கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்தம் அழகியார்

Page 1


Page 2


Page 3

சித்தம் அழகியார்
(கட்டுரைத் தொகுதி)
கரவைகிழார்” * க. கந்தசாமி
*மதி ஒளி வாசா' கரவெட்டி கிழக்கு,
கரவெட்டி.
பதிப்புரிமை ஆசிரியர்க்கே

Page 4
முதற் பதிப்பு-1972 )
விலை. ரூபா 2-00
ஆசிரியரின் பிற நூல்கள்:
தணியாத தாகம் விலை: ரூபா 2-00 (வரலாற்று நாடகம்)
கரவைகிழார் கவிதைகள் விலை: ரூபா 2-00
இப்புத்தகம் 10, மெயின் வீதி, யாழ்ப்பாணம் கலைவாணி அச்சகத்தில் அச்சிடப்பட்டு திரு. க. கந்தசாமி ("மதி ஒளி வாசா' கரவெட்டி கிழக்கு கரவெட்டி) அவர்களால் வெளியிடப்பட்டது 348-72

செந்தமிழ்க் கலைமணி, வித்துவான், பண்டிதர்
கா. பொ. இரத்தினம் பி. ஏ. (ஆண்க) இலண்டன்; எம். ஏ. பி. ஒ. எல். (சென்னை)
தேசிய அரசப் பேரவை உறுப்பினர் ܗܝ (ஊர்காவற்றுறை) அவர்கள் வழங்கிய
முகவுரை
Iக்கள் சூழ்நிலையினுல் உந்தப்படாமல் வாழல் முடியாது. மக்களுக்குள்ளும். உணர்ச்சியும் சிந்தனை யும் மிக்கவர்கள் சூழ்நிலையின் தாக்கத்தோடு மோதா மல் இருக்க முடியாது. இவர்களுள்ளும் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றைப் படைக்கும் புல மையாளர் சூழ்நிலையைத் தழுவியும் தாக்கியுமே தமது படைப்புக்களை ஆக்குவர். வாழ்வியல் வேண்டாம், அரசியல் வேண்டாம்; கலைபோதும்; சமயம் போதும் சரித்திரம் போதும் என்று அமைப்பவர்கள் நெஞ்சுர மும் நேர்மைத் திறனுமில்லாத பஞ்சோந்திகளாவர்கள். இத்தகையவர்களால் அவர்களுடைய நாடோ, இனமோ, மொழியோ பயனடையாது. சூழ்நிலையால் பாதிக்கப் படும் வாழ்வுத் துறைகளில் தன்னை ஈடுபடுத்தி அச் சூழ்நிலையின் தாக்கங்களினுல் தன்னுள்ளத்து உதிக் கும் உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உண்மை யான உருவம் கொடுப்பவனே உயர்ந்த படைப்பாள ணுவான். இந்த உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தாம் கைக்கொண்ட சில கொள்கைகளுக்குள் மட்டுப் படுத்தித் தங்கள் படைப்புக்களை ஆக்குபவர்கள் போலிகள் வரிசையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் பெருகும் இலங்கையில் கரவைகிழார் போன்ற உயர்ந்த உண்மைப் புலமையாளர் சிலராகுதல் இருப் பது மகிழ்ச்சிக்குரியது.

Page 5
ii
இக்கட்டுரைகளில் ஆசிரியர், கவிஞர் கரவைகிழார், தம்முள்ளத் தெழுந்த உணர்ச்சிகளையும் எண்ணங்களை யும் செந்தமிழில் - தேன்தமிழில் அஞ்சாமல் அசை யாமல், ஒழிக்காமல் உருட்டாமல், குழப்பாமல் குறைக் காமல் தீட்டித் தந்திருக்கிருர். கட்டுரைகளைப் படிக் கப்படிக்க ஆசிரியரின் உணர்ச்சிகள் நம்மை ஆட் கொள்ளுகின்றன.
"அன்னியர் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு, அடிமைப் படுகுழியில் வீழ்ந்து தனது நாடு தனது மொழி தனது இனம் என்பவற்றை மறந்து போலி வாழ்வில் மயங் கிய கயவர்களைக் கண்டு நாளும் நொந்து நைந்தார் பாரதி." என்று ‘வாழ்வும் மொழியும்’ என்ற கட்டு ரையில் ஆசிரியர் கூறுகிறர். இன்றும் எங்கள் தமிழ ரில் சிலர் அடிமை வாழ்வில் மயங்கி ஆளுவோரின் அடிவருடிகளாக, கூலிப்படையாகக் காட்சி அளிப்ப தைக் கண்டு நல்ல தமிழ் உள்ளங்கள் கொதிப்பது போல அன்று பாரதியாரின் உள்ளமுங் கொதித்தது. இந்த உள்ளக் கொதிப்பை ஆசிரியர் பட்டறிவால் உணர்ந்து உரைத்திருக்கிருர், s
“நாட்டுப்பற்றுப் போதும், மொழிப்பற்று வேண் டாம்; மண்வாசனை போதும்; மொழியுரிமை வேண் டாம்; மொழியுரிமை நாட்டுப்பற்றிற்கு மாருனது” என்று கூறி ஆரவாரஞ் செய்யும் பச்சோந்திகளுக்கு இக் கட்டுரையில் ஆசிரியர் நல்ல சவுக்கடி கொடுக் கின்ருர்,
“ஒரு நாட்டின் உரிமைப்போர் வெறும் கல்லுக்கும் மண்ணுக்கும் உரிமை பெற்றுத்தரும் போர் அன்று. கருத்திற்கும் வாழ்விற்கும் உரிமை பெற்றுத்தரும் போரே ஆகும். கருத்திலும் வாழ்விலும் மொழியே உயிர்போன்ற கருவியாகக் கலந்து நிற்கிறது. ஆகவே

iii
நாட்டுரிமை என்பது நாட்டுமக்களின் வாழ்வுக்கு இன் றியமையாத மொழிக்கும் உரிமையாகும். இதனுலேயே நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இணைந்து செல்வன என்று கருதுவர். ஆதலின் நாட்டுப் பற்றுக் கொண் டவர் மொழிப்பற்று உடையவராக விளங்குவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.' எனும் அவர் கூற்றையும் நோக்குக,
ஆசிரியரின் தாய்மொழிப் பற்றினை 'விழுமிய உணர்ச்சி’ எனும் கட்டுரையும் நன்கு காட்டுகிறது. தமிழ் மக்கள் தமிழ் உரிமைகளைப் பெறுதற்கு எத்த கைய தியாகத்தையுஞ் செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் முறை யில் பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை நினைவூட்டி நிலை நாட்டுகிருர்,
'பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத்துறவின் முறையார் தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத்/ தந்தை குயில்போல் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை அயலவராகும் வண்ணம் - தமிழ்என் அறிவினில் உறைதல் கண்டிர்'
'குடும்பத்திலும் பிள்ளைப்பாசம் உள்ளத்தை உருக்கி உணர்ச்சிப் பெருக்கை உண்டாக்குவது; உயி ரையே தியாகம் செய்யத் தூண்டுவது. எனவேதான் புரட்சிக் கவிஞர் 'அன்பைக் கொட்டிவளர்க்கும் பிள்ளை' எனப்பாடிஞர். அழகு தமிழ் அவர் அறிவில் உறையும் போது அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள் ளையும் அயலவராகத்தான் தோன்றிற்று. தமிழுக்கு ஊறுநேரும் போது எத்தகைய உயர்ந்த தியாகத்தை யும் செய்யத் சித்தமாயிருக்க வேண்டும் என்பதை

Page 6
iv
எழிலுற இதயத்தைத் தொடும் வகையில் பாவேந்தர் பகர்ந்திருக்கிருர்.”
"அன்னத் தமிழுக்கு அரியாசனம் தந்த அண்ணு’ என்று அறிஞர் அண்ணுதுரையின் அருஞ்செயலை ஆசிரியர் ஒருகட்டுரைத் தலைப்பாக்கியிருக்கிருர். இக் கட்டுரையில் அறிஞர் அண்ணுவின் அரும் பெரும் பணிகளைத் தொகுத்தும் வகுத்தும் தொட்டும் காட்டும் அருமைப்பாடு வியப்புக்குரியது.
பின்வரும் பகுதியில் ஆசிரியர் அறிஞர் அண்ணு வின் ஈடிணையில்லாத் தொண்டுகளை இரத்தினச் சுருக் கமாக எடுத்துரைத்துளர். v
“தனது தாய் மொழியும் தாய்நாடும் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பரிதாப நிலையை நினைந்து நினைந்து நாளும் உருகினுர், தெளிந்த அரசியல் அறிவையும் பண்பட்ட உணர்வையும் ஊட்டினுலன்றி மக்கள் கிளர்ந்தெழுந்து நாட்டையும் மொழியையும் காத்திடப் போர்க்களத்தில் குதிக்கமாட்டார்க்ள் என்பதை நன்கு உணர்ந்தமை யினுல்தான் முதலில் கருத்துப் புரட்சிக்கு வித்திட்டார். மக்கள் மனங்களிலே மண்டிக்கிடந்த மூடநம்பிக்கை யையும் கண்மூடிப் கபோதிப் பழக்கவழக்கங்களையும் சாடி, சிந்தனை செய்யத் தூண்டி மக்களை எழுச்சி கொள்ளச் செய்தார். தமிழினத்தைப் பன்னெடுங்கால மாகப் பீடித்திருந்த அரசியல் விழிப்பின்மை, தாய் மொழிப் பற்றின்மை, தீண்டாமை போன்ற பிணிகளை அகற்ற இடையருது பேச்சு மூலமும் எழுத்து மூலமும் பணியாற்றினுர்.”
அண்ணுவைச் "சீர்திருத்தச் செம்மல்,” “துணிவு
மிகு தொண்டன்,” “அருமைத் தம்பிகளின் அண்ணு,” “பெரியாரைப் பேணிய பெருந்தகை,” “மொழிப்

w
போர்த் தலைவன்,” 'தண்ணுெளி ஈந்த தலைவன்’ என்று பன்முகமாகப் பாராட்டிக் கட்டுரையினை முடிக் கும் பொழுது “காருள்ள அளவும் இந்தப் பாருள்ள அளவும், நீருள்ள அளவும், தமிழ்த்தாய் உள்ள அள -வும் தமிழர் நெஞ்சில் அண்ணு வாழ்வார்.” என்று கூறி அவரை என்றும் வாழ்பவராக்குகின்ருர்,
சித்தம் அழகியார், இருளும் அருளும், தேசாபிமானம், எழுத்தின் ஆற்றல், யூதர்களின் விடுதலைப்போர், சிந்தை கவர்ந்த மாந்தையும், வீரச் செம்மல் உலவிய வன்னியும்.
எனும் கட்டுரைகளும் சமய நுட்பங்கள், வர லாற்று நிகழ்ச்சிகள், நாட்டுப்பற்று விடுதலை வேட்கை என்பவற்றை நன்கு விளக்கிச் சிந்தனை க்கு விருந்த ளிக்கின்றன.

Page 7
அணிந்துரை
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும்” எனப் பாடி ணுன் பாரதி. ஒரு வகையில், அதையே அவனும் செய்து கொண்டிருந்தான். எதை? மனித சமுதாயத்தின் அடித் தளத்திலிருந்து எழுந்து அனல் பரப்பிக் கொண்டிருக் கிறதே அறிவுப் பசி, அந்தத் தணியாத தீவிர பசிக்குப் பாரதி தன்னையும் தன் எழுத்தையும் தன்னுலான மட் Q}ub அர்ப்பணித்திக் கொண்டே இருந்தான், இறந்தான். எனினும், புலவர்களின் எழுத்தென்பது இலையில் படைக் கப்பட்ட தின் பண்டமல்ல. அவை வற்ருத ஜீவநதியாய், வரட்சி காணுத பிட்சா பாத்திரமாய் நின்று உலகுக்கு வாழ்வையும் வழியையும் என்றென்றும் வழங்கிக்
கொண்டே இருக்கும்.
அறிவின் ஆரம்பம் எப்போது உதயமாயிற்று? அழகு ஒளி வீசத் தொடங்கியது என்று? உணர்வு பிறந் தது எந்நாள்? இவற்றையெல்லாம் கணக்கிட்டுக் கூற முடியாததைப் போல புலவனின் இதய வீணை மீட்டப் பட்டு அவனது அமுதப் பண் உலகில் இசை பரப்பத் தொடங்கிய நாளையும் கணித்துக் குறித்திட முடியாது. மனித இதயத் துடிப்பின் சிற்ருெலி இருக்கிறதே, அதன் ரீங்காரம் பல நூற்ருண்டு காலம் வாழும் வல்லமை பெற்றதாயும் விடுவதுண்டு. அதிலும் இதய இசை யானது வரி வடிவம் பெற்றுவிட்டாலோ அதன் பணியும் பயனும் ஆயிரமாயிரம் வருடத்துக்கு உரியதாய் விடு கின்றது. அவ்விதம் ஆயிரக் கணக்கான அரும் பெரும் புலவர்களும் கவிஞர்களும் அறிஞர்களும் ஆளுநர் களும் சான்ருேரும் உரவோரும் சீலர்களும் சித்தர் களும் இறைவடிவாய் வந்த உத்தமப் பணியாளர்களும்

vii.
விட்டுச் சென்ற அருளுணர்வும் அறநெறியும் சேர்ந்த, அறிவையும் உயர்வையும் எம் உள்ளத்தே உயிரென ஊட்டி நிற்கும் எம் தாய் மொழியாம் நந்தமிழை நினைந்து வணங்கி அமைந்ததே இந்நூல். இது ஒரு தமிழன் படைத்த உண்மைத் தமிழ் நூலாகும்.
இந்நூலின் கண் இதன் ஆக்கியோணுகிய கவிஞர் கரவைகிழாரின் சிறப்பையோ குறிப்பையோ காண முடியாதிருக்கிறது; தமிழின் சிறப்பையே இங்கு காண முடிகிறது. காரணம், கரவைகிழாரின் நெஞ்சம் தமிழ், நினைவு தமிழ், பேச்சும் மூச்சும் இலட்சியமும் இதய தாகமும் - அத்துடன் வாழ்வும் - தமிழேதான்! “உள் ளத்தின் உண்மை ஒளி” என ஒன்று உண்டல்லவா? அந்த உண்மையானது கரவைகிழாரின் உள்ளத்தில் வீசி உந்த அதன் பயணுய் ‘தணியாத தாகம்” என்ற வன்னி வள நாட்டின் வரலாற்று நாடகம் எமக்குக் கிடைத்தது. நாடக நூலையடுத்து முழுமை பெற்ற கவிதை நூலொன்று முகிழ்த்து மலர்ந்தது. இப்போது "சித்தம் அழகியார்” என்ற தலைப்பில் தேன்தமிழ்க் கட் டுரைத் தொகுப்பை அவர் ஈந்துள்ளார்.
வாழ்க்கையை வெறுமனே சித்தரிப்பது இலக்கிய மாகாது; உணர்வின் ஊடாக வாழ்வை உயர்த்துவதாக வும் அது அமைய வேண்டும். “உடலழகு, உறுப்பழகு உடை யழகு, உறைவிடத்தழகு என்பனவெல்லாம் உயர்ந்தவையல்ல; உள்ளத்தின் அழகுதான் உயர்ந்தது 9 சிறந்தது" என தமிழ் மரபின் வழி வந்து நவிலும் “சித் தம் அழகியார்” என்ற முதற் கட்டுரையிலேயே உயர் வின் அழகு மலையருவியாய் நின்று பயன் பாய்ச்சத் தொடங்குகிறது. கரவைகிழாரின் தெள்ளுதமிழ் உரை நடை மணிவாசகப் பெருமானின் திருவாசகத்துடன் கலந்து புரண்டு பாய்ந்து வரும்போது அது தேனருவி யாயல்லாது வேறெதுவாய் இருக்க முடியும்?

Page 8
viii
மரத்தின் இலையும் தழையும் மலரும் அழகும் அத் தனையும் அம்மரத்துக்கு மூலமாயிருந்த வித்தின் விரிவி ஞல் உண்டானதே என்பதைப் போல, ஒவ்வொரு மணி தனது உயர்வும் அவனது சித்தத்துச் சிறப்பினுல் விரி வது என்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. இவ்விதம் உள்ளத்தை உயர்த்திடும் இந்நூல் மூலம் நாம் பெறும் அனுபவம் பலப்பல!
“சித்தம் அழகியார்” என்ற முதற் கட்டுரையில் புற அழகின் மயக்கம் தீர்வதைப் போல, தயக்கத்தை நீக்கி அச்சம் போக்கி ஆண்மையை உலகுக்கு ஈவதாயுள்ளது "இருளும் அருளும்’ என வரும் அவரது அடுத்த கட் டுரை. இவ்வித அருளொளியன் ருே உலகை உய்விக் கிறது? ஆயினும் அந்த ஒளிக்குரிய சூடு வேண்டுமே! தொட்டால் சுட்டுவிடும் என்ற மன நிலை ஒளி பாய்ச்
#F DIT?
ஒட்டினுள் அடங்கிய ஆமையின் வாழ்வை அரண் மனைப் பெருவாழ்வு என நாடுவதா? இந்த இழிவைத் தான் இன்றைய “பெரியோராயுள்ள’ சிலர் ஊட்ட முனை கிருர்கள். இந்நிலை களையப்பட வேண்டும், நெஞ்சத்து உரமில்லாப் போலிப் பெரியோர்களும் பயங்கொள்ளி களும் சுயநலமிகளும் சாடப்பட வேண்டும், எம் இனம் வாழ வேண்டின்!
“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்”
என்ற தமிழ் மறைப்படி அனைவரையும் தொட்டு நிற்பது அரசியல். “தேசாபிமானம் சொல்லித் தெரியக் கூடியது அல்ல; அது உணர்ந்து தெரியக் கூடியதே" எனக் கூறிடும் கவிஞர் கரவைகிழாரின் குரலானது தெள்ளத்

iX
தெளிவுடன் ஒலித்து படிப்போரின் உள்ளத்தைத் தொடு கிறது. இன்றைய நிலையில் இத்தகைத் துணிவில்லாப் பணி தமிழ்ப் பணியாகுமா? அதனைத் தமிழ்தான் ஏற் குமா? இந்த வழி வந்த அரிய கட்டுரைத் தொடர்களே “அறமும் அரசியலும்”, “தனி மொழிச் சட்டத்தின் விளைவு’, ‘வாழ்வும் மொழியும்” என்பவையாகும். விழு மிய உணர்ச்சி என்ற கட்டுரையிலே நட்பு, காதல்,பக்தி ஆகிய உயரிய உணர்வெல்லாம் ஒளிவீசுகின்றன, தியாக உணர்வும் மிளிர்கிறது.
“எழுத்தின் ஆற்றல்' என வரும் கட்டுரையோ வீரப் பெருவாழ்வை விளக்கும் வரலாற்றுத் தொடர் போல நல்லவர்கள் நாட்டுக்குழைத்த கதையை விளக்கி வாழ்கிறது. யூதரின் விடுதலைப் போர், சிந்தை கவர்ந்த மாந்தை, அமரர் அண்ணு என்ற கட்டுரைகள் யாவும் நெஞ்சம் நிறைந்த உணர்வைத் தந்து விரிகின்றன.
அறிவு வளர கட்டுரை அவசியம். உணர்வு வியாபிக் கவும் கட்டுரை தேவை. மறைமலையடிகள், திரு. வி. க. ஆகியோர் தமிழ் வளர்க்க உதவியது பெரும்பாலும் கட்டுரையன்ருே? எம் நாவலர் தந்ததுட் பல கட்டு ரையே.
கர வைகிழாரின் இக்கட்டுரைத் தொகுப்பிலே இடம் பெறும் பெயர்களைக் கவனிப்போமா? அவையே கரவை கிழாரின் ஆய்வுக்கும் அறிவுக்கும் சான்று பகர்கின்றன. அப்பெயர்களாவன - மணிவாசகர், நபிகள் நாயகம், புத்த பிரான், யேசு கிறிஸ்து, வள்ளலார், வள்ளுவர், சீன நாட்டு நல்லறிஞர் குவாங் சுவாங், பிரஞ்சு நாட்டுப் பேரறிஞர் ரூசோ, ஆங்கிலப் புலவர் பைரன், பெர்னுட்ஷா, எச். ஜி. வெல்ஸ், சோமசெற் மோம், சைவ நாயன்மார், குமரகுருபரர், கணியன் பூங்குன் றணுர், நக்கீரர், கோவூர்க் கிழார், அரசில் கிழார்,

Page 9
மா மூலர், பரணர், போப் ஐயர், பாரதி, திரு. வி. க., பாரதிதாசன், மறைமலையடிகள், பெரியார் ஈ. வே. ரா., பன்மொழிப் புலவர் அப்பாத்துரை, ரா. பி. சேதப் பிள்ளை, ராஜாஜி, நாலடியார், அறநெறிச் சாரம், திரு மந்திரம், கந்தப் புராணம், கம்பராமாயணம், மகாவம் சம், கயிலை வன்னியன், அமரர் அண்ணு.
இவ்வித பெருமுயற்சிக்கு நாம் நன்றி பகர்வது 5Tirsorb?
புங்குடுதீவு,
நாக-பத்மநாதன் 14. O. 72.

முன்னுரை
க்ருத்துப் பரிமாற்றத்திற்குக் கட்டுரை இலக்கியம் மிகச் சிறந்த கருவி. பாரதத்தின் புகழ் வாய்ந்த கவிஞர் களான பாரதியாரும் ரவீந்திர நாத தாகூரும் பல அரிய சீரிய கருத்துக்களை கட்டுரைகள் மூலமும் மனித சமுதாயத்திற்கு வாரி வழங்கியுள்ளார்கள்.
கருத்துக்களால் வளர்ந்து, கருத்துக்களை வளர்ப் பவன் மனிதனே. சிந்தனையில் எழுந்த எண்ணங்களில் சீரியவற்றை, சிற்பி செதுக்கி சிலையாக வடித்துத் தரு வது போல, கட்டுரை வடிவில் தந்து மக்களைத் தெளி வாக சிந்திக்கத் தூண்டுவது கட்டுரை இலக்கியம்.
கடந்த சில ஆண்டுகளாக எ ன து சிந்தையில் உதித்த உணர்ச்சிகளுக்கும், எண் ணங்களுக்கும் கட்டுரை வடிவம் கொடுத்து எழுதினேன். "ஈழநாடு” "எழுச்சி” ஆகிய பத்திரிகைகளிலும், 'மலர்' சஞ்சிகை யிலும் அக்கட்டுரைகள் வெளிவந்தன. அப்பத்திரிகை களுக்கும் சஞ்சிகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி உரியது. வெளிவந்த கட்டுரைகளிற் சிலவற்றை யும் வேறு சில கட்டுரைகளையும் தொகுத்து நூலாக வெளியிடும் எண்ணம் எழுந்து கட்டுரைத் தொகுதி யாக இப்போது வெளிவருகிறது.
இறைவனை வழிபட, அறத்தின் வழி நின்று அரசி யல் நடத்த, இதயத்தைப் பண்படுத்தும் இலக்கியம் படைக்க விடுதலை வேண்டும். விடுதலை வேட்கை கொள் ளாத மனமுடையவன் மனிதனே அல்ல. ஆன்ம ஞானி புலன்களிலிருந்தும்,பற்றுக்களிலிருந்தும் விடுதலை பெற விழைகிறன். அநீதி, அதர்மம், அக்கிரமத்திலிருந்து விடுதலைபெற நாட்டு மக்கள், உலக மக்கள் விழைகிருர் கள். விடுதலை பெற்று உரிமையுடன் வாழ எண்ணுவதே

Page 10
xii மனித இயல்பு. விடுதலை பெற்று உரிமையை நிலை நாட்
டாத எந்த நாட்டிலும் அறம் தழைத்து, அன்பு பூத்து அருள் கனியாது,
இந்நூலுக்கு முகவுரை, அணிந்துரை, நூலாசி ரியர் பற்றிய உரை ஆகியவற்றை வழங்கி ஊக்கம் தந்த உயர் திரு. செந்தமிழ்க் கலைமணி பண்டிதர் கா. பொ. இரத்தினம் அ. பே. உ. அவர்களுக்கும் கெழு தகை நண்பர் திரு. நாக. பத்மநாதன் அவர்களுக்கும் இனிய நண்பர் திரு. செ. கோடீசுவரன் அவர்களுக் கும் எனது உளங்கனிந்த நன்றி உரியது. அட்டைப்பட ஓவியத்தை எழிலுறத் தீட்டித் தந்த ஓவிய ஆசிரியர் திரு. செ. சிவப்பிரகாசம் அவர்களுக்கும் அழகுற அச்சிட்டுத் தந்த கலைவாணி அச்சகத்தார்க்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இந்நூல் வெளி வருவதற்குப் பல வகையிலும் உதவிய, "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையும்” இனிய இதயம் கொண்ட எனது மைத்துனர் திரு. க. வேலுப்பிள்ளை அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைக் கூறுகின்றேன்.
யான் முன்பு வெளியிட்ட நூல்களுக்கு ஆதரவு நல்கிய தமிழ் அன்பர்களையும் நண்பர்களையும் அபிமான வாசக நேயர்களையும், இக்கட்டுரைத் தொகுப்பிற்கும் ஆதரவு நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
வணக்கம்.
கரவைகிழார்.

பொருளடக்கம்
இறை உணர்வு
சித்தம் அழகியார்
இருளும் அருளும்
அறமும் அரசியலும் தேசாபிமானம்
அறமும் அரசியலும் தனி மொழிச் சட்டத்தின் விளைவு .
வாழ்வும் மொழியும் - As
இதயமும் இலக்கியமும்
விழுமிய உணர்ச்சி
உண்மை ஒளியும் உள்ளத் தெளிவும் . எழுத்தின் ஆற்றல்
விடுதலை வேட்கை
யூதர்களின் விடுதலைப் போர்
அன்னைத் தமிழுக்கு அரியாசனம்
தந்த அண்ணு
சிந்தை கவர்ந்த மாந்தையும் வீரச் செம்மல் உலவிய வன்னியும் .
O
6
20
25
3.
43
49
54

Page 11

சித்தம் அழகியார்
"சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்’’. “எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய், “சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே' எனப் பாடிய மாணிக்கவாசக அடிகளின் உள்ளத்தில் மலம் அறுந்து, சிவம் உறைந்தது. வாக்கில் உண்மை ஒளிர்ந் தது. தாம் பெற்ற பேரின்பத்தை மக்கள் யாவரும் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு பல பக்திப் பாடல்களைப் பாடியருளினுர்,
இயற்கை, பெண் ஆண் வடிவங்களாகப் பொலி வதை அவர் உணர்ந்தார். பெண்மையே தாயாக மலர்ந்து இறைமையாகக் கணிகிறது. “குவளைக் கண்ணி கூறன் காண்க, அவளுந்தானும் உடனே காண்க” என இறைவனைப் பாடினுர், சிவம் இன்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவம் இல்லை. "அருளது சக்தியாகும். அரன் தனக் கருளையின்றி, தெருள் சிவம் இல்லை. அந்தச் சிவம் இன்றி சக்தி இல்லை" என்று சிவஞான சித்தியாரும் செப்புகின்றது. மானிட வாழ்விலும் பெண்மைக்கு முதன்மை வழங்கப்பட்டது. இறை உணர்விலும் பெண்மைக்கு முதலிடம் நல்கப்பட்டது. இறைவனையே பார்வதி பாகன், இலட்சுமி நாராயணன் என அழைப்பது பண்டைய மரபு, வெம்மையும் தண்மையும் உடல்நலத்திற்கு இன்றியமையாதன. அவைபோல வாழ்வு நலத்திற்கு, இறையுணர்விற்கு ஆண் மையும் பெண் மையும் இன்றியமையாதன. பெண்மை என்ருல் என்ன? "கட்புலஞயதோர் அமை தித் தன்மை’ என்ருர் நச்சினுர்க்கினியார். “கண்ணுக் குப் புலனுகாத அமைதி, பெண்வடிவாகிக் கண்ணுக் குக் காட்சியளிக்கிறது” என விரித்துரைக்கிருர்
2

Page 12
*ாவைகிழார் கட்டுரைகள்
தமிழ்த் தென்றல் திரு. வி. கலியானசுந்தரஞர். 'அடக்கம் பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், இஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று தான் பெண்மை எனப்படும்" என திரு. வி. க. வரை விலக்கணம் கூறுகிருர், அத்தகைய பண்புநலம் வாய்க் கப்பெற்ற பெண்களும் உயர்ந்த உள்ளத்தைப் பெற்று இறைவனே உய்த்துணர வேண்டும் "எண்ணி மாணிக்கவாசகப் பெருந்தகை பெண்களின் நிலேக்கே தாமும் இறங்கி, அவர்கள் விளையாட்டின் போது பாடும் பாவினங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றினூடே அறநெறியையும், வாழ்க்கை முறையையும் இறை உணர்வையும் ஊட்டுகின்ருர், திருவெம்பாவை, திருப் பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவம்மானே, திருப்பூவல்லி போன்ற பாடல்கிளேப் பின்ட்ெ நாளில் !"வையர் பாடினர். திருவெம்பாவையில் ஒரு பாடல் பின்வருமாறு:
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் சித்தன் ஆனந்தன் அமுதனென்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்தா ட்கொண்டாற் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தமழகியார் பாடாரோ நம் சிவன்
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்
உடலழகு, உறுப்பழகு, உடையழகு, உறைவிடத் தழகு என்பனவெல்லாம் உயர்ந்தவையல்ல. உள்ளத் தின் அழகுதான் உயர்ந்தது; சிறந்தது. புறவழகு அழகல்ல. அக அழகே அழகு என்பதை அழுத்தந் திருத்தமாக இப்பாடலிலே எடுத் துரைக் கின் ருர் மாணிக்கவாசகப் பெருந்தகை, பெண்ணினம் வாழ வேண்டிய நெறிமுறையையும், கற்பின் திண்மையையும் பின்வரும் பாடலில் பாடுகின்ருர்,

சித்தம் அழகியார்
முன்னைப் பழம்பொருட்கு முன்னேப் பழம்பொருளே
பின்னப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்ஃனப் பிரானுக பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கனவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய் பணிசெய்வோம் இன்னவகையே எமக் கெங்கோ நல்குதியேல்
என்ன குறையுமிலோ மேலோ ரெம்பாவாய்,
உங்கையிற் பிள்ளே உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எங்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க.
"உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம். அன்னவரே எங்கணவர் ஆவார். அவரு கந்து சொன்ன பரிசே தொழும் பாய் பணி செய் வோம், எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க என்னும் அடிகளேப் பாடிப்பாடி ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருத்தன் எ ன் னு ம் கற்பு வாழ்வைப் பெண் மட்டும் கடைப்பிடித்தாற் போதாது எ ன் ப ைத யுணர்ந்த வள்ளுவப் பெருந்தகை 'ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழு கின் உண்டு' எனப்பாடி, ஒருத்தனுடன் ஒழுக்க நெறியில் வாழுகின்ற கற்புடைய பெண்ணேப்போல ஆணும் ஒழுக வேண்டும் என வலியுறுத்திஞர்.
புற உடலில் படிந்திருக்கும் அழுக்கைத் தண்ணீர் கொண்டு கழுவிவிடலாம். ஆனல் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் மலத்தைக் கழுவ எந்த மடுவில் மூழ்கி எழ வேண்டும்? எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன் றிசைந்த பொங்கு மடுவில் மூழ்கியெழ வேண்டு

Page 13
4. கசவைகிழார் கட்டுரைகள்
மெனப் பாடுகின்ருர் மாணிக்கவாசகப் பெருந்தகை. சிவமும் சக்தியும் இசைந்தது போன்ற அருள் நீர் பொங்கும் மடுவில் மூழ்கியெழுந்தால், அகமலம் அகன்று அருள் சுரக்கும். "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" என மாணிக்கவாசகப் பெருந்ததை பாடியதுபோல எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த' எ ன் ற அ டி யில் பொதிந்துள்ள தத்துவார்த்தம் அறிவியல் அடிப்படை யிலும் பொருத்தமாக அமைந்துள்ளது. இரசாயன ரீதியிலும் பார்த்தால் தண்ணீர் H20 என அழைக்கப் படுகின்றது. அதாவது ஐதரசன் என்னும் வாயுவும். பிரான வாயுவும் சேர்ந்துதான் தண்ணீராகக் காட்சி யளிக்கிறது. அவைபோலத்தான் சிவமும் சக்தியும் சேர்ந்து இசைந்த அருள்நீர் பொங்கும் மடு என மாணிக்கவாசகப் பெருந்தன்கை பின்வரும் திருவெம் பாவைப் பாடலில் பாடுகின்ருர்,
பைங்குவளக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கன் மலங்கழுவுவார் வந்து சார்தலினுல்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்ப கொங்கைகள் பொங்க குடையும் புனல்பொங்கப்
பங்கையப் பூம்புனல் பாய்ந்தாடே லோரெம்பாவாய்
வடிவழகு, கல்வியழகு, சித்தமழகு ஆகியவற்றுள்
தலே கிறந்தது சித்தமழகே.
குஞ்சியழகும் கொடுந்தானேக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாமென்னும் நடுவு நிலமையாற் கல்வி பழகே அழகு

சித்தம் அழகியார்
என நாலடியார் செப்புகின்றது. நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவுநிலைமை அழகிய சித்தத்திலேதான் மலரும். எனவே நெஞ்சத்து நல்லம்யாமென்னும் நடுவு நிலமையை எய்த விட்டால் கல்வி அழகு அழகல்ல.
மாணிக்கவாசகப் பெருந்தகையே தன்னே ஒரு சித்த மழகியாராகப் பாவித்துக் கொண்டுதான், தலைவகும் இறைவனே எண்ணியெண்ணி உருகி பின்வருமாறு பாடிஞர்
"சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானுய்
தண்ணளி மிகுந்த செம்மனச் சான்ருேரின் சித் தத்தில் ஒளிரும் அழகுதான் உலகுக்கு உய்வு தர வல் லது. உலகம் உய்ய பயன் கருதாத் தொண்டாற்றிய பண்புடைய சான்ருேர்கள் விட்டுச் சென்ற அறவுரை களிலும், மறை மொழிகளிலும் அன்ஞரது சித்தத்தின் அழகு ஒளிர்ந்துகொண்டேயிருக்கிறது. சேய்க்கு வரும் நோய்க்குத் தாய் மருந்துண்பது போல உலகத் துயிர்கள் இன்பம் அடைவதற்காக, துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட சான்றேர்கள் எல் லோரையும் சித்தமழகியார் என்றே அழைத்திடலாம்.

Page 14
fj கர வைகிழார் கட்டுரைகள்
இருளும் அருளும்
"இருளே உலகத்தியற்கை இருளகற்றும் கைவிளக்கே கற்ற அறிவுடைமை - கை விளக்கின் கெய்யே தன் நெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த பால்போல் ஒழுக்கத்தவரே பரிவில்லா மேலுலகம் எய்து பவர்.
மனிதன் நேர்வழியில் மற்றவர்க்குத் தீங்கிழை பாது வாழ்ந்திடத் தடையாக நிற்பவை மயக்கமும் தயக்கமும், மனமயக்கத்தையும் தயக்கத்தையும் நீக்கி விட்டால் மனிதமனம் அறநெறியில் இயங்கும். இருள் என்னும் மயக்கம் மண்டிக்கிடக்கும் உள்ளத்தில் அருள் ஒளி பாய்ச்சப்பட வேண்டும். நல்லொழுக்கம் என் னும் பால் அருளுடைமை என்னும் நெய்யைப் பயந்து கற்ற அறிவுடைமை என்னும் விளக்கு ஒளிர உறு துனேயாய் அமைந்து, உலகத்திருளாகிய மயக்கத்தை ஒட்டுகின்றது என மேற்கூறிய அறநெறிச்சாரப் பாடல் வலியுறுத்திக் கூறுகிறது.
அன்பு நெறியில் ஒழுகிட அறிவு துனே புரியவேண் டும். ஆணவமும் ஆசையும் உள்ளத்தில் மண்டிக்கிடக்கு மட்டும் உண்மையொளியாகிய அருள் சுடர்விட்டு ஒளிராது. சமய நூல்களிலே தத்துவங்களேக் கதாபாத் திரங்களுக் கூடாகத் தெளிவுற விளக்கும் மரபைக் காண்கிருேம். மாலும் பிரம்மாவும் ஆசையும் ஆணவ மும் கொண்டு தாம்தான் பிரான் என்று கூறினர். அன்பென்னும் சிவன் ஒளிப்பிழம்பாகி காட்சி கொடுத்த போது அவன் அடிமுடியைத் தேடிக் காணமுடியாது மாலும் பிரமாவும் அரற்றியதாகத் திருமூலர் திருமந்தி ரத்திலே பாடியுள்ளார். அப்பாடல் பின்வருமாறு:-

リ
(。
இருளும் அருளும்
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றுகின் ருரே.
-திருமந்திரம்
ஆணவம் ஆசை என்னும் இருள் அகல, அன் பென்னும் சிவனே அருள் அனற் பிழம்பாய் காட்சி தந்து நின்ருன் அனற் பிழம்பாய் காட்சிதந்த அன்றைய தினத்தையே சிவராத்திரி என மத நூலார் கூறுகின்றனர். இரவு நேரத்திலே தான் காம குரோத எண்ணங்கள் செயற்பட்டு எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கின்றன. ஆசையும் ஆணவமும் உறை பும் உள்ளம் எப்போதும் இருள் மண்டும் இரவாகவே இருக்கிறது. காமகுரோத எண்ணங்கள் இடையருது தோன்றுகின்றன. சூரிய உதயம் தோன்றியதும் இருள் அகன்று ஒளி பரவுவது போல, இறைவன் அருள் என் னும் ஆதவன் தோன்றி மன மருள் என்னும் இருளே ஒட்டும் தத்துவத்தை மிக நுண்ணியதாகச் சிவராத்திரி பற்றிய தத்துவ மூலம் உய்த்துணரக் கூடியதாய் இருக் கின்றது. உள்ளத்தை உருக்கும் திருவாசகம் தந்த மணிவாசகரும்
இன்றெனக் கருளி யிருள்கடிங் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினேப்பற நினேந்தேன்
நீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன் ருந்
திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்ல பன்றியொன் றில்லே யாருன்னே யறிய கிற் பாரே.

Page 15
S கரவைகிழார் கட்டுரைகள்
இறைவன் அருள் புரிந்து இருளைக் கடிந்து ஆதவன் போல மாணிக்கவாசகருடைய உள்ளத்திலே எழுந் தான். இறைவன் அருளாது விட்டால் மருளில் மயங்கி உழல நேரும் என்பதையும் மணிவாசகர் பின்வரும் திரு வாசகத்தில் பாடுகின்ருர்,
அருளா தொழிந்தா லடியேன் யஞ்சே
லென்பா ராரிங்குப், பொருளா வென்னைப் புகுந்தாண்ட பொன்னே
பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து
வேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேற்
செத்தே போனுற் சிரியாரோ.
அன்பையும் அருளையும் வலியுறுத்தாத மதமே உல கத்தில் இல்லை எனலாம். அருளொளி உலகெலாமீ பரவி எல்லோரும் அன்பு நெறியில் வாழ வேண்டுமென எல்லா மதங்களையும் சார்ந்த ஆன்ம ஞானிகளும் இடை யருது உபதேசம் செய்கின்றனர். புத்த பிரான், இயேசு கிறிஸ்து, முகமது நபி போன்ற சான்றேர்கள் யாவரும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அல்லும் பக லும் அனவரதமும் அன்பு நெறியில் ஒழுகிப் பாடுபட்ட னர். சமரச சன்மார்க்க நோக்கிலே உலகம் முழுவதை யும் பார்க்கும் அருள் உணர்வு தோன்ற வேண்டும். பல அறிஞர்களின் பெரு முயற்சியினுல் பற்பல நூல்கள் ஆண்டு தோறும் பல்வேறு நாடுகளிலும் பிரசுரமாகி மக்களிடையே பரப்பப்பட்ட போதும் மனிதனை மணி தன் நேசித்து விரோதம் குரோதம் இன்றி அன்புடன் வாழும் உன்னத நிலை தோன்றவில்லையே. தற்போது அறிவியல் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனிலும் பார்க்கக் கூடிய வேகத்தில் விரோதமும்

இருளும் அருளும் 9
குரோதமும் உலகத்தில் வளர்ந்து வருகின்றன. எல் லோரும் சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம், சம நீதி, அன்புடைமை பற்றிப் பேசுவதால், உண்மைக்கும் போலிக்கும் வேறுபாடு காண முடியாதிருக்கின்றது. எனவே அறிவு மட்டும் வளர்ந்து, உள்ளத்தைப் பண் படுத்தி அன்பை வளர்க்காது விட்டால், மீண்டும் உல கம் இருள் சூழ்ந்த அந்தகார நிலைக்கே தள்ளப்பட
லாம்.
பண்டை நாட்களில் பல மதங்களிடையே போரும் பூசலும் ஏற்பட்டமையால் உலகிலுள்ள பல்வேறு நாடு களிலும் அமைதி குலைந்தது. இப்போது அரசியலிலும் வீர வணக்கம், தெய்வ வணக்கம் போல பரவி வருவ தால், அரசியற் கட்சிகளிடையே தோன்றியுள்ள போரும் பூசலும் உலக அமைதிக்கு இடையருது ஊறு விளைவிக்கின்றன. இவ் அவல நிலையில் வள்ளுவப் பெருந்தகை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கூறிய தனிமனிதனுடைய மனத் தூய்மை ஏற்பட்டா லன்றி அமைதியும் இன்பமும் உலகில் தோன்ற வழி யில்லை.
'மனத்துக்கண் மாசில ஞதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற."
என்ருர் திருவள்ளுவர். உள்ளத் தூய்மை தான் அறம். தூய்மை நிலவும் உள்ளத்தில் உண்மை அரு ளொளி ஒளிர்ந்து கொண்டிருக்கும். மனத்திலே மாசில் லாத மாண்புமிகு நிலைக்கு மன்பதை உயர்ந்திடுமா?

Page 16
O கரவைகிழார் கட்டுரைகள்
தேசாபிமானம்
சிவனி எங்கும் சர்வதேசியத்தைப் பற்றிய எண் ணம் நிலவுகின்ற இக்காலத்திலே தேசாபிமானத்தைப் பற்றிய எண்ணம் அவசியமா? என்ற ஐயம் ஒரு சில ரின் உள்ளத்தில் எழவும் கூடும். ஆங்கிலப் பேரறிஞர் “பேட்றன்றசல்" போன்றவர்கள் உலகு முழுமைக்கும் ஒரே அரசாங்க அமைப்பு - ஒரே மொழி என்ற கொள் கையை வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையிலே தான் உலகின் பல்வேறு சிறிய நாடுகளும் தத்தமது உரிமையை நிலை நாட்டுவதற்காக போராடிக் கொண் டிருக்கின்றன. சில போராடி வெற்றி வாகை குடிப் பெருமிதம்கொள்ளும் நிலையிலுள்ளன. "சர்வதேசியம் என்பது தேசியத்திலிருந்துதான் முளைத்தெழுகிறது. சர்வதேசியக் கொள்கைகளைப் பரப்ப வேண்டுமென்று நினைத்தால் முதலில் நாம் நமது தேசியத்தைப் பல மான முறையில் ஸ்தாபிக்கவேண்டும், தேசியம் பல. மான முறையில் வேரூன்றுவதற்கேற்ற நிலைமை ஏற் படாவிட்டால் சர்வ தேசியமும் பிறகு நன்ருகப் பிரகா சிக்க முடியாது’ என்று டாக்டர் “சன்யாட்சன்” அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றர்.
தேசாபிமானம் என்றல் என்ன?
தேசாபிமானம் என்ற சொல்லை இரு கூருகப் பிரிக்க லாம். ஒன்று தேசம், மற்றது அபிமானம். தேசம் அல் லது நாடு, அபிமானம் அல்லது பற்று. தேசாபிமானம் அல்லது நாட்டுப்பற்று. தேசாபிமானம் சொல்லித் தெரி யக் கூடியது அல்ல, உணர்ந்து தெரியக் கூடியது. ஒரு தேசம் அல்லது நாடு ஒரு இன மக்களைக் கொண்டதாக இருக்கலாம் அல்லது பல்வேறு இன மக்களைக் கொண்ட தாக இருக்கலாம். ஒரு மொழி பேசும் மக்கள் அங்கே வாழலாம். அல்லது பல்வேறு மொழி பேசும் மக்களும் அங்கே வாழலாம். ஒரே கலை கலாச்சாரம் உடைய மக்

தேசாபிமானம் li
களும் வாழலாம். அல்லது மாறுபட்ட கலை கலாச்சாரம் உடைய மக்களும் வாழலாம். ஆனல் அத்தனை மக்களும் பிறந்த பொன்னுட்டின் மீது நீங்காத பற்றுக் கொண்டு அவசிய அவசரம் நேரிடும்போது உணர்ச்சியால் உந்தப்பட்டு கிளர்ந்தெழுந்து நாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் ஈந்திடத் துணிவார்களாயின் அவர் களே தேசாபிமானம் கொண்டவர்கள்.
நாட்டுப்பற்று எரிமலை போன்றது. பூமியினடியிற் கனன்றுகொண்டிருக்கும் அனற்பிழம்பு எரிமலை வாயி லாக எழுந்து பீறிட்டுக் கிளம்புவதுபோல சில சில சந் தர்ப்பங்களிலே நாட்டுப்பற்று அல்லது தேசாபிமான மும் அத்தகைய உத்வேகத்தைக் கொள்கிறது.
அத்தகைய சந்தர்ப்பங்கள் யாது? தனது நாட்டின் மீது பிறிதொரு நாடு படையெடுக்கும் போது, தனது நாட்டின் பொருளாதாரத்தை வேறு நாடு சுரண்டிடும் போது, நாட்டின் விழி போன்ற மொழியை பிறர் அழித்து ஒழித்திட முயன்றிடும்போது நாட்டுப்பற் றெனும் இத்தீவிர உணர்ச்சி புயலெனக் கிளம்பும் தீயெனப் பரவும். தான் பற்றிய உள்ளங்கள் அத்தனை யையும் பற்றியெரியச் செய்யும், செயலில் இறங்கத் தூண்டும்.
உணர்வு உள்ள ஒவ்வொரு மானிடருக்கும் பற்று இருக்கத்தான் செய்யும். தாய் மேற் பற்றுக் கொள்ளாத மனிதனே இல்லை எனலாம். அத்தகைய தாயைவிட நாட்டின்மேல் இடையருப் பற்றுக்கொள்ளச் செய்வது நாட்டுப் பற்றெனும் உணர்ச்சியே. ‘பயிலுறும் அண் ணன் தம்பி, அக்கம் பக்கத்துறவின் முறையார், தயை மிக உடையாள் அன்னை, என்னை சந்ததம் மறவாத் தந்தை, குயில் போற் பேசிடும் மனையாள், அன்பைக்' கொட்டி வளர்க்கும் பிள்ளை அயலவராகும் வண்ணம்’ நாட்டுப்பற்று தனது இதயத்துள் உறைவதாக உணர்கி ரூன் நாட்டுப்பற்றுடையோன். நாட்டுப்பற்றுக் கொண்

Page 17
12 கசவைகிழார் கட்டுரைகள்
டவன் நாடு முழுமையும் ஒரே குடும்பமாகக் காண்கி ருன். அந்நாட்டில் வதியும் மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாயினும், எந்த மொழியைச் சார்ந்தவர்க ளாயினும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் எனக் கருது கிறன். அவனது இலட்சியம் புத்தபெருமானின் தத்து வத்துள் அடங்கியிருக்கிறது.
ஒரு கால் புத்தர் பிரானை அவரது சீடர்களில் ஒரு வன் அணுகித் தனது உள்ளத்தில் எழுந்த ஐய விஞ) ஒன்றைக் கேட்டான். ‘சுவாமி! ஒரு துளி தண்ணிர் உல கில் நிலைத்து நிற்க முடியுமா?’ என்று. அதற்குப் புத்தர் “ஆம் முடியும்!” எப்படியெனில் ஒரு துளி நீரானது கடலினுள் கலந்துவிடுமானல் அதற்கு என்றும் நித்திய வாழ்வுண்டு என்ருர், நாட்டுப்பற்றுள்ளவனும் இதே தத் துவத்தைத்தான் தனது குறிக்கோளாகக் கொண்டிருக் கிருன். தனி ஒரு மனிதன் வாழவே முடியாது. நாடென் ஆறும் கடலில் அவனுெரு துளி. கடலின்றேல் துளியில்லை. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டால், புயல் அடித்தால் அவை துளியையும் பாதிக்கத்தான் செய்யும்.
பிறந்த மண்ணின் உயர்வு
பிறந்த மண் எவ்வளவு உயர்ந்தது சிறந்தது என் பதை எடுத்துத் தெளிவுற விளக்குவதற்கு ஒரு சீன நாட்டு வரலாற்றுக் கதையை எடுத்துக்காட்டாகக் காட் டலாம். இற்றைக்குச் சில நூற்ருண்டுகளுக்கு முன்பு சீன நாட்டைச் சக்கரவர்த்தி ஒருவன் ஆண்டுகொண்டிருந் தான். அந்தக் காலத்தில் அந்நாட்டில் வாழ்ந்த பிரபல அறிஞனுன "குவாங் சுவாங்’ என்பவன் சக்கர வர்த்தியை அணுகித் தான் பல நாடுகளையும் சுற்றிப் பார்க்க ஆவல்கொண்டிருப்பதாகவும், அதற்கு ஆசியும் அனுமதியும் தரும்படியாகவும் வினயமாக வேண்டினன். சக்கரவர்த்தி உடனே எதுவும் பேசாது சேவகனை அழைத்து ஒரு கிண்ணத்தில் தண்ணிர் கொண்டுவரும் படி கட்டளையிட்டான். அங்ங்னமே கிண்ணத்தில் தண்ா

தேசாபிமானம் 3.
ணிர் கொண்டுவரப்பட்டது. அத்தண்ணீருக்குள்ளே ஒரு பிடி மண்ணைக் கையாலெடுத்துப் போட்டுக் கலக்கி, கலக்கிய அந்நீரைக் குடிக்கும்படி அறிஞனை வேண்டி ஞன். சபையிலிருந்த அத்தனை பேரும் பிரமித்துப் போளுர்கள். ஒரு சிலர் நினைத்தார்கள் இது என்ன பைத்தியக்காரத்தனம். உலகம் சுற்றிப் பார்க்கப் போகி றேன் என்று வந்த அறிஞரிடம் ஒரு பிடி மண்ணைத் தண்ணிரில் கலக்கிக் கொடுக்கிருரே இந்தச் சக்கர வர்த்தி. இதன் அர்த்தம் தான் என்ன? அறிஞருக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒவ்வோர் முகங் களிலும் சிந்தனை ரேகைகள் தோன்றின. சக்கர வர்த்தியே கடைசியில் தன் செயலுக்குரிய அர்த்தத்தை விளக்கினர். "அறிஞரே, உலகம் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னிர்கள். நீங்கள் சுற்றிப் பார்க்கப் போகும் நாடுகளில் மனதைக் கவரும் மலை களும், சோலைகளும், மங்கையர்களும் அவர்கள் வாழும் மாடமாளிகைகளும் இன்னும் எத்தனையோ உள்ளத் தைக் கவரக்கூடிய புதுமைகளையும் காணலாம். அவற் றைப் பார்த்து நீங்கள் சொக்கலாம். அதனுல் நீங்கள் பிறந்த நாட்டை மறந்திடவும் நேரலாம். நீங்கள் பிறந்த மண்தான் உங்களுக்கு உயர்ந்தது, சிறந்தது. தன்னைப் பெற்றவள் தாய். அவள் எவ்வளவுதான் நலிந்து வாடி யிருப்பினும் அவர் தாம் நமது நற்ருய் என்ற உயர்ந்த எண்ணத்தோடு தாங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டுமென ஆசி கூறி வழியனுப்பி வைத்தார் சக்கர வர்த்தி.
அன்னியரின் ஆட்சியினுல் அடிமைத்தளையில் சிக் குண்டு பஞ்சைகளாய், பராரிகளாய் “தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற தாமோர் பாரததேசம் தன்னில்” அறியாமை இருளை ஒட்டி அடிமைத்தளையை அகற்ற உதவியது நாட்டுப் பற்றெனும் சீரிய உணர்ச்சிதான். அத்தகைய உணர்ச்சி

Page 18
4 கரவைகிழார் கட்டுரைகள்
யினுல் உந்தப்பட்ட உத்தமர்கள் பலர். அவர்களுள் தலைசிறந்து விளங்குபவர் மகாத்மா காந்தி அவர்களே. மகாத்மாகாந்தி
அன்னியர் ஆதிக்கத்தினுல் தான் பிறந்த பொன் குடு சீரழிகிறதே என்ற இடையரு எண்ணம் அவரது உள்ளத்தைக் குடைந்து கொண்டேயிருந்தது. அரசிய அலுணர்வு சமுதாயத்திற்கு எத்தகைய அவசியமானது என்பதை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக தனது சொற்பொழிவுகளிலும் தான் எழுதிய கட்டுரைகளிலும் விளக்கிக் காட்டினர். அவர் தமது பிரார்த்தனைக் கூட் டங்களிலே ஆங்கிலக் கவிஞர் "ஷெல்லி அவர்கள் பாடிய புரட்சிக் கவிகளை அடிக்கடி பாடிக் காட்டி மக்களை உணர்ச்சி கொள்ளச் செய்தார். அவரது சீரிய தொண்டுக்கு உறுதுணையாய் இருந்தவர் பலர். அவர் களில் தமிழ் நாட்டின் தவப்பயணுய் வந்துதித்த மகா கவி சுப்பிரமணிய பாரதியார் ஒருவர். சிந்தை, அணு ஒவ்வொன்றும் நாட்டின் விடுதலைக்காகவே அர்ப்பணம் என்று சொல்லிச் செயலாற்றிய கர்மவீரர். அவர் ஒரு விடுதலை உணர்வின் பிழம்பு.
பொதுவாக இந்திய விடுதலை வரலாற்றில் சிறப்பாக தமிழக வரலாற்றில் அவர் ஒரு திருப்பு முனையாக அமைந்தார். விடிவெள்ளியாகத் தோன்றி பலருக்கு வழி காட்டினுர், பண்டிதர்களின் சொத்தாகிய பாட்டை விடு தலைப் படைக்கலக்கருவியாக்கித் தந்து மக்களை வீறு கொண்டெழச் செய்த பெருமை அவரையேதான் சாரும்.
"பெற்றதாயும் பிறந்த பொன்னுடும்
நற்றவவாணினும் நனி சிறந்தனவே" “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே" எனப் பல கவிதைகளைப் பொழிந்தார். அவரது தொண்டு அடிமைத்தளையை அகற்றுவதற்குப் பெருந் துணை புரிந்தது.

தேசாபிமானம் 15
நாட்டுப்பற்றல் இழந்த நாட்டைப் பெற்றவர் யூதர்
மனிதாபிமானமும் ஜனநாயகமும் உலகிலே தழைத் தோங்குவதற்கு பாடுபட்ட செம்மல்கள் பலப்பலர். ஆதிக்கவெறி பிடித்தவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகள் பலப்பல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமது இனத்தின் மாண்பை மறந்து தாம் பிறந்த நாட்டைத் துறந்து உலகின் பல்வேறு பகுதிகளி ஆலும் வாழ்ந்து வந்தவர்கள் யூத குலத்தவர்கள். கிட்ல ரின் விஷவாயு அறைகளிலே 60 லட்சம் யூதர்கள் மடிந் தனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் விரட்டி அடிக்கப் பட்டனர். அவர்களது நாட்டுப்பற்று மட்டும் மங்கி மங்கி ஒளிர்ந்து கொண்டிருந்ததேயன்றி மடிந்துவிட வில்லை. அவர்களது இடையரு உழைப்பினுலும், அளப் பரிய தியாகத்தினுலும் இழந்த நாட்டைப் பெற்றனர். இன்று உரிமை வாழ்வு வாழ்கின்றனர். சைப்பிரஸ்தீவு சதிகாரர்களின் கையிலே சிக்கித் தத்தளித்த நேரத்திலே மதத்தைப் போதிக்கப் புறப்பட்ட பாதிரியார் "மக்காரி யோஸ்’ நாட்டுப் பற்றினுல் உந்தப்பட்டு விடுதலைப் போரிலே ஈடுபட்டார். இன்னல் பல ஏற்ருர். இறுதியில் வெற்றியும் கண்டார். இத்தாலிய நாட்டின் உதய சூரிய ஞக விளங்கிய மாஜினி அந்நாட்டு விடுதலைக்காக இளை ஞர் படையைத் திரட்டி வெற்றி கண்டான்.

Page 19
6 கரவைகிழார் கட்டுரைகள்
அறமும் அரசியலும் அறம்வேறு அரசியல் வேறு எனக் கருதுவோர்க்கு
அறமும் புரியாது அரசியலும் புரியாது என ரூசோ என்னும் பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞர் கூறினுர்,
இன்று ஈழத்தில் தமிழர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அரசியற்தலைவர்கள் அறத்தின் அடிப்படையில் அமைந்த அரசியலில் அக்கறை செலுத்துவதாக யாருமே கூறமுடியாது. ஆங்கிலப் புலமையும் சட்டத் தைப்பயின்று தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் பெற்றவர் களே ஈழத்தில் தமிழ் அரசியல் தலைவர்களாக விளங் குவதால் கட்டாயமாகப் புகுத்தப்பட்ட சிங்கள மொழியை படிப்பதில் எவ்வளவு இடர்களை, இன்னல் களை எதிர்நோக்க வேண்டியிருக்கிற தென்பதையும் அம்மொழியைப் படிப்பதனுல் விளையக் கூடிய பயன் என்ன என்பதையும் அவர்கள் ஆழ்ந்து ஆராய்ந்து உற்று உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ங்கிலமொழி மூலமாகவே எல்லாப் பாடங்களை யும் படித்தபோது இருந்த நிலையைச் சிறிது ஆராய் வோம்: தமிழில் மூன்ருந்தரம் படித்த மாணவன் ஆங் கிலக் கல்லூரியில் முதல் ஆண்டில் சேர்க்கப்பட்டான். கல்லூரியில் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆங்கிலத் தில் படித்து லண்டன் மற்றிக்குலேசன் அல்லது கேம் பிரிட்ஜ் சீனியர் அல்லது சீனியர் ஸ்கூல் சேர்ட்டிபிக் கட்போன்றபரீட்சைகளில் அவன் சித்தியடைய வேண்டி யிருந்தது. ஆங்கிலக்கல்வி கற்ற தமிழ் மாணவர்களிலே எத்தனைபேர் கிரகிக்கும் ஆற்றலையும் மனதில் பதிய வைக்கும் ஆற்றலையும் எடுத்துரைக்கும் ஆற்றலையும் பூரணமாய்ப் பெற்றிருந்தார்கள் என்பதைச் சிந்தித் துப் பார்க்கவேண்டும். கணிதம், இரசாயனம், பெளதி

அறமும் அரசியலும் 7
கம் போன்ற அறிவியல் பாடங்களில் கூடிய புள்ளிபெற்ற மாணவர்கள் ஆங்கில மொழியில் தேவையான புள்ளி களைப் பெறமுடியாது போனமையினுல் இறுதிப்பரீட் சையில் சித்தியடைய முடியாது திணறித் தவித்தார்கள் தாய்மொழிமூலம் அவர்களுக்கு கல்வி புகட்டப்பட்டி ருந்தால் ஒரு சிலர் அறிவியல் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டங்களையே பெற்றிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் கல்வியின் உச்சநிலைக்குச் செல்வதற்குத் தடையாக நின்றது எது? ஆங்கில மொழி தான். தென்இந்தியாவில் கணிதமேதை இராமானு 蠶 ஆங்கிலத்தில் எடுத்துர்ைக்கும் ஆற்றல் இல்லா ருந்தன்மயினுல்தான் தமது ஆராய்ச்சிகளை வெளி யிடமுடியாது இடர்ப்பட்டார்.
இரஷ்யாவிலும் ஜப்பானிலும் பிரான்சிலும் ஜேர்மனியிலும் சீனுவிலும் ஆங்கில மொழியிலா அறிவியலைப் போதித்தார்கள், போதிக்கிருர்கள். தாய் மொழிதான்.அங்கே பிரயோகப்படுத்தப்பட்டது; பிர யோகப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை மறந்து விடக்கூடாது. இன்று ஈழநாட்டில் அரசாங்க சேவையி லும், கல்விச்சேவையிலும் ஆங்கிலமொழிமூலம்சேர்ந்து தொழில் புரியும் எத்தனைபேர்க்கு எடுத்துரைக்கும் ஆற்றல் உண்டு. நூறுபேரைக் கொண்ட ஒரு திணைக் களத்தில் ஒருவர் இருவர்தான் மாற்ற விண்ணப்பப் பத்திரங்களையோ அன்றி வேறு மகஜர்களையோ மற்ற வர்களுக்காகத் தயாரித்துக் கொடுத்திருக்கிருர்கள். இன்றும் அதே நிலைதான். ஒரு மொழியைத் தெரிந்தி ருப்பது வேறு-. அதே மொழியில் பேச வாசிக்க, எழுத எண்ணியதை எடுத்துரைக்க ஆற்றல் பெறுவது வேறு. இதே நாட்டில் பிறந்த சிங்களமாணவன் சிங்களத்தில் கல்விபயின்று கல்வி ஏணியின் உச்ச நிலைக்குச் செல்ல, உத்தியோகம் பார்த்து உயர்ந்த நிலையடைய, கல்விச் சேவையில் ஈடுபட்டுக் கல்விமானு

Page 20
IS கரவைகிழார் கட்டுரைகள்
கத்திகழ அவனுக்குச் சகல வசதிகளுண்டு. வாய்ப்பு
முண்டு. இடர் இல்லே_தடையில்லே. சிங்கள மொழியு
டன்_உலகமொழியாகிய ஆங்கிலத்தையும் கற்றிட்
ஆதியுண்டு. ஆணுல் தமிழ் கற்கவேண்டிய அவசியமே
Gla.
தமிழ் மாணவன் நிலை என்ன? தமிழில் கல்வி பயின்று, ஆங்கிலத்தையும் கற்று சிரேஷ்ட தராதரத் தையும் பெற்ற பின்பு வேறு துறையில் ஈடுபட்டு உயர்ந்த நிலேயடைய சிங்களம் பயிலவேண்டுமாம். பயில்வது மட்டுமல்ல. குறித்த கால எல்லேக்குள் பயின்று தேர்ச்சிபெற்று திறம்பட பணியாற்ற வேண்டு மாம். குறித்தகால எல்லேக்குள் தேர்ச்சி பெருவிட்டால் வேலேவாய்ப்பை இழக்கும் தண்டனேக்காளாக வேண்டு மாம், சிங்கள மாணவன் தமிழ் பயில வேண்டும் என்ற கட்டாயமுண்டா? பயின்று தேர்ச்சி பெறத் தவறினுல் வேலே வாய்ப்பை இழக்கும் தண்டனேயுண்டா? இது இனத்துவேசமல்லவா? இது பற்றித் தமிழ் மக்கள் சிந் திக்கவேண்டும்.
சிங்களத்தைப் பயின்று தேர்ச்சி பெற்ருலும், எத் தனே வீதம் தமிழ்பேசும் மாணவர்களுக்கு வேலே வாய்ப்பு கொடுக்கப்படும்? பதவி உயர்வு கொடுக்கப் படும்? 1963-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிங்கள மொழிக் கெடுபிடியினுல் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு ஓய்வில் (பென்சனில்) செல்வதற்கு மறை முகமாக நிர்ப்பந்திக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்களின் இன்றைய அவலநிலேயையும் எண்ணவேண்டும். உயர்ந்த பதவிகளில் இருந்து கொண்டு சகல வசதிகளுடனும் வாழவேண்டியவர்கள் தற்போது சொற்ப பென்சனுடன் வாழ்க்கையை நடாத்த மிகவும் இடர்ப்படுகிருர்கள். தமிழராய்ப் பிறந் ததுதான் அவர்கள் செய்த குற்றமா? 1980-ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை செய்யப்பட்ட உத்தியோக நியமனங்களேயும், பதவி உயர்வுகளேயும் பத்திரிகை

அறமும் அரசியலும்
களிலும் அரசாங்க வர்த்தமானியிலும் வெளியாகும் புள்ளி விபரங்களின்படி நோக்கினுல் தமிழ்பேசும் மக் களுக்குரிய விகிதாசாரம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் எந்தத் துறையிலுமே தமிழர்களேச் சேர்க்காத நிலை ஏற்பட்டுவிடும். எனவே வலிந்து நாம் சிங்களத்தைப் பயின்ருலும் பயன் விளேயாது, என்பது தெட்டத் தெளிவாகப் புரிகிறது.
இவ்வவலநிலேயில் அல்லற்படும் தமிழ் பேசும் மாணவர்களேயும் அரசாங்க ஊழியர்களேயும் பார்த்து சிங்களம் படியுங்கள் என்று கூறும் அரசியல் தலேவர் கள், தமிழினத்துக்கு நேரிய சீரிய வழியைக்காட்டக் கூடிய தகைமை பெற்றவர்களா என்பதைச் சிந் தித்துச் செயலாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது தமிழினம். "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ருகும்' என்ற இளங்கோவடிகளின் அறவுரையை அரசியல் தலேவர்கள் நினேவுகூர வேண்டும்.

Page 21
{) கரன் வகிழார் கட்டுரைகள்
தனிமொ ழிச் சட்டத்தின் விளைவு
திமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதமிழ்த் தலைவர் களில் பெரும்பான்மையோரை 1956ம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துவிட்டு தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாது பொலிஸ் ராணுவ பந்தோபஸ்துடன் பாராளுமன்றத்தில் சிங்களம் மட் டும் சட்டம் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை தமிழ் பேசும் மக்கள் மறந்து விட முடியாது. இச்சட்டத்தின் விஜளவாக :
வும் நேரடியாகவும் பாதிக்கப்பட்டவர் அரசாங்க ஊழி பர்களே. அரசாங்க ஊழியர்களின் சம்மதமும் விருப்பமு மின்றி அவர்கள் பழைய ஊழியரென்றும் புதிய ஊழிய ரென்றும் இரு பிரிவினராக வகுக்கப்பட்டனர். 1956ம்
ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு அரசாங்க சேவையில் சேர்ந்தவர்களேப் பழைய ஊழியரென்றும், அதற்குப் பின்பு அரசாங்க சேவையில் சேர்ந்தவர்களேப் புதிய ஊழியரென்றும் வகுக்கப்பட்டுள்ளது. இப்பாகு பாட்டினேக் கொணர்ந்தது"சிங்களம் மட்டும்" சட்டமே என்பதை தமிழ் பேசும் மக்கள் நினைவில் நிறுத்த வேண்டும்,
தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களின் நலன் பாதிக் கப்பட்டபோது தேசிய தொழிற்சங்கங்கள் எனப் பறை சாற்றித் திரிந்த எந்தத் தொழிற்சங்கமும் துடித் தெழுந்து துயர்துடைக்க முனேயவில்லே, தேசிய தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்த தமிழ் பேசும் அர சாங்க ஊழியர் பிரிந்து மொழிவழித் தொழிற்சங்கங் களே அமைத்தனர். தமிழ்த் தலைவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி, இ ன த் தை க் காட்டிக்கொடுப்பது துரோகம் என்பதை உணர்ந்து, சிங்களம் படிப்பதில்லே
 
 
 

தனிமொழிச் சட்டத்தின் விளைவு 2.
என்ற உறுதிபூண்டு இடையருது மொழிவழித் தொழிற் சங்கங்கள் செயலாற்றின. சிங்களம் படியாத தமிழ் அர சாங்க ஊழியர்களே 1984ல் கட்டாய ஓய்வில் அனுப்பியது அன்றைய அரசாங்கம் உருட்டல் மிரட்டல்களேக் கண்டு உறுதிகுலேயாது கொள்கையைக் கடைப்பிடித்து நின் றனர் சிலர். மிரட்டலேக் கண்டு பயந்த பலர் சிங்களம் கற்கத் தொடங்கினர். ஆணுல் மிரட்டலுக்குப் பயந்து விடாது கட்டாய ஓய்வில் சென்ற ஒருசிலர் மீண்டும் கட்டாய சேவைக்கு அழைக்கப்பட்டனர். எதுவித நிபந் தனேயுமின்றி, கட்டாய ஓய்வில் நின்ற காலத்திற்குரிய சம்பளமும் இரண்டரை ஆண்டுக்காலத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. கட்டாய ஓய்வில் சென்றவர்களேப் போல எல்லா அரசாங்க ஊழியர்களும் உறுதிகுலேயாது, சிங்களம் படிப்பதில்லே என்ற கொள்கையைக் கடைப் பிடித்திருந்தால் இ ன் றை ய அவல நிலேக்காளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. சிங்களம் படிக்க வேண்டாம் என்று முன்பு உபதேசம் செய்த தஃலவர்கள் இன்று தமிழ் அரசாங்க ஊழியர்களே காட் டிக்கொடுத்துவிட்டார்கள். தலேவர்கள் கொண்ட கொள் கையைக் கைவிட்டபோதும் ஒருசில தமிழ் அரசாங்க ஊழியர்கள் சிங்களம் படிக்காதுதான் சேவை செய் கிருர்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். தமிழ்த் தலேவர்களுக்கு இல்லாத துணிவும், தெளிவும் தியாகமும் ஒருசில தமிழ் அரசாங்க ஊழியர்களிடையே உண்டு.
இச்சட்டத்தினுல் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு வரான திரு. செ. கோடீஸ்வரன் அவர்கள் அரசாங்க எழுதுவினைஞர் சங்க உதவியுடன் மாவட்ட நீதிமன்றத் தில் நீதிகோரி ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு 1964ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங் கப்பட்டது. அந்த வழக்கின் முக்கிய தீர்ப்புகளில் ஒன்று சிங்களம் மட்டும் சட்டம் நாட்டில் நிலவும் சட்

Page 22
22 கரவைகிழார் கட்டுரைகள்
டத்திற்கு மு ர னு ன து என்பது. மற்றது இச் சட்டத்தின் விளைவாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த திரு. செ. கோடீஸ்வரனின் சம்பள உயர்வுகளேக் கொடுக்க வேண்டும் என்பது. இந்நாட்டில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக அப்போது ஆட்சி பீடத்திலி ருந்த அரசாங்கம் உயர்நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்தது. உயர்நீதி மன்றத்தீர்ப்பில் மாவட்ட நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியல்லவென கூறப்பட்டது. அத னேத் தொடர்ந்து லண்டனில் உள்ள பிரிவுக் கவுன் சலுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக அப் பீல் செய்து அறத்தின் அடிப்படையில் நீதியைப்பெற ஆவனசெய்து கொண்டிருக்கிறது அரசாங்க எழுது வினேஞர் சங்கம். இது இவ்வாறு இருக்க நீதி நியாயத் திற்கு புறம்பாக தனது பெரும் பான்மை பலத்தைக் கொண்டு சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை உதாசீனம் செய்து 1956 ஆண்டு தொடக்கம் ஆட்சிபீடத்தில் அமர்ந்த அத்தனை அரசாங்கங்களும் பிரச்சினேக்குரியசிங்களம்மட்டும் சட்டத்தைஅமுலாக்கி நாளாந்தம் தமிழ் பேசும் மக்களேயும், தமிழ் அரசாங்க ஊழியர்களையும் கஷ்ட நஷ்டத்திற்கு ஆளாக்கி வரு கின்றது. பெரும் பான்மையோர் தமது மொழியின் பெயரால் தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களுக்கு துரோகம் செய்து கஷ்ட நஷ்டத்துக்குள்ளாக்கி உள்ளனர். இந்த ஏழாயிரம் அரசாங்க ஊழியர்களே நம்பியிருக்கும் குடும்பங்கள் நட்டாற்றில் விடப்படுமே என்பதை இந்நாட்டையாளும் அரசாங்கம் உணர மறுக்கிறது.
ஒரு மொழியைப் படிப்பது வேறு, ஒரு மொழியில் இன்னுெரு பாடத்தைப் படிப்பது வேறு. எடுத்துக் காட்டாக தமிழ் மொழி படித்த ஒருவருக்கு ஆங்கிலத் தில் தேர்ச்சிபெறுவது கடினம். ஆணுல் தமிழில் இலக் கியம் படித்த ஒருவன் தமிழிலேயே தர்க்க சாஸ்திரத்

தனிமொழிச் சட்டத்தின் வி3ளவு ፰፻፵
தையும் படிக்கலாம். அவன் தர்க்க சாஸ்திரத்தை ஆங் கிலத்தில் படிக்க முடியாது. ஆங்கிலம் இந்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்க மொழியாக விளங்கியும் நாட்டின் பலபாகங்களிலே ஆங்கிலேயர் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டியும் இடையருது முயன்ற போதும் ஏறத்தாழ நாட்டில் உள்ளவர்களில் 8 வீதம் பேர் மட்டுமே ஆங்கிலத்தில் ஓரளவுக்கு தேர்ச்சிபெற முடிந்தது என்பதை எல்லோரும் உணர வேண்டும். 150 ஆண்டு காலமாக ஆண்ட ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஆறு வீதம் மட்டுமே தேர்ச்சிபெற முடிந்ததானுல் குறுகிய மூன்று வருட எல்லேக்குள் எத்தனே வீதம் படித்து சிங்களத்தில் தேர்ச்சிபெற முடியும், உலகப் பேரறிஞர்களாகிய ரசி, ஜி. வெல்ஸ், ஜோர்ஜ் பெர் குட்ஷா போன்றவர்களே தம் தாய் மொழியாகிய ஆங் கிலத்தை விட வேறு மொழியில் பான் டித்தியம் அட்ைப முடியாமல் போய்விட்டது என்று ஒப்புக்கொண்டுள் ளனர். மாமேதைகளின் நிலேயே அதுவானுல் சாதாரண மக்களின் நிலே எதுவாயிருக்கும். விதிவிலக்காக பல மொழிகளைப் பயின்று அத்தனை மொழிகளிலும் பான் டித்தியம் பெற்ற பன்மொழிப் புலவர்கள் இருந்திருக் கிருர்கள். இன்னும் இருக்கின்ருர்கள். சுவாமி ஞானப் ür高r乎齿, தனிநாயக அடிகளார், சுத்தானந்த பாரதி பார் போன்றவர்க3ளக் குறிப்பிடலாம். இன்று ஆங்கி உத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்கும் ஒரு சிலரும் கூட தமது தாய்மொழியாகிய தமிழைத் தியா கம் செய்துதான் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்ருர் கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களின் நலதனப் பேணிப்பாதுகாக்க வேண்டிய தமிழ்த் த2லவர்கள் திமது கடமை ஒபூபக் செவ்வனே செய்யத் தவறிவிட்டனர். சிங்களம் படிப் பதற்கு இன்னும் இரண்டு வருடகால அவகாசம் தாருங் கள் என்று அரசாங்கத்தைக் கேட்பது தாக்கில் தூக்கு

Page 23
கரவைகிழார் கட்டுரைகள்
வதற்குத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவனுக்கு இரண்டு வருடகால அவகாசம் தாருங்கள் என்று கேட்பதற்கு ஒப்பானது. தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களின் இன்றைய நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இப் பிரச்சினைக்கு முடிவுகாண முயல வேண்டும். பழைய ஊழியர், புதிய ஊழியர் என்ற பாகுபாடு எதஞல் ஏற் பட்டது? சிங்களம் மட்டும் சட்டம் இல்லாதிருந்தால் அந்தப் பாகுபாடு ஏற்பட்டிருக்காது. அந்தச் சட்டத் திற்கு எதிரான வழக்கு பிரிவுக் கவுன்சில் அப்பீலிங் இருக்கும்போது, அச்சட்டத்தின் விளைவான பழைய புதிய ஊழியர் என்ற பாகுபாட்டினை வலியுறுத்தி புதிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை இழ க் கு ம் தண் டனேயை விதிப்பது நியாயமானதா? நீதியானதா? ஏழாயிரம் ஊழியர்கள்தானே என்று தட்டிக்கழித்து விடமுடியாது. இந்த ஏழாயிரம் பேரையும் நம்பி வாழும் ஏறத்தாழ 35,000 பேர்களும் அவல் நிலேக்குள்ளாக்கப் பட்டுள்ளனர். வருங்காலத்திலும் அரசாங்க சேவையில் தமிழினத்துக்கு இடமில்லை என் ப? த் தெளிவாக உணரக்கூடியதாக நி3லயில் பழைய புதிய ஊழியர் என்ற பாகுபாடின்றி தமிழ் பேசும் அரசாங்க ஊழியர் அனைவருக்கும் சிங் தளங் மட்டும் சட்டத்தில் இருந்து விதிவிலக்குப் பெறு வதற்கு தமிழ்த் தலைவர்கள் முயல வேண்டும். இப்பிரச் சி2 தமிழ்த் தலைவர்களுக்கும், தமிழ் ஊழியர்களுக் கும் மட்டுமே என்று எண்ணிவிடக்கூடாது. தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துச் செய லாற்ற வேண்டும். அநீதியைத் தொடர்ந்து செய்வத ஞல் அது நீதியாகி விடமுடியாது. அறத்திற்குப் புறம் ப்ாக அநீதியான முறையில் அமுலாக்கப்பட்ட சிங் தளம் மட்டு
ாங்க ஊழியர்களின் வாழ்வையும்: அவர்களே நம்பி யிருக்கும் 35,000 பேர்களின் வாழ்வையும் பலிகொண்டுள் ளது. இதனைப்பார்த்துக் ஒகாண்டு வாளாவிருப்பதா? தமிழ் பேசும் பெருமக்களே சிந்தியுங்கள் சிந்தித் துச் செயலாற்றுங்கள்.
விருக்கின்றது. தற்போதைய சூழ்
நீ சட்டம் ஏழாயிரம் தமிழ் பேசும் அர

வாழ்வும் மொழியும் 盟岳
வாழ்வும் மொழியும் செலவு தந்தைக்கோ ராயிரம் சென்றது
திதெ னக்குப்பல் லாயிரம் சேர்ந்தன நலமோ ரெட்டுனையும் கண்டிலே விதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன் சிலமுன் செய்நல் வினேப்பய னுலும்நந்
தேவி பாரதத் தன்னே யருளினும் அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்திடா தொருவாறு பிழைத்ததே.
-ID + st. Ef LIF J5
மக்கள் கவிஞராய்த் திகழ்ந்த மகாகவி பாரதி தமது பால்யப் பருவத்தில் ஆங்கிலம் பயின்ற அவல நிலையை தமது சுயசரிதையில் கூறியுள்ளார். அவர் பாடிய பாடல்களில் ஒன்றுதான் மேலே தரப்பட்டுள்ள பாடல். ஆங்கிலம் பயின்றதால் நலம் ஒர் எள் துணை யும் கண்டிலேன். இதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன் என வெளிப்படையாகவே எடுத்துரைக் கின்ருர் பாரதி. ஆங்கிலக் கல்விப் பயிற்சியினுல் பாரதியின் தந்தை பாரதியின் ஆங்கிலக் கல்விக்கு ஓராயிரம் செலவு செய்ய நேர்ந்தது. பாரதிக்கோ ஆங்கிலப் பயிற்சியினுல் தீது பல்லாயிரம் சேர்ந்தன வாம். வடமொழி, இந்துஸ்தானி, பிரான்சு, ஆங்கிலம் முதலிய பலமொழிகளையும் கற்றுத்தேர்ந்த அறிஞ ரான பாரதி கூறுவதில் அர்த்தம் இல்லாதிருக்காது. பாரதி வாழ்ந்த காலத்தில் ஆங்கிலமொழி அரசோச் சியமையால் ஆங்கிலம் பயின்று சிறந்த LILLÄ55&IT "r பெற்று, உயர்ந்த பதவிகளில் வீற்றிருந்து பொருளிட் டுவதே பலரது குறிக்கோளாக இருந்தது. உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்ட பாரதியின் குறிக்கோள் இதற்கு நேர்மாருனது. அன்னியர் ஆதிக்கத்திற்கு

Page 24
26 கரவைகிழார் கட்டுரைகள்
ஆட்பட்டு அடிமைப் படுகுழியில் வீழ்ந்து, தனது நாடு தனது மொழி, தனது இனம் என்பவற்றை மறந்து போலி வாழ்வில் மயங்கிய கயவர்களைக் கண்டு நாளும் நொந்து நைந்தார் பாரதி. இழந்த உரிமையை மீண் டும் பெறுவது எப்படி? இன்பத் தாயகத்தை, இன் தமிழ்த் தாயை மீட்பது எங்ங்னம்? என்று நீண்ட காலம் இடையருது சிந்தித்தார். தாய்மொழிக் கூடாக கல்வி புகட்டப்பட்டாலன்றி நாட்டு மக்கள், நாட்டுப் பற்று, மொழிப்பற்று, இனப்பற்றுக் கொள்ளமாட்டார் கள் என்பதை உணர்ந்தார். எனவேதான் தாய்மொழிப் பேச்சு மூலமும் எழுத்து மூலமும் மக்களிடையே பல அரிய கருத்துக்களை பரப்பி உணர்ச்சி ஊட்டினுர்.
மனித இனத்தின் மகத்தான சாதனைகளுக்கு அடிப்படையாய் அமைந்து உதவுவது மொழியே. அரசாட்சி, சமுதாய வாழ்வு, கலை, நாகரிகம், அறிவி யல் ஆகிய யாவும் மொழியின்றேல் இல்லை. அறிவை யும் உணர்வையும், அனுபவத்தையும் தலைமுறை தலைமுறையாக மக்கள் சமுதாயத்திற்குக் கொண்டு செல்வது மொழியே. எனவே சமுதாய வாழ்வுக்கும். குடும்ப வாழ்வுக்கும் மொழியே உயிர் மூச்சாகும். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவர்கள் தாய் மொழிபற்றிக் கூறிய சில கருத்துக்கள் பின்வருமாறு:-
"சமயம், இனம். தேசம் ஆகியவற்றில் உயர்வு தாழ்வுக்கு இடம் இருக்கிறது. ஆணுல் மொழியில் தாய் மொழியில் எத்தகைய அடிப்படை உயர்வு தாழ்வும் இருக்க முடியாது. எத்தகைய உயர்வு தாழ்வும் நீடித்து நிற்கவும் முடியாது. பேச்சுத்திறத்தில் குன் றிய பண்டிதரையும், அதில் மிஞ்சிய குதிரைக்காரரை யும் தாய் மொழியிலே மட்டுந்தான் காணமுடியும் தாய்மொழி வாழ்வில் அரசனும் ஆண்டியும் புலவனும் புலமையற்றவனும், வணிகனும், துறவியும் ஒருநிலைப்

வாழ்வும் மொழியும் 27
பட்டவர்களே. அவர்கள் யாவரும் எவ்வகை ஏற்றத் தாழ்வும் இல்லாமல் அதன் புகழில் தங்கு தடையின்றி சரிசம நிலையில் போட்டியிட முடியும். போட்டியிட்டி ருக்கின்றனர். எடுத்துக் காட்டாக இரந்து திரிந்த கோமர் புகழை உலகாண்ட யூலியஸ்சீசர் அத்துறை யில் வென்றுவிடவில்லை. கல்லா நடிகனுகிய செக்ஸ்பியர் புகழுடன் கற்றறிந்த புலமைக் கவிஞன். மில்டன் போட்டியிட முடிந்ததே தவிர வெல்ல முடிய வில்லை. வணிகராகிய கூலவாணிகன் சாத்தனருடன் அரசத் துறவியாகிய இளங்கோவும் துறவியாகிய திருத்தக்க தேவரும் சரிசமமாகவே போட்டியிட்டனர்.
ஒரு நாட்டின் உரிமைப்போர் வெறும் கல்லுக்கும் மண்ணுக்கும் உரிமை பெற்றுத்தரும்போர் அன்று. கருத்துக்கும் வாழ்விற்கும் உரிமை பெற்றுத்தரும் போரே ஆகும். கருத்திலும் வாழ்விலும் மொழியே உயிர்போன்ற கருவியாக கலந்து நிற்கிறது. ஆகவே நாட்டுரிமை என்பது நாட்டு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத மொழிக்கும் உரிமையாகும். இதனு லேயே நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் இணைந்து செல்வன என்று கருதுவர். ஆதலின் நாட்டுப்பற்றுக் கொண்டவர் மொழிப் பற்றுடையவராக விளங்குவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.’
*பிறமொழியில் உண்மையான பழக்கம் பெற தேவைப்படும் உழைப்பு பயனற்ற உழைப்பாகும்." (The labour required to acquire a real familiarity with a foreign tonque is profitless) 6T6örg) ஆங்கில எழுத்தாளர்களில் பழுத்த புலவராகிய சோமர் செட் மாம் என்பவர் கூறிய கருத்தையும் நினைவிற் கொள்ள ჭიu6öör@ub.
இவ்வறிஞர்கள் அண்மைக் காலத்தில் உணர்ந்து எழுதிய கருத்துக்களை ஏறத்தாழ எழுபது ஆண்டு

Page 25
28 கரவைகிழார் கட்டுரைகள்
களுக்கு முன்பே பாரதியார் உணர்ந்து, எழுதி, செய லாற்றியுள்ளார். பிறமொழியாகிய ஆங்கிலம் மூலம் கல்வி கற்றவர்கள் தமது நாட்டின் வீரவரலாற்றைக் கற்று உணராது. ஆட்சிபீடம் ஏறிய ஆங்கிலேயர்க் குக் கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்ததைப் பின்வரும் பாடல்களிலே உணர்ச்சி வேகத்தோடு பாடியுள்ளார் பாரதியார்.
'கம்பனென்ருெரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கதைபு னந்ததும்
C SS S S LL LLL L0 C0L0LL S SLSSSS SC SS 0 0L LLSL LSL SS L L LLLLL LL LSLS LSL S C C qq LLL q qC qS q 0 LLS 0S SL L L LS LL LSL CSS S S
"சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார வித்ததும் தர்மம் வளர்த்ததும் பேர ருட்சுடர் வான்கொண் டசோகஞர்
பிழைப டாது புவித்தலங் காத்ததும் வீரர் வாழ்ந்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
* அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்(து)
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்சிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
என்ன கூறுமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே.”

வாழ்வும் மொழியும் 29
அநீதி அதர்மம், அக்கிரம், அரசோச்சிய அவல நிலை கண்டு உளம் எரிந்து பாடினுன் பாரதி. அதே அவல நிலை இன்றும் ஈழத்தில் நிலவுகிறது. ஆங்கி லேயனுக்கு அடி வருடிய கயமைக்குணம் இன்னும் மாறவில்லை. சிங்களத்தைக் கற்று, செந்தமிழை விற்று சுகபோக வாழ்வு காணத் துடிக்கும் சுயநலம் கொண் டவர்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு பாரதி பாடிய பாட்டு அறிவு கொளுத்த வல்லது. தாய்மொழி யைத் துறந்து ஆளும் பிறமொழியை அணைத்திடத் அதுடிப்பவர்களைப் பார்த்து பாரதி ஆவேசமாகப் பாடுகிருன்.
"வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ” *நீதி நூறு சொல்லுவாய்-காசொன்று நீட்டினுல் வணங்குவாய் போ போ"
வாயளவில் நீதிபேசுவோர் ஒருகாசுக்காக தம்மை யும், தாம் பேசும் மொழியையும், தாம்வாழும் நாட் டையும் விற்கத் துணிந்திடும் கயவர்களாக மாறுவ தைப் பார்த்து உண்மையான தேசபக்தன் உளம் மிக வெதும்புகிறன். இத்தகைய கயவர்களைப் பார்த்து
"நாட்டில் அவமதிப்பும்
நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்பும் கொண்டே-கிளியே
சிறுமை யடைவாரடி’
எனப்பாடினுன் பாரதி. நாணம் என்பது பெண் ணுக்கு மட்டும் உரியதல்ல. செய்யத்தகாததைச் செய்ய மனிதன் நாணவேண்டும். இந்த நாணம் எல்லோர்க் கும் இருக்கவேண்டும். நாணமின்றி இழிசெல்வத்தைத்

Page 26
30 கரவைகிழார் கட்டுரைகள்
தேடி சிறுமை அடைந்திடும் சிறுமதியாளர்கள் மனம் திருந்துவார்களா?
“மொழி ஒர் உயிரியக்கம் என்பர் மொழிநூலார். மொழி சார்ந்து வளரும் நாட்டையும் இனத்தையும் நாம் தாய் என்று குறிப்பது மிகையணி வழக்கன்று குறையணி வழக்கென்பதை இது காட்டும். உண்மை யில் தாயின் பணிகூட மொழி, நாடு, இனம் ஆகிய வற்றின் பணிகளைச் சுட்டிக்காட்டுமேயன்றி. அவற் றுக்கு ஈடாக மாட்டாது. தாய் பிள்ளையைப் பெறுகி ருள் வளர்த்துவிடுகிருள்; அவ்வளவே. பிள்ளையின் வாழ்வுடன் தாய் வாழ்வதில்லை. பிள்ளையின் பிள்ளை களை பிள்ளையின் பிள்ளைகள் தலைமுறைகள் வளர்ப்ப தில்லை. மொழியும், நாடும், இனமும் இவற்றை திறம் - ஆற்றுகின்றன." என பன்மொழிப்புலவர் கா, அப் பாத்துரை அவர்கள் கூறியுள்ளார். இத்தகைய தாய் மொழியையும் இனத்தையும், தாய் நாட்டையும் துறந்து மறந்து நாம் வாழ்ந்திட முடியுமா? /

விழுமிய உணர்ச்சி 3.
விழுமிய உணர்ச்சி
நட்பு, காதல், பக்தி ஆகியவற்றிற்கு அடிப்படை யாக விளங்குவது விழுமிய உணர்ச்சியே. ஓர் ஆடவ னுக்கும் இன்னுேர் ஆடவனுக்கும் இடையே அல்லது ஓர் அரிவைக்கும் இன்னுேர் அரிவைக்கும் இடையே நிகழும் உணர்ச்சிப் பிணைப்பையே நட்பு என்று அழைக்கின் ருேம். ஆடவனுக்கும் அரிவைக்கும் இடையே மலரும் உணர்ச்சி இணைப்பைக் காதல் என்கிருேம். இறைவனுக் கும் அடியார்க்கும் இடையே ஒளிரும் உணர்ச்சிப் பிழம்பை பக்தி என்கிருேம், தேசத்திற்கும் தொண்ட னுக்கும் இடையே அல்லது மொழிக்கும் தொண்டனுக் கும் இடையே மிளிரும் உணர்ச்சி ஒளியை தேசபக்தி அல்லது மொழிபக்தி என செப்புகிருேம். காதல் வாழ் வில் மட்டுமே உடல் உறவு இடம் பெறுகிறது. மற்றைய உணர்ச்சிக் கட்டங்களாகிய மொழி பக்தி, தேசபக்தி, நட்பு, இறைபக்தி முதலியவற்றில் புணர்ச்சி இடம்பெற வில்லை. முழுமை பெற்ற விழுமிய உணர்ச்சியே முகிழ்த்து, மலர்ந்து மணமும் ஒளியும் வீசுகின்றது. இறைபக்தி கொண்ட செந்தண்மை பூண்ட அறவோர் கள் தேசபக்தி கொண்ட வீரர்களாகவும் திகழ்ந்திருக்கி ருர்கள். சுவாமி விவேகானந்தர் இந்திய சுதந்திரக்கனலை தமது வீறுகொண்ட சொற்பொழிவின் மூலம் ஊட்டி ஞர். எமது சைவநாயன்மார்களும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று நிறைந்த நெஞ்சம்கொண்ட இறைபக்தர் களாக விளங்கி நாட்டுக்கும் மொழிக்கும் சைவத்திற்கும் தொண்டு செய்தார்கள்.
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்”
எனக் கூறிஞர் செந்நாப்புலவர் வள்ளுவப் பெருந்தகை. புணர்ச்சியும் வேண்டாம், பழகுதலும் வேண்டாம், உணர்ச்சி ஒன்றே நட்புக்குப் போதுமானது. எடுத்துச்

Page 27
32 கரவைகிழார் கட்டுரைகள்
காட்டாக இந்தியாவில் வாழ்ந்த காந்தியடிகளும் ரஷ்யாவில் வாழ்ந்த அறிஞர் டால்ஸ்டாயும் ஒருவரை ஒருவர் கண்டு பழகவில்லையாயினும் உயர்ந்த நண்பர் களாக விளங்கினர். உணர்ச்சி நட்பாங் கிழமையைத் தந்தது. கோப்பெருஞ் சோழன் உயிர்நீத்தான் எனக் கேள்வியுற்ற பிசிராந்தையார் வடக்கிருந்து தம்முயிரை யும் நீத்தார். இவ்விரு உயர்ந்த நண்பர்களும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பழகியதில்லை.
சுந்தரமூர்த்தி நாயஞர் தம் தாய்மொழியாகிய தீந் தமிழ்மீது தீராக் காதல் கொண்டு இறைவனை ஏத்திப் போற்றி நாளும் தொண்டு செய்தார். இறைவனையே தமிழுக்கு ஒப்பானவன் என மொழிகின்ருர் பின்வரும் தேவாரத் திருப்பதிகத்தில்.
“பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்
பழத்தினில் சுவை ஒப்பாய் கண்ணிடை மணி ஒப்பாய்
கடுவிருட் சுடர் ஒப்பாய் மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே."
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் புரிந்த இடையருத தமிழ்த்தொண்டு பற்றி இன்னுெரு தேவாரத்தில் சுந்த ரர் மிக அழகாகப் பாடியுள்ளார்.
*நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கிரங்கும்
தன்மையாளனை என்மனக்கருத்தை ஆளும் பூதங்கள் பாடகின்ருடும்
அங்கணன்றன எண்கணம்இறைஞ்சும் கோளிலிப் பெருங்கோ யிலுளானைக்
கோலக்காவினில் கண்டுகொண்டேனே.”

விழுமிய உணர்ச்சி 33
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்” என்ற அடியிலுள்ள உண்மையை, சைவமும் தமிழும் இரு கண்கள் என்றும், அவை பின்னிப் பிணைந்தவை பிரிக்க முடியாதவை எனவும் கூறிப் புளகாங்கிதம் அடையும் சைவ மெய்யன்பர்கள் உய்த்து உணரவேண்டும்; உணர்ந்தால்தான் திருஞானசம்பந்தரைப் போல நாளும் இன்னிசையால் தமிழ் ப ர ப் ப முன்வரு வார்கள். தமிழ் மக்களிடையே தெலுங்குக் கீர்த்தனங் களைப் பாடிப் பேரின்பம் பெற விழையும் இசைப் புலவர் களும் இதை உணர வேண்டும். நமது நாயன்மார்கள் சைவத்தை மட்டும் ஓம்பி வளர்த்துப் பரப்பவில்லை. சைவம் உறையும் தமிழையும் பேணி வளர்த்துப் பரப்பி ஞர்கள். சைவம் என்று கூறிக்கொள்வதற்கு சான்று களாக உள்ள திருமந்திரமும், சிவஞானபோதமும் நாயன்மார்களின் தேவாரங்களும், நெஞ்சை உருக்கும் திருவாசகமும், இன்னுேரன்ன பிறவும் எந்த மொழியில் உறைகின்றன என்பதை எண்ணிப் பார்த்ததுண்டா? தமிழ் இன்றேல் சைவம் இல்லை. தமிழ் வாழ்ந்தால்தான் திருமந்திரமும் திருவாசகமும் தேவாரங்களும் வாழ முடியும். இவ்வுண்மையை உணர்ந்து சைவமெய்யன் பர்கள் தமிழுக்கும் தொண்டாற்ற வேண்டும். தமிழ் மொழியைத் தெய்வமாக ஏத்திப் போற்றினுர் "மனுேன் மணியம்” என்னும் நாடக நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை. v
இறைவனை அடைவதற்கு உலகத்திலுள்ள அத்தனை பந்தங்களையும், சொந்தங்களையும் துறந்துவிட்டதாக மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளினுர்.
“உற்ருரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையும் குற்குலத் தமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே"
4

Page 28
கரவைகிழார் கட்டுரைகள்
மொழிமீது நீங்காப் பற்றுக்கொண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பந்தத்தையும் சொந்தத்தையும் தமிழுக்காகத் துறந்துவிட்டதாகத்தான் பாடினர்.
"பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார் தயைமிக உடையாள் அன்ன் - என்னச்
சந்ததம் மறவாத் தந்தை குயில்போற் பேசிடும் மனேயாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பின்ளே அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என் அறிவினில் உறைதல் கண்டீர்"
திருமணம் செய்யாது பிரமச்சாரியாய் இருப்பவர் துறவு பூண்டு தொண்டு செய்வதை விட, இல்லறத்தில் தாய் தந்தை, பெண்டு பிள்ளே, அண்ணன் தம்பி உற்ருர் உறவினர் என்னும் பந்தபாசத்தில் கட்டுண்டு வாழும் ஒருவன் துறவுபூண்டு சிந்தையாலும் சொல்லா லும் செயலாலும் தொண்டுபுரிவதே மிக உயர்ந்தது. குடும்பத்திலும் பிள்ளைப்பாசம் உள்ளத்தை உருக்கி உணர்ச்சிப் பெருக்கை உண்டாக்குவது; உயிரையே தியாகம் செய்யத் தூண்டுவது. எனவேதான் புரட்சிக் கவிஞர் "அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளே' எனப் பாடினுர், அழகுதமிழ் அவர் அறிவில் உறையும்போது அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளேயும் அயலவராகத் தான் தோன்றிற்று. தமிழுக்கு ஊறு நேரும்போது எத்தகைய உயர்ந்த தியாகத்தையும் செய்யச் சித்த மாயிருக்க வேண்டும் என்பதை எழிலுற இதயத்தைத் தொடும் வகையில் பாவேந்தர் பகர்ந்திருக்கிருர்,
"ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந் தத் தேனினேச் சொரியும்" திருவாசகம் தீந்தமிழில்

விழுமிய உணர்ச்சி
அல்லவா பாடப்பட்டுள்ளது. செந்தமிழ்ச் சொற்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள விழுமிய உணர்ச்சி வெள்ளம் உள்ளத்தில் பாயும்போதுதானே உள்ளொளிப் பெருக் கம் ஏற்படுகிறது. அத்தகைய உணர்ச்சி வெள்ளத்தைத் தன்னுள் அடக்கிவைத்திருந்து உளம் நொந்துவாடும் மைந்தர்களுக்கு உய்வுதரும் உத்தமியாம் தமிழ் அன்னையை தனயர்கள் மறந்தால் தரணியில் உள்ளோர் தாயை மறந்த தனயரெனத் தூற்றுவர். திருவாசகத்தின் அருமை பெருமையினை உணர்ந்த வணக்கத்திற்குரிய டாக்டர் ஜி. யு. போப் அவர்கள் அதனை ஆங்கில மொழி யில் பெயர்த்துள்ளார். அம்மொழி-பெயர்ப்பு நூலின் முன்னுரையில் அவ்வறவோர் தம் மாணவர்களுக்கு ஓர் உருக்கமான வேண்டுகோளே விடுத்துள்ளார். "Fo many years I have not ceased to say - there in India, and here in Oxford - to successive classes of students, "you Inlist learn not only to think in Tamil, but also to feel in Tamil, if you are to be intelligible and useful among the Tamil people."
"தமிழில் சிந்திப்பது மட்டும் போதாது, தமிழில் உணரவும் வேண்டும்' என்கின்ருர் டாக்டர் போப் அவர்கள்.
காந்தியடிகளின் தாய்மொழிப்பற்றின் பெற்றியை தமிழ்த்தென்றல் திரு. வி. கலியானசுந்தரஞர் பின்வரு மாறு 'மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற தமது நூலில் கூறுகின்ருர். 'காந்தியடிகள் என்றும் உரிமை வேட்கை உடையவராக வாழ்ந்ததைப் பார்க்கும்
பேறு பெற்ருேம். உரிமையின் பொருட்டு அவர் பட்ட
பாடு நமக்குத் தெரியும், உரிமைக்காக அவர் உயிரையும் விட முனேந்து நின்ருர். இதற்கு அடிப்படை எது? அடிகள் தாய்மொழி மாட்டுக் கொண்ட தனியா அன்பே யாகும். தாய்மொழியின் இடத்து அன்பில்லா ஒருவன் தாய்நாட்டின் அன்பளுகான். நாட்டன்பிற்கு நாட்டு மொழி அன்பே உயிர் - உயிரென்க"

Page 29
கர வைகிழார் கட்டுரைகள்
தமிழைக்கொண்டு ஊதியமும் விளம்பரமும் பெறும் தமிழாசிரியர்களும் எழுத்தாளர்களும் தமிழ் அன்னே யைக் கொன்றும் வாழும் அவலநிலேயை எண்ண வேண்டும்.
"ஈழத்தின் எழுத்தாள நண்பனேநின்
எழுத்துக்கு தமிழ்மொழிதான் முச்சே என்ருல் கடமுக்குக் கொள்கையினே ஏலம்போடும்
கும்பலிலே நின்குரலேன் ஒலிக்க வேண்டும் தாழிட்டுத் தமிழ்த்தாயின் இதயந்தன்னை
தருக்கர்கள் தத்தளிக்கச் செய்யும் வேளே ஏழடுக்கு மாடியிலே இருந்துகொண்டே
எழுதிநீ குவித்துத்தான் என்ன காண்பாய்
உள்ளத்தின் உணர்வதனப் வடித்துக் காட்டு
உணராதார் தமக்கதனைப் படித்துக்காட்டு நள்ளிரவு வெளிச்சம்போல் துண்யாய் நில்லு
நடுப்பகவில் பகல்வேடம் வேண்டாம் தள்ளு துள்ளிவரும் வேல் கண்டு துவளல் வெட்கம்
துடித்தெழுந்து செயலாற்றத் துணிந்து வாராய் பள்ளிகொண்டு பணிமறக்கும் கோழையா நீ
பணயமாய் உன் உயிரை பரிந்தே ஈவாய்'
உயிரூட்டம் தரும் தாயின் உயிர்க்கே உலேவைக்கத் துடித்துச் செயலாற்றுவோர்க்கு துனேயும் தூண்டு கோலுமாக விளங்கும் தமிழ் மைந்தர்கள் விளம்பரம் என்ற போர்வையில் துரோகம் செய்கிருர்களே என் பதை மறுக்கவோ மறைக்கவோ அன்றி மறக்கவோ முடியாது. தமிழர்கள் எல்லோரும் ஏகோபித்து வி மிய தமிழுணர்ச்சியால் ஒருமைப்பாட்டினைப் பெற்ரு அன்றி சகோதரத்துவமோ சமத்துவமோ நிலவுவது சந் தேகமே. சமரச சன்மார்க்கத்தைப் போதித்து ஆன்
 
 
 

விழுமிய a art I - R 37
நேய ஒருமைப்பாட்டிற்காக அயராது உழைத்த அருட் சோதிவள்ளல் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா தமிழர்களுக்கு ஒளிகாட்டும் விளக்காக ஒளிரவல்லது.
"எத்துணையும் பேதமுருது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்ருர்
யாவரவர் உள்ளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமென நான் தேர்ந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்குரவல் புரிந்திLஎன்,
சிங்தை மிக விழைந்த நாலோ",

Page 30
S. கர வைகிழார் கட்டுரைகள்
உண்மை ஒளியும் உள்ளத் தெளிவும்
சிரிய நேரிய வாழ்விற்கு சிந்தனேத்தெளிவு மிக இன்றியமையாதது என்ற உண்மையை நமது ஆழ்ந்த கன்ற நுண்ணுணர்வுடைய ஆன்ருேரும் சான்ருேரும் உணர்ந்தனர். தாம் உணர்ந்த அனுபவங்களே உல கோரும் உணர்ந்து உய்வு பெற்றிட வழங்கிச் சென்ற னர். உள்ளத்துணிவும் சிந்தனேத்தெளிவும் கொண்ட சான்ருேன் கனிவுடன் மன்பதை உய்திட அல்லும் பகலும் அனவரதமும் உழைத்திட்டான். அறிஞனுக் கும், சான்ருேனுக்கும் வேறுபாடு உண்டு. கூர்த்த மதியை உடைய அறிஞன் விழுமிய ஒழுக்கத்தை ஒம்பி சீரிய வாழ்க்கையை நடாத்தினுல்தான் அவன் சான்றேன் எனத் திகழ்வான். எளிமை கண்டு இரங் கலும் சிறுமை கண்டு பொங்கலும் சான்ருேர்க்குரிய தனி இயல்புகள். அநீதி, அதர்மம் தலைவிரித்தாடும் போது சான்ருேன் அஞ்சாது எதிர்த்துப் போரிட்டு உண்மையை நிலைநாட்டுகிருன்,
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகன் சான்ருேன் எனக்கேட்ட தாய்"
என மொழிந்தார் வள்ளுவப் பெருந்தகை. சான்ருேன் எனக்கேட்ட தாய், தான் ஈன்றபொழுதிற் பெரிதுவத் தாள்: அறிஞன் எனக் கேட்டபோதல்ல. சான் ருேன் என்ற சொல்லுக்கு படித்துப் பட்டம் பெற்ற அறிஞ னெனப் பலரும் தவருக விளக்கம் கூறுகின்றனர். வள்ளுவர் கருதிய சான்ருேன் உள்ளத்துணிவும், எண்ணத் தெளிவும். கனிவும் நிறைந்தவன். பற் பல நூற்ருண்டுகளாகச் சிறந்த பண்பாட்டையும் மரபையும் பேணி வளர்ப்பதற்கு உறுதுணேயாகவும் ஊன்றுகோலாகவும் விளங்கியவர் சான்ருேரே. தம் அணு

உண்மை ஒளியும் உள்ளத் தெளிவும் :}}
பவத்தில் கண்ட உண்மைகளை, ஆழ்ந்த உணர்ச்சியும் உயர்ந்த கற்பனேயும், இனிமை மிகுந்த நுட்பமான ஒலிநயமும் பொருந்திய பாடல்களில் பொதிந்து வைத்துள்ளனர். உயர்ந்த கற்பனைச் சித்திரங்களாக விளங்கும் அவை சிறந்த கருத்துக் கருவூலங் களாகவும் திகழ்கின்றன. உண்மை ஒன்றுதான். அதனை உணரமுயன்றவர் பலர். ஆழ்ந்தகன்ற நுண் ணுணர்வுடைய சான்ருேர் தாம் உணர்ந்த தனித் தன்மை வாய்ந்த அனுபவங்களை ஈந்துள்ளனர். காதல், வீரம் சோகம், தியாகம், நாட்டுப்பற்று மொழிப் பற்று அற நெறி ஆகியவைபற்றிப் பாடிய புலவர்கள் பலர். ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு வகையாகத் திகழ்கிறது. இப்பாடல்களைப் பாடிய புலவர்கள் எல்லோரையும் மெய்யுணர்வு பெற்ற சான் ருேரெனக் கூறிட முடியாது. ஆயிரக்கணக்கான புல வர்களிலே ஒருசிலர் மட்டும்தான் மெய்யுணர்வு பெற்ற சான்ருேராக விளங்கினர்.
சமயங்கள் யாவும் மெய் உணர்வைப் போதிக்கின் றன. சமயமென்று சொல்லாமலே மெய்யுணர்வை எடுத்துரைத்த பெற்றி சங்ககாலச் சான்ருேர்களேயே சார்ந்தது. சங்ககாலச்சான்ருேர் செப்பிய அனுபவ மெய்யுணர்வைத்தான் அவர்க்குப் பின்பு வாழ்ந்து மறைந்த சமயச் சான்ருேர்களும் கூறிப் போந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய புறநானூற் றுப்பாடலேப் பார்ப்போம். கணியன் பூங்குன்றஞர் என்னும் சான்ருேன் பாடிய அப்பாடல் பின்வருமாறு:
"யாது முரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நிழ்ச் நோதலுந் தணிதலு மவற்றேர்ன்ன்சி' ELDԱք சாதலும் புதுவதன்றே வாழ்தல்
-
".

Page 31
40 கரவைகிழார் கட்டுரைகள்
இனிதென மகிழ்தன்று மிலமே முனிவின் இன்னு தென்றலு மிலமே மின்னெடு வானந் தண்டுளி தலைஇ யானுது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணையோ லாருயிர் முறைவழிப் படூஉம் மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
மலையில் பெய்தமழை ஆருகப்பெருகி சுழிகொண்டு ஓடுகிறது. சுழிகொண்டு ஒடும் ஆற்றில் அகப்பட்ட புணைபோல நமது ஆரூயிர் விளங்கி முறை வழிப்பட் டுச் செல்கிறது. "நீர் வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியிற் தெளிந்தனம்’ எனப்பாடுகின்ருர் சான்றேர் கணியன் பூங்குன்றணுர். முன்பு வாழ்ந்த சான்றேர்களின் விழு மிய அனுபவத்தில் கண்ட உண்மையைத் தாம் தெளி வாக உணர்ந்துவிட்டதாகக் கூறுகின்றர். யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, இனிமையான வாழ்வும், இடரும், இன்னலும், சாவும் புதுமையல்ல என்பவற்றை உணர்ந்தமையால் மாட்சி பெற்ற பெரியோரை வியக்கவும் மாட்டோம்; அதனை விடச் சிறியோரை இகழவும் மாட்டோம் என மொழி கின்ருர்,
தூய்மையான உள்ளத்தில்தான் துணிவும், தெளி வும், கனிவும் தோன்றும். "மனத்துக்கண் மாசிலனுதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற" என்றர் வள்ளுவப் பெருந்தகை.
தெளிந்த உள்ளத்துடன் அழுதழுது தொழுது இறைவனடி சேர்ந்த மாணிக்கவாசக சுவாமிகளும், புறநானூற்றுப்பாவில் கூறப்பட்ட அனுபவ உண்மை யையே புகலுகின்ருர்,

உண்மை ஒளியும் உள்ளத் தெளிவும் 4 1
'அன்றே என்ற னுவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் எனையாட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்ரூேர் இடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
கன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானுே இதற்கு நாயகமே"
என்றும்,
“கூறும் காவே முதலாகக்
கூறும் கரண மெல்லா நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமை தன்மை முழுதுநீ
வேருேர் பரிசிங் கொன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கின்
தேறும் வகையேன் சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ"
எனவும் பாடியுள்ளார் மாணிக்கவாசகர். "நன்றே செய்வாய் பிழைசெய்வாய், தேறும் வகைநீதிகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ" என்னும் அனுபவ உண் மையை உய்த்து உணரவேண்டும்.
அன்பு வடிவானவன் இறைவன் என்று கூறுவதை விட உண்மை வடிவானவன் இறைவன் எனக்கூறுவது தான் சாலச் சிறந்தது என்று காந்தியடிகள் புகன்று போந்தார். காரணம், அன்பு - தாய்பிள்ளை, கணவன் மனைவி, உற்றர் உறவினர், தலைவன் தொண்டன் ஆகி யோரிடையே வெவ்வேறு கட்டங்களில் வெவ்வெறு வடிவங் கொள்கிறது. ஆணுல் உண்மை எல்லோர்க்கும் எல்லாக் கட்டங்களிலும் ஒன்றேதான். இந்த உண் மையைத்தான் மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் *மெய்ம்மை உன்னை விரித்துரைக்கின்’ எனப்பாடி யுள்ளார்.

Page 32
42 காவைகிழார் கட்டுரைகள்
மகாகவி பாரதியும் "திண்ணிய நெஞ்சத்தையும் தெளிந்த நல்லறிவையும்” தருமாறுதான் பராசக்தியை இறைஞ்சிக் கேட்டார்.
*அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பிளுேர் வெள்ளம் பொறிகளின் மீது தனியர சானை
பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம் கர்மயோ கத்தில்
கிலைத்திடல் என்றிவை யருளாய் குறிகுண மேதும் இலாதாய் அனைத்தாய்
குலவிடும் தனிப்பரம் பொருளே.'
எனப் பாரதியார் அகங்குழைந்து பாடினுர். “உள்ளத் தில் உண்மையொளி உண்டேயாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்," என்ற பாரதியின் வாக்கினையும் உய்த்துணர்ந்து உள்ளத் தெளிவினைப் பெறவேண்டும்,

எழுத்தின் ஆற்றல் 43
எழுத்தின் ஆற்றல்
"கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான்- மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ்கொண்டு
ob6f GF tið 2. LiðL”
r --குமரகுருபரர்,
உணர்ச்சி, கற்பனை, கருத்துக்கொண்டு ஆக்கப் படும் படைப்புக்கள் பிரம்மதேவன் ஆக்கிய படைப் புக்களைப் போல அழிவதில்லை. படைத்தவன் மண் ணுேடு மண்ணுக மறைந்தாலும் படைக்கப்பட்டவை பாரில் நீடு வாழ்ந்து உலகுக்கு ஒளியுமிழும் கலங் கரை விளக்கங்களாகத் திகழ்கின்றன. சொற்பொழி வாளனது நாவும், எழுத்தாளனது பேணுவும் கூரிய வாளிலும் சக்தி வாய்ந்தவை. மனித சமுதாயத்தை ஆக்கவும் அழிக்கவும் அவைக்கு ஆற்றல் உண்டு. அவற்றின் முக்கியத்துவத்தையும் ஆற் றலை யும் உணர்ந்துதான் வள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு பாடிஞர்.
வில்லேர் உழவர்பகை கொள்ளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
சொல்லை ஏராகக் கொண்டு மனித நெஞ்ச வயஜல உழுது பண்படுத்தி நாட்டுக்கும் மொழிக்கும் இனத் துக்கும் உய்வு தருபவர்கள் சொல்லேர் உழவர்களா கிய எழுத்தாளர்கள். ஒருநாட்டின் நாடி நரம்புபோல திகழும் கவிதையை இயற்றும் கவிஞன் நாட்டு மக் களது உள்ளங்களை ஆளும் சக்தியைப் பெறுகிருன்.
தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களாக, சான் ருேர்களாகத் திகழ்ந்த கவிஞர் பெருமக்கள் படைத்த

Page 33
44 கர வைகிழார் கட்டுரைகள்
படைப்புக்கள் நாட்டுமக்களுக்கு நல்வழிகாட்டும் ஒளி விளக்குகளாக மிளிர்கின்றன. காசுக்கும் கவர்ச்சிக் மோக தம் கலைத்திறனை பேரம்பேசும் தரகர்களாக விளங்காது, பண்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் உறு ஆணையாகும் உத்தமர்களாகக் கவிஞர் பெருமக்கள் திகழ்ந்தனர்.
தாம் வாழும் நாட்டை, கேடு சூழ்ந்தபோது ‘நமக்கு ஏன் வீண் தொல்லை’ என்று வாளாவிருக்க வில்லை. நாட்டை ஆளும் அரசனுக்கும் நாட்டில் வாழும் **ளுக்கும் அறிவுறுத்தி, உணர்ச்சி ஊட்டி, கிளர்ந் தெழச் செய்து நாட்ட்ை கேட்டிலிருந்து கவிஞர்கள் *"ப்பாற்றியதற்கு பல சான்றுகள் பண்டைய இலக் கியங்களிலே உண்டு.
புலவர் பெருமக்களில் நடுநாயகமாகத் திகழ்ந்த நக்கீரரும், கோவூர்க்கிழாரும், அரிசில் கிழாரும், அறத்தின் வழிநின்று அஞ்சாமையுடன் நீதிக்காக வாதாடினர்,
தமிழ்நாட்டில் வடமொழி புகுந்து தமிழின் வளர்ச் சிக்குக் குந்தகம் விளைவித்தபோது, அயராது தொண் டாற்றி, பிறமொழி ஆதிக்கத்திற்கு தமிழ்மொழி ஆட் பட்டு அழியாது காப்பாற்ற உதவிபுரிந்தார் உத்தமர் நக்கீரர். அறத்தை ஒம்பி வாழ்ந்த அழகுதமிழ் அறி ஞர் நக்கீரர் வறுமையிலேதான் வாழ்ந்தார். "நெடுநல் வாடை என்னும் பாடலைப்பாடித் தமிழ்ச்சங்கத்திலே அரங்கேற்றியபோது பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கினுன், வேறுபல சந்தர்ப்பங்களிலும் யானைகளை பாட்டுக்குப் பரிசில்களாகப் பெற்றிருக்கிருர் புலவர் பெருந்தகை நக்கீரர். இத்துணை மதிப்புவாய்ந்த பரி சில்களைப் பெற்றவர் ஏன் வறுமையில் வாடவேண்டும் என்ற ஐயவிஞ எழலாம். தமக்குக் கிடைத்த பரிசிற் பொருட்களை உற்ருர்க்கும் உறவினர்க்கும் அயலவர்க்

எழுத்தின் ஆற்றல் 45
கும் வாரிவழங்கி அவர்களது வறுமைத் துன்பத்தை நீக்குவதில் இன்பம் கண்டவர் நக்கீரர். பொருளைக் குவித்து வைத்து எதிர்காலத்துக்கு வேண்டுமென்று எண்ணி வாழ்ந்தவர் அல்லர். இன்பம், துன்பம்,வெறுமை இவற்றில் எது வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, நடுநிலைநின்று, அன்புள்ளம் பூண்டு, பொதுத் தொண்டு புரிந்தவர்.
தமது பாட்டைப் பாராட்டிப் பரிசில் வழங்கிய வேந்தணுயினும் அவன், அறத்தின் வழி நில்லாது அநீதி செய்தபோது, அஞ்சாது அநீதியைச் சுட்டிக்காட்டி நீதிக்கு வாதாடி இறப்புலகுக்குச் செல்ல இருந்த உயிர் களை மீட்டு இன்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றனர் இன் தமிழ்க் கவிஞர்கள். கிள்ளிவளவன் என்னும் அரசன் தனது பகைமன்னன் மலையமான் மேல் கொண்ட பகை மையினுல் மலையமானின் மக்களை யானையின் காலில் இட்டுக் கொல்லுமாறு கட்டளை இட்டபோது, கோவூர்க் கிழார் என்னும் புலவர் பெருந்தகை, அரசனின் கட்டளை அநீதியானது அதர்மமானது என அஞ்சாது கனிவுடன் இடித்துரைத்து நீதி கோரினுர், புலவரின் அறவுரையைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்த அரசன் சினம் தணிந்தான். மலையமானின் மக்கள் புலவரின் துணிவான முயற்சியால் காப்பாற்றப்பட்டனர்.
ஏதுமறியாத குழந்தைகளை, ஆட்சிபீடத்தில் இருக் கும் அரசனை எதிர்த்து, இறப்புலகிலிருந்து காப்பாற் றும் துணிவும், தெளிவும், கனிவும் இக்காலக் கவிஞர் களுக்கு ஏற்படுமா? செல்வாக்கு மிகுந்தவர்களின் காலடியில் கலைத்திறனை கவித்திறனை காணிக்கை ஆக்கும் கீழ்மை நிலையில் உள்ளவர்களைத்தான் இன்று காணக் கூடியதாகவிருக்கிறது.
ஆங்கில நாட்டில் பிறந்த பைரன் என்னும் புகழ் வாய்ந்த புலவர், கிரேக்கநாட்டில் நடந்த உரிமைப்

Page 34
46 கரவைகிழார் கட்டுரைகள்
போரில் உவகையுடன் கலந்துகொண்டார். நொந்தவர் தமக்காய் வெந்திடும் நெஞ்சம் விடுதலைப்புலவர் துஞ்சிடும் மஞ்சம் என்று கூறினுல் மிகையாகாது.
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில் (1882) தோன்றி இருபதாம் நூற்ருண்டின் முற்பகுதி யில் (1921) மறைந்த மகாகவி பாரதியின் உரிமை உணர்வும் தியாகமும் தொண்டும் பாரத நாட்டுச் சுதந்திரப்போர் வெற்றியடையப் பலவகையில் 565 புரிந்தன. உருசிய நாட்டுப் புரட்சியையும் புகழ்ந்து பாடினர் பாரதி. பாரதியாரை இடையருது வறுமைத் தேள் கொட்டிற்று. சொந்த மனைவி மக்களைப் பிரிந்து பத்து ஆண்டுகளாக புதுவையில் அஞ்ஞாதவாசம் செய்தார். பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும் ஆளானபோதும் உரிமைப் பெருந்தீ அவர் உள்ளத்தில் நாளும் ஒளிர்ந்து கொண்டுதான் இருந்தது. விடுத லைக் கவிஞனின் உள்ளம்,
"சிறுமை கண்டு சகிக்காது
செல்வ நிலைக்கோ ஏங்காது பொறுமை பூண்டு கடமைதனை
பொறுப்பை உணர்ந்து செய்திடுமே வறுமைப் பிணியே பீடித்து
வருந்தி யுழலும் நிலைதனிலும் திறமை ஆற்றல் செயல்கொண்டு
தீனர்க் குதவி மகிழ்ந்திடுமே’.
“என்றுதணியும் இந்த சுதந்திரதாகம், -என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’
என உரிமை உணர்ச்சி பொங்கக் கேட்ட விடுதலைக் கவி பாரதி சுதந்திரப்பயிர் பற்றிப் பாடும்போது

எழுத்தின் ஆற்றல் 4፲ -
"தண்ணிர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக்
கண்ணிராற் காத்தோம்
கருகத் திருவுளமோ?"
என உள்ளமுருகி இறைவனை இறைஞ்சிக் கேட் scod.
பாரதியின் வழிவந்த புரட்சிக்கவிஞர் பாரதி தாசனும்
"எமை கத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்".
எனச் சுதந்திர வீறுடன் பாடினுர். பாரதியார் விட்டுச்சென்ற பணியைப் பாங்குறச் செய்து, பைந் தமிழுக்கு அரியாசனம் பெற்றுத்தர அயராது உழைத்த அமரர் அண்ணுவுக்கும் அவரது விடுதலை இயக்கத் துக்கும் தமது வீர உணர்ச்சி பொங்கும் கவிதைகளை படைக்கலக் கருவிகளாக வழங்கிஞர் புரட்சிக் கவி ஞர் ‘பாரதிதாசன். சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு வரும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று உடையவராய் விளங்க வேண்டுமென்ற உயர்ந்த கருத்தை “குடும்ப விளக்கு” என்ற காவியத்தில் அழ காக ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார் புரட்சிக் கவிஞர். குடும்ப விளக்குக் காவியத்தலைவி தலைவனைப் பார்த்து பின்வருமாறு கேட்கின்ருள்.
"தமிழரென்று சொல்லிக் கொள்கின்ளுேம் நாம்
தமிழ் நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றேம்
எமதென்று சொல்கின்றேம் நாடோறுந்தான்
எப்போது தமிழனுக்கு கையாலான

Page 35
48 கரவைகிழார் கட்டுரைகள்
நமதுழைப்பை ஒருகாசைச் செலவுசெய்தோம்
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்
அமைவாகக் குந்தி நினைத்தோமா? இல்லை
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்
இத்தகைய உணர்வொளியீந்த உயர்ந்த புலவர்க ளின் தொண்டுதான் உலகுக்கு உய்வு தருகின்றது.
இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துான்றும் தூண்
- திருக்குறள் -

யூதர்களின் விடுதலைப்போர் 49
யூதர்களின் விடுதலைப் போர்
இரண்டாயிரம் வருடங்களாக உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து, அந்தந்த நாட்டின் பல்வேறு அறைகளிலும் ஈடுபட்டுப் புகழ் எய்தி, கண்யமிக்கப் பிரஜைகளாகத் திகழ்ந்த போதும், யூதர் என்னும் இனத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக, படுமோச மாகத் துன்புறுத்தப்பட்டார்கள் யூதமக்கள். ஆயினும் தமது தனித்தன்மையையும், விவேகத்தையும் வீரத்தை யும் இழந்துவிடாது அவற்றையே மூலதனமாகக் கொண்டு, அறிவும் அஞ்சாமையும் இணைந்த பாதை யிலே வீறுநடைபோட்டு, உலகமே பார்த்து வியக்கும் வண்ணம், அயராது, த ள ரா து, உரிமைவேட்கை கொண்டவர்களாய், அளப்பரிய தியாகங்களைச் செய்து, விடுதலைப்போரை நடாத்தி, தமது இன் பத்தாயகமான இஸ்ரவேல் (பாலஸ்தீனம்) நாட்டைப் பெற்றர்கள். அத்தகைய விடுதலைப் போரின் வீரவரலாற்றை அடிப் படையாக வைத்து, உள்ளத்தைக்கிளறும் உணர்ச்சி மிக்க சம்பவங்களைக் கோத்து, கருத்தைக் கவரும் கதாபாத்திரங்களைப் படைத்து. படிப்பவர் தம் நெஞ்சங் களில், பலவித ரசங்களும் கலந்த உணர்ச்சி வெள்ளம் ததும்பும் வண்ணம் தத்ரூபமாக, ஆங்கில மொழி யிலே திரு. லியோன் யூறிஸ் (Leon Uris) என்னும் நாவலா சிரியரால் எழுதப்பட்டுள்ளது எக்ஸ்சோடஸ் (Exodus) என்ற நாவல். கதாபாத்திரங்கள்
அறிவு, ஆற்றல், திறமை, அஞ்சாமை, அன்பு, தியாகம் முதலியவற்றின் மொத்த உருவாகக் காட்சி யளிக்கும் அடலேறு போன்ற விடுதலை வீரன் அரிபென் கனன் (Ari Ben Canan)என்பவன்தான் நாவலின் தலைவன்.

Page 36
缸H காவைகிழார் கட்டுரைகள்
அன்பு கனிவு, இரக்கம், அச்சம், நாணம் முதலிய பெண்  ைம க்கு ரிய பண்புகளைக் கொண்டிலங்கும் மாதரசி கிற்றி (Kitty) என்பவள் தான் நாவலின் தலைவி அவள் ஒரு நர்ஸ். மற்றும் கேரன் (Karen), டோவ் (POV) தலைவனின் தந்தை யோசி (Jossi), தந்தையின் தம்பி யாகோவ் (Jakov) நெஞ்சை விட்டு நீங்காத பாத் திரங்கள்.
நாவலில் வரும் உணர்ச்சி மிக்க கட்டங்கள் உள் ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தன. உதாரணத்திற்கு ஒரு சில.
இட்லர் வெறியாட்டம்
இட்லரின் வெறியாட்டத்திற்கு ஆளாகி, விஷவாயு அறைகளிலே உயிர்நீத்த யூதர்களின் தொகைமட்டும் அறுபது இலட்சம். இரண்டாவது மகா யுத்தம் முடிந்த நேரம் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த யூத அகதிகள் கப்பல்கள் மூலம் பாலஸ்தீனத்திற்குச் சென்றுகொண் டிருக்கிருர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் யூதர் களின் விடுதலே இயக்கமாகிய சயோன் மூவ்மெண்டுக் குங் (Zion movement) இடையில் ஒவ்வொரு மாதமும் எழுநூறு அகதிகளே பாலஸ்தீனத்திற்குள் அனுமதிப் பது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஆயினும் அராபியர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, ஒப்பந் தத்தின்படி அகதிகளைப் பாலஸ்தீனத்திற்குள் அனுமதி யாது தடுத்துவைக்க ஒரு தந்திர நடவடிக்கையைக் கையாள்கிருர்கள் பிரிட்டிஷார். சைப்பிரஸ்தீவில் அகதி கள் முகாமில் அடைத்து வைத்திருக்கிருர்கள். விடுதலே இயக்கத்தின் தலைவன் அரிபென் கனன், முகாமிலிருந்து பத்து, பன்னிரண்டு, பதினேந்து வயதுடைய இளஞ் சிருர்கள் முந்நூறு பேரை பிரிட்டிஷ் இராணுவத்திற் குத் தெரியாது கப்பல் மூலம் கடத்துவதற்கு இரகசிய ஒழுங்குகள் செய்து முயற்சியில் ஒரளவு வெற்றி பெறு

யூதர்களின் விடுதவேப்போர் 吊】
கிருன். ஆனல் கப்பல் துறைமுகத்தை விட்டுப் பாலஸ் தீனத்திற்குப் புறப்படும் சமயம், செய்தி பிரிட்டிஷ் இராணுவத்தார்க்குத் தெரிந்துவிடவே, கப்பல் மேற் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்படுகிறது. கப் பலில் இருக்கும் தலைவனையும், இளஞ்சிருர்களேயும், அவர்க்கு உதவிபுரிவோரையும் கரைக்கு வரும்படி கட்டளேயிடுகிருன் இராணுவத் தளபதி, கப்பற் தலே வணுே கட்டளைக்குப் பணிய மறுத்து, தனது கப்பலே பாலஸ்தீனம் நோக்கிச் செல்ல அனுமதிக்குமாறு விநய மாக வேண்டுகிருன் வேண்டுகோள் நிராகரிக்கப்படு கிறது. சிருர்கள் உண்ணுவிரதம் இருப்பதெனத் தீர் மானிக்கிருர்கள். இந்தப் பரபரப்பூட்டும் செய்தி உல கின் பல்வேறு நாடுகளிலிருந்தும், அவ்விடம் வந்தி குந்த நிருபர்களால், பத்திரிகைகளுக்கு அனுப்பப்படு கிறது. சிருர்கள் சித்தம்குலையாது தொடர்ந்து உண்ணு விரதம் இருந்தமையால் ஒரு சிலர் மயக்க முறுகிருர் கள். பலரிடையே சோர்வு, அசதி கானப்படுகிறது. இதைப்பார்த்துக்கொண்டு கப்பலுக்குள் இருந்த பெரி யவர்களின் மனம் நெகிழ்கிறது. உறுதியில் தளர்ச்சி ஏற்படுகிறது. செவ் (ZBW) என்னும் உழவன் 'நான் ஒரு போர்வீரன்தான். ஆணுல் பச்சிளம் குழந்தைகள் பட் டினிகிடந்து சாவதை என்னுல் பார்க்கமுடியாது" என் கிருன் அதற்கு'இதே வயதுள்ள இளஞ்சிருர்கள் பாலஸ் தீனத்தில் போராடும் வீரர்களாக விளங்குகிருர்கள்" என அரி பதிலிறுக்கிருன் வேறு சிலரின் உரையாட லிலும் தளர்ச்சியும் சோர்வும் தென்படுவதைக்கண்ட அரி "நீங்களெல்லோரும் சரணுகதி யடையவா விரும்பு கிறீர்கள்" என ஆவேசமாகக் கேட்கிருன், நிசப்தம் நிலவுகிறது. டேவிட் என்பவனைப் பார்த்து 'நீ ஒன்றும் பேச வில்லேயே? உன் அபிப்பிராயம் என்ன?" என அரி வினவுகிருன் யூத வேதத்தில் ஆழ்ந்த அறிவுள்ள, பய பக்தி நிறைந்த அறிஞணுகிய டேவிட் எல்லோராலும் மதிக்கப்படுபவன். அவன் சொல்கிருன்.

Page 37
丘芷 காவைகிழார் கட்டுரைகள்
"60 இலட்சம் யூதர்கள் தாம் ஏன் மடிகிருர்கள் என் பதை அறியாது விஷவாயு அறைகளிலே மடிந்தார்கள். ஆளுல் இந்த எக்ஸ்சோடஸ் என்னும் கப்பலில் உள்ள நாம் முந்நூறுபேரும் உயிர் நீத்தால் நாம் ஏன் உயிர் நீத்தோம் என்பது எமக்குத் தெளிவாகத் தெரியும். உல கமும் அறிந்து கொள்ளும். இரண்டாயிரம் வருடங் களுக்கு முன்பு எமது தாய் நாட்டுக்கு நாம் சொந்தக் காரர்களாக விளங்கிய போது, ரோமர்களுடனும் கிரேக்கர்களுடனும் கடைசி ஒரு யூதன் மடியுமட்டும் போராடி நமது வீரமரபை நிலைநாட்டியிருக்கிருேம். இந்தக் கப்பலேவிட்டு வெளியேறி விருப்புடன் மீண்டும் கம்பி வேலிகளால் சூழப்பட்ட சிறைக்குள் போகத் தீர்மானிப்போமானுல் கடவுள் நம்பிக்கையை இழந்த வர்களாவோம்'. இவ் வீர உரைக்குப்பின்பு உண்ணு விர தம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனல் பிரிட்டிஷ் ராணுவமோ விட்டுக் கொடுக்க மறுக்கிறது. பிரிட்டி சாரின் பிடிவாத மனுேநிலையைக் கண்ட கப்பல் தலைவன் போராட்ட முறையை மாற்றி தமது கப்பலே பாலஸ் தினம் நோக்கிச் செல்ல அனுமதிக்கும் வரை நாளொன் றுக்குப்பத்துச் சிருர்கள் தற்கொலே செய்யத் தீர்மானித் திருப்பதாயும் கப்பலில் உள்ள கடைசிநபர் இறக்கும் வரை எதிர்த்தே தீருவோம் எனவும் கூறுகிருன். இதைக் கேள்வியுற்ற பிரிட்டிஷ் மேலிடத்தார் மிகவும் கலங்கு கின்றனர். அகில உலகமும் அக்கறையோடு கவனித் துக் கொண்டிருக்கும் போது தாம் விட்டுக் கொடுக் காது இருந்தால் தமது கெளரவம் பெருமளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, கப்பல் பாலஸ் தீனத்தை நோக்கிச் செல்ல அனுமதி வழங்குகிருர்கள். யூதச் சிருர்களின் உள்ள உறுதியும், தியாகமும் வெல்ல, கப்பல் பாலஸ்தீனத்தை நோக்கிச் செல்கின்றது.
காதற் கட்டங்களும் கணிசமான அளவு இருக்கின் றன. கிற்றி அரிபென்கனனேக் காதலிக்கிருள். இருபத்து
 
 
 
 
 
 

யூதர்களின் விடுதலேப்போர் 岳器
நான்குமணித்தியாநிலங்களும் இன்பத் தாயகத்தின் விடு தலை பற்றிய எண்ணம் குடிகொண்ட அவனது இத யத்தில் காதலுக்கு இடமேது? தான் எதிர்பார்க்கும் மென்மை உணர்வையும் இங்கிதத்தையும், தன் காத லனிடம் காணுது தவிக்கிருள் காதலி.
வனுந்தரமாக உள்ள பூமியை வளமுள்ள பூஞ் சோலையாக்க ஒவ்வொரு யூதனும் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்துகிருன் நாட்டைக்காக்க ஒரு கையில் துப்பாக்கியும் பொருளாதாரத்தைப் பெருக்க மறுகையில் ஏரோடும் காட்சியளிக்கிருன். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக ஒவ்வொரு துறையி லும் ஈடுபட்டு உழைக்கிருர்கள். சுதந்திர தாயகம் சுபீட்ச முறையில் பீடுநடை போடுகிறது.
இறக்கும் நிலையடைந்தாலும், பிறந்த மண்ணை, தாய்த் திருநாட்டைக் காக்கவேண்டும் என்ற உயரிய தத்துவத்தை சிறந்த இலட்சியத்தை, உரிமை வேட் கையை படிப்பவர்தம் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதியவைக்கிருர் நாவலாசிரியர்.

Page 38
岳4 காவைகிழார் கட்டுரைகள்
அன்னைத் தமிழுக்கு அரியாசனம் தந்த அண்ணு
'ஊருக்குழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் போருக்கு நின்றிடும்போதும் - உளம் பொங்கலிலாத அமைதி மெய்ஞானம்'
என மகாகவி பாரதி பாடியதற்கொப்ப அமரர் அண்ணு அவர்கள் சிந்தையனு ஒவ்வொன்றும் செந் தமிழ்க்கும், பிறந்த பொன்குட்டிற்கும் என இடையருது எண்ணி எண்ணி தொடர்ந்து தொண்டாற்றி, கொண்ட இலட்சியத்தை முழுமையாக அடையாவிட்டாலும் ஓரள வாவது அடைந்தார்.
சீர்திருத்தச் செம்மல்
அழகொளிரும் ஆங்கிலத்தில் மோனை மிளிரப் பேசிடவும் எழுதிடவும் ஆற்றல் பெற்ற அண்ணு, மற் றைய ஆங்கிலமோகம் கொண்ட தலைவர்களைப்போல தமிழைத் துறந்து, ஆங்கிலத்துக்கு ஆக்கம் தந்தவ ரல்ல. தனது தாய்மொழியும் தாய்நாடும் "தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலே தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற" பரிதாப நிலையை நினேந்து நினேந்து நாளும் உருகிஞர். தெளிந்த அரசியல் அறிவையும் பண்பட்ட உணர்வையும் ஊட்டினுலன்றி மக்கள் கிளர்ந்தெழுந்து நாட்டையும் மொழியையும் காத்திடப் போர்க்களத்தில் குதிக்கமாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்தமை யால்தான் முதலில் கருத்துப் புரட்சிக்கு வித்திட்டார். மக்கள் மனங்களிலே மண்டிக்கிடந்த மூடநம்பிக்கையை
\
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னத் தமிழுக்கு அரியாசனம் தந்த அண்ணு
யும், கண்மூடிக் கபோதிப் பழக்கவழக்கங்களையும் சாடி, சிந்தனை செய்யத்தூண்டி மக்களை எழுச்சி கொள் ளச் செய்தார். தமிழினத்தைப் பன்னெடுங்காலமாகப் பீடித்திருந்த அரசியல் விழிப்பின்மை, தாய்மொழிப் பற்றின்மை, தீண்டாமை போன்ற பிணிகளை அகற்ற இடையருது பேச்சு மூலமும் எழுத்து மூலமும் பணி யாற்றினுர்,
தனி ஒருவர் எத்துனே அறிவாற்றல் திறமையுடைய வராக விளங்கினுலும், உணர்ச்சித் துடிப்பும் கொள்கைப் பிடிப்பும் தூயசிந்தையும் நாட்டுப்பற்றும் மொழிப்பற் றும் கொண்ட இளைஞர்களின் ஒத்துழைப்பின்றி சமூக சீர்திருத்தத்தையோ அரசியல் விழிப்பையோ ஏற் படுத்த முடியாது என்பதை உணர்ந்து, செயலாற்றி செந்தமிழ்ச் செம்மல்களின் சிந்தைகளேக் கொள்ஐ கொண்டார்.
துணிவுமிகு தொண்டன்
மனமயக்கமும் தயக்கமும்தான் இயக்கத்திற்குத் தடையாக இருப்பன. அண்ணுவின் நெஞ்சத்தில் மயக் கமோ தயக்கமோ த8லகாட்டவில்ஜ. துணிவும், தெளி வும், கணிவும் அன்னுர் நெஞ்சத்தில் அல்லும் பகலும் அனவரதமும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. தொன் டர்க்கு ஒளிவிளக்காம் த8லவர் எனத் திகழ்ந்தார். அன் குரின் சிந்தை, சொல், செயலில் உண்மை ஒளிர்ந்தது.
ஆரம்பத்தில் கொண்ட கொள்கையை மக்கள் ஏற்க வில்லே என்பதற்காக, ஈழத்து இன்றைய தலைவர்க2ளப் போல மயக்கம்கொண்டு தயங்கி விரக்தி அடைந்தவ ரல்ல. தேர்தலில் தோல்வி கண்டபோதும் துணிவுடனும் தெளிவுடனும் அவர் தொடர்ந்து தொண்டாற்றிஞர். பல ஆண்டுகளாக இடையருப் பிரசாரத்தின் மூலம் தமது கொள்கையை மக்களுக்குத் தெளிவாக எடுத்து விளக்கினுர்,

Page 39
கரவைகிழார் கட்டுரைகள்
அருமைத் தம்பிகளின் அண்ணு
தான் கொண்ட இலட்சியத்தைத் தானடைய வாய்ப்புக் கிட்டாது விட்டாலும், தனக்குப் பின் வாழக் கூடியவர்கள் அடையவேண்டும், நாடும் மொழியும் வாழ வேண்டும் என்ற உன்னத எண்ணம் உந்த, அவரவர் அறிவாற்றல் திறமையை அறிந்து அரசியல் துறையி லும், கலைத்துறையிலும் பலரை அறிஞர்களாகவும், நாவலர்களாகவும், கலைஞர்கள் ஆகவும் உருவாக்கிஞர். அருள் உள்ளம் கொண்ட சான்ருேர்தான் மற்றவர்களே யும் வளர்த்து, தாமும் வளர்வார்கள், மற்றவர்கள் வளர்ந்து தம்மையும் மிஞ்சிவிடுவார்களோ என்ற அச் சம் - அறிவும் அடக்கமும் பொறுமையும் அஞ்சாமை யும் செயலாற்றும் திறமையும் கொண்ட அருளாளர் அகத்தில் தோன்றுவதில்லை. எனவேதான் பல இலட்சம் தம்பிமாரைக்கொண்ட பரம்பரையை உருவாக்கிய பாக் கியத்தைப் பெற்ருர் வலிவும் பொலிவுமிக்க புதியதோர் நடையையும் தமிழுக்குத் தந்தார்.
பெரியோரைப் பேனிய பெருந்தகை
சீர்திருத்தத் தந்தை பெரியாரையும், தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த மறைமலை அடிகளேயும், அரசியலிலும், தொழிற்சங்க இயக்கத்தி லும் இலக்கிய சமயத் துறைகளிலும் தமிழ்த் தொண் டாற்றிய திரு. வி. கலியாணசுந்தரஞரையும், கம்பராமா யணம், கந்தபுராணம் போன்ற காப்பியங்களின் பல நயங்களையும் அழகுதமிழில் அடுக்குத்தொடரில், அள்ளி அள்ளி ஈந்த சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளே அவர்களேயும் அண்ணு அவர்கள் பல சந்தர்ப்பங்களி லும் நன்றியுடன் போற்றியுள்ளார். நாட்டுணர்ச்சியும் மொழியுணர்ச்சியும் பொங்கிவழியும் கவிதைகளை ஈந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே நாடறியச்செய்த பெருமையும் அண்ணுவையே சாரும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னத் தமிழுக்கு அரியாசனம் தந்த அண்ணு புரட்சிக்கவிஞர் "தமிழாய்ந்தவன் தமிழ் முதலமைச் சன் ஆதல் வேண்டும்" எனப் பெரிதும் விழைந்து பாடி ஞர். அவர் விழைந்தது போலவே தமிழ் நாட்டின் தவப் பயனுய், தமிழை ஆய்ந்த, தகமைவாய்ந்த, தன்னேரில் லாத் தண்டமிழ்த் தலேவன் அண்ணு அவர்கள் முத லமைச்சராகி, வரலாற்றுப் பெருமைவாய்ந்த 'தமிழ் நாடு" தீர்மானத்தை நிறைவேற்றி, "மட்ருஸ் ஸ்ரேட்" என்ற ஆங்கிலப் பேரை மாற்றி அன்னைத் தமிழுக்கு அரியாசனம் தந்தார்.
மொழிப்போர்த் தலைவன்
இந்தி மொழி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்த்து 1938-ம் ஆண்டு தொட்க்கம் இட்ையருது போராடிவந் தார் அண்ணு. இந்தியைத் தமிழ்நாட்டில் முதலில் புகுத் திய ராஜாஜி அவர்களே இந்தியை எதிர்க்கும் அள விற்கு அண்ணுவினதும் தி. மு.க. வினதும் தொண்டு சிறந்தோங்கியது. பல கூறுகளாகப் பிரிந்து நின்று அரசியல் நடத்திய ஆதித்தனுரையும், சிலம்புச் செல்வ ரையும் இணைத்து, ராஜாஜியின் ஆசியூடனும் ஆதரவுட துணும் காங்கிரசைத் தமிழ் நாட்டில் படுதோல்விய்டையச் செய்த பெருமை அண்ணுவையே சாரும். கருத்துவேற் றுமை கொண்ட அரசியல் தலைவர்களுடனும் கண்ணிய மாகவே பழகிஞர். அரசியலில் நாகரிகத்தையும், பண் பையும் புகுத்தினுர், கசப்புணர்ச்சி கொண்டு காழ்ப் பைப் பெருக்க்வில்லே. தண்ணுெளி ஈந்த தலைவன்
தமிழின் புகழ் தரணியெங்கும் பரவும் வகையில், தமிழ் நாட்டில், பலரும் பாராட்டும் முறையில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடாத்தினர். தனது உடலின் உருவும் திருவும் அழிய ஊண் உறக்கமின்றி தொடர்ந்து தொண்டாற்றி தமிழுக்கு ஒளி ஈந்தார்.
கார் உள்ள அளவும், இந்தப் பார் உள்ள அள்வும், நீர் உள்ள அளவும், தமிழ்த் தாய் உள்ள அள்வும் தமிழர் நெஞ்சில் அண்ணு வாழ்வார்.

Page 40
58 கரவைகிழார் கட்டுரைகள்
சிந்தை கவர்ந்த மாந்தையும் வீரச் செம்மல் உலவிய வன்னியும்
1ழமை, பாரம்பரியம், பண்பாடு என்பனபற்றி எழுதுவதோ எடுத்துரைப்பதோ, புதுமைக்கு எதிரான செயல் என எண்ணுவோர் உளர். அவ்வண்ணம் எண் ணுவோர் வாழ்ந்திடும் தாய் நாடும் பழமையானது; அவர்களைப் பெற்றெடுத்த தாய்மாரும் பழமையில் ஊறியவர்கள். புதுமை பேசிப் புத்துலகம் சமைக்க புத்தெழுச்சி ஊட்ட, கருவுக்கு உரு தந்து, உயிராக்கி உலவவிட்ட பழமையை உதாசீனம் செய்வதோ, உத றித் தள்ளுவதோ அறிவுடைமையல்ல; பழமையிலிருந் துதான் புதுமை முகிழ்க்கிறது. அந்தப்புதுமை பொலி வுடனும் வலிவுடனும் திகழ்ந்து, உருவிலும் திருவி லும் சிறக்க ஊன்றுகோலாய், உறுதுணையாய் என்றும் உரிமையுடன் நிற்பது பழமைதான். அழகான மலர்த் தோட்டம் அமைத்து அழகும், மணமும் சுவையும் பயனும் பெற்றிட எமக்கு நிலம் வேண்டும்; அறம் தழைத்து அருள் பூக்க அன்பகலா நல்நாடு வேண்டும்
நமது ஈழநாட்டின் பண்டைய வரலாற்றைச், சிறப் பாகத் தமிழராண்ட நாட்டின் வரலாற்றை ஆராயும் போது மாந்தை எத்தகைய மாண் புடன் திகழ்ந்து மாநிலத்திற்கே கலங்கரை விளக்கமாக விளங்கியது என்ற உண்மையை உணர முடிகிறது. ஈழத்தின் தொன் மையை, பண்டைய வரலாற்றை அறிய விரும்புவோர் மாந்தை பற்றி ஆராய வேண்டும். தென்னிந்தியாவில் பூம்புகார், கொற்கை, தொண்டி, முசிறி முதலிய துறைமுகங்கள் எத்தகைய சீருடனும், சிறப்புடனும் திகழ்ந்தனவோ அத்தகைய சீருடனும், சிறப்புடனும் மாந்தைத் துறைமுகமும் விளங்கிற்று "இவ்வுலகிற்கே

சிந்தை கவர்ந்த மாந்தை 59
ஒரு பெரிய வாணிப நிலையமாக (Emporium) மாந்தை மாண்புடன் ஒளிர்ந்தது. பண்டைக்கால கிரேக்கர் மாந்தை மாநகரை பொலிஸ் மண்டி (Polis-Mundi) என் றனர். (பொலிஸ் மண்டி எனில் உலகின் நகரம் எனப் பொருள்) அது ஒர் உலக நகரமென்ற கருத்திலேயே அவ்வாறு அழைத்தனர். மாந்தைபற்றி சங்க இலக்கிய மாகிய அகநாநூற்றில் பின்வருமாறு மாமூலனுர் என் னும் சங்கப்புலவர் பாடியுள்ளார்.
"கன்னகர் மாந்தை முற்றத் தொன்னர் பணிதிறை கொணர்ந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிர மொடாம்ப லொன்றுவாய் நிறையக் குவை இ யன்றவண் ணிலந்தினத் துறந்த நிதியத்தன்ன’
(அகம் 127)
மாந்தை பற்றிச் சங்கப்புலவர் பரணரும் பின்வரு மாறு பாடியுள்ளார்.
**கந்தூம்பு வள்ளை யழற்கொடி மயக்கி வண்டோட்டு கெல்லின் வாங்குபீள் விரியத் துய்த்தலை முடங்கிருத் தெறிக்கும் பொற்புடைக் குரங்குளைப் புரவிக் குட்டுவன் மாந்தையன்ன வென்னலந் தந்து சென்மே”
(95.5 376)
மகாவம்சத்தில் மாந்தை “மகாதீர்த்த’ எனக் குறிப்
பிடப்பட்டுள்ளது. மாந்தைக்கே மாதோட்டம் என்ற இன்னுெரு பெயரும் வழங்கியது.
மாதோட்ட மன்னனின் ஆட்சிக்குட்பட்ட அரிப்பு என்னும் துறைமுகத்தில் முத்துக்குளிப்பு நடைபெற்

Page 41
60 கரவைகிழார் கட்டுரைகள்
றது. அங்கே எடுக்கப்பட்ட முத்துக்கள் தாமர வர்ணிகா” என அழைக்கப்பட்டன என்று வரலாற்ரு சிரியர் கூறுகின்றனர் சுந்தரமூர்த்தி நாயனுராலும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுராலும் பாடப்பெற்ற திருக்கேதீஸ்வரம் அருள் ஒளி உமிழ்ந்து கொண்டிருந் ததும் மாதோட்டத்திலேதான். மாதோட்ட மன்ன்ன் ஆண்டபோது இருந்த மாடமாளிகைகளும்; கூட கோபுரங்களும் மண்ணுேடு மண்ணுய் மறைந்து விட் டன. ஆணுல் சில ஆண்டுகளுக்கு முன் திருக்கேதீச் சரத்தில் அகழ்வாராய்ச்சி நடந்தபோது மண்ணுக்கடி யில் மாடமாளிகையின் செங்கல்லாலாகிய அத்திபாரத் தையும் சிவலிங்கத்தையும் காணக்கூடியதாக இருந் தது. அகழிகள் தூர்ந்துபோய்க் கிடந்தன. அங்கே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தையே திருக்கேதீச் சரத்தில் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார்கள்.
போர்த்துக்கேயர் ஈழத்தில் வந்திறங்கியபோது கிழக்கே திருக்கோணமலையிலிருந்து மேற்கே மன்னுர் மட்டும் வன்னிநாடு பரவிக் கிடந்தது. வன்னிநாட் டின் மேற்குப்பகுதியில் முன்பு மக்கள் நெருக்கமாகக் குடியேறியிருந்தார்கள். இப்பகுதிதான் இன்று மன்னுர் மாவட்டமென அழைக்கப்படுகிறது. இங்கேதான் பாடல்பெற்ற தலமாகிய திருக்கேதீச்சரமும் திகழ் கிறது. தூர்ந்துபோன குளங்களும் வாய்க்கால்களும் இன்று வாழ்விழந்த வனிதையர்கள் போல் காட்சியளிக் கின்றன. வன்னியில் இன்று பாய்ந்துகொண்டிருக்கும் ஆறுகளின் பெயர்கள் பின்வருமாறு: (1) பறங்கியாறு இது மன்னுரின் வடபால் உள்ள கடலுடன் சங்கம மாகிறது. (2) அருவியாறு அல்லது மல்வத்தை ஒயாபண்டைய நாளில் கடம்பநதி என அழைக்கப்பட்டது. இது மன்னுரின் தென்பால் அரிப்பு (சரித்திரப் பிர.

சிந்தை கவர்ந்த மாந்தை 6.
சித்திபெற்ற துறைமுகம்) அருகில் கடலுடன் கலக் கிறது. (3) மோதரகம ஆறு அல்லது மோர்க்கமான் ஆறு. (4) கனகராயன் ஆறு. (5) நாய் ஆறு. (6) பேர் ஆறு.
வன்னியில் கிறிஸ்துவுக்கு முன் இருந்த குளங் களின் பெயர்கள்: கட்டுக்கரைக்குளம், வவுனிக்குளம், பாவற்குளம். கிறிஸ்துவின் ஆரம்பகாலத்தில் இருந் தவை: பெரியகுளம், மாமடு, ஒலுமடு, கனகராயன் குளம், பண்டாரகுளம். பதினைந்து மைல் நீளமுள்ள கட்டுரைக்குளம் உலகத்திலுள்ள நீண்டகுளங்களில் இன்று நாலாவது இடத்தை வகிக்கிறது.
குளம், மடு, கேணி, ஒடை ஆகிய துளய தமிழ்ப் பெயர்களை இறுதியாகக் கொண்டே வன்னியின் பல இடங்களின் பெயர்கள் விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக பின்வருவனவற்றைக் கூறலாம்:- கனகராயன் குளம், மாமடு, நெடுங்கேணி, மருதோடை. வேறுசில இடங்கள் மரங்களின் பெயர்களைக் கொண்டு விளங்கு கின்றன. எடுத்துக்காட்டாக உள்ளவை:- புளியங் குளம், மருதமடு, நொச்சிக்குளம், பூவரசங்குளம், இரணை இலுப்பைக்குளம், விளாத்திக்குளம்,கருங்காலிக் குளம். வன்னிநாடு நீர்வளத்தாலும் நிலவளத்தாலும் சிறப்புற்று விளங்குகிறதென்ற உண்மையையும் நாட் டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு போன்றது என்பதையும் உணரவேண்டும்.
இத்தகைய சிறப்பும் பெருமையும் வாய்ந்த வன் னியை பண்டை நாளில் ஏழு குறு நில மன்னர்கள் ஆண்டனர் என்று வரலாறு கூறுகிறது. போர்த்துக் கேயர் இலங்கையின் பலபகுதிகளையும் கைப்பற்றி ஆட்சி செலுத்தினுர்கள். ஆணுல் வன்னிப்பகுதியை

Page 42
62 கரவைகிழார் கட்டுரைகள்
சுலபமாகக் கைப்பற்ற முடியவில்லை. நாளடைவில் சில வன்னி மன்னர்களை நயமாக ஆசைவார்த்தை கூறி அடிபணிய வைத்துவிட்டார்கள். பனங்காமம் மட்டும் அடிபணிய மறுத்துவிட்டது. போர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில் பனங்காமத்தைக் கைப்பற்றமுடியாது போய்விட்டது. பின்பு டச்சுக்காரர் காலத்தில் வன்னி யர்களின் இராசதானியாக விளங்கிய பனங்காமத்தை யாண்ட வன்னிமன்னன் கையிலைவன்னியன் அஞ்சா நெஞ்சத்துடன் ஆண்டுவந்தான். யாழ்ப்பாணம், மட் டக்களப்பு, மன்னர், நீர்கொழும்பு. கோட்டை, திருக் கோணமலை யாவும் டச்சு ஆட்சிக்கு அடிபணிந்து வரி செலுத்திக்கொண்டிருந்தன. பனங்காம மன்ன னும் திறைசெலுத்த வேண்டுமென யாழ்ப்பாணத்தை ஆண்ட டச்சுக்கவர்னர் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஒலை அனுப்பிக்கொண்டே இருந்தார். 17-ம் நூற்ருண் டில் வாழ்ந்த வீரகேசரி கயிலை வன்னியன் கவர்னரின் ஆணையை மீறி 12 ஆண்டுகள் வரிசெலுத்த மறுத்து நாட்டின் சுதந்திரத்தைப் பேணிக் காத்திருக்கிருன் திரு. சி. எஸ். நவரத்தினம் அவர்கள் எழுதிய (Vanni and the Vanniyas) என்ற ஆங்கில நூல் இதற்குச் சான்று பகர்கிறது.
“It was Thomas Van Rhee (1692-1697) the Dutch Governor who wrote “the Vanni rulers were standing with one foot on the Company's land and the other on the king's territory'. They were a constant source of irritation to the Dutch as they had been to the Portuguese. The Chiefs would not often pay their annual tribute of elephants and their land rents and some even would not appear at the annual durbar when they were summoned by governors. This was especially the case with Kayla Vanniya of Panamkamam who failed to appear before the Dutch Governor for twelve consecutive years'-

சிந்தை கவர்ந்த மாந்தை 63
"வீரம் என்பது வெற்றியிலும் பலத்திலும் மட்டுமே தங்கியிருக்கிறது என்ற குழப்பமான எண்ணம் நிலவி வருகிறது. வீரன் என்ற சொல் தியாகத்தையும் சாவையும் ஏன் தோல்வியையும் உள்ளடக்கியதுதான். வீரன் மக்களின் உள்ளத்தைத் தொடவேண்டும்’ இத் தகைய வீரனுக விளங்கிய கயிலைவன்னியனின் வீரம் தனித்தன்மை வாய்ந்தது. போர்த்துக்கேயரை எதிர்த்த சங்கிலிமன்னனைச் சிறைப்படுத்தித் தூக்கிலிட்டார்கள். ஆங்கிலேயரை எதிர்த்த பண்டார வன்னியனுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. ஆனல் கயிலைவன்னியன் ஆண்ட காலத்திலே அவனைச் சிறப்படுத்தமுடியாது போய்விட்டது. அதுமட்டுமல்ல கயிலைவன்னியன் 1878-ல் மாண்ட பின், பனங்காம மக்கள் தங்கள் வாரிசை, டச்சு அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் தாங் களே நியமித்தார்கள் எனவும், கயிலை வன்னியனுடைய பேரப்பிள்ளையினுடைய காலத்திலேதான் பனங்காமம் டச்சுக்காரர் ஆட்சிக்குட்பட்டது எனவும் சரித்திரம் சான்று பகருகிறது,
“When this fearless wealthy chief died in 1678, the Wanniyas appointed a successor without reference to the Dutch authorities. The Dag register of that time notes 'affairs in Jaffna as regards the Wanniyas had improved, for the obstinate Kayla Wanniya was dead and his grand nephew Kaysianar had succeeded him and sworn allegiance to the company'.
விடுதலை வேட்கை தணியாது மாற்ருன் தாள் பணி யாது பனங்காமத்தை ஆண்டு ஆதிபத்யதிக்காரர்களை எதிர்த்து, சுதந்திரத்தைப் பேணிப்பாதுகாத்த அரச கேசரி கயிலைவன்னியனை ஈழமக்கள், அகத்தில் உரிமை விளக்காக ஏற்றி, உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டும்.

Page 43
64 காவைகிழார் கட்டுரைகள்
‘தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனுள் பவர்க்கு”
- திருக்குறள்
இவ்விதம் அந்நியனை எதிர்த்து வளம் பல பெருக்கி அரசுரிமையை நிலைநாட்டிய அடலேரும் வன்னியரை ஈன்ற பெருமை மாண்புடைய மாந்தை மண்ணையே
Fr(guió.


Page 44


Page 45
எரிலே ஒருவராக நின று களம் கண்ட
இளம் வயதிலேயே அரசாங்க ே அவர் முடிவு செய்தபோது வாழ்கைச் விலவே. இதனுல் சிறிது துணுக்கு பிரச்சினேகளேயிட்டு அவரிடம் கதை திற்கு பணிய மறுத்ததினுல் 1964-6 ஓய்வில் அனுப்பியபோது வேறு தொ தமிழ்ப் பயிர் தழைத்தோங்க நாள் ப என்று குன்ருத உறுதியோடு பதி
யாருடைய சிபாரிசுமின்றியே=ஏன் ட்ைய "காவைகிழார் கவிதைகள்" நூலகங்களின் காங்கிரஸ் நிலையத்தி புலமையெனில் வெளி நாட்டோர் டும்." என்ற பாரதியின் வரைவிலக்க கரவைகிழார் வெளிநாட்டார் டே ஈழத்தமிழ் நாட்டார் போற்றுவர் என காவைகிழாரின் உயரிய இலட்சிய கிறது.
 

Iff ULI
கவிஞர் சுர வைகிழார் அவர்கள் தமிழ்த் தாயின் பாதார விநதவ எளிலே சூட்டியுள்ள நறுமவாகா ல. அவரின் நூலுருப் பெற்ற ஒவி பங்கள்."எழுதாக்கவிதை", "காவை கிழார் கவிதைகள்" எனற இரு வி  ைத நூல்களும் "தனியாத நாகம" என்ற வரலாற்று நாடக நூலும்-தற்பொழுது வெளிவருவது'சித்தம் அழகியார்' என்ற அவரின் கட்டுரைத் தொகுப்பு.
காவைகிழார் முத்தமிழ் வித்தகர். சிறந்த எழுத்தாளர், கவிஞர், - LYY TTTS STTTTLL SS tttLLLLLL L LL LLL LLLS அத்துடன் மொழி வழித் தொழிற் சங்க இயக்கத்தின் முன்னுேடிக - வீரருமாவர்.
சவையிலிருந்து 1970-ல் ஓய்வு பெற குே வேறு வழி அமைத்துக்கொள்ள ஏற்ற நிலையில் அவர் வாழ்க்கைப் த்தபோது "தனிச் சிங்களச் சட்டத் அரசாங்கமே என்னோக் கட்டாய ழில் வசதி இருக்கவில்லை. ஈழத்தில் சளேயாக முடிவு செய்து விட்டேன்" விறுத்தார்.
இவருக்கே தெரியாமலே-இவரு என்ற நூல் அமெரிக்காவிலுள்ள ல் இடம் பெற்றுள்ளது. "திறமான அதை வணக்கம் செய்தல் வேண் னத்திற்கு இலக்கியமாகி விட்டார் ாற்றும் காவைகிழாரை நிச்சயம ா நம்புகிறேன். சித்தம் அழகியார்
உள்ளத்தை வெளிக்காட்டி நிற்
செ. கோடீசுவரன்