கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல்: மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள்பார்வை நோக்கி

Page 1
GILI6ÖIB6ÍI 9 slát D fl6ning,6ITITF - மனித உரிமை
fiTT606
काो@6७ा தமிழாக்கம்: சித்திர
பெண்களுக்கெதி அபிவிருத்திக்
றொக்ஸான தமிழாக்கம்: கந்தை
சமூக விஞ்ஞா 19
 
 
 

மைகளை மனித அங்கீகரித்தல் கள் பற்றிய ஓர்
நோக்கி.
ட் பஞ்ச் லேகா மெளனகுரு
ரான வன்முறை கு ஓர் தடை
T :STrfGulf நயா சர்வேஸ்வரன்
魏
鑫
னிகள் சங்கம் 25

Page 2

பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல்
மனித உரிமைகள் பற்றிய ஓர்
மீள்பார்வை நோக்கி.
சார்லொட் பஞ்ச் தமிழாக்கம்: சித்திரலேகா மெளனகுரு
பெண்களுக்கெதிரான வன்முறை அபிவிருத்திக்கு ஓர் தடை
GprtésmoT6OTT STrfGurt தமிழாக்கம்: கந்தையா சர்வேஸ்வரன்
சமூக விஞ்ஞானிகள் சங்கம் 1995

Page 3
கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதி ஆதரவில் வெளியிடப்பட்டது.
Printed by Karunaratne & Sons Ltd. Colombo 10.

பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல்
- மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள்பார்வையை நோக்கி.
பெண்களாக இருக்கும் காரணத்தாலேயே உலக சனத்தொகை யில் குறிப்பிடத்தக்க பகுதியினர் சித்திரவதை, பட்டினி, பயங்கரவாதம், உளரீதியான பாதிப்பு, அங்கவீனம், கொலை ஆகியவற்றுக்குக் கிரமமாக ஆளாகின்றனர். ஆனால் பெண்களைத் தவிர வேறு எவரும் இத்தகைய வன்முறைகளுக்கு ஆளானால் அது அவர்களது மனித உரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தல் எனவோ, சிவில், அரசியல் நெருக்கடிநிலை எனவோ கூறப்படும். பெண்களது மரணங்கள், அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்குத் தெளிவான பதிவு இருந்தும் பெண்களது உரிமைகள் மனித உரிமைகளாக வகைப்படுத்தப்படுவதோ புரிந்து கொள்ளப்படுவதோ இல்லை. பெண்களது வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களை சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்பதை இது காட்டுகிறது. பெண்களைப் பொறுத்தவரை இது பாதகமான விளைவுகளைக் கொண்டிருப்பதால் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பிரச்சினைக்குரியதாக விளங்குகிறது. பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாக ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை? பெண்கள் உரிமை களும் மனித உரிமைகளும் வேறு வேறான விடயங்களாகக் கருதப் படுவதனால் எழும் கொள்கைத் தாக்கங்கள், இதன்ை மாற்று வதற்குக் கையாளக்கூடிய அணுகுமுறைகள் ஆகியவைபற்றி இக் கட்டுரை ஆராய முயல்கிறது.

Page 4
பெண்களின் மனித உரிமைகள் பல வகைகளில் மீறப்படுகின்றன. அரசியல் ஒடுக்குமுறைக்கு ஆண்கள் உள்ளாவது போன்று பெண்களும் ஆளாகின்றனர். இவ்வாறான நிலைமைகளில் பிரச்சினை தெட்டத்தெளிவாகிறது. ஏனெனில் அரசியலில் தீவிர பங்கெடுப்பவராக ஆண்களே கருதப்படுகின்றனர். பெண்களது மனித உரிமைகள் மீதான பெருமளவு துஷ்பிரயோகங்கள் அவர்கள் பெண்களாக இருப்பதனால் இட்ம்பெறுபவையாகும். பெண் அரசியல் கைதிகளும், ஒடுக்கப்படும் இனக்குழுக்களின் பெண் அங்கத்தவர் களும் பெரும்பாலும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளா கின்றனர். பொதுவான அவர்களது மனித உரிமைகள் மீறப்படு வதுடன் இது மேலதிகமாக நடைபெறும் ஒரு உரிமை மீறலாகும். இங்கு பெண்களின் பால்நிலை என்பது அவர்களது உரிமை மீறலுக்கு முதன்மையான அல்லது தொடர்பான காரணி எனவே நான் கருதுகின்றேன். ஏனெனில் இந்த அம்சம் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மனித உரிமைகளுக்கு மாபெரும் சவாலாகவும் விளங்குகிறது.
உலகம் முழுக்கப் பொருந்தக் கூடியவை எனக் கருதப்படும் சில ஒழுக்கவியல் நோக்குகளில் ஒன்றாக மனித உரிமை என்ற கருத்தாக்கம் விளங்குகிறது. எனினும் அதன் சகல அம்சங்களும், முழுமையாகச் சர்வதேசரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆயினும் இக்கருத்து பெரும்பாலோர் மத்தியில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.பால்ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்வாகப் பயன்படக்கூடிய ஒரு அம்சமாகப் பலராலும் கருதப்படுகிறது. மேலும் உலகமெங்கிலுமுள்ள மக்களின் வாழ்க்கை பற்றிய அக்கறை பற்றியும், நாடுகளுக்கிடையில் கூட்டாக நடைபெற. வேண்டிய செயல்களின் அவசியம் குறித்தும் பேசுகின்ற ஒருசில சித்தாந்தங்களில் இதுவும் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபை 1949ம் ஆண்டு நிறைவேற்றிய மனிதஉரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனம் இந்த உலக நோக்கின் குறியீடாக விளங்குவதுடன் மனித உரிமைகள் என்பதை மிகவும் பரந்தமுறையில் வரையறுக் கிறது. பெண்களைப்பற்றி அதிகம் கூறாவிடினும் இதன் இரண்டாவது சரத்து "இனம், நிறம், பால், மொழி, சமயம், அரசியல் கருத்து, தேசிய அல்லது சமூகத் தோற்றுவாய், சொத்து, பிறப்பு அல்லது வேறு அந்தஸ்து ஆகியவற்றில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இன்றி இப்பிரகடனத்தில் தெரிவிக்கப்படும் உரிமைகளும் சுதந்திரங்களும் அனைவருக்கும் உரியதாகும்” எனக் கூறுகிறது.
 

பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலை காரணமாக எழும் பிரச்சினை களை கவனத்திற்கு எடுப்பதற்கு வழிவகுக்கும் என்க் கருதியே பால் என்ற பகுப்பையும் இப்பிரகடனத்துள் சேர்த்துக் கொள்ளுமாறு எலினோர் ருஸ்வெல்டும், லத்தீன் அமெரிக்கப் பெண்களும் மிகவும் வற்புறுத்தினர்.
1949ம் ஆண்டு முதல் உலக அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட ஒன்றாக, மனித உரிமைகள் பற்றிய பல்வேறு வியாக்கியானங்களை உலக சமூகம் விவாதித்து வந்துள்ளது. எனினும் பால் சம்பந்தமான பிரச்சினைகளையிட்டு சிறிதளவே பேசப்பட்டுள்ளது. பெண்களது பிரச்சினைகள் அதிகம் உள்ளடக்கப்படாததையிட்டு சமீப காலத்திலேயே மனித உரிமைபற்றிய நோக்கு நிலைக்குப் பல சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும் உயிர்ப்புள்ள சகல நோக்குகளைப் போலவே மனித உரிமைகளும் எந்தக் குழுவினதும் ஆதனமாகவும் அமையவில்லை. அத்துடன் அது மாறாத ஒரு கருத்தும் அல்ல. ஆனால் மனிதர் தமது தேவைகளையும் நம்பிக்கைகளையும் மீள் உருவகிப்பதற்கு ஏற்றவாறு அதன் கருத்து விரிவடையக் கூடியதாகும். இந்நோக்குடனே பெண்நிலை வாதிகள் பெண்களது தாழ்த்தப்பட்ட நிலை, உரிமைமீறல் ஆகியவை பற்றிக் கவனம் செலுத்துவதற்காக மனித உரிமைகள் பற்றி மறுவியாக்கியானம் செய்யத் தொடங்கினர். பெண்களது பிரத்தியேக மான அனுபவங்களைப் புறந்தள்ளி வைத்திருக்கும் மனித உரிமைகள் பற்றிய பாரம்பரிய அணுகுமுறையை பெண்கள் மேலும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் அவர்களது அனுபவங்களைச் சேர்க்க வேண்டும். அத்துடன் பெண்கள் வாழ்க்கை பற்றி அதிக கரிசனை கொள்ளும்படி எமது கலாச்சாரங்களில் மனித உரிமைகள் பற்றிய கருத்தையும் நடைமுறையையும் மாற்றவும் வேண்டும்.
மனித உரிமைகளுடன் பெண்களின் உரிமைகளைத் தொடர்பு படுத்துவதற்கான முயற்சியில் நான்கு அடிப்படை அணுகுமுறை களை நான் அவதானித்துள்ளேன். இவைபற்றி இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் விளக்கமளிக்கிறேன். எனினும், 'மனித உரிமைகளாகப் பெண்களின் உரிமைகளைக் கருத்திற் கொள்வது ஏன் மிகவும் கடினமானது என்றும், ஏன் அது மிகவும் முக்கியமானது என்றும் முதலில் நான் ஆராய்கிறேன்.

Page 5
வார்த்தை ஜாலங்களுக்கு மேலாக அரசியல் தாக்கங்கள்
பெண்கள் சமத்துவத்தை ஒரு அடிப்படையான மனித உரிமையாக மிகச் சில அரசாங்கங்களே தமது உள்நாட்டு அல்லது வெளிநாட்டுக் கொள்கைகளில் சேர்த்துக் கொண்டுள்ளன ஒரு நாட்டின் மனித உரிமைகள் நிலைமைகளைப் பொறுத்தே நிதி உதவி, வர்த்தகம் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படு வதாகக் கூறப்படும் போதும், தமது பெண்களை அந்தந்த நாடுகள் நடத்துவதைப் பொறுத்து எந்த அரசாங்கமும் தமது கொள்கைகளை வகுப்பதில்லை. அரசுசார்பற்ற நிறுவனங்கள் பெண்களுக்கு தமது திட்டங்களில் முதன்மை அளிப்பது மிக அரிதாகவேயுள்ளது. சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் திகதி நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற பிரச்சினைகள் அக்கறைக்கு எடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. அரசாங்கங்களையும், மனித உரிமை ஸ்தாபனங்களையும் பெண்களது உரிமைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டும்போது, அவ்வாறு செய்ய முடியாது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பின்வரும் முறையிலேயே அக்காரணங்கள் அமைவதை நோக்கலாம். 1) பால்ரீதியான பாரபட்சம் மிக அற்பமான ஒரு விடயமாகும், அது முக்கியமானதல்ல. உயிர்வாழ்தல் தொடர்பான பாரிய பிரச்சினைகளுக்குப் பின்னாகவே இது இடம்பெற வேண்டும். 2) பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மனவருத்தத்திற்குரியவைதான் எனினும் அவை கலாசார, தனிப்பட்ட, தனிநபர் பிரச்சினைகளே ஒழிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசியல் விடயம் அல்ல. 3) பெண்கள் உரிமைகள் முற்றிலும் மனித உரிமைகள் அல்ல. 4) பெண்கள் மீதான் துஷ்பிரயோகம் அங்கீகரிக்கப்படும்போது அது தவிர்க்க முடியாதது என்றோ அதுபற்றிக் கவனம் செலுத்துவது ஏனைய மனிதஉரிமைப் பிரச்சினைகளை மேவிவிடும் என்றோ கூறப்படும். இத்தகைய கருத்துக்களை ஆராய்வது மிக முக்கியமானதாகும்.
குடியியல், அரசியல் உரிமைகளை அரசு மீறுதல்என மேற்குலகில் மனித உரிமையை மிகக்குறுகிய முறையில் வரையறுப்பதே பெண்களது உரிமைபற்றியும் அக்கறை கொள்வதற்குத் தடையாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலோ கம்யூனிஸ்டுகள் கையில் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் என மேலும்
 

மனிதஉரிமைகளின் வரைவிலக்கணம் குறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய கம்யூனிஸ்ட் நாடுகளில், உதாரணமாக ருமேனியாவில் பெண்களைக் கட்டாயமாகக் கருவுறச் செய்தல் போன்ற பாரதூரமான பெண்களுக்கெதிரான குற்றங்களை மனிதஉரிமை மீறல்களாகக் கணிக்கவில்லை. பெண்களது உரிமைகளில் சில முக்கியமான அம்சங்கள், குடியியல் உரிமைகள் என்ற பகுப்பினுள் அடங்குமாயினும் பெரும்பாலான துஷ்பிரயோகங்கள் பெண்களை ஒடுக்குகின்ற சமூக பொருளாதார முறையின் பகுதியாகவே அமைந்துள்ளன, இவற்றை முற்றிலும் அரசியல் ரீதியானவை எனவோ அரசினால் மேற்கொள்ளப்படுபவை எனவோ கூற முடியாது. மனித உரிமைகளில், பின்னர் சேர்த்துக்கொள்ளப் பட்டவையாகிய உணவு, இருப்பிடம், தொழில் ஆகியவற்றுக்கான உரிமைகள் (இவை சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன) பெண்களது அக்கறைகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு முக்கியமானவையாகும். பெண்களது உரிமை மீறலுக்கு அரசு பொறுப்பல்ல என்ற எடுகோளானது, அத்தகைய மீறல்களுக்குத் தனிப்பட்ட பிரஜை காரணமாயிருந்தாலும் அரசே அவற்றை அங்கீகாரம் அளிக்கிறது என்ற உண்மையைப் புறக்கணித்து விடுகிறது. அரசின் பொறுப்பு குறித்து பின்னர் கூறுவேன். இப்போது, பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளில் அடங்காது என்ற கருத்துக்கு மாற்றாகச் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
பெண்களது உரிமைகள் பற்றி வஞ்சகம் மிக்க ஒரு பொய்மை என்னவெனில் அவை வாழ்வின் ஏனைய அம்சங்களுடன் ஒப்பிடும் போது அற்பமானவை என்பதாகும். உண்மையில் பால்ரீதியான பாரபட்சம் கொலை செய்யுமளவு மோசமானதாகும். பெண்ணா யிருப்பது உயிர் அச்சம் தருவது என்பதற்குப் பல ஆவணப்படுத்திய சான்றுகள் உள்ளன. கீழே சில உதாரணங்களைத் தந்துள்ளேன்:
பிறப்புக்கு முன் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதற்கு அமினோசென்டிஸிஸ் எனும் ஒரு சோதனை முறையைக் கையாண்டு பெண்கருக்களைக் கலைக்கும் முறை இந்தியாவில் உள்ளது. பம்பாயில் 99 சதவிகித பெண் கரு அழிக்கப்படுகிறது. இயற்கையான பிறப்பு விகிதத்தின்படி ஆண்களைவிடப் பெண்களே அதிகளவு பிறக்கக்கூடியதாயிருப்பினும் சீனாவிலும் இந்தியாவிலும் ஆண்குழந்தைகளே அதிகளவு பிறக்கின்றன.

Page 6
பிள்ளைப்பருவத்தில் பெரும்பாலான நாடுகளில் பெண்பிள்ளை களுக்கு குறைவாகவே உணவூட்டப்படுகிறது. சிறிதுகாலமே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. குறைந்தளவிலேயே மருத்துவ வசதி கிடைக்கிறது. இதனால் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெண்பிள்ளைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
வளர்ந்தபின் பெண்களுக்குத் தமது இனப்பெருக்கத்தில் எத்தகைய உரிமையும் இல்லாமை-வறுமையும், மோசமான சுகாதார நிலைமைகளும் காணப்படும் சூழலில் பெண்கள் தமது தேர்வுஇன்றி இனப்பெருக்கம் செய்யவேண்டிய நிர்ப்பந்தமானது உயிராபத்து விளைவிப்பதாகும். லத்தீன் அமெரிக்காவில் 15க்கும் 39க்கும் இடைப்பட்ட வயதுப் பெண்களின் மரணத்திற்கு சட்டபூர்வமற்ற கருச்சிதைவு முன்னணிக் காரணியாக விளங்குகிறது.
பால்ரீதியான பாரபட்சம் தினமும் பெண்களைப் பாதிக்கிறது. இனம், வர்க்கம் மற்றும் வேறு வகையான ஒடுக்குமுறைகளுடன் சேரும்போது இத்தகைய பாரபட்சம் பெண்களது உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் உலைவைத்து விடுகிறது. பெண்கள் மீதான மிகவும் வக்கிரமான துஷ்பிரயோகங்களாக மனைவியரை அடித்தல், சிறுபிள்ளைகளுடன் உடலுறவு, பலாத்காரம், சீதனக் கொலை, பிறப்புறுப்பைச் சிதைத்தல், போன்றவை விளங்குகின்றன. வர்க்கம், வயது, இனம்,தேசம் ஆகிய வேறுபாடின்றி இத்தகைய வன்முறைகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக பிலிப்பைன்சில் அமெரிக்க இராணுவத் தளங்களைச் சுற்றியுள்ள விபசார விடுதிகளில் உள்ள வறிய பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை, இனவாதம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள் உடல் மோசமான முறையில் வக்கிரமான பாலியல் செயல்களுக்கு உள்ளாக்கப்படுகிறது.
உளரீதியாகப் பெண்களுக்கு எதிரான வன்முறை மிக அதிகமான தாகும் என்பதை அங்கொன்றும் இங்கொன்றுமான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அமெரிக்காவில், வளர்ந்த பெண்கள் காயமடைவதற்கு அடித்தல் பிரதான காரணியாக விளங்குகிறது. ஆறு நிமிடங்களுக்கு ஒரு தடவை பலாத்காரம் நிகழ்கிறது.
 

7
பெரு நாட்டில், பொலிசாருக்குக் கொடுக்கப்படும் குற்ற முறைப்பாடுகளில் 70சதவிகித பெண்கள் தமது கணவர் அல்லது காதலரால் தாக்கப்படுவது தொடர்பானதாகும். ஏழு மில்லியன் சனத்தொகையுடைய லிமாவில், 1987ம் ஆண்டு 168,970 பலாத்காரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், 10 மனைவியருக்கு 8 பேர் வீட்டில் அடிக்கப்படுவது போன்ற ஏதாவது ஒருவகை வன்செயலுக்கு உள்ளாகின்றனர். இவர்களில் மேலும் அதிர்ஷ்டம் குறைந்தவர்களைக் கணவர்கள் தாம் மீண்டும் திருமணம் செய்து புதிதாகச் சீதனம் பெற வேண்டும் என்பதற்காக கொலை செய்துவிடுகின்றனர்.
பிரான்சில், வன்முறைக்கு இரையாகுவோரில் 95 சதவீதம் பெண்களாவர். இவர்களில் 51 வீதம் காதலர்களாதோ, கணவர்களாதோ வன்செயலுக்கு உட்படுகின்றனர். மேலும் பங்களாதேஷ், கனடா, கென்யா, தாய்லாந்து போல் பலதரப்பட்ட நாடுகளிலும் 50விகித பெண் கொலைகள் குடும்பங்களுக்குள்ளேயே நடைபெறுகின்றன.
பதிவு செய்யப்பட்டவற்றிலிருந்து நோக்கும்போது 40 - 80சதவீத பெண்கள் வீட்டில் அடிக்கப்படுவதானது பெண்களைப் பொறுத்த வரை வீடு வன்முறையும், குரூரமும் நிறைந்த மிக அபாயகரமான இடம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அமெரிக்க பொஸ்டன் நகரில் இடம்பெற்ற கரோல்ஸ்ரூவட் கொலை தெளிவுபடுத்துவதைப் போல அமெரிக்காவில் நிலவும் இனவாத பால்வாதக் கருத்துக்கள் பெண்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை மூடிமறைத்து விடுகின்றன. மசசூசெட்டில் ஒவ்வொரு 22 நாட்களுக்கும் ஒரு பெண் கொலை நிகழ்கிறது. மேற்கூறிய எண்ணிக்கைகள் பெண்களுக்கு எதிரான வன்முறையின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தவில்லை. உண்மையில் பெரும்பாலான வன்முறைகள் மறைவாகவே நடைபெறுகின்றன. எனினும் இவ்வன்முறைகள் உலகின் முக்கிய மானதோர் முரண்பாடு அல்லது நெருக்கடிநிலை என அங்கீகரிக் காமல் இதனைத் தனிப்பட்டவரது பிரச்சினை எனவோ அல்லது கலாச்சார அம்சம் எனவோ கூறி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
“சுதந்திரம், கெளரவம், நடமாடுதல் போன்றவற்றிற்கு எதிரான கட்டுப்பாடுகளும், ஒரு நபருக்கு உரிமைகளை மறுத்தலும் வன்முறையும் அச்சுறுத்தலுமாகும். எனினும் பெண்களுக்கு எதிரான

Page 7
வன்முறைகளுக்கு உள்ளவோரின் தொகை சர்வதேச மன்னிப்புச் சபையால், குற்றத்துக்கு உள்ளானோர் என வெளியிடப்படும் எண்ணிக்கையை விட எவ்வளவோ அதிகமானதாகும்.இத்தகைய வன்முறைகள் பகிரங்கமாகவே பொறுத்துக் கொள்ளப்படுகின்றன. சட்டத்தின்படி இவற்றுள் சில வன்முறைகள், குற்றங்கள் அல்ல; வேறும் சில, வழக்கமான நடைமுறைகள் என நியாயப்படுத்தப் படுகின்றன. அத்துடன் பல வன்முறைகளுக்கு குற்றத்துக்கு இரையானோரே காரணம் எனக் கூறப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையானது மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தின் குறுகிய தன்மையையும் பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தின் அரசியல் தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. லொரிஹெய்சே கூறுவது போல "இவை இடைக்கிடை நடைபெறும் வன்முறைகள் அல்ல; பெண்களாயிருப்பதே ஆபத்துக்கு உரிய விடயம்". பெண்கள் தமது பால்நிலை காரணமாகவே வன்முறைக்கு உள்ளாகின்றனர். இந்த வன்முறையினூடு அதிகாரம் தொடர்பான ஒரு செய்தியே வெளிவருகிறது. "உனக்குரிய இடத்தில் இரு அல்லது பயப்படு” என இது கூறுகிறது. தனிப்பட்டது அல்லது கலாச்சாரரீதியானது என்பதற்கு முரணாக இத்தகைய வன்முறை அரசியல் ரீதியானது என்பதே உண்மையாகும். அதிகாரம் ஆதிக்கம் ஆகியவற்றுடன் தொடர்பான ஆண் பெண்ணுக்கிடையிலான அமைப்பு ரீதியான உறவுமுறைகளின் விளைவாக இது ஏற்படுகிறது. வீடு, வேலைத்தளம், ஏனைய பொது இடங்களில் இத்தகைய அதிகாரரீதியான உறவுகளை நிலைநிறுத்துவதற்கு பெண்களுக்கு எதிரான வன்முறை அத்தியாவசியமாய் அமைந்துள்ளது.
மனித உரிமைகள் நிரலிலிருந்து பாலியல் பாரபட்சத்தையும், பெண்களுக்கு எதிரான வன்முறையையும் விலக்கி வைப்பதானது பெண்ணொடுக்கு முறையை அரசியல் ரீதியானதாகப் பார்க்கத் தவறுவதன் விளைவாகும். பெண் அடிமைத்தனமானது ஆண் ஆதிக்க நலன்கள், கருத்து நிலை, நிறுவனங்கள் ஆகியவற்றால் நிலைநிறுத்தப்படும், அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட யதார்த்தம் என்பதற்குப் பதிலாக, அது இயற்கையானது, தவிர்க்க முடியாதது என்ற கருத்தே இன்னும் நிலவுகிறது. ஆனால் ஆண்கள், பெண்களைத் துஷ்பிரயோகம் செய்தல் தவிர்க்க முடியாதது, இயற்கையானது என்பதை நான் நம்பவில்லை; அது ஆண்கள் பற்றிய ஒரு குறுகலான பார்வையாகும். அரசியல்ரீதியாக உருவாக்
 

கப்பட்ட யதார்த்தங்கள் என இவை விளங்கிக் கொள்ளப்படின், அந்த அமைப்பைக் கட்டுடைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கு மிடையே நீதியான ஒரு உறவுமுறையை உருவாக்குவதை எண்ணிப் பார்க்க முடியும்.
பெண்களது மனிதஉரிமைகள் எனக் கூறப்படும் அரசியல் போராட்டத்தின் பெளதீக எல்லை பெண்களது உடலாகும். பெண்களது உடல் மீதான கட்டுப்பாட்டைப் பெண்களுக்கே அளிக்க வழிவகுக்கும் சட்டங்கள், சமூக மாற்றங்கள் ஆகியவற்றுக்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பின் தீவிரமானது, பெண்கள் மீது நிலவும் அதிகாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இனப்பெருக்க உரிமைகள், எதிர்ப் பால் அல்லது ஒரே பாலின ருடனான உறவுக்கான பாலியல் சுதந்திரம், திருமண வாழ்க்கையுள் இடம்பெறும் பலாத்காரத்தை குற்றம் என அங்கீகரித்தல் போன்றவை தொடர்பான சட்டங்களுக்கே மிகத் தீவிரமான எதிர்ப்பு நிலவுகிறது. இனப்பெருக்க உரிமைகளை மறுத்தலானது பெண்களுக்கு மேலான அதிகாரத்தை நிலைநாட்டும் ஒரு அரசியல் கருவியாக அமைவதுடன் பாரம்பரியப் பால்நிலைப் பாத்திரங்களை வலியுறுத்துகின்றது. இது மனித உரிமைகள் தொடர்பான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. பெண்களது உடல்ரீதியான துஷ்பிரயோகம் மனித உரிமை மீறல் களின் ஏனைய வடிவங்களான அடிமைப்படுத்தல், நிர்ப்பந்தமான விபசாரம், பாலியல் பயங்கரவாதம் (பலாத்காரம்) சிறைப்படுத்தல் (வீட்டில் தனிமைப்படுத்தி வைத்தல்) சித்திரவதை (அடித்தல்) ஆகியவற்றுடன் சேர்ந்து நடைபெறுகிறது. சில நிகழ்ச்சிகள் மிகத் தீவிரம் வாய்ந்தன. உதாரணமாகத் தாய்லாந்து விடுதிகளில் கட்டிலுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த பெண்கள் விடுதி தீப்பற்றியபோது தப்பிச் செல்ல முடியாது இறந்தனர். கெளரவமான கல்வி, தொழில் ஆகியவற்றுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதால் பெண்கள் விருப்பமற்ற திருமணம், சுரண்டல்தன்மை வாய்ந்த தொழில், விபசாரம் ஆகியவற்றுள் தள்ளப்படுதல் சர்வசாதரணமாக நடைபெறும் நிலைமைகளாகவே பல விளங்குகின்றன.
இது பெண்களது மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள பொறுப்பு பற்றிய வினாக்களை எழுப்புகின்றது. தனிப்பட்டதும் பொதுவானதும் என்ற இரு நிலைப்பட்ட விடயங்களுக்கிடையிலான முரண்பாட்டை பெண்நிலைவாதிகள் எடுத்துக் காட்டியுள்ளனர். அரசாங்கங்கள் குடும்பத்திலும் கலாச்சார தளத்திலும் பல விடயங்

Page 8
O
களைக் கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக அடிமைநிலை, இனரீதியான பாரபட்சம், பிளவு போன்றவை தென் ஆபிரிக்காவிலும் அமெரிக்காவின் தென்பகுதியிலும் போன்று அரசு அல்லாத வேறு சக்திகளினால் தனிப்பட நடைமுறைப்படுத்தப்படினும் அல்லது கலாச்சார மரபுகள் எனக் கூறப்படினும் மனித உரிமைச் செயல் வாதிகள் அவற்றைத் தடுப்பதற்காக அரசாங்கங்களைக் கோருகின் றனர். உண்மையாக வினாக்கள் யாதெனில் நியாயமான மனித உரிமைகள் எவை என்பதும் அவற்றில் அரசு எதற்காக எவ்வளவு தூரம் தலையிட வேண்டும் என்பவை தொடர்பானவையாகும்.
எவை தனிப்பட்ட நடைமுறைகள் என்பதும் தனிப்பட்டவை எனப் பாதுகாக்கப்பட வேண்டியவை அல்லது குடும்ப சுயாதீனம் எவை என்பதுமே இங்கு கவனிக்க வேண்டியவையாகும். குறிப்பிட்டுச் சொன்னால் குடும்பத்துள் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களான ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பிறப்புறுப்பைச் சிதைத்தல், மனைவியரை அடித்தல் போன்றவை மனித உரிமைக் கோட்பாடு, நடைமுறை ஆகியவற்றுள் அடங்க வேண்டுமா என்பதே பிரச்சினையாகும். ஏனைய பல கோட்பாடுகளைப் போல மனித உரிமைக் கோட்பாடுகளினதும் அடிப்படையான பிரச்சினை, இவற்றுக்குரிய அளவுகோல்கள் ஆண்களை மையமாக வைத்தே வரையப்பட்டிருப்பதாகும்.
உலகரீதியாகப் பெண்கள் மீது திணிக்கப்படும் குரூரமான துன்புறுத்தல்களைப் பற்றி அக்கறை செலுத்தும் வகையில் மனித உரிமைச் சமூகமானது ஆண்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட கோட்பாடுகளை மாற்ற வேண்டும். சகல மனித, உரிமைக் குழுக்களும் தமது பணியின் திசையை மாற்ற வேண்டு மென்பது இதன் அர்த்தமல்ல. ஆயினும் இவற்றிலுள்ள ஆணாதிக்கச் சார்பு நிலையைப் பரிசீலிப்பதும், பெண்களது உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரிப்பதும் முக்கியமானதாகும். அரசியல்ரீதி யாகவும், கலாச்சார ரீதியாகவும் பெண்கள் மீது தொடுக்கப்படும் யுத்தத்தை அரசாங்கங்கள் நிலைநிறுத்துவதைத் தொடர்வதைத் தவிர்த்து அவற்றை முடிவுக்குக் கொண்டுவர முயலவேண்டும். பெண்களது உரிமைகள் தமது நாட்டு எல்லைகளுக்குள் மீறப்படு வதில் தலையிடுவதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் பொறுப்பேற்ப தோடு ஏனைய நாடுகளில் இத்தகைய உரிமை மீறல்களில் ஈடுபடும் சக்திகளுடன் இணைவதையும் தடுத்தல் வேண்டும்.
 

11
செயற்பாட்டினை நோக்கி: நடைமுறைரீதியான அணுகுமுறைகள்
மனித உரிமைகள் என வகைப்படுத்தப்படுபவை வார்த்தைகளை விட மேலானவையாகும். ஏனெனில் இவை நடைமுறைரீதியான கொள்கைத் தாக்கங்களைக் கொண்டுள்ளன. மனித உரிமையானது இன்னும் பெண்கள் உரிமைகளைவிடப் பிரதானமானதாகவே கருதப்படுகிறது. இவை இரண்டையும் வேறுபடுத்துவது பெண்களது உரிமைகள் முக்கியத்துவம் குறைந்தவை என்ற கருத்தையும் “பெண்களது முழுமையானதும் சமத்துவத்துவமானதுமான உரிமை களை ஏற்றுக் கொள்ளாத நடைமுறைகளையும்” நிலைநிறுத்து கின்றன. ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைகள் கொமிஷன், பெண்களது அந்தஸ்து தொடர்பான கொமிஷனைவிட அதிகாரம் கொண்டதாக விளங்குகின்றது. அதிகளவு நிதி, உத்தியோகத்தர், பெறுபேறுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் திறமான வழிமுறை கள் ஆகியவற்றை அது கொண்டுள்ளது. எனவே ஒரு வழக்கு மனித உரிமை மறுப்பு அன்றி பெண்களது உரிமை மறுப்பாக இருக்கும்போது என்ன செய்யலாம் என்பதில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.
மனித உரிமைகள் மீதான விடயங்கள் என்ன என எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை அகதி அந்தஸ்தை நிர்ணயிக்கும் தன்மை எடுத்துக் காட்டுகிறது. இவ்வித அந்தஸ்தைப் பெறுவதற்கான காரணிகளாக பெண்களுக்கு எதிரான பாலியல் அடக்குமுறை, மற்றும் வன்முறை ஆகியவற்றைக் கொள்ளும் தமது முன்னோடி முயற்சிகளின்போது டச்சு அகதிச் சங்கமானது, சில ஐரோப்பிய அரசாங்கங்கள் அரசியல் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாக பாலியல் வன்முறையை ஏற்றுக்கொண்டாலும் அகதி அந்தஸ்து அளிப்பதற்குரிய காரணியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் கண்டறிந்தது. இத்தகைய வேறுபடுத்தலினால் ஏற்படும் தாக்கங் களைப் பின்வரும் உதாரணம் விளக்குகிறது. பாகிஸ்தான் - பங்க ளாதேஷ் யுத்தத்தின்போது பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்கள் அவர்களது குடும்ப கெளரவத்தைப் பேணுமுகமாக ஆண் உறவினர் களால் கொலை செய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கினர். மேற்கு நாடுகள் இது தொடர்பாக தீவிர கண்டனத்தை வெளியிட்டன ஆனால் இவர்களுக்குத் தமது நாடுகளில் புகலிடம் வழங்கவில்லை.

Page 9
12
மனித உரிமைகளுடன் பெண்கள் உரிமைகளை இணைப்பதில் நான்கு அடிப்படை அணுகுமுறைகளைத் தருகிறேன். இவற்றை இங்கு வேறுவேறாகத் தருவதன் மூலம் அவற்றை நாம் தெளிவாக இனங்காண முடியும். இந்த அணுகுமுறைகளை பல்வேறு பிரச்சினை களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும். ஆனால் நான் அதனை பெண்களுக்கு எதிரான வன்முறையுடன் தொடர்புபடுத்துவதுடன் மனித உரிமை, பெண்கள் உரிமை என வேறுபடுத்தி நோக்குவதால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் எடுத்துக் காட்டுவேன்.
1. அரசியல் குடியியல் உரிமைகளை உள்ளடக்கி அங்கீகரிக்கப் பட்டி மனித உரிமைகளுடன் பெண்களது பிரத்தியேகத் தேவை களைச் சேர்த்துக் கொள்ளுதல் முதலாவது அணுகுமுறையாகும். அதாவது ஆண்கள் உள்ளாவது போன்ற உரிமை மீறல்களுக்குப் பெண்களும் உள்ளாகின்றனர் என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதும், அத்தகைய உரிமை மீறல்களின்போது அவர்கள் பெண்களாயிருப்பதால் உட்படும் துஷ்பிரயோகங்களைப் பற்றிய அக்கறையை ஏற்படுத்துவதுமாகும். தென் அமெரிக்காவில் நடை பெறுவது போன்று பெண் கைதிகளைப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் போன்ற ஏனைய உரிமை மீறல் வடிவங்களைத் தொடர்புபடுத்தும் போதே பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய பிரச்சினை எழுகின்றது. சர்வதேச மன்னிப்புச்சபையின் பெண்கள் விசேட பணிக்குழு போன்றவை சிறையிலிருக்கும்போது பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாதல், தடுத்து வைக்கப்படும் போது கர்ப்பிணிகள், தாய்மார் ஆகியோருக்கு வசதிகள் இல்லாமை போன்ற விடயங்கள் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ளும்படி சர்வதேச மன்னிப்புச் சபையை வற்புறுத்தி வந்துள்ளன.
பெண் அகதிகளின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தலும் அதற்கேற்றவாறு கொள்கைகளை உருவாக்குவதும் இந்த முதலாவது அணுகுமுறையின் இன்னோர் அம்சமாகும். அகதி முகாம்களில் இருப்போரில் பெண்களும் குழந்தைகளும் 80% ஆக உள்ளனர். எனினும் இவர்களின் தேவைகளையும் அகதி முகாம்களில் நடைபெறும் பாலியல் துஷ்பிரயோகங்களையும் பற்றி அக்கறை செலுத்தக்கூடிய கொள்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. உதாரணமாக ஆண்களிடமே பகிரப்படுவதற்காக வழங்கப் படும்போது, அவர்கள் உணவைப் பெண்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கொடுத்து அதற்குப் பதிலாக அப்பெண்களுடன்
 

13
பாலுறவில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சம்பவங்கள் பெண்களுக் கான உணவை நேரடியாக அவர்களிடமே வழங்க வேண்டும் என்பது போன்ற புதிய கொள்கைகளுக்கு வழிவகுத்தது.
பல மனித உரிமைக் குழுக்களுக்கு இத்தகைய அணுகுமுறை ஒரு பயனுள்ள ஆரம்பமாக அமையக்கூடியது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பணியாற்றும் துறைகளிலே நடைபெறும், பெண்களது பிரத்தியேகமான உரிமை மீறல்களை அடையாளம் காணவும் அங்கீகரிக்கவும் இது உதவும். எனினும் குடியியல் சுதந்திரநோக்கின் குறுகிய பரப்பை வெளிப்படுத்தும் முரண்பாடுகளையும் இம் முதலாவது அணுகுமுறை எழுப்புகிறது. சிறைப்படுத்தலின்போது இடம்பெறும் பலாத்காரத்தை மனித உரிமை மீறல் என்று கூறும் அதேசமயம் வீட்டிலோ வேறிடங்களிலோ அது நடைபெறும்போது அவ்வாறு கருதாமல் விடுவது இதன் ஒரு முரண்பாடாகும். ஒருபால் உறவு கொள்வோரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதால், சிறையிடப்படுதல் பேச்சுச் சுதந்திர மீறல் எனக் கூறப்படும் அதேசமயம், ஒருபால் உறவுக்காக சித்திரவதை செய்யப்படுவதோ, கொலை செய்யப்படுவதோ அவ்வாறு கருதப்படுவதில்லை. ஆகவே ஏற்கனவே நடைமுறையிலுள்ள மனித உரிமை வகைப்பாட்டுடன் பெண்கள் உரிமைகளைச் சேர்ப்பது பயனுடையதாயிருக்கும் அதேநேரம், அது மாத்திரம் போதுமானதாயில்லை என்பதை உணரவேண்டும்.
2. இரண்டாவது அணுகுமுறையானது உணவு வசிப்பிடம், சுகாதாரவசதி, தொழில் ஆகியவற்றில் பெண்களது நிலைமையை மனித உரிமைகள் விடயங்களுடன் தொடர்புபடுத்துவதாகும். பெண்களது உரிமைகளை பொருளாதார ரீதியானவைகளாகக் கருதுவதுடன் தனிநபர்களுடையதாகக் காணும் மேற்குலக மனித உரிமை மரபின் ஆதிக்கம் என குற்றம் சாட்டுவதற்கு இது காரணமாகும்.
பொருளாதார உரிமைகளைப் பற்றி அக்கறைப்படாமல் அரசியல் உரிமைகள் பற்றிப் பேசுதல் அர்த்தமற்றது என வாதிடும் தொழிற்சங்க வாதிகள், சோசலிஸ்டுகள் ஆகியோர் மத்தியிலேயே இந்த இரண்டாவது அணுகுமுறையின் தோற்றமூலம் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை உட்பட ஏனைய உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணியாக அமையும் பெண்களது

Page 10
14.
பொருளாதார ரீதியான கீழ்ப்பட்ட நிலையிலேயே மேற்கூறிய இரண்டாவது அணுகுமுறை அக்கறை செலுத்துகிறது. தொழிலாளர் என்ற வகையில் பெண்களுக்குள்ள அணிதிரளும் உரிமை, வேலைத்தலத்தில் நிகழும் வன்முறைகள் போன்றவற்றைப் பற்றிக் கவனம் செலுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய அணுகு முறையின் இன்னோர் அக்கறையானது பெண்கள் வறுமையடைவது பற்றியதாகும். ஏனெனில் வறியவர்களில் பெண்களே அதிக விகிதாசாரமுடையவர்களாக உள்ளனர்.
பெண்களை அபிவிருத்தியுடன் சேர்த்து நோக்குதல் இத்தகைய அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் இன்னோர் போக்காகும். சமூக் பொருளாதார அபிவிருத்தியை ஒரு மனித உரிமை விடயமாக நோக்க வேண்டுமென மூன்றாம் உலக மக்கள் கோரியுள்ளனர். இத்தகைய கோரிக்கையின் பரப்புக்குள் அபிவிருத்தியில் பெண்களை இணைத்துக் கொண்டு நிலச் சொத்துரிமை, கடன்பெறும் வசதி போன்ற பிரத்தியேகமான பெண்களது தேவைகள் பற்றி ஆராய்ந்துள்ளனர். பெண்கள், அபிவிருத்தி தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளோரிடையே பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒரு சுகாதாரப் பிரச்சினையாகவும், அபிவிருத்திப் பிரச்சினையாகவும் நோக்கும் ஆர்வம் வளர்ந்துவருகின்றது. சமூக உற்பத்திக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒன்றாக வன்முறை காணப்படுமானால் அது அதிக கவனத்தைப் பெறும். ஆனால் வன்முறை ஒரு மனித உரிமை மீறலா என்பதைத் தீர்மானிக்கும் அம்சமாகக் குறுகிய பொருளாதாரக் காரணி அமைந்துவிடக் கூடாது. வன்முறையை ஒரு அபிவிருத்திப் பிரச்சினையாகக் காண்பது அபிவிருத்தி என்பதை மனிதகுல வளர்ச்சியுடனும், வலுப்பெறுதலுடனும் தொடர்புபட் டுள்ளது.
இரண்டாவது அணுகுமுறையின் ஒரு எல்லைப்பாடு என்ன வெனில் அது பெண்களது தேவைகளை பொருளாதாரத் தளத்துடன் குறுக்குவது மாத்திரமின்றி பெண்களது உரிமைகள் சோசலிசத்துடன் அல்லது மூன்றாம் உலகநாடுகளின் அபிவிருத்தியுடன் நிறைவேற் றப்பட்டுவிடும் என்று கூறுவதுமாகும். ஆனால் இது உண்மையல்ல; இத்தகைய ஒரு நோக்குநிலையிலிருந்து பணிபுரியும் பலர் மேற்குலக முதலாளித்துவ அல்லது சோஷலிச அபிவிருத்தி மாதிரிகளுடன் பெண்களைச் சேர்ப்பதைக் கைவிட்டு பெண்களது பொருளாதார, அரசியல், கலாச்சார ரீதியான வலுவை தொடர்புபடுத்துகின்ற
 

15
ஒரு மாற்று அபிவிருத்திச் செயல்முறை ஒன்றைத் தேட முற்பட் டுள்ளனர்.
3. பெண்களது உரிமைகளை மனித உரிமைகளாகக் கொள்ளும் வழியில் மூன்றாவது அணுகுமுறையானது பால்ரீதியான பாரபட்சங்களை நீக்குவதற்கு புதிய சட்டரீதியான வழிவகைகளை உருவாக்குவதாகும். இத்தகைய முயற்சிகள் ஏற்கனவேயுள்ள சட்ட, அரசியல் நிறுவனங்கள் பெண்கள் குறித்து அக்கறை கொள்ளுமாறு செய்வதுடன் பெண்களது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு அரசைப் பொறுப்பு வகிக்கச் செய்கிறது. பாலியல் ரீதியான பாரபட்சத்தைப் பற்றி கரிசனை கொள்ளும் தேசிய, உள்ளூர் சட்டங்கள் ஆகியவை இதற்கு உதாரணம் ஆகும். இதற்கு முதன்மையான விளக்கமாகக் கொள்ளக்கூடியவை ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையும் அகற்றுதல் (CEDAW) என்ற அமைப்பாகும்.
இந்த அமைப்பு பற்றிப் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது: "அபிவிருத்திச் செயல்முறையில் பெண்கள் பங்குபற்றலுக்கான உரிமைகளின் சர்வதேச சட்டமாகவும் பெண்களுக்கும் ஆண்களுக்கு மிடையில் சமத்துவத்தை உருவாக்கக்கூடிய சர்வதேச ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளையும் தராதரங்களையும் எடுத்துக் கூறுவதாகவும் இதன் நோக்கம் அமைந்துள்ளது. 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த விதிகள், அவற்றுக்கு முரண்படாத வகையில் கொள்கைகளை அமைப்பதாக கோட்பாட்டு ரீதியான 97 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இந்த விதிகளுக்கிணங்க தமது நடவடிக்கைகளை பெண்களுக்கெதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையும் ஒழித்தல் (CEDAW) கமிட்டிக்கு அறிவிப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளன.
பால் பாரபட்சத்தின் பல பிரச்சினைகளை இந்த சீடா - CEDAW உடன்படிக்கை கையாள்கின்றபோதும் அதனது ஒரு குறைபாடு பெண்களுக்கு எதிரான வன்முறையில் நேரடியாகக் கவனம் செலுத்தாமையாகும். எனினும் சீடா குழு 1989ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற அதன் 8வது கூட்டத் தொடரில் பெண்களுக்கு எதிரான வன்முறையை அதன் நோக்கங்களுள் ஒன்றாகவும் இவ்வன்முறை பற்றிய சீடா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட

Page 11
16
ஒவ்வொரு அரசும் தத்தமது நாட்டில் புள்ளிவிபரங்கள், சட்டங்கள், ஆதரவாக அமையும் சேவைகள் போன்றவற்றை காலரீதியான அறிக்கைகளில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டு மென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கொமன்வெல்த் செயலகம் இந்த சீடா ஒப்பந்தத்துக்கு அறிக்கை தயாரிக்கும் செய்முறை பற்றி வெளியிட்ட கைநூலில் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினை பற்றிய அக்கறை "ஒப்பந்தத்தின் நோக்கிற்கு தெளிவான அடிப்படையாகும்” அத்துடன் அதனது 5வது சரத்தில் எந்தப் பாலினரதும் உயர்வு அல்லது தாழ்வு என்ற எடுகோளின் அடிப்படையாக அமைந்துள்ள பால்நிலைப்பாத்திரங்கள் சமூக கலாசார கோலங்கள், வகைமாதிரிகள் போன்றவற்றில் தேவையான சிறு திருத்தங்கள் செய்வது பற்றியும் கூறுகிறது.
அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மிகப் பெரும் முன்னோக்கிய பாய்ச்சலாக அமையக்கூடிய பெண்களுக்கான மனித உரிமை நிரலொன்றை சீடா ஒப்பந்தம் வரையறை செய்துள்ளது. எனினும் இத்தகைய சர்வதேச ஒப்பந்தங்களில் அவற்றை அமுல்படுத்துவதில் போதுமானளவு அதிகாரம் இல்லா மையால் எழும் பொதுக்குறைபாடு சீடாவைப் பொறுத்தளவிலும் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்த ஒப்பந்தம் பொதுவாகவே பலம் உள்ளதாகக் கணிக்கப்படுவதில்லை. இதனால் ஒப்பந்தத்துடன் ஒத்துப்போகும்படி அதில் கைச்சாத்திட்ட நாடுகளைக் அறிக்கை கேட்டரீதியிலும் சீடா பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. மேலும் இன்னும் இவை மனித உரிமைகள் என்றில்லாமல் பெண்கள் உரிமைகள் என்றே பல அரசாங்கங் களாலும், அரசுசார்பற்ற நிறுவனங்களாலும் கருதப்படுகின்றன. எப்படியிருந்த போதிலும் பெண்கள் சட்ட, அரசியல் மாற்றங்களத் தமது பிரதேசங்களில் அடையக்கூடியதாக செயல்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை மட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பயனுள்ள விதிகளாகும் என்பதைப் புறக்கணிக்க முடியாது.
4. பெண்களது வாழ்க்கை பற்றிக் கூடிய கவனம் செலுத்தத் தக்கதாக பெண்நிலை நோக்கில் மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தை உருமாற்றுவது நான்காவது அணுகுமுறையாகும். பெண்களது உரிமைகள் மீறப்படுவதை விசேட கவனத்தில் கொள்வதும் எவ்வாறு மனித உரிமைகளுடன் தொடர்புடையது என்பதையும் பெண்களின் தேவைகளுக்கு எவ்வாறு முகங்
 

17
கொடுக்கக்கூடியது என்பதையும் இந்த அணுகுமுறை விளக்குகிறது. இதற்கு உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் கபிரியேலா பெண்கள் கூட்டணி சென்ற வருடம் “பெண்கள் உரிமைகள் மனித உரிமைகள்" என ஒரு பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது. நினோச்கா ரொஸ்கா பின்வருமாறு விளக்குவது போல் மனித உரிமைகளை சட்டரீதியானவை என மாத்திரம் குறுக்கிவிட முடியாது. பெண் களுக்கு எது பொருத்தமானது அல்லது பொருத்தமற்றது என்பது பற்றி சமூகத்தில் பாரம்பரிய நோக்கு நிலையினால் மனித உரிமை கள் பற்றிய கருத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் உரிமை களுக்கான சர்வதேச கண்காணிப்புக்குழுவின் 1990ம் ஆண்டு மகாநாட்டின் ஒரு அமர்விலும் இதேபோல “பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு மனித உரிமைப் பிரச்சினை” எனப் பிரகடனம் செய்யப்பட்டது. முன்பு கூறிய முதல் மூன்று அணுகு முறைகளைவிட இந்நான்காவது அணுகுமுறை விசேடமாக பெண்நிலைப்பார்வை கொண்டதாகும்.
இத்தகைய உருமாற்றும் தன்மை கொண்ட அணுகுமுறையானது எத்தகைய விடயத்துக்கும் பொருத்தமானது எனினும் பால்நிலை யுடன் தொடர்புபட்ட இனப்பெருக்க உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை குடும்பத்துள் நடைபெறும் குற்றச் செயல்கள் கட்டாயத் திருமணம், பெண் பிறப்புறுப்புச் சேதம் போன்றவை பற்றியே அதிக கவனம் செலுத்துகிறது. இத்தகைய விடயங்களே பெரும்பாலும் மனித உரிமைப் பிரச்சினைகளல்ல என முன்னர் ஒதுக்கப்பட்டவையாகும். எனவே இவ்விடயம் அதிக விவாதத்துக் குள்ளானது எனவும் பொதுவானது எது, தனிப்பட்டது எது, அரசின் பொறுப்பு யாது? அரச சார்பற்ற பொறுப்புகள் யாவை? என்பது பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.
மனிதஉரிமை பற்றிய நோக்கு நிலையை மாற்றுவதற்கு குறிப்பிட்ட அணுகுமுறையிலிருந்து பணிபுரிவோர் முன்னர் மனித உரிமைகள் பற்றிய விளக்கத்தை விரிவுபடுத்தியோரின் பணிகளிலிருந்து உதாரணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக இருபதாண்டுகளுக்கு முன்னர் காணாமற்போதலை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக எவரும் கணிக்கவில்லை. எனினும் ஆர்ஜண்டீனாவின் மாயோ டி பிளாஷாவைச் சார்ந்த பெண்கள், காணாமற் போதல் மனித உரிமைப் பிரச்சினைகளாகப் பிரகடனப் படுத்தும்வரை காத்திராமல் இத்தகைய குற்றச் செயல்களுக்கான

Page 12
18 S5
அரச பொறுப்பை வலியுறுத்தினர். இவ்வாறு செய்ததன்மூலம் இராணுவம் அல்லது வலதுசாரி மரணப்படைகளால் செய்யப்படும் கொலைகளுக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்குவதற்குரிய சூழலை ஏற்படுத்தினர். ஊக்குவிக்கப்படும் வன்செயல்கள் (ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அங்கத்தவர் என்ற காரணத்திற்காக அவர் மீது மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள்) ஒரு நபரினது குடியியல் உரிமைகளை மீறுதலாகும் என்ற கருத்தாக்கத்தின் வளர்ச்சியாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களைத் தடுப்பதில் அரசுக்குப் பங்குண்டு எனப் பலரும் பெண்களுக்கு எதிரான வன்முறையும் ஒரு சார்புநிலைப்பட்ட குற்றம் என்ற கருத்தை வளர்த்தலும் முக்கியமானதாகும்.
பெண்நிலை நோக்கிலிருந்து, மனித உரிமைகள் என்ற கருத்தாக் கத்தை உருமாற்றலின் நடைமுறைப்பிரயோகங்கள் பற்றி மேலும் ஆராய்தல் வேண்டும். இத்தகைய நோக்கைக் கடைப்பிடிப்பதிலுள்ள அபாயம் என்னவெனில் ஏனைய மனித உரிமைக் குழுக்களுடன் ஒரு போட்டிநிலை ஏற்படுவதும் (ஏனெனில் பல குழுக்கள் பால்நிலை வன்செயல்களையோ அல்லது பால்நிலைப் பாரபட்சத்தையோ மனித உரிமை மீறல்களாக ஏற்பதில் தயக்கம் காட்டுவதால்), தனிமைப்படுவதும் ஆகும். மனித உரிமைச் சமூகமானது ஏனைய விடயங்களைக் கைவிடாது பால்நிலை நோக்கைச் சேர்த்துக் கொண்டு தமது பணியை எவ்வாறு இது விரிவுபடுத்துகிறது என்பதை நோக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறையை மனித உரிமைகளின் அக்கறைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்வதன் மூலம் அவை இதனையே முதன்மை யான அக்கறையாகக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் மனித உரிமை அமைப்புகள் தமது எல்லைகளைப் பாதுகாத்துக் காவல்காக்கும் இறுக்கமான போக்கினைக் கைவிட்டால்தான் நியாயமான மனித உரிமைப் பிரச்சினைகள் எவை என்பதைத் தீர்மானிப்பது சாத்தியமாகும்.
மேலே குறிப்பிட்டவாறு இந்த நான்கு அணுகுமுறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. பெண்களது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு அத்தியாவசியமான அம்சங்களை இவையாவும் கொண்டுள்ளன. இந்த அணுகுமுறைகளை ஒன்றிணைத்தல் அவசியமானதாகும். ஆரம்பகால பெண்நிலைவாத அமைப்பு ஒன்று கூறியதுபோல “எமக்கு உண்பதற்கு உணவு மாத்திரமல்ல
 
 

19
பூக்களும் தேவையாகும்” பெண்களுக்கு உணவும் வேண்டும்; சுதந்திரமும் வேண்டும்; வன்முறை, அடக்குமுறை ஆகியவை அற்ற கெளரவமான வாழ்க்கையை வாழக்கூடிய சாத்தியப்பாடும் வேண்டும். இத்தகைய போராட்டத்தில் பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரிப்பது ஒரு முக்கியமான பங்கை வழங்கமுடியும்.

Page 13
பெண்களுக்கெதிரான வன்முறை: அபிவிருத்திக்கு ஓர் தடை
மனித சமுதாயத்தின் அபிவிருத்தி என்பது மக்களின் தெரிவுகளை விரிவுபடுத்தும் ஓர் படிமுறையாகும். நீண்ட காலத்திற்கும், திடகாத் திரத்திடனும் வாழ்வதற்கு இப்பெருமளவு தெரிவுகள் அவசியமான வையாகும். மக்களுக்கு இத்தெரிவுகள் பற்றி அறிவுறுத்த வேண்டி யிருப்பதும், அவர்கள் ஓர் நாகரீகமான வாழ்க்கைத்தரத்தைப் பேணுவதற்குரிய வளங்களை அவர்கட்கு கிட்டச் செய்வதென்பதுமே இங்கு முக்கிய பிரச்சினையாகிறது. ஒவ்வோர் நபர்களதும் சுய கெளரவம் என்பதும், மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலையும், அரசியற் சுதந்திரமும் மேலதிக தெரிவுகளில் உள்ளடங்கு கிறது. அபிவிருத்தியே மக்களுக்கு இத்தெரிவுகளைக் கிட்டச் செய்கிறது. (UNDP மனித அபிவிருத்தி அறிக்கை 1990)
சமூக, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்புத் தொடர்பான சர்ச்சைக்குரிய முக்கியத்துவத்தை கவனத்திற்கு கொண்டு வருவதில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான us5T6doTGasait (United Nations Decade for Women) a 56 urf 5g வருகிறது. எனினும் பெண்களை அபிவிருத்தி பணிகளுக்குள் இணைப்பதற்கான பதினைந்தாண்டுகால முயற்சிகளின் பின்னும், அபிவிருத்தித் திட்டங்களினதும், கொள்கைத் திட்டங்களினதும் மிகச்சிறு பயனை மட்டும் பெறுபவர்களாகவே பெண்கள் இன்னும் உள்ளனர். வேலைவாய்ப்பிலும், கல்வியிலும், சுகாதார வசதிகளிலும், அரசாங்கத்திலும் பெண்களுக்கு சாதகமற்ற நிலைமை காணப்

21
படுவதையே பல்வேறு ஆய்வுகளும் காட்டி நிற்கின்றன. ஆண்களுக் குச் சமமான இடத்தை பெண்கள் பெற்றுக்கொண்ட எந்தநாடும் இல்லை என்பதுடன் இது தொடர்பாக குறிப்பிடத்தக்க பெரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவுமில்லை. (Sivard 1985: 5)
மாற்றம் மெதுவானதாக இருந்தபோதும்; அபிவிருத்திப் படிநிலை களின் கருப்பொருளான பெண்கள் அபிவிருத்திக்குத் தடையாக உள்ள, ஆனால் பாரம்பரியமாக அடையாளம் காணப்படாதிருந்த காரணிகளை அடையாளம் காண்பதில் அபிவிருத்திச் சமூகத்தில் வேலைசெய்யும் பெண்கள் வெற்றி கண்டுள்ளனர். இவ்வகையில் பால்வேறுபாடு காரணமான வன்முறை ஓர் காரணியாக இனம் காணப்பட்டுள்ளது. முன்னர் அவதானிக்கப்பட்ட பெண்களுக் கெதிரான வன்முறை என்பது தனிப்பட்ட விடயமாகவும், குடும்ப கலாச்சார அடிப்படையிலும், சிறப்பாக சமூகநலத் திட்டங்களுடன் சார்பான விடயமாகவுமே நோக்கப்பட்டது. பெண்களின் பொதுவான நிலைமை பற்றி ஈடுபாடு கொண்டவர்களைப் பொறுத்தவரை பால்ரீதியான வன்முறைப் பிரச்சினைக்கு சமாதானத்தை மேம்படுத்து வதன் மூலமும், மனித உரிமைகள் பிரச்சினையில் இதனையும் இணைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற வட்டத்துக் குள்ளுமே புரிந்துவைத்திருந்தனர். இவ்வணுகுமுறையினால் பல்வேறு காரணிகளைக் கொண்ட இவ்வன்முறை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவை எவ்வகையிலும் பிரச்சினை தொடர்பான எமது புரிதலை பாதிக்கவில்லை. அபிவிருத்திப் படிநிலையிலேயே பால்ரீதியான வன்முறையின் தாக்கம் தொடர்பாக வும், அதன் பரிமாணம் தொடர்பாகவும் எமது அறிவில் இன்னும் மிகப்பெரிய இடைவெளிகள் இருக்கின்றன. இப்பிரச்சினையை ஆவணப்படுத்த முடியாமைக்கான பல காரணிகளில் இது தொடர்பான புள்ளி விபரங்கள் போதாமை என்பதும் ஓர் காரண மாகும். அபிவிருத்திப் படிநிலைகளில் பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் ஓர் வடிவமாக வன்முறை எந்தளவுக்கு அமைந்திருக் கிறது என்ற ஜீரணிக்கமுடியாத உண்மையை கண்டுபிடிக்கின்ற அளவுக்கு வந்துவிட்டோம்.
மூன்றாம் உலக நாடுகளின் பெண்களின் அபிவிருத்தி கட்டமைப்பு ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளமைக்கு அதிகரித்து வரும் வன்முறையே முக்கிய காரணமாகும். இவ்வளர்ச்சி என்பது அடிமட்ட பெண்களின் பெருமுயற்சியினால் ஏற்பட்டதேயன்றி

Page 14
22
வெளி அதிகாரிகளினாலே அல்லது சில உள்ளூர் முகவர்களி னாலோ ஏற்பட்டதல்ல. உதாரணமாக UNFEM நிதி உதவித் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வன்முறை ஓர் முக்கிய பிரச்சினை என்பது பெருமளவில் இனங்காணப் பட்டுள்ளது. அத்துடன் ஓர் பிரச்சினை என்றவகையில் அபிவிருத்தித் திட்டங்களில் பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்துகிறது அல்லது அபிவிருத்தித் திட்டங்கள் மூலமான பயனை அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறது. பெண்களுக் கெதிரான வன்முறையை அம்பலப்படுத்துவதிலும் வன்முறைக்கான காரணங்களைப் பேசுவதிலும், வெளிப்படுத்துவதிலும், தீர்வுகாண்ப திலும் பெண்கள் தலைமைப் பாத்திரம் வகித்துள்ளனர். உகண்டாப் Guédat Glypédigé5ftist aipajálasicsig (Uganda Association of WomenLawyers) ஆசிய பசுபிக் பெண்கள் வரை, லோ அன்ட் -6 lost D. GoufrédéaSc(sis (Law and Development New09றினிடாட் கற்பழிப்பு நெருக்கடி நிலையம்வரை (Trinidad Rape Crisis Centre), Lobopsin Sg. Guadoressit a shot இயக்கம் வரை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பெண்களின் தலைமை யானது பெண்களுக்கெதிரான வன்முறையை தேசியப் பிரச்சினை களில் ஒன்றாக முக்கியத்துவம் பெறவைப்பதிலும், எந்தெந்த வழிகளில் இவ்வன்முறை என்பது அபிவிருத்திக்கு ஓர் தடைக் கல்லாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதிலும் போராடிக் கொண்டிருக்கின்றன. பால்ரீதியான வன்முறை என்பது அது மிகக் கொடியமுறையிலானதாயினும் சரி, மிக நாசூக்கான வகையிலானதாயினும்சரி பெண்களின் வாழ்வைப் பொறுத்தவரை இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றதென்பதை அவர்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றனர். ஐஎஸ் ஐஎஸ் இண்டர் நேஷனல் (SIS nemational) என்ற அமைப்பு இலத்தீன் அமெரிக்காவில் பெண் களுக்கெதிரான வன்முறை தொடர்பான பல்வேறு விடயங்களைக் கையாளும் 156 வேலைத்திட்டங்களை அடையும் கண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் பெண்கள் கார்த்திகை 25ம் திகதியை கண்டன நாளாகவும், பெண்களை நோக்கிய வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடும் நாளாகவும் நிறுவன ரீதியாக அறிவித்துள்ளனர். இதுபோன்ற முயற்சிகள் உலகின் ஏனைய பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான பிரச்சினைகளில் இருபதாண்டுகளை அர்ப்பணித்த மெட்ச் இன்டர்நேசனல் (MATCH
 

23
International)என்ற கனேடிய அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனம் பெண்களுக்கெதிரான வன்முறை பிரச்சினைக்கு மிகுந்த அக்கறை கொடுத்து அதனை உயர்த்திப் பிடித்தது என அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள பெண்கள் குழுக்களுக்களால் மேற்கொள் ளப்பட்ட 1988ம் ஆண்டின் உலக ரீதியான கணிப்பு கூறுகிறது. அபிவிருத்தியில் இத்தகைய வன்முறையின் தாக்கத்தினை மிக உறுதியான வகையில் பெண்களின் குழுக்கள் அடையாளம் கண்டிருப்பதாக MATCHஅறிக்கை அதன் முடிவில் கூறுகிறது.
உலகெங்கும் பெண்களுக்கெதிரான வன்முறையானது அவர்களும் மனிதர்களே என்ற கெளரவமான ஸ்தானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களது நுண்ணறிவையும், ஆற்ற லையும் குறைத்து மதிப்பிடக்கூடியதும், வன்முறைக்கும், பதில் தாக்குதலுக்கும் பயந்து செயலற்று முடங்கிப் போகக்கூடியதுமான சூழ்நிலைகள் பெண்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் தமது சமுதாயத்தின் அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் விடயங்களிலும் சரி தீர்மானமெடுக்கும் படிநிலைகளில் பெண்கள் பங்குபற்ற முடியாதவாறு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பெண்களுக் கெதிரான வன்முறை என்பது எந்த ஒரு நாட்டுக்கேனும் மட்டுப் படுத்தப்பட்டதல்ல. இவ்வன்முறையானது தாக்குதல் தொடக்கம், மரபு ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ தடைசெய்யப்பட்ட பாலுறவு, அடித்தல், உலகளாவிய வகையில் பெண்கள் மீது பலாத்காரம் புரிதல், ஆபிரிக்காவைப் பொறுத்தவரை சில சமூகங்களில் பெண் குறியின் உணர்ச்சி மென்சவ்வை வெட்டுதல், இந்தியாவில் சீதனக் கொலை, பிலிப்பைன்சில் இராணுவமயமாக்கல்வரை நீள்கிறது. அத்துடன் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி வாய்ப்பு கிட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் குறைவாகவே உள்ளது. மேலும் சமுதாயத்தில் பெண்கள் தனிமைப்பட்டிருப்பதென்பதும், அவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் அவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினை களாகும். எத்தகைய சமூக, பொருளாதார வரலாற்று யதார்த்தத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை நடைபெறுகிறதோ அந்த யதார்த்த நிலைக்கேற்ப பெண்களுக்கெதிரான வன்முறையின் வடிவங்களும் மாறுபடுகின்றன. (MATCH செய்தி 1990)
இதிலிருந்து அபிவிருத்தி தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற ஓர் திட்டத்தை MATCH நடத்தி வருகிறது.

Page 15
24
வன்முறையின் வியாபகம்
பெண்களுக்கெதிரான வன்முறை என்பது ஏழைகளை மட்டுமோ அல்லது மூன்றாம்.உலகநாடுகளில் உள்ள பெண்களை மட்டுமோ பாதிப்பதல்ல. சொல்லப்போனால் தொழில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட பிரச்சினையின் உண்மையான பரிமாணங்களைத் தெளிவாக வரைவதற்கு உதவக்கூடிய உறுதியான அடிப்படை களைத் தரவல்ல நடைமுறை ஆய்வுகளை மேற்கொள்வதை மிகச்சில நாடுகளே ஆரம்பித்துள்ளன. பப்பூவா நியூகினி (Papua NewGuinea) போன்ற சில நாடுகளைத் தவிர அபிவிருத்தியடைந்து வரும் பெரும்பாலான நாடுகளைப் பொறுத்தவரை புள்ளிவிபரங்கள் மிக அரிதாகவே கிடைக்கும் நிலையுள்ளது. ஆனால் இப்புள்ளி விபரங்கள் கிடைக்கும்பட்சத்தில் அவை சர்வதேச அளவில் பெண்களுக்கெதிரான வன்முறை எந்தளவுக்கு ஆழமானதாகவும், பரவலாகவும் தாக்கமான பிரச்சினையாகவுள்ளது என்பதனை வெளிப்படுத்தக்கூடிய சக்திமிக்க ஆவணங்களாக்கப்படுகின்றன.
உதாரணமாக அமெரிக்காவின் உத்தியோகபூர்வ தரவுகளில் பால்ரீதியான வன்முறை அந்தந்த நாடுகளில் அல்லது சமுதாயங்களில் அதிர்ச்சிதரக்கூடிய அளவிற்கு அதிகமானதாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பலாத்காரத்திற்கு உட்படுகிறாள். பெண்களுக்கு உடலூறு விளைவதற்கு குறிப்பிடத்தக்க மிகப்பெரும் காரணம் வீட்டில் அவர்கள் தாக்கப்படுவதுதான். வாகன விபத்துக்களை விடவும் பலாத்காரங்களும், கட்டாயப்படுத்தலும் அதிகமானதாகும். 1985 FBI அறிக்கைக் கணிப்பின்படி மனைவியை கணவன் தாக்கும் சம்பவங்களில் முறைப்பாடு செய்யப்படாதவை மட்டும் குறைந்தது 10 பேருக்கு ஒருவராகும். ஆய்வாளர்கள் மேலும் மயிர்க்கூச்செறியும் தொகையை சமர்ப்பிக்கிறார்கள் மொத்தத்திருமணங்களில் மூன்றில் இரண்டு திருமணங்களில் ஒரு தடவையாவது வன்முறை நடக்கிறது எனக் காட்டுகிறார் றோய். ஸ்ட்ராவுஸ் (Strauss), ஜெல்லஸ் (Geles), ஸ்டீன்மெற்ஸ் (Steinmetz)ஆகியோர் எட்டுத்தம்பதிகளுக்கு ஒருவர் தமக்கு கடுமையான காயமேற்படுமளவுக்கு தமக்கிடையே வன்முறை நடப்பதாக ஒத்துக்கொள்கின்றனர் என்பதை ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். கொனெக்ரிக்கட் (Connecticut) வைத்தியசாலையில் ஸ்டார்க்கும் பிளிச்கிறாவ்ட்டும் (Stark and
 

25
Fitchcraft) நடத்திய ஆய்வில் 25 வீதம் பெண்களை தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்வது வீட்டில் அவர்கள் தாக்கப்படுவதுதான் என்பது வெளிப்படுகிறது. பல்வேறு ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும்போதே தாக்கப்படுவதை நிரூபிக்கிறது. காவல்துறை அறிக்கை அவர்களது இரவுநேர பணியின்போது வரும் தொலைபேசி அழைப்புக்களில் 40-60% வீட்டில் நடக்கும் தகராறுகள் தொடர்பான அழைப்புக்களே எனச் சுட்டிக்காட்டுகிறது.
கன்சாஸ் (Kansas) நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கொலைகளுக்காக பொலிசார் குறைந்தது ஐந்து தடவை அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; இக்கொலைகளில் 50விகிதமானவை தம்பதிகளில் ஒருவரால் மற்றவர் கொல்லப்பட்ட சம்பவங்களாகும் எனத் தெரிவிக்கிறது. ஒஹியோவிலுள்ள (Ohio) கிளிவ்லாண்ட் (Cleveland) இல் ஒன்பது மாதங்களில் குடும்பச்சண்டை தொடர்பான கிட்டத்தட்ட 15ஆயிரம் தொலைபேசி அழைப்புக்களை பொலிசார் பெற்றுள்ளனர். ஆனால் இவற்றில் 700 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 460 வழக்குகள் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. (மேற்கண்ட விபரத்தை பெண்களும் குடும்பச் சட்டத்திற்குமான தேசிய நிலையம் தெரிவிக்கிறது).
தொழில்மயமான நாடுகளிலிருந்து கிடைக்கும் புள்ளி விபரங்களும் இதேபோலவே மனக்கலக்கத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. பிரான்சில் இருந்துவரும் அறிக்கை வன்முறைகளில் பாதிக்கப்படுவோரில் 95விகிதமானோர் பெண்களே எனக்கூறுகிறது. இதில் 51 வீதமானோர் தமது கணவன்மார்களின் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் ஆவர். டென்மார்க்கைப் பொறுத்த வரையில் 25 வீதமான பெண்கள் தமது விவாகரத்துக்கு வன்முறையே காரணமெனக் கூறுகின்றனர். அத்துடன் 1984இல் 7 கனேடிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இந்நகரங்களில் பாதிக்கப் பட்டவர்களில் 90வீதமானோர் பெண்களாவர். கனடாவைப் பொறுத்தவரை நான்கு பெண்களுக்கு ஒருவர் தமது வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் என்பதை எதிர்பார்க்கலாம். இவர்களில் பாதிப்பேர் பதினேழு வயதுக்கு முன்னரே இத்தகைய பலாத்காரத்துக்குள்ளாகின்றனர். (MacLeod, 1990: 12)

Page 16
26
மூன்றாம் உலகநாடுகளைப் பொறுத்தவரை ஆய்வுகள் சொற்ப மானதாக இருந்தபோதும்கூட பாலியல் வன்முறைகளின் தன்மை யைப் பொறுத்தவரை கைத்தொழில் ரீதியில் முன்னேற்றமடைந்த சமூகங்கட்கும், மூன்றாம் உலக நாடுகட்குமிடையில் குறிப்பிடத் தக்களவு ஒற்றுமைப்பாடுகள் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதன் வெளிப்பாடுகள் கலாச்சாரங்களுக்கேற்ப வித்தியாசமானதாக இருந்தாலும் கூட பால்ரீதியான வன்முறை என்பது தேசிய எல்லைகள், வகுப்புகள்,இனங்கள், இனக்குழுக்கள், கோட்பாடுகளைக் கடந்து ஒரே தன்மையுடையதாக இருக்கிறது. ஓர் மெக்சிகன் தொண்டர் ஸ்தாபனத்தின் கணிப்பீட்டின்படி 70 விகிதமான மெக்சிகன் குடும்பங்களில் குடும்பத்தகராறுகள் காணப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையான தகராறுகள் முறைப்பாடு செய்யப்படாமலே போகின்றன. மெக்சிகன் பெண் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அறிக்கை 95 விகிதமான பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்றும், இவ்விடயத்தில் துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்படாமை என்பது தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை குறைக்கின்றது என்றும் கூறுகிறது.
é6úSulgeir6T (The Servicio Nacional de la Mujer) 6T60TüuGub அமைப்பு குடும்பத்தினுள்ளான வன்முறைகளைத் தடுக்கும் கடமையினை முன்னுரிமை கொடுத்து தமது வேலைத்திட்டமாக்கி யுள்ளனர். சந்தியாகோவில் (Santiago) ஒர் ஆய்வின்படி 80விகிதமான பெண்கள் தமது வீட்டில் நடக்கும் வன்முறைகளால் தாம் பாதிக்கப்படுவதை ஒத்துக் கொள்கின்றனர். பப்புவா நியூகினியிலுள்ள சட்ட சீர்திருத்த ஆணைக்குழு நடத்திய குடும்பத் தகராறுகள் தொடர்பான தேசிய அளவிலான கணிப்பீட்டில் நாட்டின் சில பகுதிகளில் 67 வீதமான மனைவியர் திருமணம் சார்ந்த வன்முறை களுக்கு ஆளாகி உள்ளதுடன், 1981இல் கொல்லப்பட்டவர்களில் 61 வீதத்தினர் பெண்களாவர் என்றும் இவர்களில் பெரும்பான்மை யானோர் அவர்களது கணவன்மார்களால் கொல்லப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது. கொரியன் பெண்களில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானவர்கள் தமது கணவன்மார்களால் தொடர்ச்சியாகத் தாக்கப்படுகின்றனர். இத்தொகை நிக்கரகுவாவைப் பொறுத்தவரை 44 வீதமாகும். இங்கு ஆண்கள் தாம் மனைவியரையோ அல்லது காதலிகளையோ அடிக்கடி உடல் ரீதியாக தாக்குவதை ஒத்துக் கொண்டுள்ளனர். மேலும் தாய்லாந்தின் ஓர் அறிக்கை
 

27
திருமணமானவர்களில் 50 வீதமான பெண்கள் கனவன்மார்களால் அடிக்கடி தாக்கப்படுவதாக கூறுகிறது.
சிறு பெண்கள் விபச்சாரம் தொடர்பாக பொலிவியாவிலுள்ள கொக்கபம்பாவில் (Cochabamba) நடத்திய ஓர் ஆய்வில் 79வீதமான பெண்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகவே தாம் விபச்சாரத் தொழிலுக்கு வந்ததாகவும், வீட்டில் வன்முறை தாங்கமுடியாது உறவினரிடம் சென்றபோது அங்கு அவர்களது உறவினர்களால் முறைதகா பாலுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கற்பழிக்கப்பட்ட தாகவும் கூறுகின்றனர். இந்திய அரசால் வெளியிடப்பட்ட இன்னோர் ஆய்வின்படி "கடந்த தசாப்தத்தில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்துவரும் போக்கை” காட்டுவதையும் அதேவேளை இக்குற்ற வாளிகள் நிரூபிக்கப்படுவதோ, அவர்கள் தண்டனை பெறுவதோ குறைந்து வருவதையும் காட்டுகிறது. 1987-88 காலப்பகுதியில் முன்னைய ஆண்டைவிட தற்கொலை இரண்டு மடங்காக அதிகரித்ததாகவும் கூறுகிறது. பாகிஸ்தானில் நடத்திய ஆய்வின்படி 99 வீதமான வீட்டிலுள்ள மனைவியரும் 77 வீதமான வேலைக்குச் செல்லும் பெண்களும் தமது கணவன்மார்களால் அடிக்கடி தாக்கப்படுவதாக கூறுகிறது. மேலும் காணித்தகராறு காரணமான கொலைகள், ஏதாவது பிரச்சினைகளில் வெறுப்படைந்து மனைவியின் கண்களைக் குருடாக்குவது, அடித்துக் கொல்வது, கோபத்தில் உயிருடன் எரிப்பது, கடத்தப்படுவது, விற்கப்படுவது, கற்பழிப்புகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் என இவ்வன் முறைப் பட்டியலை அவ்வாய்வு வெளிப்படுத்துகிறது. (AWRAN Report, 1985). ஐக்கிய நாடுகள் சபை ஆவணம் ஒன்றில்கூட மேற் கோள் காட்டப்பட்ட வேறு அறிக்கைகளின்படி பங்களாதேஷ், கொலம்பியா, கென்யா, குவைத், நைஜீரியா, உகண்டா ஆகிய நாடுகளில் பெரிய குடும்ப வன்முறைகள் நடைபெறுவதைக் காட்டுகிறது. (UN1989:20)
பெண்களுக்கெதிரான வன்முறை அவர்களை ஊறுபடுத்துவதும், தளர்வுறச் செய்வது மட்டுமன்றி, பெண் கொலை என்பது மிகப் பெரிய அளவில் குழந்தை பிறப்புக்கு முன்னர் தொடங்கி வாழ்க்கை பூராவும் தொடர்கிறது. அமாட்யா சென்(AmanyaSen) ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சமூக, பொருளாதார சமத்துவமின்மை என்பது எந்தளவுக்கு அபாயகரமான விலையைக் கொடுக்கவேண்டி ஏற்படுத்துகிறது என்பதை குறைவிருத்தி நாடுகளில் பெண் -ஆண்

Page 17
28 றொ
பால் விகிதாசாரத்தை பகுத்தாய்வதன் மூலம் சுட்டிக்காட்டுகிறார். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் 106 பெண்களுக்கு 100 ஆண்கள் (1.06) என்ற ரீதியில் விகிதாசாரம் காணப்படுகிறது. ஆனால் மொத்த குறைவிருத்தி நாடுகளையும் எடுத்துக் கொண்டால் 97 பெண்களுக்கு 100 ஆண்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். சில பகுதிகளில் குறிப்பிடத்தக்களவிற்கு ஆசியாவிலும் சிறப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஆபிரிக்க விகிதாசாரத்தை(1.02) பிரயோகித்துப் பார்ப்பின் இச்சமன்பாடு மனதை உறையவைக்கும் முடிவுகளைத் தருகிறது. இவ்விரு நாடுகளிலுமுள்ள ஆண்களின் தொகையைக் கணக்கிலெடுப்பின் இந்தியாவில் தற்போதுள்ள பெண்கள் தொகையைவிட மேலும் 30 மில்லியன் பெண்கள் அகதிகமாக இருந்திருக்க வேண்டும். சீனாவைப் பொறுத்தவரை இப்போதுள்ள பெண்களை விட மேலும் 38 மில்லியன் பெண்கள் இருந்திருக்க வேண்டும். இங்கு காணாமற்போன தொகை பெண்கள் கர்ப்பத்திலே அழிக்கப்படுவது தொடக்கம் சத்துணவின்மை, பஞ்சம், சுகாதாரப் பிரச்சினைகளை கவனியாது விடல், சீதனக் கொடுமை யால் சாதல், போன்ற பால்ரீதியான பல்வேறுவகைப்பட்ட வன்முறை களினாலும் காணாமல் போனவர்களாவர். "பெரியளவிலான இறப்புகளும், தாக்குப்பிடிக்கும் திறனும் கவனிப்பாலோ அல்லது அலட்சியத்தாலோ மட்டும் நிகழ்வதில்லை. மாறாக சமூக நடவடிக்கைகளும், பொது மக்கள் தொடர்பான கொள்கைகளுமே இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன’ என்பதை நினைவுபடுத்து கிறார் திரு சென். மேலும் இவ்விடயத்தில் அபிவிருத்தி உபாயங்கள் பெண்களின் தேவைகளை பெருமளவிற்கு தெளிவாக கவனத் திலெடுக்க வேண்டும். (Sen, 1990:124)
சர்வதேச அரங்குகளில் பெண்களுக்கெதிரான வன்முறை
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான பத்தாண்டுகள் 960)Lou Sait still 551&gait (Within the context of the United Nations Decade for Women) u6)fr GuglioTeseidsGas,SJT60T 6).j6itcp60p. பிரச்சினையை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டனர். மெக்சிக்கோ நகரில் 1975இலும், கோப்பென்ஹேகெனில் (Copenhagen) 1980இலும் நைரோபியில் 1985இலும் நடைபெற்ற பெண்கள் தொடர்பான மூன்று மாநாடுகளிலும் சரி, இதனோடு சமாந்தரமாகச் செயற்படும் தொண்டர் ஸ்தாபன அரங்குகளிலும் சரி பெண்களுக்காக வாதாடு
 

29
பவர்கள் பால்ரீதியான வன்முறைப் பிரச்சினையை பெருமளவில் எழுப்பினர். இதனால் அவர்கள் சமுதாயத்தில் தமது முழு பங்களிப்பைச் செய்ய முடியாத கட்டாயத்தில் வைக்கப்படுகிறார்கள் என்பதையும், இவ்விடயத்தில் சிறப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்தினர். இம்மாநாடுகளிலும், அரங்குகளிலும் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்கள் எல்லா நாடுகளிலும், எல்லாப் பிராந்தியங்களிலும், எல்லாக் காலாச்சாரங்களிலும் பெண்கள் ஒதுக்கப்படுகின்ற பிரச்சினையை வெளிப்படுத்தும் சக்திமிக்க ஆதாரபூர்வமான குற்றப்பத்திரிகையாக அமைந்தது. அத்துடன் பால் தொடர்பான வன்முறையை வித்தி யாசமான கோணங்களில் புரிந்துகொள்ள பயனுள்ள அடித்தளத் தினையும் அது வழங்கியுள்ளது. சர்வதேச சமூகத்தின் அக்கறையை அவர்கள் நிரூபித்ததுடன், இதனை இல்லாதொழிப்பது அரசாங் கங்களினதும், சமுதாயத்திலுள்ள அனைவரதும் பொறுப்பாகும் என்பதையும் ஏற்றுக்கொண்டனர். இப்பிரச்சினைகளை விளக்குவதில் புதிய உபாயங்களையும், கொள்கைகளையும் வடிவமைப்பதற்கு ஏற்ற பல திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான பத்தாண்டுகள் 960)until Sait (United Nations Decade for Women) &Ln5gjouth Lobgjun அபிவிருத்தியும்-அமைதியும் என்ற அம்சங்களை மீளாய்வு செய்யவும், மதிப்பிடவும் என 1985இல் நைரோபியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 'முன்னோக்கிப் பார்க்கும் உபாயங்கள் (Forward Looking Strategies) என்ற கட்டுரையே அபிவிருத்திக் குறிக்கோள்கள் தொடர்பாக பால்ரீதியான வன்முறையை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆவணங்களில் ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு வடிவங்களிலான வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை நிறுவன ரீதியாக்குவ தையும், இப்பிரச்சினைகளைத் தடுப்பதற்கான கொள்கைகளை விபரமாகத் தரக் கோரும் 258வது தீர்மானத்தினையும் இது உள்ளடக்கியுள்ளது. இது பெண்கள் அடிக்கப்படுவது, வெளியே பேச முடியாதவர்களாக ஆக்கப்படுவது, எரிக்கப்படுவது, பாலியல்ரீதியாக அவமதிக்கப்படுவது, கற்பழிக்கப்படுவது" ஆகிய பிரச்சினைகளை ஏற்றுக்கொள்கிறது. அத்துடன் இத்தகைய வன்முறையானது "பத்தாண்டுகள் அமைப்பின் நோக்கங்களை எய்துவதற்கு மிகப்பெரும் தடையாகும் என்பதினால் இவ்விடயத்தில்

Page 18
30
றொக்ஸானா காரியோ
சிறப்பான அக்கறை காட்டப்பட வேண்டும்” என்பதையும் ஏற்றுக் கொள்கிறது. இவ் ஆவணத்தின் ஏனைய பகுதிகள் (உதாரணம் 76.245,271,288) வன்முறைக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வேலைசெய்யும், சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகட்கு சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டுமெனவும் வற்புறுத்துகிறது. பால் தொடர்பான வன்முறையூடாக பெண்கள் தரம் தாழ்த்தப்படுவதற்கு ஒர் முடிவு கட்டுவதற்கு சட்டம் கொண்டுவர வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விடயங்களில் பெண் மனித உரிமைகளை உயர்த்துவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. நிறுவன ரீதியாக பொருளாதார மற்றும் வேறு வடிவிலான உதவிகளை உள்ளடக்கிய ஓர் தடுப்பு அணுகுமுறை ஒன்றுக்கு இணங்க வேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது. குடும்ப வன்முறைகளைக் கணக்கிலெடுத்து கையாளும்படி தேசிய சேவை நிறுவனங்களுக்கு இது யோசனை கூறுகிறது. மேலும் பால்ரீதியான வன்முறையினால் குடும்பத்திலும் பொதுவாக சமூகத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என்பதற்கு மேலாக பந்தி 288 பின்வரும் கோரிக்கையை விடுக்கிறது:
பெண்களுக்கெதிரான வன்முறை என்பது ஓர் சமுதா யத்தைப் பாதிக்கும் பிரச்சினையாகும். இவ்விடயத்தில் சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சி களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலும் இத்தகைய வன்முறை களைத் தடுக்கும் வகையிலும், இல்லாதொழிக்கும் வகையிலும் கொள்கைகள் வகுக்கப்பட்டு அவை சட்ட உருப்பெற வேண்டும். குறிப்பாக ஒடுக்குமுறையி னுாடாக பெண்களின் கெளரவத்தைப் பாதிக்கும் வகையிலும், சமூகத்தில் அவர்களது பிரதிநிதித்து வத்தைப் பாதிக்கும் வகையிலுமான நடவடிக்கைகளை நிறுத்த இவை உதவ வேண்டும். பெண்களுக்கெதிராக தவறாக நடப்பவர்களுக்கு கல்வி, மறுகல்வி வசதிகள் ஏற்படுத்துவதனூடாக அவர்கட்கு இப்பிரச்சினையின் தாக்கம் தொடர்பான அறிவு புகட்டப்பட வேண்டும்.
(ibid)
பொருளாதார சமூக சபை ஆணைக்குழுவின் 32வது கூட்டத்

31
தொடர் போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய பிரிவுகளும் கூட பெண்களின் நிலமை தொடர்பான விடயங்களை வெளிப் படுத்தின. செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் பெண்களுக் கெதிரான வன்முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது: "உடல்ரீதியான, பாலியல் ரீதியான, உணர்ச்சிவசப்பட்டதன் அடிப்படையிலான, பொருளாதார ரீதியான துஷ்பிரயோகங்கள் என்பன குடும்பத்திற்குள் நடைபெறுகின்றன. கற்பழிப்பு, பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள், பாலியல்ரீதியான தாக்குதல்கள், பெண்களைக் கடத்துதல், விருப்பத்திற்கு மாறாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், உணர்ச்சிகளைத் தூண்டும் வக்கிரமான பாலியல் புத்தகங்கள், வெளியீடுகள்”அனைத்தும் ஒரேவிடயத்தின் வெவ்வேறு அம்சங்களே. “பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்ளுமாறு பலாத்காரப்படுத்துதல்". (n,p)
மனித முன்னேற்றமும் வன்முறையும்: ஓர் முரண்பாடு
அபிவிருத்தி என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அணுகுமுறையான மனித முன்னேற்ற அறிக்கை uSGeoGu (Human Development Report) gheilairtiuous T6OTg) brida யுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னைய அபிவிருத்திப் பத்தாண்டுகளைக் குறிக்கின்ற மூன்று வெவ்வேறு அணுகுமுறை களை மறுமதிப்பீடு செய்யும் இந்த ஆவணம் அபிவிருத்தியும், வளர்ச்சியும் தொடர்பாக போதியளவிற்கு புள்ளிவிபர ரீதியான குறியீடுகளுக்கு ஆற்றலுண்டா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மனித முன்னேற்றம் தொடர்பான மதிப்பீட்டை மேலும் செழுமைப்படுத்துவதற்கும், யதார்த்தமானதாக்குவதற்கும் கணக்கிலெடுக்கப்பட வேண்டிய ஏனைய அம்சங்கள் தொடர்பாக புதிய யோசனைகளை முன்வைக்கிறது. அவையாவன:
ஊட்டச்சத்தும் சுகாதார சேவைகளும், கல்வி அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்க்கை நிலமைகள், குற்றங்களுக்கும் உடல்ரீதியான வன்முறைகளுக்கும் எதிரான பாதுகாப்பு, திருப்திகரமான இடைவேளை, தமது சமுதாயத்தில் பொருளாதார-கலாச்சார அரசியல் நடவடிக்கைகளில் பங்களிப்பு

Page 19
32
ஆகியனவாகும். இந்த அடிப்படையில் அமையும் அபிவிருத்தி
குறிக்கோளானது மக்கள் நீண்டகாலத்திற்கு சந்தோஷமாகவும்,
திடகாத்திரமாகவும், ஆக்கபூர்வமான வகையிலும் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்கும்.
மூன்று தசாப்தங்களில் மூன்றாம் உலக நாடுகளில் மனித முன்னேற்றத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தவிர குறிப்பாக வாழ்க்கை எதிர்பார்ப்புகள், கல்வி, சுகாதாரம் தொடர்பாக கலாச்சார வேறுபாடின்றி பால்ரீதியான வித்தியாசத்தின் அடிப்படையிலான பார்வைகளின் விளைவுகளை கவனமாக பரீட்சித்துப் பார்க்க வேண்டும். இப்போது பெண்கள் ஆண்களைப் போன்ற அளவிற்கு சந்தோஷத்தை அனுபவிக்கிறார்களா? மேலும் சில விடயங்களைப் பொறுத்தவரை இடைவெளி மிக அதிகமாகவே காணப்படுகிறது. இது மனித முன்னேற்ற அறிக்கையில் (HDR) குறிப்பிட்டது போன்று அபிவிருத்தி முயற்சிகள் பெண்களுக்கு வாய்ப்பைக் குறைக்கும் வகையிலான உள்ளார்ந்த எண்ணத்துட னேயே செய்யப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பவேண்டி இருக்கிறது. இது தொடர்பாக HDRகீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறது:
அநேகமான சமுதாயங்களில் ஆண்களைவிட பெண் கள் குறைவான வாய்ப்புக்களையே கொண்டுள்ளனர். குழந்தைகளைப் பொறுத்தவரை கல்விக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சில சமயங்களில் உணவு, சுகாதார வசதி வாய்ப்புகள் கூட மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. பெரியவர்களைப் பொறுத்தவரை குறைந்த கல்வியும், பயிற்சியுமே அவர்களுக்கு கிடைக் கிறது. குறைந்த ஊதியத்திற்கு அதிகமான நேரம் வேலை செய்யவேண்டி இருக்கிறது. சொத்துரிமை மிகக்குறைவாக இருக்கிறது. சிலவேளை இல்லாமலே போகிறது. (UN1990:31)
வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களை நோக்கியும் பெண்களுக் கெதிரான பாகுபாடு என்பது வளர்ந்து வருகிறது. பெண்களுக்கு போதிய உணவு மறுக்கப்பட்டால், அவர்களின் சுகாதாரத் தேவைகளும், கல்வியும் ஆண்களைவிட குறைவாகவே வழங்கப்படு மாயின், சமுதாயத்தில் உற்பத்தியிலும்-மறு உற்பத்தியிலும் அவர்களது பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படுமானால், மனித
 

முன்னேற்றம் தொடர்பான புள்ளிவிபரச் சீட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பால்ரீதியிலான இன்டவெளி தொடர்ந்து அதிகரித்துச் செல்வதைத் தடுக்க முடியாது. அபிவிருத்தி என்பதனை மனிதர்களை மையமாகக் கொண்டு பால் வேறுபாட்டு அடிப்படையில் நோக்குவதெனில்; அபிவிருத்தி என்பது பெண்களை தனியான சமூகப் பிரிவாக எடுத்து சிறப்பாக அதனை வெளிக்காட்ட வேண்டும். இதற்கு அபிவிருத்திச் சுட்டிகள், அபிவிருத்தி நடவடிக்கை களின் மூலம் பெண்கள் பயன்பெற வேண்டுமானால், பெண்களின் வளிர்ந்துவரும் தன்னம்பிக்கையையும், சமுதாயத்தில் எல்லா அம்சங்களிலும் பங்களிப்புச் செய்வதற்கான அவர்களது ஆற்ற லையும் வலியுறுத்த வேண்டும்.
பெண்களுக்கெதிரான வன்முறை என்பது மனிதர்களை மையப்படுத்திய அபிவிருத்திக் குறிக்கோள்களை எய்துவதற்கு நேர்முரண்பாடானதாகும். இது அவர்களது வாழ்க்கையில் பல தடைகளை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தர்ப்பங்களையும் மறுக்கிறது. உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பெண்களின் நம்பிக்கையையும் அவர்களது மதிப்பையும் ஒவ்வொரு கட்டத்திலும் இழக்கச்செய்கிறது. இது பெண்களை உடல் ரீதியாக அழிக்கிறது. அவர்களது மனித உரிமைகளை மறுக்கிறது. சமுதாயத்தில் அவர் களது முழுமையான பங்களிப்பிற்கு தடையாக இருக்கிறது. எங்கே குடும்ப வன்முறை ஓர் பெண்ணை அபிவிருத்தித் திட்டங்களில் பங்குபற்றுவதை தடுக்கிறதோ அல்லது பால் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்கின்ற பயம் அவள் ஒர் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கிறதோ அல்லது எங்கே அவளை உழைப்பினால் வருமானம் பெற விடாமல் தடுக்க பலாத் காரம் பயன்படுத்தப்படுகிறேதா அங்கே அபிவிருத்தியோ முன்னேற் றமோ நடக்கவில்லை என்றே கூறவேண்டும்.
பெண்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஓர் வழிமுறையாகவே அவர்கள் அனுபவிக்கும் வன்முறை காணப்படுகிறது. இது அவர்கள் தாம் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான சந்தர்ப்பங்களை வற்புறுத்திப் பெற்றுக் கொள்வதை கட்டுப்படுத்துகிறது. இவ் வன்முறை வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் வரையும், வேலைத்தளங் களிலும், மற்றும் எல்லாப் பொது அமைப்புக்களிலும் காணப்படு கிறது. உற்பத்தி, மறுஉற்பத்தி ஆற்றல்களில் பெண்ணின் உழைப்பைக் கட்டப்படுத்தவே வன்முறை பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக;

Page 20
34
பெருவில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வுக்குட்படுத்தியதன் மூலமும், மெக்சிகன் மாக்குயிலாஸ் (Mexicanmaquilas) இல் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களை ஆய்வு செய்ததன் மூலமும்; அவர்களது சம்பளத்தைத் தம்மிடம் தரும்படி கேட்டு கனவன்மார் அடிக்கடி தமது மனைவி யரை அடிப்பதைக் காணமுடிகிறது. இந்தோனேசிப் பெண் தொழிலாளர்கள் துன்புறுத்தல்களிலிருந்தும், பாலியல்ரீதியாக தவறாக நடத்தப்படக்கூடிய வேளைகளிலும், தமக்கு பாதுபாப்பு இல்லையெனக் கூறி தமது கிராமத்துக்கு திரும்பிச் செல்கின்றனர். அடிக்கடி அவர்களது சம்பளங்கள் மாதாந்தம் வழங்கப்படாமல் பல மாதங்களுக்கு பிடித்துவைக்கப்படுகிறது. தப்புவதற்கோ, எதிர்த்து நிற்பதற்கோ வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன. பிலிப்பைன்சில் ஏற்றுமதிக் கைத்தொழில் முகாமையாளர்கள் அங்கு வேலை செய்யும் பெண்களுக்க வழங்கும் இரண்டு தெரிவுகள் “எமது ஆசைக்கு அடிபணி அல்லது வேலையை விட்டுப்போ”என்பதாகும் (AWRAN Report, 1985)
பெண்கள் ஆண்களில் தங்கியிருத்தல்
பெண்கள் ஆண்களில் தங்கியிருப்பதென்பது சமுதாயரீதியாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதுவே பெண்கள் வன்முறைக்கு ஆளாகும் இக்கட்டான நிலையிலுள்ளதைப் புரிந்துகொள்ளப் போதுமானதாகும். இவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியிலேயே தங்கியுள்ளனர். இவர்களது வாழ்க்கையின் பல மட்டங்களிலும் பால்ரீதியாகப் பாகுபாடு காட்டப்படுவதனாலேயே இவர்கள் இவ்வாறு தங்கிநிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. முதலாவதாக; மிகப்பெரும்பாலான பெண்களின் உழைப்பிற்கு வீடுகளிலும் வேலைத்தளங்களிலும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே இது மொத்தத் தேசிய உற்பத்திக் கணிப்பீடுகளில் இடம்பெறுவதில்லை. இம்மொத்த தேசிய உற்பத்தியே நாட்டின் உற்பத்திகான வேலையினைக் காட்டும் சுட்டியாகும். இரண்டாவதாக அதிகநேரம் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யவேண்டி ஏற்படுகிறது, அதிலும் குறைந்த வசதிகளிடையே ஆண்களைவிட பாதுகாப்புக் குறைந்த சூழ்நிலையிலும் வேலை செய்ய வேண்டியுள்ளது.
 

35
உளரீதியாகவும், சமுதாய-கலாச்சார ரீதியாகவும்கூட பெண்கள் ஆண்களைச் சார்ந்து நிற்கின்றனர். பெண்களின் ஆற்றல் பெண்களின் மதிப்பு ஆண்களையும் அவர்களது வாழ்க்கையையும் சார்ந்தே உள்ளதாக நம்புவதற்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள். தந்தையை, சகோதரனை, கணவனை, அல்லது மகனைச் சார்ந்தே பெண்கள் வாழ வேண்டுமென பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆண்களுக்குப் பணிந்து நடக்காவிட்டாலோ, கட்டுப்பட்டு நடக்க மறுத்துவிட்டாலோ சமுதாயத்ததால் ஒதுக்கப்படுகின்றனர். அல்லது விெறுப்புடன் பார்க்கப்படுகின்றனர். பெண் என்பவள் தனது சொந்தத் திறமைகளையும், ஆற்றல்களையும் மற்றவர்களின் தேவை களையும், விருப்பங்களையும் நிறைவேற்ற உதவுவதில் திருப்தி காணும்படி சமுதாயத்தில் வளர்க்கபட்டிருக்கிறாள். இதனால் ஆண்கள் அவர்களை அடித்தால் அது தமது குறைபாட்டினால் அல்லது தமது தவறு காரணமாகத்தான் தண்டிக்கப்படுகிறோம் என தம்மீதே தவறைப்போட அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வகை சமுதாயமயப்படுத்தல் என்பது கலாச்சார ரீதியாக திணிக்கப்படுகிறது. இதனால் பெண்களின் ஆற்றல் தொடர்ந்து குறைந்து செல்கிறது. அவளது பால்ரீதியான வேறுபாடு என்பது விற்பனைப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. அவளது வேலையும் பண்பும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை பெண்ணை அவளது உடல்ரீதியான செயற்பாடுகளை வைத்து தரம் குறைந்தவகையில் அடையாளம் காட்ட வழிவகுக்கிறது. எனவே இன்னும் பெண்கள் தொடர்பான ஆண்களின்தவறான அணுகுமுறைக்கு பெண்களே காரணமாக இருப்பதாகவும் அல்லது பெண்கள் இவ்வாறு தவறாக நோக்கப்பட வேண்டியவர்கள்தான் என்ற நிலையும் நீடிக்கிறது.
பெண்கள் சமூக-பொருளாதார, மனோவியல் ரீதியாக ஆண் களில் தங்கிநிற்றல் என்பது குடும்பத்தில் அல்லது அவர்களது வாழ்விடத்தில் அவர்களுக்கெதிரான வன்முறையிலிருந்தோ, பாலியல்ரீதியான துன்புறுத்தல்களிலிருந்தோ விடுபட்டுச் செல்வதை சிரமமாக்குகிறது. கிராமிய அமைப்பு முறைகளைப் பொறுத்தவரை இது மேலும் சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. உண்மை யிலேயே பெண்கள் செல்வதற்கென்று இடமில்லை. அல்லது இப்பிரச்சினைகளிலிருந்து விலகிப்போக வழிவகையுமில்லை. இவர்களுக்கு இவ்விடயத்தில் எந்தச் சேவையும் கிடைக்கக் கூடியதா கவும் இல்லை. நிபுணர்களின் கருத்தை மேற்கோள்காட்டி பொதுநல

Page 21
36 றொக்ஸானா காரியே
வாய நாடுகளின் அறிக்கையொன்று "பாதிக்கப்பட்டவர்கள் தங்குமிடம் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பான மாற்றுவசதி என்பது பத்தாயிரம் பேர்வரை இருக்கக்கூடிய நகரங்களி லேயே சாத்தியமானதாகும்” எனக்கூறுகிறது.
ஆனால், பெண்களைத் தவறாகப் பார்க்கக்கூடிய உறவுகளிலி ருந்து சுலபமாக விடுபடக்கூடிய நகர அமைப்புக்களிலும் இப்போதும் வன்முறைக்கும்-வீடின்மைக்கும் இடையிலான தொடர்பை விரிவாகப் பார்க்கவேண்டியுள்ளது. பொஸ்டனிலுள்ள வீடற்ற பெண்களுக்கான ஓர் இல்லத்தின் அறிக்கையின்படி அங்கு வாழ்ப வர்களில் 90 விகிதமானோர் குடும்ப உறுப்பினர்களின் வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்களாவர். (நியூயோர்க் டைம்ஸ் ஆகஸ்ட் 26 1990) நியூயோர்க் நகரின் பாதிக்கப்பட்டோர் இல்லத்தைச் சேர்ந்த வேலையாட்களின் அவதானிப்பும் மேற்கூறப்பட்ட அதே போக்கையே காட்டுகிறது. அவுஸ்திரேலிய சமூகவியலாளரான றொபர்ட் கொன்னல் (Robert Connel 1987; 11) அவர்களின் நோக்கில் பிரச்சினையின்றி வாழ்வதற்கேற்ற மாற்றீடான வீட்டுவசதி பற்றாக் குறையே அவர்கள் இத்தகைய இல்லங்களில் தங்கவும் அல்லது கட்டாயத் திருமணங்களுக்கு மீண்டும் செல்லவும் ஓர் காரணமாகிறது. மேலும் வன்முறையே பெண்களை மென்மேலும் ஆண்களில் தங்கிநிற்பதற்கு இட்டுச் செல்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து வரும் ஆய்வுகளும் பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் வன்முறை அவர்களது சுயமதிப்பைக் குறைப்பதுடன் அவர்கள் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் ஆற்றலைக் குறைக்கிறது எனத் தெரிவிக்கின்றன.
குடும்பத்திலும் குழந்தைகளிலும் இதன் தாக்கம்
பெண்களுக்கெதிரான வன்முறை என்பது குடும்பங்களினதும், குழந்தைகளினதும் முன்னேற்றத்தையும், நலன்களையும் கூட பாதிக்கிறது. அதிர்ச்சியினால் ஏற்படும் மனத்தாக்கம், மருத்துவ ரீதியில் தொழிற்பாடின்மை, நடவடிக்கைகளிலும்-உணர்ச்சிகளிலும் ஒழுங்கின்மை என்பன வன்முறை நிறைந்த வீட்டுக் குழந்தைகளிடம் காணப்படுவதாக கனடாவில் வீட்டில் தாக்கப்படும் பெண்களின் குழந்தைகளை ஆய்வு செய்த அறிக்கை தெரிவிக்கிறது. (Jafe, WolfeandWilson) தாயைத் தந்தை அடித்துத் துன்புறுத்தும்போது
 

37
அதனைப் பார்க்கும் குழந்தைகள் வன்முறையை ஏற்றுக்கொள்ளவும் அல்லது தாமும் அதில் ஈடுபடவும், தாய் தந்தையரை மரியாதையின்றி ஏசவும்கூட இது வழிவகுக்கின்றது என்றகருத்தும் உண்டு. வன்முறை குழந்தைகளை இத்தகைய சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்கிறது.
குழந்தைகளின் இறப்பைக் குறைப்பதற்குச் சிறந்தவழி பெண்களுக்கு கல்வியறிவை அதிகரிப்பதே என்பது மிகத்தெளிவாகத் Qg5ffpg). (White House Task Force on Infant Mortality Report, cited in the New York Times, August 12th 1990: Buvinic and Yudelman 1989) பெண்களின் கல்வியறிவு வளர்ச்சியுடனே சமுதாய வளர்ச்சியும் இணைந்திருக்கிறது. நடைமுறையிற் காட்டப்பட்டது போன்று குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு, குடும்பத்திற்கு சிறந்த ஊட்டச் சத்து, அடிக்கடி கருவுறுவதைக் குறைப்பதும்-சனத்தொகை குறைப்பும் ஆகியன பெண்களின் கல்வியறிவின் வெளிப்பாடே என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்ட அறிக்கை (UNDPReport) கோடிட்டுக் காட்டுகிறது. வேறு சில ஆய்வுகள் பெண்களின் தன்னம்பிக்கைக்கும் குழந்தைகள் இறப்பு வீதத்திற்கும் இடையே ஓர் தொடர்பை காண்கின்றன. குழந்தைகளின் உடல் நலமும், மனோவியல் வளர்ச்சியும் நாட்டின் எதிர்கால வளர்ச்சியுடன் இணைந்தவை. எனவே பால்வகைப்பட்ட வன்முறை, தன்னகத்தே கொண்டுள்ள பெண்கல்விக்கு இடையூறான தடை என்பது வெளிப்படையாக அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் முரணானது. எனவே பெண்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது என்பதும், கல்வியறிவை வளர்ப்பது என்பதும் குழந்தைகள் நலத்திற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நீடித்து நிலைத்திருக்கும் பயனைத் தருவதற்கான முக்கியமான மூலதனமாகும்.
பால்ரீதியான வன்முறை குடும்பங்களையும் அழிக்கிறது. பப்புவா நியூகினியின் சட்டச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆய்வின்படி கணவன்மார் தமது வன்முறை மூலம் நீண்டகாலப் போக்கில் குடும்பத்தலைவருக்குரிய தகுதியை இழந்து குடும்பத்தைக் கட்டுப்படுத்தும் தன்மையையும் இழக்கின்றனர். அவர்களது வன்முறை காலப்போக்கில் அவர்களுக்கே எதிரான விளைவுகளைக் கொடுக்கிறது. மனைவி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக் கையில் இறங்கும் பட்சத்தில் அவர்கள் காயப்படுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். தனது மனைவியிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் அன்பையும் மதிப்பையும் பெறத்தவறிவிடு

Page 22
38
கின்றனர். அதனால் பெரும்பாலும் குடும்பத்தையே இழந்துவிடு கின்றனர். ஏனைய பல நாடுகளைப்போலவே பப்புவாநியூகினியிலும் கண்மூடித்தனமாக அடித்தல் அல்லது தாக்குதல் என்பது விவாகரத்துக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைகிறது.
சமூகத்திற்கு ஏற்படும் நஷ்டம்
பெண்களுக்கெதிரான வன்முறை என்பது அபிவிருத்தியின் எல்லா அம்சங்களிலும் பெண்களை முழுமையாக பங்குபற்ற விடாமல் சமுதாயத்தை பின்தள்ளுகிறது. லோறி ஹெய்ஸ் (LOri Heise) குறிப்பிட்டதுபோல,
மூன்றாம் உலகநாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பரந்தளவுக்கு பொருளாதாரசமூக அபிவிருத்தியை பாதித்துள்ளது. பெண்களின் முழுமையான பங்களிப்பு இல்லாமல் பிறப்பு வீதத்தை யும், காடுகள் அழிக்கப்படுவதையும், பஞ்சம், பட்டினி பிரச்சினைகளையும் தீர்ப்பது முடியாத காரணமென அபிவிருத்திச் சமூகம் உணரத்தலைப்பட்டுள்ளது. எனவே பெண்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் வன்முறைப் பயத்தைச் சுமந்து கொண்டும் தமது உழைப்பை, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை இவ்விடயத்தில் நல்க முடியாது. (ஹெய்ஸ் 1989)
வன்முறையினால் பலமணிநேர வேலைகள் இழக்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் செலவு பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர் இழந்த வேலை நேரம், இதற்காக பொலிஸ் உட்பட சட்ட, மருத்துவ, மனோதத்துவ, சுகாதார அதிகாரிகள் செலவிடும் நேரத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். எந்தளவிற்கு இத்தகைய வன்முறைகள் இருக்கிறது என்ற தகவல்கள் கிடைப்பது குறைவாகவே இருப்பதனால் இதற்கு ஏற்படும் செலவுத் தொகையை சரியாகக் கணிப்பது பெரும்பாலும் சாத்தியமற்ற ஒன்றாகும். கணிக்கப்பட்ட மிகச்சில மதிப்பீடுகளின்படி அவுஸ்திரேலியாவின் வன்முறைகள் மீதான குழு (Committee On Violence) குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கான தங்குமிட வசதிகளுக்கு ஏற்படும் செலவு 1986-87இல் மட்டும் 27.6 மில்லியன்
 

39
டொலர் என கணிப்பிட்டுள்ளது. குயின்ஸ்லாண்ட் மாகாணத்தில் மட்டும் கடுமையான தாக்குதல் சம்பவங்கள் 108 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவை வருடந்தோறும் ஏற்படுத்து &airpooT. (Australian Institute of Criminology 1990: 15) GTGofgjun மிகப்பெரும் நட்டம் என்பது மனித அவலம்தான்.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவான இடங்களிலேயே வன்முறை அதிகமாக நடைபெறுகிறது. பாதுகாப் பற்ற போக்குவரத்துச் சேவை ஊதியம் பெறும் தொழிலாளர் படையில் பெண்களும் இணைவதை பெருமளவுக்குக் கட்டுப்படுத்து கிறது. பெண்கள் வேலைக்குப்போய் வரும்போது பொதுமக்களுக் கான போக்குவரத்து சாதனங்களில் நடந்த பல கடுமையான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளின் பின் இப்பிரச்சினையைப் பகிரங்கப்படுத்திய பம்பாயைச் சேர்ந்த "பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு” பெண்களுக்கு தனியான பஸ்சேவை “Ladies only Carriages" தேவை என அரசைக் கோரியது. ரொறன்டோவைச் சேர்ந்த குழந்தைகளுக்கும்-பெண்களுக்கும் எதிரான பொது GIGöTCpGogo fig5TGOT ELGIJLqėšGOD85ės Sug (Toronto Metro Action Committee on Public Violence Against Women and Children) 560Ts. விழிப்புணர்வை வெளிப்படுத்தி ஓர் பொது மக்கள் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது. பொது மக்கள் போக்குவரத்துச் சேவையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் மூலம் தொழிலாளர் படையில் பெண்கள் இணைவதற்கும் உதவியது. நகரத்தைத் திட்டமிடுதலிலும், வடிவமைப்பதிலும் பெண்களின் அக்கறை, பெண்கள் தொடர்பான பரந்துபட்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் அவர்களின் கருத்துக்களை நகர ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வைத்தது. அதன்விளைவாக நகரத்தில் மின்வசதிகள் அதிகரிக்கப்பட்டது பெயர்ப் பலகைகள், மக்கள் போக்குவரத்து வசதிகள் என்பன அதிகரிக்கப்பட்டன. நகரின் எல்லாக் கட்டிடங்களுக்கும் புதிய நிபந்தனைகளும், வழிகாட்டல்களும் கொடுக்கப்பட்டது. இம் முன்னெடுப்புக்கள் பெண்களின் சுதந்திரம் பொது இடங்களில் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதையும் எவ்வகையில் இத்தகைய பாதிப்பு அமைகிறது என்பதையும் உணர்த்துகிறது.
இன்னோர் உதாரணம்: போதிய மலசலகூட, தண்ணீர், குப்பைத் தொட்டி வசதியின்மையாகும். பொதுவாக பெண்கள் சன நடமாட்ட மற்ற தனிமையான இடங்களுக்கு மலசலம் கழிக்கச் செல்லவேண்டி

Page 23
40
யுள்ளது. இது குடிசைகள் அதிகம் உள்ள நகரங்களிலும், கிராமப் பகுதிகளில் வாழும் பெண்களுக்கும் பொதுவான ஓர் அனுபவமாகும். குறிப்பாக இத்தகைய சூழ்நிலைகள் அவர்கள் வன்முறைக் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட வாய்ப்பாக அமைகின்றன.
முன்னேற்றத் திட்டங்களில் பெண்களின் பங்களிப்புக்கு, பெண்களுக்கு எதிரான வன்முறை நேரடியான தடைக்கல்லாகும். உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான 9|Sasaq.55 figusair (United Nations DevelopmentFund for Women: UNIFEM) நிதியுதவியுடனான மெக்சிக்கோ திட்டமொன்று அடிபட்ட மனைவிகளை மேற்கோள்காட்டி பெண்களின் பங்களிப்பு மூலம் அவர்களது ஆற்றல் வளர்வதுடன் கூடவே அவர்கள் தாக்கப்படு வதும் அதிகரிக்கிறது எனக்கூறுகிறது. பெண்களின் வளர்ந்துவரும் ஆற்றல் தமது கட்டுப்பாட்டுக்குச் சவாலாக அமைந்துவிடும் என ஆண்கள் நினைப்பதே இவ்வன்முறைக்கு காரணம் என இத்திட்டம் அடையாளம் காண்கிறது. எனவே இவ்வாறு அடித்தல் என்பது பெண்களின் ஆற்றலைக் குறைப்பதற்கான முயற்சி என்பதை புரிந்துகொள்ள முடியும். இவ்வகையில் அவர்களது ஆற்றலைக் குறைத்து அவர்கள் அத்திட்டத்தினின்றும் விரட்டப்பட்டனர் என இவ்வாய்வு கூறுகிறது. இதேபோன்று வேலை செய்யும் பெண்கள் அமைப்புக்கான சுழற்சி நிதித் திட்டம் சென்னையில் அழிந்துபோகச் செய்யப்பட்டது. இதில் பங்குபற்றிய ஆற்றல்மிகு உறுப்பினர்கள் இதில் இணைந்துகொண்ட பின்னால் வீட்டில் இதற்கெதிராக அதிகரித்த வன்முறை காரணமாக அவர்கள் தமது பங்களிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டியேற்பட்டது. ஆனால் இதே பிரச்சினை களை எதிர்நோக்கி லிமாவைச் சேர்ந்த (Lima) பெண்களின் அபிவிருத்திக்கும் ஒன்றிணைப்புக்குமான கழகம் (Association for the Development and Integration of Women) 6.05unroots 605 அதிகரிப்பதையும் பெண்களுக்கான சட்ட உதவி வழங்குவதையும் இணைத்த திட்டத்தில் வெற்றிகண்டது. இத்திட்டத்தின் மூலம் கணவன்மாரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்களும் பெற்றோரால் கைவிடப்பட்ட பெண்களும் பயனடைந்தனர்.(Buvinic and Yudelman, 1989:44)
இவற்றையும் மீறி பெண்கள் தொடர்ந்து அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும்போது வன்முறையால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கவலை ஏனைய குறிக்கோள்களை நோக்கி அவர்களது சக்தியை
 

றொக்ஸ்ானா ফ্ৰািপ্লক্টuা 41
பயன்படுத்த முடியாமல் அவர்களை திசைதிருப்புகிறது. சிலவேளை களில் பெண்கள் கூட்டங்களுக்கு வரமுடியாமல் போகிறது. இதற்கான காரணங்கள் தாம் அடிக்கப்படுவோம் என்ற பயம் அல்லது தாக்குதல் காரணமாக உடல்நிலைபாதிப்புறுதல் அல்லது பாதிக்கப்பட்ட பெண்களையோ குழந்தைகளையோ கவனிக்க வேண்டி இருப்பது போன்றவையாகும். சில பெண்கள் தாக்கப்பட்ட தனால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வெட்கப்பட்டு பொது இடங்களுக்கு வருவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தும் சமுதாயத்தின் குணாம்சம் அவர்கள் மீது அனுதாபம் ஏற்படுத்தும் சூழலை உருவாக்குவதில்லை. இப்பிரச்சினைகளை விவாதிக்கும் குழுக்கள் வன்முறையையும் அதுதொடர்பான பிரச்சினைகளையும் பேசுவதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றன. இது ஏனைய திட்டக் குறிக்கோள்களை எய்துவதற்கான நேரங்களை யும் எடுத்துக் கொள்கிறது.
பால்வகைப்பட்ட வன்முறை பெண்களைத் தரம் தாழ்த்துவதும், அவர்களுக்கெதிரான வன்முறையைக் கண்டிப்பதற்குப் பதிலாக கண்டுகொள்ளாமல்விடும் கலாச்சாரமும் மூன்றாம் உலக நாடு களில் பெண்களின் முழுத்திறமையையும் பயன்படுத்த முடியாமல் தடுக்கிறது. குடும்ப அடக்குமுறையும், வன்முறையும் மிகச் சிறந்த படித்த பெண்களை நாட்டைவிட்டே ஓடச்செய்கிறது. இது மூன்றாம் உலக நாடுகளில் மூளைசாலிகள் குறைந்து செல்வதற்கும், முன்னேற்றத்திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய மிகச்சிறந்த மூளைசாலிகளின் இழப்புக்குமே வழிவகுக்கிறது. மாறாக மூன்றாம் உலகநாடுகளில் வாழும் பெண்கள் சமுதாயம் அவர்களுக்கென ஒதுக்கப்படிருக்கும் ஆண்களுக்குதவும் உதவிப்பணிகளை இசை வுடன் ஏற்றுச் செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களது ஆற்றலுக்கேற்ற வகையில் வெளிப்படையாக அவர்கள் உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்டால் கணவன்மார் தாழ்வுமனப்பான்மைக் குள்ளாகி வீட்டில் பிரச்சினை எழுமோ என்ற பயம் காரணமாக அவர்கள் பதவி உயர்த்தப்படுவதில் தயக்கம் காட்டப்படுகிறது. உதாரணமாக பப்புவாநியூகினியைப் பொறுத்தவரை,
ஓர் வன்முறை நடவடிக்கை எந்தளவிற்கு ஓர் பெண் ணின் மனதைக் கட்டிப் போடுகிறதோ அந்தளவிற்கு வன்முறைக்கான மிரட்டலும் அப்பெண்ணின் மனதைப் பாதிக்கிறது. இது பெண்கள் தம்மைத்தாமே

Page 24
42
சிறையிட நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஓர் பெண் தனக்கு என்ன தேவை? அல்லது தான் என்ன செய்ய வேண்டும்? அல்லது தனக்கு எது நல்லது? என்ற அடிப்படையில் முடிவை எடுப்பதற்கு மாறாக தனது கணவன் எதை அனுமதிப்பார் என்ற அடிப் படையிலிருந்தே அவளது தெரிவு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சுகாதாரமும், எயிட்சும், வன்முறையும்
அபிவிருத்தி என்ற விடயத்தில் சுகாதாரம் முக்கியமான ஒன்றாக வழக்கமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பால் வகைப்பட்ட வன்முறையைப் பொறுத்தவரை மிகத்தெளிவான உண்மை என்னவெனில் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பெண் களுக்கு தீங்குவிளைவிப்பது என்பதாகும். அது பெண்களின் வாழும் உரிமைக்கும் தீங்கானது. 1989இல் அமெரிக்காவைச் சேர்ந்த சத்திரசிகிச்சை அதிகாரி (Surgeon General) சீ. எவெர்ட் கூப் (C.Evert Koop)அவர்கள் தாக்குதலுக்கு ஆளாகாத பெண்களை விட தாக்குதலுக்கு ஆளான பெண்களுக்கு 4 அல்லது 5 தடவை அதிகமான மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கிறது என்று கூறுகிறார். இவர்களே தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாகும்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவிற்கு தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அமெரிக்கா வில் வருடத்திற்கு 10லட்சம் வரையாகும் என அவரது அறிக்கை கூறுகிறது. இக்காயங்களில்; கண்டற்காயங்கள், தலைமீது அடித்ததால் ஏற்பட்ட கலக்கம் அல்லது அதிர்ச்சி, மூக்குடைதல், பற்கள் உடைதல், கை-கால் விலா உடைதல், தொண்டைக் காயம், பிராண்டற்க்காயங்கள், கத்திக்குத்துக் காயங்கள், தீச் சூட்டுக்காயங்கள், கடித்த காயங்கள், போன்றவகைக் காயங்களும் உள்ளடங்கும். இத்தகைய காயங்கள்; கத்தியினாலும், காலால் உதைப்பதனாலும், கூர்மழுங்கிய கரடுமுரடான ஆயுதங்களாலும், கைமுட்டியால் இடிப்பதனாலும், நசித்தல் அல்லது நெரித்தலினா லும், மாடிப்படிகளிலிருந்து கீழ்நோக்கி வீழ்த்தப்படுவதனாலும் பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகின்றன. ஏராளமான ஆதாரங்களின்
 

43
அடிப்படையில் இப்பிரச்சினையைப்பற்றி; “பெருமளவிலான உள-பொருளாதார-சுகாதார சுமைகளை எமது சமுதாயத்தால் இதற்கு மேலும் தாங்கமுடியாது” எனக்கூறுகிறார்.
அரசாங்கம் இவ்விடயத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும், சமூக அளவிலும் பொருத்தமான நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றார். "சட்டவாக்க உறுப்பினர்கள், நகரகபைகள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், குற்றவாளிகள் கண்காணிப்பு அதிகாரிகள், சுகாதார-தொழில்-கல்வி நிறுவனங்கள், தொடர்பு சாதனங்கள்,திருச்சபைகளும்-பாதிரிமார் களும், தொண்டர் நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள்” இவர்கள் பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதனை அங்கீகரிக்க வேண்டும். மேலும் எல்லோர்க்கும் அவசியமான தலைமைத்துவத் தைத் தரவேண்டும். (Koop, 1989: 5.6) நிரப்பப்பட வேண்டும்.
எயிட்ஸ் பிரச்சினை சமமற்ற பால்ரீதியான உறவைப் புதிய கோணத்தில் வெளிப்படுத்துகிறது. எயிட்ஸ் தொற்றுநோய் அதிர்ச்சி தரும் அளவிற்கு அதிகரித்துவிட்ட ஆபிரிக்கக் கண்டத்தில் ஆண் களின் அடக்குமுறையால் பலவகைகளிலும் கொல்லப்படும் அளவிற்கு பயங்கரமான தாக்கங்களை பெண்கள் அனுபவிக்கின் றனர். உகண்டா சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட 15இற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட ஆண் -பெண்களை எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பகுதி பெண்களாகவும் ஒரு பகுதி ஆண்களாகவும் காணப்படுகிறது. பாலுறவில் அடிக்கடி ஈடுபடும் 18வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தாம் வயது குறைந்த பெண்களுடன் பாலுறவு கொண்டால் தம்மை இந்த நோய் பாதிக்கும் சாத்தியம் குறைவு எனப் பொதுவாக நம்புவதையே இது பிரதிபலிக்கிறது.
சில பகுதிகளில் குறிப்பாக பெண்களைக் கட்டுப்படுத்தும் மரபு ரீதியான பழக்கங்களான பெண் குறியின் உணர்ச்சியேற்றும் மென்சவ்வை (Clitoris) வெட்டி விடுதல், புணர்ச்சி செய்வதை தடுக்கும் பொருட்டு உணர்ச்சி மென்சவ்வு அமைந்துள்ள பெண்குறிப் பகுதியைத் தைத்துவிடுதல் போன்ற பழக்கமுள்ள இடங்களில் நோய் பெருகும் அபாயம் பலமடங்காகும். ஆண்களுக்கு பெண்களின் உடலை அனுபவிக்க கிடைக்கும் இலகுவான வாய்ப்பை உலகம் நியாயப்படுத்துகிறது. இப்போக்கு உலகம் எங்கும் ஆழமாக

Page 25
44
வேரோடிவிட்ட பழக்கமாகவும், மரபாகவும் ஆகிவிட்டது. இதன் விளைவாக கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வதன் மூலமும், தடைவிதிக்கப்பட்ட இரத்த உறவினருடனேயான பாலுறவு மூலமும், ஏனைய வடிவங்களிலான பலாத்கார பாலுறவு மூலமும் இவ்வைரஸ் பெண்களுக்கு கடத்தப்படுகிறது. எய்ட்ஸ் இற்கும் வன்முறைக்கும் இடையிலான தொடர்பை நிரூபிப்பதற்குப் போதியதரவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத போதும் இத்துறையில் நடத்தப்பட வேண்டிய ஆய்வு பெண்கள் தொடர்பாக எய்ட்ஸ் பற்றிய எமது புரிந்துணர்வை விரிவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை.
வன்முறைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளல்
இடங்களையும், மக்கட் சூழ்நிலைகளையும் பொறுத்து பால்ரீதி யான வன்முறை ஏன் இவ்வாறு காலத்திற்கு காலம் வந்து மாறும் நோய் போல தொடர்கிறது என்பதற்கு விடைகாண்பது குழப்பகர மான முயற்சியாகும். எனினும் இப்பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்ற கேள்வி எழும்போது ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டிய தேவையும் இங்கு எழுகிறது. இவை தொடர்பாக உயிரியற்(Biologica)காரணம் தொடக்கம் பிறப்புரிமை கோட்பாடு வரை எண்ணிலடங்கா கருத்துக்கள் காணப்படுகிறது. இவர்கள் மதுபானத்தையோ, வேறு போதையேற்றும் வஸ்துக்களையோ அதிகமாக அருந்துவதால் வன்முறை ஏற்படலாம் என்ற காரணமும் கற்பிக்கப்படுகிறது. இதனைவிட பஞ்சம்,சமூக வளர்ப்புமுறை ஆகியனவும் சிலவேளை பெண்களே கூட வன்முறைக்கு காரணமாகவும் இருக்கின்றனர். (Commonwealth Secretariat 1987: 12) géises(bigdisasait éauoubfloo சிறுசிறு உண்மைகள் இருந்தபோதும் இவற்றில் எந்த ஒன்றும் வன்முறைப்பழக்கத்தை நியாயப்படுத்தவோ அல்லது வன்முறைச் சூழலுடன் பொருந்தக்கூடிய ஏனைய காரணங்களைப் புரிந்து கொள்ளவோ போதுமானதாக இல்லை. இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் பெண்களுக்கெதிரான வன்முறை என்பது அறியப்பட்டுள்ள அல்லது புரிந்துகொள்ளப் பட்டுள்ள ஓர் நடைமுறையாகும். இதனை மாற்ற முடியும்.
பால்ரீதியான வன்முறைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற அரசியல்-சமூக உறுதிப்பாடு இருக்குமாயின் இவ்வன்முறை
 

தடுக்கப்படலாம் அல்லது பெருமளவிற்கு குறைக்கப்படலாம். பெண்களுக்கான வன்முறையின் ஊற்றுக்களை ஆராய்ந்து அதன் சாராம்சத்தை மட்டும் எடுக்கும் நோக்கம் கொண்டதல்ல இவ் விவாதம் மாறாக பால்ரீதியான வன்முறைபற்றிய புரிந்துணர்வு எந்தளவுக்கு அதைத் தடுப்பதற்கான உபாயங்களை உருவாக்கு வதற்கு உதவும் என காணும் முயற்சியே இவ்விவாதமாகும். இப்பிரச்சினையில் சமூக சேவையினரின் பதில் நடவடிக்கைகளுக்கு அப்பால் இப்பிரச்சினை எழாவண்ணம் தடுத்து நிறுத்தும் நோக்கத் திலேயே இவ்விவாதம் நிகழ்த்தப்படுகிறது.
வஸாக்கும், ரமாயோவும்(VasqueZandTamayo) பெருவில் செய்த ஓர் ஆய்வின்படி பெண்கள் தாக்கப்படுவதற்கான பல காரணங்கள் அடையாளம் காணப்பட்டன. அவை; ஆண்களுக்கும் பெண்களுக் கும் இடையேயான சமமற்ற உறவு, பால்ரீதியான படிநிலை அமைப்பு, ஆண்களே வீட்டில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பதால் பெண்கள் அந்நியப்படல், பெண்கள் தமது சொந்தக் காலில் நிற்கக்கூடிய அல்லது தனியாக வாழக்கூடிய ஓர் பக்குவத்தை எட்ட முன்னர் சிறுவயதிலேயே திருமணம் செய்தல், ஓர் பெண் ஆற்றல்களை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரே அமைப்பு வீடாகவே இருப்பது ஆகியனவாகும். பெண்ணை ஆதிக்கம் செய்வதனூடாகவே ஆணின் பிரதிநிதித்துவம் வெளிப்படுத்தப்படுகிறது. குடும்பச் சண்டைகள் தொடர்பாக குடும்பத்தினரே தமக்குள் கலந்து பேசாமை, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் முரண் பாடுகள், பிரச்சினைகளில் யாரும் தலையிடாமல் அது கணவன் மனைவி தகராறு என தமக்குச் சம்பந்தமில்லாத விடயம் என ஒதுக்கிவிடல் ஆகியனவும் பெண்கள் தாக்கப்படுவதற்குக் காரண மாகும். வன்முறைகளைக் குறைத்துவிடக்கூடிய பல அபிவிருத்தி இலக்குகளை அடையாளம் காண்பதில் இவ்வாய்வு ஆலோசனை கூறுகிறது. ஜேன் கொன்னர்ஸ் இவ்வன்முறை பழக்கத்திலுள்ள தலைகீழான முரண்பாட்டை விபரிக்கிறார்.
பால்ரீதியான வன்முறைகளை சமுதாய கட்டமைப்பு ரீதியாகவும், நிறுவனரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் ஆழமாய்ப் பார்த்தோம். பெண்களை இழிவாக நோக்குவதென்பது ஒர் அப்பட்டமான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடேயாகும். பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற வகையில் பெண்

Page 26
46 றொக்ஸானா srt Gມື,
களுக்குப் பொறுப்பானவர்களாகவும், அவர்களைப் பாதுகாப்பவர்களாகவும் சமூக உறவுகள் வளர்க்கப் பட்டிருக்கிறது.
பப்புவா நியூகினி ஆய்வுகள் கொன்னர்ஸ் அவர்களின் உறுதியான கருத்துடனும் அறிக்கையுடனும் உடன்படுகிறது.
பெண்கள் மீதான ஆண்களின் வன்முறை என்பது சாராம்சத்தில்; அவர்களது குறைபாடு, உதவியின்மை அல்லது தனிமை அல்லது பலவீனமேயாகும். அத்துடன் பெண்ணுக்கு எதிரான வன்முறை மிரட்டலின்போது பெண்ணுக்கு மனம் இளகி மயங்கி தாம் இக்கட்டுக்குள் மாட்டி விடுவோமோ என்ற பயமும் காரணமாகும். வன்முறை என்பது பெண் களைத் தாழ்வுமனப்பான்மைக்கு இட்டுச் செல்கிறது (Bradley: ibid)
வன்முறையினால் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு அவர் கள் ஆட்படாமல் அதனை எதிர்க்கும் வகையில் பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டியது தீர்வுதரவல்ல முக்கிய நடவடிக்கை என ஆலோசனை கூறுகிறது.
கொள்கைகளுக்கான வழிகாட்டல்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது காலம் காலமாக தொடர்ந்து எல்லாச் சமுதாயங்களிலும் பொதுவாக நடைபெற்று வரும் ஒன்றாகும். இந்த ஆய்வைப் பொறுத்தவரை மூன்றாம் உலகநாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்துப் போராடும் தந்திரோபாயத்தைத் தேடுவதே குறிப்பாக இதன் நோக்கமாகும். பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சியில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்கள் அவர்களின் வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளிலும் அவர்களின் முன்னேற் றத்திற்கும் பால்ரீதியான வன்முறைக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெண்களின் முழுமையான பங்களிப்பிற்கும், அதிகமாக வன்முறையினால் ஏற்படும் சவால், அது பெண்களுக்கு ஏற்படுத்தும் வரையறைகள், பலவந்தங்களை கணக்கில் எடுத்து

47
குறைந்த வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு இவ்வேலைத் திட்டங்கட்கு ஆதரவு அளிப்பது என்பதே முழுமுதற் கேள்வியாகும். செயல்முறை வகுக்கப்பட்டதும், செயல்முறை வகுக்கப்படாததுமான இரண்டு மட்டங்களிலுமே ஓர் அபிவிருத்தி அமைப்பு அல்லது செயல்திட்டம் எந்தளவிற்கு விளைவுகளின் வெற்றி குறித்து ஊக்கமான பங்களிப்பைச் செய்கிறது என்பதிலேயே இதற்கான பதில் தங்கியுள்ளது.
அபிவிருத்திப் பாதையில் பால்ரீதியான வன்முறை எந்தளவிற்கு தடைகளை ஏற்படுத்துகிறது என்பதனை வெளிச்சத்திற்க கொண்டுவரும் ஈடுபாடே ஊக்கமான பங்களிப்பு என்பதன் கருப்பொருளாகும். அத்துடன் திட்டமிடல், நடைமுறைப் படுத்தல், ஆவணப்படுத்தல், மதிப்பிடுதல், பரவலான விளைவுகளை ஏற்படுத்துதல் ஆகிய வேலைத்திட்டச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இப்பால்ரீதியான வன்முறையால் ஏற்படும் தடைகளை முறியடிக்கும் வழிவகைகளைக் கண்டறிவதும் இப்பங்களிப்பின் ஒர் பகுதியாகும்.
பல்முனைப்பட்ட செயல்திட்ட உருவாக்கப் படிகளிலும் நடவடிக்கை
அ.பால்ரீதியான வன்முறை ஏற்படுத்தும் தடைகள் தொடர்பான விழிப்புணர்ச்சி.
1. ஓர் வேலைத்திட்டத்தின் உருவாக்கம், நடமுறைப்படுத்துதல் ஆகிய இரு கட்டங்களிலும் கலாச்சாரரீதியான குறிப்பிட்ட வகை பால்ரீதியான வன்முறை தொடர்பான விழிப்புணர்ச்சியானது பெண்களின் பங்களிப்புக்குத் தடையாக உள்ள காரணிகளை அடையாளம் காணவும் அத்தடைகளை வெல்வதற்கும் பெரிதும் உதவும். உதாரணமாக தமக்கு முன்பின் தொடர்பில்லாத ஆண் களால் பிரச்சினை ஏற்படக்கூடிய போக்குவரத்துச் சாதனங்களைப் பொறுத்தவரை உள்ளூரளவில் சாத்தியப்படக்கூடிய மாற்றுப் போக்குவரத்துக்கான வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டும். பம்பாய் நகரில் பெருமளவு மக்களை ஏற்றி இறக்கும் “மகளிர் மட்டும்” வாகனங்கள் ஒதுக்கீடு, அல்லது பாகிஸ்தான் சுகாதார விரிவாக்க வேலையாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள "வழிப்போக்கர் விடுதிப் பாதுகாப்பு” ஆகியன இத்தகைய உபாயங்களைப் பிரதிபலிக் கின்றன.

Page 27
48
2. மேலும் திட்ட உருவாக்கத்தின் போதும், நடமுறைப்படுத்தலின் போதும்; பெண்களின் தகுதியும் அந்தஸ்தும் மாற்றத்திற்குள்ளாகும் வேளையில் அவர்கள் வன்முறைக்கு ஆட்படக்கூடிய நிலமைகளைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். இத்தகைய மாற்றம் பெண்களுக்கு வன்முறை மிரட்டலைக் கொண்டுவரும் என்பது கலாச்சாரரீதியாக வெளிப்படையான ஓர் விடயமாகும். வேலைத்திட்ட நடவடிக்கைகள் என்பன பெண்களது தன்னம்பிக்கையை பலப்படுத்தவும், தம்மைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றலை உருவாக்கவும், ஆண்களின் நிலைக்கு உயரவும் ஏதுவான வகையில் அமையவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் பெண்களின் ஈடுபாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவது, அவர்களது எதிர்பார்ப் பில் மாற்றத்தைக் கொண்டுவருவது ஆகியனவும் இத்திட்டங்களில் குறிக்கோள்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கட்டங்களில் அதன் விளைவாக வன்முறைச் சம்பவங்கள் நடக்கும்பட்சத்தில் அவை தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் இவ்வேலைத் திட்டங்களின் ஓர் அம்சமாகும். உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான 9|Safis issuscit (United NationsDevelopmentFund) QuincurrouT, மெக்சிக்கோவைச் சேர்ந்த UNIFEM அலுவலர்கள் வேலைத் திட்டங்களில் பங்குகொள்வோரின் வேலைத் தன்மைகளை மாற்றம் செய்வதன் விளைவாக எழும் வன்முறைகள் தொடர்பாக இத்திட்டங் களில் பங்குகொண்டு உழைப்போரின் கணவன்மாரையும், அவர் களது சமூக உறுப்பினர்களையும் அறிவுறுத்துவதற்கும் கணிசமான நேரம் செலவிட வேண்டியுள்ளது.
3. ஓர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கட்டத்தில் அவ்வேலை’ செய்ய ஆள் எடுப்புச் செய்யும்போது வன்முறை ஓர் தடையாக அமைவது தொடர்பான விழிப்புணர்ச்சி ஓர் முக்கிய பண்பாகக் கணிக்கப்பட வேண்டும். ஓர் திட்ட முகாமைத்துவம் என்பது வெறும் தொழில்நுட்பரீதியான தேர்ச்சி மட்டுமல்ல. மாறாக சூழல் தொடர்பான பரவலான விழிப்புணர்ச்சியும், பெண்களின் முழுமை யான பங்களிப்புக்கு வசதி செய்யும் வகையில் அதனை எவ்வாறு மாற்றியமைப்பது என்ற திறமையையும் கொண்டிருக்க வேண்டும்.
4. பால்ரீதியான வன்முறை அபிவிருத்திக்குத் தடையாக அமை கின்றது. வேலைத்திட்ட சூழற்சியில் ஏற்படக்கூடிய வன்முறைக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பங்களை குறைக்க எடுக்கும் நடவடிக்கை
 

49
களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அலுவலர்கள் நேரில் பார்வையிடச் செல்லுதல் அல்லது மதிப்பீடுகள் ஆய்வறிக்கைகள் மூலம் இவை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை பதிவு செய்யப் படலாம். இவ் அவதானிப்புகள் ஒன்று திரட்டப்பட்டு பகுத்தாய்வதை வேலைத்திட்ட அனுபவத்தின் மூலமான படிப்பினையின் ஓர் பாடமாகச் செய்ய முடியும்.
ஆ. பால்ரீதியான வன்முறை தொடர்பான புள்ளிவிபரங்களை, சேகரிக்கப்படும் தரவுகளுக்குள்ளும், திட்டமிடலுடனும், பயிற்சியு டனும் இணைப்பது என்பது அபிவிருத்திக்குத் தடையாக அமையும். இத்தகைய பால்ரீதியான வன்முறையை வெளிப்படுத்தவும் இப்பிரச் சினை தொடர்பான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் முக்கிய தேவையாகும்.
இ. அச்சமூட்டி செயலூக்கத்தைக் கெடுக்கக்கூடிய பால்ரீதியான வன்முறைக்கு எதிரான உறுதியான மாற்றுவழிகளைத் தேடுதல்.
நேரடியான முறையில் வன்முறையுடன் சம்பந்தப்பட்ட அல்லது வன்முறையைக் குறித்து நிற்கும் விடயங்களில் தலையிடுவதன் ஊடாக அல்லது நுட்பமான ரீதியில் வேலைத்திட்டங்களைப் பரீட்சார்த்தரீதியில் செய்து பார்க்கலாம். பெண்களை அச்சமூட்டி செயற்திறனை குறைத்தல் தொடர்பாக “பெண்களுக்கு எதிரான வன்முறையின் கடுமையான தன்மையையும், எந்தளவிற்கு அது தாக்கமானது என்பதையும் ஆவணப்படுத்தும் ஓர் வேலைத்திட்டம் அல்லது ஓரிரு கல்விப் பிரச்சாரத்தினூடாக வன்முறை சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதை அறிவுறுத்துவதன் மூலமும் பரீட்சித்துப் பார்க்கலாம். இதன்மூலம் இத்தகைய அணுகுமுறைகளின் பயன்களையும், சாத்தியப்பாடுகளையும் வெளிப்படுத்த முடியும். இதேபோல் வன்முறையின் விளைவுகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் (கற்பழிப்பு நெருக்கடி நிலையம், காவல்துறை, நீதிபதிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர் ஆகியோருக்கு பயிற்சிகள் போன்றவை). வேலைத்திட்டங்களுக்கு குறிப்பாக அவர்கள் புதிய அணுகுமுறைகளைப் பரீட்சிக்கும்போதும் அல்லது அரசாங்கத்திடம் சேவைகளை அதிகரிக்கக் கோரும்போதும் பால்ரீதியான வன்முறையை அம்பலப்படுத்துவதில் பரீட்சிக்கப்பட்ட அணுகுமுறைகளை விரிவுபடுத்தும்போதும் அதனை நாம் ஆதரிக்க வேண்டும்.

Page 28
50
ஈ. வன்முறையை அடையாளம் காணவும், எதிர்ப்பதற்குமான ஆற்றலை பெண்களுக்கு வளர்த்தல்.
தொடர்புகொள்ளும் ஆற்றலை பலமானதாக்கும் திட்டங்கள், சாத்தியமான நடவடிக்கைகளூடாக பெண்களின் விழிப்புணர்ச்சியை உயர்த்துகின்றன; முகாமைத்துவ ஆற்றலை வளர்க்கின்றன; தற்காப்புக்கலையை பயிற்றுவிக்கின்றன. பால்ரீதியான வன்முறையை அம்பலப்படுத்தும் ஆற்றலை விரிவுபடுத்தக்கூடிய வகையில் பெண்கள் அமைப்புக்களைப் பலமானதாக்கும் வேலையையும் செய்கின்றனர்.
11 செயல்முறை வகுக்கப்படாத படிமுறைகள்
சர்வதேசஅபிவிருத்திச்சமூகம் குறிப்பாக சமூகத்தினுள் உள்ள பெண்கள் அமைப்பு, வேலைத்திட்டங்களுடன் தொடர்புபடாத ஆனால் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் பொறுப்பை தாங்கள் ஏற்றுச் செய்யலாம். இத்தகைய வேலைகளில் ஈடுபடும் அலுவலரின் நேரம் தவிர வேறு செலவுகள் ஏற்படாது. இதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளுள் வன்முறை அபிவிருத்தியுடனும் முன்னேற்றத்து டனும் தொடர்புபட்ட பிரச்சினை என்பதனையும் அவர்களுக்குப் புரியவைக்கலாம். வன்முறை தொடர்பான பரவலான அறிக்கை களிலிருந்தும்; நிரல்படி வகுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஊடாகவும் அபிவிருத்திச் சமுதாயத்தில் பெண்களுக்காக வாதாடுபவர்கள் வன்முறையின் தாக்கத்தினை வெளிக்கொணர முடியும்.
ஒட்டுமொத்தமாக நோக்கின், பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அபிவிருத்தி அமைப்புக்கள், நிறுவனங்கள் ஆகியன தமது வேலைத்திட்டங்களையும், செயல்முறைத் தயாரிப்பையும் வன்முறை தொடர்பான அதிக உணர்வுடன் செய்ய வேண்டும். அத்துடன் முன்னேற்றம் அல்லது அபிவிருத்தியின் உள்ளார்ந்த விளைவாக வெளிவரும் புதிய வடிவிலான பால்ரீதியான வன்முறை தொடர்பாகவும் மனதிற்கொள்ள வேண்டும். வருமானத்தை உருவாக்கும் திட்டங்கள், வீட்டுத்திட்டங்கள் போன்ற குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை நேரடியாகச் சுட்டிக்காட்டாத வேறுபல அபிவிருத்தித் திட்டங்களின் அம்சமாகவும் பால்ரீதியான வன்மறைப் பிரச்சினையை வெளிக்கொணர்வது முக்கியமாகும். அபிவிருத்தியில் பெண்களின் பங்கு தொடர்பாக அதிக ஈடுபாட்டுடன்
 

51
செயற்பட்டுவரும் சர்வதேச அபிவிருத்தி அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், UNIFEM, உலக சுகாதார நிறுவனம், சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஆகியன சர்வதேச நிறுவனங்கள் என்ற ரீதியில் தமக்கிருக்கும் ஆற்றலையும், கெளரவத் தையும் இப்பிரச்சினை தொடர்பான நியாய ஆதிக்கத்தை விரிவுபடுத் துவதற்கும், இவ்விடயத்தில் வேலை செய்யும் குழுக்களுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
(plg6)
பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினையை அவர்கள் எடுத்தாளாமல் விடுவார்களேயானால் அபிவிருத்தித் திட்டங்களில் பெண்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தோல்வியில்தான் முடியும். பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தப்படும் பால்ரீதியான வன்முறைகளை அம்பலப்படுத்த உதவும் சர்வதேச அபிவிருத்திச் சமுதாயத்தின் வேலைத்திட்டங்களை நியாய ஆதிக்கமுடைய அபிவிருத்தித் திட்டங்கள்தான் என்பதனை நிரூபிப்பதே இவ்வாய்வின் முயற்சியாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினையைக் கையாளும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையாக அதிகாரம் அளிப்பதற்கான முயற்சியில் ஒரு பகுதியே இதுவாகும். இதனூடாக அபிவிருத்திப் ப்டிமுறைகளில் பெண்களின் முழுப்பங்களிப்பைத் தொடுவதற்கும் உறுதியான முயற்சியே இத்திட்டங்கள் என இவ்வாய்வு கருதுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை முறியடித்தல் என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கான தடையை இல்லாதொழித்தல் என்பது மட்டுமல்ல. பெண்களின் முழு ஆற்றலையும் அவர்களே உணர்ந்து கொள்வதை வெளிப்படுத்தும் ஓர் நடவடிக்கையுமாகும்.
மெக்சிக்கோவைச் சேர்ந்த பிரபல கல்வி தொடர்பான அறிஞர் இவ்வேலையின் உள்ளார்ந்த ஆற்றல் எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பதற்கு கூறிய விளக்கத்தை இங்கு கூறுதல் பொருத்த மாகும்.
கே: வன்முறைப் பிரச்சினையைத் தாங்கள் எவ்வாறு நோக்கு கிறீர்கள்?

Page 29
52
ப; பெண் எப்போது தனது சமுதாய பங்களிப்பை கண்டு கொள்கிறாளோ, எப்போது வன்முறைப் பிரச்சினை எழவில்லையோ அங்கு பால் தொடர்பான பிரச்சினையை இக்கருத்தரங்குகள் வெளிப்படுத்தவில்லை என்பதே அர்த்தமாகும். பசியால் குழந்தைகள் இறத்தல், பொருளாதார கஷ்டங்கள், தாக்கப்படல் போன்ற நீங்கள் கூறும் வன்முறைகளுள் எந்த வன்முறை தொடர்பாக நீங்கள் பரிசீலனை செய்யப்போகிறீர்கள் எனத் தெரிவு செய்யும்படி கேட்கிறோம். ஏனையவகை வன்முறைகளுடன் ஏற்கனவே மோதிய தாலும், குடும்ப வன்முறை பற்றிய புரிந்துணர்வு இருப்பதாலும் வழக்கமாக குடும்ப வன்முறையையே அவர்கள் தெரிவு செய்கிறார் கள். பொருளாதார ரீதியான வன்முறையைச் சமாளிக்க அவர்கள் உணவு வகைகளை விற்பது, அரசிடம் மானியம் கேட்பது என்ற வகையில் செயற்படுகின்றனர். ஆனால் தமது குடும்பத்திற்குள்ளோ, அயலவருடனோ, தனது அமைப்பிற்குள்ளே பேசக்கூட முடியாத வன்முறையின் வேறு அம்சங்கள் உள்ளன.இத் தடை செய்யப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கருப்பொருட்களே பால்வகைப் பிரச்சினை யுடன் வேலை செய்வதற்கு அடிப்படைகளாகும். ஏழையாக இருப்பதற்கு காரணம் கண்டுபிடிக்க அதிக வேலையில்லை. ஆனால் ஓர் பெண் என்ற வகையில், பெண்ணாக இருப்பதன் (ஏழைப் பெண்ணாக) அர்த்தம் என்னவெனில், அவர்கள் வாழ்வதற்கான விருப்பத்தைக் கொண்டுள்ளனர்; தம்மை வெளிப் படுத்தக் கற்றுக் கொள்கின்றனர்; பாலியற் பங்களிப்பு தொடர்பாக தமது அனுபவங்களை எவ்வாறு தமது பிள்ளைகளுக்கு கொடுப்பது என்பதை அறிய முற்படுகின்றனர்; தாம் ஒடுக்கப்படுவதற்கான காரணங்களைர அவர்கள் கண்டுபிடிக்கின்றனர்; அத்துடன், அதற்கேற்ப நடந்துகொள்ளும் வல்லமையையும் பெறுகின்றனர்.
架
 


Page 30
டாக்டர் மேரி ரட்னம்
இலங்கையில் பெண் கனேடியப் பெண்ம
- குமாரி ஜெயவர்
வைத்திய கலாநிதி அலிஸ்
முன்னோடிகளான சில ே
மருத்துவர்களும்,
- டிலோரெய்ன் ட
Printed by Karun
 
 
 

&ảT 2)_fia)unả55ITas உழைத்த তেন্তেীি
த்தனா
டி புவரும் பகர்ப் பெண்
ரோகியர்
aratne & Sons Ltd.