கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செந்தமிழ்த் தேன்

Page 1


Page 2


Page 3

செந்தமிழ்த் தேன்
புதுக்கிய பதிப்பு

Page 4
"செந்தமிழ்த் தேன்"
முதற் பதிப்பு 1959; மறு பதிப்பு 1962 தொகுப்பாசிரியர்கள்:
வித்துவான் பொன். முத்துக்குமாரன் பீ. ஒ. எல். Jr. g. Drt F (BT tués i B. A. (Lond)
செந்தமிழ்த்தேன்
(புதுக்கிய பதிப்பு)
முதற் பதிப்பு 1965
புதுக்கித் தொகுத்தவர்:
தி. ச. வரதராசன்
பதிப்புரிமை: - வரதர் வெளியீடு ~ -
226, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
^سمبر^محی^محمۂ محم^م. برہ۔ ہبر ہے

பதிப்புரை
"ஈழத்து அறிஞர்கள் பலருடைய கட்டு ரைகளைக் கொண்டதான ஒரு நல்ல கட்டு ரைத் தொகு தி, க. பொ. த. வகுப்பு மாணவர்களுக்கு, இலக்கிய பாட நூலாகத் தேவை’ என்ற குரல், இந்நூல் தோற்று வ தற்கு முதற் காரணமாயிற் று.
"பாடப் புத் தகம் வெளியிடுதலை ஒரு தொழிற் கண்ணுேட்டத்துடன் கவனிக்கும் அன்பர்கள், "இத்தொழிலையும் எம் நாட்டில் வளர்க்கவேண்டும்" என்று என்னை ஊக்கி யது மறு காரணமாயிற்று.
தகுந்த அனுபவமும் அறிவும் மிக்க வித்துவான் பொன். முத்துக் குமாரன் அவர் களும், திரு சு இராசநாயகம் அவர்களும் தொகுத்துத் தந்த ‘செந் தமிழ்த் தேன்’ என்ற நூலில், சிறந்த பத்துக் கட்டுரைகள் ஆயத்தமாக இருந்தமை எனக்குக் கை கொடுத்தது. SSS SSqSqqS
ஈழத்திலுள்ள தகுதிவாய்ந்த பேரறி ஞர்களிடம் இந்நூலுக்கான முதல் நோக்

Page 5
கத்தைத் தெரிவித்துக் கேட்டபோது, அவர் கள் மிக விருப்புடன் கட்டுரைகளை எழு தித் தந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்து மனமார்ந்த நன்றி உரியது. ஈழத் துக் கல்வியுலகும் அப் பெருமக்களுக்குக் கடமைப்பாடுடையது.
இந்நூல் எ ந் த நோக்கத்துக்காகத் தொகுக் கப்பெற்றதோ, அவ்வளவில் மிக வெற்றியடைந்துள்ளது பற்றி ம கி ழ் ச் சி யுடன் இதனை வெளியிடுகின்றேன்.
வர தர் வெளியீடு, தி. ச. வரதராசன்,
யாழ்ப்பாணப நிர்வாகி
1 9-2-65

பொருளடக்கம்
1. தெய்வப் புலவர் திருவள்ளுவர் 7
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
3. உடலும் உளமும் 13
- as. F. Sy QB6ir 5 jö 60 M. Sc., (Lond)
3. குட்டிப் பிசாசும் உரொட்டியும் 20
- லியோ ரோல் ரோஸ் ய்
(தமிழாக்கம்: தேவன்-யாழ்ப்பாணம்)
4. ஞாயிற்றுப் பொட்டுக்கள் 26
– gł. 69. ubu95) 6, 73660Tub M. A i Ph D; Bsc.
5. தமிழர் கண்ட சமுதாயவாழ்வு B1
- வித்துவான் பொன், முத்துக்குமாரன் M. A., B, O, L
6. சரித்திரப் பேரறிஞர் வி. கனகசபைப்பிள்ளை அவர்கள் 37
- ச. அம்பிகைபாகன் B, A,
7. & L.-6it Lul-6b 41
- பூஞரீல பூரீ ஆறுமுகநாவலர்
8. தருமம் தக்லகாக்கும் 45
- டாக்டர் உ. வே. சாமிநாதையர்
9. நமது தாய்காடு 66
- வித்துவான் சி. ஆறுமுகம்
10 ஒத்த மரபு 60 - வித்துவான் கி. வா. ஜகன்நாதன் M A, M: O, Lெ
11. கம்பர் கண்ட வாலி 64
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
19. ஏன் இந்தத் தயக்கம்? 79 -- L — IT si L - if (typ 6NJU 5 T mT OF 6ör M. A , M. o., L. Ph., I).

Page 6
15,
14.
15.
16.
17.
18.
19.
இலக்கியங்களில் நகைச் சுவை 87
- செந்தமிழ்மணி, பண்டிதர் பெர். கிருஷ்ணபிள்ளை
ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் 93 – U6ö7 q-5 ff g. «F45 T Gaulh M. A. (cey), D, Phil (Oxon)
அணுவினல் ஆக்கமும் அழிவும் 99
– 9. gugś867 b GT693 uff M As, Ph.D. (Cantab)
M. Sc. D. Sc. (Lond)
நான் விரும்பும் நாடு 104
- வித் துவான் பொன். முத்துக்குமாரன் B, O, L.
தங்கத் தாத்தா 108
- செந்தமிழ்மணி, பண்டிதர் பொ, கிருஷ்ணபிள்ளை
கன்னன் 112
- சுவாமி விபுலானந்தர்
மேடை நாடகத் தயாரிப்பு 15
- க. செ. நடராசா B. A.

தெய்வப் புலவர் திருவள்ளுவர்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
அறம் உரைத் தானும் புலவன்முப் பாலின் திறம் உரைத் தானும் புலவன் - குறுமுனி தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவனென்றக் கால்.
மூவேந்தரும் போய் முச்சங்கமும் ஒடுங்கிப் பாவேந்தர் காற் றிலே அகப்பட்ட இலவம் பஞ்சுபோலே பறந்து அஃலந்து திரிந்த தொரு காலத்திலே, புலவர் ஒருவர் சங்கத்துப் புலவர்களைக் கல் லிலே சமைத்த உருவங்களிலேயாதல் தரிசிக்க விரும்பித் தமிழ்ச் சங்கம் இருந்த இடமாகிய மதுரைக்கு வந்தார். அப்பொழுது அங்கே ஒருவன் தனக்குப் 'பாண்டியன்' என்று பெயர் வைத்துக்கொண்டு, அம் மதுரையை அரசபுரிந்துகொண்டிருந்தான். அவன் அநூலோம பிரதிலோம பாண்டியர்களின் வரிசையைச் சேர்ந்தவன். சங்கத்துப் புலவர்களைத் தரிசிக்கும் பொருட்டு மதுரைக்கு வந்த புலவர் இக் தப் பாண்டியனேயும் வந்து கண்டார்.
பாண்டியன் தன் பரிவாரங்களுடன் புலவரை வரவேற்றுப் பெரிய உபசாரங்கள் செய்தான். அவனுடைய சபையில் உள்ள வித்துவான்களில் ஒருவர் புலவரை எல்லைகடந்து பாராட்டினுர்.
"இந்தப் புலவர் அந்தக்காலத்திலே இருந்தால், இப்பொழுது சங்கத்துப் புலவர்களின் எண்ணிக்கையில் ஒர் எண் கூடியிருக்கும்." என்பது அந்த வித்துவானுடைய பாராட்டுரையில் ஒரு பகுதி.
சங்கத்துப் புலவர்களின் வரிசையிலே, தம்மையும் ஒரு புலவர் என்று வைத்துப் புகழ்ந்ததை, அங்கே வந்த அந்தப் புலவராற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அப்புலவர் சற்றே பொறுமை யிழந்து, தம்மைப் புகழ்ந்தவர்களுக்கு வணக்கஞ்செய்து, மிக்க தாழ் மையுடன், தமது நிலையைப் புலப்படுத்தி ஒரு பாட்டுப் பாடினர்.

Page 7
8 செந்தமிழ்த்தேன்
'அறமுரைத்தானும் புலவன்" என்று தொடங்குகின்ற பாட்டுத்தான் அந்தப் புலவர் பாடிய பாட்டு.
"அறம் உரைத்தானும் புலவன்?
திருக்கைலாசத்திலே கல்லால விருட்ச நிழலிலே ஜனகர் முத லிய முனிவர்களுக்கு அறங்களை உபதேசித்தருளியவர் கடவுள். அங் தக் கடவுளும் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்ற பெயர் தரித்துத் தலைச் சங்கத்திலே தலேமைப் புலவராயமர்ந்தவர். அவ ரும் புலவர்.
'குறுமுனிதானும் புலவன்'
குறுமுனி-அகத்தியர். கல்வி என்கின்ற பல்வேருன கடல்களை யெல்லாம் முழுதொருங்கு குடித்தவர் அகத்தியர். அவர் தலேச்சங் கத்திலும் இடைச் சங்கத்திலும் புலவராய் இருந்தவர். அவரும் புலவர்,
'முப்பாலின் திறம் உரைத்தானும் புலவன்’
முப்பால்-திருக்குறள். அறம், டொருள், இன்பம் ஆகிய மூன் றன் இயல்புகளையும் உள்ளவாறு திறம்பட எடுத்துச் சொன்ன வர் திருவள்ளுவர். சங்கத்துப் புலவர்களாலே "தெய்வப் புலவர்" என்று கொண்டாடப்பட்டவர் அவர். இந்த உலகத்திலே அவரும் புலவர்.
“யானும் புலவன் என்றக் கால்
கடவுளே முன்னிட்ட சான்ருேரர்களான புலவர்களின் வரிசை யிலே, புல்லறிவு படைத்த என்னேயும் ஒரு புலவன் என்று வைத்து மதித்தால், அதற்கு யானும் உடன்பட்டால்,
'தரணி பொறுக்குமோ”
புலமை உலகம், “ஏ ஏ! இவனும் புலவனு? அந்த வரிசைக்கு இவன் யாவன்?" என்று என்னை கிந்திக்கும் அன்றே!
இவ்வாறு "அறம் உரைத்தானும்’ என்ற பாட்டுக்கு ஒரு விளக்க உரையும் கூறித் தமது தாழ்மையைத் தெரிவித்துக்கொண்டார் அந் தப் புலவர் என்பது பழையதொரு கதை.

தெய்வப் புலவர் திருவள்ளுவர் 9
“வரிசை அறிதலோ அரிதே' என்பது சங்கத்துப் புலவரா கிய கபிலரின் வாக்கு. ஒருவருடைய தகுதியை அறிந்து, எந்த வரி சையில் அவரை வைத்து மதிக்கவேண்டுமென்பதை உணர்வது எளிதன்று. 'அறம் உரைத்தானும்" என்ற பாட்டில் ஒரு வரிசையை அந்தப் புலவர் அமைத்திருக்கின் ருர், அது பெரிதும் சிந்தனத் குரியது.
எல்லா அறிவும். எல்லா முதன்மையும் படைத்தவர் கடவுள். தலச் சங்கத்திலே தலைமைப் புலவராயிருக்தவர் கடவுள். அவர் குறித்த வரிசையிலே முதற்கண் இருக்கின்றர்.
இடைச் சங்கத்திலே திலைமைப் புலவராயிருந்தவர் அகத்தியர்; அவர் முதற் சங்கத்திலும் இருந்தவர்; மகா முனிவர்; கடவுளின் பழுத்த அருளுக்குப் பாத்திரமானவர். அவர் அந்த வரிசையிலே இறுதிக்கண் இருக்கின் ருர்,
திருவள்ளுவ நாயனச் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவர். ஆனல் சங்கத்தில் அவர் அங்கத்தவர் அல்லர். அப்படியிருந்தும் கடவுளுக்கும் அகத்தியருக்கும் மத்தியில் கடுராயகமாய் அவர் வீற் றிருக்கின் ருர், அவருடைய தெய்வப் புலமை அவருக்கு அக்த இடத்தை அளித்திருக்கின்றது. கடவுளின் அருளுக்கும் அகத்திய ரின் மதிப்பிற்கும் பாத்திரமானவர் தெய்வப் புலமைத் திருவள் ளுவ காயர்ை. இந்த வரிசையைப் புலமையுலகம் ஒப்புக்கொள் ளும். சங்கத்துப் புலவர்கள் அவரைத் தெய்வப் புலவர் என்கின் றனர். w
* முப்பாலில் நாற்பால் மொழிந்தவர்.
தெய்வத் திருவள்ளுவர்"
என்கின்றனர் தீரந்தையார் என்கின்ற புலவூர், காற்பால்-அறம், பொருள், இன்பம், வீடு.
*தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் -6s gay திருவா சகமும் திருமூலர் சொல்லுழ் ஒருவா சகமென் றுணர்”

Page 8
செந்தமிழ்த் தேன்
என்பது ஒளவையாரின் திருவாக்கு உபநிடதங்கள், தேவா ரங்கள் வேதாந்த குத்திரம், திருக்கோவையார், திருவாசகம், திரு மந்திரம் என்கின்ற வரிசையில் திருக்குறள் வரிசை செய்யப்பட் டிருக்கின்றது. முனி-வியாச முனிவர். முனி மொழி-வேதாந்த சூத் திரம் எனப்படும் பிரம கத்திரம், அது உத்தர மீமாம்சை எனவும் படும். திருக்குரள் முதல் திருமந்திரம் ஈருன்வைகள் பொருள் ஒருமை படைத்தவைகள், "ஒரு வாசகம்’ என்பது அதனேக் குறிக் கின்றது.
"எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு-முப்பாற்குப் பாரதஞ்சீ ராம கதைமருப் L153לr5כנL-Lנגינה ח
நேர்வனமற் றில்ல நிகர்"
என்றிங்கனம் முப்பாலாகிய திருக்குற&ளப் பாராட்டுகின் ரூர் பாரதம் பாடிய பெருந்தேவனுர், வியாசர், வான்மீகி முதலிய இரு டிகளின் நூலும், இறைவனருளிய சுருதிகளும் திருக்குறளுக்கு ஒப் பானவைகள், சாதாரண மனிதர்கள் செய்த நூல்கள் திருக்குற ளோடு ஒப்பிடத் தகாதவைகள் என்பது பெருக்தேவனுர் சுருத்து. 'நாலடி" என்று தொடங்குவதொரு பிற்காலத்துப் பாடலிலே முப் பாலே வரிசைசெய்து கணக்கிடுவது பெரிய கப்பு. முப்பாலோடு வரிசை செய்து சில நூல்களே உயர்த்த முயன்றது அந்தப் பாஸ் அது கிற்க.
மது, மிருதியாகிய ரீதிநூல் செய்தவர். 'ஆதித்தன் குவி முதல் வன் மதுவினே யாரறியாகார்" என்று கம்பர் மதுவைப் பாராட்டு கின்றர். மிருதி இறைவனருளிய சுருதிக்கு அயவில் வைத்துப் பாராட்டப்படுவது. மிருதி சிறப்புக் தர்மங்களே எடுத்துச் சொல்லு கின்ற சிறப்புநூல். திருக்குறள் பொதுத் தர்மங்கள் எடுத்துச் சொல்லுகின்ற பொது நூல்,
சிறப்புத் தர்மங்கள்ே எடுத்துச் சொல்வது எளிதன்று. ஒரு குற்றத்தை உயர்ந்தோரான வினுேபாஜி செய்தால் அவருக்குத் கண்டனே வேறு; பழிக்கஞ்சாதவர்கள் செய்தால் அவர்களுக்குத் தண்டனே வேறு. "நற் பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை" என்பது

தெய்வப் புலவர் திருவள்ளுவர்
காட்டில் வழங்குவதொரு பழமொழி, பதினுயிரம் வார்த்தைக்கும் அசையாத பெண்டிருமுண்டு. அப்பெண்டிருக்கு விதிக்கும் தண் டனே வேறு. அவரவர் தகுதிக்கேற்பத் தர்மங்களே ஆராய்ந்தது மீது அப்படிப்பட்ட மநுவோடு ஒப்பிட்டுப் பேசும் பெருமைபடைத் துே பொதுத் தர்மங்களே ஆராய்ந்ததாகிய திருக்குறள் சிறப்புக் கர்மங்களேப் போலவே எல்லாருக்கும் பொதுவான பொதுத் தர் மங்களே எடுத்துச் சொல்லுவதும் எளிதன்று. காலங்கள், தேயங் கள், சமயங்கள், வருணங்கள், ஆசிரமங்கள் என்றிவைகளேயெல் லாம் நோக்கிப் பொதுத் தர்மத்தைக் காண் டல் அரிதினும் அரிது. 'செயற்கரிய செய்வார் பெரியர்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வள் ஒருவரே இலக்கியம்.
உலகப் பொது நூலாய், 'ஒன்ருக கல்லது" என்று ஒரு நூலேக் கூதும்படி கேட்டால், ஒரே ஒரு விரலே மாத்திரம் மடித்துக் கூறக் கூடிய துல் திருக்குதள் ஒன்றுமேயாம், அயலாக மற்ருெரு விரலே மடித்துக் கூநக்கூடியதொரு பொது நூல் இந்த உலகத்தில் இல்லே. கீதை மனித தர்மங்களே எடுத்துப் பேசுவதாயினும் கிருஷ்ண நாமம் வருவதால் அதனே ஒப்புக்கொள்ளாதவர்களும் உண்டு. திருக்குறளே ஒப்புக்கொள்ளாதவர்கள் இல்லே, திருக்குறள் தேயத்தானன்றிக் காலத்தானும் பொதுவாயது.
"என்றும் புலரா தியானர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையது"
என்பது இறையனூர் வாக்கு யானர்-அழகு. அது சொன் முடிபு பொருண் முடிபு பற்றி வருவது. யானர் என்றும் புலராதென்க.
ஒளவையார் வள்ளுவரைத் தேவர் என்கின்றர். தேவர்களுக் குப் "புலவர்' என்பது மற்ருெரு பெயர். மெய்ப்புலமை படைத்த வர்கள் தேவர்களே. வள்ளுவர் பிறப்பால் மனிதரேயாயினும், மெய்ப் புலமையால் தேங் வருக்கத்தைச் சேர்ந்தவர். அன்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். அதனுலும் அவர் தேவர். அவர் புலமை தெய்வப் புலமை அவரே மெய்ப் புலவர்.

Page 9
2 செந்தமிழ்த் தேன்
*புலவர் திருவள் ஞவரன் றிப் பூமேற் சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு பிறங்கொளி மா?லக்கும் பெயர்மாலை மற்றுங்
கறங்கிருண்மா லைக்கும் பெயர்"
என்பது மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார்க்கிழார் பாட்டு, பூர்வபக்கத்து மாலேக்காலமும் மாலேக்காலம்; அபரபக்கத்து மாலேக்காலமும் மாலேக்காலம்!
இந்தத் தரணியிலே,
திருவள்ளுவரும் புலவர்; மற்றவர்களும் புலவர்
 

உடலும் உளமும் 5. F. 9 (56ipb5 M.Sc. (London)
மக்களாகிய காங்கள் சுகமாகவும் இன்பமாகவும் வாழ்வதற்கு எங்களுக்குள்ள உடலேயும் உளத்தையும் பற்றிய நல்லறிவு இன்றி யமையாது வேண்டப்படுகின்றது. உடனலமும் உளகலமும் ஒன்றி லொன்று தங்கியுள்ளன. ஆதலினுல், அவற்றின் அமைப்பு, இயல்பு, தொழிற்பாடு இம்மூன்றையும் நாம் நன்கறியாவிடில் இன்பமான சுகவாழ்வைச் சிறக்க வாழ்தல் அரிதினுமரிது.
மதிநுட்பத்தைப் பிரயோகித்து அனுபவ வாயிலாகப் பல்லா யிரம் ஆண்டுகளாக முன்னுேர் பட்டறிந்து தெரிக்தெடுத்து எமக்கு விட்டுப்போன பல கருத்துக்களும் கொள்கைகளும், அவற்  ைற ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கை விதிகளும் பழக்க வழக்கங்க ளும் உள்ளன. எனினும், இவ்வாறு பெற்ற அறிவுக்கு இக்கால விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்து பெற்ற அறிவுக்குள்ள திட்ப நுட் பமும் ஆழத்தொடு விசாலமும் இல்லே. சென்ற நூற்ருண்டின் பிற் கூற்றிலும், இந்த நூற்றண்டில் இது வரையிலும், விஞ்ஞானம் பல துறைகளிலும் அடைந்த விருத்தியும் வளர்ந்த வளர்ச்சியும் ஆச்ச ரியமானவை. பெளதிகவியல், இரசாயனவியல், புவியியல், உட வியல், உளவியல், இன்னுமன்ன பல்லியல்கள் எ ல் ல 7 ம் பண்டு தொட்டு வழங்கிவந்த கொள்கைகளை உறுதிப்படுத்தியும், திருத்தி யும், மாற்றியும், மறுத்தும், உண்மைகளைப் புதிதாகக் கண்டறிந்து போதுமான ஆதாரங்களுடன் நிறுவியும், அவற்றைப் பிரயோகித்து உலகைப் பிரமிக்கச் செய்கின்ற செயல்களேச் செய்து ம், ஒயா தோங்கி வளர்ந்துகொண்டு வருகின்றன. இந்த விஞ்ஞான வளர்ச் சிக்கோ எல்லே காண முடியாது. எல்லே இல்லையென்றும் கூறலாம்.
விஞ்ஞானக் கலைகள் ஒவ்வொன்றும் பல துறைகளாகப் பிரிந்து வளருகின்றன. பெளதிகவியலானது சடப்பொருளியல்பியல், வெப் பவியல், ஒளியியல், ஒலியியல், நீர் நிலையியல், மின்னியல், காந்த வியல் என்னும் கிளைகளாகப் பிரிந்து, முன்னேறிக் கொண்டிருக் கின்றதை உதாரணமாகக் கூறலாம் விஞ்ஞானக் கலேகள் வெவ் வேருக வளருகின்றனவெனினும், ஒன்றுக கொன்று துணையாக பயன்படுகின்றன. உடலியலாராய்ச்சிக்கு இரசாயன வியலோடு பெளதிகவியலும், உளவியலுக்கு உடலியலும் சிறப்பாக உதவு
3.

Page 10
செந்தமிழ்த் தேன்
கின்றன. கலே எதுவாயினும் அதன் பொருளடக்கம் பரந்தகன்ற தாயும், அதன் பாகங்கள் வெவ்வேருகப் பிரிந்து நிற்கத்தக்கன வாயும் இருக்குமிடத்து ஆராய்ச்சிக்கு வாய்ப்பாக, கிளேக்ககலகளே விஞ்ஞானிகள் அமைத்துக்கொள்வர். வேருன ந?லகள் ஒன்ருெ டொன்று உறவு பூண்டிருத்தலிலும் பன்மடங்கு ஒரு கலேயின் கிளே கள் யாவும் தம்முள் அன்னியோன்னிய உறவு பூண்டுள்ளன
எங்கள் உடலானது அதனுள்ளே எங்கனும் பரந்து கிடக் கின்ற தசை என்பு, நரம்பு குருதி ஆகிய அம்சங்ககளயும், மூ8ள, இதயம், சுவாசப்பை, இரைப்பை, குடல், ஈரல், சிறுநீரகம், சுரப் பிகள் ஆதிய உள்ளுறுப்புக்களேயும், தோல், பொறிகள் முதலாய புறவுறுப்புகளேயும் உடையது. இவற்றுள் சிலவற்றைப் பற்றிய ஆராய்ச்சிப் பரப்புக்கள் சிறப்பானவையாகவும் பரந்தனவாகவும் இருத்தவினுல் அவை கிளேக்கலேகளாகப் பிரித்து வளர்க்கப்படு கின்றன. முளேயோடு நரம்பு மண்டலத்தைப் பற்றியவொரு பெருங் கிளேக்கலேயும், சரப்பிகளேப் பற்றிய இன்னுெரு கிளேக்கலேயும் இன்னுமன்ன வேறு சிறு கிளேக்கலேகளும் உண்டாகி விளங்குகின் றன. இவ்வாறு, ஆராய்ச்சிக்காக உடலுறுப்புக்கள், பிரித்துத் தனி யாக அல்லது தொகுதிகளாக, ஆராயப்படுகின்றன வெனினும், உள்ளபடி அவை எல்லாம் ஒன்ருேடொன்று நெருங்கிய தொடர் புடையனவாகக் தொழிற்படுகின்றன. அவற்றுள் எதுவேனும் ஒன் றுக்குப் பங்கம் கேர்த்தால் அல்லது அதனின் மாற்றம் ஏதும் ஏற்பட் டால், அக்இல் உடல் முழுதும் தாக்கப்படும். அது மாத்திரமன்று, உளமும் தாக்கப்படும்.
விஞ்ஞான முறைப்படி வளர்க்கப்பட்டு வருகின்ற இளங்ககில் யாகிய உளவியலும், விசாலம் மிக்குள்ள விரிந்தவொரு பெருங்ககல யாதவின், அதுவும் கிளேகளாய்ப் பிரிந்து ஆராய்ச்சிக்கு இடமாய் இருக்கின்றது. பெளதிக விஞ்ஞானத் துறைகளில் ஆராய்ச்சி செய் வதுபோல, உளவியற்றுறைகளிலும் நேராக எண்ணல், அளத்தல், நிறுத்தல் முறைகளேப் பிரயோகித்து ஆராய்தல் சாத்தியமன்று என்பது வெளிப்படை. ஆதலினுல், உளத்தின் தொழிற்பாட்டை ஆராய்ந்தே உளத்தைப் பற்றிய உண்மைகளே அறிகின்ருேம். இக் ததி தொழிற்பாடுதானும் ஆராய்வோருக்கு உடல்வாயிலாகவே புலப் படுகின்றது. உளமானது தன்ஃனத் தானே உற்று நோக்கி ஆராயும் இயல்புடையது என்றுகொண்டு, உளக்கலேயை ஒருகாலம் வளர்த்து வந்தனர். ஆணுல் இந்த முறைக்கு பல இடர்களும் இழுக்குக்களும்

உடலும் உளமும்
உண்டென்று கண்டு, விஞ்ஞானமுறைகளே அனுட்டிக்கலாயினர். அதன் பின்னர்தான் உளக்கலே உள்ளபடி ஓங்கி வளரத் தொடங் கியது
படும். அவையாவன புத்தி அல்லது விவேகம், சித்தம், உள்ளுணர்வு அல்லது உளச்சுவை என்பன இந்த உளத்துக்கு உடலிலே இருப் பிடம் ஒன்றுளதா, இருப்பின் எங்குளது? மூளேயில7, நரம்பு மண்ட லத்திலா. அன்றேல் வேறெங்கேனு மா? இந்த விணுவுக்கு விடை யைப் பலவாறு கூறிவந்திருக்கின்றனர். இக்கால ஆராய்ச்சியின் பேருக, உடலும் உளமும் ஒன்றுக்கொன்று புறம்பானவை அல்ல வென்றும், பிரதானமாக மூக்ள யோடும், அதற்குப் புறம்பேயிருந்து அதனுேடு இக்ணக்கப்பட்டிருக்கின்ற பெருக்தொகையான நரம்புக ளின் மண்டலத்தோடும் உளத்தைத் தொடர்வுபடுத்தியும் கூறலாம். இவ்வாறு, உளத்தினது உறைவிடத்தைச் சிறப்பாக முளயாகக் கொண்டு. உடலெங்கணும் அது வியாபித்திருந்து தொழிற்படுகின்ற தென்று கொள்ளுதற்குப் போதுமான ஆதாரமுண்டு. இந்தக் கொள் கையை தனது மதிநுட்பத்தினுலும் உள்ளொளியினுலும் கொண்ட கவிப்பெருமான் கம்பர், தமது இராமாயணத்தில் ஒரு கவியில் அழ காக அமைத்திருக்கின்றனர். போர்க்களத்தில் மாண்டுகிடந்த இரா வனனது உடலில் "மேலும் கீழும் எள்ளிருக்கும் இடணின்றி" அம் புத் துளேகள் இருப்பதைக்கண்ட அவர் பத்தினியார் மண்டோதரி, பல அம்புகளே எவராயினும் ஒருவர்மீது எய்தல் இராமபிரானது வில்லாண்மைக்கும் மகத்துவத்துக்கும் பொருந்தாதாதலின் அன்னுர் விடுத்த அம்பு ஒன்றேயொன்றென்னும் முடிபுக்கு வந்ததும், பல துளேகளே ஒரே அம்பு உண்டாக்கியது எங்ங்னம் என்று தம்மையே வினவினர். விடையைக் கண்டனர். கண்டதும், 'கள்ளிருக்கு மலர்க் கூந்தற் சான கியை மனச்சிறையிற் கரந்த காதல், உள்ளிருக் கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி' என்று புலம்பினர். காதல் என்பது சில உள் நிகழ்ச்சிகளோடு எழுகின்ற வோர் உள்ளுணர்வு. இதயமே அதனிருப்பிடம் என்று ஆதாரமின் நிக் கூறப்படுகின்று கூற்றைப் புறக்கணித்து, உடலெங்கனும் காதல் என்னும் உள்ளுணர்வு உண்டென்று உறுதியாகக் கம்பர் கூறிப் போந்தனர்.
உளத்துக்கு மூன்று பேருறுப்புக்கள் உண்டென்று கொள்ளப்
உள்ம் தொழிற்படுமாற்றை நோக்குமிடத்து, எங்களுடைய அனுபவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப்பற்றி அறிதல் வேண்டும். பிரத்தியட்சமாகத் தெரியக் கிடக்கின்ற மெய், வாய்,

Page 11
செந்தமிழ்த் தேன் கண், முக்கு செவி ஆகிய ஐந்துமே எங்களுக்குள்ள பொறிகள் என்று பண்டுதொட்டுக் கூறிவந்தனர். ஆலுைம், இன்னும் வேறு பொறிகளும் எமக்குண்டென்பது இப்போதெமக்குத் தெரியக்கிடக் கின்றது. அவையாவன, உடலியக் கத்தோடு தொடர்புடைய தசை நார்ப் பொறியும், வெப்பநி3லயை உண்ருதிற்குள்ள சூட்டுப் புள்ளிப் பொறிகளோடு குளிர்ப்புள்ளிப் பொறிகளும், கோவையும் நோவ னேய உடற்றுன் பங்கஜ் யும் உணருதற்குள்ள கோப்புள்ளிப் பொறி களும் பசி, தாகம் முதலியனவற்றை உண்ருதிற்குள்ள உட்பொறி களும். இவற்றை நாம் ஐம்பொறிகளோடும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
பொறிகள் வாயிலாக நாம் பெறுகின்ற அனுபவங்கள் உன்ாத்துக் குப் புலப்படுகின்றன. புலப்பட்டதும் அவற்றை உளம் கிரகிக்கின் றது. உதாரணமாக, கட்புலனே சோக்குவாம். புறத்தே புள்ளவொரு பொருளே நாம் கண்டதும், உடனுக்குடனுக கிகழுகின்றவொரு நிகழ்ச்சியாக அக்தக் காட்சி எமக்குத் தோன்றுகின்றது எனினும், உள்ளபடி இந்த நிகழ்ச்சியை ஒன்றன்பின் னுென்முக நிகழ்கின்ற நான்கு கூறுகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக, உடலுக்குப் புறத்தே காட்சிப் பொருளின் அணுக்கள் எல்லாம் ஒயாது வேகமாக அதிர்ந்துகொண்டிருக்க, அவற்றின் அதிர்வுகளானவை, ஆங்கிலத் தில் ஈதர்" எனப்படுபவை, ஆகாய நுண்ணணு மண்டலத்தில் எக் திசையிலும் அ?லகளே ச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இரண் -7வதாக, இந்த அலேகள் கண்ணினுட் புகுதலும், ஆங்குள்ள கண் இணுடி உடனிர், பளிங்கு வில்லே, விழித்திரை ஆதியனவற்றில் சில இரசாயன மாற்றங்கள் எழுகின்றன. மூன்றுவதாக, இந்த மாற்றங் களின் பேருக, மின்னுேட்டத்தை ஒத்த எதுவோவோர் ஒட்டம் கண்ணே முளேயோடு இஆன த்திருக்கின்ற நரம்புகள் வழியே முகிா யில் அதற்குரிய பாகத்தைப் போயடைகின்றது. நான்காவதாக, அக்தி முளேப்பாகத்தில் எவையோ நிகழ்ச்சிகள் நிகழுகின்றன. இவ் வாறு இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நிகழ்ந்ததும் உளம் அந்தப் பொரு ளேக் கிரகிக்க, நாமதைக் காண் கின்ருேம். கண்டதும் உடலின் நிகழ்ச்சி உளத்தின் நிகழ்ச்சியாகிவிட்டது.
உள நிகழ்ச்சிகளே அறிதல், துணிதல், உணர்தல் அல்லது சுவைத்தல் என முன்முகப் பிரித்து நோக்கலாம். இவ்வாறு, அத இனப் பற்றிச் சிந்தித்தற்காகவும் ஆராய்கற்காகவும் பிரித்தபோதி இம், அவை உள்ளபடி ஒருங்கே கிகழுகின்றன. அறிதலின் பேரு

உடலும் உளமும் 7
கச் சிக்தனேகளும், துணிதலின் பேருகச் செயல்களும், சுவைத்த வின் பேருக மெய்ப்பாடுகளும் எழுகின்றன. ஒருதாரணத்தை எடுத் துக்கொள்வாம். கடிநாய் ஒன்றைக் கண்டானுெருவன், அது கடி நாய் என்று அறிந்து, தற்பாதுகாப்புக்காக ஒடித் தப்பிக்கொள் ளவோ, பிறருதவி வேண்டி ஒலமிடவோ, எதுவோ ஒன்றைச் செய்ய முற்படுகின்றன். இவற்ருேடு உடனிகழ்ச்சியாக அச்சம் என்னும் உள்ளுணர்வு தோன்றுகின்றது. அதன் விளேவாக, உடலின் உள் ளேயும் புறத்தேயும் மாற்றங்கள் உண்டாகின்றன. உடலினுள்ளே அப்பொழுது ஆங்கிலத்தில் 'அட்டிறீனற் கிளாண்டு" எனப்படும் அகஞ் சுரக்கும் சிறுநீரக வயற் சுரப்பியானது 'அட்டிரனெலின்"என் னும் பதார்த்தத்தைச் சுரக்கின்றது. இந்தப் பதார்த்தம் ஈரலுக் குப் போய் ஆங்குச் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றவெல்லத்தை விடுதயோக்க, அந்த வெல்லம் இரத்தத்தோடு சேர்ந்து உடலெங் கணும் பரவுகின்றது இவ்வாறது பரவி ஒட்சிசன் எனப்படும் பிராண வாயுவுடன் சேர்ந்து தகனமாகும். இந்தத் தகனத்தால் உண்டாகும் மேலதிகமான சக்தியானது பிரதானமாகத் தசைநார் களே ஊக்க, அவை வழக்கமாக இயங்குதலிலும் பன்மடங்கு பல மாக இயங்கித் தொழிற்படுகின்றன. ஒட அவன் துணிவானுயின், இடர்களேப் பொருட்படுத்தாது வேகமாக ஓடவும், அந்தக் கடிகா யோடு பொருதத் துணிவானுயின் பலமாகப் பொருதவும் வல்லவனு கின்றன். இயற்கையிலே எங்களுக்குள்ளவொரு தற்காப்புப் பொறி யமைப்பாகும் இது. உள்ளுணர்வு அளவுக்கு மிஞ்சி மேலிட்டு அறி வை முற்றுக அடக்கவும் கூடும். அவ்வாறு அறிவு கீழ்ப்படுமாறு உள்ளுணர்வு தன்னுதிக்கத்தைச் செலுத்துமாயின் அவன் செய லற்றுத் தற்பாதுகாப்புச் செயல் எதனேயும் செய்யாது வாளா கின்று விடுவான். இந்த நிகழ்ச்சிகளும் இன்ன பிறவும் உடலினுள்ளே நிகழ, மெய்யின் புறத்தே மயிர் சிவிர்த்தல், நடுங்கய், வியர்த்தல், விழி அகன்று பிதுங்குதள் ஆகிய மெய்ப்பாட்டுக் குறிகள் பிறருக் குத் தெரியத்தக்கனவாகத் தோன்றும்.
அனுபவங்களே நாம் பெற்றபின்னர், அவற்றின் வரலாறுஎன்னே? உடலிலும் அதனுல் உளத்திலும், அவை பதிந்து கிடக்கின்றன. மீட்டும் மீட்டும் ஒரனுபவத்தை நாம் பெறுதலினுல் அதன் பதிவு உறுத்தப்படுகின்றது. இதுவே ஞாபகத்தின் அடிப்படையாகும். ஞாபகம் என்பது எங்களுக்கு இயல்பாகவுள்ள ஆற்றல்களுள் ஒன்று. அதற்கு மூன்று படிகளுள. அவையாவன முதலாவதாக அனுபவத்தைப் பெறுதலும், இரண்டாவதாக அதை உள்த்தில்

Page 12
芷岛 செந்தமிழ்த் தேன்
நன்கு பதித்து கினேவில் வைத்திருத்தலும், முன்ருவதாக வேண் டியவிடத்து அதனே நினேவு கூருதலும், அனுபவங்களுக்கிடையே ஒப்பு, உடனிகழ்ச்சி காரணகாரியத் தொடர்பு ஆகிய பல தொடர் புகள் உள்ளன. இந்தத் தொடர்புகளினுலே அவை இஃணக்கப்பட் டிருத்தவினுல், ஒன்று கினேவுக்கு வர அதனுேடு தொடர்புடைய பல்வேறு அனுபவங்களும் தொடர்ந்து கினேவுக்கு வரும் அன்றேல் அவற்றை நினேவுக்குக் கொண்டு வரலாம். யானே குதிரை என்பன நாற்காலூர்திகள் என்ற ஒப்பினுலும், சோறு கறி என்பன உடனுண் ணப்படுதலாலும், மழை வெள்ளம் என்பன காரண காரியத் தொடர் புள்ளனவாதலினுலும், அவற்றுள் எதுவேனுமொன்று நினேவுக்கு வந்ததும், தொடர்புடைய மற்றையதும் வருதல் இதற்கு உதாரண மாகும்.
எங்களுடைய அனுபவங்களோ எண்ணிறந்தன. அவையெல் லாம் உளத்தில் பதிகின்றனவெனினும், ஒரு சிறு பகுதிதான் நினே விக்கு வரக்கூடிய நிலயிலிருக்கின்றது. மற்றவையெல்லாம் கினேவுக்கு வரக்கூடிய அளவுக்குப் பதியாதனவாய் நினேவுப்புற வுள்ளத்தில் கிடக்கும். அவற்ருேடு, திடுக்காட்டமான அனுபவங்களும் கடும் வெறுப்புக்கிடமான அனுபவங்களும் நினேவுநிலக்குப் புறத்தேயுள்ள உள்ளப்பாகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவை கோளாறுகளேயும் குழப்பங்களயும் செய்து உளநலத்தைக்கெடுத்து உளப்பிணிகளே உண்டாக்க வல்லனவாய்க் கிடக்கின்றன. உளம் இத்தன்மையதாதலின், அதனேக் கடலில் மிதந்து கிடக்குமொரு பனிக்கட்டி மலேக்கு ஒப்பிடுவர் நீரின்மேல் இருக்குமதன் பாகமோ மிகச் சிறிது நீரின் கீழ் இருக்கும் பாகமோ மிகப் பெரிது. முன்னது நினேவுள்ளத்துக்கும் பின்னது நினேவுக்கப்பாற்பட்ட உள்ளத்துக் கும் ஒப்பாகும்.
அறிவுத் துறையில் ஞாபகத்தைப் போன்ற வேறு சில தொகுதி ஆற்றல்களும், அறிதல் நிகழ்ச்சி ஒவ்வொன்றுக்கும் சிறப்பாகவுள்ள எண்ணிறந்த சிறப்பாற்றல்களும் எமக்குண்டு. இவை எல்லாவற் றுக்கும் மேலான பொதுவாற்றல் ஒன்றுண்டு. புத்தி அல்லது விவே கம் என்று முன்னர் இங்கு கூறப்பட்டுள்ளதே அதுவாகும். சிந்த
 

உடலும் உளமும்
னேயில் நிகழுகின்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அது பங்குபெறு கின்றது. என்ருலும், எல்லாச் செயல்களிலும் ஒரே அளவாக அது தொழிற்படுகின்றிலது. ஒரு கருமத்தில் எவ்வளவுக்கது தொ ழிற்படவேண்டும் என்பது அந்தக் கருமத்தின் இயல்பைப் பொறுத் தது. எல்லோருக்கும் ஒரே அளவினதாக இல்லாத இந்தப் பொது வாற்றலாகிய விவேகம் ஏற்றமாக இருந்தாற்ருன், கட்டமும் சிக் கலுமான கருமங்களில் ஈடுபட்டுச் சித்திபெறலாம். பிறவியிலேயே ஒவ்வொருவருக்கும் எல்லே வகுக்கப்பெற்ற இந்த விவேகவாற்றல் ஏற்றமாக ஒருவருக்கிருந்தாலன்றி, உயர்தரக்கல்வியை அவர் கற் துப் பட்டங்கள் பெற்று, பேராசிரியர், பொறியியல் வல்லுனர், நியாயவாதி போன்ற பதவியொன்றில், அவருக்குரிய தொகுதி யாற்றல்கள், சிறப்பாற்றல்கள், உளச் சார்புகள் ஆகியவற்றுக்குப் பொருத்தமாக அமர்ந்து த ன க் கு ம் சமுதா யத் து க் கும் சிறந்த பயனுண்டாகுமாறு வாழ இயலாது. இந்தப் பொதுவாற் றல் உச்சப்படியிலுள்ளவர்களே தத்தம் துறைகளில் உன்னத நிலே யை அடைந்து நிபுனர்களாக விளங்குபவர்கள். விவேகம் எவ்வள் அக்கு உயர்த்ததாக இருந்தாலும், ஏற்றவாறதைப் பயன்படுத்தாதா சிலும் உள்ள விவேகத்தை இயன்றமட்டும் நன்கு பயன்படுத்து பவர்கள் சமுதா மும் தாமும் பன்மடங்கு செழிப்புறுமாறு வாழ வல்லராவர்.

Page 13
குட்டிப்பிசாசும் உரொட்டியும் மூலம் விபோ ரோல்ரோஸ்ய் தமிழாக்கம்: தேவன், யாழ்ப்பாணம்.
ஓர் ஏழை விவசாயி ஒருநாள் அதிகாலேயில் காலே உணவுக்காக ஓர் உரொட்டியையும் எடுத்துக்கொண்டு உழுவதற்காகப் புறப்பட் டான். கலப்பையை ஆயத்தம் பண்ணிக்கொண்டு உரொட்டியைத் தன் அங்கியினுல் சுற்றி ஒரு புதரின் கீழ் வைத்துவிட்டு வேலேசெய்ய ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தின் பின் அவனுடைய குதிரையும் களேத்துவிட்டது. அவனுக்கும் பசியெடுக்கத் தொடங்கிவிட்டது. கலப்பையை நிறுத்திவிட்டு, குதிரையை அவிழ்த்து புல் மேய விட்டுவிட்டுத் தன் அங்கியையும் காலே உணவையும் எடுக்கச் சென்றன்.
அங்கியைத் தூக்கிப் பார்த்தான். உரொட்டியைக் காணுேம் திரும்பத் திரும்பப் பார்த்தான், அங்கியைப் புரட்டிப் பார்த்தான், உதறிப்பார்த்தான் - உரொட்டி போனது போனதுதான். இதை அவனுல் புரிந்துகொள்ள முடியவில்லே.
'இது விநோதமாயிருக்கிறதே. நான் யாரையும் காணவில்லே. அப்படியிருந்தாலும் யாரோ இங்கு வந்து உரொட்டியை எடுத்துச் சென்றிருக்கிருர்களே' என்று அவன் எண்ணினுன்
அவன் உழுது கொண்டிருந்தபோது உரொட்டியைத் திருடிய குட்டிப்பிசாசு அப்போது புதரின் பின்னுல் உட்கார்ந்துகொண்டு அவ்விவசாயி திட்டுவதையும், பெரிய பிசாசை அழைப்பதையும் கேட்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தது.
விவசாயிக்குக் காலே உணவை இழந்ததைப் பற்றி வருத்தமேற் பட்டது. ஆயினும் 'இது தவிர்க்க முடியாதது, பார்க்கப்போஜல் பசியினுல் கான் இறந்துவிடப் போவதில்ஃயே! உரொட்டியை எடுத்தவனுக்கு அது தேவையாயிருந்தது என்பதில் சந்தேகமில்லே. அது அவனுக்கு நன்மையை அளிக்கட்டும்' என்று சொல்லிக் கொண்டான்.
கிணற்றடிக்குச் சென்று நீரைக் குடித்துவிட்டுக் கொஞ்சகேரம் இஃாப்பாறினுன் பின்பு குதிரையைப்பிடித்து, சேணத்தைப்பூட்டி மீண்டும் உழ ஆரம்பித்தான்.
 
 

குட்டிப்பிசாசும் உரொட்டியும்
விவசாயியைப் பாவம் செய்யத்தூண்ட முடியாபல் போய்விட் டதே என்று மனந்தளர்ந்த குட்டிப்பிசாசு தன் எஜமானனுகிய பெரிய பிசாசிடம் நடந்ததைச் சொல்வதற்காகச் சென்றது.
பெரிய பிசாசிடம் போய் தான் விவசாயியின் உரொட்டியைக் களவாடியதையும் அவன் திட்டுவதற்குப் பதிலாக "கன் மையை அளிக்கட்டும்" என்றதையும் கூறிற்று.
பெரியபிசாசு கோபித்து, "ஒரு மனிதனே உன் வழிக்குக் கொண்டு வர உன்னுல் முடியவில்லேயென் ருல் அது உன் தவறுதிான். உன் வேலேயை நீ சரிவரச் செய்யவில்லே. விவசாயிகளும், பின்பு அவர்க ஞடைய மனே விகளும் அப்படி நடக்க ஆரம்பித்தால் எங்கள் பாடு முடிந்துவிடும். இதை இப்படியே விடமுடியாது. உடனே திரும்பப் போய் கிலேமைனயச் சீராக்கு மூன்று வருடங்களுக்கிடையில் ே அவனே வழிக்குக் கொண்டு வராவிட்டால் உன்னேப் பரிசுத்த நீரில் மூழ்கச்செய்வேன்' என்று கூறிற்று.
குட்டிப்பிசாசு பயந்துபோய்விட்டது. தன் தவறை எப்படி நிவிர்த்தி செய்வது என்று எண்ணியவாறு பூமிக்குத் திரும்ப ஓடி வந்தது. யோசித்து, யோசித்து கடைசியில் ஒரு கல்வதிட்டமிட்டது.
தன்ஃன ஒரு கூவியாள்ாக மாற்றிக்கொண்டு அவ்வேழை விவ சாயியிடம் போய் வேக்லசெய்ய ஏற்றுக்கொண்டது, முதல் வருடம் ஒரு சேற்று கிலத்தில் தானியத்தை விதைக்கும்படி அவனுக்கு ஆலோசனே கூறியது. விவசாயியும் அவ்வாலோசஃனயை ஏற்றுக் கொண்டு சேற்றில் விதைத்தான். அவ்வருடம் மழையின்மையால் ஏனேய விவசாயிகளின் பயிர் சூரியவெப்பத்தினுல் கருகிப்போக இந்த ஏழையின் பயிர் செழிப்பாகவும் உயரமாகவும் கதிர்கள் நிறைந்ததாகவும் வளர்ந்தது. வருடம் முழுவதற்கும் போதிய தானி யம் கிடைத்ததுமல்லாமல் மேலதிகமாகவும் நிறைய அவனிட மிருந்தது.
மறுவருடம் குட்டிப்பிசாசு மலேயில் பயிரிடும்படி அவனுக்குப் புத்தி கூறிற்று. அம்முறை கோடைமழை பெய்து மற்றவர்களின் பயிர்கள் சாய்ந்து பழுதடைந்து கதிர்கள் பழுக்கவில்லே. ஆணுல்
卓
گئے۔

Page 14
2. செந்தமிழ்த் தேன்
இவ் விவசாயியின் பயிரோ மலேமீது நன்ருய் விளங்திருந்தது. முன்னேயிலும் பார்க்கத் தானியம் நிறைய மிஞ்சிற்று. அவ்வளவை பும் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லே.
பின்பு குட்டிப்பிசாசு தானியத்தை காறவைத்து அதிலிருந்து மது வடிகட்ட அவனுக்குக் கற்றுக்கொடுத்தது. அவ்விவசாயி அப் படியே காரமான ஒரு குடிவகை தயாரித்து, தானும் குடித்து தன் நண்பர்களுக்கும் கொடுக்கலாஞன்.
குட்டிப்பிசாசு தன் எஜமானனுகிய பெரிய பிசாசிடம் சென்று தன் தோல்விக்கு ஈடுசெய்து விட்டதாகப் பெருமைபேசியது. தானே கேரில் வந்து கிலேமை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதா கப் பெரியபிசாசு சொல்லிற்று.
பெரியபிசாசு விவசாயியின் வீட்டுக்குவந்து அவன் தன் பனக் கார அயலவர்களே அழைத்து குடிவகை பரிமாறுவதைக் கண்டது. அவனுடைய மனேவி விருந்தாளிகளுக்குக் குடிவகைகளேக் கொடுத் துக் கொண்டிருந்தாள். அப்படிக் கொடுக்கும்போது மேசை மீது இடறி ஒரு கிண்ணத்தைச் சிந்திவிட்டாள்.
விவசாயிக்குக் கோபம் வந்தது. தன் மனேவியை "கேடு கெட்ட வளே, என்ன கினேத்தாய்? முடமே தரையில் கண்டபடி இந்த அருமையான பொருளேச் சிந்துவதற்கு இது சாக்கடை நீரென்று நிஜனத்தாயா?" என்று ஏசின்ை.
குட்டிப்பிசாசு தன் முழங்கையால் பெரியபிசாசை மெதுவாக இடித்து, "பார்த்தாயா, இந்த மனிதன்தான் தன் ஒரே உரொட்டி போனுல் போகட்டும் என்று கவலேப்படாதவன்' என்றது.
அவ்விவசாயி தன் மனேவியை ஏசியவாறு தானே பரிமாறத் தொடங்கிவிட்டான். அப்போது இன்னுெரு ஏழைவிவசாயி,வே&லயி விருந்து திரும்பிப் போய்க்கொண்டிருந்தவன், அழைப்பின்றி அங்கு நுழைந்துவிட்டான். வந்தவன் வணக்கம் சொல்லிவிட்டு உட்கார்ந்து மற்றவர்கள் குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். வேலேயினுல் கக்ளத்துப்போய் வந்தவன் தனக்கும் ஒருதுளி கிடைக்காதா என்று ஆசைப்பட்டான். ஆனுல் விருந்தளித்துக் கொண்டிருந்தவனுே அவ னுக்கும் கொடுப்பதற்குப் பதிலாக "வருகிறவர்கள் எல்லோருக் கும் குடிக்கக்கொடுக்க என்னிடம் கிடையாது" என்று முணு முணுத்தான்.

குட்டிப்பிசாசும் உரொட்டியும்
பெரிய பிசாசுக்கு இது திருப்தியைக் கொடுத்தது. குட்டிப் பிராசு குதுரகவித்து, "கொஞ்சம் பொறு. இன்னும் எவ்வளவோ இருக்கிறது" என்றது.
பணக்கார விவசாயிகளும் விருந்தளித்த விவசாயியும் குடித் தனர். ஒருவருக்கொருவர் போலியாக வழவழா'ப் பேச்சுக்கள் பேச ஆரம்பித்தனர்.
பெரிய பிசாசு அனேத்தையும் கேட்டது குட்டிப் பிசாசைப் போற்றியது.
"அந்தக்குடி அவர்களே அவ்வளவு தந்திரிகளாக்கி ஒருவரே யொருவர் ஏமாற்றச் செய்யுமென் குல் விரைவில் அவர்கள் எங்கள் வசமாகி விடுவார்கள்' என்றது.
"என்ன வருகிறதென்று பார். ஒவ்வொருவரும் இன்னுமொரு கிண்ணம் குடிப்பார்கள். இப்போது நரிகள் போலக் குள்ள மாசுவாலே யாட்டி ஒருவரையொருவர் வசப்படுத்தப் பார்க்கிருர்கள். இனிக் காட்டுமிராண்டித் தனமான ஒநாய்களாக நடந்துகொள்வார்கள்" என்றது குட்டிப்பிசாசு
விவசாயிகள் மேலும் ஆளுக்கு ஒரு கிண்ணம் மதுஅருந்தினர் அவர்களுடைய பேச்சு முரட்டுத்தனமாகவும் உரமாகவும் மாறியது. 'வழவழா’ப் பேச்சுக்குப்பதில் ஒருவரைப்பார்த்து ஒருவர் தூற்றவும் உறுமவும் ஆரம்பித்தார்கள். உடனே அவர்கள் சண்டைபோட்டுக் கொள்ளத் தொடங்கினர்கள். ஒருவர் முக்கில் இன்னுெருவராக அவர்கள் குத்திக்கொண்டார்கள். விருந்தளித்தவனும் சண்டையில் கலந்துகொண்டு கன்ருக அடிவாங்கி குன்,
பெரியபிசாசு இதைப்பார்த்துக் கொண்டேயிருந்தது; மிகவும் திருப்தியும் அடைந்தது.
'அபாரம்" என்றது பெரிய பிசாசு.
குட்டிப்பிசாசு, "கொஞ்சம்பொறு. சிறந்த பகுதி இனித்தானிருக் கிறது. முன்முவது கிண்ணமும் குடித்து முடிக்கும் வரை பொது, இப்போது ஓநாய்கள் போல் ஆத்திரம் கொள்பவர்கள் இன்னுெரு கிண்ணத்திற்குப்பின் பன்றிகள் போலாகி விடுவார்கள்" என்றது.
விவசாயிகள் மூன்ருவது கிண்ணத்தையும் உட்கொண்டார்கள்: மிருகங்களாகவே மாறிவிட்டார்கள். ஒருவர் சொல்வதை மற்றவர். கேட்காமல் முணுமுணுத்தார்கள், கூச்சவிட்டார்கள்

Page 15
墅星 செந்தமிழ்த் தேன்
விருந்துக்கு வந்தவர்கள் கலேய ஆரம்பித்தார்கள். தனிமை யாகவும், இருவராகவும், மூவராகவும்-எல்லோரும் தெருவழியே தள்ளாடிக்கொண்டு சென்ருர்கள். போகிறவர்களேத் துரிதப்படுத்த விருந்தளித்தவன் வந்தான். சகதியில் முக்கு அடிபடும்படி விழக் தான் அவன் உச்சியிலிருந்த உள்ள ங் கால்வரை சேறு மயமாயிற்று. அங்கேயே பன்றிபோல் உறுமிக்கொண்டு அவன் கிடந்தான்.
பெரிய பிசாசுக்கு இதுமேலும் திருப்தியைக் கொடுத்தது.
"நீ ஓர் அற்புதமான குடியைக் கண்டுபிடித்துவிட்டாய், முன்பு உரொட்டி விஷயமாக நீ விட்ட தவறுக்கு பரிகாரம் தேடிவிட்டாய். இக்குடியை எப்படித் தயாரிப்பதென்று எனக்குச்சொல். முதலில் கரியின் இரத்தத்தைக் கலந்திருப்பாய். அதுதான் அவர்களுக்கு நரிகளேப் போன்ற குள்ளப்புத்தி பிறந்தது. பின்பு ஓநாயின் இரத் கத்தைக் கலந்திருப்பாயென் நினேக்கிறேன். அதுதான் அவர்களே ஒநாய்களே ப்போல் முர்க்கர்கள் ஆக்கியது. கடைசியில் அவர்களே ப் பன்றிகள் போல நடக்கச்செய்ய, பன்றியின் இரத்தத்தைச் சேர்த்தி ருப்பாய்' என்று சொல்லிற்று.
இல்லே, அதை கான் அப்படிச்செய்யவில்லே. நான் செய்தது முழுவதும் அவனுடைய தேவைக்கு மேலாகத் தானியம் கிடைக்கும் படி பார்த்துக் கொண்டதுதான். மிருகங்களின் இரத்தம் எப்போ தும் மனிதனில் இருந்துகொண்டிருக்கிறது. தன்னுடைய தேவைக்கு மட்டும் போதிய தானியம் கிடைக்கும்வரை அது சுட்டுக்குள் அடங்கி இருக்கும். அப்படியிருக்கும்போது அவ்விவசாயி தன் கடைசி உரொட்டி போனதைப்பற்றிக் கவலேப்படவில்லே. ஆணுல் தேவைக்கு மிஞ்சித் தானியம் கிடைத்ததும் அதிலிருந்து இன்பம் பெறும் வழிகளே காடினுன் நான் ஒரு இன்பத்தைக் காட்டிக்கொடுத் தேன்-குடி கடவுள் கொடுத்த பரிசில்களே அவன் தனக்கு இன்ப ாட்டும் போதைப் பொருள்களாக மாற்ற ஆரம்பித்தும் அவ ணுள்ளேயிருந்த நரி, ஓநாய், பன்றி ஆகியவற்றின் இாத்தம் வெளியே தோன்றியது. அவன் குடித்துக்கொண்டே போவானுணுல் என்றும் மிருகமாகவே இருப்பான்' என்றது குட்டிப்பிசாசு.
பெரிய பிசாசு குட்டிப்பிசாசைப் பாராட்டி, அதன் முந்திய தவறை மன்னித்து அதை நன்மதிப்புக்குரிய ஓர் உயர் பதவியில் அமர்த்தியது.
ーーOー
 

ஞாயிற்றுப் பொட்டுக்கள்
பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம், M. A Ph.D. B.Sc
வானில் ராம் பல ஒளிர்கின்ற பொருள்களேக் காண்கின்ருேம். அவற்றுள் ஞாயிறும், புவியொழிந்த ஞாயிற்றின் கோள்களாகிய புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் என்பனவும், புவியின் உப கோளாகிய திங்களும் மட்டுமே எங்கள் கட்பார்வைக்கு பருமனுடை பனவாய்க் காட்சி தருகின்றன. அத்தொகுதியில் ஞாயிறு ஒன்றே தன்னுெளிர்வுள்ளதாய் இருக்கின்றமையாலும், ஞாயிற்றுக்கும் புவி வாழ் உயிரினங்களுக்கும் தாவரவினங்களுக்கும் மிக்க கெருங்கிய தொடர்பு உள்ளதாலும், மக்களின் கருத்தானது தொன்றுதொட்டு ஞாயிறு மீதே செலுத்தப்பட்டு வந்திருக்கிறது.
காலேயிலும் அதற்குப் பின்னரும் ஞாயிற்றை நாம் நேரே பார்த் நல் ஆகாது. அவ்வாறு செய்வோமாயின் எங்கள் கட்டார்வைக் குத் தீர்க்கவொண்ணுத தீங்கு கவருது கேரிடும். ஆயினும், அந்திப் பொழுதில் ஞாயிறு மறையுங்கால் நேராகவோ, நண்பகவில் விளக் குக்கரி நன்கு படிந்த கண்ணுடித் தட்டொன்றின் ஊடாகவோ, காம் யாதொரு அச்சமுமின்றி அதனே அவதானிக்க இயலும், அல் லாமலும் வீட்டுக் கூரையிலுள்ள சிறுதுளேயொன்றின் வழியாக உட் செல்லுகின்ற ஞாயிற்றின் கற்றையானது சுவர்மீது ஞாயிற்றின் விம் பத்தைத் தருகின்றதல்லவா? அவ்விம்பத்திலிருந்தும் ஞாயிற்றைப் பற்றிய செய்திகள் சிலவற்றை காம் பெறமுடியும். நாம் நோக்கும் முறையானது எவ்வாருயினும், ஞாயிறு ஒரு வட்ட வடிவமான தட் டுப்போல் தோற்றுகின்றது. உண்மையில் ஞாயிறு உருண்டை வடி வமுடையதே. ஆனுல் மிகத் தொஃலயில் அது இருக்கின்றமையால் தட்டுவடிவமே புலனுகின்றது.
ஞாயிற்றை ஆய்கருவிகள் மூலம் முதன்முதல் அவதானித்த வர் இத்தாலிய நாட்டு மேதாவியும், பரிசோதனே முறை விஞ்ஞா மனத்தின் தாத்தாவும், தொலேகாட்டியை உருவாக்கினவருமான கலிலேயோ என்பவர் ஆவர். அவர் தம் தொலகாட்டி ஊடாக ஞாயிற்றை நோக்குங்காலே, ஞாயிற்றின் மேற்பரப்பில் பல கருமை யான பொட்டுக்களே அவதானித்து, அவற்றிற்கு ஞாயிற்றுப் பொட் டுக்கள் எனப் பெயருமிட்டார்.

Page 16
曼芭 செந்தமிழ்த் தேன்
ஞாயிற்றுப் பொட்டுக்களே ப்பற்றிக் கூறுமுன் ஞாயிற்றின் அமைப்பைப் பற்றியோரளவு அறிந்திருப்பது கன்ருகும். ஞாயிற்றுக் கும் புவிக்குமிடையிலுள்ள தொலே 9.3 கோடி மைல் என்றும் ஞாயிற் றின் விட்டம் 885 லட்சம் மைல் என்றும், அதன் புறவெப்ப நிக்ல 10,000 பாகை பரனேற்று அகவெப்ப நிலே நிதி கோடி பாகை பர *னற்று என்றும், அது முற்றிலும் வாயுமயமானது என்றும், புவியை நோக்க அதன் திணிவு 338 லட்சம் மடங்கு என்றும், நாம் அறிய வந்துள்ளோம்.
ஞாயிரனது மூன்று ஒரே மையமுள்ள பகுதிகள் உடையது. மிகவும் உள்ளான பகுதி பானது ஒளிமண்டலம் எனப்படும் இடைப் பகுதி நிற மண்டலம் என்றும், வெளியேயுள்ள பகுதி ஒளி வட்டம் என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன. ஒளி மண்டலத்தை நோக்க ஏனய பகுதிகளின் வெப்ப கிலேகள் மிகவும் குறைவாக இருக்கின்றமையால் சாதாரண காட்களில் நாம் ஒளி மண்டலத்தை அதாவது மேற்கூறிய தட்டை மட்டுமே அவதானிக்க இயலும், ஆனுல் ஞாயிற்றுக் கிரகனகாலங்களிலே திங்கள் குறுக்கிட்டு ஒளி மண்டலத்தை மறைக்கிறது. அக்காலங்களில் நிறமண்டலத்தையும், ஒளி வட்டத்தையும், ஒளி வட்டத்திலிருந்து எதிர்பாராத வகை யில் பாய்கின்ற ஞாயிற்றுப் பிதுக்கங்களேயும், நாம் இலகுவாகப் பார்க்க முடியும். நாம் கருதிவரும் ஞாயிற்றுப் பொட்டுக்கள் ஒளி மண்டலத்தின் அகத்தில் உற்பத்தியாகி, அதனது மேற்பரப்பை அடைந்து, எங்களுக்குக் கட்புலனுகின்றன.
ஞாயிற்றுத் தட்டின் அமிசங்களுள் மேற்கூறியுள்ள பொட்டுக் களே மிகவும் கவர்ச்சி வாய்ந்தவை. அவை கருமையாகத் தோற்று கிறதற்குக் காரணம் அவற்றின் சற்றுத் தாழ்ந்த வெப்பகிலேயா கும். அவற்றின் அயல் உயர்வெப்பகிலேயில் இருக்கின்றமையால் நாம் ஞாயிற்றுப் பொட்டுக்களிலிருந்து குறைவாகவே ஒளிபெறுகின் ருேம். ஆகவே அவற்றின் அயலே நோக்க ஞாயிற்றுப் பொட்டுக்கள் கருமையாகக் காட்சிகருகின்றன. இவ்வாறு துலக்கமிக்க பின்னணி மீது தோன்றுகின்ற பொட்டுக்கள் ஒவ்வொன்றும் இரு கூறுகள் உடையதாம். உள்ளான பகுதி கருநிழல் என்றும், வெளியானது நிறைவணுகுநிழல் என்றும் அழைக்கப்படுகின்றன.
ஞாயிற்றுப் பொட்டுக்கள் தனித்தனியாகவும் பல பொட்டுக்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாகவும் தோன்றக்கூடும். பொட்டுக்கள் அள வில் வேறுபடுகின்றன. மிகப் பெரிய பொட்டுக்களின் விட்டம்

ஞாயிற்றுப் பொட்டுக்கள் 『
ஞாயிற்றினது விட்டத்தின் 20 இல் 1 ஆகும். மிகச்சிறிய பொட் டுக்கள் கட்புலனுகமாட்டா. தொங்காட்டி கொண்டே அவற்றை அவதானிக்க இயலும்,
ஞாயிற்றுக் கட்டுமீது பொட்டில்லா நாட்களும் உள. அங்காட் கள் அமைதி காள்கள் எனப்படும். அவற்றிற்கு நேர்மாருன, குழம் பிய காள்கள் எனப்படுங் காலங்களில் நூறு பொட்டுக்களுக்கு மேலாக ஞாயிற்றின் தட்டுமீது நாம் காணமுடியும்.
ஞாயிற்றுப் பொட்டுக்கள் தி க்ல யா ன வை அல்ல. எல்லாப் பொட்டுக்களும் சமாந்தர கோடுகளில் ககர்கின்றன என விஞ்ஞா னிகள் அவதானித்துள்ளனர். அச்செய்தியிலிருந்து ஞாயிருரனது ஓர் அச்சைக் குறித்துச் சுழல்கின்றது என நாம் முடிவு செய்யலாம். புவிபோல் ஞாயிறும் சுழற்சியுடையதாதலால் புவியின் வரிப்படத் தில் அகலக் கோடுகளும், மத்திய கோடும் வரைந்திருக்கின்றமை போல் ஞாயிற்றின் வரிப்படத்திலும் அதே விதமாக நாம் கோடு கள் வரையலாம். அக்கோடுகளேக்கொண்டு ஞாயிற்றுப் பொட்டுக் களின் இயக்கத்தை காம் விவரித்துக் கூற இயலும்.
ஞாயிற்றின் சுழற்சியச்சானது புவியின் சுழற்சியச்சுக்குக் கிட் டத்தட்ட சமாந்தரம் என்றும், ஞாயிற்றின் சுழற்சிக்காலம் அதன் பாகங்களின் அகலக் கோடுகளுக்கேற்ப 24, 7 நாள் முதல் சீ காள் வரை மாறுகிறதென்றும் ஞாயிற்றுப் பொட்டுக்களின் இயக்கத்தை யளத்தல் செய்து அறியவந்திருக்கிருேம்.
ஞாயிற்றுத் தட்டின் எல்லாப் பா க ங் களி லும் பொருள்கள் தோன்றமாட்டா. பொதுவாகக் கூறுமிடத்து, ஞாயிற்றுப்பொட்டுக் கள் 40 பாகை (வட, தென்) அகலக்கோடுகளுக்குக் கீழேயே உற் பத்தியாகின்றன, மேலும் ஞாயிற்றுப் பொட்டுக்களின் தோற்றத் தில் ஓர் ஒழுங்குமுறையும உளது. அவை 11 ஆண்டு ஆவர்த்தனம் காட்டுகின்றன. அதாவது 11 ஆண்டுகளுக்கொருமுறை பொட்டுக் களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், இடையில் மிகவுயர்வா கவும் இருப்பது தெரியவருகின்றது. அந்த 11 ஆண்டுக் காலம் ரூாயிற்றுப் பொட்டு வட்டம் எனப்படும்.
ஞாயிற்றுப் பொட்டு வட்டத்தின் தொடக்கத்தில் பொட்டுக்கள் சி0 பாகை வடதென் அகலக் கோடுகளுக்கு அணித்தாய்க் குறைந்த எண்ணிக்கையில் தோன்றுகின்றன. காள்கள் செல்லச்செல்ல பொட்

Page 17
செந்தமிழ்த்தேன்
டுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. மேலும் பொட்டுக் கள் உற்பத்தியாகின்ற இடங்களும் ஞாயிற்றின் மத்திய கோட்டை இருபுறங்களிலிருந்தும் அணுகுகின்றன. கடைசியாக, வட்டத்தின் ஈற்றில், மிகச் சிலவற்றையே மத்திய கோட்டின் அயலில் நாம் காண இயலும். அக்காலங்களில் அடுத்த வட்டத்தின் பொட்டுக் கள் மேற்கூறியுள்ள உயர் அகலக் கோடுகளில் தோன்றலாகும்.
ஞாயிற்றுப் பொட்டுக்களுடன் தொடர்புள்ள நிகழ்ச்சிகள் பல உள. எவ்வெவ்விடங்களிற் பொட்டுக்கள் தோன்றக்கூடும் என் பதுபற்றி காம் முன்னதாக அறிய இயலும் ஏனெனில், அவ்வவ் விடங்களிற் பொட்டுக்களின் தோற்றத்துக்குச் சின் னுட்களுக்கு முன் மிளிரிகள் உற்பத்தியாகின்றன. மிளிரியொன்றின் பின் தோன்றலா கிய பொட்டின் மறைவுக்குப் பின்னரும் அம்மிளிரியானது சொற்ப காலம் காட்சி தந்துகொண்டேயிருக்கும் எனத் தெரியவந்துகொண் டேயிருக்கும் எனத் தெரிய வருகிறது. மேலும், ஞாயிற்றுப்பொட்டு உயர்வு காலங்களில் ஒளிவட்டத்தில் மாற்றங்களும், மாபெரும் ஞாயிற்றெறியொளிர்வுகளும் நிகழ்கின்றன.
ஞாயிற்றுப்பொட்டுத் தொழிற்பாடானது புவியிலும் புவியைச் சூழ்ந்திருக்கின்ற வளிமண்டலத்திலும் நிகழ்கின்ற பல தோற்றப்பா டுகளுக்கு ஏதுவாகும். அத் தோற்றப்பாடுகளேப் பெரும்பான்மை யாக ஞாயிற்றுப்பொட்டு உயர்வுகாலங்களில் அவதானிக்க இயலும். அவ்வக்காலங்களில் வேகமிக்கவும், மின்னேற்றமுடையனவுமான துணிக்கைளும், அத்துடன் ஒளியும், ஞாயிருரல் மேலதிகமாகக் காணப் படுகின்றன. புவியின் அயலே அடைந்ததும் அத்துணிக்கைகள் புவி யின் காந்த மண்டலத்தால் தாக்கப்பட்டு புவியின் இரு முனேகளே நோக்கிச்செலுத்தப்படுகின்றன. முனேகளே அவ்வாறு அடைகின்ற துணிக்கைகள் அவ்விடங்களில் காட்சியளிக்கின்ற வட தென்முனேச் சோதிகளேத் தோற்றுவிக்கின்றன. அல்லாமலும், புவியின் ஏனேய பகுதிகளே அணுகுகின்ற துணிக்கைகள் அவ்விடங்களிலுள்ள வளி யில் மின் மாற்றங்களேத் தோற்றுவித்து இரேடியோ வான்களில் குழப்பங்களேயும் அழிவையும் நிகழச் செய்கின்றன. அதே தோற்றப் பாடுகள் ஞாயிற்றுப்பொட்டு உயர்வு காலங்களில் மேலதிகமாகக் காணப்படும் ஒளியாலும் உண்டாகின்றன.
ஞாயிற்றுப்பொட்டு வட்டத்துக்கும் வானிலேக்கும் மிக்க நெருங் கிய தொடர்பு உளது. பொட்டு உயர்வில் குளிர்காலத்தையும், பொட்டுத்தாழ்வில் அதி வெப்பத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஞாயிற்று வட்டத்துக்கும்
 
 

ஞாயிற்றுப் பொட்டுக்கள்
தாவரவினங்களின் வளர்ச்சிக்குமுள்ள தொடர்பை மாபெரும் மரங் களின் குறுக்கு வெட்டுக்கள் நேராகக் காட்டுகின்றன. நான்கு அல் லது ஐந்து அடி விட்டமுடைய மரமொன்றைக் கருக்கு வாளால் அறுத்து வரும் வெட்டுமுகத்தை உற்று நோக்குவோமாயின் அவ்
வெட்டுமுகமானது வளேயங்களாக அமைந்திருப்பதை அவதானிப்
போம். ஒவ்வொரு வ%ாயமும் மரத்தின் ஒராண்டு வளர்ச்சியை குறிக்கிறது. வக்ளயங்களின் தடிப்பை அளத்தல் செய்தால் அடுத் திாற்போல் தோன்றும் இரு மிகத் தடிப்பான வக்ாயங்களுக்கிடை யில் பத்துவளேயங்களிருப்பதை அவதானிப்போம். அதாவது ஒவ் வொருபதினுென்ருவதுவளேயமும்தடிப்புமிக்கதாகத் தோற்றுகிறது. அதிலிருந்து தாவரவினங்களின் வளர்ச்சிக்கும் ஞாயிற்றுப்பொட்டுத் தொழிற்பாட்டுக்கும் உள்ள தொடர்பை ஊகித்தறிந்து கொள்ள முடியும்,
ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெண்மணிகள் குளிர்காலங்களில் குளிரைத் தாங்கும் பொருட்டு, நீர் நாயின் தோலால் ஆக்கப்பட்ட ஒருவகையான மேலாடை அணிகின்றனர். அவ்விலங்குகள் முக்கியமாகக் கனடா நாட்டின் வடகோடியிலும் கீழ்க்கோடியிலும் வாழ்கின்றன. ஆண் டு தோறும் கட்சள் குடாக்கடல் தாபனத்தார் அவ்விடங்களுக்குக் கப்பல்கள் அனுப்பி அவ்விலங்குகளே வேட்டையாடி, விற்பனேக்கென அவற்றின் தோல் களேப் பெறுகின்றனர். அத்தாபனத்தார் அவதானித்துள்ள செய்தி யானது ஞாயிற்றுப்பொட்டுஉயர்வுகாலங்களிலேயே பெருந்தொகை யான நீர் நாய்கள் கொல்லப்படுகின்றன என்பதாகும், அச்செய்தியி விருந்து ஞாயிற்றுப்பொட்டு உயர்வு காலங்களில் உயிரினங்கள் மிகுதியாகப் பிறக்கின்றன என நாம் அறிய வருகின் ருேம்.
கடைசியாக ஞாயிற்றுப் பொட்டுக்களின் தோற்றத்துக்குக் காரணம் யாது என்பதுபற்றிச் சிறிது கவனிப்போம். அவ்விடயத் தில் முடிவான கருத்தை விஞ்ஞானிகள் இன்றுவரை பெற முடியாது தடுமாறுகின்றனர். ஞாயிறு வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ள உருண் டையொன்று என்றும், அதனது மேற்பரப்பின் வெப்பதிலே 10,000 பாகையாகவும், மையத்து வெப்பநிலை 3" கோடிபாகையாகவும், இருக்கின்றமையால் காலத்துக்குக் காலம் ஞாயிற்றின் அகத்தில், சுழற்சி காரணமாக, உறுதியின் மை தோன்றிக் குழப்பங்கள் உண் டாகின்றன என்றும் அக்குழப்பங்கள் ஞாயிற்றின் அகத்தில் தாங்க
齿

Page 18
செந்தமிழ்த் தேன்
வொண்ணுதி அமுக்கங்களேத் தோற்றுவிக்கின்றனவென்றும் அம்
மேலதிகமான அமுக்கத்தைச் சீர்படுத்தும்பொருட்டு வாயுமயமான
பொருள்களும் மின்னேற்றமுடைய துணிக்கைகளும் அதிவேகத்து டன் கக்கப்பட்டு வெளியேறுகின்றன என்றும், வெளியேறிவரும் அப் பொருள்கள் குளிர்ச்சியடைந்து குறைவாக ஒளிர்கின்றமையால் அவை தோற்றுகின்ற இடங்கள் கருமையாகத் தென்படுகின்றன என்றும் மட்டுமே விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கின்றனர்.
ஞாயிற்றினது ஆராய்ச்சி எல்லா நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றது. அதற்கெனத தனிப்பட்ட ஞாயிற்றுநோக்கு நிக்லயங் கள் தாபிக்கப்பட்டிருக்கின்றன. முகிலில்லா நாட்களில் ஞாயிற்றை ஒளிப்படம் பிடிக்கின்றனர். ஞாயிற்றினது ஒளியைப் பாகுபடுத்து கின்றனர்; வேறு பலவும் செய்து வருகின்றனர். சர்வதேச உடன் படிக்கையொன்றின்படி எல்லா ஞாயிற்று கிலேயங்களாற் கிடைக் கப்பெற்ற செய்திகள் யாவும் பாரிஸ் மாநகரிலுள்ள காரியாலய மொன்றுக்குத் திங்கள்தோறும் அனுப்பிவைக்கப்படவேண்டும். அவ்விடத்தில் ஆராய்ச்சியாளர் ஒன்று கூடி ஞாயிற்றைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர். அம்முயற்சியின் பயனுக ஞாயிற்றைப் பற்றிப் பொதுவாகவும், ஞாயிற்றுப் பொட்டுக்கக்ளப்பற்றிச் சிறப் பாகவும், விரைவில் பல உண்மைகளே அறிய வருவோம் என்னும் திடமான கம்பிக்கை விஞ்ஞானிகளிடம் உளது.

தமிழர் கண்ட சமுதாய வாழ்வு
வித்துவான், பொன் முத்துக்குமாரன் B, G.L.
ஒரு சக்கரத்தை நாம் உருட்டிவிடுகின்ருேம்; அது நிலத்தில் அழகாய் உருண்டு செல்கின்றது. அது வேகமாய் உருளும்போது அதன் ஆரைகள் தனித்தனியாய்க் காணப்படுவதில்ல. அவ் வாரைகளின் இடையேயுள்ள வெற்றிடங்களும் மறைந்துவிடுகின் றன. வேறுபாடற்ற அந்த ஆரைகளேயும், விரைவாய்ச் செல்லும் சக்கரத்தின் விந்தையான காட்சியையும் நாம் கண்டு மகிழ்கின் ருேம். அந்தச் சக்கரத்தின் ஒத்ததுவே நாம் வாழும் சமூகம். சக்கரத்திலுள்ள ஆரைகளேப்போல, சமூக வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனும் அமைகின்ருன். ஆரைகளில் ஒன்று பழுதுறின் சக்கரத்தின் ஓட்டமும் அழகும் குன்றும். தனிமனிதனின் நல்வாழ்வு கேடுறுமாயின் சமூகத்தின் கல்வாழ்வும் தாழ்வுறும்.
ஒவ்வொரு மனிதனும் பிறரோடு ஒன்றி வாழ்வதற்கே உரிய வன். சமூகமாய் வாமுதலன்றித் தனித்து வாழ்தல் என்பது இய லாதது மட்டுமன்று இனிமையானதுமன்று. உணவு உடை, இருப்பிடம் இன்பப் பொருள்கள் என ஒருவனுக்கு இன்றியமை யாது வேண்டப்படுவன பல உள. அவற்றையெல்லாம் ஒருவன் தனக்குத்தானே ஆக்கிக்கொள்ளல் இயலாது, ஓரளவுக்குப் பிற ருடைய உதவியையும் துனேக்கொண்டே ஒருவன் அவற்றைப் பெறல் இயலும். எனவே, பிறருடைய உதவியின்றி வாழ்வேன் எனல் பேதமையேயாகும். தான் பிறரிடத்திலிருந்து உதவிபெறு தல்போலவே பிறருக்குத் தான் உதவிபுரிதலும் ஆவசியகமானது. தன்னன்மையை மட்டுமே விரும்புதலும், பிறர் நன்மை கண்டு பொருத தன்மையும் சமூக வாழ்வில் மாத்திரமன்றித் தனிமனித னின் உயர்வாழ்வினும் தடையாய் நிற்பனவாகும்.
மக்கள் எல்லோரும் ஒத்த தன்மை, ஒத்த வன்மை உடையவ ரல்லர். மக்கட் சமூகத்தில் ஒருவர் மற்ருெருவர்போல் இருப்ப தில்லே. சிலர் கூரிய அறிவினர்; சிலர் குறைந்த மதியினர் சிலர் அங்கப் பொலிவுடையவர் சிலர் அங்கப் பழுதுடையவர், இவ் வாறு பலர் பலதிறத்தினராயுள்ளனர். ஆயினும், சமூகம் என்ற பெயரால் குறிக்கப்படும்போது எல்லோரும் ஒருவரே. சமூகம் நல் வாழ்வில் தழைக்கும்போது எல்லோரும் வேறுபாடற்ற இன்ப

Page 19
தமிழர் கண்ட சமுதாய வாழ்வு 母婴
வாழ்வு எய்துபவர்களே. விரைந்து ஓடாத சக்கரத்தில் ஆரைகள் வேறு வேருகத் தெரிவதுபோல் நன்கு வாழாத சமுகதிற்ருன் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு வெளியாய்த் தெரியும்.
தனிமனிதனேச் சமூகத்தோடு பிணத்து வைப்பன ஒப்புரவு, ஈகை என்ற உயர்ந்த செயல்களே இதனே நன்குணர்ந்ததுமன் றித் தம் வாழ்விலும் கடைப்பிடித்தனர் ம்ேமுன்னுேர்கள். "தாம்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உயர்ந்த உள்ளம்
படைத்த தமிழ்ச் சான்ருேர்கள் தாம் பாடிய நீதி நூல்களிலும் தனிப் பாடல்களிலும், காவியங்களிலும் ஒப்புரவு பற்றியும் ஈகை பற் றியும் ஒப்புயர்வற்ற கருத்துக்களே உணர்த்திச் சென்றுள்ளார்கள். தமிழ் நூல்களிலே தக்லயாய அறநூல் என்று போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவர் அந்நூலில் கூறிய சிறந்த கருத்துக்க எளில் சிலவற்றை நோக்குவோம்.
மக்கள் ஒரு கருமத்தைச் செய்தற்கு இரண்டு காரணங்கள் உள. ஒரு காரணம் அக் கருமத்தைச் செய்தலால் தமக்கு ஏற்ப டும் நற்பயன். அந் நற்பயகன் எண்ணிச் செய்பவர்களே பெரும் பான்மையினர். அவர்கள், ஒரு கருமம் நல்லதாயினும் அதனுல் தமக்குத் தீமைவிளேயுமாயின் அதனே ஒருபோதும் செய்யார் செயல் தீயதாயினும் பயன் நல்லதாயின் அவர்கள் செய்ய ஆவல்கொள் வர். இவ்வாறு பயனே பலரை ஒரு கருமம் செய்யத் தூண்டுவதா யுள்ளது. இதனேயன்றி மற்றுமோர் காரணமும் உண்டு. அது மிகச் சிலரிடத்திலேயே காணப்படுகின்றது. அதாவது, ஒரு கருமம் செய் 4முன் அதன் ஆராய்ந்து, அது செய்யத் தக்கது, சிறந்தது என்று கண்ட நல்லறிவாகும். இக் நல்லறிவு காரணமாக ஒரு கருமத்தைச் செய்பவர் தமக்கு அதனுல் தீமை விளேயுமாயினும் செய்யத் தலைப் படார். அத்தகைய பெருமக்கள் தம் நன்மையையன்றிச் சமூக நன் மையையே பெரிதும் பேணுபவர்கள். வள்ளுவர் பெருமான் இந்த இருதிறத்தாரையும் மனத்துட் கொண்டே தாம் கூறும் அறங்களே வற்புறுத்துவதைக் கூரிய மதியுடையோர் நேரிதின் அறிவர்.
வள்ளுவர் அருளிய வாய்மொழிகளிற் சில, பயனே எடுத்துக் காட்டி அறத்திற் பற்றுக்கொள்ளச் செய்வன. மற்றும் சில சிந்திப் பார்க்கு விருந்தாய் அமைவன், ஒப்புரவு என்பதுபற்றி அவர் யாது சொல்கின்ருர் அதனே நோக்கும்போது, ஒப்புரவு என்ருல் என்ன? என்ற வினு முதலில் எழுகின்றது. முதற் குறளேப் பார்ப்போம்.
 

தமிழர்கண்டசமுதாய வாழ்வு 53
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னுற்றும் கொல்லோ உலகு"
நீரைச் சொரிகின்ற மேகங்களுக்கு நிலத்திலுள்ள உயிர்கள் எத்தகைய பிரதி உபகாரத்தையும் செய்தலும் இயலாது. அது போல ஒப்புரவிக்னக் கடமையாகக்கொண்டு செய்பவர்க்கு ஒருவர் எவ்வித பிரதியுபகாரமும் செய்தல் இயலாது என்பது இக்குறளின் பொருள், வள்ளுவர் மேகத்தின் செயலே உள்ளத்தால் எண்ணி வியந்தார். அதனேயே ஒப்புரவினே விளக்கும் உவமையாகக் காட் டினர். மேகம் வானத்திற் தானே தோன்றியதன்று பூமியிலுள்ள ர்ேகிலேகளிலிருந்து எழுந்த ஆவியே தன் வடிவமாய் அமையப் பெற் றது. அவ்வாறு தோன்றிய மேகம் அங் த ரத் தி லேயே சென்று மறைந்து விடுவதில்லே. தான் தோன்றுதற்கு இடனுப் இருந்த வைய கத்தையே வாழ்வித்து, தன் உருவும் பெயரும் இழந்து புகழ் பெற்று விடுகின்றது. அது அவ்வாறு மண் குளிர மழையாய்ப் பெய்தற்குப் பிரதியுபகாரமாக ஒன்றையும் எண்ணியதுமில்ல. மண்ணகம் வழங்கு வதுமில்லே, அதுபோலவேதான் உயர்ந்தோர்கள் தாம் வாழும் சமு கத்திடமிருந்து ஒன்றனேயும் எதிர்பாராது சந்தர்ப்பம் நோக்கித் தம் உடல், பொருள்களே மட்டுமன்றி வேண்டுமாயின் உயிரையும் அதற்கு உவந்து உதவுகின்றனர். சந்தர்ப்பம் அறிந்து உதவும் செயலாகிய இத்தகைய ஒப்புரவுக்குப் பதிலாக எதன்ே ஒருவர் செய்யமுடியும். மேலும் வள்ளுவர் கூறிய தெள்ளிய கருத்தொன் றைச் சிந்திப்போம். ஊருக்கு நடு விலே ஒரு மரம் முளேத்துத் தழைத்து ஓங்கி நிற்கின்றது. அதுவோ தித்திக்கும் கனிதரும் தேமா. அது மண்ணிலிருந்து எடுத்த வளமான சத்துக்களே காயாகக் கனி யாகப் பெருக்கிப் பார்ப்போர் ம ன தி  ைத ஈர்த்துப் பரந்து பொலிந்து நிற்கின்றது, அது மண்ணிலிருந்து அரிதிற் தான் பெற்ற சத்துக்களேத் தானே உண்டு அழித்து விடுவதில்லே. தான் பெற்ற எல்லாவற்றையும் பிறர்க்கே மறைக்காது கொடுத்துப் பெருமை படைகின்றது. சிறுவர் முதல் பெரியோர்வரை எல்லோரும் ஏறி யும் எறிந்தும் அதன் பழங்களேப் பெற்று மகிழ்கின்றனர். அவ்வா றேதான் நல்லவர்கள் பெற்ற செல்வமும் பிறவும் பகைவர் நண்பர் அயலார் என்ற பாகுபாடின்றி எல்லார்க்கும் பயன்படுகின்றது. மரத்தின் வாழ்வு அதன் நன்மையாய் முடியாமல் அது தோன்றிய இடத்திற்கும் அதனே ச் சூழ வாழ்வோர்க்கும் உபகாரமாய் முடிதல் போல, ஒவ்வொருவனது வாழ்வும் அ வ னு  ைடய நன்மையின் பொருட்டே அமையாமல் அவனது சமூகத்தின் மேன்மைக்காகவே நிக் பெறல் வேண்டும்.
齿

Page 20
செந்தமிழ்த் தேன்
"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்திற்ருற் செல்வம்
நயனுடையான் கண் படி ன்" என்ற குறள் சமூக வாழ்வில் தனி மனிதனின் கடமை இது என்பதை இனிமையாய் எடுத்துரைக் கின்ற து:
ஒப்புரவு போலச் சமூக வாழ்விற்கு இன்றியமையாத மற்ருெரு செயல் ஈகையாகும். வள்ளுவர் ஈகையின் பயனேக் கூறி வற்புறுத்து வாராய்,
"ஆற்ருர் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றன் பொருள் வைப்புழி'
"பாத்துரண் மரீஇயவ?னப் பசியென்னும்
தீப்பிணி திண்டல் அரிது" என்ற குறள்களேப் பாடியுள்ளார். &ë: a) E LL Lituar விரும்பாது ஈதல் நல்லதா என்று சிந்திப் பார்க்கும் அவர் சில கருத்துக்கள் வழங்கியுள்ளார்.
'கல்லாறெனினும் கொளல்திது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று' இக்குறள் ஈகையின் நற்ப யன் எதனேயும் கூறவில் ஐ. மறுதலேயாக ஈகையால் சுவர்க்கம் எய்தாது, நரகமே கிடைக்கும் என்பார் உளராயினும் ஒருவன் ஈகையையே ஊக்கமுடன் செய்தல்வேண்டும் என ஆணேயிடுகின் றது. வள்ளுவர் கூறியவாறு ஈகையின் பயன் கோக்குதளின்றி ஈகை சிறந்த செயல் என்று மசித்து, அதனேப் போற்றிச் செய்த பெருமக்கள் வள்ளுவர் வாழ்ந்த கால த் தி லும் இருந்தார்கள்; அவர்க்கு முன்னும் இருந்து சிறப்புற்றர்கள் ஆய் என்பவன் கடை யெழுவள்ளல்களின் ஒருவன். அவன் நீல நாகமொன்று தனக்கு அளித்த உயர்ந்த ஆடையை ஆலமர் கடவுளாகிய சிவபிரானுக்கு அகமுவந்து கொடுத்தவன். இறைவனிடத்தில் வைத்த அன்புபோ லவே ஏழைகளிடத்திலும் இரக்கம் மிக்கவன். அவன் த ைவிடத்தில் வருபவர்க்கெஸ்லாம் மறுக்காது, மறைக்காது வாரி வழங்கினுன் அவன் அவ்வாறு கொடுத்தது எ கன் பொருட்டு?
"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலே வணிகன் ஆய் அலன் பிறரும் சான்ருேர் சென்ற நெறியென ஆங்குப்பட்டன்று அவன் கை வண்மையே" என்பது, ஆய் என்ற மன்னனின் வள்ளன்மை இத்தன்மை புது என நேரில் கண்டறிந்த ஏணிச்சேரி முடமே சியாரின் பாட்டு,

தமிழர் கண்ட சமுதாய வாழ்வு 晶岳
தமக்கு வரும் நன்மையைக் கருதி அறத்தைச் செய்பவர்கள் அற விலே வணிகர் சமூகத்திற்கு நன்மை என்று கருதிக் கடைப்பிடிப் பவர் ஆய் என்ற வள்ளல் ஒத்தவர்களாவர்.
பிறர் குறிப்பறிந்து உதவி செய்தற்கும், வறியராய் வந்தாரை மகிழ்வித்தனுப்புதற்கும் இன்றியமையாது வேண்டுவது பொரு என்று இரங்கும் இதயமேயாகும். பிறர்க்குத் தன்னுலான நன்மைசெய்யவேண்டும் என்னும் உள்ளம் ஒருவனுக்குண்டாகு மாயின் அங்கல்லுள்ளம் மனம், மொழி, மெய் என்னும் மூன்று வழி கனாலும் சென்று மற்றவர்க்கு உற்றதுசெய்து மகிழ் விக்கும். ஏழை தன் நல்லெண்ணத்தினுலும், இன் சொல்விலுைம் இயன்ற வகையில் உடலுதவியாலும் பிறர்க்கு நன்மைசெய்தல் இயலும், பொருளுள்ளவன் மேற்சொன்னவற்றேடு பொருளாலான நன் மையையும் மேலாகப் புரியமுடியும். சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு புலவரது வாழ்க்கையும் வாக்கும் ஈண்டு நோக்கத்தக்கன. அப் புலவரின் பெயர் பெருஞ்சித்திரனுர் என்பது, அவரது இல்லம் வறுமையின் இருப்பிடம். நன்கு முதிர்ந்த தாயும், மாசற்ற ம&ன யாளும், மழலே திருந்தாத மக்களும் என அவரது மனேயில் வாழ் வோர் பலர். அப்புலவர் அரசர்களுடனும், குறுநில மன்னர்களுட னும் அளவளாவி மகிழும் தகுதியும் பெருமையும் உடையவர். ஆயினும் அவரது வறுமை என்றுமே குன்ருமல் இருந்தது. மன் னர்களும் வள்ளல்களும் பெருஞ்சித்திரனு ரது பாடலேக் கேட்டுப் பாராட்டிப் பலவகைப் பரிசுகள் அளிப்பர். பொன்னும் மணியும் தேரும் யானேயும் என எண்ணிறந்தன அவரில்லத்தை அடையும், ஆனூல், அவை சில நாள்களாயினும் அவர் மனேயில் தரித்திருப்பு தில்லே காரணம், அவர் உள்ளத்தில் குடிகொண்டு வாழ்வில் மலர்க்க ஒப்புரவும் ஈகையுமேயாம். அவர் ஒருமுறை குமண னிடமிருந்து தாம் பெற்றுவந்த பொருளே மனேவி கையில் கொடுத்து யாது கூறுகின்ருர்,
'நின்னயக் துறைகர்க்கும் நீ நயந்துறைார்க்கும் பன்மாண் கற்பின் கின் கிளேமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும் இன்னுேர்க் கென்னுது என்னுெடுஞ்சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னுது

Page 21
செந்தமிழ்த்தேன்
எல்லோர்க்கும் கொடுமதி மனே கிழவோயே பழந்துசங்கு முதிரத்துக்கிழவன் திருந்துவேற் குமணன் நல்கியவளனே "
மனேயாளே, பழங்கள் நிறைந்த முதிரமலே யையுடையவனு
கிய குமணன் தந்த செல்வம் இது. இதனே நீ உன்னுதவியை
விரும்பி வாழ்பவர்க்கும், உனக்கு உதவிசெய்து உன்னுல் விரும் பப்படுபவர்க்கும், உனது குடியிலுள்ள முதிய மகளிர்க்கும், உன் சுற்றத்தாரின் பசிதீர மீண்டகாலக் கடனுகப் பொருள் தந்தவர்க் கும், இவர்க்குக் கொடுக்கலாமா என்ருே, என்னுடன் உசாவ வேண்டும் என்ருே கினேயாது, யாம் இப்பொருளேப் பாதுகாத்து வைத்திருந்தால் கவலையின்றி வாழ்வோமே எள் றும் சிந்தியாது எல்லோர்க்கும் கொடுப்பாயாக" என்பது இப்பாடலின் பொருள்.
இப் புலவர்பெருமானேப்போல, "எல்லோரும் வாழவேண்டும் என்ற எண்ணம் சமூகவாழ்விற்கு ஆணிவேர் போன்றது ஒப்பு வும், ஈகையுமே இல்வாழ்வின் கல்லறங்கள். அதுமட்டுமன்று நல்ல இலட்சியங்களுமாம். அந்த நல்லிலட்சியங்களேயே அறநூல் கள் வற்புறுத்தின. காவியங்கள் புனேந்து காட்டின. அவைகள் பெயரால் அறங்களின் வகையில் அடங்குமாயினும் தமிழர்கண்ட சமுதாய வாழ்வு அவைகளே என்பதில் ஐயமில்லே.

சரித்திரப் பேரறிஞர், வி. கனகசபைப்பிள்ளை அவர்கள். F. a rig, Li Ti, it B. A.
யாழ்ப்பாணச் சரித்திரத்தில் 1833-ம் ஆண்டில் ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த ஆண்டிலேதான் அமெரிக்கப் பாதிரிமார் வட்டுக்கோட்டையில் 'செமினேறி' என்ற வித்தியாபீடத்தை ஆரம்பித்தார்கள். கீழைத் தேசங்களில் தாபிக்கப்பெற்ற உயர்தர கல்வி கிலேயங்களில் இது இரண்டாவதாகக் கருதப்படுகின்றது. முதலாவது தாபனம் கல்கத்தாவுக்கருகில் தாபிக்கப்பட்ட சிரம் பூர்க் கல்லூரி என்று கூறப்படுகிறது.
இந்த செமினேறியில் பல பாடங்கள் போதிக்கப்பட்டபோதி லும், இவற்றுக்கெல்லாம் அத்திவாரமாகச் செக்தமிழும், ஆங்கில மும் செவ்வனே போதிக்கப்பட்டன. ஆகவே இந்தச் செமினேறியி லிருந்து வெளியேறியவர்களெல்லாம் இரு மொழிகளிலும் விற்பன் னர்களாக விளங்கினர். இவர்களில் சிலர், சுதுமலே (கரொல்} விசுவநாதபிள்ளே, சி. வை. தாமோதரம்பிள்ளே, சிதம்பரப்பிள்ளே, வைமன் கதிரவேற்பிள்ளே, மோசஸ் வேலுப்பிள்க்ள, மல்லாகம் விசுவநாதபிள்ளே என்பவர்களாவர். இவர்கள் இப்படி இருமொழி விற்பன்னர்களாக விருந்தபடியாலேயே தமிழில் கணி தம், தர்க்கம், வானசாத்திரம் முதலிய துறைகளில் சிறந்த நூல் கள் எழுத வல்லராயினர்.
இப்பொழுது தேசமொழிகளில் உயர்தரக்கல்வி போதிக்கப் படவேண்டுமென்ற கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனுல் ஆங் கிலத்திலும், தாய்மொழியிலும் பாண்டித்தியமுடைய ஆசிரிய சமூ கம் தோன்றும் வரைக்கும் தேசிய மொழிகளில் உயர்தரக்கல்வி ஊட்டுவது சாத்தியமாகாது. வட்டுக்கோட்டைச் செமினேறியி யில் நடைபெற்றமாதிரி இந்தக் காலத்திலும் ஆசிரியர், பேராசிரிய ராக வர விரும்புவோருக்கு ஆங்கிலமும் தாய்மொழியும் செவ்வனே போதிக்கப்படவேண்டிய தவசியமாகும்.
நாம் முன்பு கூறிய மல்லாகம் விசுவநாதபிள்ளேயென்பவரே வி. கனகசபைப்பிள்ளேயின் தந்தையாராவர். அவர் செமினேறியில் கல்விகற்று ஆங்கிலத்திலும் செந்தமிழிலும் விற்பன்னராக விளங் கினர். பின்னர் கரொல்ட் விசுவநாதபிள்ளே, தாமோதரம்பிள்ளே ஆகியோரைப்போல் சென்னேக்குச் சென்று அங்குள்ள சர்வகலா

Page 22
8ዳ செந்தமிழ்த் தேன்
சாஃலப் பரீட்சைக்குத் தோன்றி பீ. ஏ. பட்டம் பெற்ருர், இவ ருடைய தமிழ், ஆங்கில அறிவைக் கண்ட சென்னே அரசாங்கத்தி னர் இவரை அரசாங்க மொழிபெயர்ப்பாளராக அமர்த்தினர். இதோடு வின் சிலோ பாதிரியாருக்கு அவருடைய அகராதி வேலே யில் இவர் உதவிபுரிந்து வந்தார். தமது அகராதி வெளியிடுவதற்கு விசுவநாதபிள்ளே செய்த உதவியை, வின்சிலோ பாதிரிபார் அகரா திக்கெழுதிய முகவுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றிற்கு மேலாகப் பல ஆங்கில நூல்களேத் தமிழில் மொழிபெயர்த்து வெளி
7 LT f.
இப்படித் தமிழ் வளர்த்த விசுவநாதபிள்ளேக்கு ஏக புத்திர ணுக கனகசபைப்பிள்ளே சென்னே கோமளேஸ்வரன் பேட்டையில் 25-5-1855ல் பிறந்தார். இவர் இளம் வயதில் கல்வியில் ஊக்கமுள்ள வராக விளங்கினுர், பின்னர் சென்னே அரசாங்கக் கல்லூரியிற் பயி ன்று 1872-ம் ஆண்டில் தமது பதினேழாவது வயதிலேயே பீ. ஏ. பட் டம் பெற்ருர். இதனுல் இவரைப் பட்டதாரிப் பையன்" என்று அழைத்துவந்தனர். சென்னே அரசாங்கக் கல்லூரியில் இவருடன் சேர், இராம5ாதனும் கல்வி கற்ருர் என்பர். சேர். இராமநாதனப் போல் இவரும் உடல்நலம் கருதி ஒரு பயில்வானிடம் தேகப்பயிற்சி முறைகளிேக் கற்று நாள்தோறும் தேகப்பயிற்சி செய்துவந்தனர்.
பீ. ஏ. பட்டம் பெற்றதும் சென்னே தபாற் பகுதியில் உத்தி யோகத்தில் அமர்ந்தார். அவ்வுத்தியோகத்திலிருந்துகொண்டே சட்ட நூற் கல்விகற்று பீ. எல். பட்டம் பெற்ருர் இக் காலத்தில் தபாற் பகுதியிலிருந்து ஒரு வருட ஓய்வு எடுத்துக்கொண்டு மதுரை யில் நியாயவாதத் தொழில் பார்த்தார். மதுரையிலிருந்தபொழுது சேர். எஸ். சுப்பிரமணிய ஐயருடைய கட்பையும் பெற்ருர், 1875-ம் ஆண்டில் தமது மாமனுர் டாக்டர் பொன்னேயாவின் மகளே மனஞ் செய்துகொண்டார்.
ஓராண்டு முடிவெய்தியதும் கியாயவாதத் தொழிலே விட்டுவிட்டு பழையபடி தபாற் பகுதியில் உத்தியோகத்தில் அமர்ந்தார். தமது வேலேத் திறமையால் விரைவில் பிரிவு மேலதிகாரியானுர், இதனுல் உத்தியோக நிமித்தம் தமிழ்நாட்டில் பல பாகங்களுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு நேர்ந்தது. இப்படிப் போகுமிடங்களில் தமிழ் ஏட்டுப் பிரதிகளேத் தேடுவதும் கோயில்களிலே காணப்படும் சாச னங்களே ஆராய்வதும் இவருக்கு வழக்கமாகி விட்டன. பலவிடங் களிலிருந்தும் பெருந்தொகையான ஏட்டுப் பிரதிகளே பிரதி செய்வ

கனகசபைப்பிள்ளே அவர்கள்
தற்கும் தாம் சொல்லும் விடயங்களே எழுதி வைப்பதற்கும் அப்பா வுப்பிள்ளே என்பவரை வைத்துக்கொண்டார். இப்படிச் சேகரித்து வைத்த ஏட்டுப்பிரதிகளேயும், மற்றும் ஆராய்ச்சியின் பயனுகக்கண்ட செய்திகளேயும் காலத்துக்குக்காலம் தமிழ் அறிஞர்களுக்குக் கொடுத் துதவிவந்தார். இந்தத் தாராள மனப்பான்மை வேறு சில தமிழறி ஞர்களிடம் மட்டுமே காணப்பட்டது.
கலித்தொகைப் பிரதிகளே சி. வை. தாமோதரம் பிள்ளேக்குக் கொடுத்துதவினர். இதைப் பற்றிக் கலித்தொகை முகவுரையில் தாமோதரம்பிள்ளே கூறுவது பின்வருமாறு: "யாழ்ப்பாணத்து மல் லாகம் விசுவநாதப் பிள்ளேயவர்கள் புத்திரரும் தமிழ்க்கலே விநோ தந் தமக்குப் பொழுது போக்காகவுடையவருமான பூரீ கனகசபைப் பிள்ளேயவர்கள் தம் பிரதியும், திருமணம் கேசவ சுப்பராய முதலி யார் மயிலே இராமலிங் கம்பிள்ளே பிரதிபுத் தயை செய்தார்."
டாக்டர் உ.வே.சாமிநாதையருக்கு பத்துப்பாட்டு, புறகானூறு சிலப்பதிகாரம் முதலியவற்றின் ஏட்டுப்பிரதிகளேக் கனகசபைப் பிள்ளே கொடுத்துதவிஞர். டாக்டர் உ. வே. சாமிநாதையர் தமது புறநானூற்று முகவுரையில் பின்வருமாறு கூறுகிருர் "முதன்முதல் இந்நூலே அச்சிட்டு வருகையில் சிலாசாசனம் முதலியவற்றில் அறி தற்குரியவற்றைத் தெரிந்துகொள்ளுதற் பொருட்டு நான் விணுவிய போது ராவ்பகதூர் வி. வேங்கயரவர்களும், ராவ்பகதூர் வி. கனக சபைப் பிள்ளேயவர்களும் அனுப்பிய விடைகள் அரும்பதமுதலிய வற்றின் அகராதியில் உரிய இடங்களில் அடிக்குறிப்பாகச் சேர்க்கப் பெற்றுள்ளன.
இவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளில், 1800 ஆண்டுக ளுக்கு முந்திய தமிழரைப்பற்றி எழுதியவையே மிகப் பி. சித்தி பெற்றவை. இக்கட்டுரைகள் 1893-ம் ஆண்டுக்கும் 1902-ம் ஆண்டுக்கு மிடையில் "மதருஸ் றிவியு" என்னும் பத்திரிகையில் வெளிவந்தன. அக்காலத்தில் இக்கட்டுரைகளே அறிஞர்கள் மிகவும் பாராட்டினர் இவர்களுள் முக்கியமானவர் சேர். எஸ். சுப்பிரமணிய ஐயராவர். அவர் இந்தக் கட்டுரைகளேத் தொகுத்து வெளியிடும்படி பிள்ளே பவர்களேத் தூண்டினர். பிள்ளேயவர்கள் கட்டுரைகளேத் தொகுத்து 1904ம் ஆண்டில் நூலாக வெளியிட்டு, அந்நூலே சேர். எஸ். சுப்பிர மணிய ஐயர் அவர்களுக்கு உரிமையாக்கினர்.
பிள்ளேயவர்கள் தமது நூலேப் பதினுறு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிருர், அவற்றுள் தமிழ் காட்டின் நிலப்பிரிவுகளேயும்,

Page 23
星门 செந்தமிழ்த் தேன்
தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளேயும், அக்காலத்தைய தமிழர் கிரேக்கர், உரோமர் முதலிய அந்நிய நாட்டாரோடு நடாத்திய வானி பத்தையும், அக்காலத்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க் கை முறையையும் எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றுடன் ፵፪ | நாட்டை ஆண்ட முடியுடை மூவேந்தரைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் அக்கால சமூக வாழ்வையும் தெளியக் காட்டியுள்ளார். பின் னர் அக்காலத்துத் தோன்றிய குறள், சிலப்பதிகாரம், மணிமேகஜல, போன்ற இலக்கியங்களைப் பற்றியும் அவற்றை இயற்றிய புலவர் களே ப்பற்றியும், பிற புலவர்கள்ேப் பற்றியும் ஆராய்ந்துள்ளார். இறுதியாக அன்றைய தமிழ்நாட்டுச் சமய்நிக்ஸ்பற்றி எழுதியுள்ளார். இப்படி எல்லாப் பொருள்களேயும் ஒன்றுசேரத் தொகுத்து ஒரு பெருவரலாற்றுநூலே, தமிழ் இலக்கியங்கே பும் தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்டிருந்த பிறநாட்டு அறிஞர்முடிபுகளேயும் கொண்டு எழுதியுள்ளார்.
கனகசபைப்பிள்ளே தாம் எழுதிய பெரு நூலுக்குப் பிரதான ஆதாரமாக எடுத்துக்கொண்டவை பத்துப்பாட்டு, 61 ட்டுத் தொ கை, சிலப்பதிகாரம், மணிமேகலே முதலிய நூல்களாகும். இந்த இலக்கியங்களெல்லாம் கி. பி. முதலாம் இரண்டாம் நூற்ருன்டுக ஞக்தச் சேர்ந்தவை என்பதை பலசான்றுகள் கொண்டு தோற்று வாயில் நிறுவியுள்ளார்.
1904-ம் ஆண்டில் நூல் வெளிவந்ததும் கனகசபைப் பிள்ளேயின் புகழ் பரவத் தொடங்கியது 1905-ம் ஆண்டில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவுக்கு இவரே தலேமை தாங்கினர். மது ரைத் தமிழ்ச்சங்கப் புலவர் குழுவில் இவரும் ஒர் உறுப்பினராக இருந்து அச்சங்கவெளியீடான "செந்தமிழ்" முதல் இதழிலிருந்தே கட்டுரை எழுதிவந்தார்.
இப்படி தமிழ்த் தாய்க்கு அருக்தொண்டாற்றியவர் 1908-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29-ம் திகதி சிவராத்திரித் தினத்தன்று காஞ்சிபுரத்தில் அகால மரணமடைந்தனர். இவருடைய மரணம் தமிழ் அறிஞர்களேத் துக்கக்கடலில் ஆழ்த்தியது.
மேற்கூறியவற்றல் பிள்ளேயவர்கள் தமிழ் இலக்கியத்துக்கும் சரித்திர ஆராய்ச்சிக்கும் செய்தசேவை ஒருவாறு புலப்படும். தமி ழர்கள் அவர் எழுதிய சரித்திர நூலேப்படித்து அவர் ஞாபகத்தை வளர்த்து வருவார்களாக மேலும் தமிழினத்தின் சிறந்த பண்பைப் பற்றி பிள்ஃளயவர்கள் கூறியது பின்வருமாறு: "சென்ற இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கள் மொழியையோ ாேகரிகத் தையோ கிட்டத்தட்ட மாருதகிலேயில் வைத்துக்காத்துள்ள உல கின் ஒரே இனம் தமிழினமே."
தமிழினத்தின் இத்தனிப்பண்புக்கு இடையூறு நேராவண்ணம் பாதுகாப்பது தமிழ்மக்களிள் கடனுகும்.

35L6öT LIL6)
(பூநீலபூரீ ஆறுமுகநாவலர்)
சரீரசுகத்தின் பொருட்டாவது, தருமத்தின் பொருட்டாவது யாவரும், தங்கள் தங்கள் வரவுக்கேற்ப மட்டாகச் செலவு செய்தல் வேண்டும். வரவுக்கு மேலே செலவு செய்யப் புகுவோர் கடன் படத் தலேப்பட்டுப் பெருக் துன்பத்தையும் அவமானத்தையும் அடைவர். கடனுடையவருக்கு இம்மை மறுமை இரண்டினும் இன்பமே இல்லே. எத்துணேப் பெருஞ் செல்வராயினும் கடன்படத் தலப்படுவோர் விரைவிலே தங்கள் செல்வமெல்லாம் இழந்து தரித்திரராவர். இம்மை யிலே மனிதர்கள் அநுபவிக் குங் துன்பங்களெல்லாவற்றினும், கடனுல் உண்டாகுங் துன்பத்தின் மிக்க துன்பம் யாதொன்றும் இல்லை. தாயைக் கண்டாற்போலப் பேரானந்தத்தோடு தனிகனேக் கண்டு அவனிடத்தே கடன்பட்டவர், பின்பு அவன் எதிர்ப்படும் போது பேயைக் கண்டாற்போலப் பெரும் பயத்தோடு அவனேக் கண்டு நடுநடுங்கி ஒளிப்பிடங்தேடி ஓடுவர்.
பொருளில்லேயானுல் கூலித்தொழில் செய்து வயிறு வளர்க்கி னும் வளர்க்கலாம் பிச்சையேற்று உண்ணினும் உண்ணலாம் பசி நோயால் வருந்தி இறக்கினும் இறக்கலாம். இவையெல்லாம் அவ மானங்களல்ல; இவற்றினுலே பிறருக்கு யாதொரு கேடும் இல்லே எவருக்காயினும் அஞ்சவேண்டுவதும்இல்லே. இவற்றினுலே துன்பம் உண்டாயினும் அத்துன்பமோ மிகச்சிறிது அச்சிறு துன்பமும் நல் லறிவோடு அமைந்து சிந்திக்கும்போது நீங்கிவிடும், கடனுே இப் படிப்பட்டதன்று, பெருவியாதி முதலிய கொடுகோயினுல் உண்டா குங் துன்பத்தைப் பொறுக்கினும் பொறுக்கலாம், கடனுள் உண்டா குங் துன்பத்தைப் பொறுத்தல் அரிது அரிது.
கடன்படக் கூசாதவர் பொய்சொல்லக் கூசார் பொய்ப்பத் திரம் பிறப்பிக்கக் கூசார் பொய்வழக்குப் பேசக் கூசார் விசுவாச காதகஞ் செய்யக்கூசார் வழக்குத் தீர்ப்பிலே பரிதானம் வாங்கக் கூசார் களவு செய்யக் கூசார் கொலே செய்யக் கூ சார் கடன் படல் எல்லாப் பாவங்களேயும் வலிந்து கைப்பிடித்தழைக்குங் தூது,
tj

Page 24
செந்தமிழ்த் தேன்
ஒருவனுக்குத் தன்பொருளிற் சிறிது கடனுகக் கொடுத்தவன் அம் முதற்பொருள் வட்டியோடு வரும் வரும் என்று நெடுங்காலம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன்; சிலபோது தனக்கு முட்டு வந்தவிடத்துத் தன் முதற் பொருளேயும் வட்டியையும் நம்பித்தான் பிறனிடத்தே கடன் படுகின்ருன் தான் கொடுத்த கடன் வாராத பொழுது தன் பிறமுயற்சிகளே விடுத்துக் கடனுடையவனேப் பல நாளும் பலதரமும் தேடித்தேடிக் கேட்டுக்கேட்டு அலேந்து திரிகின் முன் அவன் அக்கடனேத் திராதபோது அவன்மீது தருமசபையிலே வழக்குத் தொடுத்துத் தன் காலத்தையும் தன்னஞ்சிய பொருளேயும் பல வாற்ருலும் அவ்வழக்கிலே போக்குகின்றன் அவ்வழக்கை நடத்துதற்குத் தன் எஞ்சிய பொருள் போதாதபோது பிறனிடத்தே கடன்படுகின்ருன், நெடுங்காலஞ் சென்றபின், தான் அவ்வழக்கிலே தோல்வியடையாது வெல்வி அடைக்கானுயினும், கடனுடையவனி டத்தே தாவரசங்கமப் பொருள் உண்டோ இல்லேயோ என்று பல நாளும் ஆராய்ந்து கொண்டு திரிகின்றன் அவையும் இல்லாத போது ஏங்கி வருந்தி மாய்கின்ருன், தாவரசங்கமப்பொருள் கண்டு விக்கிரயஞ் செய்தவிடத்தும் அவற்றின் விலே தனக்கு வரற்பாலன வாகிய முதலுக்கும் வட்டிக்கும் வழக்குச் செலவுக்கும் போதாத பொழுது தான் பிறனிடத்தே வாங்கிய கடனேத் தீர்த்துவிட்டு "என் செய்வேன் என்செய்வேன்' என்று பெருமூச்செறிந்து கவலேக் கடலின் மூழ்கித்தன் மனேவிமக்களோடுட்டினியிருக்து மாய்கின்ரன். இது இப்படியிருக்க, தன் பொருள&னத்தையும் திருடரால் இழந்த வினுே சிலநாள் மாத்திரம் கவலேயுற்றுப் பின்புஆக்கவலேயை ஒழித்து விட்டுத் தன்னுல் இயன்ற தொழில்செய்து மகிழ்ச்சியோடு சீவனஞ் செய்கின்றன். ஆதலினுலே, ஒருவனுடைய பொருள் முழுதையும் திருடுதலினும் அவனுடைய பொருளிற் சிறிதையேனும் கடனுக வாங்கிக்கொண்டு அதனேத் தீர்க்காமை பெருங்கொடும் பாவம் | Մի ն]] էի:
நம்முடைய தேசத்தாருள்ளே கடன்படும் வழக்கம் மிகப்பெரிது. கடன்படாதவர் நூற்றுவருள்ளே ஒருவர் கிடைப்பதும் மிக அரிது. அநேகர் சுபாசுபகருமங்களிலே பிறர் செலவு செய்வதைப் பார்த்து தாங்களும் அப்படியே செலவு செய்யாதொழிந்தால் தங்களுக்கு

GLIGT LJLi
அவமானமாகும் என்று எண்ணிக் கண்ணே முடிக்கொண்டு அகப் படுமட்டும் கடன் பிட்டுச் செலவுசெய்கின்ருர்கள். கடன்பட்டு வட்டி வளர்ந்தபின் முன்னுள்ளதும் இழந்து பசிநோயால் வருந்துதலும், கடனத்தீர்க்க இயலாது தணிகர் குடியைக் கெடுத்தலும் அவமான மல்லவாம்; வரவுக்கேற்ப மட்டாகச் செலவுசெய்து முட்டின்றி வாழ் தல் அவமானமாம். ஐயையோ! இவர்களின் அறியாமை இருந்தபடி କTୋté୩ !
கடன் பட்டு ஆபரணங்தரிப்போரும், பவனிவருவோரும், பிறர் பார்த்து இன்பம் அநுபவிக்க, தாங்கள் தங்கள் கடனே கினேந்து நெஞ்சங் திடுக்குத் திடுக்கெனப் பெருமூச்செறிந்து துன்பமே அதுப விக்கின்றர்கள். தாங்கள் துன்பக்கடலில் மூழ்கியும் பிறருக்கு இன் பத்தைக் கொடுக்கும் இந்த டாம்பிகர்களுடைய சீவகாருண்யத்தை யாது சொல்வோம்!
வாணிகஞ் செய்ய விரும்புவோர் இயன்றமட்டும் தங்கள் கைப் பொருளேக்கொண்டு வாணிகஞ் செய்வதே தகுதி கைப்பொருளில் லாதவர் கடன்சொல்லிச் சரக்குகளே வாங்கி வாணிகஞ்செய்ய முயன் ரூல், கடன் கொடுப்பவன் வட்டிவாசிகளே அச்சரக்கின் விலேயோடு சேர்த்தே கொடுப்பான். ஆதலினுல் வாணிகம் தலேயெடுக்காது.
கடன் படத் த&லப்படுவோர் தாம் கடன்படுதற்கு முன்பே 'இப்போது இந்தப் பணத்தொகை நமக்கு ஆவசியகமா? இந்தக் கடனேத் தீர்த்தற்குப்பொருள் வரும்வழி உண்டா? பொருள் விபர வில் வருமா? தாமதத்தில் வருமார் தாமதத்தில் வருமாயின், இதற்கு வட்டி வளர்ந்து விடுமன்ருே பொருள் வராதவிடத்து இக்கடனே த் தீர்க்கப் பிறிதுவழி உண்டா? இப்பொழுது இப்பணம் ஆவசியகமே பாயினும் கடன்படாது நம்முடைய தாவரசங்கமப் பொருளிலே சில வற்றை விற்றே செலவு செய்யலாமே. இப்படிச் செய்தால் வட்டி மிஞ்சுமே! இப்படிச் செய்யாதொழிந்தால் வட்டி வளர்ந்தபின் நம் முடைய தாவரசங்கமப் பொருள் முற்றும் போய்விடுமே! அதன் பின்பு சீவனத்துக்கு பாது செய்யலாம்' என்று இவையெல்லாவற
றையும் செவ்வையாக ஆலோசிக்கக் கடவர்.

Page 25
曹整 செந்தமிழ்த் தேன்
கடனுடையவன் தான் வாங்கின் கடனேக் கொடாவிடில் அவன் செய்த புண்ணியமெல்லாம் தனிகனேச்சாரும். வாங்கின கடனேத் திராமல் இறந்துபோன கடனுடையவன் அளவில்லாத காலம் நரகத் துன்பத்தை அநுபவித்த பின்பு தனிகன் வீட்டிலே கூவியாளாகவும் பெண்ணுகவும் அடிமையாகவும் குதிரையாகவும் மாடாகவும் கழுதையாகவும் பிறந்துழைப்பான்.
ஒருவன் தன்னிடத்தே பிறனுல் நம்பிவைக்கப்பட்ட பொருளே தன் புத்திரனேப்போலக் காத்து, பொருளே வைத்தவன் கேட்கும் பொழுதே கொடுக்கக்கடவன். அப்படிப் பொருளேக் காத்துக் கொடுத்தால் அவன் இரணியதானம் முதலிய தானங்களேக் கொடுத் தவனுக்கு உண்டாகும் பலத்தையும், அடைக்கலம் புகுந்தவனேக் காத்தவனுக்கு உண்டாகும்பலத்தையும் அடைவான். அந்தப்பொரு ளேக் கவர்ந்தவன் தன் புத்திரனேயும் சிநேகன் முதலானவர்களே யும் கொன்ற பாவத்தை அடைவான்.

*தருமம் தலைகா க்கும்’ (மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்)
ஏறக்குறைய நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் ஆங்கரை என்னும் ஊரில் சுப்பையரென்ற செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டாயிரம் ஏக்கர் கன்செய் நிலங்கள் இருந்தன. அவை ஏழு கிராமங்களில் இருந்தன என்பர். அவருடைய குடும்பம் பரம்பரையாகச் செல்வமுள்ளதாத விளங்கியது. அவர் தெய்வபக்தி யும் ஏழைகளிடத்தில் அன்பும் தருமசிந்தனேயும் வாய்ந்தவர்.
நாள் தோறும் காலேயில் ஸ்நானம் செய்துவிட்டு அவர் பூசை முதலியவற்றை முடித்துக்கொள்வார்; பிறகு போஜனம் செய்வதற்கு முன் வெளியே வந்து தம் வீட்டுத்திண்னேயில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களா என்று கவனிப்பார் தரிசிபுரம், நீரங்கம், திருவா &னக்கா முதலிய இடங்களுக்குக் கால்நடையாகச் செல்லும் வழிப் போக்கர்கள் அவருடைய வீட்டுக்குவந்து திண்ணேயில் தங்கியிருப் பார்கள். சுப்பையர் அவர்களே உள்ளே அழைத்துப் பசியாற அன்ன மிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதை அறிந்திபல பிரயாணிகள் அவருடைய வீட்டுக்கு வருவார்கள். அவருடைய வீடானது ஒரே சமயத்தில் பலர் இருந்து ஒருங்கு உண்ணக்கூடிய முறையில் விசாலமாக அமைந்திருந்தது. எல்லாவகையினருக்கும் அவர்களுக்கு ஏற்றவகையில் அவர் உணவளிப்பார். பசியென்று எந்தநேரத்தில் யார் வரினும் அவருடைய பசியை நீக்கும் வரையில் அவரது ஞாபகம் வேருென்றிலும் செல்லாது.
தம்முடைய வீட்டுக்கு இரவும் பகலும் இங்கனம் வந்து போவாரை உபசரித்து அன்னமிடுவதையே தம்முடைய வாழ்க்கை யின் பயனுக அவர் எண்ணினுர், பசிப்பிணி மருத்துவராகி வாழ்ந்து வந்த அவருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை யாவரும் அன்ன தானம் ஐயரெனவும், அன்னதானம் சுப்பையரெனவும் அழைப்பா ராயினர்.
சுப்பையரின் குடும்பம் பெரியது. அவருடைய சகோதரர்கள். அவருடைய மகனவிமார், குமாரர்கள், மருமக்கள் முதலியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர், அன்னதானம் செய்யும் பொருட்டு

Page 26
செந்தமிழ்த் தேன்
அவர் தனியே சமையற்காரர்களே வைத்துக்கொள்ளவில்லே. அவர் வீட்டிலுள்ள பெண் பாலரே சமையல் செய்வதும் வந்தோரை உபச ரித்து அன்னமிடுவதுமாகிய வேலேகளேச் செய்துவந்தனர். சிறுபிள் ளேகள் முதற் பெரியவர்கள் வரையில் யாவரும் இலேபோட்டும் பரி மாறியும் பிறவேலே களேப்புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கு ஏற்றபடி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள். அதிதிகளுக்கு உபயோகப் படும் பொருட்டு அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய் முதலிய வரிறை அவ்வப்போது செய்துவைக்கும் வேலேயில் அவ் வீட்டுப் பெண்பாலார் ஈடுபட்டிருப்பார்கள். அவருடைய வீடு ஒரு சிறந்த அன்னசத்திரமாகவே இருந்தது; குடும்பத்தினர் யாவரும் தர்மத் திற்காக அன்புடன் உழைக்கும் பணியாளர்களாக இருந்தனர்.
"இப்படி இருந்தால் எப்படிப்பணம் சேரும்? எப்பொழுதும் இந்த மாதிரியே நடத்தி வருவது சாத்தியமா' என்று யாரேனும் சிலர் சுப் பயரைக் கேட்பார்கள் அவர், "பரம்பரையாக கடந்து வரும் இந்தத் தருமத்தைக் காட்டிலும் மேற்பட்ட இலாபம் வேறென்று எனக்கு இல்லே. பசித்து வந்தவர்களுக்கு அன்னமிடு வதையே சிவாராதனமென்று எண்ணுகின்றேன். தெய்வம் எவ் வளவு காலம் இதனே கடத்தும்படி கிருபை செய்கிறதோ அவ்வளவு காலம் கடத்தியே வருவேன். நான் செய்வது கெட்டகாரியமன்று என்ற திருப்தியே எனக்குப் போதும்' என்பார்.
இங்ங்ணம் அவர் வாழ்ந்துவரும் காலத்தில் ஒரு சமயம் மழை யின்மையாலும் ஆறுகளில் நீர் போதிய அளவு இல்லாமையாலும் நிலங்களில் விளேவு குறைந்தது. ஆயினும் அன்னதானத்தை அவர் குறைக்கவில்லே. இப்படி ஒருவர் அன்னதானமிடுகிருர் என்ற செய் தியை அறிந்த பலஏழைமக்கள் அங்கங்கே நேர்ந்த விளேச்சற் குறை வினுல் ஆதரவுபெருமல் சுப்பையர் வீட்டுக்குவந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்ருர்கள். இதனுல் அக்காலத்தில் வழக்கத்துக்கு மேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் மனம் கலங்கவில்லே. நாயன்மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் இறைவன் சோதனேக்கு உட்பட்டு அக் நாயன்மார்கள் பின்பு நன்மை பெற்றதை அறிந்தவராதலின், தம் முடைய நிலங்கள் விளேவு குன்றியதும் அத்தகைய சோதனேயே

தருமம் தலேகாக்கும் 47
என்றெண்ணினுர் தருமம் கலேகாக்கும் என்றதுணிவினுல் அவர் எப்பொழுதும் செய்துவரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்ன தானத்தை நடத்திவந்தார். பொருள் முட்டுப்பாடு உண்டானமை யால் தம்குடும்பத்துப் பெண் பாலரின் ஆபரணங்களேவிற்றும் அடகு வைத்தும் பொருள் பெற்று அன்னதானத்திற்குப் பயன் படுத்தி வந்தார். அதனுற் குடும்பத்திற்கு ஒரு சிறிதும் வருத்தம் உண்டாக வில்லே; அப் பெண்களோ தங்கள் நகைகள் ஒரு நல்ல காரிடத்திற் குப் பயன்பட்டது கருதி மகிழ்ந்தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள யாவரும் ஆடம்பரமின்றி இருந்தனர்.
பொருள் முட்டுப்பாடு அவ்வருஷத்தில் நேர்ந்தமையால் அர சாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய வ ரிப் பண த் தை அவராற் செலுத்த முடியவில்லே. அவ்வூர்க் கணக்கப்பிள்ளே மணியகாரர் ஆகிய கிராமாதிகாரிகள் இருவரும் வரி வசூல்செய்ய முயன்ருர்கள். சுப்பையர் தம்முடைய நிலமையை விளக்கினுர், அவர்கள் சுப்பை யருடைய உண்மை நிஃயையும் பரோபகார சிந்தையும் கன்கு அறிந்தவர்களாதலால் அவர் கூறுவது மெய்யென்று ஏற்றுக்கொண் டனர். ஆயினும் மேலதிகாரிகளுக்கு எவ்விதம் பதில் சொல்வது? அதனுல் சுப்பையரை நோக்கி"நாங்கள் பாது செய்வோம்? உடனே வரியை வசூல் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்தி ருக்கிறதே" என்ருர்கள். சுப்யைர், 'என்மீது வஞ்சனேயில்ஃ என் பது உங்களுக்கே தெரியும் கான் இப்போது வரியை செலுத்த முடி யாத கிலேயில் இருப்பதாக மேலதிகாரிகளுக்குத் தெரிவியுங்கள் அவர்கள் நிலத்தை ஏலம் போடக்கூடும். தெய்வம் எப்படி வழிவிடு கிறதோ அப்படியே நடக்கும். அதுவே எனக்கும் திருப்தி" என்ருர்,
சிலர் அவரிடம் வந்து,"இந்தக்கஷ்டத்திலும் அன்னதானத்தை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? சிலகாலம் நிறுத்தி விட்டால் வரியையும் கொடுத்து விடலாம்; உங்களுச்கும் பனம்சேருமே" என் ரூர்கள். அவர் "இந்தக்காலத்தில் அன்னமிடாவிட்டால் இவ்வளவு காலமும் செய்தும் பயனில்ஃப் இப்போதுதான் அவசியம் இந்தத் தருமத்தை நடத்தி வரல்வேண்டும். விடமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே? பல ஏழைகள் பசியோடு வரும்போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தருமத்தைச் செய்துவந்தால் நன்முக விளேயும் காலத்தில்

Page 27
48 செந்தமிழ்த் தேன்
உண்டாகும் இலாபத்தில் ஈடுசெய்து கொள்ளலாம். இப்பொழுது செய்யாமல் நிறுத்திவிட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது" என்ருர்,
கணக்குப்பிள்ளேயும் மணியகாரரும் நடந்ததை வரிப்பன அதி காரியிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தார் அவருக்கு ஒன்றும் தோன்றவில்லே-"தாசில்தாருக்குத் தெரிவித்தார். அவர் மிக்க முடுக் கோடு வந்து பயமுறுத்தினுர் சில கடுமையான தொந்தரவுகளேயும் செய்து பார்த்தார். சுப்பையர் தம்முடைய கிலேமையை எடுத்துச் சொன்னுர், தாசில்தார், "இந்த அன்னதானத்தை நிறுத்தி விட்டுப் பணத்தைக்கட்டும்' என்று சொல்லவே சுப்பையர், "தாங்கள் அதனே மாத்திரம் சொல்லக் கூடாது. எங்கள் பரம்பரைத் தருமம் இது. இதனே கிறுத்திவிடுவதென்பது முடியாத காரியம், என்னு டையமுச்சு உள்ளவரையில் இதனே நிறுத்த மாட்டேன்; எனக் என்ன துன்பம் வந்தாலும் வரட்டும்' என்ருர்,
தாசில்தார். "இவையெல்லாம் வெறும் வேஷம் அன்னதானம் செய்கிறேனென்று ஊரை ஏமாற்றுகிறவழி" என்ருர், சுப்பையர்பால் சில காரணங்களால் பொருமை கொண்ட அரசாங்க ஊழியர்கள் சிலர் தாசில்தாரிடம் அவரைப்பற்றி முன்னமே கோள் கூறியிருந் தனர். தாசில்தாரும் கோபியாதலின் சுப்பையருடைய குணத்தை அறிந்துகொள்ளவில்லே.
'உம்மால் பணம் சொடுக்க முடியாவிட்டால் உம் மு ைட ய நிலத்தை ஏலம் போடுவேன்" என்ருர் தாசில்தார்.
'அவ்விதம் செய்வது அவசியமென்று தங்களுத் தோன்றினுல், தெய்வத்தினுடைய சித்தமும் அதுவாக இருக்குமானுல், நான் எப் படி மறுக்க முடியும்?' என்று சுப்பையர் பணிவாகக் கூறினுர்,
தாசில்தார் நிலத்தை ஏலம் போட்டார் இந்தத் தருமதேவதை யின் நிலத்தை ஏலத்தில் வாங்கினுல் நம்முடைய குடும்பமே காச மாகிவிடும்" என்ற பயத்தால் அவ்வூரில் உள்ளேரேனும் அயலுரரின ரேனும் அந்தநிலத்தை வாங்கத் துணியவில்லே, தம் அதிகார மொன் றையே பெரிதாக எண்ணிய தாசில்தாருக்கோ கோபம் பொங்கியது, மீசை துடித்தது, கண் கள் சிவந்தன. "இக் த மனிதன் பொல்

தருமம் தலகாக்கும்
லாதவனென்று தெரிகிறது. இவனுக்கு அஞ்சியே இதனே வாங்க ஒருவரும் முன்வரவில்லே. இருக்கட்டும், இவனுக்குத் தக்கபடி ஏர் பாடு செய்கிறேன்" என்று சொல்லித் தாசில்தார் போய்விட்டார். சுப்பையரைப் போலவே வேறு பலர் வரிசெலுத்தவில்லே. ஆயினும் அவர் செலுத்தவேண்டிய தொகை சிறியதாதலின் எவ்வாறேனும் வசூல் செய்து விடலாமென்ற தைரியம் தாசில்தாருக்கு இருந்தது. சுப்பையர் பெருந்தொகை செலுத்த வேண்டியவராக இருந்தமை யால் அவர்மீது தாசில்தாருக்கு இருந்தகோபத்திற்கு அளவேயில்லே. உடனே, தாசில்தார் பலரிடமிருந்து வரி வசூல் செய்யப்படவில்லே என்பதையும், அவர்களுள் பெருக்தொகை செலுத்தவேண்டிய சிப் பையர் அதற்குரிய முயற்சியொன்றும் செய்யாமல் இருப்பதையும், அவருடைய நிலத்தை ஏலத்தில்வாங்க ஒருவரும் துணியாததையும், மாவட்டத் தக்லவருக்கு எழுதி, ஒரு தக்க ஏற்பாடு செய்யவேண்டு மென்று தெரிவித்தார்.
"எல்லாம் இறைவனின் திருவுள்ளப்படி நடக்கும்' என்ற மன் அமைதியோடு சுப்பையர் அன்னதானத்தை வழக்கம் போலவே குறைவின்றி நடத்தி வந்தார்.
தாசில்தாருடைய கடிதத்தைக்கண்ட மாவட்டத்தலேவர் ஆங் கரைக்கு வந்துசேர்ந்தார். அவர் ஒரு வெள்ளேக்காரர் மதியூகி எத ஆனயும் ஆலோசித்தே செய்பவர் தருமவான்; நியாயத்துக்கு அஞ்சி ஒழுகுபவர் தமிழ்ப்பயிற்சிஉள்ளவர்; பிறர் தமிழ்பேசுவதைத் தெளி வாக அறிவதோடு தாமே தமிழிற்பேசவும் தெரிந்தவர். அவர் தாசில் தாரையும் வருவித்துச் சுப்பையரைப்பற்றி விசாரித்தார்.
தாசில்தார் தம்முடைய அதிகாரமொன்றும் சுப்பையரிடத்திற் பலிக்கவில்லே என்ற நோபத்தினுல் அவரைப்பற்றி மிகவும் கடுமை யாகக் குறை கூறினர். "அவன் பெரிய ஆஷாடபூதி அவ்வளவு நிலம் வைத்திருக்கிறவனுக்குப் பணம் இல்லாமலா போகும்? ஏதோ ருக்குச் சோற்றைப் போட்டுவிட்டு, அன்னதானமென்று பேர் வைக் துக்கொண்டு பணத்தை மறைவாகச் சேகரித்து வைத்திருக்கிரு னென்றே எண்ணுகிறேன். தன் வீட்டிலுள்ள நகைகளேயும் ஒளித்து வைத்திருப்பான். துரையவர்கள் சிறிதேனும் இரக்கம் காட்டாமல் அந்த மனிதனேத் தக்கபடி தண்டிக்கவேண்டும்; அப்போதுதான் மற்றவர்களும் பயப்படுவார்கள்" என்ருர்,

Page 28
50 செந்தமிழ்த் தேன்
தாசில்தாருடைய பேச்சில் கோபம் தலதூக்கி நின்றதை மாவட்டத் தலைவர் உணர்ந்திருந்தார்; அவருடைய வார்த்தைகளே அப்படியே நம்புவது அபாயமென்று எண்ணினர் ஆதலின் அந்தப் பக்கங்களில் இருந்தவேறு சிலரிடம் சப்பையரைப்பற்றி அக்தரங்க மாக விசாரித்தார். அவ்வந்தன உபகாரியிடம் பொருமை கொண்ட சிலர் தவிர மற்றவர்களெல்லாம் அவரைப்பற்றி மிக உயர்வாகவே சொன்னர்கள்; அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி உள்ளம் குளிர்ந்து பாராட்டினுர்கள்.
ஒருநாளிரவு சப்பையர் வழக்கம்போலவே தம்முடைய வீட்டுத் திண்ணேயில் படுத்திருந்தார். பகலிலும் இரவிலும் யாவருக்கும் அன்னமிட்டபின்பு, அகாலத்தில் யாரேனும் பசியோடுவந்தால் அவர் களுக்கு உதவும்பொருட்டு உணவு வகைகளேத் தனியே வைத்திருக் கச் செய்வது அவருடையவழக்கம், சிலசமயங்களில் மழை முதலிய வற்ருல் துன்புற்று வழிநடைப் பிரயாணிகள் நள்ளிரவில் வருவார் கள். அவருடைய பசியைப் போக்குவதற்கு அவ்வுணவு உதவும். சப்பையர் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கெடுந்து ரத் திலிருந்து, "சாமீ சாமீ" என்று ஒரு குரல் கேட்டது. அதனுல் சுப்பையருடைய தூக்கம் கலேந்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் கேட்கும் வழியே சென்ருர், அவ்வீதியின் கோடியிலிருந்து யாரோ ஒருவன், சா மீ சாமி என்று கத்திக் சொண்டிருந்தான்.
"யாரப்பா? அது' என்று கேட்டார் சுப்பையர். 'சாமீ, நான் பக்கத்திலுள்ள கிராமத்துப் பறையன். வேறு ஊருக்குப் போய்த் திரும்பிவருகிறேன் பசி தாங்க முடியவில்லே; இவ்வளவு தூரம் கடந்து வந்தேன், மேலே அடியெடுத்து வைக்கவும் முடியவில்லே" என்ருன்.
"அப்படியானுல் சற்றுநேரம் இங்கே இரு இதோ வருகிறேன்" என்று சொல்லிச் சுப்பையர் தம்வீட்டுக்கு வந்தார். உடனேவெளிக் கதவைத் திறக்கச்செய்து சமையலறையிற் புகுந்தார். அங்கிருந்த கறி, குழம்பு, இரசம், மோர் ஆகியவற்றைத் தனித்தனியே சில தொன்னேகனில் எடுத்து வைத்து அன்னத்தை ஒரு மரக்காவில் போட்டு அதன்மேல் கறி முதலியவற்றைவைத்து இலேயொன்றினுல்

தருமம் தலகாக்கும் 51
முடினுர், அப்படியூே அதனே எடுத்துக்கொண்டு தெருவின்கோடிக்கு வந்து, "அப்பா, இந்த மரக்காலில் சாதம், குழம்பு, கறி, இரசம் எல் லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே. அந்த வாய்க்காலுக் குப்போய் உண்டுவிட்டு உன் ஊருக்குப்போ. முடியுமானுல் மரக் காக்ஸ் நாஜிளக்குக் கொண்டுவந்து கொடு முடியாவிட்டால் நீயே வைத்துக்கொள்' என்றுசொல்லி அந்தமரக்கால அவன் பார்க்கும் படி கீழே வைத்தார்.
பறையன் அதனே எடுத்துக்கொண்டு 'சாமீ! உங்களேத் தெய் வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலேகாக்கும்" என்று வாழ்த்திவிட்டுச் சென்மூன். அவனுடைய பேச்சில் ஒருவிதமான காக்குழறல் இருந்தது. "பாவம், பசியினுல் பேசக்கூட முடியவில்லே, நாக்குக் குழறுகிறது' என்று சுப்பையர் எண்ணி இரங்கினுர் அவ னது பசியைத் தீர்க்கச் சந்தர்பம் வாய்த்தது குறித்து மகிழ்ந்து விடுவந்து சேர்ந்தார்.
ஆங்கரையில் வந்திருந்த மாவட்டத் தஃலவர் மேற் சொன்ன சிகழ்ச்சி நடைபெற்றதற்கு மறுநாள் தம்மிடம் சுப்பையர் வரவேண்டு மென்றும், தாம் விசாரனே செய்யவேண்டுமென்றும் அவருக்கு உத் தரவொன்றை முன்னமே அனுப்பியிருந்தார். விசாரணே நாளில் சுப் பையர் உரியகாலத்திற் செல்லாமல் நேரம் கழித்துச் சென்ருர்,
சேவகர்கள் அவரை மாவட்டத்தல்வரின் முன் நிறுத்தினுர்கள். நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமாயிருந்த அவருடைய ஆடை இடையி டையே தையலுடையதாயும் சில இடங்களில் முடியப்பட்டதாயும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது: மார்பில் உருத் திராக்கமாலே இருந்தது. அவர் நேரங்கழித்து வந்ததனுல் தஃலவரின் முகத்தில் கோபக்குறி வெளிப்பட்டது. "இவரா சுப்பையர்' என்று கேட்டார் அவர்,
அருகிலிருந்த தாசில்தார் "ஆமாம்" என்ருர் தலேவர், "இவ்வ
ளவு ஏழையாக இருப்பவரைய நீர் பெரிய பணக்காரனென்றும்
வரிப்பணம் அதிகமாகத் தரவேண்டு மென்றும் முதியிருக்கிறீர்' என்று விணுவினுர்,

Page 29
52 செந்தமிழ்த் தேள்
தாசில்தார். இவையெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரையவர் கள் மனமிரங்கி வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்று தீர்த்து விடக்கூடுமென்ற எண்ணத்தோடு வந்திருக்கிருர்,
கலேவர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சப்பையரைப் பார்த்து, "ரோ ஆங்கரைச் சுப்பையர்?" என்று கேட்டார்.
சுப்பைபர் ஆம்
தவர் நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்இ? அரசாங்கத்தாரின் உத்தரவை அலட்சியம் செய்யலாமா?
சப்பையர் துரையவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. காகலயில் எழுந்து ஸ்நானம் செய்து பூஜையை முடித்துவிட்டு, வருகிறவர் களுக்கு ஆகாரம் செய்விப்பது என் வழக்கம். இன்று பலர் வந்திருந் தரர்கள். வழக்கப்படியே அவர்களேப் போஜனம் செய்வித்து நானும் ஆகாரம் செய்தபிறகு வந்தேன்.
தலவர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே! தெரியுமா?
சப்பையர் தெரியும். என்மேல் வஞ்சனே இல்லே. நிலம் சரியான Lال Eiff&īM7 L (TGT) riu (TG) வரிப்பணத்தை என்னுல் இப்பொழுது செலுத்த முடியவில்ஃ).
கலவர் அன்னதானத்தை மட்டும் எப்படிச் செய்கிறீர்?
சப்பையர் கிடைக்கும் நெல்லேயெல்லாம் வை த்துக்கொண்டு செய் கிறேன். முன்பு அன்னதானம் செய்தது போக மிஞ்சுவதில் வரியைச் செலுத்தி வந்தேன்.இப்பொழுது அது முடியவில்லே. அன்னதானத் திற்கே போதாமையால் என் வீட்டு நகைகளே அடகுவைத்துக் கடன் வாங்கியிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேன்.
தலவர் இவ்வளவு கஷ்டப்பட்டு அன்னதானத்தை நீர் ஏன் செய்ய வேண்டும்?
சப்பையர் அது பரம்பரையாகவே எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.

தருமம் தலேகாக்கும் 3.
தலைவர்: அன்னமிடுவது பகலிலா? இரவிலா? சுப்பையர்: இரண்டுவேளேயும் கொடுப்பதுண்டு. கால் நடையாக வருகிறவர்கள் பசியோடு எப்போதுவந்தாலும் கொடுப்பதுவழக்கம் தலைவர்: எந்தச்சாதியாருக்குக் கொடுப்பீர்? சுப்பையர்: பிராமணருக்கும் மற்ற ச் சாதியாருக்கும் அவரவர் களுக்கு ஏற்றமுறையில் செய்வதுண்டு. பசித்து வந்தவர்கள் யாரா னுலும் அன்னமிடுவேன்.
தலைவர் பறையருக்கும் கொடுப்பதுண்டா? சுப்பையர் ஆம்; எல்லோரும் சாப்பிட்டபிறகு கொடுப்போம்.
தலவர் இதுவரையில் அப்படி எத்தனே முறை பறையர்களுக்குக் கொடுத்திருக்கிறீர்?
சுப்பையர் எனக்கு நினேவில்லே பலமுறை கொடுத்திருக்கிறேன். த&லவர்: சமீபத்தில் எப்போது கொடு த்தீர்?
சுப்பையர்: நேற்றுக்கூட ஒரு பறையன் பாதிராத்திரியில் பசிக்கிற தென்று வந்தான் சாதம் கொடுத்தேன்.
தலைவர்: அப்படியா என்னகொடுத்தீர்? எல்லோரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்!
சுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படுமென்று இரசம், குழம்பு, மோர் முதலியவற்றிற் கொஞ்சம் கொஞ்சம்தனியே எடுத்து வைத்திருப்பது வழக்கம். ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, இரசம், மோர் எல்லாம் கொடுத்தேன்.
தலவர் இலேபோட்டா சாப்பாடு கொடுத்தீர்?
சுப்பையர் இல்லே அதுவழக்கமில்லே. ஒருமரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித்தனியே தொன்னேகளில் இரசம், கறி, குழம்பு முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.
த&லவரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் இவ் வளவு விரிவாக அவர் விசாரகன செய்வதை நோக்கி மிகவும் வியப் புற்ருர்கிள். சுப்பையர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்த துரை, தாசில்தாரைப் பார்த் தார். அவர், "எல்லாம் பொய்" என்று சொல்லிவிட்டு முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.

Page 30
54 செந்தமிழ்த் தேன் தலைவர்: உமக்கு அந்தப்பறையனைத் தெரியுமா? சுப்பையர்: இருட்டில் இன்னுனென்று தெரியவில்லை.
தலைவர்: அவனிடம் கொடுத்த மரக்காலக் கொண்டு வந்து காட்டு 6 pir?
சுப்பையர்: அதை அவன் இன்னும் திருப்பிக்கொடுக்கவில்லை.
தலைவர்: அப்படியானுல் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்கு வேறு சாட்சி என்ன இருக்கிறது?
சுப்பையர்: வேறுசாட்சி எதற்கு? தெய்வத்திற்குத் தெரியும். அப் படி நான் செய்ததை யாரிடம் சொல்லிக்கொள்ளவேண்டும்?
தலைவர்: அந்த மரக்காலை அவன் திருப்பிக்கொடுக்காவிடில் என்ன செய்வீர்?
சுப்பையர்: "முடியுமானல் கொடு; இல்லாவிடில் நீயே வைத்துக் கொள்" என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்கா விடில் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.
தக்லவர் "அப்படியா!" என்று சொல்லிக்கொண்டே மேசை முழுவதையும் தரை வரையிலும் மறைத்து முடியிருந்த ஒரு துணியை மெல்லத்தூக்கினர். என்ன ஆச்சரியம் அதன் கீழே ஒரு மரக்கால் காணப்பட்டது! Y
*நீர் கொடுத்த மரக்கால் இதுதான பாரும்" என்று சொல்லித் துரை அதனை எடுத்து மேசையின்மேல் வைத்தார்.
சுப்பையர் திடுக்கிட்டார்; தாம் கண்ட தை அவரால் கம்பமுடிய வில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். தாம் முதல் நாள் பாதி ராத்திரியில் ஒரு பறையனிடம் கொடுத்த மரக்கால் அங்கே எப்படி வந்திருக்கலாமென்று யோசித்தார்; ஒன்றும் தெரிய வில்லை. அங்கே இருந்தயாவரும் ஒருநாடகத்தில் மிகவும் இரசமான காட்சியொன்றில் ஈடுபட்டு மெய்ம் மறந்தவர்போல் ஆனர்கள்.
'என்ன, பேசாமல் இருக்கிறீர்? இராத்திரி நீர் செய்த அன்ன தானத்துக்குச் சாட்சி இல்லையென்று எண்ண வேண்டாம். பாதி ராத்திரியில் வந்த பறையன் நான்தான்! நீர்கொடுத்த மரக்கால் இதுதான்! இந்த இரண்டு சாட்சிகளும் போதாவிட்டால், என்னு

தருமம் தலைகாக்கும் 55
டன் வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறன். நீர் சொன்னவை யெல்லாம் உண்மையே. உம்முடைய வீட்டு அன்னதானத்தையும் கறி முதலியவற்றையும் நானே ருசி பார்த்தேன். உம்முடைய ஜன் மமே ஜன்மம்" என்ருர் மாவட்டத் தலைவர். அவருடைய கண்க ளில் கீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் தொண் டையை அடைத்தது. சிறிது நேரம் அவராற் பேச முடியவில்லை. பிறகு, "உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம் உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும்; ” உமக்காகத்தான் மழை பெய்கிறது" என்ருர் அவர்.
அந்த வார்த்தைகளின் தொனியில் முதல்நாள் இரவு பறையன், ‘தெய்வம் உங்களைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலை காக்கும்" என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்; தமிழைப் புதிதாகக் கற் றுக்கொண்ட வேற்று நாட்டாராகிய துரையின் பேச்சானது, பசியி ரூல் தமிழை காக்குழறிப் பேசுபவனது பேச்சைப்போல இராத்திரி யில் தமக்குத் தோன்றியதென்பதைச் சுப்பையர் அறிந்தார். அவ ருக்கு இன்னது சொல்வதென்று தோன்றவில்லை.
"அப்படியே அந்த நாற்காலியில் உட்காரும், நீர் வரிப்பணத்தை மோசம்செய்ய மாட்டீரென்பது எனக்கு நன்ருகத்தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்துவிட் டேன், எடுத்துக்கொள்ளும். உம்முடைய தருமம் குறைவின்றி நடை பெற இந்த வரிப்பணம் உதவுமானுல் இந்த அரசாங்கத்துக்கு அத னிலும் சிறந்த இலாபம் வேறு இல்லை. உம்மால் எப்போது கொடுக்க முடியுமோ அப்போது கொடுக்கலாம். உம்மை எவரும் கிர்ப்பந்தம் செய்யமாட்டார். நான் இந்த மா வட் ட த் தி ல் இருக்கும் வரையில் உமக்கு ஒருவிதமான துன்பமும் நேராது" என்ருர் மாவட் டத்தலேவர். பிறகு தாசில் தாரை நோக்கி, "உம்முடைய வார்த் தையை நான் நம்பியிருந்தால் பெரியபாவம் செய்திருப்பேன். இனி மேல் தீரவிசாரியாமல் ஒருவரையும்பற்றி நீர் எழுதக் கூடாது'என்று
கண்டித்துக் கூறினர்.

Page 31
THA
நமது தாய் நாடு
(வித்துவான் சி. ஆறுமுகம்)
"தாய் நாடு" என்னும் அருமையான சொற்ருெடர், சிக்னக்குக் தோறும், பேசுக்தோறும், கேட்குந்தோறும் இனிமை பயக்குக் தன் மையுடையது.
"பெற்ற தாயும் பிறந்த பொன்குடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே"
என்று தாயையும், தாய்காட்டையும் மதித்து வியந்து பாடியுள் ளார் மகாகவி பாரதியார் பெற்றதாயை மதிப்பதுபோல, நாம் பிறந்த பொன்ட்ைடையும் மதித்து வாழப் பழகுதல் வேண்டும். மக் கள் ஒவ்வொருவருக் தனித்தனியே தத்தக் தாயரிடத்துப் பேரன்பு காட்டுகின்றனர். என்னே தாயரோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொ ருவரே தாய் காடோ அங்காட்டவர் எல்லோருக்கும் ஒன்றே
இன்று காம் வாழ்ந்துவரும் நாடு இலங்கை. இதுவே நமது காய்நாடு. நமது தங்தையருக் தாயரும் மகிழ்ந்து வாழும் நாடிது. கம்முன்னுேர், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து சிறந்த 5ாடும் இது. இன்னும் எண்ணில் காலம் நம் பின்னுேர் வாழவிருக் கும் காடும் இதுவே. கடந்த ஐஞ்ஞாறு ஆண்டுகளாக மேனுட் டினர் 5ம் ாேட்டை அடிமைப்படுத்தி யாண்டனர். அதன் பயனுக காம், கம் காட்டையே மறந்திருந்தோம், தாய்நாடு என்று சொல்ல வும் வெட்கமுற்றுேம், சிற் சில வேளேகளில் நமது தாய் நாடு இந்தி யாவே என்று கூறிக் கூறிப் பெருமை கொள்ளுகின்ருேம். நமது தாய்காடு இந்தியாஎன்று கூறுவதைதான்எதிர்க்கின்றேன். அதனுல் யான், இந்தியாவின்மீது வெறுப்புக் கொண்டவன் என்று எண்ணி விடக்கூடாது. இந்தியாவை இன்னும் நமது தாய்நாடு என்று கூறுங் கூற்றுப் பொருளற்ற கூற்றாகும். பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் கம்முன்னேர் இந்தியநாட்டிலிருந்து புறப்பட்டு வந்து இலங்கையிற் குடியேறினர். அன்று அம்மக்கள் இந்தியாவைத் தாய்நாடு என்று கூறியமை ஓரளவுக்குப் பொருத்தம் உடையதே. ஆனூல் நூற்ருண்டு கள் பல கடந்து காமெல்லாம் இக்காட்டு சிட்டபின்னரும்

நமது தாய் நாடு 57 இந்தியாவைத் தாய்நாடெனக் கொள்வது தக்கதன்று. கம்முடைய பண்பாடு இந்தியப் பண்பாட்டின் தாக்கலுக்கு உட்பட்டது உண்மையேயாயினும் நமது இலங்கை தனிப்பட்ட நாடே. எனவே நம்முடைய தாய்நாடு இலங்கையே என்ற உறுதியான உளப்பாங் கினே என்றும் வளர்ப்பது நம் பெருங்கடமையாகும்.
நம்நாட்டின் தொன்மையையுஞ் சிறப்பையும் நாம் உணர்வதற் குச் சரித்திரக் கண்கொண்டு நாட்டைத் திரும்பிப்பார்த்தல் வேண் டும். உலகநாடுகளுள் மிகச்சிலநாடுகளே தெளிவான வரலாற்றினே யுடையன. அவற்றுள் இலங்கையும் ஒன்ருகும். ஏறக்குறைய ஈராயி ரத்து ஐஞ்ஞாறு ஆண்டுகளாக இந்நாட்டில் வாழ்ந்த மக்களேப் பற்றிய வரலாறுகளே நன்கு அறியக் கூடியவாறு இதன் வரலாறு அமைந்திருக்கின்றது. இன்னும் பண்டைத்தமிழ் இலக்கியங்களிலி ருந்தும் இந்நாட்டின் பழம்பெருஞ் சிறப்பினே நாம் அறியலாம். இற் றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன், தென்னிந்தியாவிலே பாண்டி காட்டின் தக்லநகராக விளங்கியது மதுரைமாநகர். அங்காளில், அங் நகரில் தமிழ்ச்சங்கம் ஒன்று அமைத்துத் தமிழ்மக்கள் தமிழை வளர்த்தனர். இத் தமிழ்ச் சங்கமே, பண்டைய தமிழ்ச் சங்கங்கள் மூன்றனுள் கடைசியாக இருந்த சங்கமாகும். அதனுல் இதனேக் கடைச் சங்கம் என்பர் அறிஞர். இக்கடைத் தமிழ்ச்சங்கம் இருந்த இடம் மதுரையென்று மேலே கூறினுேம், ஈழநாடாகிய இலங்கை யில் வாழ்ந்த பூதங்தேவனுர் என்ற பெரும் புலவர் அம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கினுர், அவர்பாடிய பாடல் கள் பல. அவற்றுள் ஏழு பாடல்கள் மட்டுங்கடைச்சங்க நூல்களுள் இன்னுங் காணப்படுகின்றன. அப்புலவர் ஈழநாட்டவர் என்பதற் குச் சான் ருக ஈழத்துப் பூதந்தேவனுர் என்னும் பெயரினுலேயே அக்காலந்தொட்டு அழைக்கப்பட்டுள்ளார். அவரைப் போன்ற புலவர்களும், சான்ருேர்களும் வாழ்ந்து வளம்பட்டுயர்ந்த காடு நமது இலங்கை வளநாடு.இந்நாட்டின் நாகரிகஉயர்வுக்கு உறுதுனே புரிந்தவற்றுள் அருள்நெறியும், ஆட்சிநெறியும் முக்கியமானவை.
உலகமக்களே நல்வழிப்படுத்தி, 'வையத்து வாழ்வாங்கு வாழ' வழிகாட்டுவது அருள்கெறி எனப்படும் சமயம் ஆகும். அருள்நெறி கள் பலவற்றுள்ளும் உலகில் முந்துநெறியாய் விளங்குவது இந்து
S

Page 32
53 செந்தமிழ்த் தேன்
நெறியே என்பர் ஆராய்ச்சியாளர். ஈராயிரத்து ஐஞ்ஞாறு ஆண்டு களுக்கு முன்னரே இந்து நெறியிற் சீர்திருத்தஞ்செய்ய முயன்று
வெற்றிகண்டவர் போதிமாதவராகிய புத்தர்பிரான் ஆவார். அவர் காட்டிய புத்தமும், அவருக்கும் முந்தியே இந்து நெறிகளுட் சிறந்து
விளங்கிய சைவமும் நந் தாய் நாடாகிய இலங்கையிற் பண்டுதொட்டு
விளங்குவன. இவ்விரு அருள் நெறிகளும் ஒன்றுக்கு ஒன்று மாறு
படாமல் இலங்கைமக்களின் பண்பாட்டைப் பாதுகாத்து வளர்த்து
வருகின்றன.தென்னிலங்கையில் இலங்கும் கதிர்காமத்திருத்தலத்து
அமர்ந்தமுருகனது திருவருள் பெறவேண்டி இன மத வேறுபாடின்றி எண்ணிறந்த மக்கள் அப்பெருமானது திருவடிகளே யிறைஞ்சி, இரங்கிநிற்றல் கண்கூடு. அன்றியும் கண்டிமாக கர்ப் பெரகரா" விழா
வின்போது முன்னின்று "அரகரா" என்று பேரொலியெழுப்புங் கதி ரேசன் அடியார்களே அறியாதார் அறியாதாரே. வடஇலங்கை நாக தீபம் (நயினுர்தீவு) புத்த சமயத்தவருக்கும் புனித கிலேயம். இவ் வாறே முனீஸ்வரம்,தெய்வேந்திரமுனே, பொல்லநறுவை, அதுரதபுரம்
முதலிய புனித நகரங்களும் இரு சமயத்தவருக்கும் பொது கிலேயங்
களாக விளங்குதல் இக்காட்டின் சமய சமரசச் சான் ருகும்.
நமது தாய் நாட்டின் ஆட்சிநெறி பண்டுதொட்டு மன்னராட்சி பாகவே விளங்கிற்று. மன்னர்கள் மண்ணுசை கொண்டு போரிட்டு மடிந்தனர் நாட்டையும் சிற்சில வேளேகளில் மண்ணுக்கினர். எனி
னும் மலேகளின் மீதும் மாடம் அமைத்தனர்; குன்றினுச்சியினுங்
கோட்டை கட்டினர் குகைகளினூடும் ஓவியக் திட்டினர் ஆறு களேத் தடுத்துக் குளங்களேக்கட்டி விளேவினேப்பெருக்கி அயல்நாடு களுக்கு ஏற்றுமதியுஞ் செய்தனர். "ஈழத்து உணவும்" சோழநாட் டில் இறக்குமதி செய்யப்பெற்றது. இடைக்கிடை பிரிவுணர்ச்சி மேலிட்டு போருக்கங் தலதுாக்கியதும் காடு, தலேயெடுக்க முடியா மல் தவித்தது. அங்கியர் தலேயீடும் அடிக்கடி தலேகாட்டியது. முடி வில் நாடு அடிமையாட்சியுட்சிக்கி அலமந்து மண்டியிட்டது. இன்று ஒருவாறு அடிமையிருள் நீங்கிச் சுதந்திர சூரியன் உதயமாகின்ருன், மக்களாட்சி என்ற புதுக்குரல் கேட்கின்றது. இக்குரல் இலங்கை மக்கள் வாழ்வை மலரச் செய்யுமா? என்ற ஐயவினு அங்குமிங்கும் எழுப்பப்படுகின்றது. உண்மையான மக்களாட்சி,வாழ்வை மலர் த் து மேயன்றி அழித்துவிட மாட்டாது. நாமெல்லோரும் விழிப்புடன் விளங்கினுல் நாடு கல்லாட்சி பெற்று ஓங்கும்.

நமது தாய் நாடு $9
எனவே இந்நாட்டுமக்களாகிய நாம் முதலில் நம்நாட்டை மதிப் போம்; வாழ்த்துவோம் வணங்குவோம். அடுத்து இது நமது தாய் நாடு என்று பெருமை கொண்டு த8லநிமிர்ந்து நிற்போம்; நமது காட் டுக்காக நம்முயிரையுங் கொடுப்போம்.
நாட்டுயிர் நம்முயிரே, நம்முயிர் நாட்டுயிரே, நாட்டுயிர் வாழ்ந்திடவே நம்முயிர் ஈந்திடுவோம்"
என்று உறுதியுடன் அறுதியிடுகின்ருர் கவிஞர் சுத்தானந்த பாரதி பார். இன்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்ருகிய சுவிற்சலாந்தில் வரமும் மக்கள்.
" நான்கு மொழி ஓர் குரல், நான்குஇனம் ஒர் குலம்" ே נחש : or
என்று ஒற்று  ைமக்கு ர ல் எழுப்புகின்றனர். அவ்வாறே நமது இலங்கை வள நாட்டிலும்,
"இருமொழி ஓர் குரல், ஈரினம் ஓர் குலம்"
என்ற ஒற்றுமைக்குரல் எழும் நாள் எக்காளோ! அந்நாள் விரைந்து வருவதிாக
"இலங்கைவள நாடெங்கள் இனியதமிழ் நாடு
என்றென்றும் வாழ்கவென இனியதமிழ் பாடு"
-
الجلد
*్వ |

Page 33
ஒதத மரபு வித்துவான் கி. வா. ஜகந்நாதன் M. A.
ஆந்திர நாட்டிலுள்ளது ஹம்பி என்னும் நகரம். விஜய நகரப் பேரரசின் தலைநகராய் இருந்த ஊர் அது. அங்கே அரசனுடைய பிரதானியாக அறம்வளர்த்த முதலியார் என்னும் வேளாண் செல்வர் இருந்தார். அவர் தமிழ்நாட்டில் உள்ள செம்பூர் என்ற ஊரிலே பிறந்தவர். அவர் மதியிற் சிறந்தவராக இருந்தமையால் அரசன் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தான்.
அம்பி அறம் வளர்த்த முதலியார் தமிழ்ச்சுவை தேரும் இயல்பு உடையவர். தமிழ்ப் புலவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஆதரிக்கும்
வள்ளன்மை உடையவர். அவர்தம் ஊருக்கு வரும்போது அக்காலத்
திற் சிறிய பகுதியை ஆண்டு கொண்டிருந்த பாண்டிய மன்னனேக் கண்டு அளவளாவிச் செல்வார்.
பெருஞ் சிறப்புப் பெற்று வாழ்க்த பாண்டியர்களுக்குப் பின் அவர் மரபில் பெயருக்குப் பாண்டிய மன்னனுகச் சிறிய நாட்டுப் பகுதியை ஆண்டு வந்தான் அப்பாண்டியன். அவன் தமிழ்ப்புலமை மிக்கவன். நல்லகவிஞன். அறம்வளர்த்த முதலியார் பேரரசனுடைய பிரதானியாக இருந்தமையால் அவருடைய நட்புத்தனக்கு கிலி டக் ததைப்பெரிய சிறப்பாகக் கருதினுன் அவன். முதலியாரும் பாண்டிய னுடன் மனம் கலந்து பழகி இன்புற்ருர்,
சில நூல்களே இயற்றினுன் பாண்டியன். அம்பி அறம் வளர்த்த முதலியாரைப் புகழ்ந்து ஒரு சிறியதால் இயற்ற வேண்டும் என்னும் ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவரிடம் சொல்லாமலே ஒரு கலம்பகம் பாடினுன். அவருக்கு அந்தச்செய்தி தெரிக்தபோது. "பிறரால் பாடல்பெறும் தகுதிஉள்ள நீங்கள் என்னப்பாடலாமா?" என்று தம்பணிவைக் காட்டிக் கொண்டார். நூல் சிறப்பாக அரங் கேற்றப் பெற்றது.
ஒருநாள் பாண்டியன் தனக்கு வேண்டிய புலவர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தான். கலம்பகம் பாடியதுகேட்டு அறம்வளர்த்த முதலியார் சொன்னதை அப்புலவரிடம் சொன்னுன். அந்தப்புலவர் முதலியாரின் பணிவைப் பாராட்டவில்லே. "பார்த்தீர்களா? நான் அப்போதே கினேத்தேன்" என்ருர்.
 

நமது தாய் நாடு 51
என்ன கினேத்தீர்கள்?' என்று பாண்டியன் கேட்டான்.
"அவர் வேளாளர், நீங்கள் முடிமன்னர்களாகிய பாண்டிய மர பில் உதித்த வர்கள். அவர்கள் உங்கள் குடிமக்களில் ஒருவராக இருக் கும் நிலையினர். அப்படியிருக்க நீங்கள் சாமானியப் புலவனேப்போல் உங்கள் பெருமையைக் குறைத்துக்கொண்டு அவரைப் பாடலாமா?
அது முறையன்றுதான்' என்ருர் புலவர்.
அதுகேட்ட பாண்டியன் புலவருடைய அறியாமைக்கு இரங் கினுன்.
"சோழ அரசர்கள் முடி மன்னர்கள் அல்லவா?"
"ஆம்" பதிள்ளிவளவன் என்ற சோழனேப்பற்றிக் கேள்வியுற்றதுண்டா"
"புறநானூற்றில் அவனேப்பற்றிய செய்திகள் வருகின்றன." 'அவன் ஒரு வேளாளனேப் பாடியிருக்கிற பாடலேப் பார்த்தது உண்டா? அதுவும் புறநானூற்றிலேதான் இருக்கிறது."
"யாரைப்பாடினன்'
'சிறுகுடிகிழான் பண்ணஇனப் பாடியிருக்கிருன். யான் வாழும் வரைக்கும் பண்ணனும் வாழட்டும் என்று அந்த வேளாண் செல்வ
சீனப் பாடியிருக்கிருன்."
புலவர் சற்றே யோசித்தார். பிறகு, 'ஏதோஒரு பாட்டு, அரைப் பாட்டு அவசியமான சந்தர்ப்பத்தில் பாடியிருக்கலாம். ஆனுல் இப் படி ஒரு முழுநூலே யாரும் பாடியிருக்கமாட்டார்கள். நீங்கள் உங் களேக் குறைத்துக்கொண்டது மட்டும் அன்று பாண்டிய மரபின் பெருமைக்கே இது இழுக்கு' என்று மிடுக்குடன் பேசிவிட்டார். சோழனே உதாரணம் காட்டியதனல் வந்த ரோசம் அப்படிப் பேசக் தூண்டியது.

Page 34
62 செந்தமிழ்த் தேன்
பாண்டியன் சற்றே நிதானித்தான். புலவருடைய படபடப்பு
அடங்கட்டும் என்று காத்திருந்தான். பிறகு மெல்லப் பேசத்தொடங்
கினுன்,
"புலவரே, உங்கள் மனம் எனக்குத் தெரியும். எங்கள் மரபுகள் உயர்வுதாழ்வு உடையவை; சமானமானவையல்ல என்று நினே க் கிறீர்கள்"
"நினேப்பது என்ன? யாருமே சொல்வார்களே!"
"நான் அப்படி நினேக்கவில்லே. எங்கள் மரபு ஒன்றற்கொன்று ஒத்து நிற்பவை."
"எப்படி!"
'சொல்லுகிறேன். பாண்டிய மரபு சக்திரகுலம் அல்லவா?"
"ஆம்"
'அறம் வளர்த்த முதலியார் வம்சம் இன்னதென்று உங்களுக் குத் தெரியுமா?"
"வேளாண் குலம்"
"அவர்களுடைய குலத்துக்கு முதல் யார் என்று தெரியுமா?"
"அவர்களேக் கங்கா குலத்தினர் என்று சொல்வார்கள்."
"நாங்கள் திங்களின் வழிவந்தோர். அவர்கள் கங்கை வழிவக் தோர். எங்கள் இருவர் மரபுக்கும் மூலமாக இருப்பவர்கள், ஒத்த கிலேயில் உள்ளவர்கள். பரமேஸ்வரனே அவர்கள் சமமானவர்கள் என்று கருதித் தன்னுடைய சடைமுடியில் அவர்களுக்கு இடம் கொடுத்திருக்கிருன், கங்கையும் திங்களும் இறைவன் திருமுடியில் அருகருகே சமானமாக விளங்குவதை யார் அறிய மாட்டார்கள்? இறைவனே திங்களும் கங்கையும் ஒப்புடையவர்கள் என்று தல் யாலே தாங்கிக் காட்டும்போது அவ்விருவர் மரபும் ஒப்புடையன, உறவுடையன என்று காம் கொள்வது பிழையாகுமா? இது தெரிந்து தான் கான் பாடினேன்" என்று பாண்டியன் முடித்தபோது புலவர் வாய் அடைத்து கின்றர்.

நமது தாய் நாடு 63
பாண்டியன் தன் கருத்தை ஒரு பாட்டாகவே பாடிவிட்டான்.
உங்கள் மனந்தெரி யும்புல
விர்ஒரு சிர்மரபோம் திங்கள் மரபினம் திங்களின்
கூடச்செம் பூர் அறமா துங்கன் மரபினரிற் கங்கையும்
சூடினன் சோதியன்றே எங்கள் மரபொன் றெனக்கவி
பாடினம் யாம் அவற்கே"
ஒருசீர் மரபோம்-ஒரே சீருள்ள மரபிஜன உடையோம். திங்கள் - சர்திரன். அநமாதுங்கன்-அறம் வளர்த்த முதலியார் மரபு-வசம் சோதி-சிவபெரு மான். ஒன் றுளன-ஒருதன்மையை யுடையன என்று எண்ணி, அவற்குஅந்த முதலியாரின் மேல்.)
இன்ன காரணத்தால் தான்பாடியது முறையே என்று பாண்டி யன் காரணங்காட்டி நிறுவிவிட்டான். ஆனூல் அவன் பாடியதற்கு உண்மையான காரணம் அன்புதான்.
སྙི

Page 35
கம்பர் கண்ட வாலி
(பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை)
சீதா பிராட்டி விதியின் விளேயாட்டினுல் வஞ்சிக்கப்படுகின்ருள். இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லுகின்றன். மாயமானே த் தொடர்ந்த பூரீராமனும் அவனேத் தொடர்ந்த இலட்சுமணனும் ஒரு வரை யொருவர் சந்தித்துச் சீதையின் பிரிவால் துயரம் உறுகின் முர் கள். சிறிய தக்தையாகிய சடாயு இராமலட்சுமணர்களே அணேத்த படி, 'இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ருன்" என்று சொல்லிக் கொண்டே உயிர் நீக்குகின்றது. இராமலட்சுமணர்கள் சடாயுவைத் தமது கண்ணிரால் முழுக்காட்டித், தீக்கடன் நீர்க்கடன்களேச்செய்து முடித்துக்கொண்டு, அப்பால் சீதையைத் தேடிக்காடுதோறும் அலே கின்ருர்கள். கவந்தவனம் என்பது ஒரு நாடு. அந்தக் காட்டுக்குள்ளே பிரவேசிக்கின் ரர்கள்.
கவத்தன் என்பவன் ஒரு பெரிய இராக்கதன். யானே முதல் எறும்பு ஈருரன உயிர்வர்க்கங்களே வாரிஎடுத்து விழுங்குபவன் அவன். ஒருசாபத்தால் இராக்கதவடிவில் இருக்கின்ருன். அவனுக்கு எதிரில் அவன் கைகளுக்கிடையில் இராமலட்சுமணர்கள் அகப்படுகின் ருர் கள். அவன் வாயைப் பிளந்துகொண்டு வருகின்ருன். அவன் கண் கள் அவர்களேத் தரிசிக்கின்றன. தரிசன விசேஷத்தினுல் அவனு டைய வடிவம் தேவவடிவமாய் மாறுகின்றது. அவன் இராமலட்சும னர்களின் நிலேயையும் அவர்களுக்கு எய்தியதையும் உணர்ந்து அவர்களே வணங்கி, அவர்களுக்குச் 'சுக் கிரீவனுடைய நட்பு இன்றி யமையாதது" என்று கூறி, மேலுலகஞ் செல்லுவானுயினுன், இராம லட்சுமணர்கள் மிக்க ஆச்சரியத்துடன் அவனுக்கு ஆசிவழங்கி அப் பாற் செல்லுகின்ருர்கள். அடுத்தவனம் மதங்கவனம்.
மதங்கர் ஒரு முனிவர். அவருடைய ஆசிரமத்தில் அவருக்குப் பணிசெய்து கொண்டு, பூரீராமருடைய தரிசனத்தை வேண்டி, நெடுங்காலம் தவஞ்செய்து கொண்டு ஒரு தவ முதுமகள் வசிக்கின் ருள். அவளுக்குப்பெயர் சவரி, காத்திராப்பிரகாரம் புதையலைக்கண் டவர்கள்போல அவர்களேக் காணுகின்ருள் அவள். பூரீராமன் முன் பழகியவன்போல ‘கலந்தானே' என்று கூறிச் சவரியை அணுகினுன்

கம்பர் கண்ட வாலி 5
நீண்டகாலமாக இராமனுக்கென்றே சேர்த்து வைத்த கிழங்கு காய் கனி வகைகளே எல்லாம் நிவேதித்து இராமனேப் பூசித்தாள் சவரி பூநீராமன், அன்பு கனிந்த அந்த விருந்தை உவந்து அருந்தி உள்ள மும் பூரித்தான். சவரி எடுத்த பிறப்பின் பயனே எய்தினுள். முத்தியுலகம் அவளே இரு கைகளேயும் நீட்டி அழைத்தது. சவரி பூநீராமனது உள்ளக்குறிப்பை உணர்ந்து, கிட்கிங்தையில் சுக்கிரீ வன் வசிக்கும் இடத்துக்குச் செல்லும் வழியை உணர்த்திவிட்டு, வணக்கத்துடன் தன் ஊனுடல்ப் பிரித்துக்கொண்டு முத்தியுல கத்தை அடைந்தாள். இராம லட்சுமணர்கள் சவரியை வியந்து கொண்டு, அவள் சொன்ன வழியில் கிட்கிந்த மலேயின் சாரலேச் சென்று அடைந்தார்கள்.
திட்கிந்தை அடைக்கலம் புகுந்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதொரும&ல, சக்கிரீவன் தமையனுகிய வாவிக்கு அஞ்சி அந்த ம&லயில் அடைக்கலம் புகுந்திருக்கின்றன். அநுமான் அவனுக்கு மந்திரி. சுக்கிரீவனும் அநுமானும் மற்றும் வானரர்களும் அங்கே வசிக்கின்றர்கள். இராம லட்சுமணர்கள் தம்மை நோக்கி வருவதை அந்த வானரங்கள் காணுகின்றர்கள். சுக்கிரீவனுக்கு அச்சம் உண் டாகிறது. இந்த மனிதர்கள் வாலியின் ஏவலினுல் வருகின்ருர்கள் என்பது எண்ணம். சக்கிரீவன் உள்ளிட்ட எல்லாரும் மலே முழை களில் ஒடி ஒளித்துவிட்டார்கள். அநுமான் மாத்திரம் ஒளிக்கவில்லே. அந்த மனிதரை உற்று நோக்குகின்றன். உச்சிமுதல் உள்ளங்கால் வரை கோக்குகின்றன். முன் பிரிந்தவர்களே எதிர்ப்படுகின்றதொரு கிலே அநுமானுக்கு உண்டாகின்றது. அதுமானே அறியாமலே அவர்கள்பால் அவனுக்கு அன்பு கசிகின்றது. இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல அநுமானே ஏதோ அவர்கள்பால் இழுக்கின்றது. அநுமான் சற்றே அவர்களே அணுகுகிறன். அணுகியவன் ஒரு மறை வில் நின்று, அந்த மறை முதல்வர்களே மேலும் கோக்குகின்றன்.
'தருமமும் நீதியும் இரு மன்மதர்களின் உருவை எடுத்துக் கொண்டு இழந்ததொரு அருமருந்தைத் தேடுவதுபோல இங்கே எழுந்தருளுகின்றனவோ கருணே என்கின்ற பொருள் இவர்கள் கண்களிற் குடியிருக்கின்றதுபோலும். இவர்களுடைய திருவடி கள் திண்டுந்தோறும் கூடிய வெய்பகற் பாறைகளும் சந்திரகாந்தக்
9

Page 36
BB செந்தமிழ்த் தேன்
கற்களாய் மாறி நுண் துளிகளைச் சொரிகின்றனவே. அவர்கள் பார்க்குங்தோறும் பார்க்குக்தோறும் பட்ட மரங்களுக் தளிர்விடு கின்றன. மயில்களும் மான்களும் அவர்கள்மேல் வெய்ய கிரணங் கள் படாமல் தடுத்துச் செல்லுகின்றன. இப்படிப்பட்ட புண்ணிய புருஷர்களேக் கிட்டாமல் கான் மறைந்துநிற்பதெப்படி!"
என்றிங்கனம் தனக்குட் சொல்லிக்கொண்டவனுய், அநுமான் வணக்கத்துடன் அவர்கள் எதிரிற் சென்று 'உங்கள் வரவு நல்வர
வாகுக" என்ருன்,
இருவரும் அநுமானே நோக்கினுர்கள். அதுமான் அவர்களே கோக்கினுன்
"பிரிந்தவர் கூடினுற் பேசல் வேண்டுமோ' என்கின்றதொரு பேசாத கிலே நிகழ் ங் த து. ஒரு கணம் பொறுத்து பூரீராமன் 'நீ யாரப்பா? எங்கேயிருந்து வந்திருக்கிருப்?" என்று வினவினன்.
"அடியேன் வாயுதேவனுக்கு அஞ்சனே வயிற்றிற் பிறந்தவன்; அதுமான் என்று எனக்குப் பெயர் கூறுவார்கள். இந்த மலேயில் வசிக்கின்ற சூரியன் புதல்வனை சுக்கிரீவனுக்கு ஏவல் செய்பவன் யான், தங்கள் வரவின் சிறப்பை அறியும்பொருட்டுத் தங்களிடம் வந்தேன். வணக்கம்' என்ருன் அநுமான்,
சுருக்கமும் கருத்துக் தெளிவுமான அந்த வார்த்தைகளேக் கேட்ட இராமன், மிக்க ஆச்சரியத்துடன் இலட்சுமணனே ஒருமுறை பார்த்தான்.
"இதோ, இந்தச் சொல்லின் செல்வனேப் பார் இவன் கூறிய கடையில் நீயும் எங்கள் வரலாற்றை இவனுக்கு எடுத்துக் கூறிப் பழகு" என்று சொல்லுபவன் போன்றிருந்தது அந்தப் பார்வை. அப்பால் அதுமனே உவந்து, 'அன்பனே! உனது மன்னன் எவ்விடத் இருக்கின்றன்? அவனேக் காணுதற்குப் பெரிதும் விழைகின்ருேம்; அதன் பொருட்டே இவ்விடம் வந்தோம்' என்ருன்.
"புண்ணியர்களாகிய தங்கள் வரவு எங்கள் மன்னனேக் காணு தல் பற்றியதாயின், நாமெல்லாம் இன்றே உய்தி கூடினுேம், உறு திப் பொருளான புகலிடத்தை இன்றே பெற்றுவிட்டோம். எங்கள்

கம்பர் கண்ட வாவி
மன்னன் செய்த தவமே தவம்' என்று கூறி வணங்கினுன் அது மான். இலட்சுமணன். இராமன் குறிப்பின்வழி அநுமானுக்குத் தங் கள் வரலாற்றைச் சீதையை இழந்தது இறுதியாக இயன்றவாறு செவ்வனே சொல்லி முடித்தான். கேட்ட அநுமான் கண்ணிர் வார உரோமஞ் சிலிர்க்க மீண்டும் இராமனே வணங்கி, வாலியின் கொடு மையையும் சக்கிரீவன் மனேவியை அவன் கவர்ந்த இழிவையும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொன்னுன். அதன்பிறகு சுக்கிரீவன் சந்திப்பு நிகழுகின்றது.
"நாம் இன்றுடன் உய்ந்தோம் வாலிக்குக் காலன் வந்தனன்" என்ற வார்த்தைகளுடன் அநுமான் சுக்கிரிவனே அணுகி, அவனுக்கு இராமலட்சுமணர்களின் வரலாறுகள் அனேத்தும் கூறி, அவனே அழைத்து வருகின் ஆரன்.
"உலகங் தோன்றிய காலந்தொட்டுச் செய்த தவமே இந்த உரு வங்களாய் அமைந்ததோ' எ ன் று எண்ணிக்கொண்டு, அந்த மானுடத் தெய்வங்களேயே உற்று நோக்கியபடி சுக்கிரீவன் அவர் கள் எதிரில் வந்தான். வந்தவனே பூநீராமன் தனது மலர்க்கரத்தை நீட்டி இனிது இருப்பாயாக என்று குறிப்பிட்டான். "நல்லூழ் தங் களே வருவித்தது; இனிக் கைகூடாதது என்று ஒன்று இல்லே' என்று சொல்லிக்கொண்டு சுக்கிரீவன் இருந்தான்.
இருவரும் அளவளாவினுர்கள். இருவருக்கும் உணர்ச்சி ஒன்று பட்டது. "உன்னுடைய இன்ப துன்பம் என்னுடையவை; உன்னேச் செறுபவர்கள் என்னேச் செறுபவர்கள்; உன் கிளே என் கிளே இனி வேறு சொல்லுதற்கில்லே உயிர்த் துனேவன் நீ" என்ருன் ரீராமன்.
அது கேட்டு 'ஆர்த்தது குரங்குச் சேனே. வேதங்கள் வாய் விட்டு ஒலித்தன. அநுமான் வாழ்த்துப் பாடினுன் பிறகு விருந்துப சாரமாகிய அன்பு உபசாரம் நடந்தது. நடுவில் வாலியின் வீரதிரப் பிரதாபம் விருந்துப் பேச்சாய் நிகழ்ந்தது. முடிவில் வாலியின் அறி குறியான மராமரங்களும் துந்து பி மலேயுங் காட்டப்பட்டன. இராம பாணம் ஒன்ருல் மராமரங்கள் துளே பட்டுப் பொடிப்பொடியாய்ப் போயின. இலட்சுமணனின் கால்விரல் துதியால் துந்து பிமலே வானு லகஞ் சென்றது. அவ்வளவில் "வாலி இறந்துபோயினுன்' என்ற எண்ணம் சுக்கிரீவனுக்குத் தெளிவாய் விட்டது. கள்ளுண்டு களிப் பவர்கள் போல் அநுமான் உள்ளிட்ட யாவருங் களித்தார்கள்.

Page 37
5 செந்தமிழ்த் தேன்
இந்தச் சமயத்திலே சுக்கிரீவன் அவ்விடம் பேணி வைத்தி ருந்ததொரு ஆபரணப் பொதியை பூரீராமன் முன்னிகலயில் வைத் தான். அது பிராட்டியின் அழுகையும் கண்ணிரும் ஒருங்கு சேர்ந்த தாயிருந்தது. இராவணன் குடிசையோடு தன்னே எடுத்து ஆகாய வழிக்கொண்டு சென்றபோது, அடையாளத்தின் பொருட்டுப் போலும், அலறிக்கொண்டே பிராட்டியால் அம்மலயில் இடப் பட்ட பொதி அந்தப் பொதி.
பொதியினுள்ளே இருந்த தேவியின் மெய்யணிகளே பூநீராமன் உற்று நோக்கின்ை. நோக்கிய அதேகணத்தில் பேரெரியினெதிர்ப் பட்ட வெண்ணெய்போல அவன் யாக்கை உருகியது. அவசமா யின்ை. திருமேனி வெயர்த்தது. விஷவேகம் எய்தியவன்போலா யினுன் பூரீராமன். 'என்கினேந்து என் செய்தேன்' என்று கூறிய வனுய் ச் சுக்கிரீவன் எழுந்து இருகரங்களாலும் பூரீராம&ன அ&ன த் தான். அநுமானுதியர் சோகக் தெளிதற்கேற்ற உபசாரங்கஜ்ளச் செய்தார்கள். ரீராமன் சிறுபொழுது கழிந்து சாந்தியெய்தி அவர் களே உற்றுநோக்கினன்.
அப்போது சுக்கிரீவன் தன் குறைகளே மறந்து இராமன் அடி களேப் பணிந்து, "பிரபுவே, அந்த இராவணனின் இருபது புயங்களே யுந்திருகித் தேவியைத் தங்கள் சக்திதியிற் சமர்ப்பித்து, எனது கைப் பணியைச் சற்றே செய்தற்குத் தாங்கள் இதோ அடியே ணுக்கு அநுக்கிரகித்தல் வேண்டும்" என்று வேண்டினுன்
பூநீராமன் சுக்கிரிவனேயும் தன் கைவிரலயும் நோக்கிக்கொண்டு கூறுகின்றன், 'அன்பனே உன் ஆற்றலேயும் ஆராமையையும் நான் பாராட்டுகின்றேன். இந்த வில் என்கையில் இருக்க எனக்கு நேர்ந்த குடிப் பழியை நானே திராமலிருப்பது தருமம் அன்று; அதனேயும் நின் குறையை முடித்தன்றிச் செய்யேன்" என்ருன் சிக்கிரீவனுக்கு மேலே நா எழவில்லே. அநுமான் மிக்க வணக்கத்துடன், "வாலி யைக் கொன்று, சுக்கிரீவனே அரசாக்கிய பிறகுதான், வானரப்படை களேக் கூட்டுவதும் தேவியைத் தேடுவதும் எளியன் ஆகும்" என் முன் இராமன் தலேயை அசைத்து அதுமானின் விவேகத்தை வியத் தான். பின்பு சுக்கிரீவனே உள்ளிட்ட யாவரும் வாலியை எப்படிக் கொல்லுவதென்று சிந்தித்தார்கள். பூநீராமன் சிந்த&னயில் ஆழ்க்

AFGh Lu J, MTL anumg
திருந்தான், சூழலில் மெளனம் நிலவியது. யாவரும் இராமனேயே உற்று நோக்கியபடி இருந்தனர்.
இராமன்,
"வேறு நின்று, எவ்விடத் துணிந்து
அமைந்தது என் கருத்து இது" என்றனன்
(வாவிவதை: )
"சுக்கிரீவனே, நீ வாலி இருக்கும் இடத்துக்குப் போய் அவனே அழைத்துப் போர் தொடங்கு அப்பொழுது உங்களுக்கு வேருக மறைந்து நின்று வாலிமீது பானத்தை ஏவுதற்கு என்மனம் துணிந்து விட்டது. அம்மட்டோ அதில் அமைதியும் பிறந்திருக்கிறது. இது எனது கிலேயாய கருத்து' என்பது இராமனது கூற்றில் அமைந்து திரண்ட பொருள்.
அந்தக் கரணங்களுக்குள் சிறந்தது மனம், அடிப்பட்டதும் பண் பாடு படைத்ததுமான தன் மனத்தை இராமன் நம்புகின்ருன்,
'ஏகும் நல்வழி அல்வழி என் மனம்
ஆகுமோ (மிதிலேக் காட்சி; 147)
என்பது முன்னுெரு சந்தர்ப்பத்தில் அவன் கூறியது:
முனிவர்கள் சுருதிப்பிரமாணத்துக்குக்கீழே, பிரத்தியட்சம் அநு மானம் ஆகமம் என்ற பிரமாணங்களுக்கு மேலே, ஸ்மிருதி என் கின்ற பிரமாணத்தை வைத்து மதிப்பவர்கள். சுருதி கேட்பது. மகான்கள் சிலருக்குச் சில உண்மைகள் அவர்கள் செவியில் எழுந்து ஒலிப்பதுண்டு. அது சுருதி எனப்படும். அவர்கள் அதனே உயர்ந்த பிரமாணமாகக் கொள்வார்கள். ஸ்மிருதி சிந்திக்கப்பட்டதென்னும் பொருளேயுடையது. மாசற்ற மனத்திரையிலே சில எண்ணங்கள் தோன்றும். அவ்வெண்ணங்கள் பிரத்தியட்சம் முதலிய முதன்மூன்று பிரமாணங்களுக்கும் மேலே வைத்து மதிக்கப்படும்,
நீராமன் "காசில் கொற்றத்து" இராமன் வசிட்டர் ஆசிரமத் தில் வளர்ந்தவன்; விசுவாமித்திரரின் பரிசுைடிகளில் தேறியவன்; "துனியில் காட்சி" முனிவர்களின் ஆசியைப் பெற்றவன். அவனு டைய மனசு மாசற்ற மனசு, 'மனத்துக்கண் மாசிலனுதல்" என்ற

Page 38
70 செந்தமிழ்த் தேன்
வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமானவன் இராமன். அவன் தனது தூயமனத்தில் விளேந்த ஸ்மிருதியை "என் கருத்து இது' என்று கூறு கின்றன். அவ்வளவில் அமையாது "துணிந்து அமைந்தது" என மேலுங் தெளிவு பிறக்கக் கூறுகின்றன். ஸ்மிருதியின் இரகசியம் எம்மனுேர்க்கு எட்டாதது. அது தருமத்தின் கியதி தருமம் இருந்த படியைக் காட்டுவது அது. மகாபாரதத்தில் பூரீகிருஷ்ணனின் ஸ்மிருதி ஒப்புக்கொள்ளப்பட்டது. கிருஷ்ணன் பொய்யுஞ்சொல்லு வான் அதனேப் புரைதீர்ந்த மெய்யென்று உலகம் கொண்டாடும். அநுமான் போன்றவர்களே "ஸ்மிருதி’யின் அருமையை உணரவல்ல வர்கள். இங்கே சுக்கிரீவன் உள்ளிட்ட யாவரும் "நன்று' என்று பூரீராமனது ஸ்மிருதியாகிய கருத்தை உடன்பட்டார்கள்.
அந்தக் கணமே சுக்கிரீவன் எழுந்து வாலி ைய வலிந்து போருக்கு அழைத்தான். வாலிக்குப் பெருஞ்சிரிப்பு உண்டானது. அதனுேடு கோபமும் முண்டது. வாலியின் மனேவி தாரை. அவள் வாலியைத் தடுத்தாள். வாலி பாற்கடல் கடைந்து தேவர்களுக்கு ஒருமுறை உதவியது தொடக்கம் தன் வீரப் பிரதாபங்களே எடுத் துக்கூறித் தன்னே எதிர்ப்பவர்களின் வரத்திலும் வலியிலும் பாதி தன்னேச் சாரும் என்கின்ற தனது தவவலியையும் அவளுக்கு வலி யுறுத்தினுன். அதன்மேல் அவள் மிக்க அச்சத்துடன் மற்ருெரு இரகசியத்தை அவனுக்கு வெளிப்படுத்தினுள். பூரீராமன் என் ருெருவன், தம்பியோடு கூடியவன், சுக்கிரீவனுேடு கட்புப்பூண் டிருக்கின்ருனும்" என்பது அந்த இரகசியம்.
இரகசியத்தைக் கேட்டதும் வாலி வெடி படச் சிரித்தான். "பேதையே பூஜிராமனே நீ இதுகாறும் அறிந்திலேபோலும் அவன் தருமத்தின் வேலி, வேலி பயிரை மேய்வதில்லே. தாயுரை பேணிய வன் இராமன் தந்தை உதவிய தரணியைத் தம்பிக்கு உதவியவன்; அதனுலே காடு போக்தவன் அவன். தம்பிக்கு உருகுகின்ற அந்தத் தமையன், எம்பியினின்றும் என்னே ப் பிரிவுசெய்வான் என்பது எத் துணேப் பேதமை மழைக்காரிருட்டிலும் மக்தி கொம்பிழக்கப் பாயாது' என்பது எங்கள் அநுபவம். அவ்வாறே எந்தச் சந்தர்ப்பத் திலும் மநுநீதியைக் கடவாமை ஆரிய தர்மம். அவர்கள் பரிசுத்த

கம்பர் கண்ட வாலி 71
ஆரியர். பதினுலுலகங்களேயும் ஊடுருவ வல்லது இராம பாணம். அப்படிப்பட்ட பாணம் ஏவல் செய்துகொண்டிருக்க பூரீராமனுக்கு ஒரு துனே வேண்டுமாம்! அந்தத் துனேயும் புல்லியதொரு குரங் காம் கல்லது நல்லது உன் பெண்மைப் புத்தியை இனி விடு! விடு" என்று கூறிக் கனன்று எழுந்தான் வாலி, போர் மூண்டது.
வெற்றி தோல்வி தெரியாத பிரகாரம் வாலியும் சுக்கிரீவனும் ஒருவரையொருவர் தாக்கிக் கட்டிப் புரளுகின்ருரர்கள். பூஜிராமன் வேட்டையை மேற்கொண்டவன்போல ஒரு மறைவில் பானம் தொடுத்த வில்லுடன் இருவரையும் உற்றுநோக்கியபடி இருக்கின் முன். இலட்சுமணன் அவன் பக்கவில் நிற்கின்ருன், இராமனுக்கு வாலி சக்கிரிவர்களிடையே வேற்றுமை தெரியவில்லே இலட்சு மணனே வினுவினுன். அவன் மெளனம் சாதித்தான். தமையனே ஒரு தம்பி கொல்லுவிக்க எண்ணுகின்ருன் அப்படிப்பட்ட தம்பிக் குத் துனே புரிவதா? என்கின்ற சிக்தனேயில் அவன் ஆழ்ந்திருந்தான். அவன் கிலேயை உணர்ந்த இராமன் 'தம்பி என்ருல் நீ பரதக்னயே கிக்னக்கின்ருய்: சுக்கிரீவனின் நிலேயைப் பரதனுேடு ஒப்பிடுவதா?” என்று கூறி மேலுஞ் சொல்லத் தொடங்கினுள். தொடங்கும்போது, சுக்கிரீவன் வாலிக்கு ஆற்ருதவனுய் ஒருவாறு உயிர் தப்பி ரீராமனே நோக்கியோடி வந்தான். பூரீராமன் ஒரு கணமுந் தரியாமல் சுக்கிரீ வனுக்கு அபயம் அளித்து, "அப்பனே, உங்களுடையே வேற்றுமை தெரியவில்லே. இந்தக் கொடிப் பூவை அடையாளப் பூவாக அணிந்து கொண்டு மீண்டும் போய்ப் போர் தொடங்கு" என்ருன். அவன் கூறியவாறே சுக்கிரீவன் மறுமுறையும் வலிந்துபோய்ப் போர்க் கறை கூவிப் போர் தொடங்கினுன் "பாவம் உயிர் தப்பிப்போகட் டும்" என்றெண்ணி உயிர் பிழைக்க வைத்த வாளிக்குக் கோபாக் கினி அதன் எல்லேயை அடைந்தது. சுக்கிரீவனே ஆகாயத்தில் எடுத்து வீசினுன் சுக்கிரீவன் சூரியமண்டலம்வரை சென்று கீழ் கோக்கி நிலத்தில் வந்து விழுந்தான். விழுந்தவனேப் பிறகு உருட்டி ணுன் புரட்டினுன் உதைத் தான் வாலி. அந்தத்தருணத்தில் இராம பாணம் வாலியின் மார்பை ஊடுருவியது, வாலி என்கின்ற மகாமேரு
நிலத்திற் சாய்ந்தது.
வாலி வாலினுலும் காலி னு லும் கைகளினுலும் இ ரா ம பாணத்தை இறுகப் பற்றினன். அதன் வேகத்தைத் தணித்தற்கு

Page 39
72 செந்தமிழ்த் தேன்
அவன் வலி போதாதாயினும் அது அப்பாற் செல்லாமல் அதனேத் தடுத்து நிறுத்தினுன் அவன். வாலியின் தவவலியே வலியென்று வானவர்கள் வியந்தார்கள். ஊடுருவிய பாணத்தின் வேகம், சிறி துக் தணிவுபெருது அவன் வலியனேத்தையும் உண்டு உமிழ்வதா யிற்று. உதிரம் பெருகியது. வாலி உருண்டான் புரண்டான் மூர்ச் சித்தான். ஆயினும் அவன் கைகள் சிறிதும் நெகிழாமல் பானத்தை இறுகப் பற்றிக்கொண்டன. இயமனும் கடுங்கினுன், வாலியின் வலி பஃனத்தும் ஒருங்குசேர்ந்தும் அந்தப் பாணத்தை ஒரு மயிரிடைதா னும் பெயர்க்க முடியவில்லே. "இது வில்லிலிருந்து வந்ததன்று விதி யிலிருந்து வந்தது" என்ற எண்ணம் வாலிக்கு உதயம் ஆனது. அஃது உதயமாக அதனேச் சற்றே பெயர்க்கவும் முடிவதாயிற்று. இந்த கிலே யில் "இதனே ஏவிய பரமன் எவனுே? அவன் நாமத்தை அறிகுவேன்' என்று கூறிச் சற்றே தலேயை வ&ளத்து அந்தப் பாணத்தை உற்று நோக்கினுன் வாலி, அமரர்கள் புஷ் பாஞ்சலி செய்தார்கள்.
"மும்மைசால் உலகுக் கெல்லாம்
மூலமந்திரத்தை முற்றுந் நம்மையே தமக்கு நல்குந்
தனிப் பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினே இராமன் என்னும் செம்மைசேர் நாமந் தன்னக்
கண்களில் தெரியக் கண்டான்."
(வாவி வகை: 71)
"மரணப் பிரமாத" நேரத்தில், நாவேயன்றி அவன் கண்களும் புனிதம் எய்தன. முனிவர்களுக் தேவர்களும் எந்த மந்திரத்தை மற வாதிருக்கத் தவங் கிடக்கிருர்களோ, அந்த மந்திரம், அவன் இருத யத்தில் குடியிருப்பது போல, இதயத்தைத் துளே செய்கின்ற பாண் மாகிய எந்திரத்தில் பொறிக்கப்பட்டு, அவன் காவிலும் கண்களிலும் ஒருங்கே தோன்றியது. இறக்குங் தருணத்தில் "ராம நாமத்தைச் செப்புதற்கு எத்துனேத்தவம் எத்தனேசென்மங்களிற் செய்துவைக்க வேண்டும் வாலிக்கு காவுக்குமேலே அவன் கண்களும் அந்த அரு மந்த நாமத்தை ஏற்றதொரு செவ்வியில் ஆரத்துய்த்தன. எழுமை எழுபிறப்பையும் ஒருங்கே தாவியவன் ஆயினுன் வாலி. ஆயினும்,
 

கம்பர் கண்ட வாலி 73
சொல்ல்றத் துறந்திலாத
சூரியன் மரபுந் தொல்லே நல்லறந் துறந்தது என்னு
நகைவர நாணுட் கொண்டான்."
(வாலிவதை 72)
ஒருநாள் இராவணன் இராமன் எதிரில் நிராயுதபாணியாய், பத்துத் தக்லகளுங் குனிந்து, இருபது கரங்களுக் தொங்கி, நாணம் உடையவன் ஆனுன். ஆனபோதும் அவன் இராமனுக்குப் புறங் காட்டவில்லே. புறமுங்காட்டி யிருப்பானுணுல் எ த் து ஃண நாணங் கொண்டிருப்பானுே! அத்துனே காணம் உறையிடவும் போதாத தொரு நாணம் அன்று வாலிக்குவந்தது. அது உள்ளிடம் முழுவதை யும் கிறைத்துத் தலக்கு மேலேயுஞ் சென்றது. அதனுலே,
"வெள்கிட மகுடஞ் சாய்க்கும்"
வாவிக்குத் த&லநிமிர்ந்து இந்த உலகத்தைப் பார்க்க முடிய வில்லே, அத்துனே வெட்கம்! அவன் சூடிய மணிமகுடம் மண்ணே கோக்கியது. தனது எதிர்பாராத மரணத்தையோ சுக்கிரீவனின் பகைமையையோ அவன் கினேக்கவில்லே. அவைகளே மறந்தேபோயி னுன். இந்த உலகத்திலே சூரிய குலமே அறத்தைப் பாதுகாத்து வந்தது. "ஆதித்தன் குல முதல்வன் மநுவினே யார் அறியாதார்!" சூரிய குலத்தில் உதித்த மநு மகா புனிதர் மநுநீதியை வகுத்தவர். அந்தமரபை விளக்கவந்தவன் பூநீராமன். அவன் யுத்த தர்மத்தைக் கடப்பானுனுல், இனி இந்த உலகத்தில் தலேகிமிர்ந்து நிற்ப தெப் படி "அடராமா! நீயுமா" என்ற வார்த்தை வாலியின் காவில் மெல் லத் தவழ்ந்தது. ஆயினும் பாணத்தை ஏவியவன் 'இராமனேதான்' என்பதில் இன்னமும் வாலிக்கு கம்பிக்கை பிறக்கவில்லே. நானச் சுமை தலயை கெரிக்க நெரிக்க, வாலி சற்றே தக்லயை நிமிர்த்தி அக்த ஆண்மகனேப் பார்க்க ஆசைப்படுகின்றன். இராமன்தானுே என்று பார்க்க ஆசைப்படுகிருன் அந்த அவசரத்தில்,
"ஏவியவன் நானேதான்"
என்றுதெரிவிப்பவன் போல பூரீராமன் வாவியின் எதிரில் காட்சி யளிக்கின்றன். பல கோடி காலம் தவம் முயலும் முனிவர்கள் எதிரே திரு நாராயணன் தோன்றுவது போல வாலியின் எதிரே பூரீராமன் தோன்றுகின்றன்.
1)

Page 40
74 செந்தமிழ்த் தேன்
"கண்ணுற்ருன் வாலி நீலக்
கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்ற வரிவில் ஏந்தி
வருவதே போலும் மாலே
(வாலிவதை 75)
சங்கு சக்கரதாரியும் கருஜணமே கமுமான திருமாலேக் காணுவது போலக் காணுகின்ருன் வாலி.
"அவன் தவம் செப்பற் பாற்ருே!"
(கந் தாரகன் வதை 26 அது கிற்க,
"எண்ணுற்றப் என் செய்தாய் என்று ஏ. சு வான் இயம்ப லுற்றன்."
அப்பனே என்ன நிஜனந்து என்ன செய்து விட்டாய் இது உனக்கு அடுக்குமா! நான் உன்&ளதடி ஒரு எய்தி விட்டேனுே
"வாய்மையும் மரபுங் காந்து
மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே நீ
பரதன் முன் தோன் றிஞயே."
(வாவிவதை 78)
ரீ சக்கரவர்த்தியின் புதல்வன் தானு சத்தியத்தையும் தொன் மையாகிய மரபையுங் காக்கும்பொருட்டுத் தன்னுயிரைவள்ளன்மை செய்த அக்தத் தூயோன் எங்கே 3 அது இருக்க,
'பரதன் முன் தோன்றினுய் நீயே" ஏ. ஏ. பரதனுக்குத் தமையன் நீ தானுே' வெட்கம்! வெட்கம்! உன்குலம் என்ன கல்வி என்ன"
"கூட்டொரு வரையும் வேண்டாக்
கொற்றவ பெற்ற தாதை பூட்டிய செல்வ் மாங்கே
கம்பிக்குக் கொடுத்துப் போந்து நாட்டொரு கருமஞ் செய்தாய்
எம்பிக்கின் வரசை நல்கிக் காட்டொரு கருமஞ் செய்தாய்
கருமந்தான் இதின்மேல் உண்டே"
(வாலிவதை 81)

albusk Hight L angå
என்றிங்ங்ணம் ஏசுபவின் போல,
இயம்பல் உற்ருன்.
ஓர் ஆசிரியன் தான் நம்பியிருந்த தனது உத்தம் மாணவன் காத்திராப் பிரகாரம் ஒழுக்கத்தினின்றும் வ முக் கி வீழ்ச்சியுற்ற போது, "என்னப்பா செய்தாய்' என்று இடித்துரைக்கும் முறையில் இயம்புகின்ருன் வாலி. மதிப்பென்கின்ற அருமந்தவிலே தெரிந்தவன் வாலி. அவன் தன் இழுக்கத்துக்கு இரங்கவில்ஃப், இராமனது ஒழுக் கத்துக்குக் கொதித்தான். வாவியின் கொதிப்பு ஒரு புது உபதேச விண்ணப்பம். அக்கொதிப்பை ஒரு சிறிது தணிக்கும் முகமாகி பூரீராமன் அவன் செய்த குற்றங்களேச் சற்றே எடுத்துக்காட்டின்ை. குற்றங்களுள் தலேயாயது 'தம்பியின் தாரத்தைக்கவர்ந்தது. அதனே உணர்த்தியபோது, வாலிசிரித்தான். குரங்குகளுக்கும் மநுநீதியா? என்ருன்,
"தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னல ராயின் உப பாந்துள மக்களும் விலங்கே மருவின் நெறி புக்கவேல் அவ் விலங்கும் புத்தேளிரே"
(வாவிவதை 112)
என்றிங்ங்னம் வாலியின் தெய்வத கிலேயும், அவன் மநுநீதிக்கு உட்பட்டவன் என்பதும் நீராமனுல் தெரித்துக் காட்டப்பட்டன. வாலி தலே வணங்கினுன், ஆயினும், ஒரு சந்தேகம் தலே தூக்கியது.
செவ்வியோய் அனேயதாக;
செருக்களத்து உருத்து எய்யாதே வெவ்விய புளிஞ ரென்ன
விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னே" என்ருன்
(வாலிவதை 156)
"இலக்குவன் இயம்பலுற்றன்.'
வாலி இராமன் பால் விடுத்த விணுவுக்கு விடையிறுத்தற்கு அ து மதியின்றி இலட்சுமணன் இடையில் தோன்றினுன் அவனுடைய சமாதானத்தை இராமனுவது வாலியா வது செவிமடுத்ததில்லே

Page 41
: XS
76 செந்தமிழ்த் தேன்
இலட் சும ண ன் கூற்று இடையே கின்று வற்றியது. இராமன் மெளனியாய்த் தன்பால் நிகழ்ந்த ஸ்மிருதி சொற்களுக் கடங்காதது என்பான்போல, மெளன முத்திரை காட்டி வாளாநின்றன். அக்தி நிலையைக் கண்ணுற்ற வாலி, V
அவியுறு மனத்தன் ஆகி
அறத்திறன் அழியச் செய்யான் புவியிடை அண்ணல் என்பது
எண்ணினன்"
(வாலிவதை; 118
வாலியின் மனத்தில் அமைதி தோன்ற, அந்த அமைதியில் வாலிக்கும் ஒரு ஸ்மிருதி தோன்றியது. அந்த ஸ்மிருதிதான் "காசில் கொற்றத்து இராமன்" என்பது. ‘இராமன் தவறு செய்யான்" என் பதே அதன் பொருள். ஒருநாள் தாடகை வதத்தில் விசுவாமித் திரனின் ஏவலைச் சிறிதே ஐயுற்ருன் பூரீராமன். ஆயினும் அதே கணத்தில் ‘மெய்யகின்னுரை வேதம்எனக்கொண்டு செய்கையன்ருே அறஞ்செயும் ஆறு’ என்ருன்.
(தாடகை வதம்: 87)
அன்று விசுவாமித்திரன் எதிரில் இராமன் எய்திய கிலேயை இன்று இராமன் எதிரில் வாலி எய்திஞன். வாலியின் விஞவுக்கு இராமன் மெளன நிலை விடை பகர்ந்தது. வாலி வணங்கின்ை.
"தாயென உயிர்க்கு நல்கித்
தருமமுந் தகவுஞ் சால்பும் நீயென நின்ற நம்பி
நெறியினில் நோக்கும் நேர்மை நாயென நின்ற எம்மால்
நவையற உணர லாமோ தீயன பொறுத்தி என்ருன்
சிறியன சிந்தி யாதான்"
(வாலிவதை; 119) வாலி சிறியன சிந்தியா தான்' ஆயினன். கீழான செயல்கள் அவன் மனசை விட்டு அகன்று போயின. 'துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத்துக்குத் தோன்றிய பூரீராமன் ஆராய இந்த காய் ஆர்?" என்ற கேள்வி அவன் மனசில் எழுந்தது. இராமன் செயல் விதியின் விதியாய் வாலிக்கு வேதம் ஆனது. அந்தக்கணமே 'தீயன பொறுத்தி" என்று சரணுகதி எய்தின்ை வாலி.

கம்பர் கண்ட வாலி ፃን
ஏேவுகூர் வாளியால்
எய்துநா யடியனேன் ஆவிபோம் வேலைவாய்
அறிவுதந் தருளினுய் மூவர்நீ முதல்வனி
முற்றுநீ மற்றுநீ பாவதி தருமநீ
பகையுநீ உறவுநீ"
(வாலிவதம்: 122) உரம்ளலாம் உருவிஎன் .: உயிரெலாம் நுகரும்நின் சரம்அலால் பிறிதுவேறு
உளதரோ தருமமே
(வாலிவதை; 123 "பகையும்நீ உறவும்நீ" சேரம் அலால் வேறு உளது கொல் தருமம்"
ஆவிபோம் வேலை ஏவுகூர் வாளி அறிவுதந் தருளியது" என்ற வார்த்தைகள் மேலும்மேலும் எடுத்து எடுத்து உச்சரிக் கப்பட்டன.
இந்த நெறியிலே வாலியின் வாய் வாழ்த்துப் பாடித் தனக்குக் கழுவாய் தானே செய்து கொண்டது.
சக்கிரீவன் இச்செயல்களுக்கு ஆற்ருது கண்ணீர் பொழில்தான். வாலி சுக்கிரீவனே ஒருகையால் அணைத்தபடி,
வெற்றரசு எய்தி எம்பி
வீட்டரசு எனக்கு விட்டான்'
(வாலிவதம்: 1261 என்று கூறி மனங்குளிர்ந்தான். அதுகேட்டுச் சுக்கிரீவனின் உள்ளம் உருகி ஓடியது. வாலி மற்றக்கையால் அனுமானையும் அண்ணத்துக் கொண்டு பூரீராமண் விளித்து,
அநுமன் என்பவன ஆழி ஐய
நின்சேய் செங்கைத் தநுஎன நினைதி: மற்றுனன் தம்பி
நின்தம்பி ஆக
(வாலிவதை; 130

Page 42
78. செந்தமிழ்த்தேன் என்ற வரங்களே பூரீராமன்பால் வேண்டினன். வேண்டியவன்,
மற்றிலேன் எனினும் மாய
அரக்கன வாலிற் பற்றிக் கொற்றவ நின்கட் டந்து,
குரக்கியற் ருெழிலுங் காட்டப் பெற்றிலேன்; கடந்த சொல்லிப்
பயனிலை"
(வாலிவதம்: 1297
என்று கூறியவனுய் ஒரு பெருமூச்சு விட்டான்.
அந்தச் சந்தர்ப்பத்தில் வாலியின் புதல்வனுன அங்கதன் ஓடி வந்து வாலியின் மேல் வீழ்ந்து விம்மி அழுதான். வாலி,
*உன்னடைக்கலம் என்று உய்த்தே
உயர்கரம் உச்சி வைத்தான்'
(வாலி; 1381 அங்கதனை பூரீராமன் பால் பாத காணிக்கை செய்து, கைகளைச் சற்றே நெகிழ்த்து உச்சியின்மீது குவிக்க முயன்ருன்; ஒருவாறு குவித்தான்.
வாலியின் கைகள் குவிந்தவை குவியமுன்னமே, வாலியின் கண் களுக்கு நேரிலே, வாலியின் 'பொருள்' ஆன அங்கதன் கையிலே,
"பொன் உடைவாளை நீட்டி
நீ இது பொறுத்தி என்ருன்?
பூரீராமன்.
(வாலி: , 152) அம்மட்டோ பூரீராமனின் திவ்விய திருக்கரங்கள் அங்கதனின் முதுகைத் தைவந்து, அவன் உச்சிமீது கவிழ்ந்து, அன்புமயமான ஆசியை வழங்கின. அதுகண்டு வாலியின் ஆத்மா சாந்தி எய்தியது. தம்பொருள் என்ப தம்மக்கள்' என்பது தமிழ், வேத வாக்கு. வாலி யின் கண்களில் ஆனக்த அருவி ஊற்றெடுத்தது. ஆவி அதில் முழுகி மேல் எழுந்தது. அதன் கதி ஊர்த்துவ கதி. --
வோலியும் ஏகினுன் விண்" -
அம்பும் அப்பாற் சென்றது. வாலியின் செய்தவம் முற்றிற்று.

ஏன் இந்தத் தயக்கம்? (வித்துவான். மு. வரதராசன். M. A., M.0.L, PH D
தமிழிலே கலைச் சொற்கள் உருவாக வேண்டும். அவற்றை அமைத்து நூல்கள் பல வெளிவரவேண்டும். அந்த நிலை வந்தபிறகு தான் கல்லூரிகளில் தமிழ் போதனை மொழியாக முடியும்’-இவ் வாறு இன்று ஆசிரியர்கள் முதல் அரசியலார் வரையில் பலரும் கூறத் தலைடப்பட்டுவிட்டனர்.
தமிழ்நாடு முன்னேற முயலும்போதெல்லாம் இதற்கென்றே தனி வகையான முட்டுக்கட்டைகள் தோன்றி வருகின்றன. தமிழ் நாட்டு அறிஞர்களே பெரும்பாலும் அவற்றிற்குக் காரணமாக இருக் கின்றனர். இது மிக வருந்தத்தக்கது. நாட்டின் ஆட்சி மொழியாக வும் பல்கலைக்கழக அறிவுமொழியாகவும் தமிழ் வளர்வதற்கு அரிய தொரு வாய்ப்புக் கிடைத்தபோதும் இந்த முட்டுக்கட்டை முன்வந்து விட்டது. . :ܗܝ
தமிழில் கலைச் சொற்கள் உருவாகத் தேவையில்லை என்று கூற வில்லை. அவற்றை அமைத்து நூல்கள் வெளிவர வேண்டா என்றும் கூறவில்லை. ஆணுல், இவ்வளவும் குறைவின்றி அமையும் வரையில் தமிழ்போதனை மொழியாக ஆதல் கூடாது என்று சொல்வதுதான் வருந்தத் தக்கதாகும்.
எந்தத் துறையிலும் கல்ல நூல்கள் வெளிவர வேண்டுமானல் அதற்கு முன்பே அந்தத் துறையில் சிக்தனை வளர்ந்த பிறகுதான் செம்மையான நூல்கள் எழுதமுடியும். இன்று விஞ்ஞானத் துறை யில் நூல்கள் இல்லையே என்று குறை கூறுவோர் தமிழில் அந்தத் துறையில் சிந்தனை வளர்த்தவர் இல்லேயே என் ப ைத உணர வேண்டும்.
விஞ்ஞானத்துறையில் தாய்மொழியில் சிந்தனை வளராமைக்குக் காரணம் என்ன? கற்றுத்தேர்ந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தின் வாயி லாகவே கற்கின்ருர்கள். ஆகவே, அறிவை வளர்க்கும் பொறுப்பை யுடைய கல்வியுலகம் தாய்மொழியில் சிந்தனை வளர்வதற்கு ஒருசிறு வாய்ப்பும் தரவில்லை; வாய்ப்புத்தராமலே இருந்துவிட்டு இன்று தாய்மொழியைக் குறை கூறுகின்றர்கள். ஆங்கில்த்திற்கு உள்ள ஆற்றலும் வளமும் தமிழுக்கு இல்லை என்று கூசாமல் குறை கூறு கின்முர்கள். . . . . .

Page 43
80 செந்தமிழ்த் தேன்
ஆங்கிலம் அந்த ஆற்றலும் வளமும் பெற்றது எவ்வாறு? உல கத்தின் விஞ்ஞானிகளெல்லாம் இங்கிலாந்தில் பிறர்தவர்களா? ஆங் கில மொழியில் எழுதியவர்களா? இரண்டும்இல்லை. ஆங்கில காட்டி லும் ஒரு சில விஞ்ஞானிகள் பிறந்தார்கள்; ஆங்கிலத்தில் எழுதிருச் கள். பெரும்பாலோர் பிறநாட்டாரே; பிறமொழியினரே. அவ்வாறு இருக்க ஆங்கிலம் அறிவு மொழியாக ஆற்றலும் வளமும் பெற்றது எவ்வாறு? ஆங்கிலப் பல்கலைக் கழகங்கள் தம் தாய் மொழியாகிய ஆங்கிலத்தின் வாயிலாகவே பிறநாட்டு நல்லறிஞரின் கருத்துக்களே உணரத் தலப்பட்டதே காரணமாகும். ஆக்ஸ்போர்டு (Oxford) கேம்பிரிட்ஜ் (Cambridge) போன்ற பல்கலைக் கழகங்கள் ஆங்கில மொழியின் வாயிலாகவே ஜெர்மன் விஞ்ஞானிகளின் கருத்துக்களை மாணவர்களுக்குக் கற்பித்தன. ஆங்கிலமாணவர் அக்கருத்துக்களைச் சிந்தனே செய்து ஆங்கில மொழியில் பேசவும் எழுதவும் வல்லவராக விளங்கினர். வகுப்புக்களில்பேசவும் தேர்வுக்கூடத்தில் (Examination hal) எழுதவும் அவர்கள் பெற்ற ஆற்றலே பிற்காலத்தில் மேடைகளில் எடுத்துரைக்கவும் நூல்களில் செம்மையாக எழுதவும் துண் செய்தது; காலப்போக்கில் ஆங்கில மொழி பல விஞ்ஞான நூல்களையும் பெற்று வளம் நிரப்புவதற்கும் காரணமாயிற்று.
இந்த முறையைத் தமிழறிஞர்கள் போற்றி வருவார்களானல், காட்டுக்கும் காட்டு மொழிக்கும் தன்மை செய்தவர் ஆவார்கள். ஆனல், ஏழு, எட்டு நூற்ருண்டுகளாக அடிமைப்பட்டுப் பிறர்க்கு அடங்கி வாழ்ந்த இனமாகையால், தமிழர்க்குப் போதிய உரிமையு ணர்ச்சி இன்னும் பிறக்கவில்லையோ என்று இன்னும் எ ண் ண வேண்டியிருக்கிறது. தமிழிலே கற்பிக்கலாம், தட்டுத் தடுமாறியே னும் கருத்துக்களை உணர்த்தலாம் என்றதுணிவு ஆசிரிய உலகத்துக் குப் பிறக்கவில்லே. கம் அறிவு தெளிவும் உரமும் பெறவேண்டுமா ஞல் எவ்வளவு குறைகள் இருந்த போதிலும் தாய் மொழியின் வாயி லாகவே கற்றுணர முற்படுவோம் என்றவேட்கை மாணவர் உலகத் துக்குப் பிறக்கவில்லை. இடையிடையே இரண்டொரு சொற்கள் தாய்மொழியில் பேசுதல் தம்மதிப்பைக் குறைத்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர் ஆசிரியர்கள். தாய்மொழிக்குக் காலத்தைச் செல விடுதல் ஆங்கிலத்திறனைக் குறைத்துவிடுமோ என்று தயங்குகின் றனர் மா ன வ ர் கள். ஆரம்ப பாடசாலை மாணவரேயாயினும் "சைலன்ஸ்" (Silence) என்று ஆங்கிலத்தில் கூற விரும்புகின்ரரே

ஏன் இந்தத் தயக்கம்? 81
அல்லாமல், "அமைதி" என்ற சொல்லைப் பயன்படுத்த மனம்கொள்ள வில்லே. ஒருகால் அவர் மொழிப்பற்றுக்கொண்டு துணிந்து கூறி விடினும் மாணவர்களின் செவியைச் 6 சைலன்ஸ்" என்ற சொல், ஈர்க் கும் அளவிற்கு ‘அமைதி" என்ற சொல் வயப்படுத்த முடியவில்லை. அவ்வாறே "ப்ரசன்ட் சார்" (Present Sir) என்று மாணவர்கள் சொல் லும்போது ஆசிரியர்களின் திருவுளம் மகிழும் அளவிற்கு "உள் ளேன் ஐயா" என்ற ஒலியால் மகிழ்வதில்லை; நேர்மாருக மருள்வ தும் உண்டு. இந்தச் சிறுசிறு செய்திகளுக்கும் தமிழ் அறிவு மொழி ஆவதற்கும் தொடர்பு இல்லைப்போலத் தோன்றலாம்; தொடர்பு உண்டு. இரண்டிற்கும் அடிப்படையானது ஒரேவகை மனப்பான் மையே. கதர்ச் சட்டைக்கும் காட்டு விடுதலைக்கும் எவ்வளவு தொடர்பு உண்டோ அவ்வளவு தொடர்பு இவற்றிற்கும் உண்டு. சிறுசிறு நிகழ்ச்சிகளில் தமிழைப் பேசவும் கேட்கவும் கூசும் மனக் தான் போதனை மொழியாகத் தமிழ் வர முடியாது என்னும் அள விற்கு எண்ணுகின்றது. இரண்டிற்கும் அடிப்படையான காரணம் கெடுங்காலம் இருந்து வந்த அடிமைத் தனத்தால் அமைந்துள்ள தாழ்வு மனப்பான்மையே ஆகும். தமிழரின் கடைகளிலுள்ள ஆங் கில விளம்பரப் பலகைகள், வீட்டுப் பெயர்கள், தமிழர்கள் எழுதும் பெயர்களில் உள்ள பெயர்க் குறிப்புக்கள், முகவரி (Address) முதலி யவை இதே மனப்பான்மையைத் தான் புலப்படுத்துகின்றன. இந்தி யாவில் வேறு எந்தப் பகுதியிலும் இந்நிலைமை இல்லை. ஆங்கில மொழி அளிப்பது பெருமை என்றும், தாய்மொழியால் பெறுவது சிறுமை என்றும் எண்ணும் நெஞ்சத்தை இந்தப் பலகைகள் முத லிய வற்றில் காணலாம். நியூயார்க்கிலிருந்து வந்து சென்னையில் விமானத்தில் இறங்கும் மலையாளி இன்னுெரு மலையாளியைக் கண்ட வுடனே மலேயாள மொழியில் கொஞ்சிக் குலவ, தமிழ்நாட்டுத் திண் ணே மீது பொழுதுபோக்கும் தமிழர் இருவர் ஆங்கில மொழியிலேயே பேசி மகிழ்கின்றனர்! அரைகுறையாக ஆங்கிலம் படித்த தமிழர் களும் தமிழ்ச் செய்தித்தாளை வாங்கிப் படிக்க மனமில்லாமல் காட்டு நன்மைமீது சவாரிசெய்யும் ஆங்கிலச் செய்தித் தாளையே வாங்கிப் படிக்க விழைகின்றனர். செய்திகளையும் தாய் மொழியின் வாயிலாக உணர முடியாது என்று இவர்கள் நெஞ்சம் அஞ்சுகின்றது என லாம். அல்லது, தமிழ்ச் செய்தித் தாளைக் கையில் ஏந்தியிருந்தால் ஆங்கிலம் அறியாதவர் என்று பிறர் தவருக எண்ணிவிடுவாரோ என்று தயங்குவதாக இருக்கலாம்.

Page 44
82 செந்தமிழ்த் தேன்
இவ்வாறு அஞ்சியும் தயங்கியும் தமிழர்கள் பெற்ற நன்மை ஏதேனும் உண்டா? முற்காலத்தைப்போல் திறமை வாய்ந்த ஆசிரி யர்கள் இக்காலத்தில் இல்லே என்று பெற்றேர்கள் குறைகூறுகின் றனர். கல்வியின் தரம் குறைந்துவிட்டது என்று அதிகாரிகள் இரு சாராரையும் குறை கூறுகின்றனர். அதிகாரிகள் முன்போல் கட மையைச் செய்வதில்லே என்று அரசியலார் குறை கூறுகின்றனர். உரிமை உரிமை என்று பேசி மாணவர் உலகைக் கெடுத்துவிட் டனர் என்று அரசியலாரை அனேவரும் குறை கூறுகின்றனர். ஆங் கிலக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குப் புது வழி காணவேண் டும் என்று அறிஞர்கள் முற்பட்டுள்ளனர். சீர் குவுேம் குழப்ப முமே எங்கும் உள்ளன.
ஆங்கிலத்தின் தரத்தை உயர்த்துவது என் குரல் என்ன? தமிழர் ஒவ்வொருவரும் ஆங்கில மொழியில் பேசவும் எழுதவும் வல் லவராகச் செய்வதா? ஒரு நாட்டு மக்கள் அன்ேவரும் பிற மொழியில் வல்லவராக முடியுமா? இத்தகைய முயற்சி எந்த நாட்டிலேனும் வெற்றிபெற்றது உண்டா? நூற்றைம்பது ஆண்டுகள் இருந்த ஆங் கில ஆட்சியிலேனும் வெற்றியைக் கண்டது உண்டா? ஆங்கில ஆட்சியில் நூற்றுக்கு எழுவர் படித்தவர். அவர்களினும் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவரே ஆங்கிலத்தில் உரையாட வல்லவர் பதினுயிரத்துக்கு ஒருவர் அல்லது இருவரே மேடையில் ஆங்கிலத் தில் முழங்க வல்லவர், நூருயிரத்தில் ஒருவர் அல்லது இருவரே ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதவல்லவர். கோடியில் ஒருவர் அல் லது இருவரே ஆங்கிலேயரும் பாராட்டத்தகுந்த வகையில் அந்த மொழியைக் கையாள வல்வர். வல்லவர் என்று குறிக்கப்படும் இக் தப் பெருமக்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் ஒர் உண்மை விளங் கும். தாய்மொழியைத் தியாகம் செய்த காரணத்தாற்ருன் இவர் கள் ஆங்கிலத்தில் புலமை பெற முடிந்தது என்பது அந்த உண்மை. இளமையிலேயே ஆங்கிலப் பள்ளியில் (Convent) சேர்ந்து ஆங்கிலத் திலேயே கல்வி தொடங்குவது, தமிழ் அறியாத ஆங்கிலேய ருடனே பழகுவது, வீட்டுக்கு வரும் நாள்களில் கூடுமான வரை யில் தமிழில் பேசாமல் இருப்பது, பெற்ருேர்க்கும் கண்பர்க்கும் ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதுவது, திருக்குறள் முதலான தமிழ்ப் புத்தகங்களே ப்பற்றி ஒன்றும் அறியாமலே வளர்தல், ஆங்கில நடை யுடைகளேயே போற்றித் தமிழ் மட்டும் பேசுவோரிடத்தே பழ கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏன் இந்தத் தயக்கம்? 83
திருப்பது. ..இவ்வளவும் செய்து தாய்மொழியைத் தியாகம் செய்த ஒரு சிலர் தாம் ஆங்கிலேயர் போற்றும் அளவிற்கு ஆங்கி லத்தில் வல்லமை பெற முடிந்தது. இந்த கிலேமையோ இதற்கு அடுத்த நிலமையோ தமிழர் அனேவரும் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் கனவாகும். ஆங்கிலம் மட்டுமல்லாமல் வட மொழி இந்தி முதலான எந்த மொழியிலும் தமிழர் ஒருசிலர் உயர்ந்த தரம்பெற முடியும், அதற்கு வழி தமிழைப் புறக்கணித்து அந்தந்த மொழியை மட்டுமே இடைவிடாமல் படிப்பதேயாகும். இத்தகை யவர் ஒரு சிலர் என்றும் நாட்டுக்குத் தேவையே. அவர்களேத் தமிழ் நாடு என்றைக்கு வேண்டுமானுலும் பை த்துக்கொள்ள முடி யும். மேற்கூறிய முறையில் ஒரு சிலர்க்குப் பாதுகாப்பான கல்வி அளித்துப் பிற மொழியில் வள்லவர்களாகச் செய்து நாடு அவர்க *ளப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனுள், நாட்டிலுள்ள எல் லோரும் அப்படி ஆகவேண்டும் என்று முயல்வது வீண் கனவா கும். கிங்காங் போன்ற கழிபேரிரையர்கள் நாட்டுக்கு ஒருவர் இரு வர் இருக்காம்; ஆனுல் எல்லோரும் வேளேக்குப் பல கோழிக ஆளப் பதம் பார்க்கவேண்டும் என்று திட்டம் வகுப்பது அறிவு டைமை அன்று.
தாய்மொழிக் கல்வி இயற்கையானதாகும். தமிழ் மண்ணில் வாழை வளமுற வளர்வதுபோல், சிறிது இடம் கொடுத்தாலும் இ2ளஞரின் மூ&ளயில் தாய்மொழி விரைந்து வளர்ந்துவிடும். இதற் குப் பெரிய ஆராய்ச்சி வேண்டா. இன்றைய கிலேயையே எண்ணிப் பார்த்தால் போதும். இவ்வளவு தாழ்வு மனப்பான்மையும் ஆப் சில மோகமும் குடிகொண்டுள்ள இந்தக்காலத்திலேயே மாணவர் உலகத்தில் தமிழ் வளர்ந்துள்ள வேகம் வியத்திற்குரியதாகும். ஆங் கிலத்துக்கு எல்லாச் சிறப்பும் இருந்த அந்தக்காலத்தில் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர் பதினுயிரத்தில் ஒருவர். துருயிரத்தில் ஒரு வர் என்று அருகி நிற்றல் கண்டோம், அதே கண்களால் இன்று என்ன காண்கிருேம்? ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு கல்லூரியி லும் ஒவ்வொரு வகுப்பிலும் தங்கு தடையின்றித் தமிழ் பேசும் ஆற்றலுடைய மாணவர் பலரைக் காண்கின்ருேம், அழகான கையெ முத்துப் பத்திரிகை கடத்திக் கதைகளும் பத்திரிகைகளும் எழுத முன்வரும் இளேஞர் பலரைக் காண்கின் ருேம், "நீ பேசு, சிறிது பேசு, எப்படியாவது பேசு' என்று ஆங்கில மேடைக்கு அழைக்கும்

Page 45
岛串 செந்தமிழ்த் தேன்
நி3லமை போப், "எனக்கு இடம் கொடுங்கள். நான் சிறிது பேச வேண்டும். எப்படியாவது இடம் கொடுங்கள்" என்று இ&ளஞர் வேண்டி நெருக்குகின்ற தமிழ் மேடையைக் காண்கின்ருேம். ஆங் கில ஆசிரியர் எழுதிக் கொடுத்ததை கெட்டுருச்செய்து மேடையில் ஒப்புவிக்க முடியாமல் திணறிய காட்சி போய், தமிழாசிரியர் சொல் விக் கொடுத்த இரண்டொரு குறிப்புக்களேயே நீள வளர்த்துக் கொண்டு நெடுகப் பேசும் இளேய முளேகளேக் காண்கின்ருேம், பல புத்தகங்களேக் கொடுத்து அவற்றைப் படித்து ஒரு சிறு கட்டுரை யாவது எழுது என்று வற்புறுத்தும் ஆங்கில நிலமை போய், கட்டுக்கட்டாகத் தமிழ்க் கதைகளும், நாடகங்களும் கட்டுரைக ளும் எழுதிக் குவித்து வைத்துக்கொண்டு, "இவற்றை வெளியிட்டு ஆதரிப்பார் இல்லையே' என்றும் ஏங்கும் இளேஞர் பலரை இன்று ஊர்தோறும் காண்கின்ருேம். எவ்வளவு பெரிய மாறுதல் உயர் நிலப் பள்ளிகளில் தமிழை முதல்மொழி என் று ஆக்கியவுடன் இத் தனகய மாறுதல் வேகமாக ஏற்படக் தொடங்கிவிட்டது. பல்க இலக் கழகங்களில் விஞ்ஞானம் முதலிய கலைகளேக் கற்பிக்கும் மொழியாகத் தமிழை உயர்த்தும் நிலமை வந்துவிட்டால் தமிழர் கள் பலர் அந்தக் கலேகளில் சிந்திக்கும் கிலேபெற்று விளங்குவர் என் பது திண்ணம் அறிவுக் கூர்மைக்குப் பெயர்பெற்ற இந்த நாட்டில் விஞ்ஞானிகள் பலர் தோன்றித் தமிழிலே அரிய விஞ்ஞான நூல் கள் எழுதுவர் என்பதும் திண்ணம்.
ஆணுல், இந்த மாறுதலே விளேவிப்பதற்கு காட்டின் தலேவர் சிலர் உளங்கொளல் வேண்டும். அ தற்கு அஞ்சாமையும் துணிவும் வேண்டும்.
மராட்டியரிடையே, குஜராத் திய ரி டையே நல்லகாலமாக இதற்கு வேண்டிய சூழ்நில அை மக்திவிட்டது. ஆங்கிலேயர் வென்று கைப்பற்றிய நாள் வரையில் உரிமையோடு வாழ்ந்த இனம் மராட் டிய இனம். அதனுல் அவர்களின் உரிமையுணர்ச்சி மங்கவில்க்ல; மடியவில்ஃப். ஆங்கிலத்தில் எவ்வளவு தேர்ச்சியும் புலமையும் பெற்றவர்களும் அந்நாட்டில் தாய்மொழிக் கடமையை மறக்க வில்லே, தி கர், கோதலே போன்ற பெருமக்கள் ஆங்கிலத்தில் வல் லுநர் ஆயினும் மராட்டிக்கே ஆக்கம் தேடினர்; இன்னும் ஜயகர் உள் ளோர், அவர் பூணுப் பல்கஜலக் கழிகக் தக்வர். ஆங்கில காட்டின்

ஏன் இந்தத் தயக்கம்? 85
பெருமதிப்புக்குரிய ரைட் ஆனரபில்' (Right honourable) என்னும் பட்டம் பெற்று இன்று உயிருடன் வாழும் இந்தியர் அவர் ஒரு வரே. ஆங்கில மொழிக்கு அவரிலும் கடமைப்பட்ட இந்தியர் வேறு எவரும் இல்லே எனலாம். அத்தகையவர் அங்கே என்ன செய்தார் செய்கின்ருர்? பக்கத்து நாட்டிலே குஜராத்தில் முன்ஷி போன்றவர் களின் முயற்சியால் குஜராத்தி மொழி போதனே மொழியாக அமை வதற்கு முன்னே பூணுப் பல்கலேக் கழகத்தில் மராட்டிய மொழி போதனே மொழியாக விளங்குமாறு செய்ய முனேகின்ருர், ஏன்? கல் வியின் இயல்பையும் கற்கும் மாணவரின் தன்மையையும், முளேயின் இயற்கையையும் அவர் கன்கு உணர்ந்தவர். ஒன்பதாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயதுவரை ஒருவன் ஆங்கிலத்தை எவ்வளவு போற்றிக் கற்றுவந்த போதிலும் ஆங்கிலச் சொற்கள் பலவற்றைக் கற்கமுடியுமே தவிரக் கருத்துக்களிலோ கலேகளிலோ தெளிவுபெற் றவனுக முடியாது என்பதை நன்கு உணர்ந்தவர். ஆங்கிலச் சொற் களேயும் வாக்கியங்களேயும் கெட்டுருச் செய்து இளேஞர் தம் காலத் தைப் போக்குவதால் நாட்டுக்கு நன்மை விளேபாது என்பதைத் தெரிந்தவர் அவர் பத்து ஆண்டுகள் ஆங்கில மொழியின் வாயிலாக விஞ்ஞானத்தைக் கற்பதிலும் பார்க்க ஐந்து ஆண்டுகளில் தாய் மொழியின் வாயிலாகக் கற்றுப் பலமடங்கு தெளிவுபெற முடியும் என்பதை அறிந்தவர் அவர். ஆதலின், கலேச் சொற்கள் அமைக் கப்படும் வரையில், நூல்கள் இயற்றப்படும் வரையில் காத்திருத்தல் கூடாது என்று மராட்டியைப் போதனே மொழியாக்க முனேந்துள் னார்.
ஒரு தலைமுறை இடர்ப்பாடு இருக்கலாம். ஒன்றுமே செய்யா மல் இருத்தலேவிட இடர்ப்பட்டு முன்னேறுதல் நல்லது, கற்பிக்கும் ஆசிரியரின் கையில் ஆங்கில விஞ்ஞான நூல்களே இருக்கலாம். அந்த நூல்களே வைத்துக்கொண்டே ஆசிரியர் தாய் மொழியில் கேட்டு உணர்த்தலாம் மாணவரும் தாய் மொழியில் கேட்டு உண ரலாம். தேர்வுக் கூடத்திலும் மாணவர்கள் தாய் மொழியிலேயே எழுதலாம்; ஒருசில ஆங்கிலச் சொற்கள் கலந்தும் எழுதலாம்; சிறிது தடுமாறலாம். அதனுல் திங்கு ஒன்றுமேயில்லே. தனக்கு என்று கருத்தே இல்லாமல் கெட்டுருச்செய்து தடுமாறுவதை விடக் கருத் துக்கள் நிரம்ப வைத்துக்கொண்டு ஒருசில சொற்கள் இல்லாமல்

Page 46
85 செந்தமிழ்த் தேன்
தடுமாறுதல் மேலானதாகும். முன்னேய தடுமாற்றம் முளேயை வளர வொட்டாமல் மங்கச் செய்வது பின்னேய தடுமாற்றம் முஃயைத் தூண்டி வளர்ச்சிக்குத் துனே செய்வது, ஆதவின் இந்தத் தடுமாற் றத்தை மகிழ்ந்து வரவேற்கவேண்டும். ஷேக்ஸ்பியரின் நாடகங்க ளின் சிறப்பைக் குறித்து ஆங்கிலத்தில் படிக்கிருன் ஆசிரியரும் ஆங்கிலத்தில் கற்பிக்கின்ருர், ஆயினும் ஆங்கிலத்தில் எழுதுவ தென்ருல், எழுதவேண்டுமென்று கட்டாயப்படுத்தும்போதும் அவ னுடைய முளே திறனுய்வு ( riticism) எழுதிய ஆசிரியர்களின் வாக்கியங்களேயே கினேந்து அழுகின்றது. மூன்று நான்கு பக்கங் கள் எழுதுவதற்கும் பெரும்பாடுபடுகின் முன் ஆணுல் ஆங்கிலத்தில் படித்த அதே நாடகத்தைப்பற்றி வேடிக்கையாகத் தமிழில் எழு தத் தொடங்கிவிட்டாலோ அவனுடைய கை நிற்பதில்லே வேண் டாத அளவுக்கும் அவனுடைய கட்டுரை நீண்டுவிடுகின்றது. இதனே உணர்ந்துதான் ஹோமர் (Homer) தாங்தே (Dante) போன்ற பிறமொழிப் புலவர்களின் காவியங்களேயும் ஆங்கிலப் பல்கலேக் கழ கங்கள் ஆங்கிலத்தின் வாயிலாகவே கற்பித்து ஆங்கிலத்திலேயே கட்டுரை எழுதச் செய்கின்றன. ஆகவே நூல்கள் எந்த மொழி யில் இருப்பினும் இருக்க கற்பித்தலும் கற்றலும் தாய் மொழியில் இருத்தல் கடமை என்ற தெளிவுதான் இன்று தமிழ்நாட்டு அறி ஞர்க்கு வேண்டும். ஒரு தலேமுறை வரையில் இந்த கிலேக்கு இடம் கொடுப்போமானுல் அடுத்த தலேமுறையிலே விஞ்ஞான நூல்கள் பல தாய்மொழியிலேயே இயற்றப்பட்டும் விடும். இந்தத் தலேமுறை யில் தாய் மொழியில் சிந்தனே வளர இடம் கொடுப்போம். அடுத்த தலேமுறையில் நூல்கள் எழ வழிவகுத்தவர்களாவோம். இந்த நாட் டில் அறிவுக்குப் பஞ்சம் இல்லே. தொன்றுதொட்டு முளே வனம் உடைய நாடு இது. ஆதலின் நம்பிக்கை கொள்வோம்; துணிவோம்.
ஜயகர் போன்ற அறிஞர்கள் துணிந்துவிட்டனர். நீந்தக் கற் றுக்கொள்ளும் வரையில் நீரில் கால் வைக்கமாட்டோம் என்று அவர்கள் தயங்கவில்லே. நமக்குமட்டும் ஏன் இந்தத் தயக்கம்?
 
 

இலக்கியங்களில் நகைச்சுவை (பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை)
இலக்கியச் சுவைகளே ஒன்பது வகையாகக் கூறுவர் தமிழ்ப் பெரியார். பண்டைய தமிழிலக்கியங்களிலே காதல் வீரச் சுவைகள் பெரிதும் இடம் பெற்றுள்ளன. உடல் வளர்ச்சிக்கு நாமுண்ணும் உண்வில் அறுசுவைகள் அமைந்திருக்குமாறு போல உயிருளப் பண் பாட்டிற்கு உதவும் இலக்கியங்களிலும் ஒன்பது வகைச் சுவைகளும் இடம்பெறலால் இலக்கியங்கள் உண்ண உண்ணத் தெவிட்டாத அமிழ்தம் போன்று படிப்போர் உளத்துக்குப் பெரிதும் உவகை பயப்பன. நாவால் அநுபவிக்கப்படும் அறுசுவையினும் செவியால் நாம் நுகரும் கவிச்சுவை எத்துனேயோ மடங்கு சிறப்புடையதெனத் திருவள்ளுவர் மொழிகின்றர். பொன், மணி, நிலம் ஆகிய செல்வங் களினும் இலக்கியச் சுவைச் செல்வம் தலே சிறந்ததென வள்ளுவனுர்,
"செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலே "
என்று திறம்பட மொழிகின் ருர், நவரசங்களே யும் தம் கவிதை வழியே புலப்படுத்தும் புலவர்கள் தேவரினும் சிறந்தவர். அச்சுவை களே உணர்ந்து அநுபவிப்போர் அமிழ்தமுண்பவர் போல்வர்.
ஒன்பது சுவைகளில் வீரமும் கோபமும் எரிவை உண்டாக் கும் உறைப்புச் சுவைபோன்றிருப்ப நகைச்சுவையோ தேனேயும் பாலேயும் போன்று எல்லோரையும் வசியப்படுத்துகின்றது. கடிகா ரம் களவாடிய ஒருவரைப் பார்த்துப் பிறரொருவர் பிறர் முன்னிலே யில் நேரம் யாதிருக்குமென வினவினுர், அதற்கு விடையாக மற்ற வர் பால்சு நிக்கும் நேரமாகிவிட்டதென் ரூராம். தம்மைக் கெட்டிக் காரனென் மதித்துத் தம் பேதமையால் தாம் கறவை மாடொன் றினேக் களவாடிய இழிசெயலேப் புலப்படச் செய்துவிட்டார் நேரங் கேட்டறிய முன்வந்தவர் 'அவன் கெட்டாள் குடிகாரன், எனக் குக் கள்ளுக்கொடு." ஒட்டகம் ஓந்தியைப் பார்த்து "ஐயோ பாவம்! உனக்கு முதுகிற் கூனல் விழுந்துவிட்டதே' என்று இரங்கிற்ரும். இத்தகைய நகைத் துணுக்குகள் உலகியல்பை நன்ருகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. உலகியல்பைப் புலப்படுத்துவதோடு நகைச்சுவை நம்முடலிலுள்ள நரம்புகளுக்கூடாகக் குருதி ஒட் டத்தையும் துரிதப்படுத்தி முறுக்கேறிய நரம்புகளுக்கு மின்சக் திப் பரிகாரம் போன்ற நற்பயனளிக்கின்றதென ஓர் அறிஞர் கூறு கின்ருச்.

Page 47
இலக்கியங்களில் நகைச் சுவை
மனிதர் வாழ்நாளில் எய்தும் கசப்பும் கவலேயும் ஏமாற்றங் களும் அவர் வாழ்க்கையைப் பாழாக்க முற்படுகின்றன. இத்த கைய நிலயில் மனிதர் தம் கவலேயை மறந்து உளமகிழ்வெய்தும் வாய்ப்பு ஏற்படாவிடில் இப்பூவுலகே நரகமாகிவிடும். ஆகவே மனி தர் கவலேயையோட்டிச் சிரித்து உற்சாகமெய்த நல்ல எழுத்தாள ருடைய நூல்கஃா வாசிப்பதும், விகட நடிகருடைய அகடவிகடங் களே அநுபவிப்பதும் வாழ்க்கைக்குச் சுவையும் இன்பமுமுட்டுகின் றன தென்னுவிராமன் கதையும், அவிவேக பூரண குரு கதையும் துக்கத்துக்கு நல்ல மருந்தாவன். ஆனந்தவிகடனும் கல்கியும் தமிழ் நாட்டில் எத்தனேயோ இல்லங்களிலே சிரிப்பையும் குதூகலத் தையும் ஊட்டுகின்றன.
சுப்பிரமணிய பாரதியார் வாழ்நாள் முழுவது ம் வறுமை யுடன் போராடினுர், வானவெளியிலே ஒய்யாரமாகப் பறந்து திரி யும் காட்டுப் பறவைபோன்ற கவிதைவெறி பிடித்த இக் கவியரசர், புதுச்சேரியிலே சிறு வீட்டில் கூண்டுக் கிளிபோல் அடைபட்டுக் கிடந்தார். அந்த நிலேயிலே, விரும்பியவாறெல்லாம் வானப் பரப் பிடைப் பறந்து சோலேயிற் பழமுண்டுறங்கிப் பண் மிழற்றும் குயில் பாரதியாரைக் கவர்ந்ததில் வியப்பில்லே, எத்தனேயோ ஓசை நயங் களேத் தன்கட் கொண்டு காட்டும் அவர் புதுமைப் படப்பாகிய குயிற் பாட்டிலே பாரதியாருடைய நகைச்சுவை ஒளிவிட்டு மிளிர் கின்றது. குயிலின் கூற்றிலே வைத்துக் குரங்கின் அழகினேப்பற் றிப் பாரதியா பாடுவது உண்மைக்குப் பொருத்தமாயிருப்பதோடு நற்சுவையோடும் வெளிப்படுகின்றது.
- வான் ரரே ஈடறியா மேன் மையழ கேய்ந்தவரே
மண்ணிலுயிர்க்கெல்லாம் தலைவரென மானிடரே ஈண்ணிநின் ருர் தம்மை மேனியழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் பல வியிருக்கும் கொலுநேர்த்தி தன் விலுமே வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர் தம் ஆசை முகத்தினப்போல் ஆக்கமுயன்றிடினும்

இலக்கியங்களில் நகைச்சுவை 마
ஏறத்தெரியாமல் ஏணிவைத்துச் சென்ருலும் வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் LITT LIGJ GGG) வானரர்போலாவாரோ? வாலுக்குப் போவதெங்கே ஈனமுறுங்கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாலிருக்கப் பார்த்துண்டு சுந்தைபோல் வேகமுறத் தாவுகையில் ຢູ່ ຫຼື எழுவதற்கே தெய்வம் கொடுத்த திருவாலப் போலமோ? இப்பாடற் பகுதியிலே கூனியிருக்கும் கொலுநேர்த்தி, மீசையையுங் தாடியையும் விக்தை செய்தல், வானரர் கம் ஆசைமுகம், ஈன்முறும் கச்சை, பாகையிலே வால் என்பன போன்ற தொடர்கள் 厄ü凸可孟 தில் எழுப்பும் காட்சிகளேயும் உண்ர்ச்சிகளேயும் என்னென்போம்! தெய்வம் கொடுத்த திருவால் என்ற தொடரிலே அமைந்துள்ள சுவை கோடி பெறுமே!
பாரதியாரிடம் குடிகொண்டிருந்த நகைச்சு? ஆவர்தம்பல் அல்லல் நிறைந்த வாழ்க்கையில் ல்விமருந்தாயுதவியதோடு நமக் கும் நல்ல சுவை தருகிறது.
குரங்குக் கூட்டமொன்று நிகழ்த்தும் ஒரு 守凸L)、西 பாட்டாலே தீட்டுகின்ருர் நக்கீரதேவர். குறும்புக் குணமும் மர மேறும் சிறப்பும் வாய்ந்த குரங்குகள் பழமரம் ஓங்கிய 1) it-FTT லொன்றி%ன அடைகின்றன. அமுக்கம்" பளபளப்பு நிறைக்க மலேச்சாரல் நிலத்துள் ஒரு குரங்கு அபூர்வமான பொருளேக் கண்டு விட்டது. தன் சினேகிதருக்கும் அதனேக் காட்டுகிறது நிரந்தச் சிவந்த வாயில் நீரூறச்செய்யும் பழமே அது கண் - அருமைப் பொருள். தம் கூரிய நகத்தால் கல் நிலத்தைத் தோண்டிக் தனி கவர முற்படுகின்றன துள்ளித் தொங்கி மரமேறி மகிழும் வானே ரங்கள். பாட்டு வருமாறு:-
கல்லாக்குரங்கு பளிங்கிற் |- எல்லாக் குரங்கும் الات ثالثة الجسم الوقت تونس يتم இருந்துகிராற் சுற்கிளேக்கும் சோபே மேனிேப் பொருந்த அராப் பூண்டான் {ଳuit [i], "i") " " .. '' (சுண்டி-நெருங்கி, இருந்து உகிராம் கல்கிரேக்கும் - குந்தியிருந்து நகத்தினுல் கல்லேத் தோண்டிக் பெற முயலும். ஈங்கோப்-இரு தலம்.)
டிவிங்கத்துப் பரணி இலக்கிய வரிசையிலே பலவகைச் சுவிை களும் கலந்திருக்கும் நூல் விர ர்ைச்சி மீறிடும் போரினேப்பற்றிக் கூறும் இந்த நூலிடையே மிகுதியாக வரும் நகைச்சுவை சிற்றிளஞ்
2.

Page 48
ԶD செந்தமிழ்த் தேன்
சிருர்க்கும் பேருவகை தரும். வீரர் வழிபடும் தேவியை விட்ட கல மல் அவளுக்குக் குற்றேவல் செய்யும் பேய்களின் உருவினே இத்து ணேச் சிறப்போடு வேறு எந்த நூலும் எடுத்தியம்பவில்லே, போரின் மையால் தீராத பசியால் வாடும் பேய்களின் கைகாலாதிய உறுப் புக்கள் இதோ நம்முன் காட்சியளிக்கின்றன.
பெருநெ டும்பசி பெய்கல மாவன
பிற்றை நாளின் முன் னுளின் மெலிவன சுருநெடும் பனங் காடுமு. (மையுங்
காலுங் கையு முடையன போல்வன. 'பசி பெய்கலம்டபுரி குடியிருக்கும் பாத்திரம்) உண்ண உண்ணப் பசி முதிருவதன்றித் தீராத பேய்களின் வயிற் றிவிடுவதற்கு வாய் என்ற வாயில் மிகச் சிறிதாகிவிட்டதாம். வயிற் றிலே வாயமைத்து மலம5லயாக உன்னுடன் ஊணேயும் வாரிச் செலுத்தினுல் ஒருவேளே அவற்றின் பெரும்பசிக்கு மருந்து ஏற்பட லாம். இவ்வளவு பசிமிக்க பேய்களின் வாயின் தோற்றமும் முழக் தாளின் மெலிந்த காட்சியும் பாட்டிலே அப்படியே காட்சி தருகின் றன.
வன்பித்தொடு வாது செப் வாதி
ar அணிறை யாதவ் | முன்பி ருக்கின்மு சுத்தினு மேற்வெ மும்மு நம்படு மம்முளந் தாளின (பிங்-குகை)
ஒட்டைப் பாத்திரத்துட் பேயொன்று கூழ் வாங்குகின்றது. கீழே புறத்திலே ஒழுகுகின்றது. வெளிப்பக்கம் கூரொமுகக் கார ம்ே 'தென ஒருபேப் மெத்து ஆராய்ச்சித் துறையிலே cryn2&ŵr யைச் செலுத்துகின்றது. க்சனங் கண்டறிய அப் பாத்திரத்தைப் புரட்டிப் பார்க்கிறது. பாவம் பசி மிகுந்த பேய்க்குக் கிடைத்து கூரெல்லாம் நிலத்திலே சிதறி விட்டது. இந்த ருக்துக் காட்சி 2ேயப் புலவர் காட்டிப் பேயின் புத்தித் திறனே நமக்குக் காட்டு கின் ருர்:
fa | rn it Eur ஒட்டைக்கத்துக் கூழ்
புறத்தே யொழுக மறித்துப் பார்த் கெல்லாம் கவிழ்த்துத் திகைத் திருக்கும்
இழுதைப் பேய்க்கு வாரிரே மறித்துப் பார்த்து - திரும்பிப் 'ர்த்து இழுதை-மூடத் சின் பை ஆடை வாரீர்-குடிக்கக் கூழை வார்த்துவிடுங்கள்.
கவியரசன் கம்பன் இந்த நகைச் சுவையைக் கையாளும் முறையையும் பார்ப்போம். அநுமன் வீரர் வரிசையிலே முன்னிற்ப

இலக்கியங்களில் நகைச்சுவை 마1
வன். தன்னே மறந்து இராம சேவையிலே முற்ருக ஈடுபட்ட ஆண் டகை அவன். சீதாதேவியைத் தேடிவந்து கண்டு அவளுக்குறுதி வார்த்தை இயம்பிச் சோகம் போக்கி மீளுகையில் அவன் இராட் சத பூமியிலே செய்த அழிவுகள் அளவற்றன. பஞ்ச சேபைதிகள் சேனு வீரர் அரக்கர் குழுவினர் பலரை மாய்த்ததோடு இராவணன் மைத்தன் அட்சகுமாரனேயும் காலனுலகிற்கு அனுப்பிக் காலகால ய்ை விளங்கினுன் ஈற்றில் இந்திரசித்து ஏவிய நாகபாசத்தால் வலியின்றிக் கட்டுண்டவன்போலத் தன்னேக் காட்டிக்கொள்ளுமாற் ருல் இராவணனே நேரேகண்டு இராமன் புகழையியம்பி அவ&த் திருத்தும் வழியிலும் ஈடுபட விரும்புகிருன் இந்த கிலேயில் அவன் இராவணன் முன் இழுத்துச் செல்லப்படுகின் முன், அவன் வளியை நன்கு ஒர்ந்த இராவணன் கோபமீதுர மிடுக்குடன் அவனேப்பற்றி வினவுகின்றன். அதே மிடுக்குடன் அநுமன் தேவர்கள் பணிந்து நிற்கும் இலங்கையரசனுக்குக் கொலுமண்டபத்தில் விடையிறுக்கும் போது தான் வாவி மைந்தன் அங்கதன் தூதன் என்கிருன் அரக்க மன்னன் கோபமெல்லாம் பறந்தது வாவியின் சுகம்பற்றி விசா ரிக்கின்றன். அப்போது இளிவரலும் நகைச்சுவையும் ஒருங்கே ததும்ப அநுமன் இறுக்கும் விடையைக் கம்பன் காட்டுகின்ஞன். "வாலியின் நாமத்தைக் கேட்டு அஞ்சு று ம் அரக்கனே கேள் பயத்தை விட்டுவிடு. பயமற்று நீ இருக்கும் வாய்ப்புக் கிடைத்து விட்டது. உன்னேக் கட்டியோட்டிய வீராதி விரன் வாலி இராமனம் பொன்ருல் எய்திய பேற்றை அறிதி' என்ற கருத்தை அடக்கி, இயம்புகின்ருன்.
'அஞ்சல் பரக்க பார்விட் டந் தர மடைந்தா னன்றே
வெஞ்சின வாலி மீளான் வாலும்போப் விரிந்து நன்றே"
அநுமன் சொற் சாமர்த்தியத்தையும் அவன் மிடுக்கான நகைச் சுவையையும் கம்பன் "வாலும் போய் விளிந்ததன்றே" என்ற கூற்றிலே தெளிவாக்குகின் முன் இராவனேசுவரன் ஒரு குரங் கால் மாத்திரம் அரச அவையிலே இரங்கத்தக்க இழிநிலக்கு ஆளா கின்ருனு? இராமதூதனுகத் தனக்கு உய்வழிகாட்ட வந்த அங்க தனே யாரென வினவி மேலும் ஈன்மெய்துகின்றன். தன் புகழையே இடையருது கேட்டுச் செருக்குற்ற இராவணனுக்குச் செருக்கொழி யத் தலைபத்தும் நிலத்தைப் பார்க்க விடையிறுக்கின் முன் அங்கதன். முன்னிலேயில் நிற்கும் அம்மன்னவனே ப் படர்க்கை இடத்தவன் போல் வைத்து அங்கதன் நிகழ்த்தும் கூற்று அநுமன் சுற்றுப்போ லவே இனிவரலும் நகையும் கலந்ததொன் ருகும். அது இராவணன் நிகலயை மேலும் கேவலமாக்குகின்றது.

Page 49
g: செந்தமிழ்த் தேன்
இந்திரன் செம்மல் பண்டோ ரிராவணனென்பான் நன்ஃச் சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றிச் சிந்துக் கிரிகடாவித் திரிந்தனன் தேவருண்ண் மந்தரக் கிரியால் வேண் கலக்கினுன் மைந்தனென்ருன்"
இராவணன் வாலி வாலாற் கட்டுண்டது பலருமறிந்த இர கசியம். ஆயின் இராவணன் பட்ட அவத்தை அவனுக்கு மாத்திரம் இதுவரை தெரிந்திருந்தது. பத்துத் தஃகளும் மலேகளின் மீதெல் லாம் மோதி மோதி நெருக்குண்ண அக்தரத்திலே வாலி வாவில் இராவணன் சுழன்ற அந்த இரங்கத் தக்க நிக்லயை அரக்கர் வருக் கத்துக்கே விரித்துரைக்கின்றன் அங்கதன். ஒரு குரங்கால் இராவ னன் பட்ட கேட்டையெல்லாம் எடுத்தியம்பும் அங்கதன் அரக்க மன்னனுேடு இரக்கமிலா அரக்க வர்க்கமும் புத்தம் முளின் இராம இலக்குவராலும் குரங்கினங்களாலும் எய்தும் அவலநிக்லயையும் குறிப்பாலுணர்த்துகின்ருன்.
தமிழிலே தோத்திர இலக்கியங்களிலும் நகைச்சுவை அமைத் துள்ளது. தாம் பிறந்த சீகாழியின் வளத்தைச் சம்பந்தமூர்த்தி மாயனூர் ஓரிடத்திலே குறிப்பிடுகின்ருர், மருத வளத்தை உச்சப் படியிலே வைத்துக்காட்டும் சுவாமிகள் மறுமலர்களின் சேர்க்கை யால் மருதநிலப் பொய்கை மதுமலர்ப் பொய்கை ஆகின்றதென் தென்கின் ருர், அத்தகைய பொய்கையுள் ஒருசிறு நாடகம் நிகழ் கிறது. தெளிந்த நீருள்ள பொய்கையிலே பச்சில்களின் நடுவே நீலக் குவள்ேகள் செழிப்புடன் மலர்ந்திருக்கின்றன. தவளேயொன்று குவளேயின் முன் தன் வாய் திறந்தபடியே அமர்ந்திருக்கின்றது. கொழுத்த இருல் மீன்கள் துள்ளி விளேயாடுகின்றன. இருவின் துள் எல் குவளே மலரை அசைத்து அதன்கன் நிரம்பியுள்ள தேனே வெளியே துளும்பர் செய்கின்றது. அந்தத் தேன் முழுவதும் தவளே பின் பிளந்த வாய்க்குள் புகுந்துவிடுகின்றது. தவளேக்கு இன்று கிட்டியதுதான் விருந்தாகும். விருந்தென்முற் புதுமை உடைத்தென் பது கருத்து பூச்சி புழுவுண்ணும் சேற்றுத் தவளேக்குத் தேனருக் தும் அநுபவத்தை நனட்டும் இம் மருத நிகழ்ச்சி நமக்கும் சிரிப்பு விருந்து அருத்துகிறது. "மைச்செறிகுவளே தவனே வாய்நிறைய மது மலர்ப் பொய்கையிற் புதுமலர்
பச்சிய வெறிவயல் வெறிகமழ் காழிப்பதி." (கிழியப் இவ்வண்ணம் நபச்சுவையாகிய நகைச் சுவையை நல்லமுறை யில் உணர்த்தும் இலக்கியங்களேப் பாடிப் பாடிக் கற்று நலம் பெற்றுத் தமிழன்ன்ேயை வாழ்த்துவோமாக,

ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் (பண்டிதர் ஆ. சதாசிவம் M A (Ceyl), D, Phil 0xon))
பல கல்களின் வளர்ச்சிக்குரிய இடம் எனப் பொருள்படும் பல்கலேக் கழகங்கள், பாடசாலேகள் அல்லது கல்லூரிகளின்றும் வித்தியாசமானவை. பாடசாலேகளில் ஆசிரியர்கள் படிப்பிப்பதை மாணவர்கள் கிரகித்து அதனுற் பயன்பெறுவர். கல்லுரிகளில் ஆசிரியர்கள் பாடங்களேக் கற்பிப்பதுடன் மாணவர்கள் தம் சொந்த முளே மூலம் சிந்திக்கும் வண்ண்ம் அவர்களேத் தூண்டுவர். பல் கலேக் கழகங்களிலோவென்ருல் பா ன வ ர் கள் பெரும்பாலும் ஆராய்ச்சி வேலே களில் ஈடுபடுவர். தங்களுக்குத் தெரியாதவற்றைத் தம் ஆசிரியர்களாகிய விரிவுரையாளரிடம் கேட்பர். இங்கனம் மாணவர்களது வயதுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ப, ஆரம்ப மத் திய பாடசாஃப்களும் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஆற்றி வரும் தொண்டு வித்தியாசமானது.
பல்கலைக் கழகம் எங்கு எப்போது முதன்முதல் தோன் நிற்று என இன்று மட்டிட்டுக் கூற முடியாது. பாரத நாட்டிலே நாளந்தா, தக்சிலா போன்ற பல்கலேக் கழகங்கள் பண்டைக்காலத் தில் நிலவின. இப்பல்கலேக் கழகங்களில் சமயம், தத்துவம் வான சாத்திரம், இலக்கியம் போன்ற கலேகள் ஆராயப்பட்டன, யப் பான் சீனு போன்ற நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சியாளர் இந்தியா விற்கு வந்து மேற்கூறிய பல்க0ேக் கழகங்களில் ஆராய்ச்சிசெய்து வந்ததாக இந்திய சரித்திரம் கூறும் எனினும் இக்காலப் பல்கலைக் கழகங்கள் ஆங்கில காட்டில் 13-ம் நூற்றுண்டில் முதன் முதல் தோன்றிய ஒக்ஸ்போட் (Oxford) பல்கலேக் கழகத்தைப் பெரும்பா லும் பின்பற்றியுள்ளன எனக்கூறுவது பொருத்தம். இன்றைய பல்கலைக் கழகங்கள் இயங்கும் முறை மிக வித்தியாசமானது. உதா ரணமாக, பேராதனேயிலுள்ள இலங்கைப் பல்கலேக் கழகத்தை எடுத்துக்கொண்டால் அங்கு மத்திய காரியாலயம் ஒன்றும் மான் வர் விடுதிச்சாலேகள் (Hal of residence) எட்டும் உள்ளன. இந்த விடுதிச் சாலேகள் ஆண்களுக்கு வேருகவும் பெண்களுக்கு வேருக

Page 50
Öቆ செந்தமிழ்த் தேன்
வும் அமைந்துள்ளன. எல்லா விடுதிச் சாஃப்களும் யாதொரு சமய வித்தியாசமுமின்றி ஒரேமாதிரியாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனுல் சென்னே, கல்கத்தா, ஒக்ஸ்போட் போன்ற பல்கலேக் கழ கங்கள் பல கல்லூரிகளின் இணேப்பாய் உள்ளன. இக் கல்லூரிகள் எல்லாம் ஒரு மதத்தினருக்கு உரியவையல்ல பல மதங்களேயும் கிலேநாட்டுவதற்காக எழுந்தவை.
ஒக்ஸ்போட் பல்கலேக் கழகம் என்பது ஒக்ஸ்போட் நகரத்தில் பல்வேறு மதங்களேயும் கொள்கைகளேயும் போதிப்பதற்காகப் பல் வேறு காலங்களில் கட்டப்பட்ட இருபத்தெட்டுக் கல்லூரிகளின் இணேப்பாகும். கல்லூரிகளின் இணேப்பு என்பது மயக்கந்தரும் வார்த்தையாகும். இதனே இன்னும் விரித்து விளக்கினுல் பின்வரு மாறு விளக்கலாம்: ஒக்ஸ்போட் நகரத்தில் ஏறக்குறைய 11-ம் ஆண்டில் கல்லூரி ஆரம்பமாயிற்று. இக் கல்லூரியைத் தொடக்கி வைத்தவராகிய பேலியல்' (Balol) என்பவரின் பெயரே இக் கல்லு ரிக்கும் இடப்பட்டு இன்றும் பேலியல் கல்லூரி' எனக் கூறப்பட்டு வருகிறது. இவரைத் தொடர்ந்து பிற அறிஞரும் தங்கள் பெயரால் ஒன்றன்பின் ஒன்ருகக் கல்லூரிக்ளேக் கட்டினர். ஒன்று கத்தோ
விக்கக் கல்லூரி ஒன்று புருெ டெஸ்தாந்து (Protestant) கல்லூரி,
இவ்விதம் கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு கிளேச் சமயங்களே அனுட் டிக்கும் மாணவர்கள் தங்கள் தங்கள் ஆசாரங்களேப் பாதுகாத்து வளர்க்கும் வண்ணமாக இக்கல்லூரிகள் தொடக்கப்பட்டன. இங் கனம் 19-ம் நூற்ருண்டில் ஒரேயொரு கல்லூரி நிலவிய ஒக்ஸ்போட் நகரத்தில் இன்று இருபத்தெட்டுக் கல்லூரிகள் ஸ்தாபிக்கப்பட்டு விட்டன. இவையெல்லாம் தனிப்பட்ட அதிகாரிகளால் நடாத்தப் படும் கல்லூரிகள். ஒவ்வொரு கல்லுரரிக்கும் விடுதிச்சாலேகள் உண்டு, சிறந்த நூல்கிலேயங்களேயும் அவை கொண்டுள்ளன. இக் கல்லூரிகளில் கல்விகற்கும் மாணவர்களுக்குப் பட்டம் வழங்குவதற் காக ஒரு பொது நிலேயம் உண்டு. அதுவே பல்கஃக் கழகம் எனப் படும். எனவே ஒக்ஸ்போட் பல்கலேக்கழகம் என்பது தனித் தனியே ஆட்சி நடத்திவரும் இருபத்தெட்டு கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் பட்டம் வழங்குதல் முதலியவற்றை நடத்தி வருவதாயும், இவற்றின் வேருக நில்லாதும் இயங்கும் ஓர் ஒப்புயர்வற்ற கலாபிடமாகும்.

ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் 9岳
இனி, ஏனேய பில்கலக் கழகங்களுக்கு இல்லாத சிறப்பு ஒக்ஸ் போட் பல்கலேக் கழகத்துக்கு ஏற்பட்டது எங்ஙனமென்பது ஆரா பத்தக்கது. ஆங்கில காட்டில் முதன் முதல் எழுந்த பல்கலைக்கழக மாதலால் இதற்கு ஓர் தனிச்சிறப்புண்டு எண்ணுரறு வருடகால மாக வளர்ந்தோங்கி வரும் இப்பல் கலேக் கழகத்தில் கல்வி கற்றுப் பெரிய சரித்திர நிபுணர்களாயும் பொருளாதார நிபுணர்களாயும் சாஸ்திர நிபுணர்களாயும் பல்லாயிரக் கணக்கான ஆங்கிலேயர் நாட் டுக்குத் தொண்டுசெய்து வந்தனர். இன்றும் தொண்டுசெய்து வரு கின்றனர். ஆங்கிலேயர் பெரிய சாம்ராச்சியம் நடத்தியகாலத்தில் உலகின் பல் வேறு பாகங்களேயும் அரசாளக்கூடிய மதி விற் பன்னர்களேத் தோற்றுவித்தது இப் பல்கலேக் கழகம். இன்றும் ஒக்ஸ்போட் பல்கலேக் கழகத்தில் இந்திய மொழிகளுக்கென ஒரு நூல்கிலேயம் உண்டு ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத் தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அரசியலதிகாரிகள் இந்திய மக்கள் பேசும் மொழிகளேச் சிறிதாவது கற்றுக்கொண்டு வருவது நல்லது என்ற மனப்பான்மையினுல் தமிழ், தெலுங்கு இந்தி, வங் காளம், மராட்டி முதலிய மொழிகளெல்லாம் ஒக்ஸ்போட் பல்க லேக் கழகத்தில் பயிற்றப்பட்டன. இன்று அமெரிக்கா, அவுஸ்திரே வியா, இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா, ஐரோப்பா முதலிய தேசங் களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒக்ஸ்போட் பல்கலேக் கழகத்தில் கல்விகற்கின்றனர். சுவைமிக்க பழங்கள் பழுத்திருக்கும் ஒரு மரத்தை நோக்கிப் பல திசைகளிலிருந்தும் பறவைகள் வருவது போலச் சிறந்த கல்வி ஊட்டப்படும் ஒக்ஸ்போட் பல்கலேக் கழ கத்தை நோக்கி உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து மாணவர்க ளும் ஆசிரியர்களும், பட்டதாரிகளும் செல்கின்றனர்.
ஒக்ஸ்போட் பல் கலேக்கழகத்தில் ஆங்கிலமே போதனுமொழி யாக உள்ளது. இதனே இங்குக் குறிப்பிடக் காரணம் ஒன்று உண்டு. சமீப காலம்வரை பல்கலேக் கழகக் கருமங்கள் இலத்தீன் மொழிக் கூடாகவே நடத்தப்பட்டு வந்தன. சமீபகாலத்தில் ஆங்கிலம் இலத் தீன் மொழியின் இடத்தை எடுத்தபோதும் இன்றும் பல்கலேக் கழ கப் பட்டமளிப்பு விழா (Convocation) இலத்தின் மொழியிலேயே நடந்து வருகின்றது. எனவே ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்லும் மாணவர்களுக்கு இலத்தின் மொழி ஒரளவு

Page 51
95 செந்தமிழ்த் தேன்
தெரியவேண்டியிருக்கிறது. வழக்கிறந்த ஒரு மொழியை ஒக்ஸ் போட் இன்றும் ஏன் போற்றவேண்டுமென ஒருவர் கேட்கலாம் அதற்கு விடையாதெனில், ஆங்கில மக்களுக்கு பழமையில் மிகுந்த பற்று உண்டு, உலகம் முழுவதையும் அரசாள்வதற்கு ஏற்ற உத்தி யோகத்தர்களேயெல்லாம் தோற்றுவித்துத் தொண்டு புரிந்த ஒக்ஸ் போட் பல்கஃக் கழகத்தை ஆங்கில மக்கள் மணிமுடிபோற் போற்றுகின்றனர். வேற்று நாட்டினர் ஒருவர் பல்கலேக் கழகக் கட் டிடங்களே நோக்குவராகில் அக் கட்டிடங்கள் பாசிகளால் மூடப்பட் டிருக்கும் மிகப் பழைய கட்டிடங்களாகக் காட்சிதரும் 12-ம் நூற் முண்டு தொடக்கம் கட்டப்பட்ட கட்டிடங்கள் எத்தனேயோ முறை புதுக்குவிக்கப்பட்டுவிட்டன. எப்படித்தான் புதுக்குவித்தாலும் அக்கட்டிடங்களின் உட்பக்கங்களேச் செவ்வன்ே வெள்ளே அடித்தும் வெளிப்பக்கங்களே பாசிபடரவிட்டும் ஆங்கிலேயர் அவற்றைப் பாது காக்கின்றனர். தங்கள் பழைய பல்லேக் கழகம் ஒக்ஸ்போட் எனச் சிந்திக்கும்போது அவர்களுக்கு மிகுந்த உணர்ச்சி பிறக்கின் றது. இவ்வுணர்ச்சி சிறந்த ஆக்கவேலகளில் ஈடுபடும்படி அவர் களேத் தூண்டிவிடுகின்றது.
ஒக்ஸ்போட் பல்கலேக் கழகத்தின் சிறப்புக்குக் காரணமான ஏதுக்களில் ஒன்று அதன் இயற்கை வனப்பாகும். மந்தமாருதம் வீசும் மலர்கள் நிறைந்த பூங்காவுடன் விளங்குவது ஒக்ஸ்போட் நகரம், பல்கலேக் கழகத்தைச் சுற்றி நதி ஒன்று அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இலங்கைப் பல்கலேக்கழகத்தைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் ஆள்விழுங்கும் மகாவலி கங்கையைப் போன்ற தன்று சேர்வெல் (CheWel) என்னும் ஒக்ஸ்போட் நதி. இது ஆழங் குறைந்த நீர் நிறைந்த நதியானதால் மாணவர்கள் தினமும் படகுகளே ஒட்டி விளயாடும் அமைதிநிலவும் இடமாக விளங்குகின் றது. எனவே கதி பல்கலக் கழக மாணவர்களின் ஒய்வு நேரங் களப் போக்குவதற்குச் சிறந்த இடமாகக் காட்சியளிக்கின்றது. இயற்கை வனப்பின் மத்தியிலே இங்கு அளிக்கப்படும் கல்விமுறை மாணவர்களேப் பெரிதும் வசீகரிக்கின்றது. பல்கலேக் கழகத்தில் விரி வுரைகள் நடந்துகொண்டிருக்கும் விரும்பியவர்கள் வகுப்புக்குப் போகலாம், விருப்பமில்லாதவர்கள் போகாதுவிடலாம். யாரும் ஏன் என்றும் கேட்கமாட்டார்கள். ஆணுல் இங்கு அளிக்கப்படும் கட்டு
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்ஸ்போட் பல்கலேக் கழகம் 7
ரைப் பயிற்சி (εutoriίί) மிக முக்கியமானது. ஒவ்வொரு மானவ னும் கற்கும் மூன்று பாடங்களேயும் அவதானிக்கும்பொருட்டு மூன்று கட்டுரைாசிரியர்கள் (tutors) அமர்த்தப்படுவர் மாணவன் தனிப் பட்ட முறையில் அந்த அந்த ஆசிரியரது அறைக்குச்சென்று தான் எழுதப்போகும் கட்டுரைபற்றி ஆசிரியரோடு கலந்து உரையாடு வன். ஒருமணிநேரம் உரையாடியபின் விடுசென்று கட்டுரையை எழுதி ஆசிரியரிடம் சமர்ப்பிப்பான். அடுத்தகிழமை ஆசிரியர் அவன் எழுதிய கட்டுரையை அவன் முன்னிகலயில் ஒருமணி நேரம் பரிசீலனே செய்வர். இங்ங்னம் ஒக்ஸ்போட் பல்கலேக்கழகத்தில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனும் தனிப்பட்ட முறையில் ஆசிரி யர்களேச் சந்தித்து அவர்களோடு பழகி அவர்களின் அறிவைக் தானும் பெறச் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. இவ்விதக் முறை ஒக்ஸ்போட் பல்கலேக்கழகத்தில் மாத்திரமே நிலவுகின்றது: ஏனெனில், இம்முறையைக் கைக்கொள்வதற்கு ஆயிரக் கணக் கான ஆசிரியர்கள் வேண்டும். இதற்கேற்ற பண் வருவாய் ஏனேய பல்கலைக் கழகங்களுக்கு இல்லாதபடியால் ஒக்ஸ்போட் கல்விமுறை யை இன்றுகூட உலகின் ஏனைய பல்கலைக் கழகங்களால் பின்பற்ற முடியவில்லே. இந்த முறையில்ை மாணவர்கள் சுதந்திர புருடர்க களாய் வளரமுடிகிறது. ஆசிரியர்கள் பெரிய எழுத்தாளர்களாய் இருப்பதனுல் அவர்களோடு பழகும் மாணவர்களும் ஆசிரியர்க ஆளப்போல் வரமுடிகிறது. உலகில் இன்று வி3லப்படும் உயர்தர நூல்களிற் பல ஒக்ஸ்போட் பல்கஜலக்கழகப் பேராசிரியர்களால் எழுதப்பட்டவையாகும். ஆசிரியர்கள் ஆராய்ச்சி வேலேயில் கண் ணுங் கருத்துமாய் இருப்பதல்ை பல்கAலக் கழக அச்சு நிலேயத்தி விருந்து தினமும் நூல்கள் அச்சிடப்பட்டு ஆங்கில மொழி வழங் கும் பிறநாடுகளுக்கெல்லாம் அனுப்பப்படுகின்றன.
கழக வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாய் இருக்கும் மக்கள் அப்பல்கலேக் கழகத்திலிருந்து பல பயன்களே எதிர்பார்க் கின்றனர். முதலாவதாக நாட்டுக்கலாசாரங்களே வளர்க்கும் நியே மாகப் பல்கலைக்கழகம் விளங்கவேண்டும் இரண்டாவதாக பல்க ஐக்கழகத்தில் பயிற்சிபெறும் மானவர்கள் உத்தம பண்புகள் படைத்தவர்களாய் நாட்டின் வருங்காலத் தலவர்களாய் விளங்க வேண்டும்; உலக அறிவுக்கு உதவிசெய்யாத புத்தகப்படிப்பு மாதி "
13

Page 52
g8 செந்தமிழ்த் தேன்
திரம் உடைய மாணவர்களேப் பல்கலைக் கழகம் உற்பத்தி செய் வகல்ை பயனில்லே மாணவன் பெறும் பட்டத்திற்கேற்ப அவன் அறிவு குணம் என்பன அமைந்திருக்கவேண்டும். முன்முவதாகப் பல் கலேக்கழகப் பேராசிரியர்கள் சிறந்த தரம்படைத்த ஆராய்ச்சி நூல் as #t வெளியிடவேண்டும். பல்க3லக் கழகத்திற்கு வந்து கல்வி கற்கமுடியாத பிறரும் படித்துப் பயன்பட இவ்வாராய்ச்சி நூல்கள் உதவி செய்யும். இம் மூன்றுவித பயனும் ஒரு பல்கலேக் கழகம் தரும். இம் மூன்று பயனேயும் ஒருங்கே தீரும் ஒக்ஸ்போட் பத்து லேக் கழகம் ஆங்கில மக்களால் மாத்திரமன்றி உலக மக்களாலும் போற்றப்படுவதில் வியப்பொன்றுமில்ஜல.

அணுவினல் ஆக்கமும் அழிவும் (சி ஜயரத்தினம் எலியேசர் M. A. Ph D (Cantab)
M. Sc., D.Sc. (Lond
1945-ம் ஆண்டு இரண்டாவது உலகப் பெரும்போரின் இறு திக் காலமாகும். அந்த ஆண்டில் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா (Hiroshima) என்னும் பட்டினத்தில் ஒரு புதுவகையான குண்டு வீசப் பட்டது. 10,000 தொன் எடையுள்ள சாதாரண இரசாயன வெடி மருந்து களினுல் (usual chemical explosive) விளேயக்கூடிய அழிவை இந்த ஒரு குண்டே உண்டுபண்ணிவிட்டது. அதன்பின் னர், பன்மடங்கு அதிகமான அழிவுச் சக்திபடைத்த குண்டுகள் செய்யப்பட்டன. ஜலவாயுக் (hydrogen) கு எண் டு க ளி ற் சில 20' தொன் இரசாயன வெடிமருந்துகளின் சக்தி படைத் தனவாய் உள்ளன.
ஒவ்வொரு புத்தத்தின் முடிவிலும் அழிவைச் செய்யும் கருவி களேயே சமாதான காலத்தில் ஆக்கவேலேகளுக்கும் பயன்படுத் தக்கூடிய வகைகள் கண்டுபிடிக்கப்படுவதுண்டு. 'அவர் க ள் வாஃாக் கலப்பைக் கொழுவாகவும், ஈட்டியை அரிவாளாகவும் மாற் றியமைப்பார்கள்' என விவிலிய நூலில் சொல்லப்படுவதுபோல, பெருக்தொகையான மக்களுக்குச் சா  ைவ யு ம் சஞ்சலத்தையும் உண்டுபண்ணிய அணு இன்று பொருள்வளத்தையும் சமாதானத் தையும் வழங்கும் கருவியாக உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்து உருவழியா, அமெரிக்கா முதலிய நாடுகளில், அணுசக்தியால் இயங் கும் உற்பத்திச்சாதனங்களிலிருந்து வீடுகளுக்கு மின்சாரம் கிடைக் கிறது. புற்றுநோய், வெண்குஷ்டம், கேடயத்தட்டுப்பாடு (thyroid deficiency) முதலிய நோய்களினுல் வருந்தும் நோயாளிகளுக்கு கிளர் வீசும் ஓரிட மூலகங்கள் (radio 1500pes) மூலம் சிகிச்சை அளிக்கப் படுகிறது. ஓரிடமூலகங்களினுல் உரங்களின் சார்பிடங்களே நன்கு ணேர்ந்து விவசாய உற்பத்தி விருத்திசெய்யப்படுகிறது. இவை போன்ற நம்பிக்கையூட்டும் பலவழிகளினுல் சமாதானத்துக்கும் செல்வப் பெருக்கத்துக்கும் அணுசக்தி வழிகோலுகிறது.
தினசரி வாழ்க்கையில் எத்தொழிலச் செய்வதற்கும் சக்தி தேவைப்படுகிறது. பண்டைக்காலத்தில் கிடைக்கக்கூடியதா யிருந்த சக்தி மனித அடிமைகளினதும் மிருகங்களினதும் உட

Page 53
1ՈՍ செந்தமிழ்த் தேன்
33 Y 500 APCT (FLJU I T Nh (muscular energi). அதிேைலயே பண்டைய நாகரி கங்கள் அடிமைகளே க்தொண்ட வாழ்க்கை முறையை இன்றியமை யாது வேண்டி நின்றன.
பின்பு மிக்க பேரளவில் பெறக்கூடிய ஒரு புதுவகைச் சக் தியை உபயோகிக்க மனிதன் கற்றன். அதுதான் மூலக்கூற்றுச் "F molecular energy) Gurņi மூலக்கூறுகளாலானவை. இம்'லக்கூற்றுச் சக்தியின் சில பகுதிகள் இரசாயன மாற்றங்க GITTGồ (Chemical transformatlon) Gffaff.joor, Il-UL 537, FU FITT GJYMTY, அத்தகைய மாற்றத்துக்குத் 354f5 577 și G39 #55 (burn ing) ay wilayari. நெருப்பை உண்டுபண்ணவும் கட்டுப் படுத்தவும் கண்டு பிடித்தது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். காட்டுத்தியில்ை சர்வநாசமும் இரதம் ਨੇ ஆதிமனிதனுக்கு விெருப்பு அச்சத்தின் சின்னமா கக் கானப்பட்டது என்பது உண்மைதான். ஆயினும், கொஞ்சம் கொஞ்சமாக மரத்துண்டுகளேத் தேய்த்துத் தியை உண்டுபண்ண வும், சருகுகளினுலும் மரக்குற்றிகளிலுைம் அதனே அணயாமல் வைத்துக்கொள்ளவும் அவன் பயின்றன். வெப்பத்தை உண்டுபண் ஒன ஷம் சமையல் செய்யவும் தியை உபயோகித்தான் மனித சரித் திரத்தையும் அவனுடைய வாழ்க்கைமுறையையும் இப் புதியசா தனே வெகுதூரம் மாற்றியமைத்தது.
எரிபொருள்களான நிலக்கரியையும் மண்ணெய்யையும் (ols) பெற்ருேவியத்தையும் (petroleum) மனிதன் என்றைக்குப் பூமியிலி ருந்து கிண்டியெடுக்கத் தொடங்கினுனுே அன் ைேறயிலிருந்து இர if I Li Fis (chemical energy) Early a ful அளவில் அவனுக்குக் கிடைக்கத் தொடங்கியது. இந்த எரிபொருள்களுக்குப் பிரான வாயுமீது (Oxygen) மிகுந்த நாட்டம் உண்டு. ஆகையால் அவை காற்றேடு சேர்ந்திருக்கும்போது பொருத்தமான சூழ்நி3லயில் நன் ரக எரியக்கூடியன. அப்படி எரியும்போது மின்சாரத்தை உண்டு பண்ணுவது, மோட்டார் வண்டியை ஒட்டுவது முதலிய பல தேவை களுக்குப் பயன்படக்கூடிய சக்தியை இந்த எரி பொருள்கள் வெளிப்படுத்துகின்றன. பெற்ருேலினது ஆவி (Petro Wat POUT) E 17 fügy ஆகிய இரண்டும் சேர்ந்த கலவைக்கு எரியூட்டில்ை பலமான வெடி (Wர்கொ 8plosion) உண்டாகும். ஆணுல், பெற்ருேல் காற்று ஆகிய வற்றின் அளவுகளேக் கரிசேர்கருவி (carbureter) ஒன் றினுல் கட்டுப்

அணுவிஞல் ஆக்கமும் அழிவும் O
படுத்தி ஓர் உள்தக்ன எந்திரத்துள் (internal Combustion engine) ஒரு தீப்பொறியின் மூலமாக எரியூட்டி ஒல் அவ்வெடியில்ை உண் டாகும் சக்தியைக் கட்டுப்படுத்தி மோட்டாரைச் செலுத்துவதற்கு உபயோகிக்கலாம்.
அதேபோல, ஹிரோஷிமாவை கிர்மூலமாக்கிய அணுவெடி யைக் (Atomic explosion) கட்டுப்படுத்தி மனித ஊழியத்துக்கும் உப யோகிக்கலாம். சென்ற யுத்தத்தின் ஆரம்பத்தில், அதாவது அணுக்குண்டு செய்யும் முயற்சி வெற்றியடைவதற்கு முன்னரே, விஞ்ஞானிகள் அணுத்தாக்கத்தின் (Atomic reaction) மூலம் அணு சக்தியைக் கட்டுப்பாடாக வெளிப்படுத்தக்கூடிய கருவியைப் படைத்துவிட்டனர். மனித சரித்திரத்தில் 1949-ம் ஆண்டு மார்கழி மாதம் 2-ந் திகதி ஒரு திருநாள். அன்று சிக்காகோ பட்டினத்தில் ஓர் ஆய்கூடத்தில் காலஞ் சென்ற பேராசிரியர் என்றிக்கோ பேர் மியின் (Enrico Fermi) தலமையில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் ஓர் அணு உலேயின் (Reactor) மூலம் அணுசக்தியைப் பெற்ருரர்கள் அன்றுதான் அணுயுகம் பிறந்தது.
அணுவின் மத்தியிலே அளப்பரும் சக்தி தேங்கிக் கிடக்கிறது. கருப்பிளவு முறையினுல் (Nuclear Fission) கன த் த அணுக்களேச் சிறிய கூறுகளாகப் பிளப்பது சாத்தியம். இம்முறையினுல் அணு வில் அடங்கியுள்ள அளப்பரும் சக்தியின் ஒரு பகுதி விடுவிக்கப் படுகிறது.
சடப்பொருளின் பிளக்கமுடியாத மிகச் சிறிய துகள்தான் அணு என்பதை ofru orb (ChemistrY) கற்றவர் நன்கு அறிவர். இப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களும் ஒருவகைப்பட்ட அணுக்களின் சேர்க்கையாலோ அல்லது பலவகைப்பட்ட அணுக் களின் சேர்க்கையாலோ ஆனவை என்பது விஞ்ஞானிகளால் ஆராய்ந்து முடிபு செய்யப்பட்டது. எல்லாமாக அணு வகைகளின் தொகை ஏறக்குறைய நூறு எனலாம். எடையை அடிப்படையாகக் கொண்டு அவ்வணுக்களே வரிசைக் கிரமப்படுத்தலாம். ஜலவாயு மிக வும் எடைகுறைந்தது; அதன் அணு ateist (Atomic Number) për IV. ஹீலியம் (Helium) அடுத்தது; அதன் அணு எண் இரண்டு. விதியத்

Page 54
O2 செந்தமிழ்த் தேன்
தின் அணு எண் மூன்று. இப்படியாக வரிசைப்படுத்தினுல் கடை சியாக நிற்பது 22ஐ அணு எண்ணுகக்கொண்ட யூரேனியம் (Uranium) என்பதாம். அணுக்கள் ஒன்ருேடொன்று சேர்ந்தே மூலக்
கூறுகள் (Molecules) உண்டாகின்றன. இரண்டு ஜலவாயு அணுக்
கள் சேர்ந்து ஒரு ஜலவாயு மூலக்கூறு உண்டாகிறது இரண்டு ஜல
வாயு அணுக்கள் ஒரு பிராணவாயு அணுவும் சேர்ந்தால் நீரின் ஒரு மூலக்கூறு அமைகிறது. சோடியம் அணு ஒன்றும் குளோரின் (Chlorine) அணு ஒன்றும் சேர்ந்து சோடியம் குளோரைற்று (Sodium Chloride) எனப்படும் சாதாரண உப்பின் மூலக்கூறு தோன்றுகிறது. எட்டுக் கரி (Carbon) அணுக்கீம் பதினெட்டு ஜலவாயு அணுக் களும் ஒரு குறிப்பிட்ட முறையில் பினேந்தால் பெற்ருேலின் ஒரு மூலக்கூறு அமைகிறது. பெற்ருேல் எரியும்போது அதன் கணுளள அணுக்களின் முன்னேய இஃணப்புக்கள் சிதைந்து புதிய பிணேப் புக்கள் உண்டாகின்றன-புதிய மூலக்கூறுகள் தோன்றுகின்றனநீரும் கரிவளியமும் (Carbon di Oxide) உண்டாகின்றன.
இரசாயன மாற்றங்கள் கி க மும் போது அணுக்களிடையே உள்ள உறவு மாற்றமடையலாம்-புதிய அணுச் சேர்க்கைகள் நிக ழலாம் ஆணுல், அணுவில் எவ்வித மாற்றமும் உண்டாவதில்லே. அதனுற்ருள் இரும்பையும் பொன்னுக்கலாம் என்ற கனவு பழைய இரசவாதிகளுக்கு நனவாகவில்லே. எத்தகைய இரசாயன மாற்றம் நேர்ந்தபோதிலும் எளிய உலோகத்தினது (Base Metal) அணுவில் எவ்வித மாற்றமும் உண்டாகாது. கருத் தாக்கங்கள் (Nuclear Reactions) நிகழும்போது அணுவின் உட்கருவே (Core of Atom) மாற்றமடைகிறது. இந்த உண்மை 19-ம் நூற்ருண்டின் இறுதியில் கிளர்மின் வீச்சின் தோற்றம் (phenomenon of Radio Activity) எனப்படும் புதிய ஞானத்தினுல் முதன்முதலாகத் தெரிய வந்தது. அதுவரையும் அணு பிளக்கமுடியாதது என்றே நம்பப்பட்டு வந்தது, கிளர்மின் தொழிற்பாட்டை ஆராய ஆராய அணுவின் புதிய இயல் புகள் தெரிய வந்தன. அணு மிகவும் சிறியது. பத்துக்கோடி நுணுக்களே அடுக்கினுல் ஒரு தசமமீற்றர் (Centimeter) அகலங் தானும் ஏற்படாது. ஆனல், ஒவ்வொரு அணுவின் உள்ளேயும் மிகச் சிறிய கரு (Nucleus) உள்ளது. அணுவின் தி னிவு (Mass)

அணுவினுல் ஆக்கமும் அழிவும் 10
செறிந்திருப்பதும் அங்கேதான். பொருளடர்த்தி (Density) கருவி லுள் மிக அதிகம். கருவைப் பிளந்தோ அல்லது தாக்கங்களினுல் உருவ மாற்றம் செய்தோ அணுவிலிருந்து அளப்பரும் சக்தியைப் பெறலாம். இச் சக்தி பெரிய அளவில் மனிதருக்குக் கிடைக்கக் கூடியதாகி வருகிறது, உடலுழைப்பு, மூலக்கூற்றுச் சக்தி, அணு சக்தி ஆகிய மூவகைச் சக்திகளிலும் அவ்வச் சக்திகளின் இயல்பு களில் மாத்திரமன்றி, அச்சக்திகள் கிடைக்கக்கூடிய அளவின் மிகு திப்பாட்டிலும் பெரும் வேற்றுமை ஏற்பட்டுள்ளது. முன்பு சக்தியை அலகுகளாக (Units) அளவிடவேண்டியிருந்தது, இப்போது சக் தியை ஆயிரக்கணக்கான அலகுகளாகக் கணக்கிடவேண்டியிருக் கிறது.
சமீபகாலம் வரையில் வெறுப்பையும் அச்சத்தையும் தந்த அணு இன்று நம்பிக்கைக்கும் பொருள்வளத்துக்கும் ஒப்பற்ற சாத னமாகி விட்டது. விருப்பு வெறுப்புக்கக்ள ஒழித்து எல்லோருட னும் தோழமை பூண்டு, அணுவையும் துணேயாகக்கொண்டு மனி தன் வாழ்வானேயானுல் செல்வப் பெருக்கமும் சாந்தியும் ஒருங்க மைத்த புதுயுகம் தோன்றுமென்பதில் சிறிதும் ஐயமில்லே. அந்தப் புது யுகம் தோன்றவேண்டுமானுல் சமூக இலட்சியங்களில் மாற் றம் அடையவேண்டும்; எல்லா மக்களும் ஓரினம் ஒரு குலம் என்ற எண்ணம் உதயமாகவேண்டும் சாதி குலப்பிறப்பென்னும் சுழிப் பட்டுத் தடுமாறும் பேதமை வேரோடு களேயப்படல்வேண்டும். மனிதன் தனது குறுகிய மனப்பான்மையோடு கூடிய பற்றுக்களே க் கைவிடாது காரணமற்ற விருப்பு வெறுப்புக்களுக்கு ஆளாகி இனி யும் வாழ்வானேயானுல் பயங்கரமான அணு யுத்தத்தினுல் மண் ணுேடு மண்ணுகி மடிவது திண்ணம். "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற இலட்சியம் ஒன்றே நமக்கு கற்கதி நல்கும்.

Page 55
1[յն செந்தமிழ்த் தேன்
அங்குள்ள கல்வி முறையே புதுமையானது. மக்கள் அனேவ
ரும் அறிவு வளரவேண்டும் என்றே கல்வி கற்கிருர்கள். அதனுல் அவர்களது கல்வி பயிலும் காலம் எல்லேயின்றிச் செல்கிறது. மாந்தரெல்லாம் சாந்துனேயும் தேர்ந்து கற்பர். அங்குக் கல்வித் தேர்வில்லை. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலான செய்திகள்தாம் அவர்களின் கல்வித் தேர்வுகள். உலகமே அவர்கட்குக் க3லபயில் கூடம் ஒவ்வொரு பிராணியும் ஒவ்வோர் உண்மையை உணர்த் தும் ஆசிரியன். ஆகவே அவர்கள் தாம் காணும் அநுபவங்களே ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை; ஆராய்கிருர்கள், ஆய்ந்து ஆய்ந்து உண்மையை அறிகிறர்கள் அறியாமையை அகற்று கிருர்கள்.
உழவு கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் அக் காட்டில் மிகச் சிறந்த முறையில் நடைபெறுகின்றன. அவையஐனத் தும் சமுக நன்மை குறித்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே இசை, சிற்பம், ஓவியம், முதலிய கலேகளும் வளர்க்கப்படுகின்றன. தொழி லாயினும் கலேயாயினும் தன்னலங் கருதிச் செய்தல் பாவம் என அக்காட்டவர் கருதுவர். தொழிலாளரும் கலேஞரும் உலகைக் காத் கும் மன்னவர் போலக் கணித்தற்கும் கெளரவித்தற்கும் உரியர். ஒரு நாட்டின் நல்வாழ்விற்கு அரசன் இன்றியமையாதவாறுபோல தொழிலாளரும் இன்றியமையாதவர் என்பது அவர்கள் சித்தாக் தம் எனவே, ஒவ்வொரு தொழிலாளனும் ஓய்வுபெறும் காலத்தில் போதுமான ஊதியம் பெறுகிருன் உழைத்த காலத்திற் போல இளேத்த காலத்திலும் உண்மை மதிப்பைப் பெறுகிருன்,
ஒரு குடும்பம் பலபேரைக் கொண்டது. தனிக்குடும்பங்களும் பிரிந்து வாழும் முறையும் அங்குக் காண்டல் அரிது. குடும்பத் தல வனிடத்தில் அக்குடும்ப உறுப்பினர் ஆஃனவரும் அதிக மதிப்புக் காட்டுவர். அவ்வாறே தலேவனும் உறுப்பினர்களின் விருப்பத்திற் கும் உள்ளப் போக்கிற்கும் தக்க உரிமை கொடுக்கிருன், ஊர் நன் மைக்கான கருமங்கள் பஞ்சாயத்துப் போன்ற சபைகளால் துவ னிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தனரைச் சேர்ந்தவரும் தம்மூரின் நன்மையைத் தம் முயற்சிகொண்டே பேணுகின்றனர். பிறருதவியை எதிர்பார்த்தல் அவர்க்குப் பேதமையானது. தம் ஊரிலில்லாத பொருள்களேப் பண்டமாற்றுமூலம் பிற ஊர்களிலிருந்து பெறுவர். நாணய வழக்கை நாம் காண இயலாது. தம் தேவைக்கு அதிகமான பொருளே யாரும் சம்பாதிக்கமாட்டார்.

நான் விரும்பும் நாடு 105 f
அறத்தை மகன் தொடர்ந்து ஆற்றுகிருன் வாழ்க்கை ஓர் அஞ்சல் ஒட்டம் என்பது அவர்கள் உள்ளக் கருத்து. மனித வாழ்வில் அறம் என்னும் விளக்கு இடையீடின்றித் தொடர்ந்து சுடர்விடவேண் டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றனர். அதனுல், அறம் வளர்க்கும் நாடு என அதைக் கூறலாம். பிறர் துன்பத்தைத் துடைத் கல் ஒவ்வொருவருக்கும் பிறவிக்குணமாய் அமைந்துள்ளது. தனக் கென உழைப்பவன் ஆண்டில்லே. குறிப்பறிதலும், பொறுப்புணர் கலும் எல்லோர்க்கும் பொதுப் பண்புகள். தாம் அனே வரும் ஒரே குலத்தினரென்றும், உடன்பிறப்பாளர் என்றும் அவர் எண்ணி நடப்பர். அந்த அன்புணர்ச்சி சிறுவயதிலிருந்து சிறந்து வளர் கிறது. அதனுற் பிறரது நிறைவைக் கண்டு பெரு மகிழ்ச்சியடை தலே ஒவ்வொருவரதும் பண்பாயமைந்துள்ளது.
அக்காட்டு மன்னன் மக்களால் தெரிந்தெடுக்கப்படுவன், நாட் டில் அறிவிலும் அநுபவத்திலும் மிக்கவன் ஒருவனே அவனில்லக் தேடி மக்கள் சென்று அரசனுயிருக்கும்படி வேண்டுவர். அவ் வேண் டுதலினுலேயே அவன் அரசனுவன். பதவி மோகமும், போட்டியும் அக்காட்டில் இல்லே, தனக்கு வேண்டிய உதவியாளர்களேத் தானே நியமித்து அரசன் தன் நாட்டைப் பிறநாட்டுத் தாக்குதலினின் றும் பாதுகாப்பன். பிறநாட்டுப் படையெடுப்பை விடப் பிறநாட் டுக் கொள்கை, நாகரிகம் முதலியவற்றையே பெருங் கவனமெடுத் துத் தடுப்பன், படையினுல் ஏற்படும் அழிவைத் தடுத்தலும் கூடும். வேற்றுக்கொள்கை பரவுதலினுல் ஏற்படும் கேட்டை நீங்குதல் அரிது. தீய கொள்கைகளும் பழக்கங்களும் நெடுங்காலம் நின்று ஒரு நாட்டின் உண்மைப் பண்பையும் உயர்ந்த கலாசாரத்தை யும் அறவே இல்லாமற் செய்யவும் கூடும் அல்லவா?
அந்நாட்டில் நியாயவாதிகள், சிறைச்சாலேகள், கொலேத்தண் டனேகள் இல்லே. அதனுல் குற்றம் புரிவோரும் இல்லேயென்று நாம் எண்ணக்கூடாது. குற்றம் புரிவோர் தண்டிக்கப்படுவதில்லே. அவர்கள் திருந்துவதற்கு நல்ல சூழ்நி3லயையும் கல்லோர் நட்பை யும் மக்களே உண்டாக்கிக் கொடுக்கிருர்கள். குற்றம் செய்தவ னிடத்து எல்லோரும் காட்டுவர். அவன் குற்றம் செய்தமைக்குக் காரணம் அவனதறியாமை என்று கருதி அவ்வறியாமையை நீக்கு வதே அவனேத் திருத்துவோரின் முயற்சியாகும்.

Page 56
105 செந்தமிழ்த் தேன்
அங்குள்ள கல்வி முறையே புதுமையானது. மக்கள் அனேவ ரும் அறிவு வளரவேண்டும் என்றே கல்வி கற்கிருரர்கள். அதனுல் அவர்களது கல்வி பயிலும் காலம் எல்லேயின்றிச் செல்கிறது. மாக்தரெல்லாம் சாந்துனேயும் தேர்ந்து கற்பர். அங்குக் கல்வித்
தேர்வில்லை. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலான செய்திகள்தாம்
அவர்களின் கல்வித் தேர்வுகள். உலகமே அவர்கட்குக் கலபயில் கூடம். ஒவ்வொரு பிராணியும் ஒவ்வோர் உண்மையை உணர்த் தும் ஆசிரியன். ஆகவே அவர்கள் தாம் காணும் அநுபவங்களே ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லே ஆராய்கிருர்கள், ஆய்ந்து ஆய்ந்து உண்மையை அறிகிருர்கள் அறியாமையை அகற்று கிருர்கள்.
உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் அங் நாட்டில் மிகச் சிறந்த முறையில் நடைபெறுகின்றன. அவையனேத் தும் சமுக நன்மை குறித்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே இசை, சிற்பம், ஒவியம், முதலிய கலேகளும் வளர்க்கப்படுகின்றன. தொழி லாயினும் கலேயாயினும் தன்னலங் கருதிச் செய்தல் பாவம் என அந்நாட்டவர் கருதுவர். தொழிலாளரும் கலேஞரும் உலகைக் காக் கும் மன்னவர் போலக் கணித்தற்கும் கெளரவித்தற்கும் உரியர். ஒரு நாட்டின் நல்வாழ்விற்கு அரசன் இன்றியமையாதவாறுபோல தொழிலாளரும் இன்றியமையாதவர் என்பது அவர்கள் சித்தாக் தம் எனவே, ஒவ்வொரு தொழிலாளனும் ஓய்வுபெறும் காலத்தில் போதுமான ஊதியம் பெறுகிருன், உழைத்த காலத்திற் போல இளேத்த காலத்திலும் உண்மை மதிப்பைப் பெறுகிருன்,
ஒரு குடும்பம் பலபேரைக் கொண்டது. தனிக்குடும்பங்களும் பிரிந்து வாழும் முறையும் அங்குக் காண்டல் அரிது. குடும்பத் தலே வனிடத்தில் அக்குடும்ப உறுப்பினர் அனேவரும் அதிக மதிப்புக் காட்டுவர். அவ்வாறே தலைவனும் உறுப்பினர்களின் விருப்பத்திற் கும் உள்ளப் போக்கிற்கும் தக்க உரிமை கொடுக்கிருன், ஊர் நன் மைக்கான கருமங்கள் பஞ்சாயத்துப் போன்ற சபைகளால் கவ னிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவரும் தம்மூரின் நன்மையைத் தம் முயற்சிகொண்டே பேணுகின்றனர். பிறருதவியை எதிர்பார்த்தல் அவர்க்குப் பேதமையானது. தம் ஊரிலில்லாத பொருள்களேப் பண்டமாற்றுமூலம் பிற ஊர்களிலிருந்து பெறுவர். நாணய வழக்கை நாம் காண இயலாது. தம் தேவைகு அதிகமான பொருளே யாரும் சம்பாதிக்கமாட்டார்.

நான் விரும்பும் நாடு
நாம் சென்ற இடங்களிலெல்லாம் அங்காட்டில் திருந்திய முறை யில் விருந்தளித்தனர். மக்களின் மனப் பண்பும், வாழ்க்கை முறை யும் நம் மனத்தைக் கவர்ந்தன. அங்காடு பொன்னுடோ என ஐயுறத் தக்கவாறு அழகும் அமைதியும் இன்பமும் அங்குக் கானப்பட் டன. அந்நாட்டிலிருந்து நம் காட்டை நிகனயும்போது பொருமை பும், வறுமையும், துன்பமும், சூழ்ச்சியும், தன்னலமும், இன்னல் களுமே 5ம் மனக்கண் முன் தோன்றின. பிற்போக்கு நாடாயினும் பிறந்த பொன்னுடு என்ற பேரபிமானமே எம்மை ஊர்க்குத் திருப் பியது. கம் காட்டை அந்நாடுபோல நன் னுடாக்க விழைந்தோம். ஆணுலும் பன்னெடுங் காலமாகப் படிந்து கிடக்கும் மாசைக் கழுவ ஆசைமட்டுமன்றி அயரா உழைப்பும் வேண்டுவதன்ருே.

Page 57
தங்கத் தாத் தா
செந்தமிழ் மணி, பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளே
புலவர் பெருமக்கள் என்றும் கற்பஃன உலகிலேயே வாழுபவர் கள். கற்பனேயே அவர்களுக்கு ஊற்றங் கொடுக்கும் மூச்சு எனலாம். நவாலியூர் சோமசுந்தரப் புலவராம் தங்கத் தாத்தா, என்றும் வள் மை/ம் இளமையும் குன்ருத் தமிழைத் தெய்வமாக, தாயாக, பச் சிளங் குழந்தையாகப் பலவழிகளிற் கண்டு கண்டு அன்புமீது ர என் பையும் உருக்கும் வகையிற் பற்பல பாக்களே யாத்துள்ளார்கள். தமிழை நாமகளாங் குழந்தையாக அவர் காட்டுஞ் செஞ்சொல்லால் அமைந்த சீர் சிறந்த கண்ணிபோன்ற பாடல்கள் பொருட் சிறப் புடையனவாகக் குழவிகளே யுங் கிழவர்களேயும் ஒருங்கே உளங் கவ ருங் தன்மை வாய்ந்தன.
நாமகளாங் குழந்தை அமும் பாவனேயிற் புலவருக்குக் காட்சி தருகின்றது. செந்தமிழ் நாட்டுச் செல்வச் சிறு குழந்தைக்குப் பாலாலோ, பஞ்சனேயாலோ, பூணுலோ எவ்வித குறையுமில்லே என்று கூறித் காத்தா குழங்கைக்கு ஆறுதல் ஊட்டுகின்ருர், தயை நிறைந்த புலவருள்ளம் அவரைத் தாய் கிலேயில் வைத்துக் குழந் தைக்குத் தேற்றங்கூற வைக்கின்றது. குழந்தைகள் பெரும்பாலும் அழுவது பாலுணவு கொள்ளுதற்கேயென உணரும் புலவர் பிரான் பாலுக்குப் பஞ்சமில்லேயென்று பலவாற்ருனும் பகருகின்ருர், தமிழ் நாட்டுத் தெய்வப்பிரான் தன் மீது மட்டிலா கோபங்கொண்ட உப மன்பு என்னும் பாலகனுக்குப் பாற்கடலேயே முழுவதாக ஈந்த வரலாற்றை உரைத்து அதன்மேலும் சீர்காழிச் செம்பவளவாய்க் குழந்தை தேம்பியழ அன்னேயுமை பாலமிழ்தூட்டிய பெருக்ககை மையைக் காட்டி
பாலன் குரல்கேட்டுப் பாற்கடலே யீந்தபிரான் ஒலஞ் செவிகேட் டுனது பசி திரானுே? தேம்பி யமுத சிறுவனுக்குப் பால்சுரக்க காம்பனதோ ளன்ஃன கருணே புரியாளோ? என அன்னேயும் அத்தனும் நாமகளுக்கும் கற்பாலூட்டுவார் என் கின் ரூர்,
இக் குழந்தை பிறந்த குடியோ செல்வச் சீர் சிறப்பாற் பேர் பெற்றதொன்று. இப் பிள்ளேக்கு மாமனுரோ '
 
 
 
 
 
 
 

தங்கத் தாத்தா
பள்ளிகொள்ளும் முடிவிலா அழகன் என்று அழகாக வடிதமிழில் வார்த்துக் காட்டுகின் ருர் புலவர்:
காணுறங்கு மேனி வடிவழக னுன்மாமன் தானுறங்கும் பாற்கடலேத் தந்துபசி திரானுே? உலகத்தைப் பாதுகாக்கும் பேரருள் மாயனே குழந்தைச் செல்வத்தின் மாமனுர் ஆகின் ருர், உலகத்தைப் பாதுகாக்கும் பரந்தாமன் மேனி, அளவின்றிப் பரந்து உலகிற்கு நலனியும் நீல நிற வான் போன்றது. ஞானகுருவாம் இம் மாமனுக்கு பூத சம்பந்த மான நீல வானே ஒப்புமையாக்கப் புலவர் உள்ளங் சுசுகின்றது. நீல் கிரி வானில் மாநிற மாயனே வைத்துக் காட்டும்போது வான் தன்னுெளி யிழந்து வறிது தோற்றக் தருதலால் வானே அடுத்து உறங்கும்" என்ருெரு சொல்லேக் கருத்து நிரம்பப் புலவர் பெரு மான் தெரிந்தெடுத்துக் காட்டுகின் ருர், உறங்குவார் மேனி ஒளி குன் றிக் காணும் தன்மையில் மாயன் மேனிமுன் வானின் நிறம் மங்கித் தோற்றுமாற்றை வேறு எப்புலவர்தான் எவ்வாற்ருற் காட்ட முடி U/Lt?
இச் சிறு குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு ஒரு பசுவிற்குப் பதில் மூன்று பகக்களே-அதுவும் பசுவர்க்கத்தில் மிகவுயரிய காம கேனுக்களே - ஒருவருக்குப் பதில் மூவர்-அவரிலும் முர்த்திகள் இருவருடன் வார் கடலேக் குடித்து ஏப்பமிட்ட, பால்போன்ற தெளிந்த அறிவினேயுடைய தமிழ்முனியும்-பாதுகாத்து வருவதா கப் புலவர் செய்யும் அழகு ஒப்பிலாதது:
பிள்ளேப் பிறையணிந்த பிஞ்ஞகனும் பேறுதவு புள்ளி மயிலுTரும் புலவர் பெருமானும் வாரி குடித்த வாமுனியும் வாலறிவிப் சிரியரு மோர் மூன்று தேனு வளர்த்தார்கள். முச் சங்கங்களாம் மூன்று காமதேனுக்களும் வளர்ந்த மூவிடங் களே யுக் தொழுவங்களாகச் சட்டி, இப் பச்சிளங் குழந்தைக்குப் பால்தரும் பசுக்களேப் பச்சைப் பசும்புல் உண்டு செமும் பசும்பால் தருவனவாகப் புலவர் காட்டுகிருர்:
வல்லநா வாலே மதிவயலி லேசெதுக்கிப் புல்லுநூ லூட்டிமிகப் போற்றி வளர்த்தார்கள் செல்வப் பசுமூன்றிற் தேடிக் கநங்தெடுத்த நல்ல சுவையமுதம் காங்களுனக் கூட்டி வைப்போம். என்ற கண்ணியில் அமைந்துள்ள உருவக அழகு தமிழ்த் தாயின் உருவை எத்துகின உயர்வுடன் எடுத்துக் காட்டுகின்றதென காம்

Page 58
O செந்தமிழ்த் தேன்
கூருகே படிப்போர் பன்முறை மீட்டுமீட்டோதி உணர்தலே சாலும், மதியை வயலாகவும், தமிழ்ப் பாக்களின் சுவையிலே திளேத்த நாவையே உழவாரமாகவும் கொண்டு செதுக்கி எடுத்த தலே சிறந்த கலே நூல்களாய்ப் புல்லேப் புலவர் சிறந்த முறையிற் காட்ட உரு வக அணியைக் கையாளுகின்ருர், புல் பால் சுரப்பித்தல்போல நூல் கள் அறம் பொருள் இன்பப் பாக்லச் சுரத்தவியல்பு.
முச்சங்கக் காமதேனு என்றும் பாலேச் சுரந்தபடி இருக்கின் றது. பக்குவமறிந்து அதன் பாலேக் கறந்துதர வல்லவர் தாரணி யில் ஒரே ஒருவர்தாமுளர். அவர்தாம் அறம் பொரு வின்பமென் னும் முப்பாலேத் தமிழிலே தக்து உலகுக்கு உயிருட்டம் ஊட்டிய வள்ளுவனுர், புலவர் கூறும் மொழியில் அப் பாட்டினே இதோ பார்க்கின்ருேம்:
முற்ருத தெய்வமொழி முச்சங்கச் சீமாட்டி வற்ருது பால்சரக்கும் வான்பசுக்கா னம்மானே, வற்ருது பால்சரக்கும் வான்பசுவே யாமாயின் மற்ருரோ பால்கறந்து வைத்தார்கா னம்மானே! வள்ளுவர்முப் பால்கறந்து வைத்தாரே பம்மானே.
(அம்மானே ?) நீரோ, நெருப்போ, பகைவரோ தமிழின் மேம்பாட்டை அழிக்க முற்படில் அது அழிக்கமுடியாதிருப்பதோடு புத்தப்புது அழகுடன் என்றும் நின்று நிலவுமாற்றைப் புலவர் பெருமான் தெய்வமொழி, முன்முற்ருத என்ற அடையால் காம் பெற்றுக்கொள்ளத் தந்துள்ளார். தமிழின் நடையழகும், பொருளழகும் உணர்ச்சியழகும் என்றும் குன்ருப் பயன்தருதலின் வற்ருது பால் சுரக்கும் என்ற கருத்துள்ள சொற்களேப் பொருத்தமுங் திருத்தமும் பொருந்தப் பெய்துள்ளார். முப்பால் கறந்த வள்ளுவரே தமிழ்த் தாய்க்கு இப்பாலூட்ட வல் லர். புலவர் பெருமான் தமிழ்மீது வைத்துள்ள பெரும் பேரன்பாற் பெருக் தெய்வங்களேயே அருங் தமிழன்னேக்குப் புல் செதுக்கிப் பசு வளர்த்துப் பாலூட்டுக் தொண்டாற்றும் பேரடியாராக்கிவிட்டார். தெய்வத் திருப்பாலுண்டு வளர்ந்த தமிழ்க் குழந்தை இன்று மடந்தையாக-சிற்றிடை அழகியாகத்-திகழுகின்ருள். எனவே புல வர் சொல்லில் அவள் சிற்றிடைச்சியாகின்ருள். இடைச்சியின் தொழில் பாலுண்ன அருளுதலேயாகளின், இத்தமிழ்ச் சிற்றிடைச்சி யாருக்குப் பாலூட்டுகின்ருள் என்ற வினு எழுதல் இயல்பே. புல வர் பெருமான் அதற்குத் தரும் விடை கம்மை வியப்பிடை ஆழ்த் துகின்றது. உலகிடை நிறைந்த உயிர்களுக்கெல்லாம் ”
 
 
 
 
 
 
 
 

தங்கத் தாத்தா 醇
வகையில் அவள் அறிவெனும் பாலே ஊட்டுவதாகக் கூறும் பாட் டைச் சுவைத்துப் பார்ப்போம்:
ஏராருந் தென்ன விருஞ்சிலம்பி லேபிறந்த சீரார் தமிழ்மடங்தை சிற்றிடைச்சி பம்மானே சிரார் தமிழ்மடந்தை சிற்றிடைச்சி யாமாயின் ஆரார்க்குப் பாலுண் ண் வருளினள் கா of the 23r ஆருயிர்கட் கறிவின் பா லருளினள்கா ரைம்மானே. அன்று சிற்றிளங் குழந்தையாய் இருந்த தமிழ் புலவர் 6ıIETT r7 iyu7isi) உலகிற்கே அமுதூட்டும் அருள் நிறை அன்னே யாம் அழகை என் னென் போம்,
சின்னஞ்சிறு கண்ணிகளிற் பள்ளிப் பிள்ளேகளுக் துள்ளித் துள் விப் பாட புலவர், "நாமகள் புகழ்மாஃ' என்னும் நூலிற் பாக் களே அள்ளியள்ளித் தருகின்ருர், மூன்று சிறுபெண்கள் கூடி வினு வோடு விடையுந் தருமுறையில் அமைந்த அம்மானேகள் தமிழ்த் தாயின் செஞ்சொல் ஓவியங்களாக அமைந்துள்ளேன்.
ஈழத்தாயின் அரும் பெரும் புலவராகிய தங்கத் தாத்தா ரோ சுந்தரஞரின் தீந்தமிழ்ப் பாடல்கள் பல்லுழிகாலம் கின்று நிலவும் என்பதுறுதி.

Page 59
கன்னன்
சுவாமி விபுலானந்தர்
பாரதத்திற்குக் காப்பியத் தக்லவன் யாவன்?
கண்ணபிரான் என் பாரும், அருச்சுனன் என்பாரும், ரன் என் பாரும், சுயோதனன் என் பாருத் தம்முள்ளே முரணி நிற்க, ஈண்டுக் குறிப்பிட்ட அனேவரையுந் தனது அன்பினுற் பிணித்த ஆங் கர் கோணுகிய கன்னன் காப்பியத் தலைவனுவானென் பாரது கூற்று வலிமையுற்று கிற்கின்றது.
'பெண் மைக் கிரதியென வந்த பெண்ணுரமுதே பேருலகி லுண்மைக் கிவனே வலிக்கிவனே புறவுக்கிவனே யுரைக்கிவனே திண்மைக் கிவனே நெறிக்கிவனே தேசுக்கிவனே சிலேக்கிவனே வண்மைக் கிவனே கன்னனெனு மன்னன் கண் டாய் மற்றிவ
(னே' எனத் திரெளபதியின் செவிலித் தாயார் கூற்ருகக் கவி ఈ లి கின் ருர்,
ாத்தலங்களினு மிகையாலோகை வாகையா லெதிரிலா விரன்' நாகாயுதத்தினே மறுகாலு மேவாது பார்த்தனது சரமாரிக் கிலக் காகி நின்ற வெல்லேயிலே முதல்வனுகிய கண்ணபிரான் வஞ்ச வேதியன் வடிவங் கொண்டு வந்து, "வறுமையால் வாடினேன் இக் கனத்து எனக்கு இயைந்த தொன்று அளிப்பா' பென இக்து நின் முன்,
"என்றுகொண் டந்த வந்தன னுரைப்ப
விருசெவிக் கமுதெனக் கேட்டு வென்றிகொள் விசயன் விசயவெங் கணேயால்
மெய்தளர்க் திரதமேல் விழுவோன் நன்றென நகைத்துத் தரத்தகு பொருணி கவில்கென நான்மறை யவனும் ஒன்றிய படிகின் புண்ணிய மனேத்தும்
உதவுகென் றலுமுள மகிழ்ந்தான்.'
"ஆவியோ நிலேயிற் கலங்கிய தியாக்கை
அகத்ததோ புறத்ததோ வறியேன்
பாவியேன் வேண்டும் பொருளெலா நயக்கும் பக்குவங் தன்னில்வந் திலேயால்,
 
 
 

த இன் துே என் r
ஒவிலா தியான் செய் புண்ணிய மனேத்தும்
உதவினேன் கொள்க(ேயுனக்குப் பூவில்வா ழயனு நிகரல னென்றற்
புண்ணிய மிதனினும் பெரிதே'
"என்ன முன் மொழிந்து கரங்குவித் திறைஞ்ச இறைஞ்ச்சலர்க் கெழினியே நனேயாள் கன்ன*ன் யுவகைக் கருத்தினு குேக்கிக்
கைப்புன லுடன் தரு கென்ன அன்னவ னிதயத் தம்பின்வா பம்பா
யளித்தலு மங்கையா லேற்ருள் முன்னமோ ரவுனன் செங்கை நீ ரேற்று முவுல கமுமுடன் கவர்ந்தோன்"
குருக்கேத்திரப் போர்க்களத்திலே போர் தொடங்கிய பதினேழா நாளன்று கடந்த இத் தெய்வக் காட்சியை அகக்கண்ணுல் நோக்கு வோமாக பொழுது மேற்றிசையிலே இரண்டு விற்கிடை உயரத் திலே கிற்கிறது. சூரியனது பொன்போன்ற கிரணங்கள் புதல்வ எனது ஆகத்திக்ன மெல்லெனத் தழுவி நிற்கின்றன. அருச்சுனனது ஆயிரம் அம்புகள் துளேத்த துளேகளினின்றும் பாய்கின்ற செங் குருதி சூரிய குமாரனது உடலத்திலே ஆயிரங் கிரணங்கள் போ லத் திகழுகின்றது. இரு பெரு வீரர்களது இரதத்திற் பூட்டிய குதி ரைகளும் செயலற்று நிற்கின்றன. கண்ணபிரான் விசயனேச் செரு வெசமுதி' பென்க் கையமர்த்திக் கன்னனே நோக்கி வருகின்ருண். வேதியன் வடிவமாக வந்த கண்ணபிரான் இரத்தலும் கன்னன் இதயத்திற் பாய்ந்து கிடந்த அம்பிக்ன வாங்கி அங்குப் பாயந்த செந்நீரே ரோசுத் தான்புரிந்த புண்ணியமனேத்தினேயுந் தானஞ் செய்கின்ருன் பெற்ற கண்ணபிரானுகிய வேதியன் வேண்டிய வரங்
கேள்' என்கின்ருன், இதுகேட்ட கன்னன்,
விதயநீ அளித்தருள்"
என்கின்குள் கருணே வள்ளலாகிய சண்ணபிரான் உளமுருகிக் கண்களினின்று சொரிந்த நீரினுலே கன்னனே நீராட்டித் தனது விதய்வ வடிவோடு அவன் கண் களிக்கக் காட்சியளிக்கின்ருன்.
'சமரமாமுனேயிற் றனஞ்சயன் கனே யாற் சாய்ந்துயிர் விடவுஞ் அமலதா ரனனேக் காணவும் பெற்றேன்" (செங்கண்

Page 60
செந்தமிழ்த் தேன்
எனக் கூறிக் கன்னன் அகமகிழ்கின்றன். பின்னுமவன் கண்ண பிரானே கோக்கி,
"தருமன் மகன் முதலான அரியகாதற்
ஹம்பியரோ டமர் மலேந்து தி துகளுண்மைச் செருவிலென துயிரஐனய தோழிற்காகச்
செஞ்சோற்றுக் கடன் கழித்தேன் தேவர்கோவுக் குரைபெறுநற் கவசமுங்குண் டலமுமீந்தேன்
உற்றபெரு கல்வினேப்பே றுனக்கே தந்தேன் மருதிடைமுன் நவழ்ந்தருளுஞ் செங்கண் மாலே
மாகவத்கா லொரு தமியன் வாழ்ந்தவாறே"
எனக் கூறுகின்ருன். இவ்வெல்லேயிலே தாயாகிய குத்தி தேவி போர்க்களத்தினே அடைந்து இறக்துபடுகின்ற கன்னஐர மார்புறத் தழுவி,
"ஓரைஞ்சு பேருளரா லறந்த El T35
உதிட்டிரணு தியருரகக் கொடியோ ணுதி
பீரைஞ்சு பதின்மருளர் தம்பிமார்கள்
இங்கிதங்க ளறிந்தடைவே யேவல் செய்யப்
பாரஞ்சு மொருகுடைக்கீழ் ேேயயாளும்
பதமடைந்தும் விதிவலியாற் பயன்பெருமற்
காரஞ்சு கரதலத்தா யக்தோ வங்தோ
கடவுளர்தம் மாயையிற்ை கழிவுற்ருயே"
எனக்கூறி அழுதரற்றுகின்ருள். இத்தகையதோர் காட்சியினே ஹோமர் எழுதிய வீரகாவியங்களிலும் காண்டல் அரிது.
H-O-
 
 

f
மேடை நாடகத் தயாரிப்பு திரு க. செ. நடராசா B, A (இலங்கை வானுெவி தமிழ் நிகழ்ச்சி அதிகாரி) ) ாேடகம் தமிழ்மக்களுக்குப் புதிய கலேயன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், அதற்கு முற்பட்ட காலத்தும் தமிழ்மக்க ளிடையே நாடகம் உயர்ந்த கிலேயில் விளங்கியிருக்கிறது என்ப தைப் பழக் தமிழ்நூல்கள் வாயிலாகக் காண்கிருேம். நாடக மின்றித் தமிழ்மொழியே முழுமைபெருது என்ற அளவுக்குத் தமிழின் ஒரு பகுதியாக நாடகங்களே வகுத்திருக்கி ரர்கள் நம் ஆன்ருேர் நாட கத்துக்கு ஒர் இலக்கணமும் அவர்கள் வகுத்துத் தந்திருக்கிருர் கள். அவ்விலக்கணத்துக்கமைய ஆடலும் பாடலும்கொண்ட கூத் துக்கள் அற்றைநாள் அநேகமெழுந்தன. அவற்றையே இன்று நாம் நாட்டியங்களாகவும், நாட்டுக் கூத்துக்களாகவும் ஆங்காங்கு காண்கிருேம்,
இன்று நாம் நாடகங்கள் என்று குறிப்பிடுவன, தமிழ்மக்க ளுக்கு இடையிட்டு வந்துசேர்ந்த ஒரு கலே என்றுதான் சொல்ல வேண்டும். மேல்நாட்டாரின் நாடகமுறையைப் பின்பற்றியே இன்று நாம் தமிழில் நாடகங்கள் தயாரிக்கிருேம். இன்றைய நாடகங்களிலே, அற்றைகாட் கூத்தின் அமிசங்கள் ஓரளவிருப்பி னும், மேல்நாட்டார் கையாளும் முறைகளே பெரிதும் இடம்பெறு கின்றன.
அற்றைகாட் கூத்தினே எவ்வாறு அண்ணுவியிடம் பயிலாது ஆடமுடியாதோ, அவ்வாறே இற்றை நாள் நாடகத்தினேயும் தக்க ஆசானிடங் கல்லாது தயாரித்தல் முடியாது. பலர் நாடகம் பயி லும் துறையில் இன்று கவனஞ் செலுத்தாதிருப்பதனுலேயே, சிறந்த நாடகங்கள் தயாராவது அபூர்வமாயிருக்கிறது. நாலேந்து நாட கங்களேப் பார்த்துவிட்டு, நாமும் ஒரு நாடகங் தயாரிக்கத் துணி வது பெருங் தவருன் செயலாகும், எழுத்தாளர்களாக விளங்க இளேஞர்கள் ஆசைப்படுவதுபோல, நாடகத் தயாரிப்பாளராக வந்துவிட அவர்கள் அவாவுவதும் இயல்பே. ஆணுல், நாடகங் தயாரிக்கும் முறைகளேயெல்லாம் நல்ல தயாரிப்பாளர் ஒருவரிடம் ஓராண்டு காலமாவது பயிலாது நாடகங் தயாரிக்க யாரும் முயலக் கூடாது. ஏனெனில், இன்றைய நாடகங்களுக்கு வேண்டிய ஒவ் வொரு அமிசத்தினேயும் நன்கு தெரிந்துகொள்ளாது, சிறந்த நாட கங்களே எவ்வாறு தயாரித்தல்முடியும்? சிலருக்குச் சில கலேகள்

Page 61
直正6 செந்தமிழ்த் தேன்
இயல்பாகவே கைவரக்கூடும். ஆனுல் எல்லாக் கலேயும் இயல் பாகவே தமக்குக் கைவரும் என்று எண்ணுவது, தம்மைப்பற் றித் தாமே அதிகமாக எண்ணிவிடுவதாகும்.
இக்கால நாடகத்தைத் தனி ஒரு கலேயென்று கூறிவிட இய லாது. அதற்குட் பல கலேகள் அடங்கிக் கிடக்கின்றன, அற்றை நாட் கூத்திலும் அவ்வாறே பல கலேகள் அடங்கிக் கிடந்தன என் பதைச் சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதை எடுத்துக்காட்டும். ஆடல், இசை, பாடல், தண்ணுமை, குழல், யாழ் என்பனவற்றின் அமைதிகளும், அரங்கின் தன்மையும் அறிந்தவனே ஆடலாசான் ஆகலாம். அவ்வாறே இன்றைய நாடகத் தயாரிப்பாளர் சு ஸ் தெரிந்துகொள்ளவேண்டிய கலேகளும் பல. அவற்றுள் முக்கிய மானவற்றைக் கவனிப்போம்.
நாடகங் தயாரிப்பதற்குமுன் நாடகத்துக்கான எழுத்துப் பிரதி யைத் தெரிவுசெய்தல்வேண்டும். நாடகத்தின் வெற்றிக்கு அதுவே முதற் காரணமாகும். எல்லா நாடகப் பிரதிகளும் நல்ல தயாரிப் புக்கு ஏற்றனவாக அமைவதில்லே. தயாரிப்பதற்கு வாய்ப்பான நாடகப்பிரதியைத் தெரிவுசெய்வதும், தமக்கு வேண்டியவாறு பிர தியை எழுதுவிப்பதும், அதனேத் திருத்தியமைப்பதுமெல்லாம் ஒரு தனிக்கலேயென்றே சொல்லல்வேண்டும்.
தயாரிப்பதற்கு மட்டுமன்றி நடிப்பதற்கும் நாடகப்பிரதி போதிய இடமளிக்கவேண்டும். நாடகம் எழுதுபவர்களுக்குத் தயாரிப்பு நுட்பங்கள் தெரிந்திருக்கவேண்டும் அல்லது தயா ரிப்பு நுட்பங்கள் தெரிந்தவர்களே நாடக எழுத்துப் பிரதிகளே எழுதவேண்டும். அப்பொழுதுதான் நாடகம் தயாரிப்பதற்கு ஏற்ற தாய் அமையும்.
இன்றைய தமிழ் நாடகங்களேப் பெரும்பாலும் சமூக ாேடகங் கள், சரித்திர நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், இலக்கிய நாடகங்கள் என வகுத்துக் கூறலாம். நாட்டிய நாடகம், இசை நாடகம் ஆதியன வேறு வகையைச் சேர்ந்தன. எல்லாத் தயாரிப் பாளர்களும் எல்லாவகையான நாடகங்களேயும் திறம்படத் தயா ரித்துவிட முடியாது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையிலே திறமையிருக்கலாமே தவிர எல்லாவகையிலும் திறமையிருப்பது அபூர்வம் நகைச்சுவை நாடகங்களேத் தயாரிக்கும் ஒருவர், ஒரு வேளே சமூகநாடகங்களேயும் தயாரிக்கக் கூடியவராயிருக்கலாம். ஆனுற் சமூகநாடகங்களேத் தயாரிக்கும் மற்ருெருவர் நகைச்சுவை நாடகங்களேத் திறமையாகத் தயாரிக்க முடியாதவராயுமிருக்கலாம். இால்லார்க்கும் ஒவ்வொன்றெளிது என்பர்.
 
 
 

I
மேடை நாடகத் தயாரிப்பு - 1
சரித்திர நாடகங்கள் த பாரிப்பவர்களுக்குச் சரித்திர அறிவும், இலக்கிய நாடகங்கள் தயாரிப்பவர்களுக்கு இலக்கிய அறிவும் அவசியந்தேவை. எவ்வெத் துறையிலே தயாரிப்பாளர்களுக்குப் போதிய அறிவும் ஆற்றலுமுண்டோ, அவ்வத்துறை நாடகங்களேயே அவர்கள் தயாரிக்க முயல்தல் வேண்டும்.
எந்த ஒரு நாடகமும் இக்காலத்தில் இரண்டரை மணித்தி யாலங்களுக்குமேல் மீளக் கூடாது. அதற்குமேல் நீண்டால், மக்க ளூக்கு அவகாசம் போதாமையால் அலுப்புத்தட்ட ஆரம்பித்து விடுகிறது. ஐந்துகிமிட நேரத்துக்குக் குறைந்த காட்சிகள், கதை யோட்டத்தைக் குறைப்பதற்கான்றி வேறெதற்கும் உதவா. அத ஒல், நாடகக் காட்சிகள், ஒவ்வொன்றும் குறைந்தது பத்துப் பதி ஆனந்து நிமிடங்களுக்காவது நீண்டிருத்தல்வேண்டும். எல்லாமாக ஐந்து அல்லது ஆறு காட்சிகளுக்கு மேற்படாதிருந்தால் நாடகக் தயாரிப்பதற்கு வாய்ப்பாயிருக்கும். சில தயாரிப்பாளர்கள் இரண்டு மூன்று நிமிடங்களுக்கொரு காட்சியாக வைத்து, இருபது, முப்ப தென்க் காட்சிகளே அடுக்கிவிடுகிருர்கள். அது கல்ல நாடகத் தயாரிப்பிற்கே பங்கம் விளக்கும் செயலாகும்.
நாடக பாத்திரங்கள் பத்துப் பன்னிரண்டிற்கு மேற்படாதிருத் தல் நற்பலகீனயளிக்கும். பெருக்தொகையான கதாபாத்திரங்களேப் புகுத்துவதால் மேடை நாடகங்களேச் சோபிக்கச் செய்யலாமென்று எண்ணுவது சரியான கருத்தென்று கொள்ளல் முடியாது. மூன்று நான்கு கதாபாத்திரங்களுடனேயே ஒரு நாடகத்தைத் திறம்படத் தயாரித்துவிடுதல் கூடும். காட்சிகளும் பாத்திரங்களும் குறைவா யிருந்தால், நாடகம் தயாரிப்பதற்கு இலகுவாய் இருக்கும். எமது நாட்டிலுள்ள நாடகமேடை வசதிகளேப் பொறுத்தவரையில், அதிக மான காட்சிகளுக்கும், தொகையான கதாபாத்திரங்களுக்கும் இட மில்லேயென்று துணிந்து சொல்லிவிடலாம்.
நாடகத்தயாரிப்பதற்கு கல்லமேடைகள் இலங்கையில் இரண்டு மூன்றிர்குமேல் இல்லேயென்றே சொல்லலாம். மேடைவசதியில் லாத இடத்தில் நாடகங் தயாரிக்க முயல்வது பெருக் துணிகரமான செயல்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே அரங்கு எவ் வாறு அமையவேண்டுமென வகுத்துக்கூறியிருக்கிருரர்கள் நம் ஆன்
ருேர், செயிற்றியணுரும், சுத்தானந்தப்பிரகாச ஆசிரியரும், சிலப்
பதிகாரந்தந்த இளங்கோவும் அதனேத் திட்டவட்டமாகக் கூறி
யிருக்கிருர்கள்

Page 62
II & செந்தமிழ்த் தேன்
"அரங்கி னுயரமும் அகலமும் நீளமும் இருபத்து கால்விரற் கோலள வதனுல் எழுகோ லகலத் தெண்கோ னிளத் திொருகோ லுயரத் துறுப்பின தாகி, உத்தரப் பலகையோ டரங்கின் பலகை வைத்த விடை நில நாற்கோலாக ..."
என்ருர் சத்தானந்தப் பிரகாசத்தில், அதனே இக்கால அடித்தனத் கின்படி கூறினுல், அரங்கானது நிலத்திலிருந்து 4 அடி உயர்ந்தும் 28 அடி அகன்றும், 33 அடி நீண்டும், 18 அடி உயரத்தில் மேல் விதானங் கொண்டும் அமையவேண்டும். இக்கால நாடகங்களுக் கும் ஏறத்தாழ இவ்வளவு நீள அகல உயரங்களேக் கொண் டி மேடைகள் தேவை. அப்பொழுதுதான் நாடகத் தயாரிப்பின் திறமையை எந்த ஒரு தயாரிப்பாளனும் காட்ட முடியும், ஒளி யமைப்பினேயும், காட்சி மாற்றங்களேயும் திறமையாகக் கையாள்வ கற்கும், கடிகர்கள் கடிப்புத் திறமையைப் புலப்படுத்துவதற்கும் அத்திகேய அகன்று நீண்ட அரங்கே மிகவும் பொருத்தமானதா யிருக்கும். 'சைக்ளோருமா" என்ற "வர்ணஜாலம்" காட்டும் வெண் படாம் அமைப்பதற்கும் அதுவே ஏற்றதாகும். இக்கால நாடகத் துக்கு அதுவும் அவசியமே. "சுழல் அரங்கு' வசதிகள் உள்ளபோது மட்டும் அது தேவைப்படாமலிருக்கலாம். ஆமாம், சுழலரங் கிற்குரிய தயாரிப்பு முறையே வேறு.
சுழல் அரங்கைப்பற்றிக் கூறும்போது, சாதாரண அரங்கிற் காட்சி மாற்றங்களுக்கிடையே ஏற்படுத் தாமதம் நினேவுக்கு வரு கிறது. சுழல் அரங்கிற்ருன் அந்தக் கவலேயே இல்லே. பல தயா ரிப்பாளர்கள், காட்சிமாற்றங்களுக்கிடையே பல நிமிட நேரத்தைப் போக்கிவிடுகிருரர்கள். இது நாடகத் தயாரிப்பில் ஏற்படும் ஒரு பெருந்தவறு. காட்சி மாற்றத்தில் கேரம் அதிகம் செல்வதால், ாேடகம் பார்ப்பவர்களுக்கு அலுப்புத்தட்டுவதுடன், நாடகத்தி லுள்ள கவர்ச்சியுங் குறைந்து விடுகிறது. நாடகம் TRT ) ளிடையே நடிகர்கள் ஒரு காட்சியில் ஏற்படுத்தும் உணர்ச்சியை மறுகாட்சிக்கும் வளர்ந்து செல்ல விடாது கெடுத்துவிடுகிறது அந்த நீண்டநேர இடைவேனேகள், அதனுல், நடிகர்களின் முயற்சிக் பெரும் பகுதி பயனற்றுப் போய்விடுகிறது எனவேதான் கா மாற்ற நேரம் அரை கிமிடத்துக்கு மேற் செல்லாமற் கவனிக்கவே யிருக்கிறது. இடைவேளே கூட இல்லாமல் நா. கத்தை க
 
 
 

மேடை நாடகத் தயாரிப்பு பு
முடிப்பது அதன் வெற்றிக்குப் பெரிதும் அநுகூலமாயிருக்கும். அப் படியானுல், தமது தயாரிப்பாளர்களுட் பலர் ஏன் அவ்வாறு செய்வ தில்லே இந்த இடத்திலேதான் மேடையலங்காரமும் உடையலங்
மேடையலங்காரமும் உடையலங்காரமும் நாடகத்துக்கு அவ சியமே. ஆனல் அவை நாடகத்தின் நோக்கத்தைக் கெடுத்துவிடக் கூடியனவாயிருக்கக்கூடா. பொதுவாகக் காட்சி மாற்றங்களுக் கிடையே நேரத்தைப் போக்குவன இவ்வலங்காரங்களே. அவை நாடக ஓட்டத்தைத் தடைப்படுத்தாதவாறு அமைக்கப்படவேண் டும். ஒரு காட்சி முடிவில் ஒருவகை உடையில் வரும் பாத்திரம் அடுத்த காட்சி ஆரம்பத்தில் வேறு உடையிலே காட்சியளிக்கவேண் டியவிதமாக நாடகப் பிரதி அமையக்கூடாது. அதுபோலவே, மேடையலங்காரமும் அரை நிமிட நேரத்துக்குள் மாற்றியமைக்கக் கூடிய விதமாகச் செய்யப்படவேண்டும். சில வேளேகளில், ஒளியை அணேத்து அதனப் பத்துப் பதினேந்து விநாடிகளில் மீண்டும் ஏற்று வதற்கிடையிற் காட்சி மாற்றக்கூடியதாயமைக்கவேண்டும்.
மேடையலங்கார விடயத்தில் இருகட்சிகள் உள. குறித்த காட்சி அப்படியே மேடையிற் பிரதிபலிக்குமாறு அலங்காரஞ் செய்யவேண்டுமென்பது ஒரு கட்சி. அதாவது, ஒரு குடிசையில் கடைபெறுங் கட்சியென்ருல், மேடையில்ே அப்படியே ஒரு குடி சையமைத்து, அதற்கான சூழலேயும் ஆக்கி வைக்கவேண்டும். ஆணுல், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள், அக்குடிசையை அரை நிமிட கேரத்துக்குள் அகற்றி, மற்ருெரு மாளிகையை அங்கு நிறு வக்கூடிய வசதி செய்யத்தக் கவர்களாய் இருத்தல் வேண்டும். மறு கட்சியைச் சார்ந்தவர்கள். கட்சிக்கேற்றவாறு அடையாள அலங் காரஞ் செய்தாற் போதுமென்பார்கள். அதாவது மேடையைப் பொருள்களால் நிரப்பாது, ஒரு சோகீலக் காட்சியைக் குறிப்பதற்கு ஒரு மரக் கிளேயோ, அன்றி ஓர் இலேயோ போ து மென் பர். மேடையை உண்மையான வீட்டுக் காட்சி போலவோ சோலேக் காட்சி போலவோ அலங்கரிப்பதால், மக்கள் கவர்ச்சி அதிலே சென்று விடுகிறதேயன்றி நடிப்பிற் செல்வதில்லேயாகையால், நாட கத்தின் நோக்கம் கெட்டுவிடுகிறது என்பது அவர்கள் வாதம்.
இந்தவகையான அடையாள அலங்காரம் செய்பவர்களுக்குக் காட்சி
றத்தில் நேரம் போவதற்குக் காரணமேயிருக்கமுடியாது. அடை
அலங்கார முறையைக் கையாளும் தயாரிப்பாளர்கள், நடிப் திறமையினுல் மக்கள் உள்ளங்களேக் கொள்ளே கொள்ளக்கூடிய

Page 63
直岛0 செந்தமிழ்த்தேன்
ஆற்றல் மிக்க கடிகர்களேயுடையவர்களாயிருக்கவேண்டும் இல்லே யேல் நாடகம், இரண்டும் கெட்டாணுகிச் 'சப்'பென்று போய் விடும்.
நடிகர்களுக்கு ஒப்பனே செய்வது உண்மையிலே ஓர் ஓவியக் கலே வல்லுனருக்குரிய தொழிலாகும் ஆணுல், நாடகத் தயாரிப்பா ளருக்கும் ஒப்பனே செய்தல்பற்றிய அறிவு இருத்தல் அவசியம். ஏனெனில், நாடகத் தயாரிப்பென்பது, நாடகாசிரியரின் கதையை நடிகர்களின் உதவியைக்கொண்டு ஒருவன் தன் கற்பனேக்கேற்ற வாறு மேடையிலே சித்தரித்துக் காட்டுவதாகும்.
எனவே, பாத்திரங்களின் வேடப் பொருத்தம் எவ்வாறிருக்க வேண்டுமென்பதனே தயாரிப்பாளன் தான் கற்பனே செய்துகொள்ள முடியுமே தவிர, வெறும் ஒப்பனேக் கலேஞனுல் அதனே முற்குக உணர முடியாது. தயாரிப்பாளனின் உத்தரவின்படியே ஒப்பனே யாளன் வேடம் அமைக்கவேண்டும். அதனுற்ருன், எவ்வெப் பாத் திரத்திற்கு எவ்வெவ்வொப்பினே அமையவேண்டுமென்ற அறிவு தயாரிப்பாளனுக்குத் தேவைப்படுகிறது.
ஒரு நாடகத்தில் நடிப்புத் தான் முக்கியம். அதற்கு உடை பலங்காரம், மேடையலங்காரம், ஒப்பனே ஆகியன ஒத்தாசையளிக் கத்தக்கனவாயமையவேண்டும். கடிப்பென்பது, கதையின் தன்மை யையும், பாத்திரங்களின் குணசித்திரங்களேயும் மெய்ப்பாட்டின் மூலமும் உணர்ச்சிப் பிரதிபலிப்பின் மூலமும், வார்த்தைகள் மூல மும் வெளிக்காட்டி, குறித்த ஒரு சம்பவம் அக்கணம் உண்மையி லேயே நிகழ்கிறது என்ற ஒரு மயக்க உணர்வை மக்கள் மனத் தில் ஏற்படுத்தத்தக்க செயற்பாடாகும். ஆனுல் கடிகன் உணர்ச்சி வசப்பட்டுத் தள்னே மறந்து தானே அப்பாத்திரமாக மாறிவிடக் கூடாது. மக்கள் மனத்தில் அவனே அப்பாத்திரமாக விளங்கு கிருன் என்ற மயக்க உணர்ச்சியை உண்டாக்கத்தக்கதாக நடிப்பு அமையவேண்டுமே தவிர, நடிகன் தன் கீன மறந்து நடிக்கக்கூடாது. தன்னே மறந்தநில ஏற்பட்டால் நடிப்புக்குப் பங்கம் விக்ாயும். நடிப்பின்போது ஒரு சிறருற்றைக் கடந்து செல்லுங் கட்டத்தை அவ்விடத்தில் ஆறு இல்லாமலே நடிப்புத் திறமையாற் செய்து காட்டலாம். ஆணுல், அக் காட்சி முழுவதிலும், குறித்த ஆறு
ஓடுவதாக ஒருமுறை கற்பனே செய்து காட்டிய இடத்தில், ஒவ்வொரு
முறையும் நடிகர் செல்லும்போது ஆற்றில் நடப்பதுபோலவே செல்ல
வேண்டும்; அல்லது அவ்விடத்தை விட்டு வேறிடத்தில் வேறுவின்
l
 

மேடைநாடகத் தயாரிப்பு
நடிக்கவேண்டும். ஒரு பெருங் கல்கில எடுத்து எறிகிற கட்ட שחםL மாயினும், அவ்விடத்திற் கல் இல்லாமலே, மக்கள் மனத்திற் டாரிய கல்லெறியும் உணர்ச்சியை ஏற்படுத்தலாம். அதுதான் நடிப்பு.
。 திரைப் பட நடிப்புக்கும் மேடை நடிப்புக்கும் அதிக வித்தி
'யாசமுண்டு. பல இளைஞர்கள் திரைப்பட நடிப்பிக்னப் பார்த்து விட்டு, மேடையிலும் அப்படியே நடிக்க ஆசைப்படுகிறர்கள். மேடை நடிப்புக்குச் சில பண்புகள், வழக்கங்கள், மரபுகள் alଞT{}, நடிகர்கள் மேடைக்கு வருவதற்கும், வெளியே செல்வதற்கும், ஒரு ஒழுங்குமுறையிருப்பதுபோலவே, அவர்கள் மேடையில் நடப்பதற் கும், நிற்பதற்கும், திரும்புவதற்கும் பேசுவதற்கும் சில ஒழுங்கு முறைகள் உள.
கொலேக்காட்சி விரசமான செயல்கள் போன்றன மேடை நாட கங்களிலே தவிர்க்கப்படவேண்டும் என்பது, நாடக அறிஞர்கள் பலகாலமாகக் கைக்கொண்டொழுகும் சம்பிரதாயமாகும். அவ் வாறே, திரைப்பட உத்திகளே மேடை நாடகத்திற்கையாளும் முறை களும் தவிர்க்கப்படவேண்டும்.
நாடகம் சிறந்து விளங்குவதற்கு ஒளியமைப்புப் பெரிதும் உதவுகின்றது. இக்கால நாடகத்துக்குமட்டுமன்றி, அக்காலக் கூத் துக்கும் ஒளியமைப்பு எவ்வாறிருக்க வேண்டுமென விதி வகுத் திருக்கிருர்கள். சிலப்பதிகாரத்து அரங்கேற்று கா  ைகி í7 (F Eð, தூனிழற் புறப்படமான் விளக்கெடுத்து" என்று அரங்க ஒளியமைப் புப்பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அரங்கிலேயுள்ள தூண்களின் நிழல் அரங்கிலும், நடிகர்மீதும், சபையோர் மேலும் விழாதவாறு விளக்குகள் அமைக்கப்படவேண்டுமென க் கண்டிருக்கிருர்கள் அற்றைநாள் நாடகாசான்கள். அந்த உண்மை இக்காலத்துக்கும் பொருக்தும்.
மேடை நாடகங்களுக்கு இப்பொழுதெல்லாம் ஒளியமைப்பு, மின் விளக்குகளாலேயே செய்யப்படுகின்றது. மின் விளக்குகளுள் ஒரும், கடுங்கதிர்ச் Gros (spot LIGHTS) sat ig5 (at 56 யமைப்புக்கு ஏற்றன. அவ்விளக்குகள் மே  ைடக் கு முற்புற மாகவும், ஒளியானது மேடைக்கு வெளியே மேலிருந்து மேடையை நோக்கிக் கீழேவந்து மேடையில் விழத்தக்கதாகவும், (FDGDLu76) எல்லா இடங்களிலும் ஒளி ஒரே அளவினதாகப் பரவக் கூடியதாக வும் அமைக்கப்படல்வேண்டும். அவ்வாறமைத்தால் மேடையில் நிழல்விழக் காரணமிராது. மேடையில் நிழல் விழும்படியாக ஒளி

Page 64
22 செந்தமிழ்த் தேன்
யமைப்பிருக்கக் கூடாது. ஒளியை ஏற்றவும் இறக்கவுந்தக்க தணி கருவியைக் (DIMMER) கொண்டு காட்சிகளின் தன்மைக்கேற்றவாறு ஒளியின் செறிவைக் கூட்டியோ, குறைத்தோ கொள்ளவேண்டும்.
ஒளியமைப்பு ஒப்பனைக்கேற்றவாறு அமையவேண்டும்; அல் லது ஒப்பனை ஒளியமைப்புக்கு ஏற்றவாறு அமையவேண்டும். வேருேர் அறையிலே வேறுவித ஒளியிலிருந்து ஒப்பனை செய்துவிட்டு மேடையில் கடிகன் வந்து நிற்கும்போது அந்த மேடை ஒளியமைப் புக்கு அவ்வொப்பனே விட்டுக்கொடுப்பதைப் பலி தயாரிப்பாளர் கள் கவனிப்பதில்லை. எனவேதான், மேடைக்குரிய ஒளியமைப் புடனேயே, ஒப்பனை ஒத்திகைகளும் நடத்தப்படல்வேண்டும்.
நல்ல நாடகத் தயாரிப்பாளராக விளங்க விரும்பும் எவரும். இத்தனை அம்சங்களையும் ஓரளவாவது தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். இவ்வொவ்வொரு துறையிலும், தனி நூல்கள் எத் தனேயோ ஆங்கிலத்திலிருக்கின்றன. அவற்றைப் படித்துத் தயா ரிப்புமுறைகளைஏட்டுப்படிப்பளவிலாவது தெரிந்துகொண்டு 5ாடகக் தயாரிக்கத் தலைப்பட்டால், நமது சமூகத்தில் நல்ல நாடகத் தயா ரிப்பாளர்கள் பலர் விரைவிலே தோன்றிவிடுவார்கள். அப்பொழுது நமது பழம்பெருங் கலையாகிய நாடகம் மீண்டும் உயர்வடைந்து, முத்தமிழை முழுமைபெறச் செய்து, எம் சமூகத்தை உய்விக்கும்.
ལྷོ་


Page 65


Page 66