கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆவதறிவது (கவிதைத் தொகுதி)

Page 1

| _| _ - - - - - -

Page 2

ஆவதறிவது.
(கவிதைத் தொகுதி)
ஸையிட் எம்.எம். பவுரீர் எஸ்.எம்.எம். நளிர்
*சிந்தனை வட்டம்
த.பெ. இல: 01 பொல்கொல்லை 20250, ரீலங்கா. தொலைபேசி / தொலைநகல் O094-81-2497246
282/2008

Page 3
ஆவதறிவது.
நூலாசிரியர் :
பதிப்பு : வெளியீடு :
அச்சுப்பதிப்பு :
ISBN-13
பக்கங்கள் :
AAVATHARVATHU
ஸையிட் எம்.எம். பவரீர், எஸ்.எம்.எம். நஸர் 1ம் பதிப்பு - ஜனவரி 2007 சிந்தனை வட்டம். த.பெ. இல: 01, பொல்கொல்லை 20250, ரீலங்கா. சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு த.பெ. இல: 01, பொல்கொல்லை 20250, ரீலங்கா.
: 978-955-893-86-4
83
Subject : Collection of Tamil Poems
Author : Printers & Publishers:
Edition: Language : ISBN-13 : Pages :
Seyed M.M. Bazheer, S.M.M. Naseer Cinthanai Vattam
CV Publishers (Pvt) Ltd, P.O.Box No: 01, POLGOLLA, 20250. Sri Lanka. 1st Edition January 2008
Tamil
978-955-8913-86-4
83
GSEYED M.M. BAZHEER, 2008
All Rights Reserved. No part of this Documentation may be reproduced of itsed, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electivitic, mechanical, photocopying, recording or otherwise, without the prior writt
permission of the author.

ஆவதறிவது. . .
(கவிதைத் தொகுதி)
இனங்களுக்கிடையே உண்மையான, நீதியான சமத்துவத்திற்கும், ஐக்கியத்துக்குமாக பாடுபடும் அனைவருக்கும்
இந்நூல் சமர்ப்பணம்

Page 4

பதிப்புரை
கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் களான எளப்.எம்.எம்.பவுநீர், எஸ்.எம்.எம்.நளிர் ஆகியோரது கவிதைத் தொகுதியினை “ஆவதறிவது.’ எனும் தலைப்பில் சிந்தனைவட்டத்தின் 282வது வெளியீடாக வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கவிஞர்களான எஸ்.எம்.எம்.பவுதீர், எஸ்.எம்.எம்.நளிர் ஆகிய இருவரும் உடனிபிறந்த சகோதரர்கள். எஸ்.எம்.எம்.பளயீர் தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகின்றார். இவர் கவிஞராக இனங்காணப்படாத போதிலும் கூட சமூக உணர்வு மிக்க ஒரு எழுச்சி எழுத்தாளனாக இனங்காணப்படுபவர். பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிவரும் தமிழ், ஆங்கிலமொழி சஞ்சிகைகள், பத்திரிகைகளிலும், இலக்ட்ரோனிக் ஊடகங்களிலும், இணையத்தளத்திலும் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய நூற்றுக்காணக்கான கட்டுரைகளை எழுதி யுள்ளார். இவரினி கட்டுரைகள் இலங்கையினி தேசியப் பத்திரிகைகளிலும், இணையங்களிலும் மறுபிரசுரம் செய்யப்பட் டுள்ளன. இலங்கையினி முஸ்லிம்களினி பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் கொண்டு செல்வதில் பவுரீரின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. சொல் வீரர்களான இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளைப் போலன்றி, பணத்தையும் விளம்பரத்தையும் மதத்தையும் குறியாகக் கொண்டு செயற்படும்இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் செயற்பாடுகளைப் போலன்றி உணிமையான சமூக நோக்கத்திற்காக எழுதிவருபவர்களுள் இவர் மிகவும் குறிப் பிட்டுக் கூறக்கூடியவர்.
ஆவதறிவது. ሰና

Page 5
கடந்த ஆண்டு நான் பிரித்தானியாவுக்குச் சென்றிருந்த நேரத்தில் இலண்டன் The LangorfHotel இல் நடைபெற்ற ஈழத்து தமிழ் இலக்கியம் தொடர்பான கலந்துரையாடலினி போது நண்பர் பவுரீருடன் தமிழ் இலக்கியம் தொடர்பாக நீண்ட நேரம் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அச்சந்தர்ப்பத்திலே பஷீர் தனது வாலிப பருவத்தில் பல கவிதைகள் எழுதியுள்ளதை அறிந்து கொள்ளமுடிந்தது. அதன் பின்பு ஏற்பட்ட தொடர்புகளின் போது பஷீரினி கவிதைகளை எனினால் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அச்சந்தர்ப்பத்தில் அக்கவிதைகளைத் தொகுத்து நூலுரு வாக்க வேணடும் என்ற எண் விருப்பத்தைத் தெரிவித்தேனி. அந்நேரத்தில் அவர் தனது விருப்பத்தினை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. தனது கவிதைகள் நூலுருவாவதற்கு தகுதியானவையா? எனிற ஐயப்பாடு அவரினி மனதில் இருந்ததை அறிய முடிந்தது. சமகாலத்தில் காணப்படக்கூடிய கவிதைகளுடன் ஒப்பிட்டு அவரினி கவிதைகளை அவருக்கு இனங்காட்டிய போது அவருக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. இப்புத்தகத்தை வெளியிட அனுமதி தந்தமைக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கினிறேன். .
இத்தொகுதியில் நணபர் பவுரீருடையதும், அவருடைய சகோதரர் நளிருடையதும் கவிதை இடம்பெற்றுள்ளன. இருவரும் தொடர்ந்தும் கவிதை எழுத வேண்டும் என்பதே எனினுடைய ஆசை.
சிந்தனைவட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு வாசக நெஞ்சங்களான நீங்கள் தந்த ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மிக்க நன்றி
கலாபூஷணம் பீ.எம்.புனினியாமீனி முகாமைத்துவப் பணிப்பாளர் % ‘சிந்தனை வட்டம் த.பெ. இல: 0 பொல்கொல்லை 20250, Uலங்கா
10-O-2008
ஆவதறிவது* V * XV V MO m . . O6

அணிந்துரை
மட்டக்களப்பு பிரதேசத்தை நினைக்கும் போது முதலில் எனக்கு ஞாபகம் வரும் பெயர் புரட்சிக்கமால்.
1950, 60களில் ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதை எழுச்சிய டைந்தபோது அதன் முக்கிய தூண்களுள் ஒன்றாக நிமிர்ந்து நின்றவர் புரட்சிக்கமால். ஐரோப்பாவின் நோயாளி என்று கருதப்பட்ட துருக் கியை மதச்சார்பற்ற ஒரு நவீன துருக்கியாக மாற்ற முயன்ற முஸ்தபா கமாலை ஆதர்சமாகக் கொண்டு சாலிஹ என்ற தன் சொந்தப் பெயருக்குப் பதிலாக புரட்சிக்கமால் என்று புனைப்பெயர் பூண்டபோதிலும், முஸ்தபா கமால்போல் மதச்சார்பற்ற மேலைமய மாக்கலின் ஆதரவாளராக அன்றி ஆழ்ந்த இஸ்லாமிய உணர்வுமிக்க சமூக சீர்திருத்தக் கவிஞராகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டவர் புரட்சிக்கமால். 1950, 60களில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ உணர்வு ஸ்தாபனமயப்பட்ட சூழலில் அதன் கவித்துவக் குரலாக ஒலித்தவர் இவர்.
1970, 80களிலும் அதன் பின்னரும் மட்டக்களப்பு பிரதேசத்தில்
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிராமங்களிலிருந்து புரட்சிக் கமாலின் இலக்கிய வாரிசுகளாக அவரின் பிறிதொரு கட்ட
ஆவதறிவதுe - - - - - 07

Page 6
வளர்ச்சியாக சிறுகதை எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் பலர் உருவாகினர்.
எஸ்.எல்.எம். ஹனிபா, வை. அகமட், ஓட்டமாவடி அறபாத் ஆகியோர் புரட்சிக் கமாலைப்போல் தங்கள் பிரதேச எல்லைகளைத் தாண்டி சமகால ஈழத்து இலக்கியத்தின் குறிப்பிடத் தகுந்த இலக்கிய ஆளுமைகளாகக் கருதப்படுபவர்கள்.
1980களில் எழுச்சியடைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் வட, கிழக்கில் முஸ்லிம்களின் இருத்தலுக்கும், சகவாழ்வுக்கும் அச்சுறுத்தலாக உருவாகிய பின்னணியில் 1990களில் மேலும் பல இளைஞர்கள் இப்பிரதேசங்களிலிருந்து இலக்கியத் துறைக்குள் ஈர்க்கப் பட்டனர். இவ்வகையில் அனலக்தரின் பெயர் உடனடியாக என் நினைவுக்கு வருகின்றது.
ஒரு வளமான இலக்கியப் பாரம்பரியமுடைய மட்டக்களப்புப் பிரதேசத்தில் இருந்துதான் இக்கவிதைத் தொகுதியின் ஆசிரியர்களான முஹம்மது பஸிர், முஹம்மது நஸிர் ஆகிய இருவரும் இப்போது நமக்கு அறிமுகமாகின்றனர். இது இவர்களின் முதலாவது கவிதைத் தொகுதி. இருவரும் மட்டக்களப்புப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பஸிர் ஒரு சட்டத்தரணி. சமூக முன்னேற்றத்திலும், அரசியலிலும் அக்கறை உடையவர். புலம்பெயர்ந்து இப்போது இங்கிலாந்தில் ஒரு சொலிசிட்டராகப் பணிபுரிகிறார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலை தொடர்பாக அடிக்கடி கட்டுரைகளும் எழுதி வருகிறார். முஹம்மது நஸிர் ஒரு மெளலவி. அத்துடன் ஒரு வணிகவியல் பட்டதாரி. இருவரும் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஸிர் 1970களின் பிற்பகுதியிலிருந்தே கவிதை எழுதிவருகிறார். எனினும் வெளியுலகத்தில் ஒரு கவிஞராக பரவலாக அறியப்பட்டவர் அல்ல. நஸிர் 1980களில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். இருவரும் ஏராளமாக எழுதாவிட்டாலும் இணைந்து ஒரு தொகுதி வெளியிடும் அளவு கவிதையின் மீது ஆர்வமும், அக்கறையும் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
ஆவதறிவது. h− (0ዷ

இரு சகோதரர்களின் முப்பத்திரண்டு கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இருவரின் சமூக அக்கறை, மனிதநேய உணர்வு, யுத்த எதிர்ப்பு, எதிர்கால நம்பிக்கை என்பன இக்கவிதைகளில் பதிவாகியுள்ளன. இவை இத்தொகுதியின் ஆரோக்கியமான அம்சங்கள் எனக் கருதுகின் றேன். அவ்வகையில் சமகால ஈழத்துக்கவிதையின் பொதுவான கருத்து நிலைத்தடத்திலேயே இவர்களும் கால்பதித்துள்ளனர் எனலாம்.
கவித்துவம் என்பது கவிதையின் பொருளிலன்றி அந்தப் பொருளை வெளிப்படுத்தும் மொழியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. அவ்வகையில் இக்கவிதைகளில் கவித்துவம் சார்ந்த ஒரு பொதுவான நொய்மை காணப்படினும், பல இடங்களில் மொழியின் கட்டிறுக்கமும் கவித்துவ வீச்சும் பளிச்சிடுகின்றன. இச்சிறு அணிந்துரையில் அத்த கைய சில வரிகளை எடுத்துக்காட்டி வாசகர்களை இக்கவிதைக ளுக்குள் ஆற்றுப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
பஸிரின் அத்தகைய கவிதை வரிகள் சில:
1. வர்ணச் சிறகு
குலைந்து போகாமல் வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க முனைந்து சிறகழிந்து போனவை இளமைக் கனவுகள்
2. தேவைகளுக்காய்
நான் கைகளை உயர்த்தியதில்லை குனிந்தவர்களை நிமிர்த்துவதற்காக எனது கரங்கள தாழ்ந்திருக்கின்றன மேகங்களில் மனசு மென்மையாய் ஏறிக் குந்தியிருக்கிறது
ஆவதறிவது. KM I P I 09

Page 7
3. உனது முகச் சுடரில் இருள் எனது வீட்டைவிட்டுக் கரைந்தது
4. இப்போதோ
என் மனது கிணற்றை விட்டு சமுத்திரத்தையே
நேசிக்கிறது.
5. மடிப்பிச்சைக்காரன் கூட
நாணுவதுண்டு வாக்குப் பிச்சைக்காரர்களைக் கண்டு
6. மே முதல் திகதி இப்போதெல்லாம் ஏப்ரல் முதல் தேதியாய் இடம் மாறிப்போயிற்று
7. அமாவாசை எனது அஸ்தமனமன்று
பெளர்ணமிக்கான எனது அடியெடுப்பு
இவ்வரிகளில் மேத்தா, வைரமுத்து பாணிக் கவித்துவத்தை நாம் காணலாம். பஸிரைவிட சற்று வெளிப்படையாக உரத்தகுரலில் தன் கவிதைகளில் அரசியல் விமர்சனம் செய்கிறார் நஸிர். அதனால் அவர் பயன்படுத்தும் மொழியும் வெளிப்படையான பிரச்சார மொழியாக இருக்கின்றது. அவரிடமிருந்து சில உதாரணங்கள்:
1. மக்கள் சேவைக்கு
மக்களிடமே மன்றாடும் மனித நேயர்களைப் பாருங்கள் போட்டிபோட்டுக் கொண்டு இவர்கள் வாக்குக் கேட்பதெல்லாம் மக்கள் சேவைக்காகத்தான்
ஆவதறிவது. 10

2. தேசங்களை வரையறுக்கும் எல்லைக் கோடுகள் மானுடத்தை தேசியத்தின் கைதியாக்கிவிட்டன
3. மண்ணை நேசிக்கும் மதியீனர்களே முதலில் மானிடத்தை நேசியுங்கள் ஆயுதங்களை நேசிப்பவர்களே
முதலில் நேசிக்கப் பழகுங்கள்
கவிதைக்குப் பல முகங்கள் உண்டு. இதுதான் கவிதை 66 அதன் ஒரு முகத்தைமட்டும் காட்டி கவிதையை வரையறுத்துவிட (P9 list.
கவிதை வேறுபடுவதைப் போல கவிதை பற்றிய கொள்கை 5ளும், கவிதை ரசனையும் வேறுபடுகின்றன.
ஒருவருடைய அனுபவம், கல்வி, வாழ்க்கை நோக்கு, இலக்கி ப்ப்பயிற்சி, மொழித்திறன், சமூகச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து ஒருவருடைய இலக்கிய நோக்கும், ரசனையும் அமைகின்றன. இது படைப்பாளிக்கும், வாசகனுக்கும் பொருந்தும். தன் இயல்திறனுக் கேற்ப கவிதை படைக்கும் ஒரு கவிஞன் இதோ என் கவிதை என்று தருவதை வாசகன் தன் இயல் திறனுக்கேற்ப வாசித்துப் பொருள் கொள்கிறான். ரசித்து அனுபவிக்கிறான். மதிப்பிடுகிறான்.
ஒரு கவிதை நல்ல கவிதையா இல்லையா என்பது நமது ரசனையின் பாற்பட்டதுதான். பஸிரும், நஸிரும் தம் எண்ணங்களை யும், உணர்வுகளையும் கவிதைகளாகப் படைத்து ஒரு தொகுதியாக இதோ வாசகர்முன் வைத்திருக்கிறார்கள். இனி இவை வாசகர்களுக்கு
ஆவதறிவதுMS 3 V8 KM I SV III

Page 8
உரியவை. தம் திறனுக்குகேற்ப இனி அவர்கள் இவற்றுள் நுழைந்து அனுபவிக்கலாம். மதிப்பிடலாம்.
தம் சமூகக் கடப்பாட்டை தம் கவிதைகள் மூலம் வெளிப்படுத் தியுள்ள பஸிருக்கும், நஸிருக்கும் எனது பாராட்டுகள்.
பேராசிரியர எம்.ஏ. நுஃமான் இந்திய ஆய்வியல் துறை
மலாயப் பல்கலைக்கழகம்
மலேசியா.
25.12.2008
ஆவதறிவது. 12

பிரவேசம்.
பாடசாலையின் இறுதிக்காலங்களில் கவிதை எழுதும் உணர்வு அவ்வப்போது எழுத்துக்களாக பரிணமித்தாலும், என் கவிதைகள் உண்மையில் கவிதைகளாகுமா அல்லது கவிதை படைத்தலில் செயற்பாடாக மாறுமா என்ற கேள்வி எழுந்தபோது என்னைத் தட்டிக் கொடுத்து கவிதையாக்கும் படிமுறையில் நான் கால்வைத்திருப்பதாக திரு. குரூஸ் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டியபோது, கவிதையிலக்கிய விமர்சகனாக, இரசிகனாக மாத்திரம் என்னுள் குறுகியிருந்த கட்டுக்கள் மெதுமெதுவாக விட்டுப் போயின.
ஆயினும் எனது கவிதைகள் அதிகளவில் தன்னுரக்க கவிதை களாகவே வெளிப்படத் தொடங்கின. நான் கற்ற நூல்கள், என்னைப் பாதித்த கவிஞர்கள், சிந்தனைவாதிகள் எனது கவிதைகளில் ஊடுறு வியிருப்பதை நான் உணர்ந்தே எழுதினேன்.
குறிப்பாக பாரதியினால் அதிகம் பாதிக்கப்பட்ட எனது கவிதை பற்றிய சிந்தனைகள் மு.மேத்தா, வைரமுத்து என்றும், டாக்டர்
எம்.எஸ். உதயமூர்த்தியின் தன்னுாக்க கட்டுரைகள். என்று ஒரு தொடர் பாதிப்புகளினூடாகவே கவிதையுருக் கொண்டன.
எனது இளமைக்காலத்தில் எழுதிய கவிதைகள் சிலவற்றிற்கு அங்கீகாரங்கள் பல்வேறு மட்டங்களில் கிடைத்தன. ஏதேனும் ஒரு கவிதை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எனது நண்பர்களின் பாராட்டு தலைப் பெற்று வந்திருக்கிறது என்பதால், தொடர்ந்தும் எழுதலாம் என்று நினைத்து 1970களின் பிற்பகுதிகளிலும், 1980, 1990களிலும்
ஆவதறிவது. 13.

Page 9
அவ்வப்போது சிலவேளை எண்ணங்களை கவிதைகளாக பிரசவித்த அனுபவங்களுமுண்டு. சிசேரியன் செய்த பிரசவங்கள் போல் வலிந்து பிரசவிக்கப் பண்ணியவையுமுண்டு. எவ்வாறெனினும் எனது
எங்களது - கவிதைகள் இன்றைய காலத்தின் ‘அரும்பொருள் காட்சிப்பொருளாக பார்க்கப்படுமா?” என்ற கேள்வியினை அலட்சியம் பண்ணி எங்களின் கவிப்பார்வையை ஒரு சிலரேனும் சிலாகித்துப் பேசமாட்டார்களா என்ற நம்பிக்கையுடன் இதனை வெளியிடுவதில் ஆர்வம் காட்டினோம்.
கவிஞர்களோடு வாழ்ந்தமை, பழகியமை என்ற அனுபவங்களின் தடயங்களில் எனது கவிதைச் சுவடுகளையும் பதிவு செய்யும் ஒரு முயற்சியாக இக்கவிதைத் தடயத்தினை பதிக்க வேண்டிய காலம் தாமதமாகி விடவில்லை என்பதை எனது நண்பர்கள் இடித்துக் காட்டியபோது அலட்சியம் செய்ய முடியவில்லை. மாறாக இன்றுதான் சந்தர்ப்பம் என்னைச் சந்தித்திருக்கிறது. ஐரோப்பிய நண்பர்கள் பலரும் எனது கவிதைகளை படிக்காமல் கூட உங்கள் கவிதை களை வெளியிடுங்கள் என்று கூறியபோதுதான், நண்பர் புன்னியாமீன் இலண்டனில் என்னைச் சந்திக்க நேரிட்டது. நாங்கள் பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதன் விளைவே இந்நூல்.
எனது சகோதரர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் எழுதிய கவிதைகள் மூட்டைகட்டி வைத்திருந்ததை தூசுதட்டி எனது கவிதை மூட்டைகளுடன் சேர்த்தே இரு சகோதரர்களின் கவிதைகளாக வெளி வருவதும், சில கவிதைகள் ஒரே விடயத்தினை ஒரே மாதிரியாக அணுகுகின்ற தன்மையும் எனக்கே வியப்பாகவிருந்தது. வாசகர்களின் பார்வையும் அதனை கவனிக்கத் தவறாது என்ற எதிர்ப்பார்ப்புமுண்டு. சுட்டிக்காட்டுவதற்காக 'தாய், ‘சுவனத்து நுழைவுச் சீட்டு கவிதைகள்.
எனது இளம்பராய காலத்தில்: ரூமேனியா கம்யூனிச ஆட்சியிலிருந்தபோது 'ஒரு இளசின் சமாதானம்' என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்ததால் அதனை நான் தமிழில் மொழி பெயர்திருந்தேன். ஒரு பள்ளிச் சிறுமி சமாதானத்தை தன்னிடமுள்ள பாடசாலை Crayon கலர் கட்டிகளினுடாக தேடுகின்ற மனதினை
ஆவதறிவது. 14

எண்ணி வியந்தேன். இக்கவிதை ஒரு சிறுபிஞ்சின் சமாதான வடிவம் என்பதை விட இதன் கவிதைப் பரிமாணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. எனவே அக்கவிதையினையும் இத்தொகுப்பில் இடம் பெறச் செய்துள்ளேன்.
சுமார் 30 ஆண்டுகளின் பின்பு இன்று இலங்கையின் பள்ளிச் சிறுவர்களும் இவ்வாறுதான் சமாதானத்தை வரைய முனைவார்களா? சமாதானம் என்பது வரைந்துவிடக்கூடியதா? எழிலும், நலமுமிக்க மனித ஜீவியத்தில் வாழ்வதற்கான உதைப்பினை எமது சிறுவர்கள் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்விகள் என்னை உறுத்துகின்றன. சமாதானத்தைத் தேடுகின்ற இலங்கையின் பகைப்புலத்தில் இக்கவிதை அதுவும் சிறுபிள்ளையின் கவிதை பெரியவர்களை, அரசியல்வாதி களை சிந்திக்கப் பண்ணுமா என்ற அங்கலாய்ப்புடன் குழந்தைகளின் குரலாகக் கொண்டு சமாதானப்படத்தை நாமும் வரைவோமா?
... ' எனக்கொரு மனக் குறையுண்டு. நிகழ்காலத்தில் நான் கவிதை எழுதாமலிருப்பது. பல வருடங்களாக கவிதை எழுதுவதை, வாசிப்பதை மறந்திருப்பது. ஆயினும் 1990களில் இடம்பெற்ற தமிழ் மொழி பேசும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை (இப்பதப்பிரயோ கங்களை முதலில் இன அடாவடித்தனத்துக்கெதிராகப் பயன்படுத்திய மறைந்த நண்பர் தராக்கி சிவராமுக்கு - நன்றி) குறித்து எனது பேனா கவிதைகளை பதிக்கவில்லை. ஏனெனில் அந்தத் துயர்களால் எனது பேனாவும் “மையத்தாய்ப்” போய்விட்டது. மீண்டும் அது பீனிக்ஸாய் உயிர் பெறுமா என்பது ஐயமே!
புலம்பெயர்ந்தபின் தமிழ் மொழி மீது ஆர்வம், இலங்கையில் *ற்பட்ட அனுபவங்களால் குன்றிப் போயிற்று. “தமிழன் என்று சால்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கவிதையை கூறி தலைநிமிர்ந்தவர்கள்: கோழைகளாய் பாரதியின் “நெட்டைநெடும் மரங்களாய்” மெளனித்து போனதினால் எனது தமிழ் மீதான ஈடுபாடு என்னையே கேள்விக்குட்படுத்தியது. அந்த ரணங்கள் ஆற பல ஆண்டுகள் எடுத்திருக்கின்றன. ஆயினும் நான் மானுடனாய் பல்வேறு
ஆவதறிவது. 15

Page 10
இனக்கலவரங்களில், யுத்த சூழ்நிலைகளில் அநியாயமாய் அழிக்கப் பட்ட தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்களுக்காக கண்ணிர் சிந்தி மறுகியிருக்கிறேன். இன்றும் மறுகுகிறேன். மானுடம் வெல்ல வேண்டும். மானுடத்தின் மாட்சிக்கு சவால்விடும் வன்முறைகளை எதிர்க்க வேண்டும் என்பதனால் எனது தமிழ்மொழித் தளங்களை மாற்றிக் கொண்டுள்ளேன்.
எனது கவிதைத் தொகுதியில் உள்ள “கற்பனைப்போராளி” என்ற கவிதையில் நான் குறிப்பிடும் 'அத்வைதத்தின் அருக்குழவி என்ற பதம் உண்மையான 'அத்வைத நம்பிக்கையில் அல்லது அது குறித்து நிற்கின்ற ஆத்மீக பின்னணியில் குறிப்பிடப்படவில்லை. எனவே என்னை 'அத்வைதிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்பது எனது வாசகர்களுக்கு ஒரு விநயமான வேண்டுகோள். குறிப்பாக ‘அத்வைத சிந்தனையாளர்களுக்கும், எனக்கும் எவ்வித உடன்பாடும் கிடையாது. மாறாக 'அத்வைத சிந்தனைகள் ஏகத்துவ விரோத சிந்தனையாகவே நான் பார்க்கின்றேன்.
எனது மகனும், மகள்களும் இன்று கவிதை எழுதுகிறார்கள். தமிழ் தெரியவில்லையாயினும் ஆங்கிலத்தில் அவர்களது கவிதைகள் இணையத்தளங்களில், நூல்களில் கூட பிரசுரிக்கப்படுகின்றன என்பது எனது பரம்பரைச் சொத்தை நான் கையளித்துவிட்டேன் என்ற மன ஆறுதலை தருகிறது. கவிதைகள் இப்படித்தான். ஹைக்கூவாய் குறும்பாவாய் இனிவரும் உலகம் சுருக்கமாக சுவையாக பார்க்கும் என்பதற்கு இரண்டு தமிழ் ஆங்கிலக் கவிதைகள் எனக்குப் பிடித்தவை களுடன் எனது கவிதை வாழ்வின் நினைவுகளை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
“உங்கள் முத்திரைகள் பதியும்போது பல முகத்திரைகள் கிழிபடலாம்”
-இரா வேலுச்சாமி"My brain socialist. Myheart anarchist My eyes pacifist My blood revolutionary”
Adrian Mitchell
ஆவதறிவதுa rap a . . . 16

நினைவும். நெகிழ்வும்.
பால்யபராயத்தில் சளசளவென்று தமிழை வாசிக்கக் கற்றுக் கொண்ட வேளையில் திருக்குறள் கற்றுத்தந்து அதிலும் குறிப்பாக “என் நன்றி கொன்ற..” குறளை அழுத்தமாக தன்னலம் கருதியா யினும் மனனம் செய்வித்து அம்புலிமாமா, கண்ணன் போன்ற சிறுவர் சஞ்சிகைகள், நூல்களை வாசிக்க காரணமான எனது தந்தை செயினுலாப்தீன் செய்யது முகம்மது;
தனது தந்தை (எனது பூட்டன்) ஒரு புலவன் எனவும், அவரின் முடிதிருத்தினருடனான பாவினை அடிக்கடி பாடிக்களித்து பெருமிதம் கொண்டு; தனது பெளத்திரன் ஏதோ ஒரு வகையில் வாழ்வில் சிறக்க வேண்டுமென்பதில் கரிசனை காட்டி எனது வாழ்க்கையின் முதற் குருவாயமைந்த பாட்டனார் சீனிமுகம்மது செயினுலாப்தீன்,
கம்பராமாயணமும், மகாபாரதமும் எனப் பல காவியங்களை தவணை முறையில் படுக்கைப்பாயில் கதைகளாக்கி இலக்கியங்கள் மீது எனது பார்வையை திருப்பக் காரணமான எனது தாய்;
திருக்குறளை, பாரதிதாசனை, பாரதியாரை ஆழமாக அனுப வித்து, ரசிக்கவும், தர்க்கிக்கவும் பயிற்றுவித்த, என்னுடன் தோழன் போல் பழகிய எனது அன்பிற்குரிய தாய்மாமன் மர்ஹ"ம் சின்ன லெவ்வை மரைக்கார் ஜுனைட், சிறுவயதில் எனது பாடசாலைத் தமிழ் ஆசிரியராய் வேஷடியுடன் குள்ளமாய் தமிழ் கற்பித்து “நீயே உன்னை அடையாளப்படுத்திக் கொள்” என்று என்னை எனக்குள் தேடவைத்த, "தாத்தாவுக்கு ஒரு யானையிருந்த” கதையை ஓரங்கட்ட உணர்த்திய சம்மாந்துறை மரைக்கார் மாஸ்டர்;
கட்டுரையாக்கமும், தமிழும் கற்பித்த ஜனாப் தெளபீக் ஹஸன் ஆசிரியர், ஆசிரியராக மட்டுமல்ல அறிவூட்டுபவராக, ஒரு மூத்த சகோதரராக வாஞ்சையுடன் தமிழ் போதித்த, எனது கவிதை எழுதும் ஆற்றலை மெச்சி எனக்குள் மறைந்திருந்த ஆளுமையை அடையா
ஆவதறிவது. 17

Page 11
ளங்கான வழிகாட்டிய எனது அன்பிற்குரிய ஆசான் எஸ்.எம். குரூஸ் (முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர்); பாடசாலைத் தோழனாக இளமைக்கால நண்பராக தமிழ் சினிமாப் பாடல்களின் சிருங்கார வரிகளைத் தேடி இலயித்து கவிதை நயம் செய்து களித்த எனது அன்பிற்குரிய மறக்கவொன்னா நண்பன் மறைந்த தங்கவேல் ஜீவகன் (முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக, மாகாண சபை ஆகியவற்றின் கணக்குப் பிரிவு உத்தியோகத்தர்); எனது கவிதைக் கப்பால் எனது தமிழ் ஈடுபாட்டை மதிக்கும் நண்பன் அருளம்பலம் திருப்பதி (மட்டு நகர்) மற்றும் எங்கள் இலக்கியச் செயற்பாடுகளுடன் சேர்ந்தியங்கிய நண்பர்கள் மறைந்த தே. தர்மகுலசிங்கம் (முன்னாள் யாழ்ப்பாண நீதிமன்ற இலிகிதர்) அவரது சகோதரர் கே. சிவராஜா, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கவிதை நண்பருமான நேசன் (செங்காவலன்) மற்றும் நண்பர் செல்வராஜா ஆசிரியர்,
கவிதை இலக்கியங்கள் குறித்து நட்புடன் கருத்துப் பரிமாற் றங்கள் செய்த பொழுதுகளில் மட்டுமல்ல தனது ‘போடியார் வீடு” கவிதையினை சுமந்த தனது "விதிவரைந்த கோலங்கள்” கவிதை நூலினை எனக்கனுப்பிய எனது இளமை ஞாபகங்களை - அவரது கவிதை மீது மதிப்பினை ஞாபகமூட்டிய - அன்றை சமூக முறைமை யினை அச்சொட்டாக வர்க்க முரண்பாட்டுக் கண்ணோட்டத்துடன் வரலாறாக்கிய முதன்மைக் கவிஞர் திலகம் டி. மீராலெவ்வை (அனலக்தர்);
உத்தியோக காலத்தில், பின்னர் பல்கலைகழகம், சட்டக்
கல்லூரி என்ற பல்வேறுபட்ட கால கட்டங்களில் எனது கவிதை
இலக்கிய நண்பர்கள் என பிரேம்ராஜ் (நோர்வே), இனிய நண்பர்
சட்டத்தரணி யாகூப் (கண்டி), சியாட் முஹமட் (பலாங்கொடை),
டாக்டர் அஜ்வத் (ஒட்டமாவடி), முன்னாள் பேராதனைப் பல்கலைக்
கழக விரிவுரையாளர் காசிநாதர், மற்றும் கலாநிதி ஹஸ்புல்லாஹற். அவர்கள், சட்டத்தரணி அப்பாஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
இலக்கிய மஞ்சரி (முஸ்லிம் சேவை) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
கவிதைபாட களமமைத்த நண்பர் முத்துமீரான் (சட்டத்தரணி),
ஆவதறிவது. IS

சட்டத்தரணி ஷேஹ" இஸ்ஸதீன் (பிரதி ஊடக அமைச்சர்), அமைச்சர் நண்பர் ரவூப் ஹக்கீம் அவர்கள் (சட்டத்தரணி), பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதியின் கவிதைகளுடன் எனக்குள்ள ஈடுபாட்டினை ஊரறியச் செய்த கவிஞனும் முன்னாள் பல்கலைக்கழக நண்பனுமான ப. தங்கத்துரை (கல்வித்திணைக்களம் - மட்டக்களப்பு), கவிதையை கிரகிக்கவும் பிறரை இரசிக்க வைக்கவும் தெரிந்த நண்பன் எஸ். இராஜேந்திரன் ஆசிரியர் (கொழும்பு), நண்பன் எம்.ஐ.எம்.முஸாதிக்,
“வந்தாரை வாழவைத்து சொந்த மண்ணில் பிறந்தாரைச் சாகடிக்கும் சிங்காரமான மட்டக்களப்பு சீமையான் வேறென்ன சிரைப்பான்’ என பல ஆவேசக் கவிதைகளை படைத்து கிழக்கின் இளைய தலைமுறைக் கவிஞர்களுள் பிரபல்யம் பெற்று அகால மரணமடைந்த நண்பர் திரு. ஆனந்தன் (சம்மாந்துறை)
எனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக்கும் முயற்சிகளை சுமார் 16 வருடங்களுக்கு முன்பே ஊக்குவித்த நண்பர்கள் சட்டத்தரணி தம்பையா, சட்டத்தரணி தியாகராஜா கவிதைகளை கையெழுத்துப் பிரதி செய்த தம்பி முரளிதரன் (வந்தாறுமூலை), பின்னர் சுமார் 12 ஆண்டுகளின் பின்பு “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என எனது கவிதைகளை கம்பியூட்டரில் பதிவு செய்துதவிய ஏறாவூர் தம்பி றிஸ்வான், எனது சமூக செயற்பாடுகளில் என்றும் துணை நிற்கும் மனைவி, சகோதரன் முபாறக் ஆகியோர் தொடர்ச்சியாய் கொடுத்த நச்சரிப்புக்களின் வெளிப்பாடாய் இறுதியில் புத்தகமாய் உங்களிடம் இதனை கையளிக்கிறேன். இது புத்தகமாக வரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய சட்டத்தரணி நண்பர் ஜபருல்லாஹம் (மன்னார்) மற்றும் அகால மரணமடைந்த இந்திய நண்பர் மர்ஹ"ம் அஸிஸர் றஃமான் என்றும் என் நினைவில் உள்ளவர்கள்.
இறுதியாக- எனது நீண்ட வெளியீட்டு எண்ணத் தொடருக்கு மட்டுமல்ல எனது சகோதரரின் கவிதைகளையும் இத்தொகுப்புடன் இணைத்தேவர, முன்னுரை எழுதி எங்களை இலங்கையின் கவிதைப் பரப்பில் அறிமுகம் செய்யும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் (இந்திய ஆய்வியல் துறை, மலாயப் பல்கலைக்கழகம்) துரிதமாகவும்
ஆவதறிவது. . I9

Page 12
உற்சாகமாகவும் இதனை உங்களின் பார்வைக்கு காண்பிக்க காரணமான நண்பர் பீ.எம். புன்னியாமீன் ஆகியோருக்கு எங்கள் நன்றிகள்.
ஏன். இதனை பொறுமையாக வாசிக்கும் உங்களுக்கும் எங்களது முன்நன்றிகள்
இவ்வண்ணம்
6767ö67ğb.6rüb. Uağr B.A. (Cey) சட்டத்தரணி (இலங்கை) சொலிசிட்டர் (இங்கிலாந்து - லேல்ஸ்)
150, Merton Road
Wimbledon
London
AW191EH Tel: 0044- 208543 6600 Fax: 0044 - 208 543 3198 Mobile: 0044 - 793 909 5467 E-mail: shazeerayahoo.co.uk bazeerandco(a)aol.com
ஆவதறிவது. 20

ஆவதறிவது.
ஸையிட். எம்.எம். பஷீர்

Page 13
உள்ளே.
நானும் ஒரு கோடி மனிதன் (23) மந்திரக்கோல் (26) என் இனிய தாயே (28) மனதை மறந்து. (30) பாதுகைகள் (32) மெழுகுவர்த்தி (33) கிணற்றை விட்டு (34) பாலைச் சிலிர்ப்பில் பிறந்த சோலை (35) கற்பனைப் போராளி (36) பிணவாடை (38) தாஜ்மகால் (39) விபுலானந்தா (40) தேர்தல்கள் (42) றம்ளான் பிறை (43) குழந்தையாய் (45) மனித ஜாதி (47) மே தினம் (49) ‘குலிஷ்தான்’ (51) மனிதச் சந்திரன் (53) எனது தாத்தா (55) LDT560TÜ LuLb! (57)
ஆவதறிவது 22

நானும் ஒரு கோடி மனிதன்
நரம்பு மையத்தில் நினைவு எறும்பு வெகு நிதானமாய் ஊறத் தொடங்கிற்று
நான்:
கூட்டுக்குள்ளே கூடுபாய்ந்த வாழ்க்கைச் சரிதத்தில் நிகழ்கால விருந்தாப்பியன்
சிலமணி நேர சினிமாப் பொழுதில் குழந்தை எட்டும் கிழப்பருவமாய் சென்ற வாழ்க்கை. சிறிய பொழுதுகள்: இரவுப் பாயில் படுத்து இறந்து காலை வெயிலில் குளித்து மீண்டெழும் எனது புராணம் என்னையொத்த கோடி மனிதரின் வாடிக்கை வாழ்க்கை
ஆவதறிவது.

Page 14
ஸையிட். எம்.எம். பஷீர்
வேடிக்கைத் தூசியை தட்டி உதறி தேடிக்கை பிடிக்க நினைத்தவை ஆயிரம்: இரைகளை இழந்து தூண்டில்கள் தொங்கின: ஆயினும் மனசு
மாமிசச் சுவையில் என்றும்
மல்லாந்து கிடந்தது
،، நாளை விழுமோ” என நகரும் பைசா” வாய் எனது மனதில்
கனவுக் கோபுரம் இத்தனை நாளும் நின்று பிடிக்கிறது.
வர்ணச்சிறகு
குலைந்து போகாமல் வண்ணத்துப் பூச்சியை பிடிக்க முனைந்து சிறகழிந்து சிதைந்து போனவை இளமைக் கனவுகள் என்
இனிய நினைவுகள்.
ஆவதறிவது. 24

தேவதைகளுக்காய் நான் கைகளை உயர்த்தியதில்லை குனிந்தவர்களை நிமிர்த்துவதற்காக எனது கரங்கள் தாழ்ந்திருக்கின்றன மேகங்களில் மனசு
மென்மையாய் ஏறிக் குந்தியிருக்கிறது.
விட்டிலாய் கட்டிலைக் கட்டித் தழுவி விம்மிய இளமைக்கு விளக்கம் கண்ட பின் சிறகிழந்த நொய்மைத் துயரில் சுமைகள்
பட்டியலாய் சுற்றி வரித்தது சொப்பன சுகங்கள்
சலித்தே கழிந்தன .
ms“
ApruuP brub. U6
ஆவதறிவது.
25

Page 15
ளைபயிட். எம்.எம். பவரீ'
மந்திரக்கோல்
தரும்புத் திரைகளே இன்று உருகும் போது இந்த பிரம்புத் தட்டிகளா உனைத் தடுத்து வைக்க முடியும்.
நினைத்ததைக் கட்டி வைக்க மோஸஸின் கையில் மாத்திரமல்ல இடையனிடம் கூட இருக்கிறது மந்திரக்கோல் அசைப்பவன் நம்பினால் அசைவன அசையும, முதலில் நம்பிக்கையை மனசில் நட்டுவை.
உன்னிடமும் இருக்கிறது எழுது கோல் அசைத்து விடு மந்திரத்தால் கட்டுண்டு மககள நகாவாாகள
ஆவதறிவது. 26

aparus,
எழுதுகோல் தானே இருண்ட குகையில் குனிந்து திரிந்தவனை அடியும் முடியும் அற்றவனாக்கிற்று
விட்டில்கள் கூட வினையறிந்தும் விளக்கில் வீழ்வது விளையாட்டிற்காகவல்ல வெளிச்சம் தேடத்தான் இலக்கை தேடிக் கொள்
இழப்புகள் சகஜமே. கட்டிலை விட்டு கால்களை பூமியிற் பதி கதவுகளை மூடிக் கொண்டால் ஒளி ஒழிந்துவிடுவதில்லை ஆரிய கிரகணமும் சொற்ப வேளைதான்: வெளியே உன்னைத் தரிசிக்க வாய்ப்புகள் வாசலில் நிற்கின்றன.
எம்.எம். பஷீர்
ஆவதறிவது.

Page 16
ஸையிட். எம்.எம். பஷீர்
என் இனிய தாயே
உனது சொப்பனங்களின் பிரகாசங்களை தொலைவிலுள்ள தாரகைகள் கூட கடன் வாங்கிக் கொண்டன மின்னுவதற்காக
எனது நினைவுகளுக்காய் உனது கனவுகளையே அடகு வைத்த உன் பாதாரவிந்தங்களில்தான் சொர்க்கம் தனது வாயிலையே வைத்திருக்கின்றது.
ஆவதறிவது.
28

தூசுப் புயலில் எனது விழிகள் துடித்த போது உனது விழிகள் சோகம் சுமந்து நகர்த்திய நதிகள் பனி மலையாய் என்னிதயம் நிறைந்து இறுகிப் போயிற்று.
உன் இதயம் நெகிழ்ந்து திருவாய் நழுவி என்னில் சொரிந்த புகழ்ச்சிப் புஸ்பங்கள்: விண்ணைச் சாடிய மனிதச் சுவட்டின் வெற்றிக் களிப்பாய் என்னை ஆழ்த்திய இனிய ஷனங்கள்.
அவ்வப்போது
உனது உதடுகள் உற்பவித்த சாபங்கள்: நீ துப்பிய வெற்றிலைக் குருதிபோல் ஒப்புக்காக உனது வாயில் சிவந்த வார்த்தைகள் விபத்துக்களை விலக்கிய "சிக்னல் விளக்குகள்.
என் இனிய தாயே என்னைச் சரித்திரமாக்க சரிந்த உன் சரிதையை எனது பிஞ்சுகளும் நெஞ்சில் சுமக்கும். ஆவதறிவது.
apové2U, mu),7ub, unifát
29.

Page 17
ளைபயிட் எம்.எம். பவுரீர்
மனதை மறந்து.
சலனமுறும் குப்பி விளக்கின் மங்கிய ஒளியில் விழிக் கனாக்களில் ஆயிரம் நினைத்தாள்.
ஒழுக்காய் மழைத் துளிகள் உடலில் சிலிர்க்கையில் அணைப்பை ஏங்கி உடம்பு குளிர்ந்தாள்
ஆவதறிவது as 30

நினைவை இழந்து கனவில் கரையும் இவளின் பெரு மூச்சு அடுப்பை அடிக்கடி ஊதி எரித்தது.
பாதையில் கிளம்பும் சைக்கிள் மணியால் பல நாள். பாதைவரை அவள் பாதங்கள் நீண்டன.
நீண்டவள் வெறுமையில் நித்தம் மீண்டதும் கதவு நிலைகளே தாங்கிப் பிடித்தன
கால தேவனின் இராப் பொழுதுகள்
வளின் சாந்திக்காய் அமைதிப் பூஜை அனுதினம் செய்தது.
ஆனால், அவனோ, தன்னை அவள் மறப்பதற்காக தன்னை அவன் மறப்பதற்காய் எங்கோ போனான்.
apowo-Pu Arubarub, uofd
ஆவதறிவது.
31

Page 18
நாங்கள் வழிபடத்தான் வந்தோம் வாழ்வு தேடி அல்ல
ஆண்டவனின் முன்னால்
சில வேளை
செருப்புக்கள் கூட குறுக்கீடு செய்கின்றன.
இதயத்தை தொலைத்தவர் இங்கும் கூடுவர் அவர்களில் சிலர் பழைய ஜோடுகளை புதிதாக மாற்றும் வித்தை பயின்றவர்
நிழல் தேடியவனின் அழல் தேடுவதற்காக
இவர்கள் இங்கும் வந்தனர்.
எங்கள் பாதுகைகள் நாட்டின் காவலன் அல்ல அது எங்கள் பாதங்களின் சேவகர்கள்.
ஸையிட். எம்.எம். பஷீர்
பாதுகைகள்
ஆவதறிவது.
32

மெழுகுவர்த்தி
வெள்ளையுடையுடன்
நீ, தனித்தே நிற்கின்றாய் ஒரு விதவையாய்,
உனது முகத்தில் ஒளி சுடரும் போது நீ ஏன் அழுகின்றாய்?
பிறருக்காக நீ கண்ணிர் சொரியும் போது உன்னையே அழித்துக் கொள்கின்றாய்.
உனது முகச் சுடரில்தான்: இருள் எனது வீட்டை விட்டுக் கரைந்தது.
உன்னைத் தீண்டும் போதுதான் உனது கண்ணின் வெம்மை என்னை கலங்கவைக்கிறது.
சலனங்களோடு, நீ ஒளி சிந்தும் போதுதான் எண்ணங்களை மனது மென்மையாக ஜனிக்கிறது.
சோகமாய் நீ அழிந்து போனபின் தான் உனக்குள்ளும் ஒரு "ஆத்மா” இருந்தது எனபதை
உணர்கிறேன்.
ஆவதறிவது. 33

Page 19
உனது நெருக்கத்தின் பின்னே
வசந்தங்களை
எனது கண்கள் தரிசித்தன. மழைக்கால குளிரின் கத கதப்பு " உன்னால் தானே: என்னுள்
சிலிர்த்தது.
இரவும் பகலும் ஒன்றையொன்று
துரத்தி விளையாடும் போது
உன்னால்தானே நானும் - அவற்றுடன் என்னை மறந்தே நகர ஆரம்பித்தேன்.
காற்றாடிக்கு நூலானாய் என்றிருந்தேன் அந்தரத்தில் எனைவிட்டு அறுத்துக் கொண்டாயே எனது தத்தளிப்பை உணராமல்.
இப்போதோ என் மனசு கிணற்றை விட்டு சமுத்திரத்தையே நேசிக்கிறது.
உன்னை விடவும் உன்னை விடவும் உலகம் பரந்தது உய்க்கவும் துய்க்கவும் விளிம்புகளற்றது.
ஸையிட். எம்.எம். பஷீர்
கிணற்றை விட்டு
ஆவதறிவது.
.34

9. - aparvu P. Yderd, wat
பாலைச் சிலிர்ப்பில் பிறந்த சோலை
அரேபியப் பாலை ஒரு நாள் சிலிர்த்தது ஒரு ஜீவ ஊற்று ஜனனமாயிற்று: நகரத் தொடங்கிற்று அதன் பாதம் பட்டு பாறைகளும் சில்லிட்டன
சத்திய தரிசனம் தேடிய விதைகள் சிதைந்து போன தோலைத் தாண்டி
இதயம் குளிர
தாகம் தீர்த்தன: கருவறை பிளந்து விண்ணை உரசும் விருட்ஷமாய் விழித்தன, தூர ஞானப் பார்வை பரப்பி கிளைகள் கிளர்ந்தன புஸ்பங்கள் புன்னகைத்தன: மெளனமாக சருகுகள் உதிர்ந்தன.
நிலத்தைப் பெயர்த்து நதியின் பாதையை வேர்கள் சுமந்தன
ஈரம் இளக்கிய இரு மருங்கெங்கும் சத்தியச் சுவடுகள் சாட்சியாய் அமைந்தன புஸ்பங்கள் புன்னகைத்தன மெளனமாக சருகுகள் உதிர்ந்தன.
ஆவதறிவது. 35

Page 20
ஸையிட். எம்.எம். பஷீர்
கற்பனைப் போராளி.
பஞ்சுப் பொதியாய் அவன் சிகை குவிந்து கிடக்கிறது வாழ்க்கைச் சமுத்திரத்தில் ஆழ்ந்து மூழ்கி எழுந்த படிவங்களின் பிரதிபலிப்பு: சடலத்தின் சிற்பச் சிதைவுகள் கடந்து வந்துவிட்ட திருப்பதியின் சாயை உதட்டில் வெளிறித் தெரிகிறது. அவன் எது செய்தான் அத்வைதத்தின் அரும் குழவியானதைத் தவிர நாடகத்தில் இவன் ஒரு பாத்திரமே.
ஆவதறிவது 36

ஞானப் பாலை நக்கி நா தடவிய பூனை, தொடர் கதையாய் இவனை சந்தித்துச் சலித்துவிட்ட ஆசாபாசங்கள் இத்தனைக்கும் இவன் சளைக்காது உருளும் சதுரங்கப் பாய்ச்சி.
இளமையின் முறுக்கேறிய நரம்புகளின் சிலிர்பபில் அவனின் ஆத்மா சூடுபிடிக்கிறது கண்களில் அதே ஒளியில்லை வெந்துவிட்ட தன் உடலை வெற்றுணர்வுடன் அலைக்கும் இவனா அவன், ஊஹூம் அவனா இவன்?
பஞ்ச பூதங்களின் நண்பன் மரமாய் கட்டையாய் வாழ்ந்தவை யாவும் சமத்துவம் பேசி இவனை தோள். தட்டும் அத்வைதத்தின் கற்பனைப் போராளி இவன்
у M»4ri *w'' tub,MTub, uQ6
ஆவதறிவது.
37

Page 21
விறைத்துப்போன இரவுகளில் நாய்கள் உரத்து வாதம் பண்ணும் நாலு கால்கள் ஆட்சி பிடிக்கும் மானுடக் குரல்கள் அந்தரத்தில் மாயமாக ஆவியாகும்.
இயந்திரக் குழாய்கள் காறித்துப்பும் காதுகள் பொத்தி கன்னத்தில் அறையும் செவிப்பறைகள் குருதி கொட்டும் மீதி இரவை கண்கள் மறக்கும் இதயம் கையில் துடித்துச் சாகும். சமுத்திர மத்தியில் துடுப்புத் தவறும் சலித்து மெலிகையில் பொழுது புலரும் காதுகள் ஊர்ந்து தெருவிற்குப் போகும் கிசுகிசுக் குரல்களில் பிணவாடை வீசும்
ஸையிட். எம்.எம். பஷரீர்
பிணவாடை
ஆசிதறிவது.
38

oove' ' srderð, uafð
in
bTeg DehsT6)
இமைத்திரைகள் LILLIL-55 நினைவுகளை நிஜமாக்க உணர்வுத் தீயில் தகித்து நிற்கும் விழியோர மழையூடே நிலவுக் குளிரில் நின்று நடுங்கும் தாஜ்மஹாலைக்கண்டு சாஜஹானின் அதரங்கள் சப்தித்தன
எனதுயிரே என்னிதயம் உனது மாளிகையானபின் நம்மைத் தள்ளி வைக்கும் தாஜ்மஹால் தேவையோ?
ஆவதறிவது. 39.

Page 22
வையிட். எம்.எம். பஷீர்
விபுலானந்தர்
‘விபுலானந்தர்” உன் பெயரில் கூட மரியாதை ஒட்டியிருக்கிறது.
தனி மனித தமிழ்ச் சங்கம் நீ மதுரைக்குப் பின்பு.
சஞ்சீவி மலையை தூக்கிவரவில்லை நீ உன் முதுகில் சங்கப் பலகையே ஏறி அமர்ந்து கொண்டது.
ஆவதறிவது a 40

நீ துறவியோ! நான் மறுப்பேன் தமிழ்க் கன்னியை காந்தர்வம் செய்தவன் நீ: இல்லையென்றால் முத்தமிழுக்கு உன்னையே காணிக்கையாக்கியவன் நீ
மட்டு வாவியில் மகரயாழை நீ இட்டு வைத்ததனால் பூரணை நிலவில் தேனிசை வந்து - காதில் இன்றும் பாய்கிறது
மடம் கொடுத்தே தமிழ் நாக்கில் இடம் பிடுங்கியவன் நீ கிழக்கில் கதிரவனுக்கு வர்ணம் தீட்டியவன் வயல்களையும் வரப்புகளையும் உடைத்துக் கொண்டே கல்விமடை திறக்க வைத்தவன் நீ.
உன் கல்லறை மலர்வரிகள்-உன் இதயக்கமலத்தின் இறுதி மரணசாசனம்.
ஆவதறிவது.
41.

Page 23
ளைபயிட். எம்.எம். பஷீர்
தேர்தல்கள்
முன்பெல்லாம் தேர்தல்கள் திருவிழாக்கள்
இப்போதுமென்ன திருவிழாக்கள்தான் பட்டாசுக்குப் பதிலாக ஆட்களைக் கூட வெடிக்க வைக்கிறார்கள்.
மடிப்பிச்சைக்காரன் கூட நாணுவதுண்டு வாக்குப்பிச்சைக்காரர்களைக்கண்டு எப்போதாயினும்
தம்மிடம் கூட
பிச்சைகேட்கும்
ஆட்கள் உண்டு என்பதால்.
ஆவதறிவது* a osa ao 42

றம்ளான் பிறை
நீ முக்காடு விலக்க, எட்டி உனை நான் காணும்வரை எனது வானம் சென்ற வருடம் முழுவதும் இருளில்தான்
இன்று
பெளர்ணமியோ
என் முகத்தில்
‘இந்த நாளின் இனிய திரும்புகை மீண்டும் நிகழ்க’ ஜன்ம சாபல்யத்திற்காய் கண்மணியே அடுத்த வருடமும் உனைககான எனது விழிகள் பூத்தே கிடக்கும் “ இன்ஷா அல்லாஹற் ”
இந்த வாழ்க்கையை கசக்கிப்பிழிந்து கந்தலாகாமல் கபணுக்கு காப்பாக்க கண்மணியே
காட்சியாகிச் சாட்சியாகு - அங்கும் உனைக்காண எனது விழிகள் பூத்தே கிடக்கும் “ இன்ஷா அல்லாஹற் ”
ஆவதறிவது. V− 43

Page 24
ஸையிட். எம்.எம். பஷீர்
இந்த நாளின் அந்த நாள் 'பத்று இல்லையென்றானால் முந்தை நாளின் முதுசங்கள் இழந்திருப்பேன். அந்நன்றிக்காய் கண்மணியே - எங்கும் உனைக்கான எனது விழிகள் பூத்தே கிடக்கும் “இன்ஷா அல்லாஹற்’
"இன்ஷா அல்லாஹர் - இறைவன் நாடினால் கப்று - புதைகுழி கயன் - இறந்த உடலை சுற்றிய ஆடை பத்று - முக்கிய யுத்தம்
ஆவதறிவதுa - - - -

-- ജ്
தெருவில் சிவப்பு நிறம் “ தள்ளி நில்” எனும் அபாய அறிவிப்பு ஆனால் உன்னைத் தழுவியிருக்கும் சிவப்பு ஆடைகள் ‘அள்ளிக் கொள்'
எனும்
அழகிய விளம்பரம்.
குழந்தையாய்
ஆவதறிவது.
45

Page 25
w வையிட். எம்.எம். பவரீர் உனது மதர்த்த விழிகளில் எனது பார்வையைத் தொலைத்ததால் எனது வழிகள மறந்து போயின.
கவிதைகளை ரசிப்பதில்லை என்றாய் நீயே ஒரு அழகிய கவிதை உன்னை நீயே ரசிக்க முடியுமா ஆதலால், நான் உன்னை ரசிக்கிறேன்.
உனது மனசு அவ்வப்போது
கடிதங்களாக
எனது கரங்களை ஸ்பரிசிக்கும் போது நானோ பண்டிகை நாள் உதயத்தில் குதூகலிக்கும் ஒரு குழந்தை.
ஆவதறிவது. 46

மனித
சேரித் தெருக்களிள் வற்றிய முலைகளில் தொற்றிய குழந்தைகள் வானக் கூரையின் வெறுமையைத் தரிசிக்கும்
குப்பைத்தொட்டியாய் மனித உடல்களில் இந்த மனிதர்கள் வர்க்கக் கொடுமையின் எச்சமாய் தொங்க சுகந்தக் காற்று மறந்தும் இவர்களைத் தீண்ட மறுத்ததால் நடுத்தெரு இவரது முதுசொமாய் தொடர தெருவோரங்களில் சுவராய் போனவர்கள்.
எச்சில் இலையை மோப்பம் பிடிக்கும் இவர்களின் பெண்கள் பல வேலைகளில் மூலை முடுக்கில் எச்சிலாய் ஆனவர்கள் தெருவோர ‘நாய்களின்’ உணவாய்ப் போனவர்கள்.
, andard. upad .
ஜாதி
ஆவதறிவது.
47

Page 26
எங்கேயாவது காட்சிப் பெட்டிகளில் விதம்விதமாக கண்டதை நினைத்து கனவில் சுகித்தவர்கள். வாழ்க்கை முழுவதும் கனவில் கரைந்தவர்கள். 'காக்கை குருவி எங்கள் சாதி என்று தெருப்புழுதியில் உழல்பவர்கள் பாவம்! மனித ஜாதியாய் ஆனவர்கள்
குற்றம் ஏதும்
புரிந்தாலாவது கூண்டுக்குள்ளேயும் சுகமாய் வாழலாம் குற்றமின்றி இந்தத் தண்டனை கொடுத்தவர் யார்? இவர்கள் விதியைச் சமைத்தவர் யார்?
ஸையிட், எம்.எம். பஷீர்
ஆவதறிவது.
48

மே தின
இடையர்கள் மந்தைகளை (மே)-ஏய்க்கும் தினம்
பூகோளப் பந்தை நெம்பு கோலின்றி உருட்டும் கரங்கள் கோடி கோடியாய் தம்மை இணைத்து தேச வரம்புகளை ()ெதறித்து எறிந்ததை உலகைச் சமைத்தவன் உதிரங்கள் ஒர்நாள் வீதிக்கு தீந்தை விரித்திட்டதை கொண்டாட கால்பேஸ் திடலில் டப்பாங் கூத்தாய் மாலைப் பொழுதில் ம(ய)ங்கிப் போகும் தொழிலாளர் தினம்
LD
ஆவதறிவது.
49

Page 27
கோரோஸ் கோசங்கள் குரல்வளை உலர்ந்து முக்தி சித்தித்ததாய் முடங்கிப் போகும் கோசங்களின் பின்னால் வேசங்கள் அந்தப்புரத்தில் சுகமாய்.
ஒரு ரூபாய் காட்சியாய் அரங்குகள் எங்கும் கனவுற்பத்திகள் தொழிலாளர் இனத்தை மலினப்படுத்தும் நிஜக் கண்கள் இருட்டில் குருடாய்ப் போகும்.
மே தினம் மெலிதாய் நாட்காட்டியில் கனதியிழந்து கழிந்து போகும் தீரமிகு வரலாறு கட்டெறும்பூர் கல்லாய் தேய்ந்து போயிற்று. மே முதல் திகதி இப்பொழுதெல்லாம் ஏப்ரல் முதல் தேதியாய் இட்ம் மாறிப் போயிற்று.
ஸையிட், எம்.எம். பவுரீர்
ஆவதறிவது.
60

‘குலிஷ்தான்”
பாரசீகத்து
பக்கத்து வீட்டின் வெண் மணற்பரப்பு முற்றத்தில் செந்நிறமாய் குருதி ஊற்றெடுக்கும் போது
5 TLD ஏகாதிபத்திய பெருமை கண்டு வாய் பிளந்திருக்கிறோம்.
குருதித் துளிகள் விழும் சத்தம் தீக் கனலாய் தூக்கம் கலைந்து நாமும் அவர்களுக்காய் சஞ்சலப் படகில் சஞ்சாரம் செய்கின்றோம்
ஆவதறிவது. 51

Page 28
மானுட புஸ்பங்களின்
குலிஷ்தானில் குரங்குகள் நுழைந்ததால் உலகத் தேசப்படத்தில் கோரத்தின் வடிவங்கள்
புதிது புதிதாக வரையப்படுகின்றன.
ஏகாதிபத்திய சமுத்திரங்களில் அமிழ்ந்து போவதற்கு சுதந்திரம் கனத்த இரும்பல்ல அது காற்றடைத்த மிதவை
அங்கே ஜயபேரிகை முழங்கும் போது மானுட புஸ்பங்கள் மலரும் போது
எமது இதயம்
விம்பி மலரும்
அந்த நாள்
எமது சிறைப்பட்ட உணர்வுகளுக்கு விடுதலை நாள் எமது போராளித் தோள்களின் புனர் ஜன்ம தினம்
opovuo. srtb.srtb. us.
‘குலிவுத்தான்” - பூஞ்சோலை இக்கவிதை இரஸ்யாவிற்கெதிரான ஆப்கானிஸ்த்தான் முஹாஜிதீன்கள் குறித்து எழுதிய கவிதை
ஆவதறிவதுX «O » «K «O
52

Mu' '. Tubarub, und
மனிதச் சந்திரன்
எந்தத் திரையும் என்னை மூடிவிட முடியாது கரிய மேகமும் - எனக்கு கரி பூச முடியாது துண்டு துண்டாய் அரியப்பட்டாலும் துண்டு துண்டாய் வளரத் தொடங்குவேன்.
என் மீது
உன்னால் கல்லெறிய முடியாது! சொல்லெறிந்தவர்களே சோர்ந்து போயினர். குளத்தில் கல்லெறிவதால் என் முகத்தை சிதைக்கவா முடியும்?
ஆவதறிவது. 53

Page 29
தெரிந்து கொள்! கதிரவனால் கூட என்னைப் பொசுக்கமுடியாது ஒளியூட்டமுடியும் ஒழிக்க முடியாது
என்பாதை எப்போதும் ஒன்றுதான் அமாவாசை எனது அஸ்த்தமனமன்று பொளர்ணமிக்காய் எனது அடியெடுப்பு
இருட்டை
விரட்டுவதால் உலகுக்கே நான் விளக்கு ஆயினும் உனக்கேன் நாள் விலக்கு! புரிந்து கொள் மனித மூச்சு முடியும் வரையிலும் எனது பேச்சு
முடியாதிருக்கும்.
ஸையிட். எம்.எம். பஷீர்
ஆவதறிவது.
54

எனது தாத்தா
அட! வைக்கம் பஷீர் குஞ்சலி மரைக்கான் உனக்கு தாத்தாவல்ல ஆனால் உன் தாத்தாவுக்கொரு யானையிருந்தது
என் தாத்தாவுக்கும் எத்தனை ஒருக்கள் இருந்தன தெரியுமா? அவனது கபுர் மேலும் கீழுமாய் ஆயிரம் பேரை அடக்கிக் கொண்டிருக்கலாம் அவ்வப்போது அவனது எலும்புகள் மண்வெட்டி கிளறி மேலே கிளம்பலாம் ஆயினும் எனது தாத்தாவுக்கு எத்தனை ஒருக்கள் இருந்தன தெரியுமா?
ஆவதறிவது. 55.

Page 30
காணியென்றான் வரப்பென்றான் எழுவான் கரைக்கும் படுவான் கரைக்கும் இடையில் தனக்கும் சொந்தமென்றான் என்னைப் பற்றிய உனது கனவுகளை மரண சாசனத்தில் நான் சுவீகரீத்துக் கொண்டேன்.
ஆவதறிவது அறிவன்று உலை வேவதறிவதேயறிவு என்று புதுக்குறள் சொன்னவன் நீ தாத்தா!
உனது ஒருக்கள் எனக்குக் கனவுதான். ஆனால் உனது கனவுகள் எனது பாத்தியதைகள்
ஸையிட். எம்.எம். பஷீர்
குறிப்பு:-
எனது தாத்தா இறந்தது குறித்து எழுதிய கவிதை
ஆவதறிவது.
ქ26

சமாதானப் படம்!
பளபளக்கும் பிரகாசமான நற் பல்லர்ண கட்டிகள் என்னிடமிருந்தன
நிறங்களிலே சூடான, குளிர்ந்த வர்ணக்கட்டிகள் என்னிடமிருந்தன காயமுற்றோரின் குருதியாய் என்னிடம் சிவப்பு இருக்கவில்லை மரித்தோரின் முகமாய் எனினிடம் வெள்ளை இருக்கவில்லை சுடுமணற்பரப்பினாய் எனினிடம் மஞ்சல் இருக்கவில்லை.
ஜீவியத்தின் மகிழ்வாய் என்னிடம் ஆரேனிஜ் இருந்தது இளமையின் மொட்டாயப் என்னிடம் பச்சை இருந்தது தெளிந்த விசும்பாய் என்னிடம் நீலம் இருந்தது சாந்தமாய், கணவாயப் என்னிடம் இளஞ்சிவப்பு இருந்தது நான் அமர்ந்தேனர் சமாதானப் படத்தை வரைந்தேன்
ஒரு ருமேனிய சிறுமி 1970களில் எழுதிய
ஒரு கவிதையின் தமிழாக்கம் இது
தமிழாக்கம்: எஸ்.எம்.எம். பவர்
ஆவதறிவது. 57

Page 31
ஆவதறிவது
S8

ஆவதறிவது.
(கவிதைத் தொகுதி)
எஸ்.எம்.எம். நவீர்
59

Page 32
எஸ்.எம்.எம். நளிர்
என்னுரை இது முன்னுரை
கவிதை எழுதுவதற்கென்றே சிலர் எழுதுகோலை தூக்குகின்றனர். இதனால் நிழல்கள் கூட நிஜங்களாகின்றன. ஆனால் இவன் நிழல் களை நிஜங்களாக்கும் கலை தெரியாதவன். அதனால் தான் நிஜங்க ளையே நிழலாட வைக்கும் முயற்சியில் இறங்கினான். நிழல்களை நிஜங்களாக்கும் கவிஞர்களுக்கு வர்ணங்கள் ஏழாகலாம். ஆனால் நான் நிஜத்தையே நம்பி கோலெடுத்தவன். வர்ணங்களின் அலங்காரத் தேரில் உலாவரத் தெரியவில்லை. ஒரு காலத்தில் கவிதைகள் தனியொரு வர்க்கத்தின் தனியுடைமையாகவே இருந்தன. ஆனால் ‘இலக்கியம் மக்களுக்கே”என்ற புரட்சியின் பின்னர் இன்று பொதுவு டைமையாகிவிட்டது.
சராசரி மனிதனின் சபையிலும் அறியப்பட வேண்டியதுதான் இலக்கியங்கள் என்ற கருத்து வலுவடைந்த போது ஏகபோக கவிச்சக் 1."வர்த்திகளின் ஆட்சிகள் ஆட்டம் கண்டன. கோட்டைகளை : ரசர்கள் அரணாகத்தான் அமைத்துக் கொண்டார்கள். ஆனாலும் அரசனுக்கு கோட்டைகளையே இலக்கணமாக்கி விட்டார்கள் சிலர். இன்று கோட்டை இல்லாதவன் அரசனில்லை என்ற விதிகள் விலக்காகிவிட்டன. முடியாட்சியே முழுகிப் போய்விட்ட பிறகு நிலா முற்றத்தில் இருந்து நிஜ முற்றத்திற்கும் கவிதைகள் உதயமாயின.
கவிதைக்கு வரையறைகள் சிறை அல்ல, ஆபரணம் தான். ஆனால் ஆபரணங்களையே அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒன்றுதானே. வரதட்சணைக்கு வழி இல்லாமல் கன்னிப் பெண்களை பாழடிப்பது போல் வரையறைகளுக்காக கவிதையினை அடைத்து வைத்த காலம் கடந்து விட்டது. வரதட்சணைக்கு எதிராக எழும் போர்க்குரல் வரைய
ஆவதறிவது. 60

எஸ்.எம்.எம். நவீர் றைக்கும் எதிராகவும் எழுந்ததன் விளைவே இது. யாரோ அன்னிய னுக்காக - அறிமுகம் இல்லாதவனுக்காக இறுதிவரை விவரணக் கவிதை எழுதியவர்கள் பக்கத்தில் இருப்பவனை, பரிச்சயமானவனை புறக் கணித்து விட்டார்கள். ஆனால் இன்றைய யுகத்தின் கவிதைகள் யாப்பிலக்கணத்திற்கு உட்படாதவைகூட உறங்கிக்கிடப்பவனையும் உசுப்பி விடுகின்றது. இதுதான் காலத்தின் தேவையும், மக்களின் இலக்கியமுமாகும்.
தன் காதலிக்காக தாஜ்மகாலைக் கட்டியவன் மாத்திரம் தான் காவியநாயகன் என்ற நிலைமாறி, தன் காதலுக்காக குச்சுவீடு கட்டியவனும் காவியநாயகன் தான் என்பது இப்போது உணரப்பட்டு விட்டது. படையெடுத்து பகைவரை அடக்கிய புரவலருக்கு துதி பாடுவதுதான் பாவலருக்கு பெருமை என்ற நிலை மாறி வாழ்வதற்கு போராடும் வக்கற்ற இளைஞனைக் கருவாகக் கொண்டதும் கவிதை தான் என உணரப்பட்டுவிட்டது.
கனவான்களின் மனம் குளிர்வதையே நோக்கமாகக் கொண்ட கவிஞர்களோ காலம் சென்று விட்டார்கள். பணத்துக்கு பாக்களால் பாய்விரித்த பரத்தை கவிஞர்களும் காணாமல் போய்விட்டார்கள். பலருக்குப் புரிந்தால் அது உரைநடை, சிலருக்கே புரிந்தால்தான் அது கவிதை என்ற தப்பான எண்ணங்களை மாற்றி பரந்துபட்ட மக்களை அரவணைக்கத் தெரியாதவையோ பாமரனையும் விழிப்பூட் டாதவையோ இலக்கியங்களே அல்ல என்ற புரட்சிச் சிந்தனை தவிர்க்க முடியாதவையே என்ற கவியுக வளர்ச்சிப் போக்குக்கு நாங்கள் களமமைக்கின்றோம்.
ஆம்! அன்றிருந்த உரைநடை இன்றில்லை. அன்றிருந்த நாடகத்தமிழ் இன்றில்லை. ஆனால் கவிதை மட்டும் மாறக் கூடாதா?
மக்களே! நீங்களே தீர்ப்பளியுங்கள்.
மெளலவி எஸ்எம்எம்நஸிர் (ஜமாலி) B.COM
ஆவதறிவது. - 61

Page 33
எஸ்.எம்.எம். நளிர்
உள்ளே. நீயும் ஒரு நிருபரே தான் (63) விலைவாசியா விண்கலமா? (65)
நேயம் (67)
தேர்தல் களம் (68) என்ன பொருத்தம் (70)
போர்க் கொடி (73)
மனிதனின் விலை (75)
மனித நேயம் (77)
அவன் (79)
ஜனநாயகம் (81)
சுவனத்து நுழைவுச் சீட்டு (82)
ஆவதறிவது- a - r - - - - - - - - - -- . . 62

a ',
Ariff
நீயும் ஒரு நிருபரேதான்
ஓ! இரவு ராணியே - என் காதுகளில் வந்து கிசுகிசுக்கின்றாயே? உனக்கு நான் இரத்த தானம் செய்ததற்காக நன்றி சொல்கின்றாயா?
td.......
நேற்றிரவு நசுங்கிச் செத்த - உன் சொந்தச் சகோதரிக்காக என்னை எச்சரிக்கின்றாயா?
ஆவத 62/. . . . . .
63

Page 34
எளப்.எம்.எம். நளிர்
கச்சேரி வாய்ப்பிழந்த . . வித்துவான்கள் போல் - நீயுமுன் இசை ஞானத்தை
96)6.8FLDITs அரங்கேற்றுகின்றாயோ?
ஒஹோ. புரிந்துவிட்டது ஒரு கப் சாயாவுக்கே உளறி விடும் சிலரைப்போல் - என் இரத்தத்தைக் குடித்ததனால் எதிர் வீட்டு ரகசியத்தைத் தானே கிசு கிசுக்கின்றாய்.
ம்.மொழிதான் புரியவில்லை ஆனாலுமென்ன
அசைவுகளையே கிசு கிசுக்களாக்கும் எமக்கு - உன் கிசு கிசுக்கள் எம்மாத்திரம்.
இரவு ராணியே! இனி நீயும் ஒரு நிருபரேதான் சந்தையில்
கிசு கிசுக்களே அதிகம் விலை போவதால் - உன் கிசு கிசுக்கள் கூட இனி மேல் செய்திகளாகிவிடும் கவலைப் படாதே.

arraroandar du, gorod
விலைவாசியா விண்கலமா?
விலைவாசியே நீயுமோர் விண்கலம் தான் நீ வெளியிடும் கழிவுப் பொருள் தான்
இங்கே பெருமூச்சாக.பெருமூச்சாக. வெளியேற்றப்படுகின்றது.
விலைவாசியே! உயர உயரத்தானே உன் வேகமும் உயர்ந்து. உயர்ந்து.
ஒ
உன்னையும் அதோ அதோ வென அண்ணாந்து தானே பார்க்க முடிகின்றது.
நீயும் திட்டமிடப்பட்டு ஜாக்கிரதையுடன் தானே உயர்த்தப்படுகின்றாய்.
விலைவாசியே!
கீழ் மத்தி மேலென உனக்கும்
மூன்று பிரிவுகள் தானே.
ஆவதறிவது. m 65

Page 35
மேல் தட்டின்
உயர்வுக்காக கீழ் இரண்டும் எரிந்து விழுகின்றனவா எரித்து வீழ்த்தப்படுகின்றவா?
உன்னை உயர்த்தியவர்களோ மெளனம் சாதிக்கிறார்கள் 1.
நீ வான் வெளியில்
எதைத் தான் தேடுகின்றாய்?
இலக்கே இல்லாத - உன் பயணத்திற்கு எல்லைதான் எது? இறங்கத் தெரியாத உனக்கு உயர்ச்சி ஒன்றுதான் நிரந்தரமோ
புவியீர்ப்பு சக்தியைத் தான் கேள்விப்பட்டிருந்தோம் - ஆனால் புவி உந்து சக்தியை புரிய வைத்ததே - நீதானே
அண்மையில் இருந்த போதே ஈர்த்திழுக்க முடியாத புவியின் ஈர்ப்பு சக்தியை
இனிமேலும் நாங்கள் நம்பத்தான் வேண்டுமா?
புரிந்து கொண்டோம் உன்னை ஈர்த்திழுக்கும் ஒரே சக்தி மக்கள் ஈர்ப்புசக்தி தான். அது மையம் கொண்டால் உன் வரைவிலக்கணமே மாற்றப்பட்டுவிடும், ஜாக்கிரதை.
எஸ்.எம்.எம். நளிர்
ஆவதறிவது.
66

- - 5 ۔ ت۔ ۔ ۔ ۔ ڈ gravi s tigre), 2add
நேயம்
உன் தாயை
நான் தூசிக்கவில்லை ஏனெனில் என் தாயை நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிப்பது - என் தாயை மட்டுமல்ல தாய்மையையும் தான் அதனால் தான் பெண்மையே - எனக்கு மென்மையாய் தாய்மையாய் தோற்றமளிக்கிறது.
நான் நேசிப்பது என் தாய் மொழியை மட்டுமல்ல - பிறர் தாய் மொழியையும் தான் அதனால் தான் மொழிகளே - எனக்கு இனிமையாய்
பரிந்துணர்வாய் புரிந்து போகின்றது.
ஆவதறிவது. 67

Page 36
எளப்.எம்.எம். நளிர்
தேர்தல் களம்
மக்கள் சேவைக்கு மக்களிடமே மன்றாடும்
மனித நேயர்களைப் பாருங்கள்.
போட்டி போட்டுக் கொண்டு இவர்கள்
வாக்கு வரம் கேட்பதெல்லாம் மக்கள் சேவைக்காகத்தான்.
ஆவதறிவதுwas wo 68

மனித நேயம் செத்து விட்ட தென்று யார் சொன்னார்கள்! தேர்தல் காலங்களில் நீங்கள் உலா வந்ததில்லையோ?
இதோ! சென்ற தேர்தலில் உரிமைக்காக உயிர் கொடுக்க உறுதி பூண்டவர்களைப் பாருங்கள்.
அடுத்த தேர்தலிலும் அதே உயிரை
மீண்டும்
பணயம் வைத்து வோட்டு வரம் கேட்கின்றார்கள்
D... . . . . மக்களின் மறதியை மூலதனமாக்கி அவர்களின் அப்பாவித்தனத்தில் அரியாசனம் ஏறத் துடிக்கும் மக்கள் தொண்டர்களில் உரிமை கீதமும் கடமை நாதமும் காதைப் பிளக்கவில்லையோ?
07ubub. g6
ஆவதறிவது.
69

Page 37
எளப்.எம்.எம். நளிர்
என்ன பொருத்தம்
அரசியல் வாதிகளுக்கும் சினிமா நடிகர்களுக்கும்தான் எவ்வளவு ஒற்றுமை
அங்கே சினிமா நடிகர்கள்
திரைகளுக்காக சாயம் பூச எங்கள்
அரசியல் வாதிகள்
தினசரிக்காக இதைத்தானே செய்கிறார்கள்.
சினிமாவில் மாத்திரம் தானா செயற்கைக் காட்சிகள் சில விழாக்களுக்காக அரசியல் வாதிகளும் அவ்வப்போது அரங்கமைப்பதில்லையா?
ஆடம்பரங்களுடன் ஆரம்பமாகி தொடக்கப் பூசையுடன் அடங்கிப் போனவைகள் புதிய சினிமாவிற்கான அறிவிப்புகள் மாத்திரம் தானா? எங்கள் அரசியல் வாதிகளின் திட்டங்கள் பற்றிய தீர்மானங்களும் தான்.
ஆவதறிவதுøssø «øst
70

நாயக வாய்ப்பு இழந்தவர்களின் முகவரிகள் மட்டுமல்ல முகங்கள் கூட மறக்கப்படுவது நடிகர்களோடு அரசியல்வாதிகளுக்கும் பொருத்தம் தானோ?
இரட்டை வேடங்களில் சினிமா நடிகர்கள் மட்டுமல்ல எங்கள் அரசியல் வாதிகளும் கை தேர்ந்தவர்கள் தான் இதனால் தானே அரசியல் உலகில் அவர்கட்கு
தொடர்ந்தும் கால் சீட்டுக்கள் ஒப்பந்தமாகின்றன.
சினிமா நடிகர்களோ அறிமுகமானதும் ஆட்டம் போடுகிறார்கள் எங்கள் அரசியல் வாதிகளோ அவைக்குள் நுழைந்ததும் ஆடத் தொடங்குகிறார்கள்.
சண்டைக் காட்சிகள் சினிமாவில் மட்டும் தானா இன்று நாடாளுமன்றத்திலும் சகஜமாகிவிட்டதே!
எளப்.எம்.எம். நளிர்
ஆவதறிவது.
71

Page 38
நடிகர்களுக்கோ ரசிகர் மன்றங்கள் மாலை மரியாதை காட்ட இங்கே அரசியல்வாதியின் தலையை கிடைக்கின்ற சந்தர்ப்பத்திலாவது குனிய வைக்கும் முயற்சியில் சில மன்றங்கள் மகிழ்ந்துதானே போகின்றன? பொன்னாடை போர்த்தி
தொடரும் தோல்விக்குள் துவளாமல் நிற்க அந்த நடிகர்களுக்கு ரசிகர்கள் வாய்ப்பது போல் எங்கள் அரசியல் வாதிகளுக்கும் வாய்ப்பதுண்டு - சில தியாகத் தொண்டர்கள்
ஆஹா !
என்ன பொருத்தம் எங்கள் அரசியல் வாதிகளும் சினிமா நடிகர்களும் இவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதால் தானோ இவ்விரண்டு வீட்டாரும் அடிக்கடிச் சம்பந்தம் பேசிக் கொள்கின்றனர் நிஜ வாழ்க்கையில்
எளப்.எம்.எம். நபீைர்
ஆ வதறிவது.
Z2

o pró
போர்க் கொடி
பிரித்தாண்ட
பிரித்தானியர்கள் இன்றில்லை தான் ஆனாலுமென்ன நம் சுதேச வாரிசுகள் அதை நன்றாகவே கவனித்து கொள்கின்றார்களே
உங்கள் கரங்களோடு உறவு கொள்ளுமவர்கள் உங்கள் வயிறுகளையல்லவா விரோதிக்கின்றார்கள்.
உங்கள் கையும் வயிறும் வேறு வேறுதான் ஆனாலுமென்ன வயிறு எரியும் போது தனியாகவா எரிகின்றது
உங்கள் கரங்கள் உருவாக்கியவை - இன்று அவர்களுக்காக இருக்கலாம் ஆனாலுமென்ன நீங்கள் உருவாக்கியதே உங்கள் வயிற்றிற்காகத்தானே.
உங்கள் வயிற்றைக் பகைத்துக் கொண்டு கரங்களை நேசிக்கும் அவர்களுக்காகவா உங்கள் கரங்கள் இப்போதும். இப்போதும்
ஆவதறிவது. 73

Page 39
அந்தோ! உங்கள் கரங்களில் இருக்க வேண்டியது அவர்களின் சுகபோகத்திற்கான உழைப்புக் கொடியா? அல்லது அவர்களின் சுரண்டலுக்கெதிரான போர்க் கொடியா?
எளப்எம்எம், நளிர்
ஆவதறிவது « a
74

7 m.
batub, sardi
மனிதனின் விலை
மண்ணுக்கும் பொண்ணுக்கும் விலையேறிக் கொண்டேயிருக்கிறது ஆனால் மனித உயிர்கள் மாத்திரம் மலிவாகவே விலை போகின்றன
மனித உயிர்களின் கொள்வனவுச் சந்தையில் ஆக்கிரமிப்பாளர்களும் ஆதிக்க வெறியர்களும் போட்டி போட்டுக் கொண்டாலும் மனித உயிர்களின் விலை மட்டும் ஏன் ஏறாமலிருக்கின்றது?
இன்று
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைவது மனித உயிர்களின் விலை மாத்திரம் தானே.
மனித உயிர்களின் கொள்வனவுச் சந்தையில் ஆக்கிரமிப்பாளர்களும் ஆதிக்க வெறியர்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறார்கள். இன வெறியர்களும் மத வெறியர்களும் போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.
ஆவதறிவது.
25.

Page 40
எஸ்.எம்.எம். நளிர்
ஆனாலுமென்ன மனித உயிர்களின் விலை மட்டும் வீழ்ச்சியடைவதுதான் விதியாகி விட்டதே.
தேவையின் அதிகரிப்பு விலையை அதிகரிக்கு மென்பது மனித உயிர்களின் விடயத்தில் மாத்திரம் புற நடை விதியோ?
மிருக வதை பற்றி மூக்கால் அழுபவர்கள் மனித வதை பற்றி அலட்டிக் கொள்வதில்லை
ஆறாம் அறிவையே அடியோடு வெறுக்கும் ஆதிக்க வெறியர்கள் ஐயறிவையே ஆசிக்கின்றார்கள் அதனால் தான் மிருகங்களை மாத்திரமே நேசிக்கின்றார்கள் போலும்
ஆறாம் அறிவை வெறியால் இழந்து விட்ட ஆறறிவு ஜீவிகள் மத, இன, ஆதிக்க ஆக்கிரமிப்பு போதையில்
புத்தி ஜீவிகளை புதை குழிக்கு அனுப்ப புறப்பட்டதன் விளைவு தான் ஆறறிவு மனித உயிர்களின் விலை மலிந்து போய்விட்டதோ!
ஆவதறிவது. 76

魏郡、
“ 'gb,ጣdዕ ፴ፍrÙፉ .
மனித நேயம்
மனித நேயம் இன்று ஆயுள் கைதியாய் அவதிப்படுகின்றது மொழிகள் மோதிக் கொள்கின்றன. சாதிகள் சண்டையிடுகின்றன. இனங்கள் இணங்க மறுக்கின்றன.
தேசங்களை வரையறுக்கும் எல்லைக் கோடுகள் மானுடத்தை தேசியத்தின் கைதியாக்கி விட்டது.
மொழி வெறியும் இன வெறியும் தேசியத்தினுள்ளும் மானுடத்தை பங்கு போட்டு படை திரட்டுகின்றன.
ஆட்சியாளர்களும் ஆதிக்க வெறியர்களும் ஆட்டம் காணாமலிருக்க அடிக்கடி
விதைக்கும் வித்துக்கள் தானே எம்மை மோதச் செய்கின்றன.
ஆவதறிவது.
zク

Page 41
ஓ! என் இனிய சகோதரனே உனது சகோதரனின் உதிரத்தை
தங்களுக்கு உரமாக்கி கொண்டோரை இன்னுமா நீ இனங்காணவில்லை
ஓ! என் இனிய சகோதரனே நரபலி கொடுக்கும் ஆதிக்க வெறியர்கள் இன மொழித் திரைக்குள் Si6OLILDTu LD60pus நீயும் நானும் உதிரத்தை ஒட்டிகிறோம்
ஓ! என் இனிய சகோதரனே நீயும் நானும் மனித இனம் தான் ஆதிக்க ஆசைகள் உனக்கும் இல்லை எனக்கும் இல்லை அப்படி இருந்தும் நீயும் நானும் ஆதிக்க வெறியரின் “அடியாள்” ஆனதேன்.
ஓ! என் இனிய சகோதரனே போதும்! போதும்! உன் அடி மனதில் முனங்கிக் கொண்டிருக்கும் மனித நேயத்தை இனியாவது விடுதலை செய்.
எஸ்.எம்.எம். நஸீர்
ஆவதறிவது.
78

அவனுக்கே அவன் புரியாத போது அவன் புதிரானது மட்டும் எப்படிப் புதுமையாக முடியும்?
புரியாதவைகள் புதுமைகளல்லதான் - ஆனாலும்
புதுமைகளும் புரியாமல்தானே அறிமுகமாகின்றன இங்கே.
அவனை மற்றவர்கள் புதிராக்கும் வரை
அவனை அவன் புரிந்துதான் இருந்தான் - ஆனால்
அவன் புதிராக்கப்பட்ட போதுதான் அவனுக்கு அவனே புரியாமல் போனது.
கனவுக் கோட்டைகள் மட்டுமல்ல நினைவுக் கோட்டை கூட கனவாகிப் போன போதுதானே அவனே அவனான்.
அவனுக்கே விரோதமாகும் அவன் வயிற்றைக் கூட அவன் கவனித்துக் கொள்வதோ போர்க் காலங்களில் மட்டுமேதான் அதுவும் சமாதானங்கள் சாத்தியப்படாத போது
f .'ಶಿ நளிர்
96)60T
ஆவதறிவது.
79

Page 42
அவனைத் தேடியவர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்
ஆனாலவன் அவனையல்லவா மூடிக் கொண்டிருக்கிறான்.
அவனையே அவனுக்கு புதிராக்கி விட்டு இங்கே அவனைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் - சில புண்ணியாத்மாக்களின் புலமையே தேய்கிறது.
அவன் அவனென்பதை ஆட்சேபிக்கும் சிலர் அவனைத் தாமாக நினைத்துத்தான் அவனை அவனுக்கே புதிராக்கி புரியாமல் ஆக்கி விட்டார்கள்.
நண்பர்களே! அவன் அவனாக இருப்பதையும் ஆமோதியுங்கள் அவனின் அவனுக்கும் சுதந்திரம் கொடுங்கள் அது வரைக்கும்
அவன் புதிராகவே இருக்கட்டும்.
எளப்.எம்.எம். நளிர்
ஆவதறிவது as 88
80

varvarðard, 66vj
ஜனநாயகம
ஐந்தாண்டுக்கோர் முறையே மலர்ந்து மணம் வீசும் - இந்த ஜனநாயகப்பூ இடைக்காலங்களில் - வெறும் காகிதப் பூவாகவே காட்சிக்கு வைக்கப்படுகின்றது.
இந்த ஜனநாயகப் பூவையே காகிதப் பூவாக்க
ஜனங்கள்
மீண்டும் மீண்டும் சம்மதித்து அளிக்கும் வாக்கு மூலம் தானே - இந்த வாக்குப் பதிவுகள்
அந்தோ 1 மக்கள் ஜனநாயக உரிமையன்றோ “ஜனநாயகர்” களுக்காக தேர்தல் வேள்வியில் பலிகொடுக்கப்படுகின்றது
ஆவதறிவது. 81

Page 43
எஸ்.எம்.எம். நளபீர்
சுவனத்து நுழைவுச் சீட்டு தாயே
விடுதலையென்றதும் வீறிட்டு அலறுவது வேறந்தச் சிறைவாசத்தில்
தாய்மையின் சிறையில் மட்டுமா உந்தன் உதிரத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தேன். விடுதலைக்குப்பின் வீட்டுக்காவலிலும் உந்தன் உதிரம்தானே என்னை உப்பதைத்தது
நான்விழியால் பேசியபோதெல்லாம் மொழியால் வியாக்கியானம் செய்தாயே அதையெங்கே கற்றுக் கொண்டாய்?
நான்
திக்கிப் பேசியதையே கன்னல் மொழியென்றாய் தத்தி நடந்தயைப் பார்த்தே ராஜநடையென்றாய் எந்தன் பொய்ப் பற்களைத்தானே மெய்யான முத்தென்றாய்
தாயே உண்மையில்
|f வித்தியாசமாகவே
ரசித்திருக்கின்றாய்
ஆவதறிவது. 82

நான் சிரித்தபோது சிரித்தாய் அழுதபோது துடித்தாய் என்றும் நீ எனக்காகவே வாழ்ந்தாய்
தாயே இன்று நான் உனக்காக வாழக்கூடாதா? இல்லையில்லை அதுவும் எனக்காகத்தான் ஆம் உந்தன் திருப்திதானே எந்தன் சுவனத்து நுழைவுச் சீட்டு
nadrubatub. gadó.
ஆவதறிவது.
83

Page 44


Page 45
69 (5 66T பாரம் பரியமுடைய பிரதேசத்தில் இருந்து தொகுதியின் ஆசிரி பஸிர், முஹம்மது ந இப்போது நமக்கு அ இவர்களின் முதலாவ இருவரும் மட்டக்கே பிறப்பிடமாகக் கொன சட்டத்தரணி. சமூக அரசியலிலும் அச் புலம்பெயர்ந்து இப்ே ஒரு சொலிசிட்டர கிழக்கிலங்கை முள நிலை தொடர்பாக அ எழுதி வருகிறார். மு மெளலவி. அத்துடன் பட்டதாரி. இருவரும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் எம்.ஏ. நுஃமா
ISBN: 978-955-8913-86-4
 

DT 60T இலக் கியப் மட்டக் களப்புப் து தான் இக்கவிதைத் யர்களான முஹம்மது ஸிர் ஆகிய இருவரும் றிமுகமாகின்றனர். இது து கவிதைத் தொகுதி. ளப்புப் பிரதேசத்தைப் ண்டவர்கள். பஸிர் ஒரு
முன்னேற்றத்திலும், 58660) (D 9d 60)Luj6). U. போது இங்கிலாந்தில் ாகப் பணிபுரிகிறார். ஸ்லிம்களின் அரசியல் அடிக்கடி கட்டுரைகளும் முஹம்மது நஸிர் ஒரு ண் ஒரு வணிகவியல் சகோதரர்கள் என்பதும்
'60T