கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அவனும் சில வருடங்களும்

Page 1


Page 2


Page 3

அவனும் சில வருடங்களும்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
குமரன் பப்பிளிஷர்ஸ்
3, மெய்கை விநாயகர் தெரு வழி: குமரன் காலனி, 7வது தெரு வடபழனி : சென்னை - 600 026

Page 4
' Ꮆ)
விலை ரூபா. 64/-
TITLE SUBJECT AUTHOR NO. OF PAGES TYPE
SIZE
PAPER BINDING
PRICE PUBLISHERS
SALES ALSO AT
LASERSET
முதல் பதிப்பு : ஜூலை, 2000
AWANUM SILA WARUDANGALUM A SOCJAL. NOWE RAJESWARI BALASUBRAMANAM 26O
10 point
125 X 18 cm
1 1.6 kg Creamwove
ART BOARD
RS. 64
KUMARAN PUBLISHERS 3, MEIGAI VINAYAGAR STREET, VADAPALANI, CHENNA 6OO 026. PAARI NILAYAM 184, BROADWAY, CHENNA-108
NAM PROCESS CHENNA 6OO O 8
PHONE: 433 18 O8

1.O.
ஆசிரியரின் பிற நூல்கள்
நாவல்கள்
தேம்ஸ் நதிக் கரையில் ஒரு கோடை விடுமுறை பனி பெய்யும் இரவுகள் தில்லையாற்றங்கரையில் வசந்தம் வந்து போய் விட்டது
சிறுகதைகள்
உலகமெல்லாம் வியாபாரிகள் நாளைக்கு இன்னொருவன் S94 foLDT என்றொரு பெண் ஏக்கம்
அரைகுறை அடிமைகள்

Page 5
குறிப்பிட்ட வருடத்திய சினிமா மாணவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களையும், பிரச்சனைகளையும், திரைப்படக் கல் லூரியோடு சம்பந்தப்பட்ட இன்னோரன்ன நடைமுறைகளை யும், இன்னுமொரு காதல் கதை மூலமே ஆசிரியர் சொல்ல முற்பட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
‘பைசிக்கிள் தீவ்ஸ்’, ‘சிற்றிசன் கேன்’ போன்ற சாகாவரம் பெற்ற சினிமாக்களைப் பற்றியும், உலகளவில் மரியாதை பண்ணப்படும் இயக்குநர்கள் பற்றியும் பயின்றபடியே, இந்த இன்ஸ்டிட்டியூட் மாணவர்கள் காதல் வயப்படுகின்றனர்.
ஆசிரியர் ராஜேஸ்வரி கூட இதே லண்டன் திரைப்படக் கல்லூரி மாணவியாய் இருந்தவர் என்பதால், திரைப்படக் கல்லூரிகளின் அறியப்படாத பல அபூர்வ தனித்துவங்கள் பல இந்த நாவலில் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் நீண்ட காலம் வாழ நேரும் தமிழர்கள், ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் பழகிக் கொள்வதால் இவர்கள் தமிழில் எழுத உட்காரும் பொழுது, ஆங்கிலம் மூலமாகவே தமிழை அணுக முடிகிறது. இந்த விதேசி வாடை வீசும் தமிழ்தான் ராஜேஸ்வரிக்கும் நிகழ்ந்தி ருக்கிறது.
காதல் கதை என்பதால், இதன் சுருக்கத்தை இங்கு சொல்லி வாசகரின் வாசிப்பு சுவாரஸ்யத்தை நான் குறைக்க விரும்பவில்லை. கதையைப் படித்து முடிந்ததும், ஒருவேளை ராஜேஸ்வரி இதைப் பிறிதொரு சமயத்தில் ஒரு சினிமாவாக - தமிழ் சினிமாவாக எடுக்கும் உத்தேசத்துடன்தான் எழுதி னாரோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. நிறையப் பரபரப்பு. நிறையத் திருப்பங்கள். நிறைய அதீத உணர்வு வெளிப்பாடுகள்.
நானும் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாய் இருந்த வன் என்ற வகையில், இந்த நாவலின் இயங்கு தளத்துடன் என்னால் இலகுவாக ஐக்கியப்பட முடிந்தது.
வாழ்த்துக்களுடன்,
beఒ4 tyr(ہملU

என்னுரை
ங்கிலேய திரைப்பட உலகம் மிகவும் பழமை வாய்ந் தது, சரித்திர பூர்வமானது. நீண்ட காலமாக ஆங்கிலேயர் மட்டும்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களாக இருந்தனர். 1980ம் ஆண்டுகளில் கறுப்பு மாணவர்களுக்கும், தயாரிப்பாளர் களுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கறுப்புத் திரைப்படத் தயாரிப்பாளர்களாலும் ஆங்கிலேய முற்போக்கு வாதிகளாலும் முன்வைக்கப்பட்டது.
இந்தக் கதையின் கதாநாயகன் ராகவன் ஒரு தமிழ் அகதி. சாதாரண - சுமாராகப் படித்த குடும்பத்திலிருந்து திரைப்படப் பட்டதாரியாகும் ஆசையில் கல்லூரிக்குப் போகிறான். அங்கு அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ஒரு நாவலாக உருவாகியி ருக்கிறது. -
இலட்சியத்துடன் வருபவர்கள், இலட்சியமற்று வருபவர் கள், என்னவென்று தெரியாமல் வருபவர்கள் என்று எத்தனை யோவிதமான மாணவர்கள் திரைப்படக் கல்லூரிக்கு வருவார் கள். அவர்களின் வாழ்க்கையின் பின்னணியும், அரசியல் முதிர்ச்சிகள், சுற்றாடல் சூழ்நிலையில் உள்ள அக்கறை என் பன அவர்களின் படிப்பில் பிரதிபலிக்கும்.
நாவலில் வரும் ராகவன் இலங்கைத் தமிழ் அகதி: அரசியற் கொடுமைகளால் மிக மிக நொந்து பூோனவன். கல்லூரியில் டெவீனா ஸேர்விங் என்ற ஆங்கில மாணவியின் தொடர்பு கிடைக்கிறது. கிழக்குத் தேசத்துத் தத்துவங்களும் எதிர்பார்ப்புகளும் மேற்கு நாட்டாரின் சபலங்களும் குழப்ப மும் ஒன்றோடு ஒன்று மோதுவது இவர்களின் உறவில் வெளிப்படுகிறது. காடுகள் அழிவதற்கும் பறவைகள் இறப்ப தற்கும் பரிதாபப்படும் ஆங்கிலேய இளம் தலைமுறைக்குக் கறுப்பரின் பிரச்சினைகளை நேரே பார்க்கும் சந்தர்ப்பம்

Page 6
கிடைக்கிறது. இந்த நாவலில் 'எய்ட்ஸ் நோய் பற்றிய ஒரு கண்ணோட்டமும் இருக்கிறது. டெவீனா இயற்கையை ரசிக் கும் ஒரு சுதந்திரப் பேர்வழி. அவளின் மத்திய தர வாழ்க்கை முறை அப்படி; ஆனால் அவளில் அன்பு கொள்ளும் ராகவ னின் உணர்வுகள் மிகவும் ஆழமானவை. எப்படித்தான் ஆழ மான அன்பு இருந்தாலும் டெவீனா தன்னை ஒரு நீண்ட கால உறவுக்குள் சிறைப்படுத்திக் கொள்ளப் போவதில்லை என்று விலகியதும் ராகவன் துடித்துப் போகிறான்.
இது ராகவனின் ஆண்மைக்குச் சவாலாகவுமிருக்கிறது. ராகவனின் உணர்வுகள் அவனின் குடும்பப் பின்னணியில் அமைந்தவை. அம்மாவைத் திருப்திப்படுத்த அவன் வாழ வேண்டியுள்ளது. தங்கை மைதிலி ஒரு முஸ்லிமை விரும்பு வது அம்மாவால் தாங்க முடியாதிருக்கிறது.
இலங்கை அரசியல் மாற்றங்கள், அதன் அழிவுகள் ராகவ னின் குடும்பத்தை மிகவும் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பின் வேதனைகளை மறக்க, டெவீனா தேவைப்படும்போது அவ ளால் இவனின் "தேவைகளுக்குத் தன்னைச் சிறை கொடுக்கத் தயக்கம் வருகிறது.
இவனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா, ராகவ னைப் புரிந்து கொள்கிறாள். யாரையோ ‘கட்டாயம் கல்யா ணம் செய்யத்தான் வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களால் இந்திரா கல்யாணம் செய்கிறாள். இது ஒரு வெறும் காதல் கதையல்ல. இலங்கையரசியலைப் பற்றி, எயிட்ஸ் நோயைப் பற்றி, பெண் ணியவாதம் பற்றி, கறுப்பர் அரசியல் நிலை பற்றி எல்லாம் விவாதம் இருக்கிறது. இதில் வரும் பெரும்பாலானவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள். வாசகர்களும் தெரிந்து கொள்ளட் டும். விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.
லண்டன், 9.6.2000 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 5
அவனும் சில வருடங்களும்
லிப்ட் கதவுகள் மூடப்பட்டுக் கொண்டிருந்த போது அவள் ஓடி வந்து லிப்ட்டில் புகுந்து கொண்ட வேகத்தில் ராகவனில் மோதிக் கொண்டாள். மார்பில் விழுந்த மாலை போல் அவனில் சரிந்து விழுந்தாள்.
செப்டம்பர் 1985
அவனின் ஒவர் கோர்ட் பாக்கட்டில் செருகியிருந்த பேனா வில் அவள் தலைமுடிகள் சிக்கிக் கொண்டதை அவள் அவ னுக்குச் சாரி சொல்லிக் கொண்டு நகர்ந்தபோது தெரிந்தது.
லிப்ட் நிறைந்திருந்தது. அவள் அவனுடன் ஒட்டிக் கொண்டு நிற்க வேண்டிய நிர்ப்பந்தம். ராகவனின் கிட்டத் தட்ட ஆறு அடி உயரத்தில் அவனின் கழுத்தளவு அவள் உயரம். அவள் அவசரப்பட்டு ஓடிவந்ததால் எழுந்த உஷ்ண மான மூச்சுகள் அவன் கழுத்தைத் தழுவின.
அவள் இவனைப் பார்த்து இன்னொருதரம் 'ஸாரி சொன் னாள். அப்படி ஒரு கோடி நில விழிகளை அவன் தனது இருபத்தி ஐந்து வயது அனுபவத்தில் இதுவரை சந்தித்த தில்லை.
அவன் பதிலுக்கு ஒரு புன்சிரிப்பைத் தந்தான். அவன் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறான். லண்டனில் ஒரு திரைப்ப டக் கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதைப் போன வருடம் வரை அவன் கற்பனை செய்யவில்லை.
தாங்க் யு டேவிட்" என்று ராகவனின் மனம் சொல்லிக் கொண்டது. ராகவனின் சினேகிதன் டேவிட் உதவி செய்திருக்

Page 7
அவனும் சில வருடங்களும்
காவிட்டால் அவன் இன்று இங்கு வந்திருக்க முடியாது. அவன் நேரத்தைப் பார்த்தான். காலை ஒன்பது மணி. முதல்நாளே அவன் லேட்டாகப் போக விரும்பாமல் அதிகாலையில் புறப் பட்டான். ஆனாலும் பஸ்ஸில் வந்ததால் காலை நேர ட்ராவிக் பிரச்சினையாகிவிட்டது. லண்டன் ட்ராவிக் என்று பயந்து கார் எடுத்து வராதது பற்றி யோசித்தான். கார் கொண்டு வந்தாலும் பார்க் பண்ண இடம் இருக்குமா? லிப்ட் ஏதோ தளத்தில் நின்றது.
கிட்டத்தட்ட லிப்ட் காலியான மாதிரியானது. அவள் இப்போது கொஞ்சம் நகர்ந்து நின்றாள். ஆனாலும் அவள் அணிந்திருந்த வாசனைத் திரவியம் ராகவனில் படிந்து விட் டாற்போல உணர்வு இனித்தது. பதினான்காம் மாடி வந்த போது அந்த லிப்ட்டில் எஞ்சியிருந்தவர்கள் அவனும் அவளும் தான்.
லிப்ட் கதவு திறந்ததும் அவன் விரைந்தான். அவளும் பின் தொடர்ந்தாள்.
திறந்திருந்த விரிவுரை மண்டபத்தில் ஏற்கனவே வந்தி ருந்த மாணவர்களின் பார்வையும் அவர்களுடன் அமர்ந்திருந்த அதிபர் மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைனின் பார்வையும் இவர் களை மொய்த்தன. புதிய உலகம், புதிய எதிர்காலம் அவ்வி டம் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் வரப் போகும் மூன்று வருட காலத்தில் அவனின் சக மாணவர்கள் “வெல்கம் ராகவன், வெல்கம் டெவீனா’, மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைனின் குரலில் கனிவு கலந்திருந்தது.
இந்தக் கல்லூரிக்குக் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள் டேவிட் ராகவனைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான்.
அன்றைக்கே ஜான் பேர்ன்ஸ்ரைனை ராகவனுக்குப் பிடித்து விட்டது. நன்றியுடன் உட்கார்ந்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 7
திரைப்படக் கல்லூரியின் இன்ரவியுக்கு வந்திருந்த போது சில இரண்டாம், மூன்றாம், எல்லா வருட மாணவர்களையும் இனி வரப்போகும் சிலரையும் சந்தித்தான். டெவீனாவைக் கண்டில்லை.
முதல் நாளே அவள் தன்னில் மோதிக் கொண்ட விதம் மனதில் பதிந்தது. ஆரம்ப அநுபவங்கள் அடிமனத்தில் பதிந் தது. அதிபர் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர்க ளைப் பார்த்தார்.
டெவீனாவும் ராகவனும் காலியாகக் கிடந்த இரு நாற்கா லிகளில் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள்.
"திட்டமிடாத சந்திப்புக்கள், திட்டமிடாத எதிர்பார்ப்புக் கள், இப்படி எத்தனையோ இன்றிலிருந்து தொடங்கும், இல்லையா'
ராகவன் எதை நினைத்தானோ அதையே அதிபர் சொன் னது நம்ப முடியாமலிருந்தது. அதிபரின் கண்களின் அபார மான கூர்மை ஒவ்வொருத்தரையும் ஊடறுத்தது.
“எனக்கு வயது ஐம்பது. இந்தக் கல்லூரியின் அதிபராகப் பத்து வருடங்களாகக் கடமை செய்கிறேன். இந்த வருடம் தான்."
அதிபர் சொல்வதை ஒரு கணம் நிறுத்திவிட்டு எல்லோரி லும் தன் பார்வையைத் தவழவிட்டார்.
'- •••• இந்த வருடம்தான் ஒரு இன்ரர் நாஷனல் மாணவர் கூட்டத்தைச் சந்திக்கிறேன். பிரான்சைச் சேர்ந்த அலான் பார்டோ, இத்தாலியைச் சேர்ந்த அன்ரனியோ, இலங்கையைச் சேர்ந்த ராகவன், மேற்கு இந்தியத் தீவைச் சேர்ந்த மைக்கல், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ஸ்ரீவன், அயலண்டிலி ருந்து வந்திருக்கும் ப்ராயன் எல்லோரையும் பார்த்துச் சந்தோ சப் படுகிறேன்" அவர் சொல்லும்போது குரலில் மிகவும் சந்தோசம். அவரின் சோழப்பூ நிறத்தாடியைத் தடவிக் கொண்

Page 8
8 அவனும் சில வருடங்களும்
டார். அவர் பெருமிதத்திலும், சினேகிதத்திலும் கண்கள் மின்னியது. M
"மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைன் ஒரு யூதன். ஹிட்லர் செய்த கொடுமைகளிலிருந்து தப்பியோடிய அகதித் தம்பதிகளின் மகனாக ரோம் நகர அகதி முகாம் ஒன்றில் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களில் மிகவும் ஆர்வமுள்ளவர். பெண்கள் விடுதலையில் அக்கறை காட்டுபவர்' டேவிட் சொன்ன வார்த்தைகளை ஒரு தரம் ஞாபகப் படுத்திக் கொண்டான்.
"இன்ரவியுவிக்கு வந்தபோது ஏன் நீங்கள் திரைப்படப் பட்டப்படிப்பு படிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று சொன்னீர் கள். உங்கள் லட்சியங்களை அல்லது உணர்வுகளை உங்களின் சக மாணவர்களின் உணர்வுகளுடன் கலந்து கொண்டால் ஒருத்தரை உணர்ந்து கொள்ள உதவியாக இருக்குமில்லையா?*
அவர் இன்னொருதரம் தன்னுடைய பொன்னிறத் தாடி யைத் தடவிக் கொண்டார்.
"இன்டர்வியுவிக்கு வந்தபோது ஒரு சிலரைச் சந்தித்திருப் பீர்கள். இன்றுதான் இருபத்தி எட்டுப் பேரும் ஒரு இடத்தில் சந்திக்கிறீர்கள். இன்னும் மூன்று வருடம் ஒன்றாக வேலை செய்யப் போகிறீர்கள். ஒருத்தரின் புரடக்ஸனில் இன்னொருத் தர் பங்கெடுக்கப் போகிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் எனது பெஸ்ட் விஷெஸ்’ தனது தலைமையின் கீழ் இந்த இளைஞர் கள் மூன்று வருடத்தைச் செலவழிக்கப் போவதை அவர் தொனி எதிரொலித்தது. சுற்றியிருந்த மாணவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். ஒரு சிலரை ராகவன் சந்திருக்கி றான். இத்தாலியைச் சேர்ந்த அன்ரோனியோவையும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலானையும் இன்டர்வியு நடந்த அன்று சந்தித்திருக்கிறான். எத்தனையருமையான சந்தர்ப்பம் இது. உலகின் பல பாகங்களிலுமிருந்து வந்திருக்கும் மாணவர்களு டன் கலந்து படிப்பது ஒரு வரப்பிரசாதம் என்று நினைத்துக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 9
கொண்டான். "என்ன, யாராவது உங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்குங்கள். கமான் ஜேன்'
அதிபரால் ஜேன் என்று கூப்பிட்ட பெண் தொண்டை யைக் கனைத்துக் கொண்டாள்.
அவள் தலையை "பொப்ட்' செய்திருந்தாள். ஒரு துளி மேக் அப்பும் இல்லாத முகம். ஜீன்சும் ஜம்பரும் போட்டிருந் தாள். முகத்தில் அலாதியான நம்பிக்கை. யாரையும் மிடுக்கா கப் பார்க்கும் பார்வை. அவள் தன்னைச் சுற்றியிருந்த தனது சக மாணவர்களைப் பார்த்தாள்.
"எனது பெயர் ஜேன் டார்வின். எனக்கு வயது இருபத்தி நான்கு. இதுவரைக்கும் ஆபிஸ் உத்தியோகத்திலிருந்தேன். எப்போதும் சினிமாத் துறையில் ஆர்வமிருந்தது. இப்போது தான் எனது ஆசை நிறைவேற இடம் கிடைத்திருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த மூன்று வருடத்தையும் உருப் படியாகப் பயன்படுத்தி நன்மை பெறுவேன் என்று நினைக்கி றேன். ’ எல்லோரும் கொல் என்று சிரித்தனர். ஜேனின் வார்த்தைகள் உண்மையாயிருந்தன.
இப்படியே ஒவ்வொருத்தரும் சொல்லிக் கொண்டேயிருந் தனர்.
"அந்ரோனியோவிடமிருந்து இத்தாலிய திரைப்பட வளர்ச்சி பற்றியும், அவனிடமிருந்து பிரன்ஞ் திரைப்பட உலகத்தில் நடக்கும் மாற்றங்களையும் ராகவனிடமிருந்து இந்தியப்பட உலகத்தையும் பற்றியறிய ஆவற்படுகிறேன்’
மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரன் சொல்லிக் கொண்டு நேரத் தைப் பார்த்தார்.
'இப்போது நேரம் பதினொரு மணி. காப்பி சாப்பிடும் நேரம். ஸ்ருடன்ட்ஸ் கன்டீன் எங்கேயிருக்கும் என்று எல்லோ ருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதேயிடத்தில் பதினொன்று முப்பதுக்குச் சந்திக்கிறேன்’

Page 9
10 அவனும் சில வருடங்களும்
அவர் போய் விட்டார். சட்டென்று கலகலப்புத் தொடங்கியது. ஜேன் தானாக வந்து ராகவனிடம் பேசினார். அவளை அவனுக்குப் பிடித்து விட்டது. கன்டீனுக்குப் போகும் வழியில் 'எனக்கு ஏதோ பயமாக இருக்கிறது" டெவீனா சொன்னார்.
ராகவன் திருப்பிப் பார்த்தான். டெவீனா யாரோடோ பேசிக் கொண்டு வந்தாள். அவளுடன் பேசிக் கொண்டு வந்தவன் பிலிப் ஹமில்டன் என்பவன். இப்போதே ஒரு பட டிஸ்ரிபியுட்டிங் கம்பனியில் வேலை செய்வதாக மாணவர் இன்ரடக்ஷன் போது சொன்னான்.
பிலிப் மெஷினில் கோக் எடுக்கும்போது டெவீனா ராகவன் பக்கம் திரும்பினாள்.
ஒன்றிரண்டு மணித்தியாலங்களுக்கு முன் அவசரத்தில் ஓடிவந்து இவன் மார்பில் மாலையாய் விழுந்த ஞாபகம் வந்தது. அவளின் உயர்ந்த தோற்றம் பொன்னிறத்தலை சட் டென்று நிலைத்து நிற்கும் ஞாபகப் பிரதிகளாயிருந்தன
டெவீனா ஸேர்லிங் (Deveena Shiring) பெரிய இடத்துப் பெண்போல் தோன்றினாள்.
திரைப்பட ஆர்வத்திலிருக்கும் ஜேன் என்ற பெண்ணுக் கும், தான் கடந்த ஐந்து வருடமாக ஒரு புகைப்பட டிவலப் கொம்பனியில் வேலை செய்கிறேன் என்று அறிமுகம் செய்து கொண்ட சில்லியா என்ற பெண்ணுக்கும் டெவீனாவுக்கும் எத்தனையோ வித்தியாசமிருந்தது.
“உங்களுக்கு 'நேர்வசாக இல்லையா' டெவீனா ராகவ னைப் பார்த்துக் கேட்டாள். தனக்கு இருபத்தி இரண்டு வயது என்று அறிமுகம் செய்து கொண்டாள். ஆனாலும் முகத்தில் இன்னும் குழந்தைத் தனமான இனிமை பார்க்க அழகாக இருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 11
ராகவன் ஒரு கணம் மறுமொழி சொல்லாமல் கையில் வைத்திருந்த ஆரேன்ஞ் கிளாசைப் பார்த்தான்.
'இல்லை. எதிர்காலத்தை ஒரு ஷாலன்ஞ் என்று எடுத்துக் கொள்ளப் போகிறேன்’
ராகவன் இப்படிச் சொல்லும்போது அவனின் பார்வை அவளிற் பதிந்திருந்தாலும் ஞாபகம் எங்கேயோ பறந்தோடி யதை அவள் உணர்ந்தான்.
"உங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒரு காலத் தில் படம் எடுப்பீர்களா' டெவீனா சட்டென்று கேட்டாள்.
மாணவர் அறிமுகம் நடந்த போது ராகவன் சொன்னதை அவள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அவன்தான் இலங் கைத் தமிழன் என்றும் தனது இனத்தின் விடுதலை பற்றியும் சொன்னான்.
"எனது இனம் ஒடுக்கப்பட்ட இனமாக வதைபடுகிறது, அந்த இனத்தின் விடுதலைக்கு எனது படிப்பு உதவுமாயிருந் தால் நான் பெருமைப்படுவேன்’ என்று அவன் சொன்னதை அவள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
அவனது கேள்வி, அந்த முக பாவம், அவனில் அவள் வைத்திருந்த விழிகளின் கபடமற்ற தன்மை அந்த நிமிடத்தின் பின் இனி ஒருதரம் அவனால் ரசிக்க முடியாதது என்பதை அவன் அறியான். செப்டம்பர் மாதக் காலையிலும் வெயில் கன்டீன் ஜன்னலால் எட்டிப்பார்த்தது. அவள் கண்களில் பிரதிப லித்த அந்த அழகு அவனுள் புதைந்து விட்டது.
"அட, என்ன புதினமாயிருக்கிறது. எங்கட ஆண்களும் திரைப்படப் பட்டப்படிப்புக்கு வருவார்களா’
ராகவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கையில் ஒரு தோடம்பழத்தை உரித்தபடி ஒரு பெண் - தமிழ்ப் பெண் நின்றிருந்தாள், தமிழில் பேசினாள்.

Page 10
12 அவனும் சில வருடங்களும்
"என்ன அப்படிப் பார்வை? புது மாணவர் பட்டியலில் ராகவன் சிற்றம்பலம் என்ற பெயர் இருந்தது. யார் என்று தேடிக் கொண்டிருந்தேன். எனது பெயர் புவனா நாராய ணன். இரண்டாவது வருட மாணவி. உனது பெயரைப் பார்த்ததும் தமிழாயிருக்கிறதே என்று ஜானைக் கேட்டேன். நீயும் ஒரு இலங்கையன் என்று அவர் சொன்னார்."
ராகவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவள் சொன்ன விதம் மிகவும் வேடிக்கையாயிருந்தது.
“என்ன அப்படிச் சொல்லி விட்டேன்? எங்கள் இலங்கை யர் டாக்டர், எஞ்சினியராகத்தானே படிப்பார்கள்’ புவனாவின் கேள்வி சரியானதுதான்.
"இந்தா, உனக்குத் தோடம்பழம் பிடிக்குமா?’ அவன் ஆமாம். இல்லை. சொல்ல முதல் அவன் கைகளில் தோடம்ப ழச் சுளைகளில் சிலவற்றைத் திணித்தது. அவனது அம்மாலை ஞாபகப்படுத்தியது.
“லன்ஞ் டைம் பார்க்கலாம்’ புவனா மறைந்து விட்டாள்.
இன்றைக்கு நடந்ததெல்லாம் கனவாக இருக்கிறது.
அப்பா இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பாரா? ஜன் னலுக்குள்ளால் வெளியாற்பார்த்தான். செப்ரம்பர் மாதக் குளி ரில் உலகம் கம்பளி கோட்டுக்களுக்குள் மூடிக் கிடந்தது.
பின்னேர சந்தடியில் பஸ் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
வாட்டர்லூ பாலத்தில் பஸ் ஓடிக் கொண்டிருந்தது. பாலத் திற்கு அப்பால் பிரித்தானிய பாராளுமன்றம் பிரமாண்டமாக உயர்ந்து தெரிந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 13
'எட்டு வருடங்களுக்கு முன் லண்டனுக்கு வந்தபோது இன்று இப்படிப் பிரயாணம் செய்வேன் என்று நினைத்திருப் பேனா? படத்துறைப் படிப்புக்குத் தன்னை உற்சாகப்படுத்திய டேவிட்டில் நன்றி பிறந்தது. ராகவன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. அப்பா இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? மற்றவர்கள் போல் வேறு படிப்புக்கள் பற்றிச் சொல்லியிருப்பாரா? புவனா சொன் னதுபோல் எப்படியோ படித்து டொக்டரோ அல்லது எஞ்சினி யராகவோ வரப் பார் என்று புத்தி சொல்லியிருப்பாரா? அம்மாவும் தமக்கை கீதாவும் இவன் திரைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்ததை வியப்புடன் பார்த்தார்கள்.
புவனா வித்தியாசமான தமிழ்ப் பெண். தனது தாய் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு படிக்க வந்ததாகச் சொன்னாள். தந்தையை பற்றி அதிகம் சொல்ல வில்லை. லண்டனிற் பிறந்து வளர்ந்து தமிழ்ப் பெண் வித்தியா சமாக உலகத்தைப் பார்க்கிறாள் எர்ன்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
அப்பா இருந்திருந்தால் அம்மாவிடம் தர்க்கம் பண்ணியி ருக்கலாம். அம்மாவுக்கு இவன் இந்த விசர்த்தனமான படிப் பெல்லாம் படிப்பது விருப்பமில்லை.
திரைப்படப் பட்டப் படிப்பு படிக்கப் போகிறேன்" இவன் சொன்ன போது இவனது மைத்துனன் மகாலிங்கம் கிண்டலாகப் பார்த்தான்.
"என்ன பாலு மகேந்திராவாக வரும் உத்தேசமா?" மகாலிங்கத்துக்கு எவரும் எதையும் கிண்டலாகத்தான் பார்க்க முடியும். தனிப்பட்ட முறையில் மகாலிங்கம் மேற்ப டிப்பு படித்து முன்னுக்கு வராமல் கடை வைத்து வாழ்க்கை நடத்துவதும் ஒரு காரணமாய் இருக்குமா?
ராகவனில் மகாலிங்கம் பெரிதாக ஒரு மதிப்பும் வைக்காத தற்குக் காரணம் ராகவன் குடும்பத்திற்காக ஏதோ குறைந்த

Page 11
14 அவனும் சில வருடங்களும்
சம்பளத்தில் வேலை செய்ததாக இருக்கலாம். ராகவனின் தம்பி கணேஸ் எஞ்சினியராகவும் தங்கை வழக்கறிஞராகவும் படித்து முடித்திருக்கிறார்கள்.
பஸ் வார்டர்லூ பாலத்தின் பக்கத்தைக் கடந்து பி.பி.சி. கட்டிடத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.
"ஒரு காலத்தில் எனது மக்களின் பிரச்சினை பற்றி ஏதும் டொக்குமென்டரி எடுப்பேனா?*
ராகவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இவனது நண்பன் ஆனந்தனும் ராகவன் திரைப்படப் பட்டப்படிப்பும் படிக்கப் போகிறேன் என்று சொன்னபோது ஆச்சரியத்துடன் பார்த்தான். “இனவாதத் திமிர் பிடித்த இங்கிலாந்தில் திரைப்படப் பட்டம் படித்து என்ன பண்ணப் போகிறாய்? சாப்பாட்டுக்கே கஷ்டப் படப்போகிறாய்? சுதந்திரமான தயாரிப்பாளருக்குள்ள கஷ்டங்கள் உனக்குத் தெரியாதா'
ஆனந்தன் ஒரு உண்மையான நண்பன். மகாலிங்கத்தைப் போல் குதர்க்கமாகப் பேசி குத்திப் பேசத் தெரியாதவன்.
நேர்மையான உணர்வுகள் கொண்டவன். ராகவன் இலங் கையை விட்டு ஓடிவந்த காலத்தில் வந்த தமிழ் இளைஞன். அதே போல ஆனந்தனும் ஒரு தமிழ் அகதி. பிறந்த நாட்டு நிலமை பற்றி யோசிப்பவன்.
எப்போது இலங்கைக்குத் திரும்பிப் போவோம் என்று பெருமூச்சு விடுபவன். எப்போது எங்களுக்கு விடிவு வரும் என்று ஓயாது கேட்பவன். தமிழர்களின் விடுதலை எங்கே என்று பெருமூச்சு விடுபவன்.
'டேவிட் உன்னைக் குழப்பி விட்டானா’ ஆனந்தன் ஒரு நாள் கேட்டான்.
'யாரையும் யாரும் குழப்பி விட முடியாது. எனக்கு எப்போதும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருக்கிறது என்று உனக்குத் தெரியும்தானே'

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 15
'புகைப்படத்தில் உள்ள இன்டரெஸ்ட் உருப்படியாக ஏதோ செய்ய உதவுமா"
'ஆனந்தா எது எப்படி நடக்கும், எப்படி எதிர்காலம் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது, என்னால் செய்ய முடியும் என்று நினைப்பது தைரியம் என்றால் செய்ய முடி யுமா என்று நினைப்பது அவநம்பிக்கை. மனிதர்களின் வாழ்க்கை தைரியத்திலும் நம்பிக்கையிலும்தான் உள்ளது.'
ராகவன் சிரித்தபடி சொன்னான். ஆனந்தன் நண்பனை உற்றுப் பார்த்தான். “எனக்கென்னவோ நீ உன் எதிர்காலத்துடன் விளையாடு கிறாய் என்றுதான் நினைக்கிறேன்.'
'ஆனந்தா, இப்படித்தான் வாழவேண்டும் என்று திட்டம் போட்ட எந்த வாழ்க்கையும் வெற்றியடைந்ததாக எனக்குத் தெரியாது. அதற்காக எப்படியும் வாழ்ந்து தொலைக்க வேண் டும் என்ற ஏனோ தானோ மனப்பான்மையும் எனக்கில்லை. வாழ்க்கையில் எனது மனத்திருப்திக்கு ஏற்பட நடந்து கொண் டால் நல்லது என நினைக்கிறேன். காசு எந்த விதத்திலும் உழைத்துத் தொலைக்கலாம். ஆனால் எனக்கு காசு பெரி தில்லை.
கலையாசை, மனித உறவுகளும் மேன்மை தரும் உணர்வு கூட இருக்கிறது. நான் பிறந்த சமுதாயத்தின் வரலாற்றில் ஒரு துளியையாவது எனது கலைப் படைப்புக்களில் பிரதிபலிக்க முடியுமானால் அதே எனக்குத் திருப்தி."
மேற்கண்ட வார்த்தைகளையுதிர்த்த ராகவனை ஆனந்தன் ஆழமாகப் பார்த்தான். வசதியாக வாழ்ந்த தமிழ் மத்தியதரக் குடும்பத்திலிருந்து வந்த ராகவன் அரசியல் ரீதியான பிரச்சி னையால் அகதியாக வந்து லண்டனிற் கண்ட அனுபவங்கள் இப்படிப் பேச வைக்கிறதா? ஆனந்தனின் அனுபவங்களும்

Page 12
அவனும் சில வருடங்களும்
ராகவனின் ஆநுபவங்களும் மிகவும் வித்தியாசமானவை. அன்று அவர்கள் அலெக்ஸாண்ரா பலஸ் என்ற இடத்திலுள்ள பெரிய பார்க்கில் நடந்து கொண்டிருந்தார்கள்.
'நீ எனது முடிவுக்கு ஆதரவு தருவாய் என்று எதிர்பார்த் தேன். நீயே இப்படிச் சொன்னால்."
ஆனந்தனைத் துயரத்துடன் பார்த்தான் ராகவன். ஆனந்தன் லண்டனுக்கு வந்து இரண்டு வருடங்களாகின் றன. கொழும்பில் நடந்த பயங்கர இன வெறியில் சிங்களக் காடையர்களால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களில் ஆனந்தனின் குடும்பமும் ஒன்று. ஆனந்தன் அந்தக் கால கட்டத்தில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் போயிருந்ததால் உயிர் தப்பினான்.
உறவினர்களின் உதவியுடன் லண்டன் வந்திருக்கிறான். விரக்தியும் வேதனையும் நிறைந்தவன் ஆனந்தன். ராகவனின் மனத்தில் ஒடிய நினைவுகளை பஸ் நின்ற போது ஏறிய ஒரு இளம் ஆசியப் பெண் கலைத்தாள்.
"எப்போது இந்திரா லண்டனுக்கு வந்தாள்.' கேள்வி ராகவனின் நாக்கு நுனியில் இடறுபட்டது. பஸ்சில் ஏறிய பெண் இவனைக் கடந்து போய் பின் பக்க இருக்கையில் இருந்து கொண்டாள்.
தான் அனுமானித்தது பிழை என்பது தெரிந்ததும் தனக் குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
'மாமா கடைசிவரையும் இந்திராவைத் தனியாக லண்ட னுக்கு அனுப்பமாட்டார் அவன் தனக்குள் சொல்லிக் கொண் டான்.
அம்மா இவன் வீட்டுக்குள் காலடி வைத்ததும் புருவத் தைச் சுழித்துக் கொண்டாள்.
'ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்கப் போகிறாளா?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 17
அம்மாவின் நெற்றியில் உள்ள சுருக்கங்களைப் போல அவள் கண்களிலும் எப்போதும் கேள்விகள் தொங்கிக் கொண் டிருக்கும்.
வாய்மொழியை அதிகம் பிரயோசனப்படுத்தாமல் அங் கங்களின் மூலம் பேசத் தெரிந்த பெண்களுக்கு அம்மா பேராசிரியையாக இருக்கலாம். ராகவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் அவளின் மூத்த மகன். மூத்த மகளாகக் கீதா இருந்தாலும் ராகவனில் அவனுக்குப் பெரிய அக்கறை. அதற் குக் காரணம் முதல் மகள் கீதாவுக்குப் பின் ஐந்து வருட இடைவெளியில் இரண்டு குழந்தைகள் இறந்து பிறந்தது காரணமாக இருக்கலாம்.
ராகவனை அம்மா கருவிற் தரித்தபோது அவன் அப்பா திருக்கேதீஸ்வரத்தில் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருந் தார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பளிச்சென்று பரந்த பாலாற்றின் கரையில் அன்புக் கணவனோடும் அருமை மகள் கீதாவுடனும் குடித்தனம் நடத்தியபோது தூரத்திற் தெரிந்த திருக்கேதீஸ்வரக் கோபுரத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும் பிடுவாள். அப்போது ராகவனை வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தாள். 'இறைவா என் குழந்தையை உயிருடன் தந்து விடு' அந்தத் தாயின் பிரார்த்தனைக்குக் கடவுள் ஆசி கிடைத்தது போல் அவன் பிறந்தான்.
முதல் இரண்டு வருடமும் எத்தனையோ வருத்தங்களு டன் போராடிய பின் அம்மாவின் வயிற்றில் இன்னொரு குழந்தை வந்ததும் ராகவன் அப்பாவின் செல்லப் பிள்ளையா னான்.
ஆனாலும் அம்மாவின் கவனம் எப்போதும் தன் 'நோஞ் சான் மகனில் தானிருந்தது.

Page 13
1. அவனும் சில வருடங்களும்
"சாப்பிடப் போகிறாயா அல்லது டீ போட்டுத் தரட்டா' எப்போதும் சாப்பாட்டு ஞாபகம்தான் அம்மாவுக்கு!
அவன் மறுமொழி சொல்லவில்லை. கொண்டு வந்திருந்த புஸ்தகங்களை மேசையில் போட்டு விட்டு சோபாவில் தொப் பென்று விழுந்தான். 'என்ன மறுமொழி வராதா’ அம்மா சலிப்புடன் சமயலறைக்குள் போய்விட்டாள். காலையிலி ருந்து இதுவரைக்கும் ஒரேயடியாகப் பெண்களாலேயே சூழப் பட்டது போன்ற உணர்வு.
மாலையாய் வந்து மார்பில் விழுந்த டெவீனா, முன்பின் தெரியாத பெண்ணாக இருந்தாலும் சக மாணவன் என்ற உரிமையில் சகஜமாகப் பழகும் ஜேன், ஏதோ ஒன்றாக வாழ்ந்து பழகியது போல் களங்கமற்றுத் தன்னுடன் பேசிய புவனா, இந்திராவை ஞாபகப் படுத்திய பஸ்சில் கண்ட பெண்கள் எல்லோரும் ஒரேயடியாக அவன் மனத்தில் ஊர்வலம் வந்தார் கள்.
"எப்படிக் கொலிஜ்?"
அவன் தங்கை மைதிலி இப்போதுதான் குளித்துவிட்டுத் தலையில் டவலைச் சுற்றிக் கொண்டு வந்தாள்.
"எப்படிக் கொலிஜ்?' அவன் திருப்பிக் கேட்டான். அவள் பதினெட்டு வயதில் யூனிவசிட்டிக்குப் போனவள். இவன் இருபத்தி ஐந்து வயதில் போயிருக்கிறான். மைதிலியின் முகத்தில் குறும்புச் சிரிப்பு. அவன் தலையில் ஒரு செல்லக் குட்டு ஒன்றைக் கொடுத்து விட்டு அம்மாவைத் தொடர்ந்தான்.
'அம்மா ஒண்டும் செய்யாதேங்கோΦ Χ 38 23 Α பசிக்கல்ல."
"ஸ்ருடன்ஸ் கிளப்பில் ஏதோவெல்லாம் சாப்பிட்டு வயிறு சரியில்ல' அவன் உண்மையைச் சொன்னான்.
அம்மா இன்னொருதரம் இவனைத் தன் பார்வையாற் துளைத்தெடுத்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 19
பேசிக் கொண்டிருக்கும்போது கதவு திறக்கப்பட்டது. தம்பி கணேஸ் வந்து கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து தமக்கை கீதாவும் கணவன் மகாலிங்கமும் அவர்களின் குழந்தை சத்தியாவும் வந்து கொண்டிருந்தார்கள்.
வீடே நிறைந்து விட்டது. அம்மா பரபரப்புடன் ஏதோ வெல்லாம் செய்து கொண்டிருந்தாள்.
‘எப்படி மிஸ்டர் பாலு மகேந்திரா" மகாலிங்கத்தின் குரலில் வழமையான கிண்டல். ராகவன் மறுமொழி சொல்ல வில்லை.
"ஏதும் நடிகைகளைச் சந்திக்கவில்லையா’ மைத்துனரின் கிண்டலைப் பொருட்டுத்தாமல் சத்தியாவைத் தூக்கிக் கொண்டு செல்லம் பண்ணினான் ராகவன்.
'எந்தக் கோடிஸ்வரன் பணம் தருவான், படம் எடுக்க’ மகாலிங்கம் இடைவிடாமல் தொடர்ந்தான்.
'மாமா போன் பண்ணினார்’
அம்மா சட்டென்று ஞாபகம் வந்ததுபோல் சொன்னாள். "உனது படிப்பு விடயம் பற்றி ஆசீர்வாதம் சொன்னார்’ பஸ்சில் கண்ட பெண் இந்திராவை ஞாபகப்படுத்தியது. நினைவில் வந்தது. இந்த நேரத்தில் அதைச் சொன்னால் இந்தக் குடும்பம் அவனைச் சீண்டத் தொடங்கும் என்று தெரியும். மெளனமானான்.
கதவு மணியடித்தது, ஆனந்தன் வந்தான். ராகவன் எதிர் பார்த்ததுதான் ‘எப்படிக் கொலிஜ்?' அவன் அப்படிக் கேட்ட தும் மைதிலி களிர் என்று சிரித்து விட்டாள். கொஞ்ச நேரத் திற்கு முன் அதே கேள்வியை அவள் கேட்டிருந்தாள்.
"கொலிஜ்.? பதினான்கு மாடிக் கட்டிடம். கடைசி மாடியில் எங்கள் டிப்பார்ட்மென்ட் இருக்கிறது. மொட்டை மாடிக்குப் போனால் லண்டனை ஒரு பனாராமிக் வியுவில்

Page 14
O அவனும் சில வருடங்களும்
பார்த்து ரசிக்கலாம். எனது வகுப்பில் நிறைய வெளிநாட்டு மாணவ மாணவிகள் இருக்கிறார்கள். பைத வேய் எங்கள் நாட்டைச் சேர்ந்த புவனா என்ற பெண்ணும் படிக்கிறாள். நாளைக்கு எங்களுக்கு வெல்கம் பார்ட்டி வைக்கிறார்கள். எனது அதிபர் ஒரு யூதன். அடக்கப்பட்ட மக்களில் மிகவும் அநுதாபம் உள்ளவர்; சரி எல்லாக் கேள்விகளுக்கும் மறு மொழி சொல்லி விட்டேனா?"
ராகவன் கேட்டபோது எல்லோரும் சிரித்தார்கள். "ஏதோ கவனமாகப் படித்தாற் சரி’ அம்மாவின் குரலில் பிரார்த்தனை
கலந்திருந்தது.
அடுத்த நாள் கொஞ்சம் நேரம் முந்தியே புறப்பட்டான் ராகவன். வகுப்பில் கடைசியாய்ப் போய்ச் சேர விரும்ப வில்லை.
எலிபன்ட் அன்ட் காஸில் அண்டர் கிரவுண்டில் வந்து இறங்கிறான். காலை நேரத்தில் ஹரிங்கேய் நகரிலிருந்து (Haringey) கொலிஜ"க்கு வர பஸ்ஸை நம்பியிருப்பதில்லை என்று முடிவு செய்திருந்தான்.
லிப்ட்டுக்குள் போனதும் நேற்றைய ஞாபகம் வந்தது. டெவீனா ஸேர்லிங் ஒரு மத்திய தர வகுப்புப் பெண் என்று தெரிந்தது. நேற்று பின்னேரம் ஸ்ருடன்ஸ் கிளப்பில் சந்தித்த போது தான் இந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தது சரிதானோ என்று அவள் சொல்லியது ஞாபகம் வந்தது.
ஏதோ எல்லாம் யோசித்தபடி லெக்ஸர் ஹாலின் ஜன்ன லால் தூரத்தே தெரியும் பார்லிமெண்ட் கட்டிடத்தில் பார்வை யைப் பதித்திருந்தான்.
இன்றும் ஒன்பது மணியாகவில்லை. யாரோ வரும் காலடி கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அதிபராயிருந்தால் அவருடன் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 21.
"குட் மோர்னிங்.." டெவீனாவின் குரலில் உற்சாகம். ராகவன் குட் மோர்னிங் சொன்னான். "நேற்று லேட்டாக வந்த இருவரும் இன்று முந்தி வந்து விட்டோம்" அவள் குரலில் ஒரு குழந்தையின் குதூகலம்.
செப்ரம்பர் மாதக் குளிர் ஊசி முனையாய் உடம்பைத் துளைக்கும்போது அவள் மெல்லிய சேர்ட்டும் ஜீன்சும் போட் டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
“ஸாரி. உங்கள் பெயரை மறந்து விட்டேன்’ தர்ம சங்கடத்துடன் சொன்னான்.
வகுப்பறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த மாணவர் லிஸ்டைக் காட்டினான்.
"அதில் உள்ள ஒரே ஒரு ஆசியப் பெயர் என்னுடையது” அவன் தன் பெயரைச் சொல்லாமல் தூரத்திலுள்ள மாணவர் லிஸ்டைக் காட்டியது அவனுக்குக் குழப்பமாயிருந்தது என் பதை முகம் சுட்டிக் காட்டியது.
"எனக்கு இந்தியர்களுடன் அதிகம் பழக்கமில்லை." அவன் சொல்லிக் கொண்டு, தான் கொண்டு வந்த புத்தகங்களைத் தன் மேசையில் வைத்தான்.
"நான் இந்தியனில்லை. இலங்கையிலிருந்து அகதி னாய் வந்திருக்கும் ஒரு தமிழன்’
இலங்கை அரசியல் பற்றி அவள் விழிகளை அகலப் படுத்தியபடி கேட்டாள்.
கொஞ்சக் காலமாக இலங்கையில் நடக்கும் தமிழ் விடு தலை போராளிக் குழுக்களிடையே நடக்கும் கொலைகள் பற்றி லண்டன் பத்திரிகைகளைப் படித்திருப்பாள் போலும்.
அவன் மறுமொழி சொல்ல முதல் அவள் தொடர்ந்தாள். "ஐயாம் சாரி. இன்ரர்நாஷனல் பொலிட்டிக்ஸ் எனக்கு

Page 15
22 - அவனும் சில வருடங்களும்
அவ்வளவாகத் தெரியாது. ஏதோ பத்திரிகைகளிற் படித்ததைப் பார்த்துக் கேட்கிறேன்.'
‘தெரிகிறது' அவன் குரலின் கிண்டலைப் புரிந்து கொண்ட நாணம் அவள் கன்னங்களில் செம்மை பூசிச் சிரித்தது.
“எனக்கு இந்தியா என்றால் ஆசை" அவள் தொடர்ந்தாள்.
"ம்" அவன் உம் கொட்டினான்.
இந்தியாவின் காமசூத்திராவும் கஜ"ராஹோ கோயிலும் கறிச் சட்டியும் அல்லது காளித் தெய்வத்தையும் பார்க்கப் போகிறாளா?
"இந்தியாவில் நிறையப் படம் எடுக்கிறார்கள், அந்தப் படங்களைப் பார்த்துத்தான் திரைப்படத்துறையில் உங்களுக்கு நாட்டம் வந்ததா’ சுந்தராம்பாளுக்குத் தங்கையா இவள். கேள்விகளே கேட்டுத் தொலைக்கிறாளே! அவன் மறுமொழி சொல்ல வாயெடுத்தபோது மாணவர்கள் வரத் தொடங்கி விட்டார்கள்.
மைக்கல் - மேற்கிந்திய நாட்டிலிருந்து ஒரு காலத்தில் லண்டனுக்கு வந்த கறுப்புத் தாய்தகப்பனுக்குப் பிறந்தவன். டெவீனாவையும் ராகவனையும் மாறிமாறிப் பார்த்தான். பின் னர் ராகவனைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டினான்.
அதிபர் மாணவர்களை, நேற்றுக் காட்டியபோது எஞ்சியி ருந்த டிப்பார்ட்மெண்ஸ்சை, காட்டக் கூட்டிக் கொண்டு போனார்.
'இந்த வருடம் அகில உலக மாணவர்கள் நிறைய வந்திருப்பது மிகவும் சந்தோசமான விடயம்’ பெண் விரிவுரை
யாளரான வேர்ஜினியா பாமஸ்ரன் சந்தோசத்துடன்
சொன்னார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 23
மத்தியானம் கன்டீனுக்குப் போனபோது புவனா ஒரு மூலையில் புத்தகத்தில் கவனம் செலுத்தியிருந்தது இவன் பார்வையிற் பட்டது.
"ஏன் லைப்ரரிக்குப் போயிருந்து புத்தகம் படிக்க முடியா தோ’ ராகவன் கேட்டபடி அவள் முன்னால் உட்கார்ந்தான்.
'கடவுளே உன்னைப் பார்ப்பதற்கு இந்த மூலையில் தனிமையில் தவமிருக்கிறேன்' அவள் கிண்டலாகச் சொன் னாள்.
அவன் சிரித்தான். எதையாவது கேட்டு கேள்விகள் படைக்கும் டெவீனா, எதற்குக் கிண்டலாக மறுமொழி சொல் லும் புவனா, எடுத்ததெற்கெல்லாம் சித்தாந்த விளக்கம் சொல் லும் ஜேன் என்பவர்கள் ஒவ்வொரு வினாடியும் அவன் மனத்தில் மின்னிட்டு மறைந்தார்கள்.
அதிகம் மேக் அப் போடாத புவனாவின் புன்னகை மிக மிக வசீகரமாக இருந்தது.
புன்னகை தாங்கிய புவனாவின் முகத்தில் நேர்மை பளிச் சிட்டது. அவள் கூர்ந்து பார்த்தது அவளுக்குத் தர்ம சங்கடத்தை யுண்டாக்கியிருக்க வேண்டும். முகத்தைத் திருப்பிக் கொண் டாள்.
"உங்களுக்குத் தம்பி தமயன்கள் இல்லை என்று நினைக்கி றேன்’ அவள் ஆர்வத்துடன் கேட்டாள். அவளின் பேர்ஸனா லிட்டி அவனைக் கவர்ந்திருந்தது.
"என்னென்று தெரியும்’ அவள் தன் விழிகளையுயர்த்திக் கேட்டாள். புருவங்கள் வில்லாய் வளைந்தன.
'அடங்காத வாயிலிருந்து தெரிகிறது' அவன் குறும்புடன் சொன்னான். "ஏய் என்னை மட்டம் தட்டாதே’ அவள் தன் புத்தகத்தால் அவன் தலையில் அடித்தாள்.
'எனக்கு ஒரே அக்கா இருக்கிறாள். எதையும் கேட்டுச் சண்டை பிடிக்காதவள் கிடைத்ததை யிட்டுச் சந்தோசப்

Page 16
24 அவனும் சில வருடங்களும்
படுபவள்." அவனால் தொடர முடியவில்லை. மகாலிங்கத் தைக் கீதாவுடன் சேர்த்துப் பார்க்கும்போது அவன் சிலவேளை தர்ம சங்கடப் படுவான்.
'கீதாவுக்கு மறுபெயர் பூமாதேவி என்று வைக்கலாமா?? அவன் சட்டென்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.
"அவள் ஒரு மண்டைக்கனம் பிடித்தவனைக் கைபிடிக்கப் போகிறாள். அல்லது பிடித்து விட்டாளா’
எத்தனை கூர்மையான பேச்சு இவனுடையது? "என்ன யோசிக்கிறாய்"
புவனா இன்னொருதரம் இவன் தலையில் புத்தகத்தால் தட்டினாள்.
"எனது தங்கச்சி." சொல்லும்போதே அவன் முகத்தில் மகிழ்ச்சி. மைதிலி ஒரு சந்தோசப் பிராணி. தானும் சந்தோச மாக வாழ்ந்து கொண்டு தன்னோடு சேர்ந்தவர்களையும் சந்தோ சப்படும் இளம் பெண்.
“ரொம்பவும் சுட்டியான பெண், செல்லம் என்று நினைக் கிறேன்’ புவனா சொன்னாள்.
ராகவன் புவனாவைக் கூர்மையைப் பார்த்தான். "எனது போய் ப்ரண்ட் ஒரு சைக்கோலஜிஸ்ட். அவன் புத்தகங்களில் பொறுக்கி எடுத்த சிலவற்றைச் சொல்கிறேன் அவ்வளவுதான்."
“எப்போதும் மூத்த குழந்தைகள் தாய் தகப்பனின் எதிர் பார்ப்புக்களின் பிரதிபலிப்பாக மாறுகிறார்கள். தாங்கள் நல்ல தாய் தகப்பனாக, கெட்டிக்காரத் தாய் தகப்பனாகக் காட்டப் பெரும்பாலோர் தங்கள் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார் கள். பாவம், முதற் பிள்ளையாய்ப் பிறந்தோர் பலர் அதி சின்னவயதிலேயே தங்கள் சுயமையை, குழந்தைத் தனத்தை பறி கொடுத்து விட்டுத் தாய் தகப்பன்களால் அவர்களுக்கு ஏற்றபடி மாற்றப்படுகிறார்கள்."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 25
அவன் இடைமறித்தான். “ஏதோ பிரசங்கம் செய்ய வேண்டாம். நான் மூத்த LD&56it..... வீட்டார் எதிர்பார்த்ததற்கெல்லாம் எதிர்மாறாகச் செய்கிறேன்' அவன் உற்சாகத்துடன் கூறினான் "உனக்குத் தமக்கை யிருப்பதாகச் சொன்னாய்’ அவள் திருத்தினாள்.
அவன் மெளனமானான். அக்கா அம்மாவின் கண்ணிருக்காகக் கல்யாணம் செய்து கொண்டவள்! இந்த நினைவு அவன் மனத்தில் முதற்தரம் சம்மட்டியாக அடிபட்டது.
"ஏய், நீ சினிமா படிக்க வந்த இடத்தில் இந்தத் தர்க்கத்தை எல்லாம் தூக்கி வைத்து விட்டு உருப்படியாகப் படி' அவள் எழுந்தாள். அவளை அவனுக்குப் பிடித்து விட்டது. அவள் பேச்சு, சிந்தனைகள் எளிமையான சுபாவம் எல்லாம் அவனுக் குப் பிடித்து விட்டது. "நீங்கள் இப்படி எல்லாம் பேச எங்கே கற்றுக் கொண்டீர்கள்?"
அவன் கேள்வி அவள் இதழ்களில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டது. மலர் விழித்தாற்போன்ற அந்த அழகிய சிரிப்பு அவள் வசீகரத்தின் சிகரம் அவள் கண்கள் பாசத்துடன் அவனை வளையம் வந்தன.
'அநுபவம் தரும் படிப்பை எந்தக் கலாசாலையாலும் தர முடியாது." எழுந்தவள் கொஞ்ச நேரம் இவனைப் பார்த்த படி நின்றாள்.
"எனக்கு அண்ணாவோ தம்பியோ இல்லை. இரண்டு சகோதரிகள்." புவனா முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். கண்களில் படியும் கலங்கத்தை அவள் கண்டு கொள்ளக் கூடாது என்ற தவிப்பு அவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. 'ஏய் என்ன ஆசிய மாணவர்கள் அமைப்புக் கூட்டம் போடத் திட்டமா? கறுப்பு மாணவர்கள் சங்கம் ஒன்று தொடங்

Page 17
26 A. அவனும் சில வருடங்களும்
குவோம். நானும் சேர்கிறேன்’ மைக்கல் உரத்த குரலில் சொல்லிக் கொண்டு வந்தான்.
'ஒகே, சீ யூ ராகவன்’ புவனா விரைந்து விட்டாள். அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மைக்கல் கண்களில் பளிச்சிடும் கேள்விகளைக் கண்டுபிடிக்க எந்த சைக்கோலஜியும் தேவையில்லை என்று நினைத்தான் ராகவன்.
'உம், எக்ஸெலண்ட் இந்தியன் பியூட்டி" மைக்கல் முணு முணுத்தான்.
'இல்லையப்பா, இலங்கை பியுட்டி’ ராகவன் மைக்க லின் தலையிற் குட்டினான். மைக்கல் புவனா போகும் வரைக்கும் வாய் பிழந்தான். கன்டீனுக்கு அதிபர் வருவது தெரிந்தது.
"இந்தக் கல்லூரியில் எங்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு உருப்படியான படிப்புக் கிடைக்கும் என்று நினைக்கிறாயா' மைக்கல் கோர்ட் பொக்கற்றிலிருந்து ஒரு கஞ்சாக் கட்டியைக் கவனமாக எடுத்து சிகரெட் புகையிலைத் தாளில் சேர்த்தபடி கேட்டான்.
ராகவன் தர்ம சங்கடத்துடன் அங்கும் இங்கும் பார்த்தான். கல்லூரியில பகிரங்கமாகக் கஞ்சா பிடிப்பதைப் பார்த்துப் பயந்தான். "மைக்கல் வாழ்க்கையில் முன்னேற நினைத்தால் அதை ஆத்மார்த்த ரீதியாக நம்ப வேண்டும். யாரோ எங்களுக்கு சேர்ட்டிபிக்கற்றை வெள்ளித் தட்டில் வைத்துத் தரப் போவ தில்லை. மனம் ஏற்பது மிகவும் சிக்கலான சக்தி அதைச் சீர்படுத்தி வாழ்க்கையில் நாம் அடைய நினைப்பதைச் செயல் படுத்துவதுதான் எங்கள் இலட்சியமாக, நம்பிக்கையாக இருக் கணும்.'
'ஏய், ஏய் என்ன தத்துவ விளக்கம் சொல்கிறாய்? நான் கஞ்சா குடிப்பதைச் சுட்டிக் காட்டிக் கிண்டலடிக்கிறாயா?" மைக்கலின் குரலில் பாதி கோபம் பாதி ஆர்வம். ராகவன் மறுமொழி சொல்லவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 27
கன்டீன் வாசலில் டெவீனாவும் பிலிப்பும் வந்து கொண்டி ருந்தது தெரிந்தது.
'கல்லூரிகள் என்றால் புத்தகப் படிப்பையோ அல்லது டெக்னிக்கல் திறமையையோ மட்டும் மேன்படுத்துவதில்லை. மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் தனிப்பட்ட உணர்வுக ளையும்தான் வெளிக் கொணர்கிறது. அந்த உணர்வுகளின் ஆழம், தார்மீகக் கோணங்கள் என்பதை ஒவ்வொருத்தரின் அனுபவமும் எடை போடும் என்று நினைக்கிறேன்.'
ராகவன் தனக்குச் சொல்கிறானா அல்லது வேறு யாருக் கும்தான் சொல்கிறானா என்று மைக்கல் ஒருதரம் தலையைச் சொறிந்து கொண்டான். பின்னர் ராகவனைப் பார்த்தான்.
'ஏய் ராகவன், கல்லூரி என்றதும் புத்தகங்களை கட்டிக் கொண்டு மாரடியாதே, உன் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடு. கஞ்சா அடிப்பதும், கிராக் பாவிப்பதும், கொக் கேயினை உறிஞ்சுவதும், ஹெரோயின் ஊசிபோடுவதும், விஸ்கியில் மூழ்குவதும், பீர் அடித்து மூத்திரம் பெய்வதும் மட்டும்தான் கல்லூரிகளில் நடக்கும் என்று நினைக்காதே." மைக்கல் கிண்டலாகச் சொன்னான்.
ராகவன் மைக்கலை ஏறிட்டுப் பார்த்தான்.
'ராகவன். காதலிக்கவும் பழகிக் கொள்’ மைக்கல் சத்தம் போட்டுச் சிரித்தான். டெவீனாவும் பிலிப்பும் அப் போது மைக்கல் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நின்றார்கள்.
பிலிப் மைக்கலைக் கிண்டலாகப் பார்த்தான். ஆண் டாண்டு காலமாக உலகத்தின் அரைவாசிப் பகுதியை ஏகாதி பத்தியம் கொண்ட பார்வையது.
டெவீனா வழக்கம்போல் குழப்பத்துடன் ராகவனையும் பிலிப்பையும் மைக்கலையும் மாறி மாறிப் பார்த்தாள்.
பிலிப் டெவீனாவைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். பின்னர் “மேற்கிந்திய நாட்டைச் சேர்ந்த மைக்கல் கிழக்கிந்திய

Page 18
28 அவனும் சில வருடங்களும்
நாட்டைச் சேர்ந்த ராகவனுக்குக் காதலிப்பது பற்றி லெக்ஸர் பண்ணுகிறார்’ என்றான்.
ராகவன் இடைமறித்தான். "எக்ஸ்கியுஸ்மி பிலிப், நான் இந்தியாவைச் சேர்ந்தவ னல்ல. இலங்கையைச் சேர்ந்தவன். வெள்ளை நிறத் தோல் உள்ளோர் எல்லோரும் இங்கிலிஸ்காரரா அதே போலத்தான் உன்னைவிடக் கொஞ்சம் நிறம் குறைந்த எல்லோரும் ஏதோ இந்திய நாட்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நீ நினைப்பது உனது பொதறிவின் மட்டத்தைக் காட்டுகிறது. அத்தோடு யாரும் இன்னொருத்தருக்கு எப்படிக் காதலிப்பது என்று சொல்லித் தரத் தேவையில்லை. காதல் என்பது ஹலோ ஹவ் டு யுடு என்று சொல்லிவிட்டுக் கட்டிலில் முடித்துக் கொள்ளும் வசனமில்லை. காதல் என்பது நிலவில் நடப்பதுபோல், தென்றலில் தாலாட்டுவதுபோல் நினைவில் கனியும் ஒரு இனிமையான உணர்வு."
ராகவனின் நீண்ட பேச்சு பிலிப்பைத் திக்கு முக்காடாக்கி யிருக்க வேண்டும். ராகவனின் நீண்ட பேச்சு அவனை யோசிக் கப் பண்ணியிருக்க வேண்டும்.
“மன்னிக்க வேண்டும் நண்பரே, நாங்கள் இருவரும் இரு துருவங்களிலிருந்து உலகத்தைப் பார்ப்பவர்கள்." டெவீனாவின் முகத்தில் தர்ம சங்கடம்.
"உம், கலாச்சாரங்கள் எல்லையிருந்தாலும் மனித உணர்வு கள் ஒரே மாதிரித்தானே இருக்கிறது. ப்ராய்ட் சொல்வதுபோல் அடிப்படை உணர்வுகளால் மனிதன் உந்தப் படுகிறான். சாப் பாடு, நீர், காற்று, காதல் இல்லாமல் மனிதனால் வாழமுடி யுமா???
டெவீனா மேற்கண்ட கேள்வியைக் கேட்டுவிட்டு தனக்கு
முன்னால் நிற்கும் மூன்று இன இளைஞர்களையும் பார்த்தாள்; யாரும் மறுமொழி சொல்லவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 29
“சினிமா என்ற மகத்தான சாதனம் இன்று லாபம் தேடும் ஒரு மலிவான வியாபாரமாகிவிட்
டது மல்லாமல், மனிதர்களின் மனத்தைக் குழப்பும் ஒரு பயங்கர கருவியாகவும் மாறியுள்ளது. உதார ணமாக அமெரிக்க சினிமாக்களைப் பார். அந்தக் காலத்து "வெஸ்ரேன்’ படங்கள் அமெரிக்க ஆதிமக் களாகிய சிவப்பு இந்தியரை, நாகரீகமான அமெரிக் கர்களின் எதிரிகளாகப் பிரதிபலித்தது. இப்போது பார்த்தால் 'ரம்போ’ போன்ற படங்கள் தனிமனித வீரத்தை அதாவது அமெரிக்கரின் மன உணர்வை - உலகத்தின் போலிஸார் தாங்கள்தான் என்ற தத்துவத்தை நிலைநாட்டத் தூண்டுகிறது. 9 மிஸ்ரர் ஜான் பேர்ன்ஸ்ரைன் தனது விரிவுரையில் சொன் னது ராகவனின் நினைவில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
அன்று பின்னேரம் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர் களால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த வெல்கம் பார்ட்டிக்குப் போனபோது புவனாவிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான்.
பார்ட்டிக்குப் பலர் தங்கள் கேர்ள் பிரண்ட்ஸ், பாய் பிரண்ட்சைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அன்ரோனி யோவுடன் வந்திருந்த பெண் எல்லோரையும் கவர்ந்தாள்.
சங்கு போன்ற கழுத்து, தாளம் போடும் ஒய்யார நடை, அள்ளி வைத்த முல்லைச் செண்டான முகம், கண்களென வளையவரும் இரு வண்டுகள் 'இவள் எனது கேர்ள் பிரண்ட் ஜூலியட் 'அன்ரோனியோ பெருமையுடன் சொன்னான்.

Page 19
3O அவனும் சில வருடங்களும்
டெவீனா பிலிப்புடன் வந்திருந்தாள். அலான் பார்டோ வும், ஜேன்டார்வினும் மிகவும் உக்கிரமான தர்க்கத்தில் ஈடுபட் டதுபோற் தெரிந்தாலும் அவர்கள் கண்கள் ஒருத்தரில் ஒருத்தர் எவ்வளவு நெருக்கமாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ப தைக் காட்டியது.
"எந்த நேரம் பார்த்தாலும் இன்பம் அநுபவிப்பதைப் பற்றிப் பிதற்றுவாயே எங்கே உனது கேர்ள் பிரண்ட்’ மைக்க லைச் சீண்டினான் ராகவன்.
'ஒன்று இருந்தாலல்லவா பெருமையுடன் கொண்டு வரலாம். இருப்பவர்களை எல்லாம் கொண்டு வந்தால் ஒரு புட்போல் ரீம் மாதிரி வந்து விடும்’ மைக்கல் வழக்கம் போல் ஒ வென்று சத்தம் போட்டுச் சிரித்தான். கண்கள் சிவந்திருந் தன. கஞ்சாப் புகை முகத்தை மறைத்திருந்தது. வாழ்க்கையை ஒரு விளையாட்டு மைதானமாகப் பார்ப்பதை ராகவன் விசித்தி ரமாகப் பார்த்தான்.
தன்னை ஹொமோ செக்சுவல் என்று அறிமுகம் செய்து கொண்ட ஸ்ரீவன் தனியாக வந்திருந்தான். முகம் சோர்வாக இருந்தது.
"என்ன சுகமில்லையா' ராகவன் பரிவுடன் கேட்டான்.
ஸ்ரீவன் ராகவனை ஒரு நிமிடம் ஆழமாகப் பார்த்தான், பின்னர் 'அப்படி ஒன்றும் சீரியஸாக இல்லை. என்யோய் த பார்ட்டி ராகவன்’ என்றான்.
புவனா தன் போய் பிரண்ட் றிச்சார்ட் என்பவனுடன் வந்திருந்தாள். றிச்சார்ட் மிகவும் சினேகிதமாகப் பழகிக் கொண்டான்.
"தலைக் கனம் பிடித்த பிலிப்புக்கும் றிச்சார்ட்டுக்கும் எவ்வளள வித்தியாசம்’ மைக்கல் முணு முணுத்தான்.

ாஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 31 - ܗܝ
'றிச்சார்ட்டின் குணம் பிலிப்பின் குணம் மாதிரி இருந் தால் புவனாவின் காதலனாக இருக்க முடியுமா? ராகவன் பீர் கானை உடைத்தபடி கேட்டான்.
核经
உம். டெவீனாவைப் பார்த்தால் எவ்வளவு நல்ல பெண்ணாக இருக்கிறாள். அவள் பிலிப்புடன் நெருங்கிப் பழகிறாளே’
மைக்கல் எரிச்சலுடன் சொன்னான். அதே நேரம் ஸ்ரீவன் இருமலுடன் சங்கடப் பட்டதால் ராகவன் ஸ்ரீவனை அழைத் துக் கொண்டு வெளியே வந்தான்.
செப்ரம்பர் மாதக் குளிர் ஈட்டிபோல் தோலைத் துளைத் தது. வெளியில் புகை பிடிப்போர் இருந்தாலும் ஸ்ரீவனால் வெளியில் இருப்பது பிடித்தது.
"நானும் ஒரு காலத்தில் புகை பிடிப்பவனாகத் தான் இருந்தேன். இப்போது எனது வாழ்க்கையே மாறி விட்டது” பெருமூச்சுடன் சொன்னான் ஸ்ரீவன். -
புவனா இவனைத் தேடிக்கொண்டு வருவது தெரிந்தது. புவனா நீண்ட கறுப்பும் கவுனும் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியும் போட்டிருந்தாள். மிக மிக எளிமையான உடுப்பில் மிக மிகக் கவர்ச்சியாய்த் தெரிந்தாள்.
அவள் இவர்களிடம் வந்ததும் 'ஸ்ரீவன், புவனாவைக் காதலியாக அடைவதற்கு றிச்சார்ட் கொடுத்து வைத்திருக்கி றான் இல்லையா'
ராகவன் சொன்னது புவனாவுக்குக் கேட்டிருக்க வேண் டும்.
'ஏய் என்ன புலம்புகிறாய் புவனா பொய்க் கோபத்துடன் ராகவனின் மூக்கில் குத்தினாள்.
“என்னவென்று இலங்கைத் தமிழரின் பார்வையில் படா மல் இந்த ஆங்கிலேயனின் உறவில் அகப்பட்டுக் கொண்டாய்."

Page 20
32 அவனும் சில வருடங்களும்
ராகவன் புவனாவின் நீண்ட தலைமயிரை விளையாட் டாக இழுத்தான்.
“என்ன நீ பெருமூச்சு விடுவதைப் பார்த்தால் நீயே றிச்சார்ட்டில் பொறாமைப் படுகிறாய் போலிருக்கிறது? ஸ்ரீ வன் தனது இருமலையும் மறந்து சிரித்தான்.
ராகவன் வெட்கத்துடன் தன் பார்வையைத் தெருவிற் பாயவிட்டான்.
"எப்படி லெக்ஸர்ஸ்" புவனா தனது ஆரேன்ஞ் ஜ"சுடன் உட்கார்ந்தாள். ஜான் வேர்ன்ஸ்ரைன் சினிமா பற்றியும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் பற்றியும் சொன்ன விடயங்களைச் சொன்னான்.
"ஏன் மூன்றாம்தர இந்தியச் சினிமா பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையா’ புவனா வெடித்தாள்.
"மனித நேயத்திற்கும் புறம்பான தத்துவக் கருத்துக்கள், மனித முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் இதிகாசங் கள், இதில் அடிப்படையிற் தானே இந்தியச் சினிமா இருக்கி றது.'
தூரத்தில் தெருவில் பாய்ந்தோடும் கார்களின் இரைச்சலில் புவனா சொல்வது அரையும் குறையுமாகக் கேட்டது.
'உலகத்திலேயே நிறையப் படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியா, உலகத்திலுள்ள சமயங்களில் மிகவும் கூடுதலான எண்ணிக்கை கொண்ட கடவுளைக் கொண்டது இந்து சமயம். பெண்களை இரண்டாம்தரப் பிரசையாகக் கூட நடத்தாமல் கொடுமை செய்கிறது இந்தியக் கலாச்சாரம். இவற்றின் பிரதிப லிப்புத்தான் தானே இந்திய சினிமாக்கள்."
புவனாவின் ஆத்திரம் ஏன் தன்னில் பாய்கிறது என்று புரியாமல் விழித்தான் ராகவன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 33
"இந்தியச் சினிமாவைப் பிடிக்காவிட்டால் எனக்கு ஏன் திட்டுகிறாய், நானா படம் எடுக்கப் பணம் கொடுக்கிறேன்."
ராகவன் குழப்பத்துடன் கேட்டான். "உன்னைப் போல இளைஞர்கள் சினிமாவை நாடுவது ஏதோ ஒரு கற்பனையிற்தானே? நாளுக்கு மூன்று படம் எடுக்கும் இந்தியாவில் முழுக்க முழுக்கப் பெண்கள் கவர்ச்சிக் கன்னிகளாக, போதைப் பொருட்களாக, புசிக்கப்படும் தசைப் பிண்டங்களாகத்தானே படைக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டி எத்தனை முற்போக்கான படம் வருகிறது."
ராகவன் மறுமொழி சொல்ல முதல் ஜேன் வந்து சேர்ந் தாள்.
“பார்த்தாயா ஜேன், இந்தியக் குப்பைச் சினிமாவுக்கு என்னைப் போன்றோர்தான் காரணம் என்று புவனா பொரிந்து தள்ளுகிறாள்." ராகவன் பாதி கோலமாகவும் பாதி குழப்பமாக வும் தனது சக மாணவியான ஜேனிடம் முறையிட்டான்.
"ஒகோ, பெண்களைக் கவர்ச்சிப் பொருட்களாக வைத்து இந்தியாவில் மட்டும் படம் எடுக்கிறார்களா? உலகத்தில் பரவலாக நடக்கும் விடயம் தானே. பெண்களுக்குச் சம நிலை தேவை என்பதைப் பெண்களே உணராத சமுதாயத்தில் நடக் கும் பொதுவான நிகழ்ச்சியிது." ஜேன் சொல்லி முடிக்க முதல் ராகவன் இடைமறித்தான்.
"அப்படி என்றால் மேற்குநாடுகளில் பொருளாதார சுதந்தி ரம் ஓரளவுக்குப் பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் நாடுகளில் எல்லாமே முற்போக்கான படங்கள்தான் உருவாகின்றதா."
"நான் அப்படிச் சொல்லவில்லை. தங்கள் சுயமைக்குப் போராட வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பெண்களுக்குப் பொருளாதாரம் மட்டுமல்ல அவர்களைச் சுற்றியுள்ள கலாச்சார மும் தடையாயிருக்கின்றது."

Page 21
34 அவனும் சில வருடங்களும்
புவனா ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள். பார்ட்டி நடந்த மண்டபத்தில் நடனம் ஆடுவோரின் ஆரவாரம் ஜன்னலால் கேட்டது. குளிர் கூடிக் கொண்டு வந்ததால் ஸ்டீவனின் இருமல் தொடங்கியது.
"ஸ்ரீவன் நீ வீட்டுக்குப் போவது நல்லது என்று நினைக்கி றேன்’ ஜேன் ஆதரவுடன் சொன்னாள்.
"வேண்டாம், இது எங்கள் புது வாழ்க்கையின் ஆரம்பம். என்னை நோயாளியாக நினைத்துக் கொள்ளாமல் என்னை ஒரு சக மாணவனாக நினைத்துக் கொண்டு இந்த இனிமையான ஒரு மாலை நேரத்தை என்ஜோய் பண்ண விரும்புகிறேன்."
ஸ்ரீவன் மேற்படி சொல்லி முடிக்க முதல் இன்னொரு தரம் இருமத் தொடங்கி விட்டான். ஜேன் ராகவனைப் பார்த்தான். ஸ்ரீவனை துரிதப்படுத்த விரும்பமில்லை என்பது அவன் பார்வையிற் தெரிந்தது.
அந்த நேரம் டெவீனா வெளியே வந்தாள். “இந்த மண்டபத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எனக்குத் தலை வெடித்து விடும்'
டெவீனா வானத்தைப் பார்த்து நீண்ட மூச்செடுத்துக் கொண்டு சொன்னாள்.
"ஏன் உனக்கு சத்தமான மியுசிக் பிடிக்காதா, அல்லது டிஸ்கோ லைட்டிங் பிடிக்காதா அல்லது."
ஜேன் கேள்வியை முடிக்க முதல் டெவீனா இடைமறித் தாள்.
"எங்கள் வெல்கம் பார்ட்டியில் இதெல்லாம் இருக்கும் என்று தெரியும். ஆனாலும் எனக்கு மிகவும் சகிக்க முடியாத விடயம் சிகரட் புகை. கண் எரிகிறது. தலை சுற்றுகிறது. சில மனிதர்கள் மிகவும் சுய நலமானவர்கள், மற்றவர்களுக்குத் தர்ம சங்கடமான விடயங்களைத் தயக்கமின்றிச் செய்கிறார்கள். அதை ஒரு சோசியல் முற்போக்கு என்றும் நினைக்கிறார்கள்."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 35
அவள் வெடித்த விதத்திலிருந்து தெரிந்தது டெவீனாவுக் குப் புகை பிடிப்பது பிடிக்காதென்பது ஸ்ரீவன் சிரித்துக் கொண்டான். "டெவீனா புகை பிடிப்பது பிழை என்று சாப்பாடு போடும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள். அந்தப் புகை மண்டலத்துள் இருந்து இருமித் தொலைக்காமற் தானே இந்தக் குளிரில் வந்து மாரடிக்கிறேன்."
"நோ நோ, நீ கட்டாயம் இந்தக் குளிரில் கஷ்டப் படக் கூடாது. கொஞ்சம் பொறு, நான் எனது காரைக் கொண்டு வருகிறேன். நானே உன்னை வீட்டுக்குக் கொண்டு செல்கி றேன்."
ஜேன், ராகவன், ஸ்ரீவன் மூவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்’ டெவீனாவின் முகத் தில் குழப்பம். மங்கலான வெளிச்சத்தில் அவளின் அந்தக் குழந்தைத் தனமான குழப்பத்தை ராகவனால் ரசிக்க முடிய வில்லை.
அளவிட முடியாத ஒரு அப்பாவிக் குழந்தைத் தனம் அவளோடு இணைந்திருப்பது புரிந்தது.
"நாங்கள் ஒவ்வொருத்தரும் ஸ்ரீவனுக்கு நீ சொன்னதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது எங்கள் வெல்கம் பார்ட்டி. தான் கட்டாயம் கடைசி நிமிடம் வரையும் இருக்கப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான்." ஜேன் அநுதாபத்துடன் சொன்னாள். "ஸ்ரீவன் முட்டாள்தனமாகக் கதைக்காதே. நீ இருமு வதை குணப்படுத்தா விட்டால் மூன்று வருடப் பட்டப் படிப்பு முடிய விட்டே மரணயாத்திரைக்குத் தயாராகி விடு வாய். வெளிக்கிடு நான் கார் கொண்டு வருகிறேன்’ டெவீனா ஆர்டர் போட்டாள்

Page 22
36 அவனும் சில வருடங்களும்
“லண்டனைப் பார் இரவின் அமைதியில் எத்தனை ரம்பியமாக இருக்கிறது. இந்த வார்டர்லூ பாலத்தின் இந்த ரம்பியமான அழகைப் பகலில் ரசிக்க முடியுமா”
ஸ்ரீவனை அழைத்துக் கொண்டு போய் கெனிங்டன் என்ற இடத்தில் சேர்த்து விட்டு ராகவனும் டெவீனாவும் வந்து கொண்டிருந்தார்கள்.
நேரம் இரவு பத்து மணியாகிக் கொண்டிருந்தது.
"ஸ்ருடன்ஸ் பார்ட்டி முடிந்திருக்கும் என்று நினைக்கிறீர் களா’ டெவீனா ராகவனைக் கேட்டாள்.
“தெரியாது. முடிந்திருக்கா விட்டாலும் இன்னொரு தரம் போக விருப்பமில்லை."
"ஏன்'
"உங்களைப் போலத்தான் எனக்கும் புகை பிடிப்போர் நடுவில் இருக்கப் பிடிக்காது.”
"நீங்கள் குடிப்பீர்களா."
"உம் பீர் எடுப்பேன். சீரியஸான ட்ரிங்ஸ் எடுப்ப தில்லை." இவன் இப்படிச் சொல்ல அவள் சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிறாய் டெவீனா'
"மூன்று வருடப் படிப்பு முடிவதற்கிடையில் மைக்கல் சொல்வதுபோல் எத்தனையோ விடயங்களை புரிந்து கொள் வாய்'.
இருவரும் சிரித்தார்கள். டெவீனா காரை நிறுத்தினாள். "ஏன் நிறுத்தி விட்டாய்."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 37
"இந்த செப்டம்பர் மாதத்திலும் பூரண நிலவு அழகாகத் தெரிகிறது. அதன் பிரதிபிம்பம் தெறித்து விழும் தங்கத் தகடுகளாகத் தேம்ஸ் நதியில் பிரதிபலிக்கிறது. அதை ரசிக்கி றேன்."
ராகவன் மறுமொழி சொல்லவில்லை.
திடீரென்று அவனின் மாமா மகள் இந்திராவின் ஞாபகம் வந்தது. வவுனியா நகரில் அவர்கள் குடும்பம் வசித்தபோது ராகவன் குடும்பம் அநுராதபுரத்திலிருந்து மாமா வீட்டுக்கு வருவார்கள்.
இந்திரா மிகவும் அழகாகப் பாடுவாள். இவனை விட ஐந்து வயது குறைந்தவள். இவன் பதினொரு வயதாக இருக் கும்போது கள்ளமறியாத குழந்தை வயதில் அவள் தன் குழந்தைக் குரலில் அவள் தகப்பன் சொல்லிக் கொடுத்த பாரதியார் பாடல்கள் பாடுவாள்.
"சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற்பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளை யாடிவருவோம்." இந்திராவின் மழலைத் தமிழை ரசிப்பான் ராகவன். அவளுக்கு ஆறு வயது. அச்சம் நாணம் தெரியாத அருமையான
வயது.
"தேம்ஸ் நதியில் நிலவு தெறிப்பதைப் பார் என்று சொன்னது பைத்தியகாரத் தனமாக இருக்கிறதா’
இவனை நினைவிலிருந்து இழுத்தாள் டெவீனா. வன்னி நகரமும் லண்டன் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பா கத் தெரியும் பாராளுமன்றக் கரையோரமும் எத்தனை வித்தியா சமான உலகங்கள்.

Page 23
88 அவனும் சில வருடங்களும்
அவள் கேள்விக்கு இன்னும் மறுமொழி சொல்லாதது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.
"ஐயாம் சாரி ராகவன். சீக்கிரம் வீட்டுக்குப் போக வேணுமா"
ஸ்ரீவனை வீட்டுக்குக் கொண்டு போகத் துடித்த அதே ஆதரவான குரல்.
இந்தப் பெண்ணை இரண்டு நாளைக்கு முன் யாரென்றே தெரியாது.
குளிர் தோலையுரிப்பேன் என்று பயமுறுத்தியது. ஆனா லும் அவன் மனதில் ஏதோ ஒரு புதுவிதமான சந்தோசம்.
"என்ன யோசிக்கிறாய்." "என்னை உனக்கு முன்பின் தெரியாது. இரண்டு நாள் உறவில்.’
"உன்னை நம்பி இந்த நடுச்சாமத்தில் இந்தப் பாலத்தில் போரடிக்கிறேன் என்று நினைக்கிறாயா'
அவன் மறுமொழி சொல்லவில்லை. "ஒருத்தரில் ஒருத்தர் நம்பிக்கை, அன்பு, மரியாதை இல்லாவிட்டால் உலகம் எப்போதோ தலைகீழாகப் போயிருக் கும் ராகவன். நீ எனது சக மாணவன், பெரும்பாலும் ஒரே விதமான நோக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கும் என்று நினைக்கிறேன்."
அவள் வார்த்தைகளைத் தெளிவாகச் சொன்னாள். வித்தியாசமான ஒரு திருப்பம் என்று நினைத்தான். ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் ஸ்ரீவனை வீட்டுக் குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
அவன் தனது உடம்பைச் சரியாகப் பார்ப்பது முக்கியம் என்று அவள் பிரசங்கம் செய்யத் தொடங்கியதும் ஸ்ரீவன் வழக்கம் போல் மெல்லச் சிரித்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 39
‘'நீ மிகவும் பிடிவாதமான பெண். உனக்குச் சரி எனப்பட் டதை நேரே சொல்கிறாய், செய்தும் விடுகிறாய்.” ஸ்ரீவன் இப்படிச் சொன்னதும் அவள் கொஞ்ச நேரம் மறுமொழி சொல்லாமல் கார் ஒட்டுவதில் கவனம் செலுத்தினாள். பின்னர் கொஞ்சம் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டபடி சொன்னாள்.
"ஸ்ரீவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உந்துதல் இருக்கும்போது அதை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பது பிடிவாதம் போல் தெரிந்தாலும் அது வாழ்க்கையின் கடமை என்று நினைக்கிறேன்."
ராகவனும் ஸ்ரீவனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். ஸ்ரீவனின் முகத்தில் அசாதாரணமான ஒரு புன்னகை. ஆயாசத்துடன் சொன்னான்:
"டெவீனா உன்னை எனது சக மாணவியாக அடைந்த தற்கு மிகவும் சந்தோசப்படுகிறேன்."
"ஐயையோ அப்படி ஒன்றும் பெரிதாகச் சொல்ல வேண் டாம். எனது தகப்பனுக்கு நான் பிலிம் கொலிஜ்சுக்கு வந்தது விருப்பமில்லை. இடதுசாரிகளும், அனக்கிஸ்ட்டுகளும் இந்த LCP. க்கு வருவார்கள் என்று முணுமுணுத்துக் கொண்டிருந் தார்."
அவள் வேடிக்கையாகச் சொன்னாள். "ஆமாம் யாரோ உனது தகப்பனுக்கு மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைன் பற்றிச் சொல்லியிருப்பார்கள்."
ராகவன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். "என்ன இன்னும் ஏதோ யோசிக்கிறாய்." டெவீனா காருக்குள் இருந்து கிறிஸ்ப்பாக்கட் ஒன்றை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள்.
அவன் நேரத்தைப் பார்த்துக் கொண்டான். நேரம் பதி னொரு மணியாகிக் கொண்டிருந்தது.

Page 24
4O அவனும் சில வருடங்களும்
"வீட்டில் பேசுவார்களா? அவள் கேட்டாள். இல்லை என்று தலையாட்டினான்.
'திடீரென்று ஸ்ரீவனை வீட்டுக் கொண்டு போக வந் தாயே உனது போய் பிரண்ட் பிலிப் கோபிக்க மாட்டானா'
"வாட்’ அவள் அதிர்ச்சியுடன் கேட்டாள். “எனது போய் பிரண்ட் பிலிப் என்று சொன்னாயா? அவளின் குரல் உயர்ந்திருந்தது. அவனுக்கு அவளின் திடீர் மாற்றம் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அமைதி. அவர்களை கடந்து சில கார்கள் போய்க் கொண்டிருந்தன. "ஒரு இந்தியனிடமிருந்து இப்படியான பேச்சைத்தானே எதிர்பார்க்க வேண்டும்."
அவள் குரலில் திடிரென்று ஒரு ஏமாற்றத்தின் தொனி, ஆயாசம் கலந்த எரிச்சலின் தொனி அது என்று அவனுக்குப் புரிந்தது.
"நீ நேற்று கொலிஜ்ஜுக்கு வந்த நேரத்திலிருந்து முடிந்த நேரமெல்லாம் புவனாவுடன் சுற்றிக் கொண்டி ருக்கிறாயே..."
அதற்குக் காரணம் என்ன என்று அவள் கேட்கவில்லை. "ஐயம் சாரி பிலிப் உங்கள் போய் பிரண்ட் என்று நினைத்து விட்டேன்."
அவள் மறுபொழி சொல்லவில்லை. "அத்துடன் ஒரு விடயம் நான் இந்தியனில்லை. இலங் கைத் தமிழன்."
அவள் வாய் சட்டென்று பூட்டுப் போட்டாற் போன்ற மெளனம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 41
காரை நோக்கி நடந்தாள். என்னடா இது கரைச்சல் என்று அவன் தனக்குள் முணு முணுத்துக் கொண்டான். இருவரும் காரில் ஏறிக் கொண்டார் கள்.
"குழந்தைத் தனமாக நடந்ததற்கு மன்னிக்கவும்." அவள் முணு முணுத்தாள். இப்போது அவன் மெளனம் தாறுமாறாக எதையும் சொல்லி அவளிடம் தர்க்கம் செய்ய விரும்பவில்லை.
கார் குறுக்குப் பாதைகளில் போனபடியால் அவள் எங்கு போகிறாள் என்று தெரியவில்லை.
அவன் ஜன்னலுக்குள் வெளியால் பார்த்தான். கார் யூஸ்ரன் ஸ்ரேசனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.
“என்னை இந்த இடத்தில் இறக்கி விட்டால் நான் ட்ரெயின் எடுத்துப் போகிறேன்."
அவன் சொன்னான். அப்போது கார் ஹம்ஸ் ரேட் ரோட்டில் போய்க் கொண்டிருந்தது.
"ஓ மை கோட். ஏதோ ஞாபகத்தில் என் வீட்டுக்குப் போகும் வழியில் போய்க் கொண்டிருக்கிறேன்."
குரலில் உண்மையான தவிப்பு. "பரவாயில்லை. பழக்க தோஷம். இந்த இடத்தில் இறக்கி விட்டால் நான் எப்படியோ வீட்டுக்குப் போய்ச் சேருகிறேன்."
"வேண்டாம், இந்த நேரத்தில் குடிகாரர்கள் தொல்லையி ருக்கும். நானே கொண்டு போய் விடுகிறேன்." அவளின் இரக்க சுபாவம் அவன் மனதைத் தொட்டது.
"பிலிப் எனது போய் பிரண்ட் இல்லை. நீண்ட கால சினேகிதன். எனது தகப்பனும் அவனது மாமாவும் வியாபாரக்

Page 25
42 அவனும் சில வருடங்களும்
கூட்டாளிகள். நீண்ட காலமான உறவு." அவள் விளக்கம் சொன்னாள். அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
"நீங்கள் பிலிப்புடன் என்னைச் சேர்த்துப் பேசியது எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் இந்தியரான. சாரி இலங் கையரான உங்களிடமிருந்து முற்போக்கு விதமான நோக்கு இருக்குமென்று நினைத்தேன். . உங்கள் கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் பழகுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது சர்வ சாதாரணம் என்று நினைக்கிறேன். நான் வித்தியாசமான உலகத்தில் பிறந்து வளர்ந்தவள். உங்களின் கலாச்சாரத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. எனது கலாச்சாரத் தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.”
'மனம் விட்டுப் பேசியதற்கு நன்றி? கார் ஹாம்ஸ்ரெட்ஹீத் என்ற லண்டனிலுள்ள பெரிய பார்க்கைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.
"எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று' அமைதியான அந்த இரவில் அந்தப் பார்க்கின் நடுவே போவது ஏதோ கனவில் நடப்பது போலிருந்தது.
அவன் நேரத்தைப் பார்த்தான். இரவு பண்ணிரண்டாகி விட்டது. அம்மாவுக்குச் சொல்லி விட்டுத்தான் வந்தான். ஆனாலும் அவள் இவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு தவிப்பாள்.
'அம்மா தேடுவாளா? அவன் ஆமாம் என்பது போல் தலையாட்டினான். "நீங்கள் அதிர்ஷ்டசாலி' அவன் பெருமூச்சு விட்டாள்.
"உங்களுக்கு அம்மா இல்லையா’

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 43
"அம்மா இருக்கிறாள். மிகவும் அழகான அம்மா." இன்னுமொருதரம் பெருமூச்சு. கார் இப்போது ஹைகேட் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தது.
“எனது வீட்டைக் காட்டத்தான் இந்தப் பக்கம் கொண்டு வந்தேன்."
காரை நிறுத்திவிட்டு ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினான். பணக்காரர்கள் வாழும் பக்கம் பணக்கார வீடு? மெளனமாகத் தெரிந்தது.
'வீட்டில் யாருமில்லை. அப்பா கென்யாவில் இருக்கி றார். வியாபார விடயமாகப் போய் விட்டார். அம்மா...'
அவள் சொல்ல வார்த்தைச் சொல்லாமல் ஒரு வினாடி மெளனமாக இருந்தாள். பார்வை வெறித்திருந்தது.
‘போவோமா. ??
கார் ஹரிங்கேய் நகரை அடைந்தபோது நேரம் இரவு கிட்டத்தட்ட ஒரு மணியாக இருந்தது.
இவளின் கார் வீட்டுக்கு முன்னால் நிற்கவும் அவனின் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு அவன் சகோதரி கீதா, மைத்துனர் மகாலிங்கம், குழந்தை சத்தியா என்போர் வெளி யில் வரவும் சரியாக இருந்தது.
அவர்களைத் தொடர்ந்து அம்மாவும் வந்தாள். 'அம்மா இது என்னுடன் படிக்கும் டெவீனா ஸேர்லிங், லிப்ட் தந்தாள். ' அத்தனைபேரும் அவளை ஏறிட்டுப் பார்த்தனர்.
Os)
அம்மா ராகவனுடன் முகம் பார்த்துப் பேசிப் பல நாட்களாகி விட்டன. டெவீனாவுடன் நடுச் சாமத்தில் மகனைக் கண்ட அதிர்ச்சி அவளை மிகவும் தாக்கி விட்டது என்பது அவனுக்குப் புரிந்தது. W

Page 26
44 அவனும் சில வருடங்களும்
மகாலிங்கம் தனக்குத் தெரிந்த கற்பனைகளையெல்லாம் விரித்து விட்டிருக்கலாம். அம்மாவின் உலகம் ராகவனின் உலகத்திலிருந்து அப்பாற்பட்டது என்பது அவனுக்கு தெரியும். "எனது சினேகிதன் ஒருத்தனுக்குச் சுகமில்லாமல் வந்தது. அதுதான் அவனைக் கொண்டு போய் சவுத் லண்டனில் சேர்த்துவிட்டு வந்தோம்.'
அவன் அம்மாவுக்குச் சொன்னதை எவ்வளவு தூரம் நம்பினாள் என்று தெரியாது.
நான்கு குழந்தைகளும் ஏதோ கடவுள்துணையால் நல்லப டியாக வாழ்கிறார்கள் என்று நிம்மதியாக இருந்தவனுக்குக் கடந்த சில மாதங்களாக நிம்மதியில்லை என்பது முகத்தில் தெரிந்தது.
அவனுக்கு அம்மாவுக்கு முழுக்க முழுக்கத் திருப்தி தரும் வழியில் நடந்து கொள்வது என்பது முடியாத காரியமாகப் பட்டது. அதனால் பெரும்பாலும் தேவையானவற்றை மட்டும் பேசிக் கொள்வது என்று முடிவு கட்டிக்கொண்டான். கல்லூரி யில் இவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து விட்டார்கள்.
ராகவனின் பிரிவில் பிலிப், டெவீனா, ஸ்ரீவன், மைக்கல், ஜேன் என்று ஆறுபேர் குறிப்பிடப்பட்டார்கள்.
மைக்கல் ஒலிப் பதிவில் மிகவும் திறமையானவன் என்று தெரியும். −
திரைப்படப் பட்டப் படிப்புக்கு வருமுதலே ஒரு மியுசிக் கொம்பனியில் வேலை செய்தவன்.
ஸ்ரீவன் அமெரிக்காவில் ஒரு நாடகக் கம்பனியில் மிக வும் அனுபவம் பெற்றவன். அத்துடன் ஸ்கிரிப்ட் எழுதுவதில் மிகவும் திறமையானவன்.
ராகவனும் டெவீனாவும் தங்கள் பிரிவில் கமரா வேலை செய்வதை விரும்பினார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 45
ஜேன் புரடக்ஸனின் பெரும்பாலான வேலைகளில் பங் கெடுத்தாள்.
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு விரிவுரையாளர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.
இவர்களின் பிரிவுக்கு மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்டைன் பொறுப்பாக இருந்தது, ராகவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரைக் கண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான்.
"உங்கள் குறுப்புக்குப் பொறுப்பாக இருப்பதில் மிகவும் சந்தோசப்படுகிறேன். வித்தியாசமான கலாச்சாரப் பின்னணி, குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களின் கலைச் சிந்தனை எப்படித் திரைப்படமாகப் பிரதிபலிக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்."
ராகவனுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் சாதாரணமான வையாகத் தெரியவில்லை. ஒரு தீர்க்க தரிசனமான வார்த்தைக ளாகப் பட்டன.
"பிலிப்பும், டெவீனாவும் மிகவும் வசதியான ஆங்கில வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். மைக்கல், நீ, என்போல கலாச் சார வேறுபாடுகள் மட்டுமல்ல, குடும்ப உறவுகளிலும் வித்தி யாசமாக வளர்க்கப் பட்டவர்கள்; ஸ்ரீவன் தன்னை முதன் நாளே யாரென்று அடையாளம் காட்டி விட்டது நிம்மதியான விடயமாக இருக்கிறது. இல்லை என்றால் சில மாணவர்கள் சில கால கட்டத்தில் ஸ்ரீவனைப் புரிந்து கொள்ளாமல் விட்டால் அந்த நிலையும் பல குழப்பங்களையும் கொண்டு வரலாம்."
ஸ்ரீவன் அடிக்கடி சுகவீனமாக வரும் நிலையை அதிபருக் குச் சொல்லலாமோ என்று ஒரு கணம் யோசித்தான். ஆனாலும் அது ஸ்ரீவனின் தனிப்பட்ட விடயம் என்று மெளனமானான்.

Page 27
46 அவனும் சில வருடங்களும்
'ராகவன் உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். எங்கள் கல்லூரிக்குப் பெருமை தரவேண்டும் என்று எதிர்பார்க் கிறேன். உனது மனம் திறந்து பேசும் சுபாவம் எனக்கும் பிடித்து விட்டது. இனி வரும் மூன்று வருடங்களையும் மிகவும் பொறுப்பான முறையில் பாவிக்கப் பழகிக் கொள். என்னிடம் எதுவும் தேவையாயிருந்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் கட்டாயம் வரவும்.'
நன்றி சொன்னான். தனக்குச் சொன்ன அறிவுரைகளை மற்ற மாணவர்களுக்கும் சொல்லியிருப்பார் என்று அவன் உணர்ந்து கொண்டான்.
"கெட்டித்தனமான இரண்டு பெண்கள் உனது குறுப்பில் இருக்கிறார்கள். நல்ல புரடக்ஸனாக ஏதும் செய்யுங்கள். முதலாம் வருடத்திலிருந்து உங்கள் திறமையை அவதானித்துக் கொண்டிருப்பார்கள்."
புவனா அறிவுரை சொன்னாள். அன்ரோனியோ தன்னு டைய சினேகிதன் ஒருத்தனின் புரடக்ஸனுக்குக் கமரா வேலை செய்ய டெவீனாவையும் ராகவனையும் உதவி செய்ய முடி யுமா என்று கேட்டது ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"நாங்கள் எங்கள் முதலாவது டேர்ம் புரடக்ஸன் இன்னும் தொடங்கக் கூட இல்லை." ராகவன் தயங்கினான்.
"தெரியும். டெவீனாவின் 8, MM புரடக்ஸனைப் பார்த் தேன். அவள் இங்கு வருவதற்காக எடுத்த பத்து நிமிட புரடக்ஸன் பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன்.
அன்ரோனி கேட்ட போது தான் டெவீனாவின் 8. M.M. படத்தைப் பார்க்கவில்லை என்று சொன்னான்.
"பியுட்டிபுல் வேர்க். தகப்பனின் தேயிலைத் தோட்டத்து வேலையாட்களை எடுத்த படம். என்னவென்றுதான் அப்படி
ஒரு பணக்கார மனுஷனுக்கு இப்படி ஒரு இளகிய மனம் படைத்த பெண் பிறந்தாளோ தெரியாது.”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 47
அன்ரோனியோ தான் ஒரு இடது சாரி என்றும் தனது குடும்பம் இத்தாலியில் காலம் காலமாக கம்யூனிஸ்டுகளாக இருந்து முசோலியின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர் கள் என்றும் சொல்லியிருக்கிறான்.
பிலிப்பை மைக்கலுக்குப் பிடிக்காது, ஸ்ரீவனை ஏனோ தானோ என்று நடத்துபவன் பிலிப், டெவீனா பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று கிண்டலடிப்பவன். ஜேன், இவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது பிரச்சினையாக இருக்கப் போகிறதா அல்லது சுவாரசியமாக இருக்கப் போகி றதா என்று ராகவனுக்குத் தெரியவில்லை.
முதலாவது புரடக்ஸனுக்குத் தேவையான முதல் மீட்டிங் ஸ்ருடன்ஸ் பார் மூலையில் நடந்தது. மாணவர்களின் கூச்சல் ஒரு பக்கம், குடிப்போரின் கும்மாளம் ஒரு பக்கம், அத்துடன் சிகரெட் புகைபிடித்தாலே டெவீனாவுக்குப் பிடிக்காது.
“யாருக்கும் ஆட்சேபனையில்லை என்றால் எனது பிளாட் டில் அடுத்த மீட்டிங்குகளை வைத்துக் கொள்ளலாமே?
ஸ்ரீவன் எல்லோரையும் பார்த்துச் சொன்னான். 'நிறை யப் பீர் தருவாயா?" மைக்கல் கேட்டான்.
"நீ தேவையான அளவு பீர் வாங்கிக் கொண்டு வா எனக்கு ஆட்சேபனையில்லை." ஸ்ரீவன் திட்டமாகச் சொன்னான்.
"மைக்கல் புகைபிடிப்பதானால் வீட்டுக்கு வெளியில் - சாரி பிளாட்டுக்கு வெளியில் போய்ப் பிடிக்கணும்’ டெவீனா உத்தரவு போட்டாள்.
மைக்கல் முணு முணுத்துத் தன் அதிர்ப்தியைத் தெருவித் துக் கொண்டான்.
மகன் அடிக்கடி லேட்டாக வருவது அம்மாவுக்குப் பிடிக்க வில்லை என்பது அவளின் பேச்சிலிருந்து புரிந்தது.
‘'நீ எப்போது இந்தப் படிப்பைத் தொடங்கினாயோ அப்போதே எனக்கு நிம்மதி போய் விட்டது.'

Page 28
48 அவனும் சில வருடங்களும்
அம்மா இப்படி சலித்துக் கொண்டது அவனுக்கு ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருக்கவில்லை. இவன் திரைப்படக் கல்லூரிக்குப் போனதே அவளால் புரிந்து கொள்ள முடியாதது என்று அவனுக்குத் தெரியும்.
ஒரு நாள் பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்தபோது மைதிலி வந்திருக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் சத்தியா தன் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளுமில்லை, அம்மா தனியாக இருந்தாள். ராகவனுக்குப் பிடித்த சமையல் செய்து கொண்டிருந்தது, சமயலறையிலி ருந்து வந்த மணத்திலிருந்து தெரிந்தது.
அவள் முகம் கொடுத்துப் பேசாததற்குக் காரணம் தெரிந் தாலும் அவனாக அது பற்றி பேசத் தயாரில்லை.
"முகம் கழுவிக் கொண்டு சாப்பிட வா’ வெந்தயக் குழம்பு, பருப்புக்கறி, வெண்டிக்காய்ப் பொரி யல், பப்படம், ரசம், வடை அத்தனையும் செய்திருந்தாள் egy libLDT.
'கணேஸ் இந்தக் கிழமையும் வரல்லயா? ஏதோ பேச்சுக் காகக் கேட்டான். கணேஸ் வேல்ஸ் நாட்டில் வேலை செய்கி றான். கொம்பியூட்டர் எஞ்சினியர், எப்போதும் பிஸி என்று சொல்கிறான்.
அதற்கு மேலான பிஸி என்னவென்று தெரியும். வேல்ஸ் நாட்டில் ஒரு தமிழ் வீட்டிற் தங்கியிருக்கிறான். ராகவன் குடும்பத்தினருக்கு எத்தனையோ வருடமாகத் தெரிந்த குடும் பம்.
தியாகராஜா மாமா, வேல்ஸ் நாட்டில் ஒரு யூனிவர்சிட்டிப் பேராசிரியராக இருக்கிறார். அவர் மகளின் அழகு கணேசுக்குப் பிடித்து விட்டது என்று அவன் பேச்சிலிருந்து தெரிந்தது.
அம்மாவுக்கு அது பற்றி உள்ளார சந்தோசம் என்று தெரியும். கமலாவின் கண்களின் கவர்ச்சி அலாதியானது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 49
அவள் பதினைந்து வயதாகவிருந்தபோதே பாதையில் போவோரைத் திரும்பிப் பார்க்க வைத்தவள். கல கல வென்ற பெண்மை, சாந்தமான கண்கள், கெட்டிக்காரப் பெண். டென் ரிஸ்ட் ஆகப் பட்டமெடுத்து வேலை செய்கிறாள்.
தியாகராஜாவின் ஒரே ஒரு மகள். மகன் ஒருத்தன் டொக்ட ராகப் படித்துக் கொண்டிருக்கிறான்.
அம்மாவின் நிம்மதிக்கு இப்போது தான் தொல்லை தருவதாக அம்மா நினைப்பது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
டெவீனா வந்த நாளிலிருந்து அம்மாவின் முகத்தில் சந்தோசமில்லை.
"வெந்தயக் குழம்பு நல்லாயிருக்கும்மா." "அப்படியா’ அவள் குரலில் கிண்டல்.
'உங்கள் சமயலுக்கு யார் போட்டி போடுவார்கள் அம்மா’
"உனது வெள்ளக்காரப் பெட்டைக்குத் தமிழ்ச் சாப்பாடு சமைக்கத் தெரியுமா” அம்மாவின் குரலில் இப்போது கிண்ட லில்லை. அவனுக்கு எரிச்சல் வந்தது. ஒரு நடுச்சாமம் காரில் கூட்டிக்கொண்டு வந்த பெண்ணை அவனின் வாழ்க்கையுடன் இணைக்கிறாளே! 'ஒரு ஆணுடன் ஒரு பெண் பழகினால் அதற்குக் காரணம் ஒன்று மட்டும்தானா டெவீனா கேட்ட கேள்வியை அம்மாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது.
அவன் மறுமொழி சொல்லவில்லை. சொல்ல விருப்ப மில்லை, அம்மாவுடன் தேவையில்லாத பேச்சுக்கள் வைத்துக் கொண்டால் வீணான மனக்குழப்பங்கள்தான் பெருகும் என்று தெரியும்.
இருவரின் மெளனத்தைக் கலைப்பதையும் போல் டெலி போன் மணியடித்தது.

Page 29
SO அவனும் சில வருடங்களும்
இவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் அம்மாதான் எடுத் தாள். பின்னர் இவனைப் பார்த்தாள். "உனக்குத்தான் டெலி போன்’ அவள் குரலில் எரிச்சலும் ஆத்திரமும் இழையோடி யது. அவன் அம்மாவை ஒரக் கண்ணால் பார்த்துவிட்டு அம்மாவிடமிருந்து டெலிபோனை வாங்கினான்.
"ஹலோ ராகவன், ஹரிங்கேயில் பெரிய சண்டை என்று TV யில் காட்டுகிறார்கள். கவனமாக இரு" டெவீனா பதற்றத் துடன் சொன்னாள்.
ஜோய்ஸ் கார்டினர் என்ற கறுப்புப் பெண் போலிஸாரால் தாக்கப்பட்டாள். ஒரு கறுப்புப் பெண்ணை ஆங்கிலேயப் போலிஸார் அநியாயமாக நடத்தியதால் ஆங்கிலேயப் போலி ஸாருக்கும் கருப்பு இளைஞர்களுக்கும் தகராறு நடந்து கொண் டிருந்தது தெரியும். அந்தக் கலவரம் அன்றிரவு பூகம்பமாக வெடித்தது.
ராகவன் அன்றிரவு பெரும்பாலும் டெலிவிஷனுக்கு முன் உட்கார்ந்திருந்தான்.
ஹீத் பிளேக் என்ற போலிஸ்காரரைக் கறுப்பு இளைஞர் கள் அடித்துக் கொலை செய்து விட்டதாகச் செய்தி சொல்லப் பட்டது.
கட்டிடங்கள் உடைக்கப்பட்டன. பொலிஸ்கார்கள் எரிக் கப்பட்டன.
காலம் காலமாக அடக்கி வைத்திருந்த கறுப்பு இளைஞர்க ளின் ஆத்திரம் அன்றிரவு கரை புரண்டது.
மனிதர் ஒருத்தரை ஒருத்தர் அடக்க நினைத்தால் கடைசி யில் ஒடுக்கப்ட்ட மக்கள் கொதித்தெழுவார்கள் என்பதற்கு அடையாளமாக அன்று ஹரிங்கேய் நகரம் எரிந்தது. V இவன் வீட்டுக்கு ஒரு மைலுக்கு அப்பால் கலவரம் நடந்தாலும் பொலிஸ்கார்களின் சைரன்களும் போலிஸ்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 51
ஹெலிகொப்டர்களின் பயங்கர அலறல்களும் பயங்கரமான நிலையைப் பிரதிபலித்தது.
டெவீனா இன்னொரு தரம் போன் பண்ணினாள். "நி லமை சரியில்லா விட்டால் நாளை கொலிஜ்ஜ"க்கு வராதே. நான் வேண்டுமானால் வந்து கூட்டிக் கொண்டு வருகிறேன்."
‘'வேண்டாம்' அவன் அவசரத்துடன் மறுத்தான்.
அடுத்த கிழமை கலவரம் லண்டனில் பல இடங்களிலும் வெடித்தது.
இன ஒதுக்கலுக்கு எதிராகக் கறுப்பு இன இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு பிரித்தானிய அரசாங்கம் ஆட்டம் கண்டது.
பிரதம மந்திரி மார்க்கரெட் தச்சரின் மந்திரி சபையிலுள் ளோர் பலர் பண்டைக்கால பிரபுக்கள் பரம்பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
"அடிமைகளாக எங்களால் மேற்கிந்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் கூலிகளாக பிரித்தானியா வுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் எங்களுக்கெதிராகப் போர் தொடுப்பதா'
மந்திரி சபை தனது போலிஸ் பட்டாளத்திற்கு அதி முக்கிய அதிகாரங்களைக் கொடுத்தது. அதன் எதிரொலியாய் லண்டனில் மட்டுமல்லாது இங்கிலாந்தில் பல பாகங்களிலும், பேர் மிங்காம், லிவர்பூல், லூட்டன் போன்ற பாகங்களிலும் கலவரம் வெடித்தது.
இலையுதிர் காலத்தில் மொட்டையாய் நிற்கும் மரங்கள் கலவரத்தில் பற்றியெரிந்த கட்டிடங்களின் பின்னணியில் பயங் கர எலும்புக் கூடுகளாகப் பிரமை தந்தன.

Page 30
52 அவனும் சில வருடங்களும்
பிதிக்ஸ்ரன் நகரில் கோடிக்கணக்கான பெறுமதி பெற்ற கடைகள், கட்டிடங்கள், அரசாங்க ஸ்தாபனங்கள் கலவரத்தில் நாசமாயின. பிரபு கார்மன் என்பவரின் தலைமையில் அரசாங் கம் ஒரு விசாரணைக் கொமிஷனை நியமித்தது.
லண்டனில் நடக்கும் கலவரத்தின் எதிரொலி கல்லூரிகளி லும் பிரதிபலித்தது.
"இந்தக் கொடுமைகளைப் பார்த்து மனம் எரிகிறது.*
டெவீனா சொன்னாள்.
மைக்கல் வெடித்தான். 'கறுப்பு நிற மக்கள் என்றால் காட்டு மிராண்டிகளாக நினைத்து நடத்தினால் எப்படி அவர்கள் தாங்குவார்கள்?"
"இலங்கையில் சிங்களவர் தமிழர்களை யடக்குகிறார்கள். உலகில் பல பாகங்களிலும் சாதி, மத அடிப்படையில் மனிதர் கள் அடக்கப்படுகிறார்கள். அடக்கப்பட்ட மனிதர்கள் எப்போ தும் அடங்கியிருப்பதில்லை. எப்போதோ ஒரு நாள் சுதந்திரத் திற்காகப் போராடாமல் இருக்க மாட்டார்கள்."
இவர்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த புவனா கேட்டாள். "அப்படி என்றால் இந்தியாவில் ஏன் கோடிக்கணக்கான மக்கள் வர்ணாஸ்ரமம் என்ற போர்வையில் மனிதத் தன்மையற்று நடத்தப்படுகிறார்கள். அவர்கள் எப் போது போராடுவார்கள்."
அவள் கேள்வி பிலிப்புக்கு விசித்திரமாக இருந்திருக்க வேண்டும். புவனாவை ஆர்வத்துடன் பார்த்தான். "இங்கிலாந் தில் எப்படி மறைமுகமான சட்ட திட்டங்களால் கருப்பு நிற மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அதே போல் இந்தியாவில் பலதரப்பட்ட முன்னுக்குப் பின் முரணான தத்துவங்களால் மக்கள் மதவாதிகள் குழப்பி வைத்திருக்கிறார்கள். இந்த நூற் றாண்டில் மகாத்மா காந்தி மனித நேயத்தின் மேன்மையை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 53
அஹிம்சா வாதியில் போதித்ததை உலகத்தின் பெரும்பகுதி யைத் தனது ஆட்சியில் வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தி யத்தின் அதியுன்னத அதிகாரமே தலை வணங்கியது. அதே நேரத்தில் அந்த புனித உயிரைக் குடித்தவன் கடவுளின் பிரதி நிதி என்று சொல்லிக் கொள்ளும் பிராமணியன் ஒருத்தனே. உலகத்தில் அடக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் அடக்கி வைக்க எந்த வித தந்திரத்தையும் பாவிக்க அதிகார வெறி கொண்டவர்கள் தயங்கப் போவதில்லை. மதத்தை ஒரு ஆயுத மாகப் பாவிப்பார்கள், மொழியை ஒரு கருவியாகப் பாவிப் பார்கள். நிறத்தை ஒரு அதிகார சின்னமாகப் பாவிப்பார்கள்.’
"அதையெல்லாம் பார்த்துக் கொண்டு மெளனமாக இருப் பது அப்படியான கொடுமையானவர்களுக்கு எங்கள் சம்மதத் தைக் கொடுப்பது என்பதாகும். ஒரு தனி மனிதனின் சுயமை நேர்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்."
டெவீனா உணர்ச்சியுடன் பேசினார்.
"அப்படியானால் உனது தகப்பனிடம் சொல்லி அவரு டைய தேயிலைத் தோட்டங்களை எல்லாம் கென்யா மக்களி டம் ஒப்படைக்கச் சொல்" ஜேன் கோபத்துடன் கூறினாள்.
"இன்னும் இருநூறு வருடங்களில் உலகத்தில் வெள்ளை யரின் தொகை பத்து வீதமாக மட்டுமே இருக்கும். இருந்தும் அவர்கள்தான் அதிகாரத்தை வைத்திருப்பார்கள். அமெரிக்கா தன்னால் முடிந்தவரை உலக நாடுகளில் குழப்பத்தையுண்டாக் கும். பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறும் நாடுகளைத் தன் கைப்பாவையாக வைத்துக் கொள்ளும். அமெரிக்காவின் தந்தி ரத்தில் ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் பெரிய சர்வாதிகள் தோன்றுவார்கள். அவர்களின் ஆட்சியில் சாதாரண மக்கள் முன்னேறப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் தலைவர்க ளின் குடும்பங்கள் மட்டும் குபேர வாழ்க்கை நடத்தும்."

Page 31
34 அவனும் சில வருடங்களும்
ராகவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அதிபர் ஜான் பேர்ன்ஸ்டைன் வந்து சேர்ந்தார்.
"என்ன அப்படியே சோர்ந்துபோய் இருக்கிறீர்கள்." "லண்டனில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்கள் மிக வும் துக்கமாக இருக்கிறது."
ஸ்ரீவன் அலுப்புடன் கூறினான். அதிபர் பாசத்துடன் அந்த இளம் மாணவர் கூட்டத்தைப் பார்த்தார்.
"உங்கள் சிந்தனைகளின் தெளிவு உங்கள் சினிமா புரடக் ஸனில் தெரியட்டும். ஞாபகமிருக்கிறதா? போன கிழமை சினிமாவும் சமுதாய வளர்ச்சியும் என்ற தலைப்பில் நான் நடத்திய சொற்பொழிவு? ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கி றேன். அமெரிக்காவிலுள்ள பிற்போக்கு வாதிகள் முற்போக்கு சிந்தனையுள்ளோரை சிறை பிடித்த போது சார்ளி சப்ளின் போன்ற சினிமாக்காரர் வாய்மூடி மெளனிகளாக இருந்தார் களா? அவர் ஹிட்லரைக் கிண்டலடித்து எடுத்த "த டிக்டேட் டர் பார்த்தீர்கள். சினிமாத் துறையில் ஒரு சிந்தனையாளரின் படம் எவ்வளவு தூரம் சமுதாயச் சீரழிவை அம்பலப்படுத்துகி றது என்பது தெரிகிறதா? உங்கள் சிந்தனைகளைச் சீர்படுத்துங் கள், சிந்தனையைச் செயல்படுத்துங்கள்."
அன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அம்மாவின் முகத் தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
அவளாகச் சொல்லும்வரை தானாகக் கேட்டு அவள் கோபத்தைக் கூட்ட விருப்பமில்லாமல் தன் அறைக்குள் நுழைந்து கொண்ட்ான்.
மைதிலியைக் காணவில்லை. யாரோ சினேகிதி வீட்டுக் குப் போயிருக்கலாம். ரேடியோவைத் திருப்பிவிட்டான். லண் டனில் நடக்கும் கலவரங்கள் பற்றி சமுக அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 55
கீழே சத்தம் கேட்டது. கீதா குழந்தையுடன் வந்திருக்கி றாள் என்று தெரிந்தது. சத்தியா ஓடிவந்து மாமாவில் ஏறிக் கொண்டாள். 'எப்படி பாலுமகேந்திரா' மகாலிங்கம் ராகவ னைக் கேட்டான்.
மகாலிங்கத்தின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் தனது தமக்கையுடன் பேசிக் கொண்டிருந்தான்.
கீதாவின் முகத்தில் புதுப் பொலிவு? என்னவாயிருக்கும்? மகாலிங்கம் ஒரு புதுக்கார் வாங்கியிருக்கலாம் அல்லது வீட் டில் இன்னொரு மாற்றம் செய்து கொண்டிருக்கலாம். ஏதோ ஒன்று செய்யாமல் மகாலிங்கத்தால் இருக்க முடியாது. அது வும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயம் தன்னை ஒரு பெரிய மனிதனாக மதிக்க வேண்டும் என்பதற்கான அளவுப் படிகளாக எதையும் செய்பவன் மகாலிங்கம்.
“என்ன முகத்தில் சந்திர சூரியரெல்லாம் பளிச்சிடுது’’ தமக்கையைச் சீண்டினான் ராகவன்.
மகாலிங்கம் திரும்பிப் பார்த்தான். “உமக்கு ஒரு மருமகன் பெற்றுத் தரப்போகிறாளாம். எப்போது பெட்டை பெற்றுத் தரப் போகிறாய்."
"அக்கா ரொம்ப சந்தோசம்’ ராகவன் பாசத்துடன் தமக் கையைப் பார்த்தான். சத்தியாவுக்கு மூன்று வயதாகிறது. சத்தியாவுக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறந்தால் அவள் எவ்வளவு சந்தோசப்படுவாள்?
அந்த நேரம் ஆனந்தன் வந்து சேர்ந்தான். பேச்சு திசைமாறி யது. ஆனந்தன் இலங்கையில் தமிழ்ப் பேராளிகளுக்குள் நடக்கும் மோதல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மகா லிங்கத்திடமிருந்து தப்பியோட நினைத்த ராகவனுக்கு ஆனந்த னின் வருகை சந்தோசமாக இருந்தது. இருவரும் வெளியில் நடந்தனர். குளிர் காற்றும் மழையும் உடலைச் சில்லிடப் பண்ணியது.

Page 32
56 அவனும் சில வருடங்களும்
"இலங்கைச் சிங்கள ராணுவத்தை ஒன்றாகத் திரண்டு எதிர்ப்பதற்குப் பதிலாக இப்படி ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொண்டிருக்கிறார்களே’ ராகவன் வேதனைப் பட்டான்.
'இது எந்த விடுதலைப் போராட்டத்திலும் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி. விடுதலைப் போராட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு சமுதாய விரோதிகளும், புல்லுரிவிகளும் மக்களைப் பல்வேறு விதங்களில் கொடுமைப் படுத்துவதைத் தவிர்க்க வேறு வழியில்லை."
"தமிழனைத் தமிழன் கொன்று குவிப்பதுதான் அதற்கு வழியா’
"சமுதாயத் துரோகிகள் யாராயிருந்தாலும் அவர்களை யடையாளம் கண்டு தண்டனை கொடுப்பது மக்களின் விடு தலை போராட்டத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண் டோரின் முக்கிய கடமை என்று நினைக்கிறேன்."
"எங்களையே நாங்கள் அழித்துக் கொண்டால் எங்கள் மக்களின் விடிவு எப்படிப் பிறக்கும்."
"எங்கள் மக்களின் விடுதலை எப்போது கிடைக்கும் என்று திகதி, நட்சத்திரம் பார்த்துச் சொல்வதா? எப்போது மக்களும் விடுதலை வீரர்களும் ஒன்றாகத் திரண்டு அநியா யத்தை எதிர்க்கிறார்களோ அப்போதுதான் விடுதலை வரும். மக்கள் ஒன்றிணையாத எந்த விடுதலைப் போராட்டமும் வெற்றியடையாது. மக்களின் உணர்வுகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களாக மட்டுமல்லாது, அறிவு பூர்வமாக ஒரு விடுதலையுணர்வாகப் பரிமாணம் எடுக்கும்வரை மக்கள் பார்வையாளர்களாகத்தானிருப்பார்கள். பங்களிப்பாளர்களாக மாறாதவரை போராட்டம் வெற்றியடையாது."
ஆனந்தன் பேச்சில் தெளிவு நம்பிக்கை, பரிபூரணமாக எதிர்பார்ப்புத் தெரிந்தது.
“உமது படிப்பு எப்படிப் போகிறது" என்று கேட்ட ஆனந்தன் ராகவனையுற்றுப் பார்த்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 57
"என்ன கேட்கப்போகிறாய்" ராகவன் நண்பனின் முகத் தையாராய்ந்தபடி கேட்டான்.
"அன்று நான் வீட்டுக்கு வந்தபோது நீ இருக்கவில்லை. அம்மா உன்னைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள்.'
ராகவன் மெளனமானான். பின்னர் பெருமூச்சு விட்டபடி வானத்தைப் பார்த்தான்.
குளிர்ந்த மேகக் கூட்டங்கள் மிகச் சோர்ந்த கிழவிபோல் மெல்லமாக ஊர்ந்து கொண்டிருந்தது. மேகக் கூட்டங்கள் நடுவே கண்ணடிக்கும் நட்சத்திரங்கள் நீலப்பட்டில் பதித்த வைரங்கற்போல் கண் சிமிட்டின.
இருவரும் ஹைரோட்டில் நடந்து கொண்டிருந்தார்கள். கிறீன் ஸ்ரீட் என்று சொல்லப்படும் அந்தப் பகுதி ஒரு நாளும் தூக்கம் காணாத பகுதி. துருக்கிய, சைப்ரஸ் வியாபாரிகளின் கடைகளால் நிறைந்த பகுதியது. எப்போதும் சந்தடியாயிருக் கும்.
"அம்மாக்கள் எப்போதும் எதையோ நினைத்துக் கொண்டு துன்பப் படுவார்கள், மற்றவர்களுக்காகத்துக்கப்படு வதில் சந்தோசம் காண்பவர்கள் அம்மாக்கள் என்று நினைக்கி றேன். ப்ராய்ட் சொல்வதுபோல் சந்தோசங்களைத் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதன் மூலம் அதாவது “மஸாக்கி ஷம் என்று சொல்வதன் மூலம் பெற்றுக் கொள்பவர்கள் அம்மாக்கள்." ராகவன் அலுத்தபடி சொன்னான்.
‘'நீ நடுச் சாமத்தில் வெள்ளைக்காரப் பெண்ணுடன் வந்தது பற்றி மிகவும் துக்கப்பட்டாள்.'
"சும்மா துக்கப்படாவிட்டாலும் மகாலிங்கம் துக்கப்பட வைத்திருப்பான்."
"எல்லாத் தாய் தகப்பனும் தங்கள் குழந்தைகள் தங்கள் கலாச்சாரத்துடன் சேர்ந்து நிற்பதைத் தான் விரும்புவார்கள்."

Page 33
58 அவனும் சில வருடங்களும்
"நான் அப்படி என்ன வித்தியாசமாகச் செய்து விட்டேன். காற்சட்டைக்குப் பதில் வேட்டியணியட்டுமா??
"சும்மா எரிச்சல் படாதே"
"கலாச்சாரம் என்று சொல்கிறாயே அது என்ன? ஏதோ கட்டி வைத்த கோபுரமா சார்ந்து நிற்க? ஆனந்தன் கலாச்சாரம் ஒவ்வொரு வினாடியும் மாறுகிறது. மற்றக் கலாச்சாரத்துடன் சேர்கிறது. நேற்றைய சிந்தனைகளையும் இன்றயை சிந்தனைக ளையும் ஒரே விதத்தில் எடைபோட முடியாது. மனித அனுப வங்கள் வித்தியாசமானவை. அனுபவங்கள் மனிதனின் சிந்த னையைத் தெளிவாக்குகிறது, அல்லது சில வேளைகளில் மாற்றமடையப் பண்ணுகிறது. அம்மா நினைப்பது போல் நான் நினைக்க முடியாது. அம்மா எதிர்பார்ப்பதுபோல் நான் வாழ முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சுயமான சிந்தனை யில் வழிநடத்தப்படுவதை மற்றவர்களுக்காக வாழ்வது என்று சொல்வது மிகவும் போலித்தனமான விடயம். சுய நலமில் லாத எந்த மனிதனும் உலகிலில்லை."
"ஆவேசப்படாதே, அம்மா உனது நன்மையைத் தான் எதிர்பார்க்கிறாள்.'
ஆனந்தன் நண்பனின் முதுகிற் தட்டிக் கொடுத்தான். 'நீ சினிமாப் படிப்புக்கு மட்டும் போகவில்லை. சினிமா உலகத்தில் நுழைந்திருக்கிறாய். மிகவும் மாயையான உலகம். போலி அனுபவங்களின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதே."
ராகவனுக்கு ஆனந்தன் என்ன சொல்கிறான் என்று புரிந் தது. வீட்டுக்கு வந்தபோது அம்மாவையும் மைதிலியையும் தவிர யாருமில்லை.
மைதிலி அழுதிருக்க வேண்டும். முகம் சிவந்திருந்தது. அழுகையிலும் ஒரு நாகரீகம், அழுத பெண்ணின் சோகம் தெரியவில்லை. அழுகையிலும் மைதிலியின் பிடிவாதமான, அல்லது சுயமையான தோற்றம் பரிமளித்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 59 ر
“ஏன் எனக்கு இப்படித் தலையிடியை இருவரும் தருகி ஹீர்கள்."
அம்மா விம்மினாள்.
என்ன செய்து விட்டம்? ராகவன் குழம்பி விட்டான். மைதிலி மெளன சித்திரமாக விருந்தாள்.
அம்மாவிடம் தர்க்கம் பண்ணுவதா அல்லது மைதிலி போல மெளனத்துடன் அம்மாவைச் சமாதானப்படுத்துவதா?
தன் அறைக்குள் போய்விட்டான். அடுத்த கிழமை நடக் கும் செமினாருக்குத் தேவையான நோட்சைப் படிக்க வேண்டி யிருந்தது.
மனம் எதிலும் செல்லவில்லை.
அம்மாவை நினைக்கப் பரிதாபமாகவிருந்தது. சாதாரண வாழ்க்கையின் சாதாரண எதிர்பார்ப்புக்களுடன் வாழ்பவள் அம்மா. தனது மகன் டொக்டராகவோ, எஞ்சினியராகவோ வரவேண்டும் என்று எதிர்பார்த்திருப்பாள். இலங்கைத் தமிழ ரின் முக்கிய தொழில்கள் மெடிசின், எஞ்சியனரிங், சட்டத் துறை இப்போதெல்லாம் கொம்பியூட்டர் இதை விட்டு ராக வன் கமராவுடன் அல்லது அவளுக்கு எரிச்சல் தருவது அவ னால் புரிந்து கொள்ள முடியும் விடயமாக இருந்தது.
அப்பா இருந்தால் அவனுக்கு ஆதரவு தந்திருப்பார் என்று தெரியும். அவனது பதினாறாவது வயதில் மலிவான கமராவை வாங்கிக் கொடுத்தவர். என்ன நினைத்துக் கொடுத்திருப்பார்? மகன் ஒரு காலத்தில் லண்டன் திரைப்படக் கல்லூரிக்குப் போவான் என்று நினைத்திருப்பாரா? அர்த்த ராத்திரியில் ஆங்கிலேயப் பெண்ணுடன் வந்து அம்மாவின் எரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்வேன் என்று நினைத்திருப்பாரா?

Page 34
SO − அவனும் சில வருடங்களும்
நினைவுகள் புரண்டன.
அடுத்த சில கிழமைகள் இவர்களின் தயாரிப்பான வினி மண்டேலா பற்றி ஒரு சிறிய தயாரிப்பு வளர்ந்தது.
ஜேனின் முயற்சிக்கு எல்லோரும் சம்மதித்தார்கள். இந்த நூற்றாண்டின் மகத்தான ஒரு இனவிடுதலைத் தலைவனான மண்டேலா சிறையிலடைக்கப் பட்டபோது மண்டேலாவின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் வினிபி ரட் மண்டேலாவின் சேவையை அகில உலகிலுமுள்ள பெண் விடுதலையாளர்கள் எப்படிப் போற்றுகிறார்கள் என்பதற்கு ஜேனின் இடைவிடாத முயற்சி சாட்சி சொன்னது.
பிலிப்புக்கு இம்மாதிரியான தயாரிப்புக்கள் வித்தியாச மாக இருந்திருக்க வேண்டும். திரைப்படப் பட்டப் படிப்பு படிக்க வரமுதல் ஒரு பெரிய அட்வர்டைசிங் கொம்பனியில் வேலை செய்தவன்.
ஆண்களின் தசையாசைக்குத் தங்கள் உடம்பை அடகு வைக்கும் பல பெண்களின் அங்கங்களைப் படம் எடுத்தவ னுக்கு வினியின் விடுதலைப் பேச்சுக்கள் வித்தியாசமானவை யாக இருந்திருக்க வேண்டும்.
மைக்கலும் ஸ்ரீவனும் தங்கள் மனம் நிறைந்த உழைப் பைக் கொட்டினார்கள்.
தயாரிப்பின் காட்சி முடிந்ததும் இவர்கள் குறுாப் அதிபரா லும் மற்றவர்களாலும் மிகவும் பாராட்டப் பட்டது.
"மிகவும் அருமையான தயாரிப்பு’ புவனா சந்தோசத்து டன் ஜேனையும் டெவீனாவையும் தழுவிக் கொண்டாள்.
"அடுத்த வருடம் நீயும் டெவீனாவும் எனது ஃபைனல் இயர் புரடக்ஸனுக்கு கமரா வேலை செய்வீர்களா’ ஆவலுடன் கேட்டாள் புவனா.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 6
ராகவனும் டெவீனாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
"என்ன எனது படத்துக்கு வேலை செய்ய உங்களுக்கும் பிடிக்காதா"
"அப்படியில்லை, அது பெரிய சந்தோசமான விடயமென நினைக்கிறேன்" டெவீனா சந்தோசத்துடன் கூறினாள்.
‘'நீ என்ன சொல்கிறாய்?
புவனா ராகவனைக் கேட்டாள். 'நான் உனது படத்திற்கு வேலை செய்யக் கொடுத்து வைத்தவன்’ ராகவன் சந்தோசத்து டன் சொன்னான்.
அன்ரோனியோவின் சினேகிதன் மார்ட்டீனின் படத்திற் குத் தங்களை உதவியாளர்களாக அழைத்ததையும் சொன்னான் ராகவன்.
"அடேயப்பா, முதல் வருடத்திலேயே மிகவும் பிரபல மான சோடிகளாகிவிட்டீர்கள். ஆசீர்வாதங்கள்’ புவனா தன் பாசத்தைக் காட்டிக் கொண்டாள்.
"ஆனால் ஒரு பிரச்சினை, மார்ட்டின் தனது தயாரிப்பை பரிஸ் நகரில் செய்வதாக யோசித்திருக்கிறான். அதுவும் நத்தார் விடுமுறையில் வைத்திருக்கிறான்."
ராகவனின் குரலில் தயக்கம். "ஏன் நீ கிறிஸ்மஸ் பார்ட்டி வைத்துக் கூத்தாடப் போகிறாயா’ புவனா குறும்பாகக் கேட் டாள்.
'ஓ நோ, எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. டெவீனா வின் தாய் தகப்பன் என்ன சொல்வார்களோ தெரியாது" ராகவன் தயக்கத்துடன் சொன்னான்.
"என்னைப் பற்றி அக்கறைப் படுவதற்கு நன்றி. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத் தைத் தவறவிட்டால் ஒன்றும் தலை போய் விடாது. எவ்வளவு

Page 35
62 அவனும் சில வருடங்களும்
தூரம் எனது படிப்புக்குத் தேவையான அம்சங்களைப் படிக்க முடியுமோ அவ்வளவு தூரம் அனுபவங்களைப் பெறத்தெண் டிக்கிறேன்."
"நீ ஒரு வித்தியாசமான இங்கிலிஸ் பெண், எத்தனையோ பேர் எப்போது கிறிஸ்மஸ் என்று காத்திருக்கிறார்கள். நீ என்றால் உனது அருமையான ஹொலிடேயைப் படப்பிடிப் பில் செலவழிக்கப் போகிறேன் என்கிறாய். படப்பிடிப்பைத் தவிர வேறேதும் காரணங்கள் உள்ளதா?’ புவனாவின் குரலில் குறும்பு, சாடையாக ராகவனைப் பார்த்தாள்.
"அப்படி ஒன்றுமில்லை" டெவீனா சட்டென்று சொன் னாள்.
"பாரிசுக்கா போகிறாய்"
மைக்கல் வாயைப் பிழந்தான். "இங்கே பார் மைக்கல், கஞ்சா போட்டுக் கொண்டாயா னால் உனது கற்பனை தாறுமாறாப் போகும். தயவு செய்து ஏதும் அநாவசியக் கேலிப் பேச்சுக்கள் வேண்டாம்.'
ராகவன் மைக்கலின் வழக்கமான கிண்டள் சிரிப்பைக் கண்டதும் மேற்கண்டவாறு சொன்னான்.
“என்ன பாரிசுக்கா போகிறான்." அம்மா வியப்புடன் கேட்டாள்.
'அம்மா அவனுக்கு இருபத்தைந்து வயதுக்கு மேலாகி விட்டது. ஏன் இன்னும் முந்தானையில் முடிந்து வைக்கப் பார்க்கிறீர்கள்???
அம்மாவைப் பார்க்காமலே மைதிலி முணுமுணுத்தாள். "பொன்னம்பலம் மாமா வீட்டுக்கு ஒருதரம் போய் எட்டிப்பார். போன் பண்ணிப் பார்த்துவிட்டுப் போ." அம்மா வின் குரலில் கட்டளை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 63
பாரிசில் எவ்வளவு தூரம் பிஸியாய் இருப்பான் என்று தெரியாது. மார்ட்டினும், அன்ரோனியாவும் என்னென்ன திட் டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற முடியவில்லை. அத்துடன் பொன்னம்பலம் மாமா குடும்பத்தைப் பார்க்க அவனுக்கு ஆவலுமிருந்தது.
மாமாவின் இரு பெண் குழந்தைகளும் இப்போது மிக வும் மாறியிருப்பார்கள்.
அவர்களை கடைசியாக இந்தியாவில் வைத்து இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்தான்.
அம்மாவின் தகப்பன் இந்தியாவுக்கு வந்திருந்து தன் மகளை லண்டனிலிருந்து வரவழைத்திருந்தார். அப்போது 83ம் ஆண்டு தமிழர்க்கெதிராக நடந்த இனக் கலவரத்திலிருந்து தப்பி பொன்னம்பலம் மாமா குடும்பம் இந்தியா வந்திருந்தது. ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் போவதாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
பிறந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட ஆயிரக் கணக் கான தமிழர்களில் இவர்களில் குடும்பமும் ஒன்று.
பதினேழு வயதுப் பெண்ணாக சல்வார் கமிஸ் போட்டி ருந்த இந்திரா இப்போது பாரிஸ் பட்டணத்தில் ஜ"ன்ஸ் டீ சேர்ட்டுப் போட்டிருப்பாளா?
அம்மா மாமா குடும்பத்திற்குச் சில அன்பளிப்புக்கள் வாங்கிக் கொடுத்தாள். இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக் குக் கப்பலில் போவது என்று முடிவு செய்தான். மாணவர்க ளுக்குக் கிடைக்கும் உதவிப் பணத்தில் அனாவசியமாகச் செலவழிக்க விரும்பவில்லை. டெவீனா தான் பிளேனில் வருவதாகச் சொன்னாள்.
பாரிஸில் கார்டிநோட் ரெயில்வே ஸ்ரேசனிற் சந்திப்பதாக அன்ரோனி சொல்லியிருந்தான்.

Page 36
84 அவனும் சில வருடங்களும்
விக்டோரியா ஸ்ரேசனிலிருந்து டோர்ே துறைமுகம் போகும்போது மனதில் எத்தனையோ யோசனைகள். தங்கை மைதிலியின் முகத்தில் கொஞ்ச நாட்களாக ஏன் இவ்வளவு சோகம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த வருடம் படிப்பு முடியப் போகிறது. அம்மா சந்தோசப்படு வாள் என்று நினைத்ததும் முகத்தில் தன்னையறியாமல் புன்மு றுவல் தவழ்ந்தது.
“என்ன இது? மூன்று வருடப் படிப்பு முடியத்தான் பைத்தியம் பிடிக்கும் என்று நினைத்தேன். இப்போதே தன் பாட்டுக்குச் சிரிக்கத் தொடங்கிவிட்டாயே’
டெவீனா மூட்டை முடிச்சுக்களுடன் வந்து கொண்டிருந் தாள். நல்ல வேளையாக ராகவன் இருந்த இருக்கைக்கு முன்னால் ஒரு வெற்றிடம் காலியாயிருந்தது. உட்கார்ந்தாள்.
“என்னவென்று இந்த ரெயினில் நான் போகிறேன் என்று தெரியும்.”
'நீ அன்ரோனிக்கு போன் பண்ணியபோது நான் உன் னோடு இருந்தது தெரியாது. காலையில் பாரிஸ் ஸ்ரேசனில் சந்திக்கச் சொன்னாயே. ஞாபகமில்லையா?*
'ஆ சரி நீ ஏன் பிளேனில் போகவில்லை."
"அன்ரோனியோவோக்கு ஏன் வீண் சிரமம் கொடுப்பான் என்று யோசித்தேன். பிளேன் எடுப்பதானால் நாளைக்குக் காலையிற்தான் எடுக்க வேணும். என்னை எயார்போட்டுக்கு வந்து சந்திப்பதும் உன்னை ரெயில்வே ஸ்ரேசனில் வந்து சந்திப்பதும் அன்ரோனியோவுக்குச் சிரமமாயிருக்காதா."
இந்தப் பெண் எப்போதும் மற்றவர்களின் சுக துக்கங்க ளையே முதன்மைப் படுத்திப் பார்க்கிறாளே? ராகவன் தன் ஆச்சரியத்தைத் தனக்குள் அடக்கி விட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 65
"அத்தோடு கப்பலில் நீ தனியாகப் பிரயாணம் செய்யா மல் நான் பேச்சுத் துணையாக இருக்கலாம் என்று யோசித் தேன். பிடிக்காவிட்டால் நீ மெளனம் சாதிக்கலாம். நான் சுருண்டு படுத்துக் கொள்கிறேன். படுக்கை வசதிகளையும் அள்ளிக் கொண்டுதான் வருகிறேன். அன்ரோனியோ எங்களுக் குத் தங்குமிடம் எங்கே பார்த்திருக்கிறானோ தெரியாது. வசதி யான இடமில்லையில்லாவிட்டால் எங்கள் படுக்கைகளையே பாவிக்கலாமே?
ராகவன் ஒரு கொஞ்ச நேரம் அவளையே பார்த்தான். எத்தனை கவனமாக இந்தப் பெண் எதையும் யோசித்துச் செய்கிறாள்? "என்ன அப்படிப் பார்க்கிறாய்."
"உன்னையிப்படி வளர்த்த அம்மா மிகவும் கெட்டிக்காரி யாக இருக்கவேணும்.'
சட்டென்று டெவீனாவின் முகத்தில் ஒரு மாற்றம் யாரோ பறித்தெடுத்தாற்போல அவளின் பளிச்சென்ற சிரிப்பு மறைந்
தது.
முகத்தைத் திருப்பி ஜன்னலால் உலகத்தைப் பார்த்தாள். "அதோ பார், டோவர் துறைமுகம் தெரிகிறது." பேச்சை மாற்றுகிறாள் என்று தெரிந்தது. ஜன்னலால் பார்த்தான். இரவு ஒன்பது மணி லைட் வெளிச்சத்தில் துறைமுகம் ஆரவாரமாகத் தெரிந்தது.
"பாரிசுக்குப் போயிருக்கிறாயா? இல்லை என்று தலையாட்டினான். "எனது தாய்க்குப் பாரிஸ் பிடிக்கும். நான் அவளுடன் அடிக்கடி போயிருக்கிறேன் உலகத்தின் அழகான நகரங்களில் ஒன்று பாரிஸ் என்று உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். காதலர்களின் தேவலோகம் என்று அம்மா சொல்வாள்.'
அவள் சாதாரணமாகத்தான் சொன்னாலும் அவள் அவ னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு சொன்ன விதம் அவனுக்குத்

Page 37
66 அவனும் சில வருடங்களும்
தர்ம சங்கடத்தை யுண்டாக்கியது. பார்வையை ஜன்னலுக்கப் பால் துரத்தி விட்டான்.
"அன்ரோனியோ ஸ்கிரிப்ட் தந்தானா'
ராகவன் இல்லை என்று தலையாட்டினான். "என்ன இது? நாங்கள் நத்தார்க் கொண்டாட்டங்களையும் தியாகம் செய்து விட்டு, எங்கள் பணத்தைச் செலவழித்து பாரிசுக்குப் போகிறோம். மார்ட்டினும் அன்ரோனியோவும் என்ன நினைத்துக் கொண்டார்களாம், ஸ்கிரிப்ட் பார்க்காமல் என்னவென்று கமரா வேலை செய்வதாம்.'
டெவீனா முணுமுணுத்தாள். ரெயின் நின்றது. சாமான்க ளைத் தூக்கிக் கொண்டார்கள்.
இமிக்ரேஸன் ஆபிஸர் ராகவனின் டொக்குமென்ட்சைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
“ஸ்ருடன்ஸ் கார்ட் கொண்டு வந்தாயா’
அவனுக்குத் தன்னுடைய தவறு புரிந்தது. "நாங்கள் லண்டன் பிலிம் கொலிஜ்ஜிலிருந்து வருகி றோம், இதோ என்னுடைய கார்ட், என்னுடைய போய் பிரண்ட் தன்னுடைய கார்ட்டைக் கொண்டு வர மறந்து விட்டார். பிளிஸ் மன்னித்து விடுங்கள்."
இமிக்ரேஸன் ஆபிஸர் இருவரையும் மாறி மாறிப் பார்த் தார். பின்னர் ஒரு நட்டுச் சிரிப்புடன் 'ஹாவ் எ நைஸ் ரைம் இன் பரிஸ்’ என்று சொல்லி அனுப்பினார்.
C9 D
கப்பல் நடுக்கடலில் போய்க் கொண்டிருந்தது. இங்கி லாந்துத் துறைமுகம் கண்களிலிருந்து மறைந்து விட்டது. அடுத்த கரையில் பிரான்சு நாட்டின் வெளிச்சங்கள் தெரியத் தொடங்கவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 67
டெவீனா கப்பலின் மேற்தட்டில் நின்றபடி இருளில் பிளந்துகொண்டோடும் கப்பலின் விளிம்பைப் பிடித்தபடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தால்.
அங்குமிங்கும் சில சோடிகள் தங்களையணைத்து முத்த மிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கையில் இரண்டு கோக் கான்களுடன் மேலே வந்து சேர்ந்தான் ராகவன்.
அவள் ஆழ்ந்த நினைவில் தன்னையே பறிகொடுத்திருந் தாள். இவன் வந்ததை கவனிக்கவில்லை.
"இந்தக் குளிரில் காப்பி சாப்பிட்டிருக்கலாம்' அவன் அவள் கைகளில் கோக் கொடுத்தான்.
'எந்த உலகத்தைப் பிடிக்கும் யோசனை.' “போனகிழமை பார்த்த சத்தியத்ரேயின் பதர் பாஞ்சாலி" படம் ஏதோ ஞாபகம் வந்தது.'
"இங்கு குடித்துக் கும்மாளமிடும் இந்தக் கூட்டத்தைக் கண்டதும் இந்திய ஏழைக் குழந்தைகள் ஞாபகம் வந்ததா'
'இல்லை. இந்தியாவில் இப்படி வறுமை ஏன் இருக்கி றது என்று யோசித்தேன்.'
"இந்தியாவில் நீ இங்கிலாந்தில் பார்க்காத செல்வந்தர்களு மிருக்கிறார்கள். இந்தியாவின் சமுதாய அமைப்பில் எப்போ தும் சத்யத்ரே காட்டிய வறுமையை விடக் கூடிய வறுமை இருந்து கொண்டேயிருக்கும்.'
"இங்கிலாந்திலுள்ளதுபோல் அரசாங்கப் பணம் கிடைக் காதா மக்களுக்கு."
ராகவன் தன்னையறியாமல் சிரித்து விட்டான் "என்ன சிரிக்கிறாய்."
"இந்தியாவில் மட்டுமல்ல பெரும்பாலான வளரும் நாடு களில் அரசியற் தலைவர்களுக்குக் குடிமக்களின் நல்வாழ்க்கை

Page 38
38 அவனும் சில வருடங்களும்
யில் அக்கறையில்லை. தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் குபேர வாழ்க்கை வாழ மக்கள் பெயரில் செல்வத்தைச் சுருட்டிக் கொள்கிறார்கள். இந்தக் கொள்ளைக்காரர்கள் பாரா ளுமன்ற முறை என்ற கேலிக் கூத்தின் மூலம் மக்கள் வாக்கை எடுக்கிறார்கள்."
டெவீனா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். "என்ன அப்படிப் பார்க்கிறாய்? உனது அப்பா கென்யா நாட்டில் பெரிய தேயிலைத் தோட்ட முதலாளி என்று சொன் னாய். உனது தகப்பன் தனது வியாபார விடயமாக எத்தனை ஆபிரிக்க மந்திரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தாயா. '
அவள் மறுமொழி சொல்லவில்லை. முகத்தில் உலகத்து வறுமைக்கெல்லாம் வெட்கப்படும் சோகம் கவிழ்ந்து கிடந்தது.
“டெவீனா, உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தலைவர்கள் என்று இருப்பவர்களுக்கு மக்களின் நலத்தில் அக்கறை கிடையாது.'
“மக்கள் தங்கள் உரிமைகளுக்குப் போராட மாட்டார் ᏭᏏᎶrᎢfᎢ. * ?
அவன் விரக்தியுடன் சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய், கொடுமைக்காரர்கள் அழிக்கப் படு வார்கள் என்றுதானே நியதி இருக்கிறது."
'இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் ஒன்று பட்டுப் போராட முடியாத வகையில் சமயமும் சாதியமைப்புக்களும் மிகவும் கொடூரமான முறையில் மக்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது."
"இந்து சமயம் தர்ம்த்தின் அடிப்படையில் உண்டானதில் லையா’ அவள் குளிருக்கு ஒரு போர்வையை எடுத்து மூடிக் கொண்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 69
"குளிராயிருக்கிறது கீழே போவமா’
‘'வேண்டாம்.'
"ஏன்? "நத்தார்க் கொண்டாட்டங்களில் எல்லாரும் குடித்துக் கும்மாளமிட்டு மோதியடிக்கிறார்கள். அதை விட இவ்விடமி ருப்பது சந்தோசமாக இருக்கிறது."
"நீ வித்தியாசமான பெண்’ "நீயும்தான். எனக்குத் தெரிந்த ஆண்களில் நீ மிகவும் வித்தியாசமானவன் ராகவன்’’.
எப்படியான வித்தியாசம் என்று கேட்க நினைத்தவன் வாயெடுக்க முதல் அவள் பேசத் தொடங்கினாள்.
"சொல்லேன், மற்றவர்களுக்கு உதவி செய் என்று உனது இந்து சமயம் சொல்லவில்லையா.'
"டெவீனா சமயம் சொல்வது வேறு, சமுதாய அமைப் பின் நடைமுறைகள் வேறு."
"அப்படியானால்." அவள் மாணவி போல் ராகவ னைக் கேட்டாள்.
"இந்து சமயம் வர்ணாஸ்ரமம் பற்றிச் சொல்கிறது. அதன் படி தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் கடவுளால் தண்டிக்கப் பட்டவர்கள். அதாவது முற்பிறப்பில் செய்த பாவங்களால் தாழ்த்தப்பட்டவர்களாகப் படைக்கப்பட்டார்களாம். இவர்கள் பெரும்பாலோர் மிகவும் ஏழைகள். இந்தியாவில் மூன்றி லொரு மக்கள் இப்படியான துன்ப நிலையில் வாழும் ஏழை கள். இவர்களை வசதிபடைத்த உயர்ந்த சாதியினர் தீண்டாச் சாதியினராக நடத்துகிறார்கள்.'
அவள் கொஞ்ச நேரம் மெளனமாக விருந்தாள். "இன்னொருதரம் வேறு உலகத்துக்குப் போய் விட் டாயே, இப்போது என்ன யோசிக்கிறாய்."

Page 39
7Ο அவனும் சில வருடங்களும்
ராகவன் விளையாட்டுத் தனமாக அவள் கூந்தலை யிழுத் தான்.
'உனக்கு வெட்கமாயில்லையா”
டெவீனாவின் முகத்தில் கோபம். அவன் திடுக்கிட்டுப் போனான். "ஐயம் சாரி டெவீனா’ ராகவன் அவமானத்தால் குன்றிப் போனான்.
‘'நீ ஒரு இந்து என்று சொல்லிக் கொள்ள உனக்கு வெட்கமாயில்லையா??
அவள் சீறினாள்.
ராகவன் இன்னுமொருதரம் குழம்பி விட்டான். "நான் உன்னைத் தொட்டதற்கு மன்னித்து விடு'
“அட சும்மா போய்யா, நீ என்னைத் தொட்டதற்கு நான் ஒன்றும் குதிக்கவில்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தீண்டத் தகாததாகச் சொல்கிறதென்றால் அப்படிச் சொல்கிற ஒரு மதம் அதர்மமானது."
அவள் இன்னும் சீறிக் கொண்டிருந்தாள்.'
"ஒ யெஸ், நீ ஏன் இந்தியாவுக்குப் போகக் கூடாது? புத்தரும் காந்தியும் சொல்லியும் கேட்காத உண்மைகளை நீ சொல்லியா யாரும் கேட்கப் போகிறார்கள்." அவன் பெரு மூச்சு விட்டான்.
"சினிமா ஒரு பலம் வாய்ந்த சக்தி என்று அதிபர் சொன்னாரே. சமுதாய மாற்றத்தை உண்டாக்கும் படங் களை இந்தியாவில் யாரும் எடுப்பதில்லையா'
- "எடுத்தால் ஓடாது."
“Giro”
"இந்தியாவில் சினிமா வியாபாரத்தின் அடிப்படையில் நடக்கும் பெரிய தொழில்."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 71
"சத்யத்ரேயின் படம் அப்படியில்லையே’
"அவர் அந்தப் படம் எடுக்க மிகவும் கஷ்டப்பட்டார். படம் உலகத்தில் பல பரிசுகளைப் பெற்றது. ஆனால் இந்தியா வில் அவர்களைத் திட்டினார்கள்."
"அந்த மேதையைத் திட்டினார்களா’ அவள் முகத்தில் சோகம்.
பாவம் டெவீனா குழம்பிவிட்டாள். அவள் அகராதியில் உலகம் களங்கமற்றது.
"இந்திய சைக்கோலஜியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. இந்து சமயத்தைப் போல், ஆயிரக் கணக்கான கடவுள்கள் போல், நூற்றுக் கணக்கான சாதிப் பிரிவுகள் போல் இந்திய மனிதத்தின் சிந்தனையும் மிகவும் சிக்கலானது."
டெவீனா அவனிடம் நெருங்கி வந்தாள். அவனது இரு கைகளையும் இறுகிப் பற்றிக் கொண்டாள்.
'ராகவன், இந்த இரவை என்னால் மறக்க முடியாது. * குரலில் குழந்தைத் தனம்.
"ஏன் இந்தக் குளிரில் என்னை வைத்து இந்து சமயத்தைப் பற்றிக் கேள்வி கேட்டதற்காகவா?
அவன் அவள் பிடித்திருந்த கைகளை விடாமல் கேட் டான். இந்த நேரம் மைக்கல் பக்கத்திலிருந்தால் என்ன சொல்வான் என்று ஒரு சில வினாடிகள் யோசித்தான்.
அவளை அப்படியே அள்ளி எடுத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது. அவளின் நெருக்கம் அந்த இரவின் தனிமையில் அவன் உடலில் உஷ்ணத்தைப் பரப்பியது. "ராகவன், மூன்று வருடம் படித்து முடிய நீ என்ன பண்ணுவாய்.”
'முடிந்தால் ஒரு பிலிம் புரொடியூசராக இருக்க விரும்புகி றேன்." அவன் தெளிவாகச் சொன்னான்.

Page 40
ፕ2 அவனும் சில வருடங்களும்
'அது மட்டும் கூடாது. சாதி சமயக் கொடுமைகளுக்கு எதிராகப் படம் எடுப்பாயா’ அவன் அவளின் அப்பாவித் தனமான ஆசையைக் கேட்டுப் பரிதாபப் பட்டான். எவ்வளவு நம்பிக்கையானவள் இவள்?
இந்தியாவில் பிறந்த எத்தனையோ மகான்களால் செய்ய முடியாத வேலையை இவன் செய்வானென்று எதிர்பார்க்கிறார் களே?
"சத்யத்ரே மாதிரி எத்தனையோ பேர் பிறந்தாலும் இந்தி யாவை மாற்ற முடியாது டெவீனா’
"சத்தியத்ரே என்னவென்று வித்தியாசமான படங்களை எடுத்தார்?"
"அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலை வித்தியாசமானது. லண்டனில் 1950ஆம் ஆண்டுகளில் இருந்தபோது நியோஹியலி g-L (Neo-realist) Lil-liigssiflai glia).JLb கொண்டார். அத்துடன் அவர்க்கு பிரான்ஸ் நாட்டின் முக்கிய டைரக்டர்களில் ஒருத்த ரான ஜூன் றெனோ என்பவரின் தொடர்பும் கிடைத்தது. ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்த சூழ்நிலை, நல்ல யதார்த்தமான சினிமா சூழ்நிலையை லண்டனிற் கண்டது, அந்தக் காலத்தில் உலகத்தின் முக்கிய டைரக்டர்களில் ஒருத்தரான றேனோ (Jean Remoir) யைச் சந்தித்தது எல்லாம் காரணங்களாக இருக்கலாம்.' "தமிழ் டைரக்டர்களில் சமுதாய சிந்தனையுள்ள வர்களில் லையே?
"ஓரிருவர் இருக்கிறார்கள், பாலச்சந்தரின் படங்கள் சமு தாய சிந்தனையைத் தூண்டுபவை. அத்துடன் பாலு மகேந்திரா வின் படங்கள் மூன்றாம்தர தமிழ்ப் படங்களுக்கு அப்பாற்பட் டவை. அழகிய கலை ஒவியத்தைப் பார்க்கும் உணர்வைத் தூண்டும் படங்கள். வண்டனுக்குப் போனதும் ஒரு சில படம் பார்ப்போம். சிறிலங்கன் டைரக்டர் ஜேம்ஸ் லெஸ்டர் பீரிஸின் படங்கள், ஒரு சில மலையாளப் படங்கள் எல்லாம் நீ பார்க்கலாம்."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 73
‘ராகவன், ரொம்பவும் நன்றி. நான் பிளேனில் போயிருந் தால் இவ்வளவும் நான் தெரிந்திருக்க முடியுமா?"
அவள் எவ்வளவு கபடமற்ற பெண், குழந்தை மாதிரிச் சந்தோசத்திற் கூவினாள்.
"அது சரி இமிக்ரேஸன் ஆபிஸரிடம் நான் உன்னுடைய போய் பிரண்ட் என்று சொன்னாயே. ஏன் அப்படிச் சொன் னாய்.”*
'அவன் தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல, வீடு வாசல்களில் நத்தார் பண்டிகையைக் கொண்டாடாமல் பரிஸ் நகரத்துக்குப் போகிற வர்கள் யார் என்ற நினைக்கிறாய்."
அவன் அங்குமிங்கும் பார்த்தான். பெரும்பாலானவர்கள் காதல் நகரமான பரிசுக்குப் போகிறவர்கள்.
"நான் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால் அவன் உன்னை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். பல ஆபிஸர்கள் இனவாதிகள். உன்னை எனது போய் பிரண்ட் என்று சொன்ன தும் என்ன நமுட்டுச் சிரிப்பு பார்த்தாயா."
"நாங்கள் சத்யத்ரே பற்றிப் பேசியதை அவன் அறிவானா’ ராகவன் சிரித்தான்.
'இல்லை, நாங்கள் காமசூத்ரா பற்றிக் கருத்தரங்கம் வைப்பதாக அவன் நினைத்திருக்கலாம்."
கார்டினோட் ரெயில்வே ஸ்ரேசனில் அன்ரோனியோ வந்திருக்கவில்லை. மார்ட்டின் மட்டும் வந்திருந்தான்.
"எங்கே அன்ரோனியோ??

Page 41
74 அவனும் சில வருடங்களும்
மார்ட்டின் ஒரு கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லவில்லை.
"அன்ரோன்யோவின் கேர்ள் பிரண்ட். 3
"ஜூலியட்டுக்கு என்ன நடந்தது?? டெவீனா பதறினாள்.
"ஜூலியட்டுக்கு ஒன்றுமில்லை. அவளின் அப்பா ஒரு விபத்தில் இறந்து போனார். தாயார் மன அதிர்ச்சியில் ஒரு சைக்கியாட்ரிக் ஹாஸ்பிட்டாலில் அட்மிட் பண்ணப் பட்டிருக் கிறாள். அன்ரோனியோவுடன் பாரிஸ் வருவதாக இருந்த ஜூலியட்டால் வர முடியல்ல. அன்ரோனியோ இடிந்துபோய் குடித்துத் தொலைக்கிறான். என்னவென்று ஷ"ட்டிங் செய்யப் போகிறேனோ தெரியாது."
மார்ட்டின் மன வேதனையுடன் அலுத்துக் கொண்டான்.
'இன்றைக்கு நாங்கள் ஒருத்தரும் ஒன்றும் செய்ய முடி யாது. நாங்கள் இருவரும் பிரயாணக் களைப்பிலிருக்கிறோம். நாளைக்கு கிறிஸ்மஸ் யாரும் ஒன்றும் பண்ண முடியாது. முடியுமான வரைக்கும் ஸ்கிரிப்டைப் படித்து, ஸ்ரோரி போர்ட் பார்ப்போம். ஷொட்ஸ் எப்படிச் செய்வது என்பதை யோசிப் போம்." டெவீனா வழக்கம்போல் தன்னுடைய ஆலோசனைக ளைச் சொன்னாள்.
மார்ட்டின் டெவீனாவை நன்றியுடன் பார்த்தான்.
அவரின் ஆறுதல்கள் அவனுக்கு தேவையாயிருந்தன என்று அவன் தொனியில் தெரிந்தது.
அன்ரோனியோ இன்னும் எழும்பவில்லை. மார்ட்டின் தனது நண்பன் ஒருத்தனின் பிளாட்டில் இவர்கள் தங்க ஒழுங்கு செய்திருந்தான்.
மார்ட்டினின் பிரன்ச் நாட்டுச் சினேகிதன் கமரா வேலை செய்வதென்று ஒழுங்கு பண்ணப் பட்டிருந்தது.
சோபியா என்ற மார்ட்டினின் சினேகிதியும் இவர்களுடன் கலந்து கொண்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 75
சோபியாவும் டெவீனாவும் 'ஒரு அறையைத் தங்களு டைய தாக்கிவிட்டார்கள்'.
மற்ற நான்கு ஆண்களும் மற்ற அறையிலும் ஹாலிலும் தங்குவதென்று முடிவாயிற்று.
"இதெல்லாம் வித்தியாசமான அனுபவங்கள்’ டெவீனா சிரித்துக் கொண்டாள்.
அன்று பின்னேரம் பொன்னம்பலம் மாமா வீட்டாருக்குப் போன் பண்ணிவிட்டுச் சென்றான்.
“என்ன திடீரென்று பரிசுக்கு வந்திருக்கிறாய்? மாமா வரவேற்றபடி கேட்டார்.
"சினேகிதன் ஒருத்தன் தனது படப்பிடிப்புக்கு உதவி செய்யச் சொல்லிக் கேட்டான்." ፅ·
மாமா பதில் பேசவில்லை. மாமி இவனிடம் ராகவனின் வீட்டாரைப் பற்றி கேள்வி கள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இந்திரா காப்பி ட்ரேயுடன் வந்தாள். இவன் கற்பனை செய்தபடியே ஜ"ன்சும் டீசேர்ட்டும் அணிந்திருந்தாள். அவள் தங்கை கலா ட்ரெஸ் போட்டிருந்தாள்.
"எப்படிப் பரிஸ்’ இந்திராவைக் கேட்டான். 'பாஷை பழகக் கஷ்டமாக இருந்தது" இந்திராவுக்காக மாமா மறுமொழி சொன்னார்.
'பாரதி பாடல்கள் இன்னும் ஞாபகமிருக்கா’ ராகவ னுக்கு இந்திரா நன்றாகப் பாடுவாள் என்பது ஞாபகம் வந்தது. "இலங்கையில் பாட்டு மட்டுமல்ல, வீணையும் பழகி னாள். இப்போ.* மாமியின் கண்கள் கலங்கின.
மாமி சாப்பிடச் சொன்னாள். இடியப்பமும் சொதியும் இறால் குழம்பும் முட்டைப் பொரியலும் அமிர்தமாக ருசித்தன.

Page 42
76 அவனும் சில வருடங்களும்
"இந்திரா தான் சமைத்தாள்’ கலா தமக்கையைச் சீண்டி னாள்.
'நல்ல சாப்பாடு’ ராகவன் உண்மையைச் சொன்னான். "விருப்பமிருந்தால் வாழ்க்கை முழுதும் சாப்பிடலாம்’ கலா ராகவனின் காதில் கிசு கிசுத்தாள்.
ராகவனுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது. மாமா நாட்டுப் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு சில நாட்களுக்கு முன் அநுராதபுரத்தில் சிங்களப் பொதுமக்கள் தமிழ் விடுதலை வீரர்களால் படுகொலை செய்யப்பட்ட விபரம் பத்திரிகைகளில் வந்திருந்தது.
'83ம் ஆண்டில் எங்களை மிருகங்களாக வெட்டிக் குவித் தார்கள். நடுரோட்டில் உயிரோடு எரித்தார்கள். தமிழர்கள் என்ன கையாலாகாதவர்களா? சிங்களவர்களும் அனுபவிக்கட் டும்.’
ராகவன் ஒன்றும் சொல்லவில்லை "என்ன தம்பி பேசாம லிருக்கிறீர்கள்." יא
"கொலைகள் செய்வதால் தேசிய இனப் பிரச்சினைக்கு முடிவு வருமா"
"கொலைகளைத் தொடங்கியவர்கள் சிங்கள இனவாதி கள். தமிழன் ஆயுதப் போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றி கொள்ளாவிட்டால் சிங்களவர் எங்களை இன்னும் எத்த னையோ கோடி வருடங்களுக்கு அடிமையாகத்தான் வைத்தி ருப்பார்கள்."
ராகவன் நேரத்தைப் பார்த்தான். பாரிஸ் புதிய இடம். ராகவன் தங்கியிருக்குமிடம் நடந்து போகும் தூரத்தில் இல்லை. 'மெட்ரோ எடுத்துப் போகவேண்டும். அவன் அவசரப் பட்டான்.
'தம்பி, இந்த நேரத்தில் போக வேண்டாம். தங்கி விட்டு நாளைக்குப் போங்கள்’ மாமி வேண்டிக் கொண்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் . . . 77
‘'வேண்டாம், எனக்காகக் காத்திருப்பார்கள் "அவன் அவ சரப் பட்டான்.
"பாயாசம் சாப்பிடுங்கள்' கலா குறும்புடன் பாயாசத்தை அவன் முன்னால் தள்ளினாள்.
“என்ன இந்திரா, வாய் திறக்க மாட்டேன் என்கிறாய். ஒரு பாரதியார் பாட்டுப் பாடு'
ராகவன் இந்திராவைக் கேட்டான். இந்திரா நாணத்துடன் மறைய மாமா கூப்பிட்டார். 'தம்பி கேட்கிறார் ஒரு பாட்டுப் பாடு."
ஒரு சில நிமிடங்கள் மறுப்புச் சொல்லிய பின் மாமியின் உத்தரவுக்குப் பணிந்து இந்திரா பாரதி பாட்டுப் பாடினாள்.
"நல்லதோர் வீணை செய்தே நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி, என்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய். வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே, சொல்லடி சிவசக்தி, நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ" இந்திராவின் குரல் அப்படியே கணிரென்றிருந்தது. பாரிஸ் நகரில் பாரதி பாடலை இந்திராவின் வாயால் கேட்டது அவள் செய்த பாயாசத்தை விட இனிமையாக இருந்தது.
மாமா பெருமூச்சு விட்டார்.
"நாடற்ற அனாதைகள் நாங்கள். இந்தப் பாடலை அந்நிய நாட்டில் பாடவேண்டிய தலைவிதியை என்ன சொல்வது?’
மாமா மெட்ரோ ரெயில்வே ஸ்ரேசன் வரைக்கும் வந்தார்.
'ஏன் இந்தப் படிப்பு? எதிர்காலம் எப்படியிருக்கும்’ மாமா தயக்கத்துடன் கேட்டார்.

Page 43
7. அவனும் சில வருடங்களும்
"தெரியாது’ ராகவன் உண்மையைச் சொன்னான்.
"மாமா எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று போலிக் கற்பனைகள் செய்து ஏமாற்றம் அடைய நான் தயாரில்லை. எனக்கு விருப்பமான படிப்பு படிக்கிறேன். நல்ல திருப்பம் வருமென்று எதிர்பார்க்கிறேன்.'
"இருபத்தைந்து வயதாகிறது. ஒரு நல்ல வேலை எடுக் கும் படிப்பாயிருந்தால் பரவாயில்லை."
மாமா தன்னை ஒரு எஞ்சினியராகவோ லோயராகவோ எதிர்பார்த்திருக்கிறார் என்பது அவரது குரலிற் தெரிந்தது.
அம்மாவின் தலைமுறையில் பிறந்த மாமாவிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும்?
அப்பா எவ்வளவு வித்தியாசமானவர்?
ராகவனைச் 'செம்மீன்’ படம் பார்க்கக் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். கொழும்புக்கு வரும் நேரங்களில் பிலிம் பெஸ்டிவல் நடந்தால் மகனையும் கூட்டிக்கொண்டு போவார்.
அப்பா நிறைய வாசிப்பார். இவரை பதின்மூன்றாவது வயதில் 'வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தைப் பரிசா கக் கொடுத்தார். பதினாறாம் வயதில் ஒரு கமெராவை வாங்கிக் கொடுத்தார்.
மெட்ரோ ட்ரெயினிலிருந்தபடி சடுதியாகத் திரும்பிய தமிழர்களின் வாழ்க்கையை யோசித்துப் பார்த்தான். டாக்டரா கவோ, எஞ்சினியராகவோ, லோயராகவோ தங்கள் குழந்தைக ளைப் பார்க்கும் இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் ராகவன் லண்டனில் திரைப்படப் பட்டப் படிப்பு படிப்பதை ஆச்சரியத் துடன் பார்ப்பது ஒன்றும் அதிசயமில்லை.
அவர்கள் தங்குமிடத்திற்குப் போனபோது டெவீனாவைத் தவிர யாருமில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 79
"எல்லாரும் குடிக்கப் போய் விட்டார்கள்’ டெவீனா அலுப்புடன் சொன்னாள்.
"சாப்பிட்டாயா' டெவீனா ஆச்சரியத்துடன் ராகவனைப் பார்த்தாள்.
"என்ன அப்படிப் பார்க்கிறாய்." "எல்லாரும் வெளியே போய் விட்டார்கள் என்றால் அவர்கள் வெளியில் சாப்பிடுவார்கள். அதுதான் கேட்டேன்." "பிரட், சீஸ், சலட் சாப்பிட்டேன். பிரிட்ஜ் நிறைய வைன் இருக்கிறது. உனக்குத் தெரியும்தானே பிரன்ச் காரர் தண்ணீருக் குப் பதில் வைன்தான் குடிப்பார்கள். உனக்கு ஏதும் வைன் வேணுமா."
‘'வேண்டாம்’ ராகவன் தொப்பென்று நாற்காலியில் சாய்ந்தான்.
மாமா குடும்பம் கண்முன்னே நின்றது. இந்திராவின் பாடல் காதில் இன்னும் ஒலிப்பது போன்ற பிரமை.
“எப்படி உனது சொந்தக்காரர்' இவன் நினைவைத் தெரிந்து கொண்டவள்போல் கேட்டாள்.
'பாவம், அகதியான துக்கம் இன்னும் போகவில்லை." அந்நிய நாட்டில் ஏதோ செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் விரக்தியுடன் வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள். இப்போது நாளாந்தம் போவதையே நரக வேதனையாக யோசிக்கிறார்கள்' சோகத்துடன் சொன்னான் ராகவன்.
"லண்டனுக்குப் போக முதல் இன்னொருதரம் போவாயா?
"தெரியாது, ஏன் கேட்கிறாய்."
"அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்."

Page 44
8O அவனும் சில வருடங்களும்
"பார்க்கலாம்" ஏனோ தானோ என்று மறுமொழி சொன் னான் ராகவன்.
சினிமாத் துறையில் மாமாவுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்று தெரியும். அவர் முன்னால் ஒரு வெள்ளைக்கா ரப் பெண்ணுடன் போய் நின்றால் அதிர்ந்து போவார் என்று ராகவனுக்குத் தெரியும்.
மாமா வீட்டுக்குப் போனதைப் பற்றி அம்மாவுக்குப் போன் பண்ண நினைத்தான். வெளியில் போய் டெலிபோன் பண்ண ஆயத்தமானான்.
“வீட்டில் அடைந்து கிடக்க எரிச்சலாக இருக்கிறது. கொஞ்சத் தூரம் நடக்கலாமா? டெவீனா கேட்ட கேள்வி இவனைச் சிரிக்கப் பண்ணி விட்டது.
"என்ன சொல்லிவிட்டேன், ஏன் சிரிக்கிறாய்." "நான் அம்மாவுக்குப் போன் பண்ண வேண்டும் போகி றேன். வேண்டுமென்றால் என்னுடன் வரலாம்."
பாரிஸ் தெருக்கள் இன்னும் பிஸியாக இருந்தது. கிறிஸ் மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் குடித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவன் இளம் வயதில் மன்னாரில் வாழ்ந்த போது கிறிஸ்தவ மக்கள் எவ்வளவு சிறப்பாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
அம்மா மாமா குடும்பத்தினரில் இந்திராவைப் பற்றி விசேடமாக விசாரித்தாள்.
"பாவம் அந்தப் பெண், சங்கீதத்தில் மிகவும் கெட்டிக் காரி, இப்போது பாரிஸில் ஏதோ வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறாள்." அம்மா பெருமூச்சு விட்டாள்.
அம்மாவின் அதிகப்படியான விசாரணையின் பின்னணி யில் என்ன கருத்துப் புதைந்து கிடக்கிறது என்று அவனுக்குத் தெரியும். சிந்தனை எங்கேயெல்லாமோ பறந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 81
"ஜூலியட் லண்டனுக்கு வராவிட்டால் தன்னால் வாழ முடியாது என்று அன்ரோனியோ புலம்புகிறான்’ டெவீனா சிந்தனையை உடைத்தாள்.
“முட்டாள்' அவன் முணு முணுத்தான். "ஏன் முட்டாள்" அவள் விசாரித்தாள்.
"காதல் இல்லையேல் சாதல் என்று உளறுவது முட்டாள் தனம்’
'காதல் வாழ்க்கையின் ஒரு அற்புதமான அனுபவம் இல்லையா’ அவன் திரும்பி நின்று அவளைப் பார்த்தான். கேட்டவள் இவனில் பார்வை பதித்திருந்தாள். இரவு நடுச் சாமமாகிக் கொண்டிருந்தது.
நத்தார் பிரார்த்தனைக்காகப் பக்கத்திலுள்ள நொற்றடாம் தேவாலயத்தில் மணிகள் ஒலித்துக் கொண்டிருந்தன.
செயின் நதி காதல் ததும்பிய பெண்ணின் நடை போல் மிகவும் ஒய்யாரமாகத் தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் பின்னணியில் நொற்றடாம் கதீட்ரல் வானத்தைப் பிழந்து கொண்டு நின்றது. அந்தத் தேவாலயத்திலிருந்து பிரார்த்தனைக் கீதங்கள் வானத்திலிருந்து தேவதைகள் வாயிலிருந்து வரும் புனித ஒலிகளாகக் கேட்டன.
இரண்டு நாளாகப் பிரயாணக் களைப்பில் முகம் வாடினா லும் மனம் வாடாத புன்னகையுடன் டெவீனா அவன் முன் னால் நின்றிருந்தாள்.
திரைப்படக் கல்லூரி லிப்ட்டில் அவன் மார்பில் மாலை யாய் விழுந்தவள். நேற்று லண்டனிலிருந்து வரும்போது நடுக்கடல் கப்பலில் காதற் போதையை அவனில் ஊற்றியவள்.
நேற்று இந்திய வறுமைக்கு உருகியவள்.
இன்று . அன்ரோனியோவின் காதலைப் பற்றிக் கேள்வி கேட்கிறாள்.

Page 45
2 அவனும் சில வருடங்களும்
"என்ன கேட்டாய்' அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு கேட்டான்.
அந்த நிமிடமும் அவள் அவனுக்கு முன்னால் நிற்பதும் கேட்கும் கேள்வியும் அசாதாரணமாகவிருந்தன.
"காதல் ஒரு அற்புதமான அனுபவம் என்று சொன்னேன்" அவள் குரலில் குறும்பு.
“எனக்கு ஒரு அனுபவமும் இது வரைக்குமில்லை" "தெரியும்' அவள் குரலில் கிண்டல். அவன் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் நடந்து கொண்டி ருந்தான்.
'ராகவன்' அவள் குரல் எங்கேயோ தூரத்தில் கேட்பது போலிருந்தது.
'ம்' அவன் அப்படியே நின்றான். அவள் அவன் அருகில் வந்தாள்.
"என்னைப் பார்க்க ஒரு பெண்ணாய்த் தெரிய வில்லையா’ அவளின் கேள்விக்கு மறுமொழி சொல்ல முடிய வில்லை.
"எங்கேயும் எங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தையும் ஒரு வினாடி சுற்றிப்பார்’
தனிமை, இருள், பிரார்த்தனைப் பாடல்கள், கோயில் மணியோசைகள், செயின் நதியில் தெறித்து விழும் நிலவின் சிதறல்கள்.
"ராகவன் என்னை முத்தமிட வேண்டும்போல் உனக்குத் தோன்றவில்லையா' டெவீனாவின் கேள்வி அவனைக் குலுக் கியது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 83
நத்தார்ப் பண்டிகையன்று சோபியா, டெவீனா இருவரும்
பெரிய சமையல் செய்திருந்தார்கள். அன்ரோனியோ இன்னும் படுக்கையை விட்டு எழும்பவில்லை; ஜூலியட் பற்றி நித்தி ரையிலும் புலம்பிக் கொண்டிருந்தான்.
மார்ட்டின் எரிச்சலுடன் தலையிலடித்துக் கொண்டான். 'இவனை நம்பி பாரிஸ் வந்தது எனது முட்டாள்தனம்’ மார்ட்டின் முணு முணுத்தான்.
சோபியா அவனுக்கு வைனை ஊற்றிக் கொடுத்தாள். "என்ன என்னையும் புலம்பப் பண்ணப் போகிறாயா' சோபி யாவைக் கேட்டான் மார்ட்டின்.
“என்ன பண்ணுவது, உனது படப்பிடிப்பு நேரம் பார்த்து ஜூலியட்டின் அப்பா மண்டையைப் போட்டது அன்ரோனி யோவின் பிழையா’ சோபியா எதிர்க்கேள்வி கேட்டாள்.
'தவிர்க்க முடியாமல் வரும் சந்தர்ப்பங்களைத் தாங்கிக் கொள்ள மனித மனம் பழக வேண்டும்’ மார்ட்டின் இரண்டா வது கிளாஸ் வைனை ஊற்றிக் கொண்டான்.
"காதலிக்கு வந்த துயர் அவன் துயர்தானே. உனது சுய நலத்திற்காக ஏன் மற்றவர்களின் துயரை உணர்கிறாயில்லை’ சோபியாவுடன் டெவீனாவும் சேர்ந்து கொண்டாள்.
“இப்போது என்ன செய்யச் சொல்கிறீர்கள். எல்லாவற்றை யும் கான்ஸல் பண்ணி விட்டுப் பார்ட்டி வைத்துக் கொண்டாடு வமா’ மார்ட்டினின் குரலில் கோபமா, தவிப்பா என்று தெரியவில்லை.
ராகவன் பதில் பேசவில்லை. பாரிசுக்கு வந்த நேரத்திலி ருந்து நடப்பதெல்லாம் அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

Page 46
84 அவனும் சில வருடங்களும்
"அன்ரோனியோவின் மூட் சரியாகும் வரை அவனைத் தொல்லைபடுத்தாமலிருப்பது நல்லது டெவீனா ஆலோ சனை சொன்னாள்.
“டெவீனா நீ ஒரு அமைதிகாக்கும் படையில் இருக்க வேண்டியவள்’
மார்ட்டின் சிரித்தான். அவள் பதில் பேசவில்லை. "உனது வீட்டாருடன் நத்தார்ப் பண்டிகையைக் கொண் டாடாமல் எங்களுடன் வந்ததற்கு உன்னை மிகவும் மதிக்கிறேன்'
'தயவு செய்து அப்படி எல்லாம் சொல்ல வேண்டாம்" டெவீனா முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.
"எனது வீட்டில் நிற்கப் பிடிக்காமல்தான் இங்கே வந் தேன்."
அவள் குரல் சோர்ந்திருந்தது. சோபியா எழுந்துபோய் டெவீனாயை அழைத்துக் கொண்டாள்.
மார்ட்டீனும் ராகவனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
"இருபத்தி ஒரு வயதுவரைக்கும் என் தாய் தகப்பனின் சொற்படி எல்லாம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இப்போது அப்படியில்லை. எனக்கு இருபத்தியிரண்டு வயதாகிறது. எனக்குப் பிடித்த வேலை செய்யலாம். திரைப்படப் பட்டப் படிப்புச் செய்யலாம், பாரிஸில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத் தைக் கொண்டாடலாம்'
சட்டென்று ஊசி விழுத்தால் கூடக் கேட்டுமளவுக்கு நிசப்தம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 85
'எனது தாய் தகப்பன் எனக்காக ஒன்றாக வாழ்பவர்கள். இந்த வருடமாவது அவர்கள் தாங்கள் நினைத்தபடி சந்தோச மாக இருக்கட்டும் என்று நினைத்தேன். அப்பா நியுயோர்க் போய் விட்டார். தனது கேர்ள் பிரண்டுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுகிறார். அம்மா."
அவள் கண்களில் நீர். ராகவன் நீர் தழும்பும் டெவீனாவைப் பார்த்தான். என்னை முத்தமிட மாட்டாயா என்று கேட்ட காதற் தேவதை யாய் டெவீனா தெரியவில்லை.
தாய் தகப்பனற்ற அனாதையாய்த் தெரிந்தாள். பரிதாப மாக இருந்தது.
"எனது தாய் நீண்ட நாட்களாகச் சுகவீனமாக இருக்கி றாள். இந்த விடுதலை நாட்களில் தனது தமக்கையுடன் ஸ்கொட்லாந் போய் விட்டாள்’
"யார் எங்கே போனாலும் என்ன? நான் ஜ"லியட் வராவிட்டால் லண்டனுக்கு வர மாட்டேன்’ அன்ரோனியோ அரை குறை நித்திரையில் உளறிக் கொண்டு வந்தான்.
சோபியா எல்லோரையும் பார்த்தாள். "சரி, சாப்பிட உட்காருங்கள்'
ராகவனுக்கு மனதில் ஏதோ அடைத்தது. இத்தனை வேதனைகளையும் வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் இந்தப் பெண் என்னவென்று நிலவில் குளிக்கும் தென்றலாக மென்மையாக இருக்கிறாள்?
சாப்பாடு இறங்கவில்லை ஏனோதானோவென்று எதையோ சாப்பிட்டு விட்டு வெளிக்கிட்டான். VM
பாரிஸ் நகர் நத்தார் தினமன்று மிக அமைதியாக விருந் தது. தூரத்தில் ஐவிள் டவர் மனித உழைப்பின் உயர்ச்சியை உணர்த்திக் கொண்டு மேகத்தை முட்டியது.

Page 47
86 அவனும் சில வருடங்களும்
கால் போன போக்கில் நடந்தான். எத்தனையோ மனிதர் கள் இலங்கைத் தமிழர்கள் போற் தெரிந்தார்கள். 83ம் ஆண்டு கலவரத்தின் பின் 300,000 தமிழர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாய்த் தஞ்சம் அடைந்திருப்பதாகத் தெரிந்தது.
அதில் கிட்டத்தட்ட 50,000 தமிழர் பரிசிலும் பரிசைச் சுற்றிய பகுதிகளிலும் வாழ்வதாக மாமா சொல்லியிருந்தார். அந்நிய நாடுகளில் அகதிகளாய் வாழும் அவலத்தின் விரக்தி மாமாவின் பேச்சில் எதிரொலித்ததை அவன் உணராம வில்லை.
எத்தனையோ பெரிய உத்தியோகத்தில் வாழ்ந்த தமிழர் கள் அந்நிய நாடுகளில் கூலிகளாக வாழும் நிலை மனதைக் குடைந்தது.
பொன்னம்பலம் மாமா வவனியா நகரில் ஒரு பாடசாலை அதிபராக இருந்தவர். மனமொடிந்த அந்த அதிபர் இன்று ஏதோ கட்டிடத்தின் காவலராக வேலை செய்கிறார்.
வீணை தாங்கிய சரஸ்வதியாய்த் தரிசனம் தரும் இந்திரா ஒரு பிரன்ச் ரெஸ்ட்ரோண்ட் ஒன்றில் கூட்டித் துடைக்கும் வேலை செய்கிறாளாம்.
இருதயத்தில் ஈட்டிகள் பாய்ந்தன. எங்கள் தமிழர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?
நல்லதோர் வீணை செய்தே. இந்திராவின் பாடல் ஞாபகம் வந்தது.
நீண்ட நேரம் கால்போன போக்கில் நடந்தபின் தங்குமி டம் வந்தான். யாருமில்லை. அவனிடம் திறப்புமில்லை. இவன் எப்போது வருவேன் என்று சொல்லாமல் வெளிக்கிட்ட தால் மற்றவர்கள் இவனுக்காகக் காத்திருக்காமல் வெளியில் போய் விட்டார்கள் என்று தெரிந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 87
அன்ரோனியோவின் புலம்பலைக் கேட்காமல் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியில் போனது நல்ல விடயமாகப் .5Jیکا "الا
இவனுக்குப் பிரன்ச் பாஷை தெரியாது. கால் போன போக்கில் இன்னுமொருதரம் போக விரும்பமில்லை. தூரத் தில் தெரிந்த ஐவிள் டவருக்குப் போக யோசித்தான். தனிமை யில் போவது ஒரு வித்தியாசமான உணர்வாக இருந்தது. டவரைச் சுற்றி சுற்றுலாப் பிராயணிகளின் கூட்டம் தெரிந்தது. பக்கத்தில் செயின் நதியில் எத்தனையோ படகுகள் உல் லாசப் பிரயாணிகளைச் சுமந்து கொண்டு ஆரவாரமான சத்தத்து டன் போய்க் கொண்டிருந்தது."
தனக்குப் புரியாத மொழி பேசும் ஆயிரக்கணக்கான மக்களுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டான்.
அம்மாவைப் பிரிந்து வெளிநாடு வந்தது இதுதான் முதற் தடவை. அம்மாவை நினைத்ததும் டெவீனாவின் தாய் தகப்ப னைப் பற்றி நினைத்துக் கொண்டான்.
“என்ன தனிமை??? குரல் கேட்டுத் திரும்பினான். சோபி யும் டெவீனாவும் நின்றிருந்தார்கள். "வீட்டுக்குள் நுழையச் சாவி இருக்கவில்லை. ஏதோ பொழுது போகட்டும் என்று வந்தேன்’ −
உண்மையைச் சொன்னான் ராகவன். "நல்ல விடயம்’ டெவீனா சொன்னாள். மத்தியான சாப்பாட்டு நேரம் நீர் வழிந்த பெண்ணாகத் தெரியவில்லை. மலர்ந்திருந்தாள்.
"சோபியா வீட்டுக்குப போகிறாளாம். போகலாமா அல் லது கொஞ்ச நேரம் சுத்தித் திரியலாமா? மார்ட்டினும் அன்ரோ னியோவும் நாளைக்கு ஷ"ட்டிங் நடக்குமிடங்களைப் பார்க் கப் போய் விட்டார்கள். '

Page 48
88 அவனும் சில வருடங்களும்
டெவீனா கேட்டபடி இவன் அருகில் உட்கார்ந்தாள். இவன் மறுமொழி சொல்ல முதல் "பயப்படாதே முத்தமிட சொல்ல மாட்டேன்’ என்று காதில் மெல்ல ரகசியம் சொன் னாள். அவளின் கிசுகிசுத்த குரல் அவனை என்னவோ பண்ணி
Eil.
சோபியா போய்விட்டாள். பின்னேரக் குளிர் முகத்தைத் தொட்டு விளையாடிது. "உன்னுடைய தாய் தகப்பன் பற்றிச் சொன்னது எனக்கு மிகவும் துன்பத்தையுண்டாக்கி விட்டது."
"என்ன செய்வது? வாழ்க்கையில் ஒவ்வொருத்தர் மனத்தி லும் ஒவ்வொரு துன்பம்’ அவள் தத்துவம் பேசினாள்.
"என்ன தம்பி, குளிரில இருக்கிறியள்’ ராகவன் திடுக்கிட் டுப் பார்த்தான். மாமா குடும்பம் எதிரே நின்றது. யாரை அவள் வீட்டிக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது என்று நினைத் துக் கொண்டானோ அவளுடன் அவர்களுக்கு முன்னால் நிற்பது தர்ம சங்கடத்தை யுண்டாக்கியது.
‘விடுதலை நாளில வீட்டில் இருந்து என்ன செய்யிறது. அதுதான் சும்மா நகர் சுற்றிப் பார்க்க வெளிக்கிட்டம்’ உன்னை ஒன்றும் பின் தொடரவில்லை, தற்செயலாகத்தான் சந்தித்தோம் என்ற சமாதானம் மாமாவின் குரலில் ஒலித்தது.
"நாங்களும் அப்படித்தான். இது என்னுடைய சக மாணவி டெவீனா ஸேர்லிங்" ராகவன் டெவீனாவை அறிமு கம் செய்து வைத்தான். மாமா ஹலோ சொன்னார். மாமி உற்றுப் பார்த்தாள். அல்லது முறைத்துப் பார்த்தாள்.
நேற்று தலை குனிந்து, பார்வை நிலம் பதிய நல்லதோர் வீணைசெய்தே பாடிய இந்திரா இப்போது மாமிக்குப் பின் னால் நின்று இவனை நேரடியாகப் பார்த்தாள்.
இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை மரீனா பீச்சில் பார்த்த குழந்தைத்தனமான இனிய பார்வைக்கும் இன்று

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 89
ஆயிரம் கேள்விகள் கேட்டும் இந்தப் பார்வைக்கும் எத்த னையோ கோடி வருடங்கள் வித்தியாசம்.
கலா தமக்கையின் அருகில் நின்று ராகவனையும் டெவீ னாவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். இரவு கண்ட குறும்புத் தனம் அவள் முகத்திலில்லை.
"எப்போது லண்டன் திரும்பிகிறீர்கள்’ மாமா சம்பிரதா யத்திற்குக் கேள்வி கேட்டார்.
"இரண்டு மூன்று நாட்களில் என்று நினைக்கிறோம்’ அவன் சொன்னான்.
"எங்கள் சினேகிதரின் படப்பிடிப்பைப் பொறுத்தது. அவரின் படப் பிடிப்பிக்கு உதவி செய்ய வந்தோம்," டெவீனா விளக்கிச் சொன்னாள்.
"போக முதல் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வாங்கள்' இந்திரா ஆங்கிலத்தில் டெவீனாவைப் பார்த்துச் சொன்னாள். 'ஆஹா ரொம்பச் சந்தோசத்துடன் வருவேன். ராகவன் கூட்டிக் கொண்டு வந்தால்’ டெவீனா வழக்கம்போல் களங்க மற்றுச் சொன்னாள்.
"அவர் கட்டாயம் கூட்டிக் கொண்டு வருவார்’ இந்திரா வின் குரலில் கிண்டலா உண்மையா, ராகவனாற் புரியவில்லை.
ராகவன் இருக்குமிட விலாசத்தையும் டெலிபோன நம்ப ரையும் மாமா வாங்கிக் கொண்டார்.
"உங்களால் வர முடியாவிட்டாலும், நான் அம்மாவுக்குச் சில சாமான்களைத் தர விரும்புகிறேன்’
மாமி விளக்கம் சொன்னாள். அவர்கள் பிரியும் போது மாமி பின்னால் சென்ற இந்திரா திரும்பி ராகவனையும் டெவீனாவையும் ஒரு நீண்ட பார்வை பார்த்தாள். ராகவனுக் குத் தர்மசங்கடமாக இருந்தது.

Page 49
90 அவனும் சில வருடங்களும்
மாமா வீட்டுககுப் போய்ச் சேர்ந்ததும் அம்மாவுக்குப் போன் பண்ணி தன் மருமகனை ஏன் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் பாரிசுக்கு அனுப்பினாய் என்று கேட்பார் என்று தெரியும்.
“உங்கள் சொந்தக்காரப் பெண் மிகவும் அழகான பெண்’ டெவீனா சொன்னாள்.
"அழகாகப் பாடுவாள். முறைப்படி சங்கீதம் படித்தவள்’ ராகவன் எங்கோ பார்த்தபடி சொன்னான்.
"அவர்கள் வீட்டுக்குப் போனால் கட்டாயம் அவளைப் பாடச் சொல்லிக் கேட்பேன்’
டெவீனா உலகத்தை மிகவும் களங்கமற்றுப் பார்க்கிறாள் என்று ராகவனுக்குத் தெரியும்.
தங்குமிடம் வந்தபோது அன்ரோனியோவிடம், ராகவ னின் சொந்தக்காரர்களைச் சந்தித்த விடயம் பற்றிச் சொன்னாள் டெவீனா.
"ஆமாம் இந்தியர்கள் இத்தாலியர்களைப் போல் உறவு களை மிகவும் பேணுபவர்கள் நீ, என்ன சொல்கிறாய் ராகவன்’ அன்ரோனியோ பீர் கானை உடைத்தபடி கேட்டான்.
"ஆமாம் உங்களுக்கும் எங்களுக்கும் உறவு இருக்கிறது. ரஜீவ் காந்தி சோனியாவைத் திருமணம் செய்து கொண்டார் இல்லையா’ ராகவன் குறும்புடன் சொன்னான்.
‘எங்களைப் போல் இந்த இங்கிலிஸ் காரர்களுக்குக் காதலை மதிக்கத் தெரியாது’
"அப்படி எல்லாம் சொல்லாதே, இங்கிலாந்து மன்னர் எட்டாவது எட்வேர்ட் அமெரிக்க டிவோர்சியான வொலி ஸிம்சனைக் காதலித்துக் கல்யாணம் செய்ய வேண்டித்தானே ஆனானப் பட்ட ஆங்கிலேயே முடியைத் துறந்து இங்கே வந்து காதல் நகர் பரிஸில் வாழ்ந்தார். அதை மறந்து விட்டாயா"

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 91.
'எனக்கென்னவோ இவர்கள் எங்களைப் போல் உணர்ச்சி களை மதிப்பவர்களாகத் தெரியவில்லை’
அன்ரோனியோ அலுத்துக் கொண்டான்.
ஜூலியட்டின் பிரிவு காரணமாக அவன் பட்ட துயரத்தை மார்ட்டின் சரியாகப் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருந் தது அவனுக்கு.
'நீ உனது கலாச்சாரத்திற்குப் புறம்பான பெண்களைக் காதலிப்பாயா'
"அப்படி ஒரு பெரிய திட்டம் ஒன்றுமில்லை’
மார்ட்டின கொடுத்த ஸ்கிரிப்டில் பார்வையை ஒட்டியபடி சொன்னான் ராகவன்.
அன்ரோனியோ இன்னுமொரு பீர் கானை உடைத்து ராகவனிடம் கொடுத்தபடி ரகசியம் பேசுவது போற் கேட் டான்: "டெவீனாவுடன் சுற்றுகிறாயே’
"அவள் எனது சக மாணவி'
“அதற்குமேல் ஒன்றுமில்லையா'
"எதற்குமேல்’
“ஒன்றாயத் திரிவதற்குமேல்"
ராகவன் பதில் சொல்லாமல் அன்ரோனியோவை முறைத் துப் பார்த்தான்.
அன்ரோனியோ தாடியும் மீசையுமாகத் தெரிந்தான். ஜுலி யட் தன்னைத் தேடி வரும்வரைக்கும் தாடி எடுக்க மாட்டா னாம்! தேவதாஸ்!
"டெவீனா மிகவும் கவர்ச்சியானவள்’ அன்ரோனியோ ராகவனை விடாப் பிடியாகச் சீண்டினான்.
'அதற்கு நான் என்ன பண்ணலாம்’
"காதலித்துப் பார்’ அன்ரோனியோவின் குரலில் கிண் டல்.

Page 50
92 அவனும் சில வருடங்களும்
"அப்படியா’ ராகவன் குரலில் கண்டிப்பு.
"காதலிக்கும்போது கவனமாக இரு அன்ரோனியோ ஆலோசனை சொன்னான்.
"அப்படி என்றால் என்ன'
"உன்னை ஒரேயடியாக இழந்து விடாதே"
"அதாவது." ராகவன் அன்ரோனியோவைக் கூர்மையு டன் பார்த்தான்.
"ம். உன்னை ஒரேயடியாகக் கொடுத்துவிட்டு பைத்திய மாகாதே’’
'அதாவது உடலாசையை மட்டும் திருப்திப் படுத்தி, உள்ளத்து உணர்வுகளைப் பொருட் படுத்தாதே என்கிறாய் அப்படியா’
அன்ரோனியோ குழம்பிப் போய்ப்பார்த்தான்.
'அன்ரோனியோ உடம்பின் கவர்ச்சியில் வருவது காமக்க வர்ச்சி, ஒரு தடவை படுத்தெழும்பி விட அலுத்து விடும், உள்ளத்தின் இணைப்பில் சங்கமம் அமைக்கும் காதலுக்கு உடல் உறவு பெரிய முக்கிய மில்லை’
"அப்படியா’ அன்ரோனியோவின் குரலில் அலுப்பு.
'சரி டெவீனாவைத் தீபம் காட்டி ஆராதனை செய்து கொள்'
அன்ரோனியோ பீர் கானுடன் போய் விட்டான்.
s O O
அம்மா என்னை புது வருடத்திற்கு ஸ்காட்லாந்துக்கு வரச் சொன்னாள்.'
டெவீனா அம்மாவுக்கு டெலிபோன் பண்ணிவிட்டு வந்தி ருந்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 93
'அதற்கிடையில் மார்ட்டினின் படப்பிடிப்பு முடியுமா?" நத்தார் முடிந்து இரண்டு நாட்களாகியும் மார்ட்டினினும் அன்ரோனியோவும் அவர்கள் போட்டுக் கொண்டு வந்த திட்டத்தில் கொஞ்சத்தையேனும் முடிக்க வில்லை.
‘ராகவன், மார்ட்டினும் அன்ரோனியோவும் நல்ல பையன்கள். ஆனால் ஒரு உருப்படியான ஒழுங்கு முறையில் லாமல் இழுத்தடிக்கிறார்கள். இவர்கள் இப்படி ஏனோ தானோ என்று இழுத்தடித்தால் இவர்கள் ஒழுங்கு செய்திருக்கும் நடிக நடிகையர் வரமாட்டார்கள். அது கிடக்கட்டும் எங்களை என்ன கமரா உதவியாளர்களாகவா நடத்துகிறார்கள்? ஏதோ எடு பிடி ஆட்கள் மாதிரித்தானே நடத்துகிறார்கள்’
டெவீனாவின் குரலில் அலுப்பு, களைப்பு, எரிச்சல். கடந்த சில நாட்க்ளாகச் சரியாக நித்திரையில்லை. அத்துடன் தாயைப் பற்றிய யோசனை ஆழமாக இருப்பதை அவள் வெளிக்காட்டாமல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துகி றாள் என்பது நேரடியாகத் தெரிந்தது.
ராகவனுக்கு டெவீனா சொல்வது புரிந்தது. அத்துடன் கல்லூரி தொடங்கியதும் அவன் செய்ய வேண்டிய செமினார் காத்துக் கிடந்தது.
அதற்கிடையில் மாமா வீட்டாரையும் போய்ப் பார்க்க வேண்டியிருந்தது.
அப்போது மார்ட்டின் அழாத குறையாக வந்து சேர்ந்தான். இவர்கள் எடுத்த பிலிம் ஸ்ரொக் தரக்குறைவான தென் றும் எடுத்த ஷொட்ஸ்களே உதவாமற் போயிருக்கலாம் என் றும் மனம் வெடிக்கக் கூறினான்.
“ஏதோ மிஞ்சிக் கிடந்த பிலிம் ஸ்ரொக்கை ஒருத்தர் தருவதாகச் சொன்னதை நம்பி இப்படி ஏமாந்து போனேன்’

Page 51
94 அவனும் சில வருடங்களும்
"மார்ட்டின், யாரும் வேண்டுமென்று, மாணவர்களாகிய எங்களை ஏமாற்றியிருக்க மாட்டார்கள். நல்ல காலம் இப்போ தாவது தெரிந்து கொண்டோமே" டெவீனா வழக்கம்போல் ஆறுதல் சொன்னாள்.
'இப்போது என்ன பண்ணுவது? ஏன் பாரிஸில் கிடக்க வேண்டும்’ ராகவன் அவசரத்துடன் கேட்டான்.
அடுத்த நாள் காலையில் லண்டன் புறப்படுவதாக முடிவு கட்டினார்கள்.
அன்ரோனியோ ஆரம்பத்திலிருந்தே அபசகுனம் போல் அழுது கொண்டிருந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தாள் (Sgt. Suurt.
அன்று பின்னேரம் ராகவன் டெவீனாவையும் சோபியா வையும் அழைத்துக் கொண்டு மாமா வீட்டுக்குப் போனான். அவசரமாக லண்டன் திரும்ப நேரிட்டதைப் பற்றிச் சொன் னான்.
அவர்கள் சிக்கன் நூடில்ஸ் செய்திருந்தார்கள். சோபியா இந்தியா போயிருக்கிறாள். சென்னைப் பக்கம் போகவில்லை. பெரும்பாலான வெளி நாட்டார் போல் ஆக்ராவும், கோவா வும் ராஜஸ்தானும் போயிருக்கிறாள். தனது இந்தியப் பிரயா ணம் பற்றி இந்திராவிடம் சொன்னாள். இந்திரா இந்தியாவில் பரதம் படித்தவள். 'உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்’ நூடில்சை வாயில் போட்டபடி சொன்னாள் Gog97uut.
"தாஜ்மஹாலைப் பார்த்தவர்கள். தாய் மஹாலைப் பார்க் காதவர்கள்’
மாமா குடும்பத்தினர் அமைதியுடன் சோபியா சொல்வ தைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 95.
“அதாவது காதலின் மகிமையை, ஆழத்தை துயரத்தை அறிந்தவர்கள் ஒரு சாரார், அடுத்தவர்கள் அதை ஒன்றையும் தெரியாதோர் என்கிறாயா'
டெவீனா இந்திரா செய்திருந்த மரக்கறி சலட்டை ஆராய்ந் தபடி கேட்டாள்.
"அப்படியில்லை, தாஜ்மஹால் பார்க்கப் போகும் வசதி படைத்தவர்கள், அடுத்தவர்கள் வசதிபடைக்காதவர்கள்’ ராக வன் சொன்னான்.
'உலகத்து அதிசயங்களில் ஒன்றைப் பார்க்க ஆர்வம் கொண்டவர்கள் ஒரு சாரார். மற்றவர்கள் வசதியிருந்தாலும் சரித்திர சம்பந்தமான விடயங்களில் அக்கறைப் படாமல் ஹொலிடே என்ற சாட்டில் குடித்துக் கும்மாளம் போடுபவர் கள் என்றும் சொல்லலாமே சோபியா சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள்.
'இந்திரா சங்கீதம் கற்றுக் கொண்டவளாம்' டேவீனா சோபியாவுக்குச் சொன்னாள். 'தமிழ் சங்கீதம் கற்றுக் கொண்ட வள்' மாமா திருத்தினார்.
எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசியதால் மிகவும் சந்தோசமாகப் பொழுது போனது. கடைசியாக எல்லோரின தும் வற்புறுத்தலுக்கிணங்க இந்திரா பாடினாள். ராகவனுக்குப் பிடிக்கும் என்பதற்காகத்தான் பாரதி பாடல் பாடினாள் என்று அவனுக்குப் புரிந்தது.
"காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்குத் தூணிலழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும்”
இந்திராவின் குரலில் தெய்வீகம் இழையோடியது. இசைக்கென்றே பிறந்தது அவள் குரல் - சாப்பிட்டு விட்டு வரும்போது மெட்ரோவின் பக்கத்தால் வரும்போது சில

Page 52
96 அவனும் சில வருடங்களும்
பிரான்சிய இளைஞர்கள் ராகவனைக் காட்டி ஏதோ கிண்டல் செய்வதுபோற் பேசினார்கள்.
இரு வெள்ளைக்காரப் பெண்களுடன் ஒரு ஆசிய நாட் டான் போவது அவர்களுக்குப் பொறாமையாக இருக்கிறது என்பது அவர்கள் பார்வையிலேயே தெரிந்தது.
"இவர்களின் செய்கைக்காக நாங்கள் மன்னிப்புக் கோருகி றோம்’ சோபியாவும் டெவீனாவும் சொன்னார்கள்.
"அவர்கள் இனவாதிகள் இலங்கைத் தமிழனான எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமான அனுபவமல்ல" ராகவனின் குரலில் துயரம்.
“உங்கள் சொந்தக் காரர்கள் இந்த இனவாதத்தை முகம் கொடுக்க வேண்டியிருப்பதையிட்டு நான் துக்கப் படுகிறேன்’ சோபியாவின் குரலில் அவமானம் கலந்த துயரம்.
"அவர்களும் நான் அனுபவித்த கொடுமைகள் போலக் கொடுமைகளை அனுபவித்தவர்கள் தானே’ ராகவன் பெரு மூச்சு விட்டான்.
"உனது சொந்தக் காரப் பெண்கள் ரொம்பவும் கெட்டிக்கா ரர்கள். அழகானவர்கள், துணிச்சலுள்ளவர்கள், பாவம், சொந்த நாட்டில் வாழமுடியாத நிலை யாருக்கும் வரவேண்டாம்.'
கடைசி நேரத்தில் அன்ரோனியோ இவர்களுடன் வராமல் to a to a போய்விட்டான். மார்ட்டின் சோபியாவுடன் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி விட்டு லண்டன் வருவதாகச் சொன்னான்.
டெவீனாகவும் ராகவனும் கப்பலின் மேற்தளத்தில் நின்றி ருந்தார்கள். பாரிசுக்கு வரும்போது இரவில் பிரயாணம் செய் தார்கள் இப்போது காலை பதினொரு மணிக்குக் கப்பல் புறப்பட்டது.
"நாளைக்கு இதே நேரம் ஸ்காட்லாந்துக்கு ரெயின் எடுப் G8 u Groo

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 97
புகாரில் ஊர்ந்து போகும் கப்பலின் தளத்தில் முன் தெரியும் ஆங்கிலக் கால்வாயில் பார்வையைப் பதித்தபடி சொன்னாள் டெவீனா.
"உனது அம்மாவின் உடல் நிலை சரியாக வரவேண்டு மென்று வேண்டிக் கொள்கிறேன்’ மனமுணர்ந்த - ஆத்மீக அன்புடன் சொன்னான் ராகவன்.
'நன்றி ராகவன், அம்மாவின் உடல்நிலை இனிப் பெரும் பாலும் முழுக்க முழுக்கப் பழைய நிலைக்கு வராது. மார்புக் கான்ஸர் வந்து கொஞ்சம் குணம் வந்தது. இன்னொருதரம் ஏதும் பிரச்சினை வந்தால் குணமடைவது நடக்காது என்று டாக்டர் சொன்னார்’
தாயின் மரணம் பற்றி இவள் துயருடன் சொன்னது இவன் மனதைத் தொட்டது.
"உனது துயரத்துக்கு எனது அனுதாபங்கள்’ "ராகவன் உனது சினேகிதத்தை மிகவும் மதிக்கிறேன்" 'நன்றி டெவீனா, கல்லூரிச் சினேகிதமாக இல்லாமல் நீண்ட நாட்கள் எங்கள் உறவு தொடரும் என்று நம்புகிறேன்" "அப்படியா’ அவன் சொன்னதில் நம்பிக்கையில்லாதவர் போல் அவனைப் பார்த்தாள்.
"ஏன் என் சொல்லில் நம்பிக்கையில்லையா?* அவள் அருகில் வந்தாள். கப்பல் மேற்தட்டில் எத்த னையோ மனிதர்கள், புகாரையும் பொருட் படுத்தாமல் நீலக் கடலில் நீந்தியோடும் கப்பலின் ஓட்டத்தை ரசித்துக் கொண்டி ருந்தார்கள்.
பிரான்ஸ் நாடு கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. இந்தப் பக்கத்தில் இங்கிலாந்தின் கரை இன்னும் தெரிய வில்லை.

Page 53
98 அவனும் சில வருடங்களும்
அவள் உஷ்ணக் காற்று கலந்து அவன் கழுத்து நாடிகளின் உதிரத்தைக் கொதிக்கப் பண்ணியது.
என்னை முத்தமிடப் போகிறாயா என்று கேட்கவில்லை. அவன் இதழ்களை தன்னுடன் இணைத்துக் கொண்டாள். ஒரு முத்தத்திற்கு இவ்வளவு சக்தியுண்டா? அவன் அறியான். வானமெங்கும் நட்சத்திரம் வெடிப்பதுபோல் அவன் உணர்வு கள் தெறித்தன.
அவர்கள் நீண்ட நேரம் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
"என்னில் உனககுள் கோபமா. உனது அனுமதியில்லா மல் முத்தம் தந்தேனே கோபமா...'
அவள் கேட்டு முடிக்கமுதல் அவளையிழுத்தணைத்து முத்தமிட்டான்.
"செயின் நதிக் கரையில் நான் கேட்டபோது ஏன் மெளன மாகப் போனாய்’
ஏன் மெளனமாகப் போனான்? மாமா வீட்டுக்குப் போன குழப்பமா? இந்திராவைக் கண்ட கலக்கமா? “எனக்குத் தெரியாது’ உண்மையான மறுமொழியது. "உனது அம்மா பேசுவாளா?’ "அதுவும் தெரியாது’ "உனது மாமா எங்கள் இருவரையும் பாரிசில் கண்டதாகச் சொல்லியிருப்பார் இல்லையா?*
"இரண்டு வெள்ளைக்காரப் பெண்களுடன் சாப்பிட வந்த தென்றும் சொல்லியிருப்பார்’
இருவரும் சிரித்தார்கள்.
"உனது குடும்பத்தைப் பற்றி எனக்கேன் சொல்ல வில்லை’

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 99
“என்னிலுள்ள அனுதாபத்தில் உனது அன்பு எனக்கு வேண்டாம் என்று நினைத்தேன். அத்தோடு எனது குடும்பப் பிரச்சினை எனது நினைவு தெரிந்த நாள் முதலாகத் தெரிந்த விடயம். நான் அந்தத் துன்பத்துடன் வாழப் பழகிக் கொண் Göu L6öt ʼʼ
"உனது அப்பா கேர்ள் பிரண்ட் வைத்திருப்பது உனக்குக் கோபம் இல்லையா'
“எப்போதோ இருந்தது. இப்போது இல்லை’ "ஏன் என்ன நடந்தது' "கல்யாணம் நடந்து கொஞ்ச நாட்களிலேயே அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு வழிகளில் சிந்திக்கத் தொடங்கி விட் டார்கள் என்று நினைக்கிறேன். யூனிவர்சிட்டிக் காதல் இரு பத்தி ஓராம் வயதில் அம்மா கிராட்யுவேட் ஆன அடுத்த மாதம் திருமணம். அப்பா கல்யாணம் முடிந்த அடுத்த சிலமாதங்களி லேயே கென்யா போய் விட்டார். அம்மாவுக்குப் பிரயாணம் பிடிக்காது. அத்துடன் நான் அப்போது அம்மா வயிற்றில் சில மாதக் குழந்தை."
"உனது தகப்பனுக்கு கென்யாவில் தேயிலைத் தோட்டம் இருப்பது தெரிந்துதானே உனது தாய் திருமணம் செய்து கொண்டாள்'
"ஆமாம், தோட்டத்தை விற்று அந்தப் பணத்தை லண்ட னில் வேறு வியாபாரத்தில் போடுவதாகச் சொன்னாராம். அதற்கு அவர் தமயன் ஒத்துக் கொள்ளாத படியால் அவர் குடும்ப வியாபாரத்தில் ஈடுபட வேண்டித் தொடர்ந்தது.
'அம்மா லண்டனில் அப்பா கென்யாவில், நான் விடுத லையில் அப்பாவின் தாய் தகப்பனுடன் கிளாஸ்கோவிலும் போய் நிற்பேன். ஏனென்றால் அப்பா வந்ததும் அப்பாவும் அம்மாவும் ஏதோ விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்’

Page 54
OO அவனும் சில வருடங்களும்
"பெரும்பாலான கல்யாணங்களே இப்படித்தான்’
"எப்படி? 'ஏதோ ஒரு காரணத்திற்காக, தாய் தகப்பனுக்காக சாத்திர சம்பிரதாயத்திற்காக நடக்கும். ஆரம்பத்தில் எல்லாமே சந்தோ சமாகத்தான் இருக்கும் பின்னர் ஏனோ தானோ என்று இழுத்த டித்து வாழ்ந்து தொலைப்பார்கள்'
"உனது அப்பாவும் அம்மாவும் அப்படியா’ அவள் ஆர்வத்துடன கேட்டாள்.
'இல்லை, எனது தாய் பதினெட்டு வயதாயிருக்கும் போது பப்ளிக் ஹெல்த் இன்ஸ் பெக்டராக அப்பா வந்தார். பாடசாலை மாணவிக்கும் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்பெக்டருக் கும் காதல். அப்பா இலங்கையின் வடக்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். அம்மா வடமேற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். அடுத்த வருடம் கல்யாணம். அதற்கடுத்த வருடம் அக்கா பிறந்தாள். எனது ஞாபகத்தில் அம்மாவும் அப்பாவும் பெரிதா கச் சண்டை பிடித்து நான் கண்டதில்லை’
"எவ்வளவு சந்தோசமான சீவியம் உன்னுடையது' டெவீனா பெருமூச்சு விட்டாள்.
ஜனவரி 1986
“பாரிஸ் எப்படி?” அதிபர் கேட்டார். சுருக்கமாக நடந்த விடயத்தைச் சொன் னான்.
"புவனாவும், மைக்கலும் மார்ட்டினுக்கு எடிட்றிங் உதவி செய்வதாகச் சொன்னார்கள், இப்போது எத்தனை பிரச்சினை? அன்ரோனியோவுக்காகத் துக்கப் படுகிறேன்’

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 101
“நிச்சயமாக' ராகவன் சொல்லிக் கொண்டான். "இன்னும் டெவீனா கல்லூரிக்கு வரவில்லை’ அதிபர் துக்கப் பட்டார்.
"தாய்க்குச் சுகமில்லை என்று சொன்னாள்’ அவனுக்கு இரண்டு நாளைக்கு முதற்தான் போன்பண் ணிச் சொல்லியிருந்தாள். தாயின் நிலை சரியில்லை என்றும் தகப்பனின் வருகைக்காகத்தான் காத்திருப்பதாகவும் சொன் னாள்.
புவனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மார்ட்டினின் படம் சரிவரவில்லை. இன்னுமொருதரம் எல்லா வற்றையும் திருப்பிச் செய்ய வேண்டும்.
புவனா தனது மூன்றாவது வருட படிப்புக்குத் தேவை யான கட்டுரைகளை எழுதி முடிக்க வேண்டும். மார்ட்டினின் படத்திற்கு எடிட்டிங் செய்ய ஒப்புக் கொண்டதால் தான் கொடுத்த வாக்குறுதியை மீற முடியாமல் தவித்தாள். தான் கமரா வேலைக்கு உதவ முடியாது என்று ராகவன் மார்ட்டினுக் குச் சொல்லி விட்டான்.
எல்லோரும் அன்ரோனியோவில் எரிச்சல் பட்டுக் கொண் டிருந்தார்கள்.
அம்மா வீட்டில் முந்தானையால் முகத்தைத் துடைக்கும் சாட்டில் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். ராகவனுடன் பேசப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
மாமா பாரிசிலிருந்து என்ன சொல்லியிருப்பாரோ தெரி யாது. அவன் அம்மாவின் சோகத்திற்குக் காரணம் கேட்க விரும்பவில்லை.
கல்லூரியில் முடிக்க வேண்டிய செமினார், மார்ட்டினின் படப்பிடிப்பு, டெவீனாவின் தாயின் சுகவீனம் என்பன அவன் தலையில் பாரமாய் அழுத்தின.

Page 55
1Ο2 அவனும் சில வருடங்களும்
குளிரில் வாடிய லண்டன் இளவேனிற் காலத்தில் மெல் லிய வெளிச்சத்தில் பரபரக்கத் தொடங்கியது.
டெவீனாவுடன் பாரிஸ் சென்ற அனுபவம் இப்போது தான் அவன் சிந்தனையை உண்மையாகத் தாக்கத் தொடக்கியி ருந்தது.
தகப்பனாரின் அகால மரணம் அவர்கள் லண்டனுக்கு வந்து அடுத்த வருடமே ஏற்பட்டதால் பத்தொன்பது வயதில் குடும்பச் சுமையை ஏற்று தம்பி தங்கையின் படிப்புக்கு உதவியவன். இப்போது இருபத்தைந்து வயதில் தனக்குப் பிடித்த படிப்பைத் தொடங்கியிருக்கிறான். அம்மாவுக்கு அதி கம் பிடிக்கவில்லை. மகாலிங்கத்திற்கு வேடிக்கையாக இருக்கி
D51,
கீதா தனது குழந்தை வயிற்றைத் தடவிப்பார்த்துச் சந்தோ சப் பட்டுக் கொண்டிருக்கிறாள்.
மைதிலி சில மாதங்களாக அம்மாவுடன் பிரச்சினைப் பட்டுக் கொண்டிருக்கிறாள்.
ஒரு பின்னேரம் வீட்டுக்கு வந்தபோது ஆனந்தன் வந்திருந் தான். மைதிலியில் ஆனந்தனுக்கு ஒரு கண் இருப்பதை ராகவன் அறிவான். ஆனந்தனின் வருகையால் அம்மாவின் முகத்தில் சந்தோசம். ஆனந்தன் ஊரில் தமிழ் இயக்கங்கள் ஒருத்தரை ஒருத்தர் கொலை செயவதைப் பற்றிச் சொல்லித் துக்கப்பட்டான்.
"உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்’ ஆனந்தன் ராகவ னிடம் சொன்னான்.
"ஊரில் நடக்கும் கொலைகளைப் பற்றி எனக்குச் சொல்வ தானால் நான் வரவில்லை'
ஆனந்தன் ராகவனை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் O3
"என்ன பார்க்கிறாய். அரசியலில் நடக்கும் இந்தக் கொலைகளை நான் வெறுக்கிறேன். அதைப் பற்றிப் பேசவோ நியாயப் படுத்திக் கேட்வோ எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன்"
"உனது வீட்டுப் பிரச்சினைகளை என்றாலும் கேட்கப் பிடிக்குமா"
ஆனந்தன் குரலில் எரிச்சல், ராகவனின் முகத்தைப் பார்த் தான். இருவரும் வெளியிற் போனார்கள்.
'பார்’ ஒன்றுக்குப் போய் பீர் ஆடர் பண்ணிக் கொண்டார் கள்.
"மைதிலியின் விடயத்தை அம்மாவால் தாங்க முடியாம லிருக்கிறது’
முன் பின் எந்த அறிவிப்புமின்றி ஆனந்தன் அப்படிச் சொன்னதை ராகவன் புரிந்து கொள்ளவில்லை.
"என்ன சொல்கிறாய்" "உனது தங்கை மைதிலி ஒரு முஸ்லீமை விரும்பு கிறாளாம்"
குடித்த பீர் தொண்டையில் சிக்கிக் கொண்டது. ராகவன் இருமிக் கொண்டான். அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.
ஒரு சில நிமிடங்கள் ஒரு சில மணித்தியாலங்கள் போல் கழிந்தன.
ஆனந்தன் பொறுமையின்றி நண்பனைப் பார்த்தான். 'ஆனந்தன்." சொல்ல வந்தைச் சொல்லாமல் நண்ப னின் கைகளைப் பிடித்துக் கொண்டான். ஆனந்தன் ஒன்றும் சொல்லாமல் நண்பனைப் பார்த்தான்.
'ஆனந்தன் உனக்கு மைதிலியில் விரும்பமென்று நான் நினைத்துச் சந்தோசப் பட்டுக் கொண்டிருத்தேன்’

Page 56
O4 அவனும் சில வருடங்களும்
"உஷ் அதெல்லாம் டூ லேட் இப்போது மைதிலியின் விடயத்தை எப்படிக் கையாள்வது என்று யோசிப்போம்"
ஆனந்தனின் குரலில் தோல்வியில்லை. தத்துவம் தொனித்தது. தான் காதலித்த பெண்ணின் காதலுக்கு உதவி செய்யும் மனிதத் தன்மை தெரிந்தது. அற்புதமான தமிழர்களில் ஒருத்தன் ஆனந்தன். ராகவன் உணர்ச்சியுடன் நண்பனைப் Untiggsnair.
'மைதிலியுடன் பேசினேன். . தன்னுடன் சட்டக் கல்லூ ரியிற் படிக்கும் கொழும்பைச் சேர்ந்த முஸ்லீம் மாணவன் என்று சொன்னாள். அம்மாவுக்கு இவள் நடத்தைகளில் எப் போதோ சந்தேகமாம். உன்னுடன் இது பற்றிப் பேச விருப்ப மில்லையாம்'
"ஏனாம்" ராகவன் அவசரமாய்க் கேட்டான். "நீ வெள்ளைக்காரப் பெட்டையுடன் திரிகிறாயாம்" ஆனந்தன் நண்பனைக் கூர்ந்து பார்த்தான்.
ராகவன் ஒன்றும் பேசவில்லை. அம்மாவுக்குத் தனக் குள்ள ஆத்திரத்திற்கு மகாலிங்கமும் பாரிஸ் மாமாவும் இன் னும் எரிபொருள் கொடுத்திருப்பார்கள் என்று தெரியும்.
"நீ மைதிலியை விரும்பியதை அம்மாவுக்குச் சொன்னா 1 j fr**
"நான் என்ன முட்டாளா, எரியும் நெருப்பில் எண்ணெய் விட" ஆனந்தன் சோகத்துடன் சிரித்தான்.
கொஞ்ச நேரம் பக்கத்திலுள்ள குடிக்கும் கூட்டத்தைப் பார்த்தான். இந்தப் 'பாரில் எத்தனையோ நாட்டைச் சேர்ந்தவர் கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடிக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் கலப்புத் திருமணம் செய்திருப்பார்கள்? ராகவன் பெரு மூச்சு விட்டான்.
"நான் மைதிலியின் விருப்பத்திற்குத் தடையாக இருக்க மாட்டேன்' ராகவன் உறுதியாகச் சொன்னான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 1O5
'அம்மாவும் அதையேதான் சொன்னாள், நீ மைதிலி பக்கம் தான் இருப்பாய் என்று சொன்னாள்.
“வேறு என்ன செய்யச் சொல்கிறாய்? 'மைதிலியுடன் பேசிப்பாரேன்'
'ஆனந்தன் மைதிலிக்கு இருபத்தி ஒரு வயதாகிறது. அம்மாவோ நானோ மைதிலிக்கு ஒன்றும் சொல்ல முடியாது. அன்பால் வளைக்க முடியாத உணர்வுகளைச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது."
'நீ வித்தியாசமான தமிழனாக இருக்கிறாய்?
"இதில் ஒன்றும் வித்தியாசமில்லை. மாறிக் கொண்டிருக் கும் வாழ்க்கைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்க வேண் டும்' ராகவன் தெளிவாகச் சொன்னான்.
அம்மா இரண்டொரு நாட்களாகச் சாப்பிடவில்லை. அறையுள் முடங்கிக் கிடந்தாள்.
'இவள் என்னையிப்படித் தலை குனியச் செய்து விட்டா ளே” அம்மா விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
கணேஸ் வந்திருந்தான். "நீங்கள் சொன்னால் அவள் மனம் மாறுவாள்’ தமயனுக்குச் சொன்னான் கணேசு. தங்க ளுக்காக உழைத்தவன் ராகவன் என்ற நன்றி கணேசுக்குண்டு. மைதிலியின் பிடிவாதத்தை யுணராதவனாகத் தெரிந்தான் கணேஸ். سمي“
அம்மாவிடம் இது பற்றிப் பேசி மேலும் தர்க்கத்தையுண் டாக்கவிரும்பவில்லை. ராகவன் முடியுமானவரை அம்மாவு டன் தேவைகளுக்கு மட்டும் பேச்சுக்களை வைத்துக் கொண் டான்.
கடந்த பல வருடங்களாகக் குடும்பத்திற்கு உழைத்தவன் இப்போது வேண்டாதவன் மாதிரி அம்மாவால் நடத்தப்படுவ தாக நினைந்து மனம் வருந்தினான்.

Page 57
O8 அவனும் சில வருடங்களும்
அடுத்த நாள் கொலிஜ்ஜுக்கு பஸ் எடுத்த போது எல்லோ ரிலும் கோபம் வந்தது.
கல்லூரியில் புவனாவின் கோபத்தை எதிர் நோக்க வேண் டியிருந்தது. மார்ட்டினின் படத்திற்காக எடிட்டிங் ரூம் ஒழுங்கு செய்திருந்தாள். இவள் பாவிக்கா விட்டால் மற்ற மாணவர்க ளுக்குக் கொடுக்கச் சொல்லி அதிபர் சொன்னதால் அவள் கோபமாயிருந்தாள்.
"அன்ரோனியோவின் பேச்சை நம்பினேனே" என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
ராகவனின் முகத்தைப் பார்த்ததும் தனது திட்டலைக் குறைத்ததுக் கொண்டு; “என்ன முகம் நீண்டு போயிருக்கிறது’ என்று கேட்டாள்.
மைதிலியின் விடயத்தை இவளிடம் சொல்லியழ வேண் டும்போலிருந்தது. சொன்னான். புவனா இலங்கைப் பெண். அவளாள் இவனின் துயரை உணர முடிந்தது.
"என்ன செய்யச் சொல்லி அம்மா எதிர்பார்க்கிறாள்'
" . 'மைதிலியின் காதலை விடச் சொல்லி என்னை எதிர்
பார்க்கிறார்கள்’ ராகவன் துக்கத்துடன் சொன்னான்.
"சொல்வாயா?
'இல்லை"
"ஏன்?
“பெண்களின் சுதந்திரத்தை மிகவும் தீவிரமாக ஆதரிக்கி றேன். மைதிலியின் விருப்பம் அவளின் சொந்த விடயம். அடுத்த வருடம் சட்டத் தரணியாக வரப்போகிறாள். உலகம் தெரிந்தவள் என்று நினைக்கிறேன்’
'நீ வித்தியாசமானவன்'
'ஆனந்தனும் இதைத்தான் சொன்னான்’
'யார் ஆனந்தன்?"

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 1O7
'எனது சினேகிதன், மைதிலியில் மிகவும் விருப்பமாக இருந்தவன்’
'பாவம், காதலில் தோல்வியா' 'இல்லை, ஒரு அனுபவம் என்று சொல்கிறான்' "உனது அனுபவம் பாரிசில் எப்படி? காதலர்கள் பூமியில் யாரையும் முத்தமிடச் சந்தர்ப்பம் கிடைத்ததா? மார்ட்டினின் நிறைய கேர்ள் பிரண்ஸ் ஹலோ சொல்லியிருப்பார்களே வார்த்தையாய்ச் சொல்லாமல் வாயில் தந்திருப்பார்களே’ புவனா கிண்டல் செய்தாள்.
ராகவன் மறுமொழி சொல்ல முதல் மைக்கல் வந்து சேர்ந்தான். 'ஏய் ராகவன், பாரிஸ் எப்படி?’
'மழையும் குளிருமாயிருந்தது* "காதலர்கள் கட்டியணைக்க நல்ல சுவாத்தியம்’ மைக்கல் பலமான சத்தத்தில் சிரித்தான்.
"சட் அப் மைக்கல்’ புவனா அதட்டினாள். அன்று இத்தாலிய படத்துறைபற்றி லெக்ஸர் நடந்தது. ஹொலிவூட் படங்கள் மாதிரியில்லாமல் சமுகக் கருத்துக் கள் பற்றிய படங்களின் வளர்ச்சி பற்றி அதிபர் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த லெக்ஸருக்குச் சில இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களும் வந்திருந்தனர். மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைன் திரைப்படத் துறை மக்களிடம் எவ்வளவு மதிப்புப் பெற்றிருக் கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
புவனாவும் ஜேனும் டெவீனா இன்னும் கல்லூரிக்கு வந்து சேராதது பற்றித் துக்கப் பட்டார்கள்.
1940ம் ஆண்டுகளில் இத்தாலியில் தோன்றிய புது - யதார்த்தம் (Neo-Realism) என்ற சித்தாந்தத்தைப் பற்றி விளங் கப் படுத்தினார் அதிபர்.

Page 58
108 அவனும் சில வருடங்களும்
இந்தச் சிந்தனையின் பின்னணியில் உண்டான படங்கள் பற்றிப் பேசினார். உருவச் சீரமைப்பு, கதை சொல்லும் பாணி என்பவை எப்படி சமுதாய யதார்த்தத்துடன் பின்னிப் பிணைந் திருக்கிறது என்பதை விளக்கும் சைக்கிள் திருடன் (Bicycle Thieves 1949) எனற படத்தைக் காட்டினார்.
இத்தாலிப் படங்களில் எப்படி பாஸிஸத்தைப் பற்றிய விளக்கங்கள் பிரதி பலித்தன என்பதை அதிபர் விளங்கப் படுத்தியபோது ராகவன் கூர்மையாக அவதானித்தான்.
நியோ-றியலிச சித்தாந்தைப் பின் பற்றி எடுக்கப் பட்ட படங்கள் 1950 ஆண்டுகளுடன் முற்றப் பெற்றாலும் இத்தாலிய சினிமாத் துறை எப்படி உலக சினிமா அரங்கில் ஒரு இன்றிய மையாத இடத்தைப் பெற்றது என்பது மறுக்கக முடியாதது.
"இப்படியான படங்கள் இந்தியாவில் வருமா’ புவனா ராகவனைக் கேட்டாள்.
"நான் நினைக்கவில்லை, பாமர மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கவும் பாமர மக்களை முட்டாள்களாக்கிச் சினிமாக் கதாநாயகர்களைத் தலைவர்களாக்கவும் ஆத்மீகத் தலைவர்க ளாகவும் உயர்த்தி வைத்துப் படம் எடுக்கிறார்கள் இந்தியத் தயாரிப்பாளர்கள்'
"அந்த நிலை மாறவே மாறாதா' "மூன்றாம் தர இந்திய சினிமாவை விட தரமான படங் கள் பெரும்பாலும் வரவில்லை, தரமான சிந்தனையாளர்கள் இந்தியச் சினிமாவில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் எண்பது வீதத்திற்கு மேலான மக்கள் சாதாரண வாழ்க்கைத் தரத்தையே எட்ட முடியாத வறுமை நிலையில் வாழ்க்கிறார்கள். அவர்களின் துயர் படிந்த வாழ்க்கைவிலிருந்து ஒரு சில மணித்தியாலங்கள் என்றாலும் விடிவு பெற இந்தக் கற்பனைப் படங்கள் உதவி செய்கின்றன’

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 109
"ஆமாம் ஆயிரக்கணக்கான தெய்வங்கள் அவர்களின் வறுமைக்கு நிவாரணம் செய்வார்கள் என்பது நினைப்பது போற்தான்’ புவனா பெருமூச்சு விட்டாள்.
"இந்தியாவில் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்து விட்டது. அரசியல்வாதிகள் தங்களின் ஊழல்களை மறைக்க சினிமா உதவுகிறது. இந்தியாவில் சினிமா ஒரு தீவிரமான சமயத்தின் ஸ்தானத்தைப் பெற்றுவிட்டது. மதம் அபினுக்குச் சமம் என்று உனக்குத் தெரியும்தானே. அந்த நிலைதான் இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்திய சினமா பாமர மக்களுக்குப் போதை கொடுக்கிறது. அரை குறையாடையணிந்த நாயகிகள் காம போதை கொடுக்கிறார் கள். எகிறியடிக்கும் கதாநாயகர்கள் வீரவெறியையுண்டாக்குகி றார்கள். நாளுக்கு கிட்டத்தட்ட மூன்று படங்கள் இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன. இந்தியாவில் புனிதமான காதலும் மனிதனை மேம்படுத்தும் சமய சிந்தனைகளும் எவ்வளவு தூரம் யதார்த்தம் என்று எனக்குத் தெரியாது.'
ராகவன் சொல்லிக் கொண்டே தன் மூட்டை முடிச்சுகளை எடுத்துகக் கொண்டு ஸ்ரேசனுக்குப் போனான்.
'மைதிலியின் விடயம் எப்படி' புவனா ஆர்வத்துடன் விசாரித்தாள்.
'அம்மா இன்னும் அரைகுறை அஞ்ஞாத வாசம் செய்கி றார். தமிழ்க் கலாச்சாரத்தை நானும் மைதிலியும் கேவலப் படுத்துவதாக முணு முணுக்கிறார்’
ராகவன் படிகளில் இறங்கியபடி சொன்னான்.
'கலாச்சாரம் என்றால் என்ன?’ புவனாவின் கேள்வி ராகவனைச் சிரிக்கப் பண்ணியது.
'கலாச்சாரம் வளர அந்தக் கலாச்சாரத்தை ஒட்டிய சமயம், மொழி, பண்பாடு என்ற மூன்று விடயமும் தேவை. நான் தமிழ்ப் பெண் கோயிலுக்குப் போக மாட்டேன், நேரமில்லை,

Page 59
110 அவனும் சில வருடங்களும்
தமிழ் பேசச் சந்தர்ப்பம் இல்லை, சாரிகட்டிக் கொண்டு கல்லூரிக்கு வருவது வசதியான விடயமாகப் படவில்லை. அப்படி என்றால் நான் தமிழ்ப் பெண் இல்லையா’ புவனா கேட்டாள்.
ராகவன் அவளையுற்றுப் பார்த்தான். ஒவர்க் கோட்டுக் குள் புதைந்த உருவம், குங்குமம் காணாத நெற்றி, தமிழ் அதிகம் வராத சம்பாஷணை, ஆனால் அவள் ஒரு நல்ல பெண், உலகத்துக் கொடுமைகளை உணர்ந்து துடிப்பவள். மனித நேயத்தின் பிரதிநிதி. அந்த உணர்வுக்கு எந்தக் கலாச்சாரமும் தேவையில்லை. மனித நேயம் என்ற கலாச்சாரமே போதும்.
"என்ன யோசிக்கிறாய்" "உன்னைப் பட்டுச் சோலையிலும் குங்குமப் பொட்டி லும் பார்க்க ஆசைப் படுகிறேன்’
"ஏன் என்னைக் கல்யாணம் செய்யப் போகிறாயா? கேலியாகக் கேட்டாள் புவனா.
"உன்னைத்தான் றிச்சார்ட்டிடம் கொடுத்து விட்டாயே, அது சரி நீ றிச்சார்ட்டுடன் வாழ்வதை உன் குடும்பம் எதிர்க்க வில்லையா'
புவனா ரெயினில் ஏறினாள். அவள் தொடர்ந்தாள். “பெரிய அக்கா அம்மா சொன்னபடி செய்தாள். மாப் பிள்ளை சோம்பேறி, வேலைக்குப் போகாதவன், அக்கா ஏதும் கேட்டால் அடியுதை. இரண்டாவது அக்கா காதலித்துக் கல்யா ணம் செய்தாள். முதல் இரண்டு வருடங்கள் சந்தோசம். குழந்தை பிறந்து வாழ்க்கைப் பொறுப்புக் கூடக்கூட ஒருத்தரை ஒருத்தர் வார்த்தைகளால் வருத்திக் கொள்கிறார்கள். என்னால் கல்யாணம் என்ற சிறைக்குள் போக முடியாது. றிச்சார்ட்டைச் சந்தித்தேன். சந்தோசமாக வாழ்கிறோம். கல்யாணம செய்வது பற்றி அகக்கறையில்லை. பேப்பரில் போடும் கையெழுத்துக் காகவோ, கழுத்தில் கட்டும் தாலிக்காகவோ, கையிற் போட்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 111.
டுக் கொள்ளும் மோதிரத்திற்காகவோ உறவுகள் இல்லை. அன்பு ஆத்மீக ரீதியானது. சட்டத்தின் பாதுகாப்பும், சமயத்தின் ஆசிர்வாதமும் சம்பிரதாயத்தின் நல்வாழ்த்துக்களும் ஒருத்தரில் ஒருத்தர் உண்மையான அன்பு வைத்தால் தேவையற்ற அம்சங் கள் என்று கருதுகிறேன்’
ரெயின் அடுத்த ஸ்ரேசனில் நின்றது. 'உண்மையான அன்பு என்றால் என்ன?’ ராகவன் ஆர்வத் துடன் கேட்டான்.
'ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதை கொடுப்பது. கட்டிய பெண்சாதி காலம் பூராவும் கட்டிலில் இன்பம் தரவும் வயிற் றுக்குச் சமைத்துப் போடவும் வந்தவள் என்ற உணர்வின்றி வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட ஜீவன் என்று கெளரவம் கொடுப்பது'
ராகவன் சிரித்தான். "என்ன சிரிக்கிறாய்? "உலகத்தில் எத்தனை தம்பதிகள் இப்படியிருக்கிறார்கள்’ “தெரியாது. ஆனால் நான் அப்படித்தான் வாழ்க்கிறேன்’
ஜூலியட் லண்டனுக்கு வந்து அன்ரோனியோவுடன் வாழமுடியாது என்று எழுதியதாக அன்ரோனியோ சொன்
னான்.
ஏப்ரல் 1986
“மனதில் தடுமாறியிருக்கும் தாயை என்னவென்று தனி யாக விட்டு வரமுடியும்’ ராகவன் கேட்டான்.
"நான் மிகவும் பெலவீனமானவன் என்று நினைக்காதே, ஆனாலும் ஜூலியட் இல்லாமல் என்னால் வாழமுடியாது’

Page 60
112 அவனும் சில வருடங்களும்
இவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது டெவீனா ஸ்ருடன்ஸ் ஹாலில் காலடி எடுத்து வைத்தாள்.
சில கிழமைகளாக அவளைக் காணாததால் மனம் குமைந்து கொண்டிருந்த ராகவனில் ஆயிரம் சூரியன் கண்ட பிரகாசம்.
‘எப்படி அம்மா" "ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணப் பட்டிருக்கிறாள். கான்சர் அவள் எலும்பெல்லாம் பரவியிருப்பதாகச் சொல்கி றார்கள். சிகிச்சை செய்கிறார்கள்’
அன்ரோனியோ தனது ஒப்பாரியை ஒதுக்கி வைத்து விட்டு டெவீனாவின் தாயின் உடல்நிலை பற்றி விசாரித்தான். அன்று பின்னேரம் லண்டன் நாஷனல் பிலிம் தியேட்ட ரில் 'சியாம் பெனகலின்” படமொன்றுக்கு டெவீனாவுடன் போனான் ராகவன்.
ஒரு வருடத்திற்கு முதல் என்றால் ஒரு ஆங்கிலப் பெண் ணுடன் இந்தியப் படமொன்றுக்குப் போவதை நினைத்திருக்க மாட்டான்.
அப்பா இறந்தபின ஒரு பிலிம் டிவெலப் பண்ணும் கொம்பனியில் வேலை செய்தான். வேலையுண்டு தானுண்டு என்ற பாவம். அத்துடன் குடும்பச் சுமை வேறு. அந்தக் கால கட்டத்திற்கும் தற்போதைய தனது நிலைக்கும் உள்ள வித்தியா சத்தை அவனாற் கற்பனை செய்ய முடியவில்லை.
படம் முடியவிட்டு தேம்ஸ் நதிக்கரைப் படிகளில் அமர்ந் திருந்தார்கள்.
'அம்மாவுக்கு ஏதும் நடந்தால் என்றால் எப்படித் தாங்க முடியுமோ தெரியுமோ தெரியாது."
"நடப்பதை யாரால் தவிர்க்க முடியும்?"
'உலகம் வெறும் மாயையாகத் தெரிகிறது’

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 13
'நானுமா" 'நீ ஒருத்தன் இல்லை என்றால் லண்டன் திரும்பியிருப் பேனோ தெரியாது' அவர் குரலின் கலக்கத்தில் அவன் கரைந்து விட்டான்.
'வாருங்கள் லண்டனுக்கு வெளியில் எங்காவது போவோம்"
அவன் அம்மாவுக்கு போன் பண்ணி லேட்டாக வருவதா கச் சொன்னான். கார் எங்கேயோ போய்க் கொண்டிருந்தது.
"எங்கே போகிறோம்’ "எங்களைத் துன்பப் படுத்தும் மனிதர்கள் இல்லாத உலகத்திற்கு'
'அடேயப்பா அது எங்கேயிருக்கிறது, எப்படி யிருக்கும்?"
கார் பிறைட்டன் பக்கம் போய்க் கொண்டிருந்தது. "ஐ யையோ பிறைட்டன் பீச் கல்லும் மண்ணுமானது, குளிர் காற்று உயிரைக் குடிக்கப் போகிறது” அவன் ஒலம் போட்டான்.
பிறைட்டனைத்தாண்டி கார் நியு ஹேவன் என்ற இடத்திற் குப் போனது.
நேரம் பதினொரு மணிக்குமேல் இருக்கும். வெள்ளைக் குன்றுக் கடற்கரையில் அலைகள் ஓலமிட்டு அலறி முட்டின. காரை நிறுத்தி விட்டு அவள் நடந்தாள், அவன் தொடர்ந் தான். அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று ஒரு சில வினாடிகள் யோசித்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மின்மினுக்கும் சில தெரு விளக்குகள், திறந்த வெளி, வெண்ணிறப் பாறைகள், பயங்கர ஓசையுடன் கடல் அலைகள்.
"டெவீனா இந்த இடம் அபாயமானதாகத் தெரிய வில்லையா?*

Page 61
114 அவனும் சில வருடங்களும்
"அபாயமென்று நினைத்தாத்தான் பயம். எனது இளம் வயதில் இந்தப் பாறைகளில் அமர்ந்திருந்து எத்தனையோ கனவுகள் கண்டிருப்பேன்’ அவள் குரல் கனவில் ஒலிப்பது போல் தானிருந்தது.
“என்னைத் தனிமையில் விட்டு ஓடிப் போக வேண்டும் போல் இருக்கிறதா’ அவள் ஏக்கத்துடன் கேட்டாள்.
"என்ன பைத்தியத்தனமான கேள்வியது?’ அவளை அணைத்துக் கொண்டான்.
‘'நீ உண்மையாகக் காதலிக்கிறாயா ராகவன்’ அவன் மறுமொழி அவள் இதழ்களின் பதிந்தது. “எனக்கென்னவோ இந்த இடத்தில் இந்த நிமிடமே இறந்து விட்டால் சந்தோசமாக இருக்குமென்று நினைக்கி றேன்’ விரக்தியின் பிரதிபலிப்பு அவள் குரலில். "டெவீனா குழந்தைத் தனமாகப் பேசாதே" "என்னில் அன்புள்ள அம்மா போய் விட்டால், உனது அன்பும் இல்லை என்ற நிலை வந்தால் என்றால் இந்த உலகத்தை முகம் கொடுக்க முடியுமோ தெரியாது’ வாழ்க்கை யைப் பார்த்துப் பயந்த குழந்தையின் தொனியது.
"நீயும் அன்ரோனியோ போல பேசத்தொடங்கி விட்டாய்"
"அன்ரோனியோவை நான் இப்போது விளங்கிக் கொள்கி றேன். காதலில்லாத, அன்பில்லாத வியாபாரத்தனமான உறவுக ளில் ஏனோ தானோ என்று வாழ்க்கையை இழுத்தடிப்பதை விட தொலைந்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்’
டெவீனாதான் இப்படிப் பேசுகிறாளா என்று ராகவனால் நம்ப முடியாமலிருந்தது. தாயின் சுகவீனம் அவளை எப்படிக் குழப்பியிருக்கிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 115
அடுத்த சில நாட்களில் ஜூலியட் லண்டன் வந்தாள். அன்ரோனியோவின் முகத்தில் மகிழ்ச்சி. அன்ரோனியோவின் கட்டளையை அவளால் ஏற்க முடியாது என்று அழுதாள்.
ஒரு நாள் இருவரின் தர்க்கமும் மாணவர்களின் ஒய்வறை யிலிருந்து உக்கிரமாகக் கேட்டன.
பின்னேரம் ஐந்து மணிக்கு லெக்ஸர் முடிந்து வகுப்பறைக ளால் வந்து கொண்டிருந்த மாணவர்கள் என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தார்கள். :
டெவீனாவைக் கடந்து கொண்டு ஜூலியட் மொட்டை மாடி நோக்கி ஓடினாள்.
'ஜ"லியட் என்ன நடந்தது’ என்று டெவீனா பின் தொடர்ந்ததும் அதற்குப் பின் நடந்ததும் திரைப் படக் கல்லூ ரியை உலுக்கி விட்டது.
ஜூலியட் பதினான்காம் மாடியிலிருந்து குதித்து விட் டாள். கண்மூடித் திறப்பதற்குள் அந்தகக் கோர நிகழ்ச்சி நடந்தது.
டெவீனா எட்டிப் பார்த்தபோது இரத்தத்தில் தோய்ந்து கிடந்த அழகிய ஜூலியட்டின் உடலைப் பார்த்ததும் அவனுக் குத் தலை சுற்றியது. ஆம்புலன்ஸ் வருவதற்கிடையில் ஜூலி யட்டின் ஆவி பிரிந்நது விட்டது.
அவள் இல்லாவிட்டால் வாழமுடியாது என்று அடிக்கடி சொல்லிய அன்ரோன்யோவை விட்டு ஜூலியட் மறைந்து விட்டாள்.
அன்ரோனியோவை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர டொக்டரை அழைத்து நித்திரை ஊசி போட வேண்டியிருந் தது. அவன் அலறலில் அந்த இடம் அதிர்ந்தது.
அடுத்த சில நாட்கள் மைக்கல், ஜேன், ஸ்ரீவன், ராகவன் நால்வரும் அன்ரோனியோவின் பிளாட்டில் தங்கினார்கள்.

Page 62
116 அவனும் சில வருடங்களும்
அதிபர், ஒவ்வொரு பின்னேரமும் வந்து அன்ரோனியோ வைப் பார்த்தார். நித்திரை முடிந்து எழுந்தால் அலறுவான்.
நண்பர்கள் விஸ்கியைக் கொடுத்து அவனை நித்திரையாக் குவார்கள்.
ராகவன் போன் பண்ணி அம்மாவுக்கு விடயத்தைச் சொன்னான்.
"படத் தொழிலில் இருப்பவர்கள் அதிகம் பேர் பைத்தி யம் தானே’ முன்னுக்குப் பின் முரணாக அம்மா ஏதோ அலட்டினாள்.
மைதிலி தன் உளமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாள்.
அன்ரோனியோ, ஜூலியட் இருவருக்குமிடையில் நடந்த தர்க்கத்தைக் கேட்டவர்கள் அன்ரோனியோ ஜ"லியட்டைக் கண்ட பாட்டுக்குத் திட்டியதாகச் சொன்னார்கள்.
உன்னைப் போல பெண்களை நம்பிய எத்தனைபேர் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று திட்டினா னாம்.
அதைத் தாங்க முடியாத ஜூலியட் உணர்ச்சி வேகத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாகச் சொன்னார்கள்.
உயிர் போவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் என்றா லும் தன் எதிர்காலம் இப்படி வெட்டப்படப் போகிறது என்று நினைத்திருப்பாளா?
டெவீனா குன்றிப் பேனாள். கான்ஸரில் இறந்து கொண்டிருக்கும் தாயைப் பார்த்து விட்டு வந்தவளுக்கு கண்ணுக்கு முன்னால் பாய்ந்து மடிந்த ஜூலியட்டின் இறப்பு எவ்வளவு தாக்கத்தையுண்டாக்கியிருக் கும். யாராலும் கற்பனை செய்ய முடியவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 117
அன்ரோனியோவுடன் ராகவன் தங்கி நின்றபோது புவனா, பிலிப், டெவீனா எல்லோரும் ஒரு பின்னேரம் வந்தனர்.
அன்ரோனியோ தள்ளாடியபடி எழுந்தான், அழுதான், தலையிலடித்துக் கொண்டிருந்தான். லண்டனிலிருந்தால் தனக் குப் பைத்தியம் பிடிக்கும் என்றான்.
ஜூலியட் தற்கொலை செய்து கொண்ட பிலிம் கொலிச்சுக் குத் தான் காலடி எடுத்து வைக்க முடியாது என்று விம்மியழு தான். அவனின் துயரை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. புவனாவும் பிலிப்பும் வீடுகளுக்குச் செல்ல ஆயத்த மானபோது டெவீனா இன்னும் அன்ரோனியோவைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.
"நீ வரவில்லையா’ பிலிப் டெவீனாவைக் கேட்டான். "நான் ராகவனுடன் போகிறேன்’ என்று பிலிப்பின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள்.
அவர்கள் போனாலும் அன்ரோனியோவுக்குச் சாப்பாடும் நித்திரைக் குளிசையும் கொடுத்து தூங்கப் பண்ணிறார்கள்.
“இப்படி ஒரு பயங்கர அனுபவம் யாருக்கும் வேண் டாம். உயிருக்குயிராய் நேசித்த ஒருவள் தனக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டதை என்னவென்று ஒரு மனித மனம் மறக்க முடியும்?"
டெவீனாவின் மனம் ஆழ்ந்த துயரத்திலாழ்ந்திருக்கிறது என்று அவர் பேச்சில் தெரிந்தது.
'நடந்தைப் பற்றி யோசிக்காதே டெவீனா" ராகவன் ஆறுதல் படுத்திறான்.
"ராகவன், அன்ரோனியோ படிப்பிற் கவனமில்லாமல் குடித்துக் கொண்டும், மைக்கலுடன் சேர்ந்து கஞ்சா அடித்துக்

Page 63
118 அவனும் சில வருடங்களும்
கொண்டுமிருப்பதாக ஜூலியட்டுக்கு எழுதினேன். நான் எழுதி யிருக்கா விட்டால் அவள் வந்திருக்காமலிருந்திக்கலாம்’
ராகவனுக்கு இது புதிய செய்தி. இரக்க மனமுள்ள டெவீனாவின் இந்தச் செயல் இத்தனை பாரதூரமான விளை வைக் கொண்டுவரும் என்று யார் கண்டார்கள்?
"டெவீனா நடந்ததையே திரும்பத் திரும்ப யோசித்தால் பைத்தியம்தான் பிடிக்கும்’ ராகவன் அதட்டினான்.
'அன்ரோனியோ குடித்துக் கொண்டு அலட்டிக் கொண்டி ருப்பான் இப்போது பைத்தியமாகப் போகிறானேர், அது என்னாற்தானே நடந்தது'
டெவீனா அழத் தொடங்கி விட்டாள். டெவீனா இப்படி அழுதது அவன் கண்டதில்லை.
அவளையணைத்துக் கொண்டான். ஒரு குழந்தைபோல் அவள் அழ இவன் கண்களைத் துடைத்து விட்டான்.
தூரத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட சப்தம். யாரோ விபத்தில் அகப்பட்டிருப்பார்கள் போலும், வெளியில் கொஞ்சம் நேரம் ஆரவாரம்.
அவளையணைத்து அவள் பொன்னிறத் தலையைத் தடவி விட்டான். அவள் உடம்பு கொடியாய் அவனிற் துவண்டது. அவளின் ஸ்பரிசம் அவன் உடம்பில் அக்கினியை மூட்டிவிட் டது. அவள் இதழ்களின் தேன் அவன் உணர்வைத் திகட்டியது. அன்ரோனியோ குறட்டை விடுவது கேட்டது. அவனின் கதவைச் சாத்திவிட்டு வந்தான் ராகவன். தனக்குள் குடியிருந்த வேறு யாரோ விழித்துக் கொண்ட உணர்வு ராகவனுக்கு. இருபத்தைந்து வருடத்தின் திருப்பம் இன்றிரவு என்று மனம் சொல்லியது.
சித்திரை மாத நிலவு வெட்கத்துடன் இவர்களை ஜன்ன லால் எட்டிப் பார்த்தது. நட்சத்திரங்கள் சம்மதத்துடன் கண் சிமிட்டின.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 119
"ஐ லவ் யூ சோ மச் ராகவன்' அவள் கிசு கிசுத்தாள். அதன் முழு அர்த்தத்திற்கும் விளக்கம் தேடும் நிலையில் அவன் இல்லை. உடம்பு தகித்தது. உள்ளம் பர பரத்தது.
'நான் மிகவும் ஏழை' அவன் முணுமுணுத்தாள். 'தாஜ் மஹால் கேட்கமாட்டேன்' அவள் குரலில் குறும்பு.
"நான் கருப்பன்' "நான் நிறங்களை ரசிப்பவள்' இருவரும் சிரித்தனர். "காதல் குழப்பத்தைத் தரும்' அவன் சொன்னான். "முழு மனிதம் என்பது காதலையுணர்வது. நான் ஒரு முழுமையான பெண்ணாக உன்னிடம் என்னையர்ப்பணிக்கி றேன்’
அவள் நேர்மை பேசியது.
"நான் கொடுத்து வைத்தவன்’ "அது எனக்குத் தெரியாது." அவளின் ஆடையற்ற உடம்பு பளிங்குச் சிலையாய் அவன் பார்வையைக் கலக்கியது.
சாதி, சமய, நிற, மொழி, வர்க்க பேதங்கள் அந்தச் சங்கமத்தில் சிதறிப் பறந்தன.
'ராகவன், இருபத்திரண்டு வயதில் ஆங்கிலப் பெண்கள் பலர் அனுபவமுள்ளவர்கள் என்று கேள்வி, ஐயம் எ வேர்ஜின், பிளிஸ் பி ஜென்டில்’ அவளின் கெஞ்சலை அவனின் கொஞ் சல் அமைதிப் படுத்தியது.

Page 64
12O அவனும் சில வருடங்களும்
மைதிலிஜ"லியட்டின் மரணத்தை அடிக்கடி விசாரித்தது
அம்மாவுக்கு பயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.
“என்ன விசர் வேலை, நாங்கள் நாடோடிகளாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறோம், தற்கொலை செய்ய எல்லோ ரும் யோசித்தால் உலகத்தில் யாரும் மிஞ்சப் போவதில்லை’ அம்மா சொன்னாள். அம்மாவின் பயம் முகத்தில் தெரிந் தது. ராகவன் கல்லூரிக்குப் புறப்பட்டான். காதல் சரிவரா விட்டால் மைதிலியும் இறந்து விடுவாளோ என்று அம்மா பயப்பட்டாள். 'என்ன ஏதோ புது உலகம் கண்ட மனிதன் மாதிரி கண்களில் ஒரு வித்தியாசம் தெரியுதே என்ன?
புவனா இவ்னை மேலும் கீழும் பார்த்தபடி சொன்னாள். அவன் புது உலகம் கண்ட அனுபவத்தை யாரிடமும் பங்கிடத் தயாரில்லை. டெவீனாவுடன் கழித்த சில இரவுகளின் பின் இன்று தான் கல்லூரிக்கு வந்திருக்கிறான். ஒரு புது உலகத்திலி ருந்து பூமிக்கு வந்த உணர்வு அவனுக்கு.
"என்ன அன்ரோனியோவுடன் சேர்ந்து நானும் விஸ்கி போட்டேன் என்று நினைக்கிறாயா? அவளின் கேள்விக்கு ஏதோ மறுமொழி சொன்னான். புவனாவைப் பார்க்காமல் சொன்னான். புவனா புதிர் தெரியாமல் விழித்தாள். அதிபர் மாணவர் அசெம்பிளியில் இறந்து போன ஜூலியட்டுக்காகத் தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
மூன்றாம் வருட மாணவர்கள் தங்கள் கடைசி வருட படத் தயாரிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். ராகவ னின் வகுப்பினர் பலர் உதவியாளர்களாகப் பல துறைகளில் பணி புரிந்தனர்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 121
அந்த வருட வசந்த காலத்தில் எடிட்டிங் அறைகளிலும் சவுண்ட் றெக்கோட்டிங் ஸ்ரூடியோக்களிலும் மாணவர் கூட் டம்; இரவும் பகலுமாக உழைத்தார்கள்.
படவிழா வழக்கம்போல் மிகவும் கோலாகலமாக 'பாவ் ரர் தியேட்டர் என்ற இடத்தில் நடந்தது.
மாணவர் தயாரிப்பில் லண்டனைச் சேர்ந்த சில கல்லூரிக ளுடன் போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் கல்லூரியும் நிறைய, நல்ல தயாரிப்புக்களை வெளியிட்டது.
'அட கடவுளே இதையெல்லாம் பார்க்கப் பயமாக இருக்கிறது. அடுத்த வருடம் நான் இந்த நிலையில் இருப்பேன்’ புவனாவின் பயம் தெளிவாகத் தெரிந்தது.
"புவனா எதிர்காலத்தைப் பற்றிப் பயப்படாதே நம்பிக் கையுடன் இரு’ டெவீனா சொன்னாள்.
"ஆமாம் நீ சொல்வாய்தானே. உனக்கென்ன படிப்பு முடிய பி.பி.சி.யில் நல்ல வேலை கிடைக்கும். நாங்கள் என்ன பண்ணலாம்? கறுப்பு, ஆசிய படத்தாயாரிப்பாளர்கள் லண்ட னில் படும் கஷ்டம் தெரியும்தானே? மூன்று வருடம் இந்தக் கல்லூரியில் நேரத்தை வீணாக்குவதை விட அம்மா சொன்னது போல் அக்கவுண்டன்ஸ் அல்லது எஞ்சினியரிங் செய்திருக்க லாமோ என்று யோசிக்கிறேன்"
"புவனா இது உன் வாயிலிருந்துதான் வருகிறதா? நீ உறுதியான பெண் என்றல்லவா நினைத்தேன்’ டெவீனா புவனாவைத் தட்டிக் கொடுத்தாள்.
அப்போது அவர்கள் 'பாவ்ரர் பட விழாவிலிருந்து பிக்க டெலி அண்டர் கிரவுண்ட் ரெயின் எடுக்க வந்து கொண்டிருந் தார்கள்.
பிக்கடெலி சதுக்கம் வழக்கம்போல் இளைஞர்கள், ஊர் சுற்றிப் பார்ப்போர் என்போரால் நிறைந்திருந்தது. காதல்

Page 65
122 அவனும் சில வருடங்களும்
தெய்வம் ஈரோஸ் அம்புக்கணையுடன் சிலையாக அந்தச் சதுக்கத்தில் உயர்ந்து நின்றார். உல்லாச பூமியான லண்டனில் செல்வந்தர்களான அரேபியர்களின் படகுகள் போன்ற கார்கள் பகட்டாகப் போய்க் கொண்டிருந்தன. محے
விபச்சார விடுதிகள் நிறைந்த 'சோஹோ’ என்ற இடத்திற் குச் சிலர் தங்களை யாரும் அடையாளம் காணமாட்டார்கள் என்ற நினைவில் தலையைத் தாழ்த்தி, ஒவர்க் கோர்ட்டுக்குள் தங்களை மறைத்துக் கொண்டு திரிந்தார்கள்.
பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா?
"இந்த ஆண்களைக் கட்டி வைத்து உதைக்க வேணும்’ புவனா வெடித்தாள்.
“வீட்டில் அன்பான மனைவியும் அழகான குழந்தைக ளும் இருக்கும் மனிதர்கள் தான் இவர்களிற் பெரும்பாலானவர் களாக இருப்பார்கள்" புவனா தொடர்ந்தாள்.
"ஏன் இந்த ஆண்கள் மனைவிக்குத் துரோகம் செய்கிறார் கள்' டெவீனா கேட்டாள்.
"சுவையற்ற கல்யாணம், சுமையான குடும்பம். இவைக ளிலிருந்து தப்ப இப்படி அலைகிறார்கள்’ புவனா தொடர்ந் தாள்.
'ஏன் ஆண்களை மட்டும் திட்டுகிறாய். பெண்களும் தானே தங்கள் உடம்பை விற்பனை செய்கிறார்கள்’
"டெவீனா பெரும்பாலான பெண்கள் வறுமையின் கார ணமாகத்தான் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் அபிவிருத்தி நாடுகளிலிருந்து மேற்கு நாடுக ளுக்கு ஏற்றுமதி யாகும் மூலப் பொருளில் இளம் பெண்களின் தொகையும் முக்கிய இடம் பெறுகிறது’
“உலகத்தில் எப்போது ஒரு வறுமையற்ற சமுதாயம் உருவாகும்?' டெவீனா பெருமூச்சு விட்டாள். வறுமை, சாதிக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 123
கொடுமை, பெண்ணடிமை என்பன டெவீனாவைத் துக்கப்ப டுத்தும் என்று யாருக்குத் தெரியும். u
"நீங்கள் வறுமை பற்றிப் பேச எனக்குப் பசிக்கிறது’ ராகவன் முணு முணுத்தான்.
"உனது எதிர்காலப் படைப்புக்கள் உலகத்தில் வறு மையை ஒழிக்கத் தயாரிக்கப்படுமா’ புவனா ராகவனைச் சீண்டினாள்.
"உலகத்தில் எத்தனையோ ஞானிகளும், சிந்தனையாளர்க ளும், புரட்சிவாதிகளும் செய்ய முடியாததை நான் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. ஆயிரக் கணக்கான வருடங் களாக உலகம் காணாத முன்னேற்றத்தைக் கடந்த ஐம்பது வருடங்களாக உலகம் கண்டு விட்டது. பெரும்பாலான விஞ் ஞானக் கண்டு பிடிப்புக்கள் மனித நேயத்தை விரிவு படுத்துவ தற்காக உதவுகிறதா எனக்குத் தெரியாது.
இனி இல்லை என்ற நுண்ணிய, பெலம்வாய்ந்த பயங்கர மான போர்க்கருவிகளை இன்று மனிதன் கண்டு பிடித்திருக்கி றான். போர் ஆயுதங்கள் வில், அம்புக்கள் என்றில்லாமல் ஏவுகணைகளிலும் நச்சு வாயுக் குண்டுகளுமென்று உலக நாசத்திற்கே வழி காட்டுகிறது? காட்டையழிக்கிறான் மனிதன், கடலைக் குதறுகிறான், பிரபஞ்சத்தை நச்சுத் தன்மையால் நாசமாக்குகிறான் மனிதன். இவைகளின் கொடுமைகளின் தாக்கத்தை யார் தடுக்கப் போகிறார்கள். என் போன்ற இரு கலைஞர்களால் முடிந்த காரியமா?"
ராகவன் தனது நீண்ட பேச்சை முடித்துக் கொண்டான். "இந்தக் கொடுமைகளைக் கண்டு வாய் பேசாமல் இருப் பதை விட எங்கள் எதிர்ப்பைக் காட்டுவதும் மனித அன்புக்கு நாங்கள் செய்யும் கடமையாக இருக்குமில்லையா' டெவீனா ராகவனின் பேச்சுக்கு ஆதரவாகச் சொன்னாள்.
பிலிப் வருவது தெரிந்தது.

Page 66
124 அவனும் சில வருடங்களும்
"டெவீனா உனக்கு விருப்பமான ஜாஸ் நிகழ்ச்சி ரொனி ஸ்கொட்டில் நடக்கிறது? வாயேன்"
டெவீனா புவனாவையும் ராகவனையும் பார்த்தாள். "ஐயையோ என்னால் ரொனி ஸ்கொட் கிளப்புக்கு வர முடியாது. முட்டாள் பெண்ணே, மாணவர் ஊதியத்தில் என்ன வென்று இந்தக் கிளப்புகளுக்கெல்லாம் போக முடியும்’ புவனா கூவத் தொடங்கிறாள்.
டெவீனா பிலிப்பைத் திரும்பிப் பார்த்தாள். "பட விழாவில் இன்றெல்லாம் திரிந்து நானும் களைத் துப் போய் விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு’ பிலிப்பின் ஆவலான முகத்தில் தோல்வியின் சாயல் படிந்தது.
"அன்பளிப்பு டிக்கெட்ஸ் என்னிடம் இரண்டு இருக் கிறது" பிலிப் கெஞ்சினான். வசதியான குடும்பத்து ஆங்கிலே யன். இருபத்தைந்து பவுண் கொடுத்துச் செல்லும் ரொனி ஸ்காட்டுக்கு வேறு எத்தனையோ தியேட்டர்களுக்கு அன்ப ளிப்பு டிக்கெட்ஸ் கிடைக்கலாம்.
"பிளிஸ் வேண்டாம், தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யதே'
டெவீனாவின் குரலில் கண்டிப்பு. பிலிப் சோர்ந்த முகத்துடன் போய்விட்டான். "பிலிப் உன்னில் மிகவும் பைத்தியமாக இருக்கிறான்’ புவனா கிண்டல் செய்தாள். "கிடைக்கமுடியாததைத் துரத்துவதில் ஆண்களுக்கு ஒரு ஆசை. எப்படியும் தங்களுக்குப் பிடித்ததை அடைய வேண் டும். அதிலும் தாங்கள் ஆசைப்படும் பெண்களை அனுபவித்து விடவேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு வந்து விட்டால்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 125
அதற்காக எந்தப் பொய்யும் சொல்வார்கள். ஜ லவ் யூ என்ற வசனத்தைச் சொல்லிவிட்டால் வாழ்க்கையை வளைத்துவிட்ட உணர்வு அவர்களுக்கு'
டெவீனா பொரிந்து தள்ளினாள். "அடேயப்பா, இது என்ன திடீரென்று இப்படித்தத்துவங் கள் கொட்டுகின்றாளே. ஜேன் டார்வினா உனது குரு'
புவனா ஆச்சரியப் பட்டாள். "யாரும் சொல்லித் தரவில்லை. பெண் சுதந்திரமாக நடக்க வெளிக்கிட்டால் அந்தச் சுதந்திரத்தைப் பாவித்துக் கொள்ள ஆண்கள் தயங்குவதில்லை. அதாவது சுதந்திரமான பெண் என்றால் படுக்கைக்கு வருவதைப் பெரிது படுத்த மாட்டாள் என்ற முட்டாள்தனமான கருத்து முற்போக்கு வாதிகள் என்ற போர்வையில் நடமாடும் போலிகளிடம் இருக்கிறது. பிற்போக்கு வாதிகளிடம் பழகிக் கொள்வது மிகவும் இலேசானது. அவர்கள் உலகத்தில் கடவுளும் கற்பும் என்ற பெயரில் சந்தர்ப்பம் வந்தால் எந்தப் பெண்களையும் அனுபவிக்கத் தயங்காதவர்கள். முற்போக்கு வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு பெண்களைச் சுற்றுபவர்களை நம்பக்கூடாது. வெறும் வார்த்தைகளால் உலகத்தை மாற்றப் போவதாக உளறும் கனவான்கள் இவர்கள்’
"இதோ பார் டெவீனா, சினிமாக் கொலிச்சுக்கு வரும் போது நீ நன்றாகத்தானேயிருந்தாய். என்ன இப்போது உலகத் துக் கொடுமைகளையெல்லாம் உடைத்தெறியும் புரட்சிப் பெண்ணாக மாறிவிட்டாய்'
புவனா ஆச்சரியத்துடன் கேட்டாள். ராகவன் ஒன்றும் சொல்லாமல் இந்தப் பெண்களின் தர்க்கத்தைக் கேட்டுக் கொண்டு வந்தான். தூரத்தில் I.C.A என்ற இடத்தில் மைக்கல், ஸ்ரீவன் காத்திருப்பார்கள் என்று ஞாபகம் வந்தது.

Page 67
126 அவனும் சில வருடங்களும்
"புவனா I.C.A யுக்குப் போவோமா' ராகவன் கேட்டான். "நான் களைத்துப் போய்விட்டேன். அத்தோடு இன்று றிச்சார்ட் அம்மாவிடம் போய்விட்டு வருகிறான். ஏன் இந்த இந்தியப் பெண்ணுடன் சுற்றுகிறாய் என்று அவன் அம்மா ஒப்பாரி வைத்திருப்பாள். றிச்சார்ட் களைத்துப் போய் வந்தி ருப்பான். ஒடிப்போய் அவனுள் புதைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது" புவனாவின் குரலில் காதல் கரைந்து பிக்கடெலி சதுக்கத்தில் வடிந்தது.
புவனாவை ஸ்ரேசனில் சேர்த்துவிட்டு ராகவனும் டெவீ னாவும் 1.C.A கட்டிடத்திற்குப் போகும் வழியில் நடந்து கொண்டிருந்தாள்.
“என்ன பேசாமல் வருகிறாய்’ டெவீனா ராகவனைக் கேட்டாள்.
'ஏனோ இன்று நான் உனது வித்தியாசமான கருத்துக்க ளைக் கேட்டதால் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டேன்’
"என்ன சொல்கிறாய்" "உன்னை இன்னும் அதிகம் புரிந்து கொண்டேன்’ "எனக்குத் தெரியாது. எங்களை எங்களுக்கே முற்றும் புரியாது. புரிந்து கொள்ளக் கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை முன்வைத்து எங்களை நாங்கள் கணித்துக் கொள்கிறோம், ஆனால் அது முழுக்க முழுக்க எங்களை நாங்கள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியா காது. நாங்கள் சமுதாயத்தில் மிகவும் புத்தியுள்ள மிருகங்கள் என்று நினைக்கிறேன். எங்களைத் திருப்திப் படுத்திக் கொள்ள எங்களுக்குப் பிடித்த தத்துவங்களில் தொங்கிக் கொண்டிருக்கி றோம் என்று நினைக்கிறேன்’’.
ராகவனுக்கு அவளில் இன்னொருத்தியோ, பலரோ இருப் பதாக உணர்ந்தான். வீட்டில் மைதிலி எல்லோரையும் ஆச்சரி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 127
யத்தில் ஆழ்த்தியதுபோல் இந்தப் பெண்ணும் அடிக்கடி இவனை ஆச்சரியப் படுத்துகிறாள்.
அவன் அதை ரசித்தான். அவளை அறிந்து கொள்ளும் ஒவ்வொரு கோணத்திலும் அவள் மிகவும் ரசிக்கக் கூடிய பெண்ணாகத் தெரிந்தாள்.
அவனுடையவனாக இருப்பது தனது அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டான்.
அந்த அன்பில் அவளை இறுக அணைத்துக் கொண்டான். "உனக்குப் பிலிப்பில் பொறாமையில்லையா? அவள் மெல்ல அவன் காதில் கிசு கிசுத்தாள்.
"ஏன் பொறாமைப் பட வேண்டும்’ 'அவன் என்னைச் சுற்றுகிறான். சாதாரண ஆண்களுக்கு வரும் பொறாமை உனக்கில்லையா?
அவனுக்கு உடனடியாக மறுமொழி சொல்லத் தெரிய வில்லை. பொய் சொல்லவும் தயாராகவில்லை.
"நான் உன்னை இந்த வினாடி ரொம்பவும் காதலிக்கி றேன். இந்த உணர்வு எப்போதும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு இடையூறாக ஏதும் நடந்தால் எப்படி நடந்து கொள்வோனோ தெரியாது’
"மற்ற ஆண்களைப் போல் என்னைச் சிறையில் போட்டு வதைக்க மாட்டாயே’
அவள் குழந்தை போன்ற கெஞ்சலுடன் கேட்டாள். அவனுக்குப் புரியவில்லை. இவன் ஒரு தமிழன், கல்யா ணச் சிறையில் தள்ளத்தான் பார்ப்பான் என்று அவள் அடிமனத் தில் பயம் இருக்கிறதா?
I.C.A கட்டிடத்தின் வாயிலில் மைக்கல், ஸ்ரீவனுடன் காத்திருந்தான். மைக்கலின் கண்கள் கஞ்சா வெறியில் சிவந்து கனிந்து பழுத்துப் போய்க் கிடந்தது.

Page 68
128 அவனும் சில வருடங்களும்
"முட்டாள் இப்படிக் கஞ்சாவைக் காதலிக்கிறாயே உரை மூளை என்னமாதிரி தாங்கும்’ ராகவன் அன்புடன் கடிந்து கொண்டான்.
"உனது காதல் உன் மூளையைப் பைத்தியமாக்கியிருப் பதை விட எனது கஞ்சா ஒன்றும் என்னை நாசமாக்கி விடாது' தத்துவம் பேசினான் கஞ்சா ஞானி.
ஸ்ரீவன் இவர்கள் இருவரையும் பார்த்து ரசித்தான். 'ஏய் முட்டாள் ராகவனே, காதற் பைத்தியம் அன்ரோனியோவை என்ன வாக்கியது என்று தெரியும்தானே. கவனம். அதுவும் வெள்ளைக் காரப் பெண்களுடன் கவனமாக இருக்க வேண் டும். அவர்கள எங்கள் பெண்கள் போல எதையும் பொறுத்துக் கொள்ள மாட்டாள். புவனா சொன்னாளே உனது கலாச்சாரத் தில் கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் என்று பெண்கள் நடக்க வேண்டுமாம் உண்மையா’
ராகவன் சிரித்தான். அதே கனம் தமக்கை கீதாவும் மைத்துனர் மகாலிங்கமும் ஞாபகத்தில் வந்தார்கள். நினைவு தரித்தது. கீதா சந்தோசம்’ என்ற போர்வையில் எப்படி மகாலிங்கத்துடன் பெரும்பாலான நேரங்களில் போலியாக வாழ்கிறாள் என்று தெரிந்தது.
அந்த வருடம் இலங்கையில் நடந்த மாற்றங்கள் ஆனந் தனை மிகவும் பாதித்திருந்தது. இலங்கையில் தமிழருக்குச் சிங்களவர் செய்யும் கொடுமைகளைத் தாங்காத இந்திய அரசாங்கம் அமைதிப் படையை அநுப்பியிருந்தது.
ஏதோ ஒரு விதத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு விடிவு கிடைக்கும் என்று நம்பியிருந்த லட்சக்கணக்கான தமிழர்கள் குழம்பிப் போய் விட்டார்கள்.
இலங்கை அரசியல் மிகவும் சிக்கலான உருவில் வளர்ந்து கொண்டிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 129
ஆனந்தன் ஊருக்குப் போக ஆயத்தம் செய்து கொண்டிருந் தான். "அன்னிய நாட்டில் ஏதோ செய்து வாழ்ந்து கொண்டிருப் பதைவிட சொந்த நாட்டில் செத்துப் போனாலும் பரவாயில் லை’ விரக்தியுடன் சொன்னான் ஆனந்தன்.
மைதிலியில் அவன் வைத்திருந்த அன்பு தோல்வியடைந் ததன் தாக்கம் ஒரு புறம் ஆங்கில நாட்டின் இன ஒதுக்கலுக்கு முகம் கொடுக்க முடியாதது மறுபுறம், ஆனந்தனை வதைத்துக் கொண்டிருந்தது என்று ராகவனுக்குத் தெரியும்.
வீட்டில் மைதிலியும் அம்மாவும் தேவையில்லாமல் ஒரு பேச்சும் வைத்துக் கொள்ளாத அளவுக்கு அவர்கள் உறவு குறுகியிருந்தது.
மைதிலியுடன் நேரடியாகப் பேசி அவள் என்ன நினைக்கி றாள் என்று அறியும் யோசனையும் ராகவனுக்குச் சரியாகப் படவில்லை.
கீதாவும் மகாலிங்கமும் மைதிலியை ஒதுக்கி நடத்துவ தைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. தன்னையும் மைதிலி யையும் அம்மாவும் மற்றவர்களும் தமிழ்க் கலாச்சாரத்தை அவமதிக்கும் விதத்தில் நடப்பதாக மறைமுகமாகப் பேசுவ தும் அவனுக்குத் தெரியும்.
சந்தர்ப்பங்கள் என்னவென்று மனிதர்கள் பிரித்து வைக்கி றது என்பதை அவன் தன் நிலையில் வைத்துப் பார்த்தான்.
மைதிலியை அம்மாவும் மற்றவர்களும் ஒதுக்கி நடத்துவ துபோல் நாசர் வீட்டிலும் அவனைக் கோபமாக நடத்தமாட் டார்கள் என்று என்ன நிச்சயம்?
டெவீனாவின் தாய் இன்னும் ஹாஸ்பிட்டலில் இருக்கி றாள். நீண்ட நாளையச் சிகிச்சை தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெவீனாவின் தகப்பன் ராகவனைச் சந்தித்தால் எப்படி நடந்து கொள்வார்? அவனுக்குத் தெரியாது.

Page 69
13O அவனும் சில வருடங்களும்
(16)
இந்த வருடம் ராகவனின் வகுப்பு மாணவர்கள் ஜேர்மனி யில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது என்று கல்லூரி அதிபர் அறிவித்தார்.
உலக நாடுகளிலிருந்து வரும் கலைப்படைப்புக்களைப் பார்க்கலாம்; வித்தியாசமான தயாரிப்பாளர்களைச் சந்திக்க லாம்; அவர்களின் கருத்துக்களை கேட்கலாம் என்ற ஆவலில்
ஏப்ரல் 1987.
மாணவர்கள் உற்சாகமாகத் திரிந்தார்கள்.
ஒரு பின்னேரம் டெவீனாவின் வீட்டுக்குத் தற்செயலாகப் போக வேண்டி ராகவனுக்குச் சந்தர்ப்பம் வந்தது.
டெவீனாவின் பல ஆசைகளில் ஒன்று ஹாம்ஸ்ரெட் ஹீத் என்ற பிரபலமான பார்க்கில் மணிக்கணக்காக நடந்து திரிவது. சித்திரை மாதத்தில் இளம் தளிர்கள் சிலிர்த்தது வளர்ந்த மரங்கள் மெல்லிய சூட்டில் தலை நிமிர்ந்து நின்றன. பனியி லும் குளிரும் படாத பாடுபட்ட பூமித்தாயைச் சூரியன் தன் இளம் சூட்டினால் மெல்ல அரவணைத்தான்.
பறவைகள் மெல்லிசை பாடின. மனிதர்கள் ஓவர்கோட் டுக்களிலிருந்து தங்கள் முகத்தை நிமிர்த்திருந்தார்கள்.
டெவீனாவுடன் பார்க்கில் நடந்து பல விடயங்களையும் பேசிவருவது சந்தோசமான விடயம்.
'கார்ல் மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்தபோது இந்த பார்க் கில் காலையில் நடப்பது பழக்கமாக இருந்தாம்’ இவள் இப்படிச் சொல்லிக் கொண்ருக்கும்போது லேபர் பார்ட்டியின் முன்னாள் தலைவர் மைக்கல் புட் ஒரு பக்கமும் பிரபல ஆசிய டி.வி. தயாரிப்பாளர் ராறிக் அலி இன்னொருபக்கமும் மெல் லிய ஓட்டத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 131
"அப்பா என்னை ஏதாவது உடற்பயிற்சி செய்யச் சொல்லி நச்சரிப்பார்’ டெவீனா சொன்னாள்.
தாயைப் பற்றிச் சொல்லுமளவுக்குத் தகப்பனைப் பற்றி இவள் பேசுவதில்லை என்று தெரியும். தகப்பனைப் பற்றிப் பேசினால் தகப்பனின் கேர்ள் பிரண்டையும் பற்றிப் பேச வேண்டி வரலாம் என்று அவரைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான்.
“சரியான களைப்பு. வீட்டுக்குப் போய்க் காப்பி சாப்பிட லாம்’ அவனையிழுக்காத குறையில் இழுத்துக் கொண்டு போனாள்.
உயர்ந்த மேல்வர்க்க ஆங்கிலேயரின் வீட்டுக்கு அவன் போனது அதுதான் முதற்தடவை, ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டான்.
ஆறடிக்கு மேல் வளர்ந்த அந்த உயர்ந்த மனிதன்தான் அவள் தகப்பனென்று சொல்லத் தேவையில்லை. அவளு டைய பொன்னிறத் தலை அவருக்குமிருந்தது.
அவனை ஏறிட்டுப் பார்த்தார். "ஹலோ கம் இன்’ என்றார். வீடு நிறைந்த, உயர்ந்தவிலையுள்ள தளபாடங்கள், சித்தி ரங்கள், சிலைகள் அவன் கருத்தைக் கவர்ந்தன. சில சிலைகள் இந்தியச் சிலைகள். ஒரு ஆறடி உயரத்தில் கண்ணன் சிலை வெண்கலத்தில்; பளிங்கில் வடித்த பெரிய நடராஜ சிலை இன்னொரு பக்கம்.
"எனது பாட்டனார் மட்ராசில் வேலை செய்தவர்' ராகவன் உம் கொட்டினான். 'எத்தனை இந்தியரை அழித் தீர்கள்’ என்று கேட்க வேண்டும்போல் இருந்தது.
“என்ன, பீர் வேணுமா விஸ்கி வேண்டுமா?

Page 70
132 அவனும் சில வருடங்களும்
அவர் தனக்கு விஸ்கியூற்றிக் கொண்டு பிரிட்சைத் திறந்து பீர்க் கானையும் எடுத்தார். .
'பீர் பிளிஸ்? அவன் வாங்கிக் கொண்டான். "அவள் அதிகமாக தன்னுடைய சகமாணவர்களை வீட் டுக்குக் கூட்டிக் கொண்டு வரமாட்டாள். பிலிப் மட்டும்தான் வருவான்." மேலே போயிருந்த டெவீனா வந்தாள்.
"என்ன பிலிப் என்ன செய்தான்’ டெவீனா தனக்கொரு ஆரன்ஸ் பழ ரசரத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.
"பிலிப்பைத் தவிர நீ யாரையும் இந்த வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்" தகப்பனின் குரலில் கிண்டலா அல்லது எதிர்மறையான எச்ச ரிக்கையா என்று அவனுக்குத் தெரியவில்லை. கெளரவமாகத் தன்னுடன் பேசினாலும் மகளின் நெருங்கிய சினேகிதனாகத் தன்னை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மகளையணைத்தபடி 'இவள் ஒரு புகைப்படக் கலைஞை என்று உனக்குத் தெரியுமா” என்று கேட்டார், மிஸ்டர் ஸேர்லிங் குரலில் பெருமை.
'இவளுடைய பதினெட்டாவது வயதில் கென்யாவில் ஒரு புகைப்படக் கண்காட்சி வைத்தாள், சொன்னாளா’
ராகவனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. டெவீனா அதைப்பற்றித் தன்னிடம் சொல்லவில்லை என்பது ஏனோ மனதில் தைத்தது.
"அப்பா சும்மா இருங்கள். கொலிச்சுக்குப் போனால் என்னைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்’
மகள் செல்லத்துடன் தகப்பனைக் கடிந்து கொண்டாள். "படித்து முடிய நைரோப்பியில் ஒரு ஸ்ரூடியோ போடச் சொல்லியிருக்கிறேன். திரைப்படம் எடுப்பதனால் இந்தக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் • I - VM S 133
காலத்தில் பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஏன் என் மகளுக்கு அந்தத் தொல்லை’
மிஸ்டர் ஸேர்லிங் பேசிக் கொண்டேயிருந்தார். படிப்பு முடிந்ததும் டெவீனா நைரோபிக்குப் போவதை ராகவனால் நம்ப முடியாமலிருந்தது.
நேரம் செல்லச் செல்ல அவன் எப்போது அந்த வீட்டை விட்டு ஓடலாம் என்றிருந்தது.
டெவீனாவைத் தன் சகமாணவியாக அறிமுகமாக்கிப் பின்னர் காதலியாய் அனுபவித்ததற்கும் இப்போது மிஸ்டர் ஸேர்லிங் மகளாகப் பார்ப்பதற்கும் நம்ப முடியாத வித்தியாச மாக இருந்தது. அதல பாதாள உலகத்தில் திணறுவது போன்ற உணர்ச்சி வந்தது அவனுக்கு. ஏன் இந்த நிலையிற் தன்னைத் தானே மாட்டிக் கொண்டேன் என்று சட்டென்று நினைத்துக் கொண்டான். அந்த நினைவு நெருப்பாய்ச் சுட்டது.
தன்னைத் தானே ஒரு அன்னியராகப் பார்த்துக் கொண் டான். படிக்கப் போன இடத்தில் படிப்பைப் பார்த்துக் கொண்டும் இளம் மனதின் உணர்ச்சிகளையடக்கிக் கொண்டி ருந்திருக்கலாமே என்று மனம் திட்டியது.
அவனை அனுப்ப வெளியே வந்தவள் அவனின் கார் வரைக்கும் நடந்து வந்தாள்.
"என்ன ஏதோ பெரிதாயெல்லாம் யோசிக்கிறாய்’ அவ னையிழுத்து வைத்து முத்தமிட்டாள்.
பெருமூச்சு விட்டான். ' 'அப்பாவின பேச்சு மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் அவள் அன்பு குரலில் கனிந்தது. "இதோ பார் இந்த வீடு எனது தாயின் பெயரில் உள்ள வீடு. எனக்கு நிறைய உரிமையிருக்கிறது. நீ எப்போதும் வரலாம், போகலாம்"

Page 71
134 அவனும் சில வருடங்களும்
அவன் வேதனைவுடன் சிரித்தான்.
"நாங்கள் இரு வேறு உலகங்கள்’ "தத்துவம் போதும்" அவள் அவன் வாயைப் பொத்தி னாள்.
அடுத்த நாள் தங்கள் வீட்டுச் சாவிக்குப் பிரதி எடுத்துக் கொண்டு வந்து ராகவனிடம் கொடுத்தாள் டெவீனா.
"எனது வீட்டுக்கு எந்த நிமிடமும் நீ வரலாம். உனக்கு ஆங்கிலேயச் சட்டம் தெரியும் என்று நினைக்கிறேன். இரு பத்தி ஒரு வயதுக்குமேல் தாய் தகப்பன் தங்கள் குழந்தைகளின் விடயத்தில் தலையிட முடியாது.”
அவன் அவள் கொடுத்த சாவியைப் பார்த்தான். கல்லூரி யின் ஆரம்ப நாளன்று மூடிக் கொண்டிருந்த லிப்டில் ஓடிவந்து மாலையாக அவன் மார்பில் விழுந்தவள் இன்று தன் வீட்டுச் சாவியைக் கொடுக்குமளவுக்கு நெருங்கிய புதுமை அவனால் நம்ப முடியாதிருந்தது.
அடுத்த நாள் காலை லிவர்பூல் ஸ்ரீட் ரெயில்வே ஸ்ரேச னுக்கு ஜேர்மனிக்குப் போவதற்காகச் சென்றார்கள். போலிஸா ரின் சோதனைக்குச் சில மாணவர்கள் ஆளாகிறார்கள்.
மைக்கல் கஞ்சாவுடன் அகப்பட்டுவிட்டான். இவர்களு டன் வந்த வேர்ஜினிய பார் மஸ்ரோனின் தலையீட்டால் மைக்கல் விடுபட்டாலும் பிலிப்பின் திட்டலுக்கு ஆளானான். மைக்கலை பிலிப்புக்குப் பிடிக்காது என்பது பெரும்பா லான மாணவர்களுக்குத் தெரியும். "நீ சரியான இனவாதி' ஜேன் பட்லர் பிலிப்பை நேரே திட்டினாள்.
ஸ்ரீவன் கடுமையாக இருமிக் கொண்டிருந்தான். 'இந்த இருமலுடன் நீ வரத்தான் வேணுமா’ அன்புடன் கடிந்து கொண்டான் ராகவன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 135
ரெயின் முழுக்க மாணவர்களின் கும்மாளம். ஆடலும் பாடலும் மற்றப் பிரயாணிகளின் நிம்மதியைக் கெடுக்குமள வுக்கு ஆர்ப்பாட்டம்.
ஹார்விச்துறைமுகத்தைப் புகையிரதம் காலை பதினொரு மணிக்கு அடைந்தது. கடலிற் சில மணித்தியாலங்கள் மெல் லத் தவழ்ந்த கப்பல் பெல்ஜிய நாட்டின் ஒஸ்ரெண்ட் துறைமு கத்தையடையப் பின்னேரம் மூன்று மணியாகி விட்டது.
கப்பலில் டெவீனாவுடன் பாரிசுக்குப் போன இனிய ஞாபகம் ராகவனின் நினைவை வருடியது.
ரெயினில் டெவீனாவும் ஜேன் டார்வினும் மற்றப் பெண் கள் கூட்டத்துடன் கும்மாளம் போட்டதால் அவனுடன் பேச அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஒஸ்ரெண்டிலிருந்து புகையிரதம் ஜேர்மனி நோக்கிப் புறப்பட்டது. ஆறுபேர் இருக்கக் கூடிய பெட்டியில் ராகவன், ஸ்ரீவன், ஜேன், டெவீனா, அலான் பார்டோ என்ற பிரன்ஸ் மாணவன் ஐவரும் படுக்கைகளைக் குவித்தார்கள். ஆறாவது நபராக பிலிப் வரக்கூடாது என்று மனம் சொன்னது. ஆனால் பிலிப் வந்து சேர்ந்ததும் ராகவன் தர்ம சங்கடத்துடன் தலை யைத் திருப்பிக் கொண்டான்.
பிரயாணக் களைப்பில் டெவீனா ராகவனின் தோளிற் சரிந்து உறங்கி விட்டாள். ஜேன் அலான் பார்டோவின் மடியில் நல்ல உறக்கம். ஸ்ரீவன் இந்தக் காதற் கூட்டத்தை ரசிப்பது முகத்திற் தெரிந்தது.
கஞ்சா பிடிக்க முடியாத எரிச்சலில் மைக்கல் முகத்தை நீட்டிக் கொண்டிருந்தான்.
ஏதோ ஸ்ரேசனில் ரெயின் நின்றபோது மற்றவர்கள் காப்பி வாங்கப் போனதும் ஸ்ரீவன் ராகவனிடம் சொன்னான்:
"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி"

Page 72
136 அவனும் சில வருடங்களும்
"egcár”
"டெவீனா உன்னில் உயிரையே வைத்திருக்கிறாள்" "நானும் தான்' ராகவன் முணு முணுத்தான்.
'ம், உணர்வுகளின் சங்கமத்தின் வலிமைடையக் கலாச்சா ரப் பிரச்சனைகள் மோதும் போதுதான் சோதனை தெரியும்’ ஸ்ரீவன் ஒரு அமெரிக்கன், ஆனாலும் இங்கிலிஸ்காரரின் மன உணர்ச்சிகளைப் புரிந்தவன்.
ரெயின் பெல்ஜிய நாட்டினூடாகப் போய்க் கொண்டிருந் தது. யூகலிப்டஸ் மரங்கள் ஒய்யாரமாகச் சாய்ந்தாடின. சித்திரை மாத இளம்வெயில் மாலை மயக்கத்தில் டெவீனாவின் முகத் தில் முத்தமிட்டடது. தன்னில் சரிந்துறங்கும் டெவீனாவின் அழகை ரசித்தான்.
அன்ரோனியோவின் வீட்டில் முதற்தரம் காதல் புரிந்த அந்தக் கவிதைக் கொத்து அவன் கரங்களின் பாதுகாப்பில் நித்திரை செய்வதை பிலிப் பொறாமையுடன் பார்ப்பதை ஸ்ரீவன் கவனித்தான்.
'பாவம் அன்ரோனியோ" ஸ்ரீவன் சொன்னான். "ஆமாம் எவ்வளவு ஆசையாகக் கல்லூரிக்கு வந்தான்" என்றான் ராகவன்.
'எல்லாம் காதல் படுத்தும் பாடு’ ஸ்ரீவன் குறும்பாகச் சிரித்தான்.
டிக்கட் பரிசோதகர்கள் வந்தார்கள். மாணவர்கள் எல்லா ரும் நித்திரையால் எழுப்பப் பட்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் கறுப்பு, ஆசிய மக்கள் அகதிகளாக வருவதால் இனவெறுப்பு வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு இந்தியனின் தோளில் ஒரு வெள்ளைக்காரப் பெண் தூங்குவ தைக் கண்ட பெல்ஜிய டிக்கட் பரிசோதகர் பொறாமையுடன் ராகவனைப் பார்த்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 137
"இனவாதம் பிடித்த பாஸ்ரட்" ஜேன் ஆங்கிலத்தில் திட்ட டிக்கட் பரிசோதகர் அவளை எரித்து விடுவதுபோல் பார்த்தான்.
“உங்களிடம் பரிசோதனைக்குரிய பொருள் ஏதும் இருக்கி pg. It?' ('Do you have anything to declare')
டிக்கட் பரிசோதகர் அதட்டினான். அங்கிருக்கும் கறுப்பு மாணவன் மைக்கலையும், ஆசிய மாணவன் ராகவனையும் அதட்டும் குரல்.
"எங்களிடம் ஏதும் பரிசோதனைக்கு இருக்கிறதா என்று கேட்கவில்லையே" ஜேன் ஆத்திரத்துடன் கேட்டாள். பரிசோத கன் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.
"இரண்டு சோடி இங்கிலிஸ் முலைகள் இருக்கிறது பரிசோதிக்க உனக்குத் தைரியமிருக்கிறதா’
மாணவர் கூட்டம் ரெயின் வெடிக்குமளவுக்குச் சிரிக்கத் தொடங்கிவிட்டது.
பரிசோதகர் ஆத்திரத்துடன் அந்தப் பெட்டியை விட்டு நகர்ந்தான்.
"ஜேர்மனியில் என்னத்தை எதிர்பார்க்க வேண்டுமோ?? மைக்கல் எரிச்சலுடன் முணு முணுத்தான்.
மாணவர்களுக்கென்று ஆயத்தம் செய்த ஹாஸ்டலில் இவர்கள் மூட்டை மூடிச்சுகளுடன் போய்ச் சேர்ந்தார்கள். ஒபர் ஹவுசன் என்ற இடம் ஒரு சிறிய நகரம். ஒரு அறையில் மூன்று மாணவர்கள் என்று சேர்ந்தார்கள்.
ஸ்ரீவனும், மைக்கலும், ராகவனும் ஒரு அறையிற் தங்கி றார்கள். பிரயாணக் களைப்பில் ராகவன் தூங்கி விட்டான்.
நடுச்சாமத்தில் வெளியில் பெரிய சத்தம். ஜன்னலால் எட்டிப் பார்த்தான். சில மாணவர்கள் கிளப்புக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

Page 73
138 அவனும் சில வருடங்களும்
கடைசியாகப் போன சோடியை உற்றுப் பார்த்தான். டெவீனாவும் பிலிப்பும்!
மெளனமாக, இருட்டில் நின்று அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்ச்சி.
அடுத்த நாள் முதல் நாளையப் பட விழா ஆடம்பரமாகத் தொடங்கியது. ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த படங்கள் காட்டப் பட்டன.
யதார்த்தமான, கலையுணர்வான படங்கள். மாணவர்கள் படத்தயாரிப்பாளர்களைச் சந்திப்பதிலும் கருத்துக்கள் பரிமா றிக் கொள்வதிலும் பிஸியாக இருந்தார்கள்.
ஸ்ரீவனின உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. விரிவுரையாளர் வேர்ஜினியா பார்மஸ்ரோன் ஸ்ரீவனின் நிலை கண்டு மிகவும் துக்கப்பட்டார்.
"நான் வந்திருக்கக் கூடாது" ஸ்ரீவன் முணுமுணுத்தான்.
“வந்தது வந்தாயிற்று நான் முடிந்த வரையில் உதவி செய்கிறேன்’ மிஸ் பாமஸ்ரோன் ஒரு ஜேர்மன் டொக்டர் ஸ்ரீவனைப் பார்க்க உதவி செய்தாள்.
மூன்றாம் நாள் இந்தியத் தயாரிப்பாளர்களின் படங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிலொரு படம் ஜேன் டார்வினை மிகவும் நோகப் பண்ணிவிட்டது.
ஒரு வயதுபோன, வருத்தம் சொல்லிக் கொண்டு வாழ்க்கை நடத்தும் தாய். மிகப் படித்தும் வேலைக்குப் போக அவசியமில்லை என்று தாயால் வீட்டில் அடைபட்டுக் கிடக் கும் அழகிய இளம் பெண். இவர்களின் போராட்டத்தையுண ராது, எப்போதும் வெளியிற் சுற்றித் திரியும் தகப்பன்; இவர்க ளைச் சுற்றிய கதை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 139
இளம் பெண்ணில் விருப்பமுள்ள ஒரு இளைஞன் அவ ளைக் கேட்க வீட்டுக்கு வருகிறான். தாய் அவனைக் கேட்காத கேள்விகள் எல்லாம் கேட்டுத் துரத்தி விடுகிறாள்.
உறவினர் சிலர் மாப்பிள்ளை பேசி வருகிறார்கள். தாய் ஏதோ காரணங்கள் சொல்லி அந்தக் கல்யாணங்களைத் தடுக்கி றாள். நீ வசதியானவள், நல்ல மாப்பிள்ளை ஒரு நாளைக்கு வருவான் என்று மகனுக்கு அடிக்கடி சொல்கிறாள்.
ஒரு நாள் அந்தத் தாய் தற்செயலாக, தன் மகள் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நிர்வாணமாய் நின்று அவளின் இளமுலைகளையும் பெண் குறியையும் வருடி அழுவதைக் காண்கிறாள்.
மகளை நிர்வாணமாய் - அதுவும் அந்த நிலையிற் கண்ட தாய் மூர்ச்சையுற்றுக் கீழே விழுக்கிறாள், ஒரு சில நாட்களின் பின் உணர்வு வராமலே இறக்கிறாள்.
சில மாதங்களுக்குப் பின் இவளை விரும்பிய அதே பையன் பெண் கேட்டு வருகிறான்.
தகப்பன் அந்த இளம் பெண்ணின் தாய் இவ்வளவு நாளும் சொன்ன அதே மறுமொழியைச் சொல்கிறார் “நீ வசதியான பெண், கண்ட கழுதைகளுக்கெல்லாம் உன்னைக் கொடுக்கத் தயாரில்லை'
இந்த இடத்தில் அந்தப் பெண்ணின் இரு துளிர் கண்ணிர்த் துளிகளில் கமராவின் பார்வை படுவதுடன் படம் முடிகிறது. நிலைக் கண்ணாடி வெறுமையாகத் தெரிகிறது. படம் முடிந்த தும் ஜேன் அழுதுவிட்டாள்.
"மனிதர் சுய நலமானவர்கள்; பாசம், கலாச்சாரம் என்ற வார்த்தைகளைச் சொல்லி மனிதர்களின் வாழ்க்கையை அழிக் கிறார்கள்’ ஜேன் சொன்னாள்.

Page 74
14O அவனும் சில வருடங்களும்
1. "எல்லாரும் அப்படியில்லை சூழ்நிலையும் சில மனிதர்க ளைச் சுயநலமாக்குகின்றன, அத்தோடு மனித மனம் குழம்பியி ருக்கும் போது தான் செய்வது தவறு, அது மற்றவரைத் துன்புறுத்தும் என்று தெரியாமல் செய்கிறார்கள்’ டெவீனா வின் விளக்கம் இது.
அடுத்த நாள் நடந்த படவிழாவில் மனதையுருக்கும் ஒரு ஆப்பிரிக்க நாட்டுப் படம் காட்டப்பட்டது.
ஒரு கிழவிக்குப் பல குழந்தைகள் வயதுபோன காலத்தில் அவளின் கடைசி மகனுடன் வாழ ஆசைப்பட்டு மருமகளுடன் பிரச்சினை வருகிறது. "கையாலாகாத உன் மகனைக் கட்டி எனக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தது தவிர வேறென்ன கிடைத் தது? நீயும் ஒரு பாரமாய் இருக்கிறாயே’ என்று பட்டினியால் வாடும் மருமகள் மாமியைத் திட்டுகிறாள்.
சரியாகவும் நடக்க முடியாத வயதுபோன, வருத்தத்தால் தொய்ந்த கிழவி அடுத்த மகனிடம் போக ஒரு காட்டுப் பாதையால் போகிறாள். நடக்க முடியாத நிலையில் பசியால் வாடி ஒரு மர நிழலில் அமர்ந்திருக்கும்போது ஆடுகள் மேய்க்கும் ஒரு பையனின் காலில் பெரிய விஷ முள் பாய்ந்து அலறுகிறான்.
கிழவி அந்தப் பையனைத் தன் பாடல்களாலும் கதை சொல்வதாலும் ஆறுதல் படுத்தி அவனது காலிற் பாய்ந்த முள்ளை எடுத்து விடுகிறாள்.
பையன் நன்றியுடன் கிழவி ஏன் அந்த மர நிழலில் இருக்கிறாள் என்று கேட்கிறான். கிழவி தன் கதையைச் சொல்கிறாள். பசியின் கொடுமையால் தன்னால் மேற் கொண்டு நடக்க முடியாத நிலை சொல்லியழுகிறாள்.
"அழாதே வீட்டில் கஞ்சியிருக்கும் எடுத்து வருகிறேன்’ என்று பையன் சொல்கிறான். வீட்டுக்குப் போன பையனின் கால் விஷ முள்ளின் தாக்கத்தால் வீங்கி அவனால் நடக்க முடியாமலிருக்கிறான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 14.
இரவில் தன் தாயிடம் கிழவியின் நிலை பற்றிச் சொல்லிய ழுகிறான். 'யாரோ வழிப்போக்கர்கள் உதவி செய்திருப்பார் கள். கடவுள் எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்வார்’ என்று தாய் தேற்றுகிறாள்.
ஒரு சில தினங்களுக்குப் பின் பையன் நொண்டி நடந்த படி கஞ்சி எடுத்துக் கொண்டு கிழவியைத் தேடிப் போகிறான். அதிகாலைப் பணியில் கிழவியின் சுருண்ட உடல் மரத்தடியிற் தெரிகிறது.
அடிவானத்திலிருந்து பிழந்து கொண்டு வரும் ஆதவனின் சிவப்புக் கதிர்கள் கிழவியின் கறுத்தத் தோலில் மாயாஜாலம் காட்டுகிறது.
பையன் கிழவியை எழுப்புகிறான். கிழவி எழும்ப வில்லை. 'என்ன கடவுள் உனக்கு அனுப்பிய கஞ்சியைக் குடித்து விட்டு வெயில் தெரிவது கூடத் தெரியாமல் நித்திரை கொள்கிறாயா' பையன் பொய்க் கோபத்துடன் கேட்கிறான். கிழவியிடமிருந்து பதில் இல்லை. "நான் வரவில்லை என்று கோபிக்காதே. எனக்கு நடக்க முடியாமல் இருந்தது. இப்போது நல்ல சூடான உப்புப் போட்ட சோழக் கஞ்சி கொண்டு வந்திருக்கிறேன்’ பையன் சொல்லிக் கொண்டு கிழவியின் முகத்தைத் திருப்புகிறான்.
சில்லிட்டு விறைத்த பிணத்தின் திறந்த விழிகள் இவனை வெறித்துப் பார்க்கிறது. "கடவுள் உனக்குக் கஞ்சி தராததால் செத்துப் போனாயா’ என்று பையன் கதறுகிறான்.
அந்தப் படத்தின் கதை, ஆபிரிக்க நாட்டின் வறுமையை யதார்த்தமாகப் படம் பிடித்த கோணங்கள், சுருங்கிய கிழவி யின் சிரிப்பும் துடிப்பான பையனின் கதறலும் படத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்த பதிவுகள் ஆகும்.
செல்வமான லண்டனிலிருந்து வந்து செல்வமுள்ள ஜேர் மன் நாட்டில் வறுமையில் வாடும் ஆபிரிக்க முகங்கள் திரைப் படங்களின் பிரமையாக மனச்சாட்சியை வதைத்தது.

Page 75
142 அவனும் சில வருடங்களும்
டெவீனா கென்யா நாட்டில் பெரும்பாலான விடுமுறை களை கழிப்பவள். மஸாய் இன மக்களைப் பற்றிய புகைப்பட எக்ஸ்பிஸனை நைரோபியில் வைத்தவள்.
அலான் பார்டோ, ஜோன் டார்வின் என்போர் வழக்கம் போல சர்ச்சையில் ஈடுபட்டார்கள். அந்தப் படம் எடுத்த தயாரிப்பாளர் ஒரு இளைஞர். எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் படத்தை எடுத்தார் என்பதைச் சொன்னார்.
திரைப்பட உலகத்தில் கலையுணர்வு, சமுதாயச் சிந்தனை, புது தொழிற் திறமையுள்ளவர்கள் என்போர் பட உலகில் காலடி எடுத்து வைக்கும்போது உண்டாகும் கஷ்டம் அந்தத் தயாரிப்பாளர் வாயிலாகத் தெரிந்தது.
இன்னும் இரண்டொரு நாளில் படவிழா முடிவதாக இருந்தது. அதற்கிடையில் ஸ்ரீவனின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. படவிழா முடிய இரண்டொரு நாட்கள் ஜேர்மனியில் நிற்க விரும்புவதாகப் பல மாணவர்கள் சொன் னார்கள்.
அன்றிரவு ஸ்ரீவன் மூச்சு எடுக்க முடியாமல் கஷ்டப்பட் டான்.
"உனக்கென்ன வருத்தம். ஆஸ்த்மாவா, கான்ஸரா’ மைக் கல் அப்பாவித் தனமாகக் கேட்டான்.
"மைக்கல் எனக்கு வந்திருப்பது எயிட்ஸ்’ மூச்சுத் திணறி யபடி சொன்னான்.
"வாட்' மைக்கல் கட்டிலால் துள்ளி அலறினான். 'எயிட்ஸ் காரனுடா இத்தனை நாளும் இந்த அறையில் இருந்தேன்’ மைக்கல் சத்தம் போட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 143
"சட் அப் மைக்கல், ஒரு அறையில் இருந்தால் எயிட்ஸ் ஒன்றும் ஒட்டிக் கொள்ளாது" ராகவன் மைக்கலை அதட்டி னான்.
அடுத்த நாள் ஸ்ரீவனை லண்டன் அன்ழத்துச் செல்வதற் காக ராகவன் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போது டெவீனா வந்தாள்.
"ஐயாம் சாரி ஸ்ரீவன்’ டெவீனா ஸ்ரீவனுக்குத் தன் துக்கத்தைச் சொல்லிக் கொண்டாள்.
'ஒரு கிழமையாக உன்னைக் காண்பதே அபூர்வமாக இருந்தது’ ராகவன் எடுத்தெறிந்து பேசினான்.
"ஆமாம் எத்தனையோ படங்கள், விமர்சனங்கள் கருத்த ரங்கள்." டெவீனா சொல்லி முடிப்பதற்கிடையில் "இரவில் களியாட்டங்கள்’ என்று முடித்தான். ராகவன் வந்த அன்றே பிலிப்புடன் கிளப்புக்குப் போன காட்சி மனதில் வந்து தைத்தது.
அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். 'அடிக்கடி வெளியில் போய்ச் சந்தோசமாக இருக்கிறாய் என்று சொன் (്ഞTG??
"ஆமாம் அன்றிரவு உங்கள் அறைக்கு வந்தேன். நீங்கள் சரியான நித்திரை. உங்களை குழப்ப வேண்டாம் என்று ஸ்ரீவன் சொன்னான், அது சரியென்று பட்டது. உங்களைக் குழப்பாமல் பிலிப்பைத் துணைக்குக் கூப்பிட்டேன்’
களங்கமற்ற தொனியில் டெவீனா சொன்னாள். ராகவ னரின் மனம் ஒரு விதத்தில் நிம்மதியானாலும் ஏதோ மனதைச் சுரண்டிக் கொண்டிருந்தது.
அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
“மிகுதியான நாட்களையும் சந்தோசமாகக் கழிக்கப் பார்’ ஏனோ தானோவென்று சொன்னான்.

Page 76
144 அவனும் சில வருடங்களும்
ரெயின் ஜேர்மன் நகரான ஒபர் ஹவுசனைவிட்டு ஒடத் தொடங்கியது. ஜேர்மனிக்கு வரும்போது தோளில் துவண்ட வள் இப்போது இன்னொருத்தனுடன் இரவில் கிளப்புக்குப் போவதைச் சகிக்க முடியாமலிருந்தது.
ராகவன் பெருமூச்சு விட்டான். “டெவீனாவிலுள்ள கோபத்தில் ஜேர்மனியை விட்டு ஒடுகிறாயா’ ஸ்ரீவன் இருமியபடி கேட்டான்.
"அப்படியில்லை. உன்னை யாராவது கூட்டிக் கொண்டு போகத்தானே வேணும்' அவன் சமாளித்தான். வாழ்க்கை மிகக் குழப்பமாகத் தெரிந்தது. சோர்வுடன் தூங்கி விட்டான் ராகவன்.
இவன் இரண்டு நாட்கள் முந்தி வந்தது அம்மாவுக்குச் சந்தோசமாக இருந்திருக்க வேண்டும். வெள்ளைக் காரப் பெட்டையில் பிடியிலில்லாமல் வந்தது இன்னும் சந்தோசமாக இருந்திருக்க வேண்டும்.
அம்மாவின் உலகத்தில் அன்னிய கலாச்சாரம் பற்றிய விளக்கம் தெரியாது. அவளின் உலகத்தில் கர்மம், விதி என்ற நம்பிக்கைகளில் நன்மை தீமை, சரி பிழை என்பவற்றை எடை போடுகிறாள். அன்பைத் தவிர எதையும் கொடுக்கத் தெரியாத இளகிய மனம் கொண்டவள் அம்மா.
ஜேர்மனியிலிருந்து வரும்போது "நீ இளகிய மனமுள்ள வன்’ என்று சொன்னான் ஸ்ரீவன்.
ராகவன் சிரித்துக் கொண்டான். அம்மாவிடமிருந்து குழந் தைகளுக்குக் கிடைக்கும் கொடையது.
"டெவீனாவும்தான் அன்ரோனியேர்வை அன்புடன் பார்த் துக் கொண்டாள்" ராகவன் சொன்னான்.
"உனது சேவைக்கு எனது நன்றி" உணர்ச்சியுடன் சொன் னான் ஸ்ரீவன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 45
"ஸ்ரீவன் நான் உனது சகமாணவன், நீ ஹோமோ செக்சுவல் என்றால் அது பற்றி எனக்கு ஒரு எதிர்ப்பும் கிடையாது. செக்சுவாலிட்டி ஒவ்வொருத்தர் விருப்பத்தையும் பொறுத்தது; அகங்காரம், அறியாமை, ஆணவம் என்பன மனிதனைப் பிரிக்க எத்தனையோ சூட்சிகளைப் பாவிக்கின் றன. என்றால் முடிந்தவரை ஒரு சாதாரண மனிதனாக வாழ யோசிக்கிறேன். மனிதர்களை நேசிப்பது இயற்கை. மனிதனை மனிதன் வெறுப்பது பொறாமையின் பிரதிபலிப்பு. எனக்கு அது வேண்டாம்" ராகவன் மிகவும் தெளிவாகச் சொன்னான். ஏப்ரல் மாதக் கடைசியில் திரைப்படக் கல்லூரி மிகவும் பிஸியாய் இருக்கும். புவனா தனது படப்பிடிப்பு வேலைக ளைத் தொடங்கியிருந்தாள்.
ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு ஜேன் உதவி செய்தாள். நியுபரிக் குப் பக்கத்தில் கிறின்ஹாம் என்ற ஊரில் அமெரிக்க ராணுவத்தி னர் 1983ம் ஆண்டு குறுஸ் மிசாயில் என்ற அணுசக்திக் குண்டுகளை கொண்டு வந்திருந்து சேர்த்திருந்தார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஹிரோஷிமா, நாக ஸாகி என்ற இரு ஜப்பானிய நகரத்தில் அமெரிக்கர் போட்ட அணுகுண்டால் லட்சக்கணக்கான மக்கள் கோரமாகக் கொலை யுண்டார்கள்.
தங்கள் நியுபரி என்ற நகரின் அருகில் அணு குண்டை அமெரிக்கர் இறக்கியபோது அரசியலே என்னவென்று தெரி யாத ஒரு தாய் இந்த அணுகுண்டுகளுக்கு எதிராக ஆர்ப்பாட் டம் செய்கிறார். அவரின் ஆவேசம் சில வாரங்களில் கிறின் ஹாம் கொமன் என்ற இடத்திற்கு 30.000 ஆண்களையும் பெண்களையும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்க வைக்கிறது.
பல்கலைக் கழக மாணவிகளும் மாணவர்களும் போராட் டத்திற் குதிக்கிறார்கள். நேர்ஸரி ஆசிரியைகளும் குழந்தைக ளும் ஆயிரக் கணக்கிற் பங்கு பற்றுகிறார்கள்.

Page 77
146 அவனும் சில் வருடங்களும்
சாதாரண வீட்டுப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அமெரிக்காவின் அணு குண்டு எதிர்ப்பு செய்கிறார்கள். இது பற்றி புவனா 30 நிமிட டொக்கு மென்ரறி எடுக்கத் திட்டமிருந்தாள்.
கிறின்ஹாம் கொமன் நேரடிப் போட்டத்தில் கூடாரம் அடித்துக் குளிரில் வாடிய எத்தனையோ ஆயிரம் பெண்ணில் ஜேன் டார்வினும் ஒருத்தி. புவனாவும் ஜேனும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதி முடித்தார்கள்.
கமரா வேலைக்குப் பிலிப்பையும் டெவீனாவையும் கேட் டிருப்பதாகப் புவனா சொன்னபோது ராகவனுக்கு ஒரு மாதிரி யாயிருந்தது.
"நடிகர் தேர்வுக்கு உதவி செய்வாயா- எடிட்டிங்கு உதவி செய்வாயா?’ என்று ராகவனைக் கேட்டாள்.
டெவீனாவுடன் கமரா வேலை செய்ய முடியாமல் போனது மனதிற்குத் துக்கமாக இருந்தது.
மைக்கல் இன்னொருதரம் போலிஸாருடன் அகப்பட்டு பெரிய விவகாரமாகி விட்டது. அவன்தான் சவுண்ட் சிஸ்டத் தைப் பொறுப்பெடுத்தான். அன்ரோனியோ கல்லூரிக்கு வரு வதே அருமையாகி விட்டது.
ஒர்ப ஹவுசனில் நடந்த திரைப்பட விழாவிற்கே அவன் வரவில்லை. ராகவன் அவனைத் தேடிப் போனபோது பிளாட் டில் வெறுமையான விஸ்கிப் போத்தல்களும் பீர்க் கான்களும் கிடந்தன. அன்ரோனியோ கொக் கேய்ன் பவுடரை மூக்கில் உறிஞ்சிக் கொண்டான். ஹெரோயின் ஊசி போட்ட தழும்பு கையிற் தெரிந்தது. பைத்தியக்காரன் போல் தோற்றமளித்தான் அன்ரோனியோ. "ஜூலியட் இல்லாமல் என்ன வாழ்வு’ என்று முணு முணுத்தான்.
ஸ்ரீவன் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப் பட்டிருந்தான். அவன் புவனாவின் படப்பிடிப்பின் செட் அமைப்புகள் பற்றி உதவி செய்வதாக இருந்தான். w

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 147
“மைக்கல் கஞ்சாவுடன் அகப்பட்டான், அன்ரோனியோ அரைப் பைத்தியமாகி விட்டான், ஸ்ரீவன் எப்போது வெளி யில் வருவானோ தெரியாது’ புவானவின் முகத்தில் என்றும் கொள்ளும் வெடித்தது.
படப்பிடிப்பின் வேலை முடிய தனது இறுதி வருட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் விடயமாக இந்தியா போவதாகச் சொல்லியிருந்தாள்.
இளமைக்காலத்தில் இந்தியாவிற் தங்கி பரத நாட்டியம் பயின்றவள்.
"ஆராய்ச்சிக் கட்டுரை எது பற்றியிருக்கும்’ ராகவன் கேட்டான்.
“இந்தியப் படங்களில் பெண்கள்’ பற்றி எழுதப் போகி றேன்’ புவனா தனக்கு வந்திருந்த நடிக நடிகையரின் படங்க ளில் பார்வையைப் பதித்த படி சொல்லிக் கொண்டிருந்தாள்.
“என்ன பெரிதாக எழுத இருக்கிறது. கதாநாயகிகளுக்கு கழுத்துக் கீழே இருக்கும் இரு மேடுகளையும் கால்களுக்கிடை யிலிருக்கும் ஒரு பள்ளத்தையும் குலுக்கி, மினுக்கி, அசைத்து ஆசையூட்டுவதைப் பற்றி எழுதப் போகிறாயா' ராகவன் கிண்டலாகக் கேட்டான்.
"சும்மா கிட, இந்திய சினிமாவில், ஆரம்பத்தில் வந்த தமிழ்ப் பெண்களின் பங்களிப்பும் இப்போது வந்திருக்கும் இறக்குமதி உடம்புகளின் பங்கும் என்ன என ஆராயப் போகிறேன்."
"உனக்குத்தான் இந்தியச் சினிமாவைப் பிடிக்காதே’
"நான் வெறுக்கவில்லையே, திருத்தங்கள் வந்தால், சமு தாய முன்னேற்றத்திற்குச் சினிமா உதவி செய்தால், மூட நம்பிக்கையை ஒழிக்க முயன்றால், பெண்களுக்குக் கெளரவம் குடும்பத்திலும், சமுதாயத்திலும் அரசியலிலும் இருக்க வேண் டும் என்று சீர்திருத்தங்கள் செய்தால் இந்தியாவுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று ஆசைப்படுகிறேன்'

Page 78
148 அவனும் சில வருடங்களும்
புவனா தெளிவாகச் சொன்னாள்.
"புவனா, 1896ம் ஆண்டு யூலை 7ம் திகதி பம்பாய் வாட்சன் ஹோட்டலில் பிரன்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் (Lumiere Brotheres) சினிமா காட்டத் தொடங்கிய காலத்தில் இந்தச் சினிமா இந்தியாவின் ஒரு சமயமாக மாறும் என்று நினைத்திருப்பார்களா’ ராகவன் வியப்புடன் கேட்டான்.
“தெரியாது, ஆனால் இந்திய சினிமா அந்தக் காலத்தில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த நாடகத்துறையை ஒட்டியே வளர்ந்திருக்கிறது. பாடத் தெரிந்த ஆண்கள் மட்டும் பெண் வேடத்தையும் எடுத்து நடித்தார்கள். அதே பாணிதான் சினிமாவிலும் பின் பற்றப் பட்டது. ஆரம்ப காலத்தில் பெண்கள் கிடைக்கவில்லை. மெளனப் படம் எடுத்த காலத் தில் தேவதாசிக் குலத்தைச் சேர்ந்த, அதாவது சமுதாயத்தால் ஒழுக்கமற்றவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்க ளைத் தான் சினிமாவில் அறிமுகம் செய்ய முடிந்தது*
புவனா எழுந்துபோய்ச் சில புத்தகங்களைக் கொண்டு வந்து மேசையிற் போட்டாள்.
“இந்திய சினிமாவை ஆழ்ந்து ஆராய்ந்து எழுதிய புத்தகங் கள் குறைவு. அதுதான் சினிமாவில் அனுபவமுள்ள அறிஞர்க ளைச் சந்தித்து விடயங்களை அறியப் போகிறேன்’
புவனா எழுத்தாள்: ராகவனுக்கு ஸ்ரீவனைப் பார்க்கப் போக நேரம் வந்ததால் அவசரமாக வெளியேறினான்.
ஒரு இந்திய டொக்டர் ஸ்ரீவனைப் பார்த்துக் கொண்டிருந் தார்.
ராகவனைக் கண்டதும் "நீயோ இவனது போய் பிரண்ட்?’ என்று அருவருப்புடன் கேட்டார்.
உயிரைக் காப்பாற்ற வேண்டிய டொக்டரின் முகத்தி லேயே அருவருப்பு. ராகவனால் நம்ப முடியவில்லை. அம்மா

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 149
மைதிலியைத் தீண்டாதவள் மாதிரி நடத்துகிறாய், ராகவனை யும் கிட்டத்தட்ட அப்படித்தான் நடந்துகிறாள். அம்மா உலகம் தெரியாதவள். இந்த டொக்டரும் அப்படியா?
வீட்டுக்கு வந்தபோது வேல்ஸ் நாட்டிலிருந்து கணேஸ், கமலா, தியாகராஜா மாமா வந்திருந்தனர். அதே நேரம் மகாலிங்கம் தங்கள் மகன் கண்ணனுடன் வந்தான்.
‘எங்கே கீதா ராகவன் தமக்கையைப் பற்றி விசாரித்தான்.
“கோயிலுக்குப் போய் விட்டாள். அர்ச்சனைக்கு உங் கள் வீட்டிற்தான் புதிய பெயர்கள் முளைக்கின்றனவே.'
“அவனுக்கு ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுக்க வேண்டும்’ மகாலிங்கத்தின் கிண்டல் ராகவனுக்கு எரிச்சலைத் தந்தது.
“எங்கள் குடும்பதிலுள்ளோர் சிலருக்குப் புத்தியும் குழம்பி விட்டது" ராகவன் முணு முணுத்தான்.
வீட்டுக்கு வருவதே சிலவேளை எரிச்சலாக இருக்கிறது. அன்பும் ஆதரவும் உள்ள வீடு என்று ஒடோடி வந்த காலம் போய் இப்போது மறைமுகமாக வசவுகளும் திட்டலும் கிடைப்பது சிலவேளை சகிக்க முடியாதிருந்தது.
டெவீனாவைக் கண்டு சில நாட்களாகி விட்டன. ஜேர்ம னிக்குப் போய் வந்த நாளிலிருந்து இன்னும் நெருக்கமாகப் பழகவில்லை என்பது மனத்தை நெருடிக் கொண்டிருந்தது.
கல்லூரியின் எடிட்டிங் ரூமில் புவனா தன் செலுலோயிட் படத்துண்டுகளை ஸ்லை ஸரில் வெட்டி ஒட்டிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'ஏன் ஜேர்மனியிலிருந்து திடீரென்று ஓடிவந்தாய்’ சட் டென்று புவனா ராகவனைக் கேட்டாள்.
அவன் மறுமொழி சொல்லாமல் அவளைப் பார்த்தான்.

Page 79
15O அவனும் சில வருடங்களும்
"ஸ்ரீவனுக்காக மட்டும்தான் நீ ஓடிவந்தாய் என்பதை என்னால் நம்ப முடியாது’ அவளின் தீர்க்கமான கண்களில் இவனில் படர்ந்தது.
அவன் முகத்தைத் தாழ்த்தி ஸ்ரிம் பெக்கில் படம் பார்த் தான்.
"ராகவன், காதல் என்பது என்னவென்று தெரியுமா”
அவன் மறுமொழி சொல்லவில்லை. "காதல் என்றால் ஒருத்தரில் ஒருத்தர் வைக்கும் ஆசை மட்டுமல்ல, மரியாதையும்தான். அவளின் அன்பை மதிக்கப் பழகு, அறிவை உணர்ந்து கொள், அபிப்பிராயத்தைச் செவி கொடு, சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடு. சிறையிலடைத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே'
'என்ன பிரசங்கம் நடக்கிறது? டெவீனா ஏதும் சொன்
GOTTGITT? ’ ”
'நீங்கள் இருவரும் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. பார்க்கத் தெரிகிறது’
அவன் மெளனமாக அவளின் படத்துண்டுகளை நம்பரின் படி ஒட்டி வைத்தான்.
"ராகவன் மற்றவர்கள் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங் களையும் உணர்ந்து கொள்ள அனுபவமும் மனப் பக்குவமும் தேவை. எங்கள் கலாச்சாரத்தை விட வித்தியாசமான கலாச்சா ரங்களைப் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது என்பதற் காக அந்தக் கலாச்சாரத்தை மட்டமாக நினைக்கக் கூடாது'
"புத்திமதிக்கு நன்றி* ராகவன் நன்றி என்ற வார்த் தையை அழுத்திச் சொன்னான்.
"டெவீனா உன்னில் மிகவும் அன்பாக இருக்கிறாள் நீ அதிர்ஷ்ட சாலி என்று நினைத்துக் கொள்’ அவள் குரலில் பாசம், கனிவு, அத்துடன் கண்டிப்பு "உனக்குக் களைப்பாயி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 151.
ருந்தால் போ, நான் இயலுமான வரையில் நின்று எடிட்டிங் செய்கிறேன்’
"ஆமா, ரொம்பக் களைச்சிட்டன்." புவனா வெளியேறி னாள்.
கொஞ்ச நேரத்தில் டெவீனாவும் ஜேனும் வந்தார்கள். ஜேன் ஸ்ரீவனைப் பற்றி விசாரித்து விட்டுப் போய் விட்டாள். டெவீனா மிகவும் களைத்துக் காணப்பட்டாள். அவளை முத்தமிட்டு ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது. ஆனால் அது எத்தனையோ வருடப் பிரிவு போல் இருந்தது ராகவனுக்கு.
"ஒரு சிலர் இரவிரவாக எடிட்டிங் செய்ய திட்டம் போடுகிறார்கள்’ டெவீனா சொன்னாள்.
வருட நடுப்பகுதியில் பெரும்பாலும் நடக்கும் வேலை யது. எடிட்டிங் செய்ய ஒரு குறிப்பிட்ட நேரம் தான் கொடுப டும். அதற்கிடையில் அவசர அவசரமாக எடிட்டிங் செய்வார் கள்.
வசதி படைத்த மாணவர்களென்றால் பிரைவேட்டாக எடிட்டிங் செய்ய ஏற்பாடு செய்வார்கள். புவனாவின் டாக்யு மென்ரரி பெரும்பாலும் சிக்கலில்லாத எடிட்டிங். அவர் ஸ்கிரிப்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"நீ பின்னேரம் நின்று எடிட்டிங் செய்வதானால் நானும் உதவி செய்யட்டுமா" டெவீனா கேட்டாள்.
சந்தோசத்தில் மனம் துள்ளியது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. புவனா நிறையச் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தாள். சாவியைக் கொடுத்தாள்.
"இரவு எட்டு மணிக்குப் பின் இருக்க வேண்டாம். செக்கியுரிட்டிக் காரர் கரைச்சல் தருவார்கள்'

Page 80
152 அவனும் சில வருடங்களும்
புவனா எச்சரித்தாள். ஆனாலும் அவளுக்குத் தெரியும் பெரும்பாலான மாணவர்கள் சாவியை ஒப்படைப்பது போல் கொடுத்து விட்டு வந்து உள்ளுக்குள் பூட்டுப்போட்டுக் கொண்டு எடிட்டிங் செய்வார்கள் என்று.
ராகவன் எடிட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டான். டெவீனா தனது தாயின் சுகவீனம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்.
பின்னர் அன்ரோனியோவின் நிலை, மைக்கல் பொலிசாரி டம் சிக்கியிருக்கும் விடயம், ஸ்ரீவன் ஹாஸ்பிட்டலில் அட் மிட் ஆகியிருக்கும் விடயங்கள் பற்றிப் பேசினாள்.
கடைசியாகச் சாப்பிடும்போது, “ஏன் ஜேர்மனிக்குப் போய் வந்த நாளிலிருந்து என்னுடன் பழகுவதில்லை’ டெவீனா அவனைப்பார்த்துக் கேட்டாள்.
"அப்படி ஒன்றுமில்லை' "ராகவன் தயவு செய்து பொய் சொல்ல வேண்டாம்." அவள் குரல் கரகரத்தது.
இந்த நேரத்தில் தேவையற்ற விடயங்களைப் பற்றி அவன் பேசி பிரச்சினையையுண்டாக்க விரும்பவில்லை. மெளனமாக விருந்தான்.
வெளியில் செக்கியூரிட்டிக் கார்ட் வரும் ஒசை கேட்டது. லைட்டை அணைத்து விட்டு மூச்சு விடாமல் இருந்தார்கள்.
இருளின் தனிமையில் அவள் மூச்சு அவன் கழுத்தை வருடியது. வெளியிலிருந்து வரும் லைட்டின் வெளிச்சம் ஜன்னலால் வந்து எடிட்டிங் ரூமில் குவிந்து தொங்கும் படச் சுருள்களைப் பாம்புகள் போலக் காட்டின. மங்கிய வெளிச்சத் தில் அவள் முகம் தேவதையாய் தோன்றியது.
"செக்கியூரிட்டி போய் விட்டானா’ அவள் மெல்லக் கிசு கிசுத்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 153
"ம் போய் விட்டான்' அவளை அப்படியே எடுத்து முத்தமிட்டான்.
"இந்த நிமிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்' அவள் முணு முணுத்தாள்.
பொன்னிறத்தியில் மெல்லிய மேசை விளக்கொளி ஜாலம் காட்டியது. பொங்கியெழுந்த இளமையின் பூரிப்பு அவனை போதையிற் தள்ளியது.
"மேக் லவ் ருமி ராகவன்’ அவள் அவனில் துவண்டாள். இரவு சொர்க்கமானது. நினைவு சரித்திரமானது.
இந்தக் காதலர்கள் என்ன கோலத்திலிருப்பார்கள் என்று புவனா ஊகித்திருக்க வேண்டும்.
"பூனை பரதேசம் போனால் எலிகளுக்குக் கொண்டாட் டம் என்பதுபோல் செக்யூரிட்டியிடம் தப்பி விட்டீர்கள். அதிபர் வரப் போகிறார் ஒடுங்கள்’ புவனா அவசரப்படுத்தி னாள்.
அன்று பின்னேரம் வீட்டுக்குப் போனபோது அடித்து விட்ட பாம்புபோல் மிகவும் சோர்ந்து போயிருந்தான்.
ஆனந்தன் வந்திருந்தான். இலங்கையரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அம்மா சுடச் சுடத் தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். மைதிலி அப்போதுதான் வந்தவள் மெளனமாக மேலே போய் விட்டாள்.
“என்ன உங்கள் வீட்டில் உள்நாட்டுப் பிரச்சனையா?* "கண்டபாட்டுக்கு மனதையலைய விட்டால் எங்கே தான் பிரச்சனை வராது" அம்மாவின் குரலில் சோகம்.

Page 81
154 அவனும் சில வருடங்களும்
ஆனந்தனுடன் இவன் வெளிக்கிட்டுக் கொண்டிருந்த போது 'இந்த வார விடுமுறைக்கு எங்கேயாவது போகிறாயா’ அம்மா கையில் முந்தானையைத் துடைத்துக் கொண்டு சொன் னாள். ஏதோ திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு சொன்ன தாகப் பட்டது.
இல்லை என்று தலையாட்டிவிட்டுப் போனான். வைகாசி மாத இளம்வெயில் லண்டனைத் தழுவியது. புவனாவின் எடிட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. புவனா இந்தியா போய்விட்டாள்.
ராகவன் டெவீனாவுடன் றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்புக் குப் போனான். யூன், யூலை மாதங்களில் ஹாம்ஸ்ரட் ஹீத்தில் பகிரங்க வெளியில் நடக்கும் இசைக் கச்சேரி பற்றிச் சொன் னாள். அவனையும் இழுத்துக் கொண்டு போகத்திட்டம் வைத்திருப்பது அவள் தொனியிற் தெரிந்தது. அவனுக்கு ஜாஸ், பியானோ என்ற இசைகள் பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும்.
அவனுக்குப் பிடித்தது வீணையும் புல்லாங்குழலும்; லண் டனுக்கு வந்த நாட்களில் அப்பா தேடித்தேடிப் போய் வீணை, புல்லாங்குழல் றெக்கோர்ட்ஸ் வாங்குவார்.
"என்ன யோசிக்கிறாய்?" டெவீனா கேட்டாள். "அப்பாவின் ஞாபகம் வந்தது' அப்பாவுடன் அனுராதபுர வெயிலில் ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிட்டது ஞாபகம் வந்தது. அவர் தோளில் ஏறியிருந்து நல்லூர்த் திருவிழா பார்த்தது ஞாபகமிருக்கிறது. வன்னிக் குளக்கட்டில் இந்திரா குடும்பத்துடன் நடந்த ஞாபகம் வந்தது. ஜாஸ் முடிய சென்ட்ரல் லண்டன் தெருவில் நடந்து வந்தார்கள். பளிச்சென்ற நிலவு வைகாசி இரவு மனத்திற்கு இதமளித்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 155
“நியு ஹேவன் பீச்சுக்கு போவோமா? அவள் திடீரென்று கேட்டாள்.
இவளைச் சந்தித்த நாட்களில் இவனையிழுத்துக் கொண்டு போன இடங்களில் ஒன்று.
"வெண்குன்றைத் தொட்டலையும் கடல் அலையில் தெறித்து விழும் நிலாத் துண்டுகள் ரசிக்க அழகாக இருக்குமில்
60)G) il fr’’
அவள் கனவுலகத்திலிருப்பதுபோலக் கேட்டாள். அவள் மனத்தை ஏதோ குடைகிறது என்று தெரியும். தாயின் நினைவு என்று அவனுக்குத் தெரியும். டெவீனா வின் தாய் இனிப்பிழைக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறாள் என்றும் தெரியும்.
ஜாஸ் கிளப்புக்குப் போனபின் ஸ்ரீவனைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தான். ஸ்ரீவன் இப்போது வீட்டுக்குப் போய் விட்டான்.
டெவீனாவுடன் பழகுவதும், அவளோடு திரிவதும் கனவு போலிருக்கிறது. நியு ஹேவன் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்த நேரம் இரவு பதினொரு மணியாய் விட்டது. முன்னொருதரம் வந்திருந்தபடியால் சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டான்.
அவள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தாயைப் பற்றிக் கேட்டு அவள் துயரை அதிகரிக்க அவன் விரும்பவில்லை. "ராகவன் என்னால் தாங்கமுடியாத துக்கம் வரும்போது நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' அவள் குரலில் கெஞ்சல். அந்த இருட்டில் அந்தத் தனிமையில் காதல் புரிவது அபாயத்திற்குச் சவாலாயிருந்தது. நடுச்சாமத்தில் வீடு வந்த போது பாரிசிலிருந்து பொன்னம்பல மாமா குடும்பத்தி னர் வந்திருந்தது தெரிந்தது.

Page 82
156 ツ அவனும் சில வருடங்களும்
இந்திரா வித்தியாசமாக இருந்தாள். இவனை நேரே பார்த்துப் பேசினாள். முகத்தில் துணிச்சலும் அதேநேரம் கவர்ச்சியும் தெரிந்தது.
வார விடுமுறையில் எங்கும் போகாதே என்று மறைமுக மாகச் சொன்னது இதற்குத்தான் என்று இப்போது புரிந்தது.
பொன்னம்பபலம் மாமாவின் மைத்துனரின் தாய் சுகவீன மாக இருப்பதால் அவர்களைப் பார்க்க இவர்கள் வந்திருப்ப தாக அம்மா சொன்னாள்.
இலங்கையில் இந்திய அமைதிப்படை வந்திருப்பதால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.
கீதாவும் குடும்பத்துடன் போய் மகாலிங்கத்தின் தாய் தகப்பனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந் தாள்.
மைதிலி விடயம் பொன்னம்பல மாமாவுக்குத் தெரி யுமோ என்று ராகவன் ஒரு கணம் யோசித்தான். இந்திரா புத்திசாலி, ஒரு சில மணித்தியாலங்களில் கண்டு பிடித்துவிடு வாள் என்று ராகவன் யோசித்தான். மைதிலி வழக்கம்போல் மெளனமாகத் தானும் தன் வேலையுமாக இருந்தாள்.
அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை. இந்திரா குடும்பத்தினரை லண்டன் நகரைச் சுற்றிக் காட் டக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி அம்மா ராகவனுக்குச் சொன்னாள்.
அன்று அவன் புவனா வீட்டுக்குப் போய் எடிட்டிங் விடயமாகப் பேச யோசித்திருந்தான்.
பொன்னம்பல மாமா தான் களைத்துப் போய் இருப்பதா
கச் சொன்னார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 157
மாமியும் தான் வரவில்லை என்றாள். கலாவும் இந்திரா வும் மைதிலியைத் தங்களுடன் வரச்சொல்லிக் கேட்டார்கள்.
மைதிலி தமயனைப் பார்த்தாள். ராகவன் தர்ம சங்கடத்துடன் தங்கையைப் பார்த்தான். தான் புவனா வீட்டுக்குப் போவதைப் பற்றித் தயங்கிச் சொன் னான்.
அம்மாவுக்கு ஆத்திரம் வந்து விட்டது. "என்ன அப்படிக் கண்டறியாத படிப்பு, ஞாயிற்றுக் கிழமையும் படிப்பு என்று சும்மா ஒடுறாய்"
அம்மாவின் குரலில் மிகவும் ஆத்திரம். இந்திராவுக்கு நிலைமை புரிந்தது.
"இன்னொரு நாளைக்குப பார்க்கலாம்’ என்று நிலைமை யைச் சமாளித்தாள்.
அவன் தனிமையாக நின்றபோது அவள் வந்தாள். "நாங் கள் என்ன தீண்டாச் சாதியா, எங்களுடன் வரப் பயப்படு கிறாய்" அவள் குரலில் கிண்டலா அல்லது சோகமா தெரிய வில்லை.
"இந்திரா. * அவன் விளக்கம் கொடுக்க முதல் அவள் தன் இதழ்களில் விரலை வைத்து 'உஸ்" என்று அடக்கினாள்.
"ராகவன், நாங்கள் ஒன்றும் இலங்கையில் வன்னிக் குளக் கரைகளில் ஒடிப் பிடித்து விளையாடிய குழந்தைகளல்ல. நீ எனது பாரதி பாட்டுகளைக் கேட்டு ரசித்த காலத்தின் இனிமை யும் இனிவராது.”
அவள் குரல் அடைத்தது. கண்கள் கலங்கின. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். யாரோ வரும் சத்தம் கேட்டது. அவள் போய் விட்டாள்.

Page 83
158 அவனும் சில வருடங்களும்
மாமா குடும்பத்தினர் பாரிசுக்குத் திரும்பிப் போன பின் இந்திராவைக் கொஞ்சக் காலம் தங்களுடன் நிற்கச் சொல்லி அம்மா கேட்டதாக கீதா சொல்லியிருந்தாள்.
அம்மா ஏன் இந்திராவை லண்டனிற் தங்கச் சொல்கிறார் என்று தெரியும். மைதிலிக்குப் புத்தி சொல்வதற்கு இந்திரா வைப் பாவிக்கப் போகிறாள் என்று திட்டவட்டமாகத் தெரி պւհ.
அடுத்தது! அவன் நெஞ்சை அரிக்கும் கேள்வி. அம்மா மறைமுகமாக அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் விடயம், அதாவது வெள்ளளைக்காரப் பெண்களை வீட்டு மருமகளாக நான் ஏற்க மாட்டேன் என்பதாகும்.
அம்மாவின் ஆத்திரம் மைதிலியிலும் தன்னிலும் எவ்வ ளவு தூரம் பதிந்திருக்கிறது என்று அவனுக்குத் தெரியும் மைதிலியின் சோகம் தாங்க முடியாதிருக்கிறது. மகாலிங்கத் தின் கிண்டல் எரிச்சல் வருகிறது. இந்திராவின் வசனங்கள் இரட்டைக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.
அம்மா இவனை ஏனோ நம்பியிருக்கிறாள். கல்லூரிப் பொறுப்புக்கள் தலையில் ஏறின. இந்த வருட இறுதிக்குள் அவர்கள் அடுத்த இறுதிவருடத்திற்கான திட்டங் களை அதிபருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
இவ்வருட இறுதி மாணவர்களை புவனா குழுவினரின் தயாரிப்புகளில் உதவி செய்யத் தன்னையிணைத்துக் கொண்ட போதுதான் தான் மூன்றாவது வருட மாணவனாக வந்தால் என்னென்ன பிரச்சினைகளைத் தரும் என்று புரிந்தது. கல்லூரி தரப் போகும் தயாரிப்பு உதவிப் பணம் (Production Fund) மாணவர்களின் தயாரிப்பில் பத்து வீதத்தையும் முடிக்காது. பெரும்பாலான மாணவர்கள் குடும்பத்தினரின் உதவியுடன் தான் தயாரிப்புக்களை முடிப்பார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 1.59
அல்லது வெளியிலுள்ள தொடர்புகளால் பிலிம் ஸ்ரொக், எடிட்டிங் உதவி என்பனவற்றைப் பெற்றுக் கொள்வார்கள்.
டெவீனா, பிலிப் போன்றவர்கள் அதைப் பற்றிக் கவ லைப் படப்போவதில்லை. வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
நான் என்ன செய்ய? மகாலிங்கத்திடம் உதவி கேட்பதா?” எரிச்சலுடன் கல்லூரியைக் கடந்து வந்தவனுக்கு முன் னால் டெவீனாவின் கார் நின்றது.
“என்ன உலகம் மறந்த யோசனை’ அவன் பதில் சொல் லாமற் சிரித்துக் கொண்டான்.
அவள் கார் கதவைத் திறந்து விட்டாள். “இலங்கைப் பிரச்சினைகள் பற்றி நிறையச் செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. அது பற்றியா யோசிக்கிறாய்"
அதற்கும் அவன் மறுமொழி சொல்லவில்லை. வெளியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
"வீட்டில் தகராறு' அவன் அவளைத் திரும்பிப் பார்த் தான்.
“என்னைப் பற்றியும் பேச்சு வந்ததா’ அவன் ஆச்சரியத்துடன் டெவீனாவைப் பார்த்தான். அம்மா டெவீனா பெயர் சொல்லித் திட்டாவிட்டாலும் அம்மா வின் வேதனைகளுக்கு டெவீனாவும் ஒரு காரணம் என்று தெரியும்.
“வெள்ளைக் காரப் பெண்கள் கட்டிலுக்குத்தான் சரி. கல்யாணம் நடத்திக் குடும்பம் நடத்தச் சரியில்லை என்று அம்மா சொன்னாளா’ டெவீனாவின் குரலில் கிண்டலா அல்லது உண்மையாகவே அவனிற் சிரத்தையா என்று கண்டு பிடிக்க முடியாமலிருந்தது.

Page 84
16O அவனும் சில வருடங்களும்
‘எப்படித்தான் இருந்தாலும் எங்கள் கலாச்சாரத்தின் பிடிப் புக்கள் எங்களை விட்டுப் போகாதுதானே'
டெவீனாவே பேசிக் கொண்டிருந்தாள்.
"அப்படி என்றால் என்ன" அவன் தன் கேள்வியைச் சுருக்கமாகக் கேட்டான்.
“உங்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு கல்யாணம், குழந்தை கள், வீடு, குடும்பப் பொறுப்பு என்று விரிந்திருக்கும் என்று நினைத்திருக்கிறேன்'
கார் அவளின் வீட்டு முன் நின்றது. இது அவளின் வீட்டுக்கு வரும் இரண்டாவது தடவை. அவள் அவனுக்குக் கொடுத்த சாவி அவனிடம் இருக்கிறது. அந்தச் சாவியைப் பாவித்து அவளின் வீட்டின் கதவைத் திறக்க அவனுக்கு இதுவரை தேவையிருக்கவில்லை.
திறந்தவுடன் ரேப் ஒன்றைப் போட்டாள். அவனுக்குப் பிடித்த ஜாஸ் இசை அறையை நிறைத்தது. ஜோன் கோட்ரன் டின் ஜாஸ் இசையும் கதையும் கருத்தையும் கவர்ந்தது.
"அம்மாவின் ஆசைகள் சாதாரண மனிதர்களின் ஆசைகள்' அவள் காரில் வரும்போது சொல்லிக் கொண்டு வந்த விடயங்களை அவன் மறக்கவில்லை என்பது அவனின் மறுமொழியில் தெரிந்தது.
"சம்பிரதாயத்தின் நிர்ப்பந்தங்கள்’ அவள் அவனுக்கு ஒரு பீர்க் கானைக் கொடுத்து விட்டுத் தனக்கு ஆரஞ்சு ஜூசை எடுத்துக் கொண்டாள்.
'பிறந்து விட்ட குழந்தைகளை உருப்படியாக வளர்க்கத் தெரியாத மனிதர்கள் எத்தனைபேர் தெரியுமா? சமுதாயம் பழிக்கும் என்பதற்காக கல்யாணப் போர்வைக்குள் புகுந்து கொண்டு சுதந்திரத்தை இழக்கும் பெண்களின் கண்ணிரைக் கண்டிருக்கிறாயா'

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - - 161
"உனக்கு புவனாவும் ஜேனும் நல்ல புத்திகள் தான் சொல்கிறார்கள்’
அவன் சிரித்தான். மெல்லிய பட்டுக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த அவள் அறை கலைஞனின் தியேட்டர் போலிருந் தது. காதல் புரிந்தார்கள். “நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. குழந்தையும் பெற்றுக் கொள்ளப் போவ தில்லை. உலகத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினி யால் இறக்கிறார்கள். அந்தப் பட்டினியைப் போக்க என்னால் முடியுமென்றால் எதுவும் செய்யப் பார்க்கிறேன். எனக்கென்று ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமல் உலகத்தில் அன் புக்கு ஏங்கும் குழந்தைகளுக்கு எனது வாழ்க்கையின் கொஞ்சத் தையாவது கொடுக்க நினைக்கிறேன்’ அவளின் நேர்மை அவனை அவளில் மேலும் ஆசையைத் தூண்டியது.
ராகவன் பதில் பேசவில்லை. வீட்டில் இந்திரா கல்யாணத் துக்குள் இவனுடன் இணைக்கும் கற்பனையுடன் வாழ்கிறாள்.
இவள் என்றாலோ..? அவன் பெருமூச்சு விட்டான். அடுத்த சில மாதங்கள் மிகவும் கொடுமையானவை என்று ராகவனின் வாழ்வில் பதிந்து விட்டது.
யூலை மாதத்தில் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வந்து இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுடன் தமிழர் பிரச்சினை யைத் தீர்க்க ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் தலைவர் பிரபாக ரனை டெல்லியில் வைத்துவிட்டு ரஜீவ் வந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது குறித்து இலங்கைத் தமிழ் அரசியலை கவ னித்தவர்கள் கவலை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்தியர்களின் அமைதிப் படை யாருக்காக இலங்கைக்கு வந்தது என்ற கேள்வி பலரிடை எழுந்தது. இலங்கையில்

Page 85
162 அவனும் சில வருடங்களும்
நிச்சயமாக அமைதி வருமா என்று ஏங்கிக் கொண்டிருந்த தமிழர் அமைதிப் படைக்கு மலர் மாலை போட்டு வரவேற் றார்கள் மக்கள்.
லண்டனின் புவனாவின் வகுப்பு மாணவர்களின் படத் தயாரிப்புக்கள் முடிந்து படக் காட்சி நடந்தது.
புவனா முதலாம் வகுப்பிற் பாஸ் பண்ணியிருந்தாள். இந்திய சினிமா பற்றி அவள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தாள். அவளின் கடுமையாக உழைப்புக்கு அவளின் சினேகிதன் றிச்சார்ட் மிகவும் உதவியாயிருந்தான்.
இந்திய சினிமா பற்றிய அவள் கருத்துக்கள் அவனைச் சிந்திக்கப் பண்ணின.
'ராகவன், கல்கத்தா, பம்பாய் போன்ற பெரிய நகரங்க ளில் வாழும் ஏழைகளுக்கு மூலாதாரமான வாழ்க்கை வசதி களே கிடையாது. அவர்களுக்கு இந்தியச் சினிமாப் படம் ஒரு பொழுது போக்காக மட்டுமல்ல ஒரு கொஞ்ச நேரம் குளிர் காற்று நிறைந்த தியேட்டர்களில் இருக்கவும் உதவி செய்கிறது. சினிமாத்துறையை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அத்துடன் சமய, சாதி, வர்க்கம், பெண்ணடி மைத் தனம் என்று ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து கிடக்கும் சமுதாய அமைப்பில் புரட்சிப் படங்கள் எதிர்பார்க்க முடியாது’
"நீ இந்தியா போய் வந்தபின் மிகவும் மாறி விட்டாய்” ராகவன் வியப்புடன் கூறினான்.
"மேலை நாட்டில் வாழ்ந்து கொண்டு மேலைநாட்டுச் சிந்தனைகளினாற் தாக்கப்பட்டு வாழும் எங்களுக்கு இந்தியா வில் இன்னும் வலிமையாயிருக்கும் பழைய கொள்ளைகளின் தாக்கத்தைப் புரிய முடியாது. பூஜை போட்டுப் படம் எடுத்து, நல்ல நேரம் பார்த்து படம் வெளியிட்டு அதிர்ஷ்டமான

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 163
நடிகைகளை அமர்த்திப் படம் எடுத்து இந்தியத் திரையுலகம் இன்னும் மேற்கு நாட்டில் வாழும் நாம் கற்பனை செய்ய முடியாத 'பழம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை மாற்ற நினைப்பது மலையை அசைப்பது போலாகும்’ "சத்யயித்ரே, சியாம் பெனகால், மிரான் சென்; அவர்க ளில் சென் போன்றோரின் சிந்தனை வித்தியாசமாக இருக்கிற தே’ அவன் தலையைச் சொரிந்து கொண்டான்.
"ஆமாம் இந்தியத் திரைப்படத்தைத் தயாரிப்பவர்களில் பலர் சத்யபித்ரே போல் புத்தி ஜீவிகள் இல்லை. சத்யயித்ரேக்கு பிரன்சிய மேதை என்று சொல்லப்படும் றெனோவின் உறவு கிடைத்தது ஒரு திருப்பம் என்று நினைக்கிறேன்’
புவனா இந்தியத் திரைப்படத்தைப் பற்றி மேலும் விளக்கி கக் கொண்டிருந்தாள்.
"படிப்பு முடிந்து விட்டது என்ன செய்யப் போகிறாய்? ராகவன் கேட்டான். லண்டனில் கறுப்பு மாணவர்கள் திரைப்ப டப் பட்டப் படிப்பின் படும் கஷ்டங்களை அவன் அறிவான். "தெரியாது. ஒரு சில வருடங்கள் உலகம் சுற்றிப் பார்க்க லாம் என்றிருக்கிறேன். றிச்சார்ட்டும் சம்பந்தித்திருக்கிறான். உழைப்பு, குடும்பம் என்ற பொறுப்புக்கள் வந்தால் இளம் வயதில் பார்க்க ஆசைப்பட்ட பலவற்றைப் பார்க்க முடியாமற் போகும்’
"எங்கே போவதாக உத்தேசம்’
"இந்தியாவை முடியுமானால் ஆறுமாதம் தரிசிக்கப் போகிறோம். அதன் பின் றிச்சார்ட்டின் தமக்கை அவுஸ்திரோ லியாவில் இருக்கிறார். அவளைப் பார்க்கப் போகிறோம்’
"இலங்கையில் தற்போது அமைதி கொஞ்சம் இருப்ப
தால் ஆனந்தன் என்ற நண்பனும் எனது தமக்கை குடும்பத்தின ரும் இலங்கை போய் விட்டார்கள்’.

Page 86
164 அவனும் சில வருடங்களும்
‘'நீ எப்போது போகிறாய்” தான் செய்து கொண்டிருந்த வடையை எண்ணெயிற் போட்டபடி கேட்டாள்.
“தெரியாது. படிப்பு முடியட்டும்’
"நான் போவதானால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் போவேன். கல்லூரித் தொடர்புடன் உறவு முடிந்து விட்டதாக நினைக்காமல் எட்டிப்பார்’
‘'நீ உதவி செய்யாவிட்டால் என் ஸ்கிரிப்ட் உருப்படியா காது. ஜனவரிக்கு முதல் ஸ்கிரிப்ட் எழுத உதவி செய்’
"கட்டாயம், நீ எனக்குச் செய்த உதவியை மறக்க முடியு
Η Ο Π. .
அவள் பாசத்துடன் அவனின் தலையைத் தடவி விட்டான்.
கீதாவும் குழந்தைகளும் அடிக்கடி வராத வீடு சூனியமாக இருந்தது. கீதா குடும்பத்தினர் மகாலிங்கத்தின் தாய் தகப்ப னைப் பார்க்க யாழ்ப்பாணம் போய்விட்டனர்.
ஆனந்தன் யாழ்ப்பாணத்திலிருந்து கடிதம் எழுதியிருந் தான்.
"இலங்கையில் தமிழர் அநியாயமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். சுட்டுத் தள்ளப்படுகிறார் கள். பட்டினி போடப்படுகிறார்கள் என்ற செய்திகளால் அனுதாபப்பட்ட தமிழ் மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் கடைசியாக அமைதிப்படை என்ற பெய ரில் ஒரு லட்சம் சிப்பாய்களை இராணுவ ஆயுதங்களு டன் அனுப்பியிருக்கிறார்கள். அமைதிப் படையா ஆள வந்த படையா என்று தெரியாமல் மக்கள் திணறுகிறார் கள். இவர்கள் யாருக்கு உதவி செய்ய வந்தார்கள் என்பது புதிராக இருக்கிறது’ என்ற விதத்தில் எழுதியிருந்தான் ஆனந்தன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 165
“எத்தனையோ ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் இறங்கியதும் ஏன் மூலைக்கு மூலை இப்படி இந்திய இராணுவ வாகனங்கள் நிற்கின்றன என்று பயமாக இருக்கிறது.'
கீதா அம்மாவிற்கு எழுதிய கடைசிக் கடிதம் அது. ஸ்காட்லாந்தில் டெவீனாவின் தாயின் நிலை பாரதூரமாக இருப்பதாக டெவீனா போன் பண்ணினாள். தகப்பன் அமெரிக் காவிலிருந்து உடனடியாக வருவதாகவும் தான் அடுத்த நாள் போவதாகவும் சொன்னாள்.
அவள் போன் பண்ணியது அக்டோபர் மாதம் ஆறாம் திகதி பின்னேரம். அன்று தான் இந்திரா பாரிஸ் திரும்பினாள். மைதிலியுடன் மிக நெருங்கிப் பழகி மைதிலியைக் கொஞ்சம் சந்தோசமாக வைத்திருந்த இந்திராவில் ராகவன் மிகவும் நன்றியாக இருந்தான்.
டெவீனாவின் டெலிபோன் கோல் வந்ததை இந்திராதான் எடுத்தாள்.
"உங்களுக்குத்தான்' மேலேயிருந்து இறங்கி வந்த ராகவ னிடம் போனைக் கொடுத்தாள். கொடுத்த போது அவள் பார்வையிற் தெரிந்த கோரத்தை அவனால் தாங்க முடிய வில்லை.
டோவர் துறைமுகத்திற்கு அவளை கொண்டுபோய்க் கப்பல் ஏற்ற கணேசும் கமலாவும் வந்திருந்தனர்.
இந்திரா "வருகிறேன்’ என்று சொல்லிப் புறப்பட்ட போது ராகவன் டெவீனாவைப் பார்க்கப் போக அவசரப் பட்டுக் கொண்டிருந்தான்.
டெவீனா அடுத்த நாள் ஸ்காட்லாந்து போகிறாள் என்றும் தாயின் நிலையைப் பார்த்து எவ்வளவு நாள் தங்கமுடியுமோ அவ்வளவு நாள் தங்கப் போவதாகவும் சொன்னாள்.

Page 87
166 அவனும் சில வருடங்களும்
இந்திராவை வாயிற்படி வரை வந்து வழியனுப்பிய தாய் அவள் போனதும் மகனைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
"உனக்கு இப்படியான லெட்சுமியான பெண் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கா’ அம்மாவின் கண்களில் நீர்.
அக்டோபர் ஆறாம் திகதி 1987 இங்கிலாந்து கண்டிராத சூறாவளியடித்தது.
டெவீனா வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர யாரும் இல்லை. டெலிபோனில் ஓர்டர் பண்ணி சாப்பாடு எடுத்துக் கொண்டார்கள்.
வீட்டுக்குப் போனால் அம்மாவின் முணுமுணுப்பு தாங்க முடியாது என்று அவனுக்குத் தெரியும்.
அன்று பின்னேரம் இந்திரா புறப்பட்டுப் போன பின் அம்மா விடாமல் ஏதோவெல்லாம் சொல்லிக் கொண்டிருந் தாள்.
வெளியில் இடி மின்னல், காற்று, மழை; இரவு பண்ணி ரண்டு மணியிருக்கும். 'உலகமே அழியப் போகிறதோ' அவனின் அணைப்பில் டெவீனா முனகினாள். "அழிந்து தொலையகட்டும் இந்த நிமிடமே? சந்தோஷத் துடன் இறந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்’ அவளுக்குள் தன்னைப் பிணைத்துக் கொண்டு அவன் முனகினான்.
அந்த நேரம் றெக்கோர்ட் சட்டென்று நின்றது. லைட் போய் விட்டது. ஜன்னலுக்கப்பால் உலகத்தில் இயற்கையின் மின் கீற்றுத் தவிர எந்த வெளிச்சமும் இல்லை.
அவனை இறுக அணைத்துக் கொண்டாள் டெவினா.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 167
“எனக்குப் பயமாக இருக்கிறது. பார்த்தாயா உலகத்தில் மின்னல் தவிர எந்த லைட்டும் இல்லை. மனித சக்தியை ஒரு நிமிடத்தில் அழித்தொழித்து விட்டதே இந்த இயற்கை ஆவே gլb ''
அவள் பயத்தில் முனகினாள். நீண்டநேரம் லண்டனும் லண்டனைச் சுற்றிய பல நகரங்களும் இருளில் ஆழ்ந்தன. உலகத்தின் நாகரீக தலைநகரான லண்டன் ஆதரவற்ற குழந்தை யாய் இயற்கையன்னையின் இருள் மடியிற் கிடந்தாள்.
"இவ்வளவுதானே வாழ்க்கை, ஒரு கொஞ்ச நேரச் சூறாவ ளியைத் தாங்க முடியாத நாகரீகம், விஞ்ஞானம், பணவலிமை, தொழில்வளம்’ டெவீனா இருளில் பெருமூச்சு விட்டாள்.
"நாளைக்கு ஸ்காட்லாந்துக்கு ரெயின் இருக்கும் என்று நினைக்கிறாயா’ ராகவன் சந்தேகத்துடன் கேட்டான்.
‘தாமதமானாலும் ரெயின் போகும். ரெயின் போகாவிட் டாலும் பிளேனில் போய்க் கொள்கிறேன்.
"போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணு' “என் நலனில் இவ்வளவு அக்கறையாய் இருக்கிறாயே’ 'இது மனிதாபிமானம் இல்லையா’’ இப்படிச் சொன்ன போது இந்திராவைப் பற்றிய நினைவு எங்கோ தைத்தது? இந்தச் சூறாவளியால் கடற் பிரயாணத்தில் ஏதும் பிரச்சினை வந்திருக்குமா? அல்லது புயல் தொடங்க முதல் கப்பல் பிரான்சியக் கரையை கண்டிருக்குமா?
'என்ன யோசிக்கிறீர்கள்' "இந்திராவைப் பற்றி யோசிக்கிறேன்" உண்மையைச் சொன்னான்.
இருளில் அவள் முகம் தெரியவில்லை. அவளின் மெள னம் என்ன காரணத்தினால் என்று புரியவில்லை.

Page 88
168 அவனும் சில வருடங்களும்
'இந்திராவிற்குக் கல்யாணம், குழந்தை என்றெல்லாம் ஆசையிருக்குமில்லையா’ அவள் இவனின் மார்பில் முகத் தைப் பதித்தப்படி கேட்டாள்.
'பெரும்பாலான பெண்களின் ஆசைகள் அது’.
'நான் பெரும்பாலான பெண்கள் போலில்லை என்பது உனக்கு ஆச்சரியமாயில்லையா'.
'இல்லை’
"ஏன்?
"புவனாவும் பெரும்பாலான பெண்கள் போலில்லை. நகை நட்டு என்று ஆசைப்படாத தமிழ்ப்பெண் புவனா. தாய் தகப்பன் சொல்வதைக் கேட்காமல் றிச்சார்டுடன் ஒன்றாக வாழ்கிறாள், அது மிகவும் துணிவான விடயம் என்று நினைக் கிறேன். புவனாவிடம் எனக்கு மரியாதை, அன்பு, பாசம், அவள் மிகவும் வித்தியாசமான பெண் ஒரு விதத்தில்.’
"இந்திராவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி அம்மா கேட்கவில்லையா'
'எனக்கு இப்போது இருபத்தியாறு வயது முடிந்து விட்ட து' அவன் சிரித்தான்.
"அப்படி என்றால்’
“எனக்கு என்ன வேண்டும் என்று தெரியும்."
"என்ன வேண்டும்" அவளின் கிசுகிசுப்பு இன்னொரு தரம் அவனை கிறங்கப் பண்ணியது. நீண்ட இருண்ட இரவின் மடியில் அவர்கள் இணைந்து உலகை மறந்தார்கள்.
ஸ்காட்லாந்து போனதும் அழுகையும் கண்ணிருமாகப் போன் பண்ணினாள். 'அம்மாவின் கடைசி நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன். எப்போது உனக்குப் போன் பண்ணுவேன் என்று எனக்குத் தெரியாது’ அவள் அழுகையி னுாடே போன் வைத்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 1.69
இலங்கையில் இந்திய அமைதிப் படையினருக்கும் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்குமிடையில் சுமுகமாக நிலை என்று செய்தி பரவிக் கொண்டிருந்தது.
ஒரு பின்னேரம் ராகவன் வெளியில் போயிருந்த நேரம் பாரிசிலிருந்து டெலிபோன் கோல் வந்தது.
மைதிலிதான் டெலிபோனை யெடுத்தவள். பிரமை பிடித் தவள்போல் நின்றாள். 'என்ன மரம் மாதிரி நிற்கிறாய்" அம்மா போனைப் பிடுங்கி எடுத்தாள்.
பொன்னம்பலம் மாமா அழுகையினுடே கடந்த சில நாட்களாக நடக்கும் விஷயங்களை விவரித்தார். கடைசியில் அவர் சொன்ன விஷயம் தாயை வீரிடப் பண்ணியது.
கீதா, குழ்தைகள், மகாலிங்கம் என்போர்இந்திய அமை திப் படையினரால் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் கீதா குடும்பமும் ஒன்று.
எட்டு வயதுத் தமிழ்ப் பெண்குழந்தை தொடக்கம் எழு பது வயதுத் தமிழ்ப் பாட்டி வரை தமிழ்ப் பெண்கள் இந்திய அமைதிப் படையின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பது போன்ற செய்தி புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.
சிங்களப் படையினரின் கொடுமைக்கு இரவும் பகலும் பட்ட துயர், உயிரழிவு, பொருள் அழிவு, நகர், நாகரீக அழிவு என்று பட்ட துயர் துடைக்க கடல் கடந்து வந்த இந்திய அமைதிப் படையினரின் செய்கை மனித நேயத்தைப் போற்று வோரால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது.
அம்மா வாயிலும் மார்பிலும் தலையிலும் அடித்துத் துடித்தாள். கீதா என்ற பொறுமையின் சின்னம் இந்தியப் படைக்கு என்ன செய்தது? அம்மா பைத்தியம் போல் அலறிய ழுதாள்.

Page 89
17Ο அவனும் சில வருடங்களும்
மைதிலி தாயைக் கட்டியழுதாள். ராகவன் வீடு வந்த போது உறவினர்களால் நிறைந்து வழிந்தது.
அதன் பிறகு சில நாட்கள் வீடே சவக்களை கட்டியது. வருவோர்துயருடன் இந்திய அமைதிப் படைக்குச் சாபம் போட்டார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பூரீலங்காப் படையினர் செய்த கொடுமையைக் கடந்த இரண்டு கிழமைக ளாக இந்திய அமைதிப் படை என்ற பெயரில் வந்த ராணுவம் மூர்க்கத் தனமாகச் செய்து முடித்தது என்று செய்திகள் சொல் லப்பட்டன.
இந்திய அமைதிப் படையினரால் கொல்லப்பட்ட இளம் தமிழர்களில் லண்டனிலிருந்து சொந்தக்காரனைப் பார்க்கச் சென்ற ஆனந்தனும் ஒருத்தன் என்று தெரிய வந்தபோது ராகவனின் துயர் இன்னும் கூடியது.
“ஏழைத் தமிழர்கள் இங்கு அழிகிறார்கள். வசதி படைத்த வர்கள் நாட்டை விட்டோடி விட்டார்கள். வால் பிடிக்கத் தெரிந்தோர் வாழப் பழகி விட்டனர். ஏழைகள் என்ன செய்ய முடியும்?"
இப்படி அடிக்கடி சொன்ன ஆனந்தன், சமாதானம் வந் தால் எனது தாய் நாட்டுக்குச் சென்று என்றால் முடிந்ததைச் செய்வேன் என்று சொன்னவனை 'அமைதி"ப் போர்வையில் வந்தோர் அழித்து விட்டார்கள் என்ற செய்தி துன்பம் தந்தது. மழலை ததும்பும் கண்ணனின் இனிய முகம், இன்றும் மனதில் நிற்கிறது. மருமகள் சந்தியாவின் குறும்புப் பார்வை இரவில் கனவாக எழுப்புகிறது.
ஏதோ இயந்திரம் போல் இயங்கினான் ராகவன். 83ம் ஆண்டு கலவரத்தில் தாய் தகப்பனைக் கொழும்பில் இழந்த ஆனந்தன் நான்கு வருடங்களின்பின் இந்திய ராணுவத் தால் அழிக்கப் பட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 171
எத்தனையோ நாட்களுக்குப் பின் கல்லூரி சென்ற வேறு பலர் அனுதாபம் தெரிவித்தார்கள் யாரிடமும் அதிகம் பேச மனம் பிடிக்கவில்லை.
அதிபர் இவனையணைத்து தனது மனத்துயரைப் பகிர்ந்து கொண்டார்.
டெவீனா கல்லூரியிலில்லை என்று தெரிந்ததும் அவளி டம் ஓட வேண்டும் போலிருந்தது.
தாயைப் பார்க்கப்போய் இரண்டு கிழமைகள் ஆகிவிட் டன. அவளிடமிருந்து ஒரு தகவலுமில்லை.
தான் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்து போய்ச் சேர்ந்தது பற்றிப் போன் பண்ணியபின் அவள் போன் பண்ணவில்லை. ஸ்காட்லாந்தில் அவள் பெரிய தாயுடன் தங்கியிருப்பாள் என்று தெரியும். அவளின் ஸ்காட்லாந்து டெலிபோன் நம்பர் அவனுக்குத் தெரியாது. பீட்டருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனா லும் அவனைக் கூடக் கல்லூரியில் காணவில்லை.
மைக்கல் நீண்ட நாட்களுக்குப்பின் தெருவிற் சந்தித்தான். கஞ்சா விடயமாகப் போலீசாரால் பிடிபட்டபின் ஏற்பட்ட பிரச்சினையால் அவன் கல்லூரிக்கு வருவதை நிறுத்தி விட் டான்.
தனது துயர் தீர்க்கப் புவனாவிடம் போனில் பேசினான். அவன் மனம் டெவீனாவிடம் ஒடிக் கொண்டிருந்தது.
அதிவிரைவில் டெவீனா தனது அடுத்த வருட இறுதி வருடப் படத் தயாரிப்பு விடயமாக நைரோபி போவதாகப் பேசிக் கொண்டிருந்தாள். அதே நேரம் தாயின் உடல் நிலை என்னவாயிருக்கும் என்று அவனுக்குத் தெரியாது.
தன்னுடைய இந்தத் துயரான நேரத்தில் அவள் துணை இன்றியமையாததாக இருந்தது.
அவளுக்குப் போன் பண்ணிப் பார்க்க பாக்கட்டில் கைவிட்டபோது அவள் தந்த சாவி கையிற் பட்டது.

Page 90
172 அவனும் சில வருடங்களும்
அவனிடம் அந்தச் சாவி கொடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அவன் ஒரு நாளும் அவள் வீட்டுக்குத் தானாகப் போகவில்லை. ஹாம்ஸ் ரெட்டுக்குத் திரும்பி வந்திருப் பாளோ இல்லையோ என்ற யோசனையுடன் நடந்தான். டெவீனா லண்டன் திரும்பியிருந்தால் தனக்கு ஏன் போன் பண்ணவில்லை என்று யோசித்தான்.
இரண்டு கிழமைக்கு மேலாக ஏன் ஒரு தொடர்பும் கொள்ளாமல் இருக்கிறாள் என்று அவனால் புரியாமலிருந்தது. தாய்க்கு ஏதும் நடந்தால் என்றால் அதைத்தாங்க முடியாது என்று விம்மியவள், இவன் துணை தனக்குத் தேவை என்று கெஞ்சியவள் எங்கே போய் விட்டாள்?
'எனது தமக்கை, அருமை மருமகள், மருமகன், மைத்து னன், அருமை நண்பன் எல்லோரையும் கொடுமை பிடித்தோர் கையால் அழிக்கப்பட்ட வேதனையை உன்னிடம் சொல்லி அழ வேண்டும் டெவீனா’ அவன் தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான்.
இந்திரா எத்தனையோ தரம் போன் பண்ணி ஆறுதல் சொன்னாள், பொன்னம்பல மாமா கிட்டத் தட்ட ஒவ்வொரு நாளும் போன் பண்ணுகிறார்.
கணேசனும் அவனது வருங்கால மனைவியும் அம்மாவுட னேயே இருக்கிறார்கள்.
அம்மா மைதிலியைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டே யிருக்கிறாள். ஒரே தரத்தில் நான்கு உயிர்களைப் பறி கொடுத்த துயரை அந்தத் தாயால் தாங்க முடியவில்லை என்பது அவளது உலராத கண்களிலிருந்து தெரிந்தது.
ஏதேதோ சிந்தித்துக் கொண்டு டெவீனாவின் வீடு போய்ச் சேர்ந்தான்.
வீட்டில் லைட் தெரிந்தது. கடைசியாக அவளைச் சந்தித்த போது இருளில் மூழ்கிக் கிடந்தது ஞாபகம் வந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 173
அந்தப் பெரிய வீட்டின் சாவியை அவன் கையில் வைத்தி ருப்பதே நம்பிக்கையற்ற விடயமாக இருந்தது.
தயங்கியபடி கதவைத் திறந்தான். இரவு பத்து மணிக்கு மேலானபடியால் தெருவிலும் அதிக சத்தம் இல்லை. எப்போ திருந்தோ ஒரு கார் போய்க் கொண்டிருந்தது.
கதவைத் திறந்ததும் தெரிந்த அமைதி அவன் மனத்தை ஏதோ செய்தது.
அந்தப் பெரிய வீட்டின் அலங்காரப் பொருட்களான சிலைகளும் சிற்பங்களும் இவன் தேடலை வியப்புடன் பார்ப்பது போலிருந்தது.
டெவீனாவின் படுக்கையறை சாடையாகத் திறந்திருப்பது தெரிந்தது. அந்த அறையில் அவளுடன் அனுபவித்த இன்பம் நினைவில் குதித்தது. இப்போது அவள் தாயின் நோய் காரண மாகத் துயரத்துடன் படத்திருப்பாளா?
அவளைத் தொட்டு, அணைத்து முத்தமிட்டு, காதல் புரிந்து இரண்டு கிழமைகளாகி விட்டன. ஏதோ இருநூறு வருடங்கள் போல் இருக்கின்றன. அவளுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு தன் துயர் தீர்த்து அலற வேண்டும் போலிருக்கிறது.
கதவைத் திறந்தான்.
திறந்த சத்தத்தில் பிலிப் எழுந்தான், அதே நிமிடம் அவனின் அணைப்பில் கிடந்திருந்த டெவீனாவும் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்தாள்.
அவன் சட்டென்றுத் திரும்பினான். நெஞ்சில் ஏதோ அடைத்தது. கண்கள் இருண்டன. உதிரம் கொதிப்பது போலி ருந்தது. கால்கள் நகர மறுத்தாலும் ஏதோ ஒரு அசுர வேகத்தில் அவன் திரும்பினான்.
"ராகவன்’ பிலிப்பின் அவசரக் குரல் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

Page 91
174 அவனும் சில வருடங்களும்
நடக்கிறானா ஒடுகிறானா என்று தெரியாமல் தனது கார் தேடி ஓடினான். தலை இடித்தது. அவனைக் கடைசியாக கண்டபோது நடந்த புயலும் சூறாவளியும் இப்போது அவன் மனதில் பிரளயம் நடத்தியது.
அவள் வீட்டு ஹாலின் சிலைகள் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. ஊழித் தாண்டவமாடும் நடராசர் அவன் சிரத்தைப் பிடுங்க வருவது போலிருந்தது.
அவன் நடையை "ராகவன், என்னுடன் கொஞ்சம் தயவு செய்து பேசு' என்ற டெவீனாவின் அலறல் தடை செய்ய முடியவில்லை.
அவன் கல்லூரிக்குப் போய் எத்தனையோ வாரங்களாகி விட்டன. நவம்பர் மாதமும் முடியப் போகிறது. அவன் கல்லூரிக்குப் போகவில்லை.
ஸ்ரீவனின் போன்கோல் வந்தது. வீட்டிற்போய்ச் சந்தித் தான். "இந்தக் கடைசி வருடம் மிகவும் கஷ்டமாகப் போகி றது. பாவம் உன்னைப் பார். ஒரு குடும்பத்தையே இழந்து விட்டு நிற்கிறாய். டெவீனாவும் தாயை இழந்து விட்டாள்’
டெவீனா தாய் இழந்த விடயம் தெரியாது. இவனுக்கு அனுதாபம் சொல்லும்போது அவளின் தாய் இறந்த விடயத் தைச் சொல்ல மறந்து விட்டார்களா?
ஆனாலும் பிலிப்புடன் அவளைக் கட்டிலிற் கண்ட காட்சியை அவனால் மறக்க முடியவில்லை.
அதை மறந்து விட்டு 'உன் தாய் இறந்ததற்கு எனது
அனுதாபங்கள்’ என்று வெறும் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை.
'ஏன் கல்லூரிக்குப் போகவில்லை’ மைதிலி கேட்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 175
"அம்மா பாவம்' அவன் பொய் சொன்னான். மைதிலி அதை நம்பினாள். கணேஸ் வேல்ஸ் நாட்டுக்குப் போய் விட்டான்.
ராகவன் குடும்பம் லண்டனுக்கு வந்தபோது மைதிலிக் குப் பதின்மூன்று வயது. தகப்பன் அடுத்த வருடமே மாரடைப் பால் இறந்தபோது தமயன் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டது, அவனில் மதிப்பையுண்டாக்கியது.
இருபத்தைந்து வயது வரைக்கும் தங்களின் நல்வாழ்வுக்கு உழைத்தவன் என்ற மரியாதை ராகவனில் மைதிலிக்கு இருந் ჭნჭნl.
அம்மாவைத் தேற்றுவதற்குப் பதில் ஏன் அவன் இப்படி நொந்து போனான் என்று அவளால் புரியும். அவன் வீட்டில் இல்லாத நேரம் டெவீனா ஒருநாள் போன் பண்ணினாள். அந்த நேரம் அம்மா கண்ட பாட்டுக்குப் பேசினாள். அதனால் டெவீனா தமயனுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண் டாளோ என்று ஒரு கணம் யோசித்தாள். இதுபற்றி அண்ணாவி டம் கேட்கலாமா என்று கூட யோசித்தாள்.
ஆனால் முடியவில்லை. அவனின் சொந்த விடயத்தில் தலையிட்டால் அவன் தனது சொந்த விடயத்தில் தலையிடு வானோ என்ற பயம். தமயன் தன் அறையைப் பூட்டிக் கொண்டு மெளனம் சாதிப்பதை சோகத்துடன் சகித்தாள் மைதிலி.
"கண்டறியாத படிப்பு, அக்காவின் கடையை எடுத்து நடத்து’ அம்மா விரக்தியுடன் சொன்னார்.
மகாலிங்கத்தின் தமயன் ஒருத்தர் கடையை நடத்திக் கொண்டிருந்தார். திரைப்படப் பட்டதாரியாகும் என்ற தமய னின் இலட்சியத்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்று பிரார்த்தித்தாள் மைதிலி. யாரிடம் இதைப் பற்றிப் பேசலாம் என்று யோசித்த போது புவனா போன் பண்ணினாள்.

Page 92
176 அவனும் சில வருடங்களும்
“தேடிய தெய்வம் காலடிக்கு வந்த மாதிரி’ மைதிலி சொன்னாள்.
“உங்கள் குடும்பத்திற்கு நடந்த இழப்பையிட்டு மிகவும் துக்கப் படுகிறேன்’ புவனா சொன்னாள்.
மைதிலி யாழ்ப்பாணத்தில் நடந்த 'அமைதிப்படையின ரின் அட்டூழியங்களில் தனக்குக் கிடைத்த தகவல்களைச் சொன்னாள்.
'அரசியல் பயங்கரமானது. யார் சினேகிதர் யார் எதிரி என்று சொல்ல முடியாத வியாபாரம். அது சரி உனது அண்ணா என்ன சன்னியாசம் வாங்கப் போகிறாரா? கல்லூ ரிக்கே வரவில்லை என்று சொன்னார்கள். இந்த வருடத்திற் கான படத் தயாரிப்பு விடயங்களைச் சமர்ப்பிக்கா விட்டால் அடுத்த வருடம் அவர் கல்லூரிக்குப் போகமுடியாது. அவர் என்ன கனவு காண்கிறாரா'
புவனாவின் குரலில் ஒரு தமக்கையின் குரலிலுள்ள பாசம். "அக்காவின் கடையை எடுத்து நடத்தப் போகிறேன் என்று சொல்கிறான்'
“என்ன முட்டாள் இவன். திரைப்படக் கல்லூரிக்கு அட்மிஷன் கிடைக்காமல் எத்தனைபேர் அழுகிறார்கள். இவன் என்னவென்றால்.’’ புவனா ஆத்திரப்பட்டாள்.
அம்மா மகளின் நினைவான சாமான்களை அடுக்கி வைத்து விட்டு அழுதாள். குழந்தைகளின் துணிமணிகளைக் கண்டு அவள் கதறியது கல் மனத்தையும் கரைத்து. தனது அறையில் ராகவனும் டெவீனா கொடுத்த ஜாஸ் ரேப்ஸ், புக்ஸ், சேர்ட்ஸ் என்பவற்றை மூட்டையாகக் கட்டினான்.
கையாற் தொடமுடிந்தவற்றை மூட்டை கட்டலாம், கருத் திற் பதிந்தவற்றை என்ன செய்வது.
நியூ ஹேவன் கடற்கரையில் நடு இரவில் அவள் தந்த முத்தங்கள் இவனின் ஆத்மாவுடன் கரைந்து விட்டதே. அவளி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் * - 177 * ---- -- - ܫ -- ܙ
டம் நேரடியாகப் பேசி என்னை ஏன் இப்படித் துடிக்க வைத்தாய் என்று கேட்க மனம் எண்ணியது. அம்மா கதறியழு கிறாள். இவன் ஆண்பிள்ளை அழ முடியவில்லை.
ஒருநாள் அன்ரோனியோ வீட்டுக்குப் போனான். அரைப் பைத்தியம்போல் அலட்டிக் கொண்டிருந்தான். அன்ரோ னியோ. எப்படியும் இந்த இறுதி வருடத்தை முடித்து விட வேண்டும் என்றான்.
"எனது பாட்டன் முசோலியின் பாஸிஸத்தை எதிர்த்து இறந்து போன சோஸலிஸ்ட் எனது தகப்பன் மார்பியாக்களை எதிர்த்து இறந்த நல்ல மனிதன். என்னையிழந்த ஜூலியட் அழித்து விட்டாளே’
அன்ரோனியோ அழுதான். "இலங்கையின் இனவாதத்தைத் தாங்கமுடியாமல் எனது தந்தை லண்டன் வந்து இந்த வாழ்க்கைக்குத் தாக்குப் பிடிக்கா மல் இறந்து போனார். டெவீனா என்னையழிக்க இடம் கொடுக்க விடலாமா? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் ராகவன்.
“பார் ஸ்ரீவனை, எப்படியும் தனது படிப்பை முடித்து ஒரு திரைப்படப் பட்டதாரியாக வேண்டும் என்று இவ்வளவு வருத்ததுடனும் முயற்சி செய்கிறான் பார்த்தாயா’ அன்ரோ னியோ நம்பிக்கையுடன் சொன்னான்.
'பாவம் மைக்கல், தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக் தன்னை தானேயழித்துக் கொண்டான்’ முனகிக் கொண்டான் ராகவன்.
‘எப்படி டெவீனா’ அன்ரோனியோ சட்டென்று கேட் டான்.
ராகவனுக்கு நெஞ்சில் ஏதோ அடைத்தது. இந்த இடத்தில் தானே முதலில் காதல் புரிந்தார்கள். நான் வேர்ஜின் தயவு செய்து மென்மையாய் நடந்து கொள்’ என்று இந்த அறையில்

Page 93
178 அவனும் சில வருடங்களும்
வைத்துத்தானே சொன்னாள்? தலையைப் பிடித்துக் கொண்டு கதற வேண்டும் போலிருந்தது. அவனுக்கு நெஞ்சை யடைத்தது.
அன்ரோனியோ கொடுத்த விஸ்கியைக் குடித்துக் கொண் டான். வேதனையை மறக்க வேறொன்றும் தெரியவில்லை. விஸ்கி உணர்வை மழுக்கியது. "குடித்துப் போட்டு என்ன வென்று ட்ரைவ் பண்ணுவாய்’ அன்ரோனியோ துக்கப்பட் டான். டெவீனாவை பிலிப்பின் அணைப்பில் கண்டது நினை வில் எரிந்தது. நெஞ்சம் கனத்தது. வாழ்க்கை கசந்தது.
கண்ணை மூடினால், திறந்தால், அவள் வந்தாள். நவம்பர் மாதம் உலகை நிர்வாணமாக்கியது. பெரிய காற்றால் மரங்கள் துயிலுரிந்தன. மேகங்கள் இருள் படலத்தில் நட்சத்திரங்களைப் பறி கொடுத்தன. பூமித்தாயின் பசுந்தரை கொட்டிவிழும் பழுத்த இலைகளால் பாயாக விரிக்கப்பட்டது. மக்கள் ஒவர் கோர்ட்டுக்குள் ஒளிந்து கொண்டார்கள்.
குளிருக்குப் பயந்த குழந்தைகள் விளையாட்டு இடங் களை அனாதையாக்கி விட்டு சூடான வீடுகளில் டி.வி.க்கு முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள்.
இந்தியச் சமுதாயம் தீபாவளி கொண்டாடியது. இங்கி லிஸ் சமுதாயம் கொடியவனுக்கு தீயிட்டுக் (Guy Fawkes Night) கொளுத்திக் கொண்டாடினார்கள். முஸ்லீம்கள் றமலான் நோன்புற்குத் தயார் செய்தார்கள். பெரிய கொண்டாட்டமான கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கி றது. கடைகள் பரபரத்தன. 1988ம் ஆண்டு பிறக்க ஐந்து கிழமைகள் இருக்கின்றன.
ராகவனின் வகுப்பார் தங்களின் இறுதி வருடப் பட்டப் படிப்புக்கான தயாரிப்புக்களின் குறிப்புக்களை அதிபரிடம் சமர்ப்பித்துக் கொண்டார்கள். 'என் மனத்தை என்னையறியா மல் இவ்வளவு தூரம் கொடுத்து விட்டேனே. அவன் தன் னைத்தானே திட்டிக் கொண்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 179
இவனது குழுவிற்கு இறுதி வருட மேற்பார்வையாளராக மிஸ் வேர்ஜினியா பாமஸ்ரன் நியமிக்கப் பட்டிருந்தாள்.
ராகவனின் ஸ்கிரிப்ட், ஒலி, ஒளி, காமராவிடம் லோக்கே ஷன் பற்றிய விபரமெல்லாவற்றையும் சமர்பிக்கச் சொல்லிக் கடிதம் எழுதியிருந்தாள்.
அருமையான மாணவன் ஒருத்தன் இப்படி அநியாயமாக லாமா மிஸ் பாமஸ்ரன் புழுங்கிக் கொண்டிருந்தாள்.
டெவீனாவும் பிலிப்பும் சேர்ந்து தங்கள் இறுதி வருடத் தயாரிப்பு விடயமாகத் திட்டமிடுகிறார்கள் என்று அன்ரோ னியோ சொல்லியிருந்தான்.
ஜேன் கிழக்கு லண்டன் ஏழைமக்கள் பற்றிய தயாரிப்பு ஒன்றைச் செய்வதாகக் கேள்விப்பட்டான். அலான் கிழக்கு ஐரோப்பிய கொம்யூனிசத்தை எதிர்த்து டாக்கிமென்டரியை 'கனவு’ என்ற பெயரில் எடுப்பதாகச் சொன்னார்கள். வீட்டுக்கு வந்தபோது பெரிய கடிதம் ஒன்று வந்திருந்தது. கையெழுத்தில் தெரிந்தது, டெவீனாவிடமிருந்து வந்திருக்கிறது என்று.
ஆத்திரம், வியப்பு, அழுகை, அலறல் எல்லாம் ஒன்றாக வந்தது. கடிதத்தை உடனடியாகக் கிழித்து எறியவேண்டும் போலிருந்தது. ஆனாலும் முடியவில்லை. கடிதத்தை எடுத்துக் கொண்டு காரை ஒட்டினான். என்ன எழுதியிருப்பாள் என்று கூட யோசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. கடிதம் அவன் மடியில் அவளாகக் கிடந்தது. காரை எங்கேயெல்லாமோ ஒட்டினான். கடைசியில் முதற்தரம் அவளுடன் இரவில் வந்த வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நிறுத்தினான்.
ஸ்ரீவனை வீட்டில் சேர்த்துவிட்டு வரும்போது அவளு டன் நடுச்சாமத்தில் இந்தப் பாலத்தில் நின்றது ஞாபகம் வந்தது. எத்தனை விசித்திரமாக உறவுகள் ஆரம்பிக்கின்றன. தொடர்கின்றன. முடிகின்றன? மனம் அழுதது. காரை நிறுத்தி விட்டு நடந்தான். நாஷனல் பிலிம் தியேட்டருக்கு சியாம் பெனகாலின் நிஷான்’ படம் பார்த்துவிட்டு இந்தப் படிகளில்

Page 94
18O அவனும் சில வருடங்களும்
நடுச் சாமத்தில் அமர்ந்திருந்து இந்தியாவின் பெண் அடிமைத் தனத்தைப் பேசியது ஞாபகம் வந்தது.
அவளையணைத்த கைகள் கனத்தன. அவள் தலை பதிந்த மார்பு எரிந்தது. அவள் இட்ட முத்தங்கள் எரிச்சல் தந்து. நினைவு எரிந்தது. கடிதத்தை அப்படியே துண்டு துண்டாகக் கிழித்து ஒடும் தேம்ஸ் நதியில் எறிந்தான். லண்டன் நகர வெளிச்சத்தில் அவன் நினைவுகளும் துண்டுகளாகப் போய்க் கொண்டிருந்தன. அவள் என்ன எழுதியிருப்பாள் என்று அவ னுக்கு அக்கறையிருக்கவில்லை.
இப்போது அன்ரோனியோவின் துயரத்தின் தாக்கம் புரிந் தது. நெஞ்சம் கனத்தது. வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது மைதிலி விழித்திருந்தாள். புவனா போன் பண்ணியதாகச் சொன்னாள்.
தன் அறைக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்த விஸ் கியை ஊற்றினான். தன் கையாலேயே தன் வாழ்க்கையை அழிப்பதை அவன் மனச்சாட்சி உறுத்தியது. கீழே டெலி போன் மணியடித்தது. "அண்ணா புவனா பேசிறாள்’ மைதிலி கீழேயிருந்து குரல் கொடுத்தாள்.
"என்ன அஞ்நாத வாசம்’ புவனாவின் குரலில் கோபம். மைதிலி இன்றும் பக்கத்தில் நின்றிருந்தாள்.
அவன் மறு மொழி சொல்லவில்லை. மைதிலி போன பின் "என்ன வேணும்" ராகவனின் குரலில் சோகம்.
"இதோ பார் ராகவன், அக்காவின் குடும்பம் அழிந்தது எனக்கும்தான் துக்கம். உலகத்தில் ஒவ்வொரு நாளும் அநியாய மாக எத்தனையோ உயிர்கள் அழிந்துதான் முடிகிறது. அதற்காக உலகம் நின்று விடப் போவதில்லை. உனக்கு வந்த நல்ல சந்தர்ப்பம் பல பேருக்குக் கிடைக்காதது. தயவு செய்து பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் ஒரு வருடத்தை எப்படியும் முடிக்கப் பார். ஒரு விடயத்தை ஆரம்பிப்பது

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் . 181
இலகு. முடித்துக் காட்டுவது மிகக் கடினம்’ அவன் மறு மொழி சொல்லவில்லை.
"ராகவன், நீ இரக்கமான மனமுள்ளவன். மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன். தம்பி, என் சொல்லைக் கேள்'
அவள் குரலில் பாசம் அவனைக் கரைத்தது. அவனையறி யாமல் நீர் வழிந்தது. புவனாவுக்குக் கூட அவன் டெவீனாவின் தொடர்பு அறுந்ததைச் சொல்லவில்லை.
"உனது தமக்கை கீதாவாக என்னை எடுத்துக் கொள். உன் முன்னேற்றத்திலும் சந்தோசத்திலும் மிகவும் அக்கறையுள்ள வள் என்பதைப் புரிந்து கொள்’ அவளின் அன்பு அவனைத் தொட்டது.
அன்றிரவு அவன் தூங்கவில்லை. அம்மா சரியாகத் தூங்கியே எத்தனையோ வாரங்களாகி விட்டன. இரவில் எழும்பி தன் பேரக் குழந்தைகளைத் தேடுகிறாள். அவன் நித்திரை எங்கே மறைந்து விட்டதோ அவளுக்குத் தெரியாது.
‘அண்ணா அம்மாவைக் கூட்டிக் கொண்டு எங்காவது போங்கள்,’ மைதிலி பயத்துடன் சொன்னாள்.
டொக்டரும் அதையேதான் சொன்னார். அம்மாவுக்கு நேர்வஸ் பிரேக்டவுண் வரலாம் என்று சொன்னாள்.
“என் மகள் என்ன பெரிதாக எதிர்பார்த்தாள். ஒரு நல்ல தாயாய், ஒரு நல்ல மனைவியாய் வாழ்ந்தாளே அது பாவமா? தாய்மையைத் தலை வணங்கும் இந்தியப் படை ஏன் இந்தக் கொடுமை செய்தார்கள்' அம்மா கடைக்குப் போன வெள் ளைக்காரப் பெண்களை வழிமறித்து இந்தக் கேள்வியைக்
கேட்டாள்.

Page 95
182 அவனும் சில வருடங்களும்
அவளின் மனநிலை மிகவும் குழம்பியிருந்தது. அவளால் இந்தத் துயரைத் தாங்க முடியவில்லை. மனம் மிகவும் பேதலித்து விட்டது.
ராகவனுக்கு இதயம் மரத்து விட்டது போலிருந்தது. சில வேளைகளில் டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கும் பெண் டெவீ னாவை ஞாபகப் படுத்தினாள். சந்திகளில் ஒட்டப்பட்டிருக் கும் போஸ்டர்களில் டெவீனா சிரிக்கிறாள். அவள் ஞாபகம் அவனைச் சித்திரவதைப் படுத்தியது. அவளைத் தவிர்ப்பதற் காக கல்லூரிக்கே முழுக்குப் போட்டு விட்டாலும் அவள் நினைவு துரத்தியது.
"மோகத்தைக் கொன்று விடு அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு தேகத்தைச் சாய்த்திவிடு - அல்லாலதில் சிந்தனை மாய்த்து விடு யோகத்திருத்திவிடு, அல்லாவென்றன் ஊனைச் சிதைத்து விடு ஏகத்திருந்துலகம் - இங்குள்ளன யாவையும் செய்பவளே பந்தத்தை நீக்கிவிடு, அல்லாலுயிர்ப் பாரத்தை போக்கிவிடு சிந்தையை தெளிவாக்கு - அல்லாலிதைச் செத்த உட லாக்கு." இந்த மோகநிலையின் தவிப்பு அநுபவிக்கா விட்டால் தெரியாத உணர்வு. ஓரிரு வருடங்களுக்கு முன் இப்படியும் ஒரு சித்திரவதை காதலுணர்வால் உண்டாகும் என்று யாரும் சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்க மாட்டான். இதெல் லாம் கற்பனையூற்றுகளின் வசனக் கோர்வைகள் என்று சிரித்தி ருப்பான் - இன்று அவன் மெளனமாக அழுதான்.
"தானும் தன் பாடும் என்று கல்லூரியை முடித்து விட்டு வெளியேறியிருக்கலாம். ஏன் எனக்கு இந்த சோதனைகள்?"

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 183
இவன் மனம் தாயின் துயரிலும் தனது துயரிலும் தனது தமக்கை குடும்பத்தின் அழிவால் நடந்த துயரிலும் நன்கு பின்னப் பட்டிருந்தது. தெருவால் போய்க் கொண்டிருந்த சீக்கிய மனிதன் ஒருத்தனை அம்மா ஒடிப் போய்க் கண்ட பாட்டுக்குப் பேசினாள்.
"ஏன் என் குழந்தையைக் கொன்றாய்" அம்மா தன் மார்பிலும் வயிற்றிலும் அடித்துச் சத்தம் போட்டாள். அடுத்த நிமிடம் ஆவேசம் தாங்காமல் சீக்கிய இளைஞனை அடிக்கத் தொடங்கி விட்டாள்.
gg( மாதாவே உங்கள் தயவை நாடுகிறோம் என்றுחt J''' அழுத எங்களுக்கு இப்படியா கொடுமை செய்வது'
அம்மாவின் அலறலால் தெருவில் போன கூட்டம் அதிச யத்துடன் திகைத்தது. பைத்தியம் போல் இந்த வயது போன தாய் ஏன் இப்படிக் கத்துகிறாள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ராகவன் ஒடிப் போய்த் தாயை அழைத்து வந்தான். இந்திய சீக்கியன் "பைத்தியம் என்றால் அடைத்து வைப்பது தானே' என்று பேசி விட்டுப் போனான்.
'உங்களைப் போன்ற இந்தியர்களால்தான் என் தாய் இந்த நிலைக்கு வந்தாள்' அவன் ஒலமிட்டு அழவேண்டிய இந்த வார்த்தைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். 'அம்மாவை எப்படிப் பார்ப்பது’ மைதிலி விம்மினாள். 'கணேஷ் வீட்டுக்குக் கொஞ்ச நாள் கொண்டு போய் விடுவம், கமலாவும் கணேசும், புதிய இடமும் அம்மாவின் மனக் குழப்பதைக் கொஞ்சம் சீர்ப்படுத்தலாம்' அவன் தங் கைக்கு ஆறுதல் சொன்னான்.
"அம்மா எங்கள் இருவரிலும் கோபமாய் இருந்தாள். அந்த மனவேதனையுடன் அக்காவின் சேதியும் அம்மாவை இப்படியாக்கி விட்டது."

Page 96
184 அவனும் சில வருடங்களும்
மைதிலி அம்மாவின் நிலைக்குக் காரணங்கள் தேடினாள். “மைதிலி நாங்கள் அம்மாவைத் திட்டம் போட்டு இப்ப டியாக்கி விட்டோம் என்று யோசித்து உன்னைத் துன்பப் படுத்த வேண்டாம்".
தங்கையின் தலையைத் தடவி விட்டான். அவனுடைய கடைசித் தங்கை, குடும்பத்தின் செல்லம் கடந்த இரு வருடங்க ளாக வேண்டாத விருந்தாளிபோல் நடத்தப்படுவதை அவன் வெறுத்தான்.
அம்மாவுக்காக அவனும் மைதிலியுடன் பெரிதாகப் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளவில்லை.
'ஏன் அண்ணா எங்களுக்கு இவ்வளவுகஷ்டம்?" மைதிலி மனம் விட்டு அழுதாள்.
தாய் ஏதோ பிரமை பிடித்ததுபோல் இவர்கள் இருவரை யும் அன்னியர்கள்போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இலங்கை அரசியல் கொடுமையால் எத்தனை தாய்மார் இப்படி சுயநிலையிழந்து அல்லற்படுகிறார்கள்?
அவன் பெருமூச்சு விட்டான். எப்போது இலங்கைத் தமிழருக்குச் சுதந்திரம் வரும்? எப்போது எங்கள் தாய்மார் கண்ணிர் துடைப்பார்கள்? என்று எங்கள் பெண்கள் பாதுகாப் பாக இருப்பார்கள்? என்று எங்கள் இனம் நிம்மதி பெறும்?
அவனுக்கு நித்திரை வரவில்லை. ஆனந்தனை நினைத்துக் கொண்டான். இலங்கை அரசாங்கம் வேட்டையாடிய இளை ஞர்களை இன்று இந்திய அமைதிப்படை வேட்டையாடுகி றதே?
அம்மாவின் பிதற்றல் அடுத்த அறையிற் கேட்டது. மைதி லியின் விம்மல் பக்கத்து அறையிற் கேட்டது.
இலங்கைத் தமிழனாய்ப் பிறந்ததைப் போல் பாவம் வேறொன்றும் இந்த உலகில் இல்லை; அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். ஒரு இனத்தின் விடுதலைக்காக

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 185
அழியும் இளம் உயிர்கள், பறிபோகும் பெண்மைகள், அனா தைகளாகும் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் எத்தனை பேர்? நீண்ட நேரம் நித்திரை வரவில்லை. ஏதோ ஒரு "ரேப் எடுத்துப் போட்டான். டெவீனா கொடுத்த பேத்ஹோவதின் பியானோ கொன்சேர்ட்டோ. அவள் கொடுத்தவற்றை மூட்டை கட்டிய போது எஞ்சிய ரேப்.
மனம் அம்மாவை விட்டு அவளிடம் ஒடியது? அவள் இல்லாத போதுதான் அவள் எவ்வளவு தூரம் அவன் மனதிற் பதிந்து விட்டாள் என்று புரிந்தது. ஞாபகங்கள் நெருப்பாய் எரிந்தன. அவள் இட்ட முத்தங்களின் ஞாபகம் முள்ளாய்த் தைத்தது. அவளின் அணைப்புகள் அரவத்தை நினைவூட்டியது. அடுத்த நாள் அதிபரின் டெலிபோன் கோல் வந்தது. "அம்மாவின் நிலை பற்றி மிகவும் வருந்துகிறேன். உனது தமக்கையின் குடும்பத்தின் அழிவுக்கு எப்படி என் துக்கதைச் சொல்வது என்று தெரியாது’ அதிபர் உண்மையான சோகத்து டன் சொன்னார்.
இவன் ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று அவர் கேட்க வில்லை. எப்போது வருகிறாய் என்பது போலிருந்தது அவரது தொனி.
‘என்ன செய்வது உலகத்தில் நடக்கும் போர்களால் அப் பாவி மக்கள்தான் பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள். எழுபத்தி ஒன்பதாம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க வந்த ரஷ்ஷியர்களை எதிர்க்க ஆப்கான் மக்கள் போராடுகிறார் கள். கிட்டத் தட்ட ஒரு கோடி மக்கள் இறந்து விட்டதாகவும் அதை விடக் கூட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டதாகவும் சொல்லப் படுகிறது. போர்களால் நன்மைய டைவோர் அரசியல்வாதிகளும் ஆயுதம் விற்பவர்களுமே. உங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையால் அழியும் தமிழர்க ளுக்கு மிகவும் மனம் வருந்துகிறேன்’ அவர் இவனைத் தேற்ற ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

Page 97
186 அவனும் சில வருடங்களும்
அவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழாம் ஆண் டில் ரோமாபுரி அகதி முகாமில், ஜெர்மனியிலிருந்து ஓடிவந்த யூத அகதித் தம்பதிகளின் புதல்வர். அறுபத்தி ஏழாம் ஆண்டு இஸ்ரேல் எகிப்துக்கு எதிராகத் தொடங்கிய யுத்தத்தில் ஒரு கொமாண்டராகப் பணிபுரிந்தவர்.
மேலிடத்து உத்தரவால் அனாதரவான எகிப்தியத் தாய்க ளையும் குழந்தைகளையும் இஸ்ரேல் ராணுவத்தின் கொமாண் டர் என்ற பதவிக்காகக் கொலை செய்ததை மிகவும் மனம் வெறுத்து ராணுவத்திலிருந்து விலகி லண்டனுக்கு வந்தவர்.
இரக்கமும், மனித நேயமும் நிறைந்த கலைஞன் அந்த அதிபர். அவரின் கனிவான மொழிகள் அவன் மனத்தையுருக்கி யது. அவரின் ஆதரவில்லாவிட்டால் மைக்கல், அன்ரோ னியோ, ஸ்ரீவன், ராகவன் போன்றோர் நின்று பிடிக்க மாட் டார்கள். அவர் நீண்ட நேரம் பேசி இவன் மனத்தை மாற்றப் பார்த்தார்.
"யாரும் மளிகைக் கடை போடலாம். கமரா பிடிக்கக் கலைக் கண்கள் தேவை, புதுமைகளை ரசிக்கவும் பழைய வற்றை ஆராயவும், மாற்றங்களை மற்றக் கோணங்களிற் பார்ப்பதற்கும் மன முதிர்ச்சி தேவை."
அவன் அதிபரின் அறிவுரை கேட்டு முடிய மனம் தாங்க முடியாத வேதனையடைந்தது.
டேவிட் என்ற சினேகிதனின் உதவியால் திரைப்படக் கல்லூரிக்குப் போனதற்கு இந்த அதிபர் எவ்வளவு முக்கிய காரணம் என்பது அவனுக்குத் தெரியும்.
தமக்கையின் குடும்பத்தின் அழிவு, தாயின் மனமுடைந்த நிலை மட்டுமா, அவன் கல்லூரிக்குப் போகாமல் விட்டதற்குக் காரணம்? ---
மைதிலி தாய்க்கு ஏதோ மருந்து வாங்கச் சொன்னாள். இயந்திரம் போல் செய்து விட்டு அறைக்குள் முடங்கிக் கிடந்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 187
நவம்பர் மாதம் முடியப் போகிறது. புகார் இருள் உல கைக் கவிழத் தொடங்கிவிட்டது. புகார் நடுவில் அவள் முகம் தெரிவது போலிருந்தது. மீண்டும் மீண்டும் அவள் நினைவு உயிரை வதைத்தது.
கால் போன போக்கில் நடந்தான். வீடு இருக்குமிடம் ஹரிங்கேய். கால்போன போக்கில் நடந்துபோய் அலெக் ஸாண்ட்ரா மாளிகையின் பக்கம் போய்விட்டான்.
இந்த மாளிகை விக்டோரியா மகாராணியின் மகன் எட் வேர்ட்டின் மனவிை அலெக்ஸாண்ட்ரா கட்டினாள்.
எட்வேர்ட் இளவரசன் வைப்பாட்டிகள் வைத்திருப்பதில் பிரபலமானவன். பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கும் மாளிகை யைப் பார்த்தான்.
கணவனை யாரிடமோ பறிகொடுத்த தாழ்மையுணர்ச்சி யிலா இந்த உயர்ந்த மாளிகையை அலெக்ஸ்ஸாண்ட்ரா இளவ ரசி கட்டினாள்?
என்னுடையவள், அல்லது என்னுடையவன் என்ற நிம்ம தியில் வளர்ந்த உறவுகள் சட்டென்று யாரிடமோ தொலைத்த பின் என்னவென்று தாங்கிக் கொள்ளும்? அவன் புகார் மறைத்த மேகத்தைப் பார்த்தான்.
ராகவன் மனம் விட்டு அழுதான். யாருக்காக அழகிறான் என்று தெரியவில்லை. மருமகள் சத்தியாவின் குழந்தைச் சிரிப்பை குழித் தோண்டிப் புதைத்த இந்திய ராணுவத்தின் கொடுமையை நினைத்து அழுதானா?
எப்போதும் பாசத்தோடு தன்னை நேசித்த தமக்கையை நினைத்தழுதானா?
பால் முகம் மாறாத மழலைக் கண்ணனை நினைத்துக் கண்ணீர் பெருகியதா?

Page 98
188 அவனும் சில வருடங்களும்
அன்பு தரவேண்டிய தாய்மை தான் யாரென்று கூடத் தெரியாமல் பித்தம் பிடித்திருக்கிறாளே, அவளுக்காக அழு தானா?
அலெக்ஸ்ஸாண்ட்ரா மாளிகையின் படிக்கட்டுகளிலி ருந்து நேரே பார்த்தால் சமவெளியில் கண்ணடிக்கும் மின்ன லென லண்டன் மாநகரின் வெளிச்சங்கள் தெரிந்தன.
அவள் நினைவு நெஞ்சில் குத்தியது. இறந்து கொண்டிருக் கும் போதும் யாரோ எழுப்பி இவளை நீ மறக்க முடியாது’ என்று கட்டளையிடுவது போலிருந்தது.
வீட்டுக்குப் போனபோது மைதிலியின் அறையிலிருந்து பாலச்சந்தரின் வீணையொலி கேட்டது. மைதிலிக்கு அப்பா வின் ரசனையிருக்கிறது. பாலச்சந்தரின் வீணை, சுப்புலட்சுமி யின் பாடல்கள். அப்பாவின் ரசனையின் சின்னங்கள், மைதிலி யின் காதலன் நாசர் எதை ரசிப்பான். பாரசீகக் கவிஞன் உமார் கயாமின் கவிதைகளை இவள் காதில் கிசுகிசுப்பானா?
சங்கீதங்களை நினைக்கும் போது இந்திராவின் பெரிய மான்விழிகள் கதவடியில் நிற்பது போலிருந்தது. அவள் சில மாதங்கள் இந்த வீட்டில் இருந்தாள் என்பதே அவனுக்கு நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
அவன் தன் முன்னாலிருந்தால் பாடச் சொல்ல வேண்டும் போலிருந்தது?
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" இந்திராவை அம்மா மிகவும் விரும்பினாள். இவனுடன் இந்திராவை இணைப்பது அவள் கனவாக இருந் தது என்பது அவள் கொஞ்சக் காலத்திற்குமுன் சொல்லிய விடயங்களிலிருந்து புரிந்தது.
நெஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இந்திராவை நான் காதலித்தோனா என்று தேடிப்பார்த்தான். தட்டிய கதவிடுக்குக ளில் டெவீனாவின் நீல விழிகள் நர்த்தனமாடின்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 189
இந்திராவின் சோகப் பார்வைக்குத் தான் காரணம் என்று நினைத்தபோது குற்ற உணர்வு வாட்டி எடுத்தது.
நினைவுகள் எங்கேயோ போய்க் கொண்டிருந்ததை டெலி போன் அழைப்பு முறித்தது.
“ஹலோ ராகவன் எப்படி" ஸ்ரீவனின் குரல். 'நீ எப்படி யிருக்கிறாய்" ராகவன் எழுந்து உட்கார்ந்தான். நோயோடு போராடும் ஸ்ரீவனின் குரல் நெஞ்சை எங்கோ தொட்டது.
"செத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முதல் ஏதாவது சந்தோசமாகச் செய்து விட யோசிக்கிறேன்' பாதி சிரிப்பும் பாதி வேதனையுமாகச் சொன்னான் ஸ்ரீவன்.
'அப்படி எல்லாம் பேசாதே, மனத்தை திடப்படுத்திக் கொள்’ ஸ்ரீவனின் சோகச் சிரிப்பு அடுத்த முனையிற் கேட்டது.
'ராகவன் அடுத்த வருடம் இதே நேரம் நான் இருப் பேனோ தெரியாது. இன்றைக்கு எனக்கு விஷ் பண்ணு. இன்டைக்கு எனக்கு பேர்த்டே"
"ஐ விஷ யு ஆல் த பெஸ்ட், குட் லக் போர் யுவர் பைனல் இயர் வோர்க்'
"டேய் மடையா, என்ன எனது பைனல் இயர் தயாரிப் புக்கு வாழ்த்துச் சொல்கிறாய். நீதானே கமரா வேலை செய்வ தாகச் சொன்னாய்"
ஸ்ரீவன் சீறினான். ராகவன் உறைந்து போனான். ஸ்ரீவனின் தயாரிப்புக்குத் தான் கமரா வேலை செய்வதாக உறுதி கொடுத்திருந்தான். அந்த உறுதியைப் பாழடிக்கலாமா? இறந்து கொண்டிருக்கும் நண்பனின் லட்சியத்தை அவமதிக்கலாமா? "எப்போது கொலிச்சுக்கு வருகிறாய்” ராகவன் மறுமொழி சொல்ல வில்லை.

Page 99
190 அவனும் சில வருடங்களும்
"கிறிஸ்மஸ் ஹொலிடே முடிய வருவாய்தானே" ராக வன் ஏதோ முணு முணுத்தான்.
"இறந்து கொண்டிருப்பவன் பேர்த்டே தொண்டாடுகி றேன். எதிர்காலம் பற்றி யோசிக்கிறேன். நீ என்னடாவென் றால்." ஸ்ரீவன் அலுத்துக் கொண்டான்.
"உனது பேர்த்டேய்க்கு என்ன பண்ணப் ப்ோகிறாய்?" ராகவன் ஸ்ரீவனின் ஞாபகச் சக்தியை மெச்சினான். ராகவன் நவம்பர் கடைசியில் பிறந்தவன்.
'அம்மாவை வேல்சுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன்" h
ஸ்ரீவனுக்குச் சொன்னதுபோல் அம்மாவை அழைத்துக் கொண்டு வேல்ஸ் நாட்டுக்குச் சொன்றான்.
காரில் இங்கிலாந்தைக் கடந்து வேல்ஸ் நாட்டில் போய்க் கொண்டிருந்தபோது வேல்ஸ் நாட்டின் ரம்மியமான காட்சி மனதுக்கு இதமாக இருந்தது. வானுயர்ந்த மலைத்தொடர்கள், வளைந்தோடும் சிறு நதிகள், கைவண்ணத்தில் தீட்டப்பட்டது போன்ற வயல் வெளிகள். இந்த அழகிய கமவிெளியில் தோய்ந்தோடும் ஒடைகளின் கரையில் டெவீனாவுடன் கைகோர்த்து நடக்க ஆசையாக இருந்தது. வான் முகட்டில் ஏறி நின்று ஐ லவ் யு டெவீனா’ என்று அலற வேண்டும் போலிருந்தது. அவனது ஆத்மீக ஏக்கங்களில் பல அவளிடம் சொல்லாமலே தடைப்பட்டுவிட்டது. அவளையழைத்துக் கொண்டு அழகிய திருகோணமலைக் கடற்கரையில் நடக்க ஆசைப்பட்டான். அவன் நடந்த வன்னிவெளியில் அவளோடு நடக்க வேண்டும். பண்ணைக் கடற்கரையில் சூரிய அஸ்தம னத்தின் அபூர்வ கோலத்தை ரசிக்க வேண்டும். கன்னியாகுமரி யின் கோடியில் அவன் மடியில் படுத்திருந்து சூரியனின் விடிவையும் முடிவையும் ரசிக்க வேண்டும். இப்படி எத்தனை எத்தனை? மகாபலிக் கடற்கரையின் மணல் புதைய அவளை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 191.
ஒடப் பண்ணிப் பார்க்க வேண்டும். "சத்தியா கணேஷ் வீட்டில் குழப்படி செய்யாமல் இருப்பாளா’ அம்மா திடீ ரென்று கேட்டாள். அவன் நினைவு அறுந்தது.
சத்தியாவோ மற்றவர்களோ அம்மாவைப் பொறுத்த வரையில் இன்றும் இறக்கவில்லை. தனது மகளைப் பார்க்க வன்னி நகர் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். கமலா அம்மாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டாள்.
கணேசும் கமலாவும் கார்டிவ் நகரில் வேலை செய்கிறார் கள். ஒன்றாய் வேலை செய்கிறார்கள். கல்யாணம் செய்யாமல் ஒன்றாய் வாழ்கிறார்கள்.
சுய உணர்வுடனிருந்தால் அம்மா ஒழுக்கம்' பற்றி ஒப் பாரி வைத்திருப்பாள். இப்போது தான் வன்னி நகர் வந்திருப்ப தாக நினைத்துக் கொண்டு அடுப்படிக்குப் போனாள். வாழை மரங்களை யார் பிடுங்கினார்கள் என்று வியந்தாள்.
அம்மியும் குழவியும் எங்கே என்று கேட்டாள். வேலைக் காரப் பெட்டை ஏன் இன்னும் வரவில்லை என்று வீட்டைச் சுற்றி வந்தாள். கிணற்றடியில் யாரையும் காணவில்லை என்று விழித்தாள். பார்க்கப் பதிதாபமாகவிருந்தது.
"கொஞ்ச நாளில் அம்மா சரிவந்து விடுவாள்' கணேஸ் ஆறுதல் சொன்னான். ・・
"நான் அம்மாவுடன் நிற்கிறேன். நீங்கள் லண்டனுக்குப் போங்கள்’ மைதிலி தமயனை வேண்டினாள்.
"தனியாக இருந்து யோசிக்காமல் கொலிஜ் வேலையைச் செய்யுங்கோ’ மைதிலி கட்டளை யிட்டாள்.
வேல்ஸ் நாட்டிலிருந்து லண்டனுக்கு வந்த போது வெறு மையான வீடு வேதனையைக் கூட்டியது. சூனியத்தில் நடமா டும் பிரமை அவனுக்கு வந்தது. அன்ரோனியோ போன் பண்ணினான்; ராகவன் தனியாக இருக்கப் பிடிக்காவிட்டால் தன்னுடன் வந்து நிற்கச் சொன்னான்.

Page 100
192 அவனும் சில வருடங்களும்
ராகவனுக்குப் புவனாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது.
'போன் பண்ணிக் கொண்டிருக்கிறேன். எங்கே தொலைந்து விட்டாய்' என்று கேட்டெழுதியிருந்தாள்.
அலான் பார்டோவும் ஜேனும் கிழக்கு யூரோப்பிய சோச
லிஸ்ட் கூட்டங்களுக்குப் போவதாகச் சொல்லிப் போன் பண்ணினார்கள்.
கிழக்கு பேர்லினையும் மேற்கு பேர்லினையும் இணைக் கும் வேலையில் லண்டனைச் சேர்ந்தே அகில உலக சோச லிஸ்ட் கட்சியிலுள்ளோர் வேலை செய்வதை ராகவன் அறி வான். தங்களுடன் பேர்ளின் வரச் சொல்லிக் கேட்டார்கள்.
மைதிலியும் அம்மாவுமில்லாமல் வீடு வெறுமையாக இருந்தது. மகாலிங்கத்தின் தமயன் கடையைப் பார்ப்பவர் வந்து ராகவனைக் கடையின் பொறுப்பை எடுக்கச் சொன்னார்.
அம்மாவின் நிலை சரிவரும் வரைக்கும் தான் எந்தப் பொறுப்பும் எடுக்கப் போவதில்லை என்று சொன்னான் ராகவன்.
அவர் மகாலிங்கம் போல் ராகவனைக் கிண்டலடிக்காமல் 'படிப்பில் கவனம் செலுத்துவது என்று முடிவு கட்டினால் அதைக் கவனமாகச் செய்யுங்கோ, அம்மாவின் சுகவீனத்திற் காக நிறைய லீவு எடுத்து விட்டீர்கள்’
அவரின் கரிசனம் உண்மையான பாசத்துடன் தொனித்தது. இவனைக் கடைக்காரனாகப் பார்க்காமல் கமராக்காரனாகப் பார்க்கும் கரிசனம் அது. இப்படியான தங்கமான மனிதர்களால் தான் தமிழ் இனம் வாழ்கிறது. "அம்மா பாவம், மிகவும் ஆடிப் போய் விட்டாள்' வந்தவர் பெருமூச்சுடன் சொல்லி விட்டுச் சென்றார்.
லண்டன் மாநகரம் நத்தார்ப்பண்டிகைக்கு ஊர்க்கோலம் போட்டது. உலகின் பல பாகங்களிலுமிருந்து லண்டனுக்கு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 193
நத்தார் அன்பளிப்புக்கள் வாங்க வருவோர் தொகை ஒக்ஸ் போர்ட் ஸிரீட்டை நினைத்தது.
எண்பத்தி ஐந்தாம் ஆண்டு நத்தார்ப் பண்டிகைக்கு முன் டெவீனாவுடன் பாரிஸ் போனது ஞாபகத்தில் வராமலில்லை. இந்திரா பாரிஸிலிருந்து போன் பண்ணினாள். அவள் குரலின் கனிவு; அவன் இருதயத்தை வருடியது. அம்மாவைப் பற்றி விசாரித்தாள். மைதிலியைப் பற்றி விசாரித்தாள்.
மைதிலியின் காதலுக்கு உதவி செய்யச் சொன்னாள். அவன் அவள் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். டெவீனா பற்றி இவளிடம் சொல்லியழ வேண்டும் போலிருந் தது. தன் அவமானத்தை யாரிடம் பகிர்வது? "என்ன மெளனம்’ அவள் விசாரித்தாள். ஏனோ அவள் குரல் இவனை மிகவும் நையப் பண்ணி விட்டது. உடம்பில் ஒவ்வொரு அணுவும் எதற்காகவோ ஒலம் வைப்பதற்குத் தயாராய் இருப் பது போலிருந்தது. இந்திரா என்ற பெண்ணைக் கடந்து என்னவென்று டெவீனா என்னை ஆட்கொண்டாள்? 'அம்மா வின் சுகவீனம் அக்காவின் குடும்பத்தின் அழிவெல்லாம் உங்களை எப்படித் துக்கப் படுத்தியிருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எப்படியும் படிப்பை முடிக்கப் பாருங்கள்
எல்லோரையும்போல அவளும் சொன்னாள். ஆனாலும் அந்தக் குரலின் பரிவு நெஞ்சை நெகிழப் பண்ணியது. ‘வாழ்க் கையின் நினையாப் பிரகாரமாய் நடக்கும் மாற்றங்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்று தெரியும்தானே’
அவள் தத்துவம் பேசினாள்.
இனிமையான கனவு, பயங்கர அனுபவமாய்ப் போனதை அவள் அறியாள் 'ஒரு கதவு பூட்டப்பட போனதை எந்தக் கதவும் திறக்க வேண்டாம்." அவன் முணுமுணுத்தான்.

Page 101
194 அவனும் சில வருடங்களும்
"அப்பா சொல்ல முதல் நான் இந்த விடயத்தைச் சொல்லிவிட லாம் என்று நினைக்கிறேன்’ அவள் குரலில் சட்டென்று ஒரு மாற்றம்.
“என்ன விடயம்' அவன் ஏனோ தானோ என்று கேட்கா மல் அக்கறையுடன் கேட்டான். 'எனக்குக் கல்யாணம் கெதி யில் நடக்கப் போகுது’ நினைவு சிலிர்த்தது. இந்திரா தூரம் போய்விட்ட உணர்ச்சி. வன்னிக் குளக்கட்டில் ஒடிவிளையாடி இந்திராக் குட்டிக்குக் கல்யாணமா? பரதத்தையும், இசையை யும் இரு கண்களால் போற்றும் இந்தக் கன்னிக்கா கல்யாணம்? தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா செண்பகத் தோட்டத்திலே காத்திருந்தால் வருவேன் என்று பாடியவள் கல்யாணம் செய் யப் போகிறாள்? வருபவன் இவள் அருமை தெரிந்தவனாக இருப்பானா?
"என்ன பேசாமலிருக்கிறாயே" அவள் அதட்டினாள். குரல் கரகரத்திருந்தது. இவனிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கி றாள்? “வாழ்த்துக்கள்' அவன் ஒரு வார்த்தையில் சொன்னான் பெரிதாய்ப் பேச வெளிக்கிட்டால் நிலை தடுமாறுவான் என்ற பயம் 'அவ்வளவுதானா’ அவன் பெருமூச்சு விட்டாள்.
"வேறென்ன’ அவன் தயக்கத்துடன் கேட்டான். கல்யா ணம் செய்யாதே என்று சொல் என்று மனம் சொன்னது. "யார் மாப்பிள்ளை, எப்படி மாப்பிள்ளை என்றெல்லாம் கேட்க மாட்டாயா" அவள் குரலில் ஏக்கம். என்னைப் புரிந்து கொள் என்ற தாபம்.
'சொன்னால் கேட்கிறேன்' அவன் டெலிபோனை இறுக் கிப் பிடித்தான். அடுத்த பக்கம் மெளனம். அவளின் கலங்கும் விழிகள் அவன் கற்பனையைத் தட்டியது. 'எனக்குப் பேசியி ருக்கும் மாப்பிள்ளையின் தகப்பன் மிகவும் சுகவீனமாக இருக்கிறார். தான் இறக்கமுதல் மகனைத் திருமணக் கோலத் தில் பார்க்க வேண்டும் என்றாராம்."
"தான் ஒரு பலியாடு என்று சொல்கிறாளா? அவனுக்குப் புரியவில்லை. அவளில் மிக மிகப் பரிதாபம் வந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 195
‘'நீ விரும்பியவனைச் செய்ய உனக்குக் கொடுத்து வைக்க வில்லை. உன்னை விரும்புவனைச் செய் என்று அம்மா கெஞ்சினாள்’ இந்திராவின் குரல் அடைத்துக் கொண்டது.
டெலிபோனைப் பிடித்திருந்த அவன் கைகள் நடுங்கின. அவள் தொடர்ந்து பேசினால் அவனால் அதைச் சகிக்க முடியாது என்று தெரிந்தது. தர்ம சங்கடத்துடன் தடுமாறினான். டெவீனா மாயையாகவும் இந்திரா நிஜமாகவும் தெரிந்தது.
"இரண்டு வருடத்துக்கு முதல் நீங்கள் பரிசுக்கு வந்த போதே." அவள் மேலே சொல்லாமல் டெலிபோன் வைத்து விட்டாள்.
என்ன சொல்ல வந்தாள் என்று தெரியவில்லை. ஆனா லும் அவளின் அழுகைக்குள் காரணம் அவனுக்குத் தெரியாம லில்லை. இவனையிழந்த துயர் அவள் குரலில் வெளிப்பட் டதை அவனால் தாங்க முடியாதிருந்தது. மனம் மிகவும் தர்ம சங்கடப் பட்டது.
நத்தார் அன்று தனியாக வீட்டிலிருந்தான். ஒரு விதத்தில் புதிய அனுபவமாக இருந்தது. இரண்டு பெண்களின் நினை வும் உலகை மறக்கப் பண்ணியது. இரண்டு வருடங்களுக்கு முன் நத்தார் இரவன்று பாரிசில் வைத்து டெவீனா "என்னை முத்தமிடத் தோணலயா’ என்றாளே. டெவீனாவின் அந்த ஞாபகம் அடிக்கடி வந்து அமைதியைக் கெடுத்தது. ஜனவரி எண்பத்தி எட்டாம் ஆண்டு வந்தது. இரண்டாம் திகதி டெவீ னாவின் பிறந்த நாள்.
அன்று முழுக்க முழுக்க அவள் தந்த ரேப்பில் எறியப்படா மற் கிடந்த பேத்ஹோவனின் பியானோ கொன்சேர்டோவைத் திருப்பித் திருப்பிப் போட்டுக் கொண்டான்.
அம்மாவின் நிலையில் மாற்றமில்லாத படியால் கணேஸ் அம்மாவைத் தன்னுடன் வைத்துக் கொண்டான். மைதிலி லண்டனுக்குத் திரும்பி வந்தாள். மிகவும் மாறியிருந்தாள். முகத்தில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. இவனைக் கண்டால்

Page 102
96 s அவனும் சில வருடங்களும்
தயங்கிப் பார்க்கும் பாவனை மறைந்திருந்தது. அன்று இரவு தங்கையை அழைத்துக் கொண்டு சாப்பிடப் போனான்.
மைதிலி தாயைப் பற்றிச் சொல்லியழுதாள். பின்னர் தமக்கையைப் பற்றிச் சொல்லியழுதாள். இந்தியப் படையின ரால் எப்படிக் கொல்லப்பட்டாள். என்ன விபரம் தியாகராஜா மாமாவுக்கு வந்திருந்தது.
மகாலிங்கத்தின் சொந்தக்காரப் பையன் விடுதலைப் புலி களுடன் சம்பந்தப்பட்டவன். அவனைத் தேடி வந்த அமைதிப் படையினர் வந்தனர்.
மைதிலியால் மேலே சொல்ல முடியவில்லை. விம்மி விம்மியழுதாள்.
கட்டிய கணவன், தகப்பனுக்குச் சமமான மாமா பெற்ற குழந்தைகள் முன்னால் பெண்மையின் சிறப்புக்கு முன் உதார ணமாக கீதா இந்திய அமைதிப் படையினரின் காம வெறிக்கு இரையாகிக் கொலைச் செய்யப்பட்டாள். குடும்பத்திலுள்ள அத்தனை பேரையும் கொலை செய்து வீட்டையும் தீ வைத்து அழித்தார்களாம்.
மைதிலி இதயம் பிழக்க அழுதாள். தமக்கையின் பெண் மையைப் பறித்த மிருகங்களைச் சாபம் போட்டாள்.
எனது தமக்கை போன்ற தமிழ்ப் பெண்மையைச் சிதைத்த இந்த நாய்களை கடவுள் தண்டிப்பார் என மைதிலி சாபமிட் டாள். தங்கை வாயால் தமக்கையின் பெண்மை பறிக்கப்பட்ட செய்தியைக் கேட்கும் அனுபவம் எந்த மனிதனுக்கும் வர வேண்டாம். அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
'மைதிலி எங்கள் குடும்பத்திற்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதம்மா’.
தங்கையின் கரங்களைப் பற்றிக் கொண்டான். இந்தத் தங்கையாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று மனம் வேண்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 197
டியது. “மைதிலி நாசர் விடயம் எனக்குத் தெரியும் எப்படியும் உன்னை அவனிடம் சேர்த்து விடுகிறேன்’’.
திடீரென்று தமயனிடமிருந்து வந்த இந்தத் தகவல் அவ ளைத் திடுக்கிடப் பண்ணியிருக்க வேண்டும்.
அவனின் குரலில் ஒலித்த அவசரம் கீதாவின் மரணத்தை மறக்க எடுத்த தவிர்க்க முடியாத ஆவேசத்தின் பிரதிபலிப்பா என்று அவனுக்குத் தெரியவில்லை.
தமயனை ஏற இறங்கப் பார்த்தாள். தமயன் என்ற ஸ்தா னத்தில் அவன் தன் சந்தோஷத்தை எவ்வளவு தூரம் ஆழமாக யோசிக்கிறான் என்று அவனுக்குப் புரிந்தது.
கணவன், மாமன் போன்றோராலேயே தமக்கை கீதாவின் துயரைத் தடுக்க முடியவில்லை, இவன் உலகத்து மாயாஜாலம் போன்ற நிகழ்ச்சிகளின் நடுவில் தன்னைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி அவளை நெகிழப் பண்ணியது. நாசரைப் பற்றிய உண்மையான செய்தியைச் சொன்னால் எவ்வளவு துக்கப் படுவான் என்பது அவனுக்குத் தெரியாது.
அதிபரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. மிஸ் வேர்ஜினியா பாமஸ்ரனின் கடிதத்திற்கு ராகவன் பதில் எழு தாத படியால் தன்னை வந்து பார்க்கச் சொல்லி எழுதியிருந்தார்.
கடிதத்தைப் படித்தபின் யோசிக்கும் தமயனை உற்றுப் பார்த்தாள் மைதிலி.
"அண்ணா எடுத்த விடயத்தை முடிப்பது உனது கொள் கைகளில் ஒன்றாக இருந்தது. அந்த அருமையான கொள் கைக்கு என்ன நடந்தது!’
ராகவன் கேள்வி கேட்கும் தங்கையை அன்புடன் பார்த் தான். மைதிலியைச் சந்தோசப்படுத்தவாவது கல்லூரிக்குப்

Page 103
198 அவனும் சில வருடங்களும்
போக வேண்டும். அவளின் பாசத்தின் வேண்டுகோள், புவனா
டுகோள்களை அவன் அறிவான்.
ஸ்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் அவன் மறக்க வில்லை.
வாழ்க்கையே அழிந்து விட்டது என்ற விரக்தியாயிருந்த அன்ரோனியோவே இறுதி வருடப் படிப்பிற்குத் தன்னைத் தயார் செய்கிறான்.
ராகவன் ஏதோ ஒரு உறுதியுடன் கொலிச்சுக்குப் போனான். கல்லூரிக் கட்டிடம் பதினான்கு மாடியுயரத்தில் பிரமாண்டமாக இவனை வரவேற்றது. ஒரு சில மாதங்களாக இந்த உலகத்தைப் பிரிந்திருந்தது வியப்பாக இருந்தது.
கதவைத் திறந்தவுடன் கண்ணிற் தென்பட்டவன் மைக்கல்.
கல்லூரி வாழ்க்கையை அநியாயமாக முடித்துக் கொண் டான் என்று நினைத்திருந்த மைக்கலைக் கல்லூரியிற் கண்டது ராகவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
"உனது தமக்கை குடும்பத்தினரின் துயருக்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்’ மைக்கல் ராகவனின் தோளைத் தட்டிச் சொன்னான்.
"நீ கல்லூரியை விட்டு விட்டதாகக் கேள்விப் பட்டிருந் தேன்'
"ஆமாம். போலிஸாருடன் நடந்த விடயங்களால் அவ மானம் தாங்கமல் கல்லூரிப் பக்கம் வரவில்லை’.
மனம் திறந்து சொன்னான் மைக்கல். "ஜான் ரொம்பவும் அக்கறையாகப் புத்தி சொல்லி என்னை மீண்டும் கல்லூரிப் படிப்பைத் தொடர உதவி செய்தார்’ மைக்கலின் குரலில் உண்மையான நன்றி.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 199
"அந்த அருமையான மனிதன் இல்லாவிட்டால் இந்த பிலிம் கொலிச்சிலிருந்து எத்தனையோ பேர் ஒட்டம் எடுத்தி ருப்போம்'.
ராகவன் சொல்லிக் கொண்டே லிப்டில் நுழைந்தான். ஞாபகங்கள் எங்கேயோ தொலைந்தன. இந்த லிப்ட்டிற் தானே அவனுடன் விதி விளையாடத் தொடங்கியது. எத்தனையோ மாதங்களுக்குப் பின் பிலிம் டிப்பார்ட்மென்ட்டுக்குள் நுழைய மனம் என்னவோ செய்தது.
முதலாம் வருட மாணவர்கள் சுறுசுறுப்பாகத் சிரித்தார் கள். இரண்டாம் வருட மாணவர்கள் எடிட்டிங் ரூம், சவுண்ட் ஸ்ருடியோ, என்று அலைந்து கொண்டிருந்தார்கள்.
அதிபர் ஜான் பேர்ன்ஸ்ரைனின் கதவடிக்குப் போகும் போது அடிவயிற்றில் பூச்சி நெழிவது போலிருந்தது.
கதவைத் தட்டக் கையெடுத்தபோது அவரே வெளியே போக வந்து கொண்டிருந்தார்.
"ஹலோ கம் இன்’ அவர் திரும்பவும் போய்த் தன் இருக்கையில் அமர்ந்தார்.
காலை பதினொரு மணி வெயில் ஜன்னலால் அத்துமீறி நுழைந்து அதிபரின் பொன்நிறத் தலை மயிரை பளபளக்கப் பண்ணிக் கொண்டிருந்தது.
ஆழமான நீல விழிகள் ராகவனைத் துளைத்தெடுத்தன. இருக்கச் சொல்லி சைகை செய்தார்.
ஜன்னலுக்கப்பால் தூரத்தில் பிரித்தானிய பாராளுமன்றம் உயர்ந்து நின்று தன் பெருமையைக் காட்டிக் கொண்டிருந்தது. தேம்ஸ் நதி இதமாக இளம் வெயிலுடன் சரசம் பண்ணுவது போல் மெல்லத் தவழ்ந்து கொண்டிருந்தது.
"உம், என்ன பிளான், கல்லூரியை விடுவதாக GuuntarGaoGMTulumt”.

Page 104
2OO அவனும் சில வருடங்களும்
அவர் குரலில் கடுமை, அதைப் பார்த்தத் தர்ம சங்கடமாக இருந்தது.
அவரைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. "பிலிம் கொலிச்சுக்கு வருவதென்பது கமராவைத் தூக்கு வது, சவுண்ட் எடிடிங் செய்வதுமட்டுந்தான் என்று நினைப்பது முட்டாள்தனம். எங்கள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் ஒவ் வொரு தொடர்கதை, அதை விடுகதையாக்கும் வீண் கற்பனை கள் உன்னை எங்கும் கொண்டு சேர்த்து விடும் என்று நினைக்கிறாய்'.
ஒரு சில வாரங்களுக்கு முன் அவர் குரலிலிருந்து அனுதா பம் இல்லை. அதிபர் என்ற தோரணம் வெளிப்பட்டது.
"தோல்விதான் எனக்குச் சரியானது என்று சங்கற்பம் செய்பவர்களை என்போன்ற அதிபர்களால் ஒன்றும் செய்ய முடியாது. வாழ்க்கையில் முன்னேற ஆசையிருந்தால் உதவி செய்கிறேன்".
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். "இறுதி வருடத் தயாரிப்புகளுக்கான திட்டங்களைச் சமர்ப்பிக்கும் காலக் கெடு முடிந்து விட்டது உனக்குத் தெரியு Lost'
அவன் "ஆமாம் சொல்லத் தலையாட்டினான். அவருக்கு எரிச்சல் வந்திருக்க வேண்டும். எழும்பிப்போய் ஜன்னலருகில் நின்றார். அவனிடம் தன் கோபத்தைக் காட்டாக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்கிறார் என்று தெரியும். அவனுக்கு முதுகுப் பக்கத்தைக் காட்டிக் கொண்டு ஜன்னலுக்கப்பால் பார்வையைப் பறித்துக் கொண்டு கேட்டார்.
'அக்காவின், அம்மாவின் நிலைமையால் மட்டும்தான் நீ கல்லூரிக்கு வராமலிருப்பதற்குக் காரணமா’ நீதிபதி குற்ற வாளியிடம் கேள்வி கேட்ட தோரணை அவனுக்குச் சுரீர் என்றது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2O1
அவர் அவன் அண்மையில் வந்தார். அழுத்தமான குரலில் சொன்னார், "காதலும் செக்ஸ"ம் வாழ்க்கையில் ஒரு பகுதி, அவைகளே வாழ்க்கையல்ல" அவர் குரல்.
ராகவன் குறுகிப் போனான். டெவீனாவைப் பற்றி யார் சொல்லியிருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது.
"டெவீனா’ அதிபரின் குரல் உயர்ந்தது. அடுத்த அறையி லிருந்து டெவீனா வந்தாள்.
அக்டோபர் மாதத்தின்பின் அவன் அவளைக் காண வில்லை. மிகவும் மெலிருந்திருந்தாள். 'சுட்டும் விழிச்சுடர் தான் சூரிய சந்திரரோ என்று பாரதியின் வர்ணிப்புக்கு வரைவிலக்கணமான அவளின் அழகிய விழிகளில் துயரக் கறை.
"நீங்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். இரண்டு மணி லெக்ஸருக்கு வந்தால் சந்தோசப் படுவேன்' அதிபர் வெளியேறி விட்டார்.
அவளும் அவனும் முன்பின் தெரியாதவர்கள் போல் ஒதுங்கி நின்றனர். சட்டென்று நடுப் பாலைவனத்தில் நிற்பது போன்று அவன் உடம்பு கொதித்தது. அவளின் மெலிந்த தோற்றத்தைக் கண்ட பரிதாபம் மறைந்தது. பிலிப்புடன் அவளைக் கண்ட ஞாபகம் இரத்தத்தைக் கொதிக்கப் பண்ணி
யது.
மெளனமான அந்த சில வினாடிகள் மயான அமைதியு டன் ஒரு யுகத்தைக் கழித்தது போலிருந்தது.
"உனது தமக்கையின்." அவள் குரல் கரகரத்தது. அவனால் அவளை நேரடியாகப் பார்க்க முடியவில்லை.
"உனது குடும்பத்தில் நடந்த துயருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்'.
நாகரீகமான ஆங்கிலேயப் பெண் நமக்குள் ஒன்றும் நடக்கவில்லையே என்பது போல் சொல்கிறாயா?

Page 105
2O2 அவனும் சில வருடங்களும்
தன்னைக் காதலித்தவளாக அவள் அவனுக்குத் தெரிய வில்லை. மிஸ்டர் ஸேர்லிங் என்ற இங்கிலிஸ் பணக்காரனின் மகளாகத் தெரிந்தாள்.
"என்ன நீ இப்படிக் கேவலமாக நடத்துவதை நான் அனுமதிக்கத் போவதில்லை’ அவள் குரலில் இப்போது சூடு. "உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் நான் போய் விடுகிறேன், அதற்கு முதல் சில விடயங்களைச் சொல்லி விட்டுப் போகிறேன். என்னிலுள்ள கோபத்தில் அருமையான எதிர்காலத்தைப் பாழாக்குவது முட்டாள்தனம், ஒரு பெண்ணி டம் முகம் கொடுக்க முடியாமல் ஒடும் ஆண்கள் கோழைகள் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியும், நீ கல்லூரிக்கே வராமலிருந்தற்குக் காரணம் உனது தமக்கையின் மரணம் மட்டுமல்ல நானும்தான் காரணம், ஆனால் என்னைப் பற்றி நீ மிகவும் அற்பத்தனமாய் உணர்ந்து கொண்டாய் என்பதை நினைக்க உன்னோடு பழகியதற்காக வெட்கப் படுகிறேன்".
அவள் மேடையில் ஏறி நின்று பிரசங்கம் செய்வது போல் பேசிக் கொண்டிருந்தாள்.
என்ன பேசுகிறாள்? 'உன்னை உயிருக்கும் மேலாக நேசிக் கிறேன்’ என்றவளை இன்னொருத்தன் அணைப்பில் கண்ட போது எந்தச் சாதாரண மனிதனும் அவமானப்படுவது எதிர்ப் பார்க்கப் படவேண்டியதில்லையா?
அவன் குழம்பி விட்டான்? என்ன சொல்கிறாள் இவள்? தகப்பனுக்காக பிலிப்பைக் கல்யாணம் செய்வது என்று முடிவு செய்து விட்டாளா? அல்லது இறக்க முதல் பிலிப்புடன் சேர்ந்து கொள் என்று வாக்குறுதி வாங்கினாளா தாய்?
பிலிப்பின் அணைப்பில் இருப்பதற்கு ஏதோ ஆழமான காரணம் இருந்திருக்க வேண்டும்.
'கண்ணால் கண்டதும் பொய், காதாற் கேட்டதும் பொய் தீரவிசாரித்தறிவதே மெய் என்பது உனது நினைவில் வரவில் 661 fToo

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2O3
அவள் கண்களில் நீர் சுரந்தது. ஜன்னலோரம் போய்த் தன் அழுகையை மறைத்துக் கொண்டாள்.
அவளது அழுகை அவனை இரங்கப் பண்ணவில்லை. ஆனாலும் வார்த்தைகளைக் கொட்டி நிலைமையைக் குழப்ப விரும்பவில்லை. "உனது தாயின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' அவன் பேச்சைத் தொடங்கினான். அவள் சாடையாகத் திரும்பிப் பார்த்தாள். ‘என் தமக்கை குடும்பம் அழிந்த செய்தி கேட்டு அந்தத் துயர் மறக்க உன்னிடம் வந்தால் நீ இன்னொருத்தன் அணைப் பிலிருந்தாய், அதை எப்படி தாங்குவேன்' அவன் இதைச் சொல்ல நினைத்தான் சொல்ல முடியவில்லை. துயர் தொண் டையை அடைத்தது. ‘நான் உனக்கு அலுத்து விட்டிருந்தால் அதைக் கெளரவமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே? 'ஒரு சில வாரங்களுக்கிடையில் என்னை மறந்து விட்டு இன்னொருத்தனுடன் போக உனக்கு எப்படி மனம் வந்தது. இதுதான் உனது கலாச்சாரமா என்று அலற நினைத்தான்.
அப்படி எல்லாம் கேள்வி கேட்க நினைத்தால் உணர்ச்சி வசப்பட்டு ஏதும் நடந்தாலும் என்று தன்னையடக்கிக் கொண் டான்.
"உன்னைத் துன்பப் படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்."
அவன் சட்டென்று வெளியேறினான். இன்னும் சில வினாடிகள் அவளுடன் அந்த அறையில் தனியாக இருக்க நேர்ந்தால் ஏதும் எக்கச்சக்கமாக நடக்கலாம் என்று பயந்தான். வெளியில் வரும்போது பிலிப் தூரத்தில் யாருடனோ சிரித்துப் பேசியது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் இருந்தது.

Page 106
2O4 அவனும் சில வருடங்களும்
இவர்களைச் சந்தித்துக் கொண்டு எப்படி இந்தக் கல்லூ ரிக்கு ஒவ்வொரு நாளும் வருவது?
தெளிவாக யோசிக்க முடியாத உணர்வு. அலானும் ஜேனும் ஸ்ருடன்ஸ் ரூமில் இவனைக் கண்டதும் சந்தோசத்து டன் கட்டிக் கொண்டார்கள். அவர்களின் ஸ்நேகிதத்தின் பரிவு அவனைச் சந்தோசப்படுத்தியது. ஸ்ரீவன் வந்திருந்தான். மிக மிக மெலிந்திருந்தான். ஆனாலும் அவன் முகத்தில் ராகவ னைக் கண்டதும் சந்தோசம்.
“எனக்குத் தெரியும், நீ உனது வாக்குறுதியை நிறைவேற் றுவாய் என்று. என்ன கமரா 'புக் பண்ணலாம். இப்போதே எல்லாம் தயாராய் இருக்கா விட்டால் இன்னும் சில வாரங்க ளில் கொலிச் ஸ்ரொக் எல்லாம் முடிந்துவிடும்."
ஸ்ரீவன் சந்தோச ஆரவாரத்துடன் சொன்னான். அன்று இரண்டு மணிக்கு லெக்ஸர் ஹாலில் ராகவனைக் கண்டதும் அதிபரின் முகத்தில் ஒரு சந்தோசம் வந்து போனதை அவன் அவதானித்தான். கடந்த இரண்டு வருடங்களாக டெவீ னாவுடன் சேர்ந்திருப்பவன் இப்போது போய் மைக்கலுடன் உட்கார்ந்தான். அன்று பிரன்ஸ் சினிமா பற்றிய விரிவுரை நடந்தது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பிரன்ஸ் சினிமாவின் வளர்ச்சி பற்றி அதிபர் விரிவுரை செய்தார்.
வழக்கம்போல் அவர் பேச்சு ஒரு மையத்திலிருந்து சுற்றிச் சுற்றிப் பல விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
பிரான்ஸ் சினிமா உலகின் மாமேதை என்று மதிக்கப்ப டும் றெனோர் (Renor) பற்றி நீண்ட நேரம் பேசினார்.
பிரான்ஸ் சினிமா உலகத்தில் மட்டுமல்லாமல் அவர் தொடர்பால் இந்திய டைரக்டர் சத்யத்ரே என்போர் புதிய

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2O5
சினிமாக் கண்ணோட்டத்தை வளர்த்தார்கள் என்பதை விரிவா கச் சொன்னார்.
பேச்சின் கடைசியில் மூன்றாம் வருட மாணவர்களுக்குத் தன் புத்திகளையும் மறைமுகமாக எச்சரிக்கைகளையும் சொன் eTT.
'மூன்று வருடப் படிப்புக்கு நீங்கள் இவ்விடம் வந்த போது கமராவை எப்படி இயக்குவது, ஒலியை எப்படி வெட்டி ஒட்டுவது, லைட் அமைப்பை எப்படிப் பார்ப்பது மட்டும்தான் சினிமாப் படிப்பு என்று நினைத்துக் கொண்டு வந்திருந்தால் இன்று உங்கள் மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் போது அந்த நினைவுகள் பிழை என்று தெரிந்திருக்கும். ஒரு சிலர் தாங்கள் படிக்க வந்த படிப்பை முடித்துக் கொண்டு வெளியேறுவோம் என்று வந்தீர்கள், சிலர் இந்த மூன்று வருடத்தில் எத்தனை அனுபவங்கள் வருகின் றதே. அத்தனையையும் அனுபவித்து முடிப்பது என்று கங்க ணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலர் ஏதோ தானோ என்று மச மசப்பாக இருக்கிறீர்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் நான் தாக்கவில்லை. ஆனாலும் எனது அனுபவத் தில் உங்களிடம் கண்டதைச் சொல்கிறேன். உங்களின் இறுதி வருடப் படிப்புக்கு எனது வாழ்த்துக்கள்."
அவர் பேசி முடிய ஜேனின் கண்களில் நீர் துளித்தது. ஒரு அதிபர் என்ற முறையில் மட்டுமல்லாமல் ஒரு சகோதர னாய் சினேகிதனாய் தங்களுக்குச் செய்யும் சேவை எல்லோரும் அறிந்ததே.
"அவரின் அன்பில்லாவிட்டால் எங்களில் எத்தனையோ பேர் இப்போது லண்டன் தெருக்களில் வேறு வேலை தேடிக் கொண்டிருப்போம்." உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னாள் ஜேன்.
ராகவன் இன்னும் இறுதியாண்டுத் தயாரிப்புக்கான திட் டங்களைச் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பிக்க வேண்டிய இறுதி

Page 107
2O6 அவனும் சில வருடங்களும்
நாள் மார்கழி மாதக் கடைசியில் முடிந்து விட்டது. இது பற்றி மிஸ் வேர்ஜினியா பாமஸ்ரோன் அவனுக்கு எழுதியும் அவன் இன்றும் பதில் எழுதவில்லை.
நீண்ட நாட்களின் பின் இன்று கல்லூரிக்கு வந்திருக்கின் றான். அவனிடமிருந்து திட்டம் எதிர்பார்க்கப் படுகிறது என்பது அவனுக்குத் தெரியும்.
கடுமையான உழைப்பு இல்லாவிட்டால் தனது இறுதி வருடப் படிப்பு தோல்வியிலேயே முடியும் என்று அவனுக்குத் தெரியும். மைதிலியும் புவனாவும் அதைத் தாங்க மாட்டார்கள். ஒரு சில மாணவர்கள் இப்போதே தங்கள் தயாரிப்புக்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார்கள். டெவீனா தனது தயா ரிப்பை கென்யா நாட்டில் செய்வதாக எப்போதோ சொல்லியி ருந்தாள்.
அலான் பார்டோ தனது தயாரிப்புக்காக பிரான்ஸ் செல்கி றான்.
விரிவுரை மண்டபத்தை விட்டு அன்ரோனியோவுடனும் மைக்கலுடனும் வெளியேறும்ப்ோது தூரத்தில் டெவீனா ஜேனுடன் ஏதோ மிகவும் காரசாரமாக விவாதிப்பது தெரிந்தது. அன்ரோனியோ தனது நண்பனைப் பார்த்தான். 'ஏன் டெவீனாவுடன் கோபமா’ என்று அவன் பார்வையின் கேள்வி யாக இருந்ததை ராகவன் அவதானித்தான்.
மைதிலி இன்று வீட்டுக்கு வர லேட்டாகும். அவள் தனது சீனிய வழக்கறிஞருடன் மான்ஸெஸ்டர் நகருக்கு ஒரு வழக்கு விடயமாகப் போய் விட்டாள்.
அன்ரோனியோவுடன் தனது தயாரிப்பு விடயம் பற்றிப் பேச அவனது பிளாட்டுக்குப் போனான் ராகவன். மைக்கலும் வந்தான். அவர்கள் முதலாவது மாணவர்களால் இருக்கும் போது ஒருத்தருக்கொருத்தர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கெளரவப் படுத்தினார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2O7
ராகவனின் தயாரிப்புக்கு டெவீனா கமரா வேலை செய்வ தாகவும், மைக்கல் சவுண்ட் செய்வதாகவும், ஸ்ரீவன் லைட் டிங் செய்வதாகவும் அன்ரோனியோ ஸ்கிரிப்ட் எழுதுவதில் உதவி செய்வதாகவும் அவானும் ஜேனும் எடிட்டிங்கில் உதவி செய்வதாகவும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.
அதே போல ராகவனும் தனது உதவியைத் தனது சகமான வர்களுக்குச் செய்வதாகச் சொல்யிருந்தான். டெவீனா கென்யா போவதால் பிலிப்புடன்தான் அவள் போவாள் என்று சொல்லி யிருந்தாள். டெவீனாவின் தகப்பனைப் போல் பிலிப்பின் மாமனாரும் கென்யா நாட்டில் தேயிலைத் தோட்டம் வைத்தி ருக்கும் முதலாளியாகும். ஆனால் டெவீனாவின் தயாரிப்பின் எடிட்டிங்குக்குத் தான் உதவி செய்வதாக சொல்லியிருந்தான்.
இது பற்றி அவளிடம் எப்படிப் பேசுவது என்று தெரிய வில்லை. மரபுப்படி மூன்றாம் வருட மாணவர்களுக்கு இரண் டாம் வருட மாணவர்கள் உதவி செய்வார்கள். அந்த மாதிரி யாரின் உதவியையும் டெவீனா பெறப் போகிறாளோ என்பது ராகவனுக்குத் தெரியாது.
“என்ன பெரிய யோசனை? டெவீனாவுக்கும் உனக்கும் பிரச்சினையா’ அன்ரோனியோ நேரடியாக விடயத்திற்கு வந் தான். ஆங்கிலேயர் மாதிரி எதையும் கெளரவமாகப் பேச முனைவார்கள். ஆனால் அன்ரோனியோ இத்தாலியன், நேரடி யாக விடயத்திற்கு வந்தான்.
'ஒரு பிரச்சினையுமில்லை" அப்பட்டமான பொய்யைச் சொன்னான் ராகவன். தனது சினேகிதனுக்குப் பொய் சொல்ல வேண்டிய தர்ம சங்கடத்தை யுணர்ந்தான்.
"காதலர்களின் ஊடலா?’ அன்ரோனியோவுக்கு இவர்க ளின் பிரச்சினையின் ஆழம் தெரியாதபடியால் அவன் வேடிக் கையாகக் கேட்டான்.
"அன்ரோனியோ தயவு செய்து நாங்கள் எனது ஸ்கிரிப்ட் பற்றிப் பேசுவோமா'

Page 108
2O8 அவனும் சில வருடங்களும்
ராகவின் குரலிலிருந்த கடுமை அன்ரோனியோவை மெள னமாக்கியது.
லண்டனில் அகதிகளாக வரும் தமிழர்களின் நிலை பற்றித் தான் ஒரு சிறு டாக்குமென்ரரி தயாரிக்க நினைப்பதாகச் சொன்னான் ராகவன்.
'உனது தயாரிப்பு எது பற்றியது' அன்ரோனியோ கொடுத்த மூலிகைத் தேனீரைச் சுவைத்தபடி கேட்டான் ராக வன்.
கொக்கேய்ன், ஹேரோயின், விஸ்கி எல்லாவற்றையும் விட்டாயிற்று. இப்போது மூலிகைத் தண்ணீர்கள் மூலம் தனது உடலையும் உள்ளத்தையும் சுத்தி கரிப்பதாகச் சொன்னான். அன்ரோனியோ முகமும் மலர்ச்சியாக விருந்தது. அவனது மாற்றம் சந்தோசமாக இருந்தது.
"இதோ எனது ஸ்கிரிப்ட்’ அன்ரோனியோ உற்சாகத்து டன் கொடுத்தான்.
அவனது தயாரிப்பின் பெயர் நான்". கொடுத்த ஸ்கிரிப்டில் நான்’ பற்றி ஒன்றுமில்லை. சூரியலிசப் படம் பார்ப்பது போலிருந்தது. அவனது ஸ்கிரிப் டைப் படிக்கும்போது,
ராகவன் குழப்பத்துடன் நண்பனைப் பார்த்தான். "பெண் களைப் பற்றி எழுதியிருக்கிறாயே" ராகவன் தனது ஆச்சரி யத்தை வெளிப்படுத்தினான்.
"ஆமாம் நாங்கள் ஒவ்வொருத்தரின் நான்’ என்ற அக தியை இயக்குபவர்கள் பெண்கள் தானே? பெண்களில்லாவிட் டால் நீயும் நானும் பிறந்திருக்க முடியுமா? அவர்களின் அன்பு இல்லாவிட்டால் உலகம் உய்யுமா? என்னைப் பொறுத்தவரை யில் பெண் அன்பின் முழுமையைத் தெரியாதவன்தான் மகா அயோக்கியன்களாக கொலைகாரர்களாக, போர் விரும்பிக ளாக, போக்கிரிகளாகத் திறிகிறார்கள் என்று நினைக்கிறேன்."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2O9
அன்ரோனியோ ஆவேசமாகப் பேசினான்.
ராகவன் நண்பனையுற்றுப் பார்த்தான். ஒரு கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை பெண்கள் என்போர் மாயப் பிசாசுகள் என்று திட்டிக் கொண்டிருந்தவன் என்னவென்று மாறினான்?
அன்று கல்லூரித் திரைப்பட அரங்கில் "சிட்டிஸன் கேன்’ (Citizen Kane) என்ற அமெரிக்கப் படம் திரையிடப்பட்டது. பின்னேர விவாத மேடைக்குச் சில நேரம் உலகில் பிரபலமான படங்கள் திரையிடப்படும்.
"சிட்டிஸன் கேன் 1941ம் ஆண்டு திரையிடப்பட்ட அமெ ரிக்கன் பிலிம் இந்தப்படம், ஒர்ஸோன் வேல்ஸ் (Orson Weles) என்பவராற் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான படம் இந்தப் படத்திற்கு இதுவரை எழுதப்பட்ட விமர்சனம் உலகில் எந்தப் படத்திற்கும் எழுதப்படவில்லை. இந்தப் படம் திரைப்படத் தொழில் நுட்பத்தின் ஆழத்தைக் கமராவின் மூலமும், ஆழ மான கருத்துக்களை எப்படி ஒரு ஒளிப் படைப்பின் மூலமும் கொண்டு வரலாம் என்பதையும் காட்டுகிறது. கதையைப் பார்த்தால் இதுவரை நீங்கள் பார்த்த படங்களுக்கு எதிரான நரேற்றிவ் முறையைக் கொண்டிருப்பதைக் காணலாம். அடுத் தது இந்தக் கதை அமெரிக்கன் வாழ்க்கையை உவமைப்படுத்தி எடுத்த கதை (metaphor) என்பது அறிவாளர்களின் கருத்து’ விவாதத்தைத் தொடங்கி வைத்த மிஸ் வேர்ஜினியா பாமஸ் ரோன் சொன்னாள்.
வழக்கமாக ஐந்து மணிக்கு விழுந்தடித்துக் கொண்டு வெளியேறும் மாணவர்கள் அன்று இரவு ஏழரை மணிவரையு மிருந்து படத்தின் பல கோணத்தையும் ஆராய்ந்தார்கள், விவா தித்தார்கள், பூரித்தார்கள்.

Page 109
21.O அவனும் சில வருடங்களும்
வெளியில் வரும்போது ஜேனும் டெவீனாவும் அந்தப் படத்தின் கதாநாயகன் கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்த சொல்லை வைத்துக்கொண்டு தர்க்கம் செய்து கொண்டிருந்தார் கள்.
கதாநாயகன் 'றோஸ் பட்" (Rose bud) என்று சொல்லி விட்டு இறக்கிறான்.
அன்ரோனியோ ஞாபகம் வந்தது. பெண்மைக்குள் பிறந்து, பெண்மைக்குள் புகுந்து பெண்மைக்குள் அழியும். நான் களில் சிட்டிஸன் கேன் என்பவனும் ஒருத்தன் என்று முணு முணுத்துக் கொண்டான் ராகவன்.
“Rose bud! பெண்மையின் சொர்க்கத்தின் சிகரம்" ஜேன் சத்தம் போட்டுத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
"ரோஜாவின் மொட்டு என்று அவன் உவமித்த பெண்மை யின் சொர்க்கத்தின் பரிவிடம் பற்றி ஒரு ஆணுக்கு என்னென்று தெரியும்’ ஜேனின் கேள்வி ராகவனுக்குச் சிரிப்பைத் தந்தது. அவர்களைத் தாண்டிப் போகும்போது டெவீனா ஜேனு டன் பேசியதை நிறுத்திவிட்டு இவனைப் பார்த்தாள்.
அந்தப் படம் உண்டாக்கிய உணர்ச்சிகளின் நெகிழ்ச்சி அவள் கண்களில் பிரதிபலித்தது.
"உன்னுடன் கொஞ்சம் பேச முடியுமா? டெவீனா சட் டென்று இவனைக் கேட்டாள்.
ஒரு கணம் ஆடிப் போனாலும், "நானும் கொஞ்சம் உன்னோடு பேச வேணும்' அவன் அமைதியாகச் சொன்னான். இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள்.
‘எங்கேயாவது வெளியே போவோமா? அவள் பார்வை இவனிற் பதிந்திருந்தது.
இவர்களுக்கிடையில் இதுவரை நடந்த பூசல்கள் எல்லாம் மறந்து பழைய நெகிழ்ச்சி குரலில் இழைந்தோடியது. அவன்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 211
உம் கொட்டினான். அவளுக்குப் பிடிக்காத எதையோ சொல்லி அவளைக் கோபப்படுத்த விரும்பவில்லை.
"நான் கார் கொண்டு வரவில்லை. உன்னுடன் வரலாமா” அவள் குரல் சட்டென்று இறுகி விட்டதுபோல் இருந்தது. தன் உணர்ச்சிகளை இறுக்கி வைத்திருக்க வேண்டும் என்று முடிவு கட்டி விட்டாளா?
இவ்வளவு காலமும் அவளுக்குப் பிடித்த பல இடங்களில் தங்கள் தனிமையான காலங்களைக் கழித்திருக்கிறார்கள். இன் றைக்கு அவளுடன் எங்கே போவது என்று தெரியவில்லை.
டவர் பிறிட்ஜ் பக்கத்திலிருக்கும் "கதரின் டொக்" என்ற இடம் இரவின் வெளிச்சத்தில் ரம்யமாக இருக்கும். அன்ரோ னியோ விஸ்கி குடித்துவிட்டு ஜூலியட்டைப் பற்றி ஒப்பாரி வைக்கும்போது அந்தப் பக்கம் போய் இருக்கிறார்கள்.
அவன் அவளை அந்தப் பக்கம் கூட்டிக்கொண்டு போனான். 'டிக்கின்ஸ் இன்’ என்ற பாரில் அவளுக்கு ஆரன்ஸ் கேன்களும் தனக்கு பீர் கேன்களும் வாங்கிக் கொண்டு தேம்ஸ் நதிக்கரையோரம் நடந்தார்கள்.
தேம்ஸ் நதி தை மாதம் கடைசிக் குளிரில் ஒடுங்கித் தெரிந்தது. உல்லாசப் பிரயாணிகளின் ஆரவாரம் தேம்ஸில் ஒடிக் கொண்டிருக்கும். பல படகுகளிலிருந்து கேட்டுக் கொண் டிருந்தது.
டவர் பிரிட்ஜ் கம்பீரமாக உயர்ந்து நின்றது. அவள் குளிருக்குப் பயந்து ஓவர் கோட்டை இழுத்து விட்டாள்.
காரில் வரும்போது அதிகம் பேசவில்லை. பொது விட யங்களைப் பற்றிப் பேசினார்கள். கல்லூரி விடயம் பற்றிப் பேசினார்கள். அன்னியர்கள் போல் சம்பாசணையைத் தொடர்ந்தார்கள்.

Page 110
212 அவனும் சில வருடங்களும்
“என்ன பேசணும்’ அவள் கேட்டாள். என்ன பேசுவது? நீயில்லாமல் நானில்லை என்று உறுதி செய்து கொண்ட வர்கள் இன்று பேசுவதற்கே விடயத்தைத் தேடுவது விந்தை யாக இருந்தது.
"உனது எடிட்டிங் விடயமாக’ அவன் விடயத்திற்குச் சட்டென்று வந்தான்.
‘ஓ’ அவள் மங்கிய வெளிச்சத்தில் அவனை உற்றுப் பார்த்தாள்.
'நீ எனது தயாரிப்புக்குக் கமரா வேலை செய்வாய் என்று சொன்னாய்."
அவன் முடிக்க முதல் அவள் சொன்னாள். "நான் சீக்கிரம் கென்யா போகிறேன். எப்போது வரு வேன் என்று தெரியாது. உனது ஸ்கிரிப்ட் கூட நீ எழுதி
முடிக்கவில்லை." அவள் குரலில் தர்ம சங்கடம்.
'உண்மைதான். கொலிச்சுக்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை."
"ஆமாம், கோழைகளின் வேலையது" அவள் திட்டினாள்.
அவனுக்கு கோபம் வந்தது. W "நான் எடுக்கப்போகும் தயாரிப்புக்கு நீ எடிட்டிங் செய் வாயோ தெரியாது." அவள் சந்தேகத்துடன் சொன்னாள். அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
"கென்யாவில் மஸாய் இனப் பெண்களைப் படம் எடுக் கப் போகிறேன்."
“அதற்கும் நான் எடிட்டிங் செய்யக் கூடாது என்பதற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
“மஸாய் இனப் பெண்களை எனது சிறிய வயது முதல் அறிவேன். தகப்பனின் சொத்து அவர்கள். அவர்கள் பிறக்க முதலே தகப்பன்கள் தங்களின் பிறக்கப் போகும் பெண்களுக்கு மாப்பிள்ளை பேசிவிடுவார்கள்."
“இதற்கும் நான் எடிட்டிங் செய்யக் கூடாது என்பதற்கும் என்ன சம்பந்தம். உனக்கு என்னைப் பிடிக்கா விட்டால் நான் எடிட்டிங் செய்யாமல் விடுகிறேன்."
அவள் குரலில் கோபம். ஏதோ சாட்டுக்கள் சொல்லித் தன்னிடமிருந்து ஒரேயடியாகப் பிரிந்துக் கொள்ள முயற்சிக்கி றாள் என்று அவன் யோசித்தான்.
"ராகவன் நீ என்ன யோசிக்கிறாய் என்று தெரியும். உடைந்துவிட்ட எங்களின் தனிப்பட்ட உறவு நாங்கள் எங்கள் கல்லூரி வாழ்க்கைக்குச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சொல்லத்தான் இங்கு வந்தேன். நான் கென்யாவிலிருந்து வரும்போது உனது தயாரிப்புக்கு எல்லாம் ரெடி என்றால் நான் கமரா வேலை செய்யத் தயார். இல்லை என்றால் இரண்டாவது வருட மாணவர்களில் எத்த னையோ பேர் நல்ல கமராத் திறமையாளர்கள். அவர்கள் உதவி செய்வார்கள்."
அவன் மறு மொழி சொல்லவில்லை. ஒரு விதத்தில் அவள் சொல்வது சரிதான். அவன் எத்தனையோ மாத காலத்தை அணியாயமாக்கி விட்டதால் இப்போது எத்த னையோ வேலைகள் தலையை அழுத்தி விடுகிறது.
“அடுத்தது எனது புரடக்ஸனுக்கு நீ எடிட்டிங் செய்வாய் என்று நான் நினைக்கவில்லை."
அவன் கேள்விக் குறியுடன் அவளை நோக்கினான். அவன் பார்வையை நேரடியாக வாங்கிக் கொள்ளாமல் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

Page 111
24 அவனும் சில வருடங்களும்
"ராகவன், நான் எடுக்கப் போவது நாடோடி மக்களான மஸாய் இனமக்களைப் பற்றி மட்டுமல்ல. மஸாய் இனப் பெண்களின் கதை போல் கோடிக்கணக்கான பெண்களின் பெண்மையின் மொட்டு அதுதான் இன்று "றோஸ் பட (Rose bud) இன்று முனகிவிட்டு இறந்தானே அந்த மொட்டுக்கள் எப்படி ஆணாதிக்கக் கொடுமையால் சிதைக்கப்படுகிறது என் பதைப் படம் எடுக்கப் போகிறேன். Female Circumcision என்று கேள்விப் பட்டிருக்கிறாயா? ஆபிரிக்காவின் வட பகுதி மக்களி டையே கலாச்சாரம் என்ற போர்வையில் இந்தக் கொடுமை நடைபெறுகிறது. இந்தப் பெண்களின் மொட்டுக்கள் (clitoris) எப்படி வெட்டித் தைத்து சித்திரவதைப் படுகின்றன என்பது பற்றி எடுக்கப் போகிறேன். அதை எடிட் பண்ணுவாயா."
அவனுக்கு எரிச்சல் வந்தது. அவனுடைய பெண்ணிய சித்தாந்தத்துக்கும் இவன் எடிட்டிங் செய்வதற்கும் என்ன சம்பந்தம்?
"உன் போன்ற ஆண்களின் சிந்தனைகள் பெண்கள் தங்கள் உடமைகள் என்ற தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது."
'ஒசட் அப் டெவீனா. உனக்கு நான் எடிட் பண்ணுவது
பிடிக்காவிட்டால் நேரடியாய்ச் சொல்வதெற்கென்ன? ஏன் இப்படித் தேவையில்லாத தர்க்கங்களை எல்லாம் எடுக்கிறாய்?
அவனுடைய கோபம் அவளுக்குப் புரிந்தது. அதற்காக அவனிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பான்மை அவள் குரலில் தொனித்தது.
'ராகவன், ஒரு பெண்ணின் மனத்தைப் புரியாதவன் பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க முடியாது."
அவன் கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 215
"ஆண் பெண்ணின் உறவு செக்ஸ்க்கு அப்பால் இருக்க முடியாது என்று நினைக்கும் உனக்கு பெண்கள் விடுதலை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது.'
அவள் வெடித்தாள். மின்னல், இடி எல்லாம் அவள் குரலில். தூரத்தில் தேம்ஸ் நதியில் போய்க் கொண்டிருக்கும் படகுகளிலிருந்து ஆடலும் பாடலும் இவர்களின் சம்பாஷ ணையைக் கேலி செய்வதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஜேர்மனியில் ஒபர் ஹவுஸன் பிலிம் Fபெஸ்டிவலின் போது நீ பிலிப்பையும் என்னையும் பொறாமையுடன் பார்த் ததை நான் ஆழமாக யோசித்திருக்க வேணும். சாதாரண காதலர்களின் பொறாமை என்று தான் நினைத்தேன். அந்த விஷம் உனது மனத்தில் எப்படி வளர்ந்திருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது."
“டெவீனா நான் சாதாரண மனிதன், ஆனாலும் உன்னை பிலிப்புடன் ஒரு கட்டிலில் கண்டபோது எல்லாம் துறந்த முனிவர்போல் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு வாழ முடியவில்லை."
"ராகவன், அக்டோபர் ஆறாம் திகதி லண்டனைச் சூறா வளி அழித்துக் கொண்டிருந்தபோது உன் மார்பில் நான் தலை பதித்து அழுதது ஞாபகமிருக்கிறதா?”
அவள் இப்போது அழுதாள். அடக்கி வைத்திருந்த கோப மெல்லாம் கடந்து வெடித்துச் சிதறுவது போல் அவள் கதறி
66.
"அம்மா இறந்தால் அந்தக் கொடுமையை என்னாற் தாங்க முடியாது. உன் அணைப்பில் என்னையிணைத்து அந்தத் துன்பத்தை மறக்க வேணும். நான் கெஞ்சியது ஞாபகம் இருக்கிறதா'
அவன் மெளனமானான்.

Page 112
216 அவனும் சில வருடங்களும்
"அம்மா இறந்து கொண்டிருக்கும்போது அவளை விட்ட கலமாட்டேன். உனக்கும் போன் பண்ண மாட்டேன். ஆனால் எல்லாம் முடிந்தபின் உன்னிடம் ஓடோடி வருவேன் என்றழு தேனே ஞாபகமிருக்கிறதா."
அவள் குரல் அடைத்துக் கொண்டது. முகத்தைக் கைக ளாற் பொத்திக் கொண்டு குலுங்கி யழுதாள். பார்க்கப் பாவ
மாக இருந்தது.
"தகப்பன் வழிப் பாட்டி இங்கிலாந்தின் தெற்குத் தொங்க லான ஈஸ்ட்போனிலும், தாய் வழிப்பாட்டி ஸ்காட்லாந்தின் வடக்கு மூலையிலான கிளாஸ்க்கோவிலுமிருக்கிறார்கள். அப்பா தன் துயர் தீர்க்க அவரின் கேர்ள் பிரண்ட்டிடம் நியுயோர்க் போய்விடுவார், நான் உன்னைத்தேடி லண்டனுக்கு ஒடோடி வருவேன் என்று உறுதி சொன்னேனே அது கூட ஞாபகமில்லையா.'
எல்லாம்தான் ஞாபகமிருக்கிறது. ஆனால் இவளை பிலிப் தன் அரவணைப்பிற் கண்டதை ஞாபகத்திலிருந்து அழிக்க முடியவில்லையே!
"ராகவன், நாற்பத்திரண்டு வயதில் என் தாய் இறந்தாள். அப்பாவிலுள்ள ஆத்திரத்தில் இருபத்தைந்தாவது வயதில் சன்னியாசி மாதிரி தனியாக வாழ்ந்தவள். முப்பத்தி ஏழு வயது தொடக்கம் மார்புக் கான்ஸரால் துயரப் பட்டவள். அந்தத் தாய் எனக்குத் தந்த அன்பு அளப்பரியது. அவள் இறப்பை நிவர்த்தி செய்ய நீ யிருக்கிறாய் என்று ஒடோடி வந்தேன்."
அவள் குரல் அடைத்துக் கொண்டது. அவளின் தாய் இறந்த அதே நாளிற்தான் கீதா குடும்பத்தினரின் மரணச் செய்தியும் வந்தது. உலகமே தலைகீழாகத் தெரிந்த நாட்கள் அைெவ.
"உனது தமக்கை குடும்பத்தின் அழிவுக்கு மிக மிக மனம் வருந்துகிறேன், ஆனால் உனது தாய் அப்படி என்னைப் பேசியிருக்கத் தேவையில்லை."

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 217
ராகவனின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது. அம்மா மூளை குழம்பிப் போயிருந்தபோது என்ன பேசியிருப் பாள்?
"என்னைப் போன்ற ஒழுக்கம் கெட்ட பெண்கள் உங்கள் குடும்பத்தில் தலையிட்டதாற்தான் கடவுள் இப்படிச் சாபம் போட்டதாக உன் தாய் என்னைத் திட்டினாள்.'
“டெவீனா என்தாய் என் தமக்கையின் குடும்பமும் அழிந்தபின் சுய உணர்வின்றியிருப்பது உனக்குத் தெரியுமா” அவன் குரலில் கெஞ்சல் தாய்க்காக மன்னிப்புக் கேட்கும் தோரணையிற் சொன்னான்.
"ஆமாம் அடுத்த நாள் உங்கள் மைதிலிக்குப் போன் பண்ணியும் நீங்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை."
மைதிலி இது பற்றி அவனுக்கு ஒன்றுமே சொல்லவில் லையே.
எத்தனை குழப்பங்கள்?
"ஞாபகமிருக்கிறதா ராகவன்? அன்ரோனியோவின் நிலை ஞாபகமிருக்கிறதா? ஜ"லியட்டின் மரணத்தின் பின் அவன் என்ன நிலையிலிருந்தான்? பித்தம் பிடித்திருந்தானே ஞாபகமிருக்கிறதா? நானும் நீயும் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வந்து நித்திரை மருந்து கொடுத்து அவனைத் தூங்கப்பண்ணியதை மறந்து விட்டாயா? உனது அம்மா உனது தமக்கைக்காகத் துடித்தபோது உங்கள் வீட்டில் எத்தனைபேர் இருந்தீர்கள்???
அவன் கண்களை மூடிக் கொண்டான். அவள் என்ன சொல்கிறாள் என்று ஆழமாக யோசித்தபோது அவன் தனது செயலை இன்னொருதரம் யோசித்தான்.
அவள் தொடர்ந்தாள்.
“பெரியம்மா தன்னுடன் கிளாஸ்கோவில் நிற்கும்படி சொன்னாள். அப்பாவின் தாய் ஈஸ்ட்போனுக்கு வரச் சொல்

Page 113
218 அவனும் சில வருடங்களும்
லிக் கேட்டாள். அப்பா தன்னுடன் நியுயோர்க் வரச் சொல்லிக் கேட்டார். மூன்று நாட்கள் நித்திரையில்லாமல் விறைத்துப் போன கண்களுடன் லண்டன் வந்தால் உனது வீட்டில் எனக்குக் கிடைத்த அவமானம் தாங்க முடியாதிருந்தது.
நித்திரையின்றிப் பைத்தியம் போலிருந்த எனக்கு நித் திரை மருந்து வாங்கித் தந்து என்னைத் தன் தங்கை மாதிரி பார்த்துக் கொண்டவன் பிலிப்' அவசர புத்தியால் அவன் செய்த பிழை அவனுக்குப் புரிந்தது. அவனுக்கு அவமானம் வந்தது, உடம்பு கூசியது. Ys
"எனது தாயின் அன்பும் சினேகிதியின் மகன் பிலிப் என்னைத் தெரிந்த ஒரு நல்ல ஜீவன். அவனுக்கு என்னில் உள்ள அன்பின் காரணம் வித்தியாசமானது. ஆனால் இப்போது உன்னோடு பழகுவதால் தனது ஆசைகளையடக்கிக் கொண்ட வன். எங்களை ஒன்றாய்க் கண்டதும் உனக்கு ஆத்திரம் வந்தது எனக்குத் தெரியும். நீ தலை தெறிக்க ஒடியபோது பிலிப் உன்னைக் கூப்பிட்டானே, நான் உன் பின்னால் ஓடிவந்தேனே உனக்குத் திரும்பிப் பார்க்கக் கூட முடியவில்லையா? திரும் பிப் பார்த்திருந்தால் தெரியும். ஐந்து நாளாக மாற்றாத ஜான்சுட னும் அழுக்குப் படிந்த சேர்ட்டுடனும் நான் பைத்தியம் போல் ஓடிவந்தது."
சாகவேண்டும் போலிருந்தது.
இவளிடம் என்ன மொழியில் மன்னிப்பு சொல்வது?
"ராகவன், நான் பழகிய எத்தனையோ ஆண்களை விட நீ கண்ணியமானவன் என்று உன்னை என் அன்புக்குரியவனா கத் தேர்ந்தெடுத்தேன். என் மதிப்பை அவமானம் செய்துவிட் டாய். உனது கண்ணியத்தை மதித்து என் கன்னிமையைத் தந்தேன். ரொம்ப அவமதித்து விட்டாய் ராகவன்." டெவீனா இப்படி அழுததை அவன் கண்டதில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 219
“எனது கடிதத்தை உடைத்துப் படிக்காமலேயே குப்பை யிற் போட்டாயா? எனது கடிதத்தை மட்டும் குப்பையிற் போடவில்லை. எனது காதலையும் தான் குப்பையிற் போட் டாய் ராகவன்."
மைனஸ் நாற்பது பாகையிலுள்ள பனியில் அமிழ்ந்தது போல் உறைந்து போனான் ராகவன்.
தமக்கையின் மரணம். தாயின் நிலை எல்லாம் சேர்ந்து அவன் அசாதாரணமான நடத்தைகளுக்குக் காரணமா? அல்லது ஆயிரம் கோடி வருடங்களாக ஆண்மை’ என்ற போர்வைக் குள் மூடப்பட்டிருக்கும் ஆழமான கருத்துக்கள் அவளைச் சந்தேகித்து அவனிடமிருந்து பிரித்தது?
இருவரும் அந்நியர் மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
"உனக்குத் தெரியுமா ராகவன், எனது தாய் கடைசி வரைக்கும் அப்பாவின் தொழிலிடமான கென்யாவுக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். எனது ஆறு வயதில் முதற்தரம் எனது ஹாலிடேயில் அப்பாவிடம் போனேன். எனது பாதுகாப்பாளன் பிலிப் அவனுக்கு அப்போது வயது எட்டு. இருவரையும் எயார் ஹொஸ்டரின் பராமரிப்பில் பிளேயினில் ஏற்றிவிட்டார்கள். 'டோன்ட் வொரி நான் பார்த் துக் கொள்கிறேன்’ என்றான். ஜேர்மனியில் என்னுடன் பிலிப் பைப் பார்த்துப் பொறாமைப் பட்டுத்தானே நீ ஸ்ரீவனுடன் லண்டனுக்கு ஓடிவந்தாய். ராகவன், ஜேனும் நானும் தனியா கப் போகக் கூடாது என்று பிலிப் தானாக வந்தான். உனக்கோ பொறாமை வந்து விட்டது.'
“ரொம்பவும் கொடூரமாக நடந்து கொண்டேன், மன்னித் துக் கொள்.'
அவள் கூர்மையாகப் பார்த்தாள்.

Page 114
22O அவனும் சில வருடங்களும்
"நான் இதெல்லாம் சொன்னது நீ என்னைத் துன்பப் படுத்தியதற்கு உன்னிடமிருந்து 'மன்னித்துக்கொள்’ என்ற ஒரு வார்த்தை வரவேண்டும் என்பதற்காக அல்ல, இனி என்றாலும் இன்னொரு பெண்ணை இப்படித் துன்பப்படுத்தாதே என்று சொல்லத்தான்."
இன்னுமொரு பெண்
தன்னை மூன்றாமவளாக்கிச் சொல்கிறாள் இந்தப் பெண்
அவனால் நம்ப முடியவில்லை. அவனிடமிருந்து அவள் தன்னைப் பிரித்துக் கொண்டதை நம்ப முடியவில்லை. இரவு நீண்டு கொண்டு போனது. இருவரும் காரில் மெளனமாக வந்து கொண்டிருந்தார்கள். கார் செயிண்ட் போல் கரீட்ரல் பக்கம் வந்து கொண்டிருந்தபோது அவள் சோகத்துடன் சிரித் தாள். அவன் காரணம் கேட்பதுபோல் திரும்பிப் பார்த்தான்.
"இந்தத் தேவாலயத்திற்தான் இளவரசர் சார்ள்ஸ் லேடி டயானாவைத் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போது இழுபறிப் படுகிறார்கள். உறவுகளே இப்படித்தானா? எனது அப்பாவும் அம்மாவும்தான் பிரச்சினைப்பட்டார்கள் என்றால் இப்போது பார்த்தால் பெரும்பாலான உறவுகளே போலியாகத் தான் தெரிகிறது. உண்மையான அன்பென்று ஒன்று உலகில் இல்லையா?"
நவம்பர் 1988 (நடுப்பகுதி)
எப்படியோ ஆரம்பித்த எண்பத்தி எட்டாம் ஆண்டு இலையுதிர்காலத்தின் பொல்லாத காற்றின் வேகத்தில் ஆடிப் போய் விட்டது.
நவம்பர் மாதம் மழை, குளிர், காற்று, புகார் என்று ஏதோ ஒன்றால் நிறைந்து கொண்டிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 221
ராகவனின் திரைப்படப் பட்டப் படிப்பு முடிந்து விட் டது. பட்டம் பெற்றுவிட்டான். அவன் இலட்சியம் நிறை வேறி விட்டது.
சில சினேகிதர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு சிறிய படக்கம்பனி தொடங்கியிருக்கிறான். சமுதாயக் கருத்துக்க ளைப் பிரதிபலிக்கும் சில டாக்குமென்ட்ரறிஸ் எடுத்தார். ஒன்றிரண்டு தயாரிப்புகளுக்கு பிரிட்டிஷ் நாலாவது சனல் (Channel 4) figuig,65. Gstiggs).
அலாதும் ஜேனும் கிழக்கு யூரோப்பிய சோசலிஸ்ட்டுகளு டன் சேர்ந்து 'புதிய உலகம் தேடும் அரசியல் வேலைகளின் தங்களையீடுபடுத்திக் கொண்டார்கள்.
ஸ்ரீவன் இவர்களின் படவிழா முடிய அமெரிக்கா போய் விட்டான். அக்டோபர் கடைசியில் அவன் இறந்து விட்ட சேதி வந்தபோது ராகவனும் சில சினேகிதர்களும் துடித்துப் போய் விட்டார்கள்.
இறப்போடு போராடிக் கொண்டு தன் இலட்சியத்தை நிலைநிறுத்தத் தன் பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட ஸ்ரீவனின் உறுதியான வாழ்க்கை முறை ராகவனை மெய் சிலிர்க்கப் பண்ணியது.
அன்ரோனியோவின் கடைசி வருடப் படமான 'நான்' பலரது பாராட்டையும் பெற்றது. நான்’ என்ற சூரியலிசப் படம் மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதன்பின் தாய்நாடான இத்தாலிக்குப் போய்விட்டான்.
மார்பியாக் காரரை அம்பலப்படுத்த எடுத்த டாக்குமென் டரிப் படப்பிடிப்பின் போது தாக்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாகப் போன் பண்ணிச் சொன்னான்.
மைக்கல் ஒரு மியூசிக் கம்பனியில் சவுண்ட் எடிட்டிங் செய்து கொண்டிருக்கிறான். பல காதலிகள் வேண்டாம் ஒன்று மட்டும் போதும் என்று அவன் சொன்னபோது சினேகிதர்கள்

Page 115
222 அவனும் சில வருடங்களும்
சிரித்தார்கள். பிலிப் எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் BBC யில் வேலை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
டெவீனாவுக்கு மாணவர் தயாரிப்பாளருக்கான முதற் பரிசு கிடைத்தது. அவள் தயாரித்த Female buds (பெண்மையின் மொட்டுக்கள்) என்ற டாக்குமென்டரி பிபிசியின் கவனத்தைக் கவர்ந்தது. பெண்கள் சம்பந்தமான தயாரிப்புக்களுக்கு அவ ளுக்கு உடனடியாக கொமிஷன் கிடைத்தது.
அதிபர் தனது மாணவர்களின் தயாரிப்புக்களில் மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டார்.
உலகத் திரைப் படச் சரித்திரத்தில் எத்தனையோ மேதை கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் எத்தனைபேருக்கு அதிபர் ஜான் பேர்ன்ஸ்ரைன் மாதிரி நல்ல உள்ளம் இருந்திருக் கும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
மாணவர் தயாரிப்புக்கான இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு காலை இந்திரா பெட்டியும் படுக்கையும் அழுத கண்ணுமாய் வந்து சேர்ந்தாள்.
மைதிலியின் மார்பில் முகம் புதைத்துக் குலுங்கி யழு தாள். குடும்பத்துக்காக ஒரு குடிகாரனைக் கல்யாணம் செய்து கொண்டு பட்ட கஷ்டத்தைச் சொல்லிக் கதறினாள்.
"கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன், என்ன செய்வது எல்லாம் உன் தலைவிதி. ” அம்மா சமாதானப் படுத்தினாராம். "நீ நல்ல பெண்சாதியாய் இருந்தால் அவன் ஏன் குடிக்கி றான்’ இது மாமியின் திட்டல்.
தகப்பன், மகளின் துயரை முகம் கொடுக்க முடியாமல் மெளன சாமியாகிவிட்டாராம்.
"என்னால் அங்கே இருக்க முடியாது" இந்திரா நாட்டை விட்டோடி வந்து இன்னொரு தரம் அகதியாய் வந்து நின்றாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 223
அம்மா அப்போது கணேஸ் வீட்டிலிருந்து வரவில்லை. அவள் இருந்திருந்தால் இந்திராவைக் கட்டிக் கொண்டு கதறியி ருப்பாள்.
படத்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் இந்திரா வின் துயர் தீர்க்க ராகவனால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஏதோ பட்டப்படிப்பு முடிவதே பெரிய விடயமாக இருந்தது.
இந்திராவைச் செய்பவன் கொடுத்து வைத்தவன் என்று மனதாக எண்ணியவன் ராகவன். அழகான, கெட்டிக்கார, சங்கீத ஞானமுள்ள, சமயலால் யாரையும் திருப்திப் படுத்தக்கூ டிய சகல நற்குணங்களும் கொண்ட இந்திராவை கலியாணம் செய்பவன் அதிர்ஷ்டசாலி யாகத்தானிருக்க வேண்டும் என்று மனதாக ஆசீர்வதித்தவன் ராகவன்.
லண்டன் வந்து சேர்ந்து சில நாட்கள் ராகவனை நேர் பார்க்காமல் நழுவிக் கொண்டிருந்தாள். தனது கண்ணிரையும், காயம் பட்டிருந்த கன்னத்தையும் மறைக்கத் தான் இந்திரா அப்படி நடந்து கொள்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.
தானாக வந்து சகஜமாகப் பேசும் வரைக்கும் தானும் ஒதுங்கியிருப்பது நல்லது என்று நடந்தான் ராகவன்.
அன்று சனிக்கிழமை. நவம்பர் மாதத்தின் நடுப்பகுதி. ஒரு பின்னேரம் நாலு மணியிருக்கும். கீழே டெலிபோன் அடிப்பது கேட்டது. மைதிலி இவனுக்குத்தான் போன் என்று சொன்னாள். இவன் அவசரமாக இறங்கி வந்தான்.
"ஹலோ நான் பிலிப் பேசுறன்"
ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பிலிப் ராகவனின் வீட்டுக்குப் போன் பண்ணுமளவுக்கு பெரிய நட்பில்லை.

Page 116
224 அவனும் சில வருடங்களும்
"ஹவ் ஆர் யு ராகவன்’ பிலிப்பின் குரலில் அசாதாரணக் கனிவு.
'ஒகே." ராகவன் பிலிப் பேசட்டும் என்று பேசாமலி ருந்தான். பிலிப்புக்கும் அவனுக்கும் பெரிய சினேகிதம் இருந் திருக்கவில்லை.
“பின்னேரம் எங்கேயும் போகிறாயா' பிலிப்பின் குரல் பரிவுடன் தொனித்தது.
"அவசரமாகப் போகக் கூடிய ஒரு முக்கியமான வேலையு மில்லை" ராகவனுக்குக் குழப்பம். என்ன பிலிப் இப்படி நினையாப் பிரகாரமாய்ப் போன் பண்ணுகிறான்?
"பின்னேரம் என்னைச் சந்திக்க முடியுமா. உன்னிடம் ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும்."
ராகவன் ஒரு கணம் யோசித்தான் பின்னர் "எங்கே சந்திக்க வேண்டும்?' என்று கேட்டான்.
"றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்பில் சந்திப்போமா" டெவீ னாவுக்குப் பிடித்த ஜாஸ் கிளிப்.
"சரி’ ராகவன் போனை வைத்து விட்டான். டெவீனாவின் தொடர்புகளோடு சம்பந்தப்பட்ட இடங்க ளில் றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்பும் ஒன்று. ராகவனின் மனத்தில் தர்ம சங்கடமென்றாலும் பிலிப் கேட்டபடி சொன் னான்.
டெவீனாவுடன் கடைசிப் பேச்சு ஏனோ மனதைக் குழப்பி
ԱlՑl.
ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவளுக்குப் போன் பண்ணினான். அவளைப் பார்க்கமலிருக்க முடியவில்லை. அவள் குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 225
நவம்பர் மாதற் குளிர் காற்றில் நடனமாடும் அவளின் பொன் நிறத் தலையைக் கோதி விட வேண்டும் போலிருந்தது. கடலாழ நீல நிறவிழிகளில் நர்த்தனம் செய்யும் நிலவுத் துண்டுகளைத் தேடவேண்டும் போலிருந்தது.
சம்மர் காலத்தில் அகோர வெயிலின் புழுக்கத்தோ6 அடுத்தடுத்த அறையில் எடிட்டிங் செய்த போது கடந்த வருடம் புவனாவின் படத்தை இருவரும் ஒன்றாக எடிட்டிங் செய்ததும் எடிட்டிங் ரூமில் காதல் புரிந்ததும் கருத்தை கத்தியாய் வெட் டித் தொலைத்தது.
வசந்த காலத்தில் காதலர்கள் கையோடு கை பிணைந்து கண்ணோடு கண்பதித்து லண்டன் தெருக்களில் உலவும்போது அவளின் நினைவு பாய்ந்தது.
படத் தயாரிப்பு நாட்களில் தேவையுடன் மட்டும் அவள் பேச்சுக்களை முடித்துக் கொண்டு போனபோது உயிரின் ஒவ்வொரு அணுக்களையும் அசைப்பது போலிருந்தது.
மாணவர் தயாரிப்பின் முதற்பரிசை அவளது “பெண்மை யின் மொட்டுக்கள்’ தட்டிக் கொண்டபோது தன் பெருமையை அவளுக்கு ஆயிரம் முத்தத்தின் மூலம் அர்ப்பணிக்கத் துடித் தான். அவள் தூரத்தில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள். "நாங்கள் காதலர்களில்லை. சினேகிதர்களாக இருப் போம்’ என்று கெளரவமாகச் சொல்லிவிட்டாள். அவள் போட்ட கோட்டை அவளாற்தாண்ட முடியவில்லை. மாண வர்கள் படவிழாவிற்கு மைதிலியுடன் இந்திராவும் வந்திருந் தாள். பாவ்ரர் தியேட்டருக்குள் நுழைந்தபோது அவள் இந்திரா வைக் கூர்ந்து பார்த்தாள்.
"நாங்கள் இவர்கள் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம் இல்லையா' என்று டெவீனா கேட்டாள்.
"ஆமாம்’ போட்டான்.

Page 117
226 . . . . . . . . . . . . . . . . . . அவனும் சில வருடங்களும்
"இவள் எங்களுக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடினாள் ஞாபக மிருக்கா’ டெவீனா தொடர்ந்தாள்.
இந்திராவின் பாரதிபாடல்களை என்னவென்று ராகவன் மறப்பான்?
பழைய ஞாபகங்கள் வந்திருக்க வேண்டும். டெவீனா பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பாரிஸிலிருந்து வரும் போது அவள் தந்த முதல் முத்தத்தையும் மறந்து விட்டாளா? கதரின் டொக் அருகில் ஒரு இரவு சந்தித்து நீண்ட பேச்சுக் களை வைத்துக் கொண்ட பின் அவர்கள் தனியாகச் சந்திக்க வில்லை. அவள் ஸ்ருடன்ஸ் ரூமில் கூட இவனுடன் ஒரு ஐந்து நிமிடம் கூடத் தனியாக இருக்கவில்லை. அவள் நடத்தை மனத்தை யுறுத்தினாலும் அவையெல்லாவற்றையும் பொறுத் துக் கொண்டான்.
மாணவர் படவிழா ஜுலை மாதக் கடைசியில் முடிந்தது. தகப்பன் தனது இரண்டாவது மனைவியுடன் லண்டன் வந்திருப்பதாகவும் அவர்களுடன் ஒரு மாதம் உலகம் சுற்றிப் பார்க்கப் போவதாகவும் சொல்லி விட்டாள். ஆகஸ்ட் மாத வெயில் மட்டுமல்ல அவளில்லாத துயரமும் அவனை வாட்டி எடுத்தது. செப்ரம்பர், ஒக்டோபர் மாதங்களில் அவன் தன் படப் பிடிப்பு விடயமாக பிஸியாக இருந்தான். இப்போது பிலிப் என்ன சொல்லப் போகிறான்?
தர்ம சங்கடமான கேள்விகள் ராகவனின் மனத்தைக் குதறியெடுத்தது.
"டெவீனா என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டு விட்டாள்’ என்று பிலிப் சொல்லப் போகிறானா?
டெவீனா ஒரேயடியாக கென்யாவிலோ அல்லது நியு
யோர்க்கிலோ வாழப் போகிறாள் என்று சொல்லப் போகி றானா?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 227
நினைவுகள் எங்கேயெல்லாமோ ஓடியது. லண்டன் ட்ர விக் பைத்தியக் காரர் விடுதி போல் அல்லோல கல்லோலமாக இருந்தது. சனிக்கிழமை வடிாப்பிங் செய்வோரின் தொகை
Y
திருவிழாக்களை ஞாபகப் படுத்தின. " : ، أيه *
கார் பார்க் பண்ணவே அரை மணித்தியாலம் எடுத்தது. கடைசியாக றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்பிற்கு ஒரு மைலுக்கப் பால் எங்கேயோ கார் பார்க் பண்ணிவிட்டு நடந்து சென்றான். கிளப்பில் இவனுக்காகக் காத்திருந்தான் பிலிப். இவ னைக் கண்டதும் ஹலோ சொல்லிக் கொண்டான். முகம் ராகவனை நேரடியாகப் பார்க்காமல் தாழ்ந்திருந்தது.
விஸ்கி ஆடர் பண்ணினான். "பீர் போதும்’ ராகவன் சொன்னான். பிலிப் தலையாட்டினான் விஸ்கியே எடுப்போம் என்பது அதன் கருத்து.
"பரவாயில்லை விஸ்கியே எடுப்போம். *
இவனின் சம்மதத்தைப் பற்றி பிலிப் அதிகம் அக்கறைப் படாதவனைபோல் இரண்டு டபுள் விஸ்கி ஆடர் பண்ணினான்.
மெளனமாக ஒரு சில நிமிடங்கள் ஓடின. விஸ்கியைக் குடித்தபடி பிலிப் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். தூரத் தில் மேடையில் ஒருவன் ஜாஸ் வாசித்துக் கொண்டிருந்தான். "நீ எப்படியிருக்கிறாய்" ராகவனைக் கேட்டான். ஏதோ சாட்டுக்குக் கேட்பதுபோலிருந்தது. அவன் குரல் டெலிபோனி/ லேயே அவன் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறானே! வியப்புடன் பிலிப்பை ஏறிட்டுப் பார்த்தான் ராகவன்.
என்னைப் பார்க்காமல் விஸ்கியைக் குடி” பிலிப் உத்தரவு போடுவதுபோற் சொன்னான். ராகவனுக்கு எரிச்சல் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பிலிப் கூப்பிட்டான்? என்ன சொல் லப் போகிறான்? மனம் இறக்கை கட்டிக் கொண்டு எங்கேயோ

Page 118
228 அவனும் சில வருடங்களும்
பறந்தது. தான் பட பட வென்று குடித்து முடித்தான் "டெவினா
ஏதும் சொல்லியிருப்பாளா? ராகவன் குடிக்கும் வரைக்கும்
காத்திருந்து விட்டு இன்னொரு விஸ்கி ஆடர் பண்ணிக் கொண்டான். ,
ராகவனுக்கு வெறியேறத் தொடங்கி விட்டது. "ராக வன். நான் சொல்லப் போகும் செய்தி உனக்கு அதிர்ச்சியாயி ருக்கும். தயவு செய்து இந்த விஸ்கியையும் குடித்து முடி’
பிலிப்பின் குரல் வித்தியாசமாக இருந்தது? ராகவனின் உடம்பிற் சூடேறிவிட்டது. தான் டெவீனாவைத் திருமணம் செய்யப் போகிறேன் என்று பிலிப் சொல்லப் போகிறானா? அதை எப்படி ராகவன் தாங்குவான்? அந்த நினைவு வந்ததும்
ராகவன் தானாகப் போய் மூன்றாவது விஸ்கி ஆடர் பண்ணிக்
குடித்தான்.
உள்ளத்தின் தயக்கமெல்லாம் போய் விட்டது. அவளுடன் இவனைக் கட்டிலிற் கண்ட ஞாபகம் இன்னொருதரம் வந்தது. உண்மையை வெறி மறைத்தது "என்ன சொல்லப் போகிறாய்? ராகவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். நிதானமிழந்து கொண்டு வருவதையுணர்ந்தான். பிலிப் ராகவனை விட ஒன்றிரண்டு அங்குலம் உயரமானவன். மிகவும் கம்பீரமான உயரமுடைய வன். ராகவனின் கூர்ந்த பார்வையைத் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
பிலிப் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
'ராகவன்." பிலிப் ராகவனை ஒரு தரம் ஏறிட்டுப்
பார்த்தான்.
பிலிப் தயங்கினான். பின்னர் மெல்லிய குரலில் "டெவினா. பிலிப் வார்த்தைகளை முடிக்க முதல்,
“டெவீனாவைக் கல்யாணம் செய்யப் போகிறாயா? ராக வனின் குரல் அதிர்ந்தது. பக்கத்திலுள்ளோர் திரும்பிப் பார்த் தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 229
"வாட்’ பிலிப் குழப்பத்துடன் ராகவனைப் பார்த்தான். என்ன உனக்கு பைத்தியமா என்பதுபோல் பிலிப்பின் பார்வை விரிந்தது.
"ஒரு முக்கிய விடயம் சொல்வதாகக் கூட்டிக் கொண்டு வந்தாய். விஸ்கி ஊற்றித் தந்தாய். என் டெவினாவை உன்னுடையவளாக்கப் போகிறேன் என்று சொல்லப் போகி றாயா யு பாஸ்ரட்" ராகவன் வெடித்தான். ராகவன் பயங்கர மான வெறிகாரன்போல் தோற்றமளித்தான். பிலிப் முன்னால் இருக்கும் ராகவனைக் கூர்ந்து பார்த்தான்.
"ராகவன். ராகவன் மனதைத் திடப்படுத்திக் கொள். டெவீனா இறந்து விட்டாள்" பிலிப் சொல்லிவிட்டு முகத்தை மூடிக்கொண்டான். கண்ணிரை மறைக்கிறான் என்பது புரிந்து ராகவனுக்கு முன்னால் உலகம் சுழன்றது. நிதானம் எங்கேயோ பறந்தது. பாய்ந்து பிலிப்பின் கழுத்தைப் பிடித்தான் 'பாஸ்ரட் உனக்கு இப்படிச் சொல்ல என்ன துணிவு எனது டெவீனா இறந்து விட்டதாகச் சொல்கிறாயே" அவன் பிலிப்பை வெறியு டன் உலுக்கினான்.
இவர்கள் இருவரும் இப்படித் தகராறு படுவதைப் பார்த்த இருவர் ஓடிவந்து இருவரயும் பிடித்தார்கள். யாரும் வராவிட் டால் ராகவன் பிலிப்பின் கழுத்தை நெரித்திருப்பான். மானே ஜர் வந்து இருவரையும் உடனடியாக வெளியேறும்படி சொன்
TT.
இருவரும் வெளியே வந்தார்கள். உலகத்தில் எந்தச் சந்தடியும் ராகவனுக்குக் கேட்கவில்லை. தன்னால் நிற்க முடியாது என்று தெரிந்தது.
"நீ என்ன சொன்னாய் பிலிப்' ராகவன் குரல் அதிர்ந்தது. "ஐயாம் சாரி ராகவன். இன்று காலை டெவீனா கார் விபத்தில் இறந்து விட்டாள்.'
பிலிப் தனது கண்ணிரைக் கஸ்டப்படுத்தி அடக்கிக் கொண்டான். தன் முன்னால் குழந்தைபோல் வீறிடும் இந்தப்

Page 119
23O அவனும் சில வருடங்களும்
படித்த வாலிபனை பிலிப் பரிதாபத்துடன் பார்த்தான். ராகவன் தெருவில் குந்தியிருந்து முழங்கால் களுக்கிடையில் தலை புதைத்துக் குலுங்கி குலுங்கி யழுதான்.
ரோட்டால் போனோர் ராகவன் அழுவதற்குக் காரணம் இந்தக் கம்பீரமான ஆங்கிலேயன் என்ற சந்தேகத்துடன் பார்த் துக் கொண்டு போனார்கள்.
அந்தப் பக்கம் போன போலிஸ் ஒருத்தன் வந்து என்ன பிரச்சினை என்று கேட்டார். "எனது நண்பனின் காதலி கார் விபத்தில் இறந்து விட்டாள். அந்தச் செய்தியைச் சொன்னேன். அவராற் தாங்க முடியவில்லை."
போலிஸ்காரன் சந்தேகத்துடன் பார்த்து விட்டு நகர்ந்தான். பிலிப் பொறுமையுடன் ராகவனைப் பார்த்துக் கொண்டு நின்றான். பிலிப் ராகவன் இப்படித் துடிப்பான் என்று எதிர் பார்த்து வந்திருந்ததால் பொறுமையுடன் நின்றான். ராகவன் வெட்கம் விட்டு அழுதான். எப்படி இறந்தாள்? எங்கேயிறந் தாள் என்றெல்லாம் ஒன்றும் கேட்கவில்லை.
பிலிப் ராகவனை அன்புடன் அணைத்துக் கொண்டான். "இன்று அதிகாலை தனது பாட்டியைப் பார்க்க ஈஸ்ட்போன் போய்க் கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த லாரியுடன் மோதி மரணம் சம்பவித்ததாம்.'
பிலிப் தானாகச் சொல்லிக் கொண்டிருந்தான். நேற்றுத் தானே ராகவன் அவனுக்குப் போன் பண்ணினான். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, இவனுடன் பேசுவதாகச் சொல்லியிருந் தாள்? இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் இப்படியும் ஒரு இறப்பா?
அடுத்த கிழமை கென்யாவுக்குப் போகிறாளாம். தகப்ப னின் இரண்டாவது மனைவி கற்பமாகிவிடும் தருணம். இரு பத்தைந்து வயதான தனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறப்பது மிகவும் சந்தோசமாம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 231
குழந்தை போல கும்மாளம் போட்டாளே! எத்தனை குதூகலம் குரலில் அவையெல்லாம் நேற்றுத் தானே நடந்தது? இன்று என்னைப் பிரியலாமா? "ராகவன் எங்கே போகப் போகிறாய்" பாய்ந்தோடும் ராகவன் பின்னால் விரைந்தான் பிலிப்.
"டெவீனா போகுமிடத்திற்குப் போகப்போகிறேன்’ பைத்தியம் போல் சொன்னான். என்னவென்று பிலிப் ராகவ னைப் புவனாவிடம் சேர்த்தானோ தெரியாது. ராகவனுக்குத் தான் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை.
கண் விழித்தபோது தலை விண் விண் என்று வலித்தது. எழும்பி நிற்க முயன்றான். முடியவில்லை. தன் உடம்போடு கற்தூணைக் கட்டிய கனம்.
வாந்தி வந்தது. கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்த போது அழகிய குழந்தையின் படம் தன் முன்னால் தொங்கியது. கனவா நனவா என்று தெரியாத மயக்க நிலை? யார் குழந்தை யிது?
அக்கா மகன் கண்ணனின் படமா இது? கண்ணன், சத்தியா, அக்கா, டெவீனா, ஆனந்தன் எல்லோரும் ஒரு குறுகிய காலத்துக்குள் அவனிடமிருந்து பிரிக்கப் பட்டு விட் டார்களே. சுய நிலை சாடையாக வரத் தொடங்கியதும் "டெவீனா’ அவன் பைத்தியம் போல் அழுதான். யாரோ வரும் காலடி கேட்டது. தலையை மெல்லத் தூக்கிப் பார்த்தான்.
புவனா, றிச்சார்ட், மைக்கல், பிலிப் எல்லோரும் இவ னைச் சுற்றி நின்றார்கள். அவர்களின் பின்னால் நிற்பது அவனின் மதிப்புக்குரிய அதிபர் ஜான் பேர்ன்ஸ்ரைன்.
எல்லோர் கண்களிலும் கண்ணிர். புவனா வந்து பாசத்து டன் அணைத்துக் கொண்டாள். அந்தப் பாசம் அவனை இன்னும் பலவீனப்படுத்தி விட்டது. குலுங்கிக் குலுங்கியழு தான.

Page 120
232 அவனும் சில வருடங்களும்
'அழு, அழு, மனதில் உள்ள துயரெல்லாம் போகட்டும் அழு’ புவனா தானும் விம்மினாள். ராகவன் தலையலடித்துக் கதறினான். 'எனக்கேன் இந்த வேதனை’ அவன் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
அவன் அடிமனத்தில் அவள் முதல் நாள் லிப்ட் மூடும் போது ஓடிவந்து இவன் மார்பில் மாலையாக விழுந்தது ஞாபகம் வந்தது.
என்னவென்று அந்த முகத்தை பிணப்பெட்டியில் வைக்க (ւpւգեւյւb?
மூன்று வருட வாழ்க்கையின் முடிவு இதுதானா? நான் பிலிம் கொலிச்சுக்கு வந்திருக்கக் கூடாது அவன் விம்மினான். கமராக் கோணங்களைப் படிக்க வந்தவனுக்குக் காதல் மிகவும் பயங்கரமான படிப்புக்களைத் தந்து விட்டதே.
ஒலியெல்லாம் எப்படிச் செய்வது என்று தேடியவனுக்கு அவன் ஒலம் நிலைத்து விட்டதே.
ஒளி எப்படிப் பாய்ச்சி நிழற்படத்திற்கு உயிர் கொடுப்பது என்று படிக்க வந்தவனின் வாழ்க்கை இருண்டு விட்டதே.
தன்னைச் சுற்றி நிற்பவர்களின் குரல் அந்நியமாகக் கேட் டன. அவள் மடியிற் படுத்திருந்து பேத் ஹோவனின் பியானோ கொன்சேர்ட்டோ கேட்கவேண்டும்.
லூயிங் ஆர்ம்ஸ்ரோங்கின் ஜாங் இசையில் அவளுடன் நடக்க வேண்டும். இந்திராவைச் சொல்லி பாரதியின் பாடல்க ளைப் பாடச் சொல்லி ரசிக்க வேண்டும்.
அவன் தலையைத் தடவி விடுவது புவனாவாக இருக்கக் கூடாது.
"டெவீனா, டெவீனா..? அவன் அலறல் பயங்கர மாகவிருந்தது. டாக்டர் வந்து ஊசி போட்டார். அவன் இன் னொரு தரம் மயங்கி விட்டான். நண்பர்கள் துயருடன் அவனரு கில் இருந்தனர்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 233
புவனா மைதிலிக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்க வேண்டும்.
ஒரு கிழமை கழித்து அவன் வீட்டுக்கு வந்த போது மைதிலி தமயனை ஆதரவுடன் பார்த்தாள். அவனால் யாரை யும் கண்ணெடுத்துப் பார்க்க முடியவில்லை.
இந்திரா ஓடிவந்து அன்புடன் பார்த்தாள். அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் வாயாற் சொல்ல முடியாத எத்தனையோ ஆதரவான செய்தி அவள் கண்களிலி ருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கும்.
"ராகவன்.' இந்திராவின் குரல் மெல்லமாக ஒலித்தது.
அவன் தன் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான் "டெ வீனா போய் விட்டாள் என்பது உங்கள் மனத்தில் எடுபட எவ்வளவோ நாள் எடுக்கும். இந்த வீட்டில் மூன்று பெண் கள் இருக்கிறோம். அம்மா உங்கள் நிலை தெரிந்தால் இன்னொருதரம் சுய நிலையிழந்தாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை. மைதிலி." இந்திரா இவளின் பதில் எதையும் எதிர்பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் மறு மொழி சொல்லாமல் தனது கட்டிலிற் தொப்பென்று விழுந் தான்.
மைதிலிக்கு என்ன என்பதுபோல் இந்திராவைப் பார்த் தான். இருவர் கண்களும் மோதிக் கொண்டன. சோகம் படிந்த இரு சோடிக் கண்கள், பரிதாபமாகவிருந்தன. “மைதிலியின் நாஸர் இலங்கையில் தனது சமயத்தைச் சேர்ந்த பெண்ணைச் செய்து விட்டதாக எழுதியிருக்கிறார்.'
ராகவன் முகத்தை மூடிக் கொண்டான். இடிக்கு மேல் இடியா? டெவீனா, அக்கா, குழந்தைகள், மைத்துனர், ஆனந் தன் எல்லோரும் போய்விட்டனர். அவனுக்கு ஒன்றுமே விளங்கவேயில்லை. பாவம் மைதிலி எத்தனை கற்பனை யோடு வாழ்ந்திருப்பாள்.

Page 121
234 அவனும் சில வருடங்களும்
எதிரே நிற்கும் இந்திராவைப் பார்த்தான் அவர் அசையா மல் நின்றிருந்தாள். அடைக்கலம் தேடி வந்த இந்தப் பெண் ணுக்கு எத்தனை கடமைகள், பொறுப்புக்கள்? அரைப் பைத்தி யமாயிருக்கும். ராகவனை பார்க்க வேண்டும், மன நிலை சரியில்லாத தாய், காதலில் தோல்வியுற்ற மைதிலி!
இந்தப் பெண்ணைக் கடவுள்தான் அனுப்பியிருக்க வேண் டும் "நன்றி இந்திரா’ அவன் குரல் அடைத்தது. அவள் முகத்தில் சாந்தம், பரிவு, கனிவு.
"சாப்பாடு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா" இந்திராவின் தாய்மை மனதைத் தொட்டது. டெவீனாவும் உலகத்துத் துன்பத்துக்கெல்லாம் துயர் படுபவள்.
"வேண்டாம் இந்திரா. டெவீனா இறந்து விட்டாள் தெரியுமா? குழந்தை போல் அவளிடம் சொன்னான்.
"சாப்பிடா விட்டால் அம்மா யோசிப்பாள்' அவள் பிடிவாதமாகச் சொன்னாள்.
"நான் சாப்பிட்டதாகச் சொல்' எரிச்சலுடன் முணுமுணுத் தான். அவள் மறுமொழி சொல்லவில்லை.
"என்ன பொய் சொல்ல மாட்டாயா?
"சொல்கிறேன்’ இந்திரா போய்விட்டாள். அடுத்தடுத்த நாட்கள் இவன் வேலை செய்யும் கம்பனி யைச் சேர்ந்த ஒரு சிலர் போன் பண்ணினர். செய்து கொண்டி ருக்கும் புரடக்ஸனை முடிக்க வேண்டும் அவர்கள் முணு முணுத்தார்கள்.
வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. இரவும் பகலும் டெவீனாவின் ஞாபகமாக இசையையும் பியானோவையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் இந்திரா தோசையுடன் இவன் அறைக்குள் வந்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 235
“இந்திரா துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா என்ற பாட்டைப் பாடு’ இந்திரா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். குழந்தையை தாய் பார்க்கும் பார்வை. மிக மிக மெலிந்திருந்தான்; சோர்ந்திருந்தான் “மனதிலு றுதி வேண்டும் என்று பாடட்டா’ அவனைப் பார்த்தாள். தாடி வளர்ந்திருந்தது. பேச்சு பைத்தியக்காரன் போலிருந்தது.
அணைத்து வைத்து ஆறுதல் கொடுக்க வேண்டும் போலி ருந்தது. ‘என்ன பார்க்கிறாய் எனக்குப் பைத்தியம் என்று பார்க்கிறாயா’ அவன் குரலில் ஒலித்த சோகம் அவள் கண்க ளில் பனிபடர வைத்தது.
“இல்லை" என்று தலையாட்டினான். அவனுக்கு முன் னால் அழுது அவனைத் துன்பப்படுத்த விரும்பவில்லை.
“எனது நண்பன் அன்ரோனியோ என்பவன் தனது காதலி யிறந்த போது ஒரு வருடம் வரைக்கும் போதை மருந்தென்றும் குடிவகைகளென்றும் பாவித்துத் தன் துன்பத்தை மறந்தான். நான் உன்னைப் பாடச் சொல்கிறேன், இது பைத்தியத் தனமில் லையே???
"சாப்பிடுங்கள் பேசலாம்"
அவள் சாப்பாட்டை அவனின் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில் வைத்தாள். அவன் மெளனமாகப் பார்த்தான். அவள் மெளனமாய் நின்றிருந்தாள். குழந்தையைச் சமாதானம் செய்யும் தாயைப் போல் அவள் தெரிந்தாள்.
இந்திராவுக்கு இப்போதுதான் இருபத்திரண்டு வயது. வாழ்விழந்தவள். அடைக்கலம் தேடிய இடத்தில் மூன்று துயர் படிந்த மனிதர்களை பார்க்க வேண்டிய பொறுப்பு. அவளிற் பரிதாபம் வந்தது. தன்னைவிட்டுப் போன டெவீனாவில் கோபம் வந்தது. பாவம் இந்திரா அவன் சாப்பிட்டான். வாழ்க்கை தொடர வேண்டும். டெவீனாவை மறக்க முடியாது,

Page 122
236 அவனும் சில வருடங்களும்
அதே நேரம் வெளியில் போய் உழைக்காமலிருக்க முடியாது. மைதிலியை இவன் தேற்ற வேண்டும். அம்மாவை யோசிக்கப் பண்ணக் கூடாது, அவள் இன்னொருதரம் தன் சுய நிலையி ழந்து விடுவாள்.
அவன் சாப்பிடுவதை அமைதியாக இருந்து பார்த்தாள் இந்திரா. அவள் கணவனில்லாதவள். அவன் காதலியில்லாத வன். இவர்களை யிணைக்க அம்மா கண்ட கனவுகள் ஏராளம். சாப்பிட்டு முடிய அவளை நேரடியாகப் பார்த்தான். அப்படி நேரடியாகப் பார்த்தது அவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. "இந்தப் பொன்னான கைகளை அந்தக் குடிகாரன் அடித் தானா? இந்தப் புனிதமான மனத்தைப் புண்ணாக்கினானா அந்த மடையன்' ராகவன் ஏதேதோ கேள்விகள் கேட்டான். அந்தக் குரலில் பரிவு அவளைத் துடிக்கப் பண்ணிவிட்டது.
தனது சொந்த விடயத்தை அவன் நேரடியாகக் கேட்க அவள் தர்ம சங்கடப் பட்டாள். “பெரும்பாலான பெண்கள் அடியையும் உதைகளையும் அட்டிகைகளுக்கும் கம்மல்களுக் கும் பொறுத்துக் கொள்கிறார்கள், காயங்களைக் காஞ்சிபுரப் பட்டால் மறைத்துக் கொள்கிறார்கள். கல்யாணம் என்ற கலாச் சாரப் பிணைப்பில் நன்மையடையவர்கள் ஆண்கள். அவர்கள் படைத்த சட்ட திட்டங்களின் மரபு மீறினால் கேவலப்படுத்தப் படுபவர்கள் பெண்கள் அதனால் எத்தனையோ கொடுமைக ளைச் சகித்துக் கொண்டு சந்தோசமாயிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்’ இந்திரா தனக்குத்தானே சொல்வது போல் சொல்லிக் கொண்டாள். ஏதோ சுருக்கமாக மறுமொழி கூறத் தொடங்கியவள் பெரிதாகப் பிரசங்கம் வைத்ததுபோல் இருந்தது. تبر
இருபத்திரண்டு வயதில் வேண்டாத கணவனை விட்டுப் பிரிந்த இந்தப் பெண்ணின் துணிவுதான் என்ன? தன்னைப் பாதுகாக்கும் அவள் பரிவை அவன் மெச்சினான் அன்று பிலிப் போன் பண்ணினான். ராகவன் எப்படி யிருக்கிறான் என்று விசாரித்தான். டெவீனாவின் மரணச் சடங்கு!

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 237
அவளின் இறுதிச் சடங்கு அடுத்த நாள் நடக்கப் போகிற தாம். ராகவன் பற்களையிறுகக் கடித்துக் கொண்டான். என் னால் வரமுடியாது என்று சொல்லி விட்டான்.
சேர்ச்சில் அவள் பிணப்பெட்டி வைக்கப்பட்டு பிரார்த் தனை செய்தபின் எரிக்கப்படும் என்று பிலிப் சொன்னான். அவன் சொன்னது ஒன்றும் முழுமையாக ராகவனால் உணர முடியாதிருந்தது.
“என்னால் அந்தக் காட்சியைப் பார்க்க முடியாது." ராகவன் இன்னொருதரம் பைத்தியமாகக் கத்தினான்.
அறைக்குள் ஒடிப் போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண் டான். "ஐ லவ் யு டெவீனா’ அவள் படத்தை வைத்துக் கொண்டு ராகவன் கெஞ்சினான். நினைவுகள் விரிந்தன.
'உண்மையாகவா" டெவீனா கேட்டாள். அவள் இறக் கும் சிலநாட்களுக்கு முன் நடந்த சம்பாஷணை இறுதியாக அவள் அவனுடன் பேசுகிறாள் என்று தெரியாமல் அவன் மனக் கிடக்கையைச் சொன்னான்.
தன்னை மன்னிக்கும்படி சொன்னான். அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று ஆரம்ப கால காதலன் போல் வெட்கத்தை விட்டுச் சொன்னான்.
'உண்மையாக நீ விரும்பும் எதையும் சிறை பிடிக்கக் கூடாது" அவளின் வாதம் இது.
'என்ன செய்யச் சொல்கிறாய்” ராகவன் கெஞ்சும் குரலிற் கேட்டான்.
"நாங்கள் ஒருத்தரை சந்திப்பது பிரச்சினையைக் கொண்டு வரும் என்று நினைக்கிறேன்’ அவள் நிதானமாகச் சொன்னாள்.
"அப்படியானால்' அவன் பொறுமையின்றிக் கேட்டான்.

Page 123
238 அவனும் சில வருடங்களும்
‘'நீ உண்மையாக என்னை விரும்புவதானால் தயவு செய்து என்னைச் சந்திக்காதே. என்னால் இன்னொருதரம் உனது சந்தேகத்தைச் சகிக்க முடியாது."
அவள் குரலில் உறுதி. அவனாலும் இனியும் கெஞ்ச முடியாது. அவள் கொஞ்ச நாளில் கென்யா போக இருக்கி றாள். ஒன்றிரண்டு மாதம் போகவிட்டு அவள் மன நிலையை அறியலாம்.
"If you love me truly please let me go” (g)glg5T6ár gyouci கடைசியாக அவனிடம் கேட்ட வாக்குறுதி. அவன் மறுமொழி சொல்ல முதலே போனை வைத்து விட்டாள். இன்று 'முழு மையான சுதந்திரத்துடன் எரிக்கப் படப்போகிறாள்! தலை யைப் பிய்த்துக் கொண்டழுதான். இந்திரா பெருமூச்சு விட் டாள். அந்த நினைவே சித்திரவதையாக இருந்தது.
லண்டனில்லாமல் எங்கேயாவது ஓடவேண்டும் போல் இருந்தது.
அடுத்த நாள் அம்மாவும் மைதிலியும் கோயிலுக்குப் போய்விட்டார்கள். இன்று அவளின் இறுதிச் சடங்கு என்பதை எப்படிச் சீரணிப்பது என்று தெரியவில்லை.
சமயலறையில் காலைச் சாப்பாட்டின் மணம் மூக்கைத் துளைத்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்திரா சாப்பாட்டு டன் வருவாள் என்று தெரியும். இந்திரா இவனைப் பாதுகாப்ப தில் கண்ணாக இருக்கிறாள். சாப்பாடு இறங்குமா அவனுக்கு? அவன் எதிர்பார்த்ததுபோல் அவள் வந்தாள். சாப்பாடு தயார் என்று சொல்ல வந்தாள்.
"இந்திரா. ' அவன் குரல் கரகரத்தது. அந்த வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர யாரும் இல்லை. அவள் இருபத்திரண்டு வயது வாழாவெட்டி. அவன் இருபத்தி எட்டு வயதில் காதலியை நெருப்பில் எரியக் காத்திருப்பவன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 239
‘என்ன” என்பதுபோல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "இன்று டெவீனாவின் உடல் இந்த உலகை விட்டு மறையப் போகிறது.'
அவள் மறுமொழி சொல்லாமல் நின்றாள். “லண்டனிலிருந்தால் பைத்தியம் பிடிக்கும். இந்த மன நிலையில் எங்கே போகப் போகிறான். பரிதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.
'நானும் வரட்டுமா? அவள் கேட்டது அவனைத் திடுக்கி டப் பண்ணியது.
"மனம் சரியில்லாத நேரத்தில் எங்கேயாவது போவது நல்லதல்ல. நான் வருவது பிடிக்கா விட்டால்.’’ தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். எத்தனை தாய்மை அவள் பார்வையில்; இருபத்திரண்டு வய தில் இப்படியான ஒரு தெய்வீகமான முகமா? இவளில்லாவிட் டால் பைத்தியமாயிருப்பானே. 'தயவு செய்து என்னோடு e) II. . . . . டெவீனாவுடன் நான் போன இடங்களுக்குத் தனியா கப் போனால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடிக்கும்.' அவள் முகத்தில் பிரகாசம். அவசரப்பட்டாள். பிளாஸ்கில் காப்பி யூற்றிக் கொண்டாள். மைதிலிக்கு ஒரு நோட் எழுதி வைத்துவிட்டு வெளியேறினாள். குழந்தைக்குப் பின்னால் ஒடும் ஒரு அன்பான தாயின் பரிவு அவள் செய்கையில் மிளிர்ந்தது. கார் லண்டனை விட்டு வெளியேற ஒரு மணித்தி யாலத்திற்கு மேல் எடுத்தது. லண்டன் ஆரவாரத்தைக் கடந்து நாட்டுப்பக்கம் போகக் காட்சிகள் வித்தியாசமாக இருந்தது.
"நான் லண்டனை விட்டு ஒரு நாளும் வெளியில் வரவில் லை’ அவன் கடந்து போகும் காட்சிகளைப் பார்த்தபடி சொன்னாள்.
"நீ உலகத்தில் பார்த்த விடயங்கள் மிக அற்பம் என்று நினைக்கிறேன்’ ராகவன் முணுமுணுத்தான்.

Page 124
24O அவனும் சில வருடங்களும்
"பார்த்ததே போதும். வாழ்க்கை அலுத்து விட்டது." அவள்குரலில் விரக்தி. வராதா என்ன? காதலித்தவனையே தேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டது. விரக்தியை உண்டாக் காதா? கார் ஏதோ நாட்டுப்பக்கம் போய் ஏதோ ஒரு வளைவிற் திரும்பியது.
"எங்கே போகிறோம்’ இந்திரா அங்கும் இங்கும் பார்த்த படி கேட்டாள். லண்டனிற் தெரியாத புதிய காட்சிகள். பசுமையான வயல்கள் பரந்த காடுகள். "அதோ தெரிகிறதே உயர்ந்த மேடு, அந்த இடத்திற்குப் போகிறோம்' அவன் கனவிற் சொல்வதுபோற் சொன்னான்.
இந்திரா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் பார்வை எங்கேயோ பதிந்திருந்தது.
'அந்த இடத்திற்குப் பெயர் சன்ரப்பரி சேர்க்கிள், ஆதி கால மனிதர் பூஜை செய்த புண்ணிய தலம். ஒரு பெரிய திடலில் - பெரிய ஒரு பரப்பான திடலைச் சுற்றி வளைத்து புராதன மரங்கள் நிற்கின்றன. அந்த இடத்திலிருந்து பார்த்தால் நாலு பக்கமும் மைல்க் கணக்கில் சமவெளி தெரியும். ஆயிரக்க ணக்கான வருடங்களுக்கு முன் மக்கள் இந்த இடத்தைப் புனித தலமாகப் பாவித்து யாத்திரை வந்தார்களாம்’
இந்திரா அவன் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டாள். தமிழர்கள் மாதிரி இவர்களும் இந்த மேட்டில் ஒரு முருகனைக் கும்பிட்டிருப்பார்களா?
'இயற்கையை விரும்பும் டெவீனாவுக்குப் பிடித்த இடங் களில் இதுவும் ஒன்று. இப்படியான இடங்களுக்கு அவள் என்னையிழுத்துக் கொண்டு வரும்போது அவளின் விசித்திர மான மன உணர்வு என்னையாச்சரியப் படுத்தும். அவளின் உணர்வு இயற்கையைக் கெளரவிக்கும் உணர்வு’
"இன்றைக்கு ஏன் வருகிறீர்கள்’ டெவீனாவுடன் தன்னை
யிழுத்துக் கொண்டு வந்தது, இருதயத்தைத் தொட்டது 'இரண்டு மணிக்கு அவள் உடல் சிதையில் ஏறும்.”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 241
அவன் குரல் அந்நியமாக இருந்தது. இருவரும் அந்த மேடான இடத்திற்குப் போனதும் அவன் நேரத்தைப் பார்த் தான்
"இந்திரா இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்கு என்னைத் தனியாக விடு’
அவள் விழுந்து கிடந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டு அவன் போவதைப் பார்த்துக் கொண்டாள். தன்னை ஒரு நெருக்கமான சினேகிதியாக நடத்துவதை உணர்ந்தாள். காதல் எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது? ஆறு மாதத் திருமண வாழ்வில் அவளுக்குக் காதல் என்ன என்று தெரியாது. முதல் இரவே கணவனின் குடித்த பேச்சு அவளைக் கண் கலங்கப் பண்ணியது.
காலம் கணவனின் நடத்தையை மாற்றும் என்ற பிரார்த்த னையின் பலன் நாலாம் மாதம் கன்னம் பழுக்கவும், கை கால் நோகவும் தொடர்ந்த போது இவனுடன் என்னவென்று நாற் பது, ஐம்பது வருடத்தைச் செலவழிப்பது என்று நடுங்கி விட்டாள்.
அவள் நினைவு எங்கோ போய் விட்டது. இந்திரா பெருமூச்சு விட்டாள்.
அவன் திரும்பி வந்தான், அழுதிருக்கிறான் போலும் கண்கள் சிவந்திருந்தன; நேரத்தைப் பார்த்தான்.
"டெவீனா இப்போது சாம்பலாகியிருப்பாள்' அவன் தன் பாட்டுக்கு முணு முணுத்தான்.
இந்திரா மெளனமாக இருந்தாள். இவன் அவளில் எவ்வ ளவு அன்பாக இருந்திருக்கிறான்?
ராகவன் முகிலோடும் நீலவானத்தை வெறித்துப் பார்த் தான். வானம் நிர்மலமாக இருந்தது. நவம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் இப்படித் தெளிவான ஆகாயத்தைக் காண்பது மிக மிக அரிது.

Page 125
242 - அவனும் சில வருடங்களும்
மரக்கிளைகள் இலையிழந்து காணப்பட்டாலும் ஆங் காங்கே சில பறவைகள் கீச்சிட்டுக் கத்திக் கொண்டிருந்தன.
"டெவீனாவின் வாழ்க்கையில் நான் குறுக்கிடாமலிருந் தால் அவள் இப்போது உயிரோடு இருந்திருக்கலாம்."
தனக்குத் தான் சொல்லிக் கொள்கிறானா அல்லது எனக் கும் சேர்த்துச் சொல்கிறானா என்பதுபோல் இந்திரா அவனைப் பார்த்தாள். 'நான் அவளுடன் தர்க்கம் பண்ணி மனதைக் குழப்பாமலிருந்தால் கவனமாக ட்ரைவ் பண்ணியிருப்பாள்.' அவன் பார்வை பிரபஞ்சத்தில் எதையோ தேடியது. தான் அருகில் இருப்பது கூடத் தெரியாத உலகில் அவன் சஞ்சரிப்பது தெளிவாகத் தெரிந்தது.
அவன் இன்னொரு தரம் தன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். முகத்தை மூடிக் கொண்டான். பார்க்கப் பரிதாப மாக விருந்தது. என்ன நினைக்கிறான்? டெவீனா என்றொரு உயிர் இவனோடு இணைந்த சரித்திரத்தை நினைத்துக் கொள்கி றானா?
இந்திரா, டெவீனாவையும், ராகவனையும் பாரிசில் சந் தித்த அடுத்த வினாடியே தனது கனவு தகர்ந்து விழுந்ததையு ணர்ந்து கொண்டாள்.
அந்தக் காந்த விழிகளில் நர்த்தனமிடும் நளினத்தின் அடுத்த பெயர் காதல் என்று சொல்ல எந்தக் கவிஞனும் பிறக்கத் தேவையில்லை.
'பாவம் டெவீனா இந்திரா பெருமூச்சு விட்டாள். ராகவ னின் நினைவோடு தன்னையும் இணைத்து அவன் மனக்குகை யில் அவன் தேடும் பதில்களைத் தானும் தேடினாள்.
இப்போது கதை சொல்லும் அந்தக் காந்தக் கண்கள் நிரந்தரமாக மூடியிருக்குமா?
கமரா பிடித்த கைகளை புழுக்கள் அரிக்குமா? தாளம் போடும் அவள் நடை சரித்திரமாகி விடுமா? சங்கீதம் ரசித்த

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 243
மனம் மெளன உலகில் சங்கமிக்குமா? இவனையணைத்த உடலை இறப்பு தழுவிக் கொண்டது கொடுமை இருபத் தைந்து வயதில் இப்படியான ஒரு சாவு யாருக்கும் வரவேண் டாம்.
அவனின் சோகம் அவள் கண்களை நனைத்தது. "அழாதே ராகவன்' அழுது கொண்டு அவள் சொன்னாள். "அவளுடன் மிகவும் பாரதூரமான தர்க்கம் செய்தேன். அந்த யோசனையால் கவனக் குறைவு ஏற்பட்டிருக்கலாம்." திருப்பித் திருப்பி இந்த வார்த்தைகளைச் சொன்னான்.
அவன் அவளின் இறப்புக்குத் தன்னை பிணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் சொன்னான்.
'அவள் என்னை முதற்தரம் தனிமையாகக் கூட்டிக் கொண்ட போன இடத்தைக் காட்டுகிறேன்." இவளின் சம்ம தத்தை அவன் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. எழுந்தான், நடந்தான், அவள் தொடர்ந்தாள். நியு ஹேவனுக்குப் போய்ச் சேர்ந்தபோது பின்னேரம் நான்கு மணியாகி விட்டது.
"இந்த வழியால் ஈஸ்ட்போன் என்ற நகரம் போக வேண்டும்" புகாரை ஊடறுத்துக் கொண்டு கார் போய்க் கொண்டிருந்தபோது ராகவன் சொன்னான்.
பத்தடிக்கு முன்னால் எந்தக் கார் வந்தாலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத புகார்.
அதிலும் அதிகாலையில் புகாரின் அடர்த்தி பயங்கரமாக இருக்கும். மிகக் மிகக் கவனமாக ட்ரைவ் பண்ணாவிட்டால் உயிருக்காபத்து வருவது நிச்சயம்.
கிராமப் புறமென்ற படியால் விளைவுகளும் நெளிவுகளு மான சிக்கலான பாதையது.
ராகவன் சொல்வதுபோல் அவர்கள் செய்து கொண்ட தர்க்கத்தின் தாக்கம் மனத்தில் அழுத்தமாயிருந்து. துன்பம்

Page 126
244 அவனும் சில வருடங்களும்
கொடுத்திருந்தால் அதுதான் அவள் இறப்புக்குக் காரணமாக இருந்திருக்குமா?
அதற்கப்பால் இந்திராவால் எதையும் நினைக்க முடிய வில்லை. எத்தனையோ பேர் விபத்தில் இறப்பதுபோல் டெவீனாவும் இறந்து விட்டாள். சோகமான நிகழ்ச்சி. நியுஹே வன் பீச் புகாரில் மூடி பயங்கரமாய்த் தெரிந்தது. வெள்ளைத் தோல் உடுத்த அரக்கர்கள் படுத்திருப்பதுபோல் வெண்குன்று கள் புகாரில் மங்கலாகத் தெரிந்தது. குன்றில் அடிபடும் அலைகள் மயான அமைதியைக் குலைப்பது மனத்தில் எத்த னையோ பயங்கரக் கற்பனைகளை வரவழைக்கப் பண்ணியது.
இவள் தன்னுடன் வருகிறாள் என்று கூட தெரியாதவன் போல் நடந்தான். கனவில் நடப்பது போலிருந்தது.
தான் இவனுடன் வராவிட்டால் இந்தக் குன்றிலிருந்து இவன் கீழே குதித்து உயிரை மாய்த்தாலும் மாய்த்திருப்பான் என்று நினைத்ததும் ஒடிப்போய் அவனருகில் இணைந்து கொண்டாள்.
"இந்த இடம் நடு இரவில் மிக மிகப் பயங்கரமாக
இருக்கும். என்னை முதற்தரம் இவ்விடம் டெவீனா அழைத்து
வந்தபோது எனக்குப் பயம் வந்தது. தனக்குப் பிடித்த அமைதி யான இடங்களில் இதுவும் ஒன்று என்று டெவீனா சொன் னாள். பாட்டியுடன் இளம் வயதில் இந்தப் பீச்சில் விளையா டிய ஞாபகங்களைச் சொன்னாள்.'
ராகவன் ஆழ்ந்த கடலில் அப்பால் எதையோ தேடுவது போலத் தெரிந்தான். அவளுடன் பழகிய ஞாபகங்களுக்கு உயிர் கொடுப்பதுபோல் அவன் தனது வார்த்தைகளை அளந்து பேசினான்.
எவ்வளவு நெருக்கமாக அவனுடன் நிற்க முடியுமோ
அவ்வளவு தூரம் நெருங்கி நின்றாள். அந்த இடத்திலிருந்து எப்போது வீடு போய்ச் சேருவோம் என்றிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 245
அவள் நினைத்துபோல் அவன் உடனடியாக லண்டன் போகவில்லை. அவள் தன்னுடன் இருக்கிறாள் என்ற பிரக்ஞை அவனுக்கிருக்கிறதோ என்று கூடச் சந்தேகப் பட்டாள்.
அவன் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது. ஒரு ஆண் மகனால் இப்படித் துயர்பட முடியும் என்பதை முதற் தரம் உணர்ந்து கொண்டாள்.
அவர்கள் வீட்டுக்குப் போனபோது மைதிலி இன்னும் விழித்திருந்தாள். இந்திராவை நன்றியுடன் பார்த்தாள். நீ யில்லாவிட்டால் அம்மா போல் அண்ணாவும் பைத்தியமாயி ருக்கலாம் என்று சொல்ல நினைத்தாள். ஆனாலும் மைதிலி ஒரு கேள்வியும் கேட்கவில்லை. மைதிலியும் இந்திராவும் சிங்கள ராணுவத்தினராலும் சிங்களக் காடையர்களாலும் கொலை செய்யப்பட்ட பலரைத் தெரிந்தவர்கள். அவர்களின் குடும்பத்தைத் தெரிந்தவர்கள். அவர்கள் துயரத்தை முகம் கொடுத்தவர்கள்.
ஒரு சில மாதங்களுக்கு முன் தங்கள் அன்புக்குரிய கீதாவின் குடும்பத்தை ஒரேயடியாக இழந்தவர்கள் அந்தத் துயர் என்னவென்று தாயைத் துயர் படுத்துகிறது என்று தெரிந்தவர்கள்.
அவன் தன் அறைக்குள் நுழைந்தபின் 'பாவம் அண்ணா" மைதிலி பெருமூச்சு விட்டாள்.
"இந்திரா நீ யில்லாவிட்டால் இந்த நிலையை எப்படி நான் சமாளித்திருப்பேன் என்று தெரியாது. ’ மைதிலி மனம் விட்டுத் தன் நன்றியைச் சொன்னாள் 'எனது துன்பம் எனக்குப் பெரிதாக இருந்தது. ஆனால் உங்கள் குடும்பத்திற்கு நடந்த துயர்கள் மிக மிக ஆழமானது. உங்களுக்கு உதவ முடிந்ததற்கு மிகவும் சந்தோசப் படுகிறேன்."
மைதிலியை ஆறுதல் படுத்தச் சொன்னாள். ஆனாலும் தான் உடன் செல்லாதிருந்தால் ராகவன் சிலவேளை தற்

Page 127
246 அவனும் சில வருடங்களும்
கொலை செய்திருக்கலாம் என்ற சிந்தனை அவள் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. எதிரிக்கும் இந்த நிலை வரவேண் டாம் என்று மனம் சொல்லிக் கொண்டது.
ஒரு சில நாட்களின் பின் பிலிப் வந்தான். மிஸ்டர் ஸேர்லிங் ராகவனைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான்.
ராகவனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. அவரை என்ன வென்று முகம் கொடுப்பது என்று தெரியவில்லை. ஒரு சில மாதங்களில் மனைவியையும் மகளையும் இழந்த அந்த மனி தனை ராகவன் பரிதாபமாக நினைத்தான். பிலிப்பின் ஆதரவு டன் ஹாம்ஸ்ரெட் போன போது மிஸ்டர் ஸேர்லிங்கின் துயரமான முகம் அவனை நிலை குலையப் பண்ணியது.
"உனது துயரை நான் புரிவேன்' இவன் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அன்பை அவனாற் தாங்க முடியாதிருந்தது. தன் துயரை மறைத்து விட்டு இவன் துயர் பற்றிப் பேசுகிறார் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“டெவீனாவைப் புதைக்கவில்லை, எரித்தோம் என்று பிலிப் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்" ராகவன் மெளனமானான்.
"உனக்காக அவள் இந்துவாக மாறிவிட்டாளோ என்று யோசித்தேன்' அவர் சொன்னார்.
அவனுக்குக் குழப்பமாக இருந்தது. அவள் அப்படி ஒருநாளும் நினைத்திருக்க மாட்டாளே! “அவள் தாயின் மர ணச் சடங்கின்போது தான் எனக்கு முன் இறந்தால் எரித்துவிடச் சொன்னாள்’ தகப்பன் சொன்னார்.
ராகவன் வேதனையுடன் சிரித்தான். "அவள் இந்துவாக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்காது. இந்து சமயத்தைச் சேர்ந்தவனாக நான் இருப்பதையிட்டு வெட்கப்பட வேண்டும் என்று சொன்னாள்.'

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 247
இப்போது தகப்பன் ராகவனை ஆச்சரியத்துடன் பார்த் தார். அவர் முகத்தில் தோன்றிய கேள்விகளுக்கு அவன் விளக்கம் சொல்ல வேண்டி வந்தது. இந்து சமயத்திலுள்ள சாதிக் கொடுமைகளை அவள் பாரதூரமாக வெறுத்ததை அவன் விளக்கிச் சொன்னான்.
அவர் புரிந்து கொண்டாரா தெரியாது. நடராஜர் சிலைக்க ருகில் வைக்கப் பட்டிருந்த பேழையைக் காட்டினார்.
"அதுதான் என் மகள். என் மகளின் அஸ்தி’ தகப்பனின் குரல் கசிந்தது. ராகவனுக்கு இதயம் வெடிக் கும் போலிருந்தது.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளையணைத்த கைகளில் அவள் அஸ்தியைத் தொடுவதை அவனாற் கற்பனை செய்ய முடியாதிருந்தது.
"என்னை விட உனக்குத்தான் அவளில் கூட. y 9 அவருக்கு மேலே சொல்ல முடியவில்லை.
“லண்டனில் பூங்காவனங்களில் இப்படி அஸ்தியைப் பரப்புவோம். நீ என்ன செய்யலாம் என்று சொல்’ இந்தத் தகப்பனின் மனித நேயம் அவன் இருதயத்தைத் தடவியது. மகளின் ஒரு காலக் காதலனுக்கு எவ்வளவு மதிப்பு இவர் தருகிறார்?
"டெவீனாவின் அறையை அடுக்கும்போது இந்தக் கடிதம் கிடைத்தது. உனக்கு எழுதி அனுப்பபடாத கடிதம் என்று நினைக்கிறேன்."
தகப்பன் ஒரு கவரை எடுத்துக் கொண்டு ராகவனிடம் கொடுத்தார். ராகவன் வாங்கிக் கொண்டான்.
எதிர்பாராத விடயங்களை ராகவன் எதிர் கொள்ள வேண்
டியிருந்தது.

Page 128
248 அவனும் சில வருடங்களும்
"டெவினாவின் றெக்கோர்ட், ரேப், கலக்ஸன் ஆயிரக் கணக்கிலிருக்கிறது. உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்.'
டெவீனாவின் கதவைத் திறந்து விட்டார். மிஸ்டர் ஸேர் லிங்.
"இன்னொரு நாள் பார்க்கலாம்’ அவன் எழுந்தான். அவனால் அந்த இடத்தில் இருக்கமுடியவில்லை. எங்காவது தனிய ஓட வேண்டும் போலிருந்தது.
பிலிப் அவனுடன் வந்தான். "டெவீனாவின்." பிலிப் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.
"அவனுக்குப் பிடித்த ஹாம்ஸ்ரெட் பார்க்கில் பரப்பு வோம். அவள் அஸ்தியில் ஆயிரம் றோஸ் பொட்டுக்கள் மலரட்டும்" ராகவன் பிலிப்பின் கரங்களைப் பற்றிக் கொண்டு சொன்னான். டெவீனாவைக் காதலித்த இரு மனிதர்கள் அந்த ஆடவர்கள்.
“என் அருமை ராகவன், இரவின் தனிமையில் என்னருகில் நீ வேணும், உனது விழிகளின் மொழி கள் நினைவில் உரசுகின்றன. உன் ஆசையணைப் புக்கு என்னுடல் ஏங்குகிறது. என் இளமைக்கனவு கள் வெறுமையாய்ப் போகணும்? உன் மெல்லிய மூச்சு என் நினைவைக் கலைக்கிறது இன்னொரு காலம் இறந்த காலம் வரவேண்டும். உன்னோடு நான் உலகமெலாம் வலம் வர வேண்டும். செயின்ட் நதி ஓரத்தில், செயின்போல் கதீட்ரலில் உன் அணைப்பில் நானிருக்க உலகம் உறங்கட்டும் நீயில்லா நாட்கள் நிலவற்ற வானம். உடைந்த இதயம், சிதைந்த கனவுகள் இறை பிடிக்கும் உறவு கள், இதுதான் யதார்த்தமா? நீதான் என் முதற்கா தல், இறுதிவரை என் காதல், நீயெனக்கு வேணும்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 249
பதிலெங்கே ராகவன்." டெவீனாவின் பெரிய கடிதத்தின் சுருக்கமிது. இவன் அவளுடன் தொடர்பு வைக்காத காலத்தில் எழுதப்பட்டு இவனுக்கு அனுப்பப் படாத கடிதம் என்று தெரிந்தது.
பிலிப் அடிக்கடி வந்தான். கல்லூரியில் ஒருத்தரை ஒருத்தர் ஏனோ தானோ என்று நடத்திக் கொண்டவர்கள் இப்போது டெவீனா இறந்த பின் ஆறுதலுக்காக நெருக்கமாய் விட்டார்கள்.
அவளுக்குப் பிடித்த பேத்ஹோவனின் பியானோ கொன் சேர்டடோவைக் கேட்பது இருவருக்கும் பிடித்திருந்தது.
‘'நீ அதிர்ஷ்ட சாலி” பிலிப் திடீரென்று ஒரு நாள் ராகவனிடம் சொன்னான்.
ராகவன் அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் பிலிப்பை ஏறிட்டுப் பார்த்தான்.
"உன் வீட்டில் இருக்கும் இந்திராவுக்கு உன்னில் அன்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.'
"அவள் எனது சொந்தக்காரப் பெண்” பிலிப்பின் முகத் தைப் பார்க்காமல் சொன்னான் ராகவன்.
'அவ்வளவுதானா’ பிலிப் ஆச்சரியத்துடன் கேட்டான். "கல்யாணத்தில் தோல்வி கண்டவள்." "நாங்கள் காதலில் விரக்தி கொண்டவர்கள்’ பிலிப் விரக்தியுடன் சொன்னான்.
"இந்திரா இல்லாவிட்டால் நான் அன்ரோனியோ மாதிரி விஸ்கியிலோ, கொக்கேயினிலோ நிம்மதி தேடியிருக்க வேணும்" ராகவனின் குரலில்
"டெவீனாவின் இடத்தை இந்திரா எப்போது எடுக்கப் போகிறாள்' பிலிப் நேரடியாகக் கேட்டான்.

Page 129
2SO அவனும் சில வருடங்களும்
ராகவன் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. 'இந்தி ராவில் எனக்கு அபிமானம், மரியாதையிருக்கிறது. இந்திரா டெவீனாவாக முடியாது’ -
“ஞாபகங்கள் புதிய கோளத்தில் ஒருகாலத்தில் தெரியும். உண்மையான அன்பை உதைத்துத் தள்ளாதே' பிலிப் சினேகி தத்துடன் ஆலோசனை சொன்னான்.
1989 மார்கழி மாதம் வந்தது. ஒரு வருடம் ஒடிப் போய் விட்டது.
இந்திரா இந்தியா போக ஆயத்தம் செய்கிறாள். தனது இலட்சியத்தை நிறைவேற்ற இசையிலுள்ள காதலைப் பரிபூர ணப்படுத்த சங்கீதம் படிக்கப் போகிறாள்.
பாரிசிலிருந்து மாமியும் மாமாவும் வந்தார்கள். மகளின் முடிவை அவர்கள் தர்ம சங்கடத்துடன் ஏற்றுக் கொண்டார்கள். மனம் மாறித் தன் கணவனிடம் வருவாள் என்று எதிர் பார்த்திருந்தார்கள். இப்போது இந்தியா போகிறாள். கஷ்டப் பட்டு உழைத்துத் தன் படிப்புக்குத் தேவையான பணத்தைச் சேர்த்து வைத்திருப்பதாகச் சொன்னாள்.
அவள் துணிவும் விடாமுயற்சியும் எல்லோரையும் மெச் சப் பண்ணியது.
அவள் இந்தியா புறப்பட முதல் மைதிலியையும் அவளை யும் சாப்பிடக் கூப்பிட்டான்.
கடைசி நேரத்தில் மைதிலி ஏதோ காரணம் சொல்லி விட்டு நின்று விட்டாள். இந்திரா ராகவனின் காரில் ஏறிக் கொண்டாள். பாரிஸ் அம்மாவும் ராகவனின் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் ஏதோ அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
"எனக்குச் சாப்பாடு வேண்டாம்." அவள் குரலில் ஏதோ ஒரு வித்தியாசம்.
ஏன்?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 251
"நீங்கள் டெவீனாவுடன் போகும் இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போங்கள்'
இந்திரா ஏன் அப்படிச் சொல்கிறாள் என்று தெரிய வில்லை. இந்திராவுக்கும் டெவீனாவுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் அவர்களுக்கு இயற்கையி லும் இசையிலுமுள்ள ஈடுபாடும் ஒன்று. "உங்களை இப்படி அவள் ஆக்கி வைத்திருக்கிறாள் என்றால் நீங்கள் மிகவும் ஆழமாக அவளை நேசித்திருக்க வேண்டும்" அவள் தன்னை டெவீனாவாக வைத்துக் கற்பனை செய்கிறாளா?
“ஆறிக் கொண்டிருக்கும் புண்ணை இன்னொருக்கா வெட்ட நான் தயாராவில்லை' அவன் குரலிற் கடுமை.
"டெவீனா ஒரு விதத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலி” அவள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் மறுமொழி சொல்லவில்லை. 'காதலே என்னவென்று தெரியாமல் ஆயிரக் கணக்கான பெண்கள் அழிந்து போகிறார்கள். ஒரு சில வருடமென்றாலும் உங்களின் அன்பை இவ்வளவு தூரம் கவர்ந்தது அதிர்ஷ்டம்தான்."
"இந்திரா பிளிஸ் ஸ்ரொப். நான் இன்று சாப்பிடக் கூப்பிடக் கூட்டிக் கொண்டு வந்தது ஏதோ ஒரு முக்கிய விடயம் பற்றிப் பேசுவதற்கு’
அவள் கேள்விக் குறியுடன் அவனைப் பார்த்தாள். "உன் னிடம் ஒரு முக்கிய விடயம் பற்றிப் பேச நான்தான் மைதிலி யைக் கடைசி நிமிடத்தில் வரமுடியாது என்று நடிக்கும்படி சொன்னேன்.”
இந்திராவின் குழப்பத்தை அவன் நீடிக்க விரும்பவில்லை.
டெவீனாவுடன் அவன் சேர்ந்திருந்து உலகத்தை மறைந்த g)LLDITGOT N.F.T (Nation Film Theatre) uj5lb gall që GlastasistG போனான். இந்திராவின் பார்வையில் ஏதோ தேடல்கள்.

Page 130
252 அவனும் சில வருடங்களும்
இவனின் மனத் திட்டத்தைத் தேடியா? வழக்கம்போல் மார்க ழிக் குளிர் உயிரை வதைத்தது.
தேம்ஸ் நதிப் படிக்கட்டுகளுக்கப்பால் போடப்பட்டிருக் கும் பென்சில் உட்கார்ந்தார்கள். தேம்ஸ் நதி சோம்பேறி வேலைக்காரன் போல் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. "எவ்வளவு காலம் இந்தியாவில் இருப்பாய்' அவன் தன் பார்வையை அவளிற்பதித்தபடி கேட்டான். “பெரும்பாலும் இரண்டு, மூன்று வருடம் இருப்பேன் என்று நினைக்கிறேன்" குரலில் சோகம் பார்வையில் இன்னும் ஏதோ ஒரு கலக்கம்.
"உனது கணவர் உன்னைத் தேடி வந்தால் என்ன செய் வாய்’ ராகவன் அவள் முகத்தின் உணர்ச்சிகளின் மூலம் மறுமொழியைத் தேடினாள்.
அவள் விரக்தியாய்ச் சிரித்தாள். அவனுக்கு அந்தச் சிரிப்பு தர்ம சங்கடமாக இருந்தது. "என்ன சிரிக்கிறாய்."
"வெளிநாட்டு மாப்பிள்ளைகளைக் கட்ட எத்தனையோ இலங்கைப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தியை இவர் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறதாம்."
"உனது டிவோர்ஸ் இன்னும் வரவில்லையே? "சட்டப்படி கல்யாணத்திற்குத்தான் இரண்டு வருடம் டிவோர்ஸ் பைனலைஸ் பண்ணக் காத்திருக்க வேணும், இவர் இந்தியாவில் தாலி கட்டுகிறார், இன்னும் சில மாதங்களில் சட்டப்படி கல்யாணம் செய்யலாம்.'
அவன் ஆச்சரியத்துடன் வாயைப் பிழந்தபடி இருந்தான். சிலருக்குக் கல்யாணம் சடங்கு எல்லாம் தங்களின் சுய நலத் தின் அடிப்படையிற்தான் நடக்கிறது" இந்திராவின் குரலில் எரிச்சல் இல்லை வேதனை தெரிந்தது. "ஐயம் ஸாரி இந்திரா" டெவீனாவைப் போல் இந்திராவும் மிகவும் இரக்க மனம் படைத்தவள், அவளின் வேதனை பரிதாபமானது. அவள் கொஞ்ச நேரம் விம்மினாள். அவன் மெளனமாக இருந்தான். அவள் கணவன் இவளைத் துன்புறுத்தினான். தானும் டெவீனா

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 253
வைத் துன்புறுத்தினேனா என்று ஒருகணம் யோசித்தான். தான் சொல்ல வந்ததை அவள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகி றாள் என்று தெரியவில்லை.
“என்ன சொல்லவேண்டும் என்று கூட்டிக்கொண்டு வந் தீர்கள்’ கண்ணிரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு இவ னைக் கேட்டாள்.
'சொல்லவில்லை. கேட்க வேண்டும் என்று கூட்டிக் கொண்டு வந்தேன்."
கேள்விக் குறியுடன் அவனைப் பார்த்தான். “அதாவது. "அவன் முகத்தில் அவள் கண்கள் மொய்த்
தன.
அவன் தயங்கினான், எதிர்காலத்தைப் பற்றிய பேச்சை என்னவென்று இரண்டு நிமிடத்தில் பேசுவது என்று தெரிய வில்லை.
“அதாவது. உனது சங்கீதப் படிப்பு முடிந்ததும் கல்யா ணம் செய்யும் யோசனையிருக்கிறதா’
"சூடு கண்ட பூனை நான்’ அவள் இன்னொரு தரம் விரக்தியுடன் சிரித்தாள்.
"எல்லாரும் குடிகாரர்கள் இல்லை. எல்லா ஆண்களும் பெண்களைக் கொடுமை செய்பவர்கள் இல்லை. உனது தகப்பன், எனது தகப்பன், தியாகராஜா மாமா எல்லோரும் எவ்வளவு நல்லவர்கள்." அவன் ஆண் வர்க்கத்திற்கு வக்கா லத்து வாங்கினான்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளின் நேரடியான பார்வை டெவீனாவை ஞாபகப்படுத்தியது.
"ஏன் அப்பா உங்களிடம் கல்யாணம் பேசச் சொன்னாரா? அவள் குரலில் வியப்பு. ராகவன் கல்யாண விடயம் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

Page 131
254, அவனும் சில வருடங்களும்
"அப்பா சொல்லவில்லை நான்தான் யோசித்தேன்."
என்ன யோசித்தீர்கள் என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வை அவன் இருதயத்தை ஊடறுத்தது.
"இன்னும் சில வருடங்களில். அதாவது தற்போ தைக்கு இல்லை. இன்னும் சில வருடங்களில் யாரையும் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தால், அல்லது யோசனை வந்தால்."
சொல்ல வந்ததைச் சொல்லாமற் தயங்கினான். ஏன் மென்று விழுங்குகிறாய் என்பதுபோல் அவள் அவ னையுற்றுப் பார்த்தாள்.
"நீ என்னைக் கல்யாணம் செய்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன்." ராகவன் சொல்லி முடிப்ப தற்கிடையில் இருதயம் படபடவென அடித்துக் கொண்டது அவள் திடுக்கிட்டாள்.
போன வருடம் காதலியைப் பறிகொடுத்தவன். ஒரு வருடதிற்கிடையில் இப்படிக் கேட்பதை அவளால் நம்ப முடியாதிருந்தது.
"இந்திரா. மைதிலி மிகவும் வாடிப்போய் இருக்கி றாள். அவள் மனம் அறிந்து கல்யாணத்திற்குச் சரி சொல்ல எத்தனை நாள் எடுக்குமோ தெரியாது. ஒரு காலத்தில் அவள் ஒரு நல்ல மனிதனைச் சந்திப்பாள் என்று நினைக்கிறேன். அம்மாவின் மூத்த மகன் நான். மூத்த மகனின் குடும்பத்தை யிழந்த தாய் இன்றோ நாளையோ அடுத்த வருடமோ என்னை ஒரு கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்காமல் விடப் போவதில்லை." அவன் குரலில் கெஞ்சல்.
“உங்கள் தாய்க்காக நான் உங்களைக் கல்யாணம் செய்ய வேணுமா’ அவள் குரலில் கோபம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 255
'இல்லை என்னையுணர்ந்த ஒரு ஜீவன் நீதான் என்பதால் எனக்கு நீ தேவை." அவளின் வேண்டுகோள் அவன் ஆத்மாவைப் பிழிந்து கொண்டு வந்தது. அவள் சிலையாக இருந்தாள். உதட்டைக் கடித்துத் தன் உணர்ச்சிகளை யடக்கிக் கொண்டாள். "இந்திரா நீ ஒரு நாளும் டெவீனாவாக மாற முடியாது. டெவீனா ஒரு நாளும் இந்திராவாக மாற முடியாது. இந்த நிமிடத்தில் எனக்கு எந்தப் பெண்ணுமே அருகில் வரவேண்டாம். இன்னும் சில வருடங்களில் என் தாய் நச்சரிக்கும்போது நான் ஏதோ பண்ணித்தான் ஆக வேண்டும்." "உனது வெறுமையை நிரப்ப என்னைப் பாவிக்கிறாயா’ "இல்லை என்னையுணர்ந்த, என்னைப் பைத்தியமாகா மல் காப்பாற்றிய ஒரு அன்புள்ள பெண்ணின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்' அவன் அவள் முகத்தில் ஒரு நல்ல பதி லைத் தேடியது அப்பட்டமாகத் தெரிந்தது. அவனின் நேர்மை அவளைச் சிலிர்க்கப் பண்ணியது.
அவள் அவனைப் பார்க்காமல் திரும்பியிருந்து அழுதாள். அதையவனாற் சகிக்க முடியாது.
"நான் சொன்னது பிடிக்காவிட்டால் மன்னித்து விடு. பிளிஸ் தயவு செய்து அழாதே. தயவு செய்து அழாதே’
"ராகவன்." அவள் விம்மி விம்மி யழுதாள். ஏதோ சொல்ல வேண்டியவை தொண்டைக்குள் சுருண்டு கிடப்பது போல் கேவிக் கேவியழுதாள்.
“என்னைத் திட்ட வேண்டுமென்றால் திட்டு ஆனால் அழாதே’ அவன் கெஞ்சினான்.
"ராகவன் என் நினைவு தெரிந்த நாளிலிருந்து நீதான் எனக்குத் தாலி கட்டப் போகிறாய் என்று சொல்லி வளர்த்தார் கள். நீ வெள்ளைக் காரியுடன் உறவானதும் யாரையாவது கட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டேன். ராகவன் உனக்

Page 132
256 • அவனும் சில வருடங்களும்
குத் தெரியுமா உன்னில் வைத்த அன்பை என் மனதிலிருந்து எடுக்க எவ்வளவு பாடு பட்டேன் என்று’
அவள் கதறல் அவனை நிலை குலையப் பண்ணியது. 'இப்போது என்னிடம் அன்பில்லாவிட்டாலும் அனுதா பம் இல்லையா இந்திரா" அவன் கெஞ்சல் அவளை நெகிழப் பண்ணியது. w
“எனக்குத் தெரியாது. என்னை இந்தியா போகவிடு. காலம் வந்தால் பதில் சொல்கிறேன்" அவள் எழுந்தாள்.
இவன் பின்னால் வருகிறானா என்று திரும்பிப் பார்க்கா மல் நடந்தாள். அவன் பொறுமையுடன் தொடர்ந்தான். இரண்டோ மூன்று வருடங்கள் வாழ்க்கையில் மிகவும் நீண்ட காலங்கள் ஆனாலும் அவன் காத்திருப்பான்.
★ ★ ★


Page 133


Page 134
பாலுமகே முன்னுள்
சினிமா என்ற மீடியத்தி பார்ப்பவர்களை மட்டுமல்ல, ஆட்கொள்ளுகின்றன என்ட gd 600T60) D.
இந்த நாவல் திரைப் பின்புலமாகக் கொண்டது. லன் அங்கு பயிலும் பல நா ஆசிரியர்கள் ஆகியோருமே
வெவ்வேறு நாட்டைச் வெவ்வேறு கலாசாரப் பின்: அவர்களிடையே ஏற்படும் மு மீறி ஊடாடும் சில உட சித்தரிக்கப்படுகின்றன.
ஆசிரியர் ராஜேஸ்வரி கூ கல்லூரி மாணவியாய் இருந்: கல்லூரிகளின் அறியப்படாத பல இந்த நாவலில் இயல்பாக
காதல் கதை என்பதால் சொல்லி வாசகரின் வாசிப்பு க விரும்பவில்லை.
நானும் ஒரு திரைப்ப இருந்தவன் என்ற வகையில் தளத்துடன் என்னால் இலகுவ

ந்திராவின்
ரயில்.
ன் தாக்கமும், வசீகரமும் படம் படம் எடுப்பவர்களையும் கூட து ஒத்துக் கொள்ளப்பட்ட
படக் கல்லூரி ஒன்றினைப் ாடன் திரைப்படக் கல்லூரியும், ட்டு மாணவர்கள், மற்றும் இதன் கதை மாந்தர்கள்.
சேர்ந்தவர்கள் என்பதால், னணியும், இதன் காரணமாக முண்பாடுகளும் இவற்றையும் டன்பாடுகளும் இந்நாவலில்
ட இதே லண்டன் திரைப்படக் நவர் என்பதால், திரைப்படக் பல அபூர்வ தனித்துவங்கள் ச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதன் சுருக்கத்தை இங்கு வாரஸ்யத்தை நான் குறைக்க
டக் கல்லூரி மாணவனாய் , இந்த நாவலின் இயங்கு ாக ஐக்கியப்பட முடிந்தது.