கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிந்தனை வளம்

Page 1

t

Page 2


Page 3

பேரன்புக்குரிய
பேராசிரியர் மு. வ. அவர்களுக்கு
இந்நூல்
காணிக்கையாகும்

Page 4

சிந்தனை வளம்
கலாநிதி ஆ. கந்தையா
எம். ஏ. (சென்னை), பிஎச். டி. (இலண்டன்)
சிரேட்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கல்விச் சேவைக் குழு உறுப்பினர்,
கல்வி அமைச்சு
1985

Page 5
உரிமை பதிவு முதற் பதிப்பு: சனவரி 1985. விற்பனை உரிமை : ஆசிரியருக்குரியது. விலை : ரூபா 20/- v,
Copyright reserved
Chintanai Valam by Dr. A. Kandiah Wم• First Edition: January 1985
Printed at Thirumakal Press, Chunnakam.

முனனுரை
காலத்துக்குக்காலம் சிந்தனையிலே எழுகின்ற கருத் துக்கள் காலக் கழிவாலும் கவனக் குறைவாலும் மறைந்து விடுதலுண்டு. எனினும், அவை மனத்திரை மறைவிலே மங்கிய நிலையிற் புகையுண்ட ஓவியங்கள் போல நிற்கும். ஆணுல், அவற்றுட்சில முற்ருகவே மறைந்து விடுவதுண்டு. வேறு சில கன்மேல் எழுத்துப்போல என்றுமே நிலைத்து நிற்கும்.
காலத்துக்குக்காலம் எனது சிந்தனையிலே எழுந்து நிலை பெற்ற சில கருத்துக்கள் கட்டுரைவடிவத்தைப் பெற்றுள் ளன. அவற்றைச் “சிந்தனை வளம்" என்ற பெயருடன் நூல் வடிவில் வெளியிடத் துணிந்தேன்.
ஆரம்ப பாடசாலையில் மாணவனுய் இருந்த காலத்தி விருந்தே நவராத்திரி விழாவிற் கலந்துகொள்ளுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கல்லூரியிலே மாணவனுக இருந்தபோதும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொழும்பு இந்துக் கல்லூரியிலே ஆசிரியணுய்ப் பணி செய்தபோதும் நவராத்திரி விழாவை ஒழுங்கு செய்து நடாத்துகின்ற பொறுப்பு என்னைச் சார்ந்ததாய் இருந்தது. நவராத்திரியின் தத்துவத்தை மாணவர் தெரிந்துகொள்ளு வதற்கும் சமய உணர்வினை அவர்களிடத்தில் ஏற்படுத்து வதற்கும் நவராத்திரி விழா பேருதவியாய் அமைந்தது. நல்லமுறையிலே நவராத்திரி விழா அமைந்தமையைக் கண் ணுற்ற ஆசிரியர்கள் பலர் என்னைப் பாராட்டினர்; மான வர்கள் மதிப்பளித்து மகிழ்ந்தனர். எனினும், "சமயத்தைப் பயன்படுத்திப் புகழைத் தேடுகின்ருய்' என்று நண்பர் ஒருவர் என்மீது பகிரங்கமாகப் பழிசுமத்தியமை இன்றும் எனது நினைவில் இருக்கின்றது. அக்காலத்திலே சிந்தனை யிலே எழுந்த எண்ண அல்கள் இன்று "ஒன்பது இரவுகள் என்ற கட்டுரையாக இந்த நூலிலே இடம்பெறுகின்றது.
பாரம்பரிய பல்கலைக்கழகத்திலிருந்து 1981ஆம் ஆண்டு திறந்த பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் பெற்றேன்.

Page 6
vi
"தொலைக் கல்வி முறைமை" பற்றிப் படிப்பதற்கும், ஆய்வு மேற்கொள்வதற்கும் இந்த இடமாற்றம் உதவியது. கடந்த செத்தெம்பர் மாதத்திற் பாங்கொக்கிலும், அவுஸ்திரேலியா விலும் நடந்த தொலைக் கல்வி பற்றிய கருத்தரங்குகளிலே கலந்துகொள்வதற்கான நல்வாய்ப்பை உயர் கல்வி அமைச்சு எனக்கு அளித்தது. பாங்கொக்கில் நடந்த கருத்தரங்கிலே *இலங்கைத் திறத்த பல்கலைக்கழகமும் தொலைக் கல்வி முறை யும்" பற்றி நான் நிகழ்த்திய உரையை மாற்றியமைத்துப் "பயனுள்ள திருப்பம்" என்ற தலைப்பிலே இந்நூலிற் சேர்த் துள்ளேன்.
"தமிழ் நலன்" என்ற திங்கள் இதழைத் தகவல் திணைக் களம் வெளியிட்டு வருகின்றது. "காதற் காட்சிகள்" என்ற தலைப்பிலே நான் எழுதிய சிறிய கட்டுரைகள் சில இவ்வித ழில் வெளிவந்தன. அவற்றுள் மூன்று காட்சிகளைச் சேர்த்துக் ‘காதலர் வாழ்வு" என்ற தலைப்பிலே தந்துள்ளேன். இவ் விரண்டு அடிகளிலே சொற் சித்திரங்களாகப் பாலைக் கலி யிலே தீட்டப்பட்டுள்ள காட்சிகளுக்கு விரிவுரையாய் அமை கின்றது "காதலர் வாழ்வு’.
"சிந்திக்க வேண்டுகிருேம்" என்ற தலைப்பிலே "தமிழ் நலன்" இதழ்களில் நான் எழுதிய நான்கு ஆசிரியர் தலையங் கங்களைச் சேர்த்து "வாழ்வும் வளமும்’ என்ற தலைப்பிலே தந்துள்ளேன். அவை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டிய கருத் துக்களைக் கொண்டவை. எதிர்கால நல்வாழ்வுக்கு மேற் கொள்ளவேண்டிய கருத்துக்கள் ஆகையால் "வாழ்வும் வளமும்" என்று பெயரிட்டுள்ளேன்.
1981ஆம் ஆண்டு கல்வி வெள்ளை அறிக்கையைத் தமி ழாக்கஞ் செய்கின்ற பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் full-gil. குறுகிய காலத்தில் விரைவாய் அப்பணியை முடிக்கவேண்டியிருந்தது, கல்வி வெளியீட்டுத் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. வி. பேரம்பலம், அரசகருமத் திணைக் களத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளர் திரு. க. சிவராச சிங்கம், கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. கோ. கோணேசபிள்ளை ஆகியோர் கல்வி வெள்ளை அறிக்கையைத்

vii
தமிழாக்கஞ் செய்துதவ முன்வந்தனர். இப்பணிக்கு இரவு பக லாக எனக்கு உதவியவர் திரு கோணேசபிள்ளை அவர்க ளாவர். தமிழாக்கம் வெளிவந்ததும் கொத்தணிப் பாட சாலை முறைமை பற்றியும் "கொத்தணி என்ற சொல்லாக்கம் பற்றியும் பகிரங்க விவாதங்களும் உரையாடல்களும் நடை பெற்றன. அச்சூழ்நிலையிலே ‘வீரகேசரி"யிலே எழுதிய கட் டுரையே "கொத்தணி முறைமை" ஆகும்.
பொது அறிவு மாணவர் மத்தியில் மந்தநிலையில் உள் ளது என்று பலர் குறைகூறுகின்றனர். இக் குறைபாட்டைப் போக்குவதற்குச் சிந்தனையிலெழுந்த எண்ண அலைகளை "வளரும் பயிர் " என்ற தலைப்பிலே கட்டுரையாய் எழுதி யுள்ளேன்.
1983ஆம் ஆண்டுச் சுதந்திர தினச் சிறப்பிதழில் எழுதிய கட்டுரையை "முடியாட்சியும் குடியாட்சியும்" என்ற தலைப். பிலே தந்துள்ளேன்.
இலங்கை வானெலியிற் பேசியது - "கூப்பிய கரங்கள்".
அனைத்து வயதுவந்தோர் வாக்குரிமை பெற்ற ஐம்ப தாண்டு நிறைவையொட்டித் தகவல் திணைக்களம் வெளி யிட்ட சிறப்பிதழிலே "கலைவளர்ச்சியிலே ஒரு திருப்புமுனை" என்ற கட்டுரை இடம்பெற்றது. இதிலே இடம்பெறும் சில கருத்துக்கள் சிலருக்கு ஒவ்வாதவை. கலைஞர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன என்பதை நாம் அறிவோம். கருத்துக்கள் வேறுபடும்போது கருத்து மோதல் களும் ஏற்படுதல் இயல்பாகும்.
தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றிய பெரியார்களை, அடிக்கடி நினைவுகூரவேண்டியது அவசியமாகும். அவர்களின் பணிகளை மட்டுமன்று, அவர்தம் உயர்ந்த பண்புகளையும் போற்றல் வேண்டும். அவ்வாறு செய்வது எதிர்காலத்தில் அறிஞர்களையும் பெரியோர்களையும்இளஞ் சந்ததியினரிடையே உருவாக்க வழிசெய்வதாக அமையும். எனவே தமிழுக்குப் பணியாற்றிய டாக்டர் சாமிநாதையர் அவர்களைப்பற்றிய கருத்துக்களை, "என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே"

Page 7
viii
என்ற தலைப்பிலும், சைவசமயத்துக்குத் தொண்டாற்றிய பெரியார்களை "சைவம் வளர்த்த ஈழத்து அறிஞர்கள்" என்ற தலைப்பிலும் கட்டுரைகளாக வரைந்துள்ளேன்.
இந்நூலினத் தமிழ்கூறு நல்லுலகம் ஏற்று ஆதரிக்கு மென்னும் நம்பிக்கையுடையேன்.
எனது "மலரும் மணமும்" என்ற நூலுக்குப் பேரா சிரியர் டாக்டர் மு. வ. அவர்கள் அணிந்துரை தந்து சிறப் பித்தார். அடுத்து வெளிவந்த "இலக்கிய வளம்" என்ற நூலுக்குப் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அணிந்துரை வழங்கினர். அதன்பின்னர் வெளிவந்த "உள்ளத் தனையது உயர்வு" என்ற நூலுக்குத் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழக விரிதமிழ் இயக்குநர் டாக்டர் தி. முருகரத் தினம் அவர்கள் அணிந்துரை எழுதினர்கள். இவர்கள் மூவரும் தமிழகத்துத் தமிழ் அறிஞர்கள். ‘சிந்தனை வளம்" என்ற இந்த நூலுக்கு இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர் பண் டிதமணி அவர்களின் அணிந்துரை அழகு செய்வது எனக் குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. பண்டிதமணி அவுர்கள் பிறந்த ஊரைச் சேர்ந்தவன் யான். ஆகவே, எனது ஊரைச் சேர்ந்த பேரறிஞர் ஒருவர் ‘சிந்தனை வளம்" என்ற இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். முதுமையான காலத் திலும் தமது கஷ்டங்களைப் பொருட்படுத்தாது இவ்வணிந் துரையை வழங்கியதற்கு அப் பேரறிஞருக்கு யான் என்றுங் கடப்பாடுடையேன்.
இக் கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகளை வாசித்துத் திருத்தங்கள் செய்து உதவிகள்புரிந்த என் மாணவன் பேரா தனைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் கலாநிதி எஸ். அருணுசலம் அவர்களுக்கும், ஒப்புநோக்கி வேண்டிய திருத்தங் கள் செய்துதவிய அன்புக்குரிய திரு. வி. விக்டோறியா அவர்க ளுக்கும் எனது உளங்கனிந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
"நடனுலயம்" கலாநிதி ஆ. கந்தையா 4, 40ஆவது ஒழுங்கை,
கொழும்பு - 6.
H984 صس-3--19
தொலைபேசி இலக்கம் 82770

அணிந்துரை
கலாநிதி திரு. ஆ. கந்தையா அவர்கள் பல்வேறு காலங் களில், பல்வேறு இடங்களில், கல்விமான்கள் மத்தியில்,
செய்ய வேண்டிய கருமங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக் கும் சமயங்களில், மனத்திலெழுந்து உருப்பெற்றவையே "சிந்தனை வளம்" என்கின்ற இக்கட்டுரைத் தொகுப்பு நூல்"
கட்டுரைகளின் தலையங்கங்களே,கட்டுரைகளின் அருமை, பெருமை, ஆழம் என்றின்னுேரன்னவற்றை உய்த்துரைப் பவை அன்றிக் கட்டுரைகளை வாசிக்கவும் துரண்டுபவை.
சிந்தனையாளர்கள் தாம் தாம் எடுத்துக்கொண்ட சிந்த னையை ஒப்பிட்டு மேன்மேல் வளர்த்துக்கொள்ள வாய்ப்பான ஒரு நல்விருந்து, " சிந்தனை வளம்".
சிந்தனை வளம் என்ற இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் படிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டிக் கல்வி உலகில் நல்ல முடிவுகளைக் காணக்கூடிய அளவுக்கு வழி செய்வனவாய் அமைந்துள்ளன.
"சைவம் வளர்த்த ஈழத்து அறிஞர்கள்" என்ற கட்டுரை யின் மூலம், ஈழத்தின் சமய, இலக்கியப் பணியின் விரிவை எடுத்துக் காட்டுகின்ற நூலாசிரியர், பசுக்கொலைக்கஞ்சிப் பரதேசம் சென்ற திருநெல்வேலி ஞானப்பிரகாசர் தொடங்கி, மட்டக்களப்புச் சைவப்புலவர் கா. அருணுசலதேசிகர் வரை அவரவர்கள் செய்த சைவத் தமிழ்த் தொண்டினை நன்கு ஆராய்ந்துள்ளார். நாவலர் பெருமான், நீர்வேலிச் சங்கர பண்டிதர், புலோலி நா. கதிரைவேற்பிள்? இவர்களது
I

Page 8
Χ
சரித்திரங்கள் சைவத் தமிழ்ச் சரித்திரந்தான் என்பதனைக் குறித்த கட்டுரையின் மூலம் நிறுவியுள்ளார்கள் ஆசிரியர் அவர்கள்.
676 நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே " என்ற கட்டுரை மிகவும் ஆராய்ச்சிக்குரியது.
மஹாமஹோபாத்தியாயர் உ. வே. சாமிநாதையர் அவர்களின் பதிப்புக்கள் பெரிதும் பாராட்டுக்குரியவை.
சிந்தனை வளத்தையும், அதனை உபகரித்த கலாநிதி அவர்களையும் பெரிதும்
பாராட்டுவோமாக !
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், 26-04-84.

பதிப்புரை
கலாநிதி ஆ. கந்தையா அவர்கள் சென்னைப் பச்சையப் 11ன் கல்லூரியில் டாக்டர் மு. வ. அவர்களின் நன் மாணவ (ணுகத் திகழ்ந்த காரணத்தினுலே தமிழ் வளர்க்கும் பணியில் இன்றும் நன்கு ஈடுபட்டிருப்பது மிகவும் வரவேற்கப்படக் கூடியதாகும். தாமே " திருக்கேதீஸ்வரம் ', "மலரும் மணமும்', "இலக்கியவளம்', 'உள்ளத்தனையது உயர்வு", "கற்பனை வளம்" ஆகிய பல இலக்கியப் படைப்புக்களை ஆக்கி சங்க இலக்கியங்களையும் சமய உணர்வுகளையும் இளைய சந்ததியினருக்கு அறிமுகஞ் செய்து அவர்களையும் இத் துறைகளில் ஈர்க்கவைக்கும் பணி மிகவும் வரவேற்கவேண்டிய தொன்ருகும்.
தமிழ்ப்பற்றும் இலக்கிய ஆர்வமும் கொண்டு விளங்கும் கலாநிதி கந்தையா அவர்களின் "சிந்தனை வளம்" என்னும் இந்நூலை அச்சேற்றுவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகிருேம். தமிழ் வாசகர்கள் இந்நூலைப் பயின்று இலக்கிய இன்பம் பருகுவதோடு இவ்வாசிரியரின் ஏனைய நூல்களுக்கு அளித்த ஆதரவைப்போன்று இந்நூலுக்கும் வழங்குமாறும் வேண்டு கின்ருேம்.
uậPầủur6ềứu uĩ

Page 9
உள்ளே. . . . .
பக்கம் 1. சைவம் வளர்த்த ஈழத்து அறிஞர்கள் 1. 2. வளரும் பயிர் - a r v w 17 3. வாழ்வும் வளமும் . a o 27 4. பயனுள்ள திருப்பம் · · · · u 38 5. காதலர் வாழ்வு as 48 6. கலைவளர்ச்சியிலே ஒரு திருப்புமுனை 56 7. கொத்தணி முறைமை i 1N v 65 3. ஒன்பது இரவுகள் − 77 9. என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே 88 10. கூப்பிய கரங்கள் 98 11. முடியாட்சியும் குடியாட்சியும் 105

1. சைவம் வளர்த்த ஈழத்து அறிஞர்கள்
சைவசமய வளர்ச்சிக்கு அயராது உழைத்த சைவப் பெருமக்கள் பலரை ஈன்றெடுத்த பெருமை ஈழத்துக்கு உண்டு. பண்டைக்காலத்தில் ஈழத்தை ஆண்ட இராவணனே சிவபக்தனுய்த் திகழ்ந்தான். ** இராவணன் மேலது நீறு ’ என்று அவனைத் தேவாரம் புகழ்ந்து பேசுகின்றது. எனவே, வாழை யடி வாழை யென ஈழத்துச் சைவப்பெருமக்கள் சைவசமய உண்மைகளை உணர்ந்து வாழ்ந்ததோடு, அதன் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அல்லும் பகலும் அயராது உழைத்துள்ளனர். ஈழத்துச் சைவப்பெரியார்கள் பலர் கடல் கடந்து சென்று தமிழகத்திலும் சைவப்பணிகள் பல புரிந்தார்கள் என்ருல் அவர்களின் சமய ஆர்வத்தை எங்ங்னம் சொற்களாலே தீட்டுவது?
ஈழத்துச் சைவப்பெரியார்கள் பலர் தமது வாழ் வின் பெரும் பகுதியைச் சமயத் தொண்டிற்கே செலவு செய்தனர். இந்தியாவுக்குச் சென்று ஆதீ னங்களில், ஆண்டுகள் பல தங்கியிருந்து சைவ சமய உண்மைகளை ஆய்ந்து உணர்ந்தனர் சிலர்; துறவறம் பூண்டு ‘என் கடன் பணி செய்து கிடப் பதே" என்ற உள்ளத்தோடு சைவசமய வளர்ச்சிக்கு ஈழத்திலும் தமிழகத்திலும் அரும் பணிகள் புரிந் தனர் வேறு சிலர். சைவசமய நூல்களை அச்சிட்டு வெளியிட்டும், நுண்ணறிவால் நுணுகிக் கண்ட சைவசமய உண்மைகளைச் சொற்பொழிவுகளாக

Page 10
- 2 -
நிகழ்த்தியும், நுட்பமும் திட்பமும் அமைந்த உரை களைச் சைவ நூல்களுக்கு எழுதி எளிதாக்கியும், ஆண்டுகள் பல ஆய்ந்து கண்ட உண்மைகளை நூல்களாய் வெளியிட்டும் பணிகள் பல புரிந்துள் ளனர் இன்னும் சிலர்.
சைவ சமயத்தை வளர்க்க உழைத்ததோடு இப் பெரியார்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உறுதுணையாய் இருந்தனர். சைவம் வளர்ந்தபோது தமிழும் வளர்ந்தது. சைவத்தின் சீரும் சிறப்பும் தமிழன்னையின் எழிலை மேலும் மிகுதிப்படுத்தின. எனவே, ஈழத்துச் சைவப்பெரி யார்கள் சிறப்பாகச் சைவசமயத்திற்கும் பொது வாகத் தமிழ்மொழிக்கும் ஆற்றிய தொண்டுகள் சைவசமய வரலாற்றிலே பொன்னெழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டியவையாகும்,
ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணம் திருநெல் வேலியைச் சேர்ந்தவர். தமிழுக்கும் சைவத்துக்கும் இவர் செய்த தொண்டுகள் பல. போர்த்துக்கேய ருடைய கொடுமைகளைப் பொறுக்காதவராய் இந்தி யாவுக்குச் சென்ருர், ஈழத்திலே செய்த சைவப் பணியைத் தொடர்ந்து தமிழகத்திலும் மேற்கொண் டார். வடமொழிப் புலமையும் தென்மொழி ஆற்ற லும் பெற்றுத் திகழ்ந்த இவர், துறவு பூண்டு திரு வண்ணுமலையிலே தங்கியிருந்தார். சைவசித்தாந்த ஞான நூல்களையும், சைவாகமங்களையும் ஆராய்ந் தார். சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, சிவ யோக சாரம் முதலிய வடமொழி நூல்களுக்கு இவர் அரிய விரிவுரைகளை எழுதியுள்ளார். சிவஞான

-- 3 -- .
சித்தியாருக்கு இவர் எழுதிய உரை இவரின் சைவசித்தாந்த அறிவின் நுட்டபத்தை இனிது புலப்படுத்துவதாகும். கெளட தேசத்தில் இவர் தங்கி யிருந்தபோது ஒரு பிராமணத் துறவியிடம் தருக் கம், வியாகரணம் முதலியவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தார். சிதம்பரத்திலே நடராச தரிசனம் செய்து கொண்டிருந்த காலத்திலே அங்கு ஒரு திருக் குளத்தை அமைத்தார். அத்திருக்குளத்தைச் சிதம் பரத்திலே இன்றும் காணலாம்.
நாவலர் பெருமானின் திருவவதாரம் ஈழத்துச் சைவ சமய வரலாற்றில் மட்டுமன்றித் தமிழகத் தில் சைவ சமய வரலாற்றிலுமே மிகவும் முக்கியம் வாய்ந்த தொன்ருகும். உணர்ச்சியின்றி, உள்ளத் தில் உறுதியின்றி வாழ்ந்த ஈழத்துச் சைவப்பெரு மக்களுக்கு ஊக்கமும் உறுதியும் கொடுத்து விழித் தெழச் செய்தவர் நாவலர். இவர் தமிழ் வளர்ச் சிக்கும் சைவசமய எழுச்சிக்கும் அயராது உழைத் தார். போலி ஒழுக்கம் நாவலர் பெருமானுக்குப் பெரும் வெறுப்பைக் கொடுத்தது. போலி ஒழுக் கத்தை ஒழித்துச் சமூகத்தைச் சீர்ப்படுத்த வேண்டும் என்று அவர் உள்ளம் விழைந்தது. எனவே, போலி வாழ்வை வெறுத்தார்; போலி ஒழுக் கத்தைத் துறந்தார்; போலி மார்க்கத்தைக் கடிந்தார்.
சைவ சமயத்திற்கு இவர் செய்த தொண்டுகள் பல. தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் அச்சகங்களை நிறுவிப் பல சைவ சமய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். சைவப் பிள்ளைகள் படிப்பதற்குத் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் சைவப் பாட

Page 11
- 4 ܢܘܣ
சாலைகளை நிறுவினர். சமயச் சொற்பொழிவுகளாற் சைவசமயத்தின் மாண்பை மக்களுக்கு எடுத்துரைத் தார். யாவரும் எளிதிற் புரிந்துகொள்ளக் கூடிய தாய்க் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளை யாடற் புராணம் என்பவற்றை உரைநடையில் எழுதி உதவினுர். எளிமையும் புதுமையும் கம்பீர முங் கலந்த இவரது உரைநடை இன்றும் உயர்ந்து திகழ்கின்றது. இதனுலன்றே ‘வசனநடை கைவந்த வல்லாளர்” என்று தமிழுலகம் இவரைப் போற்று கின்றது. நாவேந்தராகவும் பேணுமன்னராகவும் விளங்கிய நாவலரால் ஈழத்திலும் தமிழகத்திலும் சைவம் உயிர்பெற்று வாழ்ந்தது. இவர் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய பணிகளை,
* கல்லைாகக ராறுமுக காவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழேங்கே? சுருதியேங்கே? - எல்லவரும் ஏத்துபுரா ஞகமங்க ளேங்கேப்ர சங்கமேங்கே? ஆத்தனறி வெங்கே அறை” என்று சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் போற் றிப் புகழ்ந்தார்.
சென்னையில் ஒர் அச்சகத்தை நிறுவிப் பல சைவசமய நூல்களையும், திருக்குறள் பரிமேலழக ருரை, திருக்கோவையாருரை, சேஞவரையம் தொல்காப்பிய குத்திர விருத்தி, பிரயோக விவேகம், நன்னூல் விருத்தி, பாரதம், தருக்க சங்கிரகம் முதலாம் நூல்களையும் பிழையறப் பதிப்பித்து உத வினர்; சேக்கிழார் புராணத்தை உரைநடையிற் பத்திச் சுவை பெருக்கெடுக்குமாறு எழுதித் தமிழ்த் தாயின் அழகுக்கு மெருகூட்டினர். இவ்வாறு

--- 5 س
நாவலர்பெருமான் துைலும் வளர: இரரப்பகலாய் உழைத்தார். அவர் 7 சைவராகவே பிறந்தார்; சைவராகவே வாழ்ந்தார்; சைவராகவே இறைவ னடியையும் அடைந்தார். அவரின் உடையிலும் உணவிலும் சைவம் தவழ்ந்தது; சொல்லிலும் செயலிலும் சைவம் மிளிர்ந்தது; உடலிலும் உள் ளத்திலும் சைவம் உறைந்தது.
சங்கர பண்டிதர் சுன்னுகத்தில் பிறந்து நீர் வேலியில் வசித்துவந்தார். இவர் வடமொழியிலும் தென்மொழியிலும் நிரம்பிய புலமையுடையவராய்த் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்திலிருந்த சமஸ்கிருத பண்டிதர்களுள் இவர் தலைசிறந்து விளங்கினர். இவர் சமஸ்கிருதத்திலுள்ள ஆகம சாஸ்திரங்களி லும் தமிழிலுள்ள சித்தாந்த சாஸ்திரங்களிலும் வல் லவர். இவர் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பற்பல நூல்களை இயற்றியும், வடமொழி, தென்மொழி என் னும் இரு மொழிகளையும் வளர்த்ததோடு, சொற் பொழிவுகள் செய்து சைவசமயத்தையும் வளர்த்து வந்தார். சங்கரபண்டிதர் அவர்களும் நாவலர் அவர்களும் ஒரு காலத்தவர் என்பது பெரியபுராண வசனத்துக்குச் சங்கரபண்டிதர் அளித்த சிறப்புப் பாயிரத்தால் அறியக்கிடக்கிறது. இவருக்குப்பின் சிறந்த புலவராய் விளங்கிய சிவப்பிரகாச பண்டிதர் இவரின் புத்திரர் ஆவர்.
நாவலரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஈழத்தி லும் தமிழ் நாட்டிலும் சைவம் வளர்த்த பெரியார்கள் பலர். அவர்களுட் சபாபதி நாவலரும் ஒருவர். ஈழநாட்டிலும் தென்னகத்திலும் பல சைவப் பாட

Page 12
- 6 -
சாலைகளை நிறுவினர்; சைவச் சொற்பொழிவுகள் பல ஆற்றினர்; சைவசமய நூல்களைப் பிழையறப் பதிப்பித்து வெளியிட்டார். திருவாவடுதுறை ஆதீன வித்துவானுய் விளங்கிய இவருக்கு அவ்வாதீனம் 'நாவலர்’ என்ற பட்டத்தை அளித்தது. திராவிடப் பிரகாசிகை என்னும் நூலை இயற்றித் தமிழுல குக்கு அளித்தார். சதுர்வேத தாத்பரியம் என்னும் நூல் இவரால் இயற்றப்பட்டதாகும். இவர் வட மொழியிலும் தென்மொழியிலும் புலமை உள்ளவ ராய்த் திகழ்ந்தார். ஆங்கிலத்திலும் இவருக்கு நிறைந்த அறிவிருந்தது. சிதம்பரத்திலுள்ள நாவலர் வித்தியாசாலைக்கு இவர் தலைமை ஆசிரியராய் இருந்தார். இவர், பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய திராவிடப் பிரகாசிகை இவருக்கு இன் றும் தனிப் பெருமையை அளிக்கின்றது. இந் நூலே முதன்முதலிலே தமிழ் இலக்கிய வரலாற்றை எடுத்துரைத்தது.
நாவலர் காட்டிய வழியிலே நின்று சைவம் வளர்த்தவர்களுள் மட்டுவிலிற் பிறந்த சைவப் பெரியார் திரு. க. வேற்பிள்ளையும் ஒருவராவர். இவர் கோயில்களிலும், மடங்களிலும், வீடுகளிலும் கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவற்றைப் படித்துப் பொருள் சொல்லி மக்களை மகிழ்வித்தார். இயற்கையாய் அமைந்த இனிய குரல் இவருக்கிருந்தது. எனவே, இசையோடு பாடிப் பொருள் சொன்னபோது மக்கள் தம்மை மறந்து அதனைக் கேட்டு மகிழ்ந் தனர். சொல்லின்பமும் பொருளின்பமும் தோன்ற விரிவுரைகளை நிகழ்த்தியபோது செவிமடுத்தோர்

- 7 -
யாழிசையோ, அன்றிக் குழலிசையோ என்று வியந் தனர். வேற்பிள்ளை அவர்கள் சிதம்பரத்திலுள்ள நாவலர் வித்தியாசாலையிற் பல ஆண்டுகள் ஆசிரிய ராகத் தொண்டாற்றியுள்ளார். இவர் திருவாதவூ ரடிகள் புராணத்திற்கு அரியதோர் உரையை எழுதியுள்ளார். இவரின் உரையின் சிறப்பு இவ ருக்கு உரையாசிரியர்” என்னும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
ஒல்லாந்தர் காலத்திலே சைவம் சீரழிந்தது. ஒல்லாந்தர் சைவ சமய முறைகளைத் தூற்றினர்; சைவ சமயக் கிரியைகளை எள்ளி நகையாடினர். அதனுற் சமய உணர்வு மக்களிடையே குறைவ தாயிற்று. இதனைக் கண்டு கலங்கிய சைவர்கள் பலர். அவர்களிற் சிலர் அந்நியராட்சியை வெறுத் தது மட்டுமன்றிக் கட்டு மரங்களிலே தமிழகஞ் சென்று சிவாலயங்களைத் தரிசித்துக் கண்ணிர் விட்டு மீண்டனர். அவ்வாறு அங்கு சென்றவர் களுள் ஒரு சிலர் அங்கேயே தங்கியும் விட்டனர். அவ்வாறு தங்கிய பெரியார்களுள் வரணியூர்த் தில்லைநாதர் என்பவரும் ஒருவர். அவர் திருவண்ணு மலைக்குச் சென்று ஞானப்பிரகாச மடத்திலே தங் கினர். காவி உடையணிந்து சிவானுபூதிமானுய்த் திகழ்ந்த இவர், சைவசமய நூல்களை ஐயந்திரிபறக் கற்ருர், வேதாரணியத்திலுள்ள சிவாலயத் திருப் பணியை மேற்கொண்டார். இவ்வாறு வரணியூர்த் தில்லைநாதர் சைவத்திற்கு அருந்தொண்டுகள் பல ஆற்றியுள்ளார்.

Page 13
சைவம் வளர்த்த ஈழத்துப் பெரியார்களுள்ளே திரு. கதிரைவேற்பிள்ளையும் ஒருவராவர். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலியைச் சேர்ந்தவர். சென்னையிலே தங்கியிருந்து அரும் பணிகள் பல புரிந்தவர். இராயப்பேட்டையில் ‘பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை? ஒன்றை நிறுவினுர், நாவன்மை படைத்த திரு. கதிரைவேற்பிள்ளை அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க மக்கள் திரள்திரளாகக் கூடுவர். திரு. வி. க. அவர்கள் கூட அவரின் சொற் பொழிவுத் திறனைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இவர் தொகுத்த சைவபூஷண சந்திரிகை, சுப்ரமண்ய பராக்கிரமம் என்னும் நூல்களால் இவரின் சமயத் திறனை நாம் நன்கு அறியமுடிகின்றது. ஆரணி நகர சமஸ்தான வித்துவானுய் இருந்த இவர், சைவ சித்தாந்த சரபம் என்னும் சிறப்புப் பெய ரையும் உடையவராய் விளங்கினுர், நாவாலும் பேணுவாலும் சைவம் வளர அரும் பணிகள் புரிந்த இவரைச் சைவ உலகம் என்றும் மறந்துவிடாது
சென்னைச் சைவசித்தாந்த சமாசத்திற்குத் தலைமைதாங்கிச் சிறப்புச் செய்த சைவப் பெரியார்க ளுள்ளே தா. பொன்னம்பலம்பிள்ளையும் ஒருவர். யாழ்ப்பாணத்திலே பிறந்த இவர், தென்னிந்தியாவி லுள்ள திருவனந்தபுரத்திலே உயர்தர உத்தியோ கம் வகித்தார். இவர் வரலாற்று ஆராய்ச்சியில் மிகவும் ஈடுபட்டு உழைத்தார். இவர் எழுதிய * வஞ்சிமாநகர் ’ என்னும் நூல் இவரின் ஆழ்ந்த ஆராய்ச்சித் திறனை இனிது புலப்படுத்துகின்றது. இவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை இவரின் மொழித்திறனையும், ஆராய்ச்சி நுட்பத் திறனையும்

- 9 -
நன்கு தெரிவிக்க வல்லனவாக அமைந்து விளங்கக் காண்கிருேம். சைவசமய நூல்களை ஐயந்திரிபறக் கற்ற திரு. பொன்னம்பலம்பிள்ளை அவர்கள் சைவ சமய உண்மைகளை உணர்ந்து வாழ்ந்தார்.
நல்லூரிலே கல்வியும் செல்வமும் நிறைந்த குடும்பத்திற் சிற். கைலாயபிள்ளை தோன்றினுர், அரசாங்க உத்தியோகத்திலே திறம்படக் கடமை யாற்றி இராசவாசல் முதலியார் என்னும் பட்டத் தைப் பெற்றர். இந்தியாவிலே சிலகாலம் வசித்துத் திருவாவடுதுறை ஆதீனத்தோடு தொடர்பு கொண் டிருந்தார். அவருடைய தமிழறிவையும் சமய அறி வையும் கண்ட ஆதீனத் தலைவர் இவருக்குப் பட்டுப் பீதாம்பரம் கொடுத்து மரியாதை செய் தனர். இவர் அகவற்பா இயற்றுவதிலும், அதை உரிய இசையோடு பாடுவதிலும் ஒப்பாரும் மிக்கா ரும் இல்லாது விளங்கினுர். இவர் வடமொழியி லும் ஆழ்ந்த அறிவுடையராய் விளங்கிச் சமஸ் கிருத சுலோகங்களைப் பிராமணரும் வியக்குமாறு ஒதுவார். இவர் தேவாரங்களைப் பண்ணுேடு பாடுவ திலும் வல்லவர். சேர் பொன். இராமநாதன், சேர் பொன். அருணுசலம் முதலியவர்களோடு நெருங்கிய தொடர்புடையவராய் வாழ்ந்து சமய சாத்திரங் களை அவர்கள் கற்பதற்கு உதவியாயிருந்தார். இவர் கொழும்பு விவேகானந்த சபையில் நெடுங் காலம் சமய சாத்திர வகுப்புக்களை நடாத்தினுர்,
அம்பலவாண நாவலர் யாழ்ப்பாணத்திலுள்ள வட்டுக்கோட்டையிற் பிறந்தார். தமிழ், வடமொழி ஆகிய இரண்டினையும் நன்கு பயின்றவர். ஈழத்

Page 14
- 10 -
திலும் தென் இந்தியாவிலும் சைவ பாடசாலைகளை நிறுவியும் சைவப் பிரசங்கங்கள் செய்தும் சைவ சமய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் அரும் பணிகள் பல புரிந்தார். ஆறுமுகநாவலரின் பாத சேகரர் என்ற சிறப்புப் பெயர் பூண்ட அம்பல வாண நாவலர், ஆரிய திராவிடப் பிரகாசிகை, பெரிய புராண பாடியம் என்னும் நூல்களை இயற்றி யுள்ளார். சமயத் துறையிலே பெரிதும் உழைத்த இவர், தம் வாழ்வின் பெரும் பகுதியை இந்தியாவிற் கழித்தார். உமாபதிசிவாசாரியார் இயற்றிய பெளவு கராகம விருத்தியைச் சிறந்த முகவுரையோடு பதிப்பித்தார். இவ்வாறு, இவர் தமிழுக்கும் சைவத் துக்கும் ஆற்றிய அரும்பணிகள் பல.
ஆறுமுகத்தம்பிரான், பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்களின் மாணவர். நாவலர் பெருமான் உணர்த்தி யருளிய புராண படனத் தொண்டின் பெருமையை உள்ளபடி உணர்ந்தவர் ஆறுமுகத் தம்பிரான் சுவா மிகள் என்று கூறின் அது மிகையாகாது. இவர் திருவண்ணுமலை ஆதீனத்தைச் சேர்ந்து, சைவ சித்தாந்த நூல்கள் சிலவற்றைக் கற்றுச் சைவ சம யத்தில் நுண்ணறிவுடையவராய் விளங்கினுர். இவர் பெரிய புராணத்திற்குச் செய்த திட்பமும், நுட்பமும் நிறைந்த உரை இவரின் அறிவின் ஆற்றலை இனிது புலப்படுத்துகின்றது. முதன்முதலிற் பெரிய புரா ணத்திற்குச் செறிவும் நுட்பமும் வாய்ந்த உரை ஒன்றினை எழுதியவர் இவரே. ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் பெரிய புராணத்திலே கொண்டிருந்த ஈடுபாட்டை இனிது தெளிவுற அவ்வுரை உணர்த்து கின்றது.

- 11 -
சபாரத்தின முதலியார் யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவிலைச் சேர்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்தி லும் புலமை நிறைந்து விளங்கினுர். சைவசமய வளர்ச்சிக்கு இவர் அரிய பல தொண்டுகள் செய் தார். இவர் ஆங்கிலத்தில் ‘இந்துமதத்தின் பிரதான அம்சங்கள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். அதனைக் கொண்டு முதலியார் அவர்களின் சமய அறிவின் ஆற்றலை நன்கு அறிய முடிகின்றது. சித்தாந்த தீபிகை’ என்னும் ஆங்கில வெளியீட் டுக்குப் பல சிறந்த ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி உதவியுள்ளார். இவர் தென்னிந்தியாவில் நடை பெற்ற சைவசித்தாந்த மகாசமாசத்திற்குத் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.
சுவாமிநாத பண்டிதர் யாழ்ப்பாணத்து நல்லூ ரைச் சேர்ந்தவர். தமிழகம் சென்று திருவாவடு துறை ஆதீனத்தோடு நெருங்கிய தொடர்புடைய வராய்ப் பல ஆண்டுகள் வாழ்ந்தார். தென் இந்தி யாவில் இவர் செல்லாத ஊர்களே இல்லை யென லாம். சென்றவிடம் எல்லாம் தமது சைவசமயச் சொற்பொழிவுகளாற் சைவப்பெருமக்களின் ஆழ்ந்த அன்பைப் பெற்றர். இவர் பல சைவசமய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். மாபாடியத்திற் சில பாகங்களை இவரே முதன்முதலில் அச்சிட்டவ ராவார். தேவார அடங்கன்முறையைத் திருத்த மாகவும் தெளிவாகவும் அச்சிட்டு வெளியிட்ட பெரு மையும் இவருக்கு உண்டு. நாவலரைப் போன்று இவருக்கும் பல பகைவர்கள் இருந்தனர். எனினும், தமது அறிவுத் திறனுலும் சொற்பொழிவு ஆற்ற

Page 15
- 12 -
லாலும் சென்றவிடம் எல்லாம் சிறப்பினைப் பெற் றர். இவர் திருச்செந்தூரில் ஒரு சைவபாடசாலையை நிறுவி நடாத்தி வந்தார்.
வடமொழியிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை நிறைந்த செந்திநாதையர் திருப்பரங்குன் றத்திலே பல ஆண்டுகள் தங்கியிருந்து சமயத் தொண்டாற்றியவர். இவர் இயற்றிய நீலகண்ட பாடிய மொழிபெயர்ப்புப் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றது. சிவஞானபோத வசனுலங்கார தீபம், தேவாரம், வேதாசாரம் முதலிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையாகும். சைவசமயத் திலே இவருக்கிருந்த ஆழ்ந்த அறிவை இவர் இயற்றிய நூல்களின் வாயிலாக நாம் கண்டு கொள்ள முடியும்.
மானிப்பாயிலே தோன்றிக் கொழும்பில் வழக் கறிஞராய் விளங்கிய திருவிளங்கம் அவர்கள் சைவ சித்தாந்த சாத்திர அறிவிற் சிறந்து விளங்கிய பெரு மகளுவார். சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர் போன்ற தமிழறிஞரின் உதவியோடு சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய சாத்திர நூல்களுக்குத் தெளிவான உரை எழுதினர். மேலும், சிறந்த முருக பத்தரான இவர், திருப்புகழுக்கும் கந்தரலங்காரத் துக்கும் உரையெழுதியுள்ளார். காலஞ்சென்ற கே. சி. நாதன், வட்டுக்கோட்டை வழக்கறிஞர் வே. நாகலிங்கம் முதலியோர் இவரிடமே சைவசமய சாத்திரங்களைக் கற்றனர்.
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் வண்ணுர் பண்ணையைச் சேர்ந்தவர். இலக்கணச்சாமி என்ற

- 13 -
பெயரும் இவருக்குண்டு. வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டிலும் இவருக்கு நிறைந்த புலமை இருந்தது. சைவசித்தாந்தத்திலே இவர் நிறைந்த அறிவு உள்ளவராக விளங்கினுர். பழனி ஈசான சிவாச்சாரியார், கோவை சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் என்போர் இவரிடம் சித் தாந்த பாடம் கேட்டவரெனில் இவரின் ஆற்றலைப் புலப்படுத்த வேறு சான்றுகள் வேண்டியதில்லை. சிவஞானமாபாடியத்தை ஆராய்ந்து முதன்முத லில் முழு நூலாக வெளியிட்ட பெருமையும் இவருக்குரியது. சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் எழுதிய பெரியபுராண உரைக்கும் இவர் பெரிதும் உதவியாய் இருந்தார். இவ்வாறு சைவசமயத்திற்குத் தொண்டுகள் பல புரிந்த இவர், துறவியாய்ச் சிதம்பரத்திலே பல ஆண்டுகள் தங்கி யிருந்தார்.
நாவலர் வழிநின்று சைவத்தை வளர்த்தவர் களுட் சைவப் பெரியார் சிவபாதசுந்தரஞர் முக் கியமானவர். இவர் செந்தமிழையும் ஆங்கிலத்தை யும் திறம்படக் கற்றுச் சித்தாந்த சாத்திர அறி விலே தலைசிறந்து விளங்கினுர். சுழிபுரம் விக்ரோறி யாக் கல்லூரியிலும் பரமேசுவரக் கல்லூரியிலும் அதிபராய்ப் பணியாற்றினுர், சைவபோதம், கந்த புராண விளக்கம் முதலிய வசன நூல்களை எழுதிய தோடு, திருவருட் பயனுக்கு ஒரு தெளிவான உரையையும் கண்டுள்ளார். சைவ சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்திலும் நூல் ஒன்றை எழுதியுள் ளார். திருக்கேதீச்சர புனருத்தாரண சபைக்குப் பல்லாண்டுகள் தலைவராயிருந்து அருந்தொண் டாற்றிய வராவர்.

Page 16
14
மட்டக்களப்பிலே பிறந்த விபுலானந்த அடி களார் தமிழ் வளர்ச்சிக்கும் சமய எழுச்சிக்கும் அயராது உழைத்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கு விளங்கிய இவர், அண்ணுமலேப் பல் கலைக்கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகவும் கீழைத் தேயக் கலையாராய்ச்சித் துறைத் தலைவராகவும் விளங்கினர். இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்து துறவறத்தை மேற்கொண்டார்; சைவ சமயத்தின் உண்மையை உணர்ந்து வாழ்ந்தார். இவர் கைலாசம் வரை யாத்திரை செய்து சமய வாழ்வு வாழ்ந்து தமிழ்த்தொண்டாற்றினர். சமயப் பணிகள் பல புரிந்தார். 1935ஆம் ஆண்டு திருவண்ணுமலேயில் நடந்த சைவ மாநாட்டுக்குத் தலேமை தாங்கினுர்,
சேர் பொன். இராமநாதன் அவர்களின் ஆஸ் தானக் கவிஞராகவும், இராமநாதன் கல்லூரித் தலைமைப் பண்டிதராகவும் நவநீதகிருஷ்ணபாரதி யார் விளங்கிப் பெருமை பூண்டவர். சைவ சமயப் பற்றும் பண்பும் நிறைந்த பாரதியார் சைவ சமய வளர்ச்சிக்கும் தமிழ்மொழி உயர்ச்சிக்கும் தொண் டுகள் பல ஆற்றினர். "உலகியல் விளக்கம் என்ற சிறந்த இலக்கிய நூலே இயற்றினுர், இன்னும், இவர் செய்த நூல்கள் இவரின் தமிழ்ப் புலமையை இனிது தெளிவுறுத்தி நிற்கின்றன. பாரதியார் பல ஆண்டுகள் உழைத்துத் திருவாச கம் முழுமைக்கும் அரிய உரையொன்றினே எழுதி அளித்துள்ளார். திருவாசகத்திற்கு உருகி நின்று, அவர் உணர்ந்து கண்ட உரை உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் திகழக் காண்கிருேம். சிவபுராணத் தைத் தற்சிறப்புப்பாயிரமாகவும், அதனையடுத்துள்ள மூன்று அகவல்களையும் நூலின் வரலாருகவும்
 

- 15 -
கொண்டு உரை கண்டுள்ளார். அவர் கண்ட உரை யைக் கொண்டு திருவாசகத்திலே எவ்வளவு ஈடு பாடுள்ளவராக அவர் வாழ்ந்தார் என்பதை நாம் கண்டுணர முடிகின்றது.
தமிழிலும் வடமொழியிலும் புலமை நிறைந்த கணேசசையர் அவர்கள், தொல்காப்பியம் முழுவ தையும் உரை விளக்கக் குறிப்புக்களுடன் பதிப் பித்தும் இரகுவம்சத்துக்கு உரைகண்டும் ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரத்தை எழுதியும் தமிழ்த் தாய்க்கு அருந்தொண்டாற்றியுள்ளார். ஐயர் அவர்கள் இலக்கிய இலக்கணங்களே எந்த அளவு கற்றிருந்தாரோ, அந்த அளவுக்குச் சமய சாத்திரங் களையும் கற்றிருந்தார்; கற்றதோடமையாது கற் ருங்கு வாழ்ந்தும் காட்டினுர், தமது இட்டதெய்வ மான கணேசப் பெருமான்மீது பல பிரபந்தங்கள் பாடியுள்ளார்.
நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் தமிழுக்கும் சைவசமயத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் பல. அவர் இயற்றிய இலக்கியங்களிற் சைவசமய மணம் கமழ்வதைக் காணலாம். சைவசமய நூல்களைக் கற்று உணர்ந்து வாழ்ந்த அவரின் பணிகளைச் சைவ உலகம் என்றும் மறவாதன்ருே. இவர் இயற் றிய "கதிரைச்சிலேடை வெண்பா', 'கந்தவனநாதர் நான்மணிமாலை முதலாம் பிரபந்தங்கள் இவரின் சைவசமயப் பற்றையும் தமிழ்ப் புலமையையும் இனிது காண்பிக்கின்றது.
ஈழநாட்டிற் சைவம் வளர்த்த பெரியார் வரிசை யில் ஒரு முக்கிய இடம் பெறவேண்டியவர் மட்டக் களப்புச் சைவப் புலவர் கா. அருணுசல தேசிக ராவர். இவர் தமிழ் அறிவிலும் சைவசித்தாந்த அறி

Page 17
- 16 -
விலும் சிறந்து விளங்கினுர். கிழக்கு மாகாணத் திலே சைவ பாடசாலைகளைத் தாபிப்பதிலும் அவற்றை வளர்ப்பதிலும் கண்ணும் கருத்துமாய் உழைத்தார். விபுலானந்த சுவாமிகளின் கல்வித் தொண்டுக்கு உறுதுணையாயிருந்தவர். 'சைவசமய சிந்தாமணி’ என்ற சிறந்த நூலை ஆக்கித் தந்
துள்ளார்.
இவ்வாறு சைவ சமயத்திற்குச் சைவப் பெரி யார்கள் அரும்பணிகள் பல புரிந்துள்ளனர். இவர் களைவிட இன்னும் சைவசமயத் தொண்டாற்றிய அறிஞர்கள் பலர் ஈழத்தில் வாழ்ந்தனர். அவர் களின் வரலாறுகளையெல்லாம் திரட்டி, விரிவாக எழுதுவது அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய சீரிய பணியாகும். எனினும், ஈழத்திற் பிறந்து சைவசமயத்தை வளர்த்த சிலரின் பணிகளை இக்கட் டுரையில் ஓரளவு திரட்டித் தந்துள்ளேன். ஏனைய வர்களின் வரலாற்றையும், பணிகளையும் அறிந்து நூல் வடிவில் வெளியிட வேண்டியது அறிஞர் களின் கடமையாகும். அப்பெரியார்களின் முன் மாதிரியைப் பின்பற்றிச் சைவசமயத்தின் உண் மைகளை உணர்ந்து உள்ளத்தைச் செம்மைப்படுத்தி உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்வோமாக,
* என்னை கன்ருக இறைவன் படைத்தனன், தன்னை கன்ருகத் தமிழ்செய்யு மாறே,”
என்ற திருமூலரின் திருவாக்கை உள்ளத்திருத்தித் தமிழுக்கும் சைவத்திற்கும் பணிபுரிவோமாக,
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்."

2. வளரும் பயிர்
கல்வி என்னும்போது அது நூற்கல்வியையே இன்று சிறப்பாகக் குறிப்பிடுகின்றது என்று கூறின் அது மிகையாகாது. கல்வி, நூற் கல்வியுடன் நின்று விடல் கூடாது. நூற் கல்வியாக மட்டும் அமைந்து விடின் அது முழுமையான கல்வியுமாகாது; வாழ்க் கைக்குப் பயன்படக்கூடியதும் ஆகாது. கல்வி முழுமையானதாகவும் கற்போனின் வாழ்வுக்கு வள மளிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
பல்கலைக்கழகத்திற் பட்டம் பெற்று, பெற்ற பட்டத்தின் துணையோடு உயர்ந்த பதவியையும் பெற்று, வாழ்க்கையை வளமுள்ளதாக அமைத்துக் கொண்டாலும் அது முழுமையான வாழ்வாக அமைந்து விடாது. பட்டம் பெற்றுப் பெரும் பதவி யையும் பெறுவதுடன், அறிவோடும் பண்போடும் மனிதன் வாழ்தல் வேண்டும். “கற்றது கைம்மண்ண ளவு” என்று கூறுவர். ஆகவே, பல்கலைக்கழகத்திற் பெறுகின்ற பட்டத்தோடு கல்வி நின்று விடவில்லை. ஒருவன் பல்கலைக்கழகக் கல்வியை முடித்துப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுகின்றபோது தான், உண்மையாகக் கல்வியுலகிலே காலடி எடுத்து வைக்கின்றன். அவ்வாறு ஆரம்பமாகும் கல்வி ஆழ மானதாகவும், அகலமானதாகவும் அமைதல் வேண் டும். பல்கலைக்கழகம் மாணவர்களுக்குக் குறிப் பிட்ட துறையில் மட்டும் ஆழமான கல்வியை வழங்குகின்றது. ஆனல், அகலமான அறிவைப் பெறவேண்டுமானுற் பலநூல்களைப் படித்தல் வேண்

Page 18
- 18 -
டும். “கண்டது கற்கப் பண்டிதனவான்’ என்று கூறுவர். எனவே அகலமான கல்விக்கும் பொது அறிவுக்கும் பத்திரிகைகளையும் மாணவர் வாசிப்பது அவசியமாகும்.
இன்றைய மாணவர் பொது அறிவில் மிகவும் குறைந்தவர்களாக இருக்கின்றனர் என்று கல்வி யாளரும் மற்றையோரும் அடிக்கடி குறைகூறக் கேட்கின்ருேம். இக்குறைபாட்டைப் போக்குவது எவ்வாறு? இக்குறைபாட்டிற்குக் காரணமாக இருப் G3Lum jf ஆசிரியர்களா? பெற்றேர்களா? அல்லது அர சாங்கமா? இக்குறைபாட்டைப் போக்கப் பெற்றேர் எந்த அளவிற்குப் பங்களிக்கலாம்? ஆசிரியர்கள் எந்த அளவிற்கு உழைக்கலாம்? அரசாங்கம் எந்த அளவிற்கு உதவலாம்?
பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை யிலே தமிழ் மாணவர்களின் அறிவைப் பெருக்க வும் பொது அறிவை வளர்க்கவும் தமிழ்ப் பத்திரி கைகள் பெருமளவில் உதவுகின்றன. வளர்ச்சி யடைந்த நாடுகளில் மாணவர்களின் பொது அறிவை வளர்க்க வழங்கப்படும் வாய்ப்புக்கள் வளர்முக நாடு களில் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலே, நகர்ப்புறங்களில் வாழ்கின்ற மாணவர்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப் புக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மாணவர் களுக்குக் கிடைப்பதில்லை, நகர்ப்புறத்திற் படிக் கின்ற மாணவன் பொது அறிவில் மிக்கவணுகக் காணப்படுகின்றன். அதே நேரத்திற் கிராமப் பாட சாலை ஒன்றிற் கற்கின்ற மாணவன் பொது அறிவிற்

- 19 -
குறைந்தவனுக இருக்கின்றன். ஏன்? இலங்கையி லுள்ள பல்கலைக்கழகங்களிற் படித்து வெளியேறிய பட்டதாரிகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம். ஒரே காலத்தில், ஒரே பட்டத்தை வெவ்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து பெற்ற மாணவர்களிடையே ஒரு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் அவனது தரத்தில், அறிவில், பொது அறிவில் மிக்கவன் என்றும் மற்றை யவன் அவற்றிலே குறைந்தவன் என்றும் கணிக்கப் படுகின்ற நிலை இலங்கையில் நிலவுவதை எவருமி மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
அறிவு வளர்ச்சிக்கு, சிறப்பாகப் பொது அறிவு விருத்திக்குப் பத்திரிகைகள் பெருமளவில் உதவு கின்றன. வகுப்பறையில் ஆசிரியர் கற்றுக் கொடுப் பதோடு கல்வி நின்று விட்டால் மாணவரின் அறிவு வளர்ந்துவிட மாட்டாது. மாணவரின் அறிவு வளர்ச்சிக்குப் பெற்ருேரும் உதவல் வேண்டும்; ஆசிரியர்களும் வழிவகுத்தல் வேண்டும்; அரசும் உறுதுணையாக அமைதல் வேண்டும்.
பத்திரிகை வாசிக்கின்ற பழக்கத்தைச் சிறு வயதிலேயே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துவது அவசியமாகும். இப்பொறுப்புப் பெருமளவிற் பெற் ருேரைச் சார்ந்ததாகும். நகரங்களைப் பொறுத்த அளவிற் பணம் படைத்த பெற்றேர்களுட் பலர், தமி குழந்தைகள் தமிழ்ச் செய்தித் தாள்களை வாசிக்க வேண்டுமென்று கருதுவதில்லை. சிறப் பாகக் கொழும்பு மாநகரத்திற் பல குடும்பங்களில் ஆங்கிலச் செய்தித் தாள்களை மட்டுமே வாசிக் கின்ற நிலை இன்றும் நிலவி வருவது கவலைக்குரிய

Page 19
سے 20 -
தாகும். பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் தமிழ்க் குழந்தைகள் இன்று தம் தாய்மொழியிலேயே கற்கின்றர்கள்; எழுதுகிறர்கள்; பேசுகின்றர்கள். எனவே, தமிழ்மொழியில் ஆற்றலுள்ளவர்களாக வரு வதற்கு மாணவர்கள் தமிழ் நூல்களோடு, தமிழ்ப் பத்திரிகைகளையும் வாசித்தல் வேண்டும். தம் குழந் தைகள் பத்திரிகை வாசிக்க வேண்டும்; அதற் காகத் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றினை வாங்க வேண் டுமே என்று தமிழ்ப் பெற்றேர் பலர் கருத்திற் கொள்ளாதிருப்பது விந்தைக்குரியது. வறியவர் களைப் பொறுத்தளவிலே தினமும் செய்தித்தாள் ஒன்றை வாங்குவது இயலாததாக இருக்கலாம். ஆனல், தம் குழந்தைகளை வாசிகசாலைகளுக்கா யினும் அனுப்பிச் செய்தித்தாள்களை வாசிக்கச் செய் யும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அப்பெற் ருேர்களின் கடமையல்லவா?
கிராமங்கள் தோறும் வாசிகசாலைகளும், பொது நூல் நிலையங்களும், சனசமூக நிலையங்களும், நலன் புரிச் சங்கங்களும் இன்று காணப்படுகின்றன. ஆகவே, கிராமத்திலுள்ள பெற்றேர்கள் அந்நிறுவகங் களுக்குத் தம் குழந்தைகளை அனுப்பிச் செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறு பத்திரிகைகளை வாசிக்கின்றபோது மாணவர்களின் அறிவு வளர்கின்றது; பொது அறிவு பெருகுகின்றது. ஆகவே, மாணவர் பத்திரிகை வாசிக்கும் பழக்கத்திற்குப் பெற்ருேரே முதலில் வித்திடல் வேண்டும். இப்பொறுப்பை உணராமல், தம் குழந்தைகளை வழிநடத்துகின்ற பெற்றேர் தம் கடமையிலே தவறியவர்களாவர்.

- 21 -
வாசிக்கின்ற பழக்கத்தை இளமையிலேயே ஏற்படுத்தல் வேண்டும், வாசிப்பது தண்ணிர்த் தாகம் போன்றது. ‘வாசிக்க வேண்டும்” என்ற உள்ள விழைவு மாணவனுடைய உள்ளத்தில் உதய மாக வேண்டும். வீட்டிலிருக்கும் போதும், பூங்கா விலே ஓய்வெடுக்கும் போதும், புகைவண்டியிற் பய ணஞ் செய்யும் போதும் மாணவர் வாசித்துக் கொண்டே இருக்கின்ற பழக்கத்தை மேல் நாடு களில் நன்கு அவதானிக்கலாம். இவ்வகையான உள்ள விழைவைக் குழந்தைகளிடத்தில் ஏற்படுத் தல் பெற்றேரின் பொறுப்பாகும். அதாவது இயல் பாகவே இப்பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தல் நன்று. இவ்வகை உள்ள விழைவை மாணவர்க ளிடம் உண்டாக்கப் பத்திரிகைகள் பெருமளவில் உதவுகின்றன. ஆகவே, தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றை வாங்கித் தம் குழந்தைகளை வாசிக்கப் பழக்குவது பெற்றேரின் கடமையாகும். தம் குழந்தைகளின் அறிவுத் தாகத்தைப் பெருக்க வேண்டும் என்று தமிழ்ப் பெற்றேர்கள் கருதிச் செயற்படுவார்களேயானுல், அவர்கள் தம் குழந்தை களின் அறிவு வளர்ச்சிக்கு, உதவுகின்றதோடு தமிழையும் வளர்க்கின்றவர்கள் ஆவர்.
தமிழ்ப் பத்திரிகைகளை வாசிக்கின்ற பழக் கத்தை மாணவர்களிடையே வளர்ப்பதற்கு ஆசிரி யர் பெருமளவிற் பொறுப்புடையவராவர். இப் பழக் கத்தை உண்டாக்குவதிற் பெற்றேரிலும் பார்க்க ஆசிரியரின் பொறுப்பே பெரிதாகும். பத்திரிகை களை வாசிப்பதற்கு மாணவரிடையே தூண்டுதலை ஏற்படுத்த வகுப்பறையை ஆசிரியர் பயன்படுத்த

Page 20
- 22 -
லாம். பத்திரிகை வாசிப்பதற்கென்றே ஒரு பாட நேரத்தை ஒதுக்கலாம். வாசித்த செய்திகளை வகுப் பறையில் எடுத்துச் சொல்ல வாய்ப்பளிக்கலாம். வாசித்த செய்தியொன்றை எழுதுமாறு மாணவரைப் பணிக்கலாம். செய்தித் தாளில் மாணவர்களுக்கான பகுதியில் இடம்பெறுகின்ற விடயங்கள் பற்றிக் கலந் துரையாடலாம்; மாணவர் பகுதியில் இடம்பெறு கின்ற கதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக் குகள் போன்றவற்றை ஆக்குவதற்கு மாணவ ரிடையே ஆர்வத்தை உண்டாக்கலாம்; மாணவர் படைத்த படைப்புக்களைச் செய்தித் தாள்களில், மாணவர்களுக்கான பகுதியில் வெளிவருவதற்கு உதவலாம். இவ்வாறு ஆசிரியரின் தூண்டுதல்கள் மாணவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதற்கு ஆர்வ மூட்டுவதுடன், அவர்கள் ஆக்கவேலைகளில் ஈடுபடுவ தற்கும் உதவும்.
வகுப்பறையிலே மாணவன் மேற்கொள்கின்ற ஆக்க வேலைகள் எதிர்காலத்திலே அவனை ஒரு சிறந்த எழுத்தாளனுகவும் கவிஞணுகவும் திகழ வைக்கும். இன்னும், அவன் சிறுகதை ஆசிரிய ணுகவும் நாவல் ஆசிரியணுகவும் விளங்குவதற்கும் வழிசெய்யும். ஆகவே, ஆசிரியனுடைய பொறுப்பு, பெற்றேருடைய பொறுப்பிலும் மிகக் கூடுதலான தென்று கூறுவது சாலப் பொருந்தும்.
மாணவர் கற்கின்ற பாடங்கள் பற்றிய விட யங்கள் விஞவிடையாகவும், கட்டுரையாகவும், கலந் துரையாடலாகவும் சில செய்தித்தாள்களில் இடம் பெறுவதைக் காண்கின்றேம். இவை மாணவர்களின்

- 23 -
அறிவு வளர்ச்சிக்கும், அவர்கள் தமது பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்கும் பெரிதும் பயன்படுமென் பதில் ஐயமில்லை. செய்தித்தாள்களில் இடம்பெறும் மாணவர்களுக்கான இப் பகுதிகள் ஏற்புடையன வாயின் அவற்றை வகுப்பறையில் ஆசிரியர்கள் நன்கு பயன்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்ட வேண் டிய பொறுப்புடையவராவர்.
வகுப்பறையிலேயே பத்திரிகை ஒன்றை நடாத்த ஆசிரியர் மாணவர்களுக்கு வாய்ப்பளித்தல் வேண் டும். வகுப்பறையில் முளைத்த பத்திரிகை தமிழ் மன்றத்தில் வளர்ந்து, கல்லூரி ஆண்டு மலரிற் பூத்துக் காய்த்துப் பயனை நல்கலாமன்றே மாண வர் நாடோறும் வாசிகசாலையிலும் நூல் நிலையத் திலும் வாசிக்கின்ற செய்தித்தாள்கள், பாடசாலைத் தமிழ் மன்றத்தில் வெளிவரும் பத்திரிகையைத் தர முள்ளதாயும் பயனுள்ளதாயும் உருவாக்குதற்கு உதவுவதாக அமையும்.
வளர்ச்சியடைந்த நாடுகளிற் சிறுவர்களுக் கென்றே நூல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின் றன. சிறுவர்களுக்கென்றே செய்தித்தாள்கள் வெளி வருகின்றன; சிறுவர்களுக்கென்றே அசையும் படங் கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று நமது நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. வளர்ச்சி பெற்ற நாடுகளிலே சிறுவர்களுக்குள்ள வாய்ப்புக்களைப் போன்று, நமது நாட்டிலும் பல வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன; இன்னும் பல ஏற்படுத்தப்படுமென எதிர்பார்க்கலாம். செய்தித் தாள்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் கிடைக்கக் கூடியனவாகவும், அவற்றை மாணவர் வாசிக்கக்

Page 21
- 24 -
கூடியனவாகவும் செய்தல் அரசின் பொறுப்பாதல் வேண்டும். மாணவர்களுக்கான ஒரு செய்தித்தாளை அரசே வெளியிட முன்வரின், அது மாணவர் உலகிற் குப் பெரிதும் பயனுள்ளதாக அமையுமெனலாம்.
செய்தித் தாள்களிற் கட்டுரை, கதை, சிறுகதை ஆகியவற்றிற் போட்டிகளை நடாத்தி, மாணவர் பத்திரிகைகளை வாசிக்கவும், பத்திரிகைகளுக்குத் தம் ஆக்கங்களை வழங்கவும் கல்வித் திணைக்களம் வாய்ப்பளித்தல் வேண்டும். கிராமங்கள் தோறும் வாசிகசாலைகளை நிறுவி, அங்கே செய்தித்தாள்களை வரவழைத்து மாணவர்களும் மற்ற வர் களும் அவற்றை வாசிக்கக்கூடிய வாய்ப்பை அளிக்கவேண் டியது அரசின் பொறுப்பாகும். இதனை அரசு சன சமூக நிலையங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், கலைக் கழகங்கள், நலன்புரிச் சங்கங்கள் ஆகியவற்றின் வாயிலாக நடைமுறைப்படுத்தலாம்.
பாடநூல்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்க அரசு முன்வந்துள்ளமை பாராட்டுக்குரிய தொன்று. இலவச நூல் விநியோகம் குறித்து ஆய்வு நிகழ்த்திய கல்வி அதிகாரி ஒருவர், தம் ஆராய்ச்சி யின் பயணுகக் கண்டவற்றை விளக்கிக் கூறியதை இவ்விடத்திலே குறிப்பிடுவது பொருத்தமாகும்.
*இலவச பாடநூல் விநியோகம் பாடசாலை களில் மாணவர் அனுமதித் தொகையை அதிகரிக்கச் செய்துள்ளது; வறிய குடும்பங்களிலிருந்து பாட சாலைக்குச் செல்லும் மாணவர்களின் தொகை கணிச மான அளவு கூடியுள்ளது; இவற்றிலும் மேலாக ஏழு, எட்டு வயது நிரம்பிய பிள்ளைகளும் பாட

- 25 -
சாலைக்குச் சென்று பாலர் வகுப்பிற் கல்வியைத் தொடங்க இலவச பாடநூல் விநியோகம் தூண்டுத லாக அமைந்துள்ளது'.
இலவசமாகப் பாடநூல்கள் விநியோகம் செய் வது போன்று எதிர்வரும் ஆண்டுகளில் முக்கியமான செய்தித்தாள்களையும் இலவசமாகப் பாடசாலைகள் ஒவ்வொன்றும் பெறக்கூடியதான வாய்ப்பை அரசு செய்து கொடுக்குமானல், சிறப்பாகச் சிறிய பாட சாலைகளிலும், கிராமப்புறப் பாடசாலைகளிலுமுள்ள மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். அரசினையே எதிர்பார்த்திராமற் பெற்றேர் ஆசிரியர் சங்கங் களும் இவ்வகையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வருதல் வேண்டும்,
இதுவரை இலங்கையிலுள்ள தமிழ் மாணவர் களைப் பொறுத்தவரையிற் பத்திரிகை வாசித்தல் எவ்வளவிற்கு இன்றியமையாதனவெனக் கண்டோம். இன்னுெரு கோணத்தில் நின்று நோக்குகின்ற போது, மாணவர்களைப் பொறுத்தவரையிலே தமிழ்ப் பத்திரிகைகளின் பணியை மிகப் பெரிதெனவே கூறல் வேண்டும். மாணவர்களின் அறிவு வளர்ச் சிக்கும் மொழித் திறனுக்கும் பத்திரிகைகள் சிறந்த பணியாற்ற முடியும். பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயில்கின்ற மாணவர்களைக் கருத்திற்கொண்டு அவர்களின் அறிவு விருத்திக்கான சில பகுதிகளைப் பத்திரிகைகளிலே இனிய தமிழிலே இடம் பெறச் செய்வது அவசியமாகும்.
செய்தித் தாள்களிலே தினமும் ஒரு பக்கத்தை யேனும் மாணவர்களுக்காக ஒதுக்குதல் பயன் தரத்

Page 22
- 26 -
தக்கதாகும். மாணவரின் தரத்திற்கேற்ப, குறித்த பக்கத்தில், வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு தரமுள்ள விடயங்கள் வெளிவரலாம். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், துணுக்கு கள், கேலிச் சித்திரங்கள், பொது அறிவுப் போட்டி கள் என்பன மாணவரின் ஆர்வத்தைத் தூண்டக் கூடியனவாகும்.
இவை மாணவர்களின் வாசிக்கும் பழக்கத் தைத் தூண்டுவதோடு நின்றுவிடாமல், அவை போன்ற படைப்புக்களை ஆக்கவேண்டும் என்ற ஆர் வத்தையும் அவர்களிடத்திலே ஏற்படுத்துமென்பது திண்ணம்,
மாணவர்களின் படைப்புக்களைப் பத்திரிகையில் வெளியிட்டு, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டு வதும் பத்திரிகை ஆசிரியர்களின் பொறுப்பாகும். மொழித்திறனை வளர்க்கக்கூடிய ஆக்கங்களை வெளி யிடவேண்டும்; கலை, விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் முதலிய துறைகளில் மாணவர்களுக் கான ஆக்கங்கள் மாணவர் பகுதியில் இடம்பெறு தல் வேண்டும். இதனுல் வளரும் பயிர்களான மாணவர்களும் பயனடைவர்; பத்திரிகையாளர் களும் பயன் பெறுவர்.

3. வாழ்வும் வளமும்
மக்கள் வளமாக வாழ்வதற்கு நாட்டின் அபி விருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுதல் அவசிய மாகும். நாடு அபிவிருத்தி அடைகின்றபோதுதான் மக்கள் வளமாக வாழ்வர்; செல்வச் சிறப்போடு திகழ்வர். இன்று நாட்டிற் பல பாரிய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் வீடமைப்புத் திட்டங்கள், விவசாயத் திட்டங்கள், மீன்பிடித் தொழில் முன்னெறியங்கள், போக்கு வரத்து வசதிகள், தொலைத் தொடர்பு வாய்ப்புக்கள், கல்விச் சீர்திருத்தங்கள், கைத்தொழில் அபிவிருத்தி கள், சுதந்திர வர்த்தக வலயம், மகாவலி அபிவிருத் தித் திட்டம் முதலியன குறிப்பிடத்தக்கன.
அபிவிருத்தித் திட்ட வேலைகள் துரிதமடையும் போது வேலைவாய்ப்புக்கு இடமுண்டு. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்கு அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் இன்றியமையாதனவாகும். இளை ஞர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற்று, நாட்டின் அபிவிருத்திக்கு அயராது உழைத்தல் வேண்டும், அவர்கள் தமது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள வும், நாட்டின் செல்வச் செழிப்புக்குப் பங்களிக்கவும் முன்வருதல் வேண்டும்,
அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக முன் னேற்றமடையவும் அதன்வழி நாடு பயனடையவும் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலவுதல் அவசிய மாகும். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்பதன்

Page 23
- 28 -
உண்மையை உணர்ந்து, நாட்டின் வளத்துக்குப் பணியாற்ற இலங்கை மக்கள் ஒவ்வொருவரையும் தியாக உணர்ச்சியோடு முன்வருமாறு பிறந்த பொன்னுடு அழைக்கின்றது.
அன்பும் அறமும் மக்களின் நல்வாழ்வுக்கு உறு துணையாக அமைவன. உலகம் ஒரு குலமாதல் வேண்டும் என்று பேசலாம், எழுதலாம். அந்தப் பேச்சும், எழுத்தும் செயலாதல் வேண்டும். அன் பினலேயே செயலாக்குதலைச் சாதிக்கலாம். மக்கள் ஓரினமாக, ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக வாழ்வதற்கு அன்பு, வழிவகுக்கின்றது. “அன்பின் வழியது உயர்நிலை’ என்று வள்ளுவர் கூறுவதை மனத்திற் கொண்டு வாழ்தல் வேண்டும். அன்பினை விரைந்து பெருக்கும் இயல்பு மனிதப் பிறவிக்கே உண்டு. அதனுல் அப்பிறவி விழுமியது என்று ஆன்ருேராற் போற்றப்பட்டது. அன்பின் வழி வாழ்க்கை அமையும்போது, அது பண்பும் பயனும் உடையதாக அமையும்.
மனமாசற்ற நிலையே அறம் என்பது. அறத்தை விளங்க வைப்பது அன்பு. இதற்கு விரிவுரையும் வேண்டாம்; விளக்கமும் வேண்டாம். அன்பாலே தெளிவுறும் அறத்தை அடிப்படையாகக்கொண்டது வாழ்க்கை. திருவள்ளுவர் கூறிய அறநெறியில் வாழ்ந்தால் உலகத்திலே இன்பம் பெருகும்; மக்கள் மக்களாக வாழ்ந்து இன்பமான வாழ்வை மேற் கொள்ள முடியும்.
*அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு'

- 29 -
யாழ்ப்பாணத்தின் முக்கிய விளைபொருள்களாக மிளகாயையும், வெண்காயத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை இரண்டும் யாழ்ப்பாண விவ சாயிகளுக்கு வருவாயைக் கொடுப்பன. சில காலங் களிலே இவை இரண்டும் பெருமளவில் வருவாயை வழங்கியதும் உண்டு.
யாழ்ப்பாணம் வானம் பார்த்த பூமி ஆகும். * மழை இல்லையானல் விளைச்சலும் இல்லை’ என்ற நிலையில் அங்கு விவசாயிகள் வாழவேண்டியவர் களாக இருக்கின்றனர். ஆணுல், யாழ்ப்பாண விவ சாயிகள் முயற்சி உள்ளவர்கள்; அயராது உழைப் பவர்கள். வானம் மழையைக் கொடுக்காவிட்டா லும், கிணற்றிலிருந்து நீரை இறைத்துப் பயிர்களை விளைவித்து வாழ்பவர்கள்; நெற்றி வியர்வை நிலத் திலே சிந்த அயராது உழைத்துப் பாடுபடுபவர்கள்.
கிணற்றிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு பயிர்வகை பல விளைவிக்கப்படுகின்றன. வாழை, வெங்காயம், மிளகாய், காய்கறிவகைகள், குரக்கன், சாமை என்பன இங்கு கூடுதலாக விளையும் பயிர்க ளாகும். கிணற்று நீரை வாளிகளாலே துலா மூலம் இறைக்கின்ற முறை முன்னர் யாழ்ப்பாணத் திலே பெருமளவில் இருந்தது. பின்னர் நீர் இறைக் கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. முன்னைய தற்கு மனித வலுத் தேவைப்பட்டது; பின்னைய தற்கு எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. எரி பொருள் மனித வலுவைக் குறைத்தாலும், செலவைக் கூட்டியது. ஆகவே விளைபொருள்களின் விலையும் அதிகரித்தது. எண்ணெய் விலை அதிகரிக்க அதி

Page 24
مرتبہ۔۔۔ 30 ست
கரிக்க விளைபொருள்களின் விலையும் உயர உயரச் சென்றது. இதனுல் யாழ்ப்பாணத்து விவசாயிகளின் பிரச்சினை பெருகி வளர்ந்து வந்துள்ளதையே நாம் காண்கின்ருேம்.
இதற்கும் மேலாக, அடுத்த சில ஆண்டுகளிலே யாழ்ப்பாண விவசாயிகள் பெரும் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருப்பர். துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மகாவலி நீர் விவசாய அபிவிருத்திக்குப் பெருமளவிற் பயன் படுத்தப்படும். மகாவலிகங்கையின் நீர் இலங்கை யிற் பரந்த அளவிற் பாய்ந்தோட இருக்கின்றது. பாய்ந்தோட இருக்கின்ற அந்த நீரைக்கொண்டு பல்வகைப் பயிர் வகைகளை விவசாயிகள் சிரமம் இல்லாமலே விளைவிக்கப் போகின்றனர். ஊர்களி லும், காடுகளிலும், மேடுகளிலும், பள்ளங்களிலும் பயிர்வகைகள் விளையவுள்ளன. அப்போது குறைந்த முயற்சியோடும் குறைந்த செலவோடும் வெங்கா யம், மிளகாய், ஏனைய விளைபொருள்கள் என்பவற் றைப் பெருமளவில் மகாவலி நீர் பாய்ந்தோடவுள்ள பகுதிகளில் விளைவிக்கப் பெருவாய்ப்பு உண்டு.
இந்த நிலையில் வெங்காயம், மிளகாய் ஆகிய வற்றின் உற்பத்திப் பெருக்கம் அதிகரிக்கும்; குறைந்த விலையிலே அவற்றை உற்பத்தி செய்ய வும் முடியும். வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு அவற்றின் உற் பத்தி அதிகரிக்கும்.
பாய்ந்தோடுமீ நீரைக்கொண்டு விளைவிப்பது ஒன்று; நீரைப்பாய்ச்சி விளைவிப்பது இன்னென்று.

ع-31 -نے
மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி நீரைப் பாய்ச் சுவதனுற் செலவு அதிகமாகும். பாய்ந்து செல்லும் நீரைச் சிரமமே இல்லாமற் பயன்படுத்திப் பயிர் களை விளைவிப்பது எளிதாகும்; செலவும் குறைவாக இருக்கும். இந்த நிலைமை ஏற்படும்போது மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை விளைவிக்கும் யாழ்ப்பாண விவசாயிகள் அடுத்த சில ஆண்டுகளிற் பெரும் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருப்பர்.
மகாவலி நீரினுல் விளையவிருக்கும் வெங்காயம், மிளகாய் என்பவற்றுடன் போட்டி போட்டு யாழ்ப் பாணத்திலே அவற்றை உற்பத்தி செய்ய முடியுமா? இந்தப் பிரச்சினை எழுவதற்கு முன்னதாகவே, யாழ்ப்பாண விவசாயிகள் தமது உற்பத்திப் பொருள்களை அதிகரிக்க மாற்றுவழி ஒன்றைக் காணவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
மாற்றுப் பயிரைப் பயிரிடுவதா? மழை நீரைச் சேமித்துவைத்து, மகாவலி நீரைப் போலப் பயன் படுத்துவதா?
குறைந்த செலவிற் கூடிய உற்பத்திக்கு வழி காணவேண்டும். இன்னுெரு வகையாகக் கூறின், செலவைக் குறைத்தல் வேண்டும், உற்பத்தியைப் பெருக்கல் வேண்டும். ஒன்பது ஏக்கரில் விளைந் ததை ஓர் ஏக்கரில் விளைவிக்க விஞ்ஞான முறை களைக் கையாளுதல் வேண்டும்.
அபிவிருத்தியினுலும் உற்பத்திப் பெருக்கத்தி ஞலுமே பிரச்சினைகளைப் போக்க முடியும். இதனை மனத்திற் கொண்டு எதிர்காலத்தைத் திட்டமிடுவது அவசியம் அல்லவா?

Page 25
ت- 32 -تتـ
அருவினை யென்ன வுளவோ கருவியான் கால மறிந்து சேயின்.
தமிழர்கள் மத்தியில் இன்று நிலவுகின்ற பிரச் சினைக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப் பதன் மூலமாக மட்டுமே தீர்வுகாணல் முடியும், வேலைவாய்ப்பு என்று கூறும்போது அரசாங்க உத்தியோகங்களை மட்டும் கருதுதல் கூடாது. சிறப் பாக யாழ்ப்பாணத் தமிழர் அரசாங்க உத்தியோகங் களையே மேலானவையெனக் கருதி வாழ்ந்தனர்; இன்றும் வாழ்கின்றனர். பிழையான இந்த மனப் போக்கை இன்று நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய வர்களாக இருக்கின்ருேம், தொழிலின் மகத்துவத் தைப் போற்றி, எந்தத் தொழிலையும் மேற்கொண்டு, அதனுல் வாழ்க்கையை வளம்படுத்திக்கொள்ள நாம் தயாராதல் வேண்டும்.
உத்தியோகத்துக்கு மதிப்புக் கொடுக்காமல் செய்கின்ற தொழிலினுலே பெறுகின்ற வருமானத் தின் அளவைக் கொண்டே அத்தொழிலை மதிப் பிடுதல் வேண்டும். மேல் நாடுகளுக்குச் செல் கின்ற இளைஞர்கள் எந்தத் தொழிலைச் செய்தும் பணம் சம்பாதிக்க விழைகின்றனர். அங்கே அவர்கள் செய்கின்ற தொழிலுக்கு மதிப்பளிக்கின்றனரா? இல்லை. அதனுல் வருகின்ற வருமானத்துக்கே மதிப்பளிக்கின்றனர். இன்னுெருவகையாகக் கூறின், கூடிய வருமானத்தைக் கருத்திற்கொண்டு தொழி லைத் தெரிவு செய்கின்றனர்; குறைந்த வருமான முள்ள தொழிலை அவர்கள் விரும்புவதில்லை. அதே நிலை எமது நாட்டிலும் ஏன் உருவாதல் கூடாது?

- 33 -
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையிலே, பழச் செய்கையை வருமானம் கொடுக்கும் ஒரு தொழி லாக மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தின் சுவாத்தியம் பழச் செய்கைக்கு மிகவும் உகந்தது. சுவையான பழங்கள் யாழ்ப்பாணத்திலே நிறைய உண்டு. அவற்றுள் வாழைப்பழம், மாம்பழம், தோடம்பழம், பலாப்பழம், முந்திரிகைப்பழம் என் பன முக்கியமானவை. வாழைப்பழத்திலே எத்தனை இனங்கள்? கதலி, தேன் கதலி, கப்பல், மொந்தன், யானை, இதரை என்று சொல்லிக்கொண்டே போக லாம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைக் கொண்டது. அது போலவே மாம்பழத்திலே எத்தனை வகைகள் ? யாழ்ப்பாணத்து மாம்பழத்துக்குத் தனி யான மதிப்பு உண்டு அல்லவா? அவற்றை விரும்பி உண்ணுதார் யார்?
இவ்வாறு பழச் செய்கைக்கு வாய்ப்பான நில வளத்தைக்கொண்ட யாழ்ப்பாணத்திலே பழவகைச் செய்கையை அபிவிருத்தி செய்து, தொழில் வாய்ப்பையும் வருவாயையும் பெருக்கிக்கொள்ள முடியாதா?
ஆகவே, பழச்செய்கையைப் பெருமளவில் மேற் கொள்ளல் வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு விஞ்ஞான அடிப்படையிலே அதனை வளம்படுத்தல் வேண்டும். குறைந்த முயற்சி யோடு கூடிய வருவாயைப் பெறக்கூடியதாகப் பழச் செய்கையைப் பரந்த அளவிலே உற்பத்தி செய்ய யாழ்ப்பாண விவசாயிகள் முன்வருவார்களா?
பழவகைகளைப் பெருமளவிற் செய்யும்போது அவற்றைத் தகரப் புட்டிகளிலே அடைக்கக்கூடிய
3

Page 26
- 34 -
வகையிலே தொழிற்சாலைகளை நிறுவுதல் அவசியம். அதனுல் வேலைவாய்ப்புக்கு இடமுண்டு, வருவாயைப் பெருக்கிக்கொள்ளவும் வாய்ப்புண்டு.
அரசாங்க உத்தியோகங்களை மறந்து பழச் செய்கை முதலிய தொழில்களை நாம் ஏன் மேற்கொள் ளல் கூடாது? அரசாங்க உத்தியோகத்தாற் பெறு கின்ற வருமானத்திலும் பார்க்க, இப்படியான தொழில்களாற் கூடிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் அல்லவா?
கீழ் மாகாணத்தைப் பொறுத்தவரையில் மரமுந் திரிகைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்குப் போதிய இடமுண்டு; உகந்த சுவாத்தியமும் உண்டு. எனவே, அதனைப் பெருமளவிற் செய்கைபண்ணி ஞல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய முடியு மல்லவா?
இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மரமுந்திரிகைப் பருப்புக்குப் பெரிய வரவேற்பு உண்டு. ஆகவே, கிழக்கு மாகாணத்தில் மரமுந் திரிகையைப் பரந்தளவிலே பயிரிடுவதற்கு மக்கள் முன்வருதல் வேண்டும்.
இன்னுென்றையும் இவ்விடத்திற் கூறிவைப்பது அவசியமாகின்றது. இவ்வகைத் தொழில்களை வளம் படுத்த அரசாங்கத்தை மட்டும் நாம் எதிர்பார்த் திருத்தலாகாது. தமிழ் மக்களிடையே பல வள்ளல் கள் வாழ்கின்றனர். அவர்கள் முன்வந்து, பழச் செய்கையைக்கொண்டு வளத்தைப் பெருக்குவதற்கு உதவுவார்களா?

- 35 -
பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றற் செல்வ
கயனுடை யான்கட் படின்.
பல ஆண்டுகளாய் யாழ்ப்பாணத் தமிழர் கல்வி யில் முன்னணியில் நின்று வந்துள்ளனர். தரமான கல்லூரிகள் பல யாழ்ப்பாணத்திலே இருக்கின்றன. அதனுற் பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசிக்கும் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்துவந் தது. கல்வி கற்ற யாழ்ப்பாணத் தமிழரிற் கூடிய எண்ணிக்கையானுேர் அரசாங்கத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் வேலைசெய்து வந்தனர். அவர்கள் கற்றவர்கள் ; கடினமாக உழைப்பவர்கள்; ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக்கவர்கள்; அதனுல் நிரு வாகச் சேவையிற் சிறந்து விளங்கினர்; ஆசிரியத் தொழிலைக் கண்ணியமாகப் பேணினர்.
நிலேமை இன்று மாறிவிட்டது
கீழ்மாகாணத் தமிழர் யாழ்ப்பாணத்தவர்களை
விடுத்து, தமக்கே உத்தியோகங்களைக் கொடுக்க
வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
முஸ்லிம் மக்கள் தமது பாடசாலைகளிலே முஸ்லிம் ஆசிரியர்களையே நியமிக்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த நியாயமான கோரிக்கையில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர்.
மலையகத்திலுள்ள பாடசாலைகளில் யாழ்ப் பாணத்தவர்கள் இதுவரை ஆசிரியப் பணி செய்து வந்தனர். இன்று மலையகத்திலும் மலையகத் தமிழர் களுக்கே இடமளித்தல் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

Page 27
- 36 -
ஏனேய மாவட்டங்களிலும் இன்று நிஜலமை மா விட்டது. வவுனியாவில் ' யாழ் அகற்றுச் சங்கம்" முல்லைத்தீவில் “யாழ் ஒதுக்கு மன்றம்’, மன்னுரி "யாழ் மறுப்பு ஒன்றியம்’. இந்த நிலையில் வவுனி யாவிலே இருப்பவர்களுக்கே வவுனியாவில் உத்தி யோகம்; முல்லைத்தீவில் உள்ளவர்களுக்கே முல்ஜலத் தீவில் ஆசிரியர் பதவி; மன்னுர் மக்களுக்கே மன் குனூரில் அரசாங்க வேலே.
அண்மையில் நிலேமை இன்னும் மோசமாகி விட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அண்மையி லுள்ளது கிளிநொச்சி. அது தனி மாவட்டமாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையிற் கிளிநொச்சி மக்கள் வெற்றி கண்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ளவர்களுக்கே கிளிநொச்சியில் உத்தியோகங் கள் கொடுக்கப்படல்வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இன்று கிளிநொச்சியில் வாழ்கின்ற வர்கள், நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர் கள். அவர்களே யாழ்ப்பாணத்தவரை வேண்டாம் என்று குரலெழுப்பும் அளவிற்கு நிலைமை மாறி விட்டது.
விவேகம் மிக்க தமிழ் இளைஞர்கள் விரக்தி யடைந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆணுல், கட்டுப்பாடும் ஒழுங்கும் சீர் குலையுமானுல் அச்சீர்குலைவு எதிர்காலச் சந்ததி யினரை நல்வழியிலிட்டுச் செல்லாது.
இந்த நிலைமையில் மாற்றுவழி ஒன்றைக் காண் பது அவசியமாகின்றது. பல்கலைக்கழகக் கல்வி
 
 
 
 
 

- 37 -
யிலேயே தங்கியிருக்க எண்ணுவது அறியாமை யாகும். கைத்தொழில், மீன்பிடித்தொழில், விவசா யம் போன்றவற்றைத் தமிழர் விருத்தி செய்தல் வேண்டும். உத்தியோகமே மேலானது என்ற எண்ணத்தை விடுத்து, தொழிலின் மகத்துவத் துக்கே முதலிடம் அளித்தல் வேண்டும். வேலை வாய்ப்பைப் பெற்று, சீதன முறையை ஒழித்து, சாதிக் கொடுமையைப் போக்குதற்கு இளைஞர்கள் முன்வருதல் வேண்டும்.
சுயமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அதன் வழி வருமானத்தைப் பெருக்கி இளைஞர்கள் விரக்தி மனப்பான்மையின்றி வளமாக வாழ்வதற்கு வழி காண்போம்.
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்போவ்வா சேய்தொழில் வேற்றுமை யான்.

Page 28
4. பயனுள்ள திருப்பம்
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின்கீழ், 1980ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் தாபிக் கப்பட்டது. கல்வி வளர்ச்சிக் கட்டங்களிலே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான, நல்வாய்ப்பை நல்குகின்ற, பயன் மிகுந்த ஒரு கல்வி முறை என்று திறந்த பல்கலைக் கழக அமைப் பினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பலருக்கு, எட் டாப் பழமாய் இருந்த பல்கலைக்கழகக் கல்வி, திறந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதும், பயன்மரம் உள் ளூரிலே பழுத்தது போல அமைவதாயிற்று. பாட சாலைக் கல்வியை முடித்தபின்னர் பல்கலைக் கழ கத்தை எட்டிப் பார்க்க முடியாது போயிற்றே என்று ஏங்கிய பலருக்குத் திறந்த பல்கலைக்கழகம் பெறமுடியாத வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. இன் ணுெரு வகையாக இதனைக் கூறினுல், “மாணவர் பாடசாலையை விட்டு விலகிய பின்னர், இல்லா திருந்த அல்லது அவர்கள் பெறமுடியாதிருந்த கல்வி வாய்ப்பினை வழங்குவதனுல், திறந்த பல்கலைக் கழகம் தான் கவர்ந்துகொண்ட மாணவரின் நோக் கில் ஒரு வீட்டுக் கற்கைப் பல்கலைக் கழகமாகவும், பிற்பட்ட காலத்திலே அதாவது வாழ்க்கையின் இறு திக் காலத்திலும் உயர் கல்வி வாய்ப்பினை வழங்கு கின்ற ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்குகின்றது”.

-س- 39 --
எனவே, பல்கலைக்கழக அமைப்பு முறையிலே திறந்த பல்கலைக்கழகம் இலங்கைக்குப் புதியதும் புதுமையானதும் ஆகும். வேறெரு வகையாகக் கூறின், இலங்கையிலே சிறப்பாகத் தாபிக்கப்பட் டுள்ள, கல்வித் துறையிற் சுயாதீனமான ஒரு தேசி யப் பல்கலைக்கழகமாகத் திறந்த பல்கலைக் கழகம் விளங்குகின்றது எனலாம்.
பாரம் பரியபல் கலைக்கழகத்துக்கும் திறந்த பல் கலைக்கழகத்துக்கும் இடையேயுள்ள சிறப்பான ஒப் புமை வேறுபாடுகளை இங்கு எடுத்துக்காட்டுவது அவசியமாகின்றது. முதலிலே ஒப்புமைகளை நோக்கு G6)]mrub.
பாரம்பரிய பல்கலைக்கழகங்களிலுள்ள நிருவா கம், கல்வி நெறிகள், சட்டம், அந்தஸ்து முதலியவை திறந்த பல்கலைக்கழகத்துக்கும் ஏற்புடையன. பாரம் பரிய பல்கலைக்கழகங்களைப் போன்று, திறந்த பல் கலைக்கழகமும் கற்கை நெறிகளை நடாத்துகின்றது; பட்டங்கள், திப்புளோமாக்கள், சான்றிதழ்கள், வேறு கல்விச் சிறப்புகள் என்பனவற்றை வழங்குகிறது. இன்னும், தனக்கென ஒரு வளாகத்தையும் பணியினரையும் பாரம்பரிய பல்கலைக்கழகம் கொண் டுள்ளது போன்று, திறந்த பல்கலைக்கழகமும் சொந்த மத்திய வளாகம் ஒன்றையும் (அது நாவலை யில் நிறுவப்பட்டுள்ளது) முழு நேரப் பணியணி யினரையும் கொண்டுள்ளது. ஏனைய பல்கலைக் கழ கங்களுக்குள்ளது போன்றபேரவை ஒன்றும் உண்டு, அப்பேரவை நிறைவேற்றுச் சபையாகவும் கல்விச் சபையாகவும் ஆளும் அதிகார சபையாகவும் அமைந்துள்ளது.

Page 29
- 40 -
எனினும், சிறப்பாக இரு அமிசங்களிலே திறந்த பல்கலைக்கழகம் ஏனைய பாரம்பரிய பல்கலைக் கழகங்களிலிருந்து வேறுபட்டிருப்பதை அவதானிக்க லாம்; ஒன்று கற்பித்தல் முறை, இன்னுென்று அங்கே கற்கும் மாணவர் வகை.
முதலிலே கற்பித்தல் முறையை நோக்குவோம். பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகத்தினுல் மேற் கொள்ளப்படும் கற்பித்தல் முறைகளை இலங்கை மக்களின் சூழலுக்குப் பொருத்தமான முறையிலே மாற்றி, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் வழங்கு கின்றது. கற்கை முறையின் அல்லது கற்பித்தல் முறையின் ஆக்கக் கூறுகளாக ஐந்து முறைகளை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
திறந்த பல்கலைக்கழகத்தின் பயிற்சிநெறியில் அச்சிட்ட சாதனங்கள் மிகவும் முக்கியமானவை. இவை பாடங்களாக அச்சிடப்பட்டுப் பயிற்சிநெறிக் காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இவற் றுடன் வாசிப்பதற்கு விதந்துரைக்கப்பட்ட நூல் களையும் திறந்த பல்கலைக்கழக மாணவர் வாங்கு மாறு எதிர்பார்க்கப்படுகின்றனர். அச்சிட்ட சாத னங்கள் மாணவர் படித்தற்கான நேரத்தில் 55-70 சத வீதமான காலத்தைக் கொண்டன. எனவே, திறந்த பல்கலைக் கழகக் கற்பித்தல் முறையிலே, அச்சிட்ட சாதனங்கள் பெறும் இடம் மிக முக்கியமான தென்று வலியுறுத்திக் கூறல் வேண்டும்.
கட்புல-செவிப்புலச் சாதனங்களைப் பயன்படுத் தல் திறந்த பல்கலைக்கழகக் கற்பித்தல் முறையில் முக்கியமான இன்னுெரு கற்பித்தல் முறையாகும்.

- 41 -
பயிற்சிநெறிப் பாடங்கள் வானெலியில் ஒலிபரப்
பாகும்; செய்து காட்டல்கள் தொலைக்காட்சியிற் காண்பிக்கப்படும். சலனப் படங்களையும் நழுவற்
படங்களையும் பிராந்திய நிலையங்களிற் பார்க்கின்ற
வாய்ப்பை மாணவர்கள் பெறுவர். இக்கற்பித்தல்
முறையில், மாணவர்கள் விளக்கப் படத்தைப்
பார்த்துக்கொண்டு ஒலிப்பதிவு நாடாவிற்குச் செவி
மடுத்துக் கற்கின்ற முறை விளக்கத்தை ஏற்படுத்
தும்; தெளிவை உண்டாக்கும்.
பிராந்திய நிலையங்களிலேயுள்ள ஆய்வுகூடங் களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவ்வாய்வுக் கூடங்களில் மாணவர் செய்முறை வேலைகளில் ஈடுபடுவர்; செய்து காட் டல்களை அவதானிப்பர்.விஞ்ஞானம்,தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகளைப் பயில்கின்ற மாணவர் கள் குறிப்பிட்ட காலங்களில் இவ்வகைச் செய் முறை வேலைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளிக்கப் படுகின்றனர். திறந்த பல்கலைக்கழகக் கற்கை முறை மையிலே ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தல் விஞ் ஞானம், தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறி மாண வர்களைப் பொறுத்த வரையில் மிக மிக முக்கிய மானதாகும்.
திறந்த பல்கலைக்கழகத்தின் தலைமையகம் கொழும்பு மாநகரத்துக்கு அண்மையில் நாவலை யிலே அமைந்துள்ளது. அதன் பிராந்திய நிலையங் கள் இலங்கையின் முக்கியமான நகரங்களிலெல் லாம் நிறுவப்படவிருக்கின்றன.தற்போது கொழும்பு கண்டி, யாழ்ப்பாணம், காலி, இரத்தினபுரி, மட்டக்

Page 30
-ܚܗ 42 ܢܚ
களப்பு, அமீபாறை ஆகிய நகரங்களிலே திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.
பிராந்திய நிலையங்களிற் பகுதி நேரப் போதனையாளர்கள் நியமிக்கப்படுவர். ஏறக்குறைய இருபது மாணவர்களுக்கு ஒரு போதனையாளர் பொறுப்பாக இருப்பர். இப் போதனையாளர் கள் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஒப்படைகளைத் திருத்துவர். இன்னும் கல்வி நிலையங்களில் நேரடிப் போதனைகளை நடாத்துவர். தனிப்பட்டவர்களின் கல்விப் பிரச்சினைகளை ஆராய்ந்து உதவிபுரிவர். பாட விடயங்களைக் கலந்துரையாடிக் கருத்துக்களை வழங்குவர். இவ்வாறு, பகுதி நேரப் போதனையாள ராலே திறந்த பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப் படும் நேரடிப் போதனையும் ஆலோசனை வழங் கலும் கற்கைக் காலப் பகுதியில் ஏறக்குறைய 5-15 சத வீத நேரத்தைக் கொண்டதாகும்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை மதிப் பிடுவதற்கு ஒப்படைகள் முக்கியமானவையாகும். மாணவர்கள் தாம் கற்கின்ற பாடங்கள் ஒவ்வொன் றுக்கும் ஒப்படைகள் தயாரிக்குமாறு பணிக்கப்படு வர். அவ்வொப்படைகள் எழுத்து வேலையாக இருக்க லாம்; பரிசோதனை அல்லது ஆராய்ச்சித் தரவுகளைச் சேகரிப்பதாக அமையலாம். மாணவர் அவ்வாறு தயாரிக்கின்ற ஒப்படைகளைப் போதனையாளர்கள் அல்லது விரிவுரையாளர்கள் திருத்துவர். மாணவர் களுக்குப் பயன்படக் கூடிய விளக்கக் குறிப்புகளை எழுதுவர். மதிப்பிட்டும் புள்ளிகள் வழங்குவர்.

- 43 -
அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று வாரங் களுள் மாணவர்களுக்கு ஒப்படைகளின் சரியான தரங்கள் பற்றிப் பல்கலைக்கழகம் அறிவிக்கும்.
பயிற்சி நெறியின் இறுதியில் நடைபெறும் பரீட்சையின் பின்னர், மாணவர்களின் பெறு பேற்றை நிருணயிப்பதற்குப் பரீட்சையிற் பெற்ற புள்ளிகளுடன் ஒப்டைகளின் மதிப்பீடுகள் கவனத் துக்கு எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பிட்ட தொகை யான ஒப்படைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்றும் அவைகளின் மதிப்பீட்டுத் தரங்கள் பரீட்சையிலே சித்திபெறுவதற்குப் போதுமான வையா என்றும் கணித்து முடிவுகள் மேற்கொள் ளப்படும்.
பயிற்சிநெறியின் இறுதியில் மாணவர் எழுத் துப் பரீட்சைக்குத் தோற்றுதல் வேண்டும். பாரம் பரிய பல்கலைக்கழகங்களின் தரத்தளவிற்குத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வித் தரமும் அமைய எழுத் துப் பரீட்சையிற் பெற்ற புள்ளிகளும் ஒப்படை களிற் பெற்ற தரங்களும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேருெரு வகையாக விளக்கிக் கூறின், “ஆண்டு முழுவதும் ஒப்படைகளிற் பெற்ற தரங்களும் எழுத்துப் பரீட்சையிற் பெற்ற புள்ளிகளும் ஒரு மாணவர் பயிற்சிநெறி ஒன்றினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்துள்ளாரா அல்லரா என்பதனை நிருணயிக்க உதவியாக அமையும்.” இதனுல் பாரம்பரிய பல்கலைக்கழகங்களின் தரத்துக் குத் திறந்த பல்கலைக்கழகத்தின் தரம் சமமுடை யதா என்பதை முடிவுசெய்ய உதவும்.

Page 31
- 44 -
பாரம்பரிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவதற்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகைமை கள் எதிர்பார்க்கப்படுவதை நாம் அறிவோம். ஆனல், திறந்த பல்கலைக்கழகத்துக்கான அனுமதி யைப் பொறுத்தவரையில், அவ்வகையான வரை யறுக்கப்பட்ட கல்வித் தகைமைகள் எவையுமே வேண்டியதில்லை. திறந்த பல்கலைக்கழகத்தின் இந் தத் திறந்த பான்மையானது கல்வியின் தரத்தை எவ்வகையிலும், சிறிதளவேனும் பாதிக்காத வகை யிற் பேணிக் காக்கப்படும். எனவே, பல்கலைக் கழகத்தின் பெயருக்கு ஏற்ப, முறையான கல்வித் தகைமைகள் எதுவுமே இல்லாமற் பொருத்தமான கல்வி நெறி ஒன்றினைத் தெரிந்து கற்கவும் பல் கலைக் கழகப் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வும் திறந்த பல்கலைக் கழகம் வாய்ப்பளிக்கின்றது.
திறந்த பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றுப் பயிற்சி நெறியைக் கற்கின்ற மாணவர்களைப் பல் வேறு வகுதியினராகப் (Categories) பகுக்கலாம். 18 வயதினையும் அதற்கு மேற்பட்ட வயதினையு முடைய யாவரும் தமது சொந்த நேரத்திலே தமது சொந்த வீடுகளிலேயே இருந்துகொண்டு அல்லது தொழில் புரிந்துகொண்டு ஏற்ற ஒரு கல்வி நெறியைக் கற்றுப் பட்டம், பட்ட மேற்பட்டம், திப்புளோமா, சான்றிதழ் ஆகிய கல்வித் தகைமை களைப் பெறத் திறந்த பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்
கின்றது.
திறந்த பல்கலைக்கழகத்திலுள்ள பயிற்சிநெறி
ஒன்றினைக் கற்றுத் தகைமை பெற்று ஏற்புடைய ஒரு தொழிலைப் பெறுகின்ற வாய்ப்புடைய மாண

- 45
வரை ஒரு வகுதியினராக அடையாளங் காணலாம். இவ்வகுதியினர் வேலை வாய்ப்பைப் பெற முடியாது பயனற்ற கல்வியைக் கற்றுப் பொன்னுன காலத்தை மண்ணுக்கினுேமே என்ற விரக்தி மனப்பான்மை அற்றவர்களாய், கற்ற கல்விக்கு ஏற்ற தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பர்; அல்லது செய்கின்ற தொழிலிலே பதவி உயர்வு பெறுவதற்குத் திறந்த பல்கலைக்கழகத்திலே பெற்ற கல்வி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
எந்தவொரு தொழிலைச் செய்துகொண்டிருக் கின்றவர்களுக்கும் மாணவராக அனுமதிபெற்று உயர் கல்வியைப் பெற்றுக்கொள்ளத் திறந்த பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கின்றது. இவர்கள் தாம் செய்கின்ற தொழிலிலே முறையான அறிவையும் ஆற் றலையும் பெற்று, அத்தொழிலிலே மேன்மை அடையக் கூடியதாகத் திறந்த பல்கலைக்கழகம் பொருத்தமான கல்வி நெறிகளை அவர்களுக்கு வழங்குகின்றது. இத ஞல் அம் மாணவர் செய்கின்ற தம் தொழிலை வளம் படுத்திக் கொள்ளவும் வாழ்க்கையைச் செல்வச் செழிப்புள்ளதாக்கிக்கொள்ளவும் முடியும்.
திறந்த பல்கலைக்கழக மாணவர்களின் இன் ணுெரு வகுதியினரை நோக்குவோம். இவ்வகுதி யினரும் தொழில் புரிகின்றவர்களே! ஆனல் தாம் செய்கின்ற தொழிலிலே பதவி உயர்வை நாடுகின்ற வர்கள். எனவே, திறந்த பல்கலைக்கழகத்தில் ஏற் புடைய, பொருத்தமான பயிற்சி நெறி ஒன்றினைத் தெரிந்து கற்று, அதனுற் பெற்ற தகைமைகளின்

Page 32
46
அடிப்படையிற் பதவி உயர்வுகளே எதிர்பார்ப்ப வர்கள். இவ்வகுதியினர் தொழிலில் அமர்ந்து கொண்டே திறந்த பல்கலைக்கழகத்திலே கல்வியைக் கற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகின்ற வர்கள் ஆவர்.
திறந்த பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற தகை மைகளைக் கொண்டு சிறந்த இன்னுெரு தொழிஜலப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்ற தளரா நம்பிக் கையோடு திறந்த பல்கலேக்கழகத்தில் மாணவர்க ளாகச் சேர்பவர்கள் இன்னுெரு வகுதியினர். இவர் களும் தொழிலிலிருந்துகொண்டே திறந்த பல்கலைக் கழகத்திலே மாணவர்களாகக் கல்வி கற்கின்ருர் கள். இவ்வகுதியினர் செய்கின்ற தொழிலிலும் சிறந்த இன்னுெரு தொழிலே நாடுபவர்கள்.
இவர்களேத் தவிர்ந்த இன்னுெரு வகையினரை யும் வாழ்க்கைப் பாதையிலே காண்கின்ருேம். இவர் கள் “கல்வி கல்விக்காகவே” என்ற கருத்துடை யோர். கற்பதை ஒய்வுநேர முயற்சியாகக் கொண்டு, அதில் இன்பம் காண்பவர்கள், கல்வியால் மன நிறைவைப் பெறுகின்றவர்கள். 'கற்றது கைம்மண் னளவு, கல்லாதது உலகளவு' என்ற கருத்தோடு மேலும் மேலும் கல்வியைப் பெற விரும்புகின்றவர் கள். இவ்வகுதியினரும் திறந்த பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு வகுதியினராவர்.
உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களும் திறந்த பல்கலைக்கழகத்திலே விரும்பிய கற்கைநெறி ஒன்றுக்கு அனுமதி பெற்றுப் படிப்பதற்கு வாய்ப் புண்டு. இவர்கள் கல்வியாற் பெறுகின்ற இன்பத்

- 47 -
தையே நோக்கமாகக் கொண்டவர்கள். அறிவுப் பசியைப் போக்கவும், ஆராய்ச்சியிலே ஈடுபட்டு உழைக்கவும் விரும்புகின்றவர்கள்.
நாட்டின் தேவைக்கு ஏற்ப அந்த நாட்டின் கல்விமுறையும் அமைதல் வேண்டும். அவ்வாறு அமையும்போதுதான் நாடு வளமுள்ளதாக அமை யும்; மக்கள் வேலேவாய்ப்புக்களைப் பெற்றுச் செல் வச் செழிப்போடு வாழவும் முடியும். இதனை இன் றைய அரசு நன்கு உணர்ந்து தொழில் நுணுக்கக் கல்வி, தொழில்முறைக் கல்வி ஆகியவற்றுக்கும் வாய்ப்பளிக்கக்கூடியதான கல்வி முறைமை ஒன்றுக் குத் திட்டம் தீட்டியுள்ளது. இவ்வகையான தொழில் வாய்ப்புக்களே வழங்கக்கூடிய கல்வியைத் தொழில் செய்வோருக்கும் ஏனேயோருக்கும் வழங்கக்கூடிய கல்வி நிறுவனமாகத் திகழப்போவது இலங்கைத் திறந்த பல்கலேக்கழகமாகும்.
திறந்த பல்கலைக்கழகம் வழங்கவுள்ள பயிற்சி நெறிகளும் பாடங்களும் தொழில் வாய்ப்பை வழங் கத் தக்கவை. படித்து முடித்துப் பட்டம் பெற்ற பின்னர், வேலே இல்லேயே என்ற கவலேயின்றி ஏதோவொரு தொழிலேச் செய்யக்கூடியதாக வகுக் கப்பட்ட பாடநெறிகளேயே திறந்த பல்கலேக்கழகம் நடாத்துகின்றது.

Page 33
5. காதலர் வாழ்வு
இன்பமான இல்வாழ்வு மனித இனத்துக்கு மட்டும் உரியதன்று. பறவைகளும் தம்முள்ளே இல் வாழ்க்கை நடாத்தி இன்புறுகின்றன; மிருகங்களும் கூடிவாழ்ந்து குலாவிக் களிக்கின்றன. பகுத்தறி வற்ற அவைகளின் இல்வாழ்க்கை உற்றுநோக்கு வோரின் உள்ளத்தைத் தொடக்கூடியதாகும்.
மென்சிறகராலாற்றும் புரு
ஆண் புருவும் பெண் புருவும் சேர்ந்து கூடு கட்டுகின்றன. சுள்ளிகளே ஒவ்வொன்ருகப் பொறுக்கு கின்றன. அவற்றைக் கொண்டு மரக் கொம்பரிலே பாதுகாப்பான ஒர் இடத்திற் கூட்டை அமைக்கின் றன. பருவ காலம் வந்ததும், பெண் புரு முட்டை களே இடுகின்றது; அந்த முட்டைகளேப் பேணி அடைகாக்கின்றது. பெண் புரு கூட்டிலே முட்டை களே அடைகாக்க, ஆண் புரு அருகேயுள்ள கொம் பர் ஒன்றிலே அமர்ந்திருக்கின்றது; பின்னர், அந்த இரு புருக்களும் ஒன்று சேர்ந்து உணவு தேடி உண்டு மகிழ்கின்றன; வானத்திலே பறந்து இன்பங் காண்கின்றன.
முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் பெண் புரு உணவு தேடுகின்றது; குஞ்சுகளுக்கு உணவூட்டி உவப்புறுகின்றது. ஆண் புருவும் பெண் புருவும் கணவனும் மனேவியுமாகச் சேர்ந்து, தம் குஞ்சுகளேப் பேணிக் காக்கின்றன. குஞ்சுகள் வளர்ந் ததும், தமக்கு வேண்டிய உணவைத் தேடி உண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 49
வாழ்கின்றன. தமது குஞ்சுகளுக்காக அந்தப் புருக்
கள் சேமித்து வைப்பதுமில்லே, சீதனம் வேண்டுமே என்று கவலே கொள்வதுமில்லே,
சேர்ந்து வாழ்ந்து இல்வாழ்க்கை நடாத்தும் அந்தப் புருக்கள் சண்டை போடுகின்றனவா? ஒன்றையொன்று பிரிந்து வாழ்கின்றனவா? ஆண் புரு இன்னுெரு பெண்புருவை நாடுவதுமில்ல; பெண்புரு இன்னுெரு ஆண் புருவைத் தேடுவது மில்லே. இதனுல் அவைகளின் வாழ்க்கையில் "மன முறிவு' ஏற்படுவதுமில்லே,
இரண்டு புருக்களின் வாழ்க்கையிலே நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பாலேநிலத்திலே கண்டு வியப்புறு கின்ருர் பாலே பாடிய கடுங்கோ. பாலே நிலத்திலே மரங்கள் பல நிற்கின்றன, அவை பூப்பதுமில்லே, காய்ப்பதுமில்லே. வற்றி வரண்ட மரங்கள்; இலேகளே உதிர்த்தி வாடி வதங்கி நிற்கின்றன. அங்கே இரண்டு புருக்கள். ஒன்று ஆண்; மற்றையது பெண். அவை நிழலின்றி வெயிலின் வெம்மையால் வேதனை அடைந் தன. மென்மையான உடலேயும் உள்ளத்தையும் உடையது அந்தப் பெண்புரு; அதனுல் கொடிய வெயிலின் வெம்மையைப் பொறுக்க முடியாது வேதனே அடைந்தது. அதன் இறகுகள் காய்ந்து விட்டன; நீரில்லாமல் நா வரண்டுவிட்டது. மத்தி யான நேரம் அல்லவா? கொடிய வெயிலில் அந்தப் பெண் புரு பதைபதைத்தது.
ஆண் புரு வலிமையான உடலையும் உறுதி யான உள்ளத்தையும் உடையது. அதனுல் கொடிய வெயில் அதனே வருத்தவில்லே, துன்பமான சூழலி
A.

Page 34
س- 50 -
லும், உடல் நலியாமலும் உள்ளம் தளராமலும் சமாளிக்க அதனுல் முடிந்தது. ஆணுல், தன் காதலி யின் துயரத்தைக் கண்டு அது கவலே கொண்டது துயரத்தைத் துடைக்கத் துடிதுடித்தது. காதலி யின் துயரத்தைப் போக்க என்ன செய்யலாமென்று எண்ணி எண்ணி ஏங்கியது. இறுதியிற் தன் காதலி யின் அருகே சென்றது. தனது சொண்டினுல், அதன் இறகுகளேத் தடவியது: அருகே அமர்ந்து ஆறுதல் சொல்லியது. ஆணுல், பெண் புருவின் துன்பம் நீங்கவில்லே; அதன் துன்பம் கூடியது. கொடிய வெயில் அதனே வாட்டி வருத்தியது.
பெண்புருவின் அருகே அமர்ந்திருந்த ஆண் புருவிற்கு அப்போது ஓர் யோசனை எழுந்தது. T மென்மையான இறகை வீசி வீசிக் காற்றை எழுப்பியது. அந்தக் காற்றுப் பெண்புருவின் மேல் விழுந்தது. தனது இறகைக் குடைபோல விரித்துப் பெண்புருவின் மீது பிடித்தது. அப்போது பெண் புருவின் வரண்ட இறகுகள் வெம்மை குறைந்தன. உடலில் எழுந்த வியர்வையும் குறைந்தது. வெம்மை குறைந்து தண்மை உண்டானது. ஆம், ஆண்பு வின் இறகினுல் எழுந்த காற்றுப் பெண்புருவுக் ஆறுதலையும் அமைதியையும் அளித்தது. ஆண் புருவின் இறகு குடைபோல அமைந்து பெண் புரு அக்கு நிழலேக் கொடுத்தது. பெண்புரு கவலே திர்ந்து களிப்படைந்தது. காதலியின் களிப்பைக் கண்டு கவலே நீங்கியது ஆண் புரு. இவ்வாறு ஆறறிவற்ற அந்தப் புருக்கள் அல்லல் வந்தபோதும் அன்பாக வாழ்ந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... 51 -
கடுங்கோ என்ற புலவர் இக்காட்சியினைப் பாலே நிலத்திலே சுண்டு களிப்படைந்தார். அவர் கண்ட அந்தக் காட்சி வாயிலே சொற்களாக வெளிவந்து கவிதையாக உருவெடுத்தது.
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு.
என்று புருக்களின் காதல் வாழ்வை இனிய சொற் களாலே சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டினுர், இந்த இரண்டு அடிகளும் புலப்படுத்திய புருக்களின் அன்பு வாழ்க்கை கற்போரின் உள்ளத்துக்கு நல் லுணர்வை நல்குகின்றது அல்லவா?
பிடி ஊட்டிப் பின்னுண்ணும் களிறு
பாலே நிலத்தில் வேனிற் காலம், அழலன்ன வெயில்: மணல் நிறைந்த பாதை; இலேயுதிர்த்திய மரங்கள்; காய்ந்து கருகிய செடிகள்; வற்றிய சுனே கள்; வெடிப்புகள் நிறைந்த நிலம், அங்கே இரண்டு யானேகள் தமது கன்றுடன் சென்றன. கன்று முன்னே செல்லக் களிறும் பிடியும் பின்னே சென் றன. கல் நிறைந்த பாதை; கனல் பறக்கும் வெயில், அதஞல் அவை களேத்துவிட்டன. தண்ணிர்த் தாகத்தால் இங்கும் அங்கும் அலேந்தன.
யானேக் கன்று தண்ணிர்த்தாகத்தாலே தவித் தது; நடக்க முடியாமல் அல்லற்பட்டது. அதனைப் பார்த்துத் தந்தையும் தாயும் வேதனை அடைந்தன; கன்றின் தாகத்தைத் தணிக்கத் தண்ணீர் தேடிப் பாலே நிலமெல்லாம் அலேந்தன; சுனைகளைத் தேடி இங்கும் அங்கும் அலேந்தன. ஆளுல் சுனேகள்

Page 35
ー32ー
யாவும் வற்றி வரண்டு காணப்பட்டன. நக்கி எடுப்ப தற்குத்தானும் நீர் இல்லாத அந்தச் சுனைகள் அவைக்கு ஏமாற்றத்தையே அளித்தன. இளங் கன்று அல்லவா ? இளைத்து விட்டது. நடக்க முடி யாது தள்ளாடியது.
கொடிய வெயில் அல்லவா? அதனுற் பாலே நிலத்திலே கானல் நீர் ஓடியது. அந்தக் கானல் நீர் யானைகளின் கண்களுக்குத் தெரிந்தது. அதனை நீர் என்று எண்ணி, அதனைக் குடிக்கும் அவாவி ஞலே அவை துரத்திச் சென்றன. இறுதியிலே அந்த யானைகள் அடைந்த ஏமாற்றத்தை எங்ங்ணம் எடுத்துரைப்பது?
வற்றி வரண்ட சுனை ஒன்றிலே கொஞ்சத் தண் ணிர் இருந்தது. அந்த நீரைக் கண்டு யானைக் கன்று களிப்படைந்தது. நீரைப் பருக ஓடிச் சென்று தண்ணீரிலே இறங்கியது. அப்போது யானைக் கன் றின் கால்கள் தண்ணீரைக் கலக்கிவிட்டன. கலக் காமல் அல்லவா நீரைப் பருகுதல் வேண்டும்? இதனை இளங் கன்று எவ்வாறு அறியும்? தான்மட்டும் அல் லாது தந்தையும் தாயும் பருக வேண்டுமே என்றும் அது நினைக்கவில்லை; தண்ணிரைக் கண்டதும் ஓடிச் சென்று சுனையிலிருந்த நீரிற் சுற்றிச் சுற்றி நடந் தது. துதிக்கையால் நீரை வாரி வாரி நாலாபக்க மும் வீசியது. வாரி இறைத்த நீர், அதன் உடம் பெல்லாம் பட்டது. பின்னர், கலக்கிய நீரைக் கன்று பருகியது; அதன் தாகமும் தணிந்தது.
*இட்டும் தொட்டும் கெளவியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்’ குழந்

- 53 -
தைகள் விளையாடுவது போலவே அந்த யானைக் கன் றும் விளையாடியது. அதனைக் கண்டு, களிறும் பிடி யும் மகிழ்ந்தன, பாலை நிலத்திலே நடந்து களைத்த துன்பத்தையும் மறந்தன. “மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே” என்பது மனித இனத்துக்கு மட்டும் சொந் தமா? இல்லை. விலங்குகளுக்கும் சொந்தம்; பறவை களுக்கும் சொந்தம்.
கலங்கிய சின்னிரைக் கயந்தலை குடித்துத் தன் தாகத்தைத் தணித்தது. எஞ்சியிருந்த நீர், தனக் கும் தன் மனைவிக்கும் போதாது என்பதைக் களிறு கண்டது. எனவே, என்ன செய்யலாமென எண்ணி யது. ஆண்கள் உண்ட பின்னர், பெண்கள் உண் பது தமிழர்கள் மத்தியிலுள்ள வழக்கு. ஆணுல், ஆண்யானை அவ்வாறு செய்யவில்லை. யானையாக இருந்தாலும் பெண் யானைதானே? மென்மையானது. உடல் வலிமையும் உள்ள உறுதியும் இல்லாதது. ஆண்யானை துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளு மளவிற்குப் பெண் யானையாலே துன்பத்தைத் தாங் கிக்கொள்ள முடியாது. பாலை நிலத்திலே நடந்த களைப்பு ஒருபுறம்: தண்ணிர்த் தாகம் மறுபுறமீ. தன் மனைவியின் இந்த நிலையைக் கண்டு, களிறு கலங்கியது. தான் எஞ்சியிருந்த நீரைப் பருகா மல் தன் காதலிக்கு அளித்து இன்பங்காண எண்ணி யது. எனவே, சுனையில் எஞ்சியிருந்த நீரை மனைவி யைக் குடிக்கவிட்டது. பெண் யானை தண்ணிரைப் பருகித் தனது தாகத்தைத் தணித்துக்கொண்டது. அதனைக் கண்டு ஆண் யானை மகிழ்ந்தது.

Page 36
- 54 -
பெண் யானே குடித்து முடித்த பின்னரும் சுனே யிலே கொஞ்ச நீர் எஞ்சியிருந்தது. அந்த நீரைக் குடித்துத் தனது தாகத்தைத் தணித்துக்கொள்ள லாம் என்று ஆண் யானே கருதியது. துதிக்கையை நீரிலிட்டு எஞ்சியிருந்த அந்த நீரை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கியது. இதனே,
*துடியடிக் கயங்தலே கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு " என்று கடுங்கோ என்ற புலவர் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார். மனிதர்களிடத்திலே காணமுடியாத சில நற்பண்புகளைச் சிலவேளைகளில் விலங்குக ளிடையேயும் காணலாம்: பறவைகளிடையேயும் பார்க்கலாb.
தன் நிழலேக் கொடுத்தளிக்கும் கலே
இாண்டு அழகிய மான்கள் ஒன்று ஆண்; மற்றது பெண் அவை இரண்டு வெம்மையான பாலேயிற் கல் நிறைந்த பாதையிலே சென்றன. அனல் போன்ற வெயிலால் மடப்பிஜன அவதிபுரி றது: கல் நிறைந்த பாதையில் நடக்க முடியாது கவலைகொண்டது. பெண் மான் அல்லவா? பெண் என்ருலே மென்மை" என்று பொருள். இவ்வியல்பு விலங்குகளுக்கு மட்டும் விதிவிலக்கா?
மென்மையான உடலேயுடைய அந்தப் பெண் மான் பாலைநில வெயிலிலே பதைபதைத்துத் துடி
துடித்தது. கல் நிறைந்த பாதையிலே நிழலேத் தேடிக் கவலையோடு சென்றது. பாலே நிலத்திலே
நிழல் ஏது? வற்றி வரண்ட மரங்களேயே கான
34.123

-- 55 -
லாம். எனவே, நிழலேத் தேடித் தேடி அலேந்து அலேந்து அல்லலுற்ற அந்த மான் கடைசியிலே தளர்ந்து தரையிற் படுத்துவிட்டது.
ஆண் மான் தன்னுடைய காதலியின் துன்பத் தைக் கண்டு கவலே கொண்டது. தன் காதலியின் துன்பத்தைத் துடைத்து இன்பங்கான அது விழைந் தது. தளர்வுற்றுத் தரையிலே கிடந்த தன் காத விக்குத் தன்னுடைய நிழலேக் கொடுத்து இன்பங் கான விரும்பியது. தன் காதலியின் அருகே சென் றது. வெய்யோனின் கொடிய வெயிலேத் தன் உடலி ேைல தடுத்தது. அப்போது ஆண்மானின் நிழல் பெண் மான் மேல் விழுந்தது. தனது உடலின் நிழல் காதலியின் மேல் விழக்கூடியதாய்க் கவனித்து அந்த ஆண் மான் நிற்கின்றநிலை கவிஞனுடைய உள்ளத்தைத் தொட்டுவிடுகின்றது. ஆண் மானின் நிழலிலே மடப்பினே தன் தளர்வைப் போக்கி ஆறு தலும் அமைதியும் அடைகின்ற நிலையைக் கண்டு பாலபாடிய கடுங்கோ வியப்படைகின்ருர்,
இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பினைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை.
தன் துன்பத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன் காதலியின் இன்பத்தினேயே பெரிதாக எண்ணி வாழ்கின்றதே அந்தக் கலைமான்; அது மனிதவினத் துக்கு நல்லதொரு பாடத்தையல்லவா கற்றுக் கொடுக்கின்றது? மனிதனும் காதல் வாழ்வு வாழ் கின்ருன்; காதலாற் கட்டுண்டு இன்பமும் பெறு கின்றன். ஆணுற், கலைமான் காதலுக்குக் கட்டுப் பட்டுத் தன் காதலிக்கு இன்னிழல் கொடுத்து இன்பங்காணும் பெருந்தகுநிலை நமது உள்ளத்துக்கு நல்லுணர்வினை அல்லவா அளிக்கின்றது!

Page 37
6. கஜலவளர்ச்சியிலே
ஒரு திருப்புமுனே 1931ஆம் ஆண்டு அனைத்து வயது வந்தோர் வாக்குரிமை இலங்கையிலே அறிமுகம் செய்யப்பட் டதிலிருந்தே மந்தநிலையிலிருந்த தமிழ்க் கலைகளும் தமிழ்ப் பண்பாடும் புத்துயிரும் புதுமெருகும் பெறத் தொடங்கின என்று கூறுவது சாலப் பொருந்தும், கலேயும் பண்பாடும் சுதந்திரமாக வாழ்கின்ற மக்கள் மத்தியிலேயே வளர்ச்சியும் உயர்ச்சியும் பெற்றுத் திகழ முடியும். இந்த உண்மையினே எமது நாட்டில் அனேத்து வயது வந்தோர் வாக்குரிமை வழங்கப்பட்டதிலிருந்து ஐம்பது ஆண்டுகளே வர லாற்றுக் கண்கொண்டு நோக்குகின்றபோது இனிது கண்டுகொள்ளலாம்.
அனேத்து வயது வந்தோர் வாக்குரிமை இலங் கையில் அறிமும் செய்யப்பட்ட பின்னர், அதாவது ஐம்பது ஆண்டுக் காலப்பகுதியிலே இலங்கை மக்கள் பத்துத் தடவைகள் இரகசிய வாக்களிப்பின் மூலம் ஆட்சியை அமைத்துள்ளனர். இரகசியமான சுதந்திர வாக்குகள், ஆட்சியாளர்களேத் தெரிவு செய்யும் வலிமையைப் பெற்றிருந்தன. அந்தப் பெரு மதிப்பு மிக்க வாக்குகள், மக்களின் பங்களிப்புடன் மக்களாட்சியை நடாத்துமாறு ஆட்சியாளர்களைப் பணித்தன. மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் மக்களின் ஆட்சியாக அமைந்தபோது கலைகள் புத்துயிர் பெற்றன. நலிவும் மெலிவும் பெற்றிருந்த தமிழ்க் கலேகள் எழில் பெற்று மிளிர்ந்தன; வளர்ச் சியும் உயர்ச்சியும் அடைந்தன.
 
 
 
 
 
 

- 57 -
* ஆய கலைகள் அறுபத்து நான்கினேயுமி" என்ற கூற்றிஜனக்கொண்டு, தமிழ் மக்களிடையே அவர்கள் வாழ்வும் வளமும் பெற்றிருந்த அன்று. அறுபத்து நான்கு கலைகள் இடம் பெற்றிருந்தன என்பது தெரிய வருகின்றது. இவற்றுள் இலக்கியக் கலே, நாடகக்க2ல, இசைக்கலே, நடனக்கலே ஆகியவை கடந்த ஐம்பது ஆண்டுகளிற் சுதந்திரமாகக் குறிப் பிடத்தக்களவு வளர்ந்துள்ளன என்று துணிந்து கூறலாம். ஒரு காலத்திலே தமிழகத்தில் அரண் மஐனகளுக்கே உரியனவாக இசை, நடனம், இலக்கி பம் போன்ற கஜலகள் அமைந்திருந்தன. பல்லவ மன்னர் ஆட்சியின் போது அவை கோயில்களிலே இடம் பெறத் தொடங்கின. கலேக் கூடங்களாய்த் திகழ்ந்த கோயில்கள் இசை, நடனம், இலக்கியம், சிற்பம் ஆகிய கலேகளே மக்களுக்கு வழங்கின. கோயில்களிலே வளர்ந்த இக்கலேகள் சமயச் சார் புடையனவாகவே மிளிர்ந்தன. தமிழ்க் கலைகள் யாவும் ஏதோவொரு வகையில் இறைவனுடன் தொடர்புடையனவாகவே வளர்ந்து வந்துள்ளன என்பதை வரலாறு இன்று தெளிவாக்குகின்றது. இறைவனேக் கஜலகளின் வடிவமாகவே தமிழ்க் கலை ஞர்கள் கண்டனர். இறைவனை இசை வடிவமாகக் கண்டு பாடிப் பரவினர்; சிவனே ஆடும் தெய்வ மாகக் கண்டு வணங்கினர்; சொன்மாலேகள் புனேந்து வழிபட்டனர். கலேகள் கடவுள் வடிவங்கள் ஆயின. இவ்வாறு தமிழ் மக்கள் கண்ட கலைகள் தெய்வீகத் தன்மை பெற்றன. "இந்திய இலக்கியக்கலே சமயச் சார்பு உடையது' என்று தாகூர் கூறுவர். ஆனல், தமிழர்களின் கலைகள் ஒவ்வொன்றுமே இறை வழி

Page 38
- 58 -
பாட்டுடன் இனேந்தவை. இவ்வாறு அமைவதற்குக் கலேக்கூடங்களாகத் திகழ்ந்த கோயில்களே காரண மாகும் எனலாம்.
மன்னர் ஆட்சி மறைந்தது; மக்களாட்சி மலர்ந் தது. அரண்மனையிற் பிறந்து, ஆலயத்தில் வளர்ந்த கலைகள், மக்கள் மத்தியிற் பூத்துக் காய்த்துப் பொலிந்தன. தெய்வீகப் பொலிவுடன் கூடிய நடனம், இசை, இலக்கியம், சிற்பம் முதலிய கலேகள், தெய் வீகக் கலேகளாகவே மக்கள் மத்தியில் வளர்ந்த இறையுணர்வோடு கூடிய உணர்வுகளே மக்களுக்கு வழங்கின; இன்றும் தொடர்ந்து வழங்கி வருகின் றன. இறைவனேயும் கஜலகளேயும் பிரிக்க முடியாத அளவிற்கு அவை ஒன்றி நின்று மக்கள் கலேகளாகி மக்களாட்சியில் மறுமலர்ச்சி பெற்று வளர்ந்து வரு கின்றன். இலங்கையைப் பொறுத்தவரையில், 1931ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஐம்பது ஆண்டு களாய் நடனம், இசை, நாடகம் ஆகிய கலைகள் அடைந்த வளர்ச்சியைச் சுருக்கமாக நோக்குவோம்.
பாழ்ப்பாணத் தமிழரிடையே 19ஆம் நூற்ருண் டிர் சின்னமேளப் பரம்பரையினராலேயே நடனக் கலே தொடங்கப்பட்டது என்று கூறுவது பொருத்த மாகும். திருவிழாக் காலங்களிற் கோயில்களில் நடன மாடுவதற்குத் தமிழகத்திலிருந்து இவர்கள் வா வழைக்கப்பட்டனர்; இவர்கள் தென்னிந்தியக் கோ யில்களில் நடனமாடிய தேவ அடியாள்" மரபின ரைப் போன்றவர்கள். இவ்வாறு தொடங்கிய நடனக் கலே, ஏறத்தாழ 1950ஆம் ஆண்டு வரை யாழ்ப் பாணத்தில் நிலவி வந்தது. மறுபுறத்திற் கர்நாடக
 

- '59 -
இசை வரலாற்றை நோக்கும் போது, கர்நாடக இசை யில் ஆரம்பம், நடனக்கலேயின் தொடக்கத்திலும் முந்தியதென்பதற்குச் சான்றுகள் இருப்பதைக் காண்கின்ருேம். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஏறத்தாழ 1925-30 ஆண்டுகளிற் கர்நாடக இசை யைக் கற்பிப்பதற்கு வகுப்புக்கள் தொடங்கப்பட் டன. இன்னுெரு புறத்தில் நாடக வளர்ச்சியின் வர லாற்றைப் பார்க்கும்போது நடனம், இசை ஆகிய இரண்டிற்கும் முன்பாகவே நாடகக்கலே இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நிலேத்து வளர்ந்து வந் துள்ளது என்பது தெரிய வருகின்றது. நாட்டுக் கூத்து மரபு மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மலே பகம் முதலான பிரதேசங்களில் நிலவி வந்துள்ள மையை வரலாறு தெளிவாக்குகின்றது.
1931ஆம் ஆண்டில் அனைத்து வயது வந்தோர் வாக்குரிமையின் அறிமுகத்தின் பின்னர், இம் மூன்று கலேகளும் வரலாற்றில் ஒரு திருப்பு முனே யைக் கண்டன. மக்களாட்சியிற் கலேகள் புத்துணர்ச் சியையும் புதுமெருகையும் பெறும் என்பதற்கு இத் திருப்புமுனே நல்லதோர் எடுத்துக் காட் டாகும்.
பரதநாட்டியத்தை வரன்முறையாகக் கற்பதற் குத் தமிழகத்துக்குப் பலர் சென்றனர். அங்கே தாம் கற்ற, கலேப் பொலிவும் தத்துவப் பொருளும் நிறைந்த நடனக் கலேயை இலங்கை திரும்பியதும் மேடைகளில் அரங்கேற்றியும் நடனப் பாடசாலே களேத் தொடங்கி அங்கே மற்றவர்களுக்கு அதனேக் கற்பித்தும் வருவாராயினர். கடந்த சில ஆண்டு

Page 39
களிற் பொதுவாக இலங்கையின் பலவிடங்களிலும், சிறப்பாகத் தலைநகரிலும் நிகழ்ந்த நாற்றுக் கணக்கான நடன அரங்கேற்றங்கள் தமிழ் மக்கள் பரதநாட்டியக் கலேயிற் காட்டிவரும் ஆர்வத்தை இசுரிது தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில் இல் லாத அளவிற்கு இலங்கையில் நடன அரங்கேற்றங் களும் அரங்கேற்ற அமைப்பு முறைகளும் வளர்நீ துள்ளன என்று கூறின் அது மிகையாகாது. செல் வம் படைத்தவர்கள் மட்டுமன்றி, சாதாரணமான வறிய மக்களும் கற்கக்கூடிய கலேயாகப் பரதநாட் டியக் கலே கடந்த பத்தாண்டுகளில் மாறியுள்ளது என வலியுறுத்திக் கூறலாம். இன, மொழி, சாதி வேறுபாடுகளின்றி இக்கலே இன்று இலங்கையிற் பலராலும் பயிலப்படுகின்றது. சிங்கள இளம் நங்கை பரும் பரதக் கலேயைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் தொடங்கியுள்ளனர். இஃது இன ஒற்றுமைக்குப் பாதநாட்டியக்கலே வித்திட்டுள்ளது என்பதையே தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றது. சிங்களப் பெரு மக்களும் தம் புதல்வியரைத் தமிழகத்துக்கு அனுப் பிப் பரதநாட்டியத்தைக் கற்பிக்க முன்வந்துள் எமையும், பயின்றபின் அாங்கேற்றங்களே நடாத்தி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கவை. பரத நாட்டியத்தை இலங்கையின் இன ஒற்றுமையின் பாலம் என்று வருணிப்பது சாலப் பொருத்த முடைத்து.
பரதநாட்டியக் கலே அமிசங்களில் வேறு நடன வகைகளின் அமிசங்களேப் புகுத்துகின்ற நிஐலயை யும் கடந்த சில ஆண்டுகளிற் காணக்கூடியதாக இருந்தது. இவ்வகைக் கலப்பு இன ஒற்றுமையை
 
 
 
 
 
 

س- 61 --
ஏற்படுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். சிங்கள் நங்கையர் பரதநாட்டியத்தைப் பயில்வது போன்று, தமிழ் நங்கையர் கண்டிய நடனத்தைக் கற்பார் களேயாளுல் இன ஒற்றுமை தானுகவே வளரும். ஆணுல் ஒரு கலே அமிசத்தை இன்னுென்றிற் புகுத்து வது கலேயின் புனிதத்தன்மையையே கெடுப்பதற்கு வழி செய்யும்.
நடனக் கலேயைப் போன்றே இசைக் கலேயும் அனேத்து வயதுவந்தோர் வாக்குரிமையின் அறி முகத்தின் பின்னர், இனிது வளமாக வளர்ந்தது. இசைக் கலேயைக் கற்பதற்கு ஆண்களும் பெண் களும் தமிழகத்திற்குப் படையெடுத்தனர். வாய்ப் பாட்டு, வயலின், வினே, மிருதங்கம் என்பவற்றை நன்கு கற்று நாடு திரும்பினர். இசைக் கல்லூரிகள் தோன்றின; கலே மன்றங்கள் உதயமாயின. இசைக் கச்சேரிகளேச் சிலமணி நேரம் அமர்ந் திருந்து கேட்டு மகிழ்கின்ற அளவிற்கு இக்கலே வளர்ந்துள்ளது. எனினும், தமிழகத்திலே இசைக் கலைஞர்கள் வளர்ந்துள்ள தரத்திற்கும் சுவைஞர்கள் மலிந்துள்ள அளவிற்கும் நாம் வளரவில்லை என் பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனினும், தமிழ் மக்களின் மங்கல வாத்தியமான நாதஸ்வர இசை யாழ்ப்பாணத்திலே தரமான நிலைக்கு வளர்ந் துள்ளமை பாராட்டுதற்குரியது.
இலங்கையின் தமிழ் நாடக வரலாற்றைப் பார்க் கும்போது அண்மைக்காலத்திற் பல நாடக மன் றங்கள் நவீன முறைகளைப் பயன்படுத்தி நவீன நாடகங்களே மேடையேற்றியுள்ளன. ஆணுல் நாடகக்

Page 40
... 62 -
கலேஞர்கள் வளர்ந்துள்ள அளவிற்கு நாடகச் சுவைஞர்கள் வளரவில்லே. இதனுல் நாடகக் கஃ ஞர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள் தளர்ச்சி அடைகின்றன. அவர்களின் கலே வடிவம் வள கின்ற தரத்திற்கு அவர்களின் ஆர்வமும் அவாவும் தூண்டப்படுதல் வேண்டும். நாடகங்களின் வளர்ச் சிக்குச் சுவைஞர்களின் பெருக்கம் மிகவும் வேண்
நடனம், இசை, நாடகம் ஆகியவற்றின் வளர் சிக்கு மக்களாற் பதவியேறிய அரசுகள் ஆக் பூர்வமான பல நற்பணிகளேச் செய்துள்ளன. சிற பாக இன்றைய அரசு ஆற்றிவருகின்ற பணிகள் மிகப் பல. எமது நாட்டில் அனேத்து வயதுவந்தோர் வாக்குரிமை வழங்கப்பட்டதிலிருந்து ஐம்பதாவது ஆண்டினை நினைவுகொள்ளும் போது, மக்கள் 50 ஆண்டுகளாக அனுபவித்து வந்த வாக்குரிமையின் பயனே அவை என்று அறுதியிட்டுரைக்கலாம். நட னம், இசை, இலக்கியம், நாடகம் ஆகிய கலைகளே ஊக்குவிப்பதற்கும் வளர்ப்பதற்கும் மதியுரைக் குழுக்களே மாறி மாறிப் பதவியேற்ற அரசுகள் அமைத்து வந்துள்ளன. இன்றைய அரசு அமைத்த மதியுரைக் குழுக்கள் பிரதேச அபிவிருத்தி அமைச் சின் கீழ் இயங்கி வருகின்றன. 1980ஆம் ஆண்டிற் கலாசார அமைச்சின் கீழ் நாடக மதியுரைக்குழு அமைந்திருந்தபோது நாடகக் கலைஞர்களே ஊக்கு விப்பதற்கு முதலிற் பிரதேச மட்டத்திலும், பின் சீனர் தேசீய மட்டத்திலும் நாடக விழாக்களே நடாத் தியமை வரலாற்றில் இடம்பெற வேண்டியதாகும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 63 -
கலேயுணர்வு இளைஞர்களிடையே வளரல்வேண் டும். இதனேக் கருத்திற்கொண்டு தேசிய இளேஞர் சேவை மன்றம் அகில இலங்கை மட்டத்திற் கலேப் போட்டிகள் பலவற்றை ஆண்டுதோறும் நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது. போட்டிகளில் வெற்றி பெறுவோர் பணப் பரிசில்களேயும் சான்றிதழ்களே யும் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றன.
இந்தியக் கலேஞர்கள் இலங்கைக்கு வந்து போ வதற்கு அனுமதி வழங்கியதும் தமிழக வெளியீடுகளே வரவழைப்பதற்கு முன்பு இருந்துவந்த தடையை நீக்கியதும் முறையே கலேயை வளர்க்கவும் அறிவுப் பசியைப் போக்கவும் அரசு மேற்கொண்ட நற்பணி கள் என்றே கூறலாம். கலேக்கும் அறிவுக்கும் வரம் பிடுவது சர்வாதிகார ஆட்சி முறைக்கு ஏற்றது: மக்களாட்சிக்கு ஒவ்வாதது. இந்தியக் கலேஞர் க3ளயும் தமிழக வெளியீடுகளையும் தடை செய்தமை சுவைஞர் மனங்களேப் புண்படுத்தியது: கலேயின் தரத்தை மட்டுப் படுத்தியது.
கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை கள வளர்க்க அரசுடன் தனியார் நிறுவனங்களும் பெரும் பணியாற்றியுள்ளன. கலேகளே வளர்க்க கழகங்கள் அமைக்கப்பட்டன; சங்கங்கள் நிறுவப் பட்டன; பாடசாலைகள் கட்டப்பட்டன: கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பாடசாலேகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் மன்றங்களும் சங்கங்களும் உதயமாயின. அவை விழாக்களே எடுத்துக் கலேகளே வளர்த்தன; கலேஞர்களே ஊக்கு வித்தன. இன்று இந்த நிலை மேலும்மேலும் வளர்ந்து வருவது பாராட்டுதற்குரியது.

Page 41
- 64 -
பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் இசைக் கலேயையும் நடனக் கஜல யையும் பாடத்திட்டங்களிலே இடம்பெறச் செய்து, ஆசிரியர்களே நியமித்து மாணவர் அக்க3லக2ளக் கற்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை கள் வரவேற்கத்தக்கன. நுண்கலைகளே வளர்ப்பதற்கு அழகியற் கல்வி நிறுவகம் ஒன்று கொழும்பிலே நிறுவப்பட்டுள்ளது. இசை, நடனம் ஆகிய முக்கிய கலேகளேக் கற்றுக் கொடுக்க யாழ்ப்பானத்திலே 'இராமநாதன் அக்கடமி அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 1931ஆம் ஆண்டில் அனேத்து வயது வந்தோர் வாக்குரிமையின் அறிமுகம் கடந்த ஐம்பது ஆண்டுக் காலப் பகுதியில் மக்களாட்சியின் வாயிலாகத் தமிழ்க் கலேக2ளப் பெருமளவிற்கு வளர்த்துள்ளது. இவ்வளர்ச்சி மக்களாட்சியின் மகத்துவத்தையே தெளிவுபடுத்துகின்றது. கஜலகள் வளர்ந்தபோது தமிழ்ம்க்கள் பண்பாடும் பேணிக் காக்கப்பட்டது.

7 கொத்தணி முறைமை
பாடசாலேகளேக் கொத்தணிகளாகத் தொகுத் தல், கல்வி வெள்ளே அறிக்கையின்படி, கல்வி அமைச்சு மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்தங்களுள் முக்கியமானதொன்று. இப்புதிய சீர்திருத்தம் புதிய தொரு கருக்கோளோடு கூடியது; இதுவரை மேற் கொள்ளப்படாததொன்று. நல்லதோர் அமைப்பு முறையை உண்டாக்குதல், முகாமிப்பை உருவாக் குதல், அபிவிருத்தியை ஏற்படுத்தல் என்பன இச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும். இக்கொத்தணித் தொகுப்பு முறை அரசினதும், சமுதாயத்தினதும் மூலவளங்களே வீண்விரயமின்றி மட்டுப்படுத்திப் பயன்படுத்துவதற்கு உதவியாக அமையும்.
9,500 பாடசாலைகள் இன்று இலங்கையில் உள் எ ன. இவை யாவும் கிட்டத்தட்ட 1000 கொத்தணி களாகத் தொகுக்கப்படலாம். ஏறக்குறைய 10 பாட சாலேகளிலே கிட்டத்தட்ட 3,000 மாணவர்களே ஒவ் வொரு கொத்தணியும் கொண்டிருக்கக் கூடியதாக இத்தொகுப்பு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க் கப்படுகின்றது. இவ்வகையான சீர்திருத்தம் மான வர்களுக்கும் நன்மை பயக்கும்; பெற்றேர்களுக்கும் அக்கறையை உண்டாக்கும்; அரசின் மூலவளங்களே நன்முறையிற் பயன்படுத்த நல்வாய்ப்பையும் ஏற் படுத்தும். இன்று பாடசாலைகளுக்கிடையேயுள்ள உயர்வு தாழ்வைக் குறைத்து ஒப்புரவான கல்வி முறை ஒன்றை ஏற்படுத்தவும் இக்கொத்தணி அமைப்புமுறை பெரிதும் உறுதுணையாக அமையும்,
5

Page 42
- 66 -
பட்டினங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் கிராமங் களிலுள்ள பாடசாலைகளுக்கும் இடையேயுள்ள ஏர் நத்தாழ்வைக் குறைக்கவும், பின்னர் இல்லாதொழி கவும் கொத்தணி அமைப்புமுறை வழிவகுக்கும்
கொத்தணி அமைப்பினுல் உத்தேசிக்கப்ப டுள்ளவையென வெள்ளே அறிக்கை பின்வருவன வற்றை வகுத்துக் கூறுகின்றது:-
(அ) "கல்வி வசதிகளே அளிப்பதில் இன்று நிலவுகின்ற ஒப்புரவின்மைகளேக் குை * தல்;
(ஆ) பாடசாலே அதிபர் வகிக்கின்ற அ
சாணியன்ன நி3லயினே அங்கீகரித்து தகைமை கூடிய ஆளணி வாயிலாகப் பாடசாலைகள் முகாமிக்கப்படுதலேச் சாத் தியமாக்குதல்;
(இ) மிகவும் சிறிய பாடசாலைகளும் ஒரு தொகுதியிலே இடம்பெறுவதற்கு வாய் பளித்து, அத்தொகுதியின் திரண்ட மூல வளங்களைக்கொண்டு, அத்தொகுதியி சேர்ந்துள்ள பாடசாலைகள் யாவற்று கும் பெறுமதி மிக்க வசதிகளும் வாய் புக்களும் கிடைக்குமாறு வகைசெய் அவ்வழி, வறியவரும் செல்வருமான பெற்ருேர் யாவரும் தத்தம் பிள்ளை களின் கல்விக்காகத் தமக்கு அயலிே புள்ள பாடசாலைகளே எதிர்பார்த்திரு கத் தக்கவாறு ஊக்கமளித்தல்.”

- 67 -
ஒவ்வொரு கொத்தணியிலும் ஆரம்பப் பரீட சாலேகளும் இடைநிலைப் பாடசாலைகளும் கல்லூரித் தரத்திலான பாடசாலைகளும் இடம்பெறும். இதனுல், பெற்ருேர் தம் பிள்ளைகளுக்கு மொத்த மூலவளங் கள் யாவும் வாய்க்கின்றன என்று கருதுவதற்கு இடமுண்டு.
ஒவ்வொரு கொத்தணியும் தனியான அமைப் பலகு என்ற அடிப்படையிலேதான் இயங்கும். அது மாணவர்களேக் கொத்தணி அடிப்படையில் அனுமதிக்கும்; வழங்கீடுகளே வசப்படுத்தும்; மூல தனங்களேச் செலவிடும்; ஆசிரியர்களைக் குறித் தொதுக்கும். ஒரு பாடசாலேக் கொத்தணியின் பிரதான நிறைவேற்றுநர் கொத்தணி அதிபர் என்ற பெயரைப் பெறுவார். பாடசாலைக் கொத்தணிக்கு மதியுரைச் சபை ஒன்று அமைக்கப்படும். இதற்குக் கொத்தணி அதிபர் தலேவராக இருப்பார். ஏனேய அதிபர்களும், பாடசாலே அபிவிருத்திச் சபைகளின் பிரதிநிதிகளும் உறுப்பினராக இருப்பர். கொத்தணி அதிபர் மூலாதாரப் பாடசாலையில் இருந்துகொண்டு கொத்தணியிலுள்ள பாடசாலைகளே நிருவகிப்பார். மூலாதாரப் பாடசாலை கல்விச் சீர்திருத்தத்தில் இன் னுெரு கருக்கோள் ஆகும்.
கொத்தணிப் பாடசாலைகளின் தொகுப்பு முறை ஈமயும், முகாமிப்பும் சுருக்கமாக இங்கு எடுத்துக் காட்டப்பட்டன. இப்படியான தொகுப்புப் புதியது: இதற்கு முன் இல்லாததொன்று. இது வெள்ளே அறிக் கையில் ஆங்கிலத்தில் "School Cluster' என்று கூறப்பட்டுள்ளது. Cluster என்ற ஆங்கிலச்

Page 43
ܚܒܪܗܕ 65 --
சொல்லுக்குக் கொத்து, குலே, சுடட்டம், தொகு என்ற சொற்கள் அகராதியில் இடம்பெறுகின்றன. இச் சொற்களேப் பாடசாலேயோடு இணேத்துக் கூறி ஞல் "பாடசாலைக் கொத்து', 'பாடசாலைக் குலே', "பாடசாலேக் கூட்டம்’, 'பாடசாலேத் தொகுதி" என்று வரும். இவற்றுள் இறுதியில் வரும் தொகுதி “தேர்தல் தொகுதி" என்ற பொருளில் வழக்கில் வந்துள்ளது, ஏனேயவை மேலே எடுத்துச் சொல்லிய கருக்கோளேப் புலப்படுத்து வனவாக அமையா எதிராக ஒவ்வாத பொருளே ே தருவன. எனினும், கொத்து என்ற சொல்லு டன் அணி என்ற சொல்லேச் சேர்த்து, கொத்து அணி = கொத்தணி என்று Cluster என்ற ஆங் கிலத்துக்குச் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது. "கொத்து' என்பது பூங்கொத்து என்ற பொருளே தருவது. பூவிலே பல இதழ்கள் உண்டு; நறுமண மும் உண்டு, இதழ்கள் பாடசாலேகளேக் குறிக்கும்: பூவிலிருந்து வரும் நறுமணம் பாடசாலேயில் உரு வாகும் கல்வியைக் குறிக்கும். பூவிதழ்களேப் போன்ற பல பாடசாலேகளேக் கொண்ட "கொத்தணியில் பூங் கொத்திலிருந்து எழும் நறுமணம் போன்று கல்வி உருவாகும் என்பதைப் புலப்படுத்துவதாய்க் குறித்த சொல்லாக்கம் அமைந்துள்ளதல்லவா? எனவே, பூ கொத்துப் போலப் பல பாடசாலேகள் ஒன்ருகத் தொகுக்கப்படுதலுக்கு அணி என்ற பின்னுெட்டு கொடுத்து கொத்தணி என்று சொல்லாக்கஞ் செய் யப்பட்டுள்ளதைக் கல்வியாளர்கள் வரவேற்பார்கள் என்பது திண்ணம்.
எதிர்காலத்திலே பாடசாலேத் தொகுதிகளேக் கொத்தணிப் பாடசாலைகள்’ என்றும், அவற்றை முகாமிக்கும் அதிபரைக் "கொத்தணி அதிபர்
 
 
 
 
 
 
 
 
 
 

- 69 -
என்றும், இன்னும் "கொத்தணி ஆய்வு கூடம், "கொத்தணி மதியுரைக்குழு", "கொத்தணி ஆசிரியர், "கொத்தணி மூலவளம்', "கொத்தணிப் பரீட்சை" என் றெல்லாம் வழங்க வாய்ப்புண்டு. எனவே, கொத்தணி பொருத்தமான சொல்லாக்கமாக அமைகின்றதென லாம். இன்று மலேப்பாகத் தோன்றும் இச்சொல் லாக்கம் வழக்கில் வரும்போது, தமிழ்பேசும் வாயில் எளிமையாக வெளிவரும்; இனிமையாகச் சுவைக்கும்.
கொத்தணிக்குப் பதிலாகக் குழுப் பாடசாலே" என்று ஏன் குறிப்பிடக் கூடாதென ஒருவர் கேட்க லாம். குழு’ என்பது இன்று Committee என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளேத் தரும் பதமாக வழக்கில் வந்துவிட்டது. ஆகவே, Cluster School என்ற ஆங்கிலத்துக்குக் குழுப் பாடசாலை என்பது பொருந்தாததொன்று என்பது தெளிவாகின்றது.
பாடசாஜலக் கொத்தணியைக் (Cluster School) கல்விச் சீர்திருத்தத்தில் முக்கியமான ஒரு புதிய கருக்கோள் எனக் கூறினுேம், கருவிலேயே குழந்தையைச் செவ்வனே பேணிக் காக்கத் தொடங் குதல் வேண்டும். அப்போதுதான் அக்குழந்தை வளர்ந்து மனிதனுகும் போது உடல் வளமும் உள நலமும் உள்ளதாய் விளங்கும். இதை விடுத்து, கருவிலேயே சிதைத்துவிட்டால் அக் குழந்தை எதிர்காலத்தில் எப்படி வாழும்? அதேபோலவே கல்விக் கருக்கோள்களும் எதிர்காலத்தைக் கருத் திற்கொண்டு சரியானமுறையில் உருவாக்கப்படு தல் வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. புரிந்துகொள்ள முடியவில்லையே என்பதற்காகப்

Page 44
- 70 -
பிழையானதைச் செய்வதற்கு ஒரு கல்வியாளன் ஒருபோதும் ஒருப்படமாட்டான். நுண்மாண் நுழை புலத்துடனேயே கல்வியாளன் கல்விப் பூட்கைகளை வகுக்கின்றன்.
* போதிய ஆயத்தமின்றி அவசரப்பட்டு செயற்படுத்தப்படுவதாலேயே நல்லதோர் கல்விச் சீர்திருத்தமும் பாழாகிப் போதல் உண்டு. சீர்திருத் தங்களின் குறிக்கோள்கள் இவ்வாறு தோல்வியடை தல் மாத்திரமன்று: அகாலத்தில் அழிவுபடும் இதி தகைய சீர்திருத்தங்களுக்குப் பலியாடாகின்ற இளந் தலேமுறையினர்க்கு ஈடுசெய்யவொண்ணு கேடும் பெரும்பாலும் வந்துறுத்தல் கண்கூடு. ஆத லின், இச் சீர்திருத்தங்கள் சட்டக் களரியிலே, பகிரங்க விவாதத்துக்கும் உரையாடற்கும் பாதி திரமாய பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், இச் சீர்திருத்தங்கள் எவர் நலன் கருதித் தீட்டப் படுகின்றனவோ அந்த மாணவ மணிகளுக்கும் மானுக்கருக்கும், தகவிலாத் திட்டமிடலும் அவசரப் பட்ட செயற்பாடும் காரணமாக, எவ்வித ஏலாப் பாடுமி வந்துருவகையில் உறுதிப் படுத்து பொருட்டு, அவசியமான காப்பீடுகள் பாவும் மேற் கொள்ளப்படும்" என்று வெள்ளே அறிக்கையின் முன்னுரையிற் கூறப்பட்டுள்ள மை வா வேற்கப்பட வேண்டிய தொன்று.
ஒவ்வொரு கொத்தணியிலும் பல ஆரம்ப பாட சாலைகளும், பல இடைநிலைப் பாடசாலைகளும், கல்லூரித் தரத்திலான பாடசா?லகளும் இடம்பெறும் என முன்னர்க் கூறப்பட்டது. இவ்வாறு அை
 
 
 

 ை71 =
கின்ற கொத்தனிப் பாடசாலே அமைப்பு ஒவ்வொன் றிலும் நடுநாயகமாக ஒவ்வொரு "மூலாதாரப் LmLgro'' (Core School) 3LÉ GL IIIb. “sofisti தணியில் இயல்பாகவே நடுநாயகமாக விளங்கத் தக்கதும் அல்லது அந்நி2லயினை வகித்தற்கு வேண் டும் இயல்திறனை உடையதும், இடைநிலை வகுப்புக் க3ளக் கொண்டதுமான பெரும் பாடசாலேயே மூலா தாரப் பாடசா?ல" எனக் குறிப்பிடப்படும்.”
கொத்தணியிலுள்ள பாடசாலைகள் ஒவ்வொன் றுக்கும் ஒவ்வோர் அதிபர் இருப்பார். ஆனல், இக் கொத்தணிப் பாடசாலேகளுக்கு நடுநாயகமாகவும், அமைப்பு மையமாகவும் அமையும் மூலாதாரப் பாடசா?லயின் நிருவாகத் த8லவராகக் கொத்தணி flush (Cluster School Principal) GCI, 6) if Bull மிக்கப்படுவார். இவர் கொத்தணி அதிபர்" என்ற பெயரைப் பெறுவார். இவர் தம் பணியைச் செள் வனே மேற்கொள்வதற்காக மூலாதாரப் பாடசாலை பிலே மேலதிகமான இடவசதிகள் இருக்கும் அத் துடன் போதிய தொகையான பணியணியினரும் இருப்பர். இன்னும் மூலாதாரப் பாடசாலேக்கு ஒரு மேலதிக அதிபரும் நியமிக்கப்படுவார். இவர் கொத் தனி அதிபரின் நிருவாகத்துக்கு உதவுவார் கொதி தனிப் பாடசாலைகளின் கல்வியை மேற்பார்வை செய்வதற்கு உறுதுணேவராகவும் இருப்பார்.
மூலாதாரப் பாடசாலே ஒவ்வொன்றிலும் சிறந்த பரிசோதனைச்சாலே, வேலைக்களம், நூலகம், செவிப் புல-கட்புலக் கல்வி வசதிகள், இனே-பாடசாலே விதானப் பயிற்சி வாய்ப்புக்கள் என்பன இடம்பெறும்.

Page 45
-72 -
இவை நன்முறையில் அபிவிருத்தி செய்யப்ப டுப் பேணிக்காக்கப்படும். மூலாதாரப் பாடசாலே லுள்ள இவ்வாய்ப்புக்களேக் கொத்தணியிலுள்ள ஏனேய பாடசாலேகள் பயன்படுத்திக்கொள்ள வாய் புண்டு. இவ்வாய்ப்புக்களேக் கொத்தனியிலுள்ள பா சாலேகள் ஒவ்வொன்றும் கொண்டனவாய் இயங்க பெருந்தொகை மூலவளம் வேண்டும். வீண்விரயத் தைத் தடுக்கவும், மூலவளத்தை நன்முறையிலே பயன்படுத்தவும் மூலாதாரப் பாடசா?லகள் உதவ கூடியனவாகும். சிறப்பாற்றலுள்ள ஆசிரியர்களு விலேமிக்க உபகரணங்களும் பிற வசதிகளும் வே டியாங்கு பயன்படுத்தப்படாமையையும் அநாவசி மாகப் பெருக்கமடைகின்றமையையும் குறைத் உள்ள மூலவளங்களே உத்தமமாகப் பயன்படுத் வதே மூலாதாரப் பாடசா?லகளே அமைப்பதின் கியமான நோக்கங்களுள் ஒன்றெனலாம்.
மூலாதாரப் பாடசாலேயைக் கொத்தணிப் பாட சாஃலகளின் "மடு" என்று கூறுவது பொருத்தமாகு ஏனெனில், இந்த மடுவில் வேலேக்களம், நூலக ஆய்வுகூடம், செவிப்புல- கட்புலக் கல்வி வசதிகள் என்பன யாவும் கிடைக்கக்கூடியனவாக இருக்கும் இவற்றுக்கு வேண்டிய உபகரணங்கள், தேவையான பொருட்கள் ஆகியனவும் வழங்கப்படும். ஆளணி யினர், ஆசிரியர்கள் ஆகியோரும் இங்கு இருப்பர் இன்று இவ்வகையான வாய்ப்புக்களேப் பெறமுடியா திருக்கின்ற சிறிய பாடசாலேகள் இம்முறையாற் பெரும்பயனைப் பெறக்கூடியனவாக இருக்குமென்பது மறுக்க முடியாததொன்று. Cluste Pool" என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 73 -
ஆங்கிலத்துக்குக் கொத்தணி மடு' என்று தமிழாக் கம் செய்யப்பட்டுள்ளது. "கொத்தணி என்ற சொல் லின் பொருத்தப்பாடு முன்னரே எடுத்துக் காட் டப்பட்டது. Pool என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "மடு என்ற தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டுள் ளெது. "மடு" என்பது பலவற்றைத் தன்னகத்துக் கொண்டுள்ளது என்று பொருள்படும். நிறைந்திருத் தல் என்ற பொருளையும் தரும். ஆகவே, பல பாட சாலைகளுக்கும் தேவையானவற்றைத் தன்னகத்துக் கொண்டுள்ளமையால் "கொத்தனி மடு என்ற சொல் லாக்கம் எடுத்துக்கொண்ட பொருளேப் புலப்படுத்து வதாக அமைந்துள்ளது.
மூலாதாரப் பாடசாலேயில் நூலகம் ஒன்று அமைந்திருக்கும். அதே போன்று கொத்தணியி லுள்ள ஏனேய பாடசாலேகளிலும் நூலகங்கள் இருக்கலாம். இவ்வாறு இந்த நூலகங்களிலுள்ள புத்தகங்களேப் பாடசா?லகள் யாவும் பெற்று மாண வர்கள் பயன்பெறக் கூடியதான சுற்ருேட்டதி திட்டம் ஒன்றை மூலாதாரப் பாடசாலே வகுத் தமைக்கும், அதனுடன் துனே நூல்களே எழுது வதற்கும் ஒழுங்குகளே மேற்கொள்ளும். போதனேத் துனேக் கருவிகளேயும் இயன்ற அளவு அபிவிருத்தி செய்து கொத்தணிப் பாடசாலேகளுக்கு வழங்கி நல்வாய்ப்பினே நல்கும்.
மூலாதாரப் பாடசாலே நிருவாக மையமாகவும் அமையும். அங்கே கொத்தணி அதிபராக இருப்ப வர் கொத்தணியிலுள்ள பாடசாலைகளுக்குத் தலேவ ராகச் செயற்படுவார்; கொத்தணியிலுள்ள பாட

Page 46
س- 74 ----
சாலேகளின் அபிவிருத்திக்குத் திட்டமிடுவார்; அவற் றின் பணியும் பயனும் ஈதெனக் காண்பார்; ஆசிரி யர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்; பாடவிதானச் செயற்றிட்டங்களேயும் இணே - பாடவிதானச் செயற் றிட்டங்களேயும் வகுத்தமைத்து மேற்பார்வை செய் வார்; வசதிகளையும் உபகரணங்களேயும் ஒழுங் காகவும் தேவைக்கு ஏற்றவாறும் பங்கிட்டளித்த லும் கொத்தணி அதிபரின் பணியாகும். கொத் தணியிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கல்களேச் செய்வதற்கும் பொறுப்புடையவராக இருப்பார். கொத்தணிக்குரிய வசதிக் கட்டண வரவு செலவுத் திட்டத்தையும் அவரே தீட்டுவார்.
* கொத்தணியினது முதல்வர் என்ற வகை பிலே அவர் தமது கடமைகளே நிறைவேற்றுங்கால் கொத்தணிப் பாடசாலேகளின் அதிபர்கள் ஒவ்வொரு வரும் தத்தம் சுதந்திரத்தைப் போற்றுவர் என் பதை உரியவாறு மதித்தும், பொதுக் குறிக்கோள் கஃன அடைதற்கு வேண்டிய ஒத்துழைப்பைத் திரட்ட வல்ல தலேமைத் திறன்கொண்டே இசைவாக நல் லுறவு பேணிக் கொத்தணியை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தும் ஒழுகக்கடவர். ஆத லின், ஒரு கொத்தணியில் அடங்கியுள்ள பாடசாலை களின் அதிபர், அக் கொத்தணி ஒரு தனி அலகாக இயங்குவதற்கு ஏற்புடையதாகத் தம் பாடசாலை களின் நிருவாகக் கட்டுப்பாட்டைத் தம்பால் வைத் திருப்பர்’.
 
 
 
 
 
 
 
 
 
 
 

س- W5" --
கொத்தனியிலுள்ள பாடசாலைகளின் மாணவர் ஒழுக்காறு, பாடசாலே நிதி, செயற்றிட்டங்கள் என்ப வற்றை அவ்வப் பாடசா?ல அதிபர்களே மேற்கொள் வர். கொத்தணியிலுள்ள பாடசாலைகளிற் பணிபுரி யும் ஆசிரியர்களே இடமாற்றம் செய்யும் பொறுப்பு மாவட்டக் கல்விப் பணிப்பாளருக்கு உரியதாகும் எனினும், ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யும் போது கொத்தணி அதிபரை மாவட்டப் LIGJOf?" ITSYTI உசாவுதல் வேண்டும். ஆசிரியர்களின் சம்பளவேற் றம் பற்றியும், சிறு தண்டங்களே வழங்குதல் பற்றியும் விதந்துரைப்பதற்குக் கொத்தணி அதிபருக்கு அதி காரமுண்டு. வசதிக் கட்டணங்கள் எவ்வாறு பயன் படுத்தப்படுகின்றன என்பது பற்றி ஆராய்வதற்கும் மூலாதாரப் பாடசாலையிலுள்ள கொத்தணி அதி பருக்கு அதிகாரம் உண்டு.
மூலாதாரப் பாடசாலை பற்றிய கருக்கோள் கல்விச் சீர்த்திருத்தத்தில் முக்கியமானதொன்று. இக் கருக் கோள் ஆங்கிலத்தில் Core School என்று குறிப் பிடப்பட்டுள்ளது. "Core" என்ற ஆங்கிலச் சொல் லுக்குப் பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கருவிதை உறை, உள்ளமைப்புப் பகுதி", "கருவுள்', "இதயம்
உள்ளிடம் முதலிய சொற்கள் அகராதியில் இடம் பெறக் காணலாம். ஆனல், பாடசாலை என்ற சொல்லின் முன்னர் இவற்றை வைத்துச் சொல் லாக்கம் செய்வது பொருத்தமாக அமையவில்லை! உண்மையான பொருளேயும் புலப்படுத்துவதாக வில்ஜல. எனவே, பாடசாலைகள் யாவற்றுக்கும்

Page 47
س--W6" -
நடுநாயகமாக அமைந்து, அவை நலனுக்கு உதவு வதாய் அமையும் ஒரு பாடசாஃப்பாக இப் பாட சாலே இருப்பதால், இதனே மூலாதாரப் பாடசாலே என அழைப்பது பொருத்தமாகும். மூலம் + ஆதா ரம் + பாடசா?ல எனப் பிரித்துப் பொருளே நோக் கும்போது, எடுத்துக்கொண்ட கருக்கோளுக்கு ஏற் புடைய தமிழாக்கமாக அஃது அமைவதைக் கல்வி யாளர் ஏற்றுக் கொள்வர். ஏனேய பாடசாலைகளுக்கு மூலாதாரமாக அமையும் பாடசாலே என்று இதனே எடுத்துக் கூறலாம்.
 
 
 
 
 

8. ஒன்பது இரவுகள்
வீரம், செல்வம், கல்வி என்பன வளமுள்ள வாழ்வுக்கு இன்றியமையாதவை. வீரமின்றிச் செல்வ மும் கல்வியும் மட்டும் சீரும் சிறப்புமுள்ள வாழ்க் கைக்கு வழி செய்யா, வலிமையும் உள உறுதியும் இல்லாமல் நோயுடையோராய்க் கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் பெற்று வாழ்வதிற் பயன் பாது மறுபுறத்தில், வீரமும் செல்வமும் உடைய ராயினும், கல்வியில்லாதவர் முருக்கம் பூவுக்குச் சமமாவர். இன்னுெருவகையில், வீரமும் கல்வியும் உடையவராயினும், செல்வமில்லாதவரை அவருடைய தாய், தந்தை, மனேவி, மைந்தர் முதலானுேரும் அவமதிப்பர். ஆகவே வாழ்க்கை நோயற்றதாகவும் பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் நிறைந்த தாகவும் இருத்தல் வேண்டும்,
எனவே, வீரம், செல்வம், கல்வி ஆகிய முன் நும் வளமான வாழ்க்கைக்கு அடிப்படையானவை என்பதை உணர்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்கள், விரத்தைக் கொற்றவையாகவும் செல்வத்தைத் திரு மகளாகவும் கல்வியைக் கலே மகளாகவும் கண்டனர். இன்னுெருவகையாகக் கூறின், வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் மூன்று பெண் தெய்வங் களாய் வழிபட்டனர்; இன்றும் விழாவெடுத்து வழி பாடு செய்கின்றனர்.
சிவபரம்பொருளின் அருளேச் சக்தி' என வேறு பிரித்துக் கூறுவர் சைவசித்தாந்த அறிஞர். "அரு எது சக்தியாகும் அரன் தனக்கு" என்று சிவஞான

Page 48
- 78 -
சித்தியார் எடுத்துக் கூறுகின்றது. இச் சக்தியே மக்களுக்கு வேண்டிய இன்றியமையாத் தேவைகளை வழங்கும் தெய்வமாகும். பிற்காலச் சமய நூல்கள் இச் சக்தி பேதங்களைப் பலவாறு பிரித்துக் காட்டி னும், ஒரே அருட்சக்தியின் முக்கூறுகளாகவே கொற்றவையையும் திருமகளையும் கலைமகளையும் போற்றுகின்றன. இம் மூன்று பெண் தெய்வங் களுக்கும் ஒன்பது இரவுகளிலே மேற்கொள்ளப் படும் வழிபாடே நவராத்திரி’ ஆகும்.
‘நவ" என்ருல் ஒன்பது என்றும், ‘இராத்திரி என்ருல் இரவு என்றும் பொருள்படும். எனவே, நவராத்திரி’ என்பது இரவுகளைக் குறிக்கும். மூன்று சக்திகளுக்கும் ஒவ்வொரு சக்திக்கும் மும் மூன்று இரவுகளாக ஒதுக்கி, ஒன்பது இரவுகளிலே இவ்விழா எடுக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் நவராத்திரி இரண்டு பருவ காலங்களிற் கொண்டாடப்படும், வேனிற்காலமாகிய சித்திரை மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் உமாதேவியாரைக் குறித்து விழா வெடுத்து விரதமிருப்பது வசந்த நவராத்திரி ஆகும். கார்காலமாகிய புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் ஒன்பது இரவுகள் விழாவெடுத்து வழிபாடு மேற்கொள்வது சாரதா நவராத்திரி ஆகும். இவை இரண்டிலும் பின்னையதே தமிழ் மக்கள் மத்தியிற் பிரபலியமானதாகும்.
மேலே குறிப்பிட்ட இரண்டினுட் பின்னையதை இன்னுெரு வகையாகக் கூறலாம். உமாதேவியார்

சிவபெருமானின் அருட்சக்தியாவார். இவர் ஆற்றல், இச்சை, அறிவு என மூன்று இயல்பினராய் நின்று உயிர்களுக்கு அருள் செய்கின்றர். எனவே, ஆற்றலை வீரம்" என்றும், இச்சையைச் செல்வம்’ என்றும், அறிவைக் கல்வி’ என்றும் கண்டு, முறையே கொற்றவை என்றும், திருமகள் என்றும், கலைமகள் என்றும் மூன்று பெண் தெய்வங்களாக இந்து சமயத்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.
*அமாவாசையன்று ஒருவேளை உணவுடன் உபவாசமிருந்து, அடுத்துவரும் ஒன்பது நாட் களும் பால், பழம் என்பன மட்டும் உண்டு, மூன்று வேளைகளிலும் பூசித்தல் வேண்டும். தேவியைக் கும்பத்திலோ (குடம்) அல்லது பிம்பத்திலோ (உருவம்) மந்திரம், பாவனை முதலியவற்ருல் விதிப் படி ஆவாகனம் செய்து, ‘இவ்விரதத்தை இயன்ற வரை சிரத்தையுடன் மேற்கொள்ளுகின்றேன்’ எனச் சங்கற்பஞ் செய்து நவராத்திரி பூசையைத் தொடங் குதல் வேண்டும்’* என்று கூறுவர்.
மூன்று சக்திகளுக்கும் எடுக்கப்படும் இவ்விழா வானது சிறப்பாக இரவுக் காலத்துக்கே உரிய தாகும். எனவே, "நவராத்திரி’ (நவ+இராத்திரி) = ஒன்பது இரவுகள் என்று பொருள் பெறுவதா யிற்று. கோயில்களிலும் கல்விக் கூடங்களிலும் வீடு களிலும் நவராத்திரி கொண்டாடப்படுவது பெரு வழக்காகும். வறியவர்களும் செல்வர்களும், கற்றவர் களும் கல்லாதவர்களும், சிறியவர்களும் பெரியவர் களும் நவராத்திரியைப் பெருவிழாவாகக் கொண்

Page 49
80
டாடுகின்றனர். எனினும் இவ்விழா பெண்களுக்கே சிறப்பாக உரியதெனக் கொள்வாருமுளர்.
நவராத்திரி வழிபாட்டுக்குரிய ஒன்பது இரவு களிலே முதன் மூன்று இரவுகளும் கொற்றவை வழி பாட்டுக்குரியன. இச்சக்தியைத் துர்க்கை என்று வடமொழியிற் கூறுவர். தமிழிலே கொற்றவை என்றும் வடமொழியிலே துர்க்கை என்றும் பெயர் பெறும் பெண் தெய்வம், வீரத்துக்குரியவள். வேருெரு வகையாகக் கூறின், விரத்தைக் கொற்றவை அல்லது துர்க்கை என்ற பெண் தெய்வமாகக் கண்டு இந்து சமயத்தவர் வழிபட்டனர். இந்த மூன்று நாட்களிலும் கொற்றவையின் திருவுரு வத்தை வைத்து வணங்குவர்.
உடல் வலிமையும் உளவுறுதியும் உடையவர் களே வீரம் மிக்கவர்கள் உடல் வலிமையைப் பெற்று உளவுறுதியில்லாது வாழ்பவர்கள் கோளேக எாவர். இவர்கள் வாழ்க்கைப் பாதையிலே ஒரு முறையல்ல பலமுறை இறந்து இறந்து பிறக்கின் றனர். இனி உளவுறுதியுடையவராய் உடல் வலிமை யற்றவர் நோயாளராவர். அவர்களே எந்த நோயும் எளிதிலே பீடிக்கும். அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லே! வாழ்வின் பயனேப் பெருமலே குறுகிய காலம் வாழ்ந்து மடிந்து மண்ணுேடு மண்ணுகி விடுகின்றனர். இதஞலேயே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று நம் முன்னுேர் கூறிப் போந்தனர். உடல் வலிமையும் உளவுறுதியும் செல் வத்தை ஈட்டவும் கல்வியை வளர்க்கவும் உறுதுனே யாவன. ஆகவே, வீரத்துக்கு முதலிடம் கொடுத்து,
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 81 -
அதஜனக் கொற்றவை என்ற பெண்தெய்வமாக உருவகித்து அத்தெய்வத்துக்கு முதல் மூன்று இரவு க3ள ஒதுக்கி அந்த மூன்று இரவுகளிலும் விழா வெடுத்து வழிபட்டனர்.
நவராத்திரி வழிபாட்டிற்குரிய அடுத்த மூன்று இரவுகளும் திருமகள் வழிபாட்டிற்குரியன. திரு மக2ள வடமொழியிலே இலக்குமி என்று கூறுவர்.
கொற்றவை சிங்கக் கொடியினே உடையவள். பைங்கிளியைத் தாங்கியவள். பாய் கலேயை ஊர்தி யாகக் கொண்டவள். பேய்களே அவளின் பெரும் படைப்பாகும். ■
ஆளி மணிக்கோடிப் பைங்கிளிப் பாய்கலைக் கூளி வலிபடைக் கொற்றவை என்று அவளின் தோற்றம் வருணிக்கப்பட்டுள்ளது.
வானுேர் வணங்க மறைமேன் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யோகிற்பாய்" என்றும்,
அரியரன் பூமேலோன் அகமலர்மேன் மன்னும் விரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய்"
என்றும், கொற்றவையை அறிவொளி வடிவத்தின
TT ஆன்ருேர் கண்டனர்.
கொற்றவை வழிபாட்டைப் பற்றிப் பழந்தமிழ்
இலக்கியங்களிற் காணலாம். வீரத்துக்குரிய தெய்
வத்தை வழிபட்ட பின்னரே போருக்குப் புறப்படுவது
6

Page 50
- 82 -
வழக்கமாகும். போரிலே வாகை சூடிய பின்பும் கொற்றவைக்குப் பெருவிழாவெடுக்கப்பட்டது. எனவே, பண்டைத் தமிழர் வாழ்விலே கொற்றவை வழிபாடு முக்கியமானதோர் இடத்தைப் பெற்றிருந் தது என்பது தெளிவாகின்றது.
திருமகள் செல்வத்தை வாரி வழங்குபவள். ஒன்பது இரவுகளுள் நடு மூன்று இரவுகளைத் திரு மகளுக்கு ஒதுக்கி விழாவெடுத்து வழிபட்டனர்.
*அழியாப் பொருளாகிய கல்வியையும் கல்வித் தேர்ச்சிக்குரிய புத்தகங்களேயும் கொள்ளுதற்கும், பசி முதலியவைகளினுல் வருந்தாது கவலேயற் றிருந்து கல்வி கற்றற்கும், கற்ற கல்வியை அழகு செய்து தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தற்குமான கருவி செல்வமே. கல்வியுடையவரும் வறியவராயின் பசி நோயினுலும் தீராக் கவலேயினுலும் வருந்தி, தாம் முன் கற்ற கல்வியையும் மறந்துவிடுவர்" என்றும்,
“கல்வியும், தருமமும், இன்பமும், கீர்த்தியும், மனிதருள்ளே பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும், வெற்றியுமாகிய எல்லாம் செல்வமுடைய வருக்கே உண்டு. செல்வம் இல்லாதவர் உலகத்திலே நடைப்பிணமாவார். ஆதலினல், யாவரும் செல் வத்தை இடையரு முயற்சியோடு வருந்திச் சம் பாதித்தல் வேண்டும்' என்றும் நாவலர் கூறுவர்.
செல்வத்தின் இன்றியமையாமையை "முனிவரு மன்னரு முன்னுவ பொன்ஞன் முடியும்" என்று மணிவாசகப்பெருமான் கூறியுள்ளார்.

-- 83 --
எனவே, செல்வத்தின் இன்றியமையாமையை உணர்ந்த தமிழ்ப் பழங்குடி மக்கள், அதனேத் திருமகள் என்ற பெண்தெய்வமாக உருவகித்து விழாவெடுத்து வணங்கினர். திருமகள் செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டவள்.
எனவே, வீரமுள்ளவர்களாக வாழ்வதற்குக் கொற்றவையை வழிபடுதல் வேண்டு மென்று உணர்ந்த தமிழ்ப் பெருமக்கள், செல்வச் சிறப் போடு வாழ்வதற்குத் திருமகளேயும் வழிபடுதல் வேண்டுமென நம்பினர். எனவே, முதல் மூன்று இரவுகளும் கொற்றவையை வணங்கிய அவர்கள், அடுத்த மூன்று இரவுகளும் திருமகளே வழிபாடு செய்தனர்.
நவராத்திரியின் இறுதி மூன்று இரவுகளும் கலேமகள் வழிபாட்டிற்குரியன. இப் பெண்தெய்வம் தமிழிலே "கலைமகள்' என்றும், வடமொழியிலே "சரஸ்வதி" என்றும் போற்றப்படுகின்ருள். கலேமகள் கல்விச் செல்வத்துக்குத் தலேவியாவாள். அவள் வெண்டாமரை மலரிலே வீற்றிருப்பாள். கலைமகளின் தோற்றத்தைத் தூய வெண்ணிற வடிவமாக வரு ணிைத்தனர் கலைஞர்களும் கவிஞர்களும். உள்ளத் தூய்மை செய்வது கல்வி. எனவே தூய்மைக்குக் கருவியான கல்வியை வெண்ணிறத் தோற்றமான பெண்தெய்வமாகக் காண்பது பொருத்தமானதே
வெள்ளைக் கலையுடுத்து வேள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்"
என்று கலைமகளைக் காளமேகப்புலவர் பாடியுள்ளார்.

Page 51
- 84 -
கல்வி என்னும்போது அது கலைகள் யாவற்றை யும் அடக்கும். தமிழகத்திலே அறுபத்து நான்கு கலேகள் நிலவியிருக்கின்றன என்றும் அந்த அறுபத்து நான்கு கலேகளுக்கும் தலேவியாகக் கலைமகள் விளங்குகின் ருள் என்றும் கூறுவர். *ஆய கலைகள் அறுபத்து நான்கினேயும் ஏய வுணர் விக்கும் என்னம்மை’ என்று அச் சக்தியைப் போற்றினர் நம்முன்னுேர்,
செல்வப் பொருளினும் கல்விப்பொருளே மேலா னது. "செல்வப்பொருள் பங்காளிகள், கள்வர், வலிய வர், அரசர் என்னும் இவர்களாலே கொள்ளப்படும்; கல்விப்பொருளோ ஒருவராலும் கொள்ளப்பட மாட் டாது. செல்வப் பொருள் வெள்ளத்தாலாயினும் அக்கினியாலாயினும் அழியும்; கல்விப்பொருளோ ஒன்ருலும் அழியமாட்டாது. செல்வப்பொருள் பிற ருக்குக் கொடுக்குந்தோறும் குறைந்துகொண்டே வரும்; கல்விப்பொருளோ பிறருக்குக் கொடுக்குந் தோறும் பெருகிக்கொண்டே போகும்; செல்வப் பொருள், சம்பாதித்தல், காப்பாற்றல், இழத்தல் என்னும் இவைகளாலே துன்பஞ் செய்து, பலரை யும் பகைவர்களாக்கும். கல்விப் பொருளுடையவர், இம்மையிலே சொற்சுவை பொருட்சுவைகளே அணு பவித்தலாலும், புகழும் பெருமையும் பூசையும் பெறுதலாலும், பின்னே தருமத்தையும் முத்தியை யும் அடைதலாலும், இடையருத இன்பத்தை அணு பவிப்பர். இப் பெரியாரைச் சேர்ந்து அறியாதவை களே யெல்லாம் அறிந்தோம் என்று, உலகத்தார் பலரும் அவரிடத்து அன்புடையவராவர். ஆதலி
 
 
 
 
 
 
 

- 85 -
ஞலே, செல்வப் பொருளிலும் கல்விப்பொருளே சிறப்புடையது' என்று நாவலர் கூறுவர்.
அரசனுக்குத் தன்னுடைய நாட்டிலே மட்டும் சிறப்புண்டு. கற்றறிந்தவருக்கு அவர் சென்ற தேசங்களிலெல்லாம் சிறப்புண்டு. எனவே, நாட்டை யாளும் மன்னனிலும் கற்ருேன் சிறப்புடையோன் ஆவான். பெற்ற தாயும் கற்ருேனேயே விரும்புவாள்; அரசனும் கல்வியறிவுடையோனேயே துணையாகக் கொள்வான். கீழ்நிலையிற் பிறந்தவனுயினும் கற்ற வனுக்கே தலேமையுண்டாம்.
* உற்றுபூழி யுதவியு முறுபொருள் கோடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் ருயுமனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வேன்னு தவருள் அறிவுடை யோனு றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லோருவனு மவன்கட் படுமே "19
எனவே, குடும்பமும் சமுதாயமும் ஆட்சியும் கல்வி நலத்தாற் சிறப்படைகின்றன.
இவ்வாறு கல்வியின் சிறப்பை உணர்ந்த தமிழ்ப் பெருமக்கள் நவராத்திரியின் இறுதி மூன்று இரவுகளிலும் கலே மகளுக்கு விழாவெடுத்து வனங் கினர். எனினும், ஒன்பதாவது நாளேச் சிறப்பாகக் சரஸ்வதிக்குரிய புனித தினமாகக் கொண்டு வழி

Page 52
- 86 -
படுவது வழக்காகும். ஒன்பது நாள்களும் விரத மிருக்க இயலாதவர்கள் கடைசி மூன்று நாள்களி
லாவது முறையே கொற்றவையையும், திருமகளே
பும், கலேமகளேயும் வழிபடுதலும் உண்டு.
தேவி அண்டங்களே எல்லாம் படைப்பவள் என்பதைப் புலப்படுத்தவே பொம்மைகளாலான கொலுவை வைத்து நவராத்திரியைக் கொண்டாடு
கின்ருேம். தொழில் செய்வோர் யாவரும் தத்தம்
தொழிலுக்குரிய ஆயுதங்கள் யாவற்றையும் ஒன்பதா வது நாள் கொலுவில் வைத்துப் பூசிப்பர். இஃது ஆயுதபூசை என்று சொல்லப்படும்.
நவராத்திரியை அடுத்து வருகின்ற பத்தாவது நாள், விஜயதசமி ஆகும். பாண்டவர்கள் வனவா சத்துக்குச் சென்றபோது தமது ஆயுதங்களேயெல் லாம் வன்னிமரப் பொந்து ஒன்றிலே வைத்து விட்டுச் சென்றனர். வனவாசத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது, வன்னிமரப் பொந்திலே வைத்துச் சென்ற ஆயுதங்களே விஜயன் என்னும் அர்ச்சுனனே பூசித்து எடுத்துக் கொண்டான். இதன்
காரணமாகவே விஜயதசமி என்று பத்தாவதுநாள்
போற்றப்படுவதாகக் கூறுவர்.' திருக்கோயில்
களில் வன்னி மரத்தடியிலே அம்பாள் எழுந்தருளி
அம்புபோடுவது இக்கருத்தை மேலும் வலியுறுத்தும்,
ஒன்பது இரவுகளே மும்மூன்று இரவுகளாக முறையே கொற்றவைக்கும் திருமகளுக்கும் கலை மகளுக்குமாக ஒதுக்கிய முறையிலும் சிறப்புண்டு. பொருட்செல்வத்தைத் தேடவும் கல்விச்செல்வத்

87 -
தைப் பெருக்கவும் நோயற்ற வாழ்வு வேண்டும். நோயற்ற வாழ்வுக்கு உடல் வலிமையும் வேண்டும்: உளவுறுதியும் வேண்டும். அதனையே வீரம் என்று போற்றிக் கொற்றவை என்ற பெண்தெய்வமாகக் கண்டு முதல் மூன்று இரவுகளே ஒதுக்கினர். வீர முள்ளவன் செல்வத்தைத் தேடிக்கொள்வான். எனவே, அடுத்த மூன்று இரவுகளைத் திருமகளுக் குரிய இரவுகளாகக் கொண்டனர். கல்விச் செல்வத் தைப் பெறுவதற்கு வீரமும் வேண்டும்; செல்வமும் வேண்டும். வீரமும் செல்வமுமுடையோன் கல்விச் செல்வத்தைப் பெற்றுக்கொள்வான். எனவே தமிழ்ப் பெருமக்கள் இறுதி மூன்று இரவுகளிலும் கலே மகளே வழிபட்டனர்.
அடிக்குறிப்புகள்
1. ஞானசம்பந்தம், தருமையாதீனத் திங்கள் இதழ்,
மலர் 38, இதழ் 10 பக். 40மி. 2. மேற்படி பக். 407,
புறப்பொருள் வெண்பாமாஃ1 - 20
அ. சிவப்பதிகாரம், வேட்டு - 8
5. சிலப்பதிகாரம், வேட்டு - 9
6. பாலபாடம், நான்காம் புத்தகம் ஆறுமுக நாவல்
ரவர்கள் செய்தது, பக். 30
7. மேற்படி பக். 51
8. தனிப்பாடற்றிரட்டு, காளமேகப் புலவர் 1
S.
பாலபாடம், நான்காம் புத்தகம் ஆறுமுக நாவலி ரவர்கள் செய்தது, பக். 4-5 10. புறநானூறு, செய். 183 11. ஞானசம்பந்தம், தருமையாதீனத் திங்கள் இதழ்.
மலர் 38, இதழ் 10 பக் கீ8ே.

Page 53
9. என் கெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே
" தோன்றிற் புகழோடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் ருேன்ருமை கன்று." என்பது வள்ளுவர் வாய்மொழி.
மஹா வித்துவான் டாக்டர் உ. வே. சாமிநா தையர் அவர்களும் தோன்றிஞர்; புகழொடு தோன் றிஞர். சிலர் புகழை விரும்பி அலைவர்; சிலரைப் புகழ் தானுகவே வந்துசேரும், ஐயரவர்களேப் புகழ் தேடிவந்தது. ஓயாது உழைத்துக் காலத் தைப் பொன்போலக் கருதி அருந்தொண்டாற்றிய ஐயரவர்களேப் புகழ் தானுகவே தேடிவந்ததில் வியப்பில்லே. ஐயரவர்கள் கடமை கடலிலும் பெரிது’ என்ற கருத்துடையவர்: " ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்ற கொள்கையுள்ளவர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற பரந்த நோக்கமுங் கொண்டவர். இவ்வரிய நற்பண்புகளையுடைய அவரின் தமிழ்ப்பணியைத் தமிழ் மக்கள் மறந்துவிடுவார்களா? விழா வெடுத் தும் சிலே நிறுவியும் அவரைப் போற்றி வருகின் றனர.
டாக்டர் சாமிநாதையர் இளமையிலே திறமை உள்ளவராய்த் திகழ்ந்தார். திண்?னப் பள்ளியிலே படித்துத் தமிழ்ப்புலமையைப் பெற்ருர் சங்க இலக்கியங்களேயும் பிற்காலத் தமிழ் நூல்களையும் நன்கு கற்றுத் திறமை பெற்ருர், கசடறக் கற்ற

- 89 -
அவர் அறிஞராகவும், ஆற்றல் மிக்கவராகவும் வாழ்ந்ததோடு, நற் பண்பு நிறைந்தவராகவும் விளங்கினுர், பொறுமை, தெய்வபக்தி, நேர்மை, உண்மை, அடக்கம் முதலிய நற்பண்புகள் அவ ருடன் உடன் பிறந்தவை.
மஹா வித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் பாடங் கேட்கும்பேறு ஐயரவர்களுக்குக் சிடைத்தது. அதன் பயனுகவே அவரது பிற்காலம் பெருமைக்கும் புகழுக்கும் உரியதாய் அமைவ தாயிற்று. தமது ஆசிரியரைப் போலவே, இவரும் திறமைமிக்க தமிழ் ஆசிரியர் " என்று எல்லா ராலும் போற்றப்பட்டார். தமது பொறுப்பை உணர்ந்து, மாணவர்களின் குறைகளேக் கண்டு, அவர்களே அன்போடு தட்டிக்கொடுத்துப் பாடங் களே நடத்துவார். அவரது போதனையிலே பிள்ளே கள் பெரிதும் விரும்பக்கூடிய பல வேடிக்கைகள் கலந்து இருக்கும்.
கவனக் குறைவாகக் காணப்பட்ட மாணவர் களே நல்லுரை கூறி நயம்படத் திருத்துவார். ஐயரவர்களின் சாமர்த்தியமான பேச்சைக் கேட் டுக் குழப்படி மிக்க மாணவரும் நாளடைவில் அடங்கி நடந்தனர். ஆணுல், ஐயரவர்கள் என்றும் எவரையும் மனம்வருந்தக்கூடியதாய் பேசியது மில்லே; நடந்ததுமில்லே. தமிழ்த் தேர்விற் குறைந்த புள்ளிகள் பெற்ற மாணவரை நயம்படப் பேசிக் கேலி செய்வார். ஒருபோது குறைந்த புள்ளிகள் பெற்ற ஒரு மாணவனைப் பார்த்து, "இந்தப் பணத்தை நிலத்திற் போட்டிருந்தாற் பெரும் பயன் அளித்

Page 54
- 90 -
திருக்கும்” என்று கூறினர். மற்ருெரு தமிழ் படித்த மாணவனைப் பார்த்து, “நீ வடமொழி கற்றிருக்க லாம்” என்று சொன்னுர், இவ்வாறு அவரின் கூற் றுக்கள் மாணவரை நேரடியாகத் தாக்காவிட்டா லும் மறைமுகமாகத் தாக்கி அவர்களைப் படிப் பிலே ஊக்கமும் உழைப்பும் உண்டாக்க உதவின.
ஐயரது இயற்பெயர் வேங்கடராமன் என்பதா கும். இவரின் ஆசிரியர் ஒருநாள் இவரைப் பார்த்து, * உமது பெயர் என்ன?’ என்று வினவினர். "வேங் கடராமன் என்பது என் மூதாதையர் பெயர். ஆனல், வீட்டார் சாமிநாதன் என்ற என் பெயரைச் சுருக்கி சாமா என்று கூறுவர்” என்று விடையிறுத்தார். ‘சாமிநாதன் என்ற பெயரே சிறந்தது” என்றர் ஆசிரியர். அன்று முதல் ஐயரவர்கள் சாமிநாதன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். அப்பெயரே தமிழுலகத்தாற் பாராட்டத்தக்க நற்பெயராகவும் அமைந்தது.
செல்லரித்துச் சிதைந்த பல ஏட்டுச் சுவடி களை நூல் வடிவினிலே வெளியிட்ட பெருமை ஐய ரவர்களுக்கு உண்டு. ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கால்நடையாகவும் வண்டிகள் மூலமாகவும் பல கிராமங்களுக்குச் சென்றர். எங்கெங்கு ஏடுகள் கிடைக்குமென்று கேள்விப்பட்டாரோ, அங்கங்கெல் லாம் சென்று பார்த்தார். தேடி அலைந்தார். இரவு பகலாகப் படித்துப் பாடங்களைச் சரிசெய்தார். பின்னர், அவைகளைக் காகித ஏடுகளிற் பிழையின்றி எழுதினுர். முகவுரை, கதைச் சுருக்கம், அரும்பத வுரை என்பனவற்றை எல்லாம் எழுதுவதில் அவ

- 91 -
ருக்குப் பல ஆண்டுகள் கழிந்தன. இங்ங்னம் அரும் பாடு பட்டுப் பொறுமையுடன் உழைத்தார். அதன் பயணுய் நூல்கள் பல வெளிவந்தன. சீவக சிந்தா மணி வெளிவந்தது; பத்துப்பாட்டு அச்சாயிற்று5 சிலப்பதிகாரம் நூல் வடிவைப் பெற்றது; புறநா னுாறு புத்தகமாயிற்று. இவ்வளவா? மணிமேகலை, பதிற்றுப்பத்து, ஐந்தொகை என்பனவெல்லாம் ஐய ரவர்களின் அயராத உழைப்பின் பயனுய் அழியாத வாழ்வைப் பெற்றன. சுருங்கக் கூறின் சங்க நூல் கள் அச்சு ஏறின; பிற்காலக் காவியங்கள், நூல் வடிவைப் பெற்றன; புராணங்கள் புத்தக வடிவிலே வெளிவந்தன; பிரபந்தங்களும் இலக்கண நூல் களும் மறுமலர்ச்சி பெற்றன.
தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டதோடு, ஐயரவர்கள் பெரிய நூல்களை எளிய நடையில் எழுதியும் உதவிஞர். சிலப்பதிகாரம், மணிமேகலை, உதயணன் கதை என்பன ஐயரின் உழைப்பின் பயனுற் கதைச் சுருக்கங்களாய் மாறின. மேலும், ஐயரவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள் பலருக் குப் பயன்படும் வகையிலே நூல் வடிவைப் பெற் றன. அவை அறிவுக்களஞ்சியங்களாய் அமைந்து படிப்பவர்களுக்குப் பெரும் பயனைப் பயக்க வல்லன வாக இன்றும் திகழ்கின்றன.
டாக்டர் சாமிநாதையர் அவர்களின் உரை நடையைப் பற்றிச் சிறிது கவனிப்போம். உயர்ந்த கருத்துக்களை எளிய நடையிலே எடுத்துரைக்கும் திறன் ஐயரவர்களுக்கு நிறையவுண்டு. ஆழ்ந்த அறிவும், நிறைந்த புலமையும் அவரின் உரைநடை

Page 55
- 92 -
யில் மிளிர்தலைக் காணலாம். ‘புதியதும் பழைய தும்' என்ற ஐயரவர்களின் நூலில் நுழைவோர் ஐயரது உரைநடையின் எளிமையையும் இனிமை யையும் இனிது காண்பர். இன்று புற்றீசல்போல் ஆயிரக் கணக்கான உரைநடை நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. அவை இலக்கணப் பிழைகள் மலிந்தும், இலக்கிய மரபை இழந்தும் இருப்பதைக் காண்கின்ருேம். ஆணுல், ஐயரவர்களின் உரைநடை புதுமைக்குப் புதுமையாக இன்றும் சிறப்புடன் விளங்குகின்றது. இலக்கணத்திலே அழுத்தமான அறிவைப் பெற்றிருந்த ஐயரவர்கள் பிழையின்றி எழுதினுர், பிழையின்றிப் பேசினுர்.
‘புதியதும் பழையதும்" என்ற நூலிலுள்ள வர லாறுகள் மக்கள் படித்துப் பயன்பெறல் வேண்டும் என்ற கருத்தோடு எழுதப்பெற்றவை. எனவே, உரையாடுவது போல் நாடக பாணியில் அக்கட் டுரைகள் எழுதப்பெற்றன; ஐயரவர்களின் உரை நடையில் வண்டவானம் முத்துச்சாமிஐயர் சிலே டையாகப் பேசுவார். ஏழை ஒருவன் தமிழ் அன்பு கொண்டு உரையாடுவான்; கண்ணிர் துடைத்துக் கணவனைப் பார்ப்பாள் கன்னி ஒருத்தி. எனவே, ஐயரவர்கள் எழுதியவைகளைப் படிப்போர் வண்ட வானம் முத்துச்சாமி ஐயரைப் போலச் சிலேடை யாக உரையாடுவர்; ஏழையைப் போலத் தமிழ் அன் புடன் நடமாடுவர்: கண்ணிர் துடைத்த கன்னியைப் போலக் கலங்கி நிற்பர்.
ஐயரது தமிழ்த் தொண்டை ஆட்சியாளர் முதல் அறிஞர் வரையிலே எல்லாருமே பாராட்டினர்.

- 93 -
ஆட்சியாளர் ஆயிரம் ரூபாய்களை ஐயருக்குப் பரிசாய் அளித்துக் கெளரவித்தனர். “பெரும் பேரா சிரியர்" என்ற பட்டமும், “மஹா வித்துவான்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டன. அறிஞர்கள் “பண்டிதமணி’ என்று புகழ்ந்தனர். ‘திராவிட வித் தியாபூஷணம்’ என்று போற்றினர். தாகூ4ணுத்ய கலாநிதி" என்று வாழ்த்தினர். சென்னைப் பல்கலைக் கழகமும் ஐயர் அவர்களைக் கெளரவித்து, ‘இலக்கி uud 56 Tšš” (Doctor of Literature) 66õrgyb பட்டத்தை வழங்கியது. பொதுமக்களும் ஐயரின் தமிழ்த் தொண்டைப் போற்றி அவருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப் பணமுடிப்புகளை வழங்கிய தோடு, விழாக்களையும் எடுத்தனர்.
காலத்தைப் பொன்போலக் கருதி ஐயர் வாழ்ந் தார்; அயராது உழைத்தார். “கடந்து சென்ற காலம் அழுது புரண்டாலும் வராது” என்ற உண் மையை உணர்ந்து இன்ன நேரத்தில் இன்னதைச் செய்தல் வேண்டும் என்பதைக் கடமையாகக் கொண்டார். ஐயரவர்கள் ‘கடமை கடலிலும் பெரிது’ என்ற கருத்துடையவர். படிப்பதும், பாடம் சொல் வதும், குறிப்புகள் வரைவதும், சொற்பொழிவு நிகழ்த்துவதுமாகவே அவர் காலம் கழிந்தது. வாழ்க் கையிலே ஒரு நிமிட நேரத்தைத்தானும் அவர் வீணுக்கியதில்லை. நன்றே செய்தலும் வேண்டும், அதுவும் இன்றே செய்தலும் வேண்டும்’ என்ற எண்ணத்தோடு, இரவு பகலாய்த் தமிழ்த் தொண் டாற்றினுர்,

Page 56
-س- 94 -- و
தமிழ் மொழியிற் பற்று இருந்ததுபோலத் தமிழ்ப் புலவர்களிடத்திலேயும் ஆழ்ந்த அன்பு உடை யவராய் ஐயர் வாழ்ந்தார். *ஓய்வு நேரங்களிலே தமிழ் நூல்களைப் படியுங்கள், ஆரவாரங்களிற் காலத் தைப் போக்காதீர்கள்; உழைப்பும் ஊக்கமும் வேண்டும்; உழைப்பினுல் உயர்வைப் பெறலாம்; எனவே ஓயாது உழையுங்கள்’ என்று அறிவுரை வழங்கினுர். தமிழ்ப் புலவர்களின் மேல் மதிப்பும் அன்பும் வைத்திருந்தமையால் அவர்களின் உழைப் பைப்பற்றி அடிக்கடி பேசுவது அவரது இயல்பா யிற்று. தமிழ்ப் புலவர்களும் ஐயரை மனமாரப் பாராட்டிப் போற்றிவந்தனர். “கற்ருரைக் கற்ருரே காமுறுவர்’ அல்லவா?
தமிழ் வளர்ச்சிபற்றி ஐயரவர்கள் பல கருத்துக் களை வெளியிட்டார். அவரின் கருத்துக்கள் உயர்ந் தவை; சிறந்தவை. தமிழ் நூல்களை ஆழ்ந்து பயில வேண்டும்; பலமுறை பயின்ருற்ருன் உண்மை புலப் படும். முதலிலே கடினமாகத் தோன்றினுலும் பல காற் பயிலுங்கால் தெளிவு உண்டாகும். ‘ஒரு நூலி லுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை அனுபவித் துப் படித்தல் வேண்டும். அவற்றைப் பிறர் அறியும் வண்ணம் எளிய நடையில் சொல்லவும் எழுதவும் வேண்டும்’ என்று எடுத்துரைத்தார். மேலும், “பழைய நூல்களையும் உரைகளையும் தெளிவாக ஆராய்ந்து உண்மைக் கருத்தை அறிதல் வேண் டும்’ என்றும், ‘தெரியாதவற்றைத் தெரிந்தவை யாகக் காட்டலாகாது’ என்றும், 'நாமே அதிகமாக அறிந்துவிட்டோம் என்று அயலாரைத் தாழ்வாக நினைத்துப் பேசுதலும் கூடாது” என்றும், “பிறர்

- 95 -
எழுதியுள்ளவற்றை அவமதியாமற் குணமான பாகங் களை அறிந்துகொள்ளவேண்டும்” என்றும் பரந்த பண்போடு பேசினுர்,
குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைகாடி மிக்க கொளல், என்ற வள்ளுவன்கூறிய உண்மையினை உணர்ந்த ஐயரவர்கள் வள்ளுவன் வழியிற் பண்பும் பயனு முள்ள வாழ்வை வாழ்ந்தார்.
நன்றியுணர்ச்சியோடு ஐயரவர்கள் வாழ்ந்து நல்லன பலவற்றை நாட்டுக்குச் செய்துள்ளார். தமக்கு உதவி செய்தாருக்குப் பதிலுதவி செய்ய முடியாவிட்டாலும், அவர்களை மனமாரப் பாராட்ட அவர் என்றுமே மறந்ததில்லை. ஆசிரியர் வேலை யினை அளித்த உயர்திரு. தியாகராசாச் செட்டியார் அவர்களின் பெயரைத் தம் வீட்டுக்கு வைத்து மகிழ்ந்தார். மேலும், "தியாகராசாச் செட்டியார்’ என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். இன்னும், தம் அருமைக் குருவான் மஹா வித்துவான் மீனுட்சிசுந்தரம் அவர்களின் வரலாற்றை இரு பாகங்களாய் எழுதி உதவிஞர். இவ்வளவுடன் நில்லாமல் அவரின் குடும்பத் தாருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆத ரித்து வந்தார். ‘நன்றி மறவாமல் இருப்பவரே உலகில் நல்வாழ்வைப் பெறுவர், நன்றி கொன்ற வற்கு உலகில் நல்வாழ்வே இல்லை” என்பது நம் முன்னுேர் கண்ட உண்மை.

Page 57
- 96 -
எங்கன்றி கோன்ருர்க்கு முய்வுண்டா முய்வில்லைச் சேய்க்கன்றி கோன்ற மகற்கு. என்ற வள்ளுவன் வாய்மொழியைச் சாமிநாதையர் நன்கு படித்தவர் அல்லவா? எனவே, உடலிலே உயி ருள்ளவரை நன்றி உணர்ச்சி உள்ளவராக வாழ்ந்தார்.
சாமிநாதையர் சிறந்த சொற்பொழிவாளர். நூற்றுக்கணக்கான மேடைகளிற் சொற்பொழிவாற் றிப் பலரையும் மகிழ்வித்த பெருமை அவருக் குண்டு. அவரின் பேச்சுச் சொல்வளம் நிரம்பியது; பொருளாழம் மிக்கது. ஆனல், எளிய நடையில் அமைந்தது. ஐயரவர்கள் வேடிக்கையாகப் பேசு வார்; கேலியாகக் கதைத்துக் கேட்போரை மகிழ் விப்பார். குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்துத் தாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் இன்பமடையச் செய்வார். கருத்து வளம் நிறைந்த அவர் பேச் சில் வரலாற்றுக் குறிப்புக்கள் இடம்பெறும்; வள்ளல் களைப் பற்றிய வரலாறுகள் காணப்படும். தமிழ் நூல்களைப் பற்றிய விளக்கங்கள் பொதிந்திருக்கும். பலரும் கூறும் பல செய்திகளையும் எழுதிவைக்கும் பழக்கமுடையவர் ஐயர். பொதுச் செய்திகளை அறிய அவருக்கு இருந்த ஆர்வம் அளவுகடந்தது. இத் தகைய நற்பண்புகள் நிறைந்த இவரைத் தமிழர் தம் உள்ளத் தாமரையிலே இருத்திப் போற்றினுர்கள்; புகழ்ந்தார்கள்.
தனித்தமிழ் பற்றிய ஐயரவர்களின் கருத்து அறிஞர்களாலே போற்றி வரவேற்கக்கூடியவை. வடமொழிச் சொற்களைப் புகுத்தித் தமிழை எழுது

-97 -
பவர்களுக்கு ஐயரவர்கள் அறிவுரை வழங்கத் தயங் கினரல்லர். ‘தமிழில் இல்லாதபோது, பொருள் களையோ எண்ணங்களையோ வெளியிடப் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். தமிழிலே தக்க சொற்கள் இருக்கும்போது அவற்றையே பயன்படுத்த வேண்டும்’ என்று கூறிஞர்.
இதுவரை டாக்டர் சாமிநாதையர் அவர்களின் இளமைப் பருவத்தையும் எளிமையான வாழ்வை யும் அறிந்தோம். அன்னுரின் அயராத உழைப்புத் திறனையும் ‘கடமை கடலிலும் பெரிது’ என்ற கருத் தினையும் பார்த்தோம். மேலும், நல்லாசிரியராய் வாழ்ந்து நம் மாணுக்கரின் அன்பிற்கும் மதிப்பிற் கும் ஆளாகிப் போற்றப்பட்டதையும் நோக்கினுேம், காலத்தைப் பொன் போற் கருதி ஏட்டுச் சுவடிகளி லிருந்த தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு நோக்கி, அச்சேற்றி, நூல் வடிவிலே வெளியிட்டு உதவிய தமிழ்த் தொண்டினையும் கண்டோம். க்சடறக் கற்ற அவர், நற்பண்புகள் உடையவராய் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையம்’ என்ற பரந்த பண்போடு வாழ்ந்து திகழ்ந்ததையும் உணர்ந்தோம்.
தமிழ்த்தாய்க்கு ஆற்றிய பெரும்பணிகள் காரணமாகத் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நிலை யான ஓர் இடத்தை டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பெற்றர். தமிழ் நெஞ்சங்களைத் திறப் போர், அங்கே ஐயரவர்களைக் காண்பர்.

Page 58
10. கூப்பிய கரங்கள்
நளவெண்பாவைச் செய்தவர் புகழேந்தியார். இவர் பாண்டிய மன்னன் பேரவையை அணிசெய்த பெரும் புலவர்களில் ஒருவர். இவர் கற்பனைத்திறன் வாய்ந்த அற்புதக் கவிஞராய் விளங்கினுர். இவர் செய்த நளவெண்பா கற்போர்க்கு வற்ருத வான் பெரும் அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கும் இயல்பினது. அத்துணைச் சிறந்த நளவெண்பாவில் இரண்டு பாடல்களை ஆராய்ந்து அவற்றின் நயத் தினைக் காண்போம்.
புட்கரனுடன் சூதாடி நளன் தோல்வியடைந் தான். அதனுலே தமயந்தியையும் அழைத்துக் கொண்டு, நளன் நாட்டை நீங்கிக் காட்டை அடைந்தான். இரவு வந்தது. நளனும் தமயந்தியும் இராப் பொழுதைக் கழிக்க ஒரு பாழடைந்த மண்ட பத்திலே தங்கினர். தமக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைந்து தமயந்தி கலங்கினுள். உடலும் உள்ள மும் சோர்ந்தாள். அதனுல் அவள் உறங்கிவிட் டாள். அப்போது தாமிருவரும் அணிந்திருந்த ஒரே ஆடையை நளன் வாளால் அரிந்து கொண்டு நள்ளிரவிலே தமயந்தியைத் தன்னந்தனியே காட் டிலே விட்டுவிட்டுப் பிரிந்தான்.
தமயந்தி கண்விழித்து எழுந்தாள். சுற்றுமுற் றும் பார்த்தாள். நளனை க் காணுது கலங்கினுள். காரிருளிற் கைவிட்டுச் சென்ற கணவனை நினைந்து கண்ணிர்விட்டுக் கதறி அழுதாள். திக்கற்றவளாய்த் திகைத்து நின்ருள். பின்னர் இங்கும் அங்கும்

-- 99 است.
நளனைத் தேடி நள்ளிரவில் அலைந்தாள்; எங்கும் கண்டிலள்.
பொழுது புலர்ந்தது. நளனைத் தேடித் தமயந்தி காடெல்லாம் அலைந்தாள்; காட்டிலே மானையும் மயிலை யும் கண்டாள். “இளமான்காள்! மென்மயில்காள்! உங்களுக்கு நீண்ட வாழ்வுண்டு. கணவனைக் காணுமற் கவலைப்படுகிறேன். என்னைப் பிரிந்து சென்ற வேந்தனைக் காட்டுவீரோ” என்று சொல்லிக் கண்ணிர் பெருக்கிக் கதறி அழுதாள்.
இவ்வாறு அழுது புலம்பிக்கொண்டு தமயந்தி காட்டுவழியே நடந்து சென்ருள். வழியில் மலைப் பாம்பு ஒன்றைக் கண்டாள். பெரிய யானை ஒன்றை விழுங்கிவிட்டு அந்த மலைப்பாம்பு படுத்திருந்தது. அந்தப் பாம்பின் தன்மையைத் தமயந்தி அறியாத வளாய் அந்தக் கொடிய மலைப்பாம்புக்குக் கிட்டப் போஞள். திடீரெனப் பாம்பு தமயந்தியைக் கெளவிப் பிடித்துக்கொண்டது; தமயந்தியின் கால் களைப் பிடித்து அது விழுங்கத் தொடங்கியது. தமயந்தியின் கொங்கைக்கு மேற்பட்ட பாகம் நீங்க ஏனைய பகுதியை அது விழுங்கியது. இத் துன்ப மான காட்சியைப் புகழேந்தியார் கற்பனைக் கண் களாற் கண்டார். அவரின் கவிதை உள்ளம் கவலைக் கடலில் ஆழ்ந்தது.
மலைப்பாம்புதமயந்தியை விழுங்கியமை, வெண் மதியை இராகு என்ற பாம்பு விழுங்குவது போலக் கவிஞர் கண்களுக்குத் தோன்றிற்று. கண்ட காட் சியைச் சொல்லோவியமாகப் புகழேந்தியார் புனைந் தார்.

Page 59
- 100 -
அங்கண் விசும்பின் அவிர்மதிமேல் சென்றடையும் வேங்கண் அரவுபோல் மேல்லியலைக் - கொங்கைக்கு மேலேல்லாம் தோன்ற லிழுங்கியதே வேங்கானின் பாலெல்லாம் தீயுமிழும் பாம்பு.
மலைப்பாம்பு தமயந்தியை விழுங்கியது; கொங் கைக்கு மேலெல்லாம் தோன்ற விழுங்கியது. ஏனைய பகுதி பாம்பின் வயிற்றுள் சென்றுவிட்டது. தமயந் தியின் தலையும், கைகள் இரண்டும் மாத்திரம் பாம்பின் வாய்க்கு வெளியே இருந்தன. . இச் சோகக் காட்சி வெண்மதியையும் இராகுவையும் புக ழேந்தியாருக்கு நினைவுபடுத்தின; கொடிய கண்களை யுடைய இராகு என்ற பாம்பு வெண்ணிலவைக் கெளவுகின்றது. அப்போது வெண்மதியின் ஒரு பகுதி பாம்பின் வாய்க்கு வெளியே காணப்படுகின்றது. ஏனைய பகுதியைப் பாம்பு விழுங்கிவிடுகின்றது. இவ்வாறு இராகு என்னும் பாம்பு வெண்ணிலவை விழுங்கியதைப் போலத் தமயந்தியை மலைப் பாம்பு விழுங்கியது என்று ஒப்புமை கூறிப் புகழேந்தியார் பாடலைப் பாடினுர்,
மலைப்பாம்பு தமயந்தியைச் சிறிது சிறிதாய் உள்ளே விழுங்கியது. தமயந்தியின் உடல் கொஞ் சம் கொஞ்சமாய்ப் பாம்பின் வயிற்றுள் போய்க் கொண்டிருந்தது. தமயந்தியின் தலையும் இரண்டு கைகளும் மட்டுமே வெளியே தெரிந்தன. அந்த நேரத்திலே தமயந்தி அவலக்குரல் எழுப்பிக் கண் ணிர் பெருக்கிக் கதறினுள். தமயந்தியின் உடல் பாம்பின் வயிற்றுள்ளே போகப்போக அவளின் அவலக்குரலும் கூடிக்கொண்டே போனது. முதலில்

- 101 -
தமயந்தி தன் கணவனை அவலக்குரலிற் கூவி அழைத்தாள்; பின்னர் தன் அன்பு மக்களை நினைத்து அழுதாள்.
* அரசே கொடிய மலைப்பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொண்டேன். மன்னவா! உன்னை அடைந்துவாழ விரும்புகின்றேன். நின் தோள் வலிமையாற் பாவியாகிய என்னை இந்தப் பாம்பின் வாயினின்றும் விடுவிக்கமாட்டாயா?’ என்று பெருங் குரலெடுத்துக் கதறினுள். ஆணுல், அவளைக் காப் பாற்ற நளன் வந்திலன். எனவே உயிர் போகப் போகும் நேரத்திலாவது தன் கணவனைக் காண வேண்டுமென்று அவளின் உள்ளம் விரும்பியது. அந்த ஆசையின் மிகுதியினுல், “மன்னவா! கொடிய பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொண்டேன். உடலை விட்டு என் உயிர் நீங்கப்போகின்றது, என் அன்பு மக்காள்! நீங்களாவது மன்னவனை ' ஒருமுறை காண்பீர்களோ?’ என்று சொல்லி மனம் கலங்கி அழுதாள். ܗܝ
தமயந்தியின் அழுகைக் குரலைக் கேட்கின்ற பொழுது நமது கண்களும் கலங்குகின்றன. அல் லாமலும் பாம்பின் வாயில் அகப்பட்டு அல்லலுறும் தமயந்தியின் அழுகைக் குரல் அச்சத்தோடு கூடிய அவல நிலையை எமக்கும் உண்டாக்குகின்றதல்லவா? எனவே, மலைப்பாம்பின் வாயிலே தமயந்தியைக் காண்பித்து, அதன் பின்னர் அவளை வாய்விட்டு அவலக்குரலில் அழவைத்துப் பாடலைப் படிக்கின்ற வர்களையும் கலக்கிக் கண்ணீர் பெருக வைக்கும் புகழேந்தியாரின் கற்பனைத்திறன் பாராட்டுதற் குரியது.

Page 60
- 102 -
இவ்வளவுடன் புகழேந்தியார் நின்ருரல்லர். இன்னுமோர் உருக்கமான காட்சியையும் நமக்குக் காட்டுகின்றர். LITT 6ổT 6JTu6id அகப்பட்ட தமயந்தி, தான் இறப்பது நிச்சயம் என நம்பினுள். எனவே, கணவனையும் குழந்தைகளையும் எண்ணி எண்ணி அழுதாள். உள்ளம் வேதனையடைந்தாள். இந்த வேதனையைப் பொறுக்கமுடியாமல் அவள் வாய்விட்டு அலறிஞள். தான் கூவி அழைத்து அலறுகின்ற அபயக்குரல் காட்டிலே தன்னைவிட்டுப் பிரிந்த தன் கணவன் செவிகளுக்குக் கேட்கும் என்று அவள் எண்ணினுள் போலும் ஆகவே தன் கணவனைக் கூவி அழைக்கின்ருள். ‘என் தலைவனே! நான் சென்றிருந்த இக் கொடிய காட்டிற் கொடிய மலைப்பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொண்டேன். என் உயிர் ஊசலாடுகின்றது. ஐயோ! என் உயிர் உடலைவிட்டு நீங்கப்போகின்றது. தலைவ! இறக்கப் போகும் எனக்கு விடை கொடுப்பாய்’ என்று சொல்லிக் கண்ணிர்விட்டாள். பின் தன் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினுள்.
இச் சோகமான காட்சியைப் புகழேந்தியார் கற்பனைக் கண்களால் கண்டார். அவரின் கண்க ளும் கலங்கின; கண்ணிர் பெருகியது. அந்தக் கண் ணிராற் சோகச் சித்திரம் ஒன்றைத் தீட்டினுர், அடையும் கடுங்கானில் ஆடரவின் வாய்ப்பட் டுடையும்உயிர் நாயகனே ஓகோ - விடையேனக்குத் தந்தருள்வாய் என்னுத்தன் தாமரைக்கை கூப்பினுள் செந்துவர்வாய் மேன்மேழியாள் தேர்ந்து.
இதுவே புகழேந்தியார் தீட்டிய சோகச் சித்திரம்,

-- 103 است.
இந்த உருக்கமான காட்சியை உருவாக்கப் புகழேந்தியார் பல வழிகளைக் கையாண்டுள்ளார். முதலில் அடர்ந்து வளர்ந்த காட்டைக் காட்சிக் குரிய பின்னணியாய் அமைத்தார். அங்கே நள னைத் தேடித் தமயந்தி அலைவதைக் காட்டினுர், அதன்பின்னர், மலைப்பாம்பு தமயந்தியைப் பிடித்து விழுங்குவதைத் தெரியச் செய்தார். ஆருமற்ற காட்டிலே ஒரு பெண்ணை மலைப் பாம்பு விழுங்குவது பரிதாபமான காட்சியல்லவா? அதுவும் தமயந்தி யின் தலையும் இரண்டு கைகளும் மட்டுமே LJffb பின் வாயில் தெரிந்தன. அப்போது கணவனையும் குழந்தைகளையும் கூவி அழைத்த தமயந்தியின் அவலக்குரல் கேட்டது. ஈற்றில் தமயந்தி கைகூப் பிக் கணவனிடம் விடைபெற்ருள்.
இவ்வாறு தமயந்தியின் அவல நிலையைப் படிப் படியாக உச்சக்கட்டத்திற்கு உயர்த்திய புகழேந் தியார், இறுதியிலே தமயந்தியைக் கைகூப்பி விடை பெற வைக்கும் கட்டம் உருக்கமானதும் உள்ளத் தைத் தொடக்கூடியதுமாகும்.
இன்னுமொரு சிறப்பினையும் புகழேந்தியாரின் சோக சித்திரத்தில் காண்கின்ருேம்:
ஒரு பொருளின் உரிமையாளனே அந்தப் பொ ருளை ஆக்கவும் அழிக்கவும் உரிமையுடையவன். அந்த உரிமை இல்லாதவர் அதனை ஆக்கவும் முடி யாது; அழிக்கவும் முடியாது. அம்முறையிலே தம யந்தியின் உயிருக்கு உரிமையாளன் நளன். எனவே, நளனைக் கேட்காது உயிரை விடத் தமயந்திக்கு

Page 61
- 104 -
உரிமையே இல்லை. எனினும், பாம்பின் வாயில் அகப் பட்டுத் தத்தளித்துக் கிடக்கையில் அவளின் உயிர் பிரிதல் திண்ணம். ஆகவே, உரிமையுடையவனிடத்து உரிமை பெற்றுச் செல்கின்ற கருத்தினளாய்த் தன் அன்பு பிரிய இடந்தராமையால் ஓகோ விடை யெனக்குத் தந்தருள்வாய்' எனக் காணுத நாயக னைக் கண்டது போற் பேசித் தன் துன்ப நிலை யைச் சொல்லிச் சொல்லி தமயந்தி அழுதாள்,
இதுவரை புகழேந்தியார் தீட்டிய சோகச் சித் திரம் ஒன்றைப் பார்த்தோம். அடர்ந்த காடொன் றையும் அங்கே தமயந்தி அல்லற்பட்டு அலைவ. தையும் கண்டோம். அதன்பின் தமயந்தி மலைப் பாம்பின் வாயில் அகப்பட்டுக் கைகளும் தலையும் தெரியக் கதறி அழுவதையும் கேட்டோம். அப் போது தமயந்தி தனது காதற் கணவனையும் அன்பு மக்களையும் கூவி அழைத்த அபயக் குரலையும் கேட் டோம். இறுதியாக, உடலைவிட்டு உயிர் நீங்கும் நேரத்தில் ஆருயிர்த் தலைவனிடம் தமயந்தி கூப்பிய கரங்களோடு விடைபெறும் உருக்கமான கட்டத் தையும் கண்டோம்.

11. முடியாட்சியும்:கலகக்யும்
சிறந்த ஓர் அரசியல் நூலாகத் திருவள்ளுவ ரது பொருட்பால் விளங்குகின்றது. பொருட்பாலில் வள்ளுவன் கூறுகின்ற அரசியற் கருத்துக்கள், அவன் வாழ்ந்த காலத்து அரசியல் நிலையை எடுத் துச் சொல்லுபவையெனினும், அவை இக்காலத்துக் கும் பொருந்துவன; எதிர்காலத்துக்கும் ஏற்புடை யன. இன்னுெருவகையாகக் கூறின், உலகம் உள் ளளவும் வள்ளுவன் கண்ட அரசியல் நின்று நிலவும்
பெற்றியது.
வள்ளுவன் முடியாட்சிக் காலத்திலே வாழ்ந் தான். நாம் இன்று குடியாட்சிக்காலத்திலே வாழ் கின்ருேம். வள்ளுவன் வாழ்ந்த காலத்தில் முடி யாட்சி உலகெங்கும் நிலவியது; நாம் வாழ்கின்ற இக்காலத்திலே குடியாட்சி உலகெங்கும் பரவி வரு கின்றது. எனவே குடியாட்சிக்குப் பொருத்தமான கருத்துக்களை, முடியாட்சிக் காலத்திலே வாழ்ந்த வள்ளுவணுல் எடுத்துரைக்க முடியுமா? திருக்குற ளிலே அவன் கூறுகின்ற கருத்துக்கள் முடியாட் சிக்குத்தானே பொருந்தும்; குடியாட்சிக்குப் பொருந் தாதே?’ என்று சிலர் விஞவலாம். வள்ளுவனுடைய குறள்களை முடியாட்சிக் கண்கொண்டு நோக்குவோர் முடியாட்சியையே காண்பர்; குடியாட்சிக் கண் கொண்டு நோக்குவோர் அங்கே குடியாட்சியையே பார்ப்பார். அவன் கருத்துக்கள் முடியாட்சிக்கும் பொருந்தும்; குடியாட்சிக்கும் பொருந்தும்.

Page 62
- 106 -
முடியாட்சி முறையில் மன்னனே ஆட்சித் தலைவனுக இருப்பான். அவன் அறநெறியில் ஆட்சி செய்தபோது நாட்டிற் செங்கோலாட்சி நிலவியது; அறத்துக்கு முரண்பட்டமுறையில் ஆட்சி செய்த போது கொடுங்கோலாட்சி நடைபெற்றது. அரச னுக்கு அறிவுரை வழங்க அமைச்சர்களும் இருந் தனர்; புகழ்ந்து பாடப் புலவர்களும் இருந்தனர். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற அசையாத நம்பிக்கை முடியாட்சியில் நிலவி வந் தது. நாட்டு மன்னன் இறந்ததும் ஆட்சியுரிமை வழிவழியாக அந்த மன்னவன் குடிக்கே சென் றடைந்தது.
மன்னன் ஆட்சியாகி இருந்தாலும் மக்களுக் காகவே மன்னன் வாழ்ந்தான்; அவர்களின் வள மான வாழ்விலேயே அவன் கண்ணுங்கருத்துமாய் இருந்து வந்தான்.
முடியாட்சிக்கு முற்றிலும் முரண்பட்டது குடி யாட்சி. மக்களால், மக்களுக்கு, மக்களின் ஆட்சி யாக அமைவது குடியாட்சி. மக்களே ஆட்சியாளர் களைத் தெரிவு செய்வர். மக்களாலே தெரிவு செய் யப்படும் பிரதிநிதிகளே ஆட்சியை நடாத்துவர். கட்சியின் தலைவர், அமைச்சர் குழுவை அமைத்து ஆட்சியை மேற்கொள்வார். ஆட்சிக்காலம் குறிப் பிட்ட காலத்துக்கே உரியது. மக்களின் அனுமதி யின்றி ஆட்சித் தலைவரின் பதவிக்காலத்தை நீட் டிக்கவும் முடியாது; ஆட்சி மன்றத்தின் ஆயுட் காலத்தை அதிகரிக்கவும் இயலாது. குடியாட்சி யிலே தந்தைக்குப்பின் மகன் பதவியேற்பதற்கும்,

- 107 -
தாய்க்குப்பின் மகள் ஆட்சிபுரிவதற்கும் இடமே யில்லை. ‘மக்களே நாட்டு மன்னர்கள்’ என்ற முறையில் அமைவது குடியாட்சி.
"இருவகை ஆட்சியிலும் பல அடிப்படை அமி சங்கள் ஒத்திருத்தல் காணலாம். பொது மக்களின் நன்மையைக் கருதி ஆட்சிசெய்தல், ஒற்றுமையை வளர்த்தல், பகையை ஒடுக்குதல், பசியும் பிணியும் நாட்டிலே பரவாமல் தடுத்தல், நீர்வளம், நில வளம், தொழில் வளம் ஆகியவற்றைப் பெருக்குதல், எல்லோர்க்கும் ஒத்த உரிமையை வழங்கி நடு நிலைமை தவருமல் முறை செய்தல் முதலிய அடிப் படைகள் முடியாட்சிக்கும் வேண்டியவை; குடியாட் சிக்கும் வேண்டியவை; முடியாட்சிக்கும் குடியாட் சிக்கும் பொருந்தும் இவ்வடிப்படைகளை வள்ளுவன் கண்ட அரசியலிலே பரக்கக் காணலாம்”. எனவே, வள்ளுவன் முடியாட்சிக் காலத்திலே வாழ்ந்து திருக் குறளைச் செய்தாலும், அரசியலைப்பற்றிய அவன் கருத்துக்கள் குடியாட்சிக்கும் சாலப் பொருந்துவன வாகும்.
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்ற கூற்று ஆழமான கருத்தைத் தன்னகத்துக்கொண் டது. ஆட்சியாளர்கள் மக்களின் பிரதிநிதிகள் ஆவர். அவர்கள் மக்களுக்காக ஆட்சி செய்பவர்கள். ஆகவே, “மக்களே மன்னர்கள்; மன்னர்களே மக் கள்." இன்னுெருவகையாகக் கூறின், குடியாட்சி யில் மன்னரும் மக்களும் ஒருவரே. ஆட்சியாள ரைப் பிரித்துக் கூறுவதும், நாட்டுச் சொத்துக்களை ஆட்சியாளரின் சொத்துக்கள் என்று மக்கள் கருது

Page 63
- 108 -
வதும் பொருந்தாதவை. நாட்டுச் சொத்துக்களுக் குச் சேதம் விளைவிப்பது குடியாட்சிக்கு ஒவ்வா தது. குடியாட்சியில் அழிவை மேற்கொள்ளுவது எதிரியின் சகுனப் பிழையைக் கருதித் தன் மூக்கை அறுக்கின்றவன் செயலுக்கு ஒப்பானதாகும். நாடும் நாட்டிலுள்ள சொத்துகளும் மக்களுக்கே உரியன அல்லவா?
மன்னன், வேந்தன், அரசன், இறைவன் என்ற பல பெயர்களால் வள்ளுவன் ஆட்சித் தலைவனைக் குறிப்பிட்டு அழைக்கின்றன். முடியாட்சியில் அவன் இவ்வாறு ஆட்சித் தலைவனைப் பல பெயர்களால் அழைத்தாலும், குடியாட்சிக்கும் அப்பெயர்கள் பொருந்துவனவாகும். மன்னன், வேந்தன், அரசன், இறைவன் என்ற சொற்களைக் கொண்டு வள்ளுவன் முடியாட்சித் தலைவனைக் குறிப்பிடுபவை, குடியாட் சிக்கு முரண்பட்டவை என்று கருதுவது ஏற்புடைத் தன்று. வள்ளுவனின் பின்வரும் கருத்துக்கள் இத னைத் தெளிவாக்கும்.
நாட்டின் நலன் கருதி, ஆட்சித் தலைவன் பல திட்டங்களைத் தீட்டுகின்றன். விவசாயத்தை விருத்தி செய்கின்றன். கைத்தொழில்களை அபிவிருத்தி செய் கின்றன். ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன். நீர்ப்பாசன வசதி களையும் போக்குவரத்து வசதிகளையும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றன். வீடுகளைக் கட்டுகின் ருன். நடுநிலை தவருது குடிகளைக் காக்கின்றன். அப்போது நாடு வளம் பெறுகின்றது; மக்கள் சீரும் சிறப்போடும் வாழ்கின்றனர். எனவே, நல்

- 109 -
வாழ்வை வழங்கிய அவனை, மக்கள் இறைவணுகவே போற்றுகின்றனர்.
முறைசேய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையேன்று வைக்கப் படும். இதுவே வள்ளுவன் கண்ட ஆட்சித் தலைவன். அவனைப் புலவரும் போற்றுவர்; அறிஞரும் வாழ்த் துவர்.
நமது நாட்டில், இன்று பல துறைகளில் அபி விருத்தி வேலைகள் மேற்கொள்ளப் படுகின்றன. நாட்டில், நீர்வளத்தையும் நிலவளத்தையும் மகா வலித்திட்டம் ஏற்படுத்தும், வேலை வாய்ப்பையும் வெளிநாட்டு நாணயமாற்றையும் சுதந்திர வர்த்தக வலயம் வழங்குகின்றது. தொழிற்சாலைகளும், சிறு கைத்தொழில்களும், வீட்டுத் திட்டங்களும், விவ சாயப் பண்ணைகளும் செல்வ வளத்துக்கு வழி வகுக்கின்றன. போக்குவரத்து வசதிகளும் கடல் வளத்தைப் பெறுவதற்கான திட்டங்களும் மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாகின்றன. இவ் வாறு நாடு அபிவிருத்தியாகும் போது, மக்கள் உண்பதற்குப் போதிய உணவும், உடுப்பதற்கு நல்ல உடையும், வாழ்வதற்கு வசதியான வீடும் பெற்றுச் செல்வச் செழிப்போடு வாழ்வர். இவ்வாறு வளமான வாழ்வை நல்கும் ஆட்சியாளரை மக்கள் மனமாரப் போற்றுவர்; வாயார வாழ்த்துவர்.
குடிதழிஇக் கோலோச்சு மாநில மன்ன னடிதழிஇ நிற்கு முலகு.

Page 64
- 110 -
இங்கே ஆட்சித்தலைவனை மன்னன் என்று வள்ளு வன் குறிப்பிடுகின்றன். மன்னன் குடிகளை அணைத்து அவர்களின் கருத்திற்கு இயைய ஆட்சி புரியும் குடி யாட்சித் தலைவனுக விளங்குகின்றன். எனவே, முடி யாட்சியில் மன்னனுக்குச் சிலை அமைத்த மக்கள், குடியாட்சியில் ஆட்சித் தலைவனுக்குச் சிலை எடுக் கின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆட்சித் தலைவனுடைய பெரும் பொறுப்பாகும். இதற்காக நிதி அமைச்சர் பொருள்வரும் வழி களைப் பெருக்குகின்றர்; வெளிநாட்டு நாணயமாற் றைப் பெறுவதற்கான வழிகளை வகுக்கின்ருர்; வெளி நாட்டு உதவிகளைப் பெறுகின்றர். அதனுல் பொருள் வளமும், நிதி வளமும் பெருகுகின்றன, பெரு கிய வருவாயைப் பேணிக்காப்பதும் அவர் பொ றுப்பாகும். நிதியை ஒவ்வொரு துறைக்கும் இவ்வ ளவு இவ்வளவு என்று ஒதுக்குகின்றர். இவ்வாறு நாட்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதி அமைச் சர் தயாரிக்கின்றர்.
இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு, என்று வள்ளுவன் எடுத்துரைக்கின்றன். இங்கே அரசு’ என்று நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை வள்ளுவன் குறிப்பிட்டாலும், குடியாட்சி அமைப் பில் ஆட்சித் தலைவனையும் அவனுடைய நிதி அமைச்சரையும் அது குறிப்பிடுதலையே காண்கின் ருேம்.

- 111 -
மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய் கின்றனர். தெரிவு செய்யப்பட்டவர் மக்களின் பிரதி நிதிகள்; மக்களுடைய நலனுக்காக உழைக்சின்ற வர்கள் மக்களுடைய நன்மை தீமைகளிலே கலந்து அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ள வேண்டியவர்கள். எனவே, மக்கள் தமது பிரதிநிதிகளிடம் பலவற்றை எதிர்பார்க்கின்றர்கள். அவற்றுள் இரண்டினைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒன்று, எவரும் தன்னை எளிதாகக் கண்டு தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பளித்தல். இன்னுென்று தன்னைக் காண வரு பவர்களுடன் கடுஞ் சொற்களைப் பேசாது இன் சொற் கூறிப் பழகுதல்.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னரிலம்.
இந்த இரண்டு பண்புகளையும் உடையவன் என்றும் மக்களின் பிரதிநிதியாக, ஆட்சித் தலைவனுக இருப்பான் என்பதற்கு ஐயமே இல்லை. அவனை மக்கள் போற்றிப் புகழ்வர். அவன் பேரும் புகழும் உடையணுய் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற உயர்ந்த உள்ளத்தோடு மக்களுக்குச் சேவை செய்வான். இங்கே மன்னன் என்று வள்ளுவன் கூறுவது குடியாட்சியில் ஆட்சித் தலைவனைக் குறிப் பிடுகின்றது.
இவ்வாறு ஆட்சியாளனைப் பற்றி வள்ளுவன் எடுத்துக் கூறிய கருத்துக்கள் மிகப்பல. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டோம்.

Page 65
- 112 -
அரசியலைப் பற்றிய கருத்துக்கள் 25 அதிகாரங் களில் இடம்பெறுகின்றன. இதனைக்கொண்டு இரண்டு உண்மைகளைக் கண்டுகொள்ள முடிகின்றது. ஒன்று அரசனது-ஆட்சித் தலைவனது இயல்புகளைச் சொல் வதற்குக் கூடிய தொகையான அதிகாரங்களை ஒதுக்கியுள்ளமை; மற்றென்று, அரசனின் ஆட்சித் தலைவனின் இயல்புகளைக் கூறும் அரசியலை ஏனைய ஆறு அங்கங்களுக்கு முன்னே அமைத்துள்ளமை,
ஆட்சித் தலைவனுடைய இயல்புகளை விரிவாகக் கூறிய வள்ளுவன், அரசியல் அங்கங்களையும் விரி வாக விளக்கியுள்ளான். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவற்றை அரசியலின் ஆறு அங் கங்களாக வள்ளுவன் எடுத்துக் கூறியுள்ளான்.
படைகுடி கூழமைச்சு நட்பர ஞறு முடையா னரசரு ளேறு.
பொருட்பாலின் முதற் குறளிலேயே இந்த ஆறு அங்கங்களையும் குறிப்பிட்ட வள்ளுவன், அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே விளக்கினுன், பத்து அதிகாரங்களில் அமைச்சினை விளக்கினன், இவ்விரண்டு அதிகாரங்களால் அரணையும் படை யையும் குறிப்பிட்டான். 17 அதிகாரங்களால் நட்பை யும், 13 அதிகாரங்களாற் குடியையும் கூறிஞன். ஓர் அதிகாரத்தாற் கூழைத் தெளிவுபடுத்தினுன்.
அரசியல் அங்கங்களிலே படை மிகவும் முக்கிய மானது. எனவே, அதனை முதற்கண் வள்ளுவன் குறிப்பிட்டான். படை என்னும்போது இன்று முப் படைகளைக் குறிக்கும். அவை கடற்படை, தரைப்

- 113 -
படை, வானப்படை என்பன. வள்ளுவன் 'படை பற்றிய கருத்துக்களை இரண்டு அதிகாரங்களாற் கூறிஞன், படைமாட்சி ஒன்று, “படைச்செருக்கு” இன்னுென்று, முன்னையதிற் படையினது தன்மை யையும், பின்னையதில் அப்படையினது மறை மிகுதி யையும் விளக்கியுள்ளான். வள்ளுவன் எடுத்துச் சொல்லும் இக்கருத்துக்கள் முடியாட்சிக்கு மட்டு மன்று, குடியாட்சிக்கும் வேண்டியனவே.
குடி என்பது குடிமக்களைக் குறிக்கும். குடிகள் இல்லையாளுல் அரசும் இல்லை; ஆட்சியும் இல்லை. மக்கள் ஆட்சியில் மக்கள் நலன் பேணப்படுதல் வேண்டும். எனவே, குடிகளின் இயல்பை 13 அதி காரங்களிலே வகைப்படுத்தி வள்ளுவன் விளக்கி யுள்ளான். அவ்வதிகாரங்கள் குடிமை, மானம், பெருமை, சான்றன்மை, பண்புடைமை, நன்றியில் செல்வம், நாணுடைமை, குடிசெயல்வகை, உழவு, நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்பன, குடி மக்களுக்காக வள்ளுவன் யாத்த இவ்வதிகாரங்கள் குடியாட்சியில், நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக் குமே பொருந்துவனவாகும். மக்களுக்கும் பொருந் தும் ; மக்களின் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். முடியாட்சியிலே குடிமக்களுக்குக் கூறப்பட்டவை, குடியாட்சியிலே ஆட்சியாளருக்கும், குடிமக்களுக் கும் வேண்டுவனவாக இருப்பதைக் காண்கின்ருேம்,
கூழ் என்பது பொருள்செய் வகையை. இதனை ஓர் அதிகாரத்திலேயே வள்ளுவன் விளக்கியுள்ளான். செல்வத்தைச் சம்பாதித்தல் ஓர் அதிகாரத்திற்

Page 66
- 114 -
குறிப்பிடுவது இக்காலத்துக்கு ஒவ்வாதது போல் தோன்றுகின்றது. செல்வம் இல்லாதவிடத்து நாட் டிலே பல பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு. வருவாய் இல்லாத நாட்டில் மக்கள் வறுமையால் வாடி வதங்கவேண்டி வரும். எனவே, இன்றைய நிலையில் மக்களாட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு நாடு வள முள்ளதாக இருத்தல் வேண்டும். செல்வம் உண் டேற் சிறப்பும் உண்டு. நாட்டிலுள்ள வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தி நாட்டிலே செல்வச் செழிப்பை ஏற்படுத்துவது ஆட்சியாளர் பொறுப் பாகும்.
அமைச்சு என்பது அமைச்சர்களை அமைச் சர்களது குணங்களையும் செயல்களையும் வள்ளுவர் 10 அதிகாரங்களிலே எடுத்துக் கூறியுள்ளார். அவை அமைச்சு, சொல்வன்மை, வினைத்தூய்மை, வினைத் திட்பம், வினைச்செயல்வகை, தூது, மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை என்பன. அன்று மன்னனுக்கு உறுதுணையாக இருந்த அமைச்சினது தன்மை, இன்று ஆட்சித் தலைவனுக்கு உறுதுணையாக அமை கின்ற அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஏற்புடைய தாகின்றது. மன்னனின் ஆட்சி சிறப்புற, அமைச் சன் உதவியாக இருக்கிறன். ஆட்சித் தலைவனின் ஆட்சி மாண்புமிக்கதாக அமைய மந்திரிமார் உதவி யாக இருக்கின்றனர். அரசியலை நடாத்துவதற்கும் நாட்டினை உயர்த்துவதற்கும் வேண்டுவனவற்றைச் சூழ்ந்து எண்ணி ஆட்சித் தலைவனுக்கு எடுத்துக் கூறி அவனிட்ட ஆணைகளை நடத்தி வருபவர்கள்

- 115 -
அமைச்சர்கள் ஆவர். எனவே, வள்ளுவன் முடி யாட்சிக்குரியதாகக் கூறிய அமைச்சு, இன்று குடி யாட்சிக்கும் சாலப் பொருந்துகின்றதல்லவா?
நட்பு என்பது நட்பு. அரசுகளைக் குறிப்பிடு கின்றது. உலகிலுள்ள நாடுகள் இன்று பல கூட் டங்களாக இயங்குகின்றன. அமெரிக்காவும் அதன் நட்பரசுகளும் ஒரு புறம்; ரூசியாவும் அதன் நட் பரசுகளும் மறுபுறமீ; அணிசேரா நாடுகள் இன் னுெருபுறம், நட்பரசுகள் இல்லையானல் தனியரசு கள் தழைத்தோங்க இயலாது. உலக அரசுகள் யாவும் நட்பரசுகளாக இயங்குதல்வேண்டு மென் பது இன்றைய இலங்கை அரசின் கொள்கை ஆகும்; வள்ளுவர் கொள்கையும் அதுவே.
அரண் என்பது கோட்டையை, இதனை இரண்டு அதிகாரங்களில் வள்ளுவன் விளக்கினுன், முடி யாட்சியில் மதில், அகழி, காவற்காடு என்பன அரண்களாகக் கருதப்பட்டன. குடியாட்சியிலே விமா னத் தளம், கப்பல் தளம், கடல் எல்லை, ‘ருெக்கற்” தளம் என்பன போன்றவற்றை அரண் குறிப்பிட்டு நிற்கின்றது என்று கூறலாம்.
இதுவரை கூறியவற்றை ஆராய்ந்துபார்க்கும் போது, முடியாட்சியிலே அரசன், மன்னன், வேந் தன், இறைவன் என்று வள்ளுவன் கூறியவை, குடி யாட்சியிலே ஜனதிபதி, பிரதம அமைச்சர் முதலிய ஆட்சித் தலைவர்களுக்குப் பொருந்தும். அமைச்சுப்

Page 67
- 116 -
பற்றிய கருத்துக்கள் அமைச்சரவை உறுப்பினர் களுக்கு ஏற்புடையன. ஏனைய ஆட்சித் தலைவ னுக்கும் நல்லாட்சிக்கும் அறிவுரைகளாக அமை வன. பரந்த கண்கொண்டு பார்க்கும்போது, வள்ளு வன் அரசியல்பற்றிக் கூறுகின்ற கருத்துக்கள் மக்க ளாட்சியிலே தனி மனிதர் ஒவ்வொருவருக்கும் பொருந்துவனவாகும்.


Page 68


Page 69