கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த சோதனை

Page 1
ரீமத் சுவாமி
 

( NNNNNNNNNNNNNN" W
W
. [
W
W
Mahir
蹟
Aih
W
鹏。
T T601 T

Page 2


Page 3

சுவாமி கொங்காதரானந்தா
அவர்களின்
சித்த சோதனை
*சிவயோக சமாஜம், ‘சுவாமி கெங்காதரானந்தா சமாதி, 68, பிரதான வீதி, திருக்கோணமலை, இலங்கை R 026-22049

Page 4
நாற் தலைப்பு முதற் பதிப்பு பிரதிகள்
தொகுத்தவர்
உரிமை
66ນ6ຫົuໃ6
அச்சிட்டோர்
விலை
“சித்த சோதனை?
06-03-2000
1000
செல்வி. தா. சியாமளாதேவி
சிவயோக சமாஜம்
சிவயோக சமாஜம்,
திருக்கோணமலை,
உதயன் பிரிண்டர்ஸ்
39, அருணகிரி வீதி, திருக்கோணமலை, இலங்கை,
தொ. பே. 026-20783
40/=
அருள்மிகுறிமத். கவாமி. கெங்காதரானந்தா
அவர்களின்
9வது ஆண்டு நிறைவு குருபூஜை தினத்தன்று (06-03-2000) இந்நூல் வெளியிடப்பட்டது.
ല്ലല്ലല്ല

அணிந்துரை
‘றி குருப்யோ நமஹ'
திருகோணமலை சிவயோக சமாஜத்தினர் வெளியிடும், “சித்தசோதனை' என்னும் நூலுக்கு இந்த அணிந்துரையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சற்குரு சுவாமி கெங்காதரானந்தஜி அவர்களது, இதுவரை வெளிவராத ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பே இந்நூல். இதில் பதினான்கு கட்டுரைகள் | உள்ளன.
யாரும் அறியாத வகையில், இரவு முழுவதும் அமைதியாகப் பெய்து, காலையில் மொட்டுக்கள் பலவற்றை மலரச் செய்யும் பனியைப் போன்று, சற்குரு சுவாமி கெங்காதரானந்தா அவர்களும், தங்கள் அருள்வாழ்க்கையை எந்த ஆரவாரமும் விளம்பரமும் இன்றி மிக அமைதியாக வாழ்ந்து, அதேசமயம் யாரும் அறியாவணி ணம் LU 6MD J 35 உள் ளங்களை நல்வழிப்படுத்தியுள்ளார். இன்றும் அப்பணி அவரது நூல்கள் மூலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இந்நூல்களையெல்லாம் தொகுத்து வரும் செல்வி. சியாமளா தேவி அவர்கள், சிறுவயதிலிருந்தே சற்குரு சுவாமிகளுக்கு பல ஆண்டுகளாக சேவை செய்து, ! அவரது கருத்துக்கள் மற்றும் உணர்வுகளில் மூழ்கியவர். சுவாமிகள் மேற்கொண்ட தெய்வீகப் பணியில் செல்வி சியாமளா தேவி அவர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. எதிர்கால சந்ததியினர் என்றென்றும் அவருக்கு கடமைப் பட்டவர் ஆவர்.

Page 5
இன, மத, மொழி வேறுபாடுகளை அடிப்படை யாகக் கொண்ட முடிவில்லாத யுத்தங்கள், உடல் உள ரீதியாக பாதித்து, சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாக்கும் மது மற்றும் போதை வஸ்துக்களின் ஆதிக்கம், நாகரீகம் என்ற பெயரில் நடைபெறும் அநாகரீகச் செயற்பாடுகள், நற்பண்புகளை வளர்க்கத் தவறிய சமயச் சடங்குகள் மற்றும் கல்விமுறை - இவையே இன்றைய வாழ்க்கைச் சூழல். இத்தகைய சூழலில் வாழும் ம்க்களின் மனம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறத் தேவையில்லை. அமைதியை இழந்து, கவலை ஏக்கங்களால் அவதிப்படும் இத்தகைய மனதை, நல் வழிப் படுத்தக் கூடிய சக்தி ஞானிகளின் வார்த்தை களுக்குமட்டுமே உண்டு.
அவலங்கள் நிறைந்த சூழலின் மத்தியிலும், நிறைவான, உயர்வான வாழ்க்கையை ஒருவர் வாழமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஞானிகள், அந்த அடிப்படையில் தான், ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்” என்று கூறினர். ஆனால் அந்த உன்ன தத்தை அவர்கள் தீவிர ஆன்ம சாதனையின் மூலமாகவே பெற்றனர். எனவே அமைதியான வாழ்க்கைக்கு ஆன்ம சாதனை அவசியம் என்பதை சுவாமிஜி அவர்களே கூறுகிறார்கள், ‘இந்த முடிவில்லாத பேரின்ப நிலையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோளாக இருந்தால், அதற்குரிய சாதனையைச் செய்துதான் ஆகவேண்டும்” (இலட்சிய வாழ்க்கை). அவர் மேலும் கூறுகிறார், ‘‘தாமிரத்தை செம்பொன்னாக மாற்றும் இரசவாத வித்தை போன்று, துன்பம் நிறைந்த உலக வாழ்வை தெய்வீகமாக மாற்றுவது யோகம்” (சித்த சோதனை).
I

யோகம் என்றதும் உலகைத் துறந்து காட்டிற்குச் சென்று, ஊண் உறக்கமின்றி கடும் தவம் இயற்ற வேண்டுமோ என்று மனம் அச்சம் கொள்ளலாம். ஆனால் சற்குரு சுவாமிகள் சொல்லும் யோகம் எளிமையானது. "மனம், புத்தி, சரீரம் இம்மூன்றையும் தம்வசப்படுத்தி பிரபஞ்ச நியதி நியமங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். இதற்காகத் தனித்திருக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடக் கடமைகளை தார்மீகரீதியில் செயற்படுத்தினால், நாளடைவில் இதயசுத்தி கிடைக்கும். அழுக் கற்ற கண்ணாடியில் முகம் தெளிந்து காணப்படுவது போல, தன்னைத் தான் காணமுடியும்.” (வாழ்வதெப்படி).
இந்த இதயசுத்தியே இன்றைய அவசரத் தேவை. இதைப் பெற்றாலொழிய வேறு எதைக் கொண்டும் வாழ்க்கையில் அமைதி பெற இயலாது என்கிறார் சற்குரு சுவாமிஜி அவர்கள். “இறைவன் மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் இவ்வுலகில் படைத்து வைத்திருக்கிறான். அதில் ஒரு குறையுமில்லை. அதனைச் சமநோக்குடன் பகிர்ந்து அனுபவிப்பதற்குரிய மனப்பக்குவக் குறைவுதான் உலகத்தில் அதிக துன்பத்தை விளைவிக்கின்றது. எனவே இன்று நமக்கு அவசரமாகத் தேவைப்படுவதெல்லாம், மனிதர்களுடைய மானசீகமான ஒரு நல்ல மாற்றத்திற்குரிய புரட்சியே. இதனைத் தவிர, வேறு எந்தப் புரட்சியும் மனித சமுதாயத்தை திருப்தியுடன் நிம்மதியாக வாழ வைக்க உதவாது”. (தார்மீகப் புரட்சி)
III

Page 6
மேற்கூறிய கருத்துக்களைப் போன்று இன்னும் பல நன்முத்துக்கள் இந்நூலின் கட்டுரைகளில் பரவிக் காணப் படுகின்றன. வாழ்க்கை என்னும் உரைகல்லில் தேய்த் தெடுக்கப்பட்ட அனுபவங்களிவை என்பதால், இக்கருத்துக்கள், படிப்பவர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுவே ஞானிகள் வாக்கின் சிறப்பாகும்.
சற்குரு சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் ஆன்மீகச் சிந்தனைகளை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டுவரும் திருகோணமலை சிவயோக சமாஜத்தினரின் பணி மிகவும் போற்றத்தக்கது. இந்நூல்களின் வாயிலாக சற்குரு சுவாமிகளின் சாந்நித்தியம் பேணப்படுகின்றது என்பதில் ஐயமில்லை.
ஞானிகளைப் போற்றி, அவர் காட்டும் வழிநடந்து, வாழ்க்கையில் உயர்வு பெறுவோமாக!
கவாமி ஆத்மகனானந்தா தலைவர், இராமகிருஷ்ண மிஷன், 40, இராமகிருஷ்ண வீதி, கொழும்பு - 6.

游
兴
பொருளடக்கம்
தார்மீகப் புர்ட்சி
வாழ்வதெப்படி இலட்சிய வாழ்க்கை
ஆத்ம விசாரம்
நாதோபாசனை
மந்திரயோகம்
தியான சாதனை
இன்றைய உலகப் பிரச்சனைகளுக்கு வேதாந்தம் கூறும் வழி என்ன?
கடந்த காலங்கள் (இந்துக்களின் சிந்தனைக்கு) சித்த சோதனை (1)
சித்த சோதனை (I)
சித்த சோதனை (I)
கம்மா இரு
அபூர்வ சிந்தனை
வஜனாம்ருதம் (மூன்றாம் பாகம்)
<ܠܐ
01.
04
06
11
15
17
21
27
29
35
40
44
50
63
65

Page 7

ஒதார்மீகப் புரட்சிஐ
உலகம் பலவாறான பெரும் கொந்தளிப்புகளுக்கூடாக, நீந்திக் களைத்துப் போய்க்கொண்டிருக்கிறது. மதுரமான இருதயத்துடன் வாழவேண்டிய மனித இருதயங்களில், சாந்தியும் சமாதானமும் இல்லை; அடுத்த நிமிடம் என்ன நிகழுமோ என்ற சந்தேகம் - பயம் - அச்சம் முதலிய மனநிலையோடு மனிதன் வாழவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகின்றது. மனித சமுதாயத்தின் கடிவாளத்தைப் பிடித்து நடத்தவேண்டிய பிரதான தர்மங்களெல்லாம், அதன் பரிசுத்தமான இலட்சியத்திலிருந்து நழுவிக் கொண்டிருக்கின்றன.
ஆத்மீக ஒருமைப்பாட்டுடன் வாழவேண்டிய மனிதர், ஜீவித தர்மங்களைப் புறக்கணித்து, சுயநலம் - சுரண்டல் - அகங்காரம் - போட்டி - பொறாமை போன்ற தீய குணங் களுக்கு அடிமைப் படுகின்றனர். மனித சமுதாயத்தின் அதிபிரதான தளங்களாகிய இன-மத-அரசியல் போன்ற வைகளில் இந்தக் குணங்கள்தான் இன்று தலைவிரித் தாடுகின்றன. நாம் ஆனந்தமாய் பிரயாணம் செய்யவேண்டிய வாழ்க்கையாகிய தார்மீக வண்டிச் சில்லுகளை, நாங்க ளாகவே தகர்த்தெறிந்து கொண்டிருக்கின்றோம்.
உங்களிடம் ஒரு சமுதாய ரீதியான அன்புணர்வு இருதயம் இருக்குமேயானால், உங்களுடைய மதிப்பிற்குரிய நேரத்தின் ஒருசில நிமிடங்களாவது இதனை ஆர அமரச்சிந்தனை செய்தால், உண்மையில் மனித சமுதா யத்தை நேசிக்கின்ற அந்த இருதயம் வேதனையால் துடிக்கக் கூடுமல்லாவா? மனிதனுடைய மூளை அபாரமாய் வளர்ந் திருக்கின்றதென்பது முற்றிலும் உண்மை. எனினும்,மனம் அதற்கேற்றவாறு வளர்ச்சி அடையவில்லை. இந்த
01

Page 8
மனவளர்ச்சிக் குறைவுதான் இன்று சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சகல பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.
நமக்கு வரும் பொல்லாப்புகளெல்லாம், எங்கிருந்து - எவ்வாறு உருவாகி வருகின்றன என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். நன்மையும் தீமையும், வானத்திலிருந்தோ அன்றி பூமியிலிருந்தோ உருவாகுவதில்லை. அவைகள் மனிதன் தனது மனதால் தானே சிருஷ்டித்துக் கொண்டவை. ஆகை யால் மனிதன்தான் இத்தகைய துன்பங்களைச் சம்காரம் செய்ய வேண்டும். மனிதன் ஒன்றை நிச்சயமாக உணர வேண்டும்; இதே நிலையில், மனித சமுதாயத்தின் மனம், தொடர்ந்து மிருகத் தன்மைகளின்பால் செல்லுமானால், எதிர்கால சமுதாயத்தின் கதி என்னாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
குழந்தைகள் தவறான வழியிற் செல்வதைப் பார்த்து அலட்சியமாயிருக்கின்ற பெற்றோர்கள், குழந்தைகளுடைய குற்றச் செயல்களுக்கு உடந்தையாயிருப்பது போன்று, தற்போதைய சீர்கேடுகளைப் பார்த்து நாம் மெளனமா யிருக்கும் பட்சத்தில், எதிர்கால சமுதாயத்திற்கு நாம் பெருங் குற்றம் விளைவித்தவர்களாகவே ஆவோம். மனிதர் தமது தார்மீக மூலகங்களை விட்டு, வெறும் ஒரு பொருளாதாரப் பிராணிகளைப் போன்று மாறி வருவது துக்கத்துக்குரியது. காலக்கிரமத்தில் எஞ்சியிருக்கின்ற மனிதப் பண்புகளையும் இதனால் இழந்து விடக்கூடும்.
இறைவன் மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் இவ்வுல கத்தில் படைத்து வைத்திருக்கின்றான். அதில் ஒரு குறையுமில்லை. அதனைச் சமநோக்குடன் பகிர்ந்து அனுபவிப்பதற்குரிய மனப்பக்குவக் குறைவுதான் உலகத்தில் அதிக துன்பங்களை விளைவிக்கின்றது. எனவே இன்று நமக்கு அவசரமாகத் தேவைய்யருவனவெல்லாம் மனிதர் களுடைய மானசீகமான ஒரு நல்ல மாற்றத்திற்குரிய
02

புரட்சியே.இதனைத் தவிர, வேறெந்தய் புரட்சியும், மனித சமுதாயத்தைத் திருய்தியுடன் நிம்மதியாக வாழ வைக்க உதவாது.
ஆகையால் ஜனங்களிடம் மிஞ்சியிருக்கும் தார்மீக சக்திகளை யெல்லாம் திரட்டி எடுத்து, இருதய சுத்தியோடும் நல்ல சுபாவத்தோடும் கூடிய, ஒரு நல்ல தார்மீக சமுதாயத்தை உருவாக்கி எடுப்பதற்கு, எங்களுடைய சர்வ சக்திகளையும் உபயோகப்படுத்த வேண்டும். மனிதர் களுடைய சிந்தனா சக்திகளையும், செயற்பாடுகளையும் தீவிரப்படுத்துவோமானால், மங்களகரமான ஒரு எதிர் காலத்தை ஆசிப்பதற்கு இடமுண்டு.
மதத்தின் மூலக் கருத்துக்களை வாழ்க்கையின் அடிக்கல்லாகக் கருதுக அதன் சக்தியை உங்கள் பிரான சக்தியென்று நினையுங்கள். மதத்தில் சகஜமாகவே உருவாகிவரும் சாம்பல் - கரி போன்றவற்றை தயவு தாட்சண்ய மில்லாமல் அள்ளி எறியுங்கள். மதச் சிந்தனைக்கு நாசம் வருவதாயின் உலகத்திற்கு நாசகாலம் வந்திருப்பதாக அறிந்து கொள்ளுங்கள்.
ck k XK 米米米 米米米
சரீரம் ரோகத்தாலும், மனம் ஆசாபாசத்தாலும், ஆத்மா மாயையாலும் பந்திக்கப்பட்டிருக்கின்றன. இம் மூன்று பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைகின்றவனே,
யதார்த்த சுதந்திர புருஷனாவான்.
- வஜனாம்ருதம்
03

Page 9
வாழ்வதெப்படி?
ாழ
நன்மையும் தீமையும் நம்மைக் கைவிடுகின்றனவா? நன்மைக்கும் தீமைக்கும் பின், அனைத்தையும் கடந்து நிற்கும் உங்களுடைய சுயசொரூபத்தை நீங்கள் அறிய வேண்டும். அறிந்த பின் உங்கள் பார்வையில் அனைத்தும் நல்லதாகவே தோன்றும்; தீர்வு காணமுடியாத வாழ்க்கைப் பிரச்சனைகள் அறவே நீங்கும். துயரம் தீர்ந்த சுக அனுபவம் ஒவ்வொரு நிமிடத்திலும் அனுபவ, மாத்திரமாய் நிறைந்து நிற்கும்.
வாழ்க்கை என்பது ஒரு கடினமான போராட்டமாக, பிரச்சனைகளால் நெருக்குண்டு இருப்பது என்பதில் சந்தேகமில்லை. தைரியமுடன் அதனைக் கடந்து செல்ல வேண்டும். கடந்து செல்லக் கூடிய அற்புதமான சக்தி, உங்களுடைய ஹம்ருதயத்தில் இருக்கின்றது. அந்த ஆத்ம சக்தியை உபயோகப்படுத்தி, சகலவிதமான இன்ப துன்பங்களையும் ஒதுக்கி மேலே செல்லுங்கள்!
இஃது ஒவ்வொரு மனிதனாலும் சாதிக்கக் கூடியது; அனுபவத்திற்குக் கொண்டு வரக்கூடியது. அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் 'விதி என்பதற்கு நீங்கள்தான் கர்த்தா. உங்களால் படைக்கப்பட்ட நன்மை தீமைகளிலிருந்து, நீங்களாகவே விடுதலை அடைய வேண்டும். ஜீவ சக்தியும், பரமாத்ம சக்தியும் ஐக்கியப்படும்பொழுது, அதுதானாகவே நிகழக் கூடியது.
மனம், புத்தி, சரீரம் இம்மூன்றையும் தம்வசப்படுத்தி, பிரபஞ்ச நியதி நியமங்களுக்கு அப்பாற் செல்ல வேண்டும்.
04

இதற்காகத் தனித்திருக்க வேண்டுமென்பதுமில்லை. அன்றாடக் கடமைகளை தார்மீக நெறியிற் செயற் படுத்தினால், நாளடைவில் ஹம்ருதயகத்தி கிடைக்கும். அழுக்கற்ற கண்ணாடியில் தனது முகம் தெளிந்து காணப்படுவதுபோல், மாசற்ற ஹற்ருதயத்தில் தன்னைத் தான் காண முடியும்.
உன்னுடைய எதிர்காலத்தை நிச்சயிப்பது நீ பழ வினைகளிலிருந்து விமுக்தனாகும் ஆத்ம சக்தி உன்னிடமிருக்கிறது. அந்தச் சக்தி தான் நீ! நீரோட்டத்தைக் கிழித்துச் செல்லும் வள்ளம் போன்று, தன்னறிவால் வாழ்க்கைப் பிரச்சனைகளைக் கிழித்தெறிந்து முன் செல் வாய்! உன்னை ஓர் ஆத்மீக வீரனாக மாற்றுக! வேற்று மைகளும் துன்பங்களும் நிறைந்த பிரபஞ்ச நியமங்களில், குற்றமற்ற - இன்பம் நிறைந்த ஒன்றை, எல்லாவற்றிலும் - எப்பொழுதும் காண முயற்சிக்க வேண்டும். அதுதான் வாழும் வாழ்க்கை.
*带书令-+#今·
அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடு செய்யும் கோபம் - சினம் - பகை - பொறாமை போன்ற ஜென்ம சத்துருக்களை ஞான விஜாரத்தால் வெல்லுங்கள். கோபம் வரும்பொழுது யாருக்கு இந்தக் கோபம் வந்தது? யாரோடு வந்தது? எதற்கு வந்தது? என்ற விசாரணையால் அதைச் சாந்தப்படுத்துங்கள். அதே போன்று மற்றெல்லா மனத்துவேசுஷங்களையும் ஞான விசாரணையால் ஒடுக்கிச் சாந்தப்படுத்துக!
- வஜனாம்ருதம்
05

Page 10
3 இலட்சிய வாழ்க்கை ஐ
நன்மையும் தீமையும் கலந்து வரும் எண்ணங் களுக்குரிய விஷயங்களை, நமது அனுபவத்திற்குக் கொண்டுவருவதற்குரிய பெரும் முயற்சியேதான் வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. சுக துக்கங்கள் கலந்த இந்த எண்ணக் குவியற் போராட்டங்களை, மிகப் பரிசுத்தமான ஒரு எண்ணத்துடன் 'பொருந்த வைத்து, செயற்படுத்தும் பொழுதுதான், வாழ்க்கை என்பது நிறைந்த பொருளு டையதாக - உயர்ந்த குறிக்கோள் உடையதாக அமையும்.
எண்ணங்கள் எவ்விதமாக உண்டாகின்றன? அவை செயற்படும் முறைகள் எவ்வாறு? உயர்ந்த குறிக்கோள் என்றால் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் நாம் தெளிவான அறிவுடையவர்களாக இருக்க வேண்டும். மனம் - புத்தி - சரீரம் என்ற முக்கரணங்களைக் கொண்டு, இறைசக்தி நம்மையெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கிறது.
ரஜோ குணம், தமோகுணம், சாத்வீக குணம் என்ற மூவகை இயற்கைக் குணமுடைய எங்கள் மனம், சூக்கும பிராண சக்திகளின் அலைகளால் சதா தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிராண சக்தியின் தாக்கத்தினால், மனதில் அசைவு அல்லது சலனம் உண்டாகிறது. அசைகின்ற மனம், அலை அலையாக வளர்ந்து, புலன்கள் வழியாக வெளிச் சென்று, உலக விசயங்களுடன் தொடர்பு கொள்கிறது.
இவ்விதம் உலக விசயங்களில் மனம் சம்பந்தப் படுவதனால், காமம் - குரோதம் - லோபம் - மோகம் மதம் - மாச்சரீயம் போன்ற குணங்களின் உருவகம் கொண்டு, அதற்கேற்ற நன்மை தீமைகளை ஓயாமல் அனுபவித்துக்
06

கொண்டு இருக்கிறது. முன் குறிப்பிட்ட ஆறு விதமான குணங்களுடைய நுகர்ச்சிக்கும் - வளர்ச்சிக்கும் தக்கபடி, எங்களுடைய ஜனன மரணங்களும் கூடிக் கொண்டே போகும்.
இவ்விதம் ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இறப்பு - பிறப்பு என்ற சுழற்சியினால் வரும் தீராத துன்பங்களிலிருந்து விடுபட்டு, துக்கக் கலப்பில்லாத - நித்தியமான ஒரு பரமசுகத்தை நாம் அடைய முடியுமா? முடியும் என்று சமய தத்துவம் கூறுகின்றது.
அஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட சகலவிதமான துன்பங்களையும் புறந்தள்ளினால், எஞ்சி நிற்பது சத் - சித் ஆனந்தம் என்ற பேரனுபவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது எல்லோராலும் - எக்காலத்திலும் அடையக் கூடியதென்று சான்றோர்கள் உறுதிமொழி கூறுகின்றார்கள். அந்தப் பேரின்பம் - அல்லது ஆனந்த நிலை, நித்தியமும் சத்தியமுமாயிருக்கின்ற ஆத்மாவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றபடியால், அதை அடைவதுதான் எங்கள் வாழ்க்கையின் மேலான இலட்சியமாக அமைய வேண்டும்.
இந்த இலட்சிய சிந்தனை எங்களுடைய அன்றாட வாழ்க்கையில், எல்லாப் பாங்கிலும், உணர்வு மயமாக நின்றாலே போதுமானது. நாளடைவில் ஆசையும் - வெறுப்பும் மயக்கமும் - தடுமாற்றமும் நிறைந்த வாழ்க்கையிலிருந்து தூக்கி எடுத்து, ஒளியும் தன்னம்பிக்கையும் நிறைந்த, ஜீவசக்தி வழியும் ஒரு வாழ்க்கை வட்டத்திற்குள் நம்மைக் கொண்டு போய் நிறுத்துவதைக் கண்கூடாகக் காணலா மென்று மகான்கள் வாயிலாக அறிகின்றோம்.
இப்படியாகச் சுழன்று சுழன்று வரும் ஜனன மரணங்களின் துக்கங்களை நீக்கி, ஒரு பூரண சுகத்திற்கு எங்களை ஆளாக்கித் தீர்க்கும் இலட்சிய வாழ்க்கைக்கு, இந்து மதம் சில வழிவகைகளைத் தந்திருக்கின்றது. இந்து
07

Page 11
மதம்- இந்து மத சித்தாந்தம் ஒரு சில மார்க்க தரிசிகளால் மாத்திரம் உண்டாக்கப்பட்டதன்று. அவை யுகம் - யுகங்களாக, பல்லாயிரம் தத்துவ சிந்தனையாளர்களால், காலாகாலத்தில் இறைவன் - இயற்கை - மனிதன் இம் மூன்றையும் பலகோணத்திலிருந்து - பல்வேறு ரீதியாகவும் ஆராய்ந்து எடுத்த தத்துவங்களேயாகும்.
இங்ங்னம் ஆராய்ந்தெடுத்த முடிவான தத்துவத்தை அடிப்படையாக வைத்து, பண்படுத்தி எடுத்த ஒரு வாழ்க்கை முறையைத்தான், இந்துமதம் என்று சொல்கிறோம். சனாதன தர்மம், என்றும் நிலைத்திருக்கின்ற சில குண விசேஷங்களை சுபாவமாகக் கொண்ட வாழ்க்கை முறையாகையால், இந்து மதம் வெறுமனே ஒரு மதம் அல்ல; அதை சனாதன தர்மம் என்று சொல்லுவதே உசிதமென்று பெரியோர்கள் கூறுகின்றார்கள்.
கால தர்மத்திற்கும் - மக்களுடைய மனபரி பாகத்திற்கும் ஏற்றவாறு கர்மம் - யோகம் - பக்தி - ஞானம் என்ற ஆத்ம பயிற்சிகள் மூலம் தர்மம் - அர்த்தம் - காமம் - மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற வாழ்க்கை அனுபவங்களை வளர்த்துச் சென்று இலட்சியத்தை அடைய வேண்டும். இதில் மோட்சம் என்பது வாழ்க்கையின் குறிக்கோள்; மற்றவை மூன்றும் குறிக்கோளை அடைவ தற்குரிய உபாயங்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் இப்போது கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். கலிசந்திரனோபநிஷதத்தில், கலியுகத்தில் இறைவனை எளிதில் அடையும் வழிவகைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் நாம பஜனை தான் முக்கிய சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் ஏனைய சாதனைகளுக்கு ஏற்ற மனப்பக்குவம் மக்களுக்கு இல்லாதபடியால், நாம பஜனை ஒன்றுதான் இக்கால மக்களுக்கேற்ற சிறந்த ஆத்ம சாதனமாகக் கருதப்படுகிறது. விசேஷ அனுஷ்டானங்கள் ஒன்றுமேயில்லாமல், எளிதில் எல்லோராலும் - எப்பொழுதும் செய்து பலனடையக் கூடியது.
08

சமீப காலத்தில் வாழ்ந்த தியாகப் பிரம்மம், மகாபிரபு, சைதன்யர், ராதாகிருஷ்ணன் போன்ற மகான்கள், நாம பஜனையால் இறைவனை நேரடியாகத் தரிசித்தவர்கள். இறைவனுடைய திருநாமத்தை, அதற்கேற்ற ஒழுங்குடன் பஜனையாகச் செய்து வந்தால், இறைவன் திருவருள் சாதனைக்கேற்றவாறு பொழியத் தொடங்கும்.
எங்களைச் சூழ்ந்திருக்கும் கஷ்டங்களையும் எதிர்ப்புக் களையும் பார்த்து, கண்ணிரும் கையுமாக ஒதுங்கி வாழ்வதற்கு மதம் எங்களுக்குப் போதிக்கவில்லை. அவைகளை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளும் இயற்கைச் சக்தி எங்களிடம் உண்டு. அந்தச் சக்தியை நாமஜெபம், பஜனையின்வழி வளர்த்தெடுத்து, சக்தியும், பலமும் பொருந்திய ஒரு சமுதாயமாக நாம் மாற வேண்டும்.
"ஆத்ம சாதனைகளால் ஆத்ம சக்தியைத் தட்டி எழுப்பி, இயற்கைக் கஷ்டங்களைக் கீழடக்கி, மேலே செல்லுங்கள்’ என்பதுதான், இந்து மதம் நமக்குத் தரும் மிக உற்சாகமான செய்தி. எங்கள் இதயஸ்தானத்தில் மறைந்திருக்கும் அந்தத் தெய்வீக சக்தியை, நாம பஜனை களின் மூலம் எழுப்பிவிட்டால், ஓஜசும் - தேஜசும், நிறைந்த தெய்வீக சக்திகளாக நாம் மாறலாமென்று, சமயம் எங்களுக்குச் சிந்தாந்திக்கிறது.
ஒஜஸ் என்பது சரீர பலத்தையும், தேஜஸ் என்பது ஆத்ம சக்தியையும் குறிக்கும். ஆகையால் எங்களைச் சூழ்ந்திருக்கும் கஷ்டங்கள் எத்தகையதாக இருந்தாலும் சரி, அவைக்குரிய காரணங்கள் எவையாயினும்சரி, அவை களைப் பார்த்து நிலை தடுமாறி விடாமல், தியானம் நாம பஜனை போன்ற ஆத்ம சாதனைகளை நாள்தோறும் செய்துவரவேண்டும்.
09

Page 12
தினசரி சிறிது நேரமாவது நாம பஜனையுடன் ஜெபம் - தியானம் இரண்டையும் சேர்த்துப் பழகி வந்தால், நாளடைவில் அபூர்வமானதொரு தெய்வீக சக்தியின் அலைகள், எங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு நிற்பதை உணரலாமென்று, அனுபூதிமான்கள் கூறக் கேட்டிருக் கின்றோம். சாதனையால் எழும் அந்த இரகசிய அலைகளின், விசேஷ சக்தியால், ஆரம்பத்தில் சரீரத்திலும் மனதிலும் ஆழ்ந்த சுகம் தோன்றத் தொடங்கும். எதிர்பாராத விதமாக, அநேக காரியங்கள் கைகூடி வருவதையும், தீவினைகள் எல்லாம் மெல்ல மெல்ல விலகிச் செல்வதையும் உணரலாம்.
காலம் செல்லச் செல்ல சாதனையால் விரிந்து சுத்தமடைந்த மனம், இச் சிறு சரீரத்திலிருந்தும் அதனால் ஆக்கப்பட்ட குறுகிய வட்டத்திலிருந்தும் விரிந்து சென்று, பரிசுத்த அன்புணர்வின் வழி, பூரணத்துவ நிலைக்கு உயர்ந்து செல்லுமென்று மதம் எங்களுக்குப் போதிக்கின்றது. இந்தப் பூரணத்துவம்தான் எங்களுடைய இறுதி உச்ச நிலை. ஒரு ஜீவன் இந்த முழுமையை அடையும்போது, தனித்துவம் என்ற ஜீவபேதத்தில் நின்று, ஏகத்துவம் என்ற பரந்த வெளியில் ஒன்றித்து நிற்பதனால், முடிவில்லாத சுகத்துடன் இரண்டறக் கலக்கின்றது.
இந்த முடிவில்லாத பேரின்ப நிலையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோளாக இருந்தால், அதற்குரிய சாதனையைச் செய்துதான் ஆகவேண்டும். இதைவிட தீராத துயரத்திலிருந்து மீள்வதற்கு வேறு வழியில்லை. எங்களுடைய செயல் திறனையும், அதன் பலாபலனையும், இறைவனுக்காக அர்ப்பணம் செய்து, கர்வம் - பேராசை - அகங்காரம் போன்ற தீய குணங்களை அகற்றி, ஜெபம் - தியானம் - நாம பஜனை ஆகிய சற்கருமங்களில் நம்மை உட்படுத்தி வந்தால், ரிஷிவாக்கியம் போன்று, நாம் அனைவரும் அமிர்தத்தின் மக்களாகவே வாழலாம்.
10

ஜீ ஆத்ம விசாரம்
இந்த ஊன் உடலில் இருந்து முற்றிலும் வேறாய், அழிவற்றதாய், தூய அறிவு மயமாயிருக்கும் பரமானந்தப் பரவஸ்து ஒன்றிருக்கின்றது என்பது, சர்வ சமயத்தின் முற்றான முடிவு. இது ஆத்மாவென்றும், பிரம்மமென்றும், சிவமென்றும், விஷ்ணுவென்றும், இன்னும் பல பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த ஆத்மா ஜனன மரணமற்றதாயும், புலன்களால் அறிய முடியாததாயும், சுயம் பிரகாசமாய் இருக்கிறது. இந்த ஆத்ம தரிசனமே வாழ்வின் இறுதி இலட்சியமென்பது, சர்வ சமயங்களின் ஏகோபித்த முடிவு.
தோற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படைத் தத்துவமான ஆத்ம சொரூபத்தையே விவேகியானவன் அறியத்தக்கவனா கின்றான். இதை அறியும் முயற்சியே பெரு முயற்சி; இதை விசாரிக்கும் முறையே 'ஆத்ம விசாரம்; இதை அனுபவித்து உணரும் உணர்வே மெய்யுணர்வு; இந்தக் காட்சியே மெய்க்காட்சி; இதன் சேர்க்கையே ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம்; இந்த ஐக்கிய பாவமே ஜனன மரணமற்ற பெருநிலை என்றும், மோட்சமென்றும், ஜீவன் முக்தி நிலை என்றும் கூறப்படுகின்றது. சம்சார துக்கத்தை அழித்து, சர்வ சுத்த சுதந்திர பேரின்ப நிலையை நிலை பெற்றிருக்கச் செய்வது, இந்த ஆத்ம தரிசனம் ஒன்றுதான். அகண்ட பரிபூரண ஆனந்தமாய், அழிவற்றதாயிருக்கும் ஏகப் பரம்பொருளை அறிந்து, அதில் இரண்டறக் கலப்பது, பரம சாந்தி நிலை.
மனம் - புத்தி - சித்தம் - அகங்காரம் இவற்றைத் தாண்டி உபாதிகள் எதுவுமின்றி, பேத புத்தியை அகற்றி, சமரச பாவனையில் நின்று காணும் காட்சியே ஆத்ம தரிசனம். இந்த ஆத்மன் சங்கற்பவிகற்பாதிகளற்றது; கூறுபடாத குணாதீத சொரூபன்; இந்த ஆத்ம சொரூபமே நீ! இதை நன்கு அறி; இதுவே வேத வேதாந்தங்களால் விளக்கிக் கூறப்படுகின்றது.
11

Page 13
நான் - எனது - என்னும் மமதையால், ஆத்ம தரிசனம் தடைப்படுகின்றது. நான் என்னும் தற்போதத்தால், ஜீவபேதம் - மாயை - ஏனைய ஆணவ மலங்களும் உண்டாகின்றன. நான் என்பதில், பஞ்சகோச ரூபங்களான தூல - சூக்கும - காரண - சரீரங்கள் அடங்கிவிட்டன. ஆத்ம விசாரத்தில் இம் மூவித பேதங்களையும் அகற்றிவிடலாம். அந்தக் கரணத்துக்கு இதயமே இருப்பிடம்.
இந்திரியங்கள் புறக்கரணம்; மனம் அகக்கரணம். தூய அறிவு மயமாயிருக்கும் சுத்த சத்துவமணம், தமோ குணத்தின் சேர்க்கையால், ஜெகத்தாகத் தோற்றமளிக்கின்றது. ரஜோ குணத்தின் தோஷத்தால் நான் - நீ என்ற பேதபுத்தியும், அதனால் பாப புண்ணியங்களைச் செய்து ஜனன மரணங்களும் உண்டாகின்றன. இவ்வித பேதபுத்தியை அகற்றித் தான்தானாகவே இருக்கும் நிலை மோட்சநிலை. நான் அழிவற்ற ஆத்மா என்ற திடபாவத்துடன் இடைவிடாது விசாரம் செய்தால், மனம் விஷயாதிகளினின்றும் விலகித், தனது சொந்த நிலையை அடையும். விஷயாதிகளில் விருப்பு வெறுப்பற்ற மனதால் ஈஸ்வர தரிசனம் எளிதில் அறியப் படுகின்றது.
பிராணாயாமம், ஜெபம், மூர்த்தி தியானம் முதலியவை, மனதைப் பரிசுத்தஞ் செய்து, மனதைத் தன்னிலையில் வைக்க வல்லவை. ஆனால் ஆத்ம விசார மார்க்கம் மனதை முழு நாசம் செய்யவல்லது. ஆத்ம விசாரத்தால் ஆழ்ந்து, தன்னுள் மூழ்கி, திட் வைராக்கியத்துடன் ஆத்ம நிஷ்டனாய் இருப்பதே தன்னை ஈசனுக்கு அர்ப்பணம் செய்தலாகும். ‘நான் யார் என்னும் ஆத்ம விசாரணையால் மனதை நாசம் செய்தலே, உயர்ந்த ஆத்ம சாதனை. இந்த விசார மார்க்கத்துடன் பூஜை ஜெபம் முதலியவற்றைச் செய்து வருவானாயின் சாதகன் எளிதில் முன்னேற்றமடைவான்.
12

நான் என்பதில் இரண்டு விதமுண்டு. ஒன்று அகந்தையால் ஏற்படும் நான் என்ற தற்பெருமை; மற்றது - சங்கற்ப விகற்பாதிகளகற்றி, உள்ளத்தில் ஆழ்ந்து பார்க்கும் பொழுது நன்கு பிரகாசித்துக் காணும் சச்சிதானந்த சொரூபமாயிருக்கும் சிவம்; இதுவே உண்மையான நான். இந்த சத்திய சொரூபமாயிருக்கின்ற நான் - உடலல்ல; மனமல்ல; பிராணனுமல்ல; ஏனைய கர்ம ஞானேந்திரி யங்களுமல்ல; இவற்றையெல்லாம் விலக்கி மிஞ்சியிருப்பதே உண்மையான நான். இதன் இயல்பு சத்-சித்-ஆனந்தம். உள்ள மெய்ப் பொருளும் இதுவே. பாசமகற்றினால் ஜீவன் சிவமாகப் பிரகாசிக்கும்.
ஆத்ம விசாரணையும் ஒருவித மனோ விருத்திதான். எனினும் முள்ளை முள்ளால் எடுப்பது போல், விசாரணையின் இறுதி முடிவில், விசாரணைக்குரிய மனதின் மற்றப் பகுதியும் அழிந்து விடும். அப்பொழுது உள்ளது உள்ளபடி விளங்குகின்றது; நான் என்ற அகம்பாவம் அழிகின்றது; எல்லா விருத்திகளும் அடங்கி விடுகின்றன. எதைச் செய்யும்பொழுதும் நான் செய்கின்றேன் என்ற அகந்தையை அகற்றிச் செய்ய வேண்டும்.
ஆத்ம தரிசனத்தின் பொருட்டு, அகந்தையை அகற்றி விடுவதுதான் உண்மையான தியாகம் - சேவை - துறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. சுயநலமற்ற பெருநிலையும் பக்தியும் அதுவேதான். ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்து போகும் அளவில், பூர்வ வாசனைகளும் -தொடர்ந்த பாவ புண்ணியங்களும் தானே தேய்ந்து விடும்.
ஆத்ம விசாரம் செய்யும்போது, பூர்வ வாசனைகளும் வினைகளும் அகலுமா - இல்லையா என்ற சந்தேகத்திற்கு இடங்கொடாது உறுதியுடன் விசாரத்தில் ஆழ்ந்து மூழ்கிவிட வேண்டும். சந்தேகம் உண்டாகும் போதெல்லாம், யாருக்கு
13

Page 14
இந்தச் சந்தேகம் வந்ததென்று விசாரித்து அறிய வேண்டும். எண்ணங்கள் கிளம்பும் போதெல்லாம், எண்ணம் எழுந்த இடத்தில் வைத்து, அதை நசுக்கிவிட வேண்டும்.
திட வைராக்கியத்துடன் பெரு முயற்சி செய்து, விசாரணை செய்து கொண்டு போகும்போது, இறுதியில் மனது அடங்கி ஒடுங்கி, அழியும்; சகல பாப புண்ணி யங்களும் அகன்று, சச்சிதானந்த சொரூபமாய் சுத்தனாய் விளங்கும்; இனிமேல் அழிவில்லை; இன்பதுன்பங்கள் நம்மைத் தீண்டா; வெப்பம் குளிரால் நாம் பாதிக்கப்படுவதில்லை; இனி வரத்தும் போக்கும் நமக்கில்லை; இப்பொழுது உன் மனதால் சங்கற்பித்த உலகின் தோற்றம் முற்றிலும் உன் எதிரில் நின்றும் மறைந்து விட்டது; எல்லாம் ஒரே பிரகாசமாயிருக்கும் பேரொளி ஒன்று மட்டும்தான் எஞ்சி நிற்கும்; அகண்ட சச்சிதானந்த சொரூபமாயிருக்கும் இப்பேரொளிப் பிழம்பில் யாவரும் ஒன்று; இனம் - மொழி - தேசம் - நாம ரூபங்கள் அங்கு கிடையாது; இனத்தால் - நிறத்தால் - தேசத்தால் - மொழியால் இருக்கும் பிரிவினைகள், பரமார்த்தீக நிலையில் காண முடியாது. இவைகள் குறுகிய உள்ளத்தின் பிரிவு பாவனைகளன்றி - வேறல்ல.
உயர் ஆத்மாக்களே! எதையும் வெளியில் தேடி அலையாதீர்கள். எல்லாச் சம்பத்துக்களும் உமக்குள்ளே இருக்கின்றன. தெய்வீக சம்பத்தைநாடிநின்றால், பெளதீக சம்பத்து தானே வரும். இதைக் கருத்தில் வை. தன்னை அறிந்து தானாக நிற்கும் நிலையறியாமல், கேவலச் சிற்றின்ப நுகர்ச்சியில் கருகி விடாதே பரவெளியில் பரநடனம் புரியும், பரமானந்தப் பரம் பொருளை ‘நான் யார்’ என்ற விசாரணையால் அனுபவித்து அறிந்து நில்!
நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் தானான உண்மை தனைச்சாரு நாள் எந்நாளோ?
-தாயுமானவர்
14

3 நாதோபாசனை ஐ
பிரபஞ்சம் நாதமயமானது. ஏதொரு பொருளைத் தட்டினாலும் நாதம் பிறக்கும். நாதமில்லாத வஸ்து உலகத்தில் இல்லை. பிரபஞ்ச உற்பத்திக்கு தூல காரணமாயிருக்கின்ற நாதத்திற்குள்ளே, சர்வ சக்தனும் சர்வ வியாபியுமாகிய சர்வேஸ்வரன் பிந்து வடிவில் இருப்பதால் இறைவனை, “நாத பிந்து கலாதி நமோ நம' என வழிபடுகின்ற சம்பிரதாயங்களும் இருக்கின்றன. நாதமாகிய பேரொளி பிராணிகளை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதால், அதைப் பிரணவம் என்றும், ஓம் என்ற ஓசையுடன் ஒலிப்பதால் ஓங்காரமென்றும் கூறி வருகின்றனர்.
மனிதர்களுடைய நாபிக் கமலத்தை ஆதாரமாக வைத்து, சரீரம் முழுவதிலும் அதி அற்புதகரமான ஓசை விசேஷங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும், 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை உபாசிக்கின்றவர்கள், அதனுடைய சக்தியையும் மகிமையையும் பெறுகின்றனர்.பிரணவ மந்திரம் மற்றெல்லா மந்திரங்களுக்கும் பிராண சக்தியைக் கொடுப்பதாலும், ஏனைய மற்றைய உபாசனைகளைவிட மனம் எளிதில் இதில் லயிப்பதாலும், ஒங்கார மந்திர உபாசனைமிகவும் சிரேஷ்டமானது.
வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி எழுப்பி யிலிருந்து (Hom) வெளிவரும் ஒசையானது, அடிப்படையில் ஒன்றாயிருந்த போதிலும், அந்தக் கருவியின் அமைப்பு வித்தியாசத்தால் வெளிவரும் சப்தங்கள், விதம் விதமாகக் கேட்கின்றன. அதே போன்று 'ஓம்' என்ற பிரணவ நாதம், ஏக ஒலி வடிவமாயிருந்தும், அது வெளிவரும் ஜீவிகளின் கண்ட நாள அமைப்பு வித்தியாசங்களுக்கேற்ப, சப்தமும் வித்தியாசப்படுகின்றது.
நம்முடைய சரீரத்திலிருக்கும் எழுபத்திராயிரம் நாடி நரம்புகளின் கேந்திர ஸ்தானங்களாக, மூலாதாரம் மணிபூரகம் - சுவாதிஷ்டானம் - விசுத்தி - அனாகதம் -
15

Page 15
ஆக்ஞை - சகஸ்ராதாரம் என்றழைக்கப்படும் ஏழு ஆதாரச் சக்கரங்கள் (Plescus) இருக்கின்றன. சக்கரங்கள் என்றால் சில்லுகள் என்று அர்த்தம். ஒரு வாகனம் ஓடுவதற்கு சில்லுகள் எவ்வாறு பயன்படுகின்றனவோ, அதே போன்று. சரீரமாகிய வாகனம் ஓடுவதற்கு, இந்த ஏழு சக்கரங்களும் பயன்படுகின்றன.
சரீர இயக்கத்தின் முழுச் சக்திக் கேந்திரங்களாகிய இந்த ஏழு ஆதார சக்கரங்களில் அடங்கிக் கிடக்கும் மாபெரும் சைதன்ய சக்தியை, ஆத்ம சாதனைகளால் தட்டி எழுப்புகின்றவர்களுக்குத் திரிகால ஞானத்துடன் கூடிய அஷ்டமாசித்திகள் எல்லாம் சித்திக்கின்றன.
ஓங்கார ஒலி ஒவ்வொரு ஆதார சக்கரங்களிலும், தசவித நாதங்களென்று கூறப்படும். பலவித நாதங்களும் ஒலித்த வண்ணம் இருக்கும் சூக்கும் சரீரத்தில், இந்தச் சப்தங்கள், புலன்களால் கிரகிக்க முடியாத அதி சூக்கும மானவை. வெளிமணம் ஒடுங்கிய நிலையில் அந்தர்முக மனத்தால் மாத்திரம் கிரகிக்கக் கூடியவை. ஆனந்தமயமான இந்த நாதங்களில் மனம் இலயித்தால், மகுடி நாதத்தில் இலயித்து நிற்கும் சர்ப்பம் போன்று, மனம் உலக வாசனையற்று, நாத சுகத்தில் இலயித்து விடும்.
நாதானு சந்தானம் என்ற லயோ உபாய வித்தையால், சாதகனுடைய குண்டலினி சக்தி மேலெழுந்து, அனாகதச் சக்கரத்தைப் பேதனஞ் செய்து, உள்ளே நுழையும் போது, 'ஹிரீம்' என்ற அனாகதத் தொனி, ஹிருதய மத்தியில் தெளிந்து கேட்கும். இந்த ஹிரீங்கார சப்த விசேஷம்தான் 'ஹிரீம்' என்ற சக்தி பீஜ மந்திரம். அனாகதத் தொனி கேட்கும்பொழுது, தேனுண்ணும் வண்டு மலரின் மணத்தில் அக்கறை அற்றிருப்பது போன்று, சாதகன் சித்த விருத்திகளடங்கி, பெரும் சுகத்தில், இரண்டறக் கலந்து விடுகின்றான். நாதத்தில் லயித்திருக்கின்ற மனமும், மனத்தின் விஷய வாசனைகளும், நாதத்தில் லயித்து விடுகின்றபடியால், மனம் என்பது மரணமடைகின்றது. மனம் மரணமடைந்த பின்னர் மிஞ்சியிருப்பது முக்தி.
gas
16

ஒ3 மந்திர யோகம் ஐ
அனேகவித யோக சம்பிரதாயங்களில் மந்திர யோகம் அல்லது ஜெபயோகம் என்றொரு யோகமார்க்கம் இருக்கின்றது. தியான யோகத்தால் இறைவனை அடைவது போன்று, மந்திர ஜெபத்தால் மந்திரப் பொருளாகிய இறைவனை அடைவது மந்திர யோகம். வால்மீகியும் ஹனுமாரும் "ராமா' என்ற தாரக மந்திரத்தை ஜெபஞ்செய்து, யோகநிலை கண்டவர்களாவர்.
நம்முடைய உள்ளங்களில் எழும் கருத்துக்களை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக, மனிதனால் ஆக்கப்பட்ட கருத்துடைய அசுடிர இணைப்புகள் பாஷை என்று சொல்லப்படுகிறது. மந்திரம் அவ்வாறு மனிதனால் ஆக்கப் பட்ட அகஷ்ரக் கோவைகளன்று. ஆதியும் அந்தமுமில்லாமல் அண்ட பிண்டங்களில் சதா ஒலித்துக் கொண்டிருக்கும், ஓங்காரப் பிரணவ சப்தத்தின் பிரதிபலனான ஓசைகள்தான் மந்திரங்களென அழைக்கப் படுகின்றன.
இயற்கையில் இயற்கையாகவே ஒலித்துக் கொண்டி ருக்கும் இந்த மந்திர சப்தங்களை, ரிஷிகள் தங்களுடைய ஞான திருஷ்டியால் கண்டறிந்தபடியால், ரிஷிகளை ‘மந்திர திருஷ்டாக்கள்’ என்று கூறுவதுமுண்டு. என்றென்றும் பிரம்மாண்டத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த சப்த விசேஷம் தான் ஒவ்வொரு பொருளிலும் ஓசையை உண்டாக்குகின்றது. ஒரு பொருளைத் தட்டும்போது அதிலிருந்து எழும் ஒசைக்கு, இந்த மந்திர சப்தங்கள் தான் மறைமுக காரணமாய் இருக்கின்றன.
மனிதருடைய தேகத்திலிருக்கும் பிரதான கலாகேந் திரங்கள் ஒவ்வொன்றிலும் ஓம் - ஹிறிம் - க்கிலிம் - சிறீம்
17

Page 16
இவை போன்ற அனேகவிதமான மந்திரங்கள் இடையறாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றபடியால்தான், நமது அங்கங் களை அசைப்பதற்கும், பேசுவதற்கும் முடிகின்றது. மூலாதாரம் - நாபி - ஹற்ருதயம் - கண்டம் - நாக்குநுனி - உச்சி போன்ற கலா கேந்திர ஸ்தானங்களில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் மந்திர சப்தங்கள் ‘பீஜாட்சரங்கள்' என்று கூறப்படும். இந்த மந்திர சப்தங் களின் முன்னே 'ஓம்' என்ற பிரணவத்தைச் சேர்க்கும்போது, மந்திரம் பரிபூரண சக்தியுள்ளதாய் அமைகின்றது.
ஜெபிக்கின்றவனிடத்திலும், அவனைச் சுற்றியுள்ள மறைமுக மண்டலத்திலும், ஜெபம் அற்புதகரமான சக்தி அலைகளை உருவாக்கி விடுகின்றது. அந்த அலைகளுக்கு ஆக்கவும் அழிக்கவும்வல்ல சக்திகளுண்டு. ஜெபிக்கின்ற மந்திரத்திற்குத் தக்கபடி, ஜெபிக்கின்றவனுடைய மனம், புத்தி, காயங்களில் அதி மானசீக சக்திகளும், இன்னும் அனேக பிரபஞ்ச சக்திகளும் தோன்றுகின்றபடியால், ஜெபசாத கனுடைய இயல்பான ஆற்றலும் - அறிவும், பன்மடங்கு பெருகுகின்றது. அவனுடைய எண்ணங்களும் சொற்களும், தவறாமல் பலிதமாகின்றன. எந்தெந்த நோக்கங்களுக்கு மந்திர சக்திகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்தந்த நோக்கங்கள் கைகூடுகின்றன.
காயத்ரி மந்திரம் வருண மந்திரம் போன்ற மகா மந்திரங்களுடைய பிரயோக சித்தியால், கடும்வரட்சிக் காலங்களில்கூட மழை பெய்வதையும், இன்னும் பலவிதமான ஜெப சாதனையால் நோய்கள் குணமடைவதையும், கொடும் சர்ப்ப விஷ உபாதைகள் சுகப்படுவதையும் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம். பழங் காலப் போர்க்களத்தில், மந்திர சக்திவாய்ந்த அஸ்த்திரங்களைப் போர்க்கருவிகளாகப் பாவித்திருந்ததாயும், மந்திர சக்தியால் பறக்கும் ஆகாய விமானங்கள் இருந்ததாயும், புராண வரலாறுகள் அறியத் தருகின்றன. W
18

மந்திர ஜெபத்தால் தேவதைகளைப் பிரத்தியட்சப் படுத்தி, அற்புதகரமான சித்திகளைப் பெறுவதற்கும், உத்தமமான ஜெபயோகத்தால் யோகதரிசனம் பெறுவதற்கும் ‘ஜெபம்’ ஒரு சிறந்த சாதனையாகும். இப்படிப்பட்ட சர்வாபீஷ்டகரமான மந்திர ஜெபம், பக்தர்களுடைய நித்திய வழிபாட்டில் அதிமுக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றதென்பது கவனிக்கத்தக்கது.
அடிமனதில் பதியப்பட்டிருக்கும் பூர்வ ஜன்ம கர்ம வாசனைகளுடைய பதிவுக்கு மேல், மந்திர ஜெபத்தினின் றெழும் நுண்ணிய அலைச் சக்திகள் தாக்கும் பொழுது, பூர்வ ஜன்ம கர்ம வாசனைகள் மேலெழ விடாமல், அதன் ஸ்தானத்தில் வைத்தே, அவைகளை அழித்து விடுகின்றன. அன்றியும், மூலாதார பத்மத்தில் துயில் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை, ஜெப மகிமையால் எழும் அக்னிச் சுவாலைகள், தட்டியெழுப்பிச் சுழுமுனையிலேற்றி, சகஸ் ராதாரத்தைத் திறந்து, தெளிந்த ஞானத்தை உண்டாக்குவதற்கும், ஜெப சாதனை ஈடு இணையற்ற யோக மார்க்கம் ஆகின்றது. ஜெப சாதனையால் சாதகனுடைய ஜென்ம வாசனைகள் நீங்கி விடுவதால், அவன் ஒரு தெய்வீகப் பிறவி எடுத்தது போன்ற ஒரு புத்துணர்வும், எல்லாவற்றையும் சத்தியத்தின் வெளிச்சத்தில் பார்க்குமொரு சூக்கும திருஷ்டியும் பெற்றவன் ஆகின்றான்.
மந்திரங்கள் உத்தமம் - மத்திமம் - அதமம் என்று மூவகைப் படும். விரோதிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் மந்திரங்களை அதமம் என்றும், தமது சொந்த உலகியல் காரிய லாபத்திற்காகப் பிரயோகிக்கும் மந்திரங்களை மத்திமமென்றும், பிறவித் தோஷங்களைத் தீர்த்து ஞானத் தையும், இறையனுபவங்களையும் தரும் மந்திரங்களை உத்தம மந்திரங்கள் என்றும் சொல்வர்.
19

Page 17
உத்தமமான சாதகன் சாத்வீக மந்திரத்த்ை தவிர, ஏனைய மந்திரங்களை ஏற்கலாகாது. ஆடிக் கொண்டிருக்கும் கயிற்றில் ஒரு பாரத்தைக் கட்டிவிட்டால், கயிறு அசையாமல் நிற்பது போன்று, ஒடிக் கொண்டிருக்கும் மனத்தில், ஜெபம் என்ற பாரத்தை வைத்தால், மனம் - கணத்தில் அசைவற்றுப் போகும். அசைவற்ற மனதைக் குறிக்கப்பட்ட பொருளில் எடுத்து வைப்பது எளிதாயிருக்குமாகையால், தியானப் பொருளில் மனம் லயப்பட்டு நிற்பதற்கும் ஜெபம் உற்ற உபாயமாகின்றது.
மந்திர ஜெபம் எந்தவொரு நோக்கத்திற்காக ஆரம்பிக்கப் படுகின்றது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்தபின், மந்திர சித்தி பெற்ற ஒரு குருவினிடத்திலிருந்து, மந்திரத்தை தீட்சா முறைப்படி உபதேசம் பெற்று, ஜெப முறைப்படி ஜெபஞ் செய்துவரின் இரண்டு அல்லது மூன்று மண்டல காலத்திற்குள் ஆரம்ப பலன்கள் பலதையும் காணக் கூடியதாயிருக்கும். ஏனைய ஆத்ம சாதனைகளை விட ஜெப சாதனையில் தேகவெப்பம் அதிகமாகையால் அவ்வப்போது பஞ்ச கல்ப்ப ஸ்நான விதிகளைக் கையாண்டு, தேக வெப்பத்தைத் தணித்தல் வேண்டும். இங்ங்ணம் உத்தம மந்திரங்களைச் சாதனை செய்கின்ற சாதகன் நான்கு புருஷார்த்த தர்மங்களையும் அடைவது அரிதான காரியமன்று.
பசுத்தோல் போர்த்தவர், ஓநாய் போன்றவர்கள், ஆலயம் சென்று கடவுளை வாழ்த்தி- வணங்கி- நீறணந்து - பூவைத்து நிற்பர். இவை எதற்கு? ஆசைகளாகிய இரையைப் Uடிப்பதற்குரிய சுருக்குக் கயிறாகக் கடவுளைப் பயன் படுத்துவதற்கு.
- வஜனாம்ருதம்
20

3 தீயான சாதனை ஐ
தோன்றிக் கொண்டிருக்கும் உயிர்கள், மாயாமயமாகிய இப்பிரபஞ்சத்தில் தமோ, ரஜோ, சாத்வீகம் ஆகிய முக்குணங்களின் நிமித்த காரணங்களாக இருக்கின்றன. திறமை வாய்ந்த ஒரு ஓவியக் கலைஞன் போன்று, மாயையாகிய சித்திரக் கலைஞன், முக் குணங்களாகிய சாயத்தால், சுத்தப் பிரம்மமாயிருக்கின்ற ஓவியப் பலகையில் வரைந்து விட்ட அதியற்புதமானதொரு ஒவியந்தான் இய்பிரபஞ்சம்.
ஜீவன், முக்குண சேர்க்கையால், தனக்கில்லாத ஜனன மரணங்களும் - சுகதுக்கங்களும், தனக்கிருப்பதாக எண்ணும் எண்ண விருத்திகளாகிய சங்கற்ப விகற்பாதிகளால் அஞ்ஞானமடைந்திருக்கின்றது. முக்குண சகவாச தோஷத் தால், ஜீவனில் தோன்றியிருக்கும் மயக்க மறைப்புகளை நீக்கி, தெளிந்த ஞானமுடையதாக்கித் தீர்ப்பதற்கு, தியானம் அனுபவ சித்தமான ஒரு ஆத்ம சாதனையாயிருக்கின்றது.
தியானம் மனதால் மனதில் நிகழும் ஒரு நுண்கிரியை. குறிக்கப்பட்ட ஒரு பொருளில் மனதை ஒருமுகப்படுத்தி, சலனமில்லாமல் நிறுத்துவது தியானம். சூரிய அஸ்தமனத்தில் கூடணையும் இராப்பறவைகள் போன்று தியான தீபத்தின் ஒளியைக் கண்டதும் மனோ விருத்திகள், அவை தோன்றிய இடத்திலேயே ஒடுங்கிவிடும். ஜனன மரணங்களுக்குக் காலாகிய சித்த விருத்திகள் ஒடுங்கினால், ஜீவன் - ஜீவன் முக்தனாவதற்குரிய சந்தர்ப்பம் சுயமாகவே உருவாகும்.
21

Page 18
நானாவித ஆத்ம சாதனங்களின் கேந்திர பிந்துவாகிய தியானம் இதற்கொரு குறிதவறாத அம்பாயிருக்கின்றது. வாய்ப்புண் இருப்பவர்களுக்கு உணவு உட்கொள்வது சிரமமாயிருப்பது போன்று, தியான நுழை வாசலாக இருக்கின்ற வெளி மனதில் அழுக்காறுகள் இருந்தால், உள் மனதில் தியானம் நுழைவது அசாத்தியமாயிருக்கும். தியானம் உள் மனதில் நுழைவதற்கு வெளி மனதில் அலைகளும் அழுக்கும் இருக்கக் கூடாது. அகிம்சை, சத்தியம், ஆஸ்தேயம், பிரம்மச்சரியம், அபரிக்கிரகம் முதலிய நியம அனுஷ்டானங்களைக் கொண்டு, வெளி மனதைச் சுத்திகரித்து தியானம் ஆரம்பிப்பதால் தியானம் எளிதில் கைகூடும்.
அகிம்சை - மனம், வாக்கு, காயத்தால் எவ்வுயிர்க்கும் சங்கடம் விளைவிக்காமலிருப்பது,
சத்தியம் - அறியாததை அறியாததென்றும், அறிந்ததை அறிந்தபடி சொல்வதும் - செய்வதும் சத்தியம்.
ஆஸ்தேயம் - தனது தந்தையின் பொருளாயினும் சரி, தனது உழைப்பில்லாமல் வந்த பொருளாயினும் சரி அவற்றில் ஆசை வையாமலும் தீண்டாமலும் இருப்பது.
அபளிக்கிரகம் - தன்னுடைய அத்தியாவசிய தேவைக்கு மிஞ்சிப் பொருளைச் சேமித்து வைக்காமல் இருத்தல்.
பிரமச்சரியம் - தேகத்தில் ஊறும் வீரிய சக்திகளை வீண் விரயம் செய்யாமல் ஒஜஸாக மாற்றி, சரீரம் - மனம் - புத்தியை தேஜோமயமாக்கித் தீர்ப்பது. ஹடயோகப் பயிற்சிகளாகிய பெந்தம், முத்திரை, பிராணாயாமம் போன்ற சாதனைகளால், பிரமச்சரிய நிஷ்டை உண்டாகும்.
22

இந்த நியமக் கிரியாவிசேஷங்களால், வெளிமணம் சுத்தமாகி, தியானம் உள்மனதில் நுழைந்து நிகழும். அதுவரையில், தியானம் - தியானத்திற்குரிய முயற்சியே தவிர தியானமாகாது. இயம நியமங்களையும், தியானத் தையும் ஒரே காலத்தில் ஆரம்பிப்பதிலும் தவறில்லை.
வெளிமண் மலங்கள் நீங்கி, தியானம் உள்மயமாகினால், பகிர்முக மனம் ஒடுங்கி, அந்தர்முக மனம் பிரகாசிக்கும். அந்தர் முக மனப் பிரகாசத்தால், அங்கே பதிந்திருந்த பிராரப்த கர்ம வாசனைகள் கருகித், தியானமும் - தியானப் பொருளும் மாத்திரம் எஞ்சி நிற்கும். காலக் கிரமத்தில் தியானமும் - தியானப் பொருளும் ஏகாத்மமாய் ஒரே குண வடிவமாய் நிற்கும். இங்ங்னம் ஜீவன் ஆத்மாவின் ஏக குணவடிவமாய் மாறிய பின்பு, இறப்பு - பிறப்பு என்ற துன்ப துயரங்கள் நீங்கி, நித்திய சுகியாய் பரிணமிக்கின்றது.
தியானம் - நிர்க்குணத்தியானம், சகுணத்தியானம் என்று இருவகைப்படும். மனம் குணமயமானது. குண ரூபத்தோடு கூடியல்லாது மனதால் எதையும் நினைக்க முடியாது. எண்ணம் மனதில் உதிக்கும் பொழுது, அதற்கேற்ற உருவ குண வடிவங்களுடன்தான் உதிக்கின்றது. ஆகையால் மனதால் எண்ணப் படுவதெல்லாம் உருவ வடிவமான வைகளே.
எனவே நிர்குணத் தியானமென்பது ஒரு மானசீகப் பயிற்சியன்று. பின்னை, நிர்க்குணத் தியானம் என்பது என்ன? சகுணத் தியான முதிர்ச்சியால் சாதகன், மன அதீத நிலைக்கு உயரும் பொழுது, யாதொரு உவமானங்களாலும் உவமைப்படுத்திக் கூறமுடியாத தனியொரு அவஸ்தா விசேஷமே நிர்க்குணத் தியானம் என்று சொல்லப்படும்.
23

Page 19
பூமியின் ஆகர்ஷண சக்திக்கு மேல், விண்வெளிக் கலங்களை உந்திவிடும் யந்திரம் போன்று, சகுணத் தியானம் சாதகனை ஆத்மீகப் பெருவெளிக்கு உந்திவிடுவதற்குரிய ஒரு உபாயமாகும்.
சகுனத்தியானம்:- சாதகன் அடைய வேண்டிய குறி இறைவனாகையால், தியானிக்கின்றவனுடைய மனதில் இயல்பாகவே தோன்றும் இறை வடிவங்களில் ஒன்றைத் தியான ஸ்தானங்களிாகிய புருவமத்தி - ஹற்ருதயம் - நாபி போன்ற ஸ்தானங்களில் பாவனை செய்து, அதில் மனதைச் சலனமில்லாமல் நிறுத்தி நிறுத்திப் பழகுக. தியானத்திற்குத் தேர்ந்தெடுக்கும் திருவுருவக் காட்சி ஏகரூப வடிவில் இருந்தால், மனம் ஒருமுகப்படுவதற்கு எளிதாயிருக்கும்.
தியானிக்கும் பொழுது, பூர்ணிமா திருஷ்டி - பிரதிபல் திருஷ்டி - அமா திருஷ்டி என்ற மூவகைத் திருஷ்டிகளில், சுலபமாய் வைத்திருக்கக் கூடிய ஏதாவது ஒரு பார்வையில் சாதகன் கண்களை வைத்திருக்க வேண்டும். கண்களைப் பூரணமாய்த் திறந்து வைப்பது பூர்ணிமா திருஷ்பு. அரைக்கண் பார்வையுடனிருப்பது பிரதிபல் திருஷ்டி. முழுமையாக மூடியிருப்பது அமா திருஷ்டி.
தியானம் ஆரம்பிக்கு முன் பூஜை, பிரார்த்தனை, பிராணாயாமம், ஜெபம் போன்றவைகளை முறையாகச் செய்து தியானம் தொடங்கினால், விஷய சஞ்சாரஞ் செய்யும் மனம், கூடிணத்தில் ஏகாக்ர நிலையடையும். தியானிப்பதற்கு முன் தியான சித்திக்காக, இறைவனையும் குருவையும் மனமுருகி பிரார்த்தனை செய்க. தியான சக்திகள் பூமியின் ஆகர்ஷண சக்தியால் ஈர்க்கப்படாமல் இருப்பதற்கு மான் தோல், புலித்தோல் தர்ப்பை போன்ற ஆசனங்களைப் பாவிப்பது நன்று.
24

தியான நேரத்தில் வெறும் வயிற்றுடனிராமல், லேசான நீராகாரத்தை அருந்தியபின் தொடங்கவும். தியானத்தில் இருக்கும் பொழுது, முதுகெலும்பு நிமிர்ந்து இருக்கும் வண்ணம் முகம், கழுத்து, நெஞ்சு இவைகளை நேர்கோட்டில் வைத்திருந்து, அவரவர் குருவாக்கின்படி தியானத்தை ஆரம்பிக்கவும். புலர் காலத்திற்கு முன்பும், உச்சி வேளையும், அஸ்தமன நேரமும் தியானத்திற்குரிய சோபன காலங்கள். தியானமும் தியானிக்கின்றவனும், தியானப் பொருளும் ஒன்றாகி விடுமளவுக்குத் தியானத்தில் தேர்ச்சி பெறுக.
மனத்தூய்மை இல்லாத தியான சங்கற்பத்தில் தோன்றும் ஒளி - ஒலிகளும், இன்னும் பல தோற்றங்களும் வெறும் மனப் பிரமையே தவிர, அவைகள் உண்மையான தியான தரிசனங்களல்ல. அத்தகைய தோற்றங்கள் ஏற்கனவே மனதில் ஊட்டப்பட்ட சங்கற்பங்களின் பிரகடனங்களேயாகும். பிழையான தியான சாதனையால் தியான விரக்தி வருவதுமல்லாமல், முன்னிருந்ததைவிட மனோ நிலைகள் மோசமடைவதற்கும் இடமுண்டு.
தியானம் உள்மயமாகும் பொழுது உண்டாகும் யதார்த்த அற்புத தரிசனங்களில் பற்று வைக்கப்படுமானால், சாதகனுடைய தியான முயற்சி அத்துடன் நின்றுவிடும். எனவே அத்தகைய தரிசனங்களில் சாதகன் உதாசீனனா யிருப்பது அவசியம். ஒரு நிமிஷமேனும் தியானத்தில் மனம் நிலையாய் நிற்பதற்குத் தொடர்ந்து சிலகாலம் தீவிரமாய் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் நிமிடங்களில் தியானம் நன்றாக நிலைத்த பின்புதான், தியான நேரங்களை மெல்ல மெல்லக் கூட்ட வேண்டும்.
25

Page 20
எம்பொழுதாகினும் தியானசித்தி கைகூடுமென்ற நம்பிக்கையுடன், மனத்தளர்ச்சி இல்லாமல், பொறுமையுடன் பழகி வரவேண்டும். இன்றைய தியான அனுபவங்கள் நாளையஜீவிதமாய் மலருகின்றன. ஆகையால் நாளைய ஜீவிதத்தை இன்றைய தியானத்தால் ரூபாந்தரப்படுத்துக. தியானத்தின் புலரொளியில் புலர்ந்த மனம், ஈஸ்வர மயமாகும்போது, பிராரப்த கர்ம வாசனையாகிய அனல் காற்றையேற்று உலர்ந்த ஜீவிதம், பசுமையுடன் துளிர்த்து நிற்கும் வசந்த காலப் பூந்துளிர்கள் போன்று, அனந்தமான சுகத்தில் துளிர்த்திருக்கும்.
OOO
மனம் சிலவேளை நல்ல பிள்ளைபோல் நடிக்கும்; அது உன்னை வஞ்சிப்பதற்குரிய தந்திரம் என்று அறிந்து கொள் மனம், யுக்தி நியாயங்களைக் கொண்டு, அதர்மத்தைத் தர்மம் என்று கருத வைக்கும்; கறுப்பை வெள்ளை போல் தோற்றுவிக்கும்; கசப்புக்கு மேல் இனிப்புப் பூசிக் காட்டும்; மின்னுவதெல்லாம் பொன்போல் நினைக்க வைக்கும்; அசட்டுத்தனமாக இருந்தால் உன்னையும் விழுங்கும்; விழிப்பாயிரு
女女大
மனத்திற்குத் தனிக் கோத்திரமும், தனிக் குலமும், தனி வர்ணமும் இல்லை. அதன் குலமும் கோத்திரமும் வர்ணமும் எண்ணிடலங்கா. அத்தகைய மனதை, ஒரு தர்ம பத்தினி போல் எண்ணுவோமேயானால், அது எத்தகைய மூடத்தனம்?
- வஜனாம்ருதம்
26

இன்றைய உலகப் பிரச்சனைகளுக்கு
வேதாந்தம் கூறும் வழி என்ன? ty
உலகத்தில் அனேக கோடி நீர்த்தேக்கங்கள் இருக் கின்றன. நல்ல நிலா வீசும் இராக் காலத்தில், ஒவ்வொரு நீர்த்தேக்கத்திலும் தனித்தனிச் சந்திரனைக் காணலாம். சந்திரன் அனேகாயிரம் இல்லை; ஒன்றுதான் இருக்கிறது. அதே போன்று கோடானு கோடி சரீரங்களில் தனித்தனியாகத் தோன்றும் ஆத்மா, ஒரே ஒரு பிரம்மத்தின் பிரதிரூபமேயாகும். ஆகையால் தனித்தனி ஆத்மாக்கள் என்பதும், தனித்தனி ஜீவன் என்பதும் இல்லை. எல்லா ஜீவனும் ஒன்றே. வேறுவேறென்ற பாவனை அஞ்ஞானத்தினின்றும் எழுந்தது.
அஞ்ஞானம் நமக்கெல்லாம் பல கஷ்டங்களையும், துன்பங் களையும் விளைவிக்கின்றது. என்னுடைய ஆத்மா - உன்னுடைய ஆத்மா என்ற ஜீவபேத பாவனை, எனது உனது என்ற சுயநலத் தடிப்பை உருவாக்கி, கலகங்களை உண்டுபண்ணுகிறது. ஏகமாய (Intergrated) ஆத்மாவைப் பற்றிய வேற்றுமை உணர்வுதான், இன்று உலகில் தோன்றிக் கொண்டிருக்கும் அரசியல் சண்டைகள், சர்வாதிகார மோகங்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், இனமத ரீதியான வேற்றுமைகள், இன்னும் பல பஞ்சமாபாதகமான செயல்களுக்கெல்லாம் மூலகாரணமாக இருக்கின்றன.
ஓர் நீர்த்தேக்கத்தில் ஊற்றிய நஞ்சானது, அந்த நீர் முழுவதிலும் பரவுவது போல், ஒரு தனி மனிதனில் அல்லது ஒரு தேசத்தில் உருவாகும் ஒரு தீச் செயலானது, உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும். காரணம் - உலகத்திலுள்ள ஆத்மாக்களெல்லாம் ஒரே ஆத்மாவாக இருப்பதனாலேயாகும். ஒரேயொரு ஆத்மாதான், சகல ஜூவராசிகளினுடைய இருதயத்திலும் (35.9 கொண்டிருக்கின்றது என்ற உண்மையை, தெள்ளத்தெளிவாக
27

Page 21
நமக்குள்ளே அனுபவப்படுத்தினால், ஆத்மீக ஒருமைப் பாட்டுணர்வின் கீழ், மனித சமுதாயம் ஒன்றிணைந்து வாழும். சண்டை சச்சரவுகளுக்குரிய காரணங்கள் சுயமாகவே மறைந்துவிடும்.
மனிதன் பலவாறான தர்மங்களைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றான். ஏகாத்ம போதத்துடன், தங்கள் தங்களுடைய சுயதர்மங்களை சரியான முறையில் செயற் படுத்தும் பொழுதுதான், வேதாந்தத்தின் ஏகாத்ம தத்துவ வாதம், நாளடைவில் ஒவ்வொரு இருதயத்தாலும் உணரப்படும்; உலக மக்களுக்கிடையில் ஆத்மீக ரீதியான ஐக்கியம் உருவாகும்; ஒன்றைத் தவிர இரண்டில்லை; காண்பதெல்லாம் ஒன்றின் பிரதி வடிவங்கள் என்ற வேதாந்த உண்மையை நிரூபிக்கும் முறையில், நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்ற, நவீன விஞ்ஞான உண்மைகள், ஆஸ்தீக மக்களுக்கு இத்துறையில் கூடுதல் விசுவாசத்தையும் உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய தாயிருக்கும்.
ஆத்ம பேதமில்லாமல் நாம் பலதுறைகளிலும் பல குழுக்களாய்ப் பிரிந்து நின்று, சண்டை போட்டுக் கொண்டிருக் கிறோம். பிரிந்து பிரிந்து நிற்பதெல்லாம் ஆத்மாவின் ஏகத்வ உண்மையில் - உணர்வில் ஒருமுகப்படும்பொழுது, உலகத்திற்கு நிரந்தரமான சுகமும் சமாதானமும் கிடைக்கும். பலவாறாகத் தோன்றும் ஆத்மாவின் ஏகாத்ம நிலையை அறிவதற்குரிய அறிவும், பயிற்சியும், வேதாந்தம் நமக்குத் தருகின்றது. இனிமேலாவது நமது சிந்தனைகளை அவ்வழியில் செலுத்தி நித்ய தர்மங்களை இக் கருத்துடன் செயற்படுத்தும் பொழுதுதான், உலகப் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து, எங்களுடைய வாழ்வு பிரசாந்த நிலையை அடையும்.
28

கடந்த காலங்கள்
இந்துக்களின் சிந்தனைக்கு)
அந்நியர்களின் அபிப்பிராயப்படி ஹிந்துக்கள் அறிவில்லாதவராயும், மூட நம்பிக்கையுடையவராயும், வறுமைப்பட்டவராயும் இருக்கலாம்; விஞ்ஞான உலகில் பின் தங்கியவராயும், வாழ்க்கை வசதிகள் குறைந்தவராயும் இருக்கக் கூடும். எது எப்படியாயினும் நாம் நாளிது வரையிலும், தெய்வத்தைக் கைவிடவில்லை; தெய்வமும் எங்களைக் கைவிட்டதில்லை. உயிரில் கரைந்து சேர்ந்த தெய்வ சிந்தனை, இந்துக்களை அழித்தாலும் அழிக்க முடியாத, ஒரு தனி சக்தியாக மாற்றிவிட்டது.
அவ்வப்போது நடந்த இயற்கை மாற்றத்தால் பலதும் அழிந்தும் ஒழிந்தும் போய் இருக்கின்றன. ஆனால் இந்துக்களுடைய ஆத்மீகச் சேதனா சக்தியின் உயிர் நாடியைக் காலச்சக்கரத்தால் அழித்துவிட முடியவில்லை. அது காலா காலத்தில், புதுப்புது உடல் எடுத்து, இது கால வரையிலும் தன்னைத்தான் ஸ்திரப்படுத்தி வந்திருக்கின்றது.
இந்துக்களுடைய சரித்திரம் சாதாரணமாக எழுதப்படும் சரித்திரம் அன்று. அது யுக நிகழ்ச்சிகளைக் கூறாமல் கூறி நிற்கும் தெய்வீகச் சுவடி. ஆகையால் நாம் அதைப் பூசித்து வழிபடுகின்றோம். மனிதப் பண்பு குறைந்து, உலகம் மிருகச் செயலால் மடிந்து மாண்டு போகும் பொழுதெல்லாம், சனாதன தர்மம் என்ற அமுத தாரையால், உய்ய வழிவகுத்துக் கொடுத்தவர் இந்துக்கள்.
அத்தகைய பிரம்ம சக்தி நிறைந்த பரம்பரையில் தோன்றும் பாக்கியம் கிடைத்த நாங்கள், ‘அமுதத்தின்
சந்ததிகள்’ என்பதில் சந்தேகமே இல்லை. தன்னை
29

Page 22
உணர்ந்து வாழ்ந்து வந்த சமுதாயம், இன்று தன்னை மறந்து வாழும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றது. சனாதன தர்ம சித்தாந்தத்தை நாம் சரிவர உணர்ந்தால், பிரபஞ்சத்தில் தோன்றும் வேறு எந்தத் தத்துவங்களுக்கும், ஏன் - மனித நிர்மிதமான மற்று எதற்கும் நாம் சிரம் குனிய வேண்டிய தில்லை.
எனினும் அநேகாயிரம் பேரருவிகளையும், சிற்றருவி களையும் கவர்ந்தெடுத்து, தன்மயமாக்கித் தீர்க்கும் மகா சமுத்திரம் போன்று, நான்கு திசைகளிலிருந்தும் வரும் நல்லவற்றை எல்லாம் தனதாக்கித் தீர்க்கும், விரிந்த மனமுடையவர்களாய் வாழ்ந்து வந்திருக்கின்றோம். சனாதன தர்மத்தை புனருத்தாரண கர்மம் போன்று, காலா காலத்தில் புதுப்பிக்க வேண்டியதில்லை. காரணம் அது நித்தியமானது; சம்பூர்ணமானது; காலம் அறிந்து செயற்படுத்தினால் மாத்திரம் போதுமானது.
ஒளியும் இருளும் கலந்த பல காலகட்டத்தை நாம் கடந்து வந்தோம். தூர தேசத்திலிருந்து புனித யாத்திரைக் கென்றும், கல்வி கற்பதற்கென்றும், குடியேறுவதற்கென்றும், பலர் வந்து நம்மை ஆட்கொள்ளப் பார்த்த போதிலும், புயல் சமுத்திரக் கொந்தளிப்பை உண்டாக்கினாலும், சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போன்று, சனாதன தர்மம், தனது ஒளியும் சக்தியும் இழக்காமல், இன்றும் நிலைத்திருக்கின்றது. அது இனி என்றும் பாரிஜாத மலர் போன்று, வாடாமல், உதிராமல் காலமெல்லாம் நறுமணம் வீசிக் கொண்டிருக்கும்.
அநேகாயிரம் ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பதப்படுத்தி, பண்படுத்தி, ஏதொரு நீச சக்தியாலும் அழிக்க முடியாத நமது சொந்தக் கலை கலாசாரத்திலிருந்து, நாம் விலகி வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம். தேசியக் கலையும் - கலாசாரமும் தான் ஒரு சுதந்திர சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்குரிய கருவி கரணங்கள்.
30

சனாதன தர்மத்தின் செயற்பாடுகளாய் இருக்கின்ற சொந்தக் கலைகள், எங்கள் இரத்த நாளங்களில் ஒழுகிக் கொண்டிருந்தால் தான், நாம் உண்மையான சுதந்திர முடையவர்களாய் இருக்க முடியும். அந்தச் சுதந்திரந்தான் தனிமனிதனுடையதும் - சமுதாயத்தினுடையதுமாகிய முக்தி நிலை. சமுதாயத்தின் முக்தி எங்களை விமுக்தராக்கும். தசாவதார சக்திகள் வழி உலகத்தை உயர்த்தி எடுத்து உயிரோட்டமளித்த அதே சக்திதான் ‘அகம் ப்ரமாஸ் மீ” என்று ஓதியபடி எங்கள் இதயத்தில் அணுப்பிரமாணமாய் மறைந்திருக்கின்றது. இதை எங்கள் இதயத்தின் இதயமாகக் கருத்தில் கொள்ளும் பட்சத்தில், சம்பூர்ண ஆத்ம சக்தி வாய்ந்த ஒரு மானிட வர்க்கத்தை எங்களால் உருவாக்க (Մուգեւյւb.
அணுவிற்கும் அணுவாய் என்ற விஞ்ஞான தத்துவத்தி லிருந்து, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சமதர்ம சித்தாந்தத்தை காலானுசரணம் உருவகம் கொடுத்து உலகத்திற்கு அளித்த வரலாறு நமக்கு இருக்கின்றது. சனாதன தர்ம சக்தியின் ஆசீர்வாதம் எங்கள் உச்சியில் படிந்து கொண்டிருக்கும் காலம் வரைக்கும், "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்ற உறுதியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
புத்தியில் வளர்ந்த உலகம் உள்ளத்தால் வளர வில்லை. உண்பதும் உறங்குவதும் என்ற கேவல நிலைக்கு நழுவிக் கொண்டிருக்கும் இன்றைய உலகத்தின் சோர்ந்து போன இதயத்தை, சர்வ சக்தி வாய்ந்த சனாதன தர்மத்தின் தெய்வீகக் கரங்களால் தடவித்தடவி புத்துயிர் அளிக்க வேண்டும்.
அமாவாசை இருளில் மலர முடியாமல் தவிக்கும் நீராம்பல், பூம்நிலவை நோக்கி விரைவது போன்று, மனச் சாந்தி இழந்து இருளில் மூழ்கிக் கொண்டிருப்பவர்கள், நிலையான சாந்தியைத் தேடி, எங்கள் திசையை நோக்கி
31

Page 23
வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இந்து, தனது சொந்தக் கடமைகள் போன்று, உலகத்திற்குச் செய்ய வேண்டிய தலையாய கடமைகளும் இருக்கின்றன.
உலகத்தின் கண் மாசுபடிந்த பொழுதெல்லாம், அதைத் துடைத்துப் புனிதப்படுத்தும் அரும்பெரும் பணியை நாளிது வரையிலும், நாம் மேற் கொண்டு வந்திருக்கின்றோம். இந்தத் தெய்வப் பணியை மேலும் மேலும் உலகத்திற்கு அளிக்க வேண்டும். இழந்திருக்கும் ஆத்மீக சக்திகளை மீண்டும் பெற்றெடுக்க வேண்டும். உலகாயுதத்தின் அசுர காரியங்களால் நெருக்குண்டு பொலிவற்றிருக்கும் கரங்கள் எங்களிடம் நீட்டப்படும் பொழுது, அதில் வைத்துக் கொடுப்பதற்குரிய ஆத்மீக செல்வங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். மங்கி மறைந்திருக்கும் ஆத்மீக சக்தியை உயிர்ப்பித்து, அதில் நாங்களும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.
அனேகம் இதழ்கள் ஒன்றாக இணைந்திருக்கும் பொழுதுதான் மலர் என்ற பொருள் மலராகவே இருக்க முடியும். இதழ்களைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்தால், மலர் என்ற பொருள் இருப்பதில்லை. அதே போன்று தனிமனிதன் ஒன்றாகச் சேரும் பொழுதுதான் சமுதாயம் என்பது உருவாக முடியும். சமுதாயத்தின்றும் பிரிந்து நிற்கும் தனிமனிதனுக்கு, பூவினின்று உதிர்ந்து விழும் இதழ்கள் போன்று, அழகும் மணமும் இருப்பதில்லை.
தனிமனிதன், தனது சுயசுகத்திற்கும், வளர்ச்சிக்கும் அதி நிஜமான முறையில் சமுதாயத்தை மலினப்படுத்தும் சுரண்டல் முறையைக் கையாண்டு வருகின்றான். இது தன்னையும் - சமுதாயத்தையும் கொடுரமான ரீதியில் இம்சைப்படுத்துவதாகும். தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இருக்கும் பொருத்தமில்லாமையால் அடிக்கடி நிகழும்
32

அருவருக்கத்தக்க மோதல்கள், சமுதாய முன்னேற்றத்திலும், ஆத்மீக சக்தியிலும், ஆழமான புண்களை உருவாக்கி உள்ளன.
தனிமனிதனுடையதும், சமுதாயத்துடையதுமாகிய இச்சைகளைச் சேர்த்து - இணைத்து இவை இரண்டினதும் முன்னேற்றத்திற்குரிய, கிரியா சக்தியை உருவாக்கி, ஆத்மீக ரீதியிலும், பெளதீக ரீதியிலும் முன்னேறுவதற்குரிய, ஒரு இலட்சிய வாழ்க்கையை செயல்முறைப்படுத்தி எடுக்க வேண்டும். நாம் தர்மத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும், அரசியலைப் பற்றியும் தாராளமாகக் கேட்கின்றோம்; பேசுகின்றோம்; ஆனால் அதனுடைய ஸ்தாயியான உண்மைகளை எங்கள் வாழ்க்கையின் நடைமுறையில் வடித்தெடுக்க முடியவில்லை.
உலகியல் செல்வங்களும், ஆத்மீகக் கலையும், ஆத்ம சக்தியின் இருகண்கள். பரமார்த்த நிலையில் இரண்டும் ஒன்று. ஆகையால் மண்ணும் பொன்னும் வெறுக்கத் தக்கவையல்ல. அவற்றை வெறுப்பதற்கு இந்து மத சித்தாந்தங்கள் போதிப்பதும் இல்லை. பிரச்சயைால் குழுமியிருக்கும் மனோவிகார வளையத்திலிருந்து, நிலையான சாந்தியும் சுகமும் தரக்கூடிய, ஒரு சம்பூரண வாழ்க்கை என்ற பரவெளிக்கு நாம் உயர்ந்து செல்ல வேண்டும்.
ஒவ்வொருவரும் பலதுறையிலும் வீண்விரயம் செய்யும் சக்திகளை ஒன்று திரட்டி உள் முகப்படுத்தி எடுக்கும் சுயாதீன சக்தியால், அன்றாட வாழ்க்கையின் உள்நாளங்களில், மேலான சாந்தியையும் சுகத்தையும் ஒழுகவிட வேண்டும். பிரச்சனைகளை மழுப்பி மறைக்க முயற்சிப்பதும். அதிலிருந்து ஓடி ஒழிக்க முயற்சிப்பதும், இந்து மத வாழ்க்கைச் சித்தாந்தத்திற்கு எதிர்மாறானது ஆகும்.
33

Page 24
நமது பிரச்சனைகள் தனித்தன்மை உடையவையா யினும் சரி, தேசிய ரீதியானவையாயினும்சரி, எதுவாயிருந் தாலும், பிரச்சனைகளை நேரடியாக - தெளிவான முறையில் தீர்க்கும் வாய்மையையும், சக்தியையும் பெற்றிருக்க வேண்டும். இந்து மதம் எங்களுக்கு அளிக்கும் தலையான கருத்துக்களில் இதுவும் ஒன்று.
எங்களை நோக்கி அதிவேகமாக ஒழுகிவரும் நவநாகரீக சிந்தனைகளில், எடுக்க வேண்டியதை எடுக்கவும், தள்ள வேண்டியதைத் தள்ளவும் நாம் பழக வேண்டும். நாம் பழமையின் அல்லது புதுமையின் நிழலாக ஆடிக்கொண்டிருக்காமல், இதைவிடக் கருத்தாழம் நிறைந்த ஒளிமயமான ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கி எடுக்க வேண்டும். சனாதன தர்மத்தைக் கோணல் இல்லாமல், அறியவும் செயற்படுத்தவும் முடியுமானால், இதை நிச்சயமாகச் சாதிக்கலாம்.
சனாதன தர்மத்தின் உதய கீதம்பாடி, செங்கதிர் உதித்து உயர்ந்து வரும் நவீன சக்திவாய்ந்த இந்து என்ற உயர்ந்த தாரகையின் உயர்விற்கு, வேகமும், சக்தியும் கொடுப்பதற்காக, நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். சனாதன தர்மத்தின் செம்பொன் ஒளியால், உள்ளொளி கண்டு, சுய சுகத்தையும் - Ց ԱԼ சிந்தனையையும் உடையவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்விதம் சுயசிந்தனையின்வழி, சுய செயற்பாட்டின் வழி, சமுதாயம் பூரணத்துவம் அடைய வேண்டும். அதுதான் சமயத்தின் உட்கருத்து. அதுதான் &FLDuib.
ങ്ങrങ്ങ് ീ Ifrg് ഖ്വി
ഖ്'...Ir്യ ിങ്ങ് Luീ'?
- வஜனாம்ருதம்

சித்த சோதனை (1) ty گے؟
இறை இணக்கத்தைக் குறியாய் வைத்து வாழும் உனக்கு, மிதமிஞ்சிய சாஸ்திர அறிவும் - ஆராய்ச்சியும் அவ்வளவாகத் தேவையில்லை என்பதே நமது கருத்து. ஆத்ம ஞான விருப்பங் கொண்ட மெய்யடியானுக்கு, அவைகள் சஞ்சலத்தையும் தருக்க புத்தியையும் ஏற்படுத்தி, அருள் நாட்டத்தில் விக்கினங்களை விளைவிக்கக் கூடும்.
‘சித்தாந்த சார சபல பூர்வபட்சார்ந்த லோசனா கர்த்தே பத்திவை மோகால்
என்று வேதவியாசர் பல சந்தர்ப்பங்களிலும் உபதேசித் துள்ளார். சாஸ்திரங்களில் கூறும் பூர்வபட்சார்ந்த கருத்துக்களை சரிவரத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு, அது விரோத பாவத்தை உண்டாக்கும். பருவத்திற்கு மீறிய உரமும் நீரும் செலுத்தினால், பயிர் பிஞ்சிலே அழுகி விடுமல்லவா? எல்லாம் பருவத்திற்கு ஏற்றபடி அளவுடன் செய்ய வேண்டும். ஆத்ம ஞானத்திற்குரிய சாஸ்திரங்களின் சாரத்தை மாத்திரம் கிரகித்து, அதைத் திரும்பத் திரும்ப மனனம் செய்து, போஷணை செய்து வந்தால், போதுமானது.
உனது அந்தரங்க உணர்ச்சிகளும், விருப்பு வெறுப்புகளும், மற்றவர்களை விட நன்கறிந்து நேர்வழி நடத்திச் செல்லத் தகுதி மிக்க ஒரு நுண்பொருளாக உனது இதயக் குகையில் வீற்றிருக்கின்றது. செயல்களுக்கெல்லாம் அதுவே காட்சிப் பொருள்; அது அணுவைச் சலிப்பிக்கும் ஜீவ அணுவின் ஆதார தத்துவம் - உயிர்களின் அந்தராத்மா. குற்றங்குறைகளை அறிந்து திருந்தக் கூடியவனும், ஆர்வக் கனலை உணர்ந்து அதன் குறியில் கைதுாக்கிவிட வல்லவனும் அவனே ஆவான்.
35

Page 25
அந்த மெய்ப் பொருளே சிறந்த குரு; பிரதிபலன் கருதாத உபதேசகன்; உற்ற நண்பன்; விசுவாசத்திற்கு உரியவன்; தக்க சமயத்தில் கைகொடுத்து உதவ, மிக அண்மையில் சதா உனது நினைவுகள் தோன்றுமிடத்தில் மறைவாக வீற்றிருக்கின்றான். உனது வேண்டுதலை முதன்முறையாகக் கேட்பவனும் அவனே; பாவ புண்ணியங் களை நினைக்காமல் தக்கதே செய்து உய்விக்கத் தகுதியுள்ளவனும், அவனே ஆவான்.
விருப்பங்களை நொடிப்பொழுதில் நிறைவேற்றத் தகுதியும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பேரறிவும் அவனுக்கிருப்பது போன்று, சாஸ்திர சித்தாந்தங்களுக்கு இல்லை. காரணம் - அவன் சர்வக்ஞன், சர்வேஸ்வரன்; வேண்டுவார்க்கு வேண்டுவதைக் கொடுக்கும் கொடை வள்ளல்; அவன் ஒருவனே உன்னை நன்கு அறிபவன். மைந்தனே! அந்தத் தீன தயாளன் உன்னிடம் இணங்கி நிற்பது போன்று, மற்ற எவரும் இணங்கி நிற்பதில்லை.
ஈடு இணையற்ற அதன் இணக்கத்திற்கும், பரிவிற்கும் நெருங்கிச் செல். அந்த இணக்கமே யோகம். உனக்கு வேண்டியவற்றை அது சதா உபதேசித்த வண்ணம் இருக்கின்றது. மோகத்தால் கதி கலங்கிய நெஞ்சம், அந்த உபதேச மொழிகளைக் கேட்பதில்லை. தியானத்தால் மனவிகாரம் அடங்கி நின்று, புத்தியும் தெளிவடைந்த உத்தம யோகிகளால் அவை கிரகிக்கப்படுகின்றன.
சாஸ்திர விசாரணையால் அறிய முடியாததை குருவினால் உபதேசிக்கிறான்; விளக்க முடியாததை குருவின் தனித்த இனிய குரலில், புரியும் மொழியால் விளக்கியும் அருளுகிறான். அந்த அமுத மொழிகளே அசரீரி வார்த்தை எனப்படும். "ஸ்பர்சக மணியால் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று சொல்வதுண்டு. நித்திய முக்தனாம் பரமேஸ்வரனின் திருக்கர ஸ்பரிசம் ஒருமுறை பட்டவர்க ளெல்லாம் ஜீவன் முக்தர்களேயாவார்.
36

உனது ஒவ்வொரு எண்ணங்களும் உணர்ச்சிகளும் . அவை தீயவையானாலுங்கூட, ஈசனிடம் இணங்க நிறுத்து. சாக்கடை நீரும் கெங்கா நதியில் கலக்கும் பொழுது புனிதமடைவதுபோல், இறையிணக்கத்தால் மாசுபடிந்த மனமும் தூய்மை அடையும். மகா மாயையினால் அஞ்ஞான வசப்பட்டு ஜென்ம ஜென்மாந்தரங்களில் தேடி வைத்திருக்கும் கொடும் வினைகளின் முடிச்சுகளை அறுக்கும், சந்திர காசம் அவனிடம் தான் உண்டு.
கருணை வள்ளலின் இரக்கத்தைப் பெற்றால் சுமந்து திரியும் மூட்டை முடிச்சுக்களை நொடிப்பொழுதில் அறுத்தெறியலாம். இறைவன்பால் வைக்கும் நம்பிக்கை வீண்போவதில்லை. தவறி விழுந்தாலும் அவன் திருவடி யிலேயே விழு; நகராதே; தூக்குவான் - கொஞ்சுவான் - ஆறுதலைத் தருவான் - அறிவளிப்பான் - ஞானக் கதவைத் திறந்தருள்வான். அவனை விட வேறு தெய்வமில்லை. அவனே ஏகன், ஜடாதரனின் உச்சியில் நின்றுாறும் அமிர்த தாரையால், சகல சராசரங்களும் உயிர் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அந்தச் சேதனா சக்தியைப் பிரிந்து வாழும் ஒவ்வொரு நிமிஷமும், வெறும் ஆசைகளால் ஏமாற்றப்பட்ட ஜீவனற்ற வினாடிகளேயாகும். அதன் முடிவு சோகமும் துயரமுமே. தீர்த்தால் தீராத கர்மவியாதிகளுக்குரிய சித்த ஒளஷதம் அவனிடமுண்டு. நோயின் தராதரமறிந்து, விலை கூறாமல் மருந்தளிக்கும் தீனதயாளன். அவன் தாள் வணங்கி நிற்பதே அவனளிக்கும் மருந்தின் பத்தியம். திருவருளாம் காயகற்பத்தை ஒரு முறை உட்கொண்டாலே போதும்; நோயும், பிணியும், ஏன் - மரணமும் கூட அணுகாமல் அமிர்த நிலையை அடையலாம்.
இரவு முழுவதும் அயர்ந்து தூங்கி, காலையில் எழுந்து, ஒன்றும் தெரியாமல் நன்றாகத் தூங்கினேன் என்று
37

Page 26
அனைவரும் கூறுவதுண்டு. ஒன்றும் தெரியாத சுழுத்தி நிலையில் சுகமாய்த் துரங்கினேன் என்று உணர்த்திய பொருள் யாது? புலனறிவு ஒடுங்கிய நிலையிலும் அறியுமென்றும் - அறியாததென்றும் உணர்த்திக் கொண்டிருக்கும் பொருள் எதுவோ, அதுவே வேதாந்திகளால் ஆராய்ந்து அறியப்பட்ட வேதப்பொருள்; சாட்சி மாத்திரனென்றும், இதயக் குகையில் வீற்றிருப்பவனென்றும் கூறப்பட்ட பொருள் அதுவேயாகும். அதுவே நமது வாழ்வின் குறி.
பணிவினால் கடவுளும் பணிவான். இறைவன் முன் பணிந்து பணிந்து, மாந்தளிர் போல் உன்னை மிருதுவாக்கிக் கொள். மிருதுவான துளிர்களே ‘அர்ச்சனைக்குத் தகுதி யுடையவை. உன்னை ஒரு அர்ச்சனைப் பொருளாக்கி, தன்னைத்தானே அர்ச்சனை செய். அதுவே விரைவில் ஏற்றுக் கொள்ளப்படும் சிரேஷ்டமான அர்ச்சனையாகும். அர்ச்சனை மலருக்காக காடு - மலை - தடாகங்களைத் தேடி அலைந்து திரியும் நீ, உள்ளப் பொய்கையிலிருக்கும் உள்ளத் தாமரையைக் கொய்து, அங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யத் தெரியவில்லையே என்று ஆதிசங்க ராச்சாரியார் பாடியிருக்கின்றார்.
பிரதிபல் திருஷ்டியில் (திறந்தும் திறக்காமல்) மெளனயோகத்தில் சலனமற்றிருக்கும் பரமயோகியின் முக்கண் பார்வையை விழிக்கச் செய். நீ பயின்ற கலைகளும், தேடிய செல்வமும், அடைந்த பெருமையும் உன்னைப் பாதுகாக்குமென்று நினைப்பது மடமை. அவற்றால் நீ நிச்சயம் வஞ்சிக்கப்படுவாய். பந்த பாசங்களால் பாசி பிடித்து நாற்றம் எடுக்கும் நெஞ்சில், அவன் திருவடிகளை மெல்லெனத் தூக்கிவை. பொற்பாதம் பட்டதும், நெஞ்சில் பற்றிய தூசு துரும்புகள் கருகி விடுமல்லவா?
உனது பூஜாபலன் குறையுமுன், இதயத் துடிப்பு உன்னை விட்டு அகலுமுன் அதைச் செய்! உனது பக்தியை அம்பின் நுனிபோல் கூரியதாக்கி, அசைவற்றிருக்கும் யோக
38

சிரேஷ்டனின் இதயக் கமலத்தைக் குறியாய் வைத்து எய்து விடு! பாணம் அவன் திரு நெஞ்சில் தைத்ததும், நிஷ்டை கலைந்து திருக்கண் பார்வை அருள்வான். உன்னைக் காக்க அந்தத் திருக்கண் பார்வை ஒன்றே போதுமானது. திருவருட் பார்வையால் அழுத்தப்பட்டவர் மீண்டும் உலக துன்பங்களில் மிதிப்பதில்லை. ஆத்ம வீரனே கற்பனா உலகில் வாழ்ந்தது போதுமன்றோ! உறுதியுடன் எழுந்து நில்! நானென்ற உணர்ச்சிக்கு ஆதாரமாய் நிற்கும் அந்தச் சேதனா சக்தியை வணங்கி நில்! எக்காலமும் வணங்கி நில்!
OOO
மனம் உலக யுத்தங்களை மூட்டி விடும்; பிறகு சமாதானம் பேசும்; உள்ளே இருந்து கிள்ளிக் கொண்டிருக்கும்; தப்பித் தவறி உண்மையைப் பேசப் போனால், உனக்குத் துரோகி என்ற பட்டத்தைச் சூட்டி விடும்; இப்படி நெறி கெட்ட மனத்துடன் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியுமா? ஜெப தியானத்தால் மனதை நெறிப்படுத்தி எடு; நீ சுகத்துடன் வாழலாம்.
மனம் மூவுலகிலும் சஞ்சாரம் செய்யும் சஞ்சாரப்
பறவை; அதற்குப் பின்னால் நீயும் சஞ்சாரம் செய்வதாகில், உனக்கு விமோசனம் என்பது இல்லை.
- வஜனாம்ருதம்
39

Page 27
ஒ சித்த சோதனை (I) ஐ
ஆத்ம சகோதரா புறநாட்டங் கொண்டு உழலும் மனதை அகமுகப்படுத்தி, ஆத்மாவின்கண் ஏவிவிடுவதென்பது எளிதான காரியமன்று. நீ நெல்லிக் கனியை உண்டு சுவைத்திருப்பாய்; அல்லது அதன் குண விசேஷங்களை யாவது கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா? முன்னர் கசக்கும் - துவர்க்கும்; - பின் இனிக்கும். ஆத்ம பயிற்சியும் இத்தன்மை வாய்ந்ததே என்று அறிக!
உனக்குத் தோன்றும் நெருக்கடிகள் உனது ஆத்மீக முன்னேற்றத்தைச் சோதனை செய்யும் உரை கல்லாக கருதிக்கொள்வாயாக. இடர்கள் பலவற்றால் சோதிக்கப்படும் பொழுது மனக்கிளர்ச்சியின்றி, நிதான புத்தியுடன், காரிய காரணங்களின், சரியான நிலைப்பாட்டை கண்டறியத் தகுதி இல்லாவிடின், உனது ஆத்மீக முன்னேற்றம் தீவிரம் அடையவில்லை என்பதை அறிவாயாக!
நாளிது வரையிலும் மிகப்பற்றுடன், தனி உரிமையும் விருப்பும் பாராட்டி வந்த ஒன்றிற்கு, ஆபத்துக்களும் எதிர்ப்புக்களும் திரண்டு வரும்பொழுது உள் எழும் உணர்ச்சி வேகங்களை ஊன்றிக் கவனிக்கவும். அத்தகைய சோதனை மிக்க சந்தர்ப்பங்களில் பொங்கி எழும் மனவிகாரங்கள், நீதி நியாயங்களை சாவகாசமாக விசாரணை செய்யச் சந்தர்ப்பமளிக்காமல், சினமும் சீற்றமும் கொண்டு, அவசரச் செய்கைக்குக் தூண்டுமாயின, உனது யோகமுயற்சிகள் இன்னும் சிற்றுணர்வின் ஆதார நிலையை விட்டு உயரவில்லை என்று கருதுவாயாக!
விபரீத புத்தியின் விளைவால் நன்னெறி உணர் வற்ற ஒரு சுற்றாடலில் வசிக்க வேண்டியிருக்கிறதே என்று வேதனைப்படுகிறாயா? ஆத்மீகப் பண்பாடற்ற தன்னலத்திற்காக, கூச்சமில்லாமல் எதையும் பேசவும்,
40

செய்யவும் பழகிவிட்ட உலகச் சூழலில் , சீரிய இலட்சியத்திற்காக தார்மீக சிந்தனையுடன் வாழும் உன்னைப் போன்றவர்களின் வாழ்வு சோதனைக்குரியது என்பதில் சந்தேகமில்லை. எனினும் நீ விரும்பும் ஓர் களங்கமற்ற சூழ்நிலை அகிலமெல்லாம் தேடினாலும் கிடைப்பது அரிது என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
யோக முயற்சியால் உருவாகும் ஐக்கிய உணர்வின் கிரணம், மனோபுத்தி - பிராணனில் ஊடுருவல் செய்யும் பொழுது, இத்தகைய வெறுப்பும் பீதியும் மனதை விட்டகன்று, அனைத்திலும் ஒரு அன்புத் தொடர்பு - மனோபாவம் உதயமாகும்.
தாமிரத்தைச் செம்பொன்னாக மாற்றும் இரசவாத வித்தை போன்று, துன்பம் நிறைந்த உலக வாழ்வை, தெய்வீகமாக மாற்றுவது யோகம். இதனைத் தெளிவாய் கருத்திற் கொள்ளவும். பயம், பீதி, அச்சம் முதலியவற்றின் காரிய காரணங்களை அல்லது அவற்றின் இரகசியத்தை, உனது அந்தராத்மா தெளிவாக விளக்கிக் காட்டும் காலம் வரும். அப்பொழுது அதைப் பார்த்து புன்முறுவல் கொள்வாய். அந்த அரிய நிலை வரும் வரையிலும், இலட்சியத்திற்கு இடையூறான சூழலால் தீண்டப்படாமலும், நீ அவற்றைத் தீண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது உனது கடமை.
அநீதிகளையும் அக்கிரமங்களையும் எதிர்க்க வேண்டிய இடத்தில், அவதான புத்தியுடன் நிதானமாகச் செயலாற்ற வேண்டும். இதைவிட உத்வேகமானதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான தெளிவான வழியும் இருக்கின்றது. தார்மீகப் பணி பாட்டின் உருவடிவாயப் மெளன யோகத்தில் ஆழ்ந்திருப்பதே அந்தச் சீரிய முறையாகும்.
41

Page 28
சரி பிழைகளை வரையறுத்துக் கூறுவது ஞானிகளா லும் கஷ்டமென்று கீதை கூறுகிறது. சரியாக நிர்ணயிக்க முடியாத விஷயத்தால் தடுமாறும் பொழுது, ஆழ்ந்த மெளனத்தை மேற்கொண்டு, அந்தராத்மாவின் தீர்ப்புகளை எதிர் நோக்கி இருப்பாயாக! விரைவில் அல்லது சிறிது தாமதித்தேனும் தெளிவாய் நிர்ணயிக்கப்பட்ட முடிவுகள் உனது காதில் விழும். அந்த முடிவின்படி சஞ்சலமில்லாமல் செயலாற்றுவீராக! இன்னும் சிலவற்றைக் கருத்தில் ஊன்றுவீராக!
விடுதலையும் அதனால் ஏற்படும் பூரணத்துவமுமே யோக சாதனையின் குறிக்கோள் என்பதை அறிந்திருப்பீர். இந்த முடிவில் வைத்திருக்கும் ஆர்வத்திற்கும், நம்பிக்கைக்கும் தக்கபடி சாதனையின் பலாபலன்கள் கைகூடும். முழுமையை நாடி மனம், புத்தி, காயங்கள் அதிதீவிரமாய் முயற்சிக்கும் பொழுது, அதன் உத்வேகம் அல்லது அலைகள், சகல ஜீவராசிகளுக்கும் நலனையும் சுகத்தையும் கொடுப்பதை நேரில் உணர்வாய்!
சாதனையின் முயற்சியால், இத்தகைய பல அனுபவங்களைக் காணும் பொழுது, அகந்தையும் செருக்கும் படாமல் விழிப்பாயிருக்கவும். இறைவனது பெருமையையும், உனது சிறுமையையும் எண்ணிப் பார்த்தால், பரம் பொருளின் மகா சன்னிதானத்தில் அனைவரும், பிபிலிகளுக்கு (ஊர்ந்து செல்லும் புழு) சமானம் என்று உணர்வாய்! இத்தகைய விசாரணையாலும், உணர்வினாலும் தற்பெருமையும் . தற்செருக்கும் அடையாமல் இருப்பீராக!
அவசர புத்தியாலும், உடலுணர்ச்சி வசத்தாலும், உனது உலகியல் கடமைகளை ஒரேயடியாக விட்டுவிடுவது அவ்வளவு உசிதமாய் இருக்குமென்று தோன்றவில்லை. முறைதவறி, கடமைகளை விட்டுவிட்டு, ஆத்மிகத்திற்கும் -
42

லெளகீகத்திற்கும் உதவாக்கரைகளாய், அங்கும் இங்கும் அலைந்து திரியும் ஒரு கூட்டத்தினரை நீ நேரில் பார்த்திருக்கக் கூடும்.
இலட்சியத்தின் கண் ஊக்கமுடையவனாய், முறைப் படுத்திய பயிற்சியைத் தீவிரப்படுத்தும் பொழுது, உன்னை விட்டு உலக பந்தங்கள் தானாகவே விலகத் தொடங்கும். ஆத்ம சாகடித்காரத்துக்குரிய உள்ளெழுச்சியின் வேகம் வலுவடையாவிட்டால், அனுஷ்டான சாதனைகள் வெறும் மன - உடல் பயிற்சியில் முடிவடையும் என்பதைக் கருத்திற் கொள்க. சத்சங்கம் - தூய சாதுக்கள் உறவு - தீர்த்த யாத்திரை - மகான்களின் தரிசனம் இவைகளினாலும் அனுகூலம் உண்டாகும்.
அற்ப சொற்ப அனுபூதிகளைக் கண்டு, உன்னை ஒரு ஆத்மீக ஆசிரியனாகக் கருதும் மோகம் எழுமாயின், அதனிடத்தில் கடும் காவலாய் இரு அகண்ட சச்சிதானந்த வடிவின்முன், பரம ஞானிகளும் நித்திய மாணாக்கர் என்பதை அவர்களும் உணர்ந்திருக்கின்றனர். தன்னைத் தான் விளம்பரம் தேடும் ஆவலுக்கு, சிறிதளவும் இடமளியாதே
சுருங்கக் கூறின், இறைவனிடத்தில் பூரணசரணாகதியும், நன்னெறி நழுவாத சிந்தனையும் - செயலும், லட்சியத்தின் தளராத முயற்சியும் இருக்குமாகில், நாளடைவில் உனது அருட் தாகம், ஆத்மானுபூதி என்ற புனித நீரால் தணிக்கப்படுவது நிச்சயம்.
ΟOO
மதம் மனிதருடைய மிருக வாசனைகளை
அடக்கும் அங்குசம்.

Page 29
சித்த சோதனை (I) ஐ
ஆத்ம சகோதரா! நீ துறவறத்திற்கு விருப்பம் கொண்டிருப்பது நன்று - நன்று. பூர்வ ஜென்ம புண்ணியப் பயனே இத்தகைய ஆர்வத்திற்குத் தூண்டுதலாயிருக்கின்றது. முன்னைய நல்வினையும், தற்பொழுதிருக்கும் இச்சையும் . முயற்சியும் ஒன்று சேர்ந்து செயற்படுங்கால், துறவறம் பூண்பது சாத்தியமேயப்ாகும். எனினும் ஆத்மீகத் துறையின் இளம் பிராயம், துறவைப் பற்றிய உண்மைகள் இவற்றை தெளிவாய் அறிந்திருப்பது முயற்சிக்கு அனுகூலமாகும்.
துறவு - சந்நியாசம் முதலான வார்த்தைகள் சற்றேறக் குறைய ஒரே கருத்தை விளக்குபவை. துறவென்பது சில சின்னங்களை அணிவதனாலோ அன்றி, விருதுகள் சிலவற்றைப் பெறுவதினாலோ, கிடைக்கக் கூடியதன்று. நாமங்களை மாற்றி அமைப்பதனாலும் அது கைகூடுவ தில்லை. ஈஸ்வர சிருஷ்டிகளை வெறுத்து - ஒதுக்கிப் - புறந்தள்ளி விட்டு வாழ்வதும் துறவற வாழ்வன்று.
இவைகளெல்லாம் வாழ்க்கையின் சில இலட்சியங் களையும், விருப்பங்களையும் மாற்றி அமைத்தற்குரிய அறிகுறிகளும் வேஷங்களுமேயாகும். உண்மைச் சந்நியாசம் அல்லது துறவு அதுவன்று. உயர்ந்த மனோபரிபாகத் தாலடையும் பற்றற்ற நிலையே துறவு. இன்னும் சிறிது விரித்துக் கூறுவதென்றால், நான் - எனது என்ற தன் முனைப்பும், ஜீவபேதமும் அற்ற இடமே துறவு. சமரச அனுபூதியே துறவின் அருள் விளக்கம். நான் என்ற தடிப்பு சிறிதளவு இருக்கும் வரையிலும், துறவின் அனுபூதி அணுவளவும் உண்டாவதில்லை.
44
 

சிற்றுணர்ச்சிகளைப் பதப்படுத்துவதே தவம்; ஆகையால், உண்மையான சந்நியாசம் ஒருவனால் அளிக்கக் கூடியதன்று. ஆத்ம பயிற்சியினாலும், திருவருளினாலும் பரிபக்குவம் அடையுங் கால், அனுபூதி மாத்திரமாய் நிற்கும், ஒரு தனித்த நிலையே துறவு என் சகோதரா கனவிலும் நினைவிலும் குறியின் கண் ஆர்வக் கனலை எழுப்பு மெல்ல மெல்ல நிதான புத்தியுடன் சாதனையைத் தீவிரப்படுத்து!
தற்கால ஆத்மீகத் துறையில் அதிசூக்குமமாய் செயற்பட்டு வரும், வஞ்சனை - பொய் - பித்தலாட்டங்களில் அகப்பட்டு வீழ்ச்சியடையாமல் இருக்க, ஆத்மானந்த சொரூபியாகிய பரம் பொருள், எக்காலமும் உன்னைக் காத்து இரட்சிப்பதாக! அவனருள் என்றும் நிலைப்பதாக! சமரச அனுபூதியை மறைக்கும் சம்சார பந்தங்களினின்றும் சிறிது சிறிதாக விடுதலை அடைவாய் தீவிர முயற்சி செய்; காரியம் கைகூடும் வரையிலும் ஓய்ந்திராதே!
சம்சார பந்தங்களினின்றும் விலக்கப்பட்டவனே துறவி. மனதின் ஆசாபாசங்களே சம்சாரம். அதைத் துறப்பதே துறவு. வியக்தி மனம், தனது பரிணாம வளர்ச்சியினிடையில் அனுபவித்த விஷயாதிகளின் பதிவுகளே ‘பிராரய்தம்'. சகலவற்றையும் வெறுத்துத் தள்ளி வரட்சியான மனதுடன் வாழ்வதே துறவென்று அநேகம் பேர்கள் கருதுகின்றனர். இவ்வுலகில் காண்பதெல்லாம் திருவருட் சக்தியின் மகிமையால் தோன் ரியவை. திருவருட்கடாட்சம் பெற்றவைகளை வெறுப்பதென்றால், ஈஸ்வரனை வெறுப்பதற்கு ஒப்பாகும். எனினும் ஒன்றிலும் கட்டுண்டு கிடக்காமல், சேர்ந்து வாழப் பழகுதல் வேண்டும். அதுவே பற்றாமல் பற்றிய வாழ்வு.
சிலவற்றில் விருப்பும், மற்றும் சிலவற்றில் வெறுப்பும் இல்லாமல், சம பாவனையுடன், தனக்குற்ற பணியைச் செய்து கிடப்பதே துறவின் பூதவுடல் வாழ்க்கையாய் இருத்தல்
45

Page 30
வேண்டும். எதையும் வெறுக்காமல் என்பது நஞ்சையும் ஏற்கலாமென்று பொருள் கொள்ளலாகாது. தனது இலட்சிய வாழ்வுக்கு அனுகூலமானவற்றையும், அவசியமானவற்றை யும் பெற்று, மற்றையவைகளிடத்தே, சாதக பாதகமில்லாமல், அலட்சியமாய் இருப்பதே, வெறுப்பில்லாமல் இருப்பதென்பதன் கருத்து.
ஒவ்வொன்றும் அதனதன் ஸ்தானத்தில் உபயோக முள்ளதும், சிறப்புடையதுமாக இருக்கின்றன. இவ்வுலகில் நிரந்தரமாக பழமையும் புதுமையும் இல்லை என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன். பழமை புதுமையாகவும், புதுமை பழமையாகவும் மாறி மாறி வடிவெடுக்கின்றன. இங்ங்ணம் நஞ்சென்றும், அமுதமென்றும் தனித் தன்மை வாய்ந்த பொருளும் இவ்வுலகில் இல்லை. ஒன்றுக்கு நஞ்சாயிருப்பது, பிறிதொன்றுக்கு அமுதாயிருப்பதை நீ அறியவில்லையா? மனிதரின் உயிரை மாய்க்கும் சில நஞ்சுப் பொருள், மற்றும் சில உயிர்களுக்கு போஷகப் பொருளாயி ருப்பதை நீ நேரில் அறிந்திருக்கக் கூடும்.
இவ்விதம் ஒரு பகுதிக்கு நலம் தருவன, மற்றும் சிலவற்றிற்கு துன்பம் விளைவிப்பனவாய் இருக்கின்றன. ஒரு காலத்தில் சுகம் தருபவை, மற்றொரு காலத்தில் துக்கமாகவும், அதே துக்கம் இன்னொரு சுகத்திற்குக் காரணமாக இருப்பதையும் எண்ணிப் பார்த்தால், எல்லாமே விசித்திரமானவை. எனினும், பிரபஞ்ச நிகழ்வுகள் யாவும் ஒரேயொரு சர்வேஸ்வரனின் ஆணைக்கும், அனுசரணைக்கும் உட்பட்டு, நியதியை மீறாமல் நிகழ்வதேயாகும். வெளிப்பார்வைக்கு ஒன்றோடொன்று பொருத்தமில்லாது அன்னியோன்னிய விரோதமாயும் தோற்றப்படும்.
உலகப் பொருட்கள் யாவும், தண்ணொளியும் சக்தியும்
மிக்க ஒரு அமுதக்கலையாய் தொகுத்து இணைக்கப்
பட்டிருக்கின்றன.பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அத்துமீறிச் செல்லாமல்,
46

நியதிக்கு உட்பட்டு ஒழுங்காக இயங்குவதற்கு, அனைத்திலும் ஊடுருவி நிற்கும், அந்த அமுத சக்தியே காரணமாயிருக் கின்றது. மெல்லிய தங்கக் கம்பி போல், எல்லாவற்றிலும் செறிந்து நின்று, தன்பால் அனைத்தையும் தொகுத்து வைத்திருக்கின்றது. என்னையும் உன்னையும், ஏன் மற்றெல்லாச் சராசரங்களையும், ஒருமைப் படுத்தி ஒன்றித்து நிறுத்து!
ஒவ்வொன்றிலும் அந்தரங்கமாய் இருக்கும் இணக்கத் திற்கும், விருப்புக்கும் இந்த அருட்சக்தியே நிமித்த காரணமாய் இருக்கின்றது. உன்னிலும் என்னிலும் இருக்கும் வெப்பமும் - குளிரும் ஒளியும் அதன்பால் வருவதேயாகும். அண்டங்களுக்குப் பிரகாசமும், வலிமையும், இயக்க சக்தியும், தொடர்பு கொள்ளும் ஆகர்ஷண சக்தியும், அந்த அமுத கலையின் தொடர்பால் உண்டானவை. ஒவ்வொன்றும் தன் நிலை தவறி விழாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
பரமார்த்திகத்தில் நாம் அனைவரும் அந்த ஜீவாமிர்தக் கம்பியாம் அச் சக்தியில் தொடுக்கப்பட்ட பலவித மணிகளேயாகும். எப்பொழுது அந்த ஜீவாமிர்தக் கலை, தனது சொந்த ஸ்தானத்தில் திரும்பவும் லயப்பட்டு ஒடுங்குகிறதோ, அப்பொழுது அண்டசராசரங்களும் தனது ஜீவசத்தை இழந்து சூனியமாகிவிடும். போதிய பரிபாகமடைந்து, உன்னை நீயே அறியுங்கால், எல்லா வற்றையும் இணைத்து நிறுத்தி உயிர்ப்பிக்கும் அந்த ஜீவசக்தி ஊறி வரும் ஒரு ஆதாரப்பொருள், அருட் கனல் கக்கும் ஒரு மகா சைதன்யத்தின் ஓர் அம்சமாக உன்னில் உறைந்திருப்பதை நீ உணர்வாய்.
நீ எதைப் பார்த்துத் தியான ஜெபங்கள் செய்து வருகின்றாயோ, அந்த லட்சியப் பொருளே அது. பூத உடலையும், மனம் - புத்தி - சித்தம் - அகங்காரம் சேர்ந்த அந்தக் கரணம் என்ற சூக்கும சரீரத்தையும் கடந்து, உச்சியில் இருக்கும் காரண சரீரமாகிய பிரம்ம சரீரத்தை
47

Page 31
அடையுங்கால், இதன் இரகசியமெல்லாம் விளக்கமுறும். காரண சரீரத்தை அடைந்தவன், ஜனன மரணங்களைப் பற்றிய மர்மத்தை உள்ளபடி விளங்கிக் கொள்கிறான். அதனை விளங்கியவன், யாண்டும் துறவியேயாகும்.
மூப்பும் - பிணியும் - விருப்பும் - வெறுப்பும் - பிறப்பும் - இறப்பும் யாருக்கு? அன்றும் - இன்றும் - இனி என்றும் உள்ளவாறே இருக்கின்றாய். பரமார்த்தீக நிலையில் துறக்க வேண்டுமென்ற விருப்பமும்கூட ஒரு பிரமையே ஆகும். எனது கூற்று அளவுமீறி விட்டதே என்று நினையாதே! இதையிட்டு அதிர்ச்சியும் அவிஸ்வாசமும் கொள்ளாதே! உண்மையைக் கூறினாலும் கூறா விட்டாலும் என்றும் உள்ளது உள்ளபடியே இருக்கும். மாற்றங்க ளெல்லாம், உனது அந்தக்கரணத்திற்கும், அதைத் தாங்கி வரும் பூத உடலுக்குமே தவிர, ஆத்மாவுக்கு இல்லை என்பதை உறுதியாய் விஸ்வாசிப்பாயாக!
இறப்பும் - பிறப்பும் அந்தக்கரண சேஷ்டைகளேயாகும். கொல்லன் முரட்டுத்தனமான இரும்பை உலையில் வைத்துக் காய்ச்சிப் பக்குவப்படுத்தித், தனது இச்சைப்படி வேண்டிய பொருளாக மாற்றுவது போல், ஆத்ம சாதனங்களால் அந்தக் கரணங்களை நன்றாகச் செப்பனிட்டு, பதப்படுத்தி, தன்வயப்படுத்தி வைத்தால், அதை விரும்பியவாறு கையாளலாம். அந்தக் கரணத்தாக்கமில்லாமல், வேறாக உன்னில் தனித்துய் பிரிந்து நிற்பது எதுவோ, அதுவே உண்மையான நீ அதுவே தனித்த நிலை; உனது நிஜ சொரூபமும் அதுவே.
அந்தக்கரணத்தை தன் கைப்பொம்மையாக வைத்திருப் பவர்களுக்கு, இவ்வுலக வாழ்வு தாமரை இலையும் நீரும் போல் பற்றிப்பற்றற்று நிற்கும். உதய அஸ்தமனம் போல் தோன்றியும் மறைந்தும் நிற்காமல், ஞான தாகத்தாலும் நித்தியா நித்திய விசாரணையாலும் உள்ளது ஒன்றே என்ற எண்ணத்தைத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்துக!
48

அன்புக்குரியவனே! உன்னைச் சுற்றித் திரியும் கூட்டத்தினரெல்லாம், உண்மையில் உனது நலனில் அக்கறை உடையவரல்லர். உலக வழமைக்கேற்ப, நீ பெற்றிருக்கும் சில உலகப் பேறுகளை மொய்க்க வந்த ஈக்களும் கிருமிகளுமேயாகும். அதாவது பருவ காலத்தில் உன்னிலுறும் பலரகக்களியை உறிஞ்சியுண்டு முடிந்தபின், புது விருட்சங்களை நாடித் திரியும் பறவைகள் போன்று, உனது தேக சம்பத்துக்கள் யாவும் குன்றியதும், உன்னிடம் வந்து என்ன என்று கேட்பவர், திரும்பிப் பார்ப்பவர் யாருமிலர்.
எனினும் உனது உதவியையும், சகாயத்தையும் நாடி நிற்பவர்களுக்கு, இயன்றதை உள்ள நிறைவுடன் செய்; அவர்களுடன் பழகும்போது, ஊனும் இரத்தமும் கலந்த தேக விகாரத்திற்குப் பலியாகாமல், எட்டி நின்று பணி செய்; உன்னில் உறைந்திருக்கும் அதே சைதன்யமே, அவர்களுள்ளும் உறைந்திருக்கின்றது.
அங்ங்ணமிருந்தும் தன்னுள் மறைந்து இருக்கும் ஆத்மப் பிரபையை ஒருவன் காணாத காலம் வரையிலும், பிறரிடத்தில் அதைக் காண்பதும், பிற உயிர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடுவதும், அசாத்தியமானதே ஆகும். ஆழ்கடலில் மூழ்கிச் செல்லும் நீர்மூழ்கியைப் போல், உனதுள்ளே ஆழ்ந்து ஆழ்ந்து மூழ்கிச் செல். முக்கோண வடிவில் துயில் கொள்ளும் குண்டலினி சக்தியை தியான வலிமையால் தட்டி எழுப்பி, உச்சிக் குகையில் ஏற்றி நிறுத்து, அளவிட்டு உரைக்க முடியாத அதன் சக்திக் கனல், அந்தக் கரண மலங்களை எரித்துச் சாம்பலாக்கி, உன்னை நித்திய சுத்த சுதந்திரனாக்கும்.
<
49

Page 32
3 சும்மா இரு ஐ
எண்ணரிய தாவர சங்கமங்களைத் தன்னகத்தமர்த்தி, நன்மை - தீமை, இருள் - ஒளி, குளிர் - வெப்பம் போன்ற இருவினைகளால் காட்சியளிக்கும் இப்பிரபஞ்சத்தின் நிலையை ஒருமுறை ஆழ்ந்து நினைத்தால், திரிகரணங்கள் அதை ஆக்கியோனின் கழலிணையில் தாழ்ந்து வணங்கி நிற்கும்.
புலனறிவுக்கு அப்பாற்பட்ட நுண்சக்தி பலவற்றால் சூழப்பட்டு கிரமமாய் அமைந்து நின்றியங்கும் எண்ணிலாக் கோள்களைக் கொண்ட விண்ணுலகம்; எண்ணரிய சராசரங்களைச் சிரமமின்றித் தன்மேனியில் தாங்கி நிற்கும் மண்ணுலகம்; இவை இரண்டையும் பொருத்தமுடன் இணைத்து நிறுத்தி, நியதி தவறாமல் இயக்கிவரும் அந்த மகாசைதன்ய சக்திதான் என்ன?
மனிதச் சிந்தனைகள் குறுமூளை கொண்டு எழுந்த காலமுதல் இன்றுவரையில், மெல்ல மெல்ல வளர்ந்து வந்த அறிவுப் பரம்பரைக்கு ஆதிகாரணமாயிருந்த சிந்தனைச் சுடர், இப்பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று என்ற கேள்வியில் எழுந்ததாகும். புராதனமான இக்கேள்வி இன்றும் புதுப்புது வடிவங்கொண்டு பல கோணத்திலிருந்தும் பலவாறாகக் கேட்கப்படுகின்றது. ஏன்? - பழமை வாய்ந்த இக்கேள்வியின் அந்தரார்த்தம் ஒவ்வொரு பிராணிகளின் இதயத் துடிப்புடனும் சம்பந்தப்பட்டிருப்பதேயாகும்.
நானாவித அறிவுச் சுரங்கங்களை வெட்டித் திறப்பதற்கும், பழமை வாய்ந்த இக் கேள்வியே முதல் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டிருக்கின்றது. வண்டுகளுக்கு மது அருந்தும் புஷ்பம் எப்படியோ, அப்படியே சகல பிராணிகளுக்கும் மதுவாயிருக்கும் இந்த அண்ட பிண்டங்கள்.
50

இவை எங்ங்னம் உண்டாயின. நமது உயிர் இலங்கும் இந்தச் சிறு பிண்டத்தைப் பற்றியே ஞான சூனியமா யிருக்கையில், அனாதியாயும் அளவற்றதாயும் இருக்கின்ற அகண்டாகார உற்பத்தியைய்பற்றித் தெரிந்து
கொள்வது எங்ங்னம்? V
நம்மைச் சுற்றி நிமிடத்திற்கு நிமிடம் எத்தனை எத்தனை இயற்கை அற்புதங்கள் நிகழ் நீ து கொண்டிருக்கின்றன? இப் புவியில் தோன்றி - வளர்ந்து - தேய்ந்து போகும் பலரக வஸ்துகளையும் அவற்றின் நடைமுறைகளையும் ஆராய்ந்தால், நாம் அறிந்தவை கேட்பவை - காண்பவை - நுகர்பவை - ருசிப்பவை எல்லாம் மிகமிகச் சொற்பமானவையே ஆகும். அகண்டாகார வெளியின் கீழ் எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து மடிந்து போகின்றன.
இவைகள் எங்கிருந்து, எங்ங்ணம் வந்து, எக்காரணமாக ஒட்டிநின்று இறுதியில் எங்கே செல்கின்றன? இவைகள் சென்று சேரும் உறைவிடந்தான் யாது? நமது அறிவும் அனுசரணையும் வேண்டப்படாமலே நிகழ்ந்து கொண்டிருக் கும் இவ்வரிய நிகழ்ச்சியின் இரகசியந்தான் என்ன? வழக்கில் கூறும் பகுத்தறிவுக்கும் நுண்ணறிவுக்கும் அப்பாற்பட்ட இவற்றின் மர்மங்களை நாம் எங்ங்ணம் அறிவது? இயற்கை வாதிகளின் (Naturalist) விளக்கம் ஒருபுறமிருக்க, ஞானவிளக்கமாயிருக்கின்ற சமய சாஸ்திரங்களில் கூறும் முடிவை ஆராய்வோம்.
உருவிளங்கி, உயிர்விளங்கி, உலகெலாமுணர்ந்து மெய் நிலைகண்டு விளங்கிய சான்றோர்கள் கூறும் பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றிய சித்தாந்த முடிவு, முடிந்த முடிவாகவே இருக்க வேண்டும். ஆகாச வெளியில் புலனாகும் சூரிய சந்திரர்களும், ஏனைய கிரக கோளங்களும், பஞ்ச பூதங்களும், ஜனன மரண நியதிகளும், ஓசை ஒலிகளும், நிலை தவறி ஒரு கணம் இயங்கினால் வரும் விபரீத பலன்கள் என்னவென்பதை நம்மால் சிந்திக்க முடியுமா?
51

Page 33
இவ்விதம் இயற்கை நடை முறைகளை ஊடுருவிப் பார்த்தோமாகில், கிரகாதிகள் தொடக்கம் ஒரு சிறு துரும்பு ஈறாக ஏதோ ஒரு பெரும் சக்தியின் ஆணைக்கு உட்பட்டு இயங்கிவருகின்றன என்பதை ஊகிக்கலாம். புவனமெல்லாம் நியதி தவறாமல் சத்திய நெறிக்கு உட்பட்டு இயங்குவதற்கு இன்னொரு சத்தியப் பொருள் இருந்தாக வேண்டும்.
எல்லாவற்றிக்கும் ஆதி தத்துவமாயும், காரிய காரணங்களுக்கெல்லாம் மூலகாரணமாயும், நிர்விகாரனா யும், அவ்யக்தனாயும், இச்சா - ஞான - கிரியா சக்திகளுக்கு இருப்பிடமாயும், சச்சிதானந்த சொரூபமாயும் இருக்கின்ற அந்தப் பரம சத்தியத்தினின்றும் (பிரம்மத்தில்) ஜடமான இப்பிரபஞ்சம் தோற்றப்பட்டிருக்கின்றது. அதன் சைதன்ய விசேஷத்தால் கேவல ஜடமயமான இப்பிரபஞ்சத்திற்கு உயிரோட்டமும் ஒளியும் கிடைத்துப் பிரகாசிக்கின்றது. இந்தச் சேதனா சக்தியில் உறையும் ஆனந்தத்தின் ஒரு சிறு துளியினாலேயே இவ்வையகம் முழுவதற்கும் மகிழ்வும் ஆனந்தமும் உண்டாகின்றது.
*ஏகச்சா சர்வ பூதாந்தராத்மா
ரூபா ரூபப் பிரதி ரூபா விகச்சா'
என்று சிருஷ்டி தத்துவத்தைப் பற்றி வேதம் சுருக்கமாக விளக்கியிருக்கின்றது. ஒரு பொருள் பலவாறாகத் தோற்றப்படுகிறது என்பதே இதன் அர்த்தம். சர்வ பூதங்களுக்கும் அந்தராத்மாவாக இருக்கும் அந்த ஏகப் பொருள், விதவித ரூபங்களாயும், பிராணிகளாயும், மற்றெல்லாமாயும் வடிவெடுகின்றது. தற்கால விஞ்ஞான முடிவுகளும் இத் தத்துவத்தை ஏற்கும் விதத்தில் இருப்பதை நாம் விசேஷமாகக் கவனிக்கக் கூடியதாயுள்ளது.
52

ஒன்றாயும் பலவாயு முருவாயு மருவாயும் குன்றா மணுவாயுங் குணமாயுங் குணியாயும் நன்றாயும் தீதாயும் நானாயுந் தானாயும் இன்றா முளதாயு மிருக்கு மந்தப் பரமசிவம்
இங்ங்னமிருக்கும் பரமசிவனில் நின்றும் முதன்முதலாக அபஞ் சிகிருத (பஞ் சீகரணம் செய்யாத) பஞ்சபூத தன்மாத்திரைகள் தோன்றுகின்றன. பரமாத்மனின் சலனமாகிய மூலப்பிரகிருதியின் விசேஷ சலன சக்தியினால் ஆதிபூதமாகிய ஆகாச தத்துவம் உண்டாயிற்று. இறைவனின் இச்சை யென்றும், எண்ணமென்றும், ஆகர்ஷணமென்றும், பிராணனென்றும் பலவாறாகக் கூறும் மகா சக்தியினால் ஆகாசத்தில் சலனமுண்டாக, அந்தச் சலன விசேஷத்தால் எண்ணரிய அண்டங்கள் உருவெடுக்கின்றன.
ஆகாசத்தினின்று வாயு, வாயுவினின்று அக்னி, அக்னியில் நின்று நீரும், நீரினின்று பிருதிவியும் ஆகிய பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன. ஆகாயத்திற்கு சப்தம் ஒரு குணம்; வாயுவுக்கு சப்தம், ஸ்பரிசம் என்று இரண்டு குணம்; அக்னிக்கு சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்று மூன்று குணம்; நீருக்கு சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்று நான்கு குணங்கள். பூமிக்கு இந்த நான்கு குணங்களுடன் கந்தம் என்ற குணமும் சேர்ந்து ஐந்து குணங்களாக அமைகின்றன.
இவைகளே பஞ்சபூத தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும். பஞ்சபூத தன் மாத்திரைகளில் பீஜ ரூபமாய் அதி சூக்கும நிலையில் இருக்கும் சைதன்ய சக்தியால், 960)6 பஞ்சீகரணம் செய்யப்படும்பொழுது, எண்ணிலடங்காத சூரிய சந்திரர்களும் - நட்சத்திரங்களும் - பூமி போன்ற பற்பல அண்டங்களும் - விலங்குகளும் - மனிதர்களும் தோற்றம் பெறுகின்றன.
53

Page 34
ஐந்து பூதமும் பத்தாக்கி யவை பாதி நந்நான் காக்கி நந்து தம்பாதி விட்டு நான்கொடு நான்குங் கூட்ட வந்தன தூலபூத மகாபூத மிவற்றி நின்றுந் தந்தன நான்காந் துால தனுவண்ட புவனபோகம்
(கைவல்யம்)
ஆகாச முதலிய சூக்கும பூதங்களினின்று ஒவ்வொன்றை இரண்டிரண்டு பாகஞ் செய்ய அவை பத்தாகும். அதனின்று ஐந்து அரை அரைப்பாகத்தை உள்ளபடி நிற்கவிட்டு, மற்ற ஐந்து பாகங்களினின்றும் ஒவ்வொன்றையும் நன்நான் காக்கப்பட்டு, அந்த நன்நான்கு பாகங்களையும் நிறுத்தி வைக்கப்பட்ட தத்துவம், அரை அரை பாகத்தை விட்டு, மற்றப் பூதங்களில் நான்கு அரைப் அரைப் பாகங்களில் சேர்க்கப்படும்பொழுது, ஒவ்வொரு பூதங்களும் ஐந்தைந்து விதமாகப் பரிணமிக்கின்றன. இதுவே பஞ்சீகரணம் எனப்படும்.
இங்ங்ணம் பஞ்சபூத தன்மாத்திரையினின்றும் பஞ்சீ கரணம் செய்து வரும் தூலத்தில், இயற்கையினின்றும் உதித்த முக்குணங்கள் கலக்கப்படும்பொழுது, அந்த முக்குணங்களின் விகிதாசாரப்படி பலதரப்பட்ட உருவங்கள் தோன்றலாயிற்று. ஆகாசத்தை இரு கூறாகப் பிரித்தால் ஒரு பகுதிக்கு சமஷ்டி என்றும், மற்றப் பகுதிக்கு வியஷழ என்றும் கூறப்படும்.
சமஷ்டி என்பது ஈஸ்வரனுடைய உபாதி என்றும், வியவர்டி என்பது ஜீவர்களுடைய உபாதி என்றும் சொல்லப்படும். இந்த வியவர்டி பாகத்தை நான்கு பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகமும் தனித்தனியே, வாயுவுடன் சேரும் பொழுது புத்தியும், நீருடன் சேரும் பொழுது சித்தமும், பூமியுடன் சேரும் பொழுது அகங்காரமும் உண்டாகின்றன. இவை நான்கும் சேர்ந்ததே அந்தக்கரணம் என்று சொல்லப்படும்.
S4

இங்ங்னம் பஞ்ச பூதங்களின் தத்துவாம்சத்தினின்று அந்தக் கரணமும் கன்மேந்திரியங்களும் உண்டாகின்றன. இங்ங்னம் பஞ்சீகரணம் செய்யப்பட்ட பூதவுடலுக்கு ஐந்து கன்மேந்திரியங் களும், ஐந்து ஞானேந்திரியங்களும், ஐந்து பிராணன்களும், மனம் - புத்தி - சித்தம் - அகங்காரம் என்ற அந்தக் கரணத்துடன், பத்தொன்பது தத்துவங்களுடன் சேர்ந்ததே நமது சரீரம்.
அந்தக் கரணம் என்ற சூக்கும சரீரத்திற்கு சுத்தமாயை - அசுத்தமாயை என்ற இரண்டு பிரகிருதிகள் இருக்கின்றன. அசுத்த மாயையில் தோன்றும் பரமாத்மாவின் பிரதிபிம்பமே ஜீவாத்மா என்று சொல்லப்படும். பிராணன் சூக்குமம் துாலம் என்று இருவகைப்படும். தூலப் பிராணனின் வெளித் தோற்றமே சுவாசம், சூக்கும பிராணன் அல்லது மனோ பிராணனுடைய அலைகள் சித்தத்தில் வீசும்பொழுது எண்ணங்கள் சிந்தனைகள் முதலியன உண்டாகின்றன. சூக்கும தேகத்திற்கும் தூல தேகத்திற்குமுள்ள பிராணத் தொடர்பு அற்று விடுவதே மரணமென்ற அவஸ்தையாகும்.
ஆகாச தத்துவத்தில் பிரதிபலிக்கும் பிரம்மத்திற்கு சதாசிவமென்றும், வாயுவில் பிரதிபலிக்கும் பிரம்மத்திற்கு மகேஸ்வரனென்றும், தேயுவில் பிரதிபலிக்கும் பிரம்மத்திற்கு ருத்ரன் என்றும், ஜலத்தில் பிரதிபலிக்கும் பிரம்மத்திற்கு விஷ்ணு என்றும், பிருதிவியில் பிரதிபலிக்கும் பிரம்மத்திற்கு பிரம்மனென்றும், இங்ங்ணம் பஞ்சபூத சப்த குணங்களை அனுசரித்துப் பிரம்மத்திற்குப் பல பெயர்கள் உண்டாயின.
வாயுவில் தோன்றும் மகேஸ் வர தத்துவம் ஆத்மாக்களுக்கு பிரமையையும் (இல்லாததை உண்டென்று நினைத்தல்), ஆகாசத்தில் பிரதிபலிக்கும் சதாசிவ தத்துவம் ஜீவர்களுக்கு அறிவையும் உண்டாக்குகின்றது. இதே
55

Page 35
சதாசிவ. தத்துவம்தான் ஆத்மாக்கள் துரியாதீத நிலையை அடையும் பொழுது ஆத்ம சுகானுபூதியையும் கொடுக் கின்றது. தோற்றத்திற்கு வந்த சகல ஜீவராசிகளும் சுழுத்தி - சொப்பனம் - ஜாக்கிரம் என்ற மூவகை அவஸ்தையில் நின்று இயங்குகின்றன.
சுழுத்தி (தூக்க) நிலையில் மரம், செடி, கொடி முதலிய தாவரங்களும், சொப்பனாவஸ்தையில் விலங்கினங்களும், ஜாக்கிர (விழிப்பு) நிலையில் மனிதனும் இருந்து உயிர் வாழ்கின்றன. ஜீவர்த்மன் தன்னைத்தான் வெளிப்படுத்திக் கொள்ள இயலாதபடியால் தனக்குத்தானே ஒரு உபாதியை தேடிக்கொள்கின்றான். அந்த உபாதியே மனம் என்றழைக்கப் படும் அந்தக் கரணம். இந்த அந்தக் கரணம் எந்த ஜீவராசியிடத்தில் அதிகமாக வெளிப்பட்டு நிற்கின்றதோ, அதற்கேற்ப அந்த ஜீவாத்மனும் நன்றாகப் பிரகாசித்துத் தோன்றும்.
தாவரங்களுக்கிடையில் மனம் தூக்க நிலையிலும், விலங்கினத்தில் சொப்பனாவஸ்தையிலும், மனிதனிடத்தில் விழிப்பு நிலையிலும் இருக்கின்றபடியால்தான் மனிதனில் மாத்திரம் ஈஸ்வர சைதன்யம் அதிகமாகப் பிரகாசிக்கின்றது. இதுவே மனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் உள்ள வித்தியாசமாகும். இங்ங்ணம் மூவகை அவஸ்தையிலிருந்து உயிர் வாழும் சகல ஜீவ கோடிகளும் முக்குணவயப்பட்டு ஒழிவிலொடுங்கும் வரையிலும், தன்தன் இயல்புக்கேற்றவாறு இடையறாமல் கருமம் செய்து கொண்டிருக் கின்றன.
நஹி கஸ்சித் கடினமாபிஜாது
திஷ்டத்ய கர்மக்ருத க்ரயதே ஹற்யவச கர்ம ஸர்வ
ப்ரக்ருதி ஜைர்குணேன
(கீதை)
56

தொழில் செய்யாமல் எவனும் ஒரு கணமும் ஓய்ந்திருப்பதில்லை. கரும சொரூபமாயிருக்கும் இயற்கை யில் இணைக்கப் பட்டிருப்பவர்களெல்லாம் தொழில் செய்தே ஆக வேண்டும். இவ்விதம் செயலை ஒரு கணமாவது தவிர்த்திருக்க முடியாத இந்தக் கரும உலகில், கம்மா இரு’ என்று மகான்களால் ஆத்மீகத்துறையில் உபதேசிக் கப்பட்டுவரும் பொருள்தான் என்ன?
‘வெளிக்குள் வெளி கடந்து சும்மா லிருக்கும் சுகம் என்று தாயுமானவரும், 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம்விரஜ' என்று கீதையும் மொழிகின்றன. மக்கள்பால் உள்ளுறைந்து நிற்கும் சகல ஆசைகளும் - விருப்பங்களும், நிலையான சுகத்தையும் திருப்தியையும் குறியாய்க் கொண்டு எழுந்தவையாகும். மாசுமறுவற்ற சுகத்தை அடைவதற்காக, மனிதன் பலதர வித்தைகளைக் கற்று நானாவித தொழில்களைச் செய்து வருகின்றான். செய்யுந் தொழிலை ஒழுங்காகவும் நுட்பமாகவும் செய்து, எண்ணிய பலனை அடைவதற்கு வித்தைகள் உபாயமாயிருக்கின்றன.
இங்ங்னம் மக்களால் கற்றறிந்து அப்பியாசிக்கும் வித்தைகள் பரவித்தை என்றும் - அபரவித்தை என்றும், இரு வகைப்படும். அபரவித்தை, காமிய காரிய லாபத்திற்குரியவை. அபர வித்தையில் நாட்டம் கொண்ட வர்களை உலக இன்பங்கள் இழுத்து நிறுத்தி, மேலும் கருமத் தளைக்களை இறுகச் செய்து, திரும்பத் திரும்ப மரணத்தையும் பிறப்பையும் வாங்கியும் கொடுத்தும் கீழ்மையில் ஒதுக்கி நிறுத்தும்.
புலன்களுக்கு விஷய சுகங்களை எளிதில் தேடிக் கொடுப்பதும், அக்னியில் நெய் ஊற்றியதைப்போல் ஆசைக்கனலை மேலும் மூட்டி விடுவதுமாகிய அபரவித்தை, வேதாந்த பரிபாஷையில் அவித்தை என்றும் கூறுவர்.
57

Page 36
உத்தமமான ஆத்ம சுகத்தை மறைப்பதும், சிற்றின்ப சுகத்தின் சிறுமையில் கவர்ச்சியைக் கொடுப்பதும், மீண்டும் மீண்டும் மரண துக்கத்தில் அழுந்தும்படி செய்வதுமாகிய அபர வித்தையைப் படிப்படியாகத் துறந்து, பரசுகத்தைத் தரும் பரவித்தையை சிறுகச் சிறுக அப்பியாசிக்க வேண்டும்.
பிறப்பு - இறப்பு என்ற குற்றத்தை நீக்குவதும், சுகத்தின் நிலையான இருப்பைத் தூண்டிக் காட்டுவதும், ஆத்மஞானம் என்ற தேனமுதைக் கொடுப்பதுமாகிய, பரவித்தை அல்லது பிரம்ம வித்தையே வித்தைகளிலெல்லாம் சிரேஷ்டமான வித்தை. தேனீக்கள் பலரசங்களைச் சேர்த்து ஒன்றாக்கி தேன் என்ற ரசத்தை ஆக்கி வைத்திருப்பது போன்று, சகலவித்தைகளின் சாரமாகிய மகாசாரமே பிரம்ம வித்தை அல்லது ஆத்மவித்தை.
போற்றுதற்கரிய அத்யாத்ம வித்தையைக் தெளிவுறக் கற்றுணர்ந்த தீரன், திசைகள் தோறும் பறந்து திரியும் மனதை ஆத்மாவில் நுழையவிட்டு, அங்கு ஒரு கணமாவது அயர்ந்து தூங்கி விழித்தெழும்பச் செய்துவிட்டால், தொன்றுதொட்டு வந்த பாபக் களையாறி உள்ளுணர்வில் விழித்து நிற்பான். ஆத்மசுகம் பெற்ற மனம் ஜீவாமிர்தம் ஊற்றிய உலர்ந்த மரம்போல் புத்துயிர் பெற்று, திசைமாறிச் செல்லாமல் தன்னிலையில் நின்றவாறு நிற்கும்.
மக்களை பிரேயசில் (உலகாயதத்தில்) நின்று, சிரேயசிற்கு (ஆத்மீக செல்வத்திற்கு) உயர்த்திவிடும் ஆத்ம வித்தைகளின் ஈடுஇணையற்ற அப்பியாச முறையே "சும்மா இரு’ என்பது. அதி நுட்பமான கர்ம சூட்சுமம் இதில் அடங்கி இருக்கின்றது. எதேச்சையாய்க் கிடப்பதை வைத்து உண்டும், உடுத்தும், உறங்கியும் காலங்கழிப்பது சும்மா இருந்து சுகம் பெறுவதாகாது. சும்மா இரு என்பதற்கு கர்மத்தில் அகர்மம் (கர்மம் செய்தும் செய்யாமலிருப்பது) என்று பகவத்கீதை விளக்கம் தருகிறது.
58

கர்மத் தளைகளை அறுத்து அதே நேரத்தில் அதி தீவிரமாகக் கர்மம் செய்து கொண்டிருக்கும் அதி சூக்குமமான கர்ம நுட்பமே கம்மா இரு என்பது. இந்தக் கர்ம சூட்சும தத்துவத்தை அறிந்து அதன் வழி கர்மம் செய்து கொண்டிருப்பவனே, சும்மா இருந்து சுகம் பெறுபவன். நான் கர்த்தா என்ற அகங்காரத் தடிப்பினால் மனிதனுக்குச் சகல துன்பங்களும் விளைகின்றன. நான் செய்கின்றேன் - செய்விப்பிக்கின்றேன் என்ற கர்வம் இருக்கின்றவன், அழுக்காறு - அவா - வெகுளி முதலிய நீர்மைகளிற் சிக்கித், தனக்குத் தான் அழிவைத் தேடிக் கொள்கின்றான்.
நானே கர்த்தா என்ற கர்த்திருத்துவ போதத்தைத் துறந்து, இறைவனுக்குத் தன்னை முற்றாக அர்ய்பணம் செய்து, அவன் இச்சைக்கும் உணர்வுக்கும் இசைந்து நின்று, அது வழிவரும் அருட்சக்தி நம்மை ஒரு கருவியாகக் கருதிய் பயன் கருதாமல் நமக்கேற்றகருமம் செய்வித்தலே கம்மா இரு என்பதன் பொருளாகும். இறைவனின் இச்சைக்கு தன்னை ஆளாக்கி அவன்பால் மனதை மாசற நிறுத்தியவர்களின் வாக்கும் - பலமும் - பிராணனும் மற்ற அங்கங்களும் தத்தம் தொழிலை நன்கு செய்யத் திறமை உடையவவைகளாய் இருக்கும். இத்தகை யவனே கர்மம் செய்தும் கர்மவினை பற்றாமல் சும்மா இருந்து சுகம் பெற்று வாழ்வாங்கு வாழ்பவன்.
மனம் எதனைச் சார்ந்திருக்குமோ அதன் சுபாவம் வாய்க்கப் பெறுகின்றது. வாழ்க்கையில் ஒளியும் - ஆற்றலும் தன்னறிவும் நிறைந்து, ஞானமும் முக்தியும் கைகூடி ஜனன மரணங்களை ஒழிப்பதற்கு இதுவே உற்ற உபாயம். காலம் மாறுகிறதென்றால் மக்களின் எண்ணங்களும், விருப்பு வெறுப்புகளும், அதற்கேற்றவாறு தேவைகளும், செய்கை களும் மாறுகின்றதென்பதே பொருள்.
59

Page 37
ரிஷிகள் வாழ்ந்த காலத்திற்கும், இன்றைய மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் வெகுதூர வித்தியாசம். இறைதத்துவம் - பிரகிருதி தத்துவம் - ஜீவதத்துவம் யாவும் அன்றும் இன்றும் ஒன்றே. எனினும் காலத்திற்கேற்றவாறு கர்ம நியதியை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இன்றைய தேச - சமய - சமுதாயத்தின் நிலையை ஊடுருவிப் பார்த்தால், அதில் ஒளியும் - உயிரும் - ஒழுக்கமும் - ஆற்றலும் - திறமையும் மங்கி மறைந்து வருவதைப் பார்க்கலாம்.
ஒழுக்க நெறியும், பலமும் வீரமும் குன்றி, நோயும் வறுமையும் குடிகொள்ளுமிடத்தில் சமயம் இருப்பதுமில்லை; விளங்குவதுமில்லை. ஆலயங்கள் - திருவிழாக்கள் - திருக்கூட்டங்களின் எண்ணிக்கை இவற்றைக் கொண்டு, சமய வளர்ச்சியை எடை போட்டுய் பார்ப்பது தவறு. தன்னலமற்ற தார்மீக சிந்தனையும், மக்களின் நல்லொழுக்கமும் அன்புணர்ச்சியும், விடுதலைக்குரிய வேட்கையுமே சமயத்தின் அளவுகோல்.
புகழைக் கருதித் தம்மைப் போற்றுதற்பொருட்டு தர்மம் செய்கின்றவர்கள், தற்புகழ்ச்சியுடையவர்கள், தன்னை மதிக்கவில்லையென்று பிறர்மேல் கோபம் கொள்கின்றவர்கள், கடினவார்த்தைகளைய் பேசுகின்ற வர்கள், நன்மை தீமை களைச் சொல்லியும் கேளாமல் தன்னிஷ்டம் போல் நடப்பவர்கள், மூட நம்பிக்கை யுடையவர்கள், இத்தகைய அசுர குணமுடையவர்கள் அசுரயோனியில் மீண்டும் பிறக்கின்றனர்.
(கீதை அ. 16 சுலோ 21)
60

சமய ஆத்மயோக தத்துவங்கள் வெறும் விமரிசனத்துக் குரிய இலக்கியப் படைப்புகளல்ல. அவை என்றும் மாறாத சீரிய வாழ்க்கைத் தத்துவங்களின் சாரம்; வாழ்க்கையின் இதய ஸ்தானத்தைத் திறந்து காட்டும் திறவுகோல். பெளதீக தத்துவ வாதமெல்லாம் எத்தகைய நற்பயனைத் தந்தாலும், ஆத்ம தத்துவத்தின் அடிப்படையில் ஊறாத எத்தகைய முயற்சியும் நடைமுறையில் பூரணத்துவம் அடைவதில்லை. ஆத்ம போதமில்லாத சீர்திருத்த முயற்சிகளெல்லாம் ஜீவநாடியை இழந்த இரத்தக் குழாய்கள் போல் உயிரற்றதும் பிரயோசனமற்றவைகளு மாகும்.
புலனடக்கமின்றி விஷய வாசனைகளால் ஏவப்பட்டு, மண் - பொன் ஆசைகளில் அழுந்தி, துன்பமும் துக்கமும் செறிந்து தோன்றும் உலகத்தவர்களுக்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் எல்லையற்ற ஆனந்தத்தையும், பரம சாந்தியையும் அனுபவிக்கும் பொருட்டு தெய்வம் அருளிய வார்த்தைகள் பின்வருமாறு:
கர்வத்தை விடு; நானென்ற செருக்கை ஒழி எத் தொழிலைச் செய்தாலும் என்னையே சரணமாகக் கொண்டிரு; உன் மனதை எனதாக்குக; என்னிடம் பக்திபூண்டு என்னையே வணங்கிநில்; எனதருளால் எல்லாத் தடைகளையுந் தாண்டிச் செல்வாய்; glu IriLILITG35. (கீதாசாரம்)
வாழ்க்கையில் சுவையற்று - ஈரமற்று உலர்ந்து காய்ந்து போகும் மானிடர்களுக்கு இறைவன் அருளும் உறுதிமொழியும் இதுவேயாகும். நானே கர்த்தா என்ற போதத்தைவிட்டு, எனதென்பவைகளையெல்லாம் அவன் உடமையாக்கியபின், தனக்கேற்ற கருமங்களைத் தன்னலமற்றுச் செய்து கொண்டிருப்பவர்களே சும்மா இருந்து சுகம் பெறுகின்றவர்களாவர். கருமத்தின் இயல்பை நன்கறிந்து நல்வினையாற்றுபவர்களே சான்றோர்கள்.
61

Page 38
மனச்சபலதையால் கீழ்மையிலிருந்த குரங்குகள், தங்களுடைய மனக்குரங்கை இராமபிரானுடைதாக மாற்றி இராமனையே சரணமாகக் கொண்டபின், செய்தற்கரிய கருமங்களைச் செய்து முடித்த கர்ம வீரர்களாகவும், சிறந்த பக்தி ஞானமுடையவர்களாகவும் மாறிய கதையை இராமாயணம் நமக்குப் போதிக்கவில்லையா? கேவல நிலையிலிருந்த வானரங்கள்கூட கர்மம் - பக்தி - ஞான விஷயங்களில் மேன்மை யடையலாமென்றால், மனிதனுக்கு இன்னுமது எளிய காரியமன்றோ!
கர்மமும் பக்தியும் ஞானமும் கைகூடி சிவயோக நிலைகண்டு தெளிந்தவர்களுக்கு இவ்வுலகமே சுவர்க்கம்; அவர்கள் இச்சரீரத்திலிருந்தே சுத்த சுதந்திர நிலையை அடைகின்றனர்.
மனம் போகும்போக்கில் விட்டிருந்தால் மனம் உனக்குத் துதிபாடும், அது பொய்த்துதி; துன்பம் விளைவிக்கக் கூடியது. மனம் போகும் போக்கிற்கு இடைஞ்சலாக நின்றால் அது விஷம் சுரக்கும். தியானம் என்ற விஷக் கொல்லி மூலிகையை வைத்திருந்தால் சுரக்கும் விஷமும் அமிர்தமாய்
OTOILs.
அழக்குகளைக் கொத்தித் தின்னும் காகம் போல் இருந்தமனம், ஞானப்பிரகாசத்திற்குப் பின், பழங்கள் தின்னும் கிளிகள் போன்று ஞானப் பழத்தைக் கொத்திக் கொத்தித் தின்னும்.
- வஜனாம்ருதம்
62

ఇg அபூர்வ சிந்தனை 3?
நாகரீகம் - முன்னேற்றம் - விஞ்ஞானம் இவைகளைப் பற்றிக் கூடுதலாகப் பேசிப் பெருமைப்படுகின்றோம். எத்தகைய முன்னேற்றங்கள் இருந்த பொழுதிலும், அவை ஆரோக்கியமான முன்னேற்றங்கள் என்று சொல்வதற்கில்லை. காரியங்களை ஊன்றி நினைத்தால் மாரடைப்பு வருமளவிற்கு மனிதனும் மனித சமுதாயமும், பலயினமடைந்து வருகின்றது.
esp
இதை மாற்றி அமைப்பதற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தார்மீக சக்தியின் தாக்குதல் தேவை. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தார்மீக சக்தி இயக்கத்தால் மட்டுமே இதை மாற்றி அமைக்கலாம். உணவினால் மாத்திரம் உயிர் வாழ்வது வாழ்வன்று. நன்றாக வாழ்வதற்கும் - இறப்பதற்கும் ஒரு சிறந்த இலட்சியமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். அது இல்லாமல் இருந்தால், மனிதன் திக்குத்திசை தெரியாமல் தடுமாறித் திரிவான்; வாழ்க்கையின் தாளம் பிழைக்கும்.
கர்மவினை சாராமல் வாழ்வதென்பது வாழ்க்கையின் ஒரு உயர்ந்த நோக்கம். பல்லாண்டுகளாகக் கேட்குக் கேட்டுப் பழகி வந்த ஒரு தொடர் இது. இனிப் பிறவாமல் இருப்பதற்கும் அதுதான் ஒரேயொரு வழி. கர்மங்கள் எத்தகையவையா யிருந்தாலும் சரி, பலனை இறைவனுக்காக அர்ப்பணம் பண்ணிவிடு. இதுதான் வினைப்பயன் சாராமல் இருப்பதற்குக் கூறும் சித்தாந்தம்.
அபூர்வமாகச் சிலர் மட்டும் இதைச் சாதித்திருக்கின்றனர். அவை போதுமானவையல்ல. அபூர்வமான இந்த உயர்ந்த நோக்கத்தை, சமுதாயத்தின் சம சிந்தனைக்கும், செயலுக்கும்
63

Page 39
உட்படுத்தி எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த இலட்சியங்கள் மனித வர்க்கத்தில் அடிவேரூன்றி வளர (Մ»tջuւյլb.
கடவுளைப்பற்றித் தெளிவான உணர்வில்லாத மனத்தால் வினைப்பயனைச் சமர்ப்பணம் பண்ணுவதென்பது அசாத்திய மான காரியம். நுணுக்கமும் எளிதானதுமான சாதனா முறை இருக்கின்றது.
அந்தரங்க சுத்தியுடன் கர்மத்தையும், கர்ம பலனையும் சமுதாயத்திற்காக அர்ப்பணம் செய்க! சமுதாயம் இறைவனு டைய படைப்பு என்பதால், சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் சற்கருமங்கள் எல்லாம், இறைவனைச் சார்ந்தே இருக்கும். அங்ங்ணம் தேசத்தின் ஆத்மீக - பெளதீக சேவைகள் மூலம், பலேச்சை - செயல் - பயனைத் தியாகம் செய்தால், வினைப்பயன் சாராத இதம் கிடைக்கும்.
புலன்கள் எப்பொழுதும் அது வேண்டாம் - இது வேண்டாம் என்ற போராட்டத்தில் மும்முரமாக இருக்கின்றன. ராக துவேஷங்களுடைய இப்போராட்டம் மனிதனைக் கடுமையாகப் பந்தித்திருக்கிறது. சற்விஜாரணைகளினால் இப்பந்தத்தை அறுத்தெறிக.
மதத்தின்நல்லுணர்வுகள் உங்கள் இரத்தத்தில் கலக்கும் பொழுது நீங்கள் நல்ல மனிதராகவே வடிவெடுப்பீர்கள்.
- வஜனாம்ருதம்
64

f نوحے
வஜனாமருதம ty
மூன்றாம் பாகம்
* துர்க்குணங்களாகிய களைகள் முளைத்திருக்கும் மனமாகிய வயலில், நற்குணங்களால் உழுது பண்படுத்தி, தியானம் என்ற நீர் இறைத்து விட்ால், ஞானம் என்ற விதையை விதைப்பதற்கு தயாராக இருக்கும்.
* மனக் குரங்கை உன்னால் ஆட்டத் தெரியாவிட்டால், மனக்குரங்கு உன்னைக் குரங்காகவே ஆட்டி வைக்கும்.
* உனக்கு ஒன்பது வாசல்; உன் மனத்திற்கோ ஆயிரம் வாசல்.
* மனமாகிய யானைக்கு மதம் பிடித்தால், மானிடர் களையும் மானிலத்தையும் அழிக்கும்.
* எதற்கும் அடங்காத மனம், பிரார்த்தனை என்ற அங்குசத்திற்கு அடங்கும்.
★ உன்னுடைய மனதையே நீ நம்பாது இருக்கையில், அடுத்தவனுடைய மனதை நீ எங்ங்ணம் நம்பலாம்?
* இயற்கையைத் திசை திருப்ப முயற்சிக்கும் விஞ்ஞான மனிதனுக்கு, மனதை நல்ல திசைக்குத் திருப்ப இயல வில்லையே!
* ஆகாயத் தாமரை ஆகாயத்தில் பூப்பதில்லை; அது பூப்பதும் மலர்வதும் பூமியில். ஞானியின் ஞானம் சுவர்க்கத்தில் பூக்காமல் பூமியில் பூத்து, சுவர்க்கத்திலும் மணம் கமழ வைக்கின்றது.
65

Page 40
* மலரைக் கொண்டு மரத்தைச் சீவமுடியாது; அதற்குச் சீவுளி தேவை. சுவையான வார்த்தைகளால் மனத்தைச் சீர் செய்ய முடியாது. அப்பியாசம் என்ற சீவுளியால் சீவிச்சீவி மிருதுவாக்க வேண்டும்.
* உன் கண்பார்வையில் இல்லாத மனம், நிமிஷத்துக்கு நிமிஷம் ஆயிரம் ஆயிரம் நிறங்களாக மாறும்; ஆயிரமாயிரம் உணர்வு கொள்ளும்; ஆயிரமாயிரம் ருசி பார்க்கும்; மனக் குரங்கு உன்மேல் என்னென்ன விதமான சேஷடைகள் விடுகின்றது? அக்குரங்கை விவேகம் என்ற பார்வைக்குக் கொண்டு வருவதாகில், நரிப் பார்வைக்கு அகப்பட்ட கோழிக் குஞ்சு போன்று அடங்கும்; ஒடுங்கும்; நகராது.
* நாகபாம்பை அணைக்கப் பார்த்தாலும் கொத்தும்; துரத்தினாலும் கொத்தும். இதே சுபாவந்தான் மனதுக்கும். ஆப்பு வடிவத் தடியினால் பாம்பின் தலையை அழுத்தினால் விஷம் கக்கும். ஜெபம், தியானம் என்ற கவர்த்தடியினால், மனதின் புல்லிய குணங்களாகிய விஷப்பை உடையும்; மனம் சுத்தமாகும்.
* மனத்தைப் பற்றி முற்றாக அறியுமுன், உன் ஆயுள் காலம் முடிவடைந்து விடும்.
* இறைவனை ஆராய்ந்தால், ஆயுள் முடிவதற்குள் இறைவனை அறிவது சுலபம்.
* மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதைத் திடமாய் அறிந்த பின்பும், அதைச் செவ்வனே வழிநடத்த முயலாமல் இருப்பது ஏனோ?
* குளத்தின் சேறு சகதிகள் குளத்திற்கு அடியில்; மனத்தின் சேறு சகதிகள் மேல் மனதில்.
aboo-o-o-
66


Page 41


Page 42
靶
翡
ܗ
ஞான மண்டலம்
அலையாத இன்பம்
வஜனாமிர்தம்
ஆலயம்
மனிமொழிகள்
வேத நூல்
ஆத்ம விஜாரம்
கீதாசாரம்
மெய்யுணர்வு
ஞானச்சுடர்
குரு முகம்
பிரம்ம ஞானிறிமத்
அமிர்தவர்ஷம்
அமிர்தத் துளிகள்
My Guru
NectarOLIS Senten