கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பத்திரிகைத்துறை - சில நினைவுக்குறிப்புகள்

Page 1
எஸ். டெ (முன்னாள் ஆக்
 

Iடுமாளர் சிரியர் ஈழநாடு)

Page 2


Page 3

பத்திரிகைத்துறை
நினைவுக்குறிப்புகள் טFo&
O III65D எஸ். பெருமாள் (முன்னாள் ஆசிரியர் ஈழநாடு)

Page 4
நூல்:
ల్కdiui:
டுதல் பதிப்பு: ш5iйшый:
வெளியிடுபவர்;
Book:
Author:
1st Publication:
Printers:
Published by:
:Price ܢܠ
பத்திரிகைத்துறை சில நினைவுக் குறிப்புகள் எஸ்.பெருமாள் (முன்னாள் ஆசிரியர், ஈழநாடு, யாழ்ப்பாணம்) 2002 g56 buff.
பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, uJITuplutoOTLib. திருமதி ஈஸ்வரி பெருமாள் அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
"Paththirikaithurai Sila Ninaiwu Kurippukal" (Journalism: A few memory sketches) S.PERUMAAL (Former EditorEelanadu, Jaffna)
2002 November
Bharathy Pathippakam, 430,K.K.S. Road, Jaffna, Phone No:- O21-222.308.
Mrs. Easwary Perumaal Araly North - Vaddukoddai (All rights reserved)
RS 150.00

fImirühjah
மலையகத்துக் காந்தி அமரர் கே. இராஜலிங்கம் அவர்கட்கு
பாதை யறியாது யான்
பதைத்து நின்ற வேளை, பத்திரிகைத்துறை யென்னும் பாதை தனைக் காட்டி ஆதரித்துமுன்னேற
ஆனதெல்லாம் செய்தோய், அருந்தலைவ! மலையகத்து
மாதவமே, 'காந்தி ! (நும்) மலர் பாதம் தமக்கிந்த
சிறு நூல் சமர்ப்பணமே!

Page 5

இதழியல் அல்லது பத்திரிகை இயல் மேலை நாடுகளில் அதிக வளர்ச்சி கண்ட துறையாக உள்ளது. தொகை ரீதியாகவும், தரரீதியாகவும் அவை உன்னத நிலையில் உள்ளன. கல்வி வளர்ச்சியும் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியும் இதழியல் துறையின் வளர்ச்சிக்கு துணையாயின. இதன் வளர்ச்சி இன்று மின் இதழியல் துறையாக வளர்ந்ததோடமையாது ஒரு யுக மாற்றத்தையே உருவாக்கிவிட்டது. ஆம், இன்றைய யுகம் "தகவல் தொழில்நுட்ப யுகமாகும்." "உலகம் ஒருகிராமமாக' சுருங்கிவிட்டதென்றும் உள்ளங்கையில் உலகம்" என்றும் கூறுவதற்கு தகவல் சாதனங்களின் வளர்ச்சியும் தகவல் பரிமாற்றத்தின் வேகமுமே காரணங்களாகும்.
மேற்கே மெத்தவளரும் இப்புதிய கலைகளை
நுட்பங்களை நாம் பொதுவாக எமது நாடுகளுக்குக் குறிப்பாக தமிழ் உலகிற்குக் கொணர்ந்து சேர்க்கவேண்டும். அப்போதுதான் பல்துறையிலும் நாம் அபிவிருத்தி காணமுடியும். இத்துறைகளின் வளர்ச்சி இந்தியாவில் வியக்கத்தக்க அளவுக்கு வளர்ந்துவரும் அதேநேரம் தமிழ் உலகும் வளர்ச்சிப் பாதையில் செல்வதை அவதானிக்க முடிகின்றத. தமிழ் உலகு இன்று 50 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் பரந்துள்ளதால் தமிழ்மயப்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ் உலகின் அபிவிருத்திக்கு இன்றியமையாததாகின்றது.
தகவல் யுகம் பற்றிப் பேசும் போது அது வளர்ந்த வரலாறு பற்றிய சிந்தனை - அதன் வேர்கள் பற்றிய கண்டுபிடிப்புக்கள் என்பன எமக்கு இன்றியமையாதவை. வான் உயர ஓங்கி நிற்கும் தகவல் யுகம் எனும் கட்டிடத் Uதிற்கு அதுவே அத்திவாரமாகும். தகவல் பரிமாற்றத்தின்)
W

Page 6
(வரலாறு பாரம்பரிய முறைகள் மூலம் தகவல்களைY அறிவித்தல், அச்சுநுட்பத்தைப் பயன்படுத்தரிய பத்திரிகைத்துறையின் வளர்ச்சி, மின் இதழியல்துறை வளர்ச்சி என்பனவாக அமைகின்றது. இன்று மின் இதழியல் துறை வளர்ந்துள்ளபோதும் அச்சுப் பத்திரிகைத்துறையானது கணனி, இணையம் போன்ற புதிய தொழில் நுட்பங்களைத் தன்னுட் புகுத்தி, அதன் இன்றியமையாத நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதைக் காணமுடிகின்றது. இந்நிலைமை நீண்டகாலம் தொடரும் போல் தெரிகின்றது.
எனது இளமைக் காலத்தில் நான் ஒரு பத்திரிகை யாளனாக வரவேண்டுமென்ற இலட்சியம் கொண்டவனாகவே இருந்தேன். இன்றுவரை அந்த விருப்பு உண்டு. பத்திரிகைகள் மெய்மையை உரைக்கவேண்டும். மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் சத்தியம் என்பதே பத்திரிகைத் தர்மமாக இருத்தல் வேண்டும். எவர்க்கும் அஞ்சாமல் நேர்வழியில் மக்கள் சிந்தனைகளை வழிநடத்திச் செல்ல வேண்டும். நல்லவை எவை? தீயவை எவை? என இனங்காட்டி மானுட நேயத்துடன் பத்திரிகையும், பத்திரிகையாளனும் செயலாற்றவேண்டும் என்பன போன்ற இலட்சியங்களே பத்திரிகைத்துறையை நான் நேசிக்கக் காரணமெனத் தோன்றுகின்றது.
பத்திரிகைத்துறை பற்றிய எனது இளமைக்கால எண்ணங்களை யதார்த்தமாகத் தரிசிக்கவைத்த ஈழத்துப் பத்திரிகைகளாக அக்காலத்தில் 'வீரகேசரி, ஈழநாடு" போன்ற தினசரிகளை இனங்காணமுடிந்தது. தமிழ்மொழி நடையைத் செம்மைப்படுத்துவனவாக, தமிழரின் சிந்தனையை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்தவையாக இலட்சியம் ஒன்றை நோக்கி ஆளுமையுடன் சென்றவையாக இவை மிளிர்ந்தன. தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அரசுகளால் அடக்கி ஒடுக்கப்பட்டபோது இவை அஞ்சாது நீதிக்காக குரல்கொடுத்தன. தீமை நிகழ்ந்தபோது அவற்றைச் சுட்டிக்காட்டின. இலங்கை தன்னாட்சி உரிமைபெற்ற நாடாக மாறியபோதும் அத் தன்னாட்சிக் காலத்தில் சுதந்திரம் Uதமிழருக்குக் கிடைக்கவில்லை என இவை வாதிட்டு வந்தன.لر
νi

(தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் பிரதேசத்தின்N பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிக்கும் இவை
பெருமளவு பங்காற்றின. இவ்வாறான மதிப்புப் பெற்ற இரு
பத்திரிகைகளிலும் பணியாற்றிய திரு. எஸ். பெருமாள்
அவர்கள் 'பத்திரிகைத்துறை. சில நினைவுக்குறிப்புக்கள்"
எனும் நூலை ஆக்கியதன் மூலம் மெய்யாகவே மக்களை
நேசித்த அப் பத்திரிகைகளின் மனச்சாட்சியின் குரலை
பதிவுசெய்துள்ளார். இது காலத்தினால் செய்த நன்றி.
ஞாலத்தின் மானப் பெரிது"
பழம்பெரும் பத்திரிகையாளரான திரு.எஸ்.பெருமாள் அவர்கள் பற்றியும் திரு.கோபாலரத்தினம்(கோபு) அவர்கள் பற்றியும் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் விரிவுரையாளரான கலாநிதி எஸ்.வி. காசிநாதன் அவர்களின் மூலம் நான் எழுபதுகளிலேயே அறிந்திருந்தேன். திரு. காசியும் சில காலம் 'ஈழநாடு" பத்திரிகையில் பணிபுரிந்தார். சத்தியம், நேர்மை பற்றி எமக்கெல்லாம் போதித்தவர் அவர்தான் அவர் ஈழநாட்டில் பணிபுரிந்த போது மிகவும் மதிக்கத்தக்க பத்திரிகையாளரென திரு. பெருமாள் அவர்களையும் திரு. கோபு அவர்களையும் குறிப்பிடுவதோடு தனது அன்றாட சம்பாஷணைகளில் அவ் இருவரது சிறப்பியல்புகள் பற்றியும் அடிக்கடி குறிப்பிட்டமை இன்றும் என்நினைவுகளில் நிலைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 60 முதலான மூன்று தசாப்தங்களில் எல்லாம் நல்ல இலட்சியங்கள் வழிநடத்திய ஒரு பத்திரிகைக் கலாசாரம் இருந்திருக்கின்றது என்பதையிட்டு நாம் பெருமைப்படலாம். இக் கலாசாரத்தின் சிற்பிகளான பத்திரிகையாளர்கள் இன்றும் எம்மத்தியில் மெளனிகளாக வாழ்கின்றார்கள். ஈழநாடு" பத்திரிகையை ஆரம்பித்து நடாத்திய அமரர் திரு. கே.சி. தங்கராசா அவர்கள் வார்த்தைகளே இக் கலாசாரத்தின் மேன்மையை உரைக்கப்போதுமானவை. தமிழ் மக்களின் கருத்து வெளிப்பாட்டிற்கும் சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டிற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து பத்திரிகைகள்
வெளிவரவேண்டும். இபோல் கிழக்கிலங்கையிலும்لم
vii

Page 7
(மலையகத்திலும் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.Y என்றும் கூறும் அவர் பத்திரிகையைப்பயன்படுத்தி பெரும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதோ பத்திரிகையின் செல்வாக்கைப் பயன்படுத்தி பதவிகளைப் பெறவேண்டும். என்பதோ பத்திரிகையின் நோக்கமாக இருத்தல்கூடாது எனவும் ஆணித்தரமாகக் கூறியிருந்தார்.
ஈழநாடு பத்திரிகையின் சிறப்பும் மேன்மையும் இன்று 50, 60 அகவை காண்போரால்தான் மெய்யாகவே உணர (ալգԱյԼճ. ஈழநாடு பத்திரிகைக்தலையங்களின் தொகுப்பாக வெளிவந்த ஊரடங்கு வாழ்வு நூலை வாசிக்கும்போது தமிழ் மக்களின் வாழ்வில் அப் பத்திரிகை கொண்டிருந்த அக்கரையை எண்ணி மெய்சிலிக்கின்றது. இவற்றையெல்லாம் எமது இளம் தலைமுறையினருக்கு எளிமையாகவும் கதை கூறுவதுபோன்று இனிமையாகவும் திரு.பெருமாள் அவர்கள் இந் நூல் மூலம் எடுத்துச் சொல்கின்றார். பல இயல்களாக வகுக்கப்பட்டுள்ள முறையும் இயல்தோறும் துணைத் தலைப்புகளிட்டு வாசிப்பை இலகுவாக்கும் தன்மையும் தேர்ந்த பத்திரிகையாளருக்குரிய முத்திரைகளாகும். இதில் குறித்துரைக்கத்தக்க தென்னவெனில் நூலாசிரியரின் எழுத்தில் உள்ள சத்தியத்தை எமது இளம் தலைமுறையினர் தரிசிக்கவேண்டும் என்பதே. இதயமுள்ள இதழியலாளர் ஒருவரின் உயர்ந்த ஆத்மாவைத் தரிசிக்க வைக்கும் இந்நூல் இளம் இதழியலாளர் செல்ல வேண்டிய சத்திய வழியைக் காட்டிநிற்கும் வழிகாட்டியாக உள்ளது.
கடந்த பதினைந்து வருடங்களாக போர்முட்டம் சூழ்ந்த பூமியாகக் காட்சிதரும் யாழ்ப்பாணத்தின் பொருளாதார, சமூக, கலாசார துறைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் போன்றே இதழியல் துறையிலும் ஓர் ஆரோக்கியமின்மையே தென்பட்டது. இதனை ஓரளவாவது நிவர்த்திக்க வேண்டி 1993 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகில் இதழியல் கற்கை நெறி ஒன்றினை ஆரம்பித்தோம். மூன்று தொகுதியாக இடம்பெற்ற இக் கற்கைநெறியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 300 இளம் சந்ததியினர் பயின்றனர். ஆரோக்கியமான இதழியல் கலாசாரத்தை இம் மண்ணில் உருவாக்கிய மூத்த Uஇதழியலாளர்களே தமது பட்டறிவுப் புலமையை இளம்)
viii

(சந்ததியினருக்குக் கையளித்தனர். இவர்களில் ஒருபுலமைN யாளராக வருகைதந்திருந்த போதே திரு.பெருமாள் அவர் களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமைதி, அடக்கம், பெருந்தன்மை கொண்ட மதிப்பார்ந்த மனிதராக அவர் காட்சி தந்தார்.கற்கைநெறி பயின்ற இளைஞர்களுடாக இதழியல்துறையில் அவரது ஆழ்ந்த புலமையையும் அன்றே புரியக் கூடியதாக இருந்தது. அவர் தனது பட்டறிவுப் புலமையை இந்நூல் வாயிலாகத் தருவதன்மூலம் தமிழ் இதழியல்துறை வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்குகின்றார் எனத் துணியலாம். ஈழநாடு பத்திரிகைத்துறை அனுபவத்தை அதன் வரலாற்றுச் சிறப்பை பெருமாள் அவர்கள் தருவது போன்று வீரகேசரி பத்திரிகைத்துறை அனுபவத்தை திரு. கார்மேகம் அவர்களும் ஒரு நூலாக சமீபத்தில் தந்திருக்கின்றார். இவை தமிழ் இதழியல் துறையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத வரலாற்றுப் பதிவேடுகளாகும்.
இவ்வகையில் இதழியல் துறையை மேலும் வளம்படுத்த வேண்டுமாயின் சிறப்பான எமது இதழியல் கலாசாரத்தை மேன்மைப்படுத்த வேண்டுமாயின்முதியவர்களாகிக் கொண்டி ருக்கும் எமது மூத்த பத்திரிகையாளர் அனைவரும் தங்கள் தங்கள் பத்திரிகை அனுபவங்களை எழுதி நூலாக்க வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் இளம் சந்ததியினருக்கு தங்கள் அறிவைக் கையளிக்கும் பெரும்பேற்றை இவர்கள் பெற்றவர்கள்ஆவார்கள். இந் நூலாசிரியரிடமிருந்து மேலும் பல நூல்களை எதிர்பார்க்கும் அதேநேரம் இவரது இந்நூல் ஏனைய முத்த பத்திரிகையாளர்களின் நூலாக்கத்திற்கும் வழிகாட்டுமென எதிர்பார்க்கின்றேன்.
இணைப்பாளர். புறநிலைப் படிப்புகள் அலகு, duIdflfbut &JI.dfloud bilai, &Oaiutari, 9a d5 sj6Tij uljaft glosaurin. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
5.1.2002.
الم ܢ
ix

Page 8
தொன்னூறுகளின் முற்பகுதியில் யாழ். இலக்கிய வட்டத்தினர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் எனது பத்திரிகைத்துறை அநுபவங்களைக் கூறுமாறு கேட்டிருந்தார்கள். கலைப்பேரரசு திரு.ஏ.ரி.பொன்னுத்துரை அவர்களின் தலைமையில் அக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் குறைவாக இருந்த போதிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் அறிஞர் கள் பலர் அங்கு கூடியிருந்தார்கள்,
கூட்டம் முடிவுபெற்று விடைபெற்றுக் கொண்ட பொழுது, நான் அங்கு பேசியவைகளை எழுத்தில் வடிக்கும்படி பிரபல எழுத்தாளரான கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் யோசனை கூறினார்கள்.
"எழுதிவிடலாம், புத்தகமாக போடுவதுதான் கஷ்டமான காரியம்” என்று நான் கூறவும், "புத்தகம் போடுவதைப்பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் எழுதுங்கள்” என்று அழுத்திக் கூறினார் அவர். எழுத்துத்துறையில் அனுபவமிக்கவரும் பலநூல்களின் ஆசிரியருமான அவரது இந்த யோசனைதான் இச்சிறுகட்டுரை தொகுப்பினை நான் எழுதிமுடிப்பதற்கு தூண்டுதலாய் இருந்தது என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடை கின்றேன். எனக்கு மட்டுமல்ல "ஏதாகிலும் எழுதவேண்டும்” என்ற ஆர்வமுள்ள எவருக்குமே இந்த யோசனை பொருத்தமானதுதான் என்று கூறத் தேவையில்லை. இவ்வாறு ஒரு தொகுப்பினை நான் எழுதி வெளியிட வேண்டும் என்று பலதடவைகளிலும் தூண்டி வந்த இன்னொருவர் புலவர் ம.பார்வதிநாதசிவம் அவர்களாவர்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் தமிழ்ப்பத்திரிகைத்துறை எவ்வாறு இருந்திருக்கும்? நிச்சயமாக இத்துறையில் அக்காலத்தில் ஈடுபட்டிருந்தவர்களால்தான் இக்கேள்விக்கு விடையளிக்க முடியும். நான் அறிந்தவரை அக்காலத்தில் பத்திரிகைத்துறையில் உயர் நிலையில் இருந்தவர்களான கே.பி. ஹரன், கே.வி.எஸ். வாஸ், எஸ்.டி. சிவநாயகம், தினகரன் நாதன் போன்றவர்கள் அல்லது \அக்காலத்தில் இளையவர்களாய் இருந்து இன்று முத்தபத்து
X
 

(திரிகையாளர்களாய் இருப்பவர்கள் எவரும் தங்கள்\ அநுபவங்களை அல்லது தமது அறிவாற்றல்களை இனிவரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் எழுதிவைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அவ்வாறு யாரும் செய்திருப்பின் நான் அறியாமல் போனமை எனது துர்ப்பாக்கியமே. இல்லையெனில் அந்த இடைவெளியை எனது இந்தச் சிறுமுயற்சி "இட்டு நிரப்பிவிடும்” என்று நான் கூறிக்கொள்வதாக எவரும் எண்ணிவிடலாகாது.
பத்திரிகைத்துறையில் புகுந்த காலம் தொட்டு நான் பணிபுரிந்துள்ள நிறுவனங்களினூடாக பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் படிப்பினைகளையும் இன்றைய இத்துறை ஆர்வலர்கள் அறிந்துகொள்ளட்டும் என்ற நோக்கிலேயே இத்தொகுப்பினை எழுதியுள்ளேன். இதனால் இன்றைய தலைமுறையினர் ஏதும் பயனடைவார்களானால் அது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியளிக்கும். எழுதுவதற்கு சுவையான விடயங்கள் ஏராளமாக இருந்த பாதிலும் வாசகருக்கு ஏதாகிலும் ஒருகருத்தினைச் சுட்டிக் காட்டக் கூடியதானவற்றை மட்டுமே கூடிய அளவில் எழுத முயன்றிருக்கின்றேன்.
மேலும் நான் ஒன்றாக சேர்ந்து பழகி பணிபுரிந்த அன்பர்களி, பெரியோர்கள் பற்றியும் இதில் ஆங்காங்கே சிற்சில குறிப்புக்கள் வருகின்றன. இவை சிலவேளை முன்னும் பின்னுமாக மாறிவரக்கூடும், காரணம் நான் ஏதும் குறிப்புக்களை வைத்துக் கொண்டு இதனை எழுதவில்லை. இவையாவும் என் நினைவேட்டிலிருந்து எடுத்தாளப்பட்டவையே. ஆனால் எதுவும் உண்மைக்கு மாறானவையன்று. இவைகளை விரிவாக எழுதமுடியாமைக்கு வருந்துகின்றேன்.
இந்த எனது எழுத்துக்கள் எவரையாகுதல் மனம் நோகச் செய்திடுமானால் அதற்காக உண்மையில் வருந்துகின்றேன். அது என் நோக்கமுமல்ல - அங்ங்ணம் நிகழக்கூடா தென்பதற்காகவே பல சம்பவங்களை இதில் சேர்க்காமலும் பல பெயர்களைத் தவிர்த்தும் இருக்கிறேன்.
இந்நூலின் கையெழுத்துப் பிரதியை வாசித்து உதவியதுடன் இந்நூலின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ள என்னைப்பற்றிய குறிப்புரையையும் எழுதி உதவிய எனது மதிப்புக்குரிய புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர்களுக்கு எனது நன்றிகள்.
N. لر
Χi

Page 9
/ N
கையெழுத்துப் பிரதியை சிரமம்பாராது நகல் எடுத்து வழங்கிய அராலி இந்துக்கல்லுாரி இறுதியாண்டு மாணவி செல்வி கெளசல்யா மகேந்திரனும் எனது நன்றிக்கு உரியவர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் இ.சிவச்சந்திரன் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள் ளார்கள்.
யாழ். பல்கலைக்கழகத்தின் புறநிலைப் படிப்புக்கள் அலகின் இணைப்பாளராக அவர் பணியாற்றிய காலத்தில் 1993ம் ஆண்டு தொடக்கம் சில ஆண்டுகள் "இதழியல் ஓர் அடிப்படைக் கற்கை நெறி” என்ற பத்திரிகைத்துறை சார்ந்த வகுப்புக்களை பொறுப்பேற்று நடாத்தியவர் என்ற முறையில் இந்த நூலுக்கு அவரது அணிந்துரை மிகவும் பொருத்தமுடையது என்று கருதுகிறேன். மேற்படி கற்கைநெறி அமர்வின்போது புகைப்படக் கலைஞர் கதிரவேலு அவர்களை அழைத்து விரிவுரையாளர் ஒருவரைக் கொண்டு அறிமுகம் செய்வித்து கெளரவித்த பெருமைக்குரியவர் இப்பேராசிரியர். அவருக்கு எனது மனமுவந்த நன்றிகள்.
இந்நூல் வெளிவருவதற்கு பலவகையிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகூறுகிறேன்.
இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய பாரதி அச்சகத்தி னருக்கு குறிப்பாக நண்பர் இ. சங்கர் மற்றும் அன்பர்கள் அனை வருக்கும் என் நன்றிகள்.
எஸ். பெருமாள்.
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை

தகுதியும் பயிற்சியும்
ஆ பத்திரிகைத் துறையில் இறங்கி பயிற்சி பெற விடும்பும் இளைஞர்களுக்கு
வேண்டிய தகுதிகள் என்ன?
13 தூற்றப்படும் போதும் போற்றப்படும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருக்க
(pıçıyıDI?
ஒரு பத்திரிகை ஆசிரியரின் முன் போய் நின்ற இளைஞன் ஒருவன் "நான் உங்கள் பத்திரிகையில் சேர்ந்து பத்திரிகையாளனாக வரவிரும்புகிறேன், எனக்கிருக்க வேண்டிய தகுதிகள் என்ன? என்று கேட்டான்.
குனிந்து எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர் நிமிர்ந்து அந்த இளைஞனைப் பார்த்தார். அவனைக் கண்களாலேயே எடை போட்டார். அவர் முகத்தில் இலேசான புன்னகை தோன்றியது.
“உமக்கு எழுத வருமா”? ஆசிரியர் கேட்டார்.
“ஆகா, எழுதுவேன் - சிறுகதை, கவிதை எல்லாம் எழுதியிருக்கிறேன்” என்றான் இளைஞன்.
"இது செய்திப்பத்திரிகை - பார்ப்பதை - கேட்பதை அப்படியே பிழையில்லாமல் பத்திரிகைத்தமிழில் எழுத வேண்டும், எப்படி?”
"பத்திரிகைத் தமிழில்? முயற்சி செய்வேன்” என்றான் இளைஞன்
"இதுதான் முதல் தகுதி, இதை நாங்கள் பரீட்சித்துப் பார்ப்போம்” என்று ஆசிரியர் கூற "நான் தயார் எங்கே பரீட்சித்துப் பாருங்கள்” என்று அவசரப்பட்டான் இளைஞன்.
"இதைவிட இன்னொரு தகுதி இருக்கிறது - அதை நீரே உம்மை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்” என்றார் ஆசிரியர். "அது என்ன சேர், விசித்திரமான தகுதி” என்று கேட்டான் இளைஞன். அதற்கு ஆசிரியர் பின்வருமாறுவிடை கூறினார்.
91

Page 10
"காலையில் குறித்த நேரத்தில் ജ|ളഖണ്ഡblb வந்தி கையெழுத்துப்போட்டுவிட்டு மேசையில் அமர்ந்து வேலை செய்துவிட்டு மாலையில் மீண்டும் கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் முறையிலான மாமூல் தொழில் ஒன்றை நீர் எதிர்பார்த்திருந்தால் பேசாமல் வேறு எங்காவது போய்விட வேண்டியது. நேரம் காலம் பார்க்காமல், சிலநேரம் குறித்த நேரத்தில் சாப்பிடாமல், இரவில் தேவைப்படும் போது கண்விழித்து, அவசியமானால் ஆபத்தான இடங்களுக்குச் சென்று செய்தி எடுத்து, பாராட்டப்படும் போதும் தூற்றப்படும் போதும் ஒரே மனோ நிலையை வைத்துக்கொண்டு, தனது செயற்பாட்டின் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதொரு சேவையைச் செய்கிறோம் என்ற வகையில் பணியாற்றக்கூடிய பக்குவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதினால் உமக்கு பொருத்தமான இடம் இதுதான். ஆலோசித்து முடிவெடுத்துக்கொண்டு நாளைக்கு வாரும்”
விடை பெற்றுக்கொண்டு சென்ற இளைஞன் திரும்பி வந்தானா இல்லையா என்பது வேறுவிடயம். இன்று பத்திரிகைத் துறையில் முன்னிலையில் நிற்கும் பத்திரிகையாளர் அனைவருமே மேலே குறிப்பிட்டவாறான சூழ்நிலை பின்னணிகளில் வளர்ந்தவர்கள்தாம் என்பதைக் கூறத்தேவை யில்லை இந்த நிலையில் நான் எவ்வாறு பத்திரிகைத் துறைக்குள் புகுந்தேன் என்பதை சுருக்கமாக கூறிக்கொண்டு மேலே போகலாம் என்று நினைக்கிறேன்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கு பத்திரிகைகளைப் படிப்பதும் அவைகளில் உள்ளவற்றை கிரகித்துக் கொள்வதும் பழக்கமாக இருந்து வந்தது. கல்லூரி இலக்கிய மன்றத்தின் பத்திராதிபராக பல தடவைகள் நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். கல்லூரியை விட்டு விலகி வேலை தேடும் படலம் தொடங்கியபோது ‘வீரகேசரி' நிறுவனத்தில் ஆட்கள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கு விண்ணப்பம் அனுப்பினேன். அதன்பேரில் 1957ம் ஆண்டு முற்பகுதியில் வீரகேசரி ஆசிரியர் பகுதியில் நேர்முகத்தேர் விற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தக்காலத்தில் வீரகேசரி யின் நிர்வாக ஆசிரியராக திரு. கே. பி. ஹரனும் செய்தி ஆசிரியராக திரு.கே. வி. எஸ் வாஸ"ம் உதவி பிரதம செய்தி ஆசிரியராக திரு க.வெங்கட்ராமனும் இருந்தார்கள். வாரமலருக்கு திரு. சி.லோகநாதன் ஆசிரியராக இருந்தார்.
لم . ܢܠ
O2

காட்டினேன்.அவர் என்னை ஒரு மேசையில் அமரும்ப்டி கூறி சில
செய்திகளையும் கொடுத்து எழுதச்சொன்னார். முதலில் என்ன
வளர்த்துக் கொண்டிருந்தமை சமயத்தில் உதவியாயிருந்தது.
கூறவேண்டும். அவர்.எம்.ஏ. பட்டதாரி. ரஜனி' என்ற புனை
N சென்று அழைப்பைக்
பத்திரிகை நறுக்குகளையும் ரெலிபிரின்ரரிலிருந்து எடுத்த் சில
செய்வதென்று தெரியவில்லை. அவைகளை வாசித்துப் பார்த்த போதுதான் மொழி பெயர்க்கச் சொல்லியிருந்தார். என்பது புரிந்தது.
மொழிபெயர்க்கும் ஆற்றலை நான் ஏற்கனவே ஓரளவு
செய்தியாக இருந்தவற்றை மொழி பெயர்த்தேன். ஆல்லாதவற்றை செய்தியாக மாற்றி எழுதினேன். அவைகளை செய்தி ஆசிரியர் திரு. வாஸிடம் அனுப்பினார் திரு. வெங்கட்ராமன். சிறிது நேரத்தில் திரு.வாஸ் அவர்களின் அறைக்கு அழைக்கப்பட்டேன்.
திருவாஸ் அவர்களைப்பற்றி, வாசகர்களுக்கு சிறிது
பெயரில் பல நாவல்களை எழுதியிருக்கின்றார். அவை வீரகேசரி நாளிதழ்களில் தொடராக வெளிவந்தன, பின்னர் நூலுருவிலும் வெளிவந்தன. துப்பறியும் கதைகளுக்கு வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த காலமாகையால் அவரது கதைகளுடன் வந்த பத்திரிகைகளுக்கு பெரும் கிராக்கி இருந்தது. அவர் ஒரு சுறுசுறுப்பான பேர்வழி. ரெலிபோனில் வரும் செய்திகளை சில சமயங்களில் தாமே எடுப்பார், எடுத்தகையோடு முறையாக எழுதி தலைப்பிட்டு அச்சுக்கு கொடுப்பார். - அதேவேகத்தில் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தட்டச்சு செய்து வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவார். பேராசிரியர் கல்கி அவர்கள்' இலங்கை வந்த பொழுது இவர் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்து வியந்து பாராட்டியதாக கூறுவார்கள்.
அந்த வாஸ் அவர்கள் முன்னிலையில் நான்போய் நின்றேன். நான் கொண்டு போயிருந்த சான்றிதழ்கள், சிபாரிசுக் கடிதங்கள் எதனையும் அவர் கேட்டு வாங்கிப் பார்க்கவில்லை. நேராக என்னைப்பார்த்தாரா' என்பது கூடத்தெரியவில்லை. நான் எழுதியவற்றை4,அவர் பூார்த்திருக்கிறார். நான் செய்தி எழுதியிருந்த முறை ஆவருக்குப் பிடித்துக்கொண்டது. மாலையில் வந்து நியடின்க்கடிதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி
جيم
கூறி அனுப்பி விட்டார்.*** لم
-ണ്ണ-

Page 11
/ நியமனக் கடிதத்துடன் வீடு திரும்பியவன் அடுத்தவாரமே) கொழும்பு சென்று கொட்டாஞ்சேனையில் ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டேன். கொட்டாஞ்சேனை சந்திக்கும் ஆமர்வீதிச் சந்திக்கும் அவ்வளவு தூரமில்லை -Lu6můL600T Lb அந்தக்காலத்தில் பத்து சதம்தான். ஆமர் வீதி சந்தியில் இறங்கி நடந்தால் சில நிமிடத்தில் "வீரகேசரி" அலுவலகம் வந்துவிடும். ஆயிற்று, வீரகேசரி ஆசிரிய பீடத்தில் நானும் ஒருவனாக சேர்ந்தாகிவிட்டது. ஆசிரியர் பகுதியில் மொழி பெயர்ப்பாளர் என்றுதான் நியமனக் கடிதத்தில் போட்டிருந்தது. அந்தக்காலத்தில் பொதுவாக ஆசிரியர் பகுதிக்கு எடுக்கப்படும் புதியவர்கள் எல்லோருக்குமே இவ்வாறுதான் நியமனம் வழங்கப்படுவது வழக்கமென்று அறிந்தேன்- ஆறுமாத பயிற்சிக்காலம் - அதாவது தகுதிகாண் பயிற்சி - இடையில் தகுதியில்லையென்று கண்டால் வீட்டுக்குப் போகவேண்டியது
தான்.
ஆசிரியபகுதி ஊழியர்கள்
ஆசிரியபீடத்தின் அறை விசாலமானது. நடுவில் வடக்குப்பக்கம் பிரதம உதவி ஆசிரியரின் மேசை. அதை ஒட்டினாற்போல் நேர்நேராக பல மேசைகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. இவைகளில் உதவி ஆசிரியர்கள் அமர்ந்து வேலை செய்தனர். உதவி ஆசிரியர்களுக்கு சுழற்சிமுறையில் வேலை போடப்பட்டிருந்ததால் மேசைகளும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதுண்டு. இந்த மேசைகளைத்தவிர அறையின் மூலைப்பகுதிகளிலும் சிலர் மேசைகளில் அமர்ந்து வேலை செய்தார்கள்.
அன்று அங்கு பணிபுரிந்த உதவி ஆசிரியர்களில்
பெரும்பாலானவர்களின் பெயர்கள் எனக்கு நினைவிருக்கின்றன. அவர்களை இங்கு நினைவு கூரலாம் என நினைக்கின்றேன். திரு. இப்றாகீம் - இவரைப்பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் ஏனைய பணிகளுடன் இஸ்லாமிய விடயங்கள் யாவற்றையும் இவரே கையாண்டார். திரு. பயஸ் பெர்னாண்டோ, இமானுவல், சவரிமுத்து முதலியவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்களில் சவரிமுத்து மிகவும் வயதானவராக இருந்தார். ஜப்பானியர் கொழும்பில் குண்டு வீசிய சமயத்தில் அலுவலகத்திலேயே இருந்து பத்திரிகை வெளிவருவதற்கு உதவினார் என்றும் அதனாலேயே வயதான பிறகும் நிர்வாகம் அவரை வைத்திருந்தது என்றும் கூறுவார்கள். திருவாளர்கள் எஸ். எம். கோபாலரத்தினம் - க.இராமசாமி, டேவிட் ராஜூ, ஏ. பெருமாள் , தாழையடி சபாரத்தினம், வி.ஏ.திருஞானசுந்தரம், டி.எம்.முரு \கையா, ஆதித்தன், எஸ். பெருமாள்(நான்) ஏனையவர்களாவர். لم
04

இவர்களில் திரு.எஸ்.எம். கோபாலரத்தினம் பிற்காலத்தில்Y
யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, ஈழநாதம் முதலிய பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரு. க.இராமசாமி வீரகேசரி வாரமலரின் உதவி ஆசிரியராக இருந்தார். பிற்காலத்தில் சுதந்திரன் ஆசிரியராக சிலகாலம் இருந்தவர். திரு.டேவிட் ராஜ" தமது வேலாயுதம் என்ற முந்திய பெயரைமாற்றி அமைத்துக் ’கொண்டிருந்தார். இவர் இரவில் பணியாற்றும் நாள்களில் பயிற்சிக்காலத்தில் எனக்கும் வேலை போடப்பட்டிருக்கும். அதனால் செய்தி எழுதுவது தலைப்புப் போடுவது என்பனவற்றை இவரிடம் கற்றேன்.திரு.ஏ.பெருமாள் - இவர் ஒரு சுவாரஷ்யமான மனிதர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல பாஷைகள் இவருக்குத் தெரிந்திருந்தன. திரு. ஆதித்தன் - வெளிநாட்டுச் செய்திகளுக்குஇவர் பொறுப்பு. தினத்தந்தி ஆதித்தனாரின் மருகள். தாழையடி சபாரத்தினம் - செய்தி எழுதுவதைவிட கதைகள் எழுதுவதிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம். இவரது சிறுகதையொன்று தமிழ்நாடு சஞ்சிகை சிறுகதைப்போட்டி ஒன்றில் பரிசு பெற்றிருந்தது. திரு.வி.ஏ.திருஞா னசுந்தரம் - இவர், நான் , டி.எம். முருகையா ஆகிய மூவரும் ஒரே சமயத்தில் புதியவர்களாய் எடுக்கப்பட்டிருந்தோம். திரு.வி.ஏ திருஞான சுந்தரம் பிற்காலத்தில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத் திலும், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் உயர் பதவிகளில் இருந்தார்.
இவர்களைத் தவிர திரு. பொன். பாலசுந்தரம் பிரதம நிருபராக இருந்தார். திருவாளர்கள் வென்ரஸ்ராட்டன், தேவநாரா யணா, கெளார்ட், ஜோ, ஏ.எம் தாஸ், டி றோஸ் முதலியவர்களும் நிருபர்களாக இருந்தார்கள். லேக்ஹவுஸிலிருந்து விலகிய திரு. றெஜிமைக்கலும் நிருபராக இருந்தார். திருவாளர்கள் ராஜ", டீன் ஆகியவர்கள் படப்பிடிப்பாளர்கள். திரு.வி. கனகலிங்கம்(வி.கே) திரு. சபாநாயகம் (சபா) இருவரும் ஒவியர்கள்.
தகுதிகாண் பயிற்சிக்காலத்தின் ஆரம்பத்தில் சிறுசிறு செய்திகள் எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இவை ஆங்கிலப்பத்திரிகைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வையாகவும் ரெலிபிரின்ரரில் வரும் செய்திகளாகவும் இருந்தன. இவைகளை அப்படியே சில சமயம் மொழிபெயர்க்க வேண்டி இருக்கும். வெட்டி எடுக்கப்பட்டவைகளில் முக்கிய அம்சத்தை பிரதம உதவி ஆசிரியர் மையினால் கீழ் கோடிட்டிருப்பார். அந்த அம்சத்தை தவறவிடாமல் செய்தியில் எழுதவேணடும். அதேபோல் ரெலிபிரின் செய்திகளிலும் முக்கிய அம்சம் கீழ் \கோடிடப்பட்டிருக்கும். ار
O5

Page 12
/ N
இவைகளில் தமிழ் வாசகர்களுக்கு அவசியம் என்று தெரிபவைகளைமட்டும் எழுதினால் போதுமானது. இவை தவிர உள்ளூர் வெளியூர் நிருபர்கள் அனுப்பும் செய்திகளில் தேவை யற்றவற்றை நீக்கியும் ஒழுங்குபடுத்தியும் எழுதவேண்டும். சிலசமயம் எது முக்கியமோ அதனை நிருபர் முதன்மைப் படுத்தாமல் எழுதியிருப்பார். அதைக் கவனித்து முதன்மைப் படுத்தி மீண்டும் எழுதி அச்சுக்கு கொடுக்கும் விதத்தில் தயார் செய்ய வேண்டும் - இதனையே (Edir") "எடிற் செய்வது என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
ஆரம்ப காலத்தில் சிறுசிறு செய்திகளே பார்த்து கொடுக்க தரப்பட்டன. அப்படிப்பார்த்துக் கொடுப்பவை பிரதம செய்தி உதவி ஆசிரியரிடமே போகும். அவர் நாம் செய்ததைப் பார்த்து தேவையெனில் திருத்தமும் செய்து அச்சுக்கு கொடுப்பார். அவ்வாறான எனது செய்திகள் முதலில் இடம் நிரப்பும் (fiers)செய்திகளாகவே பயன்படுத்தப்பட்டன. சிறிது காலத்தின் பின் நான் எழுதும் செய்திகளுக்கு தலைப்புக்கள் போடும்படி திரு. வெங்கட்ராமன் பணித்தார். பத்திரிகைகளில் வரும் செய்திகளில் இருக்கும் தலைப்புகளைப் பார்த்து தலைப்புக்கள் போடுவதற்கு முயற்சிகள் எடுத்தேன். எனது பார்வைக்கு அல்லது மொழியாக்கத்திற்கு தரப்பட்ட செய்திகளில் அவை எத்தனை 'பத்தி(colum) தலைப்பில் அமையவேண்டும் என்பதும் குறிக்கப்பட்டிருக்கும். ஒற்றைப் பத்தி என்றால் s/c (sigle oேlum) என்றும் இரட்டைப்பத்தி என்றால் Dெ/C (Dெouble colum) என்றும் மூன்று பத்தி என்றால் 3/c (Gree Golum) என்றும் பிரதம செய்தி உதவி ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பார். அதன்படி செய்திகளை எழுதி தலைப்புக்களும் போட்டு பிரதம உதவி ஆசிரியரிடம் கொடுப்பேன் - அவர் அவைகளைப் பார்த்துவிட்டு அச்சுக்கு கொடுப்பார். மேலும் சிறிது காலத்தின் பின்னர் நான் எழுதும் செய்திகளை நேராகவே அச்சுக்கு கொடுக்கும் படி பிரதம உதவி ஆசிரியர் பணித்தார். செய்திகளை நேராகவே அனுப்பினாலும் தலைப்புக்களை அவரிடமே அனுப்ப வேண்டும்நான் மட்டுமல்ல ஏனைய உதவி ஆசிரியர்களும் அவ்வாறுதான் " அனுப்ப வேண்டும். ஏனென்றால் எவ்வெந்த செய்தி எவ்வெந்த பதிப்புக்கு எவ்வெந்த பக்கத்திற்கு என்பதை தீர்மானித்து அதற்கேற்றாற்போல் குறிப்பிட்டு அச்சுக்கு அனுப்புவதற்கு இது அவருக்கு உதவியாய் இருக்கும்.
త్రోసిi செய்திகளை எழுதக்கொடுக்கும்போதே அது எந்தப்لر
O6

(பக்கத்திற்குரிய செய்தி எத்தனை பத்தி தலைப்பு என்பதைN பிரதம உதவி ஆசிரியர் அதில் குறித்து விடுவார். அதனால் முதுநிலை உதவி ஆசிரியர்கள் தமது செய்திகளை நேராகவே அச்சுக்கோக்க அனுப்ப முடியும். காலையில் எட்டுமணிக்கு வேலைகள் தொடங்கினால் மதிய இடைவேளையைத் தவிர பிற்பகல் இரண்டு மூன்று மணியளவில் உள்பக்கங்கள் முடிந்து விடும். பிறகு பெரும்பாலும் முதல் பக்கத்திற்குரிய வேலைகள் நடைபெறும். என்போன்றவர்களை பக்கம் போடப்படும் பகுதியில் போய் கவனிக்கும்படி திரு. வெங்கட்ராமன் அனுப்பிவிடுவார். அங்கும் கடைசிநேர வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
பக்கம் அமைக்கப்படும் போது -அது ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள டம்மி யின்படியே நடைபெற்றாலும் - சிலசமயம் செய்திகளின் அளவை அல்லது தலைப்பில் ஒரு சொல்லை அல்லது ஓர் எழுத்தைக் குறைக்க அல்லது மாற்ற வேண்டியிருக்கும். இந்த வேளையில் உதவி ஆசிரியர் ஒருவர் பக்கம் போடுபவரின் அருகில் இருப்பது உதவியாக இருக்கும். அவ்வாறு செய்யும் போது செய்தியின் கருத்து அல்லது வசனம் தொடர்பு அறுந்து போகாமலும், செய்தியின் முக்கிய அம்சம் அடிபட்டுப் போகாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
k se a:
/
கிராமிய ஊடகங்கள்
'வளர்முக நாடுகளில் தொடர்பாடலுக்கான பாரம்பரிய முறைகள் உண்டு கிராமிய கலைவடிவங்கள் மூலம் விழுமியங்கள் பகிர்ந் கொள்ளப்படுகின்றன. புதிய கருத்துக்களை பரப்புவதற்கான பயனுள் முறையாகவும் இவை விளங்குகின்றன. பண்பாட்டின் முக்கிய அம்சமா விளங்கும் இவைகளை, நவீன ஊடகங்களை நாடி ஒடும் நமத இன்றை போக்கின் மூலம் புறக்கணிப்பதானது மண்ணிக்க முடியாத குற்றமாகும்
ܐܗܝ
- எச்லுைலித் ܢܠ
O7

Page 13
Y- ༄༽
பார்த்தும் கேட்டும் பழகுதல்
ஆ செய்திகளை எழுத, முதன்மைப்படுத்த, தலைப்புக்கள் அமைக்க முதுநிலை உதவி ஆசிரியர்களின் செயற்பாடுகளைப் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு பழகுவது பின்னர் இரவு நேரங்களில் அல்லது சனிக்கிழமை போன்ற வார இறுதிநாட்களில் தனியாக பணிபுரியும் போது எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும். மூன்று மாத காலம் பகலிலும் இரவிலும் மாறிமாறி வேலை செய்ய வேண்டியிருந்தது. இரவில் யாராகினும் முதுநிலையாளருடன் உதவியாகப் பணிபுரியும் வகையில் "டியூட்டி போடப்பட்டிருக்கும். அவர்களிடமிருந்து பலவற்றை பயிலுநர்கள் கற்றுக் கொள்ளமுடியும். செய்திகளை எவ்வாறு முதன்மைப்படுத்தி எழுதுவது, எவ்வாறு தலைப் புக்களைப் போடுவது - தூரஇடங்களிலிருந்து டெலிபோனில் வரும் செய்திகளை எவ்வாறு குறிப்பெடுத்துக் கொண்டு விரிவாக எழுதுவது போன்றவை மட்டுமன்றி பக்க வடிவமைப்புடன் தொடர்புள்ள ஏனைய விடயங்களையும் அறிந்து கொள்ளலாம்.
பின்னர் இரவில் தனியாக பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பங்களும் மெதுவாக தரப்பட்டன. ஆரம்பத்தில் பயத்து டனும் பிழை ஏற்பட்டு விடுமோ என்ற கூச்சத்துடனும் தொடங்கி சரளமாக விடயங்களைக் கையாளக்கூடிய தகைமை உண்டா யிற்று.
ஒரு தினம் இரவுவேலை. வழமையாக எதை நகரப்பதிப் புக்கு தலைப்புச் செய்தியாக பயன்படுத்தலாம் என்பது குறித்து திரு.வெங்கட்ராமன் ஆலோசனை வழங்கிவிட்டு போகிறவர், அன்று "எதையாவது பார்த்து போடுங்க” என்று கூறிக்கொண்டு போய்விட்டார். இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. முதல் பக்கத்தலைப்புக்கு ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கிடைத் திருந்தவைகளிலும் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாகப் பயன்படுத்தகூடிய எதுவும் தென்படவில்லை. தெரிந்த இடங் களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு பார்த்துவிட்டேன். வெளியூர் நிருபர்களிடமிருந்து ஒன்றும் கிடைக்கவில்லை. திரு.வாஸ் அவர்களுக்கு போன் செய்து பார்த்தேன். "ஏதாவது இருக்கும் பார்த்துப்போடுங்க ” என்று கூறி போனை வைத்துவிட்டார். பயிலுநரான எனக்கு அன்றிரவு ஒரு சோதனைதான்!
الم 丽 ܓܠ

/ இரவு போர்மன் தலைப்புச் செய்தியைத்தரும்படிY நச்சரிக்கத்தொடங்கிவிட்டார். இக்கட்டான நிலைமை - பதட்டமும் கூட என்ன செய்வதென்றுதெரியவில்லை. கிடைத்த அன்றைய பத்திரிகைகள் எல்லாவற்றையும் ஒரு தடவை அலசிப் பார்த்தாகிவிட்டது. ஆங்கிலப்பத்திரிகைகளில் ஏதாகிலும் ஒரு செய்தி சின்னதாக இருந்தால் தமிழ் வாசகர்களுக்கு பொருத்தமானதாகவும் இருந்துவிட்டால் அதனை மெருகுபடுத்தி அடுத்தநாள் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக விளாசிவிடலாம் என்ற எண்ணத்தில் தடவிப் பார்த்தேன். எனது துரதிஷ்டம் அப்படியும் ஒன்றுமே தட்டுப்படவில்லை. இறுதியில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளிநாட்டுச் செய்தி பக்கத்தில் ஒரு சிறு செய்தி கண்ணில் பட்டது. அன்றைய உலக விவகாரம் ஒன்றைப்பற்றி அறிக்கை ஒன்றினை ஐ.நா. பொதுச் செயலாளர். ஊதான்ட் அவர்கள் உலகத்தலைவர்களுக்காக விடுக்க இருக்கிறார் என்பது அச்செய்தி. (அது என்ன பிரச்னை பற்றியது என்பது நினைவில்லை) அரை மனதுடன் ரெலிபிரின்ரர் கருவியை போய்ப் பார்த்தேன். ஊதான்ட் அவர்களின் அறிக்கை பகுதி பகுதியாக வந்து கொண்டிருந்தது. முழுவதையும் வாசித்துப் பார்த்தேன். அப்பாடா! அடுத், நாள் பத்திரிகைக்கு தலைப்பு கிடைத்து விட்டது. அறிக்கையின் முக்கியமான பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்து செய்தியாக்கினேன். மீண்டும் வாசித்துப் பார்த்த போது திருப்தியாகவிருந்தது. மகிழ்ச்சியாகவும் புதிய அனுபவமாகவும் இருந்தது.
இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சமயோசிதம் மட்டுமல்ல பிறமொழி அறிவு - குறிப்பாக ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருப்பது அவசியம். பத்திரிகையாளர்களுக்கு ஆங்கில மொழி அறிவு அவசியம் என வற்புறுத்தப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் 666.
இவ்வாறு இன்னொருவிதமான சிக்கல் பின் ஒரு இரவில் ஏற்பட்டது. செய்திகள் யாவும் நகரப்பதிப்புக்கென கொடுக்கப்பட்டு விட்டன. இரவு போர்மன் நாராயணசாமி வந்தார்.
“என்ன, எல்லாம் சரிதானே?” என்று கேட்டேன்." சரியா? இன்னும் அரைப்பக்கத்திற்கு "மட்டர் வேணும்" என்றார். நான் திக்பிரமைக்கு உள்ளாகிப் போனேன். நாளைக்கு பத்திரிகை வெளியாவதில் நேரமாகிவிடுமானால் - பத்திரிகை விற்பனைக்கு போவது பிந்திவிடும். இதனால் பத்திரிகை விற்பனை பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல , பத்திரிகை வெளியாவதில் ஏற் )தாமதம் காரணமாக ஊழியர்களுக்கு மேலதிக நேரப் --ا-Lلا
O9

Page 14
(படிகள் வழங்கப்பட வேண்டிய கட்டாயமும் ஏற்படும். இவ்வளN விற்கும் யார் காரணம் என்றால் அன்று இரவு பணிபுரிந்த இரவு உதவி ஆசிரியரின் அசமந்த போக்குத்தான் என்று முடிவாகும்! இதற்கு இடமளிக்கலாமா? பம்பரம் போல் இயங்கி ஒருகற்றை செய்திகளை தயாரித்து முடித்துவிட்டு நிமிர்ந்தேன் போர்மன் பக்கமும் கையுமாக வந்தார், "இந்தாங்க, இதைப் பார்த்து பாஸ் பண்ணுங்க” என்றார். "என்னையா இப்பதானே அரை பக்கத் திற்கு மட்டர் தேவையின்னு சொன்னிங்க” என்று கேட்டேன். “பின்னே, நான் போதும்னு சொல்லியிருந்தா நீங்க தூங்கிப் போயிருப்பீங்களே! இப்ப பாருங்க என்ன உற்சாகமா இருக்கீங்க?" என்று சிரித்தார்.
விடயங்கள் அச்சுக்குகொடுக்கும் போதே எவ்வளவு விடயம் தேவை, எவ்வளவு கொடுக்கப்பட்டது, இனி எவ்வளவு கொடுக்கப்படவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு அளவு கணக்கு வைத்துக் கொண்டு செயல்பட்டிருந்தால் இம் மாதிரி போர்மன் என்னை திக்கு முக்காடச் செய்திருக்க முடியாது. அன்றிலிருந்து இரவில் எத்தனை "கலம்” பிரிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம்.கவனமாக இருக்கப் பழகிக் கொண்டேன்.
இந்த போர்மன் நாராயணசாமிதான் பின்னர் ‘ஈழநாடு’ யாழ்ப்பாணத்தில் தினசரியாக மாறியபோது வந்திருந்து இங்குள்ள இளைஞர்களுக்கு பக்கங்களை வேகமாகவும், திறமாகவும் தயாரிப்பதற்கு பழக்கியவர். அவரிடம் பழகிய வர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவரை நினைவில் வைத்திருப்பார்களா? சந்தேகமே!
வீரகேசரி செல்லத்துரை
அந்தக் காலத்தில் வீரகேசரியின் யாழ்ப்பாண நிருபராக திரு. செல்லத்துரை இருந்து வந்தார். இவர் ரெலிபோனில் செய்தி தருகிறாரென்றால் ஆசிரியர் பகுதியில் ஒரு பர பரப்பு தென்படும். முக்கியமான செய்தி இருந்தால் மட்டுமே அவர் டெலிபோனில் தருவார். அதுவும் யாழ்ப்பாண பதிப்பில் இடம்பெறக்கூடிய விதத்தில் நேரம் அறிந்து அவர் தரும் செய்திகளை எடுப்பதற்கு ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தயங்குவதைப் பார்த்திருக்கிறேன். மூன்று நிமிடம் அல்லது கூடினால் ஆறு நிமிடங்களுக்குள் அவர் தரும் செய்திகளை குறித்துக் கொண்டு விபரமாக எழுதியாக வேண்டும். எனவே யாழ்ப்பான பின்னணி தெரியாதவர்கள் தயங்கியதில் நியாயமுண்டு. பெரும்பாலும் திரு. கோபாலரத்தினம். அல்லது)
10

(டேவிட்ராஜ" போன்றவர்கள் அச்செய்திகளை எடுத்து கச்சிதமாகN எழுதுவார்கள். புதியவர்களான திரு. வி.ஏ. திருஞானசுந்தரம் மற்றும் நானும்கூட பிறகு அவரிடம் செய்தி எடுக்கப் பழகிக் கொண்டுவிட்டோம்.
அவர் ரெலிபோனில் செய்தி கொடுத்ததின் பின்னர் அதன் அசல் பிரதியையும் தபாலில் ஆசிரியருக்கு அனுப்பிவிடுவார். எழுதும் முறையில் வித்தியாசம் இருந்தாலும் உள்ளடக்கத்தில் தவறு இருக்குமானால் அதனைச்சுட்டிக்காட்டி கடிதமும் எழுதிவிடுவார்.
ரெலிபோனில் அவர் கொடுக்கும் செய்திகளை எடுக்கத் தயங்குகிறவர்கள் கூட அவர் எழுதி அனுப்பும் செய்திகளைப் பார்த்து தலைப்பிட்டு அச்சுக்கு கொடுக்க தயங்கமாட்டார்கள். அவ்வளவு கச்சிதமாகவும், தெளிவாகவும் எழுதியிருப்பார். எதை நீட்டி எழுத வேண்டும் எதைக் குறைத்து எழுத வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி, மேலும் உள்ளூருக்கு முக்கியமான செய்தியெனில் அதற்கான குறிப்பும் செய்தியுடன் இருக்கக் காணலாம்.
வெங்காய விஷயம்.
ஒரு தினம் திரு.செல்லத்துரை அனுப்பியிருந்த செய்தி யொன்று- பார்த்து கொடுப்பதற்காக என்னிடம் அனுப்பியிருந்தார் பிரதம உதவி ஆசிரியர். அந்தக்காலகட்டத்தில் திரு செல்லத்துரையின் செய்திகள் எல்லாமே 'எடிட்' (தணிக்கை) செய்யப்படாமல், அதாவது வெட்டிக்குறைக்கப்படாமல் அச்சுக்கு கொடுக்கப்படுவதாகவும் அதனால், ஏனைய நிருபர்களை விட அவருக்கு வேதனம் அதிகமாக அனுப்ப வேண்டியிருப்பதாக நிர்வாகம் கருதுவதாகவும் ஆசிரிய பகுதியில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. அதனால் என்னிடம் தரப்பட்ட செய்தியை வெட்டிக் குறைப்பது உசிதமாகவிருக்கும் என்று நான் கருதினேன். யாழ்ப்பாணத்தில் வெங்காயம் பரந்த முறையில் பயிரிடப்படுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தமை தொடர்பான செய்தி அது. அச்செய்தியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெட்டிக் குறைத்து ஒரு பத்தி(S.C) தலைப்பும் இட்டு அச்சுக்கு அனுப்பி விட்டேன். சிறிது நேரத்தில் செய்தி ஆசிரியர் திரு.வாஸ் என்னைக் கூப்பிட்டு அனுப்பியிருந்தார், "நீங்களா இதை "ட் , சப்தீங்க” என்று அந்த செய்தியைக் காட்டிக் கேட்ட r. அது எப்படி அவரிடம் சென்றது என்ப தெரியவில்லை. "இது வெங்காய കെ? ம்ை o
A st
11

Page 15
(நினைக்கப்படாது. யாழ்ப்பாணத்தில் இப்பதான் வெங்காயம் Y அமோகமாக பண்ணத்தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு நாமதான் ஊக்கமளிக்கணும்" என்றார். மேலும் அவர், "செல்லத்துரை அனுப்பும் செய்திகளைக் கண்ணை மூடிண்டு வெட்டப்படாது. தேவையில்லாம அவர் எதையும் எழுத மாட்டார்.” என்றார். பிறகு "வழவழன்னு தலைப்புப் போடாதீங்க 'கெச்சியா போடுங்க” என்று கூறி அனுப்பிவிட்டார்.
தலைப்பை "கெச்சியாகப் போட வேண்டும் என்பது எனக்கு அப்பொழுது புரியவில்லை. வாசகர்களைப் படிக்கத்துாண்டும் விதத்தில் தலைப்பு இருக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் என்று தெரிந்து கொண்டேன். செய்தியும் தலைப்பும்
தலைப்பொன்றை வைத்துக்கொண்டு கட்டுரை வரைவது சுலபம். ஆனால் செய்தியை எழுதிவிட்டு தலைப்புப் போடுவ திலுள்ள சிரமம் செய்தி எழுதுபவர்களுக்குத்தான் தெரியும் ஒரு செய்தியின் தன்மையைப் பொறுத்தே அதனை என்ன விதமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றான் பத்திரிகையாளன். ஒரு செய்தி கிடைத்தவுடன் அதனை எந்தப் பதிப்பில் எந்தப் பக்கத்தில் எத்தனை “பொயின்ற்” றில் எத்தனை பத்தியில் (கலம்) என்பதைல்ெலாம் ஒரு சில நிமிடங் களுக்குள் அவன் தீர்மானிக்க வேண்டும். இந்த இடத்தில்தான் ஒரு கைதேர்ந்த கவிஞனின் அல்லது ஓவியனின் நிலையில் ஒரு செய்திப்பத்திரிகை ஆசிரியன் இருந்து செயல்படுகின்றான் என்று கூறலாம். ஒரு கவிஞனுக்கு கவிதைக்குரிய சொற்கள், மற்றும் எதுகை, மோனை தளைசீர் என கவிதைக்குரிய அம்சங்கள் பயன்படுவதைப்போல், ஓவியனுக்கு, கோடுகள், வர்ணங்கள், உருவங்கள் பயன்படுவதைப்போல். ஒரு பத்திரிகையாளனுக்கு அவனது அறிவு, ஆற்றல் பயிற்சி, அனுபவம் முதலியவை அவன் வெளிப்படுத்தவிரும்பும் கருத்தை தலைப்பாக அமைத்து வெளிப்படுத்த உதவுகின்றன. முன்னையவர்கள் ஆறஅமர இருந்து தம் படைப்புக்களை உருவாக்கிக் கொள்ளலாம். பத்திரிகையாளனோ ஒரு கணப்பொழுதில் ஒரு முடிவினை எடுத்து அதனை எழுத்தில் வடித்தாக வேண்டும்.
ஒரு பரபரப்பான செய்தி வருகின்றதென்று வைத்துக் கொள்வோம். அதனை முறையாக எழுதி அச்சு கோர்க்க அனுப்புகிறார் பத்திரிகையாளர். அச்சு கோர்க்கப்பட்டு ஒப்பு நோக்கப்பட்டு திருத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன. தலைப்பு வந்து சேராவிட்டால எப்படி பக்கத்தைத் தள்ளுவது?
لص . 12

பயிற்சியும், திறமையுமுள்ள பத்திரிகையாளர்களுக்குN இப்படியான நிலமையே ஏற்படாது. அவர்களில் சிலர் செய்தியை எழுதும் போதே அதன் தலைப்பையும் மனதில் தீர்மானித்து விடுவார்களர். பின்னர் தனியாக அதனை எழுதி அனுப்புவார்கள். இன்னும் சிலர் எழுதவேண்டிய செய்திகளையெல்லாம். எழுதிவிட்ட பின்னர் ஒவ்வொன்றாகத் தலைப்புக்களை எழுதுவார்கள். வேறு சிலர் செய்தியை எழுதி முடித்துவிட்டு தலைப்புப் போடமுடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பார்கள்.
மலையகத்தில் கடையொன்றில் வேலைபார்த்த இளைஞனுக்கும் கடை முதலாளியின் இளம் மனைவிக்கும் இடையில் கூடா நட்பு ஏற்பட்டிருந்ததை முதலாளி நேரடியாகவே அறிந்து கொண்டார். அவர் அலட்டிக்கொள்ளாமல் இருவரையும் அழைத்துச் சென்று அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் அறிவித்து அவர்கள் மூன்னிலையிலேயே இருவரையும் ஒன்று சேர்த்து எங்காகிலும் போய் சந்தோசமாக வாழும்படி கூறி பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். றக்குவானை என்ற இடத்தைச் சேர்ந்த நிருபரால் விபரமாக அனுப்பப்பட்டிருந்த இச்செய்தியை பார்த்து தலைப்பிட்டு அனுப்பும்படி பிரதம செய்தி ஆசிரியர் என்னிடம் அனுப்பியிருந்தார். இம்மாதிரி செய்திகளை பெரிதாக ஆலாபனை செய்து பிரசுரிப்பது அந்தக்காலத்தில் வீரகேசரியின் கொள்கையாக இருக்கவில்லை. எனவே அச்செய்தியை சுருக்கி தணிக்கை செய்து முடித்தேன். ஆனால் தலைப்பு? வரவேயில்லை. பல முதுநிலையாளர்களிடமும் காட்டிப்பார்த்தேன். கடைசியில் திரு. கோபாலரத்தினத்திடம் காட்டினேன். அவர் தயங்காமல் , “தொட்டநீயே கொண்டுபோ” என்று போடுங்கள் "என்றார். அவ்வாறுதான் அச்செய்தி பிரசுரமாயிற்று.
*"விரைந்து முன்னேறும் விஞ்ஞான உலகில் படிக்கக்கூட நேரமில்லாது விரைந்து செயல்படுபவர்களும் பத்திரிகையைய் பார்த்தவுடனே ஓரளவு செய்தியினை அறிந்து கொள்ள உதவுவது செய்தித்தலைப்பே ஆகும”.
*"ஒத்த செல்வாக்குடைய இரண்டுமொழிகள் கலக்கும் பொழுது சிலநேரங்களில் இரண்டுமொழிகளும் வாழும். பெரும்பாலும் ஒரு மொழியே நிலைத்து நிற்றல் இயல்பு, அதாவது செல்வாக்குப்பெற்ற மொழி வளம் பெற மற்றையது மறைந்துவிடும்”
டாக்டர் தங்கமணியன். ابر ܢܠ
15

Page 16
செல்வாக்கும் சமூகநலனும்
3 பத்திரிகையாளர்கள் தம் பணியின் காரணமாக மதிப்பும் செல்வாக்கும் அடைகிறார்கள். எவரோடும் எந்த சந்தர்ப்பத்திலும் பேசுவதற்கு அவர்களுக்கு துணிவும் ஆற்றலும் வருகின்றன. இதனை நேர்மையானவர்கள் சரியான சந்தர்ப்பத்தில் நாட்டுக்கும் சமுகத்துக்கும் நண்மைதரும் விதத்தில் பயன்படுத்துகிறார்கள்
பத்திரிகையாளர்கள் தம் பணியின் காரணமாக சமூகத்தில் செல்வாக்கும் பிரபல்யமும் அடைந்து விடுகிறார்கள். இதையே மூலதனமாக வைத்து சிலர் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இப்படியா னவர்கள் சமூகத்தில் பெரும்புள்ளிகளாக விருப்பவர்களதும், அரசியல்வாதிகளதும் கைப்பொம்மைகளாக மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் அரசியல்வாதிகளாகவே மாறிவிடுகிறார்கள். இவர்களில் வேறும் சிலர் தமது திறமை செல்வாக்கு முதலிய வற்றை சந்தர்ப்பம் அறிந்து சமூகத்துக்கும் சகமனிதர் களுக்கும் பயன்படும் வகையில் மனித நேயத்துடன் செயல்படுகின்றார்கள். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை இனி விபரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
1958ல் இடம் பெற்ற இனக்கலவரம் பற்றி வாசகர்கள் அறிந்திருப்பார்கள். கலவரம் தொடங்கியதினத்திற்கு மறுதினம் ஆமர்வீதி சந்தியில் பஸ்ஸில் இருந்து இறங்கி வழியில் இருந்த சந்திரவிலாஸ் ஓட்டலில் காலை உணவு அருந்திக் கொண்டி ருந்தேன். கடையை மூடப்போவதாகவும் தேனீர் அருந்துபவர்கள் விரைந்து வெளியேறும்படியும் கடை முதலாளி அறிவித்தார். வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு வருவதாகக் கூறிக்கொண்டு சென்ற ஒருவர் சிறிது நேரத்தில் மூக்குடைபட்டு இரத்தம் ஒழுக வந்து சேர்ந்தார். எல்லோரும் ஓடி ஒளித்துக் கொண்டிருந்த வேளையில் இவர் ஏன் வேடிக்கை பார்க்க வெளியில் சென்றார் என பலரும் பேசினார்கள். இதற்கிடையில் கடையின் பெரும்பகுதியும் மூடப்பட்டுவிட்டது. நான் பணத்தைச் செலுத்திக் கொண்டு வெளியில் வந்தேன். இலேசாக ᎿᏝ60Ꭷup துாறிக்கொண்டிருந்தது. தொப்பியை நெற்றிப்பக்கமாக இழுத்து விட்டுக் கொண்டு தலையைக் குனிந்தபடி ஆனால் அங்குமிங்கும் கண்களால் நோட்டம் \விட்டபடி நடைபாதை வழியாக வீரகேசரி காரியாலயம் நோக்கி)
14

(நடக்கத் தொடங்கினேன். சிறிது தூரம் சென்றதும் சில பெட்டிY வீடுகள் வந்தன. அதாவது பெட்டிப்பலகையால நடைபாதையின் ஒரத்தில் அமைக்கப்பட்ட சேரிவிடுகள் அவ்வீடுகள் இருந்த இடத்தில் நடைபாதைக் கரையின் ஒரத்தில் ஒரு இளம்பெண் நின்று கொண்டு வீதியில் போவோர் வருவோரை அங்கு நின்ற குண்டர்களுக்குக் காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தது போல் தெரிந்தது. தூரத்தில் ஒருவரை சிலர் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் சரியான இடத்தில் மாட்டிக்கொண்டுவிட்ட்து போல் தெரிந்தது. நெஞ்சம் ‘படக்படக்கென மிக வேகமாக அடித்துக்கொண்டது. அந்தக் குளிர் நேரத்திலும் வியர்த்துக்கொட்டியது.
அந்தப் பெண்ணை எனக்கு நன்கு தெரியும். அவள் தன் பெட்டி வீட்டின் வாயிலில் நிற்பதை வேலைக்கு போகும் போதும் வரும்போதும் நான் பார்த்துக்கொண்டு போவதுண்டு பேசிய தில்லை ஆனால் நான் தமிழன் என்பது அவளுக்குத் தெரியும் இனி தப்பவழியில்லை அவள் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறாள். என்னை அந்த வேளையில் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை, இறைவனைத் தவிர.
அந்த இடமும் வந்துவிட்டது. அவள் விதிப் பக்கமாகத்திரும்பி நின்று கொண்டிருந்தாள். தலையில் தொப்பி அணிந்து கையில் ஒரு தும்புத்தடிய்ையும் வைத்துக் கொண்டிரு ந்தாள். அவளை நான் பின் பக்கமாக கடந்து செல்ல வேண்டும். ஓடினாலும் ஆபத்து. நின்றாலும் ஆபத்து, திரும்பிச்செல்லவும் முடியாது, அவள் நிச்சயமாக் என்ன்ைக் கண்டிருப்பாள்.இனி நடப்பது நடக்கட்டும். வெள்ளம் தலைக்கு மேலே பாயும் போது சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன! இறைவனை நினைத்துக் கொண்டு நடந்தேன்.
'மஹத்தயா விஜஹாய் யன்ர (அய்யா விரைவாகப் போங்கள்) அவள் பக்கமாக இருந்துதான் குரல் வந்தது. நான தலையைத் திருப்பி அவளைப்பார்த்தேன். அவள் இன்னமும் என் பக்கம் திரும்பாமலே "மொக்கத்த u6)T67(36.7, தமுஸட்டதமாய் கியான்னே, இக்கமனின் ய்ன்ர" ( என்ன பார்க்கிறீர் உமக்குத்தான் சொல்லுகிறேன் விரைவாகப் போங்கள்) அதற்குமேல் நான் ஏன் தயங்கப் போகிறேன்! எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்து காரியாலயம் போய்ச் சேர்ந்தேன். அந்தச் சம்பவத்தை நான் அதற்குப் பின் மறந்ததே இல்லை.
1 ." ܢܠ

Page 17
காரியாலயம் சென்றடைந்தபோது முதல் நாள்\ குண்டர்களால் எறியப்பட்ட கற்கள், தடிகள், மண்ணெண்ணெய்ப் போத்தல்கள், எரிபந்தங்கள் போன்றவை முன்பகுதியில் கிடக்கக் கண்டேன். பல ஊழியர்கள் அங்கு முன்னதாகவே வந்திருந்தார்கள். முதல் நாள் வேலை செய்தவர்களும் இருந்தார்கள், ஆசிரியர் பகுதியில் நானும் திரு. ஆதித்தனும் வேறு சிலரும் இருந்தோம். திரு. கோபாலரத்தினமும் வேறு சிலரும் அடுத்த நாட்களில் வந்து சேர்ந்தார்கள்.
கலவரம் தொடங்கிய இரண்டாம் நாள் அதாவது நான் காரியாலயம் திரும்பியிருந்த அன்று மாலை நேரம் வந்த போது எங்கள் நிலைமைமோசமாகிக் கொண்டிருந்தமை தெரிய வந்தது. காரியாலயத்துக்கு முன்னால் வீதியின் கரையில் சிறிது சிறிதாக ஆட்கள் கூடத்தொடங்கியிருந்தார்கள்.
எப்படிதப்புவது? எங்கே பதுங்குவது?
காடையர்களும் குண்டர்களும் வெளியில் இருந்து கட்டடத்துக்குள் நுழைவதற்கு ஆயத்தம் செய்து கொண்டி ருந்தார்கள் என்றும், ஊழியர்களையும் அங்குள்ள பொருள்களையும் அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்றும் கட்டடமும் யந்திரசாதனங்களும் தீவைத்துக் கொளுத்தப் படப்போவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல பீதியும் அங்கலாய்ப்பும் அதிகரித்துக் கொண்டிருந்தது.
எப்படித் தப்புவது எங்கே பதுங்குவது? என்றெல்லாம் சிலர் யோசிக்கத்தொடங்கியிருந்தார்கள். வேறு சிலர் காடையர்கள் உள்ளே நுழைந்தால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். இரும்புக்கம்பிகள், தடிகள் மற்றும் இது போன்ற பொருள்களை சிலர் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். யந்திரப் பகுதியில் வேலை செய்தவர்கள் ஈயம் காய்ச்சும் கலன்களில் ஈயத்தைத் தண்ணிர் போல காய்ச்சி இருப்புக் கரண்டிகளுடன் ஆயத்தமாகியிருந்தார்கள். குண்டர்கள் நுழைந்தால் அவர்கள் மீது அள்ளி தெளிப்பதற்காக. இதேவேளை கட்டடத்தின் முன்னால் வீதியின் மறுகரையில் காடையர்களும் குண்டர்களும் தமது ஆயத்தங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள். வீரகேசரி ஊழியர்களும் கட்டடமும் | படப்போகின்ற பாட்டினை வேடிக்கை பார்த்து மகிழவும் \ಆ611ನೆ கூடத்தொடங்கியிருந்தார்கள். ار
16

( , ஆசிரியர் பகுதியில் நானும் ஆதித்தனும் வேறு சிலரும்\ டிதுங்கியிருந்தோம். ஆதித்தன் உருவத்திலும் உயரத்திலும் பெரியவர் நான் சிறியவன். அவர் சொன்னார். "அவங்க வந்து தாக்கினா நான் மாட்டிக்கிடுவேன், நீங்க தப்பிக்கிடுவீங்க” என்று "ஏன் அப்படி சொல்றீங்க” என்று கேட்டேன். “அவங்க என்னைத் தாக்கும் போது நீங்க என்னிலேயே மறைந்து தப்பிடுவீங்க” என்று அவர் கூற அந்த இக்கட்டான நிலையிலும் சிரித்துக் Qa5. T60ir(SuTib.
எங்கிருந்தோ வந்தார்
நேரம் சென்று கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம்இருள் கவியத் தொடங்விடும். பரபரப்பு, படபடப்பு - பயங்கரமான சூழ்நிலை. அந்த வேளையில் வெளியிலிருந்து ஓர் அன்பர் வந்து சேர்ந்தார். அவர் பெயர் நைடோ,’ப் - பறங்கி இனத்தவர். விளம்பரம் சேகரிப்பது அவரது பணி - செய்திகளும் தருவார். நாங்கள் இருந்த நிலையைப்பார்த்து கவலை கொண்டார். "இப்ப என்ன செய்யலாம், இவர்கள் அனைவரையுமே காப்பாற்றி ஆகவேண்டுமே” என்று ஆங்கிலத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார், உதவிக்கு யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்த அனைரும் பரிதாபகரமாக அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். சற்றுநேரம் யோசித்தார். பின்னர் நேராக ரெலிபோன் பரிவர்த்தனை அறைக்குள் போனார். மகாதேசாதிபதியின் மாளிகைக்கு தொடர்புகொண்டார். தான் யார் எங்கிருந்து பேசுகிறார். என்பதையும் பேசும் காரணத்தையும் கூறினார். சற்றைக்கெல்லாம் மகாதேசாதிபதியின் செயலாள ருடன் தொடர்பு கிடைத்தது. "மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம், வீரகேசரி நிறுவனமும் ஊழியர்களும் இன்னும் சிறிது நேரத்தில் பெருந்தாக்குதல்களுக்கு உள்ளாகப் போகி றார்கள். அதற்கான ஆயத்தங்கள் வெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கட்டடத்திற்குள் பெறுமதியான யந்திரங்களும் ஊழியர்களும் இருக்கிறார்கள். இவர்களில் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல இந்தியத் தமிழர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பாதுகாப்புக் கருதி தஞ்சமடைந்துள்ள குடும்பங்களும் இருக்கின்றன. உடனடியாக இந்த மக்களையும் நிறுவனத்தையும் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் " என்று கேட்டுக்கொண்டார். மறுபக்கத்திலிருந்து என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை. "பயப்படத்தேவை யில்லை, இன்னும் சில நிமிடங்களில் உதவி வந்து சேரும்” என்று கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினார். நேரமாகிவிட்ட மையினால் அவர் தமது இருப்பிடத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் எங்களுக்கு பயம் போகவில்லை.
ノ -- ܢܠ

Page 18
( முன்பக்கத்தில் குண்டர்களின் ஆயத்த வேலைகள்\ தங்குதடையின்றி மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்து வைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். நன்றாக இருள் கவியட்டுமென்று பார்த்துக் கொண்டிருந்தார்களா, அல்லது யாரிடமிருந்தேனும் உத்தரவு வரும் வரை காத்திருந்தார்களா? அங்கு குழுமியிருந்தவர்கள் பெரும் மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் காணப்பட்டார்கள். பொறிக்குள் எலிகள் மாட்டிக்கொள்ள பொறிக்கு வெளியில் பூனைகள் கும்மாளம் போட்டால் எப்படி இருக்கும், அப்படித்தான் இருந்தது நிலைமை.
யாரும் எதிர்பாராத நிலையில் சில கடற்படை டிரக்குகள் வேகமாக வந்து கட்டடத்தின் வாயிலில் நின்றன. அவைகளி லிருந்து ஆயுதங்களுடன் குதித்த கடற்படை சிப்பாய்கள் அங்கே நின்றவர்கள் அனைவரையும் துரத்தித் துரத்தியடித்து கலைததனா.
சிறிது நேரத்தில் அமளி ஓய்ந்தது. வீரசேகரி கட்டடமும் அதிலிருந்த பொருள்களும் காப்பாற்றப் பெற்றன. ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். திரு.நைடோ,’ப் தமது சமயோ சித அறிவை அவ்விதமாக பயன்படுத்தியிராவிடில் என்ன நடந்தி ருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. அன்றைய தினம் நிறுவனத்தின் நிர்வாகிகளும் உரிமையாளர்களும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதோ கம்பனி கட்டடத்தையும் ஊழியர்களையும் காப்பாற்றுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்திருந்தார்கள் என்பதோ நாம் எவரும் அறிந்திருக்கவில்லை. பிற்காலத்திலும் கூட அது பற்றி யாரும் கதைக்கவில்லை. அவர்களும் தமிழராய் இருந்தமையால் என்னமாதிரியான இக்கட்டிலிருந்தார்கள் என்பதும் தெரியாது.
குறிப்பு:-
சில பத்திரிகையாளர்கள் பொலிஸ் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களுடன் தமக்கு ஏற்படும் அறிமுகத்தையும் செல்வாக்கையும் சொந்த நலன்களுக்கும் பணம் சம்பாதிக்கவும் பயன் படுத்துவதுண்டு. இப்படியானவர்கள் பத்திரிகைத்துறையின் புனிதத்தைக் கெடுப்பவர்களாவர்.
2k xk k k
ار ܢܠ

அடிப்படை மூலதனம்
ஆரியிழையில்லாமல் எழுதக்க டிய எவரும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் முயன்றால் பத்திரிகைத்துறையில் முன்னேறிவிடலாம் கீத்துறையின் (ழ்லதனமே இதுதான்.
ஆசிரியர் பீடத்தில் திரு.ஏ.பெருமாள் என்றொருவர் இருந்தார் என்று கூறினேன் அல்லவா? அவள் ஒரு நாள் நேராக என்னிடம் வந்து "ஆர் யு ஏ பி.ஏ." என்று கேட்டுவிட்டு சென்றுவிட்டார். அதாவது நீர் ஓர் பி.ஏ. பட்டதாரியா? என்று அவர் கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் ஏனைய நண்பர்களிடம் கேட்டு பார்த்தேன். சில பட்டதாரி இளைஞர்கள் ஏற்கனவே புதிதாக ஆசிரியர் பகுதியில் சேர்ந்திருந்ததாகவும் வேலை பிடிக்காமையால் போய்விட்டதாகவும் கூறிய அவர்கள் அதைப்போல்தான் நானும் போய்விடுவேன் என்று நினைத்து அவ்வாறு கேட்டிருப்பார் என்று கூறினார்கள்.
அந்தக்காலத்தில் பட்டதாரிகள் எவரும் பத்திரிகைத் துறையில் நிலைக்காமல் போனமைக்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், தமது கல்விக்கேற்ற ஊதியமில்லாதவிடத்து எவர்தான் அத்துறையில் தொடர்ந்து இருக்க முடியும?
நியதியல்ல!
எதுவானாலும் பத்திரிகையாளனாக வருவதற்கு ஒருவர் பட்டதாரியாகத்தான் இருக்க வேண்டுமென்பதோ பட்டதாரியாக இருப்பவர் எல்லோருமே பத்திரிகையாளராக வரலாம் என்பதோ நியதியல்ல. பத்திரிகைத்துறையை ஒரு பாடமாக எடுத்து பட்டம் பெற்றவர்களிலும் கூட பலர் செயல் அளவில் சோபிக்காமல் போவதுண்டு. ஆர்வமும் அக்கறையும்தான் இத்தறை யின் அடிப்படை மூலதனம்.
பிழையில்லாமல் எழுதவும் வாசித்து விளங்கிக் கொள்ளவும் தெரிந்த ஒருவர் ஆர்வத்தோடு முயல்வாரானால் இத்துறையில் முன்னேறி விடலாம். ஒரு நல்ல பத்திரிகை யாளனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி ஜிகேபூரி)
19

Page 19
எனும் இந்திய பத்திரிகைத்துறை அறிஞர் பின்வருமாறுN கூறுகிறார். "முதலில் அவன் நன்றாக எழுதக்கூடியவனாய் வேண்டும். இரண்டாவது, அவனுக்கு செய்தி முக்கு செய்திகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல்) இருக்க வேண்டும். இத்துறையில் ஒருவன் வெற்றி பெறுவதற்கு பிஏஎம்ஏ போன்ற பட்டங்களோ அன்றில் பத் டிப்ளோமா' போன்ற பயிற்சிகளோ உத்திரவாதமல்ல. தொழில் பெற்றுக் கொள்ள இவை உதவலாம். ஆனால் இத்துறையில் முன்னேறி பிரகாசிக்க இவை மட்டும் போதாத
இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். ஒருவர் பட்டதாரியாகவிருந்து பத்திரிகைத்துறையிலும் ஆர்வமும் அக்கறையுமிருக்குமானால் மிகச்சிறந்த பத்திரிகை யாளராக அவர் வளர முடியும் . ஏனென்றால் ஏதாவது ஒரு துறையில் அல்லது பல துறைகளில் அவர் ஆழமான அறிவு டையவராயிருப்பார். அந்த அறிவு பத்திரிகைத்துறையில் அவருக்கு பலவகையிலும் பயனுள்ளதாய் இருக்கும். இவ்வாறான கல்விசார் அறிவு இல்லாத ஆனால் பத்திரிகைத்து றையில் ஆர்வமும் அக்கறையுமுள்ள இளைஞர்கள் முன்னேறு வதற்கு பல்வேறு விடயங்களையும் நூல்களையும் தேடி கற்று அறிவை ஆழமாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவில் பத்திரிகையாளன் என்று சொல்லப்படுபவன் பல்வேறு விடயங்களை பற்றியும் ந்தவனாகவும் எந்த விடயத்தையும் ஒரு புதிய கோணத்தில் பார்ப்பவனாகவும் இருக்க வேண்டும். அதற்கு வெறும் பத்திரிகை செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருக்காமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல நூல்களை வாசித்துப் பார்ப்பதும், அவை களில் இருந்து குறிப்புக்கள் எடுத்து வைத்துக்கொள்வதும் பின்னர் உதவியாக இருக்கும்.
se se se se
来
‘இதழியல் தறையும் மொழிபெயர்ப்பும் இணைந்த செயல்படுபவை. ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளில் வெளியாகும் இதழ்களுக்கு மொழி பெயர்ப்பே உயிர்நாடி ஆகும். நாளிதழ்த் தறையில் மொழிபெயர்ப்பு நடவா மல் போனால் இதழ்கள் வெளிவரா"
டாக்டர் கு. முத்துராசன். \ الم
丞

/ N
历 f
3 பத்திரிகையாளன் எழுதும் செய்திகளில் தனது சொந்த விருப்பு வெறுப்பு தலைதாக்க இடந்தரலாகாது. சார்ந்தள்ள பத்திரிகையின் கொள்கை பிடிக்காவிடில் அங்கிருந்து அவன் வெளியேறிவிட வேண்டும்.
பயிற்சி காலத்தில் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது மட்டுமல்ல சில சமயங்களில் வெளியில் சென்று செய்திகள் எடுத்து வருவதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுவ துண்டு. அவ்வாறான ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை இங்கு சொல் லலாம் என்று நினைக்கிறேன்.
அலுவலகத்தில் வேலைகள் முடிந்து புறப்படும் நேரத்தில் பிரதம உதவி செய்தியாசிரியர் நாராயண குரு மண்டபத்தில் இடம் பெறவிருந்த பாரதி விழாவுக்குப் போய் செய்தி எடுத்து வரும்படி பணித்தார். வீட்டுக்குப் போக வேண்டிய நேரத்தில் கூட்டத்துக்குப் போகச் சொல்லுகிறாரே என்று உள்ளுக்குள் ஆத்திரமாகவிருந்தாலும் கூட்டத்திற்குப் போனேன்.
அன்றைய பேச்சாளர்கள் இருவர். ஒருவர். செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி - இப்பொழுது வழங்கப்படும் பட்டங்கள் எல்லாம் அப்போது அவருக்கு இல்லை. மற்றவர் மட்டக்களப்பு முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் திரு. செ. இராசதுரை. . கூட்டத்தைக்கவனித்து செய்தி எடுப்பதற்காக நிருபர்களுக்கென போடப்பட்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். தினகரன் பத்திரிகை நிருபரும் வந்திருந்தார். இருவரும் முதல்தடவையாக சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தோம். திரு. இராசதுரை மேடைக்கு வந்தவுடன் தினகரன் நிருபரைக் கண்டுவிட்டு தம்மிடம் அழைத்தார். என்னையும் அழைப்பார் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. அந்த நிருபருடன் ஏதோ கதைத்துவிட்டு அவரது குறிப்புப் புத்தகத்தில் ஏதோ எழுதியும் கொடுத்தார். இது எனக்கு ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பின்னர் அவர் கூட்டத்தில் பேசியபோது அதிலிருந்து குறிப்பு ஒன்றையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் செல்வி. தங்கம்மாவின் பேச்சிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்கொண்டேன். لم ܢܠ
21

Page 20
N லுெவலகம் திரும்பியதன் பின்னர் செல்வி தங்கம்மாவின் பேச்சிலிருந்து எடுத்த குறிப்பை முதன்மைப்படுத்தி செய்தி எழுதி முடிவில் மட்டக்களப்பு முதல் எம். பி. திரு.இராசதுரை
பேசுகையில் ". என்று கூறினார் என முடித்திருந்தேன். அடுத்தநாள் காலையில் அலுவலகம் வந்து பத்திரிகையைப் பார்த்த போது நான் கடைசியாக எழுதியிருந்ததை முதன்மைப்படுத்தி தலைப்பிட்டு செல்வி தங்கம்மாவின் பேச்சுக்கு இரண்டாம் இடம் கொடுக்கப் பட்டிருப்பதைப் பார்த்தேன். அன்று இரவு கடமையில் இருந்த உதவி ஆசிரியர் இந்த மாற்றத்தை செய்திருந்தார். அச்செய்தி ஏன் அவ்வாறு மாற்றப்பட்டிருந்தது என்பதைப்பற்றி சற்று ஆழமாக யோசித்தபோதுதான் விஷயம் விளங்கிற்று. திரு. இராஜதுரை அந்தக்காலத்தில் ஒரு செல்வாக்கு பெற்றிருந் தகட்சியின் இளம் தலைவர், பாராளுமன்றப் பிரதிநிதி, எனவே அவரது கருத்தை மக்கள் அறிய விரும்புவார்கள். அச்செய்தியை பிரசுரிப்பதன் மூலம் பத்திரிகையின் விற்ப னையும் அதிகரித்திருக்க முடியும். எதுவானாலும் அவரது பேச்சினை இருட்டடிப்பு செய்தமைக்கு நியாயமான காரணம் என்னிடமிருக்கவில்லை. அவ்வாறு செய்ததின் மூலம் நான் சார்ந் திருந்த பத்திரிகைக்கும் நான் நன்மை செய்துவிடவில்லை.
மாற்று பத்திரிகை நிருபரிடம் திரு. இராஜதுரை என்ன கதைத்தார், அவரது குறிப்பு புத்தகத்தில் என்ன எழுதினார். என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதவை. நான் செய்திருக்ககூடியது என்னவென்றால், அவரிடம் நேராகச் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மற்ற, நிருபருக்குக் கொடுத்த செய்தியை எனக்கும் தாருங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனது என் தவறேயன்றி வேறன்று. இவ்வாறு சிந்தித்ததின் பிறகு செய்திகளில் விருப்பு வெறுப்புக்கள் தலையெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலானேன்.
பொதுப் பத்திரிகையில் பணிபுரியும் செய்தியாளன் விருப்பு வெறுப்புக்களுக்கும், கட்சி சார்புகளுக்கும் இடந்தரலா காது என்பது அங்கீகரிக்கப்பட்ட கருத்து. ஆனால் கட்சி சார்பான பத்திரிகைகளுக்கு இது பொருந்தாது.
தாம் பணிபுரியும் பத்திரிகை எதுவோ அந்தப் பத்திரிகையின் கொள்கை, கோட்பாடுகளுக்கு அமையவே பத்திரிகையாளன் செயல்பட வேண்டும். முடியாதவிடத்துஅப்பத்திரிகையிலிருந்து வெளியேறி விடவேண்டும். ck k >k
الم ܢܠ 22

செய்திகளைத் தாமே உருவாக்கும் செய்தியாளர்.
3 செய்திகள் உருவாவத ஒரு புறமிருக்க பத்திரிகையாளார்கள் சந்தர்ப்பம் சூழ்நிலைகளைப் பொறுத்து செய்திகளைத் தாமே உருவாக்கு கிறார்கள். இப்படியான செயற்பாடுகள் நீடித்த பலன்களைத் தருமென்ற கூறவியலாதது.
செய்திப்பத்திரிகைகளுக்கு, செய்திகள் எப்படி கிடைக்கின்றன என்பது ஒரு பிரச்சினையல்ல. என்னென்ன புதிய நிகழ்வுகள் நிகழ்கின்றனவோ அவையெல்லாம் புதினங்கள்தாம். பார்க்கப்போனால் ஒவ்வொருகணமும் நம்மைச் சுற்றிலும் ஏதாவது நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் புதினப் பத்திரிகைகளுக்கு இவை எல்லாமே புதினமாகிவிடாது. இங்கேதான் பத்திரிகையாளன் ஏனைய மக்களிலிருந்து வேறு படுகின்றான். தான் சார்ந்துள்ள பத்திரிகை எதைப் பிரசுரிக்கும், அதன் வாசகர்கள் எதை விரும்பி வாசிப்பார்கள் என்பதே அவனது கவனமாகவிருக்கும்.
தன் பத்திரிகையின் போக்கு, கொள்கை, தன்மை போன்றவற்றை வைத்தே தன் செய்திகளை எழுதுகிறான் பத்திரிகையாளன்.
பதவியிலிருக்கும் ஒரு ஆட்சியை ஆதரித்து நிற்கும் ஒரு பத்திரிகையில் பணிபுரியும் பத்திரிகையாளன் அந்தக் கொள்கைக்கு மாறாக செய்திகளை எழுதமாட்டான். அவ்வாறு மாறான கருத்து அவனுக்கு ஏற்படுமாயின் அப்பத்திரி கையிலிருந்து வெளியேறிவிடுவான்.
செய்திகள் தாமே உருவாவது ஒரு புறமிருக்க பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் பொறுத்தவரை சிலசமயம் செய்திகளை உருவாக்கவும் செய்கிறார்கள். செய்திகளுக்கு தட்டுப்பாடு என்று வருவதில்லை. ஆனால் தமது வாசகர்கள் எதிர்பார்க்கின்ற விதத்தில் ஒரு செய்தியை வழங்காதவிடத்து பத்திரிகை வாசிப்பு குறைந்து விடும் என்பது அவர்களின் கவலை. இம்மாதிரி நேரங்களில் சில பத்திரிகைகள் சில உத்திமுறைகளைக் கையாள்கின்றன. இன்னும் சில உண்மைபோல் தோன்றக் கூடியதும் பொய் என்று கூறமுடி \யாததுமான செய்திகளை உருவாக்கி வெளியிட்டு விடுகின்றன)
-

Page 21
(இதற்கு உதாரணமாக கற்பனையில் ஒரு செய்தியைN
வாசகர்களுக்கு விளங்கப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
இலங்கையில் இன்று இனப்பிரச்சினை ஒரு முக்கிய விடயம் எந்தப் பத்திரிகையும் ஏதாவதொரு செய்தியை இது பற்றி எழுதி வெளியிட வேண்டி இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் இங்கிலாந்து மகாராணி கப்பல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் வழியில் இலங்கையில் இரு தினங்கள் தங்கிச் செல்லவிருக்கிறார் 6я 6ії Діі வைத்துக்கொள்வோம்.
அடுத்தநாள் பத்திரிகையில் வெளிவிடுவதற்கு நல்ல செய்தியொன்று வேண்டுமே என்று மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கும் பத்திரிகையாளனுக்கு திடீர் யோசனை ஒன்று தோன்றுகின்றது.
இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் ஸ்தானிகள் அலுவலகத் திற்கு டெலிபோனில் தொடர்பு கொண்டு மகாராணி எப்பொழுது வருகிறார். எங்கே, எத்தனை நாட்கள் தங்குகிறார், யார் யாரை சந்திப்பார் என்பதையெல்லாம் அறிந்து கொள்கிறார். அதையடுத்து பின்வருமாறு ஒரு செய்தியை எழுதுகிறார்.
தலைப்பு*இலங்கையின் இனப்பிரச்னையில்
பீட்டிஷ் மகாராணி அக்கறை
தமிழ், சிங்களத்தலைவர்களை சந்தித்துப்பேசவும் விருப்பம்.
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாவது எலிஸபெத் இலங்கை இனப்பிரச்னையில் அக்கறை கொண்டிருப்பதாக விஷயமறிந்த
ဖူမျိုးရှို့ဇုန္နိဋ္ဌိ தெரிய வருகின்றது. அவர் இலங்கையில்
醬當器| ங்கள் ఫిన్ల
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாவது எலிசபெத் அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் வழியில் இலங்கையில் இரண்டு நாள்கள் தங்கியிருப்பார் என்பது தெரிந்ததே. அவ்வாறு இங்கு தங்கியிருக்கும் போது இலங்கையில் சில முக்கியமான அலுவல்களைக் கவனிக்க விரும்புகிறார். அவைகளில் இலங் கையிலுள்ள சிங்களத் தமிழ் தலைவர்களைச் சந்திக்கவிருப்பது
ܢܠ
24

h ஒன்று. தமிழ் சிங்களத்தலைவர்களைச் சந்தித்து இங்குள்ளN இனப்பிரச்சினை பற்றி நேரடியாக விளங்கிக் கொள்வது மட்டுமல்ல இங்கிலாந்து திரும்பியதன் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் இதில் அக்கறை செலுத்தி விரைவான ஒரு தீர்வுக்கு உதவும்படி கோருவார் என்றும் அறியப்படுகின்றது. k k at
பிரிட்டிஷ் மகாராணி இலங்கைக்கு வருவார் என்பது உறுதியானால் மேற்படி செய்தியும் உண்மையாகவே இருக்கும் என வாசகர்கள் கருதிவிடுவார்கள்.
எதுவானாலும் இவ்வாறு செய்திகளை சிருஷ்டித்து வெளியிடுவதை வாசகர்கள் புரிந்து கொண்டால் அப்பத்திரி கையின் நம்பகத்தன்மை குறைந்து செல்வாக்கும் அற்றுப் போய்விடும்.
பத்திரிகைகள் தம் விற்பனையை அதிகரிப்பதற்கும் தொய்ந்துபோன செல்வாக்கை மீளமைக்கவும் சில உத்தி களைக் கையாள்வதுண்டு. அவை சில சமயம் வெற்றியளிக்கும் இன்னும் சில சமயங்களில் தோல்வியாகவும் முடியலாம்
அறுபதுகளின் பிற்பகுதியில் 'சிலோன் ஒப்சேவர்' பத்திரிகை இவ்வாறான ஓர் உத்தியைக் கையாண்டது.
அதாவது, "இன்று உங்கள் ஊரில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருவாளர் ‘ஒப்சேவர்' உலாவுவார்” என்று அறிவிக்கப்படும். வாசகர்கள் வீதியில் செல்லும் ஒருவரை அவர்தான் திருவாளர் ‘ஒப்சேவர்' என்று கருதினால் கையிலுள்ள பத்திரிகையினால் அவரைத்தொட்டு (Mr.Observer) "மிஸ்டர் ஒப்சேவர்' என்று அழைக்கவேண்டும். உங்கள் ஊகம் சரியாய் இருந்தால் அவர் உடனடியாகவே 100 ரூபாய்க்கான வவுச்சர் ஒன்றை வழங்குவார். இல்லையென்றால் உங்கள் முகத்தில் அசடுவழியக் கேட்க வேண்டுமா? இந்த உத்தி எவ்வளவு தூரம் வெற்றியளித்தது என்று தெரியவில்லை.
இங்கிலாந்தில் ஒரு பத்திரிகை இன்னொரு விதமான உத்தியைக் கையாண்டது என்பது பழைய சங்கதி, ஒரு இளம் பெண்ணிடம் முட்டையொன்றைக் கொடுத்து அதனை மார்பில் வைத்து இருபத்தொரு நாள்கள் அடைகாக்க வைத்தார்கள். இருபத்தொரு நாள்கள் குஞ்சு பொரிக்கும் வரை அப்பெண்ணின்
நிலமை பற்றியும், தன்கோதே w

Page 22
55DT6 செய்திகளை படங்களுடன் பிரசுரித்தார்கள். இம்மாதிரிY வினோதமான செய்திகளை விரும்பிப் படிக்கும் அம்மக்கள் மத்தியில் பத்திரிகை விற்பனை அதிகரித்ததில் ஆச்சரிய மில்லை.
米 米 米 米
அவர்கள்
செய்ததெல்லாம்.
குட்டன் பேர்க், கெக்ஸ்ரன் முதலானவர்கள் நூல்களை வெளியிடுவதற்கு முன்னரே நால்கள் பாவனையில் இருந்துள்ளன.
மார்க்கோனிக்கு முன்பே ஒலி அலைகள் வெவ்வேறு இடங்களுக்குப் போய்க் கொண்டுதான் இருந்துள்ளன.
பெயார்ட் தொலைக்காட்சியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஓவியங்கள் மூலமாக செய்திகளைப்பரப்பும் முறை நடைமுறையில் இருந்துள்ளத.
அவர்கள் செய்ததெல்லாம், மிக இலகுவாகவும் வசதியாகவும் அதிகமான மக்கள் இவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு உதவியமைதான்"
)எச். வை.ஷாரதாபரேசாத் ܢܠ
ik anan Sisrga sinari djari?
வானத்தை, மண்ணின் கதகதப்புத்தன்மையை விலைக்கு ഖmക്കു്യ ക്ര விற்கவும் எவ்வாறு முடியும்? எம்மைப்பொறுத்தவரை இத ஒரு விசித்திரமான விடயம்தான். காற்றின் தாய்மையையும், தண்ணின் பளிச்சிடும் தன்மையையும் எங்களால் உரிமைகொண்டாட முடியாது என்றால் அவைகளை எங்களிடமிருந்து நீங்கள் எப்படி விலைக்கு வாங்க முடியும்?
சீஃப் சீட்டில் (செவ்விந்தியத்தலைவன்)
26

r N Juji|It ina îl însminăasită înăutig
S பரபரப்பான சூழ்நிலையில் பத்திரிகாலயங்களில் நடைபெறும் செயற்பாடுகள் சிலசமயங்களில் ஆச்சரியமுட்டுபவையாக இருப்பதையும் அனுபவமுள்ள ஆசிரியர்கள் எவ்வளவு நாஆக்காக நிலைமைகளைக் கையாள்கிறார்கள் என்பதனையும் அவதானிக்கலாம்.
உதாரணத்துக்கு ஒன்றை பார்ப்போம்
முதல் பதிப்புக்கு விடயங்கள் கொடுத்து முடிப்பதற்கான நேரம் முடிவடைய (Dead line) இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கும் பிந்தினால் பத்திரிகை அடித்து முடிக்க நேரமாகிவிடும். அவ்வாறு நேரமானால் வெளி ஊர்களுக்கு பத்திரிகைகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றுவிடும். (பெரிய நிறுவனங்கள் தமக்கென பிரத்தியேக வாகனங்கள் வைத்திருக் ’கின்றன. வெளிநாடுகளில் விமானங்கள் சொந்தமாக வைத்தி ருக்கும் பத்திரிகை நிறுவனங்களும் உண்டு) ரயில் பஸ் மற்றும் தனியார் வாகனங்களை நம்பியுள்ள நிறுவனங்கள் அந்த வாகனங்கள் புறப்படும் நேரத்துக்கு முன்னதாகவே பத்திரிகை களை அவைகளில் ஏற்றி விட வேண்டிய நிலையில் இருக்கி னறன.
இம்மாதிரியான ஒரு நிலையில் கடைசிநேரத்தில் மிக முக்கியமான ஒரு செய்தி பலபக்கங்களைக் கொண்ட அறிக்கையாக அதுவும் ஆங்கில மொழியில் வந்து சேர்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த செய்தி முழுமையாக வெளியூர் பதிப்பில் வெளிவரவேண்டியதாகவும் இருக்கு மானால் ஆசிரியர் பகுதியினருக்கு பெரும் திண்டாட்டமாகவே இருக்கும். இருந்தாலும் திறமையான நிர்வாக அமைப்பைக் கொண்ட பத்திரிகை நிறுவனங்கள் மிக எளிதாக இந்நிலைமை யைக் கையாள்வதைப் பார்க்கலாம்.
பல பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையினை பல பகுதிகளாகப் பிரித்து இலக்கமிட்டுக்கொண்டு ஆங்கிலம் தெரிந்த அனைவரும் தமிழாக்கம் செய்வார்கள். இவ்வாறு தமிழாக்கப்படும் பகுதிகளை இலக்கக் கிரமப்படியே அச்சுக் w
لم - ܢܠ
27

Page 23
N கார்ப்பாளர்களும் தனித்தனியே அச்சுக்கோர்ப்பார்கள் துண்டுதுண்டாக அச்சுக் கோர்க்கப்பட்ட பகுதிகள் இலக்கக் கிரமப்படி ஒரே செய்தியாக ஒன்று சேர்க்கப்பட்டு தேவையான தலைப்பு அறிமுகம் முதலியவற்றுடன் பக்கத்தில் ஏற்றப்பட் டுவிடும். வேலை மிக விரைவாகவும் சுலபமாகவும் முடிந்து விடும். குறித்த நேரத்தில் பத்திரிகையும் அச்சாகிவிடும். இம்மாதிரி நேரங்களில் ஆசிரியர் பகுதி, அச்சுக்கோர்க்கும் பகுதி ஒப்பு நோக்கும் பகுதி என அனைவரும் பம்பரம்போல் வேலை செய்வதைப் பார்க்கலாம். பத்திரிகை சிறப்பாக வெளிவ ருவதற்கு இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல் புரிவது மிக அவசியம் என்று சொல்லத் தேவையில்லை.
米 米 米 来
ஈழநாடு’ பத்தாவது ஆண்டு நிறைவின்போது பிரபல நடிகரும் டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவருமான அமரர் டி.கே. எஸ். பகவதி வருகை தந்திருந்தார். அவருடன் அமரர்கள் ஏ.ஈ. தம்பர், கே.பி. ஹரன், கே.ஸி. தங்கராசா, து. சீனிவாசகம் மற்றும் திரு.எஸ்.எம் கோபாலரத்தினமும் சகஊழியர்களும் காணப்படுகிறார்கள்.
الم - ܢܠ
28
 

/ - N
GFüfâ Gior Guusfüų
ஆ பிரதியை நன்கு வாசித்து விடயத்தைக் கிரகித்து கொண்டதன் பின் அதனைக் கருத்து பிறழாமல் தமிழில் கொடுத்து விடவேண்டும். இதுதான் செய்திமொழிபெயர்ப்பு
மொழி பெயர்ப்பு என்பது இன்று பத்திரிகை த்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. பிரதேச மொழி பத்திரிகைகள் ஏனைய மொழி பத்திரிகைகளிலிருந்து முக்கியமான செய்திகளையும் , செய்தி கட்டுரைகளையும் மொழிபெயர்த்து வெளியிடுகின்றன. குறிப்பாக ஆங்கில மொழியிலிருந்தே பெரும்பாலும் முக்கிய விடயங்கள் மொழிபெயர்க்கப்பட்டு சுதேசமொழி பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. இதனால் பத்திரிகைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு பிறமொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் மொழி அறிவு இருப்பது அவசியம் என்று கருதப்படுகிறது.
கதை, கட்டுரைகள், விளம்பரம், சட்டப்பிரசுரங்கள் யாப்புகள், அரசாங்க மற்றும் அதிகாரபூர்வ அறிவித்தல்கள் போன்றவற்றை மொழி பெயர்ப்பதற்கும் செய்திகள், செய்தி கட்டுரைகளை மொழிபெயர்ப்பதற்கும் அதிக வித்தியாசமுண்டு, முன் கூறப்பட்டவை மூலக்கருத்து சிதைவு படாமலும் 9. கருத்து வெளிப்படும் வகையிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். செய்திகளோவெனில் செய்திகளைப் பொறுத்தும் பிரசுரிக்கப் படவிருக்கும் பத்திரிகையின் தன்மைக்கேற்பவும் மொழியாக்கம் செயப்யப்படவேண்டும். இருந்தாலும் பிரசுரிக்கப்படுவதற்காக மொழி பெயர்க்கப்படும் பகுதி மூலத்திலிருந்து சிதைவுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரிய நகரங்களில் வெளியாகும் பத்திரிகைகள் அவை என்னமொழி பத்திரிகைகளானாலும் செய்தியாளர்கள் அவைகளுக்கு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே செய்திகளை வழங்குகிறார்கள். இவர்களில் பலர் ஒரே சமயத்தில் பல பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கும் (Freelances)சுதந்திர பத்திரிகையாளராய் இருப்பர். இதனால் தமது செய்தி பிரதிகளை (copy) ஆங்கிலத்திலேயே தயாரித்து அதன் நகல்களை வெவ்வேறு பத்திரிகைகளுக்கும் அனுப்புவர். அதனால் பத்திரிகை நிறுவனங்களில் உள்ள செய்தியாளர்கள் அல்லது உதவி ஆசிரியர்கள் அவைகளை மொழி வயர்த்துக்கொள்கிறார்கள் الم
丞

Page 24
/一 N
பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தும், ரொய்ட்டர்ஸ், "டாஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் செய்திகள் ஆங்கிலத்திலேயே கிடைக்கின்றன.
இவ்வாறு வருகின்ற செய்திகளை மொழி பெயர்த்து தமது நிலைமைக்கும் தேவைக்கும் ஏற்ப தமிழ்பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்கின்றன. ஒரு நிருபரால் அனுப்பப்படும் செய்தியொன்று தமிழ்ப்பத்திரிகைக்கு அவசியமற்றதாக விருக்கலாம், அதேசெய்தி சிங்களப்பத்திரிகைக்குப் பெரிய விட்யமாகவிருக்கலாம். இதேபோல் சிங்களப்பத்திரிகைக்கு அவசியமற்றது தமிழ்ப் பத்திரிகைக்கு முக்கியமாகப்படலாம். அதாவது பத்திரிகைகள் தமது வாசகர்களின் சுவைக்கு ஏற்ப செய்திகளை வழங்க முனைகின்றன என்பதாகும்.
செய்திகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பதற்கு ஆழமான ஆங்கிலப்புலமை இருக்க வேண்டுமென்பதில்லை. பிரதியை நன்கு வாசித்து விடயத்தை கிரகித்துக் கொண்டதன் பின்னர் அதனை கருத்துப்பிறழாமல் தமிழில் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுந்தான். என்றாலும் ஆங்கில மொழி வழக்கிலுள்ள சொற்பிரயோகங்கள், மரபுத் தொடர்கள் போன்றவற்றை ”அறிந்து வைத்துக்கொள்வது மொழி பெயர்ப்புக்கு பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக, Red carpet Welcome என்பதை சிலர் சிவப்புக் கம்பள வரவேற்பு என்று எழுதுகிறார்கள். சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது ஆங்கில மரபுத் தொடராக இருந்தாலும் அதுவே சரியான மொழியாக்கமும்கூட. மிக முக்கியமான ஒருவிருந்தினர் வருகைதரும் போது அவர் நடந்து வருவதற்காக விரிக்கப்படும் ஒரு குறுகிய நீளமான சிறு சிவப்புக் கம்பளத்தையே இது குறிக்கிறது. சிவப்புக்கம்பளம் கொடுத்து வரவேற்கப்பட்டார். என்று சிலர் மொமி பெயர்ப்பதை அவதானித்திருக்கிறேன். இது தவறு.
நீதி மன்றம் ஒன்றில் மாடு திருடப்பட்ட வழக்கொன்று நடந்தது. எதிரிக்காக ஏற்பட்டிருந்த பிரபல வழக்கறிஞர் நீதி 6JT6060T unfigbgs "This is not a bulk story Sir, this is a cock and buil Story' என்று கூறினார். இந்த செய்தி பத்திரிகைக்கு வந்தபோது நிருபர் வழக்கறிஞரின் கூற்றையும் அப்படியே எழுதியிருந்தார். அதனை மொழி பெயர்த்தவர் "இது DIL6ಹ್ರ
乔

விளங்காத பகுதியை மொழி பெயர்ப்பாளர் எழுதாமல்Y விட்டிருக்கலாம். எழுதியதிலும் ஏதாகிலும் கருத்து வெளிப் படுவதாக இருந்திருக்க வேண்டும். ஆங்கில மரபுத்தொடரின் கருத்து புரிந்து கொள்ளப்படாமல் எழுதப்பட்டதாக அது இருந்தது. வழக்கறிஞர் Story என்று அந்த வழக்கைத்தான் குறிப்பிட்டிருந்தார். எனவே மொழி பெயர்ப்பாளர் பின்வருமாறு மொழி பெயர்த்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும் "இது உண்மை வழக்கல்ல ஐயா, இது சோடிக்கப்பட்ட வழக்கு" 6T6ig. "cock and bull story" 6T6irpT6) 60 root Daig (DTBT60Tg5) என்று கருத்தாகும்.
மொழி பெயர்ப்பு சமயோசிதமாகவும் விவேகமாகவும் அமைதல் வேண்டும். " . . .
தமிழ் விளங்காத உயர் அதிகாரி ஒருவர் சோதனைக்காக ஒரு காரியாலயத்திற்கு வந்திருந்தார். அவரைப்பிடிக்காத அலுவலர் ஒருவர் "இவன் யாரடா, இளிச்சவாயன் இப்ப வந்திருக்கிறான்" என்று அந்த அதிகாரியின் காதில் படக்கூடியதாகவே வெறுப்பை வெளிப்படுத்திவிட்டார். அதிகாரி விடுவதாக இல்லை. இன்னொரு அலுவலரைப்பார்த்து "What is இளிச்சவாயன்” என்று கேட்டார். அவரும். சக அலுவலரைக் 5Tlig&Qa5.T(6855.TLD6) " (S.6s&SF6JTuj6i means, the man with a smiling mouth" இளிச்சவாயன் என்றால் புன்னகைபூத்த வாயை உடையவா" என்று பொருள் கூறினார். அதிகாரிக்கு நிச்சயம் உச்சி குளிர்ந்துதான் போயிருக்கும் இதை சமயோசித மொழி பெயர்ப்பு என்று கூறலாமல்லவா.
இன்னொரு ஆங்கில செய்தியையும் அதன் மொழி பெயர்ப்பையும் உதாரணத்துக்காக பார்ப்போம்.
MESSAGE TO TEACHERS
A teacherto be effective should AIways be a learner, if the ceases to be a student, he ceases to be a good teacher.
This was the advice Dr. Radhakrishnan gave to teachers all over the country on his 79th birthday, being celebrated as teachers' day.
In a message the former president and one time teacher said'Today we are growing more and more insensitive to moral
5

Page 25
svalues and there is an increase of lawlessness. The teachers\ should set an example to the pupils by their behaviour. Inquiry, practice and teaching should go together. We should develop the habits of self scrutiny and self discipline. If properattitudes are developed in our youth, we will certainly have a better future for our country.
O - A (IndianExpress 6.9.1967) தமிழாக்கம்:-
ஆசிரியர்களுக்கு செய்தி
ஒர் ஆசிரியர் தமது பணி பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனக்கருதுவாரானால் அவர் எப்பொழுதுமே கற்கும் பழக்கமுடையவராக இருத்தல் வேண்டும். கற்பவன் என்ற நிலையை அவர் எப்போது கைவிடுகிறாரோ அப்பொழுதே ஓர் நல்லாசிரியன் என்ற நிலையிலிருந்தும் நழுவி விடுகிறார். Հ
டாக்டர் ஆர் இராதாகிருஷ்ணன் , தமது 79வது பிறந்த தினத்தையொட்டி நாடுமுழுவதுமுள்ள ஆசிரியர்களுக்கு வழங் கியுள்ள ஆலோசனை இதுவாகும். அவரது பிறந்த தினம் நாட்டின் ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுவது தெரிந்ததே.
முன்னாள் குடியரசுத்தலைவரும் ஒருகாலத்தில் ஆசிரிய பணிபுரிந்தவருமான அவர் விடுத்துள்ள செய்தியொன்றில்
மேலும் தெரிவித்திருப்பதாவது:
இன்று நாம் அறநெறி உணர்வுகளிலிருந்து மிகமிக தூரமாகவே சென்றுகொண்டிருக்கிறோம் இதனால் சட்ட முறைகளை அலட்சியப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஆசிரியர்கள் தமது நடத்தை மூலம் மாணவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும் . விசாரித்தறிதல், பயிற்சி செய்தல், கற்பித்தல் ஆகியவை ஒன்றாகவே நடைபெற வேண்டும் சுய விசாரணை, சுயநல்லொழுக்கம் ஆகிய பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 5LP5 இளைஞர்களை சரியான வழியில் நடத்திசெல்வோமானால் 6TD35 நாட்டுக்கு ஓர் நல்ல எதிர்காலத்தைத் தோற்றுவித்துவிடலாம். (இந்தியன் எக்ஸ்பிரஸ். 6.9.1967)
鬱鬱鬱鬱
لم ܢܠ 52

༄༽
புதிய தமிழ் சொல் வளர்ச்சிக்கு செய்திப் பத்திரிகைகள் பெரும்பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் அறிஞர் களும், பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்களும் புதிதாக அறிமுகப்படுத்தும் சொற்களும் சொற்றொடர்களும் பத்திரி கைகள் மூலமே பொதுமக்களுக்குப் போய்ச்சேருகின்றன. பத்திரிகைகள் அவைகளைப்பயன்படுத்துவதின் காரணமாக சாதாரணம்க்கள் அவைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ಙ್ಗಣಪ! அவ்வாறு மாற்றம்பெற்ற சில சொற்களை மட்டும் LITTL TLD.
1. Chairman - அக்கிராசனர் தலைவர்
2. Secretary. காரியதரிசி செயலாளர் செயலர்
3.Treasurer பொக்கிஷதார் பொருளாளர்
4.Candidate அபேட்சகள் வேட்பாளர்.
5.Post office தபால் கந்தோர். அஞ்சலகம்
6. Clerk குமாஸ்தா, எழுத்தர், எழுதுவினைஞர் எழுதுநர் இலிகிதர்
7.Editor பத்திராதிபர் ஆசிரியர் 8.Depression பவனஅமுக்கம் தாழமுக்கம்
9.University சர்வகலாசாலை பல்கலைக்கழகம்.
10. Disarmament ஆயுதப்பரிகரணம் ஆயுதக்குறைப்பு 11. Scholarship உபகாரச் சம்பளம் புலமைப்பரிசிலி
الم ܢܠ

Page 26
r -N அடிப்படைக்கோட்பாடு
S புதிய செய்தி எதவோ அதனை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எடுத்து சரி என உறுதிப் படுத்திக் கொண்டதும் அதே வேகத்தில் அதனை வெளிப்படுத்தி மக்கள் அறியும்படி செய்வததான் செய்திப் பத்திரிகைத்துறையின் அடிப்படைக்கோட்பாடு
இன் பூ பத்திரிகைத்துறையானது ஏனைய ஊடகத்துறைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். விதவிதமான உள்ளக - வெளிக்கள தொலைபேசிக் கருவிகள், ..பாக்ஸ் எனப்படும் தொலைநகல், இன்ரநெட் எனப்படும் இணையதளம், ஈமெயில் மற்றும் கணனி சாதனங்கள் எல்லாம் இத்துறையினை மிகவும் நவீனப்படுத்தி வருகின்றன. வானொலி டெலிவிஷன் செய்திகளை உடனுக்குடன் பதிவு செய்து கொண்டு வசதிபோல் பின்னர் பிரதி எடுத்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் கூட இருக்கின்றன.
ஆனால் அன்று?
அன்றைய நாட்களை இன்று நினைத்துப் பார்க்கையில் ஒருவகையில் உவகையாகவும் இன்னொருவகையில் ஆச்சரியமாகவும் இருக்கின்றது. நான் இங்கு கூறுவது நம் நாட்டிலிருந்த அன்றைய நிலை பற்றி, கம்பி மூலமான தொலைபேசி தொடர்புதான் அன்றைய பத்திரிகையாளனுக்கு கிடைத்திருந்த மிகப்பெரிய தொடர்பு வசதி. அதுவும் கூட வெகுநேரத்தாமதத்தின் பின் கிடைக்கும் மூன்று நிமிட அல்லது ஆறு நிமிடத்தொடர்பு இந்த சில நிமிடங்களுக்குள் செய்திகளை வழங்குவதும் எடுத்துக்கொள்வதும் எத்தனை பெரிய சாதனையாக இருந்திருக்க வேண்டும்? கொழும்பில் டெலிபிரின்ரர் கருவி வெளிநாட்டு செய்திகளைப் பெற்றுக் கொள்ளும் இன்னொரு சாதனமாக இருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தொலைபேசியும் வானொலிப்பெட்டியும் மட்டுமே வரப்பிரசாதமாகவிருந்தன. பின்னர் தொலைக்காட்சியும் இதில் சேர்ந்து கொண்டது. பிறமாவட்டங்களிலிருந்து தந்திகள் மூலம் செய்திகளைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு இருந்தது.
الم. ܢܠ
-

இன்றைய முன்னேற்றங்களைப் பார்க்கையில் કો ஈடுபட்டுள்ள இன்றைய இளைஞர்கள் அதிஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். ஆனால் இந்த நவீன வசதிகளுக்கேற்ப இவ்விளைஞர்களின் வாழ்க்கைப் படிகளும் நவீன மாக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை அது உள்ளக விவகாரம். கடந்த காலங்களில் வசதிகள் எந்த அளவுக்கு குறைவாக இருந்தனவோ அந்த அளவுக் கு பத்திரிகையாளர்களின் வேதனமும் குறைவாகவே இருந்துள்ளன. அந்த நிலைமை இன்று மாறி இருக்கும் என்றே நம்புகின்றேன்.
என்னதான் நவீன நுட்பங்களும் தொடர்பாடல் முறைகளும் இத்துறைக்குள் புகுத்தப்பட்டிருந்தாலும்
பத்திரிகைத்துறையின் அடிப்படைக்கோட்பாடு அப்படியேதான் இருந்து வருகின்றது. இருந்து வரவே செய்யும்.
அதாவது, புதியது எதுவோ அதனை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பெற்று வெளிப்படுத்தி பொதுமக்கள் அறியும்படி செய்துவிடுவதாகும்.
இதனையே 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான தோமஸ் டிலானே (Thomas Delane -1852) எனும் தலைசிறந்த பத்திரிகையாளர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "குறித்த ஒரு காலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் விபரங்களை மிகவிரைவாகவும் , மிகச்சரியாகவும் பெற்று உடனடியாகவே வெளிப்படுத்தி தேசத்தின் பொதுச் சொத்தாக அதனை ஆக்கிவிடுவதுதான் பத்திரிகைத் துறையின் முதல் கடமையாகும்.”
இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் இன்றைய நாள் இதழ்கள் விசேஷப்பதிப்புக்களும் பிந்திய பதிப்புக்களும் வெளியிடுகின்றன.
செய்தி கிடைத்த பின்னரும் அதனை வெளிப்படுத்தாமல்
வைத்திருப்பதானது மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களும் வதந்திகளும் உருவாக ஏதுவாகிவிடும். se se se ck
الم. im - ܬ
5

Page 27
பொது செய்திகளும் தனிப்பட்ட செய்திகளும்
GéFu தி 9 என்பதற்கு தனியான வரைவிலக்கணம் ஒன்று இல்லை, ஆனால் பல்வேறு விதமான வியாக்கியானங்கள் உண்டு. என்றாலும் செய்திகளை பொதுவான செய்திகள் என்றும் தனிப்பட்ட செய்திகள் என்றும் இரண்டு வகையாக வகுக்கலாம். இதில் முதல் வகை பொதுவாக எல்லா மக்களும் அறிய வேண்டிய அல்லது அறியவிரும்பக்கூடிய செய்திகள், இதனையும் இன்னும் பல்வேறு உபதலைப்புக்களின் கீழ் வகுக்கலாம்.
இவ்விரு பிரதான தலைப்புக்களை மட்டும் இங்கு : LNTTIGBuTub.
பொதுவானசெய்திகள்:- இவை சகல மக்களும் அறிவிரும்புகின்ற
அல்லது அறிய வேண்டிய செய்திகள்.
தனிப்பட்டவர்களுக்கான .. செய்திகள் :- தனிநபர்கள் அல்லது தனிப்பட்ட
குழுக்களுக்கு மட்டும் உரித்தான
செய்திகள் இவை. -
ஒரு கிராமத்தில் ஒரு நபர் இயற்கையாக மரணமானார் என்று வைத்துக்கொள்வோம். அம்மரணம் அம்மனிதரின் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு சிலசமயம் அந்தக்கிராமம் முழுமைக்குமே ஒரு செய்தியாகத்தான் இருக்கும். ஆனால் அப்பிரதேசம் முழுமைக்குமே அது ஒரு செய்தியாக இருக்க முடியாது. எனவே அதனை பொது செய்தி என்ற தலைப்பின் கீழ் அடக்க முடியாது. அது தனிப்பட்ட செய்தி என்றே கொள்ள வேண்டும்.அதே நபர் ஒரு கார் விபத்தில் மரணமாகிவிடுகின்றார். என்று வைத்துக் கொள்வோம். இம்மரணம் செய்தியாகி விடுகின்றது. முன்னையது இயற்கை அதாவது சாதாரணமான ஒரு நிகழ்வு. பின்னையது இயற்கைக்கு மாறான - அசாதாரணமான ஒரு நிகழ்வு. எனவே சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்று அசாதாரணமாகும்போது பொதுச்செய்தியாகி
ܓ

அம்சங்கள் அதாவது பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் அடங்கியிருப்பதையும் காணலாம்.
கார் விபத்து எனும் போது அது ஒரு பொது இடத்தில் பொதுமக்கள் சாதாரணமாக நடமாடும் இடத்தில் நடந்திருக்கும் என்பது கண்கூடு. மேலும் இவ்விபத்து எவ்விதமாக நடந்தேறியது? வீதியில் சென்று கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதா? அந்நபர் புத்தி சுவாதீனமற்ற நிலையில் நடுவீதியில் சென்று கொண்டிருந்தாரா? அல்லது மது போதையில் கார் வருவது தெரியாமல் அதன்மீது மோதிக் கொண்டவரா? மேலும் அக்காரைப்பற்றிய விபரங்களும் அறியப்பட வேண்டியவையாய் இருக்கலாம். வீதியால் ஓடக்கூடிய நிலையில் அக்கார் இருந்ததா? காரை ஓட்டியவர் ஒட்டுநருக்குரிய தகுதி பெற்றிருந்தாரா? குடிபோதையில் காரை ஒட்டிச்சென்றாரா அல்லது வேண்டுமென்றே காரை அந்நபர்மீது மோதி படுகொலை செய்தாரா? இந்த விபரங்கள் எதுவானாலும் அவை குறித்த செய்திக்கு பொது செய்திக்குரிய தன்மைகளை ஏற்படுத்து கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
குறித்த நபர் இயற்கை மரணமே எய்தியிருந்தாலும் கூட அந்த நபரின் அந்தஸ்து சமூகத்தில் அவருக்குள்ள மதிப்பு போன்ற அம்சங்களைப் பொறுத்தும் அவரது மரணச்செய்தி பொதுவானதா, தனிப்பட்டதா என்பதை நிர்ணயிக்க வேண்டி யிருக்கும்.
அவர் ஒரு உள்ளூர் பிரமுகராய் அல்லது தலைவராய் இருப்பாரெனில் பிராந்திய பத்திரிகைகளில் அல்லது பதிப்புக் களில். அதற்கு முக்கியத்துவம் கிடைக்கலாம் . -தேசிய, மட்டத்தில் அது ஒரு சிறு செய்தியே. அதே நபர் ஒரு தேசியத 'தலைவராக (பிரதம மந்திரி - ஜனாதிபதி போன்று) இருப்பின் நிச்சயமாக அது ஒரு பெரிய செய்தி . சகல பதிப்புக்களிலும் அது முக்கிய முதல் பக்கச் செய்தியாக அமைந்துவிடும்.
ஆக, ஒரு மனிதன் சமூகத்தில் வகிக்கும் அந்தஸ்தைப்
பொறுத்தும் அவர் சம்பந்தப்பட்ட செய்தி முக்கியத்துவம் பெறுவதை உணரலாம்.
ノ ܓܠ .
(விடுகின்றது. அசாதாரணமான ஒரு நிகழ்வில் பலபொதுY

Page 28
(மனிதனை நாய் கடித்தால் அது ஒரு சாதாரண விடயம். ஆனால்Y நாயை மனிதன் கடித்தால் அது செய்தியாகிவிடுகின்றது. என்பார்கள், ஆனால் இந்தச் செய்தியின் தன்மை வடிவம் என்பன எப்படி இருக்கும் என்பதை அவதானிப்பது சுவையாய் இருக்கும். இச் செய்தியில் "மனிதன் நாயைக் கடித்திருக்கிறான்.” என்ற வகையிலான ஒரு வித ஏளனம் தொனிப்பது கண்கூடு. வேறுவகையில் பரபரப்போ, எல்லா மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தன்மையோ இச்செய்தியில் இல்லை. எனவே அது பொது செய்தியாக இருந்தாலும் முதல்பக்க கொட்டை எழுத்து தலைப்புச் செய்தியாக எந்த ஒரு செய்தியாளனும் பயன்படுத்த மாட்டான். ஆனாலும்விசித்திர செய்திகளுக்கே முதன்மை கொடுத்து பிரசுரிக்கும் பத்திரிகைகளைப் பொறுத்தவரை இதுவே முதல் பக்க கொட்டையெழுத்து தலைப்புச் செய்தியாக இடம்பெறக் கூடும் என்று சொல்லத்தேவையில்லை.
எனவே ஒரு பத்திரிகையின் தன்மையைப் பொறுத்தும் செய்திகளின் வடிவங்கள் மாறுபடும் என்பதை அறியலாம்.
ஒரு நகரத்திலிருந்து பல பத்திரிகைகள் வெளிவரு கின்றனவென்றால் அந்தப்பத்திரிகைகள் அனைத்திலும் ஒரே செய்திதான் தலைப்புச் செய்தியாக அமைந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஒவ்வொரு பத்திரிகையினதும். கொள்கை செய்திகளைக் கையாளும் முறை போன்றவற்றுக்கு அமையவே செய்திகளின் வடிவங்கள் அமையும். ஆனால் முக்கியமான செய்திகளைக் கோட்டைவிடாமல் இருப்பது அவசியம்.
se se se se
Distula Fö anslå “பல்வேறு நாடுகளின் வரலாறுகளைப் படிப்பதன் மூலம் வெகுகாலத்திற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் காட்டுமிரா ண்டித்தனமான இனக்குழுக்கள் வாழ்ந்து கொண்டிருந்த அதே வேளையில் சீனா, எகிப்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய காரி யங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தமையை அறிந்துகொள்ளலாம். இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்த சிறப்பான அந்தக்காலத்தில் இந்தியா செல்வம் கொழிக்கும் சக்திமிக்க நாடாக விளங்கி இருக்கின்றது”
米
ஜவஹர்லால் நேரு(மகளுக்கோர் கடிதம்)
للر ܢܠ

aflafli 65nsluld
Osijā ujfinā
3 1956, 1958 ஆகிய ஆண்டுகளில் இனக்கலவரங்கள் இடம்பெற்று தமிழ் மக்கள் தம் நிலை குறித்து தீவிரமாக சிந்திக்கத்தலைப்பட்டதையடுத்து தமிழ் பரிரதேசங்களில் இருந்தே தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவரவேண்டிய கட்டாயம் உணரப்பட்டது. அந்த வேளையில் காலத்தின் தேவையால் மலர்ந்ததே ஈழநாடு’பத்திரிகை.
வீரகேசரியில் நான் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போனதன் பின்னணி விபரங்களையெல்லாம் எழுதுவதற்கு இது சந்தர்ப்பமல்ல என்று கருதியும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணியும் இத்துடன் அதை நிறுத் திக் கொணி டு, யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு” பத்திரிகையுடனான எனது தொடர்புகள் பற்றி இனி எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
1961 ம் ஆண்டு மார்ச்மாதம் என்று நினைவு. வீரகேசரியில் இருந்து விலகிய பின்னர். யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகையில் வந்து சேர்ந்தேன். எனக்கு முன்பே திருவாளர்கள் எஸ். எம். கோபாலரத்தினம், டி.எம் முருகையா போன்றவர்கள் வீரகேசரி யிலிருந்து வந்திருந்தார்கள். 1959 ஆம் ஆண்டு வாரமலராக ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘ஈழநாடு 1961 ம் ஆண்டுதான் தினசரியாக மாற்றப்பட்டிருந்தது. அதுவரை ஆசிரியராகவிருந்து வந்த திரு இராஜ் அரியரத்தினம் அவர்கள் தொடர்ந்தும் அதே பதவியில் இருந்து வந்தார். திரு.கே.பி ஹரன் நிர்வாக ஆசிரியராகவும் திரு. எஸ்.எம்.கோபாலரத்தினம் செய்தி ஆசிரியராகவும் பொறுப்பாக விருந்தார்கள். திரு.எம்.முருகையா வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாகவிருந்தார். திரு. க. கணேசலிங்கம் மற்றும் சிலர் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டி ருந்தார்கள். திரு. கே.ஜி. மகாதேவா, திரு.எம். மாணிக்கம் ஆகியவர்கள் பழகுநர்களாக எடுக்கப்பட்டார்கள். திரு.எஸ்.சபாரத்தினம் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகவிருந்து அனுபவம் பெற்றவர். அவரும் எங்களுடன் இணைந்து கொண்டார். வேறுபலர் இருந்திருக்கலாம் இப்பொழுது நினைவுக்கு வரவில்லை.
لم ܢܠ

Page 29
N
நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தவரான திரு. கே. பி.ஹரன்
அவர்கள் பல காலம் வீரகேசரி பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்து அனுபவம் பெற்றவர். வீரகேசரி நிறுவனர் செட்டியாரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு ஆசிரியராக்கப்பட்டவர். செட்டியாருக்குப் பின்னர். அங்கு ஏற்பட்டிருந்த நிர்வாக சிக்கலின் காரணமாக பதவி விலகிய அவரை திரு கே. ஸி தங்கராஜா அவர்கள் யாழ்ப்பாணம் அழைத்து வந்து வாரமலராகவிருந்த ‘ஈழநாடு’ பத்திரிகையை நாளேடாக மாற்றி நடத்தும் படியான பொறுப்பினை அவரிடம் வழங்கினார். அதன் பிரகாரம் ‘ஈழநாடு’ நாளேடாக மக்கள் யாவரும் போற்றும் படியாக சிறப்புடன் நடைபெற்று வந்தது.
‘ஈழநாடு’ பத்தாவது ஆண்டின் நிறைவினை ஒட்டி 1968ம் ஆண்டு மிகப் பெரிய இலக்கியப் போட்டிகள் நடாத்தப்பட்டன. அப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டுவைபவ மொன்றில் பேசிய இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள், ‘ஈழநாடு இலக்கிய போட்டி நடாத்தினாலும் திரு ஹரனுக்கு "தமிழ் இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது" என்றொரு கருத்தைக் கூறினார். கூட்டத்துக்கு தலைமை வகித்த திரு.ஹரன் அவர்கள் பின்னர் அதற்கு விடையளித்த போது "திரு. கனகசெந்திநாதன் அவர்கள் கூறியது போன்று எனக்கு இலக்கியம் தெரியாதுதான், ஏன் தமிழ் கூடத் தெரியாத என்னை இந்தத் தமிழ்ப்பத்திரிகைக்கு ஆசிரியராக நியமித்திருப்பதானது 1 ஏதோ ஒரு சக்திதான் இதற்குக் காரணம். இறைவன் தான்
இதனைச் செய்கிறான்." என்றார்.
முகமன் பாராது எதனையும் மறைத்து வைக்காமல் வெளியிட்டுவிடுவது திரு. கனகசெந்திநாதன் அவர்களின் போக்கு. எதையும் இறைவன் தலையில் போட்டுவிடுவது திரு ஹரன் அவர்களின் போக்கு. தமிழ் சமய நூல்களைக் கற்றிருந்த அளவுக்கு தமிழ் இலக்கியம் குறிப்பாக ஈழத்து இலக்கியத்தில் திரு. ஹரனுக்கு அதிக பரிச்சியம் இருக்க வில்லை என்பது உண்மைதான்.
米。米 米 米
யாழ்ப்பாணத்தில் அப்பொழுது அரசியல் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகளை ‘ஈழநாடு உடனுக்குடன் சுடச்சுட பிரசுரித்தது. அதேசமயம் வெளிநாட்டுச் செய்திகளையும் கோட்டைவிடாமல் வானொலியைக் கேட்டு பிரசுரித்தோம். الصر
40

சத்தியாக்கிரகமும் ஈழநாடும்
சத்தியாக்கிரக செய்திகளைத் தமிழ் மக்கள் பேரார்வத்தோடு படித்தார்கள். வாரமலராகவிருந்து வாரம் இருமுறை என்று மாற்றப்பட்ட 'ஈழநாடு மக்கள் காட்டிய ஆர்வம் காரணமாக அன்றைய தேவையை ஒட்டி தினசரியானது. சில சமயங்களில் காலையில் ஒரு பதிப்பும் மாலையில் இன்னொரு பதிப்பும் கூட தினசரி வெளியிட வேண்டிய கட்டாயம் இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் ஆனந்தா அச்சக உரிமையாளர் திரு.வரதராசன் (வரதர்) அவர்கள் புதினம்' என்றொரு செய்திப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கியிருந்தார். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்ததாகவே அறிந்தேன். ஆனால் அதனைத் ದ್ವಿಗ್ಧಖ நடத்தாமல் சிறிதுகாலத்திலேயே அவர் நிறுத்தி
LL-ffT.
New என்ற சொல்லில் இருந்தே News என்ற சொல் பிறந்ததாக கூறப்படுவதுண்டு . அதாவது புதிய என்ற சொல்லில் இருந்து "புதினம்’ என்ற சொல்கிடைப்பது போல (What is New isNews"புதியது எதுவோ அதுவே புதினமாகின்றது என்பதாகும்.
இந்தப் புதினம் என்ற பெயரைக் கொண்டே ஒரு புதினப்பத்திரிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தமை கவனத்திற்குரியது. W−
சத்தியாக்கிரகத்தில் மக்கள் தினமும் திரள்திரளாகக் கலந்து கொண்டார்கள், நாட்டின் பல பகுதிகளிலிருந்து தமிழ் மக்களும் தலைவர்களும் வந்து சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்தார்கள் சத்தியாக்கிரக நிகழ்வுகளை அவ்வப்போது சென்று பார்த்து செய்திகளை விபரமாகவும் மக்கள் மனம்கவரும் வகையிலும் எழுதி வெளியிட்டு வந்தார். திரு. கோபாலரத்தினம். யாழ் கச்சேரியடியில் மிக விஸ்தாரமாக இடம்பெற்று வந்த சத்தியாக்கிரகத்தை சிலசமயங்களில் வேலைகள் முடிந்த பிறகு நானும் வேறு சில நண்பர்களும் போய்பார்த்து வருவதுண்டு.
இவ்வாறு சென்றிருந்த வேளையில் ஒருதினம் எனது பழைய ஆசிரியர் ஒருவரைக்கண்டேன். அவர் தமது \சமயப்பிரிவின் பேரால் சில துண்டுப்பிரசுரங்களுை)
4.

Page 30
(சத்தியாக்கிரகிகள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருந்தார்N
அந்தத்துண்டுப் பிரசுரங்களில் சிலவற்றை என்னிடம் கொடுத்து செய்தியாக்கி பிரசுரிக்கும்படி கேட்டுக்கொண்டார். காரியாலயம் திரும்பிய பின்னர் அந்தத் துண்டுப்பிரசுரங்கள் பற்றிய சுருக்கமான செய்தியொன்றை எழுதி பிரசுரத்துக்குக் கொடுத்துவிட்டு போய்விட்டேன். அச்செய்தி வெளியான தினம் காலையில் திரு.ஹரன் என்னை அழைத்து அச்செய்தி பற்றி விசாரித்தார்.
சத்தியாக்கிரகத்தின் போது சாதி சமய கட்சி வேறுபாடுகளின்றி சாரிசாரியாக மக்கள் வந்து கலந்து கொண்டிருந்தார்கள். திச்சட்டிகளுடன் ஊர்வலங்கள் வந்தன. பால் காவடிகள் வந்தன, தீவட்டி ஊர்வலங்களும் வந்ததாக நினைவு. அதேபோல் கவிதைகள் , கட்டுரைகள் கொண்ட சிறுநூல்களும் துண்டு பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அவ்வாறான ஒரு பிரசுரமாகவே அந்த ஆசிரியரின் பிரசுரத்தையும் நான் கருதினேன் அவைகளில் சமயப்பிரசாரம் இருந்ததா இல்லையா என்பது எனக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. அவைகளில் செய்தியின் தன்மை ஏதாகிலும் இருந்ததா என்பதைக் கவனித்து அந்த அளவுக்கு செய்தியாக்கியிருந்தேன் அவ்வளவுதான்.
இந்த நிகழ்வு என் மனத்தைக் குழப்பிவிட்டிருந்தது. மேலும் இரவு பகலென்று வேலை செய்ததில் உடல் தளர்வும், வயிற்றுக் கோளாறும் ஏற்பட்டு ஒரு தினம் மயக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில் கொழும்பிலிருந்து அவசரமாக ஓர் அழைப்பு வந்ததால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கு சென்றவன் திரும்பி வரவில்லை. அக்காலத்தில் இ.தொ. காங்கிரஸின் ஆதரவில் நடைபெற்று வந்த தொழிலாளர் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அனைத்துலக தொழிலாளர் நல ஸ்தாபனத்தின் பிரதிநிதி திரு. ஜே.வி. மொரின் என்பவருக்கு மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தேன். எனினும் பத்திரிகைத் துறை நோக்கியே மனம் ஒடிக் கொண்டிருந்தது. இக்காலத்தில் தினகரன் வாரமலரில் எனது சிறுகதைகள் பல மன்னிரண்" என்ற புனை பெயரில் வெளிவந்திருந்தன. "தடிப்பின் சாயல்", "அம்மாவின் ஆசை" , “solarar Qasapo graos,* saavanou * என்பன ஒரு சிலவாகும் . இதே காலத்தில் நான் எழுதிய இரண்டொரு நாடகங்களும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகின அவைகளில் தேயிலையின் கண்ணி என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. திரு. டொமினிக் ஜீவா அவர்களின் ാഴ്സു ஒரு சிறுகதை வெளிவந்தது. لم
42

Y- ༄༽
இந்தக் காலத்தில்தான் குணசேன நிறுவனத்தினர் தமிழ் பத்திரிகையொன்றையும் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள் . அப்பத்திரிகையில் சேர்வதற்கு முயற்சி GaFui uu6oTb என்று யோசித்துக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்த திரு கோபாலரத்தினத்துடன் ஒரு தினம் தொலை பேசியில் தொடர்பு கொள்ள நேர்ந்தது. அவர் யோசனை கூறியதன்பேரில் கொழும்பில் திரு.ஹரன் அவர்களிடம் சென்று அவரைச் சந்தித்தேன் . "ஈழநாடு" நிறுவனத்தில் தேவைக்குமேல் ஆட்கள் இருப்பதாகவும் தேவை ஏற்படின் தெரிவிப்பதாகவும் சொல்லி என்னை அனுப்பிவிட்டார் அவர். ஆனால் திரு.கே.ஸி. தங்கராஜா விடமிருந்து அழைப்பு வந்தது. அவரது இல்லத்தில் சென்று
அவரைப்பார்த்தேன் . நான்கேட்ட அளவிற்கு சம்பளம் தருவதாகவும் அங்கு இரவு வேலைக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் சொல்லி யாழ்ப்பாணம் செல்லும்படி
கூறினார் திரு. தங்கராஜா.
1966 ம் ஆண்டு மார்ச்மாதம் மீண்டும் ஈழநாடுபத்திரி கையில் சேர்ந்தேன். அப்பொழுது திரு கே. கணேசலிங்கம், திரு கே. ஜி. மகாதேவா, திரு.எம் . மாணிக்கம் ஆகியோர். தொடர்ந்து சேவையில் இருந்தார்கள். திரு.இராஜ் அரியரத்தினம் திரு டி. எம்.முருகையா முதலியவர்கள் சென்றுவிட்டதாக அறிந்தேன். திருவாளர்கள் எஸ்.கே. திருச்சிற்றம்பலமி, (பாமா) ராஜகோபால், திரு.கானமயில்நாதன். முதலியவர்கள். எனக்குப் புதியவர்களாய் இருந்தனர். இவர்களில் பலர் காலத்திற்குக் காலம் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றுவிட்டனர். கானமயில்நாதன் கொழும்பு தினபதி பத்திரிகைக்கும் திரு.மகாதேவா கண்டியில் செய்தி’ பத்திரிகைக்கும் பின்னர் திரு.ராஜகோபால் தினக ரனுக்கும் சென்றனர். திரு.கணேசலிங்கமும் புலவர் பூரணமும் ஆசிரியர்களாக பதவிபெற்று சென்றனர். திரு. திருச்சிற்றம்பலம் நிர்வாகப் பகுதிக்கு மாற்றம் பெற்று பணியாற்றி பின்னர் சங்கானையில் பலநோக்கு கூட்டுறவு நிறுவனத்தில் பதவி பெற்று அங்கு சென்றுவிட்டார். பிற்காலத்தில் ‘ஈழநாடு நிறுவனத்தின் பொது முகாமையாளராகவும் இவர் பணியாற்றினார்.
நான் இரண்டாம் முறையாக ‘ஈழநாடு வில் சேர்ந்த சிலநாட்களின் பின் திரு. ஹரன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். \தாம் இடமில்லையென்று சொல்லியிருக்க அவருக்கு முன்பே,
45

Page 31
(விட்டிருப்பாரோ அந்தகாலத்தில் திரு. ஹரன் அவர்கள்` கொழும்பில் சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் என்று போய் வந்து கொண்டிருந்தமையால் ஸ்தாபனத்தின் அன்றாட நடைமுறைக் கஷ்டங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் இப்படியான நியமனங்களும் அவருக்குத் தெரியாமலே நடந்திருக்கலாம். பொறுப்பாக ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க அவருக்குத் தெரியாமலே ஆட்களை எடுப்பதென்பது சம்பந்தப்பட்டவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நிலைமை யல்லவா? பிற்காலத்தில் ஆசிரியப்பகுதிக்கு பொறுப்பாக நான் நியமிக்கப்பட்டிருக்க எனக்குத்தெரியாமலே சிலர் நியமிக் கப்பட்ட சமயம் ஸ்னக்கு ஏற்பட்டிருந்த மனச்சங்கடங்களை உணர்ந்தபோதுதான் திரு.ஹரனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்கஷடத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எதுவானாலும் திரு.ஹரன், திரு.தங்கராஜாவின் தம்பியாரான LITisL. கே.ஸி.சண்முகரத்தினம் அவர்களிடம் இது பற்றிகூறியிருந்தார். அவரும் என்னை அழைத்து திரு. ஹரன் முன்னிலையிலேயே விசாரித்தார். திரு. தங்கராஜாதான் என்னை இங்கே அனுப்பியிருந்தார் என்பதை அறிந்தபின் திரு ஹரன் அமைதியானார். திரு.கோபாலரத்தினம் தான் தம் விருப்பம்போல் என்னை திரு.ஹரனுக்கு தெரியாமல் எடுத்திருந்தார் என்ற கருத்தும் ஒழிந்தது.
வாழ்வை உயர்த்தும்
"சுயமரியாதை, சுயஅறிவு, சுயகட்டுப்பாடு இவை மூன்றும் வாழ்க்கையை அதி உன்னத நிலைக்குக் கொண்டுபோய் விடக்கூடியவை"
- டென்னிசன்.

தனிப்பட்ட நபர்களைப் பாதிக்கும் செய்திகள்
நஆ தனிப்பட்ட நபர்களைப் பாதிக்கக்கூடிய செய்திகளை
மிகக்கவனமாக பத்திரிகையாளன் கையாள வேண்டும’ செய்திகளையும் கோட்டைவிடாமல் சட்டத்தின் பிடியிலும் சிக்கிக்கொள்ளாமல் செய்தியை எழுதுவது பத்திரிகை யாளனின்சாமர்த்தியம்.
இரண்டாம்முறை நான் ‘ஈழநாடு வில் சேர்ந்த பொழுது சில நண்பர்கள் அதை விரும்பவில்லையென்பது எனக்குத்தெரிந்திருந்தது நேராகவே அதை இரண்டொருவர் என்னிடம் கூறியுள்ளார்கள். மறைமுகமாகவும் சிலர் சில காரியங்களைச் செய்தார்கள். அவைகளை நான் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு இருக்க ஒரு தினம் முதல் பதிப்பில் பிரசுரமாயிருந்த செய்தியொன்றை எடுத்துவிட்டு இரண்டாம் பதிப்பில் வேறு செய்தியைப் போடும் படியான நிலைமையொன்று எனக்கு ஏற்பட்டிருந்தது. நான் அவ்வாறு செய்தது தவறு என்றும் பத்திரிகை விற்பனையைப் பாதிக்கும் செயல் என்றும் நிர்வாகம் என்னை விசாரித்தது. அச்செய்தியை அகற்றியதன் மூலம் பத்திரிகைக்கு ஏற்படவிருந்த அபகீர்த்தியைத் தவிர்த்தது மட்டுமன்றி அச்செய்தியால் ஓர்இளம் பெண்ணின் எதிர்கால வாழ்வு பாதிக்கப்படா மலிருக்கவும் உதவியுள்ளேன் என்று விளக்கம் அளித்தேன்.
ஒரு பாடசாலை மாணவி பலவந்தத்துக்குள்ளாக்கப் ’பட்டதான செய்தி அது. குறித்த சிறுமியின் பெயர், ஊர் மற்றும் விபரங்கள் எல்லாம் அச்செய்தியில் கொடுக்கப்பட்டிந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மட்டுமே அனுப்பப்பட்ட முதல் பதிப்பில் மட்டுமே அச்செய்தி வெளிவந்திருந்தது யாழ்ப்பாணத்திற்குரிய பதிப்பில் அது அகற்றப்பட்டு விட்டமையால் அது இடம்பெற்றிருக்கவில்லை. என்றாலும் அப்பெண்ணின் உறவினர்களுக்கு அச்செய்தி வெளிவந்திருந்த பிரதியொன்று கிடைத்திருந்தது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் ‘ஈழநாடு' மீது இழப்பீடுகேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். தங்கள் பிள்ளையின் பெயருக்கும் குடும்ப கெளரவத்துக்கும் பங்கம் விளைவித்து விட்டதாக வழக்கில் குற்றம்சாட்டியிருந்தார்கள். வழக்குக்கான அழைப்பாணை வந்தபோதுதான் ‘ஈழநாடு’ நிர்வாகம் விழித்தெழுந்தது. செய்தியை யார் போட்டவர், யார் எழுதியவர், யார் அனுப்பியவர் என்பதையெல்லாம் ஆராய்ந்த போது முதல் ار
45

Page 32
/ N பதிப்பில் மட்டுமே அது பிரசுரமாகியிருந்தமையும் இரண்டாம் பதிப்பில் அது நீக்கப்பட்டிருந்தமையும் வெளியாயிற்று அதனால் வழக்கின் தாக்கம் பெரிதாக இருக்கமாட்டாது என்பதும் புரிந்தது. சம்பந்தப்பட்ட நிருபரை விசாரித்தபோது அவர் அச்செய்தியை பொலிஸ் நிலையப் பதிவேட்டில் இருந்து பெற்றதாக அறிவித்தார். அப்படியான புகார் எதுவுமே பதியப்பட்டிருக்கவில்லையென்று பொலிஸ்தரப்பில் கூறப்பட்டி ருந்தது. எனவே குறித்த செய்தி வேண்டுமென்றே பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்ததாக விவாதிப்பதற்கு வழக்காளிகளுக்கு போதுமான நியாயம் கிடைத்திருந்தது. பத்திரிகையின் சார்பில் தோற்றிய வழக்கறிஞர்கள் குறித்த செய்தி கொழும்பு விளம்பரதாரர்களுக்கு மட்டுமே அனுப்புவதற்காக பிரசுரிக்கப் பட்டிருந்த ஒரு சில எண்ணிக்கைகளைக் கொண்ட முதல் பதிப்பில் மட்டுமே வெளியிடப்பட்டதென்றும் ஏனைய (மட்டக் களப்பு -யாழ்ப்பாணம்) இருபதிப்புகளிலும் வெளியிடப்பட வில்லையென்றும் வாதித்து வழக்கை சமாதானமாகத் தீர்த்துக் கொண்டதாக அறிந்தேன்.
இப்படியான செய்திகளைப் பிரசுரிக்கும்போது செய்தியாளர்கள் மிகக்கவனமாக இருப்பது அவசியம். செய்திக்குரியவரின் ஊர், பெயர் போன்ற விபரங்கள் வெளியிடப் படத்தான் வேண்டுமென்றால் விடயம் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்து பதிவாகும் வரை காத்திருப்பதே உத்தம LDIT(35LD.
இப்படியான ஒரு நிகழ்வு இடம்பெற்றால் பொலிஸ் விசாரணைகளை மட்டும் வைத்துக்கொண்டு பெயர் ஊர் முதலிய விபரங்களைப் பிரசுரிக்க எத்தனிப்பது சிக்கலில் மாட்டிவிடும். சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸ் மட்டத்திலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டுவிடுவார்கள். சிலவேளை பொலிஸ் பதிவேட்டில் இருப்பதை நீக்கச் செய்வதற்கான செல்வாக்குப் பெற்றவர்களும் இருப்பார்கள்.
இன்னொரு அம்சம் யாதெனில் இவ்வாறான பிரச்சனைக்குள்ளாகுபவர் ஓர் இளம் பெண்ணாயிருப்பின் அச்செய்தியை அவசரப்பட்டு பிரசுரிப்பதன்மூலம் குறித்த பெண்ணின் எதிர் காலத்தைப் பாதிப்பதாக அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் இது என்கருத்து. ஆனால் செய்திகளில் ஒளிவு மறைவே இருக்கக் கூடாது, செய்தி ஒன்று கிடைத்துவிட்டால் அதனை அப்படியே பிரசுரித்துவிடவேண்டும்
། མ་༠ip கூறுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி பிரசுரிக்கத்தான்الم 46

' * N வேண்டுமென்றால் அதனால் தனிப்பட்டவர்களுக்கு அல்லது சமூகத்துக்கு வரக்கூடிய தாக்கங்களை பத்திரிகையாளன் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பேன் நான். மேலும் இதனால் குறித்த பத்திரிகை சட்டப்பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொள்ளாத விதத்தில் செய்தியைக் கையாள்வதும் அவசியம்.
தனிமையில் இருக்கும் ஓர் இளம் பெண் ஒரு காமுகனால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். ஊர், பெயர் உட்பட முழுவிபரமும் கிடைத்து விடுகிறது. இதை அப்படியே பிரசுரிப்பதா இல்லையா.?
ஒரு குடும்பத்தின் கெளரவத்தைக் கெடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இப்டியான காரியங்களைத்திட்டமிட்டு செய்கிறவர்களும் சமூகத்தில் உண்டு. அப்படியான ஒரு சூழ்நிலையெனில் பத்திரிகையாளன் மனநீதியுடன் செயல்பட வேண்டும். கூடிய வரையில் தான் வெளியிடும் செய்தியின் மூலம் சமூக விஷமிகளின் உள்நோக்கம் நிறைவேறாமலும் அதே சமயம் தண்டனை பெறவேண்டிய குற்றவாளி சமூகக் கண்ணிலிருந்து தப்பிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். எதுவானாலும் குறித்த செய்தியின் மூலம் அவசியமில்லாமல் ஒரு குடும்பத்தின் கெளரவத்திற்கு அல்லது இளம்வயதினரின் எதிர்கால வாழ்விற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதனைப் பிரசுரிக்க முயலமுடியும்.
மேல்நாடுகளில் இது ஒன்றும் பிரச்னையான விடயமே அல்ல. அங்கு இம்மாதிரி விடயங்களையே தேடிப்பிடித்து பிரசுரிப்பதில் பத்திரிகைகளும் செய்தியாளர்களும் முண்டி யடித்துக்கொள்கிறார்கள். தனிப்பட்ட மனிதர்களைவிட பெரிய அரசியல், வர்த்தகப்புள்ளிகளின் வாழ்க்கை விவரங்களை தேடி பிரசுரிப்பது மட்டுமல்ல அச்செய்திகள் மூலம் பெரும் அரசியல் மாற்றங்களைக்கூட அவர்களால் செய்துவிட முடிகின்றது. பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையைப் படம்பிடித்து (செய்தியாக்கி) பெரும் பணம் சம்பாதிக்கும் பத்திரிகையாளர்கள் ஏராளமானபேர் அங்கு இருக்கிறார்கள் . காலஞ்சென்ற அமெரிக்க அதிபர் ஜோன் எட்ப் கென்னடி அவர்களின் மனைவி ஜக்குலின்கென்னடி மறுமணம் செய்து கொண்டு புதிய கணவர் ஒனாசிஸ் என்பவருடன் அந்தரங்கமான்தோரிடத்தில் தடாக மொன்றில் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்த போது அந்தத்தடாகத்துக்குள்ளேயே நீருக்குள் ஒளித்திருந்து படம் பிடித்து வெளியிட்ட பத்திரிகையாளர் பற்றி என்ன சொல்வது! ஆம், பத்திரிகைン
47

Page 33
(தந்திரம் அந்த அளவுக்கு அங்கு பேணப்படுகிறது என்றுதான்) சொல்ல வேண்டும். ஆனால் அந்த விதமான அளவுக்கு நம் நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் வேண்டுமா என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமே. என்றாலும் பொதுவிடயங்களில் கூட நேர்மையாகவும் 2) 60.56) Du IIT 856), Lib செய்திகளை வெளியிடுபவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் கோரப்பிடிக் குள்ளாவது ஒரு புறமிருக்க தன்னிச்சையான தண்டனை களுக்குள்ளாக நேர்வதும் துரதிஷ்டமாகும்.
* 3.8 3.8 38
பின்னணியில் தெரியும் யோகசுவாமிகளின் திருவுருவப்படத்தை வரைந்து வழங்கிய ஓவியர் "லங்காவுடன் அமரர் து. சீனிவாசகமும் நிர்வாக ஆசிரியர் அமரர் என். சபாரத்தினமும் காணப்படுகின்றனர். நிற்பவர்கள் பெண் ஊழியர்கள்.
الم. ܢܠ
48
 

தம்பர் கொடுத்த பயிற்சி
தி டு. ஹரன் அவர்கள் அடிக்கடி கொழும்புக்கு சென்று வந்ததால் அவர் இல்லாத நாட்களில் ஓய்வு பெற்ற மத்தியகல்லூரி அதிபர் திரு.ஏ.ஈ.தம்பர் அவர்கள் ஆசிரியர் பகுதிஆலோசகராக இருந்து வந்தார். உதவி ஆசிரியர்களுக்கு குறிப்புக்களைக் கொடுத்து ஆசிரிய தலையங்கம் எழுதுவதற்கு பழக்கினார் அவர். அந்த வகையில் அவருடன் கூடி பல தலையங்கங்களை நான் எழுதி பயிற்சி பெற்றேன். பிற்காலத்தில் திரு.என்.சப்ாரத்தினம் அவர்களுடன் சேர்ந்து யார் எழுதியது என்றே சொல்ல முடியாத அளவுக்கு என்னால் தலையங்கங்கள் தீட்டமுடிந்தமைக்கு திரு.தம்பர் கொடுத்த பயிற்சியே காரணமாகவிருந்தது.
அறுபதுகளின் பிற்பகுதியில் டாக்டர் கே.ஸி.சண்முக ரட்ணம் அவர்கள் காலமானதால் அரசாங்கத்துறையில் நிரந்தர செயலாளராகவிருந்து ஓய்வு பெற்றவரான திரு. எம் வைரமுத்து அவர்கள் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வந்தார். ஆனால் இவர் இடைநடுவில் விலக நேர்ந்ததால் ஓய்வு பெற்ற வைத்தீஸ்வராக் கல்லூரி ஆசிரியரான திரு.து. சீனிவா சகம் பொதுமுகாமையாளரானார்.
எழுபதுகளின் முற்பகுதியில் திரு.வி.எஸ்.துரைராஜா நிர்வாகத்தின் பணிப்பாளரானதையடுத்து பல பிரிவுகளிலும் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டன. பதில் ஆசிரியராகவும், செய்தி ஆசிரியராகவுமிருந்த திரு.கோபாலரத்தினம் பெரும் நெருக் கடிகளுக்குள்ளானார். திரு.கே.ஜி.மகாதேவா கண்டியிலிருந்து அழைக்கப்பட்டு செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இது சிறிது காலமே நீடித்தது. திரு.துரைராஜா நிர்வாகப் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து திரு. மகாதேவாவும் சென்றுவிட்டார். பழையடி திரு.கோபால ரத்தினம் செய்தி ஆசிரியரானார். இந்தக்கால கட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு விடயங்கள் சுவையானவை fào
இப்போது தேவையற்றவை எனஜிசிஜரேத
السسسسس حت کg ܢܠ

Page 34
திரு.எஸ்.எம்.கோபாலரத்தினம் பத்திரிகைத்துறையில் 25 ஆண்டுகள் பூர்த்தி செய்தபோது இடம்பெற்ற பாராட்டு நிகழ்வு. நடுவில் அமரர் து.சீனிவாசகம்.
நான் நெருங்கிப் பழகி புரிந்து கொண்ட பத்திரிகை யாளர்களில் திரு. ബൺ .6Tb. கோபாலரத்தினம் குறிப்பிடத்தக்கவர் பெரிய படிப்போ பட்டமோ அவருக்கு இருக்கவில்லைத்தானி. ஆனால் இதழாளர்களுக்கிருக்க வேண்டிய திறமைகள் தகுதிகள் யாவும் அவரிடமிருந்தன. பத்திரிகைத்துறைக்கலையானது இயற்கையாகவே சிலருக்கு அமைந்து விடுகின்றது என்றால் திரு. கோபாலரத்தினம் அவர்களில் ஒருவர் என்பேன்.
:k se se le
எழுதும் ஆற்றல் இறைவனின்
கருணையால் கிடைப்பது
எமர்சன்.
5面
 

தந்தி மொழியில் தலைப்புக்கள்
3 செய்திப்பத்திரிகைகளில் செய்திகளுக்கான தலைப்புக்கள் தந்தி மொழியிலேயே அமைக்கப்படுகின்றன இது சர்வதேசமட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று
ogFu தி களுக்கு தலைப்பு போடுவதிலுள்ள சிரமம் பற்றி முன் பக்கங்களில் சிலவற்றைக் கூறியுள்ளேன். அதுபற்றி இன்னும் சில குறிப்புக்களை இங்கே எழுதுவது அவசியம் என்று கருதுகின்றேன்.
முன்னர் பெல்ஜியம் கொங்கோ என்றழைக்கப்பட்டு பின்னர் சாயிரே(ZAIRE)என பெயர் மாற்றப்பட்ட நாட்டில் புகழ் மிக்க பிரதமராகவிருந்து பின்னர் ராணுவப்புரட்சியின் காரணமாகப் படுகொலை செய்யப்பட்ட பெற்றிஸ்லுமும்பா என்பவரின் கொலை பற்றிய செய்தியினை குறித்த நாள் காலையில் வானொலியில் கேட்டு எழுதி "லுமும்பா கதை முடிந்தது.” எனத் தலைப்பிட்டு கொடுத்துவிட்டுப் போயிருந்தேன் நான். ஆனால் அடுத்தநாள் காலையில் பார்த்தபோது "லுமும்பா படுகொலை” என பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
லுமும்பா பற்றிய செய்திகள் பல நாட்களாக பத்திரிகைகளில் அடிபட்டு வந்தமையால், லுமும்பாவின் கதை இனி வராது என்பது போல் சாரப்பட நான் தலைப்புப் போட்டிருந்தேன். ஆனால் செய்தி ஆசிரியர் அதைமாற்றி லுமும்பா படுகொலை' என போட்டிருந்தார்.
இரண்டு தலைப்புக்களையும் வைத்து நான் சீர் தூக்கிப் பார்த்தேன். இரண்டாவதில் இருந்த பரபரப்பும் விறுவிறுப்பும் முன்னையதில் இருக்கவில்லை என்பது புரிந்தது. ஒரு விடுதலை வீரனை, தன் நாட்டின் மக்கள் மனம் கவர்ந்த, அவர்களின் உரிமைக்காக போராடிய ஒரு மனிதனை சதிகாரர்கள் படுகொலை செய்து விட்டார்கள் என்று கூறும் போது வாசகர்களுக்கு ஒரு புதிய தகவல் கொடுக்கப்படுகின்றது. அதனை வாசித்த மாத்திரத்தில் வாசகன் பரபரப்படைகின்றான். இந்தக் கொலையைச் செய்தவர்கள் யார், எவ்வாறுリ
|-

Page 35
(செய்தார்கள் என்பதையெல்லாம் அறிவதற்காக அச்செய்தியை) முழுமையாக படிக்கத் தூண்டப்படுகின்றான் . எனவே நான் போட்டிருந்த தலைப்பு வாசகனை சோர்வு கொள்ளவே செய்திருக்கும் என்பது புலனாயிற்று.
“ஒரு செய்திக்குத் தலைப்புப் போடுவதில் என்ன பிரமாதம் இருக்கிறது. செய்தியை வாசித்துவிட்டு உள்ளே இருக்கும் விடயத்தை மேலே எழுதிவிடுவதுதானே?" என்று ஒரு பெரியவர் கூறியதைக் கேட்டிருக்கிறேன். நிருபர் ஒருவர் அவர் அனுப்பும் செய்தியைத் தமிழில் முறையாக எழுதியிருப்பாராகில் அதனை வாசித்துவிட்டு உள்ளே இருப்பதை எடுத்துத் தலைப்பாக போட்டு விடுவதில்க்கூட சிரமம் இருப்பதுண்டு. ஏனென்றால். செய்தியின் தரம் , தன்மை என்பவைகளை வைத்துக்கொண்டு எந்தப்பத்தியில் எந்தப்பக்கத்தில் , எந்த அமைப்பில் எத்தனை புள்ளியில் என்பதையெல்லாம் கூட பத்தரிகையாளன் யோசிக்க வேண்டியிருக்கும்.
இதில் இன்னொருவிடயத்தையும் பார்க்கவேண்டும். செய்திக்கான தலைப்பினை உருவாக்கும்போது அந்தச் செய்தியின் முக்கிய அம்சம் என்ன என்பதையே கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த முக்கிய அம்சத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே தலைப்பும் அமைய வேண்டும் . அவ்வாறு தலைப்பை உருவாக்கும் போது அதனை எத்தனை பத்தியில்(column) போடுவது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றாற்போல் புள்ளிகள் (points) குறிக்க வேண்டும். பொதுவாக 12, 14, 18, 24, 36, 48, 72 ஆகிய புள்ளி களே தலைப்புக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக, விடயத்தின் உள்ளே இருப்பதைத் தூக்கி மேலே போட்டுவிட்டால் தலைப்பாக அமைந்துவிடும் என்று கருதுவது தவறாகும்.
மேலும், இங்கே நான் குறிப்பிடும் செய்தித் தலைப்புக்களை பத்திரிகையாளர்கள் தமக்கே உரித்தான ஒரு பாணியில் அமைக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தப்பாணி அல்லது முறையானது சர்வதேசமட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த முறைக்கு (Telegraphic language)"தந்தி மொழி" என்பது பெயர். ஒருவருக்கு தந்தி அனுப்பும் போது எவ்வளவு சுருக்கமாகவும் அதே சமயம் அதைப் பெறுபவர். விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் அனுப்பப் படுகின்றதோ அவ்விதமாகவே பத்திரிகைச் செய்தித்தலைப் \ழுக்ளும் அமைக்கப்படுகின்றன. . لر

ஒரு விபத்து நிகழ்ந்து விடுகிறது. பாதுகாப்பற்ற இரயில்வே கடவையில் பிரயாணிகள் பஸ்மீது ரயில் வண்டி மோதியதில் சுமார் 20 பேர் மரணமாகிவிடுகிறார்கள். இன்னும் 20 பேருக்கு காயம். E(660). Dust 858 காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
இந்தச் செய்தியை எழுதும் பத்திரியாளனுக்குவிபத்தில் மரணமானார்களின் எண்ணிக்கையே பிரதானமாக கருத்தில் படும் . எனவே அவன், “பிரயாணிகள் பஸ் மீது இரயில் மோதியதால் 20 பேர் மரணமானாவர்கள் " என்று நீண்ட வசனமொன்றை தலைப்பாகப் பயன்படுத்தமாட்டான். இதில் ஏறத்தாழ 38 எழுத்துக்கள் இருக்கின்றன. செய்தியின் முக்கியத்துவம் கருதி முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாகப் போடுவதானால் இது மிகச்சிறிய எழுத்துக்களிலேயே அமையும் . எனவே அவன் 72 புள்ளிகளில் அதனைப் பிரசுரிப்பதற்காக சொற்களையும் எழுத்துக்களையும் குறைக்க யோசிப்பான். 72 புள்ளிகளின் அளவில் தனது பத்திரிகையின் பக்கத்துக்கு எத்தனை எழுத்துக்கள் தேவைப்படும் என்பது அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். எனவே தந்திமொழியின் அடிப்படையில் இரயில் - பஸ் மோதல். 20 பேர். மரணம் ' என்று தனது தலைப்பை போடுவதற்கு அவன் தீர்மானிக்கக் கூடும். இதிலும்கூட எழுத்துக்கள் பக்க அளவுக்கு அடங்காதுவிடின் இரயில்' என்பதில் "இ" எழுத்தைக் குறைப்பான். அல்லது மரணம்' என்பதை 'பலி' என்று மாற்றுவான். இதில் சொல் சிக்கனம் மட்டுமல்ல எழுத்து சிக்கனமும் தேவைப்படுவதை கவனிக்கலாம்.
பத்திரிகைத்துறை நவீனகணனி தொழில் நுட்ப முறைகளுக்கு உள்ளாகி முன்னேறி வருவதனால் நான் இங்கு குறிப்பிட்டுள்ள தலைப்பு அமைப்பு முறைகளில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டுவருவது கண்கூடு. என்றாலும் சொற்களையும் எழுத்துக்களையும் குறைப்பதின் மூலம் தலைப்புக்களை பத்திரிகையின் பக்க அளவுக்கு ஏற்றாற் போல பெரிய அளவில் போடவேண்டும் என்ற ஆர்வம் பத்திரிகையாளனிடம் குறைந்துவிடாது.
米 事 本 米
दु

Page 36
/ N
பத்திரிகையின்செல்வாக்கைவெளிப்படுத்தும் அம்சம்
S ஒரு பத்திரிகையின் விற்பனையை வைத்துக்கொண்டு அதன் செல்வாக்கை அளக்க முடியாது. சமூக நன்மை கருதி அது மேற்கொள்ளும் செயற்பாடுகளே அதன் செல் வாக்கை வெளிப்படுத்தும்.
படுத்தித்துறையில் நடைபெற்ற ஒரு அரசியல் கட்சியின் மகாந்ாட்டைப் பார்ப்பதற்கு நானும் திரு. கோபாலரத்தினமும் போயிருந்தோம். அன்றைய ‘ஈழநாடு பத்திரிகையில் அந்த மகா நாடு பற்றிய செய்திகளே பெரும்பாலும் இடம்பெற்றிருந்தன. ஆசிரிய தலையங்கம் கூட அந்த மகாநாடு பற்றியதாகவே இருந்தது. ஆனால் முதல் பக்கத் தலைப்பில் ஓர் எழுத்து பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. செய்தியின் உள்ளடக்கத்தில் எதுவித தவறும் இருக்க வில்லை. அச்செய்தியை முழுமையாகப் படித்தவர் எவரும் தலைப்பில் அச்சுப்பிழை (ஒப்பு நோக்காளர் கவலையினமாக விட்டது.) ஏற்பட்டிருந்ததை புரிந்து கொண்டிருப்பார். ஆனால்
கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ‘ஈழநாடு வேண்டுமென்றே குறித்த பிழையை விட்டிருந்ததாகக் கற்பனையுடன் விளாசிக் கொண்டிருந்தார்கள். மேடையில்
ஒருவர் அன்றைய பத்திரிகையில் வந்திருந்த செய்திகளை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தார் மேற்படி செய்தியை வாசித்து தலைப்பில் ஏற்பட்டிருந்த தவறினைச் சுட்டிக்காட்டியபோது கூட்டத்தில் ஆரவாரம் ஏற்பட்டது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவர்கள் உரத்துக்கத்தினார்கள்.
"ஈழநாட்டில் 'கோபு என்று ஒருத்தன் இருக்கிறானாம் அவன்தான் இதெல்லாம் செய்கிறவன், அவனைத்து லைத்தால்தான் சரிவரும் ” என்று ஒருவர் கூறினார். "கோபு என்பக்கமாகத்திரும்பி புன்னகை செய்தார். நானும் பதிலுக்கு முறுவலித்தேன். நாங்கள் யார் என்பது அவர்கள் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நொறுக்கி இருப்பார்கள். கூட்டத்தில் சலசலப்பு அதிகரித்தது நாங்கள் மெதுவாக எழுந்து நழுவுவதற்கு ஆயத்தமானோமி. அந்த சமயம் பார்த்து ‘ஈழநாடு’ நிருபரும் குறித்த கட்சியின் ஆதரவாளருமான ஒருவர் எங்களைக் கண்டுவிட்டு அந்த இடத்துக்கு வந்தார். அதனால் நாங்கள் ‘ஈழநாடு வில் இருந்து வந்தவர்கள் என்பதைக் கூட்டத்தினர் புரிந்து கொள்ளவும்)
54

வாய்ப்பு உருவாகி விட்டிருந்தது. நல்லகாலம் மகாநாட்டுதி தலைவர் எழுந்து பேசலானார். ‘ஈழநாடு மகாநாடு பற்றி pob6)Ulqujra(36). செய்திகள் வெளியிட்டிருந்தது. என்றும் தலைப்பில் ஏற்பட்டிருந்த பிழை தவறுதலாக ஏற்பட்டிருந்த அச்சுப்பிழைதான் என்றும் அவர் விளக்கியதன் பின்னர்தான் கூட்டம் அமைதியடைந்தது.
பல கட்சிகள் செயல்படும் நாடுகளில் நடுநிலை பத்திரிகைகளின் பணியானது மிக சிக்கலாகவே தென்படுகின்றது. மக்கள் ஆதரவை அதிகமாகப் பெற்றுள்ள கட்சிகள் தமது செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றன. இதனால் தமது செயற்பாடுகள் மக்கள் நலனுக்கு மாறாக விருந்தாலும் அதனை விமர்சிப்பதை அக்கட்சிகள் விரும்புவதில்லை. மேலும் தம் ஆதரவாளர்களை அப்படியான பத்திரிகைகளை வாங்க வேண்டாமென்றும் வற்புறுத்துகின்றன. -
இந்த நிலைமை மேல் நாடுகளில் இல்லை. அங்கு மக்கள் ஜனநாயக பண்புகளில் ஊறிப்போய் இருக்கிறார்கள். அதனால் அங்கு மாற்றுக்கருத்துக்களை அவர்கள் அப்படியே ஒதுக்கித்தள்ளிவிடுவதில்லை. எந்தப்பத்திரிகை எந்தக் கட்சியைச் சார்ந்து நிற்கிறது என்பதைவிட அப்பத்திரிகை வெளிவிடும் கருத்துக்கள் எந்த அளவுக்கு நியாயமானவை நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுள்ளவை என்பதையே கவனிக்கிறார்கள்.
"நீங்கள் எந்தக் கட்சி பத்திரிகையை வாங்கிப் படிக்கிறீர்கள்?" என்று பிரபல நாடக ஆசிரியர் காலஞ்சென்ற பெர்னாட்ஷாவிடம் கேட்ட போது "நான் விரும்பும் கட்சி பத்திரிகையைவிட எதிர்கருத்து பத்திரிகைகளையே அதிகம் படிக்கிறேன். அது என் கருத்துக்களை தற்காத்து கொள்வதற்கு உதவுகிறது." என்று விடை பகர்ந்தாராம்.
அதிகம் விற்பனை இல்லாத பத்திரிகை கருத்துச் செல்வாக்கை இழந்து விடும் நிலை உருவாகும். செல்வாக்கு இல்லாத பத்திரிகையின் கருத்துக்கள் செல்லா காசாகிவிடும் . அதன் கருத்துக்கு மதிப்பு இருக்காது. இப்படியான நிலைமை உருவாகாமல் தடுத்துக் கொள்ள நம்நாட்டில் நடுநிலை பத்திரிகைகள் பெரும் எத்தனங்கள் புரிய நேர்கிறது.
என்றாலும் ஒரு பத்திரிகையின் விற்பனையை வைத்துக்
கொண்டு அதன் செல்வாக்கை அளக்கலாம் என்பதில் கருத்து
வேறுபாட்டுக்கு இடமுண்டு. குறித்த பத்திரிகையின் பொது
\நோக்கு, சமூக நன்மை கருதி அது மேற்கொள்ளும்) 55

Page 37
நடவடிக்கைகள் போன்றவைதான் அதன் செல்வாக்கிை உறுதிப்படுத்தும் அம்சங்களாம்.
ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் ஒரு மஞ்சள் பத்திரிகையையும் ஒரு சில ஆயிரமே விற்பனையாகும். ஒரு நடுநிலை பத்திரிகையையும் எடுத்துக்கொண்டு பார்த்தால் நிச்சயமாக இரண்டாமிடத்தில் இருக்கும் பத்திரிகையே செல்வாக்கு மிக்கதாயிருக்கக் காணலாம்.
பத்திரிகையின் செல்வாக்கை எது உறுதிப்படுத்துகிறது என்பதை எச்.வை.ஷாரதாபிரசாத் எனும் இந்திய பத்திரிகை கத்துறை நிபுணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒரு பத்திரிகையின் அபரிமிதமான விற்பனையைக் காட்டிலும் அதன் நன் நோக்கமும் நம்பகத்தன்மையும், நேர்மையுமே அதன் செல்வாக்கை உறுதிப்படுத்தும்.”
se le se se
நன்மை
"நகரங்களின் வளர்ச்சியை தொடர்ந்த நாடுகளும் தேசியங்களும் உருவாகலாயின. ஒரு நாட்டில் அருகருகே வாழ்ந்த மக்கள் இயற்கையாகவே ஒருவரை ஒருவர் சிறப்பாகப் புரிந்தகொள்ளலாயினர். ஏனைய நாடுகளில் வாழ்பவர்களை விட தாங்கள் உயர்வானவர்கள் என இவர்கள் நினைக்கலாயினர், எனவே ஏனையவர்களுடன் இவர்கள் முட்டாள்தனமாக மோதிக் கொள்ளத்தொடங்கினர். இவ்வாறு போரிடுவதும் கொலை செய்வதம் மனிதர்கள் செய்யக்கூடிய மிகவும் கீழ்த்தரமான காரியம் என்பதை அவர்கள் அன்று உணர்ந்திருக்கவில்லை, இன்றும்கூட மக்களால் உணரப்படவில்லை இத எவருக்குமே நன்மை செய்வதில்லை
-ஜவஹர்லால் நேரு- (மகளுக்கோர் கடிதம்)

/ ༄༽
தமிழ் மக்களின் கருத்து வெளிப்பாட்டுக்குக் களம்
ஆ தமிழ் மக்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு தமிழ்ப் பகுதியிலிருந்தே பத்திரிகைகள் வெளிவரவேண்டும் என்பது அமரர் கே. சி. தங்கராஜாவின் விருப்பமாகவிருத்தது.
தி முற்.கே.பி.ஹரன் சுகவீனம் காரணமாக ஓய்வுபெற விரும்பியதனால் ஒய்வுபெற்ற முன்னாள் இந்துக்கல்லூரி அதிபர் திரு.என்.சபாரத்தினம் அந்த இடத்துக்கு நியமிக்கப் பட்டார்.
பத்திரிகையின் அன்றாட செயற்பாடுகளை பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் நடத்திச் செல்லக்கூடியதாய் இருக்க மேல்மட்டங்களில் அரசாங்கத்துறையிலிருந்தும் கல்வித் துறையிலிருந்தும். ஒய்வு பெற்றவர்களை நியமிப்பது என்பது திரு.தங்கராஜாவின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதன் சரிபிழை பற்றி நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.
இந்த நிலையில் பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர்சபையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் ஆசிரியர் பகுதியிலும் மீண்டும் மாற்றங்கள் ஏற்பட்டன. திரு. என்.சபாரத்தினம் தாமே நின்றுவிட்டார். திரு கோபாலரத்தினம் முன்போலவே ஆசிரியராக செயல்படலானார். திரு. கே. ஜி மகாதேவா மீண்டும் வந்து சேர்ந்தார்.
இந்நிலையும் வெகுகாலம் நீடிக்கவில்லை. திரு.என். சபாரத்தினம் மீளவும் அழைக்கப்பட்டார். திரு.தங்கராஜா நிர்வாகத்தைத் தாமேபொறுப்பில் எடுத்துக்கொண்டுவிட்டதால் அவரது மருகள் திரு.சிவானந்தனின் செல்வாக்கு மீண்டும் ஓங்கியது. இதற்கிடையில் திரு.கோபாலரத்தினம் சொந்த காரணங்களின் நிமித்தம் பத்திரிகையிலிருந்து விலகிக் கொண்டார். இதன் பேரில் பதில் ஆசிரியராக என்னையும் செய்தி ஆசிரியராக திரு.மகாதேவாவையும் நியமித்தார் திரு. தங்கராஜா.
ஈழநாடு ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கான காரணங்களை விளக்கி முதல்பத்திரிகையிலேயே திரு.தங்கராஜா எழுதியி Uருந்தார். தமிழ்மக்களின் கருத்து வெளிப்பாட்டிற்கும், ಆಊಹ್ರ
57

Page 38
(பொருளாதார பண்பாட்டு மேம்பாட்டிற்கும் பணியாற்றக்Y கூடியதாக யாழ்ப்பாணத்திலிருந்தே பத்திரிகை வெளிவருவது அவசியம் என்று அவர் கருதியிருந்தார். இதே போல் கிழக்கிலங் கையிலும் மலையகத்திலும் பத்திரிகைகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பது அவரது விருப்பமாகவிருந்தது. பத்திரிகையைப்பயன்படுத்தி பெரும்பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ, பத்திரிகையின் செல்வாக்கைப் பயன்படுத்தி பதவிகளைப் பெறவேண்டும் என்பதோ, அவரது நோக்கமாக இருக்கவில்லை. தமிழ் மக்களும் அவர்களின் மேம்பாடுமே அவரது எண்ணமாக இருந்து வந்தது மேலும் சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளை அவர் கொஞ்சமும் கருத்தில் எடுக்கவில்லை.
te ze ze ze
ஆங்கில் மொழியின் பண்ைபு
தனக்கு எது அந்நியமோ அதைக்குறிக்கும் சொல்லினை தனக்கே உரிய முறையில் மாற்றி தனதாக்கிக் கொள்ளும் பண்பு ஆங்கில மொழிக்குண்டு இன்று ஆங்கிலம் உலக மொழியாக வளர்ந்துள்ளமைக்கு இந்தப்பண்பும் ஒருகாரணம் என்க. டகத்துறையில் சர்வதேச ஒத்துழைப்பு
ஊடகத்துறையில் தொழில்நுட்ப ரீதியிலான அநுபவங்களையும், கருவிகளையும் பகர்ந்து கொள்வதானது வரவேற்க்கூடியதே. வேறொவரின் வெற்றிதோல்விகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி களைத் தயாரித்தல் போன்ற திறமைகள் நாட்டின் விசேஷ தேவைக்கேற்ப உள்நாட்டிலேயே வளர்க் கப்படல் வேண்டும். .
சர்வதேச ஒத்துழைப்பானது மக்களை அவர்களின் பாரம்பரியங்கள் மற்றும் மூலவேர்களிலிருந்து பிரித்துவிடாமல் அவர்களின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் பொருத்த மானதாக இருக்கக்கூடியவற்றை கூட்டுச்செயற் பாட்டின் மூலம் கண்டுபிடிக்கும் தன்மையதாய் அமைதல் வேண்டும்"
எச். வை. வடிாரதாபிரசாதி
لم ܢܠ

: :
பிற்காலத்தில் அமரர் கே. ஸி. தங்கராஜாவின் ஒரு தோற்றம்.
இளைஞராகவிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகத் துடிப்போடு செயல்பட்ட வாலிப காங்கிரஸ்(youth CongreSS) என்ற அரசியல் அமைப்பும் அவ்வமைப்பின் முக்கிய பிரமுகர்களின் நட்பும் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகின்றது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில்பெரும் மதிப்போடு இயங்கி வந்த "கலாநிலையம்” என்ற பண்பாட்டு அமைப்பில் இவருக்கு நெருங்கிய தொடர்பும் ஈடுபாடும் இருந்துள்ளது. கலைப்புலவர் கே. நவரட்ணம். எஸ். அம்பிகைபாகன், ரி.சீனிவாசகம் கே.குமாரவேலு, என்.பத்மநாதன், எம்.கதிரவேலு, ஏ.ஈ.தம்பர், கே.ஸி.தங்கராஜா ஆகியவர்கள் அக்காலத்தில் “கலாநிலைய நண்பர்கள்” என அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.
எழுபதுகளின் முற்பகுதியில் ‘ஈழநாடு’ பத்திரிகையின் அச்சு எழுத்துகள் யாவும் மிக மோசமாகத் தேய்ந்து போய் பத்திரிகை வாசிக்கவும் முடியாத நிலையடைந்திருந்த வேளையில் நான் கொழும்பில் இருந்தேன். பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதா இல்லையா என்பது பற்றி அவர் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார். ஒருதினம் சில நண்பர்களுடன் இதுபற்றி அளவளாவிக் கொண்டிருந்த திரு. குங்கராஜா என்னை அழைத்து அவர்கள் முன்னிலையில்
59

Page 39
("பேப்பர் எப்படி இருக்கிறது" என்று வினவினார், "எழுத்துகள் எல்லாம் படுமோசமாகத் தேய்ந்து போய் படிக்கவே முடியாமல்
இருந்த போதிலும் சுமார். நாலாயிரம் மக்கள் தொடர்ந்தும் பேப்பரை வாங்கிப் படித்து வருகிறார்கள்" என்று நான் Jing(360T6it. gig. 55J figs, & GL6GT, "that's enough, well continue the paper, அது போதும் நாம் தொடர்ந்து பத்திரிகையை நடத்துவோம். என்றார்.
தரக்குறைவான விடயங்கள், படங்கள் முதலியவை ‘ஈழநாடு’ பத்திரிகையில் வெளிவருவதை திரு. தங்கராஜா விரும்பவில்லை. அனுமதித்ததுமில்லை வருமானம் குறையினும் தரக்குறைவான விளம்பரங்களை தவிர்க்கும்படி அவர் பணித்தார். துரையப்பா, விளையாட்டரங்கில் நடைபெற்ற களியாட்ட மொன்றில் 'காபறே நடனம் ஒன்று நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நடனத்தை ஆடவிருந்த பெண்ணின் அரைகுறை ஆடையுடனான விளம்பரப்படமொன்று ‘ஈழநாடு முதல் பதிப்பில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. அவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் இருந்த தங்கராஜா அவர்கள் உடனடியாகவே அவ்விளம் பரத்தை அகற்றும்படி பணித்தமை நினைவுக்குவருகிறது." தமிழர் பிரதேசத்தில் இருந்து வரும் பத்திரிகை தமிழ் பண்பாட்டுக்கு முரணான விடயங்களைப் பிரசுரிக்கலாகாது. பண்பாட்டு, விழுமியங்களை தொடர்ந்தும் வளர்த்து பேண வேண்டும் அதற்கு தமிழ் பத்திரிகைகள் உதவவேண்டும்" என்று அவர் விரும்பினார்.
米 米 米 米
Ai nidi
நீர், காற்று, உடற்பயிற்சி ஓய்வு, உணவு ஆகிய ஆறும் சிறந்த வைத்தியர்கள், முறையாக அணுகினால் அவர்கள் கட்டன நல்லாரோக்கியத்திற்கு வழிசெய்வார்கள் -
=சர்சைள் சஞ்சிகை
5

N ujisansasfld silsnúuyfissí
இபத்திரிகைகளின் நீடித்த வாழ்வுக்கு விளம்பரங்கள் உதவுகின்றன. வாசிப்பும் விற்பனையும் அதிகரிக்கும் போது விளம்பரங்களும் அதிகரிக்கின்றன.
ஒரு செய்திப்பத்திரிகையானது வெற்றிகரமாக நடைபெற வேண்டுமானால் அதற்கு விளம்பரங்கள் மிக அவசியம் பொதுவில் செய்தி பத்திரிகைகள் விற்பனையின் மூலம் அடையும் வருமானத்தைவிட விளம்பரங்கள் மூலமே பெரும் இலாபத்தை ஈட்டுகின்றன. ஒரு பத்திரிகையின் விற்பனை அதிகரிப்பையும் சகல இடங்களிலும் அது மக்கள் வாசிப்புக்கு கிடைப்பதையும் பொறுத்தே அதற்கு விளம்பரங்கள் வந்து சேரும் விடயம் தங்கியிருக்கும்
"Advertisement" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளம்பரம் என்ற சொல்லுக்கு அகராதியில் பின்வரும் விளக்கம் தரப்பட்டுள்ளது. “விற்பனைக்குரிய அல்லது பிறர்க்குத் தேவைப்படுகின்ற பொருள்கள் பற்றி பொதுமக்கள் காணக்கூடியதாக பத்திரிகைகளில் , அல்லது ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் வெளியிடப்படுகின்ற. செய்தி அறிவித்தல்களாகும்"
செய்திகளைப் போலவே விளம்பரங்களையும்கூட இருதலைப்புக்களின் கீழ் வகுத்து அமைக்கலாம்.
ஒன்று- பொது விளம்பரங்கள்
இரண்டு;- தனிப்பட்ட விளம்பரங்கள்
முன்னையது வாசகர்கள் அதாவது பொதுமக்கள்
அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் பிரசுரிக்கப்படுவதாகும். பின்னையது தனிப்பட்ட ஒருவர், அல்லது சிலருக்காக மட்டும் பிரசுரிக்கப்படுவதாம் முன்னையதை தனிப்பட்டவர்கள் வாசிக்கக்கூடாதென்றோ பின்னையதை பொதுமக்கள் வாசிக்கக்கூடா தென்றோ வரையறை ஏதும் இல்லை.
V -ܝܠ
5

Page 40
/ ஒரு கார் தயாரிக்கும் நிறுவனம் விளம்பரம் செய்கின்றது என்று வைத்துக்கொள்வோம். தங்கள் காரைப்பற்றி ஒரு தனிப்பட்ட நபர் மாத்திரம் அல்லது தனிப்பட்ட குழுவினர் மாத்திரம் அறிய வேண்டும் என்று அவர்கள் கருதமாட்டார்கள், பொதுமக்கள் அனைவரும் தமது காரைப்பற்றியும் தங்கள் நிறுவனம் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையிலேயே அவர்களின் அந்த விளம்பரம் அமைந்திருக்கும் எனவே இதனை நாம் பொது விளம்பரம் என்று கொள்ளலாம்.
தனிப்பட்ட நபர்கள், அல்லது குழுக்கள் மட்டும் தெரிந்து கொள்ளவேண்டுமென்று வெளியிடப்படும் விளம்பரங்கள் பெரும்பாலும் (classified) சிறுவிளம்பரங்களாகவே வரும். காணாமல் போனவை , கண்டெடுக்கப்பட்டவை பொருள் விற்பனைக்கு , தேவைகள், வீடு விற்பனைக்கு, வீடு வாடகைக்கு, தங்கும் வசதி, வேலைவாய்ப்புக்கள் போன்றவை இவைகளில் இடம் பெறக்காணலாம்.
பத்திரிகைகளில் விளம்பரங்கள் இடம் பெறுவதனால் மூன்று வெவ்வேறு தரப்பினர் நேரடியாகப் பயனடைகிறார்கள் மறைமுகமாகப் பயனடையவர்கள் அனேகள் உண்டு. முதல் மூன்று தரப்பினரும் வருமாறு:-
முதலாமவர்:- விளம்பரம் செய்பவர்- தம்மிடமுள்ள பொருளொ ன்றை அது தேவைப்படும் இன்னொருவருக்கு விற்பதற்கு விளம்பரம் உதவுகிறது. அதன் மூலம் இவர் பயனடைகின்றார்.
இரண்டாமவர்:- விளம்பரத்தைப் பார்த்து பொருளை வாங்குபவர் - தமக்குத் தேவையான ஒரு பொருளை வாங்குவதற்கு அது எங்கே கிடைக்கும் என்று தேடித்திரியாமல், விளம்பரத்தில் காணப்படும் இடத்திற்கு நேரே சென்று வசதியாக அப்பொருளைப் பெற்றுக்கொள்வதின் மூலம் இவர் பயனடைகிறார்.
முன்றாமவர்: - விளம்பரத்தைப் பிரசுரிக்கும் நிறுவனம். குறித்த விளம்பரத்தை வெளியிட்டு உதவுதற்காகப் பெற்றுக்கொள்ளப்படும் கட்டணத்தின் மூலம் பத்திரிகை நிறுவனம் பயனடைகின்றது.
الم.  ܼܲܢܠ
62

/ N செய்திகள் என்றாலும் விளம்பரங்கள் என்றாலும் புதிய புதிய தகவல்களைத்தான் அவை எமக்குத் தருகின்றன. ஆனால் ஒரு செய்தியானது ஒரு முறை மட்டுமே வெளியாகும், இன்னொரு தடவையும் அதே செய்தி வெளியிடப்படுமானால் அது பழைய செய்தியென்றாகிவிடும், என்றாலும் குறித்த செய்தி தொடர்பாக ஏற்படும் முன்னேற்றம் அல்லது விரிவாக்கம் புதிய செய்தியாக வழங்கப்படலாம். உதாரணமாக, S)(b விமானம் கடத்தப்பட்டுவிட்டது, யாரால்? எவ்வாறு? எங்கே என்பதெல்லாம் தெரியாமலிருக்கலாம். என்றாலும் விமானம் கடத்தப்பட்டது பற்றிய செய்தி அன்று (அல்லது அந்த நேரத்தில்) வெளிவரும் பத்திரிகையில் இடம்பெறவேண்டும். அது பற்றி கிடைக்கும் பிந்திய விபரங்கள் அடுத்தநாள் (அல்லது அடுத்த பதிப்பில்) வெளியிடப்பட வேண்டும். இம்மாதிரியான செய்தியின் தன்மை நிமிடத்துக்கு நிமிடம் வளர்ந்துகொண்டே போகக்கூடும். அதற்கேற்ப செய்தியாளன் அச்செய்தியின். மிகப்பிந்திய நிலையைப் புதிய செய்தியாகவும் முந்திய விபரங்களை அச்செய்தியின் பின்னணியாகவும் அமைத்து வாசகருக்கு வழங்குவானர். முதல் முறையாக அச்செய்தியை வாசிப்பவனும் கூட அதன் (ԼՔ(Ա9 பின்னணியையும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக அது அமையும். ஆனால் விளம்பரம் அப்படியல்ல. முதலில் வெளியிடப்படும் போது புதிய தகவல் ஒன்றை அது வெளியிட்டாலும்கூட அடுத்தடுத்த பதிப்புக்களிலும் அது அப்படியே வெளியிடப்படக்கூடும். இதன் நோக்கம் வாசகர்கள் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்கவேண்டும் என்பதே. செய்தியைப் பொறுத்தவரை பழைய செய்தியையே மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்க எவரும் 6îl(5bLuLDT "LITT என்பது ዩ9QU5 புறமிருக்க, பழையசெய்திக்காக 6T6 g)b பத்திரிகைகளை வாங்க முன்வரமாட்டான் என்பதுமாகும்.
மேலும் இவை இரண்டும் வழங்கப்படும் முறைகளும் வடிவங்களும்கூட வேறுபடுகின்றன. குறிப்பாக இவை இரண்டிலும் கையாளப்படும் மொழிநடையைக் கவனிக்க வேண்டும். செய்தி பெரும்பாலும் வாசகனுக்கு விளங்கும் வகையில் நீட்டியும் விபரமான விளக்கங்களோடும் எழுதப்படும்.
விளம்பரங்கள் சிறு சொற்கள் - வசனங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். அதற்காக ஒதுக்கப்படும் இடம் (அளவு) அதன் - பெரிய அல்லது சிறிய வடிவத்தை நிர்ணயிக்கும். அதுவும் கூட விளம்பரம் செய்பவர் வழங்கத்தயாராய் இருக்கும் பணத்தைப் பொறுத்தும் அது அமையலாம். لم
65

Page 41
/ N
நகைச்சுவை
விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் படங்கள், கேலிச்சித்திரங்கள், நகைச்சுவை அம்சங்கள் போன்றவை அவ் விளம்பரங்களின் தரத்தை உயர்த்துகின்றன. நகைச்சுவையை மக்கள்விரும்புகிறார்கள், அவர்களுக்கு அவை மகிழ்வூட்டு கின்றன. அத்துடன். அவைகளை மக்கள் மறக்காமல் இருக்கவும் உதவுகின்றன.
பெரிய விளம்பரங்கள் மட்டுமன்றி சிறு விளம்பரங்களும் கூட சிலசமயம் - நக்ைசுவை இழையோடும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
எடுத்துக் காட்பாக;- 1. "பெரியாஸ்பத்திரி முன்னால் சைக்கிளை மாற்றி எடுத்துக் கொண்டு போனவர் தயவு செய்து திருப்பிக்கொண்டு வந்து தரவும்உமது புத்தம் புதிய சைக்கிள் இங்கே இருக்கிறது."
2."பளையிலிருந்து பஸ்ஸில் வரும் போது பையைத் தவற விட்டுவிட்டேன். எடுத்தவர் Ֆեւ 16ւ! செய்து திருப்பித்தருவாரா? அதிலிருந்து பணம் போனாலும் பரவாயில்லை ஆவணங்கள் முக்கிய
D60606)
3."கப்பலில் வரும்போது பையை மாற்றி எடுத்து சென்றவருக்கு நன்றி. உமது பையில் வெறும் கடதாசிகளும் பழைய உடுப்புக்களும் இருந்தன. விலாசம்கூட இல்லை. எனது பையில் ஒரு தொகை பணம் இருந்தது. ஆவணங்களை மட்டும் தபாலில் அனுப்பியிருந்தீர். அதன் முக்கியத்துவம் அறிந்து. மீண்டும் நன்றி"
தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்:- நடுவீதியில் சார்ஜ ன்ட் சின்னத்தம்பி நின்று வாகனங்களுக்கு திசைகாட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சந்தியை நோக்கி அழகான ஒரு புதிய கார் வருகிறது. நடுச்சந்தியில் நின்ற சார்ஜன்ட் மிக பவ்வியமாக ஒதுங்கி அந்தக்காருக்கு வழி விடுகிறார். கார் போனபிறகு கையை வாயில் வைத்து ஒரு முத்தத்தையும் அக்காரை நோக்கி
64

/ஊதிவிடுகிறார். இந்த காட்சியைப் பார்த்தவர்கள் அக்கா
மறந்துவிட மாட்டார்கள் அந்தக் காட்சி மனதை விட்டு அகலாது.
இவ்வாறான நகைச்சுவை அம்சங்கள் மக்கள் மத்தியில்
சுவாரஷயமாகப் பரவும் என்பதில் ஐயமில்லை.
விளம்பரம் செய்வதென்பது இன்றைய காலகட்டத்தில் மிக சிறந்த தொழில் துறையாக வளர்ந்திருப்பதை அவதானிக்கலாம். உலகின் பல்வேறு பெரிய நகரங்களிலும் விளம்பர முகவர் நிலையங்கள் செயல்படுகின்றன. இவைகளில் இத்துறையில் பயிற்சி பெற்ற அனேகள் பணிபுரிகிறார்கள். அனேக தொழில் நிறுவனங்கள் மேற்படி விளம்பர முகவர்கள் மூலமே தமது பொருள்கள் பற்றிய விளம்பரங்களை வெளியிடுகின்றன.
ஒரு பொருளை விற்பதற்கான நல்ல விளம்பரம் ஒன்றை எழுதுவதானால் அதற்கு ஓரளவு உளவியல் அறிவு இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. வாசகனை கவருவது மட்டுமல்லாது குறித்த பொருளை வாங்கும்படி தூண்டுவதாகவும் அந்த விளம்பரம்அமைய வேண்டும் என்பது எழுதுபவருக்கு ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். வாசகனை ஒரு பொருளை வாங்கும்படிதுண்டவும், வாங்கவேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வரவும் அவர் எழுதும் விளம்பரம் உதவவேண்டும்.
ઈ6o விளம்பரங்கள் பார்ப்போரை (சில சமயம் கேட்போரை) எரிச்சல் கொள்ளும்படி செய்கின்றன. விளம்பரம் எழுதுபவரின் திறமையின்மையே இதற்கு காரணம்.
"எமது நல்லெண்ணெய்தான் திறமானது" என்று ஒருவர் விளம்பரம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சுத்தமான நல்லெண்ணெய் எல்லாமே திறமானதாகத்தான் இருக்குமி, இதில் “எங்கள் நல்லெண்ணெய்தான் திறமானது" என்று எப்படி கூறமுடியும்? குறித்த நல்லெண்ணெய் திறமானது என்பதற்கான காரணங்களையும் கொடுத்தால், அதனை "பாவித்துப் பார்ப்போம்" என்ற எண்ணத்தை வாசிப்பவர் மனதில் ஒரு வேளை ஏற்படுத்த (DQUID.
மரண அறிவித்தல்களும் விளம்பரங்கள் தாம். இவை பெரும்பாலும் தனிப்பட்டவர்களுக்கான விபரங்களில் அடங்கும். ஆனால் அவை வழங்கப்படும் முறை பத்திரிகைகளிலும் சரி ஏனைய ஊடகங்களிலும் சரி தனித்துவமாக அமைந்திருப் பதைக் காணலாம். பெரும்பாலும் பத்திரிகைகளில் மரண அறிவித்தல் விளம்பரங்கள் கறுப்புக் கோடுகளால் கட்டமிடப் \பட்டிருக்கும். لم
65

Page 42
Z N
மரணங்கள் பிரபலஸ்தர்கள் சம்பந்தப்பட்டதெனின் அவை விளம்பரங்களாக மட்டுமன்றி செய்திகளாகவும் வெளியிடப்படும்.
விளம்பரம் போதுமான அளவு இல்லாதவிடத்து பத்திரிகையானது நீடித்து நிலைப்பது துர்லபம்.
இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயகத்தின் மேம்பாட்டுக்கு பத்திரிகைகளின் வளர்ச்சி முக்கியம் என்று கருதப்படுன்றது. இதனால் மாநில, மாகாண மட்டங்களில் வெளிவரும் பத்திரிகைகளுக்கும் கூட கோட்டா முறையில் அரச விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன. பெரிய பத்திரிகைகளுக்கும் அரச சார்பான பத்திரிகைகளுக்கும் மட்டும்தான் அரச விளம்பரங்கள் என்ற நிலை இல்லை. இவ்வாறு சிறு பத்திரிகைகளுக்கு அரசு கைகொடுப்பதால் அரசின் செய்திகள், விவசாய, பொருளாதார, சமுதாய மட்டங்களில் அது மேற்கொள்ளும் செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் கிராமிய மக்களுக்கு இலகுவில் போய் கிடைக்க முடிகின்றது. அரசின் நோக்கங்களும் நிறைவேறுகின்றன.
水 米 米 米
இறைவனின் வெளிப்பாடு
"உண்மை, அழகு, அன்பு, ஆகியவை எங்கே
காணப்படுகின்றனவோ அங்கே இறைவன் தன்னை வெளிப்படுத் 'திக் கொள்ளுகின்றான்.”
-ஆர்த்தர் பொறிட்ஸ்
ஒருவனின் முட்டாள்தனம் இன்னொருவனுக்கு அதிஷ்டமாகிவிடுகின்றது.
- பிரான்சி) பேக்கன் .
அமைதிப்புரட்சியை சாத்தியமற்றதாக்கி விடுகிறவர்கள் வன்மு புரட்சியை தவிர்க்க முடியாததாக்கிவிடுகிறார்கள் V
- ஜோன் எஃப் கென்னடி -
لر  ܼܲܢܠ

N ஆசிரிய தலையங்கத்திற்கு சிறப்பளிக்கும் அம்சம்.
3 ஆசிரியர் தலையங்கங்களில் தரக்குறைவான அல்லது கண்ணியமற்ற சொற்களை பிரயோகிப்பத பத்திரிகையின் மதிப்பையும் செல்வாக்கையும் பாதிக்கும். ஆனால் வழக்கில் உள்ள கருத்த செறிவுள்ள மரபுத் தொடர்கள், மேற்கோள்கள், பழமொழிகள் போன்றவற்றை பொருத்தமாகக் கையாள்வத தலையங்கத்தக்கு சிறப்பளிக்கும்.
அறிவுக்களஞ்சியமாக விளங்கிவந்த யாழ் நூலகமும் அதுபோன்ற வேறு பல நிறுவனங்களும் ஆயுதப்படையினராலும் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த காடையர்களாலும் 1981ம் ஆண்டு எரித்து நிர்மூலமாக்கப்பட்ட பொழுது ‘ஈழநாடு கட்டடமும் எரியூட்டப்பட்டது. அதன் காரணமாக காங்கேசன்துறை வீதியில் ஓர் இடத்தில் தற்காலிகமாக பத்திரிகை அச்சிடப்பட்டு வந்தது. இக்காலத்தில்தான் திரு. என். சபாரத்தினம் மிகத்துணிச்ச லாகவும் ஆழமாகவும் ஆணித்தரமான கருத்துக்களுடன் தலையங்கம் தீட்டத் தொடங்கியிருந்தார். அத்தலையங்கங்களை வாசிப்பதற்காகவே வாசகர்கள் பலர் பத்திரிகை வாங்கினார்கள் என்று கூறினால் அது மிகையன்று. எவ்வளவு காரமாகவும் தாக்கமாகவும் எழுதினாலும் கண்ணியக்குறைவாக சொற்களை அல்லது சொற்றொடர்களை அவர் பயன்படுத்தியதில்லை அதுவே "ஈழநாடு’ பத்திரிகையின் பாரம்பரியமாகவும் இருந்து வந்துள்ளது. பழைய கட்டடம் திருத்தப்பட்டதும். பத்திரிகையும் அங்கேயே அடிபடலாயிற்று. அக்காலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் திரு. சபாரத்தினமும் மூன்றுநாட்கள் நானும் ஒன்றுவிட்டு ஒருநாள் தலையங்கம் எழுதுவதென்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இதனால் நாளாந்த காரியாலயக்கடமை களுடன் மூன்று நாட்கள் தலையங்கம் எழுதும் கடமையும் என்னில் சார்ந்திருந்தது. திரு. சபாரத்தினம் தலையங்கம் எழுதுவதற்கு கையாண்ட பாணியைப் பின்பற்றி நானும் எழுதலானேன். உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கன்றி எவருக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கமாட்டாது. ஆனால் வைத்தீஸ்வரா வித்தியாலய முன்னாள் அதிபர் திரு. அம்பிகைபாகன் அவர்கள் இந்த வித்தியாசத்தைத் துல்லியமாக அவதானித்து எங்களுக்கு தமது கருத்துக்களை எழுதிவந்தார்.
الم ܢܠ
67

Page 43
༄༽
பத்திரிகையாசிரியர் தலையங்கமானது நறுக்கு தெறித்த மாதிரியில் சிறிய வசனங்களில் ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்துபவையாக அமைவதே சிறப்பு பழமொழிகள், மரபுத்தொடர்கள் , மேற்கோள்கள் போன்றவை பொருத்தமாகவும் இடம் அறிந்தும் பயன்படுத்தப்படல் வேண்டும். ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் சொல்வதானது. அரைத்தமாவையே அரைப்பதான நகைப்புக்கு இடமாகும். தலையங்கத்தை வாசித்து முடிக்கும் ஒருவருக்கு ஒரு நல்ல விடயத்தை படித்தோம். அல்லது ஒரு பிரச்சினை தொடர்பாக தெளிவு ஏற்பட உதவியது என்பது போன்று திருப்தியடைய உதவுமானால் ஆசிரியர் வெற்றிபெற்றுவிட்டாள் என்று கருதலாம்.
சிலசமயங்களில் எழுதும் ஆசிரியரின் திறமை, அனுபவம், மொழியாற்றல் போன்றவற்றின் காரணமாகவும். தலையங்கம் சிறப்புற அமைவதுண்டு. இவர்களில் சிலர் எழுதுபவை வெளிப்படையாகப் பார்க்கும் போது ஒருகருத்தும் ஆழ்ந்து பார்க்கும் போது இன்னொரு கருத்தும் தருபவையாக அமைவதுண்டு. இப்படியானவற்றை ("read between lines"). வரிகளுக்கிடையில் வாசிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இம்மாதிரி எழுதுவதில் திரு. என். சபாரத்தினம். அபாரத்திறமை பெற்றிருந்தார். வரிகளுக்கிடையில் வாசித்து விளங்கிக் கொள்ளமுடியாதவர்கள் தவறான கருத்தைக் கொண்டுவிடக்கூடிய ஆபத்தும் இதிலுண்டு.
率 率 率 本
1986 ல் திரு சபாரத்தினம் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிலநாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் எழுதவேண்டிய நாட்களிலும் நானே தலையங்கம் எழுதவேண்டியிருந்தது. ஒருதினம் ஆஸ்பத்திரியில் அவரைப்பார்க்கச் சென்றிருந்தேன். தன்னைப் பார்க்க வந்த நண்பர்கள் பலர் "ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே எவ்வாறு இம்மாதிரி தலையங்கங்களை எழுதுகிறீர்கள்" என்று தம்மைக் கேட்டு வியந்தார்கள் என்று என்னிடம் கூறிபாராட்டினார்.
இவ்வாறு அவர் எழுதிய தலையங்கங்களில் சிலவற்றைத் \தேர்ந்தெடுத்து "ஊரடங்கு வாழ்வு" என்ற பெயரில் சில)

("அன்பர்கள் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்நூலிலி
நான் எழுதிய சில தலையங்கங்களும் இடம் பெற்றிருந்தன. அது அவருக்கும் கூட தெரியாமலிருந்தமை வியப்புக்குரியதுதான். அந்நூல் பற்றி பல தடவைகள் நாங்கள் இருவரும் உரையாடி யதுண்டு. எனது எழுத்துக்களும்அதில் இடம்பெற்றிருந்தமை பற்றி அவர் பிரஸ்தாபிக்கவுமில்லை நான் வலிந்து அவருக்கு அதை சுட்டிக்காட்ட முயலவுமில்லை.
1988ல் ‘ஈழநாடு மீளவும் தாக்குதலுக்குள்ளானதையடுத்து நான் தொழில் இழக்க நேர்ந்தது. எனது இந்த நிலமைக்காக அவர் மிகவும் வருந்தினார்.
‘ஈழநாடு திரும்பவும் பணிகளை ஆரம்பித்தபொழுது என்னை அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். என் நிலைபற்றி அவர்கள் என்ன முடிவு எடுத்திருந்தார்கள் என்பதை நான் அறிய முயன்று கடிதங்களும் அனுப்பினேன். பதில் இல்லை. நான் அங்கு மீளவும் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள உள்ளே இருந்தும் வெளியில் இருந்தும் சில அன்பர்கள் பெரும்பாடு பட்டதாக அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
羽一羽一来一羽
சிலந்தியும் விளம்பரமும்
மார்க்டுவேயின் எனும் அமெரிக்க எழுத்தாளர் ஒரு பிரதேசப்பத்திரிகைக்கு ஆசிரியராகவிருந்த சமயம் ஒரு வாசகரிடமிருந்து அவருக்கு கடிதம் ஒன்று வந்தது "உங்கள் பத்திரிகையை இன்று படிக்கப் பிரித்த போது அதில் ஒரு சிலந்தி இருக்கக்கணிடேன். இது எனக்குவரும் அதிஷ்டத்தைக் குறிக்கிறதா துரதிஷ்டத்தைக் குறிக்கின்றதா என்று அவர் கேட்டிருந்தார்.
floud பத்திரிகையில் இருந்தமை அதிஷ்டமோ இல்லையோ அதைவிட்டுத்தள்ளுங்கள் அது என்ன செய்து கொண்டிருந்துள்ளது என்பதைக் கவனித்தீர்களா? எந்த வியாபாரி விளம்பரம்போடாமலிருந்துள்ளார் என்பதைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்துள்ளது. விளம்பரமில்லாவிட்டால் வியாபாரமில்லை வியாபாரமில்லாவிட்டால் கடைபடுத்துவிடும். அப்போ அங்கே போய் கதவில் வலைபின்னி கூடுகட்டிக்கொணர்டு செளகரியமாக வாழலாம் அல்லவா? இந்தச் சாரப்பட்ட மார்க்டுவேயின் பதில் எழுதியிருந்தார்.
米 米 米 米
米 எழுத்து என்பது அதனை வாசிப்பவருக்கு ஒரு இன்பத்தைத்தராவிடில்
அது இலக்கியமாகாது. அந்த இன்பமானது சொல்லப்படும் விடயத்திலிருந்து மட்டுமல்ல அது சொல்லப்படும் முறையிலிருந்தும் ஏற்பட வேணர்டும்"
ஸ்டொப்பர்ட் ஏ. புறாக்
V
69

Page 44
r N
பத்திரிகையாளனுக்கு வரும் பயமுறுத்தல்கள்
நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பயமுறுத்தல்களுக்கும் நேர்முக, மறைமுகமான தாக்குதல்களுக்கும் உள்ளாவதென்பது இந்நாட்டில் சாதாரணமாகி வருகின்றது. செய்திகள் தொடர்பாக எனக்கும் பலவிதமான பயமுறுத்தல்கள் வந்ததுண்டு. ஆனால் அவைபற்றி நான் அலட்டிக்கொண்டதே கிடையாது.
பத்திரிகைக் காரியாலயங்களில் ஆசிரியர்களுக்கிடையில் விவாதங்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது புதினமில்லை. ஆனால் அவை அங்கேயே முற்றுப்பெறவேண்டும். சிலர் சுயலாபம் கருதி வெளியிடங்களில் உள் விவகாரங்களை வெளியிட்டுவிடுகிறார்கள். ஆசிரிய பீட பணியாளர்களுக்கி டையில் நம்பிக்கையும் கூட்டுப்பொறுப்பும் மிகமிக அவசியம்.
ஒரு முக்கிய செய்தி விடயமாக ஒரு அதிகாரி காரியாலயம் வந்திருந்தார். குறித்த செய்தியை நான் எழுதியிருக்கவில்லை. அதை யார் எழுதினார் என்பதோ யார் பிரசுரிக்ககொடுத்தார் என்பதோ எனக்குத் தெரிந் திருக்கவில்லை. ஏனென்றால் நான் வேலை முடிந்து வீடு சென்றபின் அது பிரசுரிக்கப்பட்டிருந்தது. அச்செய்தியில் பிழை ஏதும் இருந்த மாதிரியும் எனக்குத் தெரியவில்லை. பதில் ஆசிரியர் என்ற முறையில் அவருடன் நான் வார்த்தையாட நேர்ந்தது. செய்தியில் தவறு இருப்பின் எழுத்தில் தரும்படியும் திருத்தம் பிரசுரிப்பதாகவும் கூறினேன். ஆனால் அவர் திருப்தியடையவில்லை. என்மீது ஏற்கனவே இருந்த ஏதோ கோபத்தை தீர்த்துக்கொள்ளும் விதத்திலேயே அவர் பேச்சு அமைந்திருந்தது. இறுதியில் என் மேசைக்கருகில் வந்து எனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக "நீங்கள் எல்லாம் திருந்தமாட்டீர்கள்
அடிதான் உங்களைத் திருத்தும்." என்று ஆத்திரத்துடன் கூறிக்கொண்டு போய்விட்டார். ۔
அவர் கூறியபடி என்னை நேரடியாக அடிக்கவில்லை. ஆனால் மறைமுகமாக அடிப்பதாக எண்ணிக்கொண்டு சில பல காரியங்களை அவர் செய்ததாக உணர்ந்தேன். அதனால் எனக்கு கால ஓட்டத்தில் நன்மையே விளைந்தது. அந்த வகையில் அவருக்கு நன்றி கூறினாலும் தகும். இதுபோல வேறு சம்பவங்களும்பல உண்டு. ஆனால் இப்போது இதுபோதும் என்று
நினைக்கின்றேன். .الم
可

r அரசியல், சமூக நாகரிகம் வளர்ந்துள்ள நாடுகளில் பத்திரிகைத்துறையும், பத்திரிகையாளர்களும் வெகுவாக மதிக்கப்படுகிறார்கள். மேலும் கருத்து சுதந்திரமானது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் தாக்குதல்களுக்கும் அடக்குமுறைக ளுக்கும் ஏன் கொலை செய்யப்படுதலுக்கும் கூட உள்ளாகிறார்கள் என்றால் அந்நாடுகளில் அரசியல் , சமூக நாகரிகம் வளரவில்லை, இன்னமும் மனிதர்கள் பழைய காட்டு மிராண்டி நிலைமையிலேதான் இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.
செய்தியில் ஏற்படும் தவறுகள்
செய்தியில் தவறுகள் ஏற்படுவதென்பது இயற்கை. சில சமயங்களில் ஒரு சொல் அல்லது எழுத்து தவறாக அமைந்துவிடுமானால் செய்தியின் கருத்தே மாறிவிடக்கூடும். இவ்வாறான பிழைகளுக்கு "Printers Devil அச்சுப்பிசாசின் வேலை என்று பத்திரிகைத்துறையினர் கூறிக்கொள்வார்கள். என்றாலும் செய்திகளில் தவறு ஏற்படுமானால் அச்செய்திக்கு திருத்தம் பிரசுரிப்பது பத்திரிகைகளின் கடமை. திருத்தம் வெளியிடப்படாதவிடத்து அது குறித்து பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் நியாயம் கோரக்கூடும். செய்தியில் ஏற்படும்தவறைச் சுட்டிக்காட்டி திருத்தம் கோருபவர் அதனை எழுத்தில் தரவேண்டும் என பத்திரிகைத்துறையினர். கோருவதில் நியாயமுண்டு. ஏனென்றால் தவறு எனக் கூறிவருபவர் திருத்தம் பிரசுரிக்கப்பட்டதின் பின் அதனை மறுக்கவும் கூடும் மேலும் அத்தவறு ஏற்பட்டமைக்கு பத்திரிகையாளர்களே காரணம் அல்லது அவர்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை வெளியிட்டு பின்னர் தாம் சுட்டிக்காட்டியதின் பின் திருத்தம் பிரசுரித்திருக்கிறார்கள் என்றும் பிரசாரம் செய்ய இடமேற்படலாம். தற்செயலாக தவறு ஏற்படுமிடத்து அதனை நேர்மையாக சுட்டிக்காட்டி திருத்தம் பிரசுரிப்பதும் விசனம் தெரிவிப்பதும் பத்திரிகையின் மதிப்பு, நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.
7

Page 45
N
மத்திரிகையாளன்பாத்திற்கு அடிமைாகலாமா?
இந்த இடத்தில், பென் பிராங்க்ளின் என்பாரின் கருத்தொன்று நினைவுக்கு வருகின்றது. "நேர்மையான மனிதன் எவனும் தனக்கு உரியதாயில்லாத புகழையோ, பணத்தையோ பெற்றுக்கொள்ள முன்வரமாட்டான்” என்பதாகும் அது. நான் தொழில் செய்த இடங்களில் என் வேலைக்கு போதியளவு வேதனம் கேட்டு வாதிட்டிருக்கிறேன். ஆனால் வழங்கப்பட்ட வேதனத்துக்கு (3LD6)Tab குறுக்கு வழியில் L600TLD பெற்றுக்கொள்ள முயன்றதில்லை. செய்திகள் , கட்டுரைகள் பிரசுரிப்பதற்காக பணத்தையோ அன்றி வேறுவிதமான சலுகைகளையோ எதிர்பார்த்ததுமில்லை. இது என்னைப்பற்றிய சுய தம்பட்டமன்று.
பாடசாலை ஆசிரியர்கள் சம்பந்தமான ஏதோ ஒரு குழுவுக்கு தேர்தல் நடைபெறவிருந்தது. போட்டியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினரின் செய்தியொன்று ஏற்கனவே ஈழநாட்டில் வெளிவந்திருந்தது. தேர்தல் நடைபெறவிருந்த கடைசி தினத்துக்கு முதல் நாள் இரவில் எதிர்குழுவினரில் சிலர்ஒரு செய்தியைப் போடும்படி கேட்டு வந்திருந்தார்கள். அன்றிரவு கடமையில் இருந்த நான் காலையில் வெளிவரவேண்டிய பதிப்புக்கு தேவையான செய்திகள் அனைத்தும் அச்சுக்கு கொடுக்கப்பட்டுவிட்ட நிலையிலும் அவர்களுக்கும் ஒரு செய்தி போட்டு உதவ வேண்டியது நியாயமே எனக்கருதி அவர்களுக்காக ஒரு செய்தியை எழுதி அச்சுக்கு கொடுப்பதற்காக மேசையில் வைத்திருந்தேன். வந்தவர்கள் விடைபெற்றுக்கொண்ட பொழுது அவர்களில் ஒருவர் சிறுகடித உறையை என்மேசையில் வைத்துவிட்டு அகன்றார். "இது என்ன” என்று கேட்டபடி உறையைத் திறந்து பார்த்தேன் . சில பண நோட்டுக்கள் அதில் இருக்கக்கண்டேன். "அது உங்களுக்குத்தான் " என்று ஒருவர் கூறினார். எனக்குப் புரிந்துவிட்டது. உண்மையாகவே எனக்கு அவர்கள் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அந்தப்பணத் தைத்துக்கி அவர்களிடமே எறிந்துவிட்டு எழுதி வைத்திருந்த செய்தியையும் கிழித்து எறிந்தேன்.
“உங்களுக்காக ஒரு செய்தியை நாளைய பத்திரிகையில்
வெளியிடலாமென்று நினைத்தேன். ஆனால் நீங்கள் என்னை அவமதித்துவிட்டீர்கள். ஆசிரியர்களாய் இருந்தும் நீங்கள்
الم. ܢ
72

N
இவ்வாறு நடந்து கொண்டமை எனக்கு கவலையளிக்கிறது.” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டேன்
அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதற்கு காரணம் இல்லாமலில்லை. செய்திகளை வெளியிடுவதற்காக . சில பத்திரிகையாளர்கள் வெகுமதிகளைப் பெற்றுவந்திருக்கி றார்கள் என்பதே அது. ஆனால் எல்லாப்பத்திரிகையாளர்களும் அப்படியானவர்கள் அல்ல என்பதை வந்தவர்கள் புரிந்து கொள்ளாமலிருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
பத்திரிகையாளர்களின் பொருளாதார நிலையே இவ்வாறான வெகுமதிகளை அவர்கள் நாடுவதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. எனவே பத்திரிகையாளனின் நிலைமைக்கும் தகுதிக்கும் ஏற்ப அவர்களுக்கான வேதனங்களை பத்திரிகை நிறுவனங்கள் நிர்ணயிக்க வேண்டும் . பத்திரிகையாளர்களுக்கென சம்பளத்திட்டமொன்று 1986ம் ஆண்டு சம்பள நிர்ணய சபையினால் வகுக்கப்பட்டது. அத்திட்டம் பின்னர் மேலும் சீர்செய்யப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இத்திட்டம் பெரும்பாலும் அமுலாக்கப் படவேயில்லை. இது போக போதுமான அளவு வேதனம் வழங்கப்பட்டாலும் பத்திரிகையாளர்களில் சிலர் g5LDgBl தேவைகளுக்கு மேலாக செலவுகளை ஏற்படுத்திக்கொண் டுவிடுகின்றார்கள். எதுவானாலும் வெகுமதியை எதிர்பார்த்து செய்தி எழுதும் பத்திரிகையாளன் தன்னைத்தானே விற்றுக்கொள்கின்றான் என்றே நான் கருதுகின்றேன். இப்படியான ஒரு பத்திரிகையாளன் தன்னை பக்கம் சாராதவன் என்று எங்ங்ணம் கூறிக்கொள்ள முடியும்?
米 米 米 米
சிறந்த உறவினன்
முன்னெச்செரிக்கையும் விசுவாசமும் உள்ள நண்பனைப் போல் சிறந்த உறவினன் இல்லை"
- பெஞ்சமின் பிராங்க்ளினர்.
الم  ܼܲܢܠ 75

Page 46
மதுவென்னும் மகுடி
பல பத்திரிகையாளர்கள் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இந்தப் பலவீனத்தை அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள், விளம்பரம் விரும்பும் ஏனையோரும் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. குடிப்பதென்பது அவரவர் சொந்த தனிப்பட்ட விடயம் தான் ஆனால் தொழில் செய்யும் இடத்திலும் அதனைப் பாவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று. பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களால் குடிப்பதை முற்றாக நிறுத்திவிட முடியாது என்று சிலர் கூறுகிறார்கள். வெளியில் சென்று அரசியல்வாதிகள், வணிகத் துறையினர் போன்றோரை சந்தித்து செய்திகள் சேகரிப்ப வர்களால் மேற்படி பிரமுகர்கள் வழங்கும் வெகுமதிகளை அல்லது மதுபானங்களை மறுக்கமுடியாமல் போகின்றது என்றும் வாதிக்கப்படுகின்றது. இது வெறும் பழக்கதோஷமே. தொழில் செய்யும்போது வெகுமதிகளைப்பெற்றுக் கொள்வதில்லை, மது அருந்துவதில்லை என்ற வகையில் தமக்குத்தாமே சில நெறிமுறைகளை வைத்துக்கொண்டு அதனை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் செய்தால் இந்தக் குற்றச்சாட்டுக்குட்பட நேராது என்பது என்கருத்து.
வெளிநாட்டுத்தூதரகங்கள் அல்லது பிரமுகர்கள் நடத்தும் "கொக்டெயில்” விருந்துகளுக்கு பத்திரிகையாளர்கள் மிக விருப்பத்துடன். போவதைப் பார்த்திருக்கிறேன். இம்மாதிரி விருந்துகளின் போது பலதரப்பட்ட பிரமுகர்களையும். சந்திக்கலாம் என்பதுடன் பல புதிய தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் உண்மைதான். இவைகளை விட அவ்விருந்துகளில் பரிமாறப்படும் விதவிதமான, விலை உயர்ந்த மதுபானங்களை சுவைக்கலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் இம்மாதிரி விருந்துகள் பெரும்பாலும் மாலைவேளையிலேயே நடக்கும் என்பதால் விருந்தின் பின் அதில் கலந்து கொள்பவர்கள் இரவிற்கு தம்தம் இருப்பிடங்களுக்குச் சென்று விடலாம். அதேவேளை விருந்தின் போது மதுபானங்களைத் தொட்டுக்கூடப்பார்க்காமல் வெறும் "சோடா' பானங்களை மட்டுமே சுவைத்துக்கொண்டு தாம் சென்ற நோக்கத்தை கச்சிதமாக முடித்துக்கொண்டு திரும்புகிறவர்களும் உண்டு.
لم ܢܠ 74

r N
எதுவானாலும்,பணியாற்றும் நேரத்திலும் போதையுடன் செயல்படும் பத்திரிகையாளனால் நடுநிலையாக செயல்பட முடியும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "எழுதுவதற்கு முன் ஏதாகிலும் குடித்தால்தான் முடிகிறது. குடித்தால்தான் நரம்புகள் வேலை செய்கின்றன, இல்லையெனில் கைகால்கள் நடுக்கம் கொள்கின்றன” என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். குடிக்கும் பழக்கமுள்ள ஒரு கவிஞன். அல்லது எழுத்தாளன் இவ்வாறு கூறுவதில் நியாயமிருக்கலாம். ஆனால் நடுநிலை பத்திரிகையாளனுக்கு இது உகந்ததாக நான் கருதவில்லை. ஆரம்பத்திலேயே இப்பழக்கத்திற்கு ஆளாவதில்லை என்ற கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் இவ்வாறு கஷ்டமுற நேராது.
எனவேதான் இத்துறையில் இறங்க விரும்பும் இளம் வயதினர் குடியென்னும் மகுடியில் மயங்காமல் தம்மைத் தற் காத்துக் கொள்ளவேணி டும் என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
புதிதாக பயிலுநர்களைத் தேர்ந்தெடுக்கும் போதே பத்திரிகை நிறுவனங்கள் மேற்படி விடயம் தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிப்பது வரவேற்கத் தக்கதாய் இருக்கும் . அது அந்த இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் நிறுவனத்தின் மேம்பாட்டுக்கும் ஏன் பத்திரிகையின் மதிப்புக்கும்கூட உதவும்.
米 米 米
திடுப்தி 'திருப்தியானது ஏழைகளைப் பணக்காரராக்கும் .
திருப்தியின்மையோ பணக்காரனை ஏழையாக்கிவிடும்"
- பெஞ்சமின் பிராங்க்ளின. * ஒருவன் தனக்கு இயற்கையாகவே செய்ய முடிகின்ற ஒரு வேலையயை, ஏனையவற்றை க்ரிட்டுவிட்டு சரியான நேரத்தில் செய்வானாகில் எவ்வாப் பொருள்களுமே இன்னும் அதிகமாகவும் இவகுவாகவும் சிறந்த தரத்துடன் உற்பத்தியாக முடியும் என்று கருதலாம்
- பிளேட்டோ
ܢܠ
الم.

Page 47
எழுத்தாளர்கள் இருவர்
3'ஈழநாடு’ ஆசிரிய பீடத்தை அலங்கரித்தவர்களில் இரு பெரியவர்களை இங்கு நினைவுபடுத்தவத என் கடமை என்று எண்ணுகின்றேன்.
அவர்களில் ஒருவர் அ.செ. முருகானந்தம் அவர்கள். மற்றவர் வி.என். பாலசுப்பிரமணியம் அவர்கள். முன்னையவர் கதை எழுதுபவர். மற்றர் கட்டுரை வரைபவர்.
திரு. பாலசுப்பிரமணியம் இலங்கை வானொலி தமிழ்ப்பிரிவில் பணிபுரிந்துவிட்டு இளைப்பாறியவர். அவர் திறமை மிக்க கர்நாடக சங்கீத் வித்துவானும்கூட நகைச்சுவைய்ாகவும் இரண்டு கருத்துப்படவும் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர். திரு. ஹரன் அவர்கள் எழுதிய "ஐயாறன்” பத்தி வெளிவராத நாட்களில் நாடும் நட்ப்பும்' என்ற பத்தியை திரு. வி. என்.பி. எழுதுவார். நறுக்கு தெறித்த மாதிரியும் மிகச்சுவைபடவும் அது அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்து மண்வாசனை 'கம்' என்று வீசும் வகையில் அவர் எழுதுவார். சமூக முரண்பாடுகள்ை தத்திக்காட்டி எழுதும் அவரது நடை அலாதியானது. சிறப்பான மொழிபெயர்ப்புக்களையும் அவர் செய்வார். எவ்வளவு சிக்கலான ஆங்கில மொழி கட்டுரையானாலும் மிக எளிதான நடையில் செறிவான மொழி ஆக்கங்களாக தருவார் அவர்.
இறுதி காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பரவிக்கிடக்கும் சிறுசிறு கோயில்களைத் தேடிச் சென்று அவைகளின் வரலாறு, புதுமை, சிறப்புக்களைப் பற்றி அருமையான கட்டுரைகளை எழுதிக்கொண்டி ருந்தார். பின்னர் கதிர்காமக் கந்தபெருமானை கால்நடையாகவே சென்று தரிசிக்கவென்று புறப்பட்டுச்சென்றார். செல்லும் வழியில் தரிசித்த் கோயில்களைப்பற்றி கட்டுர்ைகள் எழுதி அனுப்பினார். திருகோணமலைக்குச் சென்று அங்கிருந்து கிளிவெட்டிக்கு அப்பால் அவரால் போகமுடியவில்லை. அங்கேயே காலமானதாக செய்திவந்தது.
அ. செ. முருகானந்தம் அவர்கள் ‘ஈழநாடு வாரமலருக்கு ஆசிரியராகவிருந்த காலமது. இருவரும் இருவேறு நடையுடை பாவனையுடையவர்கள். அ.செ.மு. வெற்றிலைப்பெட்டி, குடை, சால்வை சகிதம் வேலைக்கு வருவார். வி.என்.பி. மூக்குத்தூள் ழுப்பியுடன் வருவார் பிற்காலத்தில் குறுந்தாடியும் வைத்திருந்தார்)
76

/முன்னவர் வெற்றிலை போட்டுக்கொண்டு மேசையில் அமர்வாரி பின்னவர் மூக்குப் பொடியை இழுத்து விட்டு எழுதத் தொடங்குவார். அ.செ. மு. வின் எழுத்து நீளமான வசனங்களையும் வர்ணனைகளையும் கொண்டிருக்கும் . வி. என்.பியின் எழுத்துக்கள் சுருக்கமாகவும் ஆழமாகவும் இருக்கும். ஆனால் இரண்டுமே வெவ்வேறு வகையில் சுவையுடையனவாய் இருக்கும்.
ஈழநாட்டில் அ. செ. மு. அவர்கள் தமது கடந்த கால நினைவுகளை மிகவும் அழகான கட்டுரைகளாக எழுதிவந்தார். தமது கிராமம் அங்கிருந்த நிலைமைகள் தமது நண்பர்கள் போன்ற பல விடயங்களை அவைகளில் சித்திரமாகத் தந்தார். அந்தக்காலத்தில் எவரும் அதில் அக்கறை காட்டிக் ’கொள்ளவில்லை. திடீரென அவர் வேலைக்கு வராமல் போனது ஆச்சரியமாகவிருந்தது. சுகவீனம் ஒருபுறம். வயதான தாயார்
ஒருபுறம் இவைதான் அவர் வேலைக்கு வரமுடியாமல் போனதின் காரணமாகவிருந்திருக்கலாம் என்று நான் நினைத்திருந்தேன். வேலைக்கு வராமல்விட்டாலும்
கட்டுரைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவையும் பின்னர் நின்றுவிட்டன.
எழுபதுகளின் பிற்பகுதியில் ‘ஈழநாடு வாரமலருக்கு நான் பொறுப்பாகவிருந்த காலத்தில் அ.செ. மு. வுக்கென ஒரு நிதியை ஆரம்பித்தோம். பணம் அனுப்பியவர்களின் பெயர்கள் பட்டியலாக வெளியிடப்பட்டு வந்தன. ஈழநாடு’ பழைய ஏடுகளைப் புரட்டினால் அப்பெயர்களைப் பார்க்கலாம். தினபதி பிரதம ஆசிரியர் திரு. எஸ் டி.சிவநாயகம். அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் அனுப்பியிருந்தமை நினைவுக்கு வருகிறது.
ஆயிரம் ரூபாய்க்கும் சற்று அதிகமாக பணம் சேர்ந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் அது ஒரு கணிசமான தொகையே. இப்பணத்துடன் ‘ஈழநாடு சார்பிலும் சிறுதொகைப்பணத்தை பெற்று அதில் சேர்த்துக்கொண்டு ஒரு தினம் அளவெட்டியில் அவர் வாழ்ந்த இடத்திற்குச் சென்றேன். என்னுடன் திரு. கோபாலரத்தினத்தின் 360)6Tuj புதல்வன் uJIT56 gub வந்திருந்தார். எங்களைக் கண்டு திரு. அ. செ. மு. பெருமகிழ்ச்சி கொண்டார். அவரையும் அழைத்துக் கொண்டு சென்று அருகிலிருந்த அஞ்சலகத்தில் அப்பணத்தை வைப்பிலிட்டு “தேவையான சமயங்களில் எடுத்துப்பாவியுங்கள் " என்று கூறி சேமிப்பு புத்தகத்தைஅவரிடம் கொடுத்தேன். அஞ்சலகத் திலிருந்து நாங்கள் திரும்பி போது அவரது தாயார் எங்களுக்கு
77

Page 48
(பகல் உணவு தயாரித்திருந்தார். நாங்கள் எவ்வளவு கூறியும் அவர்களின் அன்புக்கோரிக்கையை மறுக்க முடியவில்லை. நாங்கள் மூவரும் வரிசையாக இருக்க அந்த மூதாட்டி உணவு படைத்தார். தலையும் கைகளும் நடுக்க முற்றிருந்தாலும் அவரது வாக்கிலும் உறுதியிலும் தடுமாற்றம் தெரியவில்லை. தாம் இல்லாதவிடத்து தனது மகனின் நிலை என்னவாகும் என்ற கவலை அவரிடம் காணப்பட்டது. ‘ஈழநாடு மூலம் சேகரிக்கப்பட்ட பணம் அ.செ.மு. விடம் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து கட்டுரையாக வாரமலரில் எழுதியிருந்தேன். பிற்காலத்தில் அ.செ.மு. இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் கில்னர் ஒழுங்கையில் தங்கியிருந்தபோது அவரைச் சென்று பார்த்தேன். கடுமையாக சுகவீனமுற்றிருந்த போதிலும் படுக்கையில் எழுந்திருந்து உரையாடினார். அப்போது அவர் தாம் இருந்த இடத்தைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் எங்கு போவது என்று தெரியாமலிருப்பதாகவும் கூறினார். மேலும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. சண்முகலிங்கம் அவர்கள் வருவதாகக் கூறியிருந்ததாகவும் அவரைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
வெகுநேரம் பழைய புதிய விடயங்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் சந்திப்பதாகக் கூறிக்கொண்டு புறப்பட்டேன். அதற்குப்பின் அவரைச் சந்திக்கவேயில்லை. நாட்டின் நிலைமை மோசம் அடைந்து பலரும் பல்வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்த போது அவரும் எங்கோ போயிருப்பார் என்று நினைத்திருந்தேன். கிறிஸ்தவ ஆச்சிரமமொன்றில் சேர்க்கப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டார். என்றும் பின்னர் திருகோணமலையில் காலமானார் என்றும் அறிந்தேன்.
ck k >k
ஏழுவிதமான பாவங்கள் பற்றிய காந்தியடிகளின் வரைவிலக்கணம்
. உழைப்பில்லாத செல்வம் மனநீதியில்லாத இன்பம் ஒழுக்கமில்லாத அறிவு . தார்மீகமில்லாத வியாபாரம் . மணிதத்துவமில்லாத விஞ்ஞானம்
தியாகமில்லாத வழிபாடு கொள்கையில்லாத அரசியல்
78

/ ཡོད
usaflugá WILIGñunGŭ
பத்திரிகையின் ஆரம்பமி.
பத்திரிகைகள் எவ்வாறு தோன்றின? எதற்காகத் தோன்றின என்றவாறு கேள்விகள் எழும் போது நாம் இரண்டு முக்கிய அம்சங்களை சாதாரணமாக சுட்டிக்காட்டலாம்.
முதலாவது:- மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்துள்ள (Inquisitiveness) எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அல்லது ஆவல் . இந்த ஆர்வம் அல்லது ஆவல் என்ற குணமானது. இன்று நேற்று ஏற்பட்டதன்று. மனித குலம் உருவான காலம் தொட்டே இது இருந்து வருகின்றது. இந்த ஆர்வத்தின் பரிநாம வளர்ச்சியின் ஒரு அம்சமே பத்திரி கைத்துறை எனலாம்.
இரண்டாவது:- மனிதன் தான் தெரிந்து கொண்டதை அல்லது அறிந்து கொண்டதை பிறருக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்பது அவனது இன்னொரு பிறவிக்குணம். இதுவும் கூட மனித இனம் தோன்றிய காலம் தொட்டே மனிதனுக்கு இருந்து வருவதாகும் . இதன் வெளிப்பாடே ஆதி மனிதன் வாழ்ந்த கற்குகை சுவர்களில் கிறுக்கப்பட்டுள்ள ஒவியங்களும் குறியீடுகளும் எனலாம். இதன் வழிமுறையிலேயே எழுத்துக்களும் மொழிகளும் தோன்றலாயின எனக்கருதுவது தவறன்று. -
எனவே, மனிதன் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள், தாவரங்கள, மிருகங்கள், பறவைகள் ஆறுகள் , கடல்கள் , காடுகள் மற்றும் இவைகளோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை எல்லாம் அறிந்து கொள்ள முற்பட்டமையும் அவ்வாறு அறிந்து கொண்டவற்றை பிறருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த முயற்சியில் ஈடுபட்டமையும் காலப்போக்கில் இன்றைய பத்திரிகை உலகமாக பரிணமித்தது என்று கொள்ளலாமல்லவா? எதுவானாலும் மனிதனுக்கு மேலே குறிப்பிட்ட இரு பிறவிக்குணங்களும் இருக்கும் வரை பத்திரிகைத்துறையும் நீடித்து நிலைத்திருக்கும். என்பது நிச்சயம்.
一ノ ܢ
79

Page 49
(பத்திரிக்கா என்ற வடமொழி சொல்லிருந்தே பத்திரிகை என்ற சொல் தமிழிற்கும் வந்ததாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே பேப்பர்’ என்ற சொல்லிலிருந்துதான் வந்திருக்க முடியும். ஏனென்றால் பத்திரிகைத்துறையை ஆஸிய மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்களே மேற்கு நாட்டவர்தாம். இந்த "பேப்பர் என்ற சொல்லும் கூட பப்பிரஸ்' அல்லது "பேப்பிரஸ்' என்ற சொல்லில் இருந்தே பெறப்பட்டதாக கருதப்படுகின்றது."பேப்பர்” பத்திரிகையின் ஆரம்பம்பற்றிய டேவிட் இயூஜின் சிமித் எனும் அறிஞர் கூற்றின் சுருக்கம் வருமாறு:
"எகிப்து தேசத்தில் ஒருவகை நீர்த்தாவரம் இருந்தது. எமது சதுப்பு நிலங்களில் காணப்படும். நாணல் போன்றவைதான் அவை. ஆனால் பெரிதாகவும் நீளமாகவும் இருந்தன. இந்தப் புற்களை நறுக்கி உரித்து வரிசையாகவும் நெருக்கமாகவும் ஒட்டி அடுக்கி அதன்மீது குறுக்காக இன்னொருதடவையும் அடுக்கி நன்றாக அழுத்தி காயவைத்து அதன்மீது எகிப்தியர்கள் எழுதினார்கள் . எழுதியவற்றை பத்திரமாக சுருட்டியும் வைத்து பாதுகாத்தார்கள். இவ்வாறு எழுத பயன்படுத்தப்பட்ட புல்லின் பெயர் "பேப்பிரஸ்' (papyrus) என்பதாகும். இதிலிருந்தே "பேப்பர்’ (paper) என்ற சொல் பிறந்தது"
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைத்துறையானது இந்தியாவில் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்சியிலிருந்த அவர்களால் தமது சொந்தத் தேவை களுக்காகவும் அரசாங்க அறிவித்தல்களை வெளிப்படுத்து வதற்காகவும். ஆரம்பிக்கப்பட்ட இத்துறையின் பயன்பாட்டை தெரிந்து கொண்ட சுதேசிகள் தமது மொழிகள் கலைகள், கலாசாரங்களின் மேம்பாட்டுக்காகவும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத்தொடங்கினர். குறிப்பாக சுதேச விடுதலைக்கும் விடுதலை போராட்டங்களுக்கும் பத்திரிகைகள் பெரும்பயன் அளிக்கலாயின. இதனால் ஆங்கில மொழியில் மட்டுமின்றி சுதேச மொழிகள் பலவற்றிலும் பத்திரிகைகள் வெளிவரலாயின.
இந்தியாவில் பத்திரிகைத்துறை ஆரம்பமான ஏறத்தாழ அதே காலத்தில்தான் இலங்கையிலும் பத்திரிகைத்துறை ஆரம்பமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு ஆங்கிலமொழியில் ஆரம்பமான பத்திரிகைத்துறையானது சுதேச மொழிகளிலும் அதேபாணியில் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்தது. இன்று கணனியின் உதவியுடன் மிக வசீகரமான முறையில் போட்டா போட்டியுடன் நடத்தப்பட்டு வருவதைப் பார்க்கின்றோம்.
80

/ ஒரு நாட்டின் சமுதாய, பொருளாதார, அரசியல் மற்றும் கலை கலாசார சகல துறைகளதும் மேம்பாட்டுக்கு உதவுகின்ற மகோன்னத சக்தியாக பத்திரிகைத்துறை இன்று இருந்து வருகின்றது. ஜனநாயகம் என்று பேசப்படுகின்ற மக்கள் குடியரசுகள் பல்வேறு நாடுகளிலும் வளர்ந்து. இன்றைய முற்போக்கான நிலையை அடைந்தமைக்கு பத்திரிகைத்துறை பெரும் பங்காற்றியுள்ளது என்றால் மிகையன்று.
ஏன் வாங்குகிறார்?
− ஒரு பொது மனிதன் தன் பணத்தைக் கொடுத்து ஒரு பத்திரிகையை வாங்குகின்றார் என்றால், அதில் அவர் எதையோ எதிர்பார்க்கிறார் என்பதே பொருள்.
உலகில் இன்று என்ன புதினம் ? இரவு வானொலியில் கேட்ட செய்தியின் முழு விபரம் என்ன? ஒரு தலைவர் ஏதாகிலும் புதிய கருத்தை அல்லது திட்டத்தை வெளியிட்டுள்ளாரா? தமக்கு வேண்டிய ஒரு பொருள் எங்கே கிடைக்கும்? தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் பற்றிய அறிவித்தல் ஏதேனும் வந்திருக்கின்றதா? ஊரில் அல்லது நகரில் என்ன நிகழ்ச்சி, எங்கே நடக்கப்போகின்றது?
இவ்வாறான ஏதோ ஒரு அல்லது பல விடயங்களை அறிந்து கொள்ளவே அவர் பத்திரிகையொன்றை வாங்குகிறார். மேலும் அவர் வாங்கும் பத்திரிகையில் அவர் எதிர்பாராத ஒரு விடயம்அவருக்கு உற்சாகமூட்டுவதாக, அல்லது அதிர்ச்சி யூட்டுவதாக, அல்லது மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கலாம். மேலும் அதில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை ஒருகவிதை அல்லது ஆசிரியரின் கருத்துரை பயனுள்ளதாக அமையலாம்.
ஆக ஒரு பத்திரிகையின் அடிப்படை பயன்பாடு என்னவென்றால், "வாசகனுக்கு அது ஏதோ ஒரு தகவலை வழங்குகிறது" என்பது தான்.
இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் அத்தகவல்களின் தன்மையைப் பொறுத்து, கையாளப்படும் மொழிநடை, வடிவம் போன்றவற்றின் மூலம் வாசகனின் மனதை உலுப்பியும், நெகிழ வைத்தும், சிந்திக்கத்தூண்டியும் தேசிய மட்டத்தில் மக்கள் கருத்தை உருவாக்கவும் அக்கருத்தின் செயற்பாட்டிற்கு ஊக்கம் கொடுக்கவும் பத்திரிகைகளால் முடிகின்றது. இதுவே பத்திரிகைத்துறையின் அபாரசக்தி என்று குறிப்பிடப்படுவது.
"The pen is mightier than the sword'. '6JT6061T6 L பேனையின் சக்தியே வலியது' என்ற பழமொழி இதற்கு \பொருத்தமாக அமைவதை காண்க. - − ン
8

Page 50
N
இந்த சக்தியானது சிலவேளைகளில் நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயமும் உண்டு. இன, மத, மொழி, சாதி சமயப் பூசல்களை உருவாக்கி ஒரு நாட்டின் அமைதியையே கெடுத்து குட்டிச்சுவராக்கிவிடும் சக்தியும். இத்துறைக்கு உண்டு.
இதற்காகத்தான் பத்திரிகைத்துறையில் ஈடுபடுகிறவர்கள் நேர்மையானவர்களாகவும், நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களாகவும் மட்டுமன்றி பொறுப்புள்ள கனவான்களா கவும் இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. குறிப்பாக பத்திரிகைகளின் மேல் தரங்களில் பணிபுரிபவர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.
நெறிமுறை:-
ஒரு பொது பத்திரிகையானது தனது பணியைச் சரியாக முன்னெடுப்பதற்கு பின்வரும் நெறிமுறைகளைப் பின்பற்றுவது வரவேற்கத்தக்கதாகும்.
1. செய்திகளில் உணர்மைத் தன்மையைப்
பேணுவத
இதனை சற்று விவரித்துப்பார்த்தால், ஒரு செய்தியை வழங்கும் போது அதன் உண்மைத்தன்மையை முன்கூட்டியே உறுதி செய்து கொண்டு வழங்குவதாகும் உறுதிப்படுத்த முடியாதவிடத்து அச்செய்தியை விட்டு விடுவது உத்தமம். உண்மையாய் இருந்தும் அது கிடைத்த விதத்தை அல்லது அதன் மூலகர்த்தாவை வெளிப்படுத்துவது உசிதமாய் இல்லாத விடத்து "நம்பகமாகத் தெரியவருகிறது" என்பது போன்ற பதங்களைப்பிரயோகிப்பதாகும்.
2. செய்திகளை திரித்து வெளியிடாமை
நடந்த ஒன்றை வைத்துக் கொண்டு அதனோடு தொடர்புள்ள வேறொன்றை வேண்டுமென்றே பெரிது படுத்துவது, ஒருவர் கூற்றை வேறு கருத்து வரக் கூடியதாக மாற்றி எழுதுவது போன்றனவாம். உண்மையை பொய்யாகவும் பொய்யை மெய்யாகவும் காட்ட முயல வது மி அடங் குமி . இவர் வாறு செய்தியைத் திரிப்பதானது பத்திரிகாதர்மத்திற்கு மாறானதாகும். .الم  ܼܲܢܠ

3.மக்களை தவறான வழிக்கு திசை திருப்பா
திருப்பத
ஒரு குறிப்பிட்ட செய்தி மக்களைக் குழப்பத்திற்கு ள்ளாக்கும் அல்லது மோதல்களுக்கு வழிவகு க்கும் எனக் காணுமிடத்து அவ்வாறு நிகழாத வாறு, அதாவது மக்கள் குழப்பமடையாது நிதானத்துடன். நடந்து கொள்ளும் வகையில் அச்செய்தியை கையாள்வது.
4. ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலைநாட்டுதல்
மக்கள் ஒற்றுமையாகவும் ஒருங்கிணைப்புடனும், வாழ்வ தற்கு வழிவகுக்கும் செய்திகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் பொழுது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவதை ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. இந்த விடயங்களில் மிக சாணக்கி u JLDT&b6 Lb அதேசமயம் பாதிக்கப்படுபவர்களின் நியாயப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் நடுநிலை பத்திரிகைகள் நடந்து கொள்ள வேண்டும்.
5. நிலைமைகளை மக்களுக்கு விளக்குதல்
நாட்டில் நிலவும் சமகால நிலைமைகளை, நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொண்டு தெளிவு பெறும் விதத்தில் கதை, கட்டுரை, கவிதைகள் போன்ற ஆக்கங்களாக வெளியிடுதல்
6.மக்கள் விரோதமான செயற்பாடுகளை விமர்சித்தல்
பொதுமக்களை. அல்லது நாட்டின் நலன்களை, அல்லது மக்கள் சமுதாயத்தின் ஒரு பிரிவினரை பாதிக்கும் ஆட்சியாளரின் நடவடிக்கைகளை துணிச்சலுடன் எதிர்த்தும் விமர்சித்தும் எழுதுதல், இந்த இடத்தில் மக்கள் பிரதிநிதிகளின் நிலைக்கு சமமாக அல்லது அதற்குமேலாகவும் பத்திரிகைத்துறை குரல் கொடுக்க வேண்டும். இதற்காகவே பத்திரிகைத்துறை (4th Estate) 4வது பீடம் என்ற நிலையில் பிரிட்டனில் மதிக்கப்ப டுகின்றது. ஒருகட்சிப் பிரதிநிதி போன்றில்லாமல் சமூகத் தின் சகல தரப்பினர்சார்பிலும் பேசுவதற்கு பத்திரிகைக்கு
உரிமையுண்டு.
لر ܢܠ
85

Page 51
Y
N
7. பேரிடம் வேளைகளில் மக்கள் மனோதி
டத்தைப் பேணுதல்
புயல், வெள்ளம், மண்சரிவு, பூகம்பம், கொள்ளைநோய், யுத்தம் போன்ற பேரிடர் வேளைகளில் மக்கள் பேதலி த்துப் போகாமலிருக்கும் வகையிலும் அவர்களுக்கு தெம்பூட்டும் வகையிலும் செயற்படுவது, தன்னார்வ நிறுவனங்களின் பணிகளுக்கு ஊக்கமளிப்பது, தேவையெனின் நிவாரண நிதிகள் சேர்த்து வழங்க முயல்வது போன்றவையாம்.
8. விவசாயம், கைத்தொழில் போன்ற ஆக்கத்
தறைகளின் நலன்கள்
கிராமிய வாழ்வையும் தொழில்துறை மேம்பாட்டையும் 60) Du JLDIT8585 கொண்ட செய்திகளை பொதுவில் பெரும்பாலானவர்கள் வாசிப்பதில்லை. ஆனால் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமதுதுறைகள் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் படிப்பார்கள். எனவே நாட்டி ற்கும் சமூகத்துக்கும். நற்பயனளிக்கும் இத்துறை சார்ந்த விடயங்களை சகலரும் ஆர்வத்துடன் படிக்கவும் பயன்பெறவும் கூடிய வகையில் கவர்ச்சியான முறையில் அவைகளை வெளியிடுவது, ஊக்கமளிப்பது.
9. பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சீர்கெ
டுக்கும் விடயங்கள் தேசிய பண்பாட்டு விழுமியங்களுக்கு அந்நியமான விடயங்களை தவிர்ப்பதும், அவைகள் சமூகத்தில் நிலைகொள்ளாத வகையில் குரல் கொடுப்பதும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிக்க முயல்வதும் இத்தலைப்பில் அடங்கும்.
10. இளம் சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்கான
விடயங்கள்
இளம் சமுதாயத்தினர் எப்பொழுதுமே Ll85l6ᏈᎠᎿᏝ 8666 விரும்பும்மனப்போக்குடையவர்கள் எனவே
புதியவை யாவும் இளம் சமுதாயத்தினரின் எதிர்கால
84

N நன்மையை மையமாகக் கொண்டே இருத்தல் வேண்டும். நாகரிகத்தின் பெயரால் இழிவான செயற்பாடுகள் அவர்கள் மத்தியில் பரவாதமுறையில் விழிப்புடன் செயல்படுவது.
ck k >k sk
இங்கே குறிக்கப்பட்டுள்ள 10 அம்சங்களும் கட்டாயக் கோட்பாடுகள் அன்று. உத்தேசமாகக் கொடுக்கப்பட்டுள்ளவை பொதுப்பத்திரிகைகள் இவைகளை அல்லது இவைபோன்ற நெறிகளை உருவாக்கி பின்பற்றுவது சிறப்பாகும்.
பத்திரிகையாளனின் நிலைமை
பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் எல்லாத்தரப்பினரோடும் எப்பொழுதும் நண்பர்களாய் இருக்கமுடிவதில்லை. ஒரு நல்ல செயலுக்காக ஒருவரை ஒருமுறை பாராட்டியெழுதுபவர் வேறொருமுறை வேறொரு காரணத்துக்காக அவரை விமர்சிக்கவும் வேண்டியேற்பட்டு விடுகின்றது. நடுநிலை பத்திரிகையின். பத்திரிகையாளனின் நிலை இதுதான. இந்நிலையை சில படித்தவர்கள்கூட புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். பத்திரிகையில் இருக்கும்வரை அவனோடு ஒட்டி உறவாடுகிறவர்கள் அப்பத்திரிகையிலிருந்து விலகியவுடன் தூர ஒதுங்கிக்கொண்டு விடுகிறார்கள். எதுவானாலும் ஒரு நல்ல பத்திரிகையாளன் இந்நிலைகண்டு துவண்டுவிடமாட்டான். எப்பொழுதுமே அவன் தன் நடுநிலையான போக்கிலிருந்து பிசக விரும்பமாட்டான்.
உரிமைப் போராட்டங்கள், மக்களின் நியாயமான கோரிக்கைகள், அடிப்படையுரிமைகள், ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை என்று வரும் போது ஒரு தேசிய நடுநிலைப்பத்திரிகை அல்லது பத்திரிகையாளன் மனோ தர்மத்தை நிலைநாட்ட முயல்வதே நியாயம். அதாவது எல்லா வித கருத்துக்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் அதேவேளை நியாயத்தின் சார்பில் குரல் கொடுக்க தேவைப்படின் அதன் பக்கமாகவே சார்ந்து நீதிக்காகப் போராடு வதே சிறப்பாகும்.
米 米 米 米
என்நிலை
1957ம் ஆண்டு பத்திரிகைத்துறையில் நான் கால் வைத்தேன் 1988ம் ஆண்டு வரையில் இத் துறையில் துடிப்புடன் செயல்பட்டு வந்துள்ளேன். இதில் ஏறத்தாழ 25 ஆண்டுகள் \ஈழநாடு வில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து இறுதியில் ப்தில்
85

Page 52
(ஈழநாடு பத்திரிகையில் பலநிலைகளில் பணிபுரிந்து இறுதியில் பதில் ஆசிரியர் என்ற நிலையில் அத்துறையிலிருந்து ஒதுங்க வேண்டி ஏற்பட்டது.
இந்த 25 வருட காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியுடனோ அன்றில் தனிப்பட்ட அரசியல் குழுக்களுடனோ நான் அவசியமற்ற விதத்தில் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எல்லாக்கட்சிகளிலும் எல்லாத் தரப்புகளிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள்
என்றாலும் ஒரு மனிதன், ஒரு குடிமகன் என்ற முறையில்
எனக்கும் அரசியல் நோக்கங்கள், கலை கலாசார மேம்பாடுக்கான விருப்பங்கள் இல்லாமலில்லை. ஆனால் அவை பொதுமக்களின் நன்மை, பொதுதேசத்தின் மேம்பாடு
போன்றவற்றிற்கு இசைவாகவே வளர்த்துக் கொள்ளப்பட்டவை. அவைகளை நான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு பயன் படுத்திக் கொள்ள முற்படவில்லை. இதில் தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம் நானும் ஒருமனிதன் அன்றோ "தவறிழைப்பது மனித இயல்பு . மன்னிப்பதும் மறப்பதும் தெய்வீகம்"
வணக்கம்
86


Page 53


Page 54
அனுபவமும் ஆற்றலும்
மானவராக இருந்த காடு பத்திரிகைத்துறை ஆர்வம் ப எஸ்.பெருமாள் அவர்கள். மலை
பத்திரிகைத்துை ல் குச் சென்று ஆசிரியராக லேயே நி
பெரியார் சியால் u E!J|[Lll[[TH! யராகவும்,
pobĩTTEFJUT ஈழநாட் டில் பணிபுரிந்த6 1961இல் ஈழநாடு பத்திரிகையில் அயராத உழைப்பினாலும் ஆ லேயே ஈழநாடு வாரமலர் ஆகி அனுபவம் மிக்க எழுத்தாளர்க: யதுடன், புதியவர்களுக்கு சந்தர் தரம் வாய்ந்த இலக்கிய ஏடாக ந
இருபத்தைந்து ஆண்டுக பணிபுரிந்த இவர் "பன்னிரன், வர்ண பெயர்களில் சிறுகதைகளும் கல் றார். அத்துடன் பெருந்தொகையா
தமது பத்திரிகைத்துறை சிறந்து விளங்கப்பத்திரிகைத்துை கின்றார்.
இந்நூல் பத்திரிகைத்து விழைவோர்க்கும் பத்திரிகைத் போர்க்கும், பெரும் பலன் இலக்கியகாரர் ஆதலால் இனிய சம்பவங்களையும் சேர்த்துக் க கற்கும் போது ஏற்படும் ரசனை இந்நூலுக்கு கிடைக்கும் ஆ இவரைத் தூண்டும் எனநம்புகிறே
யாழ்பாணம்
ܠܐ
 
 
 
 
 

மிக்க பத்திரிகையாளர். །༽
பத்திலேயே தமிழ் பற்று மிக்கவராவும் விக்கவராகவும் விளங்கியவர் திரு. மயகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 1ற ஆர்வம் காரணமாக கொழும் வீரகேசரி பத்திரிகையில் உதவி சேர்ந்தார் மிகக்குறுகிய காலத்தி ர்வாகத்தின் நன்மதிப்பிற்கும் உடன் பாரின் அன்புக்குமுரியவரானார்.
கே.சி.தங்கராஜா அவர்கள் முயற் பாழ்ப்பானத்தில் ஈழநாடு பத்திரிகை ாது. கே.பி. ஹரன் பிரதம ஆசிரி எஸ்.எம். கோபாலரத்தினம், டி.எம் ஆகியோர் உதவியாசிரியர்களாகவும் னர். திரு. எஸ். பெருமாள் அவர்கள் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தமது வத்தினாலும் மிகக்குறுகிய காலத்தி சிரியராகப் பதவி உயர்வு பெற்றார். ளை வாரமலரில் எழுதத் தூண்டி ப்பம் கொடுத்து ஈழநாடு வாரமலரை டத்தினார்.
ளுக்கு மேல் பத்திரிகைத்துறையில் னம், பேனா, பி.எஸ்.பி " ஆகிய புனை விதை கட்டுரைகளும் எழுதி இருக்கி ான கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
அநுபவம், அறிவு, ஆற்றல் யாவும் 1ற தொடர்பான இந்நூலை வெளியிடு
1றை பற்றித் தெரிந்து கொள்ளு துறையைப் பயின்று கொண்டிருப்
தரவல்லது நூலாசிரியர் ஆக்க ப தழிழ் நடையில் பல சுவையான ற்போருக்கு சிறந்த இலக்கியத்தைக் ா உண்டாகும்படி எழுதியிருக்கிறார். தரவு இத்துறையில் மேலும் எழுத
T.
புலவர்.மார்வதிநாதசிவம்.
الفر