கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தியானசாதனம்

Page 1


Page 2

虚山F征
ision)f G.) கவியோகி சுத்தானந்த பாரதியார்
வெளியீடு: Ör 55T GOT55 (30JR 5. FEDTS h யாழ்ப்பாணம்.
1967.

Page 3
-) ஷ் ли э8
அத்தன் அமலன் அருளா னந்த
ஆழியில் முகந்தே அருள்மழை பொழியும்
சுத்தா னந்த பாரதி யென்னும்
சோதியை யுள்ளத் தமைத்தடி போற்றி
இத்தரை யுள்ளோர்க் கவருள் நூலே
ஈடினே இல்லா அன்ஃபோ லன்பு
வைத்துள ஞான கலாம்பிகை நினைவாய்
வழங்கினன் வயித்திய லிங்கனு நன்றே.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வழி கீட்டிக அம்மையர்"
திருமதி. ஞானகலாம்பிகை கனகராசர தோற்றம் 20 - 12 - 1906 மறைவு 30 - 5 - 1967

Page 4

கந்தா வா வா
காபி - ராகம் 1 (ஆதி - தாளம். பல்லவி
கந்தா வாவா கலாபமயில்மேல்
சுந்தர வடிவேலா - ஓம்சிவமுருகா (கந்தா)
அனுபல்லவி
வந்தனஞ் செய்யும் அடியார் மகிழச் சிந்தையில் இனிக்கும் செந்தில் அமுதே (கந்தா)
சரணங்கள்
குதுபொருமைச் சூழ்ச்சிக ளெல்லாம்
துயர்செய் பகையெல்லாம் வாதுவழக்குகள் வம்புக ளெல்லாம்
வராது துன்பந்தராது விலகிடக் (கந்தா) ஆணவச்சூரனை நாணப்புடைப்பாய்
ஆனந்த வாழ்வினைக் கொடுப்பாய் மாணழகுத் திருமங்கலச் செல்வம்
மனைதொறு மிலகிட நல்காய் - குகனே (கந்தா)
தவயோகிகளின் இதயக் குகைவூர் T( சிவயோகச் சுடரே - ஜய நவஜீவனமருள் சமயோகசாதன
நாயகனே சரணம்-முக்தி தாயகனே சரணம், (கந்தா)

Page 5
س- 2 --
உள்ளும் புறமும் உயிரும் உடலும்
உலகும் விரிவானும் - கடலும்
துள்ளும் ஆறும் மலையும் உனது
துலங்கும் அருள்வடிவே - ஓம் சுப்ரம்மண்ய குருவே - ஜயஜய
வறுமை மடமை அடிமை சிறுமை
வஞ்சத் தொல்லைகள் - இனங்கெடு சஞ்சல மாயங்கள் - வராதே
மறுமலர்ச்சிதா புதியவாழ்வுதா
மனநிறைவு தாராய் முருகா மயக்கு வினைதீராய்
போக்கும் வரவும் வாக்கும் வடிவும்
பொருளும் ஆஞய்நீ - என்ன்ைத் தாக்கும் வினையை நீக்கிச் சீவனை ஆக்காய் உனக்காளாய் - சுத் தானந்தத்தோழா - சரவணபவனும் கந்தா வாவா - கலாபமயில்மேல்
கார்த்தி கேயாவா கந்தா வாவா - சுந்தர வேலா
கலிநவியப் புதுநல் - யுகமே கண்டு களித்திடவே - கருணைக் கடலிற் குளித்திடவே!
(கந்தா)
(கந்தா)
(கந்தா)
(கந்தா)

தியான சாதனம்
1, agшиол&n)
"ஜபமாலை". காலமெல்லாம் எனது ஜபமாலை; விண் மீன்கள் எல்லாம், அதிற் கோத்த மணிகள். 'ஓம். ஓம். ஓம்" என்று உருவேற்றிச் செல்கின்றன.அருணுலயத்தில் அருட்சோதி எழுந்ததும், நட்சத்திர ஜபமாலை ஜோதியில் மறைகிறது. எனது ஜபமும் ஒளியிற் கலக்கிறது. காலைப் புட்கள், "சிவ சிவ.ஹர ஹர...' என்று ஜபிக்கின்றன.
சோலை மலர்களெல்லாம், எனது நவரத்ன ஜபமாலை. கணிக ளெல்லாம் பொன்மணிமாலை. மெல்லிய காற்றுடன் நானும் "ஓம்.ஓம்’ என்று ஜபிக்கிறேன். ஒவ்வொரு மூச் சும் மந்திர ஜபம். ஒவ்வொரு பேச்சும் நாமஸ்மரண்ை. ஒவ்வொரு செயலும், திருவாராதனம். ஒவ்வொரு நெஞ் சத் துடிப்பும், ஜபவுரு பரமாத்மனே, ஒங்கார ஜோதியே, என் வாழ்வெல்லாம் தியான நிஷ்டையான ஜபமாலையாகுக,
2. ஜீவவிணை
பரமாத்மனே, இந்த ஜீவவிணையில் நீ பேரின்பப் பண் களை மீட்டுகிருய். அதன் குடம் மூலாதாரம். உடல் மேருதண்டம். மனம், சித்தம், அகங்காரம், புத்தி ஆகிய நான்கும் நான்கு வீணைத் தந்திகள். ஓங்கார மேளம்செய்து நீங்காத நித்திய கானத்தை உன் அன்புவிரல்கள் மீட்டு கின்றன. ஏழிசைகளும் ஏழு சைதன்யப் படிகள். அவற் றில் உன்குரலும், விரலும் ஏறி இறங்கி ஆயிரம் இன்பப் பண்களை மீட்டுகின்றன. பண்ணும் நீயே, பண்ணிசைப்

Page 6
一4一
புலவனும் நீயே, குரலும், விரலும் நீயே. இந்த ஜீவவிணை யும் உனதே. பரமா, நின் வேதவொலிகள் அதில் நர்த் தனஞ் செய்க.
3. நான்
இந்த உடலில், "நான்.நான் என்று மார்தட்டிப் பேசு வது யார்? தோலா, எலும்பா, சதையா நரம்பா, வாயா, வயிரு? . இல்லையே! - இந்த உடல் உறங்கும்போது, மூச்சு விடுவது யார்? கனவு காண்பது யார்? எத்தனையோ, நினை வுப் படலங்கள் கனவில் வந்து ஆடுகின்றனவே, அவற்றைக் காண்பது யார்? மனமா? மனமிறந்த சமாதியில் உள்ளின் பத்தை உணர்வது யார்? 'நான் இன்புற்றேன்’ என்பது யார்? ஆழ்ந்து பார்த்தால், "நான்' என்பதும், சுத்தசக்தி மயமான நீயே.பரமாத்மனே, "நான்.நான்" என்னும் போது, "நீ, நீ" என்றுணர்ந்து நினக்கே, இந்த உடல் உயிர் மனம் உள்ளம்-எல்லாம் ஊணுக அருள் புரிவாயாக . !
4. அதிகாலையில்
அதிகாலையில், மந்தமாருதத்தில், கண்ணன் குழ லோசை நீந்திவருகிறது. நட்சத்திரங்கள், தங்கள் புன்ன கையை மலர்களுக்கு அளித்து, ஒளியில் மறைகின்றன. சோலைமரங்கள், தோகைவிரித்த மயில்கள்போல் விளங்கு கின்றன. வேல்முருகன், அங்கே மலரணி கொண்டு பொலி கிருன் மலைகள் சிவலிங்கமாக விளங்குகின்றன. அருவிகள், ஓம் என்று வேதயாழ் இசைக்கின்றன. புட்கள், 'சிவசிவ . ஹர . ஹர" என்று நாமாவளி பாடுகின்றன. சூரியன், கற்பூர ஜோதியாக விளங்குகிறது; எல்லையற்ற, வான்சூழ்ந்த இயற்கைக் கோவிலில் உன் அழகைக் காணக்காண என்

- 5 -
உள்ளம் காதலால் பூரிக்கிறது. பேச்சற்ற, தியானக்கவிகளால் உன்னுடன் கூடிக் குழைகிறேன், பரமாத்மனே ! எனக்கெனக் கோவில் எதற்கு? ஆசிரமம் எதற்கு? உலகக் கோவிலில், இயற்கையெழிலில் நீ ஒளிர்வதைக் கண்ட பிறகு, சாதிமதக் கோவில் மறைந்தது. குருக்கள் மறைந்தார். நானும் நீயும், இந்த உலகக் கோவிலில் ஒரே நெஞ்சத்துடிப்பில் பேசுகிறேம்!
5. நள்ளிரவில்
உலகெல்லாம் உறங்கும் நள்ளிரவின் மெளனத்தில், நாம் கூடிக் குழைந்து இரண்டறக் கலக்கிருேம். உன் உள்ளம் என் உள்ளத்தில் துடிக்கிறது. உன் மெல்லிய குரல் என் சிதாகாசத்தில் ஒலிக்கிறது. என் குரல் அடங்கியபோது நீ பேசுகிருய் என் கண்கள் மூடியபோது நீ விழித்திருக்கிருய்! என் ஆசைகள் அற்றதுமே, நீ நாணுகிருய் . எனது என்பது போனதும், எல்லாம் உனதாகிறது ! 'நான்" என்பது நீங்கியதும், எல்லாம் நீ-நானும் நீ ஆகிருய்; நான் நீயான தும், நீ நானே..!
6. шл ї.?
இல்லை’ என்பவன் யார்? . "இல்லை" என்று, உள்ளி ருந்து சொல்பவன், யார்? . ஹே, இல்லையப்பா, நீயும் கடவுளின் இல்லப்பா! . மனச்சாட்சியைத் தொட்டுப் பார்; உன்மூச்சை விஞவிப்பார்; உன் கண்ணை ஊடுருவிப் பார் . உனது நெஞ்சம் உன்னுலா துடிக்கிறது? கடிகாரத்திற்குச் சாவிகொடுக்க ஒருவன் வேண்டுமே . சக்கரத்தை ஒருவன் சுழற்றினலே, எஞ்சின் "படபட" என்று சத்தமிட்டுக் "கடகட" வென்று நீர் இறைத்துப் பாய்ச்சுகிறது. இந்த உயிர்ப்பொறியின் அந்தக்கரணங்களைச் சுழற்றி, நெஞ்சம்

Page 7
سے 6 سے
"பட் பட்” என்று துடிக்கவைத்த ஒரு சுத்தசக்தி இறை வனை நீ மறுக்க முடியுமா? அதை மறுத்தால் நீ இல்லை, உனக்கு உயிரில்லை, உணர்வில்லை . எஞ்சின் "நீராவி இல்லை, ஒட்டுவோன் இல்லை; நானே ஒடுகிறேன்." என்னுமா? பல்பு, "மின்சாரம் இல்லை; ஸ்விட்சுப் போடுவோன் இல்லை, நானே எரிகிறேன்’ என்பதா? . இல்லையப்பா, உன் உள்ளம் தில்லையப்பா .
7. ஏன் .?
"அப்பனே, நீ நானகியும் என்னை நான் மறப்பதேன்? நீ என் உள்ளத்தில் இன்ப ஊற்ருகப் பொங்கியும், இந்தப் பாழும் மனத்தில் அச்சம் புகுவதேன். துயரம் துளைப்ப தேன். நீ என்பக்கம் இருக்கையில், துக்கம் ஏன்? நீயே நான், நீயே அவன், நீயே அவள், நீயே அது; எனில், அவன் இவ்னுக்குப் பகையாவதேன்? அவள், இவள்மேலே பொருமைப்படுவதேன்? . நீயே உலகம், நீயே உயிர்க்குலம், நீயே நாடு, நீயே வீடு, எனில், அந்த நாடு இந்நாட்டின் மேலே அணுகுண்டு வீசுவதேன்? உலகுயிர் நண்பனுன நீ இருக்கையில், யார் யாரைப் பகைப்பது? எல்லாம் தரும் நீ இருக்கையில். யார், யாரைத் திருடுவது? யார் யாரை வருத்துவது?. எல்லாம் விசித்திரமாய் இருக்கிறதே P
8. உன்னைத் தா.
"அப்பனே, உன்னை அதுதா, இது தா என்பர் உல கோர். நான், "எல்லாம் எடுத்துக்கொண்டு உன்னைத் தா" என்கிறேன் காதலா, என்உயிரை உன் அருட்கரத்தால், அணைந்துகொள்; என் உள்ளத்துடிப்பில், உன்உள்ளம் குதிக் கட்டும். என் மூச்சில் உன் இச்சை உயிர்க்கட்டும். என்

--۔ 7 سے
மூளையில், நீ நினை; என் நாவில் நீ பேசு; என் குரவில் நீ பாடு என் காது உன்னைக் கேட்கட்டும்; என் கை உன் பணி செய்க, என் கால்கள் உன்பின் நடக்கட்டும் . தலைவனே, நீ இன்றி நானில்லை; நீ என்னுள் எல்லாமாக இருந்து நின் இச்சையை நிறைவேற்று, அதுவே, பிறவிப் பயன் .
9. நீயே நானுகுக.
என் அப்பனே, சந்தடியிலும் உன் குழலோசை காதில் விழுகிறது. போராடும் உலகிலும் உன் புனித நினைவே வரு கிறது. அப்பனே, உன்னுணர்வே என் வாழ்வாகுக! என் காமம், சிவகாமம் ஆகட்டும்! என் சினம், சினத்தின்மேல் சினக்கட்டும். என் சீற்றம் வஞ்சம் கோள் பொய் பொழு மையைச் சீறட்டும்; புனிதனே, உனது திருப்புகழே எனது நாவாகுக! உனது தியானமே நெஞ்சாகுக; உன் உண்மை, உரையாகுக; உன் செயலே கையாகுக; உன் கோவிலே உட லாகுக. உன் சந்நிதியே உள்ளமாகுக; உன் அருளே, என் உருவாகுக; நீயே நானுகுக!.
10. உன் காதல்
ஐயனே, உன் அன்புமட்டும் என்னுள் துடிக்கட்டும்; உன் காதல், என்னை விழுங்கட்டும்! உன் சுத்தசக்தி என் னுள் நிறைந்து சுழலட்டும்! என்னைச் சூழவரும் தொல்லை களும், துன்பங்களும், பொருமைப் புயல்களும் இன்றுடன் ஒழியட்டும். நேற்றைத் துன்பம் நேற்றுடன் போகட்டும். இன்று முதல், புதிய வாழ்வைத் தா!. நீயே இந்த உடலில் உயிராய் இரு உயிர்ப்பாய் இரு; நீயே புலன்களிலிருந்து உணர், மனதில் நினை. நீயே சுத்தான்ம சைதன்யமாக இந்தச் சட்டையைப் போட்டுலாவு புனிதனே, கவலைப்பேய்

Page 8
- 8 -
என்னைப் பிடிக்காது, கட்டற்ற பேரின்பமான உன்னை நான் கலந்து வாழவ்ருள்.
11. கவலையே 1.
கவலையே, நீ எங்கிருந்து வருகிருய்? நான் ஆழ்ந்து தியானிக்கும்போது, எங்கு சென்ருய்? உன்னை யார் படைத் தது? யார் உன்னை அழைத்தது? ஏன் என்வீட்டில் நுழை கிருய்? அமைதியை நாடும் என்னை, ஏன் சீரழிக்கிருய்? என் னைக் காற்றுப்போலச் சுயேச்சையாக வாழச்செய்.கவலையே, என்மேல் உனக்கேன் இவ்வளவு காதல்? நான், "போ, போ' என்றலும் விடமாட்டாயா? நீ என்ன திருட்டு நாயா? உனக்கு உணர்ச்சி இல்லையா? கவலையே, நீ ஏன் என்மனதை விட்டுப் போகவில்லை?.
கவலை சொல்கிறது:- "மனிதா, உன் பேராசை என்னை
அழைத்தது; ஆசை போனல், அவா ஒழிந்தால் நானும் போய்விடுவேன்...”*
12 எப்படி?
உலகே, நீ எப்படிக் காலத்தேரில் ஒடுகிருய்? உடலே, உன்னைச் சுமப்பது யார்? உயிரே, உன்ன்ை இயக்குவது யார்? மனமே, நீ எப்படி நினைக்கிருய். ? செவியே, நீ எப்படிக் கேட்கிருய்? யார் உன்னுள் கேட்பது. கண்ணே, உன் னுள் காண்பது யார்? நெஞ்சே, உன்னுள் துடிப்பது எது?. உயிரியே உன்னுள் உயிர்ப்பது எது? எல்லாம் நான்; நான் யார்?. எது நீயோ, எது அவனே, எது அவளோ, எது எது எல்லாமோ, அதுவே நான் . "நான் - அறிவே", ஞானம் ஆகும்.

- 9 - 13. சுமப்பதில்லை
தனி ஆள் நடக்கும்போது, மூட்டையையும் தலையில் சுமக்கிருன். உடலையும் சுமந்து நடக்கிறன். புகைவண்டியில் ஏறிச் செல்லும்போது, உடல் மூட்டை - இரண்டையும் வண்டி சுமக்கிறது. ரயில் பிரயாணி, தனது பெட்டியைத் தன் தலையிற் சுமப்பதில்லை. அதே மாதிரிப் பழுத்த நல்லறி ஞர், உலகைப் பற்றிய கவலை சுமப்பதில்லை. ஆசை பொருமை ஆகிய பிணி சுமப்பதில்லை: பத்துடன் பாரம் சுமப்பதை விடப் பொருமையும் பேராசையும் அதிகக் கனமாகும். தீமையின் பளுவே, "பாபம்" என்பது. பாபச்சுமை குறை யப் புண்ணிய நன்மை செய்க. எரி விறகை எடுத்தாலே, கொதி நிற்கும். எண்ணங்களை நிறுத்தினலே, மனது நிலைக்கும்.
14 நரமே பொறுப்பாளி
பழனியாண்டவருக்குக் காவடி எடுத்தாலும், நாமே மலைப்படி ஏறிச் செல்லவேண்டும்; பழனியாண்டவர், தூக் கிச் செல்லமாட்டார். "வேங்கடரமணு, கோவிந்தா" என்ருலும், திருப்பதிமலைமேல் நாமே ஏறிச்செல்லவேண்டும். வேங்கடேசப்பெருமாள் நம்மைத் தூக்கிச் செல்லமாட்டார். 'ஹரி, ராமா, மாதவா, கிருஷ்ணு' என்ருலும் நமது வினைமூட்டையை நாமே சுமக்க வேண்டும். பிறர் அதைச் சுமக்க முடியாது நமது சுமைக்கு நாமே பொறுப்பாளி. சுமைப்பளுவை நீக்கி அதை வண்டியிற் போடவேண்டும். சுத்தசக்தி அருளே, மின்சார வண்டி, அதில் நாம் இடம் பெற்று அமர்ந்தால், பிறகு சுமையில்லை, கவலையில்லை, கட் டில்லை; நாம் சும்மா அமர்ந்தாலே அது நம்மைத் தாங்கிச் செல்லும்.

Page 9
- 10 -
15. கடவுள் எங்கே? .
கடவுளே, நீ கோவில் மூலஸ்தானத்திலே தானு இருக் கிருய்? கருங்கல்லும் செங்கல்லும் போட்டுக் கட்டினலே, நீ வசிப்பாயா? பூசாரி தூபம் போட்டாலே, நீ வருவாயா? துதிமலர் தூவினலே, நீ மகிழ்வாயா? நீ உருவா, அருவா? ஒன்ரு, இரண்டா? உன்னைக் கண்ணுல் காண்பதா, மனத்தால் நினைப்பதா? மாயாவியே, நீ எங்கே இருக்கிருய்? எத்தனை கோவில்களில் தேடினேன்? எத்தனை குருமாரை நாடினேன்! நீ எல்லோரையும் கண்கட்டி ஆட்டிக் கண்ணிலேயே ஒளிந் திருக்கிருய்; என் மனதை அல்லற்படுத்தி, என் நினைவிற்கு எட்டாது ஒளிந்து விளையாடி, மனத்திரைக்குப்பின்னலேயே ஒளிந்திருக்கிருய்; இனி ஒளிய முடியாது . இதோ மெளனத் தால் உன்னைப் பிடித்துக்கொண்டேன்!
16. தனியன் .
நீண்ட யாத்திரை செய்தேன் . என் பை கனக்குமட் டும், நண்பர் கூடினர். 'உன்னைப் பிரியோம் ." என்றனர் பிரியம் எல்லாம் பிரிந்துபோனது. பரிவெல்லாம் இரிந்து போனது . எல்லோரும் என்னைப் பித்தன் என்று கைவிட் டனர். ஐயோ, உலகில் எனக்கு யாகும் இல்லையே! காதலா, நீதான் எனக்கு ஒரே கதி. நீயும் என்னைக் கைவிடுவாயா? ஐயோ, காதலா, எங்கே இருக்கிறாய் ..! என் கண்ணுல் உன்னைக் காண்பேன?. என் காதால் உன் அன்புமொழி களைக் கேட்பேனே?. ஆயிரம் உருக்களை, "நீ, நீ " என்று அணையக் கை நீட்டினேன்; வெறுங் காற்றையே அணைந் தேன். ஆயிரம் குருமாரின் திருவடியில் உன்னைத் தேடினேன். அகம்பாவச் சிறையையே கண்டேன் காதலா, உனக்கே பித்

- li l
தானேன்; என்னை இன்னும் சோதிக்காதே . நீ அருவானல், இதோ இந்த உருவையும் நீத்து, நான் என்பதை “நீ" என்பதிற் கரைத்து நீயாகிறேன் ...!
17. அணுதை .
நான் அணுதை - எனக்கு மனிதர் துணையில்லை நண்பர் என்று வந்தவரும் எப்படியோ பகைவராகின்றனர், முன் ஞல் புகழ்ந்தவர், பின்னல் இகழ்கின்றனர். பகல் வெளிச் சத்தில் பல்லை இளித்தவர், இரவின் இருளில் பல்லைக் கடித் தனர். ஆண்டவனே, ஏமாற்றத்திற்கு ஏமாற்றம், இப்படி அலைவதா என்விதி உலகக் காட்டில் கலகக் காட்டில், கண்ணில்லாக் குழந்தை போல 'அம்மையப்பா !” என்று அலறிச் செல்கிறேன். பின்னும் இருள், முன்னும் இருள். மேலிருந்து நட்சத்திரங்கள், என் விதியைக் கண்ணடித்து நகைக்கின்றன. எனக்கு வழிகாட்ட வந்தவரும், வழிப்பறி யில் புகுந்தனர். அப்பனே, திகைக்கிறேன் ...! நீ பின்னல் இருந்தே சிரிக்கிருய் !! இரக்கம் இல்லையா ..?
18. ஒரே தொழில்
கர்மசாலையான உலகில், உ ன் னை ப் பாடுகிறேன்; 'பாட்டு", அதுவே என் தொழில், வேறெதற்கும் நான் தகுதியல்லேன். உன்னைத் தேடவும், பாடவும் பொழுது சரி யாய் இருக்கிறது. உன்னைக் கூடுவேனே ..? உன் கைகோத்து ஆடுவேனே ? உன் இச்சை எதுவோ, அறியேன்; ' காதலா” என்று, உன்னைக் கூவிக்கூவிக் கவி பாடுகிறேன்; 'டாங் . டாங்’ என்று தொழிற்சாலைச் சம்மட்டிகள், ‘டுருடுரு ...” என்று யந்திர ஒலிகள், ‘டுமீல் டுமீல் ' என்று குண்டு பீரங்கிச் சத்தம், அரசியல் மேடைச் சிலம்பம், எல்லாம்

Page 10
- 12
என் பாட்டை அழுத்திவிடுகின்றன. உலகில் என் பாட்டைக் கேட்பாரில்லை. நீயாவது கேட்கிருயா ? என் இரு செவி களுக்கு உள்ளும் இருந்து, மனிதசாட்சியாகக் கேட்பவன் நீதானே! என் முறையீட்டிற்கு என்ன பதில்?
19. உன் எண்ணம்
உன் எண்ணம் தெரியவில்லை; என் எண்ணம் பலிக்க வில்லை; நான் புகழ்மாளிகைக்குச் செல்கிறேன். அங்கே நாய்கள் குலைக்கின்றன, சேவகர் தடுக்கின்றனர், எல்லாம் தாண்டிச் சென்றேன்; அங்கே செல்வரைக் கண்டேன். ஆடல் பாடல் கூத்துக் கண்டேன். உன்னைக் காணவில்லை. பட்டம், பதவி, வேட்டையைக் கண்டேன், போட்டியைக் கண்டேன்-புகழ்வேட்டை மும்மரத்தில், இந்த ஏழைக் கோவணுண்டியை யார் தேடுவர்? புகழ்மாளிகைக்குப் பின் புறம் மயானக்காடு; அதில் அமர்ந்து எனது காவிய மாலையைத் தொடுத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு மலரிலும், என் கண்ணிர் புன்னகைத்தது; நீயும் புன்னகைத்தாப்.இதுவோ, நின் எண்ணம்.? காதலா!.
20. காத்திருக்கிறேன்
என் வேலை முடிந்தது. வாழ்க்கைத் தோட்டத்தில் உதிர் கனிகளை உண்டேன். எந்த மரத்திலும் ஏறிப் பறிக்க வில்லை. காதலர், மலர் பறித்து மாலை தொடுத்து அணிந் தனர்; தோட்டக்காரன், கனிகளைக் கூடைகூடையாகச் செல் வருக்கீந்தான். என் பசிமுகத்தை நீகூடப் பார்க்கவில்லை; ஒரு பாம்புப்புற்றின் அருகே, இடிந்த மண்குடிலில் அமர்ந்து எனது மனத்துயரை யெல்லாம் கவிமலராகத் தொடுத்து வைத்துவிட்டேன். என் வேலைமுடிந்தது; சூரியன் அஸ்தமிக்

- 13 -
கிறது செவ்விருள் படர்கிறது. காரிருள் அதன்மேற் பாய் கிறது. என்னுடன் பேசியபுட்களும் கூடடைந்து உறங்கின. கலகலச் சிரிப்புடன் உலாவிய செல்வக் காதலரும், ஜோடி ஜோடியாகச் சென்றனர்; நான் எங்கே செல்வது, யாரை வழிகேட்பது ? யாரும் இல்லாத வறட்டுத் தனிமை; எனக்கு யாரும் இல்லையா ? ஹா 'நான் இருக்கிறேன்; உன்வேலை என் வேலை. எல்லோரும் உன்னைக் கைவிட்ட போது, நான் உன் கையைப் பிடிக்கிறேன்.’’ என்கிருய், ! நீதானே பேசுவது ? காதலா, !
21, மழை இருட்டு...!
மழையிருட்டு; மையிருட்டு; தனிமை, தனிமை ஆள் அரவமில்லாத காடு வீடு வாசலெல்லாம் விட்டு, ஊரார் கேலிச் செருக்கைப் பொறுத்து, உனக்காக இங்கே காத் திருக்கிறேன் காதலா! உனக்காகவே, உயிர் இந்த உள் ளத்தில் துடிக்கிறது; உள்ளமும் நீ, உயிரும் நீயே. "ஊழ், ஊழ் '-நரிகள் வளைகளில் ஊளையிடுகின்றன; என் தனிமையும், 'ஊழ் ஊழ்' என்று குமுறுகிறது; பாம்புகள், 'புஸ் புஸ்" என்று படமெடுத்தாடுகின்றன "அது செய்வோம், இது செய்வோம்" என்ற மனிதரை, "எங்கே உதவி?’ என்று கூவுகிறேன் அரட்டையும் குறட் டையுமே கேட்கின்றன மேகங்கள் மதயானைக் கூட்டம் போலக் குவிகின்றன இடி மின்னல் இரும்புப் பட்டரை யில் பழுக்கக் காய்ச்சின நீளக் கம்பிகள்போலத் தாவுகின் றன. மின்னல் பளிச்சிடும்போது, என் கவிமலர்களின் வாட் டத்தைக் காண்கிறேன் என் கண்ணிரைத் தெளித்து, மலர் களை வாட்டந் தீர்க்கிறேன் காதலா, ஹே காதலா வா வா! என்னை நீ அணைந்துகொள்ளாவிட்டாலும் என் மாலையை அணைந்துகொள்' என்று கதறுகிறேன், பாவி!

Page 11
- 14 -
கார்மேகம் தடதடவென்று பொழிகிறது: என் மாலையை வெள்ளம் அடித்துச் செல்கிறது இனியென்ன? ஏமாற்ற மும், விசனச் சுமையும் தாங்காமல் நான் இந்த ஓட்டைக் குடிலில் படுத்துக் 'காதலாவது, கடவுளாவது? கவியாவது, மலராவது ? எல்லாம் பொய் 'என்று ஏதோ ஒருகுனிய வெறுப்பில், கண்ணை மூடுகிறேன்; காதலும் உண்மை, கட வுளும் உண்மை; உன்கவியும் உண்மை, மலரும் உண்மை .' என்று என்னை யாரோ, தழுவிக்ெெகாள்கிருர் "அடடா,
நீயா, என் பரமாத்மக் காதலனே! என் கவிமலர் மாலை உன் மார்பில் உள்ளதா?. இதுபோதும், இன்பம் இன்பம்.!"
22. பொறுமை, பொறுமை
பொறுமை, பொறுமை ! என் பொறுமை, உலகப் பொருமையுடன் எத்தனைநாள் போராடுவது? ஐயனே, உனக் காக இந்தக் கலகவிட்டில் பொறுத்திருக்கிறேன். இந்த வீட்டில், எத்தனைவிதமான மக்கள்; அவர்கள் உடை பல விதம், நடை பலவிதம், குணம் பலவிதம், குறி பலவிதம், கொள்கை பலவிதம், கோணல் பலவிதம்; அவர்கள் பற்றுக் கோடு பலவிதம், நெற்றிக் கோடு பலவிதம்; அவர்கள் கொடுக்கல் வாங்கல் பலவிதம் மீனத்தாங்கல் பலவிதம்; வாய்வீச்சுகள் பலவிதம்; கைவீச்சுகள் பலபல, சாத்திரச் சண்டை, ஆத்திரச் சண்டைகள் பலபல . இந்த வீட்டில், சாதுவாக ஜபமாலை உருட்டிக்கொண்டிருந்தாலும் பாரடா. உருத்திராட்சப் பூனையை! ' என்று நையாண்டி செய்கிறர் கள். இவர்களைத் திருத்தப் புகுந்தால், நம்மைத் துரத்தப் புகுவார்கள் .1-கற்றழைக்கு முள் பிடுங்கும் கதைதான்; சந்தைக் கூச்சலுக்குச் சரளிவரிசை பாடுவது போலத் தான்!.

- 15 -
காதலா, என்னைத்தனியே அழைத்துச்செல்; நம்மிடையே
உலகப் பேய்கள் புகாமல், மனக் குரங்கு தாவாமல், நீ-நான், இருவரும் ஆன்ம ஒருமையில் வாழ்வோம்! .
23. கடவுள்
* கடவுளே, கடவுளே " என்ருலும் இவர்கள் சிரிக்கிருர் கள். 'கடவுளாம், கிடவுளாம் . பகுத்தறிவற்ற பத்தாம் பசவிகள்; விஞ்ஞானம் சந்திரமண்டலத்தில் குதிக்கும் காலத் தில், கடவுளுக்கு அழுகிறர்கள் ... ! ‘ஹரி ஹரி" என்ருல் அணுக்குண்டு வெடிக்காதா? "சிவசிவா' என்ருல் நீரசகுண்டு புகையாதா? 'கந்தா' என்ருல் காஸ்மிக்ரே மின்னதா? கடவுள்தான் பறவைக்கப்பலைச் செய்தாரா? விஷ்ணுதான் விஞ்ஞான அற்புதங்கள் செய்கிருரா? கடவுள் பெயரில்லா மல் பயிர் விளையாதா? உயிர் வளராதா? என்றெல்லாம் வாதாடுகிறர்கள்; ஹே விஞ்ஞானியே, உனது சூட்டளவை ரசத்தை 100-டிகிரியில் நிறுத்தும்; ஆனல் சூட்டை 110டிகிரி ஆக்கமுடியுமா? உனது காற்றளவை மலையின் உயரத் தைக் காட்டும்; அதுமலையை உயர்த்துமா? விஞ்ஞானத்தால் இதயம் துடிக்குமா, உயிர் உயிர்க்குமா, மூளை நினைக்குமா? இதோ, பிணம்; இதை மூச்சுவிடச் செய்; இதில் உயிர்த் தது எது? நினைத்தது எது? ஆண் பிணத்தையும் பெண் பிணத் தையும் சேர்த்துப் பிள்ளை பெறச் செய்வாயா? இரண்டிலும் ஜீவசக்தியாய் இருந்தது எது? ஏதோ ஒன்று உள்ளே இருக் கிறது என்கிருய் அந்த ஏதோ ஒன்றுதானப்பா சுத்தசக்தி அதையே மனத்தைக் கடந்த உள்ளமாகிய * ருேம்;

Page 12
م- 16 وس--
24. இங்கும், அங்கும், எங்கும்
"எங்கே" என்பவருக்கு எங்கும், இங்கும் அங்கும் என் கிறேன். "இங்கே" என்று தொட்டதும், சுத்தாத்மாவாக உணரச் செய்யாயா ? எங்கே என்பவருக்கு எங்கும் என்று காட்ட, உள்விழி திறவாயா? எங்கே என்பவருக்கு, ‘அங்கே’ என்று காட்டப் பரமாகாச வெளியில் நிலவாயா? உள்ளத் தில் உள்ளான்மா, அகண்டான்மா, உயரத்தில் பரமான் மாவாக உன்ளை விளக்காயா?நீ உண்மை, நீயே உயர்பொருள். என்னில் உன்னையே தஞ்சம்புகுந்து கதறும் எனக்கும் ஏன் ஒளிந்திருக்கிருய்? உலகம் உன்னை இல்லை என்ருலும் உள்ளே உண்டு என்கிருய். உள்ளங் கவர் கள்வனே, உன்னை நான் ஆராய்ச்சி சாலையில் ஆய்குழாய் ரசாயனத்திற் காண முய லேன்; உள்ளாராய்ச்சி சாலைக்கும் அரிய உன்னை, நீதான் விளக்கவேண்டும். ஐயே, எவ்வளவு ஆர்வமுடன் உன்னை நம்பிக் கதறுகிறேன்; இன்னும் என்னைக் கண்கட்டி ஆட்டு கிருயா? இதோ, உன்னை எட்டிப் பிடித்தேன் சிக்கனப் பிடித்தேன் எங்கே, இனி என்ன ஏமாற்ற முடியாது
25. 49ь.., шЈЈ...!
மாஸ்கோவில் போல்ஷிவிக் தியேட்டரில் ஆபரா (இசை நாடகம்) பார்க்கிறேன். ஸின்ட்ரில்ா கீதை நடக்கிறது. ஐம்பது இசைக்கருவிகளுடன் மயிலும் அன்னமும் போன்ற மடவார் ஆடுகின்றனர். பாடுகின்றனர். ஆண்கள், பல பல வேடம்பூண்டு அவர்களுடன் உல்லாச வெறிநடனம் புரி கின்றனர். "யோகியே, இவர்கள் உன் கடவுளாலேதான் இப்படிப் பாடியாடி இன்புறுகிருர்களோ .' என்று கடவுள் ஆகாத நண்பர் கிண்டல் செய்கின்றனர்,"ஐயா, கிண்டலாரே

ー17ー
இங்கே பாடுவதும் ஆடுவதும் எது? ஆடம்பரமான ஆ.ை களா? எங்கே, அந்த ஆடைகளை மட்டும் ஆடச் சொல் லும்," "அது எமக்குத் தெரியாதா, ஆடைக்குள் ஆளிருந்து ஆடல்பாடல் நடக்கிறது ." - "மெத்தச்சரி, கிண்டலாரே, ஆள் என்ருல், உடலா, காலா, முகமா, பூச்சா? உடல் உறங்கிக் கிடக்கும்போது பாடுமா, ஆடுமா?." - "இது தெரியாதா.உடலுக்குள் உயிர் இருந்து ஆடுகிறது, பாடு கிறது." - "மெத்தச்சரி, நா யணு, உறங்கும்போதும், 'புஸ். புஸ்.” என்று உயிர் மூச்சு விடுகிறதே, அப்போது இந்த ஐம்பது வாத்தியங்களும் 'லலலலலலா" என்று. வாசித்தால் உயிர் ஆடுமா?."-"இது தெரியாதா. உயிருக் குள் மனம் ஆடுகிறது"-"கேளும் ஐயா, உறக்கத்தில் மனம் கனவு காண்கிறதே, அப்போது ஆடுமா? ஆடினுலும், நீர் உறங்கும்போது ‘சபாஷ்' என்பீரா..? பாடகன் உள்ளே ஆடுவது எது? பாட்டில் இன்புறுவது எது? ஆடுவோர் உள்ளே ஆடுவது எது? ஆட்டத்தில் இன்புற்றுக் கைதட்டுவது எது? ஆம், உடல் உயிர் மனங் கடந்த ஒன்று உள்ளது. ஆபரா என்பதிலும் ஆ. பரா - ஆத்மாவில் பரமாத்மனே, என்று சொல்லும் ஒன்று உள்ளது."
26. உலகைச் சுற்றி
உலகைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் என்ன? எங்கும் செங்கல் கட்டிடம்; எங்கும் ஆண்பெண் ஆசைக் கனவுகள்; எங்கும் உறுப்புகள் ஒன்று. இரத்தநிறம் ஒன்று, உயிர்ப்பு ஒன்று, எங்கும் நல்லது பொல்லாதது உண்டு. எங்கும் குண தொந்த விகாரங்கள்; எச்சாதி எந்தமதம், எந்தநிறம், எந்த நாடு, எவ்வளவு உயரம், எவ்வளவு குட்டையானலும் மானிடம் ஒன்றே நாடித்துடிப்பு ஒன்றே. நெஞ்சத்துடிப்பு

Page 13
- 18 -
ஒன்றே; பிறகேன் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று மனிதர் சண்டையிடுகின்றனர்? மனிதர் வாழ்வில் சாதிமதம் எனது யான் என்னும் தீமை புகுந்து சண்டை வளர்ந்தது. மனிதன் கல்லாலும் காரையாலும் கோவில் கட்டியபோதே, மதபேதம் உண்டானது. நாட்டுக்கொரு கொடியும் கோலும், அரசும் அரியணையும் எழுந்தபோதே, போர்முரசு விம்மத் தொடங்கியது. நானே - எனதே என்ற அதிகார மமதை புகுந்த போதே, குண்டுபீரங்கிகள் வெடித்தது. அணுசக்தி ஆயுதங்கள் ஆகாயத்திலிருந்து பொழியத்தொடங்கின. உல கம் கலகக்காடானது. மதமும், அரசியலும் உலகைப் பிரித்துப் போர்க்களமாக்கின. இந்த கலகக்காட்டில் அமைதி வருமா? வரும் - மனிதக் கட்டுமானங்களையெல்லாம் புறத் தொதுக்கி, அசுத்தமான மாயா சக்திகளைத்தாண்டிச் சுத்த சக்தியை உணர்ந்து, இயற்கை வழி வாழவேண்டும். அதுவே தூயநல்லின்ப வழி.
27. கடவுளும் மனிதனும் .
மனிதன் : கடவுளே, என் சலவைக்கல் மாளிகை மின்சார
வசதிகளுடன் நிலவுகிறது. அதிலே வந்திருக்க LDITL L-IT unr?
கடவுள்: சிறுமனிதனே, எங்கும் இருக்கும் என்னை, உன்
சலவைச் சிறையில் அடைக்கப் பார்க்கிருயா?
மனிதன் : கடவுளே, உனக்கு அழகான கருங்கோயில் கட்டி, கர்ப்பக் கிரகத்தில் குழிதோண்டிப் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறேன், வா .
கடவுள் : மனிதா, நீ க ட் டி ய கோவில்கள் காலத்தில் இடிந்து மடிந்துபோகும்; உன்மனதில் பிரிவினைப்

மனிதன் :
6L6Gi :
மனிதன் :
கடவுள் :
மனிதன் :
تن= 19 --
பேய் புகுந்துள்ளது; பெருமாள்கோயில், காளி கோயில், ஐயனர்கோயில், சர்ச்சு, தூபி, மசூதி - என்று பிரிவினைக் கோவில்கட்டிச் சண்டைபோடும் மனிதனே, குறுகிய கட்டிடங்களை விட்டு வெளியே வா; பார் எல்லையற்ற உலகை ...! வான்சூழ் உலகமெல்லாம் எ ன் கோ வில்; அதில் நீயும் வணங்கு!.
கடவுளே, உனக்குக் குடலைகுடலையாக மலர் தூவுகிறேன். அடமணிதா, நான் தோட்டம் தோட்டமாகப் பூஞ்செடிகளை ஆக்கினேன்; ஊரில் வாடும் மலர் கள், விண்ணில் வாடா நட்சத்திர மலர்கள் இவற் றின்முன் உன் குடலைமலர் என்ன ஆகும் .? மனிதா, அன்புத்தேன் துளிர்க்கும் உன் இதய மலரைத் தா . கடவுளே, உனக்குச் சட்டிப் பொங்கல் நிவேதிக் கிறேன் . அட மனிதா, எனக்கு வயிறுமில்லை, பசியுமில்லை; குடலுமில்லை, எனக்குச் சும்மா கைகாட்டி நீ உண்கிருய்; நான் தினம் ஒருபடி சாப்பிடுவதானுல், நீ நிவேதனம் செய்யமாட்டாய்; உலகப் பயிர்களை வளர்த்து, எல்லா உயிர்களையும் ஊட்டும் எனக்கு, உன் சட்டிப் பொங்கல் எதற்கு? அதை அதோ அந்த ஏழைக்குத் தா ... அவன் மூலம் நான் சாப்பிடுவேன் . தருவாயா? வெறுவாயா! கடவுளே, உனக்குக் கற்பூரம் காட்டுகிறேன்; திரு விளக்கெடுக்கிறேன்;

Page 14
- 20
கடவுள் : பார், வானில் சூரியன் பகலெல்லாம் எனக்குக் கற்பூரம் காட்டுகிறது உனது ஜப்பான் சூடம் எனக்குத் தேவையில்லை; சூரியன் உதிக்கும்போது ஓம் சுத்தசத்தி ஜோதி ஒம் . என்றுபார்;
மனிதன் : கடவுளே, உனக்குப் பட்டணி சூட்டுகிறேன்; பொன்மணி பூட்டுகிறேன்; இதோ, நிலைக்கண்ணு டியில் உன்அழகைப் பார்; கடவுள் : மனிதா, திசையெல்லாம் என் ஆடை ஆன்மத் தொகுதி என்வடிவம்; ஜவுளிக்கடைத் துணி எனக் கெதற்கு? மூர்த்திகளுக்கு அணியும் துணி மெழுக் கெடுத்து அழுக்குநாற்றம் அடிக்கிறதே . மனிதன் : கடவுளே, உன்னை எந்தப் பெயரால் அழைப்பது ? கடவுள் : ஓம் ஸத்யம், சுத்தம், சக்தி, சாந்தம் மெள
Grub "
28. மனச் சாட்சி அருவியே, உனக்கு யார் வழிவகுத்தது?
பசுங் குழந்தைகளை ஊட்டும் பரிவும், பணிவும் எனக்கு வழிவகுத்தன; தாழ்ந்த இடங்களுக்கு நான் ஒடிச்செல் வேன்
கதிரே, உனக்கு வான்வழி வச்த்தது Lustrip உயிர்களுக்கு ஒளிதரும் அன்பும், கடலாவிமுகந்து மழை மேகத்தை உண்டாக்கும் அருளும் எனக்கு வழிவகுத்தன. மரமே, நீ மேலோங்கிப் பூத்துக் கனியச்செய்தது எது?
நான் மலர்வது மகிழ்வால்; கணிவது கனிவால் . என் மலரழகு மலர் மணம், கனிரசம் எல்லாம், உலகிற்குத்தரும் மகிழ்வால் செழிக்கிறேன்.

- 21 -
கடவுளே, நீ மனிதனுக்கு வகுத்த வழி எது?
மனச்சாட்சி; மாசற்ற மனமே, மனிதனுக்கு வழிகாட்டி. வேதம்,கீதை, பைபிள், குரான், யோகசித்தி-எல்லாம் மனச் சாட்சியின் வாசகமே;
மனச் சாட்சியே, உன்வழி எது?
என்வழி தூய்மை, அது மட்டும் போதுமா?
ஆம்; தியானத்தால் மனத்துரய்மை, வாய்மையான இன் சொல்லால் மொழித்துரய்மை, அருட்பணியால் காயசுத்தி ஏற்படும். தூய்மையால் வாய்மை, அதனல் மனத்திட்பம், அதனுல் அன்பு, அருள், அடக்கம், பொறுமை, ஒருமை எல்லாம் வரும்.
மனச்சாட்சியே, உன் வழியே வழி !
29. கொடு கொடு கொட்டு!
ஜோர் ஜோர் ஜோராகக் கொடு "தட தட” என்று பொழிகிறது வான்மழை. "கொடு, கொடு, é5-é54வென்று கடவுள் பெயரால் கொடு' என்கிறது மலையருவி, 'பயிர்களுக்கும் உயிர்களுக்கும் பாய்ந்து பாய்ந்து கொடுப் போம், ஓம்.ஓம்' என்று பாடுகிறது, ஆறு. “ஹே மனிதா, என் ஆவியைச் சூரியனுக்குக் கொடுத்து, மழை பொழியச் செய்கிறேன்; உன் ஆவியை உலகாலயப்பணிக்குக் கொடு, கொடு ' என்கிறது, அலைகடல். அலை மீண்டும், மீண்டும் கரையில் வந்து மோதி ஒரு சுழிப்புடன் செல் கிறதே, அதன் பொருளென்ன ? "உலகம் சுழி, உலகச் செல்வ மெல்லாம் சுழித்துப் போகுமப்பா ”, “உன் கட்

Page 15
- 22 -
டிடங்க ளெல்லாம் மணல் வீடுபோலக் காலக்கடலில் கரைந்துபோகும். உள்ளபோதே கொடு, கொடு ' என் கிறது அலைகடல், இந்தச் சோலை மலர்களெல்லாம் அழகை யும் மணத்தையும் காற்றிற்கு அள்ளித் தருகின்றன. காற்று உலகிற்கு அள்ளித் தருகிறது. இரத்தினம்போன்ற இந்த மாங்கனிகள், மரகதப் பந்துபோன்ற பலாக் கனிகள், தங்க மான வாழைக்கனிகள்; எல்லாம் "ஈகை, ஈகை, ஈகையே வாழ்வு" என்று தம்மையே நமக்குத் தருகின்றன. . தாயின் தியாகத்தால் சேய் வளர்கிறது. அன்பின் தியாகத்தால் உயிர்க்குலம் வளர்கிறது. இதுவே, ஜீவநதியின் அகண்ட கீதம். “ஈவோம் ஒம்! "
30. என்மனம் உருகுகிறது
உலகைக்கண்டு என்மனம் இளகி உருகுகிறது. நீ உல கெங்கும் யாதுமா யிருந்தும் உலகம் உன்னை யறியவில்லையே? . உன் பெயரால் வரும் குருமார்களுக்குப் பின்னும் பிரிவினைக் கோட்டைகளே எழுந்தன. ஒவ்வொரு கோட்டை யிலும் ‘எனதே, யானே" என்னும் பீரங்கிகள், மற்ருெரு கோட்டையை நோக்கி ஆசையானவக் குண்டுகளே வீசு கின்றன. கடவுளுக்கும் உலகான்மாவுக்கும் இடையே இந்த ஆணவக்கோட்டைகள் நிற்கின்றன. ஆண்டவனே! ஒரே வான்குடை நிழலில் ஒரே கடவுளான நின்னை உணர்ந்து வாழலாகாதா ? உன்னை மறந்து சுயநலக் கோட்டைகளில் ஆணவமாயங்களை வணங்கித் திரியும் மாந்தரைக் கண்டால் என்மனம் இளகி உருகுகிறது, !
31. பரிதாபம்.
இரண்டு சாளரங்கள் வழியே உலகைப் பார்க்கிறேன். அதோ, கருப்புச் சந்தை வெள்ளைக் குல்லாப் பணக்காரன்,

- 23
சாக்கடைச் சுகத்திற் பணத்தைக் கொட்டுகிருன்; ஆடல் பாடல். அமளியில் பணப்பை துள்ளி விளையாடுகிறது. தொந் தியைத் தூக்கி நடக்கமுடியாதவன் பண மூட்டைமேல் படுத்து உறங்குகிறன். பட்டும் சாயமும் பொன்னும் வைர மும் கொண்டு மினுக்கும் குரலுக்கும் சிலம்புக்கும் ஆயிரம் ஆயிரமாகக் கொட்டுகின்றனர். இரண்டுமணி நேரம் குரலை அசைத்தால், இரண்டாயிரம் மூவாயிரம் ; நாளெல்லாம் வேர்வைசொட்ட வேலை செய்கிருன், வயல் வரப்பில்; பட படக்கும் வெயிலில் விறகுசுமந்து வருகிறது, ஒரு ஏழைக் கடவுள். துரசி படர்ந்த சாக்கடை ஒரத்தில் இடியாப்பக் கடை வைக்கிருள், ஒரு பராசக்தி. கரும்புத் துண்டுகளை யும், அவித்த சீனிக்கிழங்குகளையும் வைத்துப் பசியோடு வருவோர் போவோர் முகத்தைப் பார்க்கிருள், ஒரு சக்தி. ஐயோ, பசியுடன் போராடும் ஏழைகளைக் கண்டால் என் மனம் வெடிக்கிறதே; பன்னிரண்டு மணி நேரமும் வேலை செய்யக் காத்திருக்கும் ஒரு ஏழைக்கு, ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருக்கிறதே. அந்த அலங்காரக் குரலுக்கும் இந்த நெற்றி வேர்வைக்கும் எவ்வளவு வேறுபாடு! "ஈசனே, உன் உலகில் எத்தனையோ தொழில்களுண்டு; ஒவ்வொரு கையும் நேர்மையான தொழில் செய்து பிழைக்க வேண்டும்; வேலைக்கேற்ற கூலி தரவேண் டும்; உழைத்தவனுக்கே உண்ண உரிமை, உள்ளக் கடவுளே உழைப்பாளிக்கு உதவு!"
32. கவியின் கண்ணிர்
காதலா, உன் அன்பு என்னைக் கொள்ளைகொண்டது; உன் எல்லையற்ற அழகை, எல்லையற்ற காதலால் அள்ளிப் பருகினேன் அந்த ஆனந்தம் கவியாக மலர்ந்தது; நீ அருண

Page 16
一24一
கல்யாணியின் பொன்நகையாகக் கிளம்பிக் கதிர்விரித்து, உலக ஒளியாக விளங்குகிருய். உன் பொலிவு ஒவ்வொரு மலரிலும் புன்னகைக்கிறது; என் கவிவண்டு ஒவ்வொரு மலரிலும் தேன்பருகி, உன்னைப் பாடுகிறது. குழந்தைப் பருவம்முதல் உன்னைப் பாடி வருகிறேன்; வாலிபத்தில் என் காதலெல்லாம் கவிதையானது; உனக்காக எத்தனை மாலை கள் தொடுத்து வைத்தேன்; என் கவிமாலைகளை வேறு யாருக்குச் சூட்டுவது? உலகம் என்னை அறியவில்லை; "இதென்ன கவி' என்றனர் சிலர்: சிலர், "பழங்கவிகள் இருக்கப் புதுக்கவி எதற்கு? என்றனர். பண்டிதர்கள், தளை எண்ணிப் பார்த்தனர்; எல்லாம் சரியானுலும், ஏற்கவில்லை. காதலா, உனக்குக் கவிமாலை தொடுத்தே நாளைக்கழித்து முதிர்ந்தேன்; என்கண்ணிரால் இதை வாடாமல் வைத்துக் கொண்டு இருக்கிறேன்; கவிக்கு உலகம் தரும் பரிசு, வறுமை தான். என் உடல் வறுமையால் வாடினும், என் உள்ளம் "உன்னைப் பாடும் செல்வமே போதும்" என்கிறது. என் கவியை மாதவி மாலைபோல் விலைகூற விரும்பவில்லை; நான் வறுமையால் வாடினுலும், உன்னைப் பாடிக் கொண்டே வாட்டந்தீர்வேன்; என் கண்ணிரை ஊற்றிக் கவிப் பயிரை வளர்த்து, அதன் கனியை உனக்கு நிவேதிக்கிறேன். காதலா என் அன்புக் காணிக்கையை ஏற்கலாகாதா?
33. இரக்கம், இரக்கம்
வெயிலில் அந்த மணிலாப்பயிர் வாடியதைக்கண்டு என் மனம் வாடியது: அதன் பசி தீர, தண்ணிர் பாய்ச்சியபிறகே என்பசி தணிகிறது. அனதைக் குழந்தை ஒரு தகரக்குவளை யைத் தட்டிக்கொண்டு, "அம்மா, பசி. அம்மாபிச்சை' என்று அலறுகிறது; என் உள்ளம் துடிக்கிறது: “வாடா

- 25 -
குழந்தை, உடம்பில் எவ்வளவு அழுக்கு: எண்ணெய் தேய்த்து நீராட்டுகிறேன்; இந்தப் புதிய ஆடையை அணி, என்னு டன் உட்கார்ந்து சாப்பிடு; குழந்தாய், அந்தப் பள்ளிக் கூடத்தில் படி. குழந்தை படிக்கிருன், வளர்கிருன், அறி வாளியாகிருன்; அவனுக்கு என் உள்ளத் துடிப்பைச் சொல் லுகிறேன்; அவனை யோகதீரனுக்குகிறேன். என் உள்ளம் மகிழ்கிறது; அந்தராத்மா, 'நீ ஒரு பெரிய நன்மையைச் செய்தாய்' என்று மெச்சுகிறது. பயிருக்கும், உயிருக்கும் இப்படிச் சேவைசேய்யும் அருளும் பொருளும், அன்பும் இன் பமும் வேண்டும். "இறைவனே, இரக்கம் என்னை உண்கிறது; என் இரக்கம் அருட்பணியாகப் பழுக்க அருள்புரிவாய்; என் கண் உள்ள மட்டும் நான் காணும் உலகிற்குத் தொண்டு செய்யும் இன்பத்தை அருளாய்'
34. என் குடும்பம்
என க் கு முத்துவிழா நடக்கிறது "எழுபதாண்டுக் கொண்டாட்டம் நடக்கிறதே, உமது மனைவி யார்? என்று கேட்கிருர்கள். ஆம், எனக்குஒரே மனைவி சமயோகம்; எட்டு வயது முதல் அவள் என்னுடன் வாழ்கிருள்; அவளை எனக்குத் தந்த மகான், ஞானசித்தர், அவளைந் தாரை வார்த்தவர் மகரிஷி பூர்ணுனந்தர். யோகம் என்னைப் பிரிந்ததேயில்லை. இரவும் பகலும் என்னுடன் இணைபிரியாது வாழ்கிருள். நான் உலகில் ஊடாடிச் செயல் புரிந்தாலும், உள்ளத்தில் கடவுளை அன்பு செய்தாலும், மனதை அடக்கித் தியானம் செய்தாலும், அவள் என்னுடனேதான் இருக்கிருள்; என் ஒவ்வொரு மூச்சும் பேச்சும், செயலும் நினைவும் அவளால் இயங்கும். எட்டு வய தில் எங்கள் இருவருக்கும் ஒரு அருட்குழந்தை பிறந்தது. அதுவே கவிதை, கவிச்செல்வியை நான் அருமையாக வளர்த் தேன். பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்ததுபோல் அவள்

Page 17
ー26ー
என் ஆத்மவனத்தில் மலர்கொய்து அன்புமாலை கட்டி என் அந்தர்யாமியான சுத்த பரமாத்மனுக்கே அணிவித்தாள். அவனையே காதலித்தாள். யோகம் அவளே அப்படி வளர்த் தாள். பன்னிரன்டு வயதில் எனக்கொரு பையன் பிறந்தான்அவன் பெயர் வசனம்; அவன் என் ஊகத்தில் ஏறி உல கெல்லாம் ஓடி விளையாடுகிருன்-உலக இலக்கியங்களெல்லாம் அவனுக்கு நண்பர். பல மொழிகள் கற்ருன். அந்தந்த மொழி நயங்களையெல்லாம் வடித்தெழுதினன். எங்களுக்கெல்லாம் ஒர் அழகிய சோலை உண்டு; அதுவே பைந்தமிழ்ச் சோலை. அதில் தொல்காப்பியம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை, கம்பராமாயணம், திருக்குறள், தேவாரம், திருவாச கம், திருமந்திரம், திருப்புகழ், போன்ற சில கற்பக மரங்கள் பூத்துப் பழுத்துப் புலமைப் புட்களுக்கு விருந்து அளித்தன. அதில் வேலியில்லாமல் திருட்டுப்போனது. காப்பாரின்றி முள்ளும் புதரும் அடர்ந்தன. நானும் என் மனைவியும் என் மகள் கவிதையும் என்மகன் வசனமும் புதர்நீக்கி உழுது, உரம்போட்டுப்பாடுபட்டு ஆயிரம் கனிமரங்களை நட்டோம் அதற்குத் தண்ணிர் பாய்ச்ச ஒரு பம்புசெட்டு வைத்திருந் தோம். அதுவே, பவுண்டன் பேன. இதுவற்ற ஊற்று. இந்த ஊற்றுப் பொசிந்து பூத்த மலர்களும், காய்த்த கணிகளும் பல; பல கனிகளைப் பறவைகள் கொத்திச் சென்றன. மீதமுள்ள கனிகளைத் தமிழருக்குத் தந்துள்ளேன்.
35. நானும் யோகமும்
நானும் யோகமும், ஜீவப் படகில் ஏறிக் காலவெள்ளத் தில் செல்கிருேம், வாலிபத் துறையைத் தாண்டினுேம் . 'நீ யார்? எதற்காக இந்தப் படகேறி எங்கே செல்கிருய்?" என்ருெருவர் கேள்வி கேட்டார். என்னைப் பற்றிய இந் தக் கேள்விக்கு நானே பதிற்சொல்ல முடியவில்லையே..!!

என்று திகைத்தேன். கேள்வி கேட்ட ஞானியே, ரமண மகரிஷிகள்; அவர் எங்களை ஒரு குகையில் அமர்த்தினர்; யோகமும் நானும் விருபாட்சிச் குகையில் நிட்டை கூடி ணுேம். உள்ளம் திறந்தது; உள்ளத்தில் "அஹம், அஹம்,." என்று துடிக்கும் ஒன்றே, நான். அதில் நானுயிருப்பதே இன்பம் என்ற அறிவு மலர்ந்தது; மீண்டும் படகேறி முன் சென்ருேம். சாக்ஷாத் கிருஷ்ண பகவானே முன்வந்து பகவத் கீதையை என்கையில் தந்து 'இதைக்கற்று நில்' என்ருர். எங்கே நிற்பது?" என்று திகைக்கும்போது, “இங்கே நானிருக் கிறேன்" என்று பூரீ அரவிந்தாசிரமத்தைக் காட்டினர். அரவிந்தர் புன்னகையுடன் என்னை அன்பாக ஏற்றுத் தமது திருவடியில் அமர்த்தினர் . இருபத்துமூன்று ஆண்டுகள் மகாதுரியசமாதி மெளனத்தில் ஆழ்ந்து பல சித்திகளை அடைந்தோம் - அப்போது என்செல்வி கவிதை, யோகக் கலையை மணந்து ஓர் அற்புதக் குழந்தையைப் பெற்ருள்: அதுவே பாரத சக்தி . பாரத சத்தியுடன் நானும் யோக மும் உலகயாத்திரைக்குக் கிளம்பினுேம்.
36. உலக யாத்திரை
நான் எங்கே சென்ருலும் "என்னைப் பார்" என்று முன்னே நிற்கிருய்; இந்தியாவின் ஆற்றேரங்களில் நீ பசு வனமாக நிலவுகிருய்; இமாலய உயரத்தில் சிவலிங்கமாகக் காட்சியளிக்கிருய், ரிஷிகேசம் சர்வமத சபைக் கூட்டத்தில், தலைமைவகித்து என்னைப் பார்க்கிறேன்; நீயே தலைமை வகிக் கிருய் சுற்றிலும் பார்க்கிறேன், நீயே ஒவ்வொரு மதத்தின் உள்ளமாகக் காண்கிருய்; வேதஞானமும், புத்ததருமமும், கிறீஸ்துவின் மலையுபதேசமும் ரசூலின் பக்தியும் நீயே, கண்டி, கதிர்காமத்தில் உன்னையே புத்தணுகவும் முருகனக

Page 18
- 28 -
வும் காண்கிறேன். மலேயாவின் ரப்பர் தோட்டங்களில் பால்வடிக்கும் கூலிக்குடிலில் உன்னைக் காண்கிறேன். பினங்கு மலைமேலுள்ள புத்தர் கோவிலிலும் கோலாலம்பூர் சுத்தசமா சத்தின் பிரார்த்தனைக் கூடத்திலும் உன்னையே காண் கிறேன்: சிங்கப்பூர் துறைமுகத்தில் நீயே உலகக் கப்பல் களை ஒட்டிக் கிழக்கையும் மேற்கையும் இணைக்கிருய், பாங் காக்கு மரகதபுத்தர் கோவிலில், சைகோன் மாதா கோவி லில் நீயே இனியகீதம் பாடுகிருய்; ஹாங்காங்கிலிருந்து கான்டன்செல்லும் வழியெல்லாம் உன் அலங்காரப் பவனி யைக் காண்கிறேன்; அழகான ஜப்பானில் ரோஜா முகங்க ளுடன் நீ புன்னகை புரிகிருய்: தோகியோ கல்லூரியில் நீயே அறிவுச்செல்வம் பொழிகிருய், ஒஸாகா உபவனத்தில் உன்னுடன் தியானிக்கிறேன். கெய்ரோ பிணக்கோபுரங் களில் நுழைகிறேன்; 'இந்தப் பெயர் வடிவில் யார் உலாவி யது?’ என்று கேட்கிருப்: கோடிக் கோடிப் பெயர் வடிவு களில் உலாவியது ஒன்றே, அது நானே - உன்னுள்ளும் நானே. 'என்கிருய்; நண்பனே, ரோமில் வாடிகனின் அழ கிய சிற்பச்செல்வத்தை வியந்து பார்க்கிறேன். இந்தச் சிற் பத்தை யார் எழுதியது? மைகேல் ஆஞ்சலு, ரஃபேல் அவர்கள் உடல் மண்ணுனதே அதனுள் யார் இந்தச் சித்திரங்களை ஊகித்தது?. 'நானிே ஊகித்தேன். நானே எழுதினேன்; மைகேலும் ரஃபேலும் 3லிபித்தனர் *6ரன் கிருய்; ஜெனிவாவின் அழகான லெமோன் ஏரியிற் பொங்கி அடிக்கும் நீர்ப்பொசிப்பை ஒரு ரோஜா வனத்தினின்று பார்த்துக்கொண்டே சமாதியில் ஆழ்கிறேன், கண்களைத் திறக்கிறேன்; சுற்றிலும்கூடிய ஆண்களும் பெண்களும் என் னுடன் அளவளாவுகின்றனர் 'இந்த அற்புதமான பொங் கூற்றின்முன் நானே இந்த நண்பராக உன்னுடன் அன் பாடுகிறேன்." என்கிருய், ஜூரிச் சர்வகலாசாலையைச்

- 29 -
சுற்றிக் காட்டி, 'நானே இங்கே ஆசிரியர் உனதுநாட்டில் இந்த மாதிரிக் கல்விமுறையை நாட்டு" என்கிருய்; பெர் லின் ஆபராவில், ரோமியோ ஜூலியத் நடக்கிறது. இருவர் உள்ளத்தில் காதலாகக் கூடுவது நானே என்கிருய்; யூக் ரேன் மாதருள் உன்இன்பமே நடனமாடுகிறது; மாஸ்கோ அரங்கத்தில் எத்தனை நாமரூப பேதங்களுடன் நீயே விளை யாடுகிருய்! கிரெம்லின் காட்சிச்சாலையில் பொன்னும் நவ ரத்தினங்களும் பொலியும் அழகான உருக்களும், பாத்திரங் களும் காண்கின்றன; ஜாரின் சாராயக்கோப்பை நவரத் னப் பொன்மயம். அவன் பைபிள் தங்கமயம்; அதைப் படித்தவன் எங்கே, கோப்பையில் சாராயம் குடித்தவன் எங்கே? இந்தப் பொருள்களை நுகர்ந்தவன் எங்கே? லெனின் கிராடின் அற்புதமான கலைக் காட்சியைக் கண்டு இன்பச் சிலிர்ப்படைகிறேன்; இந்தக் கலைவடிவங்களின் அழகு, என் எழிலின் விளக்கமே' என்கிருய் பீடர் ஊற்றுக்களில் உன் ஆனந்தமே பொங்கிப் பொசிகிறது; பாரிஸ் பிரெஞ்சு அகா தெமியிலும் சோர்போனிலும் நீயே கலைவடிவாக விளங்கு கிருய்; லண்டன் வெஸ்ட்மினிஸ்டரின் சிற்பச் செல்வங்களில் உன் எழில் குலுங்குகிறது. சிகாகோவின் அருகே யுள்ள ஆர்கான் விஞ்ஞானச்சாலையில் நீயே அணுசக்தியை உண் டாக்குகிருய்; ருத்ரனெ உன் சக்தியை ஆக்கவேலைக்கே ஊக்கு; அரக்கர் கையில் அணுக்குண்டைக் கொடுத்து அழிவு நடத்தாதே; உலகமெல்லாம் உன்மயம்; உள்ளதெல்லாம் நீயே, ஓம் சுத்தசக்தி" பரமாத்மனே, வணக்கம் W
37. இந்த உடல்
இந்த உடலைப்பூண்டு உலாவுவோன் யார்? இதில் குழந் தையாக இருந்தும், வாலிபன க வளர்ந்தும், கவியாகப்

Page 19
பாடியதும், யோகியாகத் தியானித்ததும், யோக சமாஜம் நாட்டியதும் யார்? இன்று எழுபதாண்டு விழா யாருக்கு? எதற்கு எழுபதாண்டு? உள்ளப் பெருமானே, உனக்கா, எனக்கா? நான் யார்? நீயின்றி நானுண்டோ? உனக்கும் எனக்கும் வயதேது? பிறப்பேது, முதுமை ஏது? நான் இந்தச் சட்டை பூண்டிருக்கிறேன்; நீ என்னைப் பூண்டிருக்கிருய்; நான் உலாவுகிறேன், தொழில் செய்கிறேன்; நீ சாட்சி யாகப் பார் த் து க் கொண்டிருக்கிருய்; எதற்கு எழுப தாண்டோ, அது அழிவது; உனக்கும் எனக்கும் அழிவேது? உன்னையும் என்னையும் பிரித்துவைத்த மாயத்திற்கே எழுப தாண்டு; இந்த எழுபதாண்டுக்கு வந்த இன்பதுன்பங்களெல் லாம் மாயத்திரையாட்டமே ஹா, ஹா ! இந்த மாயம், எத்தனை பெயர் வடிவு, எத்தனை நிறங்களாக என்னை மயக் கியது - 1 ஐம்புலன்கள் வழியே மனதிற் புகுந்த மாயம், இரவையும் பகலையும் என்முன் எத்தனை நவரச நடனக் குலுக்குடன் விளையாட்டியது . எனக்கு வந்த ஆயிரம் இடர்களையும், துன்பங்களையும் கவிதையாகக் கோத்து' உனது நித்திய சுருதியை வைத்து ஒவ்வொரு மூச்சுடனும் பாடினேன்; எத்தனை கனவுகளைக் கோத்து இந்த ஜபமாலை ஆக்கினேன் இதன் ஒவ்வொரு மணியும் புதுப்புதுப் பண் களை உயிர்த்துக்கொண்டே என் சிந்தையில் சுழல்கிறது.
38. ஆண் - பெண்!
இது ஆணும், அது பெண்ணும்; இதற்கொரு வடிவம், அதற்கொரு வடிவம், இதற்கு வேட்டி, அதற்குப் புடவை; இதற்குச் சட்டை, அதற்கு ரவிக்கை. இதற்கு தாடி, மீசை, சிகை; அதற்குக் கூந்தல்; இதற்குப் புன்னகை, அதற் குப் பொன்னகை; இது டக், டக்' என்று நடக்கிறது.

- 81 -
அது, "ஜல், ஜல்" என்று சிலம்பு குலுங்க நடக்கிறது. இதன் குரல் கம்பீரம்; அதன் குரல் கம்பி; இது காளை நடை, அது அன்னநடை; இது ஆற்றெழுக்கு, அது நீர் வீழ்ச்சி; இது உணர்ச்சிக் கனல், அது உணர்ச்சிப் புயல்; ஆனல் இதற்கொரு உள்ளத்துடிப்பு, அதற்கொரு உள்ளத் துடிப்பா? கண், காது, மூக்கு, கை, கால், குடல், நரம்புஎல்லாம் ஒன்றுதானே ? இரண்டின் அந்தக்கரணத்துள் ளும் ஒரே ஆன்மா ஒரே ஆன்மாவை ஆளுவதும் ஒரே பரமாத்மாவான நீயே; ஆண்டவனே, நாணுகிய நீயே, அவளாகிய பெண்ணும்; மனக்கண்ணுடியை உள்ளே திருப் பினல், வேறுபாடு ஒழியும்; அதை வெளியே புலன்கள் வழியாக நீட்டினல், வேறுபாடு; அந்தக்கரணத்தை தாண் டினல் அனைவரும் ஆன்மா . ஆண்டவனே, இந்த ஆத்ம ஞானம் இல்லாமல் எத்தனை வேறுபாடுகளைக் கற்பிக்கின் றனர்.? எத்தனை கட்டுக் கதைகள் புனைகின்றனர்? ஆணும் பெண்ணும் ஆன்மநேய ஒருமையுடன் வாழும் நாளைக் கொண்டுவர மாட்டாயா? ஒரே சுத்தான்ம சக்தியே ஆணுடல் போர்த்து சுத்தான்ம சக்தியைப் பெண்ணுகக் காதலிக்கிறது; அதுவே பெண்ணுடல் போர்த்து, ஆணுடல் போர்த்த சுத்தான்ம சக்தியைக் காதலிக்கிறது; இந்தக் காதல் பரமாத்மக் காதலாகப் பழுக்க, உள்ளிருந்து, நீ தூண்டாயா, வேண்டாயா..? இந்த ஒருமை வந்து விட்டால், உலகவாழ்வு யோகவாழ்வாகக் கனியுமே!.
39. இரண்டும் என்னுள்!
என்னுள், நான் பெண், நீ ஆண்; நான் உன்னையே காதலித்து உருகி நிற்கிறேன்; நீ என் காதலைச் சோதித்து ஆயிரம் துன்பப் புயல்களை எழுப்புகிருய்; திடீர், திடீரென்று புதுப்புதுக் கவலை அலைகளை வீசுகிருய்; சத்தியமாகச் சொல்

Page 20
-32 -
கிறேன், ஆண்டவனே, உன் னை த் தவிர வேறு எந்த ஆணையோ பெண்ணையோ நான் காதலித்ததில்லை; மன்ம பாணம் என்கிருர்கள்; அது இன்னதென்பதே எனக்கு தெரியாது; உனக்காக நான்  ைந ஷ் டி க பிரம்மச்சரியம் பூண்டேன்; நீ அல்லது தனிமை; இதுவே என் வைராக் கியம்; என்னுள் ஆணுகிய நீ உலகில் மினுக்கும் பெண் மாயத்தில் ஒருநாளும் மயங்கமாட்டாய்; இதையறியாமல், என்னென்னமோ உளறுகிருர்கள்; கதைகட்டுகிருர்கள். என்னைச் சுற்றி இருபாலாரும் வாழ்கிருர்கள்; இருபாலாரும் உன்பால் அன்புகொண்டு வாழ்கிருர்கள்; ஆண்டவனே, சாதி-மதம், நாடு, நிறம், பால் வேற்றுமைக்கு அப்பால் அன்புரிமைகொண்டு யோகசமாஜத்தொண்டு செய்யும் உள்ளன்பரை எனக்குத் தா! பெண்மையே, உன்னைப் பரா சக்தியாக வணங்குகிறேன். உலகின் முட்டாள் கதைகளை நம்பாதே; நீயும் யோகம் பயில்; நீயும் தியானசீலத்துடன் வாழ்; நீ யோக சமாஜத்தின் அன்னை.மனிதா, அன்னையை என்ன நினைக்கிருய்; உன் கண்களை உள்ளே திருப்பி, அந்தக் கரண சுத்தியுடன் பார்; பழைய மூடக் கட்டுக்கதைகளை இன்னும் கட்டியழுதுகொண்டே சீர்திருத்தம் பேசுகிருயா? . முதல் திருத்தம், விகார ஜயம்; இரண்டாவது, ஆண் பெண் இருபாலாரும் யோகசித்தி பெற்று வாழ்வது; யோகமே உலகின் உயர்வு; யோகசித்தி பெற்ற ஆணும் பெண்ணுமே உலகில் வானரசு நாட்டமுடியும்.இதை நன்கு உணர், உலகமே, உன் கட்டுக் கதைகளைக் குப்பையில் எறி.!
40. சிவகாமம்
பிள்ளைப் பிராயத்திலேயே என்னை ஆட்கொண்ட சுத்த சக்திச் சுடரே, உனக்கு வணக்கம்! சிறுவயது முதல்,

سے 38 سے
இன்று வரையில் எனது பிரமசரியத்தைக் காத்துவந்த சுத்த பராசக்தியே, உனக்கு வணக்கம் ! பெண்களை உன் மயமாகப் பார்க்கும் மாசற்ற உள்ளத்தைத் தந்த ஞானேஸ் வரியே, உனக்கு வணக்கம் ! எத்தனையோ மாயவலைகள்
அபாயமாக வந்து மோதினும் எதிலும் சிக்காத ஆத்ம
வீரத்தைத் தந்த வைராக்கிய சக்தியே, உனக்கு வணக்கம்!
இனியும் என் வாழ்வெல்லாம் யோகத்திலும், மகாதுரிய
சமாதியிலும், மகா காவிய மாலையிலும் செல்லவருள்! மற்ற
எந்த வேலையும் எனக்குப் பிடித்ததில்லை; கவிதையும்
யோகமும் எனது நெஞ்சத் துடிப்புகளாக்கின; உலகின்
அழகைக் காண்கின்றேன் . அழகில், சுத்தசக்தியின் புன்
னகை தவழ்கிறது. பெண் அழகு புடவை, நகை, பூச்சுக்
களில் இல்லை பெண்ணின் உள்ளத்தில் பராசக்தி அழ
கையே வணங்குகிறேன்; ஆணழகில் இந்திரனை, சிவனை,
முருகனைக் காண்கிறேன். ஆண்-பெண் அழகைவிட ஆயிரம்
மடங்கு இன்பமளிப்பது, மலையழகு. பலநிற மலர்கள்
பூத்து, நீர்வீழ்ச்சியின் ஓங்காரத்துடன் பொலியும் குற்ருலம்,
சிவசமுத்திரம், பாணதீர்த்தம், இமாலய நீர்வீழ்ச்சிகள்,
சுவிற்சர்லாந்து மலையருவிகள்,நயகாரா நீர்வீழ்ச்சிகளைப் பார்க்
கப் பார்க்கப் பரவசமாகிறது. நீர்வீழ்ச்சியில் உதயகுரிய
னின் கதிர்கள்பட்டு ஏழுநிறத் துமிகள் தெறித்து வானவில்
தோன்றும்போது, என்னுள்ளம் பூரிக்கிறது; ஒரு பெண்
னின் இனியகுரல் என்னை மயக்கவில்லை. நீர்வீழ்ச்சியின் ஒங்
காரத்துடன் சோலைக்குயிலும் கிளியும் மைனுவும் உள்’ ளானும், எனக்குத் தரும் இசைவிருந்தே விருந்து , !
அந்த விருந்தில் எத்தனை புதிய ராகங்கள் எழுந்தன!
சுத்த பரமாத்தனே, என் கவித் துடிப்பை இயற்கையுள்
ளத்துடன் இணைத்து வைத்த உனக்கு வணக்கம், வணக்
கம்.

Page 21
سے 84 ہے۔
41. கட்டற்ற வாழ்வு
கோடி நூல்கள் உள்ளன; வாழ்க்கையின் மர்மத்தைக் கூறுவதாக எத்தனையோ புலவர் மார்தட்டுகிருர்கள்; எல்லாம் இதோ இந்தச் சோலைப் பறவைமுன் தலைகுணிகின்றன. கிளியைப் பிடித்துக் கூட்டில் அடைக்கின்ருன் மனிதன். சுதந்தரமாகப் பழம் உண்டு பண்முழங்கிப் பறந்து திரியும் கிளியும், குயிலும் போல வாழப் பழகவில்லை மனிதன். அவற்றின் கண்ணில் வஞ்சமற்ற தெளிவு ; குரலில் குளிர்ந்த இனிமை; ஒலியில் செருக்கற்ற பண்பாடு; உடலில் நோயற்ற உறுதி; பறவைப் பெண்ணே உனக்கு யார் ஜாதகம் கணிக் கின்ருர்கள் ? . மீ, சகுனம் சடங்கு பார்த்தா வாழ்கிருய்?. நாள் நட்சத்திரம் பார்த்தா கூடுகிருய்? உனக்கு நோய் உண்டா, மருத்துவர் உண்டா ? தாய்ச்சி உண்டா ? நீ புட் டிப்பால் குடிக்கிருயா ? . சட்டிச் சமையல் உனக்குண்டா? நீ பிறக்கும்போது, யார் புண்யா போஜனம் செய்தது? நீ இறக்கும்போது, பாடையும் பிலாக்கணமும் உண்டா? ஏ, பெண்கிளியே, உன்கணவன் இறந்தால் உனக்கு முக் காடும், மூலைகாத்தலும் உண்டா? உன்னை யாராவது மொட் டைச்சி, அபசகுனம் என்பதுண்டா? நீ இன்னெரு காதலனு டன் வாழத் தடையுண்டா? புள்ளம்மா, சுதந்தரமாகத் துள்ளம்மா ! நீ என் உள்ளம்மா 1 வாழும் வ& கயை விள்ளம்மா !
42. பாட்டின் உயிர்
உலகில் ஆயிரம் நதிகள் உள்ளன; கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணு, காவேரி சிந்து, யாங்டீசிகாங், மிசிஸிபி, அமேஜான், ரைன், ரோன், வால்கா மனிதன் இவற்றிற் குத் தனித்தனிப் பெயர் தருகிருன் எனது நாட்டு நதி

سی۔ 3 --
என்கிருன்; எல்லாம் ஒரே தண்ணீர், எல்லாம் ஒரே உவரி யில் சேர்கின்றன ; பூமியைச் சுற்றிக் கடல் கர்ஜிக்கிறது. மனிதன், "இது என் கடல், இது எனது வங்காளக் கடல் இது அரபிக்கடல், இது நடுக்கடல், இது பிஸ்கிக்கடல். இது வெண்கடல், இது ஜப்பான்கடல், இது சீனக்கடல், இது அத்லாந்திக்சமுத்திரம், இது பசுபிக்சமுத்திரம் இது இந்துசமுத்திரம்" என்று பெயர் முழக்குகிருன் எல்லாக் கடலும் ஒரே உப்புநீர், எல்லாக் கடல்களும் "ஹோ ம்’ என்று ஒரே அகண்ட கீதம் பாடிக் குதிக்கின்றன ஒரே வான், ஒரே சூரியன், ஒரே கடல், ஒரே ஆவி, ஒரே மேகம், ஒரே மழை. மழை வெள்ளம் எத்தனையோ அருவிகளா கின்றது; எத்தனையோ பயிர்களையும் சோலைகளையும் வளர்க் கின்றது. மலர்கள் ஆயிரம் அழகு. ஆயிரம் நிறம், ஆயிரம் மணம்; எல்லாம் ஒரே அமுத நகை, எல்லாம் கணிவைக் கின்றன; கனிகள் பல பல ஆனல் எல்லாம் பஞ்சாமிர்த மாகப் பண்ணினல், ஒரே இனிமை, பூக்கள் பல எல்லாம் முடிவில் உன் வழிபாட்டில் கூடுகின்றன. எல்லாப் பூக்களே யும் என் கவிகளிற் கோத்து, உனக்கு மாலை சூட்டுகிறேன் ! என் கவிகள் பலவகை; தெருப் பாட்டும் உண்டு, தேசப் பாட்டும் உண்டு; கலைப் பாட்டும் உண்டு; இசைப் பாட்டும் உண்டு; சந்தப் பாட்டும் உண்டு; அருட்பாட்டும் உண்டு; எல்லாம் உனக்கே அர்ப்பணம்; என்பாட்டின் உயிர் நீயே; என் வாழ்வெல்லாம் உனக்கே கீர்த்தனஞ்சலி, என் வாழ் வெல்லாம் பாரதசக்தி விளக்கமே; பாரதசக்தி உனது சுத்த சக்தி விளக்கமே; இறைவா, எல்லாம் நீ! பாட்டு, பாட கன், கவிதை, கவிஞன், கவிச்சுவை - எல்லாம் நீயே !
43. f, 鹰撃
“யார் . “ என்று கேட்கிறது அகண்ட வானம் எல்லையற்ற நீலமணிவான இரவில் பார்த்தால், “இதோ

Page 22
- 36 -
நான்’ என்கிருயா? அகண்டாகாரனே, உன்முன் நான் யார் என்று மனம் நாணி நடுங்குகிறது, நட்சத்திரங்களுடன் என் தியானத்தேரும் காலையைநோக்கிச் சென்று அதோ பொன் மயமான உனது தேஜஸில் கலந்துபோகிறது! ஒரு சூரியன் மெல்ல எழுகிறது . கோடிகோடி நட்சத்திரங்கள் இருந்த இடம் தெரியவில்லை. மனம் கோடி நினைவுவானில் சுழல் கிறது. நீ, என் சிதாகாசத்தில் அருட்சோதியாக உதிக்கிருய்; உடனே கோடிகோடி எண்ணங்கள் கனவுபோல மறை கின்றன. "நீ" என்னும்போது, நானே உன்னுள் மறைந்து போகிறேன்; நீ! நீ நீர் எல்லாம் நீ! .
44. இல்லையென்பதும் நீயே
'கடவுள் இல்லை" என்பவர் வெறும் பெயரை இல்லை என்கிருர்கள் . நீ பெயரா, வடிவா? இல்லையப்பா, நீ தில்லை யப்பா! உன்னை மறந்த வாழ்க்கை தொல்லையப்பா இல்லை என்பவர் உள்ளத்திலும் இருக்கின்றேன் என்று பேசவல்லை யப்பா இல்லை என்பாருக்கு இந்த உணர்ச்சிவர வில்லையப்பா! உள்ளம் துடிப்பது யாரால், கண்ணிற் காண்பது யார்? காதில் கேட்பது யார்? சூரியன் எழுவதும் உலகம் சுழல்வதும் காற்று வீசுவதும் யாரால்? ஆகாயத்தில் நடக்கும் ஜோதியற்புதங்கள் யாரால் நடக்கின்றன? . சவமான உடலில் ஜீவன் எப்படி உள்ளது? சிவஞல் உள்ளது. சவத்துள் சிவம் இருந்து ஜீவசத்தி பொழிந்து வாழ்வை இயக்குகிறது; இது தெரியவில்லையா மனிதா? .. உண்டு, உண்டு, ஒரு பொருள் உண்டு; என்னுள் உள்ளது, உணர்கிறேன்; உன்னுள்ளும் உள்ளது; உணர்; உணர், இரவில் நட்சத்திரங்களைப் பார்த்துச் “சூரியன் இருப் பது பொய்; சூரியன் இருந்தால் காட்டு” என்கிருன், பேதை மனிதன். பேதை மனிதா, எங்களுடன் ஒளியைநோக்கி

- 37 -
யாத்திரை செய்; உன் ஆசை ஆணவங்களையெல்லாம் விட்டு வா .. வா .. செல், உடன் . அதோ, காலைச் செம்பொன் முகம் . முகத்தில் முத்துநகை . இருட்பகை மறைகிறது; அதோ, இரவி! ஒளி, ஒளி, ஒளிமயம் .
45. நிவேதனம்
உனக்கு எதை நிவேதிப்பேன்? உலகநாதமே, நான் உனக்கு என்னையே நிவேதித்து விட்டேன்; நான் என் கையில் இல்லை. என் உயிர்ப்பும் துடிப்பும் இரத்த ஓட்ட மும் நினைப்பும் செயலும் பேச்சும் நீயே, சர்வமும் படைத்த உனக்குச் சர்க்கரைப் பொங்கல் இடவா? ஜோதிமயனுன உனக்கு விளக்குக் காட்டவா ? எங்கும் அழகு சொக்கும் உனக்கு மலர் சூட்டவா? "நான் உன்னை அழகு செய்கி றேன். ' என்பதே, அதிகப் பிரசங்கித்தனம் அல்லவா? தேவதேவனே, நான் காணும் மலர்களிலெல்லாம் உன் புன்னகை மிளிர்கிறது. அந்தப் புன்னகை மாலையை உனக் குச் சூட்டுகிறேன்; நட்சத்திரங்களை மணிமாலையாகச் சூட்டு கிறேன்; உலகை உனக்குக் கோவிலாக்குகிறேன்; என் உள் ளத்தை அரியணையாக அளிக்கிறேன்; அரசே, அதில் வீற் றிருந்து என்னை உன் இச்சைப்படி ஆண்டுகொள். எல்லாம் நீ தந்தது; எல்லாம் உனக்கே நிவேதனம்; என்னிடம் உள்ளது இந்த உலகம் தந்த துன்பக் கண்ணிரே கண்ணிர்ந்துளி களை முத்துமாலையாகக் கோத்து உனக்கு அளிக்கிறேன்; ஆண்டவனே, எனக்குரிய துன்பத்தை உரிமையுடன் அளிக் கிறேன் உனக்குரிய இன்பத்தை என்னுள் நிரப்பு: துரய நல்லின்ப ஒளியாக என்னுள் என்றும் எழிலோங்கி வாழ் அப்பனே, சரணம், !

Page 23
- 88 -
46. போர்வெறி எங்கே?
"என் கண்ணே, என் முத்தே, என் செல்வமே. ' என்று உன் குழந்தையைக் கட்டியணைத்துக் கொஞ்சுகிருய். போர்வீரனே, நேற்று நீ பிடித்த துப்பாக்கி எங்கே? நீ போட்ட குண்டு எங்கே? இதைப்போன்று எத்தனை குழந்தை களை நீ கொன்ருய்? உன் குழந்தையுள்ளத்தில் துடிக்கும் ஆத்மாதானே எல்லாருள்ளும்? அந்த ஆத்ம உடல்களைக் கொன்ற நீ, இந்த ஆத்ம உடலைக் கொஞ்சுவதேன்.?
போர்வீரன்: நண்பா, இந்த அன்பு என் இயற்கை; போர்க் களத்தில் நான் காட்டும் பகையும், கொலையும், கொடுமையும் என் பிழைப்பிற்காக, அரசுக்காக, என் வயிற்றுக்காக
நண்பன் : வயிரு, உள்ளமா? நீ அரக்கன, அன்பன?
போர்வீரன்: நான் அன்பு, என்மனம் அரக்கன்; என் அர சன் மனம் அன்பானுல், என்மனமும் அன்பாகும்;. நண்பன் : ஒர் அரசனுக்காகக் கோடி உயிர்கள் சாகின் றனவே, அரசன் அரசனுடன் ஒருகை பார்க் கட்டுமே ? இவனுக்கும் அவனுக்கும் பகையாளுல், ஆயிரக்கணக்காண ஜனங்களைப் போர்க்களத்தில் பலியிடுவானேன்.?
போர்வீரன்: நியாயம், நண்பா.ஆனல் இருவரும் குவித்
துள்ள குண்டுகளுக்கும் வேலை வேண்டுமே.
நண்பன்: போர், குண்டுகளிலில்லையப்பா. மனத்திமிரில் உள்ளது; பேராசையும் பொருமையும் ஒழிந்தால், மனக்கொழுப்பு ஒழிந்தால் போர் ஒழியும்,

போர்வீரன்: ஆமாம் நண்பா, மனப்போரே இனப்போர், மனப்போரே சினப்போர்; இதை அரசனிடம் சொல்லித் துப்பாக்கியை அவனிடமே தந்துவிடு கிறேன்."
47. உலகமெலாம்
உலகமெல்லாம் எதையோ தேடியலைந்தேன். கப்பல், ரயில், விமானங்களிலும் மோட்டாரிலும் எங்கெங்கோ சென் றேன். கிழக்கிலும் மேற்கிலும் ஐந்து கண்டங்களிலும் எத் தனையோ நாடுகளைக் கண்டேன். பல நாட்டினர் பழக்க வழக் கங்களைக் கண்டேன்; பத்துலட்சம் பேர், என்னுடன் கை குலுக்கி நட்புறவாடினர். அவர்கள் பெயர்கூட மறந்து போனது; உருவம்கூட மறைந்தது. நாமரூப பேதங்களெல் லாம் மறைந்தன. ஐந்து கண்டமும் ஐம்பூத விளையாட்டுத் தானே? ஆயிரம் பட்டினங்களைச் சுற்றிக் கண்மூடி உட்கார்ந் தேன். மனத்திரை விழுந்தது. உள்ளம் திறந்தது; பட்பட் டென்று ஒளி மிளிர்ந்தது. 'அன்பா, நீ எங்கெங்கு போனயோ, அங்கெல்லாம் நானே உன்னைச் சுமந்து சென்றேன்;. நீ "அங்கு, இங்கு' என்று தேடியபோது, 'அந்தக் குரு, இந் தக் குரு' என்று அலைந்தபோது, "அட, பைத்தியமே! நான் எட்டடிவீட்டுப் பூசையறையில் இருக்கிறேன்" என் ஒமொலி கேட்கிறது. "இரவும் பகலும் நீ உறங்கினுலும், எனது இதய நடனம் நடக்கிறது; பார் உள்ளே' என்கி ருய்; அகநாயகனே, ஓம் மெளனம் ஓட்டமில்லுைத்தேட்ட மில்லை; நான்-இல்லை, நீ நான், !
48. தேடியதும் கிரீடிமீதும்
ஒவ்வொரு நாளும் உன் அழைப்பு வருகிறது.**இந்த வீட்டை விட்டுச் சுதந்தரமாக வெளியீேசென்று உலாவு

Page 24
- 40 -
வோம்" என்கிருய்; காதலா, இதோ புறப்படுகிறேன்; இந்த வீட்டுக் கூரை வெளுத்துப் போனது; சுவர்கள் கறையான் மேவின; மூங்கில் கம்பங்கள் செல்லரித்தன; இந்தக் குடிலை விட்டு, அகண்ட வெளியிற் செல்வோம்; எங்கே சென்ரு லென்ன, உனக்கும் எனக்கும் நடுவே இந்த மனப்பேய் புகுந்து சேட்டை செய்கிறது. அடக்கி ஒதுக்கித்தள்ளி என்னை அழைத்துச் செல். எனக்கும் உனக்கும் நடுவே, காற்றுக் கூடப் புகாமல் நாம் ஒன்ருகச் செல்வோம்; பின்னே ஒரு பொருமை நாய் குலைக்கிறது; நான் உண்டானபோது நீயும் என்னுடன் இருந்தாய் என்பதை அந்தநாய் அறியுமா? "கண்ணுடியைப் பார்த்துக் குலைக்கும் நாய் நம்மைப் பார்த் தும் குலைக்கிறது; ' நமது மனது தூயது, பயமில்லை. செல் முன்னே; ஊரும் பேரும் என்ன செய்யும்? திற, கதவு; தாண்டு, வாசலை; திரும்பிப் பாராதே; செல், என்பின்னே வா! காதலா, ஊரைத் தாண்டினுேம். காவேரி தாண்டினுேம், திருப்பதி தாண்டினுேம்; இன்னும் எங்கே செல்வது? இதோ கங்கை இதோ கங்கோத்திரி. இதோ இமாலயத்தைத் தாண்டினேம், அடடா, உலகையே தாண் டிவிட்டோமே! காதலா, என்ன வியப்பு! நீ எங்கே ! நீ அருவானுய்! நான் எங்கே? நானும் அருவாகி, உன்னைச் சேர்ந்தேன்; உள்ளே ஒளிந்த உன்னை உலகெல்லாம் தேடி னேன்; என்னைத் தேடவிட்டு நீ உள்ளே சிரித்தாய்; உள்ளே தேடினேன்; ஓம். ஓம்" என்ற உன்குரலைக் கேட்டேன்; "டக், டக்" என்று உன் காலடிச்சத்தம் கேட்டேன்; கத கதவென்ற உன் சைதன்யக் கனலை உணர்ந்தேன் உன் ஒளியைக் கண்டேன், ஒளியிற் புகுந்தேன் என்னையே காணேன் . யானும் நீ, எனதும் நீ; தேட்டமும் நீ, கூட்ட மும் நீ, ஆட்டமும் நீ . அமைதிப் பெருமானே!.

- 4l - 49. ஏதோ கவலை
ஏதோ கவலை விளக்கு எரிகிறது, விழித்திருக்கிறேன்; நீ இருக்கிருய், வீடிருக்கிறது எல்லாம் இருந்தும் ஏதோ கவலை மனத்தில் ஏதோ குறை இந்த மாய மனதில், குண தொந்த அலைகள் கொந்தளிக்கின்றன . அஞ்சாதே என்கி முய்; ஏதோ அச்சம் இந்தப் பேதைமனத்தை வாட்டுகிறது. காரிருள், கார்மேகம் சூழ்ந்த இருட்குகையில் தனித்திருக் கிறேன்; வானம் குமுறுகிறது; "ஐயோ, பயமாய் இருக் கிறதே" என்று பதறுகிறேன். "பயப்படாதே, நான் இருக் கிறேன்" என்று ஒரு மின்னல் நடனமிட்டு என் கண்களைக் கவர்கிருய்; மின்னல் மறைகிறது. கவலையும் அச்சமும் மீண் டும் என் கண்ணைமூடி விளையாடுகின்றன. எப்போதோ நடந்ததெல்லாம் சித்தச்சபையில் அரங்கேறி, ஊழிநடம் புரிகின்றன கண்ணை மூடுகிறேன்; கணவுகளின் களியாட்டம், அமைதியைச் சிதைக்கிறது. மனம் எதையோ நினைத்துத் திடுக்கிடுகிறது; யாரையோ பிரிந்த துக்கம் என்னை வாட்டு கிறது; நிறைவேருத ஏதோவொரு ஆசைபற்றி, மனம் உழல்கிறது; "அப்படி நடக்குமோ, இப்படி வந்தால் என்ன செய்வோம்?' என்ருெரு திருடன் இந்த இருட்டுமூலையில் நடுங்கிக்கொண்டிருக்கிருன். அச்சம், விசனம், துயரம்-இந்த மூன்று பேய்களும் மனக்குகையிற் புகுந்து அமைதியைக் கலக்குகின்றன: ஜபமாலை உருட்டினேன், மந்திரம் போட் டேன், படித்துப் படித்துச் சொன்னேன் பலிக்கவில்லை; அப்பனே அபயமருள். நீயே தஞ்சம், என்செயல் இல்லை. உன் செயலை நடத்து. என்று சரண்புகுந்தேன்.'கட கட கடவுள் உள்ளே கிட கிட தியானத்தால் கடை கடை காண்பாய்' என்று சிரித்தாய்.

Page 25
- 42 - 50. சுயநலக் கும்பல்
நானும் உலகோரைப் பார்க்கிறேன், பார்க்கிறேன்! . என்ன ஏமாற்றம். ஒருவர் வந்தார். "அதைச்செய்வேன், இதைச்செய்வேன், நானே உம் வாரிசு. உமது சமாஜத்தைத் தாரும். அச்சகத்தைத் தாரும், பணத்தைத் தாரும் நடத்துகிறேன், பாரும்” என்ருர், இருக்க இடம் தந்ததும், "எல்லாம் எனது' எ ன் ரு ர். எல்லாரையும் மிரட்டினர், அரற்றினர், மை போட்டார், முட்டையுடைத்தார் 'நீர் இறப்பீர், நானே இங்கே இருப்பேன்" என்ருர், போற்றி னவர் தூற்றினர். சீடன் என்றவன் வேடன் ஆஞன். "ஐயையோ, ஆண்டவனே, இரவும் பகலும் ஊணுறக்க மின்றிப் பாடுபட்டுப் பேணுமுனையில் உன்னை வழிபடுகிறேன். என்னுள்ளம் அறிந்த தியாகி ஒருவனை அனுப்பாயா? எனது யோகசக்தியைப் பெற்றுக்கொள்ளத்தக்க சுத்தாத்மா இல்லையோ? இராமகிருஷ்ணருக்கு, நீ விவேகானந்தரைத் தரவில்லையா? புத்தருக்கு ஆனந்தரைத் தரவில்லையா? காந் திக்கு நேருவையும் படேலையும் தரவில்லையா? நீயே கதி என்று வாழும் எனக்கு இதுவோ விதி? ஏமாற்றமா நீ தந்த பரிசு..இதோ, நீ தந்த மலர்களை நின்னடியிற் குவித் துச் செல்கிறேன். உன் இச்சை நடக்கட்டும் நான் இல்லை, கடவுளே!.நீயே உண்டு.உன் சித்தம் "நடக்க்ட்டும்
51. ஒரு சிற்பி வந்தான்
ஆயிரம் நூல்களை வாரி இறைத்து என்கணக்கை முடி த்துவிட்டேன். இனி நீநடத்தினலொழிய நடக்க முடியாது. உன்குரல் கேட்டாலொழிய எழுந்திருக்க முடியாது. இறைவா, என்னுள் நிறைவாய். அப்படியே அயர்ந்து

- 43 -
போனேன். வந்தான் ஒரு சிற்பி. அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் ஏடுகளைப் பார்த்தான், கோத்தான். மனம் பூத் தான். நண்பரை அழைத்தான், அச்சடித்தான்.உலகுக்குக் கொடுத்தான்.எல்லாம் உன்னருள் விளக்கம், 'கடவுளே, நீ வா என்ருல் வருகிறேன். போ என்ருல் போகிறேன்; உன் குரலுக்காகவே, இந்த மெளனத் தனிமையிற் காத் திருக்கிறேன். உனது திருவருளைத் துணையனுப்பு.'
52, ஏன் அழுகிருய்?.
'குழந்தாய், ஏன் அழுகிருய்?...பிறவியே அழுகையா? தாயின் கும்பியிலிருந்தபோது அழ வில் லை யே ? உலக வெளிச்சத்தைக் கண்டதும், ஏன் அழுகிருய்? உதர வாசத்தைவிட, உலக வாசம் அவ்வளவு பயங்கரமானதா? சகிக்க முடியாததா?.
குழந்தை அம்மா நான் எங்கே வந்தேன்? . உன் இதயக்குகையில் துடிக்கும் சுத்தசக்தி சைதன்யம், என் உள் ளத்திலும் துள்ளிக் குதிக்கிறதே? அத்த உணர்வில் ஒன்று பட்டுப் பேச்சற்ற பேரின்பத்தில் இருந்தநிலை, பிரிந்ததோ?.
குகையின்பம்ே வா. குவா குவாகுவா!
53. நெஞ்சே, அஞ்சேல்!
நெஞ்சே, ஏன் தளர்கிருய்?.தவிக்கிருய். எதையோ பறிகொடுத்து அலைகிருய். குட்டியைப் பறிகொடுத்த பூனை போல் அலறுகிருய். இந்தப பொய்ப்புலன்களை நம்பாதே. புலன்களாற் பார்த்தவை யெல்லாம் அழிந்துபோகும். சாவும், துயரும் தாண்டவமாடும் இந்த உலகில், மன விகாரச் சுழலில் மயங்கியலையும் உயிர்களிடையே, யாதோ

Page 26
سے 44 ہے۔
ஒன்று அழியாது, அனைத்தையும் வகித்து, யாங்கோ நடத்து கிறது. நெஞ்சே, நம்பு. உன்க்கு நீ மாசற்றிரு உன்னுள் அமைதியாய் இரு. சுற்றுலகம் உன்னை மதிக்கவில்லையா?. அறியவில்லையா?. உன்மேல் அபாண்டமான பொய்கட்டி விடுகிறதா?. உன்னைத் தூற்றவே ஒருகூட்டம் புறப்படு கிறதா?. காமவாடையே அறியாத உன்னை இழுக்காடு கிறதா?. கலங்காதே.உள்ளே செல் - உன்னை நீயே சோதி உன்னிடம் பிழை இருந்தால் வருந்து; உன் மனம் தூய தானுல், தைரியமாய் இரு சோதனையும் வாதனையும் உன் மனதைத் தேய்த்துக் களிம்பகற்றும் உபாயமே. நெஞ்சே, பொறுத்திரு. உன்னுள் வீடுகொண்ட ஜீவசாட்சியை நம்பு. அது செல் என்ருல் செல்; நில் என்ருல் நில், அதன்படியே அனைத்தும் நடக்கும். அதுவே உன்னை நடத்துகிறது. அதைப் பின்பற்றி முன் செல், வழியிற் கிடக்கும் நெருஞ்சி முட்கள் குத்தாமல், நம்பிக்கை என்னும் பாதுகையை மாட்டிச் GolfGil...... ...
54. உள்ளே உணர்!
“பிரக்ஞானம் பிரம்மம்.(அறிவே கடவுள்) என்பது ருக் வேதம்." அஹம் பிரும்மாஸ்மி (நானே பிரும்மம்) என்பது யஜுர்வேதம், “தத்வமஸி (அது நீ) என்பது சாமவேதம். அயமாத்மா பிரம்மம்" (இந்த ஆத்மாவே பிரம்மம்) என்பது அதர்வ வேதம். பிரம்மம், கடவுள், நான், தான், அது, ஆத்மா என்பதெல்லாம் மனிதர் தந்த பெயர்களே. பரிசுத் தமான ஒரு பரமசக்திக்கு இப்பெயரளித்தனர் அறிஞர். “ஓம் சுத்த சக்தி” என்பதே அதன் விளக்கம் ஆகும். தூய பொருளின் அருட்சத்தி விளக்கமே, உயிரும் உலகும் ஆகும். தூய சிந்தை, செயல், மொழி, வாழ்க்கையாலேதான் அதை

- 45 -
உணரலாம். அந்த அகண்ட சக்திக் கனலில் ஏற்றிய விளக்கே, ஆன்மா.
55. பசுவைப் பார்!
பசுவைப் பார்! பசும்புல் உண்டு, வெண்பால் அளிக் கிறது யாருக்கு?. கன்றுக்கு1.கன்றைக் கட்டி, மாந்தர் பால்கறந்து உண்கின்றனர். பசு, ஒரு சொட்டாவது குடிக் கிறதா? இல்லை!. கன்றைக் கொன்று மாமிசத்தை உண்டு, தோலில் வைக்கோலடைத்து முன்னே வைத்துப் பசுவை ஏமாற்றும் வன்னெஞ்சரை என்னென்பது? அதையும் பார்த் துக் கண்ணிர் வடித்துக்கொண்டே பசு பாலைச் சுரக்கிறது; மனிதன் கை கறக்கிறது. ஆஹா: சுயநலமற்ற காம தேனுவே, உனக்கு வணக்கம்!. காலை மலரே! உன் அமு தப் புன்னகையை அள்ளிப்பருகி ஆனந்தக் கூத்தாடுகிறேன் உன் உள்ளேஊறும் தேனை நீ, பருகியதுண்டா?. ஓம். ரீம். ஓம்!..!! வண்டுகள் உன்வன்மையைப் பாடித் தேனுண் கின்றன! கடவுளே, எல்லாம் உனது; நீ எல்லாம் தரும் கருணைக்கடல்; அருள்வானமுதம், உனக்கு ஏழை, எதைத் தரமுடியும்?. உன் கருணைக்கு, என்னையே பலியாகத் தரு கிறேன்!.அன்புமயனே, எனது ஜபமாலையை ஏற்றருள்!.

Page 27
- 46 -
அறவோர்
பார்வாழ்க்கை முற்றும் பரமன் வழிபாடாம் பூரண குக் கென்றே புகல்.
சுத்த பரிபூரணரான அறவோர்க்கு இந்தஉலகவாழ்க்கை முற்றும் பரமாத்மாவை வழிபடுவதேயாகும் என்க. அவர் ஒவ்வொரு செயலையும் அனைத்துந் தானன இறைவனுக்கே வேள்வியாகச் செய்வர்.
உள்ளும் புறமும் ஒன்ருய்ப் பரவி, எங்குங் கண்ணுய், எங்குங் காதாய், எங்குங் காலாய், அனைத்துள்ளும் அறிவாய் விளங்குகிருன் இறைவன். ஆணவத்தையும் தனி யுணர்வை யும் அவனுக்கே ஊணுக்கிய யோகியர், "அவனன்றி யாது மில்லை" யென்றறிவர். முக்குணச் சிக்கினிற் பட்டு வருந் தும் மானிடர்க்கு அறிவொளி விளக்கவேண்டியது அற வோர் கடமை; அதற்கே அவர் வாழ்வர். அவர் வாழ்க்கை முற்றும், இறைவனிச்சையை மனித சமுதாயத்தில் நிறை வேற்றும் கர்ம-ஞான-பக்தி யோகமாகும்.
அறிதற் கரிதை யறிந்தறிவாய் மாந்தர்க் கறிவொளி யாவரற வோர்.
அறவோர் அறிவதற்கு மிக்க அருமையான சுத்தான் மாவைச் சாதனங்களால் அறிவர்; தாமே அந்த அறிவுப் பொருளாக நிற்பர். 'அறிந்தால் அது நீ" என்னும் வேதம். அந்த அறிவை மூடிவைத்துக் கொண்டு சும்மா இருக்கமாட் டார் அறவோர்; அவர் உலக மாந்தருக்கு அறிவொளியாக விளங்குவர். அஃதாவது சுத்தான்ம ஞானத்தை மாந்தர் பெற்று இன்புற எங்கும் பரப்புவர்.

- 47 -
தாம் பெற்ற அறிவொளியைக் கொண்டு உலகின் மட மையிருளை யொழிப்பர் அறவோர். ஒரு பரம்பொருளின்" உயிர்ப்பே உயிரினங்களாகும்; உயிர்களெல்லாம் இறைவனில் ஒன்று. யோகசித்திபெற்ற அறவோர் ஆத்ம சாந்தத்தில் நிலைத்து, உலகில் அருட்பணி புரிவர்; உள்ளமைதியுடன் உலகில் உலாவுவர். மனப்பற்றில்லாது மன்னுயிர்க் கிரங்கி, உலகைத் தாம் அஞ்சாமல், உலகம் தம்மைக்கண்டு அஞ்சா மல், நேர்மையும் பொறுமையும் உண்மையும் கொண்டு, அன்பைப் பெருக்கி, ஒற்றுமையை நிலைநாட்டி மனித சமு தாயத்தின் இன்பமே கருதி, ஆத்மஞான விளக்குகள் போல ஊர்தொறும் சென்று பணிபுரிவர் அறவோர்.

Page 28
- 48 - யோக சமாஜம்
யோக சமாஜம் - உலக சமாஜம் ஒம்சுத்த சக்தியின் ஒளிமணிக் கோயில்
தக வாழ்வை நல்ல திருவருட் கலையெனச் செய்திடும் அமுதினை உய்திடப் பெய்திடும்
உலகமே கோயிலாய் உயிர்த்தொகை சாமியாய் நலமதே பூசையாய் நாளெல்லாம் சேவையாய் பலமத ஒருமையின் பண்பினை நாட்டியே பாரத சக்தியின் வீறுபெற் ருேங்கிடும்
பத்தியும் தியானமும் ஞானமும் மோனமும் பண்ணுடன் பணிகளும் எண்ணறு தொழில்களும் நித்தியம் இயற்றியே நிம்மதியாய் வாழும் நேயர் நலம்பெருகும் தூய தவநிலையம் கடவுளே தலைவன், காணிக்கை மனமே கனிமனச் சாட்சியே இனியவுள் ளாசான் கடமையே சாதனம், கருணை நிவேதனம் காணுயிர் களித்தலே கைவல்ய சேதனம்
பலகலை பலமொழி பலமதம் பலதவம் பலநிலை நாடுறு பண்பறி நண்பன் இலகு சுத்தானந்தன் இதயத்தி லெழுந்துல கெங்கிலும் மங்கலம் ப்ொங்கிடப் ப்ொலிவது
ஓம் பரி பூர்ண யோக சமாஜம் பரமாத்ம ஜயம் யோக சமாஜம் விஸ்வாத்ம ஜயம் யோக சமாஜம் ஜீவாத்ம ஜயம் யோக சமாஜம்
ஜயஜய ஜயஜய யோக சமாஜம் ஜயஜய ஜயஜய ஓம் சுத்தசக்தி! ஓம்சுத்த சக்தி ஜயசத்ய ஜோதி ஓம் சச்சிதானந்த பரமக்ருபா நிதி
IGSuit |
[யோ
[யோ
TGuiT1
|யோ)


Page 29

-
قصيدته كي ينظمها سيتم كسيا அச்சகம், ܩ
னம்.
ہیں۔ سمصر سيحیے = با "فیس==
ܬܐ . ܒܵܨܒP E
ட