கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடலின் ஒரு பக்கம்: ஓர் ஆய்வியல் நோக்கு

Page 1
W W
 

* W.
W. *
W
W W W
W.
الليبيا. و

Page 2


Page 3


Page 4

தேடலின் ஒரு பக்கம்
- ஓர் ஆய்வியல் நோக்கு -
ஜெஸ்மி எம். மூல7
தென்றல் வெளியீட்டுப் பரிையகமீ,
LDCD5dp6D)6OT.

Page 5
தேடலின் ஒரு பக்கம்
ஆசிரியர்
தொடர்பு
முதற்பதிப்பு
6556 பிரதிகள் வெளியீடு அட்டை கணினியாக்கம்
பதிப்பாக்கம் விலை ISBN
Author
Contact
First Edition
Pages
Copies
Published by
Cover Computer Typesetting
Printing Price ISBN
- ஒர் ஆய்வியல் நோக்கு -
எம்.எம். ஜெஸ்மி (Journalist)
B.A. (Hons), PGDE, SLTS Dip-in-Human Rights, Resource Person (Tamil)
522B, ஸம் ஸம் வீதி, மருதமு-ை03.
தொலைபேசி - 0672224741, 0773624690 Lí56160T6556) - jesamymoosaGDyahoo.com
: 2008 Qsl'ILLibus.
: XX + 76
: 500
தென்றல் வெளியீட்டுப் பணியகம், மருதமுனை. என். சாமில், லாஸ்ற்மேன் அட்வடைசிங். ஜெஸா கிறயிக்ஸ்,
79/1, அல்-மனார் வீதி, மருதமுனை-02. Ο672225032, O776561557.
பெருவெளி, அக்கரைப்பற்று. 200 : 978 955-51296-0-2
Theadain Oru Pakkam
- Or Aayviyal Nokku -
: M.M. Jesmy (Journalist)
B.A. (Hons), PGDE, STS Dip-in-Human Rights, Resource Person (Tamil)
: 522B, Zam Zam Road, Maruthamunai-03.
Telephone - 0672224741, O773624690
Email - jesmymoosaGDyahoo.com : September 2008 : XX + 76 : 500
: Thendra Publication, Maruthamunai. : N. Shamil, astman Advertising. : Jesa Grafix,
7971, A-Manar Road, Maruthamunai-02. O672225032, O776561557
: Peruveli, Akkaraipattu. : 2OOf= : 978 955-51296-0-2
- ii -

வாப்பா எஸ்.எம். மூஸாவுக்கும் od LbLDT எம்.எல். றாஹறிலாவுக்கும் என்னைச் சமன் செய்த மனைவி பாத்திமா சுமைய்யாவுக்குமாக

Page 6

விரிவான தகவல்களைத் தரும் விமர்சன ரீதியாக அமைந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகள்
தமிழ்த்துறைத் தலைவர் - றமிஸ் அப்துல்லாஹற்
மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள, தென்கிழக்குப் பிரதேசத்துக்குத் தனியான இலக்கியப் பாரம்பரியமுண்டு. வாய்மொழி இலக்கியப் பாரம்பரியமும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களின் இலக்கியப் பணியும் இப்பாரம்பரியத் திற்கு செழுமை சேர்ப்பன. ஈழத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணியை அரங்கேற்றிய பெருமை மருதமுனைக்குண்டு. அத்தகைய சிறப்புமிக்க மருதமுனையைச் சேர்ந்த ஜெஸ்மி. எம். மூஸா அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைவதே இந்நூல்.
ஜெஸ்மி எம். மூஸாவின் குடும்பமே ஒரு கலைக் குடும்பம். இவரது தந்தையான மூஸா ஆசிரியர் “இஸ்லாமிய இயக்கங்கள் - ஒரு வெட்டுமுகம் -” என்ற நூலை எழுதியவர். இவரது சகோதரர் விஜிலி, சமகால இளம் கவிஞர்களுள் முக்கிய மானவர். அதுபோல அவரது மற்ற சகோதரர்களும் எழுத்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்தப் பாரம்பரியத்தோடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சிறப்புக்கலை மாணவராக நமக்கு அறிமுகமானவரே ஜெஸ்மி எம்.
ep6most.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிறப்பான இலக்கியம் பயிலும் மாணவர்களைப் பெற்று பெருமை கண்டது. அம்மாணவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரே இந்நூலின் ஆசிரியர். இவர் இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் தமிழ்ச் சங்கத் தலைவராகவும் இருந்து சிறந்த பணியாற்றியவர். இவரது இலக்கிய அனுபவங்களினுடே இலக்கியப்பணி புரிந்த தனியாட்கள் குறித்தும், இலக்கியச் சிந்தனைகள், வடிவங்கள் குறித்தும் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் இன்று நூலுருப் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் பத்திரிகைக் கட்டுரைக்குரிய பண்பில் இருந்து மாறுபடாது இருப்பது கவனத்திற்குரியது.
இலக்கியப் பணிபுரிந்த தனியாட்கள் வரிசையில் இப்பிராந்தியத்தின் செந்நெறி இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய முதல்வர் புலவர்மணி ஆ.மு. வடிரிபுத்தின்

Page 7
பற்றிய வரலாற்றுக் குறிப்பு இதில் இடம்பெற்றுள்ளது. "மர்ஹம் வடிரிபுத்தினின் வெளிவராத படைப்புக்களை வெளிக்கொணர வைப்பது அவரது குடும்பத்தினரது தார்மீகப் பொறுப்பாகும்” எனக் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். புலவர் மணியின் மகன் கவிஞர் ஜின்னாஹற் வடிரிபுத்தின் இப்பணியை பெருமளவு நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிராந்தியத்துக்குரிய சிறுகதை ஆசிரியர்களில் முதன்மையானவர் பித்தன் கே.எம். ஷா பற்றிய குறிப்புக்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பித்தனின் கதைகள் ஈழத்துச் சிறுகதையுலகில் புதிய அடையாளங்களைத் தோற்றுவித்தமையை இக்கட்டுரையாசிரியர் விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார்.
தென்னிலங்கைப் பிரதேசத்தின் மூத்த எழுத்தாளரான எம்.எச்.எம். ஷம்ஸின் பன்முக ஆளுமையைப் புலப்படுத்தும் முக்கிய கட்டுரையும் இத்தொகுதியிலுள்ளது. இக்கட்டுரை, ஷம்ஸ் ஓர் இலக்கியவாதிக்கு அப்பால் சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளராகத் திகழ்ந்துள்ளார் என்பது பற்றிய குறிப்புக்களை எடுத்துரைக் கின்றன. இதேபோல கவிஞர் எம்.எச்.எம். அஷரஃப்பின் கவிதைகளில் வெளிப்பட்ட அரசியல் சிந்தனைகளைத் தொகுத்து எழுதியுள்ளார். அஷரஃப்பின் கவிதைகள் பற்றிய முழு ஆய்வொன்றையும் ஜெஸ்மி தனது பல்கலைப் பரீட்சைத் தேர்வுக்காக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியாகக் கவிஞர் அல்லாமா இக்பாலினது கவிதைகளை இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைகளோடு ஒப்பிட்டு இத்தொகுதியில் நோக்கியுள்ளார். இவ்வாறு நூலாசிரியரிடம் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் உள்ளதை நமக்கு அறிமுகம் செய்துள்ளார். இக்கட்டுரைகள் அறிமுகக் குறிப்புக்கள் என்றளவில் நோக்கத்தக்கன. இன்னும் விரிவாக இவை எழுதப்பட வேண்டிய தேவையுள்ளது.
இதேபோல நூலாசிரியர் சில இலக்கிய வடிவங்கள், சிந்தனைகள் குறித்தும் இந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார். "தென்கிழக்குப் பிரதேசத்தவர்களிடமிருந்து தூரமாகிச் செல்லும் நாட்டார் பாடல்கள்” என்ற கட்டுரை நாட்டார் பாடல்களின் முக்கியத்துவத்தையும் அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறுகிறது. அதேபோல் 'லிமரிக்ஸ்’ எனும் கவிதை வடிவம் பற்றிய கட்டுரை ஒன்றும் இதிலுள்ளது. அவ்வடிவம் சமூக விமர்சனத்துக்குப் பயன்பட்ட விதம் குறித்தும் விரிவாக நோக்கியுள்ளார். இத்தொகுதியிலுள்ள இக்கட்டுரை மிக முக்கியமானதே.
நீக்ரோவியம் பற்றிய கட்டுரையும், பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரையும் விரிவான
- vi

தகவல்களைத் தரும் விமர்சன ரீதியாக அமைந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகள். எழுத்தாளனுக்குரிய துணிச்சலை இக்கட்டுரைகளில் ஆசிரியர் வெளிப்படுத்தி யுள்ளமை முக்கிய அம்சமாகும்.
மொத்தத்தில் இந்நூல் இலக்கிய ஈடுபாடுடையவர்களுக்கும், ஆர்வலருக்கும் வாசிப்பு ஈர்ப்பைத் தரும் நூலாகும். இது முழுமையான ஆய்வு ரீதியாக அமையாது தகவல்களை அறிமுகமாகத் தரும் குறிப்புக்கள் கொண்டவை. எதிர்கால ஆய்வுக்கு வழிவிடுபவை.
ஜெஸ்மி எம். மூஸா முயற்சியுள்ளவர். இன்னும் முயற்சியும் தேடல் ஈடுபாடும் கொண்டால் நமக்குப் பயன்தரும் நூல்கள் பலவற்றை அவர் தரக்கூடும். அதற்கு ஆண்டவன் அவருக்கு சித்திக்க வேண்டும். ஜெஸ்மிக்கு நமது வாழ்த்துக்கள்.
மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 8-07-2008. ஒலுவில்.
- vii

Page 8
இச்சிரமமான பணி படித்த இளையவர்களால் தொடரப்பட வேண்டும் எண்பதற்கு இந்நூல் முன்னுதாரணமாகும்
பன்னுரலாசிரியர் - டாக்டர் ஜின்னா வடிரிபுத்தீன்
ஆளுமைமிக்க ஒரு படைப்பாளி தான் சொல்ல விளையும் கருப்பொருளை கற்பனை நயங்கூட்டி ஒரு கவிதையாகவோ சிறுகதையாகவோ அன்றியொரு புதினமாகவோ சிருஷ்டித்து விடுவது ஒன்றும் சிரமமானதல்ல. ஆனால் ஒன்றின் மீது ஆய்வுசெய்து ஒரு பிரதியைத் தயாரிக்கும் ஒரு ஆய்வாளன் கொள்ளும் பிரயத்தனம் அபரீதமானது.
முதலில் தன் ஆய்வுக்குட்படுவது ஒரு தனி மனிதனாயின் அந்த நபர் பற்றிய முழுமையான தேடுதல் அவசியமாகின்றது. ஏதாவது ஒரு படைப்பைப் பற்றியதாயின், படைத்தவனின் கருத்துக்கு முரண்படாதவாறு முழுமையாக அதனைக் கற்று தெளிதல் வேண்டும். தவிரவும், தான் ஆய்வுக்காய்த் தேர்ந்த படைப்போடு ஒப்பாய்வு செய்தலுக்கான வேறு பிறவற்றையும் கற்றறிதல் வேண்டும். அகலவிரிந்த ஒரு தளத்திலிருந்து பிறந்துள்ள இவ்விலக்கியம் தனித்த ஆக்க இலக்கியத்தில் இருந்து வேறுபடுகின்றது.
இந்நூல் தனிமனிதத் தேடலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் கவித்துவ ஆளுமை பற்றியும், அவர்தம் அரசியல் நிலைப்பாட்டினை இலக்கியத்தின் வாயிலாக வெளிப்படுத்திய வித்துவத்தையும், தான்கொண்ட உசாத்துணை நூல்களிலிருந்து பெற்ற தகவல்களுடன்கூடி நிரூபணம் செய்கின்றார் ஜெஸ்மி எம். மூஸா,
கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் பன்முக ஆளுமையை மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளார். தேசிய நுண்கலைப் பிரிவுச் சபையின் உறுப்பினர்களாக நாமிருந்தபோது, முஸ்லிம்களின் கலாசாரக் கலைகளின் வளர்ச்சியின்பால் அவர் கொண்டிருந்த ஆளுமையையும், அக்கறையையும் நானறிந்திருந்தேன்.
எனது தந்தையார் புலவர்மணி ஆ.மு. வடிரிபுத்தின் அவர்களின் வரலாற்றுக் குறிப்பினைக் கைக்குள் பொத்தியபாங்கில் சுருக்கமாய்ச் சொல்லியிருப்பது சிறப்பு.
- viii -

இலங்கையின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான "பித்தன்” கே.எம். ஷா பற்றிய தகவல்கைளயும் விபரமாகச் சொல்லும் இந்நூல் எதிர்காலச் சந்ததியினர் தம் முன்னவர்கள் பற்றி அறிந்து கொள்ளத் தரும் சிறப்பான பதிவுகளாகும்.
இமாம் அல்-கஸ்ஸாலி, கவிஞர் அல்லாமா இக்பால் ஆகிய இருபெரும் மேதைகளை ஒப்பாய்வு செய்து தரப்பட்டுள்ள ஆய்வு, நூலுக்கு அணி சேர்ப்பதாகும்.
மேலும்; இந்நூலில் பின்நவீனத்துவக் கோட்பாடு பற்றியும், தமிழில் அதன் தவறான புரிதல் பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள விமர்சனங்களையும் கூறுவதோடு, அதன் தேவையையும் சொல்லுகின்றார்.
நாட்டாரியல் இலக்கியம் பற்றிய ஒரு ஆழமான தேடலுடன், தென்கிழக்குப் பிரதேசத்தவரிடமிருந்து வழக்கொழிந்து செல்லும் நாட்டார் பாடல்கள் பற்றியதோர் ஆய்வும் இந்நூலில் உண்டு.
“லிமரிக்ஸ்” கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும், அதன் மீள் அவதானிப்பின் தேவைபற்றியும் சொல்லுமவர் இலங்கையில் அவ்வடிவம் சார்ந்த கவிஞர்களாக மஹாகவி, ஷம்ஸ் போன்றோரால் எழுதப்பட்ட 'குறும்பா’ பற்றியும் இந்நூலில் கவிச்சான்றுகளோடு விளக்கி இருக்கிறார்.
கோஷடி சார்ந்து, இனம் சார்ந்து, பிரதேசம் சார்ந்து, தம்மைச் சுற்றியுள்ளவர் களைப்பற்றியும் மிகைப்படப் போசுவதோடன்றி, தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியின் பால் தமது முழுமையான பங்களிப்புச் செய்தவர்களை இருட்டடிப்பும் செய்து வரும் இன்றைய காலகட்டத்தில், இறந்தும் இறவாப் புகழுக்குரியவர்களை எழுத்தில் பதிவு செய்ய விருப்புக்கொண்டு இவ்வாறான உயரிய பணியில் ஜெஸ்மி முனைந்திருப்பது போற்றுதற்குரியதாகும்.
இச்சிரமமான பணி படித்த இளையவர்களால் தொடரப்பட வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு முன்னுதாரணமாகும். ஆசிரியருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
16, ஸ்கூல் அவன்யூ ஒப்(f) ஸ்ரேசன் வீதி, 23-03-2008. தெஹிவளை.
- іх -

Page 9
ஊர்ப்பற்று இருப்பதோடு உலகளாவிய நோக்கொண்றும் ஜெஸ்மி மூஸாவிடம் இருப்பதனைக் கண்டுகொள்ளலாம்
சிரேஷ்ட விரிவுரையாளர் - க. இரகுபரன்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே பயின்று, தமிழ் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறி, தற்போது பிரபல ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் திரு. ஜெஸ்மி எம். மூஸா. அவர் பணிவும், எவரிடமும் அன்பு பாராட்டும் இயல்பும் உடையவராய், சமுதாய முயற்சிகளில் முன்னிற்பவராய் விளங்கிய, விளங்குகின்ற துடிப்பான இளைஞர். ஊடகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.
அத்தகையவர் அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்காகத் தாம் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடுவது மகிழ்ச்சிக்குரியதே.
தமது கிராமம் சார்ந்த புலவர்மணி ஆ.மு. வடிரிபுத்தின் அவர்களைப் பற்றி எழுதும் ஜெஸ்மி, கடல் கடந்த தொலைதுார தேசத்துக் கறுப்பின மனிதர்களுக் குரியதான நீக்ரோவியம்' பற்றியும் எழுதுகிறார். ஊர்ப்பற்று இருப்பதோடு உலகளாவிய நோக்கொன்றும் ஜெஸ்மி எம். மூஸாவிடம் இருப்பதனை இதன் மூலம் கண்டுகொள்ளலாம்.
கட்டுரைகள் பெரும்பாலும் பத்திரிகை நோக்கில் எழுதப்பட்டமையாலோ என்னவோ அவற்றின் தலைப்பு முதல் கருத்து வெளிப்பாட்டு முறைமை வரையில் பத்திரிகை நடையே முனைப்புற்று நிற்கிறது. கட்டுரைகளின் எளிமைப்பாடு அதன் வழியாக ஏற்பட்டதேயாம்.
விடயங்களைச் சாதாரண வாசகர் மட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு அந்த எளிமைப்பாடு நன்கு உதவுவதாகலாம். அதனால் உண்டாகத்தக்க அறிவுப்பரம்பல் நாளாவட்டத்தில் அவர்களை மேல்நிலைப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையோடு ஜெஸ்மி. எம். மூஸாவின் நோக்கமும் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். கூடவே அவரது கருத்துக்களும் எழுத்துக்களும் மேம்படுவதற்காகவும் வாழ்த்துகிறேன்.
மொழித்துறை,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 24-05-2008. M ஒலுவில்.

வஐஸ்மி மூஸாவின் படைப்புக்களை வாளிக்கும் போது அவற்றின் பாணி ஆச்சரியப்படவைக்கின்றது
தினகரன் ஆசிரிய பீடத்திலிருந்து - அனோஜா முறிகாந்தன்
சகோதரன் ஜெஸ்மி எம். மூஸாவுடைய இந்த ஆய்வியல் நோக்கு நூலானது
வெவ்வேறு பட்ட விடயதானங்களை உள்ளடக்கி வெளிவருகின்றது. தினகரன்
பத்திரிகையிலே இத்தொகுப்புக்களில் பெரும்பாலானவை வெளிவந்துள்ளன.
மிகவும் இளம் வயதில் இவ்வாறானதொரு ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு
வரும் ஜெஸ்மி மூஸாவின் படைப்புக்களை வாசிக்கும் போது அவற்றின் பாணி
ஆச்சரியப்பட வைக்கின்றது.
மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலக மக்கள் எம்முன்னோர்
மத்தியில் நிலவிய பல விடயங்களை பின்பற்றாமல் இயங்கிக் கொண்டிருப்பதை
யாராலும் மறுக்க முடியாது. இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு பல
படைப்பாளிகள் நாட்டுப்புறக் கலைகள் பற்றி எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த வகையில் ஜெஸ்மி தினகரன் பத்திரிகையில் எழுதிய 'தென்கிழக்குப்
பிரதேசத்தவர்களிடமிருந்து தூரமாகிச் செல்லும் நாட்டார் பாடல்கள் ஆய்வுக்
கட்டுரை பலரால் விதந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று எம்.எச்.எம். ஷம்ஸ், பித்தன் கே.எம். ஷா, எம்.எச்.எம். அஷரஃப்
போன்றோரைப்பற்றி இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் எமக்கு அவசிய
மானவையே. பல்துறைசார் படைப்பாளியாக விளங்கும் ஜெஸ்மி தனது பணியைத்
தொடர இனிய வாழ்த்துக்கள்.
உதவி ஆசிரியர், தினகரன், லேக் ஹவுஸ், 20-04-2008. கொழும்பு
- xi l

Page 10
ஊடகவியல், கல்வியியல் எனும் இரு துறைகளில் தடம் பதித்திருக்கும் ஜெஸ்மியின் ஆய்வுப்பணி தொடரவேண்டும்
பத்திரிகையாசிரியர் - ரா. அப்துல்லாஹற் அஸ்ஸாம் (இஸ்லாஹி)
எங்கள் தேசத்தின் துவக்க காலத்திலிருந்து அதற்குப் பங்களிப்புச் செய்த பலருள் ஜெஸ்மி எம். மூஸாவும் ஒருவர். பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்திலேயே எங்கள் தேசத்தின் செய்தியாளராகப் பணியாற்றியவர்.
பல்கலைக்கழக கல்வி முடிந்து, ஆசிரியப் பணியில் இணைந்து கொண்ட பின்னரும் ஊடகப் பணியை இடையறாது தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எமது பத்திரிகையிலும் சரி, வேறு ஊடகங்களிலும் சரி அவர் எழுதி வரும் இலக்கியம் சார் கட்டுரைகள் கனதியானவை மட்டுமன்றி, ஆவணத் தகுதியுடைய ஆய்வுகளுமாகும்.
அவரது அரும் முயற்சியில் ஆக்கப்பட்ட ஆய்வுகைளத் தொகுத்து "தேடலின் ஒரு பக்கம் : ஒர் ஆய்வியல் நோக்கு” எனும் நூலாக வெளிக்கொணர அவர் எடுத்துள்ள முயற்சிகளை எங்கள் தேசம் மனமுவந்து பாராட்டுகின்றது.
ஊடகவியல், கல்வியியல் எனும் மிக முக்கியத்துவம் மிக்க இரு துறைகளில் தடம்பதித்திருக்கும் ஜெஸ்மி எம். மூஸாவின் ஆய்வுப் பணிகள் மேற்படி இவ்விரு தளங்களிலும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ஜெஸ்மி எம். மூஸாவின் முயற்சிகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவனின் அருள் என்றும் கிடைக்க எங்கள் தேசம் பிரார்த்திக்கிறது.
ஆசிரியர் பீடம், எங்கள்தேசம், 1 1-05-2008. கொழும்பு.
- xii

எனது மாணவரைப் பற்றி.
இந்நூலாசிரியரான எனது மாணவர் ஜெஸ்மி எம். மூஸா கடந்த ஒரு தசாப்தமாக தேசியப் பத்திரிகைகளிலும் மற்றும் சஞ்சிகைகளிலும் உற்சாகத்துடன் எழுதி வருபவர். மிகவும் இளம் வயதிலேயே ஆய்வியல் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் "தேடலின் ஒரு பக்கம்" - ஓர் ஆய்வியல் நோக்கு - எனும் நூலை வெளிக் கொணர்ந்திருப்பது நம் எல்லோரையும் மகிழ வைக்கின்றது.
1999 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் கால்பதித்த இவர் தினகரனில் இலக்கியம் சார் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருவதுடன் சுடர்ஒளி, எங்கள் தேசம், மெட்ரோநியூஸ், நவமணி, வீரகேசரியின் விடிவெள்ளி உள்ளிட்ட பத்திரிகைகளில் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார். சமூகவியல் பார்வையில் எழுதப்பட்ட இவரது கட்டுரைகள் பல பெரிதும் எல்லோரினதும்
கவனார்ப்பைப் பெற்றுள்ளன.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற ஜெஸ்மி மூஸா தமிழ்ச் சங்கத் தலைவர், மாணவர் பேரவை மற்றும் விளையாட்டுச் சங்கம் ஆகியவற்றின் பத்திராதிபர், பல்கலைக்கழக நிருவாகக் கட்டமைப்பினரை உள்ளடக்கிய "நியூஸ் லெட்டர்” ஆசிரியர் குழுவில் ஒருவர், 'துயரி சஞ்சிகையின் இணைஆசிரியர் எனப் பல பதவிகள் மூலம் தன் ஆளுமையினை வெளிக் காட்டியதுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஒலுவில் பிரகடனம்' நடைபெறுவதற்கும் முன்னின்று உழைத்தவராவார். பல்கலைக்கழகக் காலத்திலிருந்தே நூல் விமர்சனங்களை எழுதிவருவதுடன் மட்டுமல்லாது வெளியீட்டு விழாக்கள் பலவற்றிலும் கலந்து கொண்டு மதிப்பீடுகளையும் செய்து வருபவர். இவரது மதிப்பீடுகளைப் பார்க்கும் போது எமது பிரதேசத்தில் இலக்கிய மதிப்பீட்டாளன் ஒருவன் தோன்றியுள்ளான் என்ற பெருமை எமக்குண்டு.
சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஜெஸ்மி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மருதமுனை, நிந்தவூர், சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களில் உயர்தரத் தமிழையும் பிரத்தியேகமாகக் கற்பித்து வருகின்றார். மேலும் சுடர்ஒளிப்
- xiii

Page 11
பத்திரிகையின் உயர்தர வினாப்பத்திரத் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், மாகாணக் கல்வி அமைச்சின் தமிழ்ப்பாட வளவாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினரான இவர் மருதமுனை அபிவிருத்திச் சங்கம், டொக்ஸா விளையாட்டுக் கழகம் உள்ளிட்ட சமூகவியல் தாபனங்களிலும் பல்வேறு பதவிகளை வகித்துவரும் சமூக ஈடுபாடும் கொண்டவர்.
"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை” என்று கூறுவது போல இஸ்லாமிய நூல்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எம். மூஸா (B.A.J.P.) அவர்களின் புதல்வரான இவர் கவிஞர் விஜிலியின் சகோதரருமாவார்.
தற்போது இலக்கிய ஆய்வியல் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் ஜெஸ்மி எம். மூஸாவுக்கு தனி இடமொன்று உண்டு
என்பதே எனது திடமான நம்பிக்கையாகும்.
வளர்க அவரின் பணி,
வாழ்க வளமுடன்.
எம்.ஏ.ஏம். ஜெலில்,
(B.A. égDüL, M.A.)
முன்னாள் அட்டாளைச்சேனை
கல்வியியல் கல்லூரி 02-04-2008. உபபீடாதிபதி.
- Xiv -

வெளியீட்டுப் பணியகத்திடமிருந்து.
சர்வங்களின் இரட்சகனான அல்லாஹம்வுக்கே புகழ் அனைத்தும்.
போட்டி போட்டுக்கொண்டு முண்டியடிக்கும் எம்மவர்களுக்குள் இலக்கியம் சார் சங்கமங்களும் அதிகம். ஆயினும் அதன் தேவைப்பாடுகளுக்கேற்பதான பணிகள் இன்னும் எம்மைத் திருப்திப்படுத்தவில்லை. எமது சுயங்களை மாற்று நிலையாளர் களுக்குச் சொல்ல வேண்டிய அவசரப்பாடுகளும் எமக்குண்டு. மருதமுனையின் இலக்கிய ஆளுமை என்பது ஈழத்து இலக்கியப் பரப்பின் பரவலிலிருந்து நோக்கப்பட வேண்டியது. இஸ்லாமிய இலக்கியப் பாரம்பரியத்தை முதல்முதலாய் முன்னெடுத்தவர்களும் இங்கிருந்தவர்களே.
இந்நிழலாடலுக்குள் எம்மைச் சுற்றியுள்ளவர்களினதும், இருந்துவிட்டுச் சென்றவர் களினதும் இலக்கிய வகைமைப்பாடுகளை வெளிக்கொணரும் நோக்கிலேயே தென்றல் வெளியீட்டுப் பணியகத்தை நாம் முன்னெடுத்துச்செல்ல விளைந்தோம்.
ஜெஸ்மி எம். மூஸாவின் உயர்தரத் தமிழ் மாணவர்களுக்கான "நாகம்மாள் ஒரு பார்வை”, “மருதூர்க்கொத்தனின் சிறுகதைத் தொகுதி” என்பனவும் எமது வெளியீட்டுப் பணியகத்தின் முன்னெடுப்பினால் அறுவடைகளாயின. இத்தொடரில் ஜெஸ்மியின் "தேடலின் ஒரு பக்கம்” - ஓர் ஆய்வியல் நோக்கு - எனும் நூலை வெளியிடுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
எமது கிராமத்திலிருந்து மட்டுமல்ல தென்கிழக்குப் பிரதேசத்திலிருந்தே இதுவரை வெளிவந்த நூல்களுள் பல்துறை ஆய்வியலின் சாரமாய் வரும் முதல் நூல் என இதனைத் துணிந்து எம்மால் கூற முடியும். எதிர்காலத்தில் தனித்தனியாக ஆய்வினை மேற்கொள்ள சித்தம் கொள்பவர்களுக்கு இந்நூல் வழிவிடும் என்பது எம் அசையாத நம்பிக்கை. இவ்வகையில் இன்னும் பல வெளியீடுகள் இவரிடமிருந்து பிரசவிக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
குறுகிய வட்டப் பார்வை நோக்கிலிருந்து எம்மை விடுவித்து நீங்களும் எம்மோடு இணையவே இதனை ஆரம்பித்துள்ளோம். இது ஒரு சமூகத்திற்கான பணியகம் என்பதே எம் அழைப்பாகும்.
தென்றல் வெளியீட்டுப் பணியகம், அனோமா லேர்னஸ், பிரதான வீதி, மருதமுனை.
- XV -

Page 12
வலிகளும் வருடல்களும் எனக்குப் பழக்கப்பட்டவை
மாற்றங்களும் மரித்துப் போதலும் என எல்லாமே ஒரு சக்தியின் வெளிப்பாடே. அச்சக்தியே எம் எல்லோருக்கும் பொதுவான புகழாழன். அவன் கீர்த்தி கூறி எனது பெற்றோரை மனதில் இருத்தியவனாக சில வார்த்தைகள் உங்களுடன்.
பள்ளிப்படிப்பு, வளாகத்து வாழ்க்கை, வாழ்வின் தேடல், இலக்கிய நகர்வு என எல்லாமே எனக்குள் வலிகளும் வருடல்களும் நிறைந்தவைகளே; அவை பழக்கப் பட்டவையாகியும் விட்டன. என்னை நசுக்கிவிட எத்தனித்துத் தோல்வி கண்டவர்கள் தான் ஏராளம். உயர்த்திவிட்டு உரம் சேர்த்தவர்களோ சொற்பம். படிப்பே வெதும்பித் திசைமாறிய என்னைக் கண்டெடுத்துப் பட்டைதீட்டிய பெருமை என் கணிதப் பாட ஆசிரியர் எம்.ஏ.எம். சிறாஜ"தின் அவர்களுக்கே உண்டு. அவரது முயற்சியின் எத்தனிப்பே என் உயர்வுகள்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டு தமிழ்த் துறையின் முழுநேரச் செயற்பாட்டாளனாக என்னை ஈடுபடுத்திய போது அங்கு பெற்ற களங்களைக் கொண்டும் ஊடகத்துறையில் ஏற்படுத்திய நாட்டத்தினதும் விளைவுகளாலுமே இலக்கியம்சார் ஆய்வுகளை எழுதத் தொடங்கினேன். தமிழ்ச் சங்கத் தலைவரும் தமிழ்த்துறை மாணவனும் என்ற இணைப்பு என் இலக்கிய அறிமுகத்திற்கு உரமூட்டியவைகள். இவைகளால் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு எப்போதும் நான் நன்றிக்குரியவன்.
பிராந்தியப் பத்திரிகைகள் சிலவற்றில் எழுதிக் கொண்டிருந்த நான் 2000ஆம் ஆண்டு முதல் சிறுசிறு இலக்கிய வெளிப்பாடுகளை தினகரனுக்கு அனுப்பத் தொடங்கினேன். அப்போது வாரமஞ்சரியின் கலை இலக்கியப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த 'சைத்திரியன்” என்ற புனைப்பெயர் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லோரன்ஸ் செல்வநாயகம் அவர்களுக்கு என் எழுத்துக்களில் நம்பிக்கை ஏற்பட்டது. மூத்த ஊடகவியலாளரும் என் சாச்சாவுமான எம்.எல்.எம். ஜமால்டீன் அவர்களிடம் என் தொலைபேசி இலக்கத்தைப்பெற்று பேசியது முதல் தினகரன் வாரமஞ்சரியின் கலை இலக்கியப்பகுதியில் எனது செவ்வி காணலும் கட்டுரைகளும் தொடர்களாயின. இதனால் லோரன்ஸ் அவர்கள் எப்போதும் என் நினைவில் அகலாத நன்றிக்குரியவர். இவரைத் தொடர்ந்து இப்பகுதியைப் பொறுப்பேற்ற தினகரன் உதவி ஆசிரியர் அனோஜா சிறிகாந்தன் என்னால் மறக்கமுடியாதவர். எனது கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் அனோஜாவின்
- xvi -

பிரயத்தனம் குறிப்பிடத்தக்கது. இவருடன் எனது கட்டுரைகளை வெளியிட அங்கீகாரம் அளிக்கும் பிரதம ஆசிரியர் சிவசுப்பிரமணியம் ஐயா, ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த மர்ஹ9ம் எம்.எச்.எம். ஷம்ஸின் புதல்வர் எம்.எஸ்.எம். பாஹிம் உள்ளிட்ட தினகரன் குடும்பத்தினருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
எனது கட்டுரைகளில் காணப்பட்ட இனம்சார் வெளிப்பாட்டுக்குரியவைகளை முழுமைப்படுத்தக் களம் தந்த எங்கள் தேசம் பத்திரிகைக்கும், அதன் ஆசிரிய பீட நண்பன் பவர் அலிக்கும் விஷேட நன்றிகள்.
தினகரன், எங்கள்தேசம் ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளில் சிலவற்றையே இங்கு தொகுதியாக்கியுள்ளேன். எனது பல்கலைக் கழகக் காலத்தில் எழுதியவைகளைவிட அதிகமானவை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்னரே எழுதப்பட்டுள்ளன. இவ்வாறான கட்டுரைகளை எழுதியது நானாக இருந்தாலும் என் எழுத்துக்களுக்கான வெளிப்பாட்டைச் சீர்செய்தவர் என் மனைவி சுமைய்யாதான். அவரிடமிருந்த பரந்த வாசிப்பும், இலக்கியம்சார் நாட்டமும் என்னுடைய எழுத்துக்களிலும் அக்கறையாக்கின. அதனால்தான் என் முதல் வாசகராக அவரையே எப்போதும் கொண்டுள்ளேன். திசைமாறிய என்னைத் தத்தெடுத்துச் சீராக்கி எனது எழுத்துக்களுக்கும் உரம் சேர்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு என் நன்றிப் பூக்களைக் காணிக்கை யாக்கின்றேன். இந்நூல் வெளியாவதற்கு அவரின் கடின உழைப்பே காரணம் என்பேன்.
இந்நூலிற்கான உரைகளைத் தந்த என் இலக்கியத் தந்தை தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லாஹற்; என்றும் கெளரவமான எனது விரிவுரையாளர் க. இரகுபரன், பன்னூலாசிரியர் கவிஞர் ஜின்னா வடிரிபுத்தின், தினகரன் உதவி ஆசிரியர் அனோஜா சிறிகாந்தன், எங்கள் தேசத்தின் ஆசிரியர் ரா. அப்துல்லாஹற் அஸ்ஸாம், முன்னாள் அட்டாளைச்சேனைக் கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதியும் எனது ஆசிரியருமான எம்.ஏ.எம். ஜெலில் ஆகியோருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைச் சொரிவதில் பூரிப்படை கின்றேன்.
நூலினை வெளியிடுவற்கான ஆரம்ப முயற்சி முதல் வெளியிடுவதுவரையிலான கனதியான ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் சதொச முகாமையாளர் எனது மாமனார் எம்.ஏ.எம். மர்சூக், கட்டுரைகளை மீள்வாசிப்புச் செய்து திருத்தியுதவிய எனது சகோதரர்களான ஆசிரியர் கவிஞர் விஜிலி மற்றும் கல்முனைப் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மெளலவி றஸ்மி மூஸா ஆகியோருக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கிய
- xvii

Page 13
உறவினர்களான தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி நூலகர் மஸ்றுாபா ஹாமீம், ஆசிரியர் எம்.ஏ.எம். அனஸ் ஆகியோருக்கும் கெளரவமான நன்றிகளைத் தெரிவிப்பதில் அகமகிழ்கின்றேன்.
இதனைக் கணினியாக்கம் செய்த ஜெஸா கிறயிக்ஸ் உரிமையாளர் எஸ்.ஏ. ஜெசிம், கட்டுரைகளை எழுதும் போது தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்ள உதவிய எனது மாணவன் எஸ்.எம். ரஜா அமினுடீன் (தென்கிழக்குப் பல்கலைக் கழக நூலகம்), எழுத்தாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். றஊப், நூலினைப் பதிப்பாக்கம் செய்த பெருவெளி பதிப்பகத்தார், அட்டையினைத் தயாரித்த என். சாமில், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த தென்றல் வெளியீட்டுப் பணியகம், வளாகத்து மற்றும் கடற்கரை நண்பர்கள், என்னால் நினைவுகூரப்படவேண்டிய ஆசிரியர்கள், இலக்கிய நண்பர்கள் ஆகியோர்களுக்கும் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொறாமைகளும் மனக்கிலேசங்களும் நிறைந்ததே எழுத்துத்துறை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. வெறும் கோதுகளைக்கூடக் கோபுரமான படைப்புக்கள் எனக்கூறிய பலர் என் நூல் விடயத்தில் காட்டிய தயக்கங்கள் எனது வெளிப்படுத்தலின் தரத்தை எனக்குள் இன்னும் மேன்மைப்படுத்தியது. இன்ஷா அல்லாஹற் இவர்களுக்கு காலம் பதில் கூறும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குண்டு.
இது ஒர் ஆய்வுநூல் என்று மகுடம் சூட்டவேண்டும் என்ற அபரிதமான எண்ண மொன்றும் என்னிடம் இல்லை. ஆயினும் இம்முயற்சியினைத் தொடரவைப்பதும் துண்டித்துவிடுவதும் உங்கள் கரங்களிலேயே உண்டு. நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் உங்கள் பணிகளில் என்றும் நான் இணைந்திருப்பேன். உங்களது கனதியான கருத்தாடல்களை எதிர்பார்க்கிறேன் அது என்னை வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்.
எல்லோருக்கும் எல்லாம் நலமாக அமைய என் வாழ்த்துக்கள்.
என்றும், மிக்க அன்புடன்,
522B, ஸம் ஸம் வீதி, மருதமுனை-03. 2008-08-08 067222474 1,0773624690
ஜெஸ்மி எம். மூஸா
- xviii

O1)
02)
03)
04)
O5)
06)
07)
08)
09)
தேடலாய்,
தான்சார் அரசியலைத் தன் கவிதைகளால் வெளிப்படுத்தியவர் எம்.எச்.எம். அஷரஃப். O1
தமிழியல் சூழலில் பின் நவீனத்துவமும் தவறான eblsálesejtb................................................................... 14
இலக்கியப் பரப்பின் பன்முகத்தன்மை எம்.எச்.எம். ஷம்ஸ்' . 22
தென்கிழக்குப் பிரதேசத்தவர்களிடமிருந்து தூரமாகிச் செல்லும் நாட்டார் பாடல்கள். 28
மருதமுனை ஈன்ற "புலவர்மணி" &-Up. 6.9flu55s............................................................ 37
நீக்ரோவியம் ஒரு பாண்பாட்டு எதிர்ப்பின் Q616flours...................................................................... 43
ஈழத்துச் சிறுகதையின் முன்னோடி "55566' (38.6Tib. 69rt ...................................................... 49
"அறிஞர் அல்-கஸ்ஸாலி '856.6b5" &6bourTLDIT gaisure).......................................... 56
நகைச்சுவையும் சுருக்கமும் மிக்க “லிமரிக்ஸ்” கவிதைகளின் தோற்ற வளர்ச்சியும் Lí6oil ei5u95TU59álstil Gog6606).jurb ...................... 61
- хіх -
13
21
27
36
42
48
55
60
76

Page 14
- ΧΧ --

தான்சார் அரசியலைத் தன் கவிதைகளால் வெளிப்படுத்தியவர் எம்.எச்.எம். அவற்ரஃப்
கட்சிச் சார்புக்குள் உட்படாத மனிதர்களைக் காண்பது அரிது. கவிஞர்களைப் பொறுத்தவரை அவர்களில் பலர் அரசியலால் பாதிக்கப்பட்டும் இன்னும் சிலர் அரசியலுக்குள் இருந்து கொண்டும் கவிதைகளை எழுதினர். ஈழத்தில் சி.வி. வேலுப்பிள்ளை, நீலாவணன் முதலியோர் அரசியல் சார்புடன் கவிஞர்களாக வலம் வந்தோருள் குறிப்பிடக்கூடியவர்கள். இத்தொடரில் கவிஞர் திலகம் அஷ்ரஃபும் உள்ளடங்குகிறார்.
1980 களைத் தொடர்ந்து அரசியலில் அஷ்ரஃபின் தடம் பதியத் தொடங்கியது. அஷ்ரஃபின் அரசியல் பிரவேசத்திற்கு முந்தியதே அவரது இலக்கியப் பிரவேசம் என்பதால் இங்கு ஒரு கவிஞனே அரசியல்வாதியாகிறான். ஏதோவொரு பாதிப்பினுாடாகவே கவிதைகள் வெளிக்கிளம்புகின்றன. இதற்கிணங்க அரசியல் பாதிப்பு, அது சார்ந்த கவிதைகளை அஷ்ரஃபுக்கு கொடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை.
பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியில் பங்காளி யாகித்தான் தமது காரியங்களைச் சாதிக்கலாம் என்ற நிலை ஆரம்பகாலம் தொட்டே முஸ்லிம் தலைவர்களிடமும் மக்களிடமும் இருந்து வந்தது. எனினும் அஷ்ரஃப், தான் அரசியலுக்கு வர முன்னரே இதுபற்றிச் சிந்திக்கலானார். 1968 இல் அவர் எழுதிய "பந்தாட்டம்” எனும் கவிதை இதற்கு நல்ல
உதாரணமாகும்.
பந்தொன்று எவ்வாறு இரு குழுக்களால் ஆடப்படுகின்றதோ
அவ்வாறுதான் முஸ்லிம்களும் மாறிமாறிவரும் ஆட்சியாளர்களால் ஆடப்பட்டனர். எவ்வாறாயினும் வெற்றி பெறுகின்ற பக்கம் சென்று ஒட்டிக் கொள்வதே
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G10

Page 15
முஸ்லிம் அரசியல் வாதிகளின் நிலையாக இருந்து வந்தது; இன்றும் இருக்கின்றது; யார் தங்களை எதிர்க்கின்றார்களோ அவர்களிடமிருந்து பிரிந்து தனக்குச் சரியான பக்கம் இணைந்து கொள்ளும் வழக்கமொன்றும் புதிதல்ல. இதனைக் கவிஞர் பந்தாட்டம்' என்ற இக் கவிதையில் இவ்வாறு கூறுகின்றார்.
வெற்றி வாயில் தனை நோக்கி விரைவில் சென்ற பந்தின் மேல்
குற்றம் கண்ட எதிர் வீரன் கோபம் கொண்டே மேலெழுந்து நெற்றியாலே மோதுகின்றான் நிலத்தில் விழுந்து அது உடனே மற்றப் பக்கம் தனைநோக்கி
மிகவும் விரைந்து செல்கிறது. (166 : 99)
மேலும், அவரவர் விருப்பம் போல் முஸ்லிம் தலைமைகளும் மக்களும் சென்றமைக்குக் காரணம் தமக்கென்றதொரு கட்சி இல்லாமையே என்பதனை,
எந்த வீரன் உதைத்தாலும்
எந்தப் புறமும் சாராத
சொந்தக் கட்சி ஒன்றின்றி
சுழன்று பந்தும் அலைகிறத (166 : 99) எனும் வரிகளில் கவிஞர் கூறுகின்றார்.
தன் உள்ளத்தில் எழுந்த சமூகம் பற்றிய அரசியல் வருடல்களை ஒரு பந்தின் ஆட்டத்திற்குள் அடக்கியிருப்பது மெச்சத்தக்கது. அரசியலை விளையாட்டாகக் கருதும் எம் தலைவர்களுக்கு இவ்விளையாட்டு முன்னோடியானதே.
பந்தாட்டத்தின் மூலம் எமது தலைவர்களின் நிலையினை படம் போட்ட கவிஞருக்கு முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய தனியானதொரு கட்சி அவசியம் என்ற கருத்து முனைப்புப் பெறலாகியது. அதன் வெளிப்பாடே “புதிய பாதை” என்ற கவிதையாகும்.
-G2)-C ஜெஸ்மி எம். முஸா D

எண் பாதை இனி வேறு
புதிய பாதையொன்றில்
புறப்பட்டுச் செல்கின்றேண்
இதயங்கள் இருக்கின்ற
இனியவர்கள் செல்கின்ற
புதிய பாதையொன்றில்
புறப்பட்டுச் செல்கின்றேன். (160 : 99)
இப்பகுதியானது கவிஞரின் கருத்திற்கான சிறந்த ஆரம்பத் தைக் கொடுத்துள்ளது எனலாம்.
இக்கவிதை எழுந்த காலம் 1971. இக்காலத்தில் பீற்றர் கெனமன், எஸ்.ஏ. விக்ரமசிங்க எனப் பல கமியூனிஸ்டுகள் இலங்கை அரசியலில் காணப்பட்டனர். அவர்கள் வெறுமனே தாடிகளை வைத்துக்கொண்டு பேசித் திரிந்தார்களே அன்றி, அவர்களால் எவ்வித அரசியல் பிரதிபலன்களும் கிட்டவில்லை. இது கவிஞருக்கு ஒரு பிரச்சினையாகிவிட்டது. இதனைத் தன் கவிதையில் இவ்வாறு சாடுகிறார் அஷ்ரஃப் :
கற்பனாவாதம் பேசி
காலத்தை வீணடிக்கும்
விற்பன்னர்களிலிருந்து
விலகிச் செல்கின்றேன்
தாடிகளை வளர்க்கும்
தந்திரத்தால் புதுவுலகம்
காணத் தடிக்கின்ற
கபோதிகளை விட்டொழிந்து
ஓடியெண் பாதையிலே
ஒழுங்காகச் செல்கின்றேன். (160 : 99)
இங்கு ஒரு முற்போக்குவாதியாகிறார் கவிஞர் மேலும் இவ்வாறான மாறுதல்களும் போராட்டங்களும் அரசியல் வரலாற்றில் எளிதில் கிடைப்பதில்லை. இதனை,
இன்னல்களைத் தாணர்டுகையில்
இரத்தம் வடிகிறது:
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G3)-

Page 16
தடைகளைத் தாண்டுகையில் தாடை உடைகிறது (161 : 99) என்கிறார்.
எங்களை நோக்கி எத்தனை டாங்கிகள் வந்தாலும், குண்டுகள் பாய்ந்தாலும், பெரும் இடர்கள் நேர்ந்தாலும் எங்களிடம் எதிர்த்துப் போரிட எதுவுமே இல்லை. இதயத்தையும் இறை சக்தியையும் தவிர என்பதே அஷ்ரட் பின் வாதமாகும்.
இக்கருத்தாடலை
0 a ஓடி வரும் டாங்கிகள்
தாங்கி வரும் குணர்டுகள்
தடைகளினை அதிகரிக்கும்.
எங்களிடம் எதவுமில்லை
எங்களிடம் இருப்பதுவோ
இதயங்கள் மாத்திரமே
எங்களிடம் எதவுமில்லை.
எங்களிடம் இருப்பதவோ
இறைசக்தி மாத்திரமே! (162 : 99) என விபரித்தும் நிற்கின்றார்.
இவ்வாறான முன்னெடுப்புகளின் போது உயிர்கள் பறிக்கப்படலாம். அவ்வாறு நிகழ்ந்தாலும் அவ்வுயிர்களின் இயக்கத்தால் எழுச்சியும் தெளிவும் ஏற்படும் என்பதே கவிஞரின் வாதமாகும்.
புதிய அரசியல் அமைப்பின் முனைப்பு, அதனால் வரும் இடர்கள் என அனைத்தும் இக்கவிதையில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் மனதின் திருப்தியிலும் இறைவனின் நாட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள். இதனை முன்னிறுத்திய அரசியல் கட்சியினாலேயே விமோசனம் உண்டு என்பதே அஷ்ரஃபின் எதிர்பார்ப்பாகும். இதுவே பின்னர் வெற்றிகண்டு முஸ்லிம் காங்கிரஸ்' எனும் அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கு வித்திட்டிருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. தூர திருஷ்ட சிந்தனையின் இலக்கே இக்கவிதை.
-G4)-C ஜெஸ்மி எம். முஸா D

அந்தந்தக் காலகட்டத்துச் சம்பவங்களைப் பதிவு செய்யும் ஆற்றல் அஷ்ரஃபிடம் காணப்பட்டது. 1972 இல் சுதந்திரக் கட்சி உச்சவரம்புச் சட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி தென்னை 50 ஏக்கரும், நெல் 25 ஏக்கரும் ஒரு தனிநபர் வைத்திருக்கலாம். மேலதிகமாக இருப்பதை அரசு பொறுப்பேற்றது. இதன் பலனாக மேலதிக வீடுகளையும், காணிகளையும் வைத்திருந்தோர் அதனை இழக்க வேண்டியேற்பட்டது. எனினும் இத்திட்டத்தினால் சாதாரண மக்கள் நன்மையுமடைந்தனர். இதனை அஷ்ரஃப் "பிந்திய பெறுபேறுகள்” எனும் கவிதையில் ஆழமாக விளக்கியுள்ளார். இக்கருத்தின் வெளிப்படுத்தலை பின்வரும் வரிகளில் கூறுகின்றார்.
இத்தனை காலமும்
சந்ததி சந்ததியாய்
உழைத்தும் வீடிண்றி
உழன்றும் செத்தவர்கள்
சட்டங்கள் மூலம்
சந்தோசமடைந்தனர். (229 : 99)
இவ்விடயத்தால் நிந்தவூர், சம்மாந்துறை உள்ளிட்ட தனது பிரதேசங்களில் மக்கள் வீடுகளை இழக்காவிட்டாலும் காணிகளைப் பெருமளவில் இழந்தனர். இருந்தும் இவ்விழப்பீடுகளை விட இச்சட்டத்தின் மூலமான நன்மைகளே அதிகம் பயன்களைத் தந்தது என்பதில் மக்களுடன் இணைந்து கவிஞரும் திருப்தியடைகின்றார்.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீகவாபி பிரதேசம் பெளத்த பிரதேசமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அங்கிருந்த விகாரையொன்றை மையப்படுத்தியே இது நிகழ்ந்தது. ஆயினும் இந்நிகழ்வு நடைபெறுவதற்கு முன் முஸ்லிம்களும் அந்த இடத்தில் தங்கள் காணிகளுடன் பயிர்செய்து வந்தனர்.
நாங்களும் எங்கள் முன்னோரும் இந்த வயல்களில் வரம்புகள் செதுக்கி
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G5)-

Page 17
வாய்க்காலில் நீரெடுத்து
தண்ணிர் கட்டித்
தனித்திருந்து காவல் செய்த
உழுது முனையெறிந்து
புல்லுப் பிடுங்கி
புழுக்களுடன் போராடி
நெல்லை வளர்த்து
நெடுமூச்செறிந்து
உள்ளச் சோர்வுடன்
உடலோயும் வேளையில்
இந்த மணியோசை
இனிமை கொணர்ந்ததுவே. (102 - 103 : 99) என இக்கருத்தைக் கூறும் கவிதையே அஷ்ரஃபின் “மணியோசை" ஆகும்.
இப்பூமியைப் பாதுகாக்க பல உயிர்களை நாங்கள் கொடுத்ததுடன் "விசார வட்டை” என இதற்குப் பெயர்சூடி மகிழ்ந்தவரும் நாங்களே எனக் கூறும் கவிஞர் அங்கிருந்த புத்தர் சிலைகளில் படிந்திருந்த தூசுகளை அடிக்கடி துடைத்தவர்களும் நாங்களே. ஆயினும் இன்று இவ்விகாரையும் அதற்கருகிலுள்ள குளங்களும் ஏன்? அங்கு வரும் நாய்களுமே புனிதமானவை என உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் நாங்கள்மட்டும் ஏன்? புனிதமற்றவர்களாக ஒதுக்கப்பட வேண்டும் என வினவியும் நிற்கின்றார் அஷ்ரஃப்.
விகாரையும்
விகாரைக்கருகிலுள்ள
குளங்களும்
குளங்களுக்கருகேயுள்ள
குப்பைகளும் அங்கு வரும்
நாய்களும் புனிதமெனில்
நாம் மட்டும் அகசிகளா? (104: 99) என்ற வரிகளில் இதனைக் காணலாம். முஸ்லிம் தேசம் மீதான பார்வையும் எதிர்ப்புக் குரலும் இக்கவிதையில் தென்படுகின்றன. இக்கவிதை எழுதிய காலத்தில் அரசியலில் உள்வாங்கப்படாதவராக அவர் இருந்தார். எனினும் 2000 ஆம் ஆண்டளவில் தீகவாவிப் புனித பிரதேசத்திலிருந்து முஸ்லிம்களின்
-G6)-C ஜெஸ்மி எம். முஸா )-

காணிகளை மீட்டெடுக்க ஒரு அரசியல் தலைவராக இருந்து அஷ்ரட்பே பாடுபட்டார். இது ஒரு திருப்தியின் அனுபவம் என்றே சொல்லலாம்.
ஈழத்து அரசியலில் 1980கள் முக்கியமானதொரு காலகட்டமாகும். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலைப் படுகொலைகளால் அதிகமான தமிழ் பேசும் மக்கள் உயிரிழந்தனர். அவர்களின் வீடுகளும் உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அஷ்ரஃபைப் பொறுத்தவரை அது அவரது அரசியலின் ஆரம்பக் கட்டமாகும். இங்கு அரசியல்வாதியும் கவிஞனும் ஒன்றிணைகின்றனர்.
ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்' என்ற கவிதையில் 83 இல் இடம்பெற்ற கொடுமைகளை உரையாடல் பாங்கில் மன அழுத்தங்களினூடாக வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
ஐயா, அதி உத்தமமானவரே!
ஜூலை 1983ல்
உங்களுக்கு நினைவிருக்கலாம். என அன்றைய நாளை எமக்கும் நினைவூட்டும் அஷ்ரஃப்,
நானும்
இக்கடிதத்தை எழுதுகின்ற
எனது பேரனும்
கடைக்குப் போய் திரும்பிக்
கொணர்டிருக்கையில்
பம்பலப்பிட்டி
ஜாயா வீதியிலுள்ள
எங்கள் வீடு தீச்சுவாலைக்கு
இரையாகிக் கொண்டிருந்தது (75 : 99) என்கிறார். கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு அதற்குள் அகப்பட்ட உறவுகள் கருகி இறந்ததையும், தொடரும் வரிகளில் ஞாபகப்படுத்துகிறார்.
கவிஞர் சேரனனின் ஹிட்லரின் டயரிகள்’ என்ற கவிதையின்
இந்த மண்ணில் தமிழர் வாழும் ஒவ்வொரு தெருவும்
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G7)-

Page 18
வீடு, தோட்டம், பள்ளிக்கூடம்,
பல்கலைக்கழகம், பணிமனை,
கோயில், பெருஞ்சிறைக்கூடம்
ஒவ்வொன்றிலும்
குருதியும் தசையும்
நினமும் எலும்பும் (44 : 99) எனும் வரிகளிலும் இதனைக் காணமுடிகின்றது.
அன்றைய கலவரத்தினை நிறுத்துமாறு சனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். கூறவுமில்லை; ஊரடங்கு உத்தரவு முதலியவற்றை அமுல்படுத்தவுமில்லை; ஏன் ஒரு அறிக்கையாவது விடவுமில்லை. அப்போது நீங்கள் சிங்கள மக்களின் அபிலாஷைகள் பற்றியே பேசினீர்கள் எனக் கூறி இச்சார்புக்காய் வருந்தும் கவிஞர்,
அவை அன்றுதான்
அரச செலவில்
ஆரம்பமாகின
எண்பது இன்று 85 ஜனவரி 12ல்
மிகவும் நிதர்சனமாய் தெரிகின்றது (76 : 99) எனத் தன் மன உளைச்சலுக்கு விடையும் காண்கிறார்.
இக்கவிதையின் தொடராய் வரும் ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரலே "ஐயோ ராசா” என்பதாகும். இதில் அரசியலில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் கூறப்படுவதுடன் கிண்டல் தொனியும் தென்படுகின்றன. இப்பகுதியில் (1977) ஜே.ஆர். இன் ஆட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு நடந்த அராஜகங்களின் மீட்டலே இக்கவிதை.
896ции итал. நீயோ இன்று ஆட்சியின் உச்சத்தில் உள்ளாய். ஆள்பவன் நீ
ஆளப்படுவோர் நாங்கள் இவ்வுலகின் எந்தப் பகுதியிலும்
யாரும்
ஜெஸ்மி எம். முஸா D

எந்தவொரு சமூகமும்
தொடர்ந்தும்
ஆண்டதுமில்லை
ஆளப்பட்டதுமில்லை (201 : 99) என அரசியல் ஆட்சியாளர்களின் யதார்த்தத்தை இவ்வாறு முன்வைத்துள்ளார்.
ஜே.ஆர்.இன் ஆட்சியில் சிறுபான்மை இனம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனைக் கவிஞர் 'உங்களைப் போல் முன்னர் பெளத்தர்களை மட்டும் மதித்த ஆட்சியாளர்களின் வரலாற்றினைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்குமாறு கூறுகின்றார். பண்டார்நாயக்காவும் இவ்வாறு நடந்தமையினால் பெளத்த பிக்கு ஒருவரினால் கொல்லப்பட்டதை அஷ்ரஃப் ஞாபகமூட்டுகிறார். ஒரு காலத்தைக் கவிதையாக்கியுள்ள கவிஞரின் எதிர்ப்புக் குரலே இது.
அஷ்ரஃப் ஓர் அரசியல்வாதியாக இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தை வழிநடத்திய பெருந் தலைவர். பெரும்பான்மை முஸ்லிம்கள் குறிப்பாக வடகிழக்கிலுள்ளவர்கள் ஏற்றுக்கொண்ட தலைமைத்துவம் அவரிடம் இருந்தது. தான் தலைமை தாங்கிய முஸ்லிம் காங்கிரஸ் சகோதரர்களை அவர் "போராளிகள்” என்றே அழைத்தார். அவர்களை விழித்தெழுமாறு அழைக்கும் கவிதையே "போராளிகளே புறப்படுங்கள்” என்பதாகும்.
தன்மீது சுமத்தப்பட்டிருந்த பொறுப்பை உணர்ந்த அஷ்ரஃப் தன் மரணம் தொடர்பான விடயங்களை யூகித்திருந்தார். அதற்குப் பல அரசியல் காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறு ஏதும் நடந்தாலும் அது எதிரிகளுக்கு வெற்றியல்ல என்பதே கவிஞரின் கருத்தாகும். இதனை
போராளிகளே புறப்படுங்கள்!
ஒரு தரப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடங்கிவிட்டதற்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பி விடக் கூடடாக (36 : 99) என்னும் வரிகள் தெளிவுபடுத்துகின்றன.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G9)-

Page 19
தலைவர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை என்ற கருத்தும், இந்தப் போராட்டத்தில் “சூடுண்டாலும் வெட்டுண்டாலும் சுகமெல்லாம் ஒன்றே தான்” என்னும் வரிகளும் போராளிகளுக்கு உக்கிரமூட்டுகின்றன.
போராளிகளே புறப்படுங்கள் ஒரத்தில் நின்றகொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை (362 : 99)
என்ற பகுதியினால் மேலும் போராளிகளைத் தட்டியெழுப்பி உற்சாகமூட்டுகிறார் கவிஞர்.
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தண்ணிரோ பன்னிரோ தேவையில்லை. விரைவில் தொழுது விட்டு அடக்குங்கள் என்கின்ற வேண்டுதல்கள் அனைத்தும் கவிஞரின் மரணத்தின் போது உண்மைப்படுத்தப்பட்டதானது ஒரு வித்தியாசநிகழ்வே.
ஒரு தலைவன், வேலைப்பளுக்கள் உள்ளவன். அவ்வாறான
நிலையினைக் கவிஞர் இவ்வாறு முன்வைக்கின்றார் தனது கவிதையில்,
சில வேளைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேளைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேளைகளில் உங்களுடன் நான் பேசாமலும் இருந்திருக்கிறேன் (364 : 99)
பேசுவதற்கு எவ்வளவோ விடயதானங்கள் இருந்தும் வீணாகத் தர்க்கம் செய்யும் விலாசமற்ற அலசல்களை அஷ்ரஃப் தன் கவிதைகளில் எதிர்த்தார். இவரது மரணம் ஒரு ஹெலிகொப்டர் விபத்துள் அடங்கியதால் அவரை அவசரமாகவே அடக்கம் செய்ய வேண்டியேற்பட்டது. இது எவ்வாறு நடந்தது? விபத்தா? சதியா? என்பதைப் பற்றிய அலசல் இன்னும் தெளிவில்லாத விடையாகவே உள்ளது. இதனைப் பற்றிப் பேசுவதில் பிரயோசனமில்லை என்பதை இக்கவிதையில் கவிஞரே இவ்வாறு கூறுகின்றார்.
ஜெஸ்மி எம். முஸா D

ஒரத்தில் நின்றகொண்டு ஓயாமல் தர்க்கம் செய்யும் வீரத்திற்கு வையுங்கள் முற்றுப்புள்ளி (364 : 99)
அஷ்ரஃபின் மரணத்தை அடுத்து திருமதி பேரியல் அஷ்ர. புக்கும் றஊப் ஹக்கீமுக்கும் கூட்டுத் தலைமைத்துவம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியில் இரண்டு குழுக்களாகவும், பின்னர் மூன்றாகவும் இன்று தனித் தனிக் கட்சிகளாகவும் மாறியுள்ளனர். இப்பிரிவுகளின் பின்னணியில் தலைமைத்துவப் போட்டி மட்டுமல்ல இரு பிரதான பேரினவாதக் கட்சிகளின் தந்திரோபாயங்களும் அடங்கியுள்ளன. இப்பிரிப்பு நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பெரும் ஏமாற்றத்தை அடைந்ததுடன் பல்வேறு விதமான திசைத்திருப்பலுக்கும் உள்ளாகினர். மேலும் ஏமாற்றவும்பட்டனர். இன்னும் ஏமாற்றங்களைச் சந்திக்கவும் உள்ளனர் என்பது உறுதியான உண்மையே. இதனை முன்கூட்டியே உணர்ந்த அஷ்ரஃப்,
கருத்த வேறுபாடென்னும்
கறையாண்கள் வந்தரங்கள்
புரிந்துணர்வைச் சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள் (364 : 99) எனவும் ஆலோசனை கூறுகின்றார்.
இக்கவிதையினை எழுதியவனே இங்கு தலைவனாகவும் நோக்கப்படும் நிலையில், அஷ்ரஃப் தான் மரித்தாலும் தன்னால் வளர்க்கப்பட்ட மரம் வாழ வேண்டும் என்பதையே விரும்பினார். அதற்காகப் போராளிகளையும் அழைத்தார்.
"....... ஆல மரமாய் ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம் வாழ வேண்டும் ~ அதை வாழ்விக்கப் புறப்படுங்கள்” (365 : 99)
என்ற வரிகளில் கவிஞரின் இறுதி அழைப்புத் தெரிகின்றது.
--தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு ——K11O)—

Page 20
கவிதைகளில் அரசியல் கவிதைகள் எனத் தனியாக எடுத்துக் கூறுவது இலகுவானதொன்றல்ல. ஏனெனில் கவிதைகள் எல்லாவற்றிலும் ஏதாவதொரு அரசியல் காணப்படுவது இயல்பு ஆயினும் அஷ்ரஃபின் அரசியல் சார் கவிதைகளில் அவரது ஆரம்பகாலச் சிந்தனைகள், அந்தந்தக் காலகட்ட நிகழ்வுகளின் தாக்கம், தான் அரசியலில் உள்வாங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட அனுபவங்கள், எதிர்கால அரசியல் அவா எனப் பல்வேறு அம்சங்களும் இழையோடியுள்ளன. முஸ்லிம் சமூகம் அல்லது முஸ்லிம் தேசியம் பற்றிய ஓர் உணர்வுக் கருத்தாடல்கள் இக்கவிதைகளில் பரவியுள்ளமை பொதுப்பண்பு எனலாம். ஆவேசம், எதிர்ப்புக் குரல், புதுக் கவிதைக்குரிய போக்கு என்பனவும் காணப்படுகின்றன.
தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் அநீதிகளையும், சம்பவங்களையும், எதிர்பார்ப்புக்களையும் தனது கவி ஆளுமைக்குள் நின்று முன்வைப்பவனே ஒர் அரசியல்சார் கவிஞனாவான். அந்தவகையில் தன்னுடைய அரசியல் உள்ளுணர்வுகளைத் தன் கவிதைகளால் வெளிப்படுத்தியவராக கவிஞர் அஷ்ரஃபும் கொள்ளப்படுகின்றார். இவரது அரசியல்சார் நிகழ்வுகளை எதிர்கால இலக்கியச் சமூகம் உணர்ந்துகொள்ள இக்கவிதைகள் வழிகாட்டும் என்பதில் ஐயப்பாடுகளில்லை. 兼
-G12)-C ஜெஸ்மி எம். முஸா D

துணைநின்றவைகள்
O அஷ்ரஃப் எம்.எச்.எம் (1990) - நான் எனும் நீ.
புதிய வெளிச்சங்கள், கொழும்பு. ༨༽
O அனிஸ்டஸ் ஜெயராஜா (1998) - கிழக்கின் இதயம் தேசத்தின்
உதயம், புதிய வெளிச்சங்கள், கொழும்பு.
O லோரன்ஸ் செல்வநாயகம் (1999) . நான் எனும் நீ கவிதை நூல்
வெளியீட்டு விழா, தினகரன், கொழும்பு. (1999-10-03)
O அபூபக்கர் எஸ்.எம்.எம். (2003) - நேர்காணல் - மருதமுனை.
(2003-02-15)
எங்கள் தேசம் பத்திரிகையின் 2006 செப்டம்பர் 15-30, ஒக்டோபர் 1-14, 15-31 ஆகிய திகதிகளில் தொடராக வெளிவந்தன.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G13)-

Page 21
தமிழியல் சூழலில் பின்நவீனத்துவமும் தவறான கற்பிதங்களும்
மனிதன் உணர்வுகளாலானவன். அந்த உணர்வுகளால் உந்தப்பட்டு வருவதே இலக்கியமாகும். இலக்கியம் எவ்வாறு இருக்க வேண்டும்? எப்படி வெளிப்படுத்தப்பட வேண்டும்? என்பது தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட வரையறைகள் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இலக்கியத்தை விஞ்ஞான ரீதியாக, வரலாற்று ரீதியாக, மெய்யியல் ரீதியாக எனப் பல கோணங்களில் பார்த்தவர்கள் கூட இறுதியில் தெளிவுகளின்றி கைபிசைந்து நின்ற வரலாறுகள்தான் நாம் இதுவரை சந்தித்தவைகள்.
இன்று, பின் நவீனத்துவ சிந்தனைக்கூடாக இலக்கியம் பார்க்கப்பட வேண்டும் அல்லது பார்க்க முற்பட வேண்டும் என்ற முனைப்பு ஞானமாக எழுந்து, தவறான கற்பிதங்களுக்குட்பட்டு வரும் நிலையில் அது பற்றிய பரிமாறலாகவே இம் முயற்சி அமைகின்றது.
எந்தவொரு விடயத்திலும் பழமைக்கு அடுத்து வருவதையே நவீனமென்பர். புதிய கருத்துக்களை அல்லது உலகியல் மாற்றங்களைத் தொடர்ந்து இந்நிலை ஏற்படும். இந்நவீனத்துவத்தின் அடுத்தகட்ட நகர்வே அல்லது வளர்ச்சியே பின் நவீனத்துவம் (Post Modernism) என அழைக்கப்படுகின்றது.
1970 ஆம் ஆண்டு தோன்றிய இச் சிந்தனையானது 1950 களிலிருந்து ஏற்பட்ட பல்வேறு தொழிநுட்ப வளர்ச்சிகளையும் கலைகளின் மாறும் இயல்புகளையும் தன்னகத்தே கொண்டு அடையாளம் பெறத் தொடங்கியது. மேற்குலக சிந்தனைகளின் தாக்கத்தால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் இது வேரூன்றியது. கைத்தொழிற் புரட்சியின்
ஜெஸ்மி எம். முஸா )-
 
 

வெற்றி, முதலாளித்துவ வளர்ச்சி, மார்க்சியத்தின் பின் தள்ளுகையினால் ஏற்பட்ட மாற்றம் போன்றவற்றால் புதிய உலகைக் காண விளைதலாகவே இச்சிந்தனை மரபு வெளிப்பட்டது. அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் வாதத்தினது நிழலின் மறுதலிப்பாளர்களாக வந்த மிஷேல்.பூக்கோ, ஜாக் டெறிடா போன்றோர் பின் நவீனத்துவத்தின் வாரிசுகளாகத் தங்களை இனம் காட்டினர்.
ஒரு கட்டடத்தை பழைமை நிலையிலிருந்து மாற்றி புதிய தொழிநுட்பம் மற்றும் அறிவியலுடன் கூடியதாக மாற்ற முற்படும் போது அது இன்னும் அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும் என எண்ண முற்பட்டதிலிருந்தே பின்நவீனத்துவம் விளங்கப்படத் தொடங்கியது. இச் சிந்தனையானது ஒரு கட்டடக்கலை வடிவாக்கத்தில், சிற்பம் மற்றும் ஒவியத் துறைகளின் மெருகூட்டலில், புதிய கலைகளின் தேடலில், ஏனைய நவீன சிந்தனைகளின் உருவாக்கத்தில் என உயர், நவீன, தொழிநுட்பம்சார் விடயங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற கோட்பாடாகவே முன்வைக்கப்பட்டதே ஒழிய இது தனியானதொரு இலக்கியத்திற்கான சிந்தனை அல்ல. பின் நவீனத்துவத்தின் பகுதியிலும் ஒரு பகுதியாகவே இலக்கியம் பற்றிய பார்வை நோக்கப்படுகின்றதே தவிர பின் நவீனத்துவமே இலக்கியம் அல்ல என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
அமெரிக்கப் பண்பாட்டியல் ஆய்வாளரான லெஸ்லி ட்வீல்டர், கலை விமர்சகர் லியோஸ்ரைன்பேக் முதலியோர் இதனை அமெரிக்கப் பண்பாட்டியலுாடாக மட்டும் வைத்து அறிவியல் மற்றும் கலை இலக்கியத்துறைகளில் பார்க்க முற்பட்டனர். இதனால் அமெரிக்கா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் மாத்திரம் விளங்கப்பட்ட அல்லது விளங்கப்படுத்தப்பட்ட ஒரு துறையாகவே இருந்து வந்தது. இன்றும் கூட பின் நவீனத்துவம் மேற்குறித்த நாடுகளோடு சுருங்கிவிட்டது என்ற குற்றச்சாட்டு நிலவி வருவதை யாரும் மறுக்க முடியாது.
கால ஓட்டத்தின் விந்தையினால் நவீன சூழலில் இலக்கியத்துள் புதிய கருத்துக்களும், வடிவியல் மாற்றங்களும் ஊடறுப்பது என்பது தவிர்க்க முடியாதவொன்று. அவ்வகையில் பின்நவீனத்துவத் தாக்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே. ஆயினும் இன்றைய தமிழ்ச் சூழலில் இது பற்றிய சரியான
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -C15)-

Page 22
புரிதல்களும், விளங்கப்படுத்தல்களும் இல்லாத நிலையில் பெரும்பாலான வாசகர்கள் ஒரு மாயையாகவே காண விளைகின்றனர். இச் சந்தர்ப்பத்தில் பின்நவீனத்துவத்தைக் கோட்பாடு ரீதியாகவே எம்முன்னவர்கள் இறுக்கிவிட்டு சொல்லித் தப்பித்துக்கொண்ட நிலையில் இதனை இன்று வெளிப்படுத்த வருகின்றவர்கள் கூட இன்னும் சிக்கல் தன்மை உள்ளதாகக் காட்ட முனைவது
வேதனைக்குரிய விடயமே.
"தமிழ்ச் சூழலிலும் இங்குள்ள அறிவாய்வுத் துறைகளிலும் பின் நவீனத்துவச் சிந்தனை பரவலான செல்வாக்கைப் பெறவில்லை. எனினும் கலை - இலக்கியத் துறைகளில் அது காரசாரமான விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தமிழ் இலக்கியத் துறையில் இக்கருத்துக்கள் உள்வாங்கப்பட்ட முறையிலும் அறிமுகப்படுத்தப்பட்ட விதத்திலும் சில மயக்கங்களும் மிகைப்படுத்தல்களும் உண்டு” (99 : 1) எனப் பேராசிரியர் எம்.ஏ. நுட்மான் கூறியிருப்பதும் இக்கருத்தோடு ஒப்புநோக்கப்பட வேண்டியதே.
பின்நவீனத்துவ நோக்கில் நின்று கொண்டு இலக்கியம் படைக்க முயலும் எம்மவர்கள் இன்று ஓர் சிக்கல் தன்மையுடைய மொழியைக் கையாள்கின்றனர். பின்நவீனத்துவ எழுத்து என்றால் அது கடின மொழிப் பிரயோகமாக இருக்கவேண்டுமென்று கருதுகின்றனர். அவ்வாறெனில் “உள்ளதை உள்ளவாறு கூற முற்படும் இலக்கியத்தில் மொழி ஒரு விளையாட்டே. அது அவரவர் ஊட்டத்திற்கேற்ப பயன்படுத்தப்பட வேண்டும்” என பின்நவீனத்துவ சிந்தனை மரபில் திளைத்தவரான டெறிடா சொல்வதை இவர்கள் ஏன் கவனிக்கத் தவறிவிட்டனர். மொழியில் ஒர் கவனயீர்ப்பும், கவர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மேற்சொன்ன நடைமுறையினால் பின்நவீனத்துவ சிந்தனை ஊட்டம் பெற்றவர்கள் சொல்லவருகின்ற அற்புதமான விடயங்களும் கூட வலிந்து இறுக்கப்படும் போது அசிங்கமாக்கப்படுவதனை அவர்கள் உணரத் தவறிவிடுகின்றர்.
மேலைத்தேய சிந்தனைவாதிகள் சொன்ன கருத்துக்களை அப்படியே கொண்டு வந்து அதனைத் தமிழ் சூழலில் பிரதிகளின் பிரதிகளாகச் சொல்கின்ற பணியினைச் செய்வதுதான் பின் நவீனத்துவம் என்று சிலர் கருதுகின்றனர். பூக்கோவோ டெறிடாவோ யாரோ சொன்ன கோட்பாடோடு
ஜெஸ்மி எம். முஸா )-

தொடர்பான கருத்துக்கு மாற்றமாகப் பின்நவீனத்துவம் பேசக் கூடாது அல்லது சொல்லக்கூடாது என்று யார் சொன்னது? இலக்கியம் சார் கொள்கை யொன்றினை அல்லது சிந்தனையினை முன்வைத்தவர்களும் எம்மைப் போன்றதொரு வெளிப்படுத்தலாளர்களே ஒழிய அவர்கள் கடவுளர் அல்லர்.
ஜனரஞ்சக எழுத்து என்பது மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்காக எழுத்தெல்லாம் இலகுவானதாக இருக்க வேண்டுமென்பதும் கருத்தல்ல. ஒரு படைப்புக்குள் குறியீடுகளும் ஒரேவிதப் படிமங்களும் வலிந்து எழுதப்படுவது அல்லது புகுத்தப்படுவது ஆரோக்கியமானதல்ல. சிலர் தான் மற்றப் படைப்பாளிகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டப்பட வேண்டுமென்பதற்காக ஒரே படிமத்தையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். "எழுதினால் குறியீடுகளிலேயே எழுதுவேன்” என விடாப்பிடியாக நிற்கின்றனர். வரலாற்றுக் காலங்களில் கூட “வித்துவச் செருக்குடைய எழுத்துக்கள்” என இவை போன்றவை பின்தள்ளப்பட்டதை இவர்கள் சற்று உற்றுநோக்க வேண்டும். இதற்காகக் குறியீடுகளான எழுத்துக்கள் காலத்திற்கு ஒவ்வாததென்றோ, அது பிழையான நடைமுறையென்றோ சொல்லவில்லை. படைப்புலகில் அது தவிர்க்க முடியாதது ஒர் உயர்தர வளர்ச்சி எழுத்துக்களின் வெளிப்பாடுகள்தான் அவை. ஆயினும் அவை பின்நவீனத்துவம் என்ற போர்வையில் வலிந்து சொல்லப்படக்
கூடாது என்பதே எமது வாதமாகும்.
பின்நவீனத்துவ மொழி வெளிப்படுத்தலில் ஏற்பட்ட புதிய அம்சங்களை உள்ளடக்கிய மாற்றமே பத்திரிகைச் செய்தி எழுதப்படுவதை யொத்த எழுத்தாகும். இவை இன்று கவிதை, சிறுகதை மற்றும் புனைகதை சாராத நாவல்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. இது ஒர் இலகுவான வெளிப்படுத்தல் முறையாகும். ஆயினும் இதனால் இலக்கிய வடிவங்கள் அதற்கே உரித்தான அமைப்பையும் முறையையும் இழந்து விட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனினும் இதனைக் கூடப் பயன்படுத்தத் தெரியாமல் அவதிப்படுகின்ற நிலையும் எம் மத்தியில் உண்டு.
மீள் நிர்மாணம், மீள் கட்டுமானம் என்ற சொல்லை நிர்நிர்மாணம் எனச் சிலர் இன்று பயன்படுத்திக்கொண்டு தன்னை ஒரு புதிய நவீனத்துவ வாதியாக இனம் காட்ட நினைப்பது விநோதத்தை அளிக்கின்றது. இவ்வாறு எத்தனையோ சொற்களை வேண்டுமென்றே கடினமாக்கி இன்பம்
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -(17)-

Page 23
காண்பதனை நோக்கும் போது நகைப்பாகவும் இருக்கிறது. இலகுவாகச் சொல்வதற்குரிய வழிமுறைகள் இருக்கும் போது பின்நவீனத்துவப் பிரதியிலுள்ள ஆங்கில மொழிக்கையாளலை அப்படியே பின்பற்றுவதில் என்ன திருப்தியைக் காண முடியும்? இவ்வாறான பிழையான முறைமையால் தங்களது இலக்கியச் சுயமே அழிந்துகொண்டு போவதை ஏன்? இன்னும் அறிய முடியாமல் உள்ளது என்பதை எண்ணும் போது வேதனைப்படாமல் இருக்கவும் முடியாதுள்ளது.
தாங்கள் உயர்நிலை இலக்கிய ஸ்தானங்களை அடைந்து விட்டோம் என்ற எடுகோளில், இவர்களாகவே ஊகித்துக் கொண்டு பல கட்டுடைப்புக்களையும் தாண்டிப் புதிய விடயங்களைச் சொல்ல வருகின்றோம் என்ற பெயரில் பழையதையே அஜீரணமாக்கியுள்ளதைக் காண்கின்றோம். இதனால் பின்நவீனத்துவம் விதித்த அல்லது கொண்டு வந்த வகைப்பாடுகளும் சித்தரிப்புக்களும் பின் தள்ளப்பட்டு உயர்கலை என ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகளும் தாழ்நிலைக்கு வந்து விடுகின்ற அபாய நிலையை இவர்கள் உணரத் தவறிவிடுகின்றனர்.
ஒவ்வொரு காலக்ட்டத்திலும் இலக்கியங்களும் கொள்கை களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் அகவயம், அறவயம், உணர்ச்சி, சமுதாயம் என்றெல்லாம் கொள்கைகள் அடிப்படையில் காரசாரமான முறையில் இலக்கியங்கள் பார்க்கப்பட்டன. இத்தொடரில் பெண்ணியம், தலித்தியம், மார்க்ஷியம், அமைப்பியல், பின் அமைப்பியல், கட்டவிழ்ப்புவாதம், வாசகர் மையவாதம் எனப் பல கோட்பாட்டு ரீதியான கொள்கைகளும் கோட்பாடு ரீதியற்ற கொள்கைகளும் இலக்கியங்களை ஊடறுத்துப் பல எதிர்வினைகளைத் தோற்றுவித்தன. இவ்வாறானதொரு வருகையினதாகவே பின்நவீனத்துவமும் பார்க்கப்பட வேண்டுமே அல்லாமல் அதனைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால், பின்நவீனத்துவத்தைப் பிடித்துக் கொண்டிருக் கின்றவர்கள் ஏனைய நிலையிலுள்ள படைப்பாளிகளையும் பின்நவீனத்துவ நிழலில் பார்த்துவிட்டு ஒதுக்கிவிட முனைகின்றனர். ஒரு கொள்கை அல்லது சிந்தனையானது ஒரிரு வருடங்களுக்குள்ளேயே பின்தள்ளப்படுவதும் உண்டு. அதற்காக அக்கொள்கையினை காலத்திற்கொவ்வாதது என்று தள்ளிவிட
ஜெஸ்மி எம். முஸா D

முடியாது. காலச் சித்துவிளையாட்டால் ஒன்று ஏற்றுக்கொள்ளப்படுவதும் இன்னுமொன்று முன் தள்ளப்படுவதும் இயல்பு. அதற்காக முழுமையாக அதனை நிராகரித்துவிட்டு புதிய சிந்தனை மரபை மட்டும் இறுக்கிப் பிடிப்பது அழகல்ல.
பின்நவீனத்துவ விமர்சனமானது படைப்பினது சமூகப் பின் புலத்திற்கும், சூழலுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் உன்னிப்பான வாசிப்புக்கே முன்னுரிமை அளிக்கின்றது. இது மேலைத்தேய சூழலுக்கு வாய்ப்பானதொரு விடயமாகக் கொள்ளப்பட்டாலும் தமிழியல் சூழலில் படைப்பினது சமூகப் பின்புலமும், சூழலும், முக்கியத்துவம் பெறாமல் விடுவதானது இறந்துவிட்ட ஓர் இலக்கிய நுகர்வாகவே அமைகின்றது. இத்தாக்கத்திற்குட்பட்டவர்கள் வெறுமனே பக்கம் பக்கமாக மொழியினை ஓர் உயர்நிலையில் கையாண்டு இலக்கியமாக வெளிப்படுத்துகின்றனர். எந்தவித மான உள்ளடக்கமுமற்ற இந்நடை உருவாவதற்கு பின்நவீனத்துவம் வழிவகுத்ததா? எனப் பார்த்தால் தவறாக விளங்கி, பிழையாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட வரையறையே இது என்ற முடிவுக்கு வரலாம்.
இச்சிந்தனையின் பாதிப்பாளர்கள் விமர்சனம் என்ற பெயரில் ஒரு படைப்பின் சூழல், படைப்பாளியின் நிலை, பின்னணி முதலியவைகள் பற்றி எவ்விதமான பரிசோதனைகளுமின்றி தனக்குத் தெரிந்த பின் நவீனத்துவ நிலையிலிருந்து எல்லாப் படைப்புக்களையும் மட்டிட முயல்கின்றனர். இப்படைப்புக்கள் தரமற்றவை, காலத்திற்கு ஒவ்வாதவை, சுயநிலையற்றவை என்றெல்லாம் எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகின்றனர். தாங்கள் இருக்கின்ற சிந்தனையினைப் பற்றிய தெளிவில்லாத நிலையில் இன்னுமொரு படைப்பு பற்றி இவ்வாறான மட்டமான விமர்சனத்தைச் செய்ய முடியுமா? என்ற நியாயமான கேள்வி எம்முன் எழுவதை இவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது புதிராகவே இருக்கின்றது.
படைப்பாளியின் வெளிப்பாடு என்பது ஒருதாயின் பிரசவ விளைவு போன்றது. அதனை அவன் ஓர் இலக்கியமாக்கப்படுகின்ற துயரங்களை அவன் மட்டுமே உணர்வான். பிள்ளை ஊனமுற்ற நிலையில்
சிலவேளை பிறந்தாலும் எந்தத் தாயும் அதனை ஒதுக்கிவிடுவதில்லை.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 24
அவ்வாறே ஒரு படைப்பாளியின் வெளிப்படுத்தலும் அப்படைப்பு என்ன பெறுபேற்றை எடுத்தாலும் அது அவனது ஓர் உந்துதலே. அதனைப் பற்றிக் கருத்துரை சொல்லலாமே அன்றி தள்ளிவிடும் அல்லது ஓரங்கட்டும் நிலையினதாக்கிய விமர்சனத்தைக் கூற எவருக்கும் உரிமையில்லை. பின் நவீனத்துவ விமர்சனத்தின் உச்ச நிலையானது "விமர்சனத்தையே விமர்சனமாகப் பார்க்க வேண்டும்” என்று சொல்வதை இன்னும் இந்நிலையாளர்கள் அறியாமல் இது பற்றிப் பேசுவதும் தூரநோக்கானதல்ல.
இன்றைய உலகு இயந்திரமயமானது நாளுக்கு நாள் புதிய இலக்கிய வகைப்பாடுகள் கவிதையாகவோ, கதையாகவோ, கட்டுரையாகவோ வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் எதுவும் இலகுவான முறையில் சொல்லப்பட்டால் மட்டுமே வாசகர்களின் பார்வையும் அதன் பக்கம் செல்லும் வாய்ப்புண்டு. நாம் எதற்காக எழுதுகிறோம்? யாருக்காக எழுதுகிறோம்? என்ற வினாக்களே படைப்புலகில் முக்கியமானவை. எந்த எழுத்தும் வாசகர்களைச் சென்றடைவதிலும், அவனைத் திருப்திப்படுத்துவதிலும், தன் வசப்படுத்துவதிலும் தான் முன்நிற்கவேண்டும்.
பின்நவீனத்துவம் என்ற பெயரில் தனி நபரோ குறித்த குழுவோ அல்லது வட்டமோ தங்களுக்கிடையில் நியமமொன்றை வரைந்து கொண்டு, தாங்கள் விரும்பியவாறெல்லாம் இலக்கியங்களை வெளிப்படுத்த முனைவதும், வெளிப்படுத்தி வருவதும் இனிமேலும் தொடரக் கூடாது.
எனவே, பின்நவீனத்துவமானது இன்றைய நவீன சூழலில் மிக முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டிய ஒன்றுதான்; அதன் ஏற்றுக்கொள்ளுகை தவிர்க்க முடியாததுதான். இருந்தும் இது பற்றிய தவறான கற்பிதங்களிலிருந்து விடுபட்டு தமிழியல் சூழலுக்கு மாற்றமில்லாத விதத்தில் பின் நவீனத்துவம் முன்னெடுத்துச் செல்லப்படுவதானது மிகக் காத்திரமான, தரமான இலக்கிய நகர்த்தலுக்கான கருவியாக அமையும் என்பதில் வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.
ஜெஸ்மி எம். முஸா D

துணைநின்றவைகள்
O கிருஷ்ணராஜா. சோ (1999) - பின் நவீனம் ஓர் அறிமுகம்,
மெய்யியல் சங்கம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
O கார்த்திகேசு சிவத்தம்பி நவீனத்துவம்
தமிழ்-பின்நவீனத்துவம், கொழும்பு, இலங்கை.
2006-12-10 ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் வெளியானது.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -Ga)-

Page 25
‘இலக்கியப் பரப்பின் பன்முகத்தன்மை எம்.எச்.எம். வடிம்ஸ்’
எம்.எச்.எம். ஷம்ஸ் என்றால் இலக்கிய உலகமே பெருமைப் பட்டுக் கொள்ளும். 1940-03-17 ஆம் திகதி திக்வல்லையில் பிறந்தவர். கவிஞர், விமர்சகர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக எழுச்சியினையும், சமூக விடுதலையினையும் கருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர் என ஷம்ஸின் ஆளுமையினை நீட்டிக் கொண்டே செல்லலாம். இலக்கியத் தடத்தில் சுமார் நான்கு தசாப்தங்களைக் கடந்த இவர் பாஹிறா, முல்லையூர்வல்லவன், நீள்கரைவெய்யோன், இஸ்ராக், அபூபாஹிம், ஷானாஸ், இப்னு ஹமீட் எனப் பல புனைப்பெயர்களில் வலம்வந்தவர். கவிதை, கதை, நாடகம், கட்டுரை, இசைத்துறை என ஷம்ஸின் இலக்கியப் பரப்பை பல்துறைப்படுத்தலாம்.
1959 இல் 'இனிமைசேர் தமிழ்’ எனும் கன்னிக் கவிதையினை எழுதியதினூடாக இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஷம்ஸின் எழுத்தில் அதிக களம் அமைத்தது பத்திரிகைத் துறையே. தினகரன், வீரகேசரி, வினிவித, யுக்திய, ஜனருசிய, விவரண, பிரதிராவய, மாதவராவய என பல தமிழ் சிங்களப் பத்திரிகைகளில் எழுதினார். நேர்வழி, அஷ்ஷ"ஆரா, செய்திமடல், பாமிஸ், பிரதிராவய (சிங்களம்) போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
கால வர்த்தமானத்திற்கேற்ப அவ்வப்போது நிகழும் சம்பவங்களின் தாக்கங்கள் ஷம்ஸின் கட்டுரைகளில் பிரதிபலித்தன. இத்தொடரில் முஸ்லிம்களிடையே ஏற்பட்ட தலைப்பிறைக் குழறுபடி தொடர்பாக 1986 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை பத்திற்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். இது தினகரன், நவமணி, செய்திமடல் ஆகியவற்றில் வெளிவந்தன. 1905 இல் எம்.சி. அப்துல் காதர் மேற்கொண்ட தொப்பிப் போராட்டம் பற்றியும்
-G22)-C ஜெஸ்மி எம். மூஸா )-
 
 
 

1998 இல் தினகரனில் எழுதினார். மேலும் சிங்கள வாசகர்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரப் பண்பாட்டியல் அம்சங்களை தெளிவுறுத்தும் விதத்தில் சிலுமினவின் "பாலம” எனும் பகுதியில் “முஸ்லிம் கலாசாரங்களைப் புரிந்து கொள்வோம்” எனும் தலைப்பில் பள்ளிவாசல்கள், தொப்பியும் முக்காடும், ஹலால் உணவு என்றால் என்ன?, முஸ்லிம் விவகாரங்கள், தமிழ் - சிங்கள மொழி உறவுகள் ஈமக்கிரியைகள் ஆகிய உப தலைப்புக்களில் எழுதினார். மேலும் தலிபான்களின் சிலை உடைப்பை இஸ்லாம் அனுமதிக்கிறதா? சோமதேரரின் முஸ்லிம் விரோத உரைக்குக் கண்டனம் முதலிய கட்டுரைகளும் இவரது குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.
சிங்களப் பேரினவாதிகளின் சிந்தனைகளாலும் புரிந்துணர் வின்மையினாலும் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாமிய ஊடகத்துறை மீதும் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகளை இனங்கண்டு எதிர்த்ததுடன் தனக்குச் சாதகமான சிங்களப் பத்திரிகைகளையும் இதற்காகப் பயன்படுத்திக் கொண்டார். இவை அவரது எழுத்துலகச் சாணக்கியங்களே.
1988 இல் மடிகே பஞ்சாசீஹ தேரர் "ராவய” சஞ்சிகையில் எழுதிய “சிங்கள பெளத்த தன்மைக்கு எதிரான ஐந்து சக்திகள்” என்பதனை மறுத்து ராவய, வினிவித ஆகிய சஞ்சிகைகளில் எழுதினார். மேலும் "விவரண" சஞ்சிகையில் சல்மான் ருஸ்தியை ஆதரித்து கெளசல்ய என்பவர் "இது மதப் பயங்கரவாதம்” என எழுத ஷம்ஸ் "ருஸ்தியின் செயல் இலக்கியப் பயங்கரவாதம்” எனப் பதில் கொடுத்தார்.
ஷம்ஸிடம் தனியானதொரு இலக்கியப் பார்வை மட்டுமல்லாது விரிவானதொரு சமூக நோக்கும் காணப்பட்டது. எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்தை மொழிந்தார். இதனால் தனிப்பட்ட விதத்திலும் விமர்சிக்கப்
பட்டார்.
2001 டிசம்பரில் போயா தினத்தன்று சுயாதீன தொலைக் காட்சியில் சோமதேரர் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தர்மபோதனை செய்தபோது அதனை எதிர்த்து ஊடகத்துறை அமைச்சருக்கு கடிதமாக எழுதியதுடன் ராவயவில் அதனை வரவும் செய்தார். ஒரு எழுத்தாளராக இருந்து முதலில் இதனை எதிர்த்தவர் ஷம்ஸ்ே.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -C23)-

Page 26
ஒரு எழுத்தாளனின் பூரணத்துவம் என்பது அவனது ஆய்விலும் தங்கியுள்ளது என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. 1947 இல் ‘தென்னிலங்கை முஸ்லிம் பேச்சுவழக்கு’ என்ற தலைப்பில் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை மலர்' சஞ்சிகையில் எழுதினார். தொடர்ந்து 1977 இல் கொழும்பு தமிழ் சங்க மலராகிய யதார்த்த வில் சிங்கள இலக்கியத்தில் தமிழின் செல்வாக்கு’ என எழுதியபோது சிங்கள வாசக, எழுத்தாளர்களிடையே ஷம்ஸின் ஆளுமைக் கனம் அதிகரித்தது. இவ்வாண்டே கீழக்கரையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரில் தமிழ் சிறுகதை ஆக்கத் துறையில் இந்திய முஸ்லிம்களின் பங்கு' என்ற ஆய்வினைச் சமர்ப்பித்தார். மேலும் 'உலமாக்கள் நபிகளாரின் வாரிசுகள், வஹாபிகள் என்போர் யார்?' ஆகிய கட்டுரைகளை நேர்வழியில் எழுதினார். வஹாபிகள் தொடர்பாக சமூகவியல், வரலாற்று அடிப்படையில் தெளஹித் கோட்பாட்டுடன் எழுதப்பட்ட ஆய்வு முயற்சி இதுவெனலாம்.
1984 ஆம் ஆண்டில் இளம் கவிஞர்களுக்காக வழிகாட்டும் நோக்கில் 10 அங்கங்களாக ‘செவிநுகர் கனிகள்’ எனும் தலைப்பில் இவரது தொடர் கட்டுரையொன்று வெளிவந்தது. மேலும், வரலாற்றினால் மறைக்கப்பட்ட ஞாபகப்படுத்தப்பட வேண்டிய மாத்தளை காசிம் புலவர் பற்றிய கட்டுரையினை நூலாக வெளியிட்டார். 1991, 1992 களில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட முஸ்லிம் கலாசார விருது வழங்கும் மலரில் இலங்கை முஸ்லிம்களின் இயங்கு கலைப்பாரம்பரியம், சிங்கள இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு ஆகிய தலைப்புக்களில் எழுதினார். இதே காலப்பகுதியில் தகவல் திணைக்கள இதழான திங்களில் மூன்று அங்கங்களாக முஸ்லிம்களின் பண்பாட்டு பாரம்பரியம்' எனும் தலைப்பில் ஆய்வியல் கட்டுரை ஒன்றினையும் சமர்ப்பித்தார்.
1994 இல் புவியியல் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட தொழுகை நேரம்’ என்ற தலைப்பில் பிற்போக்கு வாதிகளின் மெளட்டீகக் கருத்திற்கு அறிவியல் ரீதியாக தினகரன் ஆலமுல் இஸ்லாம் பகுதியில் விளக்கமளித்தார். 1997 இல் டப்பி ஆலிம் புலவர் என அழைக்கப்பட்ட மீயல்ல அகமது நெய்னார் புலவரது ‘கவிதைகளும் பண்பாட்டுப் பின்னணியும் என்பதை கலாசாரத் திணைக்கள தேசிய மீலாத்விழா மலரில் கட்டுரை யாக்கினார்.
ஜெஸ்மி எம். முஸா )-

ஷம்ஸ் வெறுமனே எழுத்துத் துறையில் மட்டும் தம் தடத்தினைப் பதிக்காமல் ஏனைய கலைத்துறைகளிலும் நாட்டங்கொண்டார். 1947 ஆம் ஆண்டு இசைப்பரீட்சையில் சித்தியெய்தி தன்னை ஒரு வானொலிப் பாடகனாக அறிமுகம் செய்த ஷம்ஸ் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை இசையமைத்துப் பாடியுமுள்ளார். இரண்டு இஸ்லாமிய கீத நூல்களையும் எழுதியுள்ளதுடன் "வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே' என்ற சமாதானப் பாடலால் அதிகம் பேசவும்பட்டார். யுகவிளக்கு, வண்ணாத்திப்பூச்சி போன்ற நாடகங்களையும் எழுதினார்.
முஸ்லிம்களின் கலாசாரக் கலைகளான களிகம்பு, கோலாட்டம் போன்றவைகளில் இவருக்கு ஆழமான அறிவும் பயிற்சியும் இருந்தது. இதனால் மரபுரீதியான அதன் அசைவுகளிலும் ஆட்டங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். இக்கலையினை வளர்க்க தென்பகுதி மாணவர்களையும் இளைஞர்களையும் பயன்படுத்தினார். பல வருடங்களாக செயலற்றுப் போயிருந்த இலங்கை கலாசாரப் பேரவையின் நுண்கலைப் பிரிவு மற்றும் முஸ்லிம் கலை இலக்கியப் பேரவை, திக்வல்லை எழுத்தாளர் சங்கம் முதலியவற்றையும் தம் தலைமை முயற்சியில் மீளக் கட்டியெழுப்பினார்.
"ஆசிரியர் குரல்” உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ஷம்ஸ் பாமிஸ்' ஆசிரியர் குழுவிலும் இணைந்தார். 1994 இல் தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் வரை உயர்ந்தார். 08 ஆண்டுகளாக "சாளரம்" பகுதி மூலம் சிங்கள கலை இலக்கிய பாரம்பரியங்களை தமிழ் மக்களுக்கு ஊட்டியதுடன் தினகரன் “புதுப்புனல்” பகுதியினையும் ஆரம்பித்து பல இளம் கவிஞர்களை வெளிக்கொணர்ந்தார். இதன் வெளிப்பாடுகளில் ஒன்றே ஷம்ஸின் மறைவின் பின் சிந்தனை வட்டம் வெளியிட்ட புதுப்புனல் கவிதை நூல் எனலாம்.
எழுத்தாளர் அமரர் ஏ. லத்தீபினால் 'இன்சான்’ பத்திரிகையில் வளர்க்கப்பட்டவர்களுள் முதன்மையாளரான இவர் 35 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். 63, 64களில் புதுமைக்குரலில் பல சிறுகதைகள் வெளிவந்தன. 1960 - 1966 வரை வீரகேசரியிலும் எழுதினார். நீள்கரை வையோன்’ என்ற புனைபெயரையே இதற்காகப் பயன்படுத்தினார். “மனைவி தேவை” என்ற வீரகேசரி கதையால் அதிகம் பேசப்பட்டார். தினகரனில் வெளியான கதைகள் "பாஹிரா” என்ற பெயரிலேயே வெளிவந்தன.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -Q5)-

Page 27
சர்ச்சைக்குரிய விடயங்களாக இருந்தாலும் தனது மனச் சாட்சிக்கும், பொது நீதிக்கும் சரியெனக் கண்டவற்றை துணிச்சலுடன் நோக்கும் முற்போக்குப் பார்வை ஷம்ஸிடம் இருந்தது. ‘கிராமத்துக் கனவுகள்’ என்ற இவரது நாவல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்நாவல் பற்றி ஞானம்' சஞ்சிகையின் ஆகஸ்ட் 2002 இதழில் கலாநிதி துரைமனோகரன் “என்னை மிகவும் கவர்ந்த ஈழத்து தமிழ் நாவல்களில் இதுவும் ஒன்று, முற்போக்கு வாதிகளின் பலத்த வரவேற்பையும் படைப்பாளரது சமூகம் சார்ந்த அடிப்படை வாதிகளின் கடும் கண்டனத்தையும் இது பெற்றது. குய்யோ முறையோ என இதற்கெதிராக அடிப்படை வாதிகள் குரலெழுப்பினாலும் அது ஷம்ஸின் குரலை வாழவைக்கும் என்பது நிச்சயம்” எனக் கூறியுள்ளமை நோக்கத்தக்கது.
ஈழத்தில் மகாகவிக்குப் பின்னர் குறும்பாக் கவிதைகளை எழுதிய முன்னோடிகளில் இவரும் ஒருவர். கேலிச் சித்திரங்களுடனான குறும்பாக்கள் “சுதந்திரன்’ பத்திரிகையில் பல வெளிவந்தன. 2001ம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க தலைமைப் பொறுப்பை நாம் ஏற்ற காலத்தில் ஷம்ஸ் தமிழ் சங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உறவின் மூலமாகத் தனது குறும்பா பற்றிய பதிவுகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான கருத்தாடல்களைக் கொண்டிருந்த நிலையில் அவை நிறைவேற்றப்பட்டமையினாலேயே எம்மை விட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் அவரது குறும்பா பற்றிய தேடல்களும் குறிப்புக்களும் குறும்பா பற்றிய அரிதான இலக்கிய வெளிப்படுத்தல்கள் உள்ள இக்கால கட்டத்தில் அவரது குடும்பத்தினர்களால் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கைக்கூ எழுதுவது எப்படி? பத்ர் ஒரு வரலாற்றுத் திருப்பம், விலங்குகள் நொறுங்குகின்றன ஆகிய கட்டுரை நூல்களையும் கூட்டு முயற்சிகள் மூலம் வெளிக்கொணர்ந்தார்.
பட்டங்கள், பதவிகள், புகழ்களை விரும்பாத ஒருவராக இவர் வாழ்ந்த போதும் பல விருதுகள் அவரைத் தேடித் தொடர்ந்தன. 1992 இல் "நஜிமுல் உலூம்", முஸ்லிம் கலாசார அமைச்சின் "அறிவுத்தாரகை” ஒலிபரப்புத் துறைக்கான "சர்வதேச உண்டா”, தேசிய ஒற்றுமை இலக்கியங்களுக்கான “சமாதான அமைப்பு விருது” என நீண்டே செல்லும் விருதுகள் பட்டியலின் சொந்தக்காரனானார்.
ஜெஸ்மி எம். முஸா D

ஷம்ஸின் இலக்கிய, கலைப்படைப்புக்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வகையில் அவர் வாழ்ந்த சமூகத்தின் உணர்வுகள் காணப்படுவதை நோக்க முடியும். இஸ்லாமியத் தமிழிலக்கியம் என தலைப்பிட்டு இலக்கியத்தரம் காண்பவர்களின் பட்டியலில் ஷம்ஸிற்குரிய இடம் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட துறைசார் அறிஞர்களை நாம் எத்தனை சந்தித்த போதும் எழுத்து, கலை, இலக்கியம் என பன்முகத் தன்மை கொண்ட ஷம்ஸைப் போன்றோரைக் காண்பது அரிது. தென்னிலங்கைக்கு மட்டுமல்ல முழு இலக்கிய உலகுக்குமே அவரது இழப்பு மட்டிட முடியாதது ஒரு மனிதம் மரணித்த பின் பேசப்படுவதும், தரம் காணப்படுவதும் இயல்பு. இந்த வட்டத்திற்குள் இருந்தாவது இவரது படைப்புக்களும் ஆளுமைகளும் மதிப்பிடப்பட வேண்டும். இது காலத்தின் தேவையுமாகும். 16-07-2002 இல் ஷம்ஸ் என்ற மனிதம் மறைந்துவிட்டது. ஆனாலும் அதன் பிரவாகம் மட்டுமே இன்னும் ஒடிக்கொண்டே இருக்கிறது.
துணைநின்றவைகள்
O புதுப்புனல் - கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸின்
நினைவுக் கவிதைகள், சிந்தனை வட்டத்தின் 150 ஆவது வெளியீடு.
O மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் - கலாசார சமய அலுவல்கள்
960) DéFei.
O உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுச் சிறப்பு மலர் (2003)
O ஞானம் - 24 - எனது எழுத்துலகம் -
எம்.எச்.எம். ஷம்ஸ்.
O ஷம்ஸ் பற்றி குறிப்புக்கள் - எம்.எஸ்.எம். பாஹிம்,
ஆசிரிய பீடம், தினகரன்.
2006-03-20 ஆம் திகதி எம். எச். எம். ஷம்ஸின் பிறந்த தினத்தையொட்டி தினகரனில் எழுதப்பட்டது.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு - QD

Page 28
தென்கிழக்குப் பிரதேசத்தவர்களிடமிருந்து துரமாகிச்
கிராமப்புற மக்களையே நாட்டார் என்றழைப்பர். இவர்களிட மிருந்து வெளிப்பட்ட உணர்வுகளே நாட்டார்பாடல்களாகின. இம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்கள், தொழில் முறை, அன்றாட வழக்கியல் கூறுகள், மொழிக்கையாள்கை முதலியன இதன் மூலம் வெளிப்பட்டன.
1960 ஆம் ஆண்டிலிருந்து நீலாவணை, மருதமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட தென்கிழக்குப் பிரதேசம் என வரையறை செய்யப்படும் இப்பிரதேச மக்களிடமிருந்த நாட்டார் பாடல்களைத் தேடி ஆய்வு செய்யும் முயற்சிகள் ஆரம்பமாகின.
எழுத்தாளர்களான புலவர்மணி ஆ.மு. ஷரிபுதீன், ஈழமேகம் பக்கீர்தம்பி, அஸ். அப்துஸ்ஸமது, ஹஸன் மெளலானா, எஸ்.எச்.எம். ஜெமீல், மருதூர் வாணர், மருதூர்க்கொத்தன், பஸில்காரியப்பர், எம்.எச்.எம். அஷ்ரப், ஆஸாத் மெளலானா, ஏ.ஆர்.எம். சலீம், எம்.ஏ. நுஹற்மான், முத்துமீரான், றமீஸ் அப்துல்லா முதலியோர் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தின் பின்னணியில் இருந்து கொண்டு; அவர்களது காலகட்டங்களில் வெளியான சஞ்சிகைகள், தேசியப் பத்திரிகைகள், வானொலி நிகழ்ச்சிகள், பிரதேச இலக்கிய வெளியீடுகள் போன்றவைகளின் மூலம் தென்கிழக்கு பிரதேச நாட்டார் பாடல்களின் தன்மைகளைக் கூறுபோட்டு நாடறியச் செய்தனர். இம் முயற்சிகளின் விளைவாக மக்களுக்கும் இவ்விலக்கியத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது.
ஜெஸ்மி எம். முஸா )-
 
 

1995 ஆம் ஆண்டு வெளியான மருதமுனையைச் சேர்ந்த புலவர்மணி ஆ.மு. ஷரிபுதீனின் “கனிந்த காதல்” என்ற நூலே நாட்டார் பாடலுக்கான ஆரம்பத்தைக் கொடுத்தது என்றால் மறுப்பதற்கில்லை. இவ்வரிசையில் எஸ்.எச்.எம். ஜெமீலின் கிராமத்து இதயம், எஸ். முத்துமீரானின் கிழக்கிலங்கை முஸ்லிம் நாட்டார் பாடல்கள்', றமீஸ் அப்துல்லாவின் கிழக்கிலங்கைக் கிராமியம் முதலியன நாட்டார் பாடல்கள் தொடர்பான இப்பிரதேசச் செய்திகள் பலவற்றைக் கூறிச் சென்றன. இந்நூல்கள் அனைத்தும் சங்கிலித் தொடர்போல் ஒரே செய்திகளையே சொன்னாலும் சொல்லப்பட்ட விதமும், ஒரு சிலவற்றிலுள்ள புதுமை விடயங்களும் ஒன்றிணைந்த போது தென் கிழக்குப் பிரதேச நாட்டார் பாடல்கள் பற்றிய ஒரு முழுமைக்கான பெரும் பகுதியை பூர்த்தி செய்துவிட்டன என்றே கூறலாம்.
இப்பிரதேசங்களிலிருந்த தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், மீனவர் பாடல்கள், தூதுப் பாடல்கள், காதல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் ஆகியன இம்மக்களால் பெரிதும் சுவைக்கப்பட்டதுடன், குறித்த சந்தர்ப்பங்களில் பெரும் வரவேற்புடனும் எதிர்பார்ப்புடனும் பாடப்பட்டும் வந்துள்ளன.
"தாயானவள் உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசு தாலாட்டு” (97 : 37) என தென்னிந்திய நாட்டாரியல் அறிஞரான தமிழண்ணல் கூறுவது போல் இது ஒரு தாய்மையின் வெளிப்பாடே. பிள்ளையொன்று பிறந்த போது தொட்டில் கட்டி, ஊஞ்சல் அமைத்து தாயானவள் மடியில் வைத்து தாலாட்ட முற்படும் போது இப்பாடல்கள் எழுந்தன. காலை நீட்டித் தலையணை போட்டு தாயும் அவளது மூத்த வயது உறவினர்களும் குழந்தையைப் பார்த்து;
"புள்ளர கோழி வா. வா.
மைமுனாச்சி மஞ்சக்கறப்பி
ஆராத்திப் பொட்டகம்
குப்பல ரெண்டு
நெல் அள்ளிப் போட்டன்
கொத்தி தின்ன
வா. வா. வா. வா.” .
எனப் பாட ஆரம்பிக்கும் போது பிள்ளைகள் உறங்கிவிடுவதே பெரும்சுகம்.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 29
ஆனால், இன்றைய இயந்திரகரமான வாழ்வியலுக்குள் சின்னத் திரையும் சினிமாவும் ஊடறுத்து விட்டதனால் மேலே கூறிய எந்த ஏற்பாடுகளும் இல்லாத நிலையில், எப்படியாவது குழந்தையை உறங்கவைக்கும் முயற்சிகள் இருப்பதால் தாலாட்டுப் பாடல் என்பது தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது.
குழந்தைகளின் உள வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது உளவியலாளர்களின் கருத்தாகும். நாட்டுப் புறவியல் அறிஞரான டாக்டர். க. சண்முகசுந்தரம் கூறுவதைப் போல; "குழந்தைகளை பாடும் பறவைகள், ஆடும் மலர்கள், அசையும் தென்றல், அன்பின் வடிவம், ஆசைத் தேர், பாசக் கொடி, பெளர்ணமி நிலவு என எவ்வாறு புகழினும் போற்றினும் பொருந்தும். ஏனென்றால் வேறு எதிலும் இல்லாத புதுமையும், பொலிவும் குழந்தைகளிடம் உள்ளன. வேறு எதனிலும் கண்டுகொள்ள முடியாத இன்பமும், ஈடுபாடும் அதனிடம் உள்ளன.” (85.81) என்ற கூற்றின் நிழலில் பாடுதல், ஆடுதல், அசைதல், அன்பு, ஆசை, பாசம் முதலியன ஒரு குழந்தை விளையாடும் போதும், சந்தோஷமாக இருக்கும் போதும் வெளிப்படுகின்றன. இதனை நாட்டார் குழந்தைப் பாடல்கள் ஊடகமாகநின்று வழங்கினவென்றால் மறுக்கமுடியாது.
இன்று சிறுவர்கள் விளையாடுவதைக் காண்பதே அரிதாக உள்ளது. அப்படி விளையாடினாலும் நாட்டார் பாடல்களை அசைபோட்டு விளையாடும் நிலை தற்போது இல்லை. கடந்த இரு தசாப்தத்தை முன்னோக்கிப் பார்க்கும் போது வீட்டிலும் வெளியிலும் சிறுவர்கள் ஒன்றுகூடி; தமது உள்ளங்கைகளை நிலத்தில் பதிந்திருக்க, அதில் ஒருவர் தனது சுட்டு விரலால் ஒவ்வொரு கையையும் தொட்டவாறு
பருப்பும் பருப்பும் பன்னிரண்டாம் தேறம் தேறம் மஞ்சலாம் கூட்டத்திலே விளக்கமாம் உங்கொப்பண் தலையிலே என்ன பூ?’ எனக் கேட்க, மற்றவர்
முருக்கம் பூ' என்பார்.
ஜெஸ்மி எம். முஸா D

மீண்டும் தொடங்கியவரே
முருக்கம் பூ பூத்தவரே
முன்னடிக் கஞ்சி குடித்தவரே
பாதிப் பிலாக்கா திண்டவரே
உன் பாவட்டம் கையை முடக்கு என்பார். இவ்வாறே மாறி மாறி இவ்விளையாட்டுச் சென்றுகொண்டே இருக்க, இதனைத் தொடர்ந்து பல விளையாட்டுக்களும் இதனுடன் இணையும். குழந்தைகள் குதூகலிப்பர், பொழுதும் போகும், குழந்தைகளுக்கிடையே பரஸ்பர உறவும் வளரும், வளர்ந்தது.
ஆனால், இன்று இந்த நிலைமையினைக் காண முடியா துள்ளது. பத்து வயதிற்குள் போட்டிப் பரீட்சைகளும் கல்விச் சுமையும் மேலதிக வகுப்புக்களும் இவர்களை வதைக்கும்போது இதனைப் பற்றிச் சிந்திக்க நேரம் எங்கு? இன்று சிறுவர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வளர இந்நிலைமையே காரணமாகும்.
இன்றுள்ள பிள்ளைகளிடமிருந்த சந்தோசமும் விட்டுக் கொடுப்பும் சகோதரத்துவ வாஞ்சையும் இல்லாமைக்கு நாட்டார் விளையாட்டு முறையும், பாடல்களும் தூரமாகிச் சென்றமையே காரணமெனலாம்.
‘வாழ்வின் முன்னுரை தாலாட்டு என்றால் அதன் முடிவு ஒப்பாரி தாலாட்டைக் கலங்கரை விளக்கம் என்றால் ஒப்பாரியை நினைவுச்சின்னம் என்கிறார் நாட்டுப்புறவியல் ஆய்வாளரான டாக்டர் சக்திவேல். ஒப்பாரியைப் பிலாக்கணம், இழவுப்பாட்டு என்றெல்லாம் அழைத்தனர். உறவுகளில் ஒருவர் இறந்த போது அவரை நினைத்து, அவரின் செயலை நினைத்துப் புலம்புவதே ஒப்பாரியாகும்.
அள்ளிக் கொடுக்க வேணாம் அரண்மனையில் பங்குவேனாம் அன்பான வார்த்தை சொல்லி
என்ன
அரவனச்சாப் போதும் உம்மா.
- தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -(3D

Page 30
பெத்தன் வளத்தன் பேரும் வெச்சண் இன்பமெண்டு தட்டிப்பறிச்சாய் யா அல்லாஹற் தாங்குதில்லை என் மனசு’
என்றவாறு பல ஒப்பாரிப் பாடல்கள் இப்பிரதேசத்தில் வழக்கில் இருந்தன.
இவ்வாறான ஒப்பாரிகள் பல இன்று வழக்கொழிந்துவிட்டன. மார்க்க எழுச்சியும் அறிவியல் வளர்ச்சியுமே இதற்குக் காரணமெனலாம். இதுவொரு வரவேற்கத்தக்க நிலையே. இப்பாடல்கள் மெளட்டீக நிலையின் வெளிப்பாடே என்பது சமய ரீதியான நியாயமான முடிவாகும். இருந்தாலும் இவை நாட்டார் பாடலாக இருந்து தற்போது அகன்று விட்டதனாலேயே இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
நாட்டார் பாடல் வகைகளுள் இன்றும் தென்கிழக்குப்
பிரதேசத்தில் வழக்கிலிருப்பது 'மீனவர் பாடலாகும். இதனை இப்பிரதேசத்தவர் அம்பா’ என்றழைப்பர். இவை கருத்துக்கு அன்றி ஒசைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
கரைவலையினைப் பயன்படுத்துகின்ற மருதமுனை, கல்முனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் உள்ளிட்ட பிரதேச மக்களே இதனைப்பாடுவர்.
இதனது அமைப்பும், தன்மையும் பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபடும். இதனுடாக இப்பிரதேச மக்களின் சமூக, வாழ்வியல் கூறுகள் வெளிப்படுகின்றன.
‘எங்கட ஊரிலே பஞ்சமாம்
ஏழைச் சனங்களும் மிச்சமாம்
சந்திக்குச் சந்தி கூட்டமாம்
சாகிற கிழவியும் ஓட்டமாம்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ. என்றும்
-G2)- C ஜெஸ்மி எம். முஸா D

ஆழிக்கடலில்
அல்லாஹற்வை நம்பி
சவளையும் தள்ளி
சவியா இழுடா
இவ்வாறு கிளைவழக்குடன் கூடிய சொற்களைக் கொண்ட பாடல்கள் இவ்வாறு நிறையவே பாடப்பட்டுள்ளன. எனினும், ஆழிப்பேரலையை அடுத்து மருதமுனை, பொத்துவில் முதலிய இடங்களில் கரைவலைத் தோணியில் மீன்பிடிக்கின்ற நிலை குறைந்து கொண்டு வருவதால் மீனவர் பாடலும் படிப்படியாக அழிந்து செல்லும் நிலைமை உருவாகியுள்ளது.
மீனவர்களைப் பொறுத்தவரை கரைவலைத் தொழிலில் ஈடுபடும் நேரங்களில் மட்டுமே இதனைப் பாடுவதனால் பாதுகாப்பதற்கான ஏனைய முயற்சிகள் எதுவும் கைகூடாது. வலையினை இழுத்து ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளும் போதே இப்பாடல்கள் பிறக்கின்றன. ஆழிப்பேரலையின் பின் புதிய இயந்திரப் படகுகளும், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வள்ளங்களும் பெருமளவில் பயன்படுத்தப்படுவதனால் பாரம்பரிய முறையிலான கரைவலைத் தோணிக்கான மவுசு குறைந்துகொண்டே வருகின்றது. மீனவத் தொழிலை மட்டும் நம்பி வாழ முடியாத பொருளாதாரச் சுமைகள் நிறைந்த இக்காலகட்டத்தில் மீனவர் பாடலைப் பற்றிப் பேசுவது முக்கியமான ஒன்றாகவும் அமையலாம்.
விவசாயிகள் வேளாண்மை அறுவடையின் போது படிக்கும் பள்ளுப் பாடலும் நாட்டார் பாடல்களுள் குறிப்பிடத்தக்கவொன்று. இதனை உழத்திப்பாட்டு, ஏர்ப்பாட்டு என்றெல்லாம் அழைப்பர். தென்கிழக்குப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க விவசாய நிலங்கள் இருப்பதனால் இப்பாடல்கள் பெருவழக்கில் இருந்தன.
அலிக்கம்ப வட்டையிலே
அஞ்சேக்கர் செய்திருக்கண்
தாலிக்கொடி வாங்க - எண்ர
தங்கமயில் நாகூருக்கு முதலிய பாடல்கள் இப்பிரதேசத்தவர்களால் பாடப்பட்டுள்ளதனை அறிய முடிகின்றது.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு - G3D

Page 31
விவசாயிகள் தங்கள் வயலுக்குள் இறங்கி, ஏழு எட்டுப் பேர் சேர்ந்து வரிசையாக நின்று ஒருவரை இன்னுமொருவர் பக்கத்தில் பார்த்துக்கொண்டு பள்ளுப் பாடியவாறே அறுவடையில் ஈடுபடுவர். வரிசையாக நின்று ஒரே திசையில் சென்று மீண்டும் வந்து தொடங்கிய திசையின் மறுபகுதியை வெட்டுவர். இதனை தத்தி’ என அழைப்பர்.
இதன் போது வேளாண்மை வெட்டுகின்றோம், உழைக் கின்றோம் என்பதனை விட அவர்களது மனதில் ஒருவிதமான மகிழ்ச்சியும், இலக்கிய இரசனையும் இருந்தது. ஆனால் இன்று வயலுக்குள் முதலில் வருபவர் மற்றவர்களைக் கவனியாமல் தனியாகவே நின்று அறுவடை செய்து விட்டுச் செல்கின்ற நிலையே காணப்படுகின்றது. தான் எந்தளவு கூடுதலாக வெட்டுகின்றோம், எவ்வளவு கூடுதல் பணம் பெறலாம் என்ற உணர்வே இன்று உருவாகியுள்ளது.
இது தவிர புதிய நவீனரக அறுவடை இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் பள்ளுப் பாடல்களைப் பற்றியோ, நாட்டார் இலக்கிய மணத்தைப் பற்றியோ சிந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால வித்தியாசத்தினால் தோன்றும் இவ்வாறான மாற்றங்களை அங்கீகரிக்கத்தான் வேண்டும். அது காலத்தின் தேவையும் தான். இருந்தும் நாட்டார் பாடல்கள் இப்பிரதேச மக்களிடம் வழக்கில் இருந்தபோது அவர்களது வாழ்க்கைப் போக்கும், உணர்வும் மிகவும் சுதந்திரமாகவே இருந்தது. இலக்கியம் இரண்டறக் கலந்திருந்தமை இவ்வுணர்வுக்கான முக்கிய காரணியெனலாம்.
"இலக்கியம் என்பது ஒரு மனிதனைப் பாதிக்க வேண்டும். பாதிப்பு என்ற தளத்திலிருந்தே இலக்கியம் பிறக்கின்றது” எனும் எழுத்தாளர் முருகையனின் கூற்றிலிருந்து, நாட்டார் பாடல் மக்களிடம் மென்மையான, அன்பான, சந்தோசமான உணர்வுகளை வெளிக்காட்டியது என்பதே உண்மை.
90களின் பின்னிருந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியன தமிழ் விஷேடதுறை இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பிப்பதற்கான தலைப்புக்களை வழங்கும் போது தென்கிழக்குப் பிரதேசத்து மாணவர்கள் பலரை நாட்டார் பாடல்கள் தொடர்பான ஆய்வுகளில் அமர்த்தி
ஜெஸ்மி எம். முஸா )-

இருக்கின்றன. தனியே மீனவர் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனத் தலைப்பிட்டு அவற்றைத் தொகுக்காமல் அப்பாடல்களினூடாக வெளிப்பட்டு நிற்கும் கலாசார, பண்பாட்டு நிலைகளை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் இவ்வாய்வுகள் அமைந்திருக்கின்றன.
இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நாட்டார் பாடல்கள் கட்டுரை களாக்கப்பட்டு ஆய்வுத் தொகுதிகளாக துறைசார் நிலையங்களிலும், பல்கலைக்கழக நூலகங்களிலும் மீண்டும் அதே பல்கலைக்கழக மாணவர்களால் புரட்டப்படுவதனூடாக மட்டும் பொது மக்கள் முன் ஜனரஞ்சகப்படுத்தப்படுமா? என்பதே எமது பிரதான வினாவாகும்.
எனவே, யுத்த சூழலுக்குள்ளும், இயந்திரமான வாழ்க்கை முறைக்குள்ளும் அகப்பட்டுத் தத்தளித்துக்கொண்டிருக்கும் தென்கிழக்குப் பிரதேசத்தவர்களிடம் ஏதோவொரு வகையில் பாதுகாக்கப்பட்டுள்ள நாட்டார் பாடல்கள் தொடர்ந்தும் நிலைத்து நிற்க வேண்டுமாயின் பாடசாலைப் பாடத் திட்டங்களில் பிரதேச ரீதியான விடயங்களை உள்ளடக்கும் போது தென்கிழக்குப் பிரதேச நாட்டார் பாடல்களையும் உள்ளடக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். துறைசார் பாடத்திட்ட வடிவமைப்பினை மேற்கொள்ளு கின்றவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனமெடுப்பது ஒரு சமுதாய தேவை யென்றுகூடச் சொல்லலாம். இது தவிர வெறுமனே இலக்கியம், இலக்கியம் என தங்களைப்பட்டை தீட்டி மாரடிப்பவர்கள் இவ்வாறான முதுசெங்களைப் பாதுகாத்து, மக்கள்முன் நிலைத்திருக்கச் செய்ய வேண்டிய ஏர்கோலங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். என்ன நவீன உலகாயினும் நாகரீகங்களை நளினமாகக் கூறிய நாட்டார் பாடல்கள் மக்களுக்கு எப்போதும் இன்பமளிப் பனவே. இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடாமல் நாம் ஒதுங்குவது தென்கிழக்குப் பிரதேசத்து நாட்டார் பாடல்களையே துரத்திவிடுகின்ற செயலாக அமையலாம்.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -35)-

Page 32
துணைநின்றவைகள்
O சண்முகசுந்தரம்
O முத்துமீரான் எஸ்.
O றமீஸ் அப்துல்லா
O சக்திவேல் சு.
O விஜிலி எம்.எம்.
(1985)
(1997)
(2001)
(2002)
(2006)
தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள், மீரா உம்மா நூல் வெளியீட்டகம்,
நிந்தவூர்.
கிழக்கிலங்கைக் கிராமியம், மல்லிகைப் பந்தல், கொழும்பு.
நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
நேர்காணல், மருதமுனை. 2006-07-04.
2006-07-31, 2006-08-01 ஆம் திகதிகளில் தினகரனில் வெளியானவை.
ஜெஸ்மி எம். முஸா D

மருதமுனை ஈன்ற “புலவர்மணி” ஆ.மு. வடிரிபுத்தீன்
மருதமுனையில் ஆதம்பாவா - பாத்தும்மா தம்பதிகளின் ஒன்பது பிள்ளைகளில் மூன்று ஆண்களுக்கு மூத்தவராக 1909 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் திகதி பிறந்தவரே ஆ.மு. ஷரிபுத்தீன்.
மருதமுனையின் கல்வி வரலாற்றில் திருப்புமுனையாக 1911 இல் ஆரம்பிக்கப்பட்ட அல்-மனார் மத்திய கல்லூரியில் ஆரம்பப் படிப்பைத் தொடர்ந்தார். இக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஜே.எஸ். வேலுப்பிள்ளை என்பவர் அல்-மனாருக்குத் தலைமையாசிரியராக வர இவரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்ற ஷரிபுத்தீன் வேலுப்பிள்ளையின் அன்பினைப் பெற்ற மாணவராகவும் திகழ்ந்தார். ஐந்தாம் ஆண்டு சித்தியடைந்த புலவர்மணிக்கு மேலும் படிப்பினைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் அல்-மனாரில் ஆண்டு ஐந்து வரை மாத்திரமே வகுப்புக்கள் இருந்தமையாகும். பின்னர் இவரது படிப்புக்கு உரமூட்ட எண்ணிய வேலுப்பிள்ளையின் பெருமுயற்சியினால் கல்வித் தரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. இத்தருணத்தில் வேலுப்பிள்ளை மாறுதல் பெற்று மீண்டும் யாழ்நகர் சென்றுவிட்டார். இந்நிகழ்வு ஷரிபுத்தீனுக்கு மட்டுமல்ல மருதமுனையின் கல்வித் தாகத்திற்கே ஓர் ஏமாற்றமெனலாம்.
இதன் பின்னர் காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளின் பள்ளி மாணவரான எஸ். வைரமுத்து என்பவர் அல்-மனாருக்குத் தலைமை ஆசிரியராக வர இதனைத் தொடர்ந்து அல்-மனாரின் வளர்ச்சிக்கேற்ப க.பொ.த. சாதாரண தரம் வரை வகுப்புக்கள் உயர்த்தப்பட்ட போது வைரமுத்துவே ஷரிபுத்தீனின் தமிழ் ஆசிரியராகத் தம் பணியைத் தொடர்ந்தார். ஒரு மாணவனாக இருந்து கொண்டே மாணவ
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -(37)-

Page 33
ஆசிரியர்’ என்ற பரீட்சையில் சித்தியெய்தி 1929-10-01 ஆம் திகதி தனது பதினெட்டு வயதில் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியர் என்ற பெருமையினைத் தனதாக்கிக் கொண்டார்.
தனது ஆசிரியத் தொழிலின் மூலம் பாண்டிருப்பு, நீலாவணை, மண்டுர், அன்னமலை, துறைநீலாவணை, கல்லாறு போன்ற கிராமங்களுடன் கனத்த நட்புக் கொண்ட இவர் தமிழ் மாணவர்கள் பலருடனும் உறவும் வைத்துக் கொண்டார். 1942 ஆம் ஆண்டு திடீரென மாற்றம்பெற்று உடத்தலவின்னை மகா வித்தியாலயத்திற்கு தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். இங்கிருந்து கொண்டே 1947 இல் முதலாம் தர தலைமை ஆசிரியராகப் பதவியுயர்வும் பெற்றார்.
இச்சந்தர்ப்பத்தில்தான் கல்முனை ஆண்கள் பாடசாலைக்கு மாற்றமும் கிடைத்தது. அங்கு மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரபை ஒர் இளம் கவிஞனாக இனங்கண்டவரும் ஷரிபுத்தீனே. “கவிஞர் திலகம்” என அமைச்சர் அஷ்ரப் கீர்த்தி பெற இவரே வழிகாட்டினார். “கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான். ஆ.மு. ஷரிபுத்தீன் என்னைக் கண்டுபிடித்தார்” என அஷ்ரபே உயிருடன் இருக்கும் காலங்களில் ஷரிபுத்தீன் முன்னிலையிலேயே மொழிந்திருக்கின்றமை மெச்சத்தக்க அறுவடையாகும்.
தன் வசிப்பிடப் பிரதேசமான நீலாவணை முஸ்லிம் பிரதேச மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்த இவர் தனது பெருமுயற்சியினால் 1959 ஆம் ஆண்டு பெரியநீலாவணை முஸ்லிம் வித்தியாலயத்தை நிறுவினார். இது பின்னர் ஆ.மு. ஷரிபுத்தீன் வித்தியாலயம் என நாமம் பெற்றமை இவரது புகழிற்குக் கிடைத்த மகுடம் என்றே கூறலாம்.
இவ்வாறாக, 1929 ஆம் ஆண்டிலிருந்து 1961 ஆம் ஆண்டு வரை சுமார் 32 வருடங்கள் ஆசிரியர், அதிபர் சேவையிலிருந்த புலவர்மணிக்கு 1961 ஆம் ஆண்டு கல்வி அதிகாரியாகப் பதவியுர்வு கிடைத்தது. இதில் ஏழு வருடங்கள் சேவையாற்றி 1968 ஆம் ஆண்டு அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்றார். இதன் பின்னர் மருதமுனை மக்கள் ஒன்றுகூடி பெரு விழா எடுத்துப் பொன்னாடை போர்த்திப் பாராட்டி "ஆசிரியமணி” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தனர்.
ஜெஸ்மி எம். முஸா D

கல்விப்பணி போல் சமூக சேவைகளிலும் புலவர்மணி நாட்டம் கொண்டார். சமாதான நீதவானாகவும், இணக்க சபைத் தலைவராகவும் இருந்தமையினால் பிணக்குகள் பலவற்றைத் தீர்த்துவைக்கும் நீதிபதியாகவும் செயற்பட்டார். இவைகளுக்கு உறுதுணையாக இருந்தவர் இவரது அன்பு மனைவி ஆயிஷா என்றால் மிகையாகாது. இவ்வாறான சமூக ஆர்வத்துடன் சமயப் பற்றும் மிக்க ஷரிபுத்தீன் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி 1953 ஆம் ஆண்டு பாக்கித்திஸ்ஸாலிஹாத் ஜும்ஆப் பள்ளிவாயலினை நிறுவி இஸ்லாத்தின் தூய தெளஹித் கொள்கையினை நிலைநாட்ட முன்னின்றார். இவைகளுடன் நின்றுவிடாது கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், கூட்டுறவு இயக்கம், சமாதான சபை எனப் பல்வேறு அமைப்புக்களை நிறுவி அவைகளின் தலைமைத்துவப் பதவிகளையும் வகித்தார்.
ஷரிபுத்தீனை தேசிய ரீதியில் பிரபல்யப்படுத்திய விடயம் இலக்கியமே. இதன் மூலம் அவர் மரபு வழி முஸ்லிம் இலக்கிய கர்த்தாக்களில்
முதன்மையானவராகக் கொள்ளப்படுகின்றார்.
பாடசாலைக் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், பேச்சு மற்றும் விவாதப் போட்டிகளில் பங்குபற்றிப் பல தேசிய ரீதியான சான்றிதழ்களையும் பெற்றதுடன் நீலாவணன், பாண்டியூரான் போன்றோர்களுடன் கல்முனையில் நடைபெற்ற பல இலக்கிய நிகழ்வுகளில் பங்குபற்றிப் பலரின் பாராட்டைப் பெற்றார். விபுலானந்த அடிகளிடம் இலக்கணம் பயின்ற இவர் “நீர் ஓர் புலவனாக வளரும்” என்ற ஆசியினையும் அடிகளாரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மருதமுனையின் வழிகாட்டி எழுத்தாளர் சின்னாலிமப்பாவின் "ஞானரை வென்றான்” எனும் நூலை 1948 ஆம் ஆண்டு பதிப்பித்ததிலிருந்து இவரது இலக்கியப் பணி வலுப்பெற்றது. பின்னர் இதே காலப்பகுதியிலேயே "வீராங்கணை ஸைதா” என்ற கவிதை நூலை வெளியிட்டார். இந்நூல் ஓர் விமர்சன நூலாக அமைந்தது. 1952 இல் "சீறாப்புராண பதுறுப் படலம்" க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு பாட நூலாக்கப்பட்ட போது அதற்கு உரை எழுதி மாணவர்களின் தமிழ் கல்விக்கு உரமூட்டினார். 1963 இல் முஸ்லிம்களின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றியபின் அதில் கண்டுகொண்ட அனுபவங்களை “இலங்கைக்கு வெளியே நூறு நாட்கள்” என்ற கட்டுரையின் மூலம் வெளிக்கொணர்ந்தார்.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 34
1965 காலப்பகுதியில் "நபிமொழி நாற்பது” என்ற நூலினை எழுதியமைக்காக இந்திய எழுத்தாளரும், அகில இந்திய முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினருமான அ.கா. அப்துல் ஸ்மது அவர்களால் காயல் பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வைத்து “வெண்பாவில் புலி” என்னும் பட்டம் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்நூலிற்கு சாகித்ய மண்டலப் பரிசும் கிடைத்தது. இச்சந்தர்ப்பத்திலேயே தமிழ்ப் பேரறிஞர், எழுத்தாளர் சோ. நடராசா “புலவர்” பட்டத்தை வழங்கிப் பாராட்டினார். இப்பட்டத்தை 1969 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ச் சங்கம் ஏற்றுக்கொண்டு கெளரவமளித்தது.
மண்டூர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளைக்குப் பின்னர் “புலவர்மணி” பட்டத்தைப் பெற்றவர் ஷரிபுத்தீனே. இவரது இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு புலவர்மணியின் திறமையைக் கண்ட பெரியதம்பிப்பிள்ளை “வெண்பாவில் என்னை நீ வென்றாய் ஷரிபுத்தீன் நண்பாவென் நாமம் உனக்கிந்தேன்” எனப் பாராட்டி “புலவர்மணி” என்ற பட்டத்தை தமிழ்ச் சங்கப் பேரவையில் வைத்து வழங்கியமை இவரது கவிதைத் துறைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.
"புதுகுஷ்ஷாம்” என்ற நூலிற்கு நான்கு தொகுதிகளாக உரை எழுதியதுடன் இதன் வெளியீட்டு விழாவை 1979 இல் காயல் பட்டிணத்தில் நடாத்தினார். இந்நூலானது பின்னர் சாதாரண தர மாணவர்களுக்கான பாடப் புத்தகமாகியது. இதனுடன் மாணவர்களுக்கென்று "இஸ்லாமிய இலக்கியத் தொகுதி” என்ற நூலையும் வெளியிட்டார்.
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் “இசைவருள் மாலையும் மக்களுக்கு இதோபதேசமும்” என்ற நூலும் "கனிந்த காதல்” என்னும் இலக்கிய நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நூலானது சங்ககாலத்து காதல் ஒழுக்கத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்டமை சிறப்பம்சமாகும். இதன் பின்னர் "முதுமொழி வெண்பாவும் சூறாவளிப் படைப்போரும், உலகியல் விளக்கமும் நம் நாட்டின் நானிலக் காட்சிகளும்” என்னும் இரு நூல்களையும் கொழும்பில் வெளியிட்டார். இவ்வாறாகப் பல நூல்களை வெளியிட்ட ஷரிபுத்தீன் ஆசிரியமணி, புலவர்மணி, புலவர், வெண்பாவில் புலி, இலக்கியமணி, தமிழ்ஒளி, கலாபூஷணம், நூறுல்பன்னான், தமிழ்விற்பன்னம்
ஜெஸ்மி எம். முஸா D

குறித்து இலங்கை அரசு வழங்கிய “இலக்கியமாமணி” முதலிய பட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
ஈழத்து இலக்கிய வரலாற்றின் பின்பகுதியில் பங்காற்றிய வர்களுள் ஒருவராக உள்ளடக்கப்படும் ஆ.மு. ஷரிபுத்தீன் மருதமுனையில் ஹஸன் மெளலானா, மருதுரர் வாணர், மருதூர்க் கொத்தன், மருதமுனை மஜீத் முதலியோருடன் தமது புதல்வர்களான கவிஞர் ஜின்னா, நயீம் ஷரிபுத்தீன் போன்றோர்களின் எழுத்துலக வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். இவரது மகன் ஜின்னா ஷரிபுத்தீன் பன்னூலாசிரியராக இன்று வலம் வருவது புலவர்மணிக்குக் கிடைத்த புகழே.
இவ்வாறு இலக்கியத்துறையில் அரும்பணியாற்றியமைக்காக 1998 இல் கொழும்பில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பொற்கிளியும் பாராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டது. இப்பாராட்டுக் கிடைத்தவுடனேயே மருதமுனை மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக அழைத்து வந்து மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் பெருவிழா எடுத்துக் கெளரவித்தனர். உண்மையில் இந்நிகழ்வு புலவர்மணிக்கு இதுவரைகாலமும் கிடைத்த பட்டங்கள் கெளரவிப்புக்களை விடவும் உயர்வானதென்றே கொள்ளலாம்.
“எப்போதும் புகழ்பூத்த ஒரு மனிதன் இறந்த பின்னரே அவரது புகழ் பாடப்படுவது இயல்பு. இதிலிருந்து மருதமுனை மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டனர்” என இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான றமீஸ் அப்துல்லாஹற்வின் உரையினை இவ்விடத்தில் மேற்கோள் காட்டுவது பொருத்தமானதொன்றே.
புலவர்மணியின் இலக்கிய அறிமுகம் இன்றுள்ள மாணவர்களுக்கும் இருக்க வேண்டுமென்ற எடுகோளில் தரம் - 10 இற்கென 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கியநயம் பாடத்திட்டத்தில் “முதுமொழி வெண்பாவும் சூறாவளிப் படைப்போரும்” என்ற இவரது தொகுதியிலிருந்து சில பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை ஆரோக்கியமான தொரு முயற்சியென்றே சொல்லலாம். T -
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 35
புலவர்மணி இறந்த பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகம் அவரது இலக்கியப் பணிகளுக்காக கலாநிதிப் பட்டம் வழங்கியது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இவரது இலக்கியப் படைப்புக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, இவரின் இலக்கியப் பணிகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக் கழகமும் கலாநிதிப் பட்டம் வழங்குமா? என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 2000-11-16 ஆம் திகதி இறைவனடி சேர்ந்த மர்ஹ?ம் ஷரிபுத்தீனின் வெளிவராத படைப்புக்களை வெளிக்கொணர வைப்பது அவரது குடும்பத்தினரது தார்மீகப் பொறுப்பாகும். 兼
துணைநின்றவைகள்
O ஷரிபுத்தீன் ஆமு. (1999) - நேர்காணல் மற்றும்
கையெழுத்துப் பிரதிகள். 1999-02-12.
O ஷரிபுத்தீன் ஆமு.வின் ஆக்கங்கள்.
புலவர்மனியின் பிறந்த தினத்தையொட்டி 2000-05-04ம் திகதி தினகரனில் எழுதப்பட்டது.
ஜெஸ்மி எம். முஸா D

நீக்ரோவியம்’ ஒரு பண்பாட்டு
தாழ்த்தப்பட்ட இலக்கியமாக எவ்வாறு இந்தியாவில் மேற்கத்திய சிந்தனை வாதத்தின் தாக்கத்தால் தலித்தியம் எழுந்ததோ, அவ்வாறே ஈழத்திலும் இலக்கியங்கள் பல தோன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக் கூறுகளைப் புடம்போட்டன. இத்தொடரில் உலகளாவிய ரீதியில் கறுப்பினர்களின் உரிமைகளைப் பேச எழுந்த ஒரு பண்பாட்டு எதிர்ப்பின் வெளிப்பாடே நீக்ரோவியமாகும். இது ஆபிரிக்க மக்களை மையமாகக் கொண்டு எழுந்ததொரு இலக்கிய வடிவமாகும்.
பல ஆண்டுகளாக பிரிட்டிஷ், டச்சு முதலிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஆபிரிக்காவின் கலை, கலாசாரம், அறிவியல், இலக்கியம் போன்றன காலத்தால் முற்பட்டவை என ஒதுக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் அதாவது 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடிமை வாணிபமும் சட்ட ரீதியானதாக மாற்றப்பட்டது. இதனால் ஆபிரிக்க மக்கள் ஏனையோர்களால் விலை பேசப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் தொகை குறைந்ததுடன் அவர்களது படைப்பாற்றல், தொழிநுட்பம் என்பவற்றின் மீதான முன்னேற்றமும் தடுக்கப்பட்டது. இவைகளுக்குச் சவாலாக எழுந்தவொரு அமைப்பே நீக்ரோவியமாகும். இதன் தோற்றமானது இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.
ஆபிரிக்காவிற்கென்றதொரு பண்பாடு இல்லை, வரலாறு இல்லை, கடந்த காலம் இல்லை எனக் காலணித்துவ வாதிகள் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். இதை உடைத்தெறிந்து, உரிமைகளை மீட்டெடுக்க எழுத்தாளர்கள் வெளிக்கிளம்பினர். இதனைத் தொடர்ந்தே நீக்ரோவியம் பெரிதும் கவனயீர்ப்பைப் பெறத் தொடங்கியது. இவ் எழுத்தாளர்
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 36
களின் எழுத்துக்களில் இரு பணிகள் குறிக்கோள்களாக அமைந்தன. 1) தங்களது தனிப்பட்ட பண்புகளை வலியுறுத்துவதன் மூலம் இழந்துவிட்ட
அடையாளத்தை மீண்டும் நிலைநாட்டல்,
2) தங்கள் மீது திணிக்கப்பட்ட மேலாதிக்கத்தைத் தூக்கிஎறிந்துவிட்டு
அதிலிருந்து விடுதலைபெறல்.
இந்த வகையில் உலகப் புகழ்பெற்ற கவிஞரான 'எய்மே செஸாரின் "சொந்த மண்ணுக்குத் திரும்புதல்’ என்ற நீண்ட கவிதை மூலம் நீக்ரோவியம் பற்றிய இலக்கியப் பாரம்பரியத்தைப் பிரஸ்தாபம் செய்தார். அமில்கார், காப்ரால், ஃபிரான்ஸ், பெனான் போன்றோரும் இதுபற்றி விளக்கலாயினர்.
நீக்ரோக்கள் கறுப்பானவர்கள் என்று ஒதுக்கப்பட்ட போதும் 'கறுப்பு அழகானது' என்ற கருத்து பலமானதொருவாதமாக முன்வைக்கப்பட்டது. தோலைக் கொண்டு அவர்களது சலுகைகள் மறுக்கப்பட்டபோதும் தங்கள் கருத்துக்களை வெளியிட அவர்கள் தயங்கவில்லை. பிரபல அமெரிக்க கவிஞரான "லாங்ஸ்டன் ஹியூக்ஸ்’ இது பற்றிக் கூறும் போது, புதிய தலைமுறையைச் சேர்ந்த நீக்ரோக் கலைஞர்களான நாங்கள் எங்களது தனிப்பட்ட கறுப்புத்தோல் போர்த்திய பண்புகளை எவ்விதமான பயமோ, வெட்கமோ இன்றி வெளிப்படுத்த முனைகின்றோம். கறுப்பு அழகானது என்பது எமக்குத் தெரியும். எங்கள் முரசுகள் சில நேரம் சிரிக்கின்றன. சில நேரம் அழுகின்றன. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த முறையில் எங்களுக்கான நாளைய கோயில்களைக் கட்டுகின்றோம்' என்றார். இதன் மூலம் தங்களது பண்பாட்டு சலுகைகளைப் பெறுவதிலுள்ள நீக்ரோக்களின் முனைப்பைக் காண முடிகின்றது.
யேசுநாதர் இன்றுவரை பெரும்பான்மை உலக மக்களால் ஒரு தீர்க்கதரிசியாக ஏறறுக்கொள்ளப்பட்டாலும், அவரது வருகையால் மக்கள் உயர்ச்சி பெற்றாலும் அவர் ஒரு கறுப்பராகத் திரும்ப வருவாரானால் மக்கள் நிராகரிப்பர். கறுப்பர் என்ற ஒரே காரணத்தால் யேசுவுக்கே இந்நிலை நேரலாம் எனத் தன் கவிதை மூலம் ஆரூடம் கூறுகின்றார் புகழ்பெற்ற கவிஞர் லாங்ஸ்டன் ஹியூக்ஸ்'
ஜெஸ்மி எம். முஸா D

யேசுவானவர் ஒரு கறுப்பராகத்திரும்பி வருவாரானால் அது நல்லதல்ல. எவ்வளவு புனிதப்படுத்தப்பட்டாலும் நீக்ரோக்களுக்கு அங்கே வாயில்கள் மறக்கப்படும். அங்கே இனம்தான் பெரிதேதவிர
சமயம் அல்ல.
நீர்
நிச்சயமாக
மீண்டும் சிலுவையில் அறையப்படுவீர்’
’கறுப்பு யேசுநாதர்' என்ற இக்கவிதையின் சாரத்தின் மூலம் திமிர்பிடித்த வெள்ளையர்களுக்கெதிரான இயல்பும் தமது பண்பாட்டின் தாகமும் வெளிப்படுத்தப்பட்டு நிற்பதை உணரலாம்.
ஆபிரிக்க இனமானது உலகின் மிகப் பழைமைவாய்ந்தது. இதனால் மானிடவியலாளர்கள் முதல் மனிதனின் தொட்டில்’ என வர்ணிக்கின்றனர். இப்படியாக இருந்தும் பிற்காலங்களில் அவர்களுக்கிருந்த உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் அடையாளமற்றவர்களாகவும் நோக்கப்பட்டனர்.
நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன் மகனே! நான் பல முகங்களை அணியக் கற்றுக் கொண்டேன்
வீட்டு முகம், அலுவலக முகம் ~ ~’ என நைஜீரியக் கவிஞர் ஓகாரா' என்பவர் “சிரிக்கக் கற்றுக்கொள் மகனே" எனும் கவிதையில் கூறுகின்றார். இவ்வாறு பல முகங்களைக் காட்ட
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 37
வேண்டியதன் நோக்கம் தன் இருப்பை உறுதிப்படுத்தவே என்ற செய்தி இதனூடாக வெளிப்பட்டுநிற்பதனைக் காணலாம்.
கறுப்புத் தொழிலாளர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத் தாலும் இறுதியில் எவராலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. முதலாளிமார்களையும் பணமுதலைகளையும் வாழ வைத்துவிட்டு இவர்கள், தம் பண்பாட்டுக் கூறுகளையும் ஏன், தம் வாழ்வியலையும் கூட இழந்து நிற்கின்றனர். இதனை அங்கோ’ என்ற கவிஞரின் “கறுப்புத் தொழிலாளர்கள்” எனும் புகழ் பெற்ற கவிதையில் காண முடிகின்றது.
“கார்களையும் இயந்திரங்களையும்
பெண்களையும்
நீக்ரோக்களின் தலைகளையும்
வாங்கும் பணத்தை
முதலாளிக்கு யார் தருகிறார்கள்?
கறுப்புத் தொழிலாளர்கள்”
மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துன்பியல் மிகுந்த வாழ்வியலைப் புடம் போடுகின்ற சி.வி வேலுப்பிள்ளையின் “தேயிலைத் தோட்டத்திலே.” கவிதையின் உணர்வுகளை இக் கவிதையிவலும் பார்க்கலாம்.
கறுப்பு உலகத்தின் பண்பாட்டு மதிப்பீடுகளின் மொத்த உருவமே நீக்ரோவியம் எனப்படுகின்றது. பூழின்போல் சாத்தர்’ என்பவர் இதனை “இன வெறியை எதிர்க்கும் இனவெறி” என்கிறார் மேலைநாட்டுக் கல்வியின் தாக்கத்தால் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை ஒகோட்’ என்ற உகண்டாக் கவிஞர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
"வகுப்பறையில் எங்கள்
இளைஞர்களின் ஆண்மை
சாகடிக்கப்பட்டுவிட்டத
அவர்களது கவிதைகள் கனமான புத்தகங்களால்
நசுக்கப்பட்டுவிட்டன”
இவ்வாறான வெளிப்படுத்தல்களினாலேயே “கறுப்பு எழுத்துக்கள் நம் காலத்தின் உண்மையான எழுத்துக்கள்” எனப் பாராட்டப்பட்டன.
ஜெஸ்மி எம். முஸா D

தாங்கள் எவ்வளவு ஆண்மைமிக்கவர்களாக மிளிர்ந்தாலும் நீக்ரோக்கள் என்பதால் மட்டும் ஓரங்கட்டப்பட்டனர்.
“தாங்கள் கறுப்பானவர்களாக
இருக்கிறோம் என்பதை
அறிந்து கொள்வதற்காக அவர்கள்
வளர்ந்து ஆளாவதைக் காட்டிலும்
இறப்பதே மேல்.’ எனும் கருத்தை ஜான்சன்’ என்ற அமெரிக்க கவிஞனின் “களைப்பு” எனும் கவிதை கூறுகின்றது. "வாழ்வதைவிடச் சாவதே மேல்” என்கின்ற கவிஞரின் சாரம் ஒடுக்கப்பட்ட வாழ்வியல் மீதான அம்மக்களின் ஆற்றாமையின் வெளிப்பாடே எனலாம்.
"அவர்கள் பைபிளுடன் வந்தனர். எங்களிடம் நிலம் இருந்தது. போகும் போது எங்களிடம் பைபிளும் அவர்களிடம் நிலமும் இருந்தது” என்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்று இங்கு நோக்கக்கூடியது. இதனை வலுவூட்டும் விதத்தில் கியூனே க்யென்’ என்ற கானா நாட்டுக் கவிஞர் “ஆறடி நிலம்” எனும் கவிதையில் பிரஸ்தாபித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
"சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற நெடுங்கவிதையில் ஓர் அமெரிக்க கிழவன்
"கென்யா மகத்தான நாடு என்னைப் போல் ஒரு கிழவனுக்குக் கூட ஒரு மைனாக்குஞ்சு” என்கிறார்.
தங்கள் மீதான அடக்குமுறைக்கெதிரான உரிமைக்குரலாகவே இக் கவிதையினைக் கொள்ளலாம்.
இவ்வாறான கவித்துவமான வெளிப்பாடுகள் மட்டுமன்றி
நட்சத்திரங்களின் நேரம், ஒரே தொப்புள் கொடியிலிருந்து, இருட்டுக்கு நிழல் இல்லை, பணிவுடன் ஒரு மனிதன் போன்ற உலகப் பிரசித்தம் பெற்ற
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 38
கவிஞர்களின் கவிதைகளினூடாகவும் நீக்ரோக்களின் வாழ்க்கை, துன்பியல், கலாசார அடக்குமுறை மற்றும் சுதந்திர இழப்புக்கள் முதலியனவும் வெளிப்பட்டு நிற்கின்றன. ஆபிரிக்க மக்களின் பண்பாட்டு மூலத்தை வெளிப்படுத்தும் சினுவா அச்சபேயின் “சிதைவுகள்” தியாங்கோவின் "அழாதே குழந்தாய்’ முதலிய இலக்கிய வடிவங்களும் அந்நிய ஆட்சியின் கீழ் அம்மக்கள் அனுபவித்த பண்பாட்டு நெருக்கடிகளைப் பறைசாற்றுகின்றன.
எனவே, அதிகாரங்களின் கொடுரங்கள் சாமான்யமக்களின் உரிமைகளை நசுக்கும் வகையில் பீறிடுவதைத் தடுக்க முடியாது. அந்த வகையில் நீக்ரோவியம் இலக்கிய அந்தஸ்த்துப் பெற்று வெளிப்பட்டது என்பது விபத்தே. எதிர்காலங்களில் நீக்ரோவியம் போன்ற இன்னும் பல எதிர்ப்பு இலக்கியங்கள் வெளிவரத்தான் போகின்றன என்பதை கனிந்து கொண்டிருக்கும் கால ஓட்டம் பறைசாற்றுகின்றன. எதுவும் காலத்தின் காலடியில். 兼
துணைநின்றவைகள்
O இந்திரன் (1993) - அறைக்குள் வந்த ஆபிரிக்க
வானம், தமிழ் நாடு.
O சிறாஜ் மஷஷர் (2003) - எதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார
ஆயுதம், முஸ்லிம் சமூக அரசியல் படிப்பகம், கொழும்பு.
2006-01-15, 2006-01-22 ஆம் திகதிகளில் தினகரன் வாரமஞ்சரியில் வெளியானவை.
ஜெஸ்மி எம். முஸா )-

ஈழத்துச் சிறுகதையின்
முன்னோடி பித்தன்வடிா
“இலக்கியச் சேவை என்பது பயங்கரமானது. அது கண்ணைத் திறந்து கொண்டு பள்ளத்தில் விழும் செயல்” எனத் தனது சமூகத்து அனுபவங்களைத் தன்மீது சுமந்துகொண்டு அதில் வெற்றிகண்டவரே மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைமுனை என்ற சிற்றுாரில் பிறந்த சிறுகதையாளர் பித்தன் கே.எம்.எம். ஷா ஆவார்.
1930களைத் தொடர்ந்து தென் இந்திய மரபில் 'மணிக்கொடி’ சிறுகதையாசிரியர் வட்டம் பிரபல்யம் பெற்று வந்தபோது "நவீன சிறுகதையின் மன்னன்” எனப் போற்றப்பட்ட புதுமைப்பித்தன் மற்றும் மெளனி, கு.ப.ரா முதலியோரின் எழுத்துக்களால் கவரப்பட்டு; 1940களில் ஈழத்தின் இலக்கியத்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய மறுமலர்ச்சியின் பாசறையில் வளர்ந்தவரே ஷா.
ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்திலும், உயர்தரத்தை சென். அன்றுாஸ் எங்கலிக்கன் மகாவித்தியாலயத்திலும் கற்ற காலம் முதல் தமிழ் சகோதரர்களையே தன் நண்பர்களாகக் கொண்டமையினால் தனது சிறுகதைகளிலும் தமிழினத்தின் பிரச்சினைகளையும் கதையாடல்களையும் கணிசமான அளவு கையாண்டார்.
மணிக்கொடி, ஆனந்த விகடன், சக்தி, சூறாவளி முதலான சஞ்சிகைகளின் பரிச்சயம் தனக்கு ஏற்பட்ட நிலையில் 1940 ஆம் ஆண்டு இந்தியா சென்று இராணுவப் பொறியியல் பகுதியில் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் எழுத்தாளர் பி.எஸ். ராமையாவின் நட்பு தனக்குக் கிட்டியபோது
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 39
அதன் மூலமாகப் புதுமைப் பித்தனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பித்தன் ஷா பெற்றார்.
புதுமைப் பித்தனோடு கொண்ட உறவும், பல்துறை இலக்கிய ஆளுமையும் வளர்ந்துகொண்டு வரும் தருணத்தில் 1948இல் பித்தன் இறந்த செய்தி கே.எம்.எம். ஷாவைப் பாதித்தது. இப்பாதிப்பின் எதிரொலியாக கவிஞனின் தியாகம்' என்ற பெயரில் தினகரனில் சிறுகதையொன்றினை எழுதியதுடன் தன்னைப் பித்தன் ஷா’ எனவும் அறிமுகம் செய்தார். இக்கதையோடு இவரது சிறுகதை இலக்கியப் பிரவேசமும் நிகழ்ந்தது. பித்தன் மீது தான் கொண்ட பற்றுதலே பித்தன் ஷா என எழுதுவதற்கு தன்னைத் தூண்டியது' எனத் தானே பலதடவை பிரசாரம் செய்ததுடன் பித்தனின் இறப்பைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்த ஷா 1984 ஆம் ஆண்டு வரை சுமார் ஐம்பது கதைகளுக்கு மேல் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன் முதலிய பத்திரிகைகளிலும் இந்திய மற்றும் இலங்கைச் சஞ்சிகைகள் பலவற்றிலும் எழுதலானார்.
சிங்கள, ஹிந்தி, மராட்டிய, வங்காள மற்றும் மலையாள மொழி பெயர்ப்பு இலக்கிய அறிமுகம் தனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதிய பித்தன் ஷா, அவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களையும் தமது கதைகளில் கையாளலானார்.
1990 களிலிருந்து இவரது கதைகளைத் தொகுக்கின்ற முயற்சிகளில் பலர் ஈடுபட்டாலும் 1994 இல் பித்தன் இறந்துவிட்டமையினால் அவரது முன்னுரையும் எழுதப்பட்ட நிலையில் அம்முயற்சி தடைப்பட்டது. ஆயினும் 1995 இல் 'மல்லிகை’ சஞ்சிகையின் ஆசிரியரும் மூத்த எழுத்தாளருமான டொமினிக் ஜீவா பயங்கரப்பாதை, தாம்பத்தியம், ஆண்மகன், பாதிக் குழந்தை, அமைதி, அறுந்தகயிறு, பைத்தியக்காரன், மயானத்தின் மர்மம், நத்தார் பண்டிகை, சோதனை, திருவிழா, ஊதுகுழல், ஊர்வலம், தாகம், ஒரு நாள் ஒரு பொழுது, இருட்டறை ஆகிய பதினாறு சிறுகதைகளையும் பித்தன் கதைகள்’ என்ற பெயரில் மல்லிகைப் பந்தல் வெளியீடாகத் தொகுத்தளித்தது பித்தனது எழுத்துப் பணிக்குச் செய்யப்பட்ட கீர்த்தியும் கைமாறும் என்றே சொல்லலாம். இதன் பதிப்புரையில் கிழக்கிலங்கையில் தோன்றிய காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் பித்தன். அவரது கதைகளில்
ஜெஸ்மி எம். முஸா )-

மனித நேயம் அடிப்படை உணர்வாக எதிரொலிக்கின்றது' என டொமினிக் ஜீவா கூறியிருப்பது பித்தனின் உள்ளடக்கத்தோடு நின்று நோக்கத்தக்கதாகும்.
புதுமைப் பித்தனிடம் காணப்பட்ட மனித நேயம், பெண்களின் பிரச்சினை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூக சீர்திருத்தப் பாணி, வறியவர்களின் மீதான பார்வை, போலி சமயஅலங்காரங்களைக் களைதல், கிராமிய வழக் காறுகள் உள்ளிட்ட பலதும் பித்தன் ஷாவின் கதைகளிலும் இழையோடியுள்ளன.
மனித உருவில் போலியாக வாழ்ந்து உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சுயநலமிக்கவர்களைத் தேடும் பணியிலும் அவர்களை அடையாளம் காட்டும் பணியிலும் பித்தன் பின் நிற்கவில்லை. உலகம் மனித நேயமற்றுக் கிடக்கிறது என்பதை நினைத்து அவர் நொந்து கொண்டார். பாதிக் குழந்தை, நத்தார் பண்டிகை, அமைதி, தாகம், சோதனை, திருவிழா முதலிய கதைகளில் இதுபற்றிப் பேசியுள்ளார். “உலகமெல்லாம் தேடினேன் ஒரு மனிதனைக்கூடக் காணவில்லையென்று யாராவது சொன்னால் அவரைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலகம் முடிவுகட்டும். ஆனால் மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள்” (95 : 23) என 1952 இல் எழுதப்பட்ட பாதிக் குழந்தையிலும் 1953 இல் நத்தார் பண்டிகை’ சிறுகதையில் 'மனிதன் சன்னலை அடைத்தால் கடவுள் கதவைத் திறப்பார்’ என்றெல்லாம் எழுதியிருப்பது அவரது மனித நேயத் தேடலின் பின்னரான அமைதிப்படுத்தலை வெளிப்படுத்தி நிற்கின்றதெனலாம்.
1980 களை அடுத்தே பெண்ணியம்’ தொடர்பான இலக்கியப் புழக்கங்கள் ஈழத்தில் ஏற்பட்டன. அதற்கு முன்பே பித்தன் ஷா இதுபற்றி விவாதிக்கலானார். பெண்கள் வெறுமனே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் இயந்திரமாகவும் காம உணர்வுகளைத் தீர்த்துக்கொள்ளும் போகப் பொருளாகவும் பயன்படுத்தப்படுவதை அவர் தன் கதைகளினூடாக எதிர்த்தார். குறிப்பாக இஸ்லாம் பெண்களுக்கு அதிகமான உரிமைகளை வழங்கியிருந்தும் இஸ்லாமிய சமூகம் அதனை வழங்குவதிலும், பின்பற்றுவதிலும் எடுத்தாளும் மெளட்டீகக் கருத்துக்களை விமர்சித்தார். “மனிதன் ஏன் பிறக்கின்றான்? என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் வரலாம். ஆனால் பெண்கள் ஏன் பிறக்கின்றனர் என்று கேட்டால் 'பிள்ளைகள் பெற்றெடுக்க' என்ற பதில்
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -(5D

Page 40
உடனே வரும். முகத்தைத் திருப்பிக் கொள்வதில் பயனில்லை. கொஞ்சம் நேராகப் பார்க்கத் தைரியம் வேண்டும் நமக்கு நமது சமூகமும் நமது அமைப்பும் இப்படி முகத்தைத் திருப்பிக்கொள்ளும் மனப்பான்மையில்தான் பின்னிக் கிடக்கின்றது. பெண்களைப் பற்றி எண்ணிப்பார்க்கும் போது தாய்மையும் தனியாக நின்று அழிந்து போகும் தன்மையுந்தான் மனதில் நிற்கின்றன. இவற்றை விட வேறு ஏதாவது இருக்கிறதா?” (95 - 113) என 'ஊர்வலம்' என்ற கதையில் பித்தன் கேட்கும் வினா எம்மை அக்கருத்துக்களோடு சிந்திக்க வைக்கிறது.
வெறுமனே பெண்களுக்குச் சார்பான கருத்துக்களை மட்டும் கூறிவிட்டு அமைதியடைந்தவராகப் பித்தன் இருக்கவில்லை. பெண்ணினத்தின் இழிகெட்ட நிலைக்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஏன் தங்களின் அந்தஸ்த்தைப் பற்றி அறியாமல் வாழ்வதுமே காரணம் எனக் கூறும் பித்தனின் நோக்கு மனங்கொள்ளத்தக்கது. இதனை “வாழ்க்கையில் மனைவியின் பங்குதான் என்னவென்று தெரிந்து கொள்ளாத பெண்களால் மனித குலத்திற்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? இது நம் சமூகத்திற்கே ஒரு பெரும் சாபக்கேடு கட்டுப்படுத்தப்படாத தொற்றுநோய். இந்த முட்டாள்தனம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் வாழ்க்கை எப்படி சுகமடைய முடியும்? இந்த சமூகத்திற்கென்றதோர் அகராதி ஏற்படுத்தப்படுமானால் அதிலே மனைவி என்ற பெயருக்கு அடிமை என்றுதான் பொருள் கொடுக்க வேண்டிவரும்”(9549) என அமைதியில் கூறி அமைதியடைகின்றார் பித்தன்.
பள்ளிவாயல்களில் தலைவர்களாகவும், சமூகத்தில் ஹாஜிகளா கவும் இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களில் ஈடுபடும் போலி ஆசாமிகளைச் சாடுகின்றார் பித்தன் ஷா, வீட்டில் மனைவி, தென்னந் தோட்டத்தில் ஓர் ஆசை நாயகி. ஊருக்குக் கடைசியிலே ஒரு கள்ளக் காதலி என வறுமைப்பட்ட பெண்களைத் தன் இச்சைகளுக்குப் பலியாக்கி ஏப்பம் விடும் ஹாஜிமார்களின் முகமூடியினைத் தாகம்' என்ற கதையின் மூலம் கிழித்தெறிந்து அடையாளப்படுத்துகின்றார் பித்தன்.
தாய், தந்தையர்களின் திருப்தியினைப் பெறும் நோக்கில்
திருமணம் என்ற பெயரில் சீதனத்திற்கு அடிமையாகி ஏழைப் பெண்களின் கண்ணிரைத் தம் மீது சுமந்து கொள்ளும் இளைஞர்களையும் ஷா
-C52)-C agaöıs adı. Opavri D

விட்டுவைக்கவில்லை. 'ஊர்வலம், தாகம் உள்ளிட்ட கதைகளில் இதுபற்றிப் பிரஸ்தாபித்துள்ளார்.
சாதியின் பெயரால் மக்கள் பாகுபடுத்தப்படுவதையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்குள் வைத்து நோக்கப்படுவதையும் பித்தன் எதிர்த்தார். மஹாகவி து உருத்திரமூர்த்தியின் தேரும் திங்களும் கவிதை, கே. டானியலின் பஞ்சமர்’ நாவல் முதலியன ஏற்படுத்திய சாதிப் பாகுபாடு தொடர்பான அதிர்வை பித்தனின் அறுந்த கயிறு, திருவிழா, ஆண் மகன்’ போன்றவை ஏற்படுத்தின.
கல்வி என்று வரும்போது அதில் ஆண் - பெண் என்ற வேறுபாடுகள் காட்டப்படலாகாது. இஸ்லாம் என்னும் போர்வையில், பெண்கள் உயர்கல்வி பெறக் கூடாது; அவ்வாறு பெறுவது விலக்கப்பட்டுள்ளது (ஹராம்) என்றெல்லாம் போலிக் கட்டுப்பாடுகளைப் போட்டு, அது இஸ்லாத்திலுள்ள எம் சமூகத்தையே திசைமாற்றி முஸ்லிம்களின் கல்வியினையே பின்நோக்கிவிட்ட நாதியற்ற போக்கினை பல கதைகளில் பித்தன் ஷா எடுத்தாண்டிருப்பது அவரது சமூக நோக்கினையும், விடியலை நோக்கியதான பார்வையினையும் கட்டியம் கூறி நிற்கின்றது எனலாம்.
பித்தனின் கதைகளில் மண் வாசனைக் கதையாடல்கள், இஸ்லாமிய சமூகத்தின் மீதான பிரசாரம், யதார்த்த பூர்வமான கருக்கள், முஸ்லிம்களை மையப்படுத்திய பாத்திரவார்ப்புக்கள், அழகான தொடக்கம், வித்தியாசமான முடிவு, எதிர்பாராத திருப்பம், வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் மொழிநடை என நல்ல சிறுகதைகளில் காணப்படும் பல்வேறு அழகுகளும் ஒன்றிணைந்திருப்பது காலம் கடந்தும் பேசப்படுவதற்கான நல் ஏற்பாடுகளெனலாம்.
2007ம் ஆண்டு முதல் தரம் 10 தொடக்கம் 11 ஆம் தரத்திற்கான புதிய தமிழ் பாடநூல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போதும் வழக்கிலிருக்கும் பழைய பாடத்திட்ட நூலில், பித்தன் ஷாவின் இருட்டறை என்னும் சிறுகதை உள்ளடக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பித்தன் பற்றிய அறிமுகத்தையும் பதிவையும் ஏற்படுத்துவதற்கான முயற்சி என்றே சொல்லலாம். இருந்தும் 2008 முதல் வழக்கிற்குவரும் 'இலக்கிய நயம் பாடநூலில் தனி
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G53)-

Page 41
நபர்கள் சிலரின் இலக்கிய முயற்சிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை இடம்பெற்றிருக்கும் நிலையில் இவரைப் போன்றவர்கள் உள்ளடக்கப்படாமை ஆரோக்கியமற்ற நிலைமையென்றே கொள்ளலாம்.
தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்த்துறை; தமிழ் விஷேட துறை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பித்தன் ஷாவையும் அவரது சிறுகதை முயற்சியினையும் உள்ளடக்கியிருப்பதுடன் கடந்த காலங்களிலிருந்த இறுதி வருட மாணவர்களினூடாக அவரது படைப்புக்களையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
பெரிதான பாராட்டுதல்களுக்குட்படாதவராகவும் அதனை விரும்பி, அதற்கெனத் தன்னை நகர்த்தாதவராகவும் இருந்த பித்தன் 1990 இல் இந்து சமய கலாசார அமைச்சு தெரிவு செய்த மூன்று எழுத்தாளர் களுக்குள்ளே ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டமையும், 1991 இல் முஸ்லிம் கலாசார அமைச்சு எழுத்து வேந்தன்’ என்ற பட்டத்தினை வழங்கியமையும் அவரது வாழ்நாளில் பெற்ற பெரும் மகுடங்கள் என்றே சொல்லலாம். இவை தவிர ஈழத்தின் இலக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் க. அருணாசலம் 'இலங்கையில் தமிழில் ஆய்வு முயற்சிகள் என்ற தமது நூலில் “ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களுள் ஒருவர் பித்தன்” எனக் குறிப்பிட்டிருப்பதும் அவரது எழுத்துக்களின் நன்னிலைக்குக் கிடைத்த
பாராட்டென்றே கொள்ளலாம்.
1921-07-31 இல் பிறந்த பித்தன் 1994-12-14 இல் தனது 73வது வயதில் எம்மைவிட்டுப் பிரிந்தார். எனினும் அவர் எமக்காக விட்டுச்சென்ற சிறுகதைப் படைப்புக்கள் ஒவ்வொன்றும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கக் கூடிய ஆயுளைக் கொண்டவையாக இருப்பது தூரதிருஷ்ட நோக்குக் கொண்ட அவரது படைப்பாளுமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
எனவே, ஈழத்துச் சிறுகதைப் பரப்பிற்குள்ளிலிருந்து விலக்கிவிட முடியாத பித்தன் கே.எம்.எம். ஷாவின் சிறுகதைகள் முஸ்லிம் தேச அடையாளம் குறித்த எதிர்கால ஆய்வு முயற்சிகளுக்குள்ளும் முதன்மை பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பித்தன் மறைந்தாலும் அவரது கதையாடல்கள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. 彰
ஜெஸ்மி எம். முஸா D

துணைநின்றவை
O பித்தன் கே.எம்.எம். ஷா (1995) - பித்தன் கதைகள்,
மல்லிகைப் பந்தல், யாழ்ப்பாணம்.
2007 ஆகஸ்ட் 15 - 31, 2007 செப்டம்பர் 1 - 14 ஆம் திகதிகளில் எங்கள் தேசம் பத்திரிகையிலும் 2007-08-10 இல் தினகரன் பத்திரிகையிலும் வெளியானது.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -(55)-

Page 42
羲 魏
"அறிஞர்’ அல்-கஸ்ஸாலி “கவிஞர்’ அல்லாமா இக்பால்
மத்திய காலத்தில் தோன்றி வளர்ந்த கிரேக்க தத்துவ ஞானத்தின் பிடியிலிருந்து இஸ்லாத்தினை மீட்பதற்கு புறப்பட்ட சிந்தனை யாளர்களுள் குறிப்பிடத்தக்கோர் இமாம் கஸ்ஸாலியும், கவிஞர் அல்லாமா இக்பாலுமாகும். கி.பி. 661 தொடக்கம் 750 வரை இஸ்லாமிய உலகினைக் கெளவிக் கொண்டிருந்த உமையா வம்ச ஆட்சி வீழ்ச்சியுற்றதும் அப்பாசியர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்பாசிய ஆட்சியின் பிற்காலத்தில் வந்த ஆட்சியாளர்கள் சமய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலவீனர்களாகக் காணப்பட்டமையினால் கிரேக்க தத்துவம் மிக இலகுவாக இஸ்லாத்தினுள் நுழைந்து கொண்டது. இதன் காரணமாக "முஹதஸிலா” போன்று பல பகுத்தறிவுவாத இயக்கங்கள் முஸ்லிம்கள் மத்தியில் தோன்றி இஸ்லாத்தின் அடிப்படையினையே ஆட்டங்காணச் செய்ய முயற்சித்தன. அவைகளின் கோரப்பிடியிலிருந்து இஸ்லாத்தினை மீட்பதற்கு தத்துவார்த்த ரீதியாகப் போராடிய அறிஞர்களே இவ்விருவருமாவர்.
இமாம் கஸ்ஸாலி ஒரு இஸ்லாமிய சட்டநிபுணர் மட்டுமன்றி பல் துறைசார்ந்த தத்துவமேதையுமாவார். இவர் பாரசீகத்தின் தூஸ் (தபறானி) எனும் பகுதியில் “கஸாலா’ எனும் கிராமத்தில் கி.பி. 1072 இல் பிறந்து 55 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து மரணித்தார். கஸாலா கிராமத்தில் பிறந்தபடியினாலேயே கஸ்ஸாலி என அழைக்கப்பட்டார். தமது குறுகிய கால வாழ்க்கைக்குள்ளேயே ஒழுக்கவியல், மெய்யியல், அளவையியல் பற்றியெல்லாம் இருபத்தியைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதினார். அல்முன்கித் மினல்லழால் (தவறிலிருந்து இரட்சிப்பவன்), தபகாதுல் பில்சபா (தத்துவவாதிகளின் அழிவு) மீஸானுல் அமல் (அளவையியல்), இஹயா
ஜெஸ்மி எம். முஸா )-
 
 

உலுமுத்தீன் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவைகள் பிரென்சு, ஜேர்மனி, ஆங்கில மொழிகளிலும் பெயர்க்கப்பட்டன. பொதுவாக இமாம் அவர்கள் தப்ஸிர் (அல்-குர்ஆன் விளக்கவுரை), பிக்ஹஹற் (சட்டக்கலை), தஸவ்வுப் (சூபித்துவம்), தர்க்கம், தத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புலமை பெற்றிருந்தார்.
இவர் வாழ்ந்த காலத்தில் சூபித்துவத்தின் (ஆன்மீகவாதம்) தாக்கம் காணப்பட்டமையினால் தத்துவ அறிஞராகவிருந்தும் ஒரு ஆன்மீகத் தலைவரின் உதவியுடன் உண்மை வாழ்வு தேடிச் சிலகாலம் அலைந்தார். சூபித்துவத்தினூடாகத்தான் இஸ்லாமிய தத்துவத்தை அறிய முடியும் என்பது இவரது ஆரம்பகாலக் கருத்தாகவிருந்தது. “மனிதனின் ஆன்மா ஆவி மயமானதும், சூட்சுமமானதுமாகும். சர்வான்மாவின் ஒரு நிழலே அது” என்பது இவரின் கொள்கையாகும்.
மனிதனின் பரிணாமத்தைப் பற்றிக் கூறும் போது “அவன் அறிவிலியாகப் பிறந்து படிப்படியாக அறிவு விருத்தியுற்றுப் பூரணத்துவம் அடைகிறான். அறிவில் முதலில் ஸ்பரிச அறிவும் பின்னர் பார்வை, கேள்வி, சுவை, நாற்றம் என்பன ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டு இறுதியாக பகுத்தறியும் நிலை தோன்றுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அறிவுண்டு. அதுதான் கண்காணாத அந்தரங்க விடயங்களை அறியக்கூடிய அறிவு. அந்த அறிவு சிலருக்கே உண்டு. அந்தச் சிலர்தான் தீர்க்கதரிசிகள். இவர்களின் சொல்லும், செயலும் விஷேடமானவை; மனிதனால் பின்பற்றத் தகுந்தவை” என்றார். மேலும் மனிதனுக்கு இரண்டு இதயங்கள் உள்ளன. அதிலொன்று உடம்புக்கு மத்தியில் அமைந்து இரத்தோட்டம் முதலான வேலைகளைச் செய்கின்றது. மற்றையது ஆன்மீகச் செயலுக்கு மத்திய தளமாக விளங்குகின்றது. இரண்டும் 'கல்பு (மனம்) என்ற பெயர் பெறுகின்றது' என்றும் விளக்கினார்.
கஸ்ஸாலி அவர்கள் லெளஹிக வாழ்வைவிட ஆன்மீக வாழ்வுக்கு அழுத்தம் கொடுத்தமையினால் ஒரு சூபி எனக் குற்றம் சாட்டப் பட்டார். இருந்தும் இவர் தத்துவக் கலையை சமய சட்டக் கலையால் தோற்கடிக்க அரும்பாடுபட்டு வெற்றி கண்டார். இதன் காரணமாகவே அவருடைய புரட்சிகரமான சிந்தனைகள் இன்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருக் கின்றன.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G7)-

Page 43
அடுத்தவரான வங்கக்கவி அல்லாமா இக்பாலின் மூதாதை யினர் காஷ்மீரைச் சேர்ந்தவர்களாவர். இவர் இந்தியாவிலும் அதைச் சூழவுள்ள நாடுகளிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தமது சிந்தனைகளைத் தோற்றுவித்தார். பண்பாடு, கல்வி, முயற்சி, தன்மானம் என்பன குறைந்தோராக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என மனம் வருந்தினார். முஸ்லிம்கள் கிரேக்க தத்துவத்தின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் எனும் நோக்கில் பல்லாயிரக் கணக்கான கவிதைகளை எழுதிக் குவித்தார். ருமுஸ்பிகுதி, சபூரேஅஜம், பயாமே மஸ்ரக், ஜாவித் நாமா, அஸ்ராரேகுதி முதலிய இவருடைய நூல்கள் ஈரான் மொழியில் எழுதப்பட்டவைகளாகும். “அஸ்ராரேகுதி” என்ற நூலை கேம்பிறிஜ் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் நிக்கல்ஸன்’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதன் காரணமாக கவிஞர் இக்பாலின் புகழ் கிழக்கில் மட்டுமன்றி மேற்கிலும் பரவியது.
ஆரம்பத்தில் இவரும் கஸ்ஸாலியைப் போன்று சூபித்துவத்தில் விருப்புக்கொண்டு சூபிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் பெரும்பாலான சூபிகள் கைக்கொள்ளும் தன்னொறுக்கக் கொள்கையை அவர் விரும்பவில்லை. இது பெளத்த நிர்வாணக் கொள்கையை ஒத்ததால் முஸ்லிம்கள் பின்பற்றக் கூடாது என்பது இவருடைய வாதமாகும். ஒருவன் தனது புலன்களை ஒறுத்து, தன்னை நிராகரிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் என்பதே இவருடைய கொள்கை. மனிதன் இறைவனை எவ்வளவுக்கெவ்வளவு நெருங்குகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பூரணத்துவம் அடைகின்றான். அவன் அவ்வாறு சமீபிக்கும் போது அவன் இறைவனால் சுவீகரிக்கப்படுவதில்லை. மாறாக இறைவனின் தெய்வீகத்தன்மையை அவன் சுவீகரிக்கின்றான் எனக் கொள்கை விளக்கம் கொடுத்தார்.
இவருடைய ஆரம்பகாலக் கருத்துக்கள் ஆன்மீகவாதத்துடன் தொடர்புடையன போன்று தோன்றியதால் இவரும் சிந்தனைத் தெளிவற்ற ஒரு சூபி எனக் கருதப்பட்டார். ஆனால் இவருடைய போக்கு அதற்கு முரணானது என்பதை பிற்காலத்தில் பலர் உணர்ந்தனர்.
"சூபித்துவம் என்பது பிளேட்டோவின் கருத்துக்களுடன் இந்து சமய வேதாந்த சித்தாத்தங்கள் கலந்தது. சூபித்துவத்தின் போதை தரும்
ஜெஸ்மி எம். முஸா )-

விஷம் கலந்த கருத்துக்கள் அல்குர்ஆனின் தெளிவான சட்டதிட்டங்களுக்கு முரணானவை” என அல்லாமா இக்பால் கூறுவதிலிருந்து அவர் சூபித்துவக் கொள்கைக்கு எதிரானவர் என்பது புலனாகின்றது.
கவிஞர் இக்பால் நவீன யுகத்தில் ஒரு முஸ்லிம் எதிர்கொள்ளக் கூடிய புதிய சவால்களுக்கான விடைகளை இஸ்லாத்தின் கோட்பாடுகளிலிருந்து எடுத்துரைத்தார். அவைகள் முஸ்லிம்களைத் தட்டியெழுப்பின. இவர் தனது வழிக்வா (முறையீடு) எனும் கவிதை நூலை 1909 இல் லாகூரில் நடைபெற்ற ‘ஹரிமாயத்துல் இஸ்லாம் மகாநாட்டில் பாடியபோது உலமாக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நூல் அவருடைய முறையீட்டுக்கு இறைவன் பதில் அளிப்பது போன்று அமைந்திருந்தது. இஸ்லாத்தில் அதீத பற்றுக்கொண்ட தனது ஷிக்வாவை பாடினார் என்பதை அன்றைய உலமாக்கள் பலர் புரியத் தவறிவிட்டனர். ۔
உனக்காகவே போர்க்களத்தில் அணிவகுத்தோர் நாங்கள் மட்டுந்தானே! சில சந்தர்ப்பங்களில் கட்டாந் தரையிலும் சில நேரங்களில் கடல்நீரிலும் களமமைத்துச் சமர்புரிந்தோம். ஐரோப்பாவின் தேவாலயங்களிலும் நின்ற சில சந்தர்ப்பங்களில் அதான் (பாங்கு) முழங்கினோம். ஆபிரிக்க கண்டத்தின் பழுக்கக் காய்ந்த சுடுமணலிலும் உன் திருநாமம் ஒலித்தோம். மகிதலம் ஆழ்வோரின் மகோன்னதம் எதவும் எங்கள் கண்களை மயக்கவில்லை! வானாயுதத்தின் நிழலிலும் நாங்கள் திருக்கலிமா புகன்று வந்தோம்.
எனும் இப்பாடல் (ஷிக்வா) கவிஞர் இக்பால் துறவறத்தை ஆதரிப்பவரில்லை. உலக முஸ்லிம்களுக்காக வாழ்ந்தவர், முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கப் பாடுபட்டவர் என்பதைத் தெளிவாக்குகின்றது. இவருடைய தெளிவான சிந்தனைகள் உலகம் வாழும் வரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. 拳
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 44
துணைநின்றவைகள்
O இஹற்யா உலுமுத்தீன்.
O ஷிக்வா ஜவானே ஷிக்வா.
O அப்துல் காதர் லெப்பை (1990) - ஜாவித் நாமா (தமிழ்),
மணிக்குரல் பதிப்பகம், இலங்கை.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடான "துயரி’யின் 2001 நவம்பர் இதழில் வெளியானது.
ஜெஸ்மி எம். முஸா )-

జిళ్ల
நகைச்சுவையும் சுருக்கமும் மிக்க “லிமரிக்ஸ்” கவிதைகளின் தோற்ற வளர்ச்சியும்
கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், சினிமா என நீண்டுவந்த இலக்கிய வகைமைகள் ஒவ்வொன்றும் தமிழ் மொழியின் தனித்துவத்துடன் முன்னேறி வந்தாலும் இவைகளின் அபரீதமான வளர்ச்சிக்கு மேலைத்தேய இலக்கிய உறவு முக்கிய பங்காற்றியுள்ளதென்றால் அதனை மறுப்பதற்கில்லை. இவ் இலக்கிய வடிவங்களுள் காலத்தால் முற்பட்டதும், கூடுதல் பரப்பைக் கொண்டதும், அதீக கவனயீர்ப்பைப் பெற்றதுமான வடிவமே கவிதையாகும். இக்கவிதை வெளியீட்டு முறையியலின் ஒன்றாகத் தமிழுக்கு அறிமுகமானதே குறும்பாவாகும்.
"குறும்பா” எனும் இவ்வடிவமானது தமிழில் வழக்கிலிருந் தாலும் “லிமரிக்ஸ் - LIMERICKS” என்ற ஆங்கில வடிவத்திலிருந்தே தமிழுக்குப் பெயர்க்கப்பட்டு அறிமுகமானதென்பதே வரலாறு
ஆங்கிலத்தில் ஐந்துவரிகளில் ஒரு குறிப்பிட்ட யாப்பு முறையினைத் தழுவி அமைந்த லிமரிக்ஸ் கவிதை வடிவமே தமிழில் குறும்பா என அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இயைபுத் தொடையானது பேணப்பட்டு வருதல் இதன் பண்பாக இருந்தாலும், தமிழில் இவை சற்று விலகி எதுகை, மோனைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
வரையறைக்குட்பட்ட குறுகிய அடிகளைக் கொண்ட அமைப்பு
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 45
முறையாக இருப்பதுடன் குறும்புகள் அதாவது, நகைப்புத்தன்மைகள் அதிகமாக இழையோடி வருவதனாலேயே குறும்பா' என்ற பெயரை இவ்வடிவம் பெற்றதெனத் தெளிந்து கூறலாம். சமூகப் பார்வையும், கிண்டல் தொனியும் உள்ள ஒருவரினால்தான் இவ்வாறான கவிதைகளை எழுத முடியும் என்பதனால் இதுவொரு ஜனரஞ்சக இலக்கிய வடிவம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
19 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் எழுந்ததே லிமரிக்ஸ் ஆகும். இப்பகுதியில் வாழ்ந்த எட்வட் லியர் (Edward Lear) என்ற ஒவியர் பிரபுத்துவ மேல்வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பிள்ளைக்கு ஆசானாக அழைக்கப்பட்ட போது அப்பிள்ளையினை மகிழ்விக்கவென சில ஒவியங்களைக் குறும்பாக வரைந்து அதனை விபரிக்கும் முகமாகப் பொருத்தமான கவிதைகளையும் குறித்த ஓவியங்கள் ஒவ்வொன்றிற்கும் பக்கத்தில் எழுதி வைத்தார். இவ்வாறு அமைந்த ஓவியங்களுடனான கவிதைகளே பின்னர் லிமரிக்ஸ் வடிவமாக மாறி இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றது. இதனால் எட்வட் லியரே இக்கவி வடிவத்தின் பிதாமகன் என அழைக்கப்பட்டார்.
சங்க காலச் செய்யுட்களில் காணப்படும் ஒரே காட்சி யமைப்பைக் கொண்ட ஒரு பாடலில் குறித்தவொரு கருத்தை மட்டும் கூறும் தனிப்பாடல் மரபு, சிலேடைக் கருத்துக்களுக்கும் சொற்களுக்கும் முன்னுரிமை அளித்தல், கற்பனை வெளிப்பாடு, இலகுவில் மனனம் செய்யக்கூடிய தன்மை, ஓசை நயம், சாதாரண வாசகனையும் கவர்ந்திழுக்கும் மொழிநடை, சமுதாய நோக்கு, ஆபாசம், நாட்டாரியல் தன்மை முதலியன குறும்பாக் கவிதைகளின்
பொதுப்பண்புகள் என வரையறை செய்யலாம்.
தமிழில் குறும்பா பற்றிப் பேசுவதானது ஈழத்தின் குறும்பா பற்றிப் பேசுவதாகவே அமையும். ஏனெனில் குறும்பா இலக்கியத்தின் தோற்றுவாயாக இருப்பவர் ஈழத்தின் மஹாகவி து உருத்திரமூர்த்தியேயாவார். தென்னிந்திய மரபிலிருந்தே அநேக இலக்கிய வகைமைகள் கடத்தப்பட்டு வந்த வரலாறானது மாற்றப்பட்டு குறும்பாவின் அறிமுக வளர்ச்சியினை ஈழம்
ஜெஸ்மி எம். முஸா )-

செய்திருப்பது ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் முக்கிய கட்டமெனலாம். இவ்வாறிருந்தும் ஈழத்துக் கவிதை பற்றிய காலகட்டக் கருத்தாடல்களை முன்வைத்த தமிழ்த் துறைசார் பேராசிரியர்கள் இக்குறும்பாக்கள் தொடர்பாகத் திட்டமிடப்பட்ட வரையறைகளையோ ஆய்வியல் கருத்துக்களையோ இதுவரை முன்வைக்காமை சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
குறும்பாவின் ஆரம்பகர்த்தா மஹாகவிதான் என ஏற்றுக் கொள்ளப் பட்ட நிலையில் “பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசனே இதன் முன்னோடி, அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட குறும் பாக்களையே மஹாகவி சீர்செய்து தன்னுடையதாக்கினார்” என இவ்விருவர் களினதும் இலக்கிய நண்பரும், ஈழத்து இலக்கிய கர்த்தாக்களில் ஒருவருமான மு. பொன்னம்பலம் அவர்களால் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்தானது வரலாற்றை மீள இழுத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
எது எப்படி இருந்தாலும் முதன்முதலில் குறும்பா என்ற பெயரில் 1966 இல் தனது நூறு கவிதைகளை ஒவியங்களுடன் நூலாக வெளியிட்டு தமிழில் குறும்பாவுக்கான முகவரியை வழங்கியவர் மஹாகவியே என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கு இடமில்லை.
1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து வந்து ஈழத்தில் இலக்கியப்பணி செய்த எம்.ஏ. றஹற்மான் வெளியிட்ட "இளம்பிறை மாசிகை” என்ற சஞ்சிகையில் விஞ்ஞானப் பட்டதாரியும் ஒவியருமான எஸ்.கே. செளந்தரராஜன் என்பவரின் வரைபடங்களுடன் குறும்பாக்களை மஹாகவி எழுத ஆரம்பித்தார். இவரது முயற்சியைத் தொடர்ந்து எஸ். பொன்னுத்துரை, சில்லையூர் செல்வராசன் முதலியோரும் எழுதவும், கருத்துக்களை வெளியிடவும் தொடங்கினர். இதனை அடுத்து எம்.எச்.எம். ஷம்ஸ், ஜவாத் மரைக்கார், அசூமத், கலைவாதி கலில், பஸில் காரியப்பர், அன்பு முகைதீன், அன்புடீன், பாலமுனை பாறுக், ஒலுவில் ஜலால்தீன் உள்ளிட்ட பலரும் குறும்பாக்களை எழுதும் பரிசோதனையில் இறங்கினர்.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 46
ஆங்கிலத்தில் குறும்பாவானது ஐந்து அடிகளைக் கொண்டதாக இருப்பதுடன் இதில் முதலாம், இரண்டாம், ஐந்தாம் அடிகள் ஒரே சீரை உடையதாகக் காணப்பட மூன்றாம், நான்காம் அடிகள் குறுகியும் அமைந்துள்ளன. தமிழில் குறள் வெண்பா; அமைப்பில் முதல் அடியில் நாலு சீரும், இரண்டாவது அடியில் மூன்று சீரும் கொண்ட இரு அடிகள் காணப்படும். இத்துடன் ஒரு அடியினைச் சேர்த்து மூன்று அடிகளில் முடிவடையும் விதத்தில் மஹாகவி குறும்பாவை ஒழுங்கமைத்துள்ளதும், இதிலும் ஒரு புதுமையாக இம்மூன்று வரிகளையும் ஐந்து வரிகளாகப் பிரித்து அமைத்திருப்பதும் மேலும் வியக்கத்தக்கது.
மஹாகவியின் குறும்பாவானது அமைப்பில் பெரும்பாலும் முதலாம், இரண்டாம் வரிகள் முதலாவது சீரில் ஒரே மோனையும், மூன்றாம், நான்காம் வரிகளின் முதலாவது சீரிலும் ஒரே மோனையும் காணப்படுவதுடன் முதலாம், இரண்டாம், ஐந்தாம் வரிகளின் இறுதிச் சீர் ஒரே எழுத்துக்களைக் கொண்ட ஒசையிலும் முடிவடையும். இத்தன்மையினைப் பின்வரும் குறும்பாவினூடாக விளங்கிக் கொள்ளலாம்.
"கண்டியிலொரு பேரிளம்பெண் ஆத்தாள்
கற்பையவள் அற்புதமாய்க் காத்தாள்
உண்டுசெமி யாதவயிற ஊதஒரு நாள்கயிற்றை
தொண்டையிலே மாட்டிஉயிர் நீத்தாள்’ (2002 : 45)
முதலாம், இரண்டாம், ஐந்தாம் வரிகள் இடப்பக்கம் ஒரே நேராக ஆரம்பிப்பதுடன் இரண்டாம், மூன்றாம் வரிகள் இடப்பக்கமாகச் சற்று உள் இழுத்து அமைந்திருப்பதும் இக்குறும்பாவின் அமைப்பாகும்.
சமூகத்தில் மதிப்பாளர்களாகத் தங்களை இனங்காட்டிக்
கொள்ளும் மனிதர்களின் போலித்தனம், கடவுளரின் சித்து விளையாட்டு, காதலர்களின் விபரீத ஆசை, இலக்கியகாரர்களின் போலித்தனம்,
ஜெஸ்மி எம். முஸா )-

விளம்பரத்திற்காய் கொடை கொடுக்கும் ஆசாமிகளின் நிலை, கஞ்சத்தனம், நாட்களை நீட்டி வாதாட்டம் செய்து வயிறு பிழைக்கும் சட்டத்துறையினரின் நீதி வியாபாரம், நிர்வாகத்துறையிலுள்ளவர்களின் ஏமாற்றுவேலை, பெண்களின் மறை உறுப்புக்களைக் கள்ளத்தனமாய்க் காண எத்தனிக்கும் இளைஞர்களின் செயல்கள் முதலிய கருப்பொருள்களை எக்காலத்திற்கும் பொருத்தமானதாய் அமைத்திருப்பது மஹாகவியின் கவித்துவ ஆற்றலுக்குக் கட்டியம் கூறுவதாய் உள்ளது.
வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்திலுள்ள எதிர்ப்புக்களை இலக்கியங்களினூடாக வெளிக்காட்டுவது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அது வரலாற்றுக் காலங்கள் முதல் இடம்பெற்றே வந்திருக்கின்றன. ஆயினும் அதனை நகைச்சுவையாகவும், சிலேடைப் பாங்குடனும் சொல்லும் போது நேரடியான எதிர்ப்புக்கள் குறைய வாய்ப்புண்டு. மஹாகவி தன் குறும்பாக்களில் இதனைத்தான் செய்துள்ளார். அவரது குறும்பாவொன்று இவ்வாறு அமைந்துள்ளது.
"உத்தேசம் வயதபதி னேழாம் உடல்இளைக்க ஆடல்பயின் றாளாம்
எத்தேசத் தெவ்வரங்கும் ஏறாளாம் ஆசிரியர் ஒத்தாசை யால்பயிற்சி பாழாம்" (2002 : 27)
இங்கு, பக்கத்தில் நடன ஆசிரியரொருவர் மாணவியொருவருக்கு நடனம் கற்பிப்பதைப் போன்ற ஒவியமும் வரையப்பட்டுள்ளது.
நடனம் பயிற்றுவிப்பதென்பது ஓர் உயர் தொழில். அந் நடனத்தின் இறுதி உயர்ச்சியானது அரங்கேற்றத்தில் முடிய வேண்டும். ஆனால் இங்கு பதினாறு வயது மதிக்கத்தக்க கட்டிளமைப் பருவப் பெண்ணொருத்தி ஆசிரியருடன் ஏற்பட்ட உறவினால் தன் கற்பிழந்து வாழ்வைப் பாழாக்குகின்றாள். இங்கு "ஒத்தாசை” என்ற சொல்லினுடாகவே இக்கவிதையின் முக்கியகருவை
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 47
கவிஞர் முன்வைத்துள்ளார். இத்தன்மையே மஹாகவியின் குறும்பாக்கள் ஒவ்வொன்றிலும் இழையோடியுள்ளன. முதல்வரிகள் சாதாரண ஒசை நயத்துடன் வந்து இறுதியில் முக்கியமான கருத்தைத் தாங்கி வருவதே இவரது கவிகளின் பிரதான இயல்பாக அமைந்துள்ளன.
மஹாகவியின் குறும்பாக்கள் தனியே நகைச்சுவையினை மட்டும் நாதமாகக் கொண்டதுவா? என்று பார்த்தால், இல்லை. வழமையாக இவரிடம் காணப்படும் துணிவு, சமூக எதிர்ப்பு முதலியனவும் லாவகரமாக இதில் இடம்பெற்றுள்ளன. எதனையும் சொல்ல நினைத்தால் அதனைச் சொல்லிவிட வேண்டும் என்பதில் மஹாகவிக்கு நிகர் மஹாகவியேதான். 1960களில் வடபுலத்தில் உச்சக்கட்டத்திலிருந்த சாதிப் பிரச்சினை தொடர்பாக தான்சார்ந்த சமூகத்தையே "தேரும் திங்களும்” என்ற கவிதையினுடாகச் சாடிய துணிவாளனே இவர். இவ்வாறே இலஞ்சம் என்னும் பெயரில் மலிந்துவிட்ட கொடுமைக்குள் தகுதி, தராதரமின்றி பெரும்பாலானோர் இறங்கி விடுகின்றனர். யாரிடம் வாங்குவது என்ற நிலையின்றி கீழ்நிலைத் தொழிலாளர்கள் முதல் எல்லோரிடமும் இக்கொடுமையினைச் செய்கின்றனர். இதற்குள்ளிருந்து காலனால்கூட தப்பமுடியாதென இக்கவிதையின் மூலம் இவ்வாறு குறும்பு செய்கின்றார் மஹாகவி
"முத்தெடுக்க மூழ்கின்றோன் சீலன்
முன்னாலே வந்ததுநின்றாண் காலன்
சத்தமின்றி வந்தவனின் கைத்தலத்திற் பத்துமுத்தை
மொத்திவைத்தான் போனாண்முச் சூலன்” (2002 : 55)
பெண்ணின் மார்பை வியக்க வைத்த பாதிரி, தொலைபேசியில் பேசியே சீரழியும் காசி, அல்லையிலே வாழும் முல்லை, தென்னை மரம் ஏறும் சித்தன், கண்டியில் பேரிளம் பெண் ஆத்தாள், நகையில் வாழும் தோகை, சீதையை மீட்ட இராமன், கும்பிட்டுக் கொண்டிருந்த சாது, பூமாதைக் காண வந்த சாமா, ஆற்றங்கரை மேடையில் பாவலர், நள்ளிரவில் வீடு
ஜெஸ்மி எம். முஸா )-

வரும் சாப்பு, காவியம் செய்த கம்பர், தமிழ் படத்தில் வந்த ராம்நாகேஷ் எனத் தான் எழுதிய குறும்பாக்கள் ஒவ்வொன்றிலும் வித்தியாச வித்தியாசமான பாத்திரங்களைக் கையாண்டு தம் கருத்திற்கு அழுத்தம் கொடுத்திருப்பது வியக்கத்தக்கதாகும். v
புதிய வெளிப்படுத்தல் என்ற பெயரில் கவிதையினைக் கசக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலிருந்து வேறுபட்டு, யாப்பு முறையினைத் தழுவியதான தன் குறும்பா கூட இலகு தமிழில் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மஹாகவி உறுதியாயிருந்தார்.
"பந்தாடிக் கொண்டிருந்தார் பெண்கள் பார்க்கஇரண் டாயிரமாம் கணர்கள் எய்ந்தோடிப் போனஇவை ஏறிடவும் ஆட்டமிடை நின்றதவர் மேலெல்லாம் புண்கள்” (2002 : 65) என்ற இக்கவிதைக்குப் பக்கத்தில் பெண்கள் சிலர் பந்தடித்துக் கொண்டிருப் பதையும், அவர்களது கீழாடை பந்தடிக்கும் வேகத்தால் மேல் உயர்வதையும் ஓவியமாக வரைந்து எளிமையான தன் குறும் பாவுக்கு மேலும் மெருகூட்டுகின்றார்.
இவ்வாறான எளிமைத் தன்மையும், யதார்த்தப் போக்கும் இன்றைய கவிதைகள் ஒவ்வொன்றிலும் உள்ளனவா? என்ற நியாயமான வினாவுக்கு விடை காண முற்படின் மஹாகவியினது குறும்புகளின் இனிமை விளங்கும்.
மஹாகவியினைத் தொடர்ந்து இத்துறையில் பலர் காலடி பதித்தாலும் குறிப்பிட்டுக் காட்டுமளவிற்கு அவர்களில் பெரும்பாலானோரின் முயற்சிகள் கைகூடவில்லை. ஆனால் இவற்றுள் மஹாகவியின் யாப்பு விதிகளைப் பின்தொடர்ந்து குறும்பாவுக்கு உயிரோட்டம் கொடுத்தவருள் முதன்மையானவர் தினகரன் பிரதி ஆசிரியராகவும், பல்துறை இலக்கிய ஆளுமை கொண்டவராகவும் திகழ்ந்த கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் ஆவார்.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 48
1995 ஆம் ஆண்டுகளில் தினகரன் “புதுப்புனல்” என்ற பகுதியினூடாக குறும்பாக்களைச் ஷம்ஸ் ஜனரஞ்சகப்படுத்தினார்.
1975 ஆம் ஆண்டு முதலே இவரது குறும்பாக்கள் “ஜும்ஆ” பத்திரிகையில் வரத் தொடங்கின. இதனையடுத்து மற்றுமொரு இஸ்லாமிய இதழான அல்-ஹஸனாத்தில் 1990 களில் “காசா லேசா” என்ற தனியான தலைப்பினை ஆரம்பித்து முஸ்லிம் சமூக விரோதப் போக்குகளைக் குறும்பாக்கள் மூலம் இனம் காட்டினார்.
பெண்பார்க்கும் படலம் என்ற பெயரில் ஊரை வடித்துத் திரியும் பெற்றோர்களின் செயலால் மனம் நொந்து, திசை மாறி அவமானங்களைத் தேடிக் கொள்ளும் இளைஞர்களின் நிலையினை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜும்ஆ' பத்திரிகையில் ஷம்ஸ் நகைச்சுவை ததும்ப இவ்வாறு படைத்துள்ளார்.
"பொடியனுக்கு சங்கையிடம் தேடி
போனதப்பா வயதமிகக் கஉடி
முடியாதிரும் காலம்மணம் முடியவில்லை சிங்களத்தி
உடன்ஒளித்துப் போனானாம் ஓடி” (1979 : 08)
இஸ்லாமிய இறை ஒருமைப்பாட்டிற்கு (தெளஹித்) எதிரான விடயங்களான தரீக்கா, கந்தூரி, அவுலியா வழிபாடு, மெளலூது முதலியவை களைச் சாடும் போக்கு இயல்பாகவே ஷம்ஸின் இலக்கிய வெளிப்பாடுகளில் இழையோடியிருப்பதை அவதானிக்க முடியும். அதிகம் பேரினது கவனத்திற் குள்ளானதும் 2000 ஆம் ஆண்டு இவரால் வெளியிடப்பட்டதுமான “கிராமத்துக் கனவுகள்” என்ற நூலிலும் இத்தன்மையினைக் காணலாம். கந்தூரி என்னும் பெயரில் முஸ்லிம் பெண்கள் தங்களது சுயங்களை இழந்து அலைந்து திரியும் போக்கினை இவ்வாறு ஒரு குறும்பாவில் விபரிக்கின்றார்.
ஜெஸ்மி எம். முஸா )-

"ஆயிஷாத்தா தலையிலே முக்காடு
ஆம்பிளை கண்டாற்குதிக்கும் காடு
கோயிலைப்போல் கஉடெடுக்கும்
கந்தாரிநாளில் அவா
போயலையும் தானம்நடு ரோடு” (1979 : 08)
கபுறுகளில் இருந்து கொண்டு “யாசீன்” என்னும் சூறாவினை ஒதி, அதனால் தங்கள் பைகளை நிரப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மார்க்க வியாபாரிகளை ஷம்ஸ் ஏளனமாய் நோக்கினார்.
"காரிகையர் கபுரடியின் ஒரம் குந்திநிற்போர் யாளின் வியாபாரம்
வாரிவரும் சில்லறையால்
பைநிறையும் அங்குவரும் நாரியரால் கண்ணிறையும் நேரம்” (1978 : 07) என்ற இக்கவிதையில் அதனைக் காணலாம்.
இவ்வாறாக, தினகரன், ஜும்ஆ, அல்ஹஸனாத் ஆகியவற்றில் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளை ஷம்ஸ் எழுதினார். மஹாகவியின் குறும்பாக்களில் வரும் ஆரம்ப வரி, எதுகை மோனை பேணப்படாவிட்டாலும் முதலாம், இரண்டாம், ஐந்தாம் வரிகளில் இடம்பெறும் முடிக்கும் சீர் பேணப்பட்டுள்ளமையினை இதில் அறிய முடிகின்றது.
மஹாகவி தலைப்பிடாமல் தன் குறும்பாக்களை அமைத்த போதிலும் கூட ஷம்ஸ் அதிலிருந்து விலகி தலைப்புக்களை இட்டுக் கவியமைக்கும் முறையினை அறிமுகம் செய்து குறும்பாக்களை மேலும் எளிமைப்படுத்தினார். ஜும்ஆவில் வந்த இவரது ஒட்டம், ஜெய்லான், அளைந்த சோறு முதலிய குறும்பாக்களை இதற்கான எடுத்துக்காட்டுக்களாகக் கூறலாம்.
ஷம்ஸ் தன் கவிதைகளில் கையாண்டுள்ள மொழிநடையும்,
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு

Page 49
சொல்வீச்சும், கருக்களும் முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தியதாகவே அமைந் திருந்தன. மஹாகவி பொதுப்படையான கருக்களின் அடிப்படையில் புனைந் திருக்கும் போது ஷம்ஸ் தனியே முஸ்லிம் சமூக அடையாளத்தைச் சொல்லி இருப்பது முஸ்லிம் தேச இலக்கிய நகர்வுக்கானதொரு முன்னேற்றமென்றே சொல்லலாம்.
"தமிழ்க் கவிதை இலக்கியத்திலே வெண்பாக்களைப் பாடிச் சுவைத்த வாசகர்களுக்கு குறும்பாக்கள் புதுமையாக இருக்கக்கூடும். LMERICS என்று ஆங்கில இலக்கியத்திலே பயிலப்படும் இந்த வடிவத்தை தமிழிலே முதலில் பயன்படுத்தியவர் மஹாகவி சற்றுக் கஷ்டமான யாப்பமைதி கொண்டு இக்கவிதை வடிவத்தை இஸ்லாமியப் பின்னணியில் முதன் முதலில் கையாண்டவர் ஜனாப். எம்.எச்.எம். ஷம்ஸ். செக்ஸையும், நகைச்சுவையையும் கலந்து குறும்பா என்ற பெயரில் மஹாகவி இக்கவிதை வடிவத்தினைக் கையாள, ஷம்ஸோ சமுதாயச் சீர்கேட்டைக் குத்திக்காட்டும் அங்கதச் சுவையில் அமைத்துள்ளார்” என 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ஜும்ஆப் பத்திரிகையில் ஷம்ஸின் குறும்பாக்கள் குறித்து வெம்பா’ என்ற தலைப்பில் எழுதியுள்ள எழுத்தாளர் யோனகபுர ரிஸ்வியின் கருத்துக்களை மீள் வாசிப்புச் செய்வது ஷம்ஸின் குறும்பாத் தன்மை குறித்த ஆழமான எண்ணக்கருவைத் தரும் என்பதில் ஐயமில்லை.
புத்தளம் ஹாஜா என்பவரின் ஒவியத்துடன் சில்லையூர் செல்வராசனின் ஆசியுரையினையும் கொண்டு இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.எம். அப்பாஸின் அணிந்துரையுடன் 50 குறும்பாக்களைத் தொகுத்து வெளியிட இருந்த நிலையில் இறுதி வரை அது கைகூடாமலேயே ஷம்ஸ் எம்மை விட்டுப் பிரிந்தார். இருந்தாலும் காலத்தின் தேவை கருதி அவரது குடும்பத்தாரிடம் கையிருப்பிலுள்ள குறும்பாக்களையோ ஷம்ஸால் வெளியிட இருந்த தொகுதியையோ வெளிக் கொணர்வது அவரின் குடும்பத்தாருக்கும் ஷம்ஸ் ஆர்வலர்களுக்குமுள்ள முக்கிய கடப்பாடாகும்.
தினகரன் “புதுப்புனல்" பகுதியினை நடாத்தி வந்த ஷம்ஸ்
ஜெஸ்மி எம். முஸா )-

1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறும்பாக்களை அறிமுகம் செய்து அதற்கானதொரு எழுத்தாளர் கூட்டத்தினையும் வாசகர் வட்டத்தினையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 2000 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இம்முயற்சிக்கு அதிக ஆதரவு கிடைத்ததுடன் ஒரு பெரும் பட்டாளமே உருவாகியது. இக்களத்தில் இணைந்து கொண்டவரே ஒலுவில் எஸ். ஜலால்தீன்
ஆவார.
மஹாகவி, ஷம்ஸ் ஆகியோரிடம் காணப்பட்டதைப் போன்று குறும்பாவுக்கான அமைப் பொன்று ஜலால்தீனிடமும் காணப்பட்டது. மஹாகவியின் நூறு குறும்பாக்களைக் கொண்ட தொகுதியைத் தொடர்ந்து சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பின் 2002 ஆம் ஆண்டு ஜலால்தீன் "சுடுகின்ற மலர்கள்” என்ற பெயரில் தொகுதியினை வெளியிட்டார். குறும்பா வரலாற்றில் இது முக்கிய கட்டமென்றே கூறலாம். இந்நூலில் 103 குறும்பாக்களும் 2 நெடுங் குறும்பாக்களும் உள்ளன.
சமூகத்தில் காணப்பட்ட பல்வேறு தளங்களையும் தன் குறும்பாக் களில் காட்டும் போக்கு இவரிடமும் காணப்பட்டது.
“வேலியிலே ஓட்டையிட்டுக் காளை விருப்பமுற்றுப் பார்க்குமந்த வேளை
கேலிசெய்ய வருவதபோல் கிட்டவந்த முட்டியுடன் ஊற்றி விட்டாளாம்மிளகுத் தாளை” (2002 : 20) என்ற பாடலில் பெண்கள் குளிக்கும் போது அல்லது வேறு காரியங்களில் ஈடுபடும் போது அவர்களின் அவயவங்களைத் திருட்டுத்தனமாய்ப் பார்க்க எத்தனிக்கும் இளைஞன் ஒருவனுக்கு நடப்பதாகக் கூறும் இந்நிலை உண்மையில் எம் எல்லோரையும் சிலிக்க வைக்கின்றது. பக்கத்தில் சித்திரமும் சிறப்பாக கிறுக்கப்பட்டிருப்பதே இதற்கான வலுவூட்டற் காரணி எனலாம்.
இவரது கவிதை ஒவ்வொன்றும் யதார்த்த பூர்வமான
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -GO

Page 50
கதையாடல்களை முன்னோக்கியதாகவே நகர்ந்துள்ளன. எனினும் மஹாகவியின் முழுமையான சீர் அமைப்பினை இவரது கவிதை பின்பற்றாமல் 1 ஆம், 2 ஆம், 5 ஆம் முடிக்கும் சீர் ஒரே ஓசை கொண்ட ஷம்ஸின் அமைப்பினைத் தழுவியதாகவே வந்துள்ளன. ஷம்ஸின் வழிகாட்டலின் விம்பமெனவும் இதனைக் கொள்ளலாம்.
மஹாகவியின் சில குறும்பாக்கள் ஜலால்தீனிடம் பொருள் ரீதியாகவும் வடிவ ரீதியாகவும் பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.
“உத்தேசம் வயதுபதி னேழாம் உடல்இழைக்க ஆடல்பயின் றாளாம்
எத்தேசத் தெவ்வரங்கும் ஏறாளாம் ஆசிரியர் ஒத்தாசை யால்பயிற்சி பாழாம்” (மேலது பக் 65)
என்ற குறும்பாவை,
“பள்ளிக்கெனச் சென்றிருந்தாள் நோனா
பள்ளிகொண்டாண் ஆசிரியண் தானா
அள்ளிஅவன் அண்பைக்கட்டி அடையவொரு கருவாய்மாட்டி
தள்ளியது குழந்தைசரி தானா?” (2002 : 52)
என ஜலால்தீன் அமைத்திருப்பது நோக்கத்தக்கது.
"தென்கிழக்குப் பிரதேச முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களை ஜலால்தீனின் கவிதைகள் ஞாபகமூட்டுகின்றன.
தாரத்துப் பார்வைக்கு
தலங்குதகா பச்சவடம்
-G2)-O aabuo at paul D

கிட்டப் போய்ப் பார்த்தேன்
கிழவி நிறம் தோணுதகா என்னும் நாட்டார் பாடலை
கட்டிவந்தாள் கணிபறிக்கும் சாரி கண்பவர்க்கு காதல்வரும் ஊறி
கிட்டவந்த பார்த்தபோது கிழடுதட்டிப் போயிருந்தாள் கீழும்மேலும் பல்விழுந்த மேரி” (2002 : 07) என்ற குறும்பாடல் ஒத்து நிற்கின்றன” என ஜலால்தீனின் 'சுடுகின்ற மலர்கள் தொகுதிக்கு மதிப்புரை வழங்கியுள்ள மணிப்புலவர் மருதூர் ஏ. மஜிட் கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மஹாகவி, ஷம்ஸ், ஜலால் தீன் எனக் குறிப்பிடப் கூடியவர்களது குறும்பாக்கள் மாத்திரமே இங்கு எடுத்தாளப்பட்டிருக்கின்றது. ஏனெனில் ஏனையவர்களின் முயற்சிகள் பத்திரிகைகளைத் தாண்டிய ஆவணப்படுத்தல்களுக்குள் இன்னும் வரவில்லை என்பதே இதற்கான காரணமாகும். எனினும் ஈழத்துக் குறும்பாக்களின் ஒட்டுமொத்த வடிவ மற்றும் பொருள் ரீதியான வளர்ச்சியினை இம்முயற்சி உள்ளடக்கியுள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை.
ஏனைய இலக்கிய தரங்களின் வளர்ச்சி நிலைக்கு இன்னும் குறும்பா சென்றுவிடவில்லை என்பது சிந்தனைக்குரிய விடயமே. யாப்பு விதிமுறையினைப் பின்பற்றியே இது எழுதப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் குறும்பா பற்றியதான சரியான புரிதல்படுத்தப்படலும் இல்லாமையே இதற்குரிய காரணியெனலாம். நவீன சிந்தனைக்குள்ளிருந்து இலக்கியங்களைப் பார்க்க முனைபவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமான குறும்பாவின் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது கேலிக்குரிய விடயமே.
இன்றுள்ள கவிஞர்கள் வட்டத்துள் மார்புதட்டிக் கொள்ளும்
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -G3)-

Page 51
எத்தனை பேர் இதனைப் பற்றிய அறிமுகத்திலுள்ளார்கள் என்ற நியாயமான கேள்விக்கு விடை காண வேண்டிய தேவையுள்ளது. சில பத்திரிகைகள் தங்களது பக்கங்களில் இதற்கெனத் தனியான இடங்களை அண்மைக் காலங்களாக வழங்கி வந்தாலும் அவர்கள் குறும்பா என்ற பெயரில் கவிதை சிறியதாக இருப்பதையே அளவு கோலாகக் கொள்கின்றார்களே ஒழிய குறும்பாக்கான தன்மைகள் அதில் பேணப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை.
தொடர்ச்சியாகக் கால எல்லை வரையறைக்குள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பாடசாலைப் பாடத்திட்டத்தினுள் குறிப்பாக உயர்தர மாணவர் களின் தமிழ் பாட மறுசீரமைப்பிற்குள் குறும்பாவை உள்ளடக்க வேண்டிய தேவையுள்ளது. பாடத்திட்டத்தினை மாற்றுவதற்காக அழைக்கப்படுகின்ற வர்களால் சரிசெய்யப்பட்டு இறுதி முடிவுக்குள்ளான விடயங்களையே பின்னர் பாடப்புத்தகங்களில் மாற்றியடிக்கப்படுகின்ற நிலைதான் இன்றுள்ளது. கல்வித் துறையின் உயர் மட்டங்களில் கூட இவ்வாறான சூதுக்கள் நடைபெறும் நிலை முதலில் சீர்செய்யப்பட வேண்டியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இனிவரும் காலங்களிலாவது இக் குறும்பாவை அறிமுகம் செய்வதானது கால மாற்றத்திற்கான வரவேற்கத்தக்க அணுகுமுறையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் கூட மஹாகவி தொடர்பான தனிநபர் ஆக்கச்செயற்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றதே தவிர இதனைப் பற்றிய குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. தமிழ் விஷேட துறை இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வியல் தேடல்களிலும் எதிர்வரும் காலங்களில் குறும்பாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆரோக்கியமான செயற்பாடாகவே இருக்கும்.
எனவே, தற்காலத்தில் வளர்ச்சியடைந்த இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் நகைச்சுவையாகவே வெளிவர வேண்டிய தேவைப்பாடு இருப்பதை யதார்த்த பூர்வமாக உணர முடிகின்றது. ஒட்டு மொத்த இலக்கிய வெளிப்பாடுகளின் சாரமாக இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இலக்கிய வடிவமே சினிமாவாகும். இதில் பல்வேறு இரசனைகள் கூட்டிணைந்தாலும் நகைச்சுவையே பெரிதும்
ஜெஸ்மி எம். முஸா D

வரவேற்கப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது போட்டி போட்டுக் கொண்டு வெளிவருகின்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதானது நகைச்சுவைக்கானதொரு பரந்த இரசிகர் வட்டம் இருப்பதனைப் பறைசாற்றுகின்றது. இந்நிலையினை வைத்துப் பார்க்கும் போது தற்காலத்தின் தேவை கருதி தேக்க நிலையிலுள்ள அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டுவருகின்ற குறும்பாக்களை மீள் அவதாரம் செய்ய வேண்டிய தேவையுள்ளதை ஏற்கவேண்டியுள்ளது.
துணைநின்றவகைள்
O ஜும்ஆ 1978 ஜூன், 1979 செப்டம்பர்.
O மஹாகவி (2002) - குறும்பா + மாநிலத்துப்
பெருவாழ்வு, மித்ரா வெளியீடு, இந்தியா.
O ஜலால்தீன் எஸ். (2002) சுடுகின்ற மலர்கள்,
அட்டாளைச்சேனைப் பிரதேச கலை இலக்கியப் பேரவை, ஒலுவில்.
2007-08-05, 2007-08-12 ஆகிய தினங்களில் தினகரன் வார மஞ்சரியிலும் 2007 செப்டம்பர் 15 - 30, ஒக்டோபர் 15 - 31 ஆகிய தினங்களில் எங்கள் தேசம் இதழ்களிலும் தொடராக வெளிவந்தன.
தேடலின் ஒரு பக்கம் - ஓர் ஆய்வியல் நோக்கு -(75)-

Page 52


Page 53


Page 54
கிழக்ப் பல்கலைக்கழகத் பயிலும்'மாணவர்களைப்'பெற்று களுள்/குறிப்பிடத்தக்க ஒருவரே, கலைக்கழத்தில் 'பயிலும் 'காலத் இருந்து' சிறப்புப் 'பணியாற்றியல் எரினூடே இலக்கியப்பணிபுரிந்த சிந்தனைகள்,'வடிவங்கள் குறித் டுரைகள் இன்று நூலுருப்பெற்று
கோஷ்டி சார்ந்து, இனம்சார்ந்து புள்ளவர்களைப் பற்றியும் மிகை கிய'வளர்ச்சியின்பால்'தமது 'மு களை'இருட்டடிப்புச்' செய்துவரு இறவாப்'புகழுக்குரியவர்களை கொண்டு'இவ்வாறான'யரிய போற்றுதற்குரியதாகும்.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத் வெளியேறி/தற்போது/பிரபல' திருஜெஸ்மி எம்.'மூஸா, அவர் டும் இயல்பும் உடையவராய், சமு விளங்கிய, விளங்குகின்றதுடிப்பு ஈடுபாடு கொண்டவர்.
W
மிகவும்'இளம்'வயதில் 'ஆய்வு
வரும்/ஜெஸ்மி மூஸாவின்/பை றின் பாணி ஆச்சரியப்பட்வைக்
எமது/பத்திரிகையிலும்/சரி எழுதிவரும்'இலக்கியம்சார்/கட்டு ஆவணத்/தகுதியுடைய ஆய்வுக!
ISBN 97B 955-51296-0-2.
 
 
 

தமிழ்த்துறை, சிறப்பான இலக்கியம் 'பெருமை'கண்டது.'அம்மானவர் இந்நூலின் ஆசிரியர். இவர்'இப்பல் தில் 'தமிழ்ச்சங்கத்'தலைவராகவும் ர்'இவரது'இலக்கிய 'அனுபவங்க
தனியாட்கள்/குறித்தும், இலக்கியச் தும் பத்திரிகைகளில் 'எழுதிய கட்
ETIETET.
நமீள் ப்ேதுல்லானுற்
'பிரதேசம் சார்ந்து தம்மைச் சுற்றி ப்படப் பேசுவதோடன்றி,'தமிழ் இலக் நழுமையான'பங்களிப்புச் செய்தவர் ம்'இன்றைய'காலத்தில்'இறந்தும் எழுத்தில் 'பதிவு/செய்ய'விருப்புக் பணியில் ஜெஸ்மி முனைந்திருப்பது
ஜின்னா'வுரிபுத்தின்
திலே பயின்று சிறப்புப்பட்டதாரியாக ஆசிரியராகப் 'பனிபுரிந்து'வருகிறார்
பணிவும், எவரிடமும்/அன்பு பாராட் தாயமுயற்சிகளில் முன்னிற்பவராய் ான இளைஞர்'ஊடகத்துறையிலும்
முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு Lப்புக்களை'வாசிக்கும்போது'அவற்
W
நிதி
W. EGENTITAT ரீகாந்தன்
வேறு/ஊடகங்களிலும்' சரி'அவர்
ரைகள்/கனதியானவை மட்டுமன்றி,
ரூமாகும்:M
/ரா'அப்துல்லாவற்/அள்ளப்ாம்
%