கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம்

Page 1
யாப்
ழ்ப்பாண ஓர்.
றி
 


Page 2


Page 3

யாழ்ப்பாண நூல் கிலையம் ஓர் ஆவணம்
மூதறிஞர் ઠ, હી. குலரத்தினம்.

Page 4
JAFFNA PUBLIC LIBRARY - A FILE
K. S. KULARETNAM
Published by Dr. PON. ANURA
R Hithra 19ublieations
373 AURO SR2EE! Fra ARCOT RA WANNAN STIMEET EASir Wroxe5 1122 SNA 98 02& LATTCALOA (EP) ASAA 绯挚樵 Sri LANKA
 

யாழ்ப்பாண நூல் நிலையம்
மூதறிஞர் கா. சி. குலரத்தினம்
அட்டை அமைப்பு
டிராஸ்கி மருது
2த்ரrெiலிம்
சிட்னி - சென்னை -மட்டக்கள s

Page 5
ൗത്ത് ഭ
Copyright G Mithra Publications 1997
All rights reserved
Apart from any fair dealing for the purpose of private study, research, criticism or review as permitted under the Copyright Act, no part may be reproduced, stored in a retrieval system, e transmitted, in any form, or any means, electronic mechanical or photocopying, recording of otherwise without prior written permission from the author.
Nationaal Library of Australia Cataloguing in Publication data
U AFF/WA PUEBL/C L/BARRAARY
fisium,
First Publis kaed in Mithra Books 9th February 1997
Cover design by M. TROTSKY MARUDU
& G.C., SEKAR Published by Dr. PON ANURA Made in India by Mithra Book Makei's
மித்ர வெளியீடு 18 முதலாவது பதிப்பே மித்ர நூலாக வெளிவருவது 9, பிப்ரவரி 1997 பக்கங்கள் : 152--V
வடிவமைப்பு : இளம்பிறை ரஹ்மான்
இலங்கையில் விலிை
guar 100/-

யாழ்ப்பாண நூல் நிலையத்தினை உருவாக்க உழைத்த அத்தனை பெரியார்களுக்கும்
இனி அதனை பழைய நிலைக்கு கட்டி எழுப்பப் போகும் தமிழ் மான
வீரர்களுக்கும் ஈழ மண்ணின்
பரமார்த்த உபாசகர்களுக்கும்
இந்நூல்
LGBT

Page 6
கோபுரவாயில்.11 நுழைவாயில். .23 ஓர் ஆவணம்.43 ஒரு சாட்சியம்.127 திருக்கடைக்காப்பு.139

பதிப்புரை
* தமிழர் ஒரு புளுகிணி"ச் சாதி என்கிற அவப்
பெயர் சம்பாதித்துள்ளமை அவப்பேறு. தமிழர்கள் வரலாற்றினை தேர்மையாகவும் விஞ்ஞானரீதியாகவும் ஆவணப்படுத்தி வைக்கத் தவறியமையே இதற்கான காரணி, இந்த அவலத்தினைப் போக்கும் சரியான முயற்சி இந்நூல்.
இன்றைய இழப்புகளைப் பார்த்து இடிந்து போகும் இனம் கோழை. நேற்றைய மேன்மைகள் சரியான வகையிலே ஆவணப்படுத்தப்பட்டால், இன்றைய இழப்புகளை உரிய முறையிலே எதிர் கொண்டு. நாளைகளை வளமுள்ளதாக மறுபடியும் கட்டி எழுப்புதல் சாத்தியம்.
இந்த நூலின் அதி சிறப்பு ஒரு நிறுவனத்தின் வர்லாறு ஒரு சமூகத்தின் வரலாறாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளமையாகும். வரலாற்றுத் தகவல்களை மட்டுமே தந்துவிடாது, வாசிக்கவும் பாதுகாக்கவும் ஏற்ற இலக்கியமாகவும் இதுவடிவமைக்கப்பட்டுள்ளமை நிறைவினைத் தருகின்றது. கோபுரவாயில், நுழை வாயில், திருக்கடைக்காப்பு, ஒரு சாட்சியம் ஆகிய பகுதிகள், மூதறிஞர் க. கி. குலரத்தினம் அவர் களுடைய மூல ஆவணத்தினை உரிய் முறையிலே தரிசிக்க வகுக்கப்பட்ட உபாயங்கள் என மனங் கொள்ளுதல் நன்று. நூலாக்கத் துறையில் இது புதிய முயற்சி, நமது அபிமானிகள் இதனை மனநிறைவுடன் ஆதரித்து வரவேற்பாளர்களென நம்புகின்றோம்.
டாக்டர் பொன் அநுர்
mithRA publicAtions
/ Al( $(' 4ർമ42f22
a2S74A4
Osa2) tet-2567

Page 7
முன்னிடு
இதனை எழுத பேனா ஊன்றும் பொழுது, தாவீது அடிகளாரின் நினைவு சட்டென்று எழுகின்றது. St. Patrick's கல்லூரியிலே நான் மாணவனாய் இருந்த காலத்தில் அவரிடம் பாடங்கேட்கும் பாக்கியம் பெற்ற வன். பன்மொழிப் புலவராய்ப் புகழ் பூத்த அவர், நூல் ளைத் தமது உயிரிலும் மேலாக தேசித்தார் என்பது உண்மை. 1981ஆம் ஆண்டு ஆனி மாதம் Jm půLIntsov நூல் நிலையம் எரியுண்ட செய்தி கேட்ட மாத்திரத்தி லேயே அவர் தமது இன்னுயிர் நீத்தார். யாழ்ப்பாண நூல் நிலையம் ஈழத் தமிழர் நெஞ்சங்களிலே எத்தகையதோர் உந்தத இடம் பெற்றுள்ளது என்பதை நிறுவும் குறியீடு தான் அவர் மரணம்,
யாழ்ப்பாண நூல்நிலையம் அறிவுப்பசி கொண் டோர்க்கு உணவளிக்கும் பண்டசாலையாக மட்டும் to Go வாக்கப்படவில்லை. வயோதிகர்களுக்கான பொழுது போக்கு நிலையமாகவும். முதுமாணிப்பட்டம்பெறுவதற் கான உபகார சாலையாகவும் மட்டுமே அது நிறுவப்பட வில்லை. அ மே ரிக்க காங்ரெஸின் நூல்நிலையம், பிரிட்டிஷ் மியூஷிய நூலகம், ரஷ்யாவின் லெனின் நூலகம் ஆகியனவற்றைப் போல, ஈழத் தமிழருக்கான ஒப்பற்ற தேசிய நூல்நிலையம் ஒன்றினை கட்டி எழுப்புதல் வேண்டும் என்கிற கனவுகளைக் குழைத்து உருவாகியது மட்டுமல்ல. சமுதாய ஒன்று கூடலாகவோ, ஞானப் பகிர்வின் மையமாகவோ மட்டும் அது எழுந்ததில்லை. இவை அனைத்துக்கும் மேலான ஆலயம். மதம் சார்ந்த ஆலயங்களிலும் பாரிக்க உபரிந்த பெரிய கோயில்."

9
ஈழத் தமிழர்தம் மான உணர்வுகளினதும். தனித்துவ அடையாளங்களினதும், அறிவுத் தாகத்தினதும், விமுக்தி வேட்கையினதும், சமூக வாழ்க்கையினதும், ஆன்மிக உபாசனையினதும் தெய்வீகக் குறியீடாகத் திகழ்ந்தது.
தூய ஆரிய இனத்தின் மேலாதிக்க உச்சங்கள் பற்றிய கனவுகள் இரண்டாம் உலகப் போரிலே நொருங்கின. வெள்ளைத் தோல் நாட்டினரின் ஆதிபத்திய ஆசைகள் தகர்ந்தன. அறிவு நாகரிகமும், ஜனநாகயக அரசியல் நாகரிகமும் உலகை வலம் வரலாயின. மனித நேயத்திற்கு ஆன்மீக உணர்வுகள் கலந்த அர்த்தம் ஏற்றப்படுவதா பிற்று.இத்தகைய ஒரு கட்டத்திலேதான் யாழ்ப்பாணநூல் நிலையம் எரிக்கப்பட்டது. சிதைக்கப்பட்டது! இத்தகைய ஒரு கட்டித்தி மிலேச்சத்தனம் எவ்வாறு ஒரு சின்னஞ்சிறு தீவிலே மூர்க்கங் கொண்டு வாழ்கிறது? அரசியல் விசாரணைகளிலே ஈடுபடுதல் அல்ல நமது நோக்கம். 'வரலாற்றினை ஆவணப்படுத்துதலே நமது பணி.
யாழ்ப்பாண நூல்நிலையம் மீண் டும் பழைய மகோன்னத நிலை அடைந்து, ஞானத் தேடலையே இறை வழிபாடாகத் தரிசிக்கும் ஈழத் தமிழர்கள். அச்சமின்றிச் சுயாதீனத்துடன் அந்த ஆலயத்திலும் வழிபடும் உரித்தாளிகளாக் எப்பொழுது மாறு.ார்களோ அப் பொழுதுதான் அவர்களுடைய மனங்களிலே வடிந்து: கொண்டிருக்கும் ரத்தக்கண்ணீர் வற்றும்
அதுவரையிலும், யாழ்ப்பாண நூல்நிலையம் பற்றிய மான்மியம் தலைமுறை தலைமுறையாக நினைவு கூரப் படுதல் தக்கது. இத்தகைய நினைவாஞ்சலி இறைவழி பாட்டின் பாற்படும். இதனை உணர்த்து,எனது நண்டரும், மூதறிஞருமான கா. சி. குலரத்தினம் அவர்கள் யாழ்ப் பாண நூல்நிலையம் கருக்கொண்டு, உருக்கொண்டு வளர்ந்து, வளம்பெற்ற வரலாற்றினை ஆவணப்படுத்தி
நூ.2

Page 8
O
வைத்தார். இந்த ஆவணத்தைத் தயாரிப்பதற்கு அவரைப் போன்ற தகைமையாளர் வேறு ஒரு வர் gav ff. NAŠAO ஆவணம் "ஈழ நாடு" பத்திரிகையிலேதான் பிரசித்த மாயிற்று. இதிலே கொடுமை யாதெனில், அந்தப் பத்திரிகை நிறுவனமும் எரிமூட்டிச் சாம்பராக்கப்பட்டது தான்!
இருப்பினும், அவர் தயாரித்த ஆவணத்திணை ஓர் ஒட்டுப் புத்தகமாகப் பாதுகாத்து, அவுரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பொழுது வே. இ. பாக்கியநாதன் அவரி கள் தம்முடன் கொண்டு வந்திருந்தார். அந்த நூல் நிலையம் ஆற்றிய நினைவுகள் என்றும் ஈழத் தமிழர்தம் மனங்களிலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் வகையில் அதனை நூலாக வெளியிடல் வேண்டும் என்கிற ஒரு தவத்தினை அவர் மேற்கொள்ளலானார். அவருடைய த வ த் தி ன் பயனாகவே இந்நூல் இந்த அமைப்பில் உங்கன் கரன் களிலே தவழ்கின்றது.
இந்த ஆவணம் உண்மையில் ஆலய வழிபாடு நிகரித் தது. எனவே இதற்கு ஒரு கோபுரவாயிலும், நுழைவாயி லும் அமைக்கப்பட்டுள்ளன. சத்தியமேயாயினும் அதற்கு தக்கதொரு சாட்சியமும் abel6arwG•
இந்த ஆவணம் முற்றுப் பெறவில்லை. ஆவணத்திலே விடுபட்டுப் போன பகுதிகளை இறுதியில் "திருக்கடைக் காப்பு" என்னும் பகுதியிலே எழுதும் உரித்தினை எடுத் துள்ளேன். இதனால் அதனை முன்னீடு"வின் பிற்பகுதி иштв6/tb கொள்ளலாம்.
எஸ். பொ
aos 1997

யாழ்ப்பாண நூல் நிலையம்
கோபுரவாயில்

Page 9
திரு, ந. முருகேசபாண்டியன் Lunregg மண்டலத்தைச் சேர்ந்தவர். தமிழ் இலக் கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது மேலைச் சிவபுரி கணேசர் செந் தமிழ் கல்லூரியில் நூலகராக பணியாற்றி வருகிறார்.
எழுத்துத்துறையில் மாணவப் ugat ibமுதற்கொண்டு இவரது பணி தொடருகிறது. மதுரையில் படிக்கும் காலத்தில் அங்குள்ள ua Guprn Shifuf és 6ír, எழுத்தாளர்களுடன் பழகி, சமூக, கலை இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டவர்.
நூலகராக பணியாற்றுவதால் பல துறை சார்ந்த ஆய்வுப் பணிகளுக்கு உதவி வரு கிறார். நவீன தமிழ் இலக்கியத்தில் மட்டு மல்லாமல், பழங்கலைகள் - நாட்டுப் புற வியலிலும் ஆர்வம் உள்ளவர்.
Logopted நிலையாகக் கொண்ட பல நவீன நாடகக் குழுக்களில் நடிகராகவும் பங்கு பெற்றிருக்கிறார். தமிழில் பெயர்க்கப் பட்ட நூற்களைப் பற்றி, பட்ட மேற்படிப் புக்காக ஆய்வு செய்து வருகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த பண் பாளர். சேவா ஆர்வத்துடன் கூடிய Lu 60 of யாக நூலகச் சேவையை ஏற்றவர்.
ப, திருநாவுக்கரசு

1984-ஆம் ஆண்டு.
சழத்தமிழர் பிரச்னை காரணமாகத் தமிழகமெங்கும் உணர்ச்சிப் பூர்வமாக மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்ட காலகட்டம். சிங்களப் பேரின ஆதிக்கம் காரண மாசு நசுக்கப்படும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழ் நாடெங்கும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் முழு விச்சாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் நாடெங்கும் பல ஈழ விடுதலைப் போராளிக் குழுக்கள், தமிழக மக்களிடமிருந்து பலவிதமான உதவிகளைப் பெற்றுக் கொண்டதுடன், சுதந்திரமாகச் சுற்றித் திரித் தன. அப்பொழுது ஈழ விடுதலைக்காகப் போராடும் ஒரு கிறிய இராணுவக் குழு வின் தலைவரை மதுரையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் வாழ்க்கைக்கும் ஈழத்தமிழ் இளைஞர் களின் வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடு பற்றிப் பேச்சு எழுந்தது. ஒருபுறம் அரிதாரம் பூசிய நடிக நடிகை பரின் ஜிகினாத்தனமான திரைப்படங்களை உண்மை யென்று நம்பி கனவுகளில் மிதந்து தம்மை மறந்து போகும் சராசரித் தமிழக இளைஞர்களின் கேவலமான நிலை, இன்னொருபுறம் பொதுப் பிரச்னைகளுக்காகக் குர லெழுப்பித் தெருவில் இறங்கிப் போராடிய மாணவர்கள். இன்று "பருவமுறை"க் கல்விக் காரணமாக நசுங்கிப் போன அவல நிலை. பண்பாட்டுச் சீரழிவான சூழலில் வாழும் இளைஞர்கள் நிரம் பி ய தமிழ்நாட்டிற்கருகிலுள்ள அண்மை நாடான ஈழத்தில், அரசப்படையினரின் வன் முறையை எதிரித்துப் போராடும் மனநிலையை இளைஞரி

Page 10
14
கள் பெற்றிருப்பதற்கான கார ண த் தி  ைன அறிய முயன்றேன். ஒரு மொழி பேசும் இளைஞர்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இட வேறுபாடு மட்டும் காரணமாக இருக்க முடியாது. வேறு ஏதோ பருண்மையான காரணம் இருக்க வேண்டும். எனது ஐயங்களுக்கு அப்போராளி சொன்ன பின்வரும் பதில் என்னைப் பெரிதும் வியப்பிற்குள்ளாக்கியது.
*யாழ்ப்பாணப் பகுதியில் கிராமங்கள் தோறும் தொடங்கப் பெற்ற வாசகசாலைகள்தான் ஈழப் போராட்டத்தின் மையம், அதாவது வாசக சாலையில் தொடர்ந்து நூற்கள் வாசிக்க ஆரம் பித்து இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட விழிப்புணரிவு. ஈழத் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை முற் றிலும் மாற்றியமைத்து விட்டது."
எனது மனம் இன்றுவரை அவரது பதிவினைப் பல் வேறு கோணங்களில் நுணுக்கமாக ஆராய்கின்றது. இன. அடக்குமுறைக் கெதிராகத் தமது உயிரைப் பணயம் வைத்து அரசப் படையினருடன் மோதும் தமிழ் இளைஞர் களின் போராட்ட மனநிலைக்கு அடிப்படை நூலகங்கள் என்ற செய்தி வரலாற்று உண்மையாகும்.
மனித வாழ்க்கையில் நூற்கள் வகிக்கும் இடம் மிக முக்கியமானது. வரலாற்றை மாற்றக்கூடிய சக்தி நூற் சாளுக்கு உண்டு. உலக வரலாற்றில் பிரமிக்கத்தக்க, மாற்றங்களை உண்டாக்கிய நூற்களின் பட்டியல் நீள மானது. ஒரு தனி மனிதனைச் சமூக மனிதனாக மாற்று வதில் நூற்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. உலகிலுள்ள நாடுகளைச் கைப்பற்றிச் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்திய அடால்ப் ஹிட்லர், எழுதிய

S
*மெயின்காம்ப்" நூல், பாசிசத் தத்துவத்தின் அடிப் படையை விளக்குகிறது. உலகை மாற்றிய தத்துவமான பொதுவுடமைத் தத்துவத்தினைத் தந்த காரல் மார்க்ஸ் எழுதிய 'தாஸ்காப்பிடல்" நூல், உலகிலுள்ள பல நாடு களில் வாழும் மக்களுக்குப் பொதுவுடமைத் தத்துவதி தினை அறிமுகம் செய்கின்றது. மனிதனை அழிவு நிலை யிலுல் ஆக்க நிலையிலும் இயங்கிடச் செய்ய நூற்களால் முடியும் என்பதற்கு மேற்படி இரு நூற்கள் அருமையான எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
நூற்களும் அரசினுக்குமிடையில் நெருங் கி ய தொடர்பு உள்ளது. எனவே தா ன் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் குறிப்பாக ராணுவச் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் போதும் நீதிபதிகளும் நூலகர்களும் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டியதா கின்றது. ஆளப்படுகின்ற மக்கள் படிக்க வேண்டிய நூற் கன், படிக்கக் கூடாத நூல்கள் என்ற ஆட்சியாளரின் கொள்கையினை நடைமுறைப்படுத்தி நூலகர்கள் கூடு தாைக உழைக்கின்ற சூழல் ஏற்படுகின்றது. இராணுவம் மற்றும் காவல்துறை மூலம் பரந்துபட்ட மக்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையினைவிட, கருத்தியல் அடிப் படையில் மக்களின் மீது செலுத்தப்படும் வன்முறை மிகக் கொடுமையானது. ஆளப்படுகின்ற மக்களிடம் தாம் ஆளப்படுகின்ற முறை சரியானது என்ற கருத்தியல் பிரச் சாரத்தின் அடிப்படையிலே உலகிலுள்ள சர்வாதிகார அரசுகள் ஆட்சி நடத்துகின்றன. மக்களை ஒரு குறிப் பிட்ட அரசியல் கருத்தியலை மனரீதியில் ஏற்கச் செய்து விட்டால், அப்புறம் ஆட்சியாளர்களின் பணி கலபமாகி விடுகின்றது. எனவேதான் ஆட்சியிலுள்ள வன்முறை பாளர்கள், பொதுக் கருதி தினை உருவாக்கும் நூற்கள் குறித்து அக்கறை கொள்கின்றனர். அரசினுக்கு ஆதர வான கருத்துக்கள் அடங்கிய நூல்களை முன்னிலைப்

Page 11
16
படுத்தும் நேரத்தில் எதிர்நிலைக் கருத்துக்கள் அடங்கிய நூற்களை அழிப்பதில் மும்மரமாக ஈடுபடுகின்றனர்
இன்னும் சொல்லப்போனால், ஆட்சிக்கெதிராக மூணு முணுக்கும் நூலினை எழுதியவரின் குரல்வளை நெறிக்கப் படுகின்றது. இதுவரை நூலென்றால் அறிவு வளர்ச்சி என்ற கருத்து மாற்றமடைந்து, அரசின் பிரச்சாரக் கருவி என்ற நிலையில் வன்முறையுடன் தொடர்புடையதாக மாற்றமடைவது நூல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்ச மாகும்.
நூல்களைப் பாதுகாத்து மக்களின் சேவைக்காக வழங்கும் நூலகங்களும் அரசியலின் இலக்கிலிருந்து விடு பட இயலவில்லை. எனவே தான் தென்கிழக்காசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பான நூலகம், அரசப் படையினரால் தீயிடப்பட்டுக் கொளுத்தப் till-gil.
ஒரு நூலகம் தீபிட்டுக் கொளுத்தப்படுவது என்பது ஒரு செய்தி என்ற நிலையினை மீறி, மனிதர்களுக்கும் நூற்களுக்குமான உயிரோட்டமான தொடர்பு என்ற நிலையில் உள்ளத்தினை உலுக்குகின்றது. மிக நெருக்க மான மனிதரின் சாவுச் செய்தி போல மனம் துக்கமடை கின்றது. ஆனால் நூலக வரலாறு முழுக்க வன்முறை LHHLLL T L TTT LS tTTT tcLTO T0HL TL0LLLHL OMTOL aHC T TSS STTTTLLL LLLLLL எரிக்கப்பட்ட நூலகங்களின் சாம்பல் படித்துள்ளது.
அண்மையில் தமிழ் நாட்டில் நாகரிகோவில் என்ற நகரின் அமைந்திருந்த பழமையான நூலகம் மறைந்த அரசியல் கட்சித் தலைவர் சிலை நிறுவுதல் காரணமாக எழுந்த பிரச்சினையினால் வன்முறைக் கும்பலினால்

7
தீயிட் டு க் கொளுத்தப்பட்டது. அரசப்படையினருக்கு நூலகத்தின் மீதான வெறுப்பினைப் புரிந்து கொள்ள வியலுகிறது. ஆனால் வன்முறை மனநிலையுடைய கும்பலின் இலக்கினுக்கு நூலகம் பலியாகிப் போவதனை எப்படி விளங்கிக் கொள்வது? பண்பாட்டுப் பேரழிவு என்றுதான் கருத வேண்டியுள்ளது, அதிலும் கார்த்திகை மாதச் சொக்கப்பானாக நூலக நூற்களைக் கொளுத்தி விட்டு சுற்றிநின்று ஆரவாரக் குரலெழுப்பி அகம் மகிழும் அரசப்படை கும்பலின் செயல் உளவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டியதாகும்.
தீயிலிடப்பட்டுக் கொளுத்தப்படும் ஒவ்வொரு நூலகத் தின் பின்னரும் மறைந்துள்ள கடும்உழைப்பு, முயற்சித்னை வன்முறையாளர்கள் அறிவார்களா? ஒரு நூல்கத்தின் சிறப்பினுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான நூலக ஆர்வலர்கள், பொதுநல அன்பர்கள், நூலகர்களின் அக ராத உழைப்பு உள்ளது. அதிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அரிய நூற்களைச் சேகரித்தப் பாதுகாக்கும் நூலகங் களைப் பராமரிப்பது என்பது மிகவும் சிரமமான பணி. அரிய நூற்களை வாசகர்கள் பயன்படுத்தும் வகையில் பாதுகாத்துத் தர நூலகர்கள் கடுமையாக உ  ைழ கி கின்றனர். இதன்மூலம் சமூக ஆவணங்களான நூற்களைப் பாதுகாத்து வருங்காலத்தினுக்குத் தரும் மிகப் பொறுப்பு வாய்ந்த கடமை நிறைவேற்றப்படுகின்றது. நூற்களைத் தேர்ந்தெடுத்தல், வாங்குதல், தயார் செய்தல், வழங்கு தல், பராமரித்தல் என ஒவ்வொரு நிலையிலும் இயந்திர ரீதியில் நூலகப் பணிகள் நடப்பது போலத் தோன்றினா லும், எதிர்காலச் சமுதாயத்தினை உருவாக்கவிருக்கும் இளந் தலைமுறையினரினை வடிவமைக்கும் உயரிய பணி செய்யப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் பலதுறை களிலும் தேர்ந்த மேதைகளுக்குத் தொடர்ந்து நூற்கள்

Page 12
18
வழங்கப்படுவதன் மூலம் சமூக வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைப் பணியையும் நூலகங்கள் செய்கின்றன.
தமிழ்மொழி இலக்கியம் தொடர்பான நூற்கள் சேகரிப்புப் பணியில் மிகச் சில நூலகங்களின் செயற்பாடு உயரிய தரத்தில் உள்ளன. இத்தகைய நூலகங்கள் தோன்றிய முறை, செயற்பாடு குறித்து வரலாற்றுக் கன் ணோட்டத்தில் ஒரு நூல் கூட வெளியாகவில்லை. இந் நிலையில் யாழ்ப்பான நூலகம் தோற்றுவிக்கப்பட்ட முறை, செயற்பாடு பற்றி க. சி. குலரத்னம் தெளிவாக எழுதியுள்ள நூல், வரலாற்று ஆவணமாக விளங்குகின்றது பொதுவாகத் தமிழருக்கு வரலாற்றுப் பதிவு என்பது உகந்தது அல்ல. அண்மையில் நடந்த மிக முக்கியமான செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்து அறிவியல் நோக்கில் விளக்கும் வரலாற்றுப் பார்வை இல்லாத சூழல் இங்கு நிலவுகின்றது.
அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை திரும்ப வரும் தமிழ் ஆண்டுகளின் வரிசைமுறை, வரலாற்று ஒழுங்கினைச் சிதைக்கின்றது. மேலும் வரலாற்றுப் பழமை யான ஆவணங்களைத் தமிழர்கள் போற்றிய முறை வேடிக்கையினையும் வருத்தத்தினையும் தருகின்றது. ஆடிப் பதினெட்டாம் நாளன்று ஒலைச் சுவடிகளுக்குச் சந்தனம். குங்குமப் பொட்டிட்டு வழிபாடு செய்து, இறுதி யில் பொங்கிவரும் புதுப்புனலில் போடுகின்ற மாபெரும் பணியினைப் பன்னெடுங்காலமாகத் தமிழர்கள் செப்து வந்திருக்கின்றனர். இத்தகைய பழக்கம், தொடக்கத்தில் பிரதியெடுக்கப்பட்ட பழைய சிதலமடைந்த ஒலைச் வ4 களை ஆற் றில் விடுவதிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும், நாளடைவில் ஒலைச் சுவடிகளை வீட்டில் வைத்திருப்பது சுமையெனக் கருதும் புலவர் அல்லது புரவலர் பரம்பரையில் வந்த மூடர்கள் அவற்றை ஆற்றில்

9
போட்டு விட்டனர். எத்தகைய விசித்திரமான பழக்கம் தமிழர்களிடம் நிலவியுள்ளது? வரலாற்றுச் சிறப்புடைய ஒலைச் சுவடிகளைப் போற்றிப் பாதுகாத்திடும் மனநிலை பற்ற தமிழர்களுக்குப் "பதிவு" என்ற அடிப்படை
நோக்கம் அறவே இல்லை. ஆங்கிலேயரின் தொடர்பு காரணமாகத் தமிழருக்குத் தோன்றிய நூலகம் பற்றிய கருத்தாக்கமானது, இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து தோன்றியிருப்பின், தற்சமயம் கிடைத்துள்ள அரிய பல பண்டைய இலக்கியங்கள் தண்ணிருக்குள் மூழ்கியிருக்கும்
தமிழருக்கும் நூலகங்களுக்கிடையிலான ஆழமற்ற உறவு காரணமாகவே, இன்று வரையிலும் தமிழகத்தில் பல நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை" தேசிய நூலகமெனச் சொல்லப்படும் நூலகத்தில் கூட பழைய இதழ்களின் தொகுப்புகள் காலவரிசையில் முறை பாக இல்லை. அரிய நூற்களைக்கூட அரசியல் பொருளி பல் செல்வாக்குக் காரணமாக நூலகத்தினைவிட்டு வெளியே கொண்டு வரும் போக்கு நிலவுகின்றது.
நூற்கள் சமூக ஆவணங்கள் என்ற கருத்தாக்கம், நூலகத்துறையில் பணியாற்றுகின்ற பலருக்கு இல்லாத சூழலில் நூலகப் பணி என்பது சேவை என்ற அடிப்படை நிலையினைக் கடந்து வெறும் பொருள் ஈட்டுவதற்காக வேலை என்று விளங்கிக் கொள்ளப்படுமானால், எதிரி காலத் தலைமுறையினருக்கு எத்தகைய ஆவணங்களைப் பாதுகாத்துத் தர வியலும்? இத்தகைய சூழலில் 1933-ஆம் ஆண்டு யாழ்ப்பாண நகரில் தொடங்கப் பெற்ற யாழ்ப் பாண நூலகம்பற்றி முழுமையான தரவுகளுடன் நூலினை வெSவியிட்டுள்ள நூலாசிரியரின் நூலக ஆர்வம் பிரமிப்பைத் தருகின்றது. நூலகத்தினை வெறும் சடப்பொருளாகக் கருதாமல் மனித வாழ்க்கையின் அங்கமாகக் கருதி உயி ரோட்டமான நடையில் பல்வேறு தகவல்களை தொகுத்
IŠ AJộg Giro:TnTt?.

Page 13
20
வரலாறு எ ன் பது மா பெரும் தலைவர்கள், விற்பன்னர்கள் அறிவு ஜீவிகளிள் வாழ்க்கையோடு மட்டும் தொடர்புடையது அல்ல. உண்மையான வரலாறு சாமானிய மக்களின் முயற்சியிலிருந்து தொடங்குகிறது. ஆனால் நடப்பிலுள்ள வரலாறுகள் யாவும் மன்னர்கள் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை மட்டும் விவரிக்கின்றன. சரியான வரலாறு என்பது ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழும் பரந்துபட்ட மக்களின் வரலாறாக எழுதப்பட வேண்டும்.
இத்தகைய வரலாற்று அடிப்படையில் யாழ் ப் பாண நூலகத்தினை நோக்கினால், க. மு. செல்லப்பா வின் முயற்சிகளைப் புரிந்து கொள்ளவியலும், யாழ்ப் பாண மாவட்ட நீதிமன்றத்தின் சக்கடத்தார் என்றும் செயலர் பணிநிலையிலிருந்த க. மு. செல்லப்பா அவர் களுக்கு இலவச நூலகத்தினை ஏற்படுத்த பல பெரியோர் களின் துணையை நாடியதன் மூலம் நூலகம் நல்லமுறை யில் செயற்படுவதற்கு வலுவான அடித்தளமிட்டார். அவரது சமூக அக்கறையுடன் அன்றைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாண நகரில் வாழ்த்த சான்றோரிகளின் சமூக அக் கறையும் இணைந்தது. எனவேதான் அரசு இயந்திரத்தில் உயரிய பணியிலிருந்தோரும் நூலகச் சபையில் சேர்ந்து ஆர்வமுடன் செயல்பட்டுள்ளனர். யாழ்ப்பாண நூலகம் தொடங்குவதற்காக 9.6.34 அன்று யாழ்ப்பாணம் மையக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு வந்திருந்த யாழ்ப்பாணப் பிரமுகர்கள். பெரியவர்கள், நல்லவர்கள், படிப்பாளிகள் அடங்கிய அவையில் க. மு. செல்லப்பர வாசித்த அறிக்கை மிக முக்கியமானது. இலங்கையில் நூலகவியல் பற்றிய கருத்துத் தோன்றாத காலகட்டத்தில் நூலகத்தின் இன்றியமையாததனையும் தேவையினையும் பின்வகுமாறு வலியுறுத்துகின்றார்.

21
* ஊர்கள் தோறும் வா சக சாலைகள், நூல் நிலையங்கள் உருவாதல் வேண்டும். அவையாவும் மத்திய நூலகம் ஒன்றோடு ஒருங்கிணைந்து சேவை செய்தல் வேண்டும்."
ஒவ்வொரு ஊசிலும் நூலகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து, பரந்துபட்ட சமூகப் பொறுப் புணர்வின் அடிப்படையில் தோன்றியதாகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட நூலகங்கள் மைய நூலகத் துடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென்ற எண்ணம் இன்று நூலகவியலில் கூறப்படும் அடிப்படைக் கருத்துக்களில் ஒன்றாகும்.
பெரியோர்களின் ஆதரவுடன் தொடங்கப் பெற்ற யாழ்ப்பாண நூலகம், நாளடைவில் நகரசபையின் ஆதர வின் கீழ் முழுமையான வளர்ச்சியடைந்தது. நூலக வளர்ச்சிக்காக விழாக்கள் நடத்திக் கிடைத்த aica fruit மூலம் பெரிய கட்டடம் கட்டப் பெற்றது, நூலகவியல் பட்டம் பெற்ற நூலகர்களை நியமனம் செய்ததும் யாழ்ப் பாண நூல் வரலாற்றில் குறிப்பிடத் தக்கனவாகும். நூலகக் கட்டடத் தோற்றம், சிறுவர் பிரிவு அமைப்பு, அரிய நூற்கள் பிரிவு என விரிவாக ஒவ்வொன்றினைப் பற்றியும் நுணுக்கமான தகவல்களைத் தந்து விட்டு இறுதி யில் அவையெல்லாம் அரசப்படையினரால் தீயிலிடப் பட்டு கொளுத்தப் பெற்றன. என முடி க் கப்படும் பொழுது மனம் துக்கத்தினால் கணக்கின்றது.
திரு. க. மு. செல்லப்பா முதலாக யாழ்ப்பாண நூலக வளர்ச்சிக்கு உதவிய பல பெரியோர்களின் முயற்சிகள் நூல கர்களின் கடுமையான பணி எல்லாம் இறுதியில் விழலுக்கு இறைத்த நீரானது என்று மனதில் நெருடுகிறது. மீணடும் யாழ்ப்பாண நூலகம் அரசின் உதவியுடன் தொடங்கப்

Page 14
22
பெற்றாலும் சமூக ஆவணங்கள், அரிய நூற்களையெல் லாம் திரட்டி முன்னர் இருந்த நூலகம் போல முழுமை யான நூலகமாக உருவாக்க முடியுமா என்ற கேள்வி மனதில் அழுத்தமாக ஒலிக்கிறது.
தமிழ் அறிவுலகம் இதுபோன்ற நூற்களை கனிவுடன் வரவேற்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலத்தில் தமிழ் நாட்டிலுள்ள முக்கியமான நூலகத்தி சிறப் பினுக்குப் பின்னால் உள்ள கடும் உழைப்பு பற்றி வாசகரி கள் அறிந்து கொள்ள முடியும்
யாழ்ப்பாண நூலகம் பற்றி s.v. குலரத்தினம் எழுதியுள்ள நூல் தமிழ் நூலக வரலாற்றில் ஒரு குறிப் பிடத்தக்க முன்னோடி நூலாக என்றும் விளங்கும் என்பது
உறுதி.
க. முருகேசபாண்டியன்
நூலகரி கணேசா செந்தமிழ் கல்லூரி, மேலைச் சிவபுரி - 622 407 புதுக்கோட்டை மாவட்டம்.

QupūLAGOUT T6) sa)Quiñ
துழைவாயில்

Page 15
வே. இ. பாக்கியநாதன்
கல்கத்தா பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர், வெஸ்லி கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்தில், புல் பிறைந் புலமைப் பரிசில் பெற்று அமேரிக்கா சென்று அற்லான்ரா பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் (M Sc... in Library Science) Gaibaorti ... D-Gvesti lesb பெற்ற சமாதான வீரா டாக்டர் மாட்டின் லூதர் கிங் என்னும் பெரியாரை நேரிற் பார்த்துப் பழகும் வாய்ப் பும் பெற்றார். அங்கு கலிபோர்னியா மாநிலத்தின் சந்தியாகோ நூலகத்தின் சிறுவர் பகுதியில் ஒரு வருடப் பயிற்சியும் மேலதிக தகைமையும் பெற்றார்,
1964இல் யாழ்ப்பாண நூல்நிலையத்தின் நூலக ராகப் பதவியேற்ற பின்னர் எவ்வாறு அதன் வளர்ச்சி யிலும் வளத்திலும் பங்கு பற்றினார் என்கிற செய்தி கள் இந்நூலிலே பரந்து பட ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
இன்று புலம் பெயர்ந்து அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்கின்றார். இங்கும் தமிழர்களுக்கான பாரிய மைய நூலகம் ஒன்று நிறுவப் படுதல் வேண்டும் என்கிற கனவினை நிசப்படுத்தும் பணிகளிலே ஊக்கமுடன் உழைத்து வருகின்றார்.
இவரது பேச்சு-மூச்சு கனவு அனைத்துமே ஈழத் தமிழ் மக்களுக்கான அறிவு ஆலயமாக யாழ்ப்பாண நூலகம் எ ன் றென் றும் நிலைபேறுடையதாக, அமைதல் வேண்டும் என்பதுதான் என்றால் மிகை
aunt&ng a

உலகத்து மக்கள் எத்தனையோ எண்ணுகிறார் கள். அதில் பெரும்பகுதி கவனிக்கப்படாமல் போகின்றது. கவனித்தவற்றுள் ஒரு பகுதிதான் நினைவில் இருக் கின்றது. நினைவில் இருப்பவற்றுள் ஒரு பகுதிதான் பதித்து வைக்கப்படுகிறது பதித்து வைக்கப்பட்டவையுள் ஒரு பகுதிதான் எஞ்சியுள்ளது. எஞ்சியுள்ளவைகளில் வரலாற்று ஆசிரியர்களுக்குத் தெரிந்தவை ஒரு பகுதிதான். அதிலும் ஒரு பகுதிதான் நம்பகமாக உணரப்படுகின்றது. உணரப்பட்டவைகளில் ஒருபகுதிதான் முறையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதாவது நமக்குக் கிடைத்துள்ள செய்திகள் மிகச் சுருக்கமானவை.’ இவ்வாறு லூயி கோட்சாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.
இக்கூற்று நூலக வரலாற்றினையும் அவை கொண் டுள்ள சேர்க்கைகளையும் பொறுத்தமட்டில் பொருத்த Փ6ծւ-ԱյՑ]. -
ஆதியிலே மனிதன் தனக்குக் கிடைத்த எழுது பொருளில் எழுதிவைத்தான். இவை நாட்டுக்கு நாடு வேறுபட்டன. புராதன காலத்து மனிதர்கள் தாம் சிந்தித்தனவற்றை மலைப்பாறைகளிலும், கற்களிலும், எலும்புத்துண்டுகளிலும், மரப்பட்டைகளிலும் எழுதி னார்கள் பொறித்தார்கள் பதித்தார்கள். காலத்தால் அழியாத இவை இன்றும் குகைகளில் காணப்படுகின்றன. "கல்லின் மேல் எழுத்துப் போல்" என்பதற்குச் சான்றாக உள்ளன. ஆனால், எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோ ரத்தில் காணப்பட்ட பேபைரஸ் (Papyrus) என்னும் புல்லி னால் செய்யப்பட்ட தகடுகளில் எழுதப்பட்டன. இது
աn tb-3

Page 16
26 O யாழ்ப்பாண நூல் நிலையம்
அசீரிய நாட்டிலும் மற்றும் மத்தியதரைக் கடலோர நாடுகளிலும் உபயோகத்தில் இருந்தது.
நூலகம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பது திட்டவட்டமாகத் தெரியாது. அறிவுத் தேடலும், ஆவணங்களைக் காப்பாற்றும் முறையும் எப்பொழுது தொடங்கியதோ அப்பொழுதிலிருந்தே நூலகமும் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், ஆரம்பத்தில் எல்லாக் கருத்துக்களும் செவிவழியாகவே பரப்பப்பட்டு வந்தன. இவை பின்னர் வாய்மொழி வாயிலாக ஏனையோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. எழுது கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே அவை எழுத்து வடிவில் எழுதப்பட்டன. இதுதான் வரலாறு கூறும் சங்கதி.
பண்டைய காலத்திலே தோன்றிய சமயக் கருத்துக்கள் இம்முறையினாற்றான் பரப்பப்பட்டன. புனிதமானவை களைTஎழுதி வைப்பது தவறு என்ற கருத்தும் நிலவி வந்தது. சமயக் கருத்துத் தோகுதி ஒவ்வொன்றும், ஒவ்வொரு நூலும், ஒரு துறவியினால் கற்கப்பட்டு, மனப் பாடம்செய்யப்பட்டு, திருத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது. வேண்டிய பொழுது ஏனையோருக்கு அறிவுரையாகச் சொல்லப்பட்டது. எனவே, ஒவ்வொரு துறவியும் நட மாடும் நூலகமாகத் திகழ்ந்தார்.
எழுதி வைக்க முயன்ற பொழுது எழுதக் கிடைத்த பொருள்கள், இலை, மரப்பட்டை, ஒலை, பட்டுத்துணி, பேபைரஸ் புல், களிமண் தட்டு, எலும்புத்துண்டு என்பனவாம். ஆகவே, இவற்றைத் தொகுத்து எழுதிப் பரப்பி வைத்த நூலகங்கள் பற்றிய குறிப்புகள் தெளி வாகவில்லை. ஆயினும், இவை பரப்பப்படுவதற்குத் திட்ட

நுழைவாயில் 27
மிட்ட அமைப்பு, நூலக அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆவணங்களை காப்பாற்றிப் பேணிப் பாதுகாத்து வைப்பதற்கெனப் பண்டைய காலத்தில் நூலகங்கள் போன்ற அமைப்பு இருந்ததாக வரலாறு கூறுகின்றது.
அசீரியா
அசீரியர்கள்தான் முதன் முதலில் தம்மிடமுள்ள சேர்க்கைகளைப் பாட ரீதியில் ஒழுங்கு செய்து, பொது மக்களின் உபயோகத்திற்காக ஏற்பாடும் செய்திருந் தார்கள் எனத் தெரியவருகின்றது. ஆசூர் பனிப்பால் (Assurbanipal; கிமு 668-628) என்பவரே மிகப் பிரபல்ய மான நூலகமொன்றினை கினேவா (Nineveh) எனுமிடத் தில் அமைத்தார். இங்கு 30,000 களிமண் தட்டுகள் இருந்த தாகத் தெரிகிறது. இவரது நேரடிக் கண்காணிப்பில் பலர் வெவ்வேறு நாடுகளுக்கு அந்நாட்டில் எழுதப்பட்டிருக்கும் ஆவணங்களைச் சேகரிக்கும் பொருட்டு அனுப்பிவைக்கப் பட்டனர். சமய சார்பான விடயங்களுக்கு இவர் முக்கியத்துவம் அளித்திருப்பினும், ஏனைய விடயங்களில் எழுதப்பட்டனவற்றையும் தேடிக்கொண்டு வருமாறு தமது அலுவலர்களைப் பணித்தார். சுமேரியா, பபிலோனி யாவிலுள்ள நூல்களைப் அசீரிய மொழியில் மொழி பெயர்ப்பதற்காக எழுத்து எழுதுனர்களை (Scribes) நியமித்தார். நூலகச் சேர்க்கை சகல கல்விமான்களின் உபயோகத்திற்கும் திறந்துவிடப்பட்டது இவரது நூல கத்தில் சமய சார்பான நூல்களுடன் அரச பரம்பரை யினரது வாழ்க்கை வரலாறு, புவியியல், விஞ்ஞானம், வானியல், சோதிடம், கணிதம், மருத்துவம் சார்பான கணிமண் தட்டுகள் இருந்தன. அவை வரன் முறையாக களிமண் பேழைகளில் வகைப்பட்டிருந்ததாகவும் தெரி கிறது. நூலகத்தை மேற்பார்வை செய்வதற்கென எழுத்து எழுதுனர்களில் அநுபவம் வாய்ந்த ஒருவரைத் தேர்ந்

Page 17
28 யாழ்ப்பாண நூல் நிலையம்
தெடுத்து அவருக்கு பன்மொழிப் பயிற்சியுடன் மொழி பெயர்ப்புக் கலையும் பயிற்றுவிக்கப்பட்டது. அமிட் அது (Amit Anu) எனும் பபிலோனிய நூலகர்தான் மிகப் பழமையான அரச நூலகராக கணிக்கப்படுகிறார்.
எகிப்து
கி.மு.3200ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் நூலகம் இருந்ததாகத் தெரிகிறது. அங்கு அமைந்திருந்த பிரபல நூலகம் அலெக்ஸ்சாந்திரியா (Alexandria) நூலகமாகும். இதனை ஆரம்பித்து நிர்வகித்த பெருமை எகிப்தினை ஆண்ட 1ம், 2ம் தொலமிகளைச் (Ptolemy 1 & 1I) சாரும். இவர்களுக்கு ஆலோசகராக இருந்த Quopöaudio (Demetrius) என்பவர் கிரேக்க இலக்கியத்திலிருந்து சகல பிரதிகளையும் இங்கு சேர்த்து வைத்திருந்தார். பல்லாயிரக் கணக்கானவை பேபரைஸ் தாளிலும், தோலிலும் எழுதப்பட்டவையே. இவற்றிற்கான ஆசிரியர் பட்டியல் ஒன்றினை முதன் முதலில் தயாரித்த பெருமை a súllovčecio (Callimachus) 67 söru6/6ord &m (15b.
பேர்கமம்
ஆசியாக் கண்டத்தில மைந்திருந்த பேர்கமம் (Pergamem) 6TDub இடத்தில் அலெக்ஸ்சாந்திரியா நூலக்த்தினைப்போன்று ஒரு நூலகத்தை இயூமெனிஸ் 1
(Eumenes 11) என்பவர் கி.மு 1497 இல் ஆரம்பித்தார். எகிப்திலிருந்து பேபைரைஸ் தாள்களைக் கொண்டு வருவதற்கு தொலமி தடைவிதிக்கவே, கோலினாலான எழுதுகருவிகளை எழுத உபயோகித்தனர். இவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள் நீண்டகால பாவனைக்குகந்த தாக இருந்ததுடன், சுருளாகச் சுற்றி வைக்கக் கூடியன

துழைவாயில் 29
வாயும் அமைந்திருந்தன. அறிவு வளர்ச்சியினைப் பரப்ப இவை பெரிதும் உதவின. பேர்கமம் உரோமர் கையில் வீழ்ச்சியடையவே இங்கிருந்த நூலகச் சேர்க்கை வெற்றி பெற்றவர் கைக்கு மாறியது. இச்சேர்க்கையிலிருந்து அக்தோணி 200,000 சுருள்களைக் களவாடி எகிப்திய அழகி யான கிளியோபட்ராவுக்கு கொடுத்ததாக வரலாறு கூறு கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் கிரேக்க நாட்டி அள்ள சிறிய நகரங்களிலெல்லாம் பொது நூலகங்கள் இருந்ததாகவுந் தெரிய வருகிறது.
உரோமம்
கி.மு. முப்பதாம் ஆண்டளவில் உரோம இராச்சியம் ஆசியாவின் எல்லையிலிருந்து இங்கிலாந்து வரை பரவி யிருந்தது. உரோம நூலகங்கள் கிரேக்க நாட்டிலுள்ள சேர்க்கையிலிருந்து உருவாயின. எனவே, போரிலிருந்து கவரப்பட்ட நூற்சேர்க்கைகளே உரோம நூலகங்களின் ஆரம்பகாலச் சேர்க்கைகளாயின. போலஸ் எமிலியஸ் (Paulus Aemilius) 6T 6örgi 2GBTITLD | G3LurriřafurGir மசிடோனியாவின் பேர்சியஸ் என்னும் அரசனை வெற்றி யடைந்ததும், அங்குள்ள நூலகச் சேர்க்கையே இவரது கவனத்தை ஈர்ந்ததாகவும், அதனைக் கொண்டே உரோம் நகரில் முதன் முதலில் நூலகம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதே போன்று உரோம அரசர்கள் தாம் போரிட்ட நாட்டிலுள்ள நூலகச் சேர்க்கைகளைக் கவர்ந்து வந்து தமது நாட்டின்நூலகங்களை கட்டியெழுப்பி வந்தனர். ஆகஸ்டஸ் (Augustus) என்பவரே உரோமில் பொது நூலகங்களை ஆரம்பிப்பதற்கு பொறுப்பாயிருந் தார். உரோம நாட்டில் இருந்த மருத்துவர்கள், சட்ட நிபுணர்கள் பெருமளவிலான தனிப்பட்ட நூற் சேர்க்கை களைச் சேர்த்தனர். AQs Grar (Cicero) 6raituauri grav suh Löд)ž GдNLIL 99604 und "The soul of the house"

Page 18
30 யாழ்ப்பாண நூல் நிலையம்
என வர்ணித்துள்ளார். இவர் நூல்களைச் சேகரிப்பதில் வல்லவராக விளங்கினார். இவர் நூல்களை, வாங்குவதி லும், விற்பதிலும், வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி னார். அவருடைய சொந்த நூலகமே 20, 000க்கு மேற் பட்ட சுருள்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
zo Gurmruo இராச்சியத்தின் அரசனான கொன் ஸ் ரன்ரைன் (Constantine 288 -337) கிறிஸ்தவ சமயத் துக்கு அளித்த மதிப்புக் காரணமாக கிறிஸ்தவ தேவால யங்களும், அவற்றுடன் இணைந்து நூலகங்களும் உருவாயின. உரோம நூலகங்களில் உள்ள நூற்ச்சேர்க் கைகள் பொதுமக்களுக்குக் இரவலாக கொடுக்கப்பட வில்லையெனினும் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டன.
கிரேக்கம்
மேலைத்தேச நாடான கிரேக்க நாட்டிலேதான் உண்மையான நூலகங்கள் நிலவின. அங்குள்ள பல ஆலயங்களில் ஆவணங்கள் சேர்த்து வைக்கப்பட்டன. இயூறிபிரிடிஸ் (Euripridis) என்னும் கிரேக்க எழுத்தாளன் பிரத்தியேகமாக நூல்களைச் சேர்த்து வைத்திருந்த தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன முறையில் நூலகம் எனக் கருதக் காட்டியவை ஏதென்சில் கி. மு. நான்காம் நூற்றாண்டளவில் ஏற்படுத்தப்பட்டன. இங்கு இலகுவில் அழியுந்தன்மை கொண்ட எழுது கருவிகளான பேபைரைஸ், பாச்மென்ற் என்பனவற்றில் எழுதப்பட்ட ஆவணங்களுடன் கையெழுத்துப் பிரதி செய்யப்பட்ட ஆவணங்களும் காணப் பட் ட ன. அரிஸ்தோத்தில் (Aristote) என்னும் கிரேக்க தத்துவ ஞானியே மரபு ரீதியான நூலகச் சேர்க்கையைச் சேர்த்து வைத்த தாகத் தெரிகிறது. எகிப்தில் அமைந்திருந்த அலெக் சாந்திரியா நூலகத்திலிருந்தே பிரதிகள் பெறப்பட்டு

துழைவாயில் 31
இவை சேர்க்கப்பட்டதாகச் சான்றுகள் உள். கி.மு. 480-இல் ஏதென்ஸ் நகரம் பாரசீகத்தினால் கைப்பற்றப் பட்டதும், இங்குள்ள நூலகங்களின் சேர்க்கைகள் பார சீகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
கி.பி. 2ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேவாலயங்கள் தோறும் மடாலயங்கள் தோன்றின. கிறித்தவ சமயத் தைப் பரப்புவதற்கு ஏதுவாக மறை நூல்களின் பிரதி கள் தேவைப்பட்டன. இதற்கெனத் தேவாலயங்களில் பிரதியெடுப்பவர்களும் (Copyists), பிரதிகள் எடுக்கும் அறையும் (Scriptorium) ஏற்படுத்தப்பட்டன. மூலப் பிரதிகளில் இருந்து பிரதிகள் எடுக்க எழுத்தர்கள் உரு வாக்கப்பட்டனர். பிரதி எடுக்கும் கலை, முக்கிய தொ ழிலாகவும் கருதப்பட்டது. பிரதிகள் சீரானதோர் முறையில் அடுக்கப்பட்டு அவை தேவையானோருக்கு விநியோகிக்கப்பட்டன. இப்பணியினை மேற்பார்வை செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரே காலப் போக்கில் நூலகர் ஆனார். கையெழுத்துப் பிரதி seGT ஏனையோரும் உபயோகித்துப் பலன்பெறும் வண்ணம் இவை ஏனைய தேவாலங்களுக்கு இரவல் கொடுக்கப்பட்டன. இதற்கான விதிமுறைகளும் ஏற் படுத்தப்பட்டன. எனவே, நாம் தற்பொழுது கருதும் பொது நூலகம், நூலகர், இரவல் வழங்கும் முறை ஆதியன அக்காலகட்டத்திற்றான் உருவாகியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.
இந்தியா
இந்திய நூலக வரலாற்றினை உற்று நோக்கு பொழுது இங்கும் மேலைத் தேசங்களில், முக்கியமாக ஐரோப்பியக் கண்டத்தில் நிலவியிருந்த நிலையினையே காண்கிறோம். ஆதிகாலத்தில் எழுதப்பட்ட, உருவாக்

Page 19
32 O யாழ்ப்பாண நூல் நிலையம்
கப்பட்ட நூல்கள் சமய சார்புடையனவாய் இருந்தன. நூலகங்களில் பெரும்பாலானவை சமயத் தொடர்புடைய கோயில்களிலும், துறவிகள் வாழும் மடங்களிலும், சமயக் கல்வி நிலையங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. சம யத்துறையில் வல்லுநர்களாக இருந்த துறவிகள் நூல கர்களாக, நூல்களைப் பிரதி செய்பவர்களாக, சமயக் கொள்கைகளைப் பரப்பும் ஆசான்களாக விளங்கினர். நூலகங்கள் நூல்களைச் சேகரிக்கும், படி எடுக்கும் இடமாக இல்லாது, படிப்பு இடங்களாகவும், படித்துக் காட்டும் இடங்களாகவும் இருந்தன. கோயில்களில் இன்றும் புராணக் கருத்தை விரித்து உரைக்கும் இடமாக இருந்து வருவதைப் பார்க்கும் பொழுது இது உண்மை போல் தெரிகிறது.
நூல்களும் துறவிகளும் இயற்கையின் அல்லது செயற்கை யின் அழிவுகளுக்கு ஆளாயினர். இத்துடன் அறிவு அழியா திருக்கும் பொருட்டு நூல்களைத் திரும்ப எழுதிக் கொ டுக்கும் முயற்சி நடைபெற்றது. இம்முயற்சியினை "புத்தக ஆரோகணம்” என அழைத்தனர். இது திட்டமிட்ட வாறு நடைபெற்றது. கூட்டு முயற்சியாக இது முதல், இடை, கடைத் தமிழ்ச் சங்க காலங்களில் நடந்தேறியது. இதனைப் பல்வேறு சமயங்களின் முயற்சிகளிலும் காண முடிகிறது.
சமணசமய காலம்
சமண சமணம் பரவிய சகல இடங்களிலும் வட்டார மொழி வளர, வளம் பெற வாய்ப்புகள் கிடைத்தன. மகாவீரர் காலத்தில் சமண சமயம் சார்ந்த பன்னிரு. திருமுறைகள்-அங்கங்கள் (Angas),பிராகிருத மொழியில் சுவடிகளாக எழுதப்பட்டன. இப்படி எழுதப்பட்ட

துழைவாயில் 33
தால்களைச் சேர்த்து வைக்கும் இடத்தினை இவர்கள் "ஞான பண்டாரங்கள்" (Gnane Bhandaras) araw அழைத்தனர். இப்படிச் சேர்த்த, சேர்க்கப்பட்ட நூல் கள் மக்களிடையே பரப்புவதற்காக ஞான பூரணவிழா வோன்று ஏற்படுத்தப்பட்டது. இந்நாளினையே நாம் இன்று சரசுவதி பூசை நாள் எனக் கொண்டாடுகிறோம். இவ்விழாவின்போது அருகியுள்ள நூல்கள் ஆயிரக் கணக்கில் படி எடுக்கப்பட்டு தேவையானோருக்குத் "P7க வழங்கப்பட்டன. இது புத்தக தானம் எனப் பெயர் பெற்றது. இப்பணியினைத் தொடர்ந்து நடத் துவதற்கு முனைப்பாகப் பாடுபட்டவர்கள் பலர். ாளுக்கிய அரசர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்தராசா ஜெயசிம்ம தேவன். சமய நூலக இயக்கத்தில் சிறப்பிடம் பெறுபவர். இவர் கி.பி. 1094-1143 வரை அதிகாரத்தில் இருந்தவர். இக்காலத்தில் நூல்களை எழுதிக் கொடை யாகக் கொடுக்கும் முயற்சி வேகமாக வளர்ந்தது. சித்த SQLDIT Goulus T6North (Siddha Hema VyAkarna) GT6örgpylib சில் ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் படிகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரி கிறது. இதனை 300 எழுத்தெழுதுநர் (Scribes) எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு சமண ஆசானான குமாரதேவ பாலன் நூலகங்களை நிறுவு வதற்கு மானியங்களை வழங்கியதுடன், நெறி பயின்ற பணியாளர்களையும் நியமனம் செய்திருக்கிறார். இவரது பணிபற்றி “குமார பால பிரபந்தமும்’, ‘உபதேச தரங் கிணியும் விதந்துரைக்கின்றன. விசாலதேவன் அல்லது விசுவகர்மா என்பவர் காலத்தில் பழைய நூல்களுக்குப் புதியவுரை எழுதப்பட்டன.
'காம சூத்திரம்' என்னும் நூலும் இவரது காலத் திலேதான் வெளியிடப்பட்டது. இந்நூலகத்திலிருந்த இராமாயணத்தின் கையெழுத்துப் பிரதி, ஜேர்மனியி

Page 20
34 D யாழ்ப்பாண நூல் நிலையம்
துள்ள பொன் (Bonn) பல்கலைக் கழகத்தில் இருப்ப தாகக் கூறப்படுகிறது.
கி.பி. 1013-1060 வரை வாழ்ந்த போச மகாராசா சிறந்த கல்வியாளர். அறிஞர்கள் பலரை ஆதரித்தவர். இவர் தாரா என்னுமிடத்தில் கல்லூரியொன்றினை நிறுவி அதில் நூலகத்தினையும் இணைக்கச் செய்தார். சமணர் காலத்தில் தமிழில் பல நீதி நூல்கள், காப்பியங் கள், இலக்கணங்கள், நிகண்டுகள், சோதிடம், இசை, மற்றும் கணக்குத்துறை சார்ந்த நூல்கள் ஏற்படுத்தப்
ill-607.
பெளத்த மத காலம்
பெளத்த மதமும் நூலகத்துக்குதவியது. மணி மேகலை என்னும் பெளத்த காப்பியம் மதுரையில் அமைந்த 'செழுங்கலை நியமத்தில் இன்றைய நூலகத் துக்கு அன்றைய பெயர் இருந்தது. இதனைத் "தென் தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்" என்னும் குறிப்பால் அறிக.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் சிறந்து விளங்கிய பெளத்த சமயாச்சாரியர் நாகார்ச்சுனன். இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள குண்டூர் மாவட்டத் தில் ஐந்து மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதனைப் "பருவத விகாரை" என அழைத்தார். இதன் ஐந்தாவது மாடியில் நூலகத்தினை அமைத்து 84 ஆயிரம் உரை பாடல்களைக் கொண்ட திரிபிடகம்" (Tripttika) என்னுல் நூலினை அங்கு வைத்திருந்தார். பாகியான் என்னும் சீன யாத்திரிகன் இது பற்றிக் குறிப்பிட். டுள்ளார். பாடலிபுரம் மடத்தில் பாகியான் மூன்றாண்டு கள் தங்கியிருந்து சமஸ்கிருதம், பாளி மொழிகளைப் பேச- எழுதக் கற்றதாகவும், 6000 குத்திரங்கள் கொண்ட *அபிதர்மம் (Abhidhamma) சைபுல்ய பரி நிர்வாணம்

நுழைவாயில் 35
3000 சூத்திரங்களையும் படி எடுத்துக் கொண்டதாகவும் செய்திகள் உள்ளன.
பல்லவ தலை நகராகிய காஞ்சிபுரத்தில் பெளத்த மடாலயங்கள் இருந்ததாகவும் இங்கிருந்துதான் யுவான் சுவாங் எனப் பெயர் கொண்ட இன்னொரு சீன யாத்திரிகர் வேறு எங்கும் கிடைக்காத செய்திகளைப் பெற்றதாகவும் தெரிகிறது.
சைவ மதக் காலம்
சமயக் கல்வி தருவதற்குப் பொதுக் கல்வி அவசியம். இதனையுணர்ந்து, சைவ மதத்தினர் கோயில்கள் தோறும் நூல்களைச் சேகரித்தனர். அங்கு வரும் மாணவர்களுக்கும்
தனர். கல்வி கற்க வந்தோரும் பிறரும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளக் கோயில்கள் உதவின. இத்துடன் அது ஊர் மக்கள் கூடிப் பேசி, ஊராட்சி நடத் தவும் உதவியதுடன், இசை, நாடகம், ஓவியம், நுண் கலைகள் வளர்க்கும், ஆதரிக்கும் இடமாகவும் விளங் கியது. கோயிலின் சுற்றுப்புற மாளிகையில் அறிவை வளர்க்கும் நிலையம், சரசுவதி தங்கி நிற்கும் இடம், நூலகம் - அதாவது "சரசுவதி பண்டாரம்" இருந்தது.
வருவது உணர்ந்து தங்கள் செயல்களை நின்று நிலைத்து நிற்கும் வண்ணம் கல்மேல் எழுத்தாக, அதாவது கல்வெட்டுக்களாக எழுதி வைத்தனர். இவை இன்றும் தென்னிந்திய திருக் கோயில்களின் சுவர்களிலே, தூண்களிலே பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சேரன் மாதேவி, சிருங்கேரி, சீரங்கம், சிதம்பரம், காஞ்சி புரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக் களில் நூலகங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத் துள்ளன.

Page 21
யாழ்ப்பாண நூல் நிலையம் ם 36
நூலகங்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது தஞ்சாவூர் முதன்மை பெறுகிறது. தஞ்சாவூரை ஆண்ட தெலுங்கு தாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் (1538.1561) அச்சுத நாயக்கர் (1561-1614) நல்ல நூலகங்களை வைத்திருந்தனர், நாயக்கர்களுக்குப் பின்னர் அரியணை யேறிய மராட்டிய மன்னர்களும் நூல்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டினர். மராத்திய கையெழுத்தும் աւգ&air சேர்க்கப்பட்டன. தஞ்சாவூரை ஆண்ட argura மன்னர் (1798 - 1833) அறிஞ ரா க இருந்ததுடன் கலைஞராகவும் இருந்தார். அறிவு வளர்ச்சியில் ஆர்வமுடையவர். இதன் 5 IT proof LDITS, முன்னைய மன்னர்கள் சேர்த்து வைத்த நூல்களைத் தொகுக்க முனைந்தார். இத்துடன் நில்லாது, வெளி நாட்டில் இருந்து பல அரிய உயரிய நூல்களைத் தருவித்ததுடன் பழஞ்சுவடிகளை, ஒலைச் சுவடிகளை, கையெழுத்துப் படிகளைச் சேர்த்தார். இதன் பெறு பேறாக தஞ்சாவூரில் 1820 ஆம் ஆண்டு "சரசுவதி மகால்” என்ஸ் ம் நூலகம் உருவானது. இங்கு 30,000 கையெ ழுத்துப் படிகளும். ஒலைச் சுவடிகளும், 15,000 அச்சு நூல் களும் இருந்ததாகத் தெரிகிறது. இவை சமஸ்கிருதம், மராத்தி. மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது, வங்காளி, பஞ்சாப் ஆகிய மொழிகளில் இருந்ததாகவும் அறிய முடிகிறது. தஞ்சாவூரில் கல் எழுத்து அச்சகம் ஒன்றை நிறுவிய பெருமையும் சரபோசி மன்னரையே சாரும். வடமொழி, மராத்தி ஆகிய மொழிகளில் இருந்த நூல்களைத் தேவநாகரி எழுத்தில் அச்சிட்டார். இவ்வச் சகத்திற்றான் மகான் எழுதிய "சிசு பால வதம்" என்னும் காவியம் 1812 இல் அச்சானது.
இது காலவரை அரசர்களும் அவரைச் சார்ந்தோரும் மட்டுமே நூலகங்களைப் பயன்படுத்தி வந்தனர். அதுவும் அநுமதியினைப் பெற்ற பின்னரே, இந்நூலகச் சேர்க்கை

நுழைவாயில் O 37
யினைப் பயன்படுத்த முடிந்தது. வளர்ந்து வரும் சமு தாயத்தில் மக்கள் அனைவரும் கல்வி பெறவும், விருத்தி செய்யவும் பொது நூலகங்கள் தேவைப்பட்டன. இத் தகைய தலையாய பணியை அரசாங்கம் உணர்ந்தது. ஆளவந்தோரும் ஆளப்படுவோரும் உணர்ந்தனர். இதன் விளைவாக இந்திய தலைநகரங்களில் எல்லாம் பொது நூலகங்கள் உருவாக்கப்பட்டன. கல்கத்தா இதில் முன்னோடியாக விளங்கியது. இங்கு பொது நூலகம், சாயலான வங்க இராயல் ஆசியச் சங்கம் (Roya - Asiatic Society) 1784 இல் திறக்கப்பட்டு 1820 இல் பொது மக்கள் உபயோகத்துக்குத் திறந்து விடப்
பட்டினத்தில் 1818இல் நூலகங்கள் திறக்கப்பட்டன. இருப்பினும், இவற்றின் சேர்க்கையைச் சிலர் மட்டுமே அநுமதியுடன் உபயோகித்தனர். மக்களால், மக்கள் பணத்திலிருந்து மக்களுக்காக நடத்தப்படும் நூலகமே பொது நூலகம் எனக் கொள்ளலாம். கட்டணம் எதுவும் செலுத்தாது சகலரும் இலவசமாக நூலகத்தைப் பயன் படுத்துவதற்காக சென்னை மாநகர ஆளுநராக விழுந்த கன்னிமாரா பிரபு (1886-1890) சென்னை எழும்பூரில் கன்னிமாரா பொது நூலகத்துக்கான அடிக்கல்லை 1890 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி நாட்டினார். இது 1896 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இன்றும் இது சென்னையின் பிரபல பொதுநூலகமாக இருந்து, சென்னைவாழ் மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றிவருகிறது.
இலங்கை
ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையிலும்
நூலகங்கள் அரசர்களினது அதுசரணையுடன் ஏற்படுத் தப்பட்டன. அவர்களது ஆவணங்களை, நூல்களைப்

Page 22
38 O யாழ்ப்பாண நூல் நிலையம்
பேணிப் பாதுகாப்பதற்கென விகாரைகளிலும், கோயில் களிலும் மடாலயங்களை அமைத்து, எழுத்தெழுதுநர்
களைக் கொண்டு நூல்களிலிருந்து கையெழுத்துப் பிரதி
களை எடுத்தனர். தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு
காலத்துக் காலம் நூல்களை எழுதுவித்து அரங்
கேற்றினர்.
இலங்கையில் நூலகங்களின் தோற்றுவாைைய ஆராய்ந்தால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே நூலகங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பெளத்த மதம் FfTrifu T6T சமய இலக்கியங்கள் கி.மு. முதலாம்நூற்றாண்டில் ஆட்சியிலிருந்த வட்ட as Tei suu (Vattagamini Abhaya) 6. (p. 103-97, காலத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. திரிபிடகம் (Tripitaka) என்னும் நூலின் பிரதிகள் சகல விகாரை களிலும் இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது. அநுராதபுரத்தை ஆட்சி செய்த தேவகம்பிய தீசன் (கி.மு. 250-210) அங்கு மகா விகாரையைக் கட்டு வித்தான். இதனைவிட அபயகிரி விகாரை, யத்தவன விகாரை ஆகிய இடங்களில் பெளத்த பிக்குகள் தங் கிப் படித்தார்கள். அக்காலத்தில், இவ்விகாரைகள் தற் போதைய சர்வகலாசாலை அந்தஸ்தைப் பெற்றிருந்த தாகத் தெரிகிறது. புத்தகோச (Buddhagosa) இலங்கைக்கு வந்து இங்குள்ள மகாவிகாரையில் தங்கி சிங்கள மொழியில் உள்ள சமய நூல்களைப் பாளி மொழியில் மொழிபெயர்த்ததாகவும் தெரிய முடிகிறது. மகாவிகாரையுடன் ஏனைய விகாரைகளிலும் பனை ஒலையில் எழுதப்பட்ட கையெழுத்துப் படிகள் பாது காக்கப்பட்டன. மகாவம்சம், தீபவம்சம் ஆகிய நூல் கள் பாதுகாப்பாக விகாரைகளில் பாதுகாக்கப்பட்ட தாகக் குலவம்சம் கூறுகிறது. நூலகம் அதாவது "பெளத்த

நுழைவாயில் O 39
காலய யற்றவன விகாரையில் இருந்ததாகத் தெரி கிறது.
சீன யாத்திரிகரான பாகியன் இலங்கைக்கு வந்த பொழுது மகாகாம (406-428) என்னும் அரசன் ஆட்சி யிலிருந்தான். அப்பொழுது அபயகிரி விகாரையில் 5000 பெளத்த குருமாரும், மகா விகாரையில் 3000 பெளத்த
குருமாரும் இருந்ததாக அறிய முடிகிறது.
Los lugará alguoure, 128 வீடுகளில் நூல்களை வைத்திருந்தாரென குலவம்சம் தெரிவிக்கிறது. மூன்றா வது விஜயபாகு (1232-1236) தம்பதேனியாவில் தனது ஆட்சியை அமைத்து நூல்களையும், கையெழுத்துப் படிகளையும் பிரதி பண்ணிவித்தார். கான்காவது பராக் கிரமபாகு (1302-1326) 550 புத்த ஜாதகக் கதைகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பித்ததுடன், தமி ழில் உள்ள சோதிட நூலான சரசோதி மாலையையும் ஆக்கிவித்தார். இதே போன்று ஆறாம் பராக்கிரம பாகுவும் (1470-1478) இலக்கிய ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்ததுடன், பல்வேறு இடங்களில் பிரிவேனாக்களை ஏற்படுத்தி அங்கு பெளத்த பிக்குமார்களுடன் பிரா மணர்களையும் தத்துவம், மருத்துவம், சமஸ்கிருதம் பாளி, தமிழ், பொருளியல் ஆகிய பாடங்களைப் படிக்க ஆவன செய்தார்.
அந்நிய நாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் நிலை நாட்டப்பட்டதும், உள்ளூரில் இருந்த நூலகங்களும், நூல்களும் பாதிப்புக்குள்ளாயின. இருப்பினும், பிரித் தானியர் ஆட்சிக் காலத்தில் நூலகங்களை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு கிட்டியது. அகாகரிக தர்மபாலா ஒல் கொட், குணானந்த தேரோ இதற்கு முன்னின்று உழைத்தவர்களில் முதன்மையானோர். இவர்களின் ஆதரவு காரணமாக 1813–1850 ஆம் ஆண்டுக் காலங்

Page 23
40 O யாழ்ப்பாண நூல் நிலையம்
களில் இலங்கையின் பல பகுதிகளில் நூலகங்கள் ஏற்படுது ஏதுவாயிற்று.
வட இலங்கை
வட இலங்கையின் நூலக வரலாற்றினை ஆராய்பவர் களுக்கு சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் கட்டியெழுப்பிய "சரசுவதி மகால்" என்னும் நூலகம் இருந்ததற்கான சான்றே கண்முன் தோன்றும். இதுவே வட இலங்கை யின் நூலக வளர்ச்சியின் முன்னோடியென்றால் மிகை யாகாது.
சிங்கள மன்னர்களைப் போன்று இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் சமயத்துக்கும், தமிழ் மொழிக்கும் பெரும் தொண்டாற்றி வந்துள்ளனர். இவர்களுள் குறிப் பிடத்தக்கவர்கள் ஆரியச்சக்கரவர்த்திகள். இவர்கள் நல்லூரை அழகுபடுத்திய காலத்தில் நாற்புறங்களிலும் காவற் கோட்டங்கள்போல் கோயில்களை அமைத் தனர். இதன் பிரகாரம் கிழக்கில் வெயிலுகந்த பிள்ளை யார் கோயிலையும், தெற்கில் 6056)fTF நாதர் கோயிலையும், மேற்கில் வீரமாகாளியம்மன் கோயிலையும் வடக்கில் சட்ட நாதர் கோயிலையும் அமைத்தார்கள். இதில் கைலாச நாதர் கோயிலின் வரலாற்றினையும், யாழ்ப்பாணத் தமிழர்கள் வரலாற் றினையும் முத்துக்கவிராயர் இயற்றிய 'கைலாய மாலை" கூறுகிறது.
ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரைத் தலை நகராகக் கொண்டு 1478-1519 வரை அரசு செய்தனர். இவர் களுள் பரராசசேகரம் தம்பி செகராசசேகரன் மருமகன் அரகேசரி ஆகியோர் தமிழுக்குத் தொண்டாற்றியவர் களில் தலைமையானோர். நல்லூரின் கிழக்கில் நாயன் மார்கட்டு' என்னும் நகரின் மத்தியில் அமைந்த தாமரைக் குளத்தடியில் மாடியறையில்வாழ்ந்த அரசகேசர் என்பவர்

நுழைவாயில் O 41
மகாகவி காளிதாசர் வடமொழியில் எழுதிய "இரகு வம்மிசம்" என்னும் பெரு நூலைத் தமிழில் செய்யுள் நடையில் மொழி பெயர்த்துக் கொடுத்தார்.
சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளுள் செகராசசேகரன் சிறந்து விளங்கினான். இவனது ஆட்சிக்காலம் 1380-1414 வரையிலாகும். சைவ நெறியும், தமிழும் தழைத்தோங்க அயராது பாடுபட்டார். தமிழ்ப் புலமையோனாய் இருந்து தமிழ்ப் புலவர்களை வரவேற்று உபசரித்து நூல்களை ஆக்குவித்தார். இவரது காலத்திற்றான் "செகராச சேகரம்" என்ற பெயரில் வைத்திய நூலும், "செகராச சேகரமாலை" என்னும் சோதிட நூலும் வெளிவந்தன. இவர் இயற்றுவித்த இன்னொரு நூல் * கணக்கதிகாரம்" என்பதாகும். இவரைத் தமிழ் தந்த தாத்தா என்பதற்கு அவர் நல்லுரரிற் பரிபாலித்து வந்த "தமிழ்ப்புலவர் சங்கம் சான்றாகும். அங்கு அமைந்திருந்த * சரசுவதி மகாலயம்" என்னும் பெயரிய நூலகம் பல அரிய பழைய நூல்களின் ஏடுகளை அணியணியாகக் கொண்டிருந்ததாகவும், இவை தென்னித்தியாவிலிருந்து இங்கு வந்த புலவர் பெருமக்களினால் கொண்டு வரப்பட்ட தாகவும் தெரிகிறது. இந்நூலகமே யாழ்ப்பாண நூலகங் களுக்கு முன்னோடியானது. இவர் பெருமையை "இலங்கை வேந்தர், பொன் திறைக்கச் செங்கோலோச்சும் செகராச சேகரன்' என்னும் வரி எடுத்து இயம்புகிறது.
தமிழ் வளர்த்த சான்றோருள் பராாச சேகர மன்னரும் ஒருவர். "மஞ்சும் அஞ்சும் கைப் ugrirao சேகரன்" என்று புலவர்கள் பலரால் விதந்துரைக்கப் பட்டவன். வடநாட்டிலிருந்து இவரும் பல புலவர்களை வரவழைத்து நல்லூரிற் குடியிருத்தி உபசரித்தார். தனது பெயர் மறையாதிருக்கும் பொருட்டு "பரராச
սյոլք-4

Page 24
42 யாழ்ப்பான நூல் நிலையம்
சேகரம்" என்று விளங்குஞ் சிறந்த ஒரு வைத்திய நூலை ஆக்குவித்தார்.
இலங்கை அந்நியராட்சிக்குட்பட்டதும் பண்டைய நூல்களும், நூலகங்களும், விகாரைகளும். மடாலயங் களும் அழிந்தன. தமது சமயத்தையும், மொழியை யும் சுதேசிகள் மீது திணிப்பதிலேயே கண்ணுங் கருத்துமா யிருந்தனர். எனினும், பிரித்தானிய ஆட்சியாளர் தமது மொழி, சமயத்துடன், சுதேசிகளின் மொழி வளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும்.உதவினர். நூலகங்களை அமைப்பதன் மூலமும், நூல்களை வெளியிடுவதன் மூலமும் இதனைச் சாதித்தனர். இலங்கையில் இருந்து வெளியாகும் சகல வெளியீடுகளின் பிரதிகள் பிரித்தானிய அரும்பொருட் காட்சியகத்திலும், இலங்கை அரும்பொருட்காட்சியகத் திலும் இருக்க வேண்டுமென்ற விதியினை 1885ஆம் ஆண்டு ஏற்படுத்தினர். இதன் விளைவாக இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களின் விபரம் இலங்கை வர்த்த மானியின் ஐந்தாவது பகுதியில் வெளியிடப்பட்டன. இதே போன்று நூலகங்களும் ஏற்படுத்தப்பட வேண்டு மென்ற விருப்புடன், உள்ளூர் ஆட்சி மன்றங்கள் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது நூலகங்கள் மக்கள் வரிப் பணத்திலிருந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இவ்வாறுதான் இலங்கையில் பொது நூலக ஆரம்ப முயற்சிகள் ஏற்பட்டன. முக்கிய நகரங் களில் எல்லாம் பொது நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. யாழ்ப்பான பட்டின சபையும் தமக்கெனப் பொது நூலகமொன்றினை ஏற்படுத்தியது. இதுவே, வளர்ந்து யாழ் பொது நூலகமாக மிளிர்ந்தது.
இந்த நுழைவாயிலின் ஊடாக, இனி யாழ்ப்பான நூலகம் பற்றி, மூதறிஞர் க.சி. குலரத்தினம் எழுதி புள்ள வரலாற்றுப் பதிவுகளைப் பார்க்கலாம்.

யாழ்ப்பாண நூல் நிலையம்
ஒர் ஆவணம்

Page 25
மூதறிஞர் கா. சி. குலரத்தினம்
யாழ் பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தராக வந்த காலந் தொட்டு புலவர் கா. சி. குலரத்தினம் அவர்களைப் பலமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் பேச்சுகளின் மூலமும் ஆயவுக கட்டுரைகளின் மூலமும் அவரின் பரந்த அறிவையும், தமிழ்-ஆங்கில மொழித் தேர்ச்சியையும் அறிய முடி கிறது. தலைசிறந்த அறிஞராக விளங்கிய திரு.கா. சி. குலரத்தினத்தின் மறைவு தமிழ் இனத்துக்கும் யாழ்ப்பாண மக்களுக்கும் பேரதிர்ச்சியை உண்டாக் கியுள்ளது (கலாநிதி) அ. துரைராசா துணைவேந்தர் 1994-O2- O யாழ் பல்கலைக் கழகம்
பல்கலைத் திறலோன் பரிதியெனப் பயன்தந்து கல்வியை வளர்த்துக் கலங்கரை விளக்கமாய் நின்றதால் சைவமும் தமிழும் செழிப்புற்றுது கண்டோம் அவர் நினைவாக யாழ்பல்கலைக் கழகத்தில் புலமைப் பரிசில் நிதியம் நிறுவி அவர் பணிவளர்த்தல் நம் கடனன்றோ?
f. GT si). Islg trafft
அதிபர் Lusorsó eléAfu sorsroso

அத்தியாயம் ஒன்று
துவக்க நிலை வரலாறு
யாழ்ப்பாணத்துப் பொதுசன நூல் நிலயம் தனது பொன்விழாப் பொலிவை 1.12.1983இல் காணுதல் வேண்டும். அது 11-11-1933இல் உதயமாகி ஒரு கொட்டிலில் தவழ்ந்து, ஒரு கடையில் எடுத்தடி வைத்து, இன்னொரு கடையில் சிறு நடை நடந்து, ஒரு வீட்டின் மாடியில் ஒடியாடித் திரிந்து, ஒர் அழகிய மாடிக் கட்டி டத்தில் ஒளிவீசி உலகப் புகழ் பெற்றது.
பொதுமக்கள் நூல் நிலையம் என்னும் பெயரோடு முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப் பெற்ற நூலகம் இன்று நிலைத்திருந்தால், அதற்கு வயது 140 ஆகும். அது 1842 ஆம் ஆண்டில் பெரிய நீதிமன்றக் காரியதரிசியாயிருந்த எஃப்.ஸி. கிறிணியர் என்னும் பெரியாரால் ஆரம்பிக்கப் பெற்றது. அதை நூலகம்
பொருத்தமாகும்.
கிறிணியர், ஆரம்பித்த நூல் நிலையத்தைவிட
வேறொரு நூலகம் நீதிமன்றத்துள் சட்டத் தரணிகளின் உபயோகத்துக்காக நடைபெற்று வந்தது. மாட்சிமை

Page 26
46 யாழ்ப்பான நூல் நிலையம்
தங்கிய ஜனாதிபதி (ஜே. ஆர். ஜெயவர்த்தனா) அவர்களின் தந்தையார் CD வேளை அந்த நூல் நிலையத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்.
அது பொதுசன நூலகம் அல்ல. கிறிணியர் ஆரம்பித்த நூல் நிலையம் பெருமளவிற் பயன்படுத்தப்படவில்லை. படித்தவர்கள், பெரியவர்கள் ஒரு சிலர் அதனை ஒரு சில வேளைகளிற் பயன்படுத்தி வந்தார்கள். அது நாளடை வில் உருக்குலைந்து போயிற்று.
அச்சுவேலி ஊரைச் சேர்ந்த க. மு. செல்லப்பா என்பவர், யாழ்ப்பாண மாவட்ட நீதி மன்றத்தின் சக்கடத்தார் என்னும் காரியதரிசிப் பதவியிலிருந்தவர். அவர் கந்தர்மடத்துச் சந்திக்கு மேற்கில் உள்ள குத்தகைக்காரன் வளவு என்னும் மனையில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தார்.
அக்காலத்தில், கந்தர்மடத்தில், முன்னேற்றத்து முதல் நூற்றுவர், கழகம் ஒன்று நிலவியது. (The Progressive Hundred) , நூற்றுவர் கழகத்து இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் பழக்கிய பெரியார் செல்லப்பா அவர்கள் சில காலஞ் செல்ல, நீதி மன்றத்துக்கு அண்மை யிலேயே "லங்கா ஹோம்" என்னும் மனையில் வாழ்ந் 35 nrmt.
லங்கா ஹோம் மனையிலிருந்து அவர் 11-12-1933 ஆம் நாளில், தமிழர் தேசிய அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட விண்ணப்பப் பத்திரங்கள் யாழ்ப்பாண
மக்கள் மத்தியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் உலவியன. "யாழ்ப்பாணத்துக்கு ஒரு மத்திய இலவச தமிழ் வாசிகசாலையும் நூற்கழகமும்' என்பதே
stálybės 5 grup GvùLy. “ “ A Central Free Tami Library

ஒர் ஆவணம் )47 ב
in Jaffna" என்பதே ஆங்கிலத் தலைப்பு. செல்லப்பா அவர்கள் வாசிப்பதன் அருமை பெருமையை விளக்கிப் பொது மக்களிடம் நிதி சேர்ப்பதற்கு விண்ணப்பித்த படிவங்களில் தமது விடுதி விலாசத்தையும், உத்தியோக விலாசத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுத் துலாம்பர ம7கத் தமது கையொப்பத்தையும் கறுப்பு மையால் எழுதியிருந்தார். செல்லப்பா அவர்கள் விடுத்த விண்ணப் பத்தின் முன்னோடியாக அவர் "இந்து சாதனம்" என்னும் பத்திரிகையிலும், "சிலோன் பிறீ பிறெஸ் என்னும் பத்திரிகையிலும் விளம்பர வடிவில் விண்ணப்பித் திருந்தார்.
அவர் பரந்த மனப்பான்மையோடு யாழ்ப்பாணத் துக்கு அப்பால் கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருக்கோணமலை, மன்னார். முல்லைத்தீவு முதலிய இடங்களில் எங்கெங்கே தமிழர் வாழ்கின்றார்களோ அவர்களை எல்லாம் தங்களால் இயன்றளவு பத்தோ, ஐந்தோ, இரண்டோ இன்னும் குறையவோ, கூடவோ உடனடியாகவோ, தவனைப் பணமாகவோ தந்துதவு மாறு வெகு உருக்கமாக வேண்டி நின்றார்.
சிறந்த நிர்வாகியாகிய செல்லப்பா அவர்கள், பற்பல தொழிலாளர்களை அவரவர் தொழிற்சங்க அடிப்படையில் ஒன்று திரண்டு பணந் திரட்டியுதவுமாறு ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், தலைமைக்காரர்கள். வர்த்தகர்கள், ஓய்வூதியக்காரர் முதலானோரை வம்மின் கள், வம்மின்கள் என்று வரவழைத்தார்.
தமிழ் பேசும் மக்கள் யாவருக்கும் பொதுவான நூலக மாதலால் சைவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எல்லோரையும் கரங்கூப்பி அழைத்தார். தமிழ், தமிழ் எனக் கூறுவதால் தாம் பிற மொழிகளைப் புறக்

Page 27
48 O யாழ்ப்பாண நூல் நிலையம்
கணிப்பதாகக் கருதக்கூடாது என்றும் பகிரங்கமாக விளக்கினார்.
நூலகத்தில் ஆங்கிலம் சமஸ்கிருதம் முதலிய மொழி களிலான நூல்களும் இடம் பெறும் என்றார். நாட்டில் வாசிக்கும் பழக்கத்தை உற்சாகப்படுத்தி, மாணாக்கர் களை நல்வழிப்படுத்தி, குற்றங்களைக் குறைக்கவும் தடுக்கவும் வழிவகுத்து, ஆராய்ச்சி செய்வோர்க்கு ஆதர வளித்து, வைத்தியர்கள், சட்டத்தரணிகள் முதலானவர் களுக்கு வாசிக்கும் வசதி செய்து யாழ்ப்பாணம் முழுவதற்குமேயன்றி ஏனைய பிரதேசங்களுக்கும் பெரும் பயனளித்தல் வேண்டும் என்று விண்ணப்பித்து வேண்டு கோள் விடுத்தார்.
கிராமங்கள் தோறும் ஒளி விளக்குகளாக வாசிக சாலைகள் உருவாக வேண்டும் என்றும், யாழ்ப்பாணத்தில் மத்திய இலவச வாசிகசாலை நாயகமாக நிலவ வேண்டுப் என்றும் கருதினார். தாமே மேற்கொண்ட பணிக்கு நிதி உதவி செய்வோர் தங்கள் பணம் எவ்வாறு பயன்படுத்தப் பெறுகிறது முதலான அலுவல்களைப் பத்திரிகைகளில் பரக்கக் காணலாம் என்றும், விரும்பியோர் அலுவலகத் தில் வந்தும் பார்க்கலாம் என்றும் விளக்கினார்.
இங்ங்ணம் விண்ணப்பித்த செல்லப்பா அவர்கள், யாழ்ப்பாண மத்திய இலவச தமிழ் நூற்கழகம் சம்பத்த மாக விடுத்த விளம்பரத்தின் வண்ணம் 1934ஆம் ஆண்டு, ஆணி ஒன்பதாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் யாழ்ப்பாண மக்களின் பகிரங்கக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். பிரமுகர்கள் கூடினார்கள்.
நூலக அமைப்பாளர் க. மு. செல்லப்பா அவர்கள் விடுத்த விண்ணப்டம், விளம்பரம், அழைப்பு, உருக்கமான்

ஓர் ஆவணம் 49
வேண்டுகோள் யாழ்ப்பாணத்துப் பிரமுகர்கள், பெரியவர் கள், நல்லவர்கள், படிப்பாளிகள் என்றித் திறத்தோர் எல்லோரையும் இப்பணியில் ஈடுபடுமாறு வெகுவகாத் துரண்டி விட்டன.
அவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் 9-6-1934 சனிக்கிழமை கூடினார்கள். முக்கிய நிகழ்ச்சிகளாக நூலகச் சபை ஆரம்பித்தலும் உத்தியோகத்தர் தேர்வும், அமைப்பாளர் செல்லப்பா அவர்கள் அறிக்கை படித்தலும், பெரியவர் பேச்சும் இடம் பெற்றன.
உத்தியோகத்தர் தெரிவு கண்ணியமாகவும் பரந்த அடிப்படையிலும் நடைபெற்றது. தலைவராக அன்றைய மாவட்ட நீதவான் சி. குமாரசுவாமி அவர்கள், உப தலைவராக வணக்கத்துக்குரிய கலாநிதி f,gg『站 தம்பையா அவர்கள், இணைச் செயலாளராக அப்புக் காத்தர் சி. பொன்னம்பலம் அவர்களும் சக்கடத்தார் க. மு. செல்லப்பா அவர்களும் தெரியப் பெற்றார்கள். தனாதிகாரிகளாக சிறாப்பர் முதலியார் வேலுப்பிள்ளை அவர்களும் தபாலதிபர் முத்தையா அவர்களும் தெரியப் பெற்றார்கள்.
நிர்வாக சபையினராக வட மாநிலக் கல்வியதிகாரி அருணந்தி, வணக்கத்துக்குரிய மிடில்ரன்வீவர், நெவின்ஸ் செல்லத்துரை, முடிக்குரிய புரெக்ரர் கனகசபை, மேலதிகநீதவான் சின்னத்தம்பி, புரொக்ரர் ஆர். ஆர். நல்லையா, இந்து போட் இராசரத்தினம், அப்புக்காத்தர் நைல்ஸ், வணக்கத்துக்குரிய ஞானப்பிரகாசர், பரமேஸ் வராக் கல்லூரி அதிபர் நடேசபிள்ளை, தெல்லிப்பளை புறொக்ரர் வி.குமாரசுவாமி, மானிப்பாய் இந்து கல்லூரி அதிபர் ப. வீரசிங்கம், வட்டுக்கோட்டை உப அதிபர்

Page 28
50 யாழ்ப்பாண நூல் நிலையம்
கே. வி. செல்லையா. மத்திய கல்லூரி அருட்பிரகாசம், சென். யோன்ஸ் கல்லூரி ஏ.எம்.கே. குமாரசுவாமி,
புலோலி சைவப் பெரியார் சிவபாதசுந்தரம், முதலியார் வை. சுப்பிரமணியம், புரொக்ரர் ப. முருகேசபிள்ளை,
ஜனாப் அபூபக்கர், புறொக்ரர் ப. இராமலிங்கம்,
புறொக்ரர் ப. நாகலிங்கம் ஆகியோர் தெரியப் பெற்றனர். கணக்குப் பரிசோதகர்களாகக் கச்சேரி உத்தியோகத்தர் ஏ. முத்துத்தம்பி, எஸ். தம்பி ஆகியோர் தெரியப் பெற்றனர்.
கூட்டத்தில் தலைவர் அவர்களும், கல்வியதிகாரி அருணந்தி அவர்களும், வெஸ்லியன் மிஷன் தலைவர் வணக்கத்துக்குரிய மிடில்ரன்வீவர் அவர்களும், ஏ. மகா தேவன் அவர்களும், முடிக்குரிய புறொக்ரர் கனகசபை அவர்களும், அப்புக்காத்தர் சி.பொன்னம்பலம் அவர்களும் நூலகத்தின் இன்றியமையாமை பற்றியும் அமைப்பு முறைபற்றியும் ஆராய்ந்து பேசினார்கள்.
முடிக்குரிய புறொக்ரர் கனகசபை அவர்கள் முக்கிய மாகப் பலவிடயங்களைக் குறிப்பிட்டு, வாசிகசாலை உருவாவதைப் பிரேரணை ஒன்றின் மூலம் முன் மொ ழிந்தார்.
''That a Central free Tamil Library Association be formed with the Original Subscribers and others who are present at this Meeting as Original Members of the Association.' '
இப்பிரேரணையைக் கல்வியதிகாரி
அருணந்தி அவர்கள் பின்மொழியப் u G Jr Jr) ar ஏ 5 மனதாக ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

அத்தியாயம் இரண்டு செல்லப்பா சேவைகள்
முதனாட் கூட்டத்திலே பிரமுகர்கள் மத்தியில் அமைப்பாளர், அழைப்பாளர் செல்லப்பா அவர்களின் பேச்சு மிக உருக்கமாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. அவருடைய அறிக்கையும் அபிலாசையும் அதிற் கலந்து ஒலித்தன. ஆங்கிலத்தில் அவர் எழுதிப் படித்த அறிக்கையின் பொழிப்பை நாமறியலாம்.
"ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் தமிழார்வ முள்ள பொதுமக்களுக்கும் ஓரளவுக்கு உதவுமுகத்தால் இத்தகைய நூலகம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும் ான உணர்வேன், பொறுப்பு வாய்ந்த பெரியவர்கள் பலருடன் கலந்தாலோசித்துப் பத்திரிகைகள் மூலம் பனந்திரட்டுவதற்கு முயற்சி செய்தேன்.
'தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வெளியான எல்லா நூல்களையும் விலைக்கு வாங்குவதோடு முக்கியமான ஆங்கில நூல்களையும் வாங்குதல் வேண்டும் என்பது எமது விருப்பமாகும். இந்நூலகம் பரந்த அளவில் உட லுதவும் நிலையமாகவும் பயன் தருதல் வேண்டும். இதற்குப் பழைய ஏட்டுச் சுவடிகளையும் நாம் தேடி வாங்கிப் பாதுகாத்தல் வேண்டும்.

Page 29
52 யாழ்ப்பாண நூல் நிலையம்
"இந்நூலகத்தை நல்ல முறையில் அமைப்பதற்கு நண்பர்களின் ஆலோசனைகளுக்கிணங்கக் குடா நாடெங் கும் நிதிதிரட்டுவதற்கான ஒழுங்கைச் செய்துள்ளதோடு, இலங்கையின் ஏனைய பாகங்களிலும், இன்னும் மலேசி யாவிலும் அன்பர்களிடம் சேகரிக்க ஒழுங்கு செய்துள் ளேன். இதுவரை என்னிடம் ரூபா 1184-22 வந்துள்ளது. இதில் பூர்வாங்கச் செலவாக 181-81 போக மிகுதி 1002-4 இலங்கைத் தேசிய வங்கியில் முதலீடு செய்துள்ளேன்.
"'என் நண்பர்களும் பெரியவர்களும் இந்நூலகத்தை உள்ளூராட்சி மன்றத்திடம் அல்லது அரசாங்கத் திணைக் களத்திடம் ஒப்புவிக்கலாம் என்று ஆலோசனை கூறு கிறார்கள். தனிப்பட்ட ஒருவர் தம் பணத்தை இதில் செலவிடுதல் முறையாகாது. எங்கள் தமிழினத்தார் எமக்குப் போதியளவு உதவி செய்வதாகக் கூறியுள்ளார் கள், நூல்நிலையம் நல்ல முறையில் உருவாகும்.
* "ஊர்கள் தோறும் வாசிகசாலைகள் , நூல்நிலையங் கள் உருவாதல் வேண்டும். அவையாவும் மத்திய நூசல கம் ஒன்றோடு ஒருங்கிணைந்து சேவை செட் தல் வேண்டும். கிராம சபைகள் நிறுவப் பெற்றுட் பதினான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றுவரை ஒரு கிராம சபையாவது எங்காவது இலவச வாசிகசாலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி எடுக்கவில்லை. ஊர் மக்கள் தங்கள் பிரதிநிதிகளிடம் இலவச வாசிக சாலை-நூலகத்தைப் பற்றி வற்புறுத்தல் வேண்டும். யாழ்ப்பாண நகரிலேயே எங்கள் நகரசபை இதுவரை நகர மாந்தர் படிப்பத்ற்கான வாசிகசாலை அல்லது நூலகம் ஆரம்பிக்கவில்லை. இதனை நகரசபைத் தலை வருக்கு நான் சுட்டிக்காட்டிய பின் அவர் இதற்காவன

ஒர் ஆவணம் 53
செய்வதற்கு RC5 உபகுழுவை அண்மையில் நியமித்துள்ளார்.
'நான் கெளரவ கல்வி மந்திரியாருக்கு நிதியுதவி கோரி விண்ணப்பித்துள்ளேன். அவர் என் வேண்டு கோளைப் பரிசீலனை செய்து வருகிறார். நான் உள்ளூராட்சி மன்றங்களிடையேயும் உதவி நிதிகோரி விண்ணப்பித்துள்ளேன்.
"ஆங்கிலம் பயில்வதற்குப் பலவித வசதிகளோடு கூடிய பெரிய கல்லூரிகள் நிலவுகின்ற அளவுக்குச் செந்தமிழ் பயில்வதற்கு பெரிய தமிழ்க் கல்லூரிகள் எங்கள் நாட்டில் இல்லாமை வேதனைக் குரியதாகும், இன்று வடமாகாணத்தில் ஏறக்குறைய 300 தமிழ்ப் பர்டசாலைகள் V.S.I.C. என்னும் வகுப்போடு கல்வித் தரத்தை நிறைவு செய்கின்றன. மாணாக்கர் தங்கள் V.S.I.C. பரீட்சைக்கு விதிக்கப் பெற்ற பாடநூல்களைத் தவிர வேறு நூல்களை மனங்கொண்டு படிப்பதாகத் தெரியவில்லை. இன்று V. S I.C. சித்தியடைந்து ஆசிரி யப் பயிற்சி பெற்றுக் கல்வி கற்பிப்போர், ஏறக்குறைய 1500 பேர் வட மாகாணத்தில் வாழ்கின்றார்கள். இவர் கள் தம்முட் கலந்து இதுவரை ஒரு நூல் நிலையத்தை யாவது உருவாக்கவில்லை.
**இவ்வாறான காரணங்களைக் கொண்டு நாம் எங்கள் நகரில் ஒரு நூல் நிலையத்தை ஆரம்பிக்க வ்ேண்டியது அவசியம் எனக் கருதினோம். எமக்கு வேண்டிய மூலநிதியை நாம் இலகுவாகப் பொதுமக் களிடையே திரட்டிக் கொள்ளலாம். பூநகரி மக்கள் தாராள மனத்தோடு 40 ரூபா திரட்டி அனுப்பியுள்ளார் கள். யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு ஊரும், ஒவ் வொரு பாடசாலையும், ஒவ்வொரு கிராம சபையும்,

Page 30
54 C. யாழ்ப்பாண நூல் நிலையம்
ஒவ்வொரு நிறுவனமும், தனிப்பட்டவரும் தங்களாவி யன்றளவு திரட்டி உதவினால் சிறுதுளி பெருவெள்ள மாகும் வகையில் பெருநிதி சேரும்.
*நான் இதுவரை பொதுமக்களிடம் நூல் நிலையத் துக்காகத் திரட்டிய பணவிபரம், செலவு விபரம், மிகுதிப் பணம் என்பனவற்றை உங்களிடம் Flori பிக்கின்றேன்' - க. மு. செல்லப்பா, 9-6-34.
திருவாளர் க.மு. செல்லப்பா அவர்கள் விடாமுயற்சி யினால் உருவான நூல் நிலையச் சபையின் t_J60(שפ பெயர், மத்திய இலவச தமிழ் வாசகசாலைச் சங்கம். யாழ்ப்பாணம் என்பதாகும்.
இச்சங்கத்தின் நோக்கங்கள் அவர் அறிக்கையில் கண்ட வண்ணம் ஆறு படித்தாயமைத்துள்ளன.
1. தமிழ்க் கல்வியை மறுமலர்ச்சி செய்து
ஊக்கப்படுத்தி வளர்த்தல்.
2. பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை
ஊக்கப்படுத்தல்.
3. பழைய ஓலைச் சுவடிகளான ஏடுகளை விலை கொடுத்து வாங்கிப் பக்குவப்படுத்திப் பயன் செய்தல்.
4
தமிழ்மொழி சம்பந்தமான ஆராய்ச்சி முயற்சி களை வாக்கப்படுத்தி வசதி வாய்ப்பு நல்குதல்.
5. தமிழ் மொழியிலுள்ள நூல்களை வேறு மொழிகளில் பெயர்த்து எழுதியும், வேறு மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் பெயர்த்தும் எழுதியும் பயன் செய்தல்,

ஓர் ஆவணம் 55
6. யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்தையும் வாசிகசாலையையும் அமை த்து நடத்துதல், நூலகம் உடனுதவும் தன்மையில் பிரதானமாகத்தமிழ் நூல்களைக் கொண்டதாகவும், ஓரளவுக்கு ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி நூல்களைக் கொண்டதாகவும் இயங்குதல் ,
இருபத்தொரு வயதுக்கு மேற்பட்ட சகல ஆண் பெண் இருபாலரும் மாதம் இருபத்தைந்து சதம் செலுத்தி அங்கத்தவராயிருந்து பயன் பெறலாம். V
தலைவர், உபதலைவர்கள் இருவர். இணைச் செய லாளர், தானாதிகாரிகள், இன்னும் பன்னிரு தெரியப் பெற்ற சபையினர் நூலக வாசிகசாலை முகாமையாள ராயிருப்பர்.
இவ்வாறமைந்த பிரமாணங்களோடு இன்னும் பல உபவிதிகள் அமைந்த இறுக்கமான யாப்பு நூலக- வாசிக சாலைப் பரிபாலனத்துக்குத் தொகுக்கப் பெற்றுப் படித்து நிறைவேற்றப் பெற்றது. காரிய நிர்வாக சபையினர் அனுமதியின் வண்ணம் 100 பிரதிகள் அச்சடிக்கப் பெற்றன.
கேர்மையும் நிர்வாகத் திறமையும், கனிவான பேச்சும், நல்ல பண்பாடும் உள்ள செல்லப்பா அவர்களைச் சைவர். கிறிஸ்தவர். முஸ்லிம்கள் எல்லோரும் வெகுவாக விரும்பினர். அவர் வேண்டுகோள் விடுத்ததும் பலர் தங்கள் வீட்டில் தமக்குப் பயன் படாது கிடந்த பழைய புராண-இதிகாசப் பெருநூல்களை நூலகத்துக்கு அன்ப ளிப்புச் செய்தனர். அன்பளிப்புச் செய்த முன்னோடி களுள் நல்லூர் வித்தியா தரிசி கந்தையா அவர்கள், நாயன்மார்க்கட்டு வைத்தியர் இராமநாதன் அவர்கள்,

Page 31
56 யாழ்ப்பாண நூல் நிலையம்
வணக்கத்துக்குரிய ஐசாக் தம்பையா அவர்கள் முதலில் உதவினர். இவர்களைத் தொடர்ந்து உதவியோர் கனம் கல்வி மந்திரி சி. டபிள்யூ. டபிள்யூ கன்னங் கரா, வணக்கத்திற்குரிய ஞானப்பிரகாசர், மானிப்பாய் ஆசிரியர் ஏ.வி. சோமசுந்தரம், இந்து சாதனம் ம.வே. திருஞானசம்பந்தர், ஈழகேசரி நா. பொன்னை யா, நவாலி ந.ச. கந்தையா, புறொக்ரர் ரி. என். சுப்பையா ஆகியோராவர். இன்னும், சங்கைக்குரிய யாழ்ப்பாணத்து அதிமேற்றிராணியார், கிறிஸ்தவ சேவா சங்கத்தார், சென்னை பைபிள் சங்கத்தார், கொழும்பு முஸ்லிம் சங்கத்தார், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன் சபை ஆகிய னவும் நூல்களை அன்பளிப்புச் செய்தன. தனிப்பட்ட வீடுகளிலிருந்து ஓரிரண்டு நூல்களை வழங்கியவர்களும் a 6TC).
நல்ல மனம் படைத்த பெரியவர்களின் வீடுகள் தோறும் சென்று ஒரு புத்தகமாவது பெற்று வருவதற்கு அக்காலத்தில் இளைஞராய் அத்தியடி இ. கேதீஸ்வர நாதன், வைமன்வீதி செ. கனகசபை, குமாரசுவாமி வீதி அ. சண்முகநாதன், அம்மன் வீதி க.சி குலரத்தினம் முதலானோர், உழைத்தார்கள். அத்துடன் இவர்கள் எடுபிடி வேலைகள் செய்து இலவசமாக நூல்களை வாசித்துப் பயனடைந்தார்கள். as
நூலகப்பயிற்சி நெறியறியாத இளைஞர் ஒருவர் தமிழ் ஆங்கிலம் நன்றாகப் படித்தவர், அன்ன சத்திர ஒழுங்கையில் வாழ்ந்த சி. எஸ். இராசரத்தினம் என்பார், வந்து குவிந்த நூல்களைத் தூசுதட்டித் துடைத்து உறை யிட்டுச் செம்மைப், படுத்திப் பட்டியல் தயாரித்துப் பக்கு வப்படுத்தி வைத்து வந்தார்.

ஒர் ஆவணம் 57 ם
மத்திய இலவச தமிழ் நூல் நிலையச் சங்கத்தின் காரிய நிர்வாகசபைக் கூட்டம் ஒன்று நீதவான் சி. குமார சாமி அவர்கள் தலைமையில், நீதிமன்றத்து அயலில் இருந்த சட்டத்தரணிகள் வாசிகநூல் அறையில் (Law Library Room 28-7-34 at afáSpaold LDrtatDa) poll
பெற்றது.
இக்கூட்டத்தில் சில முக்கிய அலுவல்கள் தீர்மானிக் கப் பெற்று நிறைவேற்றப் பெற்றன. ஆஸ்பத்திரி வீதி யில் மின்சார நிலையத்துக்குத் தென்பகுதியில் ஒரு கடையை வருடாந்தம் முந்நூறு ரூபா வாடகைக்கு எடுத்து 1.8-34 முதல் நூலகத்தைப் பயன்படுத்த வேண் டும் என்று தீர்மானிக்கப் பெற்றது.
நூலகர் ஒருவரைக் கெளரவ சேவையிலோ சம்பள அடிப்படையிலோ நியமித்தல் வேண்டும். அவருக்கு மா? தாந்தம் இருபது ரூபா கொடுக்கலாம். தளபாடங் களுக்காக ரூபா 160 (நூற்று அறுபது மாத்திரம்) செல விடலாம். நூல்கள் வாங்குவதற்கு நூற்றி எழுபத்தைந்து ரூபா செலவிடலாம். இவ்வாறாக ரூபா ஆயிரம் முதல் ஒதுக்கீடாக ஒதுக்கப் பெற்றது.
காரிய நிர்வாக சபைக் கூட்டத்தில் தலைமை தாங் கிய நீதவான் குமாரசுவாமி அவர்கள் அன்று அருமையான பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். பாடசாலைகள், அலுவலகங்கள், மன்றங்கள் தோறும் ஆண்டுக் கொரு முறை நூலகவாரம் கொண்டாடி நிதிதிரட்டுதல் வேண் டும் என்றார்.
குமாரசுவாமி அவர்கள் முன்மொழிந்த மற்றொரு பிரேரணை கனம் கல்வி மந்திரியாரிடம் விண்ணப்பித்து
աntք-5

Page 32
58 O யாழ்ப்பாண நூல் நிலையம்
ஆண்டுதோறும் நிதியுதவி பெறும் வாய்ப்பினைப் பயன் செய்தல் என்பதாகும். அடுத்து யாழ்ப்பாண நகரசபை யிடமும், யாழ் மாவட்டத்தில் கிராம சங்கங்களிடையும் ஆண்டுதோறும் ஏதாவது நிதி உதவிகோருதல், இன்னும் பூரீ சந்திரசேகர நிதி எனப்புகழ் பெற்ற தரும சாதனத் தில் நிதி உதவி கோருதல்.
காரிய நிர்வாக சபையில் செயலாளர் செல்லப்பா அவர்கள் கொண்டு வந்த பிரேரணை பத்திரிகை பிரசுரா லயங்கள் தோறும் இலவசப் பத்திரிகைகள் கேட்டுப் பெறு தல் சம்பந்தமானதாகும். சைவபரிபாலன சபையும், கிறிஸ்தவ சேவா சங்கமும் பத்திரிகையோடு நூல்களும் அன்பளிப்பு செய்வதாக வாக்களித்தமையைப் பாராட்டிப் Gu&aastrTri.
நூலக சங்கத்துக்கு நிதியுதவி சேர்த்தும் சங்கத்தவர் களைச் சேர்த்தும் உதவி புரிந்தவர்களுக்கு அவர்கள் சேர்க்கும் பணத்தில் பத்து சதவீதத் தொகையை அலவன்ஸ் உதவியாகக் கொடுத்து ஊக்கப்படுத்தலாம் என்று செல்லப்பா அவர்கள் கொண்டு வந்த பிரேர ணையை அன்று எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
செல்லப்பா அவர்களின் மற்றொரு பிரேரணை அக்காலத்தில் உயர்நீதிமன்றத்துப் பதிவாளராய் இருந்து ஒய்வு பெற்றிருந்த ஆர். சி. புரெக்ரர் என்னும் பெரி யாரை, நூலகத்தின் கெளரவ முகாமையாளராய் நிய மித்து அவர் ஆலோசனையையும் சேவையையும் பெற் றுக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
இவ்வாறாக நூலகத்தின் ஆக்கம், நிலைபேறு வளர்ச்சி கருதிப் பயன் மிக்கனவான பத்துப் பிரேரணை கள் நிறைவேற்றப்பட்டன.

ஒர் ஆவணம் O 59
மத்திய இலவச தமிழ் நூல்நிலைய சங்கத்தார் தங் கள் நூலகத்தை ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அகன்ற பெரிய கடையொன்றில் 1-8-34 இல் ஆரம்பித்த பின்னர், 15-8-34 இல் மற்றொரு நிர்வாக சபைக் கூட்டத்தை நீதிமன்ற நூல்நிலைய அறையில் தலைவர் தலைமையிற் கூட்டினர்.
அந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் மூன்று பிரேர னைகள் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றன. அவற்றுள் முக்கியமான பிரேரணை காரியதரிசி அவர் கள் 1934 - 1935 ஆண்டுக்கான புதுக்கப் பெற்ற செல வுத் தொகை சம்பந்தமானதாகும்.
1 . உதவி நூலகரும் பணந்திரட்டுபவருமான அலுவலருக்கு மாதம் இருபது ரூபா வீதம் இருநூறு ரூபா ஒதுக்கீடு - 200/-
2. நூலக அறையின் மாதாந்த வாடகை
யாக இருபத்தைந்து ரூபா வீதம் இருநூற்றைம் பது - 250/-
3. தளபாடவகைகள் புதிதாக வாங்குவதற் கான தொகை ரூபா இருநூற்றைம்பது - 250/-
4. செய்தித்தாள்கள் வாங்குவதற்கான செலவுத் தொகை ரூபா நூற்றைம்பது - 1501.
5. புத்தகங்கள் புதிதாக வாங்குவதற்கான செலவுத் தொகை இருநூற்றைம்பது- 250.
6. நானாவித செலவுக்காக முன்கூட்டியே ஒதுக்கிய ரூபா நூற்றி எழுபத்தைந்து - 1751.

Page 33
60 யாழ்ப்பாண நூல் நிலையம்
இங்ங்ணமாக ஏற்பட்ட செலவுத்தொகை ரூபா 1275 ஒரு வருடத்துக்கானதாகும். இதைக் காரியதரிசி செல்லப்பா அவர்கள் முன்மொழிய, தலைவர் அவர்கள் பின்மொழியப் பிரேரணை ஏகமனதாக நிறைவேறியது.
முந்திய நிர்வாக சபைக் கூட்டத்தின்பின் நான்கு மாதங்கள் கழித்து மற்றொரு நிர்வாக சபைக் கூட்டம் நீதிமன்ற நூலக அறையில் உபதலைவர் தலைமையில் 14:12-34 வெள்ளிக்கிழமை மாலை கூடியது. இக்கூட் டத்தில் கொழும்பிலிருந்து வந்த கடிதங்கள் படிக்கப் பெற்றன. கல்வி மந்திரியார், உள்ளூராட்சி மந்திரியார், பிரதம காரியதரிசி ஆகிய முப்பெரும் பிரமுகர்கள் எழு தியவை சங்கத்தாருக்கு மிகுந்த உற்சாக மூட்டின. பிரதம காரியதரிசி என்பவர் தேசாதிபதிக்கு அடுத்த படியில் உள்ள பரிபாலன அலுவலர்.

அத்தியாயம் மூன்று துவக்க நிலை வளர்ச்சிகள்
நல்லவர்கள் நல்ல மனத்தோடு, நல்ல நோக்கத் தோடு தங்களை ஒறுத்துப் பிறர் நன்மைக்காக ஆரம் பித்த நற்பணி, வளர்பிறைபோல் நாளும் வளர்ந்து வந்தது. வளர்ந்து வந்த நூலகத்தை யாழ்ப்பாண நகரசபையினரே பொறுப்பேற்று நடத்துவதற்கான பூர் வாங்க ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வந்தன. அக்காலத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் பலர், நகரசபை அங்கத்தவராயிருந்தனர். அவர்கள் சேவை மனப்பான்மை கொண்ட சீரியர். படிப்பார்வம் மிக்க நிறைந்த பண்பாளர்.
நூலகத்தைப் பொறுப்பேற்பதற்கு நகரசபையார் (erugir goi) is saygir gai) - The Urban District Council - U. D. C.) தீர்மானித்ததும், அந்த நற்செய்தியைத் தலை வர் சபையினருக்கு மகிழ்ச்சி ஆரவாரத்திடையே எடுத்துக் கூறினார்.
நூல்நிலையம் 1-1.35 முதல் நகரசபையாரின் பரிபாலனத்தில் விடப்பெறுமாகையால் சங்கத்தாரிடம் கையிருப்பில் உள்ள மிகுதிப் பணத்தை முதலியார் கி. இராசநாயகம், முகாமையாளர் திரு. ஆர். சி.

Page 34
யாழ்ப்பாண நூல் நிலையம் גם 62
புறொக்கர், காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா ஆகிய மூவரிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்கள் பணத்துக் குத் தக்கதாக நல்ல நூல்களை வாங்கி நூலகத்துக்குக் கொடுத்தல் வேண்டும்.
வாசிகசாலையும் நூலகமும் அமைப்பதற்காக ஆரம் பிக்கப் பெற்ற சங்கம், நோக்கம் நிறைவேறி, நூல கத்தையும் உள்ளூராட்சி மன்றத்தில் ஒப்படைத்தபின், சங்கத்துக்கு வேலைப்பில்லை எனக் கண்ட தலைவர் முத லானோர் அதனைக் குலைக்கக் கருதினர். தாங்கள் கருதியவற்றை கலாநிலையம் செய்யும் என்றார்.
கலை- கலாசார வளர்ச்சி கருதிக் கலாநிலையம் என்னும் சங்கம், திரு. சு. நடேசபிள்ளை அவர்களைத் தலைவராகவும், கலைப்புலவர். நவரத்தினம் அவர் களை காரியதரிசியாகவும் கொண்டு, கலையாக்கங் கருதி முத்திங்ளுக்கொரு முறை ஞாயிறு என்னும் செக் தமிழ் ஏட்டினை வெளியிட்டு வந்தமை பெரிய எழுச் சியை உண்டாக்கி வந்தது.
அன்று ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த நூல் நிலையம் வசதி குறைவான கட்டடமும் சூழ்நிலையுமாயினும் வாசிப்பவர்களுக்குப் போதிய நூல்களையும் சஞ்சிகை களையும் கொண்டிருந்தது. அக்காலத்தில் வீடுகள் தோறும் திரட்டப்பெற்ற நூல்களுக்குள் சிவதருமோத்தம், நீலகண்ட பாடியம், சித்தாந்த தீபிகை, ஆறுமுகத் தம்பிரானின் பெரியபுராணவுரை, கலியாண சுந்தர னாரின் நவசக்தி பழைய இதழ்கள் முதலிய கிடைத்தற் கரிய நூல்கள் பல அடங்கியிருந்தன. செந்தமிழ், செந். தமிழ்ச் செல்வி, நவசக்தி முதலிய பழைய சஞ்சிகை களின் பழைய இதழ்கள்-மலர்கள் வந்து குவிந்தன.

ஒர் ஆவணம் O 63
அக்காலத்தில் லண்டன் மெற்றிக்குலேசன், இன்ரர், பீ.ஏ. முதலிய பரீட்சைகளுக்கு வெளிவாரி மாணாக்க ராக ஆயத்தப்படுத்திய பரீட்சார்த்திகள் பலர் பகலிரவாக அங்கிருந்து படிப்பது வழக்கம். அங்கிருந்து படித்துப் பயன் பெற்ற ஒருவர், இன்று ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் அருமையாக எழுதி வருகின்றவ ராகிய N. சபாரத்தினம் அவர்களாவார். இவரைப்போல் இன்னும் பலர் அங்கே பயன் பெற்றனர்.
நூல் நிலையத்தில் அக்காலத்தில் இரண்டு நீளமான மேசைகளும், ஒரு எழுத்து மேசையும், இரண்டு நீளமான வாங்குகளும், பதினைந்து கைக்கதிரைகளும், இரண்டு கண்ணாடி அலமாரிகளும், இரண்டு அறிவித்தல் பலகை களும், ஒரு மணிக்கூடும் இருந்தன.
நூலகத்தின் ஆரம்பத்தில் சேர்ந்த ரூபா. 1002-41 சதத்தைவிட, பின்னர் ரூபா. 541-85 சதம் சேர்க்கப் பெற்றது. இத்தொகையில் நூல் நிலையச் செலவுக்குப் பயன்பட்ட தொகை போக, எஞ்சிய 517.86 தேசிய சேமிப்பு வங்கியில் சேமிக்கப் பெற்றது.
நூலகத்தின் ஆரம்பத்தில், அங்கே இரவல் கொடுக்கும் பகுதியில் 844 நூல்கள் இருந்தன. இவற்றுள் 150 நூல் கள் புதிதாக வாங்கப் பெற்றவை. எஞ்சிய 694 நூல் களும் அன்பர்கள், அங்கத்தவர்கள், அபிமானிகள், அவ்வப் போது அன்பளிப்பு செய்தவையாகும்.
வாசிகசாலையில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் சில சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் அந்த அந்த முகாமையினர் இலவசமாக வழங்கினார்கள். அவை: வீரகேசரி, இந்து சாதனம், உதயதாரகை, சத்தியவேத

Page 35
64 ロ யாழ்ப்பாண நூல் நிலையம்
பாதுகாவலன், ஈழகேசரி, ஞாயிறு, களிரட்டை, கமத் தொழில் விளக்கம் என்பனவாம்.
பல் வைத்தியராயும், நகரசபை அங்கத்தினராயும் இருந்த கலாநிதி சாள்ல்ஸ் பத்திரானா சிங்களப் பத்திரிகை ஒன்றையும் அன்பளிப்பாகக் கொடுத்து வந்தார். கல்விப் பணிப்பாளர் கொழும்பிலிருந்து சமா சாரப் பத்திரிகை ஒன்றை அனுப்பி வந்தார்.
நூலகச் சங்கம் விலைக்குப் பெற்று வந்த சஞ்சிகை களும் பத்திரிகைகளும்: தமிழ்நாடு, சுதேசமித்திரன், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி. ஆனந்த போதினி. பாரதி, சித்தாந்தம், கலைமகள், கொங்குமலர், தமிழ்ப் பொழில் என்பனவாம்.
அக்காலத்தில் பிரசித்தமாயிருந்த ஆங்கிலப் பத் திரிகைகள் சஞ்சிகைகள் பல வாசிகசாலையில் இடம் பெற்றிருந்தன. அவற்றுள் அவ்வவ் முகாமையாளர் இலவசமாக அனுப்பியவை: இந்து ஒகன், பிறி பிறெஸ், மோனிங் ஸ்ரார், கதலிக் காடியன், ஆத்ரா, சண்டே கதலிக் ரைம்ஸ், இன்னும் எஸ். பி. சி. ஏ. பத்திரிகை gTGšTugo76ntrib.
சங்கத்தார் விலைக்குப் பெற்றவை: ரைம்ஸ் ஒவ் சிலோன், த டெய்லி நியூஸ், மெட்ராஸ் ஹிந்து, மொடோன் றிவியூ, திரிவேணி, த ஹிந்து மயின்ட் என்பனவாம். அரசாங்கத்தார் தங்கள் பரிபாலன அறிக்கைகள் சிலவற்றை அவ்வப்போது இலவசமாக அனுப்பி வந்தனர். கல்விப் பணிப்பாளர் தமக்குக் காலந் தோறும் பரிசீலனைக்குக் கிடைத்த நூல்களைத் தம் தேவை தவிர்ந்தனவற்றை அனுப்பி வைத்தார். அவை பெரும்பாலும் பாடசாலைக்குரிய நூல்களாயிருந்தன.
ஆஸ்பத்திரி வீதியில் நடைபெற்று வந்த நூல் நிலையமும், வாசிக சாலையும் நாள்தோறும் சராசரி

ஓர் ஆவணம் 65
ஐம்பது வாசகர்களுக்குப் பயன் கொடுத்து வந்தது. நாள் தோறும் காலை 8 மணி தொடக்கம், மாலை 7.30 மணி வரை பதினொரு மணித்தியால நேரம் பயன் கொடுத்து வந்தமை பாராட்டப் பெற்றது.
கெளரவ முகாமையாளர் ஒருவர், கெளரவ நூலகர் ஒருவர், சம்பளம் பெற்ற உதவி நூலகர் ஒருவர். நிர்வாக சபையினரின் கட்டுப்பாட்டுக்கு அமைந்து நூலகத்தைத் திறம்பட நடத்தி வந்தார்கள்.
பெரியகடைச் சூழலில் வர்த்தகங்கள் மத்தியில் நடைபெற்ற நூலகத்தின் பாரிய சேவையைக் கவனித்த வர்த்தகர்கள் சிலர் மாதாந்தம் இருபத்தைந்து சதம் முதல் இரண்டு ரூபாய் வரையிலான நன்கொடை கொடுத்து உதவி வந்தார்கள். அவர்களுக்கு மேலாக மாவட்டநீதிமன்றம், பொலிஸ் நீதிமன்றம், காணிப்பதிவுத் திணைக்களம், கச்சேரி முதலான கந்தோர்களில் கடமை யாற்றியோர் தம்மாலியன்றளவு உதவி வந்தார்கள். ஆங்கில, தமிழ் பாடசாலை ஆசிரியர்களுக்கு அடிக்கடி விண்ணப்பங்கள் அனுப்பப்பெற்ற போதிலும், அவர்கள் என்றும் ஏதும் அனுப்பவில்லை என்று காரியதரிசி கவலையோடு குறித்துள்ளார்.
கரவெட்டியில் கூடிய கூட்டுறவாளர் சம்மேளன விழாவில் உதவி ஆணையாளர் க. இரகுநாதன் செய்த முயற்சியால் ரூபா 239-90 சதம் திரட்டப் பெற்றது.
கொழும்பில் காணிக் கந்தோர் ப. சுந்தரம் அவர் களும், சிங்கப்பூரில் மாநகர சபையில் எம். முருகேசு அவர் களும் முயன்று திரட்டியனுப்பிய பணமும் பெரும் உதவியாயிருந்தது.
நூலகத்துக்கு ஏதாவது உதவியாகவோ மானிய மாகவோ நிதியுதவுமாறு கல்வியமைச்சருக்கு எழுதியதால்

Page 36
66 யாழ்ப்பாண நூல் நிலையம்
அவர் 1935-1936 ஆகிய ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டத்தில் தாம் 2000 ரூபா கேட்டுள்ளதாக எழுதி
யிருத்தார்.
யாழ்ப்பாண வரலாறு எழுதிப் புகழ்பெற்ற முதலியார் சி.இராசநாயகம் அவர்கள், ஒய்வுபெற்ற உயர்நீதி மன்றப் பதிவாளர் ஆர்.சி. புறொக்ரர், கெளரவ நூலகர் சி. எஸ். இராசரத்தினம் அவர்கள், உதவி நூலகர் பி.ஜி. ஜோர்ச் அவர்கள், யாழ்ப்பாணப் பொது நூலகத் துக்குப் போதியளவு சேவை செய்து புகழ் பெற்றிருந் தார்கள்.
நூலக வளர்ச்சிக்கு யாழ்ப்பாணச் சட்டத் தரணி களும், அரசாங்க உத்தியோகத்தர்களும், வர்த்தகப் பிரமுகர்களும் அவ்வப்போது உதவி செய்த பெருந் தன்மையை இணைக் காரியதரிசிகளாகிய சி. பொன்னம் பலம் அவர்களும், க.மு. செல்லப்பா அவர்களும் தங்கள் அறிக்கையில் அவர்களை வெகுவாகப் பாராட்டி எழுதி யுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்துப் பெரியார்களுள் காலத்துக்குக் காலம் அரியாலை அளப்பரிய பணிபுரிந்த மகான்களைத் தந்துள்ளது. காசிப்பிள்ளை, அருளம்பலம், கனகரத் தினம் முதலான பெரியார்கள் வரிசையில் ஆர் . சுப்பிர மணியம் என்பார் இடம் பெற்றிருந்தார். அவர் அமைதி யாக வாழ்ந்து செய்த தொண்டுகள் அதிகம் பிரதிபலிக்க மடையவில்லை.
மணியந்தோட்டம் என்னும் மதிப்பிற்குரிய பெரிய நிலப்பரப்பில் இன்று நூற்றுக்கணக்கானோர் குடி யுள்ளார்கள், நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நிலப் பகுதியில் தென்னையும், வான்பயிர்களும், செய்பயிர்களும்

ஓர் ஆவணம் 67
உண்டு. சுப்பிரமணியம் அவர்களின் மகளையே மந்திரி யார் சிற்றம்பலம் மணஞ் செய்திருந்தார்.
சுப்பிரமணியம் அவர்கள் அக்காலத்து யு.டி.சி.
என்னும் நகரசபையின் பிரதிநிதியாயிருந்தவர். அடிக்கடி நகரசபைக் கூட்டத்தில் நூலகத்துக்கு நிதியுதவி கொடுக்கு. மாறு பிரேரித்து வந்தவர். விடாக்கண்டரான அவர்
விடுத்த வேண்டுகோளுக்கமையவே நகரசபையினர் நூல கத்தைப் பொறுப்பேற்று நடத்தத் தீர்மானித்தனர்.
அதற்காதாரமான பிரேரணையும் சுப்பிரமணியம் அவர் களே கொண்டு வந்தார்கள்.

Page 37
அத்தியாயம் கான்கு
நகரசபை பொறுப்பேற்றல்
நூல்நிலையச் சங்கத்தாரின் பரிபாலனத்திலிருந்து நகரசபையினரின் பரிபாலனத்துக்கு நூல் நிலையம் கைமாறிய வைபவம், முன்னர் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தாரிடமிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு இலங்சுை கைமாறிய வரலாறு போன்றதாகும்.
நகரசபையினர் தாமே ஒரு வாசிக சாலையை ஆரம் பித்து நடத்தலாம் என்று கருதிய வேளையில் ஆர்.சுப்பிர மணியம் அவர்கள் இந்நூலகத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு பிரேரணை கொண்டு வந்தார்.
இவ்வாறாக நூல் நிலைய பரிபாலன சங்கத்தின் காரியதரிசியாய் க. மு. செல்லப்பா அவர்கள் நகரசபைத் தலைவருக்கு 21-12-34 இல் எழுதிய கடிதம் இங்கு குறிப் பிட வேண்டிய ஒன்றாகும்.
தலைவர், நகரசபை, யாழ்ப்பாணம்,
ஐயா, தங்கள் சபையினர் எங்கள் நூல் நிலையத்தை பொறுப்பேற்று நடத்துதல் சம்பந்தமாக நிறைவேற்றிய பிரேரணையை எங்கள் காரிய நிர்வாக சபையினர் கருத் துடன் பரிசீலனை செய்து 1-1-1935 தொடக்கம், நூல்

ஒர் ஆவணம் 69
நிலையத்தை நகரசபையின் பொறுப்பில் ஒப்படைப்பதற் குத் தீர்மானித்து விசேட பொதுக்கூட்டத்தில் அனுமதி பெறுவதற்கு 20-12-34இல் கூடினர். அக்கூட்டத்தில் நூல் நிலையத்தை குறித்த நாளில் ஒப்படைப்பதற்குத் தீர்மானித்தார்கள். இங்ஙனம் கையளிக்கும்போது இங் குள்ள நூல்கள், தளவாடங்கள் யாவற்றையும் உங்களிடம் ஒப்படைக்குமாறு எனக்குப் பணித்துள்ளார்கள். எனவே, தாங்கள் தயவு செய்து தங்கள் உத்தியோகத்தர் ஒருவரை நாளையோ அன்றி வருகின்ற திங்கட்கிழமையோ வந்து இவற்றைப் பொறுப்பேற்குமாறு பணிப்பீர்களாக, இடையில் விடுமுறை நாட்கள் வருவதால் இங்ஙனம் நாட்களை நான் ருறிப்பிட்டுள்ளேன். எங்கள் நூலக சங்கத்தார் 31.12-1934 வரையுள்ள கடன் கொடுக்குமதி யாவற்றையும் தீர்த்து விட்டார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இங்ஙனம் தங்கள் விசுவாசமுள்ள ஊழியன்
க. மு. செல்லப்பா
நிர்வாகத் திறமையுள்ள நகரசபைத் 56oo6v Aurif உடனடியாக மறுநாளே பதில் எழுதியிருந்தார்:
இலக்கம் 2-98 நகரசபை அலுவலகம், யாழ்ப்பாணம், 22-12-1934.
மத்திய இலவச தமிழ் நூல்கிலையம் யாழ்ப்பாணம்
3աn",
தாங்கள் 21-12-34 இல் எழுதிய கடிதத்தின் பிரகாரம் எங்கள் நகரசபை நூல்நிலயத்துக்கான செலவினை

Page 38
யாழ்ப்பாண நூல் நிலையம் ם 70
ஒதுக்கியுள்ளபடியால், அது 1-1-1935 முதல் உங்கள் நூல்நிலையத்தைப் பொறுப்பேற்கும் என்பதை அறியத் தருகிறேன்.
நகரசபைச் செயலாளரிடம் நூல்நிலையத்தை விடு முறை நாட்களில் வசதிபோல பொறுப்பேற்கும் வண்ணம் பணித்துள்ளேன். ஆகவே, தாங்கள் அவரிடம் அறிவு றுத்த வேண்டியவற்றைக் கூறவும்.
இங்ங்ணம் தங்கள் விசுவாசமுள்ள ஊழியன்
ஆர். ஆர். கல்லையா
தலைவர் நகரசபை, யாழ்ப்பாணம்.
சங்கத்தார் நடத்தி வந்த நூல்நிலையத்தை நகர சபையாரிடம் கையளித்தல் பற்றிக் காரிய நிர்வாக சபையினர் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பொதுச் சபையின் கருத்தறிவதற்குக் கூட்டிய விசேடப் பொதுக் கூட்டம் யாழ் மத்திய கல்லூரியின் 20.12-1934 வியாழக் கிழமை மாலை, வணக்கத்துக்குரிய கலாநிதி தம்பையா அவர்கள் தலைமையிற் கூடியது.
தலைவர் அவர்களே நூலகத்தை நகரசபையாரிடம் கையளித்தல் வேண்டும் என்னும் பிரேரணையைப் பிரே ரித்தார். அதனை முகாந்திரம் சி. கணபதிப்பிள்ளை அவர்கள் அனுமதித்தார். அதுபற்றிப் பலர் தங்கள் கருத்துக்களைச் சாதகமாகவும் பாதகமாகவும் பேசிய பின் வாக்கெடுப்புக்கு விட்டபோது பிரேரணைக்குச் FITss (DfT as 24 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் நிறைவேறியது.
தீர்மானம் நிறைவேறியபின் தலைவர் அவர்கள் தமது இரண்டாவது பிரேரணையாக மேற்படி சங்கம்

ஓர் ஆவணம் D 7)
1-1-1935 முதல் குலைக்கப்படவேண்டும் என்று பிரே ரித்தார். அதனை அப்புக்காத்தர் கனகநாயகம் அவர்கள் அனுமதித்தார்.
உடனடியாக அதனை எதிர்த்து நூல்நிலையச் சபையைக் குலைத்தலாகாது என்று தெல்லிப்பழை புறொக்ரர் ப. குமாரசுவாமி பிரேரித்தபோது அதனை நீராவியடி புறொக்ரர் கே. அய்யாத்துரை அவர்கள் அனுமதித்தார். அவரைத் தொடர்ந்து நெவின்ஸ் செல்வத்துரை அவர்கள், கே. வ. இராசையா அவர்கள் சபையைக் குலைத்தலாகாது என்று பேசினார்கள். இவ்வாறாகப் பலர் அபிப்பிராய பேதங் கொண்ட வேளை யில், பிரேரணை வாக்களிப்புக்கு விடப்பட்டபோது 23 வாக்குகளால் தோல்வியுற்றது.
பின்னர் காரியதரிசி செல்லப்பா அவர்கள், சங்கத் தாரிடம் இருந்த பணத்தில் இருநூறு ரூபாவைச் சங்கம் கையிருப்பில் வைத்துக் கொண்டு எஞ்சிய தொகைக்கு நூல்கள் வாங்கி நூலகத்துக்குக் கொடுத்தல் வேண்டும் என்று பிரேரித்தார். அதனை அப்புக்காத்தர் கண்க நாயகம் அனுமதித்தார். ஆளால் புறொக்ரர் வி. குமார சுவாமி அவர்கள் பிரேரணைக்கு மாறாக பிரேரித்தும், எஸ். இளையதம்பி, வி. கே. இராசையா, பி. ஜி, சுவாம் பிள்ளை முதலானோர் இவரை ஆதரித்துப் பேசினர். முடிவில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப் பட்டபோது வாக்குகள் சரிசமமாகக் கிடைக்கவே, தலைவர் தமது வாக்கைப் பிரேரணைக்கு மாறாக அளித்ததும் செல்லப்பா அவர்கள் பிரேரணை தோல்வி கண்டது.
மத்திய இலவச நூல்நிலையத்தை நகரசபையிடம் ஒப்படைத்த பின்னர் 22-4-35ல் டபிள்யூ டி. நைல்ஸ்

Page 39
72 யாழ்ப்பாண நூல் நிலையம்
அவர்கள் தலைமையில் ஒரு காரிய நிர்வாக சபைக் கூட்டம் நடைபெற்றது. அதற்குப்பின்னர் 31-5-1935ல் தலைவர் நீதவான் ஸி. குமாரசுவாமி அவர்கள் தலை மையில் இறுதியான நிர்வாக சபைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தாரிடம் எஞ்சியிருந்த பணத்தைக் கிராமசபைகளின் வாசிகசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கலாமா என்னும் விடயம் பேசப்பட்டது. திரு. என். சின்னத்தம்பி அவர்கள் 125-ரூபாவை கிராம சங்கங்களுக்குக் கொடுக்கலாம் எனப் பிரேரித்ததை க.மு. செல்லப்பா அவர்கள் ஆதரிக்கவே, பிரேரணை நிறைவேறியது. க. மு. செல்லப்பா அவர்கள் அதுகாறும் கெளரவ நூலகராகக் கடமையாற்றிய வி. எஸ். இராசரத்தினம் அவர்களுக்குப் பல மாதங்களுக்குப் பொதுவாக 75 ரூபாவை அலவன்சாகக் கொடுக்கலாம் எனப் பிரேரித்தார். இதை புறொக்ரர் முருகேசம் பிள்ளை அனுமதித்தார். பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பெற்றது. பின்னர் க.மு. செல்லப்பா அவர்கள் தங்களிடம் எஞ்சியிருந்த பணத்தை வட மாகாண அரசாங்க அதிபர் மூலம் கிராம சபைகளுக்கு வழங்க வேண்டுமெனப் பிரேரித்தார். இதனை கே. கனகசபை அவர்கள் அனுமதித்ததும் பிரேரணை ஏற்றுக்கொள்ளப் பெற்றது. இறுதியாக, தலைவர் வி. குமாரசாமி தங்கள் சங்கத்தைக் குலைக்க வேண் டும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பொதுச்சபை கூட்டப்பெற வேண்டும் என்றும், பிரே ரித்த பிரேரணை செல்லப்பா அவர்கள் அனுமதித்ததும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது. இத்துடன், பொதுச்சபை பின்னர் கூட்டப் பெறாமலேயே காரிய நிர்வாக சபைக் கடைசிக் கூட்டத்தோடு 31.5-53ல் நூல்நிலையச் சங்கம் குலைந்தது.

ஓர் ஆவணம் ロ 73
நிர்வாகத் திறமை வாய்ந்த நகரசபைத் தலைவர் ஆர். ஆர். நல்லையா அவர்களும், நகரசபைக் காரிய தரிசி என்னும் சக்கடத்தார் பாலசுப்பிரமணியம் அவர் களும் நூல்நிலையத்தை நன்கு நடத்தப் பெருமுயற்சி எடுத்தனர்.
சக்கடத்தார் பாலசுப்பிரமணியம் படிப்பார்வம் நிறைந்த பெரிய உருப்படியான மனிதர். எந்த நேரமும் பெரிய நூல்கள் இரண்டாவது அவரின் கையில் இருக்கும். நூலகத்துக்கு நல்ல நூல்களைத் தெரிவதில் அவருக்குத் தனி ஆற்றல் இருந்தது. அவற்றை முதலிற் சுவைப் பவரும் அவரே.
நகரசபை பொறுப்பெடுத்து நடத்திய நூல் நிலை யத்திற்கு அனுவமும் பொறுப்பும் வாய்ந்த நூலகர் ஒருவர் உடனடியாகத் தேவையாயிருந்தது. முன்னர் கெளரவ நூலகராயிருந்த சி.எஸ். இராசரத்தினம், மெற் நிக்குலேசன் சித்தியடைந்திருந்தார். அவரையே நூல கராக நியமிக்கவேண்டும் என்பது பாலசுப்பிரமணியம் அவர்களின் விருப்பம். ஆனால், பகிரங்கமாக விளம் பரப்படுத்தி, விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, நேர்முகப் பரீட்சை மூலம் தெரிய வேண்டும் என்பது பெறுவிதி. காலமோ உத்தியோகங் கிடையாத காலம். பெரும் உத்தியோகத்தர் பலர் வேலையாட் குறைப் பினால் உத்தியோகமிழந்து வீட்டில் சோம்பியிருந்த காலம். பட்டதாரிகள் பலர் முப்பத்தைந்து ரூபாவுக்குப் பாடசாலைகளில் படிப்பித்த காலம் அது.
நகரசபையார் நூலகர் வேலைக்கு விளம்பரஞ் செய்ததும் பட்டதாரிகள் உட்பட பலர் விண்ணப்பஞ் செய்தனர். முன்னரே மனப்பதிவு பெற்றிருந்த
aunt-6

Page 40
74 யாழ்ப்பாண நூல் நிலையம்
சி. எஸ். இராசரத்தினம் அவர்கள் நேர்முகப் பரீட் சையின் பின் நூலகராகத் தெரியப் பெற்றார். அக் காலத்திலே கொழுத்த சம்பளம் மாதம் நாற்பது ரூபா. காலை ஏழுமணி தொடக்கம் மாலை ஏழுமணி வரை நூலகர் கடமை. நூலகர் தனியொருவராய்த் தொழிலாளி வேலைகள், பணியாளர் வேலைகள், எழுத்தாளர் வேலைகள், மேற்பார்வை வேலைகள், பதிவு வேலைகள், நூல்களைத் தூசு தட்டி அடுக்கும் வேலைகள் யாவற்றையும் செய்தார்.
முன்னர் ஆபத்திரி வீதியில் விசாலமான கடை யொன்றில் நடைபெற்றுவந்த நூலகம், நகரசபையார் பொறுப்பேற்றதும் வேறு இடத்திற்கு மாற்றப்பெற்றது. அந்நாளில் U.D.C. என்னும் நகரசபை தனக்கே சொந்த மான கட்டடமோ நிலமோ இல்லாமல் யாழ்ப்பாணம் கச் சேரியில், ஒரு பகுதியில், நடைபெற்று வந்தது.
இவ்வாறாக இடநெருக்கடியிருந்த வேளையில் நகர சபையார் நூலகத்துக்கு வேறு இடந்தேடி பிரதான வீதியில், ஒரு சந்திக்கு அருகில், அபூபக்கர் கட்ட டத்தில் விசாலமான முகப்புக் கடை யொன்றை மாதம் ப்பத்தைந்து ரூபா வாடகைக்கு எடுத்தார்கள். அது விசாலமானதாக இருந்த போதிலும், சந்தடியுள்ள சூழலில் அமைந்ததாகும்.
படிப்பதற்கு ஏற்ற சுற்றாடலில் விசாலமான மண்டபம் தேடித்திரிந்த நகரசபையார், தமக்கென ஒரு பாரிய நகரசபை மண்டபத்தைக் கட்டி எழுப்பத் தொடங்கிய காலம் அது
யாழ்ப்பாண வாடி வீட்டுக்குத் தென்திசையில் சைவ வித்தியா விருத்திச் சங்க காரியாலயக்

ஓர் ஆவணம் D 75
கட்டடத்தின் அருகில் உள்ள மாடிக் கட்டடத்தின் மேல் மண்டபத்தைப் புத்தூர் மழவராயர் குடும்பத் தாரிடம் மாதம் அறுபத்தைந்து குபாவுக்கு வாடகை யாகப் பெற்றார்கள்.
அம்மண்டபம் பெரியனவாய் இரண்டு அறைகளையும், நீளமான விறாந்தையையும் கொண்டதாய் நல்ல காற் றோட்டமும் பிறவசதிகளும் கொண்டிருந்தது. அம் மண்டபத்தில் 1936 ஆம் ஆண்டு முதல் நூலகம் நல்லமுறை யில் நடைபெற்று வந்தது.
நூல்கள் வேறாகவும், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வேறாகவும் வெவ்வேறிடங்களில் வைக்கப் பெற்றிருந் தன. வாசிப்போர் தொகை நாளுக்குநாள் பெருகி வந்தது என்பது அங்கே வருவோர் கையொப்பம் இடு வதற்கு வைக்கப் பெற்ற சி. ஆர். கொப்பி கொண்டு அறியக்கூடியதாயிற்று.
மாடி வீட்டு மண்டபத்தில் நூலகம் நாளுக்குநாள் நடைபெற்று வந்த காலத்தில் பல சுவையான நிகழ்ச் சிகள் நடைபெற்றன. அங்கே வாசிக்கச் சென்ற இளைஞர் இருவர் ஒருவர் பின் ஒருவராய் உட்புகுந்து ஹிட்லர், முசோலினி என்று கையொப்பமிட்டு அமைதி யாக படித்து விட்டு வெளியேறினார்கள்.
ஹிட்லர் முசோலினியின் கையொப்பங்களைக் கண்டதும் நூலகருக்கு வெயர்த்துக் கொட்டியது. தம் கண்காணிப்பில் இப்படி நடந்ததே என்று கண் கலங்கினார். எனினும், சித்தங் கலங்காது ஹிட்லரை யும் முசோலினியையும் எதுவிதத்திலும் கண்டு பிடிப் பதற்கு வழிவகுத்தார்.

Page 41
76 O யாழ்ப்பாண நூல் நிலையம்
மூன்றாம் நாள் இருவரும் அகப்பட்டுக் கொண்ட னர். அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கு வேறு
வழியில்லாமையால் அவர்கள் மண்டபத்துக்குள் கால் வைத்தலாகாது எனத் தடைவிதித்தார்.
அவர்கள் பெயர்களை அறிந்து அறிவித்தல் பல கையில் தடையுத்தரவை எழுதி ஒட்டியிருந்தார். இளைஞர் இருவரும் அதன்பின் அந்தப் பக்கம் தலை காட்டவே இல்லை. அக்காலத்துச் இட்டாசாரம் என்னும் ஒழுக்கம் அத்தகையது.
ஆங்கிலத்தில் ஈசிசெயர் என்றும் சோபா என்றும் வழங்கும் iSaint- நாற்காலிகள் வயது முதிர்ந்த வர்களுக்கு வசதிக்காக, அங்கே இருந்தன. ஒருநாள் இளைஞன் ஒருவர் அதிலே சாய்ந்து படுத்துப் படித்த பின், புத்தகத்தை நெஞ்சிலே உறங்க வைத்து விட்டுத் தானுறங்கி குறட்டையும் விட்டபடிக் கிடந்தார்.
காலை, நண்பகல், மாலை ஆகிய முப்பொழுது களிலும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்த நகரபிதா சாம். ஏ. சபாபதி அவர்கள் உடனடியாக அலுவலகஞ்சென்று பணியாட்களை அனுப்பி உறங்கிய வரைத் தட்டி எழுப்பி, நாற்காலிகளையும் அப்புறப் படுத்திவிட்டார். அதன்பின் வயதுமுதிர்ந்த ஓய்வூதியக் காரரும் நின்றும் இருந்தும் படிக்க வேண்டியவராயினர்.
இரண்டு அறைகளிலும் பெரிய விறாந்தையிலும் பல மேசைகள் கதிரைகளுக்கிடையே நூல்கள், சஞ்சி கைகள், பத்திரிகைகள் படித்துவந்த பன்னூற்றுக் கணக் கானோரைத் தனியொருவராய நூலகர் சி. எஸ். இராசரத்தினம் அவர்கள் கண்காணிப்பது கடினமாயி ó5g... எனவே, திரு. ஆர்" சுப்பிரமணியம் என்பவர்

ஓர் ஆவணம் 77
நூலக உதவியாளராய் நியமிக்கப் பெற்றார். நூல கருக்காயினும் உதவியாளருக்காயினும் இன்றைய நூலக விஞ்ஞானம் தெரியாது. என்றாலும் அவர்கள் மேற் பார்வை செய்யும் அளவில் கண்ணியமாகக் கடமை யாற்றினார்கள்.
நூலகத்திலிருந்து நூல்கள் வாசிப்பதோடு, தாம் விரும்பிய இரு நூல்களை இரவல் எடுத்துப் போகும் முறையும் நடைமுறைக்கு வந்தது. நூலகத்தில் அங்கத் தவராய்ச் சேர்வதற்குரிய விண்ணப்பத்தாளில் பெயர், இருப்பிட விபரம் முதலியன குறித்துக் கையொப்ப மிட்டபின், நம்பிக்கைக்குப் பொறுப்பானவர் ஒருவரும், நகரசபை எல்லையுள் வீடு, நிலம் உள்ளவர் ஒருவரும் நற்சாட்சிகளாகப் பிணையொப்பம் இட்டால் ஒருவரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பெற்று அங்கத்துவ இலக்கம் வழங்கப்பெறும். அங்கத்துவம் பெற்றவர் ஒரு முறையில் இருநூல்களை இரவல் எடுத்துப் பதி னான்கு நாள்கள் படித்துப் பயன்பெறலாம். அதன் பின் வேறெவரும் அந்நூல்களை விரும்பாவிட்டால், முன்னெடுத்தவர் மீண்டும் பதினான்கு நாள்களுக்கு இரவல் எடுக்கலாம். w
நூல்கள் இரவல் எடுப்பதும் மீளக் கொடுப்பதும் பெரிய ஏட்டில் பதியப்பெறும். இக்காலத்து நிலவும் *கார்ட்" முறை அக்காலத்து வழக்கத்தில் வரவில்லை.

Page 42
அத்தியாயம் ஐந்து இரு நூலகரின் பங்களிப்பு
பொதுசன நூலகம் 1981ம் ஆண்டில் எரியுண்ட வேளையில், அதில் நூல்களை இரவல் பெறுவோர் தொகை ஏறக்குறைய பத்தாயிரமளவில் இருந்தது. ஆனால், முப்பதாம் தசாப்த ஆண்டுகளில் அங்கத்துவ வளர்ச்சி வேகம் வெகு குறைவாகவே இருந்தது. ஆரம்ப காலம் முதல் 1938 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொண்டு செய்தமைக்குப் பிரதியுபகாரமாக இலவச மாகவே நூல்களைப் பயன்படுத்திய எமக்கு மேலும் சலுகை காட்ட முடியாது என்று அதிகாரிகள் மறுத்ததும் நாம் உடனடியாக மூன்று ரூபாய் கட்டி அங்கத்துவராகிய போது கிடைத்த இலக்கம் எழுபத்திரண்டு.
அக்காலத்தில் சங்க இலக்கியங்கள், புராண இதிகா சங்கள், வேதாந்த சித்தாந்த நூல்களே தமிழ்ப் பகுதியில் அதிகமாக இடம் பெற்றிருந்தன. பத்திரிகைகள் பகுதியில் கலைமகள், சித்தாந்தம், செந்தமிழ், ஆனந்தவிகடன், செந்தமிழ்ச் செல்வி, லோகோபகாரி முதலியன சிறப்பிடம் பெற்றிருந்தன. ஈழகேசரி எல்லோர்க்கும் பெரு விருந்தாயிருந்தது. ஆங்கிலப் பகுதியில் இந்திய, ஐரோப்பிய ஆங்கில வரலாற்று நூல்களே முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்னும் ஆங்கிலப் புலவர்களின் அரிய படைப்புகளும், தத்துவத்துறையில் வித்துவான்களுக்கே

ஒர் ஆவணம் 79
விளங்கக் கூடிய மெத்தக் கடுமையான பெருநூல்களும் இருந்தன. நாவல்கள், குறுநாவல்கள், கதைகள், உருவகக் கதைகள், நவீனங்கள் என்பன அக்காலத்தில் அதிகமாகக் கிடைக்கவில்லை.
வங்காளத்தில் எழுந்த பெரும் இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள் விஷ விருட்சம், ஆனந்தமடம் போன்றவையும், தாகூரின் ஆங்கில நூல்களும் அதிக மாகக் கிடைத்தன. இவையாவும் ஒரு புறமாக, நாட்டில் ஒரு மந்த நிலை உருவாகி வந்தது. முன்னர் 1934ஆம் ஆண்டில் அரசாங்க சபைத் தேர்தலைக் குடாநாட்டின் தான்கு தொகுதிகளிலும் பகிஷ்கரித்த பின் 1934ல் இடைத்தேர்தலில் எம்மவர் சென்றதும், பொறுப்பு வாய்ந்த பதவிகளின்றி அங்கத்துவம் வகித்ததும், பின்னர் 1936-ம் ஆண்டின் தேர்தலிலும் எம்மவர் மந்திரி Lugia பின்றி இருந்ததும், 1938ஆம் ஆண்டின் யுத்த நெருக்கடிகள் உண்டானதும் நாட்டில் மந்தநிலைக்கு ஏதுவாயிருந்தன.
இதற்குள் யாழ்ப்பாண நகரசபை, அது அக்காலத்தில் முதலில் யூ.டி.சி. என்றும், பின்னர் யூ.சி. என்றும் வழங்கியது. தனக்கே உரியதான பாரிய கட்டடத்தைக் கட்டிக் கொண்டது. அதனால் நகரசபைத் தலைவரும், காரியதரிசியும் நாளிலும் பொழுதிலும் நூலகத்தைக் கண்காணிக்கக் கூடியவர்களாயிருந்தனர்.
முன்னர் 1934 ஆம் ஆண்டு முதல் நூல் நிலையத்தின் முதுகெலும்பாய், உத்தியோகத்தராய்க் கடமையாற்றி வந்த திரு.சி. எஸ். இராசரத்தினம் அவர்களுக்குத் தம்வேலையில் அலுப்புதட்டியது. போதிய உதவியாட்கள் இல்லாமை அவருக்கு வேலையில் வெறுப்புத்தட்டியது. அவருக்கும் நகரசபை தலைவர், முன்னாள் நூல்நிலைய இணைச் செயலாளர் திரு சி. பொன்னம்பலம் அவர் களுக்கும் இடையே காரசாரமான கடிதப் போக்கு

Page 43
80 யாழ்ப்பாண நூல் நிலையம்
வரத்துக்கள் நடைபெற்றன. ஈற்றில் நூலகர் எழுதி கடிதத்தில் தாம் ஒரு சிற்றுாழியர் தரத்திற்குத் தள்ளி விடப்பட்டதாக மனம் நொந்து " Atlast t am reduced to the Position of a peon'' 6Taird GTOpsasal G வேலைக்குப் போகாது விலகியிருந்தார். அவரது அளப் பருஞ் சேவையை உளங்கொண்ட காரியதரிசி சக்கிடத் தார் பாலசுப்பிரமணியம் நிலைமயைச் சமாளித்து அவர் சேவையினின்றும் ஒய்வு பெற்றதாக ஒழுங்கு செய்து, வேறொரு நூலகரை நியமிக்க வழிவகுத்தார். பன்னிரண்டு ஆண்டு காலம் லீவு எடுக்காமல் காலை தொடக்கம் மாலை வரை முழுநேர வேலை செய்து நூல்களைப் பேணிப் பாதுகாத்த இராசரத்தினம் அவர் களின் சேவை பெரிது.
பழைய நூலகர் பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரித்து விலகிக் கொண்ட பின், திரு.கந்தையா நாகரத்தினம் என்பவர் உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்து வேலையை விட்டு 1-2-1947 முதல் நூலகர் பதவியை ஏற்றார். இவர் அக்காலத்தில் மதிப்புடைய லண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்தி பெற்றவர்" வேலை அனுபவம் மிக்கவர். எவரையும் 'தம்பி' "குஞ்சு", "இராசா” என்று அன்பொழுகப் புன்சிரிப்போடு அழைத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் வாய்ந்தவர்.
வாசிக்க வருபவர், நூல்கள் இரவல் எடுக்க வருபவர் குறிப்பறிந்து புன்முறுவலோடு பழகி நட்புரிமை யோடு கடமையாற்றியவர். நூலகத்துக்கு வந்த பெரிய வர்களுக்கு ஐயா" போட்டு ஆறுதலாக உரையாடி நூலக வளர்ச்சியிலும் கண்ணாயிருந்தவர்.
திருவாளர் சி.எஸ். பார் குமாரகுலசிங்கி என்னும் பெரியாரோடு நன்கு பழகி, எங்கேயோ தெல்லிப்பழையில்

ஓர் ஆவணம் O 81
ஒகு வீட்டில் முடங்கிக் கிடந்த பலநூல்களை வாரி வாரி எடுப்பித்தவர். இந்நூல்கள் கலாநிதி ஐசாக் தம்பையா அவர்களின் பாரிய தேட்டம் என்பது அறிந்தின் புறத்தக்கது.
வணக்கத்துக்குரிய கலாநிதி தம்பையா அவர்களின் உறவினர் செய்த உபகரிப்பு, முன்னர் அவர் உயிரோடி ருந்த காலத்தில் தாமே விரும்பி உதவிய நூல்களைவிடப் பன்மடங்கு அதிகமாகும். ஏறக்குறைய 6000 நூல்கள் அவரின் பெயராற் கிடைத்தன. இலக்கியம், சமயம், தத்துவம், மொழியியல் சம்பந்தமான நூல்கள் பலவும் அவர் பெயறிற் பெரிய அலுமாரிகளில் " " கலாநிதி ஐசாக் தம்பையாவின் விருப்ப ஆவணம்" என்னும் பொருளில் 'Dr. Isac Thambiah's Bequeath' Gray7 6t(p5 Quib sis ருந்தன.
இன்னும் இலங்கை வாழ் இந்தியர்கள் மகாத்மா காத்தியடிகளின் சத்தியசோதனை என்னும் தொடரில் அமைந்த பெருந் தொகையான நூல்களையும், வேறு இந்திய நூல்களையும் பெரிய கண்ணாடி அலுமாரியில் நிறைத்து, இந்திய வர்த்தகர்களின் அன்பளிப்பு என உபக சித்தனர். அவை காந்திப்பக்தர்களால் பெரிதும் பயன் சடுத்தப் பெற்றன.
முன்னர், மதுபரிபாலனத் துறையில் ஆணையாள ராயிருந்து இளைப்பாறிய திரு கே. எஸ். நிக்கலஸ் என்பவர் சிலகாலம் மாநகர சபை பிரதிநிதியாவும் இருந்தவர். திரு. நாகரத்தினம், நிக்கல்லஸ் அவர்களுக்கு "ஐயா" போட்டு அன்புடன் பேசிப் பலநூல்களை அவரிட மிருந்து உபகரிக்கப் பெற்றார்.
முன்னர், சென்ற நூற்றாண்டிலே, 1865 ஆம் ஆண்டு முதல் கொழும்பு, கண்டி, காலி ஆகிய மூன்று நகரங்

Page 44
82 யாழ்ப்பாண நூல் நிலையம்
களும் முனிசிபாலிற்றி என்னும் மாநகர சபைகளாக இயங்கி வந்தன. எங்கள் யாழ்ப்பாணம் 1931 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டுவரையும் யூ.டி.சி (ஏபன் டிஸ்திரிக் கவுன்சில்) என்னும் சபையாக இயங்கிய பின், 1938 முதல் 1949 வரையும் யூ.சி. (ஏபன் கவுன்சில்) நகரசபையாக இயங்கயது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், 1-1-1949 முதல் முனிசிபாலிற்றி என்னும் மாநகர சபையாக இயங்கி வந்தது. தரமுயர்ந்த மாநகர சபைத் தலைவர் ouaré 55g digifu 9 sit (His Worshipful The Mayor) என்னும் பெருமதிப்புக்குரியவராவார்.
நகரபிதா தமது கடமைகளோடு நகர மக்களின் அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் நூலகத்தை நல்ல முறையில் நடத்த வேண்டியவரானார்.
இரண்டாம் உலகமகா யுத்த நெருக்கடிகள் ஓய்ந்ததும், முன்னர்பிரத்தானியப் பேரரசிரில் அடங்கியிருந்த ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரப் பாதையில் எடுத்தடி வைத் தன. முன்னர் பிரித்தானியரின் அதிகாரப் பிடியில் அமைந் திருந்த நாடுகள் சுதந்திரம் பெற்றதும் பிரித்தானியாவின் உறவை துண்டித்து விடாமல் அதன் அன்புப் பிடியில் அமைந்திருந்தன.
அன்புப் பிடியில் அமைந்திருக்கத் தொடங்கிய நாடு களே பொது நலவாய நாடுகள் எனப் பெயர் பெற்ற கூட்டுறவில் அங்கத்துவம் பெற்றிருந்தன. இவை தம்முள் கொண்டும் கொடுத்தும் அபிவிருத்தி அடை வதற்கான அமைப்பே கொழும்புத் திட்டம் எனப் பெயர் பெற்றதாகும்.

ஒர் ஆவணம் O 83
ஐக்கிய நாடுகள் உருவானதும் சுதந்திர தாடுகள் அந்தத் தாபனத்தில் அங்கத்துவம் பெற்றதும் எல்லா நாடுகளையும் ஓரளவு அறிந்து கொள்ளுவதற்கு தானிகர்கள் நியமன முறை வந்ததும், பிரதமர்கள், வெளிநாட்டு மந்திரிமார், நிதி மந்திரிமார், தம்முட் கூடிக் கலந்துரையாட வசதி வந்ததும், உலகமே ஒரு வீடாக அமைவதற்கு வழி பிறந்தது.
இந்த முறை பில் இலங்கையின் தலைநகரான கொழும்பில் பிற நாட்டுத் தூதுவர் பலர் தங்கள் நாடுகள் நலன் கருதியும், எங்கள் நாட்டின் வளர்ச்சி கருதியும் இங்கே வந்திருந்தார்கள்.
ஆசிய நாடுகளின் அபிவிருத்திக்கான ஆசியான் தாபனம் என்னும் ஏசியன் பெளண்டேசன் (Asian Foundation) உருவாகுமுன், இங்கே சுதந்திர ஆசிய நிர்வாக குழு என்னும் கொம்மிற்றி ஒவ் பிறி ஏசியா (Commitee of Free Asia) g?)uuisi 88) 6hu fög5göI .
உலக நிலைமைகள் மாறியமைந்த வகையில், இலங்கை நிலைமையும் மாறிய வேளையில், யாழ்ப்பாண நிலைமை பும் மாறியமையும் காலம் வந்தது. தமிழர் பண் பாட்டைப் பிரதிபலிக்கும் அளவில் பாரிய நூலகம் அமைதல் வேண்டும். அது பரந்த நிலப்பரப்பில் அமைதல் வேண்டும். அது யாழ்ப்பாணத்துக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதுக்குமே பயன்தரும் அளவில் பாரிய அமைப்பில் இயங்க வேண்டும். அதனை உலகநாடுகளும் பாராட்டுதல் வேண்டும் என்று அன்றொருநாள் சிந்தித் தவர் யாழ் மாநகரின் முதல்வர் சாம் ஏ.சபாபதி அவர்க 6Trenuntrf.
அக்காலத்தில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி முதல்வர் வணக்கத்திற்குரிய லோங் தந்தையாரவர்கள்

Page 45
84 யாழ்ப்பான நூல் நிலையம்
நூலக வளர்ச்சிக்கு வேண்டியன செய்வதற்கு ஆயத்த மாயிருந்தார். இன்னும் யாழ்ப்பாணக் கச்சேரியில் காரியாதிகாரியாயிருந்த ரி. முருகேசம்பிள்ளை அவர்களும் தம்மாலான உதவி செய்வதற்கு முன்வந்தார்.
திருவாளர் முருகேசம்பிள்ளை அவர்கள் செய்த அளப்பரிய சேவையும், மிகப் பெரிய தொண்டினையும் விரித்து ஒரு அத்தியாயம் எழுத வேண்டிய இடத்தில் ஒரு பந்தியாவது எழுதுதல் வேண்டும். அவர் முதலில் யாழ்ப்பாணக் கச்சேரிவிலிருந்த காலத்திலும், பின்னர் பளைப்பகுதிக்கு காரியாதிகாரியாகச் சென்ற பின்பும்நூல கத்தில் கண்ணும் கருத்துமாயிருந்தார்.
s சில வேளைகளில் தினமும் பளையிலிருந்து இங்கே -வந்து தம்வேலைகளைத் திறம்படச் செய்ததோடு நண்பர்களையும் தோளில் தட்டி உற்சாக மூட்டி வந்தார். நூலகம் அவருக்கு எட்டுப் பிள்ளைகளோடு ஒன்பதாவது பிள்ளை. -
நூலக வளர்ச்சியில் பூரண விசுவாசங் கொண்ட யாழ்ப்பாணப் பிரமுகர்கள் உற்சாகத்தோடு உதவு வதற்கு முன் வந்த அவர்கள் பெரிதும் மகிழ்ந்தமை யைக் கண்ட சாம் சபாபதி 16-6-52 இல் ஒரு பகிரங்கக் கூட்டம் கூட்டிக் கலந்து பேசினார்.
Luriiu நூலகத்தைக் கட்டி யெழுப்புவதற்கு பல்லாயிரம் ரூபா தேவையாகும் என்றும், அதைத் திரட்டுவதற்கு ஒரு களியாட்ட விழா நடத்துவதோடு, அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பும் இடம் பெறுதல் நல்ல தென்றும் பலரும் அபிப்பிராயம் தெரிவித்து, அமோக ஆதரவு தருவதாக கூறினார்கள்.

ஒர் ஆவணம் 85
காணிவல் என்னும் களியாட்டு விழாவை நல்ல முறையில் நடத்திப் பெருவெற்றி கண்ட லோங் சுவாமிகள் தாமும் தம் கல்லூரி ஆசிரியரும் முன்னின்று உதவுவ தாக உறுதி கூறினார். அவர் அக்காலத்தில் கொழும் பிலிருந்த வெளிநாட்டுத் தூதுவர்களோடு நன்கு பழகி யிருந்தவர்.
சாம் சபாபதி அவர்கள் கூட்டிய கூட்டத்தின் பயனாக **யாழ்ப்பாண மத்திய நூல்நிலைய சபை' என்னும் இயக்கம் உடனடியாக உருவாயது. சபையின் தலைவராக நகர பிதா அவர்களும், உபதலைவராக லோங் சுவாமி அவர்களும் தெரியப் பெற்றமை நூலக வளர்ச்சிக்கு வரப்பிரசாத மாயிற்று. **நாங்கள் அமைக்கப் போகும் நூல்நிலையம் தென்கிழக்காசிய நாடுகளுக்கே ஒளியூட்டும் தரமுள்ளதாகும்" என்று லோங் சுவாமிகள் பெருந் தன்மையோடு அன்று கூறி 6Tft.
வணக்கத்துக்குரிய லோங் சுவாமிகள் நீண்ட பேச்சுப் பேசியதில்லை. * "பாதர் லோங் ஷால் பி ஷோட்" (Father Long shall be short) grairdy Garnt dilaid so, is மாகவே இவர் பேசுவார். பேச்சளவில் இல்லாமல் உடனடியாகவே செயலில் ஈடுபடும் இயல்பினர் அவர்.
லோங் சுவாமிகள் நூலக நிபுணர்கள் பலரைக் கண்டும், கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டும் ஆக் கப்பூர்வமான முன்னறிவைப் பரந்த அளவிற் பெற் றார்கள்.
டெல்கிப் பல்கலைக் கழகத்து நூலகர் பேராசிரியர் கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களை இங்கே

Page 46
86 O யாழ்ப்பாண நூல் நிலையம்
அழைத்து அவரோடு நேரிற் கலந்துரையாடி ஆவன செங் வதற்குச் சுவாமிகள் ஒழுங்கு செய்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் நிறுவப் போகும் இந்தப் பெரிய நூலகம், மத்திய நூலகமாய் அமையும். அது முதலிற் குடா நாட்டிலுள்ள கல்லூரிகளின் நூல்நிலையங்கள், கிராம சங்க நூல் நிலையங்கள், நகர சங்க நூல் நிலையங்கள் யாவற்றுக்கும் நடமாடும் இயக்க முறை யில் (மொபைல் - Mobile) நூல்களை விநியோகிக்கும் என்று லோங் சுவாமிகள் அடிக்கடி கூறிவந்தார்கள். நூலகத்தை அமைப்பதற்கு வசதியான இடத்தைத் தேடித் தீர்மானிப்பதில் பெரிய சிக்கல்கள் உண்டானது. நூலக சபையினரே தம்முள் குசுகுசு கூட்டங்கள் கூடி அங்கே இங்கே என்று இழுபறி பட்டனர்.
ஒரு சாரார் இன்றைய மாநகரசபை மண்டபத்தின் தென்பகுதியில் உள்ள பழைய ஒல்லாந்தர் இடுகாட்டைச் சுத்தப்படுத்தி அதிலே நூலகத்தை அமைத்தால், கடற் காற்றும் உண்டு என்றனர்.
இன்றொரு சாரார் சுப்பிரமணியம் பூங்காவுக்கு கிழக் குப் பக்கத்தில் பெட்டிக் கடைகள் உள்ள ஒதுக்கிடத் தில் உயரமான மாடிக்கட்டடம் கட்டலாம் என்றனர். இன்னும் சிலர் இன்று நூலகமுள்ள பழைய முற்ற வெளியைக் குறிப்பிட்ட போது, வேறு சிலர் அப்படி யானால் நூலகம் முனியப்பர் கோயிலை மறைக்கும் என்றனர்.
இவ்வாறாக நூலகம் அமைவதற்கு தல்ல இடம் தேடி நான்கு பேர் நிச்சயிக்க முடியாத வேளையில், இதனை நிச்சயிக்க வல்லவர் நிபுணராயுள்ள நகர் நிர் உத்தியோகத்தரே யாவர் எனத் தீர்மானித்து

ஓர் ஆவணம் 87
அரசினர் நகர் நிர்மாண நிபுணர் திரு. வீரசிங்கா என்பவரை அழைத்தனர். நகர் நிர்மான நிபுணர் அவர் கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து நான்கு மூலைகளையும் நன்கு ஆராய்ந்து நூலகம் நகரத்தின் நடுவிலேயே அமைதல் வேண்டும் என்று கூறி முனியப்பர் கோயி லுக்குக் கிழக்கில் இருந்த முற்ற வெளியையே உரிய இடம் என நிச்சயித்தார். இதனைக் கட்டடக்கலை நிபுணர் நரசிம்மனும் நல்லது என்றார். முற்றவெளியை இழந்தாலும் நூலகம் வளர்ந்தால் போதும் எனச் சபையினர் சம்மதித்தனர். இந்த இடத்துக்குத் தெருக் கள் வசதியாக இருந்தமையும் மேலதிக அகலிப்புக்குப் போதிய நிலம் வசதியாக இருந்தமையும், சாதகமானவை என நரசிம்மன் தனது தனிப்பட்ட முறையில் தேநீர் விருந்தில் தெரிவித்தார்.
செயல் வீரரான நகரபிதா சாம் சபாபதி அவர்கள் உடனடியாகக் கட்டட வேலையை ஆரம்பித்தல் வேண் டும் எனக் கூறியதும், லோங் சுவாமிகள் அப்படியே ஆகுக என்று ஆசீர்வதித்தார். நல்ல வேளையில் சைவா சார முறைப்படி அத்திவாரம் வெட்டிப் பத்திரிப்பு வரை கட்டியபின் அடிக்கல் நாட்டுவிழா 29-3-1954 ஆம் நாள் நடைபெற்றது.
நூல்நிலையச் சங்கத் தலைவர் மாநகரசபை முதல்வர் சாம் சபாபதி அவர்கள், வணக்கத்துக்குரிய தந்தை லோங் அவர்கள், மாட்சிமை தங்கிய பிரித்தானிய தானிகர் சேர் செசில் சையெஸ் அவர்கள், மாட்சிமை தங்கிய அமெரிக்கத் தூதுவர் H. E. பிலிப் குறோவ் அவர்கள், மாட்சிமை தங்கிய இந்தியத் தூதுவரின் முதற் செயலாளர் பூரீ சித்தார்த்த சாரி அவர்கள் ஆகிய ஐவரும் அடிக் கற்களைத் திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.

Page 47
88 யாழ்ப்பான நூல் நிலையம்
அடிக்கல் திரை நீக்கம் செய்யப் பெறுமுன் பட்டுத் துணிகளால் மூடப்பெற்றிருந்தன. அமெரிக்கத் தூதுவர் தமது முறை வந்ததும், கம்பீரமாக எழுந்து சென்று பிரித்தானிய ஸ்தானிகரின் அடிக்கல்லின் மேலிருந்த திரையைத் தொட்டதும் தமது பிழையை உணர்ந்து "மன்னிக்கவும்" என்றார். இதனைக் கவனித்து நின்ற பிரித்தானிய துரதுவர் "பரவாயில்லை, நீங்கள் மீண்டும் பிரித்தானியாவுடன் இணைந்து கொள்ள விரும்பினால், நாம் ஏற்றுக் கொள்வோம்," என்று நகைச்சுவை ததும்ப பழைய சரித்திரத்தை நினைப்பூட்டி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழாவின்போது அமெரிக்க உத வியாக 22,000 டொலர் கிடைத்தது. அது அக்காலத்து இலங்கை நாணய மதிப்பில் ஒரு லட்சத்து நான்கா யிரம் ரூபாவாகத் 104,000 திரண்டது. இந்தியாவின் நன்கொடையாக சித்தார்த்த சாரி 10,000 ரூபா. உதவினர்.
அமெரிக்கரின் நன்கொடைப் பணம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலக வாசல் முகப்பில் துலாம்பரமாகப் பொறிக்கப் பெற்றுள்ளது.
** A generous gift of 104,000 by the Asian Foundation formed the nucleus of the fund for the construction of this
library
நூலகம் மழவராயர் கட்டட மாடியிலேயே நல்ல முறையில் வளர்ந்து வந்தது. புத்தகங்கள், சஞ்சிகை கள், பத்திரிகைகள் என்ற சிறத்த வெளியீடுகள் பல விதமாக வந்து குவிந்தன.

ஒர் ஆவணம் 89
இலங்கையில் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரின் காரியாலயங்களிலிருந்து förr Garnr 595 uorradow ForresFrrpru பிரசுரங்கள் வரிசையாக வந்து சேர்ந்தன.
நகரபிதாக்கள் சிலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவரா விருந்தனர். நகரபிதா சாம் சபாபதி அவர்கள் பிரித் தானியக் கலைக்களஞ்சியத் தொகுதிகளை வாங்கும் வகை செய்தார். சாம் சபாபதி அவர்களின் ஆலோ சனையின் வண்ணம் நூலகத்தில் குறிப்புரை எழுதும் பெரிய கொப்பி (Suggestion Book) ஒன்று வைக்கப் பெற்றிருந்தது. அதிலே வாசகர் தாம் எங்கேனும் கண்ட, கேட்டறிந்த நூல்களைப் பற்றிக் குறிப்பிட வசதியாயிருந்தது.
குறிப்புரைகளைக் கருத்தூன்றிப் படித்து வந்த நகரபிதா அவற்றின் தரத்தை தன்காராய்ந்து தமது தீர்ப்பைச் சிவப்பு மையால் எழுதுவார். "வாங்கவும், "வாங்கலாமா என்று ஆலோசிக்கவும்" என்று அவர் எழுதுவார். நூலகரும் செய்வர். காரியதரிசி பால சுப்பிரமணியம் அவர்களும் ஆவன செய்வர். நூலகர் ஆவன செய்வதில் கருத்துடன் பணியாற்றி வந்தார். இந்த வகையில் பாராளுமன்ற அறிக்கைகள், பரி Litory 67 அறிக்கைகள், தமிழ்ப்பண்பாடு (Tami Culture) முதலிய வெளியீடுகளை வாங்கும் வகையில் நாம் குறிப்புரை எழுதிய வேளையில், நகரபிதா எம் மைப்பாராட்டி அவற்றை உடனடியாக வாங்க வகை செய்தமை இன்று நினைத்தாலும் உருக்கமாயுள்ளது. தகரபிதாவின் அரவணைப்பால் நூலகம் வளர்ந்தது.
நாகரத்தினம் அவர்கள் நூலகராகப் பதவியேற்ற பின் நூலகத்துக்கும் நல்லகாலம் உண்டானது. முன்னர்
um-7

Page 48
90 யாழ்ப்பாண நூல் நிலையம்
1947 ஆம் ஆண்டில் தகசபை நூலகத்துக்கு வருடம் 1000 ரூபா ஒதுக்கிய் முறை போய், நூலகத்துக்கு ஒதுக்கும் நிதி படிப்படையாக அதிகரிக்கத் தொடங்கியது. அது பத் தாயிரம் ரூபா வரை உயர்ந்தமை பிரமிப்புக்குரியது அல்ல. அது இருபத்தைந்து முப்பத்தைந்து ஆயிரம் என உயர்ந்தமை பிரமிப்புக்குரிய செயலாகும். அக்காலத் தில் விதவிதமான நூல்கள் வெளிவந்தன. அவற்றை யெல்லாம் விடாது வாங்கி சேர்ப்பதற்குத் தகுந்த ஆலோசனை கூறுவாரும் இருந்தனர்.
நூலகர் நாகரத்தினம் அவர்களுக்கு உதவியாளர் வரிசை நோக்கி இருந்தனர். நூல்களை வரிசையாக அடுக்கவும் எடுக்கவும் கொடுக்கவும் உதவியாளர் பம் பரம் போலச் சுழன்று பணி புரிந்தனர். இதற்கெல்லாம் காரணம் நூலகர் தம் உதவியாளரைப் பண்போடும் பணிவோடும் பழகத் தாம் பணிந்து நடந்தமையாகும்.
புராண இதிகாசக் காலத்துப் பெருநூல்கள் ஒரு புறமாக, மேற்கில் மெத்த வளர்ந்த விஞ்ஞானத் து0ை, பொருளாதாரத்துறை சம்பந்தமான நூல் களும், சஞ்சிகைகளும் வேறு வெளியீடுகளும் விதம் விதமாக வந்து குவிந்தன. நாட்டிற் படித்தவர்கள் பெரியவர்கள் இறந்தபின் அவர்களின் உறவினர் பலர் இறந்தவர் நினைவாகப் பழைய நூல்களை நூலகத்துக்கு உபகரித்து அதனை வளரும் வகை செய்தனர்.

அத்தியாயம் ஆறு கட்டடம் வளர்ந்த கதை
யாழ்ப்பாணத்துப் பொதுசன நூல்நிலையக் கட்ட டத்தை நிர்மாணஞ் செய்த கட்டடக்கலை நிபுணர் நரசிம்மன் அவர்கள் தமிழ்ப்பண்பாடு, இந்துப் பண்பாடு, நவீன எஞ்சினியரிங் அமைப்பு முதலியவற்றை மனதிற் கொண்டு நிர்மாணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தேவாலயம், வித்தியாலயம் போல நூலகமும் ஒரு ஆலயம் என்பது அவர் மனங்கொண்ட மதிப்பு.
நரசிம்மன் நிர்மாணித்த கட்டடத்தைப் பொருளாதார வசதி நோக்கிப் பகுதி பகுதியாகவும் கட்டி நிறைவேற்ற லாம் என்றார். அதன் வரைபடம் போதிய விளக்கம் தராவிட்டாலும் எனக் கருதிய அவர், அதன் மாதிரி அமைப்பை அழகுறச் செய்து 16-10-1953 இல் தந்திருந் görmr
கட்டட வேலையை உடனடியாகத் தொடங்குவ தானால் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாவாவது கையிருப் பில் வேண்டும் எனக் கருதிய நகரபிதா சாம் சபாபதி அவர்கள், லோங் சுவாமிகள் முதலான அனுபவசாலி களின் ஆலோசனையின் வண்ணம் களியாட்டு 6pm என்னும் காணிவல் வைப்பதற்கு ஒழுங்குகள் செய்தார்.
நூலக வளர்ச்சிக்காக யாழ் விநோத காணிவல் விழாக்கள் நகரத்தில் நான்கு முறைகள் நடைபெற்றன.

Page 49
92 யாழ்ப்பாண நூல் நிலையம்
முதலில் 1952ம் ஆண்லும், இரண்டாம் முறை 1954 ஆம் ஆண்டிலும், மூன்றாம் முறை 1959 ஆம் ஆண்டிலும், பின்னர் 1963 ஆம் ஆண்டிலும் நடைபெற்றன.
நகரில் நடைபெற்ற காணிவல் விழாக்கள் எல்லா வற்றையும் இங்கே விபரிக்கத் தேவையில்லை. முதல் விழாக்கோலமாக நடைபெற்று யாழ்ப்பாண மாவட் டத்தை மகிழச் செய்த வைபவத்தை மிகச் சுருக்கமாக கூறத்தான் வேண்டும். அத்தோடு சாம் சபாபதி அவர் களின் விடாமுயற்சியையும் போற்றுதல் வேண்டும்.
சாம் சபாபதி அவர்கள் முயற்சி செய்யாதிருந்தால் யாழ் பொதுசன நூலகக் கட்டடம் அதுவரையில் கட்டப் பெற்றிருக்க மாட்டாது. சாம் அவர்களின் மூளையில் உதித்து நடை பெற்ற வேறொரு வருவாய் வழி அதிர்ஷ்ட லாப சீட்டு. அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப் புக்குக்கவர்ச்சிகரமான பெரும் பரிசுகளை உதவிய பெரிய வர்களைப் பாராட்டுதல் வேண்டும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விழாவில் மூன்று புதிய கார்கள் பரிசுப் பொருள்களாகக் கொடுப்ப தற்கு மூவர் முன் வந்தனர். ரக்கேஸ் நிறுவனத்தார் வொக்ஸ்ஹோல்கார்,கொலோனியல் மோட்டோஸ் நிறுவ னத்தார் பியட் கார், இன்னொரு சாரர் கெசெல் கார் கொடுத்தார்கள். கண்காணிப்புப் பொறியியலாளர் ரி. குணரத்தினம் அவர்கள் காணிவல் விழா நிகழ்ச்சி களைக் கருத்துடன் கண்காணித்து வந்தார்.
லோங் சுவாமிகள் அவர்களின் அன்பர்கள் தொண்டர்கள், மாநகரசபை முதல்வர், ஏனைய நகரபிதாக்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணக் கச்சேரி உத்தி யோகத்தர்கள், யாழ்ப்பாணக் கலைஞர்கள் ஆசிரியர்கள்,

ஓர் ஆவணம் 93
வர்த்தகர்கள், பிரமுகர்கள் எல்லோரும் விழா மூலம் பணந்திரட்டுவதற்கு முழுமூச்சாக ஒத்துழைத்தார்கள்.
தெல்லிப்பழையைச் சேர்ந்த மகப்பேற்று மருத்துவ நிபுணர் இராசநாயகம், இலங்கை வங்கி முகாமையாளர் எல்.பி.என். சிங்கம், கச்சேரிக் காரியாதிகாரி வெஸ்லி செல்வரத்தினம், காரியாதிகாரி சதா பூரீனிவாசன், காரியாதிகாரி முருகேசம்பிள்ளை இன்னும் பெரியார்கள் பலர் அரும்பாடுபட்டார்கள்.
மாநகரசபை உத்தியோகத்தர்கள் சிலர் காணிவல் நாள்களில் வீட்டுக்கே வராமல் விழா வேலைகளை இரவு பகலாகச் சிரமம்பாராமல் செய்து ஈடேற்றினர். அவர் களுள் திருநெல்வேலி சி. பொன்னுத்துரை அவர்கள் செய்த சேவை நினைவில் நிலைத்துள்ளது.
காணிவல் ஒப்பந்தக்காரர் கொழும்பில் பம்பல பிட்டியைச் சேர்ந்த ஏபேர்ட் சில்வா என்பவராவர். அவரின் காணிவல் விழா உபகரணங்களை யாழ்ப்பாணத் துக்கு எடுத்து வருவதற்கு வாகனச் செலவு மாத்திரம் 8000 ரூபாவாகும் என அறிந்து சிந்தித்த நகர பிதா வுக்கு, உள்ளூர் "லொறிச் சொந்தக்காரர் கண்ணியமாக உதவிபுரிய முன்வந்தனர்.
காணிவல் விழாவின் போது இடம் பெற்ற நகைச்சுவை நாடகம், "அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறார்" arai gob (He comes from Jaffna) 5T-5uorgjb. sori யாட்டு விழாவைச் சிறப்பித்த கலைஞர்களுள், கலையரசு சொர்ணலிங்கமும் அவரின் சீடர்களான கே. செல்வ ரத்தினம் முதலானோரும் ஆவர்.
காணிவல் விழாவின் போது உண்டான பெருஞ் செலவுகளுக்கு நகர முதல்வர் செக் எழுதிய போதெல்தாம்

Page 50
94 யாழ்ப்பாண நூல் நிலையம்
அவற்றை உடனுக்குடன் மாற்றிக் காசுத் தாளாகக் கொடுத்த எல்.கே.எஸ். நகை மாளிகை உரிமையாளரை யும் பாராட்டுதல் வேண்டும்.
காணிவல் களியாட்ட விழாக்கள் எல்லாவற்றையும் எழுதி நேரத்தை வீணாக்காமல், இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளை மாத்திரம் இங்கே குறிப்பிடலாம். களியாட்ட நிகழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற டொணவன் அன்றி என்பாரின் குழுவினர் செய்த சாகச விளையாட் டுக்கள் நூலகத்துக்குப் பணம் தேடித் தந்தன.
இன்னும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஒத்துழைப்பின் வண்ணம் மாணாக்கர், மாணாக்கியர் உண்டியல் குலுக்கி ஒரளவு தொகை திரட்டிக் கொடுத் தார்கள். இன்னும் பலரை இங்கே குறிப்பட வேண்டும். அவர்கள் இடம் பெறாமைக்கு மன்னிக்கவும்.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல் மேயரான சாம். ஏ.சபாபதி அவர்களின் பதவிக்காலத்தில் நூலகக் கட்டடம் கட்டி முடிக்கப் பெறவில்லை. இவ்ர் மேயர் என்னும் நிலையிலும் யாழ்ப்பாண மத்திய நூல்நிலைய சங்கத் தலைவர் என்னும் தகுதியிலும் 29-3-1954-ஆம் நாளில் அடிக்கல் நாட்டியிருந்தார்.
கட்டடத்தை நிர்மணித்த கலைஞர் நரசிம்மன் அவர் கள் இதனைப் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கலாம் என வகுத்திருந்தார். அது கட்டப் பெற்ற சமயங்களில் நரசிம்மன் இடையிடையே அங்கே வந்து மேற்பார்வை செய்து போனார்.
பழைய வகைக் கட்டத்திலேயே நடை பெற்று வந்த இந்நூல்நிலையம் 17-10.1958 தொடக்கம் யாழ்ப்பான

ஒர் ஆவணம் 95
பொதுசன நூல்நிலையம் எனப் பெயர் பெற்று நிலவி வந்தது. காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த நகர பிதாக்களுள் திரு. அல்பிரட் தங்கராசா துரையப்பா அவர்களும் ஒருவர். அவர் யாழ்ப்பாண மாநகரை அழகு படுத்தவும், விளையாட்டரங்கை விசாலித்துப் பெரிதாக்க வும், நூலகத்தைக் கட்டியெழுப்பவும், போக்கு வரத்துப் பாதைகளை இருசாலையாக்கவும், நவீன சந்தை அமைக்க வும் பலவாய திட்டங்களை வகுத்தார்.
பலவாய திட்டங்களுள் நூலகக் கட்டட வளர்ச்சிக் கான முயற்சியில் தம் முன்னோர் காட்டிய வழியைப் பின்பற்றி 1959 ஆம் ஆண்டில் யாழ் விநோத காணிவல் விழாவை ஒழுங்கு செய்தார்.
அது மாநகரசபை நடத்திய மூன்றாவது பெரு விழாவாகும். அதை அம்பலாங்கொட பொலஸ் சில்வா என்பவர் ஒப்பந்தஞ் செய்து நடத்தினார். துரையப்பா அவர்கள் காலத்தில் நடைபெற்ற விழாவில் பிரித்தானியா, இந்தியா, அவுஸ்திரேலியா, சோவியத் யூனியன் முதலான நாடுகளின் ஸ்தானிகர்கள் பெருமளவில் உதவி நல்கினார் கள். பலநாடுகளின் திரைப்பட நிகழ்ச்சிகள் ஒழங்காக நடை பெற்றன.
துரையப்பா அவர்கள் மக்களிடையே மிக நெருங்கிப் பழகி அம்மா, ஐயா, அக்கா போட்டு ஆதரவு தேடிக் கொண்டார். புரவலர் பி. எஸ். என்னும் வைத்திய கலா நிதி சுப்பிரமணியம் , அரசாங்க அதிபர் பூரீகாந்தா, நீதவான் பூணூரீஸ்கந்தராசா, மேலதிக நீதவான் சிவஞான சுந்தரம், நீதவான் டேவிட், கல்விப் பணிப்பாளர் சோம சேகரம், வணக்கத்துக்குரிய அருள்நேசன், கலாநிதி இராசலிங்கம், காரியாதிகாரி குணரத்தினம், சிறாப்பர் ஜெகந்நாதன், முடிக்குரிய அப்புக்காத்தர் முத்துசுவாமி

Page 51
96 யாழ்ப்பாண நூல் நிலையம்
பிள்ளை, ஆணையாளர் சின்னையா, ஆசிரியர் கே. வி. மயில்வாகனம் முதலானோர் களியாட்டு விழாவை ஒழுங்காக நடத்துவதற்குப் பெருமளவிலே பங்களிப்புச் செய்தார்கள்.
இவ்வாறாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வெளிநாடுகளின் பிரமுகர்கள், புரவலர்கள், கல்விமான் கள், நூலகத்தையும், கட்டத்தையும் பார்வையிட்டுத் தங்களால் இயன்றளவு நூல்களை அன்பளிப்புச் செய்வ தாக உறுதி கூறினர்.
பழைய மத்திய இலவச வாசிகசாலையும் நூல்நிலை யமும், யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையம் எனப் பெயர் வழங்கத் தொடங்கிய காலத்திலே அல்பிறெட் தங்கராசா துரையப்பா அவர்கள் நகரபிதா என்ற முறையில் நூலக காரிய நிர்வாகக் குழுவின் தலைவரா கவும் இருந்தார்.
நூலகக் காரிய நிர்வாகக் குழுவில் மாநகரசபை அங்கத்தவர்களோடு அந்த அந்த வட்டாரங்களிலிருந் தும், வெளிவாரியாகவும் நியமனம் பெற்ற அறிவாளிகள், ஆதரவாளர்கள் சேர்ந்திருந்தனர். காரிய நிர்வாக, குழுவினர் 26-11-58 புதன்கிழமை நகர மண்டபத்திற் கூடி, நூலகக் கட்டட நிதிக்கான கொடித் தினத்தைப் பற்றி நிச்சயித்தனர். அவர்கள் காரியத்தோடு காரியமாக நூலக வளர்ச்சிக்கான பிரசாரஞ் செய்யும் பெரியவராயும் பணிபுரிந்து பாடுபட்டனர்.
மாநகர சபைத் தலைவர் மதிப்புக்குரிய மேயர் அல்பிரெட் தங்கராசா துரையப்பா அவர்கள், 1959 ஆம் ஆண்டு நடத்திய காணிவல் விழா முடிந்ததும், நூலக கட்டட வேலையை வேகமாக நடத்தி நில மண்டபத்தின் ஒரு பகுதியை ஓரளவுக்குக் கட்டி நிறைவேற்றினார்.

ஓர் ஆவணம் 97
பழைய நூலக மாடியில் இடநெருக்கடி காரணமாக உடனடியாகப் புதிய கட்டத்திற் குடி புகுவதற்கான ஒழுங்குகளை வெகுவிரைவில் நிறைவேற்றியதும் 11-101959 ல் திறப்பு விழா கொண்டாடினார். அவர் நூலகத் தைத்திறந்து வைத்த வைபவத்தைக் குறிக்கும் கல்லழுத்து வருமாறு பொறிக்கப் பெற்றுள்ளது: "This Public Library was opened by Alfred T. Durayappah J.P.U.M. Mayor of Jaffna on the l l th of October 1959. ''
புதிய கட்டிடத்திற் குடிபுகுந்த காலத்தில் நூலகத்தில் ஏறக்குறைய 16,000 நூல்கள் இருந்தன . தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்த சஞ்சிகைகள், பலவாக இருந்தன. அக்காலத்தில் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வெளிவந்த வாராந்த, மாதாந்தகு முத்திங்கள் சஞ்சிகைகள் ஏறக்குறைய 150 இனங்கள் வந்து பெருவிருந்தளித்தன.
லண்டனில் வெளிவந்த நாளாந்த பத்திரிகைகள் விமானம் மூலம் வந்து சேர்ந்தன. அக்காலத்தில் கொழும்பில் சதாம் வீதியில் பேசிக் புத்தக நிலையம்" என ஒரு நிறுவனத்தை ஈழநாடு பத்திரிகையின் உரிமை யாளர் உயர் திரு.கே.சி. தங்கராசா அவர்கள் நடத்தி வந்தார்கள். அதனை அவருடைய மைத்துனர் அமிரரி து. கனகசுந்தரம் நிர்வாகஞ் செய்து வந்தார். பேசிக் புத்தக சாலை மூலம் நூலகத்திற்கு வெளிநாட்டு வெளி யீடுகள் வசதியாகக் கிடைத்தன.
நூலகத்தில் பழைய நூல்கள் பல திரவியங்களாக விருந்தன. ஒல்லாந்தர் காலத்து இலங்கை வரலாறு 1672 ஆம் ஆண்டளவில் பிலிப்புஸ் பல்டியஸ் என்பவரால் எழுதிப் பதிப்பிக்கப் பெற்றது. அவருக்கு முன் 1660 ஆம் ஆண்டளவில் கண்டி மன்னரால் சிறை வைக்கப்பட்ட

Page 52
98 யாழ்ப்பாண நூல் நிலையம்
றோப்பட் நொக்ஸ் என்பார் எழுதிய இலங்கை வரலாறு பெரு மதிப்புக்குரியதாகும். இத்தகைய பழைய நூல்கள் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு எப்படியோ கிடைத்திருந்தன. இவை முதற்பதிப்பு என்ற பெருமையும் பெற்றன. இவை அண்மைக் காலத்தில் கொழும்பில் s is gir as 65 gaps, authgos usá) (Ceylon Historic Journal) அறிஞர் எஸ்.டி. சபரமடு என்பவரால் வெளியிடப் பெற்றுள்ளன.
பொதுசன நூலகத்துக்குப் பெருமதிப்புக் கொடுத்த மிகப்பழைய நூலொன்று கத்தோலிக்கப் பெரியவர் களைப் பற்றிய வரலாறாகும். இது தமிழில் எழுதப் பெற்றது. நூலின் முகப்புத் தலையங்கம் ஸ்பானிய மொழியில் எழுதப்பெற்றது. 1586 ஆம் ஆண்டில் வெளி யானே பழைமை வாய்ந்தது.
நூலகத்தில் இரவல் எடுத்துப் போகும் நூல்களை விடப் பல பழைய நூல்கள் அறுநூறு வரை உடனுதவும் பகுதியில் பாதுகாக்கப் பெற்றிருந்தன. தொல்காப்பியத் துக்குரிய உரைகள், பெரிய புராணக்துக்கு ஆறுமுகத் தம்பிரானின் உரை, சர். அருணாசலம் தயாரித்த அறிக்கைகள், அவர் பேசிய பேச்சுகள், மொழி பெயர்ப் புகள் யாவும் வரிசையாக இருந்தன.
சேர். இராமநாதன் செய்த பகவத்கீதை விளக்கம், சிந்தாந்தமயமான உரை நுட்பம், செந்தமிழ் இலக்கணம், லேடி இராமநாதன் எழுதிய இராமாயண மொழி பெயர்ப்புகள் யாவும் வரிசையாக இருந்தன.
மகாகவி பாரதியாரின் நண்பர் நெல்லையப்பரின் நூல்கள், சஞ்சிகைகள், கடலங்குடி நடேச சாத்தியாரின் ஜோதிடநூல்கள் இன்னபிறவும் இருந்தன.

ஒர் ஆவணம் 99
ஆங்கிலத்தில் அவ்வப்போது வெளிவந்த பிரித்தானிய கலைக்களஞ்சியங்கள், அமெரிக்கக் கலைக் களஞ்சியங்கள் வரிசையாக இடம் பெற்றிருந்தன, பிரித்தானியாவிலிருந்து வெளி வந்த புகழ்பெற்ற சஞ்சிகைகளை ஆவலோடு படிப்பு தற்கு அக்காலத்துப் பிரபல ஆங்கில ஆசிரியர்களான சங்கரப்பிள்ளை, நாகலிங்கம், சுப்பிரமணிய 9ցաn, வால்ற்ரன், சிமித், செல்லையா, முத்துக்குமாரு ஆகிய ஆசிரியர் பெருமக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை பழகிய மாணாக்கர் வரிசை வரிசையாக வந்து தேனிக்கள் போல மொய்த்திருந்து படித்தனர்.

Page 53
அத்தியாயம் ஏழு புதிய நூலகளின் வழிகாட்டல்
நூலகத்துக்கு அவ்வப்போது பெருந்தொகையான நூல்களை உபகரித்தவர் வரிசையில் கோப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கம் அவர்கள், வவுனியாவைச் சேர்ந்த பண்டித இராசஐயனார் அவர்கள். வெள்ளவத்தை முதலியார், குல. சபாநாதன் அவர்கள் ஆகியோருடைய பெயர்களைக் குறிப்பிடுதல் வேண்டும்.
நூலகம் முன்னர் மத்திய இலவச வாசிக சாலையாக 1933 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பெற்ற போதே சிறப்பு அங்கத்தவராக சேர்ந்து பெருமுயற்சி செய்த தெல்லிப் பழை ப.குமாரசுவாமி அவர்கள், பட்டம் பெற்ற சட்டத் தரணியும் தமிழன்பருமாவர். சைவத் துறையிலும் சான்றோராய குமாரசுவாமி அவர்கள் திருக்கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம், முன்னீஸ்வரம், நகுலேஸ்வரம் முதலாய திருத்தலங்கள் பற்றிய ஆராய்ச்சி நூல்களை அரிதிற் சேகரித்து வைத்திருந்தவர்.
கிடைத்தற் கரிய மாந்தைப் பள்ளு, குருவிப் பள்ளு ஞானப்பள்ளு முதலிய நூல்களை ஏட்டுருவிலும் நூல்வடி விலும் அவர் வைத்திருந்தவர். அன்றியும் கதிரைமலைப் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு முதலிய பழைய பிரபந்த இலக்கியங்களை ஆராய்ச்சிக் குறிப்போடு பதிப்பித்தவர். முன்னர் எவரும் அணுகாத வகையில் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தலவர லாற்றை அணுகி நுணுக்கமாக ஆராய்ந்தவர்.

ஒர் ஆவணம் 101
இத்தகைய புகழ் பூத்த குமாரசுவாமி அவர்களின் மைந்தராய வன்னியசிங்கம் அவர்கள் தமது முயற்சி யால் தேடிய அரிய நூல்களைப் பேணிப்பாதுகாத்தவர். அவர் 1959 ஆம் ஆண்டில் மறைந்ததும் அவரின் குடும்பத் தார் பெருந்தொகையான நூல்களை யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்துக்கு அவர் நினைவாக அன்பளிப்பு
செய்தனர்.
அவர்கள் அன்பளிப்பு செய்த பெருந் தொகையான நூல்கள் தனிப்பட்ட அலுமாரி ஒன்றில் நிறைத்து வைக்கப் பெற்றிருந்தன. அவற்றைவிட வன்னியசிங்கம் அவர்கள் விட்டுச் சென்ற பாராளுமன்ற அறிக்கைககள், பரிபாலன அறிக்கைகள் முதலியன வேறு விறாக்கைகளில் அடுக்கி வைக்கப் பெற்றிருந்தன.
இலங்கையருள் மதுரை தமிழ் சங்கப் பண்டிதப் பட்டம் முதலில் பெற்றவர் என்ற பெருமை மட்டக்களப்பு மயில்வாகனனார் என்னும் சுவாமி விபுலானந்தருக்கே உரியது. இரண்டாம் பண்டிதர் என்னும் பெருமைக்குரி யவர் வவுனியாவைச் சேர்ந்த இராசஐயனார் என்ப வராவர். அவர் மறைமலையடிகளிடம் பேரபிமானங் கொண்ட தமிழர்.
பண்டித இராசஐயனார் செந்தமிழ்ப்பற்றும் சிவ நேயமும் நிறைந்தவர். ஆங்கிலப் புலமை வாய்ந்த அவர் பலதுறைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். மிடுக்கான தடையும் பேச்சும் வாய்ந்த அவரை சேர். இராமநாதன், மறைமலையடிகள், கலாநிதி நடேச பிள்ளை முதலானோர் பெரிதும் அபிமானித்திருந்தனர், தமிழ்நாட்டுச் சோமசுந்தர பாரதியாரை இங்கழைத்து அவருக்கு நாவலர் பட்டம் வழங்கிய அறிஞர் குழுவில் இராசஐயனாரும் ஒருவர்.

Page 54
102 O யாழ்ப்பாண நூல் நிலையம்
இராசஐயனார் யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணை யில் தமிழ்நாட்டுச் செட்டிய பகுதியில் திருமணம் செய்தி ருந்தார். அவர் மறைந்ததும் அவர் மனைவியார் தம் கணவர் நினைவாக அவரின் பெருந்தொகையான நூல்களை ஒரு பெரிய லொறியில் ஏற்றி நூலகத்துக்கு அன்பளிப்பாக அனுப்பினார். அவற்றுள் பிரகத்சாதகம், பிரம்ம சூத்திரத்துக்கு கடலங்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய உரை, பெருந்தேவனார் பாரதம், செந்தமிழ் தொகுதிகள் முதலிய பல நூல்கள் இருந்தன.
நூலகத்துக்கு வந்து சேர்ந்த பெருந் தொகையான நூல்களுள் ஒரு தொகுதி கொழும்பிலிருந்து வந்தது, அது விலைக்கு வாங்கப் பெற்றதாயினும், அதை யாழ்ப் பாணத்துக்குத் திசைதிருப்பிய பெருமை முதலியார் குலசபாநாதன் என்னும் புகழ்பெற்ற பேரறிஞருக்கே உரியதாகும்.
முதலியாரவர்கள் மக்கள் கவிமணி வட்டுக்கோட்டை இராமலிங்கம் அவர்களோடு சேர்ந்து பழைய முதலியார் இராசநாயகம் அவர்களிடம் தமிழ் கலாசாரம் பயின்ற வர்கள். ஆராய்ச்சித் துறையில் நுணுக்கமாகப் புகும் ஆற்றல் வாய்ந்தவர்.
முதலியார் குலசபாநாதன் அரசாங்கத்தில் தகவற் பகுதியினர் மாதந்தோறும் வெளியிட்ட பூரீலங்கா
என்னும் தமிழ் சஞ்சிகைக்குப் பொறுப்பா யிருந்தவர். அவரிடம் பெருந்தொகையான தமிழ் நூல்கள் இருந்தன. அவை யாவும் யாழ்ப்பாணப்
பொதுசன நூலகத்துக்கு மிக மலிவாகக் கிடைத்தன.
முதலியார் அவர்களின் புத்தகக் குவியல்களுள் கிடந்த முத்துக்கள், வைரக்கற்கள், தேடக்கிடையாத்

ஒர் ஆவணம் O 103
திரவியங்கள் பல. பூரீலங்கா என்னும் திங்கள் வெளியீட் டின் பழைய இதழ்களில் செந்தமிழ், சைவம், வாய் மொழி, வரலாறு, வைத்தியம், விவசாயம், புதை பொருள் முதலிய விடயங்கள் சம்பந்தமான அரும்பெரும் தகவல்கள் அடங்கியிருந்தன. அவையும் நூலகத்துக்கு வாய்ப்பாகவும் வரப்பிரசாதமாகவும் இருந்தன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகாமையாளர் சபையில் எழுது வினைஞராயிருந்த வே. இளையதம்பி அவர்களின் மைந்தன் பாக்கியநாதன் இளைஞராயிருந்த போதே இந்துக்கல்லூரியில் சிலமாதங்கள் ஆசிரியராகவும் இருந்தவர்.
பாக்கியநாதன் மேற்படிப்புக்காக கல்கத்தா சென்று பொருளியல், வர்த்தகம் முதலிய பாடங்கள் படித்துப் பட்டம் பெற்று மீண்டதும் கொழும்பில் வெஸ்லி கல்லூரி யில் ஆசிரியரானார்.
வெஸ்லி கல்லூரியிருந்த காலத்தில் புல்பிறைற் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குச் சென்று அங்கே அற்லான்ரா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் pági Lorr Gofu Lu Lib GoLupib patri (M.Sc. in Library Science)
பாக்கியநாதன் வெறும் பட்டப்படிப்போடு நின்று விடாமல், உலகப்புகழ் பெற்ற சமாதான வீரர் கலாநிதி மாட்டின் லூதர் கிங் என்னும் பெரியாரை நேரிற்கண்டு பழகி, நல்லியல்புகள் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற வர். நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு என்பது இவரளவில் பொருத்தமாயிற்று. பட்டமும் பெரியவர்களிடம் பண் பாடும் பழகிய பாக்கியநாதன் பட்டப்படிப்பின் பின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற

Page 55
104 யாழ்ப்பாண நூல் நிலையம்
சந்தியாகோ நூலகத்தின் சிறுவர் பகுதியில் ஒரு வருட காலம் பணிபுரிந்து மேலதிக பயிற்சியும் பட்டமும் பெற்றவர்.
பாக்கியநாதன் இலங்கைக்கு மீண்டதும், வளர்ந்து வந்த யாழ்ப்பாண நூலகத்துக்கு வாய்ப்பான நூலக ராகப் பணிபுரிய நியமிக்கப் பெற்றார். அவர் 28-8-1964-ல் பதவியேற்றதும் பழைய நூலகர் நாகரத் தினம் பெருந் தன்மையோடு உதவியாளராயிருந்து முழு மனதோடு ஒத்துழைப்பு நல்கினார்,
பாக்கியநாதன் தாம் மேற்கு நாடுகளில் பெற்ற பயிற்சி அநுபவங்களைக் கொண்டு யாழ்ப்பாண நூலகத்தை இலங்கையில் முதற் தரமானதாக உயர்த்து வதற்கு வெகுவாக முயற்சி செய்தார். நூலக நடைமுறை களில் அனுசரிக்க வேண்டிய வழிகளைக் காலத்துக்குக் காலம் படிப்படியாக பழக்கத்துக்கு கொண்டு வந்தார்.
உயர் வகுப்பு மாணாக்கர், மாணாக்கியர் தங்கள் மேற்படிப்புக்கு வேண்டிய அறிவைப் பெறுவதற்கு நூல கத்தில் உடனுதவும் நூல்களை வசதியாக அமர்ந்து படிப்பதற்கு வாய்ப்பாகத் தனி மேசை கதிரைகளைத் தரமான தேக்கில் நாற்பத்தையாயிரம் செலவில் நகரசபை யைக் கொண்டு செய்வித்தார்.
திருவாளர் வே . இ. பாக்கியநாதனின் பதவிக் காலத்தில் நூலகம் நாளுக்கு நாள் புதுப்பொலிவு பெற்று வளர்ந்து வந்தது. இதன் அடிப்படைக் காரணம் வெகு அந்தரங்க மானது. முன்னர் நூலகராகக் கடமையாற்றிய திருவாளர் நகரத்தினம் அவர்களின் நீண்ட அநுபவமும் உளமார்ந்த ஒத்துழைப்பு விசுவாசமும் பாக்கியநாதனுக்கு உறுதுணை யாயின. அறிவும் அநுபவமும் இணைந்த அருமையை நாம் கண்டு இருவரையும் பாராட்டி வந்ததும் உண்டு.

ஓர் ஆவணம் 105
பாக்கியநாதனிடம் சாணப்பட்ட பண்பாட்டிடையே எழுந்த ஒரு வேகம் நூலகம் வளரவேண்டும் என்பதாகும். அவர் நூல்களோடு நூல்களாய் பழைய பனையோலை ஏடுகளையும் தேடிப் பாதுகாத்துப் பயன்படுத்த முயன் றார். அது நூலகத்தின் ஆரம்பகர்த்தா க.மு.செல்லப்பா அவர்கள் கண்ட கனவாகும்.
பாக்கியநாதன் பனை ஓலை எடுகளிற் கொண்ட பசி தீருமளவில் முன்னாள் உள்ளூராட்டு மந்திரியார் உயர்திரு மு. திருச் செல்வம் அவர்கள் GpGUp (tpë&fras ஒத்துழைத்து உதவி செய்தார். அவர் உதவியால் சித்த வைத்திய வாகட ஏடுகள் பல கிடைத்தன.
பட்டம் பெற்ற நூலகர் பாக்கியநாதன் அவர்கள் உதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நூல்நிலையத்தின் நிலைமைகளை நன்றாகப் பரிசீலனை செய்து கொண் டார். அவருக்கு நல்ல முறையில் உடனுதவி ஒத்துதவி நல்கிய உதவியாளர் க.நாகரத்தினம் அவர்களும், ஆர். சுப்பிரமணியம் அவர்களும் நல்ல அநுபவசாலிகளா வார்கள் .
பாக்கியநாதன் அவர்கள் நூல்நிலையம் எந்த எந்த முறைகளில் புனரமைக்கப் பெறவேண்டும் என்றெல்லாம் விபரமாக எழுதிய அறிக்கை ஒன்றை, அந்நாளில் நகரப் பிதாவாக இருந்த உயர்திரு எஸ்.சி. மகாதேவா அவர்கள் கருத்தூன்றிப் படித்தார்கள். அவர் திாம் படித்தபின், அந்த அறிக்கையைப் பரிசீலனை செய்வதற்காக துலக காரிய நிர்வாகக்குழுக் கூட்டத்தை 8-10.1954ல் கூட்டி னார். நகரசபை உறுப்பினரும் வெளியாருமாக இருபது பேர் சமூகமளித்திருந்தனர்.
பக்கியநாதன் அவர்களின் அறிக்கையில் முதற்பகுதி துலகத்தில்ல்க நூளைக் கையாளுதல், இரவல் கொடுத்தல்
ишп-8

Page 56
106 யாழ்ப்பாண நூல் நிலையம்
முதலியவற்றில் கார்ட் முறையை அநுசரித்தலாகும், இம்முறையினையே, கொழும்பில், மாநகரசபையின் நூல் நிலையமும் அநுசரித்து வந்தது. பிறெளனிமுறை எனப் படும் வழிவகை இதற்குச் சாதகமாகும்.
அறிக்கையின் இரண்டாம் பகுதி, நூலகத்தின் உத்தி யோகத்தர் தொகையை அதிகரித்தல் சம்பந்தமானது. அன்றுவரை நூலகர் ஒருவர், உதவியாளர் ஒருவர், மேற்பார்வையாளர் இருவர், தொழிலாளர் மூவர், காவலாளிகள் இருவர் என ஒன்பது பேர் இருந்தமை வளர்ந்துவந்த வேலைப் பளுவுக்குப் போதா என்பது.
தொழிலாளர்களுள் ஒருவர் புத்தகங் கட்டும் பணி யினைச் சிறந்த முறையில் செய்து வந்தமையால், வேறொருவர் வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
மேற்பார்வையாளர் மேலதிகமாக நியமனம் பெற வேண்டிய அவசியம், இளைஞர்கள் நூல்களில் இருந்து பக்கங்களைத் திருட்டுத்தனமாக கிழித்துப் போவதா லாகும்.
மூன்றாம் பகுதி, நூலக பரிபாலனத்தில் நூலகருக்கு ஒரளவு சுயாதீனமான அதிகாரங்கள் வேண்டும் என்பதா கும். அதுவரை ஆணையாளர் அவர்களே எல்லா பொறுப் புக்களுக்கும் உரியவராயிருந்தார்.
நான்காம் பகுதி, சிறுவர்றுாலகம் ஒன்றை அமைப்பது சம்பந்தமானதாகும். இதைப்பற்றிப் பேசியவர்களுள் அங்கத்தவர் ஏ.ஜி.இராசசூரியர் ஆதரவாகப் பேசினார். அங்கத்தவர் சி.நாகராசா அவர்கள் அருமையாக ஒருவிடயத்தை விளக்கிப் பேசினார். குழந்தைகள் நூலகம் குறிக்கப்பட்ட பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்கு மாத்திரம்

ஓர் ஆவணம் 107
அமையாமல் தூரத்துப் பிள்ளைகளுக்கும் பயன் கொடுக்க வேண்டும் என்றார். குழந்தை நூலகம் பற்றிய விடயம் அடுத்த நிர்வாகசபைக கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட் - كنيسة
ஐந்தாம் பகுதி, உடனுதவும் நூல்கள் சம்பந்தமானது. உடனுதவும் நூல்களை அவ்வப்போது பதுங்கியிருந்து படிப்பவர் சிலர், பக்கம் பக்கமாக கிழித்துப் போவதை சகிக்க முடியாது என்றும், அப்பகுதிக்குத் தனிப்பட்ட மேற்பார்வையாளர் பொறுப்பதிகாரியாய் நியமனம் பெற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
ஆறாம் பகுதி, வேலைநாட்களில் ஒருநாளில் நூலகத் தைப் பூட்டி வைத்தல் சம்பந்தமானதாகும். அதுகாறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூன்று மணி நேரம் வேலை *ெய்டவர் ஒருவர், வேலை நாட்களில் முழுநாள் ஓய்வு பெற்று வந்தமையால், நாளாந்த வேலைகள் நன்கு நடத்தப் பெறத் தடையாயிருந்தது என்றார். எனவே, வேலை நாட்களில் ஒரு நாள் நூலகத்தைச் சாத்தி விடுவ தால் வேலைச் சிரமம் உண்டாகாது என்றார். இதைப், பரிசீலனை செய்த நிர்வாகக் குழுவினர் நூலகத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்து புதன் கிழமைகளில் மூடுவதற்குத் தீர்மானித்தனர். இத் தீர்மானம் நாளடை வில் திங்கட் கிழமைகளில் மூடுவதற்கு இணக்கங் கண்டது
ஏழாம் பகுதி, நூலகக் கட்டடத்தின் எஞ்சிய பகுதிகள் மிகவிரைவில் கட்டி முடிக்கப் பெற வேண்டும் என்ப தாகும்.
எட்டாம் பகுதி, நூல்களை இரவல் எடுத்துப் போகும் அங்கத்தவர்கள் அவற்றை இரு வார காலத்தில் மீளக் கொண்டு வரா விட்டால் ஏதாவது தண்டனை விதிக்க வேண்டும் என்பதாகும். தடைபட்ட நாள்தோறும் பத்து

Page 57
108 யாழ்ப்பாண நூல் நிலையம்
சதம் தண்டம் என விவாதித்த போது உதவி நூலகர் க.நாகரத்தினம் அதை ஐந்து சதமாகக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஒன்பதாம் பகுதி நூலகத்துக்கு வேண்டிய தளபாடங்கள் உபகரணங்களை அதிகரித்தல் சம்பந்தமாக அமைந்தது. அதைப் பற்றி நிர்வாகக் குழுவினர் ஒன்றும் விவாதிக்காமல் அவற்றை மாநகரசபை ஆணையாளரிடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆணை யாளர் டி.டி. ஜெயசிங்கா கூறினார்.
அன்றைய நிர்வாகக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பெற்ற மேலதிக ஐந்து தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு அமைந்தனவாகும்.
1. வண்ணார்பண்ணையில் சில ஆண்டுகள் நிலவிய கலாநிலையத்துக்குச் சொந்தமான புத்தகங்கள் கலைப்புலவர் வீட்டில் தேங்கிக் கிடந்தன. அவர் மறைந்த பின், நூல்களை எவரும் பயன் செய்ய வழியில்லாமல் போகவே அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒரு உட்குழு நியமிக்கப் பெற்றது. திருவாளர்கள் எஸ். யு. சோமசேகரம், ரி. ஏ. சபாரத்தினம், ஏ.இ. தம்பர் ஆகியோர் முயன்றும் நூல்கள் வாங்கப் பெறவில்லை.
2. நகரபிதா அவர்கள் நூல்நிலையக் குழுக் கூட்
டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையா வது கூட்டுதல் வேண்டும்.
3, நூலகத்துக்கு வந்த வெளிநாட்டுச் சஞ்சிகைகள் மூன்று வருட காலத்துக்காயினும் பேணிப் பாதுகாக்கப் பெறல் வேண்டும்.

ஓர் ஆவணம் 109
4. நிர்வாகக் குழுக் கூட்டங்களுக்குக் குறைந்தது.
ஒருவார முன்னறிவித்தல் கொடுத்தல் வேண் டும் .
5. திருவாளர் எஸ். யு.சோமசேகரம் அவர்களைப் புத்தகத் தெரிவுக்குழுவில் சேர்த்துக் கொள்ளு தல் வேண்டும் என்பதாம்,
முன்னர் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வாசித்தும் படித்தும் வந்த நூலகம், நாளடைவில் ஆயிரக் கணக்கானோர் பயன் பெறுமளவில் பல்கிப் பெருகிப் பெருவளம் பெறுவதாயிற்று. பல வர்ணப் பூக்களிடையே பல்லாயிரம் தேனிக்கள் பருகிய அமைப்பில், படிப்பார்வம் பெருகிய பல்லோர் புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் மூழ்கியிருக்கத் தலைப்பட்டனர்.
திருவாளர் எஸ்.ஸி.மகாதேவா அவர்கள் நகர பிதாவாக இருந்த காலத்தில் நூலகக் கட்டடத்தின் முதல் மாடியைக் கட்டுவதற்கு முயற்சி எடுத்தார். அவரைப் போன்றே ஆணையாளர் திரு.டி.டி. ஜெயசிங்க அவர் களும். பின்னர் விசேட ஆணையாளராயிருந்த திருெ மாணிக்கவாசகர் அவர்களும் கட்டட வேலையில் கவனஞ் செலுத்தினார்கள். இன்னும் பொறியியலாளர் நடேசன் அவர்களும், பொறியியலாளர் இ.வைத்தியலிங்கம் அவர் களும் கட்டட வேலைகளில் அக்கறை காட்டி உற்சாக மூட்டி வந்தார்கள். கட்டட அமைப்பில் ஒரு பாரம் பரியப் பண்பாட்டை நிலைக்கச் செய்வதில் வைத்திய லிங்கம் அவர்கள் அரும்பாடுபட்டார்.
முன்னர் சிலவருடகாலமாக யாழ்ப்பாணத்து நான் காம் குறுக்குத் தெருவில் அமெரிக்க அரசின் ஆதரவில் ஒரு தகவல் நூலகம் மிக நல்லமுறையில் நடைபெற்று

Page 58
110 O யாழ்ப்பாண நூல் நிலையம்
வந்தது. நூலகத்துக்கான நூல்கள், சஞ்சிகைகள் முதலியன பெருந்தொகையாக அமெரிக்காவிலிருந்து வந்திருந்தன* அன்றி அந்நிலையத்தில் அலங்காரமாக அணி அணியாக இருந்த தளவாடங்கள். உபகரணங்கள், படங்கள், படச் சுருள்கள், திரைப்படக் கருவிகள் யாவும் நல்ல முறையில் பயன் அளித்து வந்துள்ளன. முதியவர், இளைஞர், யுவதிகள் முதலானோரின் அறிவுப் பசியைத் தீர்த்த நூலகம். குழந்தைககளுக்கான பகுதி பெரிய எழுத்துப் புத்தகங்கள், படங்கள் கொண்டு ஒரு பக்கத்தில் இயங்கி வந்தது. விலையுயர்ந்த நூல்கள் பல அங்கத்தவர்கள் எடுத்துச் செல்லவும், அங்கிருந்தே வாசிக்கவும் வசதியாக அடுக்கப் பெற்றிருந்தன. எங்கே எந்த நாட்டிலே s) ன்ன புத்தகம் வெளிவந்திருக்கிறதோ, அதை அறிந்து கோள்வதற்கு வாய்ப்பாக அந்தந்த நூல்கள் பற்றிய விவரம் அமெரிக்க நூலகத்தில் துலாம்பரமாக இருந்தது. அமெரிக்க நூலகத்தார் வாரந் தோறும் அறிவுத்துறை சார்ந்த திரைப்படக் காட்சியும் ஒழுங்காக காட்டி வந்தனர்.
இத்தகைய புகழ் மணத்த புத்தக நிலையத்தை அமெரிக்க அரசு இலங்கையரிடமே கையளிக்க ஆயத்தப் படுத்தியபோது, இதனைக் கண்டி நகரத்துக்குத் தட்டிக் கொண்டு போவதற்குச் சிலர் இரகசியமாகப் பெருமுயற்சி செய்தனர். இந்த நூலகத்தின் தளபாடங்களும் அக்கால மதிப்பில் மிகக் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாவாகும்.
இந்நிலையில் இதனை யாழ்ப்பாணத்திலேயே பயன் பெற வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்று t_jש8&ח நாதன் துடியாய்த் துடித்தபோது, விசேட ஆணையாளர் மாணிக்கவாசகர் அவர்கள் வெகுவாக முயன்று யாழ்ப்பாணத்துப் பொதுசன நூல்நிலையத்தோடு ஒன்றி ணைக்க ஒழுங்கு செய்து நிறைவேற்றினார். ' .

ஒர் ஆவணம் 111
பாக்கியநாதன் செய்த பகீரதப் பிரயத்தனத்தால் நூல்களேயன்றி, தளபாடங்கள், படச்சுருள்கள், படங் காட்டும் கருவி, குழாய் விளக்குகள் முதலிய சாதனங் களும் பொதுசன நூலகத் ராகு வந்து சேர்ந்தன
அமெரிக்கத் தகவல் நூலகத்தில் பணிபுரிந்த அநுப வம் மிக்க இளைஞர் இருவரின் சேவையும் நூலக மாற்றத் தோடு வந்து சேர்ந்தமை, பொதுசன நூலகத்துக்குப் பெரு வாய்ப்பாயிற்று. மாடி உயர நூலகமும் வளர்ந்தது. வெள்ளிக் கிண்ணத்தில் பாலமிர்தம் பருகிய காலம் அக்கலாம்.

Page 59
அத்தியாயம் எட்டு
இரு நூலகங்களின் சங்கமம்
வட இந்தியாவில் கங்கை நதியும் யமுனை நதியும் ஒன்றாகக் கலந்து சந்திக்குமிடம், பெயர் பெற்ற தீர்த்த மாகும். அமெரிக்கத் தகவல் நூலகமும், யாழ்ப்பாணப் பொதுசன நூலகமும் ஒன்று கலந்தமை இலங்கை அமெரிக்க நட்புறவுப் பாதையில் ஒரு மைல்கல் எனலாம்s:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தி லேயே, 1846ம் ஆண்டளவில், அமெரிக்கரின் தொடர்பு யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்தது. அத்தொடர்பு இலங் கைக்குப் பொதுவாகவும், யாழ்ப் பாணத்துக்குச் சிறப்பாக வும் பயனளித்தது.
படித்த பெரியவர்களான கலாநிதி டானியல், பூர் முதலான முன்னோடிகளின் வருகையால் யாழ்ப் பாணத்து வட்டுக்கோட்டையில், உயர்தரக் கல்வி வசதி வைத்திய அறிவு, அச்சுக்கூட நன்மை, பெண்கல்வி நலம், பத்திரிகைப் பயன், பரஸ்பர மொழி பெயர்ப்பு வளர்ச்சி முதலியவற்றால் யாழ்ப்பாணத்தவர் நன்மையடைந்த avff.
அமெரிக்கரின் உபகரிப்பு விசேடத்தாலேயே, முன்னர் 1867 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகமும் முதன் முதலில் B.A. பரீட்சை நடத்திய போது, அதிலே சித்தி பெற்ற பரீட்சார்த்திகள் இருவரும் யாழ்ப்பாணத்த வராயிருந்தனர். ஒருவர் சுதுமலை விசுவநாதபிள்ளை

ஓர் ஆவணம் 13
மற்றவர் சிறுப்பிட்டி தாமோதரம்பிள்ளை. இவர்கள் இருவரும் முறையே குருவும் சீடருமாக வட்டுக்கோட்டை யிலிருந்து விண்ணபஞ் செய்து பரீட்சை எடுத்துச் சித்தி பெற்று முதல் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் எனத் தமிழ்நாட்டிலும் ஈழத்திருநாட்டிலும் புகழ் பெற்ற
வர்கள்.
அமெரிக்க யாழ்ப்பாண நட்புறவு 140 ஆண்டுகளாக நிலவி வந்த தொடர்பின் அறிகுறியாக முன்னர் 1954 ஆம் ஆண்டில் அத்திவார விழாவில் அமெரிக்க ஸ்தானிகர் 1,04,000 ரூபா நன்கொடை உதவினார். பின்னர்1966 ஆம் ஆண்டில் பதினோராயிரம் ரூபா நல்கினர். இப்பொழுது அமெரிக்கர் தங்கள் தகவல் நூலகத்தையே எமக்கு மன மகிழ்ச்சியோடு தந்துதவினார்கள். யாழ்ப்பாண பொது சன நூலகத்தோடு அமெரிக்க நூலகம் கலந்ததும் பின்னையது மேல் மாடியின் வடக்குப் பக்கத்துப் பெரிய மண்டபத்தில் இடம் பெற்றது.
இதனைத் திறந்து வைக்கும் முகமாக அமெரிக்கத் தானிகர் மாட்சிமை தங்கிய அன்ட்றுவி கொறி அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அவர் நூலகத்தைத் திறந்து வைத்து அருமையாக, அமைவாக, அன்போடு அளவாகப் பேசினார்.
• உலக மக்களின் நல்லுறவுக்குப் புத்தகங்களே அடிப்படை அத்தியாவசியம். அமெரிக்க UT° பாண உறவுக்கும் நூலறிவே காரணம். நூல் நிலையங்கள் வெளியுலகுக்குப் பிரவாகித்துச் செல்லும் அறிவூற்றுகளாகும். இந்த நூல் நிலையம் அறிவுக் களஞ்சியமாய் உள்ளது . இதனோடு இணைவதற்கு எங்கள் அமெரிக்கத் தகவல் நூலகத்தையும் உங்களுக்குக் கையளிப்ப

Page 60
114 யாழ்ப்பாண நூல் நிலையம்
தில் அமெரிக்க மக்கள்சார்பில் அடியேன் உள்ளம் நிறைந்த பெருமகிழ்ச்சியடைகிறேன்.
‘இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள மிகப் பழைய அமெரிக்கக் கலாசாலையைச் சென்று பார்க்க வாய்ப்புக் கிடைத்ததையிட்டுப் பெருமை யடைகிறேன். அன்றியும் இப்பிரதேசத்தில்இருபத் தைந்து ஆண்டுகளுக்கு அதிகமாகத் தங்கியிருந்து வைத்திய மருத்துவ வாய்ப்பை நல்கிய எம். நாட்டவரான கிறீன் அவர்தம் பெருமையை கேட்டு மிக மகிழ்ச்சியடைந்தேன்.
* எமது அக்கறை புத்தகங்களுக்கும், படிப்பறை க்ளுக்கும் அப்பாலும் செல்கிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். விவசாயம், சமூக சேவை முதலிய துறைகளில் தொண்டு செய்வதற்கு நம்மவர் விரைவில் இங்கே வருவார்கள். அவர் கள் உங்களுடன் கலந்துரையாடுவதற்காகத் தமிழ் படித்து வருகிறார்கள்.
"நாங்கள் உலக மக்களோடு கலந்து பழகு வதற்கு நூல்களே சிறந்தவை என்பது எங்கள் சனாதிபதி ஜோன்சன் அவர்களின் கருத்தாகும். கலாசார சாதனைகள், விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுத்துறைகள் எழுத்து மூலமே வெளிப்படுத்தப் பெறுகின்றன. எனவேதான், புத்தகங்கள் அறிவுத் துறை சார்ந்த சாதனங்கள் முதலியன தடை யற்ற பரிமாறலில் இடம் பெறுகின்றன. அறிவுத் துறையை ஊக்குவிப்பதில் அமெரிக்கா அதிக அக்கறை கொண்டு, முக்கிய கொள்கையாகக் கடைப்பிடித்து வருகிறது.

ஒர் ஆவணம் 115
இக்காலத்து நூல்நிலையங்களில் புத்தகங்களை வரிசையாக வகுப்பதில் சர்வதேச ரீதியாக பயன்படுத்தப் பெறுவது டியூவி தசவிகிதாசார முறையாகும். இத்திட்டத்தைக் கண்டு உருவாக் கிய பெருமை மெல்லில் டியூவி என்னும் அமெரிக்க ருக்கே உரியதாகும். அவர் நூல் நிலையங்கள் வெளிச் செல்லும் அறிவூற்றுகளாக அமைதல் வேண்டும்" என்று கூறியுள்ளார்.
"இன்று அமெரிக்க மக்கள் சார்பில் இந் நூலகத்தை உங்களுக்கு அன்பளிப்பு செய்கிறேன். இந்நூல்களும் பிற சாத ைங்களும் பல்லாண்டுக ளாக சேகரிக்கப் பெற்ற செல்வங்கள். இவை இன்று தொடக்கம் உங்கள் பொறுப்பில் இருக் கும். இவ்வைபவத்தில் , எங்கள் நாட்டில் நூலகவியல் பயின்று பட்டம் பெற்றுப் ப சிற்சி பெற்றுவந்த வே-இ.பாக்கியநாதன் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இவர் அங்கே நல்ல முறையில் பெற்று வந்தவற்றை இங்கே நடைமுறைப் படுத்துவதற்கு நீங்கள் பூரண ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும். இந்த நூலகம் 150 ஆண்டுகால இலங்கை அமெரிக்க நல்லுறவை மேலும் நீடித்து நிலை பெறுவதற் கான முறையில் உங்கள் மத்தியில் பயன்தருதல் வேண்டும்."

Page 61
அத்தியாயம் ஒன்பது
சிறுவர் நூலகப் பிரிவு
அமெரிக்காவில் அற்லான்ரா பல்கலைக்கழகத்தில் துரலகப்படிப்பில் முதுமானிப்பட்டமும், சந்தியாகோ நூலகத்தில் சிறுவர் நூலகப் பயிற்சியும் பெற்று வந்த பாக்கியநாதன் அவர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத் தோடு அமெரிக்கத் தகவல் நூலகத்தை ஒன்றிணைத்த முயற்சியோடு நிற்கவில்லை.
யாழ்ப்பாணத்தில், முன்னோடியாக- முதற் தரமான சிறுவர் நூலகம் ஒன்றைச் சிறந்த முறையில் அமைத்தல் வேண்டும் என்று சிந்தித்து, இரவு பகலாக முயற்சி செய்தார். நமது சேவை இந்நாட்டவர்க்கு பெருவாய்ப் பாக அமைதல் வேண்டும் என்று அமெரிக்கத் தானிகர் மாட்சிமை தங்கிய அன்ட்றுவி கொறி அவர்களை வாழ்த் திய வண்ணம் தாம் சேவை செய்ய வேண்டும் என்று துடித்தார்.
நூலக வளர்ச்சி சம்பந்தமாகவும், அதற்கு வேண்டிய நூல்களைப்பற்றி ஆலோசனை கூறுவதற்காகவும், அந் நாளில் மாநகரசபைத் தலைவர் மதிப்புக்குரிய மேயர் அல்பிறெட் த. துரையப்பா அவர்களின் தலைமையில் ஒரு நிர்வாக சபை இயங்கி வந்தது அதில் மாநகர சபை அங்கத்தவர்களோடு நகரிலும் அயலிலும் வாழ்ந்த அறிவாளிகள் சிலரும் இடம் பெற்றிருந்தனர். பாக்கிய நாதன் அவர்கள் நிர்வாகக் குழுவினரை ஒழுங்காகக் கூட்டும் அழைப்பை விடுக்கும் போதெல்லாம் தாழ்மை

ஓர் ஆவணம் 117
யாகத் தயவாக எழுதுவார். அன்புரிமையோடு கட்டாயம் வருக, தவறாமல் வருக என்று பணிவன்போடு வேண்டு வார். அவர் 1966 ஆம் ஆண்டிற் கூட்டிய நிர்வாகக் குழுக் கூட்டங்களுள் 12-5.66 வியாழக்கிழமை மாலை நகரபிதா அல்பிறெட் துரையப்பா அவர்கள் தலைமை யிற் கூடிய கூட்டம் கலகலப்பாக நிகழ்ந்தது.
அன்று நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளுள் இரண் டைப் பற்றி இங்கே குறிப்பிடுதல் வேண்டும். பொதுசன நூலகக் சட்ட திட்டங்கள் - உபவிதிகள் யாவும் ஆங்கிலத் திலேயே அக்காலம் வரை எழுதப் பெற்றிருந்தன. அவற்றைத் தமிழிலே பெயர்த் தெழுதல் வேண்டும். என்பது ஒரு பிரேரணைக்குரிய நிகழ்ச்சி.
மற்றது அமெரிக்க தகவல் நூலகத்தார் தந்துதவிய வசதிகள் வாய்ப்புகளோடு இன்னும் வேண்டியனவற்றைத் தேடிச் சிறுவர் நூல் நிலையத்தை உடனடியாக அமைப்ப தற்கான ஒழுங்கு வகைகளை ஆலோசித்து சிறுவர் நூலகத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகளுக்காக அமெரிக்க தானிகர் ரூபா பதினோராயிரம் வழங்கி இருந்தார். அதற்காக வேண்டிய தளபாட வரிசைகளுள் சின்னஞ் சிறிய கதிரைகள் முதலியவற்றையும் அமெரிக்க தகவல் நூலகம் தந்துதவியிருந்தது.
அமெரிக்காவில் சிறுவர் நூலகப் பணியும் பயிற்சியும் பழகிவந்த பாக்கியநாதன் சிறுவர் நூலகத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் எழுதியதோடு, நகரத்திலும், நகர்ப் புறங்களிலும் நிலவிய பாடசாலைகளுள் ஐம்பது பாட சாலை அதிபர்களுக்குத் தகவல் கோரி எழுதியிருந்தார். பாக்கியநாதன் கோரிய தகவல்களுள் அவ்வப்பாட சாலையில் பயின்ற பாலர்களுள் ஐந்து வயது தொடக்கம் ஏழு வயது வரையுள்ளவர்கள், எட்டு வயது முதல் பதினொன்று வரையுள்ளவர்கள், பன்னிரண்டு முதல்

Page 62
118 யாழ்ப்பாண நூல் நிலையம்
பதிநான்கு வரையுள்ளவர்கள் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர் ஆகிய பல்வகைத்தான தகவல் களும் அடங்கும்.
அவர் கேட்டதற்குச் செவி கொடுத்து முப்பத்து நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் கண்ணியமாகத் தகவல் தந்தனர். அவர்கள் தந்தகூட்டு மொத்தக்கணக்கில் ஐந்து முதல் ஏழு வரை ஆண்கள் 2097, பெண்கள் 2259; எட்டு முதல் பதினொன்று வரை ஆண்கள் 2820, பெண்கள் 3062; பன்னிரண்டு . முதல் பதினான்கு வரை ஆண்கள் 2423, பெண்கள் 2499; மொத்தமாக ஆண்கள் 7340, பெண்கள் 7820,
தகுந்த தருணத்தில தகுந்த புத்தகத்தை தகுந்த வயதினரிடம் கொடுத்தலே தகுதியானது என்று பாக்கிய நாதன் அவர்கள் கருதினார். விண்ணப்பத்தில அறிந்த வண்ணம் 15,160 பிள்ளைகளுக்கு உடனடியாக நூலகத்தை உருவாக்க முடியாவிட்டாலும், குறைந்த அளவில் 70 அடி நீளமும், 15 அடி அகலமும், கொண்ட 1050 சதுர அடி பரப்புகொண்ட இடத்தை முதலில் ஒதுக்கலாம் என்று கேட்டுக் கொண்டார்.
குறைந்தது இருபத்தையாயிரம் ரூபா செலவில் வேண்டிய சகல வசதிகளையும் செய்து முடிக்கலாம் என்று திட்டந் தீட்டினார். சிறுவர் இலக்கியத்தில் பயிற்சி பெற்ற ஒருவரின் சேவை இருந்தால் குழந்தைகளைப் படிப்பார் வம் உள்ளவராக்கலாம் என்றார்.
குழந்தையின் உள்ளத்தைப் பக்குவப் படுத்துவதே சிறுவர் நூலகத்தின் கடனாகும். குழந்தைகள் தம்பாட்டில் வாசித்துப் பழகினால் நல்லியல்புகள் உண்டாகாமல் போகலாம். குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை நன்கறிந்த பெண்களே சிறுவர் நூலகத்தை நடத்தும் தல்லியல்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் என்றார்.

ஒர் ஆவணம் 119
உலகப்புகழ் பெற்று உலகமெங்கும் வியாபித்துள்ள ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமாக நிலவும் கல்வி கலாசாரப் பகுதி UNESCO எனப்படும் உலகந் தழுவிய கல்வி கலாசார நிபுணர்கள் அதில் அங்கம் வகிப்பர். அவர்களுள் எவலின் இவென்ஸ் என்னும் பெரியாரு ஒருவர்.
செல்வி இவென்ஸ் அவர்கள் ஐக்கிய நாடுகளின் கல்வி கலாசாரப் பகுதியினரின் பிரதிநிதியாக இலங்கை யில் இருந்த காலத்தில், யாழ்ப்பாண நூலகத்தின் சிறுவர் பகுதியைக் கருத்துடன் அவதானிந்து இது இலங்கையி லேயே முதற்தரமானது என்று எழுதிப் போனார்.
மேலும், பொதுசன நூலகத்தின் தளபாட வரிசையிலே மிகவும் அழகான அமைவான பாரங் குறைந்த வசதியான நாற்காலிகளும் மேசைகளும் இருந்தமையுைம் பாராட்டி னார். இக்க திரை வரிசைகளின் அமைப்பை நிர்மாணித்த பெருமையும் திறமையும் நீராவியடி திரு. இ. இராசேந்திரம் அவர்களையே சாரும்.
மேசைகள் பலவும் தூய்மையான போமிக்கா விரிப்பு ஒட்டப் பெற்றிருந்தன. மேசைகளில் வரிசையாயிருந்த வெளிநாட்டு உள்நாட்டு சஞ்சிகைகள் யாவும் கண்ணாடி போன்ற பிளாஸ்ரிக் மட்டைகளிடையே பாதுகாப்பாக வைக்கப் பெற்றிருந்தன. சாரை சாரையாக வந்தவர்கள் மண்டபம் நிறைய அமர்ந்திருந்து சஞ்சிகைகளில் மூழ்கி முழுமூச்சாகப் படித்துப் போயினர். அங்கே ஏறக்குறைய 150 சஞ்சிகைகள் அக்காலத்தில் இடம் பெற்றிருந்தன.
அக்காலத் தில் நூலகத்தில் இரவல் கொடுக்கும் பகுதியில் ஏறக்குறைய 35,000 நூல்கள் இருந்தன. நாள் தோறும் சராசரியாக ஐநூறு அங்கத்தவர்கள் ஆளுக்கு இரண்டு நூல்கள் வீதம் எடுத்துச் சென்றனர்.

Page 63
120 யாழ்ப்பாண நூல் நிலையம்
தமிழ்ப் பகுதி, ஆங்கிலப் பகுதி என இருபெரும் பகுதிகளாக நூல்கள் அடுக்கப்பெற்றிருந்தன. தமிழ்ப்பகுதி யில் சமயம், தத்துவம்,இலக்கியம், இலக்கணம், வரலாறு, விஞ்ஞானம், விவசாயம், வைத்தியம், சோதிடம் முதலிய பல துறைகளிலும் நூல்கள் அடுக்கடுக்காக இருந்தன.
இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஒழுங்காக வெளியிடப் பெற்ற செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி முதலிய சஞ்சிகைகள் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட மலராகத் தொகுத்துக் கட்டமைக்கப் பெற்றிருந்தன. பன்னிரு இதழ்களின் தொகுதிகள் தனித்தனி நூல்களா கவே கணிக்கப் பெற்றிருந்தன.
தமிழ் நூல்களுள் சாது அச்சுக் கூடம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், வானதி பதிப்பகம், செந்தமிழ் பதிப்பகம், பழனியப்பா பதிப்பகம், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளி யீடு முதலியன நிரை நிரையாக இருந்தன.
ஆங்கிலத்திலும் சோஸர் முதல் றோ செற்றி வரையும் உள்ள புலவர்களின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், பேச்சுக்கள், நாடகங்கள். நவீனங்கள் யாவும் இருந்தன. பென்குயின், பெலிகன், நெல்சன், மாக்மில்லன், இக்கின் பாதம், அலன் அன்வின் முதலாய சுத்தப் பதிப்பு நூல்கள் நிரை நிரையா யிருந்தன. ஆங்கிலத்தில் வெளிவந்த பலவிதமான நூதன, நவீன அகராதிகள் இருந்தன. ஒக்ஸ்போட், வெப்ஸ்ரேஸ், தோண்டைக், பிளாக்கீஸ் வெளியீடுகள் பலவாக இருந்தன. என்சைக்லோபீடியா பிரித்தானிக்கா என்னும் ஆங்கிலக் கலைக் களஞ்சியங் களின் வெவ்வேறு காலத்துப் பதிப்புகள் இருந்தன.

ஓர் ஆவணம் 2
கலாயோகி ஆனந்த கென்றிஸ் குமாரசுவாமி அவர் களின் அருமையான நூல்கள் அமெரிக்காவின் நூன்டே பிரசுராலயம் வெளியிட்ட நூல்கள், ஆனந்த (g5 DITTartruál அவர்களைப் பற்றி மலேசியவாசியாயுள்ள யாழ்ப்பாணத் தமிழன் கலாநிதி எஸ். துரைராசசிங்கம் எழுதிய நூல்கள் யாவும் இருந்தன. ஆனந்த குமாரசுவாமி Syutif களின் அரிய நூல்களையும், அவரைப் பற்றித் தாம் ஆராய்ந்து எழுதிய நூல்கள் அத்தனையும், கலாநிதி துரைராசசிங்கம் அவர்கள் மலேசியாவிலிருந்து மகிழ்ச்சி (Buurt(6) அன்பளிப்பாக அனுப்பியிருந்தார். gyfiau nif தமிழறிஞர், பண்டிதர், புறொக்ரர் கே.சிதம்பரநாதனின் பெருமகனாவார்.
தமிழகராதி வகைகளுள் *துரகராதி, விசுவநாத பிள்ளையின் அகராதி, வின்ஸ்லோ அகராதி, முத்துத் தம்பிப்பிள்ளை அகராதி, பேர்சிவல் அகராதி, வைமன் கதிர்வேற்பிள்ளை அகராதி, பருத்தித்துறை supr மணிய சாஸ்திரி அகராதி, சுன்னாகம் குமாரசாமிப்புலவர் அகராதி, ஆனந்தவிகடன் அகராதி, சுவாமி ஞானப்பிர காசரின் ஒப்பியல் மொழியகராதி முதலியனவும், லெக் சிக்கன் அகராதியும் இருந்தன.
தமிழில் கலைக்களஞ்சியம் எனத் தகுந்த முறையில் யாழ்ப்பாணம் முத்துத் தம்பிப் பிள்ளை அவர்கள் எழுதிய அபிதான கோஷம் என்னும் நூலும், சென்னை சிங்கார வேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியும் இருந்தன.
புராதன இலங்கை, பண்டைய யாழ்ப்பாணம் பற்றி முதலியார் இராசநாயகம் அவர்கள், முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள், சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள்,
T-9

Page 64
122 யாழ்ப்பாண நூல் நிலையம்
கத்தோலிக்க அச்சகத்தார் எழுதிய பழைய நூல்களும்
ல்லடி வேலர் என வழங்கிய வசாவிளான் சுதேச நாட்டியப் பத்திராதிபர் க. வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய யாழ்ப்பாண வைபவ கெளமுதி முதலிய அரும் பெரும் நூல்களும் இருந்தன.
உடனுதவும் நூல்கள் மேல்மாடியில் தென் மண்டபத் தில் அழகாக அணி அணியாக அடுக்கப் பெற்றிருந்தன. வசதியாக அமர்ந்து படிப்பதற்கு வாய்ப்பாகக் கதிரையும், தனி மேசையும் மின் விசிறி வசதியோடு இருந்தன. ஒருவர் ஒரு முறையில் எத்தனை நூல்கள் வேண்டுமாயி னும் விரும்பியவாறு எடுத்துப் புரட்டிப் படித்துக் குறிப் பெடுத்துவிட்டுப் போகக் கூடிய வசதி இருந்தது.
நூலகர் பாக்கியநாதன் 31-12-1968ல் பதவியைத் துறந்து சேர் இராமநாதன் கனிஷ்ட பல்கலைக் கழகத்து விரிவுரையாளராகச் சென்றார். அவர் ஈழத்து எழுத்தா தாளர்களின் அரிய படைப்புகளை நூலகத்தில் இடம் பெறச் செய்தமை பாராட்டுதலுக்கு உரியதாகும். உதவி நூலகர் க.நாகரத்தினம் அவர்கள் 31-12-1970 இல் ஒய்வு பெற்றுச் சென்றார். இவர் நூலகத்தில் சிட்ட சாரம் நிலவச் செய்த முறைகளாற் பெயர் பெற்றவர்.

அத்தியாயம் பத்து மீட்பு முயற்சிகள்
யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்லாமல், இலங்கை முழுவதுக்குமே யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் ஒரு முன்மாதிரியாக விளங்கியது. இங்கு வந்துபோன பிரமுகர் கள், பெயர்ப் பதிவு புத்தகத்தில் எழுதிச் சென்ற வாசகங்கள் இதனை நிரூபிக்கின்றன.
இத்தகைய பெருமை வாய்ந்த நூலகத்துக்குக் கண் திருஷ்டி பட்டு விட்டது போன்று 1981 ஆம் ஆண்டு ஒரு நிகழ்வொன்று நிகழ்ந்தது. 1981 ஆம் ஆண்டு ஆணி Lorraji) ஆம் திகதி அரச படையினர் இந்நூலகத்துக்குத் தீயை மூட்டி எரித்தனர். பாரிய பெருமை வாய்ந்த பெறுமதி வாய்ந்த யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரியும் போது அதில் 97,000க்கும் மேற்பட்ட நூல்களும், பலநூற்றுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளும், பத்திரிகைகளும், syifu ஒலைச்சுவடிகளும், விலைமதிப்பு மிக்க தளபாடங்களும் எரிந்து சாம்பலாகிப் போயின.
நூலகம் எரிகின்ற தென்ற செய்தியைக் கேள் பட்டதுமே சென்பற்றிக் கல்லூரி ஆசிரியரும், பன்மொழிப் புலவருமான சங். பிதா கலாநிதி டேவிட் அவர்கள் (தும்ப ளை தாவீது அடிகளார் என்று தமிழ் உலகில் அறியப்பட்ட வர்)அந்தச் செய்தியைக் தாங்கிக்கொள்ள Փւգ-Ասո` 56մՄոլլի மனவதிர்ச்சியினால் தம்முயிரை நீத்தார். யாழ்ப்பான பொதுசன நூலகத்துடன் தொடர்பு கொண்டிருந்த 9)ւն பெரியாருக்கு இதைத் தாங்கும் சக்தியிருக்கவில்

Page 65
124 யாழ்ப்பாண நூல் நிலையம்
இம்மனோ நிலையே ஏனையவர்களுக்கும் இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
1933 இல் உதயமாகி, ஒரு கொட்டிலில் தவழ்ந்து, ஒரு கடையில் எடுத்தடி வைத்து, இன்னொரு கடையில் சிறு நடை நடந்து, ஒரு வீட்டின் மாடியில் ஓடியாடித் திரிந்து, ஓர் அழகிய மாடிக்கட்டடத்தில் ஒளிவீசி வளர்ந்து உலகப் புகழ் பெற்ற, கலங்கரை விளக்கம் போன்று இருந்து, யாழ்ப்பாண மக்களுக்கு அறிவொளியூட்டி வந்த யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிந்து போனது 1981 ஆம் ஆண்டு. இது மக்களுக்கு ஏற்பட்ட பாரிய பெருந் துன்பங்களுள் முதன்மையானதாக இருந்தது எனச் சொல்வது பொருத்தமாகும்.
எரிந்துபோன யாழ். நூலகத்தை மீளக் கட்டி யெழுப்புதல் வேண்டும் என்கிற ஒரே எண்ணம் யாழ்ப் பாண மக்களை யெல்லாம் ஒன்றுபடுத்தியது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்லூரியதிபர்கள், அந்நிய நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் மதச்சார்புடையதும் சார்பற்றதுமான பெருமக்கள் நிறு வனங்கள், மாநகரசபை ஆகியன எடுத்துக் கொண்ட பெரு முயற்சி பலனாக, ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் அரச உதவியாக ஏற்பாடு செய்தளித்த இருபது லட்சரூபா நிதியுதவிப் பணத்துடன் இந்நூலகத்தின் புனர் நிர்மாணப் பணி ஆரம்பிக்கப் பெற்றது. இத்துடன் நூலக மாதிரிப் படத்தில் உள்ளவாறு மூன்றாம் கட்ட வேலையும் ஆரம்பிக்கப் பெற்றது.
இப்பணிக்காக பொறியியலாளர் திரு ந, நடேசன் அவர்கள் முழுநேரப் பணியாளராக நியமிக்கப் பெற்று அதற்கான வேலைகளும் துரித கதியில் செயற்படுத்தப்

ஒர் ஆவணம் 25
பெற்றது. புனரமைக்கப் பெற்ற நூலகம் மீண்டும் பொது சன உபயோகத்துக்காக 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் நாள் திறந்து வைக்கப்பெற்றது.
திறந்த வெளியில் மாநகரசபை ஆணையாளர் திரு.சி. வி.கோ.சிவஞானம் அவர்கள் ஒழுங்கு செய்த திறப்பு விழா வைபவத்துக்கு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பிரமுகர் கள் மற்றும் பொது மக்கள் அநேகம் பேர்பிரசன்னமாயிருந் தனர். திறப்பு விழா வைபவத்தின் போது முன்னைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி முதல்வர் திரு அப்பா பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் பின்வருமாறு குறிப் பிட்டுப் பேசிய பேச்சு குறிப்பிடத்தக்க ஒன்று.
1933 ஆண்டு தென்னிலங்கைத் தெருக் களில் உயிரோடு தமிழ் மக்கள் கொளுத்தப் பட்டனர். உலகம் அதிர்ச்சியடைந்தது. ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற நூல்நிலையத் தகனம் பண்பாட்டுக் கொலை. கற்றோர் உள்ளத்திலெல்லாம் இலங் கையை ஆளுவோரைப் பற்றி நிச்சயம் உயர்ந்த கருத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.
"அந்தத் தீயினால் தமிழ்மக்களின் உள்ளங்களில் தமது நிலை பற்றியிருந்த அறியாமை எரிக்கப்பட்டது. அவர்கள் மூட்டிய தீயிலிருந்து புடம் போட்டத் தங்கமாக, புதுப்பொலிவோடு யாழ்ப்பாண நூல்நிலை யம் மீண்டும் எழுந்து வருகின்றது. இதற்காக யாழ் மாநகர முதல்வர் திரு. இராசா விசுவநாதன் அவர் களைப் பாராட்டுகிறேன்.
"இத்தனை துன்பங்களுக்கும் மத்தியில் கட்டி யெழுப்பப்பெற்ற நூலகம் இனிவருங் காலத்திலாவது

Page 66
26 யாழ்ப்பாண நூல் நிலையம்
இந்தத் தகனக்கிரிகைகளுக்கு உட்படாது இருக்கவேண்
டும். இதுவே யாழ்ப்பாண மக்களின் உள்ளங்களில்
உலாவரும் ஆதங்கமும் ஆசையுமாகும்.
தந்தை செல்வா அவர்கள் சொன்னது போல தமிழ் மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும், என்று.

யாழ்ப்பாண நூல் நிலையம்
ஒரு சாட்சியம்

Page 67
எஸ்.எம். கமால்தீன்
இலங்கைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர், கனடாவிலுள்ள பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெம்றவர். நூலகர்களுக்கான பயிற்சியும் பெற்றுள்ள இவர், பதினெட்டு ஆண்டுகள் (54872) கொழும்பு பொது நூலகத்தின் இணைத் தலைமை நூலகராய்ப் பணிபுரிந்துள்ளார். பின்னர், பூரீ லங்கா நூலகச் சங்கத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் சேவை செய்துள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய காடுகள், அவுஸ்ரேலியா, சவுதி அரேபியா, நைஜீ ரியா, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய பல நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளார். UNESCO நிறுவனத்தின் சார்பாகப் பல நாடுகளின் நூல் கிலையங்களைப் பார்வையிட்டதுடன், அவற்றின் தரமுயர்த்தும் வழிகளை ஆய்ந்த மாநாடுகளிலும் பங்குபற்றியுள்ளார்.
"தாய்லாந்தின் தலைநகரிலே", "பாடசாலை நூலகக் கை நூல்", "நுாலும் நுாலகமும்" ஆகிய நுால்களின் ஆசிரியர். “I FLA (Internatioua Federation of Library Association) Standards for Public Libraries 6Testp fraudsos தமிழாக்கியுள்ளார். நுாலக வளர்ச்சி, தமிழ் இலக்கிய நயப்பு, முஸ்லிம் சமுதாயத்தின் சமூக - பண்பாட்டு உயர்வு பற்றிய துறைகளிலே தமது சேவைகளைப் பதிவு செய்துள்ளார்.
இன்றும், இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் கெளர வப் பணிப்பாளராகவும், இலங்கை முஸ்லிம் வாலிப சங்கத்தின் தர்மகர்த்தா சபையின் உறுப்பினராகவும் சமுதாயப் பணிபுரிந்து வருகின்றார்.

அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்பட வில்லை.
ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்த உணர்ச்சி என்னை மேலிட்டது.
"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார் s sin ?” ”
கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ் பொது நூலகர் திருமதி எஸ். நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது.
நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும், ஏன், உலக நாடுகள் எங்ங்ணுமிருந்தும், ஆயிரமாயிரம் நல்லி தயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.
யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலுத்தியவனாக நிற்கிறேன் நான்.
முன்னர் எத்தனையோ தடவைகளில் என் சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம், சிதைந்த சூன்ய மாகி விட்டிருந்தது, இதயமற்றோர் கடந்த ஜூன் மாதம் முதல் தாளிரவு மூட்டிய தீயினால்!
இத்தகு அழிவுகளைப்பற்றி வரலாற்று ஏடுகளிலே வாசித்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் கண்ட தில்லை.

Page 68
130 யாழ்ப்பாண நூல் நிலையம்
பண்டைய எகிப்தில் உலகப் புகழார்ந்த அலெக்ஸார் திரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை நினைத்தேன் ஒரு கணம்.
எமது நாட்டிலும் பதின்மூன்றாம், பதினாறாம் நூற் றாண்டுகளில் பொலனறுவை, கண்டி ஆகிய நகர்களில் அழிக்கப்பட்ட நூலகங்களும் என் எண்ணத்தைத் தொட்டன.
ஊனமுற்ற சுவர்களிலே பயங்கரமான புண்களைப் போல் காட்சியளித்த ஜன்னல்களின் இடைவெளியினூ டாக அவ்வேளை திடுமென வீசிய காற்று, என்னை நூல கர் வழங்கிக் கொண்டிருந்த விளக்கத்திற்கு மீட்டு வந்தது. அத்தோடு முற்றாய்க் கரிந்து Gштsr நூல்களின் சாம்பலை அக்காற்று எம் உடம்பின் மீதும் தூவிச் சென்றது.
யாழ்ப்பாணப் போதுநூலகத்தின் சிதைவினால் அறிவுலகிற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பின் தன்மையை விளக்கு முன், இந்நூலகத்தின் தோற்றதி தையும் வளர்ச்சியையும் பற்றிய சில தகவல்களை நாமறிந்து கொள்வது அவசியமாகும்.
1934 ஆம் ஆண்டு ஆனி மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடை பெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடி கோலியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. as. Cup செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம்தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற் கான மூலதனமாய் அமைந்தது.
இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும்,

ஒரு சாட்சியம் 13
1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப் பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப் பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்க முற்பட்டது.
யாழ். பட்டின சபையினர் பொறுப்பேற்ற இந்நூலகம் 1-1-1935 இல் வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது. எனினும் பெருகி வரும் வாசகர்களின் தேவை களை அதனால் ஈடு செய்யமுடியவில்லை.
எனவே, சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952 ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் திகதி சாம் ஏ.சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. அம்மா நாட்டில் திரு. அ.த.துரையப்பா அவர்கள் நூலகத்தை நிறுவுவதற்கான நிதியை ஒரு களியாட்டவிழாவின் மூலமும் அதிர்ஷ்ட லாபச் சீட்டின் மூலமும் திரட்ட வேண்டு மென்றும் கொண்டு வந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்பார்த்ததை விட கூடுதலான நிதியைத் திரட்டிக் கொள்ள முடிந்தது. அந்தளவு இத்திட்டத்திற்கு யாழ். மக்களின் அமோக ஆதரவு கிட்டியது.
புதிய நூலகக் கட்டிடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.

Page 69
132 யாழ்ப்பாண நூல் நிலையம்
நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை திபுணர் திரு.கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரை படங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல் நாட்டு விழா 1953 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29 ஆம் திகதி நடைபெற்றது .
திராவிடக் கலையம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு விரைவில் பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.
பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப் பட்டு 11.10-59 இல் அதி விமரிசையாக யாழ். முதல்வர் அ.த. துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடங் க்ளும் பூர்த்தி செய்யப்பட்டன .இக்கட்டடத்தில் அமைக்கப் பட்ட சிறுவர் நூலகத்தை நாம் சிறப்பித்துக் கூற வேண்டும்.
பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.
மொத்தம் 15,910 சதுர அடிகளைக் கொண்ட யாழ் பொது நூலகம், அளவில் கொழும்பு மாநகர சபையின் பழைய நூலகத்தைவிட விசாலமானது; புதிய பொது நூலகத்திற்கு அடுத்ததாக உள்ளது.
யாழ். மாவட்டத்து, ஏன் வடமாகாணத்து, அனைத்து நூலகங்களுக்குமே இப் பொது நூலகம் தலைமைத்துவம் வழங்கி வந்ததென்றால் அது மிகைக் கூற்றாகாது. மேலும் புதிய மாவட்ட சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இதுவே யாழ். மாவட்ட மத்திய நூல் நிலையமாக இயங்க விருந்தது.

ஒரு சாட்சியம் 33
இந்நூலகத்தின் சிதைவுக்கு முன், பின்வரும் அங்கங்கள் சிறப்பாக இயங்கி வந்தன.
(அ) நூல் இரவல் வழங்கும் பகுதி (ஆ) புதின ஏடுகளையும், சஞ்சிகைகளையும்
கொண்ட வாசிகசாலை (இ) சிறுவர் நூலகம்
(ஈ) உசாத்துணை நூலகம் (உ) கருத்தரங்கக் கூடம்
(ஊ) கலாபவனம்
(எ) காரியாலயமும், நூற்சேமிப்பு அறையும்
பல்லாயிரக்கணக்கான நகர மக்கள், சிறப்பாகக் கல்லூரி மாணவரும், சிறார்களும், சுமார் 95 ஆயிரம் நூல்களைக் கொண்ட இந்த நூலகத்தின் பல்வேறு அங்கங்களிலிருந்தும் பெரும்பயன் பெற்று வந்தார்கள்.
இந்நூலகத்தில் நூல் இரவல் பெறும் அங்கத்தவர் களாகப் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
சிதைந்த நூலகத்தின் பின்புற வாயில் ஒன்றின் மூலம் நான் உள்ளே நுழையச் சென்ற போது வெளியே சிதறுண்டு கிடந்த ஒரளவு கரிந்து போன சில அங்கத்துவ அட்டைகளை கண்டெடுத்தேன். இந் நூலகத்தில் பின் வருவோர் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு நினைவுச் சின்னங்களான அந்த அட்டைகள் மெளனச் சான்று பகர்ந்தன. யோகினி பரமநாதன், இராமலிங்கம் சபாரத்தினம், ஏ.ஜே. சக்காஃ, தம்பிராஜா சிவராஜா., இவர்களைப் போன்ற எத்தனை ஆயிரம் வாசகர்கள் தங்கள் அபிமான அறிவுத் தீபம் அக்கிரமமாக அணைக்

Page 70
34 யாழ்ப்பாண நூல் நிலையம்
கப்பட்டதை எண்ணி இரத்தக் கண்ணிர் வடித்துக் கொண்டிருப்பார்கள் என்றார் அருகே நின்ற நூலகப் பணியாளர் ஒருவர்.
நூலகத்தின் ஆகக் கூடுதலான நூற் தொகை இப் பிரிவிலேயே இடம் பெற்றிருந்தது. யாழ் நகரில் சில காலத்திற்கு முன் இயங்கி வந்த அமெரிக்க நூலகக் கிளையின் பெரும்பாலான நூல்களும் இதில் அடங்கும். இங்கிருந்த 57,000 நூல்களுள் சுமார் ஐந்தில் ஒரு பாகம் தமிழ் நூல்களாகும். இப் பெருந் தொகையான நூல் களின் விபரங்கள் எதையுமே பெற முடியாதவாறு நூற் பட்டியல் பெட்டகமும், நூல் வரவுப் பதிவேடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.
வெளியில் கிடந்து நான் பொறுக்கிய ஒரே ஒரு நூற். பட்டியல் அட்டை எனது நண்பர் " "சோமலே' எழுதிய மொரீஸியஸ் தீவு எனும் நூல் பற்றிய தகவல்களைத் தந்தது.
நூலகத்தின் சிதைவுக்கு முன், இரவல் வழங்கப்பட்ட ஒரு சிறு தொகை நூல்கள்தாமும் யார் யாருக்கு வழங்கப் பட்டன வென்பதைக் காட்டும் பதிவு அட்டைகளும் அழிந்து விட்டதால், வாசகர்கள் தாமாகவே அவற்றைத் திருப்பிக் கொடுத்தாலன்றி நூலகத்தைப் பொறுத்த வரையில் அவைகளும் இழந்து போன நூல்களாகவே தணிக்கப்பட வேண்டும்.
உசாத்துணைப் பிரிவு என்பது நூலகத்தின் உயிர் தாடியெனக் கொள்ளக் கூடியது . மிகவும் அரிதான விலை மதிக்க வொண்ணாத பெருந் தொகையான நூல்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. இப் பிரிவிலிருந்த நூற்தொகை சுமார் 29,500 ஆகும்"

ஒரு சாட்சியம் 35
இவற்றுள் பெருந் தொகையான நூல்கள் அன்பளிப்பாகப் பெற்றவையாகும்.
உசாத்துணைப் பிரிவின் சிறப்பு நூற் தொகுதிகளுள் பின்வருவன பிரதானமானவைகளாம்.
(அ) கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி
இது மலேசியாவைச் சேர்ந்த திரு.துரைராஜசிங் கம் அவர்களின் அன்பளிப்பாகும். (சுமார் 700 நூல்கள்)
(ஆ) திரு.சி.வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார்,
100 நூல்கள்)
(இ) திரு. ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமயம்,
தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850)
(ஈ) திரு.கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600
நூல்கள்)
(உ) ஏட்டுச் சுவடித் தொகுதி யொன்று
(ஊ) அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பாகப்
பெற்ற உசாத்துணை நூற் தொகுதி
* இப் பெறுமதி வாய்ந்த நூற்தொகுதிகளைத் தவிர, இன்னும் பல சிறு சிறு நூற் தொகுதிகள் தனிப்பட்டவர் களாலும் நிறுவனங்களாலும் அன்பளிப்பாய் սյուի நூலகத்திற்குத் தாராளமாய் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வுசாத் துணைப் பிரிவின் பேரிழப்பு எத்தகைய தென்பதைச் சுட்டெரிந்து போன மேலும் பல நூற் தொகைகளிலிருந்து அறியலாம். விரிவஞ்சி முக்கியமான சில கலைக் களஞ்சியங்கள் போன்ற நூல்களை மட்டும்
இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Page 71
136 யாழ்ப்பாண நூல் நிலையம்
1. பிரித்தானிகள் கலைக்களஞ்சியம்-நான்கு பதிப்
புக்கள்
2. அமெரிக்கானா கலைக்களஞ்சியம்.
3. கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம்
4. விஞ்ஞான, தொழில் நுட்பக் களஞ்சியம்
(சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் 15000 ரூபாவுக்கு இக்கலைக் களஞ்சியம் வாங்கப்பட்டது.) 5. சமயங்கள் ப்ற்றிய கலைக்களஞ்சியம்.
6. மருத்துவக் கலைக் களஞ்சியம்.
7. கலைக்களஞ்சியம் (சென்னை) 8. மக்மில்லன் கலைக்களஞ்சியம்
9. குழந்தைகள் கலைக் களஞ்சியம் 10. அகராதிகள் (பல்வேறு வகைப்பட்டவை)
1. நெறிகாட்டிகள் (பல்வேறு வகைப்பட்டவை) 12. புவியியல் வரை படங்களும் வரை பட நூல்களும் இவை தவிர இப் பிரிவில் பல முக்கியமான சோதிட நூல்களும், "சிற்பச் செந் நூல்' என்ற மிக அரிதான நூல் ஒன்றும் இடம் பெற்றிருந்தன"
உசாத்துணைப் பிரிவில் ஏக காலத்தில் அறுபது வாசகர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாகப் போடப்பட்டிருந்த தனித்தனி மேசைகளும் கதிரைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்திய
அறிவுத் தாகம் கொண்ட அத்தனை வாசகர்களும் இன்று எங்கெங்கு அலைகின்றனரோ, தமது அறிவுத் தேட்டத்
திற்கு

ஒரு சாட்சியம் Y- 137
நான் அறிந்தமட்டில் இலங்கையிலேயே மிகச் சிறந்த சிறுவர் நூலகப் பிரிவிலிருந்த 8995 நூல்களையும் முற்றாக இழந்துவிட்ட ஆயிரக்கணக்கான பிஞ்சு உள்ளங்கள் எவ்வாறு ஏங்கித் தவிக்கின்றனவோ?
மலர்ந்த முகங்களுடன் கூடிய சிறுவர் சிறுமியரின் கலகலப்பான இந்தப் பிரிவில் சித்திர நூல்களில் சிந்தையை இழக்கவும், இனிக்கும் கதைகள் படித்து இன்புற்றிருக்க -வும், நூலக உதவியாளர்கள் கதை சொல்லக் கேட்டு கற்பனை உலகில் சஞ்சரிக்கவும் வரும் அக்குழந்தைகளை எண்ணும் போது எவ்வாறுதான் இந்தப் பிரிவினைச் சிதைக்க அக்கொடியோர் மனமிசைந்தனரோ என்பது எனக்குப் புரியவில்லை.
புதிய ஏடுகளும், பருவ வெளியீடுகளும் வைக்கப் பட்டிருந்த பகுதியில் அதிக சேதமில்லை. எனினும் அங்கிருந்த ஏடுகள் அனைத்தும் ஒரு மூலையில் குவித்து தீ மூட்டப்பட்டிருந்தன. இரண்டாவது மாடியில் உள்ள கலாபவனத்தில் உபயோகத்திலிருந்து நீக்கி வைக்கப் பட்டிருந்த நூல்களைக் கூட அவர்களிட்ட தீ விட்டு வைக்க வில்லை. எஞ்சியதெல்லாம் நூலகரின் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடந்த சேதமுற்ற சிறு நூற்தொகுதி யொன்று மட்டுமேயாகும்.
அந்தப் பயங்கர இரவில் நூலகத்தினுள் புகுற் தோரின் நோக்கம் எல்லாம் நூல்களை ஒழித்துக்கட்டுவ தொன்று தானென்பது தெட்டத் தெளிவாகியிருந்தது.
யாழ் நூலகத்தில் தான் மேற்கொண்ட இந்த துன்பகரமான மதிப்பீட்டின் முடிவான தீர்ப்பு.
யாழ்ப்பாணப் பொதுநூலகம் இன்று ஒரு பழம் கதையும் கனவுமாகி விட்டது.
aunr--10

Page 72
138 யாழ்ப்பாண நூல் நிலையம்
ஆனால் அறிவாலயங்களினதும், அறிவாற்றல் படைத்த மக்களினதும் வரலாறு என்றுமே இவ் வாறு முடிந்ததில்லை.
மதியீனர் செயலால் மறைந்த இந்த அறிவாலயம் மீண்டும் உயிர்த்தெழும் என்பது உறுதி.
யாழ் பொது நூலகத்தில் எரிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான நூல்களின் சாம்பலிலிருந்து அறிவுலகம் பெரு மைப்படக் கூடிய ந்வ நூலகமொன்று உதயமாகி அறிவுக் கதிர் பரப்பும் நாள் வெகு தூரத்திலில்லை என்பது எனது அசையாத நம்பிக்கையாகும்.

திருக்கடைக் காப்பு
இந்த ஆவணம்-யாழ்ப்பாண நூல்நிலையம் பற்றிய ஆவணம்-முற்றுப் பெறாத ஒன்றாகவே நமக்குக்கிடைத் துள்ளது.
இந்த ஆவணத்துக்கு ஒரு கோபுரவாயிலும், நுழை வாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. நூலகங்களின் வளர்ச் சியை நமது ஊழியமாக மட்டுமல்லாமல், தமது வாழ்க்கை யாகவும் அமைந்துள்ள தக்கார்கள் இருவர் மனமுவந்து இவற்றை அமைத்துத் தந்துள்ளார்கள். அவை இந்த நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தினை ஏற்படுத்த உதவு கின்றன. நூலகப் பணியைத் தமது வாழ்க்கை ஊழிய மாகப் பயிலும் இன்னொரு பெரியாரின் Frtl Sub, ஆவணத்தின் சத்தியத்துக்குச் சான்றாய் அமைகின்றது.
.அடுத்து வரும் தலைமுறைகள் பலவற்றின் தியாகத் திலும், ஓர்மத்திலும், உறுதியிலும் உழைப்பிலும் மட்டு மல்லாமல், அவர்களுக்கு அப்பாலான afé Sarafs சத்திய வேள்வியிலும் இந்த ஆவணம் முழுமம் பெறும் காலம் விடியும். இந்த விடியவை நோக்கிய நோன்பும் தவமும் இன்றைய ஈழத் தமிழருடைய வாழ்க்கையின் முக்கிய கூறாகவும் ஆகியுள்ளது. S.
நூல்நிலையம் எரிவதைக் கணத்த உள்ளங்களுடன் பாரித்த சாட்சிகள் பலரி. தகன சங்காரத்தின் குத்திர தாரிகளையும், எடுபிடி ஏவலர்களையும் இனங் கண்டோரி சிலர். நாகரிக உலகின் மிக அருவருப்பான இச்செயவினை இன சங்காரத்திற்கான தூமகேதுவாக இனங் கண்டோ ரும் உளர்.

Page 73
40 யாழ்ப்பாண நூல் நிலையம்
எஃது எவ்வாறாயினும், இதிகாச 39soft பறவையைப் போன்று, சாம்பரிலிருந்து யாழ்ப்பாண நூல் நிலையம் மீள உயிர் பெறுதல் வேண்டும் என்கிற ஆத்மார்ந்த பிரார்த்தனை ஒவ்வொரு இனமானதி தமிழனின் தெஞ்சத்திலும் குடிகொண்டிருக்கிறது.
ஒரு பெரிய சதியின்-சங்காரத்தின்-முன்னோட்டமே இது" என்பதை மேடை போட்டுப் பேசுவதின் மூலம் அழிந்த நூல்நிலையத்தினை உயிர்ப்பிக்க இயலாது என்கிற சமாதானம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலை யில், யாழ்ப்பாண நூல்நிலையத்தைச் சாம்பல் மேட்டி லிருந்து உயிர்ப்பிக்கும் பணிகள் துவங்கின. ஏதோ ? Blood Money' என விளங்கத் தக்க விதத்தில் அன்றைய ஜனாதி பதியிடமிருந்து பெறப்பட்ட இருபது இலட்சம் ரூபாவுடன் புனருத்தாரணப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
இந்த நிர்மாணப் பணிகளிலே ஊக்கத்துடன் உழைத்த யாழ்ப்பாண நகரசபையின் விசேட ஆணையாளர் திரு. சீ. வி.கே. சிவஞானம் அவர்களுடைய சேவை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பொறிக்கப்படுதல் தகும். சராசரி யாழ்ப்பாண மகனுடைய வளர்ச்சியை அவரிலே கான லாம். யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கேயே கல்வி கற்று, மாநகர சபையின் கணக்குப் பிரிவிலே "கிளாக்கர்" வேலை யில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டே, லண்டன் பரீட்சைகளிலே சித்தி பெற்று, மாநகரசபையின் கணக் காளராகப் பதவி உயர்வு பெற்றார். பல சந்தர்ப்பங் களிலே அதன் ஆணையாளராகவும் சேவையாற்றினார். அரச ஊழியர்களுடைய விசுவாசங்களைச் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் ஒரு மனோபாவம் மனைகோலிய காலத்திலே, இவர் ஆட்சியாளருடன் சுமூக உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டார். இதனாலும் புனருத்தாரண பணிகளுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மேலான உதவித் தொகைகளுக்கு வசதி செய்தார். மூன்றாம் கட்ட வேலை

திருக்கடைக் காப்பு 4.
களைப் பொறியியலாளர் திரு. நா. நடேசன் கரிசனை
புடன் மேற்கொள்வதற்கு இவர் உறு துணை யாக நின்றார்.
நூலக நிர்மாணப் பணிகளிலே அரசு தாராள மனம் பான்மையை கடைப் பிடிப்பதற்கான ஒர் அரசியல் நிர்ப் *ற்தமும் இருந்தது. பின்னர் நடந்தேறிய இன சங்காரப் படுகொலைகளுக்கு ஒரு முன்னோட்டமாகவே யாழ் நூல கத்தின் தகனம் நடத்தப்பட்டது என்கிற அவச்சொல் வினைச் சர்வதேச அரங்கத்திலே துடைத்தெறிய வேண்டிய நெருக்கடி இந்தத் தாராள மனோபாவத்தினை ஊக்குவித்திருத்தல் சாலும்.
ஆனாலும், யாழ்ப்பாணத்திலே மனைகோலிய போராட்ட நிலைகளின் சமன்பாடுகள் மாறிய பொழுது, இந்த தாராளப் பசுமை சீக்கிரமே வறண்டது. யாழ்ப் பாண நூலகத்தின் மேற்குத் திசையில், கல்லெறி தொலை விலிருந்த பழைய டச்சுக் கோட்டை அரச பாடைகளின் மத்திய பாசறையாக மாற்றப்பட்டது. Army Phobial இதனைப் யாழ்ப்பாண மண்ணிலே விதைத்து வளர்க்க வேண்டும் என்பது வியூகம், பொதுமக்கள்- குறிப்பாக நூலகத்தை அதிகம் பயன்படுத்தும் இளைஞர் கூட்டம்சொல்லொண்ணா அவதிகளுக்கு உள்ளானார்கள். யாழ்ப் பாணத்தில் உள்ள பொது நிறுவணங்களும், கல்லூரிகளும் வன்முறை அழிவுக்கு ஏற்ற இலக்குகள் ஆயின. இவற்றின் கருமையம் யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம்
யாழ்ப்பாணம் (டச்சுக்) கோட்டையில் தண்டிறக்கி யிருந்த அரச படைகள், ஏனைய இடங்களிலே அடைந்த பின்னடைவுகளைச் சமன் செய்வதற்கு, பmprovoked தாக்குதல்களிலும் ஈடுபடலாயின. அவர்களுடைய செயற் பாடுகளுக்குப் பின்னாலிருந்த நியாயங்களைப் பொது மக்களால் விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை. யாழ்ப்

Page 74
42 யாழ்ப்பாண நூல் நிலையம்
பாண நகரத்தின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் படுவதாயிற்று. படை முகாம்களின் அயலிலே தமது நட மாட்டங்களைத் தவிர்த்தல், பொதுமக்களைப் பொறுத்த மட்டிலே அவசியமான வாழ்க்கை முறையாயிற்று.
பொதுமக்கள் பாதுகாப்பாகத் தமது அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டுமென்ற நோக் கத்தில் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் சில நட வடிக்கைகளை மேற்கொண்டார். இவற்றுள் ஒன்று பொது மக்களுடைய சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாண மாநகரசபை அலுவலகத்தை நல்லூரி கந்தசாமி கோயிலுக்கு அண்மையிலுள்ள சங்கிலித் தோன் புக்கு மாற்றப்பட்டதாகும். ஒரு சில வீடுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு மாநகரசபையின் ஏனைய சேவைகளும் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த அலுவலக இ ப் பெயர்ச்சியின் ஓர் அங் க ம பா க, பொது நூலகமும் நல்லூருக்கு மாற்றப்பட்டது. அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பாண மாநகர முதல்வராக இருந்த காலத்தில், நல்லூரிலே கட்டப்பட்ட கல்யாண மண்டபமே தோதான இடமாகத தெரிவு செய்யப்பட்டு, யாழ் பொது நூலகம் அங்கு குடியமர்த்தப்பட்டது. .
யாழ்ப்பான பொது நூலகத்தின் வாசகர்கள் மாநகர சபை எல்லைகளுக்கு உட்படவும் , அப்பாலான தூர இடம் களிலும் வாழ்ந்தார்கள். எனவே, இந்த இடமாற்றம் பலவிதமான அசெளகரியங்களைக் கொண்டு வந்து சேர்த் தது. பொது மக்களுடைய வாசிப்புத் தாகத்தினைப் பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில் திறம்படச் செயலாற்ற முடியாத நிலையை மாநகர சபையினரும் உ னரலாயினர்.
புதியன செய்வதற்குத் தேவைகளும் நிர்ப்பந்தங்களும் தாயாக உதவுவாள் என்பது உண்மையாயிற்று. புதிய நிர்ப்பந்தங்களை எதிர்கொள்ள நூலக சேவையைப் பரவ

pogátassou 4 arů 143
லாக்கும் யோசனை முகிழ்ந்தது. நகரின் நாலா திசை களிலும் அமைந்துள்ள கேந்திர ஸ்தானங்களிலே கிளை நூலகங்களை அமைக்கலாம் என் கிற ஆலோசனை பரிசீலனை செய்யப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது யாழ்ப்பாண நூலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மாநகர சபைக் கட்டடங் ளிேலும், பொது நிறுவணங்களின் ஒரு பகுதியிலும், இந்த வசதிகள் இல்லாதவிடத்துச் சில தனியார் வீடு களிலும் கிளை நூலகங்கள் அமைக்கப்படலாயின. தலைமை நூலகம் சங்கிலியன் தோப்பில் குடியமர்த்தப் பட, சுண்டிக்குழி, நாவாந்துறை, வண்ணார்பண்ணை சோனகர் தெரு, கரையூர் ஆகிய இடங்களில் கிளை நூலகங்கள் அமையலாயின.
யாழ்ப்பாண நூலகத்தின் பிரதான நூலகர்கள் பதவி வகிப்பதும் விலகுவதும் மிகச் சாதாரண நிகழ்ச்சிகளாயின, திரு. வே.இ. பாக்கியதாதன் விலகியதற்குப் பின் 1989ம் ஆண்டுக்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் ஐந்து நூலகர் கள் பதவி வகித்துள்ளார்கள் என்கிற செய்தி, எத்தகைய ஓர் அவலச் சூழ்நிலை நிலவி வந்தது என்பதைச் சுயமே விளக்கும். திருமதி ரூ. நடராசா பதவிலிருந்து விலகியதும் பிரதம நூலகர் என்கிற பதவியில் யாரும் இல்லாதே நூலகம் இயங்கி வந்துள்ளது.
இந்திய அமைதிகாப்பு படை யாழ்ப்பாண மண்ணிலே தண்டிறக்கிய பொழுது, யாழ்ப்பாண மண்ணின் இடிபாடு களை மட்டுமல்ல, யாழ்ப்பாண நூல் நிலையத்தையும் பழைய நிலைக்குக் கட்டி எழுப்பலாம் என்று துளிர்த்த நம்பிக்கைகள், தோன்றிய அதே கடுகதியிலே கருகிச் செத்தன இந்திய அமைதிகாப்புப் படை யாழ்ப்பான மண்ணிலே நிகழ்த்திய சாதளைகள் என்ன? அது வேறு ஒரு கதை. ஆனால், அது யாழ்ப்பாண மண்ணிலே என்ன

Page 75
44 யாழ்ப்பாண நூல் நிலையம்
செய்த போதிலும், அமைதியை மட்டும் காக்கவில்லை என்பதுதான் வரலாறு.
விசேட ஆணையாளர் சிவஞானம் அரசியல் சதுரங்கத் திலே காயாக நகர்த்தப்பட்டமை அவப்பேறாகும். அவரைக் கொலை செய்ய முயற்சியும் நடந்தது. தமது பாதுகாப்புக் கருதி அவர் இந்தியா சென்று வாழலானார். இவருடைய இடத்துக்கு திரு. ச. பொ. பாலசிங்கம் உள்ளூராட்சித் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார், இவர் உள்ளூராட்சித் திணைக்களத்தின் பிரதம செயலாள ராகக் கடமையாற்றியவர். இந்த அநுபவம் யாழ்ப்பாண மாநகர ஆட்சியைச் செவ்வனே நடத்த உதவியது.
அவருடைய நிர்வாகக் காலத்திலே தான் இந்திய அமைதி காக்கும் படை வாபஸானது. தோல்வி அடைந்த தொரு ஒரு படையின் மனநிலையில் scorch and withdraw என்கிற கொள்கை எவ்வளவு தூரம் கடைப்பிடித்தது என்பதை வருங்காலத்து வரலாற்று ஆசிரியர்களே ஆய்ந்து எழுதுதல் வேண்டும். இந்திய இராணுவம் தமிழீழ மண்ணை விட்டுச் சென்றதும், ஓர் ஆண்டு காலத்திற்கு விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு நிலவியது. இந்த ஒர் ஆண்டு காலத்திற் கிடையில் பாலசிங்கம் யாழ்ப்பாண மாநகர ஆட்சியின் சார்பாக பல துரித நடவடிக்கைகளை எடுத்து யாழ்ப் பாண பொது மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் சகஜ நிலையை மீளக் கொண்டுவர முனைந்தார். நூலகங்களை விருத்தி செய்வதிலும், வாசகர்களின் தலன்களைப் பேணு வதிலும் அவர் கவனம் செலுத்தினார். பிரதம நூலகர் இல்லாத குறையினைப் போக்குவதற்காக முன்னாள் பிரதம நூலகராக இருந்த திரு. வே. இ. பாக்கியநாதனின் சேவையை ஒப்பந்த அடிப்படையிலே பெற்று ஏழு கிளை நூலகங்களையும் செயலாக்கம் பெற வழி செய்தார்.

திருக்கடைக் காப்பு 14s
தமிழ்நாட்டின் முதலமைச்சராகஇருந்த காலஞ்சென்ற எம். ஜி. ராமச்சந்திரன் எரியுண்ட நூலகத்திற்கு அன்பளிப் பாக வழங்கிய நூல்களை வகைப்படுத்தி, பட்டியற்படுத்தி சேரிக்கையுடன் இணைக்கும் பணியை அவர் பூர்த்தி செய் தாரி. விடுதலைப் புலிகளால் கந்தர் மடத்தில் நடத்தப் பட்டு வந்த பண்டிதர் நூலகத்தின் நூல்கள் பல்வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தன. அந்த நூல்களை வகைப்படுத்தும் பணியை பாக்கியதாதல் மேற்கொண்ட பொழுது, அந்த நூல்கள் மழையிலே நனைந்து கறையான்களின் தாக்குதலுக்கு உட்பட்டிருதி தீமை கண்டு பிடிக்கப்பட்டது. இருப்பினும் நூலகரின் உதவியினால், பெருந்தொகையான பண்டிதர் நூலகச் சேர்க்கைகள் மீட்கப்பட்டு, கோண்டாவிலிலுள்ள நூலகத் துக்கு மீளவிப்புச் செய்யப்பட்டன.
யாழ்ப்பாண நூலகத்தினை உருவாக்க உழைத்த நம் முன்னோர்கள் தெளிந்த தீர்க்கதரிசனப் பார்வையுடன் திட்டமிட்டு உழைத்தார்கள் என்பதை இந்த ஆவணம் துல்லியமாக நிறுவுகின்றது. ஈழம் முழுவதற்குமான பாரிய தேசிய நூலகமாகவும் அது விரைவிலேயே வளரலா யிற்று. இதன் வளர்ச்சி ஆட்சியாளர்களை உறுத்தும் என்பதை simplicity க்கும் பெயர் வாங்கிய யாழ்ப் பாணத்து அப்பாவிகள் உணரவில்லை. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்கிற கதையாகி விட்டது
களத்தின் உண்மை நிலைமைகள் நமக்குத் தெரியாது. சரிவ பயங்கர இரகசியம் யாழ்ப்பாண மண்ணின் மீது போர்க்கப்பட்டுள்ளது போன்ற ஜாலம் மனித நேய உணர்வுகளும், அடுத்த நூற்றாண்டு நோக்கி மனித குலம் முன்னேற வேண்டும் என்கிற நேரிமையான எண்ணங்கள் கூட இலங்கை மண்ணிலே உறைநிலை அடைந்து விட்டனவா? “தூய ஆரிய இனத்தின் உலக ஆதிக்க Sedar கன்" நாஜி ஹிட்லருடன் மாண்டுவிட்டது என்று யாரி

Page 76
46 யாழ்ப்பாண நூல் நிலையம்
சோன்னார்கள்? கருங்காலி நிறம் கொண்ட, இலங்கை யின் ஆரியர்கள், பரப்பவும் நிலைநாட்டவும் பிரகடனப் படுத்தியுள்ள புதிய வேதம் என்ன? இந்தப் புதிய வேததி தின் புரோகிதர்கள் நதிகளைப் பின்னோக்கி பாயசி செய்யும் அதிசயத்தை நிகழ்த்தி விட்டார்களா? பதினால் காம் நூற்றாண்டில் வாழ்ந்த செண்பக பெருமாள், மக்க ளுடைய அவலக் குரல்களின் மத்தியிலே, "ஜெய வேவா" கோஷங்களை ஒலிக்கச் செய்து "தொண்டி நொண்டி" வீரப்பவனி வருகின்றாராம்! இந்த வேடிக்கைகள் ள்ல்லாம், சிதையுண்டு கிடக்கும் யாழ்ப்பாண நூல்நிலை யத்தின் அயலிலேதான் நிகழ்கின்றனவாம்! யாருக்குத் தெரியும்? கேள்விச் செவியர்களாக எங்களுடைய பகுதி தறிவு தரம் தாழ்ந்து விடவும் கூடாது.ஆனால், சத்திய மான ஆதங்கம் ஒன்று இத்தகைய ஆவணங்களைத் தயாரிப்பவர்களுக்கு உண்டு. மூதறிஞர் க. சி. குல ரத்தினம் அவர்கள் யாழ்ப்பாண நூல் நிலையம் பற்றிய ஆவணத்தினை யாரால், எப்பொழுது up.date செய்ய ஏலும்?
ஏலாமைகளின் மத்தியிலும் இந்த ஆவணம் நூலுருங் பெற்று. இவ்வாறு வெளிவருதல் சங்கையான பணியே
இந்த ஆவணத்துக்குக் கோபுரவாயில் அமைத்துத் தற் துள்ள நூலகர் முருகேசபாண்டியனாரி ஒரு நியாயத்தை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அரிதாரம் பூசிய நடித நடிகையரின் ஜிகினாத்தனமான திரைப் படங்களை உண்மை என்று நம்பி கனவுகளில் மிதந்து தம்மை மறத்து போகும் சராசரித் தமிழக இளைஞர்களின் கேவலமான நிலையிலிருந்து மாறுபட்டு விடுதலை முனைப்புடன் ஈழத் தமிழ் இளைஞர்கள் பெருமைமிக்கத் தியாகங்களைச் செய்யும் செயல்வீரர்களாக மாற்றிய பெருமை யாழ்ப் பாண மண்ணில் அமைந்த வாசகசாலைகளுக்கு உண்டு

திருக்கடைக் asmru Ly 47
என்று சத்திய சாட்சியம் சொல்லுகின்றார். இதனை Corroborate செய்யும் சாட்சியாய் நான் வாழ்தல் எனது பாக்கியம். நாற்பதுகளின் இறுதிக் கந்தாயத்தில் யாழ்ப் பாணக் கிராமங்களிலே ஜனசமூக நிலையங்களும், அவற்றை ஒட்டினாற்போல வாசகசாலைகளும் செழிக்க லாயின. இந்த வாசகசாலைகளினால் சமூக அக்கறைகள் மட்டுமல்ல, கலை-இலக்கிய ரஸனையும் படைப்பார்வமும் செழிக்கலாயின. அறிவுத் தேட்டமே வாழ்க்கை முன் னேற்றத்திற்கான அடித்தளம் என்கிற உணர்வு தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலுடன் ஊட்டப்பட்டது" அறிவுத் தேட்டத்திற்கான ஓர் அப்பியாசமாகவும் வாசிப்புப் பழக்கம் மலிந்தது. இந்த வாசிப்புப் பழக்கத் தின் உருபு வாய்ந்த மையமாகவே யாழ்ப்பாண நூல்நிலை யம் வளரலாயிற்று, ஞானத்தேடல் ஆன்மீகமாயிற்று; கடவுளாயிற்று அதனை வழங்கும் இல்லம் கோயி லாயிற்று. இந்த ஆலயத்தின் உபாசகர்கள், ஞானத் தினை திரட்டுவதுடன் (accumulate) திருப்தி கண்டார் களல்லர், அதனைத் தன்மயமாக்க (assimilate)வும் விழைந்தார்கள் சமூகக் கடமைகள் இக்தகைய ஞான வான்களுக்கு (அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும்) பக்தியாக வாய்க்கலாயிற்று. சமூக பக்தி அவர்களுக்கு யோகமாயிற்று. இந்த எளிமையான சங்கதி பிறத்தி யாசின் பிடிமானத்திற்குள் சிக்குப்படாதது ஏன்?
இந்தக் கட்டத்தில் யாழ்ப்பான நூல்நிலையம் பற்றிய மேலும் சில தரவுகள் தகும். யாழ்ப்பாண நூல் நிலையம், ஞானப் பகிர்வின் மையமாகவும், மரபினை உள்வாங்கிப் புதியன படைக்கும் கலாசார மையமாகவும், மனித நேயத்தின் சுயம்புவைத் தரிசிக்கும் ஆலயமாகவும் உருவாக்கப்பட்டதே தவிர, "இந்துத்துவப் பாசறையாக வளர்க்கப்படவில்லை. "சைவமும் தமிழும்" என்கிற சென்ற நூற்றாண்டின் ஆறுமுக நாவலர் கொள்கைகள் தூக்கி வீசப்பட்டன. "இந்துத்துவ" உணர்வுகள் புதிய

Page 77
la8 யாழ்ப்பாண நூல் நிலையம்
தோர் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய வைக்கும் *அபினி" என்கிற விழிப்பும் ஏற்பட்டது. (இந்த விழிப்பு இந்திய அமைதி பாதுகாப்புப் படையின் செயற்பாடு களினால் மீள் உறுதி பெறுவதாயிற்று.) "தமிழ் உணர்வு களின் சடைப்பும் உலக ஞானத்தின் தேட்டமும் புதிய பரம்பரையின் எழுச்சிகளுக்குத் தோதாக அமையலாயின மதத்தால் கிறிஸ்தவர்களாக இருந்த எண்ணற்றவர் களுடைய உழைப்புகளும், கனவுகளும் இணைந்துதான் யாழ்ப்பாண நூல்நிலையம் உருவானது வளர்ந்தது. அதன் வளர்ச்சியில் முஸ்லிம் தமிழர்களுடைய பங்களிப்பும் கணிசமானது. மதம் சார்ந்த மதில்கள் எழுப்பப்படாத, தமிழ் உணர்வுகளின், கல்வித் தேட்டங்களின், கலாசார விழுமியங்களின் ஞானத் கோயிலாக யாழ்ப்பாண நூல் நிலையம் எழுந்து நின்றது. அதன் கெளரவ கம்பீரம் இலங்கை மண்ணிலே உருவான ஹிட்லர் குஞ்சுகளை உறுத்திக் கொண்டே இருந்தது விளைவுகள் ஆவணமாகி யுள்ளன.
பிறிதொன்றையும், வரலாற்று நேர்மை பேணுவதற் காக இங்கு பதிவு செய்ய விழைகின்றேன். ஈழத் தமிழர் புதிய நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள். வன் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இடைவேளைகளிலே பிர Gun Sada; l'ul Liga. The strategy was to pulverize them into submission தேசிய நீரோட்டத்திலே நீச்சலடிப்ப தாகப் பாவலா செய்தல், சேற்றை அள்ளிப் பூசுதல் என் பதை மெத்தப் படித்தவர்களுடைய செயல் க ள் நிரூபித்தன. தர்ம நியாயங்களை எண்ணிக்கையின் இராக்கதம் நிர்ணயிக்கும் ஓர் ஏற்பாடாகவே ஜனநாயக சித்தாந்தங்கள் மாற்றப்பட்டன. "முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆன்மாவை விற்க'த் தயாராக இருந்த யூதாசு கள் "கெளரவம்" பெற்றனர். இந்த லும்பன் தமிழர் களாலே தமிழர்களுடைய ஒரிமம் கொச்சைப்படுத்தப்

திருக்கடைக் காப்பு 49
பட்டது. அதென்ன லும்பன் தமிழர்? வர்க்க நலனை விற்றவர்கள் Lumpen. மார்க்ஸிய வேதாந்திகள் கற்பிதம். வர்க்க அரசியலைத் தூக்கிப் பிடித்தவர்கள், தமிழ் இனத் தின் அனைத்து உரிமைகளையும் பறிப்பதன் மூலமே மார்க்ஸியம் தேசிய நீரோட்டத்திலே கலத்தல் சாத்தியம் என்று தீர்ப்பு வழங்கிய பின்னர், வர்க்க முரண்பாடு களுக்குப் பதிலாக இன் முரண்பாடுகளே &P tidist கொள்ளும். தமிழ் இனத்தின் நலனை விற்பவர்கள் சலும் பன்கள்" ஜெயகாந்தன் சொல்லாட்சியில் Լumpen என்றால் "பொறுக்கி"
இவற்றின் மத்தியிலே, ஓர் இனத்தின் தனித்துவ அடையாளங்கள் அனைத்தையும் துவம்சம் செய்யும் இன சங்காரத்தின் மத்தியிலே, ஈழத் தமிழர் தமது மான உணர்வுகளின் ஊற்றுக் கண்ணைத் தேடலாயினர். தனித் துவ கெளரவமும், இனமான உணர்வும் தமிழ்ச் சேவிப் பிலே பெறப்படும் எனத் தெளிந்தனர். தமிழ் மொழிச் சேவிப்பின் பெரிய கோயிலாகவும் யாழ்ப்பாண நூல் திலையம் திகழ்ந்தது.
ஈசித் தமிழர்களின் தனித்துவ அடையாளம் என்பது இலங்கை மண்ணிலே தோண்டி எடுக்கப்பட்டதல்ல. வெள்ளைக்கார எஜமானர் விட்டுச் சென்ற ஆட்சி உரிமைச் சாசனத்திலிருந்து பெறப்பட்டதில்லை. ?G5 நாட்டின் எல்லைக்குள் எண்ணிக்கையிலே பெருந்தொகை யாக வாழும் இனத்தவர்களைப் பிரிதி செய்து, அவர்கள் விட்டெறியும் பிச்சையிலிருந்து பெறப்பட்டதில்லை. வீட்டிலும் வெளியிலும் பேணிய உணர்வுகளினதும், விழுமியங்களினதும், எழுச்சிகளினதும், பொற்பங்களின் தும் பதிவுகளைச் சங்கக் சான்றோர் எந்த மொழியிலே பதிவு செய்தாரிகளோ, அந்த தமிழ் மொழியிலிருந்து பெறப்பட்டது. லாலா நாட்டுக் காடுகளிலே துஷ்டனென

Page 78
150 யாழ்ப்பாண நூல் நிலையம்
தேசபிரஷ்டம் செய்யப்பட்ட விஜயனும் அவன் அடியாள் களும் இலங்கை மண்ணிலே காலடி பதிப்பதற்கு முன்னரே, இருந்திய மொழியாய் அமர இலக்கியங்கள் படைப் பதற்கு ஏற்ற மொழியாய் ஏற்றம் பெற்ற தமிழ் மொழி யிலிருந்து பெறப்பட்டது இளங்கோவுக்கும், வள்ளு கம்பனுக்கும் கவிதா சாதனைகளின் உச்சங்
ტანკში მწff அடைவதற்கு உபகாரியாய் வாய்த்த அதே தமிழ் மொழியிலிருந்து பெறப்பட்டது. வெள்ளைக்காரன் ஆட்சி
யிலே சுதந்திர முழக்கமிட பாரதிக்கு வாகாய் அமைந்து அதே தமிழ் மொழியிலிருந்து பெறப்பட்டது. அரசியல் தேவைக்காகச் சோடிக்கப்பட்ட தேசியத்திலும் பார்க்கரு அறிவு நாகரிகமான ஏற்பாடு என்கிற நினைவில் முடையப் u 'l - gGasp5mTlug மரபுகளிலும் பார்க்க, தமிழ் உணர்வுகள் தொன்மையானவை; நன்மையானவை. கால ஓட்டத் திலே பதவிகளிலே அமர்ந்து கொள்வதற்காக தமிழுணர்வு ளை பல்லாயிரம்-ஏன்-பல லட்சம் அம்பன் தமிழர்கள் துறக்கத்தயாராக உள்ள நிலையிலும், தமிழ்மானஉணர்வு களையே தங்களது ஒரே தனித்துவ அடையாளமாக ஈழத் தமிழர்கள் தாங்கி நிற்கின்றார்கள். இதனால் பரதேசி களாக அலைகிறார்கள். பிறந்த நாட்டிலேயே அகதி களாக நாடோடிக் கும் பலாக விரட்டப்படுகிறார்கள்,
". . . . . . . . . யில் வெளிய தமிழ்ச் சாதி, தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும்.
ஆகிய பல கொடுமைகளைத் தினந்தினம் கேள்விப் பட்டும், ஊமையராய்ச் செவிடர்களாய்ல், குருடர்களாய்,

திருக்கடைக் காப்பு S.
நமது தமிழர்களாய்க் கொண்ட கோடிக்கணக்கான தமிழ் யmpenகள் மத்தியிலே, வேரடி வேரடியாகப் பெற்ற இனமான உணர்வினை அடையாளமாகத் தக்க வைத்துக் கொள்ளும் வேள்வியிலே குதிக்க ஈழத் தமிழர்களைத் தயார் செய்த பெரிய கோயிலான யாழ்ப்பாண நூல் நிலையத்தினை ஈழத்தமிழர் எங்கிருந்தாலும், வாழ்த்திப் போற்றுவேர்.
யாழ்ப்பான நூல்நிலையம் மீள உயிர்க்கும். மீளப் பொலிவுறும்.
அதற்கான நீண்ட தவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
அதனை, அந்தப் பழைய பெருமையிலே உயிர்ப்பிக்க, இந்த ஆவணம் தலைமுறை தலைமுறையாகப் பயிலப் படுதல் வேண்டும். இந்த ஆவணத்தின் தரிசன பயனின் ஆன்மா அதுவே.
எஸ். பொ

Page 79
நிதியம்
இந்த நூலின் விற்பனையால் கிடைக்கும் வருவாயும், நன்கொடைகளும் மூதறிஞர் கா.சி. குலரத்தினம் அவர்களின் நினைவாக ஆண்டு தோறும் புலமைப் பரிசில் அளிக்கும் திட்டத்திற்கான நிதியம் ஒன்றினை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.


Page 80


Page 81