கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு சிங்கள இதழ்

Page 1
O DES e
 

தர பாண்டியன்

Page 2


Page 3

இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு சிங்கள இதழ்
எம். மோகன சுந்தரபாண்டியன்
விற்பனை உரிமை: அன்னம் (பி) லிட். ,
சிவகங்கை

Page 4
G இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு சிங்கள இதழ்/மோகன சுந்தரபாண்டியன் I முதற்பதிப்பு: ஜூன் 1988 / விற்பனை அன்னம் (பி) லிட் 2, சிவன் கோவில் தெற்குத்தெரு சிவகங்கை/ அச்சாக்கம் அகரம் பிரிண்டர்ஸ், சிவகங்கை விலை ரூபாய் எட்டு அட்டை ஓவியம்: ரகு

என் முதல்நூலை வெளியிடுவதற்கு என்னை ஊக்குவித்த பேராசிரியர் மீரா
என் முயற்சிக்கு அனுமதி வழங்கிய ராவய ஆசிரியர் விக்டர் ஐவன்
என் கையெழுத்துக்கு அச்சுருக் கொடுத்த அகரம் அச்சக உழைப்பாளர்கள்
என் நூல்களை விலைகொடுத்து வாங்கும் அன்பு வாசகர்கள்
என்றும் என் நன்றிக்குரியவர்கள்.
--மோகன சுந்தரபாண்டியன்

Page 5
"இலங்கையில். இனக்கலவரங்கள் எத்தனையோ இடம் பெற்ற வேளையிலும் இடம் பெயராது சிங்களப் பெருமக்களின் பேரன்புக்கும் பெருமரியாதைக்கும் நன்னம்பிக்கைக்கும் உரியவராய். தன்னம்பிக்கையோடு சிங்களர் மத்தியிலொரு சிங்கமென வாழ்ந்து இலங்கை மண்ணில் இரண்டறக் கலந்துவிட்ட எங்கள் தங்கத் தாத்தா' PSKR சிவராமு சேர்வை அய்யா அவர்கட்கு. . மூத்த பேரன் மோகன சுந்தரபாண்டியனின், அன்புக் காணிக்கை

இலங்கை இனப்பிரச்சினையில் *ராவய' - ஓர் அறிமுகம்
O
இலங்கை நாளேடுகள், சஞ்சிகைகள், திரைப்படங் கள், நாடகங்கள் மற்றும் வானொலி உட்பட வெகு சனத் தொடர்புச் சாதனங்கள் பலவும் ஆளும் வர்க்கத்தை திருப்திப்படுத்தும் நோக்கில்செயற்பட்டன. நாட்டில் நிகழ்வன இருட்டடிப்புச் செய்யப்பட்டன இந்நிலையில்- உண்மையை அறிவதற்காக தமிழர் கள் மட்டுமின்றி சிங்களருங்கூட வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களின் ஒலிபரப்பையும், விடுதலைப் புலிகளின் ‘தமிழீழத்தின் குரலையும் ஆர்வத்தோடு செவிமடுத்த காலப்பகுதியில், நாட்டின் போக்கை மக்களுக்குத் தெளிவுபடுத்தி உண்மையான பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கும் உயர் நோக்கில் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் மிக்க சிங்கள இளைஞர்கள் சிலர் சேர்ந்து ‘ராவய என்னும் பெயரில் ஒரு சிங்கள சஞ்சிகையை 1986 ஆகஸ்ட் மாதம் தொடங்கி வெளி யிட்டனர். அரசியல்-கலை இலக்கிய விமசரின மாத இதழான ராவய வின் பிரதான ஆசிரியர் விக்டர் ஐவன் என்பவராவர். இவர் "பொடி அத்துல" என்ற பெயரில் சிங்களமக்களிடை பிரபல்யம் பெற்றவராவர். 1971ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘ஏப்ரல் கிளர்ச்சி" யின் முக்கியமான சந்தேக நபரான இவர் கட்சியின் போக்கு பிடிக்காத காரணத்தால் தம்மை விடுவித்துக் கொண்டு சுயேச்சையாக இயங்கினார். பொதுவாழ்வில் தூய்மையை வலியுறுத்தும் இந்த இளைஞர் ஆழ்ந்த

Page 6
இலங்கை இனப்பிரச்சினையில். 6
நாட்டுப்பற்றும் மனிதநேயமும் மிக்கவர். தெளிவான அரசியற் சிந்தனைகளும் அஞ்சா நெஞ்சும் இவரது வலிமை எதிரான கருத்துடையோர்க்கும் களம் அமைத்துக்கொடுத்து ஒரெழுத்தும் பிசகாமல் எதிராளி யின் கருத்தை அப்படியே வெளியிடுவது இவரது பண்பு. "உபாலிகொலம்பகே-சதாஅகுபுது’ ஆகிய இருவரும் இவருக்குத் துணை ஆசிரியர்களாக விளங்கும் சிங்கள இளைஞர்கள் ஆவர்.
காலத்தின் கட்டாயம், தேசத்தின் தேவை என்ற அடிப் படையில் வெகுஜன எண்ணத்தைப் பிரதிபலித்தமை யால் மிகக்குறுகிய காலத்துள் அறிவு ஜீவிகளான பெரும்பான்மை வாசக்ர்களின் வாழ்த்துக்கும்-விமரி சனத்துக்கும்-கண்டனத்துக்கும் ஆளான "ராவய’ என்னும் மாத சஞ்சிகையில் 'இலங்கை இனப்பிரச் சினை தொடர்பாக வெளியான கருத்துக்களை தமிழ் வாசகருக்கு அறிமுகம் செய்துவைப்பதே இச்சிறு நூலின் நோக்கம் ஆகும்.
இன்று இலங்கையில் அதிகமாக விற்பனையாகும் சிங்கள மாசிகையான ‘ராவய 1986 ஆகஸ்ட் மாதம் தொடங்கி 1987 ஜூலை மாதம் வரை12 இதழ்கள் வெளிவந்துள்ளன. இனப்பிரச்சினை 'புதியவடிவம் எடுத்த இக்காலப் பகுதியில் வெளியான ‘ராவய’ இதழ்கள் அனைத்துமே பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டன. இலக்கியம், கலை, அரசியல், சமூகம், விஞ்ஞானம், பொருளியல் எனப் பலதரப்பட்ட தலைப்புக்களில் வெளியான மொத்தம் 315 ஆக்கங் களில் 68 படைப்புக்கள் இனப்பிரச்சினை தொடர்பான கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன. ஆய்வினை இலகு வாக்கும் நோக்குடன் என்னால் பின்வரும் நிரைப்படி பாகுபாடு செய்யப்பெற்றது.
1. அட்டைப்படங்களும் உட்பக்க ஓவியங்களும் 2. ஆசிரியர் தலையங்கம்
3. கலந்துரையாடல்கள் 27 4. கட்டுரைகள்-விமரிசனங்கள் 23 5. கவிதைகள் 4.

1. அட்டைப்படங்களும் உட்பக்க ஓவியங்களும்
1: 1 நாட்டுக்கு என்ன நடக்கப் போகுது? 1ம் இதழ் 1; 2 எமது எதிர்காலம்..? 1: 3 சமாதானம் வேண்டி. 慧懿 1; 4 சமாதானப் பூக்கள் மலரட்டும் s 1: 5 மனிதனை எந்நாளும் விலங்குகளால்
பிணைத்துவைக்க இயலுமா? 2ம் இதழ் 1: 6 சமாதானம் 3ம் இதழ் 1: 7 வெலிக்கட. அங்கொட 4ம் இதழ் 1 : 8 அரசியல் எதிர்காலம்..? ம்ெ இதழ் 1; 9 புத்தாண்டு நல்வாழ்த்து 6ம் இதழ் 1:10 எமக்கு உரித்தாக்கித்தரும் உலகம் இதுதானா? 12ம் இதழ்
காலத்துக்கேற்ற ‘ராவய வின் கருத்துக்களை
தலைப்புக்களும், கலைஞர்களின் கைவண்ணங்களும் அருமையாகப் பிரதிபலிக்கின்றன. மேலும் இரண்டு இதழ்களின் அட்டைப்படங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரபாகரனின் படங்கள் " .சிறிய அளவில் பிரசுரமாகி உள்ளன (5, 11 இதழ்கள்) இது வரை தமிழ்ச்சஞ்சிகைகளில் கூட வெளிவந்திராத அளவுக்கு மிக நேர்த்தியான முறையில் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தியின் படம் 12ம் இதழின் முகப்பை முழு அளவில் அலங்கரிக்கின்றது. தமிழ்-சிங்களம் இரு மொழிகளுக்கும் தொண்டாற்றிய கே.ஜி.அமரதாசவின் படமும் 2ம் இதழ் அட்டையில் இடம் பெற்றுள்ளது. பன்னிரண்டாவது இதழில் தமிழீழ விடுதலைப்புலி களின் மேதினவிழா நல்லூர் கந்தசுவாமி கோவில்

Page 7
இலங்கை இனப்பிரச்சினையில். 8
அருகில் நடைபெறுவதையும் அதில் "கிட்டு உரை யாற்றுவதையும் விளக்குவதான புகைப்படங்களும், விடுதலைப்புலிகளின் விவசாயப் பண்ணையின் படம், இந்தியப்படை பலத்தை புலப்படுத்தும் புகைப்படங் கள் என்பனவும் இடம் பெற்றுள்ளன. உரையாடலில் கலந்துகொண்டவர்கள் அனைவரது புகைப்படங்களும் குறிப்பாக தமிழர்களான திருவாளர்கள், நடேசன் (கியூ.ஸி), அமிர்தலிங்கம், அன்ரன் பாலசிங்கம் நீலன் திருச்செல்வம் ஆகியோரது படங்களும் இடம் பெற்றுள்ளன. பிரபாகரன், உமாமகேசுவரன், டெலோ சபாரத்தினம் ஆகியோரது படங்களும் "விடுதலைப்புலி களும் தமிழீழ சுதந்திரப் போராட்டமும் -'தமிழ்ப் பெண்ணின் தூய இளமை" - வடக்கே ஆரிய இராச்சி யம்" முதலான நூல்களின் முகப்புப்படங்களும் சஞ்சிகை களில் பிரசுரமாகி இருக்கின்றன. பொதுவாக பல புட்ைபடங்களும், ஓவியங்களும் சமாதானத்தை வலி யுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

2. ஆசிரியர் தலையங்கம்
மனிதாபிமான அடிப்படையில் தனக்கென ஒரு வழி வகுத்து தலை நிமிர்ந்து நடைபோடும் ‘ராவய வின் உண்மையான உள்ளத்தை நேரடியாக உணர்த்தும் விதத்தில் ஆசிரியர் தலையங்கம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதிப்பாடு தொனிக் கிறது. இதுவரை வெளியான பன்னிரண்டு இதழ் களிலும் இனப்பிரச்சனை பற்றிய கருத்துக்கள் இழை யோடி இருப்பினும் நான்கு இதழ்களில் ஆசிரியர் தன் கருத்தை முழுமையாக வலியுறுத்தி உள்ளார்.இலங்கை இனப்பிரச்சினையின் தன்மை, அதனை விரைந்து தீர்க்க வேண்டிய அவசியம் என்பன தெளிவுபடுத்தப் படுகின்றன.
2:1 “ “ 66r (G36 Tomr? Lomr6ir G36 untuomr?””
"நாம் அனைவருமே பேரழிவின் விளிம்பில், அதில் வீழ்ந்து விடக்கூடிய அபாயகரமான நிலையில் இருக் கின்றோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையின்றி நிகழ்காலத்தைப்பற்றி மட்டுமே நினைப்பதாலும், எம்மைப்பற்றி மட்டுமே அல்லாது அடுத்தவர் நலனைக் கருதாத சுயநலப் போக்கின் குற்றத்திற்காகவும் செலுத்தப்படவேண்டிய அபராதத்தொகையே அது. ஒருபுறம் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கு நாட்டின் தேசிய அரசியல்வாதிகள் அனைவருமே பொறுப்பேற்க வேண்டியவர்கள். மறுபுறத்தில் அவர் கள் தள்ளிவிட்ட காரணத்தால் மட்டுமே நாம் இந்த இடத்துக்கு வரவில்லை. அது நம்முடைய விருப்பமாக வும் இருந்தது. ஆகவே நாம் அனைவருமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.""

Page 8
இலங்கை இனப்பிரச்சினையில்... 10
"நாம் எங்கே நிற்கிறோம் என்பதை இப்போதாவது நாம் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அது இன்னும் புலனாகாத அளவுக்கு எவரேனும் இருப்பின், அவர்களது கண்களை மறைத்திருக்கும் போலித் திரையை விலக்கி உண்மை நிலையைக் காண்பதற்கு அவர்களுக்கு இயலுவதாக!
யுத்தத்தின் முன்னே சமாதானம் மடிந்து கொண்டு நாடு முழுவதும் அகதிமுகாம்களாக மாறிக்கொண்டு வருகிறது. இதில் எமது விருப்பு வெறுப்புகளுக்கு இடம் இல்லை. ஆரம்பத்தில் அயலவர்களைப் பாதித் தவை தற்போது படிப்படியாக நம் அனைவருக்குமே பொதுவானவைகளாக மாறிவிட்டன.
நமக்கு அதிலிருந்து மீள்வது அவசியமா?அவசிய மென் றால் அதற்காக இருக்கும் காலமோ வரையறுக்கப் பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மீள்வதற்கு பதில் மாள்வதுதான் விருப்பமென்றால் அதற்கான காரணங்களையேனும் அழிவதற்கு முன் புரிந்து கொள்ளக் கூடிய தன்மை எமக்கு இருத்தல் வேண்டும்.
அழிவதுதான் எமது விருப்பம் என்றால் அதற்கும் எமக்கு உரிமை இருக்கலாம். எனினும் எதிர்காலச் சந்ததியினரிடம் நாம் முதலில் மன்னிப்புப் பெற வேண்டும். நாம் அனுபவிக்கும் உரிமைகள் அடுத்த சந்ததிகளுக்குமுரியன என்பதைக் கருதாது சுயநலப் போக்கில் இயங்கும் குற்றத்திற்காக நாம் அவர்களிடம் மன்னிப்பு பெற வேண்டியவர்கள் ஆவோம்.
அந்த அளவுக்குப் பண்பட்ட பரந்த மனம் படைத்தவர் கள்ாக மாறுவதற்கு எமக்கு இயலுமாயின், எம்மால் உரிமையாக்கித் தரப்பட்ட அகதி முகாம்களில் சில வேளை எஞ்சக்கூடிய 'பிள்ளைகுட்டிகள்" சிலரேனும் இருப்பின் தமது வாழ்வைப் பாழ்படுத்திய நம் அனைவர் மீதும் பகை பாராட்டாமல் இருக்கக் கூடும்.
சதுரங்கப்பலகை தீப்பற்றி எரிகிறது. தீயில் சிக்கி அதன் காய்களும் உருகிக் கருகுகின்றன. எனினும் ஆட்டக்

11 சுந்தரபாண்டியன்
காரர்கள் போட்டியைச் கை விட்டதாகத் தெரியவில்ல, அவர்கள் தமது வெற்றி தோல்விகளையே அன்றி பலகையைப் பற்றியோ அங்கு இருக்கின்ற காய்களை பற்றியோ கவலைப் படுவதாகத் தெரியவில்லை. "எல்லாவற்றுக்கும் முதலில் நெருப்பை அணையுங்கள்!" இதுவே ராவய வின் குரல்! இதற்கு ஆயிரமாயிரம் மக்கள் குரலும் சேர்ந்தால் நாட்டில் சமாதானம்வெற்றி பெற வாய்ப்பு உண்டு. (ராலய 1ம். பக்கம்-3)
இதுதான்' ராவய எழுதியமுதல் ஆசிரியர் தலையங்கம்.
2:2 'தவறு எந்த இடத்தில்...'
"..கருத்து வேற்றுமைக்கு மூலகாரணம் 1977ன் பின் இலங்கை பின்பற்றுகின்ற முழுமையான அமெரிக்கச் சார்பு அயல்நாட்டுக் கொள்கைதான். தனக்கு எதிரான போக்கினைக் கடைப்பிடிக்கும் எதிரிகளின் அணியில் லங்கையும் சேர்ந்து விட்டதாகவே இச்செயல் ந்தியாவுக்கு உணர்த் தியது. அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காக இலங்கை இந்தியாவுக்கு "கினிமினி காட்டியது. பதிலுக்கு இந்தியாவும் "தமிழ் அகதிகள் பிரச்சினை' காரணமாகக் கொண்டு இலங் கைக்கு ‘கினிமினி" காட்டியது. இப்போது இப் பிரச்சினை 'இந்தியா படையெடுக்குமா?" என்ற அளவுக்கு வளர்ந்து விட்டமைக்கு, தான் கடைப்பிடித்த தவறான செயற்பாடுகளின் விளைவாக உருவான அழிவு நிலையே காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள அாசினால் இயலாது."
"..எனினும் பக்கம் சார்ந்த கொள்கை மாறான பலன் களையே அளிக்கும் என்பது எமது கண்முன்னாலேயே நிரூபணமாகி வருகின்றது. இதனால் அணிசேராநாடு களிடையே இலங்கைக்கு இருந்த கெளரவம் இல்லா தொழிந்து இந்திய-இலங்கை நல்லெண்ணமும் நாச மடைந்தது. இது காரணமாகவே இலங்கையில் உள் நாட்டுப் பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்க்க இய லாத ஒன்றாக மாறி உள்ளது. தவறான செயல்களால் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கமுடியாது. உண்மை
யில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலில் செயல்

Page 9
இலங்கை இனப்பிரச்சினையில்... 12
முறையைத்திருத்திக் கொள்ளவேண்டும். அப்போது தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.'
(ராவய 9ம் இதழ் பக்கம் 1) 2:3 சனநாயகத்துக்கு ஒரு கும்பிடு
'ஒரு காலத்தில் ஆசியாவுக்கே எடுத்துக்காட்டாக சிறந்து விளங்கிய இலங்கையின் சனநாயகத்துக்கு இன்று என்ன நேரிட்டது? வடக்கே சனநாயகத்துக்கு மாறாக துப்பாக்கிகளின் அதிகாரம் அரசோச்சு கின்றதே அன்றி மக்களின் சுதந்திரமான எண்ணங் களுக்கு அங்கே இடம் இல்லை. இந்நிலை பொதுவாக தெற்கிலும் படர்ந்து வருகிறது. ' 'தீவிரவாதப் போக்கினைச் சார்ந்த இளைஞர்களைச் சிறைச்சாலை களுக்கோ கசாப்புக் கடைகளுக்கோ அனுப்புவது இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகாது. பயங்கரவாதம் என்பது சனநாயக அரசியல் அமைப்பில் இயங்கும் சர்வாதிகாரத்தன்மையின் விளைவே எனில் தீர்வு காணப்படவேண்டியது இதில்தான் இருக்கிறது. அதாவது சனநாயகத்தன்மை அற்ற குப்பை கூளங் S66 அப்புறப்படுத்துவதன் மூலம் சனநாயக அமைப்பை தூய்மைப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். அப்போது சனநாயகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் இளைஞர்கள் மீண்டும் அதை அணுகுவார்கள்.'"
'இதில் சனநாயக அரசியல் கட்சிகள் ஆக்கப்பூர்வ மாகக் செயற்படாவிட்டால் அவர்களுக்கு உரித்தாகும் விதி 'அமிர்தலிங்கத்தா ருக்கு" உரித்தான விதிக்கு எது விதத்திலும் குறைவு பட்டதாக இராது!"
(ராவய 11ம் இதழ். பக்கம் 1.)
2:4 இளையதலைமுறையினரின் ஆத்திரமும் பகைஉணர்வும்
". இறப்பு நிச்சயம் என்பதைத் தெரிந்து கொண்டே படித்த இளைஞர்களும் யுவதிகளும் புரட்சி வழியில். செல்வது ஏன்? அதற்குக் காரணம் அவர்களுக்கு உரியஉரித்தாக வேண்டிய நியாயமான உரிமைகள் அவர் களிடம் இருந்து அபகரிக்கப்பட்டு இருப்பது அல்லவா?

13 சுந்தரபாண்டியன்
அவர்களின் முன்னேற்றத்திற்கா வழிகள் தடை
பட்டுக் கிடப்பது அல்லவா?.'
". இது இளைஞர்களுக்கு போதனை புகட்ட வேண்டிய நேரம் அல்ல! பொறுப்பானவர்கள் போதனையைக் கடைப்பிடித்து அவர்களின் பிரச்சினை களை விரைந்து தீர்க்க வேண்டிய காலம்! முதலில் அவர்களுக்குச் ‘சவால்'விடுப்பதைக் கைவிடவேண்டும்.
இரண்டாவதாக அவர்களை ஏமாற்றுவதற்கான முயற்சிகள் அறவே நீக்கப்படவேண்டும். மூன்றாவதாக அவர்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும்
அவற்றை நியாயமான முறையில் தீர்த்துக்கொள்வதற் கும் வழிகளைத்தடைசெய்யாது இருத்தல் வேண்டும்."
'. அவர்கள் தெரிவு செய்த வழி தவறாக இருந் தாலும் பொது இலட்சியத்துக்காக தமது உயிர்களைக் கூட மதியாது செயற்பட்டமைக்காக நாம் அவர்களைக் கெளரவிக்கவேண்டும். இன்று நாட்டுக்குத் தேவைப் படுவது அவர்களின் சக்தியைநாட்டின்மேன்மைக்காகப் பயன்படுத்துதலே அன்றி அவர்களைச் சிறைக்கூடங் களுக்கு அனுப்புவது அல்ல. இந்தச்சவாலை வெற்றி கொள்ள இயலாமற் போகுமாயின் மீண்டும் இந்தநாடு இரத்தக் குளமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது’’
(ராவய 12ம் இதழ். பக்கம்1)

Page 10
3. கலந்துரையாடல்கள்
இனப்பிரச்சினையில் ராவய தனக்கென ஒரு திட்ட வட்டமான தீர்மானத்தைக் கொண்டு இயங்குகிறது. எனினும் பொதுவான அபிப்பிராயத்தை வெளிக் கொணரும் நோக்கில் பலதரப்பட்டவர்களையும் அது அணுகி அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து கலந் துரையாடல்களாக வெளியிட்ட்து. இருபத்திஐந்து கலந்துரையாடல்களில் பெரும்பாலானவை முழும்ை யாக இனப்பிரச்சினையை மட்டுமே ஆய்வனவாக அமைந்தன. ராவய வின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த விடைகளில் குறிப்பிடத்தக்கன சிலவற்றைக் கவனிப்போம்.
3:1 முடிக்குரிய வழக்கறிஞர் திரு.எஸ்.நடேசன்
அவர்கள்
". இருதரப்பு மக்களும் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு மரணத்தை அடைவதே என்று எண்ணுகையில் 965 பற்றி பேசுவதால் என்னபயன்? நான் இந்தப் பிரச் சினையைப்பற்றி 1950 காலப்பகுதியில் இருந்தே பேசி வந்துள்ளேன். சிங்களம் அரசமொழி என்பதன்றி சிங்களம் மட்டுமே அரசமொழி என்ற தவறான கொள்கை உருவான நாள் முதலே நான் இதுபற்றிப் பேசிவந்திருக்கிறேன். அன்று நான் சொன்னவற்றை செய்யாததன் விளைவை இன்று நாம் இருசாராரும் அனுபவிக்கிறோம். இது எவ்வாறு இருப்பினும் தற் போதைய பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை என்னால் எண்ண இயலவில்லை. எனினும் அதிகாரத் தாலும் சட்டத்தாலும் இல்லாத ஒரு தீர்வை நியாய

15 சுந்தரபாண்டியன்
பூர்வமான நல்லெண்ணங்களால் மட்டுமே அடைய (Մtդպւb. ''
(ராவய இதழ் 1 பக்கம் 4-5)
3:2 வண. மாதுலுவாவே சோபித சுவாமிகள் (பெளத்த மதகுரு) ". நம் நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை. ஆனால் ஆளும்வர்க்கம் தன்னைக்காத்துக்கொள்வதற்காக வர்க்கப்போராட்டத் துக்கு இனவாத வடிவம் கொடுத்துள்ளது.'
"'. ஐக்கியமாக வாழ்ந்த மக்கள் பிளவுபட்டு இருப்ப தற்கு அதிகார வெறிகொண்ட அரசியல் வாதிகளே காரணம். இவ்வாறான அரசியல்வாதிகள் சிங்களவர் கள் மட்டுமல்ல தமிழர்களும் இருக்கின்றார்கள்.'"
'. சிங்கள அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் தமது அரசியல் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள் வதற்காக தமிழர் கட்சிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி அவர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இது போலவே தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ்மக்களை ஏமாற்றி இருக் கிறார்கள். காரணம் இந்த இரு சாராருக்கும் பொது வான பதவிப்பித்தும் அதிகார வெறியுமே! 50:50 பேரம் பேசி தமிழர்களின் வாக்கைப் பெற்று வந்த . ஜி. பொன்னம்பலம், டீ. எஸ். சேனநாயக்கவின் மந்திரிசபையில் பதவி கிடைத்ததும் வாக்கு கொடுத்த மக்களுக்கு தான் கொடுத்த வாக்குகளை மீறினார். ஏமாந்தது.யார்? தமிழ் மக்கள்தான்,
'. முதலில் 'சிங்கள மக்களை வதைத்த அரசபயங்கர வாதம் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தையும் ஆக்கிர மிக்கத் தொடங்கியது என்பதை யாழ் நூல்நிலைய எரிப்பு, வாக்களிப்பு நிலையங்களைத் தாக்கி வாக்குப் பெட்டிகளைக் கவர்ந்து சென்றமை, 1984 ஜூன் கல வரத்தை உருவாக்கியது போன்ற செயல்களால் அறியலாம்.""
'. நாட்டு மச்சன ள எதிர் நோக்கி, இருக்கும் உண்மைப் பிரச்சினைகளை மூடி மறைத்து அவர் களிடையே இனவாதப் பிரச்சினைகளைக் கிளப்பி அவர்

Page 11
இலங்கை இனப்பிரச்சினையில். 16
களை வேறுபடுத்தி ஆபத்துக்கு ஆளாக்குவது இந்த பதவிப் பித்தர்களான அரசியல்வாதிகளே என்பதை இப்போதேனும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்."
* . பிரதேச சபைகள் இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. நமது அயல்நாடான இந்தியா, மற்றும் பிரிட்டனில் அயர்லந்து முதலான பகுதிகளில் இதன் விளைவை நாம் காணக்கூடியதாக இருக்கிறது."
(ராவய இதழ் 1 பக்கம் 6-7) 3:3 கலாநிதி எதிரி வீர சரத் சந்திர.
". இந்த அரசினால் இப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பது இலகுவில் நடக்கக் கூடியதல்ல. மேலைநாடு களோ, சிங்களவர்களோ, தமிழர்களோ, இந்த அரசை நம்பவில்லை. 1983ல் இடம்பெற்ற மிருகத்தனமான செயல்களால் இது உலகப்பிரச்சினையாக மாறிவிட்டது. பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவுக்குப் போனார் கள். அதன் பின்னர் இது இந்தியாவுக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது."
". இப்போது இருக்கின்ற சிங்கள மக்களைவிடதமிழ் மக்கள் தமது பண்பாட்டை மேலாக நேசிக்கிறார்கள். அதில் பெரும் ஈடுபாட்டினையும் கொண்டுள்ளார்கள். அது எம்மிடையே இல்லை."
*". அன்று ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பொன்னம் பலம் அருணாசலம், ஆறுமுகநாவலர் போன்ற தமிழர் கள் சிங்களத்தலைவர்களுடன் இணைந்துபோராடினார் கள். இந்த நிலையை நாம் ஆழ்ந்து ஆராயவேண்டும். யாழ்ப்பாணத்தமிழர்கள் இந்தியரில் வேறுபட்டவர்கள். அவர்களுக்கு வேறு நாடு இல்லை. இந்தியாவுக்குச் சென்ற இவர்கள் பெரும் துயரில் காலத்தைக் கடத்து கிறார்கள்."
( ராவய இதழ் 1, பக்கம் 10, 11, 23) 3:4 ஹெக்டர் அபேவர்தன:
. இந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு மூல காரணம் இந்தியாதான் என்றுகாட்டமுயற்சிசெய்கிறது.

17 சுந்தரபாண்டியன்
அது இந்தியாவால் உருவாக்கப்பட்ட பிரச்சினை அல்ல! நாமே ஏற்படுத்திக் கொண்டது.'
'. ஐ.தே.க. அரசுகள் எப்போதுமே இந்தியவிரோதப் போக்கினையே கடைப்பிடித்து வந்துள்ளன."
". இந்தியாவுக்கு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் நோககம் இல்லை. நாம் நட்பு பாராட்டிய போது அதனை மதிப்பதும், நாம் எதிரிகளாக மாறி குரல் எழுப்பும்போது அமைதியாக ஒதுங்கி இருப்பதை யுமே இந்தியா கடைப்பிடித்துள்ளது.'
'. நட்புரீதியாக நாடினால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா நடுவராகத் தலையிடக்கூடும். இதில் இந்தியாவை மட்டுமன்றி, இன்று வடககே ஆயுதம் ஏந்திப் போரிடும் புரட்சிகர இயக்கங்களையும் இணங்கச்செய்வதில்தான் வெற்றி தங்கிஇருக்கிறது."
". மீண்டும் ஒரு 83 ஜூலை சம்பவம் இடம்பெற்று தமிழ் மக்கள் பாதிப்படைவார்களேயானால் தமிழ்நாடு மட்டுமன்றி முழு இந்தியாவுமே இலங்கை மீதான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள குரல் எழுப்பும். இந்தியா இவ்வேண்டுகோளைப்புறக்கணிக்கமுடியாது."
(ராவய இதழ் 1 பக்கம் 12,40)
3:5 கலாநிதி நிவ்டன் குணசிங்க.
'.போர்க்களத்தை நோக்கும்போதுயாழ்ப்பாணத்தில் இராணுவம் பாசறைக்குள் முடக்கப்பட்டு தமிழ்ப்போரா ளிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள், வடபகுதியில் பெரும்பாலும் இன்றைய நிலை இதுதான். ஆனால் கிழக்கே தமிழ்ப்போராளிகள் தமது முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இராணுவம் அதிகாரம் செலுத்துகிறது. இன்னும்பல இடங்களில் இந்த இரண்டு நிலைகளை பாம் காணக்கூடியதாக இருக்கிறது ...”*
.சிங்களம் மட்டும் சட்டம் , பல்கலைக்கழகப்
பிரவேசத்தில் விகிதாசாரம், அரச பதவிகளில் தமிழர்

Page 12
இலங்கை இனப்பிரச்சினையில். 18
களுக்குக்குறைந்த இட ஒதுக்கீடு, இவ்வாறாக நம்மால் ஆரம்பிக்கப்பட்ட முட்டாள்தனமான செயல்களின் விளைவே இன்றைய பிரச்சினை. ஆகவே இத்துடன் இந்தியாவைத் தொடர்பு படுத்திப் பேசுவது தவறு. ’ச
"...அயல் நாட்டில் ஸ்திர மற்ற நிலை தனது பாது காப்புக்கு உகந்ததல்ல என்று இந்தியா கருதுகிறது. மேலும் ஒருலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேர் இலங் கையில் இருந்து இந்தியா சென்று அங்கே அகதிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்காகப் பெருந்தொகைப் பணம் செலவிடவேண்டிய நிலை இந்தியாவுக்கு! மேலும் இந்தப் பிரச்சினையின் தன்மையை நன்கு புரிந்து கொண்ட இந்தியா இலங்கையிடம் சமாதான தீர்வினை வற்புறுத்துகிறது. அகதிசளை மீள அனுப்பி அவர்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற நிலையைக் கடைப்பிடிக்கக்கோருகிறது. ராஜீவ் காந்தி கூறுவதைப் போன்று இலங்கையிலும் இந்தியாவில் இருப்பது போன்று பிரதேச நிர்வாக முறையை அமைக்க வேண்டும்.'"
11.வடக்கே பயங்கரவாதம் திடீர் என ஏற்பட்டதல்ல. யாழ்ப்பாணத்தில் நகரசபைத் தலைவரைக் கொலை செய்தது முதலான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிறு குழு 1983 ஜூலை சம்பவத்தை அடுத்து பேரியக்கமாக உருவெடுத்தது. இந்த இன அழிப்புக்கு அரசுக்குள் இருந்தவர்களின் அனுசரணை கிடைத் தது. இது தமிழர்களுக்கு எதிரான சிங்கள மக்களின் எழுச்சி அல்ல! தமிழர்களைப் பணியவைக்க லாம் என்று எண்ணிய சில முட்டாள்களின் செயல். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக தமிழர்கள் பெருந் தொகையினராக இயக்கங்களில் இணைந்தார்கள்...”* *". இந்தப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொள்வது இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு கடினமே. பல இன-மொழி-சமய-பண்பாடு நிலவும் நாட்டை ஒன்றுபடுத்தி வைப்பதும் கடினமான செயலே!.
"...இந்தியாவுடன் நட்புமுறையில் நடந்து கொள்வதே மிக முக்கியம் 1.* (ராவய இதழ் 1.பக்கம்13, 14, 15)

19 சுந்தரபாண்டியன்
3:6 காலாகிதி கொல்வின் ஆர். டி. சில்வா
(லங்காசமசமாஜக் கட்சித்தலைவர்)
"...இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதுவரை அரசாங்கம் தெளிவான ஒரு கொள்கை இல்லாமல் ஒளிந்து விளையாடியது. ஒரு நாள் இந்தியாவைத் தூற்றுவதும் மறுநாள் போற்றுவதுமாக காலங்கடத்தி, சிக்கலை அவிழ்ப்பதற்குப் பதில் மேலும் சிக்கலாக்கிக்கொண்டுவிட்டது.”*
"...காலந் தாழ்த்தியேனும் இராணுவ நடவடிக் கைக்குப் பதிலாக சமாதானத்தீர்வுக்கு அரசு உடன் பட்டது பாராட்டற்குரியது. எந்தச் சந்தர்ப்பத்திலும்
ந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி நடந்தால்
மிகவும் நல்லது."
**. இந்தியாவைத் திருப்திப் படுத்தக்கூடிய விதத்தில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அதுவும் நல்லது தான். ஆனால் இதற்கு வடக்கே போராடும் போராளி களின் சம்மதத்தையும் பெற்றாகவேண்டும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அங்கே அதிகாரம் இல்லை, இதில் போராளிகளின் முக்கியத்துவத்தை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் அவர்கள்தான். முடிவு செய்ய வேண்டியதும் அந்தப்பிள்ளைகள்தான்!"
(ராவய இதழ் 1 பக்கம் 17) 3:7 பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி
"...நமது இனம், நமது மொழி, நமது மதம், நமது வரலாறு என்று பெருமைப்படுவது இயற்கையே, எனினும் அப்படிப் பெருமைப்படும்போது வேறு இனத்தை - வேறுமொழியினை, வேறு மதத்தைவேறு வரலாறை இழிவுபடுத்தக்கூடாது. இதை நம்மில் பெரும்பாலோர் மறந்து விடுகிறார்கள். வேறு சன சமூகத்துக்கு நியாயம், மதிப்பு கொடுக்கும் போது அதை நமக்குச் செய்து கொள்ளும் அவமதிப்பாகக்

Page 13
இலங்கை இனப்பிரச்சினையில். 20
கருதப்பழகி இருக்கிறார்கள். ஒருசிலரிடம் இவ்வாறான குறுகிய மனப்பான்மை இருப்பினும் அதையிட்டு நாம் , கவலைப்படத் தேவை இல்லை.'
* ' .1948 தொடக்கம் நாம் பெற்றுக்கொண்ட படிப் பினைகள் என்ன? நாம் எத்துணை பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் இன்னொரு பிரிவினரைத் தொடர்ந்து துன்புறுத்துவதால் நாம் ஆளவும்முடியாது. வாழவும் முடியாது. நாமும் வாழவேண்டும் மற்றவர் களையும் வாழவிடவேண்டும். புவியமைப்புஉருவாக்கிய இத்தீவைப் பிரிக்க முடியாது. அப்படி நிகழ்ந்தால் எல்லோரது எதிர்காலமும் இருண்டுவிடும்.'"
"...சிங்கள பத்திரிகைகள் சிங்களப் அகதிகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ் அகதிகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. "
*.மக்கள் அநேகர் இறந்தார்கள்; பலர் வாழும் வழி இழந்தார்கள். எனினும் நடந்தவை 6T6ib6u) AT ib தன்மைக்கே! இவற்றால் மக்கள் அனேக படிப்பினை களைப் பெற்றார்கள். விரைவில் யதார்த்தரீதியான ஒரு முடிவினைக் காணலாம் என நான் நம்புகிறேன்.""
(ராவய இதழ் 1 பக்கம் 18-19)
3:8 கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன. (சர்வோதய இயக்கத் தலைவர்)
*. இன உணர்வு அனைவருக்குமே இருக்கவேண்டி யதுதான். ஆனால் அது ஏனைய இனங்கள் மீதான வெறி அல்ல!...”*
'. மனிதவாழ்வின் நோக்கம், ஒழுக்கம், பண்பாடு இவற்றைப்பற்றிய தெளிவான விளக்கம் இல்லாமையே பிரச்சினைக்கு மூலகாரணம். மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள் இவற்றைப் போதித்தும், தாமே கடைப்பிடித்தும் மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழலாம்.'"
'. மக்கள் அனைவருக்கும் பொதுவான தேவைகள் உள்ளன. அவற்றை அனைவரிடமும் சமமாகப் பங்கீடு

21 சுந்தரபாண்டியன்
செய்யும் முறையினைப் பின்பற்றினால் இவ்வாறான பிரச்சினைகள் எழ இடம் இராது!"
11. மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவுஉடை-இருப்பிடம் , அதையடுத்து கல்வி-சுகாதார வசதிகள், பின்னர் செயற்கையான வசதிகள் போன்ற வற்றை தனிமனிதன்-குடும்பம்-சமூகம்-நாடு என்ற ரீதியில் தேசீய மட்டத்தில் அனைவரும் பெறக்கூடிய அமைப்பு உருவாகவேண்டும்.
(ராவய இதழ் 1 பக்கம்8-9)
3:9 சிறிமாவோ பண்டாரநாயக்க:
(முன்னாள் இலங்கைப் பிரதமர்)
.இந்த அரசின் தவறான போக்கினால் வடபகுதி தமிழ் மக்கள் பலவிதமான பொருளாதார - சமூகப் பிரச்சினைகளுக்கு ஆளானார்கள்...”*
"...பொதுமக்களைப் பாதிக்காதவிதத்தில் பயங்கர வாதப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு ஜனாதிபதி திறமை அற்றவராக இருக்கிறார். இந்தச் சிறிய நாட்டுக்குள் இன்னும் ஒன்பது அரசுகளை உருவாக்க எண்ணுகிறார்."
(‘ராவய இதழ் 2-பக்கம் 9.) 3:10. கனேகம சரணங்கரதேரோ
(பெளத்த மதகுரு) '.இக்காலத்தைப்போல், சிங்கள மக்களின் இரத்தத் தால் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் நனைந்த கால மொன்று இதற்கு முன் இலங்கை வரலாற்றில் ஒரு
போதும் இருக்கவில்லை, இன்று புத்தபிக்குகள் பெரும் வேதனையில் இருக்கிறார்கள்.'"
.சுதந்திரத்துக்கு முன் சிறுபான்மை இனத்தவன் கையால் பிக்கு ஒருவர் இறக்க நேரிட்டால் அதன் நிலை எவ்வாறு இருக்கும்?"
.இன்று பத்துப்பன்னிரண்டு பிக்குகள் கொலை

Page 14
இலங்கை இனப்பிரச்சினையில். 22
செய்யப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதிகள் முதலில் கொலை செய்தது ஒரு ஜப்பான் இனத்துப் பிக்குவை! ஜப்பானியர் மீது தமிழர்களுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் அவர் புத்தபிக்குவாக இருந்தமைதான் கொலை செய்யப்பட்டதன் காரணம்.”*
'.இதுஅனைத்துக்கும் காரணம் சிங்களவர் இடையே ஒற்றுமை இல்லாததுதான். இதை தமிழர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் மண்ணுக்காகச் செய்துள்ள பெருந் தியாகத்தை நமது ஒரு சிங்கள இளைஞனாவது செய்து இருக்கிறானா?.
"..எனக்கு 25 வயது வாலிபமும் அதற்கேற்ற சக்தியும் கிடைத்தால் நாளைக்கென்றாலும் காவி ஆடையைக் கழற்றிவிட்டு இராணுவத்தில் சேர்ந்து நாட்டை மீட்கப் புறப்படுவேன்.'
(*ராவய இதழ் 3 -பக்கம் 4, 5, 6.)
3:11 மகாவலி அமைச்சர் காமினி திசாநாயக்க
**.ஐக்கிய தேசியக்கட்சிக்கு போதிய சக்தி இந்த நாட்டில் இருக்கிறது. அதே போன்று சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி, லங்கா மகஜனகட்சி என்பன வும் பிரதேச சபை அமைப்புக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளன.’’ :
'..தமிழ்ப்போராளிகள் அரசியல் தீர்வில் நம்பிக்கை வைக்கவில்லை. எனினும் இந்தியாவால் அவர்களைச் சம்மதிக்கச் செய்ய முடியும்'
'-நுவர எலிய, கண்டி, மாத்தளை மாவட்டங்களில்
மொத்தத் தொகையில் 70% சிங்களவராக இருப்பதால் அங்கு பிரச்சினைகள் எழ இடம் இல்லை."
(ராவய 3ம் இதழ் பக்கம் 30-31)
3:12 கலவான பிரதிநிதி டிவ் குணசேகர. (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி)
. இந்த அரசு பிரச்சினையைத் தீர்க்க விரும்ப

23 சுந்தரபாண்டியன்
வில்லை. அது அறிமுகப்படுத்திய மாவட்ட சபை அமைப்பினால் விளைந்தது என்ன? தம்பதெனிய மக்களின் பிரதிநிதி யாழ்.மாவட்ட அமைச்சராக ஆனது தான்! இதுதான் தீர்வுகாணும் இலட்சணமா?...”*
". அவர்களின் எழுச்சிக்கு இராணுவ நடவடிக்கையே தீர்வு என்ற கொள்கையைத்தான் அரசு கடைப் பிடித்து வந்தது. இதை எமது பத்திரிகைச்செய்திகளும், ஆசிரியர்தலையங்கங்களும் கண்டித்தன. தோழர் சரத் இதனைக்கண்டித்து நாடாளுமன்றத்தில் பலத்த குரல் எழுப்பினார். நாங்கள் பல வழிகளிலும் இப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைவேண்டிநின்ற வேளை யில் இந்த அரசு குறுகிய காலத்துள் இராணுவத்தீர்வு என்றே மார்தட்டியது. ஆனால் இன்று அதில் தோல்வி கண்டு சமாதானத் தீர்வை நாடுகிறது.”*
"...ஆட்சியைக் கைப்பற்றும் நோக்குடன் செங்கொடி ஏற்றி இனவாதம் பரப்பும் குழுவினரை ஒழிப்பதே உண்மையான இடதுசாரிகளின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.’’
*". பிரதேச சபையினை வழங்குவதற்கு கருத்துக் கணிப்புவாக்கெடுப்பு தேவை இல்லை.'"
* "...இனக்கலவரங்கள் முதலான பல வழிகளில் துன்புறுத்தப்பட்டும், தொடர்ச்சியாக நமது பத்திரிகை யாளர்களால் மிகைப்படுத்திக் காட்டப்பட்ட தன்மை யினாலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் சந்தேக நிலைக்கு ஆளாகி இருக்கின்ற தமிழர் சிங்களர் இருசாரர் இடையேயும் முதலில் பரஸ்பர நல்லெண்ணத்தை உருவாக்கவேண்டியது அவசியம். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நமது ரூபவாஹினிவானொலி - மற்றும் பத்திரிகைகள் அனைத்துமே பொறுப்பற்ற தன்மையில் இயங்கி இப்பிரச்சினையைப் பெரிது படுத்தியமைக்குப் பொறுப்பேற்கவேண்டும்."
"...பிரதேச சபையினை எதிர்ப்பவர்களில் பலர்
இப்போதிருந்தே முதலமைச்சர்-மற்றும் பதவிகளைப்
பெறுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.'
(ராவய 3ம் இதழ் பக்கம் 3 -34)

Page 15
இலங்கை இனப்பிரச்சினையில். 24
3:13 பேராசிரியர் காலோ பொன்சேகா
'.சகல உயிர்களும் இன் புற்று இருப்பதாக! என்ற பெளத்தர்கள் பிரார்த்தனையை "சகல சிங்களவர் மட்டும்,இன்புற்று இருப்பார்களாக என்று மாற்றுவதே ஏற்புடையது, முக்கியமானது புனிதமானது என்ற எண்ணப்பாங்கினை உடையவர்களைவாதம் புரிவதால்
மாற்றவே முடியாது."
** மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் மந்திரிப் பதவிக்காக காற்றில் பறக்கவிட்ட ஜி. ஜி. பொன் னம்பலம் ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து கொண்டு இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழரின் வாக் குரிமையைப் பறிக்கத் தயங்கவில்லை."
"...1949ல் பொன்னம்பலம் செய்த தவறினைஎதிர்த்து வெளியேறிய செல்வநாயகம் 1965ல் அத் தவறினை தானே செய்தார். "கடைசித் தமிழனையும் கொன்று அவனது தோலை உரித்து செருப்பு தைத்து காலில் போடுவேன்" என்று பகிரங்கமாகக் கூறிய கே.எம்.பி. ராஜரத்தினா இருந்த அரசில் இணைவது அவருக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை."
"...இந்நாட்டின் பொருளியல் வளங்களையும் மற்றும் உரிமைகளையும் பங்கீடு செய்யும் அடிப்படையில் எழுந்த பிரச்சினை தற்போது பயங்கர சிவில்யுத்தமாக மாறிவிட்டது. 1983ன் பின் சிங்களராகிய நாம் சிறு பான்மையினராகிய தமிழர்களை உயிருடன் எரிக்கும் மிலேச்ச இனத்தவர் என்ற எண்ணம் உலகம் முழுக்க உருவாகிவிட்டது"
*".பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தை ஜே.ஆர். ஜயவர்த்தனா எதிர்த்தார் டல்லி-செல்வா ஒப்பந்தத்தை சிறிமா எதிர்த்தார், ஒப்பந்தங்களின்
தன்மையை உணராது எதிர்க்கட்சியின் கடமை எதிர்ப் பதே என்று செயற்பட்டமையே பல பிரச்சினைகளுக்கு காரணம்."
':பிரிவினைப் பயங்கரவாதம் 1975ல் அல்பிறெட் துறையப்பாவின் கொலையில் இருந்து வெளிப்படை

25 சுந்தரபாண்டியன்
யானது. அப்போது அதிகாரத்தில் இருந்தவர் சிறிமா வோபண்டார நாயக்கன்தான் . காரணங்களை ஆராய்ந்து "முளையிலே கிள்ள முடியாதவர் தன்னால் தான் தீர்வு காணமுடியும் என்று தம்பட்டம் அடிப்பது பயனற்றது.'
'.இராணுவ பலத்தை முழுமையாகப் பிரயோகித்து தமிழர்களை அடக்குதல் அல்லது அரசியல் தீர்வு காண்பதன் மூலம் போருக்கு முடிவு காணல் என்ற இரண்டு வழிகளே இருக்கின்றன."
'..தற்கால துட்டகெமுனுக்களும், எல்லாளர்களும் நாடு, இனம், மதம் என்று பேசித் ‘தேன் குடித்து பாதுகாப்பாக வாழ்கிறார்கள். ஏழைகளின் பிள்ளைகள்தான் நாடு, இனம், மதத்துக்கு உயிரைக் கொடுக்கிறார்கள்.'
'. இன்று வடக்கிலும் கிழக்கிலும் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் கெரில்லாப்போர்முறையினை பின் பற்றுகிறார்கள். இதில் நாங்கள் தோல்வி அடைய மாட்டோம்; ஆனால் வெல்லப்போவதும் இல்லை. என்பது இராணுவத் தலைவர்களின் அபிப்ராயம். இதை நாடாளுமன்றக் கேள்விகள் மூலம் சரத்முத் தெட்டுவேகம் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆறே மாதங்களில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற் காக இராணுவம் எத்தனை முறைமுடுக்கிவிடப்பட்டது? பெரும் பண வியாபாரமும், கடும் உயிர்ச்சேதமுமே கண்டபலன்.""
'.சோபிததேரோவின் கொள்கைகள் முற்போக் கானவையே எனினும் பிரதேச சபைகள் அமைவதை அவர் விரும்பவில்லை. ஆனால் உலக நாடு & ஸ் பல வற்றில் இவ்வாறான அமைப்புக்கள் சிறந்த முறையில் இயங்குவதை அவர் உணரவேண்டும். மேலும் அதிகாரப்பரவலாக்கம் என்பது வடக்குக்கும் கிழக்குக் கும் மட்டுமே அல்ல; ஏனைய பகுதிகளுக்கு இல்லாத அதிகாரம் வடக்குக்கும் கிழக்குக்கும் கிடைத்து விடப் போவது இல்லை.”*
'. லங்கா சமசமாஜக்கட்சி சிங்களத்தையும் பெளத்

Page 16
இலங்கை இனப்பிரச்சினையில். 26
தத்தையும் அடிப்படையாகக்கொண்டு அரசியலில் ஈடு படும் கட்சி அல்ல!" V
". பிரியும் தறுவாயில் இருக்கும் நாட்டை ஒன்று படுத்த அதிகார பரவலாக்கம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. பெரும்பான்மை மக்சளின் கருத்து இதற்கு எதிராக அமைந்தாலும் லங்காசமசமாஜக் கட்சி அதற்குத் தலைசாய்க்கப்போவது இல்லை!."
" ..நாங்கள் பிரதேசசபைகளை முழுமையாக வரவேற் கிறோம். ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொய்யும்-புரட்டுமாக மோசடி வேலைகளில் ஈடுபட்ட இந்த அரசு உண்மையில் தீர்வு காண்பதற்கான வழி யில் இறங்குமா?."
(ராவய இதழ் 4. பக்கம் 24-29)
3:14 விசாரத. டப்ளிவ். டீ அமரதேவ. (சிங்கள இசை விற்பன்னர்)
". இன்று இலங்கை ஓரின மக்களின் நாடு அல்ல, நமது சமுதாயப் பின்னணி, கலாசாரப்பின்னணி பல்லின மக்களின் கலப்பாலேதான் உருவாகி இருக் கிறது. அன்று "இந்தச் சிங்களம் எமது நாடு" என்று பேசினோம்; பாடினோம். ஆனால் இன்று அவ்வாறு பேசுவதற்கு இயலாது என்று எண்ணுகிறேன். மதத்தை எடுத்துக்கொண்டாலும் பல்வேறான மதங்களே இருக் கின்றன. மனிதாபிமானம், பரஸ்பர நல்லெண்ணம் இவற்றின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இச்சந்தர்ப்பத்தில் பாரதம்தான் நமது பண்பாட்டின் நிகேதனம் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். பாரதப் பண்பாட்டின் அடிப்படையில்தான் நாம் பெற்ற மதம், மொழி கலாசாரம் அனைத்துமே என்பதை மறந்துவிடக்கூடாது. நமது சங்கீதத்துறை உருப் பெற்று வளர்ந்து வளம் பெறுவதற்கும் பாரதசங்கீதமே அடிப்படையாகும். நாம் பாரதத்தை நன்றி உணர் வுடன் நோக்கவேண்டும். தற்போதைய இனப் பிரச்சினையை மனித நேயத்தை முன்னிறுத்தியே ஆராயவேண்டும்; மனிதாபிமான உணர்வின் அடிப் படையிலேதான் தீர்க்கவேண்டும். இன்று போரிட்டுக் கொண்டு இருப்பவர்கள் ஒரே மூலகத்தைச் சார்ந்த

27 சுந்தரபாண்டியன்
மனிதர்கள். உரிமைகளில் ஏதோ. பெருங்குறை பாட்டினைக் காண்பதாலேயே இப்பிரச்சினை எழுந் துள்ளது என்பதை உணர முடிகிறது. வரலாற்று உண்மைகளை இங்கு மறந்துவிடக்கூடாது. ஆசிய சோதி எனப்புகழப்படும் நமது புத்தபகவான் கூட அவதரித்தது பாரதத்தில்தான்; நாம் எழுப்பிடும் "சாது' ஒலியின் ஆரம்பமே பாரதம்தான்.""
(ராவய இதழ். 4 பக்கம் 10)
3:15 விஜயகுமாரணதுங்க. (மகாஜன கட்சித்தலைவர்)
11.வடக்கே ஆயுதப் போராட்டத்தைவிட, தெற்கே பட்டினிப்போராட்டம் பயங்கரமானது. எனினும் முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சினை வடபகுதிப் பிரச்சினைதான். வடக்கே நிகழும் போராட்டம் மக்களுக்கு எதிரானது அல்ல. அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட விவசாய - தொழிலாள - மீனவரின் பிள்ளைகள் தமது உரிமையைக்கோரி நடத்தும் போராட்டமே அது! அரசுக்கு எதிரான ஒரு வர்க்கப் போராட்டமே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல!...'
"நாங்கள் மக்களைக் கொல்வதை விரும்பவில்லை. இந்தப்போரில் இறப்பவர்கள் யார்? நம்முடைய அப்பாவி விவசாயிகள் - தொழிலாளிகள் - மீனவர் களின் பிள்ளைகள் அல்லவா?."
'' .இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும். இது சில பிக்குகளுக்கு விளங்குவது இல்லை. யுத்தம் முடிவடைந் தால் நாளொன்றுக்கு அதற்காகச் செலவிடப்படும் 200 லட்சமூபா மீதமாகும்.""
".படைத்தளபதிகள் சொல்லுகிறார்கள், இது செய்ய முடியாத யுத்தம் என்று. அதே போல் வெற்றி பெறவும் இயலாதயுத்தம் என்கிறார்கள். அப்படியானால்
த்தம் செய்வது யார்? சிறிமாவா? அஸ்கிரி தலைமைப் ?? இராணுவ வீரர்களுக்கு சாப்பிடுவதற்கு, சோறு சமைப்பதற்காக விறகுகளைத் தருவிப்பதற்கும்

Page 17
இலங்கை இனப்பிரச்சினையில். 28
பிரபாகரனின் அதிகாரிகளிடம் செல்ல வேண்டி இருக்கிறது."
"...இன்று அவர்கள் முத்திரை அச்சடிக்கிறார்கள். காசும் அச்சிடப்போகிறார்கள். வடக்கே அரச நிறுவ னங்கள் பலவும் அவர்களுக்குட்பட்டே இருக்கின்றன. அப்படியானால் இன்று வடக்கே தனியான அரசு இருக்கின்றது என்று எம்மால் கூறமுடியாது?"
"...இந்நிலையில் சிறிமா கூறுவதுபோல் தேர்தலை நடத்த முடியுமா? அப்படி நடத்தினால் இங்கே சிங்கள அரசும் வடக்கே தமிழ் அரசும் என்று நாடு தானாகவே இரண்டுபட்டுவிடும்."
'ஜேஆருக்ரும், சிறிமாவுக்கும் எதிரான குழுக்களில் அவர்களை இணைக்க இயலாது. அவர்களின் குறிக் கோள் தென்னிலங்கை அல்ல! வடக்கையும் கிழக்கை யும் பெறுவதே! இப்போதே வடக்கில் அவர்கள்" அயல்நாட்டுத் தூதுவர்களை நியமித்துவிட்டார்கள்."
"...சிறிமாவையும் அநுரபண்டார நாயக்கவையும் போன்று ஜே ஆர். இனவாதி அல்ல. இன்றைய சூழ் நிலையில் பிரதேச சபை முறையே ஏற்றது பிரச் சினைக்கு உடன் தீர்வுகாணத் தவறினால், இப்போது வடக்கில் ஆட்சி நடத்தும் அவர்கள் கிழக்கிலும் தமது நிலையை உறுதிப் படுத்திக்கொண்டுதெற்கே திரும்பு வார்கள். அப்போது தமிழர்களைக் கொல்லுவோம் என்பவர்கள் எமது காலடியில் விழுந்து பிரபாகரனை யும் - மகேஸ்வரனையும் கண்டு தீர்வுகாணச்சொல்லி கெஞ்சுவார்கள்."
(ராவய இதழ் 5 பக்கம் 7, 8, 15.)
3:16 லசுஷ்மன் ஜயக்கொடி
(பூரீலங்கா சுதந்திரக்கட்சி)
"...பிரதேச சபைகளுக்குப்பதிலாக முன்னர் இருந்தது போன்ற ஸ்தல ஸ்தாபன அமைப்பினையே நாங்கள் கோருகின்றோம். அப்போது தமிழர் குழுக்களுக்கும்

29 சுந்தரபாண்டியன்
உரிய முறையில் அங்கத்துவம் கிடைக்கும். பிரச்சினை
களைத்தீர்க்க அவர்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்.
நாட்டின் இறைமை பாதிப்படையாத விதத்தில் தமிழர்
களின் பிரச்சினை தீர்க்கப்படுவதை நாங்கள் எதிர்க்க வில்லை' "
"...இ. தொ. காவின் உண்மையான நோக்கம் இந்தி யாவில் வெளியாகும் 'காங்கிரஸ் நியூஸ்" படிக்கும் போது தெளிவாகும்."
"...நாட்டைப் பிரிப்பதா என்ற பிரச்சினைக்கு பொதுத் தேர்தலை நடத்துவதுதான் முறை1.'"
, , .நாட்டைப் பிளவுபடுத்தாதே! அதிகாரங்கள்ைப் பகிர்ந்து கொடுக்காதே! என மக்கள் ஆணை இடுவார் களேயானால் ஆயுதம் ஏந்துவதே முறை!."
"...இந்தியா இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்க ளிடையே ஏற்படுத்தப்போகும் அரசியல் முறையால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் ாப்பக்கம் சார்வார்கள்? பாண்டிச்சேரியில் நடப்பதை நாம் அறிவோம். ஆகவே மலையகத்தில் தமிழ்பேசும் மக்களும் இப்படியான அமைப்பே கோருவார்கள். அப் போது என்ன நடக்கும்? நாடு பிளவுபடாமல் அப்படியே இருக்கும். ஆனால் மக்களில் ஒருபகுதியினர் முழுமை யாக இந்தியாவின் பக்கம் சார்ந்தவர்களாகப் பிளவு பட்டு விடுவார்கள்."
(ராவய இதழ் 6 பக்கம் 6-9)
3:17 அருட்தந்தை அர்னஸ்ட் போருதொட்ட.
"...கொழும்பில் இருக்கும் தமிழர்களில் பெரும் பாலானோர் தாழ்ந்த சாதியினர். தமிழர்களிடையே வியக்கத்தக்க விதத்தில் சாதி வேற்றுமை நிலவுகிறது. இது என்றைக்காவது இவர்கள் இடையே பெரிய மோதலைக் கொண்டுவரும் என நான் எண்ணு கிறேன்.""
**.தமிழர்கள் கருதுவதுபோல் பேரினமக்களால் இவர் களுக்கு எதுவிதக்குறையும் ஏற்பட்டதில்லை. இன்று

Page 18
இலங்கை இனப்பிரச்சினையில். 30
இவர்களுக்குத் தேவைப்படுவது இலங்கையின் பொரு ளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றுவதுதான். மயில் வாகனம், எலியசர் என்பார் மேலைத்தேயம் சென்று ஆய்வு செய்து குழாய்க்கிணறு முறைகளை தமது இனத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தமையால் எமது பொருளாதாரத்தை தமிழர்கள் சூட்சுமமாக ஆக்கிரமித்தனர். இப்படியாக வைத்தியத்துறைதொழில்நுட்பத்துறை ஊடாகவும் எமக்குரிய பங்கு அபகரிக்கப்பட்டது."
(ராவய இதழ் 6. பக்கம் 4-5)
318 பேராசிரியர் சிரிகுணசிங்க.
"...நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பண்பாடு தூய்மையானது, நம்முடைய இனம் - நம்முடைய இரத்தம் தூய்மையானது என்று சொல்லிக் கொண் டாலும் யதார்த்தத்தில் நாம் எவருமே தூய்மை யானவர்கள் அல்ல. இனமோ - இரத்தமோ தூயது அல்ல...”*
"...நமது பண்பாடு சிங்களம் , தமிழ், முஸ்லிம் என்ற மூவினங்களினது மூலகங்களின் கலப்பினால் உரு வானது என்பதே உண்மை. ’’
(ராவய இதழ் 6 பக்கம் 21)
3:19 குணசேன மகாநாம-அலிசேச செயலர் (அரசாங்க எழுத்தர் சங்கம்)
11.தமிழ் இனத்துக்கு தாம் விரும்பிய ஆட்சி முறை யினை அமைத்துக்கொள்வதற்கு இருக்கும் உரிமையை எமது சங்கம் ஏற்றுக்கொள்கிறது.”*
(ராவய இதழ் 7. பக்கம் 40)
3:20 ருக்மன் சேனாநாயக்க (ஐக்கிய இலங்கை ஜனதா கட்சி)
1.எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத்துக்கு மட்டுமே உரியதான அதிகாரத்தை அன்னியநிறுவனங் களுக்குப் பகிர்ந்தளிக்க முடியாது."

31 சுந்தரபாண்டியன்
" ..நமது மக்களைக் கூறுபோடுவதோ-பிரித்து வேறு படுத்துவதோ எம்மால் ஏற்கக்கூடியது அல்ல. நாடு கான்பது நாட்டு மக்களையும் புவிப் பகுதியையும் உள்ளடக்கியதே ஆகும். பூணிலங்கா ஒரே நாடாக, ஒரே தேசிய இனமாக இருக்க வேண்டும். சட்டத்தை யும் ஒழுங்கையும் பராமரித்தல், சமாதான வாழ்வை உருவாக்குதல், அந்நிய அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்றுதல் என்பன அரசின் அடிப்படை அதிகாரங்கள், இத்தகைய அதிகாரங்களையோசட்டமியற்றும் அதிகாரத்தையோ வேறு நிறுவனங் களிடம் ஒப்படைக்க முடியாது...'"
" ..நிருவாகத்தைப் பரவலாக்குதல், FDDT6 அந்தஸ்து, உரிமைகள் சலுகைகள் - ஆங்கிலம் தொடர்பு மொழி முதலான முறைகளைக் கைக்கொள்வ தால்இப்பிரச்சினையைத் தீர்க்கலாம்."
(ராவய இதழ் 8, பக்கம் 8}
321 பேராசிரியர் சிரிமல் ரணவெல்ல.
""பாரம்பரிய பிரதேசம் என்று ஒரு பகுதியைச் சுட்டிக் காட்ட சில சிங்கள மேதாவிகள் பகீரதப் பிரயத்தனங் களில் இறங்கி இருக்கிறார்கள்"
"வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் பாரம்பரியப் பகுதிகள் என்றால் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல் வெட்டு ஒன்றாயினும் இருத்தல் வேண்டும். ஆனால் இதுவரை ஒரூ கல்வெட்டாயினும் கண்டுபிடிக்கப்பட வில்லை."
**.சிங்களவர்கள் கி. மு. 6ம் நூற்றாண்டில் இலங் கைக்கு வந்தபோது இங்கு வசித்த நாகர்கள் ஆரியர் களே அன்றித் தமிழர்கள் அல்ல. மகாநாக, விமலநாக, சோழநாக என்னும் அரசர்கள் சிங்களவரே அன்றித் தமிழர்கள் அல்ல."
'. கி. பி. 1917 வரையிலான அனுரதபுர யுகத்தில் தமிழர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. கி.பி. 1ம் நூற் றாண்டில் வசப மன்னனின் அமைச்சரொருவரான இச கிரி யாழ்ப்பாணத்தை ஆண்டது பற்றிய வல்லிபுரக் கல்

Page 19
இலங்கை இனப்பிரச்சினையில். 32
வெட்டு சிங்கள மொழியில் உள்ளது. கி.பி. 6ம் நூற் றாண்டில் இப்பகுதியில் பல பெளத்த விகாரைகளை 5 கட்டியிருப்பவர் 2ம் அக்கபோதி அரசர். இதனால் இப்பகுதியில் சிங்கள மக்களே இருந்தனர் என்பது தெளிவாகிறது."
'.இப்பகுதியில் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுக் களில் காலத்தால் முந்தியது கி.பி. 1153-1186 வரை ஆட்சிபுரிந்த 1ம் பராக்கிரமபாகுவின் கல்வெட்டேயா கும். சிங்களவனான பராக்கிரமபாகு தமிழில் கல்வெட்டு செய்வித்தது அப்பகுதியில் தமிழர் வாழ்ந்தாலும் அது சிங்களர் ஆட்சிக்கு உட்பட்டே இருந்தது என்பதைப் புலப்படுத்துகிறது. இப்படிக்கூறுபவர் கார்த்திகேசு இந்திரபாலன் என்னும் தமிழரே! தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரிய ராகிய எஸ். பத்மநாதன் தனது ஆய்வுக் கட்டுரையில் யாழ்ப்பாணத்தில் தமிழர் குடியேற்றம் நிகழ்ந்தது கி.பி. 13ம் நூற்றாண்டின் பின்னர்தான் என்பதைக் குறிப்பிடுகிறார்."
".யாழ். பிரதேசத்தில் 10ம் நூற்றாண்டில் கூட சிங்களக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மன்னார். திருமலை, திரியா ய், முல்லைத்தீவு அருகில் உள்ள "குருந்தன்மலை போன்ற பல பகுதிகளிலும் சிங்களக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அப்பகுதிகளில் சிங்களவர் பரவலாக வசித்ததைக் காட்டுகிறது.'
" .15 நூற்றாண்டில் கூட ம்ே பராக்கிரமபாகுவின் ஆட்சியின் கீழ்தான் யாழ்ப்பாணம் இருந்தது. போர்த் துக்கேயர் யாழ்ப்பாணத்துக்கு வந்த வேளையிலும் சிங்களவருடன்தான் போரிட்டார்கள் என்பை TEMPORLAND SPIRITUAL CONOUSTA OF CEYL ON என்ற நூல் காட்டுகிறது. அச்சுவேலிக்கு அண்மை யில் இருந்த புத்த கோவிலுக்குப் பக்கத்தில் சிங்களவர் கள் முறியடிக்கப்பட்டார்கள் என்பதை AUTRO AND EXCRT DISCRIPTION OF THE GREAT ISLAND OF CEYLON என்னும் நூல் கூறுகிறது. இதன்படி 17ம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆட்சியே இருந்திருக்கிறது.'

83 சுந்தரபாண்டியன்
".83ம் ஆண்டுவர்ை வடபகுதியில் 20000 சிங்களவர் கள் இருந்தார்கள். இனக்கலவரம் காரணமாக அவர் கள் வெளியேறிவிட்டார்கள். சிங்களப் பாரம்பரியப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் பரம்பரையாக வாழும் சிங்களவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் அவர் கள் இழிசனர் அல்லது அரிசனங்கள் என்று குறிப்பிடப் படுகிறார்கள்.'"
"...இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களும் பாரம்பரியமாக சிங்களருக்கே உரியன!"
(ராவய 9ம் இதழ்-பக்கம் 36-37)
322 கலாநிதி நீலன் திருச் செல்வம் (தமிழர் விடுதலைக் கூட்டணி)
"...அரசியல் யாப்பின் 6 வது திருத்தம் தமிழ்மக்களின்
வாக்குரிமையைப் பறித்துவிட்டது.1983ன் பின் வடக்கி ம் கிழக்கிலும் பாராளுமன்றத்துக்காக மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துவோர் எவரும் இல்லை."
* தமிழ்ப்போராளிகள் குழுக்களின் ஆயுதப்போராட்டம் பூணிலங்காவில் இயங்கும் சனநாயக அரசியல் முறை மீது ஏற்பட்ட அதிருப்தியின் விளைவேயாகும். எமது கட்சி அகிம்சை வழி செல்வதாயினும் , தமிழ்ப்போராளி களின் போராட்டம் உருவாதற்கு ஏதுவான அரசியற் காரணிகளை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கிய மானது. அவற்றை இருபிரிவாகக் குறிப்பிடலாம். முதலாவதாக அது தமது பக்கம் குறுகிய இனவாத அரசியல் குழுக்களை வென்றெடுப்பதற்காக தமிழர் பிரச்சினையை "உதைபந்தாகப் பாவித்த சிங்க்ள அரசியற் கட்சிகளின் செயலுக்கு எதிரான வெளிப்பாடு ஆகும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு ஆளானதும், கைவிடப்பட்டதுமான பல அரசியல் ஒப்பந்தங்களின் வரலாற்றினை இங்கு மீண்டும் குறிப்பிடுவது அவசிய மற்றது . நாம் அனுபவித்த சகல துயரங்களையும் கருதாது எதிர்க்கட்சியும் - அரசாங்கத்துக்குள் இருக் கும் சில குழுக்களும் சந்தர்ப்பவாத அரசியலில்இன்னும் ஈடுபடுவது வருந்தற்குரியது.
போராளிகளின் ஆயுதப்போராட்டம் தோன்றுவதற்கு

Page 20
இலங்கை இனப்பிரச்சினையில். 34
அடுத்தகாரணம் 1977ல் 1981ல் 1983ல் அலைக்குப்பின் அலையாக மீண்டும் மீண்டும் ஏற்பட்ட கொடூரமான காடைத்தனங்கள், காரணமின்றிக் கைது செய்தல் - தடுத்துவைத்துச் சித்திரவதை செய்தல். அப்பாவி மக்களைக்கொலை செய்வது - இவற்றை விசாரித்து தண்டனை வழங்காமை என்பன. இதன் விளைவாகனந்த அரசு அதிகாரத்தில் இருந்தாலும் தண்டனை கிடைக் குமே என்ற அச்சம் அற்றவராக தமிழருக்கு எதிராக எந்த விதமான காடைத்தனத்தையும் கட்டவிழ்த்துவிட லாம் என்ற நிலை ஏற்பட்டது. இவ்வாறான அநீதி களுக்கு எதிராக அரசியல் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப் படவில்லை. ‘இவர் களும் இந்த நாட்டுப் பிரசைகள்தான்; அவர்களுக்கு எதிராக இவ்வாறான அநியாயங்களைக் செய்யக் கூடாது' என்று இடித் துரைப்பதற்கு எவரேனும் சிங்கள இனத்தவர்களில் இருந்தார்கள் என்றால் அது மத்தியதர வர்க்கத்தினருள் மிகச்சிலர் மட்டுமே. இவ் விரு பிரதான காரணிகளே தமிழ்ப் போராளிகளை ஆயுதமேந்த ஊக்குவித்தன."
"தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு மக்கள் இடையே இருக்கும் செல்வாக்கு குறைந்துவிட வில்லை."
(ராவய இதழ் 9-பக்கம் 2, 3, 40) 3:23 எதிர்க்கட்சித்தலைவர் அநுர பண்டார நாயக்க.
*". இந்த அரசு இந்தப் பிரச்சினையை தீர்க்காது என்பது நன்கு தெளிவு. இந்த அரசாங்கத்தின் இந்தப் போக்கு நீடித்தால் இந்தியா இலங்கை மீது படை யெடுப்பதைவிட வேறுவிதமான பாதிப்புகளை ஏற் படுத்த முடியும். என்றாலும் இலங்கையை ஆக்கிர மிக்காமல் இருப்பதற்கு தன்னாலியன்ற எல்லா முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்.'
" ..நாங்கள் பதவிக்கு வந்தால் தமிழ் மக்களின் பிரதி நிதிகளின் ஒத்துழைப்புடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம். முதலா

35 சுந்தரபாண்டியன்
வதாக இலங்கை* மீதான இந்தியாவின் மனக் கசப் பினையும் - சந்தேகங்களையும் போக்கவேண்டும் . அதற்கு அடிப்படையான காரணங்களை நாம் நன்கு அறிவோம். நாங்கள் இந்தியவிரோதச் சக்திகளின் கைப்பாவைகள் அல்ல! இதனை முதலில் எமது செயல் மூலம் உணர்த்துவோம்."
(ராவய இதழ் 11 பக்கம் 14)
3:24 தேசிய பாதுகாப்பு அமைச்சர் ல்லித்அத்துலத்முதலி.
".சுய நிர்ணய உரிமைக்கு இடங்கொடுக்கவேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுன பிரசுரங்களில் முன்பு குறிப்பீட்ப்பட்டு இருந்தாலும் அது இப்போது தனது 3ள்கையினை மாற்றிக் கொண்டுவிட்டதாகத் தெரி
கிறது.'
".வடக்கே பிரச்சினையின் முடிவு இந்தியாவின் ஆக்கிரமிப்புதான் என்ற நிலை இருந்தாலும் அதைப் பற்றி மட்டும் கவனத்திற் கொண்டு நமது உள்நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பதைத் தவிர்க்க எம்மால்இயலாது. இந்திய அரசு இலங்கைக்குள் எதேச்சாதிகாரப் ப்ோக்கில் நுழையும் என்று நான் கருதவில்லை. அதை வேறு வழியாகச் செய்ய முடியும். இப்போது. கூட தமிழ் நாடு செய்து கொண்டிருப்பது அதைத்தானே?."
.இந்தப்பிரச்னையின் உண்மை நிலையை விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியம். அதிகாரப் பரவலாக்கு வதை அரசு கொள்கை ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளது. உலகநாடுகளும் இந்தியாவும் இதை ஏற்றுக் கொண் டுள்ளன. ஆனால் எல். ரீ.ரீ. ஈயும், ஈரோசும் மட்டும் இதை நிராகரிக்கின்றன. அவர்களுக்குத் தேவைப் டுவிது" இராணுவத் தீர்வு'அந்த இரு தழுக்களை யும் ஒதுக்கிவிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.எனினும் 10% மக்களுக்காக 35% பூமியை அவர்கள் கோருகிறார்கள். இந்தநிலையில் போரிடுதல் என்னும் தவறினை நாம் செய்ய வேண்டி உள்ளது. இராணுவ நட்வடிக்கைகளினால் இந்த இரு குழுக் களையும் பலவீனப்படுத்தி அரசியல் தீர்வொன்றினைக் னல்ாம். எனினும் மக்களிடையே இழந்த ஒற்று

Page 21
இலங்கை இனப்பிரச்சினையில். 36
மையை மீண்டும் ஏற்படுத்த வேண்டியதற்கான நட வடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. இவர் களிடையே குறுகிய மனப்பான்மையை நீக்கும் நோக் கத்தில்தான் நான் சிங்களம் - தமிழ் - ஆங்கிலம் என்னும் மும்மொழித்திட்டத்தை முன்வைத்தேன்."
(ராவய இதழ் 11 பக்கம் 24)
3:25 மாதுலுவாவே சோபித தேரோ (பெளத்த மதகுரு)
'நாட்டில் புரையோடி விட்ட பயங்கரவாதப் பிரச் சினையைத்தீர்ப்பதற்கு கடந்த பத்தாண்டுகளில் இந்த அரசாங்கம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதை யும் எடுத்ததாகச் சொல்லமுடியாது. இவர்களது நடவடிக்கைகளால் இன்று வடக்கு அதிகாரமற்ற சுயாதீனப் பகுதியாகிவிட்டது.'"
'.வடக்கே ஆட்சி அதிகாரம் இந்த அரசின் கையில் இல்லை. இந்த நாட்டில் இன்னொரு பக்கத்தின் தலைவர் தொண்டமான் அவர் ஆணையிட்டால் அரசு யுத்த நிறுத்தம் செய்கிறது-மீண்டும் அவர் விரும்பும் போது போர்புரிகிறது."
"இந்த அரசாங்கத்துக்கும் உண்மைக்கும் வெகுதூரம். கட்ந்த 22ம் திகதி நடந்த எமது பேரணியைப்பற்றி அமைச்சர் அத்துலத் முதலி சொன்னது என்ன?. இதைப்பற்றியே இவ்வளவு பொய் சொன்னால் வடக்கே நடப்பதைப்பற்றி இவர்கள் சொல்வதை நம்பமுடியுமா?."
"அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் மக்களும் சிங்களமக்களும் ஒருமித்து எழுந்து நிற்க வேண்டும், வடக்கே இன்று நடப்பது தான் நாளை நமக்கு: சிங்கள-தமிழ் பேதத்தை எவனாவது எழுப்பு வானாயின் அதற்காக நாம் ஒருவரை ஒருவர் வெட்டிக் குத்திக்கொண்டிருக்கத் தேவை இல்லை."
‘இன்று பல தனிப்பட்டவர்களாலும் இயக்கங்களினா லும் பிக்குகள் இன வாதிகளாக அறிமுகப்படுத்தப்

37 சுந்தரபாண்டியன்
பட்டுள்ளனர். தமிழ் பிக்குகள்-தமிழ் அரசர்கள் இலங்கையில் இருந்திருக்கிறார்கள். அதை பிக்குகள் எதிர்க்கவில்லை. எல்லாளனுக்கு எதிராக துட்டகை முனுவுடன் பிக்குகள் சென்றது இன விரோதத்தால் அல்ல! வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான கொள்கையையே அது புலப்படுத்துகிறது."
(ராவய 11ம் இதழ் பக்கம் 19-21)
3:26 கலாநிதி ஏ.ரீ.ஆரியரத்ன (சர்வோதய இயக்கத் தலைவர்)
‘‘1948ல் எமக்குச் சுதந்திரம் கிடைத்தபோது, இந் நாட்டு மக்களின் திறமை, அடிப்படை உரிமை, பழம் சம்பிரதாயங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு அன்றைய தலைவர்கள் செயற்பட்டு இருந்தால் தமிழ் மக்களும் சிங்களமக்களும் தமது பாரம்பரியங்களை நன்கு மேம்படுத்தி இருக்க முடியும். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள்? ஏனென் றால் வடக்கே இருந்து வந்த தலைவர்களும் இங்கே இருந்த தலைவர்களும் குலப் பெருமையில் காலங் கடத்தினரே அன்றிப் பொதுமக்களை மேம்படுத்த எண்ணவில்லை...'
"...இதனால் பொதுமக்களின் உரிமைகள் வடக்கிலோ -தெற்கிலோ உள்ள பொதுமக்களுக்குக் கிடைக்க வில்லை. பாராளுமன்றச் சம்பிரதாயங்கள் வடக்கிலும் தெற்கிலும் உள்ள உயர்மட்டத் தலைவர்கள் இடை யில் மட்டுமே தொடர்பினை வைத்து இருந்தன. ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெளி யேற்றப்பட்டதும் வடக்கே இந்த நிலை மாறிவிட்டது. கீழ்மட்டத்தில் இருந்த ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் ஆதிபத்தியம் தலைதூக்கியது. தெற்கிலும் இப்படியான நிலை ஏற்பட இடம் இருப்பதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் கூறுகின்றன. ஆகவே அதிருப்தியடைந்த மக்கள் இம்சாவழியில் இறங்குவது தெளிவாகிறது."
**.இந்த நாட்டில் வாழுகின்றவர்கள் பலவேறான எண்ணக்கருத்துக்களை உடைய மக்கள் என்பதை முதலில் நாங்கள் கூறினோம்.'

Page 22
இலங்கை இனப்பிரச்சினையில். 38
" ..நாங்கள் பிரச்சினைகளுடன் நேரடியாக மோத வில்லை. காரணம் அவைகள் வெளிப்பாடுகள் மட்டுமே. அவற்றின் உள்ளடங்கிய மூலகாரணங்களை ஆய்ந்து அவற்றுக்கான தீர்வில் ஈடுபட்டோம்..”*
"...இராணுவபலத்தைப்பெருக்குவதும், சிறைச்சாலை களில் மக்களைப் பெருந்தொகையில் அடைப்பதும் நிரந்தரத் தீர்வாகாது."
"ஓர் உயிராவது அழிவதை நாம் விரும்பவில்லை. சமூக அமைப்பு மக்கள் அழிவதற்கு ஏற்ற விதத்தில் அமைந்திருக்குமானால், அந்த அமைப்பு உடைத் தெறியப்பட்டு புதியதொரு அமைப்பு உருவாவதை நாங்கள் வரவேற்கிறோம்.'" -
‘சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய நியாயமான முறையில் அதிகாரப்பரவலாக்கம் ஏற்படுமாயின் நாடு பிரிவதைத் தவிர்க்கலாம்.'
* மக்களே தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வழிகோல வேண்டும்'
(ராவய இதழ் 11-பக்கம் 17-18)
3:27 ரீ.பி. இலங்கரத்ன (சிறிமாவோ அரசின் முன்னாள் அமைச்சர்)
"...1976ல் எமது அரசு தமிழர்களின் பிரச்சினை பற்றி செல்வநாயகம் அவர்களோடு கலந்தது. அரசின் சார்பில் நானும், தமிழர் சார்பாக செல்வநாயகம் அவர்களுடன் அமிர்தலிங்கம், நவரத்தினம், சிவ சிதம்பரம் ஆகியவர்களும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டோம். முதலில் சிங்களமொழித் தேர்ச்சி பற்றிய பேச்சுவார்த்தையை அடுத்து1.தமிழ்மொழியை தேசிய மொழியாக அங்கீகரித்தல் 2. தமிழ்மொழி உபயோகத்துக்கு நிருவாகத்தில் தரப்பட்டுள்ள அந்தஸ் தினை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்தல் 3. உயர்கல்விக்காகத் தெரிவாகும் மாணவரிடையே தமிழ் மாணவர்களுக்கு உரிய இடம் அளித்தல் ஆக

39 சுந்தரபாண்டியன்
ट्र
இந்த மூன்று பிரச்சினைகள் தான்! சில திருத்தங் களுடன் அவற்றைச் செய்துதர ஒப்புக்கொள்ளப் பட்டது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தபின் திரு. அமிர்தலிங்கம் ‘ரீ. பி. எங்களுடைய பிரதேச சபை முறையைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்றார்.
**நாடு முழுமைக்கும் ஒரே திட்டந்தான். இனரீதியான பிரதேச சபை முறையினால் நாட்டைக் கூறுபோட முடியாது. ஏன்? எங்களுடைய அரசியல் அதிகாரி முறையை ஏற்றுக்கொண்டால் நீங்கள்தானே வடக்கில் அரசியல் அதிகாரியாக இருப்பீர்கள்?" என்றேன்.
'அன்று வடபகுதி மக்களுக்கு வேறு பெரிய பிரச்சினை கள் இருக்கவில்லை. அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வெங்காயம், மிளகாய் என்பவற்றின் இறக்குமதியை முற்றாகத் தடை செய் தோம். மக்களின் பொருளாதாரநிலை நன்றாக இருந் தமையால் தனி நாடாகப் பிரிந்து போவதற்கு அவர் களுக்கு முக்கிய அவசியம் இருக்கவில்லை."
"..எனினும் பின்னர் நிலைமைமாறிவிட்டது. தொண்ட மான்-அமிர்தலிங்கம் ஜே. ஆர். கூட்டு தமிழரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் நடந்த தென்ன? வடபகுதி மக்கள் தாங்கள் விரும்பியவாறு பிரதிநிதிகளைக்கூட தேர்ந்தெடுக்க முடியாதவாறு அவர்களது உரிமைகளை இனவாதிகளான அமைச்சர் கள் இல்லாமற் செய்துவிட்டார்கள். மாவட்ட அபி விருத்திச் சபையாவது ஒழுங்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால் இந்தப் பயங்கர நிலை உருவாகாமல் இருந்திருக்கும். இத்தேர்தலின்போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு கொலைகள் நிகழ்ந்தன, வாக்குப் பெட்டிகள் மறைந்தன. ஆசியாவிலேயே பெரியதான யாழ் நூலகம் தீவைத்து நாசமாக்கப்பட்டது. மேலும் அவர்களது :பொருளாதார நிலையைச் சீர்குலைத்த சுதந்திரவர்த்தகக்கொள்கைகள்-கலவரங்கள் என்பன எமது காலத்தில் உறங்கிக்கிடந்த புலிகளை உசுப்பி விட்டன."
(ராவய இதழ் 12-பக்கம் 2-4)
பொதுவாக கலந்துரையாடல்கள், அரசியல்வாதிகள்

Page 23
இலங்கை இனப்பிரச்சினையில். 40
அரசியல் அறிஞர்கள்-மதகுருமார்-சமூகத்தொண்டர் கள்-வரலாற்றுப் பேராசிரியர்கள் கலைஞர்கள் எனச் சமூகத்தில் பிரபல்யம் வாய்ந்த பலரோடும் இடம் பெற்று இருக்கின்றன. ஒரு சிலர் தமிழர்களுக்குப் பிரச்சினையே இல்லை என்று அபிப்ராயம் தெரிவித் துள்ளனர். இன்னும் சிலர் பிரச்சினைகள் இருப்பதை ஒத்துக்கொள்கின்றனர்; ஆனால் தீர்வுக்கு வழி கூறத் தயங்குகின்றனர். சிலர் வடக்கும் கிழக்கும் சிங்களரது பாரம்பரிய பூமி என்கின்றனர். இன்னும் சிலர் பிரச் சினையில் தெளிவு இல்லாதவராக சிங்கள உணர்வு மேலிட்டவராகத் தென்படுகின்றனர்.
கலாவதி நிவ்டன் குணசிங்க, ஹெக்டர் அபேவர்தன, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, பேராசிரியர் காலோ பொன்சேகா, கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோர் இப்பிரச்சினையைப்பற்றி முழுமையான தெளிவு உடையோராக இருப்பது தெரிகிறது.கலாநிதி бт. П. ஆரியரத்னவின் பேட்டி மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்தியா விபுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்கிறார் அநுரபண்டார நாயக்க கலாவான பிரதிநிதி டியூகுன சேகர முற்போக்கான கருத்துக்களை முன் வைத்துள் ளார். கலாநிதி எதிரி வீரசரத் சந்திர, லிசாரத டப்ளிவ் டீ. அமரதேவ விஜய குமாரணதுங்க ஆகியோரது பேட்டிகளும் குறிப்பிடத்தகுந்தவை. மற்றும் அமைச்சர் கள் லலித் அத்துலத் முதலி, காமினிதிசாநாயக்க ஆகி யோரதும் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன. முடிக்குரிய வழக்கறிஞர் எஸ்.நடேசன் அவர்களது உரையாடலில் இவ்வளவுகாலமும் பேசிப் பேசி என்ன பலனைக் கண் டோம் என்ற விரக்தி தொனிக்கிறது
தமிழரின் பிரச்சினைபற்றிப்பெரும்பான்மையான தலை வர்கள் கருத்தினைப்பெற்று வெளியிட்ட "ராவய" எதிரான மறுப்புரைகள் கிடைத்தபோது அவற்றையும் வெளியிடத் தயங்கவில்லை. பேராசிரியர் சிரிமல் ரன வெல்லவின் கருத்துக்களுக்கு வரலாற்றுத்துறை வல்லு னர் அபிப்ராயம் தெரிவிப்பின் நல்லது. இனி இது தொடர்பான கட்டுரைகளையும் விமரிசனக் கடிதங் களையும் கவனிப்போம்.

| சுந்தரபாண்டியன்
4: கட்டுரைகள்-விமரிசனங்கள்
41 இனப்பிரச்சினைகள் மத்தியில் இலக்கியவாதி யின் பொறுப்பு'- கே.ஜி. அமரதாச
உண்மையிலேயே தமிழரின் நாகரிகம் - பண்பாடு உலகத்தில் தோன்றிய உயர்வான நாகரிகம்- பண் பாடு என்பதை ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பெற்ற சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காவியங்களும் ஏனைய இலக்கியங்களும் உணர்த்துகின்றன."
இரண்டாயிரம் ஆண்டுகளாக இலங்கையில் தமிழர் கள் வாழ்ந்தாலும் தமது தாயகமாக இந்தியாவையே கருதினர். சிங்களர் மத்தியில் பூஞரீலங்காதான் அன்னை
மி என்ற உணர்வு ஆழப்பதிந்திருப்பதுபோல் தமிழ
டையே பலமான உணர்வு கிடையாது. தாயகம்-தாய் நாடு எனத் தென்னிந்தியாவையே அவர்கள் குறிப்
பிடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பண்பாடு-இலக்கியம்-சமுதாயம் என்பவை தொடர்பாக கிடைக்கக்கூடிய நூல்கள் பெரும்பாலும் அண்மைக்காலம் வரை தென்னிந்தியாவில் பிரசுர
ானமைதான்."
'.இந்தநிலை இன்னும் நீடிப்பதற்கு இடமளிக்காது தவிர்த்துக்கொள்வது பூரீலங்காவின் தமிழ் எழுத்தாளர் களது கடமை. இதே போன்று பெரும்பாதிப்பை ஏற் படுத்துவன தான் தென்னிந்தியத் திரைப்படங்கள்; சிங்களக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை யில் தயாராகும் கலையுணர்வு மிக்கதமிழ்த்திரைப்படங் களை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதை தடை செய்யும் சக்திகள் இயங்குகின்றன."
'.நாடுகளுக்கு இடையிலான இலக்கியப் பரிமாற் றத்தை தடைசெய்ய முடியாது. ஆனால் வெளிநாட்டுச் சஞ்சிகைகளினால் ஏற்படக்கூடிய தீமைகளைத் தவிர்ப் பதற்காக உள்நாட்டிலும் தரமான சஞ்சிகைகள் வெளி யிடப்பட வேண்டும். புத்தக வெளியீட்டாளர்களுக்கு அரசாங்கம் நிதி முதலான உதவிகளைச் செய்ய

Page 24
இலங்கை இனப்பிரச்சினையில். 42
வேண்டும். சஞ்சிகைகள்-பத்திரிகைகள் வெளியிடுவது இலாபகரமான தொழில் அல்ல; ஆகவே நிதியுதவி செய்தல்தகும்.'
'. இனப்பிரச்சினை ஏற்பட்டதற்குப் பலகாரனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டிலே வாழும் தாங்கள் இரண்டாந்தரப் பிரசை களாக கணிக்கப்படுவதாக தமிழர்கள் எண்ணுகிறார் கள். கல்வி - தொழில் வாய்ப்புகளில் பெரும்பான்மை யினருக்குச் சமமான இடம் கிடைப்பதில்லை எனச்சிலர் கூறுகிறார்கள். இருமொழியினர் இடையேயும் பரஸ் பரவிளக்கம் இன்மை, உலகத்தமிழர் இடையே தமது பண்பாட்டைப்பாதுகாக்க வேறான ஒரு இராச்சியம் வேண்டும் என்ற உணர்வு எழுந்தமை என்பன பொரு ளியல் காரணிகளை விட முக்கியம் பெற்றவை."
".சிங்கள - தமிழ் மக்களிடையே அரசியல் பிரச் சினைகள் எழுவதற்குமுன் இலங்கையர் மட்டுமின்றி இந்தியத் தமிழர்களும் இலங்கையின் மூலை முடுக்கு களெல்லாம் பரவி வர்த்தகம் - தொழில்களில் ஈடுபட் டிருந்தனர், அரசபதவிகளில் கூட பெருந்தொகையான தமிழர்களே இருந்தனர். தமிழர்களிடையே இருந்த குல வேற்றுமையைக் கூடக்கருதாது சிங்களவர்கள் தமிழர்கள் எல்லோரையும் சமமாகவே கருதி 'அய்யா" என்று அழைத்து நட்புரிமை பாராட்டினர். பிரிவினைக் கோரிக்கையும், பயங்கரவாதமும் இந்த நிலையைச் சிதறடித்தன."
'. தமது கல்லூரிகளில் புத்தபிக்குகளை நியமித்து சிங் களம் கற்றுக்கொண்ட தமிழர், சிங்களத்தை அரசாங்க மொழியாக்கியதன்பின் அதைக் கை விட்டனர். சிங்களவர் தமிழைக்கற்கவில்லை;தமிழர் சிங்களத்தைக் கற்கவில்லை. இது ஒருவரது மொழியை மற்றவர் மதிக்கவில்லை என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவித்தது. இந்த நிலை நீக்கிப் பரஸ்பர நல்லுணர்வை உருவாக்கி உறவை ஏற்படுத்துவது எழுத்தாளரின் கடமை யாகும்."
"..எனினும் சிங்களப் பத்திரிகைகளில் இதற்கான முயற்சிகள் மிக அற்பமாக இருப்பது வருத்தத்துக்குரிய

சுந்தரபாண்டியன்
விடயம், சிங்களப் பத்திரிகைகளின் உலகம் சிங்கள மக்கள் மட்டுமே நாட்டில் வசிக்கும் ஏனைய மக்களைப் பற்றிய உணர்வே அவர்களுக்கு இல்லை. எனவே தமிழ்மக்களைப் பற்றிய கதையோ கட்டுரையோ அறுப்பப்பட்டால் தமிழர் தொடர்பானது என்பதைக் கண்டதுமே நேராக குப்பைத் தொட்டிக்குள் எறிந்து விடுவது வழக்கமாக உள்ளது.'
". இதற்கு முற்றிலும் மாறுபட்ட மனப்பான்மையுடன் செயற்படும் யாழ்ப்பாணத்து தமிழ்சஞ்சிகைஒன்றினைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அது ஆரம் பிக்கப்பட்டது இன்றைக்கு 21 வருடங்களுக்கு முன்பு. அது ஒரு சிறிய மாத இதழ். சிங்களருடன் தொடர்பு சிங்கா இலக்கியங்கள் - எழுத்தாளர்கள், படைப்புக் ா என்பவற்றை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது அதன் நோக்கங்களில் ஒன்று. அலு பலகத்தைச் சுற்றிலும் குண்டுகள் வெடித்திடும் இவ் ாயிலும் நிதானமாகத் தன் பணியைத் தொட்ரு வென்றது. கடந்த 1986 மே இதழில் கூட பேராசிரியர் A விாசரத் சந்திர பற்றிய எட்டுப்பக்க கட்டுரை பயினையும், கலாநிதி சந்திரசிரி பள்ளிய குருவின் |ந்திய சினிமா பற்றிய கட்டுரைச் சுருக்கத்தையும் வெளியிட்டுள்ளது. இது வரை பூரீலங்காவின் தமிழ் புத்தாளரைப் பற்றி ஒரு கட்டுரையேனும் சிங்களச் செய்தித்தாள்களில் இடம் பெற்றது உண்டா? நமது ாட்டின் மக்கள் தொடர்புச் சாதனங்கள் இந்த ாவுக்கு முன்னேறியுள்ளன. எனவே இந்த நாட்டில் ாறான கருத்துக்கள் தலைவிரித்தாடுவது அதிசய ா ஒன்று அல்ல."
மக்கள் தலைவர்கள், மேதைகள், வைத்தியர்கள், பொறிஇயலாளர்கள், சிறந்த அரசியல் வாதிகள் எனப் தரப்பட்ட பெருந்தகையாளர் பூரீலங்கா தமிழ் ாள் இடையே தோன்றி நாட்டுக்குப் பெரும் பணி ாறி உள்ளனர். இப்போது இருக்கின்ற பூணூரீலங்கா I தமிழ் இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களினால் ாசயும் சிங்கள மக்களையும் அச்சுறுத்தி வேறான ாச்சியத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில்
பட்டு இருப்பது இரகசியமானதொன்றல்ல."
(ராவய இதழ் 2 பக்கம் 4-8, 44)

Page 25
இலங்கை இனப்பிரச்சினையில். 44
42 சமாதானம் கானல் நீரா?-"காளிங்க
'.அரசு நீண்டகாலம் போர்வழியில் பயணம் செய்து இப்போது சமாதானத்தின் பக்கம் திரும்பி இருப்பது நல்ல செயல் எனினும் சமாதான வழி போர்வழியைப் போன்று அல்லது அதனைவிடவும் பெரும்பயனைத் தரவல்லது என்ற உண்மையை அரசாங்கம் உணர்ந் திருப்பதாகத் தெரியவில்லை."
". இப்போது பிரச்சினை மிகத்தூரம் சென்றுவிட்டது. தெற்கே பகையான சக்திகளை உருவாக்கிக் கொண்டு சமாதானத்தைக் கடைப்பிடிக்க இயலாத அளவுக்குப் பிரச்சினை வளர்ந்து விட்டது. இதற்கு அரசே பொறுப்பு."
".தீர்வுக்காகச் சட்டம் இயற்றிவிட்டால் மட்டும் சமாதானம் உதயமாகிவிடாது. அது வடக்கை மட்டு மல்ல, தெற்கையும் திருப்திப்படுத்தவேண்டியநிலை!. ஒன்று அரசியல்வாதிகள் மனிதத்தன்மை உடையவர் களாக மாறவேண்டும் அல்லது மக்களாவது ஞானம் படைத்தவர்களாக இருக்தல் வேண்டும். இந்த இரண்டுமே இல்லாத நிலையில் அழிவைத் தவிர்ப்பது இயலாத செயல்'
(ராவய இதழ் 2 பக்கம்-14, 15)
4:3 ஈழப் பிரச்சினைக்கு விஜயவீரவின் தீர்வு"சர்வாக"
11.1985 மார்ச்சு மாதம் எழுதி 1986 ஏப்ரல் 16ம் திகதி வெளியிட்ட ரோகண விஜயவீரவின் நூலாகிய "தமிழீழ பிரச்சினைக்குத் தீர்வு என்ன?" என்ற நூலின் 208ம் பக்கத்தில் 'இந்திய ஆக்கிரமிப்பு பற்றிப் பெரி தாக முழங்குவதும், யுத்த அச்சுறுத்தலை உருவாக்கு வதும் ஜே. ஆர்-தொண்டமான் அரசின் தந்திரமே! எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மதில்களில்தெருக்களில் - குப்பைக் கூடைகளில் எல்லாம் அவரது கட்சிஇந்திய எதிர்ப்புச் சுலோகங்களை எழுதியுள்ளது.

சந்தரபாண்டியன்
அப்படியானால் அரசின் தந்திரோபாயங்களை ஜே.வி.
நாள் நடைமுறைப்படுத்துகிறதா?.'
'இப்பிரச்சினையின் .נצ:ז8+ תיLD ஆயுதப்போராட்டமே பால் அதனை இராணுவ நடவடிக்கை மூலமாக பக்குவதே ஒழிய வேறு தீர்வு கிடையாது!" எனக் குறிப்பிடும் விஜய விர சிங்கள - பெளத்த இனவாதி ான் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார் "முழு இலங்கைக்கும் உண்மையான உரிமையாளர்கள்_சிங் ா மட்டுமே! இலங்கைக்கு முதலில் வந்து குடியேற் றங்களை ஏற்படுத்திய ஆரிய- இந்து ஐரோப்பிய மக்கள் இவர்களே. ஏனைய இன-மத குழுக்களுக்கு வரலாற்று ரீதியான உரிமை கிடையாது'
'.இனவாத தமிழ்ப் பயங்கரவாதிகள் இலங்கையை இரண்டாகப் பிளப்பதற்காக ஆயுதம் ஏந்திப் போராடு கிறார்கள். இவர்கள் அறிந்தோ அறியாமலோ அமெரிக்க கைக்கூலிகளாக இயங்குன்றனர். அமெரிக் காவின் அடிமையான ஜே. ஆர்- தொண்டமான் அரசு தனது எச்ம்ானைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக் கிறது. இவர்களின் நோக்கம் ஈழத்துடன் தமிழ் நாட்டை இணைப்பது-பின் படிப்படியாக இந்தி யாவைப் பிள்வுபடுத்துவது - இதன்முலம் அமெரிக் காவை எதிர்க்கக்கூடிய சோவியத் நாட்டின் வலிமை யைக் குறைப்பது; எனினும் முதலாளித்துவ வாதியான ராஜீவ்காந்தியும் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கொடுக் கிறார்."
"இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களைக் கூறும் விஜேவீரவுக்கு உலக அரசியல் அறிவை விடுத்து தமிழ் நாட்டின் அரசியலில் ஆனா. ஆவன்னா கூடப் புரிய வில்லை போல் இருக்கிறது "சிறில் மத்தியூவின்'
சிங்களனின் சடுதிப்பகைவன்" என்ற நூலின் கருத்துக் களை நினைவு படுத்துகிறார்."
.இந்த நூலின் தலைப்பு "தமிழ் ஈழப் பிரச்சினைக் குத் தீர்வு என்ன?" என்பதைக் கண்டு விலைக்கு வாங்குபவர்களும், விஜய வீாவைப் பற்றிய உண்மை
யினை உணராதவர்களுமாகிய வாசகர்கள் 300 பக்கத்

Page 26
இலங்கை இனப்பிரச்சினையில். 46
துக்குமேற்பட்ட இந்நூலில் எதுவித ஆக்கபூர்வமான தீர்வும் இல்லாததைக் காண்பார்கள். போலியான வர லாற்று எடுத்துக்காட்டுக்களும், வெற்றுப் பிரலாபங் களும் ஒருமனநோயாளியின் தன்மையையே பிரதிபலிக் கின்றன. இறுதிப்பக்கங்களில் சமஷ்டி அரசியல் முறைக்கு தான் எதிரானவர் என்பதை வலியுறுத்து கிறார். வெறும் சமதர்மம்-சோசலிசம் என்று வாயால் 108 தடவைகள் அல்ல லட்சம் முறை உருப்போட்டா லும் உருப்படியான தீர்வை இவர் காணவில்லை.
1. இராணுவ நடவடிக்கைகளால் போராளிகளை முறியடிக்கும் திட்டத்தைக் கைவிட்டு சமா தானமான முறையில் அரசியல் தீர்வொன் றினை ஏற்படுத்திக் கொள்வதாலும்.
2. ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கும் கூடுதலான ஆட்சி அதிகாரத் தைப் பரவலாக்குவதாலும் மட்டுமே இலங்கை யின் இனவாதப் பிரச்சினைக்கு நிரந்தரமான அல்லது தற்காலிகத் தீர்வொன்றினைக்காண இயலும் என்பதை விஜய வீர புரிந்து கொள்வாரா??
(ராவய இதழ் 2-பக்கம் 10-13, 37)
4:4 சமாதானத்தின் யதார்த்தம்-'காளிங்க?
"" .தமிழர் ஐக்கியவிடுதலை முன்னணியின் ஒப்புதல் தமிழினத்தின் ஒப்புதல் அல்ல.’’
*1.தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இருந்த பலத்தை6வது சட்டத் திருத்தத்தால் சிதைத்தது இந்த அரசுதான். அவர்கள் மக்களிடம் போவதை விடுத்து இந்தியாவுக்கு ஓடினார் கள். எனவே அவர்களது மக்கள் சக்தியை வடக்கே போராளிகள் பெற்றுக்கொண்டார்கள்.'"
*. இப்போது தமிழர்களின் தலைவர்களாக இருப்ப வர்கள் அவர்களது புரட்சிகரக் குழந்தைகளே! இந்த

47 சுந்தரபாண்டியன்
உண்மையை ஒத்துக்கொள்ளும் வரை யதார்த்த நிலையை நெருங்கமுடியாது’’
'.சமாதானத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டி யது போராடும் குழுக்கள் உடன் அல்லாது எங்கோ இருக்ரும் பிறத்தியாரோடு அல்ல. அப்படி சும்மா இருப்பவர்களுக்கு முதலிடம் கொடுப்பது பற்றி போரா ளிகள் சினம் அடைந்திருப்பதை அரசு உணர வேண்டும்."
*. போராளிகள் குழுக்கள் பல இருப்பினும் அவற்றுள் பெரும் பிரபல்யம் பெற்று இருப்பது பிரபாகரனின் தலைமையிலான எல். ரீ. ரீ. ஈ. குழுவினர்தான். எமது தனிப்பட்ட கருத்து எதுவானாலும் பிரபாகரனுக்கும் அவரது குழுவுக்கும் முதலிடம் அளிக்கப்படவேண்டும். பிரபாகரனின் குழுவினரைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தி ஏனைய குழுவினரிடம் இல்லை. ஆனால் அந்தக் குழுக்களின் செயற்பாட்டினை தனது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரக்கூடிய சக்தி பிரபாகரனின் குழு வினரிடம் உண்டு. எனவே இந்தக் குழுவினருக்கு கட்டாயமாக முதலிடம் அளிக்கப்படவேண்டும்..”*
(ராவய இதழ் 3-பக்கம் 35)
4:5 இலங்கையின் எதிர்காலம்-சிக்கல் மிக்க பிரச்சினை- காளிங்க?
* "...சிங்களவரின் விருப்பப்படி சிங்களவர் கையால் இறப்பதற்கு தமிழருக்கு விருப்பம் இல்லை. அவ்வாறு இறப்பதற்கு அவர்கள் விரும்பவேண்டியதும் இல்லை. தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஆரம்பத்தில் அவர் கள் சமாதானமான முறையில் வேண்டினார்கள். எனினும் விட்டுக் கொடுக்கப்படவில்லை. அவர்களில் இளைஞரான ஒரு சிலர் சம்பிரதாயமற்ற புதுவழிகளில் பிரவேசித்தனர். அரசாங்கம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது. யாழ்ப்பாண நூலகம் தீவைக் கப்பட்டது. வாக்குப் பெட்டிகள் களவாடப்பட்டன. தேர்தல் வெற்றிக்காக காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு நகரில் கடைகள் தீ மூட்டிக் கொளுத்தப்பட்டன. பெருந்தொகையினரான தமிழர்

Page 27
இலங்கை இனப்பிரச்சினையில். 48
கள் கொல்லப்பட்டார்கள். இதன் பலனாக சாதாரண மக்களும் புலிகளாக மாறினார்கள். இளைஞர்கள் சிலருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் இயக்கமாக உருவெடுத்து அவர்கள் ஆயுத பலத்தால் வடக்கை வெற்றிகொண் டார்கள். அவர்கள் பின்னடைவு கொள்ளாதது குறித்து நாம் பெருமைப்படவேண்டும். அத்தோடு நாம் நமது தேசிய நலனுக்கு ஒவ்வாத பிற்போக்கினை தவிர்த்திடவேண்டும். இனிமேல் அவர்களை அடக்கி யாள முடியாது.இனி செய்யக்கூடிய-செய்யவேண்டிய நல்ல செயல், அவர்கள் வெற்றி கொண்ட உரிமை களுக்கு முழுமையாக இடமளித்து அவர்களது நட வடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளையாத விதத்தில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு சிங்களர்கள் சுதந்திரமாக தமது தேசிய போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வதே ஆகும்.'
‘*. பிரபாகரன் கடுமையான பிற்போக்குவாதி என்று கூறப்பட்டாலும் அவரது எழுச்சியினால் பழமை எண் ணங்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன. எனவே இனி அவரது நடவடிக்கைகள் தமிழர் சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தமுடியும். இந்தநிலை யில் நாடுமு முவதிலும் ஒரு பொதுத்தேர்தல் நடக்கு மானால் சிங்களரும் தமிழரும் இணைந்து ஒரு புதுமை யான புரட்சிகர அரசு ஒன்றினை உருவாக்கிட
இயலும்.'
(ராவய இதழ் 5 பக்கம் 16-18)
4:6 தேசீயச் சிந்தனைக்காக அறிவுஜீவிகளுக்கு அழைப்பு-குணதாச அமரசேகர.
". இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள இனத்துக்கு எதிராக எழுந்துள்ள பயங்கரமான பாசிச வாத வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை! இதை இன்னும் இனப்பிரச்சினை யாகக் கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஆகும். இனவாதப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தாலும் அது இனப்பிரச்சினை அல்ல! இந்நாட்டின்பேரினமாகிய சிங்களனை அழித்து பேதப் படுத்திநாட்டை இரண்டு மூன்று துண்டுகளாக்கி அதை

49 சுந்தரபாண்டியன்
அந்நியர் வசப்படுத்துவதற்காக இந்தியாவின் தலைமையில் இயங்கும் பலம்வாய்ந்த குழுக்களின் ஆணைப்படி நிகழ்வதே இந்த ஆக்கிரமிப்பாகும். இது திடீரென தோன்றிய ஒன்று அல்ல!"
(ராவய இதழ் 7 பக்கம் 13-15)
47 தேசத்தின் சுதந்திரம் வரலாற்றின் அவசியம்எல். ரணசிங்க.
"..எனினும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த நாட்டின உணர்வு. இந்த நாட்டில் வாழும் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றாக மாறிவிடக் கூடாது. நாட்டின் பிரதான எதிரி ஏகாதிபத்திய அடிவருடியான ஐ. தே. க. அரசாங்கமே! எனவே மக்களின் எழுச்சியைத் திசை திருப்ப வேண்டிய அவசி யம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே மக்களின் எழுச்சியை தமிழர் விரோத இயக்கமாக மாற்றினால் நாட்டுக்கு ஏற்படுவது பேரழிவேயாகும். இன்று நாட்டுக்கு எழுந்துள்ள பேரபாயம் வடபகுதி மக்களால் அல்ல, ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான இந்த அரசாங்கமே என உணர்ந்து எமது போராட்டத்தை அரசுக்கு எதிராகவே மேற்கொள்ள வேண்டும்.'
(ராவய இதழ் 7 பக்கம் 17)
48 "தேசீயச்சிந்தனை - மனோவிகாரம்" நெல்சன்
எதிரிசிங்க.
'.இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை! இருப்ப தோ பாசிச ஆக்கிரமிப்பு என்று கூறும் குணதாச அமர சேகர எந்த உலகத்தில் இருந்து கொண்டு அப்படிச் சொல்கிறார்? இனப்பிரச்சினையை சமாதானமான முறையில் சனநாயக அமைப்பில் தீர்க்கவேண்டும் என்ற இடதுசாரிகள் குரல் எழுப்பும்போது இராணுவ நடவடிக்கைபற்றி இவர் பேசுவது அவரை மக்க ளிடையே அந்நியப்ப்டுத்தி இனவாத முகாமுக்குள் தள்ளிவிடுகிறது.'
'.இலங்கை அரசியல் வார்த்தைகளைப் பிரயோகிப்

Page 28
இலங்கை இனப்பிரச்சினையில். 50
பவர்கள் தனது எதிராளியைக்குறிக்க உபயோகிக்கும் இரண்டுவார்த்தைகள்தான் பாசிசம், சீ. ஐ. ஏ! இதன் உட்பொருளை விளங்கிக்கொள்ளத் திராணி அற்ற அமரசேகர தமிழ்மக்களைப் பாசிசவாதிகளாக சுட்டிக் காட்ட முனைந்ததோடு மக்களைத்தவறான பாதையில் இட்டுச் செல்ல முனைகிறார்.""
"...இலங்கையின் இனப்பிரச்சினை இவ்வளவு மோச மான நிலைக்கு ஆளாவதற்கு அவர் உச்சியில் வைத்துப் போற்றும் தர்மபால, பண்டார நாயக்க,சேனநாயக்கஜயவர்தனாக்களின் தேசீய சிந்தனைகள் அல்லவா காரணம்? இங்கு பெயர் குறிப்பிடாத பிரபல்யங்களின் தேசிய சிந்தனைகளின் செயற்பாடும் இதற்குக் குறைந்தது அல்ல!."
"..எப்படியெனினும் இனப்பிரச்சினை வளர்ந்துவிட்ட இந்த நேரத்தில் அமரசேகரவுக்கும் அவரது நண்பர் களுக்கும் கைதட்டிப் பாராட்டுதல் தெரிவிக்கக் கூடிய கூட்டம் தேவையான அளவுக்கு இனவாதச் சாக்கடைக் குள் இருந்து வெளிக்கிளம்பலாம். ஆனால் அதை மதிக்க முடியாது ஓர் இனத்தைப்பற்றி மட்டுமே சிந்திப்பது தேசியம் ஆகாது! அது அவரது வார்த்தை யில் சொல்வதானால் ‘சாக்கடையில் குளிப்பது போல’
• Dا تق) جبکہ
(ராவய இதழ் 9-பக்கம் 33)
4:9 சிங்கள தமிழ் இரத்த உறவு: ழரீசாள்ஸ் த சில்வா
'. நம் இரு இனங்களுக்கும் இடையே எத்தனையோ ஒற்றுமைகள் உண்டு. வருடப்பிறப்புஇருசாராருக்குமே பொதுவானது, வீட்டில் நிகழும் மங்கல - அமங்கல கருமங்களின்போதும் பொது நிகழ்ச்சிகளிலும் இரு சாராருக்கும் பொதுவான பழக்கவழக்கங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ’’
'நாம் வீரசிங்களனாகப் போற்றும் பிலிமத்தலாவை யார்? அராவே அப்புவுக்கும் தமிழ் கெளசல்யா குமாரிக் கும் வழித்தோன்றலாக வந்தவர்தானே?மொனரவிலரத்வத்த போன்றவர்களும் தமிழ்உயர்குலத்து இரத்தக்
கலப்பு உடையவர்கள் என்பதைக் கூறாமலிருக்க

51 சுந்தரபாண்டியன்
இயலுமா? ரட்டகேயூறாளை எனக் கூறப்படும் சிங்களப் பிரமுகர் பரம்பரையும் தமிழர் கலப்பு உள்ளவையே.’’
*"...வெளிநாட்டில் இருந்து வந்த அல்சேசன் நாயைச் “சீமைநாய்' என்கிறோம். நமது நாட்டில் பிறந்த நாயை "பற நாய்" என்கிறோம். இதேபோல் கலப் பினச் சிங்களனை ஆரியன் என்கிறோம். உயர்ந்த பண்பாடு உடைய தமிழனை "பறத் தமிழன்’ என் கிறோம். உண்மையில் பறையன் ஒன்று ஓர் சாதி இருக்கின்றது. எவனாவது துய சிங்களவன் என்று சொன்னால் அது நாம் பறையர் என்று ஒதுக்கி வைத்துள்ள ரொடியர் இனத்தில் மட்டும்தான் இருக்க ** مه. bقاUpl+ uH)
*".கோன் என்றால் அரசன். இலங்கைக் கோன்இலங்கக்கோனாகவும் அழகர் கோன் அழகக்கோனா கவும் வீரக்கோன் மட்டும் வீரக்கோனாகவும் இருக் கிறார்கள். பெரியபெருமாள் - இளைய பெருமாள் வீரப்பெருமாள் என்ற தமிழர்கள் பெரிய பெருமஇளையபெரும வீரபெரும ஆகிவிட்டார்கள்."
".அம்மா, அய்யா, அக்கா - மாமா போன்று நம் இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் அனேகம் உண்டு. வலிகாமம், சுன்னாகம் சிங்களப் பெயர்கள் என்றால் தென் பகுதியில் உள்ள பாணந்துறை நல்லூருவ இவை என்ன பெயர்கள்? பல சிங்களவர்கள் ராசபுத்ரம் குலசேகரம் என்ற தமது பெயர்களில் வரும் ‘ம்‘ எழுத்தை மாற்றிக்கொண்டது தாழ்வு மனப் பான்மை காரணமாகத்தான்.""
"இதைப்பற்றி விரிவான ஆய்வினை மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்யலாமே!’’ -
(ராவய இதழ் 10-பக்கம் 7-9)
4:10 நிவாரண உதவி கண்கட்டுவித்தை: அ. அமிர்தலிங்கம். (தமிழர் விடுதலை கூட்டணிச் செயலர்)
"...கடந்ந பெப்ரவரி மாதம் 9ம் திகதி தொடக்கம் இலங்கை மீதான இந்தியாவின் கொள்கைகளை

Page 29
இலங்கை இனப்பிரச்சினையில். 52
நாங்கள் மதிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இலங்கையின் சுயரூபத்தை இந்தியா உணர்ந்து கொண்டதை இது தெளிவுபடுத்துகிறது. இலங்கை அரசு இராணுவத் தீர்வினையே நாடுகிறது என்பதை இந்தியா புரிந்து கொண்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பிய ‘ரெலெக்ஸ்’ செய்தியில் நாங்கள் குறிப்பிட்டுள்ளதன்படி இந்தியா உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், பூரீலங்கா தமிழ் மக்களை இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமைகள்அவர்களது எதிர்காலம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மனிதப்படு கொலைகளை நிறுத்துவதற்கு உதவியாக அமையும்.'
"...பூணிலங்கா அரசு பழைய விளையாட்டை இப்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது மார்ச் 11ம் திகதி எடுக்கப்பட்ட கபினெற் முடிவு அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவுவது ஆகும். பொருளாதாரம் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் குற்றுயிராகக் கிடக்கும் யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரணம் அளிப் பதாகக் காட்டுவது அரசின் பெரும் புரட்டாகும்."
"வாகனத்துக்கு வேண்டிய எரி பொருள்களைப் பெறு வதற்கு 60 கிலோ மீட்டர் செல்லவேண்டி இருக்கிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டோரை விடுதலை செய்வது சம்பந்தமான கூற்றும் பெரும் கண்கட்டு வித்தையே. கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாதி என நிரூபிக்கப்படாத அனைவரையும் விடுவிப்பதாக பூனிலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவும், பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியும் ஏழு மாதங் களுக்கு முன்னரே கூறினார்கள். ஆனால் இப்போது தான் அதை கபினெட் தீர்மானமாக வெளியிட்டிருக்
கிறார்கள்."
**இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பயனுள்ள நடவடிக் கைகளை இந்தியா மேற்கொள்ளும் என நாம் எதிர் பார்க்கிறோம். முதலில் முக்கியமாக தமிழ்மக்களுக்கு உணவுப்பொருள்கள், எரிபெருள் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அடுத்து மனித உரிமைகளை மீறித், தொடர்ந்து செய்து வரும் போரை நிறுத்த இந்தியா

53 சுந்தரபாண்டியன்
உலக நாடுகளின் கருத்தை திரட்டும், மூன்றாவதாக வடக்கு கிழக்கு மக்களின் உயிர் உடமைகளைப்பாது காக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும். இது எல்லாம் எனது யூகங்களே! எவ்வாறெனினும் இராணுவம் யாழ்ப்பாணத்தைத்தனது கட்டுப்பாட்டுள் கொண்டுவரு முன்னர் இந்தியா எதையாவது செய்யும்"
(ராவய இதழ்-10-பக்கம்2-3)
-FRONT LINE Guilt
4:11 அன்ரன் பாலசிங்கம் (தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க ஆலோசகர்)
*".சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு ஒன்றினைக் காண்பதற்கு ஜனாதிபதி ஜயவர்த் தன அவ்வளவு நம்பிக்கையானவராகச் செயற்பட வில்லை என்பது இந்தியாவுக்குப் புரிந்துவிட்டது பற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இனிமேலும் இலங்கையின் பாசாங்குகளுக்கு இந்தியா ஏமாந்து விடமாட்டாது. தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்துவதற்கும், பொருளாதாரத் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் சமா தானத்தீர்வுக்கான டிசம்பர் 19திட்டத்தை ஏற்பதற்கும் இந்தியா இலங்கையை வற்புறுத்த வேண்டும். அத்துடன் மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவினர் முன்னிலையில் இலங்கையின் சுயரூபத்தை இந்தியா அம்பலப்படுத்தப்பட வேண்டும்."
'.பூரீலங்கா வரையறுக்கப்பட்ட ஆனால் தொடர்ச்சி யான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. யாழ்குடாநாட்டின் கிராமங்கள் - நகரங்கள் அனைத்திலுமே இராணுவ முகாம்களில் இருந்து முறையான பீரங்கி - ஷெல் வெடித்தாக்குதல்கள் இடம் பெறுகின்றன. ரெலோ போராளிகளின் அதிரடித்தாக்குதல்களினால் அடங்கிய இராணுவம் இப்போது முகாம்களுக்குள்ளேயே முடங்கி யிருந்து தாக்குகிறது."
*".உலகநாடுகள் இப்பிரச்சினையை நன்கு உணர்ந்
துள்ளன. இலங்கைக்கு பொருளாதார உதவிகள் செய்யும் நாடுகளின் கூட்டம் வருகிற மே மாதம் நடை

Page 30
இலங்கை இனப்பிரச்சினையில். ·54
பெற இருப்பதால் தற்காலிகமாகப் போரை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ளும் தொடர்ந்து போரிட்டால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காது என்பதாலேயே. இலங்கை அமைதித்தீர்வை ஆராய்வதாகக் காட்டிக் கொள்கிறது."
".19000 பேருக்கு அதிகமான இராணுவம் யாழ்குடா
நாட்டில் குவிக்கப்பட்டிருப்பதால் நேரடி மோதலைத்
தவிர்த்து பாதுகாப்பு நோக்குடன் பதிலடி கொடுத்து வருகிறோம்.'"
{ராவய இதழ் 10-பக்கம் 3)
' FRONT LI NE' Ġu' liq
4:12 சிறில் மத்தியூவின் மெளனம்: 'சதுரங்கம்
சீ. சிறில் மத்தியூ பூணிலங்கா அரசியலில் தனியான பிரகிருதி அதிசய சரிதை ஐக்கிய தேசியக்கட்சியின் பிரபல அமைச்சர் பதவியை வகித்துக்கொண்டே இந்த ஆள் தனது இனவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர்
கடந்த இனக்கலவரத்தின் போதும் சிறில் மத்தியூவின் பெயர் பெரும் அல்லோஸ்கல்லோலப்பட்டது.
அதே போன்று ஜனதா விமுக்தி பெருமுனையின் வரலாறு பற்றிப் பேசும் போதும் மத்தியூ அவர்களின் நாமம் இயல்பாகவே நினைவில் எழுகிறது. ஜ. வி.பெ. தலைவர் ரோகண விஜய வீரனின் ‘இந்தியா விஸ் தரிப்பு" வாதமும் மத்தியூவின் தமிழ் விரோதிக் கொள் கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்! இரு வரும் அரசியல் அணிகளைப் பொறுத்தவரையில் ஆகாயமும் பூமியுமாக இருந்தாலும் விஜே வீரரின் கை நூலாக இருப்பது சிறில் மத்தியூவின் "சிங்களனின் சடுதிப்பகைவன்தான்!”
ரோகண விஜே வீரர் தலைமறைவானது ஜூலை கல வரங்கள் நிகழ்ந்த வேளையில்தான். சிறில் மத்தியூ மறையாவிட்டாலும் அரசியலில் வாய்மூடிக்கொண்டது அக்காலத்தில்தான். ஆகவே ரோகண விஜே வீரரும்

55 சுந்தரபாண்டியன்
சிறில் மத்தியூவும்க்மெளனிகளாகி விட்டார்கள். வித்தி யாசம் அவர் மறைந்துவிட்டார்; இவர் இருந்தும் இல்லை!
என்றாலும் பொறுப்பான அமைச்சர் பதவி வகிக்கும் போதுகூட அரசின் கொள்கைக்கு எதிராகச் செயற் பட்ட சிங்கள இனவாதத்தின் பெரிய பயில் வான் சீ. சீ. மத்தியூ அவர்கள் இவ்வாறு அமைதியாக மெளனம் சாதிப்பது...! எமக்கு என்னவோ ஐயமாகத் தான் உள்ளது.
(ராவய இதழ் 10-பக்கம் 40)
4:13 சுதந்திரக்கட்சியின் புதிய வழி! காளிங்க"
'.இந்தியாவுடன் செயல்படுவதில் அரசுக்கு இல்லாத திறமை தன்னிடம் இருப்பதை நிரூபித்துள்ள சிறி மாவோ பண்டாரநாயக்க இதுகாறும் தன்மைப்பற்றிய எதுவித எதிர்பார்ப்பும் இல்லாதிருந்த தமிழ் மக்க ளிடையே புதிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியதோடு பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் போக்கிலும் புதிய மாற்றங்களைப் புகுத்தி உள்ளார்.'"
* யுத்தத்தினால் மட்டுமே வடக்கின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பது அரசியல் வாதிகளின் கூப்பாடு என்பது தெளிவு அது சிங்கள மக்களின் உள்ளங்களை திருப்திப்படுத்துமே அல்லாது இருக்கும் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. தனது கட்சியை இந்த ஒலத்தில் இருந்து கரைசேர்ப்பது அக் கட்சியின் வருங்காலப் பயணத்தை பலப்படுத்தக்கூடிய பெருங்காரணியாகும். வடக்கே பிரச்சினை பற்றிய ஏனைய எதிர்க்கட்சிகள் கொண்டுள்ள கருத்தினையே சுதந்திரக் கட்சியும் பிரதிபலிப்பதால் பொதுவான ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இவை இணைவதற்கு இடம் இருக்கிறது.
(ராவய இதழ் 10-பக்கம் 16)
4:14 சனநாயகத்தைப் பாதுகாத்திட பலி ஒன்று!-
காளிங்க
'அண்மைக்காலம் வரை பயங்கரவாதம் பற்றிய

Page 31
இலங்கை இனப்பிரச்சினையில். 56
நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று இருந்தது வடக்கே செயற்பட்ட தமிழர் பயங்கரவாதம் மட்டுமே. ஆனால் இப்போது தெற்கே சிங்களப் பயங்கரவாதம் பற்றியும் பேசப்படுகிறது.'
"வடக்கே பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பித்ததும் சிறிது சிறிதாகத்தான். எனினும் படிப் படியாக அது வடக்கின் சனநாயக சக்திகளையும் மீறி அப்பகுதியின் பிரதான அரசியல் பிரவாகமாக மாறி விட்டது. தெற்கில் செயல்படும் சனநாயக சக்திகளின் அறிவில் பற்றாக்குறை ஏற்படுமாயின் அதன் பலனாக இங்கும் வடக்கின் நிலை உருவாகலாம்.'
**. வடக்கே தமிழ் இன சக்திகள் சம்பந்தமாக செயற் படுகையில் அவர்களிடையில் இருக்கின்ற சனநாயக சக்திகளையும் அதற்கு எதிரான சக்திகளையும் வேறு படுத்தி கவனமாக செயற்படத் தவறியதன் விளைவை அரசு மட்டுமல்ல நாடு முழுவதும் நன்கு அனுபவிக் கிறது.அரசு முழுப்பலத்தையும் பிரயோகித்து. வடக்கே சனநாயக அமைப்புக்களை தகர்த்தெறிந்தமையால் ஏற்பட்ட வெற்றிடங்கள் பயங்கரவாதத்தால் நிரம்பின. இப்போது தெற்கிலும் அத்தகைய நிலைதான் உரு வாகிறது.'
* .அரசு தன்னையும் சனநாயகத்தையும் பாது காக்க முடியாத நிலை. ஆகவே ஒன்றில் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக சனநாயகத்தைப் பலியிட வேண்டும் அல்லது சனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தேர்தலை நடத்தி தன்னைப் பலிகொடுக்கவேண்டும்."
(ராவய இதழ் 11-பக்கம் 16)
4:15 அரசியல் வாதிகள் உருவாக்கிய இனவாத எரிமலை - சிறில் என்டேரமுல்ல
"...நகர்ப்புறம் ஆங்கில முறைக்கும் கிராமப்புறம் சிங்கள முறைக்கும் என்று இருந்த நிலை 1956ல் மாறி நாடு முழுவதும் சிங்கள மயமானது. சிங்கள மொழி அரசானதும், அரசமதமாக பெளத்தம் இடம்பெற்றதும் தேசிய உடையணிந்த மக்கள் கிராமத்திலிருந்து நகருக்கு வந்து நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்

57 சுந்தரபாண்டியன்
கொண்டதும் நாடு சிங்களமானதற்கு வெளிப்படை யான அறிகுறிகள்1.'
**1956 ன் பின் ஏற்பட்ட சமுதாய மாற்றம் நாடு இன்று இரண்டாகப் பிளவுபடுவதற்கு - தமிழன் சிங்களவன் என்று - இரண்டானமைக்கு காரணம் என்று பேசப்படுவதோடு மீண்டும் ஆங்கிலத்துக்குப் போய் இரு இனங்களையும் இணைக்கலாம் எனக் கருதப்படுகிறது.”*
.1983ன் பின் கிறிஸ்தவர் வேறுபட்டனர். கண்டி அம்பிட்டி தேவசபையில் தனிச்சிங்களர் மட்டுமே வடக்கே இந்துக்களோ கிறித்தவர்களோ இல்லை-1 தனித்தமிழர் மட்டுமே!."
"...பிரிட்டனிடமிருந்து சுதந்திரம்? பெறுமுன்னர் இரு இனமும் ஒற்றுமையாகச் செயற்பட்டது. எனினும் பிரித்தானியர் தீர்மானத்தால் இருசாரார் இடையிலும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இது பல விதங்களில் அமைதியான எரிமலையாக உருவெடுத்து 83ல் வெடித்துச் சிதறியது."
'.படித்த இலங்கையருக்காக முதலில் பாராளு மன்றம் சென்றவர் சர். பொன்னம்பலம் ராமநாதன் ஆவார். அவருக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலா னோர் சிங்களர்கள். சுதந்திரம் பெறுவதற்கான அரசி யல் சீர்திருத்தச் சபையின் முதற்தலைவராக இயங்கி யவர் சர். பொன்னம்பலம் அருணாசலம்"
"...1920 ல் வந்த சீர்திருத்தத்தை தமிழர்கள் எதிர்த்தனர்."
**.1927ல் இலங்கைக்கு வந்த டொனமூர்க்கமிஷனின் சிபாரிசையும் இவர்கள் ஏற்கவில்லை. அந்தச்சந்தர்ப் பத்தில்தான் வடக்கே பிரதிநிதிகள் முதன் முறையாக பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தனர்."
'.1948 அளவில் சிங்கள தமிழர் ஒற்றுமை சீர்
குலைந்து இருந்தது. பெருத்த முயற்சிகளின் பின் ஐக்கிய தேசியக்கட்சி உருவானது.

Page 32
இலங்கை இனப்பிரச்சினையில். 58
*".சேனநாயக்க - பண்டாரநாயக்க - ஜயவர்தனா அரசாங்கங்களில் நம்பிக்கை வைத்து-பின்னர் இழந்து தேசிய ஒற்றுமையைத் தமிழர்கள் தகர்த்துக் கொண்
டனர்.”*
**.நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்தது குறுகிய நோக்கம் கொண்ட அரசியலே! இது தமிழ் சிங்கள வரை மட்டுமல்ல, சிங்களவரையே பல கட்சிகளாக கூறுபோட்டுள்ளது. அரசியல்வாதிகள் உருவாக்கிய இனவாத எரிமலைகளை அரசியல் தீர்வுமூலம் தணிக்க முடியாது. எதிர்காலச் சந்ததியினருக்கு அளிக்கப்படக் கூடிய தேசிய ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட சிறந்த கல்வி முறையின் மூலம் நாட்டில் நற்பிரசை களை உருவாக்குவதாலேயே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்..”*
"..கல்விக் கொள்கையை அரசியல் வாதிகள் வகுக்கக் கூடாது. இதுவரை உருவான கல்விக்கொள்கைகள் அனைத்துமே அரசியற் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டமையால் தோல்வியைத் தழுவின, ஆகவே சுதந்திரமான அறிஞர் குழுவே இதனைத் தயாரிக்க வேண்டும்."
"'.இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு இருந்திருந்தால் 1979ல் மூன்று மாதத்துள் தீர்த் துக்கட்ட சிறில் ரணதுங்க புறப்பட்ட நாள் தொடங்கி மாகாணசபைப் பேச்சுக்கள் வரை இடம் பெற்ற தீர்வு
கள் ஒன்றாவது வெற்றிபெற்று இருக்கவேண்டுமே!...”*
(ராவய இதழ் 12 பக்கம் 10-12)
4:16 யாழ். விவசாயிகளின் துயரம் எல். ரணசிங்க.
"..தேசிய பொருளாதாரத்திற்கு யாழ் விவசாயிகளின் பங்களிப்பு பாரியதொன்றாகும். வற்றாதவளநதிகளோ, சிற்றாறுகளோ, நீரோடைகளோ இல்லாத வறண்ட பூமியே யாழ்ப்பாணம். ஆழமான பெருங் கிணறுகளில் இருந்து நீர் இறைக்கும் பணியையும் உழவுப்பணியை யும் மாடுகளிடம் இருந்து மோட்டார் யந்திரங்கள் பெற்றுக்கொண்டுள்ளன யாழ்ப்பாணத்தில் யுத்தமய மான் நில்லயில் டீசல், மண்ணெய் விநியோகம் பெரு

59 சுந்தரபாண்டியன்
மளவுக்கு குறைநீது விட்டது. அரசாங்கம் போராளி களை அடக்குவதற்கு ஒரு வழியெனக் கருதிய பொருளாதாரத் தடையினால் பிரச்சினை இன்னும் உக்கிரமடைந்தது, ஒருபோத்தல் மண்ணெய் ரூ 12ல் இருந்து ரூ 25 ஆகவும் ஒரு போத்தல் பெற்றோல் ரூ.20ல் இருந்து ரூ. 80 ஆகவும் விலை உயர்ந்தது. கிடைக்கக்கூடிய எரிபொருள்களில் பெரும்பகுதி * பிள்ளைகுட்டிகளின்" போர் நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் யாழப்பாணத்தில் விவசாய நடவடிக்கைகள் பெருமளவுக்குப் பாதிக்கப் பட்டன.”*
"...பல தொல்லைகளுக்கு மத்தியில் உற்பத்திசெய்யப் படும் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதில் பெரிய சிரமங்களை யாழ். விவசாயிகள் எதிர் நோக் கினர். 1983 ஜூலைக்கு முன்னர் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லொரிகளில் பொருட்கள் கொண்டு செல்லப் பட்டன. இது படிப்படியாகக் குறைந்து தற்போது 10 லொரிகளாவது செல்வது சந்தேகம் என்ற நிலை! இப்போது கொழும்பில் ரூ 15 விலையாகும் ஒரு கிலோ தக்காளி யாழ்ப்பாணத்தில் ரூ 3 விற்பனையாகிறது. கொழும் பில் 30 ரூபாவுக்கு விற்கப்படும் திராட்சையின் விலை யாழ்ப்பாணத்தில் கிலோ 8 ரூபா. ஆனால் அதே வேளை கொழும்பில் ரூ. 15. 50 ஆக விற்கப் படும் ஒரு கிலோ சீனி யாழ்ப்பாணத்தில் ரூபா 42 ஆவுகம் ரூ. 4,90 ஆக விற்பனையாகும் ஒரு கிலோ மா யாழ்ப்பாணத்தில் 8 ரூபா வாகவும் விற்கப்படுகிறது.
" .அன்றாடக் கூலி பெரும் விவசாயிகளும். தொழி லாளிகளும் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். வருமானம். பாதிக்குமேல் குறைந்து விட்ட நிலையில் வாழ்க்கைச் செலவோ பன்மடங்கு உயர்ந்து விட்டது."
.போர்நடவடிக்கைகளால் விவசாயம்சீர்குலைந்தது போலவே வடபகுதியின் பிரதான தொழிலான மீன் பிடித்தொழிலும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர் பாதிப்படை உள்ளனர். போசாக்கின்மை, வயிறுகீே

Page 33
இலங்கை இனப்பிரச்சினையில். 60
அவர்களிடையே பரவிவருகின்றது. அவர்களின் வள்ளங் களை அரச படைகள் அழித்து விட்டதே போன்று
எஞ்சியிவற்றை பயங்கரவாத இளைஞர்கள் தமது
பாவனைக்காகப் பறிமுதல் செய்துள்ளனர்."
".விவசாயிகளும், தொழிலாளிகளும் பிச்சை எடுக் காதபிச்சைக்காரர்கள் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ள நிலையில் இன்று அவர்கள் எடுக்கும் தீர் மானம்தான் யாழ்ப்பாணத்தின் தலைவிதியைத் தீர் மானிக்கும் ஒன்றில் அவர்கள் ஒதுங்கிஇருக்கவேண்டும் அல்லது தமது போராளி' பிள்ளைகளுடன் சேர வேண்டும்!...”*
(ராவய இதழ் 12-பக்கம்,23-24)
4:17 இந்திய நடவடிக்கையினால் 'மாட்டிக் கொண்ட அரசின் அரசியல் காளிங்க
"...இந்தியா இலங்கையின் ஆகாய எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்தது தாக்கு தலைவிட "நறுக்" கென்று குட்டியதற்கு சமம். அந்த 'குட்டு" "நம் தலை யில் விழுந்தது நாம் . சாதுவானவர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் அல்ல! நாம் தற்பெருமை வீராப்பினால் வீங்கிப் போயிருந்த நேரம் பார்த்துத்தான்! அதனால் இந்தியா அபகீர்த்தி அடைவதற்கு பதிலாக நமக்குக் கிடைத்த அவமானம் பல மடங்காகப்பெருகியது."
" ..நமக்கு உண்மை நண்பர்கள் இல்லாததை இந்தியா நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டது. மேலும் இந்தியாவின் இச்செயலை உலக நாடுகள் நம் பக்கம் சார்ந்த கண்ணோட்டத்தில் அல்லாது நடுநிலையில் ஆராயுமாயின் நம்முடைய "அழகுகள்” வெளிப்பட்டு நாம் தோல்வி அடைய நேரிடும்.'"
'.இஸ்ரேல் தொடர்பால் அறபு நாடுகளும், தென் ஆபிரிக்க நட்பால் ஆபிரிக்க உலகமும், போக்லண்ட் பிரச்சினையுரல் லத்தீன் அமெரிக்கநாடுகளும்.இப்படி எல்லோரையும் பகைத்துக் கொண்டோம், உலகத் தின் எதிரிகளை நமது நண்பர்களாக்கிக் கொண்ட
கால்!.

61. சுந்தரபாண்டியன்
'.இந்தியா இலங்கையை விழுங்கத் திட்டம் போடு
கிறது என்று கூப்பாடு ப்ோடுவது உண்மைக்கு மாறான
தாகும். அப்படியான அவசியம் இந்தியாவுக்கு இருந்
திருக்குமானால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்
தன.இந்தியத்தோட்டத்தொழிலாளர், கச்சத்தீவு இவை
கன்ளயே ஆயுதமாகப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் எந்த ஒரு பிரச்சினைக்
கும் தீர்வு காண்பதில் இந்தியாவின் களங்க மற்ற
ஆதரவு எமக்குக் கிடைத்துள்ளது.'
**.இந்தியா விரும்பியிருந்தால் பலஸ்தீன விடுதலை இயக்கம், தென்னாபிரிக்க மக்கள் இயக்கம் என்ப வற்றை அங்கீகரித்ததுபோல் தமிழ்ப் போர்ாளிகள் அமைப்பையும் அங்கீகரித்து இருக்கலாம் அல்லது யுத்தப்பகுதிகளுக்கு ஐ நா அமைதிப்படையை அனுப்ப வலியுறுத்தி இருக்கலாம்.'"
'இந்த அரசு பலத்த இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு முன்பாக, “ இப்பிரச்சினையை சமாதானமான முறையில் அரசியல் ரீதியில் தீர்வு காண்பதாக - தெளிவாக இந்தியர்வுக்கு எடுத்துக் கூறிஇருந்தது. இதனை நம்பி இந்தியாவும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் 'போராளிகள் அமைப்புக்களுடன் சமரச உடன்பாடு பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுவந்தது. எனினும் எல். ரீ.ரீ.ஈ. யினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள மக்கள் படுகொலைக்கு எதிராக எழுந்த மக்கள் கருத்தி னைப்பிரதிபலிக்கும் விதத்தில் அரசு திடீரென தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு முழுமையான இரா ணுவத்தாக்குதலில் ஈடுபட்டதன் மூலம் இந்தியா வுடனான உடன்படிக்கையை மீறியது.'
(ராவய இதழ் 12-பக்கம்17-19) 4:18 இந்தியாவின் படைபலம்-ஜானக Gou GTyr.
"...1962ல் தன்னை வெற்றி கொண்ட சீனாவை
மிஞ்சிய நிலையில் இந்தியப் படைபலம் இருக்கின்றது.
சீனா,பாகிஸ்தான்,தாய்வான் இந்த மூன்று நாடுகளை யும் ஒரு சேர மோதி வெல்லக்கூடிய வலிமை இன்று

Page 34
இலங்கை இனப்பிரச்சினையில்.62
இந்தியாவுக்கு இருக்கிறது என்பது இராணுவ வல்லரசு களின் கணிப்பாகும்.'
'.இந்தியாவுடன் மோதியதால் போர்த்துக்கேயப் பட்ைகள் கோவாவை இழந்தன, பாகிஸ்தான் பங்களா தேசை இழந்தது; கோவாவைக் கைப்பற்ற அன்று 48 மணி நேரமே சென்றது."
".தற்போதைய இந்தியப்படை தளபதி ஜெனரல் கிருஷ்ண ஸ்வாமி சுந்தர் ஜி இந்தியப் படைபலத்தை நவீன மயப்படுத்துவதில் பெரிதும் அக்கறை கொண்டுள் ளார். இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர்.'
'.இந்திய இராணுவத்தில் நிரந்தரமாக பத்துலட்சம் பேரும், தற்காலிகமாக ஐந்தரை லட்சம்பேரும் உள்ளனர். யுத்த டாங்கிக்ள் தொகை ம்ட்டும் மூவர் யிரத்தை எட்டிவிட்டன. இவை பெரும்பாலும் இந்தியா விலேயே தயாராகின்றன.'
**. இந்திய வான் படையில் ஒன்றரை லட்சம்பேர் வரையில் உள்ளனர். சுமார் 800 ஜெட் போர் விமானங் களும் , ஜகுவார், மிராஜ், மிக் முதலான அதிவேக
இராட்சத விமானங்களும் அநேகம் உள்ளன."
'.இந்தியக் கட்ற்படையில் சுமார் ஐம்பதாயிரம் பேர் உள்ளனர். பல நவீன நீர் மூழ்கிக்கப்பல்கள், நாசகாரி கள், விமானந்தாங்கிக்கப்பல்கள். போர் விமானங்கள் ஏவுகணைகள் அனைத்துமே அமைந்துள்ளன."
"...நமது நாட்டில் முப்படையினரும் சுமார் ஐம்பத் தையாயிரம் பேர்தான் இருக்கிறார்கள். பன்னிரண்டு சிறிய போர் விமானங்களும், 20 ஹெலிகாப்டர்களும் உள்ளன. அதிவேக பாதுகாப்பு வள்ளங்கள் உள்ளனவே அன்றிப்போர்க்கப்பல்கள் எதுவுமே இல்லை:
" ..நமது படைகளுக்குப் பெரும்பாலும் இந்தியா விலேயே பயிற்சி தரப்பட்டு வந்தது. இதன் காரண மாகவே இந்திய மீனவரைத் துன்புறுத்தியதாக நமது கடற்படையினர் கைது செய்யப்பட்டபோது ஓரிடத்தில்

63 சுந்தரபாண்டியன்
பயிற்சி பெற்ற நண்பர் களது சந்திப்பாக அது முடி வடைந்தது.'
(ராவய இதழ் 12-பக்கம் 20-22)
4:19 சாகடிக்கப்பட்ட ரெலோ தலைவர் பூரீசபாரட்னம் சிங்களவரா? -"சேன கபுகேன் பொல
'..தனது தந்தை ஒரு யூதன் என்பதை அறியாத ஹிட்லர் யூத இனத்தையே பூண்டோடொழிக்கப் புறப் பட்டான் இதேபோல் எத்தனை யோ தமிழின விரோதி களான சிங்களத் தலைவர்களும் பிறப்பால் தமிழர் களே!...”*
1.15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சிங்களர் வாழ்ந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. காலப்போக்கில் சிங்களப்பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக திரிந்தன. பஞ்சமர் அல்லது இழிசனர் எனக் கருதப் படும் மக்களின் பெயர்களைப் பார்த்தால் இது புலனா கும். "மகா நாயக்க முதியான் சேலாகே கந்தய்யா" கஜநாயக்க அப்புகாமிலாகே மகாலிங்கம். இப்ப்டி எத்தனையோ!...'
"...இதேபோல தென்னிந்தியப் பகுதிகளிலும் சிங்கள் இனத்தவராய் தமிழர்கள் மாறிவிட்டார்கள். சிலாபம், நீர் கொழும்புப்பகுதிகளில் இத்தகையோரைக் காண லாம்.'
"...பாராளுமன்ற விவாதங்களின்போது பண்டார நாயக்க-ஜயவர்தன ஆகியோரும் தமிழினத் தொடர் புடையோர் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.'
'இதன்படி சிங்களப்பெயர்களில் தமிழரும், தமிழ்ப் பெயர்களில் சிங்களருமாக இரண்டு இனங்களும் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் யார் - யாரைக் கொல்லுகிறார்கள்? நம்மை நாமே அழித்துக்கொண்டு இருக்கிறோம். நம்மால் சிறைச்சாலைக்குள் கொல்லப் பட்ட குட்டி மணியும் சிங்களவரே! பிரபாகரனின் குழு வினரால் சாகடிக்கப்பட்ட ரெலோ தலைவர் பூணூரீ சபா ரட்னமும் சிங்களவரே!-இதற்கு முடிவு என்ன?.
(ராவய இதழ் 2-பக்கம் 25)

Page 35
இலங்கை இனப்பிரச்சினையில். 64
4:20 இந்திய விரோதப்போக்கும் நமது பலமும்
--சதுரங்கம்
'.தலை நகருக்கு அருகாமையில் இரு இடங்களில் இடம் பெற்ற தாக்குதல்களும், ஆயுத அபகரிப்புக்களும் அத்துடன் வடக்கே பிரபாகரனைப் பிடிக்க முடியாமல் திணறுவதும் நமது பலத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள்." k . .
"...இல்லாத சக்தியை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பலம் படைத்த இந்தியாவுடன் போர் தொடுக்க முயலுவது முட்டாளின் ஆணவமே! முட்டா ளுக்கு ஆணவத்தை விடமேலான ஆபரணம் ஏது?.'"
"" .குறுகிய அரசியல் இலாபம் கருதி மக்களைத் தன் பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் இந்திய விரோத உணர்வைச் சிங்கள மக்களின் இதயத்தில் ஆழப்பதிக் கும் அரசுத்தலைவர்களின் போக்கு எதிர்காலத்தில் மிகப் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்."
4.அரசின் சகல மக்கள் தொடர்புச் சாதனங்களும் பொதுவாக இந்திய எதிர்ப்புணர்வை மக்களிடையே கட்டியெழுப்பும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான பத்திரிகைகள் இதைச் செய்வது தேசிய அபிமானத்தால் அல்ல; பத்திரிகை விற்பனையை அதி கரிப்பதற்கே!.’’
"..முழு நாட்டையும் பணயம் வைத்து நெடுங்கால நண்பனான இந்தியாவுக்கு எதிராக மக்களைத்தூண்டி விடுவது கடந்த கறுப்பு ஜூலையைவிடப் பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும். இதற்கு யார் பொறுப்பு? பூனிலங்கா வானொலி தனது செய்திகள் - பிரசாரங்கள் மூலமாக இந்தியாவின் பஞ்சம், கலவரம், ராஜீவ்காந்தி பற்றிய அவதூறு என்பவற்றை மீண்டும் மீண்டும் வலி யுறுத்துவதன் நோக்கம் என்ன?தன்னையும் மாடாக்கிக் கொண்டு மக்களையும் மாடுகள் ஆக்குவதல்லவா?."
(ராவய இதழ் 12-பக்கம்-40)

85 சுந்தரபாண்டியன்
421 இலக்கிய வளர்ச்சிக்கு.1 டரி. பி. பெருமுனே திலக்க.
".1956க்குப் பிறகு கலாசார அமைச்சில் இலக்கிய ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 1959 ஜூன் 8ம் திகதி சாகித்தியதினம் கொண்டாட முடிவன யிற்று. இது சிங்கள இலக்கியத்தில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ் எழுத்தாளிரிடைய்ேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மதராசில் இருந்து வரும் சஞ்சிகை களை நிறுத்தி இலங்கையிலேயே தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிடவேண்டும் என்ற கோஷம்" எழுந்தது தமிழ் எழுத்தாளரிடையேதான் பல் தமிழ் இலக்கியச் சஞ்சிகைகளும் ஆரம்பிக்கப்பட்டன.”
(ராவய இதழ் 3-பக்கம் 7-8) 422 தமிழைக்கற்போம்-யசபால வனசிங்க
*.அதே போன்று இந்நாட்டுத் தமிழர்களில் 90% மானோர் நன்றாகச் சிங்களம் தெரிந்தவர்கள். ஆனால் சிங்களவர்களில் 5% மானோருக்காவது" தமிழ்" தெரி யாது. நான் இருபது ஆண்டுகளாக தமிழைக் கற்க வ்ழி தேடினேன்; 'முய்ற்சி வீணானது. இடைக்கிடை சஞ்சிகைகளும், செய்திப்பத்திரிகைகளும் தமிழைக் க்ற்பிப்பதற்கு பாடங்களைப் பிரசுரித்த போதும் அவற்றை மிக விரைவில் தவிர்த்துக்கொண்டன. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ருசியன் மொழிகளைக் கற்க அவசியமான வசதிகள் அனேகம் உள்ளன. ஆனால் ஒன்றாக வாழுகின்ற நமதே சகோதரர்களின் மொழியைக் கற்பதற்கு அரசாங்கமோ அல்லது வேறு நிறுவனங்கள்ோ நடவடிக்கை எடுக்காதது வியப்புக் குரியது."
"...அறிவு ஜீவிகளான தமிழர்கள் எத்தனையோ ப்ேரி தங்களது கருத்துக்களுக்கு சிங்கள மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடமளிக்கப்படாமை காரணமாக மெளனமாக இருப்பது தெரிகிறது. அத்துடன் தமிழர் தலைவர்கள், ஆயுதமேந்திய போராளிகள் தலைவர்கள் கருத்துக்களையும் சிங்கள மக்கள் அறிந்துகொள்ளக்

Page 36
இலங்கை இனப்பிரச்சினையில். 66
கூடியவிதத்தில் வெளியிடுவதற்குச் சந்தர்ப்பம் அளித் தல் வேண்டும்.' · ·
(ராவய இதழ் 6-பக்கம் 2)
4:23 இந்திய இலக்கியங்களைப் பாரீர்!-சேனாரத்ன வீரசிங்க,
'.இந்திய மக்களின் வாழ்க்கை முறை நமக்கு அந் நியமானது அல்ல! இந்திய மக்களது சுதந்திரத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இந்திய இலக்கியங்கள் ஆற்றிய பணியை நமது மக்கள் உணரவேண்டும்.இதற் காக இந்திய உயர் இலக்கியங்களை மொழிபெயர்க்க வேண்டும். விசேடமாக இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய இலக்கியங்களை அணுகுவது இக்காலத்தின் கட்டாயத் தேவையாகும்.'"
(ராவய இதழ் 3- பக்கம் 18)
இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் பல பலத்த விமரிசனங்களுக்கு ஆளாயின என்பது வாசகர் கடிதங் களின் வாயிலாகப் புலப்படுகிறது. அருட்தந்தையின் கருத்துக்கு (3:17) புத்தபிக்கு ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"...அருட்தந்தை அவர்களே,தாங்கள் சீருடையினைக் கழற்றி வைத்துவிட்டு இருபத்தி நாலு மணிநேரம் கொழும்பில் உலா விவிட்டு வருவீர்களாக வேண்டு மானால் இவ்விடயம் குறித்து வாதிடவும் தயாராக உள்ளோம் . தங்கள் கருத்துக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!.'
(ராவய இதழ் 8 -பக்கம் 2)
பொதுவாக "காளிங்க' வின் அரசியல் விமரிசனக் கட்டுரைகள் அரசின் போக்கை இடித்துரைத்துமக்களை நேர் வழியில் திருப்ப முனைகின்றன. சதுரங்கத்தில்" இடம் பெறும் குறிப்புகள் 'சுருக்" கென்று உள்ளன! சிறில் எண்டேரமுல்ல இனப்பிரச்சினையின் ஆரம்பம் 1956 என்னும் சம்பிரதாயத்தை மீறி 1920க்கே சென்று விடுகிறார். பூனிசாள்ஸ்தசில்வா தனது கட்டுரையில் அனுபவ முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ‘தமிழ் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன?" என்ற விஜே

67 சுந்தரபாண்டியன்
வீரவின் நூல் அக்குவேறு ஆணிவேறாக அலசப்பட்டு பலத்த வாதப்பிரதிவாதங்களை கிளப்பிவிட்டது. இந்தி யாவைப்பற்றிய தவறான எண்ணங்களைப் போக்கும் விதத்தில் பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கே. ஜி. அமரதாசவின் இறுதிக்கட்டுரை ‘ராவய 2ம் இதழில் இடம் பெறுகின்றது. தமிழைக்கற்போம் என சிங்கள சோதரர் ஒருவர் குரல் கொடுக்கிறார். இவை தவிர் இன்னும் பல கருத்துக்கள் இடைக்கிடை இடம் பெற்றுள்ளன.
".சிங்களத்தையும் தமிழையும் அன்றே தேசியமொழி களாக அங்கீகரித்திருந்தால் இந்தப்பிரச்சினை எழுந் திராது." - சுனில் சரத் பெரேரா,
(ராவய இதழ் 3-பக்கம் 14)
"..எனது சங்கீத நிகழ்ச்சிகளில், நான் பாடும் பாடல் கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று விமரிசனம் செய்யப்படுகிறது. என்னையும் பாட லாசிரியர் கலாநிதி சுனில் ஆரியரத்னவைபும் இன வாதிகள் என்று நேரடியாகவே விமரிசனம் செய்கிறார் கள். ஆகவே பாடல்களில் எம்மையும் அறியாமல் இனவாதக் கருத்துக்கள் புகுந்துவிட்டனவோ என ஐயுறுகின்றேன்.'"-நந்தா மாலனி.
(ராவய இதழ் 12 பக்கம் 32)
"...நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் அமெரிக் காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. இந்தியாவில் தான் உள்ளன. அந்த அளவுக்கு வளம் பெற்ற பண் பாட்டுச் சுரங்கங்கள். அருள் பெற்ற கலைஞர்கள் அங்கேதான் உள்ளனர்." - தர்மசிறி பண்டார நாயகக.
(ராவய இதழ் 7 பக்கம் 32)
இவ்வாறாகப் பல கோணங்களிலும் இனப்பிரச்சினை மற்றும் இந்திய உறவு சம்பந்தமான கருத்துக்கள் பெறப்பட்டு ‘ராவய இதழ்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன.
O

Page 37
கவிதைகள்
சிங்கள மொழிக் கவிதைகள் பெரும் .பான்மை இன. வெறியைத் துண்டும், பாங்கில் வெளிவரும் இக்க்ால
கட்டத்தில் ராவய இதழில்வெளிவந்த சிங்களக் கவிதை கள் இனக்கலவரங்களின் கொடூரத்தைப் புலப்படுத்தி சமாதானத்தின் அவசியத்தை வலியுறுத்துவனவாக
அமைந்துள்ளன. சிங்களர் - தமிழர் இருசாரார்
இடையே நிலவிய "உயிர்த்தோழமை உணர்வுகள்" தொடர்ச்சியாக நடை பெற்ற இனக்கலவரங்களால் மழுங்கடிக்கப்பட்டு வெறும் வாய்ச் சொற்களாக மாறி
விட்ட காலப்பகுதியில் எழுந்த கவிதைகள் இவை!
செல்வராஜா
பத்து ஆண்டுகள் உயிர்த்தோழமை உணர்விலொன்றிப் ப்ொழுது போக்கினோம் சிறுவயதில் ஒரு பாடசாலை நிழலில் கல்வி பயின்றோம் விடுமுறைக் காலம் வந்தபோதும் வீடுகளில் இருந்து விபரங்களுக்கு கடிதங்கள் எழுதினோம் நாம் வயது வந்ததும் இருவழிகளில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று:
வைத்தியத்துறை பயின்ற அவர் வடக்கே சேவைசெய்தார் திடீரென கடந்தவாரம் * கல்கிசையில்" கண்டோம் கதைத்திடும் ஆவலில் நாங்கள் நின்றாலும் நொடிப் பொழுதில் உள்ளிருந்து பீறிட்டு எழும்
* கல்கிசை-கொழும்புக்கு அருகில் உள்ள நகரம்

69 சுந்தரபாண்டியன்
ஐயம், அச்சம் நெருப்புத் தணலானது நெஞ்சிற் கனலானது.
துப்பாக்கி வெடியோசை என எமது மெளனம் குமுறியது சிலவார்த்தைகள் வாயினால் பேசி அகன்றோம் விரைந்தே நாம்! அவர் எனக்குச்செய்த குற்றம் எதுவும் இல்லை நான் அவருக்குச்செய்த குற்றம் எதுவும் இல்லை.
இன்னும் பத்துப்பேர் சூடுபட்டு செத்துப் போனதைச் செய்தித்தாள்கள் சத்தம் போட்டுச் சொல்கின்றன எமக்கு தடித்துப்போன பெரிய எழுத்துக்களால்.
--கலாநிதி: விமல்திசாநாயக்க
ராவய-1986-ஆகஸ்ட்

Page 38
இலங்கை இனப்பிரச்சினையில். 70
2. நாளினி வா!
இலங்கைத் தீவில் சிங்களரோடு இணைந்து வாழ்ந்த தமிழர்கள்,
இனக்கலவரங்கள் காரணமாக இடம்பெயர்ந்து தமது பூர்வீகப் பகுதிகளான வடக்கு, கிழக்குப்பகுதி நோக்கிச் செல்லநேரிட்டது. ஆனால் அங்கும் அரச படையினரின் கட்டவிழ்த்து விட்ட பயங்கர வாதம் காரணமாக இருப்பிடங்களை இழந்து. இப்போது இருக் கும் இடமே தெரியாமற் போய்விட்டவர்கள் எத்தனையோ..?
சிங்களப் பாலர் பாடநூல்களில் நாளினி, சாமா, அமர என்ற சிங்களப் பெயர்களுடன் மீனா என்னும் தமிழ்ச்சிறுமி பெயரும் முன்னர் இடம்பெற்று இருந்தது. ஆனால் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாலர் புத்தகம் கூட வேறுபட்டுவிட்டது. தமிழ்ப் பெயரான மீனாவைக் காணவில்லை. புதிதாக சிங்களப் பெயரான 'சரத்* அங்கே முளைத்துள்ளது.
நாட்டு நிலையை "நாளினி வா! பூ பூத்திருக்கிறதா பார்" என்ற பாடத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார் கவிஞர்.
நாளினி வா. பூ பூத்திருக்கிறதா பார். பாலர்புத்தகம் வேறுபட்டு பழைய பூக்கள்வாடிவிட்டன ‘சாமா"க்களும் - அமர”க்களும்பூத்துள்ளனர் புதிதாக 'சரத் அங்கு வந்துள்ளான். பூத்திடு முன் மலர் வாடுங்காலமிதில் எதற்காக நாம் வருந்தவேண்டும் நாளினி! அங்கே பனைவேலிகள் தீப்பற்றின இன்று அய்யோ! மீனா! நீ எங்கே!.
போர்க்களத்தில் கொடு ஆயுதங்களை ஏந்தி போகட்டும் வடக்கே அண்ணன் குண்டுகளை தூர இருந்து வீசி எறிந்து மீண்டும் வரட்டும் கொழும்பை நோக்கி யார் யாரால் காப்பாற்றப்படுவது நாளினி ஆரம்பித்தவர்களே அதைத்

71. சுந்தரபாண்டியன்
தீர்த்துக்கொள்வார்கள் அழகான தர்மதுவீபத்தில் நிகழும் “அவைகளுக்கு ஆச்சரியப்படத் தேவையில்லை மீனா நாங்கள்.
புதியதோர் உலகம் செய்வோம் நாம்
நாளினி பார்ப்பாயாக! தர்மத்தீவின் பாழுந்தன்மையை
பதறுகிறது உள்ளம் எல்லா இடங்களுமே செயற்கையாம் நிழற்பிரதிதான் உலகமே இப்போது போதனை கேட்க : "பன்சலை” போகவேண்டாம் *கெசற்’ர் யந்திரத்தில் இருக்கிறார் நமது மதகுரு தடிகொண்டு பூக்கொய்து ஏன் களைக்கவேண்டும் மலர் தேவையில்லை பூசை செய்வதற்கு காகிதப் பூக்கள் பூத்திருக்கின்றன வீடுகளிலேயே சொல்வதற்கு இருக்கிறது அநேகம் நாளினிவா விரைவாக இங்கே பூ பூத்திருக்கிறதா என்று பார்ப்பதற்குஅல்ல தலைகீழாக மாறியிருக்கும் அந்த உலகில் தலையால் நிற்பது எவ்வளவு காலத்துக்கு தனிமை உணர்வால் தவிக்கின்றேன் மீனாவையும் அழைத்து நீயும் வா விரைந்து நாம் புதிய உலகொன்றினை உருவாக்குவோம்.
-15 TLDs) 6fy (Fasy
ராவய-1986-ஆகஸ்ட்
பன்சலை-பெளத்தகுருமார் வாழுமிடம் f கெசற்-ஒலிப்பதிவு நாடா

Page 39
இலங்கை இனப்பிரச்சினையில். 72
ஈழ மாதாவின் இதய ஒலி
பூக்கூடையுள் வைத்த மல்லிகை மலர்கள்போல் பால்வழித் தாரகைக் கூட்டம்போல் கூடியிருந்த முயற்குட்டிகள் போல்
வறுபட்டது ஏன் என் பிள்ளைகளே இவ்வாறாக
வடக்கே இருந்து காதம் பல கடந்து வந்து *கதிர்காமத்தில் காவடி ஆடினீர் ஒன்றாக நாலுதிசையும் பக்தி கீதம் பாடினீர்நன்றாக இன்று ஏன் மக்களே அழிகின்றீர்போர் புரிந்து
பூக்கள் பூத்திருந்தன
போயிலைத்தோட்டம் எங்கணும் வாவிகள் நிறைந்து அலைகள் எழுந்தன வரிசையாக பால் நிரம்பிய நெற்பயிர்கள் நெளிந்தன எழிலாக புல்முளைத்தது மனிததர்மத்தோடு ஒன்றாக
பன்சல மணியைத் தொடர்ந்து ஒலித்து பள்ளியில் தொழுகையில்மண்டியிட்டுநீங்கள் "வேல் ‘திருவிழாவில் சென்று திலகம் இட்டு ஒன்றாய் இருப்பீர் பிள்ளைகளே ஒற்றுமைப்பட்டு.
-சந்திரசிரி கன்னங்கர
ராவய-1987-செப்டம்பர்
* கதிர்காமம்;: சிங்களரும் தமிழரும் இணைந்து முருகக் கடவுளை
வழிபட்ட இடம் போயிலை:- புகையினை - யாழ்ப்பாணத்து புகையிலைக்கு சிங்கள
சிடையே நல்ல வரவேற்புண்டு
O

2 சுந்தரபாண்டியன்
நடந்தவை.
ஈழமாதாவை இறுகணைத்து சுபீட்சபிதா அழுகிறார். வீரஞ்செறி சிங்கள நாமம் இன்று குப்பைக்கிடங்கில் வருந்திச் சாவதுதான் ஒரே செல்வம் இந்நாட்டில் தெரிகிறது அறிகுறி! வெளிநாட்டின் வெற்றிப்பவனிக்கே
இத்துயரவாழ்வின் அர்த்தந்தான் என்ன? இதய வேதனை துரத்த அழுகிறேன் நான் சுதந்திரம் பெறுவதற்காக அன்று செய்த அத்தனையுமே மூடிப்போய்விட்டன மண்ணுக்குள்!
தொழில் செல்வம் மதிப்பு அதிகாரம் புகழ் மீதான பேராசை நாட்டுக்கே பெருங்கேடு அறிந்தே செய்யும் பொய்யும் அழிந்தே தீரும் எந்த இதயம்தாங்கும் இந்தப் பேரிடியினை!
அபிவிருத்தி குளிக்கிறது பச்சை இரத்தத்தில் இன்று இறந்து போனவர் தொகை சொல்லிடவா உயிர்ப்பயத்தால் ஓடியே சோகத்துடன் இருந்து புலம்பிடுவோர் துயரக்கதை சொல்லிடவா?
மனிதாபிமானமற்ற காடைத்தனம் முயன்றால் அதற்கே இரையாவாய் ஒர்நாள் நீயும் இவ்வாழ்க்கை நிலவுவது சிறிது காலமே என்பதை எண்ணாமையால் நிகழ்வனவே இவை!
-ஆனந்த விஜயவீர

Page 40
இலங்கை இனப்பிரச்சினையில். 74
மத்தும பண்டார
இலங்கையின் கடைசி மன்னர் ஒரு தமிழர். இவர் தனது அரசுக்கு எதிராகச் சூழ்ச்சியில் ஈடுபட்ட சிங்களரின் குடும்பத்தை அன்றைய சிங்களச் சட்டப்படி கொடுரமாகத் தண்டித்தார். தந்தை செய்த தவறுக்காக-அண்ணனும் தம்பியுமான இரண்டு சிங்களச்சிறுவர் கள் சிரச்சேதம் செய்யப்படவேண்டிய நிலை! ஓங்கிய வாளுடன் வருகின்ற கொலையாளியைக் கண்டு அஞ்சி அலறுகிறான் அண்ணன். ஆனால் தம்பியான மததுமபண்டாரவோ ‘‘அஞ்சாதே அண்ணா! இறக்கும் விதம் காட்டுவேன் நான்!” என்று துணிந்து சென்று தன் தலையைக் கொடுக்கிறான். சாவுக்கு அஞ்சாதவன் என்பதைவிட தமிழனின் வாளுக்கு இரையானவன் என்ற காரணத் தால்-இச்சிறுவனின் பெயர் தமிழருக்கு எதிராகச் சிங்களவரைத் தூண்டிவிடும் மந்திரச் சொல்லாக இருக்கின்றது. ‘தமிழரோடு மோதி உயிர்விடுவதற்கு இன்னும் ஆயிரமாயிரம் அஞ்சாநெஞ் சினரான மத்துமபண்டாரக்களை உருவாக்கிவிட ஆளும் வர்க்கம் அறைகூவல் விடுக்கும் இந்த வேளையில் 'வாழும் வழியினைக் காட்டுவதே வீரம்" என்று துணிவுடன் கூறுகிறார் கவிஞர்.
'அஞ்சாதே அண்ணா! இறக்கும் விதம் காட்டுவேன் நான்"
"நில்!. மத்துமபண்டார இறக்கும் விதம் அல்ல எமக்குக் காட்டு வாழும் வழியினை.!
- சாள்ஸ் தயானந்த
ராவய-1986-செப்டம்பர்.

75 சுந்தரபாண்டியன்
意 V தீப்பிடித்த கங்கை
வளர்த்திடுவர் குழந்தைகுட்டிகளை அன்னையர் தாம் வாழ்க்கைப் போரின் பாரம் சுமப்பர் தந்தையர் தாம்
சிரிப்புதிர்க்கும்போது மல்லிகை கொத்துப்போல் சரோஜினி தங்கை
எங்கே தெரிந்தது மொழியின் வேறுபாடு எமக்கு அழுது புரண்டு மாலையாய் வடித்த சிவம் தம்பியின் கண்ணிர் மொழி எம்மைக் கலங்க வைக்கவில்லையா சொல்லடி சகியே!
அன்னையர்தான் குழந்தை குட்டிகளை வளர்த்திடுவர் தந்தையர்தான் வாழ்க்கைப் போரின் பாசஞ்சுமப்பர்,
கரடிக்கூட்டம் பாய்ந்து கிராமத்தை அழிக்கையில் தாயணைப்பில் பாலருந்தும் பாற்பிள்ளைகளின் கழுத்தை முறித்து கொடூர திருப்தி அடையும் தாயின் மார்பகத்தை நகத்தாற் பிறாண்டி. வீட்டுக்கு வீடு பாழடிக்கும்.

Page 41
இலங்கை இனப்பிரச்சினையில்.76
கினநீதி கிராமத்தில் அரசோச்சும் அயல் கிராமத்தில் நாம் துயில்கின்றோம் பாற் குழந்தைகளின் கழுத்தை முறித்திடும்போது எழுப்பிடும் ஒலத்தில் எப்படி நாமிங்கு எமது பிள்ளைகளைத் தாலாட்டுவோம் அன்புத்தாய்மார்களே!
-நந்தன. மாரசிங்கராவய-1987-ஜனவரி,
(அரசின் ஆயுதப்படை தமிழரின் கிராமங்களைத் தாக்கி அட்டுழியம் புரியும் வேளையில் அயல் கிராமங்களில் வசிக்கும் சிங்களர் நிம்மதியாக உறங்க முடியுமா?)
O

17 சுந்தரபாண்டியன்
அபாய அறிவிப்பு
காலம், துவீபம், தேசம் குலம், தாய் அவள் விபரம் பாராதீர் மீண்டும் இனி அவதரிக்க இவ்வுலகில் ஏற்ற சூழலை புத்த பகவானே!
கெளதம சுவாமி கனவு கண்ட துவீபம் வேறுபட்டது மிகவும் றொபோக்கள் மனிதர்களாய் உலகாளும் இக்காலம் எவ்வாறு நீர் தேடுவீர் காமத்தால் கெடாத கன்னியர் இருக்கும் துவீபத்தை!
மைத்ரி புத்த பகவானே! எந்த தேசத்துக்கு நீர் எழுந்தருளுவீர்? தேச எல்லைகள் வேறுபட்டுள்ளன கொடிய ஆயுதம் தரித்து மனிதத்தன்மை மறைந்து பணத்தைப் பின்தொடரும் பாவையர் நிறைந்து இலங்குவது எவ்வாறு உமது தர்மம் இவ்வுலகில் அனைத்தையுமே தேடிக்கொண்டாலும் சுவாமி ஆகாது தேடுதற்கு அன்பான ஒரு தாயை!
உலகிதனில் பணம்படைத்த தாய்க்குலம் உடலின் பத்துக்கு ஊறு வந்திடாமல் உவந்தே பிறப்புக்கட்டுப்பாடு செய்யும் வேளை உலகிற் பிள்ளைகளை அநாதையாய் உலவிடாமல் இருக்கக் கருக்கதவைச் சாத்துகிறாள் உடைந்த உள்ளத்துடன் ஏழைத்தாய்! இனி, எப்படி சுவாமி! உண்மைத்தாயை நீர் கண்டுபிடிப்பீர்? ஆகவே புத்தபகவானே! கருணை மறைந்த உலகிதனில்-இனிமேல் கவனமாக யோசித்து அவதரிப்பீராக! அபாயம் நிறைந்தது மனித உலகம்!
-நாளனி பிட்டிகலராவய-1987-ஜனவரி,
O

Page 42
இலங்கை இனப்பிரச்சினையில். 78
சிங்களவர் உரிமை
'அய்யோ ஆண்டவனே. கடவுளே உனக்கு கண் இல்லையா? புத்த பெருமானே! இதுவா உன் கருணை இதுவா உன் நீதி நீயே நெருப்பு வைக்கிறாயே?"
அன்பு, கருணை, அகிம்சை, அறம் அத்தனையும் கரைந்து நீர்த்துளிகளாய் அரசமரத்தைச் சுற்றிய வெண் மணற் பரப்பில் சிதறியே வற்றிவிட்டது.
அவலக்குரல் கேட்டு இலங்கையின் பண்பாட்டு வித்தாம் அநுரதபுரி ஜயசிரி மகாபோதி அரசமரம் கேட்டது "இனியும் புத்தமதம் இருக்கமுடியுமா சிங்கள இனத்தின் உரிமையாக?"
утоји!-1987-опij

79 சுந்தரபாண்டியன்
மெளனமாய்.
அன்று ஜெர்மனியில் நாசிவாதிகள் கொன்று குவித்தார்கள் கம்யூனிஸ்டுகனை ஒன்றும் சொல்லாமல் நானிருந்தேன் காரணம் நான் கம்யூனிஸ்டு அல்ல. அடுத்து அவர்கள் அழித்தது யூதர்களை தடுக்காது நான் படுத்திருந்தேன் ஏனென்றால் நான் யூதனாக இருக்கவில்லை. பின்னர் தொழிற்சங்கங்களை ஒழித்தார்கள் முன்னர் போலவே மெளனமாய் இருந்தேன் நான் தொழிற்சங்கத்தை சாராதவன் என்பதால் அவர்கள் கத்தோலிக்கரை கொலை செய்தார்கள் ஏனென்று வாய்திறந்து அலட்டிக்கொள்ள நானொன்றும் கத்தோலிக்கன் அல்லவே. இறுதியில் அவர்கள் வந்தார்கள் என்னிடம் அப்போது எனக்காக-எனது சுதந்திரததுக்காக ஏதாவது செய்வதற்கு எவருமே எஞ்சி இருக்கவில்லை.
- Lorf' tiqdir f'Gor Gcf
(ஜெர்மன் இன அருட்தந்தை) ராவய-1987-மார்ச்

Page 43
இலங்கை இனப்பிரச்சினையில். 80
இல்லையா ஒரு முனிவர்?
('பொசொன் நிலவு’ என்னும் ஆடிப் பூரணை நாளில், வேட்டைக்காக காட்டுக்குச் சென்ற இலங்கை மன்னன் தீசன் அநுரதபுரிக்கு அண்மையில் உள்ள மிகிந்தலை என்னும் மலை உச்சியில் தரிசனம் தந்த ஒரு துறவியின் வாயிலாக பெளத்த தருமோபதேசம் பெற்று, மனம் மாறி ஆயுதங்களை வீசியெறிந்து சகல உயிர்களையும் காப்பது காவலன் கடமை எனக் கொண்டு வாழ்கிறான். அன்று தொடங்கி இலங்கை மன்னர்கள் பெளத்த நெறிப்படி மக்களின் காவலர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் இன்றோ. மன்னனின் இனம் மிருகக்கூட்டமாக மாறி விட்டதே.! என்று தன்னினத்தை நொந்து கொள்கிறார் இந்தக் 4.
எழுந்து வரும் "பொசொன்” நிலவு அன்றுபோல் மிகிந்தலை பர்வத உச்சியில் உலக இருளைப்போக்கி; எனினும் இயலவில்லை காண்பதற்கு அற்புத தரிசனத்தை! கொடிய ஆயுதங்களைக் கீழே போட்டு போதனை கேட்கும் மன்னனின் இனத்தில் உன்மத்தம் பிடித்து கொடிய ஆயுதங்களைக் கையில் ஏந்திய மிருகக்கூட்டமாக மாறி மனிதர்களின் மார்பை ஊடுருவிப் பிளந்து பெருகிடும் இரத்த கங்கையைத் தவிர உதிரவில்லை ஒருவார்த்தை உலகத்தை ஒளிசெய்து

81 சுந்தரபாண்டியன்
அன்றியும். ஆகாயம் (மழுதும் இருள் கணத்தில் பரவிடும் வெடித்துச் சிதறிடும் மனிதத் தன்மையின் ஒலத்தைத்தவிர எனினும்
இல்லையா ஒரு முனிவர்! எழுந்தருளி-வடக்கே ஜம்பு துவீபத்தில் போதித்திட இப்புனித தர்மத்தை சிங்களன்-தமிழன் முஸ்லிம்-பறங்கி
என நாலு இனம் இல்லை உலகத்தில்
உளது
உத்தமமான
ஒரே ஒரு
மனித குடும்பந்தான்
உணர்க!
--சசங்க ஜயசேகர
y sucu-987-Lot is

Page 44
இலங்கை இனப்பிரச்சினையில். 82
வராதே புத்தாண்டே நீ!
பிறந்த நாள்முதல் கண்ணீருகுத்து புகுந்து இந்த வேளை பெரும் வாழ்க்கைப்போராட்டத்தில் கவனியாது சித்திரை பிறந்தது அலட்சியமாய் என்ன இழவுக்கு கத்துகிறது இந்தக் குயில்?
புத்தாண்டுக் குமரி அடியெடுத்து எனது குணமிதுதான் என அடையாளம் இட்டதுபோல் குருதியிலுTறிய இதயங்கள் - உலகின் ஒரு பகுதியினர் முள்முருங்கை மர உச்சியில் அமர்ந்திருக்கும் அழகு!
செல்வம் பெற்று ஒரு சிலர் மட்டும் செழிப்பாய் புத்தாண்டில் உண்டுடுத்து குடித்து மஞ்சத்தில் இன்பந்தேட மிகப்பலரோ பஞ்சத்தில்வாட நீ வருவது தகாது புத்தாண்டுப் பெண்ணே!
மணிப்புரி-ரங்லர்-பொலியஸ்டர்-டீவி கண்ணாடிக் கூடுகளில் மிளிர்ந்தாலும் எழிலாக எம்பக்கம் வராது இன்னும் கல்பகாலத்திற்கு புத்தாண்டுப் பெண்ணே நீ வெறுமனே வந்து எதற்கு
கிடைத்தது ஹெரோயின் கிடையாது பதனீர் சடு குடு- கொம்பு விளையாட்டு மறைந்தது டிஸ்கோ வால் நிர்வாண ஆபாசங்களால் அழிந்தது பஞ்சசீலம் இரு கண்ணிற்படாது நீ போய்விடு புத்தாண்டே

83 சுந்தரபாண்டியன்
மறைந்தன பாடல்-கவிதை-பட்டிமன்றங்கள் தலை தூக்கவே tபொணியம்-எபா-என்பன பண்பாடுகள் இல்லாத இத்தகைய வருடப்பிறப்பு வந்து என்ன பயன்?
துயர் படிந்த செய்திகள் நிறைந்தன வடக்கிலும் கிழக்கிலும் பனைவடலி இரும்புவேலித் திரையால் பிரியோம். துயரங்கள், கவலைகள் நீங்கி பால்பொங்கும் நாளில் பாங்குடன் நீ வருவாய் புத்தாண்டுக் குமாரியே!
-சந்திரா கொட்டுகொட
J FT nu u-l 987-Tifsi.
: BONIEM ABA

Page 45
இலங்கை இனப்பிரச்சினையில்..84
செல்லமமா! நீ. செத்துப் போகலியா?
குளிரில் கைகால்கள் வேகமாக நடுங்குகின்றன நரம்புக்கொடிகள் நெளிகின்றன. புன்னகை ஊமையாக இருப்பது.? கலைந்துள்ளன மயிர்க்கற்றைகள் குழிந்துள்ளன உன்னிருகண்கள் வாய்பிளந்தது தானாகவே அசைகின்ற தேகம் முழுதும்!
நினைவிழந்து மயக்கத்தில் நீ இருந்தாலும் மூன்று நாட்கள் பட்டினியில் அனுதாபத்தோடு-வேதனையோடு பார்த்தார்களா? அடுத்தfலயத்தில் இருப்பவர்கள்! தண்ணிர் சொட்டுத் தானும் கிடைத்ததா? செல்லம்மா..!
தோட்டக்காட்டில் நெருப்பு வெய்யிலில் உழைத்த உனக்கு எமை விடவும் உறுதி இருந்தது உள்ளத்தில்! எமக்கும் மேலாகச் சக்தி இருந்தது உடலில்...!
மூன்று நாட்கள் கடந்தபின் செல்லம்மா எழுந்தபோது அடுத்தலயத்து ஆட்கள் கேட்டார்கள்-இப்படி! "நீ செத்துப் போகலியா? செல்லம்மா இந்தா வெத்தல போட்டுக்க!”*
-கே. சோமபந்து. தெனியாய, W M6 (Lu- 987.--Go.
f sub- இலங்கைத் தோட்டத் தொழிலாளிகள் உறவிடம்,

85 சுந்தரபாண்டியன்
ஆடியில் ஒரு நிகழ்ச்சி
முனியாண்டி மார்பைப் பார்த்து வெறியுடன் சிரித்தது அக்கினி தண்டம். ஒரு கண்மூடியது ஒரு புறம் தெரிந்தது.
உடற்பாரத்தை கால்களில் தாங்கி பையப்பையப் பொறுக்கித் தின்ற புறா அக்கினி தண்டத்தின் முனையில் அமர்ந்தது முனை வளைந்தது
மணல் விளையாடிய. முனியாண்டியின் பையனும் குணதாசவின் பையனும் சன்னங்களுக்கு மார்புகாட்டி. புறாவைப் பிடித்திட முனைந்த போது.
மூடிய கண் திறந்தது. இரு குழைந்தைகளையும் கண்டதுமே குளிர்ந்தான் குணதாச கைவிரல்களில் நழுவி விழுந்தது அக்கினிதண்டம் முனியாண்டியின் முகத்தில் மலர்ந்தது புன்னகை
-மு. விமலதாச
Ost Guu-1987-6 to

Page 46
இலங்கை இனப்பிரச்சினையில்..86
அன்பு உலகம்
பத்துத் திக்கும் வெடியோசை எழுந்து ஆகாயத்தில் கரும்புகை நிறைந்து பகுதியே அதிர்ந்து நிகழ்ந்த யுத்தம் முடிந்தது இருபக்கப் படைகளுமே பின்வாங்குவது தெரிந்தது மாலை மஞ்சள் ஒளியில் இரத்தம் பெருகிடப் பிணங்கள்! படைகள் இரண்டும் மோதின மீண்டும் மெல்லிய குரலில் எழுந்த முனங்கலில் அமைதி இரண்டுபட்டு புவியைப் பயமுறுத்தியது பத்துத்திக்கும் பரவியிருந்த மஞ்சள் ஒளியும் இருளுக்குத் தோற்றது.
அன்பு என்று நம் கவிஞர்கள் புகழ்ந்து பாடும் அன்பு உலகம் தானா, இது எம் கண்படும்.
-சுதர்சன A-குமார
or 64-987-(LD

84சுந்தரபாண்டியன்
பனையும் தென்னையும்
தென்னை மரமொன்று
பனை மரத்தின் மீது
சரிந்து விழுந்தது பனை மரத்தின் கழுத்து முறிந்தது. "'நான் அவனுடைய கழுத்தை முறித்து விட்டேன்" ஆணவமாகப் பேசி திரும்பிப் பார்த்தபொழுது தான், பூமியிலிருந்தே பிடுங்கப்பட்டிருப்பது தென்னை மரத்துக்குந் தெரிந்தது.
-ஜயவடுவிதான
ராவய-1987-ஜூன்.
தமிழர் பகுதியில் பனையும் சிங்களர் பிரதேசங்களில் தென்னை
யும் அதிகம். தமிழனைப் பனையாகவும் சிங்களனைத் தென்னை யாகவும் உருவகித்துள்ளர்ர் கவிஞர்)

Page 47
இலங்கை இனப்பிரச்சினையில். 88
தாயகத்தின் உரிமை
அளவற்ற துயர் வேதனைகள் பட்டு அன்போடு நற் குணத்தையும் தந்து வளர்த்திட்ட அன்புக் குழந்தைகளே நீங்கள் ஏன் பகைத்திருக்கின்றீர்கள்?
முனைந்தே பகைவர் போல் ஏன் உரிமையைப் பகிர்த்து கொள்ள போரில் ஈடுபட்டீர் நீர் ஏன் என் இதயம் வருத்துகின்றீர்? வடக்கு மூலையில் நீ இருந்தாலும் தெற்கு மூலையில் நீ இருந்தாலும் நீங்கள் பிறந்த நாளில் நான் அனுபவித்தது ஒரே வேதனைதான்
பாலுக்கழுத பாலகருமக்காக மார்பில் சுரந்த பாலின் ஒரே நிறத்தைத் தவிர ஒரு போதும் காணவில்லை நான் வேற்றுமை. தாலாட்டும் போது தாய்மடியினில் இசைத்த இனிய பாடல்களில் பெருக்கெடுத்தோடிய தாய்மடியினில் ஒரே தொனியைத்தான் நான் எழுப்பினேன்.
என் மீதான உரிமையைப் பகிர்ந்துகொள்ளப் போரில் ஈடுபட்டாலும் உங்கள் அனைவருக்கும் சமமாக நான் சொந்தம் நீவிர் எனது வயிற்றில் பிறந்ததால்!
- R5s57 g r LD5yu uš5
yra L-987-2"ir.

89 சுந்தரபாண்டியன்
இயேசுவே மீண்டும் வருவீராகில்.
வழியில் இடைக்கிடை காவல் நிலையமைத்து நிறுத்தி பேருந்துகளை சோதனை செய்து தாடியைக் கண்டதும் "அவை ஊளையிட்டன "அம்மையப்பனை" நினைவு படுத்தின.
இனிமேல் பேருந்தில் பயணம் போகும்போது சட்டம் முறைக்கும் உம் தாடியைப் பார்த்து இயேசுவே மீண்டும் நீர் இங்கு வரும் போது அரும்புமீசை அளவானதாகும் பயணங்களுக்கு
-சுதர்சன. பீ. ஜயவர்தன
JAR QJu— l987-gʻ9aDa»

Page 48
இலங்கை இனப்பிரச்சினையில். են
வரம் தருவீராக!
மனிதத் தன்மை அறியTதி மனித வயிற்றில் பிறவாத கொடு மனிதனும் பேய் சுளும் அமானுஷ்ய குணத்தோடு ஆயுமேந்தி இருக்கின்ற RF பத்துத்திக்கும் போர் புரிந்து இன்று!
உணவு இல்லாது தண்:சீர் இங்போது உடுப்பதற்கு டேவிடஒன்றும் இல்லாது துன்புறும் எம்மையும் எம்பிள்னை:ளயும் ܗ பட்டினிேத் துயரத்தில் மீட்டெடுக்க
பஞ்சத்தால் செத்துப்போன தாய்தந்தை இறந்துபோன சகோதர சகோதரிகளின்
இறந்த உடலங்களை ம் உதிரத்தையும் உண்டு $ቃኗj நானாவிலும் வாழ்வதற்கு
வர்ம் தருவி" க்
வணக்கத்துக்குரிய அதி உத்தமசே!
-ஜயதுங்க அமரவீர
எவய-1987-ஜூஜல.
-- r-arros 1 to-s, ... To- * = z இலங்கை சனாதிபதியை இவ்வாறு விேைப்பது மரபு


Page 49


Page 50
காலத்தின் கட்டாயம், ெ படையில் வெகுஜன எ யால் மிகக்குறுகிய க பெரும்பர்ன்மை வாச்க சனத்துக்கும்-கண்டனத் என்னும் ம்ாத சஞ்சிை சினை" தொடர்பாக வெ வாச்கருக்கு அறிமுகம்
நூலின் நோக்கிம் ஆகும்.
இன்று இலங்கையில் சிங்கள மாசிகையான "ர தொடங்கி 1987 ஜூன வெளிவந்துள்ளன. இன எடுத்த இக்காலப் பகு இதழ்கள் அனைத்தும் பட்டுள்ளன.
வெறும் உணர்ச்சிக்கு
பூர்வமான அறிவுக்கு மு அடிப்படையில் இனப் " ராவய" உன்னதமான பத்திரிகை தர்மத்துக்கு என்பதும் இச்சிறு நூலா

தேசத்தின் தேவை என்ற அடிப் ண்ணத்தைப் பிரதிபலித்தமை ாலத்துள் அறிவு ஜீவிகளான ர்களின் வாழ்த்துக்கும்-விமரி $துக்கும் ஆளான "ராவய" கயில் "இலங்கை இனப்பிரச் , ளியான கருத்துக்களை தமிழ்
செய்துவைப்பதே இச்சிறு
அதிகமாக விற்பனையாகும் ாவய 1988 ஆகஸ்ட் மாதம் ல மாதம் வரை 12 இதழ்கள் ாப்பிரச்சினை 'புதியவடிவம்" தியில் வெளியுள "சர்வய' பரிசீலனைக்கு உட்படுத்தப்
இடம் கொடாது ஆக்கப் , தன்மை அளித்து மனிதாபிமான ASL பிரச்சினைக்குத் தீர்வுகாண பணியாற்றியுள்ளது என்பதும் உதாரணமாக விளங்கியுள்ளது ல் புலப்படும்.