கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூவானம்

Page 1


Page 2


Page 3

தூவானம்
eĮGULJETTFIT
s
窓
os
ಜ್ಷಿಣ
v.
பதிப்பகம்

Page 4
Title
Subject
Author
CopyRight
EiðSt EditiO
Illustrations
Pages
*THOOVAANAM*
CollectiOn Of Art &o Literature CollOlufinns
A.YeaSurasa.
Author
June 200l.
A.M. RaShmy
文十88
Publication No-2
Published by
Printed at
PriCe
MOOniravathu Manithan Publication, 37/l 4, Vaux Hall Lane Colombo - O2,
Sri Lanka.
TP. Ol-502759 E-mail- 3main GSltnet.lk
U.K. Printers, Colombo-l3
RS. l2OOO


Page 5

பதிப்புரை
மூன்றாவது மனிதன் பதிப்பக வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த திசைப் பத்திரிகையில் களம் பெற்ற அ.யேசுராசாவின் “பத்தி” எழுத்துக்களை தொகுத்து வெளியிடுவதில் நாம் மனமகிழ்ச்சி கொள்கிறோம். எமது பதிப்பக செயற்பாட்டில் ஈழத்து கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு தளங்களின் பல்வேறுபட்ட பதிவுகளை - நூலுருவாக்குவதில் கொண்ட அக்கறையை - இத் துாவானம்” தொகுதி மெய்ப்பிக்கிறது.
தமிழ் வெகுசனப் பத்திரிகை, சிற்றிதழ் சூழலில் “பத்தி எழுத்துக்கள் என குறித்துரைக்கப்பட்டு எழுதப்படுவதெல்லாம் வெறும் தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கும் குறிப்புகளாகவே பெருமளவில் உள்ளது. இந்தக் குறைபாடு
ஈழத்து தமிழ்ச் சூழலிலும் அதிகம் உணரப்பட்டே வந்திருக்கிறது. ஆனாலும் இக் குறைபாட்டிலிருந்து மீள்வதற்கான எத்தனங்கள் மிகக் குறைந்தளவிலேயே நமது சூழலில் எடுக்கப்பட்டிருக்கிறது.
நமது சமகால தமிழ் பத்திரிகையியலில் உள்ள குறைபாடுகள் பெருமளவு நமது கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு அம்சங்களை மிகவும் மோசமாக பாதித்திருக்கின்றன. இதனை நாம் மிகுந்த அக்கறையுடன் ஏற்றுக் கொண்டு நமது “பத்திரிகையியல்’, ‘எழுத்துக்கள்” தொடர்பான மீள் செயற்பாட்டுத் தளத்திற்கு செல்ல வேண்டிய தேவை இன்று நம் முன் உள்ளது
Vஅ.யேசுராசா

Page 6
அ.யேசுராசா - சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாளி, தேடல் மிக்க வாசிப்பாளர், பத்திரிகை ஆசிரியர். படைப்பு, வாசிப்பு செயற்பாடுகளின் ஊடே ஒரு விமர்சன மனோநிலைக் கண்ணோட்டத்தில் இயங்குபவர். நமது ஈழத்து சூழலின் 1989 - 1990 காலப்பகுதியின் பதிவுகளை நம்முன் வைத்துள்ளார். அவரின் இந்த முயற்சி மிகுந்த அக்கறைக்குரியதாக உள்ளது.
இப் “பத்தி” எழுத்துக்கள் திசையில் வெளிவந்து ஒரு தசாப்த காலத்திற்குப் பின், இன்று நூலுருவாவதற்கு வேண்டிய தேவையை ஏற்படுத்திய ஈழத்து தமிழ்ச் சூழல் தொடர்பான எமது அக்கறையை ஈழத்து வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறோம்.
இந்நூல் வெளிவருவதற்கு அனுமதியளித்த நண்பர் அ.யேசுராசாவிற்கும், இந்நூல் வெளிவருவதில் அதிக அக்கறை கொண்டு செயலாற்றியவரும், ஈழத்து பதிப்புத் துறையிலும் சிறு சஞ்சிகை வளர்ச்சியிலும் அதிக பங்களிப்பினை வழங்கி வருபவருமான பத்மநாப ஐயருக்கும் எமது நன்றிகள்.
எம்.பெளசர் பதிப்பாளர்.
ğJT6)urT60TiñôVl

என்னுரை
பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ‘பத்தி எழுத்துக்கள் அவ்வப்போது வெளிவருகின்றன, தேவையைப்பொறுத்து கலை, இலக்கியம், அரசியல், வேறு பொது விடயங்கள் பற்றியனவாக அவை அமைகின்றன.
கலை, இலக்கியம் பற்றிய பத்தி எழுத்து என்று யோசிக்கையில் முதலில் என் நினைவுக்கு வருவது, 1965ஆம் ஆண்டளவில் 'தினகரன்' வாரமஞ்சரியில் கே.எஸ்.சிவகுமாரன் எழுதிவந்த ‘மனத்திரையேயாகும். எனது வளரிளம்பருவ காலத்தில் ஆர்வத்தைத் தூண்டிய தகவல்கள் பலவற்றைக் கொண்டிருந்ததோடு, எனது இரசனையின் திசைவழியை மாற்றுவதில் குறிப்பிட்ட பங்கை ஆற்றியதாயும் அது அமைந்தது, ‘சருகுகள்’ என்ற பத்தியைப் பின்னர் அவர் எழுதியதாகவும் நினைவு.
தூவானமீV11

Page 7
‘கசடதபற’ இதழில் நா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பத்தி (பெயர் நினைவுக்கு வரவில்லை) ஜெயகாந்தனின் நினைத்துப்பார்க்கிறேன், 'கணையாழியில் சுஜாதாவின் கடைசிப்பக்கம்" 'கண்ணதாசன்’ இதழில் ‘செப்புமொழி பதினெட்டு’ ஆகியவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன். 'மல்லிகை"யில் டொமினிக் ஜீவா 'ஜிவமொழி பத்து' என எழுதிவந்தார். ‘சுதந்திரன்', 'விவேகி', ‘ஈழநாடு', 'ஈழமுரசு", ‘ஈழநாதம்' ஆகியவற்றிலும் பத்திகள் சில வந்தன. அபியுக்தன், எஸ்தி, செம்பியன் செல்வன், டானியல் அன்ரனி போன்றோரும் 'பத்திகளை எழுதியுள்ளனர். வேறு சிலரும் எழுதியிருக்கக்கூடும். எல்லா ஆக்கங்களிலும் காணப்படும் தனியாள் வேறுபாடுகளை இந்தப் 'பத்திகளிலும் காணலாம்.
தகவல்களைத் தருதலும் சுவாரசியத்தை ஊட்டுதலும் மட்டும்தான் 'பத்தி எழுத்தின் நோக்கங்கள் என்றில்லை. பத்தி எழுத்தாளனொருவன் தனது காலத்தின் கலை இலக்கிய நிகழ்வுகள், ஏற்கெனவே தான் அறிந்துள்ள - பலருக்குத் தெரியவராத - தகவல்கள் என்பவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்யும்போது, அந்தப் பத்தி ஓர் ஆவணமாகக் கொள்ளத்தக்கதாகிறது. நுட்பமான இரசனையும் கூரிய நோக்குங்கொண்ட ஒருவர் கலை இலக்கியப் படைப்புகள்பற்றிய தனது மனப்பதிவுகளை எழுதும்போது, “தரம் - தரமின்மை' என்ற பக்கங்களில் ஒளிபாய்ச்சப்படுகிறது: வாசகரைச் சரியான திசையில்
ஆற்றுப்படுத்தலும் நிகழ்கிறது. ‘பத்தி
VIIIஅ.யேசுராசா

எழுத்துக்களை ஆழமான விமர்சனமாகக் கருதி யாரும்
மயங்கத் தேவையில்லை; ஆயினும், விமர்சன நோக்கு நல்லதொரு ‘பத்தியில் பரவியிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
1989 - 90 காலப்பகுதியில் திசை” வாரவெளியீட்டில் துணை ஆசிரியராக நான் கடமையாற்றிய வேளை, அதன் ஆசிரியர் மு. பொன்னம்பலம், கலை - இலக்கியத்துறை சார்ந்த 'பத்தியொன்றைத் தொடர்ந்து எழுதும்படி கூறி ஊக்கமளித்தார்; இருவரும் சேர்ந்து "தூவானம்' என்ற பெயரை அதற்குச் சூட்டினோம்; நீலாம்பரன்’ என்னும் புனைபெயரில் அதனை எழுதிவந்தேன். திரைப்படம், ஒவியம், கவிதை, சிற்றிதழ், கலாசாரத்துறைசார் நடவடிக்கைகள், எதிர்வினைகள், எனப் பலவற்றைத் தொடுவதாகவே அந்தப் 'பத்தி அமைந்தது; எனினும், எனது முதற்காதலான திரைப்படம் அவற்றுள் முக்கிய இடத்தினைப் பிடித்திருக்கிறது!
பலராலும் விரும்பி வாசிக்கப்படும் பகுதியாக அப்பத்தி இருந்ததைக் கடிதங்கள் மூலமும், நேரில் வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளினாலும் அறியமுடிந்தது. போதிய வாசக வரவேற்பு இருந்தபோதிலும், ஆசிரியரால் விரிந்த மனப்பான்மையுடன்கூடிய ஒத்துழைப்புக் காட்டப்பட்டபோதிலும், எல்லாமாக வெளிவந்த 69 இதழ்களிலும் இப்பத்தி வெளிவரவில்லை. பக்கத் தட்டுப்பாடு காரணமாக வேறு பலரது ஆக்கங்களை வெளியிடுவதற்கு நான் முன்னுரிமை கொடுக்க நேர்ந்தமையாலும்,
தூவானம் X

Page 8
இடைக்கிடை பத்திரிகை வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கு அவகாசமின்றிப் போனமையாலும், குறைவான இதழ்களிலேயே இப்பத்தியினை
வெளியிட முடிந்தது.
ஆர்வத்துடன் இந்தப் பத்தி எழுத்தினை நுால்வடிவிற் கொண்டுவரும் மூன்றாவது மனிதன் பதிப்பக' உரிமையாளர் நண்பர் எம். பெளசருக்கும், திசையில் முன்னர் வெளியிட்டு உதவிய மு.பொன்னம்பலத்திற்கும் எனது
நன்றிகள்.
கவிஞர் சு.வில்வரத்தினமும் நானும் நான்குமாதகால ஐரோப்பிய நாடுகளிலான கலாசாரச் சுற்றுலாவொன்றில் இலண்டனுக்கு வந்து தங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இந்த ‘என்னுரையை எழுத நேர்ந்தமையானது, எனது வாழ்வில் முற்றிலும் மாறுபட்டதொரு நிகழ்வாக அமைகிறது!
அ. யேசுராசா
27B High Street PaistOW LOndon E13 OAD
24 June 2001 United Kingdom
X அ.யேசுராசா

0 ஓவிய உணர்வு
இருபது வருடங்களுக்கு முன்னாாக என்று நினைக்கின்றேன், குமுதம் சஞ்சிகையில் ஒரு துணுக்குப் படித்த ஞாபகம். மூங்கிற் சாரத்தில் இருந்து கொண்டு, உயரமான சுவரில் பெரிய எழுத்துக்களை (விளம்பரம்) ஒருவர் எழுதுவதையும், அதை அண்ணார்ந்து பார்த்தபடி கீழே இருவர் நிற்பதையும் சித்திரிக்கும் ஒரு படம். இருவரில் ஒருவர் சொல்கிறார் 'உண்மையில் இவர் தான் பெரிய எழுத்தாளர் இது கேலிக்காக எழுதப்பட்ட துணுக்கு என்பது, படிப்பவர் யாருக்கும் விளங்கும்.
ஆனால், சமீபத்தில் யாழ்ப்பாணத் தினசரியொன்றில் வெளியாகிய ஒரு உண்மைச் செய்தி, கவனத்தையிர்த்தது. அதில் காணப்பட்டது இது தான். கோவிலில் வர்ண வேலைகள் செய்தவருக்கு ஒவியத் திலகம் பட்டமளித்துக் கெளரவிப்பு ‘வர்ணம்பூசும் வேலைகள் செய்பவர்தான் 'ஓவியர்' என்று அக்கோயில் நிர்வாகிகள் கருதுகின்றனர் போலும்!
ஓவியம் பற்றிய பரவலான விழிப்பும் திருப்திகரமான ஆதரவும் எம்மிடையே இல்லையாயினும் நிலைமை இவ்வாறெல்லாம் இருக்கக் கூடுமென எதிர்பார்க்கவே இல்லை!
சிங்கள மக்களிடையில் ஓவியக்கலை செழித்து வளர்கிறது. களனிப் பல்கலைக்கழகத்தின் அழகியற் பீடத்திற் பயிற்சி பெற்று, குறிப்பிட்ட தொகை ஓவியர்கள் ஆண்டுதோறும் வெளியேறுகிறார்கள், வெளியிலும் பிரபல ஓவியர்கள் பலர் உள்ளனர். கண் காட்சிகள் அடிக்கடி கொழும்பு
தூவானம்

Page 9
கலாபவனத்திலும், லயனல் வென்ட் மண்டபத்திலும் , பிரபலமான 'ஹோட்டேல்'களிலும் நடைபெறுகின்றன. ரூபாவாஹினி அவற்றைப்பற்றி செய்திகளை அடிக்கடி தருகிறது. ஆங்கிலப் புத்திரிகைகளும் படங்களுடன் கூடிய கட்டுரைகளை வெளியிடுகின்றன, கலாசாரப் பரிமாற்றுத் திட்டங்களின் கீழ் ஓவியர்கள் பலர் வெளிநாடுகளிற்கும் சென்று வருகின்றனர்; அந்த நாடுகளில் ஆங்காங்கே தனிநபர் கண்காட்சிகளையும், நடாத்துகின்றனர். செல்வமும், புகழும் பெற்றவர்களாகச் சிங்கள ஓவியர்கள் திகழ்கின்றனர்.
இவ்வாறான வசதிகள், ஊக்குவிப்புக்கள் கெளரவங்கள் இல்லாத வரண்ட நிலையிலும் எம்மைப் பெருமைப்படுத்தும் சிறுதொகை ஓவியர் குழாம் எம்மிடையில் இருந்தது; இருக்கின்றது. மறைந்த எஸ்.ஆர். கனகசபை போன்றவர்கள் இந்த மண்ணில் ஒவியத்தை வளர்க்க அயராது உழைத்ததை மறக்க முடியாது. ஆற்றல் வாய்ந்த ச.பெனடிக்ற், அ. தேவநாயகம், சானா போன்றவர்கள் மறைந்துவிட்டார்கள், ஆனால் இப்பொழுதும் க.கனகசபாபதி, எம்.எஸ்.கந்தையா, அ. இராசையா, அ.மாற்கு, ஆ.இராசையா, கனகசபை (கொழும் புத் துறை), சிரித்திரன் சுந்தர், அ.அமிர்தநாதன், ரமணி, கோ. கைலாசநாதன் ஆகியோர் இருக்கின்றனர், இளந் தலைமுறையைச் சேர்ந்த புதிய ஓவியர் குழாமும் (சிறு தொகையினதாயினும்) உருவாகிவருகிறது.
ஆயினும், இரண்டு மூன்று வருடங்களுக்குள் நடைபெற்ற சில கண்காட்சிகளின் மூலம் சிலரே ஓரளவு வெளித் தெரியவந்துள்ளனர். ஏனையோரை அக்கறை கொண்ட ஒரு சிலரே அறிந்து வைத்துள்ளனர். V
அ.மாற்கு நன்கு பிரபலம் அடைந்துள்ள ஒருவர். அவரது கண்காட்சியொன்று 1986இல் நடைபெற்றது. அவரைக் கெளரவிப்பதற்காய்த் தமிழியல் நிறுவனம், தேடலும் படைப்புலகமும் என்ற பெயரில் சிறப்பு மலரொன்றை (170 பக்கங்களில்) வெளியிட்டுள்ளது. மாற்குவின் படைப்புக்களுடன், தமிழக ஓவியர் - சிற்பிகளினதும், பிக்காசோ போன்ற உலகப்புகழ்பெற்ற கலைஞர்களினதும் படைப்புகளைக் கொண்ட 66 படங்களும், 34 கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவியம், சிற்பம் பற்றிய அடிப்படைகளையும் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும் திரட்டித்தரும் நூலாக, அது இருக்கிறது. ஒவியம் பற்றிய அக்கறையைத் துாண்டுவதில் எமது சூழலில் - இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னையிலிருந்து வெளிவரும் கணையாழி சஞ்சிகை, "யாழ்ப்பாண ஓவியக் கலைஞர் மாற்கு அவர்களைக் கெளரவிக்கும் முறையில் உருவான இந்தப் பெரிய அளவு நூல், தற்காலத் தமிழ்ச் சமூகத்தின் ஓவியர், அவர்கள் சாதனை, கலை விளக்கம் முதலிய அம்சங்கள் கொண்ட சிறப்பு வெளியீடாக மாறியிருக்கிறது - எளிய அச்சு சாதனத்தின் முழுக் கலை சாத்தியத்தையும் வெளிக்காட்டுவது தற்கால நூல் தயாரிப்புக்கு எடுத்துக்காட்டு" என்று பாராட்டி எழுதியிருக்கிறது. ஒவியம் பற்றிய சிறுநூல்கள் சிலவற்றை கலாகேசரி ஆ. தம்பித்துரை முன்பு வெளியிட்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது.
2 அயேசுராசா

ஆ. இராசையா, மாற்குவின் மாணவிகளான அருந்ததி, நிர்மலா, சுகுனா ஆகியோரின் கண்காட்சிகளும் ஈழமாணவர் பொதுமன்றம் பருத்தித்துறையிலும் தெல்லிப்பழையிலும் ஒழுங்கு செய்த கண்காட்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. ஓவியர் ஆ. இராசையா இயற்பண்புவாத ரீதியில் நிலக் காட்சிகளையும் வரைவதில் தேர்ச்சிபெற்ற ஒருவர், முத்தரைப் பணியகத்திற்காகச் சில தபால் முத்திரைகளையும் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.
சென்ற ஆண்டின் இறுதிப்பகுதிகளில் செல்வி அனுவரியாவின் தனிநபர் கண்காட்சிநடைபெற்றது. யாழ்பல்கலைக்கழக மகளிர் அமைப்பு ஒழுங்கு செய்த பெண் ஒவியர்களின் கண்காட்சியில் - குறிப்பாக அருந்ததி, ஜக்குலின், வாசுகி, அனுஷியா, ஷை லா, சுகந்தி ஆகியோரின் ஓவியங்கள் பலரது கவனத்தையீர்த்தன. பெண்களின் பல்வேறு நோக்குக் கோணங்களை வெளிப்படுத்துவனவாய் அவை அமைந்தன.
ஓவியக் கண்காட்சிகள் சிறிய அளவிலாயினும் அடிக்கடி நடைபெற வேண்டும்; ஒவியப் பயிற்சி வகுப்புக்களையும் ஆங்காங்கே, தகுதியானவர்கள் நடத்த வேண்டும் யாழ்பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் ஓவியப் பிரிவு கட்டாயம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தான் ஒவியத்துறை வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். அத்தோடு ஒவியங்களை வசதியாகக் காட்சிப்படுத்தக் கூடிய நிறைவான கண்காட்சி மண்டபமொன்று விரைவில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமானதாயிருக்கிறது.
A.O.989
துவானம் 3

Page 10
4 அ.யேசுராசா
0 உமா வரதராஜன் 0 நூல் வெளியிட்டு அரங்கு
கல்முனையைச் சேர்ந்த இளைஞர் உமாவரதராஜன் இலங்கையில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் முக்கிய எழுத்தாளர் சிலரில் ஒருவர். அவரது உள்மன யாத்திரை என்ற சிறுகதைத் தொகுப்பு, அழகிய பதிப்பாகத் தமிழ் நாட்டில் சென்ற வருடம் வெளியாகியது. சென்னையிலிருந்து வெளிவரும் கணையாழி இதழில் (டிசம்பர் - 88) தனது 'கடைசிப் பக்கப் பகுதியில் எழுத்தாளர் சுஜாதா இந்நூலைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து ஒரு பகுதியைத் தருகின்றேன். "இலங்கை எழுத்துக்கள் என்றவுடன் வரதட்சணை, ஏ.கே.47 துப்பாக்கிகள், இனக்கலவரம், நகரத்தில் தீ, தமிழச்சி பாடும் விடுதலை கீதம். இவையே இந்தியத் தமிழ் வாசகர்களின் மனக்கண்முன் சமீப காலமாகத் தோற்றமளித்துவந்திருக்கும், ஆனால், எரிமலைக் குழம்பு மட்டுமல்ல என் விரலின் நகச்சூடும், என் கதைகள் கூறுவதும் அதைத்தான்" என்று எனக்குக் கடிதமெழுதியிருந்த உடையப்பா மாணிக்கம் (உமா) வரதராஜனின், 'உள்மன யாத்திரை' என்கிற சிறுகதைத் தொகுப்பை (அன்னம் வெளியீடு உடனே எடுத்துப்படித்து ரசித்தேன். உமா வரதராஜனை இன்றைய தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
"ஊடரங்குச் சட்டம் பற்றித் திடீரென அறிவிப்பு வந்தது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரேமாதிரிச் சொன்னார்கள். தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை வாசிக்க வந்தவன் வழமையான ஓர் அறிவிப்பாளனுமில்லை, அவன் தப்புத்தப்பாக அறிவிப்பை வாசித்தான். சந்தைக்குப்
 

போயிருக்கக் கூடிய தன் மனைவியைப் பற்றி, பாடசாலைக்குப் போன தன் குழந்தைகளைப்பற்றி இந்த வேளையில் அவனுக்கு ஞாபகம் வந்ததிருக்கலாம். நகச்சூட்டை வர்ணிப்பதிலேயே எரிமலைக் குழம்பையும் பிரதிபலிக்கிறார் வரதராஜன்."
டொக்ரர் எம்.கே.முருகானந்தன் எழுதிய தாயாகப்போகும் உங்களுக்கு, எயிட்ஸ் ஆகிய இரண்டு நூல்களின் 'வெளியீட்டு அரங்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். டொக்ரர் க.சுகுமார் தலைமை வகித்தார். நூல்களைப் பற்றிக் கருத்துரை வழங்கியவர்களில் டொக்ரர் எஸ். ஆனந்தராஜா, டொக்ரர் க.லலிதகுமார் ஆகியோரும் அடங்குவர். இவ்விருவரது பேச்சுக்களை கேட்பது இதுவே முதல்முறை; ஆச்சரியத்தை எழுப்புவதாய் அவர்களது உரைகள் அமைந்தன. நூல்கள்பற்றிய கருத்துக்களைப் பொருத்தமான முறையில் 'செட்டாக' முன்வைத்தார்கள். கொடுக்கப்பட்ட பொருளிலிருந்து விலகிச் செல்லும் தவறை அவர்கள் செய்யவில்லை. இத்தகைய நூல்களுக்கான சமூகத் தேவை, பொருத்தப்பாடு, அதன் தொடர்ச்சியில் இந்த நூல்களின் முக்கியத்துவம் என்பவற்றை அவர்கள் நன்றாக வெளிப்படுத்தினார்கள். சொல்லாட்சித் திறனும் இருவரிலும் பளிச்செனத் தெரிந்தது. வெவ்வேறு பேச்சாளர்களது பேச்சுக்களின் ஆரம்பத்திலும் முடிவிலும் பொருத்தமான குறிப்புகளையும் இணைப்புரைகளையும் வழங்கி கூட்டத்தினை நெறிப்படுத்திச் சென்ற டொக்ரர் க.சுகுமாரின் தலைமைத்துவப் பண்பும், குறிப்பிடப்பட வேண்டியது. பொதுவில் இவர்களது பேச்சுக்கள் செம்மையானதாயும் - ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாயும் - பொருத்தமான விடயத்தை மட்டும் சொல்வதாயும் அமைந்திருந்த சிறப்பு, பலரைக் கவர்ந்தது. எமது இலக்கியப் பேச்சாளர்களும் இந்தப் பண்புகளை இலக்கியக் கூட்டங்களில் பேணுவது நல்லது.
விஞ்ஞானக் கல்வியைப் பெற்றவர்கள், வைத்தியராயும், பொறியியலாளராயும் உள்ள பலர் ஈழத்தின் எழுத்துலகிலும் கலைத்துறையிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது. இவர்கள் பெற்ற விஞ்ஞானக் கல்வியும், தொழிலும் இவர்களது ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய தாக்கத்தைச் செலுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. சண்முகம் சிவலிங்கம், சி.சிவசேகரம், நந்தி, இ.முருகையன், க.பாலேந்திரா, யூரீதரன், மயிலங்கூடலூர் பி. நடராசன், அம்பி, ஆர்.பாலகிருஷ்ணன், இசிவானந்தன், சாந்தன், மாவை நித்தியானந்தன் ஆகியோர் இவ்வாறு குறிப்பிடத்தக்கவர்கள்
2.O.1989
தூவானம் 5

Page 11
அலியான்ஸ் LT76j66ný
யாழ்ப்பாணத்திலுள்ள அலியான்ஸ் பிரான்சேஸ் (Alliance Francaise) நிலையம், இந்த ஆண்டிற்கான ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை சென்ற ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்தது.
பிரெஞ்சு மொழியைக் கற்பித்தல், பிரெஞ்சுத் திரைப்படச் சேர்வுகள் கொண்டதொரு வீடியோ நுாலகத்தை உருவாக்குதல், ஒவியக் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒழுங்கு செய்தல் என்பன, இச்செயல் திட்டங்களுள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நெருக்கடிநிலைமைகள் தீவிரமடையுமுன் - நான்கைந்து ஆண்டுகளின் முன் இங்கு, முக்கியமாக பிரெஞ்சுமொழி வகுப்புகளும், பிரெஞ்சு திரைப் படக் காட்சிகளும் (16 மி.மீ.) நடைபெற்றன. நல்ல திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பினைத் திரைப்பட ஆர்வலர்கள் சிறு தொகையினர் - நன்கு பயன்படுத்தினர்.
1979 - 82 யாழ்ப்பாணத்தில், யாழ் திரைப்படவட்டம், என்றதொரு அமைப்பு இயங்கியது. றிம்மர் மண்டபத்தில் திரைப்பட நிகழ்ச்சிகளை அது ஒழுங்கு செய்து நடாத்தியது. அப்போது 'அலியான்ஸ் பிரான்சேஸ்'இன் பணிப்பாளராக இருந்த திரு. குலேந்திரன் மிகக் குறைந்த வாடகையை (ஒர் அடையாளத்திற்காக)ப் பெற்று 16 மிமீ திரைப்படம் காட்டுங் கருவியினைத் தந்து உதவினார். அவரது ஒத்துழைப்பினாலும் உற்சாகத்தினாலுமேயே சேர்ஜி ஐஸன்ஸ் ரைன் (ரஷ்யா), பிரான் சுவா ட்ரூ.வோ (பிரான்ஸ்), ஜிறி வெயிஸ் (செக்கோசிலவேக்கியா),
6 அ.யேசுராசா

செம்பெண் உஸ்மான் (செனிகல்), ஜோஸேஜியோவன்னி (பிரான்ஸ்) போன்ற விகச் சிறந்த நெறியாளர்களின் திரைப்படங்கள் உட்பட 25 திரைப்படங்களைத் திரைப்பட வட்டத்தினால் காட்ட முடிந்தது. வரண்ட பாலையிலும், ஆர்வத்துடிப் போடிருந்தவர்களின் 'கலைத்தாகத்தை, ஓரளவாவது தணிக்க முடிந்தது.
இலங்கையில் கொழும்பு, கண்டி, காலி ஆகிய இடங்களிலும் 'அலியான்ஸ் பிரான்சேஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. கொழும்பிலுள்ள நிலையம் மாதாந்தம் நான்கு பிரெஞ்சுத் திரைப்படங்களையும் (16.மி.மீ) வேறு வீடியோப் படங்களையும் காட்டுகிறது. சிங்கள நாடகங்கள் பலவற்றுக்கும் இசை நிகழ்ச்சிகளிற்கும் பண உதவியளித்து அவற்றைத் தயாரித்தும் அளிக்கிறது. சிங்களக் கலைஞர் பலர், இதனால் பயன் அடைகின்றனர்.
சென்னையில் இயங்கும் 'அலியான்ஸ் பிரான்சேஸ்' இனை, அங்கு நவீன இலக்கியக்கலை முயற்சிகளில் அக்கறை கொண்டு இயங்கும் சிறுதொகையினர், நன்கு பயன்படுத்துகின்றனர். பிரெஞ்சுத் திரைப்படங்கள் ஒழுங்காகத் திரையிடப்படுகின்றன. அவற்றுடன் தொடர்புகொள்வோர் திரைப்படங்கள், நெறியாளர் பற்றிய கட்டுரைகளைத் தமிழ்ச் சிறு சஞ்சிகைகளில் எழுதுவதனால், நல்ல சினிமா பற்றிய அக்கறை தூண்டிவிடப்படுகின்றது. நவீன நாடக முயற்சிகள், 'கூத்துப்பட்டறை' போன்றவையும் நடைபெறுகின்றன. முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய இன்னுமொன்று என்னவென்றால், முக்கியமான நூல்கள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகள், இந்நிலையத்தின் ஒத்துழைப்புக் காரணமாக வெளிவந்திருப்பதாகும். நோபல் பரிசினைப் பெற்றவரான ஆல்பர் காம்யுவின் அந்நியன் (நாவல்), அந்த் வான்த் செந்த் எக்சுபெரி எழுதிய - "இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த எக்சிஸ்டென்வரியலிசப் புத்தகங்களில் ஒன்று" என, மார்டின் ஹை டேக் கா என்ற புகழ்பெற்ற தத்துவவாதியினால் குறிப்பிடப்பட்ட - குட்டி இளவரசன் (நாவல்), எக்சிஸ்டென்வரியலிசத் தத்துவ அறிஞரும் படைப்பாளருமான ழான் போல் சார்த்ர் எழுதிய மீள முடியுமா? (நாடகம்) ஆகிய நூல்கள், இவ்வாறே வெளியிடப்பட்டன. இந் நூல்கள் மூன்றையும் "அலியான்ஸ் பிரான்சேஸ்" ஒத்துழைப்புடன், நல்ல நூல்களை நவீனத்துவம் பேணித்தமிழில் வெளியிடும் பங்களிப்பைச் செய்துவரும் க்ரியா நிறுவனம், வெளியிட்டது. இம்மூன்று நூல்களும் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு, நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக, சென்ற ஒக்டோபரில் 'சென்னை பிலிம் சொஸைட்டி வெளியிட்டுள்ள மரபை மீறிய சினிமா - பிரெஞ்சு புதிய அலை இயக்கம் என்ற திரைப்பட நூலும் இவ்வாறான ஒத்துழைப்பைப் பெற்றே வந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள நிலையமும் ஆழ்ந்து பரந்து செயற்பட்டு, எமது பிரதேசக் கலாசாரத் தேவைகளை நிறைவு செய்யவேண்டும் என்ற அவா மேலெழுகிறது.
இதேவேளை, வேறு சில அமைப்புக்களும் நினைவுக்கு வருகின்றன. சோவியத் நட்புறவுச் சங்கம், சீன நட்புறவுச் சங்கம், செக்கோசிலவேக்கிய நட்புறவுச்சங்கம்
தூவானம் 7

Page 12
ஆகியவையும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. முதல் இரு அமைப்புக்களிடம் 16.மி.மீ. திரைப் படங்காட்டும் கருவிகளும் இருக்கின்றன. அதைவிட கிழக்கு ஜேர்மன் தூதரகம் அன்பளிப்புச் செய்த 16மிமீ திரைப்படம் காட்டுங் கருவி ஒன்றும் சிலரிடம் இருப்பதாகத் தெரிகிறது. அந்தந்த நாடுகளின் திரைப்படங்கள் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சிகள் என்பனவற்றை இவையும் ஒழுங்கு செய்யலாம். அதனால் பல்வகைப் பயன்கள் ஏற்படும். ஆனால், ஆண்டுக்கொரு தடவை ‘தேசியதினக் கட்டுரையினைப் பத்திரிகையில் வெளியிடுவதன் மூலம் மட்டுமே தாமும் இருப்பதாக அவை காட்டிக்கொள்வது, துரதிர்ஷ்டமானது
14.01.89ஆம் திகதித் துாவானத்தில் 'ஈழ மாணவர் பொதுமன்றம்' எனத்
தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை மாணவர் இளைஞர் பொதுமன்றம்' எனத் திருத்திவாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்
28.1989
8 அ.யேசுராசா

7 தூரதர்ஷனில் கலைப்படங்கள்
இந்தியா பல்வேறு மொழிகள், கலாசாரங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு கலாசாரமும், தத்தமது மொழிகளிலான கலை, இலக்கியப் படைப்புக்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
இந்திய சாகித்ய அக்கடமி, நெஷனல் புக் ட்றஸ்ற் ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் இந்திய மொழி இலக்கியங்களுடன் தமிழில் பரிச்சயங்கொண்டு இரசிக்க முடிகிறது.
ஆனால், இன்றைய உலகில் மிக முக்கிய கலை வடிவமாக உள்ள திரைப்படத்தைப் பொறுத்தவரை அவ்வாறான
வாய்ப்புக்கள் இல்லை. சத்யஜித் ரே போன்றவர்களிற்கு
வெளிநாடுகளில் கிடைத்த புகழினால் மற்றவர்களும பெற்ற ஊக்கம், பூனே திரைப்படப் பயிற்சிக் கல்லூரியின் பணி, ‘தேசிய திரைப்படப் பயிற்சி காப்பகத்தின் மூலம் உலகின் சிறந்த படங்களைத் தத்தம் ஊர்களிலேயே பார்க்கும் வாய்ப்பு போன்றவற்றாலெல்லாம் திரைப்படத் துறையில் மாற்றங்கள் உருவாகிப் பரவிவருகின்றன. புதியவர்கள் பலர் வந்து விதம் விதமான ஆக்கங்களை உருவாக்கி அளிக்கிறார்கள்.
இலங்கையில் தமிழ்ப்படங்களையும், ஹிந்திப்படங்களையும் - அதுவும் வியாபாரப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு. தரமான படங்களையோ ஏனைய இந்திய மொழிப் படங்களிையோ பார்க்கும் வாய்ப்பு இல்லை. இது துரதிர்ஷ்டமான நிலைமையே.
சமீபகாலமாக வடபிரதேசத்தில் தூரதர்ஷன் தொலைக் காட்சிநிகழ்ச்சிகளை தெளிவாக பார்க்க முடிகிறது. இதனால்,
தூவானம் 9

Page 13
இந்தி மொழித்திரைப்படங்களைப் பார்க்கவும் முடிகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், நண்பகல் 1.30மணிக்கு, பிராந்திய மொழிப்படங்கள், ஆங்கிலத்திலான துணைத் தலைப்புக்களுடன் (Subtitle) ஒளிபரப்பப்படுகின்றன.
மலையாளம், வங்காளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா, அஸ்ஸாமிய மொழிப்
படங்கள் சிலவற்றை இதுவரை - இடையிடையே தவறவிட்டு பார்த்தேன். பெரும்பாலானவை நவீனத் திரைப்படக்கலை உணர்வுடன் எடுக்கப் பட்டிருக்கின்றன. தரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பொதுவில் நல்ல திரைப்படங்களை விரும்புபவர்களிற்கு வித்தியாசப்பட்ட அனுபவங்ளைத் தரக் கூடினவாயே, அவற்றில் பலவும் இருக்கின்றன. மலையாளப் படங்களான - அக்கரே (சசிதரன்), புருஷார்த்தம் (கே.ஆர்.மோகனன்), சிதம்பரம (அரவிந்தன்), காற்றட்டே கிளிக்கூண்டு (பரதன்) ஆகியவற்றைப் பார்த்தேன். 'அக்கரே மனதில் நன்கு பதியும் படம். மத்திய கிழக்கு நாடுகளில் வேலைசெய்துவிட்டு வருபவர்களின் பணமும், புதிய அந்தஸ்தும், கேரள சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு தாசீல் தாரை மையமாக வைத்து இதில் காட்டப்படுகிறது. மத்திய கிழக்கிற்குச்சென்று வேலைசெய்யத் தன்னைத் தகுதிப்படுத்தத் தாசில்தார் படும் அந்தரம் - இறுதி விளைவுகள் என்பன பரிதாபத்தை எழுப்புவன. அவா நிறைவேறாமற் போவதோடு, வேலையும் இழந்து சுமை தூக்குபவனாக மாறநேர்வது அவலச் சுவையுடன் வெளிப்படுத்தப்படுகின்றது. தாசீல்தாராக வரும் கோபியின் நடிப்பும் சிறப்பாயிருக்கிறது.
கணவன் இறந்த பின்னர், தான் ஏற்கெனவே தொடர்பு வைத்திருந்த ஆடவனுடன் செல்லும் மத்தியதர வர்க்கப் பெண், அந்த ஆடவனை வெறுப்புடன் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவளது மகனான சிறுவன், கணவனின் சகோதரனுடைய குடும்பம், அவர்களின் மீதான சிறுவனின் பற்று ஆகியவற்றை புருஷார்த்தம்’ சித் திரிக்கிறது. அழகானப் படப்பிடிப்பு படத்திற்கு வலுச்சேர்க்கிறது.
காற்றட்டே கிளிக்கூண்டு ஓர் இளம் மாணவி தனது காதலன் மேற்கொண்ட ஆத்திரத்தினால் அவனைப் பழிவாங்க முற்படுவதில் சுமுகமாக மகிழ்ச்சியுடன் இயங்கிக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலப் பேராசிரியரின் குடும்பம் "காற்றிலாடும் கிளிக்கூண்டு போலாகிவிட்டதைக் காட்டுகிறது.
'சிதம்பரம் அகில இந்திய ரீதியில் சிறந்த படமாகத் தங்கப்பதக்கம் பெற்ற படம். பத்திரிகைகள் பலவும் பாராட்டி எழுதிய படம். அறிமுகங்கொண்டு சிறிது நெருங்கிப்பழகிய தனது வேலையாளின் மனைவியுடன் முறையற்ற உறவு கொண்ட - அதனால் கணவனால் அவள் கொலை செய்யப்பட்டு, அவனும் தூங்கித் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பின்னர் குற்ற உணர்வில் தவிக்கும் - ஒருவனைப் பற்றியது. சிலர் ஆன்மீக அர்த்தத்தினையும் இதற்குக் கொடுக்கின்றனர். நிறைந்த எதிர்ப்புக்களைத் தூண்டியிருந்த இப்படம்
1) அயேசுராசா

ஏமாற்றத்தையே அளித்தது. கதாநாயகனின் குற்ற உணர்வு சரியாகக் கொண்டுவரப் படவில்லை. விவரணத் திரைப்படத்தின் (Documentary) தன்மையைக் கொண்டு ஆரம்பித்த இப்படம், பின்னரும் நல்ல சினிமாவுக்குரிய காட்சிப் படிமங்களை அதிகம் கொண்டிருக்கவில்லை. மிகக் குறைந்த காட்சிகளில் தான் நல்ல திரைச்சட்டங்களைச் (Frames) காணமுடிகிறது. இறுதிக்காட்சியில், சிதம்பரம் கோயிலின் கோபுரத்தைக் கீழிருந்த மேல் நோக்கிக்காட்டக் 'கமரா நகர்ந்த முறையில் ஒரு வித அமெச்சூர்த்தனம் தான் தெரிகிறது. மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழி உரையாடல்களைக் கொலன்டது இப்படம், (இலங்கையில் தயாபிக்கப்பட்ட 'சருங்கல சிங்கள - தமிழ் உரையாடல்களைக் கொண்ட படம்) - பாபியின் தீர்த்தயாத்திரை' என்ற பெயரில் பாராட்டு நிறைந்த நீண்ட விமர்சனமொன்றைக் கவிஞர் சுகுமாரனும் (மீட்சி இதழில்) எழுதியிருந்தார். இந்தியாவில் இப்படம் மிக உயர்வாக ஏன் பாராட்டப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை!
பத்திக் சந்த், கோரஸ், Return என்பன வங்காளப் படங்கள். முதலாவது படம் சிறுவர் படம், "சத்யஜித்ரேயின் மகன் இதனை இயக்கியுள்ளார், சிறுவர் படமானாலும் மனதில் பதிவினை ஏற்படுத்துகிறது. படப்பிடிப்பும் ஒரு காரணம். 'கோரஸ் குறியீட்டு வடிவத்தில் - ஆளுவோருக்கு எதிராக தொழிலாளர், விவசாயிகள், புத்திஜீவிகள், வேலையற்ற இளைஞர்கள் அணி திரள்வதைச் சொல்கிறது, இவர்கள் ஐக்கியப்படுவதைக் காட்டும் இப்படம் சிக்கல் நிறைந்து தெளிவற்றதாக இருக்கிறது. உணர்வுரீதியான புரிதல் நிகழ்வுகளுக்குப்படத்தின் கட்டமைப்பு இடைஞ்சலாகவிருக்கிறது. 'மக்களிற்குச் செய்தி வழங்குவது கலைஞனின் கடமை எனக் கருதும் இதன் நெறியாளரான மிருனாள் சென் விளங்குவதற்குக் கடினமான இத்தகைய படங்களை உருவாக்குவது 'முரண்நகை'யைத் தோற்றுவிக்குமொன்று.
புத்தாடெப் தாஸ் குப்தாவின் 'Return என்பன மிகவும் கவர்ந்த படம். 'யாத்ரா'நாடக நடிகனும், முன்னாளில் சீருஞ்சிறப்புடனுமிருந்து சிதைவடைந்து கொண்டிருக்கும் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவனுமான ஒருவனை, மையமாகக் கொண்டது இப்படம். காரியஸ் தனுடன் அவனது மனைவி ஓடிச்சென்றுவிடுகிறாள். வங்காள நாடகத்துகOற60)ய வளப்படுத்தும் முயற்சியில் -பிறமொழி நாடகங்களை வங்களத்தில் எழுதுவதில், அக்கறையுடன் அவன் உழைக்கிறான். அவன் மேல் அக்கறைகொண்ட குடிகார வேலையாள், அவனது ஊமைக்காதலி, மனைவியின் விதவைச் சகோதரி - அவளது மகனான சிறுவன், ஆகியோரைச் சுற்றிக்கதை நகர்கிறது. கsoல இரச60601யும், இலட்சிய வேட்கையுங்கொண்ட - ஆனால் ஏங்கும் - ஒரு மனிதன் சக மனிதர்களுடனான உறவுகள் - புரிதலின்மையால் நேரும் விலகல்கள், தனக்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்வதன் முக்கியத்துவம், வாழ்வின் நிச்சயமற்ற தன்மை எனப் பல்வேறு தளங்களில் விரிந்து, ஆழ்ந்த உணர்வுப் புரிதல்களை ஏற்படுத்துவதாக இப்படம் அமைகிறது. 'இருப்பியல் வாதத்தன்மை
தூவானம் 11

Page 14
இழையோடுவதையும் உணர முடிகிறது. தற்கால இந்தியத் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமான ஒருவராக 'புத்தாடெப் தாஸ் குப்தா சொல்லப்படுகிறார். இந்தப் படத்தை மட்டுமே பார்த்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவும் எந்தத் தயக்கமுமில்லை. அந்த அளவிற்கு இப்படத்தின் மூலம் அவர் பாதிப்பை ஏற்படுத்துகிறார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை, பிரசாத் என்ற இளம் இயக்குநரின் ரிஷ்யசிருங்கர் என்ற கன்னடப் படம் ஒளிபரப்பப்பட்டது. நாட்டுப்புறக் கதை (நம்பமுடியாத அம்சங்களைக் கொண்டிருந்தபோதும்) அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு, இசை (பி.வி.கரந்த் - ‘சோமன துடி' என்ற கலைப்படத்தின் இயக்குநர்) என்பன மனதில் பதிவை ஏற்படுத்திவிடுகின்றன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரும் வாய்ப்பினை கலை இலக்கியத்தில்
ஈடுபாடு கொண்டவர்கள் தவறாமல் பயன்படுத்துவது நல்லது
OAO2.1989
12 அ.யேசுராசா

坐心正呈05
θ βροτήύου 0 கநா.சு. 7 டொமினிக் ஜீவா (7 asj6.67f7f Lisaff
க.நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்த முன்றில் என்ற சஞ்சிகையின் நான்கு இதழ்கள், படிக்கக் கிடைத்தன. ஒக்ரோபர் - 88 இதழில் இருவேறு தலைப்புக்களில் க.நா.சு. எழுதியிருப்பதி லிருந்து இரண்டு பகுதிகள் வருமாறு:
"வறுமை வறுமை என்று சொல்வது உங்கள் வறுமையைத் தான் காட்டுகிறது. நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியாத வறுமை, படித்ததில் நல்லது எது என்று தெரிந்து கொள்ள முடியாத மன வறுமை, புத்தகங்களைத் தேடிப்பிடித்து அதில் ஆனந்தம் காண இயலாத வறுமை, சிந்தனை வறுமை, செயல் வறுமை, நுால்கள் மூலம் சிந்திக்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள இயலாத வறுமை, சிந்திக்கும் சக்தியை உங்களுக்குத் தரக்கூடிய நூல்களைத் தெரிந்துகொள்ள முடியாத வறுமை."
இந்த வறுமையிலிருந்து தமிழகம், தமிழர்களும் என்று மீளப்போகிறார்கள்? அறிவினால் ஆகாதது எதுவுமில்லை என்றான் வள்ளுவன். பெருமைதான். ஆனால், அறிவு வேண்டாம். சிந்திக்கும் சக்தி வேண்டாம், கனமான நூல்கள் வேண்டாம், எங்களுக்குக் குமுத விகடன் குப்பைகளே போதும் என்று வாழ்கிற தமிழ் மக்களின் வறுமை - சிந்தனை வறுமை - செயல் வறுமை - எப்பொழுது ஒழியுமோ தெரியவில்லை. இந்த வறுமைகளை ஒழிக்கப் பாடுபட வேண்டியது நிஜமான, போலி அடிப்படையில்லாத இலக்கியாசிரியர்களின் கடமை.
துவானம் 13

Page 15
'அறிவு வளர்க! அறிவுச் செல்வம் பெருகட்டும்'
"இலக்கியத்துக்காகப் பாடுபட நினைக்கும் ஒருசிறு பத்திரிகை, கூடியவரை கோஷ்டி மனப்பான்மைக்கு இடம்தரக்கூடாது. ஒரு பெரிய மனித Brain washing க்கு இடம்தரக்கூடாது, போலி அறிவுத்தனத்திற்கு இடம்தரக்கூடாது, தவறான அர்த்தத்தில் ஸஹரிரு தயர்களைத் தேடிப் போகக் கூடாது. ஆசிரியருக்கு ஒவ்வாத உடன்பாடில்லாத கருத்துக் களுக்கும் ஒரு பத்திரிகையில் இடம்பெற வேண்டும். அதுதான் இலக்கியசேவை, மற்றதெல்லாம் சுயலாப முயற்சிகள் தான். (லாபம் பணத்தில்தான் என்றில்லை; Ego திருப்தியிலும் இருக்கலாமே!) கம்யூனிஸம் பேசிக்கொண்டே அதை முதலாக வைத்துப் பணம் பண்ணுவதற்குச் சிலர் முயல்வதுபோலத்தான் இதுவும்!"
முன்றிலின் அதே இதழில் அக்கம் பக்கம் என்ற பகுதி காணப்படுகிறது. அதில் கிவிட்டல்ராவ் என்பவர் சென்ற வருட இறுதியில் தமிழகம் சென்ற இலங்கை எழுத்தாளரான டொமினிக் ஜீவாவுடன் நிகழ்ந்த சந்திப்பினைப் பற்றி எழுதுகையில் தெரிவித்திருப்பதில் ஒரு பகுதி
அவராகவே கூறியவை;- திருமணங்கள், விழாக்கள், கோயில்களில் பூசனைகள் யாவும் சகஜநிலையிருப்பதாய். இந்த தருணத்திலும் நண்பர்களும் வாசகர்களும் சேர்ந்து தனது மணிவிழாவை நல்ல முறையில் கொண்டாடியதுடன் நாற்பதினாயிரத்துச் சொச்சம் ரூபாய்களைக் கொண்ட பணமுடிப்பை பரிசளித்ததாய், மல்லிகை இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதோடு.
சோமகாந்தன் என்பவர் எழுதிய ‘ஆகுதி” எனும் நாவல் மல்லிகை வெளியீடாய் ஆயிரம் பதிப்புகள் வெளிவந்திருப்பதாய்."
கலை இலக்கியங்களில் நல்ல ஈடுபாடுடையவர்கள், பலவிதமான கலைக்கோட்பாடுகளைப் பற்றி அறிந்திருப்பர். யதார்த்தவாதம், சோஷலிஸ் யதார்த்தவாதம், விமர்சன யதார்த்தவாதம், இயற்பண்புவாதம் என்பவற்றைப்போலவே 'சர்ரியலிஸமும்' (Surrealism) ஒரு கோட்பாடாக அறியப்படுகிறது. 1924 இல் அந்த்ரே ஃப்ரெற்றன் என்பவர், முதலாவது சர்ரியலிஸ் அறிக்கையை வெளியிட்டார், அதில் சர்ரியலிஸத்தைப்பற்றி விளக்குகையில் உள்மனத்தின் தடையற்ற சுய இயக்கம் எண்ணங்களின் செயல் முறையை சொல் லால், எழுத்தால் அல்லது வேறு முறைகளினால் வெளிப்படுத்துவதற்கு உள்மனத்தின் தடையற்ற சுய இயக்கம், அழகியல் மற்றும் தர்மார்த்த நெறிகளைப் பறந்தள்ளிவைத்துவிட்டு அறிவு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காதபோது சிந்தனை போட்ட டிக்ரேஷன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
14 அ.யேசுராசா

சர்ரியலிஸ் ஓவியராய் உலகப்புகழ்பெற்றவர் சல்வடோர் டாலி அவர் தனது 84 வது வயதில் சென்ற ஜனவரி 24ம் திகதி ஸ்பெயினில் காலமானார். உருக்கும், கண்ணாடியும் கொண்டதொரு பேழையில் தனது உடலைப் பாதுகாத்துவைக்குமாறு, நகர மேயரிடம் அவர் கேட்டிருந்தார், பிரான்சின் கலாசார மந்திரி டாலியை 'ஒரு இராட்சதன்' என்று வர்ணித்துள்ளார்.
இவரது கடைசி ஓவியம் எட்டு இலட்சம் டொலர்களிற்கு விற்பனையாகியுள்ளது.
回
ll.2.1989
தூவானம 15

Page 16
16 அ.யேசுராசா
0 குறும்பா 0 மஹாகவி
0 எஸ்.பொன்னுத்துரை
மஹாகவி ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவர். அத்தோடு முக்கியமான கவிஞருங்கூட, தனது 44ஆவது வயதில் 1971ஆம் ஆண்டு அவர் காலமானார்.
இலக்கிய உலகில் (இன்று வரை) நிலவிவரும் குழு மனோ பாவத்தினால் குறிப்பிட்ட காலம் வரை இவர் உரிய இடத்தினைப் பெறவில்லை. எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அக்கறை எடுத்துச் செயற்பட்டதன் விளைவாக அவரது நூல்கள் பல வெளிவந்ததோடு அவரது கவிதா ஆளுமையின் முக்கியத்துவமும் தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது. மஹாகவியின் நூல்களாக எட்டு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
1966 இல் அவரது இரண்டாவது நூலான குறும்பா வெளிவந்ததது. 100 குறும்பாக்கள் செள வரைந்த அழகிய விளக்கப் படங்களுடன் இதில் இடம்பெற்றுள்ளன. இது லிமரிக்' என்ற ஆங்கிலக் கவிதை வடிவத்தையொட்டி தமிழில் செய்யப்பட்ட ஒரு முன்னோடி முயற்சியாகும். ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை இந்த நூலிற்கு நீண்டதொரு முன்னீடு வழங்கியுள்ளார். அதில் பின்வரும் கருத்துக்களும் காணப்படுகின்றன.
"குறும்பாக்களிலே சுயம்புவான கருத்து வீறும், மொழிவீச்சும், கற்பனை வளமும் இருக்கின்றன. இத்தன்மைகளே குறும்பா

புதிய தமிழ்க் கவிதை முயற்சி என்பதை நிறுவுவதற்குப் போதுமானவை. ஆனால், இத்தகைய கவிதை முயற்சியைத் தமிழில் அறிமுகப்படுத்துதல் வேண்டும் என்ற எழுச்சி 'லிமரிக் கவிதைகளிலிருந்து திளைப்பு ஊட்டிய அருட்டுணர்விலேதான் (Inspiration) மஹாகவிக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை; அதை அவர் எனக்குக் கூறியுமிருக்கிறார்.
ஆங்கிலத்தில் ஐந்து வரிகளிலே, ஒரு குறிப்பிட்ட யாப்பு முறையில் அமையும் கவிதையை 'லிமரிக்' என்றழைப்பார்.
...மஹாகவி அறிமுகப்படுத்தும் புதுக்கவிதையாம் குறும்பாமூலந் தமிழ்க் கவிதையின் பார்வையும், பரப்பும, பாணியும் அகலிக்கின்றன. காதலையும், நிலவையும், தென்றலையும், தமிழுணர்ச்சியையும் விட்டால் கவிதைக்கான பொருள் கிடையாது என்றுநம் கவிஞர் பல செத்த பாம்மையே திரும்பத் திரும்ப அடிக்கும் பணியிலே ஈடுபட்டிருக்கும் இவ் வேளையிலே எந்தப் பொருளும் கவிதைக்கு அந்நியமாக மாட்டாது என்பதை மஹாகவிதம் குறும்பாக்கள் மூலம் நிரூபித்துவிட்டார். அத்துடன் குறும்பாவால் தமிழ்க்கவிதை வாழ்வின் எம் மூலைக்குள்ளும் புகுகிறது.
"சுவைஞரே என்று தலைப்பிட்டு மஹாகவி எழுதியுள்ள குறிப்பில் வரும்
"கட்டித்த சிந்தனை உடைய பண்டிதர்களும், கோட்பாடுகளை விழுங்கிவிட்டுச் செமித்துக் கொள்ள முடியாதவர்களும், மோப்பதற்கும் மோந்துமுணுமுணுப்பதற்குமாக எழுதப்படுவதன்று கவிதை"
என்ற வரிகள் சிந்தனைக்குரியவை.
இதோ! எனக்குப் பிடித்த குறும்பாக்கள் சில:
முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன் முன்னாலே வந்து நின்றானர் காலணி. சத்த மின்றி, வந்தவனினர் கைத்தலத்திற் பத்து முத்தைப் பொத்திவைத்தான். போனான் முச் சூலன்
O Ο Ο
தூவானம் 17

Page 17
குலோத்துங்கனிவாகையொடுமீனிடான், குவலயமே நடுங்க அரச/விடான். 'உலாத் தங்கள் பேfல், இதோ!" ஒரு புலவர்குரலெடுத்து 'நிலாத் திங்கள். எனத் தொடங்க,மாண்டான்
O Ο Ο
பெஞ்சனிலே வந்தழகக் கோனார் பெருங்கதிரைமீதமரலானார். அஞ்சாறு நாள் இருந்தார். அடுத்த திங்கள் பின்னேரம். பஞ்சியினாலே இறந்து போனார்.
OO O
வல்லரசினர் செய்கையினைக் கண்டு வல்லரசு வீசியதோர்குண்டு, நல்லபடி நம்மனிதர் நச்சரிப்புத் தீர்ந்து விடத் - தொல்லுலகை ஆள்கிறது நண்டு
c
18O2.1989
18 அ.யேசுராசா

0 ம7ற்பழம் வுெEர்டிக்காய் முருங்கைக்காய்
0 கநா.சு.
0 காசியப்பனர்
நல்ல மாம்பழம் விரும்பப்படுகிறது. முற்றிப்போகாத வெண்டிக்காயும், முருங்கைக்காயும் அவ்வாறே, நல்லதாக தரமானதாக விரும்பப்படுகின்றன. ஆனால், கலை, இலக்கியங்கள் என்று வரும்போது மட்டும் தரம் பொதுவில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை! மாறாக, பொழுது போக்குக்குரியனவும், மேம்போக்கான தன்மை கொண்டனவுமே மதிப்பைப் பெறுகின்றன, இந்நிலையை மாற்றுவதற்கு வாசகர், விமர்சகர், எழுத்தாளர் ஆகிய முத்தரப்பினரிடையேயும் பொறுப்புணர்வும், சரியான நிலைநோக்கிய மாற்றமும் தேவை என்பது உண்மை. ஆயினும், இம் மூவரிலும் எழுத்தாளர்களிடையே பொறுப்புணர்வு இருக்க வேண்டுவது அடிப்படையானதாகும்.
புகழ்பெற்ற எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சு. ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பது, நினைவுக்கு வருகிறது.
"இலக்கியத்தில் சிறந்தது, மேன்மையானது, சிறப்பானது தேவையில்லை; மட்டமானது, ஓரளவுக்கு இலக்கியம் போலப் போலியாக இருப்பது போதும் என்கிற ஒரு நினைப்பு ஏற்பட்டிருக்கிறதே - அதைத்தான் இலக்கியச் சூழலின் முதல் எதிரிடை அம்சமாக (அதாவது இலக்கியத்திற்கு எதிர்ப்பு அம்சமாக) கருதவேண்டும். விமர்சகன் என்ன சொன்னாலும் சரி, வாசகன் என்ன சொன்னாலும் சரி, பிரசுரகர்த்தா போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி என்னில் சிறந்ததை நான் தருகிறேன். எழுதுகிறேன். என்பது குறைந்துகொண்டு வருகிற
தூவானம் 19

Page 18
சூழ்நிலையில், ஓரளவுக்கு மேல் இலக்கியம் படைப்பது சாத்தியமாகத்தான் இருக்காது."
இக் கூற்றுக்களில், தரமானதையே எழுத்தாளின் அளிக்க வேண்டுமென்பது வற்புறுத்தப்படுகின்றது. தரமானதையே எழுதுவதற்கு பலமட்டங்களில் பொறுப்புணர்வை அவன் பேண வேண்டும். அதிலும் எழுதுவதற்குரிய மனோநிலை - உந்தல் - இருந்தால் மட்டுமே ஒரு படைப்பை உருவாக்குவதில் ஈடுபடவேண்டுமென்பது அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாறாக, அறிவுரீதியாக தெரிந்த - கிரகித்த - தகவல்களை மட்டும் வைத்துச் செயற்பட்டால், அது உயிர்ப்பில்லாத பிண்டமாகிவிடும். இதனால்தான், சில எழுத்தாளர்களின் உருவாக்கங்களின் இட - கள விபரிப்பைப் படிக்கையில் புவியியல் - பாடப்புத்தகைத்தைப்படிப்பது போன்றிருக்கிறது. அரசியல் - சமூகப் பிரச்சினைச் சித்திரிப்புக்களைப் படிக்கையில் செய்திப்பத்திரிகையோ, அரசியல் பிரச்சார வெளியீடொன்றையோ படிக்குமுணர்வு தோன்றுகிறது! ஒரு நல்ல படைப்பு கலைஞனுடன் 'இரத்தமும் சதையுமாகப் பிணைந்ததாகவிருக்கும். அவனது ஆளுமையின் வெளிப்பாடாக - உரிய நேரத்தில் நிகழ்ந்த பிரசவமாக இருக்கும் படைப்பு மனோநிலைக்குரிய காத்திருப்பு ஒரு போதுமே புறக்கணிக்கப்பட முடியாதவொன்றேயாகும். தமிழில் நல்ல எழுத்தாளர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற காசியபனின் கவிதையொன்றில் இக்கருத்து நன்கு வெளிப்படுகின்றதென நினைக்கின்றேன்.
"எழுதவேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால் எழுத வந்தால் தானே? உள்ளத்தில் ஊற்று வரண்டு போச்சா இல்லை, எல்லாம் எல்லோரும் எழுதியாச்சே என்ற மலைப்பா? நினைவு மயங்கிய அரைமயக்க வெளிச்சத்தில் மனதின் அடித்தளத் தாழ்வாரங்களில் வார்த்தைகள் சித்திரங்கள்.
செழ தளிர்விட்டு, வளர்ந்து மரமாகி உள்ளத்தின் உள்ளுறை வெளிச்சம்
பிரகாசிக்கும் போது.
ஆம் 1உள்ளத்தின் உள்ளுறை வெளிச்சம் பிரகாசிக்கும்போது கலைப்படைப்பு உருவாகும் என்பதை, நானும் நம்புகிறேன்.
காசியபன் கேளரத் தலைநகரான திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். தத்துவத்தையும், வரலாற்றையும் பாடங்களாகக் கொண்டு, பட்டம் பெற்றார். ஒரு காப்புறுதி நிறுவனத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னரே இலக்கியத் துறைக்கு வந்தார். இதுவரை அசடு, கிரகங்கள், ஆகிய நாவல்களும் சிறிய கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. 'கணையாழி இதழில் முன்பு தொடர்ந்து வெளிவந்த முகம்மது கதைகள் என்ற சிறுகதைகளை
எழுதியவரும் இவரே.
回
2S.O2.989
20 அ.யேசுராசா

0 எழுத்தாளர் பட்டறை
0 தா இராமலிங்கம்
எத்துறையிலும் வளர்ச்சியுறுவதற்கு மேலும் மேலும் அறியமுனைவதும் பயிற்சியும் அவசியமானவை என்ற உண்மை, எழுத்துத் துறைக்கும் பொருத்தமானது. ஆனால், எமது சூழலில் எழுத்துத் துறையில் இது பற்றிய அக்கறை போதுமான அளவில் நிலவவில்லையென்பது, துரதிர்ஷ்டமான உண்மையாகும். ஆரம்ப எழுத்தாளருக்கு மட்டுமல்லாது பழைய எழுத்தாளர்கள் பலருக்கும் இது பொருந்திவரும். வளர்ச்சிக்கு இந்நிலைமை நீடிப்பது நல்லதல்ல. நாடகத் துறையிலும் ஒவியத்துறையிலும் சமீபகாலங்களில் கொடுக்கப்பட்டு வரும் பயிற்சிகளையாவது எழுத்துத்துறையைச் சேர்ந்தோர் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழலில் நான் உளவியற் சஞ்சிகையினால் ஒழுங்கு செய்யப்பட்டு, சென்ற வாரத்தில் மூன்று நாட்கள் (10.11.12) நடாத்தப்பட்ட எழுத்தாளர் பட்டறை, முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு வாழ்க்கை நிலைகளிலுள்ள, ஆனால், எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டு எழுதிக் கொண்டிருக்கின்ற ஆரம்ப எழுத்தாளர் 36 பேர் இதில் கலந்துகொண்டனர். பயிற்சி நாட்களில் எல்லோரும் ஓரிடத்தில் தொடர்ந்து தங்கியிருந்தமையும் முக்கியமானது. இதன் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நெருங்கங் கொள்ளவும் முடிந்தது.
சிறுகதை, கவிதை, வானொலி எழுத்து, பத்திரிகை எழுத்து என்பவற்றில் பயன்மிக்க கருத்துக்களுடன் அவர்கள்
தூவானம் 21

Page 19
தொடர்பு கொள்ள முடிந்தது. நல்ல சிறுகதை, கவிதை என்பவற்றின் பொதுப் போக்குகள் என்பன விளக்கி அறிமுகப்படுத்தப்பட்டதோடு ஆறு எழுத்தாளர்களும், இரண்டு கவிஞர்களும் ‘எப்படி எழுதுகிறோம்' எனத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். எழுத்தாளர்களை நேரில் அறிந்துகொண்டதும், படைப்பு உருவாகும் விதங்களை (வெவ்வேறான முறைகளில்) தெரிந்து கொண்டதும், பயிற்சியாளர்களுக்குப் புதுமையான அனுபவங்களாயிருந்ததை அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, வித்தியாசமான கலை இலக்கியக் கொள்கைகள், எழுத்தாளர்கள், படைப்பு முறைகள், படைப்புகள் இருப்பதும் அவற்றுடன் மேலும் மேலும் பரிச்சயம் கொண்டு உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதும், வாசிப்பினதும் , மொழிப் பிரயோகத் தினதும் முக்கியத்துவமும் பயிற்சியாளர்களிடம் பதியவைக்கப்பட்டன. அவர்களும், தொடர்ந்து இத்துறைகள் பற்றி அறிய வேண்டும்' என்ற உணர்வுடன் பயிற்சியை முடித்துச் சென்றார்கள். எதிர்காலப் பயன்கருதி இன்று தூவப்பட்ட 'விதைகள்' முளைத்து நிச்சயம் பயன்கொடுக்கும் - வாசக நிலையிலும், படைப்புநிலையிலும்!
மயிலங்கூடலூர் பி. நடராஜன், கோகிலா மகேந்திரன், அ.யேசுராசா, செங்கை ஆழியான், ஐ.சாந்தன், எஸ்.தணிகாசலம், சொக்கன், எம்.ஏ.நுஃமான், என்.சண்முகலிங்கன், அ.சண்முகதாஸ் , கரவையூர் செல்வம் , எஸ்.திருச்செல்வம், சபா.ஜெயராசா, சித்திரலேகா மெளனகுரு ஆகியோரே தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் பயிற்சியாளர்களுடன் பகிர்ந்துகொண்டவர்கள்.
முன்னோடி முயற்சியொன்றை மேற்கொண்ட நான் சஞ்சிகைக் குழுவினரும், பட்டறையை நெறிப்படுத்திய சி. மெளனகுருவும் பாராட்டுக்குரியவர்கள்.
இன்று புதுக்கவிதை பெரும்பாலானவர்களால் ஒரு இலக்கியவடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. புதியவர்களில் பெரும்பாலானோர் இதிலேயே ஈடுபாடு கொண்டுமுள்ளனர், ஆனால், எழுபதுகளின் நடுப்பகுதிவரை புதுக்கவிதை' எமது விமர்சகர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. தனித்துவமும் தன்னம்பிக்கையும் கொண்ட கலைஞர்கள் தனிவழி செல்லத் தயங்குவதில்லையல்லவா? கல்வயலைச் சேர்ந்த தா. இராமலிங்கம் அத்தகைய ஒரு கவிஞர்தான். தமிழ்ப் புதுக் கவிதை வரலாற்றில் (தமிழகத்தையும் ஈழத்தையும் சேர்த்து) அவருக்கு முக்கிய இடமுண்டு. அவரது கவிதைகள் புதுமெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1965) என்ற பெயரில் நூல்களாக வந்துள்ளன. புதுக் கவிதைத் துறையில் எனக்கு வெளிச்சத்தைத் தந்த முதல் நூல்கள் இவைகளே என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். இளங்கவிஞர்கள் இந்த நூல்களைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
22 அ.யேசுராசா

மாதிரிக்குச் சில கவிதைகள் :
துயிலுகையில் பயங்கரங்கள்
துயிலுகிறேன் ! கனவுலகில் நிகழுது பயங்கரங்கள் சூரியனின் அனற்பிழம்பு வெடித்து வீழ்கிறது சமுத்திரத்தில் ! திரை மோதுகுது பனை உயரம் ஆவிகக்கிக் கரைமீது நிலம்மேவி ஒடுகுது கொதிவெள்ளம் ! மரஞ்செடிகள் விலங்கு மக்கள் அவிந்து வெம்Uவதைந்தழிய ஓங்குகுது பினப்படையல் ஊன்கரைந்து சேறுபட வீசுகுது கெடுநாற்றம்! துயிலுகையில் கனவுலகில் நிகழுவன பயங்கரங்கள் !
கலக்கம்
செத்த பகலின் சடலம் எரிமூட்டி விட்டகன்றார் விண்வெளியில் ! சாம்பல் புதையுண்ட செந்தணல்கள் காற்றில் மினுங்கூது நள்ளிரவு! எங்கேயோபோகின்றாய் கூறு !
கால்போற திக்கில் வழி போறன் கலக்கம் ஒழியட்டும் என்று !
கழுவுவார் எவருமில்லை
போக்குவரத்து மிகுந்த பெருந்தெருவில்
தூவானம் 23

Page 20
எழுப்பிவிட, நிலைக்கிறது நெடுங்கல்லாய் நினைவுச் சின்னம் !
பொறித்த பூவெழுத்தெல்லாம் பாசியிலும் துாசியிலும் மறைந்துளதே ! கல்லோடு கல்லாய்க் கணிக்காது நோக்குகிறார் மிகச் சிலரே கழுவுவார் எவருமில்லை !
c
18.03.1989
24 அ.யேசுராசா

259,1912. O9 0 கலாபவனம்
0 சனாதனின் ஓவியக் கண்காட்சி
தமிழ் மாவட்டங்களில் கலாபவனங்கள் அமைக்கப்பட வேண்டுமென பத்திரிகைகளில் கருத்துக்கள் முன்வைக் கப்பட்டுள்ளன. முன்பு வேறு பலரும் இக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர், ஆயினும், ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் மேற்கொள்ளப் படாமையால் கலைத்துறை வளர்ச்சியினைத் தடைப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அது, இன்றும் காணப்படுகின்றது.
நீண்ட மந்த காலத்தின் பின்னர் 1986 நடுபகுதியில் யாழ். பல்கலைக்கழக கலாசாரக்குழு ஒழுங்குபடுத்திய ஓவியர் அ.மாற் குவின் மாணவியர் மூவரின் 'ஓவிய அரங்கேற்றத்தின் பின்னர் எமது சூழலில் ஒரு விழிப்பு ஏற்பட்டது. பல ஓவியக் கண்காட்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. ஒவியப்பயிற்சி பெறுவதிலும், புது ஆர்வம் காணப்பட்டு வருகிறது. தேடலும் படைப்புலகமும் என்ற பெயரில் ஓவியம் சிற்பம்பற்றி முக்கிய நூலொன்றும் வெளிவந்திருக்கிறது. புதியவர்களின் ஓவியக் கண்காட்சிக்குள் அடுத்தடுத்து ஒழுங்கு செய்யப்பட்டு வரும் தற்போதைய சூழலில் 'கலாபவனங்களில் அவசியம் பற்றிக் கவனப்படுத்தும் முயற்சிகள், பொருத்தமானதாகவும் அமைகின்றன. கலைசார்ந்த நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். யாழ் ஸ்ரான்லி கல்லுTரியில், கலை கண்காட்சிகள் நடாத்துவதற்கென அமைக்கப்பட்ட 'கலைக்கூடமொன்று உள்ளது. ஆனால், அது திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதில் உள்ள திருத்தங்கள் செய்யப்பட்டால், புதிய கலாபவனக் கட்டிடங்கள் அமைக்கப்படும்வரை தற்காலிகமாக, யாழ் மாவட்டத்த வராவது பயன் பெறமுடியும்.
தூவானம் 25

Page 21
யாழ் கல்வித்திணைக்களம் சார்ந்து ஓவிய சிற்பத் துறைகளிற்காக நுண்கலை மன்றமொன்று சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சித்திர ஆசிரியரைத் தெரிவு செய்யும் ‘வேலை வங்கியாக மாறாது, முறையான பயிற்சிகளை வழங்கி தேர்ச்சிவாய்ந்த ஓவியர்களை உருவாக்குவதில் அது கவனங்கொள்வது நல்லது. 'சித்திரம்' வெறும் தொழில் என்பதாகத்தான் பல சித்திர ஆசிரியர்களுக்கு இங்கு இருக்கிறது. அவர்களில் பலர் ஓவியராக இல்லை, ஓவியங்களைப் படைப்பதில் அவர்களுக்கு அக்கறையேயில்லை. பலருக்கு ஆற்றலுமில்லை. மிகச் சிலர் தான் தொடர்ந்து ஓவியங்களை உருவாக்கி வருகிறார்கள். இச்சீரற்ற நிலைமைகள் மாறும்வகையில் நுண்கலை மன்றம் செயலாற்ற வேண்டும். தகுதிவாய்ந்தவர்களை விலக்கி வைக்காமல் அத்தகையவர்களை இணைத்து அது செயற்பட்டாற்தான் ஆக்க ரீதியான பயன்கள் ஏற்படும்.
சனாதனன் என்ற 20 வயது இளைஞரின் ஓவியக்காண்காட்சி இம்மாதம் 12,13,14, ஆகிய திகதிகளில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 62 ஒவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
சனாதனிடம் ஆற்றல் இருப்பதாக எம்மை உணரவைக்கும் எண்ணிக்கையில் மிகக் குறைவானதாகவே இருப்பது தூரதிஷ்டமானது. புகைபிடிக்கும் இரு சிறுவர்களை பென்சிலால் வரைந்திருக்கும் 'திசை மாறிய பறவைகள்', வர்ணத்திலான யாழ்ப்பாணக் கோட்டை', 'மூவர்', 'இழப்பு', 'சிந்தனை, ஆற்றாமை', 'சங்கமம்', 'வீடுநோக்கி என்ற ஒவியங்கள் என்னைக் கவர்ந்தன. வர்ணச்சேர்க்கை, பாவம், வெளிப்பாட்டு அமைதி என்பன எம்மில் ஈர்ப்பினை ஏற்படுத்துகின்றன. இவை சனாதனிடம் உள்ளுறைந்துள்ள ஆற்றலைக் கோடிகாட்டுகின்றன.
ஆனால், தன்னிடமுள்ள இந்த ஆற்றலைத் திரட்டிக்குவித்து கலை வெளிப்பாட்டை அவர் நிகழ்த்தியிருப்பதாக, ஏனைய (பெரும்பாலான) ஒவியங்களைக் கொண்டு சொல்ல முடியாது. சித்திர வகுப்பறையில் வரையப்படும் 'வெறும் சித்திரங்களாகவே அவை இருக்கின்றன. வர்ண அமைதியோ, வடிவ அமைதியோ உணர்வைக் கிளர்த்தும் தன்மையோ அவற்றில் இல்லை. போதிய அக்கறை காட்டப்படாமல் வரையப்பட்டனவாகத் தெரிகின்றன. அவற்றில் பல கற்பனையாக வரையப்பட்டவை, சில வேறு படங்களைப் பார்த்துக் கீறப்பட்டவை. இந்த வகையில் மனிதர்கள் இயற்கைக் காட்சிகள் என்பன எமது சூழலுடன் இயைபுபெறாமல் போலியானதாக இருக்கின்றன. கலைஞனோ எழுத்தாளானோ தனது சூழலை - மனிதர்களை - தனது அனுபவப் பரப்பினுள் உள்வாங்கி, தனது சொந்தத் தன்மைகளை அடையாளங் காட்டும் முறையில் கலைப்படைப்புகளாக வெளிப்படுத்துவதே சரியானது. சனாதனன் போன்ற இளைஞர்கள் நிச்சயம் இதனை மனதிற் கொள்ள வேண்டும்.
கண்காட்சி என்று வரும்போது எண்ணிக்கை முக்கியமல்ல. தனித்துவம் நிறைந்த தரமான படைப்புகள் இடம்பெறுவதே முக்கியம்- அவை சிறுதொகையினதாகக் கூட இருக்கலாம்.
25.03.1989
26 அயேசுராசா

0 ஆஸாத்தின் கவிதை 0 யில்மெஸ் குனேயின் மந்தை
திசையின் 18.02.89 இதழில் வெளிவந்த இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களில் ஒருவரான மெளலானா அபுல் கலாம் ஆஸாத் பற்றிய கட்டுரையைப் படித்திருப்பீர்கள் கொழும்பிலிருந்து எம்.ஏ.ரஹற்மானை ஆசிரியராகக் கொண்டு முன்பு வெளிவந்த இளம் பிறை சஞ்சிகை தனது 1967 ஏப்ரல் இதழை ஆஸாத் மலராக அதிக பக்கங்களுடன் வெளியிட்டிருந்தது. அந்த இதழைச் சமீபத்தில் புரட்டிப் பார்க்கையில் பயணம்' என்ற தலைப்பிலான கவிதை கவனத்தையீர்த்தது. 'தஸ்கீரா என்ற தலைப்பில் ஆஸாத் எழுதிய புதுமையான சுயசரிதத்தில் வரும் (அவரே எழுதிய) கவிதையின் மொழிபெயர்ப்பு அது:
LuSOOTib
காலிலே தைத்த
முள்ளினைக் கழற்ற
62ცეb
கணம் திரும்பவும்
காதலியோடு என்
ஒட்டகம் எங்கோ ஒழ மறைந்தது
ஒரு கணம்
திரும்பிய கவனம்;
ஒரு நூறாண்டாய்
நீண்டது பயணமே.
'ஒரு கணம் திரும்பிய கவனம்' என்ற வரி பல்வேறு அர்த்த விரிவுகளை, என்னுள் ஏற்படுத்துகிறது! உங்களுக்கு எப்படியோ.
தூவானம் 27

Page 22
1984 செப்ரெம்பர் 9 இல் பரீஸில் காலமான யில் மெஸ் குனே, கொடூர ஒடுக்குமுறைக்களுக்கெதிராக - குர்திஸ்தான் நாட்டிற்காகப் போராடிவரும் குர்து தேசிய இனத்தவரின் பெரும் நேசத்திற்குப் பாத்திரமாயிருக்கும் ஒரு விடுதலைப் போராளியும் உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞருமாவார். பாதை (Yole), மந்தை (Herd), நம்பிக்கை, சுவர் போன்றவை அவர் இயக்கிய சில படங்களாகும். 1982இல் பிரான்சின் 'கேன் நகர உலகத் திரைப்பட விழாவில் இவரது பாதை முதல் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புகழ்பெற்ற ஒருவரின் மந்தை திரைப்படம் வீடியோவில் யாழ். பிரெஞ்சு நட்புறவுச் சங்கத்தில் (01.04.89இல்) காட்டப்பட்டது.
மந்தை வளர்க்கும் நவீன நாகரீகத்தில் வளர்ச்சியடையாத - பகைமை கொண்ட இரு குழுக்கள். ஒரு குழுவின் தலைவன் - கதாநாயகனின் தந்தை - பழம் பெருமையில் மூழ்கியபடியே, மற்றக் குழுவைச் சேர்ந்தவளான மகனின் மனைவியை வெறுக்கிறான். அவளால் தமக்கு அவமானமென - நிகழும்
துரதிர்ஷ்டங்களுக்கெல்லாம் அவள்தான் காரணமெனவும் கோபப்படுகிறான். அவளைத் துரத்திவிடும்படி மகனிடம் சொல்கிறான். மகனோ அவளை நேசிக்கிறான். சகோதர்களைக் கண்டபோதும் அவள் கதைக்கவேயில்லை.
கணவனுடன் அவனைப் பின் தொடர்ந்தே செல்கிறாள். எல்லாவகைத்
துரயங்களையும், உணர்வுகளையும் தனக்குள்ளேயே அடக்கிக்கொள்கிறாள்.
பழம் பெருமை பற்றிய நம்பிக்கைகளையும், வீம்பு நிறைந்த வன்மத்தையும் தகப்பன் பின் தொடர்வது; உணர்வுகளை அடக்கியபடியே, கணவன் என்ற
புதிய உறவே தனக்கு எல்லாமுமெனப் பணிவுடன் மருமகள் தொடர்வது என்பவை, மந்தைகளின் மந்தமான - கண்மூடிப் பின்பற்றிச் செல்லும் - போக்குகளுடன் ஒத்துப்போகின்றன.
குறித்த தொகை ஆடுகளுடன் தகப்பன், மகன், மனைவி, மற்றும் இருவருடன் 'அங்காரா' (தலைநகரம்) விற்கு வருகின்றனர், நகரத்தைச் சேர்ந்தவர்களின் ஏமாற்று, அரசின் ஒடுக்குமுறை, வசதியற்றவர்களின் துயர்நிறைந்த வாழ்க்கை, சமூக மாற்றத்திற்கான இளைய தலைமுறையின் புதுக்குரல்கள் என்பன, முக்கிய பாத்திரங்கள் இயங்கும் பின்னணியில் சித்திரிக்கப்படுகின்றன. 'அங்காரா' என்ற சொர்க்கம் பற்றியிருந்த பிரமை கதாநாயகனுக்கு மெல்ல மெல்ல உடைகிறது. மனைவி நோய் முற்றி சிகிச்சையில்லாது இறக்கிறாள். டொக்ரர் தன்னைப் பரிசோதிப்பதை அனுமதிக்கமறுக்கும் அவளது பழைமைப் போக்கும், காரணம். உணர்ச்சி ஆவேசத்தில் ஒருவனை அவன் தாக்க அவன் இறந்துவிடுகிறான். தகப்பனும் பைத்தியமாகிறான்.
வலுவான காட்சிப் படிமங்களுடன், பாத்திரங்களின் செம்மையான உருவாக்கமும் அந்த மனிதர்களின் வாழ்வு பற்றிய நெருக்கமான புரிதலை எமக்குத் தருகின்றன. தனது சமூக நிலைமைகளின் ஒடுக்குதல்களுக்கு உள்ளாகித் துயருறும் பெண்களின் மேல் 'குனே கொண்டுள்ள பரிவு, இத்திரைப்படத்திலும் முக்கியத்துவம் மிக்கதாய் வெளிப்படுகிறது.
நல்ல திரைப்படங்களைப் பார்க்கக் கூடிய இத்தகைய வாய்ப்புகளை, ஆர்வமுள்ளவர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
15.04.1989
28 அ.யேசுராசா

0 சிங்களத் திரை உலகு
சிங்களப் பேரினவாதத்தினால் கட்டவிழ்க்கப்படும் ஒடுக்குமுறைகளைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமேயொழிய, சிங்கள மக்களையோ அவர்களின் கலை கலாசாரத் தினையோ அல்ல.
திரைப்படம், ஓவியம், நாடகம் போன்றவை சிங்கள மக்களிடையில் மகத்தான வளர்ச்சியடைந்திருக்கின்றன. குறிப்பாக திரைப்படத்தினை எடுத்துக் கொண்டால், அவர்களை நாம் அணுகவே முடியாது. ஈழத்தில் தமிழ்த் திரைப்படத்துறையென ஒன்று வளர்ச்சியடையவில்லை; இதன் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் காரணிகளும், பலவுண்டு. ஆனால் நீண்ட வரலாறும் (1931 இலிருந்து) பெருந்தொகைத் திரைப்படத் தயாரிப்பும் நிகழும் தமிழகத்திலும், நிலைமை திருப்திதருவதாக இல்லை. சமீபகாலங்களில் நிகழும் சில புறநடைகளைத் தவிர்த்தால் பிரதானபோக்கு, கலைத்தன்மைகளைப் புறக்கணிக்கிற - வியாபார வெற்றியை (இலாபத்தை) உறுதிப்படுத்துகிற - உண்மை நிலைகளுக்கு மாறாக யதார்த்தமற்ற - போலி உணர்ச்சிகளை, செயல்களை வெளிப்படுத்தும் - பொழுதுபோக்குக் குப்பைகளே சினிமா ஒரு காட்சி ஊடகம் (Visual medium) 6TGirl) -9LQ (JUGOlds 5(Ibg.geoGOT55, Li பேணாதவையாக, அவை அமைந்துள்ளன. அதனால்தான், அகில இந்திய ரீதியில் அவற்றால் கெளரவம் பெறமுடியவில்லை. இப்பின்னணியில், உலக ரீதியில் பரிசுகளையோ பாராட்டுகளையோ அவை பெறுவதுபற்றி, எப்படிச் சிந்திக்கக் கூடும்?
தூவானம் 29 .

Page 23
நாற்பதுகளின் பிற் கூறிலேயே, முதலாவது சிங்களத் திரைப்படமான கடவுணு பொறுந்துவ (மீறிய வாக்குறுதி) தயாரிக்கப்பட்டது. 1956 வரை தென்னிந்தியாவிலும் இலங்கையிலுமாக உருவாக்கப்பட்ட சிங்களப்படங்கள், தென்னிந்தியத் தமிழ்ப்படப் பாணியிலேயே - சூத்திரப் பாங்கானதாக - உருவாக்கப்பட்டன. சிங்கள மக்களின் வாழ்க்கையை அவை யதார்த்தமாக வெளிப்படுத்தவில்லை. 1956இல் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் உருவாக்கிய ரேகாவ (விதியின் கோடுகள்), மாபெரும் மாறுதலாக - சிங்கள வாழ்க்கையை அதன் இயல்பான தளத்தில் - யதார்த்தமாக வெளிக்காட்டுவதாய் - அமைந்தது. அதுவரை ஸ்ரூடியோவினுள் முடங்கியிருந்த சிங்களப்படம் அதற்கு வெளியே கொண்டுவரப்பட்டு, கதை நிகழும் இயல்பான களத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் 'சினிமா ஒரு "காட்சி ஊடகம்' என்ற அடிப்படைக் கருத்தும் பேணப்பட்டது. அன்று உருவாகிய மறுமலர்ச்சியின் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. வியாபாரக்குப்பைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழல் இருந்தாலும், காலத்துக்குக் காலம் கணிசமான தொகைப் படங்கள், கலைப் பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு தொகைக் கலைப்பட இயக்குநர்கள் தத்தம் முத்திரைகளைப் பதித்துள்ளார்கள். அவர்களும் அவர்களது கலை உருவாக்கங்களும் பல்வேறு நாடுகளில், பலமட்டங்களில் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
முக்கியமான இயக்குநர்களும் அவர் தம் கலையாக்கங்களுமென்று பார்க்கையில், பின்வருமாறு குறிப்பிடலாம்; லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் - கம்பெரலிய (கிராமப் பிறழ்வு), தாச நிசா (கண்களின் காரணத்தால்), ஹொலு கதவத்த (ஊமை உள்ளம்), நிதானய (புதையல்), றன் சலு (மஞ்சள் அங்கி), சந்தேஸய (தூது), சிறி குணசிங்க - சத்சமுத்ர (ஏழு கடல்கள்), ஜி.டி.எல் பெரேரா - சாமா, தஹசக் சித்துவிலி (ஆயிரம் நினைவுகள்), செனரத் யாப்பா -ஹந்தானே கதாவ (ஹந்தானையின் கதை), மினிசா சஹகப்புட்டா (மனிதனும் காகமும்) மஹகம சேகர - துன்மங்ஹந்திய (முச்சந்தி), பியசிறி குணரத்ன - மொக்கத உணே? (என்ன நடந்தது?), சுனில் ஆரியரட்ண - சருங்கலே (காற்றாடி), ரைற்றஸ் தொட்டவத்த - ஹந்தயா காமினி பொன்சேகா - பரசத்துமல் (பாரிஜாத மலர்), உத்துமாணெனி (மேன்மை தங்கியவரே), W.A.B. சில்வா - ஹலவாலி. டீ.பி நிஹால் சிங்க - மல்தெனியே சிமியோன், சுமித்ரா பீரிஸ் - கங்க அத்தற, ஸாகரஜலய, தர்மசேன பத்திராஜ-அகஸ்கவ்வ (ஆகாய கங்கை), பம்பறு அவித் (குளவிகள் வந்துவிட்டன), வசந்த ஒபேசேகர - வல்மத் வுவோ (வழிதவறியவர்கள்), பலங்கற்றியோ (தத்துக்கிளிகள்), தடயம (வேட்டை), கடபதக சாயா (கண்ணாடியில் பிம்பங்கள்), தர்மசிறி பண்டாரநாயக்க ஹங்ஸ் விலக் (அன்னத் தடாகம்), சுத்திலாகே கதாவ.
கம்பெரலிய 1965இல் புதுடெல்லியில் நடைபெற்ற '3ஆவது சர்வதேசப் படவிழாவில், தங்கமயில் விருதினைப் பெற்றுள்ளது. முழுநீளக்கதைப்
30 அ.யேசுராசா

ULisé06IT 65 (Feature Films) (50 buLilist6 b (SHORT FILMS) 6JTJT6Tub உருவாக்கப்பட்டுள்ளன. மினிசா சஹ கப்புட்டா குறும்படம் ‘சர்வதேசப் படவிழாவொன்றில் இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளது.
கலைப்பிரக்ஞையோடு கமராவினைக் கையாள்வது திரைப்படத்துறையில் மிக முக்கியமானதாகும். இத்துறையில் முக்கிய கலைஞர்களாக டொனல்ட் கருணரத்ன, அன்று ஜெயமான்ன, டி.பி. நிஹால்சிங்க, சுமித்த அமரசிங்க, எம். எஸ். ஆனந்தன், வாமதேவன் ஆகியோரைக் குறிப்பிடலாம்; பின்னிருவரும் தமிழர்கள்.
அலட்டிக்கொள்ளாமல், இயல்பான முறையில் தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த நடிகர்களாக பியதாஸ் குணசேகர, ஜோ அபேவிக்ரம, காமினி பொன்சேகா, ரொனிறணசிங்க, ஹென்றி ஜயசேன, டீ.ஆர்.நாணயக்கார சிறில் விக்ரம, தர்மசிறி பண்டாரநாயக்க ஆகியோரைச் சொல்லலாம். நடிகைகளில் புண்யா ஹீன்தெனியா, அனுலா கருணாதிலக்க, ஐராங்கனி சேரசிங்க, தெனவக்க ஹாமினி, சுவர்ணா மல்லவாராச்சி, சிறியாணி அமரசேன, மாலினி பொன்சேகா, அனோஜா வீரசிங்க ஆகியோர் முக்கியமானவர்கள். சில வருடங்களின் முன்னர் சர்வதேசப் படவிழாவொன்றில், உலகின் சிறந்த நடிகைக்கான விருதினை அனோஜா பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
29.O4-1989.
தூவானம் 31

Page 24
32 அ.யேசுராசா
@正呈12
0 பெண்களின் சுவருகளில் 0 நிர் வளையங்கள்
மரணத்துள் வாழ்வோம் (அரசியல் கவிதைகள்), தேடலும் படைப்புலகமும், (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்), ஊரடங்கு வாழ்வு (ஈழநாடு' ஆசிரியத் தலையங்கங்கள்) போன்ற சிறப்பான நூல்களை வெளியிட்ட தமிழியல் நிறுவனத்தின் சமீப வெளியீடுகளாக, இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன.
ஒன்று, சாந்தி சச்சிதானந்தம் எழுதிய பெண்களின் சுவடுகளில் என்ற ஆய்வு நூல். கட்டிடக் கலைத்துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு, பெண்கள் அமைப்புக்களின் பங்கேற்றுமிருக்கிறவரான சாந்தி, "பெண்களின் சரித்திரம் முற்றுமுழுவதுமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது. மாறாக மனித குல வரலாற்றின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் பெண்களுடைய சாதனைகள் எவ்வளவு மகத்தான பங்கினை வகித்துள்ளன என்பதைப் பற்றி இந்த நூல் பேச விரும்புகிறது" என்று, நூலின் நோக்கத்தைத் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது நூல், சண்முகம் சிவலிங்கத்தின் நீர் வளையங்கள் என்ற கவிதைத் தொகுதி, 54 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. கல்முனையைச் சேர்ந்தவரான சண்முகம் சிவலிங்கம் ஒரு முக்கிய கவிஞர் என்பதைத் தேர்ந்த வாசகனெவனும் ஏற்றுக்கொள்வான். நீண்ட காலமாகத் தமிழ்க் கவிதையை வளப்படுத்தி வரும் அவரது

கவிதைகளின் தொகுப்பு இப்பொழுதாவது வெளிவந்திருப்பது, மகிழ்ச்சியைத் தருகிறது. இத்தொகுப்பிற்கு நல்லதொரு முன்னுரையை எம்.ஏ.நுஃமான் எழுதியுள்ளார். அதில் வரும் பகுதிகள் சிலவற்றைக் கீழே தருகிறேன்;
"யாப்பிலே எந்த அளவுக்கு மோசமான கவிதைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு சிலவேளை அதைவிட அதிகமாக - யாப்பை மீறி, வசனத்தில் எழுதப் பட்டவற்றிலும் மோசமானவையுண்டு. ஆகவே யாப்பு அல்லது யாப்பின்மைக்கு தானே ஒரு கவித்துவத் தகைமை இல்லை. செய்யுளும் வசனமும் கவிதைக்கான ஊடகங்கள் (Medium) மட்டும்தான். ஊடகம், தானே கவிதையாவதில்லை. அது கவிதையைத் தாங்கி நிற்கும் சாதனம்; அவ்வளவுதான். கவிதை என்பது கவிதைப்பொருளும், பொருளின் வெளிப்பாட்டு முறையும் இணைந்த ஒன்று. வெளிப்பாட்டு முறைதான் கவிதைப் பொருளுக்கு ஒரு கவித்துவத் தன்மையைக் கொடுக்கின்றதே தவிர செய்யுள் அல்லது வசனம் என்ற ஊடகம் அல்ல."
"1970 களின் பிற்பகுதியில் இருந்து குறிப்பாக 1977 க்குப் பிந்திய கடந்த பத்து ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ்க் கவிதையின் உள்ளீடு பெரிதும் மாறியிருக்கின்றது. கடந்த பல தசாப்தங்களில் சிங்கள பெளத்த பெருந் தேசியவாதத்தின் இன ஒதுக்கல் நடைமுறைகளின் விளைவாக வளர்ச்சியடைந்த தமிழ்த் தேசியவாதம் இக்காலப்பகுதியிலேயே ஆயதம் தாங்கிய விடுதலைப் போராட்ட வடிவத்தை எடுத்தது. ராணுவ ஒடுக்கு முறையும் ஆயுதப் போராட்டமும் ஏற்படுத்திய சமூக விளைவுகளின் எதிரொலிகளே கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத் தமிழ்க் கவிதையின் பிரதான பொருளாகியது. இத்தகைய கவிதைகளைக் கொண்ட பல தொகுப்புக்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. சேரன், ஜெயாலன் போன்ற சில நல்ல கவிஞர்களை இக்காலகட்டம் உருவாக்கியுள்ளது. 1980களில் சசியும் இக்காலக்கட்டத்தின் உணர்வுகளைத் தன்பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய 12 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இன்றைய வாழ்நிலையின் குரூரமான பல அம்சங்களை அவை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக பாடாத பாடல்கள், இப்போது, பிள்ளைக்கறி, ஆகியவை இன்றைய வாழ்நிலையின் குரூரம் பற்றிய மனதை உறுத்தும் படிமங்களைக் கொண்டுள்ள வீச்சான கவிதைகளாகும்."
இதோ, சண்முகம் சிவலிங்கத்தின் மீண்டும் எழுந்திருக்கையில் என்ற கவிதையில் வரும் சில வரிகள்;
எனது மயிர் பொசுங்கிவிட்டது எனது தோல் கருகிவிட்டது எனது காதுச்சோணைகள் எரிந்துவிட்டன இந்த ரனங்களோடுதான் மீண்டும் எழுந்திருக்கிறேன்
தூவானம் 33

Page 25
இந்த ஊனங்களின் தழும்புகளுடன்தான் நான் இனி வாழவேண்டும் எனது மனவெளியோ வெந்தவனம்போல் உள்ளது. தீப்பிடித்துக் கருகிய புற்கற்றைகள் இங்கொன்று அங்கொன்றாய் தெரிகிறது இடையே சாம்பல் கலந்த மண் அழகருகிய புற்கற்றைகளிலிருந்து இரண்டொரு பசும் முளைகள் சின்னச் சின்ன பச்சைப் படர்கள் தெரிகிறதா?
O6.O.5.1989.
34 அ.யேசுராசா

0 கேரளக் கலைத்துறையில் அரசின் தலையீடு 0 மக்கள் கலைஞனுக்கு வளரும் ஆதரவு
கலைப் படைப்புகள் கலை அளவுகோல்களால் மதிப்பிடப்பட்டு, அப்படைப்புகளும் கலைஞர்களும் கெளரவப்படுத்தப்படுவது சரியானதாகும். ஆனால் இதற்கு மாறாக சார்பான அரசியற் கொள்கை, மதம், தமது குழுவைச் சேர்ந்தவர் என்பன போன்ற அளவுகோல்களால் பொருத்த மில்லாத படைப்புகளும், கலைஞர்களும் முதன்மைகெளரவம் பெறுவதும், ஏனையோர் புறக்கணிக்கப்படுவதும் பல இடங்களில் நடந்துதான் வருகின்றது. அண்மையில் வந்த இந்தியா ருடே (மே, 15) ஆங்கிலச் சஞ்சிகையில்,கேரளக் கலைத்துறையில் நிகழும் இத்தகைய குறைபாடுகளைப்பற்றி, ரமேஷ் மேனன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளர்.
இரண்டு வருடங்களின் முன்னர் சி.பி.ஐ (எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (L.D.F) கேரளாவில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மார்க்சியவாதி என அடையாளங் காட்டுபவர்கள் 'வெகுமதிகளைப் பெறுகிறார்கள். அரசாங்கம் கலாசாரத்துறையில் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் பிராந்திய விருதுகள் (State Awards) அறிவிக்கப்பட்டபோது பிறவி என்ற மலையாளப் படத்துக்கு ஆறுதல் பரிசாக, இரண்டாவது இடமே கொடுக்கப்பட்டது, அதன் தயாரிப்பாளர் அப்பரிசை வாங்க மறுத்து விட்டார். இரண்டு கிழமைகளின் (põT GOTs (35 fluu 6.sbg.J856ff (National Awards) அறிவிக்கப்பட்டபோது, பிறவிக்கு நான்கு விருதுகள் அகில இந்திய ரீதியில் கிடைத்தன. சி. பி. ஐ. (எம்) தலைவரான
தூவானம், 35

Page 26
ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இடதுசாரிக்கருத்து முதன்மை பெற்றிருக்கும் 'ஒரே தூவல் பகூரிகள் என்ற படத்தைச் சிறந்தபடமென, பிராந்திய விருதுகள் அறிவிக்கப்படுவதற்குச் சில கிழமைகள் முன்பே அறிவித்திருந்தமை இங்கு குறிப்படத்தக்கது.
அநேக கலை, இலக்கிய விமர்சகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உலகப் பிரசித்தபெற்ற அடூர் கோபாலகிருஷ்ணன (எலிப்பத்தாயம், சுயம்வரம், கொடியேற்றம் போன்ற திரைப்படங்களின் இயக்குநர்). 1987இல் முகமுகம் என்ற படத்தினை எடுத்தார். பின்னாளில் சீரழிந்துபோகும் ஒரு இடதுசாரியைப் பற்றியது, அப்படம். அது வெளிவந்ததிலிருந்து மார்க்சியவாதிகள் பலருக்குத் தொந்தரவுதரும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனால், மலையாள சினிமாவின் பொன்விழாவினை அண்மையில் கொண்டாடிய 'கேரள திரைப்பட அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்' தனது நிகழ்ச்சிகளில், புகழ்பெற்ற இத்திரைப்படத்தைத் திரையிடவேயில்லை.
இவற்றைவிட சாஹித்ய அக்கடமி விருதும் அவதூறுக்குள்ளாகியுள்ளது. சிறந்த நாவலுக்குரிய பரிசு ஒரே தேச காரய நாங்கள் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எழுதிய காளி இலக்கிய உலகில் நன்கு அறியப்படாதவர், மார்க்சியக் கட்சியின் பிரசாரப் பத்திரிகைகளில் மட்டுமே இவர் எழுதி வருபவர்; அத்துடன் அந்த நாவல், சி.பி.ஐ (எம்) வெளியீட்டுப் பிரிவான சக்தியினால் வெளியிடப்பட்டதாகும். புகழ்பெற்ற எழுத்தாளர் ஒ.வி. விஜயனின் 'தர்ம புராணம்', 'குருஸாகரம்' போன்றவற்றுக்குமேலாக அந்த மேலோட்டமான நாவலுக்குப் பரிசு கொடுக்கப்பட்டமை, மலையாள விமர்சகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பரிசுக்குச் சிபார்சு செய்யப்பட்ட 10 நூல்களின் பட்டியலிலும் விஜயனின் நாவல்கள் இடம்பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
சாஹித்ய அக்கடமி, செந்நெறிக் கலைகளுக்கான அக்கடமி போன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளுக்கும் கட்சி சார்ந்தவர்களே புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு சம்பவத்தையும் இடதுசாரி அரசாங்கத்தின் சகிப்பற்ற தன்மைக்கு உதாரணமாக, ரமேஷ் மேனன் சுட்டிக்காட்டுகிறார்.
அதாவது, திருவனந்தபுரத்திலுள்ள அரச ஊழியர்கள் இழந்த சொர்க்கம் என்ற வீதி நாடகத்தை நடத்தினர். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிதைந்துபோன மக்களின் கனவுகளை இந்நாடகம் சித்திரிக்கின்றது. அதனால், அந்நாடகக் கலைஞர்களை அரசு கைது செய்திருக்கிறது
சி.பி.ஐ (எம்)ஐச் சேர்ந்த சவ்தார் ஹஸ்மி என்ற வீதி நாடகக் கலைஞர், நாடகமொன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் இந்திரா கொங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டாரல்லவா? (பார்க்க திசை' 183.89)
36 அ.யேசுராசா

அந்த மக்கள் கலைஞனின் படுகொலை இந்தியாவின் பல பகுதிகளிலும் கலைஞர்களின் எதிர்ப்பினைத் தூண்டிவிட்டிருக்கிறது. கலைஞர்கள் இணைந்த சவ்தார் ஹஸ்மி சமரோஹ் அமைப்பு, எதிர்ப்பு நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி வருகிறது.
ஹஸ்மிதாக்கப்பட்டு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, அதற்கு வெளியே, ஹஸ்மியின் நண்பர்களும் சிறு கூட்டத்தினரும் நின்றனர். அப்போது நாடகமேதை இப்ராஹிம் அல்ஹாஸி மேசையொன்றின்மேல் ஏறிநின்றபடி, தனது வாழ்நாளின் மிக மனவெழுச்சிவாய்ந்த பேச்சினை நிகழ்த்தினார். அந்த மரணத்தின் தாக்கம் அப்போது பலரால் சரியாக உணரப்படவில்லை.
மூன்று மாதங்களின் பின்னர் இப்படுகொலைபற்றி "சவ்தார் ஹஸ்மி சமரோஹ்' 25,000 வீதி நாடக நிகழ்ச்சிகளை இந்தியாவின் பல பகுதிகளிலும் நடத்தியிருக்கிறது. மாபெரும் ஓவிய விற்பனைக் காட்சி டெல்லியில் நடந்தது. ஹஸ்மியின் மரணத்தைச் சித்தரிக்கும எம்.எப். ஹ"செயினின் ஓவியமொன்று 10 இலட்சம்(இந்திய) ரூபாவுக்கு விற்பனையாகியிருக்கின்றது. 100 இற்கு மேற்பட்ட கவிஞர்கள்-இவர்களில் சிலர் கிழவர்கள் - தமது சொந்தச் செலவில் டெல்லி சென்று கவிதை வாசித்தார்கள். பொம்மலாட்டக் கலைஞரான டாடி பதம்ஜ, நவீன நடனக் கலைஞரான அஸ்தாத் தேபூ இருவரும் இணைந்து, ஹஸ்மியின் மரணத்தைச் சித்தரிக்கும் சில நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளனர். தொலைக்காட்சிக் கலைஞர் சவரிகுமார் ஹஸ்மியின் வாழ்வைச் சித்திரிக்கும் உணர்ச்சிகரமான திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். சோமநாத ஹோர் "தோழர்கள்’ என்ற சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
ஹஸ்மி பலரைக் கவர்ந்திருப்பதற்கு அவரது ஆளுமையும் ஒரு காரணம். தனது
அரசாங்க உத்தியோகத்தை உதறிவிட்டு வீதி நாடக இயக்கத்தில் அவர் தன்னை அர்ப்பணித்தார். எதிர்ப்புகளைச் சித்திரிக்கும் அரசியல் நாடகங்கள், பஸ்ஸிற்காகக் காத்து நிற்கும் மக்கள் முன்னிலையில் அவரது குழுவால் நிகழ்த்தப்பட்டபோது, மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். ஹஸ்மி முன்னரும் இரு தடவைகளில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
O2- Ο6-1989.
தூவானம் 37

Page 27
3 அ.யேசுராசா
259,1912, 14
0 தூரதர்ஷனில் பிறவி 0 சிங்கள எழுத்தாளரின் நூற்றாணரு
0 மேலைநாடுகளில் தமிழ்ச் சஞ்சிகைகள்
ஒன்பதாந் திகதித் திசையில், அகில இந்திய ரீதியில் 1988 இன் சிறந்த படமாகத் தெரியப்பட்ட பிறவி (மலையாளம்) பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தது. 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தூரதர்ஷனில் தற்செயலாக அப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டிற்று.
படம் மனதைக் கவர்ந்து விடுகிறது. காணாமற்போன மகன் ரகு'வின் வருகைக்காக ஏங்கும், தினமும் எதிர்பார்த் திருக்கும் தந்தையின் துயர மனோநிலை, பிறேம்ஜியின் தத்ரூபமான நடிப்பிற்கூடாக நன்கு வெளிக்கொணரப்படுகிறது. சகோதரி, தாய், வள்ளக்காரன், ரகுவின் சகமாணவர்கள் மூலமாகவும் அந்த இழப்பின் கனம் வெளிவருகிறது. எக்கட்டத்திலும் மாணவனோ (ரகு) அவனுக்குப் பொலிசாரால் நிகழ்ந்த மரணமோ காட்டப்படுவதில்லை. அவற்றைக் காட்டாமலேயே அவனுடன் தொடர்புறும் ஏனைய பாத்திரங்களின் மூலமாக எதிர்மறையாக, அவன் காணாமற் போன நிகழ்வின் கனம் -உறவுகளின் மன நெருக்கடியூடாக-நெஞ்சைத் தொடும் வகையில் சித்திரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க விடயம்.
சினிமா என்ற கலைவடிவத்தின் அடிப்படை அம்சமான காட்சிப்படுத்தல்' என்பது படத்தில் சிறப்பாகப் பேணப்படுகிறது. ஆரம்பக் காட்சிகளில் வரும் மழைமேகத்திரட்சி,
 

பெருங்காற்றினால் அலைப்புறும் தாவரங்கள், மழைமூட்டம் என்பன தொடரப்போகும் பாரிய நிகழ்வின் குறியீடாக அழகுற அமைகின்றன. பெரும்பாலான காட்சிகளில் மழை பெய்துகொண்டிருப்பதும், முக்கிய
பாத்திரத்திலும் கதையின் மையத்திலும் சூழ்ந்து கவிந்திருக்கும் துயரநிலையை எம்மில் தொற்றுவிக்கத் துணை செய்வதாய் இருக்கிறது. இவற்றை விட ஏனைய காட்சிகளும் அழகிய ஓவியங்கள் போல், இயல்பாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.
முக்கிய பாத்திரமான தந்தை பாத்திரம் மட்டுமல்லாது சகோதரி, வள்ளக்காரன், தேநீர்க்கடைக் கிழவன், சகமாணவர்கள், பொலிஸ் அதிகாரி போன்ற சிறு பாத்திரங்களும் மனதில் பதிகின்றன.
தனது சகோதரியுடனும் தந்தையுடனும் ரகு கதைக்கும் குரல்கள் மட்டும்
ஒலிக்கச் செய்தும் (அதைக் காட்சியாகக் காட்டாமல்), கடித வாசகங்களின் மூலமாகவும் குறித்த பழைய சம்பவங்களைப் பார்வையாளர்களிடம் பரிமாற்றும் உத்தி, நன்றாகக் கையாளப்படுகிறது.
உள்நாட்டமைச்சரும், உயர்பொலிஸ் அதிகாரியும் இரண்டொரு காட்சிகளிலேயே சித்திரிக்கப்பட்டாலும், அரசு இயந்திரக் கருவிகளின் கபடம் வெளிக்கொணரப்பட்டு விடுகிறது.
இப்படம் சர்வதேசப் பொதுமை வாய்ந்ததென, இதனைப் பார்த்த ஒரு வெளிநாட்டு விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற கிரேக்கத் திரைப்பட இயக்குநரான கோஸ்ரா கவாரிஸ் அலண்டே'யின் மறைவின் பின்னரான 'சிலி நாட்டுச் சூழலில் உருவாக்கிய மிஸ்ஸிங் என்ற புகழ்பெற்ற திரைப்படமும், இக்கருவினையே கொண்டுள்ளது. நீண்டகாலமாக நெருக்கடிச் சூழலில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கும் இது பொருந்தி வரக்கூடியதே. இதுதான், சிறப்பான கலைகளின் சர்வவியாபகத் தன்மைபோலும்!
மார்ட்டின் விக்கிரமசிங்ஹ சிங்கள இலக்கியத்துறையில் முக்கியமான ஒருவராகக் குறிப்பிடப்படுபவர். அவரது படைப்புகள் சில ருஷ்ய, சீன, யப்பானிய மொழிகளில் வெளிவந்துள்ளன. தமிழில் சில சிறுகதைகளும், மடொல்தூவ என்ற சிறுவர் நாவலும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. கம்பெரலிய என்ற நாவல் மட்டும் கிராமப் பிறழ்வு என்ற பெயரில் நூலுருவில் (1964இல்), வெளிவந்திருக்கிறது.
அவர் பிறந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் 1989 மே 29 - 1990 மே 29 வரை கொண்டாடப்படும். இதற்காக அமைக்கப்பட்ட குழு ஒரு நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளது. தர்மசிறி கமகேயைத் தலைவராகவும் சிறில்
தூவானம் 39

Page 28
சிறிவர்த் தனவை இணைப்புச் செயலாளராகவுங் கொண்ட அக்குழு, நிகழ்ச்சித்திட்ட விபரங்களைத் தமிழில் திசைக்கு அனுப்பிவைத்துள்ளது.
1. மார்ட்டின் விக்கிரமசிங்கஹவின் கூட்டுமொத்தமான படைப்புகளை அச்சிட்டு
வெளியிடல்.
2. அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிடல்.
3. அவர் பற்றிய தொலைக்காட்சி - திரைப்படங்களைத் தயாரித்தல்.
4. அவரது படைப்புகள் பற்றிய கட்டுரைகளின் தொகுதியை வெளியிடல்.
5நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் நூற்றாண்டுக் கருத்தரங்குகள், கண்காட்சிகளை
நடாத்துதல்.
6.அவரது படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் விழாவை எல்லா மாகாணங்களிலும் ஒழுங்கு செய்தல் என்பன, அதில் காணப்படும் திட்டங்களிற் சிலவாகும்.
பல்வேறு காரணிகளாலும் இலங்கையை விட்டுச்சென்று வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிற் சிலர், தனித்தும் கூட்டாகவும் சில தமிழ்ச் சஞ்சிகைகளை (இலக்கியம் , அரசியல் பற்றியவை) வெளியிட்டு வருகின்றனர். ஜேர்மனியிலிருந்து துாண்டில், புதுமை, சிந்தனை ஆகியனவும் ; கனடாவிலிருந்து பார்வை என்ற சஞ்சிகையும் 'திசைக்குக் கிடைத்துள்ளன. தமிழ்த் தட்டச்சில் பொறித்து, பிரதிசெய்யும் நவீனசாதனங்களின் மூலம் நன்றாக இவை தயாரிக்கப்படுகின்றன. இவை பற்றிய குறிப்புகள் பின்னர் 'திசையில் வெளியாகும்,
23.6.1989
4(அ.யேசுராசா

坐昭远呜15
0 ஈழத்து வெளியீடுகளுக்கு ஆதரவு
இலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்து வதாய் இலக்கியங்கள் அமையவேண்டுமென்ற 'தேசிய இலக்கியக் கோஷம் முன்வைக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடைய ஒரு தனித்தேசிய இனம்; அவர்களுக்குத் தனிநாடு (தமிழீழம்) வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கான போராட்டம் தீவிரம் பெறத்தொடங்கியும், 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
ஆயினும், இன்றைய வாழ்வின் பல்வகைக் கூறுகளை வெளிப்படுத்தும் ஈழத்து இலக்கியங்களோ, மொழியை வளர்க்கும் வேறு அறிவுத்துறை நூல்களோ, 1000 பிரதிகள் விற்பனையாவதென்பது கடினமானதாகவே இருக்கிறது. எமது இலக்கியங்கள், எமது நூல்கள் என்ற தேசிய உணர்வு மக்களிடையில் நன்கு வளர்ச்சிடைந்திருக்கின்றதென்று கூற முடியாது. பல்வேறு சிரமங்களிடையேயே - குறிப்பாக பொருளாதாரக் கவர் டங்களுடனேயே - நுால்கள் (பெரும்பாலும் அதை எழுதியவராலேயே) வெளிக்கொண்டு வரப்படுகின்றன. செலவுகளை ஈடுசெய்வதற்கு வெளியீட்டு விழா, அறிமுகவிழா ஏற்படுத்தி - பிரமுகர்கள், வியாபாரிகள் போன்ற பணக்காரரை அழைத்து, சிறப்புப் பிரதிகளைக் கொடுத்துக் கெளரவப்பிச்சையை வாங்க வேண்டிய பரிதாப நிலையும், தெரிந்தவர்கள் உறவினர்களிடையில் நுாற் பிரதிகளைத் திணிக்க வேண்டிய நிலையும் தான் நிலவுகின்றன. எழுத்தாளனின் சுயமரியாதை இவ்வாறு இழக்கப்படாமல், மனம் விரும்பி நூல்களைத் தேடி வாங்கி அவனை ஊக்கப்படுத்தும் சூழல் இன்னும் தான் உருவாகவில்லை.
தூவானம் 41

Page 29
நூல்களின் நிலைதான் இப்படியென்றால் சஞ்சிகைகளின் நிலையும் அதிகம் வேறுபட்டிருக்கவில்லை. எல்லாமே வர்த்தகமயமாகிவிட்ட சூழலில் தத்தமக்குரிய கொள்கைகள், நோக்கங்களோடு சிறு அளவிலேனும் இயங்குபவை சிறுசஞ்சிகைகள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கலை, இலக்கியம், சமூகம் பற்றிய அக்கறைகளுடன் இயங்குமிவை ஓரளவிற்காயினும் 'ஒளி'யை ஏற்றுகின்றன.
தற்போது யாழ்பாணத்தில் சில சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டுள்ளன. வெள்ளி விழா ஆண்டை அண்மிக்கப்போகும் மல்லிகை 1000 பிரதிகளே அச்சிடப்படுகிறது. 15 ஆண்டுகளாக வெளிவரும் நான் உளவியல் மஞ்சரி 1800 பிரதிகளும், 13 ஆண்டுகளாக வெளிவரும் அலை 500 பிரதிகளும் அச்சிடப்படுகின்றன. மேலும் தாயகம், உள்ளம், ஜீவசக்தி ஆகிய சஞ்சிகைகளும் வருகின்றன. அர்ச்சுனா 4000 பிரதிகள் அச்சிடப்படுகின்றது. ஆனால். இதுவொரு புறநடை, ஒரு தினப்பத்திரிகை நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் அதன் விநியோக, விளம்பர வசதிகள் இதற்கு உதவியாயுள்ளன. வெளிமாவட்டங்களிலிருந்து கொழுந்து, முனைப்பு, விடிவு, குமரன், வசந்தம் போன்றவை வருகின்றன. இவையெல்லாம் சிலரின் பண ஆதரவினாலும், விடாப்பிடியான திட மனோபாவத்தினாலுமேயே வரமுடிகின்றது.
இச்சூழலில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சு.டிவ கலாலா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை உற்சாகத்தை ஏற்படுத்துவதாயுள்ளது. அபிவிருத்திச்சபை நூலகங்கள், சனசமூக நிலையங்கள் என்பவை ஈழத்துநூல்கள், சஞ்சிகைகளில் ஒரு பிரதியினைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 600 சனசமூக நிலையங்கள் இருக்கின்றன. இவையிரண்டும் ஈழத்து நூல்கள் சஞ்சிகைகளில் ஒவ்வொரு பிரதியை வாங்கினால், 600 பிரதிகள் உடனடியாகவே விற்பனையாகிவிடும். எழுத்தாளனுக்குப் பணவருவாய் கிடைப்பதோடு, அவனது எழுத்து மக்களிடையில் பரவும் நிலையும் ஏற்படும் இதனால், தொடர்ந்து செயற்படும் மனோநிலையும் உருவாகும்.
செம்மையானதும் விரைவானதுமான செயலாக்கமே இதில் தேவைப்படுகிறது. கலை, இலக்கியங்களிலும் அறிவுத்துறை வெளியீடுகளிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளவரான ஆணையாளர், பயன் விளையத்தக்க நடைமுறைகளை விரைவில் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது?
O7.Ο.7.1989
42 அ.யேசுராசா

0 பத்திரிகைக் கவிதைகள் 0 மொழிபெயர்ப்புக் கவிதைகள்
பிரசுரத்திற்கென ஏராளம் கவிதைகள் திசைக்கு வருகின்றன. ஆனால் ஓரளவுக்காயினும் நல்ல கவிதைகள், அவற்றில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. நல்ல கவிதைகளில் இருக்க வேண்டிய வார்த்தைச்செட்டு, இறுக்கம், வெளிப்படுத்தப்படும் உணர்வின் ஒருமைப்பாடு, மனதை இதமாக வருடிச் செல்லும் தன்மை போன்றன இல்லாத வார்த்தைக் கொட்டல்களாகவே, பெரும் பாலானவை அமைந்துள்ளன.
புதியவர்களே ஆர்வமிகுதியுடன் அடிக்கடி இத்தகைய கவிதைகளை எழுதி, அனுப்பிவைக்கின்றனர். இவர்கள் இவ்வாறான கவிதைகளை எழுதுவதற்கு வேறு காரணிகள் இருந்தாலும், அவர்களின் கண் களிற் படக்கூடிய கவிதைகளிற் பெரும்பாலானவை இத்தன்மையனவாக இருப்பதும், அவற்றையே முன்னுதாரணமாகக் கொண்டு இவர்கள் எழுதமுனைவதும், ஒரு முக்கிய காரணியாகலாம் என நினைக்கிறேன். இக்கவிஞர்களிற் பலரும் பெரும்பாலும் பரந்த வாசிப்புப் பழக்கம் அற்றவராகவே இருப்பார்கள். அவர்களுக்குச் சுலபமாகக் கிடைக்கக்கூடிய இலங்கைப் பத்திரிகைகளின் வாரவெளியீடுகளிலும் சஞ்சிகைகளிலும் தரமற்ற படைப்புகளே கவிதைகள் என்ற பெயரில்-இடம் நிரப்பிகளாகவும் - வெளியிடப்படுகின்றன. அந்தப் பக்கங்களுக்குப் பொறுப்பாயுள்ளவரின் தேர்ச்சியடையாத ரசனை, பொறுப்பற்ற தன்மை, பலருக்குப் பிரசுரவாய்ப்புக் கொடுப்பதன் மூலம்தான் விற்பனையைப் பரவற்படுத்தல் போன்ற காரணிகளினால்தான் இவ்வாறு நடைபெறுகின்றன.
தூவானம் 43

Page 30
சஞ்சிகைகளிலும் இத்தன்மைகளைக் காணலாம். தம் மைக் கவிஞர்களெனக்காட்ட விரும்பிச் சிலர் ஒன்று சேர்ந்து புற்றீசல்கள் போல் வெளியிடும் 'றோணியோ வெளியீடு'களில், இவை பெருங்குப்பைகளாகக் கிடக்கின்றன. முதிர்ந்தவர்கள் (வயதில்) வெளியிடும் சஞ்சிகைகளிலும் ஆசிரிய பீடங்களில் குந்தியிருப்பவர்களின் பலவீனமான கவிதை ரசனையினாலும் (எமது எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் ‘கதை’ரசனைக்காரர்கள்தான். அவர்கள், சிறுகதைகளை விழுந்து விழுந்து படிப்பார்கள் கொஞ்சம் மிஞ்சிப் போனால் நாவல்களை மட்டும் படிப்பார்கள். கவிதைகளில் ஈடுபாடு கொள்வோர் மிகக் குறைவு) விளம்பரம் சேர்த்துத் தந்தவர்கள், 5,10 பிரதிகள் விற்றுத் தருபவர்கள். நன்கொடை தருபவர்களைத் திருப்திப்படுத்தமுனையும் வியாபார மனோபவத்தினாலும் தரமற்ற கவிதைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தரமானவை மட்டும் தான் அச்சில் வெளிவருகின்றன என்ற நம்பிக்கையோடு, பிழையானவற்றையே முன்மாதிரியாகக் கொண்டு, இளைஞர்கள் எழுதத் தொடங்குகின்றனர். புதுக் கவிதை மிக இலகுவானது, என்ற தவறான கருத்தும் பிரசுர மோகமுங்கூட அவர்களைத் திசை திருப்புகின்றன.
பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பொறுப்புடன் நடந்து நல்ல படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் போது, அவை அடிக்கடி புதியவர்களின் கண்களில் பட, அவர்களும் அதேவழியில் செல்ல முயல்வார்கள் மெல்ல மெல்ல தற்போதைய நிலைமைகள் மாறலாம்.
அவ்வப்போது, பிறமொழிக்கவிதைகள் தமிழ் மொழி பெயர்ப்பில் படிக்கக் கிடைக்கின்றன. நல்ல மொழிபெயர்ப்பாக அமைந்த கவிதைகள் தரும் அனுபவமும் உள்ளக்கிளர்வும் வித்தியாசமானவை. அவற்றில் வெளிப்படும் தற்புதுமையினை நான் விரும்புகிறேன். தமிழில் சுயமாக எழுதப்படும் கவிதைகளில், அத்தகைய அனுபவங்கள் அபூர்வமாய்த்தான் கிடைக்கின்றன. மாறுபட்ட நிலப் பிரதேசங்கள், காலநிலைகள், பண்பாட்டு மரபுகள், அறிவியல்தத்துவ வளர்ச்சிச் சூழல்களில் வேர்கொண்டு வெளிப்படும் உணர்வுகள் என்பதால், தம்மளவிலேயே ஒரு நூதனத்தன்மையை அவை கொண்டுள்ளன போலும்! நூதனப்பான்மைகள் மட்டுமல்லாது மனிதப் பொதுமைகளும் அவற்றில் அற்புதமாக வெளிப்படுகின்றன. எக்கவிதையென்றாலும் அவற்றின் ஆன்மாவைத் தரிசிக்க, உயிர்ப்பு நிறைந்த மொழிபெயர்ப்பு முன் நிபந்தனையாகும். புகழ்பெற்ற மயாகோவ்ஸ் கியை, கார்ஸியா லோர்காவைத் தமது மொழிபெயர்ப்புகளில் கொலை செய்த 'கவிஞர்கள் இலங்கையில் இருந்தார்கள்; வேறு பிறமொழிக் கவிஞர்கள் பலரைக் கொன்றவர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள்.
எங்கள் மஹாகவி கூறுவதுபோல் 'பாட்டினையே பாட்டாய்ப் பெயர்க்கும் பணி பெரிது; மீட்டும் முதல் நூல் விளைத்தோன் அவன் பட்ட பாட்டின் வழி ஆம் பெயர்ப்பு மறுபடைப்பே
44.யேசுராசா

கேட்டும் உணர்ந்தும் கிறுகிறுத்தும் கண்டதை, நாம் /ஊட்டம் பெறுதற்குயிரோடு கொண்டுவந்து.
தந்தாலேயே நாம் பரவசம் அடையலாம்.
பை ஜுயி என்ற சீனக் கவிஞர்.கி.பி. 772-846இல் வாழ்ந்தவர், சீனாவில் வாழ்ந்துவரும் ரெவி அலி என்ற ஆங்கிலக் கவிஞர், அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர், 'பைஜுயியின் இலக்கிய சிருஷ்டிக்கு ஒரு புல்லின் நுனியோ அல்லது மரமோ போதுமானது. என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இச்சீனக் கவிஞரின் எட்டுக் கவிதைகளைச் சுந்தர்ஜி தமிழில் மொழிபெயர்த்துத்தர, சுந்தரராமசாமி தனது காலச்சுவடு காலாண்டிதழில் அவற்றை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் எனக்கு மிகப் பிடித்த இரண்டு கவிதைகளை, 'தூவானம்' வாசகர்களுக்குத் தருகிறேன். இருப்பின் அவசமும், தெளிவின் எளிமையும், இதயத்தை வருடிச் செல்லும் இதமான உணர்வு வெளிப்பாடும் , இவற்றில் சாத்தியமாகியிருக்கிறதெனக் கருதுகிறேன்.
இரவில் வீடு திரும்புதல்
இப்போது ஒரு நூறில் பாதியை அடைந்துவிட்டேன். ஆனால் எனக்கென்று தனியாக கொஞ்ச நேரத்தை எப்போது பெறுவேன்? காலையில் மெழுகு வர்த்தியினர் வெளிச்சத்தில் வீட்டைவிட்டுக் கிளம்புகிறேனர்; சாயங்கால மத்தளம் முழங்கும்போது வீடு திரும்புகிறேன். என் வைன்ஜாடி காலியாகவோ
அல்லது
என் வீட்டுச் சுவரைத் தாண்டி மலையின் காட்சி தெரியாமலோ இல்லை. ஆனால் இவையெல்லாவற்றையும் ரசிக்க எனக்கு நேரமில்லை என்பதுதான் விஷயம். ஒவ்வொரு நாளும் மிகுந்த களைப்போடு வீடு திரும்புகையில் இநரே என் படுக்கையில் விழுகிறேனர். எனக்கு மட்டுமே பிரத்தியேகமான சந்தோஷம் இனி வருமா?
தூவானம் S

Page 31
என்னைப் பற்றிய ஒரு கவிதை
சிவந்த கன்னங்கள் - நரைத்த தாழ இது - வைனர் - குடித்த நான்.
கடைசியில் வருஷங்கள் எல்லாம் ஒழக்கழிந்தபின் இப்போது எல்லாம் வெறுமையாகத் தோன்றுகின்றன. நான் வயோதிகனாய் நோய் கண்டவனாய் ஒல்லியாய் இருந்தபோதிலும் கவிதைகளின் மீதான காதல் இன்னும் மீதமிருக்கிறது. Uரியமான ஒரு கனவான், ஒரு திரையில் வரையப்பட்டதான என் உருவ ஒவியத்தை வைத்திருக்கிறார் என்றறிந்த போது, கொஞ்சம் சிரித்தேன்.
28. O7.1989
46 அ.யேசுராசா

0 ரகசியமாக ஒரு சந்திப்பு 0 "1970இன் பின் எழுத்தாளனே இல்லை!"
யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபை நூலகங்களும் சன சமூக நிலையங்களும் ஈழத்துநூல்கள். சஞ்சிகைகளின் ஒவ்வொரு பிரதியை வாங்க வேண்டுமென்று கோரி, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சு.டிவகலாலா வெளியிட்ட அறிக்கை பற்றி
தூவானத்தில் (7.789) குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
இரண்டு கிழமைகளின் முன்னர் ஈழத்துநூல்கள், சஞ்சிகைகள் கொள்வனவு தொடர்பான சந்திப்பொன்று, யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்றிருக்கிறது. செயற்பாடு நோக்கிய நகர்விற்கு தூவானமும் காரணம் என்பது, சொல்லாமலே புரியும். இச் சந்திப்பில் சுடிவகலாலாவுடன் யாழ் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த இருவரும், தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தைச் சேர்ந்த இருவரும், 'மல்லிகை ஆசிரியரும் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இதனை ஒழுங்கு செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை. எனினும், ஒரு சிலருக்கிடையில் ‘மூடுமந்திரம்போல்’ இவ்வாறு நடத்துவது தவறென்பதைச் சுட்டிக்காட்டுவது எமது கடமை.
யாழ் மாவட்டத்திலிருந்து தாயகம், அலை, புதுசு, நான், உள்ளம், ஜீவசக்தி, ஆகிய சஞ்சிகைகளும் வெளிவருகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவை, முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், அலை வெளியீடு, தமிழியல், யதார்த்தா, சுயம் வெளியீடு ஆகிய நிறுவனங்கள் பல நூல்களை வெளியிட்டுள்ளன. தனியாக நூல் வெளியீடு செய்த-செய்யக் கூடிய எழுத்தாளர்கள் பலரும்
தூவானம் 47

Page 32
இருக்கிறார்கள். பொது நோக்கிலான திட்டமொன்றைப் பரிசீலித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கும்போது, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தவறாது அழைக்கப்படவேண்டும். மாற்றுக் கருத்துள்ளவர், வேண்டாதவர், தங்களுக்குச் சங்கடந்தருபவர் எனச் சிலரை ஒதுக்கிவைப்பது ஈழத்து இலக்கிய உலகில் புற்றுநோய்போல் பரவி வருகிறது. பரந்த நோக்கம் கொண்டவர்போல் பாவனை காட்டியபடி, ஆனால் ரகசியமாக அதற்கு மாறாக, "வயதில் முதிர்ந்த சில எழுத்தாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். இத்தகையவர்களின் 'குறுகிய மனோபாவங்களிற்குள் சிக்குப்படாது ஆணையாளர் செயற்பட வேண்டுமென, எதிர்பார்க்கிறோம். .
இதே சந்திப்பில் ஒரு எழுத்தாளர், 70 ஆம் ஆண்டுக்குப் பின் உருப்படியான - நல்ல எழுத்தாளர் - ஒருவரும் இலங்கையில் தோன்றவில்லையென்றும் 'திருவாய் மலர்ந்தருளினாராம்! சில கிழட்டு இலக்கியப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டு, தம்முடன் வரலாற்றின் இயக்கம் முடிந்து விட்டதாக நினைக்கின்றன! பாவம், இதற்கெல்லாம் காரணம் தாழ்வுச் சிக்கல்தான்.
எம். எல்.எம் மன்சூர், உமா வரதராஜன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், க.சட்டநாதன், பூரீதரன், சாந்தன், அ.யேசுராசா,நந்தினி சேவியர், செளமினி, பூரணி, குப்பிழான் ஐ.சண்முகன், ரஞ்சகுமார், அ.ரவி, அருள் சுப்பிரமணியம், பிரான்சிஸ் சேவியர், மாத்தளை வடிவேலன், மலரன்பன், லெமுருகபூபதி போன்றோர் தம்மளவில் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியஎழுபதுக்குப் பிந்திய - நல்ல எழுத்தாளர்கள். இன்னும் சிலரையும் இதில் சேர்த்துக் கொள்ள முடியும்.
இன்னுமொரு விடயம், ஐம்பதுகளின் பின் கூற்றிலும், அறுபதுகளின் முன் கூற்றிலும் எழுதிய சில எழுத்தாளருக்கு, வேறு சிலர் எழுதிக்கொடுத்தோ, பெருமளவு திருத்திக்கொடுத்தோ உதவியதான குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. சிலர் அத்தகைய கதைகளுக்குப் பரிசுகளும் பெற்றுள்ளனர்! 70 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட எந்த நல்ல எழுத்தாளரும் இவ்வாறான குற்றச் சாட்டுக்கு உள்ளக வில்லையென்பதும், விசேடமாய்க் குறிப்பிடத்தக்கதாகும்.
O8.1989
48 அயேசுராசா

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன்.
மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள். வந்து கொண்டிருந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி கதிரைகள் போதாமற் போகவே, சில பல்கலைக்கழக இளைஞர்கள் (கூட்ட அமைப்பாளர்களுடன் சம்பந்தப்படாதவர்கள்) தாமாகவே எழும்பிச் சென்று, அடுத்த அறைகளிலிருந்து கதிரைகளை அடிக்கடி எடுத்து வந்து வசதிசெய்து கொடுத்த செயல்மனதில் பதிந்தது.
மற்றப்படிக்கு, பிரமுகர்களுக்கும் காசுள்ள முதலாளிகளுக்கும் கெளரவம் கொடுத்து (என்று மறையும் இந்நிலை?) நடத்தப்பட்ட வழமையான கூட்டம்.
ஆய்வுரைகள் முடிந்தபின் நூலாசிரியர் தான் பேசவேண்டியதை நீண்ட கட்டுரையாக எழுதி வாசித்தார். பல இடங்களில் கருத்துக்கள் நெருடலை ஏற்படுத்தின; ஆயினும் அவற்றையெல்லாம் பற்றிக் கருத்துரைத்து உங்களைச் சோதிக்கும் எண்ணம், இல்லை.
ஓரிடத்தில் அவர் சொன்னார்; 'எனது முன்னையநாள் காதலியைப் பற்றிய நினைவுகள் மேலோங்கும் போது நான் மிகுந்த வெறுப்புக்குள்ளாகிறேன். பதட்டமடைகிறேன். யாரையாவது தாக்கவேண்டும என்று வெறி என்னுள் எழுகின்றது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய கதைதான் ‘.’ ஒரு மோசமான கதை. அம்புலிமாமாக் கதைபோல இருக்கிறது. இதிலுள்ள ஒரேயொரு நல்ல அம்சம் கவர்ச்சியைத் தரும் அந்தத் தலைப்புத்தான் என்று தோன்றுகிறது.
தூவானம் 49

Page 33
உண்மையில் இக்கதை மோசமான கதையென்பதில் சந்தேகமில்லை சரி! மோசமான கதையென்று தெரிந்தபின்பும் அதைத் தொகுதியில் ஏன் சேர்க்கவேண்டும்? அதிலும், மோசமான அக்கதையைத்தான் தொகுப்பின் தலைப்புக் கதையாக வைக்கவேண்டுமா? ஈழத்து இலக்கிய வாசகர்கள் 'அம்புலிமாமாக் கதை படிக்கும் தரத்தில்தான் இருக்கிறார்களா?
புத்தகத்திலுள்ள ஏழு கதைகளில் நான்கு மட்டும் ஏற்கனவே ஒரு சிறுசஞ்சிகையில் வெளியிடப்பட்டவை விளக்கப்படங்கள் வரைந்தவர்களின் பெயர்ப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. முன்புற பின்புற அட்டைப் படங்களைப் பெற்ற சஞ்சிகைகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது; அதில் ஒரு சஞ்சிகை (ஆனந்தி) இன்று வரை வெளிவராத சஞ்சிகை!
இனித்தான் சுவாரசியமான செய்தி இருக்கிறது. இந்த எழுத்தாளரின் கதையை முதலில் வெளியிட்டதோடு, ஏனைய மூன்று கதைகளையும் (அதில் இரண்டு மிக நீண்ட கதைகள்) வெளியிட்டு இலக்கிய உலகிற்கு அவரை நன்கு அறிமுகப்படுத்திய அந்தச் சிறு சஞ்சிகையின் பெயர் மட்டும், புத்தகத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை?
'தார்மீகப் பொறுப்பு என ஏதோவொன்று இருக்கிறதாகத் தான் எனக்கு நினைவு கூடவே, இதையெல்லாம் 'சுத்த அக்கப்போர் என்று அந்த எழுத்தாளர் சொல்லி விடுவாரோ என்று, பயமாகவும் இருக்கிறது!
25.8989
50 அ.யேசுராசா

0 நவீன சிற்பக் கண்காட்சி 0 கவின்கலை மன்ற நிகழ்ச்சியில்.
கடந்த இரண்டு கிழமைகளுக்குள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் சில கலை, இலக்கியத்துறையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. அவற்றில் இரண்டைப் பற்றிய குறிப்புகளை இங்கு தருகிறேன்.
யாழ், பல்கலைக்கழகத்தில் 8ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களாக, சிற்பக்கலைஞர் ஐ.விஸ்வலிங்கத்தின் சிற்பக் கண்காட்சியொன்று பல்கலைக்கழகக் கலை வட்டத்தின ஆதரவில் நடைபெற்றது.
சிற்பக்கண்காட்சி எமது பிரதேசத்துக்குப் புதுமையான ஒன்று: அந்த விதத்திலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட விஸ்வலிங்கம் தென்னிலங்கையில் - சிங்களவர் மத்தியில் - சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பவர்; தனது ஜீவனோபாயமாகச் சிற்பக் கலைத் துறையையே நம்பி இருப்பவர்.அவரது சிற்பங்கள் 31தலைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தற்போதைய நாட்டுச் சூழல் காரனமாக,
தென்னிலங்கையிலுள்ள அவரதுநல்ல சிற்பங்கள் பலவற்றை இங்கு காட்சிக்கு வைக்க முடியவில்லையெனவும் தெரிகிறது.
மரத்தைத் தனது ஊடகமாகக் கொண்டு பகுதி அரூபத் தன்மையுடன், சிற்பங்களை இவர் உருவாக்குகிறார். சில சாதாரணமானவை; ஆச்சரியத்தை எழுப்பாதவை, ஆனால், பெரும்பாலானவை அவரை ஒரு தேர்ந்த கலைஞனாக எம்முடன் பரிச்சயப்படுத்தி வைக்கின்றன.
தூவானம 51

Page 34
நீட்டல், குறுக்கல், சிதைத்தல் போன்றவற்றை தனது வெளிப்பாட்டு மனோபாவத்துக்கு ஏற்ப ஒத்திசைவுடன் கையாண்டு, அவர்படைத்துள்ள சிற்பங்களில் காவடியாட்டம், பாம்பாட்டி, ஒய்யாரம், பயணி, ஆண்டி, முதுமை, தாயும்சேயும், பெண் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தன.
முகங்கள்' என்ற தலைப்பில் அமைந்த பல செதுக்குத் துண்டுகளில் தேர்ச்சியான கலைத்திறனைக் காணமுடிந்தாலும், சிங்கள மக்களின் முகமூடிகளின் சாயலை அவை கொண்டிருப்பதாகவும் தோன்றுகிறது. இவற்றிலும் வேறுபல சிற்பங்களிலும், சிங்களக்கலாசாரத் தாக்கத்தையே காணமுடிகிறது. தனது வாழ்வின் பெரும்பாலான காலத்தைச் சிங்கள மக்களிடை அவர் கழிக்க நேர்ந்தமை, இதற்குக் காரணமாகலாம். தற்போது வட பிரதேசத்தில் வசித்துவரும் இக்கலைஞர், தமிழ்ப் பண்பாட்டம்சங்களைக் கொண்ட சிற்பங்களை அதிக அளவில் படைக்கவேண்டுமென்று அவா பலரிடம் எழுந்ததை, அவதானிக்கமுடிந்தது. கலைஞர் விஸ்வலிங்கம் இதனைக் கவனத்திலெடுப்பாரென நம்புகிறேன். முன்னோடி முயற்சியாய் அமையும் இக் கண்காட்சியை ஒழுங்கு செய்து நடத்திய 'கலை வட்டத்தினர் பாராட்டிற்குரியவர்கள்.
9ஆம் திகதி காலை, யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், பல்கலைக்கழக நுண்கலைத் துறையிலுள்ள கவின் கலை மன்றத்தின் நாதவாஹினி மலர் வெளியீடும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நுண்கலைத்துரைத் தலைவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது உரையில், முக்கியமான கருத்துகள் சிலவற்றைச் சொன்னார். 'இசையை இரசிக்கும் பண்பு, எமது பண்பாட்டு வாழ்வினுள் இன்னும் நன்கு வந்து சேரவில்லை. நுண்கலைத் துறையில் பயில்பவர்கள்கூட வேலை வாய்ப்பிற்குரிய சான்றிதழைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டே பயில்கிறார்கள். இந்நிலை - மனோபாவம் - மாறினால்தான் இத்துறையில் நாம் முன்னேறலாம்' என்று அவர்சொன்னார். அத்தோடு, இலங்கையில் கர்நாடக சங்கீதத்தின் வரலாறு பற்றிய கருத்தரங்கொன்றையும், இங்கு முன்பு பயின்று சென்ற கலைஞர்களின் இசை - பரதநாட்டிய நிகழ்ச்சிகளை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து நிகழ்த்த எண்ணியிருந்ததாகவும், அது நிறைவேறவில்லையென்றும் தெரிவித்தார். ஆனால் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. அத்துடன், ஓவியம் சிற்பம் போன்ற துறைகளும் நுண்கலைப் பீடத்தில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். இங்குதான் சில கேள்விகள் எழுகின்றன. இவர்கள் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத் திருந்தால் கர்நாடக சங்கீதம் பற்றிய கருத்தரங்கையாவது நடத்தியிருக்க முடியாதா? ஐந்தோ ஆறு வருடங்களாக சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கிறார். இக்காலகட்டத்தில் அவர் ஆக்கரீதியான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் ஓவியம், சிற்பம் போன்ற பாடநெறிகளை அங்கு ஆரம்பித்திருக்க முடியாதா?
S2 அ.யேசுராசா

நானறிந்தவரை இரண்டு மூன்று ஆண்டுகளின் முன்னர், பகுதிநேர ஓவிய விரிவுரையாளர்களைச் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சையொன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது: அ.மாற்கு போன்ற எமது முதிய ஓவியர்களும் அந்த நேர்முகப்பரீட்சைக்குச் சென்றிருந்தனர். இன்றுவரை அதுபற்றிய எந்த விபரமுமே வெளிவரவில்லை.
எமது ஓவிய, சிற்பக்கலைஞர்களின் ஆக்கங்களை நுண்கலைத்துறை பணம் கொடுத்து வாங்கி, அக்கலைச் சேகரிப்புக்களைக் கொண்ட தனிக் காட்சி அறையொன்றை ஆரம்பிப்பதும் நல்லது. இதன்மூலம் இத்துறைகளும் இத் துறைக் கலைஞர்களும் பரந்த முக்கியத்துவத்தினைப் பெறும் சாத்தியமேற்படும்.
உண்மையான கலை ஈடுபாடும் அக்கறையும் இருந்தால், இவற்றைச் செய்வது கடினமானதல்ல. ஒவியம் எமது பகுதி மக்களிடையில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுவிட்டது. தற்போது நவீன சிற்பமும் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பைப் பெறுகிறது. இச்சூழ்நிலையிலாவது பல்கலைக்கழகம் குறிப்பாக நுண்கலைத்துறை ஆக்கரீதியில் செயற்பட வேண்டுமென்பதே, இப்பிரதேசக் கலை வளர்ச்சியில் இதயபூர்வமான அக்கறைகொண்ட கலைஞர்களதும் கலை ஆர்வலர்களதும் வேண்டுகோளாக இருக்கிறது.
அன்றைய இறுதி நிகழ்ச்சியாகக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கர்நாடக இசையில் போதிய அறிவில்லாதவனாக இருந்தபோதிலும் அங்கு இடம்பெற்ற பாட்டுக்களை என்னால் இரசிக்கமுடிந்தது. குறிப்பாக, பண்ணிசை வழங்கிய இரு மாணவியரின் குரல்வளம் மனதைப் பிoரித்தது. இசையால் வசமாகா இதயமெது' என்று சும்மாவா சொல்கிறார்கள்? மனித புராணம் என்ற தலைப்பில் இசைத்தளிக்கப்பட்ட வாத்தியக் கூட்டிசை நிகழ்ச்சி, இனிய அனுபவத்தைத் தந்தது; பலரினதும் வரவேற்பை அது பெற்றது. இந்திய வானொலிகளில் ஒலிபரப்பாகும் 'வாத்யபிருந்தா போன்ற நிகழ்ச்சிதான் அதுவென்றாலும், இங்கு இத்தகைய நிகழ்ச்சிகள் புதியவை. இத்துறையிலான சொந்த முயற்சிகள் வரவேற்கப்படத்தக்கவையே. மனித புராணத்தையும், இதுபோன்ற வேறு சிலவற்றையும் சேர்த்து ஒரு செம்மையான இசை நாடாவைக் கவின்கலை மன்றம் வெளிக்கொண்டு வருமானால், இசை இரசிகரின் பாராட்டுதல்களை அது மேலும் பெற்றுக் கொள்ளும்.
இறுதியாக, கசப்பானதொரு செய்தி இனிமையாக இசையில் ஒன்றி இரசித்துக் கொண்டிருந்தவேளை, மண்டபத்தின் பின்புற மூலையிலிருந்த 'சிறு கும்பல் அடிக்கடி கையொலி எழுப்பியவாறு இடையூறு செய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை நடத்துவோரையும் அதை இரசிக்கக்கூடியிருந்த இரசிகர்களையும் அவமதிக்கும் வகையில், இச்சிறு மாணவர்குழு ஏன்தான் இப்படி நாகரிகமற்று நடந்து கொண்டதோ?
22.9.1989
தூவானம் 53

Page 35
0 ஆக்கபூர்வமான சந்திப்பு
ஈழத்து நூல் கொள்வனவு சம்பந்தமாக, பல்வேறுபட்ட எழுத்தாளர்கள் சஞ்சிகை - நூல் வெளியீட்டாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டுச் செயற்பட வேண்டியதைச் சுட்டிக் காட்டிய குறிப்புகள். 11-8-89 தூவானத்தில் வெளிவந்திருந்தன.அவற்றைக் கணக்கி லெடுத்து, அவ்வாறானதொரு சந்திப்பினை யாழ். மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சு.டிவகலாலா, சென்ற 14ஆம் திகதி ஒழுங்கு செய்திருந்தார்; அவருக்கு எமது பாராட்டுகள்.
எமது பிரதேசம், எமது மக்கள், எங்கள் கலைஞர்கள், அவர்களது படைப்புகள் என்பவற்றின் மீதான அக்கறையினை அவர் தனது உரையில் வெளிப்படுத்தி, நூல் கொள்வனவுநூற்கண்காட்சி தொடர்பான ஆலோசனைகளை, வருகை தந்தோரிடம் கோரினார்.
பதினான்கு பல்கலைக்கழக ஆசிரியர் கையெழுத்திட்ட ஆலோசனை அறிக்கையினை, எம். ஏ. நுஃமான் வாசித்து அவரிடம் கையளித்தார். ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அதில் அடங்கியிருந்தன. (அவற்றில் சில சென்ற வாரத்திசையில் வெளிவந்துள்ளன)
பின்னணியில் அமைதியாக இருந்து, ஈழத்து நூல்களின் வெளியீட்டில் காத்திரமான பணிகளை ஆற்றிவரும் இ.பத்மநாப ஐயரும் பயனுள்ள, பல்வகைப்பட்ட ஆலோசனைகளைத் தெரிவித்தார். ஒரு பக்கத்திற்கு இவ்வளவு என்று விலை குறிப்பதிலுள்ள பல்வேறு
54 அ.யேசுராசா
 

பிரச்சினைகள், வியாபார வெளியீடுகள் பெரிதும் தோன்றக்கூடிய அபாயம் - ஆகையால் தரத்தினைக் கணக்கிலெடுக்க வேண்டியதன் அவசியம், தர நிர்ணயக் குழுவில் வெவ்வேறு கண்ணோட்டமுள்ளோர் இடம் பெறவேண்டும் என்பன போன்றவற்றை அவர் முன்வைத்தார். எழுபதுகளில் இந்தியப் புத்தகத் தடையிருந்தபோது வியாபார வெளியீடுகள் இங்கு வெளிவந்ததைச் சுட்டிக்காட்டி, தரம் பேணப்பட வேண்டுமென்ற கருத்தை நா.சுப்பிரமணிய ஐயரும் வற்புறுத்தினார்.
நூல்களைத் தெரிவு செய்யும் பொறுப்பை நூலகர்களிடம் விட்டுவிடவேண்டும்: அக்குழுவில் எழுத்தாளர் யாரும் இருக்கக்கூடாது என, செம்பியன் செல்வன் தெரிவித்தார். ஆனால், இதில் ஒரு ஆபத்து உண்டு. நூலகர்கள் எல்லாம் நல்ல நூல்களைத் தெரியும் திறனுடையவர்களாக இருக்கிறார்களா? இன்று ஈழத்து நூல்களில் அக்கறை கொள்ளாது, இந்திய ஜனரஞ்சக நூல்களைப் பெருமளவில் கொள்வனவு செய்பவர்களும், இவர்களல்லவா?
வேறு பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்த இச்சந்திப்பில், சிலர் சம்பந்தமில்லாதவற்றையும் கதைத்தார்கள். யாழ். கச்சேரியில் முன்பு இயங்கிய கலாசாரக் குழுவின் குறைபாடுகளை ஒருவர் விஸ்தாரமாக விளக்கினார். இன்னொரு சஞ்சிகையாசிரியர், தேநீர் குடித்தபடி எழுத்தாளர்கள் கதைப்பதற்கு ஒரு மண்டபம் தேவையென்பதையும், இரண்டு எழுத்தாளர்கள் கஷ்டப்படுவதாகவும் அவர்களிற்கு உதவவேண்டுமென்பதையும் குறிப்பிட்டார். கூடியிருந்த நோக்கத்திலிருந்து விலகிய இவ்விருவரின் பேச்சுக்கள், பலரின்
பொறுமையைச் சோதித்தன.
இறுதியில் மார்கழி மாதத்திற்கு முன்னர் ஒவ்வொரு நூலிலும் 200 பிரதிகள் கட்டாயம் வாங்கப்படும் என, ஆணையாளர் தெரிவித்தார். நூற் கண்காட்சிக்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
எழுத்தாளர்களிடையில் ஒரு வித உற்சாகம் தெரிகிறது.
29.9.1989.
தூவானம
5
5

Page 36
0 கலை இலக்கியக் களத்தின் ஆய்வரங்கு
(7 6JTafiliationallraj607Li, alsTaaffaijay
1987 - 88 இல் ஈழத்தில் வெளிவந்த தமிழ் நூல்களின் ஆய்வு என்ற தலைப்பில், இரண்டு நாள் ஆய்வு அரங்கும் கலந்துரையாடலும், இரண்டு கிழமைகளின் முன்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நடைபெற்றது. கலை, இலக்கியக் களம் அமைப்பினர் இதை ஒழுங்கு செய்திருந்தனர்.
பல்வேறு பிரிவுகளில் அமைந்த 15 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. பொருத்தமானவர்களைக் கொண்டு ஏற்கெனவே கட்டுரைகளை எழுதிப்பெற்று, இவ்வாறான ஆய்வரங்கினை ஒழுங்கு செய்வதில் பல சிரமங்கள் உண்டு. ஆய்வரங்க நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ததோடு, வருகை தந்திருந்தோருக்குச் சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு போன்றவற்றையும் சிறப்புற வழங்கி உபசரித்த சிரமத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இவற்றையெல்லாம் நன்கு நிறைவேற்றிய களத்தினரையும், அவர்களிற்கு உறுதுணையாயிருந்த ஏனையோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆய்வுக் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் எல்லாக் கருத்துக்களும் எல்லோரையும் திருப்திப்படுத்திவிட முடியாது என்பது உண்மை. ஆயினும் அவையோர் குறிப்புரையின்போது ஒரு சிலரே கலந்துகொண்டனர். அதிலும் இரண்டாம்நாள் பொதுக் கலந்துரையாடலின்போது தான், சற்று அதிகமானோர் கலந்துகொண்டனர். அப்போது 'சூடான கருத்துக்களும் வெளிப்பட்டன. கட்டுரைப்
56 அ.யேசுராசா
 

பிரதிகள் முன்னதாகவே சபையோருக்கு வழங்கப் பட்டிருந்தால், அவற்றை வாசித்துவிட்டுக் கலந்துரையாடலில் கலந்துகொள்வது சுலபமாக இருந்திருக்கும். அத்தோடு கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து, ஒவ்வொருவருக்கும் கொடுத்த 20 நிமிட நேரத்தைச் சிறிது அதிகரித்திருந்தால், பல சிரமங்களைத் தவிர்த்திருக்கலாம். நேரம் போதாமல், கட்டுரை படித்தவர்கள் அந்தரப்பட்டார்கள். குறுகிய நேரத்துள் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும் என்றிருந்தமை, பார்வையாளர்களிற்குச் சுமையாகவும் அமைந்து விட்டது. ஆய்வரங்கு என்று வரும்போது ஒருநாள் நிகழ்ச்சியாக அமைவதே நல்லதென நினைக்கிறேன். உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வின்றி, மிக்க அவதானத்துடன் சபையோர் பங்குகொள்ள அது உதவியாயிருக்கும்.
கலை, இலக்கியக் களம் அமைப்பு 1986 இல் இருந்து செயற்பட்ட விபரங்கள் அடங்கிய சிறு பிரசுரமொன்று கைக்குக் கிடைத்தது. அதைப் படித்தபோது, இந்த அமைப்பின் செயற்பாட்டுத் திறன் மீது மதிப்புக்கலந்த பாராட்டுணர்வே எழுந்தது. தொடர்ந்து இவ்வாறு இயங்கிவரும் அமைப்புக்கள் எம்மிடம் அதிகம் இல்லை. இரண்டாம்நாள் கலந்துரையாடலின்போது, உணர்ச்சிவசப்பட்ட ஒரு எழுத்தாளர், "இது ஒரு அமைப்பே அல்ல" என்று குறிப்பிட்டது சரியானதல்ல; உணர்ச்சி வசப்பட்டதால் தான் அவர் இவ்வாறு பிழையாகக் கூறியிருக்கவேண்டும்!
எது எப்படியிருந்தபோதிலும், 'களம் தொடர்ந்தும் தனது வழியில் செயற்படுமென எதிர்பார்க்கலாம்.
‘எழுதுகிறவரெல்லாம் எழுத்தாளரல்ல என்பது போல், வாசிக்கிறவரெல்லாம் வாசகர் அல்ல' என எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருமுறை குறிப்பிட்டார்.
உயர்ந்த இலக்கிய இரசனை என்பது நல்ல நூல்களுடனான பரந்த அளவிலானதொடர்ச்சியான பரிச்சயத்தினாலும், சொந்த அனுபவங்களினாலும் பக்குவமடைகிறது. பொழுதுபோக்கு மனோபாவம், மேம்போக்கான இரசனை, உணர்வுச் செறிவினுள் அமிழமுடியாத மந்த மனோநிலை, வேறு கலை வடிவங்களில் அக்கறையின்மை என்பன இந்த உயர்ந்த இரசனைக்கு நிச்சயம் உதவப்போவதில்லை.
சாமானியர்கள் சாமான்யப் படைப்புகளில்தான் திருப்தியுறுவார்கள். குமுதம், ராணி, கல்கி, ஆனந்தவிகடன் இரசிகர்கள் - சாண்டில்யன்களை, புஷ்பா தங்கதுரைகளை, சுஜாதாக்களை, ராஜேந்திரகுமார்களை, குரும்பூர் குப்புசாமிகளைத் தான் இரசிப்பார்கள். தமிழை வளப்படுத்தும் ஜானகிராமன், சுந்தரராமசாமி, மெளனி, ஷண்முகசுந்தரம் , அசோகமித்திரன், வண்ணநிலவன, பாவண்ணன், அஸ்வகோஷ் போன்ற படைப்பாளிகளின் எழுத்துக்கள் அவர்களுக்குச் சுவாரசியம் தருபவையாக
தூவானம் 57

Page 37
இராது. மாறாக, போர் அடிப்பதாகத்தான் இருக்கும்; என்ன சார் ஒண்ணுமே புரியலையே? என்றுதான் சொல் வார்கள். 'போர் அடிப்பதாயும் புரியவில்லையென்றும் கூறும் இந்த இரசிகர்கள் பல இலட்சக்கணக்கில் இருந்த போதும், உண்மை இவர்களுக்கு எதிர்ப்பக்கத்தில் தான் இருக்கிறது, இலக்கிய வரலாறு இதை உறுதிப் படுத்தியபடிதான் நகர்ந்து செல்கிறது. இந்த இலட்சக் கணக்கானோர் தமது மந்த நிலைக்காக ஒருபோதுமே பெருமைப்பட முடியாது.
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, எழுத்துக்களை - எழுத்தாளர்களைக் கிண்டல் பண்ணும் எழுத்தாளர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களிற் சிலர் உயர்ந்த இரசனை பற்றி அக்கறை கொள்பவர்களையும், நல்ல எழுத்தாளர்களையும், நல்லபடைப்புகளையும் கிண்டல் பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். (!!?). 70 களிலேயே தமிழ்நாட்டிலும் இங்கும் தரமான விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டு விட்ட மு.வ, காண்டேகர் பாணியில், 1989 இலும் 'பொன்மொழிகளையும் உளவியல் மேற்கோள்களையும் கொட்டி எழுதும் ஒரு எழுத்தாளர், ரஞ்சகுமாரின் 'கோசலை சிறுகதை என்ன கூறுகிறதென்று தனக்கு விளங்கவேயில்லை என்று, அண்மையில் கூட்டமொன்றில் பெருமைப்பட்டுள்ளார்: "பொப் பாடல்கள் போல் ரஞ்சகுமார் கோஷ்டியினரின் கதைகள் இப்படித்தான்' என்றும் ஒரு கிண்டல். ரஞ்சகுமார் இன்றுள்ள சிறந்த எழுத்தாளரில் ஒருவர். 'கோசலை சிறுகதை அண்மைக்காலப் போராட்டச் சூழலையும், யாவருக்கும் பரிச்சயமான அவல உணர்வுகளையும் ஆற்றலுடன் வெளிப்படுத்தி, காலத்தின் கலைப்பதிவெனப் பாராட்டுப் பெற்ற கதை, இந்தக் கதையே விளங்கவில்லை யென்றால், இந்த எழுத்தாளர் பேனையை எறிந்துவிட்டுப் போய் ஏதும் சுவருடன் முட்டிக் கொள்ளலாம். இன்னொரு நல்ல கதையைப் படித்தபோதும், தூக்கம்தான் வந்தது என்றும் அவர் சொல்லியுள்ளார். இன்னொரு சஞ்சிகையில் சில நல்ல கதைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், "ஒரே இழுவல்; அறுவை என ஒருவர் (இளம் நாவலாசிரியர்?) குறிப்பிட்டுள்ளார். குமுதம், ஆனந்தவிகடன் இரசிகர்கள் நல்ல படைப்புகளைப் பற்றிச் சொல்வதைத் தான் இந்த 'எழுத்தாளர்களும் சொல்கிறார்கள்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், நல்ல படைப்புக்கள் தங்களிற்கு விளங்கவில்லையென்பதையும் போர் அடிப்பதையும், இவர்கள் தமது இரசனை முதிர்ச்சிக்கு ஆதாரம்போல் பெருமைப்பட்டுக் கொள்வதுதான்!
இந்த எழுத்தாளர்களிற்கு ஒன்று சொல்லலாம். உங்கள் படைப்புக்களை குமுதம் இரசிகர்களிடம் கொடுத்துப் பாருங்கள், நீங்கள் முன்பு சொன்னதையே உங்களுக்கும் சொல்வார்கள். போர் அடிக்கிறது; ஒரே அறுவை, இழுவல். என்று. அப்படியல்லாது அவர்கள் பாராட்டினாலும் நீங்கள் பெருமைப்பட முடியாது, ஏனென்றால், உங்களின் தரம் குமுதத்தை ஒத்ததுதான் என்று ஆகிவிடுமே!
27.1ο 1989
58 அ.யேசுராசா

°正荃22
0 வியூகம் என்றொரு சிறு சஞ்சிகை
0 பல்கலைக்கழக திரைப்படக் கழகம்
வர்த்தகமயமாக்கப்பட்ட SG) ITU நோக்கமே முதன்மைப்படுத்தப்பட்ட சூழலில் பெரும் நிறுவனங்களால் வெளியிடப்படும் குமுதம், ராணி, ஆனந்தவிகடன், இதயம் போன்ற "சஞ்சிகைகள்' வாசகரின் பொழுதுபோக்கிற்கு - போலி ரசனைக்குத் தீனிபோடுபவையாக இயங்கியே லாபம் சம்பாதிக்கின்றன. கலை-பண்பாட்டு வளர்ச்சி, மனித ஆளுமை வளர்ச்சி-அதன் வெளிப்பாடாக அமையும் பன்முகத் தன்மை கொண்ட உயர் கலை இலக்கியங்கள் பற்றி, அவை அக்கறைப் படுவதில்லை: காசு தான் அவற்றின் முதன்மைக் குறிக்கோள்.
இவற்றுக்கு மாறானவை தான் சிறுசஞ்சிகைகள் - சிறுவெளியீடுகள். தம்மளவில் கலை ஈடுபாட்டுடனும் தேர்ந்து கொண்ட கொள்கைகளுடனும், அவை இயங்கத் தொடங்குகின்றன. லாபநோக்கத்தைப் புறக்கணித்து, நலிவுற்றுச் சிதைவடையாது உயர் கலை விழுமியங்களைப் பேணிக்காக்க, அவை முயலுகின்றன. நிறுவன பலமற்ற நிலையில் இலட்சியநோக்கும் ஆர்வமும்கொண்ட சிலரின் செயற்பாடுகளே, இவற்றின் அடித்தளம். இவற்றின் வீச்செல்லைகள் மட்டுப் படுத்தப்பட்டிருந்தாலும், படர்ந்திருக்கும் இருட் சூழலில் தீப ஒளியேற்றி வழிகாட்டுபவை இவைதான். சாராம்சத்தில் இவை மந்த நிலைமைகளுக்கெதிராகக் கலகம் புரிந்தபடி சமூக வளர்ச்சிப்போக்கிற்கு உதவுபவை; முன்னோடுபவை. இந்த உண்மை புரியாத முதிரா உள்ளத்தினால், 500 பிரதிகள்
தூவானம 59

Page 38
அச்சிடும் சஞ்சிகைகளை புத்திஜீவிகளுக்கானவை' என்று சிலர் கிண்டல் செய்ய வந்துவிடுகின்றனர். தாம் 1500 பிரதிகள் அச்சிட்டுக் கொள்வதனால் மக்களுக்காக வெளியிடுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்! 500 பிரதிகள்புத்திஜீவிகள், 1500பிரதிகள்-மக்கள் என்பதுதான் அவர்களது விசித்திரமான Formula போலும் வேடிக்கைதான்.
கல்முனையிலிருந்து வெளிவரும் வியூகம என்ற சிறுசஞ்சிகையின் மூன்றாவது இதழ், கைக்குக் கிட்டியது. தமிழ்-முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து வெளியிட்டுவருவது இச்சஞ்சிகையாகும். இந்த இதழ் 36 பக்கங்களில், 10/- ரூபா விலையில் வெளிவந்துள்ளது. 9கவிதைகள், 3 சிறுகதைகள், 3 கட்டுரைகள், பேனாச்சித்திரங்கள், குறிப்புகள் என்பன இடம்பெற்றுள்ள.
க.நா.சு. சில குறிப்புகள் என்ற எம்.ஏ.நு.மானின் கட்டுரை சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டிய கட்டுரையாகும். க.நா.சுப்பிரமணியம் என்ற ஆகிருதி நிறைந்த - முழுநேர இலக்கியக்காரராக வாழ்ந்து மறைந்த-மனிதரின் பல்துறை ஈடுபாடு, பங்களிப்பு என்பவற்றை நிதானமான மதிப்பீட்டுடன் அறிமுகப்படுத்தும் கட்டுரையாகும் இது. கலாநிதி க.கைலாசபதி க.நா.சு பற்றி திறனாய்வுப் பிரச்சினைகள் என்ற நூலை எழுதியுள்ளார். இதுபற்றிக் கூறுகையில், "ITISA SLLY BOOK" என்று ஒரு முறை தன்னிடம் க.நா.சு குறிப்பிட்டதாகக் கூறும் நுஃமான், மேலும், "அந்நூலை இப்போது திரும்பவும் படித்து பார்க்கையில் க.நா.சு.வின் அபிப்பிராயத்தை நிராகரிக்க முடியாதென்றே தோன்றுகிறது. க.நா.சு.வைப் பற்றிய மதிப்பீட்டில் கைலாசபதி ஆய்வு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கு மாறாக ஒருவகை அரசியல் மனப்பாங் கையே வெளிப்படுத்தியிருக்கின்றார்" என்று எழுதுகிறார்.
சதாத் ஹஸன் மன்தோ உருது இலக்கியத்தில் சிறப்பிடம் பெறுபவர். கிஷன் சந்தர், இஸ்மத் சுக்தாய, ராஜேந்திரசிங் பேதி, குர்அதுல் ஐன்ஹதர் போன்ற முக்கிய உருது எழுத்தாளர்களின் படைப்புக்கள் ஏற்கெனவே தமிழில் வந்துள்ளன. ஆனால் மன்தோ தமிழில் அறிமுகமாவது இதுவே முதல் தடவை என நினைக்கிறேன். அவரது 9 பேனாச் சித்திரங்களை, உமாவரதராஜன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தருகிறார்; அவை உயிர்ப்புடன் விளங்குகின்றன. அவரின் வேறுபடைப்புகளுடன் பரிச்சயங்கொள்ள வேண்டுமென்ற அவாவினைத் தூண்டுபவையாகவும், அவை உள்ளன.
ராதாகிருஷ்ணனின் சுயதுக்கங்கள் என்ற மலையாளக்கதை நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சின்ன விஷயமொன்றைக் கொண்ட சிறு கதையானாலும், அது எழுப்பும் சலனங்கள் அதிகம் ஆழம் மிக்கவை. வீ.ஆனந்தன் அதனை அருமையாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
எம்.ஐ.எம்.றஊப் எழுதிய 48 மாதங்களும் 15 நாட்களும் என்ற கதை வித்தியாசமாகச் சொல்லப்பட முயன்றதாயினும் மனதில் பதியவில்லை.
60 அ.யேசுராசா

ஒருமைப்பாடு குன்றியிருத்தலும் மையப் பாத்திரம் வேலையை ராஜினாமாச் செய்வது நம்பகத்தன்மை குறைந்ததாக இருப்பது காரணமாகலாம். மொழி நடையிலும் வேறு சிலரின் தாக்கத்தைக் காணமுடிகிறது. 'கைபோன போக்கில் பகுதியில் மு.லெ.மஹற்ரூப் எழுதிய குறிப்புகளிலும் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலின் தாக்கம் தெரிகிறது.
கவிதைகளின் தேர்வில் ஆசிரியர் குழு இன்னும் கவனம் செலுத்துவது நல்லது இரண்டொரு கவிதைகளைத் தவிர ஏனையவை சாதாரணமானவை.
மலையாள சினிமா பற்றி சிறு கட்டுரையும், நூல் மதிப்புரையும் கவனத்தைப் பெறுகின்றன.
சஞ்சிகையின் அமைப்பு வித்தியாசமாய், இந்தியச் சிறுசஞ்சியையோ என்று வியப்புறக் கூடிய வகையில் அமைந்துள்ளது. நவீன போக்குகளில் ஈடுபாடு கொள்வோர் தவறாது வாசிக்க வேண்டிய சஞ்சிகையாகும் இது முகவரி, ஆசிரியர் குழு.1274 பிரதான வீதி, கல்முனை.
கொழும்பில் அண்மையில் இங்மார் பேர்க்மன் திரைப்பட விழா, ஜேர்மன் திரைப்படவிழா,சோவியத் திரைப்பட விழா ஆகியன நடைபெற்றுள்ளன. நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கொழும்பில் உள்ளவர்களுக்கே அடிக்கடி கிடைக்கிறது. இத்துறையில் யாழ்ப்பாணம் வரண்ட பாலையாக இருக்கிறது; கலை, இலக்கிய அமைப்புக்கள் திரைப்படங்களில் அக்கறை காட்டுவதில்லை. யாழ். பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கழகமொன்று இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். பல்கலைக்கழகம் போன்ற உயர்நிறுவனங்களில் பல்வேறு வசதிகளும் வாய்ப்புக்களும் உண்டு. அக்கறையுடன் செயற்பட்டால் கொழும்பிலுள்ளது போன்று, பல்வேறு நாடுகளினதும் நல்ல திரைப்படங்களைப் பார்ப்பதற்குரிய வசதிகளை, இங்கும் உருவாக்கமுடியும். நல்ல திரைப்படங்களுடன் ஏற்படக்கூடிய பரிச்சயம் இங்குள்ள கலை, இலக்கியக்காரரின் படைப்பாளுமையின் விசாலிப்பிற்கும் உதவக்கூடும். பல்கலைக்கழக திரைப்படக் கழகம் தனக்குரிய பொறுப்பினை உணர்ந்து, முறையாகச் செயற்படத் தொடங்குமா? இத்துறையில் தன்னாலான ஒத்துழைப்பை வழங்கத் திசை தயாராக உள்ளது.
c
10.1.1989
தூவானம் 61

Page 39
0 ஜேர்மன் திரைப்பட விழா!
கொழும்பிலுள்ள ஜேர்மன் கலாசார நிலையத்தில் , ஒக்ரோபர் 27-30 வரை மற்றொரு பார்வை (The Other View) என்ற தலைப்பிலான திரைப்பட விழாவொன்று நடைபெற்றது. இதில் நான்கு கதைத் திரைப்படங்கள் (Feature Films) காட்டப்பட்டன. படங்கள் எல்லாவற்றிலும் துணைத் தலைப்புகள் (SubTitle) ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டன.
மற்றொரு பார்வை' என்பது ஜேர்மன் குடியரசில் (FRG) திரைப்படத் தயாரிப்பிற்கும் விநியோகத்திற்குமாக உருவாக்கபபட்ட ஒரு அமைப்பாகும். 1985இல் ஏழு இளம் திரைப்பட இயக்குநர்களால் கூட்டுறவு முறையில் இது தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான வோனர் பென்ஸெல் இவ்வாறு கூறுகிறார். "எம்மை பிரச்சாரப்படுத்தும் மன்றமாக அல்லாது அவரவரின் கையெழுத்தைப் போல் சொந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் திரைப்படங்களை உருவாக்கு பவர்களுக்கான மேடையாகவே இது உள்ளது."
இந்த அமைப்பின் இன்னொரு ஆரம்ப உறுப்பினரான நிக்கோ ஹொவ்மான் என்ற இளம் இயக்குநர் விழாவில் இடம்பெற்ற படங்களை அறிமுகம் செய்வதற்காக நேரில் வந்திருந்தார். இவர் இதுவரை 7 திரைப்படங்களையும், 28 தொலைக்காட்சிபடங்களையும் உருவாக்கியுள்ளார். இவரது இரண்டு கதைப்படங்கள் விழாவில் காட்டப்பட்டன.
62.அ.யேசுராசா
 

1. 676Org 5,5605ussor us5i) (My Father's War)
17 வயது இளைஞனை யைமமாகக் கொண்டது இந்தப்படம். இரண்டாம் உலக மகா யுத்தத்தில்படை வீரனாக இருந்து இறந்துபோன தனது தந்தையைப் பற்றிய உண்மை விபரங்களை அவரது கடிதங்கள், நாட்குறிப்புக்கள் தாய்மூலமான செய்திகள் என்பவற்றால் அவன் அறிகிறான். தந்தை யுத்தத்தை விரும்பவில்லை. மனைவியுடனும் சேர்ந்திருக்க விரும்புகிறார். ஆனால் யுத்தம் அவர் மீது திணிக்கப்படுகிறது. தனது கணவர் மீது திணிக்கப்பட்ட பேர் வாழ்வை - அதனால் அவன் தன்னைப் பிரிந்ததற்கான நிலைமையினை - தாயும் வெறுக்கிறாள். இவற்றையெல்லாம் அறியவருவதில் மகனும் யுத்தத்தை வெறுக்கிறான். தனது வளர்ப்புப் புறாக்களைக் கூட பரந்த வெளியில் வைத்து ஒவ்வொன்றாகச் சுதந்திரமாய்ப் பறக்க விடுகிறான். இளம் நாஸி மாணவர் அணியில் அவன் இணைவதேயில்லை. இதனால் அவர்களின் பகைமை இவனைக் கிட்டுகிறது. கட்டாய இராணுவ தொண்டர் பயிற்சிக்கு இவனும் அழைக்கப்படுகிறான். விரும்பாத தாய் ஒரே மகன் என்பதால் அவனுக்கு விலக்களிக்கும் படி அதிகாரிகளிடம் வேண்டுகிறாள். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாததில், அவனும் பயிற்சிக்குச் செல்கிறான். தந்தையின் மீது திணிக்கப்பட்ட யுத்தம் மகன் மீதும் திணிக்கப்படுகிறது. வன்முறைச் சூழலில் மனிதர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு அதனுடன் ஒத்துச் செல்ல செய்யப்பட்ட ஜேர்மனிய வரலாற்றுச் சூழலைச் சித்திரிப்பதே தனது நோக்கமென இதன் இயக்குநரான நிக்கோ ஹொவ்மான் தெரிவிக்கிறார். மனதில் பதியும் முறையில் காட்சிப்படுத்தல்களும் இசையும் அமைந்திருக்கின்றன.
2. தந்தையர்களினதும் தனயர்களினதும் நாரு
(Land of Fathers, Land of Sons)
ஹொவ்மானின் இந்தப்படமும், தற்கொலை செய்து இறந்த தந்தையின் யுத்தகால செயற்பாடுகளை அறியமுயன்று, பின்னர் அறிந்தவற்றை பத்திரிகையில் வெளிப்படுத்தும் ஒரு மகனைப் பற்றியதே. மகன் பத்திரிகையாளனாக இருக்கிறான். செல்வந்தனான தந்தை திடீரெனத் தற்கொலை செய்கிறார், யுத்தகால நிலைமைகளை ஆராயும் குழு, குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடத்துகிறது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொள்கிறார். யுத்தத்தின் போது போலாந்தில் அவர் ஒரு தொழிற்சாலையை நடத்தியிருக்கிறார். அது முன்பு யூதர்களுக்கு சொந்தமாக, இருந்ததாகும். இராணுவ அதிகாரிகளின் உதவியோடு, தடுப்பு முகாம்களிலுள்ள யூதக் கைதிகளைப் பயன்படுத்தியே அங்கு உற்பத்தியை மேற்கொள்கின்றனர்; சக்தியற்றவர்கள் கொல்லப்படுகின்றனர். மறுபடியும் தடுப்புமுகாம்களிலுள்ளவர்க:இ கொண்டு வரப்படுகின்றனர். போரில் காயப்பட்டவர்களைக் கொண்டு செல்ல வேண்டிய ரயில் வண்டியை, பொய்யான அறிவிப்பின் மூலம் பயன்படுத்தி,
தூவாண்டி, ே

Page 40
அத்தொழிற்சாலை இயந்திரங்களை இறுதியில் தந்தை ஜேர்மனிக்குகொண்டு வருகிறார். அதன் மூலமே அவர்களது செல்வந்த வாழ்வு தொடர்கிறது. இவற்றையெல்லாம் போலந்துக்குச் சென்று மேற்கொண்ட விசாரணைகள் மூலம் மகன் அறிகிறான். தாய் எல்லா விடயங்களையும் தனக்கு மறைத்ததையும் தெரிந்து கொள்கிறான். தந்தை மீது பாசம் கொண்டிருந்த நிலையிலும், தான் அறிந்தவற்றை நடுநிலையில் நின்று பத்திரிகையில் வெளிப்படுத்துகிறான். அக்கட்டுரை உரிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
கடந்த காலத்தைச் சேர்ந்த கசப்பான நிகழ்வுகளைப் பற்றிய தனது தலைமுறையினருக்கு பேச, முந்திய தலைமுறை தயங்குகிறது.’ எனக் கூறும் ஹொவ்மான் இரண்டு தலைமுறையினருக்கு இடையில் 'உரையாடலை ஏற்படுத்த இத்தகைய கலை உருவாக்கங்கள் உதவுகின்றன எனக்கூறுகிறார். இவரது முந்திய படத்தினைப் போல் இதுவும் மனதில் பதியும் முக்கியமான படந்தான். ஆயினும் இடைக்கிடைவரும் திருப்புக்காட்சிகளும், வேறுபட்ட கால வரலாற்றுச் சூழலும் சிறிது குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
3. Drgon's Food
இதன் இயக்குநர் ஜான் ஷட், ஜேர்மனியில் அகதியாக இருக்கும் - தொழில் அனுமதிப்பத்திரம் இல்லாத - ஒரு பாகிஸ்தானிய இளைஞனையும், சொந்தத்தில் சிறிய சீன உணவுச்சாலையொன்றை ஆரம்பிக்க ஆசைப்படும் சீனனையும் பற்றியது இப்படம். அகதிகளின் இரங்கத்தக்க வாழ்நிலை இதில் சித்திரிக்கப்படுகிறது.
"ஜேர்மனி ஒரு செல்வந்தநாடு. ஆனால் ஏழை நாடுகளிலிருந்து வரும் அகதிகளை இரக்கமற்ற முறையில் கையாளுகிறது. அதிகாரிகள் இரக்கம் என்பதை அறியாதவர்கள். மனித ஜீவிகளின் மீது கவனத்தைக் குவிக்கும் முறையில் படமொன்றை உருவாக்கவே, நான் விரும்பினேன்" என இதன் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். இரக்கமற்ற அதிகாரிகள் திடீரென பாகிஸ்தானியனுக்கு ஜேர்மனியிலிந்து வெளியேற வேண்டிய கட்டளையை கொடுக்கிறார்கள். உணவுச்சாலையை ஆரம்பித்தநாளன்றே அவன் விமானத்தில் தனது நாட்டுக்கு அனுப்பப்படுகிறான். நண்பனான சீனனின் ஆசையும் நொருங்குகிறது. படத்தின் தலைப்பு இங்கு ஒரு ஆழ்ந்த குறியீடாக மாறுகிறது. சட்டம், நிர்வாக அமைப்பு என்பன டிராகன் ஆகவும் அகதி மனிதர்கள் அதன் பசிக்குரிய உணவாகவும் ஆகிப்போகும் அவலம். அகதிமனிதர்களின் அவலநிலைகளைச் சித்திரிப்பதன் மூலம் அவர்கள் பால் அனுதாபத்தைப் பார்வையாளரிடம் எழுப்புவதில் இயக்குநர் வெற்றி காண்கிறார்.
64 அயேசுராசா

4 Black & Without Sugar
நகைச்சுவை இழையோடும் ஒரு படம், லுாட்ஸ் கோனா மான் இதை இயக்கியிருக்கிறார். வீதிநாடகம் என்பதுப்ோல் வீதித்திரைப்படமென (Street Fim) இதுபற்றிச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான காட்சிகள் வீதியோரத்தில் தான் நடக்கின்றன. கதை ஐஸ்லாந்தில் நிகழ்கிறது. வீதிநாடகக் குழுவொன்றைச் சேர்ந்த ஒரு ஐஸ்லாந்து பெண்ணுக்கும் ஜேர்மனி சுற்றுலாப்பயணிக்கும் இடையில் ஏற்படும் உறவை இது சித்திரிக்கிறது. அந்த உறவும் நேசமும் இடையிடையில் அறுபடும்; பின் தொடரும், மறுபடி அறுபடும் என்றவாறு செல்கிறது. கையில் தாம் பிடித்துக்கொண்டுள்ள துணியினால் பாத்திரங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடக முறைக் காட்சிப்படுத்தல்கள், இனியாமையான இசை என்பன சுவாரசியத்தை எழுப்புகின்றன. குறிப்பாக கடற்கரையோரத்திலிருக்கும் காதலர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அலைகளைச் சிறிது நீடித்தநேரம், பிரேமுக்குள் காட்டும் காட்சிகளும் இசையும் அற்புதமானவை, ஆழமில்லாத கதையைக் கூட தனது திறமையினால் சுவாரசியம் மிக்கதாக உருவாக்கியிருக்கிறர் இதன் இயக்குநர்.
24.1.1989
தூவானம் 65

Page 41
0 முதற்பிரதி சிறப்புப் பிரதிகள் யாருக்கு?
தவறாக விளங்கிக் கொள்வதிலும், கிண்டலாக அதனைத் தூக்கிப் பிடிப்பதிலும் இலக்கியக்காரர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது, நமது அனுபவத்தில் புதியதொன்று அல்லத்தான்.
நூல்வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பிரமுகர்கள், வியாபாரிகள் போன்றோருக்கே முதற்பிரதி, சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டு வருவது பற்றிய அதிருப்தியினை, முன்பொருமுறை குறிப்பிட்டிருந்தேன்; அதில், எவ்வித முரண்பாடோ வரட்டுத்தனமோ இல்லை.
மனவிருப்புடன் உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால், எமது நூல் வெளியீட்டு விழாக்களில் என்ன நடக்கிறது? பிரமுகர்கள், வியாபாரிகளிடம் தாம் எதிர்பார்க்கும் பணத்திற்காகவே முதற்பிரதி சிறப்புப் பிரதிபெறும் கெளரவத்தை அவர்களுக்கு நூலாசிரியர் வழங்குகிறார், பணம் உள்ளவராக இருப்பதே அவரது தகுதியாகிறது. சமூக நோக்கு, இலட்சியம், மறுமலர்ச்சி, போராட்டம், இழப்பு என்றெல்லாம் பெரிதாக முழங்குகின்றோம். இறுதியில் பணம் , செல்வாக்கு உள்ளவர்களிடம் சரணடைகிறோம்; அவர்களும் தமக்குத் தகுதியில்லாத கெளரவத்தினைப்பணம் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்! இது சரியானதுதானா?
முதிய எழுத்தாளர், கலை-இலக்கியத் துறையில் ஆக்கபூர்வமான பணிபுரிந்தோர் - புரிவோர், சமூகநலன் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு உழைப்போர், கல்வித்துறையில்
6 அ.யேசுராசா
 

மதிப்புக்குரிய தொண்டாற்றுவோர் என்போரை அழைத்து முதற்பிரதி, சிறப்புப் பிரதிகளை வழங்கிக் கெளரவிப்பதை நாம் ஏன் செய்யமுடியாது?
கஷ்டப்படும் எழுத்தாளனுக்கு பண உதவி தேவைப்படுகிறது என்று சமாளிப்புக் கூறப்படுகிறது. யதார்த்தத்தில், இச்சடங்கில் பெரிய பணஉதவி கிடைக்கிறதா எனப் பார்த்தால், மிகச் சில புறநடைகளைவிட பொதுவில் பெரிய உதவியாக இருப்பதுமில்லை. புத்தகத்தின் விலை 40 ரூபாவென்றால், 150 அல்லது 200 ரூபாதான் கொடுக்கிறார்கள். மூன்று பேரை ஒழுங்குசெய்தாலும் கிடைக்கக்கூடியது 600 ரூபா. இது 15 பிரதிகளுக்குரிய தொகை. 1000 பிரதிகளை அச்சிடும் எழுத்தாளன் இந்தப் 15 பிரதிகளால்தான் கஷ்டம் நீங்கிவிடப்போகிறானா?
எப்படியாயினும் அடிப்படைக் கேள்வி என்னவென்றால், பொருத்த - மில்லாதவர்களை முதன்மை நிலையில் வைத்துக்கெளரவிப்பதன் மூலம் பணத்தையோ அல்லது வேறு இலாபங்களையோ எதிர்பார்க்கும் நிலைக்கு, நாம் -இலக்கியவாதிகள் (இலக்கிய மன்னர்கள்?) - தாழ்ந்து போகலாமா என்பதே!
S.12.1989.
தூவானம் 67

Page 42
8.அ.யேசுராசா
0 வ்றேம்வேர்ச் சஞ்சிகை
0 தர்மபோதனைக்கு வியாளங்கள் - பாரதி
உலகின் பல பாகங்களில் பிரபலமான ஃவ்றேம்வேர்க் (Framework) என்ற சஞ்சிகை, இலங்கைத் திரைப் படத்துறைக்கென்று ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளதென. தி ஐலண்ட பத்திரிகை மூலம் தெரிய வருகிறது. இச் சிறப்பிதழினால் உலகெங்கிலுமுள்ள திரைப்பட ஆர்வலர்களின் கவனம், இலங்கைத் திரைப்படத்துறையின் மீது படியும் சாத்தியமும் ஏற்பட்டுள்ளது.
இதன் அதிதித் தொகுப்பாளர்களாகச் செயற்பட்ட றொபேர்ட குரூஸ், அவர் லி ரத்ன விபூஷண ஆகிய இருவரின் செயற்பாட்டின் விளைவே இச்சிறப்பிதழாகும்.
இதிலுள்ள முக்கிய கட்டுரைகள் வருமாறு : 'நெருக்கடியும் கலாசார நடைமுறையும்' - றொபேர்ட் குரூஸ், ‘சிங்கள சினிமாவின் வரலாறு' - எட்வின் ஆரியதாஸ, 'அரசும் சினிமாவும்', அவர் லி ரத்ன விபூஷண, இலங்கையின் கலாசார, அரசியல் விவாதங்களில் சினிமா' - ஜயதேவ உயங்கொட, 'இலங்கைச் சினிமா - நிகழ்கால எதிர்காலக் காட்சி சுனிலா அபயசேகர, யதார்த்தத்தைச் சிறைப்பிடித்தல்'- தர்மசேன பத்திராஜவின் மாற்றீடான சினிமா, பியல் சோமரத்ன.
இதைத் தவிர புகழ் பெற்ற நடிகைகளான சுவர்ணா மல்லவாராச்சி, அனோஜா வீரசிங்க, இயக்குநரான திஸ்ஸ அபயசேகர ஆகியோரின் செவ்விகள் இடம் பெற்றுள்ளன.

கே.எஸ்.சிவகுமாரனின் 'இலங்கைத் தமிழ் சினிமா, காவலூர் ராசதுரையின் இலங்கையில் தமிழ்த் திரைப்படத்தயாரிப்பின் நிலைமை' என்ற கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது. இச்சிறப்பிதழில் எனக்கு மிகச் சுவாரசியமான விடயமாகத் தெரிவதென்னவென்றால், அதன் அட்டைப்படமேயாகும். யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பொன்மணி என்ற தமிழ்ப்படத்தின் (இதன் இயக்குநர் தர்மசேன பத்திராஜ என்ற சிங்களவர்) இறுதிப் பகுதியில் வரும் - லோங்ஷொட்டில் அமைந்த - மரண ஊர்வலக் காட்சியே அட்டையில் இடம்பெற்றிருக்கிறது!
கலையா? பிரச்சாரமா?' என்ற பிரச்சினை, இன்றும் முற்றுப் பெற்று விட்டதாகத் தெரியவில்லை; ஆனால் சிறிது தணிந்திருக்கிறதெனக் கூறலாம்.
எழுபதுகளுக்கு முன் (பிரபல எழுத்தாளர்களால்) எழுதப்பட்ட (இலங்கைச்) சிறுகதைகள் சிலவற்றை, ஒரு தேவைக்காக சமீபத்தில் படிக்க நேர்ந்தது. முற்போக்கு, பிற்போக்கு (?!), நற்போக்கு என அடையாளம் காட்டப்பட்டவர்களில் பல படைப்புக்கள் ஏமாற்றமே தந்தன. கதைகள் சொல்லப்படுகின்றன, கருத்துக்கள் சொல்லப்படுகின்றன ,ஆனால், கலைஞனின் அனுபவத்தை - கலைநயத்தை - வடிவ அமைதியைத் தான் காண முடியவில்லை. அன்று முதன்மைப்படுத்தப்பட்ட சமூக, அரசியல் கருத்துக்கள் காலமாற்றத்தில் தம் கவர்ச்சியையும் இழந்து விட்டன; வெறும் கருத்துக்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. சமூகப்பார்வை, அரசியல் பார்வை, நீதி போதனை உள்ளவைதான் இலக்கியங்களாக முடியும் என்று வெறுமனே வற்புறுத்தப்பட்டதன் விளைவே இது.
ஆனால், தமிழ்ச் சிறுகதை தோற்றம் பெற்ற ஆரம்ப நாட்களில் 'சிறுகதை வடிவத்தைக் கையாண்ட முன்னோடிகளில் ஒருவரான பாரதியாரின் பின்வரும் கருத்தொன்று, இன்று பார்க்கும் போதும் ஆச்சரியத்தினைத் தருகிறது. அன்றைய நிலையிலும் அவர் தெளிவாகவே சிந்தித்திருக்கிறார்; "பொதுவாக நான் கதைகள் எழுதும்போது, வெறுமனே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்கள் எழுதுவேன். கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன்."
வியாஸங்களை அல்லது வியாஸங்களின் பகுதிகளை இலக்கியம்' என்ற பெயரில் எமது எழுத்தாளர்கள் எழுதும் போதுதான், பிரச்சாரம் என்ற பிரச்சினையே வருகிறது.
தூவானம் 69

Page 43
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கொம்யூனிஸ்ற் எழுத்தாளரும் விமர்சகருமான சிதம்பர ரகுநாதனின் கருத்தை இங்கு தருவதும், பொருத்தமானது. அவர் இவ்வாறு சொல்கிறார்: "நல்ல கருத்தை மட்டும் பிரதிபலிப்பதால் ஒன்று நல்ல இலக்கியமாகி விடுவதில்லை. நல்ல கலையழகோடு பிரதிபலிப்பதுதான் நல்ல இலக்கியமாகும் , மனிதனின் மகோன்னத உணர்ச்சிகளைச் சிறந்த சொல்லோவியமாக்கும் இலக்கியங்களும் அழிவதில்லை. இலக்கியம் வெறும் விளம்பரமல்ல. இலக்கியத்தை விளம்பரக் கருவியாகப் பயன்படுத்த முனையும்போது, அந்த இலக்கியம் கருவிலேயே செத்து விடுகிறது. விளம்பரம் மட்டுமே மிஞ்சுகிறது; கலை செத்துவிடுகிறது. விளம்பரம் செய்வது மட்டும் கலையாகிவிடாது. விளம்பரத்தையும் கலையழகோடு செய்யும்போதுதான் இலக்கியமாகிறது"
(அடிக்கோடுகள் என்னால் இடப்பட்டவை)
d
9.1.1990.
70 அ.யேசுராசா

0 ஒரு வகைமாதிரிப் பாத்திரம்!
அண்மையில் வெளிவரத்தொடங்கிய சஞ்சிகையொன்றில், இலக்கியா என்ற பெயரில் ஒரு 'குட்டி எழுத்தாளர்' குறிப்புகளை எழுதிவருகிறார். பன்றி பல குட்டிகை ஈனுவது போல் சிறுகதைகள், குறுநாவல், நாவல் எனப் பலவற்றை நீண்டகாலமாக எழுதி வருவதால் 'ஆரம்பமல்ல முடிவுதான் என நினைக்கும்படியாக, அவரது 'முதிரா உள்ளமே அவற்றில் வெளிப்படுவதால், இன்னமும் 'குட்டி எழுத்தாளராகத்தான் அவர் இருக்கிறார்.
ஏனைய எழுத்தாளரைப் பற்றி எழுதுகையில், 'சதாகாலமும்
ஒருவர் மற்றவரை அவதுாறு சொல்லிக் கொண்டு.
உள்ளனர்:"கோமாளித்தனம்', 'வெறும் வரட்டுத்தனம்' என்று இவர் அடிக்கடி குறிப்பிடுகிறார். ஆனால் இவரது குறிப்புகளிலும் இவைதான் காணக் கிடைக்கின்றன. அரைவேக் காட்டுத் தன்மையும் முரண்பாடுகளும் கொண்டவையாய் அமைந்து, பிரக்ஞை உள்ள எந்த வாசகனிடத்தும் கேலிச்சிரிப்பைத்தோன்றச் செய்பவை, இக்குறிப்புகள். தன்னை யார் யாரோ 'எழுத்தாளனென்று இன்னமும் அங்கீகரிக்கவில்லையாம்(?) என்ற எரிச்சலும், இவரிடம் இருக்கிறது; அந்த எரிச்சல், ஒருவித வக்கரிப்புடனும் முதிராத்தனத்துடனும் அடிக்கடி எழுத்தில் வெளிப்படுகிறது.
ஈழத்தின் நல்ல எழுத்தாளர்களில் இருவரான க. சட்டநாதன், உமாவரதராஜன் ஆகியோரின் சிறுகதைகளின் சில பகுதிகளைப் பிரித்தெடுத்துக் குறிப்பிட்டு, அவர்களை ஆபாஸ் எழுத்தாளர்கள் என்ற மாதிரிச் சித்திரிக்கவும் இரண்டு இதழ்களில் இவர் முனைந்துள்ளார்; பரிதாபகரமானதொரு முயற்சி
தூவானம் 11

Page 44
நமது குட்டி எழுத்தாளரின் பார்வையிலேதான் கோளாறு இருக்கிறதே தவிர, அந்த எழுத்தாளர்களில் அல்ல. பாலியல் மன உறுத்தலினால் (Sexual obsession) இவர் அவதிப்படுகிறாரென்றால், பொருத்தமான உளவியற் சிகிச்சையே அதற்குப் பரிகாரமாக அமையமுடியும்.
இரண்டு தடவைகளில், வலுச்சண்டைக்கு இழுக்கும் தன்மையில், நீலாம்பரனைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சிறு சஞ்சிகைகளின் தன்மை, பணிபற்றிய எனது கருத்துக்கள் துவானத்தில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால், அவற்றை அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிய வில்லை பரவாயில்லை. எனது கருத்தையோ வேறு யாருடையவும் கருத்தையோ. சரியாக மேற்கோள் காட்டும் திறனையாவது அவர் வளர்த்துக் கொள்ளக் கூடாதா? தப்புத்தப்பாக மேற்கோள் காட்டுகிறாரே!
திசையில் ஆசிரியர் குழுவென ஒன்று இல்லை. ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே - மு.பொன்னம்பலம் - இருக்கிறார். திசையின் பல இதழ்களில் அவரது பெயர் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனைய பத்திரிகைகளையும் போல், 'திச்ை'யில் வெளியாகும் விடயங்களுக்கும் ஆசிரியரே பொறுப்பு. இந்த எளிய உண்மைகூட நமது 'குட்டி எழுத்தாளருக்குத் தெரியவில்லையே! இதனாலேதான் போலும் நீலாம்பரனின் தலையில் சில பொறுப்புகளைச் சுமத்திஏதோ சில 'இலக்கியச் சதி நடவடிக்கைகளில் (?!!!) நான் ஈடுபட்டதுபோல் - அவதூறு சொல்கிறார். இதை இவரது கோமாளித்தனத்தின் உச்சமெனச் GeFTG)6)gust DIT?
நேரிற் சந்திக்கையில் தனது அபத்தக் கருத்துக்களை யாரும் சுட்டிக் கேள்வியெழுப்பும் வேளைகளில், அசடு வழிய மெளனத்தைக்கடைப் பிடித்துவிட்டு, ஒட்டிக்கொண்டுள்ள சஞ்சிகையில் புனைபெயரில்மறைந்து கொண்டு குத்தல்களை எழுதும் இவரது 'வீரமும் கேலிக்குரியதாய்த்தான் இருக்கிறது
ஒருவிதத்தில், ஈழத்து இலக்கிய உலகின் ஒரு 'வகைமாதிரிப் பாத்திரமாகவும்
இவரைக் கொள்ளலாம் அல்லவா?
6.2.1990.
72 அ.யேசுராசா

0 கல்கத்தாவில் உலகத் திரைப்பட விழா!
இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்ட பொழுது போக்குத் திரைப்படங்களே, பெரும் எண்ணிக்கையில் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது, பலரும் அறிந்த உண்மை. ஆயினும் கலைத்தரம் பேணும் படைப்புகள், பல்வேறு இந்திய மொழிகளில் சிறு தொகையிலாயினும் உருவாக்கப்பட்டு வருவதும், உண்மையாகும். கலை வளர்ச்சியை நோக்காகக் கொண்டு பல்வேறுவகைகளில், அரசு செயற்பட்டுவருகிறது.
உலகின் சிறந்த திரைப்படக் காப்பகங்களில் ஒன்று-National Film Archives - அங்கு அமைக்கப்பட்டுள்ளது. பூனேயில் திரைப்பட-தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது, கலைப்படங்களின் தயாரிப்பிற்கு நிதி உதவி வழங்கி உதவ, திரைப்பட வளர்ச்சி நிதியுதவிக் கூட்டுத்தாபனமும் இயங்கிவருகிறது. இதைவிட, உலக வளர்ச்சியை அறிமுகப்படுத்தவும் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும், ஆண்டு தோறும் உலகத் திரைப்பட விழாவும் ஒழுங்கு செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி 10-20 வரை 13 ஆவது உலகத்திரைப்பட விழா கல்கத்தாவில் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற வங்காள இயக்குநரான சத்யஜித்ரே சிறப்பு விருந்தினராக வருகை தந்து, இவ்விழாவினை ஆரம்பித்து வைத்தார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ஃவ்றொன்ற் லைன், இந்தியா டுடெ ஆங்கிலச் சஞ்சிகைகளும்; இலங்கையின் ஐலன்ட் பத்திரிகையும் இவ்விழா பற்றிய விபரங்களை
தூவானம 73

Page 45
வெளியிட்டுள்ளன. சில குறைபாடுகள் இருந்தாலும், சமகால இந்தியக் கலைஞர்களின் கலைத்திறன்களையும் சென்ற வருடத்தின் உலகத்திரைப்பட வளர்ச்சி நிலைகளையும் வெளிக்காட்டும் ஒன்றாக, இதனைப் பற்றிக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து சென்ற அஷ்லி ரத்னவிபூஷண என்பவரும் இவ்வாறுதான் குறிப்பிட்டுள்ளார்.
40 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 230 படங்கள் காட்டப்பட்டன. இந்தியத் திரைப்படங்கள் 57.அவற்றுள் 21 படங்கள் பனோரமா' பிரிவில் காட்டப்பட்டன, இப்பிரிவில் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களின் திரைப்படங்கள்
காட்டப்பட்டன.
இவற்றுள் "சத்யஜிரேயின் கண சத்ரு மிகச் சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது. நாடக மேதை இப்சனின் An Enemy Of the People என்ற நாடகத்தைத் தழுவி, இது உருவாக்கப்பட்டது. பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு காணாமற்போகும் கல்லூரி மாணவனான மகனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தந்தையின் ஏக்கத்தை மையமாகக் கொண்டது. ஷாஜியின் பிறவி என்ற மலையாளப்படம். நிலப்பிரபுக்களின் உல்லாசபோகத்துக்கு கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ள பெண்களைப் பற்றியது, நரசிங்கராவின் தெலுங்குப்படமான தாசி, பெண்கள் ஆலமரத்துக்குத் திருமணம் செய்து வைக்கப்படும் - 19 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் நிலவிய - கொடிய வழக்கத்தைச் சித்திரிப்பது, அபர்ணா சென என்ற பெண் இயக்குநரின் சதி என்ற திரைப்படம். சயீட் மிஸ்ராவின் சலீம லங்டே பெ மற்றொ என்ற ஹிந்திப்படம், பம்பாய்ச் சேரியொன்றில் வசிக்கும் - தனது முஸ்லிம் அடையாளத்தை இழந்துவிட்ட - 'லும்பன் ஒருவனைச் சித்திரிக்கிறது; இதனால் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மிரினாள சென இயக்கிய எக் தன் அச்சனக்; கோவிந் நிஹலானி யின் ஜஸிரே; அடூர் கோபால கிருஷ்ணனின் மதிலுகள்’ (வைக்கம் முகம்மது பஸிரின் குறுநாவல் - தமிழிலும் வந்துள்ளது); புத்தாடெப் தாஸ்குப்தா வின் பஹற் பஹதூர் ஜெயபாரதியின் (குடிசை, ஊமை ஜனங்கள் ஆகிய படங்களை முன்பு இயக்கியுள்ளார்) உச்சி வெயில் (தமிழ்ப்படம்) ஆகியனவும் இதில் இடம்பெற்றன.
ஏனைய நாட்டுப் படங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படும் படங்கள் சிலவற்றின், விபரங்கள் வருமாறு:
Blue Eyed என்ற மேற்கு ஜேர்மன் படம், ஆர்ஜன்ரைனாவில் ஆளும் இராணுவக் குழு மேற்கொண்ட கொடூரங்களைச் சித்திரிக்கிறது. Black Rain என்ற ஜப்பானியப் படம், 1945ல் 'ஹிரோசிமா யுத்தக் கொடுமைகளையும், மனிதத் துயரங்களையும் வெளிப்படுத்துகின்றது. Romero என்ற படம், சல்வடோர் விடுதலை இயக்கத்துக்கு உதவியதற்காகக் கொல்லப்பட்ட, ஆர்ச் பிஷப் ஒஸ்கார் றொமெரோவைப பற்றியது. ஜோன் டல்கன் என்ற அவுஸ்திரேலிய இயக்குநர், அமெரிக்காவில் இதை உருவாக்கியுள்ளார்.
74 அ.யேசுராசா

ஆசியாவில் திரைப்படத்துறை கலாரீதியாக நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில், தென்கொரியாவும் ஒன்றாகும். யொங் கியுவன் பயெ என்ற இயக்குநரின் Why Has Bodhi - Dharma Left for the East 6"corp ULib Q6m) at QUGT55 LD5 பின்னணியில், ஓர் இளம் துறவியின் வாழ்வைச் சித்திரிக்கிறது. இயக்குநரின் தத்துவப் பார்வை, பாத்திரச் சித்திரிப்பு, படப் பிடிப்பு, படத் தொகுப்பு, படைப்புருவாக்கத்தில் காட்சிப் படிமங்களின் இணைவு என்பன இதில் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டப்படுகிறது.
The Prosecutor என்ற பல்கோரியப் படமும் சிறப்பானதொன்றாகும். தனது சகோதரியின் காதலனும் தனது நண்பனுமான ஒருவரைக் கைதுசெய்வதற்கான ஆணைப்பத்திரத்தில் கையெழுத்திடும் அதனால் மன நெருக்கடிகளுக் குள்ளாகும் - ஒரு 'ஸ்ரேற் கவுன்சிலர் இதில் நுட்பமாகச் சித்திரிக்கப்படுகிறார்.
'மீள் நோக்கு' (Retrospcctive) பிரிவில் சார்ளி சப்ளின், ஸேர் லோறன்ஸ் ஒலிவியர் ஆகியோரின் படங்கள் காட்டப்பட்டன, வேறு சில இயக்குநரின் படங்களும் இதில் இடம்பெற்றன.
அகிரா குரோஸாவா, கொண் இச் சிகாவா ஆகிய மேதைகளுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு யப்பானியரான கெய்ஸுகே கினோவரிற்றா வின் 11 படங்கள் காட்டப்பட்டன.
கிறிஸ்ரோஃவ் கியெஸ் லோவ்ஸ்கி என்ற போலந்து இயக்குநரின் 4 படங்கள் இடம்பெற்றன. ஆழ்ந்த அன்பு-மனிதாபிமான ஈடுபாடு இவரது படங்களின் மையமெனச் சொல்லப்படுகிறது.
இத்தாலியச் சகோதரர்களான பவோலோ, விற்றேறியா ஆகியோரின் படங்களும் இப்பிரிவில் காட்டப்பட்டன.அரசியல், சமூக விமர்சனங் கொண்டவை இப்படங்கள். இந்த இருவரினதும் விமர்சன நுண்மதித் திறனும், கருத்துக்களை - தீர்வுகளை - வெறுமனே ஏற்க மறுக்கும் பண்பும் குறிப்பிடத் தக்கவையாய்ச் சொல்லப்படுகின்றன.
2.399 O.
தூவானம் 75

Page 46
ர 'மல்லிகை வெள்ளி விழா மலர் வெளியிட்ருவிழா!
மல்லிகை சஞ்சிகை 25 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன் வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா, சென்ற 10ஆம் திகதி, யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. 'திசை”க்கோ அல்லது நீலாம்பரனுக்க்கோ அழைப்பிதழேதும் கிடைக்கவில்லையாயினும், அவ் விழாவிற்குச் சென்றிருந்தேன்.
மல்லிகை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் - கலை இலக்கியம் பற்றிய அதன் கருத்துநிலை, இவற்றை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவதில் அது வெற்றியடைந்திருக்கிறதா? இந்த நீண்ட காலப் பரப்பில் தொடர்ந்து வெளிவருவதற்காக அது மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள் - சமரசங்கள், எத்தகையன? இவற்றின் பின்னர் விளைந்த சாதனைகள், பயன்கள் என்ன-யாரை அப்பயன்கள் சென்றடைந்தன? இவை போன்றவற்றை ஆராய்ந்து வெளிக்கொண்டுவரும் வகையில், காத்திரமான ஆய்வரங்கொன்று அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான மதிப்பீட்டு முயற்சிகள் அங்கு இடம்பெறாதமை ஏமாற்றத்திற்குரியது.
மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமை வகித்த இவ்விழாவில், சுவாரசியமான கருத்துக்கள் பல வெளிப்பட்டன. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்; "இந்த மலரை வெளியிட்டுவைக்க எனக்குத்தான் தகுதி உண்டு சஞ்சிகை நடத்தி ஜெயகாந்தன் தோற்றார்; க.நா.சு தோற்றார்; வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன் ஆகியோரும் தோற்றனர். இவற்றுக்குக் காரணம் என்ன? இவற்றை யெல்லாம் நான்
76 அ.யேசுராசா
 

யோசித்தேன். சிங்களப் பகுதிகளிலும் வேறு இடங்களிலுமுள்ள சலூன்களின் முகவரிகளைத் திரட்டினேன், அவற்றுடன் தொடர்பு கொண்டேன். ஜீவா தோல்வியடையவில் லயென்றால் அதற்காக இலங்கையெங்குமுள்ள சலூன்களுக்குத் தலை வணங்குகின்றேன்."
தெளிவத்தை ஜோசப்
ஜீவா சொன்னார், சிறு சஞ்சிகைகள் பல தோற்றுப் போயினவென்று. தோல்விகள் தான் வெற்றியின் அடிப்படை நின்றுபோய்விட்ட மறுமலர்ச்சி பற்றி இன்றும் பேசப்படுகிறதென்றால், அது தனக்கேயுரிய தனித்துவத்தை வெளிப்படுத்தியிருப்பதால் தான். சரஸ்வதி சஞ்சிகையின் பயன் என்ன என்று அதன் ஆசிரியர் விஜயபாஸ்கரனிடம் ஒருவர் கேட்டபோது, 'ஒரு சுந்தரராமசாமி என்று அவர் சொன்னார். அதுபோல் மல்லிகையின் பயன் என்ன என்பதை, சபையிலுள்ள உங்களுக்கு விட்டு விடுகிறேன்."
திக்குவல்லைக் கமால்
மல்லிகை எதனைச் சாதித்தது? தலைவர் விஜயபாஸ்கரனைக் குறிப்பிட்டார். இங்கு நான் அதற்கு உதாரணமாக வந்திருக்கிறேன். வேறுபலரும் உள்ளார்கள்
இன்றைய நவீன இலக்கிய கர்த்தாக்கள் தம் சமூகக் கடமையில் நின்று வழுவிவிட்டனரா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற்றது. ஈழத்துச் சிவானந்தன், செங்கை ஆழியான் ஆகியோர் கலந்து கொண்டனர். காத்திரமான கருத்துக்களை அவர்கள் முன்வைக்கவில்லை. ஆனால் பட்டி மன்றத் தலைவர் இ.ஜெயராஜின் பேச்சு, நன்கு மனதில் பதிந்த பேச்சாகும். நேர்மைத் துணிவுடன், வெளிப்படையானதாகவும் தெளிவானதாகவும் அது அமைந்திருந்தது. இத்தன்மை எமது இலக்கியக் கூட்டங்களில் மிக அரிதாகவே காணக்கிடைக்கும் ஒன்றாகும்.
இ.ஜெயராஜ் தனது பேச்சில் கூறியதாவது; தமக்குப் பிடிக்காதவரின் கூட்டத்துக்குப் போகமாட்டோம் என்று சொல்கின்ற இலக்கிய அறிஞர்கள், இங்கு உருவாகியுள்ளனர்.
நவீன இலக்கியவாதிகள் தாம் சொன்னவற்றை எவ்வளவு தூரம் கடைப் பிடித்தார்கள்? மக்களுக்காக எழுதத் தொடங்கியவர்கள் பின்னர் விமர்சகர்களைத் திருப்திப் படுத்த எழுதத் தொடங்கினார்கள். மனிதத் தன்மைக்காக வந்தவர்கள், தமக்குள் மனிதத் தன்மை அற்றவர்களாக
இருக்கிறார்கள். --
சாதாரண மனிதனைவிட மேலதிகமாக சமூகத்தைப் பார்க்கிறவனே, எழுத்தாளனாவான். ஆனால், அப்படி இல்லாதவர்களைக் காண்கிறோம்.
தூவானம் 77

Page 47
ஆகையால், எழுத்தாளர் யாரென்று பார்க்க வேண்டும். பிரச்சினையைத் தீர்க்கும்
மனோபலத்தை எழுத்தாளர் ஊட்டவேண்டும். சாதிக் கொடுமையையிட்டு சாதி உணர்வுடையவன் வெட்கப்படக்கூடிய முறையில், திருந்தக்கூடிய முறையில் எத்தனை படைப்புகள் தோன்றியிருக்கின்றன? உங்களால் பதில்சொல்ல முடியாது. டானியலின் எழுத்துக்களில், குறிப்பிட்ட சமூகப் பிரிவுகள் கிண்டல் செய்யப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தான் ஒன்றை விதையிலேயேநசிக்கப் பார்ப்பான்; மீறி வளர்ந்தால் அங்கீகரிப்பான் - போராட்டத்தை அல்ல; போராளிகளை
சாதியை ஒழிக்க வந்த எழுத்தாளர்கள், சாதியைப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் மண்ணில் தோன்றிய பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க எத்தனை பேரை உருவாக்கியிருக்கிறது? 回
23.3.1990.
78 அ.யேசுராசா

0 எனது இராகங்கள் 0 பேய் காக்கும் விடு
புதுக் கவிதை இன்று பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு வடிவமாகிவிட்டது. அதன் இலகுதன்மை இவ்வாகர்ஷிப்பின் பிரதான காரணியாகலாம். இத்தன்மையே, கவிதை வெளிப்பாட்டிலும் ஈடுபடப் பெரும்பாலானோரைத் தூண்டும் காரணியாகவும் அமைகிறது. ஒருவனின் வாசிப்பு அவனின் இரசனையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும். பரவலாகப் படிக்கக்கிடைக்கிற புதுக்கவிதை நூல்களின் செல்வாக்கை இளங்கவிஞர்கள் பலரிடம் காணமுடிகிறது. பெரும்பாலும் வசனப்பாங்கான, வர்ணனை வரிகளே 'கவிதைகள்' என அச்சேறுகின்றன.
வவுனியா தீலிபன் எழுதிய எனது இராகங்கள் கவிதைத் தொகுப்பை அண்மையில் படித்தேன். காதல், உணர்வுகள் தேசத்தின் மீதான பாசம், பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலைமைகள் மீதான அக்கறை கோபம் என்பன அவரது கவிதைகளின் பொருள்களாகியுள்ளன. இக்கவிதைகளிற் பலவும் வசனப்பாங்கான வர்ணனை வரிகளாகத் தான் இருக்கின்றன. முன்னுரை எழுதிய செம்பியன் செல்வன குறிப்பிட்டுள்ளது போல் 'தென்னகக் கவிஞர்களான நா. காமராசன், மு.மேத்தா, வைரமுத்து போன்றோரின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவாறு தவிப்பதும் தெரிகிறது. Asal
ஆயினும், கவித்துவ ஆற்றல் ஆங்காங்கே பளிச்சிடுவதைக் காணமுடிகிறது.
தூவானம் 79

Page 48
"ungé?”! நீ" தேடிய தேசத்தை நாம் கனவுகளில் தாம் கண்டுகொண்டிருக்கிறோம். வெள்ளை வெறியர்களைத் துரத்த வெழத்தெழுந்தவனே. இங்கே பார். [bfTub கறுப்புக்கைகளினால் கட்டப்பட்டுக்கிடப்பதை!" என்ற வரிகளையும்,
"மலர்களை மதிப்பதாக எண்ணிக்கொண்டு என் கால்கள் எத்தனை முட்களை முத்தமிட்டிருக்கின்றன.
பழகள் என
நினைத்தபடி
நான எத்தனை பள்ளங்களில் இடறி விழுந்திருக்கிறேன்!"
என்பவற்றையும் இதற்கு உதாரணமாக காட்டலாம். "கையில் கிடப்பது பூ" என்ற கவிதையும்,'கறுப்பு இனத்தின் வெளிச்ச விளக்கு" என்ற கவிதையும் உணர்விறுக்கத்துடன் தம்மைத் தொற்ற வைத்துக்கொள்வதில் வெற்றி
காண்கின்றன.
பெரிய கவிதைகளை விடவும் இத்தொகுப்பிலுள்ள சிறிய கவிதைகளில் இறுக்கமும் நேர்த்தியும் காணப்படுகின்றன.
சுதந்திரம்
தாராளமாக வாய்களைப் பயன்படுத்தலாம்: சாப்பிடுவதற்கு மட்டும்!
80 அ.யேசுராசா

நான் காணாமல் போய்விட்டேன் கண்டுபிடியுங்கள்: கண்ணிருக்குள்!
போராளி
இமைகள் திறந்திருக்கும் வயிறு
பசித்திருக்கும் கால்கள் பழுத்திருக்கும் ஆனாலும்,
தேசம் அவன் சிந்தனையில் மொய்த்திருக்கும்!
இறுதியாக,நம்நாட்டு தா.இராமலிங்கம்,சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், சேரன், போன்றோரதும்; தமிழகத்து கு.ப.ரா.புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, தருமு சிவராமு, ஞானக்கூத்தன், நா.சுகுமாரன் போன்றோரினதும் புதுக்கவிதைக் கலைமுறைகளுடன் பரிச்சயங்கொள்வது திலீபன் போன்ற இளங்கவிஞர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
சென்ற மாத முற்பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சில வீடியோத் திரைப்படங்கள் யாழ்பல்கலைக்கழகத்திரைப்படச் சங்கத்தால் காட்டப்பட்டன. பேய்காக்கும் வீடு என்ற, சுமார் 30 நிமிட நேரங்கொண்ட குறும்படமும் அவற்றில் ஒன்றாகும், கொழும்பிலுள்ள “மகளிர் ஆராய்ச்சி நிலையம்’ தயாரித்த இப்படத்தை ஷாமினி பொயில் என்ற பெண் இயக்கியுள்ளார். சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு, இடையிடையே தமிழில் குரல் கொடுத்து ஆக்கப்பட்ட பிரதியே இங்கு காட்டப்பட்டது.
இலங்கையில் நிலவும் ஆணாதிக்கச் சமூகச் சூழலில், படித்து ஆசிரியையாக வேலைபார்க்கும் பெண் கூட எவ்வாறு கணவனால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறாள் - வேலைசெய்யுமிடம் , தங்குமிடம் , பொது இடங்கள் என்பவற்றிலெல்லாம் எவ்வாறு அவள் உதவியற்றவளாகிறாள் - மனைவி என்ற உரிமையை வெளிப்படுத்தியபடியே மட்டும் இவ்விடங்களில் அவளைக் கையறு நிலைக்குத்தள்ள கணவனால் எப்படி முடிகிறது - இறுதியில் "பேய் பிடித்தவள்’
தூவானம் 81

Page 49
எனப்பட்டம் சூட்டி அவளது உள்ளத்தையும் உடலையும் எப்படித் துன்புறுத்த முடிகிறது என்பதே, இப்படத்தின் கதையாகும்,
இயல்பான சம்பவ வைப்புக்கள், பாத்திரச் சித்திரிப்புக்கள் மூலம் இந்நிலைமைகள் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றன. பேயோட்டும் சடங்கின் போதான "தொவில்" நடனக்காரனை "குளோசப்" பில் காட்டும் காட்சியுடன் ஆரம்பிக்கும் படம், முன் கதையைச் சித்திரித்து மறுபடியும் பேயோட்டுவோரின் நடனத்துடனும், அவனது அடிகளைத் தாங்க முடியாது மயங்கி விழும் பெண்ணைக் காட்டுவதுடனும், முடிவுறுகிறது. இறுதிக்காட்சி, ஒரு மானுட ஜீவனுக்கெதிரான அவமரியாதை என்ற உணர்வை எம்முள் கிளறிவிடுகிறது. அப்பெண்ணின் மீது நாம் கொள்ளும் பரிவு, படத்தில் கலை வெற்றியாலே தான் சாத்தியமாகிறது.
உயிர்த்துடிப்பு நிறைந்த இக்குறும்படத்தை, விவரணப்பாங்கிலமைந்ததட்டையான - தமிழ்க் குரல் சிதைக் கப்பார்க்கிறது. காட்சிரூப வெளிப்படுத்தல்களே பெரிதும் கையாளப்பட்டிருப்பதால் தமிழ்க்குரல் இல்லாதிருந்தாலும் பார்வையாளர் படத்தைப் புரிந்துகொள்வதில் அதிக சிரமம் ஏற்பட்டிருக்காது. வேண்டுமானால் தமிழில் அச்சிடப்பட்ட குறிப்புகளை, படம் ஆரம்பிக்குமுன் பார்வையாளருக்கு வழங்கலாம்.
"மகளிர் ஆராய்ச்சி நிலையம்" தனது வருங்காலத் தயாரிப்புகளின் போது, இதனைக் கருத்திற் கொள்வது நல்லதெனக் கருதுகிறேன்.
13.04.1990
82.யேசுராசா

0 துருவச் சுவருகள்
சென்ற பல வருடங்களாக மேற்கைரோப்பிய நாடுகளை நோக்கி ஈழத்தமிழரின் புலப்பெயர்ச்சி நடக்கிறது. அரசியற் காரணங்களினால் தவிர்க்கவியலாமல் செல்வோர் இப் பல்லாயிரக்கணக்கானோரில் மிகச்சிறு தொகையினராக இருக்க, வளமான பொருளாதார வாய்ப்புக்களை நாடிச்சென்றோரே பெரும்பான்மையோராவார்.
அவ்வந் நாட்டுச் சூழலில் இவர்கள் ஓரளவு தம்மைப் பொருத்திக் கொண்ட பின்னர், கலை இலக்கிய ஆர்வம் கொண்ட இவர்களிற் சிலர், சஞ்சிகைகளையும் சில நூல்களையும் தமிழில் வெளியிடத் தொடங்கினர். இவ்வாறான 30க்கு மேற்பட்ட சஞ்சிகைகள் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வெளிவருவதாகத் தெரிகிறது.
இவ்வாறான சூழலில், நோர்வேயில் அமைந்துள்ள 'சுவடுகள் பதிப்பகம்’ துருவச் சுவடுகள் என்ற கவிதைத் தொகுதியை 1989 மார்கழியில் வெளியிட்டுள்ளது. அங்கு வாழும் வ.ஐ.ச.ஜெயபாலன், தம்பா, கலிஸ்ரா இராஜநாயகம், தமயந்தி, வயவைக்குமரன், மைத்ரேயி, இளவாலை விஜயேந்திரன் ஆகிய ஏழு கவிஞர்களின் 23 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. சமுத்திரன் எழுதிய விரிவான அணிந்துரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
"நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர் தர ஆரம்பித்துள்ள புதிய கலைத்துவப் பரிமாணத்தின் முதற்படிகளை ஸ்திரப்படுத்தும் ஒரு பங்களிப்பு இதுவாகும்" என்று அவர் குறிப்பிடுகின்றார். இது இந்நூலுக்கு எவ்வளவு
தூவானம்
83

Page 50
தூரம் பொருந்தும் என்பது கேள்விக்குரியதே. புலம்பெயர்ந்து ஒதுங்கிய நாட்டின் சூழல், மரபுகள், அங்கமைந்த வாழ்க்கைமுறை, எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புதிய கலாசாரத் தாக்கம் என்பவற்றைத் தம் அனுபவத்துள் நுண்மையாக உள்வாங்கி, தத்தம் தனி ஆளுமைகளுடாக கலா ரீதியான வெளிப்பாட்டை நிகழ்த்தும்போதே அது புதிய பங்களிப்பாக அமையும். அவ்வாறு பார்க்கையில்,
நோர்வேயின் பின்னணியில் அமைந்தவை இரண்டொரு கவிதைகளே, இது ஏமாற்றம் தருவதாகும்.
மரபுக்கவிதைகளின் சந்தத்தை நிராகரித்து ஒதுக்கியபோதிலும் கையாளப்படும் பொருள், கவிஞனின் மனோலயம் சார்ந்து, தொடர்ச்சியான ஒத்திசையினை நல்லபுதுக்கவிதைகள் கொண்டிருக்கும். இந்த ஒத்திசை இல்லாது போவதனாலே தான், புதுக்கவிதைகள்' என எழுதப்படுவனவற்றில் பலவும் வெறும் வசனக் கூற்றுகளாகத் தேங்கி, கவிதைகளாக மனதில் பதியாமலே போய்விடுகின்றன. இக்குறைபாடு இத்தொகுதியிலும் பரந்திருக்கிறது.
"இன்பக்கனவுபோல் தோன்றி மறைந்தது கோடை. காற்றுக்குதிரைகளில் குளிர் சாட்டை சொடுக்கிவரும். வெய்யிற் சுகம் தேடி2 வடதுருவப் பறவைகளும் என் தாய் நாட்டின் திசை நோக்கி தங்களது இறகசைக்கும்"
என வ.ஐ.ச.ஜெயபாலன 'இலையுதிர் கால நினைவுகள் - 1989' என்ற கவிதையின் ஆரம்பம் நன்றாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து சில உவமைத் தொடர்கள், வர்ணனை வரிகள், உரையாடல் என இறுக்கமற்றுவரும் இக்கவிதை மனதில் உரிய பாதிப்பை ஏற்படுத்தாது போய்விடுகின்றது.
தம்பாவின் இரவுகள் துயில் கொள்ளா', தமயந்தியின் "புதிய ஏற்பாடுகள்", கலிஸ்ரா இராஜநாயகத்தின் "சிந்திப்பாயா?" மைத்ரேயியின் "பிரகடனம்" ஆகியவற்றில் கொஞ்சம் கவித்துவத்தைக் காணமுடிகிறது.
"நான்கு சுவர்கள் நாலு திசையான பின்னும் நாலுகுனத்தைக்கட்டி2யழும் நாயகியே!
இன்னுமாரீவிழிக்கவில்லை அல்லது
84 அயேசுராசா

விழித்தும் புறப்பட உன் இனமே தடையானதோ!" என்ற வரிகளைக் கொண்ட
சிந்திப்பாயா!?’ கவிதையும்
"அம்மா யண்ணலைத் திறப்பமா? வேர்த்துக் கொட்டுது
இல்லைப் பிள்ளை, இந்தா விசிறி பேசாமல் படு.
அம்மா,
மூச்சு முட்டுது கழுத்தை யாரோ நெரிக்கிற மாதிரி கதவைத் திறப்பமா? புதுக் காத்து உள்ளவரும்."
என்ற வரிகளைக் கொண்ட "பிரகடனம்" என்ற கவிதையும் இன்னும் சிரமம் எடுத்துச் செம்மைப்படுத்தப்பட்டிருந்தால், நல்ல பெண்ணிலைவாதக் கவிதைகளாக மாறியிருக்கும்.
வயவைக்குமரன் எழுதிய "அகதி’ என்ற சிறிய கவிதை மனதில் பதிகிறது. நம்மவரின் அகதி அந்தஸ்திற்கான "ஓட்டம்" எள்ளல் தொனியுடன் இறுக்கமான சொற்களில் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்தக் கவிதைத் தொகுதியில் இளவாலை விஜயேந்திரனின் "அழுத்தம்” என்ற கவிதையே நன்றாகவந்திருக்கிறது. இளமைக் காதலின் நினைவும், இழப்பின் துயரும் இறுக்கமான சொற்களில் கவிஞனின் மனோலயத்தோடு - வெளிப்பட்டிருக்கின்றன.
பேய்கள் வராமலே குருதிநாடியுள் உறைந்ததென் கனவில் என்று ஆரம்பிக்கும் கவிதை,
'துருவத் தொலைவில் உறைபனிக் காலையில் பத்து வருடப்
பிறகும். ஒரு கணம் எரிந்தேன்.'
தூவானம் 85

Page 51
என்று முடியும்போது, எமது நெஞ்சிலும் ஒரு கசிவு கவிதையின் வெற்றிக்குச் சாட்சியாகிறது. “பதினோராவது கட்டளை”, “மேற்கு’ஆகிய இவரது கவிதைகளும் சிறு குறைபாட்டுடன் மனதில் பதிகின்றன.
சமுத்திரனின் அணிந்துரை (அவரது கவிதை மதிப்பீட்டுடன் நான் மாறுபட்டாலும்) கனமான கருத்துக்களைக் கொண்டு, இந்நூலுக்குச் சிறப்பைத் தருகிறது. உதாரணத்திற்கு ஒன்று: "நனவு கொடூரமாகும்போது கனவுகளில் தான் தற்காலிக ஆறுதல், இந்தக் கற்பனையும் இல்லாவிடில் இன்று ஈழத்தில் தமிழர்களைப் போராட வைக்கும் உள்ளுந்துதலே அழிந்துவிடும் என்பது என் கருத்து. ஆம்! நாம் கனவுகாணப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்கூடாக விடுதலையின் உள்ளடக்கத்தைத் தேடி யதார்த்தத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும்."
இறுதியாக, இப்புத்தகத்தின் அழகான அமைப்பைப் பாராட்டவே வேண்டும். கணணியின் துணையுடன்,லேஸர் அச்சீட்டுமுறையில் இது பதிப்பிக்கப்பட்டுள்ளது. உயர்தர வெள்ளைக்காகிதம் - தடித்த பளபளப்புநிறைந்த அட்டை (இவற்றை பாவிக்க நாம் கனவுகாணவேண்டும்), கவிதைகளுக்கான விளக்கப்படங்கள், அட்டைப்படம் எல்லாம் இணைந்து புதிய மெருகினைத் தோற்றுவித்துள்ளன. சுவடுகள் பதிப்பகத்தாருக்கு எனது பாராட்டுக்கள்
27.O4.1990
86 அ.யேசுராசா

0 அரூர் இற்கு மினரும் விருது
இந்தியாவின் 37ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற வங்காள இயக்குநரான புத் தாடெப் தாஸ் குப்தாவின் பக் பஹதூர், சிறந்த திரைப்படத்திற்கான தங்க தாமரை விருதினைப் பெற்றிருக்கிறது. சிறந்த இயக்குநரான விருது மதிலுகள் என்ற மலையாளப் படத்தை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அவரது ஆறாவது படம். அத்தோடு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினை அவர் பெறுவதுநான்காவது முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடூர், பூனேயிலுள்ள "இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் பயின்றவர். −
அவரின் முதலாவது படமான சுயம்வரம் (1972), வீட்டைவிட்டு ஓடிச் செல்லும் இரண்டு காதலரைச் சித்திரிக்கிறது. காதலின் வளிகரமயக்கின் பின் எதிர்கொள்ள நேர்கிற கசப்பான புறவாழ்க்கை நிலைமைகள், படத்தின் மையம், இது கொழும்பிலும், கண்டியிலும் திரைப்பட விழாவொன்றில் முன்பு காட்டப்பட்டது. வயதுக்கேற்ற அறிவு வளர்ச்சியில்லாத ஒருவனின் வாழ்க்கையைக் கொடியேற்றம சித்திரிக்கிறது. அடுத்து அவர் உட்ருவாக்கிய எலிப்பத்தாயம், நிலப் பிரபுத்துவத்தின் எஞ்சிய அடையாளங்கள் சிலவற்றைச் சித்திரிக்கும் படம். இது "பிரித்தானிய திரைப்படப் பயிற்சி நிலையத்தின் விருதினையும் பெற்றது.
தூவானம் 37

Page 52
கொம்யூனிஸ்ற் கட்சியின் தீவிர அரசியல் ஊழியனாக இருந்து பிந்திய நாட்களில் குடியிலும், விரக்தியிலும் சீரழிந்துபோகும் ஒருவனைப் பற்றியது முகமுகம்.
அடுத்த படமான அனந்தராம கூடா உறவும் அதனால் விளையும் குற்ற உணர்வும், தனிமையும் கொண்ட கதாநாயகனின் உள்மன உணர்வுகளை ஆராய்கிறது. படத்தின் மையக் கருத்தைப் பற்றிச் சொல்லுகையில் ஒரு முறை அடூர் இவ்வாறு குறிப்பிட்டார்: "விஷயங்களைக் குறித்த நம் அறிவு முழுமையானதல்ல, ஆனால், நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். மேலும், ஒவ்வொருவரது பார்வையும் கோணமும் மாறுபடுகிறது."
கடைசிப்படமான மதிலுகள், தனது தோழர்கள் விடுதலையாகிச் செல்ல சிறையில் தனிமையை உணரும் ஓர் அரசியற் கைதியைப் பற்றியது. நிஜமும் கற்பனையும் இணைந்து பின்னப்பட்ட இப்படம் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஸ்ரீரின் சுயசரிதைப் பாங்கான குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது. இக்குறுநாவல் தமிழிலும் வெளிவந்திருக்கிறது.
அண்மையில் வெளிவந்த ஃவ்றொன்ற் லைன் சஞ்சிகையில் 'அடூர்' சொல்கிறார்: "இன்றும், என்னைக் கண்டுபிடிக்கும் செயற்பாட்டிலேயே உள்ளேன். என்னத்தைச் செய்கிறான் என்பதைப்பொறுத்தே ஒருவன் கலைஞனாகிறான். அவன் தனது படைப்பினூடாகத் தன்னையே வெளிப்படுத்துகிறான். இது தொடர்ந்து செல்லுமொரு செயற்பாடு."
"அவனது படைப்பில், ஏதாவது நிலைத்த அக்கறைகளுண்டா?" என்று கேட்கப்பட்டதற்கு அவர் பின்வருமாறு சொன்னார்.
"அவ்வாறு ஏதாவது இருக்கிறதா என்று இப்போது சொல்வது, சிலவேளை காலத்துக்கு முந்தியதாகலாம், இது வரை சிறு எண்ணிக்கையான ஆறு படங் களையே நான் உருவாக்கியுள்ளேன். ஆனால், ஏற்கெனவே சொல்லப்பட்ட வொன்றை எனது படங்களில் திரும்பவும் சொல்லக்கூடாதென்பதில் பிரக்ஞையுடன் உள்ளேன் என்பதைக் குறிப்பிட முடியும். திரும்பவும் ஒன்றையே சொல்லுவதென்பது பார்வையாளருக்கு மட்டுமல்லாது எனக்கும் கூட சலிப்பையே ஊட்டும். எனது ஒவ்வொரு புதிய படத்தினையும் விமர்சிக்க வரும்போது, அநேக விமர்சகர்கள், எனது பழைய படங்களைப் பற்றிய எண்ணங்களையும் தம்முடன் சுமந்து வருவதானது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. ஒரேமாதிரித் திரும்பவும் செயற்படக்கூடாதென்பதற்காகவே, விரைவாக அடுத்த படத்தை உருவாக்குவதை எப்போதும் தவிர்த்து வருகிறேன். அல்லாவிடின், மற்றவர்களினால், இல்லையென்றால், உங்களின் செல்வாக்கிற்காவது இலகுவில் உட்பட்டுவிடுவீர்கள்."
8.5.1990
88 அ.யேசுராசா


Page 53


Page 54


Page 55

விமர்சன மனநிலைக் E60 still Lib. என்னிடம் எப்போதும் இருந்துவருகிறது. அது அடிமனதிலும் பதிந்து வெளிப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்குமென்றுதான் Hlöll6ú605UIlh. LGOLLITGifessful இத்தகைய நிலை இருக்க வேண்டுமென்றுதான் நான் எதிர்பார்க்கின்றேன்.
அ.யேசுராசா