கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பத்திரிகையாளர் நடேசய்யர்

Page 1
T "ा
11 ܠܐܒܩܒܦܡܦܩ ܒ ፳....8፩፰)÷`..ጅ E.
NSNAFNGIF H
G33,588 LS SYKSEYSe S SSS SSS S L L SLLS LLSS S u OS
:
VN་ཀྱི་2་ན་འབུར་ 釜鹫
ترتیبیتی :திெ: . リ
X.
*三エーリ
莺
الناس 1 ܬܐܒ - ܒܬܐ .
= 1 جينيسيا
न्त । ܬܼܲܢ ليبيين النيلينينيانية تليتيتيتيتيات
 

O
* /":گلگتحدہ/منتخب سینٹ
F =
"E
TETING: ""
kek KSYYSS AAAA AA Ku S iiiiiSiS SSLLLLL LeeS S STS eeeSA
ܩܕ ܡ
ਅ 5FAFF بیت = ی = WEN WI. s
F. S. E.g. తోల్ట్ 45%,#F5:35 بلندی
F g9;ilsitiléis 5 Assis. S/ G : o ;
TESYLLLL LLSSSSS S SS LLLLLLL SS JSLSS S SSSS
۔====
ایمیلینتالیسی تشتكييتية : تزييت في ليبيين التي
بیشتر

Page 2


Page 3

பத்திரிகையாளர் நடேசய்யர்
சாரல்நாடன்
மலையக வெளியீட்டகம் த. பெ. 32 கண்டி

Page 4
பத்திரிகையாளர் நடேசய்யர் (ஆய்வு நூல்)
C) சாரல்நாடன்
முதற்பதிப்பு டிசம்பர் 1998 வெளியீடு ’ மலையக வெளியீட்டகம் அச்சுப்பதிப்பு : கிரிாபிக்லேன்ட்
. கண்டி:
விலை :
Price 165. 00
PATHTHRIRATYA,ALAR NATESA YER (NATESAIYER, THE JOURNALIST)
C) Saaralnadan
Publisher: Hill-Country Publishing House,
P. O. Box32, Kandy. Printed by: Graphic Land, Kandy.
ISBN 9554 - 9084 - 06 - 2

பதிப்புரை
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சகாப்த நாயகனாக திகழ்ந்த கோ. நடேசய்யரின் வரலாற்றை எழுதிய சாரல்நாடன் அவரின் பத்திரிகைத் துறை பங்களிப்பை ஆய்வு செய்து பத்திரிகையாளர் நடேசய்யர் என்ற நூலை படைத்துள்ளார்.
பத்திரிகைத்துறைக்கு நடேசய்யர் ஆற்றிய பணிகள் இதுவரை வெளிச்சத்திற்கு வராமல் இருந்தது. இதனை தனது கடமைகளில் ஒன்றாக கருதி பத்தாண்டுகளுக்கு மேலாக தேடுதல் நடத்தி தக்க ஆதாரங்களுடன் இந்நூலை எழுதியுள்ளார்.
தொழிற் சங் கவா தியாக மட்டுமே அறியப்பட்டிருந்த கோ. நடேசய்யரின் பன்முக ஆற் றலையும் , ஆளுமை யையும் தகுந்த ஆதாரங்களுடன் வெளிக் கொணர்ந்த சிறப்பு சாரல் நாடனைச் சாரும். ஒரு தேயிலைத் தோட்டத்தின் தொழிற்சாலை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு பல மைல்களுக்கு அப் பாலுள்ள கொழும் பு: தேசிய சுவடி திணைக் களத்திலும், தனியார் நூலகங்களிலும் நுழைந்து, தேடுதலை மேற் கொள்வதற்கு பெரு விருப்பத்துடன் அவர் முன்வந்தார். அவருடன்

Page 5
தேடுதலின் போது ஒன்றாக செயல்பட்டவன் என்ற ரீதியில் இதனை குறிப்பிட வேண்டும். மேற்குறித்த தேடுதலை மேற்கொண்டிருந்த வேளை அவரின் உடல் நிலை கூட பாதிக்கப்பட்டது ஆனால் இந்நூலை எழுதி முடித்திட வேண்டும் என்பதில் திடமாக இருந்தார்.
இந்த நூலை மலையக வெளியீட்டகத்தின் மூலமே வெளியிட வேண்டும் என மிக உறுதியாக இருந்தோம். நூல் வெளியீட்டுத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்க வேண்டுமென்பதே மலையக வெளியீட்டகத்தின் இலட்சியம்.
மேலும் எங்கள் பணிகள் தொடர உங்கள் ஒத்துழைப்பை வேண்டிநிற்கும்
என்றும் அன்புடன் அந்தனி ஆவா பதிப்பாசிரியர்

அவசியம் படித்தாக வேண்டிய நூல்
இர. சிவலிங்கம் எம். ஏ, எல். எல். பி.
சிங்கப் பாடல் ஒன்றிலிருந்து சாரல்நாடன் என்ற
மிகப் பொருத்தமான புனை பெயர் ஒன்றைத்
தெரிந்தெடுத்துக் கொண்டிருக்கும் ஹைலண்ட்ஸ்
கல்லூரியின் சிறந்த மாணாக்கர்களில் ஒருவரான
க. நல்லையா, தனது தமிழ் எழுத்தாற்றல் தேயிலைத்
தொழிற்சாலையிலிருந்து எழும் புகைக்கு நடுவே மங்கி
விடவில்லை என்பதை இந்த நூலில் வெளிப்படுத்தி
இருக்கிறார்.
மாணவப் பருவத்தில் அவரது ஆற்றலை
அருகிலிருந்து அறிந்து வைத்திருந்த என்னைப் போன்றவர்கள் அவரது பல்கலைக்கழகப் படிப்புக்
குறித்து கனவுகள் கண்டிருந்தோம். அவரோ தொழில்
தேடிச் செல்ல வேண்டியவரானார்.
தேயிலைத் தளிர்களை நறுமண்ம் கமழும் தூளாக்கி
தூரத்துச் சந்தைகளில் விற்பனை செய்யும் கலை அவருக்குக் கைவந்த ஒன்று. இப்போதோ பழஞ்சுவடித்
திணைக் களத்தில் செல்லரித்துப் போயிருக்கும்

Page 6
ஒலைச்சுவடிகளுக்கு உயிர்ப்புத் தரும் கலையும் தனக்குக் கைவந்த ஒன்றுதான் என்பதை அவர் நிருபித்து இருக்கின்றார். அவசியம் படித்தாக வேண்டிய நூல் ஒன்றை அதனால் தான் அவரால் படைக்க
முடிந்திருக்கின்றது.
எந்தக் கணிப்பீட்டை முன்வைத்தாலும் கடந்த முப்பதாண்டுக் காலப்பகுதியில் மலையகத்தில் இருந்து
வெளிவந்திருக்கின்ற எல்லா நூல்களையும் விஞ்சி நிற்கின்ற
வெளியீடாகச் சாரல்நாடன் எழுதியிருக்கும் நடேசய்யரைப்
பற்றிய நூல் அமைந்திருக்கின்றது.
இலங்கையில் 1981 - 1988 காலப்பகுதியில்
பிரசுரிக்கப்பட்ட சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலாகக்
கணிக்கப்பட்டு சாகித்திய விருது பெற்ற தேசபக்தன்
கோ. நடேசய்யர் நூல் குறித்து சென்னையிலிருந்து வெளிவரும் ExoduS சஞ்சிகையில் எழுதிய ஆங்கிலக்
கட்டுரையின் தமிழாக்கம்)

தோற்றம் :14, 01. 1887 மறைவு 07. 1. 1947

Page 7

உள்ளடக்கம்
பதிப்புரை பாராட்டுரை அணிந்துரை முன்னுரை
FOFT (6 D நடேசய்யரின் வாழ்க்கையில் கண்டி நகரில் அறிமுகம் தேசிய வீரர் வர்த்தக மித்ரன் தேச நேசன் தி சிட்டிஷன் தேசபக்தன் ஃபோர்வர்ட் தோட்டத் தொழிலாளி வீரன் சுதந்திரன் பத்திரிகைக் குரல் பத்திரிகைகளின் பெயர் அமைப்பு சொல் அடைவுகள் பத்திரிகைத் தலையங்கங்கள் கருத்துப் படங்கள் வாசகர் கடிதங்கள் பாரதியார் வழிநின்று அரசியல் வழி மக்கள் பணி காலக்கருவி நடேசய்யரின் மரணம் நிறைவாக பயன்பட்ட நூல்கள் பயன்பட்ட பருவ வெளியீடுகள் அனுபந்தங்கள்
21
24
33
36
46
57
71
81
93
96
O6
O
17
26
3.
135
140
46
17 O
173
82
85
187
190
193
2O1

Page 8
அணிந்துரை
பூரீலங்காவின் மலையகக் கலை, இலக்கிய வரலாறு அண்மைக் காலமாகத் தனித்துவம் பெற்றும் ஆய்வுலகத்தின் பார்வைக்கு இலக்கு ஆகியும் சிறப்பெய்தி வருவதை நேரில் கண்டும் கேட்டும் அறிந்தேன். சென்னை சுபமங்களா இதழில் எனது 'இலக்கிய யாத்திரை' எனும் கட்டுரையில் (1994) மலையக இலக்கியம்' தனித்தொரு தேசிய இலக்கியமாக மலையக இலக்கியவாதிகளால் வளர்த்தெடுக்கப் பெற்று வருவதைச் சுட்டிக் காட்டினேன். தமிழ் நாட்டில் அஃதொரு புதிய செய்தியாக அறியப் பெற்று வரவேற்கப்பட்டது.
மலையக இலக்கிய முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான அந்தனி ஜீவாவின் குன்றின் குரல் வாயிலாக மலையக மக்களின் புதிய விழிப்பிற்கும் மலையக இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயிற்கும் மூலகர்த்தாவாக விளங்கும் கோ. நடேசய்யர் அவர்களைப் பற்றி அறிந்தேன். அடுத்து, மலையக இலக்கிய வரலாற்றை ஒழுங்கு செய்தும் ஆய்வு செய்தும் எழுதிக் கொண்டு வருவதில் தனியானதோர் ஆற்றலை வெளிப்படுத்தி வரும் அன்பர் சாரல் நாடனின் தேசபக்தன் கோ. நடேசய்யர் (1986) வாழ்க்கை வரலாற்றை ஊன்றிப் படித்தேன். மறைந்த, மறக்கப்பட்ட வரலாற்று நாயகர்களைப் பற்றிப் புத்தொளி பாய்ச்சி நூல்கள் படைத்து வரும் நான் இயல்பாகவே, உண்மையாகவே சாரல்நாடனின் இந்த வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தைக் கண்டதும் பேருவகை கொண்டேன். இந்த ஆய்வு நூல் 1991ல் தமிழ்ச் சாகித்திய விழாவில் பரிசும் பாராட்டும் பெற்றதுடன் அன்பருக்கு இலக்கிய வித்தகர் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்ததில் வியப்பேதுமில்லை.

ஒரு வரலாற்று நாயகனை அறிமுகப்படுத்துவதோடு அமைதி கொள்ளாமல், அவருடைய பன்முக ஆளுமையை மேன்மேலும் ஆய்வு செய்து புதிய செய்திகளைப் பொலிவுற அகழ்ந்தெடுக்கும் தமது எழுத்துப் பணியை விரிவாக்கம் செய்து வருகின்ற அன்பர் சாரல் நாடன், கோ. நடேசய்யரின் பன்முக ஆளுமையில் ஒருமுகமான அவருடைய இதழியல் ஆளுமையை இந்நூல் வாயிலாக நிறுவியுள்ளது, பாராட்டுக்குரியது. தமிழ் இதழியல் வரலாறும் பத்திரிகைத் தமிழ் வரலாறும் தமிழ் நாட்டுடன் முடிவதன்று. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடன் இணைந்து விளங்குவதாகும். இந்த நோக்கில் அண்மைக் காலமாகப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் இதழியல் வரலாறும் எழுதப்பட வேண்டியதொன்றாகும்.
எனக்குச் சட்டசபை பெரிதல்ல; பத்திரிகை தான் பெரிது. நான் சட்டசபைக்குப் போய்ச் செய்யக்கூடிய நன்மையை விடப் பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகையால் ஏற்படக்கூடும்; என்று நடேசய்யர் சாற்றியுள்ளதை மிகத் தெளிவாகத் தக்க முதற் சான்றுகளுடன் இந்நூலில் உணர்த்தியுள்ளார் சாரல் நாடன்.
கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி அவர்கள் 'சுதேச மித்திரன்' ஆசிரியர் பூரீ சுப்பிரமணிய ஐயரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து எழுதிய பத்து வெண்பாக்களில் ஒரு வெண்பாவில் தமிழ் மக்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த பொழுது அமுதன்ன சுதேச மித்திரனைக் கொண்டு தமிழ் மக்களை எழுப்பினார் என்று பாராட்டியுள்ளார். மகாகவி பாரதியாரின் பத்திரிகைக் குருவான பூரீ சுப்பிரமணிய ஐயர் இந்து' பத்திரிகையைக் கொண்டு அரசியல், சமூக விழிப்பிற்குப் பாடுபட்டவர். தமிழ் நாட்டின் புதிய விழிப்பிற்கு ஆதிகர்த்தாக்களுள் ஒருவராக

Page 9
மகத்தான இந்தியத் தேசியத் தலைவரான பூரீ சுப்பிரமணிய ஐயரைக் குறிப்பிட்டுள்ளார் மகாகவி பாரதியார். இத்தகைய நினைவலைகளை எழுப்பும் வண்ணம் சாரல் நாடன் இத்தகைய நூலைப் படைத்துள்ளார். தமிழகப் பத்திரிகையின் மூலவரான பூரீ சுப்பிரமணிய ஐயருடன் மலையகப் பத்திரிகைத் துறையின் மூலவரான கோ. நடேசய்யரை ஒப்பிட்டு ஆய்வு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இலங்கைத் தேசிய அரசியலில் இந்தியத் தமிழரான நடேசய்யர் பங்கேற்றுச் சாதனை படைத்துத் தேசிய வீரராக மலர்வதற்கு வித்திட்ட்து அவர் இந்தியாவில் தஞ்சாவூரில் நடாத்திய வர்த்தக மித்திரன்', 'சுதந்திரன்' எனும் பத்திரிகைகள் என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமது அறிமுகம் அத்தியாயத்தில், '8 தமிழ் ஏடுகளிலும் 4 ஆங்கில ஏடுகளிலும் ஆசிரியராகக் கடமையாற்றிய அவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்நூலுள் 6 தமிழ் இதழ்களையும் 2 ஆங்கில இதழ்களையும் ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளார் சாரல் நாடன்.
நடேசய்யரின் முதல் பத்திரிகை முயற்சி 1915ல் வர்த்தக மித்ரன் வாயிலாகத் தொடங்கியுள்ளதை விளக்கியுள்ளார். இந்த இதழின் பிரதிகள் அனைத்தும் கிடைக்காத நிலையில் அரும்பாடுபட்டுச் சில பிரதிகளைத் தேடிக் கண்டு பிடித்துச் சாரல் நாடன் செய்துள்ள ஆய்வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வாய்வில் வ. ரா. வின் பெயர் குறிப்பிடப்படும் அளவிற்கு நடேசய்யர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை எனும் உண்மையை, வரலாற்று வழுவை, சாரல் நாடன்
எடுத்துரைத்துள்ளது நல்லதொரு ஆய்வுப் பணியாகும்.

இலங்கையில் 1921ல் தேசநேசன் மூலம் நடேசய்யரின் பத்திரிகைப் பணி தொடங்கிய தைப் பற்றிச் செய்யப்பட்டுள்ள ஆய்வும், தமிழ் இதழியல் வரலாற்றில் புதிய பக்கங்களைச் சேர்க்க வழிவகுத்துள்ளது.
Giur Gär (1920) , Gumtředurr” (FORWARD), தி சிட்டிசன் (THECTZEN), (1922), தேசபக்தன் (1920), சுதந்திரன் (1947), தோட்டத் தொழிலாளி (1947) எனும் பத்திரிகைகளை நடேசய்யர் நடத்தியிருந்தாலும் அவருடைய பத்திரிகைத் துறையின் மாபெரும் சாதனைகளைத் தேசபக்தன் பறை சாற்றுகின்றது. இதனாலேயே அந்தப் பத்திரிகையின் பெயரை அடைமொழியாகக் கொண்டு தேசபக்தன் கோ. நடேசய்யர் என்னும் சிறப்பெய்தி விட்டார். தமிழகத் தென்றல் திரு. வி. கவின் தேசபக்தன் பெயரை அவருடைய சம்மதத்தின் மூலம் தமக்குரியதாக்கிக் கொண்ட நடேசய்யர் தேசபக்தன் உருவாக்கிய புகழார்ந்த பாரம்பரியத்தைப் போற்றி வளர்த்துள்ளதுவும் குறிப்பிடத்தக்கது. ஒப்பாய்வு செய்வதற்குரிய வாய்ப்புள்ளதை நான் நடேசய்யரின் தேசபக்தன் இதழ்களைப் பார்த்து உணர்ந்தேன். கொழும்பு தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள தேசபக்தன் தொகுப்பைப் பார்த்த பொழுது வியப்புற்றேன். இந்தியத் தேசிய அரசியலின் அக்காலப் போக்குகளைச் செய்திகளாகவும் விமர்சனங்களாகவும் நடேசய்யர் தந்துள்ள பாங்கு திரு. வி. க வின் தேசபக்தன் ஏட்டினை நினைவூட்டியது. மொழிப்பற்று, சமூக சீர்திருத்தப் பற்றுடன் கூடிய தேசிய அரசியலைப் பேணியவர் திரு. வி. க.
நடேசய்யரின் முதல் இதழில் "நாம்" என்னும் தலையங்கமும் 'எனது வாழ்க்கையின் நோக்கம்' எனும் கட்டுரையும் நடேசய்யரின் இதழியல் பற்றார்வத்தை விளக்கவல்லன.

Page 10
"வ. வே. சு ஐயரின் அரசியல் தமிழ் இலக்கியப் பணிகள்" எனும் நூலாசிரியனாகிய நான், 1924ல் தமிழகத்தை உலுக்கிய வ. வே. சு ஐயரின் குருகுலப்பிரச்சினையை, அதற்கெதிரான போராட்டத்தை நடேசய்யர் நடுநிலையில் நோக்கி எடுத்த முடிவைக் கண்டும் வியப் புற்றேன். குருகுலத்தில் பிராமண மாணவர்கள் தனியே உண்ணுவதற்கு வ. வே. சு ஐயர் அனுமதித்தது பிழையாகும் என்று என் ஆய்வில் தெரிவித்தேன். நடேசய்யர் கருத்தும் இவ்வழிப்பட்டதே என்பதை அறிந்த பொழுது அவருடைய சமூக நீதி கண்ணோட்டத்தைக் கண்டு வியப்புற்றேன். வ. வே. சு ஐயரின் இந்தப் போக்கைக் கண்டித்த பிராமணர்களில் ஒருவராக நடேசய்யரையும் இனங்கண்டேன். அவர் மிகத் தெளிவாகத் தமது தேசபக்தன் (5 - 11 - 24) இதழில் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்:-
"ஓர் விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வ. வே. சு அய்யர் அவர்கள் சாதி வித்தியாசத்தைக் கைப்பற்றி நிற்கக் கூடியவரல்ல என்பதே. புதிய உணர்ச்சியும் புதிய தர்மமும் உலகில் நிலை நிற்க வேண்டுமென எண்ணுவோமானால் அன்பர் அய்யர் அவர் கள் கொள்கை சரியல் ல. இனிவரும் பிறப்புக்களாவது சாதி வித்தியாசம் பாராமல் சகோதர உணர்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது எமது கோரிக்கை. அதனை எ ப் படியாவது அய்யர் அவர் கள்
நிறைவேற்றுவார்களாக."
நடேசய்யரின் இக்கருத்து திரு. வி. க வின் கருத்துடன் ஒத்து நிற்பது. இவ்வாறு திரு. வி. க.- நடேசய்யர் இதழியல் பார்வையை ஒப்பாய்வு செய்ய வாய்ப்புகள் நிறைந்துள்ளன. அன்பர் சாரல் நாடன் ஏழாண்டுக் காலம் நடந்த தேச பக்தனின்

உள்ளடக்கங்களைப் பல்வேறு கோணங்களில் பகுப்பாய்வு செய்து தனிப் பெரும் நூலாக வெளியிடுவ்ாரெனில் நடேசய்யரின் பத்திரிகைப் பரிமாணங்கள் மேலும் விளக்கமுறும்.
வீரன் இதழின் தரத்தைக் குறித்துச் சாரல் நாடன் விவாதித்துள்ளது தற்காப்பு வழிமுறையைக் காட்டுகிறது. வீர வழிபாட்டுணர்வின் வெளிப்பாடாகும். எவ்வளவு தான் விளக்கம் கூறப்பட்டாலும், நடேசய்யரின் பத்திரிகைப் பணியில் ஏற்பட்ட தார்மீகச் சறுக்கலாகும்.
நூலாசிரியரின் தமிழ் நடை, நூலைச் சோர்வின்றிப் படித்துச் செல்லத் தூண்டுகிறது. மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள் தேசபக்தன் பத்திரிகைக்கு நெறிமுறை உரைகளாக எடுத்தாளப்பட்டுள்ளதை விளக்குமிடத்தில், "புதுக் கோலம் பூண்ட தேச பக்தனுக்குப் போர்க் கோலம் காட்டிட உதவின." என்று சாரல் நாடன் எழுதியுள்ளது அவரின் உயிர்த்துடிப்புள்ள நடைக்கு ஒரு சான்று. அத்துடன் இலங்கையில் பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகளில் நடேசய்யர் ஒருவர் என்னும் வரலாற்று உண்மைக்கும் சான்று பகர்கின்றது.
இறுதியாக, "பத்திரிகையாளர் பாரதியார்" (1989) எனும் நூலின் ஆசிரியரான எமக்குப் பத்திரிகையாளர் நடேசய்யரைத் தரிசனம் செய்யவும் இந் நூல் வாய்ப்பளித்துள்ளது.
கோ. நடேசய்யரின் பிற பன்முக ஆளுமையும் தனித்தனி நூல்களாக வெளிப்படச் சாரல்நாடனின் ஆய்வு தொடரும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
பெ. சு. மணி, முகாம், இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு - 6
- 10 - 1996

Page 11
முன்னுரை
நீங்கள் கையிலெடுத்து வாசித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் நடேசய்யர், காலந் தாழ்த்தி அச்சில் வந்திருக்கின்றதென்பதை அணிந்துரை வழங்கப்பட்ட திகதியை வைத்து அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இக்கால இடைவெளியில் நடேசய்யரின் பிறப்பு, வளர்ப்புக்குறித்து அறிந்து அவரது வாழ்க்கைக் குறிப்பை என்னால் செம்மையாக்க முடிந்தது.
நூலை எழுதி முடித்த வேகத்தில், இலங்கைக்கு தானெழுதும் நூல் சம்பந்தமாக வருகை தந்திருந்த பெ. சு. மணி அவர்களைக் கொழும்பு இராமகிருஷ்ண மடத்தில் சந்தித்து அளவளாவி அணிந்துரையைப் பெற்றுக் கொண்டேன்.
நடேசய்யரின் பன்முக ஆற்றல்களைத் தனித்தனியே நூல்களாக வடிவமைத்தெழுதினால் ஒரு முப்பதாண்டுக் காலத்துக்கான மலையகத் தமிழ் மக்களின் வரலாறு உருவாகிவிடும்.
அந்தக் காலம் எப்போது வரும்? யாரதைச் செய்ய 6) μουουπ ή P
மலையக வளர்ச்சிப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, தம்மையும் வளர்த்துக் கொண்டு, தமிழ் இதழ்களையும் வளர்த்தவர் அவர். தான் தொட்டுத்துலக்கிய பத்திரிகைத்துறையில் அவரது பணிகளை வெளிப்படுத்தும் ஓர் ஆரம்பமே இந்த நூல் வரம்புக்குட்பட்ட வளங்களை வைத்துக் கொண்டு இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன்.
மலையக வரலாற்றிலீடுபாடுள்ளவர்கள் இந்திய தேசியச் சுவடித் திணைக்களங்களையும் பல்கலைக்கழக நூலகங்களையும் பயன்படுத்தி உண்மைத் தரவுகளை அகழ்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தைப் பேராசிரியர் வி. சூரியநாராயணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழக தென்கிழக்காசியமையம்) எனதில்லம் வந்திருந்தபோது வலியுறுத்திச் சென்றார்.

நடேசய்யரைப் பற்றிய பரவலான அறிவு இன்றைய இளைய சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளதைக் காணுகையில் பத்தாண்டுகளுக்கு முன்பு மலையகக் கலை, இலக்கியப் பேரவை மூலம் நடேசய்யர் பற்றிய ஆய்வை முன்னெடுத்துச் சென்ற எங்களின் பணி அடைந்திருக்கும் வெற்றியை நினைத்துப் பெருமிதம் உண்டாகிறது.
மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நானும் நண்பர் அந்தனி ஜீவாவும் வரலாற்றில் மறைப்புண்டு கிடந்த அவர் புகழ் பரப்ப முனைந்த போது மிகப்பரந்த அளவில் தமது பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்து அளப்பறிய விதத்தில் உதவினார் அப்போதைய 'தினகரன்' பிரதம ஆசிரியர் திரு. எஸ். சிவகுருநாதன் அவர்கள்.
பத் திரிகை யரில் எனக் கிருந்த ஆர் வம் விரிவடைந்தமைக்குப் பெ. சு. மணியின் எழுத்துக்கள் தாம் காரணம். அவர் இலங்கை வந்திருந்த போது கையெழுத்துப் பிரதியாகவே இந்த நூலை வாசித்து ஓர் அருமையான அணிந்துரையை எழுதிக் கொடுத்தார்.
அச்சுப் பிரதியைச் சீர்செய்து கொடுத்த நண்பர் அல் அஸ"மத், அச்சிடுவதை ஒரு கலையாக மேற்கொண்டு வரும் கிராபிக்லேண்ட் உரிமையாளர் தம்பி கே. விக்னேஸ்வரன் என்ற இருவரும் என்னில் கரிசனை மிகுந்தவர்கள். கணனி முறையில் வடிவமைத்தவர்கள் ச. நிரஞ்சனி, கோ. உமா மஹேஸ்வரி ஆகிய இருவரும்.
ஜீவனோபாயத்துக்காக நான் மேற்கொண்டுள்ள
தொழிற்றுறையில் உள்ள தொல்லைகள் ஒருபுறம்; விரும்பி
மேற்கொண்ட எழுத்துலகின் எல்லைகள் மறுபுறம். இரண்டுக்கும் இடையில் நான்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை நான் சத்தியமாக நம்புகிறேன்.
வணக்கமும் நன்றியும்.
சாரல் நாடன் சாரலகம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,

Page 12
சமர்ப்பணம்
21. 12. 1998ல் அமரரான
துரைவி பதிப்பக உரிமையாளர் துரைவிஸ்வநாதன் அவர்கட்கு
 

நடேசய்யரின் வாழ்க்கையில்
1887 egaoTourf. 14
1914
I9I5
1919
1920 டிசம்பர்
1921 செப்டெம்பர் 4
செப்டெம்பர் 21
அக்டோபர் 9
1922 ஜனவரி 7
தஞ்சாவூர் தென் ஆர்க்காடு வளவனூர் கிராமத்தில் பிறப்பு தந்தை கோதண்டராமையர் (தாசில் தாரர்) தாய் பகீரதம்மாள் தஞ்சை திருவிக கல்லூரியில் ஆசிரியர் (தஞ்சை, திருவாரூர், (குற்றாலம்) வியாபாரிகள் சங்கத்தைத் தோற்றுவித்தல்
வர்த்தகமித்ரன் மாதமிருமுறை வெளியீட்டை தஞ்சையில் ஆரம்பித்து ஆசிரியராகக் கடமை
வர்த்கமித்ரனுக்கு சொந்த அச்சகம், வார வெளியீடாதல்
வர்த்தகமித்ரனுக்குச் சந்தா சேகரிக்க இலங்கை வருதலும், புடவை வியாபாரி வேடத்தில் தேயிலைத் தோட்டங்களுக்குள்
சென்று உண்மை நிலவரங்களை
அறிதலும்
இலங்கையில் நிரந்தரக் குடியேற்றம்
தி சிட்டிஷன் ஆங்கில வார இதழ் தேசநேசன் வார இதழ்
டாக்டர் மணிலாவைச் சந்தித்தல்
மருதான டவுன்ஹோலில் இந்தியர்களின் மாபெரும் பொதுக்
கூட்டம்

Page 13
சாரல்நாடன்
1922 ஆகஸ்ட்
1924 செப்டெம்பர் 3
செப்டெம்பர் 27
1925 டிசம்பர் 17
1928 ஜனவரி
1931 GLD
ஜுன்
ஜுலை
ஸிம்லாவில் இலங்கைக்கு இந்தியக் கூலிகள் சம்பந்தமான விசாரணையில் சாட்சியம்
தேசபக்தன் வார இதழ் சட்டநிரூபணசபைக்குப் போட்டியிட்டு தோல்வி
சட்டநிரூபணசபை இடைத்தேர்தலில் வெற்றி
டொனமூர் ஆணைக்குழு முன்சாட்சியம்
சம்பளக்குறைப்புக்கெதிராக 5000 தொழிலாளர்களைத் திரட்டி அட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் கூட்டம் நடாத்த நடேசய்யருக்கு அனுமதி மறுக்கும் தீர்மானம் கண்டி மாகரசபையில் நிறைவேற்றப்படல்
இண்டியன் எஸ்டேட் லேபரர் ஆங்கில வார இதழ்
1932
I933
1936
இந்தியாவுக்கு ஒரேயடியாகப் போகத் தீர்மானித்து அட்டன் புகையிரத நிலையத்தில் 6000 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நடேசய்யரின் தொழிலாளர் சம்மேளனம் அரசாங்கத்தால பதிவு
செய்யப்படல்
அரசாங்க சபைக்கு தெரிவு
செய்யப்படல்
22

1937 ஏப்ரல் 4
1939 GLD 27
1942
1947
1947
947
1947
பெப்ரவரி 19
ஜூன் 1
GoFu Go ourt 7
நவம்பர் 7
பத்திரிகையாளர் நடேசய்யர்
கமலாதேவி சட்டோபார்த்யாயர், பிரஷ்கேட்டில், என். எம். பெரேரா ஆகியோரை அழைத்து அட்டன் நகரில் மாநாடு
கொழும்பு கதிரேசன் கோயில் முன்றலில் ஐ. எக்ஸ். பெரை ரா (அரசாங்கசபை உறுப்பினர்) அப்துல் அஸிஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ்) ஜி. ஜி. பொன்னம்பலம் (தமிழ்க் காங்கிரஸ்) எஸ். ஜே. வி. செல்வநாயகம் (தமிழ்க்காங்கிரஸ்) ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்தியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டல்
துரைமார் சம்மேளத்துடன் ஏழு
அம்ச திட்டத்தில் கைச்சாத்திடல்
அரசாங்க சபையில் இறுதி பேச்சு
சுதந்திரன் பத்திரிகை தோற்றம்
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மஸ்கெலியாத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுறல்
மரணம், கொழும்பு கனத்தையில்
தகனம்

Page 14
சாரல்நாடன்
கண்டி நகரில்
ஆண்டுதோறும் சமய அடிப்படையில் விழாக்கள் நடாத்தப்படுகின்றன. தீபாவளி, ரம்ழான், நத்தார், வெசாக் என்ற இபயர் களில் பண் டிகைகள் கொண்டாடுகிறோம். இராமாயணத்தைப் பாராட்டிப்
படிக்கின்றோம்.
மனிதர்களுடைய நிழலிலே தேவர்களையும் அசுரர்களையும் காணுகிற முயற்சி என்ற வகையில் இதை நாம் வாழ்க்கையம் சமாகவே ஏற்றுக்
கொண்டுள்ளோம்.
மனிதர்களுடைய நிழலிலே மனிதனையே காண முயற்சி செய்வது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகிவிட்டது.
செயற்கரிய செயல்களைச் செய்து, தமது தடத்தை விட்டுச் சென்ற மனிதர்களுக்கு நினைவுத் தினம் கொண்டாடுவது இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வழிமுறையாகும்.
இன்னும் ஒரு படி சென்று அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைத் தும் சிலை வடித் தும் நினைவாலயங்கள் எழுப்பியும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்று வித்தும் இந்த முயற் சரிகள் மேம்படுத்தப்படுகின்றன.

பத்திரிகையாளர் நடேசய்யர்
அரசியல் செல்வாக்கும் ஆட்சியாளரின் ஆதரவும் பெறப்படும் நேரத்தில் இத்தகுமுயற்சிகள் கல்லூரியாக உருவாவதற்கும் பல்கலைக்கழகமாக உருவெடுப்பதற்கும் வழி பிறப்பதுண்டு. ஒரு மனிதரின் பெயரில் கிராமம் உருவாக்கப்படுவதுவும் நகரம் தோற்று விக்கப் படுவதுவுமுண்டு. சர்வமட்டத்திலும் அங்கீகாரம் பெறும் வேளையில் ஒரு மனிதருக்காக முத் திரை வெளியிடப்படுவதுவுமுண்டு.
இத்தகு செயல்முறைகளுக்கு வழி பிறக்காத நேரத்தில் - ஏன், வழி பிறந்த பிறகும் கூட, மனிதர்களுடைய நிழலிலே மனிதனைக்காணும் முயற்சியாக, மனித முயற்சிகளுக்கு மகோன்னதமான கெளரவம் தரும் நிகழ்ச்சியாக, ஒருவரின் பெயரால் ஆண்டுதோறும் நினைவுப் பேருரைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று இங்கு இடம் பெறும் நடேசய்யர் நினைவுப் பேருரையும் இவ்விதம் வரலாற்று முக்கியத்துவத்துக்கு வழி சமைக்கும் ஒரு முயற்சியாகவே கருதப்படல்
வேண்டும்.
நடேசப் யாரின் நாமம் நாற்பத் திரண் டு ஆண்டுகளுக்குப்பின்னர் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொழும்பு நகரில் அமைச்சர்கள் கெளரவ செ. இராஜதுரை
அவர்களும் கெளரவ. செள. தொண்டமான் அவர்களும்

Page 15
சாரல்நாடன்
நடேசய்யரைப் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டு உற்சாகமூட்டினர். இந்தியத் தூதுவர் ஜே. என். டிக்ஸிட் அவர்கள் நூலின் அமைப்புக் குறித்து மகிழ்வு தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு, 23. 11. 1989ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடேசய்யரின் நினைவு விழா கொண்டாடப்பட்டதுவும் மலையக நூல் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு பண்ணப்பட்டதுவும் - அந்நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல்துறை விற்பன்னர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததுவும் இந்த முயற்சியில் ஒரு மைல் கல்லாகும்.
நடேசய்யர் இந்தச் சிறப்புக்கெல்லாம் மேலானவர்.
தமிழகத்தில் டி. கே. சிதம்பரநாத முதலியாரின் தமிழ்ப் பேச்சைக் கேட்டதனால்தான் பலர் தமிழில் எழுதவும் தமிழ் இலக்கியம் படைக்கவும் விரும்பினர்
என்று கூறுவார்கள்.
இன்று இலங்கையில் தங்களை இந்திய வம்சாவளியினர் என்று கூறிக் கொள்வதில் பெருமையும் புளகாங்கிதமும் அடையுமளவுக்கு ஒரு சமூகத்தினரை விழிப் புறச் செய்த பெருமை கோ தண் டராம நடேசய்யருக்கே உரித்தானது.
1931ம் ஆண்டு அவரால் தோற்றுவிக்கப்பட்ட
"அகில இலங்கை - இந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்" மலையகத்தில் முதலாவதாகத் தோன்றிய
தொழிலாளருக்கான தொழிற் சங்கமாகும்.

பத்திரிகையாளர் நடேசய்யர்
8 தமிழ் ஏடுகளிலும் 4 ஆங்கில ஏடுகளிலும் ஆசிரியராகக் கடமையாற்றிய அவர் தேசபக்தன் என்ற பத்திரிகையை 7 ஆண்டுகள் தொடர்ந்து நடாத்தியதன் மூலம் தமிழ்த் தினசரி ஆசிரியர் களில் மிக முக்கியமானவராகக் காட்சி அளிக்கிறார்.
இன்று புதிய புதிய சான்றாதாரங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
யாழ்ப்பாணத்துக்குக் கலாசாரத் தூதுக்குழு ஒன்றை அனுப்பியிருந்த மலையகக் கலை, இலக்கியப் பேரவையினருக்குத் திருமதி மீனாட்சியம்மை நடேசய்யரின் அச்சில் வெளியான பாடல் புத்தகத்தைப் பார்க்க முடிந்திருக்கின்றது. கலாநிதி மெளனகுரு அவர்களும் சித் ரலேகா மெளனகுரு அவர் களும் இதற்கு உதவியாயிருந்தனர்.
அவர் மரணம் எய்திய 1947ம் ஆண்டு அவருக்கு 55 வயது என்ற தகவலின் பேரில் அவரது பிறந்த ஆண்டு 1892 என்று நிர்ணயிக்க முடிகிறது. சரியான பிறந்ததேதி அறிய முடியாது போனது நமது அவப்பேறே?
முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் பிறந்த குறிப்பு நமக்குக் கிடைத்திருந்தும், அவரது தந்தையார் அவருடைய பிறந்த தேதியென 3. 5. 1892 ஐக் குறித்திருந்தும், சிலப்பதிகாரப்பதிப்பு வெளிவந்த ஆண்டில் தான் பிறந்ததாக விபுலானந்த அடிகள் யாழ் நூலில் குறிப்பிட்டிருப்பதால் குழம்பிப் போயிருக்கும் அறிவுலகம், நடேசய்யரின் பிறப்புத் தேதியை அறிந்து கொள்வதில் எதிர் கொள்ள வேண்டிய சிரமம் மேலதிகமான ஒன்றே.

Page 16
சாரல்நாடன்
நடேசய்யரைப் பற்றி இது வரை தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு நூல் போதுமானதாக இல்லை. பலகோணங்களில் அவரைப்பற்றிய ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
தொழிற் சங்கத் துறையில் அவரது முனைப்பான பணிகளைப் போன்றே அரசியற்றுறையில் அவரது முற்போக்கான சிந்தனைகளும் தீவிரமான கருத்துக்களும் ஆராய்ச்சிக்குட்படுத்தப்படவேண்டிய சிறப்புக்குரியன.
1911 - 1930 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சேர். பொன். இராமநாதன் தேசிய அரசியலில் கொடிகட்டிப் பறந்ததைப் போல, 1930 - 1940 காலப்பகுதியில் நடேசய்யரின் அரசியல் ஆளுமை மலையகத் தே சரியத் தலைவராக அவரை உயர்த்துமளவுக்குத் தனித்து மிளிர்ந்திருப்பதைக் காணலாம்.
இவற்றுக்கும் மேலாக, இலக்கியத்துறையிலும் பத்திரிகைத் துறையிலும் அவருடைய பணிகள் உடனடி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவேண்டிய தவசியமாகும். "தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்" என்ற நூலின் மூலம் நடேசய்யர் மலையகத்தின் படைப்பிலக்கியத்துக்கு அடி எடுத்துக் கொடுத்தார். எனவேதான் அவரது பெயரில் இன்று ஆரம்பமாகும் நடேசய்யர் நினைவுப் பேருரையின் முதற் சொற்பொழிவு, மலையக இலக்கிய வளர்ச்சி என்ற தலைப்பில் அமைவதில் நாம் மிகவும்
பெருமை கொள்கிறோம்."

பத்திரிகையாளர் நடேசய்யர்
தன்னுடைய பத்திரிகைகளாலும் அவைகளில் வெளியான தன்னுடைய எழுத்துக்களாலும் அச்சில் வெளியான தன்னுடைய பதினான்கு நூல்களாலும் "மூலையில் குந்திய முதியோன்" என்ற தனது நாவலாலும் மலையக இலக்கியத்துக்குத் தோற்றுவாய் அமைத்துக்
கொடுத்தவர் நடேசய்யராவார்.
நடேசய்யர் குறுநாவல் போட்டி ஒன்றை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் "கொழுந்து" பத்திரிகை தனது இலக்கியப் பயணத்தை ஆரோக்கியமான திசை நோக்கி ஆரம்பித்துள்ளது என நம்பலாம். இலங்கையில், எழுத்தால் மிகப் பெரிய துரோகம் இழைத்தவர் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளருக்குப் பொலிஸ் தகவல்கள் இங்கிருந்து போகுமளவுக்கு அவரது எழுத்தில் தீவிரமிருந்தது.
பிரிட்டிஷாரே எச்சரிக்கை என்று தலைப்பிட்டுக், கட்டுரை எழுதும் துணிவு அய்யருக்கிருந்தது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று அவனியில் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஆங்கிலேய ஆட்சி இலங்கையில் நடந்து கொண்டிருந்த காலத்தில், "சாம்ராஜ்யம் ஆட்டம் காணுகிறது; அழிவு ஏற்படுவது நிச்சயம்," என்று கட்டுரை எழுதும் துணிவு அய்யருக்கிருந்தது. இங்கிலாந்துக்குத் தகவல் பறந்தது இலங்கையிலிருந்து அய்யரை நாடு கடத்த வேண்டுமென்று அரசாங்க சபை உறுப்பினர் என்ற கேடயத்தில் அய்யர் தப்பிக் கொண்டார். தொழிலாளர்களைத் தூண்டுவித்து நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கும் அவரது பிரமாண்டமான அரசியல் கூட்டங்களால் மருண்டு போன ஆட்சியினர் அவரது அரசியல் கூட்டத்துக்கு அனுமதி மறுத்தனர்.

Page 17
சாரல்நாடன்
இன்று இதே கண்டி நகரில், அய்யரது நினைவுப் பேருரையை, ஐம்பத்தெட்டுக்கால இடைவெளிக்குப் பின் ஒழுங்கு பண்ணியிருக்கின்றோம்.
கருத்து வலுவில்லாவிட்டால் காலம் அடித்துக் கொண்டு போய் விடும். வலுவிருந்தால் நின்று நிலைக்கும். காலத்தை வென்று நிலைக்கும்.
நாற்பத்தெட்டாண்டுகள் உருண்டோடி விட்டன.- நடேசய்யர் என்ற மாமனிதர் நம்மிடமிருந்து பிரிந்து சென்று - நம்மிடையே அவரது கருத்துக்கள் இன்று புதிய உருவெடுப்பதைக் காண்கிறோம்.
அவர் அச்சில் விட்டுச் சென்ற எழுத்துக்கள் ஆற்றல் மிகுந்தவை என்பது இன்று வெகுவாக உணரப்படுகின்றது. சரித்திரம் படைக்கும் சக்தி அவ்வெழுத்துக்களுக்கு உண்டு என்பதை இன்று சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மலையகத்தில் இன்று பூத்துக் குலுங் க ஆரம்பித்திருக்கும் மலர்ச்சிக்கு வித்திட்டவர் அவர் தான்.
மலையகத்தில் கலையும் இலக்கியமும் வளர்க்க முனைபவர்கள் என்று மாத்திரமல்ல - தமக்குச் சம்பந்தமில்லாது வளர்கின்ற கலைகளையும் இலக்கிய முயற்சிகளையும் கவனத்துடன் அவதானித்துக் கரிசனையுடன் உள்வாங்கிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்ற கற்றறிந்தவர்கள் கணிசமாக இன்று
தேவைப்படுகின்றார்கள்.

uğšśfleredasuum ser ñ 5Gus uiuuuử
இவ்விதத்தில் மலையகத்தை மனப்பூர்வமாக நேசித்து இங்கு ஏற்படுகின்ற மாற்றங்களை வரவேற்று வாழ்த்துப் பாடுபவர்களின் தொகை நாள்தோறும் கூடி வருவதைக்
காண முடிகிறது என்பது களிப்புத் தரும் செய்தியாகும்.
இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர்கள். அவர்களுள் ஒருவரான கலாநிதி க. அருணாசலம், "தோட்டத்துறை" என்றதோர் ஆய்வுத்துறை தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கு முதற் காரணராக இருந்துள்ளார். மலையக இலக்கியம் குறித்து நிறைய ஆய்வுகள் செய்துள்ளார். மலையக இலக்கிய வளர்ச்சி என்ற பொருளில் அவர் இன்று நடாத்துகின்ற உரை, நடேசய்யர் நினைவுப் பேருரையின் தொடக்கமாக அமைவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நினைவுப் பேருரை என்ற நிகழ்வு, மலையகத்தைப் பொறுத்தமட்டில் ஒரு புது வரவாகும். மேன்மேலும் இவ்வரவு வளர வேண்டும். வரவு, வரவு என்றே மலையகத்தின் வரலாறு வளர
வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. சாரல் நாடன் எழுதிய தேசபக்தன்
கோ. நடேசய்யர் என்ற நூல் 7, 8. 1988ல் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

Page 18
சாரல்நாடன்
2. அவரது பிறப்புக்குறித்த விபரங்கள் இந்நூலில்
சேர்க்கப்பட்டுள்ளன.
3. கோ. நடேசய்யர் நினைவுப் பேருரை சாரல் நாடன் தலைமையில் கண்டி சத்யோதயவில் 1989ல் இடம்பெற்றது. (10 - 12 - 1989)
4. நினைவுப் பேரு ரை யைப் பேராதனைப்
பல்கலைக்கழகக் கலாநிதி க. அருணாசலம் நிகழ்த்தினார்.
குறிப்பு: சாரல்நாடன் நிகழ்த்திய தலைமை உரை இங்குக் கண்டி நகரில் எனப் பிரசுரமாகியுள்ளது.

பத்திரிகையாளர் நடேசய்யர்
அறிமுகம்
இலங்கையின் முதல் தமிழ்ச் செய்தி நாளேடு எது என்பது இன்று வரையிலும் ஒரு தர்க்கத்துக்குரிய விடயமாகவே அமைந்துள்ளது.
மூலச்சான்றுகளுடன் விரிவாக இது இன்னும் ஆராய்ந்து நிறுவப்படவில்லை.
சிங்களப் பத்திரிகை உலகிலும் இது போன்ற ஒரு நிலைமையே உள்ளது. லங்காலோகயா, லக்மினிபஹண என்ற இரண்டிலும் முதல் சிங்களப் பத்திரிகை எது என்பதில் இன்னும் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
தமிழகத்திலும் முதல் செய்தித் தமிழ் ஏடாகச் கருதப்பட்ட சுதேசமித்திரன் ஏட்டுக்கு முன்னரே லத்தலி பிரச் னோதயா என்ற ஒரு தமிழ் நாளிதழ் வெளிவந்துள்ளதாக இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகை குறித்து ஆராய்ந் தெழுதியவர்கள் நடேசய்யர் நடாத்திய பத்திரிகைகள் பற்றிய பூரணமான அறிவைப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. அவரது பெயரை மேலோட்டமாக அவ்வப்போது கூறுவேதாடு அமைந்து போனார்கள். அவரது பத்திரிகைப் பணிகள் ஆழமாக ஆராயப்பட வேண்டிய தவசியம்.
அவர் நடாத்திய பத்திரிகைகளில் பல இன்று பார்க்கக் கிடைக்கவில்லை. அரிதின் முயன்று தேடிப்பெற முடிந்த பத்திரிகைகளைப் பற்றிய தகவல்களையும் அவையொட்டி எழுந்த கருத்துக்களையும் இந்நூலில்
" காணலாம்.

Page 19
சாரல்நாடன்
நடேசய்யரின் பணிகளையும் பத்திரிகையுலகுக்கு அவராற்றிய பங்களிப்புக்களையும் இனம், மொழி என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்கி மறைத்து வைத்திருந்த இலங்கை அரசியல் வாதிகளினதும் மேல்மட்டக் கற்றறிவாளர் களினதும் பரி டி க்குள் ளரிரு ந் து வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
இலங்கைவாழ் இந்தியவம்சாவளி மலையகத் தமிழரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இலங்கை காலனித்துவக் காலத்திலிருந்து விடுபடுவதற்கு முன்னர், ஆங்கிலேயர்களாலும் சிங்களவர்களாலும் எழுதப்பட்ட
நூல்கள் ஓரளவுக்கு உதவுகின்றன.
இக்காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளும் இந்தப் பணியைச் செய்துள்ளன. தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான பத்திரிகை முயற்சிகள் மேற்
கொள்ளப்பட்டுள்ளன.
அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி, அவை குறித்த விமர்சனக் கருத்துக்கள் தாங்கிய கட்டுரைகளை வெளியிட்டு வைப்பதில் நடேசய்யர் சம்பந்தப்பட்டிருந்த பத்திரிகைகள் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளன.
வரலாற்றின் டயறிகளாக அவை மிளிர்கின்றன எனலாம். அவரது பத்திரிகைகள் ஒரு சகாப்தத்தின் தகவற் களஞ்சியமாக விளங்கி, தேசிய வாழ்வில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பைப் பறைசாற்றுகின்றன. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண் டியத் துவம் பெற் றிருந் த ந டே சய் யார்

பத்திரிகையாளர் நடேசய்யர்
மொழிபெயர்ப்புத் திறன், நூலியற்றும் திறமை, கதை எழுதுமாற்றல், பேச்சாற்றல், தொழிற்சங்க அறிவு ஆகியனவும் மிக்கவராக இருந்துள்ளார்.
அவரது அகன்ற அறிவாற்றலும் பரந்த நூலறிவும் அவரது பணிகளை முன்னெடுத்துச் செல்ல உதவின.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழகத்தில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி வரை வாழ்ந்து சரித்திரம் படைத்த பலரில் நடேசய்யரும் ஒருவரே.
தொழிற்சங்கவாதியாகவும் அரசியல்வாதியாகவும் அவரை அறிந்து வைத் திருக்கும் அளவுக்குப் பத்திரிகையாளராகவும் அவரை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
大大大

Page 20
சாரல்நாடன்
தேசிய வீரர்
இலங்கையின் தேசிய வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட வேண்டியவர் கோ. நடேசய்யர். 'பல்லின மக்களை உள்ளடக்கிய இலங்கையில், மலையக மக்களிடையே இணையற்ற முறையில் தேசிய சேவையில் ஈடுபட்டிருந்த நடேசய்யரின் சேவை - தோட்டத் தொழிலாளர்களின் நலத்தில் அக்கறை மிகுந்தவர்களின் செயற்பாடுகளில் மகத்தானதாக அமைந்திருப்பதால், தேசிய வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்த புருஷர்களில் உன்னதமான ஒருவராக அவர் மிளிர்கின்றார்" என்று இலங்கை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பகிரங்க மேடையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற அரசாங்க வைபவம் ஒன்றில் , தேசிய வீரர்கள் தினக் கொண்டாட்டத்தின் போது, 1990ம் ஆண்டில் இந்தப் பிரகடனம் செய்யப்பட்டது.
நடேசய்யர் மரணித்து நாற்பத்து மூன்று ஆண்டுகளின் பின்னால் இவ்விதமான ஓர் அங்கீகாரம் கிடைப் பது, அவருடைய மகத் துவத் தை வெளிப்படுத்துவதோடு, அவருடைய மேன்மையை விளங்கி முழுமையாகப் பயன்பெறாது போன ஒரு சமுதாய அவலத்தையும் வெளிப்படுத்துகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இவ் வெளிப்பாட்டை உணர்த்தும் கவிதை, கட்டுரைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் சமீப காலமாக ஏராளமாகவே வெளிவர ஆரம்பித்துள்ளன.

பத்திரிகையாளர் நடேசய்யர்
நடேசய்யரின் பணிகளை விளக்கும் நூல் ஒன்று இந்நூலாசிரியரால் எழுதப்பட்டுள்ளது.
அவரது பணிகளின் பயன்களை உணர்ந்து சமீபத்தில் அச்சில் வெளியான சில நூல்கள் அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரில் அவர் பணியாற்றிய 'மல்லிகைப் பூவுக்கருகில் அமைந்த கிராமத் தெரு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பண்டாரவளை லியோ மார்கா ஆஸ்ரம் அவரது பெயரில் நூலகம் ஒன்றை நடாத்துகிறது.
தமது குறுகிய சுயநல நோக்கில் தாமே நிர்ணயித்துக் கொண்ட வட்டத்துக்குள் நடேசய்யர் என்ற துணிகரம் மிகுந்த மனிதனை அங்கீகாரம் செய்ய மறுத்தவர்கள், பரிதாபத்துக்குரியவர்களாகக் கால ஓட்டத்தில் இன்று
மறக்கப்பட்டு வருகிறார்கள்.
நடேசய்யரை ஒரு தொழிற்சங்கவாதியாக அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவரது பிற ஆளுமைகளை இன்னும் வெளியுலகு அறியவில்லை. கற்றறிந்தவர்களும் திறனாய்வாளர்களும் வரலாற்றாசிரியர்களும் சமூக ஆய்வாளர்களும் அவரது பன்முக ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு வெகுவாகத் தவறி விட்டனர்.
தமது பாரிய பங்களிப்பினால் நடேசய்யர், இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் பத்திரிகை வெளியீட்டுத்துறையிலும் நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் தம்முடைய முத்திரையை ஆழமாக பதித்துச் சென்றுள்ளார்.
37

Page 21
சாரல்நாடன்
அவர், தம்மை ஒரு பத்திரிகையாளன் என்று கூறிக் கொள்வதில் அளவற்ற விருப்பமும் பெருமையும் கொண்டிருந்தார்.
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தன்னை ஒரு பத்திரிகையாளன் என்று வெளிப்படுத்திக் கொள்வதில் அவர் பெரு மிதம் அடைந்தார் . தன்னுடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் அந்தப் பெருமித
உணர்வை இழையோடச் செய்தார்.
அவருடைய அத் தகு உணர்வுபூர் வமான வார் த்தைகள் அரசாங்க சபைப் பதிவேடான ஹன்சார்ட்டில் பதிவாகி உள்ளன. எழுத்துக்கள் அவர்
நடத்திய பத்திரிகைகளில் சுடர் விட்டு ஒளிர்கின்றன.
இன்றைய தலைமுறையினருக்குக் காணக் கிடைக்கும் அவரது எழுத்துக்கள், அவரைப் பற்றிய ஆவணங்கள், அரசாங்கக் குறிப்புக்கள், பொலிஸ் அறிக்கைகள், ஹன்சார்ட் பதிவேடுகள், ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு நூல்கள் அனைத்திலும் அவர் ஒரு ஜேர்னலிஸ்ட் ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளதை நம்மால் அவதானிக்க முடிகிறது.
எழுத் தின் வன் மையாலும் பத் திரிகை ஆளுமையாலும் சாகும் பரியந்தம் நடேசய்யர் தன்னில்
தக்க வைத்துக் கொண்ட பெருமை இதுவாகும்.
தேசபக்தன் ஏட்டில் வெளியான 'வாழ்க்கைக் குறிப்புக்கள்' என்ற தொடர் கட்டுரையில்" தான் ஒரு பத்திரிகையாளன் என்றே குறிப்பிடுகின்றார்.

பத்திரிகையாளர் நடேசய்யர்
அரசாங்க சபைப் பிரவேசத்தின் போது, சபை நடவடிக்கைகளில் பங்கேற்ற பல நேரங்களில் தான் ஒரு பத்திரிகையாளன் என்பதில் பெருமையடைவதாக
வாய் விட்டுப் பகிரங்கப்படுத்துகின்றார்.
அவருடைய பத்திரிகைப் பணிகள் தனியாக ஆராயப்படும் அளவிற்குச் சிறப்பானவைதாம். ஏனெனில், இலங்கையின் இன்றைய தேசிய தினசரிகளான வீரகேசரி, தினகரன் ஆகியவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே தினசரி வெளியிட்டுத் தமிழ்ப்பத்திரிகை வெளியீட்டில் தனியானதோர் இடம் தேடிக் கொண்டவரவர்.
நடேசய்யர் இலங்கையில் பத்திரிகை நடத்திய
அக்காலப்பகுதியில் பாரதத்தில் பத்திரிகைத் துறை எவ்விதமிருந்தது என்று தெரிந்து கொள்வது நலம்.
பத் திரிகைப் பேச் சே இல் லாத நாளில் பத்திரிகையொன்றை ஜனங் களின் இடையே நுழைக்கிறதென்றால் அது என்ன லேசா? ஆகவே , சென்னையரசாங்கத்தினரே இதற்கு ஒரு தூண்டுதலாய் முன் வந்து 'ஜநவிநோதினி' என்ற ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி ஜனங்களுக்கு அனுப்பிப் பார்க்க முயன்றார்கள். அதற்கென்றே ஒரு பண்டிதக் கூட்டத்தையும் ஏற்படுத்தினார்கள். பத்திரிகையில் ருசி பிறக்கச் செய்வதற்கு அதிலே நல்ல நல்ல கதைகள் எழுத வேண்டுமென்று தீர்மானித்து அ ப ப டி யே தங்கக் கட்டிகளான கதைகளை எழுதத்தொடங்கினார்கள். அந்தக் கதைகளுக்காக ஜனங்கள் பத்திரிகைகளை வாசிக்கவும் ஆரம்பித்தார்கள் என்று "பழங்காலத்து
* கட்டுரை குறிப்பிடுகின்றது.
பத்திரிகைக்காரர்கள்"

Page 22
சாரல்நாடன்
'ஜநவிநோதினி பத்திரிகை தமிழிலும், தெலுங்கிலும் வெளியிடப்பட்டது. இருபதாண்டுகளுக்கு மேலாக வருந்தி ‘உழைத்ததன் பயனாக ஜநவிநோதினியில் வெளியான தமிழ்ப் படைப்புகள் நூலாக்கப்பட்டு, பின்னர் பாடப் புத்தகங்களாகும் தகுதி பெற்றன. தெலுங்கில் சப்த ரத்னாகரம் என்ற பெயரில் ஒரு புது அகராதி வெளிவந்தது.
இதே விதத்தில் சென்னை அரசாங்கத்தினரின் ஆத ரவு பெற். ற தின வர் தி த மானி என் ற வாரப் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரைகள் சேகரிக்கப்பட்டு விநோத ரச மஞ்சரி என்ற பெயரில் நூலாக வந்து சிறப்புப் பெற்றது.
பாரதத்தில் புதிதாகப் பத்திரிகை ஆரம்பிப்பதில் உள்ள நெருக்கடிகளையும் பண முதலீட்டுக்கான இடைஞ்சல்களையும் மீறி வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு அரசாங்கத்தாரின் ஆதரவு இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இலங்கையில் நடேசய்யரின் ஆரம்பக் கால தமிழ்ப்பத்திரிகை முயற்சிகளைக் கணக்கிலெடுத்துப் பார்க்கையில் அவரது பணியின் மகத்துவத்தை எளிதில் உணரலாம்.
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த காலப்பகுதியில் தமிழ்ப் பத்திரிகை நடாத்துவதற்கு முயற்சி அதிகமாகவும் முயற்சி செய்பவர்களின் அறிவு விசாலமானதாகவும் இரண்டுக்கும் மேலாக மனம் ஒப்பிய அர்ப் பணிப்பு முழுமையான தா னவும் இருக்க வேண்டியிருந்திருக்கும் என்பதை ஊகித்தறிவதில் சிரமமில்லை.
இந்தப் பின்னணியில், குடியேறிய நாடொன்றில் அதுவும் அரசாங்கத்தினரை எதிர்த்துக் கொண்டு, பத் திரிகை ஒன்றைப் புதிதாக ஆரம்பித் து

பத்திரிகையாளர் நடேசய்யர்
நடாத்துவதென்பது அசுரத்தனமான செயல்தான். இயல்புக்கு மீறிய ஆற்றலும் அறிவும் திட்பமும் உள்ள ஒரு வருக்கே இது சாத்தியப்படும்.
இலங்கையில் இதனைச் சாத்தியமாக்கியவர் கோதண் டராம நடேசய்யர் என்பவர் என்பது பெருமைக்குரிய ஒன்றுதான்.
நடேசய்யர் இலங்கைக்கு வந்ததற்குப் பிரதானமான காரணம் இந்தியாவில் அவர் நடாத்தி வந்த பத்திரிகையாகும்.
அவர் தஞ்சாவூரிலிருந்து வர்த்தகமித்ரன், சுதந்திரன் என்ற பத்திரிகைகளை நடாத்தியதாக அறிய முடிகிறது. இந்த இரண்டு பத்திரிகைகளிலும் அவருக்கு உதவியாகப் பணியாற்றியவர் புகழ் மிகுந்த வ. ரா என்றறியப்பட்ட ராமசாமி அய்யங்கார் .
சுதந்திரன் பத்திரிகை பார்வைக்குக் கிட்டவில்லை. நடேசய்யரின் கட்டுரை (தேசபக்தன் 15 - 9 - 1924) ஒன்றிலும் ஏ.எஸ் ஜோன் என்பார் வெளியிட்ட குறிப்பு (சத்யமித்ரன் 29 - 10 - 1927) ஒன்றிலும் சுதந்திரன் பற்றி எழுதப்பட்டுள்ளது. இந்த இரண்டு பத்திரிகைகளும் இலங்கைத் தேசிய சுவடித் திணைக் களத்தில் காணக்கிடைக்கின்றன.
மணிக்கொடி கு. பூரீநிவாஸன் எழுதிய வ. ரா வாசகம் என்ற நூலிலும் சுதந்திரன் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
உண்மை இவ்விதமிருந்தும் வர்த்தக மித்ரன்,
சுதந்திரன் " என்ற இரு பத்திரிகைகளைப் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் வ. ரா. வின் பெயர்

Page 23
சாரல்நாடன்
குறிப்பிடப்படுகின்ற அளவுக்கு நடேசய்யரின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. இப்பத்திரிகைகளை ஆரம்பித்து நடாத்தியவரே நடேசய்யர் தான் என்பது பலருக்கு இன்னும் தெரியாமலே போய்விட்டது. தமிழிதழியல் குறித்து ஆய்பவர்கள் கூட இவ்விதமே எண்ணத் தலைப்படுகின்றார்கள்.
"வர்த்தக மித்ரன் என்ற பெயரோடும் பின்னால் சுதந்திரன் என்ற பெயரோடும் 35 வருஷங்களுக்கு முன்னால் தஞ்சையில் வரா பத்திரிகை நடாத்தி வந்தார்" என்ற தவறான கூற்று இதை மெய்ப்பிக்கும்.
நடேசய்யரின் முதல் இலங்கை வருகை வர்த்தக மித்திரன் பத்திரிகையோடு தொடர்புடையது. அந்தப் பத்திரிகைக்குச் சந்தா சேகரிக்கும் முக்கிய நோக்கம் கொண்டே அவர் இலங்கைக்கு வந்தார்.
இன்று போல் கடைகளில் விற்பனைக்கு வைக்கும் வசதிகள் இல்லாத காலப்பகுதியில், பத்திரிகைகள் முற்றாகவே சந்தாதாரர்களை நம்பியே வெளியாகின.
பத்திரிகைகள் நேரடியாக அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டன. பெரும்பாலான பத்திரிகைகளுக்குத் தனி இதழுக்கான விலை குறிக்கப்படுவதில்லை, சந்தா விபரம் மாத்திரமே குறிக்கப்பட்டுள்ளன. இதன் காரணம் இச்சந்தா முறையே ஆகும்.
இன்று நாம் சந்தாதாரர் என்று குறிப்பிடுவதை முன்பு கையொப்பக்காரர் என்று குறிப்பர். சப்ஸ்கிரை பர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி மொழி பெயர்ப்பு அதுவாகும். தமிழ் நாட்டில் சுப்பிரமணிய பாரதியார் உட்படப் பெரும்பாலான பத்திரிகையாசிரியர்கள் கையொப் பக் கா ரர் கள் என் ற சொல் லைப்
42
பாவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் நடேசய்யர்
நடேசய்யரோ தன்னுடைய வர்த்தக மித்ரனில் சந்தா நேயர்கள் என்று இன்று நாம் வழங்கி வரும் சொல்லை எண் பது ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியுள்ளார்.
சந்தா நேயர்களின் ஆதரவு இல்லாது போனால் பத்திரிகையைத் தொடர்ந்து நடாத்த முடியாது. மக்களின் ஆதரவோடு தொடர்ந்து வெளிவரும் பத்திரிகைகள் கூடச் சந்தாதாரர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரும் பட்சத்தில் சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றன.
சுப்பிரமணிய பாரதியார் நடாத்திய பத்திரிகைகளில் இந்தியா, சூரியோதயம், விஜயா என்ற மூன்றுக்கும் ஒரு சிறப்புண்டு. இம்மூன்று பத்திரிகைகளிலும் பாரதியாரின் அரசியல் எழுத்துக்கள் ஒரே காலத்தில் வெளியாகின. அவரது அரசியல் நடவடிக்கைகளை அவதானித்த சென்னை அரசாங்கத்தினர் தபாலாபீஸில் சேர்க்கப்பட்ட இப்பத்திரிகைகளைச் சந்தாதாரர்களுக்கு சென்று சேராது தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சந்தாதாரருக்குக் கொடுபடவில்லையென்ற போது இம்மூன்றும் திடீரென்று நின்ற போக நேர்ந்து விட்டது. தபால் மூலமாக அனுப்ப முடியாது போகையில் பாரதியாரின் பத்திரிகா முயற்சிகள் யாவும் அடியுடன் நின்று போயின என்ற கூற்று (அமிர்த குண போதினிஜனவரி 1929, 15ம் பக்கம்) கவனிக்கத்தக்கது.
இந்தியாவிலுள்ள சந்தா வர்த்தக மித்ரனுக்குப் போதவில்லை. கடல் கடந்த நாடுகளிலும் அதனைப் பெறும் முயற்சியிலீடுபட்ட நடேசய்யர் மலேயா, பர்மா,

Page 24
காரல்நாடன்
இலங்கை, அந்தமான் ஆகிய இடங்களிலிருந்தெல்லாம் தனது பத்திரிகைக்குச் சந்தா பெறுவதில் வெற்றி
56όοτι πή.
கடல் கடந்த நாடுகளில் நடேசய்யருக்குத் தொடர்பு
ஏற்பட்டதுவும், அந்த நாடுகளுக்கு அவர் பிரயாணங்கள் மேற் கொண் டதுவும் அவரது பத் திரிகைத் தொடர்பினாலும் ள்ழுத்தாற்றலாலும் சாத்தியமான
நிகழ்வுகளாகும்.
தொழிற் சங்கத் துறையில் ஈடுபாடும் அரசியலில் ஆர்வமும் கொண்டிருந்த அவருக்கு இவ்விரு துறைகளில்
சுடர் விட்டுப் பிரகாசிக்கும் அளவுக்கு உதவியது அவரது பத்திரிகை ஆளுமை என்பது மனதிற் கொள்ளத்தக்கது.
வர்த்தக மித்ரன் சந்தாதாரர்களை அதிகரிக்க வேண்டி இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தை
"இலங்கைத் தீவு சென்று மித்திரனுக்காக வேலை செய்தவுடனே அங் கிருந்த நிலைமையைக் கண்டறிந்து இந்திய வர்த்தகர்க்குள் ஒரு வர்த்தக சங்கத்தை ஸ்தாபிப்பதற்குத் தூண்டு கருவியாக இருந்தார்" என்ற ஆசிரியர் தலையங்கத்தில் காணலாம். (வர்த்தக மித்ரன் 6- 6- 1918 பக்கம் 4) இத்தலையங்கத்தில் மேலும், "தமிழ் நாட்டில் பல இடங்களிலும் அவர் பிரசங்கங்கள் செய்தாரென்றும், அக்காரணத்தால் பலவிடங்களிலும் வர்த்தக சங்கங்கள்
ஸ்தாபிக்கப்பட்டன என்றும்" எழுதப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நடேசய்யர்
இப்பத்திரிகையில் "சந்தாநேயர்களுக்கு வெளியிடும்
வேண்டுதலில் பத்ராதிபர், நண்பன் கோ. நடேசய்யர்" என்று குறித்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுதல்
வேண்டும்.
பத்திரிகைகள் அய்யரைப் பொறுத்தவரை அச்சில்
வார்த்தஆயுதங்கள். கூனிக் குறுகிக் கிடந்த மக்களை,
ஏணிப் படிகளாகப் பிறர் ஏறி மிதிக்கப் பயன்பட்ட
மக்களை நாடி பிடித்து அழைத்து வரஅவற்றைப், அவர் பயன்படுத்தினார்" என்ற மதிப்பீட்டைக் கற்றறிந்த ஆய்வாளர் உலகம் அட்டியின்றி இன்று
ஏற்றுக் கொண்டுள்ளது.
அடிக்குறிப்புகள்
:
இராஜாங்க அமைச்சர் கெளரவ பி. பி. தேவராஜ் அவர்களின் பேச்சு -வீரகேசரி - 26, 5. 1990. தேசபக்தன் கோ. நடேசய்யர் -சாரல் நாடன் -
1988. (அ) இருபதாம் நூற்றாண்டின்
நவீன அடிமைகள் - மோகன்ராஜ் - சென்னை. (ஆ) மலையகமும் இலக்கியமும் - அந்தனி ஜீவா
கொழும்பு- 1996. (இ) யத்தன்சைட் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மலர் - கொட்டகலை- 1994. தேசபக்தன் - 3, 9, 1924. அமிர்த குணபோதனி - 12, 3, 1929. தமிழ், இதழியல் சுவடுகள்- அ. ம. சம்பந்தன். தேசபக்தன் கோ. நடேசய்யர்- சாரல்நாடன் .

Page 25
சாரல்நாடன்
வர்த்தக மித்ரன் The Merchant's Friend
தஞ்சாவூரிலிருந்து 1915ல் வெளிவர ஆரம்பித்த இந்த வியாபார சஞ்சிகை ஆரம்பத்தில் மாதம் இரு முறையாகவும் பின்னர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளிவரும் வாராந்தரியாகவும் வளர்ச்சியடைந்தது. தனது 23வது வயதில் நடேசய்யர் இப்பத்திரிகையை நடாத்தினார் என்பது கவனத்திற்குரியது. இந்தச் சஞ்சிகைக்கு இந்தியா, பர்மா, சிலோன், பினாங்கு, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் சந்தா செலுத்தும் வாசகர்கள் இருந்தனர்.
இக் காலப்பகுதியில் தொடர்ச்சியாகத் தமிழ் மொழியில் வெளியிடப் பட்ட சஞ் சரிகைகள் பெரும்பாலானவற்றிற்கும் ஏறக்குறைய இந்நாடுகளில் சந்தாதாரர்கள் இருந்துள்ளனர். காரணம் இங்கெல்லாம் இந்தியத் தமிழ் மக்கள் குடியேறியிருந்தனர். அவர்களுக்குத் தமிழகத்தோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பிருந்தது.
சுப் பரிர ம னரிய பாரதரியார் நடாத் திய சஞ்சிகைகளுக்குத் தென்னாபிரிக்காவிலும் சந்தாதாரர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக மித்ரன் சஞ்சிகையின் பதிவு எண் எம். 1211 வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலிய விடயங்களுடன் வெளிவந்த இச்சஞ்சிகையின் ஆசிரியர் கோ. நடேசய்யர். இவரின் கீழ் இதே சஞ்சிகையில் வ. ரா. கடமையாற்றியுள்ளார்.
வணிகத்துறை சம்பந்தமாகத் தமிழில் வெளிவந்த இரண்டாவது சஞ்சிகை வர்த்தக மித்ரன் என்று அறியப்படுகின்றது. இதற்கு முன்னர் துண்டு வர்த்தமானம் என்ற சஞ்சிகை 1910ல் வெளிவந்துள்ளது.

பத்திரிகையாளர் நடேசய்யர்
"ஏனைய பத்திரிகைகள் நாட்டின் தற்கால நிலையைச் சீர்ப்படுத்தி உயர்த்த வேண்டும் என்று சொல்கின்றன. நமது மித்ரனோ அதை எவ்வாறு செய்வது என்னும் வழியைக் காட்டுகிறது; ஜனங்களின் கண்களைத் தொழில் துறைகளில் திருப் பி விடுகிறது. தொழில் முன்னேற்றத்துக்குச் செய்ய வேண்டிய காரியங்களே நமது மித்ரனின் நோக்கமாக இருக்கிறது," என்று இச்சஞ்சிகையின் மூன்றாவதாண்டின் முதல் இதழில் எழுதிய "நாம்" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள நடேசய்யர், தனக்கு நிறைந்த அளவில் சிரமங்களும் நட்டங்களும் ஏற்பட்டிருப்பினும் ஊக்கமது கைவிடேல் என்னும் முதுரைக்கிணங்க எடுத்துக் கொண்ட காரியத்தைக் கைவிடாமல் வர்த்தக மித்ரனை நடாத்தி வருவதாக அறிவிக்கிறார்.
சஞ்சிகை வெற்றிகரமாக நடைபெற்றதென்பதை மு த லா மாண் டு மாத மிரு முறையாக இருந்த பத் திரிகையான து இரண் டா மாண் டி ல் வாராந்தரியாக்கப்பட்டதாலும், இரண்டாமாண்டில் சொந்தமாக அச்சகசாலை அமைக்கப்பட்டதாலும் இந்த இரண்டையும் செய்த போதும் சந்தா உயர்த்தப்படாது ஆரம்ப காலச் சந்தாவே தொடர்ந்தும் நீடித்தது என்பதாலும் அறியலாம்.
தமிழ் மொழியில் பல பத்திரிகைகள் நாட்டில் வெளிவந்தாலும் நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்யும் பத்திரிகை வர்த்தக மித்ரன் ஒன்றே என்று பெருமிதத்துடன் பறைசாற்றும் நடேசய்யர் தனது கூற்றுக்கு ஆதாரமாக ஒரு வருடத்தில் தனது பத்திரிகையில் வெளியான கட்டுரைகளின் விவரங்களைக் கூறுகிறார்.
"கைத் தொழில் விஷயமாக 63. வியாசங்களும் விவசாய விஷயமாக 29 வியாசங்களும் வியாபார விஷயமாக 40ம் கல்வி விஷயமாக 15ம் பொருளாதார விஷயமாக 41ம் வியாபாரச் சங்கம், ஒற்றுமை, கூட்டுறவு

Page 26
சாரல்நாடன்
விஷயமாக 20ம் கப்பல் விஷயமாக 12ம் ரயில்வே விஷயமாக 8ம் மற்ற பல விஷயமாக 5ம் பல விடயமாக 85 வியாசங்களும் எழுதப்பட்டன." என்ற அவரது கூற்று வர்த்தக மித்ரன் சஞ்சிகையின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் சான்றாகும். 'வியாபாரம், கைத்தொழில், விவசாயம், பொருளாதாரம், என்ஜினீரிங் முதலிய விஷயங்களுக்குச் சம்பந்தப்படாத வியாசங்கள் பிரசுரிக்கப்படமாட்டா," என்று தனது பத்திரிகையில் வெளியிடப்படக் கூடிய விடயதானம் சம் பந் த மான அறிவுறுத் த ல் களையும் அவ் விடயதானங்களுக்கு தக்கவாறு சன்மானம் செய்யப்படும் என்பதையும் தனது வர்த்தக மித்ரன் பத்திரிகையில் முதல் பக்கத்தில் அறிவித்தல் வெளியிட்டிருந்தார். "ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையால் நீளுங்குடி" "குடிசெய்வல் என்னும் ஒருவற்குந் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்"
என்ற இரு திருக்குறள் வரிகளும் முதற் பக்கத்தில் பத்திரிகையின் நெறி உரைகளாக வெளியிடப்பட்டன.
இந்தியா, பர்மா, சிலோன் முதலிய இடங்களுக்கு ஆண்டுச் சந்தா ரூபா ஐந்தாகவும் பினாங்கு, சிங்கப்பூர் முதலிய இடங்களுக்கு ரூபா ஏழு ஆகவும் அமைந்திருந்தது. மாதம் ஒன்றுக்கு ஒரு முழுப்பக்க விளம்பரத்துக்கு ரூபா இருபத்தைந்து என்றும் குறிக்கப்பட்டுள்ளது. 37. 5 செ. மீ x 21, 5 செ. மீ அளவில் பத்துப் பக்கங்களில் வெளியான இப்பத்திரிகையில் இரண்டு முழுப்பக்கங்கள் விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. பிற பக்கங்களிலும் நிறைய விளம்பரங்கள். உதாரணத்துக்கு ஜூன் 13, 1918 ல் வெளியான இதழில், பத்து விளம்பரங்கள் வெளியாகியிருப்பதைக் காணலாம்.
48

பத்திரிகையாளர் நடேசய்யர்
ஒவ்வோர் இதழிலும் முறையாகக் குறிப்புகள் என்ற தலைப்பில் அக்காலப்பகுதியின் முக்கியமான செய்திகள் சேகரித்துத் தரப்பட்டுள்ளன. அதே விதத்தில் அக்காலப்பகுதிக்கான மார்க்கெட் நிலவரம் என்ற அம்சமும் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
குறிப்புகள் என்ற மகுடத்தில் வெளிவரும் செய்திகள் ஒரு ஆறுதல், வருமுன் காத்தது, பெரு மழையினால் பெருத்த சேதம், ஒரு நூதன இயந்திரம், ஒரு ஆராய்ச்சி, குடிசை முழுகிப் போய் விட்டது, கப்பல்கள் கவிழ்ந்து விட்டன, வல்வெட்டித்துறை சீனிக் கம்பெனி, இலங்கையில் தொழில் முயற்சி, யாழ்ப்பாண வியாபார சமுதாயம், மலையாளப் புகையிலை, சீனியின் விலை குறைத்தல், தபால் முத்திரை வரியை உயர்த்துதல், பலா மரமும் சாயமும், இனி ரூபாய்களுக்கு முடையிராது என்ற உபதலைப்புக்களில் வெளியாகி யிருப்பதைக் காணலாம்.
இச்செய்திகள் இந்தியா, இலங்கை, யப்பான், அமெரிக் கா பற்றியனவாக அமைந்துள்ளமை அவதானத்துக்குரியது. செய்திகளுக்கூடாகவே சிந்திக்க வேண்டிய கருத்துக்களையும் சேர்த்து எழுதுவது இச்செய்திகளின் சிறப்பம்சமாகக் கருதலாம்.
உதாரணத்துக்கு "இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள புத்த சந்நியாசிகள் உடுக்கும் உடையில் இருக்கும் மஞ்சள் சாயம் பலாமரப்பட்டையிலிருந்து எடுக்கப்பட்டு உறுதியான சாயமாகச் செய்து வருகிற பழக்கம் வெகு பழைமையானது, நம்மவர்கள் மற்றத் தொழில்களை மறந்தது போல் இதையும் மறந்திருப்பார்கள். இம்மகா யுத்தம் அதைப் புதுப்பிக்க ஆரம்பித்ததினால் ஆலப் புழையில் பலாமரத்துாள் சாயத்திற்கு உபயோகிப்பதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டு மூட்டை

Page 27
சாரல்நாடன்
ஒன்றுக்கு நாலரை ரூபா வீதம் விற்கப்படுகின்றது. மகாயுத்தம் இன்னும் எத்தனைத் தொழில்களைப் புதுப்பிக்குமோ அறியோம்" என்ற செய்தியைக் கூறலாம். (ஜூன் 6, 1918)
மார் க் கெட் நிலவரம் பகுதியில் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும் சந்தை விவரங்கள் பருத்தி, லங்காஷயர் நூல், சர்க்கரை, கோதுமை, சீனி, எள்ளுப் புண்ணாக்கு, கடலை எண்ணெய், சம்பா அரிசி, மிளகு அரிசி, பெரு அரிசி, நெல், தேங் கா யெண் ணெய் முதலியவற் றுக் குக் கொடுக்கப்பட்டன. தஞ்சாவூர் மார்க்கெட் நிலவரம், கொழும்பு நிலவரம் என்று தனித்தனியே விபரங்கள்
கொடுக்கப்பட்டன.
உண்மையில், தனக்கிருந்த வணிக, கணக்கியல் அறிவினை வர்த்தக மித்ரன் சஞ்சிகையில் விரிவான முறையில் நடேசய்யர் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு மேற்குறித்த தொடர் அம்சங்கள் சாட்சி பகர்கின்றன.
வர்த்தக மித்ரன் கட்டுரைகளும், நடேசய்யர் "நாம்" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதற்கமையவே அமைந்துள்ளன. பாரதத்தில் வேரூன்றி வளர்ந்த தேசிய உணர்வையும் தேசிய இயக்கங்களையும் பற்றிய ஒரு கட்டுரையில், "இந்தியருக்குள்ள பழைய பெருமையை விரும்பும் நாம் அந்தப் புராதன இந்தியரின் சந்ததியார் என்பதைச் செய்கையால் காட்ட வேண்டும். வாய்ப்பேச்சுத் தம்பட்டம் பயன்பெறாது. ஆகையால் சுதேசியம் என்றும் தேசாபிமானம் என்றும் ஊரெல்லாம் கூக்குரலிட்டுப் புரண்டு வருவதற்கு முன் நாட்டின் தொழில்களை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

பத்திரிகையாளர் நடேசய்யர்
“என்ன தேசாபிமானம் இருந்த போதிலும் ஜனங்களின் தேவைக்குப் போதுமானபடி உற்பத்தியில்லாவிட்டால் அவசியங்களுக்கு அந்நிய நாட்டுச் சரக்குகளைத்தான் வாங்க வேண்டியதாக வரும். இதை யாராலும் தடுக்க முடியாது. முடியாத காரியத்தைக் கட்டிக் கொண்டு கூத்தாடுவது சரியான முறையல்ல. தேவைக்கும் அதிகமாக சுதேசியச் சரக்குகள் இருந்தாலன்றி சுதேசியம் நடைபெறாது. முன்னோர் சேர்த்து வைத்த பொருள் தனக்கு எவ்வளவு இருந்த போதிலும், ஏழையோ தனவானோ அன்றாடம் தான் சாப்பிட உட்காரும் போதெல்லாம் இச்சாப்பாட்டை நான் அடைய இன்றைக்கு என்ன வேலை செய்தேன் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்."
'இவ் விஷயத்தை உண்மையான மனதுடன் ஒவ்வொருவனும் எண்ணி நடப்பானாகில் பத்து வருஷங்களுக்குள்ளாக உலகு முழுவதுமே நம்முடன் எவ்விஷயத்திலும் போட்டி போட்டு எதிர்த்து நிற்க முடியாது என்று" எழுதியுள்ளார். தன்னுடைய கருத்துக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தம், மகாத்மா காந்தியின் கொள்கைக்கு முரண்பட்டவராக அவரை மக்களிடையே அறிமுகப்படுத் தி இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும்,
"........ பதினாறு பதினேழாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவின் செல்வ மிகுதியைக் கேள்விப்பட்டு அதன் ஆசையால் இங்கு வந்தார்கள், இங்கு வந்த ஒவ்வொருவரும் இந்தியருடன் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்துடன் வந்தார்களேயன்றி நாட்டைக் கைவசப்படுத்திக் கொண்டு அரசாட்சி புரிய வேண்டுமென்று ஒருவரேனும் வரவில்லை. ஆங்கில வியாபாரிகள் மாத்திரம் வியாபார விஷயமாக மாத்திரம் அல்ல நாட்டை ஆளுவதற்காகவும் கடவுள் தங்களை

Page 28
சாரல்நாடன்
இந்தியாவிற்குக் கொண்டுவந்தார் என்று நாளடைவில் அறிந்து கொண்டார்கள். இங்கிலாந்திலுள்ள ஜனங்களின் சுக ஜீவனத்துக்கு இந்தியாவில் ஏராளமான வசதிகளிருக்கின்றன என்பதையும் அறிந்து கொண்டார்கள். இந்தியாவானது இங்கிலாந்திற்குத் தோட்டம் போல எண்ணப்பட்டது." என்று இந்தியவணிகம் கீழ்நிலையடைந்ததற்காக வருந்தி, "தொழில்களை விருத்தி செய்யவேண்டுமென்று இப்போது ஜனித்திருக்கும் விருப்பம் நன்றுதான். தொழில்களை யார் கையாள்வது என்பது தான் தெரியவில்லை. இதற்குத் தக்க மாலுமிகள் எங்கே இருக்கிறார்கள் ?" என்று நியாயபூர்வமான கேள்வியை எழுப்பி, இந்த நிலைமையிலிருந்து ஒரு மாற்றமும் அதன் வழியாக வளர்ச்சியும் ஏற்பட்டாக வேண்டுமென்றால்,
'. தற்கால உணர்ச்சி சிலாகிக்கத்தக்கது தான். ஆனால் உள்நாட்டிலும் அந்நிய நாடுகளிலும் போய்த் தொழில்களில் தேர்ச்சியடைந்த இந்தியத் தொழிலாளிகள் இருந்தாலன்றி இவ்வெண்ணம் பயன்படாது. நீர்மேற் குமிழி போல் ஒரு நொடியில் உடைந்துபோம்," என்றும் மிகத் தீர்க்கமான தனது கருத்தை முன்வைக்கிறார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போக்குவரத்து ஆரம்பமான ஆதிகாலந்தொட்டுக் கோடிக் கரைத் துறைமுகம் வழியாய் யாழ்ப்பாணம் போக்குவரத்து நடந்து வந்துள்ளது. இந்த நூற்றாண்டின் ஆரம்பக்காலம் வரை இலங்கைத் தபால் போக்குவரத்தும் கோடிக் கரை வழியாகவே நடைபெற்று வந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமான இந்த வழி, இலங்கையில் பிளேக் நோய் பரவத் தொடங்கியதால், இந்த நோய் ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலேயர் குடியேற்ற நாடுகளிலிருந்து ஏற்றி வந்த குதிரைகளின் மூலமாய்க் கொண்டு வரப்பட்டதென்பதறிந்திருந்தும் தடை செய்யப்பட்டது.

பத்திரிகையாளர் நடேசய்யர்
இது குறித்து எழுதுகையில்,
"யாழ்ப் பாண தீ தமிழர் களெல் லாம் தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். அவ்விதம் குடியேறி யாழ்ப்பாணிகளென்று பெயர் கொண்டவர்கள், மறுபடியும் இந்தியக் கரையோரங்களில் பல்லாயிரக் கணக்காயும் குடியேறி யாழ்பாணத்தார் என்ற பெயருடன் வழங்கப்படுகின்றார்கள். அங்ங்னம் வழங்கினாலும் அவர்கள் தென்னிந்திய பூர்வத் தமிழர்களே ஆவார்கள்."
"யாழ்ப்பாண வாசிகளே! உங்கள் தலைவர்களைக் கொண்டு சட்டசபையின் மூலமாய்க் கேள்விகள் கேட்டுப் பயன் பெறும் வண்ணம் முயலுங்கள். இந்தியர்களும் இடைவிடாமல் முயற்சி செய்து ஏழைகளைக் காப்பாற்றுங்கள்,' என்று குறிப்பிடுகின்றார்.
வர்த்தகமித்ரனில் பெயர் குறிப்பிடாத பல கட்டுரைகளையும், குழகன் என்ற புனைபெயரில் பல கட்டுரைகளையும் நடேசய்யர் எழுதியிருக்கின்றார். தான் வரித்துக் கொண்ட கொள்கைக்கேற்ற தகவல்களைச் சேகரித்துத் தனது நிலைப்பாட்டை வசீகரத்தோடும் வலுவோடும் முன் வைக்கும் கைதேர்ந்த எழுத்தாளனாக நடேசய்யர் இக்கட்டுரைகளில் பரிணமிக்கிறார்.
வர்த்தகமித்ரனில் வெளிவந்த இன்னொரு சிறப்பம்சம் நூல் மதிப்புரையாகும்.
தமிழில் ஆரம்பக் கட்டத்திலிருந்து நூல் பதிப்புரைக்கும் முறையைச் செவ்வனே, திறம்படத் தனது ஆரம்ப ஏட்டிலேயே நடேசய்யர் செய்து காட்டியுள்ளார். குறிப்பிட்டுக் கூறுவதென்றால் தேசியம் பரப்பிய வ. உசிதம்பரம்பிள்ளை, வ. வே. சு. அய்யா,

Page 29
சாரல்நாடன்
டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு ஆகியோரது பத்திரிகைகளும் நூல்களும் மதிப்புரைக்கு உள்ளாகும் போது நடேசய்யர் மேற்குறித்த தேசியவாதிகளுக்குத் தனி மதிப்பளித்து எழுதியிருப்பது புலனாகிறது.
"இந்திய ஜனங்களின் வாழ்வின் தாழ்வும் அதற்கு மருந்தும் சொல்வது. சுயராஜ்ஜியம் ஸ்தாபிக்க முயல்வது" என்று பெ. வரதராஜுலு நாயுடு நடாத்திய பிரபஞ்சமித்திரன் பற்றியும், . "வேதத்தைத் தமிழர் படிக்கக் கூடாதென்றிருந்த தடையிதன் மூலம் ஒழிந்தது. இதை ஒவ்வொரு தமிழரும் அவசியம் படித்து வேத நுட்பங்களையும் ஆரியர் பூர்வீக நாகரீகங்களையும் அறிந்து கொள்வார்களென்று நம்புகிறோம்," என்று இருக்கு வேத சம்ஹிதை நூல் பற்றியும்,
"இப்புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் அவசியம் படித்து அதன் உள்ளக் கருத்தை அறிந்து பயனடைவார்களென்று எதிர்பார்க்கிறோம். அங்ங்னம் செய்வதினால் தேசாபிமான சுவை நிறைந்த பல தமிழ் வீரர்களின் சரித்திரம் வெளியிடும் படி இந்நூலாசிரியர் எண் ணியிருக் கிற எண் ணத் தைக் கைகூட சி செய்ததுமாகும்," என்று சந்திர குப்த சக்கரவர்த்தி சரித்திரம் வ. வெ. சு. ஐயர் எழுதிய நூல் பற்றியும் எழுதியிருக்கும் வரிகள் கவனிக்கத்தக்கன.
மிக்க உபயோகமுள்ள தமிழ்ப் புத்தகங்கள் என்று நூலாசிரியரின் பெயர் எதுவுமின்றி எட்டுப் புத்தகங்களின் பெயர்கள் குறிப்பிட்டு ஒரு விளம்பரம் வர்த்தக மித்ரனில் (13- 06- 1918) வெளிவந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள கணக்குப்பதிவு நூல், கணக்குப் பரிசோதனை, ஆயில் என்ஜின், இன்ஷியூரன்ஸ் என்ற நான்கும் நடேசய்யரால் எழுதப்பட்டவை என்பதற்கு இன்று ஆதாரம் கிடைத்துள்ளது. ஏனைய இந்தியக்

பத்திரிகையாளர் நடேசய்யர்
கைத்தொழில் முயற்சி, சிகிச்சா ரத்ந தீபம், மரங்களும் அவைகளின் உபயோகமும், ஒற்றன் (நாவல்) என்ற நான்கும் அய்யருடையவையாகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமிருக்கிறது; நிச்சயமாகக் கூறுவதற்கில்லை. இந்த நூல்கள் பார்வைக்குக் கிடைக்காத வரை ஆய்வுக்கு உதவும் சான்றாதாரத் தகவல்களாக இவற்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
இலங்கையில் வெளியாகி இன்று ஆய்வாளர்களின் பட்டியலில் இடம் பெற்று வரும் ஒரு தமிழ்ப்பத்திரிகை குறித்தும் வர்த்தக மித்ரன் மதிப்புரை எழுதியிருக்கிறது. லாரி முத்துக்கிருஷ்ணா இந்த நூற்றாண்டின் முதல் த சாப் த த் தில் கொழும் பிலிருந்து வெளியிட்ட தமிழ் பத் திரிகை ஜன மித்திரன் . லாரி முத்துக் கிருஷ்ணாவுக்கும் நடேசய்யருக்கும் நடேசய்யர் இலங்கைக்கு வருவதற்கு முன்பே அறிமுகமும் தொடர்பும் இருந்திருக்கின்றன என்பதை இப்பத்திரிகையில் வெளிவந்துள்ள ஜனமித்திரன் பத்திரிகை குறித்து எழுதப்பட்டுள்ள வரிகள் வெளிப்படுத்துகின்றன. 'ஜனமித்திரன் என்னும் தமிழ்த் தினசரி பத்திரிகை வரப்பெற்றோம். இப்பத்திரிகை கொழும்பில் இருந்து வெளிவரும், இதன் ஆசிரியர் புதிய பத்திரிகை நடாத்துவதில் மிக்கத் திறமை வாய்ந்தவரும் இந்தியாவும் இலங்கையும் ஒன்று கூடினால்தான் முன்னேற்றம் அடையுமென்ற சரியான அபிப்பிராயம் கொண்டவரும் ஏற்கனவே "சிலோனிஸ்' என்னும் பத்திரிகையின் அதிபருமாயிருந்து செவ்வனே நடத்தியவரும் இலங்கையிலிருக்கும் இந்தியர்களின் முன்னேற்றத்தில் கவலையுடன் உழைப்பவருமாகிய கனம் லாரி முத்துக் கிருஷ்ணன் என்பார் ஆவர். இலங்கையில் நடாத்தும்

Page 30
சாரல்நாடன்
தினசரித் தமிழ்ப்பத்திரிகை இதுவொன்றேயாகும். இதில் இலங்கை விஷயங்களும் அவ்விடம் நடக்கும் வியாபாரங்களும் சரக்கு நிலவரமும் எழுதி வருகிறார்."
லாரி முத்துக்கிருஷ்ணாவைப் பற்றிய கணிப்பையும் இலங்கை வாழ் இந்தியர்களின்பால் நாட்டம் கொண்ட தலைவராக அவரைப்பற்றிய மதிப்பையும் மேற்படி வரிகளில் காணலாம். இலங்கையும் இந்தியாவும் ஒன்று கூடினால்தான் முன்னேற்றம் அடையுமென்ற சரியான அபிப்பிராயம் என்ற வரிகள் கவனத்துக்குரியவை. நடேசய்யர் இந்த வரிகளில் தனது நிலைப்பாட்டையே கூறுகிறார். இந்த மதிப்புரை காணப்படும் வர்த்தகமித்ரன் இதழ் 1918ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்துள்ளது. இது வெளியாகி இரண்டாண்டுக்குள் நடேசய்யர் இலங்கையில் குடியேறுகிறார். தன்னுடைய இலங்கைப் பத்திரிகை நடவடிக்கைகளையும் லாரி முத்துக் கிருஷ்ணாவின் தொடர் போடு ஆரம்பிக்கின்றார். இந்தப் பின்னணியில் ஜனமித்திரன் இதழுக்கு எழுதப்பட்ட மதிப்புரை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்த மதிப்புரை வெளியானதன் பின்னர் வரும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத வர்த்தகமித்ரன் இதழ்களில் ஜனமித்திரன் பத்திரிகையில் வெளியான பல கட்டுரைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன என்பதுவும் கூர்ந்து
கவனிக்கத்தக்கது.
大大大
அடிக்குறிப்புகள்
l. வர்த்தகமித்ரன் 6- 6- 1918 2. அதே 6- 6 - 1918 3. அதே 13- 6- 1918
4.
அதே 20- 6- 1918

பத்திரிகையாளர் நடேசய்யர்
தேசநேசன்
நடேசய்யரின் பத்திரிகைப் பணி இலங்கையில் தேசநேசன் பத்திரிகையில் ஆரம்பமானது. 1920ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு வந்த நடேசய்யர் நிரந்தரமாக இங்கு வசிக்கத் தீர்மானித்தார். தேசநேசன் 1921ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் வெளிவரத் தொடங்கியது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்குப் பணிகளாற்ற நடேசய்யர் மேற்கொண்ட தீர்மானத்தின் வெளிப்பாடுதான் இப்பத்திரிகை முயற்சி என்று கூறலாம்.
இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயற்படும் தீவிரவாதிகளையும் இந்தியாவுக்கு வெளியே ஜெர்மனி, சோவியத் ருஷ்யா போன்ற தொலை நாடுகளில் குடியேறி செயல்படும் இந்தியத் தீவிரவாதிகளையும் பற்றிய பூரணமான அறிவு பெற்றிருந்த நடேசய்யர், இந்தியாவுக்கு வெளியே குடியேறி அல்லலுறும் இந்திய உழைப்பாள மக்களைப் பற்றியும் மிக ஆழமாக அறிந்து வைத்திருந்தார். குறிப்பாக இலங்கை வாழ் இந்திய உழைப்பாள மக்களைப் பற்றி 1919ல் இலங்கைக்கு வந்திருந்த போது நேரிடையாகவே தெரிந்து வைத்திருந்த அவருக்கு இலங்கையின் பிற சமூகத்தவருடன் சிறப்பாக அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதன் அவசியம் தெரிந்திருந்தது.
எனவே, இலங்கையில் தீவிர அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்டு செயற்பட ஆரம்பித்தார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் தனது நிர்வாகக் குழுவில் அவருக்கும் இடமொதுக்கிக் கொடுத்தது. நிர்வாகக் குழுவில் இடம்

Page 31
சாரல்நாடன்
பெற்றிருந்த அருளானந்தன், டாக்டர் ரட்ணம் என்ற இருவரும் நடேசய்யரின் எழுத்தாற்றலை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தனர்.
அருளானந்தன் மாவட்ட நீதவான்; ரட்ணம் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்; ஆகவே, அவ்விருவரும் நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு ஒரு தமிழ்ப் பத்திரிகையைக் கொண்டு வரும் தமது தீர்மானத்துக்கு எளிதில் அவரை உடன்பட வைக்க முடிந்தது. அவ்விதம் தோற்றுவிக்கப்பட்ட பத்திரிகைதான் தேச நேசன் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கிய இப்பத்திரிகையில் இந்தியாவில் பத்திரிகைகள் நடாத்தித் தாம் பெற்றிருந்த அனுபவ முத்திரைகளை நடேசய்யர் பதிக்க ஆரம்பித்தார்.
கருத்துக்களைப் பரிமாற்றம் செய்வதற்கான அவசியம், நிர்ப்பந்தம் ஏற்படுகின்ற போது பத்திரிகைகள் தோன்றுவதற்கான சூழ்நிலை உருவாகின்றது. கருத்துக்களைப் பரிமாற்றம் செய்வதற்கு மாத்திரமின்றிப் பரிமாற்றப்பட்ட கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்கும் தகுதியானவர்கள் உருவாக வேண்டும். பத்திரிகை தோன்றுவதற்கான ஆரோக்கியமான நிலைமை அப்போதே மையங் கொள்ளும்.
தேசநேசன் தோன்றுவதற்கான அத்தகு சூழல் இலங்கையில் 1921ல் உருவாகியிருந்தது. அன்றிருந்த சூழ்நிலையில் இலங்கையில் தமிழர்களின் அரசியல் உணர்வுகளுக்கு உத்வேகம் ஊட்ட வேண்டிய அவசியமிருந்தது. இலங்கையில் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தேசிய அமைப்பாக விளங்கிய இலங்கைத் தேசிய காங்கிரஸில் தேசியம் தேய ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருந்தன.

பத்திரிகையாளர் நடேசய்யர்
தமிழர், சிங்களவர் என்ற இன உணர்வின்பாற்பட்ட குறுகிய தேசியம் முளைவிட ஆரம்பித்திருந்தது. ஜேம்ஸ் பீரீஸ், ஈ. ஜே. சமரவிக்ரம என்போர் ஒரு புறமும் சேர் பொன்னம்பலம் அருணாசலம் மறுபுறமும் முன்னின்று தமிழர் குறித்து ஒப்பந்தம் மேற்கொணடு (1919) சமரச முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தேசநேசன் இந்தப் பின்னணியில் வெளிவர ஆரம்பித்தது. கால தேவதை கருத் தரித்ததால் உருவான இந்த ஏட்டில் நடேசய்யர் ஊதியம் பெறும் ஆசிரியராகவே கடமை ஏற்றார். தேசநேசன் பத்திரிகைக்கென்று சொந்த அச்சகம் கொழும்பு நகரில் சென். செபஸ்தியன் வீதியில் அமைந்திருந்தது. அந்த அச்சகத்திலிருந்து ஓர் ஆங்கிலப் பத்திரிகையும் வெளியானது. தி சிட்டிஷன் என்ற அந்தப் பத்திரிகைக்கும் நடேசய்யரே ஆசிரியராகப் பணி ஆற்றினார்.
கொழும்பு இலங்கையின் தலைநகரம். இலங்கையின் பிரதான சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்களின் அரசியலாதிக்கக் கருத்துக்களை உருவாக்கும் அதிகாரக் குழுமம் கொழும்பு நகரிலேயே செயல்பட்டது. இவ்விதம் செயற்பட்ட தமிழ்க் குழுமத்தினரின் பத்திரிகையான தேசநேசன் ஏட்டுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தேயிலை, றப்பர் தோட்டங்களில் நிர்வாகச் செல்வாக்குப் பெற்று - அதிகாரக் குழுமத்தினராக விளங்கிய பெரியகங்காணிகள் என்று நடேசய்யர் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
கொழும்பிலும் தோட்டப்புறங்கள்லும் அதிகாரம் புரிந்த தமிழ்க் குழுமத்தினரின் செயற்பாட்டுக்கு எதிராகக் கிளர்ந்தெழுபவராகப் பின்னாட்களில் உருவான நடேசய்யர், தனது ஆரம்ப செயற்பாடுகளை அக்குழுமம்
59

Page 32
(FTUsistLet
நடாத்திய தேசநேசன் பத்திரிகையிலும் தி சிட்டிஷன் பத் திரிகையிலும் தொடங் கினார் என் பது
கவனத்திற்குரியது.
சுதந்திரமான கருத்துக்களை வெளியிடவும் மனச்சாட்சியின் குரலாக உரத்து ஒலிக்கவும் நடேசய்யர் துணிவுடன் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டார். கொள்கைக்கும் வகுத்துக் கொண்ட வழிமுறைக்கும் ஒத்து வரும் கருத்துக்கள் தேசநேசன் பத்திரிகையில் வெளிவருவதை நடேசய்யர் விரும்பினார். அவ்விதம் வெளியிடப்பட்ட சில் கட்டுரைகள் நிதியுதவி, ஊதியம் என்ற விதத்தில் பத்திரிகையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அமைந்ததுமுண்டு. -
பெரிய கங் காணிகளைக் கேவலப்படுத்தும் கடிதங்களைத் தேசநேசனில் வெளியிட்டார்.
தமிழில் பேசத் தெரியாதவர்கள் இந்திய வம்சாவளியினரின் தலைவர்களாக இலங்கையில் செயற்படுவதைக் கண்டித்து எழுதலானார்.
தமிழினத் தலைவர்களின் அந்தரங்க சுத்தியில் ஐயம் ஏற்படுத்தக் கூடிய செய்திகளுக்கு அச்சமின்றித் தமது பத்திரிகையில் இடம் கொடுத்தார். "தேசநேசன் பொய்யனுக்கு விரோதி, அக்கிரமக்காரனுக்கு விரோதி, போலியர்களுக்கு விரோதி, வேஷக்காரனுக்கு விரோதி " என்று அவரே, தான் கடைப்பிடித்த கொள்கையைக் குறிப்பிட்டுள்ளார். தேச நேசன் பத்திரிகையின் வெளியீட்டாளர்கள் கூற விரும்பாத அரசியல் கருத்துக் களை எவ்விதத் தாட் சண்யமுமின் றிக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார்.
பிரிட்டிஷாரைப்பற்றிய இவரது கட்டுரைகளும் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் போது இடம் பெற்ற பகிஷ்கரிப்பைப் பற்றிய இவரது எழுத்துக்களும்

பத்திரிகையாளர் நடேசய்யர்
பொலிஸாரின் விசேட கண்காணிப்புக்குட்பட்டு - நடேசய்யரைப் பற்றிய பொலிஸாரின் அறிக்கையில்
சேர்த்துக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வெள்ளையர்க்கெதிராக எழுத்தில் தீவிரம் காட்டிய ஜி. சுப்பிரமணிய அய்யர், சுப்பிரமணிய பாரதியாார், வ. வே. சு. அய்யர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, திரு. வி. கலியாண சுந்தரனார், சுப்பிரமணிய சிவா, டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு முதலானோரின் படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிரிட்டிஷாரின் கவனத்துக்குட்படுத்தப்பட்டதைப் போன்று இலங்கையில் வெள்ளையருக்கெதிராக எழுத்தில் தீவிரம் காட்டிய நடேசய்யரின் அரசியல் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிரிட்டிஷாரின் கவனத்துக்குட்படுத்தப்பட்டது.
வேல்ஸ் இளவரசர் 1922ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் போது இலங்கைக்கும் வருவதாக இருந்தது. அவரது வருகையின் போது இரு நாடுகளிலும் மகத்தான, கீர்த்தி மிகுந்த உபசரிப்பு நடைபெற வேண்டுமென்பதில் ஆட்சியாளர் கவனமாயிருந்தனர். மக்களும் அரசியல் தலைவர்களும் இதை விரும்பவில்லை. இந்தியாவில் முற்றுமுழுதாக இளவரசரின் வருகையை மக்கள் எதிர்த்தனர் என்று கூறி விட முடியாது.
ஒத்துழையா இயக்கம் நாட்டில் காட்டுத்தீப்போல் பரவி வந்த வேளையில் இளவரசர் இந்தியா போந்தார். அவர் அதிகார வர்க்க விருந்தினராக வருவதால் அவரது வரவேற்பில் நாட்டவர் கலவாது நிற்பதே அவருக்குச் சிறப்புச் செய்வதாகும் என்ற ஆணை காந்தியடிகள் வாயிலாகப் பிறந்தது. இவ்வாணைக்கு

Page 33
சாரல்நாடன்
மறுப்பும் எழுந்தது. ஒத்துழைப்பாளர் (பெரிதும் பாரசீகரும் கிறிஸ்தவரும்) இளவரசர் வரவேற்பில் கலந்து கொண்டனர்' என்று திரு. வி. கலியாண சுந்தரனார் குறிப்பிடுகின்றார். இலங்கையில் வேல்ஸ் இளவரசரின் வருகையின் போது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பரம விரோதியாகக் கருதப்பட்ட டாக்டர் மணிலால் இருப்பதை ஆட்சியாளர் விரும்பவில்லை. தீவிர கம்யூனிஸ்ட்டான மணிலால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு 1921ம் ஆண்டு இல்ங்கைக்கு வந்தார். அவரோடு நடேசய்யருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது.
மணிலா லின் தொடர்பினால்தான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் நடேசய்யரு க்குத் தீவிரமும் விசாலித்த தொடர்பும் ஏற்பட்டதென் பார் கலாநிதி குமாரி ஜெயவர்தன. ஆட்சியாளரும் அதன் அடி வருடிகளும் மணிலாலை நாடு கடத்தியாக வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாகவே வைத்திருந்தனர் என்பதை டெய்லி நியூஸ் ஆசிரியத் தலையங்கம் (9 - 1 - 1922) வெளிப்படுத்துகிறது. தனக்கு ஆதர்ஷமான மணிலாலை நாடு கடத்துவதென்பதை நடேசய்யரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பிரிட்டிஷாரே எச்சரிக்கை என்ற தலைப்பில், சாம்ராஜ்யம் ஆட்டம் காணுகிறது அழிவு ஏற்படுவது நிச்சயம் என்று எழுதினார்.
தமிழ்ப் பத்திரிகையுலகில் ஆரம்பக் காலத்தில் ஆசிரியரின் பெயர் அதிகமாக வெளிப்படுத்தப் படாமலிருப்பதைக் காணலாம்.
இந்தியா பத்திரிகையில் ஆசிரியராக இருந்து தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதி ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கோபத்துக்குள்ளான போதும் சுப்பிரமணிய பாரதியார் கைது செய்யப்படாமில்,

பத்திரிகையாளர் நடேசய்யர்
இந்தியா பத்திரிகையின் வெளியீட்டாளர் எம். சீனிவாசன் கைதானதற்குக் காரணம் ஆசிரியர் பெயர் பத்திரிகையில் அச்சிடப்படாததுதான்.
வெளியீட்டாளரின் பெயர் பத் திரிகையில் பொறிக்கப்பட்டிருந்தது. அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேசநேசன் பத்திரிகையில் நடேசய்யரின் பெயர் பத்திரிகாசிரியராகப் பொறிக்கப்படாதிருந்ததால் அவரும் தப்பினார். லேக்ஹவுஸ் பத்திரிகையான தினகரனில் நடேசய்யரின் பத்திரிகாசிரியர் பணி எந்த ஆண்டிலிடம் பெற்றதென்பதை உறுதியாகக் கூறமுடியாதிருப்பதற்கும் இதுவே காரணம். மேலும், லேக்ஹவுஸின் ஆரம்பகாலப் பத்திரிகை முயற்சியின் போது பத்திரிகாசிரியரின் பணிநிலை புரியாத மறைபொருளாகக் கருதப்பட்டது என்றும், உண்மையில் ஜீவித்திருந்த காலம்வரை உரிமையாளர் விஜேவர்த்தனா அவர்களே லேக்ஹவுஸின் பத்திரிகாசிரியராகக் கருதப்பட்டார் என்றும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதப்பட்டுள்ளது." இத்தனைக்கும் அப்பத்திரிகைகளில் அச்சிடுவதற்கென்று அவர் எந்த ஒன்றையும் எழுதவில்லை என்ற குறிப்பும் மேற்படி நூலில் காணப்படுகிறது.
தேச நேசன் பத் திரிகையில் நடேசய்யர் பத்திரிகாசிரியராகக் கடமையாற்றியதை நம்மால் அறிய முடிவது அவரால் எழுதப்பெற்ற சுருக்கச் சுயசரிதக் கட்டுரையின் மூலம் தான்."
மேலும், தனியாகப் பத்திரிகாசிரியர் என வெளிப்படுத்தப்படாது போனாலும் தேசநேசன் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றை வாசிக்கையில் அதற்கான ஆதாரங்கள்

Page 34
சாரல்நாடன்
நிறையத் தென்படுகின்றன. உதாரணத்துக்கொன்றாகக் "கொழும்பு தேசநேசன் பத்திராதிபர் இலங்கைத் தொழிலாளர் பிரதிநிதியாக பூரீமான் நடேசய்யர் வந்திருந்தார் " என்ற செய்திக் குறிப்பைக் காணலாம். (தேசநேசன் 6, 9. 1922, பக்கம் 3) "தேச நேசனை ஓர் பெணிமணியாக வைத்து அதன் சரித்திரத்தை ஓர் நாவல் ரூபமாக எழுதுவோம். அதில் அதிக விடயங்கள் வெளிப் படுத்தப் படும் " என்ற வாரிகளடங் கிய கட்டுரையையும் கூறலாம். (தேசபக்தன் 15, 9. 1924) "நான் சிம்லா போன காரணத்தால் தேச நேசன் ஆசிரியர் பதவியையும் விட்டேன். அப்பதவியில் எனக்குப் போதிய ஊதியம் கிடைத்து வந்தது", என்று அவர் தனது சுயசரிதத்தில் குறிப்பிடுகையில் தனது நடத்தைக்கு அவர் வருந்து கின் றா ரா அன் றேல் பெருமைப் படுகின்றாரா என்றதொரு மயக்கம் எழுகின்றது.
நடேசய்யரின் பத்திரிகைப்பணிகளுக்கு இடையூறு விளைவித்தவர்களே பின்னர் மனம் வருந்தி அவருக்கு உதவியாக இருந்திருக்கின்றார்கள் என்பதை "எமது பதில்" என்ற தலைப்பில் அவரெழுதிய கட்டுரையில் (தேசபக்தன் 15. 9, 1924) கண்டு கொள்ளலாம்.
இக்கட்டுரையில் தஞ்சையில் தான் தொடங்கி வைத்து நடாத்திய வர்த்தக மித்ரன், சுதந்திரன் என்ற பத்திரிகைகள் பற்றிய தகவல்களையும் இலங்கையில் தான் பணியாற்றிய தேசநேசன் குறித்த விவரங்களையும் எழுதியுள்ளார்.
தன்னுடைய "தொழிலாளர் அச்சக்கூடம்" பற்றியும் அதன் வெற்றிக்குத் தொழிலாளர்களின் பண உதவியே பிரதான காரணம் என்ற உண்மை நிலை பற்றியும்

பத்திரிகையாளர் நடேசய்யர்
இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அச்சுக்கூடம் கொழும்பு, கன்னாரத் தெருவில் இருந்து இயங்கியது. இதே கட்டுரையில், தமது செயற்பாட்டுக்கு எதிராக வெளியிடப்பட்ட இந்தியன் பத்திரிகை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
தேச நேசன் பத் திரிகையின் அமைப்பும் , உள்ளடக்கமும் எழுபத்தைந்தாண்டுகளைத் தாண்டி விட்ட இன்றும் பாராட்டத்தக்கதாகவே உள்ளது.
1921 செப்டெம்பர் மாதம் 20ல் தினப்பதிப்பாக இது வெளி வர ஆரம்பித்தது. எட்டுப் பக்கங்களில் பெரிய அளவில் வெளிவந்த இப்பத்திரிகையின் விலை ஐந்து சதம்.
முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் சிறையென்று வைக்கப் படும். (388) குடிதழிஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழிஇ நிற்கு முலகு (544)
என்ற திருக்குறள் வரிகள் முன்பக்கத்தில் நெறியுரைகளாக அச்சிடப்பட்டுள்ளன. இறைமாட்சி என்ற அதிகாரத்திலும் செங்கோன்மை என்ற அதிகாரத்திலும் இடம்பெற்றுள்ள இவையிரண்டும் அரசியல் சார்ந்த குறளடிகள். தேச நேசனின் நோக்கு அரசியல் என்பதை வெளிப்படுத்துகின்றன. "தமிழ்ச் சாதியர்க்கு ஒரு விண்ணப்பம்" என்று தலைப்பிட்டு எழுதப்பட்டு முதற்பக்கத்தில் பெரிய எழுத்தில் வெளியான கடிதத்தில் (290 வது இதழ்) சாதியாபிமானம் தேசாபிமானம் ஆகிய இவ்விரண்டையும் விருத்தியாக்கவும் மக்களை முன்னேற்றவும் மரியாதைக்குரியவர்களாக நடந்து கொள்ளத் தேவையான உபதேசங்களைச் செய்வதற்கும் தேசநேசன் வெளிவருகிறது என்று இக்கடிதத்தில்

Page 35
சாரல்நாடன்,
குறிப்பிட்டிருப்பதற்கொப்ப ஒவ்வோர் இதழிலும் முன்பக்க இடப்புறத்தில் இந்தியச் செய்திகள் என்ற உபதலைப்பிட்டு ஏராளமான செய்திகள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக, "அகாலி சீக்கியர்களின் சாத்வீக எதிர்ப்பு, கராச்சி முனிசிபாலிட்டி கூட்டம், காஸிப்பூர் ராஜீயக் கைதிகள், இந்திய சட்டசபையில் முனிசிபல் சட்டத்திருத்த மசோதா, வங்காள சட்டசபையில் பட்டினி கிடந்த ராஜீயக்கைதி" என்ற செய்திகளையும் (6. 9, 1922) "ஜாம் ஷெட்பூர் வேலைநிறுத்தம், தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கூட்டம், அகாலியர்களின் விசாரணை, டாக்டர் ரவீந்தரநாத் தாகூரின் சென்னை விஜயம், இந்திய சட்டசபையில் அச்சு சட்ட மசோதா, பஞ்சாபில் மின்சாரம்" என்ற செய்திகளையும் (2. 10. 1922) கூறலாம்.
தேச நேசனில் வந்திருக்கும் தலையங்கங்கள் இப் பத் திரிகையின் பிரதான பணி இந்திய வம்சாவளியினரைக் குறித்ததாக அமைந்திருப்பதைக் காட்டுகின்றன.
இந்தியக் கூலிகள் - நவம்பர் 22 தலவாக்கொல்லை ஆசிரியர் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 30 இலங்கையரின் கலாபிவிருத்தி - டிசம்பர் 1 அங்கே உத்தியோகம் இங்கே சம்பளம் - டிசம்பர் 13 என்பவை அவற்றுள் சிலவாகும்.
"இந்தியக் கூலியாள்" என்ற மகுடத்தில் ' வெளியாகியிருக்கும் ஆசிரியத் தலையங்கத்தில்
"நமது இலங்கைக்கு வருடா வருடம் வரும் இந்தியக் கூலியாட்களின் தொகை குறைந்து கொண்டே வருகிறது. (நிறையப் புள்ளி விபரங்கள் தரப்பட்டுள்ளன) இவ்வாறு குறைவு ஏற்பட்டதற்குக் காரணமென்ன?

பத்திரிகையாளர் நடேசய்யர்
எவரும் ஒரே ஒரு நியாயம் மாத்திரம் சொல்லலாம். அதாவது இலங்கை இந்தியக் கூலியாளைத் தன் வசம் இழுக்கக்கூடிய நயசு கமற்றதாயிருக்கின்றதென்பதே ( என்ற சொற் பிரயோகம் கவனிக்கத்தக்கது) . SL S SL S S S S S S LSL S S LS C LS S LSL LS LC S தமது தரித்திரத்தினாலும் அது காரணமாக தாமனுபவிக்கும் பசி, நோய் முதலிய இம்சைகளினாலும் தாமடையுங் கஷ்டங்களிலும் பார்க்க இலங்கைத் தோட்டங்களிலே தாமனுபவிக்கும் கஷ்டம் அதிகமென அறிந்தமையினாலன்றோ இங்கு வரப் பயப்படுகின்றனர்! இரு தீங்குகள் உளவாயின் அவைகளுட் குறைவான தீங்கையே மனுஷன் அனுபவிக்கச் சம்மதப்படுவது. இது இயற்கையான குணம். ஆகவே இந்தியக்கூலிகள் இலங்கைத் தோ ட் டங் களிற் படுங் கஷ்டங் கள் சகிக் க முடியாதனவாகுமென்றாகிறது. பதிவுக் கந்தோர்த் தலைவரின் அறிக்கைப்படி சிசு மரணம் தோட்டங்களில் இலங்கை முழுவதற்கும் உள்ள சராசரித் தொகையிலும் பார்க்க அதிகமெனக் கூறுகின்றனர். சிசு மரணம் ஏன் சம்பவிக்க வேண்டும் தாய்மார் பசி பட்டினியாயிருந்திருக்க வேண்டும். சிசுக்கள் நல்ல போஷிப்பின்றித் தேய்ந்திருக்க வேண்டும். அறிக்கையும் மரணத்தின் காரணம் பெலயினம் என்றே கூறுகின்றது. ஆகவே சம்பளக் குறைவினால் சாப்பாடின்றிக் கர்ப்பத்திலும் பிறந்த பின்பும் குழந்தைகள் வாழ அகால மரணத்தையடைகின்றனவென்பது ஒரு தர்க்க முறையான முடிவு.
'றப்பரிலும் தேயிலையிலும் உயர்ந்த இலாபம் எடுக்கும் முதலாளிமார் கூலிகளுக்கு ஏன் உயர்ந்த சம்பளங் கொடுக்கக் கூடாது?
"இவர்கள் பிடிவாதம் பண்ணுவரேல் நமக்கும் இலங்கைக்கும் பெரும் விபத்தையும் தரித்திரத்தையும் சீக்கிரத்தில் விளைத்துவிடுவாரென்பதே எமது எண்ணம்", என்றெழுதியிருப்பது எந்த அளவுக்கு இலங்கை வாழ் இந்தியத் தொழிலாளிகளில் தேசநேசன் கரிசனை காட்டியதென்பதை உணர்த்துகிறது. உண்மையில்

Page 36
சாரல்நாடன்
தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று இந்த மக்களுக்காக முதலில் குரல் கொடுத்த பெருமையும் நடேசய்யரையே சாருகின்றது.
இரண்டாமாண்டில் வெற்றிகரமாக அடி எடுத்த இத்தினப்பதிப்பு 22, 9, 1922ல் தனது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. காரியாலயத்தில் பணிபுரியும் அனைவரையும் புகைப்படமெடுத்துத் தேசநேசனிலும் தி சிட்டிஷனிலும் வெளியிடச் செய்தது.
இரண்டாமாண்டில் இது முதற் பக்கத்தில் புதிய தோற்றத்தைப் பெற்றது. ஒரு பாடலையும் இடம் பெறச் செய்தது. குறிப்பாக நவநீத கிருஷ்ண பாரதியின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இன்ன மிலங்கைத்தாய்
ஏழைக் கிரங்கிலையேல்
எனக் கதியு முண்டோ? என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும் நவநீதகிருஷ்ண பாரதியின் பாடல் 2. 10. 1922ல் வெளிவந்துள்ளது. இயற்கை வளம் பலவும் பெற்ற இலங்கை மாதா மனித உழைப்பை முறையாகப் பயன்படுத்தவும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தவறி விட்டதாக இப்பாடலின் கருத்து அமைந்துள்ளது.
இப்பாடல் பல்லவி, அநுபல்லவி என்றாரம்பித்து ஆறு சரணங்களைக் கொண்டெழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய வெளியேற்றச் சட்டம் தொடராக, எட்டு அத்தியாயத்தின் 33 விதிகளும் தேசநேசனில் வெளியிடப்பட்டுள்ளது. (செப்டெம்பர் 1922)
இலங்கையில் தான் தொடர்பு கொண்ட முதற் பத்திரிகையிலேயே தனது தீவிரப் போக்கைக் கடைப்பிடித்த நடேசய்யரால் அந்தப் பத்திரிகையில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.

பத்திரிகையாளர் நடேசய்யர்
"சுயநலங் கருதிய கொழும்பில் உள்ள சில இந்தியச் சகோதரர்கள் எலக்ஷன் காலத்தில் அது தீங்களுக்கு விரோதமாகி விடுமோ என்று கருதி, அது இறப்பதற்கான முயற்சிகளைத் தேடினர்" என்று குறைகூறும் நடேசய்யா, "சிலர் தேசநேசன் இறந்ததற்கு காரணங்களை அவரவர்கள் மூளை வளர்ச்சிக்குத் தக்கபடி சொல்லிப் பொது ஜனங்கள் என்னிடம் கொண்ட அன்பை மாற்றப் பார்க்கிறார்கள்" என்றும் குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.?
நடேசய்யர் தேசநேசனில் தொடர்திருக்க முடியாது போனமைக்கு அவரது இந்திய வம்சாவளியினரைப் பற்றிய நிலைப்பாடே பிரதான காரணமாயமைந்தது. இந்த நிலைப்பாட்டில் நடேசய்யர் லாரி முத்துக் கிருஷ்ணாவுக்கு நேர்விரோதமாக இருந்தார்.
லாரி முத்துக்கிருஷ்ணா இந்தியர்கள் தொடர்ந்தும் இலங்கை க்கு வர வேண் டு மென் ற கருத்தைக் கொண்டிருந்தார். நடேசய்யர் இதற்கு எதிர் மாறான கருத்தைக் கடைப்பிடித்தார்.
1922ம் ஆண்டு வெளிநாடுகளில் குடியேறிவாழும், இந்திய மக்களின் நிலவரங்களை அறிந்து ஆராயும் பொருட்டு இந்தியா ஒரு மாநாட்டைக் கூட்டியது. சிம்லாவில் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட தூதுக் குழுவில் லாரி முத்துக்கிருஷ்ணா இடம்பெற்றிருந்தார். இவரது பிரதிநிதித்துவத்தை ஒத்துக் கொள்ள நடேசய்யரால் முடியவில்லை. இந்தியத் தொழிலாளர்களின் உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டித் தனது சொந்த முயற்சியிலும் பணச் செலவிலும் சிம்லா பயணமானார். மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அரசாங்க தாதுக் குழுவுக்கு எதிராகச் சாட்சி கூறினார். பல ஆதாரங்களை வெளிப்படுத்தினார். அப்படி வெளியான ஆதாரங்களில் தேசநேசனிலும், தி சிட்டிஷனிலும் வெளிவந்த செய் திகளும் த லை யங் கங் களும் உள்ளடங்கியிருந்தன. நடேசய்யரின் சாட்சியம் ஏற்றுக்

Page 37
at Osist Lot
கொள்ளப்பட்டது. இதனால் இந்தியர்களின் பிரதிநிதியாக இதுகாலவரை வெளியுலகிலும் உள்ளூரிலும் மதிக்கப்பட்ட லாரி முத்துக் கிருஷ்ணா வின் நேரடிப் பகைக்கு உள்ளானார். விளைவு அவரது தேசநேசனிலும் தி சிட்டிஷனிலுமிருந்து நடேசய்யர் விலக வேண்டி ஏற்பட்டது.
இக் காலப்பகுதியில் பத்திரிகை வாசகர்களில் பெரும் எண் ணிக்கையினர் புறக் கோட்டை வர்த் தகர்களாயிருந்தனர். அவர் களில் மிகுந்த எண்ணிக்கையினர் தமிழ் நாட்டுக்காரர்களாயிருந்தனர். இது இலங்கை இந்தியத் தொடர்புக்கு வழி வகுத்தது. இவர்களின் ஆதரவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் ஒரு பத்திரிகை அவசியம் என்பதை நடேசய்யர் சந்தேகமற உணர்ந்தார்.
தேச நேசனின் மறைவில் தேசபக்தன் தோன்றும் அவசியம் உண்டாயிற்று.
大大大
அடிக்குறிப்புகள்
1. தேச பக்தன் (தேசியத் தமிழ்பத்திரிகை) 3. 9, 1924 2. அதே 3. அதே 4. அதே 5. The Rise of the Labor Movement in Ceylon 6. Report of the Brace Girdle Commission 7. மனித வாழ்வும் காந்தியடிகளும் - திரு. வி.க 8. The Life and Times of D. R. Wijewardane 9. தேசபக்தன் ( 1924) 10. தேசநேசன் (தினப்பதிப்பு) 6. 9. 1922 11. தேசநேசன் 29, 11. 1922 12. தேசபக்தன் கோ. நடேசய்யர் - சாரல் நாடன்

பத்திரிகையாளர் நடேசய்யர்
தி சிட்டிஷன்
The Citizen
தேசநேசன் அச்சகத்திலிருந்து வெளியான ஆங்கிலப் பத்திரிகை. 1922ல் இது ஆரம்பிக்கப்பட்டது. நடேசய்யரின் ஆங்கில அறிவை அறிந்திருந்த வெளியீட்டாளர்கள், தேசநேசன் என்ற தமிழ்ப் பத்திரிகைக்கும் தி சிட்டிஷன் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் நடேசய்யரையே பத்திராதிபராக நியமித்திருந்தனர்.
இப்பத்திரிகையின் முதல் தலையங்கம் "ஒரு முன்னேற்றம்" என்ற தலைப்பில் வெளியானது.
'பத்திரிகை நடாத்துவது இலகுவானதல்ல என்பதையும் இலாபம் தரும் தொழில் அல்ல என்பதையும் நாமறிவோம், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இப்பத்திரிகை அமைப்புப் பெறவில்லை என்பதையும் நாம் உணர்கிறோம்,' என்று எழுதிவிட்டுப் 'பத்திரிகை வெளிவருவதில் இனியும் காலதாமதம் கூடாது என்ற காலத்தின் தேவை கருதி இப்பத்திரிகை இவ்வமைப்பில் வருவதாகவும்," குறிப்பிட்டுள்ளார். தமது பத்திரிகையின் கொள்கை இதுதான் என்று எதையும் வரையறுத்துக் கூற விரும்பவில்லை. கொள்கை என்பது இன்று ஓர் அசிங்கமான சொல்லாகிவிட்டது என்று குறிப்பிடும் இத்தலையங்கத்தில், தமது பத்திகையின் பெயரிலேயே அதன் கொள்கை பளிச் சிடுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
"குடிமகன் " என்ற தனது பெயருக்கேற்ப குடிமகனின் பிரச்னைகள் பற்றி இப்பத்திரிகைக் கவனம் செலுத்தும் இன்று நாட்டில் பொதுப்பணியாற்றுதல் என்பது மிகவும் கீழ்த்தர பண்புகள் மலிந்ததாகிவிட்டது

Page 38
சாரல்நாடன்
என்பதால், குடி மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கும் மனோபாவம் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும் என்ற கூற்று இந்தப்பத்திரிகை அரசியலை தன் பிரதான நோக்காக வைத்திருந்ததை வெளிப்படுத்துகின்றது.
"ஆளுவதற்கு ஆண்டவனிடமிருந்து உரிமை பெற்றிருந்த மன்னர்களின் அதிகாரத்தை எதிர்த்து நம் மால் வாழ முடிந் திருக்கையில் , அரசியல் எஜமானர்களின் பயன்பாட்டு இச்சைக்கு சிரமப்பட்டு போராடி பெற்ற நமது சுதந்திரத்தை அடகு வைக்கும் நிலைமை ஏற்படக்கூடாது என்பதை நாம் உறுதிபடுத்திக் G3, T676T G6, 1600rGid. (We have survived the 'divine rights' of kings and must see to it that we do not surrender our hard won freedoms to the consuming lust of political bosses) என்ற வரிகள் இதை மேலும் வலியுறுத்தும்.
12 பக்கங்களில் பத்து சத விலைக்கு வெளியான இப்பத்திரிகை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வெளியானது. முன் பக்கத்தில், மக்களின் வாழ்க்கையையும் அவர்தம் சிந்தனையோட்டத்தையும் விமர்சித்தெழுதுவதை நோக்கமாக இப்பத்திரிகை கொண்டிருந்ததென்பதைக் குறிப்பிடும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.
மணிலால் என்ற இந்திய கம்யூனிஸ் ட் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட (1922) போது, இப்பத்திரிகை அவரைப்பற்றிய செய்திகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தெழுதியது. அவரது குடும்ப நிழற்படத்தை முதற் பக்கம் பிரசுரித்து அவர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா நாடுகளில் ஆற்றிய பெரும் சேவையை விலாவாரியாக எழுதி மக்களிடம் உணர்வுகளைத் தோற்றுவித்தது. 'மணிலால் மறுப்புக் கூட்டம்" என்று தலையங்கம் எழுதி

பத்திரிகையாளர் நடேசய்யர்
அவருக்காதரவாக கொழும்பில் இந்தியர்களின் மாபெருங் கூட்டம் நடக்க வழி சமைத்தது. இப்பத்திரிகையில் செய்திகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் செய்திகளைப் பற்றிய விமர்சனங்களுக்கும் கொடுபட்டது என்பது கவனிக்கத்தக்கது. விமர்சனக் கட்டுரைகள் மாத்திர மன்றி விமர்சனப்பாங்கான தலையங்கமும் இப்பத்திரிகையின் சிறப்பு அம்சமாக விளங்கிற்று.
சிட்டிஷன் பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் வாராந்தரி ஞாயிறு வார வெளியீடுகளை டைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகையும் ஒப்சேர்வர் பத்திரிகையும் வெளியிட்ட வந்தன. ஆங்கிலத்தில் வெளியான இம்மூன்று பத்திரிகைகளும் ஆங்கிலம் கற்று அரசியலில் ஈடுபாடு காட்டிய மத்தியதர வர்க்கத்தினரிடையே செல்வாக்கு செலுத்தி வந்திருந்தன. 1922ம் ஆண்டில் இடைக்கிடையே ஞாயிறு இதழ்கள் வெளியிடுவதில் டைம்ஸ் பத்திரிகையிலும் ஒப்சேர்வர் பத்திரிகையிலும் தடங்கல் ஏற்பட்டன. அதுபோன்ற நேரங்களில் சிட்டிஷன் ஆற்றிய பணி மிகச் சிறப்பானது என அப்போது கிழக்கு மாகாணத்தைப பிரதிநிதித்துவம் பண்ணிய சட்டசபை அங்கத்தவர் ஈ ஆர், தம்பிமுத்து வெளியிட்ட கருத்துரை வரலாற்று அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிட்டிஷன் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் மிகவும் வலிமையுடையது. ஆற்றல் மிகுந்த சொற்களினால் அமைக்கப்பட்டு வாசகர்களை உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்க வைத்தது.
இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி எழுதப்பட்ட ஒரு தலையங்கம் அந்தக் கூலிக்காரனைக் கொன்று விடு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
தெருக்களில் நொண்டியடித்து, வாசலுக்கு வாசல் வந்து யாசித்து நிற்கும், எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் இந்தப் பிறவி ய/7/ர் 2 உதவி கிடைக்காத ᏣᎧᎪ ᎧᏡ Ꭷ7

Page 39
சாரல்நாடன்
தெருவோரங்களில் நாய்களைப் போல செத்துப் போகும் இந்த பாவப்பட்ட ஜென்மம் யார்? நமது தோட்டத்துரைமார் நண்பர்கள் இந்த நாட்டின் முலதனம் என்று பிரலாபிக்கின்றார்களே அந்த நமது நண்பன் இராமசாமி தான். அவனையும், அவன் கூட்டத்தாரையும் சன்னம் சன்னமாகத் துயரப்படவைக்காது ஒரேயடியாகக் கொன்று விடுங்கள். (78- 6- 1922)
நிறத்தின் குற்றம் அரசியல் குறிக்கோள்கள் இருப்புப் பாதையின் விடுகதை நாம் நியாயமாக ஆளப்படுகிறோமா?
என்ற தலைப்புக்களில் வெளியான தலையங்கங்கள் தீவிர அரசியல் கருத்துக்களை உள்ளடக்கியவைகளே.
1975ம் வருடத்தின் நினைவுகள் ' (11- 6- 1922) என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் தர்க்கத்துக்குரிய கருத்துக்களை உள்ளடக்கியிருந்தது. இந்தத் தலையங்கம் ου Π Π முத் துக் கிருஷ் ணா வரினி பெ யாரில் வெளியாகியுள்ளதையும் நாம் அவதானிக்கலாம். இக்கட்டுரையின் சாராம்சத்துக்கு அவரே முழுப்பேற்கிறார் என்ற குறிப்பும் சேர்ந்துள்ளது.
இப்பத்திரிகையில் வாரந்தோறும் இலக்கியப்பகுதி (On Literary Section) G6) onfu Tsu, Git 61 g). "gig" பத்திரிகையிலிருந்தும் ஐரோப்பிய சஞ்சிகைகளிலிருந்தும் கட்டுரைகள், இப்பகுதியில் மறுபிரசுரம் ஆயின. டென்னிசன், ரொபர்ட் பிரவுன்றிக் ஆகியோரின் கவிதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பத்திரிகையாளர் நடேசய்யர்
பத்திரிகைத் துறையியல் (Journalism) குறித்துக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. இங்கிலாந்துப் பத்திரிகைத்துறை குறித்து 2- 4- 1922 இதழிலும் இந்தியப் பத்திரிகைத்துறையின் எதிர்காலம் குறித்து 19. 3. 1922 இதழிலும் முறையே ஸ்பெண்டர் என்பாரும் ஈவி சுப்பிரமண்ய அய்யர் என்பாரும் எழுதியுள்ளனர்.
இப் பத் தரிாரிகை யின் பதிப் பா சரிாரிய ராக எல். எஸ். ஜம்புசுவாமி என்பவரின் பெயரும் 8A, செபஸ்தியன் ஹில், கொழும்பு என்ற முகவரியும் குறிக்கப்பட்டுள்ளன.
சிட்டிஷன் என்ற பத்திரிகைப் பெயரின் சிறப்பு கொழும்பில் ஆழமாகவே வேரூன்றியிருந்தது. 1928ல் கொழும்பு முனிசிபல் சேர்வீஸஸ் யூனியன் ஓர் அரையாண்டு சஞ்சிகையை வெளியிட்டது. டி. டபிள்யூ. ஜயமானே அந்த வெளியீட்டுக்கு ஆசிரியராகக் கடமையாற்றினார். ஃபெர்குஸன் டிரக்டரியில் இவரது பெயருக்கெதிரே குறிக்கப்பட்டுள்ள ஆசிரியர் சிட்டிஷன் என்ற தகவலை வைத்துக் கொண்டு 1922ல் வெளியான சிட்டிஷனுக்கு இவரே ஆசிரியர் என்று சிலர் மயங்குகின்றனர். f |
"தேசநேசன்" என்ற தமிழ்ப்பத்திரிகையிலும் தி சிட்டிஷன் என்ற ஆங்கிலப் பத்திகையிலும் லாரி முத்துக் கிஷ்னா வுக்கு வெளியீட்டாளர் என்ற அதிகாரமிருந்தது. இலங்கைவாழ் இந்தியர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த கனவானாக அவர் அப்போது விளங்கினார். அவரது அங்கீகாரத்தைப் பெற்ற இந்த இரண்டு பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர் நடேசய்யர்.
லாரி முத்துக்கிருஷ்ணாவின் இலங்கை அறிமுகம் அவர் சுருக்கெழுத்தாளராக லேக் ஹவுஸ் ஸில் சேர்ந்தவுடன் ஆரம்பமாகிறது. அந்நிறுவனத்தின்

Page 40
சாரல்நாடன்
ஆசிரியர் குழுவிலும் அவர் பங்கேற்றார். பிறப்பால் அவர் ஒரு மலையாளி. இலங்கையில் வர்த்தகக் கல்வி சார்ந்த பொலிடெக்னிக் என்ற பல்தொழில்நுட்ப நிறுவனத்தை 1906ம் ஆண்டு தோற்றுவித்திருந்தார்.
ஆங்கிலத்தில் புலமையும் எழுத்துத் துறையில் ஈர்ப்பும் கொண்டிருந்த இவர் தி சிலோனிஸ்' என்ற ஆங் கிலப் பத் திரிகையில் ஆசாரியராகவும் கடமையாற்றியிருந்தவர்.
தி சிலோனிஸ் 1913ம் ஆண்டு சேர், பொன்னம்பலம் இராமநாதனால் தோற்றுவிக்கப்பட்ட செய்திப் பத்திரிகை.
அரசியலில் இராமநாதனின் பங்களிப்பைத் தேர்தல் மூலம் வேண்டிநின்ற அறிவாளிகள் அப்பத்திரிகைக்கு ஆதரவளித்திருந்தனர் என்று தீர்மானிக்கலாம்.
ஹெக்டர் ஜெயவர்த்தனா, கெர்னல் டி. ஜி. ஜெயவர்த்தனா, டொக்டர். ஈ. வி. இரட்ணம், ஃபிரான்ஸிஸ் சொய்சா என்ற அக்காலத்தைய அரசியல்வாதிகள் அப்பத்திரிகையோடு நேரடித் தொடர்பு வைத்திருந்தனர். அக்காலையில், இலங்கையில் தி டைம்ஸ் ஒஃவ் சிலோன், தி சிலோன் இண்டிபெண்டன்ட், தி சிலோன் ஒப்சேவர், தி மோர்னிங் ஸ்டார் என்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இவை அனைத்துமே ஆங்கில அரசாட்சியின் அடிவருடிகளாக இருந்தன.
"டைம்ஸ்" தோட்டத்துரைமார்களின் பைபிளாகக் கருதப்பட்ட பத்திரிகை. ஆங்கில ஆட்சியாளரின் ஊது குழலாக அது செயற்பட்டது.
இண்டிபெண்டண்ட் பறங்கி இனத்தவர்களின் மேம்பாட்டுக்காக உரத்துக் குரல் எழுப்பிய பத்திரிகை. இலங்கையின் இரு பெரும் சாகியத்தியவர்களான

பத்திரிகையாளர் நடேசய்யர்
சிங்களவரோடும் தமிழரோடும் திருமணம் மூலம் உறவு கொண்ட ஐரோப்பியரின் நேரடிச் சந்ததியினரான பறங் கியரின் குரல் ஆட்சியாளரை எதிர் க்க முனைந்ததில்லை. மேலும், இப்பத்திரிகையை நடாத்திய சேர். ஹெக்டர் வான் கைலன் பார்க் சட்டநிரூபண சபை அங்கத்தவராவார். "ஒப்சேவர்' பத்திரிகை உலகில் சாதனைகள் பல புரிந்த ஃபெர்ஸனுக்குரியது. தனிப்பட்ட வழக்குச் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளால் பொன். இராமநாதனுக்கெதிராக இது செயற்பட்டது. இப்பத்திரிகை ஏலத்தில் விற்கப்பட்ட வேளை இந் நிறுவனத் தோடு சம்பந்தப் பட்ட வர் களே மனதுக்குள்ளாக மகிழ்ந்தனர்.
"மோர்னிங் ஸ்டார்" ஒரு குடும்பப் பத்திரிகை. அரசியலில் டி. சொய்சாவின் அரசியல் நலம் பேணிய பத்திரிகை.
இந்தப் பின்னணியில் நடுநிலை நின்று நாட்டுநலம் பேணும் பத்திரிகைக்கு அவசியமிருப்பதைக் கற்றவர்கள் உணர்ந்தனர்.
"ஆண்டுக் கணக்கில் குறுகிய அரசியல் சக்தியில் அமிழ்ந்து கிடக்கும் அடிவருடிப் பத்திரிகையுலகிலிருந்து நாம் மீட்சிப் பெறுதல் அவசியம். நமது மக்களின் நோக்கையும் போக்கையும் நிர்ணயிக்கும் பத்திரிகைகள் இன்றைய நமது அவசியத் தேவையாகும்"
என்ற தன் தமையன் பொன். அருணாசலத்தின் கருத்தை "சிலோனிஸ்" பத்திரிகையைத் தோற்றுவிப்பதன் மூலம் இராமநாதன் நிறைவேற்றிட முடியும் என நம்பினார்.
இலங்கையில் ஏற்பட்டு வரும் கல்வி அபிவிருத்தி முழுமையாகவே பத்திரிகையுலகில் மாறுதலுக்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. மாறுதலுக்கான சூழ்நிலையை உருவாக்குவதில் தம்மை

Page 41
சாரல்நாடன்
இணைத்துக் கொள்பவர்கள் இவ்விதம் பத்திரிகைகளோடு தம்மை ஈடுபடுத்திக் கொள்வதை அண்மைத் தேசமான இந்தியாவில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. மகாத்மா காந்தி, அரவிந்தர், திலகர் என்ற பலரும் இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
"சிலோனிஸ்" என்ற பத்திரிகையின் முதல் மானேஜர் எச். எச். மார்க்ஸ் என்ற ஓர் அமெரிக்கன். தயேர் என்ற அமெரிக்கனே முதல் பத்திரிகையாசிரியனாகவும் கடமையாற்றினார்.
இனநலம் பேசும் குறுகிய அரசியல் போக்கு முகிழ்க்க ஆரம்பத்த காலை, பக்கம் சாராது, நடுநிலை நின்று பத்திரிகை நடாத்திட இவ்வேற்பாடு உதவும் என இராமநாதன் நம்பியதால் இவ்விதம் அமெரிக்கர்கள் நியமிக்கப்பட்டனர்.
பிரித்தானிய சம்பிரதாயத்துக்குப் புறம்பானதும் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, அமெரிக்கா என்று முனைப்புப் பெறும் சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுக்கும் பாங்கிலும் இப்பத்திரிகை செயற்பட்டது என்பர்.
"சிலோனில்" பத்திரிகையின் தோற்றத்தின் மூலம் ஒரு தேசிய இடர் தவிர்க்கப்பட்டது என்பார் இராமநாதன்.
இந்த சிலோனிஸில் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை லாரிமுத்துகிருஷணாவுக்கு இருக்கிறது.
இத்தகு ஆற்றல் மிகுந்த லாரி முத்துக்கிருஷ்ணா தம்மோடு தொடர்பு கொண்ட ஆங்கில பத்திரிகைக்கும் தமிழ்ப் பத்திரிகைக்கும் பத்திராதிபராக நடேசய்யரைப் பணியாற்ற வேண்டியமை நடேசய்யரின் பத்திரிகை ஆற்றலை உணர்ந்து மதித்தமையால் சம்பவித்த

பத்திரிகையாளர் நடேசய்யர்
நிகழ் சி சரியாகும் . இலங் கை அர சரியலில் முத்துக்குமாரசுவாமி, பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் என்ற பெயர்கள் குன்றிலிட்ட தீபங்களாக ஒளி வீசுகின்றன என்பதை மறுக்க முடியாது.
இந்த மரபில் தம்மையும் இணைத்துக் கொள்ளும் விதத்தில் பணியாற்றிய லாரி முத்துக்கிருஷ்ணாவும் கோதண் டராம நடேசய்யரும் பெரு மைக் குரிய
இருவர்களாவர்.
இலங்கை அரசியலில் பொன். இராமநாதனின் தீவிரப் பங்களிப்பு எளிதில் மறக்கப்படக்கூடியதல்ல. சிறப்பாக 1915ல் நடைபெற்ற இலங்கைக் கலவரத்தின் பின்பு அக்காலப்பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒஃவ் பொலிசாகப் பணியாற்றிய எச். எல். டவ்பிகின் என்ற ஆங் கிலேயனுக்கெதிராக ஒரு தலைக் குற்றச்சாட்டுதலை (Impeachment) சட்டசபையில் கொண்டு வந்து பேசியவர் சேர். பொன். இராமநாதன் ஆவார்.
இலங்கைச் சரித்திரத்தில் முதலில் இப்படி ஓர் இம்பீச்மெண்டைச் சட்டசபையில் விவாதத்திற்கு வைத்தவர் இராமநாதன் அவர்கள்தான். அதிகாரப் பதவியிலிருக்கும் முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பற்றிய தனது குற்றச்சாட்டும் அதையொட்டிய தனது பேச்சும் உணர்மையைப் பிரதிபலித்தாலும் ஆட்சியாளரின் அடிவருடிகளால் எதிர்க்கப்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரது பிரேரணை தோல்வி கண்டது.
அவரது வழியிலேயே, ஆங்கில அரசின் அடிவருடிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே பத்திரிகை மூலமும் நடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமும் நடேசய்யர்

Page 42
(FTU supert Left
பணியாற்றுவாரானார். தோல்வி காணும் என்று தெரிந் திரு ந் த போதும் தொடர் ந் தும் பல பிரேரணைகளைத் தம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடக்கியத் தீர்மானமாகக் கொண்டு வந்த பெருமை கோதண்டராம நடேசய்யருக்குண்டு. அவரது ஆறாண்டுச் சட்ட நிரூபண வாழ்வும் (1925 - 1931) பதினொரு ஆண்டு அரசாங்கசபை வாழ்வும் (1936 - 1947) அதற்கான பல வாய்ப்புக்களை அவருக்கு ஏற்படுத்தின. அவரது பத்திரிகைகளில் அதன் செல்வாக்கைக் காணலாம்.
大大大
அடிக்குறிப்பு
1. Citizen - 1922ம் ஆண்டுக்கான வெளியீடுகள் அனைத்தும்,

பத்திரிகையாளர் நடேசய்யர்
தேசபக்தன்
1924ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி தேசபக்தன் வெளிவர ஆரம்பித்தது. இது தன்னை ஒரு தேசிய தமிழ்ப் பத்திரிகையாக அறிவித்துக் கொண்டது. வாரத்துக்கு மூன்று முறை - திங்கள் - புதன் - வெள்ளி என்ற ஒழுங்கில் அது வெளிவந்தது. தேசபக்தனின் ஒரு பிரதிக்கு விலை ஐந்து சதம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தமிழ்ப் பத்திரிகை இல்லாத காரணத்தால் நாட்டு நடப்புக்களைப்பற்றி மக்களுக்கு எவ்வித அறிவும் எட்டுவதில்லை என்ற உணர்வினால், அந்தக் குறையை நிவர்த்திக்கும் அரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடேசய்யர் தேசபக்தன் ஏட்டை ஆரம்பித்த அதே ஆண்டில், 1924ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற சட்டநிரூபண சபைக்கான தேர்தலில் இந்தியப் பிரதிநிதியாகப் போடடியிடுவதை அவதானிக்கும் போது தேசபக்தன் அரசியல் கருத்துக்களைப் பரப்பும் நோக்கையே பிரதானமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று எளிதில் ஊகிக்கலாம்.
தேசபக்தனின் இந்த நோக்கு வர்த்தக மித்ரனின் நோக்கிலிருந்து மிகவும் மாறுபட்டது என்பதைக் கவனிக்கலாம். நடேசய்யரின் ஆரம்பகால எழுத்துலக நோக்கும் படிப்படியாக மாறி வருவதையும் அரசியலை மையமாக்கி நகர்வதையும் அரசியல் சக்தியாக மக்கள் சக்தியைக் கட்டி எழுப்பும் பாரிய பணிக்குத் தனது பத்திரிகை ஆளுமையைப் பயன்படுத்துவதையும் தேசபக்தன் பத்திரிகை இதழ்களில் காணலாம்.
தேசபக்தன் பத்திரிகையைத் தோற்றுவிக்கும் போது நடேசய்யர் இலங்கைக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. கொள்கை அடிப்படையில் அவர் எதிர்த்துப் பணியாற்ற வேண்டியிருந்த இந்திய வம்சாவளித்

Page 43
சாரல்நாடன்
தலைவர்களும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் சிங் கள அரசியல் வாதிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். இந்திய வம்சாவளித் தலைவர்களில் அனேகமானவர்கள் இதே இலங்கைத் தீவில் ஏற்கெனவே இருபத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து தங்களைப் பல வழிகளிலும் நிலை நிறுத்திக் கொண்டிருந்தனர்.
அவர் கள் . வணிகத் துறையிலீடு பட்டுப் பொருளாதாரத்தில் மிக உயர்ந்து விளங்கினார்கள். சமூக அந்தஸ்து அவர்களுக்கிருந்தது. அரசியல் செல்வாக்கும் இருந்தது.
லாரி முத்துக்கிருஷ்ணா, ஆதாம் அலி, திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா, முகம்மது சுல்தான், எஸ். பி. சார்ல்ஸ், டேவிட் ரஸ்டம்ஜி என்ற தலைவர்களும் இலங்கை இந்திய வாலிபர் சங்கம், இந்தியர் சங்கம், கங்காணிமார் சங்கம் என்ற அமைப்புக்களும் இந்திய வம்சாவளி மக்களிடையே பரவலாக அறியப்படடிருந்த ஒரு சூழ்நிலையில் தேசபக்தன் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது. a
தேசபக்தன் அய்யரின் சொந்தப் பத்திரிகை. அதில் வெளிவரும் கருத்துக்களுக்கு அவரே முழு உரிமை கொண்டாடினார். தேசநேசன் பத்திரிகை நடாத்தும் போதிருந்த கட்டுப்பாடுகள் எதுவும் தேசபக்தன் நடாத்தும் போது தமக்கிருக்கப் போவதில்லை என்பதை முதல் இதழில் எழுதிய த லை யங் கத் தில் வெளிப்படுத்தியிருந்தார்.
"தேசபக்தனும் உண்மையையே நாடி நிற்பான், சாதி மத வித்தியாசம் பாரான், உண்மையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பொது ஜனங்களுக்கூடாக

பத்திரிகையாளர் நடேசய்யர்
འ།
உழைப்பான், பணக்காரர் ஜாதி, ஏழை ஜாதி என்று இப்பொழுது ஏற்படுத்தி வரும் ஜாதியை மனந்தளராது எதிர்ப்பான், தொழிலாளர் சார்பில் அன்பு கொண்டு உழைப்பான்' என்ற வரிகளில் தனது பத்திரிகையின் நோக்கை மிக நேர்த்தியாகவே வெளிப்படச் செய்துள்ளார்.
"நான் பக்தன், தேசபக்தன், அனைவருக்கும் பக்தன், இந்தியர்களின் பக்தன், இலங்கையர்களின் பக்தன், இந்த நாட்டினரதும் பக்தன். குறிப்பாக ஏழை மக்களின் பக்தன்" என்று எழுதும் போதே தனது முன்னைய வர்த்தக மித்ரன், தேசநேசன் பத்திரிகைகளைப் பற்றியும் குறிப்பிட்டு, அப்பத்திரிகைகளிலும் பார்க்க தேசபக்தனில் தனது பணி மிகுந்திருக்கும் என்பதை,
"முன் நிலவியவர்கள் மித்திரனாகவும் நேசனாகவும் இருந்தார்கள், ஆனால் தற்போது பொதுமக்களுக்குத் தொண்டர்க்குத் தொண்டனாய் பக்தி விநயத்துடன் பணிசெய்து வர பக்தன் நான் வெளி வருகிறேன்", என்ற வரிகளின் மூலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
தேசபக்தன் என்ற பத்திரிகையின் பெயரிலேயே
அவருக்கு ஒரு பிரமை இருந்ததை மேற் குறித்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தப் பெயரில் திரு. வி. கலியாணசுந்தரனார் இந்தியாவில் ஏற்கனவே ஒரு பத்திரிகையை நடாத்தியிருந்தார்.
அரசியலிலும் தொழிலாளர் சங்கத்திலும் சமுதாயச் சீர்த்திருத்தத் துறையிலும் எழுத்தாலும் பேச்சாலும் பெரும் சாதனை புரிந்த திரு. வி. கலியாணசுந்தரனார் அய்யரை ப் -பெரிதும் ஆட் படுத் தியிருந்தார் . திரு. வி. கலியாணசுந்தரனார் ஆசிரியராக இருந்து

Page 44
சாரல்நாடன்
நடாத்திய தேசபக்தன் என்ற பெயரிலேயே அய்யர் இலங் கையில் பதி தரிாரிகை ஆரம் பரித் ததும் அச்செல்வாக்கினாலேயே எனலாம்."
தமிழகத்தில் 1917ல் வெளியான தேசபக்தன் தேசிய இன உணர்வோடு அரசியலிலும் தொழிற்சங்கத்துறையிலும் ஆற்றிய பணி வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது. தேசபக்தனில், 'யான் உருத்திரன் ஆனேன்; எண் எழுதுகோல் பாசுபதம் ஆயிற்று, என்று திருவிக. அவர்களே கூறியுள்ளதிலிருந்து இது எளிதில் புலனாகும் . 1920 ல் திரு விக. ஆசிரியப்பதவியிலிருந்து விலக நேர்ந்தது. வ. வே. சு. ஐயர் தேசபக்தன் ஆசிரியரானார். அவரும் ஒன்பது மாதங்களில் சிறை புகுந்தார். எனவே தேசபக்தன் படிப்படியே மறையலானான் என்று வருந்தி எழுதுகிற திரு.வி.க. ,
"தேசபக்தன் மறைந்தாலும் அதன் பெயர் மறையுமோ! அப்பெயரை இலங்கை நடேச ஜயர் வேட்டனர் என்று தன்னுடைய திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து தேசபக்தன் பத்திரிகையை ஆரம்பித்த நடேசய்யர், தனது பத்திரிகை முயற்சி குறித்து திரு. வி. கலியாணசுந்தரனாரு டன் ஆலோசித்து ஆசியும் பெற்றிருக்கின்றார் என்பது பெறப்படுகிறது.
நடேசய்யரைத் தேசபக்தனில் வெளிவந்த அரசியல் கட்டுரைகளும் கட்டுரைகள் எழுதப்பட்ட மொழி நடையும் வெகுவாகவே கவர்ந்திருந்தன.
தேசபக்தன் ஆசிரியப் பதவியைப் பொறுப்பேற்ற
வ. வே. சு. ஐயர் தான் எழுதிய முதல் தலையங்கத்தில், "ஆவேசமும் பரபரப்பும் தேசபக்தனில் அலைந்தன.

பத்திரிகையாளர் நடேசய்யர்
தேசபக்தன் நடையில் காளி. "(31 - 07 - 1920) என்று எழுதியிருப்பதிலிருந்து இதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கும் மேலாக இன்னோர் உண்மையையும் இங்குக் கவனித்தல் தகும்.
இந்தியாவில் வீசிக் கொண்டிருந்த தேசிய உணர்வின் பிரதிபலிப்பு கடல் கடந்த இந்தியர்களிடம் காணப்படவே செய்தது. குறிப்பாக இலங்கை, பர்மா, சையாம், மலேயா, மொரிஷியஸ், நேட்டால், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களைத் தமிழ்ப் பத்திரிகைக்கூடாகவே இவ்வுணர்வு செயல்பட வைத்தது.
அதன் உடனடி விளைவாகத் தமிழகத்தில் வெளியான பத்திரிகைகளின் பெயரிலேயே அங்கும் பத்திரிகைகள் தோன்றின. சில நேரங்களில் ஒரு சில இடைவெளிக்குப் பின்னர் அதே பெயரிலேயே தோன்றின.
மித்ரன், காந்தி, பாரதி, ஊழியன், தொழிலாளி, தேசநேசன், தேசபக்தன்தமிழன் என்ற பெயர்களில் இப்படிப் பத்திரிகைகள் வெளியாகியிருக்கின்றன.
1917ல் தமிழகத்திலும் 1924ல் இலங்கையிலும் 1954ல் மலேசியாவிலும் தேசபக்தன் என்ற பெயரில் பத்திரிகைகள் வெளியாகியுள்ளன.
திரு. வி. கலியாணசுந்தரனாரின் வாழ்வின் போக்கை நிர்ணயித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக, தேசபக்தன் ஆசிரியர் பீடத்தை ஏற்றதை உறவினரும் சுற்றத்தாரும் கூறி வந்ததாக அவர் தனது 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ' என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Page 45
சாரல்நாடன்
இலங்கையில் வெளியான தேசபக்தன் பத்திரிகை நடேசய்யரின் வெற்றிகரமான பல பணிகளுக்கு உந்து சக்தியாகவும் துணை நின்ற படைக்கலனாகவும் விளங்கியுள்ளதைக் காணலாம்.
மாற்றானுக்கிடங் கொடேல்,
ஏற்பதிகழ்ச்சி,
வீடு பெற நில்,
புத்துயிரால், என்ற வரிகள் தேசபக்தன் நெறி உரைகளாக முதற்பக்கத்தில் வெளியாயின.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பத்திரிகைகளில் வெளியானதைப் போல, கொடியேந்திய சுதந்திர தேவியின் உருவம் இலங்கையின் தேசப்படத்தைப் பின்னணியாக கொண்டு வெளியாகியது. கதர் ராட்டினமும் கலப்பையும் இதனடியில் காணப்படுகின்றன.
நாட்டில் அரசாங்கக் கருமங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் நடைபெற்று வந்ததால் மக்கள் அரசியலில் அறிவு பெறுவதுவும் ஆர்வம் காட்டுவதுவும் அபூர்வமாக இருந்தன. இந்த நிலைமை நாற்பதாம் ஆண்டு வரை நீடித்திருந்தது.
"என்ன நடக்கிறது என்று மக்கள் அறிய வேண்டும். ஒரிரண்டு பத்திரிகைகள் அதை செய்யா. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அவை நடத்தப் படுகின்றன . வேண்டுமென்றே இச்செய்திகள் இருட்டடிக்கப்படுகின்றன. பத்திரிகைத் தேவையை நாங்கள் பலரும் உணர்கிறோம். தங்கள் பிரதிநிதி என்ன செய்கிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பத்திரிகைகள்
1 | 5 τ.
அவசியம் என்று சிங் களத் தலைவர் கள்

பத்திரிகையாளர் நடேசய்யர்
நாடாளுமன்றத்தில் 1945ம் ஆண்டுவரை தீர்மானம் கொண்டுவந்து கருத்துக்கள் வெளியிட்டுள்ளதைக் காணும் எவரும் 1924ம் ஆண்டிலேயே இந்தப் பணியில் ஈடுபட்டுத் G5dfudgsor மூலம் தமிழ் மக்களுக்கு நடேசய்யர் ஆற்றியுள்ள அள்ப்பரிய பணியின் பெருமையை உணராமல் இருக்க முடியாது.
இப்பத்திரிகையில் தேர்தல் பகுதி என்றும் ஓர் கடற்கரை சம்பாஷணை என்றும் தொடர்ந்து வெளியிட்ட பந் தரிகளில் அர சரியல் நடவடிக் கைகளே ஆராயப்பட்டுள்ளன.
1925ம் ஆண்டு சட்ட நிரூபண சபைக்கு நடேசய்யர் தெரிவானார். அதன் பின்னர் வெளிவந்த தேசபக்தன் இதழ்களில் அவருடைய அரசியல் பேச்சுகள், கருத்துக்கள், சட்ட மன்றத்தின் நடவடிக்கைகள் ஆகியன தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.
உண்மையில் தேசபக்தன் வெளியான தேதிக்கும் (03, 11 1924) நடேசய்யர் சட்ட மன்றத்தில் பிரவேசித்த தேதிக்கும் (17, 12. 1925) உள்ள இடைவெளி பதின்மூன்று மாதங்களே என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், தனது அரசியல் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதில் நடேசய்யர் மிகவும் சமர்த்தராக இருந்துள்ளதை அவதானிக்கலாம்.
"நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. எழுத வேண்டும் என்று எண்ணினால், பக்கம் பக்கமாக எழுதமுடியும். எழுத விஷயங்களுமுண்டு. ஆனால் எழுதியபிறகு அதனை வாசித்துத் திருப்தியடைவதை விட ஏதாவது நன்மை செய்யும் துறையில் இறங்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்கு எனக்கு வசதி செய்து கொடுப்பீர்களா?" என்று எழுதிய நடேசய்யர்

Page 46
சாரல்நாடன்
அந்த வசதியுள்ளதுறையாக அரசியலைக் கருதினார். மக்கள் அவரது வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தனர். அவரை - இந்திய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாக சட்ட நிரூபண சபைக்குத் தெரிவு செய்தனர்.
எனினும், சட்டசபை ஒன்றே பிரதானம் என்றும் அவர் கருதினார் என்று கூறுவதற்கில்லை.
"எனக்குச் சட்டசபை பெரிதல்ல, பத்திரிகைதான் பெரிது. நான் சட்டசபைக்குப் போய்ச் செய்யக் கூடிய நன்மையை விடப் பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகையால் ஏற்படக் கூடும்' என்று அவர் எழுதியதிலிருந்து இது நன்கு புலப்படும்.
மக்கள் மேம்பாட்டுக்கு அரசியலையும் எழுத்தையும் பயன்படுத்துவதையே அவர் விரும்பினார்.
தேசபக்தன் இதழில் வெளியாகியுள்ள செய்திகளும் கட்டுரைகளும் ஆசிரியத் தலையங்கங்களும் இந்திய மக்களின் கண்ணோட்டத்தைக் காட்டுவனவாகவே அமைந்துள்ளன.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாகவும் கங்காணிகளாகவும் இருந்தவர்கள் இந்திய மக்களே ஆவர். அய்யரின் எழுத்தும் தொழிலாளர்களைப் பற்றியதாகவே இருந்தது. தேசபக்தன் பத்திரிகைக்குப் பெருளுதவி செய்தவர்கள் அந்த மக்களே ஆவர். அதற்கு நன்றி தெரிவிக்குமாப் போல கொழும்பு, கன்னாரத் தெருவில் அமைந்த தனது அச்சுக் கூடத்துக்குத் தொழிலாளர் அச்சுக்கூடம்' எனப் பெயரிட்டார்.
தேச பக் தன் பத் தரிாரிகை இங்கே தான் அச்சிடப்பட்டது.

பத்திரிகையாளர் நடேசய்யர்
கல்வி அறிவில் குறைந்திருந்த ஒரு சமூகத்தினருக்குத், தமது மனக்குறைபாடுகளை உரிய உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் முறையைக் கற்பித்துக் கொடுத்தவர் நடேசய்யரே ஆவார்.
தேசபக்தனில் மாதிரி முறைப்பாடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு, அதையொட்டி எழுதும்படி தொழிலாளர்களைத் தூண்டுவித்தார்.
இந்திய ஏஜண்டாக இலங்கையில் முதலாவதாக நியமனம் பெற்ற எஸ். ரெங்கநாதன் தமது காலப்பகுதியில் ஆண்டுக்கு ஐந்தாயிரம் பெட்டிஷன்கள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையில் வெளியான சில கடிதங்கள் உண்மையாகவே எழுதப்பட்டன, மற்றும் சில கடிதங்கள் கற்பனையானவை. எனினும் பரபரப்பான வாசிப்புக்கு இது உதவிற்று.
தேர்தலில் தன்னோடு சமரசம் மேற்கொள்ள முனைந்த இந்தியன் பத்திரிகையின் பிரசுர கர்த்தா ஏ. எஸ். ஜோன் எழுதிய கடிதத்தை வெளியிட்டு எதிரிகளைத் திணறடித்தார்.”
தோட் டத் தி ல து ரை மார் களினதும் கங்காணிமார்களினதும் கெடுபிடி ராஜ்ய கொடுமைகளை வெளிப்படுத்தும் போட்டோப் படங்களை வெளிட்டார்.
சட்டமன்றத்தில் தான் பேசும் பேச்சுக்களை வலியுறுத்தும் கருத்துக் களைச் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் காட்டுன் சித்திரங்களாகவும் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
தமிழகத்தில் இந்தியா பத்திரிகையில் சுப்பிரமணிய பாரதியார் காட்டுன் சித்திரங்களுக்கூடாக வெளியிட்ட தீவிர அரசியல் கருத்துக்களைப் போன்று இலங்கையில் நடேசய்யர் தனது தேசபக்தன் பத்திரிகையில் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
8)

Page 47
சாரல்நாடன்
சிறப்பாக இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட தனது ஆரம் பகா ல நண் பார் ஏ.ஈ. குணசிங்காவுக்கு எதிரான கருத்துக்களை நடேசய்யர் 1929ம் ஆண்டு தொடர்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த ஆண்டும் இலங்கையில் அரசாங்க சபைக்கான தேர்தல் நடைபெற்றது. தேசபக்தன் ஆரம்பிக்கப்பட்ட 1924ல் தேர்தல் நேரத்தில் காட்டிய தீவிர எழுத்து வேகத்தை 1929ல் தேர்தலின் போதும் காட்டியிருப்பதை அவதானிக்கையில் எழுத்தையும் பத்திரிகைத்துறையையும் சக்தி மிகுந்த ஆயுதம்ாக நடேசய்யர் பயன்படுத்தியிருக்கும் சாதுர்யம் தெரிகிறது.
"அய்யரின் எழுத்து நடை இயல்பாகவே லாவண்யமானது. சவாலை எதிர்நோக்குகிற போதும் எதிரியை எழும்பவிடாது மட்டம் தட்டுகிற போதும் அதில் லாகிரி வெறி ஏறுவதை அவதானிக்கலாம். தேர்தல் சமயத்தில் வெளியான தேசபக்தனில் பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி அய்யரது ஆற்றல் வெளிப்பட்டது", என்று கூறப்படுவது இந்த உண்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்ததால்தான்.
1929 ல் தேசபக்தன் பத் திரிகையைத் தினசரியாக்கினார். 1931ல் இப்பத்திரிகை நின்று போனதாக அறியமுடிகிறது. தேசிய மட்டத்தில் பணியாற்றுவதற்கு, பெரிய மூலதனத்துடன் வெளிவர ஆரம்பித்த வீரகேசரி, தினகரன் என்ற பத்திரிகைகளுடன் போட்டியிட முடியாமற் போனது இதற்கான ஒரு காரணமாகக் கொள்ளலாம்.
தின சாரியா கத் தனது பத் திரிகையை வெளிக்கொணர்ந்தவுடன் முதற்பக்கத்தில் வெளியாகும் நெறி உரைகளில் மாற்றம் செய்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இரண்டு கவிதைகள் தேசபக்தன் பத் திரிகைக்கு நெறி
உரைகளாயின.

பத்திரிகையாளர் நடேசய்யர்
சாதி மதங்களைப் பாரே7ம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியர7யினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே./
என்ற கவிதை வரிகளும்,
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்/
என்ற வரிகளும் புதுக்கோலம் பூண்ட தேசபக்தனுக்குப் போர்க் கோலம் காட்டிட உதவின.
இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட டாக்டர் மணிலா லின் கட்டுரைகளை - ஏடனில் இந்தியர் என்ற தலைப்பில் தொடராக வெளியிட்டார்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய உடுமலை முத்துச்சாமி கவிராயரின் கவிதைகளை - சத்யாக் கிரகப்போருக்கு அழைப்பு - தொடராக வெளியிட்டார்.
இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சி. எஃவ், ஆண்ட்ரூஸின் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின.
பாரதியின் கவிநயமாண்பு குறித்துக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
லிலோன் தோட்டக்காரர்கள் என்ற கட்டுரை சுதேசமித்திரனில் வந்தது. இதன் முக்கியத்துவம் கருதி, மறு பரிர சுர ம் செய் யப் பட் டு தேசபக் தனில் வெளிவந்துள்ளது.
பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றியும் சாதிக் கொடுமை பற்றியும் எச். நெல்லையாவின் பல கட்டுரைகள் வெளிவந்தன. இவர் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகப் பணியாற்றி, 1927ல் நடேசய்யரின் துணை

Page 48
gFTorsioE5TL-6ör
ஆசிரியராக தேசபக்தனில் சேர்ந்தவர். பின் வீரகேசரியில் அதன் முதல் பத் திராதிபராகச் சேர்ந்தார். பல நாவல்களை எழுதியவர்.
தோட்டப் பேச்சு என்ற தலைப்பில் தேசபக்தன் பத்திரிகையில் தொடராக வந்த குறிப்புக்கள் மக்களைக் கவரும் நேரடிப் பேச்சுப் போலவே அமைந்திருந்தன. உதாரணமாக - சட்டசபைக்குப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் போது தோட்டக்காட்டான் என்று உங்களை எண்ணாதவராய் இருக்கவேண்டும் என்பதில் கவனமாயிருங்கள் - என்பதைச் சொல்லலாம்.
தேசபக்தனில் வெளியான ஆயிரக்கணக்கான ஆசிரியத் தலையங்கங்கள் நடேசய்யரின் பல்திறப்பட்ட ஆற்றலையும் ஆளுமையையும் விளக்குவனவாக மாத்திரமல்லாது சுதந்திர இலங்கையை நோக்கி முன்னேறும் சமூக அமைப்பில் இந்திய வம்சாவளியினர் பின்னடைந்து விடாது காக்கும் அறிவுறுத்தல்களாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
★大大
அடிக்குறிப்புகள்
தேசபக்தன் - பத்திரிகை - 3, 9. 1924 அதே
அதே சாரல்நாடன் - "தேசபக்தன் கோ நடேசய்யர்" நூல் அதே
அதே
அதே
அதே தேசபக்தன் - பத்திரிகை - 17, 9. 1924 அதே 17. II. 1924 அதே 1929 சாரல்நாடன் - தேசபக்தன் கோ. நடேசய்யர் நூல்

பத்திரிகையாளர் நடேசய்யர்
ஃபோர்வர்ட் FORWARD
1921ல் ஆரம்பிக்கப்பட்ட இது தீவிர அரசியல் பேசிய பத்திரிகை. இலங்கைக்குப் பூரண சுதந்திரம் வேண்டி நின்ற தீவிரவாதிகளின் ஆதரவு முழுவதாக இப்பத்திரிகைக்கு இருந்தது. வெளிநாட்டு அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் போதுமான முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதற்கு இப்பத்திரிகை இடமளித்தது.
இந்தப் பத்திரிகையின் இணை ஆசிரியர்களாகக் கோ. நடேசய்யரின் பெயரும் ஏ. ஈ. குணசிங்காவின் பெயரும் முதற்பக்கத்தில், ஃபோர்வர்ட் என்ற பத்திரிகைப் பெ யாரினர் அ டி யில் முனைப் பாகப் ப்ொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
முன்னோக்கி" . என்ற அர்த்தம் தரும் இந்த ஆங்கிலப் பத்திரிகை தனது பெயருக்கேற்ப, இலங்கை மக்களின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில், முன்னேற்றமானதும் தீவிரமானதுமான கருத்துக்களை வெளியிட்டது.
தொழிலாளர் களின் மேம்பாட்டுக் கான கருத்துக்களை அதிகமாகப் பரப்பிய இப்பத்திரிகையில் பணியாற்றிய போதே குணசிங்காவும் நடேசய்யரும் மிக நெருங்கிப் பழகினர்.
இலங்கையில் சமூக மாற்றத்துக்கும் பொருளாதார விடுதலைக்கும் உழைப்பாளி மக்களின் விடுதலைக்கும் இப்பத்திரிகை உழைத்தது.
பத் திரா திபராக நடேசய்யரை அவனிக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலப் பத்திரிகைகள்ல் ஃபோர்வர்ட் பத்திரிகையும் ஒன்று.

Page 49
சாரல்நாடன்
அய்யரின் ஆங்கில அறிவின் மேதாவிலாசமும் லாவண்ய நடையும் இந்தப் பத்திரிகையில் வெளிப்பட்டதை அரசியல் நாட்டம் கொண்டிருந்த தீவிரவாத தமிழ்க்குழுமத்தினர் ஈடுபாட்டுள்ளத்தோடு அவதானித்துக் கொண்டிருந்தனர். லாரி முத்துக்கிருஷ்ணா, ஏ.வி. ரட்ணம், அருளானந்தம் என்ற தேசிய காங்கிரசின் தீவிர தமிழ் உறுப்பினர்கள் நடேசய்யரின் எழுத்துக்களால் மிகவும் கவரப்பட்டனர்.
நடேசய்யரின் பத்திரிகானுபவமும் மொழியறிவும் எழுத்து வளமும் ஏற்கெனவே இவர் களால் உணரப்பட்டிருந்ததுதான்.
தமிழகத்தில் அவர் நடாத்தியது தமிழ் ப் பத்திரிகையாக இருந்தாலும், உள்ளடக்கத்தில் அதில் வெளியான செய்திகளும் கட்டுரைகளும் அவரது ஆங்கில அறிவினை வெளிப்படுத்துவனவாகவே இருந்து வந்தன.
குணசிங்கா நாளுக்கு நாள் இந்திய எதிர்ப்பாளராக உருவாகி வந்தார். அவரது பேச்சும் செயலும் இந்தியருக்கெதிராக அமையலாயிற்று.
இந்திய மக்களுக்குழைப்பதற்காகவே இலங்கைக்கு வந்த நடேசய்யருக்கு இது ஒரு பலத்த அடியாயிற்று.
தொழிலாள மக்களை இனம், மொழி கடந்து வர்க்க உணர்வில் ஒன்று படுத்தும் முயற்சியில் குணசிங்காவும் நடேசய்யரும் ஈடுபட்டுழ்ைத்த கைங்கரியம் வீணாகிற்று. நடேசய்யர் குணசிங் காவிடமிருந்து வேறுபட்டார். தான் வகித்த லேபர் யூனியன் உப தலைவர் பதவியை விட நேர்ந்தது. அவரது ஃபோர்வர்ட் பத்திரிகையின் தொடர்பும் அறுந்தது.

பத்திரிகையாளர் நடேசய்யர்
நடேசய்யரின் விலகலோடு இந்தப் பத்திரிகை வெளிவருவதுவும் நின்று போனது என்பதுவும் ஒரு வரலாற்று உண்மையாகும்.
குணசிங்காவுக்கும் நடேசய்யருக்கும் ஏற்பட்ட விரிசல், குண்டர்களை ஏவிவிட்டுக் கொழும்பில் அய்யரை தாக்குமளவுக்கு வளர்ந்தது. இருவரும் வைரிகளாகவே செயற்பட ஆரம்பித்தனர். தனது பத்திரிகையில் சிறப்பாக தேசபக்தன் ஏட்டில் கவிதை, கட்டுரை, கருத்துப்படம் ஆகியனவற்றை வெளியிட்டு குணசிங்காவை முற்று முழுவதாக எதிர்க்கத்தலைப்பட்டார். -
நடேசய்யரின் முதல் தீவிர தொழிற்சங்க அனுபவம் குணசிங்காவுடன் ஏற்பட்ட தொடர்பினாலேயே நேர்ந்தது என்பர். பத்திரிகை உலகில் இதை இன்றும் . அச்சில் வெளிப்படுத்தும் ஆதாரமாக விளங்குவது, ஃபோர்வட் என்ற இந்த ஆங்கிலப் பத்திரிகையாகும்.
తి తితి తి
அடிக்குறிப்பு
1 - சாரல்நாடன், தேசபக்தன் கோ. நடேசய்யர்
(மலையக வெளியீட்டகம்) 1988.

Page 50
சாரல்நாடன்
தோட்டத் தொழிலாளி
நடேசய்யர் சொந்தமாக நடாத்திய கடைசிப் பத்திரிகை தோட்டத் தொழிலாளி என்பதாகும். இதன் முதல் இதழ் 18- 5- 1947ல் வெளியானது. இது ஒரு வாராந்தரி. இந்தப் பத்திரிகைக்குக் கிருஷ்ணமூர்த்தி
அய்யர் வெங் கடேசன் என் பவரின் Go) Luu si
வெளியீட்டாளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் நடேசய்யரின் வீட்டு முகவரியான 196, தட்டாரத் தெரு வெளியீட்டு முகவரியாகவும்
பதியப்பட்டுள்ளது.
இதே தெருவில் 194 -A இலக்கத்தில் தான் சுதந்திரன் அச்சுக் கூடம் அமைந்திருந்தது. சுதந்திரன் பத்திரிகை இங்கிருந்துதான் வெளியானது.
சுதந்திரன் பத்திரிகையின் முதல் ஆசிரியராகக் கடமையாற்றிய நடேசய்யர் , தனது தோட்டத் தொழிலாளியையும் அதே சமயத்தில் நடத்துவாராயினார். தோட்டத் தொழிலாளி பத்திரிகை சுதந்திரன் அச்சுக் கூடத்திலிருந்தே வெளியாயிற்று.
இந்த உண்மைகளை விளங்கிக் கொண்டு சுதந்திரன் பத் திரிகையின் தோற்றத் துக் கான அரசியல் காரணங்களையும் உடன் வைத்து நோக்குகையில் தோட்டத் தொழிலாளி ஓர் அரசியல் தேவைக்காக வெளியிடப்பட்ட பத்திரிகை என்பதை இலகுவில் புரிந்து
கொள்ளமுடியும்.

uAssamaauurvens i vllau
சுதந்திர இலங்கையில் நடைபெற்ற முதலாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் - 1947ம் ஆண்டு, ஒரு வேட்பாளராக நின்ற நடேசய்யர் இப்பத்திரிகையில் நிறையவே அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஞாயிறுதோறும் வெளியான வாராந்தரியான தோட்டத் தொழிலாளியின் முன்பக்கத்தில், தொழிலாளர் கண் விழித்துத் தங்கள் காரியங்களைத் தாங்களே செய்து கொள்ள அறிவூட்டும் பத்திரிகை என்ற குறிப்புக் காணப்படுகிறது.
அச்சந்தவிர்; அடிமைப்படேல்; தன் கையே தனக்குதவி என்ற வாசகங்கள் முதற்பக்கத்தில் பத்திரிகையின் நெறி உரையாக வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் நடேசய்யரின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது, தோட்டப்புற மக்களுடன் அவர் கொண்ட நெருங்கிய நேரடித் தொடர்பே ஆகும்.
அவரது இலங்கை வருகைக்கு முன்னரே, இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவம் பண்ணும் சங்கங்கள் இருந்தன; தலைவர்கள் இருந்தனர்; ஆங்கிலப் பத்திரிகை ஒன்றும் இருந்தது. இவற்றின் செயற்பாடுகள் அனைத்தும் கொழும்பு வாழ் வர்த்தகர்களையும், நகரப் பிரமுகர்களையும் பற்றியனவாகவே அமைந்துவிட்டன.
"இலங்கை இந்தியர்களுடைய நலவுரிமைகளைக் காப்பதற்கென்ற பெயருடன் கொழும்பில் 25 - 26 வருஷங்களுக்கு முன் இந்தியர் சங்கம் என்ற ஒன்றிருந்தது. ஒரு சங்கம் என்று எண்ணி விட வேண்டாம்; இரண்டு சங்கங்கள் இருந்தன. ஒன்று லாரி முத்துக்கிருஷ்ணா - சாம் ஜான் கூட்டத்தாருடன் கூடியது. இரண்டாவது

Page 51
சாரல்நாடன்
சங்கம் திரு. பெரி. சுந்தரம், ஐ. எக்ஸ். பெரைரா, ஜியார் ஜ், மோத்தா முதலியவர்களையும் வேறு கொழும்பிலுள்ள பெரிய வியாபாரிகளையும் கொண்டது" என்று நடேசய்யரே இது குறித்து எழுதியுள்ளார்.
இவ்விதம் இயங்கிய சங்கங்களுக்கு இலங்கை இந்தியர் சங்கம் என்றும் இந்தியர் சங்கம் - இலங்கை என்றும் பெயரிடப்பட்டிருந்தன. இந்தப் பெயர்களையே கேலி பண்ணிய நடேசய்யர், "என்ன வித்தியாசம் - கவனியுங்கள்/ இவ்விரு சங்கங்களும் தாங்கள் தான் இந்தியர்களுக்குப் பிரதிநிதிகள் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்த காரணத்தால் இந்தியருக்கு யாதொரு வித நன்மையும் கிடையாதிருந்தது ," என்று எழுதுகிறார். கடல் கடந்த இந்தியர்களின் துயர்மிகுந்த வாழ்க்கையைக் குறித்து இந்திய அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இந்திய உப கண்டத்தில் 1920ல் பரந்து எழுந்தது. தலைவர்கள் தமது அரசியல் பேச்சுக்களுக்கு இதையே கருவாகக் கொண்டனர். 1922ல் இந்தியா, தமது மக்கள் கடல் கடந்து சென்று குடியேறிய மலேயா, பர்மா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பிஜி, கிழக்காபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளும் வாழ்க்கை நிலைமையை அறிந்து கொள்ள விருப்பம் கொண்டது. அந்நாடுகளிலிருந்து இந்திய மக்களைப் பிரதிநிதித்துவம் பண்ணும் நோக்கில் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அழைக்க முடிவெடுத்தது.
இலங்கையிலிருந்து இந்திய மக்களின் பிரதிநிதியாக யார் செல்வது என்பதுவும் யாரை அனுப்புவது என்பதுவும் ஓர் இழுபறி விளையாட்டாகியது.
இலங்கை இந்தியர் சங்கமும் இந்தியர் சங்கம்இலங்கை என்ற அமைப்பும் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டிருந்ததைச் சாதகமாக்கிக் கொண்டு தோட்டத்

பத்திரிகையாளர் நடேசய்யர்
துரை மார் களும் இலங்கை ஆட்சியாளர்களும் இலங்கையிலிருந்து ஒரு தூதுக்குழுவை ஆங்கிலேய வழக்குரைஞர்/ துரைமார்கள் - அனுப்பி வைப்பதில் வெற்றி கண்டனர். வேறவி, வில்லியர்ஸ், வில்கின்சன் என்ற ஆங்கிலேயர்கள் இக்குழுவில் அங்கத்துவம் பெற்றிருந்தனர். இவ்விதம் இடம் பெற்ற - இந்தியருக்கு யாதொரு வித நன்மையும் கிடையாதிருந்த நிலவரத்தை, 1922ம் ஆண்டு நடைபெற்ற கறை படிந்த சம்பவத்தை, கால் நூற்றாண்டுக்கால இடை வெளிக்குப் பின்னர், 1947ம் ஆண்டு நடேசய்யர் நினைவு படுத்தி எழுதுவதற்கு மிகப் பிரதானமான காரணம் ஒன்று உண்டு.
1922ம் ஆண்டு, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு செயற்பட்டு வந்த இரண்டு சங்கங்களையும் தோட்டத்துரைமார் சங்கத்தையும் இலங்கை காலனித்துவ ஆட்சியையும் மீறிய விதத்தில் செயல்படுவதில் வெற்றி கண் டவர் நடேசய்யராவார் . அரசியல் கிளர்ச்சிக்காரராகக் கருதப்பட்ட நடேசய்யர், தமது நடவடிக்கைகளின் மூலம் தமக்கு எதிராகச் செயற்பட்ட இத்தனைச் சக்தி மிகுந்த அணிகளையும் தோல்வி அடையச் செய்தார் என்பது வரலாறு ஒப்பிய உண்மையாகும். "கிளர்ச்சிக்காரர்களும் உண்மை பேசக் கூடும்" என்ற நிலைப்பாட்டில் நடேசய்யரின் தீரம் மிகுந்த நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களின் துயரம் அரசாங்க மட்டத்தில் உணரப்பட வேண்டிய அவசியம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அது இலகுவில் நடந்து முடிந்த காரியமல்ல. ஹேவி, வில்வியர்ஸ், வில் கின்சன் என்ற மூவரும் ஆங்கிலேயர்கள். இந்தியாவுக்குச் சென்ற குழு அங்கத்தவர்கள். இந்தியர் ஒருவராவது குழுவில் இருக்க வேண்டும் என்று இந்தியாவிலிருந்து வந்த ஆரம்ப ஆட்சேபணையைச்

Page 52
சாரல்நாடன்
சாதகமாக்கி, தோட்டத்துரைமார்களின் ஆதரவோடு தூதுக் குழுவில் மேலதிகமாக இடம் பிடித்துக் கொண்டவர் லாரி முத்துக்கிருஷ்ணா ஆவார். இதை நடேசய்யர் எதிர்பார்க்கவில்லை. இந்த லாரி முத்துக்கிருஷ்ணா அவர்களுடன் நடேசய்யருக்குள்ள தொடர்பு மிக நீண்டது.
இந்தியாவில் வெற்றிகரமாகத் தான் நடாத்திய பத்திரிகையில் - லாரி முத்துக்கிருஷ்ணாவை இலட்சியத் தலைவராகக் கண்ணிப்பிட்டுக் கட்டுரை தீட்டிய 1918ம் ஆண்டிலிருந்து அவருடன் இணைந்து தேசநேசன், சிட்டிஷன் பத்திரிகையில் பணியாற்றும் காலத்துக்குள் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குள் நடேசய்யர் தமது கணிப்புப் பிழைத்து விட்டதை உணர்ந்தார்.
இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதியாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காகத் தோட்டத் துரைமார் சங்கத்தின் தலைவராக இருந்த காரிக் என்பவரின் தயவைப் பெற்று லாரி முத்துக் கிருஷ்ணா தூதுக் குழுவில் இடம்பிடித்தார். மக்களுக்காக இயக்கம் நடாத்தும் ஒரு தலைவருக்குரிய குணாம்சம் இதுவல்ல, சேவையால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும் என்பது அய்யரின் நிலைப்பாடு.
தமது செயல்பாடுகளினால், இப்படித் தெரிவான தூதுக் குழுவுக்கு எதிராகத் தான் சேகரித்து வைத்திருந்த சாட்சியங்களை டில்லிக்குச் சென்று கட்டவிழ்த்து விட்டுத் தானாற்றிய வெற்றிகரமான செயலை,
"இந்த இரகசியம் உணர்ந்த நான் வெளிக்குத் தெரியாமல் தோட்டத் தொழிலாளர் விஷயமாய் 500 தோட்டங்களினின்றும் வாங்கிக் கொண்டு சிம்லா போனேன்". என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் நடேசய்யர்
இந்தக் குறிப்பு தேசபக்தன் ஏட்டில் 1924ம் ஆண்டு வெளியாகி அதன் முக்கியத்துவம் அனைவராலும் மறக் கப்பட்டுவிட்ட நிலைமை. ஆனால், அதன் சூத்ரதாரியான அய்யரின் நெஞ்சில் இன்னும் சூடேற்றிக் கொண்டிருக்கும் சம்பவமாக இருந்தது.
"அந்தச் சந்தர் ப் பத்தில் தான் நானும் டில்லிக்குப்போய்த் தோட்டத் தொழிலாளர் விஷயமாய் வாதாடினேன். கவர்ன்மெண்டார் அனுப்பவேண்டும், மற்றவர் அனுப்பவேண்டும் என்று பட்டம் பதவி தேடி நான் நிற்கவில்லை. என்னை விசாரணை செய்யக்கூடாது என்று தோட்டக்காரர் சங்கத்தார்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அது முடியாமல் செய்துவிட்டேன். அது முதற்கொண்டுதான் தோட்டக்காரர்கள் எனக்கு விரோதிகள் ஆனார்கள். தாங்கள்தான் தலைவர்கள் என்று மனுப் போட்டுக் கொண்டிருந்த தலைவர்களுக்கும் நான் எதிரியானேன். அந்த எதிரி என்ற எண்ணத்தை இக்கூட்டத்தவர்கள் இன்னம் விடவில்லை," என்று மாடு அசை போடுவதைப் போல மிக மிக நிதானமாக மீட்டெடுத்து எழுதுவதன் முலம் தனக்குத்தானே புது உயிர்ப்பு அளித்துக் கொள்கிறார்.
"தோட்டத் தொழிலாளி' பத்திரிகையில் இவ்விதம் வெளியான வரலாற்று நிகழ்வுகள் "எனது தோட்டத் தொழிலாளர் சகோதரர்களுக்கு" என்ற மகுடத்தில் தொடர் கட்டுரையாக வாரந் தோறும் முதற் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.
"தொழிலாளர்களே எச்சாரிக்கை" என்று தலைப்பிட்டு முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங் கை இந் தரிய க் காங் கிர ஸ் சார் பரில் போட்டியிட்டவர்களைப் பற்றி எழுதுகையில் காக்கா,

Page 53
சாரல்நாடன்
தையக்காரர், தன்னையறியாத் தலைவர் என்று அடைமொழியிட்டு ஆதங்கத்தைக் காட்டியுள்ளார். தேர்தல் என்ற தலைப்பில் வெளியான ஆசிரியத் தலையங்கத்தில் (தோட்டத் தொழிலாளி 1-6-1947)
"தேர்தல் வந்திருக்கிறது. தேர்தல் என்பது உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதாகும். உங்களுக்கு யார் உபகாரம் செய்யக்கூடியவரோ, செய்தவரோ அல்லது அவ்விதம் செய்ய யோக்கிதையுள்ளவரோ அவரையே தேர்ந்தெடுப்பதாகும்" என்று மிகமிக எளிமையாகவும் இலகுவாகவும் தேர்தல் பற்றி முதன்முறையாக வாக்குகள் மூலம் தேர்தலில் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்புக் கிடைத்த வாசகர்களுக்கு எடுத்து விளக்கி , "ஒருவர் வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறார், ஒருவர் காந்திக்குல்லாய் போட்டுக் கொண்டுடிருக்கிறார், ஒருவர் சிகப்புச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரைத் தேர்ந்தெடுப்பீர்களானால் ஏமாந்து போவீர்கள். ஏனெனில் உங்களிடம் வோட்டு வாங்குவதற்காகவே காந்திக் குல்லாயோ அல்லது சிகப்புச் சட்டையோ போட்டுக் கொண்டவராகவும் இருக்கக் கூடுமென்பதை மறக்க வேண்டாம்", என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு இதுவரை பரிச்சயப்படாத சனங்கள் படிப்பறிவில் குறைந்தவர்கள் என்று கருதப்படுகின்ற தொழிலாளர்களுக்கு இதைவிட எளிமையாக எழுதமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது. நடேசய்யர் வெளியிட்ட பத்திரிகைகள் எல்லாவற்றிலும் தோட்டத் தொழிலாளர்களைக் கடிதங்கள் எழுதச் செய்வித்தார் என்பதைக் கண்டுள்ளோம். தேசபக்தனில் ஆரம்பமான இந்தப்பணி தோட்டத் தொழிலாளியிலும் தொடர்ந்தது. தோட்டப்புற மக்களைப் பத்திரிகைக்கு எழுதச் செய்த பணியைத் தொடக்குவித்த வரும் தொடர்ந்து நடாத்தியவரும் நடேசய்யரே ஆவார்.

usérfloaumons s01-ouut
"தொழிலாளர் கடிதங்கள்" என்ற மகுடத்தில் தோட்டத் தொழிலாளியில் ஏராளமான கடிதங்கள் வெளியாகின. காலத்தேவைக்கேற்ப அவை அரசியல் பற்றியே அமைந்திருந்தன.
"தோட்டத் தொழிலாளர்களுக்குள்ள குறைகளை எடுத்துக்கூற வேறு பத்திரிகைகள் இல்லையாதலால் அவர்களுக்கென இந்தப் பத்திரிகையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் எழுதும் கடிதங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் பிறர் வாசிக்கக் கூடிய முறையிலும் இருக்க வேண்டும். உள்ளது உள்ளபடி உண்மையை உரைக்க வேண்டும். பொய் என்று உணர்ந்தால் அக்கடிதங்கள் பிரசுரிக்கப்படமாட்டா. ஒரு விஷயம் அச்சில் போடுவதால் உண்மையாக மாறிவிடாது. கையொப்பமில்லாத கடிதங்கள் கவனிக் கப் படமாட் டா கையொப்பம் பொய் க் கையொப்பமாகாகவிருக்கலாகாது. அனாவசியமாகத் துாஷித்து எழுதிய கடிதங்கள் குப்பைத் தொட்டிக்குப் போகும். உண்மையைத் தைரியமாய் எழுதிப் பழக வேண்டும் என்பது எமது அவா" என்ற பத்திராதிபரின் அறிவுறுத்தலோடு இப்பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவுறுத்தல்கள் ஆரம்ப எழுத்தாளர்களுக்கான உபதேசங்களாக மட்டுமின்றி, எழுத்தையும் எழுத்தின் மகிமையையும் எழுத்தின் அவசியத்தையும் வெளிப்படுத்தும் குறிப்புக்களாகவும் அமைந்துள்ளன.
தோட்டப் பகுதி மக்களுக்கென்று பக்கம் ஒதுக்குவதை இலங்கைத் தமிழ்த் தேசிய ஏடுகளான வீரகேசரியும் தினகரனும் ஆயிரத் துத் தொ ள் ளாயிர த் து அறுபதுகளிலேயே ஆரம்பித்தன. முப்பதுகளில் (தினகரன் 1932, வீரகேசரி 1930) தோற்றம் பெற்ற பணபலம் மிகுந்த
103

Page 54
சாரல்நாடன்
இப்பத்திரிகைகள் முப்பதாண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் தோட்டப் பகுதி மக்களுக்கென மலையக மக்கள் மன்றம் என்றும் தோட்ட வட்டாரம் என்றும் பக்கங்கள் ஒதுக்குவதற்கு வரலாற்று அவசியம் ஏற்பட்டது. வளர்ந்து வரும் இலக்கிய ஆர்வத்தையும் அரசியல் தெளிவையும் மலையக மக்களிடையே பரவலாக்குவதற்குக் கைகொடுப்பது தமது விற்பனையைத் தக்கவைப்பதற்கு உதவும் என்ற வியாபார நோக்கு இப்பத்திரிகைகளுக்கு இயல்பாகவே இருந்திருக்கும். இதற்கு முற்றிலும் மாறாக நடேசய்யர் தம் பத்திரிகைகளை இத்தோட்ட மக்களைப் பெரிதும் உள்ளடக்கிய இந்திய வம்சாவளி மக்களுக்காகவே நடத்தினார். அவரது பத்திரிகையின் நோக்கும் போக்கும் இந்திய வம்சாவளி மக்களின் கண்ணோட்டத்திலேயே அமைவதாயிற்று.
அவரது - தோட்டப்பகுதி மக்களை எழுத்துலகில் இணைத்துச் செல்லும் பணி, இவ்விதம் அவரது ஜீவிதமாகவே அமைந்து இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் நிலை ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானதல்ல.
"தொழிலாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் வாக்குரிமை என்னும் ஆயுதத்தைச் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். அந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு தங்கள் கழுத்தையே வெட்டிக் கொள்ளலாம், அல்லது தங்கள் எதிரியின் கழுத்தையும் அறுக்கலாம்" என்ற கருத்து வெளிப்படும் கடிதம் ஒன்று மஸ்கெலியாவைச் சேர்ந்த எம். கருப்பையா என்பவரால் எழுதப்பட்டுள்ளது. (தோட்டத் தொழிலாளி 1- 6- 1947 இரண்டாம் பக்கம்) வாசகர்களின் பொது அறிவுக்காகவும் ஈடுபாட்டுக்காகவும் அக்பர் சக்கரவர்த்தியினையும் பீர்பாலையும் பற்றிய சம்பவங்களை கதை வடிவில் தொடர்ச்சியாகத் தோட்டத் தொழிலாளி வெளியிட்டுள்ளது. அக்கதைகளுக்கு விபசா/
04

usfautor sciut
மகளின் தந்தை யார்? வேந்தனை மடக்கிய விவே/கி கண்டதுண்டோ? கேட்டதுண்டோ? காளைமாட்டுப்ப//லும் ஆண்டபிள்ளை பிரசவித்தலும் என்று தரப்பட்டுள்ள தலைப்புக்கள் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி வாசிக்க வைப்பதாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.
இப்பத்திரிகையின் வருடச் சந்தா 3.50 ஆக இருந்தது. இது குறித்து விளம்பரம் செய்கையில் "தோட்டங்களில் தொழிலாளர் 5 பத்திரிகைகள் வாங்கச் சேர்ந்து எழுதுவார்களேயானால் 3 மாதத்திற்கு ரூ. 3. 50க்கு 5 பத்திரிகைகளும் சேர்த்து அனுப்பப்படும்" என்று எழுதப்பட்டுள்ளது. தோட்டத்தில் பத்திரிகைகளைத் தருவித்து வாசிக்கும் பழக்கம் நன்கு வேர் விட ஆரம்பித்திருந்ததை மாத்திரமல்ல, தொழிலாளர்கள் ஒற்றுமையாக இயங்கியதையும் அணிவகுத்துச் செயற்பட ஆரம் பரித் த ைதயும் கூட இவ் விளம் பரங்கள் வெளிப்படுத்துகின்றன என்று அனுமானிக்கலாம். இவ்விதமான விளம்பரம் வேறெந்தப் பத்திரிகையிலும் காணப்படவில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது.
8
அடிக்குறிப்புகள்
தோட்டத் தொழிலாளி 1. 6. 1947
அதே
Hansard - 1941- Page 690 வர்த்தக மித்திரன் 1918 தேசபக்தன் - பத்திரிகை - 3, 9. 1924 தோட்டத் தொழிலாளி -பத்திரிகை - 1. 6. 1947 அதே "

Page 55
är Triostular
வீரன்
நடேசய்யரின் பொதுப் பணிகள் அவருக்கு நண்பர்களிலும் பார்க்கப் பகைவர்களையே உண்டு பண் ணின. அவரது தீவிரமான போக்கும் , நிர்தாட்சண்யமான கருத்தும் போலிகளை மக்களிடையே எளிதில் அம்பலமாக்கிட உதவியதே இதற்கான பிரதான காரணம்.
அவரது எதிரிகள் சாதாரணமானவர்களல்லர். அரசியலில் அவர்களுக்குச் செல்வாக்கிருந்தது. நாட்டு நிர்வாகத்திலும் நாடாளுமன்றத்திலும் அவர்களின் குரலுக்கு மதிப்பளிப்பவர்கள் நிறைந்திருந்தனர். பத் திரிகைகளில் அவர் களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. பொதுவில் அவர்களை எதிர்த்து நிற்பது அத்தனை எளிதானதல்ல.
இத்தனைக்கும் மத்தியில் அவர்களை நடேசய்யர் எதிர்த்து நின்றார். அவரது எதிரிகளோ நேருக்கு நேர் அவரை எதிர்ப்பதைத் தவிர்த்துக் கொண்டனர்.
அவரை அடியோடு அழித்தொழிப்பது என்று கங்கணம் கட்டி அவர்கள் ஒன்று திரண்டனர்.
நடேசய்யர் தனது போர்த் தந்திரத்தை மர்ற்றியமைத்தார். தனக்குக் கைவந்த பத்திரிகைக் கலையைக் கொண்டே அவர் களில் பலரைத் தரைமட்டமாக்கினார்.
ஒரு சிலர் இந்த நாட்டை விட்டே ஓடிப் போயினர். வேறும் சிலர் பொது வாழ்விலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ஓரிருவர் மாரடைப்பால் மாண்டு போயினர். சிலருக்கு உத்தியோகம் பறி போயிற்று. இவைகளை அவர் தனது வீரன் பத்திரிகை மூலமே சாதித்தார்.
106

பத்திரிகையாளர் நடேசய்யர்
வீரன் தனிமனிதர்களின் பிரத்தியேக வாழ்க்கையைப் பகிரங் கப்படுத்திய பத்திரிகை. தோட்டங்களில் ராஜவாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்த பெரிய கங்காணிகள் அந்தரங்கத்தில் பெண் லோலர்களாக இருந்ததை இப் பத் திரிகையின் மூலம் அய்யர் வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார். ஆதாரங்களுடன் சில வேளைகளில் புகைப்படங்களுடனும் அவர் செய்திகளை வெளியிட்டார்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமென்பர். நடேசய்யர் தனக்குப் பரிச்சியமான பத்திரிகையெழுத்தை இவ்விதம் பயன்படுத்தியதன் மூலம் எதிரிகளை நடுநடுங்க வைத்தார். இவரது இச்செயல்கள் குறித்துப் பண்பாடு பேசுவோர் குறை கூறுவதுண்டு. இவரது பத்திரிகைப் பணிகளில் மஞ்சள் பத்திரிகையாகக் கருதப்படுமளவுக்கு நடைபெற்ற இப்பத்திரிகை இவரது பெருமைக்கு இழுக்குத் தருவது என்பது முற்று முழுவதாக ஏற்கப்படக்கூடிய வாதமாகாது.
இப்படி ஒரு பத்திரிகையை, எதிரணியினரைப் பற்றி நடாத்துவதற்கு மிகுந்த துணிச்சல் அவசியம். சாதுரியமும் சாமர்த்தியமும் தேவை. இதற்கும் மேலாக, தனது எதிரிகளைப் போராட்டக் களத்தில் சந்தித்துக் கொண்டிருந்த அய்யர் இப்படி ஒரு வழியை மேற்கொள்ள நேர்ந்ததை அவரது கெட்டிக் காரத்தனமாகவும் கொள்ளலாம்.
புலிட்சர் என்ற உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் நியூயோர்க் வேர்ல்ட் என்ற பிரசித்தமான பத்திரிகையை நடாத்தி வந்தார். நியூயோர்க் ஜேர்னல் என்ற பெயரில் புதிதாக ஒரு பத்திரிகை வெளிவர ஆரம்பித்த வேளை அவர் சற்றுஅதிர்ச்சியுற்றார். அதன் வளர்ச்சி அபரிமிதமாக அமைந்து விற்பனைப் போட்டியே நிகழ நேர்ந்தது. தனது பத்திரிகையைத் தொடர்ந்தும்
107

Page 56
சாரல்நாடன்
நடத்த முடியுமா என்ற நிலைப்பாட்டுக்கு புலிட்சர் உள்ளாகினார். தாக்குதலை எதிர்நோக்க ஆயத்தமான புலிட்சர் மஞ்சள் பத்திரிகைத் துறையைப் பெரிதும் ஆதரிப்பவரானார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் நடந்த இச்சரித்திரப் புகழ்வாய்ந்த நிகழ்வு, அறிவுலகத்தின் ஆதரவைப் பெறுகின்றதாக அமைகின்ற போது இதே நூற்றாண்டின் அரை இறுதியை அண்மித்த காலப்பகுதியில் ஊமைகளுக்காகக் குரல் கொடுக்கும் கைங்கரியத்தைச் செய்து கொண்டிருந்த நடேசய்யர் மேற்கொண்ட வழிமுறை அவரது கெட்டிக்காரத்தனமாகவே கொள்ளப்படுதல் வேண்டும்.
கடல் தாண்டிய ஒரு பிரதேசத்தில் கொண்ட கொள்கைக்கும் வரித்துக் கொண்ட குறிக்கோளுக்கும் வெற்றி தேடி உழைக்கும் எந்தெவாரு மனிதனும் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வெற்றிகரமாகப் பயன்படுத்துவது ஒரு திறமையான செயலாகவே கருதப்படுதல் வேண்டும். 1996ல் இந்த நிலைப்பாடு அட்டியின்றி ஏற்கப்படுகிறதெனில் 1920ல் இதைச் செய்து காட்டிய நடேசய்யர் போற்றப்பட வேண்டிய ஒருவர் என்பதில் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது.
தோட்டத்துப் பெரிய கங்காணிமார்கள் வீரன் பத்திரிகை இதழை அச்சில் கண்டு கதிகலங்கினர். இந்தத் தோட்டத்தைச் சார்ந்த இந்தக் கங்காணி இந்தப் பெண்ணோடு இப்படிக் களிக்கின்றார். என்ற விதத்தில் அமைந்த செய்திகள் அவர்களுக்குக் கதிகலக்கம் தந்தன.
அப்படி ஒரு கதி கலக்கத்தை ஏற்படுத்தியதன் மூலம் தனது எதிரிகளில் மிகப் பிரதானமான ஒரு பிரிவினரை நடேசய்யர் எளிதில் தூக்கியெறிந்தார்.

பத்திரிகையாளர் நடேசய்யர்
வீரன் பத்திரிகை ஒரு கதிகலக்கம். தமிழகத்தில் லட்சுமிகாந்தன் நடாத்திய இந்துநேசன் பத்திரிகைக்கும் இலங்கையில் அந்தனிசில் நடாத்திய ஒரு தீப்பொறி பத்திரிகைக்கும் வீரன் முன்னோடியாக அமைந்தது எனலாம்.
ஏ. ஈ. குணசிங்காவின் தொழிற்சங்க இயக்கச் சிங்கள மொழி ஏடான "வீரயா" - வீரன் சிங்களவரல்லாதோருக்கு எதிராகக் கிளர்ச்சிகளைத் துாண்டி வரும் பணியில் ஈடுபட்டு இவ்விதமே தரக்குறைவான முறையில் செயல்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. சிங்களப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த மலையாளிகள் இனம் காட்டப்பட்டனர். கத்திக்குத்துக்கு அந்த மலையாளிகள் ஆளானபோது வீரயா மகிழ்ந்து ஆர்ப்பரித்தது. (7. 1. 1931 - வீரயா)
அடிக்குறிப்புகள்
1. Ernest C. Hynds - American Newspapers in the
197OS 2. வீரயா - சிங்கள மொழிப்பத்திரிகை - 1931

Page 57
சாரல்நாடன்
சுதந்திரன்
நடேசய்யர் இந்தியாவில். தொடக்கி நடாத்திய வர்த்தக மித்ரன் பிற்காலத்தில் சுதந்திரன் என்று பெயர் மாற்றம் பெற்றது. "நாம் முதன் முதலாகத் தஞ்சையில் தொடங்கிய வர்த்தக மித்ரன் பத்திரிகை தான் தற்சமயம், சுதந்திரன் என்ற பெயருடன் வருகின்றது." இப்பெயர் மாற்றம் நடைபெற்ற மிகச்சிறிய இடைவெளிக்குள் நடேசய்யர் இலங்கையில் குடியேறினார்.
இலங் கையில் அ வ ர து பனரிகள் பத்திரிகைத் துறையுடன் தொடர்பு கொண்டதாக இருந்தாலும் வர்த்தகமித்ரனி, சுதந்திரன் என்ற பத்திரிகைகளுக்குத் தொடர்பான விதத்தில் அவர் பணியாற்றவில்லை.
உண்மையில், பொருளாதாரத்தில் எழுந்து நிற்கும் மனிதனை உருவாக்குவதில் கவனம் காட்டிய வர்த்தகமித்ரன் நடேசய்யராக அவர் இலங்கையில் செயல்படவில்லை. மாறாக இந்தியாவிலிருந்தபோது தானெதிர்த்து நின்ற கொள்கை ஒன்றுக்குச் சார்பான ஒருவராக அவரது பத்திரிகைப் பணிகள் இலங்கையில் அமைந்தன. இந்தப் பணியில் அவரது ஆசிரியப் பொறுப்பில் வெளியான கடைசிப் பத்திரிகை சுதந்திரன் நாளேடாகும்.
1947ம் ஆண்டு ஜுன் மாதம் முதலாந்தேதி இதன் முதல் வெளியீடு நிகழ்ந்தது. இதன் பிரதான நோக்கு அரசியல்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் ஏடாக வெளிவந்தது சுதந்திரன். தமிழ்த்தலைவர்களாக அப்போது புகழோடு விளங்கிய எஸ். ஜே. வி. செல்வநாயகமும் ஜி. ஜி.
110

ujBá)flamaurm fit g0Le buff
பொன்னம்பலமும் மிகவும் பிரசித் தம் பெற்ற வழக்கறிஞர்களாகவுமிருந்தனர். ஒருவர் சிவில் வழக்கு நடாத்துவதில் பேர் பெற்றவர்; மற்றவர் கிரிமினல் வழக்கு நடாத்துவதில் கெட்டிக்காரர்.
இந்த இரண்டு கெட்டிக்கார வழக்கறிஞர்களையும் கவர்ந்த கெட்டிக்காரப் பத்திரிகையாளராக விளங்கினார் நடேசய்யர். தாம் நடாத்தவிரும்பும் அரசியல் பத்திரிகைக்கு நடேசய்யரை அவ்விரு வரும் ஏக மனவிருப்பத்தோடு ஆசிரியராக்கினர்.
இலங்கையில் அரசியல் கருத்துக்கள் இனரீதியில் வளர ஆரம்பிப்பதைக் கண்ணுற்ற நடேசய்யர் தற்பாதுகாப்பு முயற்சியில் ஈடுபடுவது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே இது நேர்ந்தது. வடபுலத்து அரசியல் வாதிகள் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளைக் கரிசனையோடு நோக்குகின்றார்களில்லை என்ற பகிரங்கமான குற்றச்சாட்டை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் வெளியிட்டவர் நடேசய்யர். அவரது சட்டசபைப் பேச்சிலும் பத்திரிகைக் கட்டுரையிலும் இதற்கான ஆதாரங்கள் ஏராளமுண்டு. இருந்தும் வடபுலத்து அரசியல் ஏட்டில் அவர் ஆசிரியராக அமர்த்தப்பட்டார். இவ்விதம் அவர் சுதந்திரன் ஏட்டில் பணி புரிகின்றபோதே பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால், இலங்கையில் தமிழரின் அரசியல் வேறு விதமாக அமைந்திருக்கும் என ஊகிக்க இடமிருக்கிறது. அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார். அந்த மனவேதனையில் நவம்பர் மாதம் ஏழாம்தேதி அவர் மரணமடைந்தார். ஆக ஐந்து மாதங்களே அவரது ஆசிரியத்துவத்தில் சுதந்திரன் வெளிவந்தது.
1 11

Page 58
சாரல்நாடன்
இக்காலப்பகுதியில் அவரது ஆழமானதுவும் அலசல் மிகுந்ததுவுமான அரசியல் கட்டுரைகள் சுதந்திரனில் வெளியாயின. சுதந்திரனின் அரசியல் கருத்துக்களுக்குத் தமிழ் மக்களிடையே இக்குறுகிய காலத்துக்குள் பெரிய எதிர்பார்ப்பையே உண்டுபண்ணியிருந்தார்.
அவர் அடித்தளமிட்ட பாங்கே, பின்னாளில் சுதந்திரன் அரசியல் பத்திரிகையாக வேர்விட்டு வளர்ந்திட வழி சமைத்தது எனலாம்.
நடேசய்யரின் பத்திரிகையுலக அநுபவங்களையும் ஆளுமையையும் முழுமையாக, எதிர்பார்த்தவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள எஸ். ஜே. வி. செல்வநாயகத்துக்கு முடியாமற் போயிற்று. நடேசய்யரின் மரணத்தால் செல்வநாயகமும் பொன்னம்பலமும் மிகவும் வருந்தினர்.
நடேசய்யரின் மரணக்கிரியைகளை முன் நின்று செய்யும் நிலைக்குள்ளான எஸ் . ஜே. வி. செல்வநாயகத்துக்குத் தன் அரசியல் - பத்திரிகை எதிர்பார்ப்புக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் விட இன்னோர் ஏமாற்றத்தைப் பொதுத் தேர்தலுக்குப்பின் நாடாளுமன்றம் கூடியவுடன் சந்திக்க நேர்ந்தது
இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் என்ற உருவில் 1948ம் ஆண்டு டி. எஸ். சேனநாயகா கொண்டு வந்த சட்டத்தின் மூலம் இந்திய வம்சாவளி மக்களில் இலட்சக்கணக்கானவர்கள் நாடற்ற மக்களாயினர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் இந்திய வம்சாவளி மக்களின் பால் ஈடுபாடு கொண்டு தனது அரசியல் வழியையும் மாற்றிக் கொள்ளத் துணிந்த போது, அவரது கணிப்பில் கெட்டிக்காரப் பத்திரிகையாளனான நடேசய்யரின் பங்களிப்பும் கிடைத்திருக்குமானால் இலங்கைத் தீவின் சரித்திரமே வேறு விதமாக அமைந்திருக்கும்.
1 2

பத்திரிகையாளர் நடேசய்யர்
நடேசய்யரின் மரணத்தை முதற்பக்கச் செய்தியாக அவரது உருவப்படத்துடன் வெளியிடுவதற்கு டைம்ஸ் ஒஃவ் சிலோன், டெயிலி நியூஸ், தினகரன், சுதந்திரன் பத்திரிகைகள் தவறவில்லை.
சுதந்திரன் தனது இறுதி மரியாதையை,
"காந்தி நடேசய்யர் என்ற அவரின் பெயரே அவரின் சேவையை, மக்கள் அவர் பால் கொண்டிருந்த மதிப்பை வெளிப்படுத்துகிறது. காந்தி நடேசய்யர் இலங்கைத் தமிழரின் ஜீவ நாடியாகவுள்ளவர். அவர் இதயத்தில் தமிழ்க்குருதி துள்ளிக் குதித்தோடியது. ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்தவர், விடா முயற்சி மிகுந்தவர்; சேவா பக்குவம் பெற்றவர்; ஏழை எளியவரிடம் பாசம் கொண்டவர். தோட்டத் தொழிலாளர்களின் நலனையே கனவிலும் கருதி உழைத்த பெரியார். தமிழன் என்றால் ஆண்மையுடன் முன்னேறு என்பதை இலட்சியமாகக் கொண்டவர்" என்று வெளிப்படுத்தியது. நடேசய்யரின் பன்முக ஆற்றலையும் ஈடுபாட்டையும் மிகத் தெளிவுற விளக்கும் மேற்குறிப்பிட்ட வரிகளோடு அமையாது, அவரது பத்திரிகைப் பணிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் எழுதியது.
"இலங்கையில் முதன்முதலாகத் தினசரித் தமிழ்ப் பத்திரிகை வெளியிட்டவரும் இவரே. இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் அவரிடம் பத்திரிகைத் தொழில் பயின்றவர்கள் அநேகருண்டு. இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாததையிட்டு வருந்தி எங்கள் சுதந்திரன் பத்திரிகையைத் தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு வெளிவர ச் செய்த முக்கிய கர்த் தாவும் திரு. நடேசய்யர் தான்", என்ற வரிகள் கவனத்துக்குரியன.
1 3

Page 59
சாரல்நாடன்
சுதந்திரன் வெளிவர ஆரம்பித்த வேளை இலங்கையில் வீரகேசரி, தினகரன் என்ற இரு தமிழ்" பத்திரிகைகள் வர்த்தக ரீதியில் வெளிவந்து கொண்டிருந்தன. எனினும் இலங்கைத் தமிழ் மக்களின் உண்மையான கரு த்துக்கள் அவற்றில் வெளிப்படவில்லை.
தினகரன் பத் திரிகையின் உரிமையாளர் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தவர்; வீரகேசரி பத்திரிகையின் உரிமையாளர் இந்தியத் தமிழர். இந்தப் பின்னணியில் இலங்கை அரசியலில் தமிழர் நலம் பேண வேண்டின் அவர்களுக்கெனத் தனியான ஒரு பத்திரிகை அவசியம் என்பதை நடேசய்யர் உணர்ந்தது மாத்திரமல்ல, இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாததையிட்டு வருந்தியுமுள்ளார். அப்படி ஒரு பத்திரிகையை நடாத்துவது குறித்து ஆழச் சிந்தித்துள்ளார் என்பது பெறப்படுகின்றது. கால் நூற்றாண்டுக்கும் மேல் பத்திரிகையுலக அநுபவம் மிகுந்த நடேசய்யர் அது காலவரை தமது பத்திரிகைகளின் மையமாக இந்திய மக்களின் மேம்பாட்டையே வைத்திருந்தார். அவரது பத்திரிகைகளில் பொதுவான அரசியல், பொருளாதார கருத்துக்கள் இடம் பெற்றன. நாட்டு நடப்பைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவந்தன. கவிதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டன. அவை இந்திய வம்சாவளி மக்களோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டவையாகவே இருந்தன.
இதிலிருந்து வேறுபட்டு இலங்கைவாழ் எல்லாத் தமிழர்களையும் மையமாகக் கொண்டு நடாத்தும் ஒரு பத்திரிகையாகச் சுதந்திரன் பத்திரிகையைத் தமிழ்ப் பெரியார்களின் துணை கொண்டு வெளிவரச் செய்த பெருமைக்குரியவராகிறார்.
114

us69 fondasun Y Y gOLPuluu
நடேசய்யரின் கீழ்ப் பத்திரிகைத் தொழில் பயின்றவர்களில் வ. ரா, எச். நெல்லையா, டி. சாரநாதன், டி. இராமானுஜம், கவிஞர் பி. ஆர்.பெரியசாமி, அ. மு. துரைசாமி போன்றோரும் அடங்குவர் என்பதே அவரது ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். இவர்களில் வ.ரா. தமிழறிஞர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் , தமிழகத்திலும் இலங்கையிலும்
அறியப்பட்ட நாவலாசிரியர் எச். நெல்லையா.
சுதந்திரன் பத்திரிகையில் முதல் இதழிலிருந்தே இலங்கை அரசியலில் பெரும்பான்மைச் சிங்கள இனத்தவர் தமிழின மக்களை ஏமாற்றி வரும் போக்கினை வன்மையாகக் கண்டித்தும் வாய்விட்டுச் சிரிக்கும் ஏளனத்துடனும் தொடர் கட்டுரையாக நடேசய்யர்
எழுத ஆரம்பித்துள்ளார்.
இக்கட்டுரை ஏழு இதழ்களில் வெளிவந்துள்ளது.
அப்போது ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியினரை (UNP) பொய் வாக்குரைப்பவர்களாகவும் குடும்ப அரசியல் நடாத்துபவர்களாகவும் பலரும் குறை கூறினர். இக் குறைகளைத் தனக்கே உரித்தான சாமர்த்தியத்துடன் நடேசய்யர் வெளிப்படுத்தியுள்ளார். UNP 676örug| Until Next Parliament 676örl 160gó, குறிக்கும் என்று குறிப்பிட்டுத் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பார்லிமென்ட் அமைக்கும் வரையில் அவர்களது பொய் வாக்குறுதிகள் செல்லுபடியாகும் என்று ஒரு 55'GGO U uSayyid “ UNP GT Gör Lugu Uncle Nephew Party
15

Page 60
சாரல்நாடன்
என்று குறிப்பிட்டு டி. எஸ். சேனாநாயக்கா, சேர். ஜோன் கொத்தலாவலைக்குள்ள உறவு முறையில் அது ஒரு
குடும்பக் கட்சி என்று இன்னொரு கட்டுரையிலும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
அரசியல் நடப்புக்களை மிகவும் எளிமையாகவும்
இனிமை சொட்டவும் சுவை குறையாமலும் எழுதியுள்ளதை இன்றும் ரசிக்கலாம்.
X X X X
அடிக்குறிப்புகள்
l. தேசபக்தன் - பத்திரிகை - 15, 9. 1924 2. சுதந்திரன் - பத்திரிகை - 1947
3. சுதந்திரன் - பத்திரிகை - 1947
4. சுதந்திரன் - பத்திரிகை - 1947
5. சுதந்திரன் - பத்திரிகை - 1947

பத்திரிகையாளர் நடேசய்யர்
பத்திரிகைக் குரல்
பயந்து பலவீனமுற்றிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை இலட்சக் கணக்கான மக்களை உள்ளடக்கி, மொழியாலும் சமயப் பின்பற்றலாலும் தொண்ணுரறு சதவிகிதத்தில் ஒன்றாகவே அவலக்குரல் எழுப்பிய ஒரு மக்கள் கூட்டத்தை எழுந்து நின்று போராடும் மாபெரும் சக்தியாக உருவாக்கிட, தனது ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்திய நடேசய்யரின் செயல் மலை மீது வீசும் விளக்குக்கொப்பான ஒன்றென்பதில் சந்தேகமில்லை.
பத்திரிகை நடாத்துவது இடர் மிகுந்த ஒரு செயல். "எழுந்தால் சீரும் சிறப்பும், விழுந்தால் அழிவு" என்பது இத்துறையில் சந்தேகமற நிறுவப்பட்டுள்ள ஒருண்மை. இந்த உண்மையைத் தனது பத்திரிகை வாழ்க்கையில் வெளிப்படுத்திய சிறப்பும் அவருக்குண்டு.
தொழிற்சங்கத்தையும் அரசியலையும் தனது பிரதானமான கவசங்களாக அமைத்துக் கொண்ட நடேசய்யர் காலத்துக் காலம் தான் தொடர்பு கொண்டிருந்த பத்திரிகைகளின் மூலம், இடர் மிகுந்த செயல் எனக் கருதப்பட்ட ஒன்றினை விரும்பி மேற்கொண்டிருந்தவர் என்ற பெருமைக்குரியர் ஆகின்றார்.
தோட்டப் புற மக்களுக்கெனப் பத்திரிகைகளைத் தோற்றுவித்த முதல்வர் அவர் என்பது மாத்திரமல்ல, இலங்கைத் தீவின் பூரண சுய ஆதிபத்யம், பெண்களின் விடுதலை, பெண்களுக்கான அரசியல் வாக்குரிமை ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற முதல் வரிசை வீரர்களோடும் அவர் கைகோர்த்து நின்றார் என்பதும் வரலாற்று உண்மையாகும்.
17

Page 61
சாரல்நாடன்
பேராதனையில் பல்கலைக்கழகம் அமைவதற்கும் சோல்பரி ஆணைக்குழுவின் அரசியல் சீர்திருத்தம் அர்த்தமுள்ளதாக அமைவதற்கும் நடேசய்யர் தமது பத்திரிகைக் குரலை உரத்து எழுப்பியுள்ளார் என்பதுவும் கவனிக்கத்தக்கது. இலங்கை அரசியலில், பத்திரிகைக் குரலுக்கு முக்கியமான ஓரிடம் எப்போதும் இருந்தே வந்துள்ளது.
சட்ட நிரூபண சபைக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கபட்டிருந்த போதும் (1920) கவர்னருக்கு எதிராக, தேர்தலில் வென்று தெரிவான பிரதிநிதிகள் பிரதிநிதித்துவ ஆட்சிக்காகப் போராடிய கால எல்லையின் போதும் (1947), தேய்ந்து கரைந்த இருபத்தேழாண்டுகள் "இலங்கைத் தீவில் பொறுப்பான பத்திரிகைகள் திருப்தி காணும் விதத்தில் பணியாற்றினாலும் பத்திரிகை உதவியின்றிச் சட்டமன்ற உறுப்பினர்கள் தமது குரலைப் பலமாக எழுப்ப வழியின்றி விழித்தனர். நியமனம் செய்யப்பட்ட அரசாங்க உறுப்பினர்கள் பகிரங்கமாக வாய்விட்டுப் பேச வழியின்றித் தவித்தனர். பத்திரிகைகளின் உதவியைத் தாமாகவே தேடலாயினர்". இக்காலப் பகுதியில் தமது பத்திரிகைப் பணிகளைத் தொடரும் நிலையில் நடேசய்யர் இருந்துள்ளார் என்பதுவும் அவரது தனித்துவம் பேணப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதுவும் நாம் மறக்கக் கூடாத ஒருண்மையாகும்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் பத்திரிகைகளை நடாத்திய நடேசய்யர் இக்காலப்பகுதியில் மிகத் திறமையாகவே பணியாற்றியுள்ளார் எனலாம்.
தமிழ்ப் பத்திரிகைகள் வாசிப்பவர்கள் 1927ல் தமிழ்நாட்டில் மொத்தம் நாலாயிரம் பேர்கள் தாம். 1930ல் உப்புப் சத்தியாக்கிரகத்தை மகாத்மா காந்தி ஆரம்பித்த வேளையில்தான் இது பத்தாயிரமாக வளர்ந்தது என்றும் அறியப்பட்டுள்ளது.

ubs)ssRaumont gQu-Puwst
இந்தப் பின்னணியில் இலங்கைச் சூழலில் தமிழ்ப் பத்திரிகையைத் தொடர்ந்து நடாத்தி வருவதற்கான மனத்திட்பம் பெற்ற நடேசய்யர் மதிக்கப்பட வேண்டிய ஒரு வர்தான்.
"மலையகத் தமிழரிடையே தமிழ்ப் பண்பினை வளர்த்துக் கொள்வதற்கும் பிரக்ஞையை உண்டு பண்ணுவதற்கும் இவர் நடாத்திய பத்திரிகைகள் பாரிய
பங்களித்துள்ளன'
The Journalist by nature is a nomad GT Gör go கூறுவர் . ஒரே இடத்தில் தொடர் ந் திருக்கும் ஜேர்னலிஸ்டுகள் ஒன்று உரிய ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண் டும் அல்லது வேறோரிடம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
இயல்பாகவே தன்னிலமைந்துள்ள பீறிட்டெழும் ஜேர்னலிஸ்ட் குணாம்சம் காரணமாகத்தான் தனது ஒரு பத்திரிகை மறைய நேர்ந்த போது மனந்தளராது இன்னொரு பத்திரிகையைத் தோற்றுவிக்க அவரால் முடிந்தது. காலத்துக்குக் காலம் தேவைகருதி அவர் தோற்றுவித்த எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தப் பீறிட்டெழும் குணாம்சம் வெளிப்பட்டுள்ளது.
"பிறருக்குப் பண உதவி வழங்குவது ஒருவரின் பெருந்தன்மையைக் காட்டுகிற செயல். பலமிழந்த மக்கள் கூட்டத்தைச் சக்தி மிகுந்த சனத்திரளாக எழுந்து நின்று பேச வைப்பது அதற்கும் மேலான மதிக்கப்பட வேண்டிய குணாம்சமாகும். தனது ஏரிக்கரைப் பத்திரிகைகளின் மூலம் இதை நடாத்திக் காட்டிய அவருக்குச் சிலை வைத்தல் தகும். அந்த அளவுக்கு உயர்ந்த தேசிய வீரர் அவர் ஒருவரே", என்று டி.ஆர். விஜேவர்த்தனாவைப் பற்றி மார்டின் விக்ரமசிங்கா குறிப்பிடுவது நடேசய்யருக்கும் பொருந்தும்.
119

Page 62
சாரலநாடன்
இலண்டனிலிருந்த போது அங்கு வெளியான டெயிலிநியூஸ் பத்திரிகையில் மனம் லயித்த விஜேவர்த்தனா இலங்கையில் அதே பெயரில் ஒரு பத்திரிகையைத் தோற்றுவிக்கும் தீர்மானத்தை எடுத்தார் என்பர்.
இலங்கையில் பலரும் தமது வீட் டின் வரவேற்பரையில் ஆங்கிலப் பத்திரிகையை விட்டு வைப்பது தமது அந்தஸ்தை உயர்த்தும் என நம்பியிருந்தனர். ஆங்கிலம் பேசும் ஐரோப்பிய வணிகர்கள், தோட்டத் துரைமார்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் ஆதரித்த ஆங்கிலப் பத் திரிகையான ஐரோப்பியர்களுக்குச் சொந்தமான டைம்ஸ் ஒஃவ் சிலோன் பத்திரிகை பணம் பண்ணுமளவுக்கு வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. அதன் நாளாந்த விற்பனை நாலாயிரம் மாத்திரமே. டெயிலிநியூஸ் விற்பனை மூவாயிரம் மட்டுமே. பத்திரிகைத் தொழில் என்பது ஒரு வியாபாரம் மாத்திரமல்ல. பணம் சம்பாதிப்பது மாத்திரம் வெற்றிகரமான வாழ்க்கையாகாகக் கருதப்படக்கூடாது என்று நம்பியவர்கள் இலங்கையில் தமிழ்ப்பத்திரிகையை நடாத்தியுள்ளார்கள். அவர்களின் பிரதான நோக்கு சமூகப் பணியாற்றுவதே.
யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக, அரசியல் வாழ்வில் முக்கிய பங்கு செலுத்திய பத்திரிகைகள் தினகரன், வீரகேசரி போன்று வியாபார ரீதியில் வெற்றி காணவில்லை என்று கூறப்படுவது இதனாலேயே,
தோட்டப்புற மக்களிடையேயும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடையேயும் தமது பத்திரிகைப் பணிகளை முன்னெடுத்துச் சென்ற நடேசய்யரும் இது போன்ற சிரமத்துக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

usilila auТић дб ошић
இலங்கையில் இந்திய மக்களை மையமாக்கி இவப் நடாத்திய பத்திரிகைகள், தோட்டப்புறங்களில் நடைபெறும் நிகழ்காலச் சிறுமைகளை வெளிப்படுத்துவனவாக அமைந்த காரணத்தால் இந்திய அரசாங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் கவனத்தை ஈர்ப்ப்னவாக விளங்கின. குறிப்பாக அரசியல் பற்றி வெளியிடப்படும் கருத்துக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில ஆட்சியாளரின் கவனத்துக்கு உட்படுத்தப்பட்டன.
இலங்கையில் நடேசய்யரின் அரசியல் கட்டுரைகளும் தமிழகத்தில் சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் உடனுக்குடன் ஆங்கில மொழியாக்கம் பெற்றதன் காரணமிதுவே.
நடேசய்யரின் பத்திரிகைகள் இந்தியச் சனங்களின் மனோபாவத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தின.
"ஒரு விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்து விட்டதென்றால் அதை வேதவாக்காகவும் சத்தியமாகவும் மக்கள் அக்காலத்தில் மதித்தனர். அப்படி ஜனங்கள் மதிக்கிறார்களென்பதை அறிந்து பத்திரிகாசிரியர்களும் ஜாக்கிரதையாகப் பிரசுரித்து வந்தனர். பத்திரிகைகளில் வந்த தலையங்கங்களை ஜனங்கள் மதித்தது மட்டுமா? பிரிட்டிஷ் சர்க்காரும் ஒவ்வொரு சிறிய பத்திரிகையின் கரு த் தையும் மதித் து வந்தது. அரசாங் கக் காரியாலயங்களிலும் பத்திரிகாசிரியன் என்றால் ஒரு கெளரவம் இருந்து வந்தது" என்று சொல்லப்படும் கூற்று நடேசய்யர் மட்டில் நூற்றுக்கு நூறு பொருந்தும்.
தமது பத்திரிகைப் பணிகளின் வெற்றிக்கு நடேசய்யர் தமது மனைவி மீனாட்சியம்மையின் பங்களிப்பை உரியமுறையில் பெற்றிருந்ததுவும் ஒரு முக்கிய காரணம்
21

Page 63
சாரல்நாடன்
எனலாம். அய்யரின் இத்தகு வாழ்க்கையைப் போலவே மலேயாவில் தமிழ் நேசன் பத்திரிகை ஆசிரியர் சி. நரசிம்ம அய்யங்காரின் வாழ்க்கையும் அமைந்திருந்தது ஒப்பு:நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அய்யங்காருக்கு
>அவரது மனைவி லட்சுமி அம்மாளின் பங்களிப்பு வார ஏடான தமிழ்நேசன் வெற்றியாக நடைபெற நிறையவே கிடைத்தது.
"இம்மலாய் நாட்டில் தோன்றி மறைந்த ஏனைய பத்திரிகைகளைப் போலல்லாது இப்பத்திரிகையை நிர்விக்ன சாச்விதமாயும் நடத்த வேண்டுமென்று எண்ணியே யாம் எமது சொந்தப் பொறுப்பில் இப்பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறோம்", என்ற நரசிம்ம அய்யங்காரின் கூற்று, கடல் கடந்த நாட்டில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றைச் சொந்தமாக நடாத்துவதன் அவசியத்தை உணர்த்துகின்றது. இதே உணர்வில் நடேசய்யரும் தமது பத்தரிகைகளை தமது சொந்தப் பொறுப்பில் நடாத்தியிருக்கிறார்.
அய்யங்காரின் தமிழ்நேசன் அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மனைவியின் பொறுப்பில் வளர்ந்து நாளேடாகப் பரிணமித்தது. நடேசய்யருக்கு அந்த வாய்ப்பு இல்லாது போனது. அவரது மறைவுக்குப் பிறகு சுதந்திரன் தொடர்ந்து வந்தாலும் அவரது நாமத்தை நினைவில் வைக்குமளவிற்குச் சுதந்திரன் பத்திரிகையின் மையக்
கருத்துக்கள் ஒப்பானதாக அமையவில்லை.
பத்திரிகைகள் ஆற்றும் பணிகள் அதன் நீடித்த வாழ்வை வைத்தே அதிகமாகப் பேசப்படுகின்றன. தோன்றும் வேகத்திலேயே மறையும் பத்திரிகைகளே அதிகம்.
122

ub)favoasuurTOTT MY sulavuus
பத்திரிகையுலகின் மாயா சக்தியில் மனம் பறி கொடுத்தவர்கள், பத்திரிகை நடாத்துவதில் உள்ள இடர்ப்பாடுகளைக் கணக்கில் எடுக்காது, எவ்வித நிலைப்பாடான திட்டங்களுமின்றிப் பத்திரிகை நடாத்த முன் வருவதாலேயே இவ்விதம் நிகழுகிறது. இதற்கு முனைப்பான உதாரணமாக ஒரிதழோடு நின்று போன பத்திரிகைகள் விளங்குகின்றன.
"தமிழில் ஐம்பத்தைந்து சதவிகிதம் ஒரிதழோடு
நின்று போன பத்திரிகைகள் தாம்", என்கிறார் மாசு. சம்பந்தன் தனது "தமிழ் இதழியல் வரலாறு" என்ற நூலில், மேலும் நிலைத்து நிற்கின்ற பத்திரிகைகளும் தொடர்ந்து வெளிவந்து ஆண்டுக் கணக்கில் தாக்குப் பிடித்து, ஒரு தலைமுறை வாசகர்களைப் காண்பதென்பது மிகவும் அரிதான ஒன்றாக இருப்பதாக அவர் ஆராய்ந்து கண்டுள்ளார். நடேசய்யரின் பத்திரிகைகளில் தேசபக்தன் ஒன்றே தொடர்ந்து ஏழாண்டுகள் வெளிவந்துள்ளது. இலங்கையின் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றை நோக்குகையில் தேசபக்தன் வெளிவந்த காலனித்துவ ஆட்சியையும் மனதில் வைத்துப் பார்க்கையில் இது ஓர் அயரா முயற்சி என்று கூறுவதில் தவறில்லை.
நடேசய்யர் தமது பத்திரிகை முயற்சிகளை மேற் கொள் கையில் நாளேடாக, வார ஏடாக, மாதமிரண்டாக, மாதமொன்றாக என்று பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். ஒரே காலப்பகுதியில் தமிழிலும் ஆங்கிலத் திலும் பத் திரிகைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.
"இந்தியா, இலங்கையில் உள்ளவர்களைக் காட்டிலும் மலாய் நாடுகளிலுள்ளவர்கள் மேலதிகத் தேசாபிமானமும் உடையவர்கள்" என்று தன்னுடைய தமிழ்நேசன் பத்திரிகையின் முதல் தலையங்கத்தில் எழுதிய நரசிம்ம ஐயங்கார்
123

Page 64
சாரல்நாடன்
மலேயா வாழ் இந்தியர்களுக்குச் சட்ட சபைப் பிரதிநிதித்துவம் வேணி டுமென்று போராடியதை இலங்கை வாழ் இந் தியர் களுக்குச் சட்டசபை பிரதிநிதித்துவம் வேண்டுமென்று போராடிய நடேசய்யரின் பணியோடு ஒப்பிடலாம்.
நரசிம்ம ஐயங்கார் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர். பிறந்த ஆண்டு 1890. நடேசய்யரை விட இரண்டு வயது முத்தவர். தமிழ்நேசன் வார இதழை மலேயாவில் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் குரலாக ஒலிப்பித்தவர்.
ஆக, கடல்கடந்த நாடுகளில், பத்திரிகைக்கூடாக மக்களின் மேம்பாட்டுக்கான அந்நியர்களாகக் கருதப்பட்டு அல்லலுறும் இந்தியர்களுக்கான குரல் ஒலித்திருப்பதை அறிய முடிகிறது. ஆங்கில மொழியில் நடாத்தும் பத்திரிகையின் மூலம் இக்குரலை வழிகாட்டக் கூடிய முறையில் செய்திட ஒரு சிலருக்கு முடிந்தது. தென் 'ஆபிரிக்காவில் மகாத்மா காந்தி, இலங்கையில் நடேச
அய்யர் இப்படிச் செய்து காட்டினர்.
நடேசய்யர் தனது தேசபக்தன் பத்திரிகையில் இறுதிக் காலப்பகுதியில் தனது மனைவி மீனாட்சியம்மையை
வெளியீட்டாளர் என அறிமுகம் செய்துள்ளார்.
மலைநாட்டில், மிகப்பிரசித்தமான நூற்றாண்டுக் காலம் அறியப்பட்ட நகரங்களில் ஒன்று தொப்பித் தோட்டம் எனத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களால் குறிப்பிடப்படும் ஹட்டன் நகரம் ஆகும். இதற்கு அண்மையிலுள்ள நகரத்தை இத் தொழிலாளர்கள் "திக்குவாசல்" என்று குறிப்பிடுவர். இது இன்றைய "திக்கோயா" நகரமாகும்.
124

uăofflaaunsnîi adu-euun
தமிழ்ப் பிரதேசமாக விளங்கிய இப்பகுதியிலிருந்து தான் நடேசய்யர் தன்னுடைய அரசியல், தொழிற்சங்கப் பணிகளைப் பிரதானமாக மேற்கொண்டார். இவரது பத்திரிகைகள் கொழும்பில் - இலங்கையின் தலைநகர். இருந்து வெளிவருவது பலவிதத்திலும் இவருக்கு வாய்ப்பாயிருந்தது.
எனினும், நடேசய்யர் ஹட்டன் நகரில் ஓர் அச்சகத்தைத் தோற்றுவித்தார். சகோதரி அச்சகம் என்ற பெயரில் இயங்கிய அந்த அச்சகத்திலிருந்து அறிக்கைகளையும் நூல்களையும் தயார் பண்ணினார். மீனாட்சி அம்மைக்குச் சொந்தமாகப் பதிவு பண்ணப்பட்ட அந்த அச்சகத்திலிருந்து இந்திய தொழிலாளர் துயரச்சிந்து இரண்டு பாகங்கள்) நீமயங்குவதேன்? நரேந்திரபதியின் நரக வாழ்க்கை ஆகிய நூல்கள் வெளியாகின. ஹட்டன் நகரிலியங்கிய கணேஷ் அச்சகத்துக்கூடாகவும் கொழும்பு நகரில் இயங்கிய கமலா அச்சகத்துக்கூடாகவும் நடேசய்யர் தனது நூல்களை வெளியிட்டுள்ளார்.
xxxx
அடிக்குறிப்புகள்
1. The Life and Times of D. R. Wijewardene by
H. A. J. Hulugalle
2. தேசபக்தன் கோ. நடேசய்யர் - சாரல்நாடன்
3. The Life and Times of D. R. Wijewardene
4. அதே
5. ' - தமிழ் நேசன் வார ஏடு - 17- 9- 1924
மலேயா - நரசிம்ம ஐயங்கார்
6. சிந்தனைப்பண்ணையில் பாரதி - தொகுப்பாசிரியர்
குமரிஅனந்தன்

Page 65
சாரல்நாடன்
பத்திரிகைகளின் பெயர் அமைப்பு
பத்திரிகைகளின் பெயர்கள் கவனத்துக்குரியவை. பொதுவாகக் கவர்ச்சிகரமாகவும் கருத்தாழம் மிகுந்ததாகவும் அவை அமைவதுண்டு. பத்திரிகைகளின் நோக்கும் போக்கும் அவைகளின் பெயர்களிலேயே வெளிப்படும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. நடேசய்யர் வர்த்தக மித்ரன், சுதந்திரன், தேசநேசன், தேசபக்தன், தோட்டத் தொழிலாளி, வீரன், உரிமைப் போர், இந்திய ஒப்பீனியன், ஃபோர்வர்ட், தி சிட்டிஷன் என்ற பெயரமைந்த பத்திரிகைகளை நடாத்தியுள்ளார்.
அவரது முப்பத்திரண்டாண்டுப் பத்திரிகைப் பணிகள் (1915 - 1947) தமிழ்ப்பத்திரிகையுலகில் நிலையான ஓர் இடம் பெறத்தக்கன. வர்த்தக மித்ரன், மித்ரன் என்னும் பின்னட்டையைப் பெற்று வந்துள்ளது. தமிழ், சிங் களம் , மலையாளம் ஆகிய மொழிகளில் இப் பின் னட் டையைப் பெற்றுப் பத் திரிகைகள் வெளிவந்துள்ளன.
இடம் சார்ந்த பெயர் அமைப்பில் தென் இந்திய மித்திரன், இந்திய மித்திரன், குடந்தை மித்திரன், சமயம் சார்ந்த பெயர் அமைப்பில் இஸ்லாம் மித்திரன் இனம் சார்ந்த பெயர் அமைப்பில் முசுலீம் மித்திரன், திராவிட மித்ரன் என்று வந்துள்ள பத்திரிகை வரிசையில் தொழில்சார்ந்த பத்திரிகை அமைப்பில் வெளிவந்திருப்பது வர்த்தக மித்ரன் என்ற ஒன்றே என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பெயரில் நடேசய்யருக்கு முன்னரோ அன்றில் அவரது மறைவுக்குப் பிறகோ வேறெந்த இதழும் வெளி வரவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

uÁflama uma sua luf
தேசநேசன் , நேசன் என்னும் பின்னட்டையைப் பெற்று வந்துள்ளது. இடம் சார்ந்த பெயர் அமைப்பில் திருச்சி நேசன், புதுவை நேசன், சிங்கை நேசன் சமயம் சார்ந்த பெயர் அமைப்பில் கத்தோலிக்க நேசன், இந்து நேசன், பாலியர் நேசன், இனம் சார்ந்த பெயர் அமைப்பில் முஸ்லிம் நேசன், திராவிட நேசன் என்று வந்துள்ள பத்திரிகை வரிசையில் தேசம் சார்ந்த பெயர் அமைப்பில் வெளிவந்திருப்பது தேசநேசன் ஒன்றே எனலாம். தேசநேசன் என்ற பெயரில் மலேயா, பினாங்கு, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. தேசபக்தன் பக்தன் என்னும் பின்னட்டையைப் பெற்று வந்துள்ளது. தேசத்தை முன்னட்டையாகக் கொண்ட தேசநேசனும் தேசபக்தனும் சந்தேகமறத் தேசத்தை முன்னிறுத்தும் நடேசய்யரின் உள்ளத்தை வெளிப்படுதுவனவாக அமைந்துள்ளன எனலாம்.
தேசபக்தன் என்ற பெயரில் இந்தியாவில் வெளிவந்த பத்திரிகை திரு. வி. கலியாண சுந்தரனாருக்குப் புகழ் தேடிக் கொடுத்ததைப் போல இலங்கையில் வெளிவந்த தேசபக்தன் நடேசய்யருக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளது.
திரு. வி. க. விடம் தொழில் பயின்ற கல்கியும் வெ. சாமி நாத சர்மாவும் பத்திரிகாசிரியர்களாகப் பெரும் புகழீட்டியுள்ளனர் என்பது பலரும் அறிந்த உண்மை. நடேசய்யரின் இந்திய வாழ்க்கையைக் குறித்து அதிகமாக அறியப் பட வரில் லை. எனினும் , திரு. வி. க. வுடன் அவருக்குத் தொடர்பிருந்தது என்பதைத் திரு. வி. க. தனது நூலில் அய்யரைப் பற்றி எழுதியுள்ள குறிப்பினால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், தஞ்சையிலுள்ள கலியாண சுந்தரனார் உயர்தரக் கலாசாலையில் பணியாற்றும் போதும் நடேசய்யருக்கு அதற்கான வாய்ப்பிருந்துள்ளது. திரு. வி. க. விடம் தொழில் பயின்றவர்கள் பத்திரிகை உலகில் சிறந்ததைப் போல நடேசய்யரிடம் தொழில் புரிந்தவர்கள் சிறந்து
127

Page 66
சாரல்நாடன்
புகழ் பூத்தனர் . குறிப்பிட்டுக் கூறுமளவுக்குப் பிரகாசித்தவர்கள் வ. ரா. க. அ. மீராமுகைதீன், எச். நெல்லையா ஆகியோர் ஆவர்.
தமிழகத்தில் வர்த்தக மித்ரன் பத்திரிகையில் நடேசய்யரின் கீழ்ப் பணியாற்றியவர் வ. ரா.
இலங்கையில் தேசபக்தன் பத்திரிகையில் அய்யரின்
கீழ்ப் பணியாற்றியவர்கள் எச். நெல்லையா, க. அ. மீரா
էք ற ந முகைதீன் என்ற இருவருமாவர்.
இந்த மூவரின் ஆற்றல் களைத் தெரிந்து வைத்திருக்கும் தமிழ்ப் படிப்பாளிகள் நடேசய்யரின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளாமைக்குப் பிரதானமான காரணம் நடேசய்யரின் அகால மரணமே, சுதந்திர இந்தியாவிலும் சுதந்திர இலங்கையிலும் வ. ரா. வும் நெல்லையாவும் மீரா முகைதீனும் செயற்பட்டார்கள். அந்த வாய்ப்பு அய்யருக்கு இல்லாது போனதால் அவருக்கான அறிமுகமும் குறைவாயிற்று.
இந்தியன் ஒப்பீனியன் என்ற பெயரில் இவர் நடாத்திய ஆங்கிலப் பத்திரிகைக்கு வழிகாட்டியாகத் தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி நடாத்திய இந்திய ஒப்பீனியன் அமைந்திருந்தது. மகாத்மா காந்தி நடாத்திய பத் திரிகை தமிழிலும் தென் னா பிரிக் காவில் வெளியாகியிருந்தது என்கிறார் அ. ம. சாமி தன்னுடைய நூலில். இந்தியன் ஒப்பீனியன், சுதந்திரப் போர் என்ற ஏடுகள் பார்வைக்குக் கிடைக்கவில்லை. அவை பற்றிய குறிப்புகள், நடேசய்யரின் தொழிலாளர் சட்டப் புத்தகம் நூலிலும் டைம்ஸ் ஒஃப் சிலோன் கிரீன்புக் 1936 வெளியீட்டிலும் காணப்படுகின்றன.
சுதந்திரன் என்ற பெயரில் இந்தியாவில் தஞ்சையிலிருக்கும் போதும் இலங்கையில் கொழும்பில் இருக்கும் போதும் அய்யர் பணிபுரிந்த பத்திரிகைகள்

பத்திரிகையாளர் நடேசய்யர்
வெளியாகின. அதே பெயர் கொண்ட பத்திரிகை வார ஏடு , புதுவையிலிருந்து தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் அ. ம. சாமி. ரங் கூனிலிருந்தும் இதே பெயரில் பத்திரிகை வெளிவந்துள்ளதாக அவர் தன்னுடைய மற்றுமொரு நூலில் குறிப்பிட்டுள்ளார். உரிமைப் போர் என்ற பெயரில் அவ்விதமே இலங்கை, இந்தியா, மலேயா ஆகிய நாடுகளில் பத்திரிகை வெளியாகியுள்ளது.
பொதுவாக நடேசய்யர் நடாத்திய பத்திரிகைகளின் பெயர் அமைப்பு அவரது போர்க் குணத்தையும் உரிமை வேட்கையையும் வெளிப்படுத்துவனவாக உள்ளது. அவருடைய விடுதலை ஆர்வத்தையும் இந்திய வம்சாவளி மக்களின் மீது கொண்ட பற்றினை வெளிப் படுத் துவனவாகவும் அமைந்துள்ளது. இப்பத்திரிகைகள் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களிடையே அரசியல், சமூக, மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின என்று கூறுவதில் எந்த விதமான இரண்டாவது கருத்துக்கும் இடமில்லை.
பத்திரிகைகளின் மூலம் இந்திய வம்சாவளி மக்களிடையே இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வை அடியொற்றியே அக்காலப் பகுதியில் வேறும் பல பத்திரிகைகள் வெளிவர ஆரம்பித்தன.
தொழிலாளி (1924), காந்தி (1924), இலங்கை இந்தியன் (1928) தொழிலாளர் தோழன் (1929), இந்தியா இந்தியன், இந்திய கேசரி (1935), ஊழியன் (1939), பாரதயுவசக்தி, பாரதசக்தி, பாரத குலதீபம் (1939), சத்யமித் ர ன் (1926) போன்ற பத் திரிகைகள் அய்யருக்கெதிரானவர்களால் தோற்றுவிக்கப்பட்டு நடாத்தப்பட்டன என்பதே அய்யரின் பத்திரிகைப் பணிகள் மலைநாட்டுத் தோட்டப்புறங்களில் ஏற்படுத்திய
129

Page 67
சாரல்நாடன்
விழிப்பினை வெளிப்படுத்தப் போதுமான சான்றாகும். இப் பத் திரிகைப் போர் ( 1924 - 1939) பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துள்ளது என்பது ஒரு வரலாற்று உண்மை. இக்காலப்பகுதியில் நடேசய்யர் தன்னைச் சட்டசபை உறுப்பினராக உயர்த்திக் கொண்டதால் எல்லா எதிர்ப்புக்களையும். முறியடிக்க முடிந்தவரானார்.
தமிழில் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஐரோப் பியரே தமிழ் இதழ் களைத் தொடங்கி வழிகாட்டினர். அதன் காரணத்தால் தான் "தமிழ் மேகசின்", "அரோரா" என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்ட தமிழ் பத்திரிகைகள் வெளிவந்தன என்பார் அ. மா. சாமி.
இலங்கையிலோ "முனியாண்டி " என்ற தமிழ்ப் பெயரிலும் "அப்புஹாமி " என்ற சிங்களப் பெயரிலும் ஆங்கிலத்தில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. தமிழர்களையும் சிங்களவர்களையும் கவரும் விதத்தில் இந்த ஆங்கில மொழிப் பத்திரிகையின் பெயர்கள் அமைந்திருந்தன. இவற்றினை ஜோன் கெப்பர் 1869ல் வெளியிட்டார். தோட்டத்தில் துரையாகப் பணியாற்றிய அநுபவம் அவருக்கிருந்தது.
முனியாண்டி தோட்டத் தொழிலாளர்கள் பயந்து வழிபடும் தெய்வம். தீமைகளை அழித்தொழிக்கும் தெய்வம். சமூகக் கொடுமைகளை அழிப்பதில் தமக்கிருக்கும் ஈடுபாட்டை இப்பெயர் வாசகர்கள் மனசில் புதிய வைக்கும் என்கிறார் இதன் ஆசிரியர்.
* * 水 * அடிக்குறிப்பு
l. 19ம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் -அ. மா. சாமி 2. Muniandi - John Capper - 1869
130

பத்திரிகையாளர் நடேசய்யர்
சொல் அடைவுகள்
புதிது புதிதாகச் சொல்லாக்கங்கள் தமிழ் மொழியில் இடம்பெற்று வருகின்றன. பழந்தமிழில் வழக்கிலிருந்த சில சொற்கள் புதிய அர்த்தத்தில் மீண்டும் வழக்குக்கு வருவதையும் காண்கிறோம்.
நாட்டின் ஆட்சி மொழியாக அங்கீகாரம் பெற்ற தன் பின்னால், அல்லது, தேசிய மொழிகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றதன் பின்னால், அல்லது, இரண்டில் ஒன்றின் முக்கியத்துவத்தால் தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய இடங்களில் இன்று தமிழ் சிறப்பாக வளர ஆரம்பித்துள்ளது.
இந்த நிலைமை உருவாவதற்கு முன்னால் ஆங்கில ஆட்சி நிலவிய காலத்தில் தமிழ் மக்களின் அறிவை வளர்த்தெடுக்கும் பணியை மேற்கொண்ட பத்திரிகையாசிரியன் புதிது புதிதாகத் தமிழ்ச் சொற்களைக் கையாண்டுள்ளதைக் காண முடிகிறது. அது மிக அவசியமான ஒன்றாகவுமிருந்தது.
தமிழகத்தில் அரசியலிலும் தேசியத்திலும் முன்னின்று உழைத்த திரு. வி. க புதிது புதிதாக இவ் வரிதம் சொற் களைப் படைத் தளித் துப் பெருமையடைந்துள்ளார். புரட்சி, அறப் போர், ஒத்துழையாமை, ஈடுகானம் என்பவை அவர் உருவாக்கிய சொல்லடைவுகள்தாம்
மகாத்மா காந்தியை, காந்திஜி என்ற சொல்லால் மக்கள் அழைத்துப் பழகிய நேரத்தில் பெருமையோடு மட்டுமல்ல பயபக்தியோடும் அவரை நோக்க வைக்கும் விதத்தில், காந்தியடிகள் என்ற சொல்லடைவைக் கையாண்ட பெருமை திரு வி. க. அவர்களையேச் சாரும்.
131

Page 68
சாரல்நாடன்
எளிய நடையில் மக்கள் வாசித்துப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதுவதையே தனது பிரதான நோக்காகக் கொண்டிருந்த நடேசய்யர் கையாண்ட சொற்களிலும் இந்த உருவாக்கத்தைக் காணலாம். உண்மையில் தமிழகத்துத் திரு. வி. க. வைப் போல நடேசய்யரும் இலங்கையில் இம் முயற் சரியில் முன்னோடியாக விளங்கியுள்ளார்.
Representation என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் திரு. வி. க. யதேச்சாதிகாரம், இராவணாகாரம் என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். நடேசய்யர் ஜனாதிகாரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நடேசய்யர் பாவித்த சொல் இன்று நாம் பாவிக்கும் பிரதிநிதித்துவம் என்ற சொல்லுக்கு அண்மித்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளும் போது நடேசய்யரின் அறிவு மாத்திரமல்ல, அரசியலில் அவர் வரித்துக் கொண்ட நோக்கும் வெளிப்படுகிறது. மக்கள் பணியை மகேசன் பணியாக மேற்கொண்ட அவர், தான் நடாத்திய தேசபக்தன் இதழில் கையாண்டுள்ள சொற்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
Notes குறிப்புக்கள்
Notice நோட்டீஸ் Tanjore தஞ்சை Some Figures - சில கணக்குகள்
Market Reports - மார்க்கெட் நிலவரங்கள் Tea Planters - தேயிலைத் தோட்டக்காரர்கள் Ryots விவசாயிகள் India's Poverty - இந்தியாவின் ஏழ்மை நிலை Bird's Eye View - பருந்தின் பார்வை Valuble Sayings - நற்போதனை Business Experts- வாணிப வல்லோர்

பந்திரிகையாளர் நடேசய்யர்
நடேசய்யரின் சொல்லடைவுகள் மக்களுக்கு விளங்குவனவாக மாத்திரமின்றி மக்களுக்குச் செயலூட்டம்
தருவனவாகவும் அமைந்துள்ளன.
செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வசதிகளைப் பெருப்பித்துக் கொள்ளும் இலட்சாதிபதிகளை நாம் இன்று நேரில் காண்கிறோம். செல்வம் என்பது வெறுமனே பணம் என்றாகிவிட்ட இன்று, மனித நேயங்களையும் உணர்வுகளையும் மறந்தாக வேண்டிய அல்லது புறந்தள்ள வேண்டிய நிலைமைக்குட்படுவதுவும் செல்வந்தரான மனிதர் இத்தகு சூழ்நிலைக்குட்படுகையில் அதிபதியாகச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது.
இன்று நமக்குப் பெருமளவில் அறிமுகமாகியுள்ள இலட்சாதிபதி இந்தப் பின்னணியை விளக்கக்கூடிய சொல்லாகும். நடேசய்யர் தனது எழுத்துக்களில் இலட்சாதிகாரி என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.
அதிபதிக்கும் அதிகாரிக்கும் உள்ள வேற்றுமையை நடேசய்யர் மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். இலட்சாதிகாரி என்ற சொல்லால் ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து பிறர் உதவியின்றி-கல்வி அறிவாற்றலிருந்தும் உற்றார் உறவினரை விட்டு இலங்கை நாட்டில் தனது முயற்சியால் உயர் நிலையை அடைந்த இராமசாமி சேர்வை என்பவரின் சரித்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முயற்சியால், கடும் உழைப்பால் சேகரம் செய்து கொள்ளுங்கள் என்கிறார்.
தமது அறிவையும் மொழிப் புலமையையும் வெளிப்படுத்தும் விதத்தில் அய்யர் சொற்களைப்
படைத்தார்.
33

Page 69
சாரல்நாடன்
சமுதாயம், அரசியல், பொருளியல், வணிகவியல், நாடாளுமன் ற நடவடிக் கைகள் , நீதித் துறை என்பனவற்றைப் பற்றித் தமது கட்டுரைகளில் அவற்றைப் பயன்படுத்தினார். மக்களுக்கு விளங்கும் விதத்தில் அக்கட்டுரைகள் 1920களில் அமைந்திருந்தன என்பது நடேசய்யருக்குப் பெருமை சேர்க்கும் யோக்கியாம்சம் எனலாம். இருபதாம் நூற்றாண்டில் தமிழினத் தொண்டு செய்த சிறந்தோரில் நினைத்துப் பாராட்டத்தக்க பெருமக்களில் நடேசய்யரும் ஒருவர் என்பதை அவர் தம் சொல்லடைவுகள் நிரூபிக்கின்றன.
صبراہ صفحہ صبراہ N 6°N /^N WYN
அடிக்குறிப்பு
1. நீ மயங்குவதேன்? - கோ. நடேசய்யர்

பத்திரிகையாளர் நடேசய்யர்
பத்திரிகைத் தலையங்கங்கள்
நடேசய்யரின் பத்திரிகைகள் இலங்கை அரசியலிலும் தமிழ் பேசும் மக்களின் சிந்தனையிலும் ஆங்கிலம் அறிந்த சிங்கள அரசியல்வாதிகளின் மனோபாவத்திலும் ஏற்படுத்திய பாதிப்பு மிகவும் கவனத்திற்குரியது. இந்தியாவிலும் அதன் செல்வாக்கு உணரப்பட்டுள்ளது. செல்வாக்கு மிகுந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இவ்விதம் தனது கொள்கைக்காக உரத்துக் குரல் எழுப்புவதுவும் அச்சில் வார்த்து மக்களிடையே பரப்பிப் பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதுவும் எல்லாக் காலத்திலும் நடை பெறுவதில்லை.
இருந்திருந்து இடம்பெறுவதுவும் வரலாற்றை ய மைக் கும் விதத் தில் அது அமைவது வும் நடைபெறாமலுமில்லை. அமெரிக்காவில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. நியூயோர்க் ட்ரிபியூன் என்றொரு ஏட்டை 1841ம் ஆண்டு ஹொரஸ் கிரீலே என்பார் தொடக்கினார். உள்ளூர் அரசியல் பிரமுகரான அவர் சீர்திருத்தக் கருத்துக்களை ஆதரிப்பவர். தனது ஏட்டின் மூலம் அமெரிக்காவில் வேரோ டிப் போயிருந்த அடிமைத்தனத்துக்கெதிராக மக்களது கருத்துக்களை உருவாக்கத் தலைப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லிங்கனின் அடிமை ஒழிப்புப் பிரகடனத்துக்கு ஹொரஸ் கிரீலே தனது பத்திரிகையில் வெளியிட்ட தலையங்கங்களே காரணம் என்று கூறுவர். அவரது பத்திரிகைப் பணியும் எழுத்தாற்றலும் அவ்விதம் அமைந்திருந்தன. தேசபக்தன் தமிழ் ஏட்டிலும் சிட்டிஷன் ஆங்கில ஏட்டிலும் இடம்பெற்ற ஆணித்தரமான ஆசிரியத் தலையங்கங்கள் இலங்கை வாழ் இந்திய மக்களைப் பற்றிய பொது அபிப்பிராயம் உருவாவதற்கு வழி சமைத்தன.
135

Page 70
சாரல்நாடன்
"அரசியலால் நேர்ந்த பாதிப்பு/ செல்வாக்கு என்ற
ஒரம்சத்தைத் தவிர்த்து விட்டுப் பார்க்க நேர்கையிலும்
பத்திரிகையுலகுக்கு அவரது பணி அளவிடற்கரியது"
என்று ஹொரஸ் கிரீலேயைப் பற்றிக் கூறப்படும் வாசகம்
நடேசய்யருக்கும் எழுத்துக்கு எழுத்து மிகப் பொருத்தமானதாகும்.
ஒரு பத்திரிகையில் இடம்பெறும் செய்திகள் அதன் இதயப்பகுதியாக ஆமைகின்றதென்றால் அதன் ஆசிரியர் தலையங்கம் அந்தப் பத்திரிகையின் ஆத்மாவாகக் கருதப்படல் வேண்டும் என்று கூறுவதுண்டு. அது அறிவார்ந்த கூற்றேயாகும். ஆசிரியத் தலையங்கம் பத்திரிகையின் குரலை, குணாம்சத்தை, கொள்கையை வெளிப்படுத்தும் சாதனமாக விளங்குகின்றது. தான் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் வலு சேர்க்கும் விதத்தில் அமையும் ஆசிரியத் தலையங்கங்களைப் பத்திரிகைகள் வெளியிடுவது சர்வசாதாரணமானதே. இவ்விதம் வெளியாகின்ற தலையங்கங்கள் இரண்டு விதமான பணிகளைச் செய்கின்றன. 1. தேசத்தின் முக்கியமான பிரச்சினைக்குரிய அம்சங்களில் பத்திரிகை கொண்டுள்ள கண்ணோட்டம் வெளிப்படுத்தப்படுகின்றது.
2. அந்த அம் சங் களில் மாற் று க் கொள்கையுடையவர்களின் கருத்து வெளிப்பாட்டுக் களம் அமைக்கப்படுகின்றது.
ஆசிரியத் தலையங்கம் ஆசிரியராலோ ஆசிரியரின் நம்பிக்கைக்குரியவர்களாலோ எழுதப்படுகின்றது. ஆசிரியரின் விருப்பு, வெறுப்பு, தனித்தன்மை, மொழி ஆளுகை போன்ற சிறப்பியல் புகளை இவ் விதம் எழுதப்படுகின்ற தலையங்கங்களில் காணமுடியும்.

usfida unon solo uus
ஆங் கிலத் திலும் தமிழிலுமாகப் L all) பத்திரிகைகளுக்குப் பத்திராதிபராக விளங்கிய நடேசய்யப் தம் பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியத் தலையங்கங்களை எழுதியுள்ளார்.
அவரது பத்திரிகைப் பணிகளில் மிகச் சிறப்பான அம்சமாக அமைந்துள்ளது இத்தலையங்கங்களே. நடேசய்யரின் பத்திரிகைத் தலையங்கங்கள் இந்தியத் தமிழர்களை மையமாகக் கொண்டே நிறைந்த அளவில் வெளிவந்தன. இப்படி வெளியிடுவதன் மூலம் அந்த மக்களைப் பற்றிய பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மீண்டும் மீண்டும் எழுதுவதை, சலிப்புத் தட்டாத விதத்தில் எழுதுவதை அவர் ஒரு கலையாகவே பயின்றிருந்தார் என்பது தகும். மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் சத்யாக்ரகம் மேற்கொண்டிருந்த போது சுதேச மித்திரன் தொடர்ந்து அது குறித்தே எழுதியது. எண்பது ஆசிரியத் தலையங்கங்கள் அவ்விதம் எழுதப்பட்டுள்ளதென்கிறார் சோமலே தன்னுடைய "தமிழ் இதழ்கள" என்ற நூலில்
இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பற்றி ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து எழுதி வந்த நடேசய்யர் கொள்கை அடிப்படையில் தான் நடத்திய பத்திரிகைகளில் தலையங்கப்பகுதியை யுத்தக்களமாகப் பயன்படுத்தினார் என்று கூறுதல் தகும். உள்ளூர்ப் பிரச்சினைகளில் மக்களின் அத்தியாவசியத் தேவை கருதிய தகவல்களைக் கொடுத்து தகவல்களைப் பற்றிய விளக்கங்கள் அளித்து மக்களின் தூங்கும் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்யும் விதத்தில் அவரது தலையங்கங்கள் அமைந்தன. நடேசய்யரின் (தேசநேசன், தேசபக்தன்) பத்திரிகைத் தலையங்கங்களின் கருத்துக்களை ஆங்கில மொழி பெயர்ப்புகளின் மூலம் அறிந்து கொள்வதில் ஆங்கில
137

Page 71
சாரல்நாடன்
அரசு அக்கறை காட்டியது. இத்தலையங்கங்களை மொழி பெயர்க்கவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பத் திரிகை மொழி பெயர் ப் பாளர் கள் நியமிக்கப்பட்டார்கள். அதன் விளைவாகவே, "இலங்கைத் தீவில் இந்த அளவுக்குத் தேசத் துரோகம் பண்ணியது வேறு யாருமில்லை" என்று நடேசய்யருக்கெதிராகத் குற்றச்சாட்டை இலங்கைப் பொலிசார் பயன்படுத்தினர். அவரது நடவடிக்கைகளை மேலும் உன்னிப்பாகக் கவனிக்கும்படி இந்தியப் பொலிசாரையும் ஆங்கிலக் குடியேற்றச் செயலாளர் கேட்டுக் கொண்டார் என்று தனது நூலில் குறிப்பிடுகின்றார் குமாரி ஜெயவர்த்தனா. பத்திரிகைகளுக்குத் தலையங்கம் எழுதுவது அய்யரது நாளாந்தப் பணிகளாகவே அமைந்திருந்தது.
நடேசய்யரின் எழுத்து வன்மையைப் பறைசாற்றும் சான்றுகளாக விளங்கும் இத்தலையங்கங்கள் அவரது காலத்து(1920-1947) வரலாற்றை மாத்திரமல்ல, அவரது காலத்து வரையுள்ள இந்திய வம்சாவளித் தமிழரின் வரலாற்றையும் எடுத்துக்கூறும் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
இந்தியத் தொழிலாளர் துயர் 22-8-1929 இந்தியத் தொழிலாளர் சட்டம் 30-8- 1929 இலங்கை சட்டசபை 2-9-1929 பெரிய கங்காணிமார்களுக்கு ஓர் எச்சரிக்கை 23-8-1929 பற்றுச்சீட்டு தொலைய வேண்டும் 31-8-1929 அரசியல் சங்கம் 20-9-1929 இலங்கைத் தமிழ்ப்பத்திரிகைகள் 2-3-1929 டெய்லி நியூஸ் வேலை நிறுத்தம் கற்பிக்கும் பாடம்
18-4-1929
இலங்கைக்கு சுயராஜ்யம் 2- 5 - 1929 தென் ஆபிரிக்க இந்தியர்கள் 5- - 1927

பத்திரிகையாளர் நடேசய்யர்
தோட்டத் தொழிலாளரும் டைம்ஸ் பத்திரிகையும் 27-6- 1929
இந்தியக்கூலிகள் 29-11-1922 இலங்கையரின் கலாபிவிருத்தி 1- 12- 1921 தேர்தல் 1- 6 - 1947
என்ற தலையங்கங்கள் தேசநேசன், தேசபக்தன், தோட்டத் தொழிலாளி என்ற பத்திரிகைகளில் வந்த சிலவாகும்.
The Crime of Colour 8-1-1922 The Manilal Protest Meeting 15- 1 - 1922 Political Ideals 22- 1 - 1922 The Great Betrayal 14-5- 1922 Kill that Cooly 18-6- 1922 Are we justly governed? 2- 7 - 1922
என்ற தலையங்கங்கள் தி சிட்டிஷன் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தவைகளில் சிலவாகும். திரு. வி. கல்யாணசுந்தரனார் தேசபக்தன் பத்திரிகையிலும் நவசக்தி பத்திரிகையிலும் எழுதிய பல தலையங்கக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுத் தமிழ்த் தென்றல் என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. பல்கலைக்கழகப் பாட நூலாக அமைந்தும் அறிஞர்களின் சிந்தனையைக் கிளர்த்தியும் அந்த நூல் அளப்பறிய பயனளித்தது. அய்யரின் தலையங்கக் கட்டுரைகளும் தொகுக் கப்பட்டு நூலாகுமானால் காலனித்துவ கால இலங்கையில் தமிழர்களின் நிலை பற்றிய வரலாறாக மிளிரும் என்பதில் எவ்வித ஐயமுமிருக்க முடியாது.
X X X XC

Page 72
Tü5 Lö
கருத்துப் படங்கள்
மிகச் சிரமப்பட்டுக் கட்டுரையொன்றில் வெளியிடும் கருத்துக்களை, அர்த்தம் நிறைந்த முறையில் வரையப்பட்ட கருத்துப்படங்கள் அல்லது கார்ட்டூன் படங்கள் அல்லது கூடார்த்தச் சித்திரங்கள் எளிதில் சாதித்து விடுகின்றன.
ஒரு கட்டுரையை, கட்டுரை எழுதப்பட்டிருக்கும் மொழியை அறிந்தவரே வாசித்துப் புரிந்து கொள்ள முடியும். கருத்துப் படங்களுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை. மனிதனின் சிரிப்பைப் போல, அழுகையைப் போலக் கருத்துப் படங்களும் பார்த்தால் புரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள மொழியின் உதவியைத் தேடுவதில்லை.
அதிக நேரம் செலவழித்து வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டியவைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே வாசகர் மனதில் கருத்துப் படங்கள் சாதித்து விடுகின்றன.
தமிழ்ப் பத்திரிகை உலகில் சுப்பிரமணிய பாரதியாரின் சாதனைகள் அனந்தம். அவர் நடாத்திய பத்திரிகை "இந்தியா" (1906- 1910) சாதனை புரிந்தது. இக்காலப்பகுதியில் "இந்தியா" பத்திரிகையில் வெளியான இரு நூற்றுப் பத்துக் கருத்துப் படங்கள் அவருடைய கவிதைகளைப் போலவே ஆங்கில ஆட்சியினருக்கெதிராகக் கிளர்ந்தெழும் உணர் வினை வாசகர்களிடையே ஏற்படுத்தின என்பர் அறிஞர் பெரு மக்கள்.
தமிழில் கருத்துப் படங்களைப் பத்திரிகைகளில் வெளியிடச் செய்த பெருமை பாரதியாருடையது.
இந்தியா பத்திரிகையில் வெள7வரும் படங்களுக்குச் சித்திர விளக்கமும் தெளிவாக எழுதப் பட்ட ன. 9/ ᎧᏡ ᎧᎪ அர ச7ய வர்

usA9slandasuu Tam Y BOL-avuus
சம் பந்த ம/7 னவை . பத த7ா?கைகள் வெளிவருவதை ஆவலோடு எதிர்பார்த்திருந்து கார்ட்டூன் படங்களை வெட்டி, அட்டையில் ஒட்டி வீட்டுச் சுவர்களில் மக்கள் Lo/7 / 19607/7/id,677
என்று எழுதுகிறார் பாரதிதாசன்.
பத்திரிகைகளில் வெளியாகும் தலையங்கத்துக்கு நிகரான முக்கியத்துவம் கருத்துப் படங்களுக்குமுண்டு. இரண்டுமே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரச்சினைகளின் நெருக்கடியை எளிதில் உணர்த்தும் வல்லமை இரண்டுக்குமே உண்டு.
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகை உலகுக்குக் கருத்துப் படங்களை அறிமுகம் செய்தவர் நடேசய்யர் ஆவார். தன்னுடைய தேசபக்தன் பத்திரிகையில் கருத்துப் படங்களை வெளியிட்டுள்ளார்.
காடைத் தனத் தில் பேர் போனவராக ஏ. ஈ. குணசிங்கா விளங்கிய காலப்பகுதியில் கொழும்பு வாழ் இந்தியத் தமிழர்கள் அவரைக் கண்டு அஞ்சினர்.
நடேசய்யரைத் தேச பக்தன் அச்சகத்துக்குள் வைத்தே சிங்களக் காடையர்களைக் கொண்டு பயங்கரமாகத் தாக்கியவர் குணசிங்கா.
"இந்தியர் சங்கம்" இக்காலப்பகுதியில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய சங்கத்தை ஆரம்பிக்க நிதியுதவி செய்த காயாம்பள்ளி என்ற முஸ்லீம் நடுத்தெருவில் வைத்து அடிக்கப்பட்டார். சாட்சியங்கள் கூற எவரும் முன்வராததால் வழக்கு நடத்த முடியாமற் போனது. அவரை அடித்த காடையனுக்கு வைபவம் நடாத்தித் தங்கப்பதக்கம் கொடுத்தவர் இந்த குணசிங்கா?
141

Page 73
சாரல்நாடன்
கொழும்பு நகரில் இந்தியத் தமிழரை இழிவுபடுத்தும் அச்சடித்த சிங்களப் பாடல்களை விநியோகித்துக் கொண்டும் சப்தமிட்டு அப்பாடல்களைப் பாடிக் கொண்டும் சிலர் அலைந்து திரிந்து கொண்டிருப்பதைக் கண்டித்த நடேசய்யர்,
"பாமர ஜனங்களைப் படுகுழியிலிருந்து மீட்கப் போவதாகக் கூறிவரும் இத்தலைவர்கள், தமக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லையென்றால் அதைவிடக் கேவலமான நிலைமை கிடையாது" ஃ என்று எழுதியதோடமைந்தாரில்லை. அவரை முன்னிறுத்திக் கருத்துப் பாடங்களைத் தேசபக்தனில் வெளியிட ஆரம்பித்தார்.
அவ்விதம் வெளியான கருத்துப் படங்கள் குண சரிங் கா வரின், gD @oöT 60) LD சொரூபதி தை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.
ஆளை விழுங்கும் முதலையாக குணசிங்காவைச் சித்திரிக்கும் கருத்துப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. தொழிலாளர்களிடம் சேகரித்த பணத்தை-முட்டிக் காசைஅவர் விழுங்கி ஏப்பம் விட்டதாகக் கருத்துப் படங்கள் வெளியாகியுள்ளன.
நடேசய்யருடன் ஒத்து வராத "இலங்கை இந்தியன்" பத்திரிகையில் நாவலப்பிட் டியாவைச் சேர்ந்த பெ. செ. அசன் முகைய்தீன் என்பார் மகாத்மா காந்தியின் இலங்கை விஜயத்தின் போது ஏ. ஈ. குணசிங்கா முன்னின்று சேர்த்த கதர் நிதி பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆக, அச்சில் வெளியான கருத்துப் படங்கள் நடேசய்யரின் திண்ணிய நெஞ்சத்துக்குச் சான்று
பகர்கின்றன.

பத்திரிகையாளர் நடேசய்யர்
"இந்தியா" பத்திரிகையில் வெளியான கருத்துப் படங்கள் பாரதியாரின் நேரடி மேற்பார்வையின் கீழ் விரிவான விளக்கக்குறிப்புக்களுடன் வெளிவந்து அவரது மேதாவிலாசத்தைப் பறைசாற்றுகின்றது என்று கூறும் ஆ. இரா. வேங்கடாசலபதி "இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்யும் கண்கண்ட ஆவணம்"
என்று அந்தக் கருத்துப் படங்களைப் புகழ்கின்றார்.
இந்தவகையில் தேசபக்தனில் வெளிவந்திருக்கும் கருத்துப் படங்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் இலங்கையில் வேர்விட ஆரம்பித்த இந்தியத் துவேசத்தைப் பதிவு செய்த கண்கண்ட ஆவணமாகத் திகழ்கின்றன எனலாம். "தொழிலாளர் தொல்லை" என்று தலைப்பிட்டுத் தான் எழுதிய பாடல்விளக்கத்துடன் வெளியிட்ட கருத்துப் படமும் "முதலையாரும் இராசாவும்" என்ற தலைப்பில் தமது பாடல் விளக்கத்துடன் வெளியிட்ட கருத்துப் படமும்' குறிப்பிடத்தக்கவை.
"இந்தியா" இதழ் 1910ல் தடை செய்யப்பட்டது. இதற்குப் பிறகு ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு எந்தத் தமிழ் இதழும் கருத்துப்படங்களை வெளியிடவில்லை என்ற தனது தீர்மானமான கருத்தை வ்ெளியிடுகின்றார் ஆ. இரா. வேங்கடாசலபதி. பாரதியின் கருத்துப் படங்களைப் பதிப்பித்து வெளியிட்ட தனது நூலில் தேசபக்தனில் நடேசய்யர் வெளியிட்ட கருத்துப் படங்கள் 1929ல் வெளியாகின. ஏறத்தாழ இருபதாண்டுகள் என்று குறிப்பிடும் வேங்கடாசலபதி அவர்கள், இலங்கையில் வெளியான க்ருத்துப் படங்களைப் பார்த்திருக்க நியாயமில்லை.
143

Page 74
பத்திரிகையாளர் நடேசய்யர்.
lt e ," ۹. لفظ: را نهای : و &w=
قععیچیہ
** ܫܫܫܫܫܫܝYrrwr rurwr
- : و - : همچون :
usu
... 8 t ჯუჯ. . $ჯ*wჯ: î ---۰۰۰ - ۰
*க ... . S:
. : | r 3.
'....
ه =*.مره .:Y- •.'*- •
ဂ္ဂိ§
ఛ
: : م
స్ట్రీస్ట్రీ
. iუ.wi:4ა"ãაზil J'''d'''s •« - تمتد مس هية .. فرض سي
trussiya; isatists: ' ' أمه. بها من
•܀"à ܕܝܵ*ܖ•ܗܝ: ܇ܪܝܫܶܐܨܪܨ: ܢ ܕܪ. الطلمن حممہ مجتہ، چ& میں ہے
.way.-:i مم ٹھr• E &ت:....... -- . مجو ہند مہینہ**3- :چپٹے ہے..= می شمال وپی میسه مIf
. &. & 45-8&oệros" *:t Erik: 14. vi.“ 3- 1 vek" a a ** * * Iشمالاً " خمس فزعجة : 1.الخ. مد: . . 5ه مج ***
a Y a ميس
. a-i Yarxa : -سرپا حسيسهutمه sه خائے w. : ::, hir... ܐܵ،ܡܹܗ.-؟ I**» مu منفی
፪•.ቅቆ *‹‹ፉrጴሩነ ዛፌዴ፰ኅ' ' ሳIvፋ* I፡ጆጎ'ጵ፥ታ< a
۶۹ تا ۰۰۱. ب: «نمره ای: وی: ، با مهم
#ಛಿ। s "i"سي,
rri-Araxe as sisxukuota 834ko It **محمشی “ * I؟* ج: .* Iہ ex's
பத்திரிகையாளர் நடேசய்யர் நடத்திய தேசபக்தன்' பத்திரிகையில் (18. 01. 1929) வெளிவந்த கருத்துப்படம்
 

சாரல்நாடன்
நடேசய்யரின் கருத்துப் படங்கள் அவை வெளியான பின்னணியில் மெய்சிலிர்க்க வைப்பன. பாரதியாரின் "இந்தியா" கருத்துப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார் க் கத் தக்க வை என் கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதியின் மிக நெருங்கிய நண்பரான மதுரை அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் எஸ். போத்தி ரெட்டி அவர்கள்?
xxxx
அடிக்குறிப்புகள்
l பாரதியாருடன் பத்தாண்டுகள் - பாரதிதாசன்
2 தேசபக்தன் - 1927
3 தேசபக்தன் - 1929
4 இலங்கை இந்தியன் - 1928
5, வ. உ. சியும் பாரதியும் - ஆ. இரா. வேங்கடாசலபதி
6 தேசபக்தன் - 9. 1. 1929
7. தேசபக்தன் - 18. 1. 1929
8 பாரதியாரின் கருத்துப் படங்கள் ஆ. இரா. வேங்கடாசலபதி
9. நூலாசிரியருக்கு எழுதிய கடிதம்

Page 75
பத்திரிகையாளர் நடேசய்யர்
வாசகர் கடிதங்கள்
பத்திரிகையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பத்திரிகாசிரியன் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களிடையே தமது பத்திரிகையின் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்குச் சில உத்தி முறைகளைக் கடைப்பிடிப்பதுண்டு.
பத்திரிகைத்துறை இன்று நவீன வளர்ச்சி கண்டு உள்ளது. அச்சு, அமைப்பு, வெளியிடும் கால இடைவெளி என்பவைகளில் கவனம் செலுத்துவது, பிந்திய செய்திகளை முந்தித் தருவது, சூடான அரசியல் விவகாரங்களையும் கட்சி உட்பூசல்களையும் விமர்சிப்பது என்பவை அவைகளுள் சில முறைகளாகும்.
'இன்வெஸ்டிகேட்டிங் ஜேர்னலிசம் ' என்பது இன்று மிகவும் பேணப்படும் ஓர் எழுத்துத் துறையாக வளர்ந்து வருகின்றது. இந்த எல்லாத் தன்மைகளையும் உள்ளடக்கிய எளிய முறை ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற பகுதியாகும்.
இந்தப் பகுதியில் வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள் இடம்பெறும். வாசகர்களிடமிருந்து இவ்விதம் வரும் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பழக்கம் ஆங்கிலமொழிப் பத்திரிகையுலகில் நீண்ட காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தங்களுடைய பெயரை அச் சில் பார்க்க வரிரு ம் பு பவர் களுக்கும் எழுதிப் பழக ஆசைப்படுபவர்களுக்கும் இந்தப் பகுதி வசதி செய்து கொடுக்கின்றது என்று கூறப்படுவது மேலோட்டமான கணிப்பு மாத்திரமே.
146

சாரல்நாடன்
உள்ளூர்ச் செய்திகளையும் முக்கியமான உண்மைத் தகவல்களையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும் உள்ளடக்கியதாக வாசகர் கடிதங்கள் அமைவதுமுண்டு. அவ்விதம் அமையும் கடிதங்கள் பத்திரிகைச் செய்திப் பிரிவில் இடம் பெறுவதுண்டு. பத்திரிகைக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதும் வாசகர்கள் பத்திரிகையின் உத்தியோக பூர்வமற்ற நிருபர்கள் என்று கருதப்படலாம்.
"தமிழ் ஜில்லாக்காரர்களுக்கு ஓர் வேண்டுகோள்" என்ற தலைப்பில் சுப்பிரமணிய பாரதியார் தமது பத்திரிகைக்கு உள்ளூர் வாசகர்களிடமிருந்து செய்திகளைக் கடித உருவில் அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்திருப்பதை இங்குக் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.
நடேசய்யர் தமது பத்திரிகைகளில் இம்முறையை விடாது பின்பற்றினார். தோட்டத் தொழிலாளி, தேச பக்தன் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கடிதங்களைப் பார்க்கையில் இது தெளிவாகப் புரிகின்றது. இப்பத்திரிகைகளில் வாசகர் கடிதங்கள் ஏராளமாக வெளியாகின.
தோட்டங்களில் நடக்கின்ற கொடுமைகள், தோட்டத்துரைமார்களின் அலட்சிய மனோபாவம், கண் கானரி மார் களரினர் கய ம்ை த் தனம் , உத்தியோகத் தர்களின் பேடித் தன்மை ஆகியன அக்கடிதங்களில் வெளியாகியுள்ளன. சேவையின் பெயரில் அரசியல் வேடம் பூண்டவர்களின் உண்மைச் சொரூபத்தை வெளியிடும் கடிதங்களும் அவைகளில் உள்ளன.
147

Page 76
பத்திரிகையாளர் நடேசய்யர்
மொழிநடையையும் கருத்துக்களின் வேகத்தையும் கவனிக்கையில் அவற்றுள் ஒரு சிலவேனும் அய்யராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையில் ஆரம்பகாலப் பத்திரிகை முயற்சிகளில் இவ்விதம் நடப்பதென்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவரின் பின்வரும் வாசகம் கவனிக்கத்தக்கது:-
"தேசபக்தன் வெளி மாநிலங்களின் தலைநகர்களில் சன்மானம் கொடுத்துச் சொந்த நிருபர்களை அமர்த்தி அவர்கள் அனுப்பும் செய்திகளை வெளியிடக்கூடிய வசதியைப் பெற்றிருக்கவில்லை. பத்திரிகையின் செல்வாக்கு உயர்ந்திருக்கவில்லை. ஆனாலும் வசதிக் குறைவுடையது என்று காட்டிக் கொள்ளக்கூடாதென்றும் பத்திரிகையின் கெளரவத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்றும் நான் உறுதி கொண்டேன்." இப்படிக் குறிப்பிடும் வெ. சாமிநாத சர்மா பம்பாயிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் வரும் ஆங்கிலப் பத்திரிகைகளை வாசித்து முக்கியமான செய்திகளைத் திரட்டி ஒன்றரைப்பந்திக்கு மேல் போகாத விதத்தில் கடிதமாக எழுதி நாள்தோறும் வெளியிட்டு வந்துள்ளார்.
வாசகர் கடிதங்கள் மூலம் ஏற்படுகின்ற முழுப்பயனையும் நடேசய்யர் தம் பத்திரிகைகள் மூலம் பெற முனைந்திருப்பதைக் காணமுடிகிறது.
தேச நேசன் பத்திரிகையில் , இலங்கையில் முதன்முதலாகப் பத்திரிகை முயற்சியை மேற்கொண்ட
போது அவர் நேர் கொண்ட சிரமங்களையும் கழுத்தறுப்புக்களையும் வாசகர் கடிதங்கள் மூலம்
148

சாரல்நாடன்
நிறையவே எழுத்தில் வடித்துள்ளார். தேசநேசனை வாழ்த்தி வரவேற்று மலையகத்திலிருந்து மட்டுமல்ல யாழ்ப்பாணம், மலேயாவிலிருந்தும் கடிதங்கள் வந்திருப்பதாக அறிய முடிகிறது.
தேசநேசன் பத்திரிகையில் சட்ட நிரூபண சபையில் நடந்த நிகழ்ச்சிகளை அரசியல் விமர்சனம் செய்தும் நடேசய்யரின் பங்களிப்பையும் பாராட்டியும் கடிதங்கள் வந்துள்ளன. இவைகளை அவதானிக்கையில், அறிஞர் சாமிநாத சர்மாவின் வழியையே நடேசய்யரும் பின்பற்றியிருக்கிறார் என்பது சொல்லாமலே விளங்கும்.
عياحة عماله عماله
an
அடிக்குறிப்பு
l. அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் தமிழ்ப்பணி -
பெ. சு. மணி

Page 77
பத்திரிகையாளர் நடேசய்யர்
பாரதியார் வழிநின்று
இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய தேசியக் கவிஞர்களில் நாட்டுணர்வும் மொழியுணர்வும் மிகுந்தோங்கும் கவிதைகளை நிறையப் பாடியவர்களில் சுப்பிரமணிய பாரதியார் மிகவும் கவனத்துக்கு உரிய ஒருவராவார்.
அவரது மறைவுக்குப் பின்னரே அவரது பெருமையும் ஆற்றலும் வெளி உலகிற்குத் அதிகமாக தெரிய வந்தது. அவர் மறைந்து முப்பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய அரசு அவருக்கு முத்திரை வெளியிட்டுக் கெளரவம் பண்ணியது. 11- 91960ல் முத்திரை வெளியிடப்பட்டது.
சுப்பிரமணிய பாரதியார் உயிரோடு வாழ்ந்த காலப் பகுதியில் (1882 - 1921) அவருடைய பெருமையை விளங்கி கொள்ளவும் ஏனையவர்களுக்கு விளக்கிச் சொல்லவும் ஆற்றல் பெற்றிருந்தவர்கள் சிலரே எனலாம்.
அந்தச் சிலரில் நடேசய்யரும் ஒருவர் என்பதை நடேசய்யரின் பத்திரிகைப் பணிகளை ஆராயப் புகும் எவருக்கும் விளங்கிக் கொள்ள முடியும். இதுகாறும் இந்த உண்மை வெளிப்படாமைக்குப் பல காரணங்கள்
இருக்கலாம். அவைகளுள்:-
l. அந்தகாரத்தில் ஆழ்ந்து போயிருந்த மலையகத்தைப் பற்றிய போதிய அறிவின்மை,
2. இலங்கையில் வேரூன்றிப் போயிருந்த இந்திய எதிர்ப்புணர்வு,
150

Frosism Let
3. சிரமப்பட்டுத் தேடி அகழ்ந்தெடுக்க வேண்டிய ஆய்வுத் தகவல்களைச் சேகரிக்க முடியாமை
என்பவை முக்கியமான காரணங்கள் எனலாம்.
இலங்கையில் பத்திரிகையியல் ஆராயப்படும் போதும் பாரதியாரின் செல்வாக்கு ஆராயப்படும் வேளையிலும் நடேசய்யரின் பங்களிப்பு உரிய முறையில் இதுவரையிலும் ஆராயப்படவில்லை. இன்னொரு முக்கிய உண்மையும் இங்குக் கவனிக்கத்தக்கது. சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிப் பேசும் போது வ. ராவைப் பற்றியும் பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்த அளவிற்கு வ. ரா பாரதியாரின் புகழ்பரப்பும் ஒருவராக விளங்கி உள்ளார்.
இலங்கையில் பாரதியாரைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும் வ. ரா. இலங்கையில் பணியாற்றிய காலப் பகுதியை ஒட்டித் தமது கவனத் தைக் காட்டுவதிலேயே சிரத்தை செலுத்தி உள்ளனர். தமிழகத்து ஆய்வாளர்களும் இதை ஏற்றுக் கொண்டு வாய்பாடாக ஒப்பு:விக்கத் தொடங்கியுள்ளதைச் சமீபத்தில் வெளி வந்த நூலிலும் காண முடிகிறது. வ. ரா. இலங்கைக்கு வந்து வீரகேசரிப் பத்திரிகையில் ஆசிரியர் பதவி வகித்தது 1936ம் ஆண்டிலாகும். இதே வ. ரா. இந்தியாவில் நடேசய்யர் நடாத்திய வர்த்தகமித்ரன் ஏட்டிலும் சுதந்திரன் ஏட்டிலும் பணியாற்றியுள்ளார். அப்பத்திரிகைகள் வெளிவந்த காலப்பகுதியில் (1915 - 1920) சுப்பிரமணிய பாரதியார் உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தார். வ. ரா. வுக்குத் தெரிந்த அளவிற்கு நடேசய்யருக்கும் சுப் பரி ரமணரிய பார தியா  ைரத் தொ? ந் து வைத்திருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன.
15

Page 78
பத்திரிகையாளர் நடேசய்யர்
சுப்பிரமணிய பாரதியார் 1882ம் ஆண்டு பிறந்தார்; கோதண்டராம நடேசய்யர் 1887ம் ஆண்டு பிறந்தார். 1921ம் ஆண்டு பாரதியார் இறந்த போது அவருக்கு முப்பத்தொன்பது வயது நடந்து கொண்டிருந்தது. 1947ம் ஆண்டு நடேசய்யரின் மரணம் சம்பவித்த வேளை அவருக்கு அறுபது வயது நடந்து கொண்டிருந்தது.
பாரதியார் தமது இருபத்திரண்டாவது வயதில் பத் திரிகை உலகில் பிரவேசித் தார் என்று ஆதாரப்படுத்துகிறார் சீனி விசுவநாதன். நடேசய்யரும் தமது இரு பத் திரணி டா வது வயதளவிலேயே பத்திரிகையுலகத்தில் பிரவேசம் மேற்கொண்டுள்ளார்.
சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவுக்கு வெளியே ச்ெல்லவில்லை. எனினும், இந்தியாவில் காசி, புதுச்சேரி என்ற நகரங்களுக்குச் சென்று வாழ்ந்தவர். புதுச்சேரியில் அவர் வாழ்ந்த அஞ்ஞாதவாசம் தாய்நாட்டைப் பிரிந்த ஓர் அனுபவத்தையே அவருக்களித்ததென்பர். செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே, ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று புதுச்சேரியில் இருந்து பாடுகையில் தமிழ் நாட்டை விட்டுப் பிரிந்திருந்ததால் தமிழ் நாடு என்ற அளவிலேயே அவருக்குத் தேன் இனித்தது என்பர்.
மேலும், சென்னையிலிருந்து அவர் நடாத்திய இந்தியா இதழுக்கும், புதுச்சேரிக்குத் தப்பியோடிய பின்னர் நடாத் திய இந்தியா இதழுக்கும் நடையிலும் உள்ளடக்கத்திலும் உள்ள வேறுபாட்டையும் பார்க்கையில் இக்கருத்து வலிமை பெறுகிறது.
நடேசய்யர் தான் பிறந்த நாட்டிலிருந்து கடல் கடந்து இலங்கையில் குடியேறியதோடு பர்மா, மலேயா ஆகிய கடல் கடந்த தேசங்களுக்கும் சென்று வந்துள்ளார்.
152

சாரல்நாடன்
ஆக, நடேசய்யரின் ஜீவித காலப்பகுதியில் (1887 - 1947) அவர் இலங்கையில் குடியேறிய 1920க்குப் பிற்பட்ட காலப்பகுதியை விடுத்துப் பார்த்தால் வாலிப காலத்தின் பெரும் பகுதியை - முப்பத்து மூன்றாண்டுகள் - இந்தியாவிலேயே செலவிட்டுள்ளார்.
அவரைப் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கும் 1915க்குப் பிற்பட்ட அவரது முயற்சிகள் குறித்தே நம்மால் ஆராய முடிகிறது. வர்த்தக மித்ரன் வார வெளியீட்டின் நிறுவனராகவும் அச்சிட்டு வெளியிடும் ஆசிரியராகவும் இவரை நாம் அறியத் தொடங்குகிறோம். வணிகத்துறை சம்பந்தமாகத் தமிழில் வெளிவந்த வெற்றிகரமான இதழ் இது என்பதை அறியும் போது நடேசய்யரின் ஆற்றல் வெளிப்படுகிறது.
இவருக்கு இருபத்து ஏழு வயதாகும் போது இச்சஞ்சிகையை இவர் ஆசிரியராக இருந்து நடாத்தினார். இவர் இலங்கைக்குக் குடியேறத் தீர்மானித்ததும் சுதந்திரன் என்ற பெயர் மாற்றம் பெற்று வ. ரா என்றறியப்படும் இராமசாமி அய்யங்காரின் ஆசிரியர் பொறுப்பில் பத்திரிகை சிலகாலம் வெளியாகியது. பின்னர் 1933ல் பம்பாய் நகர ஆங்கில உலகுடன் தொடர்பு கொண்டிருந்த கே. சீனிவாசன் என்பவர்தான் தமிழகத்தில் தொடங்கிய மணிக்கொடியை இதே வ. ரா. விடம் கையளித்துவிட்டுச் சென்றார் என்பது பலரும் அறிந்ததே. 1921ம் ஆண்டு பாரதியார் மரணித்த வேளை நடேசய்யர் இலங்கையில் வாழ ஆரம்பித்தார். இலங்கையில் அவர் மேற்கொண்ட அரசியல் பணிகள், தொழிற்சங்கப் பணிகள், பத்திரிகைப் பணிகள் ஆகியவற்றுக்கூடாக அவர் பாரதியாரின் கருத்துக்களையும் கவிதைகளையும் பரப்பியுள்ளார். நடேசய்யரின் அரசியல் தொழிற்சங்கப் பணிகள் மலையகப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தன. மலையகப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த படிப்பறிவில் குறைந்திருந்த மக்களுக்குப் பாரதியாரின் தேசியப் பாடல்கள் உந்துதல் தரும் பாடல்களாக விளங்கின.
153

Page 79
பத்திரிகையாளர் நடேசய்யர்
கவிதையாக அவற்றைப் பார்க்கவும் படிக்கவும் அவர்களின் கல்வி அறிவு போதாமலிருந்தது என்றாலும் உணர்ச்சிப் பாடல்களாக அவற்றை இரசிக்கவும், மகிழவும் அவர்களால் முடிந்தது. நடேசய்யர் இந்த உண்மையை விளங்கிக் கொண்டு பாரதியாரின் பாடல்களைச் செயலூக்கியாகப் பாவித்தார். தோட்டங்கள் தோறும் மேற் கொண்ட "மக் களை விஷயம் தெரிந்தவர்களாக" விழிப்புற வைக்கும் முயற்சிகளின் போது நடைபெற்ற கூட்டங்களில் பாரதியாரின் பாடல்களைப் பயன்படுத்தினார். தனது மனைவி மீனாட்சி அம்மையின் வளமான குரலில் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களைக் கேட்கும் தொழிலாள மக்கள் உணர்ச்சி அடைவதைக் கண்டு மகிழ்ந்தார்.
மலை நாட்டைப் பொறுத்தவரையில் 30 களின் பிற்பகுதியிலும் 40களிலும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் உழைத்து வந்த சில தொழிற்சங்க வாதிகளின் மூலம் பாரதிப் பாடல்கள் ஓரளவு அறியப்பட்டன என்ற கூற்று வெறும் மேலோட்டமான ஒன்றே. இப்படி எழுதிய ‘பேராசிரியர் க. கைலாசபதி இலங்கை கண்ட பாரதி என்ற கட்டுரையில் நடேசய்யர் பற்றிக் குறிப்பிடவே இல்லை. எல்லாவற்றையும் விட எல். ஜி. நடேசய்யர் பாரதியார் பாடல்களில் நிரம்பிய ஈடுபாடு கொண்டவராய் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். எல். ஜி நடேசய்யர் நாடக நடிகராகத் தமிழகத்தில் சுதந்திர உணர்வை வளர்த்தவர். அவருக்கும் இலங்கை மலையகத்துக்கும் சம்பந்தமில்லை. இருவரும் வெவ்வேறு நபர்கள். இந்தப் பின்னணியில் நடேசய்யரின் பணிகள் குறித்துச் செவி வழிச் செய்தியாகவே இதுகாறும் கருத்துக் கள் கூறப் பட்டுள்ளன என்பதையும் மலையகத்தைப் பற்றிய தெளிவான தகவல்கள் பெறப்படவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
154

சாரல்நாடன்
பேராசிரியர் சி. தில் லைநாதன் எழுதிய கட்டுரையிலும் இதே குறைபாடு காணப்படுகிறது.' பாரதியாரை நடேசய்யர் மிக உயர்வாக மதித்தார். வாழுங் காலத்திலேயே அவரிடம் மதிப்பு வைத்திருந்தார். அவரது கவிதைகளில் தெறித்து விழும் விடுதலை உணர்வும் சுதந்திர வேட் கையும் அய்யரை வசீகரித்திருந்தன. தோட்டத் தொழிலாளர்களின் விடிவுக்கு பாரதியாரின் கவிதைகள் நன்கு பயன்படும் என்பதை
நன்குணர்ந்திருந்தார்.
வ. ரா. இலங்கைக்கு வந்த 1936ல், ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த நடேசய்யர் பத்திரிகை ஆசிரியராகவும் தொழிற் சங்க வாதியாகவும் அரசியல்வாதியாகவும் மிகச் சிறந்த பிரசங்கியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். 1931ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கடைசி நேரத்தில் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்காத காரணத்தால் நடேசய்யரால் போட்டியிட முடியாது போனது. இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத நடேசய்யர் 1936 சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் தான் வ. ரா. இலங்கைக்கு வந்து வீரகேசரிப் பத்திரிகையில் ஆசிரியராகக் கடமை ஏற்கின்றார்.
வீரகேசரிப் பத்திரிகை நிறுவுநர் சுப்பிரமணிய செட்டியாருக்கும் நடேசய்யருக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவியது. பத்திரிகைகளில் பகிரங்க அறிக்கை வெளியிட்டுக் கொள்ளுமளவுக்கு இருவருக்கும் மனவிரிசல் நிலவியது என்பதை தேசபக்தன் பத்திரிகையிலும் வீரகேசரி பத் திரிகை யரிலும் வந்துள் ள செய் தரிகள் வெளிப்படுத்துகின்றன.
55

Page 80
பத்திரிகையாளர் நடேசய்யர்
வ. ரா. முழுக்க முழுக்க ஒரு காங்கிரஸ் வாதி; மகாத்மா காந்தியை மிகவும் மதித்தவர்.
இலங்கையில் செயல்பட்டுக் கொண்டிருந்த இலங்கை இந்தியர் காங்கிரஸ் பாரதத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்திய காங்கிரஸின் பிம்பமாகவே இருந்தது. இலங்கை இந்திய காங்கிரஸின் பிரதிநிதியாகத் தேர்தலில் போட்டியிடும் பெரி. சுந்தரம் அவர்களை ஆதரித்தாக வேண்டிய நிலையில் வ. ரா. இருந்தார். 1931ல் அமைக்கப்பட்ட முதலாவது சட்டசபையில் கைத்தொழில் வர்த்தக மந்திரியாகப் பதவி வகித்த பெரி. சுந்தரமும் நடேசய்யரும் வெவ்வேறு அணியைச் சேர்ந்தவர்கள். ஒரு தொகுதியில் போட்டியிடப் போ கிறார் கள் . நடேசய்ய ரன் கீழ் தான் பணியாற்றியிருந்தும் வ. ரா அவருக்கெதிராகப் பெரி. சுந்தரத்தை ஆதரித்து எழுதவும் கூட்டங்களில் பேசவும் முனைந்தார். 1936களில் வெளியாகிய தினகரன், வீரகேசரி என்ற பத்திரிகைகளிலும் தேசபக்தன், இந்திய கேசரி என்ற வெளியீடுகளிலும் காணப்படும் செய்திகள் இதை உறுதி செய்கின்றன.
வ. ரா. வோடு நெருங்கிப் பழகிய டி. எஸ் சொக் கலிங்கம் அவரைப் பற்றி எழுதுகையில், "வ. ரா. வின் கட்டுரைகளை ஆர்வத்தோடு படிப்பவர்களில் 22 வருஷங்களுக்கு முன்பே நானும் ஒருவன். அச்சமயம் அவர் வர்த்தக மித்ரன், சுதந்திரன் பத்திரிகைகளில் எழுதி வந்தார். ராஜீய பத்திரிகைத் தொழிலை விட எழுத்தாளர் தொழிலே அவருக்கு அதிகம் பிடித்தமானது. அவருடைய போக்கும் அதற்கே ரொம் பப் பொருத்தமானது. நிரந்தரமான காரியங்களில் சிரத்தையுள்ளவர்களுக்குத் தினசரி மாறும் கால நிலையைப் போன்ற ராஜீவப் போக்குகளில் சிரத்தை ஏற்படுவது கஷ்டந்தான். பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது அவருக்கு எப்போதும் பிடிக்காது.
156

சாரல்நாடன்
ஒரு வட்டாரத்தில் தமது பிரசாரம் முடிந்து விட்டதென்று அவர் நினைப்பாரானால், வேறெந்த வட்டாரத்தைத் தமது கட்சிக்கு இழுக்கலாம் என்று பார்ப்பதற்காகத் தமது கூடாரத்தைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டு விடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார். கு. அழகிரிசாமி, "உத்தியோகமின்றி இருந்த போதிலும் ராஜ வாழ்க்கையே வாழ்ந்தார்" என்று அவரைப் பற்றித் தன் நூலில் குறிப்பிடுகின்றார். வ. ரா. வுக்கு அரசியலில் நேரடி ஈடுபாடில்லாதிருந்தும் அவரது இலங்கை வருகையும் வீரகேசரியில் பணியாற்றிய வேளை காட்டிய அரசியல் ஆர்வமும் தேர்தல் முடிந்த கையோடு - (தேர்தலில் நடேசய்யர் வெற்றி கண்டு அரசாங்க சபைக்குத் தெரிவானார்) திரும்பவும் தமிழகம் சென்று விட்டதுவும் வெறுமனே நடந்து விட்ட ஒன்றல்ல.
எழுத்திலும் பேச்சிலும் அறிவிலும் பிரகாசித்துக் கொண்டிருந்த நடேசய்யரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்யாமல் தடுக்க வேண்டுமெனில் அவருக்கீடான அத்துறைகளில் மிளிரும் ஒருவர் தேவைப்பட்டார். வ. ரா. அந்த இடத்தை நிரப்பியது வீரகேசரி சுப்பிரமணிய செட்டியாரின் தூண்டுதலால் தான். புதுமைப் பித்தனையும் செட்டியார் வீரகேசரிக்கு, கொண்டு வர முயற்சித்ததையும் "செட்டியார் ஆள்கட்டும் கங்காணி போல் நடந்து கொள்ள முயன்றதால் தான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் புதுமைப் பித் தன் தெரிவித்துள்ளார்."
வ. ரா. அதற்கு ஒத்துக் கொண்டது அதிசயந்தான் வ. ரா , வைப் போல் தேர்தல் காலத்தில் அய்யருக்கெதிரான அணியில் இணைந்திருந்த மற்றுமோர் சாதனையாளரான சத்யவாகேசுவரா ஐயர் பின்னாட்களில் நடேசய்யரின் உற்ற நண்பனாகச் செயற்பட்டுள்ளதையும் இங்கு நினைவிற் கொள்ளலாம். வ. ரா. தமிழுலகில்
157

Page 81
பத்திரிகையாளர் நடேசய்யர்
பெற்றிருந்த செல்வாக்கும் பாரதியார் புகழ் பரப்புவதில் அவர் முன்னின்று உழைத்தமையும் இலங்கையில் பாரதியின் செல்வாக்கு அவரது வருகையோடுதான் வந்திருக்க வேண்டுமென்ற மாயையை இலகுவில் தோற்றுவிக்க உதவியது. மலையகத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்காத ஆய்வாளர்கள் இம்மாயைக்குட்பட்டு விட்டதில் வியப்பேதுமில்லை.
சஞ்சிகைகள், பருவ ஏடுகள், சிற்றேடுகள், பத்திரிகைகள் என்று தொடர்ந்து வெளிவரும் வெளியீடுகளில் குறிக் கோளை வெளிப்படுத்தும் நெறியுரைகளாக முதற் பக்கத்தில் நிலையான வாசகங்கள் தொடர்ந்தும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.
தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் திருக்குறள் வரிகளைப் பெரும்பாலும் தமது வெளியீடுகளில் முதற் பக்கத்தில் நெறியுரைகளாக வெளியிட்டுள்ளதை நிறையவே நம்மால் அறிய முடிகிறது. உதாரணமாக,
சிங்கை நேசன் (1887 ம் ஆண்டு), சிங்கப்பூர், "தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றங் காண் கிற் பி னென் குற்றமாகு மிறைக்கு ( குறள் 436 )
விவேக சிந்தாமணி ( 1893ம் ஆண்டு), சென்னை, அறிவுடையா ரெல் லா முடையா ர றரிவிலா ரென்னுடைய ரேனு மிலர் (குறள் 430)
பூரீசுஜனரஞ்சனி ( 1892ம் ஆண்டு) புதுவை அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள் 1)
ஞானபோதினி (1897ம் ஆண்டு), சென்னை, தா மின் புறு வ து ல கின் புறக் கண் டு காமுறுவர் கற்றறிந் தார் (குறள் 399) என்ற பல்வேறு

சாரல்நாடன்
பத்திரிகை நெறியுரைகளை எடுத்துக் காட்டலாம். நடேசய்யரும் தனது முதல் சஞ்சிகையான வர்த்தக மித் ர னரில் இரணர் டு திருக்குறள் வாரிகளை வெளியிட்டுள்ளதை ஏற்கனவே கண்டோம் (குறள் எண்கள் 1022, 1023). திருக்குறள் தமிழர் வாழ்வில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இந்த நெறிமுறைகள் அமையலாம். இருபதாம் நூற்றாண்டுத் தமிழரின் வாழ்வில் இத்தகு முக்கியத்துவத்தை தமது சமுதாய நோக்கில் புனையப்பட்ட கவிதைகளின் மூலம் சாதித்துக் காட்டிய சுப்பிரமணிய பாரதியின் கவிதை வரிகள் பத்திரிகைகளின் நெறிமுறைகளாக வெளிவர ஆரம்பித்தன. பாரதியாரின் மறைவோடு தோன்றிய இச் சமூக வெளிப்பாட்டு நெறிமுறைகள் எழுபத்தைந்தாண்டுகளின் பின்னர் (1921 - 1996) இன்று புதிதாக முகிழ்த்திடும் பத்திரிகைகளிலும் வெளிப்படுகின்றன. திருவள்ளுவரின் குறளுக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை பாரதியாரின் கவிதைக்குக் கொடுத்த முன்னோடிகளில் நடேசய்யரும் ஒருவராவார்.
சுப்பிரமணிய பாரதியார் மறைந்த மூன்றாண்டுக்குள் தன்னுடைய பத்திரிகையில் அவரது கவிதை வரிகளை முதற் பக்கத்தில் அச்சிட்டுள்ளார். ஒரு மனிதனின் முக்கியத்துவம் அவன் மரணத்தோடு மறைந்து விடுகிறது. சிலசமயங்களில் சிலகால இடைவெளிக்குப் பின்னர் மறைந்து விடுகிறது. அரிதாகக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரும் மறையாது நினைவு கூறப்படுகிறது.
ஒரு சிலரின் மரணமோ காலம் செல்லச் செல்ல கந்தகத் தன்மையைப் பெறுகிறது. உணர்வும் உயிர்ப்பும் சக மனிதர்களிடையே தோன்றிட அது வழி சமைக்கிறது. தொடர்ந்தும் நீடிக்கப் பயன்படுகிறது. கவியரசர் சுப்பிரமணிய பாரதியாரின் மரணமும் அத்தகையது தான.
159

Page 82
பத்திரிகையாளர் நடேசய்யர்
கால வெள்ளத்தில் அமிழ்ந்து அடையாளம் தெரியாது போகாமல் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சுப்பிரமணிய பாரதியாரின் நாமம் தமிழினத்தின் எழுச் சரிக் கும் ஏற் றத் துக் கும் பயன் படும் சக்தியுடையதாயிருக்கிறதென்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் மிகுந்த நடேசய்யர் தனது பத்திரிகையில்,
"தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்" என்ற கம்பீரமான பிரகடனத்தையும்
"சாதி மதங்களைப் பாரோம் உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே" என்ற சமத்துவப் ’பிரகடனத்தையும் முதற் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தேசபக்தன் பத்திரிகையில் இடமும் வலமுமாக முதற் பக்கத்தில் வெளியாகியுள்ள இக்கவிதை வரிகளின் கீழ் சுப்பிரமணிய பாரதியார் என்ற பெயரையும் இரு தடவை வெளிவரச் செய்துள்ளார். தேசபக்தன் பத்திரிகை மலேயா, பர்மா, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில்" சந்தாதாரர்களைக் கொண்டிருந்ததைக் கவனத்தில் எடுக்கையில் கவியரசர் பாரதியாரின் புகழ் பரப்புவதில் நடேசய்யரின் பணி அசையாத அடித்தளம் கொண்டுள்ளது என்பதில் ஐயத்திற்கிடமில்லை. இலங்கை அரசியல் வரலாற்றை நோக்குகையில் சுப்பிரமணிய பாரதியாரின் பெயரை முதன் முதலாக ஹன்சார்டில் தனது பேச்சின் மூலம் பதிய வைத்த பெருமைக்குரியவர் நடேசய்யர்தான் என்பதை அறியலாம். நடேசய்யர் சொந்தமாகக் கடைசியாக நடாத்திய தோட்டத் தொழிலாளி பத்திரிகையிலும் "அச்சம் தவிர்" என்ற பாரதியாரின் புதிய ஆத்திசூடியில் அமைந்த முதல் வரி முதற் பக்கத்தில் நெறியுரையாக வந்திருப்பதைக்
காணர்கிறோம்.

சாரல்நாடன்
சுப்பிரமணிய பாரதியாருக்களித்த மரியாதையைத் தனது மரணம் வரை தொடர்ந்த சிறப்புக்குரியவராக நடேசய்யர் விளங்குகின்றார்.
தனது தேசபக்தன் இதழில் சுப் பிரமணிய பாரதியாரைப் பற்றி இவர் ஆசிரியத் தலையங்கம் ஒன்றை 1929ம் ஆண்டில் எழுதி உள்ளார்.?
பாரதியாரின் கவி நய மாண்பு குறித்த ஒரு விரிவான கட்டுரை தேசபக்தனில் வெளிவந்துள்ளது. "இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்" என்ற சுப்பிரமணிய பாரதியாரின் கட்டளையைச் சிரமேற் கொண்டு தமிழ் மொழிக்குப் புதிய துறைகளாக எண்ணப்படக்கூடிய சில நூல்களைக், காப்புறுதி, யந்திரப் பராமரிப்பு, நிதி வங்கிகளின் நடைமுறைகள், வணிக முயற்சிகள் பாரதியாரின் ஜீவித நாட்களிலேயே எழுதி வெளியிட்ட பெருமை நடேசய்யருக்குண்டு.
பாரத தேசத்தின் இழி நிலைமையைச் சபிக்கவும் எழுச்சி நிலைமையை வாழ்த்தவும் சுப்பிரமணிய பாரதியார் தமது கவிதை ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தினார்.
"போகின்ற பாரதத்தை" முப்பத் திரணி டு வரிக்கவிதைகளில் சபித்தெழுதிய பாரதியார் "வருகின்ற பாரதத்தை" முப்பத்திரண்டு வரிக் கவிதைகளில் வாழ்த்திப் பாடினார்.
'நீ மயங்குவதேன்?" என்ற கேள்விக்குறித் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்ட நடேசய்யர், "வெற்றியுனதே" என்ற பிரகடனத் தலைப்பில் மற்றொரு நூலையும்

Page 83
பத்திரிகையாளர் நடேசய்யர்
வெளியிட்டார். அடிப்படை மனோபாவத்தில் சுப்பிரமணிய பாரதியாரும் கோதண்ட ராம நடேசய்யரும் ஒரே விதத்தில் தான் செயற்பட்டுள்ளார்கள் என்பதை மேற் குறித்த உதாரணங்கள் மெய்ப்பிக்கும்.
'நீ மயங்குவதேன் ?" என்ற நூலில் இலங்கையில் வாழுகின்ற சிலரின் சரித்திரங்களையெடுத்துக் கூறி அடிமட்டத்திலிருந்து அவர்கள் வாழ்வின் உச்சக் கட்டத்துக்கு உயர்ந்ததையெல்லாம் விளக்கி வாசகர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றார். உனக்கு வயதாகவில்லையா?, உனக்கு வயதாகி விட்டதா?. பொருளில்லையானால் ஏன்?, ஊக்கமுடையோன் ஆக்கமுடையான், உண்மை நீங்கத் திண்மை நீங்கும், நில் ஓடாதே, கற்றுக் கொள், செய், செய்து பார், இன்னும் இன்னும் செய், கெடுவான் கேடு நினைப்பான், அதிஷ்டம் என்ற 12 தலைப்பில் எழுதப்பட்ட இந்த நூலில் வெளிவந்திருக்கும் இராமசாமி சேர்வை சரிதம் சிறுகதைப் பண்புகளைக் கொணடுள்ளதாக அமைந்து, மலையகத்தின் முதற் சிறுகதையாகக் கொள்ளப்படக் கூடியது என்று ஆய்வாளர் மு. நித்தியானந்தன் கருதுகிறார். "
பாரதியாரின் கவிதைகள் இலங்கையின் இருள் படர்ந்து கிடந்த மலைநாட்டுக்குள் இவ்விதம் புத்துணர்வு ஊட்டிடப் பயன்பட்டதெனினும் நேரடியாக இந்த மக்களைப் பற்றி அவர் கவிதைகள் எழுதவில்லை என்பதையும் கவனிக்கலாம்.
கரும்புத் தோட்டத்தினிலே என்ற அவரது கவிதையை தேயிலைத் தோட்டத்தினிலே என்று மாற்றியமைத்துத் தான் நடேசய்யரின் மனைவி மீனாட்சியம்மை தோட்டப் பகுதிகளில் பாடிவந்துள்ளார் என்று அறிகிறோம்.
162

சாரல்நாடன்
நேரடியாக இலங்கை மக்களைப் பற்றிய - தேயிலைத் தோட்டத்து மக்களைப்பற்றிய பாடல் தமிழகத்து நாடக மேடைகளில் அதே காலப்பகுதியில் பாடப்பட்டு வந்துள்ளது.
"தேயிலைத் தோட்டத்தினிலே பாரத ச்ேய்கள் சென்று மாய்கின்றார் அய்யய்யோ ( தேயிலை)
ஓயாது நாள் முழுதும் -சதா ஊழியம் செய்து உடம்பலுத்தே, கெட்ட நோயால் வருந்தும் மக்கள் - அங்கு நொந்து நொந்து தினம் நைந்து மடிகின்றார். ( தேயிலை)
கட்டத்துணியுமின்றிக் கொடுங் கானலிலே புள்ளி மானைப் போல் அலைந்து நட்டுவாக்காளி பூரான் பாம்பு அட்டை கடித்து அலறிப் புலம்புகிறார் (தேயிலை)
காசாசைப் பேய் பிடித்த மட்டிக் கங்காணியார் சிறுமங்கையாரைக் கெட்ட நேசத்திற்கே இழுத்துச் செய்யும் நிர்ப்பந்தம் தான் மனம் ஒப்பத்தகுந்ததோ என்ற இந்தப் பாடல் சுந்தர வாத்தியார் பாடியது. நாடகமேடைகள் தோறும் இந்தப் பாடல் முழங்கியது" என்ற தகவலை தன்னுடைய நூலில் கு. சா. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
கடல் கடந்த நாடுகளுக்குக் குறிப்பாக ஃபிஜித் தீவுக்குத் பிழைப்புத் தேடி ஒப்பந்தக் கூலிகளாகத் தென்னிந்திய மக்கள் செல்வதை எதிர்த்து நடந்த கிளர்ச்சிகளை ஆதரித்துக் கவியரசு சரோஜினி தேவி
163

Page 84
பத்திரிகையாளர் நடேசய்யர்
ஆங்கிலத்தில் கவிதைகள் படைத்தார். ஒப்பந்தக் கூலி முறையை ஒழிப்பதில் முன்னின்று பணியாற்றிய சி. எஃப். ஆன்ட்ரூஸ் என்ற ஆங்கிலப் பெருமகன் அக்கவிதைகளில் மனம் பறி கொடுத்தார். அவை தமிழிலும் வெளிவருதல் அவசியம் என்றுணர்ந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் கரும்புத் தோட்டத்தினிலே என்று ஆரம்பித்த முதல் நான்கு வரிக் கவிதைகளை சுப்பிரமணிய பாரதியார் எழுதியதாக
எம். எஸ். சுப்பிரமணிய அய்யர் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை நடராஜன் என்பவர் ஒப்பந்தக் கூலி முறையைக் கண்டிக்கும் கூட்டங்களில் பாடும் போது இந்தப் பாடலைக் கேட்கும் மக்கள் தேம்பித் தேம்பி அழுதனர் என்றும் அன்னிபெசன்ட் அம்மையாரும் ஆன்ட்ரூஸ் பெருமகனும் இதனால் உந்து சக்தி பெற்றனர் என்றும் கூறும் சுப்பிரமணிய அய்யர் பாரதியாரோடு சுதேசமித்ரன் பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர் என்பதை நினைவில் கொள்கையில் இந்தச் சம்பவங்களின் உண்மைத் தன்மையை அட்டியின்றி ஏற்க இடமிருக்கிறது."
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாடிய பாரதியார் ஃபிஜித் தீவில் வாழும் இந்தியர்களைப் பற்றிப் பாடியதைப் போல் சிங்களத் தீவில் வாழும் இந்தியர்களைப் பற்றிப் பாடாமைக்குக் காரணம் என்னவாக இருக்கும்? பிரித்தானியர் கால . இந்திய ஆட்சியில் இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதி போலவே நிர்வகிக்கப்பட்டது. இலங்கை அரசியலைப் பற்றிப் பேசுவதுவும் இந்திய அரசியலைப் பேசுவதுவும் ஒன்று தான். சுப்பிரமணிய பாரதியார் பாண்டிச்சேரியில்
164

சாரல்நாடன்
மறைந்து வாழ்ந்து வந்ததன் பின்னர் சென்னைக்கு வந்து பத்திரிகைப். பணிகள் ஆற்றினாலும் அரசியல் கவிதைகள் பாடுவதையும் கட்டுரைகள் எழுதுவதையும் தவிர்த்துக் கொண்டிருந்தார் என்று நிறுவும் முனைவர் இறையரசன் வ. ரா. வின் மேற்கோள் ஒன்றை,
"பாரதியாரைத் தலையங்கம் எழுதும் படி விட்டதில்லையாம். அரசியலில் பாரதியார் அதிதீவிர வாதி என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்கு காரணமாயினும் வேறு விஷயங்களைப் பற்றிக் கூட பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படியாக விடப்படுவதில்லையாம். "என்று தனது
நூலில் எடுத்தாண்டுள்ளார்."
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது 1915க்கு பிறகு அரசியலாகக் கருதப்பட்டதுவும் இலங்கையில் இந்த மக்கள் அநுபவித்த துன்பங்கள் பரவலாக வெளியில் வராததுவுமே காரணமாகக் கொள்ளப்படலாம். உண்மையில் கண்டிச் சீமையில் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருப்பதான பிரமையே நிலவியது.
புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதிய "துன்பக் கேணியும்" எஸ். கிருஷ்ணன் ஜனசக்தியில் எழுதிய "தேயிலைத் தோட்டத்தினிலேயும்" முப்பதுகளில் படைக்கப்பட்ட கதைகள் என்பதுவும் கவனத்தில்
கொள்ளத்தக்கது.
சுப்பிரமணிய பாரதியாரின் செல்வாக்கு இலங்கை மலையகத்தில் பரவியிருந்ததை மாத்திரமல்ல இலங்கை கிழக்கு மாகாணத்தில் பரவிய விதத்தையும் இலங்கை

Page 85
பத்திரிகையாளர் நடேசய்யர்
அறிஞர்கள் இது கால வரையிலும் சரியாக அறியவில்லை. மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துள்ள கிழக்குத் தபால் பத்திரிகையில் இதழ் தோறும் பாரதியாரின் வெவ்வேறு பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இது குறித்து இது காறும் எவரும் எங்கும் குறிப்பிட்டதில்லை. நடேசய்யரைக் கெளரவிக்க எடுத்த முயற்சிகளையோ அல்லது அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்களையோ காண முடியாமைக்குக் தனித்து மிளிரும் யதேச்சாதிகாரப் போக்கை அவர் கடைப்பிடித்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை விட அவரை இலங்கையராக ஏற்றுக் கொள்வதற்கு மனம் ஒப்பாத அரசியல் வாதிகளையும் தமிழ்ப்பிரமுகர்களையும் குறைதான் கூற வேண்டும். நடேசய்யருக்கு முத் திரை யொன்றை வெளியிடும்படி மலையக கலை இலக்கியப் பேரவை அரசாங்கத்தைச் சமீபத்தில் கேட்டிருந்தது. அதைச் செயற்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டை அமைச்சர் தொண்டமான் வைத் திருந்தார். நூலாசிரியரிடம் வெளிப்படுத்தினார்.
இலங்கையில் இன்று பழைய வரலாற்றுக்குப் பங்களித்தவர்களைப் பற்றிய நினைப்பத் தொடங்கியுள்ளது. இலங்கையின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையில் மேன்மைமிகு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா குறிப்பிட்ட விடுதலை வீரர்களின் பெயரில் நடேசய்யரின் பெயரும் இருந்தது.
கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 1886ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பெளத்த மத மேன்மைக்கு உழைக்கும் அக்கல்லூரி ஆரம்பமாகியதற்குக் கேர்னல் ஒல்கட் காரணம் ஆவார். கேர்னல் ஓல்கட் என்ற ஆங்கிலேயர்
166

சாரல்நாடன்
முயற்சி மேற்கொண்டு உழைத்தமையால்தான் 1894ம் ஆண்டு வெசாக் தினம் இலங்கையில் அரசாங்க விடுமுறை
தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையில் பிறந்த பெளத்தர்களால் சாதிக்க முடியாததை இலங்கைக்கு வந்து கடமையாற்றிய கிறிஸ்தவர் ஒருவரால் செய்ய முடிந்தது. இதே விதத்தில் தான் இலங்கையில் பிறந்து வளர்ந்து அரசியலிலும் வியாபாரத்திலும் சமூக அந்தஸ்திலும் கொடி கட்டிப் பறந்த பிரமுகர்களால் எண்ணியும் பார்க்க முடியாத தோட்டத் தொழிலாளர்களின் விடிவுக்கு வழிசமைக்கும் பயணத்தை நடேசய்யரால் ஆரம்பிக்க முடிந்தது.
சட்ட நிரூபண சபையில் அங்கத்துவம் வகித்த காலப்பகுதியில் ( 1921 - 1930) இலங்கைத் தீவின் பிரகடனப்படுத்தப்படாத தலைவராக ஜேம்ஸ் பீரிஸ் கருதப்பட்டார் என்பர். அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு மக்களிடையே இருந்த மதிப்பினை இது மெய்ப்பிக்கும். இப்படி ஒரு பிரதிநிதித்துவத்தை நடேசய்யர் பெற்றிருந்த காரணத் தால் தான் இலங் கையில் ஆங் கில ஏகாதிபத்தியத்துக்கும் சிங்கள் மேலாதிக்கத்துக்கும் உள்ளூர்த் தமிழ் உதாசீனத்துக்கும் நடேசய்யரால் வெற்றிகரமாக முகங் கொடுக்க முடிந்தது.
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தமது அரசியல் கொள்கைளை மக்களிடம் பரப்பிய கம்யூனிஸ்ட்களில் ஏ. கே. கோபாலன் குறிப்பிடத்தக்கவர். அரசியல் சித்தாந்தங்களில் வயப்பட்டுத் தீவிரப் பணி
புரிந்த இலங்கையர்களான என். எம். பெரேரா, கொல்வின்

Page 86
பத்திரிகையாளர் நடேசய்யர்
ஆர். டி. சில்வா, பிலிப் குணவர்த்தனா ஆகியோர் இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்ததைப் போல் தீவிர அரசியல் பணியின் காரணத்தினால் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்தவர் இந்தியரான ஏ. கே. கோபாலன். கேரளத்தைச் சார்ந்த இவர் பிரபாதம் மலையாளப் பத்திரிகைக்குச் சந்தா சேர்ப்பதற்காக இலங்கை வந்த போது சிதறிக் கிடந்த மலையாளிகளை ஒன்று திரட்டினார். அவர் வருகையின் போது மலையாளிகளுடன் சிங்களவர்க்கு உள்ள வெறுப்பு அதன் உச்சக் கட்டத்திலிருந்தது. மலையாளிகள் தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் இணைந்து பணியாற்றுவதில்லை. இவற்றை அவதானித்த கோபாலன் இந்தியர்களின் பொது நலன்களைக் கணக்கிலெடுத்து இலங்கையில் செல்வாக்குடன் இருந்த பலருடனும் ஆலோசனை நடாத்தினார். அவர் தொழிலாளர் தலைவராக விளங்கிய நடேசய்யருடன் ஆலோசித்தார்." நடேசய்யர் தம் காலப்பகுதியில் ஏனைய தலைவர்களை
விட வேறுபட்டு நின்றமையை இது காட்டும்.
நடேசய்யர் தொழிற்சங்க முயற்சிகளை மாத்திரமல்ல தமது எழுத்து முயற்சிகளையும் இந்திய வம்சாவளி என்ற உணர்வோடுதான் நடாத்தினார். இலங்கையில் வெளியான மலையாளி ( 1925), லங்காகேசரி (1926), இலங்கை மலையாளி ( 1927), சிங்கள கேரளன் (1935), மலையாளி மித்திரன் ( 1936) என்ற மலையாளப் பத்திரிகைகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பும் இருந்தது. இலங்கை வாழ் இந்திய மக்களின் எதிர்காலத்தையிட்டு ஆய்வு நடாத்தி அவர் எழுதிய இந்தியா இலங்கை ஒப்பந்தம் ( 1941), மலையாள
168

சாரல்நாடன்
மொழியிலும் வெளிவந்தது. பி. வி. வேலய் என்பவர் இதை வெளியிட்டார். நடேசய்யரின் பனிைகள் , பிரமிப்பூட்டுவன. புரட்சி, நம்பிக்கை, உற்சாகம், எழுச்சி, தீவிரம் நிரம்பியவை. அந்த உணர்வலைகள் வெளிப்படுவதை எல்லாக் காலத்திலும் மறைத்து வைக்க
முடியாது.
>< >< >< >ー
அடிக்குறிப்புகள்
1. இதழாசிரியர் பாரதி -முனைவர் பா. இறையரசன் 2. Lake House Publications - 7. 11.47 3. பாரதியின் பத்திரிகை உலகம் - சீனி விசுவநாதன் d. அமர்தகுணபோதினி - ஏப்ரல் 1929
5. வ. ரா. வாசகம்
6. பாரதி ஆய்வுகள் - க. கைலாசபதி - பக்கம் 231 7. மல்லிகை - மே 1982
8. சி. தில்லைநாதன் 9. குமரிமலர் - முதல் இதழ் - 1943
10. நான் கண்ட எழுத்தாளர்கள் - கு. அழகிரிசாமி 11. புதுமைப் பித்தன் வரலாறு - எஸ். ரகுநாதன் 12. தேசபக்தன் கோ. நடேசய்யர் - சாரல்நாடன் 13. தேசபக்தன்- 16. 7. 1929
14. பாரதியின் கவிந யமாண்பு - வாசுதேவ சர்மா -10, 1 1927 15. வீரகேசரி - 26. 1. 1992 16. தமிழ் நாடக வரலாறு - கு. சா. கிருஷ்ண மூர்த்தி 17. பாரதியார் பற்றி நண்பர்கள் - பக்கம் 53 18. இதழாளர் பாரதி - பக்கம் - 147 19. நான் மக்கள் ஊழியன் - ஏ. கே. கோபாலன்

Page 87
y
பத்திரிகையாளர் நடேசய்யர்
அரசியல் வழி மக்கள் பணி
பத்திரிகையில் பத்திராதிபராகக் கடமை புரிபவர்கள் அனைவரும் புகழ்பெற்று விடுவதில்லை. பத்திரிகையின் பெயர் தெரிந்த அளவுக்குப் பத்திரிகையின் ஆசிரியர் பெயர் தெரிந்திருக்க வேண்டிய நியாயமுமில்லை. எனினும் WritingEditor ஆக விளங்கும் எழுத்தாற்றல் மிகுந்தவர்கள் பத்திரிகை ஆசிரிய பீடத்திலிருக்கும் போது பத்திரிகையும் கூடவே பத் திரிகையாசிரியரும் புகழ் பெறும் சம்பவங்களுக்கு ஏராளமான உதாரணங்களுண்டு. நடேசய்யர் தமது பத்திரிகை வாழ்நாட்களில் முற்று முழுவதாக எழுதும் பத்திராதிபராகவே இருந்துள்ளார். தேசநேசன், தேசபக்தன் தோட்டத் தொழிலாளி, சிட்டிஷன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் அவரது எழுத்தாற்றல் மிகவும் பிரகாசமாக வெளிப்பட்டுள்ளது. அரசியல் குறித்தெழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள், பாடல்கள் அனைத்திலும் இப்பிரகாசத்தைத் தரிசிக்கலாம்.
நாட்டு நடப்புச் சம்பந்தமான அரசியல் குறித்தெழுதுபவர்கள் வாரத்துக்கு ஒரு கட்டுரை எழுதினால் போதும். கை நிறைய அதற்குச் சம்பளம் கிடைக்கும். இந்த நியதி, நிறுவனங்கள் நடாத்தும் பத்திரிகைகளுக்குப் பொருந்தி வரும். காலனித்துவக் காலப்பகுதியில் டெயிலி நியூஸ் ஆங்கிலப்பத்திரிகையில் ஆசிரியராக விளங்கிய எஸ். ஜே. கிரவுத்தர் தம் அனுபவங்களை வெளிப்படுத்துகையில் இதைக் கூறுகிறார். மேலும் சட்டசபை நடப்புகளை "மணிக்கூட்டுக் Gas/71,7326or dip" (Under the Clock Tower) 6T6örp தலைப்பில் வாரம் ஒரு கட்டுரையாக எழுதினால் போதும் என்றும் கூறியுள்ளார். கிரவுத்தர் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய அதே காலப் பகுதியில்

சாரல்நாடன்
நடேசய்யர் இந்தப் பணியினை ஆங்கிலத்திலும் தமிழிழுமாகச் செய்து கொண்டிருந்தார் என்பது மாத்திரமல்ல அரசியலில் சட்டசபை அங்கத்தவராகவும் தொழிற்சங்கத்தில் "அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்" தலைவராகவும் ஒரே சமயத்தில் பணியாற்றினார் என்பதுவும் வியப்போடு நோக்க வேண்டிய உண்மையாகும்.
அரசியலில் புகுவதன் மூலம் தம் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றலாம் என்பதைப் புரிந்து கொண்டு அரசியலில் புகுவதையே தமது நோக்கமாக, வாழ்க்கை இலட்சியமாக ஒரு சிலர் கொண்டுள்ளனர்.
தன்னுடைய வாழ்க்கையின் நோக்கங்களில் ஒன்றாக, ஏதேனுமொரு சட்டமன்றத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தையும்
பாஸ்கர சேதுபதி (1869 - 1903) வைத்திருந்ததாக அறிகிறோம். சுவாமி விவேகானந்தரை அகிலம் முழுக்க அறிய வைத்த பெருமகன் செல்வச் செழிப்பும் புலமைச் செருக்கும் புகழ் மணமும் பூத்து விளங்கிய அவரது நோக்கம் அவ்விதம் அமைந்தமைக்கு அரசியல் பதவியின் மூலம் மனுக்குல மேம்பாட்டுக்கு இன்னும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். நடேசய்யரை இந்த நம்பிக்கை முற்று முழுவதாக இயக்கியிருப்பதை அவரது பத் திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகளும் கட்டுரைகளும் வெளிக் காட்டுகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்ட வர்த்தக மித்ரன் பத்திரிகையில் (6- 6- 1918) யாழ்ப்பாண மக்களுக்கு அறிவுரை கூறும் விதத் தில் எழுதப்பட்டுள்ள 'தலைவர்களைக் கொண்டு சட்டசபையின் மூலமாய்க்

Page 88
பத்திரிகையாளர் நடேசய்யர்
கேள்விகள் கேட்டுப் பயன் பெறும் வண்ணம் முயலுங்கள் என்ற வரிகள் " அரசியல் பதவி மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்ற அவரது ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதாயுள்ளன.
சட்டசபை மூலம் ஆற்றக்கூடிய பணிகளை நன்குணர்ந்த நடேசய்யர் தேசநேசன், தேசபக்தன் இதழ்களில் இதற்கான வழிவகைகளைக் கண்டறிந்தார். சிறைப்பட்டு வாழ்வதைவிட வேறு தேசம் சென்றேனும் தேசசேவை செய்வத்ை பாரதியார் விரும்பினார் என்பதை வ. உ. சிதம்பரம்பிள்ளை எழுதிய சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிய குறிப்புக்களில் காணலாம். மேலும், வ. உ. சிதம்பரம்பிள்ளை சுதேசிய கப்பல் கம்பெனி ஆரம்பித்த வேளை அதற்கு ஆதரவு வேண்டி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கட்டுரையில் "இக்கம்பெனியில் பங்குகள் எடுத்துக் கொள்வோரில் இலங்கையரையும் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார் "," என்ற உண்மை இலங்கையிலிருந்து நடேசய்யர் போன்றவர்கள் மூலம் வெளிக் கிளம்பிய உணர்வுகள் அவரால் மதிக்கப்பட்டன என்பதை உணர்த்துகிறது.
××××××
அடிக்குறிப்புகள்
l. இராம கிருஷ்ண இயக்கமும் தமிழ்நாடும் -
பெ. சு. மணி பக்கம் 138
2. வர்த்தக் மித்ரன் -நடேசய்யர் -6. 6. 1918
3. வ. உ. சியும் பாரதியும் - ஆ. இரா. வேங்கடாசலபதி
Lu 5g5 Lb 35
4. அதே பக்கம் 45

சாரல்நாடன்
காலக்கருவி
நடேசய்யரின் இறவாப் புகழுக்கு வழிசமைத்தவை அவரது அரசியல், தொழிற்சங்கம் சார்ந்த எழுத்துக்களே ஆகும்.
அவரது தமிழகத்து வாழ்வும் (1887 - 1920) இலங்கையில் மேற்கொண்ட பணிகளும் ( 1921 - 1947) அதற்குப் பெரிதும் உதவின. அழியாப் புகழை அய்யர் பெற்றமைக்கு உதவிய அரசியல், தொழிற்சங்க எழுத்துக்களை நான்கு வகைப்படுத்தலாம். அவையாவன:
அறிக்கைகள் பத்திரிகைகள் நூல்கள் படைப்பிலக்கியம்
அவர் தயாரித்தளித்த அறிக்கைகள் மலையக மக்களின் மேம்பாட்டைப் பிரதான நோக்காகக் கொண்டிருந்தன. அவர்களது அடிமட்ட வாழ்க்கை அரசியல் சிக்கல்கள், பொருளாதாரச் சீர்குலைவு, சமூக அவலம், பிரிட்டிஷ் துரைமார்களின் அடக்கு முறை என்பவற்றை அவை விவரித்தன. தனித்தனி பிரசுரங்களாகவும் பத்திரிகைகளாகவும் நூல் வடிவிலும் அவை வெளியாகியுள்ளன.
பதினான்கு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியும் பதினேழு நூல்களை ஆக்கி வெளியிட்டும் அவராற்றிய பணிகள் வியப்புக்குரியன. போதாதற்கு டெயிலி நியூஸ், டைம்ஸ் ஒஃவ் சிலோன், தி ஹிந்து என்ற புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிகைகளிலும் அவ்வப்போது

Page 89
பத்திரிகையாளர் நடேசய்யர்
கட்டுரைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலப் பாதுகாப்புக் குறித்து டைம்ஸ் ஒஃவ் சிலோனில் எழுதிய கட்டுரை குறிப்பிட்டுக் கூறத்தக்கது. ஆக, நடேசய்யர் மலையகத்தின் நிர்மாணச் சிற்பியாக உயர்ந்தமைக்கு அவரது பத்திரிகைப் பணி மிகப் பிரதானமான காரணியாக அமைந்தது.
"காலத்தின் தேவைக்கேற்பத் தமிழ் வளர்ச்சித் துறைகளில் ஒன்றாகத் தமிழ் அரசியல் எழுத்துத் துறை அமைந்தது", என்பார் பெ. சு. மணி.
நடேசய்யரின் அரசியல், தொழிற்சங்கம் சார்ந்த எழுத்துக்கள் இவ்விதம் தமிழ் மக்களின் ஒரு காலத்துத் தேவையை வெற்றிகரமாக நிறைவேற்றி வைத்தது என்பதில் சந்தேகமில்லை.
"இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் தோற்றம் கண்ட 1930 காலப்பகுதியில் இந்தியருக்கே தமிழ் தெரியும் என்ற கருத்து இலங்கையில் பரவலாக நிலவியது. வீரகேசரியிலும் தினகரனிலும் ஆசிரியர்களாகப் பணியாற்றிவிட இந்தியாவிலிருந்தே ஆட்கள் வந்தனர்", என்று குறிப்பிடும் இ. சிவகுருநாதன், சுப்பிரமணிய செட்டியார் தன் மகனின் பெயரிலேயே வீரகேசரி என்ற பத்திரிகையைத் தொடக்குவித்தார் என்று கூறி, இது,
"தேசிய ரீதியில் பிரச்சினைகளை அணுகாமல், இந்தியர்களுக்கு இந்தியச் செய்திகளைக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தது", என்றும், "கொழும்பிலிருந்து கொண்டு சென்னையை நோக்கிய வண்ணமே இருந்தது. பத்திரிகை மொழியும் அமைந்திருந்தது",
என்றும் சாடுகின்றார்.

சாரல்நாடன்
இந்திய வம்சாவளித் தமிழரின் நலனைத் தனது மிகப் பிரதான நோக்காகக் கொண்டிருந்த நடேசய்யர் இந்தச் சாடுதலுக்குட்படாத வண்ணம் தனது பணிகளை மேற்கொண்டிருந்தார். தனது பத்திரிகைகளில் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கை மண்ணில் தம்மை எப்படி நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத் தும் தொலைநோக்குப் பார் வையை வெளிப்படுத்தினார்.
இந்த இவரது ஆளுமையினால்தான் இலங்கைத் தமிழரின் அரசியல் நலன் பேணும் ஒரு தமிழ் அரசியல் பத்திரிகையான சுதந்திரன் வெளியீட்டில் நடேசய்யரால் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்க முடிந்தது.
இலங்கை மலையகத் தோட்டப் புறங்களில் அரசியல் கள ஆய்வை ஆரம்பித்த முதல்வராகக் கருதப்படுபவர் நடேசய்யரே ஆவார்.
அரசியல் புலமைக்கான புள்ளி விபரங்களைச் சேகரிக்க தோட்டப்புறங்களுக்குச் சென்று அதிகாலையில் பெயரிடும் களத்தில் பிரசன்னமாகியிருந்ததைச் சட்டசபை பேச்சுக்களிலும் பத்திரிகைக் கட்டுரைகளிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விதம் தமிழில் பேச மட்டுமே அறிந்த லட்சக் கணக் காண மக்களிடையே அரசியலுணர்வும் சிந்தனையும் தோன்ற அவரது பத்திரிகைகள் வழிவகுத்தன.
அடக்கப்பட்ட மக்களின் சார்பாக எழுத்துப் பணி L/fu Gig 17 g, (Pedagogy of the Oppressed) egy6), 60J g'60Túb காணலாம். சுப்பிரமணிய பாரதியாருக்குப் பிறகு தமிழையும் தேசியத்தையும் இலக்கியத்தையும் அரசியலையும் இணைத்துப் பணியாற்றிய மிகச் சிலரில் நடேசய்யருக்குச் சிறப்பானதோர் இடமுண்டு என்பதில் சந்தேகமில்லை.
175

Page 90
பத்திரிகையாளர் நடேசய்யர்
தி ஹிண்டு என்று ஆங்கிலத்திலும் சுதேச மித்ரன் என்று தமிழிலும் ஜி. சுப்பிரமணிய அய்யர் பத்திரிகைகளை ஆரம்பித்த போது ( 1883) அவருக்கு இருபத்தெட்டு வயது நடந்து கொண்டிருந்தது. அவரை அரசியல், தமிழ் எழுத்துத்துறையின் முன்னோடி என்று கூறுவர். இலங்கையில் தி சிட்டிஷன் என்று ஆங்கிலத்திலும் தேசபக்தன் என் றுதமிழிலும் நடேசய்யர் பத்திரிகைகளை நடாத்திய போது “ அவருக்கு வயது முப்பத்திஆறு. இந்தியாவில் வர்த்தக மித்ரனை நடாத்திய போது அவரது வயது இருபத்துயேழு .
இவ் விரு வர் நடாத் திய பத் திரிகைகளும் நாட்டுப்பற்றுக்குச் சமமாகச் சமூக சீர்திருத்தப் பற்றை வளர்க்கும் பணியையும் பிரதான நோக்காகக் கொண்டு வெளிந்தன என்பதை அவதானிக்கலாம்.
சுதேசமித்திரனுக்கும் தேசபக்தனுக்கும் மேலும் சில ஒற்றுமைகள் உண்டு.
1899ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் திகதி தோற்றம் பெற்ற சுதேச மித்திரன் தமிழகத்தில் முதல் அரசியல் செய்தி நாளேடு எனும் வரலாற்றுப் புகழ் பெற்றது. 1924ம் ஆண்டு செப்டெம்பர் 30ம் திகதி இலங்கையில் வெளிவர ஆரம்பித்த தேசபக்தன் 1929ல் நாளேடாக வளர்ச்சி பெற்ற அரசியல் ஏடாக மிளிர்ந்தது. சுதேச மித்ரன் பத்திரிகையின் வளர்சிக்காகப் பல சுற்றுப் பயணம் மேற் கொள்ளப்பட்டன. வர்த்தக மித்திரன் பத்திரிகைக்காக இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடேசய்யர் தேசபக்தனுக்காக இந்தியா, பர்மா, மலேயா ஆகிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
176

சாரல்நாடன்
"அரசியல் கருத்துக்களைச் சாதாரண பாமர வாசகர்களிடம் பரப்ப முனைந்த சுதேசமித்திரன் தனக்காக ஒரு தமிழ் நடையை உருவாக்கப் பாடுபட்டது. தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டிய தமிழ் வளர்ப்புப் பணியையும் மேற் கொள்ள வேண்டியதாயிற்று", என்று ஆய்வறிஞர் பெ. சு. மணி கூறியதற் கொப்ப இலங்கைத் தீவில் தனது பத்திரிகை முயற்சிகளின் மூலம் நடேசய்யர் தனக்கென ஒரு லாவண்யமான தமிழ் நடையைக் கைக் கொண்டிருந்தார். தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தமிழ் வளர்ப்புப் பணியையும் மேற்கொண்டிருந்தார் நடேசய்யர். இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் மன உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, திரட்டியெழுப்பி, செயலாக்கம் பெறச் செய்தார்.
தனது சமகாலத் தலைவரான கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரைப் போன்று - இலங்கை மலையகத் தோட்டப் புற மக் களை செயல் படுத் திய வர் நடேசய்யராவார்.
சுப் பிரமணிய பாரதியார் தீவிர வாசகர். கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வந்தே மாதரம் ஆங்கில மொழித் தினசரியில் காணப்பட்ட தேசிய உணர்வூட்டும் கட்டுரைகளால் அவர் கவரப்பட்டார். தேசிய பக்தி மிகுந்த பாரதியார் அக்கட்டுரையாசிரியரான விபின சந்திரபாலர் என்பரை சென்னைக்கழைத்துக் கூட்டங்கள் நடத்த முனைந்தார். விபின சந்திரபாலரின் தீவிர அரசியல் கருத்துக்களுக்கஞ்சி பாரதியார் சென்னையில் நடாத்த விரும்பிய கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்குப் பலரும் அஞ்சினர் என்று கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மணிலா லின் தேசபக்தி மிகுந்த செயற்பாடுகளால் கவரப்பட்டு அவரை மலையகத் தோட்டப்புறங்களுக்கு அழைத்துச் சென்று, இறுதியில் இலங்கை அரசாங்கம் மணிலாலை நாடு கடத்தத் தீர்மானித்த போது அதற்கெதிராக இலங்கை - கொழும்பு நகரில் நடந்த மாபெரும்
177

Page 91
பத்திரிகையாளர் நடேசய்யர்
பொதுக் கூட்டத்துக்கு ஆதரவாகக் கையொப்பமிட அஞ்சிய இந்திய வம்சாவளித் தலைவர்கள், இது போன்ற, சுப்பிரமணிய பாரதியாருக்கொத்த, ஓர் இக்கட்டை நடேசய்யருக்கு ஏற்படுத்தியுள்ளனர்.
விபின சந்திரபாலர் ராஜதுவேசக் குற்றத்துக்காக ஆறு மாதத் தண்டனை அநுபவித்ததற்கு மேலாக மணிலால் ராஜதுவேச நாடு கடத்தல் அவரையும் அவரது மனைவியையும் இரு சிறு குழந்தைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
பாரதியாரின் தீவிர அரசியலுக்கும் - வெடிகுண்டு தயாரிக்குமளவுக்கு அவரை உத்வேகப்படுத்தியதற்கும் விபின சந்திரபாலர் இருந்ததைப் போல - தீவிர சிந்தனைக்குள்ளாகி மக்களின் விடுதலைக்காக உத்வேகச் செயல்களில் நடேசய்யர் ஈடுபடுவதற்கு மணிலால் காரணமாயிருந்தார் என்று குமாரி ஜயவர்த்தனா தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
கூட்டங்கள் நடாத்துவதற்கு மாத்திர மல்ல, கருத்துக்களைப் பத்திரிகைகளில் எழுதுவதற்கும் கூடப் பலமாக யோசிக்க வேண்டிய நிலைமை காலனித்துவக் கால இலங்கையில் இருந்தது. காரணம், அரசாளுவோர் அதிகார வர்க்கத்தினராக மாத்திரமல்ல அன்னிய ஆட்சியாளராகவுமிருந்தனர்.
1914ம் ஆண்டு "மோர்னிங் லீடர்" பத்திரிகாசிரியர் அவமதிப்புக் குற்றச்சாட்டில் "சுப்ரீம் கோர்ட்"டால் குற்றவாளியாகக் கருதப்பட்டுத் தண்டனைக்குள்ளானார். 1915ம் ஆண்டு ராஜதுவேச குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்ட எட்டுச் சிங்களப் பத்திரிகையாசிரியருகளுக்கெதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
1942ம் ஆண்டு "சிலோன் டெயிலி நியூஸ்" தனக்குத் தகவல் தருபவர்களைப் பற்றிய தகவல்களைத் தர

சாரல்நாடன்
மறுத்த காரணத்தால் தண்டிக்கப்பட்டது. நடேசய்யரின் பத்திரிகை எழுத்துக்கள், குறிப்பாக ஆசிரியத் தலையங்கங்கள் அவருக்கு ஆபத்தை உருவாக்க முனைந்தன.
இந்தியாவில் ஒத்துழையாமை இயக்க்ம் தீவிரமாகச் செயற்பட்ட காலப்பகுதியில் மேடைப் பாடல்கள் மூலம் மக்கள் உத்வேகம் பெறுவதைக் கண்டுகொண்ட ஆட்சியாளர் 1931ல் பாடல் புத்தகங்கள் மீது தடை விதித்தனர். இந்தத் தடையை மீறிச் செயற்படுவதில் சிரமங்களேற்பட்ட இக்காலப் பகுதியில் இலங்கையில் அச்சிடப்பட்ட தமிழ்ப்பாடல் புத்தகங்கள் இந்தியாவுக்குக் கப்பலில் பயணிகளின் பொதிகளைப் போல அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய அரசு இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளதை,
"உக்கிரமான தேச விரோதக் கருத்துக்களைக் கொண்ட வெளியீடுகள் தமிழில் கொழும்பில் அச்சிடப்பட்டு இலங்கையிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் வந்து நுழைகின்றன", என்று இந்திய அரசு இலங்கை அரசுக்கு அனுப்பிய கடித வாசகத்தை மேற்கோள் காட்டுகின்றார் தியோடர் பாஸ்கரன். மேடைப் பாடல் களையும் மேடைப் பேச்சுக்களையும் படிப்பறிவில் குறைந்திருந்த தோட்டப்புற மக்களிடையே பரப்பிய முதல்வராகவும் நடேசய்யரைக் கருதலாம். தோட்டம் தோட்டமாக அவரும் அவரது மனைவியாரும் மேற் கொண்ட பழகு தமிழ் மேடைப் பேச்சுக்களும் பாடல்களும் வெறும் புழுதியாய்ப் பொதிந்து கிடந்த இந்திய வம்சாவளி மக்களைப் புயலாக உருவெடுக்கச் செய்தன.
"தமிழ் நாட்டு மக்களின் கல்வி அறிவு குறைந்திருந்த காரணத்தால், கேள்வி வழியே அரசியல் அறிவு பெற முதன் முதலாகத் தமிழ் நாட்டில் பிரசங்க யாத்திரையை மேற்கொண்டு, பழகு தமிழில் மேடைப் பேச்சை நிகழ்த்தியவர்" என்று ஜி. சுப்பிரமணிய ஐயரைப் பற்றிப் பெ. சு. மணி குறிப்பிடுவதை" இங்கு நாம் ஒப்பு நோக்கலாம்.
179

Page 92
பத்திரிகையாளர் நடேசய்யர்
சுதேச மித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் தனது பத்திரிகையின் சார்பில், அரசியல் அறிவைப் புகட்டும் சிறுவெளியீடுகளையும் போகுமிடங்களில் எடுத்துச் சென்று மேடைப் பேச்சு முடிந்ததும் மக்களிடையே வழங்கி, பொது மக்கள் தொடர்பு சாதனத்தின் முக்கியத்துவத்தை நடைமுறையில் உணர்த்தியவராகக் கருதப்படுகின்றார். நடேசய்யரும் இதே விதத்தில் துண்டுப் பிரசுரங்களையும் சிறு கையேடுகளையும் தமது பேச்சுகளுக்குப் பின்னால் மக்களிடையே விநியோகித்துத் தொடர்பு சாதனத்தின் முக்கியத்துவத்தைத் தோட்ட மக்களிடையே நடைமுறையில் உணர்த்தியவராகக் கருதப்பட வேண்டியவரே.
1882ல் வாரப் பதிப்பாக வெளிவர ஆரம்பித்த ஜி. சுப்பிரமணிய ஐயரின் சுதேச மித்ரன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 1899ல் நாளேடாக வர ஆரம்பித்திருக்கையில் 1922ல் வாரம் மூன்றாக வெளிவர ஆரம்பித்த நடேசய்யரின் தேசபக்தன் 1929ல், 7 ஆண்டுகளில் நாளேடாக வர ஆரம்பித்தது என்பதுவும் கவனிக்கத்தக்கது.
கற்றறிந்தவர்களும் வருவாய் கூடியவர்களும் 5ԼD5] நம் பக் கூடிய தகவல் களைப் பெறுவதற்கான மூலாதாரமாகக் தாம் விரும்பி வாசிக்கும் - சந்தாதாரர்களாகச் சேர்ந்த பத்திரிகைகளையே இன்னும் நம்புகின்றனர்.
"தொலைக்காட்சி இன்றைக்குரியது; பத்திரிகை நேற்றைக்குரியது," என்று கூறப்படுகிறது. இந்த இரண்டிலும் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் காணாத அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட ஒரு காலப்பகுதியில் தனது பத்திரிகைகள் மூலம் நடேசய்யர் செய்த செய்தித் தகவல் பரிமாற்றங்கள் பாராட்டுதற்குரியன. அவர்
180

சாரல்நாடன்
நடாத்திய தேசபக்தன் 9 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்ததென்றால் மக்கள் அந்தப் பத்திரிகையை ஆதரித்தார்கள், அவர்களின் தேவைகளை அது பூர்த்தி செய்தது என்பதுதான் காரணம்.
இலங்கை மக்களின் - குறிப்பாக வறிய மக்களின் அந்தக் காலப் பகுதியைப் பற்றி இன்றைய வரலாற்றாசிரியர்களுக்கும் சமூக இயலாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்கியுள்ள பத்திரிகைகள் தேசநேசனும் தேசபக்தனும் தாம் குறிப்பாக அவற்றில் காணப்படும் ஆசிரியர் தலையங்கங்கள் வரலாற்றுத் தகவல்கள் தரும் மூலாதாரங்களாக அமைந்துள்ளன.
صله هاله هاله صال یاه ^N ~~ /^N MYN MYN
அடிக்குறிப்புகள்
l. For Future Security - Times of Ceylon-13-9- 1944
2. இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையின் வளர்ச்சி
இ. சிவகுருநாதன்
3. The Rise of Labour Movement - Kumari.Jayawardana
4. கார்ல்ஸ் மார்க்ஸின் இலக்கிய இதயம் -
பெ. சு. மணி

Page 93
பத்திரிகையுாளர் நடேசய்யர்
நடேசய்யரின் மரணம்
நடேசய்யர் மரணம் அடைந்த செய்தியை முதலில் வெளிப்படுத்தியது ஒப்சேவர், டெயிலி நியூஸ், டைம்ஸ் ஒஃவ் சிலோன் என்ற ஆங்கில தினசரிகள்தாம். மரணம் சம்பவித்த ஏழாம் தேதியே முதற் பக்கத்தில் தமது வெளியீடுகளில் நடேசய்யரின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட் டு அ வ  ைர SD nr u u முறையில் கெளரவப்படுத்தின.
இலங்கையில் அவருக்கிருந்த செல்வாக்கை இது வெளிப்படுத்துகிறது. தினகரன் தமிழ் நாளேடு 8ம் தேதி முதற் பக்கத்தில் நடேசய்யர் காலமானார் என்ற தலைவ் பில் அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
"பழைய சட்டசபையில் காலஞ் சென்ற திரு. நடேசய்யர் இலங்கை இந்தியரின் பிரதிநிதியாக அங்கம் வகித்தார், சட்டசபை கலைக்கப்பட்ட பின்னர் அவர் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். அவர் ஒரு சமயம் தினகரன் பத்திராதிபராக இருந்திருக்கின்றார்", என்று எழுதியதுடன் , மரணமடையும் போது நடேசய்யருக்கு ஐம்பத்தாறு வயது என்றும் அவர் ஒரு புதல்வியையும் மனைவியையும் விட்டுப் பிரிந்தார் என்ற விபரங்களையும் தந்துள்ளது. தினகரன் பத்திரிகையில் அதே தினத்தில்
"தோட்டத் தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை முதன்முதலில் உலகறியச் செய்தவர். நடேசய்யர் ஒரு தர்ம வீரன், எதற்கும் யாருக்கும் எங்கும் எப்பொழுதும் அவர் அஞ்சியதில்லை. அச்சம், தயை, தாட்சண்யமின்றி மனதில்பட்ட உண்மைகளை அவ்வப் போது எடுத்துச் சொல் லி

சாரல்நாடன்
வந்திருக்கின்றார். மகாத்மா காந்தியடிகள் முதன் முறை இலங்கை வந்த காலத்தில் திரு . நடேச யப் யர் தோட்ட தி தொழிலாளாகளுக்குச் செய்து வந்த தியாக சேவைகளை அவர் பாராட்டினார். இலங்கை இந்திய சமூகம் ஒரு பெரிய அறிவாளியை இழந்து விட்டது" ,
என்ற குறிப்புக்களடங்கிய ஒரு கட்டுரையைக் காணலாம். "பேனா நர்த்தனம்" என்ற தலைப்பில் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்துத் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த நாடோடி இக்கட்டுரையை எழுதியுள்ளார். நடேசய்யரின் ஜீவித காலத்தில் நாடோடி தனது பேனா நர்த்தனப் பகுதியில் அவரை விமர்சனம் செய்துள்ளதையும் காணலாம். சுதந்திரன் ’ நாளேட்டில் (8. 11 1947) நடேசய்யர் குறித்த ஆசிரியர் தலையங்கத்தைக் காணமுடிகிறது.
"இலங்கையில் முதன் முதலாகத் தினசரி தமிழ்ப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டவரும் இவரே. இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் அவரிடம் பத்திரிகைத் தொழில் பயின்றவர்கள் அநேகருண்டு, இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாததையிட்டு வருந்தி எங்கள் சுதந்திரன் பத்திரிகையைத் தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு வெளியிடச் செய்த முக்கிய கர்த்தாவாகவும் திரு. நடேசய்யர் தான் விளங்குகிறார்" என்ற வரிகள் பத்திரிகையாளராக நடேசய்யர் சாதித்த முக்கிய பனரி களைச் சாரித் திர த் தகவல் களாக வெளிப்படுத்துகின்றன. வீரகேசரி ஏடு நடேசய்யரோடு நல்லுறவு கொண்டிருக்கவில்லை. அவரது மரணச் செய்தியையும் அது வெளியிடவில்லை. வீரகேசரியில் தொடர்ந்து ஊர்க்குருவி என்ற பகுதி வெளிவந்து கொண்டிருந்தது. எட்டாம் தேதி வீரகேசரியில், "ஊர்க்குருவி" பகுதியில் நடேசய்யரின் மரணத்தைப்
183

Page 94
பத்திரிகையாளர் நடேசய்யர்
பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. "தோட்டமக்களின் அவல வாழ்க்கையை வெளி உலகுக்கு அம்பலப்படுத்திய தொண்டை இலங்கை இந்தியர் என்றும் மறக்க முடியாது" என்ற வரிகள் எதிரிகளாலும் உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு அவரது பணிகள் சிறந்திருந்தன என்பதை வெளிப்படுத்துகின்றன.
ஆங்கில ஏகாதிபத் தியம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆட்சி புரிந்த காலத்தில் வாழ்ந்து பணிகளாற்றிய நடேசய்யரின் பங்களிப்பு சுதந்திர இலங்கையிலும் சுதந்திர இந்தியாவிலும் இல்லாது போனமை தமிழ்ச் சமூகத்தின் சுதந்திரருக்கு ஏற்பட்ட மிகப் பெரியதோர் இழப்பாகும்.
நடேசய்யரின் மரணத்தைப் பற்றி எழுதுகையில் சுதந்திரன் பத்திரிகையில்" மக்கள் அவரைப் பயபக்தியுடன் மதித்தனர். ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்த அவரை காந்தி நடேசய்யர் என்றே குறிப்பிட்டனர் ," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்களால் தமது இரட்சகர் என்று மகாத்மா காந்தி கனம் பண்ணப்பட்டதைப் போல இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தம்மை ரட்சிக்க வந்த தலைவராக நடேசய்யரைக் கருதியிருந்ததை இது வெளிப்படுத்துகிறது. விபுலானந்த அடிகளை ஆறுமுக நாவலரின் மறுபிறவியாகக் கொண்டு விபுலானந்த நாவலர் என்று அழைத்தனர் என்று தனது 'நாவலர் இருவர்" என்ற கட்டுரையில் சு. வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளதை இங்கு ஒப்பு நோக்கலாம். நடேசய்யரின் மரணத்தோடு ஒரு சகாப்தம் முடிவுற்றது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரைப்
பொறுத்த மட்டில், இருபதாம் நூற்றாண்டில் நடேசய்யரின் சகாப்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
ck k < k cK

சாரல்நாடன்
நிறைவாக
இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனுக்கு அர்த்தம் விளங்குகிற விதத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் நடாத்தப் பெறுதல் வேண்டும் என்று பாரதியார் விரும்பினார்.
வெளிநாட்டுக்குப் போகும் இந்தியர்கள் தமது மேன்மையால் உலகத்தை வசப்படுத்தி மேம்பாடு பெற வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இந்தியர்களாகிய நம்மவர் வெளித்தேசங்களில் எங்கெங்கு அதிகமாகச் சென்று குடியேறினார்களென்ற விஷயம் பிள்ளைகளுக்குத் தெரிவதுடன் அங்கு நம்மவர் படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்த் நிலையிலே இரு க் கின் றார் கள் என் பதுவும் தெளிவாகத் தெரியவேண்டும். என்று கருதினார். பூரீமான் காந்தி என்ற தலைப்பில் 1916ம் ஆண்டு எழுதுகையில் ஒப்பந்தக் கூலிகளாக இந்தியர்கள் வெளிநாடு போவதைத் தடுக்கும் முயற்சிக்கு நமது தேசத்து மானஸ்தர்கள் தமக்கு இயன்றதையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இவை அனைத் தையும் செயல்படுத் திய செயல்வீரனாக நடேசய்யர் இருக்கின்றார் என்பது உண்மையில் வியப்புக்குரியதே.
அவர் நடாத்திய பத்திரிகைகள் இங்கிலீஷ் தெரியாதவர்களுக்காக மாத்திரமல்ல தமிழ் மொழியை வாசிக்கத் தெரியாதவர்களின் விடிவுக்காகவும் குரல் எழுப்பின. பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கியதன் மூலம் அதைச் செயல்படுத்தின. அவர் நடாத்திய பத்திரிகை வாசகர்களை இலங்கைச் சட்ட சபையின் உள்ளே அழைத்துச் சென்றது. அங்கு வளர ஆரம்பித்த இந்திய துவேசத்தை வெளிப்படுத்தியது. தோட்டத் து ரை மார் களினி லா பந் தேடும் சுயநலத் தை அம்பலப்படுத்தியது.

Page 95
பத்திரிகையாளர் நடேசய்யர்
அடக் கப் பட்ட வர் களுக்குப் போாரிடவும் பலவீனமானவர்களுக்கு ஆதரவு காட்டவும் அவை முன் னின்றன. குற்றங்களை வெளிப்படுத்தவும் குற்றமற்றவர்களுக்குக் குரலெழுப் பவும் அவை தவறியதில்லை. மக்களுக்கு உந்துதல் தரவும் உற்சாகமூட்டவும் ஊக்கமளிக்கவும் உதவின.
தோட்ட மக்களின் கடந்த காலங்களைப் பாதுகாத்து வைத்தன. நடப்பு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்தன. மேலான எதிர்காலத்தை நோக்கி நடைபயிலத் துணை நின்றன.
செய்தித் தாளின் அடிப்படைப் பணிகள் என்று பார்த்தால் தகவல் பரிமாறுவதுவும் தூண்டுவிப்பதுவும் தேச அபிவிருத்திக்கான பணிகளை ஊக்குவிப்பதும் முக்கியமானவையாகும். நேரிய சிந்தனைக் கும் ஆரோக்கியமான பொதுசன அபிப்பிராயத்துக்கும் உண்மையான தகவல் பரிமாற்றம் இன்றியமையாத அம்சமாகும். இந்த அம்சங்கள் எல்லாவற்றையும் அவர் நடாத்திய பத்திரிகைகளில் காணலாம். செய்தித் தாளாகப் பதிவு செய்து கொண்டு வெளிவரும் வெளியீடுகள் பல தரத்தன.
நாளேடு, வாரவெளியீடு, இரு வார வெளியீடு, மாத சஞ்சிகை, காலாண்டு சஞ்சிகை, அரை வருட வெளியீடு, ஆண்டு சஞ்சிகை என்ற அனைத்து வகையறாக்களும் செய்தித்தாள் கணிப்பில் உள்ளடக்கப்படுகின்றன.
செய்தித் தினசரி என்ற கணிப்பில் அடங்குவது தேசநேசனும், தேசபக்தனும் ஏனையவை யாவும் வார வெளியீடாகவும் இரு வார வெளியீடாகவும் வந்தவையே. இலங்கைப் பத்திரிகையுலகில் நடேசய்யரின் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் இன்னும் கொடுக்கப்படவில்லை என்பது வருந்துதற்குரியது.
ck X cK cc X ><

சாரல்நாடன்
பயன்பட்ட நூல்கள்
அழகிரிசாமி கு - நான் கண்ட எழுத்தாளர்கள்-1961 (சென்னை)
இறையரசன் - இதழாளர் பாரதி 1996 - (சென்னை) கலியான சுந்தரனார். திரு. வி. வாழ்க்கைக்குறிப்புக்கள்- 1944 (சென்னை)
கைலாசபதி. க - பாரதி ஆய்வுகள் -1987 (சென்னை)
கிருஷ்ணமூர்த்தி. கு. சா. -தமிழக நாடக வரலாறு- 1989சென்னை)
கோபாலன். ஏ. கே. - நான் என்றும் மக்கள் ஊழியனே- 1981சென்னை)
சம்பந்தன். மா. சு. - தமிழ் இதழியல் வரலாறு 1987 சென்னை) - தமிழ் இதழியல் சுவடுகள்-1990 (சென்னை) -தமிழ் இதழியல் களஞ்சியம்-1991(சென்னை)
சாரல்நாடன் - தேசபக்தன் கோ. நடேசய்யர் 1988 இலங்கை)
சாமி. அ. மா. - தமிழ் இதழ்களின் தோற்றமும்- வளர்ச்சியும் 1987 (சென்னை) -19ம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் 1992 சென்னை
சாமிநாத சர்மா. வெ. நான் கண்ட நால்வர்- 1959 (சென்னை)
சிவகுருநாதன். இ - இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி - 1993 (சென்னை)
சீனிவாசன். கு. - வ.ரா. வாசகம் - 1968 (சென்னை)
சீனிவிசுவநாதன் - பாரதியின் பத்திரிகை உலகம் -
1993 (சென்னை)

Page 96
பத்திரிகையாளர் நடேசய்யர்
சோமலே - தமிழ் இதழ்கள் - 1975 (சென்னை)
பத்மநாதன். ரா. அ. - வ. வே. ஸ்". ஐயர் -1981 (சென்னை)
பாரதிதாசன் - பாரதியாருடன் பத்தாண்டுகள்-சென்னை)
பெரியசாமி. பீ. ஆர். - வீரப்போராட்டம்- 1957 இலங்கை
மணி. பெ. சு. - பத்திரிகையாளர் பாரதி- 1989 (சென்னை)
- பாரதியாரும் தமிழ்ப்புலவர்களும்-1981 (சென்னை)
- கார்ல்மார்க்ஸின் இலக்கிய இதயம்
வல்லிக்கண்ணன் - தமிழில் சிறு பத்திரிகைகள் - 1991 (சென்னை)
வித்தியானந்தன். சு -தமிழியற் சிந்தனைகள் - 1 9 7 9 இலங்கை
வேங்கடாசலபதி. ஆ. இரா. -வ. உ. சியும் பாரதியும்- 1994 (சென்னை)
பாரதியின் கருத்துப் படங்கள் 1994 (சென்னை)
தொகுப்பு (தே. க. இ. பே) பாரதியின் பன்முகப் பார்வை 1984 இலங்கை
திருக்குறள்
பாரதியாரின் கட்டுரைகள்
Denie Elliott -Responsible Journalism 1986 USA
188

சாரல்நாடன்
Persits M. A. Revolutionaries of India 1973 Moscow
Philip Meyer - Ethical Journalism in Soviet Russia (1987) USA
Ernest Hynds-American Newspapers in the 1970s-1975 USA
Nandadeva Wijesekera - Sir D. B. Jayatilaka - 1973 Srı Lanka
Hulugalle H. A. J. - The life & Time of D. R. Wijewardane 1982 Sri Lanka
Visakha Kumari Jayawardana - The Rise of Labor Movement 1982 Sri Lanka 1971 USA
Silva de C. P. S. H. - A Statistical Survey of Elections to the Legislatures of Sri Lanka (1911 - 1977) 1979
பயன்பட்ட அரச ஆவணங்கள்
History of Indian Journalism - Government of Indi. 1955
Report of the Brace Girdle Commission Government of Ceylon 1938
Hanzard (1931 - 1947)

Page 97
பத்திரிகையாளர் நடேசய்யர்
பயன்பட்ட பருவ வெளியீடுகள்
வர்த்தக மித்ரன் 1914 - 1918 தஞ்சாவூர்
தேசநேசன் - தினசரி - 1921 - 1923 இலங்கை
தேசபக்தன் -தினசரி 1924 - 1929 இலங்கை
சத்யமித்ரன் 1924 - 1927 -இலங்கை
இந்தியன் 1928 -இலங்கை
இலங்கை இந்தியன் 1928 - 1930 -இலங்கை
தொழிலாளர் தோழன் 1928 - 1929 -இலங்கை
அமிர்தகுணபோதினி 1929 -சென்னை
ஊழியன் 1931 -இலங்கை
இந்தியன் கேசரி 1936 -இலங்கை
கிழக்குத்தபால் 1931 -இலங்கை
பரதவீரன் 1938 -இலங்கை
தொழிலாளி. 1938 -இலங்கை
ஜவகர் 1939 -இலங்கை
நவஜோதி 1939 -இலங்கை
இந்தியா 1939 -இலங்கை

சாரல்நாடன்
பாரதசக்தி 1939 இலங்கை
சூர்யோதயம் 1940 இலங்கை
குமரிமலர் 1943 சென்னை
சுதந்திரன் தினசரி 1947 இலங்கை
தோட்டத் தொழிலாளி 1947 இலங்கை
தினகரன் தினசரி 1947 இலங்கை
வீரகேசரி தினசரி 1947 இலங்கை
Citizen 1921 / 1923 Ceylon
Ceylon Morning Leader 1922 Ceylon
Ceylon Independent 1922 Ceylon
Forward 1926
Ceylon Indian 1928 / 1929 Ceylon
Kesari 1942 Ceylon
Ceylon Observer 1947 Ceylon
Daily News 1947 Ceylon
Times of Ceylon 1947 Ceylon

Page 98
பத்திரிகையாார் நடேசய்யர்
பார்வைக்குட்பட்ட கோ. நடேசய்யரின் நூல்கள்
அழகிய இலங்கை நீ மயங்குவதேன்?
சட்டப்புஸ்தகம் இந்திய இலங்கை சட்டப் புஸ்தகம் கதிர்காமம்
Planter Raj Ceylon Indian Crisis
பத்திரிகைகள்
வர்த்தக மித்ரன் தேசநேசன் தேசபக்தன்
சுதந்திரன் தோட்டத் தொழிலாளி Forward
Citizen

சாரல்நாடன்
ஆஃ "ாகக் i ki | | '-- iar fi
கடிதம் iந்!
".
ஈ4 ... Deg H.
#
ܩ .
.
.. . . 1-1 : تينجينوميدي بزعامته للمياه الشمالية أول ما لا يزال SSSS SSTTLkLLA CAkTTeuLS uLuAALALLLL LLLLLLT LkMAASS S SSA SS SS SS i iii
Lor = i o J.F. H. J'HFFF-, பீகார்ாக், ...tri i is . . . . Fr.
ቕ'ዛና ப Kris Lii Lars F. FA ra = قة و به آفاق آیا F 1. دفن في اليقين كبار Hof
SS S SLLLLD L D SS S u SSSSSSSLSSSDSS SS T L m HraH ܩܡܚܝܒ ܗ
##=|l+1, -11 E! T L - W III. LIII. th fo T
"": ॥ -
T H
'i. -. r ::: iI சி ாம் ருti", "நா" "ர்ே : قا لم 1 و 1 و تبق F H சந்தோ, .
- சுக - சங்ாசம் و ميتة 1 م : *ıştır: I: 18.ir: H. In 1*іEштFп, ன்ே டி டி டா k =rாசாப் பு: III - f
Il-lii ii iilii ii ii r ii r ra', is 离子 | n 1 # # பு:சா டி சோதி= is توفي 1 جرافي -ة "...†'F. ti. J &ar ai i di F 'g፡ ነ ... اة قي - قة is . . . . . . . . . . . . . . . . . . '. orie is ". . " " 1 س : " ق + ،F;" تا . " + ா = க - - - 11- ترك في في 11 تم تقي = م = = = 1 في = r بـ ..
பசுபடா. r r . G. r ॥ ". . . . . ாட்ட பாசி it. . . i si Li, ܒܸܩ+ ܠܐ ܠܐ நோ । ། __ 1 + 4 = | r is ா 14:11, க + க =ா "...i. ii i i . ri i. Hi I i"i ... . ༈ ཟླད། Fifi it is a . . . .است
iاب [ ## է": H- - --- ཟ ཟ rr.ur ཟླ . . . . . . - , | " " a T
昂証。 போபா தாக it is "էլ, *_』 rே Th,f:וןrrier | IF i, , T * .ܶܕ݁ நி3 ܢܹܐ
* را به ॥ i. ജു 意 J! ! si ai u '. . ****E. * ॥ :| 1 I f |,.; a prisis. நாள் ! لاندل: والى :
4ா டி பட்டது. * م. و قة 一 ॥" ii ii f ' illi: * بداية -i - சிகதி 44ஆர் لIقلi+yii . Ir. ii ii iii ii ii - Li FFF + LFr: 7: .1 . تتلوه في جي فاكهة ಒre d இாருந்த .تعتماد قبيلة سون its ! . Ei di ail l ள், க்ரீரகம், டிங், !
. . . . . . . . . . . . . . . iளிர்க் 1ே5 கோர் Tir, * * * I - Ah" Fl-El, i i raff நோர்கோ ೫॰13 #್ನ 1ಕ್ಕೆ +-+ எய்ட் ஆக்12), தொ :: «:» ուռոտոս 1:nոի : ங் டியூபா ப், ':33: i ಇಂr I iiiir புர்க்ர்ேே ع = سعر التي படி - is ኅog
ಸ್ಪ್ರೆಸ್ವಿಫ್ಟೆ||*'T':"To F. ' இந்நீர்க் பிங்: சந்த்பூic, இந்:::::::: ||ုးနွံ့”lf:{### :* *ள்ந்த், சேங்சே பட்ட ர்: ; பங்க்'தி|சிேங் ஆர். க், ப்ரே
சேங், கேர்ள்"ாங்
க்ள்ட்ந்த yr adeilffidi == A ellir
திகா, Gini - frr if H- mru.
ir i Ciri கங்ராத ಕ್ವಿಟ್ಹಾ! நக் ஆர்ஜிங் நாம் பாடி i. akr jjutili milf mi ma ' , , , பழங் - ॥ r в
= | T. F' jag if it. Ai II, புடவிங், isi :
- Fr-rrris.
... ፡ጵ፡ அகாய்'தt,
நரி3 բու: hi, Fr": tir [#* سميتهمها وتم
193

Page 99
  

Page 100
  

Page 101
பத்திரிகையாார் நடேசய்யர்
mis rmm mihi = SLS SLLLLL S LLLLL LLLLLLLSqL LL SLLLL LLL SL LLSLLLLLLSL
I
r వాడ?
O ...as
, iq i Hi. I rriti
הייווייץ
அாந்தர்ர்
LALAMAALLL LLLT TAAS SLLLT TT TT LLLTLLLML LL LLLLL LL LLLLLL
|| - = m_i Er. n.
H II i his i i i i i
❖,ዜ. . ாா " " 1% rfi ܫܕܪܬif 1.4)
- - - - -
ஆன்டரும் நண்பரும்யார்?
-- TH = , , , , mi
. . . . “۔= = = = = = ': ானது நோட் த்தோரி' 11 ச3.1 தரச் சுரக் ሠ J}
1ா ". Lirgi J r i hT.5ii 5",
(நியூ கோ. நடேன் ார்,
=பு: டி = யோ! 'ங்'11" SASA S SS S SS t AAA kS S LLu uT SSa SAAAAA AAAA A LLL .
... ." ii. LLLL S S S LL L SY S LSLSSS S SSSqqqS
. . . . . - it 'I', 's I . . . . . . . . .
= التي قارة
iki
u li rari f' d'urbs al a fill ki ir J F F F I
- f h if''' "I'm If diff
- so zorn Tuff
gii irrirآیا " =! : 4ள்
F = - 1. '' di - لقي السعيد F اقة في سنة = " طيبة ق :::::: ند. مهمi
lift - ய்ட்ரம்
irid -" i ii iiaiii r r ii r قد ساعل = قيادة التي عقد التي قشيعة تقد بعيد.
و تعد قي
u , m ii r I Lin
i ii ii ii 。■點 TIL FJ r Tai
is " و ناية = 1 له =
கர்" பு
ཟླ་ ཟླ་ ཟླ་ ད་ is - a i ili . . . . .” - ॥
in . . . . . is =* ॥ .. і іі іР — 1 ¬ 1، قيل - i " エ 黒。 நீர்
a == += . =======++i - F. i == "T TH is . . . . . " ܠܐ . ܊ ܓ
alai #
نقهٔ ال .
?... | Fir Pit & Hall
: -
Li Fi li i, j = = L ", la ii ii , * iros, mi di ", li i : *
ா =
* 1 İі A. "r" பூ=-"=== تے s .=_Eܒ # 罩、 ॥1॥ |
BLT L T S S SSS SSSuS S SS u SS T L AAAA A S T H III i. . . . . . . . . ."
1. பாக் "க "க k க் ங் : 'யா பேய்ட் 11
. . . . .
॥
ام
ir قت يق 1. عبد القية في 1 لقب = " " . it is
in rif f l r ng sir in a l iisa reh.
. r -i =قيليق
- - -
it
і -чі.“ = + + + + == == === F. '. It i. ■
| ii - E - -
II i = |
. . . . . . .
It is . . .
+...s¬ - 1TH ܦ ܘ , - : " : قال
1 و"" فيها "م أ ت = س
". | IF = - الداء فقق = و السياسية . ق . 、* 1 ق " + i =: . .
॥ 1 بيعة كال
. . . . . . ." .." . . . . . - **== நீங்
. . . . . . .
.
" . . . ܕܡܨܪ. ”
is lii rii
II. J. R. i i i , ki
| jdhu y h, Ir I i i m i i = 1. I i J i.
F. 1 في نفي"
--- ;""#= 1 ,"f = ن"...
1 ܪ܊ i i --
- . . . 4: ཟོ་
ін т. ғ. = 1, а =
E!'s
. ык
at it is - ཟླ་ 1 - ཟ ܠܐܒ ...
-- it is . . . .
: 1 5+1 1 .1+
ཡི་
in it.
■ ■
قام هي قياسية ق " ق " .
புகழ்நாங்
a *
.
i.
.
s
F_F . . . . . .
If I
. . .
i II i -
டி பாக
is r " " = |
lئي
ܒܨ ܕ' 1 ܕ݁ܝܢ ܊ ما ... |
சிங்க :
r =
॥ it is
is . . . . . . . .
in F. . . டிங் =
ங் 4: . . . . . .
.1+1+..
॥1॥
॥
H a i l i i l i ia i si i = ii i"
.
ங் டிா "சாக் டி புர் கோா"
عة لـ = = نة = = = = = = = = = = = = = = = = = 1 =="
s . . . .
i. ந ட
ܡ ܢ .
| T. ii i
- : : : . .::if#۔+"="+I". +==="="+I நான
.ܕ ܒܐ¬ à 1. ܠܵܐ ¬ܕ
is
= I.
= = + + 1 = 1
'ட் = : II . . . . . . . . . .
+""====### * =甲( : . . . .
:
• -,
. . . . . . . . .
*_,
li
ܐܵܒ݂ܝ.
-
i ni
is . . .
1 ܒܢܝܐ 5: ܒܹܝܬ ܕܼ܂
s = i += 1 "E i T i
is rail
LI IL FI ĦF li
is .
-- .
F = || II , , *。 i ii ii ii
* - n. l = Filii 1- " ங்டி т. ' l
. . . . . s - H 7,1 on Hl s F-ruh " ; . . . . ." ார நாய் ஆங்
Fl .له I Fo
Fr. i - Fir If I
iiiiii Lii L. IT I y III
கர்நா? J is - s. Lä äi I tri. Ei
="ti = Fikr I.ii i i...". r" ni if: 3 a ார்டிங்: டாக் i II i "ரக்பூர் புந்ா புரத *" + f + f ... i; gr. ;
ri I J. I. IFJ Fr s , Fifi il - i di Fi Fi 1 i T = IFF, . . . . | ர் ர Li nr ii r ii I'iiiiii ii ii ii ii " * isk, Rr. , it is ಸ್ಕಿ: . . . .
is . . *-н, * і
சு 11 : அ " கா , . = = = - يا ت . ق . T - - " ق اي
iri .. ية 1 = 1 + 1 = التي تلك في التي يد أحد رة
 

FITTÄJISTLIFai
l
-- "illus il-Ħilier li li ilm —m II is . FiF di i
mil m I, II u II u II,
It is - ins. It is
is L- -- H.
H. H. H. HHmlri di
ан H hm = . mi
r s r. H
நோயந்து அரங்பூந்தல் பு: ஆ)
பப்பிக்கை இஸ்த் நான் "" "டுேமஜர் ஆயுதம்
| பேத்துப் பாருங்கள்
is ha-e-r-. riff Ft. Lour Fir
dr w
e tij i pijë
, H insi
r m er i
m
His . . . #
. . . .
Fom sie so
rr.
ru. . .
s
i.
- Ħr ■ ت+aa. 更 R. B. SLLLLLSSLLLS LLSSLLLS LLLLL qSqqSLLSLLLLL LLLLL LLLS H - d -
lo , I riu
H.
iku , : II . . . . . .
. . . . . SLSLLLSLSLLLL LLLLLSA ALL ALALAAAAALLALLLL LLLLLLLALAAAAALA i si sett B F B II i II a. pr. YLLLLLLLS LLAAS LMT TTLLLLLLM LLLLLL tL LLLL LLLLLLTTL TLTTTTL qLL سي
di di e i Papirr== rr ré== Hill J'r Tirror. Il or f : 1
5. İki ili" hid` = 1 ii i r i Eட்ே .." LLLLLLL LLLL LLLLLLLTL LLLLLLLLSLS S S LLLLLLLSLSLSL
.. nn r: | ii hii i ,
m is ====== . | H . . . . LLSLSSLLLLLSLLLLLLLL LL LLL LLL LL ALIA FTIT 3 TR
SSLLLLLSSLLLLLSS LLLLLSS SLLSLLLLLLSLLLLC LLLLLL LLLLLLLLS LLLLLL
----

Page 102
சாரல்நாடன்
தன் செயல் தனக்கே கேடு
மகாகவி பாரதியார் நடத்திய இந்தியன்' பத்திரிகையில் (13. 06. 1908) வெளிவந்த கருத்துப்படம்
 

uäßfladauffenst su-silust
பெயர் அகராதி
அ. இ. இ. தோ. சம்மேளனம் 26
அந்தமான் தீவு 44
அப்புஹாமி 130
அமெரிக்கா 49, 78
அமிர்தகுணபோதினி 43 அருணாசலம். க 3.
அருளாநந்தன் 58, 94 அழகிரிசாமி. கு 157
ஆதாம் அலி 82 ஆறுமுகநாவலர் 184 ஆன்ட்ரூஸ். ஸி. எஃப் 91, 164 ஆஸ்திரேலியா 62, 72
இங்கிலாந்து 52, 78 இன்டிபென்டன்ட் 76 இந்தியா 43, 48, 52, 62, 63, 66, 83, 89, 98, 140, 144 இந்தியன் ஒப்பீனியன் 128 இந்தியன் 65, 89 இந்தியர் சங்கம் 141
இந்து 74 இந்து நேசன் 109 இராமநாதன். பொன்.28, 76, 79 இராமாயணம் 24 இராமானுஜம். டி 115 இராஜதுரை. செ. 25 இலங்கை 49, 98, 112, 113, 119

Page 103
FrTUTSTILT
இலங்கை இந்தியன் 142 உரிமைப்போர் 126 உடுமலைமுத்துசாமிக்கவிராயர் 91 ஐயர். வ. வே. சு 53, 54, 61, 84
ஒப்சேவர் 73, 77, 182
ஒரு தீப்பொறி 109 ஒல்கட் 166
கண்டி 30, 165 கலியாணசுந்தரனார் திரு. வி. க. 61, 62, 83, 84, 85, 127, 131, 132, 139
கிரவுத்தர். எஸ். ஜே. 170 கிருஷ்ணமூர்த்தி. கு. சா. 163
கிருஷ்ணன். எஸ். I65
கிழக்குத்தபால் 166
குணசிங்க்ா. ஏ. ஈ. 93, 94, 109, 141, 142 கொத்தலாவல சேர். ஜோன். 116 கொல்வின் ஆர். டி. சில்வா. 167-168 கொழுந்து 29 கொழும்பு 25, 59, 64, 73, 75, 88, 97, 141, 166 கோபாலன் ஏ. கே. 167, 168 கைலாசபதி. க 154
சகோதரி அச்சகம் I25 சந்திரிகா குமாரணதுங்க 166 சமரவிக்ரம ஈ. ஜே. 59 சம்பந்தன். மா. சு. 123 சரோஜினி தேவி I63

பத்திரிகையாளர் நடேசய்யர்
சாமிநாதசர்மா. வெ. 127 சிட்டிஷன் 59, 68, 71, 73, 100, 135, 170, 176 சித்ரலேகா மெளனகுரு 27
சிம்லா 64, 69
சிலோனிஸ் 76, 77, 78
சிலோன் 48
சிவகுருநாதன். இ 174
சீனிவாசன். எம். 63 சுதந்திரன் 41, 64, 110-115, 122, 128, 151, 170, 175, 183 சுதேசமித்ரன் 33, 137, 176, 177, சுப்பிரமணிய அய்யர். ஈ. வி. 75 சுப்பிரமணிய அய்யர். ஜி. 61, 179, 180 சுப்பிரமணிய சிவா 61 சுப்பிரமணிய செட்டியார் 157, 174 சுப்பிரமணிய பாரதியார் 61, 140, 147, 150, 151, 152, 154, 159, 165, 175, 177, 178
சூரியோதயம் 43 செல்வநாயகம் எஸ். ஜே. வி. 110, 112 சென்னை 152. 165
சேனநாயக. டி. எஸ். 112, 116
டவ்பின். எச். எல். 79
டைம்ஸ் ஒஃப் சிலோன் 73, 76,113, 120, 173, 174, 182, டிக்ஸிட். ஜே. எல். 26
ட்ெய்லரி நியூஸ் 62, 113, 173, 178, 182 தஞ்சாவூர் 31, 41. 46
தமிழ்த்தென்றல் 139
தமிழ்நேசன் 122, 123 தம்பிமுத்து. ஈ ஆர் 73 தம்புசுவாமி 75

Page 104
FT TsosTuair
தலவாக்கொல்லை 66 திருச்சி 124 தினகரன் 39, 63, 113, 114, 120 தினவர்த்தமானி 40 துரைசாமி. அ. மு. 115 துன்பக்கேணி 165 தென்னாபிரிக்கா 46, 72
தேச நேசன் 57-71, 126, 127, 132, 139, 148, 149, 170, 172, 181, 186 தேசபக்தன் 27, 95, 123-128, 132, 135, 137, 139-143,
147, 155, 160, 161, 170, 172, 176, 180, 181, 186 தொண்டமான். எஸ். 25 தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நர்டகம் 28 தோட்டத்தொழிலாளி 96, 97, 101, 102, 103, 139, 147, 160, 170
தோட்டவட்டாரம் 104 நடராஜன், தஞ்சை 164 நரசிம்ம அய்யங்கார் 122, 123, 124 நவசக்தி 139
நவநீத கிருஷ்ண பாரதியார் 68 நாடோடி 183
நித்தியானந்தன். மு. 162 நியுயோர்க் வேர்ல்ட் 107 நியுயோர்க் ஜேனல் 107
நியூசிலாந்து 72
நெல்லையா. எச் 91, 115, 128
பஞ்சாப் 66
பண்டாரவளை 37

பத்திரிகையாளர் நடேசய்யர்
பர்மா 43
பாரதிதாசன் 141
பாஸ்கர சேதுபதி 171 பிலிப்குணவர்த்தனா 168 பினாங்கு 48
பிஜித்தீவு 163 புதுமைப்பித்தன் 157, 165 புதுச்சேரி 152 பெரியசாமி. பி. ஆர். 115 பெரி சுந்தரம் 156 பெரேரா என். எம். 167 பொன்னம்பலம். ஜி. ஜி. III போத்திரெட்டி. எஸ். 145 மணிலால் 62, 72, 177, 17 ஐ மணி. பெ. சு. 174, 17g மலையக மக்கள் மன்றம் 104 மலையக க. இ. பே. 27
LDGauu T 43, 83, 85, 98, 124, 149, 152 மீனாட்சியம்மை. ந. 27, 121, 125, 162 முனியாண்டி 18O மூலையில் குந்திய முதியோன் 29 மோர்னிங் லீடர் 178
மெளனகுரு 27
աւնւսո 6ծT 49 யாழ்ப்பாணம் 26, 27, 53, 120, 149 யூ. என். பி. 115 ரட்னம். ஏ. வி. 58, 76 ரவீந்தரநாத் தாகூர் 66 ரெங்கநாதன். எஸ். 89

Page 105
சாரல்நாடன்
லக்மினி பஹன 33 லட்சுமி அம்மாள் 122
லத்தலி பிரச்னோதயா 33 லியோ, மார்க்கா, ஆஸ்ரம் 37 ஜனவிநோதினி 39, 40
ஜனமித்ரன் 55, 56 ஜெயவர்த்தனா, குமாரி 62, 178 ஜோன். ஏ. எஸ். 89
61. UT IT. 41, 115, 151, 153, 156, 157 வரதராஜுலு நாயுடு 54, 61 வர்த்தகமித்ரன் 41, 43, 46, 50, 53, 56, 64, 110, 126, 128,
151, 153, 159, 176
விக்ரமசிங்கா 119
விபுலாநந்தர் 27, 184 விபின சந்திர பாலா 177, 178 விநோதமஞ்சரி 40
விஜயா 43 À விஜேவர்தன. டி. ஆர். 63, 119
வீரகேசரி 39, 114, 120, 174, 183
வீரன் 1 O6-109 வேங்கடாசலபதி. ஆ. இரா. 143, 145

4.
usAlfaautov s0uvuus
இந்நூலாசிரியரின் ஏனைய வெளியீடுகள்
சி. வி. சில சிந்தனைகள் - 1986
தேசபக்தன் கோ. நடேசய்யர் - 1988
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற
ஆய்வுநூல்)
மலையகத் தமிழர் - 1990
மலையக வாய்மொழி இலக்கியம் - 1993
இலங்கை மத்திய மாகாண சாகித்தியப் பரிசுபெற்ற
5.
ஆய்வு நூல்)
மலைக்கொழுந்தி - 1994
இலங்கை மத்திய மாகாண சாகித்தியப் பரிசுபெற்ற
6.
சிறுகதைத் தொகுதி)
மலையகம் வளர்த்த தமிழ் - 1997
(ஆய்வுக் கட்டுரைகள்)

Page 106


Page 107
N
s
நடேசய்யர் பற்றிய தேடுதலில் சாரல்நாடன், தேயிலைத் தோட்ட அதிகாரியாகப் பணியாற்றுகிறார் விருதுகளையும் பெற்றவர்.
நூலெழுதுவதற்கு இவர் 4 நம்மை திகைப்படையச் செய்கின்
போதிய ஆதார நூல்கள் சேகரித்து வைக்கும் பழக்கம் வாழ்க்கையிலிருந்து இப்படியொ சராசரி நிகழ்ச்சியாகக் கருதி வி
நடேசய்யரைக் கற்றலில் ப நினைவுக்கு வருகிறார்கள்.
ISBN: 95.54.
Printed by Graphic Lang
 

கிடைத்த அருமையான நட்புதான் த் தொழிற்சாலை ஒன்றில் உயர் இலக்கிய அர்ப்பணிப்புக்கான
எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் றன.
இல்லாமலும் குறிப்புகளை எழுதி
சிறிதுமற்ற, மலையக மக்கள் ந ஆய்வை எழுதி முடிப்பதை ஒரு - முடயாது.
ாரதியும் திரு. வி. க. வும் தான்
ாமரை சி. மகேந்திரன் க்குள் விரலை வைத்தேன்'
கட்டுரைத் தொடரில்
9084 - O - 2 "
轟
d, Kandy. Tol: O8 - 232978
- ܚܒܝܒܝ ܐ
「三-
1 ܢ ̄ P
-
1 -- ܒ ܒ ܒ _+1
= -- ܒ - 1
El ܒ -- -- ܒܕܒܫܒܐ -- 1 ܒܫܒܬܐ ܒܫ ܬܒܩ