கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரைகுறை அடிமைகள்

Page 1

川 丽
லசுப்ரம

Page 2


Page 3

அரை குறை அடிமைகள்!
(சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் JItalijali Штајашуша иi шih
LO60ufiGLO5606)Ĺ úlJ8hJú தபால் பெட்டி எண் : 1447 4. தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை-600 017, தொலைபேசி 4342926. தொலை நகல் : 044-4346082,
●●

Page 4
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விபரம்
உரிமை
தாளின் தன்மை
நூல் விபரம்
அரை குறை அடிமைகள்
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
தமிழ்
1998
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
1.2 கி.கி.
நூலின் அளவு கிரெளன் சைஸ் (12x18செ.மீ.)
அச்சு எழுத்து அளவு 10 புள்ளி
மொத்த பக்கங்கள் 200
நூல் கட்டுமானம் 4 தையல்
நூலின் விலை ரூ. 38-00
அச்சிட்டோர் i ஆகாஷ் பிரிண்டர்ஸ்,
No. 14, ராமகிருஷ்ணாபுரம்
3-வது தெரு, மைலாப்பூர், சென்னை-600 004.
Gloeful Golmř மணிமேகலைப் பிரசுரம்.
சென்னை-17.

LIGOUTib
இலங்கைத் தமிழ்ப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை எங்களுக்காகத் தியாகம் செய்த
தமிழர்களுக்கு இந்தச்
அர்ப்பணம்!
சிறுகதைத் தொகுப்பு
TrC3gdion, Af Luxrarbaroŭlgruberufhauús
பொருளடக்கம்
அணிந்துரை என்னுரை அரைகுறை அடிமைகள் ஒரு சரித்திரம் சரிகிறது இரவில் வந்தவர் பேய்களுக்கு யார் பயம்? I Love You
அ, ஆ, இ, பக்கத்து அறைகள் பத்து வருடங்களில் அவன் ஒரு இனவாதி மோகினிப் பேய் கனவுகள் இனிமையானவை கறை பிடித்தவர்கள் அட்டைப்பட முகங்கள் தேற்றைய நண்பன்
பக்க எண்
30 37 45 59 72 79 95 08 124 150 162. 177 9.

Page 5
அணிந்துரை
28 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறிய திருமதி. ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்,தனது தனித்தன்மை மிகுந்த நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் தமிழிலக்கிய உலகில் நிரந்தரமான இடம் பெற்றவர். இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகள் எவருள்ளும் அழுத்தம் பெற்றிருக்கிற அரசியல் உணர்வு இவரது படைப்பு களிலும் இடம் பெறுகிறது. தமிழ்ச் சிந்தனையாளர் களுக்கு அதிர்ச்சி தரும் முறையில் இவரது படைப்புக்கள் அமைகின்றன. இதன் காரணமாகவும்- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் நம் கவனத்துக்குறியவர்.
ஏற்கனவே இரண்டு சிறுகதைத் தொகுதிகளை அடுத்து இப்பொழுது “அரைகுறை அடிமைகள்" என்ற இந்தத் தொகுப்பு வெளிவருகிறது. இந்தத் தொகுப்பில் இரண்டு பேய்க்கதைகளும் உள்ளன.
இலங்கைச்சூழலில் சிங்கள பேரினவாதம் காரணமாக தமிழ் மக்களுக்கு நேர்ந்துள்ள துயரங்கள் சொற்களில் அடங்குவன அல்ல.
இலங்கைச் சூழலிலும், இடைவெளியிலும் எவ்வளவோ துயரங்களுக்கு உள்ளான இளைஞர்கள் இங்கிலாந்தில் எடுபிடி வேலைகளில் ஈடுபடுகின்றனர். இங்கிலாந்திலும், ஆசிரியர்களுக்கு எதிரான கொடூர தாக்குதலுக்கு இடையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இவர்கள் வாழவேண்டி இருக்கிறது. சில இளைஞர்கள் தாம் பட்ட துயரங்களாலும், அவமானங் களாலும் மேளனத்தில் உறைந்து விடுகின்றனர். கனவுகளில் கூட இவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர். மனிதத்தனமான வாழ்க்கை மறுக்கப் பட்ட நிலையில் இவர்கள் தன்மானமற்று தரங்கெட்ட நிர்வாணப்படங்கள் பார்த்து அடுத்தவரை பற்றி அவதூறுகள் சொல்லி வாழவேண்டி இருக்கிறது.

5
நிலாவெளிச்சத்தில் தன் வீட்டு முற்றத்தில் ஆச்சி சொல்லும் கதைகள் கேட்டு மனம் நெகிழ்ந்து வாழ்த்த வாழ்க்கை இனி எப்பொழுதாவது வருமா என்று பெண்கள் ஏங்குகின்றனர். குடிகாரக் கணவன்அவனோடு சொந்தநாட்டின் சூழலையும் இழந்து துயர்படுகின்றனர் பெண்கள். இத்தகைய சூழலில்தான் அடிமைத்தனமும் பேய்த்தன்மையும் இவர்களை ஆட் கொள்கின்றன. இந்த சோகத்தைத்தான் இந்தத் தொகுப்பில் உள்ள பலகதைகள் நமக்குச் சொல்லுகின்றன. *அரைகுறை அடிமைகள்" கதையில் செவ்விந்தியன் கால் எலும்பு முறிந்த நிலையிலும் தன்னை ஒரு வெள்ளைக்கார மருத்துவன் கவனிக்கக் கூடாது என்று தன்மானத்தோடு பேசுகிறான். இலங்கைத்தமிழன், டாக்டர். சண்முகலிங்கம் இவனுக்கு மருத்துவம் பார்ப்பதை இவன் பெரிதும் விரும்புகிறான். இங்கிலாந்து சூழலில் தன்மானத்தோடு தமிழன் வாழவேண்டும் என்று டாக்டர். சண்முகலிங்கம் கருதுகிறார். வெள்ளையன் உலகை அடிமைப்படுத்து கிறான். சிங்கள பேரினவாதி தமிழனை அடிமைப்படுத்து கிறான். இப்படி தொடரும் கதையின் வழியே நமக்குள் தொடரும் உணர்வுகளைத் தொகுத்துகொள்கிறோம்.
ஆணுக்கு, பெண் அடிமை. அரசுக்கு குடிமக்கள் அடிமை. அரைகுறை அடிமைகள் என்ற இந்த கதை நமக்குள் எழுப்பும் உணர்வுகள் வழியே இந்தத் தொகுப்பில் உள்ள அநேகமாக எல்லா கதைகளையும் நாம் படிக்க முடியும். இங்கிலாந்தில் குறைந்த வாடகை வீட்டில் இளைஞன் குடியிருக்கிறான். ஜன்னலைத் திறந்தால் சவக்காளை சுடுகாடு சிங்களகாடையர்களால் கற்பழிக்கப்பட்ட தம் தமக்கையின் நினைவு பாதுகாப் பற்ற, உறுதியில்லாத வாழ்நிலை. வீட்டில் பேய் நடமாடு வதாக அவன் உணர்கிறான். இலங்கையிலிருந்து தம் மூன்றாவது பெண்ணை தருவித்துக்கொள்ள ஏஜன்ஸிக் காரனிடம் நடையாய் நடக்கிறார் பெரியவர். இடையில் அவள் எங்கோ தவறிப்போகிறாள். சோகம் சுமந்தவராய்

Page 6
6
வாழ்கிறார் பெரியவர். இப்படியே துயரக்கதைகள் தொடர்கின்றன.
இந்தத் துயரச்சூழலிலும் தன்னை எதிர்க்காமல் வாழும் சிலர் அற்புத மனிதர்கள் சிலர் கதைகளில் இடம் பெறுகின்றனர். மைக்கேலுக்கு வேலை இல்லை. இளம் வயதிலேயே இவன் தன் தாயை இழந்தான். தந்தை இவனை கற்பழித்தான். இனவாத வெறி கொண்ட வெள்ளைக்கார இளைஞர்களோடு இவன் சேர்ந்து கொண்டான். மருத்துவமனையில் தாயாய் இருந்து இவனை மீண்டும் மனிதனக்கினால் மைதிலி. இந்தி யர்களின் கருணையை மைக்கேல் பாராட்டுகிறான். இந்தியனும் இலங்கைத் தமிழனும் ஒரு பொதுவான பண் பாட்டுச் சூழலில் கருணையை, மனிதநேசத்தை தமக்குள் கொண்டவர்கள். வெள்ளைக்காரப்பெண்ணை நம்ப வேண்டாம் என்கிறான் நண்பன். தமிழ்ப்பெண்ணுக்குத் தான் கற்பு உண்டு என்பது இவனது நம்பிக்கை. இல்லை, "கற்பு" என்பது எந்த இனத்தினுள்ளும் இயங்குகிற ஓர் ஆரோக்யமான பண்பு என்ற முறையில் கதை செல்லுகிறது. இவருக்குள் இயங்கும் கவிஞன் இப்படி தன் கவிதையை முடிக்கிறான்.
*ஏழைகள் அழுகின்றார், இன்னுமொரு புரட்சி வரும்'- என்று. 'ፉ
சரளமான நடையில், கலைத்தன்மை குன்றாமல் கதை சொல்கிறார் ஆசிரியர். தமிழ்ச்சூழலின் பாதிப்போடு கதை எழுதுகிறார். தன் படைப்புக்கள் வழியே தமிழ்ச்சூழல் என்பதையும் கடந்து இன்றைய உலகியல் சூழலில் மனிதனின் துயரம் பற்றி ஆசிரியர் பேசுகிறார். தமிழ் சிந்தனைகளுக்கு அதிர்ச்சி தருகிறார். கலைத்தன்மை குன்றாமல் அரசியல் உணர்வோடு படைப்புக்கள் தருகிறார். இவர் கலைஞர். தமிழ்ச் சூழலுக்கு இவரது பங்களிப்பு முக்கியத்துவமுடையது. இவரை வரவேற்பது நம் கடமை.
-ஞானி
(Gas Tadau)

என்னுரை
கதையானாலும், கவிதையானாலும், இசை யானாலும், சிற்பம் என்றாலும் அவைகள் எல்லாம் எங்கள் உள் மனத்தின் வெளிப்பாடுகளே.
உள் மனத்தின் வெளிப்பாடுகளின் உருவங்கள் சில வேளை சிந்திக்க வைக்கின்றன; சிலவேளைகளில் சீற்றம் அடையப் பண்ணுகின்றன; சிலவேளைகளில் சிரிக்கப் பண்ணுகின்றன.
"அரை குறை அடிமைகள்" என்ற இந்தச்சிறுகதைத் தொகுதியில் அடங்கியிருக்கும் கதைகள் பல அரசியற் கதைகள் ஆகும்.
சிங்களப் பேரினத்தின் தமிழ்இன ப்பு நடவடிக் கைகளால் நடக்கும் கழ்இஐசி ਜ ஆங்கிாங்கே தெரிகின்றன.
●@ இனத்தின் விடுதலைப் போராட்டம் என்னென்ன வடிவங்கள் எடுக்கின்றன. எதிரிகளின் தாக்கங்களை விட எப்படித் தங்களைத் தாங்கள் அழித்துக் கொள்கிறார்கள் என்பதை ஒரு சில கதைகள் ” பட்ம் பிடித்துக் காட்டுகின்றன.
இக்கதைகள் பல 85-ஆம் ஆண்டுக்காலங்கள் இலங்கையில் நடந்த ஒன்றிரண்டு உண்மைச்சம்பவங் களின் அடிப்படையில் எழுந்தனவாகும், கற்பனையிற் கதை எழுதுவது என்பது எல்லாரும் செய்ய முடியாத ஒன்றாகும், என்னாலும் அப்படி முடியாது. இரத்தமும் அழுக்கும், ஊனமும் என்னைச்சுற்றி இருக்கும்போது அழகிய மலர்த்தோட்டத்தை என்னால் கற்ப்னை செய்ய முடியாமல் இருக்கிறது.
எனது நாட்டில் பூஞ்சோலைகள் கருகிவிட்டன. பொன்னான என் மண்ணில் மனித உதிரம் ஆறாகப் பாய்கிறது. தான் பிறந்த நாட்டிலேயே தமிழன் அடிமையாக்கப்பட்டோ அகதியாக்கப்பட்டோ அவதி யுறுகிறான்.
சிங்களப் பேரினவாதம் கொஞ்சம் கொஞ்சமாக லங்கைத் தமிழரை அழித்து இலங்கையை ஒரு சிங்கள பளத்த நாடாக்கப் பெருழ்யற்சி செய்கிறது."உலகத்தில் மனித உரிமை புற்றிப்பேசும் வல்லுரசுகள் இந்தக் கோடுமையைப்பற்றி மெளனமாக இருக்கிறது"மட்டு

Page 7
மல்லாமல் இந்தக்கொடுமையை வலுப்படுத்த ஆயுதங்ச களும் கொடுக்கின்றன.
ஆயுதம் எடுத்துப் போராடத் தொடங்கிய ஆயிரக் கணக்கான இளம் யுவதிகளும், இளைஞர்களும் இன்று ாங்கன் போராட்டத்தின் Tசரித்திரமாகிவிட்டார்கள்.
சரியான தலைமையோ அல்லது சரியான போராட்டப் பாதையோ ஒரு தார்மீகரீதியில் செயற்பட்டிருந்தால் தழிழருக்கு இந்த இழிநிலை வந்திருக்குமா என்று நான் * சில வேளை யோசித்ததுண்டு.
நான் அரசியல் வாதியில்லை. சாதாரண ஒரு தமிழ்ப்பெண். 28 வருடங்களாக வெளியில் வாழ்ந்து கொண்டு எனது நாட்டின் அவலத்தைக்கண்டு துயர்ப்படுபவள் எனது நாட்டு மக்களுக்கு ஒரு சுபீட் சநிலை, ஒரு வளமையான சூழ்நிலை வரவேண்டும் என்று ஆசைப்படுபவள்.
எனது எழுத்துக்களில் தேர்மைதான் தெரியும். என்னை முன்னேற்றிக் கொள்ளவோ அல்லது ஒரு குறிப்பிட்ட கோஷ்டியிடமிருந்தோ அங்கீகாரம் பெற வேண்டும் என்றோ என்னால் எழுத எனது மனச்சாட்சி இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது.
எழுத்தாளன் சமுதாயத்தின் கண்ணாடி. எனது எழுத்துக்களிலும் நான் வாழும் காலத்தின் அவலங்களின் பிரதிபலிப்பைக் காணலாம்.
இயந்திர வாழ்க்கையில், லண்டன் குளிரில், கற்பனையில் ஒரு காதற்கதை படைக்க எனக்கு நேரமில்லை. மிகமிக கஷ்டமான சாதாரண
வாழ்க்கையில் இப்படி ஏதோ ஒன்றிரண்டு எழுதினேன். எனது கதைகள் சிலரைச் சிந்திக்க வைத்தால், அது எனது முயற்சியின் வெற்றியாகும்.
இத்தொகுதியை வெளியிடும் மணிமேகலைப் பிரசுரத்திற்கு நன்றி. என்னை ஊக்குவிக்கும் எனது நண்பர்களுக்கும் எனது ந்தைகளுக்கும் எனது மனம் கனிந்த வெளியாகும் எனது எட்டாவது புத்தகமாகும் இது. உங்கள் அபிப்பிராயங் களை எழுதுங்கள். மனம் விட்டு எழுதுகிறேன். மனம் திறந்த அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். 47 Norman avenau O
ondon N 22 SEs } ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
98-سےHس

அரை குறை அடிமைகள்
ஸ்ரீவனின் முகபாவத்தைப் பார்த்து விட்டு எதை :பும் திட்டவட்டமாக முடிவு கட்ட முடியவில்லை, சண்முகலிங்கத்தால், L-ITáil-ff, *ஸ்ரிவன்வுட்"டின் முகத்தில் உணர்ச்சிகளின் வடிவங்களைக் கண்டுபிடிப்பது, அசாதாரணமான காரியம். இளமையும் அழகுமாய் உருண்டு திரண்டு கொண்டு திரியும் ஒண்டு இரண்டு நர்ஸ்களைக் கண்டால் தவிர மற்றப்படியான நேரங்களில் ஸ்ரீவனின் முகத்தில் ஒரு “மரத்தன்மைதான்” தெரியும். கடந்த இரண்டு மூன்று கிழமைகளாக டாக்டர் சண்முகநாதனுக்கு வார விடுமுறை கிடைக்கவில்லை. ஹாஸ்பிட்டலில் உள்ள பல டாக்டர்கள் விடுமுறையில் போய்விட்ட படியால் விடுமுறைக்குப் போகாதவர்கள் வார விடுமுறைகளிலும் வேலை செய்ய வேண்டிக் கிடக்கிறது.
டாக்டர். சண்முகத்தின் தமக்கை குடும்பம் இலங்கை யிலிருந்து வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறார்களா? சிங்கள அரசாங்கத்தால் அடித்து துரத்தப்பட்டு வந்திருச் கிறார்கள். தமக்கையின் குடும்பம் பெரிய குடும்பம். உயிரோடு எரியாமல் தப்பி வந்திருப்பவர்கள் தமக்கையும் கைக் குழந்தையும் தமக்கையின் வயது போன மாமி மட்டும்தான். அவர்களைப் பார்க்கப் போக வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தான் சண்முகலிங்கம், விவு கிடைத்தால் தமக்கை குடும்பத்தைப் பார்
அ=1

Page 8
10 அரைகுறை அடிமைகள்
போவது. இந்தக் கிழமை சரிவரும் போலிருந்தது. ஆனால் லீவு கடைக்குமா? “ஸ்ரீவன் வூட்டின்” டியூட் டியை சண்முகலிங்கம் எத்தனையோ தரம் "கவர்" பண்ணியிருக்கிறார், டாக்டர் சண்முகலிங்கம். இந்த வார விடுமுறையில் சண்முகலிங்கத்துக்கு டியூட்டிபோடப் பட்டிருந்தது. நான் ஒரு அவசர காரியமாக இந்த வார விடுமுறையில் லண்டனை விட்டுப் போக வேண்டும் என்று சொன்னான் டாக்டர் சண்முகலிங்கம். என்ன அவசரம் என்ன காரியம் என்று டாக்டர் ஸ்ரீவனுக்கு சொல்லும் மனநிலையிலில்லை டாக்டர் சண்முகலிங்கம். எத்தனை கொடுமைகளைச் சொல்வது?
கொழும்பிலுள்ள அவன் உற்றார் உறவினர்கள் உடமைகள் எல்லாம் இழந்தும் தெருக்களிலும் சந்தி களிலும் இழுத்து வரப்பட்டு சிங்களக் காடையர்களால் உயிரோடு எரிக்கப்பட்டதை அவன் எப்படிச் சொல்வான்? சொன்னான் முடிந்தவற்றை.
தமக்கைக்கும் குடும்பத்துக்கும் என்ன நடந்திருக்கும் என்று அவன் கடந்த ஒரு மாதமாய்ப் பட்ட வேதனை அவனுக்குத்தான் தெரியும். "இலங்கைத் தீவில் தமிழர்கள். உடமைகள் நாசமாக்கப்பட்டு அகதிகளாகிறார்கள். உல்லாசப் பிரயாணிகளாய் கொழும்பில் தங்கியிருக்கும். வெள்ளைக்காரர்கள் தமிழர்கள் தெருக்களில் உயிரோடு கொழுத்தப்பட்டதை கண்டு திடுக்கிடுகிறார்கள். அரசாங்கததைச் சேர்ந்த மந்திரிகளும் (சிங்கள) முக்கியஸ் தர்களும் தமிழர்களைத் தாக்குவதில் தலைமை தாங்குவ தாகச் செய்திகளடிபடுகின்றன" என்றெல்லால் கேள்விப் பட்டபோது சொல்ல முடியாத துயருக்குள்ளானான் சண்முகலிங்கம்.
கொழும்பில் மட்டும் ஜம்பதினாயிரம் தமிழ் மக்கள் அகதிகளாய் தவிக்கிறார்கள் என்று டெலிவில” காட்டினார்கள். சோகம் ததும்பிய ஆயிரம்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 1.
பட்டினியோடு தஞ்சடைந்த பல்லாயிரக்கணக்கான உருவங்களில் தன் தமக்கையின் உருவமும் தென்படுமா என்று துடித்தான் சண்முகலிங்கம். எத்தனையோ நாட்கள் முயற்சி செய்து அலுத்த பின் கொழும்பில் உள்ள ஒரு சிங்கள நண்பரின் முயற்சியால் தமக்கை ஒரு அகதி முகாமிலிருப்பதாக அறிந்து அதிர்ந்தான் சண்முகலிங்கம், தமக்கையின் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு என்ன நடந்ததாம், சண்முகலிங்கம் துடிப்புடன் டெலிபோனில் பேசிய தன் சிங்கள நண்பனைக் கேட்டான்.
தனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டான், சிங்கள நண்பன். தெரிந்தாலும் சொல்லத் தயாரில்லை. என்பது அவன் குரலில் தொனித்தது. அதன் பின் எத்தனையோ கஷ்டப்பட்டு டிக்கட் அனுப்பித் தமக்கையைக் கூப்பிட்டிருக்கிறான்.
டாக்டர் சண்முகலிங்கம் கல்யாணமாகாத டாக்டர். பேச்சிலர்ஸ் குவார்ட்டர்ஸில் இருக்கிறான். தமக்கை குடும்பம் தங்கி நிற்க வசதியில்லை. தமக்கையின் மைத்துனர் வீட்டுக்கு அனுப்பி விட்டான். எப்படியும் இந்த வார விடுமுறைக்கு லீவு எடுக்க வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தான். ஸ்ரீவனின் உதவியைக் கேட்டான்.
எத்தனையோ மழுப்பல்களுக்குப் பின் சரி என்று சொன்னான் ஸ்ரீவன். அப்படிச் சொன்னவன் இப்போது வந்து வேறு ஏதோ சொல் வ ைத க் கேட்க சண்முகலிங்கத்துக்கு நம்ப முடியாமலிருக்கிறது ஸ்ரீவன் சொல்லும் கதை.
வார்டில் பின்னேரம் அட்மிட் பண்ணப்பட்ட நோயாளி எந்த வெள்ளைக்கார டாக்டரும் தன்னையோ தன் உடைந்த எலும்பையோ தொடக்கூடாது என்று சொல்லி விட்டானாம்!

Page 9
12 அரைகுறை அடிமைகள்
அப்படிச் சொல்லிய நோயாளியின் தைரியத்தைப் பாராட்டும் மனநிலையிலில்லை சண்முகலிங்கம். வெள்ளைக்கார டாக்டர்களை விட்டால் டாக்டர் சண்முகலிங்கம் பார்த்தே தீரவேண்டும். அவனைவிட்டால் வேறுயாருமில்லை அந்த நோயாளியைப் பார்க்க. ஹீக்ரோ விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் கால் எலும்பை உடைத்துக் கொண்டு நிற்கிறானாம் (எப்படி நிற்பது? படுத்திருப்பான்.) புது நோயாளி.
சிக்கலான எலும்பு உடைந்திருக்கும். நிறைய இரத்தம் சேதமாகிவிட்டது என்று சந்தேகிக்கிறார்களாம். ஸ்ரீவன் தனது வெளிறிய முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சொல்கிறான், சண்முகலிங்கத்தக்குக் கோபம் பற்றிக் கொண்டு வருகிறது. தன் குடும்பம் உடைபட்டு சிக்கலாகி, சின்னா பின்னப்பட்டு சிதறிப்போய் தாங்கள் பிறந்த தாய் நாட்டிலேயே அநியாயமாய் குற்றுயிரும் குலையுயிருமாய் ஒரு உரிமையுமின்றி உதவியின்றித் தவிக்கிறார்கள். யாரிந்தப் புது நோயாளி தன் காலைத் தன் பிழையால் உடைத்துக் கொண்டு (பிழையான முறையில் கார் ஒட்டியபடியால் விபத்து நடந்ததாம். ஸ்ரீவன் தந்த தகவலிது) அந்நிய நாட்டு ஆஸ்பத்திரியில் கிடந்து கொண்டு தான் விரும்பிய டாக்டரைத் தான் பார்க்க உரிமையுண்டு என்று சட்டம் கதைப்பதற்கு?
சண்முகலிங்கம் எரிச்சலுடன் ஸ்ரீவனைப் பார்க் கிறான், "என்ன அப்படியான அவசரமான காரியம்” ஸ்ரீவன் சண்முகலிங்கத்தைக் கேட்கிறான். ஸ்ரீவன் அதிகம் கதைக்காதவன். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அக்கறை காட்டாதவன். ஆனாலும் சண்முகலிங்கத்தின் முகத்தில் வெடிக்கும் கோபத்துக்குக் காரணம் தெரியாமல் கேட்கிறான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 13
ஸ்ரீவன் பதில் சொல்லவில்லை. சண்முகலிங்கம் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். பின்னே ஆறு மணி ரெயின் எடுத்து ஹாட்வோர்ட் (தமக்கையிருக்கும் ஊர்) போவதாக இருந்தான். இப்போதோ நேரம் ஐந்தரை யாகிறது. இவன் நேரத்தைப் பார்ப்பதைப் பார்த்து விட்டு.
"ஏதும் படம் பார்க்கப் போகிறாயா” என்று கேட்டான் ஸ்ரீவன். படமா? இலங்கையில் பிறந்த குற்றத்திற்காக தமிழரின் வாழ்க்கையே பயங்கரப் படமாயிருக்கிறது! இதைவிட வேறென்ன படம் திரையில் பார்க்க வேண்டும்? சண்முகலிங்கம் ஸ்ரீவனுக்கு மறுமொழி சொல்லவில்லை. "காதல் படமா” ஸ்ரீவன் கேட்டான். சண்முகலிங்கம் மறுமொழி சொல்லாததைக் கேட்டு.
"இந்தியப் படமா” ஸ்ரீவனுக்கு என்ன இன்றைக் கெல்லாம் கேள்விப் படலம் விரிகிறது? சண்முகலிங்கம் எரிச்சலுடன் தலையாட்டினான். எதையாவது சொல்லி ஸ்ரீவனை சமாதானம் செய்துவிட்டு போகவேண்டும் போலிருந்தது?
"எதைப் பற்றிய படம்” ஸ்ரீவனின் முகத்தில் கிளு. கிளுப்பு, ஸ்ரீவன் எப்போதோ ஒரு நாள் காம சூத்திரா படம் பார்த்ததாகச் சொன்னான். ஸ்ரீவனின் குறும்பு தவழும் முகத்தைப் பார்த்ததும் சண்முகலிங்கததுக்கு இன்னும் கூட கோபம் வருகிறது. எழிய நாய்கள் இந்தியர் (சண்முகலிங்கம் இலங்கையன் ஆனால் ஹாஸ்பிட்டலில் எல்லோரும் The Indian Doctor என்று தான் அவனைக் குறிப்பிடுவார்கள்) காம சூத்திராவும் கறிச் சட்டியையுமா நினைத்துக் கொள்கிறார்கள்?
என்ன படமா? காளியைப் பற்றியது. இந்தப் பெண் தெய்வம் காளியைப் பற்றியைத் தெரியும்தானே”* சண்முகலிங்கம் வெடித்தான்.

Page 10
4. அரைகுறை அடிமைகன்
ஸ்ரீவனின் முகத்தில் சட்டென்று ஒரு இருள் படிந்த பாவம். மனக் கண்ணில் தலையைக் கொய்து நிற்கும் பத்திரகாளியைக் கண்டிருப்பான். கையிலிருக்கும் ஸ்டெத ஸ்கோப்பை ஸ்ரீவனின் கழுத்தில் போட்டு அழுத்திக் கொலை செய்யவேண்டும்போல கோபம் வருகிறது சண்முகலிங்கத்துக்கு.
இவனைக் கோபித்து என்ன பிரயோசனம். தன்னை எதிர்பார்க்கும் புது நோயாளியைத்தான் கோபிக்க வேண்டும், இந்திய டாக்டரைத்தான் பார்ப்பேன் என்று சொல்லும் அந்தப் புது நோயாளியின் நெஞ்சழுத்தம்தான் என்ன?
"அந்நிய நாட்டில் இந்தப் புது நோயாளிகளுக் கிருக்கும் துணிவும் நெஞ்சழுத்தமும் பிறந்த நாட்டில் வாழ்ந்து இன்று அகதிகளாய் மாறியிருக்கும் தமிழர்களுக் கிருந்தால்?. பெருமூச்சு விடுகிறான் சண்முகலிங்கம்.
அவன் கால்கள் வார்டுக்குப் போகும் பாதையில் போகின்றன. மனமோ நெஞ்சழுத்தமும் தைரியமும் கொண்ட நண்பன் ராமநாதனில் தாவுகிறது.
ராமநாதன் வெறி பிடித்த சிங்கள அரசாங்கத்தின் கைதியாகிவிட்டான் என்ற செய்தி சண்முகலிங்கத்திற்கு எட்டியபோது சண்முகலிங்கத்துக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. நீதிக்குத் தலைவணங்கி நேர்மையே லட்சியம் என வாழ்ந்த ராமநாதன் சிங்கள அரசாங்கத்துக் கெதிராக என்ன செய்தான்? ராமநாதன் ஒரு சாதாரண அரசாங்க ஊழியன். உணவுக்கு உழைக்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் இலக்கியமே உலகம் என்று மூழ்கிக் கிடப்பான். எப்போதாவது கவிதை எழுதுவான். βρO5 சில கவிதைகள் பத்திரிகை களிலும் பிரசுரமாகியிருக்கின்றன. இனிமையாகப் பேசுவான். அவனைச் சுற்றி ஒரு இளவட்டக் கூட்டம் சிலவேளைகளில் காணப்படும்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 15
வைத்தியக் கல்லூரியில் படிக்கும்போது விடுமுறை காலங்களில் சண்முகலிங்கமும் ராமநாதனைச் சுற்றித் திரிந்த ஒன்றிரண்டு பேரில் ஒருவனாகவிருந்தான்.
நிலவையும் தென்றலையும் பற்றிக் கவிதை எழுதத் தொடங்கிய ராமநாதன் அடிமைத்தனத்தையும் விடுதலை -யையும் பற்றி எழுதினான். யாழ்ப்பாணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் துப்பாக்கி பிடித்த சிங்கள ராணுவத்தினர்.
அடகு முறையும் தாக்குதலும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள். அதன் பிரதிபலிப்பு ராமநாதனின் கவிதை களில் தெரிந்தது. சண்முகலிங்கம் வைத்தியப் படிப்பு முடிய சிங்கள பகுதிகளில் வேலை செய்யப் பயந்து மேற்படிப்பை முன்னிட்டு லண்டனுக்கு வந்துவிட்டான். சிங்களப் பகுதிகளில் 77-ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆளாகிய தமிழர்களின் அனுபவங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. ராமநாதனின் தகப்பன் ரத்தினபுரியில் அப்போது ஆசிரியராக இருந்தார். ராமநாதனின் குடும்பம் ரத்தினபுரியிலிருந்தது. கலவரம் தொடங்கியதன் பிரதிபலிப்பு ரத்தினபுரி எங்கும் தெரிந்தது.
சிங்களக் காடையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தமிழர்களின் வீட்டைத் தேடி ஆவேசத்துடன் திரிந் நார்கள். தேடியலைகிறார்கள், இந்தியத் தமிழர்களைத் தேடவில்லையே என்று ஆறுதலுடன் ராமநாதன் குடும்பம் பக்கத்திலுள்ள தோட்டப் பகுதிக்குத் தஞ்சம் புகுந் தார்கள்.
ஆனால் அங்கு கண்ட பயங்க ரக் காட்சி. சண்முகலிங்கம் லண்டனுக்கு வரமுதல் ராமநாதன் இலங்கையில் தமிழரின் நிலைப்பற்றி கதைத்தான். தான் அனுபவித்த கண்ணால் கண்ட கோரக் காட்சிகளை விவரிக்கபோது பிணங்களையும் இரத்தத்தையும் தொட்டு

Page 11
6 அரைகுறை அடிமைகள்
அளையும் சண்முகலிங்கத்தின் உடம்பே பயத்தால்: சிலிர்த்தது.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும் பானவர்கள் இந்திய வம்சா வழியினரான தமிழ்த்தோட்டத் தொழிலாளிகள். ஆனால் அவர்களின் வாழ்க்கை நிலையோ அகில உலகமும் அறிந்த கீழ்த் தரமான நிலையானது. கடந்த நூற்றி ஐம்பது வருடங்* களாக இலங்கை அரசாங்கத்தால் அரைகுறையடிமை களாக நடத்தப்படுபவர்கள் அவர்கள்.
அவர்களுக்கு எந்த விதமான உரிமையுமில்லை. அடிப்படை மனித உரிமைகள்கூட சிங்கள அரசாங்கத் தால் பறிக்கப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளர் களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, அவர்களின் உடம்பைத் தவிர. இலங்கைப் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான முதுகெலும்புகள் சிங்களக் காடையர்
களால் உடைக்கப்பட்டன.
தொழிலாளர்களின் மனைவிகள் மக்கள் மானபங்கப்
படுத்தப்பட்டார்கள். உலகத்தில் இதுவரை எந்த
நாட்டிலும் நடக்காத கோரமான கேவலமான விதத்தில்
இந்திய வம்சாவழித் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள். எட்டு வயது இளம் இந்தியச் செல்விகளின்
பெண் மை மிருக வெறி பிடித்த சிங்களக் காடையர்களால் துவம்சம் செய்யப்பட்டழிந்த கொடுமையை ராமநாதன் நேரில் கண்டான்.
இரத்தினபுரியில் வீடு வாசலிழந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தபோதுதான் ராமநாதனுக்கு சண்முகலிங்கத் தின் சினேகிதம் கிடைத்தது. மெடிகல் காலேஜ் விடுமுறை களுக்குப் போயிருந்தபோது சண்முகத்தின் சினேகிதன் ஒருத்தனின் சினேகிதத்தின் மூலம் ராமநாதன் பழக்க
Adnrefornrør.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 17
முதல் நாளே ராமநாதனைச் சண்முகலிங்கத்துக்குப் பிடித்துக் கொண்டது. சண்முகலிங்கத்துக்குக் கவிதை, களிலும் கலைகளிலும் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட் டாலும் ராமநாதனின் கவிதைகளை ரசித்துப் படிக்குமள வுக்கு ராமநாதன் தன் கருத்துக்களையும் சிந்தனை களையும் புகுத்தியிருப்பான்.
கவிதையில் தொடங்கிய கதை சிலவேளை அரசியலில் வந்து முடியும். இலங்கையில் தமிழரின் நிலைபற்றிக் குமுறுவான் ராமநாதன்.
"ஒரு அரசாங்கம் வந்தால் தமிழரின் பிரச்சினை தீரும்” என்று சொன்னான் சண்முகலிங்கம்.
"தமிழரின் உரிமைகளை ஆதரிக்கும் தைரியத்துடன் எந்த விதமான சிங்களக் கட்சியும் பதவிக்கு வரமுடியாது. எவன் தமிழனை நசுக்குவதிலும் தமிழ் இனத்தை இலங்கையிலிருந்து அழிப்பதற்கு அதிதீவிர நடவடிக்கை எடுப்பேன் என்று சிங்கள மகா சனங்களிடம் வாக்குக் கேட்கிறானோ அவன்தான் இலங்கைப் பாராளுமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். தமிழரை இலங்கை யிலிருந்து அழிப்பது தங்கள் புத்த தர்மம் இட்ட கட்டளை என மனப்பூர்வமாக நினைப்பவர்கள் சிங்கள அரசியல் வாதிகள். அவர்களை ஆட்டிப் படைப்பவர்கள் புத்த மதவெறியும் சிங்கள மொழிவெறியும் கொண்ட புத்த மதத் தலைவர்கள். இவர்கள் கையில்தான் இலங்கைச் சனநாயக தர்மம் விலங்கு பூட்டப்பட்டுச் சிறை வைக்கப் பட்டிருக்கிறது. அந்த விலங்கு உடைபடாதவரை இலங்கைத் தமிழருக்கு எந்த விமோசனமுமில்லை. ராமநாதன் பெருமூச்சுடன் சொல்வான்.
சண்முகலிங்கம் கொழும்புக்குத் திரும்பி வரும்வரை திருப்பித் திருப்பி இதையே கதைப்பார்கள். தமிழர்கள் அடிப்படை உரிமைகளையிழந்து அல்லலுறுவதுபோல்

Page 12
8 அரைகுறை அடிமைகள்
சிங்கள மக்களிடையேயும் தங்கள் அரசியல் பொருளாதார உரிமைகளையிழந்து துயர்படும் எத்தனையோ ஆயிரம் டேரிருக்கிறார்களே! ஏன் இரு தரப்பாரும் ஒன்றுபட்டு தங்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போராடக்கூடாது. சண்முகலிங்கம் இதுபற்றி எத்தனையோ தரம் யோசித் திருக்கிறான்.
சோசலிசத்தையும் நாட்டு ஒற்றுமையையும் பற்றி தொண்டை கிழியக் கத்தும் இடது சாரிகள் ஏன் இந்த அடிப்படைப் பிரச்சினைகளை மறந்துபோய் அரசியல் புரட்சி பற்றி கத்துகிறார்கள் என்பதும் அவனுக்கு விளங்காது.
ஒர்தோபீடிக் வார்டுக்கு எட்டாம் மாடிக்குப் போக வேண்டும்.
"லிப்ட்” வரும் வரை காத்திருந்தான் சண்முகலிங்கம். வார்டுக்குப் போக லிப்ட் வரும் போகலாம்.
தமிழர்களின் எதிர்காலத்துக்கு உத்திரவாதமிருக் கிறதா அவன் திரும்பிப் போவதற்கு? அக்காவை ஏயார் போர்ட்டிலிருந்து கூட்டிக் கொண்டு வரும்போது அக்கா இதைத்தான் சொன்னாள்.
'தம்பி சிங்களக் காடையர்கள் வெறிநாய்கள்போல தமிழர்களை வேட்டையாடித் திரிகிறார்கள். தயவு செய்து திரும்பி வராதே" அவள் தன் குடும்பத்தில் பெரும் பான்மையானவர்களையிழந்த துன்பத்தில் பொரு மினாள்.
"அக்கா இது என் தாய் நாடில்லை. எப்போதோ ஒரு தாள் நான் திரும்பத்தான் வரவேணும். வானத்துக்குக் கீழ் வீட்டைக் கட்டிவிட்டு மழைக்குப் பயப்படலாமா?"
அவன் விரக்தியாகக் கேட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 9
அக்கா இவனைக் கண்டமாத்திரத்தில் ஓவென்று அழுதுகொண்டு சொன்ன பயங்கரச் செய்திகளை இவன் குமுறும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டான். ஆடி மாதம் 24-ம் திகதி கொழும்பில் தமிழர் களைக் கொலை செய்யத் தொடங்கிய முதலே யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் நடந்த பாதகங்களைச் சொன்னாள். r
திருகோணமலையில் ஒரு பஸ்சை நெருப்பூட்டி அதிலிருந்த தமிழர்களைக் கொழுத்தினார்கள் சிங்களவர் என்பதை லண்டன் பத்திரிகையொன்றில் வாசித் திருந்ததை அக்காவிடம் கேட்டான்.
"அது மட்டுமா தம்பி செய்தார்கள்? யாழ்ப்பாணத் தில் டியூட்டரிக்குள் புகுந்து தமிழ் பாடசாலை மாணவி களையும் கடத்திக் கொண்டு போய் ராணுவ முகாம்களில் வைத்துக் கற்பழித்தார்கள். அதில் சம்பந்தப்பட்ட ராணுவத்தினரைத் தமிழர்கள் தாக்கியபடியால்தான் இலங்கையில் எல்லா இடங்களிலும் சண்டையும் அக்கிரமும் கூடியது." அக்காவுக்குத் தெரியாமல் எத்தனையோ நடந்திருக்கலாம். கொழும்பிலிருந்தவர் களுக்கோ கொழும்பில் என்ன நடந்தது என்று தெரியா
95 TLD.
ஊரடங்கு சட்டம் போட்டுத் தமிழரை வீடுக்ளுக்குள் இருக்கப் பண்ணி விட்டு ராணுவத்தினரும் காடையர் 'களும் வீடுகளுக்குள் புகுந்து தாக்கினார்களாம். கொலை கற்பழிப்பு. நடந்தவைகளை நினைத்தும் வருத்தப் பட்டும் என்ன பிரயோசனம் இனி என்ன செய்ய வேண்டும்? இலங்கையில் இப்போது தமிழருக்கு என்ன நடக்கிறது? இலங்கையில் தற்போது தமிழரின் நிலை என்ன?

Page 13
20 அரைகுறை அடிமைகள்
அக்காவைப் பார்க்கப் போகவேண்டும். ஊரில் நடந்த விஷயங்களை உற்றார் உறவினர் பட்ட கஷ்டங்களைக் கேட்டறிய வேண்டும் என்று எத்தனையோ யோசனை களுடன் லீவு எடுத்திருந்தான்.
இந்தப் புது நோயாளி வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டான். யாரிந்த மண்டைக் கனம் பிடித்த மடையன்? வெள்ளைக்காரனிடம் வாய்த் தர்க்கம் போடும் தைரியம் வெள்ளைக்காரருக்கு எண்ணெய் கொடுக்கும் அராப்காரரைத் தவிர யாருமிருப்பதாகச் சண்முகலிங்கத்துக்கு தெரியாது. பணமிருந்தால் பிணமும் பேசும் என்பார்களே!
பணக்காரனா அல்லது பைத்தியக்காரனா? லிப்ட் எட்டாம் மாடியில் இவனை இறக்கிவிட்டது.
புரட்டாசி மாதம் இலையுதிர்காலம் தொடங்கி விட்டது என்பதன் அறிகுறி கீழே மொட்டையாய்த் தெரியும் மரங்களில் தெரிகிறது.
எட்டாம் மாடி ஜன்னலால் உலகத்தைப் பார்க்க ஏதோ பொம்மை நாடகம் பார்ப்பது போலிருக்கும்.
விளையாட்டுக் கார்களில் ஊர்ந்து திரியும் விளையாட்டு மனிதர்களை நினைத்துக் கொள்வான். இப்போது அப்படி ஒரு கற்பனையுமில்லை.
டெலிவிஷனில் காட்டிய இலங்கைத் தலைநகரமான கொழும்பு மனக்கண்ணில் தெரிந்தது. லண்டன் "ரைம்ஸ்" பிரசுரித்திருந்த ரோட்டில் உயிரோடு எரியும் தமிழ் மனித உடம்பு மனதில் படம் போட்டுக் குமுற வைத்தது.
பாதுகாப்பற்ற குழந்தைகள், பெண்கள், பாதுகாக்கப் படவேண்டிய நோயாளிகள் எல்லோரையும் ஈவிரக்க மில்லாமல் கொலை செய்தார்களாம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 21
அக்காவின் மைத்துனரை குற்றுயிருடன் வைத்திய சாலைக்குக் கொண்டு போனபோது கொழும்பு அரசு மருத்துவமனையில் ஏற்க மறுத்துவிட்டார்களாம். சிங்கள நோயாளிகளுக்கே உணவில்லை. "பறைத்தமிழனுக்கோ உணவும் பாதுகாப்புமோ” என்று துரத்திவிட்டார்களாம். அக்காவின் மைத்துனரின் குற்றுயிரை ஆஸ்பத்திரி ஊழியர்களே தாக்கிக் கொலை செய்தார்களாம்.
லண்டனில் ஆஸ்பத்திரியில் என்றால் தான் விரும்பிய டாக்டரைத் தான் பார்ப்பேன்" என்று அடம் பிடிக்கி றானாம் யாரோ ஒரு அந்நியன்.
யாராயிருக்கும்?
வார்டில உடைந்த எலும்புகளைத் தூக்கிக் கட்டிய படி தோரணங்களாகவும் காவடிகளாகவும் கட்டில்களில் நோயாளிகள் படுத்திருக்கிறார்கள்.
மருமகள் கமலினியை சண்முகலிங்கம் மேலே யோசிக்கவில்லை.
எட்டு வயதுச் சிறுமிகளையும் விட்டு வைக்காத புத்த மதக் காடையர்களின் கையில் பருவப் பெண்ணான கமலினியின் கற்பு.
அக்கா கதறியழுதாளாம். அடித்தார்களாம், உதைத் தார்களாம். உடம்பில் கிடந்த ஒவ்வொரு நகையையும் பறித்தும் பிய்த்தும் எடுத்தார்களாம். மாமியின் காதி லிருந்து தோடு கழட்டப்படவில்லை. பிய்த்தெடுத்தார் களாம். கண் தெரியாத மாமியின் காது அறுந்து தொங்கு கிறது.
. "ஹலோ டாக்டர் சண்” அந்தப் புது நர்ஸ் அழகாகச் சிரிக்கிறாள், இவள்தான் தற்போது ஸ்ரீவனின்

Page 14
22 அரைகுறை அடிமைகள்
கேர்ள் பிரண்ட் என்று கேள்வி. இவள்தான் இந்த Week end முழுதும் வேலை செய்யப் போகிறவள் என்றாள் ஸ்ரீவன் என்ன பாடு பட்டும் வார்டை வளைய வந்து கொண்டிருப்பானே.
"யாரந்தப் புது நோயாளி” எரிச்சலுடன் முணு முணுக்கிறான் சண்முகலிங்கம்.
"ஒ, போய்ப் பாருங்களேன். வேடிக்கையை" அவள் புது நோயாளியிருந்த அட்மிஷன் அறையை சுட்டிக் காட்டுகிறாள்.
வெள்ளைக்கார இனத்தையே தூக்கியெறிந்து பேசிய மகா வீரனே யார்?
இவன் எதிர்பார்த்துக் கொண்டு வந்ததுபோல் ஆங்கிலேயருக்கு எண்ணெய் கொடுக்கும் அராப்கார னில்லை இந்த புது நோயாளி.
விழிகளுக்குள் இரண்டு தீபங்களைப் பொருத்தி வைத்து நேரடியாகப் பார்த்து நிலை தடுமாற வைக்கும் கூரிய பார்வையையுடைய இவன்.
ஒரு அமெரிக்க இந்தியன்
"ஹலோ டாக்டர்” படுத்திருந்த நோயாளியின் முகத்திலும் வார்த்தைகளிலும் சந்தோஷம்.
வெள்ளைக்காரன் தன்னையோ தன்னுடைய உடைந்த எலும்பையோ தொடக்கூடாது என்று சொன்னவன் இவன்தானா? இந்த நோயாளிக்கு எலும்பு முறிவால் நிறைய இரத்தம் போயிருக்கும் என்று சந்தேகிப்பதாக டாக்டர் ஸ்ரீவன் சொன்னான்.
அப்படியான ஒரு அறிகுறியுமில்லாமல் இவன் முகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கிறது!

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 23
தன் ஆச்சரியங்களைக் காட்டிக் கொள்ளாமல் டாக்டருக்கு ஹலோ சொல்லிக் கொள்கிறான். "எனக்குத் தெரியும் உலகத்தில் எந்த மூலையிலும் ஒரு இந்திய டாக்டர் இருப்பார் என்று” படுத்திருந்த நோயாளி சந்தோசத்துடன் சொல்கிறான்.
டாக்டர் சண்முகலிங்கம் நோயாளியின் உடைந்த காலைப் பார்க்கிறான். தன்னை ஒரு இந்திய டாக்டர் என்று நினைக்கிறான், இந்த அமெரிக்க இந்தியன். தான். இலங்கைத்தமிழன் என்று சொல்வதா? இந்தியத் தமிழனாய்த் தான் இருந்தால் இலங்கையில் இவ்வளவு, தூரம் கஷ்டப்பட வேண்டுமா?
"வெள்ளைக்கார டாக்டரை வேண்டாம் என்று சொன்னாயாம் உண்மையா” இவன் நோயாளியைக் கேட்கிறான். நோயாளியின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. நீயும் ஒரு இந்தியன் தானே, நீ மட்டும் இந்த வெள்ளைக் காரரை நம்புவாயா" நோயாளி கேட்கிறான்.
"நான் இந்தியனில்லை இலங்கையன்! இலங்கைத் தமிழன்" டாக்டர் சண்முகலிங்கம் சொன்னான்.
நோயாளியின் முகத்தில் சொல்ல முடியாத ஆச்சரியம். லண்டன் ஆஸ்பத்திரியில் தமிழன் டாக்டராக இருப்பது ஆச்சரியமா?
லண்டனில் மட்டுமென்ன உலகத்தில் எந்த மூலை யிலும் தானே இலங்கைத் தமிழன் டாக்டராகவோ எஞ்சினியராகவோ, ஆசிரியனாகவோ இருக்கிறான். அதில் என்ன ஆச்சரியம்? இலங்கையில் வாழ முடியாமல் அனாதைகள் மாதிரி உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது இவனுக்கு த், தெரிந்தால் ஆச்சரியப் படமாட்டான்.

Page 15
24 அரைகுறை அடிமைகள்
"ஏன் அப்படி ஆச்சரியத்துடன் வாயைப் பிளக் * கிறீர்கள்" பாதி கோபமும் பாதி கேள்வியுமாய்
கேட்கிறான் டாக்டர் சண்முகலிங்கம்.
"நான் வாசித்துக் கொண்டிருப்பது இலங்கைத் தமிழரைப் பற்றித்தான் என்று உனக்குச் சொன்னால் ஆச்சரியப்படமாட்டீர்களே” நோயாளி தான் வாசித்துக் கொண்டிருந்த பத்திரிகையைக் காட்டுகிறான். New Stateesman" நியூ ஸ்ரேட்ஸ்மனில் தமிழரின் நிலைபற்றி (இலங்கையில்) ஒரு கட்டுரை வந்திருப்பது தெரியும். லண்டனில் எந்தப் பத்திரிகையைத் தொட்டாலும் ஏதோ ஒரு மூலையில் இலங்கைத் தமிழர் பற்றியும் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் செய்திகள் வந்த படியே இருக்கின்றன.
*உலகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கெல்லாம் மூலகாரணம் பிரித்தானிய ஏகாதிபத்தியம்தான் என்பது மறுக்க முடியாதது தானே’ நோயாளியின் கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் உடைந்து போயிருக்கும் அவன் கால்களைப் பரிசோதனை செய்கிறான்.
சிக்கலான உடைவுதான், எவ்வளவு சேதம் என்று பார்க்க எக்ஸ்ரே எடுக்க வேண்டும். தனக்குள் நினைத்துக் கொள்கிறான்.
சிக்கலான உடைவு எங்கள் தமிழர் எத்தனை சிக்கலான உ  ைட வுகளை க் கண்டிருப்பார்கள்? ராமநாதனையும் ராமநாதனுடன் சேர்ந்த மற்றத் தமிழ் அரசியல் கைதிகளையும் எப்படி சித்திரவதை செய்து கொலை செய்திருப்பார்கள்.
உங்கள் இந்தியாவை மட்டுமா, இந்த வெள்ளைக் காரர்கள் உலகத்தையே கூறுபோட்டுக் கொண்டார்கள். இப்போது ஆகாயத்தையும் கூறு போடுகிறார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 25
நோயாளி தன் கால் வேதனை மறக்க அலட்டுகிறானா அல்லது உண்மையாக இன்னுமொரு "இந்தியனைக் கண்ட சந்தோசத்தில் கதைக்கிறானா?
“இப்படி உடைந்து போயிருக்கும் காலை ஒரு வெள்ளைக்கார டாக்டர்களும் தொடக் கூடாது என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன் நான் வராமலிருந்தால் என்ன செய்திருப்பாய்?"
சண்முகலிங்கம் தன் தமக்கையைப் பார்க்கப் போக முடியாமல் பண்ணிய நோயாளியைக் கடுமையாகக் கேட்கிறான்.
“ஸாரி டாக்டர் உங்கள் அத்தியாவசியமான திட்டம் எதையும் குழப்பிவிட்டேனா’ கேட்ட நோயாளியை நிமிர்ந்து பார்க்கிறான் சண்முகலிங்கம், எவ்வளவு திடமான உறுதியான பார்வை இந்த அமெரிக்க இந்தியனுக்கு? இவர்களின் இனமும் ஒரு காலத்தில் வெள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதாகப் படித்திருக்கிறான் சண்முகலிங்கம்.
"அத்தியாவசிய திட்டம் ஒன்றுமில்லை. அவசரமாக என் தமக்கையைப் பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழரைப் பற்றித்தான் வாசித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாய். இலங்கையில் எங்களுக்கு என்ன நடக்கிறது என்று வாசித்திருப்பாய். குடும்பத்தில் எல்லாரையும் இழந்து விட்டு- எல்லாவற்றையும் இழந்துவிட்டு என் தமக்கை வந்திருக்கிறாள். பார்க்கப் போக முயன்றபோது உன்னுடைய பிடிவாதம் குறுக்கிட்டது”
சண்முகலிங்கம் அலுத்துக் கொள்கிறான்.
இவ்வளவு நேரம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த அமெரிக்க இந்தியனின் முகத்தில் பரிதாபம்.
<罗一2

Page 16
26 அரைகுறை அடிமைகள்
"இலங்கைத் தமிழர்களுக்கு என்ன நடக்கிறது என்ன நடந்தது, ஏன் நடந்தது என்றுதான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். திட்டமிட்டு ஒரு இனத்தை அழிக்கப் பார்க்கிறார்கள். ஜேர்மனியில் ஹிட்லர் யூதர்களைப் படுகொலை செய்ததுபோல் இலங்கையில் தமிழர்களை அழிக்க பெளத்த அரசாங்கம் திட்டம் போடுவதாகத் தமிழ் மக்கள் பயப்படுவதையும் வாசித்தேன். இருபதாம் நூற்றாண்டிலும் இப்படி அநாகரிகமான மனித வேட்டைகளை” அமெரிக்க இந்தியனுக்கு பெருமூச்சு வருவது சண்முகலிங்கத்துக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களைத் தவிர மற்றவர்களுக்கு பத்திரிகைச் செய்தி வெறும் "நியூஸ்" ஆக மட்டும்தான் இருக்குடம் என்றுதான் சண்முகலிங்கம் நினைத்தான்.
ஆனால் இன்று எத்தனையோ ஆயிரம் மைல் களுக்கப்பால் பிறந்து வளர்ந்த அமெரிக்க இந்தியன் உலகத்தில் கஷ்டப்படும் இலங்கைத் தமிழருக்காகப் பரிதாபப்படுவது நம்ப முடியாதிருந்தது.
ஆங்கிலேய நாட்டிலேயே ஆங்கில டாக்டர்கள் தன்னை தொடக்கூடாது என்று சொன்னவன் வெறும் திமிர் பிடித்தவனாக இருக்கலாம் என்றுதான் சண்முகலிங்கம் யோசித்தான். இப்போது பார்த்தால் ஏன் இந்த அமெரிக்க இந்தியன் வெள்ளையர்களை வெறுக்கிறான் என்று தெரிகிறது. அமெரிக்க ஆதிக் குடிகளான செவ்விந்தியரை அழித்தொழிந்த ஆதிக்க வாதிகளல்லவா இந்த வெள்ளையர்கள் அந்தக் கோபம் இன்னும் இதே அமெரிக்க செவ்விந்தியனுக்கு இருக் கிறதா?
"ஏன் இங்கிலீஸ் டாக்டர் உன்னைப் பார்க்க நீ அனுமதிக்கவில்லை" என்று சண்முகலிங்கம் கேட்டால்: அவன் சொன்ன மறுமொழி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 27
அமெரிக்காவின் ஆதிக்குடிகளான எங்களை அரை குறை அடிமைகளாக ஆக்கி வைத்திருக்கும் வெள்ளை யர்களை நான் மதிக்கவா? நம்பி என் உடம்பையோ எலும்பையோ கொடுப்பேனா? எங்கள் இனத்தையே கிட்டத்தட்ட அழித்தொழித்த ஏகாதிபத்தியவாதிகள் இன்று என்னைப்போல ஒரு சாதாரண இந்தியனின் உடைந்த எலும்பில் அக்கறை காட்டுவார்கள் என நம்பவா” இந்தியன் கேட்ட கேள்விகளுக்கு மறுமொழி சொல்லாமல் எக்ஸ்ரே எடுப்பதற்கு விண்ணப்ப பத்திரம் நிரப்புகின்ற சண்முகலிங்கம்.
அரைகுறை அடிமைகள்!
அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் மட்டுமா அரை குறை அடிமைகள்? பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனத்தார் நாடற்ற அரைகுறையடிமைகள் லத்தீன் அமெரிக்க நாடு களின் ஆதிக்குடிகளான பல தரப்பட்ட செவ்விந்தியர் களும் அரைகுறையடிமைகள்.
இலங்கை மலையகத்தைக் காடகற்றி நாடாக்கித் தோட்டமிட்டு தொழில் செய்து நாட்டின் வருமானத் திற்கே முதுகெலும்பான தமிழன் நாடாற்ற அரை குறையடிமை
இன்னும் கொஞ்ச காலத்தில் ஆயிரக்கணக்கான
வருடங்களாய் இலங்கையின் பிரஜைகளான தமிழர்கள்
இப்போது மட்டும் இலங்கைத் தமிழருக்கு என்ன உரிமை கிடைக்கிறது?
இலங்கையில் தமிழனாய்ப் பிறந்ததற்குப் பலன் அடி உதை கொலை கொள்ளை கற்பழிப்பு உயிரோடு எரித்தல் என்பனதான் அரசாங்கத்தின் உதவி அக்கா அழுதுகொண்டு சொன்னாள் 'தம்பி இனி நாங்கள் இலங்கையில் சிங்களவரோட ஒற்றுமையாக இருக்க

Page 17
28 அரைகுறை அடிமைகள்
ஏலாது. எங்களுக்கொரு தனிப்பிரதேசம், தனி அரசாங்கம் தேவை பாதுகாப்பாகத் தமிழர் ஜீவிக்கிறதுக்கு”
தமிழனுக்கு ஒரு தனிப் பிரதேசம் சகோதரர்களுக்கும் சண்டை வந்தால் வீட்டைக் கொத்திப் பிரிக்கலாமா?
*ஆனால் தொந்தரவு செய்யும் சகோதரன் துரோகியாயிருந்தால் உறவுக்காக அடிமைப்படாமல் பிரிந்து” அப்படித்தான் ராமநாதன் சொன்னான்.
"எங்கள் வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படை யுரிமையை மனித உரிமையை சிங்கள அரசாங்கத்திடம் பறிகொடுத்து விட்டோம். அதை மீட்க, நாங்கள் எங்கள் உரிமையுடன் வாழ சிங்களவரிடமிருந்து பிரிந்து போவதுதான் ஒரே ஒருவழி என்றால் நாங்கள் அதை முன் வைத்துப் போராட வேண்டும்.”
ராமநாதன் பிற்போக்குவாதியல்ல தமிழ் வெறி பிடித்தவனல்ல இலங்கையில் உள்ள ஒவ்வொரு இன மக்களுக்கும் இலங்கையில் சகல உரிமைகளும் இருக்க வேண்டும் என்று மனதார நம்புபவன். நம்பியவன் ஆனால் சிங்கள அரசாங்கம் திட்டமிட்டுத் தமிழ்மொழியை, தமிழ்க் கலாசாரத்தை அழிக்கக் தொடங்கியது. தமிழ்ப் பி ர தே சங்க  ைள யே சிங்களவர்களை குடியேற்றி நிரப்புகிறது.
இப்போது சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர் களைக் கொலை செய்து. வார்த்தைகளால் படிக்க முடியாதளவு சித்திரவதை செய்து. அக்கா சொன்னாள். அவள் குடும்பத்துக்கு நடந்த கோர முடிவை, வீட்டைக் கொள்ளையடித்து, மருமகளைக் கற்பழித்து, வாலிபப் பையன்களையும் மைத்துனர்களையும் கண்ட துண்டமாக வெட்டிக் குவித்தபின் அக்காவைச் சொன்னார்களாம் வீட்டுக்கு நெருப்பு வைக்கச் சொல்லி அக்கா நெருப்பு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 29
வைத்தாளாம். பற்றியெரியும் நெருப்பில் அக்காவின் கைக்குழந்தையைப் பறித்து எறியும்போது அக்கா கதறிய கதறலில் இரங்கிய பக்கத்து வீட்டு சிங்கள ஆனால் கத்தோலிக்க பாதிரியார் காடையர்களுடன் கெஞ்சி குழந்தையைக் காப்பாற்ற அக்கா குழந்தையும் கையுமாய் உடம்பில் ஒரு துணியுமின்றி இருளில் ஒடித் தப்பினார் களாம். என்ன கொடுமை. சண்முகலிங்கத்துக்கு நினைவு குமுறி நீர் துளிர்க்கிறது கண்களில்,
தமிழர்கள் அரைகுறையடிமைகளாயில்லாமல் தங்கள் விடுதலைக்குப் போராடி வெற்றி பெற "ஒற்றுமையுடன்” உழைப்பார்களா? கேள்விக்குறி மனதில் படர டாக்டர் சண்முகம் சத்திரசிகிச்சை அறைக்குள் போகிறான்.
தாயகம், 5-10-1993.

Page 18
ஒரு சரித்திரம் சரிகிறது
ஆச்சிக்குக் கிட்டத்தட்ட எண்பது வயசிருக்கலாம், கூடவுமிருக்கலாம். அவள் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது தனது பழைய கால அனுபவங்களையும் சேர்த்துச் சொல்வாள்.
அப்படி அவள் சொல்லும் அனுபவ ரீதியான கதை களுக்கு வயது பார்த்தால் அவை எழுபது அல்லது எண்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தவை.
ரஷ்ய புரட்சி பற்றி அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் தகப்பன் (அந்தக் காலத்தில் திண்ணைப் பள்ளிக் கூட வாத்தியார்) தனக்குச் சொன்ன விடயங்களை, ஷார் மகாராசனும் குடும்பமும் அழிந்த கதையை அவள் குழந்தைகளுக்குச் சொல்வாள். அவளைப் பொறுத்த வரையில் சரித்திரமென்பது அரச பரம்பரை ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்வதும் பழிவாங்குவதும்தான். அவள் இன்று சரித்திரமாகிவிட்டாள்.
அவளையும் கொலை செய்து விட்டார்கள்.
அவள் எந்த 三架D「タ பரம் ப  ைர  ைய யு ம்
சேர்ந்தவளில்லை. அரசமரம் மாதிரி பெருத்து வளர்ந்த ஒரு குடும்பத்தின் பரம்பரைக்கும் மூலமானவள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3.
அவளை அவர்கள் அடித்து- நொறுக்கி உருட்டி உதைத்து கடைசியாக அவளின் பழமையான பண்பட்ட வயது போன, நாளையோ அடுத்த நாளோ இறக்க வேண்டிய எலும்புக் கூட்டில் ஏறி நின்று மிதித்துக் கொலை செய்து விட்டார்கள்.
நாரான தசையால், பீறிட்டெழுந்த முது ரத்தம் அவர்கள் யூனிபோர்மில் புரளப்புரள அவர்கள் அவளைப்
புரட்டிப் புரட்டி அடித்தார்கள்.
கிழவிக்கும் கொலைக்காரர்களுக்கும் மூன்று தலைமுறை வித்தியாசமிருக்கலாம்.
அவர்களைப் போல இளம் சிறார்களுக்குத்தான் அவள் வளைந்து போன தென்னை மரத்தடியிற் சாய்ந் திருந்து, தென்றல் கொஞ்சும் இரவுகளில் ராசா, ராணி, வேதாளம் என்றெல்லாம் கதை சொல்வாள். அவள் கதைகளில் இளைஞர்கள் காதலர்கள், இலட்சியவாதிகள், கண்ணியமானவர்கள். அவள் கதைகளில் வரும் இளைஞர்கள் இளவரசர்கள்தான் ஆனாலும் அவள் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் எல்லாம் அவளைப் பொறுத்தவரையில் இளவரசர்கள்தான்.
அவளுக்குப் பெரிய குடும்பம்.
அந்தக் குடும்பம் மட்டக்களப்பு எட்டுப்பகுதியிலும் சிதறிக் கிடக்கின்றார்கள். அவள் ஆடி ஒடித் திரிந்த காலத்தில் அக்கரைப்பற்று, திருக்கோயில், காரைதீவு, புளியந்தீவு என்று போய் வந்து கொண்டிருந்தாள்.
மாலைக்கண் வருத்தம் வந்து இரவில் பார்வை போய் விட்ட பின் பகலில் போய் வரக்கூடிய இடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தாள்.

Page 19
32 அரைகுறை அடிமைகள்
பேரப்பிள்ளைகள் பெரியவர்களாகி வளர்ந்து, மனிதர்களாகி ஒவ்வொருத்தராய் கூண்டை விட்டுப் பறந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
சிலரின் முகமும் பலரின் குரலும் அவளுக்குப் பழக்கம். ஞாபகமும் அவ்வளவு சரியில்லை.
ஒரு காலத்தில் அழகியாய் இருந்திருக்கவேண்டும். அதை நிட்சயிக்க ஒரு புகைப்படமுமில்லை. அந்தக் காலத்தில் யாரும் படம் எடுத்துக் கொள்வதில்லை. ஆயுள் குறைந்து விடும் என்ற பயம்!
அவள் பேரன் திருச்செந்தில்நாதன் படமெடுக்கப் பழகிக் கொண்டபோது ஆச்சியை வளைந்த தென்ன மரத்தினடியில் வைத்துப் படம் எடுத்தான்.
ஆச்சியின் போன் திருச்செந்தில்நாதனில் அவளுக்கு உயிர். திரு என்று ஆசையாகக் கூப்பிடுவாள்.
திரு அவளுடைய முதல் பேத்தியின் மகன். அவன் தாயின் வயிற்றிலிருக்கும்போது ஆச்சியின் கணவர் இறந்து விட்டார்.
தனது பேத்தியின் வயிற்றில் பிறந்திருப்பது தனது இறந்த கணவன் என்பது ஆச்சிக்கு நம்பிக்கை.
திரு பிறந்தான். தவழ்ந்தான். எழும்பி நின்று ஆச்சி என்று மழலை சொல்ல அவள் அழுது விட்டாள். திருவின் சிரிப்பு அவளின் இறந்த கணவனை ஞாபகப்படுத்தியது என்று சொல்லியழுதாள்.
அவன் வளர்ந்தான், படித்தான். படம் எடுக்கக் கற்றும் கொண்டான். யாழ்ப்பாணம் போய்ப் படித்து பட்டதாரியாகி விட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 33
தமிழ்ப் பகுதிகளில் குழப்பம்.
இலங்கையரசாங்கம் கொலைகள், கற்பழிப்பு தீவைப்பு பின்னர் இந்திய அரசாங்கம், சினேகிதம், பூமாலை, நிறைகுடம் வரவேற்பு, பின்னர் கற்பழிப்பு கொலை, குண்டுவீச்சு, ஊரழிவு.
கிழவி இரண்டு உலக மகாயுத்தங்களின் அனு பவத்தைத் தெரிந்தவள். ஆனால் அவள் குடும்பத்தில் யாரும் இறந்ததில்லை. குழந்தைகள் பிறந்தார்கள், வனர்ந்தார்கள். பேரப்பிள்ளைகள் தந்தார்கள். அவர்கள் தங்களுக்கும் பிள்ளையும் பெற்றுக் கொண்டார்கள்.
தமிழ் ஈழப் பிரச்சினை இனவெறி பிடித்த இலங்கை அரசாங்கத்தால் அவள் எத்தனையோ பேரைப் பறி" கொடுத்து விட்டாள்.
முதற்தரம் ஒரு பேரன் சிங்கள ராணுவத்தால் சுடப் பட்டு இறந்தபோது ஆச்சியும் குடும்பமும் துடித்துப் போய்விட்டார்கள். சிங்களப் பேரினவாதம் தமிழ்ச் சிறு இனத்தைக் கொன்று குவித்தது. ஆச்சிக்குப் பிறப்பும் இறப்பும் மகத்துவமானது.
அந்த மகத்துவத்தை ஒரு துளியும் மதிப்பில்லாமல் ஆக்கிவிட்ட அரசியல் மாற்றத்தை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இறப்பதும் புதைப்புக்களும் இவளின் அழுகைக்குக் காத்திராமல் அவசரமாக நடந்து கொண்டிருந்தன. அவளுக்குக் கண் தெரியாது. காதும் அவ்வளவாகக் கேட்காது. அருமைப் பேரன் "திரு” அவளைத் தென்னைமரத்தினடியில் வைத்தெடுத்த படத்தையும் பார்க்க முடியாது.
திருவைப் பார்ப்பதும் முடியாது. அவனைத் தடவிப் பார்ப்பாள், கொஞ்சிப் பார்ப்பாள், முகர்ந்து பார்ப்பாள்

Page 20
34 அரைகுறை அடிமைகள்
அவன் இருபத்திரெண்டு வயதுக்கு மேலானவன். ஆச்சியின் அன்பில் வெட்கப் படுவான். கிழவிக்கு கண் பார்வை மங்க முதல் அவளோடு பழகிய போராளிகளை அவனுக்குத் தெரியும். அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று தெரியும். பால் மணம் மாறாதவர்கள், பந்தடித்து விளையாடும் வயதில் பயங்கர ஆயுதம் தூக்கிக் கொண்ட வர்கள். அவர்கள் ஊரில் ஒரு நாளும் வேண்டப் படாதவர்கள். ஊருக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு கரடு முரடானது. ஆனாலும் அவர்களின் துப்பாக்கி களுக்கு ஊரார் பயம். துப்பாக்கிகள் புதிதானவை, உயர் தரமானவை என்று யாரும் சொல்லும்போது கிழவியால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. தென்னை மரத் தடியிலிருந்து கதை கேட்கும் வயதில் கொலை செய்யும் மாற்றத்தைக் கொண்டுவந்த அரசியலைப் புரியாதவள் அவள். இரண்டு உலக யுத்தங்களை அனுபவித்தவள். , ஆனாலும் துப்பாக்கிகளை கண்டில்லை.
விடிந்த காலையின் இளம் சூட்டில், வளைந்த தென்ன மரத்தில் சாய்ந்து கொண்டு "திரு' வை யோசித்துக் கொண்டிருந்தாள்.
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு அவள் பறக்கும் குதிரைகள் பற்றிக் கதை சொல்ல மாட்டாள். ஏழு கடல்களுக் கப்பாலுள்ள பயங்கரக் குகையில் பாம்பின் தலையில் இருக்கும் மாணிக்கத்தை எடுத்துக் கொண்டு வந்து தன் காதலியிடம் கொடுக்க எந்த இளவரசனும் இப்போது போவதில்லை.
அவளைச் சுற்றி, முது கன்னிகளும், பழம் தோல்களும் தான் மிச்சம். திரு எங்கே? அவன் சிரிப்பெங்கே? குரல் எங்கே? அவள் கேள்விக்கு யாரும் உருப்படியாக மறுமொழி சொல்லவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 35
திருவைக் கூட்டிக் கொண்டுபோய் "உனது நீளம் என்ன அகலம் என்ன என்று கேட்டபின் அவனைக் கொண்டே குழி தோண்டி அவனை இறங்கவிட்டு இறக்கப் பண்ணியதை அரையும் குறையுமாய் புரிந்து கொண்டாள். திருவை" ஏன் கொலை செய்தார்கள்? திருவைப்போல் எத்தனையோ பேர் இறந்து விட்டார்கள்.
ஆச்சியின் உலகம் "திரு', புதைத்து விட்டவர்களின் *காம்ப்" அடுத்த ஒழுங்கையிலிருக்கிறது. கண் சரியாகத் தெரியாமற் போக முதல் அவர்களை அவள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள். இன்றைய துப்பாக்கி தூக்கிகள் நேற்றையக் குழந்தைகளாயிருந்ததை நினைவு கொண்டாள். அவளுக்கும் அவர்களுக்கும் எத்தனையோ வித்தியாசம், உலகம் அனுபவங்கள் அவர்களைப் பொறுத்த வரை மிக மிக வித்தியாசமானவை.
"என்ன கிழவி' ஒரு துப்பாக்கி தூக்கி அலட்சியமாகக் கேட்டான், அவள் "திருவின்" பாட்டியென்பதால் "ஆச்சி" என்ற மரியாதையில்லை. திரு’ அவர்களின் எதிரி. ஆச்சி யும் அவர்களின் எதிரி. அவள் வயதும் அனுபவமும் வாழும் சுற்றலும் அவர்களின் எதிரிகள். அவளின் மழுங்கிய பார்வையில் புகை படிந்த உருவங் .களால் நகர்ந்தார்கள். நடுமதிய சூரிய வெளிச்சத்தில் அவர்கள் ஏந்திய துப்பாக்கிகளின் வெள்ளி படிந்த இடங்கள் படபடத்தன.
இவர்கள் திருவை உயிரோடு புதைத்தார்கள்!
ஆச்சியின் கண்களில் நீர், இதயத்தில் எரிமலை, அவள் காறித் துப்பினாள். அவர்கள் கோபமானவர்கள். அவர்களுக்கும் இவளின் திருவுக்குமுள்ள வித்தியாசம் சாக்கடைக்கும் கோயிலுக்குமுள்ள வித்தியாசம். அவள் இன்னொரு தரம் காறித்துப்பினாள்.

Page 21
36 அரைகுறை அடிமைகள்
வார்த்தைகள் வெடித்தன. வார்த்தைகளில் அவளின் வயதின் உரம் தொனித்தது. தொனியில் வெறுப்புத் தகர்ந்தது.
"கொலைகார மிருகங்கள், மனிதர்களை வேட்டை யாடும் மிருகங்கள்" அவள் காறித்துப்பினாள்.
அவளின் சுருங்கிய தோலை ஒருத்தன் எட்டியுதைத் தான். இன்னொருத்தன் துப்பினான் அடுத்தவன் ஏறி மிதித்தான்.
எண்பது வயதும், இரு உலக யுத்தங்களின் அனு பவமும் மதியவெயிலில் மிதிபட்டு இற ந் து கொண்டிருந்தது.
女女女

இரவில் வந்தவர்
அவள் குழந்தைகளைப் படுக்கையில் போட்டாள். ஒலையால் வேய்ந்த வீடு. ஒட்டைகளுக்குள் பாதி நிலாவின் துண்டுகள் எட்டிப் பார்க்கின்றன. இப்போ தெல்லாம் நிலவு வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாடு வதில்லை. கோயில் மணியோசையும் குழந்தைகளின் கலகலப்பும் எப்போதோ,சூனியமாகிவிட்டன.
சத்தியா குழந்தையாயிருக்கும்போது ந ட ந் த எத்தனையோ நிகழ்ச்சிகள் இன்றும் இனிமையாக இருக்கிறது. நினைவுகளைத் தவிர வேறெதுவும் இனிமை யில்லை. ۔۔۔-
பெரிய குழந்தை பானுவுக்குப் பத்து வயதாகிறது. அவள் நித்திரை வராமல் புரண்டு படுக்கிறாள். சின்ன மகன் கேசவனுக்கு எட்டு வயது. அவன் பகலெல்லாம் ஓடிவிளையாடிய கலைப்பில் நித்திரையாகி விட்டான்.
அவள் வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு வெளியில் வந்தாள். அவளும் நிலவும் ஒருத்தரை ஒருத்தர் முட்டிக் கொண்டனர். கிணற்றடி மல்லிகையிலிருந்து குப்பென்ற மணம் தானும் சேர்ந்து தென்றலுடன் தவழ்ந்து வந்து அவள் நாசியில் நுழைந்தது.
தூரத்தில் யாரோ அழும் சத்தம். வாய் விட்டழாத சத்தம். யாரும் செத்துப் போயிருக்கலாம்.

Page 22
38 அரைகுறை அடிமைகள்
இறப்புகள் எப்போதும் துப்பாக்கிக் குண்டுகளில் காத்திருப்பதில்லை. "இந்த நாய்களுக்கு ஏன் ஒரு குண்டை வீணாக்கவேண்டும்" என்று சொல்லும் விடுதலை வீரர்களின் காற்சப்பாத்து ஒரு உயிரைப் பலிவாங்க ஒரு நாளும் தயங்கியதில்லை.
அவள் கணவனை ஒரு காலத்தில் சிங்கள அரசாங்கம் பிடித்துக் கொண்டு போனது, கேசவன் அப்போது கைக் குழந் ைத. மகாவீரர்களாகப் போஸ்டர் போட்டு மரியாதை செலுத்தப்படாமற் செத்துப்போன எத் தனையோ இளைஞர்களில் அவனும் ஒருத்தன்.
தனிமை, சுமை, குடும்பம், இளமை, அழகு, இத் தனையும் சத்தியாவின் சொத்துக்கள். தாய் தகப்பன் எப்போதோ இறந்து விட்டார்கள். ஒரே ஒரு தமயன், கொழும்பிலேயே தங்கிவிட்டான். யாழ்ப்பாணம் எட்டிப் பார்க்கப் பயம்.
சத்தியாவின் தணிமைக்குத் துணையாய் வந்தவன் நடராஜனின் சினேகிதன். என்பதாம் ஆண்டுகளில் கச்சை கட்டிக்கொண்டு கட்சி பிரித்த குழுக்களுள் சேராதவர்கள். புடவைக் கடைகளுக்குப் பிள்ளையார் துணிக்கடை, கணேசர் சாரி எம்போரியம், விநாயகர் சாரி பலஸ், கணபதி சேலைக்கடை, விக்னேஸ் துணி மாளிகை என்றெல்லாம் பெயர் வைப்பது போல் எத்தனையோ தமிழியக்கங்கள் கண்ணைக் கவரும், காதைக் குளிர வைக்கும், வீரத்தைப் பொங்க வைக்கும் பல கவர்ச்சியான பெயர்களை வைத்துக்கொண்டு விடுதலைக்கு வெளிக்கிட்டபோது, நடராஜனும் பாலேந்திரனும் பார்வையாளராக இருந்தார்கள்.
சத்யா குழந்தை சுமக்க, நடராஜன் குடும்பம் சுமந்தான். காதலித்துக் கலியாணம் செய்து கொண்ட

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 39
வர்கள். சந்தையில் நடராஜன் சின்னக் கடை வைத்திருந்: தான். வியாபாரம் நன்றாக வந்து, கையில் காசு வந்ததும் வீட்டைத் திருத்திக் கட்டி ஒடு போடுவதாக யோசனை.
கனவு அவன் கற்பனையாக மாறிப்போக இலங்கை ராணுவம் கன்னாகத்தை எரித்துவிட்டது. அவன் உடைந்து போனான். ஒலை வீடு ஒட்டை கண்டது. சத்தியாவின் நம்பிக்கை எதிர்காலத்துக்கு வழிகாட்டியது.
*பிரச்சினைகள் தீரும், கடவுள் வழி காட்டுவார்” அவள் கணவனுக்கு அன்புடன் சொன்னாள். அவள் குரல் கடவுளுக்குக் கேட்கவில்லையோ என்னவோ பிரச்சினைகள் கூடிக்கொண்டு வந்தது.
83-ஆம் ஆண்டு கலவரம். இலங்கைத் தமிழர்கள் தாங்கள் பிறந்த நாட்டிலேயே அகதிகள். நடராஜன் ஏதோ கிடைத்த வேலைகளைச் செய்து பிழைத்துக் கொண்டான்.
d
வீட்டுக்கு வீடு பிரச்சினை, போராட்டம், ஊர்வலங்
கள், உற்சாக கோஷங்கள். ஈழம் கெதியில் கிடைத்து விடும்; எல்லோர் மனதிலும் நம்பிக்கை.
84-ம் ஆண்டு ஊர்களில் திருட்டு. ஒரு இயக்கத்தின் பெயரில் இன்னொரு இயக்கத் திருட்டு. நடராஜன் வியாபார விடயமாக கொழும்புக்குப் போனவன் திரும்பி வரவில்லை.
கைக் குழந்தையுடன் சத்தியா கதறியதைக் கடவுள் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் கழுத்தில் கிடந்தவை ஒவ்வொன்றாய்ப் போய்க் கொண்ர டிருந்தன. தமயன் தன்னால் முடிந்ததை எப்போதோ இருந்து அனுப்புவான்.

Page 23
40 அரைகுறை அடிமைகள்
"கடவுளே நான் யாருக்கு என்ன செய்தேன். எனக்கேன் இந்த விதி? அந்தப் பத்தினியின் பரிதாபம் எந்தக் கடவுளுக்கும் விளங்கவில்லை. பானுமதி பசியால் துவண்டபோது, கேசவன் பாலுக்குத் தாயின் முலையைப் புண்ணாக்கியபோது அவள் கண்ணிரும் சிலவேளை வற்றி விடும்.
85-ம் ஆண்டு ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தை மனித வேட்டை செய்தார்கள். சந்திகளில் வைத்து எதிரியக்க இளைஞர்களைப் பச்சை ஓலைகளும், கார் டயர்களும் போட்டெரிப்பதைப் பண்டட்ட தமிழ் தாய்மார் வேலியால் எட்டிப் பார்த்துக் கொண்டார்கள்.
கோயிற் திருவிழாக்களும் கொடும் கொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாத மனித மந்தைகள், தெரு திரண்டு, விழியுயர்த்தி, வாய்திறந்து, மனமுடையப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சத்தியாவும் மற்ற மனிதர்கள் போல் கொடுமைகளுக்குள் குருடியாய், ஊமையாய்ச் செவிடாய்ப் பழகிவிட்டாள். ܚ
சத்தியா குடத்தில் நீர் வழித்து கழுவிக்கொண்டாள். மனம் எரிந்து கொண்டிருந்தது.
இப்படியவள் நிம்மதியில்லாமல் தவித்த ஒரு இரவில் பாலேந்திரன் வந்து சேர்ந்தான்.
"என்னையவர்கள் தேடுகிறார்கள்” என்றான்.
அவனுக்கு விளங்கவில்லை.
அவன் ஒரு நாளும் எந்த இயக்கத்திலும் சேர்ந் திருக்கவில்லை. அதுதான் பிழை.
அவன் பயத்துடன் வாசலைப் பார்த்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 4.
அவனுாரில் அவன் இருக்க முடியாதாம். அவன் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டபடி சொன்னான். சத்தியாவில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் முன் பின் தெரியாத ஒருத்தனுடன் வாழ்வதாக அவனை ஊர் தூற்றும் என்று தெரியும். அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ܗܝ
பக்கத்து வீட்டு வேலிகளுக்குக் காதும் கண்களும் கிடைத்துவிட்டது. ஊருக்கு வாய் திறந்து கொண்டது.
ஊரில் பெரிய மனிதர்கள் அவளைப் பார்க்க வத் தார்கள். அவள் நடத்தை பற்றி அடுத்த வீடுகளில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றார்கள்.
அவள் வாயடைத்துப் போய்விட்டாள். குழந்தை களும் அவளும் பட்டினியாற் துவண்டபோது இல்லாத அக்கறை இப்போது "யாரோ ஒருத்தன் அவள் வீட்டில் வந்தபோது வந்துவிட்டதாம்!
'இதெல்லாம் பொய்க்கதை. என்னில சந்தேகம் தட்டப் போறான்கள்” பாலேந்திரன் முணுமுணுத்துக் கொண்டான். பாவம் அவன் முணுமுணுப்பு முடியமுதல் சில விடுதலை வீரர்கள் வந்து "கொஞ்ச நேரம்" கதைக்கக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவர்களின் கொஞ்ச நேரத்துக்கு உண்மையான விளக்கம் பாலேந் திரனின் ஆயுள்காலம் என்பது சத்தியாவுக்குப் புரியா மலில்லை,
விடுதலை வீரர்களுடன் வந்திருந்த ஒரு பிரமுகர் அவளைப் பார்க்க வந்தார். அவள் அழகு ஏழ்மையுடன் அழிந்து போகவில்லை. சோகத்திலும் ஒரு அழகு. பிரமுகர் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தார். பாலேந்திரன் போல ஆட்கள் மக்களின் துரோகி என் Din ff.
அவள் மெளனமாகக் கேட்டுக்கொண்டு நின்றாள். அ-3

Page 24
42 .”。 அர்ைகுறை அடிம்ைகள்
அவர் குரல் இரக்கமாயிருந்தது.
பாலேந்திரனைப் பற்றி அவர் சொல்ல சொல்ன் அவளுக்கே இதுவரை பாலேந்திரனில் வைத்திருந்த நம்பிக்கை சந்தேகமாக இருந்தது.
"உனக்கு பாலேந்திரன் தங்களின்ரை ரகசியம் ஏதும் GSFmtar GomT IT IT?”
"ரகசியம் சொல்லுமளவுக்கு எனக்கும் பாலேந்திர னுக்கும் நெருங்கிய பழக்கமில்லை” அவள் அழுகை யினூடே சொன்னாள்.
பாலேந்திரன் அவளின் கணவனின் நண்பன், அவள்” பட்டினிக்கு ஏதோ ஒன்றிரண்டு உதவி செய்தவன்.
பிரமுகர் நிலவு வெளிச்சத்தில் அவளைப் பார்த்தார். அவளின் முகம் அவருக்குச் சரியாகத் தெரியவில்லை.
"குழந்தைகள் எப்படி” அவர் குரலில் இரக்கம் நடிப்போ உண்மையோ என்று அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
“செலவுக்கு வைத்துக் கொள்” புது நோட்டுகளைக் கையால் அவள் தொட்டு எத்தனையோ காலமாகி விட்டது.
நிலவு வெளிச்சத்தில் புது நோட்டுகள் மோகனமாய்ச் சிரித்தன. -
நீண்ட நேரம் அவள் தயங்க, அவர் குழந்தைக்ள், பட்டினி, பாவம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கடைசியாக அவள் அழுதுவிட்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 43
*உன்ர புருஷன் எங்களோட கொழுவ வந்த ஆள்” பிரமுகர் இறந்த காலத்துக்கு அவள் நினைவை இழுத்தார். அவளுக்கு நடராஜன் யாருக்கும் பிடிக்காமல் நடந்ததாக ஞாபகமல்லை. அவர் மிகவும் மெல்லிய குரலில் தேசக் கடமை, மக்கள் கடமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
புது நோட்டுக்கள் கல்லின் பாரத்திலமர்ந்திருத்து கண்ணடித்தன.
அவர் போய்விட்டார்.
குழந்தைகள் புது உடுப்பு போட்டன. அவள் அடுத்த நாளைக்குச் சாப்பாட்டுக்கு யோசிக்கவில்லை. அதன்பின் அவர் அடிக்கடி வந்தார். வீட்டுத் திண்ணை தாண்டி உள்ளுக்கும் வந்துவிட்டார். Ꮡ
அவள் இன்று அவருக்காகக் காத்திருப்பதுபோல் காத்திருக்கத் தொடங்கிவிட்டாள்.
அவர் ஊர்ப் பிரமுகர்களில் ஒருத்தர். இயக்கத்தில் ஒரு பிரமுகர். குழந்தை குட்டிகளுக்குத் தகப்பன்.
இரவில் வந்து போனார்.
அடுத்தவர்கள் அவள் நடத்தையில் இன்னும் சந்தேகம்
என்றும் இயக்கம் இந்த மாதிரி விடயங்களில் மிகக் கடுமையாக இருப்பதாகவும் சொன்னார்.
அவள்”அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டாள். இனி இந்தப் பக்கம் வராவிட்டால் நல்லது
என்று அரை குறை மனத்துடன் சொன்னாள்.
அவர் ஒன்றிரண்டு கிழமையாக வரவில்லை.

Page 25
d4 அரைகுறை அடிமைகள்
அவள் காத்துக் கொண்டேயிருக்கிறாள்.
இருளில் ஏதோ சலனம். யாரோ கிணற்றடியில் நிற்பது போன்ற பிரமை.
அவரைத் தவிர யாரும் இந்தப்பக்கம் வரமாட்டார் *கன் என்ற நம்பிக்கை.
நீங்களா?
அவள் மெல்லக் கேட்டுக் கொண்டு போனாள். ஒரு வெடிசத்தம். அவள் துவண்டு விழுந்தாள்.
அடுத்த நாள் இயக்கக்காரர் வந்து நடத்தை கெட்ட இந்தப் பெண்ணைக் கையும் களவுமாய்ப் பிடித்து மரண தண்டனை கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள்.
அரை குறை நித்திரையில் தானெழும்பும் போது அம்மாவுடன் சேர்ந்திருந்த பிரமுகர் இன்று பக்கத்து வீட்டுப் பத்தினிகள் பார்த்திருக்க அம்மாவின் மரணத் திற்கு நியாயம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பேய்களுக்கு யார் பயம்?
"வீடு வெறிச்சென்று கிடக்கிறது. வெளியில் நல்ல. வெயில் அடித்தது இன்றைக்கெல்லாம். எல்லோரும் வெளியில் போயிருப்பார்கள்."
* வெள்ளைக்காரர்கள் எப்போது கொஞ்சம் வெயி லடிக்கிறது என்று காத்திருப்பவர்கள் உல்லாசபிரயாணம் போக."
மகாதேவன் நடந்து வந்த களைப்பில் படுத்தபடி யோசிக்கிறான். எல்லோரும் சந்தோசமனுபவிக்கிறார்கள் வார விடுமுறையில். எங்களைப் போன்ற மாணவர் களால் முடியுமா?
"கிழமை நரட்களில் படிப்பு, வார விடுமுறையில் உழைப்பு" மகாதேவன் பெருமூச்சுடன் திரும்பிப் படுக்கிறான். மெல்லிய காற்று திறந்திருந்த ஜன்னல், சேலையைத் தடவிப் பிடித்து விளையாடுகிறது.
பின் நேரம் எட்டுமணியாகிறது. இன்னும் இருட்ட வில்லை. மெல்லிய மாலைப் பொழுதின் மயக்கமும் வேலை செய்து வந்த களைப்பும் கண்களை வருடுகின்றன.
எவ்வளவு சுகமாக இருக்கும் ஒரு நீண்ட நித்திரை யடித்தால்.

Page 26
46 அரைகுறை அடிமைகள்
மகாதேவன் நிமிர்ந்து படுத்தபடி முகட்டைப் பார்க் கிறான். உருப்படியாக, ஒரு யோசனையுமில்லாமல் சுவர்க்கரைகளில் பொருத்தப்பட்டுக் கிடக்கும் பைப்பு களில் பார்வைபடுகிறது. சாடையாகப் பதிந்து கிடக்கும், அல்லது வளைந்து-அல்லது வளைத்துக் கிடக்கும் அந்தத் தண்ணீர்ப் பைப்பில் அவன் பார்வை படுகிறது.
இந்த அறைக்கு வந்து இரண்டு கிழமையில் ஒன்றி ரண்டுதரம் இப்படி மல்லாக்காகப் படுத்துக் கூரையை ஆராய்ந்து அந்தப் பைப்புகளில் பார்வை பதிந்து. O மகாதேவன் புரண்டு படுக்கிறான். ஏனோ மூலையைப் பார்க்க அவன் விரும்பவில்லை.
* இன்றுமட்டுமல்ல வந்து இரண்டு கிழமைகளில் முதல் தரம் அந்தப் பைப்புகளில் பார்வை பதிந்தபோதே ஏதோ
அவன் ஞாபகப்படுத்த விரும்பாத ஒரு நினைவை யாரோ
வலிய ஞாபகப் படுத்தினாற்போல்.
மகாதேவன் அதற்குமேல் படுத்திருக்கவிரும்பவில்லை. கிட்டத்தட்ட ஒரு நித்திரையடித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்ற நப்பாசையும் போய்விட்டது. "குளிக்க வேண்டும், ஏதும் சமைக்க வேண்டும், நாளைக்கு முடிக்க வேண்டிய சில கொலிஜ் நோட்ஸ் இருக்கின்றன."
சேர்ட் கழட்டவும் ஜன்னலால் "சில்” என்ற காற்று உடம்பில் சேட்டை விடவும் அவன் உடம்பை நெளிக் கிறான். கைகள் ஜன்னலைப் பூட்டப் போகின்றன. ஒவ்வொரு தரமும் அவன் அந்த ஜன்னலைப் பூட்டப் போகும் போதும் அவன் பார்வை எங்கு போகுமோ அங்கே போகிறது. இருண்டு கொண்டு வரும் மாலைப் பொழுதின் மெல்லிய இருளில் தெரியும் ஆயிரக்கணக்கான சிலுவைகளையுடைய சவக்காலை அவன் பார்வையில் படுகிறது. முதல் தரம் வீட்டுக்காரப் பெண் அறையைக் ஆகாட்டக் கொண்டு வந்த போது ஜன்னற் பக்கம் வந்த

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 47
போது அவன் பார்வையில் தூரத்தே சவக்காலை
தெரிந்த போது தர்மசங்கடப்பட்டான்.
அவன் மூட நம்பிக்கையுள்ளவன் இல்லை. ஆனால். "பேய்களுக்கு பயமா”பெருத்த உடம்பும் சின்னக் கண்களு முடைய சின்னயானைக் குட்டி போல் நடக்கும் மிஸஸ் பார்னட் அவனைக் கேட்டவுடன் தோள்களைக் குலுக்கி விட்டு "அப்படி ஒன்றுமில்லை” என்றான்.
"பேய்களுக்கு யார் பயம்? அப்படி ஒன்றிருந்தால் அதை உண்டாக்கியவர்கள் பயப்படட்டும். கடவுளை உண்டாக்கியவர்கள் தானே திருவிழா வைக்கிறார்கள்? மகாதேவன் குளியலறைக்குப் போய் ஹீட்டரைப் போடுகிறான் சுடுதண்ணிர் வர.
கீழே கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது வீட்டுக் காரர்கள் வருகிறார்களாக்கும்!
அவர்கள் சமைக்கத் தொடங்கமுதல் சமைத்து விட்டால் கரைச்சல் இல்லை. தண்ணீர் சூடாக முதல் கெதியாகச் சமைக்கலாம். இந்தியன் 'கடையில் வாங்கிய ஆட்டிறைச்சியையும் அரிசி சாமான்களையும் திறந்து கொண்டு படிகளில் இறங்குகிறான். முன்கதவு ஆவென்று திறந்து கிடக்கிறது. இருள் பரவும் வீட்டில் வெளியில் தெருவிளக்கிலிருந்து வரும் வெளிச்சம் பட்டுத்தெறிக் கிறது. "கதவைத் திறந்தவர்கள் பூட்டுவதற்கென்ன? மனதில் முனு முணுத்துக்கொண்டு கீழேயிறங்கியவன் பூட்டியபடி கிடக்கும் முன் அறையைப் பார்த்துத் திடுக் கிடுகிறான்.
மிஸ்ரர் அன்ட் மிஸஸ் பார்னட் வந்திருந்தால் முதல் வேலையாக, முன்னறையைத்தான் திறப்பார்கள். மேலே, மகாதேவன் அறைக்குப் பக்கத்தில் இருக்குமறையில் சீவிக்கும் எலியட் வந்திருந்தால் "ஹலோ மகாதேவன்" சொல்லாமல் கதவைத் திறந்திருக்க மாட்டான்.

Page 27
48 அரைகுறை அடிமைகள்
மகாதேவன் அப்படியே நிற்கிறான். திறந்திருந்த கதவு காற்றிற்கு மெல்ல முன்னும் பின்னும் அசைகிறது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவன் நிழல். சட்டென்று தவைச் சாத்திவிட்டு ஹோல் லைட்டைப் போட்டுவிட்டு சமையல் அறைக்குள் போகிறான். "யார் திறந்தார்கள் கதவை? கள்ளனாக இருக்குமோ? சரியாக இருளாத இந்த நேரத்தில் வீட்டுக்குள் வரக்கூடிய கள்ளன் செயின் அல்பேன்ஸில் இருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு.
நான் சரியாகப் பூட்டாமல் விட்டிருக்கலாம். வீட்டுக்குள் வரமுதல்", மகாதேவன் அரிசியைக் கழுவியபடி யோசிக்கிறான்.
வீட்டில் ஒரேடியாக நிசப்தமாக இருக்கிறது. மேலே போய் கசட்டில் தமிழ்ப்பாட்டைப் போட்டுவிட்டு கீழே வருகிறான். செளந்தரராஜனின் கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டு மனதுக்கு இதமாக இருக்கிறது. கசட் பாட்டுக்கள் முடியவும் ஆட்டுக்கறிச் சமையலும் முடிகிறது.
சாப்பாடு ஆற (முதல் ஒரு குளிப்படித்து விட்டு. அவசர அவசரமாகத் தண்ணிரைத் திறந்துவிடுகிறான். வெள்ளை வெளிரென்ற பாத்ரப்புக்குள் நீர் நிரம்பி வழிகிறது. அருமையான குளிப்பும் ஆட்டுக்கறியும் உடம்புச் சோர்வை அகற்றிவிட்டது.
"நாளைக்கு முடிக்கவேண்டிய நோட்ஸ் எல்லாம் முடித்துவிட்டால் டெலிவிஷனில் ஏதும் பார்க்கலாம்." அவன் திட்டங்களை மீறி நித்திரைதேவி ஜாலம் பண்ணி விட்டாள்.
மகாதேவன் அரைகுறை நித்திரையில் எழும்பி லைட் ஒவ் பண்ணுகிறான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 49
*கீழே, ஹோலில் போட்ட லைட்?" ஒரு நிமிடம்: யோசிக்கிறான். -
"பாவம் கிழட்டு பார்னட்ஸ் தம்பதிகள் இரவில் இருட்டில் கதவைத் திறந்து ஏன் கஷ்டப்பட வேண்டும்?” கீழேயுள்ள ஹோலில் லைட்டை எரியவிட்டு கதவைப் பூட்டிவிட்டுப் படுக்கிறான்.
கொஞ்ச நேரத்தில் தூக்கமும் விழிப்புமற்ற இரண்டும் கெட்டான் உணர்வு மகாதேவனுக்கு. கண் களைத் திறக்க வேண்டும் போன்ற உணர்ச்சி. திறக்க, முடியவில்லை. நித்திரை கொள்ளவேண்டும் என்ற தவிப்பு. மனம் சாந்தியில்லாத பிரமை.
ஏதோ அரை குறைச் சம்பவங்கள், மனிதர்கள். சம்பாஷணைகள். அவன் புரண்டு புரண்டு படுக்கிறான். அம்மா அப்பா சகோதரங்கள் எல்லோரிலும் அன்புதான். அன்பின் பிணைப்பில் உண்டாகும் வேதனையில் துடித்த நாட்கள் போதும், வேதனையைப் பகிர்ந்து கொள்ள எந்தச் சிநேகிதர்களும் அருகில் இல்லை.
இலங்கையால் வந்தவுடன் லண்டனில் சிநேகிதர் களுடன் இருந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்குமோ தெரியாது. தாய் தந்தையரின் பிரிவு. பிரிவு மட்டுமா..?” புதுநாட்டுச் சீவியம், பொல்லாத குளிர், மண்டைக்கனம் பிடித்த சில ஆங்கிலேயரின் அவமதிப்பான நடத்தை இதை எல்லாம் சகித்துப் பழக எவ்வளவு பாடு. எல்லாத் திடமான உரமான மனப்பான்மையும் தகர்ந்து கொண்டு போவது போன்ற உணர்ச்சி. தனிமையான வாழ்க்கை ஒரு காரணமாக இருக்கலாம். நினைவுகளை உதறிவிட்டு நித்திரை கொள்ள படாத பாடுபடுகிறான்.
இந்த அறைக்கு வந்து இரண்டு கிழமைகளாகியும் சரியான நித்திரையில்லை. வந்த நாட்களில் புது இடமான படியால் இருக்கலாம் என்றுதான் நினைத்தான்.

Page 28
SO அரைகுறை அடிமைகள்
வீடு பழகி, வீட்டு மனிதர்களுடனும் ஒரு மாதிரிப் பழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த அறை.? இரவு..? விளக்கமுடியாத ஏதோ ஒன்று. தூரத்தில் தெரியும் சவக்காலை காரணமா? அரைகுறை நித்திரையிலும் மூட நம்பிக்கைகளை நினைத்து மெல்லிய சிரிப்பு நெளிகிறது.
நீண்ட நேரப் போராட்டத்தின் பின் ஒரேயடியான களைப்பில் உணர்வு தளர்ந்த போது.
கிறிச்,
கதவு திறந்த சத்தம். அதைத்தொடர்ந்து மெல்லிய சோக நினைவுகளைத் தூண்டும், அன்பான யாரையோ ஞாபகப்படுததும் ஒரு சுகந்த மணம்.
மல்லிகையின் இளம் மணம். மூக்கைத் துளைக்காத கொடி மல்லிகைப் பூவின்.
லண்டனில் எங்கே மல்லிகை மல்லிகை மணம்
நிரம்பிய வாசனைத் தைலம் நித்திரையில்லை. நிச்சய
மாக மகாதேவன் நித்திரையில்லை என்பது தெரிகிறது அவன் வியர்த்துக் கொட்டுவதிலிருந்து.
தன் திடமெல்லாம் பா வித்து , படாரென்று போர்வையை உதறிவிட்டு எழுந்தான். எழுந்த அடுத்த வினாடி லைட்டைப் போட்டான். அவன் கனவு காணவில்லை, நிச்சயமாக அந்தக் கதவு பூட்டித்தான் இருந்தது அவன் படுக்கும்போது.
இப்போது
முன்கதவு திறந்து கிடந்ததுபோல் ஆவென்று திறந்துகிடக்கிறது. மகாதேவன் மேலே எதையும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 5
யோசித்துக் குழம்பத் தயாராய் இல்லை. இனி நித்திரை கொண்ட பாடு இல்லை. நோட்ஸ் என்றாலும் எடுக் கலாம். ஒரு கோப்பி போட்டுக் குடித்துவிட்டு வெளியில் வந்தவன் திடுக்கிட்டான்.
அவன் சரியாகத் தன் கதவைப் பூட்டாமல் படுத்ததால்
அது திறந்திருக்கலாம். ஆனால் வயதுபோன தம்பதி
களுக்குப் பரிதாபப்பட்டு ஹோலில் போட்டு வைத்திருந்த - லைட்..?
வெளியில் கும்மிருட்டு, "யார் ஒல் பண்ணியிருப் பார்கள்? பேய்களுக்குப் பயமோ இல்லையோ ஏதோ ஒரு உறுத்தல் மனதில், யோசனையுடன் கீழே இறங்கி வந்தவன் பின்னேரம் போல் பார்னட் தம்பதிகளின் முன்னறை பூட்டிக்கிடப்பதைப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் விழிக்கிறான். யோசித்து என்ன பயன்?
லைட் போட்டுவிட்டு படிப்புத் தொடர்கிறது. :பார்னட் தம்பதிகள் அடுத்தநாள் வந்தார்கள். மகளுக்குப் பிள்ளை பிறந்ததாம் மான் செஸ்டர் போய் வந்தார் களாம். பக்கத்து அறை எலியட் வழக்கம் போல் காலையில் வந்து சேர்ந்தான் லண்டனிலிருந்து. இருவரும் கொலிஜ்ஜுக்குப் போக பஸ்ஸில் ஏறியுட்கார்ந்தார்கள்.
செயின் அல்பேன்ஸ் மார்க்கட் பிளேசிலிருந்து பஸ் நகரத்தொடங்கியது. மங்கி மழுங்கிய பழையகாலக் கட்டடங்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் மகாதேவன். "என்ன கண் சிவந்திருக்கிறது? வீட்டில் யாருமிருக்கவில்லை. கேர்ள் பிரண்டைக் கூட்டிக்கொண்டு வந்தாயோ?” எலியட் நித்திரையின் றிச் சிவந்து போய் இருக்கும் மகாதேவனின் கண்களைப் பார்த்தபடி சொல் கிறான் குறும்பாக. இளம் வயதில் நித்திரையில்லாமல் இருப்பதற்கு "செக்ஸ்" தவிர வேறொரு காரணமும்

Page 29
52 அரைகுறை அடிமைகள்
இருக்கக் கூடாதா? எலியட்டை கேட்கலாமா ஏதும் விசித்திரமான அனுபவம் கிடைத்ததா அந்த வீட்டில் என்று? அவன் எனக்கு முதல் குடிவந்தவன் அந்த வீட்டில்!
பேய்க்குப் பயப்படுகிறேன் என்று பகிடி பண்ண மாட்டானா? எலியட் முசுப்பாத்திக்காரன் சிரித்துவிட்டுப்போகடுட்ம்.
"எலியட்" தயங்குகிறான் மகாதேவன்.
*என்ன பேய்க்கதை சொல்லப் போகிறாயா?” எலியட்டின் இந்தக் கேள்வி மகாதேவனைத் திடுக்கிடப் பண்ணுகிறது.
"பேயோ பிசாசோ, சரியாக நித்திரை வரவில்லை” திடுக்கிட்டதைக் காட்டிக் கொள்ளாமல் மகாதேவன் சொல்லுகிறான்.
*செயின் அல்பேன்ஸ் ஒரு காலத்தில் ரோமரின் யுத்த. பூமியாக இருந்தது. ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் செத்த பூமி இது. இந்த ஊர்ச்சனம் ஒரே பேய்க்கதை களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். முட்டாள் சனங்கள். உனக்கு முதல் அந்த அறையில் இருந்த பொடியனும் தன்னால் சரியாக நித்திரை கொள்ள முடியவில்லை என்று சொல்லுவான். நான் ரோமன் போர்வீரர்களைப் பற்றி விசாரிப்பேன்" எலியட் தன் பகிடிக்குரலில் சொல்கிறான். மல்லிகை வாசத்தில் வாசனைத் திரவியம் போட்ட போர் வீரர்களா? மகாதேவன் ஒன்றும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியில் பார்க்கிறான்.
கொலிஜ் பரீட்சை தொடங்கிவிட்டது. மூச்சுவிட நேரமில்லாத படிப்பு. அந்துடன் அடிக்கடி தலையிடி வேறு. அன்றிரவு மின்னலுடன் இடி மழை ஜன்னல்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 53
உடைந்து விழும்போல் அகோரமான காற்று வேறு. இரவு நீண்ட நேரம் படித்துவிட்டுத் தன் பாட்டிற்கு கண் முடப் - التكيـك سـالا
கதவு திறந்த சத்தம், இழவு. பிடித்தக்காற்று. அவன் முணுமுணுக்கவில்லை. மனதில் சொல்லிக் கொள்கிறான். மெல்லிய கொடி மல்லிகைப் பூவின் வாசம்.
எக்காரணம் கொண்டும் ஒருநாளும் நினைக்கக் கூடாது என்று சங்கல்ப்பம் பண்ணிய சம்பவங்கள் அடக்க முடியாமல் நினைவில் ஊசலாடுகின்றன.
மல்லிகை மணம். பெரியக்கா!
மகாதேவன் வேதனையுடன் புரண்டு படுக்கிறான். வேதனை பரவிய.சோகத்தைச் சுமந்தபடி பெரியக்காவின் முகம். குறுகுறுப்பும் கொல் என்ற சிரிப்பையும் கொண்ட அக்கா எப்படி மாறிப்போனாள்? w
அக்கா எப்பவும் கெட்டிக்காரி. இளம் வயதில் பட்ட தாரியாகி அனுராதபுரத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலையில் வேலை கிடைத்தது. ஆறுமாதம் கூட இல்லை வேலைக்குச் சேர்ந்து.
அந்த 77-ம் ஆண்டுக் கலவரம்! "
அக்காவை வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அக்காவின் முகத்தில் குறுகுறுப்பில்லை. கொல்லென்ற சிரிப்பை யாரும் கேட்டில்லை. யாருடனும் கதைக்க வில்லை. பார்வை வெறித்திருக்க.
யாரும் அவனுக்குச் சொல்வார் இல்லை. அவன் சின்னப்பிள்ளையாம்-இங்கிலாந்துக்குப் படி க்க வர ஒழுங்குகள் செய்து கொண்டிருக்கிறான். அக்காவிற்கு

Page 30
54 அரைகுறை அடிமைகள்
என்ன நடந்ததென்று சொல்லாமலே அவன் ஊகித்துக் கொண்டான். கலவரம் போன போக்கில், ஆயிரக்கணக் கான தமிழ்ப் பெண்களுக்கு எது நடந்ததோ அதுதான் அக்காவிற்கும் நடந்தது.
O காட்டுப் பூனைகளின் மிருக வெறிக்கு அகப்பட்ட கூண்டுக் கிளியைக் கேட்க முடியுமா உனக்கு என்ன நடந்ததென்று
ஊர் உறங்கும் இரவுகளில் தனியே இருந்து தானழுத தமிழ்ப் பெண்களில் ஒருத்தியாக என் தமக்கை. ஒரு நடு இரவு ஒன்றுக்குப் போக எழுந்தவன் கண்சிமிட்டும் நட்சத்திரங்களின் துணையுடன் தென்னை மரத்தில் சாய்திருந்து அழும் தமக்கையைக் கண்டான்.
"அக்கா’ அவன் குரலுக்குத் திரும்பியவள் அவன் பார்க்கக்கூடாது என்பதற்காகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள் றெளிங்கவுணில்.
தேய் நிலவின் மெல்லிய ஒலி தென்னம் கீற்றால் எட்டிப்பார்க்க அந்த வெளிச்சத்தில் அக்காவின் குளம் கட்டிய கடைவிழிகளைப் பார்க்கிறான் அவன்.
"இந்த நேரத்தில் வெளியில் என்ன வேலை. அவன் தடுமாறினான். பாட்டி சொல்வது ஞாபகம் வந்தது "பேய்கள் உலவும் நேரம்" அவள் வெறித்துப் பார்த்தாள்.
பின்னர் எழுந்து வீட்டுக்குள் போனாள். அவன் முன் ஹோலுக்குள் வந்து படுத்தான். நித்திரை வரவில்லை.
ஏதோ சத்தம் என்ன சத்தம்? குசினியில் பூனையா? உறியில் உள்ள மீன், பலகாரங்களை எடுக்க பூனை பாய்வதுண்டு.

ர்ர்ஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 55
எழும்பிக் குசினிப்பக்கம் போனான். கதவு உட்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.
உட்பக்கம் பூட்டு
ஜன்னலுக்குப் போட்ட வலைக்கம்பிக்குள்ளாக பார்த்தவனுக்கு. உறியில் மீன் பொறியல் தொங்க வில்லை, பெண்மையழிந்து வெறும் பெயராய் நடமாடிய பெரியக்காவின் வெற்றுடம்பு.
"அக்கா. அக்கா. அவன் அலறல்.
மகாதேவன் திடுக்கிட்டு எழுந்தான். கூரையில் உள்ள வளைந்த பைப்பில் தொங்கும் அந்த உடம்பு. என்ன கனவா? நனவா?
உடம்பு சில்லிட்டு வியர்த்து, நாடி படபடத்து க்ைகள் உதற அவன் லைட்போட்டான்.
ஒன்றுமில்லை. அந்த வளைந்த பைப்பை வெறுத்துப் பார்த்தான். வெறித்துப் பார்த்தான்.
அந்த இரவு விடியாத நீண்ட இரவாக இருந்தது மகாதேவனுக்கு.
அக்காவின் செத்த வீட்டிற்குப்பின் இன்றுதான் இரண்டாம் தரம் அழுகிறான். சிவில் எஞ்சினியரிங் நோட்ஸ் நீர்த்துளிகளில் நனைவதை மறந்து அழுகிறான்.
அன்று காலையில் கண்கள் ஏன் சிவந்திருக்கிறது என்று எலியட் கேட்க முதல் கொலிஜ்ஜுக்குப் போய் விட்டான். அறையில் நிம்மதியாக இருந்து படிக்க - முடியவில்லை.

Page 31
s6 அரைகுறை அடிமைகள்
பின்நேரம் கிழவன் பார்ணட் கதவைத் தட்டினான். சோர்ந்த முகத்துடன் கதவைத் திறந்தான் மகாதேவன். கிழவன் அவனைப் பரிதாபத்துடன் ஏறிட்டுப் பார்க் கிறான். என்ன கிழவன் கேட்கப்போகிறான்? வாடகை கூட்டப் போகிறானா? அல்லது. கிழவன் அவ்வளவு மோசமில்லை.
கிழவன் தயக்கத்துடன் கேட்கிறான் *டிற்பூ ஹாவ் எனி நைட் மயா லாஸ்ற் நைட்" (நேற்றிரவு என்னவும் பயங்கரக்கனவு கண்டாயா?)
மகாதேவன் பேசாமல் இருக்கிறான்.
என்ன கேட்கிறான் கிழவன்?
"ஏதோ சத்தம் போட்டாய் போலக் கேட்டது இரவு" கிழவன் உற்றுப் பார்த்துக் கேட்கிறான். -
அக்காவைக் கனவுகண்டு அழுததைச் சொல்லலாமா? ஆட்களுக்குக் கேட்கக்கூடியதாகவா அழுதேன். கேட்கா விட்டால் ஏன் கிழவன் கேட்கிறான். ஏன் யாரும் கதை கட்டவேண்டும்.
மகாதேவன் தயங்குகிறான். கிழவனின் பார்வை வளைந்த அந்த தண்ணீர்ப் பைப்பில் பதிகிறது.
*சொல்லலாமா கிழவனுக்கு அந்தப் பைப்பில் தான் என் அக்காவின் உடம்பைக் கண்டேன் என்று."
கிழவன் மகாதேவனைப் பரிவுடன் தடவுகிறான் தகப்பனைப்போல.
"நான் உனக்குச் சொல்லியிருக்க வேண்டும் நீ வந்த தாளில்' கிழவனின் குரல் தடைப்படுகிறது.
என்ன சொல்கிறான் இவன்?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 57
இந்த அறையில் ஒரு பெண் தற்கொலை செய்தாள் கிழவன் மகாதேவனின் முகத்திலிருந்து பார்வையை எடுக்கவில்லை. மகாதேவனின் முகம் திடுக்கிடுவது ஆச்சரியத்தால் என்று நினைக்கலாம்.
"அந்தப்பெண்ணும் இலங்கையைச் சேர்ந்தவள்தான். பக்கத்து ஆஸ்பத்திரியில் நேர்ஸாக இருந்தாள். ஒரு வெள்ளைக்காரனுடன் சீவியம். குழந்தை வயிற்றில், அவன் எங்கே போனானோ தெரியாது” கிழவன் சொல்லி விட்டு இருக்கிறான். என்ன மறுமொழி சொல்ல இருக்கிறது.
"சிலர் ஒழுக்கம் பண்பு என்பது உயிரைவிட மேலானது என்று நினைப்பதுண்டு” கிழவன் சொல்கிறான்.
மகாதேவனின் கண்கள் கிழவன் இருப்பதையும் மறந்து கலங்குகின்றன.
ஒழுக்கம் உயிரைவிட மேலாக நினைத்துத்தான் என் தமக்கை.
அவன் சொல்லவில்லை கிழவனுக்கு.
"எங்கள் நாட்டுப் பெண்கள் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் விதம் வேறு; உங்கள் நாட்டு பெண்களின் வாழ்க்கையும் மனப் போக்கும் வேறு. இந்த அறையில் எத்தனையோ பேர் அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப் பின் இருந்திருக்கிறார்கள். ஒரு சில அனுபவங்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உன்னைப்போல் சத்தம் போடவில்லை."
கிழவன் மெல்லமாகச் சொல்கிறான். sy - 4

Page 32
58 அரைகுறை அடிமைகள்
நான் பேய்க்கு பயந்து சத்தம் போடவில்லை என்பதை என்னென்று சொல்வது? என் தமக்கையின் நினைவில் அழுதேன் என்று சொன்னால் நம்புவானா கிழவன்?
"பேய்க்குப் பயமா? கிழவன் கேட்கிறான். மகாதேவன் வெறித்துப் பார்க்கிறான்.
பேய்களை உண்டாக்கி உலகத்தை * றிஞ்சும், மனிதப் பேய்க்கூட்டத்தைக் கண்டுதான் பயப்படுகிறேன்.
த மாதிரிப் பேய்க்கூட்டத்திை
உண்மையுமுள்ள பூசாரிகள்
என்று சொன்னால்
ஒரு காலத்தில், அந் அழிக்க, வல்லமையும் உண்டாவாரென நம்புகிறேன் கிழவனுக்கு விளங்குமா?
அலை”
女女女

LOVE YOU
சிவன் அவளுக்காகக் காத்திருக்கிறான்.
அவனைச் சுற்றிய உலகத்தைப்பற்றிக் கவலையின்றிக்
em as *ܫܝ ܘܣ ܗܣܡܘܡ ܩܪ ܦr܂ܢ ܢ ܝܚܝܼܝܗܗܗ
மார்களி மாதக் குளிர் உடம்பைத் தாண்டி எலும்புகளில் உறைகிறது. W
அவன் குளிரும் கிைகளைப் பொத் டுகளுக்குன் புதைத்துக் கொண்டான். அவனைத் தாண்டி ஒடும் நினைவுகளை புதைக்க இடம் தெரியவில்லை. அவள் ஒரு நாளும் நேரம் தவறியதாக அவனுக்குத் தெரியாது. அவளுக்காக அவன் இதுவரையும் இரு நாளும் காத்திருக்கவில்லை. ஆனால் அவளைத் தெரியத் தொடங்கிய நாளிலிருந்து சரியான நேரத்துக்குப் பஸ் திலையத் துக்கு வருவதைப் பார்த்திருக்கிறான்.
இருவரும் கதைக்கத் தொடங்கி ஒன்றிரண்டு மாதங் களாகின்றன.
வேறும் “ஹலோ"வில் தொடங்கிய சினேகிதம் இன்று அவளுக்காகக் காத் திருக்கும் வரை Avšs/ ou o

Page 33
60 அரைகுறை அடிமைகள்
மழை இன்னொருதரம் தூரத் தொடங்கிவிட்டது. பாதாள ரெயிலுக்குப்போகும் மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு அவனைத் தாண்டிப் போய்க கொண் டிருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் என்னைப் போல் யாரோ ஒரு பெண்ணுக்காகக் காத்திருப்பார்கள்?
சங்கர் தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான். போவோர் வருவோரில் யாரும் இலங்கைத் தமிழர் முகம் பட்டு விடக்கூடாதே என்ற தவிப்பும் மனதில் ஒரு மூலையில்லாமலில்லை. பாதாள ரெயிலில் பாதையில் ஒரு கிற்றாகாரன் ஜோன் வில்லயித்தை உருக்கமாக வாசித்து தள்ளுகிறான்.
சிவசங்கர் தவிப்புடன் அங்குமிங்கும் பார்வையைத் தாவ விடுகிறான்.
"வராமலே விட்டு விடுவாளோ?
பாதாள ரெயில் பாதையில் வாசிக்கும் "கிற்றாரில் ஒரு அபஸ்வரம் ஏற்பட்டாற்போலிருக்கிறது. அவள் வராமலே விட்டு விடுவாளோ என்ற கேள்வி. சிந்தியா" அவளின் பெயர் ஆங்கிலேயேப் பெண்களுக்கு என்னென்ன மாதிரிப் பெயர்கள் இருக்கும். ஜரிஸ், ஸ்கொட்டிஷ் பெண்களுக்கு என்ன மாதிரிப் பெயர்கள் இருக்கும் என்று அவன் ஒரு நாளும் நினைத்துப் பார்க்கவில்லை.
My name is Cynthia 6Taird) glyougi gyóglaig.5 தன்னையறிமுகம் செய்தபோது எனது பெயர் "இந்தியா என்ற மாதிரிக் கேட்டது. அவனுக்கு அவள் பெயரை நினைக்கும்போது அவனின் நண்பன் மனோகரனையும் நினைக்காமலிருக்க முடியவில்லை.
மனோகரனுக்கு இந்தியாவையோ இந்தியரையையோ பிடிக்காது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 6.
"வடக்கத்தியான்" என்று நினைத்து வளர்ந்த ஆணவம் அவன் பேச்சிலிருக்கும். பிச்சைக்கார இந்தியாவை அவன் கிண்டலாகப் பேசுவான். சிந்தியாவையும் அவன் பெரிதாக மதிக்கவில்லை என்று தெரிந்தபோது சிவசங்கர் ஆச்சரியப் படவில்லை.
மனோகரனுக்கு யாரையும் அல்லது எதையும் சரியாக மதிக்கவோ எடை போடவோ முடியும் என சிவசங்கர் தம்பத் தயாரில்லை ஆனாலும் இருவரும் நண்பர்கள்.
ஏஜென்சிக்கும் காசு கட்டத் தொடங்கியதிலிருந்து எத்தனையோ பிளேன் ஏறி எத்தனையோ ஆபிரிக்க நாட்டு ஹோட்டல்களில் தங்கி இங்கிலாந்துக்குப் பிளேன் ஏறி, பிளேனில் வைத்துப் பாஸ்போட்டைக் கிழித் தெறிந்து விட்டு அகதிகளாக லண்டனுக்கு வந்ததிலிருந்து எப்போதும் ஒன்றாக வசிக்கும் சினேகிதர்கள். படிப்பு படித்தவர்களின் உபதேசம், நட்பு, உலக அனுபவங்கள் என்பன ஒரு மனிதனின் சிந்தனையைச் செழுமை யாக்குகிறது என்பது சிவசங்கரனுக்குத் தெரிந்தாலும் ஒன்றாக வசிக்கும் மனோகரனின் நட்பு எப்படித் தன் சிந்தனைகளை மாற்றுகிறது என்பதைத் தவிர்க்க, முடியாது வாழ்ந்து கொண்டிருந்தான்.
லண்டன் வந்ததும் லண்டன் வாழ்க்கையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ள அல்லது வாழ்க்கை போராட்டத்தில் நீச்சலடிக்க ஒரு சினேகிதம் என இருப்பவன் மனோகரன். சிவசங்கரனுக்கு மனோகரனின் வியாக்கியானங்கள் சில வேளைகளில் எரிச்சலையுண்டாக் கினாலும் வேறு வழியில்லை என்று பொறுத்துக், கொண்டான்.
சிந்தியாவைக் கண்டதும் அவள் சினேகிதம் நெருங்கத் தொடங்கியதும் சிவசங்கர் மூன்றாம் பேர்வழி ஒருத்தர்

Page 34
62 அரைகுறை அடிமைகள்
தன் வாழ்க்கையில் முக்கிய பங்கு எடுப்பதைப் பற்றிச் சந்தோசப்பட்டுக் கொண்டன்.
அவளைக் கண்டதும் பழகியதும் கனவு போலிருந்தது. சிவசங்கரன் ஒரு இந்தியக் கடையில் கையாளாக வேலை செய்கிறான். இலங்கையில் படியாத பையன்கள் செய்யும் வேலை. சிவசங்கரன் யாழ்ப்பாணம் யூனிவர்ஸ்சிட்டியில் அரைகுறையாகப் படிப்பை முடித்துக் கொண்டு (அல்லது முறித்துக் கொண்டு) உயிரைக் காப்பாற்ற அகதியாய் வந்து சேர்ந்தவன். கொழும்பில் மனோகரனின் சினேகிதம் கிடைத்தது. மனோகரன் தான் ஒரு இயக்கத்தைச் சேர்ந் திருந்தவரென்றும் இப்போது "எதிரிகள்" தன்னைத் தேடித் திரிவதாகவும், நாட்டை விட்டுத் தான் ஒடிப்போக முயற்சிப்பதாகவும் சிவசங்கரனிடம் சொன்னான்.
சிவசங்கர் சாதாரண குடும்பத்தில் ஒரு ஆசிரியரின் மகனாகப் பிறந்து பல கஷ்டப்பட்டு யூனிவர்சிட்டி வரைக்கும் போனவன். தேவையில்லாதவர்கள் யாரோ இவனைப் பற்றி யாருக்கோ வத்தி வைக்க அது அவன் உயிரைக் குடிக்குமளவுக்கு வந்து விட்டது.
அப்பாவின் பொருட்கள், அம்மாவின் அழுகை, அக்காமாரின் நகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்து விட்டன.
குடும்பத்தார்க்கு மூத்தவன் பொறுப் புக ள் எத்தனையோ ஏஜென்சிக்காரனுக்கு கட்டிய காசு கொடுக்க ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டிய திர்ப்பந்தம்.
கடைக்கார இந்தியாக்காரன் ஏதோ கருணை செய்வதுபோல் பன்னிரண்டு மணித்தியால வேலைக்கு பதினைந்து பவுண் தருவதாகச் சொன்னபோது ஆறு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 63
தாள் வேளைக்கு தொண்ணுறு பவுனும் அதில் சாப்பாட்டுக்கும் வாடகைக்கும் நாற்பது “ பவுண் போனாலும் இன்றைக்கு ஐம்பது பவுண் மிச்சம் பிடித்து எப்படியும் கடன் அடைக்க வேண்டும் என்ற நப்பாசை. மனோகரன் வழக்கம்போல் இந்தியனைத் திட்டினான் பெட்டிகளையும் பார்சல்களையும் தூக்கிக் களைத்து விட்டு வரும்போது வந்ததே அர்த்தமற்ற செயலாக தெரிந்தது சிவசங்கரனுக்கு.
படித்து ஆளாகி ஒரு நல்ல வேலையிற் சேர்ந்து ஒரு நல்ல பெண்ணை (அல்லது அழகான பெண்ணை) கல்யாணம் செய்யவேண்டும் என்ற கனவெல்லாம் எப்போதோ மண்ணாகிவிட்டது.
*போடா மடையாா இலங்கையிற் படித்துப் பட்டம் பெற்றாலும் பெண் தராத பெரிய மனிதரெல்லாம் லண்டன் மாப்பிள்ளை என்றால் விழுந்தடித்துக் கொண்டு இலட்சக்கணக்காகக் கொட்டக் காத்திருக்கிறார்கள்” மனோகரன் பெருமையுடன் சொன்னான்.
சிவசங்கரன் தான் ஒரு நாளும் முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்குத் தன்னை விற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சொன்னபோது மனோகரன் ஒகோ என்று பெரிய சத்தம் போட்டுச் சிரித்தான்.
வாழத் தெரியாத முட்டாள் என்று சிவசங்கரனைப் பார்த்துச் சிரித்தான். சிவசங்கரன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.
வேலையிடத்திலிருக்கும் பஸ் நிலையத்துக்கு வந்த போது “ஹலோ பிரதர்" என்று சிரித்தபடி, வந்த மூன்று கறுத்த இளைஞர்களைக் கண்டதும் வயிறு கலங்கி விட்டது.சிவசங்கரனுக்கு.

Page 35
64 அரைகுறை அடிமைகள்
அவர்கள் இவன் கழுத்தைத் தடவிப் பார்த்தார்கள். கைகளை இழுத்துப் பார்த்தார்கள். அம்மா கடவுள் பெயரைச் சொல்லி போட்ட பிள்ளையார் உருவம் பதித்த பதக்கத்துடன் அவன் செயின் பறிபோனது. மாமா ஆசை யாகக் கொடுத்த கைக்கடிகாரம் கறுப்பனொருத்தன் விரலில் சுருண்டு கிடந்தது.
இரவு பத்து மணிக்குமேல், இவர்கள் இவனை உயிரோடு விட்டாற் போதுமென்றிருந்தது. கடவுள்களை எல்லாம் வேண்டிக் கொண்டான். இருந்தாற்போல் பட்டென்று ஒன்றிரண்டு கார்கள் அதிலிருந்து யூனிபோர்ம் போடாத பொலிசார். கறுப்பு இளைஞர்கள்: கலங்கிவிட்டார்கள்,
அவன் தான் நினைத்த கடவுள்தான் தன்னைக் காப்பாற்றிவிட்டதாகப் பிரார்த்தனை செய்தான்.
அடுத்த நாள் பயத்துடன் பஸ்சிற்கு வந்துகொண் டிருந்தபோது "ஹலோ” என்று சிரித்த பெண்ணைப் பார்த்தான். எத்தனையோ தரம் இந்த பஸ் நிலையத்தில் கண்டிருக்கிறான். அவன் சில வேளை பன்னிரண்டு. மணி வரைக்கும் வேலை செய்வான். அதன்பின் பஸ் நிலையத்துக்கு வரும்போது அவளும் வருவாள். என்ன வேலை செய்கிறாள் என்று கேட்கத் துணிவில்லை. அவன் கடைக்கு வரும் ஆங்கிலேயப் பெண்கள் அல்லது பஸ்ஸில் சந்திக்கும் ஆங்கிலேயக் கொண்டக்டர் பெண்கள் என்போரைத் தவிர வேறு வெள்ளைக்காரப் பெண் களுடன் பழகியதில்லை.
தன் பெயர் சிந்தியா என்று அவள் அவனை அறிமுகம் செய்து கொண்டாள். தான் சிவசங்கரன் என்றான் இவன். "இரவில் கவனமாகத் திரிய வேணும்" அவள் முன்பின் பழகியதுபோல் இவனுக்குச் சொன்னாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 65.
நேற்று நடந்தது இவளுக்கு என்னவென்று தெரியும். அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.
"நான் தூரத்தால் வரும்போது உங்களையும் மூன்று கறுப்பு இளைஞர்களையும் கண்டேன். நான்தான் அந்த டெலிபோன் பூத்தில் நின்று பொலிசுக்குப் போன் பண்ணினேன். இந்த இடம் ஆபத்தான இடமென்ற படியால் அவர்கள் எப்போதும் தெரிவார்கள்.”
அவன் அவளை நன்றியுடன் பார்த்தான்.
அந்த இடம் ஆபத்தான இடம்தான். போதை மருந்துகள் விபச்சாரம் என்பவற்றிற்குப் பெயர் போன "சோஹோ" என்ற இடம். அந்த இடத்துக்கு வேலைக்கு வரவேண்டிய தன் தலைவிதியை நொந்து கொண்டான். அதன்பின் அடிக்கடி ஹலோ சொல்லி இதன்பின் சுவாத்திய நிலை பற்றிக் கதைத்து அதைத் தொடர்ந்து சுயசரித்திரத்தின் கொஞ்சமும் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
அவள் தான் ஒரு கிளப்பில் றிஸ்ப்ஸனிஸ்டாக வேலை செய்வதாகவும் பிடிக்காத வேலை என்றாலும் வேறு வேலை கிடைக்காததால் தான் செய்வதாகச் சொன்னாள்.
தான் தன் சர்வகலாசாலைப் படிப்பை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அகதியாய் வந்து இந்தியச் சரக்குக் கடையில் பன்னிரண்டு மணித்தியாலயம் மாடாய் உழைப் டதைப் பற்றி ஒப்பாரி வைத்துக்கொண்டான்.
மனோகரனைவிட இவளிடம் எதையும் மனம்விட்டுப் பேசவும் எப்படி தைரியம் வந்தது? இவன் போக்கு மனோகரனுக்கு தெரிய வந்ததும் இவனைக் கண்டபடிபேசிவிட்டான்.

Page 36
66 அரைகுறை அடிமைகள்
ஒரு பவுனுக்கு யாருக்கும் பின்னால் போகத் தயாராக இருக்கும் வெள்ளைக்காரப் பெண்களைப் பற்றி ஒரு பிரச்சாரம் செய்தான் மனோகரன்.
விழியால் மருட்டி முலையால் மயக்கும் மங்கைகள் பற்றி மனோகரன் செய்த கதாப்பிரசங்கத்தில் சிந்தியா அவனுக்குச் செய்த உதவியும் மறந்துவிட்டது.
அவள் அன்று இரக்கமில்லாமல் நடந்து கொண் டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
வழிப்பறி செய்த கறுப்பர்கள் இவனை ஏதும் செய் திருக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
மனோகரன் வழி தவறிப் போகும் தன் நண்பர்களை எப்படியும் திருத்துவதாகத்தான் கங்கணம் கட்டியிருப்ப தாகச் சொன்னான்.
சிவசங்கரன் சிந்தியாவைப் பற்றிச் சொல்வதைக் குறைத்துக்கொண்டான்.
"நாங்கள் பேயர்கள் மடையர்கள் என்று இந்த வெள்ளைக்காரிகள் நினைக்கிறார்கள். கொஞ்ச நாள் விளையாட்டுக் காட்டிவிட்டு பேயாட்டம் காட்டப் போகிறாள்".
மனோகரன் சிந்தியாவைத் தி ட் டி னான். இத்தனைக்கும் சிவசங்கரன் சிந்தியாவுடன் ஏதும் விளையாட்டுத்தனமாக நடந்ததுமில்லை, நடக்க யோசிக் கவுமில்லை. வாட்டசாட்டமான தன் தோற்றத்தைக் கண்ணாடியிற் பார்க்கும்போது சிந்தியா தன்னை ஏன் அப்படி ஆசையுடன் சிலவேளை பார்க்கிறாள் என்று அவனுக்குப் புரியாமலில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 67
"அண்ணா நீங்கள் அழகான ஆம்பிள்ளை” என்று அவனின் சின்னத் தங்கச்சி எத்தனையோ தரம் சொன்னதை அவன் மறக்கவில்லை.
சிந்தியாவும் கவர்ச்சியான பெண்தான். நைட்கிளப்பில் *றிஸப்ஸனிஸ்ட்டாக இருக்கிறாள்" என்று மனோகரன் கேள்விப்பட்டதும் பாம்பை மிதித்ததுபோற் குதித்தான்.
நைட்கிளப்பில் நிஸ்ப்ஸனிஸ்ட்டாக இருப்பவள் எப்படிக் கற்புடையவளாக இருக்க முடியும் என்று மனோகரன் கேட்டான்.
"நான் விஸ்கி விற்கிறேன் ஆனால் ஒருநாளும் குடித்த தில்லையே” சிவசங்கரன் எடுத்தெறிந்து பேசினான்.
"இஞ்ச பாரடா மச்சான், பெட்டைக்கு உன்னோட படுக்க விருப்பமெண்டா ஏன் மாட்டன் என்கிறாய். ஏதோ ஒரு அனுபவம் என்று அனுபவிப்பதுதானே"
சிவசங்கரன் தன் நண்பனின் பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டுவிட்டான்.
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்தானே "அவன சோசியலாக "பழக யோசித்தால் அதோட சரி, அதற்கு மேல் போகாதே".
மனோகரன் தன் சினேகிதனை ஒரு விதத்தில் நல்ல வழியிற் திருப்பி விட்ட தொனியிற் கூறினான்.
இதுவரைக்கும் சிந்தியாவுக்கும் சிவசங்கரனுக்கும்
உள்ள தொடர்பு ஏதோ ஒன்றிரண்டு தரம் ஒன்றாய்ச்
சாப்பிடப் போயிருக்கிறார்சள், அவ்வளவுதான். அதுவும் பெரும்பாலும் அவனின் செலவிற்தான் போனார்கள்.

Page 37
68 அரைகுறை அடிமைகள்
இன்று மனோகரன் தன் சொந்தக்காரரிடம் மான்செஸ்டர் போய்விட்டான். சிந்தியாவுக்கு இந்தியச் சாப்பாடு பிடிக்கும். தான் கூட்டிக் கொண்டுபோய்ச் சாப்பாடு கொடுப்பதாகச் சொன்னான்.
அவள் மனோகரன் சொன்னதுபோல் விழுந்தடித்துக் கொண்டு இவன் வீட்டுக்கு வரச் சம்மதம் தெரிவிக்க, வில்லை.
அவளின் முகத்திற் தயக்கம்.
"என்னில் நம்பிக்கையில்லையா” சிவசங்கரன் நேரடி யாகவே கேட்டுவிட்டான்.
"ஐய்யய்யோ! அப்படி ஒன்றும் சொல்லாதீர்கள். கட்டாயம் வருகிறேன்” என்று சொன்னான். அவளுக்காக இவன் காத்திருக்கிறான். மனோகரன் இவனைக் கவனமாக பழகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான்.
"ஏதும் பிடி கொடுக்காம நடக்கப்பார்” மனோகரன் சொன்னான். சிவசங்கரனுக்கு தன் சினேகிதன் தன்னில் உண்மையில் அக்கறையுடன்தான் சொல்கிறானா அல்லது தனக்கு ஒரு “சினேகிதியும்" இல்லையே என்ற ஆதங்கத்தில் சொல்கிறானா என்று தெரியவில்லை. ஆனாலும் அவளைக் கண்டதும் எத்தனையோ சொல்லத் துடித்தான். தான் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் அதற்காக இரவுபகலாக உழைக்க வேண்டி இருக்கின்ற தென்றும் அப்படிப்பட்ட உப்புச் சப்டற்ற வாழ்க்ன்கயில் அவள்தான் தனக்கு ஒரு சந்தோஷம் என்று சொல்ல நினைத்தான். அதேவேளையில் தான் அவளில் எவ்வளவு *ஆசையாய்” இருக்கிறான் என்பதையும் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 69
1love you என்று சொன்னால் இவளவை எவனோடும் படுத்தெழும்புவாளவை. மனோகரன் இப்படித்தான் சொல்லிவிட்டுப் போயிருந்தான்.
நத்தார் பண்டிகைக்கு சாமான் வாங்க வந்தவர் களால் ஒக்ஸ்போட் நிறைந்து வழிந்தது.
வரவே மாட்டாளா?
ஊரில் தன்னுடன் படித்த பெண்ணுடன் ஏதோ சாட்டுகளை வைத்துக்கொண்டு உரஞ்சிப் பார்த்த" ஞாபகம் வந்தது நினைவு அருவருப்பாக இருந்தது.
மழை வானத்தைப் பிளந்து கொட்டிக் கொண் டிருந்தது. லண்டன் தெரு தூங்கி வழியும் தெருவிளக்கில் பளபளத்துக் கொண்டிருந்தது. கார்கள் பொம்மைகள் போல் றோட்டை நிறைத்திருந்தன.
அவள் நினைவு அவன் மனத்தை நிறைத்திருந்தது. மனோகரன் சொல்வதுபோல் தான் "சுழண்டு" போய் es' GLearnt?
"ஊரில் பெரிய குடும்பம் உன்னை நம்பியிருக் கிறார்கள். இங்கே எந்த இழவிலும் சிக்கிக்கொள்ளாதே" மனோகரன் சொன்னது ஞாபகம் வந்தது. அவள் வந்தாள். தன் வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ சொல்ல நினைத்தான்.
தான் அவளை தன் வீட்டுக்குச் சாப்பிடவரச் சொன்னதும் பயந்துவிட்டாளா?
தான் எப்போதாவது அவளிடம் கண்ணியமில்லாமல் தடந்திருக்கிறானா?

Page 38
76) அரைகுறைஅடிமைகள்
அவன் மறுமொழி தேட முதல் அவளின் உருவம் தெரிந்தது.
"சொறி சங்கர்" அவள் குடையை மடித்தபடி சொன்னாள். குரலில் உற்சாகமில்லை.
அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். "ஏதாவது குடிக்கப் போவோமா” அவள் பார்வை பக்கத்தில் தெரிந்த pub-ல் பதிந்திருந்தது. அவன் மறுமொழி சொல்ல என்ன இருக்கிறது? அவன் பியரும் அவள் ஒரேஞ் ஜ"சும் ஒடர் பண்ணிக்கொண்டார்கள்.
ஒன்றிரண்டு மாதங்களில் இப்படி எத்தனையோ தரம் செலவழித்துவிட்டார்கள்.
"சங்கர்” அவள் குரலில் தயக்கம் அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
*நான் உன் வீட்டுக்குச் சாப்பிட வராவிட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே”.
அவன் தன் அதிருப்தியை மனத்துள் கொள்ளப் போலியாகச் சிரித்துக் கொண்டான்.
"நான் உன்னைக் கட்டாயப்படுத்த முடியுமா” எப்படித்தான் மனத்துள் கொண்டாலும் அவன் எரிச்சல்
குரலில் ஒலித்தது.
நான் நீண்ட நேரம் யோசித்தேன்" அவள் அவனின் பார்வையை நிலைத்தபடி சொன்னாள்.
*எதைப்பற்றி".
எங்களைப்பற்றி",

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் : 71
எேங்களைப்பற்றியா?”
சனங்கள் உறவைப்பற்றி” அவன் கனிரென்று பதில் சொன்னாள்.
நான் சாப்பிடத்தானே கூப்பிட்டேன்” அவன் மடக்கென்று பியரை குடித்துக் கொண்டான்.
"கட்டிலுக்கு வரச் சொல்லிய இன்விட்டேஷன் குரலில் தெரிந்ததே" அவள் சிரித்தாள்.
அவன் மெளனமானான். கொஞ்சம் புத்திசாலியாய் இருந்திருக்கக் கூடாதா?
சாசொறி சங்கர்! நான் உங்கள் வீட்டுக்கு வர முடியாது.”
"ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா"
நோங்கள் நல்ல சிநேகிதர்கள். அப்படியே இருந்து கொள்வோம்" அவள் தெளிவாகச் சொன்னாள்.
"But11oveyoய" அவன் ஆவேசத்துடன் சொன்னான். மனோகரன் அப்படித்தானே சொல்லச் சொன்னான்.
"No you don't. Love is something special'
அவள் சிரித்தாள். அவன் சிலையாய் இருந்தான்.
தாயகம்-1-1-1993

Page 39
அ, ஆ, இ,
கணேஸ் மாஸ்டர் தன் மகள் மாலதிக்கு அ. ஆ. இ. படிப்பித்துக் கொண்டிருந்தார். கேற்றைத் திறந்துக் கொண்டு யாரோ வந்த சத்தத்தில் மாஸ்டர் தன் படிப் பித்தலை நிறுத்திக் கொண்டார்.
வந்தவர்கள் நால்வரில் மூவர் துப்பாக்கி வைத்திருந் தார்கள். நாலாவது பெரியமனிதன் இவரைப்பார்த்துப் புன்னகைத்தான்.
"மாஸ்டர் உங்களுடன் கொஞ்சம் கதைக்க வேண்டும்."
பெரிய மனிதன் மாதிரியானவன் இவரைப் பார்த்துச் சொன்னான். ஹோலின் மூலையில் இவர் மனைவி கருணாவும் மகன் சீலனும் நின்று கொண்டிருந்தார்கள். மகள் மாலதி ஒடிப் போய்த் தாய்க்குப் பின்னால் மறைந்து கொண்டாள். மாஸ்டர் வத்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். துப்பாக்கி தூக்கிகள் மூவரும் பதின்மூன்று பதினான்கு வயதுப் பையன்கள். அதில் ஒருத்தன் இவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அந்த முகத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம் மாஸ்டருக்கு ஆனாலும் சரியாக ஒன்றையும் யோசிக்க முடியா மலிருந்தார். வந்தவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மாஸ்டர் போட்டிருந்த கண்ணாடியை எடுத்து வேட்டி முனையாற் துடைத்துப் போட்டுக் கொண்டார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 73
"ஒரு இருபது நிமிஷம் கதைப்பம்" இவர்களுடன் கதைக்கப் போனவர்கள் யாரும் திரும்பி வந்த ஞாபகம் மாஸ்டருக்கில்லை. “இஞ்ச வைச்சு கதைச்சால் என்ன" மாஸ்டர் குரலில் பயத்தைக் காட்டாமற் சொன்னார். *வீணாக நேரத்தை மினக்கெடுத்த வேணாம் மாஸ்டர்" பெரிய மனிதன் போன்றவனின் குரலில் கடினம்.
மாஸ்டர் மனைவியைத் திரும்பிப் பார்த்தார். அவள் கண்களில் நீர் பொங்கிக் கொண்டிருந்தது. மகன் சீலன் பத்து வயதுள்ளவன் சூனியமாகத் தனக்கு முன் நடப் பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மகள் மாலதி தனது ஆடும் பல்லை நாக்காற் தட்டிக் கொண்டு தாயின் முந்தானைக்குள் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்த்தாள். "மருந்தை எடுத்துக்கொண்டு போங்கோ" கருணா முணுமுணுத்தாள். குரல் வரவில்லை. மாஸ்டர் இனிப்பு வியாதிக்காரன் மருந்தெடுக்காவிட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவார். "நாங்க கெதியாக கொண்டு
வந்து அவரை விடுவம்”
வெளியில் முழுநிலவு இவர்களுக்கு பயந்து முகில் களுக்குள் ஒளிந்துக் கொண்டது. மெல்லிய காற்று பனை வடலியைத் தாலாட்டிக் கொண்டிருந்தது. கேற்றடியில் வைத்துத் தன் குடும்பத்தைத் திரும்பிப் பார்த்தார் மாள் டர். கருணா கண்களைத் துடைத்துக் கொண் டிருந்தாள். W
சீலனைக் காணவில்லை. பத்து தான் ஆனால் உலகமும் உலகத்தில் நடப்பதும் தெரிந்தவன். மாஸ்டரின் சினேகிதன் உள்ளதெல்லாவற்றையும் விற்றுக்கொண்டு வெளி நாட்டுக்கு போய்விட்டான். போகும் போது இவரிடம் எவ்வளவோ மன்றாடிச் சொன்னான்.
கனேஸ் எப்படியும் வெளியால போகப்பார். இஞ்ச இருந்தா சுட்டுப் போடுவான்கள்" அவருக்க யாரும்
அ-5

Page 40
74 அரைகுறை அடிமைகள்
எதிரியில்லை. அவர் யாருக்கும் எதிரியில்லை. அவர் அடிக்கடி ஊரைவிட்டு ஓடிக் கொண்டிருக்கும் உறவினர் களுக்கும் சினேகிதர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.
"நிலவுக்குப் பயந்து பரதேசம் போகலாமா" கணேஸ் மாஸ்டர் தத்துவம் பேசினார். அவருக்கு வயது நாற்பது நாற்பது வருட வயதில் நானூறு வருட அனுபவம் கண்டவர். பிறந்தவன் வாழ்ந்து தொலைக்கவேண்டும். அந்தத் தொலைப்பு என்ற சுமையான வார்த்தையின் கனத்தைப் பரிமாணம் செய்து கொண்ட வாத்தியார்
96 s.
அவருக்கு இளமைக்காலத்தில் பொங்கும் நிலவில் பனைவடலிக்குள் ஓடி விளையாடிய நினைவுகள் சொர்க்க மானவை. நேற்றுச் சாப்பிட்ட இனிப்புதான் ஆனாலும் அந்த நினைவு இன்னும் இனிக்கிறது. இவரை ஏத்திய வான் பனைவடலியைத் தாண்டி ஒரு ஊருக்குள்ளால் ஒடிக்கொண்டிருந்தது. வானுக்குள் இவரை விட இன்னும் சில மனிதர்கள்.வெளிச்சம் அதிகமாக இல்லாதபடியால் அவர்கள் முகங்கள் அதிகம் தெரியவில்லை. வெளிச்சம் இருந்தாலும் அவர்கள் முகங்கள் அதிகம் தெரியவில்லை. வெளிச்சம் இருந்தாலும் அவர்கள் முகம் இருண்டு தானிருக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டார்.
மாலதி ஆடிக்கொண்டிருக்கும் தன் பல்லை நாக்காற் தட்டிக் கழட்ட பார்க்கிறாள் அல்லது பல் ஆடும் போது நரம்பில் உண்டாகும் சிறு அளர்ச்சியில் சந்தோஷப் படுகிறாள், பல் கழன்று விழும்போது இரத்தம் வருமா என்று கேட்டாள்.
இவருக்கு முன் இருந்தவர் வாயால் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இவரின் முன் பற்களில் ஒன் றிரண்டைக் காணவில்லை. துப்பாக்கி தூக்கிகளாகயிருக்கும் வயது

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 75
வராப் போர்வீரர்களின் துப்பாக்கி மூனைக்கு அவரின் அனுபவம் கண்ட பற்கள் அனாதையாகியிருக்கலாம்.
வானில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. பேச ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் முன்பின் தெரியாதவர்கள். ஆனால் ஒரு விதத்தில் இந்த வினாடியி லிருந்து அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் சம்பாஷணைக்கு எந்த மொழியும் தேவையில்லை. மாஸ்டர் அ.ஆ.இ.வில் ஆரம்பித்து இலக்கணம் சொல்லிக்கொடுத்த எத்தனையோ மாணவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியாது. மிருகங்கள் ஆட்சியிலிருக்கும் போது அவர்களின் அரசியலின் மொழி மக்களுக்கு அப்பாற்பட்டது.
வான் நீண்ட நேரத்தின் பின் எங்கேயோ ஒரு தென்னம் தோட்டம், பெரிய மாமரங்கள் எல்லாம் தாண்டிப் போய் ஒரு பெரிய வீட்டின் முன்நின்றது. இவர்கள் இறக்கப்பட்டார்கள். வயது வராப் போர்வீரர் களில் இவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவனை இவர் தற்செயலாகப் பார்த்தார்.
அவன் பெயர் தர்மேந்திரன். இவர் அவனைப் பார்த்தார்.
"அண்ணல்கள்" இருவரும் பார்வையால் ஒருத்தரை ஒருத்தர் அளத்துக் கொண்டார்கள். அவனுக்கு ஐந்து வயதில் இவர்தான் அ.ஆ.இ. சொல்லிக்கொடுத்தார் என்ற உண்மை இவர் இருதயத்தில் ஈட்டியாய் பாய்ந்தது.
அவர் பார்வையில் இரக்கம். அவன் இருளோடு இருளாக இவரையும் பார்த்தான்.
அவனுக்கு இன்னும் மீசை வரவில்லை. பால் முகம் மாறவில்லை. பனைவடலியில் முழுநிலவில் வார் அடித்து

Page 41
76 அரைகுறை அடிமைகள்
விளையாடும் வயதில் இருளாகக் கலந்து யமதூதனாகத் திரியும் விதியா?
வீட்டைச் சுற்றி ஏதோ கட்டிடங்கள் பெரிய கம்பி களால் ஜன்னல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் அவற்றைத் தாண்டும் போது முகங்கள் முனகல்கள்.
அவர் இளம் வயதில் பார்த்த பயங்கரப் படங்கள் ஞாபகம் வந்தன. படித்த சரித்திரக் கதைகள் ஞாபகம் வந்தன. வானத்தில் நிலவு, இன்னும் பயம். அரை குறை பாக எட்டிப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண் டிருந்தது. Y
இருள், இவர்களுக்கும் நிலவுக்குமிடையில் தரகு செய்ததோ? அவர்கள் சொன்ன இருபது நிமிடம் எப்போதோ போய்விட்டது.
வீட்டில் அவர் மனைவி கருணா அழுது கொண் டிருப்பாள். மகன் சீலன் மெளனமாய்த் தாயையும் தகப்பன் சென்ற பாதையையும் பார்த்துக் கொண் டிருப்பான். மாஸ்டரும் மற்றவர்களும் ஒரு அறைக்குக் டுரண்டு போகப்பட்டார்கள். அறையில் ஒரு மேசையைச் சுற்றி மூன்று கதிரைகளில் இருவர் இருந்திருந்தார்கள். மூன்றாவது கதிரையில் இவருடன் சேர்ந்து வந்திருந்த பெரிய மனிதன் போய் உட்கார்ந்திருந்தான். அவர்கள் இவரைக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.
விடுதலைக்குப் போராட பாடசாலை மாணவர்களை ஏன் தூக்கப்படுத்தவில்லை என்று கேட்டார்கள். இவர் ஆனா ஆவன்னா இனா சொல்லிக் கொடுக்கும் வாத்தியார். அரசியல் ஆணவ இழி செயல்களுக்கு அப்பாற்பட்டவர். "தான் தெரிந்து கொண்டு ஏதும் பிழை செய்யவில்லை" என்று சொன்னார். அவர் உண்மையைச்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 77
சொன்னார். அவர்கள் இவரைப் பார்த்துச் சிரித்தார்கள் கேவலமான சிரிப்பு
அவர் இளமையாயிருக்கும் போது ஓணான் பிடித்துக் கட்டிச் சிறைபிடித்துவிட்டு அதைக் கொஞ்ச தூரம் ஒட விட்டுப் பார்த்துச்-சிரித்திருக்றார்-ஒரு நிறைவு-குரூர மான நினைவுச் சிரிப்பு.
அப்படி செய்தது பிழைதான். இன்று அவர் வலிமை யற்ற ஒரு மனிதன், அவர்கள் இவரை ஆட்டிப் படைத்துக் சிரிக்கிறார்கள். இவர்களுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவருக்கும் என்ன உறவு. அவர் களைப் பற்றி விளக்கம் தரமுடியாதா?
இப்படி எத்தனையோ கேள்விகள். எப்போது விடுவார்கள்? வீட்டில் கருணா காத்திருப்பாள். "சும்மா கேட்டால் இந்த நாய்கள் சரியாகச் சொல்லவா போகிறார்கள் மேசையில் சொகுசாக அமர்ந்திருந்த ஒருத்தன் தன் பெரிய மீசையை முறுக்கிக் கொண்டான். அவனையும் எங்கேயோ கண்ட ஞாபகம். ". .
ஒரு சில வருடங்களுக்கு முன் கம்பங்களில் எதிரி களைக் கட்டிய இலட்சிய வீரனல்லவா இவன்? மாஸ்டருக்கு அடி உடம்பு பந்தாக விளையாடப்பட்டது. எலும்புகள் இரு துரும்புகளாக உடைந்தன. இரத்தம் நீராக பாய்ந்தது.
அவர் மாலதியை முந்திக் கொண்டார். மாலதி தன் பற்களை இன்னும் ஆட்டிக் கொண்டிருக்கிறாள். இவர் பற்கள் இரத்தத்தில் தோய்ந்து வாய்க்குள் சிக்குப்பட்டு தவித்தது. 'எளிய நாய்கள், இனத் துரோகிகள்” இப்படி எத்தனையோ சொற்கள் இவற்றில் இடறுப்பட்டு ஜன்னலால் வெளியேறி விரைவாக ஒடிக்கொண்டிருந்தன. இவர் எப்போது மயங்கி விழுந்தார் என்று தெரியாது

Page 42
78 அரைகுறை அடிமைகள்
உடம்பும் உணர்வும் ஒன்றோடு ஒன்று பிரிந்து விட்டன. கண்கள் இருண்டன. மூச்சு வாங்கியது. இவரை இழுத்துக் கொண்டு போனார்கள். மற்ற அறைகளில் ஜன்னற் கம்பி க்ளோடு கட்டித் தொங்க விடப்பட்டிருந்த இவருக்கு முந்திய கைதிகள் இவரைப் போல் கெளரவமான மனிதர் களாக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். மாஸ்டர் ஒரு அறையில் தள்ளப்பட்டார். துப்பாக்கி தூக்கிகளில் ஒருத்தன் நீர் கொண்டு வந்து இவர் முகத்தில் தெளித்தான். அவர் ஒரு நீரிழிவு வியாதிக்காரன். வேட்டி இரத்தத்தாலும் சிறுநீராலும் நனைந்துபோய்க் கிடந்தது. தாகம் உயிரைப் பிடுங்கியது. மயக்கம் தெரிந்தபோது அந்தத் துப்பாக்கி தூக்கி இவரையே பார்த்துக் கொண் டிருந்தான். ஒரு காலத்தில் இவரிடம் தமிழின் உயிர் எழுத்துக்களைக் கற்றும் கொண்டவன் தர்மேந்திரன்.
"தண்ணீர்" அவர் நா வரண்டது உடம்பு சோர்ந்தது. அந்தத் துப்பாக்கி தூக்கி பார்த்துக் கொண்டேயிருந்தான். அவனுக்கு இவருக்குத் தண்ணீர் கொடுக்கச் சொல்லி யாரும் உத்தரவு தரவில்லை. இவரை உயிரோடு வைந்திருந்து விபரம் அறிய வேண்டும் என்பதுதான் கட்டளை. அவன் தண்ணிர் கொடுக்காவிட்டால் இவர் இறந்து போவார் என்று தெரிந்தாலும் இந்தச் சிறு வயதுப் போராளிக்கு மாஸ்டரின் பரிதாபமான கண்கள் எந்த இரக்கத்தையுமுண்டாக்கவில்லை. அவர் சொல்லிக் கொடுத்த அன்பு, ஆதரவு, இரக்கம் என்பதற்கு அப்பால் அலன் அதர்மம், ஆதிக்கம், இழிசெயல்கள் என்ற பயங்கர கட்டளைக்கு அடிபணிந்திருக்கிறான்.
தாயகம், 13-11-92

பக்கத்து அறைகள்
அவன் இன்று வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். வழக்கமாக வீடு வந்து சேர இரவு ஏழு மணியாகும்.
குழந்தைகள் பெரிய சத்தங்கள் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாசி மாதம் பிறந்து விட்டது. நல்ல வெயிலடித்தாலும், குளிர்காற்றடிக்கும் போது ஊசி முனையாற் குத்துவதுபோல் குளிர் காற்று முகத்தில் பாய்கிறது.
குழந்தைகள் குளிரைப் பொருட்படுத்தாமல் மிக ஆரவாரமாகவும் சந்தோஷமாகவும் விளையாடிக் கொண் டிருந்தார்கள்.
வாழ்க்கையில் மிகச் சந்தோஷமான பருவம் குழந்தைப் பருவம்தானே? அவன் பெருமூச்சு விட்டான். இலங்கையரசாங்க விமானங்கள் யாழ்ப்பாணத்தில் குண்டு போடுவதாகப் பத்திரிகையில் படித்தான். எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள்? எத்தனை குழந்தைகள், மனிதர்கள், மிருகங்கள் இதுவரைக்கும் இலங்கையில் அழிந்து விட்டார்கள்.
அவன் பெருமூச்சுடன் கதவைத் திறந்தான். மேல் மாடியில் சினிமாப் பாட்டுச் சத்தம் கேட்டது. குமரனாக இருக்கலாம். அவன் கதவைப் பூட்டும்போது, வெளியில்

Page 43
80 அரைகுறை அடிமைகள்
விளையாடும் குழந்தைகளில் ஒரு தரம் தன் பார்வையைப் படரவிட்டான்.
இந்தத் தெருவில் கிட்டத்தட்ட ஐந்து விதமான இன மக்கள் வாழ்கிறார்கள். கோடி வீட்டுப் பட்டேலின் குழந்தைகள், பெரிய வீட்டு மிஸ்டர் பார்கிளேயின் சின்னப் பெண்கள், பக்கத்து வீட்டு ஐரிஷ்காரன் மேர்பியின் பெரிய பையன், முன் வீட்டு பாகிஸ்தானி வீட்டு இரு பையன்கள். தூரத்திலிருக்கும் மேற்கிந்திய நாட்டுக் குழந்தைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுகிறார்கள்.
ஒரு காலத்தில் இவர்களும் இனத் துவேசத்தால் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்வார்களா?
அவன் விடை காண முடியாத கேள்வியது.
"யார் துரையே அது" மேல் வீட்டிலிருந்து குமரனின் குரல் விசாரித்தது.
"ஒம், நான்தான்” துரை சொல்லிக் கொண்டான், மேல் மாடியிலுள்ள தன் அறைக்குப் போவதா அல்லது குமரனிடமிருந்து தப்புவதற்காகக் கீழ் மாடியிலிருக்கும் குசினிக்குள் போய்ப் பின்னேரச் சமையலைத் தொடங்குவதா என்று யோசிக்க, குமரன் மாடிப்படியில் இறங்கி வருவதைத் துரை அவதானித்தான்.
குமரன் சமைக்கப் போகிறான் போலும் துரை மேலே போக ஆயத்தமானான்.
என்ன வெள்ளெண்ண வந்து விட்டீர் இரவிலெல்லாம் இந்தச் சனியன்களின்ர சண்டையாளம் நித்திரையில்லாமல் உமக்கும் தலையிடிக்குதா?’ குமரன் இனி விட மாட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 81
இந்தச் "சனியன்கள்" என்று குமரன் குறிப்பிட்டுப் பேசும் அடுத்த அறைத் தம்பதிகளின் இரவுச் சண்டையை குமரன் சொல்லத் தொடங்கப் போகிறான்!
செல்லத்துரைக்குக் குமரனின் "அசிங்கமான* அலட்டல்களை ஒரு நாளும் பிடிக்காது. ஆனாலும் என்ன செய்வது ஒரு வீட்டில் பக்கத்து அறைகளில் இருக்கும் போது ஏனோதானோ என்று பழகித்தானே ஆக வேண்டும்!
"ஒம், தலையிடிதான். அதுதான் வெள்ளெண்ண வந்தன். கொஞ்சம் படுக்கப் போகிறன்.”
துரை விடுவிடுவென்று மேலே போனான்.
குமரன் யாரையாவது அல்லது எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருப்பான். அவன் இரவில் ஒரு பெற்றோல் ஸ்ரேஷனில் வேலை செய்கிறான். துரை பகலில் இ ன் னு மொரு பெற்றோல் ஸ்ரேஷனில் வேலை செய்கிறான்.
வெளியில் தெருவில் விளையாடும் குழந்தைகள் ஐந்து விதமான மனித இனங்களைச் சேர்ந்தவர்கள். இந்த வீட்டில் வாழும் ஐந்து தமிழர்களும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள். ஐந்நூறு மன உணர்ச்சிகளை அல்லது ஆயிரக்கணக்கான அபிப்பிராய பேதங்களைக் கொண்ட வர்கள். ஒருத்தரை ஒருத்தர் கெளரவிக்கும் குணமிருந்தால் ஏன் தமிழன் நாடோடியாகத் திரிகிறான்?
துரை தன் அறைக் கதவைத் திறந்தான். கதவடியில் அந்த நீலக்கவர்க் கடிதம் கிடந்தது. முன் அறையில் இருக்கும் சம்பந்தர் தான் இவனின் கடிதத்தைக் கண்டால் கதவிடுக்கால் உள்ளே தள்ளுவார். குமரன் கண்டால் எடுத்து வைத்துக்கொண்டு இந்தக் கடிதம் யாரிடமிருந்து

Page 44
82 அரைகுறை அடிமைகள்
வந்ததென்று விண்ணாணமாய்க் கேட்பான், கீழ் அறை யிலிருக்கும் தம்பதிகள் என்றால் எடுத்து வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கொஞ்ச காலமாகத் தங்களுக்குள் தங்களைத் திட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் ஆபாசமான பேச்சுக்கள் மூடப்பட்டிருக்கும் கதவுகளைத் தாண்டிக் கொண்டு நிர்வாணமாக வெளியில் ஓடுகின்றன.
சிவப்புக் கார்ப்பெட்டில் நீலநிறக் கவர்க் கடிதம் இவனைப் பார்த்துக் கண்ணடித்தது. குனியும்போது கடிதத்தில் எழுதியிருந்த விலாசம் இவனைப் பார்த்து விசும்புவது போலிருந்தது.
இந்த விலாசத்தை இப்படிக் குண்டுமல்லிகைகள் போல அழகாக எழுத அவன் காதலி திலகாவைத் தவிர யாரால் முடியும்?
அம்மாவிடமிருந்து நேற்றுத்தான் கடிதம் வந்தது. வழக்கமான அழுகைதான். 'தம்பியை எப்படியும் அங்க எடுக்கப் பார். இஞ்ச நிலைமை படுமோசம். சிங்கள அரசாங்கம் குண்டு போட்டதால தேவாலயமும் அழிஞ்சு அதோட இருபது முப்பது பேர் செத்துப் போட்டினம். இளம் பொடியன இயக்கத்தில் சேரச் சொல்லுகினம். தம்பியை எப்படியும் எடுக்கப் பார்” அம்மாவின் கலங்கிய -கண்கள் ஞாபகத்திற்கு வந்ததும் இருதயத்தை என்னவோ செய்தது.
இப்போது திலகாவின் கடிதம் வந்திருக்கிறது. அவன் 4பட்டென்று கட்டிலில் விழுந்தான். திலகாவின் குறுகுறு
வென்ற பார்வை இவனைத் துளைப்பது போலிருந்தது.
eplgul கவருக்குள்ளால் அலறின மூச்சுக்கள் இவனைத் தடவுவது போலிருந்தது. கடிதத்தை மார்போடு
அனைத்துக் கொண்டான்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 83
அம்மாவைப்போல அவளும் ஒப்பாரி வைத்து எழுதி யிருப்பாள், ‘என்னை எப்போது லண்டனுக்கு எடுக்கப் போகிறீர்கள்” எப்படி இலகுவாக எழுதுகிறார்கள்?
புதுச்சட்டை போட்டுக்கொண்டு கோ யிற் திருவிழாவுக்குப் போவது போலவா ஏஜென்சிக் காரனுக்குக் காசு கொடுத்தவுடன் இங்கே வந்து சேருவது?
ஒரு ஆளை இலங்கையிலிருந்து எடுக்கப் பத்தாயிரம் பவுன் கேட்கிறானாம் ஏஜென்சிக்காரன்.
அவன் பெருமூச்சு விட்டான். அவளின் துடிப்பு அவனுக்குத் தெரியாதா?
"என்னை மறக்க மாட்டீர்களே" திலகா இவன் வர முதல் கேட்டது இன்னும் கேட்பது போலிருக்கிறது.
"நிலவை வானம் மறக்குமா? ஆழ்கடல் தன் அலையை அடித்துத் துரத்துமா? திலகா நான் உன்னை மறக்க முடியுமென்று நீ நினைப்பதை நான் மிகவும் வெறுக்கிறேன். என் நிலைமை உனக்குத் தெரியாது. கிழமையில் ஆறு நாளும் காலையிலிருந்து மிகக் கடுமையாக இரவு வரையும் வேலை செய்கிறேன். அப்படிச் செய்தும் நான் இங்கு வந்த கடனும், அம்மா பெரியக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனும் இன்னும் கட்டி முடிக்கவில்லை” அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். நினைவு கசிந்தது. இன்னும் கடிதத்தைப் பிரிக்கவில்லை. அவள் வேதனையை அவன் எதிர்கொள்ளப் பயந்தான். கதவு தட்டும் சத்தம்.
குமரனாகத்தானிருக்கும் மற்றவர்களின் மனநிலையை
மதிக்காத மனிதர்களில் குமரனும் ஒருத்தன்.
இஞ்ச பாருமன் புதினத்தை" குமரன் இவனைச்
சேர்ட்டில் பிடித்து இழுக்காத குறையாக இழுத்தான்.

Page 45
84 அரைகுறை அடிமைகள்
"இந்த வயதில இந்தப் பெட்டைகளின்ர கூத்தைப் பார்" குமரன் தன் ஜன்னலுக்கு இவனைக் கூட்டிக் கொண்டு போனான்.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மிஸ்டர் பார்கிளே என்பவரின் சின்னப் பெண்களிலொருத்தி முன் வீட்டுப் பாகிஸ்தானியின் பெரிய பையனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தைகளின் வஞ்சகமில்லாத கொஞ்சல். டி.வி.யிலும் பத்திரிகைகளிலும் பார்த்த விடயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக் கொண் டிருந்தார்கள்!
ooTaT GIT கேவலமான உலகமிது” குமரன் கண்ணியத்தின் சார்பில் கண்ணிர் வடித்தான்.
துரைக்கு எரிச்சல் வந்தது. இந்தக் குமரன் பூட்டிய அறைக்குள்ளிருந்து கொண்டு ஆபாசப் படங்கள் பார் ப் ப ைத இந்த வீட்டில் யாரும் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறனா?
முப்பத்தைந்து வயது வந்தும் இன்னும் சரியான விலை தனக்கு வரவில்லை என்பதால் ஆசைகளை ஆபாசப் படங்கள் மூலம் தீர்த்துக் கொண்டும், தெருவில் போகும் இளம் பெண்களைக் கண்களால் கற்பழித்துக் கொண்டும் கயமையாக வாழும் இந்த வயதில் முதிர்ந்து வாழ்க்கையில் 'காய்ந்து போன வறட்சியான மனிதன் களங்கமற்றக் குழந்தைகளின் செய்கையைக் காறித் துப்புகிறான்!
துரை பதில் பேசாமல் தன் அறைக்கு வந்தான்.
"இந்த நாட்டில கேவலங்கள் மலிஞ்சு போச்சு
ஆனானப் பட்ட அரச குடும்பத்துப் பெண்டுகளே முலை களைக் காட்டிக் கொண்டு மொட்டையன்களைப்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 85
பப்ளிக்காக கொஞ்சேக்க இந்தச் சின்னம் சிறுசுகள் என்ன செய்யும்" குமரன் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். இளவரசர் ஆண்ட்ருவின் மனைவி ஸேரா அவளின் அமெரிக்கக் காதலன் ஜோன் பிராயனைக் கொஞ்சியதைச் சொல்கின்றான். “இந்த நாட்டுக்கு வரச்சொல்லி யாரும் வெத்திலை வைத்துக் கூப்பிட்டினமா."
துரை குமரனைப் பார்க்காமல் முணுமுணுத்தான்.
"எங்க சம்பந்தர் போயிட்டார்? இந்த ஷோவைப் பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு திருவாசகம் படிக்கத் தொடங்கிடுவார். "குமரனுக்குச் சம்பந்தரின் கண்ணிய நோக்கும் கடவுள் பக்தியும் பிடிக்காது. குமரனை இவன் பொருட்படுத்தாமல் கதவை மூடிக்கொண்டான்.
நீல எயர்-மெயில் கடிதம் திலகாவின் இருதயத்தை எழுத்தில் வடித்திருந்தது.
“லண்டனுக்குப் போன எத்தனையோ பேர் சரியாக மாதில் போ ட் டி ன ம் . நீங்களும் அப்படியிருக்க மாட்டீர்களே.”
அவளது பேதைத்தனமான கேள்வி, அவன் கடிதத்தைப் படித்து முடித்து விட்டான். டெலிவிஷனை போட்டான். கடிதத்தின் கேள்விகளை மறக்க ஏதோ ஒன்று செய்யவேண்டும். வெளியில் காலடிகள் கேட்டன. நடைச் சத்தத்திலிருந்து பக்கத்து அறையிலிருக்கும் சம்பந்தர் வந்துவிட்டார் என்பது தெரிந்தது. தோய்ந்து போன தோற்றமும், தளர்ந்த ந  ைட யு ட னும் வந்திருப்பார் சம்பந்தர். பாவம் சம்பந்தர். பரிதாபமான தமிழர்களிலொருத்தர்.
அறுபது வயதாகிற ரிட்டயர் பண்ணுகிற வயதில் 5QL9ஒடி உழைக்கிறார். வாழ்க்கையை மற்றவர்களுக்காக

Page 46
86 அரைகுறை அடிமைகள்
வாழ்ந்து முடிக்கும் மனிதன். முப்பத்தைந்து வயது வரைக்கும் தம்பி தங்கைகளுக்காக உளுத்தவர். இப்போது மூன்று பெண்களை வைத்துக் கொண்டு திண்டாடுகிறார்.
லண்டன் தெருக்களில் பொற்காசு கொட்டிக் கிடப்பதுபோல் கனவு கண்டு உள்ள எல்லாவற்றையும் விற்று விட்டு ஐந்து வருடங்களுக்கு முன் லண்டனுக்கு வந்தவர்களில் ஒருத்தர், பாவம் ஏமாந்துவிட்டார்.
அவரின் துணிவு இவனை மலைக்கப் பண்ணியது. இப்போது தனது மூத்த மகளை என்றாலும் லண்டனுக்கு எடுக்க வேண்டும் என்று ஒடித் திரிகிறார்.
மகளை லண்டனுக்கு எடுக்க எப்படியெல்லாமோ உழைத்து ஏஜென்சிக்காரனுக்குக் காசு கொடுத்து ஒரு வருடமாகிறது.
மகள் ஏஜென்சிக்காரனால் இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு, ஆபிரிக்க நாட்டில் ஏதோ ஒரு ஹோட்டலில் இருக்கிறாள்.
ஏஜென்சியால் வெளிநாடுகளுக்கு அழைத்து வரப்படும் இலங்கை இளம் பெண்களுக்கு என்னென்ன வெல்லாமோ நடப்பதாகக் கதைத்துக் கொள்கிறார்கள். சம்பந்தர் கடவுளிடம் எல்லாப் பழியையும் போட்டுவிட்டார்.
கடவுள் இருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தக் கொடுமையெல்லாம் நடக்குமா?
இன்றையநம்பிக்கைகள் நாளைய எதிர்பார்ப்புக்கள், சம்பந்தர் போன்றவர்களுக்கு இல்லாவிட்டால் உலகம் என்னவாகும்?
குமரனின் அறையில் ஏதோ முக்கலும் முனகலும் கேட்கிறது. குப்பைப் படம் பார்க்கத் தொடங்கி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 87
விட்டான் வெளியில் வரும்போது வியர்த்துக்கொண்டு வருவான். வெறிபிடித்த நாய் போல, பின் அவசரமாக ஒடிப்போய் இன்னும் வேறு குப்பை வீடியோக்கள் கொண்டு வருவான். குமரன் தாய்மைக்கும் கண்ணியத் துக்கும் கண்ணீர் வடித்தானே கொஞ்ச நேரத்துக்கு முதல்?
துரை, குமரனின் அறையிலிருந்து வரும் ஆபாச சத்தங்களைத் தாங்க முடியாமற் தன் அறையைச் சாத்திக். கொண்டு கீழே வந்தான்.
சம்பந்தர் அறை சாடையாகத் திறந்திருந்தது. பாவம் மனிதன், ஏஜென்சிக்காரனிடம் நாயாக அலைகிறார். ஒவ்வொரு தரம் போகும் போதும் அவன் ஒவ்வொரு சாட்டுச் சொல்கிறானாம். இப்போது என்னால் உங்கள் மகளை லண்டனுக்கு எடுத்துத்தர முடியாது எனக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது" என்றானாம் ஒருதரம்.
மனைவிக்கு நிறைமாதம் இப்போது நான் பிளி? என்றானாம் இன்னொரு தரம்.
"வாங்கிய வீட்டில் புது டாய்லட் கட்டுகிறேன், தொந்தரவு செய்யாதீர்கள்? என்று பாய்ந்தானாம் போன கிழமை. கொடுத்த காசைக் கொண்டு இப்படி ஆடம்பர மாக வாழ்பவன் இந்தத் தகப்பனின் வேதனையைப் புரிந்து கொள்கிறானில்லை. ஏஜென்சிக்காரனுக்கு டாய்லெட் பெரிசு, சம்பந்தருக்கு மகளின் "பெண்மை பெரிது என்ன தமிழர்கள், என்ன உதவி இன்றும் அந்த ஏஜென்சிக்காரனிடம்தான் போய் வந்திருக்கிறார் போல இருக்கிறது.
இவன் கீழே வந்து குசினிக்குப் போனான். குமரன் மத்தியானம் ஒடியல் கூழ் காய்ச்சியிருக்கிறான் போலும்.

Page 47
88 அரைகுறை அடிமைகள்
இறால் உடைத்த தோல்களும் மீன் செதில்களும் அங்கும் இங்குமாகக் கிடந்தது.
கூழ் நாற்றம் மூக்கைத் துளைத்தது. அந்த மணம் போகட்டும் என்று ஜன்னலைத் திறந்தான்.
குழந்தைகள் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள் போலும். ஐரிஷ்காரப் பையனும் ஆங்கிலப் பையனும் முன்வீட்டு மதிலில் ஏறியிருந்து *சூப்பர் மான்" பற்றி சுவாரசியமாகத் தங்கள் கீச்சுக்
குரல்களிற் கத்திக் கொண்டிருந்தார்கள்.
ஐரிஷ்கார வீட்டுப் பையன் மிக மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். இவன் ஒரு காலத்தில் பெர்னாட்ஷாவாகவோ ஒஸ்கார் வைல்டாகவோ மாற லாம். ஆங்கிலேய இலக்கியத்தில் ஒரு போடு போடலாம்.
தூரத்தில் இவர்களின் வீட்டிலிருக்கும் பொன்மலர் வருவது தெரிந்தது. தளர்ந்த நடையும் குனிந்த தலையுமாய் வந்து கொண்டிருந்தாள். துரை அவள் தன்னைக் கவனிக்காத மாதிரி விலகி மறைந்து கொண்டான்.
இவளையும், இவள் கணவன் சுந்தரலிங்கத்தையும் தான் குமரன் "அந்தச் சனியன்கள்" என்று வர்ணித்தான். துரை அரிசியைக் கழுவி அடுப்பில் வைத்தான். பொன்மலர் இனி எந்த நேரத்திலும் குசினிக்குள் வரலாம். அவள் சுந்தரலிங்கம் வருமுதல் சமைத்து வைக்காவிட்டால் அவன் வாயிலிருந்து வரும் "வர்ணனைகளை"க் கேட்டு காற்றே நடுநடுங்கும்.
பொன்மலர் வந்து ஆறு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் நாயும் பூனையும் போல இருக்கிறார்களே. திலகாவும் நானும் எப்படி வாழ்வம்? அவன் தனக்குள்ளே யோசித்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 89
நெருப்பில் அரிசி பொங்கியது, நினைவில் திலகா தொங்கினாள்.
நான் சுந்தரலிங்கம் மாதிரிக் கேவலமாக நடந்து கொள்ளமாட்டேன். பெண்கள் வாழ்க்கையின் ஒரு பாதி, ஒதுக்கி வைப்பதற்கும் ஓங்கியடிப்பதற்குமா அவர்கள் பிறந்திருக்கிறார்கள்? நான் மனிதனாக நடப்பேன் என்று தனக்குத்தானே திடமானம் செய்து கொண்டான்.
சுந்தரலிங்கம் பொன்மலரைக் கல்யாணம் செய் து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால் ஒன்றாக வாழத் தொடங்கி கொஞ்சம் காலம்தான் ஆகிறது.
ஊரில் தாய் தகப்பன் பேசி முடிவு செய்த கல்யாணம் பொன்மலரின் புகைப்படத்தைக் கண்டதுமோ பூரித்துப் GBL urger mr GisT. எத்தனை கவர்ச்சியாகத் தெரிந்தாள் அப்போது.
"இஞ்ச பாருடா மச்சான். இந்தப் பெட்டயின்ர சிரிப்ப - குஷ்புவின்ர புன்சிரிப்பு மாதிரியில்லையா" குமரன் எச்சில் வழியக் கேட்டான். சுந்தரலிங்கம் குமரனை முறைத்துப் பார்த்தான். குமரனின் எச்சிலைக் கண்டதும் துரைக்கு எரிச்சல் வந்தது; ஆனாலும் காட்டிக் கொள்ள வில்லை. சுந்தரலிங்கம் இந்தியா போனான்.
கோயிலில் கல்யாணம். பூம்புகாரில் ஷாப்பிங், மரினாக் கடற்கரையில் ஒரு கிழமை உலாத்தல். அத்துடன் இவன் வந்து விட்டான். அவள் இங்கு வந்து சேர எத்தனையோ காலமாகிவிட்டது.
அடுப்பில் சோறு அவிந்துவிட்டது.
குசினி திறந்தது. பொன்மலர் குசினிக்குள் வந்தான். இந்தக் குசினிக்குள் எல்லாரும் ஒரேயடியாக வந்தால்
6 ك= eyے

Page 48
90 அரைகுறை அடிமைகள்
நிற்க இடமில்லை. அத்துடன் துரை பொன்மலருடன் ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ள விரும்ப வில்லை. சுந்தரலிங்கத்தின் கண்களில் பெண்களின் இன விருத்தி உறுப்புகள்தான் தெரியும், இதய நாதம் புரியாது. அவளில் துரைக்குள்ள பரிதாபத்தைச் சுந்தரலிங்கம் படு
ஆபாசமாக்கி விடுவான். இவர்கள் பிரச்சினையில் தன்னை
ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை.
அவளைச் சாடையாக ஒரக் கண்ணால் பார்த்தான். இரவெல்லாம் அழுதிருக்க வேண்டும். முகம் மிகவும் உப்பித் தெரிந்தது. அவளும் இவனைச் சாடையாக பார்த்தாள். கவனிக்க மாட்டானா என்ற தவிப்பு. அப்பட்டமாகத் தெரிந்தது.
"ஏன் இந்த உலகம் இப்பிடி தாறுது?"
பொன்மலர் எரிச்சலுடன் தான் கொண்டுவந்த மரக்கறிச் சாமானை மேசையில் வைத்தாள்.
இறால், மீன், நண்டு எல்லாம் சேர்த்துக் குமரன் சமைத்த கூழ்தான் "இந்த உலகம் இப்படி நாறக் காரணம்” என்று சொல்ல நினைத்த துரை அவளுடன் பேசக்கூடாது என்பதற்காக மெளனமானான்.
பொன்மலர் இலங்கையில் ஆசிரியையாக இருந்தவள், லண்டன் மாப்பிள்ளைக்காக வேலையையும் விட்டுவிட்டு ஒரு குடிகாரனைக் கட்டிக்கொண்டு வந்து கஷ்டப்படு கிறாள். சாதாரணமான பெண்களைவிட வித்தியாச மானவள். இலங்கையரசியல் கொடுமைகளில் அவளது மூன்று தமயன்களையும் முறையே இலங்கைச் சிங்கள ராணுவத்திடமும், இந்திய ராணுவத்திடமும், ஒரு தமிழ் இயக்கத்திடமும் பறிகொடுத்தவள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 外
அவள் இதுவரைக்கும் அனுபவித்த கொடுமைகள் அவளை எவ்வளவு பொறுமைசாலி ஆக்கியிருக்கிறது என்பதை அவள் வந்த கொஞ்ச நாளிலேயே துரை உணர்ந்து கொண்டான்.
அவளைப்போல பொறுமைசாலியாய் இல் லா விட்டால் சுந்தரலிங்கத்துடன் வாழ முடியுமா?
கல்யாணம் ஆன புதிதில் இவளைப்பற்றி ஓயாமல் புழுகிக் கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். இவள் வந்த வுடனும் கொஞ்ச நாட்கள் பரவாயில்லை. அவன் குடிப்பதைப்பற்றி இவள் கொஞ்சம் காரமாகப் பேசிய வுடன் சுந்தரலிங்கம் துள்ளியடித்தான்.
"என்னடி பெரிய சீதனம் தந்த மாதிரி என்னைக் கொன்ட்ரோல் பண்ண வாறாய்.”
சுந்தரலிங்கம் இப்படிப் பாய்ந்ததும் அவள் முதலில் மெளனமாகத்தானிருந்தாள்.
நாளடைவில் அவளின் உழைப்பில்லாமல் இந்தக் குடும்பம் நகராது என்ற நிலைக்கு வந்தபின், ஒரு இந்திய மரக்கறிக் கடையில் வேலைக்குப் போனாள்.
கணக்குப் படிப்பித்த கைகள், கல்லா" கட்டியது. சரித்திரம் சொன்ன வாய்கள் "தாங்க்யூ, ப்ளீஸ்" என்ற வார்த்தைகளுடன் அடுத்த மனித உறவுகளைக் கடையில் கணித்தது. இலங்கைத் தமிழ்ப் பெண்கள், கல்யாணப் பெண் என்ற கெளரவத்திற்காக எத்தனை வேஷம் போடு வார்கள்? இலங்கையில் அரசியற் கொடுமைகளோ இல்லையோ, ஆசையான அம்மாவுடன் அப்பாவுடன் வயது போன ஆச்சியுடன் இருப்பதைச் சமைத்துக் சாப்பிட்டு விட்டு, நிலவில் இளம் காற்றில் முன் விறாந்தையில் இருப்பது எவ்வளவு சந்தோசம்?

Page 49
92 அரைகுறை அடிமைகள்
அவள் இப்படிச் சொல்லி எத்தனையோ தரம் துரை ஆபிடம் அழு திருக்கிறாள். லண்டனில் என்ன உண்டு, தனிமை, உழைப்பு, குளிர், குடிக்கும் கணவன் பொன் மலர் பாவம்.
"இஞ்ச வந்து என்ன கண்டன்” அவள் அழுவாள்.
இப்போதெல்லாம் யாரிடமும் சொல்லியழாமல் தனக்குத் தாலி கட்டியவனுடன் சண்டைக் பிடிக்கிறாள்.
இரவில்-நடுச்சாமத்தில் வார்த்தைகள் தடிக்கின்றன. பகலில் தடுக்கப்பட வேண்டிய சில மொழிகள் இரவில் தறிகெட்டு ஓடுகின்றன.
அவள் தான் கொண்டு வந்திருந்த மரக்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள். அவள் சைவம். சுந்தர லிங்கம் அசைவம், இவள் அளவுக்கு மீறிப் பேசினால் இவளையே சாப்பிட்டு விடுவான்!
சம்பந்தர் குசினிக்குள் வருவது தெரிந்தது. அவர் முகத்தில் ஒரு ஈயாட்டமுமில்லை. மிக மிக வாடிப் போயிருந்தார்.
வந்ததும் குசினிக்குள் அடிக்கும் 'கூழ்" மனத்தில் முகத்தைச் சுளித்துக் கொண்டார். அவர் பாவம், தன் வெட்கத்தை விட்டு விம்மத் தொடங்கி விட்டார். பொன் மலர் துடித்து விட்டாள்.
"ஏன் என்ன நடந்தது." அவள் பதறினாள்.
"இந்தப் பெட்டை. என்ர மகள் கடிதம் போட்டிருக்காள்."
அவர் தேம்பினார். கடிதத்தைப் பொன்மலர் கையிற் கொடுத்தார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 93
கடிதம் :- "அப்பா நான் உங்களுக்குத் துரோகம் ஒன்றும் செய்யவில்லை. நீண்ட காலமாக என்னுடன் இவ்விடம் இருக்கும் ஒருவரைக் கல்யாணம் செய்ய முடிவு செய்துவிட்டேன். மற்றவர்களால் இந்தச் செய்தி உங்கள் காதில் எட்ட முதல் நான் இதை எழுதுகிறேன். மகள் ராதா."
பொன்மலர் கடிதத்தை வாசித்து முடித்தாள்.
"இதில் என்ன அழ இருக்கிறது” பொன்மலர் இடுப்பில் கையூன்றிக் கேட்டாள்.
*போன இடத்தில் முன்பின் தெரியாத ஒருத்த னோட'-அவரால் அந்த வசனத்தைத் தொடர முடிய வில்லை.
"இஞ்ச பாருங்கோ அவள் முன்பின் தெரியாத ஆரையும் செய்யிற என்டு ஏன் கற்பனை செய்யிறயள்? தன்னோட நீண்ட காலம் நின்ட ஒரு ஆள் விரும்புற, என்டுதானே எழுதியிருக்கிறாள்?”
'எதுக்கும் ஒரு ஒழுங்கு முறை வேணும்” சம்பந்தர் இழுத்தார்.
"என்ன ஒழுங்கு என்ன முறை? இருக்கிற நாட்டில் பெண்களுக்கென்ன பாதுகாப்பு? ஏதோ கல்யாணம் என்டு இஞ்ச வந்தும் எங்களுக்கு என்ன கிழிஞ்சு கிடக்கு? ஒரு நேரச் சாட்பாடும் எங்கட உழைப்பில்லாமத் தர எத்தனை ஆண் பிள்ளைகள் இருக்கினம்? பொன்மலரும் அழத் தொடங்கிவிட்டாள்.
துரை அவ்விடத்திலிருந்து வெளியேறினான். இன்று ஏஜென்சிக்காரனைப் பார்க்கப் போக வேண்டும். இலங்கையிலிருந்து லண்டனுக்கு ஒரு ஆளை எடுக்க என்ன விலை வரும் என்று கேட்க வேண்டும். அந்த ஒரு

Page 50
94. அரைகுறை அடிமைகள்
ள் தன் தம்பியா அல்லது திலகாவா என்று அவன் ன்னும் முடிவு கட்டவில்லை.
துரை அவசரமாகக் கதவைத் திறந்து ரோட்டில் இறங்கினான். ஐரிஷ்காரப் பையனும் ஆங்கிலப் பைய னும் இன்னும் அன்னியோன்னியமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். எத்தனை ரம்மியமான உறவிது?
ஒரு காலத்தில் இவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக் கொள்வார்களா? அவனுக்குத் தெரியாது. இருளத் தொடங்கிவிட்டது. இளம் நிலா வானத்தில். இவன் மனதில் திலகா, "love you Thilaka’-இவன் முணுமுணுத் தான். உறவின் மகிமையைப் பக்குவமாக உணரத் தெரிந்தவன் துரை. 'திலகா இந்த வினாடியில் நான் உன்னில் வைத்திருக்கும் அன்பும் நேசமும் வார்த்தை களுக்குள் அடங்காதவை. ஆனால் நாளைக்கு என்ன நடக்குமோ தெரியாது” அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண டான். துரைதான் சுந்தரலிங்கம் மாதிரி நடக்க மாட்டேன் என்றும் சொல்லிக் கொண்டான். இரவு சண்டையில் பொன்மலர் சுந்தரலிங்கத்திடம் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது, "கல்யாணம் முடித்தால் பெண் களுக்கு என்ன கிடைக்கிறது. உங்களின்ர கட்டில் தேவை களுக்கு மட்டுமா பிறந்திருக்கினம்?"

பத்து வருடங்களில்
மீனம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப் :பட்ட விமானம் ஐம்பது நிமிடத்தில் கொழும்பு பண்டார நாயக்கா விமான நிலையத்தை தொட்டு நின்றது. எத்தனையோ கஷ்டப்பட்டு லண்டனிலிருந்து புறப்பட்டுஇந்தியா வந்து அடையாறிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும்போது தான் உண்மையாகவே வீட்டுக்குப் போகிறேனா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் செல்வகுமார். 84-ஆம் ஆண்டு தை மாதம் சிங்கள இனவாதக் கொடுமை தாங்காமல் ஊரை விட்டு ஓடியவன், இன்று பத்து வருட இடைவெளியின் பின் ஊருக்குப் போகிறான்.
விமானம் நின்றபோது அருகிலிருந்த கிழவர், "ஏன் தம்பி நீங்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்" என்று நேரடியாகக் கேட்டுவிட்டார். அவன் கிழவரைத் திரும்பிப் பார்த்தான். "அப்பா உயிரோடு இருந்தால் இப்படி யிருப்பாரா? அவன் யோசித்தான். கிழவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். மிகமிகச் சோகமான கண்கள். வயது அறுபது இருக்குமா? "எனது மகன் உயிரோடிருந்தால் அவன் உன் வயதானவனாகத்தானிப்பான்" கிழவரின் குரல் தழுதழுத்தது. கிழவர் தன் மகனைச் சிங்கள ராணுவத்திடமோ தமிழ் இயக்கத்தினரிடமோ பறிகொடுத்திருக்க வேண்டும். வெள்ளையினத்தவரிட மிருந்து, ஒரு உயிரைக் கூட பலி கொடுக்காமல் சுதந்திரம்

Page 51
96 அரைகுறை அடிமைகள்
பெற்றுக் கொண்ட நாடு இலங்கை. சுதந்திரத்தின் பின் எத்தனை லட்சம் மக்களையிழந்து விட்டது?
"தமிழர்கள் இனி இஞ்ச இருக்க ஏலாதய்யா", கிழவர் சட்டென்று அழுதுவிட்டார். அனுதாபத்துடன் அவரைப் பார்ப்பதைவிட இவனால் வேறு ஏதும் சொல்ல முடிய வில்லை. "இந்தியாவிலேயும் இருக்க முடியாது. இந்த வயதிலேயும் என்னைச் சந்தேகிக்கினம். இலங்கைத் தமிழர் எல்லாரிலயும் இந்தியக்காரருக்குக் கோபம். நானா ராஜீவ் காந்தியைக் கொலை செய்தன்?" கிழவர் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கியழுதார். இவன் மறுமொழி சொல்லவில்லை.
விமானம் கொழும்ப்ை எட்டு மணிக்கு வந்து அடைந்துவிட்டது. இவன் வருவதுபற்றி ஊரில் யாருக்கும் தெரியாது. கொழும்பிலுள்ள ஒரு சினேகிதனுக்கு நேற்றைக்கு முதல் நாள் ஒரு தந்தி கொடுத்திருந்தான். அவசரத் தந்தியாகத்தான் அனுப்பினான். இன்று கிடைத் திருக்கும்.
பிரயாணிகள் அவசர அவசரமாக இறங்கிக் கொண் டார்கள். இவன் மெல்லமாகத் தலையைக் கோதிக் கொண்டான். மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. −
ஊரைவிட்டு ஒடும்போதும் கள்ளப் பாஸ்போட்டில் தான் ஓடினான். ஊருக்கு வரும்போதும் கள்ளப் பாஸ்போர்ட்டில்தான் வருகிறான்.
கையிலிருப்பது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் எத்தனையோ ஆயிரம் பவுண்ஸ் கொடுத்து எடுத்த பாஸ்போர்ட் லண்டன் "கற்விக்” ஏர்போட்டிலேயே இந்த பாஸ்போர்ட்டிடம் அவர்கள் சந்தேகிக்கவில்லையே!

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 97
இலங்கை கஸ்டம்ஸ் ஆபீசர் இவனை மேலும் கீழும் பார்த்தார். "லண்டனில் என்ன செய்கிறாய்?" கஸ்டம்ஸ் ஆபீசர் ஒல்லீஸர் இவனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு கேட்டார். A.
"பிஸினெஸ் செய்து கொண்டிருக்கிறேன்.” இவன் குரலில் கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டாலும் இருதயத்தின் படபடப்பைக் குறைக்க முடியவில்லை.
கஸ்டம்ஸ் ஆபீசைத்தாண்டி வெளியே வந்தபோது இந்த இருட்டில் என்ன செய்வது என்று தெரிய வில்லை.
அவனின் சினேகிதன் ஏர்போர்ட்டுக்கு வரவில்லை. தனியார் கார்கள் ஒன்றிரண்டு நின்றிருந்தன. அரசாங்க பஸ் நிரம்பி வழிந்துவிட்டது.
அவன் வெளியே வந்தான். ஒரு சிங்கள போலீஸ்காரர் இவனிடம் சிங்களத்தில் ஏதோ கேட்டார்.
இவனுக்குச் சிங்களம் சரியாகத் தெரியாது கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்தபோதே சிங்களம் சரியாகத் தெரியாதவன். தமிழர்களைத் தேடிக் கொலை செய்த சிங்கள இனவாதக் கூட்டத்தின் கூக்குரலை அடையாளம் தெரிந்துகொள்ள எந்தவிதமான மொழியும் தெரிந்திருக்கத் தேவையில்லை.
ஒரு மொழி என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் சின்னம் என்றால் இலங்கையில் நாகரீகத்தின் சின்னமாக எந்தவித மொழியும் இல்லை.
"தனியார் வண்டிகளில் ஏறும்போது கவனமாக ஏறவும்".போலீஸ்காரர் போய்விட்டார். இவன் தயக்கத்

Page 52
98 அரைகுறை அடிமைகள்
துடன் நடந்தான். இவனுடன் விமானத்தில் கூட வந்த கிழவர் இவனை அவசரமாகக் கூப்பிட்டார். அவர் மிகவும்
பதற்றமாகக் காணப்பட்டார்.
தேம்பி வசதியாய் வாங்கோ கெதியாய்க் கொழும்புக்குப் போகப் பாருங்கோ. தனியாய் நிண்டால் பிரச்சினை.” கிழவர் துரிதப்படுத்தினார்.
கிழவரின் வாகனத்தில் இவன் ஏறிக் கொண்டான்.
"தம்பி நீங்கள் இலங்கைக்கு வருவது மிக ஆபத்து என்று தெரியாத ஆள்போல இருக்கிறது”, கிழவர் படபட -என்று சொன்னார். "பத்து வருடமாக நான் எனது தாயைப் பார்க்கவில்லை”. இவனால் அதிகம் பேச முடிய வில்லை. அடக்கி வைத்த சோகம் பீறிட்டு எழுந்தது இவன் அழுவதைத் தவிர்த்தான்.
கண்ணெதிரே தனது 'இரு மகன்கள் ராணுவத்தால் கொல்லப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாமல் தாய் படுத்த படுக்கையானாள். படுக்கையில் விழுந்த தாயை வருடக் கணக்காகியும் வந்து பார்க்க முடியாத கொடுமையை எத்தனை தரம் நினைத்து துக்கப் படுவது?
அம்மா இப்போது இறந்து போயிருக்கலாம். அவனுக்குக் கடிதம் வந்து பத்து நாட்களாகிவிட்டன. அதற்கிடையில் அவன் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் எடுக்கப் :பட்டபாடு. லண்டனில் அவன் அகதி. பாஸ்போர்ட்டை விமானத்தில் கிழித்தெரிந்துவிட்டு லண்டனில் இறங்கிய
தமிழனில் ஒருத்தன்.
"அம்மா உயிரோடிருக்க வேண்டும்" இப்படி அவன் பிரார்த்திப்பது ஆயிரமாவது தடவையாக இருக்கலாம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 99
அம்மா எப்படி இருப்பாள்? தலை நரைத்து பல் விழுந்து.? இவன் இரவு பகல் பாராது உழைத்து அனுப்பிய காசில் அம்மா இரண்டு தம்பிகளையும் இந்தியாவுச்கு அனுப்பி விட்டாள். இரண்டு தங்கை களையும் படிப்பித்துவிட்டாள். தம்பிகள் இந்தியாவி லேயே இருந்திருக்கலாம். இலங்கைக்குத் திரும்பிப் போய்ப் படுகொலை யெய்யப்பட்டு விட்டார்கள். 1987-ம் ஆண்டு இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது இனி அமைதி கிடைக்கும் என்று நம்பி வந்த தம்பிகள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கை ராணுவத்திற்குப்
பலியானார்கள்.
*கொழும்பில் எங்கேயிறங்க வேணும்.” சாரதி கேட்டார்? இவன் திடுக்கிட்டு நினைவுக்கு வந்தான். விலாசத்தைச் சொன்னான். இப்போது கொழும்பில் தெரிந்த ஒரே ஒரு நன்பனின் வீடு அது. வண்டி வீட்டின் முன்னால் நின்றது.
இவன் போய்க் கதவைத் தட்டினான். யாரும் கதவைத் திறக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரன் நித்திரைக் கலக்கத்தில் எழும்பிவந்தான்.
இந்த வீட்டுக்காரர்கள் இரண்டு நாட்களுக்குமுன் ஊருக்குப் போய்விட்டார்களாம்! கொழும்பில் நடக்கும் தமிழர் வேட்டையிலிருந்து தப்ப, தப்பியோடும் தமிழ்க் குடும்பங்கள்.
தம்பி என்ன செய்யப் போகிறீர்கள்?’ கிழவர் பரிதாபத்துடன் கேட்டார்.
"என்ன செய்வது? அவன் விரக்தியுடன் வானத்தைப் பார்த்தான். "என்னுடன் லொட்ஜில் வந்து நிற்கலாமே." கிழவரின் யோசனையை ஏற்பதைவிட வேறொன்றும் தெரியவில்லை.

Page 53
100 அரைகுறை அடிமைகள்
அடுத்த நாள் பஸ்ரொப்புக்குப் போகும்போது பகலில் கொழும்பு நகரத்தை எடை போட்டான். எத்தனை மாற்றப்! வான் அளாவிய கட்டடங்கள். அதைத் தவிர வேறு என்ன உயர்ந்திருக்கிறது? பஸ் எத்தனையோ இடங்களில் சோதனை போடப்பட்டது. கொழும்பிலிருந்து கண்டிக்குப் போகும்வரைக்கும் சிங்களக் காடையர்கள். கண்டியைத் தாண்டியதும் முஸ்லிம்கள்.
ஒரு காலத்தில் சொந்தச் சகோதரர் மாதிரிப் பழகிய முஸ்லிம்களா இப்படி? ஊரில் அவன் நெருங்கிய சினேகிதன் ரஹீம். அவனும் மாறியிருப்பான? 24 மணித்தியால உத்தரவில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் அகதிகளாகத் துரத்தப்பட்ட கோபத்தில் ரஹீம் தன்னுடன் பேசாமல் விட்டுவிடுவானா?
இலங்கையில் மனிதத் தன்மையே மடிந்து விட்டதா? தமிழர்களுக்கெதிராகச் சிங்களர்கள், முஸ்லிம்கள். முஸ்லிம்களுக்கெதிராகத் தமிழர்கள்! மனிதாபிமானம் எங்கே போய்விட்டது?
ஊரில் அவனை யாரும் எதிர்பார்க்கவில்லை. பாட்டி பதறியழுதுவிட்டாள். இவனின் தாய் இறந்து ஏழு
நாட்களாகிவிட்டனவாம்,
இவன் பாட்டியின் தோளில் முகம் புதைத்து விம்பினான், பாட்டிக்கு எழுபது வயது. அம்மாவுக்கு ஐம்பதுவயது அவள் போய்விட்டாள். அப்பாவுக்காக அழ முடியவில்லை. தம்பிகளுக்காக அழ முடியவில்லை. இப்போது அம்மாவுக்காக அழுகிறான். ஏழு நாட்கள்.
தங்கை ஒடி வந்து காலைக் கட்டிக் கதறினாள். அவள் கணவன் ஏதோ இயக்கத்தைச் சார்ந்தவன் என்று இன்னொரு இயக்கத்தினர் அங்கம் அங்கமாக வெட்டி இவளிடம் கொண்டு கொடுத்துவிட்டுப் போனார்களாம்?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 0.
"நீ ஏன் வந்தாய்?" கிழவி தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டாள். "உன்னையும் பறிகொடுக்கவா? ஊர் திரண்டுவந்து இவனுடன் சேர்ந்து அழுதது ஒவ்வொருத்தரும் தங்கள் இழப்புகளை நினைத்தும் சொல்லியும் கதறினார்கள்.
மதிய நேரம் சொறி நாய்களையும் ஒன்றிரண்டு முதிய கிழவிகளையும் தவிர ஊர் வீதிகளில் யாரையும் காணவில்லை.
இந்த ஊரில்தான் இப்படியா?
அடுத்த ஊரில் ரஹீம் வாழ்ந்தவன். என்ன நடந் திருக்கும்? போய்ப் பார்க்கலாமா? நினைக்கவே முடிய வில்லை.
அவன் கால்போன போக்கில் நடந்தான். ஊரைச் சுற்றிக் கிடக்குப் பச்சைப் பசேல் என்ற வயல்கள் கருகிக் கிடந்தன. "புலிகளை மறைத்து விளைந்த வயலையே அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்களாம். வயிற்றைக் காப்பாற்றும் வயல் கருகிக் கிடந்தது.
இரண்டாம் தங்கை தேடிக் கொண்டு வந்தாள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒடிப்போன அவளது கணவன் இன்று எங்கேயிருக்கிறான் என்று கூடத் தெரியாது. அவன் இன்னும் உயிரோடு) இருக்கிறான் என்பது அவளது நம்பிக்கை.
அவளின் ஏழு வயது மகன் தன் மாமனை வெறித்துப் பார்க்கிறான். பத்து வயதானதும் துப்பாக்கி தூக்குவ தாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான் அவன். மாமன் ஓடி விளையாடிய வயல் எரிந்து கிடக்கிறது. மருமகனைத் தூக்கி விளையாட பாட்டன், பாட்டியில்லை. பத்து

Page 54
102 அரைகுறை அடிமைகள்
வயதில் மாமன் பந்து விளையாடினான். மருமகன் துவக்கு தூக்கப் போகிறானாம். பத்து வருடம் ஒவ்வொரு
குடும்பத்திலும் எத்தனை மாற்றம் ஒரு இனத்தின்
சரித்திரத்தில் என்னென்ன திருப்பம்!
அன்று இரவு அவன் தூங்கவில்லை. ஊரில் பயங்கர அமைதி. நடுச் சாமத்தில் காதைப் பிளக்கும் சத்தத்துடன் தீவிரவாதிகளின் வாகனம் வந்தது. ஊர் விழித்துக் கொண்டது. ஊர் மக்கள் இலங்கை ராணுவத்துக்குப் பயப்படுவதுபோல இவர்களுக்கும் பயந்தார்கள்.
இவன் கட்டிலில் எழும்பி உட்கார்ந்தான். துப்பாக்கி தூக்கிய ஒரு இளைஞன் இவனிடம் வந்தான். வந்தவனுக்கு வயது பதின்மூன்றுக்கு மேல் இருக்காது. ஒரு காலத்தில் இவன் மருமகனும் இப்படித்தான் இருப்பானோ?
"உனது பெயர் என்ன?" குரலில் ஒரு மரியாதையு மில்லை. துப்பாக்கி கொடுத்த பலம், தொணியிற் பிரதி பலித்தது. இவன் தயங்கினான். ஊரில் நடக்கும் எல்லா வற்றையும் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று பாட்டி சொன்னாள்.
“டேய் உன் பெயர் என்ன? துப்பாக்கியை இவனின் மூகத்துக்கு நேரே நீட்டினான் இன்னொருத்தன்.
*செல்வகுமார்” குரல் தடுமாறியது.
"நீதான் லண்டனிலிருந்து வந்தாயா?” ".." தெரிந்துகொண்டும் ஏன் கேட்கிறார்கள்?
"எங்கட இயக்கத்தை ஆதரிக்கிறாய் என்று நம்பு கிறோம்.” . .

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் O3
9." இவனிடமிருந்து மறுமொழியை எதிர்பார்க்கும் தொணி. வந்திருந்த தீவிரவாதிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். இவனின் மெளனம் அவர் களுக்கு எரிச்சலையுண்டாக்கியிருக்க வேண் டு ம். செல்வகுமாரின் தங்கை அழைக்கப்பட்டாள்.
"உன் தமையனுக்கு எங்களைப்பற்றிச் சொல். நாங்கள் நாளைக்கு வருவம்” தங்கை தலையாட்டினாள்.
அவர்கள் போய்விட்டார்கள்.
*அண்ணா ஏன் வந்தாய்?” தங்கை கேவிக் கேவி யழுதாள்.
தன்னைப் பரிதாபத்துடன் பார்க்கிறார்களா? அல்லது பயத்துடன் பார்க்கிறார்களா? தன்னால் இவர்களுக்கு ஆபத்தா? "அண்ணா இஞ்ச பேய்கள் ஆட்சி செய் கிறார்கள்” வானத்தில் நல்ல நிலா. தங்கை இவன் கட்டிலடியில் உட்கார்ந்து விம்மிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அப்படியே அம்மாவின் முகம்,
"அம்மா சாகும்போது என்ன சொன்னாள்?” இவன் அம்மாவை நினைத்துக் கொண்டான். தங்கை இவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
"ஏன் பேசாமலிருக்கிறாய்?" இலங்கையை விட்டுப் போகும்போது அவளுக்குப் பத்து வயது. அப்போதெல் லாம் அவள் வெடுக் வெடுக் என்று பேசுவாள். ஒரு இடத்தில் நிற்காமல் துருதுருவென்று இருப்பாள். இப்போது அவள் யாரையும் நேரே பார்ப்பது கிடையாது.
பெரும்பாலான நேரம் பேசுவது கிடையாது. "..எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு உன்னை வர

Page 55
04 அரைகுறை அடிமைகள்
வழைக்க வேண்டாம் என்று சொன்னாள்” சொல்லும் போதே அவளுக்கு அழுகை வந்தது.
"ஈழம் கிடைத்த பிறகும் நான் வரக்கூடாதா? அவன் கேட்டதை அவள் குழப்பத்துடன் பார்த்தாள். பின்னர் அவள் சிரித்தாள். வேதனை கலந்த சிரிப்பு.
என்ன சிரிக்கிறாய்?
"கனவுகள் ரொம் ப இனிமையானவைதான். தர்மங்கள் அழிந்தபின் என்ன நடந்தால்தான் என்ன?” அவள் சலித்துக்கொண்டாள். பாட்டி இவனைப் புதிதாகப் பார்த்தாள்.
அடுத்த நாள் விடிந்தது. தங்கையின் இடியப்பமும் சம்பலும் வாய்க்கு எடுபடவில்லை. தெருவுக்கு வந்தான்"
தூரத்தில் இராணுவ ஜீப்பின் சத்தம் கேட்டதும் -வாலைச் சுருட்டிப் படுத்திருந்த சொறி நாய்கள் கூட
ஒட்டம் பிடித்தன.
"அண்ணா தெருவில் நிற்காதே’ தங்கை தன் அவிழ்ந்த கொண்டையைக் கட்டிக்கொண்டு ஓடிவந்தாள். இவனைக் கோழிக்கூட்டுக்குள் மறைத்து வைத்தார்கள்.
இந்த வீட்டில் ஒரு வளர்ந்த ஆண்பிள்ளையிருக் கிறான் என்று தெரிந்தால்.” தங்கைக்கு வாய் உலர்ந்து கொண்டது. ஆண்களைத் தேடிவரும் சிங்கள ராணுவம் தமிழ்ப் பெண்களை என்ன செய்வார்கள் என்று வாயால் சொல்லத் தேவையில்லை. பாட்டி பதறிக்கொண்டு ஓடி வந்தாள். இவனை ஒடச் சொல்லித் துடித்தாள். அவன் குற்ற உணர்வில் வெதும்பினான். இந்தக் கொடுமை ஆகளை என் குடும்பம் அனுபவிக்க நான் மட்டும் லண்டனில்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 05
இருக்கிறேனே. இன்னும் சில வருடங்களில் இவன் மருமகனும் பிடிபடலாம்.
"பணக்காரர்கள் வெளிநாடு போகிறார்கள். பதவி யாசையும் ஆயுத வெறியும் பிடித்தவர்கள் பலம் பெற்றுத் திரிகிறார்கள். ஓடமுடிந்த ஏழைத் தமிழர் இந்தியாவுக்குப் போகிறார்கள். நாங்கள் எங்கே போவம்", ஒடுகிற அவசரத்தில் தங்கையின் குரல் ஒலித்தது. பாட்டி தலையி லடித்துக் கொண்டழுதாள்.
"ஏன் தமிழர்களாக இலங்கையில் பிறந்தம்". பாட்டி ஈவானத்தைப் பார்த்துக் கைகூப்பியழுதாள். ஜீப் ஊர் முனையில் திரும்பிப் போகும் சப்தம் கேட்டது. இவனை u umrGBurmr தேடி வந்திருப்பதாக மருமகன் வந்து சொன்னான
பாட்டி முந்தானையை முடிந்தபடி எட்டிப் ւմո մեծ தாள். ரஹிம்! பத்து வயதிலிருந்து பதினாறு வயதுவரை அடுத்த நகரத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். மதம் இவர்கள் நட்புக்குத் தடையாக இருந்ததில்லை. 'd வந்திருக்கக்கூடாது". ஹிம் முணுமு இணு த் தான். நண்பனைக் கண்ட சந்தோசத்தைத் திாண்டிய பயம் முகத்தில் தெரிந்தது.
"என்ன ரஹீம் இதெல்லாம்?
செல்வகுமாரின் கேள்விக்கு ரஹீம் பதில் சொல்ல வில்லை. -
"தமிழர்கள் மட்டும்தான் இலங்கையில் கஷ்டப்படு கிறார்கள் என்று ஏன் சொல்கிறாய்?
ரஹீமின் குரலில் தோய்ந்திருந்த வேதனைக்குக் காரணம் இருந்தது. அவனின் சொந்தக்காரர்களையும்
7 سے By

Page 56
106 அரைகுறை அடிமைகள்
தான்- 1,00,000 முஸ்லிம்களை- யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாய்க் கலைத்து விட்டார்கள் தமிழர்கள். ஈழம் வருமுன்னரே இப்படி நடந்தவர்கள் ஈழம் வந்தால் என்ன செய்வார்களாம்?
தென்னிலங்கையில் சிங்கள அரசாங்கத்தை எதிர்த்த கிட்டத்தட்ட அறுபதினாயிரம் இளம் உயிர்களைசிங்கள ராணுவம் கொலை செய்து குவித்ததே.”
ரஹீம் வந்ததும் வராததுமாகக் கொலைகள் பற்றிப் பேசுவதை விரும்பவில்லை என்பது குரலில் தெரிந்தது.
நீ இங்கு வந்திருக்கக்கூடாது.” ரஹீமின் குரலில் கடினம். "எனது தாயின் மரணம் காரணமாக வந்தேன்.
"இங்கு மரணங்கள் அர்த்தமற்றவையாகப் Gurtuit: விட்டன”. ரஹீம் வானத்தைப் பார்த்துக் கொண்டான். வானம் இருண்டுகொண்டு வந்தது.
திரும்பிப் போ. இந்த நிமிடமே திரும்பிப் போ. கொழும்புக்குப் போகும் லொறியில் நீ போக நான் ஏற்பாடு செய்கிறேன்.”
'ஊருக்கு வந்து இரண்டு நாள்கூட ஆகவில்லை" செல்வகுமார் தயக்கத்துடன் சொன்னான்.
தெருவில் ஏதோ சத்தம் கேட்டது.
ஒருசில இளைஞர்கள் ஏதோ விவாதித்துக் கொண் டிருந்தார்கள். இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களாகத் தெரியவில்லை. இளைஞர்கள் எங்கேயோ இருந்து வந்திருக்க வேண்டும். யாரோ ஒருத்தனை வைத்து

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 107 விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
செல்வகுமார் நண்பனைப் பார்த்தான்.
"நான் இந்த ஊருக்கு வந்ததே பெரிய ஆபத்து”. மசூதிக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைத் தமிழ்த் தீவிரவாதிகள் சுட்டதை மறக்க முடியுமா? செல்வகுமார் விரக்தியுடன் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கும் சினேகிதனைப் பார்த்தான்.
தெரு முனைவில் விசாரிப்பு நடந்து கொண்டிருந்தது. யாரோ ஒருத்தனை "ஒற்றன்" என்று விசாரிக்கிறார்களாம்: அன்று பகல் எல்லாம் ஊரே ஒரு கலக்கமாக இருந்தது. ஒத்துப் போகாதவர் எல்லாம் “ஒற்றர்" என்றால் நம்பிக்கை எங்கேயிருக்கும்? அன்று இரவு "ஒற்ற"னைக் கொண்டு வந்து ஒரு மரத்தில் கட்டினார்கள். ஊரில் உள்ள அத்தனை பேரையும் வரச் சொல்லி உத்தரவு போடப்பட்டது. குழந் ைத க ள், இளம் பெண்கள் முதியவர்கள் எல்லோரும் வரவழைக்கப்பட்டார்கள். “ஒற்றன்" தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று பரிதாபத்துடன் முணுமுணுத்தான்.
செல்வகுமாரின் மனத்தில் பத்து வருடங்களுக்கு முன் கொழும்பில் சிங்கள இனவாதம் தமிழர்களை வேட்டை யாடியது படமாக ஓடியது. இன்று தமிழனைத் தமிழன் வேட்டை ஆடுகிறான்!
அடுத்தநாள் "ஒற்றணின்" இரத்தம் தெருவில் உறைந்து கிடந்தது.
தினமணிசுடர், ஏப்ரல் 9, 1994

Page 57
அவன் ஒரு இனவாதி
"பாவம் செந்தூரன்" அவள் பஸ்ஸுக்கு ஓடிக் கொண்டிருக்கும் போது தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ஓடிய படியால் மூச்சு வாங்கியது.
செந்தூரன் அவளின் கடைசிமகன், வயது பத்து, ஒரு சில நாட்களாகச் சுகமில்லாமல் இருக்கிறான். வெறும் தடிமலும் இருமலும்தான். லண்டனில் தடிமலும் இருமலும் எப்போதும் வந்து போகும் அழையாத விருந் தாளிகள். குழந்தை மூச்செடுக்கவே கஷ்டப்படுகிறான்.
வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள வசதியில்லாத தன் வாழ்க்கையை நொந்து கொள்வதா என்று சிலவேளை யோசிப்பாள்.
பஸ் இன்னும் வரவில்லை. செப்டம்பர் மாதம் முடியப் போகிறது. கடந்த ஒன்றிரண்டு நாள்களாக நல்ல வாத்தியமாக இருந்தது. இன்றைக்குக் காலையில் எழுந்து பார்த்தால் உலகம் பெரும் புகாரால் மூடப் பட்டிருக்கிறது. யாரோ அரக்கர்மார் இரவிரவாக மிக மிக அவசரமாக ஓடிவந்து உலகத்தை மூடிவிட்டது போலிருக்கிறது புகார்.
தூரத்தில் பஸ் வருவதும் தெரியவில்லை. வழக்கம் போல் இந்த நேரம் இவ்விடம் வந்து பஸ் எடுக்கும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 109
பிரயாணிகள் ஒவ்வொருத்தராக வந்து சேர்கிறார்கள். எத்தனை ரகமான மனிதர்கள்!
வழக்கம் போல் பெரிய சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டு நிற்கும் நைஜீரியர்கள் இருவரையும் காண வில்லை. மற்றவர்கள் பக்கத்தில் இருப்பதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் சத்தம் போட்டுச் சிரித்துக் கதைப்பார்கள். கடந்த கொஞ்ச நாள்களாக நைஜீரி யாவின் அரசியலைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந் தார்கள். ஏன் அமெரிக்கா எங்கள் நாட்டு உள்நாட்டு விடயத்தில் தலையிட வேண்டும் என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டதை இவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
"ஏன் என்றால் உங்கள் நாட்டில் எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன. அதுதான் அவர்கள் உங்கள் நாட்டில் மிக மிக அக்கறை கொள்ளுகிறார்கள். சோமாலி யாவில் மிகப்பெரிய அளவில் எண்ணெய் இருக்கிறதாம். அதுதான் அமெரிக்கன் அமைதி காக்கவென்று சொல்லிக் கொண்டு போனானாம் என்று அவள் சொல்ல நினைத் தாள். பஸ் ஸ்ராண்ட் ஒரு புதிய உலகம். காதல்கள் சோகங்கள், இனவாதக் கோஷங்கள் எல்லாம் கேட் கலாம்.
போன கிழமை ஒரு பங்களாதேஷிப் பெண்ணின் முகத்தில் ஒரு பெரிய மொட்டை வெள்ளையன் காறித் துப்பினான். அந்தப் பெண் ஒரு வயதுபோன பெண். இவளுக்கு மனம் எரிந்தது.
என்ன செய்ய முடியும்? பிறந்த ஊரில் இனக்கொலை களுக்கு அஞ்சி ஓடி வந்து லண்டனில் மட்டும் என்ன கண்டோம், மைதிலி பெருமூச்சு விடுகிறாள்.
வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்கிறார்கள். பாடசாலையில் வந்ததும் இனிப்பு வாங்க என்றும்

Page 58
110 அரைகுறை அடிமைகள்
சொல்லிக் கொண்டு ரோட்டுப் பக்கம் போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். வேலையால் வரும் வரை மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கும். குழந்தைகளின் நினைவு மனத்தைக் குடைந்து கொண்டேயிருக்கும்.
மூத்த மகனுக்குப் பதினாறு வயது. மற்ற இருவரும் பதினான்கும் பத்தும், கவனமான குழந்தைகள். அம்மாவின் துயரம் தெரிந்தவர்கள். செந்தூரன் வடியும் மூக்கைத் துடைத்துக் கொண்டு பெரிய முத்தம் கொடுத்து வழியனுப்பினான். இவள் வேலைக்குப் போகாவிட்டால் தனக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்க முடியாது என்று அவன் யோசிப்பான், பெரிய மகன் இவள் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது கவனம் அம்மா என்று சொன்னான். அவன் குரலின் கனிவு இன்னும் காதில் ஒலிக்கிறது. பதினாறு வயதில் தாயைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சி குரலில் தொனித்தது.
இரண்டாவது மகன் பதினான்கு வயது மாதவன். "இனவாதிகள் மிக மோசமாக நடந்து கொள்கிறார் களாம். கவனமாகப் போ அம்மா” என்றான். அவன் மிகப் பயந்தவன்; தனியாகப் போக மாட்டான். அந்தக் குழந்தை பயப்படாமல் என்ன செய்யும்? இங்கிலாந்தில் எத்தனை இனவாதத் தாக்குதல் நடக்கிறது. ஒரு வருடத் தில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட இனவாதத் தாக்குதல் தடக்குமாம். அதில் ஐம்பது வீதமானவை லண்டனில் தானாம். அதுவும் முக்கியமாக தாக்கப்படுபவர்கள் ஆசியா மக்களான இந்திய, பாகிஸ்தானி, இலங்கை யர்கள்தானாம்!
அவள் சிலிர்த்துக் கொண்டாள். குளிரும் பயமும் அவளை மோதின. இன்னும் பஸ் வரவில்லை. புகாருக் குள்ளால் இரு நைஜீரியர்களிலும் குரல் கேட்டது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஜெனரல் பாங்கிடாவைத் திட்டுவது கேட்டது. போன கிழமை இனவாதியாக துப்பப்பட்ட அந்த வயது போன பங்களாதேசிப் பெண்ணும் வந்து சேர்ந்தாள்.
இந்தக் குளிரில் இந்த வயதில் எங்கே போகிறாள்? மைதிலி தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். ஆஸ்பத் திரியிலிருக்கும் யாரோ சொந்தக்காரரைப் பார்க்க போகிறாள் போலும். ஏனென்றால் பஸ்ஸில் ஏறியபோது பார்த்தலோமியாஸ் ஆள்பத்திரிக்கு டிக்கட் வாங்கிக் கொண்டாள்.
கிழவியும் மைதிலியும் எதிரும் புதிருமான இருக் கைகளில் அமர்ந்து கொண்டார்கள். பஸ் புறப்படும் சமயம் பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு ஒரு மேற் மேற்கிந்தியப் பெண் இளைக்க இளைக்க ஓடிவந்து ஏறிக் கொண்டாள்.
கிழவி ஒதுங்கி இடம் கொடுத்தாள்.
பஸ் புறப்பட்டது. பக்கத்திலிருந்தவனின் "சன்' பேப்பரில் கிழக்கு லண்டனில் நடக்கும் இனத் தாக்குதல் பற்றிய நிகழ்ச்சி பிரசுரமாகியிருந்தது.
ஹிட்லர் எப்போதோ இறந்து விட்டதாகச் சொல் கிறார்கள். ஆனால் உலகமெங்கும் ஹிட்லர்கள் உருவாகி விட்டார்கள் போலும். சிறுபான்மையினர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். இன்று கிழக்கு லண்டனில் இனவாதிகள் கொடுமை செய்கிறார்கள்.
மைதிலி தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டாள். கிழக்கு லண்டனில் இனவாதிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தை மேர்ஸாவைப் பற்றி இரவில் டி. வி. யில் காட்டினார்கள். அந்த முஸ்லிம் தந்தை மேர்ஸா ஒரு அப்பாவி என்று

Page 59
2 அரைகுறை அடிமைகள்
சொன்னார்கள். அந்த அப்பாவித் தந்தை ஒரு காரணமு. மில்லாமல் பயங்கரமாக தாக்கப்பட்டு உயிருடன் பயங்கர மான குளிர் நீரில் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்டி ருக்கிறான். போன வாரம் டுடேசிஅலி என்ற பதினேழு, வயதுப் பையன் பயங்கரமாகத் தாக்குப்பட்டுப் பார்வை யற்ற நிலையில் கிழக்கு லண்டன் ஆஸ்பத்திரியில் இருக், கிறான்.
மைதிலிக்கு உடம்பு சிலிர்த்தது. ஒவ்வீசுக்குள் நுழைந் தால் "ஹலோ மைதிலி" இவளை இவரின் மேலதிகாரி இனிய முகத்துடன் வரவேற்றார்.
அவள் ஒரு புனருத்தாரண நிலையத்தில் வேலை செய் கிறாள். போதை வஸ்துக்களால் வாழ்க்கையைச் சீரழித் துக் கொண்டவர்களைத் திருத்துவதற்கான உதவிக்காக இந்த ஸ்தாபனம் இயங்குகிறது.
இங்கு வேலை செய்வதே அவளால் நம்ப முடியாத ஒரு விடயம். மிகவும் பயங்கரமான மனிதர்களை எல்லாம். சந்திக்கும் வேலை. கதையில் காணும் வில்லன்மார்கள் இங்கே சாதாரணமாகத் தென்படுவார்கள்.
"எப்படிக் குழந்தைகள்” மிஸ்டர் பரட் இவளைக் கேட்டார். மிஸ்டர் பரட் என்பவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் தன் ஆண் சினேகிதனுடன் வாழ்க்கை நடத்துகிறார். ஒரு குழந்தை எடுத்து வளர்க்க ஆசை என்றும் " ஹோமோ செக்சுவல்” தம்பதிகள் குழந்தை, தத்து எடுத்து வளர்ப்பதை மிகக் கடினமான காரியமாக அரசாங்கம் கணிக்கிறது என்றும் அவர் இவளிடம் சில: வேளைகளில் புலம்புவார்.
மகன் செந்தூரன் தடிமல் இருமலுடன் கஷ்டப்படு கிறார் என்பதைச் சொன்ன போது அவர் மிக அனுதாபப் பட்டார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 113
இன்று இரண்டு புதியவர்கள் இந்தச் சென்டருக்கு வந்திருக்கிறார்கள்" மிஸ்டர் பரட் இவளின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார்.
இதில் என்ன புதுமை? ஒவ்வொரு நாளும்தான் புதிய மனிதர்கள் வந்து போகிறார்கள் அவள் மிஸ்டர் பரட்டை ஏறெடுத்துப் பார்த்தாள்.
'உம்." அவள் பேச்சை மேலே தொடராமல்: பேப்பர்களைத் தடவிக் கொண்டார். ஏதோ சொல்லத் தயங்குகிறார் என்று அவர் முகத்திலும் நடவடிக்கையிலு மிருந்து தெரிந்தது.
அடுத்த அறையிலிருந்து டெலிபோன் மணி அடித்தது. “சரி”இதைப் படியுங்கள். கெதியில் வருகிறேன்” அவர் புதிதாக வந்திருப்பவர்களின் செய்திக் குறிப்பை இவள் கையிற் கொடுத்து விட்டுப் போனார்.
மைதிலி குறிப்பைப் படிக்கத் தொடங்கினாள், ஒருத் திக்கு பதினாறு வயது. கடந்த ஒரு வருட காலமாக *ஹெரோயின்’ எடுக்கிறாள். அதற்கு முதல் அவளுக்குத் தெரிந்த போதை வஸ்துக்களை எல்லாம் அவளின் பன்னிரண்டு வயதிலிருந்து எடுத்திருக்கிறாள். போதை வஸ்துக்கள் வாங்க விபச்சாரம் செய்கிறாள். இப்போது கோர்ட் கேஸ் போடப்பட்டிருக்கிறது. அவள் தான் சீர் திருத்த ஸ்தானம் ஒன்றில் சேர்ந்திருப்பதால் தனக்குக் கருணை காட்டும்படி நீதிபதியிடம் கேட்கப் போகிறா Q7.rt tib.
அடுத்த குறிப்பு :- மைக்கல் என்பவனைப் பற்றியது. அவனுக்கு இருபத்தி ஒரு வயது. பதின்மூன்று வயதி லிருந்து போதை வஸ்துக்களைப் பாவித்திருக்கிறான். இப் போது ஒரு நாளைக்கு ஒரு கிறாம் ஹேரோயின் எடுக்

Page 60
114 அரைகுறை அடிமைகள்
கிறான். போதை வஸ்துக்களை வாங்கச் சில வேளை மிக மிகப் பயங்கரமான விடயங்களிலும் ஈடுபட்டிருக்கிறான்.
மைதிலி மேலெழுந்த வாரியாக இரு குறிப்பிட்ட குறிப்புக்களையும் வாசித்து முடித்தார்கள். இவ்விடம் வந்து சேருபவர்களின் பெரும்பாலான வரலாறு இவை தான்.
மிஸ்டர் பரட் ஏன் அந்தக் குறிப்புக்களை இவளிடம் கொடுத்தார் என்று அவளுக்குத் தெரியும். இப்போது -வந்திருக்கும் இருவரின் சீர்திருத்த வேலைகளைப் பார்ப்பது அவளின் கடமை. அங்கு வேலை செய்யும் ஒவ்வொருத்தரும் சமமாக வேலைகளை பகிர்ந்து கொள் வார்கள். அந்த இடம் பன்னிரண்டு மனிதர்களுக்கு இடம் கொடுக்கிறது. அவர்கள் போதை வஸ்துக்களுக்கு அடிமை யான ஆண்களாகவுமிருக்கலாம் பெண்களாகவுமிருக் -கலாம். இருபத்தி நான்கு மணித்தியாலமும் உத்தியோகஸ் தர்கள், வேலை செய்வார்கள். யார்டியூட்டியில் இருக் கிறார்களோ அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக். கும் கேஸ்"களைப் பார்த்துக் கொள்வார்கள்.
இப்போது இவனும் கரலைனும் டியூட்டி, புதிதாக வந்திருக்கும் இருவரும் இவள் தலையில் கட்டப்படு வார்கள். ஏனென்றால் கரலைனுக்கு ஏற்கனவே அதிகப் படியான கேஸ்கள் தலைக்கு மேற் கிடக்கின்றன.
மிஸ்டர் பரட் திரும்பி வந்தார். சிகரட்டைப் புகைக்க ஆரம்பித்தார். அவளுக்கு அது பிடிக்காது என்று அவருக் குத் தெரியும். இவளுக்கு எப்போது அந்தஇடத்தை விட்டு ஓட வேண்டும் போலிருந்தது. புகை பிடிப்பவர்களையும், மீசை வைத்துக் கொண்டிருப்பவர்களையும் அவள் தவிர்த்து விடுவாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 15 -
"சரி.மைதிலி, இந்த கேஸ்" இரண்டையும் பார்த் திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதலாவது கேஸ் பார்பரா என்பவள் பதினாறு வயது என்றாலும் அறுபது வயதுக் கிழவி மாதிரி வாதம் பண்ணுவாள். அடிபட்ட பழமரம். இரண்டாவது கேஸ்.” அவர் மேற்கொண்டு சொல்லாமல் இவளைக் கூர்ந்து பார்த்தார். அவள் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். வந்திருப்பவன் ஒரு காமுகன் ஆக இருக்கலாம். அதுதான் அவர் இப்படித் தயங்குகிறார். அவள் தன்னைச் சுதாகரித்துக் கொண் டாள். இவளைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினாள்.
*மைதிலி ஐயம் சொரி..நீ இப்படியானவர்களுடன் வேலை செய்ய வேண்டியிருப்பதை விட்டு நான் மிக மிகத் துக்கப் படுகிறேன்." அவர் சொன்னார்.
"கற்பழிப்பு செய்தவர்களுடனும், கொலை செய்தவர் களுடனும் வேலை செய்வது இது எனது முதற்தர மில்லையே’ மைதிலி தன் முகத்துக்கு வரும் சிகரெட் புகையைக் கையால் ஒதுக்கிக்கொண்டு சொன்னாள்.
*ஆனால்.ஆனால். இந்த மைக்கல் என்பவன் ஒரு இனவாதி” மிஸ்டர் பரட் படபடவென்று புகையை ஊதினார்.
அவள் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தாள். அவளின் வேலையில் அவள் நிறைய நேரம் பூட்டிய அறையில் இந்த போதை வஸ்துக்களை எடுத்தவர்களின் ஒப்பாரிகளைக் கேட்க வேண்டும். இவர் ஒரு உத்தி யோகத்தர். ஒரு கெளன்சிலர் ஒரு இனவாதியுடன் தனி மையில் அகப்பட்டுக் கொள்ளலாமா?
"பயமா” மிஸ்டர் பரட் நேரடியாகக் கேட்டார். இவனுக்குத் தான் பயம் என்று சொல்லி இன்று தப்பலாம்

Page 61
116 அரைகுறை அடிமைகள்
இனிவரும் இனவாதிகளிடமிருந்து எப்படி ஒதுங்கிக் கொள்வதாம்? “இல்லை." அவள் குரலில் தயக்கத்தைக் காட்டாமல் சொன்னாள்.
"நான் அவனுக்குச் சொல்லியிருந்தேன். நீ ஒரு இந்தியப் பெண்மணி என்றும் அவன் உன்னுடன் கவன மாகப் பழக வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறேன்" மிஸ்டர் பரட் தான் தன் கடமைகளைச் சரியாகச் செய்த தோரணையிற் சொன்னாள். இன்னொரு சிகரட்டைப் புகைத்துக்கொண்டார். அவள் தன் கேஸ் நோட்சுகளுடன் வெளியேறினாள்.
மைக்கல் மிகவும் உயர்ந்த, பொன்னிறத் தலையும் பூனை கண்களுமுடைய ஒரு ஆங்கிலேயன். இவன் கீழ் மாடிக்கு போனபோது அவன் டைனிங் ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலான இன வாதிகள் போல் அவன் தலையை மொட்டையடித்துக் கொள்ளவில்லை. டைனிங் ரூமில் உள்ளவர்கள் இவளுக்குக் குட்மோர்னிங் சொல்லிக் கொண்டார்கள். இவள் பதிலுக்குக் குட் மோர்னிங் சொல்லிக் கொண்டாள். இவள் மைக்கல் முன்னால் போய் உட்கார்ந்தாள்.
"குட் மோர்னிங் மைக்கல். நான் மைதிலி. உனது கெளன்சிலர்” இவள் கை கொடுத்தாள். அவன் அதை எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகமாற்றத்திலிருந்து தெரிந்தது. அவன் நீட்டிய கரத்தைப் பார்த்தான். அவன் முள்ளுக் கரண்டியை வைத்து விட்டுக் கைகுலுக்கினான். மிகவும் முரட்டுத்தனமான கைகள். முன்னங்கையில் எத்தனையோ மச்சங்கள், பாம்புகள், முதலைகள் அத் துடன் ஒரு பயங்கரமான நாய் உருவம் வேறு.
"அது என்ன” அவள் அவனிடம் கேட்ட முதற் கேள்வி அது. அவன் கையில் குத்தியிருக்கும் மச்சத் திலுள்ள நாயைப் பார்த்து இவள் கேட்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 117
அவன் திடுக்கிட்டுப் பார்த்தான்.
"உனக்குத் தெரியாதா இது என்ன என்று" அவன் உண்மையான ஆச்சரியத்துடன் கேட்டான்.
இவள் இல்லை என்று தலையாட்டினாள். *அது. அது." அவன் தயங்கினான். "அவள் அவனின் தயக்கத்தை அவதானித்தாள்.
"அதுதான். அதுதான் எங்களின் சின்னம்”
உங்களின் சின்னமா"
ஆமாம் பிரிட்டிஷ் நாஷனல் பார்டடியின் சின்னம் இந்த நாய்தான் பிரிட்டிஷ் புல்டோக்".
அவன் சொல்லி முடிக்க அவள் மெளனமாக இருந் தாள். இவனும் ஒருத்தனா அன்று அந்தப் பதினேழு வயது முஸ்லிம் பையனையும் குருடனாக்கியவர்களில்? அவள் யோசித்தாள். உடம்பு சிலிர்த்தது அவளுக்கு. மூன்று குழந்தைகளின் தகப்பனான ஒரு முஸ்லிமைக் கொலை செய்தது இவனின் நண்பர்களாக இருக்கலாம்! இன்று இவனின் சீர்திருத்தத்துக்கு இவள் உதவி செய்ய வேண்டும்! அவள் பெருமூச்சு விட்டாள். "ஐ ஹோப் வீ வில் வேர்க் ருகெதர்" அவள் சொன்னாள் அவன் தலையாட்டினான்.
அவள் தனக்கு ஒரு தேனிர் ஊற்றிக் கொண்டாள். டைனிங் ரூம் காலியாகிக் கொண்டிருந்தது. மைக்கல் இவளை விசித்திரமாகப் பார்த்தான். மிஸ்டர் பரட் பார் பரா என்ற பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தார்.
அவள் சூயிங்கம் தின்று கொண்டிருந்தாள். முகத்தில் ஒரு அலட்சியம். அவள் வாய் ஓயாமல் அசைந்து கொண்டிருந்தது.

Page 62
1. அரைகுறை அடிமைகள்
சோப்பிட்டாச்சா" இவள் கேட்டாள்.
பேசிக்கல்ல" பார்பரா பட்டென்று சொன்னாள்.
வழக்கமாக இந்தப் போதைவஸ்து'எடுப்பவர்கள் இப் படித்தான் சொல்வார்கள். இவளுடன் வேலை செய்வது மிக மிகச் சுலபம் என்று மைதிலி எடை போட்டு கொண்டாள். ஏனென்றால் இப்படிக் கேஸ்களை அவள் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறாள்.அறிமுகம்நடந்தது. பார்பரா டி.வி, இருக்கும் ஹோலுக்குள் போய் விட்டாள். டி.வி.யில் சீக்கியர்களின் கோயில் ஒன்று இனவாதிகளால் எரிக்கப்பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்,
அடுத்த நாள்:-
மைக்கலுடன் மைதிலி இன்னும் பேசவில்லை. நேற் றெல்லாம் சரியான பிசி. அத்துடன் சீர்த்திருத்தத்துக்கு வருபவர்கள் கடைசி மூன்று கிழமைகள் என்றாலும் இருப்பார்கள். முதற் கிழமை அவர்களுடன் கொஞ்சம் ஒடும் புளியம்பழமும் போல் பழகி அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மைதிலி மைக்கலை அவதானித்தாள். அதிகம் பேச்சில்லை.
ஐந்தாம் நாள்
"எக்ஸ்கியுஸ்மீ’ மைதிலி திரும்பிப் பார்த்தாள். மைக்கல் இரத்தம் வழியும் விரலைப் பிடித்துக் கொண்டு ஒவ்வீஸ் வாசலில் நின்றான். பென்சில் சீவும் போது விரல் வெட்டுபட்டு விட்டதாம்.
"முதலுதவி அறையில் யாருமில்லையா" அவள் கேட்டாள். அவன் இல்லை என்று தலையாட்டினான். அவள் அவனைக் கூட்டிக் கொண்டுபோய் அவனது விரலைத் துப்பரவாக்கிப் பிளாஸ்டர் போட்டுவிட்டாள்.

un Ogdoa umas outuosofiluio 119
காயம் ஒன்றும் பெரிதில்லை. ஒன்றிரண்டு நாளைக்குத் தண்ணிர் படாமற் பார்த்துக் கொள்,"
அவள் போகத் திரும்பினாள். அவனது முன்கையில் உள்ள மச்சம் போட்ட நாய் அவளைப் பயங்கரமாகப் பார்த்தது.
"உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?”
யாரும் இவளின் குழந்தைகளைப் பற்றிக் சுேட்டால் இவள் குலைந்து போவாள். "முன்று மகன்கள். முதல் மகன் உன் அளவு உயரம்.”
அவன் தலையாட்டிக் கொண்டான். "நீங்கள் மிகவும் கருணை மனம்கொண்டவர்கள்” அவன் குரல் கரகரத்தது.
"என் கடமையைச் செய்கிறேன்' அவள் சொன்னாள்
எனக்குத் தாயில்லை.” ஏன் அவன் திடீரென்று இதைச் சொன்னான் என்று அவளுக்குத் தெரியாது. அவனது சுயசரிதத்தை அவள் இன்னும் கேட்கத் தொடங்கவில்லை.
நாளையிலிருந்து "கெளன்சிலிங்" செய்வதாக இருக் கிறாள். அவளின் சுயசரிதையைக் கேட்கலாம்.
அவன் முகத்தை மூடிக் கொண்டான். அழுகிறான் என்று தெரிந்தது. ஏன் என்று கேட்காமல் விடுவது புத்திசாலித்தனம். அவள் மெளனமாக வெளிக்கிட்டாள், பாவம் தாயில்லாக் குழந்தை.
பன்னிரண்டாம் நாள்:- மைக்கல் தனது சுயசரிதம் சொல்ல வெளிக்கிட்டு மூன்று நாளாகிவிட்டன. அவன் தான் ஒரு அனாதை என்றும் தன்னை ஒரு குடும்பம் எடுத்து வளர்த்ததாகவும் சொன்னான். எடுத்து வளர்த்த

Page 63
量20 அரைகுறை அடிமைகள்
குடும்பத்தின் தாய் இவன் ஆறு வயதாக இருக்கும் போது இறந்து விட்டதாகவும் அதன்பின் இவனின் வாழ்க்கை மிக மிகச் சீர்கெட்டுப் போனதாகவும் சொன்னான்.
இவளின் கடமை அவர்கள் சொல்வதைக் கேட்பது. கேட்டுக் கொண்டிருந்தாள். தாய், தகப்பன், இல்லாதோர் எல்லாம் மற்றவர்கள் அடிக்க வெளிக்கிட்டால் உலகம் தாங்குமா? “நான் பாகிஸ்தானிகளுக்கு அடித்ததும் இம்சை செய்ததும் மிக மிகக் கொடுமையானாலும் இழி செயலானது என்று எனக்கு இப்போது படுகிறது." அவன் திடீரென்று சொன்னான்.
"நான் உனக்கு முன்னாள் இருப்பதால் நீ ஒன்றும் பொய் சொல்லத் தேவையில்லை."
அவன் இவளைப் பார்த்தான். பீளிஸ் என்னை நம்பு என்ற பார்வையது. அவள் மெளனமாக கேட்டாள்.
"ஏன் நான் அந்த மாதிரியான சூழலுக்குத் தள்ளப் பட்டேன் என்று நீ கேட்கவில்லையே.”
அவன் குழந்தைத் தனமாகப் பேசுவதாகப் பட்டது இவளுக்கு.
"சொன்னால் கேட்கிறேன்”
"ஏன் ஒவ்வொரு மனிதனும் கெட்ட வழிக்குத் தள்ளப் படுகிறான்” மைக்கலின் கேள்வியது.
"சூழ்நிலை காரணமாக” இவள் மறுமொழி சொன் னாள்.
"சரியான சூழ்நிலையில் இந்த நாடு இருந்தால் இன வாதம் இருக்காது என்று நம்புகிறாயா" மைக்கல் என்ற கிரிமினல் மைதிலி என்கின்ற தாயைக் கேட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 12
"நான் உண்மையாகத் திருந்த முயற்சிக்கிறேன். இதை நீங்கள் நம்புவீர்களா’ அவன் கேட்டான்.
பாம்பு கடிக்கமாட்டேன் என்பதை நம்பலாமா?
"நான் உன்னை நம்புவதோ நம்பாமல் இருப்பதோ எனது டியுட்டியில்லை. நீ சீர்திருந்த விரும்பினால் உதவி செய்வதுதான் என் கடமை."
"நம்புங்கள், தயவு செய்து நம்புங்கள்" மைக்கல் இப்போது வாய்விட்டு அழத் தொடங்கிவிட்டான். அவள் மெளனமாக இருந்தாள்.
மனிதர்கள் பெரிய மீனைத் தின் பார்கள். பெரிய மீன்கள் சிறிய மீன்களைத் தின்னும். சின்ன புழுக்களைத் தின்னும்" அவன் இப்படி சொல்லிவிட்டு இவளைப் பார்த்தான். அவள் இன்னும் மெளனம், அவன் தொடர்ந்தான். இதுதான் என் சீவியம்.
ஏன் போதைவஸ்துக்கு அடிமையானேன். ஏன் இன வாதியாக மிக மிகப் பரிதாபமான வயோதிபர்களான இந்தியர்களைத் தாக்கினேன் என்பதெல்லாம் எனது வாழ்க்கையின் மிக மிகப் பயங்கரமான அனுபவங்களின் எதிரொலி. எனக்கு போதைவஸ்து கிடைக்காவிட்டால் என்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு என் மனம் வேதனையில் துடித்தது" அவன் மடை திறந்தது போல் பேசினான்மனத்தில் உள்ள அழுக்கெல்லாம் உடைந்து வழிந்து ஓடட்டும் என்ற வெறியில் பேசினான்.
பதின்மூன்று பதிநான்காம் நான்கள் மைக்கலும் மைதிலியும் ஒரே மேசையிலிருந்து சாப்பிடுவதை அடுத்த மேசையிலுள்ளோர் மிக மிக அதிசயத்துடன் பார்த் தார்கள்.
வீட்டில் செந்தூரனின் தடிமல் குணமாகி விட்டது. வேலைக்குப் போகும் போது கார்டியன் பேப்பருடன்
sy-8

Page 64
22 அரைகுறை அடிமைகள்
போய்ச் சேர்ந்தாள். கிழக்கு ஜெர்மன்காரர் வெளி நாட்டாரைத் தாக்குகிறார்கள். பொஸ்னியாவில் முஸ்லிம்கள் படுமோசமாகக் கொலை செய்யப்படுவதை நாகரிகமடைந்த மேற்குலகம் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு லண்டனில் இன்னுமொரு இந்தியனோ, பாகிஸ்தானியனோ தாக்கப்பட்டுவிட்டான். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் குண்டு போடுகிறார்கள். மைதிலி பெருமூச்சுடன் வேலையைத் தொடங்கினாள். மைக்கிலின் "கேஸ் எழுதியாகிவிட்டது.
இருபதாம் நாள் :
மைக்கல் நாளைக்குப் போகப் போகிறான். இருவரும் கெளன்சிலிங் ரூமில் சந்தித்துக் கொண்டார்கள்.
'நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டதற்கு நன்றி” மைக்கல் வித்தியாசமானவனாகத் தெரிந்தான். தான் இனித் திருந்திய மனிதனாக வாழ யோசிப்பதாகவும் தன்னை அப்படி மாற்றியதற்கு இவளுக்கு நன்றி சொன்னான்.
"நீங்கள்தான் நான் முதற்தரம் பேசிப்பழகிய இந்திய பெண்மணி. உனது சமுதாயம் உன்னைப் போல் கருணையுள்ளதானால் நான் அந்தச் சமுதாயத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு மிக மிக வருந்துகிறேன்” அவன் கண்கலங்கச் சொன்னான்.
*வெளியில் போய் மற்றவர்களைத் திருத்தப் பார் மைக்கல்” அவன் தலையாட்டினான். அவன் சொன்னான் "இந்தக் கேடு கெட்ட உலகம் குழந்தைகளையும் ஏழை களையும் கொடுமை செய்யும் வழிக்குத் தள்ளிவிடுகிறது. நான் பிறக்கும் போது இனவாதியாகவா பிறந்தேன்? எனது வாழ்க்கையின் அனுபவங்கள் யாரையாவது பழி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 23,
செய்ய வேண்டும் என்ற வெறியைத் தந்து விட்டது. அனாதையான என்னை எடுத்து வளர்த்த தகப்பனே என்னைக் கற்பழித்தான்.
அந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் யாரையோ அடித்து நொறுக்க வெளிப்பட்டேன். இந்த உலகத்தில் தங்கள் குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்ட என்போன்றவர்கள் உழைப்பு வசதி கொடுக்காமல் அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் சரியாக வாழ வசதி யில்லாதவரை இனவாதம் இருக்கும்.” (யாவும் கற்பனை)
வீரகேசரி, 62-94

Page 65
Bunić6] ELJI
வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து சம்பளத் துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுத்துத் தான் நினைக்கும் சில விடயங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட் டேவன் சம்பந்தன்.
இருபத்திஓராம் வயதில் யூனிவர்சிட்டிப் படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு நல்ல வேலையில் அமர்ந்தபோதுதான் தெரிந்தது கல்லூரி நாட்களிலும் சர்வகலாசாலை நாட்களிலும் கிடைத்த சுதந்திரம் இனிக் கிடைப்பதானால் காசைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமென்று.
அந்த ஆசை பத்து வருடங்களுக்குப்பின் கிடைக் கிறது. சம்பளத்துடன் மூன்று மாத ‘விடுமுறை" அவன் வேலை செய்த கொம்பனி லண்டனை விட்டு இடம் பெயர்கிறது. லண்டனிலிருந்து நியூகார்ஸல் என்ற இடத்திற்குப் போக விரும்பாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என்றும் அதற்குப் பரிகாரமாக அவர்கள் வேலையைப் பொறுத்து நிவாரணப் பணம் வழங்கு வதாகவும் சொன்னபோது சம்பந்தன் மிகவும் சந்தோசப் பட்டான்.
லண்டனை விட்டு வேரிடம் போக அவன் விரும்ப வில்லை. ஒரு காரணம் லண்டனில் நிறையச் சினேகிதர்கள்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 25
இருக்கிறார்கள், அடுத்த காரணம் லண்டனில் இருந்தால் இன்னொரு வேலை தேடுவதும் சுகம். கிடைத்த காசை எடுத்துக் கொண்டு தாய் தகப்பனைப் பார்க்க இந்தியாவுக்கு ஒரு தரம் போய்வரலாம், அவர்கள் சிங்கள ராணுவத்தின் கொடுமை தாங்காமல் சென்னையில் போய்த் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அம்மா இவனைக் கண்டால் கல்யாணக் கதை தொடங்கி விடுவாள். தம்பி குடும்பத்தைப் போய்க் கனடாவில் சந்திக்கலாம். அகதியாய்ப் போனவன் சம்பந்தனைவிட நன்றாக வாழ்கிறான் என்று கேள்வி. தம்பி குமரன் படிக்காதவன் ஆனாலும் நன்றாக இருக்கிறான்.இவனைக் கண்டால் இவனின் பணம் சேர்க்காத இயலாமையைச் சொல்லாமற் சொல்வான். அக்காவும் தங்கச்சியும் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள், போன வருடம் லண்டன் வந்திருந்தார்கள்.
நெருங்கிய சிநேகிதன் ஒருத்தன் பாரிசில் இருக்கிறான். போனால் அவனுடன் சேர்ந்து ஒரு வாரம் கும்மாள மடிக்கலாம், ஆனால் அவன் இப்போதுதான் இறக்குமதி செய்யப்போகும் எதிர்கால மனைவியைத் தவிர வேறெதுவும் சொல்லாத மாதிரியாகி விட்டான்.
சம்பந்தன் தன் வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்தைத் தான்" நினைத்தபடி செலவழிக்கத் திட்டம் போட்டான். வேலை போவதால் இப்போது இருக்கும் நல்ல வசதியானச வீட்டில் வாடகை கொடுக்கக் கட்டாது.
நல்ல வசதியான வீட்டில் வசிப்பதற்காக அவசரப் பட்டு ஏதோ ஒரு வேலையை எடுக்கவும் விருப்பமில்லை. அத்துடன் அவன் அடிமனத்தில் எப்போதோ நினைத்து வைத்திருந்த ஆசையை நிறைவேற்ற இத்த மூன்று மாத காலத்தையும் செலவிடுவதாகத் தீர்மானித்து விட்டான்.

Page 66
26 அரைகுறை அடிமைகள்
சம்பந்தனின் இலட்சிய வேட்கை நிறைவேற அவனின் வீடு தேடும் படலம் தொடங்கியது.
வசதியும், நாகரீகமும், கலைக்கூடங்களும், நாடகக் கொட்டகைகளும், சினிமாத் தியேட்டர்களும், நவீன கடைகளும், பழைய பொருட்களும் நிறைந்த இஸ்விங்டன் என்ற சுறுசுறுப்பான கவர்ச்சியான இடத்தை விட்டுப் போக மனமில்லைத்தான்; ஆனாலும் அமைதியான இடமாகவும் மலிவான இடமாகவும் பார்த்தாற்தான் தன் வாழ்க்கையின் ஆசையைப் பூர்த்தி செய்யலாம் என்று திடமாக எண்ணினான்.
கிளப்ரன் என்ற இடத்தில் ஒரு மலிவான அறை வாடகைக்கு வருகிறது என்று பத்திரிகையில் கண்டதும் மனம் துள்ளியது. ஹக்னி என்ற வறுமையான பகுதியில் கிளப்ரன் என்ற பகுதியுண்டு.
இஸ்விங்டனைவிட கிளப்ரன் கிட்டத்தட்ட நான்கு மைல்களுக்கப்பாலிருந்தாலும் நானூறு வருடங்களைத் தாண்டிய வாழ்க்கை மாதிரி. ஏழ்மையின் சின்னங்களை எங்கெல்லாமோ கிளப்ரனிற் பார்க்கலாம்.
ஆரவாரமும் அவசரமும் படிந்த இஸ்விங்டன் எங்கே தூங்கி வழியும் பார்க்கஸ் தெரு எங்கே?
கிளப்ரன் என்ற இடத்தில் பார்க்கஸ் வீதியில் பதின்மூன்றாம் எண்ணிலுள்ள வீ ட் டி லுள்ள இரண்டாவது மாடியில் ஒரு அறையை எடுத்துக் கொண்டு தன் சாமான்களைக் கொண்டுபோய்ச் சேர்த்த வுடன் தன் வாழ்நாளின் ஆசையை நடைமுறைப்படுத்த ஆசைப்பட்டான்.
முதலாவதாகச் செய்த வேலை மிகவும் நெருங்கிய நண்பர்களைத் தவிர யாருக்கும் அவனின் டெலிபோன்

ராஜேஸ்வரி ப்ாலசுப்பிரமணியம் 1.27
தம்பரைக் கொடுக்காதது. அடுத்தது நல்ல மேசையும் கதிரையும் W. H. Smith என்ற கடையில் போய் நிறையப் பேப்பர்களும் வாங்கியதாகும்.
மூன்று படுக்கறைகளையும் கீழ் மாடியில் ஒரு ஹோலையும் பெரிய குசினியையும் கொண்டது அந்த வீடு.
முதலாவது மாடியில் இரண்டு அறைகள். ஒரு அறையைத் தான் பாவிப்பதாக வீட்டுக்கார முதலாளி ரமேஷ்சிங் சொன்னார். பெரிய தலைப்பாகையும் உருவி விட்ட மீசை தாடியுடன் அந்த மிகவும் உயரமான மனிதன் இந்த வீடு தன்னுடைய மூன்றாவது வீடென்றும் சில வேளைகளில் தனியே வாழவேண்டும்போலிருந்தால் எப்போதாவது தனது அறையைப் பாவிப்பதாகவும் சொன்னார். அடுத்த அறையில் இரண்டு ஆபிரிக்க மாணவர்கள் இருந்தார்கள்.
கல்லூரிப் படிப்பற்ற நேரங்களில் GavaraR) செய்கிறார்கள் போலும் அவர்களைக் காண்பதே அரிது அல்லது வார விடுமுறையில் சொத்தக்காரர் வீடு போகிறார்களோ தெரியாது.
இரண்டு வாரங்களாத சம்பந்தன் தனது சக வாடகை யாளரை அதிகம் சந்திக்கவில்லை.
அவன் குடி புகுந்த நேரம் அக்டோபர் கடைசிப் பகுதி. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் மூன்றும் தான் தனிமையில் வாழவேண்டும் என்று திட்டம் போட்டி ரூந்தான் சம்பந்தன்.
அக்டோபர் மாதக் கடைசியில் உலகம் அழுது வழியத் தொடங்கிவிட்டது. பேய்க்காற்றடித் ஓய்ந்து போய் இலையிழந்த மரங்கள் நிர்வாணமாய்த் தோன்றின.

Page 67
28 அரைகுறை அடிமைகள்
வானம் எப்போதும் கறுப்பும் சேலை போர்த்தியது பேண்ணாய் சோகம் காட்டியது.
சம்பந்தனின் புதிய வீட்டைச் சுற்றிக் கிட்டத்தட்ட எல்லாமே பழைய வீடுகள். அகதிகள், வேலையற்றோர். வசதியற்ற மாணவர்கன், போதையருந்தும் காவாலிக் கூட்டம் என்பனவற்றின் நடமாட்டம் சாதாரணம்.
நீண்ட அந்தத் தெருவில் பெரிய விலையுயர்ந்த ார்களோ அல்லது, பெரிய உத்தியோகஸ்தர்களோ கிடையாது.
இஸ்லிங்டனுக்கும் சம்பந்தனின் புதிய இடத்துக்கும் நிறைய வித்தியாசம்.
சம்பந்தனின் மூன்றாம் கிழமை அந்த வீட்டில் யாருமேயில்லை. எப்போதாவது இருந் துவிட்டுத் தலை காட்டும் ஆபிரிக்க மாணவர்களின் திட-மாட்டத்தையும் காணவில்லை.
வெளியில் இரண்டு மூன்று நாட்களாகச் சரியான குளிர், உடலை ஊசிகள்போல் குத்தித் துளைத்தது. மிஸ்டர் ரமேஷ் சிங் சொன்னபடி வீடு ஒன்றும் எப்போதும் சூடாக இல்லை. ஹீட்டரைப் போட்டால் ஏதோ சூடு தெரியும். ஹிட்டரை ஒவ்பண்ணி அடுத்த நிமிடம் பல் கிடுகிடுவென்று அடிக்கும்.
தனது அபிலாரை *தாவது ஒரு நாவல் ஒன்று எழுத வேண்டுமென்ற அபிலாசையை இடைமுறைப்படுத்த சம்பந்தன் எடுத்த பிரயோசனங்கள் விழலுக்கு இறைத்த
வந்து கொட்டாத விடயமென்று அவனுக்குத் தெரிய வில்லை. தனிமையில் வாழ்ந்து பழக்கமில்லாததால் இந்தப் புதிய அனுபவம் தொல்லை தந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ,俄29
வசதியான வீட்டிலிருந்து வாழ்ந்த அனுபவத்துடன்" ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த "ஏழ்மையான வீடு அவனுக்கு எந்தவிதமான உற்சாகத்தையும் தரவில்லை. கதை எழுதுவதற்கு, ஒரு கற்பனை பிறப்பதற்குச் சரியான சந்தர்ப்ப சூழ்நிலையில்லாவிட்டால் ஒன்றும் கைகூடி வராது என்பதை மெல்லமெல்லமாக உணரலானான்.
ஆனாலும் முதல் மூன்று கிழமையனுபவத்தையும். வைத்துக்கொண்டு தன் இலட்சியத்தை விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை.
அன்று அவன் தனியாக இருந்தபோது குளிருக்குப் பயந்து நிறையக் கம்பளிச் சுவட்டர்களை அணிந்து கொண்டான். ஒன்றிரண்டு பியர்களைக் காலி செய்தும் "கற்பனை" பிறக்கவில்லை. வீணையிசையும், சுவையான சாப்பாடும் காதையும் வயிற்றையும் நிரப்பியது. கதை. தான் எழுத முடியவில்லை. எத்தனையோ கதைகள் எழுத வேண்டுமென்று மனதில் போட்டிருந்த திட்டமெல்லாம் கையில் பேனாவை எடுத்தவுடன் கண்ணாமூஞ்சி விளையாட்டு விளையாடியது.
காதல் கதை, சரித்திரக் கதை, என்றெல்லாம் யோசித்துப் பார்த்தான். எங்கிருந்து ஆரம்பிப்பது?
தனக்கு அடிக்கடி வந்த கால்களைச் சிந்தித்துப் பார்த்தான், அந்தக் காதல் சம்பவங்களில் வந்துபோன எவரையும் கதாநாயகியாக்க முழுமணம் வரவில்லை.
முதல் முதல் தன் நினைவில் நிறைந்து நித்திரையிர் ஒப்பிய பக்கத்து வீட்டு வேலைக்காரியின் கட்டான உடம்பும் கருத்து நிறைந்த பார்வையும் கற்பனையில் வந்து போனதுண்டு, ஆனாலும் முழுமையாகக் கதை படைக்க ஏதும் மூலப் பொருட்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

Page 68
30 அரைகுறை அடிமைகள்
சர்வகலாசாலையில் "சகசமாகப் பழகிய சில சினேகிதி .களைக் கதைகளில் கொண்டுவரப் பயம், அவர்கள் எல்லோரும் கல்யாணம் செய்து குழந்தை குட்டிகளுடன் உலகத்தின் நாலாபக்கங்களிலும் வாழ்கிறார்கள். யாரும் கண்டுபிடித்துவிட்டால் கரைச்சல்,
வேலையிடத்தில் பழகிய சில "நெருக்கங்களை" விரித்து எழுத கருத்துக்கள் அகப்படவில்லை.
எழுத நினைத்து எத்தனையோ பேப்பர்களை அநியாயமாக்கி, சில பியர்க்கான்களைக் காலியாக்கி, குளிரில் தவித்ததை விட வேறொன்றும் பிரயோசனமாகப் படவில்லை.
உலகம் உறங்கியபோது இவனும் உறங்கப் படுக்கையில் விழுந்தபோது இரவு எத்தனை மணியோ தெரியாது.
கம்.1ளிச் சுவட்டர்களைக் கழட்ட மனம் வரவில்லை. சரத்துக்குள் கால்களைப் புதைத்துக் கொண்டு (இரண்டு சோடி சொக்ஸ் போட்ட கால்கள்) படுக்கையில் துவண்ட போது பியர்க்கானின் உதவியால் கண்கள் சோர்ந்து போயின.
"என்ன நான் தூங் கி விட்டேனா கனவு காண்கிறேனா?” சம்பந்தன் கண்களைத் திறக்க முயன்றார் திறக்க முடியவில்லை.
மாடிப்படிகளில் மெல்லிய சப்தம். யாரோ நடந்து வருவது போன்ற சப்தம்.
மிஸ்டர் சிங் ஒரு நாளும் நடுச்சாமம் வரமாட்டார். ஆபிரிக்கப் பையன்கள் வருவதானால் மிகவும் சத்தமாகச் சிரித்துக் கொண்டும் அல்லது பாடிக் கொண்டும் நாலு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3.
படிகளை ஒரு தாவலில் கடந்து கொண்டும் மிகவும்
ஆரவாரமாக வருவார்கள். இளமையின் வள்ளல் அவர்களின் நடையிற் தெரியும். மிஸ்டர் சிங் நன்றாகக் குடித்துவிட்டுத் தள்ளாடிக் கொண்டு வருவார்.
யார் இந்த நேரத்தில் இந்த மாடிப் படிகளில் நடந்து
வருகிறார்கள்? ஏழைகள் நிறைய இருப்பதால் கள்வர்கள்
அந்தப் பக்கத்தில் ஏராளம். ஏழ்மையின் எதிரொலியது. அவன் கண்களைத் திறக்க முயன்றான். முடியவில்லை.
பக்கத்துத் தெருக்களில் போதை மருந்து விற்பவர்கள் அல்லது பாவிப்பவர்கள் யாரையும் தேடி வருகிறார் களோ? என்னிடம் போதை மருந்து விற்க எந்தத் தடிப் பயல் வருகிறான்.
அவனுக்கு உடல் சிலிர்த்தது, அந்த நேரத்தில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. போதை மருந்தெடுப் பவர்கள் சுயமாகச் சிந்திக்க மாட்டார்கள். போதை வஸ்துவின் ஆக்கிரமிப்பில் இருக்கும்போது எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக் கிறான்.
"மலிவான இடம்தேடி வந்ததற்கு இதுவும் வேண்டும்
இன்னமும் வேண்டும் அவன் தன்னைத் தானே திட்டிக்
கொண்டான். எதற்கும் ஒரு விலையுண்டு, இந்தப் பகுதிக்கு வாழவந்ததற்கு இதுதானோ விலை?
ரோட்டில் எந்தக் காரோ, லொறியோ போகும் சப்தமில்லை. வெளியில் உஸ் உஸ் என்று குளிர் காற்று பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது.
அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
சப்தம் இரண்டாவது மாடியில் கேட்டது.

Page 69
32 அரைகுறை அடிமைகள்
அவன் அறையை நோக்கி நடந்து வருவது கேட்டது. கண்களைத் திறக்க முயன்றான் திறக்க முடியவில்லை.
அவனின் கதவு மெல்லத் திறந்து கொண்ட சத்தம் இருதயத்தைக் கிறீச்சிடப் பண்ணியது.
அவனுக்குப் பக்கத்தில் யாரோ வந்து நிற்கிறார்கள். அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை. மெல்லிய சென்ட் வாசம் மூக்கைத் தடவியது.
தாவரண்டது. மேலண்ணம் ஒட்டிக்கொண்டது.
இருதயம் நிமிடத்துக்கு இருநூற்றுக்கும் மேலடித்தும் கொண்டது. மூச்சு வாங்கியது. சரத்தை நினைத்து விடுமளவுக்குப் பயம், இருதயத்தை யாரோ அழுத்துவது போல் ஒரு கனம்.
"என்ன பைத்தியம் நான்?
யாராயிருந்தாலும் எழும்பி நின்று உனக்கு இங்கே என்ன வேணும் என்று கேட்கத் தைரியமில்லையா எனக்கு?
அவன் தைரியத்தை வரவழைக்க எத்தனையோ பாடுபடவேண்டியிருந்தது. ஒரு மாதிரியாக எழும்பி லைட்டைப் போட்டான், பக்கத்து மேசையிலிருந்த லைட்டைப் போட்ட கைகள் வெடவெடவென நடுங்கியது.
உலர்ந்த வாயைத் தடவிக்கொண்டு கண்களை மெல்லத் திறந்தான். கையில் கத்தியுடன், நிற்கும் ஒரு
கள்வனை மனம் கற்பனை செய்து கொண்டது.
யாருமே அறையிலில்லை!

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 133
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படுக்கையை விட்டெழுந்தான். அவனுடைய கதவு ஆவென்று திறந் திருந்தது.
நடுக்கும் கால்களை இழுத்துத் தள்ளாடிக்கொண்டு வெளியில் வந்தான்.
முன் அறை எப்போதும் பூட்டியிருக்கும். அந்த இருண்ட அறை மெல்லமாகத் திறந்திருந்தது. அது ஒரு ஸ்டோர் என்று ஆபிரிக்க வாலிபர்கள் சொல்லியிருக் கிறார்கள்.
அந்த அளவு ஏன் பூட்டியிருக்கிறது என்று அவன் இதுவரையும் பெரிதாக யோசிக்கவில்லை. ஏனென்றால் அது ஒரு படுக்கையறையல்ல. ஒரு ஸ்டோர் ரூமாகத் தான் இருக்க வேண்டும்.
மிஸ்டர் சிங் தன் தலைப்பா போன்ற சாமான்களை வைக்கும் இடமாக இருக்கலாம் என்று எப்போதோ யோசித்தது உண்டு.
அந்த அறையை முழுதாகத் திறந்து பார்க்க மனம் தூண்டியது, ஆனாலும் அவனால் முடியவில்லை. யார் அந்த அறையை இந்த நேரத்தில் திறந்தார்கள்?
தன் அறைக்குப் போய்ப் படுக்கையில் விழுந்ததும் நித்திரை எப்போதோ குட்பை சொல்லிவிட்டது தெரிந்தது.
இந்த நேரத்தில் இஸ்லிங்டனில் இவன் இருந்த வீட்டுக்கு அருகிலிருக்கும் நாடகக் கொட்டகை மூடப் படும். அதைச் சார்ந்திருக்கும் கிளப்பில் ஏதோ ஒரு சங்கீதம் கேட்கும். இவன் இருந்த வீட்டில் மேல் அறை களில் இருந்த இளம் தம்பதிகளின் மெல்லிய சிணுங்கல்கள்

Page 70
134 அரைகுறை அடிமைகள்
கேட்கும். நடுச்சாமத்தில் குடிகாரத் தடியர்களைத் துரத்தி ஒடும் பொலிஸ்காரர்களின் சைரன் ஒலி காதைப் பிளக்கும். பக்கத்து வீட்டு தென்னமிரிக்கனின் ஜாஸ் இசைக்கு நேர காலம் தெரியாது முழங்கிக் கொண் டிருப்பான். சனிக்கிழமை என்றால் இஸ்லிங்டன் தூங்காது.
கொட்டக் கொட்ட விழித்திருந்துவிட்டுக் கண்ணை மூடியபோது காலை ஏழுமணியாகியிருந்தது.
அன்று பின்னேரம் யாரும் வீட்டுக்கு வரவில்லை. வார விடுமுறையில் வாடகைக்கு வரும் மிஸ்டர் சிங் வரவில்லை. ஆபிரிக்கப் பையன்கள் எங்கே போய் விட்டார்கள்?
அன்று பின்னேரம் ஒரு நெருங்கிய நண்பன் போன் பண்ணினான். இருவரும் இஸ்லிங்டன் பார் ஒன்றில் சந்தித்தார்கள். நண்பன் ஆங்கிலேயன், வசதியானவன், இசையை ரசிப்பவன், எக்கச்சக்கமாய்க் குடிப்பவன். சம்பந்தனையிழுத்துக் கொண்டு ஜாஸ் கிளப்புக்குப் போனான். சம்பந்தனுக்கு ஜாஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சம்பந்தனை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்ட போது காலை நான்கு மணியிருக்கும். நண்பனின் காரால் இறங்கியதும் தன் வீட்டைப் பார்த்த விதத்தை நண்பன் கேலி செய்தான்.
என்ன அப்படி பேய் வீட்டைப் பார்ப்பதுபோல பார்க்கிறாய்"? நண்பன் சைமன் விளையாட்டாகத்தான் கேட்டான். ஆனாலும் சம்பந்தனுக்கு அந்த சம்பாசணை தர்ம சங்கடமாக இருந்தது. சம்பந்தனுக்குத் திக் என்றது.
அவன் நினைக்கத் தயங்கிய விடயமது
அவன் தர்ம சங்கடத்துடன் சிரித்துவிட்டு வீட்டைத் திறந்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 135
மேல் மாடியில் லைட் தெரிந்தது. அப்பாடா அந்த ஆபிரிக்கப் பையன்கள் வீட்டிலிருக்கிறார்கள்" ஸ்டோர் பூட்டியிருந்தது, ஆபிரிக்க இளைஞர்கள் பாடல் ஒலியில் அன்றும் அடுத்த நாளும் வட்டியும் முதலுமாக நித்திரை செய்து முடித்தான் சம்பந்தன்.
வாரத்தின் கடைசிப் பகுதியில் மிஸ்டர் சிங் இரண்டு கிழமை வாடகை கேட்டு வந்திருந்தார்.
முதல் சனிக்கிழமை இரவு நடந்த விஷயத்தை இவரிடம் எப்படிச் சொல்வது?
போதை மருந்தெடுப்பவர்களின் நடமாற்றம் பற்றிக் கேட்கலாமா? அன்று வந்த உருவம் ஆணா? பெண்ணா? மெல்லிய சென்ட்டின் மணத்தைப் பற்றி யோசித்ததில் பெண்ணாத்தான் இருக்கும் போலிருக்கிறது.
மிஸ்டர் சிங் நன்றாகக் குடிப்பார். இவனையும் இழுத்துக்கொண்டு பக்கத்து பாருக்குப் போனார். அவர் விஸ்கியும் இவன் பியரும் முட்ட முட்டக் குடித்தார்கள்.
இவனையறியாமலே போதை மருந்தெடுக்கும் பெண் களைப் பற்றி வாய் திறந்தான். அவர் இவன் தோள் களைத் தட்டியபடி சொன்னார் "உனக்குக் கல்யாணம் பண்ணுகிற வயது வந்து விட்டது. கட்டாயம் ஒரு நல்ல பெண்ணைப் பார்க்க வேணும், இல்லாவிட்டால் தேவை யில்லாத கற்பனைகளும் கனவுகளும் காணத் தொடங்கி விடுவாய்.”
வீட்டிலிருக்கும் ஆபிரிக்க வாலிபர்களைக் குசினியில் சந்தித்தபோது அவர்கள் எவ்வளவு காலமாக அந்த வீட்டில் வசிப்பதாகக் கேட்டான். அவர்கள் இவனைக் கூர்ந்து பார்த்துவிட்டுத் தங்கள் பாஷையில் தங்களுக்குள்

Page 71
l அரைகுறை அடிமைகள்
ரகே பேசிக் கொண்டார்கள். பின்னர் சொன்னார்கள் "நாங்கள் நீண்டகாலமாக இந்த ஆரீட்டிலிருக்கவில்லை இருக்கும் யோசனையுமில்லை.” M
அவர்கள் அப்படிச் சொல்லி ஒன்றிரண்டு நாட்களில் வீட்டைக் காலி செய்துவிட்டார்கள். மிஸ்டர் சிங் வந்து அவர்களைத் தாறுமாறாகத் திட்டினார். கிழமைக் கணக்காக வாடகை கொடுக்கவில்லை என்றும் மாணவர்கள் என்று பாவம் பார்த்ததற்கு இப்படியா பரிகாரம் செய்வது என்று இவனைக் கேட்டார்.
அவர்கள் போனா போகிறார்கள் நீயே முழு -வீட்டையும் வைத்துக் கொள், அவர்களிடம் கேட்ட வாடகையை உன்னிடம் கேட்கவில்லை. உனது வசதிபடி
தந்தாற்போதும்."
அவனுக்கு வயிற்றை என்னவோ செய்தது.
"எனக்கு இந்த வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்க வில்லை என்பதைச் சொன்னால் இந்த மனிதன் கிண்டல் செய்யத் தொடங்கிவிடும். அவன் எரிச்சலுடன் சிந்தித்தான்.
வெள்ளிக்கிழமையிரவு நல்ல மழை. இவன் நன்றாகச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு எழுதத் தொடங்கியதும் மழையும் காற்றும் ஜன்னலை அடித்து ஆரவாரப் படுத்தின. குளிர் வேறு. டெலிவிஷனைப் போட்டவன் அப்படியே தூங்கிப்போய் விட்டான். தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போல் உணர்ந்ததும் சட்டென்று -விழித்தான்.
யாருமில்லை. டெலிவிஷன் எப்போது முடிந் விட்டது. உடம்பு வியர்த்துக் கொட்டியது. து

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 37
எழும்பி லைட்டைப் போட்டான்.
மாடிப்படிகளில் யாரோ இறங்கிப் போவது போன்ற பிரமை, கனவா, கற்பனையா? பியர் மயக்கமா?
அன்றிரவு நித்திரையில்லை.
- கதை எழுதக் கற்பனை தேடியதாற்தான் இந்தப் பிரச்சினைகளோ?
தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்,
எத்தனையோ வருடங்க ளாக “அகிலனையும், சுஜாதாவையும், சாண்டில்யனையும், கல்கியையும் படித்து வளர்த்துக்கொண்ட ஆசை, இப்போது இந்த மலிவான வீட்டில் நடக்கும் சில அசம்பாவிதங்களால் அர்த்தமற்றுப் போவதா?
கல்கி தன் நாவலொன்றில் வானதியின் கண்களை வர்ணித்ததைப் போல் தானும் தன் கதாநாயகியை வர்ணிக்க சம்பந்தனுக்கு எவ்வளவு ஆசை?
இரவில் நடமாடும் இந்த மாய உருவத்தால் அவனாற் தன் மனத்தை ஒழுங்குபடுத்த முடியாமலிருக்கிறதே!
அடுத்த இரவு கதையும் வேண்டாம் கற்பனையும் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு நண்பன் மூர்த்தியின் டெலிபோன் ஆச்சரியத்தைக் கொடுத்தது. யாரிடமோ விசாரித்து மூர்த்தி இவனின் டெலிபோன் நம்பரை வாங்கிவிட்டதுமல்லாமல் இவனை வந்து பார்க்க வேண்டுமாம்!
சம்பந்தன் சம்மதம் தெரிவிக்க வேண்டிய அவசியமே யில்லை. மூர்த்தி வந்து முளைத்து விடுவான்.
9-س-ayو

Page 72
38 அரைகுறை அடிமைகள்
"உனக்கென்னமச்சான் விசரா இந்த வீட்டில தனிய இருக்கமாட்டன் என்றா சொல்ல. நல்ல மலிவாகக் கிடைச்சால் ஒமென்டு சொல்லு, நாங்க தரவளி வந்து நிண்டிட்டுப் போகலாம்” மூர்த்தி முழங்கினான்.
இரவில் வரும் மாய உருவத்தைப் பற்றிச் சொல்லாமல் இரவில் நடமாடும் போதை எடுக்கும் ஆண் பெண்கள் பற்றிப் பேசினான் சம்பந்தன்.
அன்றிரவு மூர்த்தியைத் தன் அறையில் படுக்கச் சொல்லிவிட்டு இப்போது வெறுமையாய்க் கிடக்கும் ஆபிரிக்க வாலிபர்களின் அறைக்குப் போய்ப் படுத்தான் சம்பந்தன். M
இரவு இரண்டு மணியிருக்கும் மூர்த்தியின் சத்தம் கேட்டது. "என்ன சம்பந்தன், ஏன் என்ன எழுப்பினிர்."
சம்பந்தன் மறுமொழி சொல்லவில்லை. அவனுக்குத் தெரியும். தன்னுடன் சேட்டைவிடும் உருவம் ஆள் தெரியாமல் மூர்த்தியைத் தடவியிருக்கும் என்று புரிந்து கொண்டான்.
காலையில் சாப்பிடும்போது "என்ன மச்சான் எனக்கு ஒரு துளியும் நித்திரை வரல்ல.
மூர்த்தி நித்திரை வராத எரிச்சலில் முணு முணுத்தான்.
"நீதான் நான் தனியா இருந்தால் அடிக்கடி. வரலாம். எண்டு சொன்னாயா இப்போது என்ன மனத்தை மாத்திப்
போட்டாய்.”
மூர்த்தி தர்மசங்கடத்துடன் சிரித்தான்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 39
அதன் பின் இரண்டொரு நாட்களாக ஒரு டெலிடோனுமில்லை.
போனாற் போகிறான் என்று சம்பந்தன் நினைத் நிருந்தபோது மூர்த்தி திடீரென்று ஒரு இரவு பிளாஸ்டிக் பை நிறைய பியர்க்கான்களைத் தூக்கிக்கொண்டு வந்தான்.
*உன்ர வீட்டில பேயிருக்கு மச்சான்" மூர்த்தி அவன் வயிற்றில் நான்காவது பியர்க்கான் போய் இரத்த மெல்லாம் மதுவில் நனைந்த மயக்கத்தில் பிதற்றினான்,
"சும்மா பேய்க்கதை கதையாத" சம்பந்தன் வீரத் துடன் சிரித்தான்.
"இல்ல மச்சான், ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு யாரோ என்னைப் பார்க்கிற மாதிரி இருக்கு மச்சான்" மூர்த்தி அழுதுவிடுவான் போலிருந்தது,
"உனக்கு நல்ல தலையில தட்டிப் போச்சு"
சம்பந்தன் கிண்டல் செய்தான்,
மச்சான் அண்டைக்கு எனக்கு நித்திரை வரல்ல மச்சான்”
“ஏனெண்டா இந்த வீடு சரியான குளிர்” சம்பந்தன் சமாதானம் சொன்னான். மூர்த்தி அதன்பின் அங்கு இரவில் தங்குவதில்லை.
சம்பந்தனின் வாழ்நாள் இலட்சியத்தின் ஒரு பக்கப் பேப்பரிலும் நாலு வறிகள் ஏறவில்லை.

Page 73
40 அரைகுறை அடிமைகள்
மாதம் இரண்டு முடிந்து விட்டது,
கையில் கிடைத்த காசு முடிய முதல் வேலை ஒன்றும் தேடவேண்டும்.
அவன் எழுதுவதை விட்டுவிட்டு வேலை தேடுவதில் மும்முரமாக இருந்தான்.
மிஸ்டர் சிங் இல், றும் யாரையும் வீட்டுக்கு வைக்க வில்லை.
கிறிஸ்மஸ் நெருங்கிக்கொண்டு வந்தது.
ஒரு இரவு சம்பந்தனின் அறைக்கு அந்த உருவம் வருவது கேட்டது.
சம்பந்தன் அறைத் தூக்கத்திலிருந்தான். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது,
உணர்வு வந்தபோது உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. சரம் நனைந்திருந்தது.
காரணத்தையறிந்தபோது உடம்பை என்னவோ செய்தது, உள்ளம் கூசியது. தேனிலவு காலத்தில் இரண்டு மூன்று நாள் விடாமற் கலவி செய்த களைப்பு.
அதன்பின் கிட்டதட்ட ஒவ்வொரு இரவும்,சம்பந்தன் அந்த அனுபவத்திற்கு ஆளானான்.
தனிமை அனுபவத்தில் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. மூர்த்தியை வரச் சொல்லி போன் பண்ணினான்.
முதலில் தயங்கியவன் நத்தார்ப் பண்டிகையை முன்னிட்டு ஒரு விசிட் வருவதாகச் சொன்னான் மூர்த்தி,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 141
இருவருக்கும் நல்ல வெறி.
சம்பந்தன் தன் அனுபவத்தை-அரை குறையாகச் சொன்னான். பேய் பற்றியில்லாமல் போதை எடுப்பவர் பற்றிக் கதை நண்பனையுற்றுப் பார்த்த மூர்த்தி உன்னைப் பார்த்தால் ஒரு மாதம் நெருப்புக் காய்ச்சலில் கிடந்தவன் போலிருக்கு. டொக்டரைப்பார்" என்றான்.
சம்பந்தனுக்கு இப்போதெல்லாம் பசியெடுப்பதில்லை. உடம்பு எப்போதும் களைப்பாக இருந்தது. நித்திரை கோள்ள பயம்.
தாங்க முடியாத தலைவலிக்கு எத்தனையோ மருந்து களை எடுத்துவிட்டுக் கடைசியாக டொக்டரிடம் போனான் சம்பந்தன்.
"உனக்கு ஏன் தலையிடுடிக்கிறது.”
*அதன் காரணத்தைக் கேட்கத்தான் உங்களிடம் வந்தேன்.”
யோசிக்கத் தக்கதாக வாழ்க்கையில் ஏதும் நடக்கிறதா?”
பெரிதாக ஒன்றுமில்லை. வேலை தேடிக் கொண் டிருக்கிறேன்."
"கல்யாணமாகி விட்டதா?"
'இல்லை.”
"காதலிகள். காதலியாரும் இருக்கிறார்களா?" "இருத்தாள். இப்போதில்லை."
"உனக்கு எத்தனை வயது."

Page 74
42 அரைகுறை அடிமைகள்
அவனுக்கு எரிச்சல் வந்தது. அம்மாவும் இவன் வயதைச் சொல்லிச் சொல்லித்தான் கல்யாணம் பேசுகிறார்.
"கெதியாக வேலை ஒன்று எடுக்கப் பார்" டொக்டர் ஏதோ எழுதிக் கொடுத்தார். "தனிமை நிறையப் பிரச் சினைகளைத் தரும். நிறைய யோசித்தால் நான் சொல்வது புரியும்.” டொக்டர் சொன்னார் பகலில் வேலை தேடி அலைச்சல், நத்தார்ப் பண்டிகை காலம் என்றபடியால் நிறைய வேலைகள் விளம்பரத்துக்கு வரவில்லை. தைமாதம் பிறந்தால்தான் வழி பிறக்கும் அவன் முணுமுணுத்துக் கொண்டான்.
கையிலுள்ள காசு கரைந்து கொண்டு வந்தது.
அம்மா இவனின் குழந்தைத் தனத்துக்குப் புத்தி சொல்லி எழுதியிருந்தாள். தை பிறந்தால் இவனுக்கு நல்ல திசை பிறக்கவிருப்பதாக எழுதியிருந்தாள். விரைவில் ஒரு பெண்ணின் பரிச்சயம் கிடைக்கவிருப்ப தாகவும் எழுதியிருந்தாள்.
தமக்கை ஒருத்தி தனக்கு தெரிந்த சினேகிதியின் குறிப்பு அனுப்பியிருந்தாள்.
நத்தார் நெருங்கிக் கொண்டிருந்தது.
ஆபிரிக்க வாலிபர்களில் ஒருத்தனை ஷொப்பிங் சென்டரில் சந்தித்தான்.
"நீ இன்னும் அந்த வீட்டில் இருக்கிறாயா" அவன் ஆச்சரியத்துடன் சம்பந்தனைக் கேட்டான்.
ஆமாம் தனியாகத்தான் இருக்கிறேன். கெதியில் யாரும் வரலாம்."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 43
ஆபிரிக்க மாணவன் அவன்ை மேலும் கீழும் பார்த்தான்.
a 607 e5 பைத்தியம் பிடித்த முதல் அந்த வீட்டை விட்டுப் போய் விடு" ஆபிரிக்க வாலிபன் அன்புடன் புத்தி சொன்னான்.
அதே மெல்லிய நடைச் சப்தம், அதே சென்ட்டின் வாசனை. சம்பந்தன் வழக்கம்போல் உணர்விழந்தான். எழுந்தபோது தன் நிலை நினைத்து அழுது விட்டான்.
"எனக்கு நேர்வஸ் பிரேக்டவுன் வந்து விட்டதென்று நினைத்தேன்." சம்பந்தன் புலம்பினான். நீண்ட நாள் நித்திரையின்மையால் மனம் பேதலித்துப் போயிருந்தான். டொக்டர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி அவனை ஏறிட்டுப் பார்த்தார். ஏன் இந்த ஆசியன் புலம்பினான் என்பதை யோகிக்கிறாரா?
"பைத்தியங்கள் தங்களுக்கு பைத்தியம் பிடித்த தாகச் சொல்வதில்லை. டொக்டர் கிண்டலடித்தார்.
"என்னாற் தூங்க முடியவில்லை." அவன் வெதும்பி னான்.
"உனக்கு வேலையில்லை என்ற துக்கம் அதன் எதிரொலிதான் நித்திரையின்மை, தலையிடி, எரிச்சல் மனக்குழப்பமெல்லாம்.”
வேலையில்லாவிட்டாலும் இன்னும் சில மாதங்கள்
மாளிப்பேன்," அவன் குரலில் அவசரம், அவன் ஒன்றும் ” ஏழையில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் சமாளிக்கலாம்.
பின்னர் என்ன பிரச்சினை. காதலி இல்லை என்ற துக்கமா" டொக்டரின் குரலில் கிண்டல்.

Page 75
144 அரைகுறை அடிமைகள்
"அப்படியொன்றுமில்லை."
டொக்டர் உற்றுப் பார்த்தார்.
"காதலன் யாரும் இருக்கிறார்களா?
சம்பந்தன் டொக்டரை முறைத்துப் பார்த்தான். டொக்டர் பதிலுக்கு பெண் உறவுமில்லாமல் ஆணுறவு மில்லாமல் (லண்டனில் சர்வ சாதாரணம்) இருக்கிறாயே
அப்படி என்றால் உன்னுடன் நீயே விளையாடிக் கொள்கிறாயா" என்பது போல் பார்த்தார்.
அவனுக்கு அவர் பார்வையின் கருத்து அப்பட்டமாக தெரிந்தது. குனுகி விட்டான். அவர் சைக்ரியாட்டிஸ்ட் ஆங்கிலேய நண்பன் சிபாரிசு செய்திருந்த டொக்டர்.
"எனக்குப் பயங்கரக் கனவு வருகிறது" சம்பந்தன் முணுமுணுத்தான்.
*எப்படிக் கனவு."
என்னவென் று சொல்வ து?
"கல்யாணப் பெண்போல் உடை உடுத்த ஒருத்தி என் கற்பனையில் வந்து." அவன் முடிக்கவில்லை.
*உன்னை ஒழுகப் பண்கிறாளா."
ஒளிவு மறைவில்லாத கேள்வி ஒடுங்கிப் போனான் அவன்.
"மோகங்களின் எதிரொலியின் பிரதி பிம்பம் கனவாகத் தோன்றும். பெண்ணுடன் உனக்குச் சுமுக (மான உறவு இருந்ததா".

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 45
அவனுக்கு ஏதும் மறைக்க இருப்பதாக தெரியவில்லை. பதினேழு பதினெட்டு வயதில் பார்த்து பக்கத்து வீட்டு வேலைக்காரியைப் பற்றிச் சொன்னான்.
பார்க்கவும், சிரிக்கவும், சிங்காரம் செய்யவும், தடவ வும் சில வேலை தடம் புரளப் பண்ணவும் செய்த சர்வர் கலாசாலைச் சினேகிதிகளைப் பற்றிச் சொன்னான்.
கல்யாணம் வரைக்கும் போய் தடைப்பட்டுப் போன தன் நீண்ட காலக் காதலியைப் பற்றிச் சொன்னான். நினைக்கவிரும்பாத சோகக் கதையது, சொல்லி வெதும்பி னான். சினிமாவில் பார்த்து ரசிக்கும் டெமிமோர் பற்றி கண்கள் மினு மினுக்க ரசித்துச் சொன்னான்.
டொக்டர் அவனை ஆழமாகப் பார்த்தார்.
"உன் கற்பனையில் வரும் யாரோ ஒரு மபண்ணைக் கல்யாணக் கோலத்தில் ரசிக்க உன் உள்மனம் யோசிக் கிறது என்று நம்புகிறாயா."
"எனக்குத் தெரியாது" அவன் அழுதுவிட்டான்.
"வேலை தேடிக்கொள், வீட்டை மாற்றிக்கொள். கற்பனையையும் கதை எழுதுவதையும் ஒத்திப்போடு. காதலி ஒன்றைத் தேடிக் கொள். உன் வயதுக்குத். தேவையது” டொக்டர் ஆலோசனை செய்தார்.
நத்தாருக்கு முதல் நாள் மூர்த்தி வந்திருந்தான். இருவரும் ஒன்றாகக் குடித்துவிட்டு என்னவெல்லாமோ பேசிக் கொண்டார்கள்.
"இந்த வீட்டில் பேய் இருப்பதாகவும், ஏதோ ஒரு மூலையில் நின்று உன்னை உற்றுப் பார்ப்பதாகவும். சொன்னாயே அது எப்படி" சம்பந்தன் உளறினான்.

Page 76
145 அரைகுறை அடிமைகள்
"மச்சான் பேய் என்கிறது எங்களின்ர மனப்பயம் அதன்ர பிரமைதான் பேய். பேய்களைப் பற்றி எத்தனையோ கதைகள் இருக்கு. ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் அடிமனத்தில் வைத்திருக் கின்ற அபிலாசைகளின் எதிரொலிப்புத்தான் பேயும் பிசாசுகளும், எனக்கு இந்த வீட்டைப் பார்த்தால் சோக மாகத் தெரியுது. செத்த வீடு போல தெரியுது. யாரோ அநியாயமாகச் செத்த போல தெரியுது. அதெல்லாம் என்ன வெறி மனத்தில் வாற விழல் கற்பனைகள் என்றா வைச்சுக் கொள்ளண். தற்கொலை செய்தவை பேயாய் அலையிறதென்றும், கொலை செய்யப்பட்டவை பழி தீர்க்க பிசாசாய்த் திரியினம் என்பதும் விபத்தில் செத்தவை அந்தரத்தில அலைவினம் என்றும் மூட நம்பிக்கைகள். உடம்பிலிருந்து உயிர் பிரிஞ்சா உடம்பு வெறும் கட்டை, உயிர் வெளியில போய் ஆதி அந்தமு மில்லாத ஒரு உலகத்தில் சேர்ந்து கொள்ளுது என்கிறது என் அபிப்பிராயம்.
பேய் பிசாசுகளாய்த் திரிந்து பலி வாங்கிற தெண்டால் "செத்த தமிழர்ர ஆவிகள்”சிங்கள சாமிகளை ஏன் சும்மா
விட்டு வைச்சிருக்கு?
மூர்த்தி பிதற்றிய படி நித்திரையாகி விட்டான். மூர்த்தி சம்பந்தனின் அறையில் படுத்து உறங்கினான். அடுத்த நாள் மூர்த்தியின் முகம் வெளுத்துக் கிடந்தது. முதலிரவு முடிந்த ஆணுக்கு முட்டை அடித்துக் கொடுக்கலாமா? சம்பந்தன் அதிகம் ஒன்றும் கேட்காமல் பாண் வாட்டி பட்டர் பூசிக்கொண்டிருந்தான்.
"டேய் மச்சான் இரவு ஒரு புதினமான கனவு கண்டேனடா” சம்பந்தன் மேற்கொண்டு எதுவும்
கேட்கவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 47
"மச்சான் அழகான பொம்புள ஒருத்தி கல்யாண உடுப்போட வந்து கட்டிலில் இருந்தாளடா"
சம்பந்தன் சினேகிதனை வெறித்துப் பார்த்தான்.
இருவரும் மிகவும் ஆழமாகப் பார்த்தார்கள், ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டார்கள், நத்தார் முடிந்து
விட்டது.
சம்பந்தனுக்கு புது வேலை கிடைத்து லிட்டது.
வேலை கிடைத்த இடத்திற்குப் பக்கத்தில் வீடு தேடியலைந்தான். மிஸ்டர் சிங் இன்னும் இரண்டு மாணவர்களை வாடகைக்கு அமர்த்தினார். அவர்கள் ஆபிரிக்க வாலிபர்கள் இருந்த அறையில் இருந்தார்கள். மிகவும் துடிதுடிப்பான மாணவர்கள் ஒருத்தன் கலப்புச் சாதி மற்றவன் சைனிஸ். ஒரே சர்வகலாசாலையில் படிக்கிறார்கள். அடிக்கடி சி னே கி தி களை உபசரிப்பார்கள். w
வந்து ஒன்றிரண்டு தினங்களில் அவர்களின் அறை யிலிருந்து ஒரு இளம் பெண் அரைகுறையுடுப்புடன் தூங்கி வழிந்துகொண்டு "ஹலோ குட்மோர்னிங் என்று” சம்பந்தனைப் பார்த்து முணுமுணுத்தாள்.
அவர்களின் அறையில் பியானோ ஜாஸ் ஒலியுடன் கஞ்சா மணமும் வெளியில் வரும், பியர்க்கான்கள் பிளாஸ்டிக் பைகளில் நிறையும்.
சம்பந்தன் சைக்கியாட்றிஸ்டைக் கண்டு தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும், கதை, கவிதை, என்று ஒன்றும் எழுதவில்லை என்றும் வீண் கற்பனைகளுக்கு இடம் கொடுக்கவில்லை என்றும் மகிழ்ச்சியுடன் சொன்னான்.

Page 77
48 அரைகுறை அடிமைகள்
"கல்யாண உடுப்புடன் உன் நனவுகளில் வரும் பெண்ணுக்கு என்ன நடந்தது.”
டொக்டர் சிரித்தபடி கேட்டார்.
அவன் நழுவி விட்டான். உண்மைகளைச் சொல்லி அவரின் விளக்கத்தைக் கேட்க மனம் தயங்கியது.
சம்பந்தன் மூட்டை முடிச்சுகள் கட்டிக் கொண் டிருந்தான். மிஸ்டர் சிங் இவன் போவதை துக்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.
"உனது அறைக்கு வருபவர்கள் அதிகம் தங்குவ தில்லை" அவர் தனக்குத்தானே முணுமுணுத்தார்.
அவன் மறுமொழி சொல்லாமல் அடுக்கிக் கொண் டிருந்தான்.
"உனக்கு முன் ஒரு இளம் பெண் இருந்தாள் காதலனுடன் மிகவும் சந்தோசமாக இருந்தாள். அவன் அடிக்கடி வருவான். கல்யாண உடுப்பெல்லாம் தைத்தாள். பாவம் அந்தப் பெண். மிஸ்டர் சிங் பெருமூச்சு விட்டார்.
"அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது" தன் படபடப்பைக் காட்டாமல் கேட்டான் சம்பந்தன்.
அவன் அடுக்கிய சாமான்களுக்கு இன்னும் சில பெட்டிகள் தேவைப்பட்டன.
சிங் மறுமொழி சொல்லாமல் எங்கேயோ பார்த்தார்
"ஏதும் பழைய பெட்டிகள் இருக்கின்றனவா” சம்பந்தன் அங்கும் இங்கும் பார்த்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 149
ஸ்டோர் ரூமிற் கிடக்கும் வா பார்க்கலாம்” மிஸ்டர் சிங் நடந்தார். சம்பந்தன் பின் தொடர்ந்தான்.
எப்போதும் மூடிக் கிடக்கும் ஸ்டோர் ரூமைத் தன் திறப்பால் திறந்து கொண்டிருந்தார் மிஸ்டர் சிங்.
"அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது" சம்பந்தன் அவரைப் பின் தொடர்ந்தான்.
“வெறியில் காரோட்டியபாவி ஒருத்தன் அவள் வாழ்க்கையை முடித்துவிட்டான்” மிஸ்டர் சிங் ஸ்டோர் ரூமைத் திறந்தார். அங்கே சம்பந்தன் கண்ட காட்சி அவன் வாயடைத்துப் போய் நின்றான். அவன் கனவில் (நனவில்) அடிக்கடி வந்து அவனுடன் புணர்வு செய்யும் பெண் அணிந்து வந்த கல்யாணச் சட்டை அந்த ஸ்டோர் ரூம் நடுவில் மிக அழகாகத் தொங்க விடப்பட்டிருந்தது.
சம்பந்தன் வெறித்துப் பார்த்தான்.
"என்ன பார்க்கிறாய், ஒ அந்த அழகான கல்யாணச் சட்டையையா? அதுதான் அவள் தன் கல்யாணத்துக்குத் தைத்த சட்டை. அவளின் காதலன் தனக்கு அந்தச் சட்டை வேண்டாமென்று விட்டான். அவளுக்குச் சொந்தம் யாரென்று தெரியாது. அத்தோடு இந்தச் சட்டையைக் காணும் போதெல்லாம் எனக்கு ஏதோ அவளைப் பார்க்கும் ஞாபகம், அவள் இந்த வீட்டிலேயே இருக்கிறாள் என்ற பிரமை உனக்கு அது புரியுமோ தெரியாது"

Page 78
கனவுகள் இனிமையானவை
*னது சரி எது பிழை என்பது யாரால், என்ன விடையம் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்திருக்கிறது.”
எனது நண்பன் என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனின் முகத்தை நான் பார்க்கவில்லை. அவன் சொல்லிக் கொண்டிருக்கும் விடையங்களை காது தெளிவாகக் கேட்டுக்கொண்டிருக்க எனது பார்வை ஜன்னலுக்கு வெளியால் தெருவில் போகும் மனிதர்களில் பதிந்திருந்தது.
ஒருவித பயமுமில்லாமல் இவர்கள் தெருவில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வீட்டிலும் நடப்பதுபோல் இவர்கள் வீட்டிலும் சண்டைகள், தர்க்கங்கள், கோபதாபங்கள் தடக்கலாம். வீதியில் நிம்மதியாய் போய்க்கொண் டிருக்கிறார்கள். அவசரமாய் ஒடிக்கொண்டிருக்கும் லண்டன் வாகனமொன்றில் இவர்களும் அவசரமாகப் போய் அடிபட்டு உயிரை விட்டால் யாரும் என்ன சொல்ல முடியும் அதைத் தவிர இவர்களுடன் செய்து கொண்ட தர்கத்திற்காக, இவர்களின் அரசியற் கருத்து தங்களுக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக யாரும் இவர்களைத் தீர்த்துக் கட்டப் போவதில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 151 இவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
இன்றைய வறுமை,நாளைய செல்வம், எதிர்காலக். கனவுகளை ஈடு கொடுத்துக் கொண்டு நிம்மதியாகத் திரிகிறார்கள்.
எனது நண்பன் தன் பிரசங்கத்தை நிறுத்திக் கொண்டு எனது தோளில் கை போடுகிறான்.
"என்ன யோசனை" அவனது ஆழமான பார்வை எனது அடிமனதுக்குள் போய் துளாவி என் சிந்தனைக்கு உருவம் தேடத் துடிக்கிறது.
"என்ன யோசனையா” நான் கேட்பதை அவன் கேட்கிறான்.
"குமரன் இறந்தது அநியாயம்” எனது நண்பன் சம்பந்தன் குமரன் இறந்தது அநியாயம் என்று இதுவரை பத்து தடவைகள் சொல்லி விட்டான்.
"அவன் தன்னை சாகப்பண்ணிக் கொண்டது தவறு" என்று நானும் பத்தாவது தடவையாகச் சொல்கிறேன். சம்பந்தன் அலுத்துப் போகிறான்.
"குமரனுக்குத் தெரியும்தானே இப்படி நடக்கு மென்று” எனது குரல் எனக்கே வியப்பாக இருக்கிறது. எனது கருத்தை சம்பந்தனின் மனதில் பதிக்க வேண்டும் என்பதற்காக எனது குரலில் ஒரு அழுத்தம்.
"பிறந்த அன்றே இறப்பும் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்காக கோழைகளாக வாழ்வதா” சம்பந்தனின் கேள்வி எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.

Page 79
52 அரைகுறை அடிமைகள்
"இஞ்ச பாரும் சம்பந்தன் இலங்கையில் இப்ப தாங்கள் இப்பிடி ஒரு தத்துவமும் கதைக்க முடியாது.
சுயசிந்தனை ஒன்றுமில்லாமல் இருப்பதுதான் நல்லது”
"நீ ஒரு முட்டாள்" சம்பந்தன் வெளிக்கிட்டான்.
நான் ஒரு முட்டாளாம்!
எனக்கென்ன அவன் சொன்னால் எனக்குத் தெரியும் எப்படிப் பிழைத்துக் கொள்வதென்று. எப்படிப் பணம் சேர்ப்பது என்று, எப்படி மற்றவர்களுடன் இனிமையாகப் பேசுவதென்று. இவன் சம்பந்தனுக்கு என்ன தெரியும்?
இவன் சம்பந்தனும் குமரன் மாதிரித்தான். குமரன் இப்படித்தான் சுயசிந்தனை, மனித உரிமை, மண்ணாங் கட்டி என்று வார்த்தைகளைக் கொட்டி விட்டுச் செத்துப் போய்விட்டான். தானாக வருத்தம் வந்து செத்துப் போகவில்லை.
அதைப்பற்றி எனக்கென்ன?
குமரனின் சிநேகிதன் என்பதற்காக எனக்கேதும் வராமல் இருந்தால் அதுவே புண்ணியம். அப்படி ஒன்றும் வராமல் இருக்கத்தான் அவர்களுக்கு ஒரு மாதம் இவ்வளவு கொடுக்கிறேனே.
*உனக்கு குமரனைச் சரியாகப் புரியவில்லை" இது சம்பந்தனின் குற்றச்சாட்டு.
யாருக்கு யாரை முழுக்கத் தெரியுமாம்?
சம்பந்தன் சிலவேளை இப்படித்தான் சொல்வான்.
என்ன செய்வது முற்போக்கு வாதம் என்ற பெயரில் இவன் சொல்வதையும் கேட்டுத்தான் வைப்போமே!

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 53
அப்படித்தான் நினைத்தேன் குமரனைச் சந்தித்த போதும். ஆறேழு வருடங்களாக இருக்கலாம். 9eri கையில் சிங்கள வகுப்புவாதம் கொலைவெறியாடிக் கொண்டிருந்தகாலம்.
இறந்துவிட்ட நண்பன் குமரனைப் பற்றிக் கதைக்கும் போது மனதுக்குள் மறைந்து கிடந்த பழைய நினைவு களும் கிளறுப்பட்டு வருகிறது.
குமரனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?
அவனைப் பற்றி அவன் சொன்ன விடையங்களைத் தவிர நான் என்ன புரிந்து கொண்டேன்.
பார்த்தவுடனேயே வசீகரிக்கும் தோற்றம், கூர்மை யான பார்வை, அழகான சிரிப்பு, அளந்து பேசும் வசனங்கள் யாழ்ப்பாண்த்திற்கு மேல்படிப்பு படிக்க வந்த வன்னிநாட்டவன்.
"அறை தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றான். நான் அப்போது ரியூட்டறி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக இருந்தேன். அவனுக்கும் எனக்கும் இரண்டு வயது வித்தியாசம் இருக்கலாம். ஆசிரியர், மாணவன் என்று பழக முடியாத ஒரு மரியாதை அவனில் ஏற்பட் டிருந்தது.
எனக்கு இரண்டு வயதுகூட என்பதற்காக அவனை
விட எத்தனையோ விடயங்களில் இளையவனாகத் தானிருந்தேன்.
"தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறேன்" அவன் சொன்ன இடத்திற்குத் தற்செயலாகப் போனேன். வேண்டுமென்று போகவில்லை.
主yー10

Page 80
134 அர்ைகுறை அடிமைகள்
அந்த வழியாகப் போகும்போது அவன் சொன்ன விலாசம் ஞாபகம் வந்தது.
சைக்கிளைச் சாத்திவிட்டு உள்ளே போனேன்.
இவ்வளவு இளம் பெண்கள் இருக்கும் இடத்தில் என்னென்று குடியிருக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது.
அவன் பெயர் சொல்லி விசாரித்தேன்.
ஒரு சின்னப்பெண் தன் எலிவால்ப் பின்னலுடன் ஒடிப்போய் குமரனை கூட்டிக் கொண்டு வந்தாள்.
குமரன் தன் அறைக்கு என்னைக் கூப்பிடவில்லை. தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு என்னுடன் நடந்தான். நான் கலகலவென்ற சிரிப்பொலிகளை கடைக் கண்ணால் கவனித்ததை கண்டுவிட்டு அவன் முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது
"இவர்கள் எல்லோரும் இந்த வீட்டுப் பெண்களல்ல. வீட்டுக்காரரின் பெண்ணிடம் ரியூஷ்னுக்கு வருபவர்கள்.
அவன் எனது பொறாமையைக் கண்டுபிடித்து விட்டு சொன்னான்.
"இட நெருக்கடி போலத் தெரிஞ்சுது அதுதான் பார்த்தன்" நான் சமாளித்துச் சொன்னேன்.
"ஒமோம் இட நெருக்கடிதான், வீட்டுக்காரருக்கு நிறையப் பிள்ளைகள்.
வீட்டுக்காரரின் இளம் பெட்டைகளில் ஒன்று இவனது குட்டியாக இருக்குமோ என்று மனம் எரிச்சல் பட்டது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் i55
தாங்கள் இருவரும் அந்த வீட்டுப் பெண்களைப் பற்றி நினைத்துக் கொள்வதை வெளிக்காட்டாமல் கெளரவமாக நடந்து கொண்டோம்.
"என்ன பொழுது போக்கு” என்று கேட்டேன். போகும் வழியில் புதிதாக வெளிவரவிருக்கும் புதிய படத்தையும் பற்றிய விளம்பரம். இவன் என்னுடன் சேர்ந்து வந்தால் படம் பார்கலாம் என்ற நப்பாசை.
“எனக்கு என்ன பொழுது போக்கு, நேரம் இருந்தால் கவிதை எழுதுவேன்."
கவிதை?”
*உம் கவிதை'
நல்ல பொழுது போக்கு"
"பிரச்சினையானது” அவன் மெல்லமாக முணு முணுத்தான்.” く
கவிதை எழுதுவது பிரச்சினையா?" நான் வியப்புடன் கேட்டேன்.
காதலிப்பது போல், அரசியலில் ஈடுபடுவதுபோல், கவிதை எழுதுவதும் ஒரு பிரச்சினையானதுதான்."
எனக்கு விளங்கவில்லை. நான் மெளனமாக நடந்தேன். இருளத் தொடங்கிவிட்டது.
இளமைக்குக் காதல், இலட்சியத்திற்கு அரசியல் அந்த எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கக் கவிதைகள்" அவன் பிரித்துப் பிரித்துச் சொன்னான்.
*ஆனால் எங்கள் சமுதாயத்தில் காதல்கள் அபூர்வம், ஏனென்றால் உறவுகள் பொருளாதார ரீதியில் உண்டாகிறது. ன்ங்கள் சமுதாயத்தில் நியாயமான

Page 81
156 அரைகுறை அடிமைகள்
*அரசியல் இல்லை எல்லாம் அதர்மத்தில் ஊறிப் போய்க் கிடக்கிறது. கவிதை எனது பொதுச் சொத்து எனக்கு விருப்பமான உருவத்தைக் கொடுப்பேன்."
நான் சிரித்தேன், ஏனென்றால் கலைஞர்களின் பேச்சு எனக்கு அதிகம் விளங்காது.
அதன் பின் நீண்ட நோட்களாக அவனைக் காணவில்லை. 1986-ம் ஆண்டு தமிழ் பகுதிகளில் சிங்கள வகுப்புவாதக் கொலைகளுக்குப்பதில் தமிழ் இயக்கங்களுக் கிடையே பயங்கரக் கொலைகள்.
தெரிந்த நண்பர்கள் பலர் திடீர் திடீர் என்று மறைந்து விட்டார்கள்.
எங்கே போனார்கள் என்று விசாரிக்கப் பயம் எனக்கென்ன நான் இன்னும் கொஞ்ச நாட்களில் லண்டனுக்குப் போகப் போகிறேன்.
ரியூட்டரிக்கு வராமல் விட்டதுடன் குமரனைப் பற்றியும் அதிகம்“தெரியவில்லை.
ஒரு பின்னேரம் பெரிய கடையில் எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன். மிகவும் மாறியிருந்தான். இளைத்து, தாடி வைத்து சோகமாத் தெரிந்தான்.
படிப்பு எப்படி" என்று கேட்டேன்.
*படிப்பா" அவன் ஆச்சரியப்பட்டான்,
tg. <毁
"ஏன் படிப்புக்கு என்ன நடந்தது?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 157
"படிப்பு பணக்காரர்களுக்கு சொந்தமான விடையம் நான் பேசாமலிருந்தேன்.
"தம்பி இரண்டு பேர் இறந்து விட்டார்கள் இயக்கங்கள் கொலை செய்து விட்டன.”
அவன் பெருமுச்சு விட்டான்.
நாங்கள் இருவரும் அது பற்றி மே ற் படி கனதக்கவில்லை.
சந்தியைக் கடந்தபோது ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் கம்பத்தில் தொங்கும் பிணத்தைப் பார்த்துக் கதறி அழுது கொண்டிருந்தாள். குழந்தைகள் கந்தல் உடுப்புகளுடனும் பஞ்சடைந்த கண்களுடனும் பசி வயிற்றுடனும் தாயுடன் சேர்ந்தழுது கொண் டிருந்தார்கள்.
"இவர் சமூக விரோதச் செயலில் ஈடுபட்டதால் மரண தண்டனை கொடுக்கப்பட்டது” என்று தொங்கும் பிணத்தில் எழுதப்பட்டிருந்தது.
*பசியால் அழும் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்க அடுத்த வீட்டுக் கோழியைத் திருடினால் மரணதண்டனை. தமிழ் மக்களைப் பயமுறுத்தி ஆயிரக்கணக்கில் வாங்கி ஆடம்பரமாக வாழும் தமிழ் தலைவர்களுக்கு என்ன தண்டனை?" குமரன் கேட்டான். நான் மறுமொழி சொல்லவில்லை.
நான் லண்டனுக்கு வந்துவிட்டேன்.
லண்டனில் அகதிகள் பெயர் சொல்லி அவர்களுக்கு ஒரு ஸ்தாபனத்தைக் காட்டி அவர்கள் பெயரில் ஆடம்பரமாக வாழும் படித்த தமிழர்களைக் கண்ட போது குமரனின் ஞாபகம் வந்தது.

Page 82
158 அரைகுறை அடிமைகள்
தெரிந்த ஒரு நண்பனின் வீட்டுக்குப் போனபோது சம்பந்தனைச் சந்தித்தேன். தமிழ்ப் பத்திரிகை ஒன்று கிடந்தது. அதில் குமரனின் கவிதை தமிழ் பயங்கர வாதத்தை மறைமுகமாகத் திட்டியிருந்தது.
"இந்த ஆள் இலங்கையில் இருந்துகொண்டு இப்பிடி எழுத என்ன துணிவு" சம்பந்தனின் சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னார். இவர் தமிழ் அகதிகள் ஸ்தாபனம் ஒன்றில் பெரியவர்; கொழுத்த சம்பளம் இரண்டு வீடு வாங்கிவிட்டார்.
நான் மெளனமாகவே இருந்தேன். எனக்கேன் பிரச்சினை.
எனக்கு ஒரு டொக்டர் பெண்ணைப் Gus அயிருக்கிறார்கள். பெரிய அழகு என்றில்லை. ஆனால் நல்ல சீதனம் கொழும்பிலும் வீடு.
நான் அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது குமரனின் கவிதை பற்றி ஒன்றும் பெரிதா க நினைக்கவில்லை.
அவனுக்கு என்ன துணிவு என்ற குரலில் இருந்த பயங்கரம் என்னை உறுத்திக் கொண்டிருந்தது.
நான் சாகப்பயந்தவன்; எனது அம்மா எத்தனையோ அர்சனைகள் செய்து எனது உயிருக்காக போராடியவள். இப்போதோ ஒரு டொக்டரைக் கல்யாணம் செய்யப் போகிறேன் என்பதற்காக எனது உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கப் போவதில்லை.
நான் மற்றவர்களைவிடப் தெரிதாகி விடவேண்டு மென்ற உந்தலில் ஒடிக்கொண்டிருக்கிறேன். குமரனின்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 1雅
பரிதாபமும் வருவதுண்டு. அவனுக்கு ஒரு டிக்கட் வேண்டக் காசில்லை இருந்திருந்தால் அவனும் -எப்போதோ லண்டனுக்கு வந்திருப்பான்.
சம்பந்தன் குமரனைப் பற்றி உயர்வாகக் கதைத்தான்.
"மற்றவர்களுடன் ஓடி, போட்டி போடாமல் தனக்கு விருப்பமானவற்றைச் செய்வது ஒர் இலட்சியம்தான்" *சம்பந்தன் சொன்னான். نر
"வாழ்க்கையின் சோ த  ைன க  ைள வெற்றி கொள்ளாமல் கவிதை என்றும் கலை என்றும் தங்களை மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்துக்கொள்வது கோழைத் தனம்" எனது தர்க்கம் சம்பந்தனுக்குப் பிடிக்கவில்லை.
தனக்குத்தானே இலட்சியத்தைப் படைத்துக் கொண்டு அந்த இலட்சியத்திற்காக வாழாமல் மற்றவர் களுடன் சுயசிந்தனையற்ற ஒட்டத்தில் மாட்டிக் கொள்வதுதான் கோழைத்தனம்" சம்பந்தன் விவாதித் தான.
"எனக்கு என் உயிரில் ஆசை" நான் முணு முணுத்தேன்.
"நாங்கள் கோழைகள். கொலைகாரர்களுடன் உறவு கொண்டாடி அவர்கள் கொலைகளை நியாயப்படுத்தி துப்பாக்கிகளுக்கு காசு கொடுத்து சுடுகாட்டை உருவாக்குகிறோம்." அவன் வெறுப்புடன் சொன்னான்.
"வாழ்க்கையில் சில மாற் றங்கள் தவிர்க்க முடியாதவை". நான் விட்டுக் கொடுக்காமல் சொன்னேன்?
"நாளைய பிணங்கள் இன்றைய பிணங்களை கணக்கெடுக்கிறோம்." அவன் சலித்துக் கொண்டான்.

Page 83
60 அரைகுறை அடிமைகள்
"குமரனின் சாவுக்கு நீயேன் ஒப்பாரி வைக்கிறாய். அவன் நாட்டு நடப்பு தெரிந்து வாயைப் பொத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும்". நான் சீறி விழுந்தேன்.
"நீ சந்தோசப்படலாம் ஒருவிதத்தில் குமரனின் மரணம் உனது சீதனத்தை கூட்டலாம்” சம்பந்தன் சிரித்தான்.
"என்ன பேய்க்கதை கதைக்கிறீர்”.
இலட்சியவாதிகள் போராளிகள் கலைஞர்கள் புத்திஜீவிகள் இறந்து தொலைகிறார்கள். கோழைகள் வாழ்ந்துகொண்டு வளம் சேர்க்கிறார்கள். இலங்கையில் ஒவ்வொரு ஆண்மகனின் சாவும் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு ஆணின் விலையைக்கூட்டி எங்கள் தமிழ்ப் பெண்களின் மார்க்கட் விலையை ஏற்றுகிறார்கள்” சம்பந்தன் போவதற்கு வெளிக்கிட்டான்.
அவன் கதைக்கும் குமரனின் கவிதைக்கும் இருந்த தொடர்பை என்னால் மறுக்க முடியவில்லை.
கனவுதான் என் கவிதையின் தலையங்கம் பகலில் காணும் பயங்கரங்களை மறக்க இரவில்
காணும் இனிய கனவில் யாரும் என்னை துப்பாக்கியால் துரத்தவில்லை
மிருகமென என் இனிய கனவில் எல்லோரும் நல்லவர்கள் பேசத்தெரிந்தவர்கள்- பேசிப்பழகுபவர்கள் பகலில் காணும் மனிதர் வாயற்ற முண்டங்கள் வார்த்தையென்றால் துப்பாக்கிதான் எங்கள் பெயர் சொல்லி ஏமாற்றி வாழ்பவர்கள் எங்கள் கடும் உழைப்பை கட்டணமாய் பறிப்பவர்கள்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 61
யார் இவர்கள் எங்களுக்கு? யார் இவரைத்தெரிவு
செய்தார்? ஏந்திய துப்பாக்கிகள் எங்களுக்கா எதிரிகளுக்கா? இன்று இங்கு நடப்பதென்ன? சுடுகாட்டு அரசாட்சி துப்பாக்கி தூக்கிகளே சுடுகாட்டு மன்னர்களே! காடலையும் மன்னர்களே! காலம் வரும் உங்களுக்கும்: ஏழைகள் அழுகின்றார் இன்னுமொரு புரட்சி வரும்

Page 84
கறை பிடித்தவர்கள்
இளம் வாசகர்களுக்கு பிடித்ததாக ஆறுமாதம் தொடர்ந்து வரத்தக்கதாக அரசியல் கலக்காத ஒரு தொடர்கதை எழுதித் தருவாயா" பத்திரிகை ஆசிரியர் முரளி தனது பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தான். அவன் நண்பன் கேசவன் பதிலுக்குத்தானும் ஒரு சிறு முறுவலைக் காட்டிக் கொண்டான்.
இருவரும் ஒரு காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். அந்த ஒருகாலம் என்பது எத்தனையோ வருடங்களுக்கு அப்பாற்பட்டது. முரளி எப்போது லண்டன் வந்து சேர்ந்தார் என்று கேசவனுக்குத் தெரியாது. அவன் தனது பதினெட்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டனுக்கு வந்தவன். எப்போதாவது இருந்துவிட்டு ஏதோ கதைகள் எழுதுவான். 70-ம் ஆண்டுகளில் ஜெயகாந்தனில் உண்டான காந்தம், ஜானகிராமனின் கதைகளில் காவேரி ததியில் நடந்த கற்பனை எல்லாம் அவனையும் தானும் ஏதோ எழுதவேண்டும் என்ற வேகத்தையுண்டாக்கி விட்டது.
லண்டனுக்கு வரும்போது தன்னோடு இலக்கிய தாகத்தையும் கொண்டு வந்தான். இருபது வடிவதில் இவன் ஏதோ எழுத அதை சினேகிதனின் தகப்பன் தன் பத்திரிகையின் பிரசுரிக்க கேசவனும் ஒரு எழுத்தாளனாகி விட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 163
எல்லா இளம் எழுத்தாளர்களும் போல் இவன்
கற்பனையில் இளம் கன்னிகள் தங்கள் தேன் வழியும்
அதரங்களால் இவனை முத்தமிட்டு வெறியுண்டாக்க வில்லை.
அரசியல் அறிவில்லாத ஆயுதம் தாங்கிகள் சுதந்திர கீதம் பாடவில்லை. இவன் தனக்கு லண்டனில் உண்டான அனுபவங்களை எழுதினான். தெருவில் நடந்தால் அவன் காதிற் கேட்டும் இனவாதக் கிண்டல்கள், வேலையிடங் களில் தான் நடத்தப்படும் இரண்டாம் தரப் பிரஜை என்ற பாலம், படிப்புத் தளத்தில் வெள்ளை மாணவர்கள் தங்களை உயர்சாதி என்று நினைத்துக் கொள்ளும் நடத்தை என்பன இவனை எழுதத் தூண்டியது. ஏதோ தன் மனக் கொதிப்பை ஒரு இந்தியத் தமிழ்ப் பெண்ணின் பார்வையில் எழுதினான்.
ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் பெயரில் எழுதுவதை விட ஒரு ஆண் எழுத்தாளன் தன் பெயரில் ஒரு பெண்ணின் மனநிலையை விவரித்து பல பெண் களுக்குப் பிடித்திருக்க வேண்டும். கதையைப் பிரசுரித்த இவன் சினேகிதனின் தகப்பன் ஒன்றும் சுய உணர்ச்சி யுடன் லண்டனின் இனவாதத்தை எதிர்ப்பவரல்ல. அவர் தான் லண்டனில் வாழ்வதை பத்திரிகை வெளியிடுவதைப் பெரிய கொடையாகக் கொண்டிருந்தார். இவன் ஒருநாள் தன்னுடன் படிக்கும் மாதவனுடன் அவனின் வீட்டுக்கு போனபோது அவரின் பத்திரிகையாசிரியரான தகப்பனைக் கண்டான். ஏதோ எழுதினான். அதைத் தொடர்ந்து இன்னும் ஏதேதோ எழுதினான். எழுத்தாளனாகி விட்டான்.
தற்செயலாக ஒரு நாள் இவன் முரளியைக் கண்டான். முரளியும் இவனும் இலங்கையில் கண்டியில் இவர்களின் தகப்பன்கள் அரசாங்க அதிகாரிகளாக இருந்தபோது

Page 85
164 அரைகுறை அடிமைகள்
ஒன்றாக ஒரு கல்லூரிக்குப் போனவர்கள் தமிழர்கள் இலங்கையை விட்டு ஓடவேண்டிய நிர்ப்பந்தம் வந்த தைத் தொடர்ந்து இவர்களும் நாடோடிகளாகி விட்டார்கள். t
கேசவன் லண்டன் யூனிவர்சிட்டியில் ஒன்றில் படித்து லண்டனுக்கு வெளியால் வேலைசெய்து கொண்டிருக் கிறான். முரளி மெலிந்து போயிருந்தான். பத்து வருடங் களுக்கு அவனை அப்படிக் கண்டபோது இவன் ஒரு காலத்தில் என்னுடன் படித்த முரளிதானா என்று கேசவன் யோசித்தான்.
முரளி அவர்கள் குடும்பத்தின் கடைசி மகன், செல்ல மாக வளர்க்கப்பட்டவன். பெரிய தமக்கை படித்தழுத பாவை விளக்கின் மூலம் இலக்கியத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டவன். கேசவனின் தகப்பன் ஆங்கிலப் பத்திரிகைகள் வாசிப்பவர் ரீடர் டையஸ்ட். எடுப்பவர் தனது மூத்த மகனுடன் கேசவனுடன் ஆங்கிலத்தில் பேசுபவர்.
முரளி கேசவனுக்கு அகிலனையும் அமரதாரர் களையும் அறிமுகம் செய்து வைத்தான். கேசவனின் தகப்பன் ஷேக்ஸ்பியர் பற்றிப் படிக்கச் சொல்ல கேசவன் அவருக்குத் தெரியாமல் ஜெயகாந்தனுடன் மனதை விட்டு விட்டான்.
அப்போது அவர்கள் வயது கொண்டிருந்த இளைஞர்கள் பதினாறும் பதினேழுமாயிருக்கலாம். பெட்டைகளைப் பற்றி நிறையக் கதைத்துக் கொண்டிருந் தார்கள். அதற்கு எத்தனையோ வருடங்களுக்குப்பின் லண்டனில் குளிருக்குப் பயந்து ஒவர்கோட்ட ரால் உடம்பை மறைத்தபடி ஒரு மனிதன் தமிழ்ப் பேப்பர் வாசித்தும் கொண்டிருந்தான். அவன்தான் முரளி.
இருவரும் தயக்கத்துடன் பார்த்தார்கள். முரளிதான் முதலில் வாய் திறந்தான் அதற்குக் காரணம் அவனின்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 65
முன் பற்கள் உயர்ந்து வெளிப்பட்டிருப்பது காரணமல்ல. ஆனால் அவன் எப்போதும் தானாக முன் வந்து தன்னை அறிமுகம் செய்து கொள்ளுவான்.
கேசவன் எப்போதும் தயங்கியவன் எழுத்துக்களில் அவன் மன உணர்ச்சியை அவன் முகத்தில் தேட முயன்றால் தோல்விதான். நண்பர்கள் அறிமுகமாகிக் கொண்டபோது கேசவனின் எழுத்துக்களைத்தான் வாசித் திருப்பதாக முரளி சொன்னான்.
கேசவன் அவன் புகழ்மாலைகளைத் தாங்காமற் தாங்கிக் கொண்டான். தான் ஒரு பத்திரிகை நடத்த யோசிப்பதாகச் சொன்னான் முரளி
கேசவன் குழப்பத்துடன் நண்பனைப் பார்த்தான். இப்போதெல்லாம் சுஜாதாவையும் பாலகுமாரனையும் பற்றிப் பேசினான் முரளி.
பாவம் கேசவன் வெளிநாட்டில் ஒரு எழுத்தாள் அனாதையானவன். இந்தியத் தமிழ் எழுத்தாளர்களை அடிக்கடி வாசிப்பது குறைவு கேசவனின் அரசியல் விழிப்பு முரளிக்குப் பிடிக்கவில்லை. மக்களுக்கு விளங்குகிற அரசியலாக விஷயமாக எழுத வேண்டும் என்று சொன்னான்.
லண்டன் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் மக்கள் விரும்பிப் படிப்பதென்ன? இடியப்பக் கடை விளம்பரமா? அல்லது மணமகள் மணமகன் தேவை என்ற பக்கமா? அல்லது பழைய அரசியற் தலையங்கங்களின் புதிய தமிழ் Gala Lost? கேசவன் நண்பனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் கட்டாயம் கதை கேட்டான். அதுவும் இளைஞர்கள் விரும்பிப் படிக்கும் அரசியல் கலக்காத

Page 86
66 அரைகுறை அடிமைகள்
கதை அதாவது ஒரு காதற் கதை. எப்போதாவது இருந்து ஏதோ எழுதுவதை விட ஒரு ஒழுங்காக ஒரு தொடர்கதை எழுத கேசவனுக்கும் ஆசைதான், நேரமில்லை ஒன்று. அவன் இப்போது ஒரு கல்லூரி ஆசிரியனாக இருந்தான். அது ஒரு தனியார் கல்லூரி கொம்பியூட்டர் சம்பந்தமான பாடங்கள். அத்துடன் வீட்டில் வந்தால் எத்தனையோ பிரச்சனை. இவன் இப்படி சொல்ல முரளி இவனை ஏறிட்டுப் பார்த்தான். "உனக்கு இன்னும் கல்யாணமாக வில்லை என்றெல்லோ கேள்விப்பட்டனான்” முரளி சந்தேகத்துடன் கேட்டான். கேசவன் மறுமொழி சொல்ல வில்லை. கல்யாணம் செய்து கொண்டால் மட்டும்தானா பிரச்சனைகள் வரும்?
தான் தன் தமக்கையுடன் இருப்பதையோ அவளின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களையோ அவன் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் கண்ட சினேகித. னிடம் சொல்ல விரும்பவில்லை. தனது பத்திரிகை பிரவேசத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தான் முரளி. கொழும்பில் தான் ஒரு பெரிய நாடறிந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்ததாகவும் இலங்கைத் தமிழர் படும் கஷ்டத்தின் நியதிதான் ஊரைவிட்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இப்போது லண்டனில் அகதியாக இருப்பதாகவும் தனக்குப் பத்திரிகைத் தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாதென்றும் தான் லண்டனில் உண்டாக்கும் பத்திரிகைக்கு இவன் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி முடிப்பதற்கிடையில் கேசவன் தான் இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டு விட்டான். "இதென்ன லண்டனைச் சுற்றிச் சுற்றி ஒடும். சேர்க்கிள் லைன் ரெயின் தானே இன்னொரு நாற்பது நிமிடத்தில் இதே இடத்துக்கு வந்து சேரும் தானே" அநாவசியமாகச் சொன்னான் முரளி.
கேசவன் தன் மணிக்கூட்டை பார்த்தான். அவன் இன்று கல்லூரிக்குப் போகவில்லை அவனுடைய

Tr0galvnf Luta Joavu 67
படிப்பிக்கும் ஒரு ஆசிரியையின் மகளின் பிறந்ததினப் பார்ட்டிக்குப் போய்க் கொண்டிருந்தான்.
என்ன நேரமாகிவிட்டது".
முரளி நல்லவன்தான் ஆனால் எத்தனையோ ஆண்டு களுக்குக் கண்டபடியால் இப்படித் தன்னை ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டானே என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
அவனிடமிருந்து தப்பிப் போவதே போதும் போதும் என்றாகி விட்டது.
முரளி தன் டெலிபோன் நம்பரைக் கொடுத்தான். கேசவனின் நம்பரை வாங்கிக் கொண்டான்.
யாரும் எழுதச் சொன்னால் இவனுக்கு எழுத வராது. ஆனால் இவனுடன் வேலைசெய்யும் மஞ்சுளாவை நினைத்தால் அவளைப் பற்றி ஏதோ எழுத வேண்டும் போலிருக்கிறது. கேசவன் ரெயிலிருந்து வெளிக்கிட்ட போது மழை தூறிக்கொண்டிருந்தது. படிங்ரன் ஸ்ரேசனி லிருந்து சாரி சாரியாக மக்கள் போய்க் கொண்டிருந் தார்கள். பின்னேரம் நான்கு மணி என்றபடியால் பாடசாலையிலிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகும் தாய்மார்கள் தெருக்களில் அதிகம். காணப்பட்டார்கள்.
அவன் கையிலிருந்த Llunrff Lupurnir G8esnriff Ll6aflew விலாசத்தைச் சரிபார்த்தான். லண்டன் A-Z புத்தகத்தில் அவள் விலாசத்தைக் கண்டுபிடித்தான். தெருவின் கடைக் கோடியில் அவள் வீடிருந்தது.

Page 87
168 அரைகுறை அடிமைகள்
பார்பரா ஒரு ஆங்கிலேயப் பெண். ஒரு ஐந்து வயதுப் பையனுக்குத் தாய் கல்லூரிக் காதலின் சின்னம் அந்தக் குழந்தை. அவனுக்குத் தகப்பன் யாரென்று தெரியாது. *ஒரு காலத்தில் எமது தகப்பன் யார் என்று கேட்டால் என்ன சொல்வாய்” என்று கேசவன் கேட்டபோது பார்பரா தன் நீல விழிகளால் இவனை எடைபோட்டாள். நீ ஒரு இந்தியன்தானே தகப்பனில்லாமல் பிள்ளை பிறக்கும் என்பதை விஞ்ஞானம் நிருபித்த பிறகும் நீ இன்னும் ஒரு ஆண்மகனை நான் அண்டிப்பிழைக்க வேண்டும் என்று நினைக்கிறாயே" என்பது போலிருந்தது அவள் பார்வை.
இவன் அதற்குமேல் பார்பராவை மேலதிகமாக ஒன்றுக் கேட்கவில்லை. அவள் அவனைவிடப் படித்தவள். அவனைவிடப் பரந்த விதத்தில் உலகைப் பார்ப்பவள். இவனின் அருமைச் சினேகிதி. இருவரும் எத்தனையோ இரவுகளை அரசியல் கதைப்பதில் செலவிட்டிருக் கிறார்கள். அக்கா இவனைக் காணவில்லை என்றால் பார்பரா வீட்டுக்குப் போன் பண்ணித் தேடுமளவு அவர்கள் உறவு வளர்ந்தது. கொஞ்சக் காலத்துக்கு முன் வரை அவள் இவர்கள் இருவரும் படிப்பித்துக் கொண் டிருக்கும் கல்லூரிக்கு அருகிற்தான் குடியிருந்தார்கள். அதனால் அவளை அடிக்கடி பார்க்க முடிந்தது. ஒருநாள் கல்லூரியிற் சில மாணவர்கள் ரகளை செய்துவிட் டார்கள். அப்படிச் செய்தவர்கள் கேசவன் ஒரு இந்தியன் என்றபடியால்தான் இனத்துவேசமாகப் பேசினார்கள் என்பதைப் பார்பரா மனத்துயருடன் சொன்னாள்.
நான் இந்தியனில்லை என்று சொல்லி அவளிடம் என்ன முணுமுணுப்பு என்று மெளனமாகிவிட்டான். இனத்துவேசமாகப் பேசிய வெள்ளையர்களுக்காக இவள் மன்னிப்புக் கேட்பதுபோல் இவனைத் தன் வீட்டுக்குத் தேனிர் சாப்பிட அழைத்தாள். அது வரையும் அவளைப்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 69
பற்றி இவனுக்கு ஒன்றும் தெரியாது. அழகான பெண். அமைதியான சுபாவம் மிகவும் சினேகிதமான திடத்தை என்பதை விட அவளைப் பற்றி அவனுக்கு ஒன்றும்
அந்த இளம் பெண்ணின் (Թւյահ சிமோன், அதைக் கேட்டு இவன் முகத்தில் உண்டாகும் மெல்லிய Hன்முறு வலைப்பார்த்து இவள் பிரான்ஸ் நாட்டின் பேர் பெற்ற எழுத்தாளப் பெண் சிமோன் 4ஆவாவுக்கு உறவென்று தினைக்காதே? என்று எச்சரித்தாள்.
சிமோன் மிகவும் இளம் பெண். இப்போதுதான் ஆங்கிலம் க ற்றுக் கொள்கிறாள் அவள் சீது மழலை ஆங்கிலத்தில் இவனுக்கு பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றிச் சொன்னாள். இவன் உம் 676նrմy கேட்டுக் கொண்டான்.
சிமோன் e-24D LonTasib 'பராவுடனிருந்தான். அவளின் இனிய குரலை இவனுக்குப் பிடித்துவிட்ட சில பின்னேரங்கவில் SAGBorresir குழந்தை ஜெரமியுடன்
கொள்ள முடியவில்லை.
1 سے yی

Page 88
70 அரைகுறை அடிமைகள்
"ஏன் அப்படி மறுக்கிறாய்" என்று கேட்டாள்.
"லண்டன் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்னை ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தால் தவறாகச் சொல்வார்கள்!” என்று சொன்னான். பார்பரா தன் கடல் நிற நீல விழிகளால் இவனைப் பார்த்துச் சிரித்தாள். நீ பாவம்" என்று சொல்லித் தலையாட்டிக் கொண்டாள்.
பார்பரா வீட்டுக்கு அவன் இப்போது போய்க் கொண்டிருக்கிறான். ஏன் லேட்டாக வருகிறாய் என்று அவள் கேட்கவில்லை. இவன் ஒரு தமிழன் இவனுக்கும் நேரத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அவள் எப்போதோ முடிவு கட்டிவிட்டாள். எந்தத் தமிழன் தான் சொன்ன நேரத்துக்குச் சரியாக வருகிறான்?
"வழியில் ஒரு சினேகிதனைக் கண்டேன்" இவன் தானாகக் காரணத்தைச் சொன்னான். பார்பராவின் வீடு நிறைய குழந்தைகளும் அவளின் சினேகிதர் களுமாகக் குவிந்து தெரிந்தார்கள். அவர்களில் ஒரிருவரை இவனுக்குத் தெரியும். பார்பராவின் தாயும் தகப்பனும் இவனுக்கு ஹலோ சொன்னார்கள். மற்றவர் களைப் பார்பரா இன்னும் இவனுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. "குழந்தைகளின் பார்ட்டி முடியப் பெரியவர்களைச் சாப்பிடச் சொல்லப் போகிறேன். நீங்கள் நிற்பீர்களா இல்லையா” பார்பரா இவனுக்குப் பேர்த்டே கேக் ஒன்றைக் கொடுத்தபடி கேட்டாள்.
"அக்கா பின்னேரம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும் என்று சொன்னாள். அவளின் சினேகிதியாரோ பிள்ளை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 17
பெற்றிருக்கிறார்களாம்" இவன் கேக்குடன் சேர்த்து வார்த்தைகளையும் மென்று விழுங்கினான்.
அவள் சிரித்தாள் இவன் அக்காவுக்காக வாழ்பவன், அக்கா வாழ்க்கை பட்டும் வசதியற்று இவன் தயவில் வாழ்கிறாள் இவன் முப்பது வயதைத் தாண்டியும் தன்னைப் பற்றி யோசிக்காமல் அக்காவுக்காக வாழ் இறான். அக்காவின் கணவர் குடிகாரன். அவள் பாவம் மூன்று குழந்தையும் வீட்டுக் கடனுடள் கஷ்டப்படுகிறாள்.
"நாளைக்கு வருகிறேன்." அவன் குரலில் உறுதி. "நிச்சயமாக” அவள் கேள்வியில் அவநம்பிக்கை.
முரளி கதை கேட்கிறான் என்பதை இவளுக்குச் சொல்லலாமா? தேனிரைக் குடித்துக் கொண்டு இவளைப் பார்த்தான். குழந்தை ஜெரமியுடன் அவனது ஐந்து வயது பட்டாளம் வீட்டைத் துவம்சம் செய்து கொண்டிருந்தது.
"வழியில் ஒரு சினேகிதனைக் கண்டேன்."
"வந்தவுடன் சொன்னாயே"
"அவன் ஒரு பத்திரிகை ஆசிரியன்.”
"ஒயேஸ்" அவள் இழுத்தாள்.
"காதல், கதை ஆவேணுமாம்” இவன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டான்.
அவள் கணிரென்று சிரித்தாள்.
என்ன சிரிப்பு?

Page 89
I72 அரைகுறை அடிமைகள்
w *உனக்குக் காதலிக்கத் தெரியுமா” அவளின் கிண்டல்
இவனைச் சுண்டியிழுத்தது.
மஞ்சுளாவைப் பற்றி எழுதப் போகிறேன்." மஞ்சுளாவைக் காதலிக்கி நாயா"
அவனுக்கு எரிச்சல் வந்தது.
அவளை முறைத்துப் பார்த்தான்.
"மஞ்சுளா கல்யாணம் ஆனவள்."
அவன் முணுமுணுத்தான். இவன் குடித்து முடித்த தேனீர்க் கோப்பையைத் தூக்கிக் கொண்டாள் கழுவப் போட்டாள்.
அவள் இவனைப் பார்த்தாள். அவன் நேரத்தைப் பார்த்துக் கொண்டான். பார்பரா இன்று அழகாக இருக்கிறாள். இவனின் வயதுதான் ஆனால் இவனைவிட எத்தனையோ விதமான உலக அனுபவங்சுளைக் கண்டவள். இருபத்தி ஒரு வயதில்தான் Fine Art பட்டத்தைப் பெற்றுக் கொண்டு தன் காதலுடன் ஆபிரிக்கா பார்க்க புறப்பட்டாள்.
இரண்டு மாதக் கர்ப்பவதியாய் லண்டன் வந்து சேர்ந்தாள். அழகாகப் படம் வரைவாள். இவனையும் இழுத்து வைத்துப் படம் போட்டாள். கன்வசில் இவனை தீட்டிய படத்தை அவன் இன்னும் வீட்டுக்கு கொண்டு போகவில்லை அக்காவுக்கு 'இதெல்லாவற்றையும் ரசிக்க நேரமில்லை அத்தான் தன் உணர்வுடன் எதை எப்போது
பார்த்தார் என்று இவனுக்கு ஞாபகமில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 173
மருமக்களுக்கு இப்போதுதான் பத்து, ஆறு நாலு வயதுகளாகின்றன.
நடு மருமகன் சீதாராமன் கலைகளை ரசிப்பான் என்று தெரிகிறது.
ஆறு வயதுதான் என்றாலும் இப்போதே விளையாட் டுக்கு வாங்கிக் கொடுத்த களிமண்ணால் பெண் சிலை செய்கிறான். சிறிய தலையும் பெரிய மூலைகளுடனும் மிருந்தது அந்த பெண் சிலை
"என்ன அவசரப்பட்டு ஓடுகிறாய்”
அவள் இவனுக்கு கேக்கும் பட்சணங்களும் கட்டிக் கொடுத்தாள். இவனின் தமக்கை லட்சுமியைக் கண்டிக் கிறாள். அவளின் இவளுக்குப் பரிதாபம்.
லட்சுமி கணவர் நாகலிங்கத்தில் கோபமா பரிதாபமா என்று தெரியாத உணர்ச்சி இந்தச் சமுதாயத்தின் கோரமான விளையாட்டின் பலி மாடுகள் என்றுதான் பார்பரா சொல்வாள்.
*மஞ்சுளாவைப் பற்றி ஏன் எழுத யோசிக்கிறாய்.”
வாசற் படிக்கு இவனுடன் வந்து கொண்டே கேட்டாள்.
அவன் யோசித்தான்.
"அவள் ஒன்றும் உன் காதலி கதைக்கு ஏற்ற கதாநாயகி இல்லையே" பார்பரா சிரித்தாள்.
"நீ சொல்வது சரிதான்"
அவன் புறப்பட்டான் மழை பிடித்துக் கொண்டது.

Page 90
1.74 அரைகுறை அடிமைகள்
முரளியைப் பற்றி நினைத்துக் கொண்டான். பழைய தினைவுகள் ஞாபகம் வந்தன. முரளி எப்படியும் வாழ வேண்டும் என்று நினைப்பவன். அந்த மனப்போக்கு அவன் பதினெட்டு வயதாக இருக்கும்போதே இருந்தது.
கேசவனுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியதியிருக்கிறது. அக்கா பாவம் என்று நினைத்த வுடன் தான் எப்படியும் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நினைவு மிகவும் தீவிரமாகிறது.
அக்கா பாவம் இவன் அடிக்கடி நினைத்துக் கொள்வது போல் அவள் தன்னைப்பறறி ஒன்றும் நினைத்துக் கொள்வதில்லை என்று இவனுக்குக் காட்டிக் கொள்ள தன்னால் ஆன முயற்சிகள் எல்லாம் செய்வாள்.
இலங்கையின் இனக்கலவரத்தில் எத்தனை கணவன்கள் இறந்து விட்டார்கள். அவர்களின் விதவைகளை விடத்தான் அதிர்ஷ்டசாலி இல்லையா என்று கேட்பாள்.
அக்காவின் கணவர் லண்டனிற் பெரிய வேலையிருக் கிறான் என்று சொல்லித்தான் இவளைத் திருமணம் செய்து வைத்தனர்.
இப்படி எத்தனையோ பெண்கள் கல்யாணச் சந்தையில் ஏமாற்றப்பட்டதை ஒருதோல்வியாக எடுத்துக் கொள்ளாமல் வேறு ஏதோ செய்து வெற்றியடையப் பார்க்கிறார்களா என்று இவன் நினைப்பதுண்டு.
அக்கா தன் குழந்தைகளைக் கவனமாகப் படிப்பிக் கிறாள். தகப்பனாற் தான் பட்ட ஏமாற்றம் தன் குழந்தைகளாலும் வரக்கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம். மஞ்சுளா தேசாய் என்பவளையும் ஒரு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 175
:பாவம் என்று நினைத்துக் கொள்வதா? கிழக்கு ஆபிரிக்காவிற் பிறந்த குஜராத்திப் பெண். தாய் தகப்பனுக்கு அடங்கி வளர்ந்தவள்.
எப்படி உறுதி படைத்த மனிதரையும் உலுக்கிப் படைக்கும் லண்டன் மாநகரில் தகப்பனின் உபதேசங் கனைக் கேட்டு மிக மிகக் கட்டுப்பாடாக வளர்ந்தவள்.
பம்பாயில் உள்ள தன் சொந்தகாரப் பையனைத் தகப்பன் தேர்ந்தெடுத்தபோது இவள் தலை குனிந்து லிமானம் எடுத்து கல்யாணம் செய்து கொண்டாள்.
சாந்தி முகூர்த்தத்துக்கு முன் மனம் விட்டுப்பேச வேண்டும் என்று சொன்னானாம்.
அதற்கென்ன லண்டனிற் படித்த பெண்”மனப் விட்டு பேச தயாரானபோது அவன் இவளை ஏற இறங்கப் பார்த்தபடி இவளின் லண்டன் அனுபவங்களைப் பற்றிக் கேட்டானாம். பாவம் மஞ்சுளா, தாய் தகப்பனால் இந்திய இளம் தலைமுறையினர் நடத்தும் டிஸ்கோவுக்குக் கூடச் செல்ல அனுமதிக்கப்படாதவள்.
யூனிவர்சிட்டி படிப்பில் கவனம் செலுத்தித் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டவள்.
அவன் நடுச் சாமத்தில் இவளின் பழைய அனுபவத்தை
கேட்டானாம். படுபாவி என்று திட்டத்தான் «uDal0Tg5) வந்ததாம். அவனில் கோபம் வந்தது கல்யாணம் ஆகியும் "கன்னி' கழியாமல் லண்டன்
வந்து சேர்ந்து விட்டாள். மிஸ் தேசாய் இப்போ தெல்லாம் இந்துமத வாலிபர்களையே திட்டிக் கொண் டிருக்கிறாள். கறைபடிந்த ஆண்கள் கண்ணியமாக

Page 91
176 அரைகுறை அடிமைகள்
என்ன நினைப்பார்கள் என்று பேசுவாள். ஒன்றாய்? வேலை செய்யும் சில ஒநாய்கள் இவள் கண்ணிருக்குப் புண்படுகிறார்கள். அண்மையில் நடந்த சைமனின் போர்த் டே பார்ட்டியின் போது அளவுக்கு மீறி வைன் குடித்து விட்டுத் தள்ளாடினாள்.
இவன் அவளை வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான். அக்கா. மஞ்சுளா பார்பரா என்னும் பெண்களைத்தவிர அதிகம் பேரை அவனுக்குத் தெரியாது.
மஞ்சுளாவுக்குக் கைத்தாங்கல் கொடுக்க சைமன் போன்றவர்கள் முன்வரும்போது இவனுக்குக் கோபம் வருகிறது. ஆனாலும் என்னசெய்ய? மஞ்சுளாதான் எல்லா இந்தியரையும் (அதாவது ஆண்களை) திட்டிக் கொண்” டிருக்கிறாளே பார்பரா தன்னுடன் நெருங்கிப் பழகும் போது இந்த ஆங்கிலேயப் பெண் வேறு ஏதும் காரணம் வைத்துக் கொண்டு பழகுகிறாளோ என்று யோசித்தான்.
அவள் இவனின் அப்பாவித் தனத்தை இவன் பார்வை யிலேயே கண்டு பிடித்து விட்டாள்.
"முட்டாளே என்னைக் கண்டு பயப்படாதே. நான் ஒரு பெண்ணுடன் சினேகிதமாக இருக்கிறேன். எனக்குக் கிடைத்த அனுபவத்தின் பின் ஆண்களை நம்புவேன் என்று நினைக்கிறாயா?" என்று சிரித்தாள்.
மழை முடிந்து விட்டது.
அண்டர்கிரவுண்ட் ரெயின் வந்தது. முரளிக்கும் காதல் அதை எழுத இவனால் முடியாது. இவன் ரெயினில் உட்கார்ந்தான். கனைப்பில் தூங்கிவிட்டான்.
தாயகம். 17-12-1993

அட்டைப்பட முகங்கள்
அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழுதான். யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டு வீச்சு. தேவாலயம் அழிந்து விட்டது. இருபது முப்பது பேர் இறந்திருக்கலாம்.
இலங்கைப் பத்திரிகைச் செய்தி ஒன்றை வாசித்ததும் தான் ஒரு ஆண் மகன் என்பதையும் மறந்து அழவேண்டும் போலிருந்தது. தேவாலயத்துக்குப் பக்கத்திலிருந்த குடும்பத்தை அவனுக்குத் தெரியும். தேவசகாயம் மாஸ்டரும் குடும்பமும் இறந்து போன மனிதர்களில் ஒரு சிலராக இருக்கக்கூடாது என்று அவன் மனம் பிரார்த்தித்தது. அவனின் நினைவு தெரிந்த நாள்முதல் நெருங்கிப் பழகிய குடும்பம் அது.
எத்தனையோ தரம் இப்படியான செய்திகளைக் கேட்டு மனம் கலங்கியிருந்தாலும் இன்றைய செய்தியின் பின்னிருப்பவர்கள் தனக்குத் தெரிந்தவர்கள் என்ற துயரம்: வந்ததும் கண்களும் கலங்கின.
வெளியில் சரியான பணி பெய்து கொண்டிருந்தது. இன்றைக்கு வேலைக்குப் போக முடியாது. ரெயின் பிரயாணங்கள் பணி பெய்யும் காரணத்தால் தடை செய்யப்பட்டு எப்போது மீண்டும் தொடங்குமோ” தெரியாது என்று டெலிவிஷனிற் சொன்னார்கள்.

Page 92
78 அரைகுறை அடிமைகள்
கொஞ்ச தூரத்திலுள்ள தமிழ்க்கடையிற் போய்த் தமிழ்ப் பேப்பர் வாங்கிக் கொண்டு வந்திருந்தான். கடையில் நின்றவர் யாழ்ப்பாணத்துக் குண்டுவீச்சைப் பற்றித் துயரத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
அரவிந்தனுக்குத் தேவசகாயம் குடும்பம் ஞாபகத்துக்கு வந்தது. ஞாபகங்கள் வேதனை தருகின்றன. இவனின் குடும்பமும் தங்களிடமுள்ள எல்லாவற்றையும் விற்று அரவிந்தனை வழியனுப்ப வந்தபோது தேவசகாயத்தை வழியிற் கண்டான்.
ஆறு பிள்ளைகளுக்குத் தகப்பன் அவர். ஒரு காலத்தில் இவனுடைய மதிப்புக்குரிய ஆசிரியராக இருந்தவர். முதல் மூன்றும் பெண் குழந்தைகள்.
இப்பொழுது முதற்பெண்ணுக்கே முப்பது வயதுக்கு மேல் இருக்குமோ? அந்த மூத்த பெண் அரவிந்தனுக்கு நினைவு தெரிந்த நாள்முதல் ஒரு சோகத்துடனிருந்தாள்.
டெலிபோன் அடித்தது. தேவசகாயம் மாஸ்டரின் குடும்பத்தின் நினைவு துண்டுபட்டது.
இயந்திரம்போல் கைகள் றிசீவரைத் தூக்கின. வெளியில் பணி கொட்ட நினைவில் துயர் கொட்டிக் கொண்டிருந்தது. அடுத்த பக்கத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியரின் குரல் மிக மிக உற்சாகமாகக் கேட்டது. அடுத்தவன் அவலத்தை ஆதாயமாக்கும் சில பத்திரிகை ஆசிரியர்களில் ஒருத்தர் அவர்.
"என்ன இண்டைக்கு வேலைக்குப் போகயில்லப் போல கிடக்கு"

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 179
"ஒம். சரியான பனி. ரெயின் சிக்னல் சேர்விஸ் பிழையாம். தேவையில்லாமல் பிரயாணம் செய்ய வேண்டாம் எண்டு ரெலிவிஷனில் சொல்லிச்சினம்”
நீர் வீட்ட இருப்பீர் எண்டு நினைச்சன். சரியாப் போச்சு.” ஆசிரியர் எதற்கோ அடித்தளம் போடப் போகிறார் என்பதையுணரத் தெரியாத வாலிபனில்லை அரவிந்தன்.
"பனி பெய்யிறபடியால் வேற ஒண்டும் செய்யத் தெரியல்ல?
"ஒவ்வீசுக்கு ஒருக்கா வாருமேன்” குரலில் உற்சாகம். சுடச்சுட விடயங்களை எழுதி வாசகர்களைப் பிடிக்கும் ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்.
அவர் குறிப்பிடும் ஒவ்வீஸ் அவர் வீடுதான்." அங்கேயே பத்திரிகை வேலைகளைச் செய்து கொள்வார். அரசாங்கத்துக்குக் கண்க்குக் காட்டும் போது வீட்டுக் கடன் ஒவ்வீஸ் செலவு என்ற விதத்தில் மறைபடும். சம்பளமும் “கிம்பளமும்’ எடுத்துப் பணம் சேர்க்கும் பல தமிழர்களில் ஒருத்தர் அந்த ஆசிரியர். அவரின் அழைப்புக்கு இவன் தயங்கினான்.
ஒருதரம் இந்த மனுஷன் இருமும் போது எத்தனை ஆயிரம் கிருமிகள் மற்றவனுக்குப் போகிறது? எத்தனை தமிழன், தான் செய்யும் விடயங்கள் மற்றவர்களைத் தாக்கும் என்று நினைக்கின்றான்.
"என்ன பேசாமலிருக்கிறீர்” ஆசிரியரின் குரல் அனத்தது.

Page 93
180 அரைகுறை அடிமைகள்
அரவிந்தன் ஆசிரியரின் பத்திரிகைக்கு அட்டைப் படத்திற்குத் தேவையான புகைப் படங்களை எடுத்துக் கொடுப்பவன். லண்டனில் இப்பொழுது தமிழர் எதையும் சாட்டிக் கொண்டு பெரிய பார்ட்டிகள் வைப்பதும், வீடியோ, படங்கள் எடுப்பதும் சாதாரணம். லண்டன் முழுதும் பரதக் கலைகள், பாட்டுக் கச்சேரிகள், பூப்பு நீர் ஆட்டுவிழா, பிறந்த தினமென்று மிகமிக ஆடம்பரமாக நடக்கும் வைபவங்களுக்கும் அவனைக் கூப்பிடுவார்கள். ஆசிரியரின் மாமியார் பாட மைத்துணி ஆட அடிக்கடி "கலைவிழா நடக்கும். அதை அரவிந்தன் படமெடுக்க ஆசிரியர் அழகிய நிறத்தில் அந்தப் படங்களைப் பிரசுரிப்பார். பத்திரிகை விலைப்படும், காசு சேரும்.
இப்பொழுதும் அப்படி ஒன்றுக்குத்தான் கூப்பிடு கின்றார் என்று தெரிந்தது. இவன் இருக்கும் மனநிலையில் எந்த அழகையும் மனம் கொள்ளாது. "தேவசகாயம்" குடும்பம் வேதனை தந்து கொண்டிருந்தது.
"கொஞ்சம் தடிமல் குணமாக இருக்கிறது? அரவிந்தன் பொய் சொன்னான். ஆசிரியர் விடமாட்டார் என்று தெரியும். பத்திரிகை ஆசிரியர் சிலர் எதையும் எழுதி விற்றுப் பணமாக்கத் துடிப்பவர்கள்.
*பின்னேரம் ஒருதரம் வரப்பாரும். அட்டைப் படத்தைப் பற்றி உம்மோட கதைக்க வேணும்.”
ஆசிரியருக்கு இவன் தடிமலைப் பற்றி என்ன அக்கறை. இவன் செய்யும் வேலைக்கு இவனுக்குச் சம்பளம் கிடைக்கிறது. இவன் போகாவிட்டால் ஆசிரியருக்கு உதவி செய்ய எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள். "கலை" தெரிகிறதோ இல்லையோ கமெரா பிடிக்க யாருக்குத் தெரியாது? எல்லோரும் தங்களை டேவிட் பெய்லி என்ற பிரபலமான புகைப்படக் கலைஞராகக் கற்பனை செய்வதற்கு என்ன தடை?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 8
அரவிந்தன் சரி பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
தன்னைச் சுற்றியிருக்கும் கற்றாடலைப் பார்த்தான். மெளனம் தோய்ந்திருந்தது. வீடு மிகமிக அமைதியாக இருந்தது. இவனுடன் இன்னும் இரண்டு தமிழ் வாலிபர்கள் இந்த வீட்டிலிருக்கிறார்கள். இரண்டு படுக்கையறைகள். ஒரு ஹோல், குசினி, குளிப்பறை, ரொய்லெட் கொண்ட இந்த வீட்டில் இந்த மூவரும் வாழ்கிறார்கள்.
எல்லோரும் அகதிகள். அரசாங்க உதவிப் பணத்தை எடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டுத் தங்கள் சீவியத்துக்கு இரவு பகலாக உழைப்பவர்கள்.
அரவிந்தன் ஒரு கடையில் எடுபிடி. தான் இந்தப் பனியில் வேலைக்கு வரமுடியவில்லை என்று போன் பண்ணியபோது கடைக்கார முதலாளி- ஒரு இந்திய குஜராத்தி- முணுமுணுத்தான். உங்களுக்கெல்லாம் அரசாங்க ஊழியர்கள் என்ற நினைவோ, கண்டபடி லீவு எடுக்கிறீங்கள்? குஜராத்தி ஒரு பிரசங்கம் செய்து முடித்தான்.
தேவாலயத்தில் குண்டுபோட்ட கதையை ஒரு சிநேகிதன் போன் பண்ணிச் சொல்லியிருந்தான். அந்த விளக்கத்தைப் படிக்கப் பத்திரிகை எடுத்துக்கொண்டு வந்தான். தமிழர்களின் இன அழிவு செய்தித் தொகுப்பாக மட்டும் தேங்ந்து போய்க் கொண்டிருக்கிறதா? பத்திரிகை எழுத்துக்கள் இவனுக்குத் தெரிந்தவர்களின் கண்ணிர்த் துளிகளை ஞாபகப்படுத்தின.
அந்த மாஸ்டரின் குடும்பம் எவ்வளவு அருமையான குடும்பம். இவன் யோசித்துக் கொண்டு குசினிக்குப் போனான்.

Page 94
82 அரைகுறை அடிமைகள்
முன் அறையில் இருக்கும் வாலிபன் வழக்கம்போல் குணிந்த தலையுடன் பானும் பருப்பும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனின் பெயர் தர்மலிங்கம். ஒருத்தருடனும் ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ள மாட்டான். அரசாங்கப் பணத்தை எடுத்துக் கொண்டுபோய்ச் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டு வருவான். சமைப்பான், சாப்பிடுவான். நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருப்பான். கதவைத் திறப்பதே அருமை. லண்டனுக்குத் தர்மலிங்கம் எப்போது வந்தான் என்று அரவிந்தனுக்கும் அந்த வீட்டிலிருக்கும் மற்ற வாலிபன் மூர்த்திக்கும் தெரியாது.
அரவிந்தன் லண்டனுக்கு வந்து மூன்று வருடங்’
களாகின்றது. அவன் வரும்போது அந்த வீட்டில் தர்மலிங்கம் குடியிருந்தான். அவனின் தாய் தகப்பன் "ஷெல்" விழுந்து மரணமடைந்து விட்டதாகவும் நெருக்க மான உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை என்றும் மூர்த்தி சொல்லியிருந்தான். ஒரு விதத்தில் தேவசகாயம் குடும்பத்தை விட இவன் விதி பொல்லாதது. தடைப்பிணமாக வாழ்கிறான்.
தர்மலிங்கம் இவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அரவிந்தனைப் பொறுத்தவரையில் தர்மலிங்கம் ஒரு பரிதாபத்துக்குரியவன். மூர்த்தியைப் பொறுத்தவரையில் அவன் ஒரு பைத்தியம். பட்டங்களும் முத்திரை குத்தலும் ஒவ்வொருத்தரின் நோக்கத்தையும் பொறுத்தது. அரவிந்தன் தேனீர் போட்டுக்கொண்டு முன்னால்
உட்கார்ந்தான். யாருடனாவது பேச வேண் டும் போலிருந்தது.
"யாழ்ப்பாணத்தில் குண்டு போடுகினமாம்”
அரவிந்தன் தர்மலிங்கத்தைப் பார்த்துச் சொன்னான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 83
தர்மலிங்கத்தின் உடம்பு பெருத்துப் போய் அளவுக்கு மீறிய வயதைக் காட்டியது. கண்கள் யாரையும் நிமிர்ந்து பார்க்காதவை. உலகத்தில் எனக்குப் பார்க்கத் தேவையாக எதுவுமில்லை என்ற பாவமோ என்னவோ, நேரே பார்க்க மாட்டான். கசங்கிய சேர்ட்டும் சாறமும் போட்டிருந்தான். வாழவேண்டிய வாலிபம் தனிமையில் ஒடுங்கிய பரிதாபம்.
"எனக்குத் தெரிந்த ஒரு குடும்பமும் செத்துப் போயிருக்ரும். தேர்மலிங்கம் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. யாருக்காவது சொல்லியழ வேண்டும் என்ற தவிப்பில் அரவிந்தன் சொன்னான். சிரித்து மகிழ்ந்து இவன் வாழ்வின் இனிய நினைவாக இருந்தவர்கள் இன்று சரித்திரமாகி விட்டார்கள். வெளியில் சரியான பேய்க் காத்தும் பணியும். அதைவிடப் பெரிய சூறாவளி அரவிந்தன் இதயத்தில், தர்மலிங்கம் முகத்தைத் திருப்பி வானம் பிளந்து கொண்டிருக்கும் பணித்துளிகளை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அந்தக் குடும்பத்தில் ஆறு குழந்தைகளும் தாய் தகப்பனும்.” அரவிந்தன் குரல் தழுதழுத்தது. சட்டென்று தேவசகாயத்தாரின் மகன் டானியல் ஞாபகத்திற்கு வந்தான். டானியல் மனித தர்மங்களுக்கு எதிராக நடக்கும் மிருகத்தனத்தை, நரபலிகளை வெறுத்தவன். பாதிரியாகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவன் பரலோகம் போய்விட்டானா? டானியல். அரவிந்தனுடன் படித்தவன். அரசியல் மாற்றங்கள் இருவரையும் பிரித்து விட்டது. மூத்த மகள் இவன் வரும்போது மனம் திறந்து வாழ்த்தினாள். அவள் ஒரு முதுகன்னி. யாழ்ப்பாணத்தில் என்ன இருக்கிறது. மினி பஸ்களும் முதுகன்னிகளும் மூளை குழம்பிய ஒரு சமுதாயமுமா?

Page 95
184 அரைகுறை அடிமைகள்
டானியலுக்கு இளையவள் ஸ்ரெல்லா அவள் கண்கள் இவன் நினனவிற் குத்தின. ஸ்ரெல்லாவும் இறந்து விட்டிருப்பாளா? அரவிந் தன் தர்மலிங்கத்தைப் பார்த்தான். தாய் தகப்பன் ஷெல் விழுந்து இறந்தபின் இவன் உணர்ச்சிகளும் மரத்து விட்டதா? விடுதலை தேடி எழுந்த உணர்வில் நடந்த கொடுமைகளில் மனம் பேதலித்த இளைஞர்கள் எத்தனையோ?
"உனக்கு அக்கா தங்கச்சி யாருமில்லையா?” தர்மலிங்கம் குனிந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அரவிந்தன் கேள்வி கேட்டான். 'தர்மலிங்கம் எழும்பிப் போய்விட்டான். அரவிந்தன் அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நடப்பதைப் பார்த்துப் பழகி, உணர்ச்சி மரத்துவிட்ட தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதியா தர்மலிங்கம்?
தர்மம் சிறைப்பட்டு விட்டதோ? எப்போ விடுதலை?
அரவிந்தன் தன்னை நிராகரித்து விட்டுப் போகும் தர்மலிங்கத்தைப் பார்த்தான். தர்மலிங்கம் இப்போது இலங்கையிலிருந்து வந்த பேப்பரைப் படித்திருப்பானோ? தேவசகாயம் குடும்பம் இவன் நினைவை நெருடினார்கள். ஸ்ரெல்லாவும் இறந்திருப்பாளா? திரும்பத் திரும்ப அந்தக் கேள்வி அரவிந்தனைத் துரத்தி வந்தது.
87-ஆம் ஆண்டு இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தைத் துவம்சம் செய்தபோது தப்பிய குடும்பங்களில் அரவிந்தன் குடும்பமும், தேவசகாயம் குடும்பமும் சிலவாகும். பழைய நினைவுகளை நினைத்தால் இதயம் எரிகிறது. அரவிந்தன் குளிக்க வெளிக்கிட்டான்.
வெளியில் கொட்டும் பணியை ரசித்துக்கொண்டு ஆவி பறக்கும் சுடுநீரில் அமிழ்ந்து கிடப்பது எத்தனை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 185
ரம்மியமான சுகத்தைத் தருகிறது? மனதில் வெடிக்கும் கொடிய வேதனையைச் சுடுநீர் தவிர்க்குமா?
டெலிபோன் அடித்தது. யாராக இருக்கும்? இன்று எத்தனையோ பேர் வேலைக்குப் போகார். ஆசிரியராக இருக்கக்கூடாது ஆசிரியர் போன்றோருக்கு இப்படியான நிகழ்ச்சிகள் மிகவும் லாபம் தரக்கூடியது. நண்பன் ஒருத்தன்தான் போன் செய்தான்.
"என்னடா மச்சான். இந்த நாய்கள் ஊரில குண்டு போடுறான்களாம்." நண்பன் வினவினான்.
குளிப்பதற்காக பெனியனனக் கழட்டி விட்டதால் நெஞ்சு குளிர்ந்தது.
இவன் மறுமொழி சொல்லவில்லை. அரவிந்தனுக்கும் தேவசகாயம் மாஸ்ரர் குடும்பத்துக்கும் உள்ள நெருக்கம் நண்பனுக்குத் தெரியும். "எங்க குண்டு விழுந்ததெண்டு கேள்விப்பட்டிருப்பாய்” நண்பன் இவன் இதயத்தை ஈட்டியாற் குத்தினான். “ஸ்டெல்லாவும் இறந்து விட்டாளா? இவன் மனம் விட்டு அலறத் துடித்தான்.
ou un 6nuto மாஸ்ரரின் ர குடும்பம்." நண் பன் சொன்னான், இவன் மறுமொழி சொல்லவில்லை.
"அவரின்ர வீடு தரைமட்டமாம். குடம்பக்தில் அத்தனை பேரும்.” நண்பன் விம்மினான். அவனும் ஒரு காலத்தில் மாஸ்டரின் மாணவனாய் இருந்தவன்.
ஏதோ வழியிருந்தபடியாத் தப்பினம். இல்லை யெண்.ா எங்கட கதியும் இப்படித்தானே" நண்பனின் குரலில் கடவுளுக்கு நன்றி. இந்திய ராணுவத்திடம் சூடுவாங்கி முடமாகியவன் அவன்.
அ-12

Page 96
86 அரைகுறை அடிமைகள்
அரவிந்தன் பார்வை கொட்டும் பணியை வெறித்துப் பார்த்தன. ஸ்ரெல்லா தேவலோகத்திலா? கண்ணிர் புரண்டன. வாழவேண்டிய தூய்மைகள் இலங்கை ராணுவத்தின் அழிவுக்குள் துவண்டு மடிகின்றனவே.
*உனக்கு மாஸ்டரின்ர பெட்டை ஒண் டு ல கண்ணெல்லே?" நண்பன் கேட்டான். கேட்கக்கூடிய கேள்வியா இது? அரவிந்தன் பழைய நினைவுகளைப் பணியோடு சேர்த்துப் புதைத்துவிடத் துடித்தான்.
"பின்நேரம் வந்து பாக்குறன் மச்சான். ஐயாம் சொறி.” நண்பன் சொல்ல வந்த எதையோ மென்று விழுங்கிறான். தன் பிரஜைகளைக் குண்டு போட்டு அழிக்கும் அரசாங்கம் இலங்கையை விட வேறெங்கும் இருக்க முடியுமா?
"நான் பேப்பர் ஒவ்வீசுக்கு ஒருக்காப் போகவேணும். பின்நேரம் எட்டு மணிக்கு வீட்ட இருப்பர்ன்."
அரவிந்தன் போ  ைன வைத்தான். 80p. தர்மலிங்கத்தின் அறைக் கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டது.
பத்திரிகை ஆசிரியர் சூட்டும் கோட்டும் போட்டி ருந்தார். எங்கையோ புறப்பட்டுக் கொண்டிருந்தார் போலும். இவர்களெல்லாம் பெரிய மனிதர்கள். இலக்கியம் என்னவென்று தெரியாமல் இலக்கியக் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பவர்கள். இந்தக் கிழமை வெளிவர வேண்டிய பத்திரிகையின் செய்திகளும் படங்களும் மேசை யெங்கும் சிதறிக் கிடந்தன. மிகவும் சுவாரஸ்யமான விடயங்களும் கண்ணைக் கவரும் படங்களும் மேசையை நிரப்பின. இப்போதெல்லாம் வெளிநாடுகளில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடுவது மிகவும் ஆதாயம் தரும் விடயமாகக் கணிக்கப்படுகிறது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 187
இலங்கையிலிருந்து அடிக்கடி சூடான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சித்தாந்த வறட்சியும் தனி நபர் அதிகாரமும் ஒரு பண்பட்ட கலாசாரத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறதே அதிரடிகள், அதிகாரப் போட்டிகளுக்கான விசாரணைகள், மரணங்கள், கப்பம் வாங்கல்கள் எல்லாம் தாராளமாக நடக்கும் நாடு இலங்கையாகத்தான் இருக்கும். இவற்றிலிருந்து ஓடிவந்த நாங்கள் என்னதான் செய்து விட்டோம்? அரவிந்தன் சிந்தித்தபடி நடந்தான்
லண்டனில் தமிழர்களுக்கு ஏற்றதாக எத்தனையோ விளம்பரங்கள் போடலாம். D6 oor Loser, LDGOTLDs ar தேவைகள் என்று தொடங்கி அகாலமரணங்கள் ஒன்றிரண்டு பக்கங்களை நிரப்புகின்றன. நண்டுக்கால், ஊரரிசி, கோழிக்கால், ஆட்டுக்கால், அரிசி மா, ஒடியல் என்பன இன்றும் சில பக்கங்களை நிரப்புகின்றன.
அரவிந்தனின் மனம் எதையோ நினைக்க, கைகள் பத்திரிகைச் செய்திகளைப் புரட்டிக் கொண்டிருந்தன. இந்தப் பத்திரிகை லண்டனில் நிறைய விலைபோகிறது. இந்த ஆசிரியர் சாதாரண காலங்களில் Nobody"யாக இருக்கவேண்டியவர். இப்பொழுது இலங்கையில் அரசியல் நிலைமைகள் அசாதாரணமாகி விட்டபடியால் "Somebody'urr6 aSLLITsi.
அரசியலிற் பிரமுகராகிவிட்ட கர்வம் சூட் பட்டன் களை அமுக்குவதிற் பிரதிபலிக்கிறது. அதிரடிகளும் ஷெல் தாக்குதல்களும் இல்லாவிட்டால் இவர் பத்திரிகை விலை போகாது. இலங்கையில் நிலைமை சாதாரணமாகி விட்டால் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டால் இவர் வியாபாரம் இங்கு நடக்காது
ஆசிரியர் அரவிந்தனை நிமிர்ந்து பார்த்தார். இவன் முகத்தில் ஈயாடவில்லை.

Page 97
188 அரைகுறை அடிமைகள்
"என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்?."
“யாழ்ப்பாணத்தில நிறையக் குண்டு போட்ட வையாம்” இவனின் குரல் தழுதழுத்தது.
இந்திய ராணுவத்தின் ஷெல் அடிக்கு ஒன்றாய் ஓடிய இரண்டு நண்பர்கள் சிதறி அழிய இவன் மயிரிழையில் தப்பியவன்.
இலங்கை ராணுவத்தின் ஷெல் அடியில் இவன் முன் வீட்டிலிருந்த இளம் குழந்தைகளும் தாயும் தசைத் துணுக்குகளாய்த் தகர்ந்து மடிந்ததை இன்னும் பயங்கரக் "கனவுகள் ஞாபகப்படுத்துகின்றன.
இவன் ஏதொ ஒரு நாளும் நடக்காத விட்யமாகக் குண்டு போட்ட கதையைச் சொல்வதை ஆசிரியர் வியப்புடன் நோக்கினார்.
"யாழ்ப்பாணத்தில அடிக்கடி குண்டு போடுகி *னமாம்” ஆசிரியர் இழுத்துச் சொன்னார். அவர் முகத்தில் எந்தவித சோகமும் இல்லை. அவர் சொந்தக்காரர்களும் தெரிந்தவர்களும் உலகமெல்லாம் ஓடிவிட்டார்கள். தமிழ்ப் பகுதிகளில் ஷெல் அடிக்கு அழிபவர்கள் அதிகமாக ஏழைகளும் முதியவர்களும் தானே!
"எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம்.” அரவிந்தன் வெட்கத்தைவிட்டு விம்மினான். இவனுக்குத் தெரிந்த வர்கள் என்று இவன் குறிப்படுபவர்கள் இப்போது புதைக்கப்பட்ட அல்லது சிதறிக் கிடக்கும் சரித்திரமாகி விட்டிருப்பார்கள். தமிழரின் இன்றைய அழுகையை நாளைய லாபமாக்கும் வியாபாரிகளில் ஒருத்தனாகிய இந்த ஆசிரியருக்கு இதிலென்ன அக்கறை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 89
அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். கண்களில் @@。 பளபளப்பு. முகத்தில் ஒரு ஆர்வம். சோழியன் குடுமி கம்மா ஆடுமா? எதையோ சுரண்டுவதற்கான ஏற்பாடா?
"உனக்குத் தெரிந்த குடும்பம் என்றா சொன்னாய்?”
T
ஆசிரியரின் குரலில் இனம் தெரியாத ஆவலை அரவிந்தன் கவனிக்கவில்லை. இவன் ஓம் என்று தலையாட்டினான்.
"அந்தக் குடும்பத்தில் உனக்கு நெருக்கமான யாருமுண்டா?” ஆசிரியர் தெளிவான குரலில் கேட்டார். இவன் ஆசிரியரின் கேள்வி விளங்காமல் யோசித்தான்.
*சிநேகித சிநேகிதி." ஆசிரியரின் முகத்தில் நெNந்த சிரிப்பை இவன் அவ்வளவாக விரும்பவில்லை.
"மாஸ்ரரின் மகன் டானியல் என்ர சினேகிதன்." அரவிந்தன் மென்று விழுங்கினான். அதற்கப்பால் எதுவும் விளக்கமாகச் சொல்லுமளவுக்கு உறவு வளரவில்லையே.
*சிநேகிதனுக்குத் துக்கப்படுபவர்கள் கண்ணீர் விட மாட்டார்கள்” ஆசிரியர் தான் ஏதோ தத்துவத்தைச் சொன்னது போல் முகத்தைக் கர்வமாக வைத்துக் கொண்டார்.
ஸ்ரெல்லா போன்ற பெண்கள் வாழவேண்டும்* இவன் இமயமலை ஏறிநின்று கதறவேண்டும் போற் துடித்தான்.
"அரபாத்தும் இஸ்ரேலியனும், ஐரிஸ்காரனும் ஆங்கில அரசாங்கமும், பொஸ்னியனும் சேர்பியனும் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க - மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒருத்தருடன் ஒருத்தர் பேசுகிறார்கள். ஏன் இலங்கையில் அப்படி ஒரும்ாற்றமும் வரக்கூடாது? ஏன் அரசியல்வாதிகள் பேசப் பழகக்கூடாது."

Page 98
90 அரைகுறை அடிமைகள்
அரவிந்தன் தான் கேட்பது குழந்தைத் தனமோ என்று கூட யோசித்தான். ஸ்ரெல்லா போன்ற பெண்கள் அழியத்தான் வேண்டுமா? ஆசிரியரின் கவனம் இவன் முகத்தில். இவனுடைய கேள்விக்கு மறுமொழி சொல்ல முடியாத பெரிய மனிதர் அவர்
"மாஸ்ரரின்ர பெட்டையின்ர படம் உன்னிடம் இருக்கா?
இவன் திடுக்கிட்டுப் பார்த்தான். இலங்கைப் பிரச்சினையில் சுகமாக- மரியாதையாக வாழ்பவர்கள் இந்த ஆசிரியர் போன்றவர்கள்.
‘காதலி செத்திருக்காவிட்டால் இப்படிக் கண்ணிர் வடிக்க மாட்டாயே. நல்ல தலையங்கம்.
"புகைப்படக் கலைஞரின் காதலி குண்டடிபட்டு மரணம்’-எப்படி இருக்கிறது. ஆசிரியர்தன் மேதாவித் தனத்தில் தானே பெருமை கொண்டு சிரித்தார். இவள் திடுக்கிட்டாள். புனித உயிரின் மறவை எப்படி யெல்லாம் பாவிக்கிறார்கள். ܀-
"புகைப்படம் இருந்தால் அட்டைப் படம் போடலாம்.” ஆசிரியர் எழுந்தார். அரவிந்தன் சிலையாக இருந்தான்.

நேற்றைய நண்பன்
துரத்தில் கடலிரைய, பக்கத்தில் மகன் குறட்டை விடப் பார்த்தீபன் தூங்காமலிருக்கிறான். அடுத்த அறையில் அவன் தாயின் மெல்லிய முனகல் அடிக்கடி கேட்கிறது. அவளுடன் இன்னும் சில வயது போன பேண்கள் அந்த அறையிலிருக்கிறார்கள். தூங்க மாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும்,
பார்த்தீபனின் மனைவி துளசியின் கைகள் அவன் மார்பு மேல் துவண்டு கிடக்கிறது. துளசிக்கு எத்தனையோ நாட்களாக நித்திரையில்லை. இப்போது தான் கொஞ்சம் கண் மூடியிருக்கிறாள். துளசிக்குத்தான் எவ்வளவு துக்கங்கள்? பார்த்தீபனை பற்றிய துக்கம், வயோதிகத் தாயைப் பற்றிய துக்கம், "பாவம் துளசி" அவன் குறட்டை விடும் மகனைக் குழப்பாமல் மெல்லமாக மனைவியின் பக்கம் திரும்புகிறான். அவளை ஆசை தீரப்பார்த்துப் பேசி எத்தனையோ காலமாகிவிட்டது. அசாதாரணங்களோடு ஒடும் வாழ்க்கையிது இருளில் அவளைப் பார்க்க முடியவில்லை. அவளின் மெல்லிய மூச்சு அவனோடு இணைகிறது.
என்னைச் செய்து என்ன சுகம் கண்டாள்? அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டு மனைவியைத் தடவி விடுகிறான். அவள் ஏழுமாதக் கர்ப்பிணி. தாயில்லாதவள்

Page 99
192 அரைகுறை அடிமைகள்
அவனுக்கும் அவளுக்கும் பொதுவாக உள்ள தாய்மை அடுத்த அறையில் உயிருக்கு போராடுகிறது.
அம்மா இறந்துவிட்டால் துளசி துடித்துப் போவாள்.
அவன் இருட்டில் தன் பார்வையை ஒட்டுகிறான். வெளியில் நல்ல நிலவு. சாதாரண நாட்களென்றால் ஜன்னலைச் சாடையாகத் திறந்து வைத்து விட்டுத்தான் நித்திரை செய்வான்.
இப்போது ஆவணி மாதம்-இன்னும் பழுக்கமாக இருக்கிறது. துளசி நித்திரையில் இவனையிறுகப் பிடித்தாள். ஏதோ பயங்கரக் கனவு போலும். அவளை அன்புடன் அனைத்துக் கொண்டான் இவன். தூரத்தில் எங்கேயோ தாய் குலைத்தது.
பார்த்தீபன் வயிற்றில் வண்ணத்திப் பூச்சி ஓடியது. பார்த்தீபன் கவனமாகக் கேட்டான். எந்தப் பக்கத்தி லிருந்து நாய் குலைக்கிறது? பக்கத்து அறை கிழவி ஒன்று கடவுளை கூப்பிடுவது கேட்டது. அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது. நாய் குலைத்தால் பயம்.
எமதூதர்கள் போல் ஊரைநோக்கி unt Gunt வருகிறார்கள் என்ற பயம், ஊருக்கு அப்பால் சுடலை நரிகள் சிலவேளை ஊளையிடும். ஊளையிட்டால் ஊரில் சாவு வரும் என்பது ஊராரின் நம்பிக்கை. இப்போதெல் லாம் நரிகள் ஊளையிடுவதில்லை. நாய்கள் குலைத்தால் ஊரார் நடுங்குவார்கள். ஊரை நோக்கித் துப்பாக்கி தூக்கிகள் வருகிறார்கள் என்று அதன் பல நாய்கள் குலைத்தன. துளசி திடுக்கிட்டு எழும்பி விட்டாள்.
கணவனின் மார்பில் துவண்ட கை அவன் முகத்தைத் தடவுகிறது. நீங்கள் பின்னேரமே போயிருக்க வேணும்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 93
அவள் விரும்புகிறாள் அவன் மறுமொழி சொல்லாமல் அவளையணைத்துக் கொள்கிறான். அவன் ஊருக்கு வரப் பயந்து இவ்வளவு நாளும் கொழும்பில் நின்றான். கொழும்பில்தான் அவனுக்கு வேலை என்பது மட்டும் காரணமில்லை. காரணம் அவன் ஊருக்கு வந்தால், அவன் உயிருக்கு ஆபத்து என்பது கேள்வியில்லை. உயிரை பறிக்க எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பார்த்தீபன் விம்மும் துளசியின் கண்களில் முத்தமிட்டான். அவள் ஒயவில்லை. முத்தமிட்ட அவன் உதட்டில் அவள் கண்ணிர் உப்புக்கரித்தது. f
"அம்மாவுக்கு சுகமில்லை."
அவள் முடிக்கவில்லை, மிகுதியான அவள் வார்த்தை களை அவன் கேட்க விரும்பவில்லை. அம்மா சாவப் போவதை இவள் தடுக்க முடியுமா? தூரத்தில் பல நாய்கள் ஓலமிட்டன, துளசி பதறுகிறாள்.
"இப்போதாவது எங்கேயாவது ஓடிப் போங்களேன்* அவள் தன் முகத்தை அவன் மார்பில் போட்டிருந்தாள். இறந்து கொண்டிருக்கும் தாயைப் பார்க்க அவன் வந்தான். இப்போது எங்கே போவதாம்? அவன் பெரு மூச்சு விட்டுக் கொள்வதை தவிர வேறொன்றும் சொல்லவில்லை.
அவன் பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஒடியாடி விளை யாடிப் படித்த இந்த ஊரை விட்டு எங்கே போவதாம்? அதுவும் இந்த நேரத்தில்?
இறந்து கொண்டிருக்கும் தாயைப் பார்க்கப் பார்த்தீபன் நேற்றுத்தான் வந்தான். ஊரில் அவனைத் துப்பாக்கி தூக்கிகள் தேடுகிறார்கள் என்று அவனுக்குத் தெரியும். அதற்காக அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவ

Page 100
194 அரைகுறை அடிமைகள்
தில்லை. ஏன் இவனைத் தேடுகிறார்கள் என்பது முக்கிய மில்லை. அவர்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை, தேடு கிறார்கள். துளசி எப்போதாவது இருந்து மகனையும் தூக்கிக் கொண்டு கொழும்புக்கு வருவான். மகனுக்கு ஐந்து வயது. இப்போது துளசிக்கு இன்னும்மொரு குழந்தை வயிற்றில் வளர்கிறது.
என்ர பேரப் பெட்டையைப் பார்க்காமல் சாகப் போறேனோ”
கிழவி தன் வருத்தம் கடுமையானபோது மருமகள் துளசியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்.
பக்கத்து அறையில் தாயின் முனகல், அவளால் இப்போது நடக்கவும் முடியாது. தன்னைப் பார்க்க இவன் "வந்தது அவளுக்குப் பயம், இவனுக்கு என்ன நடக்குமோ என்ற தவிப்பு.
"மகனே" அவள் குரல் தொய்ந்து போய் கேட்டது.
இவன் எமும்பித் தாயிடம் போகிறான். துளசி கண்களைத் துடைத்துக் கொண்டு கணவனைப் பின் தொடர நாய்களின் சத்தத்தில் மகன் விக்கிரமனும் விழித்துக் கொண்டான். い
தலைமாட்டில் குத்து விளக்கெரிய, தாய் மரணத்தை எதிர்பார்த்துப் படுத்திருந்தாள். அவள் வயது வந்த கிழவி வாழ்க்கையின் முடிவை எதிர்பார்க்கிறாள்.
ஒன்றிரண்டு கிழவிகள் தூங்காமல் விழித்துக் கொண் டிருந்த களைப்பில் சுவரில் சாய்ந்து சோர்ந்து போய்த் தெரிந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 195
"மகனே" சுருங்கிய கண்களில் ஆறு பெருகிக் கொண்டிருந்தது. "போய் விடய்யா. Guri GG” கிழவியின் குரல் குலுங்கியது, தாயின் இறுதி நேரத்தில் அவளுடன் இருக்க வந்தவனை அவள் போகச் சொல்லிக் கேட்கிறாள்.
பார்த்தீபன் மறுமொழி சொல்லவில்லை. இந்த தடுச்சாமத்தில் எந்த மூலையில் எந்தத் துப்பாக்கி தூக்கிகள் இவன் வெளிப்பாட்டுக்குக் காத்திருக்கிறார்கள் என்று இவனுக்கு தெரியாது. இவன் வெளிக்கிட்டுப் போய்த் தப்பித்துக் கொள்வான் என்று நிச்சயமில்லை.
"அம்மா பயப்பிட வேணாம்? நான் யாருக்கு என்ன செய்தன்?" பார்த்தீபன் அம்மாவுக்குச் சொல்கிறானா? அல்லது தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறானா?
"மகனே எங்கெண்டான உன்ர சினேகிதர்களிட்ட ஒடிப்போ" கிழவி வார்த்தைகளை தடவி எடுத்து தாங்காத வேதனையுடன் கொட்டுகிறாள்.
சினேகிதர்கள்? அவனுக்கு இப்போது யார் சினேகிதர்கள்? பார்த்தீபன் அவன் சினேகிதர்களைக் கண்டு எத்தனையோ காலமாகிவிட்டது. சில வருடங் களாகவுமிருக்கலாம். எத்தனையோ சினேகிதர்கள் சிங்கள ராணுவத்தால் சித்திரவதை செய்து கொலை செய்யப் பட்டு விட்டார்கள்.
பல சினேகிதர்கள் இயக்கங்களிற் சேர்ந்து அழிந்து அல்லது அழிக்கப்பட்டு விட்டார்கள். உயிரோடு யார் இருக்கிறார்கள்? எங்கிருக்கிறார்கள் என்றெல்லாம் அவனுக்கு இப்போது விளக்கமாகச் சொல்ல முடியாது.
அவன் ஊரை விட்டுப் போய்ப் பல வருடங்களாகி விட்டன. ஒரு காலத்தில் சிங்கள ராணுவத்துக்குப் பயந்து

Page 101
196 அரைகுறை அடிமைகள்
ஊருக்கு வராமலிருந்தவன் இப்போது இயக்கங்களுக்குப் பயந்து அரசியலறிவற்ற துப்பாக்கி தூக்கிக் கொலை காரர்களுக்குப் பயந்து வராமலிருக்கின்றான். ஏன்? என்ன குற்றம் செய்தேன்? அவன் தன்னைக் கேட்பான்.
அவன் இயக்கத்தையும் சேராமல் துப்பாக்கி
தூக்காமல் இருப்பதுதான் குற்றம் என்று தெரிந்து கொண்டான்.
மனத்தில் குமையும் துயர்களைச் சொல்லியழச் சினேகிதர்களும்?ஊரிலில்லை. ஒன்றிரண்டு சினேகிதர்களை அவனால் மறக்க முடியாது? அவனின் உயிர்ச் சினேகிதன் கிருஷ்ணனைக் கண்டு எத்தனையோ வருடங்களாகின்றது. என்ன நடந்திருக்கும்? எங்கே போயிருப்பான்?
இன்னும் உயிரோடு இருக்கிறானா? யாரையும் பற்றி யாரிடமும் கேட்க முடியாத பயத்தில் அவன் தெரிந்து கொள்ளாத விடயமது, ஒரு காலத்தில் அதோயிருக்கிறதே விளைந்த தென்னை மரம் அதிலிருந்து கொண்டு எத்தனை கதை பேசியிருப்பார்கள்? இலன் பார்த்தீபன் துளசியைப் பற்றிப் பேசும்போது கிருஷ்ணன் கூர்மையாக இவனைப் பார்த்தான்.
பார்த்தீபன் வீட்டுக்கு ஒரு செல்லப்பிள்ளை. கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவன், படித்தவன். காதலிக்கத் துணிந்தவன். கிருஷ்ணன் வீட்டுக்கு மூத்த பிள்ளை, மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் வயது வளர வளர குடும்பச் சுமையும் அவன் மனத்தில் வளர்ந்தது.
அவனால் பார்த்தீபன் வாழும் வாழ்க்கையை நினைக்க முடியாது. கிருஷ்ணன் சமுதாயம் திருந்த வேண்டும், சீதனங்கள் ஒழிய வேண்டும், பெண்கள் விடுதலையடைய வேண்டும் என்றெல்லாம் சொல்வான். தமயனாகத் தான் படும் கஷ்டம் அவன் குரலில் ஒலிக்கும்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 197
வாழ்க்கையில் ஒரு விரக்தி. அவசரமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற வெறி
"உலகத்தை ஒரு நாளில் மாற்ற முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும்" பார்த்தீபனுக்கு வாழ்க்கையில் பெரிய மதிப்பு, வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து கிடக்கும் உணர்வுகள், கலாச்சாரங்கள் எல்லாவற்றையும் ஒரேயடியாக அழித்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வர அவன் பாடுபட்டான்.
"அழிவில்தான் ஆக்கமுண்டு ஒரு புதிய சமுதாயப் படைப்புக்கு எத்தனையோ இழப்புகள் தேவை" கிருஷ்ணன் பகவத்கீதை சொல்ல பார்த்தீபன் கேட்டுக் கொண்டிருந்தான்.
பார்த்தீபன் துளசியைக் கண்ட காலத்தில், காதல் வந்த காலத்தில் தன் உணர்வுகளைக் கொட்டிப் பகிரக் கிருஷ்ணனை நாடியபோது கிருஷ்ணன் தூரத்து வான் முகட்டில் பார்வை பதிய முகம் கொடுக்காமல் எதையோ யோசித்து இவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பான்.
"கிருஷ்ணா உனக்கும் ஒரு துளசி வருவாள்" பார்த்தீபன் கிருஷ்ணனின் விரக்தியைப் போக்க ஏதோ விளையாட்டாக சொல்வான்.
"வசதி படைத்தவனுக்கு வாழ்க்கை ஒரு பூங்காவனம். வசதி கெட்டவனுக்கு வாழ்க்கை ஒரு பயங்கரக் கறை" கிருஷ்ணன் முணுமுணுத்தான்.
"நான் ஒன்றும் வசதிபடைத்த கோடீஸ்வரனில்லை. சாதாரண மனிதன். சாதாரண ஆசைகளுடன் வாழ்கிறேன். அது பிழையா" பார்த்தீபன் கேட்டான்.

Page 102
198 அரைகுறை அடி மைகள்
இவர்கள் கேள்விகள் மறுமொழிகள் இனவாதம் பிடித்த சிங்களக் கொடும் ஆட்சிக்கு முன்னால் அர்த்த மற்றுப்போய்த் "தமிழன்” என்ற வார்த்தையின் மறு அர்த்தம் "மரணம்” என்று மாற்றப்பட்டபோது சிநேகிதர்கள் வேறு திசைகளிற் பிரிந்து விட்டார்கள். தெரிந்த நண்பர்கள் திசை கெட்டுப் போய்விட்டார்கள். ஒரு சில நண்பர்கள் சிங்கள ஆமியால் உயிரற்றும் புதைக்கப்பட்ட பல நண்பர்கள் தமிழ் இயக்கங் களினால் உயிரோடு புதைக்கப்பட்டார்கள் என்று கேட்ட போது எப்போதாவது விடுதலையில் ஊருக்கு வந்து நிற்கும் பார்த்தீபனின் வாய் சும்மா இருக்காது.
"மரணத்தில் வெற்றி பெற்றவர்கள் யார்? துப்பாக்கி தூக்கிகள் சுடு காட்டிலா கொடி கட்டி விடுதலைக் கீதம் பாடப் போகிறார்கள்" என்று கேட்பான். இவன் எந்த இயக்கத்தையும் சாராததால் எல்லா இயக்கத்துக்கும் இவனிற் கோபம். காட்டு மிருகங்கள் வீட்டு மனிதர்களில் கோபப்படுகின்றன என்பதால் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதா?
'ஊருக்கு வரவேண்டாம்" துளசி உத்தரவு போட்டு விட்டு அவனைப் பார்க்க அடிக்கடி அவளால் முடிந்த நேரங்களில் கொழும்பு போவாள்.
இப்போது அவன் தாயின் மரணப் படுக்கையைக் கடைசியாகத் தரிசிக்க வந்திருக்கிறான், தூரத்தில் கேட்ட நாய்களின் குலைப்பு இப்போது அண்மயிைற் கேட்டது.
தாய் தன் நடுங்கும் கரங்களுடன் மகனின் கைகளைப் பற்றினாள். மகன் தகப்பனின் தோளைக் கட்டிக் கொண்டான். துளசி மண்டியிட்டு அலறிக்கொண்டி ருந்தாள். வளைந்து கிடந்த கிழட்டுத் தென்னை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 99
மரத்தைத் தாண்டிப் பாய்ந்து அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
பார்த்தீபன் ஒடியிருக்கலாமா? அவன். உடம்பு தடுங்க வந்தவர்களைப் பார்த்தான். ஒரு காலத்தில் ஒரு சிறு குறுகிய மனிதனாய் விரக்தியின் பிரதிபலிப்பாகத் தெரிந்த கிருஷ்ணன் இன்று கம்பீரமாக அவன் முன்னால் நின்றான். துப்பாக்கி அவன் கையில், அவன் மிகப் பெல மானவன் இருவருக்கும் இடையில் இறப்பும் பிறப்பும். துளசி கிருஷ்ணன் காலில் விழுந்து கதறினாள்.
கிருஷ்ணன் தான் அவர்கள் கல்யாணத்தைச் செய்து வைத்தவன். துளசி தன் வயிற்றைக் காட்டி தாலியைச் காட்டிக் கதறிக்கொண்டேயிருந்தாள்.
நேற்றைய நண்பர்களில் ஒருத்தன் இன்றைய பிணமாய் விழ- வெடித்த குண்டின் ஒலியில் ஊர் அதிர்ந்தது,
தாயகம், 12:3-1993
முற்றும்

Page 103
விற்பனையாகும் இதர நூல்கள் Eocharolės as 6á5ửessir-Olden Poetse= சிறந்த கவிஞர்களும் அவர்தம்
கவிதைகளும் . காளிதாசனின் கவித்திறம் பாரதி ஊட்டிய தேசிய உணர்வும்
வீர உணர்வும் . டாரதி ஊட்டிய பக்தி உணர்வும் காதல்
உணர்வும் பாரதியும் பெண்மையும் P புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாநயம் . காரைக்கால் அம்மையாரின் பாடகளும்
விளக்கமும் . புலவர்கள் வாழ்வில் சுவையான
சம்பவங்கள் பாபநாசம் சிவனின் பாட்டுச்சிறப்பு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டுத் திறன். உடுமலை நாராயண கவி தஞ்சை
ராமையாதாஸ் பாட்டுத் திறன் மருதகாசி கு. மா. பா. பாட்டுத்திறன் ஒரு பாரதி பல பார்வைகள் a இதழியியல் முன்னோடி எங்கள்
பாரதியார் பைந்தமிழ் வளர்த்த பாவலர்.
=9-grálásoá asság5íresár-English Poetsé= உலகப் பெருங்கவிஞர்கள் வாழ்விலே தாகூரின் தன்நிகரில்லாக் கவிதைகள் கீட்ஸ், பைரன், ஷெல்லியின் கவிதைகள் இைக்காலக் கவிஞர்கள்-Contemporary Poets= கண்ணதாசனும் தத்துவப்பாடல்களும் so கண்ணதாசனும் சோகப் பாடல்களும் கண்ணதாசனும் காதல் ரசமும் திரைப் பாடல்களில் வாலியின் திறம்
30-50 13-00
10-00 10-50 14-50
8-00
38-00 6-50
22-50
2-50 10- S0 5 )0
7-00 36-00
0-00له I-00 22-00
22-00 16-00 23-00
8-75


Page 104


Page 105
வித்தியாசம
வித்தியாசம
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் பிறந்து லண்டனில் குடியேறி அ வரும் சமூக நல சேவகி.
உடல் நல மேம்பாட்டு ஆலோ பணி புரிகிறார்.
மனித இன வரலாற்று ஆரா. (மருத்துவப் பிரிவு) யில் எட பெற்றவர். கல்வி, சமூகத்துறை அ மேம்பாட்டுக்கான விசேஷ திரைப்ட தயாரிப்பில் பட்டம் பெற்றவர்.
பூரீலங்காவில் கோளாவில் என்னு திருமதி மாரிமுத்து, தந்தை திரு ( லண்டனில் குடியேறியவர் ஏராளமr
தமிழ் அகதிகளின் வீட்டு வசதி தமிழில் சிறுகதைகளும், நாவல்களு ஆறு நாவல்களும், எழுபது சிறுக.ை இந்தியா, பூரீலங்கா, கனடா, பி நார்வே, நெதர்லாண்ட், இங்கிலாந்து இவரது கதைகளைப் பிரசுரித்துள்ள தமிழில் வெளியான புதினங்கள் " ஒரு கோடை விடுமுறை தில்லையாற்றங் கரையில் (1987 (1993 - இந்தியா). (லண்டன் உலகமெல்லாம் வியாபாரிக என்றொரு பெண் (1996 - இந்தி வீடியோப் படங்கள். பூரீலங்கா அகதி ஃப்ரம் ஜெனோஸைட் (79. (கல்யாணத்தில் கற்பழிப்பு பற்றிய
பெண் உரிமை, வரதட்சினை ஒ ஈடுபாடுடையவர் திருமதி. ராஜேஸ்
I , s , , , ,

ான எழுத்தாளர்
பூரீலங்காவில் ங்கே வசித்து
கராக அங்கு
பச்சித் துறை 5.ஏ. பட்டம் ஆகியவற்றின் டம், வீடியோ
ம் கிராமத்தில் பிறந்தவர். (தாயார் தழந்தைவேலு) கணவருடன் 1970ல் ான கல்வித் தகுதிகளைப் பெற்றவர். அமைப்பின் தலைவியாக இருந்தவர். ம் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தகளும் படைத்துள்ளார். ரொன்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளின் இலக்கிய ஏடுகள்
60T,
(1982ல் பூரீலங்காவில் பிரசுரம்). இந்தியா) தேம்ஸ் நதிக்கரையில் ர் முரசில் தொடராக வந்தது). ர் (1991 - இந்தியா) அம்மா யா) தயாரித்த திரைப்படம் மற்றும் களின் குடியேற்றம் பற்றிய எஸ்கேப் 36), த பிரைவேட் பிளே ஸ் து) (1988) மிப்பு ஆகிய சீர்திருத்தங்களில் தீவிர
- ஆசிரியர் குழு, மணிமேகலைப் பிரசுரம்,
is . . . . . . . . . . . .
5cmgöcm34、○:8224803