்துறை நூலகங்களும் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்துள் ளன. இயந்திரத் தொழில் நிலையம் (Mechanics Institutes) பேரன்ற நிறுவனங்களும், வேறு தொழில் நிறுவனங்களும் தங்களு டைய தொழிலாளிகள் தொழில் நுட்பக் கல்வியைத்தேடிக் கொள் ளவும், பரீட்சைகளுக்காகப் படித்துக் கொள்ளவும் தகவல் சேவை களை வழங்கி வருகின்றன.
தொழிற்றுறையில் கிரமமான பயிற்சித் திட்டங்கள் இரண்டாம் உலகயுத்த முடிவுக்குப் பின்னர்தான் மிகவும் விரிவடைந்தன. அதுவரை தொழில்நிலைப் பயிற்சித் திட்டங்களும் கல்வி வளர்ச்சிக்கான வசதி களும் ஒருசில தொழில் நிறுவனங்களில் இருந்த போதிலும் இன் றுள்ள வகையிலான கல்வி வசதிகள் இருக்கவில்லை. யுத்தத்திற்குப் பிறகு பல்லாயிரக்கணக்கானோருக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால் தொழில்நுட்பக் கல்லூரிகளும் தொழில் நிறுவனங்களும் மக்களின் அறிவுத் தேவைகளை நிறைவு செய்யச் சமயோசிதமான தகவற் சேவைகளை வழங்கி வந்தன
எனவே கல்வித்துறையிலான தகவற் சேவைகளை பல்வேறு வகையான தொழிற்றுறை சார்ந்த நூலகங்கள் நிறைவு செய்கின்றன. எந்தவொரு நூலக சேவையும் சமூகத் தேவையினையொட்டியே வளர முடியும்:
- 63 -

Page 40
சமூகத்தின் தகவற் தேவை உணரப்படுமிடத்து இயல்பாகவே நூலக சேவையும் விரிவடையும்.
தகவலைப் பெறுவதற்கு உறுதிபூண்ட நிபுணர்களின் கூட்ட மைப்பு தோன்றியவிடத்து தகவற்சேவை தோற்றியது. நிபுணத்துவ நிலையை அடையாதோர் ஒருங்குசேர்ந்த விடத்து கல்வித்துறை
சாரிந்த நூலக சேவை தோற்றியது. ஆனால் அடிப்படையில் இவ்விரு வகைத் தகவற் சேவைகளும் ஒரே நோக்கத்தை உடையனவே. அதா வது தொழிலாளியின் திறமையை உயர்த்தி அவன் சார்ந்துள்ள நிறு வனத்திற்கு அவனது பெறுமதியைக் கூட்டுவதே அந்த நோக்கமாகும். அதே வேளையில் சமூகத்திற்கு அவனது தகுதியைக் கூட்டுவதும் அச்சேவையின் பெறுபேறாகும்.
- 64

10.
முஸ்லிம்களின் நூலகப் பாரம்பரியம்
சிந்தனைக்குச் சிறப்பிடம் தருவது இஸ்லாம், அல்லாஹ்தனது அருளை மக்களுக்கு அறிவிக்குமுகமாக அவர்களைச் சிந்தனையின். பால் செலுத்துகின்றான். திருக்குர்ஆன் பின்வருமாறு அருளுகின்றது
'அவன் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் மனிதர்களுக்கு பிரயோசனமானவற்றை (ஏற்றிக்) கொண்டு சமுத்திரத்தில் செல்லும் கப்பலிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி, அதைக் கொண்டு (வறண்டு) இறந்த பூமியை அல்லாஹ் உயிர்ப்பித்துச் செழிப்பாக்கி வைப்பதிலும், கால்நடைகள் யாவற்றையும் பூமியில் பரவ விட்டி ருப்பதிலும், காற்றைப் (பல கோணங்களில் திருப்பி) த் திருப்பி விடு வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையில் அமர்த்தப் பெற்றிருக்கும் மேகத்திலும் (மனிதர்களுக்குள்ள பிரயோசனங்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனது அருளையும், அன்பையும் அறிவிக் கக் கூடிய) அநேக அத்தாட்சிகள், (நிச்சயமாக) இருக்கின்றன.??
இவ்வாறாக எமது தூய திருமறை வழி கோலிய சிந்தனையாம் களத்தில் விளைந்த அறிவுக்கதிர்களே அக்கால முஸ்லிம்களின், உல கையே வியப்பிலாழ்த்தும் சாதனைகளுக்குக் காரணமாயிருந்தன. சிறப்பு மிக்கதொரு பாரம்பரியத்தையும் எமக்கு அளித்தன. அறி வின் முக்கியத்துவம் பற்றித் திருகுர்ஆன் மீண்டும் மீண்டும் வற்பு றுத்தியுள்ளதுபோலவே, எம்பிரான் நபிகள் நாயகம் (ஸல்) அவர் களும் அறிவுத் தேட்டத்தை ஆண், பெண் ஆகிய இருபாலரின் மீதும் கடமையாக்கி வைத்துள்ளார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்பகாலம்
அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய காலத்தில் மக்காவில் எழு தவோ, வாசிக்கவோ அறிந்தவர்கள் அரிது. கதை சொல்லலும்,கவிதை பாடலும் சொற்ப வானசாத்திர அறிவுமே அரேபியரின் அறிவுப் பரப்பாயிருந்தது. இந்நிலையில் வாழ்ந்த மக்களிடையே அண்ணல் நபியவர்கள் அமைத்த இறை வணக்கத்திற்கான மஸ்ஜித்களே இஸ்

Page 41
லாத்தின் ஆதி அறிவுக் கூடங்கள் என்று கூறலாம். நபிகள் நாயகம் அவர்கள் இறைவனது இல்லமாம் மஸ்ஜித்களில் அமர்ந்துதான் தங் கள் அறிவுரைகளையும் நிர்வாக விவகாரங்களையும் நடத்தி வந்தார் கள். அவர்களுக்குப் பின்னர் இஸ்லாமிய அரசை ஏற்று நடத்திய கலீபாக்களும் மஸ்ஜித்களையே அறிவொளி பரப்பும் அரும்பீடங்க ளாக்கிக் கொண்டார்கள். பக்தாத் , திமிஸ்க், குர்துவா, போன்ற புகழ்மிகு நகரங்களிலுள்ள மஸ்ஜித்களெல்லாம் இஸ்லாமிய கலைக் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சியின்போது கூஃபா பஸ்ரா, திமிஸ்க் ஆகிய நகரங்களிலுள்ள பள்ளிவாசல்களிலெல்லாம் பல உலமாக்களை அறிவுரை நிகழ்த்துவதற்காக நியமித்திருந்தார்கள்.
எனவே மஸ்ஜித்கள் இறைவனை வழிபடுவதற்கான தலங்களாக விளங்கியதோடு அமையாது சமூக நடவடிக்கைகள் அனைத்திற்குமே மத்தியதலங்களாகவும் திகழ்ந்தன. மேலும் மார்க்க அறிஞர்கள் மாத் திரமன்றி ஏனைய அறிவுத் துறைகளில் மேதைகளாக விளங்கியவர் களும் பள்ளிவாயல்களையே தங்களின் போதனா பீடங்களாக்கிக் கொண்டார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மஸ்ஜித்களில் திரண்டு அறிஞர் கள் உரைகேட்டுப் பயனடைந்தார்கள். இப்புகழ்மிகு மஸ்ஜித் களி லெல்லாம் அரிய நூல் நிலையங்களும் இருந்தன வென்பது நாம் கூறாமலே விளங்கும். மேலும் இஸ்லாமிய கலீபாக்களும், மன்னர்க களும் நூல்கனைச் சேகரிப்பதிலும், மஸ்ஜித்களுக்கு நூல்களை வக்ஃப் செய்வதிலும், நூல்நிலையங்களை அமைப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள்.
மஸ்ஜித்களின் அறிவுப்பணி
பிாபல கவிஞரும் பிரயாணியுமான பாரசீகத்து நாஸிர் குஸ்ரோ (nasir KhuSroe) உறிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் கெய்ரோவிலுள்ள பள்ளிவாயலை மிகவும் விரிவாக வர்ணிக்கின்றார். கெய்ரோ பள்ளி வாசலில் தினசரி சுமார் ஐயாயிரம் மக்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி அறிஞர்களின் விரிவுரைகளைக் கேட்பதற்காகத் திரள்வார்கள். பெரும்பாலான விரிவுரைகள் திருக்குர்ஆன், உறதிஸ் , ஆகியவை பற் றியதாகவே இருக்கும். இஸ்லாம் வாழ்க்கையின் எல்லாத்துறைக ளுக்கும் அடித்தளமாய் அமைந்து மக்களின் சகல நடவடிக்கைகளோ டும் இணைந்து நின்ற காரணத்தால் பள்ளிவாயலிலே மார்க்க அறி வொளி பரப்பப்பட்ட அதே சமயத்தில் ஏனைய கலைஞானங்களும் அறிஞர்கள் வாயிலாக மக்களுக்குப் போதிக்கப்பட்டன.
- - 66 همه

இவையனைத்திற்கும் மேலாக ஆண்டுதோறும் நிகழும் ஹஜ் யாத்திரை முஸ்லிம்களிடையே அறிவுப்பரிமாற்றத்திற்கு இணையற்ற ஒரு சாதனமாகவும் உதவி வந்துள்ளது. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வரும் ஹஜ் யாத்திரிகர்கள் வழி நெடுகிலும் உள்ள பள்ளிவாயல் களையும், அறிவுக்கூடங்களையும் அறிஞர்களையும் தரிசித்துப்பய னடையும் வாய்ப்பை ஹஜ் ஏற்படுத்தியது,
இத்தகைய சிறப்பு மிக்கதொரு பின்னணியின் மீது தான் நாம் இஸ்லாமிய நூல் நிலையங்களைப் பற்றிய வரலாற்றினைத்தகுந்த வாறு புரிந்து கொள்ள முடியும். இஸ்லாத்தின் சரித்திரத்தோடேயே ஆரம்பமான அறிவுப் பெருக்கத்திற்கு அக்காலத்தே தோன்றிய மாபெரும் மஸ்ஜித்களும், நூலகங்களும்தான் சான்று பகர்கின்றன.
அல்-அஸ்ஹரின் தோற்றம்
அறிவுத்துறையில் மஸ்ஜித்கள் ஆற்றிவரும் பெரும் பணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அல் அஸ்ஹர் பள்ளிவாயலை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு அண்மையில் கிட்டியது. விசாலமான அப் பள்ளியினுள் நான் சென்றபோது அறிஞர் சிலர் உரையாற்றுவதை யும் அவர்கள் முன் மாணவர்களின் கூட்டம் வட்டமிட்டு அமர்ந்து மிகுந்த ஊக்கத்தோடு அவர்களுடைய உரைகளைச் செவிமடுப்பதை பும் கண்டேன். பல்லாயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்ட ாழில் மிக்க அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தையும் பள்ளிக்குப் பக் கத்திலே கண்டு பெ ருமிதம் கொண்டேன்.
உறிஜிரி நான்காவது நூற்றாண்டில் கலீ..பா அப்துல் அஸிஸ் அவர்களால் இப்பள்ளிவாயலுக்குப் பக்கத்தில் சுமார் 35 உலமா"க்கள் தங்கியிருப்பதற்கான இல்லமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ் வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த உலமாக்கள் அல் அஸ்ஹர் மஸ்ஜிதில் அறிவுரை ஆற்றி வந்தார்கள். இதிலிருந்தே அஸ்ஹர் பல்கலைக்கழகமும் உருவாகியது. உலகிலே மிகத் தொன்மையான இப்பல்கலைக்கழகம் ஒரு மஸ்ஜிதைச் சார்ந்தே உருவாகியுள்ளதை எண்ணிப் பார்க்கும்போது இஸ்லாம் பரவிய நாடுகளிலெல்லாம் இதே விதமான அறிவுப் பணிதான் பள்ளிவாயல்களைச் சூழ்ந்து நிகழ்ந்து வந்திருப்பதை நாம் கவனிக்க முடிகிறது.
இவ்வாறாக அறிவொளி பரப்பி வந்த எல்லா முக்கிய மஸ்ஜித் களிலும் தகைமை வாய்ந்த நூல் நிலையங்களும் இருந்து வந்தன என்பது நாம் கூறாமலே விளங்கும். அரசர்களும் மற்றும் தலைவர் களும் பள்ளிவாயல்களுக்குப் பெருந்தொகையான நூல்களை வக். .ப் செய்வது சம்பிரதாயமாய் இருந்து வந்தது.
- 67 -

Page 42
அரசர்களினதும் அறிஞர்களினதும் முயற்சிகள்
பள்ளிவாசல்களிலே அமைக்கப்பட்ட நூல் நிலையங்களைத் தவிர இஸ்லாமிய ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஏனைய நூல் நிலையங்களும் கல்விக் கூடங்களும் மிக மிகவாகும். மேலும் தனிப் பட்ட பல அறிஞர்களும் பெருந்தொகையான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள்.
ஹிஜிரி மூன்றாவது நூற்றாண்டின் மத்தியில் அலி இப்து யஹ்யா முனஜ்ஜிம் என்பார் தமது தோட்டத்தில் 'களினத் அல் ஹிக்மா? என்ற பெயரில் சிறப்பு மிக்க நூல் நிலையமொன்றை நிறுவினார், உலகில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இந்த நூல் நிலையத்திற்கு வந்து கூடினர்.
ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டில் குர்துவாவில் வாழ்ந்த அபுல் முத்ரீஃப் என்பவர் பெருந்தொகையான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவரிடம் எப்போதும் பிரதி எழுதுவோர் அறுவர் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். எவ்விடத்திலாவது ஒரு நூல் உண்டென்று கேள்விப்பட்டால் உடனே அந்நூலினை என்ன விலை கொடுத்தும் வாங் கிவிடுவார். அவர் மெளத்தான பின்னர் அவரது பள்ளிவாயலில் அவர் சேகரித்த நூல்கள் ஒரு வருடம் முழுவதும் விற்கப்பட்டன.
நூல்களைச் சேகரிப்பதில் இப்படியான ஆர்வம் காட்டிய முஸ்லிம் அறிஞர்களின் பட்டியல் மிக விரிவான தொன்றாகும். இவர்களைப் போலவே, அறிவுத்துறையில் ஆர்வம் காட்டிய முஸ்லிம் பேரரசர் களும் எண்ணற்றவராவர். பக்தாதில் அரசோச்சிய ஹாரூன் அல் றஷித், எகிப்தின் கலீபா அல் அஸிஸ், அப்பாஸிய கலீஃபா அல் மாமுன் ஆகியோர் பல்கலைக் கூடங்களையும் நூல் நிலையங்களையும் கட்டி எழுப்பியதோடு அவற்றின் பராமரிப்பிற்கான நிதி வசதிகளை யும் தாராளமாகச் செய்தனர்,
பிரபல நூல் நிலையங்கள்
இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து இஸ்லாமிய சரிதையோடு இணைந்து அறிவொளி பரப்பிய மஸ்ஜித்களைப்பற்றியும் அவற் றோடு சம்பந்தப்பட்ட நூல் நிலையங்கள் பற்றியும் ஒரளவு அறிந் தோம். இனி, முஸ்லிம் உலகில் தனிச்சிறப்புடன் விளங்கிய சில நூல் நிலையங்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன், அதே சமயத்தில் ஐரோப்பாவின் சில பண்டைய கலைப்பீடங்களில் நிறுவப்பட்டிருந்த நூல் நிலையங்களின் தன்மையையும் சுட்டிக்காட் டுதல் பொருத்தமாயிருகும். ஏனெனில் அக்கால முஸ்லிம்கள் அறி வுத்துறையில் எவ்வளவு முன்னேற்றங் கண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த ஒப்பீடு தகுந்த சான்று பகர்வதாயிருக்கின்றது.
- 68 -

பாரசீக மன்னர் அஸாதுத் தெளலா (Azad - ud-Douta) ஷிராஷ் என்னுமிடத்தில் களினத்துல் குத்துப்' (Khazinath-ul-Kothab) என்னும் சிறப்பு மிக்க நூல் நிலையமொன்றை நிறுவினார். இந்த நிலையம் எழில்மிக்க நந்தவன மொன்றின் மத்தியில் பிரமாண்டமான கட்டி டங்களைக் கொண்டதாயிருந்தது. இந்த நிலையத்தில் 360 அறை களும் அழகிய கூடங்களுமிருந்தன.நூ ல்கள் யாவும் பட்டியல் செய் யப்பட்டு அலுமாரிகளில் கிரமமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
பாக்தாத் நகரில் ஷாஹ்பர் இப்னு அர்தளிர் நிறுவிய நூல் நிலைய மொன்றில் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான நூல்கள் வைக்கப்பட்டி ருந்தன.
ஸ்பெயின் தேசத்தில் முஸ்லிம்களின் கலாபீடமான குர்துவாவிலி ருத்த நூல் நிலையத்தில் நான்கு இலட்சம் நூல்கள் இருந்தன. ஸ்பீரி யாவிலுள்ள தீரிப்போலியிருந்த நூல் நிலையத்தில் முப்பது இலட்சம் நூல்கள் இருந்ததாகவும் இவற்றில் சுமார் ஐம்பதினாயிரம் திருக்குர் ஆனில் வியாக்சியான நூல்கள் என்றும் கூறப்படுகின்றது.
இஸ்லாம் தோன்றிய ஒரு சில நூற்றாண்டுகளுக்குள்ளேயே இத் தகைய மகத்தான அறிவு வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் அக் கால முஸ்லிம்கள் இஸ்லாமிய நெறி பிறழாது கடைப்பிடித்த வாழ்க்கை முறைதான் என்பதையும் இங்கு நாம் நினைவுறுத்தல் அவசியமாகும்.
ஐரோப்பாவின் நிலை
முஸ்லிகளிடையே வியக்கத்தக்க அறிவுக் களஞ்சியங்களான நூல் நிலையங்கள் பெருகி வளர்ந்த காலத்தே ஐரோப்பாவின் நிலையைச் சற்றுக் கவனிப்போம். கி. பி. 9ம் நூற்றாண்டில் பிரபல நகரமான காண்ஸ்டன்ஸிலிருந்த கிருஸ்தவ தேவாலயத்தில் 356 நூல்கள் மட் டுமே இருந்தன. N
பெனடிக்ட்பியூரன் என்ற நகரிலிருந்த நூல் நிலையத்தில் 11ம் நூற்றாண்டில் சுமார் 100 நூல்களே இருந்ததாகக் கூறப்படுகின்றது. அடுத்த நூற்றாண்டில் பெம்பெர்க் நகரத் தேவாலயத்தில் 96 நூல் கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. இச் சில உதாரணங்களே இஸ் லாமிய நூலகப் பாரம்பரியத்தின் பெருமை பேசப்போதுமாகும்.
ܚ- 69 ܘܚ

Page 43
1 O.
11.
12.
13.
14.
15.
16.
உசாத்துணை நூல்கள் ( IEEFEEEWCES)
McColvin, Lionel R Libraries for children. London, Phoenix House, 1961.
Ralph, R. G. The library in education. London. Phoenix House, 1960. ‘ , Yates, Jean Key. Introduction to librarianship. New York, McGraw Hill, 1968.
Amarasiri M. S. U. (Ed) National library of Sri Lanka: Commemorative volume. Colombo, Sri Lanka National Library Services Board, 1990.
Harrison, K. C. Public libraries today. London,
Crosby Lockwood, 1963.
Davies, Ruth Ann. The School library : a force for educational excellence. London, Grafton, 1969. Wheelar, Joseph L. (and) Goldhar, Herbert. Practical administration of public libraries. New York, Harper and Row, 1962. - Esdaie, A National libraries of the world. London, Grafton, 1934. Corea, shwari (Ed.) Treasures of Knowledge. Colombo, Municipal Council, 1985. Symposium on National libraries, their Prob
ems and prospects. Paris, UNESCO, 1963. Kandiah, P. Report of the Commission on the Public library. Colombo, 1958. Harrison, K. G, First steps in librarianship. London, London, Grafton, 1960. Thani Nayagam, Xavier S, The first book printed in Tamil' Tamil Culture, Vol. VI (3) July 1958. (Madras), Academy of Tamil Culture, 1958.) Escarpit, Robert. The book revolution. London, George G. Harrap, 1966. Steinberg, S. H. Five hundred years of printing. London, Faber and Faber 1959. Jennet, Sean. The making of books, 3rd ed. London, Faber and Faber, 1964.


Page 44
No No. 「 |-
s
| | | | | | |
T ,No, | | |, }, ) |-| () |- ( ) |-+)||-), s',