கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சினமா சினமா ஓர் உலக வலம்

Page 1


Page 2


Page 3

சினமா! சீனமா! ஓர் உலக வலம்
கே. எஸ். சிவகுமாரன் பதிவுகள்
மீரா பதிப்பகம் 57ஆவது வெளியீடு 191/23 ஹைலெவல் வீதி கொழும்பு - 06. தொலைபேசி : 2513336

Page 4
சினமா! சினமா! ஓர் உலக வலம் சினமா பற்றிய கே. எஸ். சிவகுமாரனின் பதிவுகள் கிடைக்குமிடம் : 21, முருகன் இடம் pod வீதி வழியாக, கொழும்பு - 06, Ggsr. G|_1 : 2587617 LÓ. 9. kssivan. l Cðjurno.com முதலாம் பதிப்பு : 28.04.2006 மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு . 06 தொ.பே 2513336 ஈ-குவாலிட்டி கிராபிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் 315, ஜம்பட்டா வீதி, கொழும்பு - 13. தொ.பே 2389848 விலை : 200/-
Cinema! Cinema Ore Ulagavalam by K.S. Sivakumaran available () 21, Murugan Place, Off Havelock Road, Colombo. 06, T.P : 2587617 First Edition : April 28,2006 Meera Pathippakam 191/23 Highlevel Rd, Colombo - 06, T.P: 2513336. E-kwality Graphics (Pvt) Limited 315, Jampettah St, Colombo - 13. T.P : 2,389848 Price: Rs. 200/-

உள்ளே.
10,
ll.
12.
3.
14.
15.
16.
7.
முன்னுரை . W
என்னுரை. vii
கன்னட சினமா 20 ஆம் நூற்றாண்டு . 1.
கன்னட சினமா : க்ரிஷ் கஸ்ஸரவல்லி . 6
மலையாள சினமா ஜி. அரவிந்தன் .3 r a . . . . . . . . . . as e s 11
மலையாள சினமா : நான்கு படங்கள் . 17
அஸ்ஸாம் சினமா : ஒர் அழகிய பெண்ணியப் படம் . 22
இந்திய சினமா பிராந்திய மொழிப் படங்கள் . 27
ஹிந்தி சினமா (B) பிக்ரம் சிங் படம் . 32
தமிழ் சினமா : பூமணியின் படம் . 34
சிங்கள சினமா பிரேமரத்னவின் படம் . 38
சமஸ்கிருத மொழி சினமா : ஜி.வி. ஐயர் . 42
இந்திய சினமா : பெண் நெறியாளர்கள் . 44
பம்பாய் பட விழா : பெண் நெறியாளர்கள் . 48
பல மொழிகளின் பட நெறியாளர் ஷியாம் (B) பெனி(G)கல். 52
பல் மொழி நடிகை : ஸ்மிதா பட்டேல் (மராட்டி). 57
இந்திய சினமா திரைப்படங்கள் சில . 61
குறுந்திரைப்படங்கள் : (B) பி. லெனின், கா.சிவபாலன் . 64
பிரிட்டிஷ் சினமா : அயர்லாந்து நடிகர் . 68

Page 5
18.
19,
20.
21.
22.
23、
24.
25.
26,
27.
கனேடிய சினமா : ஜேம்ஸ் கமரூன் . 74
உலக சினமா : பல்வேறு வெளிப்பாடுகள் . 78
உலக சினமா : காமஞ்சார்ந்த படங்கள் . 82
உலக சினமா மேலும் சில படங்கள் . 86
உலக சினமா இன்னுஞ் சில படங்கள் . 90 உலக சினமா'சில துணுக்குகள் . 95 உலக சினமா : சில அனுபவங்கள் . 98 உலக சினமா : சில் பதிவுகள் . 101
உலக சினமா : சில செய்திகள் . 105
தமிழ் சினமா : முன்னைய பிறமொழி இசை . 109
iv

முன்னுரை.
ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் திரைப்படத்துறை சார்ந்த நூல்முயற்சிகள் மிக அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கான தேவை வாசக மட்டத்தில் அதிகமாக இருந்தாலும் கே.எஸ்.சிவகுமாரன், தம்பிஐயா தேவதாஸ், உமா வரதராஜன், மாரி மகேந்திரன் போன்ற ஒருசிலரே சினமா துறையில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
இந்த வகையில் சினமா பற்றி கே.எஸ். சிவகுமாரன் சிலகாலங் களுக்கு முன்னர் எழுதிய அசையும் படிமங்கள்' எனும் நூல் அத்துறையின் தொழில் நுட்பவியல் தொடர்பிலான பல தகவல்களை வாசகர்களுக்கு விரிவாக எடுத்தியம்பியது. இந்திய சினமாவுக்கும் அப்பால் உலக சினமா என்னும் விரிந்த தளத்தினுள்ளும் பிரவேசித்து நூலினை ஒரு மூச்சிலேயே முழுமையாகப் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆவலை இந்நூல் எம்முள் வளர்க்கின்றது.
உலக சினமா பற்றிய துணுக்குகள், அது பற்றிய ஆசிரியரது அனுபவங்கள், செய்திகள், தகவல்களோடு உலகத்திரைப்பட செல்நெறி பற்றியும் இந்நூல் பேசுகின்றது. உலகத்திரைப்பட விழாக்களில் இடம்பெற்ற உச்ச பலன் எய்திய திரைப்படங்கள் மற்றும் வேற்று மொழிகளில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்திய கலைத்துவமிக்க திரைப்படங்கள் ஆகியன தொடர்பிலான திறனாய்வும் இடையிடையே இந்நூலினை அணி செய்துள்ளன.
ஆசிரியரே கூறுவதுபோல சர்வதேச ரீதியில் திரைப்படக் கலை யின் போக்கும் வளர்ச்சியும் எவ்வாறாக அமைகின்றது என்பதை அறிந்து கொள்ள ஒரு உசாத்துணை ஆவணமாகவும் இந்நூல்

Page 6
அமைந்திருப்பது மிகவும் சந்தோசம் தருகின்றது. இந்நூலின் வரவில் குறிப்பிடத்தக்க அமிசமாகவும் அது விளங்குகின்றது.
வெவ்வேறு உலகத்திரைப்பட விழாக்களில் இடம்பெற்ற திரைப் படங்களின் பட்டியலையும், உலக மற்றும் இந்திய உன்னத திரைப் படங்களின் பட்டியலையும் தலைசிறந்த இயக்குனர்கள் பெண் நெறியாளர்கள் மற்றும் அவர்களது சாதனைகள் பற்றிய தகவல்களையும் இந்நூல் உள்ளடக்கு 1றது.
இத்திரைப்ப்டங்கள் எல்லாவற்றையும் பார்ப்பதிலும் அவை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதிலும் தொகுப்பதிலும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் பெரும் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டிருப்பது பாராட்டிற்குரியதும் முன்மாதிரியானதும் ஆகும். இந்நூலினை ஆசிரியர் எழுதுவதற்கான தகைமைகள் என நூலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பட்டியல் இத்துறையில் அவரது பிரவேசத்திற்கும் பெற்ற பெயரிற்கும் உந்து சக்தியாகி சேவகஞ் செய்துள்ளமையையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக அவர் பயணித்த கலை இலக்கிய உலகத்தில், அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன், அவரது ஆங்கிலப் புலமையும் ஆற்றலும் "சினமா! சினமா! ஓர் உலகவலம்" எனும் இந்நூலின் அறுவடையிலும், ஆரோக்கியத்திலும் பெருஞ் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளன. ஒரு சாதாரண வாசகன் கூட இந்நூலின் ஊடே அதை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
எதிர்காலப் பாடத்திட்டத்தில் சினமா உள்ளடக்கப்படவுள்ள சேதியானது பரந்த தளத்தினூடாக சினமா உள்வாங்கப்பட வேண்டிய தேவையினை வலியுறுத்தி நிற்கின்றது. அத்தகைய சவால்களை ஏற்றுக் கொள்ளத்தக்க உசாத்துணை நூல்கள் தமிழில் இனித்தான் உருவாக்கப் படல் வேண்டும். அத்தகைய நூல்களின் அறுவடை எதிர்காலத்தில் சாத்தியமானதே என்பதை கட்டியம் கூறுவதாக 'சினமா சினமா ஒர் உலகவலம்' எனும் கே. எஸ். சிவகுமாரனின் இந்நூலின் வருகை அமைந் திருப்பது மகிழ்ச்சிக்குரியதே. கொழும்பு. -எஸ்.ரஞ்சகுமார். 1 7.04.2ծ006
vi

என்னுரை.
இந்த நூலை நான் தருவதற்கான காரணங்கள் இரண்டு.
திரைப்படத்துறை சம்பந்தமாக முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இப்பொழுது அக்கறை காட்டப்பட்டு வருகிறது. பாடசாலை பாடத் திட்டங்களிலும், ஊடகம் என்ற பொதுத் தலைப்பின் கீழ் திரைப்படத் துறை பற்றியும், மாணவர்கள் கற்க வேண்டிய நிலமை உருவாக இருக் கிறது. பல்கலைக்கழகங்களிலும், ஊடகத் துறை சம்பந்தமான விரிவுரை வகுப்புகளிலும் மாணவர்கள் திரைப்படத்துறை சம்பந்தமாக சிறிதள வேனும் அறியவேண்டியிருக்கிறது. ஆயினும் இவை சம்பந்தமாக தமிழ் மொழியில் பல நூல்கள் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் நாட்டில் விரல்களுக்குள் அடக்கக் கூடிய எண்ணிக்கை கொண்ட நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் நமது நாட்டில் இவற்றின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு
எனது "அசையும் படிமங்கள்" என்ற நூல் சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்ததை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். இந்த நூலுக்கு வரவேற்பு இருந்தபோதிலும், பரவலாக விற்பனையாகவில்லை. இதற்குக் காரணம் நமது நாட்டின் தமிழ் புத்தக விநியோக முறை இன்னும் சீராக அமையாததுதான் என்று சொல்லவேண்டும்.
இந்த நூலில் (சினமா சினமா ஒர் உலகவலம்) கலைத்துவமான படங்கள் என்று சொல்லக்கூடிய பிற மொழிப் படங்கள் தொடர்பான பல தகவல்களும் திறனாய்வும் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றை வாசகர்கள் படித்து அறிந்துக்கொள்வதனால் உலகத் திரைப்படப் போக்குகள் ள்வ்வாறு படிப்படியாக வளர்ச்சி பெற்ற நிலையில் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளமுடியும். தவிரவும் தமிழ் மொழி
vii

Page 7
மாத்திரம் தெரிந்த வாசகர்கள் இந்த நூலில் இடம்பெறும் விபரங்களை நேரடியாகவே தமிழில் படித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த நூல் வெளிவருவதற்கான இரண்டாவது காரணம் திரைப்படத் துறையும், ஏனைய கலை இலக்கிய அறிவுத் துறைகளில் ஒரு பகுதியாக அமைவதனாலும், இலக்கியங்களிலிருந்து திரைப்படங் கள் உருவாக்கப்பட்டு இருப்பதனாலும், இந்த நூலின் மூலம் இரண்டு விதமான பயன்பாடுகர்யும் வாசகர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நாட்டின் முன்னணி சிறுகதை ஆசிரியர்களின் ஒருவரும், கலை இலக்கியத் துறைகளில் - குறிப்பாக, திரைப்படத்துறையில் - ஈடுபாடு கொண்டவருமான நண்பர் எஸ். ரஞ்சகுமார், இந்த நூலுக்கும் முன்னுரை எழுதியிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், நூலுக்கு ஒரு கனதியான தகுதியையும் தருகிறது.
இந்த நூலையும், எனது "அசையும் படிமங்கள்" என்ற நூலையும் எனது முகவரியில் நேரிலும், தபால் மூலமும் உரிய தொகையைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
கே.எஸ். சிவகுமாரன் 21, முருகன் பிளேஸ், ஹவ்லொக் வீதி வழியாக, கொழும்பு - 06, 28.04.2006
viii

இந்நூலை ஆசிரியர் எழுதுவதற்கான தகைமைகள் :
40
1950களில் கொழும்பில் செயற்பட்ட Colombo Film Society மூலம் பல கலைத்துவமான பிறமொழிப் படங்களைப் பார்த்துப் பயன் பெற்றமை.
1960 களில் Cinema 16 Society அங்கத்தவனாகச் சேர்ந்து 16 மி.மீ. படங்களைப் பார்த்து. உலக சினமா அறிவை வளர்த்துக் கொண்டமை.
Film Critics and Journalists' Association GTsir D Frisis digit ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவிருந்து அனைத்துலகத் திரைப்பட விழாக்கள் கொழும்பில் நடைபெற்றபோது அவற்றைப் பார்த்து அறிவையும் அனுபவத்தையும் 1970 களில் பெற்றுக் கொண்டமை.
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பிறமொழித் தெரிவுக் குழுவில் அங்கத்துவம் பெற்றுத் தணிக்கைக்கான படங்களை விதந்துரைத்தமை.
இலங்கைத் திரைப்படத்துறையின் திறனாய்வு முயற்சிகளுக்காக OCIC விருதும், அங்கீகாரமும் பெற்றமை.
gibgu.JITGilgit (360TunggirGIT Film and Television Institute of India வில் திரைப்படத் திறனாய்வு தொடர்பான பயிற்சி வகுப்பு களில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றமை,
Framework என்ற பிரிட்டிஷ் உயர்மட்ட ஆங்கிலத் திரை ஏட்டில் இலங்கை சினமாபற்றிய கட்டுரையை எழுதி அங்கீகாரம் பெற்றமை.
ix

Page 8
t
0. 0x8
திரை நாடகம் எழுதுதல் தொடர்பாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றமை,
சாஜி கருண் என்ற மலையாளத் திரைப்பட நெறியாளர் நடத்திய நெறியாள்கை தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றழை.
Asian Films நந்திய வகுப்புகளில் விரிவுரையாளராகச்
செயற்பட்டமை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆங்கில/தமிழ் சேவைகளில் திரைப்படத் திறனாய்வுகளையும் தொடர்பான விஷயங்களையும் ஒலிபரப்பியமை.
பகுதிநேர தமிழ்/ஆங்கில அறிவிப்பாளராகப் பணியாற்றிய வேளையில், திரைப்படத் துறை, திரையிசை தொடர்பான தகவல் களைத் தெரியத் தந்தமை.
1958ல் வீரகேசரியின் "கலைக் கதம்பம்" என்ற பக்கத்தில் "திரைமறைவில் இசை வழங்குவோர்" என்ற தொடரை எழுதிப் பின்னணிப் பாடக / பாடகிகளை அறிமுகப் படுத்தியமை,
இந்தியாவில் ஆண்டுதோறும் இடம் பெறும் International Film Festival of Indiaவில் கலந்துகொண்டு, அனைத்துலகத் திரைப்படத் துறை தொடர்பான அகன்ற பார்வையைப் பெற்றமை.
"அசையும் படிமங்கள்" என்ற நூலை எழுதி, இலங்கையில் அத்தகையதொரு நூல் முதற் தடவையாக வெளிவரச் செய்தமை.
இலங்கை தணிக்கை சபையில் அங்கத்துவன் என்ற முறையில் தமிழ், சிங்களம். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட பிறமொழிப் படங்களை பார்த்து. தற்கால சினமா போக்கினை அறிந்து கொண்டமை.

கன்னட சினமா
மூன்று நான்கு சகாப்தங்களுக்கு முன்னர் தமிழ் சினமாவிலே "கன்னடத்துப் பைங்கிளி" என்று பத்திரிகையாளர்களினால் பிரீதியுடன் அழைக்கப் பட்ட ஒரு நடிகை நடித்து வந்தார். அவர் பெயர் சரோஜா தேவி. பூரீதர் நெறிப்படுத்திய "கல்யாணப் பரிசு" மற்றும் பீம்சிங் நெறிப்படுத்திய "பா" வரிசைப் படங்கள் போன்றவற்றில் நடித்து வந்த இந்த நடிகை. மறைந்த நடிகர்கள் எம். ஜி. ஆருடனும், சிவாஜி கணேஷனுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரைப் போலவே கர்நாடக மாநிலத்திலிருந்து இதன் தலைநகர் பெங்களூர். நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு நவீன மாநகரம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அழகிய மைசூரும் இம் மாநிலத்தில்தான் இருக்கிறது. பிருந்தாவனம் என்ற கவின் மிகு பூங்கா பெங்களூரில் இருக்கிறது) பலர் தமிழ் சினிமாவில் புகுந்து குறிப்பிடத்தக்க பங்களிப் பைச் செய்துள்ளனர்.
எம். எஸ். ராஜேஸ்வரி பின்னணியில் குரல் கொடுக்க, "புதுப் பெண்ணை" என்ற பாடலைப்

Page 9
சினமா சினமா : ஒர் உலகவலம்
பாடும் பண்டரிபாய் பராசக்தி அவர் சகோதரி மைனாவதி, மற்றும் பல புதிய, பழைய நடிகர்கள் கன்னடியர்கள்தான்.
நினைவிற்கு வரும் ஒரு சில பெயர்கள்
நாட்டிய தாரகையும், நடிகையும் அரசியல்வாதியுமான வைஜயந்தி மாலா வாழ்க்கை, பெண், தேனிலவு, இரும்புத் திரை வஞ்சிக்கோட்டை வாலிபன்), அவருடைய எயார் வசுந்தராதேவி மங்கம்மா சபதம்), அஸ்வத்தம்மா ஹொன்னப்பா பாகவதர், எம். வி. ராஜம்மா வேலைக்காரி, ஞான செளந்தரி, தாயுள்ளம், பி. ஆர். பந்துலு (கப்ப லோட்டிய தமிழன், ஜெயலலிதா. அவருடைய தாய் சந்தியா, ஜெயந்தி, விஷ்ணுவர்தன், கல்யாண்குமார் நெஞ்சில் ஓர் ஆலயம்), ரஜினிகாந்த் (கன்னடம் பேசும் மராட்டியர் இவர்). பின்னணிப் பாடகர் பி. பி. பூரீநிவாஸ், இன்னும் பலர் தமிழ்ப் படங்களில் நடித்த பங்களிப்புச் செய்த கன்னடியர் ஆவர்.
கன்னடம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அண்மைக் கால மொழி. தமிழிலிருந்து பிறந்த மொழி என்றும் கூறுவர். கன்னடம் பேசப்படும் மாநிலத்தைக் கர்நாடக என்பர். இந்தக் கர்நாடக மாநிலம் மஹாராஷ்டிரத்திற்குத் தெற்கேயும், ஆந்திராவிற்கு மேற்கேயும், கேரளா வுக்கு வடக்கேயும் இருக்கிறது.
மஹாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்பாயில், மராட்டி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை விட ஏனைய மொழிகளைப் பேசு பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு கூடியதோ, அதே போல கர்நாடகத் தலைநகரான பெங்களூரில், தமிழ், தெலுங்கு, துளு மற்றும் வட இந்திய மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை கன்னடம் பேசுபவர்களின் எண்ணிக்கையை விட மிகவும் கூடுதலானது என்கிறார்கள்.
எனவே, கன்னடப் படங்களில் தமிழ்ப் படங்களின் செல்வாக்கு இருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதே வேளையில் பிறமொழிச் செல்வாக்குகளும் அங்கு உண்டு. இலங்கையில் முதல் தமிழ்ப் படத்தைத் தோட்டக்காரி) தயாரித்தவர் ஒரு சிங்களவர்

கே.எஸ். சிவகுமாரன்
என்கிறார்கள். அதே போல கர்நாடகத்தில் முதல் மெளனப் படத்தைத் தயாரித்தவர் நந்தலால் ஜஸ்வஜ்தால் என்பவராவர். இவர் மும்பாயைச் சேர்ந்தவர். படத்தின் பெயர் "ஹரிமாயா." ஆண்டு 1928. கன்னட மொழியில் முதலில் வெளிவந்த பேசும்படம் "சதி சுலோச்சனா" ராஜசுலோச்சனா என்ற நடிகையின் தாய் மொழியும் கன்னடமே 1934 ஆம் ஆண்டில் இது வெளிவந்தது. அதே ஆண்டில் "பக்த துரவஹ" என்ற படமும் வெளியாகியது.
தென் இந்தியாவிலேயே முதன் முதலில் வெளிவந்த சமூகப் படம் "சம்சார நெளகா" என்கிறார்கள். 1936 ஆம் ஆண்டு "வசந்தசேன" 1941). "ஜீவன நாடக" (1942) ஆகிய படங்கள் வெளிவந்தன. மைசூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த டி. கெம்ப்ராஜ் உர்ஸ் கதாநாயகனாக நடித்தார்.
வயலின் வித்துவான் டி. சௌடையா, செம்பை வைத்தியநாத பாகவதர் ஆகியோர் நடித்து, இசை வழங்கிய படம் ஒன்று 1943ல் வெளிவந்தது என அறிகிறோம். அதே ஆண்டில் வெளிவந்த "கத் ஹரிச்சந்திரா" தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர், பல படங்கள் வெளிவந்தன என்று அறிகிறோம். ஹெமாரெட்டி, மல்லம்மா, கிருஷ்ணலீலா, கோரகும் பரா. பாரதி, நாககன்னிகா, ஜகன்மோஹினி, ராஜாவிக்ரம, ஜாத் ஃபாலா, குணசாகரி போன்ற படங்கள் 1942-1953 காலப்பகுதியில் வெளிவந்தன.
அரசியல் நாட்டம் கொண்ட கன்னட "சூப்பர் ஸ்டார்" ராஜ்குமார் நடித்த "பேதார கண்ணப்பா" 1954இல் வெளிவந்தது. மற்றொரு பிரபல கன்னட நடிகரான கல்யாண் குமார் நடித்த "நட்டஷேகர" வெளிவந்தது. "ஐலதுர்க்கா", "கன்னியதாரா" ஆகிய படங்களும் வெளிவந்தன. 1955இல் சரோஜாதேவி நடித்த "மஹாகவி" வெளிவந்தது. "மோதல தேஷ", "ஸ்திரி ரத்ன", "ஷிவஷரண நம்பியாக்கள்", "பிரேமதபுத்ரி" ஆகியன தொடர்ந்து வெளிவந்தன.
கன்னடத் திரைப்பட விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் தகவலின்படி, 1958இல் பி. ஆர். பந்துலு நெறிப்படுத்திய "ஸ்கூல் மாஸ்டர்" என்ற படம் அம்மொழிப் படங்களின் ஒரு திருப்புமுனையாகும்.
3.

Page 10
é#6øTuomo éf6CTupn7 : ĝi?ń 9_6b356) 16axö
1960 -1964 காலப் பகுதியில் ஐந்து கன்னடப் படங்களே வெளியாகின. இம்மொழியில் முதலில் வந்த வர்ணப் படம் அமரஷில்பி ஜகனாச்சாரி (1964) அதே ஆண்டில் "சந்திரவல்லிய தோட்டம்" (சமூகப் படம்), "நாந்தி" யதார்த்தபூர்வமான படம்) ஆகியன வெளிவந்தன. 1965-1968 காலப் பகுதியில் "சத்ய ஹரிஸ்சந்திர", "மிஸ் லீலாவதி" "மந்திராலயமாத்மே", "லவ் இன் பெங்களூர்", "சந்தியாராக", "நக்கரே அதே ஸ்வர்க", "பெல்ஜி மோட்" உட்பட 12 படங்கள் வெளிவந்தன. சிறுவர்கள் முக்கிய l திரம் ஏற்று நடித்த "நம்ம மக்களு" 1969இல் வெளிவந்தது. 25 வாரங்கள் இந்தப் படம் ஓடியதாக அறிகிறோம்.
1970இல் வெளிவந்த மூன்று படங்களில் ஒரு படம் ஜனாதிபதி பரிசு பெற்றது. பெயர் "சம்ஸ்காரா" இது கன்னட மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆலங்கில இலக்கியப் பேராசிரியராகிய அனந்த மூர்த்தியின் நாவலைத் தழுவியது. இவர், மறைந்த பேராசிரியர் க.கைலாசபதியின் நண்பர்.
1972இல் கன்னட சினமா. உலக கவனத்தைப் பெறத் தொடங்கு கிறது. கிரிஷ் கர்நாட் (Girish Karnard) ஒரு முக்கிய, இந்தியத் திரைப்பட நெறியாளராவார். இவர் (காதலன் போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித் திருக்கிறார். நாடக/சினிமா நடிகர்/நெறியாளர். ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில், மறைந்த அத்துலத் முதலியுடன் பயின்றவர். இந்த விபரத்தை நேரே அவர் என்னிடம் கூறினார். பி. வி. கரந்த் ஆகிய முக்கிய திரைப்பட மேதைகள் அறிமுகமாகின்றனர். மற்றொரு நாவலான "வம்ஸ் விருகூழ்" திரைப்படமாகப் பல கலைப் பிரியர்களைத் திருப்திப் படுத்துகிறது.
1973இற்குப் பின்னர் கன்னட மொழியில் பல படங்கள் வெளிவரத் தொடங்கின. அவற்றிலே "காடு" (கிரிஷ் கர்நாட் நெறியாள்கை) "சொம்மனது", "கட்ட ஷரத்திய" (கிரில4 கஸ்ஸர வல்லி நெறிப் படுத்தியது), "கோகிலா" (பாலுமகேந்திரா நெறிப்படுத்தியது), "மலேய மக்களு" (வழிவராமகரந்த், "பல்லவி அனுபல்லவி" (மணிரத்தினம்), "ஃபஞ்சம்மா" (பிரேமாகரந்த், "அக்ஸிடென்ட்" (ஷங்கர் நார்க், "புஷ்பக விமானம்" (சிங்கீதம் பூரீநிவாசராவ்), "மனே" (கிரிஷ கஸ்ஸரவல்லி) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன என்பர்.
4

கே.எஸ். சிவகுமாரனர்
"மனே" (வீடு/மனை) படத்தை இந்தியாவில் நடந்த திரைப்பட விழாவொன்றிலே பார்த்து வியந்தேன், நஸ்ஸுருதீன் ஷா இதில் நடிக்கிறார். வீட்டுப் பிரச்சினையை பாலு மகேந்திரா, கிரிஷ் கஸ்ஸரவல்லி போன்றோர் வெவ்வேறு கோணங்களில் ஆராய்கின்றனர்.
கன்னடத்துக் கலைப்படங்களைப் பிற மாநிலத்தவர் ரசிக்கும் அளவிற்குக் கன்னடியர்கள் ரசிப்பதில்லை என்று இந்தியத் திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஜனரஞ்சகமசாலாப் படங்களுக்கே அதிக வரவேற்பு. கன்னட இலக்கிய விமர்சனம் வளர்ந்த அளவிற்குத் கன்னடத் திரைப்பட விமர்சனத்துறை வளராததும் ஒரு காரணமாகக் கூறப் படுகிறது.
பெங்களுரில் பெரும்பாலான மக்களின் பிரதான பொழுது போக்கு படம் பார்ப்பதே. அந்த மாநகரில் மாத்திரம் மூன்று நான்கு அடுக்காக 90இற்கும் அதிகமான திரைப்பட மாளிகைகள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அசல் சினமாப் பைத்தியம் பிடித்தவர்களுள் தமிழ் நாட்டவர்களும், தெலுங்கர்களும் சளைத்தவர்கள் அல்லர்.
நான் முதலில் பார்த்த கன்னட வணிகப்படம் ராஜ்குமார், அம்பிகா நடித்தது. 25 வருடங்களுக்கு முன். பெயர் ஞாபகமில்லை. கன்னட சினிமாவுக்கு இப்பொழுது 79 வயது.
ஜி. கே. வெங்கடேஷ், விஜய பாஸ்கர், ராஜன் நாகேந்திரா. டி. ஜி. லிங்கப்பா, எம். ரங்கரால், டி. ஏ. மோஹற்தி, சுமன் ரங்கநாத், சுதாராணி, சிவரஞ்சனி, பி. நாகேந்திராவ், ஷங்கர் நாக் போன்ற கன்னடத் திரைப்படப் பிரமுகர்களுடன் பட்டாபிராம ரெட்டி, ஜி. வி. ஐயர், எம். எஸ். சத்யூ சந்திரசேகர் கம்பர், டி. எஸ். ரங்கா, வி. ஆர். ஆர். பிரசாத், அனந்த் நாக், லோகேஷ், சுரேஷ் ஹிெல்கார், ஆர்தி போன்ற பலரும் கன்னட சினிமாவுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
X

Page 11
கன்னட சினமா :
f/ க்ரிஷ் கஸ்ஸரவல்லி (க்ரௌர்யா-கன்னடம்)
கொடூரம், குரூரம் ஆகிய தமிழ்ச் சொற்கள் உணர்த்துவிக்கும் கன்னட மொழிச்சொல் 'க்ரெளர் யா’ (KRAURYA). இந்தத் தலைப்பிலே டி.என். சீதா ராம் என்பவர் ஒரு கதையை எழுதியுள்ளார்.
அதற்குத் திரை நாடகம் (Script) எழுதி, அதனைப் படமாக்கியிருக்குறார் கிரிஷ் கஸ்ஸரவல்லி (Girish Kasra valli), sg), GJ (BG)Luj LDG0) GOT Gúl வைஷாலி இப்படத்திற்கு ஆடை அணிகலன் களைத் தேர்ந்தெடுத்துள்ளார். நெறியாளரின் படங் கள் அனைத்திற்கும் படப்பிடிப்பாளராக விளங்குய வர் எஸ். ராமச்சந்திரா. இந்தப் படத்துக்கு இசை எல். வைத்தியநாதன். சுமார் இரண்டு மணி நேரம் ஒடும் ஓர் அழகிய வண்ணத்திரைப்படைப்பு "க்ரெளர்யா"
இப்படத்தின் நெறியாளராகிய கிரிஷ் கஸ்ஸர வல்லி கன்னட மொழித் திரைப்பட நெறியாளர்களுள் முக்கியமானவர். கிரிஷ் கர்நாட் (Grish Karnard) போன்று இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு

கே.எஸ். சிவகுமாரன்
கலைஞர். பூனே திரைப்பட/தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் பயின்ற பட்டதாரி. கடந்த 28 வருடங்களுக்குள் ஆறு படங்களுக்கு மேலாக நெறிப் படுத்தித் தந்திருக்கிறார். அப் படங்களுள் மனே (மனைவீடு) குறிப்பிட்டத்தக்க ஒரு கலைத்தரமான படம். இவருடைய படங்களாகிய G5ALQJģg IT (Ghadtashiraddha), g5 LJUGEOT 55Gg5 (Tabarana Kathe), பன்னடா வேவர் (Bannada Vesh) ஆகியன விருது பெற்ற படங்கள். கர்நாடக மாநில திரைப் படச் சங்கம் இவருடைய படங்கள் அனைத்திற்கும். விருதுகளை வழங்கியுள்ளது. 1996இல் சிறந்த கன்னட மொழிப் படமாக க்ரெளர்யா தெரிந்தெடுக்கப்பட்டது. படத்தின் கதாநாயகி உயிர்த்துடிப்புள்ள ஒரு கிழவி. மத்திய தர பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு வயதான பாத்திரம் படக் கதாநாயகி. மூன்று பரம்பரைகளின் பிரதிநிதிகளுடன் அவள் சம்பந்தப்படும் வேளையில், அவள் எதிர் நோக்கும் சிக்கல்கள் காட்டப்படுகின்றன.
பார்வையாளரின் நலன் கருதி, இந்தப்படத்தின் கதைக் சுருக்கத் தைத் தயாரிப்பாளரே தந்துள்ளார். அதன் தமிழ் வடிவம் பின்வருமாறு. “வயதானவர்கள், பலமிழந்தவர்கள் போன்றோர் மீது காட்டப்படும் குரூரத்தை/கொடுமையைப் படம் சித்திரிக்கிறது. அவர்கள் மீது கட்ட விழ்க்கப்படும் வன்செயல், இடம் பெறவில்லையாயினும் இப்படம் வன்முறையை உள்ளடக்குகிறது.
ரங்காஜி என்ற 70 வயது மாது. கிராமியக் குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் பெரு விருப்புடையவர். இவருடைய மகன் வாசு இறந்து போனதும், இவரைப் பராமரிக்க யாரும் இல்லை. இவருக்குத் தூரத்து உறவினர் ராஜண்ணா. இந்தக் கிழவிக்கு உதவும் படி அயலவர் ராஜண்ணாவை வற்புறுத்துகின்றனர். இவர் பட்டுப் பூச்சி வளர்ப்பதைக் கிழவி என்றுமே விரும்பியதில்லை. ஆயினும், பொறுத்துக் கொண்டு ராஜண்ணா குடும்பத்துடன் கிழவி வாழத் தொடங்குகிறாள். அக் குடுபத்தில் இளைய மகன் மூர்த்தி. அவனுடன் பட்சமாய் கிழவி இருக்கிறாள். மூத்த மகன் சுப்பண்ணா பெங்களூரில் தொழில் பார்ப்பவன். ஆயினும், அவன் உழைப்பு, குடும்பத்திற்கு அனுப்பக் கூடியதாக இல்லை. ஒரு நாள், பெற்றோரைக் காண சுப்பண்ணா வந்த
7

Page 12
சினமா சினமா : ஒர் உலகவலம்
பொழுது, அவன் நிலைமையறிந்து அவனுக்குக் கடனாக 10,000 ரூபாவைக் கிழவி வழங்குகின்றாள். இப் பணத்தைக் கொண்டு அவன் தனியாக சோப் முகவர் நிலையம் ஒன்றைத் திறப்பதாக ஏற்பாடு.
சுப்பண்ணா பின்னர் தனக்கு உதவுவான் என்பது கிழவியின் எதிர்பார்ப்பு. அது மாத்திரமல்லாமல், தனது இறந்துபோன கணவனின் கூட்டாளிகளாகிய பத்மநாபையாவை பெங்களூரில் தொடர்பு கொள்ள உதவுவான் என்றும் எதிர் பார்த்தாள். ஆனால், சுப்பண்ணா தனது உறுதி மொழியை மறந்தான்"அவனுக்கு அவன் பிரச்சினைகள். சுப்பண்ணா வுக்கு கிழவி ரங்காஜி சமைத்துப்போட உதவுவாள் என்று கருதியும், அவளிடமிருந்து விடை பெறவும், அவளை, தன் இளையமகன் மூர்த்தியுடன் பெங்களுக்குரங்கண்ணா அனுப்பிவைக்கிறான். ஆயினும், ரங்காஜி அநாதைப் பிணமாகிறாள்.
இது படக் கதை, ஆயினும், இதனை மீறி சதையும், இரத்தமும், நற்குணங்களும், வெறுக்கத்தக்க அம்சங்களும் கொண்ட ஓர் உயிர்த் துடிப்புள்ள பாத்திரத்தின் கதை, மனதில் பதியும் வண்ணம் துரிதப் படிமங்ககாாகச் சித்திரிக்கப்படுகிறது. இது கதை சொல்பவள் ஒருத்தியின் க :வள் கடைசிக் காலத்தின் கசப்பான அனுபவங்கள் ஒன்று திரள்கின்றன. அவள் பழைய பரம்பரையைச் சேர்ந்தவள். பாரம்பரிய வித்தியாச விழுமியங்கள் மோதுண்டு, ப்ரேமுக்கு ப்ரேம் (Frame) முரண்படு அம்சம் நிறைந்த நாடகத் தன்மையை உண்டு பண்ணு கின்றன. ஆரம்பக்காட்சிகளிலேயே, அவளுடைய உயிர்த்துடிப்பான, இளமை மனோபாவம், அவள் கதைசொல்லும் உத்தி (Technique), நகைச்சுவைப் பாணி, சிறுவர்/சிறுமியர் ஆவலைத் தூண்டும் வண்ணம் பளிச்சிடும் விறுவிறுப்பான, அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் குரல் ஏற்ற இறக்கச் செயற்பாடுஅத்தனையும், அவளைத் தனது வயதை மீறிய அண்மைக்காலத் தொடர்பாடல் வல்லுநராகக் காட்டுகின்றன. படத்தின் ஷொட்களும் (Close Up and Dissolves), Ulqupă Gefä6058(Gibb Gilg)GúgyüUTösä செயற்படுவதனால், நாமும் கதை கேட்டுச் சிரித்து மகிழும் சிறுவர்கள் போல் அனுபவத்தைப்பெற்றுவிடுகிறோம். கதாபாத்திரத்தின் வீழ்ச்சி

கே.எஸ். சிவகுமாரனர்
வரப்போகிறது என்பதைக்கோடி காட்டுமாற் போல, முன் கூட்டியே எதிர்மறையான மகிழ்ச்சி நிலை மனோரதியப்படுத்தப்படுகிறது.
படத்தின் முடிவு, கிழவியின் மரணத்தில் முடிந்தாலும், ஒரு பிராமண வைதீகப்பெண், அசாதாரணமான, பவித்திரம் குன்றிய சூழலில் மரிப்பது தான், காப்பிய நாயகியின் பரிதாபகரமான வீழ்ச்சிக்கு ஒப்பானதாக அமைகிறது. இது ஒரு துன்பீற்று நாடகமான (Tragedy) முடிவல்ல. மாறாக, அசட்டு அபிமான உணர்ச்சியை (Sentimental) தவிர்த்த, பச்சாதாப உணர்வைக் கிழவி மேல் நாம் செலுத்த உதவும் ஓர் நெருடல் படத்தின் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
நாம் இந்தக்கிழவியை ஒரு சாதாரண மனுஷியாகவே இது ஒரு சாதாரண/சராசரி மனுஷியின் கதை பார்க்கிறோம். இலட்சிய வார்ப்புக்கள், தியாக உணர்வு கொண்ட உன்னத மனுவழியாக நாம் காணவில்லை. இந்த மனுவழி, சுயநலமும், பரம்பரைப் பெருமையும், கஞ்சத் தனமும் கொண்ட பெண்ணாக இருக்கும் அதேவேளை, லேசான இளகும் நெஞ்சம் கொண்ட, தாய்மை உணர்ச்சி அவளிடம் இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம். ஒரு கிழவியை நாயகியாகக் கொண்டு, அற்புதமான பாவங்களைத் திரையில் கொண்டுவரக் கைதேர்ந்த நெறியாளர்களினால் தான் முடியும். பாலு மகேந்திராவின் "சந்தியாராகம்" இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.
இந்தப் படத்தில் தொக்கி நிற்கும், சொல்லாமற் சொல்லும் ஒரு கருத்து நிலையும் இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில், பட நெறியாளர் கிரிஷ் கஸ்ஸரவல்லி, தனது கூற்றாக இதனைத் தெரிவிக்கிறார்.
“பாண்டவர் கதையை இக்கிழவி கூறுகிறார். இவர் கூறுவதைப் போல இந்தப்பயணம் (கிழவி பெங்களூர் சென்று, கிராமம் திரும்பும் வழியில் இறந்துபோகிறார். இது எதனைக் குறிக்கிறது? தருமம் என்ற காலில்லாமல், கர்ம வினைப் பயணம், முடிவில்லாத ஒரு பயணமா? அமைதி காண வேறிடம் செல்லும் பயணமா?”
அதாவது, தருமம் என்பது, பலனை எதிர்பார்க்காது செய்யப்பட வேண்டும் என்பது கிழவியின் பாத்திரத்தினூடாக வெளிப்படுத்தப்
9

Page 13
சினமா சினமா : ஒர் உலகவலம்
படுகின்றது என்பது எனது விளக்கம். நெறியாளர் விளக்கம் எதுவோ எனக்குத் தெரியாது. இந்தப் படத்தின் நடிப்பு நலன் பற்றிக் குறிப்பிடவே வேண்டும். ரேணுக்கம்மா முருகோடு, கிழவி பாத்திரத்தில் நம்மை வசீகரிக்கிறாள். இயல்பு குண வெளிப்பாடு கச்சிதம். எச்.ஜி தட்டாத்ரெய, விஜயா எக்குண்டி, விஷ்வாஸ், அசோக் ஹெக்டே போன்றறோரின் நடிப்பு நாடகபாணியாக மிகையாக இல்லாமல் இயல்பாக அமைகிறது.
ኮ நெறியாளர் கிரி, கஸரவல்லியுடன் இந்தியாவில் இடம்பெற்ற திரைப்பட விழாக்களின் போது நெருங்கிப் பழக முடிந்தது. இருவருக்கும் ஒரே இடத்திலேயே தங்குமிட வசதிகள் செய்து கொடுத்தனர். உண்மைச் சம்பவங்கள் சிலவற்றின் அடிப்படையிலும், ஒரு சிறுகதையைத் தழுவியும் இப்படத்தின் திரை நாடகத்தைத் தான் எழுதியதாக அவர் கூறினார். நமக்கு வயதாக வயதாக மனித உறவுகள் மிகவும் நொய்மையடைகின்றன என்பதயே இப்படம் காட்ட முனைகிறது என்றார். அவர் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார்?
v− “முதலில் தகவல்கள், தரவுகள் ஆகியவற்றைச் சேகரிக்கிறேன், பின்னர், பாத்திரங்களை உருவாக்குகிறேன். அதன் பின்னர், அப் பாத்திரங்கள் எவ்வாறு இயங்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். அதன் பின்னரே நாடகத்தை எழுதுகிறேன். ஒரு படத்தின் படிமங்கள் (Images) எவ்வளவு முக்கியமோ திரைநாடகச் சம்பாஷணைகளும் (Dialogues) முக்கியந்தான். பாத்திரங்களுக்கிடையே உள்ள உறவைப் பரிவர்த்தனை செய்யச் சம்பாஷணையும் உதவுகின்றது."
00
10

LOGO)6OLLIT6IT fe0TLOIT :
ஜி.அரவிந்தனின் படங்கள்
LDலையாளம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி தமிழும் வடமொழியும் கலந்தது. பழைய சங்க காலத் தமிழ்ச் சொற்கள் கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகளில் இன்றும் பயின்று வருவதுபோல, மலையாளத்தில் தமிழ் மொழியின் செல்வாக்கு அதிகம். யாழ்ப்பாணத் தமிழர் பேசும் முறைமை. மலையாளிகள் பேசும் மொழியின் அசைவுகள் போன்றது. மட்டக்களப்புத் தமிழரிலும் மலையாளச் செல்வாக்கைக் காணலாம். மலையாளம் அதிகம் பேசப்படும் மாநிலம் கேரளம். கேரளத்தின் தென் மேற்கு முனை நாகர் கோவில் போன்ற தமிழ் நாட்டு எல்லைக்கருகில் உள்ளது. தமிழ் நாட்டின் வடமேல் பகுதியில் உள்ள கோயம்புத்தூருக்கருகில் கேரளத்துப் பாலக்காடு இருக்கிறது.
கேரளத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவரின் எண்ணிக்கை 100 சதவீதம். இந்தியாவின் அரச நிர்வாகங்களிலும், வணிக்துறையிலும் முன்னணியில் நிற்பவர்கள் கேரளத்தவர். அவர்களுடைய கலை,
11

Page 14
இலக்கிய ரசனை உயர் மட்டத்தில் காணப்படுகிறது. திரைப்படத் துறையி லும் அவர்களுடைய படங்கள் வங்காளப் படங்களுக்கிருக்கும் மரி யாதையைப் பெற்று வருகின்றன.
மலையாளத் திரைப்பட நெறியாளர்களில் சிலர் உலகப் புகழ் பெற்று வந்துள்ளனர். இவர்களில் மூவர் ஜி. அரவிந்தன், அடூர் கோபால ஷாஜி ஆகியோராவர். அரவிந்தன் சில வருடங்களுக்கு முன்'மறைந்து போனார். 1990களில் அவரை நான் சென்னையில் சந்தித்தேன். அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிகம் பேச மாட்டார். நரைத்த தாடி அகன்ற நெற்றி, தீட்சண்யமான கண்கள். ப்ார்வையில் உள்ளார்ந்த கருணை, வெளித் தோற்றத்தில் சங்கோஜி, குட்டையான உருவம், எளிய உடை தாஜா, பந்தா ஆடம்பரம் ஒன்றும் கிடையாது. சிக்கனமான செலவில் அழகும் கம்பீரமும் கொண்ட படங்களைத் தந்திருக்கிறார். முழு உலகத்துக்குமே சொந்தமான இந்தியத் தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவருடைய தத்துவங்கள். பேச்சுக்கள் என்பன உட்பட்ட அருமையான விவரணப் படத்தை அரவிந்தன் தந்திருக்கிறார். கமராப் படப்பிடிப்பும், பார்வையும், உயர் தொழில் ரீதியாக அமைந்த இந்தப் படத்தின் பெயர் The Seer Who Walks Alone (தனிமையில் Blib5 Qggugpur (G5IT6) gaupo D G). Contours of Linear Rhythms, அனாதிதரா, மாறாட்டம், சஹஜா, உன்னி ஆகியவற்றுடன் உத்தராய ணம், காஞ்சனசீத்தா, தம்பு, கும்மட்டி, எஸ்தப்பன், போக்குவெயில், சிதம்பரம் ஆகியவற்றையும் தத்திருக்கிறார். 1974 தொடக்கம் ஒரு 16 ஆண்டுகள் வித்தியாசமான படங்களைத் தந்த அரவிந்தன் கடைசியாக நெறிப்படுத்திய படம் "வஸ்துவஹாரா’ இப்படத்தின் கதை கொல்கத் தாவிலும் கேரளத்திலும் நடைபெறுகிறது. மோகன்லால் என்ற பிரபல மலையாள குணசித்திர நடிகரும், நீனாலகுப்தா என்ற வட இந்திய நடிகையும் இதில் நடிக்கின்றனர். என்னைப் பொறுத்தமட்டில் அரவிந்தன் நெறிப்படுத்திய படங்களில் இதுவே சிறப்பான படம்.
அரவிந்தன் தகப்பனார் எம்.என். கோவிந்த நாயர், கேரளத்தின் புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர். கேரளாவில் எழுத்தாளர் கூட்டுறவு
12

இயக்கத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். அரவிந்தனின் தாயாரின் மைத்துனரும் ஒரு பிரபல எழுத்தாளர். அரவிந்தனின் சகோதரர் ஓர் அரசியற் கேலிச்சித்திரக்காரர். எனவே, அரவிந்தனுக்குக் கலை, இலக்கியம் ஆகியவை இயல்பாக வந்து வாய்த்தது. கேரளத்தின் ஜனரஞ்சக வெளியீடான “மலையாள மனோரமா’ கோட்டயம் என்ற இடத்திலிருந்து வெளிவருகிறது. ரப்பர். கோப்பித்தோட்டங்களுள்ள அந்தப் பிரதேசத்தில்தான் அரவிந்தன் வளர்ந்து வந்தார். ஒவியத்தில் அரவிந்தனுக்கு ஆரம்பத்தில் நாட்டமிருந்தது. அதனை விடக் கர்நாடக சங்கீதத்தில் அவர் பெருமளவு கட்டுண்டார். சிதம்பரம் படத்தில் நாயன் மாரின் தேவாரப் பண்ணிசை ஒலிப்பதே அரவிந்தனுடைய கர்நாடக இசைப்பிரிதியைக் காட்டும். சிறுவனாயிருக்கும் பொழுது நிறையத் தமிழ்ப் படங்களைஅரவிந்தன் பார்த்து வந்தார். அக்கால இசைப் பாடல்கள் கொண்ட தமிழ்ப் படங்கள் அவரை ஈர்த்தன. பி. யூ சின்னப்பாவின் படங்களைக் குறிப்பாக அரவிந்தன் திரும்பத் திரும்பப் பார்த்து வந்தார்.
ஆர்யமாலா, கிருஷ்ணபக்தி டோன்ற பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்து ரசித்த நமது நேயர்களுக்குச் சின்னப்பாவின் ஆற்றல் தெரிய வந்திருக்கும். இவர் கன்னட மொழிக்காரர். பல்கலைக்கழகத்திலே விவசாயத் துறையைப் பயின்று பட்டதாரியான அரவிந்தன், நாடகத் துறையிலும் பரிச்சயம் கொண்டவர். Cont with the Wind என்ற Hollywood LJLb Akira Kurusuwa GTcöip gJLIToiluJslä Rashamon போன்ற படங்களை 50 களின் பிற்பகுதியில் டார்த்து அதிசயித்துப் போனதாக அரவிந்தன் கூறுகிறார். திரைப்படங்களைப் பற்றி சாஸ்திர ரீதியாக அறிந்து கொள்ள விரும்பினும், அக்காலத்தில் திரைப்படப் பயிற்சி நிலையங்கள் இல்லாததால் 20 வருடங்களாக அரசு வெளிக்கள விவசாய ஆலோசகராகப் பணிபுரிந்து வந்தார். அரவிந்தனின் தந்தையார் ஒரு வழக்கறிஞராக இருந்தபோதிலும், திரைப்படத் துறையில் நாட்டம் கொண்டிருந்ததை அரவிந்தன் குறிப்பிடுகிறார்.
கேரளத் திரைப்படச் சங்கத்தில் அடுர் கோபாலகிருஷ்ணன் என்ற மற்றைய மகத்தான கேரள நெறியாளருடன் அரவிந்தன் தொடர்பு கொண்டார். அடூர் திருவனந்தபுரத்தில் விவரணத் திரைப்படங்களை
13

Page 15
எடுக்கும்பொழுது, தானும் பார்வையாளனாக அவருடன் இருந்து நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். கோட்டயத்திலும் திரைப்படச் சங்கத்தை அமைத்து நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்பு அங்கிருந்து கோழிக்கோட்டுக்கு உத்தியோகம் காரணமாக இடமாற்றம் பெற்று எம். டி. வாசுதேவன் நாயர் போன்ற பிரபல மலையாள எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். அங்குதான் திரைப்படம் எடுக்கும் ஆவல் அவரிடம் குடி கொண்டது. 1974இலே அரவிந்தவின் TAF படம், "உத்தாரயணம்" வெளிவருகிறது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தந்தையினதும் வேலை வாய்ப்பற்ற மகன் ஒருவனதும் கதை இது. 1977இல் ஆந்திரப் பழங்குடி மக்களை வைத்து காஞ்சன சீத்தா' என்ற படத்தை வெளியிட்டார். மலையாளத்தில் பெயர்க்கப்பட்ட ராமாயணக் கதையைத் தழுவியது இப்படம். இதனை நான் பார்த்தேன். எனக்குப் பிடிக்கவில்லை. காரணம், “சினமாத்தன்மை” என்று கூறக்கூடிய சினமாவுக்குரிய அம்சங்கள் இப்படத்தில் இருக்காமையே.
ஆன்மிகம், மறைஞானம் போன்றவற்றில் தனக்கு ஆழ்ந்த அனுப வம் உண்டு என்று கூறும் அரவிந்தன், 1978இல், தம்பு (அதாவது டய்யா கூடாரம்) என்ற படத்தை எடுத்தார். இந்தப் படமும் நான் பார்த்ததுதான். 1990களில் பட வளர்ச்சியை மனதில் வைத்துப் பார்த்தால், 'தம்பு இளக்காரமாகத்தான் எனக்குப் பட்டது. ஆயினும், டய்யாக் காலர்களின் வாழ்க்கைப் போக்கின் சில அம்சங்களைப் படம், காட்டி நின்றது. அரவிந்தனின் படங்கள் மரபுக்கும் நலினத்துக்குமிடையில் எழும் பிரச்சினைகளை ஆராய்கின்றன என்று சொல்லலாம். 1986இல் “ஓரிடத்து’ என்ற படத்தை அரவிந்தன் நெறிப்படுத்தினார். 1979இல், "எஸ்தப்பன்" போன்ற படங்களை இங்கு குறிப்பிடலாம். அரவிந்தன் 14 வருடங்களாக ஒரு சென்னை ஆங்கிலச் சஞ்சிகைக்குக் கார்ட்டூன் கதை வரைந்தவர் என்பதை நாம் நினைவுபடுத்தலாம். ஏனெனில், அக் கார்ட்டூன் நகரில் சித்திரதிருஷ்டி படிப்படியாக உருவாகுவதைப் போலக் கற்பனை விரிப்பு அரவிந்தனின் படங்களில் அமைவதைக் காணலாம். Small Man and a Big World (éflu Logo.g56) b Giufu da)5(plb) என்பது அக்கார்ட்டூனின் பெயர்.
14

கே.எஸ். சிவகுமாரன்
அரவிந்தன் சிறுவர்களை மையமாக வைத்து எடுத்த படம் 'கும்மட்டி' கேரளாவில் கும்மட்டி' என்ற புனைகதைப் பிரகிருதி சிறுவர்கள் பயப்படும் ஒரு கொடூரப் பிறவி
மனிதர்கள் சில வேளைகளில் மாத்திரமே பகுத்தறிவைப் பயன் படுத்துகிறார்கள் என்பது அரவிந்தனின் நம்பிக்கை தருக்கமற்றுச் சிந்திப் பது விஞ்ஞானத்தின் ஓர் அம்சம் என்றும் அரவிந்தன் துணிகிறார். விஞ்ஞானத்தைத் தான் கேலிக்குரியதாகக் கொள்ளவில்லையாயினும், தீயவர் கையில் 'அறிவியல்' நாசத்தை விளைவிக்குமென்கிறார். அரவிந்தன் இயற்கையோடு இயைந்த வாழ்வை விரும்பினார் என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.
உலகம் கறுப்பும் இல்லை வெள்ளையும் இல்லை. இடைப்பட்ட பழுப்பும் உள்ளது என்பதைக் காட்ட “ஓரிடத்து’ என்ற படத்தைத் தான் உருவாக்கியதாக அரவிந்தன் குறிப்பிடுகிறார். மனக் கோளாறை 'பொக்குவெயில்' படமும், "சிதம்பரம்' படமும் சித்திரிக்கின்றன. பொக்குவெயிலில் கதை குறைவு இசையின் நாதம் போன்று ஒரு Pattern சிதம்பரத்தில் ஆரம்பம், இடை, முடிவு என்ற பாணியில் கதையுண்டு. ஆனால், இரண்டையும் எடுத்தவிதத்தில் வித்தியாசங்கள் காணப் படுகின்றன.
பொக்குவெயில்' படப்பிடிப்பு பெரும்பாலும் மாலை வேளை களின் வர்ணத்தைக் கொண்டு வருவதற்காக அவ்வேளைகளில் பிடிக்கப்பட்டதாகவும் அரவிந்தன் தெரிவிக்கிறார். தான் காணும் கதைகளின் அர்த்தங்களை உளவியல் பகுப்பாய்வாளருடன் கேட்டு அறிந்து 'பொக்குவெயில்' படத்தைத் தந்ததாக அரவிந்தன் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். -
தமது நடிக நடிகையருக்கு ஓரிரு அறிவித்தல்களை மாத்திரம் கொடுத்துவிடுவதாகவும். அவர்களுடைய நடிப்பு வெளிப்பாட்டில் தாம் தலையிடுவதில்லையென்றும் அரவிந்தன் கூறினார். அரவிந்தன் 1989ல் நெறிப்படுத்திய படம் மாறாட்டம் ஓரங்க நாடகம் ஒன்றைத் தழுவியது. ஒரு நாடகக் கலைஞன் பற்றியும், அவன் நடிக்கவிருக்கும் பாத்திரம்
15

Page 16
சினமா சினமா : ஒர் உலகவலம்
l
பற்றியுமான படம். அவனது இயல்புக்கும், அவன் ஏற்கும் பாத்திரங் களுக்குமிடையில் ஏற்படும் முரண்பாட்டுக் குண நலன்களைச் சித்திரிக் கும் படம். இந்தப் படத்திலே கதாநாயகன் கொல்லப்படுகிறான். அவனு டைய முரண்பாடுகள் மூன்று கோணங்களிலிருந்து நோக்கப்படுகின்றன. Rashamon படத்தைப் பார்த்தவர்கள் இதே மாதிரி மூன்று பார்வைகள் மூலம் அப்படத்தின் கதை விளங்கப்படுத்தப்பட்டதை அறிந்திருப்பார் கள்.
if
கேரளத்தின் புதிய இளம் நெறியாளர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் கே. ஆர். மோஹனன், எம். பி. சுகுமாரன் நாயர் ஆகிய இருவரைப் பற்றியும் அரவிந்தன் வியந்து பேசுகிறார். இந்தியாவிவேயே சிறந்த விவாரணச் சித்திரநெறியாளர்களுள் மணிகோல் வித்தியாசமானவர் என்கிறார். காஷ்மீர் பிரதேசச் சுற்றுப்பயணத்தினைக் களமாகக் கொண்டு மணி கோல் ஒரு விவரணச் சித்திரத்தை அளித்ததாகவும், Before My Eyes (என் கண்ணெதிரே) என்ற அந்தச் சித்திரம் சுவாரஸியமான படைப்பு என்றும் அரவிந்தன் அபிப்பிராயப் பட்டார். அரசியல் ரீதியான விவரணச் சித்திரங்களைப் பொறுத்தமட்டில் அனந்த்பட்டவர்த்தனுக் குள்ள துணிவு மற்றையோருக்கில்லை என்கிறார். ஜி.அரவிந்தன் இந்திய அண்மைக் காலத் திரைப்பட வரலாற்றிலே மறக்கப்பட முடியாத ஒரு முக்கிய கலைஞர்.
16

நான்கு மலையாளத் திரைப்படங்கள்
1 994ളുഖേ இந்தியாவின் 25ஆவது அனைத் துலகத் திரைப்பட விழாவிலே, உலக நாடுகளின் தலைசிறந்த படங்களுடன், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிராந்திய மொழிப் படங்களும் காண் பிக்கப்பட்டன. இப்படங்கள் இந்தியன் பனோரமா என்ற தலைப்பில் காட்டப்பட்டன. இவ்வாறு கதை செறிந்த 18 படங்களும் கதா நிகழ்ச்சி குன்றிய 19 படங்களும் காண்பிக்கப்பட்டன.
மிர்னால் ஸென், ஜி. வி. ஐயர், டி. எஸ். நாகா பரணா, ஏ. கே. பேர், கெளதம் கோஷ், ஷியாம் பெனிகல், அடுர் கோபால கிருஷ்ணன் போன்றவர் களின் படங்களும் இந்த வரிசையில் இடம் பெற்றன. அவற்றில் ஐந்து, மலையாள மொழிப் படங்கள். அடூர் கோபாலகிருஷ்ணனின் 'விதேயன்’ என்ற படத்தைத் தவிர ஏனைய நான்கு மலையாளப் படங்களையும் பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது. அடூரின் படங்களை இலங்கையில் பார்க்கும் சந்தர்ப் பம் பின்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதர மலையாளமொழிப் படங்களையே பார்க்க நேர்ந்தது.
17

Page 17
சினமா சினமா : ஒர் உலகவலம்
லெனின் ராஜேந்திரன் நெறிப்படுத்திய ‘தெய்வத்தின்ர விக்ருதி கள்’. சிவப்பிரகாஷ் நெறிப்படுத்திய “கெளரி. கே. பி. சசி நெறிப் படுத்திய ‘இலையும் முள்ளும், பி. டி குன்ஹி ஹெம்மட் நெறிப் படுத்திய ‘மக்ரிப்’ ஆகியனவே இப்படங்களாகும். இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தபடம் ‘மக்ரிப்ட் மலையாள மொழி அர்த்தத்தில் ‘மக்ரிப் என்றால் கருக்கல் ! அந்தி மாலை அல்லது மன்னிப்பு எனப் பொருள்படும். தெற்கு மலடிாரில் வாழும் முஸ்லிம் இனத்தவரின் குறித்த 55@a)TUT IUU பண்டிகைகள் ா, இவற்றின் பாரம்பரியக் குடும்ப உறவு களூடாக, ஏற்படும் மாற்றங்களை அப்படம் சித்திரிக்கிறது எனலாம்.
தென்னிந்தியப் படமொன்றில் இதுவே முதற்தடவையாக இஸ்லா மியக்கலாசராக் கோலங்களை நான் பார்த்து மகிழ நேர்ந்தது. உயர்ந்த சினமாவாக இப்படம் அமைந்ததோ இல்லையோ, பட நெறியாளர் குன்றி மொஹம்மட்டை, அவரது துணிவுக்கும் அக்கறைக்குமாகப் பாராட்ட வேண்டும். இந்த நெறியாளர் பல விருதுகளைப் பெற்ற சிறந்த நடிகரும் கூட. இவரே இப்படத்தின் கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார். தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பட் கமராவைக் கையாண்டி ருக்கிறார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வரும் ஒரு பூர்வீக முஸ்லிம் குடும்பத்தின் ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில், அக் குடும்பத்தினரிடையே ஏற்படும் கசப்பான/இனிப்பான அனுபவங்களைத் துல்லியமாக இப்படம் சித்திரிக்கிறது. திடமான யதார்த்தச் சூழலில் அவர்களிடையே ஏற்படும் உள்ளார்ந்த உறவுகளை நெறியாளர் செவ்வனே காட்டுகிறார்.
காதலித்து மணமுடித்த ஒருவன், தன் மனைவி மீது அளவு கடந்த அன்பைச் சொரிகிறான். அது காரணமாக, விகற்பமேதுமின்றி மனைவி நடந்து கொண்டாலும், சிறிய சிறிய அற்ப விஷயங்களுக் கெல்லாம் அவன் அவள் மீது சந்தேகப்படுகிறான். இறுதியில் அவளைக் கொலை செய்து விடுகிறான். ரஸாக் என்ற இந்தக் கணவன் சித்தசுவாதீனமற்றவன் எனக் கருதப்பட்டு மன நோயாளர் புகலிடம்
18

கே.எஸ். சிவகுமாரனர்
ஒன்றில் பல்லாண்டுகளாக வைக்கப்பட்டடிருப்பவன். அவனுடைய மகளின் கல்யாணத்துக்குக் கூட சமுகமளிக்க லாயக்கற்றவன் எனக் கருதப்படுகிறான். சுதந்திரம் என்பது அவனிடமிருந்து நழுவிச் செல்கிறது.
நான் அடுத்து விரும்பிய படம் "கெளரி மிக மிக மெதுவாய்ப்படம் நகர்கிறது. மனித எண்ணங்களையும், உணர்வுகளையும் சிறிது சிறிதாகப் பகுப்பாய்வு செய்யும் படமாக இது அமைகிறது. இந்தப் படத்தை நெறிப் படுத்தியிருப்பவர் சிவப்பிரசாத். இவர் பூனே தொலைக்காட்சித் திரைப் படக்கல்லூாயில் நெறியாள்கைத் துறையில் டிப்ளோமாப்பட்டம் பெற்றவர். அங்கு நெறியாள்கைத்துறை உதவிப் பேராசியராகவும் பணி புரிந்தவர். இவருடைய கதை சார்ந்த படங்களாவன புரூரவாஸ், சய்ரேந்த்ரி, வேம்பனாட், கெளரி.
கெளரியில் இளம் காதலர்களைக்காணோம். காதலரிருவரும் நடுத்தர வயதினர் ஏற்கெனவே மணம் முடித்தவர்கள். இது சிறிது சம்பிரதாயமற்றதாகவும், எக்கச்சக்கமானதாகவும் இருக்கலாம். ஆயினும் சினமாவும், இலக்கியம் போன்று திறந்த அரங்கில் வாழ்க்கைப் பிரச்சினை களையும், அனுபவங்களையும் அலசுகின்றன. அந்த விதத்தில் இப்படக்கதையையும், திரையாக்கத்தையும் நான் வரவேற்கின்றேன். அக்கதையில் வரும் பாத்திரங்கள் இரு வேறு தனியார் நிறுவனங்களில் உயர் தொழில் பார்க்கிறவர்கள். எனவே, அவர்கள் சமூக நிலை உயர் மட்டம். உயர் மத்தியதர வர்க்கத்தினர். அநேகமாக, உளவியல் மற்றும் பிரச்சினைகள் இந்த உயர் மத்திய வர்க்கத்தினரிடையேதான் அதிகம் ஏற்படுகின்றன என்பது கண்கூடு. ஏனெனில், கீழ் மட்டமக்களினதும், மிக மேல் மட்ட மக்களினதும் விழுமியங்கள் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாறும். ஆனால், இரண்டுங்கெட்டான் நிலையிலுள்ள மத்தியதர வர்க்கத்தினருக்குத்தான் தர்மசங்கடங்கள் ஏற்படுகின்றன.
இப்படக்காதாநாயகனின் பின்னணி அதிகம் தெரிவிக்கப்பட வில்லை. அவன் மணம் முடித்து மனைவியிடமிருந்து பிரிந்திருக்கிறான். கதாநாயகி கணவனினால் துன்புறுத்தப்பட்டு சோக வாழ்க்கை நடத்துப வள். இவனுடைய மகள் கொன்வன்டில் தங்கிப்படித்து வருகிறாள். ஆறு
19

Page 18
சினமா சினமா : ஒர் உலகவலம்
மாத இடைவெளிக்குப்பின்னர் இக்காதலரிருவரும் சந்தித்துத் தேனிலவு யாத்திரையை மேற்கொண்டு உடலாலும், உள்ளத்தாலும் நிறைவு காண்கின்றனர். இவர்களுடைய உறவை வெகு நேர்த்தியாக ஸனி ஜோசப் தனது கமராவினால் சிறைப்பிடித்திருக்கிறார். சில இடங்களின் நெறியாள்கையில் மேதைத் தன்மை புலப்படுகிறது. மீனாலுகூரி சோமன், பிரேமச்சந்திரன் ஆகிய இருவரும் தோஷமின்றி நடிக்கின்றனர். மாமுல் ரசிகர்களுக்கு இப்படம்.ஒரு வேளை ஆபாசமாகப் படலாம்; ஆயினும் ‘காதல்’ என்ற மூன்றெழுத்து வார்த்தைக்கு இக்கதை பிரமாணம் பாய்ச்சுகிறது.
அடுத்த படம், ‘தெய்வத்தின்ர விக்ருதிகள், (தெய்வத்தின்ர என்ற ഥങ്ങഖധrണ வார்த்தை யாழ்ப்பாண பேச்சுமொழி போல் இல்லையா?) இறைவன் வகுத்த வழிகள் என்பது இதன் பொருள். கேரள மாநிலத்தின் வடக்கேயுள்ள கரையோர நகரமாகிய மஹேயில் கதை நிகழ்கிறது. இப்பகுதி 230 வருடங்களுக்கு மேலாக பிரெஞ்சியர் ஆளுகைகுள் இருந்து வந்தது. 1954 அளவில் விதேசியர் மஹேயை விட்டுச் சென்றனர். கேரள மக்கள் சிலரும் பிரான்சில் குடியேறினர். ‘பிராங்க போன்’ கலாசாரம் தொடர்ந்து இருந்து வந்த போதிலும். அல்போன்ஸோ என்ற மந்திரவாதி தனித்துச் சோக வாழ்வை ஏற்றுக்கொள்ளத் தயார கின்றான். அவன் மனைவியோ பிரான்சுக்குச் செல்ல எத்தனிக்கிறாள். மகன் செள்றுவிட்டான். மந்திரவாதி வறுமையில் வாழுகிறான். ரகுவரன், பூரீவித்யா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்தப்படம் என் உள்ளத்தைத் தொடவில்லை. காரணம் நெறியாள் கையில் சீரான போக்குக் காணப்படாமை. மது அம்பாட்டின் ஒளிப்பதி வாற்றல், நெறிமுறையின்றி, கதைக்கும் சம்பவத்துக்கும் பொருத்த முடைமையாய் இல்லை. இப்படத்தின் நெறியாளர் லெனின் ராஜேந்திரன் ஏற்கெனவே வேணல், கோடை) சில்லு துண்டங்கள்) மீன மாசத்திலே சூரியன் நடுக்கோடையில் கதிரவன்) பூரவிரித்தம் (சென்றகாலம்) வக்கணன் (உலகம்) ஆகிய படங்களை நெறிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியத் தேசியப் பத்திதிகைகளின் கேலிச்சித்திரக்காரராகப் பணியாற்றிய கே. பி. சசி, புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்
20

கே.எஸ். சிவகுமாரன்
கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் கடப்பாடுடைய சோசலிஸ்ட், 1982இல் இவருடைய முதலாவது கதைசாரா விவரணச்சித்திரம் உருவாகி யது. இலையும் முள்ளும்’ என்ற இவரது புதிய படம் சுவாரஸ்ய மானதாய் இருந்தாலும், அதில், சமநிலை, கலைத்துவம், நுட்பம் நொய்மை போன்றவை அரிதாகவே காணப்படுகின்றன.
கேரளத்தின் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், பெண் விடுதலைப் போக்கு வரவேற்கத்தக்கதாகவும் இருந்த போதிலும் சில இடங்களில் பெண் துவேஷ ஆணாதிக்கப் பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இப்படம் கூற வருகிறது. ஊதாரிகள் சிலர், நான்கு பெண்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து, ஒன்றாகத் தொழில் பார்ப்பதைப் பொறுக்காமல், அவர்களை இம்சைப் படுத்துவதையும், பஞ்சாயத்துத் தலைவர் உட்படப் பலர் காம சேஷ்டை களில் ஈடுபடுவதையும் இறுதியில் அப்பெண்களில் இருவர் தற்கொலை செய்வதையும் படம் காட்டுகிறது.
அடூர் கோபாலகிருஷ்ணனின் படமாகிய 'விதேயன்’ (அடிமை) தலைசிறந்த நல்ல படங்களில் ஒன்றாகத்தான் இருக்கும். இப்படத்தை நான் பார்க்காவிட்டாலும் இப்படம் தொடர்பான சில சர்ச்சைகள் அம்பலத்துக்கு வந்தன. போல் ஸக்காரியா எழுதிய நாவலொன்றைத் தழுவியது இந்தப்படம். தனது கதையைத் திரித்துத் திரைப்படமாக எடுத்திருப்பதாக நாவலாசியரியர் குற்றம் சாட்டினார். இதனை கோபால கிருஷ்ணன் மறுத்தார். அதே வேளையில் பாரதீய ஜனதாக்கட்சிக்கு ஆதரவாக 'ஹிந்துத்துவ கோட்பாட்டை நெறியாளர் புகுத்தியுள்ளதாக வும் மற்றொரு குற்றச்சாட்டு. எது எப்படியிருப்பினும் அடூர் கோபால கிருஷ்ணன் கலைத்துவம் மிளிரும் படங்களை நெறிப்படுத்தியுள்ளார். 'ஸ்வயம்வரம்', 'கொடியாட்டம்', 'எலிப்பத்தாயம்', 'முகாமுகம்", அநந்தராம்', 'மதிலுகள்' ஆகியன இவருடைய படங்கள். இவரும் பூனே திரைப்படத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையப்பட்டதாரியாவார்.
இந்திய சினிமாவிலே மலையாளப்படங்கள் தொடர்ந்தும் சிகரத்தில் இருந்து வருகின்றன.
21

Page 19
ஓர் அழகிய பெண்ணியப்படம்
அவர் பெயர் ஸந்த்வானா பர்தோலோய் (Santwana Bardoloi). QuoTÉG35 Taôlu'à 5 Tuc) படிந்த வட இந்தியப் பொன்னிறச் சருமம் அவருக்கு. குட்டையான, மெல்லிய உருவம். சாந்தமான முகம். அறிவொளி வீசும் கண்கள். அழகிய ஆங்கில உச்சரி ப்பு இனிமையும், மரியாதையும் கலந்த இங்கிதமான பேச்சு. தன்னடக்கம் அரசோச்சும் ஆளுமை. அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணியக் கலாவிற்பன்னர், தொழிலால் ஒரு வைத்தியர். கணவரும் அதே தொழில். இனிய குடும்பம். இந்திய மீமா நகரங்களில் நடக்கும் வருடாந்த அனைத் துலகத் திரைப்பட விழாக்களில் இவரை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஆயினும், இவர் இன்னார் என்று இனங் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டேன்.
1997 ஜனவரியிலே, திருவனந்தபுரத்தில் இவர்
நெறிப்படுத்திய முதலாவது திரைப்படமான அதஜ்யா (Adajya) காண்பிக்கப்பட்ட போது, வியப்பினால் ஆழ்ந்து போனேன். பறத்தல் என்ற பொருள்படும்
22

கே.எஸ். சிவகுமாரனி
இந்தப்படம் பற்றிய திறனாய்வுக் குறிப்புக்களைத் தருமுன்னர் இந்நெறியாளர் பற்றிய மேலும் சில விபரங்களைப் பாாப்போம். இவர் ஒரு தலைசிறந்த மேடை நாடக நடிகையென அறிகிறோம். பல விருந்துகளைப் பெற்றிருக்கிறார். ஹென்றிக் இப்ஸன் என்ற நோர்வே தேசத்து நாடகாசிரியர் எழுதிய “காட்டு வாத்து’ (Wild Duck) என்ற நாடகம் அஸாமிய மொழியில் பாடசாலை நாடகமாக மேடையேற்றப் பட்டபொழுது, இவர் ஒரு நடிகையாக அரங்கேறினார்.
Glasp6örgöl& Qj Gru6ïlaöt "QuTubGOLD aïG' (Doll's House) தமிழிலும், 60களில், யாழ்ப்பாணத்தில் மேடையேறியதை, பழைய பரம்பரையினர் அறிவர். யாழ்ப்பாணம் தேவன் எழுதிய இந்தத் தமிழாக் கத்தை நெறிப்படுத்தியவர், வேர்ணன் அபேசேகர என்ற ஆங்கில நாடகத்துறை விற்பன்னரும், முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரு மாவார்.
1973இல், புதுடில்லியில், அகில பாரத நாடக விழா இடம்பெற்றது. அங்கு மேடையேறிய நாடகங்களில் ஒன்று, ஜோர்ஜ் பேர்னாட் ஷோ எழுதிய “பிக்மலியன்’ (Pygmation). இதில் நடித்து, மிகச் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றார் வைத்திய கலாநிதி ஸந்த்வானா, குழந்தை நோய் மருத்துவரான இந்தத் திறனாற்றல் மிகுந்த கலைஞர். முதலிலே, 'ஆரண்யக்” என்ற குறுந்தொலைத் திரைப்படத்தை (Telefilm) தூர்தர்ஷனுக்காக இவர் நெறிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து “மத்தியவர்த்தனி” "அவக்ஹற்யாய்" ஆகிய தொலைப் படங்களையும் நெறிப்படுத்திய அனுபவம் டெற்ற ஸந்த்வானா, முதற்தடவையாக, “அதஜ்யா” என்ற முழு நீளக் கதைப் படத்தை நெறிப்படுத்தி வெற்றிகண்டுள்ளார். கலாநிதி இந்திரா கொஸ்வாமி என்ற பிரபல, அஸாமிய பெண் எழுத்தாளர் எழுதிய கதையைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திரை நாடகத்தையும் (Screen play) நெறியாள்கையையும் மேற்கொண்ட ஸந்த்வானா பர்தோலோய்க்குப் பக்க துணையாகப் படத் தொகுப்பாளர் ஏ. பூரீதர் பிரஸாத் நல்ல பணி செய்திருக்கிறார்.
23

Page 20
சினமா சினமா : ஒர் உலகவலம்
டொம் ஒல்டர் (Tom Alter) என்ற வெள்ளையர், ட்ரிஷா சைக்கியா (Trisha Saikia) மற்றும் பல அஸாமிய நடிக நடிகையர் இப்படத்தில் நடிக்கின்றனர். மிர்னால் காந்திதாஸின் வண்ணப்படப்பிடிப்பு, ஒளியும் நிழலும் சேரும் கவிதையாக, கண்ணை உறுத்தாமல் களிப் பூட்டுகிறது. ஷேர் செளத்ரியின் இசை ரம்மியமாய், படத்தின் காட்சிப் புலத்துக்கு உகந்ததாய் ஒலிக்கிறது. சரி, படம் என்ன கூறுகிறது? கதைப் போக்கினூடாக அதரப் பார்போம்.
அஸாம் ம்ாநிலத்தின் ஒரு பகுதி. அங்கு பிராமணியரின் அக்ரஹாரம். கதை நிகழும் காலம் 1940கள். பிராமணியக் கைம் பெண்கள் அவல வாழ்வு வாழ வேண்டிய சூழ்நிலை. பிராமணியர்களில் ஒரு பிரிவினர், தாமோதரரால் என அழைக்கப்படுகின்றனர். அவர் களுடைய சத்ரத்தின் தலைவர் குடும்பத்தில் மூன்று கைம்பெண்கள். அவர்களுடைய கதையை மமோனிரோய் சொம் கொஸ்வாமி நாவலாய் எழுதினார். அந்நாவலின் ஒரு பகுதியே திரை வடிவில் வந்துள்ளது. இக்கதையின் வீட்டுத் தலைவரின் இளைய சகோதரி துர்கா. அவள் மருமகன் அவளை அவ்வீட்டுக்குக் கொண்டு வருகிறான். அக் காலக்கைம்பெண்கள் அனுபவித்த சொல்லொண்ணாத் துயர்களை த: . . :னுபவித்தாலும், இறந்து போன தனது கணவனுக்கு இறுதிக் கிரியைகளைக் காசிக்குச் சென்று நிறைவேற்றலாம் எனக் காத்திருக் கிறாள். இதற்காகத் தனது நகை நட்டுக்களை விற்றுவிடவும் அவள் தயாராக இருக்கின்றாள்.
சத்ராதிகார் (சத்ரத்தின் தலைவர்) தம்பியின் கைம்பெண்ணின் நம்பிக்கைக்குப் பொறுப்பான ஒரு வேலையாள் மூலம், தனது நிலபுலன் களையும், குடியிருப்பாளர்களையும் கவனித்துக்கொள்கிறாள்.
துர்காவின் விலையுயர்ந்த நகைகள் களவு போகின்றன. மனிதர்கள் மீது வைத்திருந்த அவள் நம்பிக்கை தவிடுபொடியாகிறது. இக்கதையில் வரும் மூன்றாவது இளம் விதவையினூடாகத் தான் பெண்ணியக் கருத்தோட்டங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவள் பெயர் கிரிபாலா. இவள் வீட்டுத் தலைவனின் இளைய மகள். படத்தில் ஆரம்பத்திலேயே இவளை ஓர் இளம் விதவையாக அறிமுகப்படுத்துகின்றார் நெறியாளர்.
24

கே.எஸ். சிவகுமாரனர்
அவள் சிந்தனையும், போக்கும் வேறுபட்டவை. ஏனைய உயிருள்ள வர்கள் போலவே, கைம்பெண்களும், தாம் எங்கு, எவ்வாறு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெற வேண்டுமென வாதிடுகிறாள்.
இதற்கிடையிலே, அவளுடைய பிராமணியக் குடும்பப் பிரிவினரின் மூதாதையர் பற்றிய ஆய்வு ஒன்றை ஓர் இளம் ஆங்கிலேயன், மேற்கொண்டு வருகிறான். அவன் அக்ரஹாரத்துக்கு வந்து ஆய்வு களை மேற்கொள்ளும் போது, இளம் விதவையான கிரிபாலா, உள்ளத்தாலும், உடலாலும் வேட்கையடைகிறாள். பிராமணிய, இந்து, விதவைகள் நடந்து கொள்ள வேண்டிய, பழைய சம்பிரதாயங்களை, அவள், உதறித்தள்ளுகிறாள். அவள் பெண்ணும் ஒரு மனிதப்பிறவியே என்று நம்பி, சுயாதீனமாக நடந்து கொள்கிறாள். எதிர்பார்த்தவாறே எதிர்ப்பு ஏற்படுகிறது.
எங்கு, வாழ வேண்டும் என்று தானே தீர்மானிக்க முடியா விட்டாலும், எங்கு எப்படித் தான் மரித்தல் வேண்டும் என்பதைத் தன்னால் தீர்மானிக்க முடியும் என்று செயலில் இறங்குகிறாள் கிரிபாலா. இது, அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட சூழலில் பெரும் புரட்சி வாய்ந்த செயலாகும். பெண்ணியக் கருத்துகளின் தோற்றுவாயை இப்படத்தில் காண முடியுமென ஒரு வகையில் நாம் துணிவு கொள்ளலாம். நெருக்கு வாரங்களுக்கு மத்தியில், மனித நடத்தைகள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதையும் இப்படம் மூலம் நாம் அவதானிக்கலாம். ஸந்த்வானாவுடன் உரையாடிய பொழுது, அவர் கூறினார். “பெண்களே பெண்களின் தீவிரமான எதிரிகள். பெண் திரைப்பட நெறியாளர்களைக் கருத்திற்கெடுத்துக்கொள்வோர் குறைவு. இது வருந்தத்தக்கது. மனிதரை மனிதராகப் பார்க்காமல், ஆண் என்றும், பெண் என்றும் பார்ப்பது பேதமை. ஐம்பது வருடங்கள் கழிந்த பின்னரும், இந்தியாவில், கைம்பெண்கள் நடத்தப்படும் விதம் மாறவில்லை’
"உடனிகழ்காலக் கதையொன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருக் கலாமே?" என்று வினவியபோது, தான் எடுத்துக்கொண்ட கதையின் நிகழ்வு 1940களில் இடம்பெற்ற போதும், அக்கதையில் வரும் மூன்று
25

Page 21
சினமா சினமா : ஒர் உலகவலம்
கைம்பெண்களும், வெவ்வேறு விதமான உலக நோக்கைக் கொண்டி ருந்ததனால், அக்கதையில் ஈடுபாடு ஏற்பட்டது என ஸந்த்வானா கூறினார், நாவலின் இறுதிக்கட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தே, தனது படத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இது ஏன் எனக் கேட்ட போது, “சினமா என்ற ஊடகத்துக்கு இசைந்ததாக இருக்க வேண்டுமென்பதனால் அவ்வாறு செய்தேன்’என்றார். நாவலாசிரியை இதற்கு உடன்பட்டதாகவும் ஸந்த்வானா தெரிவித்தார். பாரம்பரியமான ஒரு காதற் கதையைய் டமாக்க விரும்பாது, காதல் ஊடாகப் பெண் ணுரிமை நிலை நாட்டப்படுவதையே தான் விரும்புவதாக, அடக்கமான கவர்ச்சியுடைய இந்தப் பெண் நெறியாளர் குறிப்பிட்டார்.
சம்பிரதாயங்களின் படி கதாநாயகி கிரிபாலா ஒரு கைம் பெண்ணாயினும், அவள் தன்னைக் கைம்பெண்ணாகவே கருதிக் கொள்ளவில்லை. நித்திய துன்பத்தில் உழலும் பழைமைப் பெண்ணாக அவள் வாழ விரும்பவில்லை. புதுமைப் பெண்ணாகவே அவள் வாழத் துடித்தாள். தான் ஒரு பெண் திரைப்பட நெறியாளராய் இருந்தபோதிலும், தனக்குக் கணவனும், குழந்தைகளுமே முதன்மையானவர்கள் எனச் சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார். ஸந்த்வானா போர்தோலேப் போன்ற திறமை சான்ற, பெண்ணியக் கருத்தோட்டம் கொண்ட, அடக்கமான, கலைஞர்களின் ஆக்கங்களைக் காண்பதும், அவர்களுடன் உரை யாடுவதும், மகிழ்ச்சிகரமான, அழகியல் சார்ந்த ஆய்வறிவு அனுபவம்.
26

இந்திய சினமா : பிராந்திய வமாழிப்படங்கள்
அஸாமிய மொழிப்படம் "அபர்தான்" இந்தச் சொல்லின் அர்த்தம் "ஓடித் தப்புகையில்", கலாநிதி பாபேந்தரா நாத் சைக்கியா கதை வசனம் எழுதி நெறிப்படுத்தியிருக்கிறார். இவரைப் பற்றிச் சில தகவல்கள் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பெளதிகத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். குறு நாவல், சிறுகதை, வானொலி நாடகம், திரைப் படப் பிரதிகள் என்று 14 நூல்களை எழுதியி ருக்கிறார். பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகங்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் காட்டப்பட்டுள்ளன. இடம்விட்டு இடம் பெயரும் அஸாமின் நாடகக் குழுவினர். இவரு டைய 14 நாடகங்களை மேடையேற்றினர்.
கலைத்திறன் கொண்ட ஜயந்தி என்ற கிரா மியப் பெண் நகரில் மேற் படிப்பை மேற்கொள்ளும் வேளையில், தீவிரத் தேசப்பற்று இயக்கமொன்றில் சேர்கிறாள். இதனால், அவள் கிராமத்தினர் அவளை ஒதுக்குகின்றனர். ஜயந்தி வேறு வழியின்றி "நடமாடும்" நாடக அரங்கில் சேர்ந்து ஒளிர் விடுகிறாள். நாடகத்தை நடத்தியவன் நிஹார்.
27.

Page 22
சினமா சினமா : ஒர் உலகவலம்
மணமானவன். மகளும் உண்டு. அவன் அவளை மோகிக்கின்றான். ஜயந்தி இடங் கொடுக்கிறாள். அவளுடைய வருமானத்திலே தான் அவள் கிராமியக் குடும்பம் தங்கியுள்ளது. நாடகக் குழுவும் அவள் ஆற்றலிலேயே தங்கியிருக்கிறது. எனவே, அவள், கட்டாயமாக அந்தக் குழுவுக்காகப் பங்களிக்க வேண்டும் என்று முறியொன்றைச் செய்து கொள்கிறது. இதற்கிடையில் ஜயந்தி பரிமால் என்ற பொறியியலாளரைச் சந்திக்கிறாள். கட்டுபாடற்ற வாழ்க்கையை நடத்திய அவன், ஜயந்தியிடம் நின்றவு'காண்கிறான். அவளும் அப்படியே, தத்தமது வாழ்க்கையை அவர்கள் இருவரும் புனர் மதிப்பீடு செய்து தன்நிறைவு காண்கின்றனர். ஆயினும், இருவரும் திருமணஞ் செய்துகொள்ளப் பல சங்கிலிப் பிணைப்புத் தடங்கள் இருப்பதைக் காண்கின்றனர். இவற்றிலிருந்து விடுபட இருவரும் எத்தனிக்கின்றனர். எல்லாத் தளைகளிலிருந்தும் ஒரு பெண் விடுபட வேண்டும் என்பதை இந்த அஸாமியப் படம் கூற முற்படுவதை கதைப்போக்கிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.
8X
வங்க மொழி நெறியாளர்களில் சத்தியஜித் ராயைவிட, ரிட்விக் கட்டாக், மிர்னால் ஸென், தபன் ஸின்ஹா, புத்ததாப் தாஸ் குப்தா போன்ற சிறப்பான கலைத்துவப் படநெறியாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை நாம் அதிகம் கவனிப்பதில்லை. காரணம் சத்தியஜித் ஆளுமையே. மிர்னால் ஸென் படம் அந்தரீன்’ (கட்டுப்படுத்தப்பட்டவர்கள்), மற் றொரு ‘விடுதலைபடம். நிர்ப்பந்தத்தின் பேரிலும், நிர்ப்பந்தமில்லாமலும், ஓர் ஆணும், ஒரு பெண்ணும் நேரடிச் சந்திப்பு இல்லாமலே தொலை பேசித் தொடர்பு மூலம் தத்தமது வெறுமையான வாழ்க்கையில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை அனுபவிக்கின்றனர். “பொபி’ என்ற ஜனரஞ்சகப் படம் மூலம் அறிமுகமாகி, இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவரான டிம்பிள் கப்பாடியா இந்தப்படத்தில் நடிக்கிறார்.
திரைப்பட விமர்சகராகவிருந்து நெறியாளராக மாறிய பிரெஞ்சு, த்தாலிய நெறியாளர்கள் போலவே மிர்னால் ஸென்னும் குறிப்பிடத்தக்க தத ந லும் கு 凸
28

கே.எஸ். சிவகுமாரனர்
வங்கஹறிந்தி மொழி நெறியாளராக மாறியவர். “கல்கத்தா-71’ என்ற இவருடைய படம் 1970களின் பிற்பகுதியில் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேசப் பட விழாவிலே காட்டப்பட்டது. பல இந்திய சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஒரியா, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் படங்களை நெறிப்படுத்தினார்.
0x
ஜி. வி. ஐயர் என்ற தமிழ்ப் பிராமணர் சமஸ்கிருத மொழியில் “பகவத்கீதை'யைத் தந்துள்ளார். பல தரமான தமிழ் இலக்கியச் சிற்றேடுகளுக்கும், புத்தகங்களுக்கும் ஓவியங்கள் வரைந்திருப்பதுடன், சிறந்த நவீன காலத் தமிழ் ஓவியர் சிற்பியாக விளங்கும் பி. கிருஷ்ண மூர்த்தி இந்தப் படத்தின் கலை நிர்மாண நெறியாளர். இப்படம் பற்றியும், நெறியாளர் பற்றியுமுள்ள மேலும் விபரங்களை நாம் பிறிதோரிடத்தில் எழுதிய கட்டுரையில் காணலாம்.
0x8
டி. எஸ். நாகாபரண என்ற கன்னட மொழி நெறியாளர் நெறிப்படுத்திய “சின்னரிமுத்தா” என்ற படத்தில் சிறுவன் ஒருவனின் ஆற்றல் இனங் கண்டு வெளிப்படுத்தப்படுகிறது. ஒட்டப் பந்தயங்களில் அவன் தேசிய விருது பெறுவதற்காகப் பெறும் பயிற்சியும் அவனிடத்தே காணப்பட்ட குடத்திலிடப்பட்ட விளக்குப் போன்ற திறனும் வெளிவர வேண்டுமென அவன் பயிற்சி ஆசிரியர் முற்படுகிறார். பி. வி. கரந்த், கிரிஷ் கர்நாட் போன்ற பிரபல கன்னட மொழி நெறியாளர்களின் வழி நடத்தலில் வளர்ந்துள்ள நாகாபரண, “கிரஹண’ என்ற அவருடைய முதற் படத்திற்குச் சிறந்த கன்னடப்படப் பரிசைப் பெற்றவர். தமிழினத்தைச் சேர்ந்தவரான ஆர். கே. நாராயண் எழுதிய “த பினான் ஷல் எக்ஸ்பேர்ட்” என்ற நாவலைத் தழுவி இவர் எடுத்த படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. மற்றும் “மைசூர்மல்லிகே” உட்படப் பல பரிசு பெற்ற படங்களை நெறிப்படுத்தியிருக்கிறார். கன்னடத்திரை மேடை தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் சமூகப்பிரக்ஞையுள்ள ஆக்கங்
29

Page 23
சினமா சினமா : ஒர் உலகவலர்
களைத் தந்திருக்கிறார் நாகாபர்ண. இவரைக் கொல்கத்தா, புதுடில்லி, பெங்களூர், சென்னைப் பட விழாக்களில் சந்தித்தபோது, தமிழ் மொழி யில் என்னுடன் நட்பாகப் பேசினார்.
ex
ஷாருக்கான், சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, சதிஷ் ஷா, ரீட்டா பாதுரி போன்ற புதிய ஹிந்தி சினிமாக் கண்டுபிடிப்புக்களும்’ நஸிருத்தீன் ஷா போன்ற சிறப்பானி நீடிகர்களும் பங்குபற்றிய படம் “காபிபான் காபி நா’ படத்தின் கதை, இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள கோ-ஆவில் இடம்பெறுகிறது. நவீன இசையில் ஈடுபாடுடைய சுனில், அனா என்ற பாடகி மீது மையல் கொள்கிறான். ஆனால், இருவரும் அங்கம் வகிக்கும் இசைக் குழுவின் தலைவனான கிறிஸ் என்ற இளைஞனும் அனாவைச் சொந்தமாக்க விரும்புகிறான். அனாவையும் கிறிஸையும் பிரிக்க சுனில் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. ஆயினும் மூவரும் காதல் என்ற கொந்தளிப்புக் கடலில் சிக்கித் தவிப்பதைப் படம் காட்டுகிறது. இப்படத்தின் நெறியாளர் குண்டன் ஷா, பூனேயிலுள்ள திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற இளம் நெறியாளர். தொலைக் காட்சிப் படங்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்.
0x8
ஒரியா மொழி, ஒரிஸ்ஸா மாநிலத்தில் பேசப்படுகிறது. “லாவண்ய பிரீதி”என்ற தலைப்பில் ஓர் ஒரியப்படம். பிரபல நெறியாளர் ஏ.கே. பீர் நெறிப்படுத்தியிருக்கிறார். இவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளருங்கூட பூனேயில் பயின்று பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் “கிளியோ’ விருது இவருடைய “போர்ன் ஈகூவல்’ (பிறப்பால் சமதை என்ற படத்திற்குக் கிடைத்து. மற்றும் சில படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஏ. கே. பீர் இந்திய சினிமாவில் பெரிய பெயர்.
ஷேக்ஸ்பியரின் “ரோமியோ அன்ட் ஜூலியட் நாடகத்தைப் போல ஒரு காதல் கதை, ஊகத்தின் அடிப்படையில் இரு காதலர்கள்
30

கே.எஸ். சிவகுமாரன்
தமது உயிரைத் தாமே பறித்துக் கொள்கின்றனர். இது படக் கதையினுள் வரும் ஓர் உப கதை. கோபால், விதியூலதா என்ற இரு காதலர்கள் பற்றியது பிரதான கதை. இவர்களுடன் மாயதார் என்ற இளைஞனும். மூவரும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். தனித்தனியாகவும், கூட்டாகவும் அவர்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பெறுகிறார்கள். கோபால், அந்தக் கிராமக் கோயில் பூசாரி ஒருவரின் சுய கெளரவத்தைக் காப்பதற்காகத் தங்க மோதிரம் ஒன்றைத் திருடி விடுகிறான். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இதன் நிமித்தம் காதலரிருவரும் பிரிய நேர்கிறது. இக்கதை மூலம் கற்பனைகள், அனுபவங்கள், மோதல்கள், உண்மை நிலை போன்றவற்றை நெறியாளர் காட்ட முற்படுகிறார் என நினைக்கிறேன்.
8X
நவ இந்திய சினிமாவில் மற்றொரு பெரிய பெயர் கெளதம் கோஸ். இவருடைய ஹிந்திப்படம் “பட்டங்’ (பட்டம் ஷப்னா ஆஸ்மி (நெல்ஸன் மண் டெலாவுக்கு உதட்டில் முத்தமிட்ட பெண்ணியவாதியும், இந்தியாவின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவருமாவர் ஒம்பூரி (பெரிய நடிகர்) வில்லனாக நடித்துப் பெயரீட்டிய ஷத்ருக்கன் சிங்ஹா போன்ற வர்கள் நடிக்கிறார்கள்.
31

Page 24
ஹிந்தி சினமா (B)பிக்ரம்சிங்கின்படம்
தென்னிந்திய நடிகை ரேவதி ஹிந்தியில் நடித்த தர்பன்’ (Tarpan - குற்றச்சாட்டினின்றும் விடுதலை) என்ற அருமையான படம், மும்பாயில் இடம்பெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவின் "இந்திய பனோரமா (அகல் பரப்புக்காட்சி) பிரிவில் காட்டப்பட்டது.
இந்தப் படத்தை நெறிப்படுத்தியிருப்பவர் கே. பிக்ரம் சிங். இதுவே இவர் நெறிப்படுத்திய முதலாவது படம். அரசாங்க உத்தியோகத்தராக இருந்துவந்த இவர், 1983இல் உரிய காலத்திற்கு முன்னதாகவே ஒய்வெடுத்துக் கொண்டார். பின்னர் தற்போது முன்னணியில் நிற்கும் தலைசிறந்த வங்காள மொழி நெறியாளரான புத்ததேப் தாஸ் குப்தா நெறிப் படுத்திய ‘அந்திகல்லி’ என்ற ஹிந்திப்படத்தை தயாரித்தார். அப்படத்திற்கு இணை நெறியாளராகப் பணி புரிந்த போது திரைப்பட நெறியாள்கை நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இது 1984இல் Galosurdug. 36.760Ti, New Delhi Times' Graip பலரின் கவனத்தையும் பெற்ற படத்தின் நிறை வேற்றுத் தயாரிப்பாளராகச் செயற்பட்டர்.
32

கே.எஸ். சிவகுமாரன்
1990 ஆம் ஆண்டு, பூனே திரைப்படத் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் திரைப்பட இரசனைlவிமர்சன பயிற்சி வகுப்பிலே நான் பயின்றபோது, திரு. பிக்ரம் சிங்கும் அதிதி விரிவுரையாளராகக் கடமையாற்றினார். திரைப்படத்துறைக்கு வரு முன்னர். இவர், இந்திய மத்திய அரசாங்கத் தகவற்றுறை அமைச்சில் உயர் அதிகாரியாகப் பணி புரிந்தவர். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பல சிறந்த Documentaries இடையிடைப்பட்ட விளக்கவுரைகளுடன், ஒன்றைப் பற்றிய மெய்யான நிகழ்ச்சிகளை மட்டும், கதைப்புனைவு இன்றி, கலப்பின்றிக் காட்டும் இயக்கப் படம்) களைத் தந்திருக்கிறார்.
'தர்பன்’ என்ற இவருடைய முதலாவது படம் என்ன கூறுகிறது?
அடக்கப்பட்டவர்கள். அடக்கியாள்பவர்கள் செய்யும் பாவங்கள், பெண்களைக் காமச்சுவைதரும் உயிர்ப்பொருள்களாக மாத்திரம் பாவித்தல் போன்றவற்றை, ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறக்கதை யொன்றை மையமாக வைத்து இந்தப்படக் கதையை எழுதி நெறிப் படுத்தி யிருக்கிறார் பிக்ரம் சிங்.
சாதிப்பெருமை தடித்துள்ள பார்வையாளரிடையே, கலாரீதியாக, அநியாயங்களைச் சித்திரிக்க இந்த Folk-Tales (மக்கள் மரபுக்கதைகள்) உதவுகின்றன போலும், மனித உறவுகளை, ஆசாபாசங்களை, உரிமைப் போராட்டங்களை வெகு நேர்த்தியாக யாவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நெறியாளர் தருகிறார் எனலாம். தர்பன்' படத்திலே ரேவதி, ராஜஸ்தானி பழங்குடி மகளாகப் பிறந்து, தனது பெண்ணுரிமையை உயர் மட்டப் பிறப்பு உறவினர்கள் முன்னிலையில் நிலைநாட்டும் பெண்ணாக, அமைதியையும், கொந்தளிப்பையும் சித்திரிக்கும் பாத்திரத்தில் நடிக்கிறார். வட இந்தியாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான ஓம்புரி மற்றும் விஜே காஷ்யப், மீட்டா வஷிஸ்ட் போன்ற பிரபலமானவர்களும் இதில் நடிக்கிறார்கள்.
33

Page 25
தமிழ் சினடிா
1997ல் திருவனந்தபுரத்தில் தமிழ் எழுத் தாளர் பூமணி பூ , மாணிக்கவாசகம்) எழுதி நெறிப் படுத்திய ‘கருவேலம் பூக்கள்’ என்ற 130 நிமிட வண்ணத் தமிழ்ப் படத்தையும் பார்க்க நேர்ந்தது. ராதிகா (வடிவு), சோனியா (த கூழ்மி), நாஸர் நல்லமுத்து), ஷக்தி (தங்கவேலு போன்றோர் நடிக்கும் இந்தக் கிராமியப் படத்தின் படப்பிடிப்பாளர் தங்கர் பச்சான், கைதேர்ந்த படத் தொகுப்பாளர்கள் பி. லெனின் மறைந்த நெறியாளர் பீம்சிங்கின் மகன்), வி. டி. விஜயன் ஆகியோர். இசை, இளையராஜா.
'பிறகு’, ‘வெக்கை போன்ற நாவல்களைப் படித்துள்ள வாசகர்களுக்குப் பூமணியின் ஆற்றல் நன்கு தெரியவரும். அவர் ஐந்து நாவல்களையும், நான்கு சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளி யிட்டுள்ளார். தமிழ் நாட்டின் கரிசல் மண்வாசனை யும், அவ்வட்டாரப் பேச்சு வழக்கும், ஒடுக்கப்பட்ட கிராமிய வறிய மக்களின் வாழ்நிலைச் சித்திரிப்பும் அவர் படைப்புக்களில் பரிமளிக்கும்.
34

கே.எஸ். சிவகுமாரனர்
‘கருவேலம் பூக்கள்’ பூமணியின் கன்னித் திரைப்பட வடிவம். திரைப்படம் என்ற ஊடகத்தை அவர் பயன்படுத்திய முறைமை பாராட்டத்தக்கதாய் அமைந்திருக்கும் அதேவேளையில் கதைப் போக்கு, வழமையான முற்போக்கு முற்சிந்தனை முற்சார்பு சார்ந்ததாய் அமைவதனால், யதார்த்தமான படம் என்பதிலும் பார்க்க ஓர் இலட்சியப் படம் எனவும் அவநம்பிக்கையையும் நடைமுறை யதார்த்தத்தை எதிர்கொண்டு முன்னேற விருப்பமின்மையைக் காட்டும் படம் எனவும் கூற முடிகிறது.
விவசாயச் சூழலில் கைத்தொழில் வளர்ச்சியும், வணிகப் போட்டா போட்டியும், சிறுவர் உழைப்புத் துவஷ்பிரயோகமும் மனித உறவுகள் இயந்திரமயமாய் மாறி, கனிவு, கசிவு இன்றிக் கடமைச் சுழற்சியாய் ஆவதும் ஆற்றாமையின் விளைவு தற்கொலையில் முடிவதன்றி வேறு வழி இல்லாதிருப்பது போல் காட்டுவதும் இந்தப் படத்தின் காட்சிப் பிரகடனம்.
ஒரு கலைஞனின் கருத்தோட்டம் நமக்கு ஒவ்வாததாக இருக்கக் கூடும். பூமணியின் கருத்து நிலை நான் ஏற்றுக் கொள்ளாததொன்று, ஆயினும் அவர் கருத்துச் சுதந்திரத்தை நாம் தட்டிக்கேட்க முடியாது. அதே வேளையில், அவர் தான் எடுத்துக்கொண்ட பொருளை, உகந்த முறையில் சாதனத்தின் வழியாகச் சித்திரித்து வெற்றி பெறுகிறாரா என்பதே நமது கேள்வியாகும். நடிப்பு, ஒப்பனை, பாத்திர உறவு நிலை, ஒளிப் பதிவு உணர்வலைகளை எழுப்புகையில் அவற்றிற்கு உகந்ததாகப் பின்னணி அமைகிறதா என்பன போன்ற கேள்விகள் நமது ரசனையை யும் கணிப்பையும் கூர்மை பெறச் செய்யும். என்னைப் பொறுத்த மட்டில், ராதிகாவின் நடிப்பு, அவருடைய முன்னைய அனுபவவெளிப்பாட்டின் திரட்டாக அமைவதால், வெகு இயல்பாகவே பரிணமிக்கிறது. நாஸர் சில வசனங்களையே பேசுகின்றார். ஆனால், அவர் பேசாத வேளையி லும் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளும் போதும் நடிப்பு இயல்பு நிலை, இரண்டிற்கும் வித்தியாசமில்லாமலேயே காட்டிவிடுகிறார்.
35

Page 26
சினமா சினமா : ஒர் உலகவலம்
"கருவேலம் பூக்கள்’ கதையும், கதைப்போக்கும் ஒரு புறம் சுவாரஸ்யமாக இருக்கும் அதே வேளையில் கதை, திரை என்ற ஊட கத்தினூடாக அசையும் பிம்பங்களாக நகர்வது, சினமாவாகவே அமை கிறது. சினமா நாடகமாக அல்லாமல் இருப்பது ஒரு சக பண்பாகும். கதைச் சுருக்கம் இவ்வாறு அமைகின்றது. சோம்பேறியும், குடிகாரணு மாகிய நல்லமுத்துவின் ஆல விருட்சம் அவன் மனைவி வடிவு. இவர் களுக்கு தனலவஷ்மி (வரிைளம் பருவத்தினள்) வள்ளி (சிறுமி, ராஜ0 (சிறுவன்) ஆகிய குழந்ளிெத்கள், கரிசல்குளத்தில் கடுமையாக உழைக்கும் விவாசாயத் தொழிலாளர்கள். அடுத்த கிராமம், முத்தையாபுரம், அங்கு தீப்பெட்டித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுகிறது. மாற்றுத்தொழில்நாடி அக்கிராமத்துக்கு இளம் பென்கள் படையெடுக்கின்றனர். தனலகூழ்மியும் வேலைக்குச் செல்ல வேண்டி ஏற்படுகிறது. தொழிற்சாலை முதலாளி, கிராமத்துப் பெண்களின் வசதிக்காகப் போக்குவரத்து ஏற்படுத்திக் கொடுக்கிறார். அதி காலையிலேயே பஸ் கிராமத்துக்கு வந்து அலறும். சின்னஞ்சிறுசுகள் பாதித் தூக்கத்தில் பஸ்ஸில் ஏறி அடுத்த கிராமஞ் சென்று கடுமையாய் தொழிற்சாலையில் உழைக்கும். பள்ளிப்படிப்பை யெல்லாம் இக்குழந்தைகள் நிறுத்தி விட்டன. அவர்கள் இருளின் குழந்தைகளாகவே மாறிவிட்டனர்.
நகர்ப்புற நாகரிகம் மெல்ல மெல்லக் கிராமத்தில் மணக்கத் தொடங் குகிறது. தனலகூழ்மிக்கும், தொழிற்சாலையைச் சேர்ந்த தங்கவேலுக்கும் காதல் அரும்புகிறது. ஆனால், அவர்கள் இணைய மாட்டார்கள். சாதி வேறுபாடு திருமணத்துக்கு குறுக்கே இருக்கின்றது. அவளின் ஆசை களை மண்ணாக்குகிறது. தற்கொலை செய்கிறாள். அவள் தாய், தமக்கை ஆகியோரை இழந்த சிறுமியும் சிறுவனும், பொருளாதார நிலைமை காரணமாகத் தொழிற்சாலைக்குச் செல்கிறார். தகப்பன் ஊதாரியாகத் தொடந்து இருக்கிறான். வாழ்க்கை ஒடுகிறது. எல்லாமே துன்ப மயம்.
கதைக்காகப் படத்தைப் பார்த்தால் அலுப்புத்தட்டும். கதை யினுடாக என்ன சொல்லப்படாமல் விடுபடுகிறது என்பவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் படத்தின் சிறப்பு விளங்கும். திரைப்படம் ஒரு
36

கே.எஸ். சிவகுமாரன்
காட்சி ஊடகம் என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தல். இப்படத்தின் சினமா அம்சங்கள் தெளிவாகப் புரியும். பாதை தெரியது பார், யாருக்காக அழுதான்', 'உன்னைப் போல் ஒருவன்', 'மண்வாசனை' போன்ற படங்கள் போன்று கருவேலம் பூக்கள்' படமும் கிராமியத்தின் வெளிப்பாடு.
37

Page 27
ઈનેrfા856IT ಶೌಢ್ಯ T எச்.டி பிரேமரத்னவின் படம்
1994இல் கொல்கத்தாவில் இந்தியாவின் 25 ஆவது அனைத்துலகத் திரைப்பட விழா நடை பெற்றபொழுது, "உலக சினமா என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு சிங்களப் படமும் காண்பிக்கப்பட்டது. ‘செயிலம’ (மாநகரம்) என்ற இப்படத்தின் நெறியாளர் எச்.டி. பிரேமரத்ன, அவருடைய துணைவியார், மற்றும் நடிகை அனோஜா வீரசிங்ஹ ஆகியோர் கொல்கத்தாவுக்கு வருகை தந்திருந்தபோது, அவர்களுடன் சேர்ந்து ரவீந்தர் சதன்’ என்ற படமாளிகையில் இப் படத்தைப் பாாத்தேன். 1993ல் தயாரிக்கப்பட்ட இப் படம் 105 நிமிஷங்களைக் கொணர் டது. திரு. பிரேமரத்ன அண்மையில் காலமானார்.
நாவல் நாடக எழுத்தாளரும் நடிகருமான சைமன் நாவகத்தேகம எழுதிய நாவல் ஒன்றைத் தழுவியே இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அனுபவம் வாய்ந்த அன்ட்ரியூ ஜயமான கமராவை இயக்கி யிருக்கிறார். எல்மோ ஹலிடே படத்தைத் தொகுத் துள்ளார். இசை ரோஹன வீரசிங்ஹ, திறமை மிக்க
38

கே.எஸ். சிவகுமாரனி
நடிகையான அனோஜா வீரசிங்ஹ, ஆண்மையை விளக்கும் ரவீந்திர ரன்தெனிய, தத்ரூபமாக நடிக்கக் கூடிய சிறில் விக்ரமகே, தயா தென்னக்கோன், மற்றும் திலானி அபேவர்தன, டபிள்யூ ஜயபூரீ அஜந்தா, ஜி. குணவர்தன ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே நன்கு அறியப்பட்ட நெறியாளராக முகிழ்த்திருக்கும் பிரேமரத்ன உதவி நெறியாளராகப் பயிற்சி பெறு முன்னர் “டைம்ஸ் ஒப் சிலோன்’ பத்திரிகையில் பிரதி ஒப்பு நோக்குபவராகத் தொழில் பார்த்தவர், சிக்குருவி (1975), அபேஹற்மா (1977), பரித்தியாக (1980), தேனிகமண (1982), அந்தர ஹசைன(1986), பாலம யட்ட (1990), சப்த கன்யா (1993) ஆகியன இவர் நெறிப்படுத்திய ஏனைய படங்கள். சினமா என்ற ஊடகத்ததைத் தாம் நன்கு புரிந்து கொண்டமையை எச்.டி. பிரேமரத்ன இப்படம் மூலம் வெளிப் படுத்துகிறார். தாம் கூற வரும் முக்கிய அம்சங்களை வலியுறுத்தும் விதத்தில் விபரங்களை மிக நுட்பமாகத் திரையில் சொல்லாமல் சொல்கிறார்.
வாழ்க்கையின் திரைக்கு வராத கோலங்களை சினமாவாக ஆக்கும் பண்பு அவரிடத்தில் மேலோங்கி நிற்கிறது எனலாம். கொழும்பின் அடித்தள, மறைவுலக மாந்தரின் நாளாந்த ஜிவிதங்களைக் காட்டும் படங்களை அவர் நெறிப்படுத்தி வருகிறார். இதற்கு பாலத்தின் கீழ் (குலசேன பொன்ஸேகா எழுதிய நாவலைத் தழுவியது ஒரு நல்ல உதாரணம். அதே வேளையில் வறண்ட வலயத்திலுள்ள கோரமான, கிராமிய வாழ்க்கையையும் அவர் திரையில் சித்திரிக்க முற்படுகிறார். நெறியாளரின் ஆக்கத்திறன் மலரும் விதத்தில் நாம் கவனம் செலுத்தும் அதே வேளையில் குறிப்பிட்ட இந்த ‘மாநகரம்’ (செயிலம) ஒரு நாவலின் திரை வடிவம் என்பதையும் நாம் மறக்கலாகாது. வன்னிப் பிரதேச மக்களின் வாழ்க்கையை அதிகாரபூர்வமாக அறிந்த ஒருவரின் நாவல் அது. எனவே, படத்தில் வரும் பிரத்தியட்ச யதார்த்தமும் துன்பியல் சார்ந்த கதைப்போக்கும் படத்தின் இரு ஊற்றுக்களின் வெளிப்படாகும். எழுத்தாளரும் நெறியாளரும்தான் இந்த ஊற்றுக்கள்.
39

Page 28
சினமா சினமா : ஓர் உலகவலம்
படத்தின் முதற் பகுதி காட்டுப் பிரதேசம் ஒன்றைப் பின்னணியாகக் கொண்டது. இயற்கையோடியைந்த வாழ்க்கை நடத்தும் கணவன். மனைவியாக சிறில் விக்ரமகேயும் அனோஜா வீரசிங்கஹவும் நம்பத் தகுந்த விதத்தில் இயற்கையாக நடிக்கின்றனர். கடும் வறண்ட வலயமே பின்னணியாயினும் தம்பதிகளிருவரும் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அந்தவேளையிற்றான் நகர்ப்புற மக்கள் அங்கு வந்து அவர்கள் அமைதியைக் கெடுக்கின்றனர். இந்த நகர மக்கள் ஊழல்களின் முகவிரிக்ள். இம்மோசடிக்காரர்கள் தாம் பிழையான வழிகளில் செல்வதை உணராதவர். இவர்கள் தமக்கேயுரிய நியாய தர்மங்களையும் வாழ்க்கைப் போக்குகளையும் அனுசரிப்பவர்கள். மாநகரத்தின் சேரி வாழ், மறைவுலக மாந்தர்களை இவர்கள் பிரதி நிதித்துவப்படுத்துபவர்கள்.
தாமே இத்தகைய வாழ்க்கையனுபவங்களை நெடுநாட்களாகப் பெற்று ஊறித் திளைத்தவர்கள் போல் ரவீந்திர ரன்தெனியவும் மற்றும் சிலரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனோஜா வீரசிங்ஹ இந்தப் படத்தில் ஓரிரு வசனங்களைப் பேசினாலும் அவருடைய வாளிப்பான » Lafi கள், மெளனம், அசைவுகள், சரியான-நேர்த்தியான வெளிப் பாடு 3 கப் பார்வையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன.
இப்படக்கதையின்படி காட்டுக் கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை அமைக்க, ரவீந்திர உதவுகிறார். சிறில் தனது வருவாயை அதிகரிக்கவே இந்த உபாயம். ஆனால், அது தோல்வியுறுகிறது. இது கண்டு, சிறில் ஏமாற்றமடைகிறான். நகரத்தாரின் குடிப்பழக்கத்திற்கும் ஆளாகிறான். இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரங்களை மாநகரத்துக்கு லொறியில் எடுத்துச் செல்லும் சாரதி ரவீந்திர இவர் முழுக்க கெட்ட மனிதன் அல்ல. ரவீந்திரவின் ஆட்களில் ஒருவன் அனோஜாவை பலாத்காரமாக அனுபவித்து விடுகிறான். இதைப் பின்னர் அறிந்த ரவீந்திர அந்த ஆளைத் தந்திரமாகக் குழிதோண்ட வைத்து அவனையே அதற்குள் பிணமாய் விழச் செய்து அவனைச் சுட்டுவீழ்த்துகிறான். கானகத்துச் சட்ட நியதி அங்கு நடைமுறையாகிறது. அனோஜாவும் அவள் பையனும்
40

கே.எஸ். சிவகுமாரனர்
அநாதையாகின்றனர். ரவீந்திர அவர்களை நகருக்கு அழைத்துச் செல்கிறான். மாநகரத்தில் அவனுக்கு மற்றொருத்தி இருக்கிறாள். அவள் கருக்கல் கன்னி. அவள் உடல் பண்டப்பொருள். அவள் சம்பாத்தியத் துக்கு ரவீந்திர ‘மாமா வேலை பார்ப்பவன். புதியவள் வந்ததும் நகரத்தவளுக்கு ஆத்திரம். இதேவேளை காட்டுக்கிராமப் பயன் மதிப்புக்களில் ஊறிய அனோஜாவுக்கு மாநகரத்துக் கலாசாரப் பயன் மதிப்புக்கள் அதிர்ச்சியூட்டுபவையாக அமைகின்றன. சேரி வாழ் மக்களின் 'திறந்த நாளாந்த நடைமுறையும் தனது புதிய கணவனின் விசித்திரப் போக்கும் தனது சக்களத்தியின் அதிக செல்வாக்கும் அவளைச் சங்கடப்படுத்துகின்றன. நகரத்துப் பெண்ணின் நளினமும் நாகரிமும் தனக்கும் இருக்க வேண்டும் என்று அனோஜா நினைக்கிறாள்.
மாநகரத்து அந்தி வேளை, உடல் விற்பனையில் தானுமிறங்கித் தன் கணவனைத் திருப்திப்படுத்த அவள் முனைகிறாள். குழந்தைத் தனமாகச் செய்வதறியாது கொழும்பு பஸ் தரிப்பு நிலையமொன்றில் சக்களத்தியுடன்-ஆனால், ஒதுங்கி-அவளும் நிற்கையில் அங்கு ரவீந்தர தனது ஒட்டோ ரிக்ஷோவில் பழைய வைப்பாட்டியைப் பஸ் தரிப்பு நிலையத்துக்குக் கொண்டு வந்து விட்டு, அவள் பஸ் ஏறுமட்டும் காத்திருக்கிறான். அனோஜாவை அவன் கவனிக்கவில்லை. அதே வேளை மாநகரத்துப் புதுப் பணக்கார ஆட்கள் இருவர் காரில் வந்து இவளை ஏறும்படி கேட்க, அனோஜா ஏறிவிடுகிறாள். பழக்கப்பட்ட விலை மாது, என்ன நடந்தது என்று அறிவதற்கு முன்னரே, புதியவள் தன் வாழ்க்கையை இழந்து திகைப்படையும் வேளையிலே ரவீந்திரவும் அப்போதுதான் அனோஜாவை இனம் கண்டுகொள்ள, கார் விரைகிறது. காரைத் துரத்திப் போனாலும் காரின் வேகத்துடன் நகரத்தையே கண்டறியாத அனோஜா மறைந்து விடுவதைத்தான் எதிர்கொள்ள முடிகிறது.
இப்படி அனோஜா பல விதங்களிலும் இழப்புகளையே காண் கிறாள், மொத்தத்தில் திரைப்பட வடிவமாக, "செயிலம’ தேர்ச்சி பெற்ற பார்வையாளரின் கவனிப்பைப் பெறுகிறது. இந்தப் படம் ஹவாய் திரைப்பட விழாவிலும் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0.
0.
41

Page 29
சமஸ்கிருத மொழிசினமா:
/ / ஜி.வி.ஐயர்
1994 ஜனவரியில் கொல்கத்தா நகரிலே இடம் பெற்ற இந்தியாவின் 25ஆவது அனைத்துலகத் திரைப்பட விழாவில் ஒரு சமஸ்கிருத மொழிப் படமும் காண்பிக்கப்பட்டது. ஜி.வி.ஐயர் என்ற தமிழ்ப் பிராமணர் நெறிப்படுத்திய பகவத் கீதை' என்பதே அத்திரைப்படத்தின் பெயராகும்.
இமயமலைச் சாரலில் 14, 000அடி உயரத்திலே இப்படத்தின் 40 சதவிகிதக் காட்சிகள் படமாக்கப் பட்டதாகவும் 11 முறை கதை எழுதி, நிராகரித்து 12ஆவது தடவையே படம் பிடிக்கப் பிரதி தயாரித்த தாவும் நெறியாளர் தெரிவித்தார்.
ஜி.வி. ஐயர் இதுவரை தமிழில் படமெடுக்க வில்லை. கடந்த 40 வருடங்களாகத் திரைப்பட உலகில் பவனி வரும் இந்த 82 வயதுக்குமரன், பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். பிராமணர். இவர் வசிப்பது கர்நாடக மாநிலத்திலுள்ள பெங் களூரில். அகன்ற நெற்றி, குடுமி, சிரித்த முகம், வெள்ளை வேட்டி, சட்டை, காலில் செருப்
42

கே.எஸ். சிவகுமாரனர்
பில்லாமை-இவரது தோற்றம். தமிழில்தான் முழுக்க முழுக்க உரை யாடினார். ஆயினும் இவருடைய படங்கள் கன்னடம், தெலுங்கு சமஸ் கிருதம் போன்ற மொழிகளில் உருவாகியுள்ளன. இவர் நெறிப்படுத்திய 'ஹிம்சகீதே ஆடலும் பாடலும் நிறைந்த படமென விபரிக்கப்பட்டது. அதிக செலவின்றி இவர் கன்னட மொழியில் உருவாக்கிய படங்கள் திரைப்பட விமர்சகர்களைத் திருப்திப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. “ஆதி சங்கராச்சாரியார்’ பற்றிய மற்றொரு வடமொழிப் படத்தையும் இவர் நெறிப்படுத்தியிருக்கிறார்.
கிருஷ்ண பரமாத்மா பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனனுக் குக் குருக்ஷேத்திரத்தில் உபதேசித்த 'உன் கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே’ என்ற தத்துவத்துக்குத் திரை வசனம் கொடுத்தி ருக்கிறார் ஜி.வி.ஐயர். மகாபாரதப் போர் பாண்டவர்களாகிய ஐவருக்கும் துரியோதனனாதியோராகிய கெளரவர்கள் நூறு பேருக்குமிடையில் நடைபெற்றது. இது கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. பகவத்கீதை' 18 அதிகாரங்களைக் கொண்ட சமஸ் கிருதப் புனித நூல். உலக மொழிகளில் அநேகமாக 400 மொழி யாக்கங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது. பகவத்கீதை என்றால் பகவானின் பாட்டு எனப்பொருள்படும். விஷ்ணுவின் அவதாரமாகிய கிருஷ்ணன். ஐவருள் ஒருவராகிய அர்ஜூனனுக்குச் செய்த உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டு மனிதனுள் நடைபெறும் போராட்டத்தைப் படம் சித்திரிக்கிறது. சமய, தத்துவக் கருத்துக்களுக்கும் கலை வடிவம் கொடுத்துவரும் ஜி.வி ஐயர், உடன் நிகழ்கால இந்தியத் திரைப்பட நெறியாளர்களுள் முக்கியமான ஒருவராகக் கணிக்கப் படுகிறார்.
4
43

Page 30
gèђčBuШ ಕೌಙ್ಗior
til பெண் நெறியாளர்கள்
புதுதில்லியில் இந்தியாவின் அனைத்துலகத் திரைப்பட விழா இடம்பெற்றது. அங்கு சில படங்களைப் பார்த்தேன். அங்கு ஆசியாவின் பெண் நெறியாளர்கள் நெறிப்படுத்திய படங்களுக் காக ஒரு போட்டியையே நடத்தினார்கள். உலகிலே பெண் திரைப்பட நெறியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், அவர்களில் பெரும்பாலான வர்கள் ஆசியாக் கண்டத்திலே காணப்படுவதும் முக்கியமான ஒரு விடயம். திரைப்படம் என்ற வெகுஜன ஊடகம் மகளிர் மீதும், பார்க்கும் ஆண் கள் மீதும் பாரிய செல்வாக்கைச் செலுத்திவருகிறது. எனவே, செல்வாக்கை ஏற்படுத்தும் இந்தப்படங்கள் பற்றியும், இவற்றினை நெறிப்படுத்தும் பெண்கள் பற்றியும் நாம் சிறிது அறிந்து வைத்திருத்தல் நமது எதிர்கால ஆய்வுக்கும், செயற்பாட்டுக்கும் உதவும். நமது நாட்டைச் சேர்ந்த யாழ்ப்பாணத்துத் தவமணி தேவி “வன மோஹினி” என்ற படத்தில் அக் காலத்தில் அரைகுறை ஆடை என்று கருதப்பட்ட ஆடையில் நடித்திருந்தார் என்பதையும் இங்கு நாம் நினைவு கூரலாம்.
44

கே.எஸ். சிவகுமாரனர்
இந்தியாவை நாம் எடுத்துக் கொண்டால், முழு நீளக்கதைப் படங்களையும் ஆவணfதியான கோவைப்படங்களையும் பெண்கள் நெறிப்படுத்தியிருக்கிறார்கள். Documentary Film எனப்படுவற்றை இந்தியப் பெண் நெறியாளர்கள் பலர் நெறிப்படுத்தியுள்ளனர். இவற்றிலே பலவற்றில் சமூகப்பிரச்சினைகள் பெண்களின் கண்களூடாகச்சித்திரிக் 5 JUGS 567 (D637. Documentary Films Seá, gL Syai) biff 9 JLJLq. அழைக்கலாம்.
'புனையா மெய் விளக்கத் திரைப்படம்” என்பது இடையில் விளக்கவுரைகளுடன் இயல் நூலையோ, பழமை ஆய்வையோ, தொழில் துறையையோ, பயணத்தையோ பற்றிய மெய் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப்படம்.
பழைய ஹிந்திக் திரைப்படங்களைப் பார்த்த உங்களிற் சிலருக்கு துர்கா கோட்டே (Durga Khote) என்ற நடிகையை ஞாபகமிருக்கலாம். இவர் பின்னர் மராட்டி மொழியில் Documentary படங்களை நெறிப் படுத்தத் தொடங்கினார். இவருடைய மகளான விஜயா மேத்தாவும் (Vijaya Mehta) Sugu Gug0õT G55uGIT.
1952 முதல் வெளியாகியுள்ள பெண் நெறியாளர்களின் படைப்பு கள் பற்றி ஆய்வு இன்னமும் மேற் கொள்ளப்படவில்லை. ஆயினும் சில பொது அம்சங்களை நாம் இனங்காண முடியும்.
உலகப்பெண் நெறியாளர்கள் அனைவரிடத்தும் காணப்படக் கூடிய பொதுவான சிறப்பம்சங்கள் என இவற்றைக் குறிப்பிட முடியும். பெண் நெறியாளர்கள் பெரும்பாலும் பெண்கள் சம்பந்தப்பட்ட பொருள்களையே தமது படங்களின் கதைப் பொருள்களாக அல்லது விவரணப் பொருள்களாக எடுத்துக்கொள்கின்றனர். பெண்கள் சம்பந்தப்படாத பொருள்களை எடுத்துக் கொள்ளும் வேளையிலும், அவை பெண்களின் கண்ணோட்டத்திலேயே அணுகப்படுகின்றன. தவிரவும் அவர்கள் தமது சொந்த, தனி ஆளுமைக்குரிய படங்களாக எடுக்கின்றனர். சிறு சிறு அவதானங்கள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் விரிந்த ஒரு ப்டுதாவுக்குள் தமது சித்தரிப்பை உள்ளடக்குகின்றனர்.
45

Page 31
சினமா சினமா : ஒர் உலகவலம்
இந்தப் பெண் நெறியாளர்கள் பெரும்பாலும் தலைசிறந்த மரியாதைக்குரிய பெண்மணிகளின் சரிதைகளைத் திரைப்படம் மூலம் ஆவணப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றனர். இளைஞர்களாகத் தம்மை இனங்காட்டுவதுடன் அல்லாமல், சமூகப் பிரக்ஞை கொண்ட வர்களாகவும் இந்த நெறியாளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். சமூகத் தடைகளையும் இதர தடைகளையும் நீக்கிச் சமத்துவமாக மகளிர் மதிக்கப்படும் டொருட்டு திரைப்படம் மூலம் இந்த நெறியாளர் கள் பணி செய்கின்றனர். னலாம்.
உதாரணமாக, இந்தியாவின் முதலாவது திரைப்பட நடிகையான கமலா பாய் பற்றிய சரிதைப் படம் ஒன்றை ரீனா மோகன் (Reena Moham) தந்திருக்கிறார். பெண்கள் இடம் வீடுதான். பகிரங்கத்தில் அவர்கள் நடமாடவே முடியாது என்றிருந்த காலகட்டத்தில், திரையில் நடிக்க வந்த ஒரு பெண்மணியின் புரட்சிப் போக்கைச் சித்திரிப்பதன் மூலம் நெறியாளர், பார்வையாளரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தூண்டவும் செய்கிறார் எனலாம். இதே போன்று கங்கா பாய் ஹன்கல் (Gangabai Hangal) என்ற இசைஞானியின் சாதனைகளையும் அந்தப் பாடகியும் அவர் தாய் ‘அம்பா பாய்’யும் (Ambabai) எதிர் நோக்கிய போராட்டங்களையும் உள்ளடக்கும் படம் ஒன்றை விஜயா முல்லாய் (Vijaya Muty) நெறிப்படுத்தியிருக்கிறார் இதே போல் மற்றொரு வட இந்திய சமூக சேவகியான சங்க பாய் (Sangabai) up 5 gapfuD6TLa Lu6Tig (Harimanti Bannerjee) 9(b) UL56055 SibgcitGTf. QGui56)GIT Gol Deepa Dhanaraj, Suhasini Muly, Manjra Dutt (3u TGổi [0 QJ fĩ 5 (GT5 Lô gìa) Documentary படங்களைத் தந்துள்ளனர்.
Something Like A War, "uiguib (SUMG) 6966, O' GT6óTLug Deepa Dhamaraj நெறிப்படுத்திய படம். உடலுறவு சம்பந்தப்பட்ட பெண்களின் பார்வை, குடும்ப நலத்திட்டம் போன்ற விஷயங்கள் பற்றிய பார்வையைப் பெண்களே தமது கண்ணோட்டத்தில் தெரிவிப்பதை உள்ளடக்கி, இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
46

கே.எஸ். சிவகுமாரன்
பெண்களிடையே எழுதப்படிக்கத் தெரியாத நிலை, தாழ்ந்த குலப் பெண்கள் படும் அவஸ்தைகள், சீதனப்பிரச்சினைகளால் பெண்கள் பல கொடுமைகளுக்கு உட்படுதல், ஆண்களின் குடிபோதையினால் பெண்கள் படும் துன்பங்கள், மத்திய கிழக்கு வேலை வாய்ப்புக் காரணமாகப் பெண்கள் எதிர்நோக்கும் பால் சம்பந்தப்பட்ட பிரச்சினை கள், குடும்ப உறவுகளின் சீரழிவு, குடும்பத் தகராறுகள் காரணமாக இடம் பெறும் வன்செயல்கள், தேவதாசிகள் எனப்படுபவர்களின் வாழ்க்கைப் போக்குகள், மற்றும் பல விஷயங்கள் தொடர்பாகப் பெண் நெறியாளர்கள் தமது சித்திரிப்புக்களின் மூலம் தமது தனிப்பட்ட UTiG06J660GT5 55ggi GT6Ti. Meera Dewan, Sai Paranjpaye, Gopi Dessai, Aruna Raja, Rinki Bhattacharya, Shiva Dhasani Gu Tairp பல இந்தியப் பெண் நெறியாளர்களின் சித்திரிப்புக்கள் மூலம் பார்வை யாளர்கள் தாக்கம் பெற்றுத் தமது அந்தஸ்தையும், வாழ்நிலையையும் உயர்த்துவதற்காக ஆதர்சம் பெற்றுள்ளனர் எனச் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள், வட இந்தியாவிலும், தென்னகத்திலும், இலங்கையிலும் இவ்வகையான முயற்சிகள் அரிது. சுஹாசினி மணிரத்தினம், தமது “பெண்’ என்ற பொதுத்தலைப்பில் அளித்த பிரபல தமிழ் எழுத்தாளர் களின் சிறுகதைகளை மையமாகக் கொண்டு சின்னத்திரைக்குத் தந்த குறும்படங்களும், அவருடைய “இந்திரா”வும் கலைத் திரைப்படத் திறனாய்வுக்கு உட்பட்டாலும், குறிப்பிடத்தக்க முயற்சிகள் எனலாம்.
0x8
47

Page 32
பம்பாய் படவிழா
இந்தியாவின் அனைத்துலகத் திரைப்பட விழா சம்பந்தமாக நாம் தகவல்களைத் திரட்டும் பொழுது புதிய சில விபரங்களும் கிடைத்தன. உதாரணமாக, உலகிலேயே கூடுதலான பெண் நெறியாளர்கள் இருக்கும் நாடு இந்தியாதான். இவர்களிலே தலை சிறந்த பெண் நெறியாளர்கள் எனப் பின்வருவோர் கணிக்கப்பட்டுள்ளனர். சாய் பரன்ஞயை, அபர்ணா ஸென், பிரேமாகரந்த், சுஹாஸினி முலே, விம்லா ஸ்வாமிநாதன், விஜயா மெஹற்தா, உமா ஸேகல்ஷாம் புட்கார், சுமித்ரா பவே. சஹிதேந்ரா கோஸ், மஞ்சிரா தத்தா, மீரா நாயர், ஸாபிக்செயீட், வாசுதா ஜோஷி, பிஜோ யாஜெனா, ரீனா மோஹன், நிதாவச்சனி, பமெலா ரூக்ஸ், கோபி தேசாய், அமித் பல்கே, டிம்பிள் கபாடியா, சமீர்சந்தா, மாலாதேய், ஷர போனி, தியோதார் ஆகிய இந்தியப் பெண்மணிகளில் சிலர் பிற நாடுகளில் இடம்பெற்ற அனைத்துலகத் திரைப் பட விழாக்களிலே சிற்சில துறைகளுக்காகப் பரிசில் பெற்றிருக்கிறார்கள்
48

கே.எஸ். சிவகுமாரன்
விபரம் வருமாறு
36 செளரங்கிலேன் (அபர்ணா ஸென்), ஃபனியம்மா (பிரேமா கரந்த, கிப்ட்ஒப் லவ் (மீராதேவன்), ஷெல்டர் (உமா ஸேகல்), ராஒ ஸஹேப் (விஜயா மெஹற்தா), அயோனிஜா (மந்திர மித்ரா), சலாம் பொம்பே (மீரா நாயர்), சதி (அபர்ண ஸென்), அய்ஸ் ஒப் ஸ்டோன் நிலிதா வச்சனி, வொய்சஸ் ப்ரொம் பலிப்பால் (வாசுதா ஜோஷி, கம்லாபி (ரினா மோஹன், ருடாலி (டிம்பிள் கபாடியா).
பிரான்ஸில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய சுமித்ரா பீரிஸ் இவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் துணைவியார்) நெறிப்படுத்திய “லொக்குதுவ’ (மூத்த மகள்) என்ற சிங்களப் படமும் விழாவில் இடம்பெற்றது. நெறியாளர் வருகை தராவிட்டாலும் தயாரிப்பாளரும் நடிகையுமான கீதா குமாரசிங்ஹ விழாவிற்கு வருகை தந்திருந்தார். பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றையும் அவர் நடத்தினார். அவர் தெரிவித்த கருத்துக்களில் சில “இலங்கைத் திரைப்படத்துறையினர் படிப்படியாகக் கலைத்துவப் படங்களைத் தயாரிப்பதிலேயே ஈடுபட்டு வருகின்றனர்." தனது முதலாவது கலைத்துவப்படம் 1956இல் வெளி யாகியது எனக்கூறினார். ஆனால் அது எந்தப் படம் என்று கூறவில்லை.
தமது மூத்த மகள் கதை மத்திய தர வாழ்க்கையைச் சித்திரிப் பதாகவும், குடும்பத்தை மேம்படுத்த மூத்த மகள் எடுக்கும் பொறுப் புகளைத் தீட்டுவதாகவும் அமைகின்றது என்று குறிப்பிட்டார். கடந்த 15 வருடங்களில் 5 படங்களைத் தாம் தயாரித்திருப்பதாக கீதா குமாரசிங்ஹ தெரிவித்தார். தமது புதிய படத்திற்கு இலங்கைக் கணக்கில் 4 கோடி ரூபா செலவானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவிலே தேசியத் திரைப்பட அபிவிருத்திக்கூட்டுத் தாபனம். (N.E.D.C) இயங்கிவருகிறது. திரைப்பட விழாக்களில் இடம்பெறும் பல கலைத்துவமான இந்தியப் படங்களை உருவாக்க இந்தக் கூட்டுத்தாபனம் பெருமளவு உதவி வருகிறது. இந்த நிறுவனத் தின் முகாமைத்துவ அதிபர் ரவி குப்தா. மும்பாய் திரைப்பட விழாவுடன் ஒட்டியதாகத் திரைப்படச் சந்தையொன்றும் ஏற்பாடு செய்யப்
49

Page 33
af607tpff (f60TupsT: 3rts 6Da56)6(b)
பட்டிருந்தது. அது சம்பந்தமாக விபரம் தெரிவித்த ரவி குப்தா இந்தச் சந்தை மூலம் 4 கோடி ரூபா இந்தியக் கணக்கு லாபத்தைத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார். இந்தக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் “சினமா, சினமா 100” என்ற கதம்ப நிகழ்ச்சி வல்ல பாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நிகழ்ந்தது. இதற்கான செலவு 16 க்ரோர் எனவும் வசூலில் 2 கோடியே 50 லட்சம் ரூபா "திரைப்படக்கலைஞர்கள் சேமலாப ட்ரஸ்ட்”டுக்கு Spಹಾಯ್ಗರು எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்தக் கூட்டுத்தம்ே ஏற்பாடு செய்த ஏனைய நிகழ்ச்சிகளா வன- ரூ லூமியே முதலாவது அசையும் திரைப்பட முன்னோடிகள் கண்காட்சி, முத்திரைக் கண்காட்சி, தேசிய திரைப்பட அரும்பொருள் சாலைக் காட்சி, திரைப்பட புகைப்படக் கண்காட்சி ஆகியனவாம். இந்தியாவின் அனைத்துலகத் திரைப்பட விழாக்கள் இந்திய மாநிலங்களின் தலை நகர்களில் நடைபெற்றுவருவது வழமை. புதுடில்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களில் படங்கள் திரையிடப் படும் இடங்கள் அநேகமாக அருகருகே இருக்கும். இந்த ஏற்பாடு வசதியா னது. ஆனால் மும்பாய் போன்ற இடங்களில் நிலைமை வேறு. எனவே இது சம்பந்தமாக ஆராயத் திறந்த கருத்தரங்கொன்று இடம் பெற்றது. மும்பாய் திரைப்பட விழாவிலே ஐஸ்லாந்து படம் ஒன்றும் காண்பிக்கப் பட்டது. அது ஒரு புதுமையான படம். ஸேக்கிரட் மவுண்ட் (புனித குன்று என்ற திரைப்படத்தை நெறிப்படுத்திய ஹரப்ன் குண்ண லொக்சன் (Hrafn GunnlaugSSon) பட விழாவுக்கு வந்திருந்தார். அவரும் ஒரு பத்திரிகை மகாநாட்டை நடத்தினார். வன்செயலுக்காக வன்செயல் என்று அடிப்படையில் இடம்பெறும் படங்களைத் தணிக்கை செய்ய வேண்டும். காமம் சார்ந்த (Sex) படங்களையல்ல என்ற அவர் அபிப்பிராயப் பட்டார்.
"செக்ஸ்’ என்பது எவருக்குமே தீங்கு விளைவிப்பது அல்ல. ஆனால், வன்செயல் பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது எனவும் அவர் கூறுகிறார். இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. “ஒரு படக்கதைக்கு முழு நிர்வாணக் காட்சி அவசியம் என்று கருதினால் மாத்திரமே அவற்றைத்தான் சேர்த்துக் கொள்வ
50

கே.எஸ். சிவகுமாரன்
தாகவும் செக்ஸ் காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் தமது நாட்டில் தடைசெய்யப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சந்தை வாய்ப்பு இல்லாததனால் ஆண்டொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று படங்களே தமது நாட்டில் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய “நோர்டிக் நாடுகள்" கூட்டிணைவாக சினமாத்துறையிலும் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
0.
51

Page 34
I6) வமாழிகளின் படநெறியாளர்: ஷியாம் (B)பெனி(G)கல்
1997 ஜனவரி மாதம், திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவிலே, வழியாம் பெனிகலின் இரண்டு படங்கள் காண்பிக்கப் பட்டன. அவையாவன:
The Making of Mahatma Greip serijála), படம் சர்தாரி பேகம் என்ற உருது மொழிப்படம். வழியாம் பெனிகல் இந்தியாவின் முக்கிய முன்னணித் திரைப்பட நெறியாளர்களில் ஒருவர். உலகத் திரையரங்கிலும் இவர் பெயர் அடிபடுகிறது. தமது 12 ஆவது வயது முதல், ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்தி ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டு வருப வர். ஹைதராபாத்திலுள்ள ஒஸ்மானியப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்ற பின்னர், மும்பாய் சென்று விளம்பரத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
பின்னர் 1967இல் புனையா மெய் விளக்கப் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டினார். (புனை யா மெய் விளக்கத் திரைப்படம்-இடையிடைப்பட்ட
விளக்கவுரைகளுடன் மெய் நிகழ்ச்சிகளை மட்டும்
52

கே.எஸ். சிவகுமாரனர்
கலப்பின்றிக் காட்டும் இயக்கப் படம். இதனையே ஆங்கிலத்தில் Documentary Film என்கிறார்கள் வழியாம் பெனிகல் முதலில் தந்த புனையா மெய் விளக்கத் திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பெயர், Children of the Street (வீதிகளின் குழந்தைகள்.) சத்யஜித் ராய் தொடர்பாக ஷியாம் பெனிகல் நெறிப்படுத்திய “மெய் விளக்கத் திரைப்படமும் உயர்ந்த ஒரு ஆக்கமாகக் கருதப்படுகிறது. ஷியாம் பெனிகல் முதலாவது முழு நீளக் கதைத்திரைப்படம் "அங்கர்” இந்தியாவில் கலை மெருகு கொண்ட படங்கள் 70களில் வரத் தொடங்கிய கால கட்டத்தில், இந்தப்படம் 1974இல் வெளிவந்தது. பல குறும் படங்களையும், தொலை நாடகத் தொடர்களையும் தந்துள்ள இந்த நெறியாளர், இதுவரை 18இற்கும் மேற்ப்பட்ட திரைபடங்களை, வெவ்வேறு மொழிகளில் தந்திருக்கிறார். 1976இல் இவருக்கு பத்ம பூரீ பட்டமும் 1991இல் பத்ம பூஷன் பட்டமும் வழங்கப்பட்டதிலிருந்து இவருடைய பங்களிப்புகளின் முக்கியத்துவம் உணரப்படும். இனி, இவருடைய புதிய இரு படங்கள் பற்றிய தகவற் குறிப்புகளைப் பார்ப்போம்.
தென்னாபிரிக்காவில் வாழும் பேராசிரியர் பாத்திமா மீர் எழுதிய The Apprenticeship of Mahatma GTGóTD biTG Goa).5 g(p6, grida) மொழியில் எடுக்கப்பட்ட படம் “மகாத்மாவின் உருவாக்கம்” என்ற ஆங்கிலப் படம். பரிஸ்டரான மோஹன்தாஸ் கரம் சந்த் காந்தி 1893ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்குச் செல்கிறார். அங்கு குடியேறிய ஒரு இந்திய பணக்காரரின் வழக்கு ஒன்றைத் தீர்த்து வைப்பதற்காகவே அவர் அங்கு செல்கிறார். இவருட்ைய ஆங்கில அறிவும், உச்சரிப்பும், தென்னாபிரிக்க வெள்ளையரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், இன வெறி கொண்ட இவர்கள், இளம் காந்தியைத் தாக்கி இம்சைப் படுத்துகிறார்கள்.
இந்த நேரடியனுபவம் காந்தியின் வாழ்க்கைப் போக்கில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஒரு சில மாதங்களிலே இந்தியா திரும்பிவந்த காந்தி, 21 வருடங்கள் தென்னாபிரிக்காவில் வாழ வேண்டி ஏற்படுகிறது. இனரீதியான ஒதுக்கல் (Apartheid) இனப்பாகுபாடு
53

Page 35
சினமா சினமா: ஓர் உலகவலம்
புறக்கணிப்புப் போன்றவற்றினால், கிளர்ச்சி பெறும் காந்தி, வன்செயலை, வன்செயல் அல்லாத சத்தியாகிரகம் மூலம் முறியடிக்க முற்படுகிறார். சத்தியத்தை நாடி அவர் செல்வதனால், இவர் குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். தாமாகவே முன்வந்து உதவும் மருத்துவ உதவியாளராகத் தென்னாபிரிக்க இந்தியத் தொழிலாள மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராடுபவராக, நிறத்தவர்களுக் கெதிராகச் செயற்படும் அனுமதிமுறை, சுமத்தப்படும் வரிகள் போன்ற வற்றிற்கு அடிபணியாது காந்தி போராடுகிறார்.
இந்தச் சம்பவங்களை வைத்தே இந்த ஆங்கிலப்படம் எடுக்கப் பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டு இறுதிக் கட்டத்தில் தென்னாபிக்காவில் நிலவிய இன வேறுபாடுகளைத் தத்ரூபமாக நெறியாளர் படம் பிடித்துக்காட்டுகிறார். அஷோக் மெஹற்தாவின் படப்பிடிப்பு, குறிப்பிடும் படியாக இருக்கிறது. ராஜித் கப்பூர் இளைஞர் காந்தியாக நடிக்கிறார். பல்லவி ஜோஷி, கஸ்தூரிபாயாக வருகிறார். மற்றும் சில வெள்ளையரும் இந்தியரும் தாக்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடித்திருக்கின்றனர். காந்திக்கும் இவர் மனைவி கஸ்தூரிக்கும் இடையே இருந்து வந்த உறவுகள், இவர்களின் இரு குழந்தைளை வளர்ந்த விதம் மாத்திர மல்லாமல் , காந்தியின் குறைபாடுகள் சிலவும் இப்படத்தில் தீட்டப்படுவதனால், படத்தின் நம்புந்தன்மை அதிகரிக்கிறது. ரஸ்கின், டோல்ஸ்டோய், வில்லியம் மொரிஸ் போன்றோரின் எழுத்துக்களினால் கவரப்பட்டவர் மோகன்தாஸ் காந்தி, சமூக நீதி மறுபக்கப்படுதல், பாகுபாடுகாட்டுதல் போன்றவற்றைக் கண்டு சீறி எழுதல் போன்ற குணாதிசயங்களைத் தன்னகத்தே வளரவிட இந்த எழுத்தாளர்கள் இருவருக்குப் பெரிதும் உதவினர்.
Nine Hours to Rama. Gandhi galu 3Gg gob g,nilala) படங்களும் காந்தியை வெவ்வேறு கோணங்களில் சித்திரித்தன. The Making of Mahatma இன்னொரு பார்வையின் சித்திரிப்பு, வண்ணத்திலமைந்த இந்தப்படம் இரண்டரை மணித்தியாலம் ஓடுகிறது. ஷியாம் பெனிகலின் உருது மொழிப் படத்தைப் பார்க்கும் முன்னர், இவருடைய ஏனைய படங்களில் விருது பெற்றவை பற்றிய தகவலையும்
54

கே.எஸ். சிவகுமாரன்
இங்கு பதிவு செய்வோம். அவையாவன. அங்கூர் (1974), சரண்தாஸ் சோர் (1975), நிஷாந்த் (1975), மன்தன் (1976), பூமிக்கா (1977), கொண்டுரா 1977), அனுக்ரஹம் (1977), ஜூனூன் (1978), மந்தி (1983), நேரு (1984). சத்யஜித் ராய் (1984), சுராஜ் கா சத்வன் (1993), மம்மோ (1994)."மம்மோ" என்ற படத்தில் ஹிந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்டன. சர்தாரிபேகம் என்ற உருது மொழிப்படம் சுமார் இரண்டு மணிநேரம் ஒடுகிறது. வண்ணத்திலமைந்த இந்திப் படத்தின் கதையை எழுதியிருப்பவர் காளிட் மொஹம்மட் இவர் Film Fare என்ற ஆங்கிலத்திரையேட்டின் ஆசிரியராவார். காந்தியாக நடித்த ராஜித் கப்பூர், அம்ரிஷ் பூரி, மற்றும் பல வட இந்திய நடிக நடிகையர் இப்படத்தில் பங்கெடுக்கின்றனர்.
படத்தில் பின்னோக்கு உத்தி (Flashbuck) பயன்படுத்தப்படுகிறது. ஓர் இளம் பெண் தலைசிறந்த பாடகியாக வளர்ச்சிபெறுவதையும், அவளின் அந்தரங்க வாழ்க்கையுடன் தொடர்புள்ள அம்சங்களையும் படம் சித்திரிக்கிறது. வட இந்திய சாஸ்திரிய இசையில் “தும்ரி’ பாணி என்பது ஒரு வகை. அதில் சிறப்புற்றுப் பிரகாசித்தவர் சர்தாரி பேகம் என்ற இந்தப்பெண். சர்தாரி பேகத்தின் மகள் பெயர் சகீனா, மகளின் சங்கீதப் பயிற்சியில் அதிக அக்கறையை, முதுமையடைந்து வரும் சர்தாரி பேகம் காட்டி வந்தார். ஒரு நாள், இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட்ட பொழுது, கல்லினால் தாக்கப்பட்டு சர்தாரி பேகம் இறந்து விடுகிறார். மரணச்சடங்குகளில் கலந்து கொள்ள இவரின் சகோதரர் ஜப்பான் அப்பாஸி, சகோதரியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். இதுவரை காலமும் அவர் அங்கு செல்லவில்லை. ஏனெனில், சர்தாரி பேக்மனின் நடத்தை குடும்பத்திற்கு இழுக்கு என்பதனாற்றான்.
அக்காலத்தில் ஆணாதிக்கச் சமூகம் பெண்கள் மீது பாரபட்ச மாக நடந்து கொண்டது. ஆடுதல், பாடுதல் பெண்களுக்கு அழகில்லை என்று சர்தாரியின் தந்தை இவற்றிற்கு அனுமதி வழங்காத போதும், சர்தாரி தனது இளம் வயதிலேயே இவற்றைக் கற்றுக் கொண்டார். அத்துடன் ஹேம்ராஜ் என்ற நிலச்சுவாந்தர் ஒருவரின் சட்டரீதியற்ற துணைவியாகவும் இருந்துள்ளார். ஜப்பார் அப்பாஸியின் மகள் பெயர்
55

Page 36
சினமா சினமா : ஒர் உலகவலம்
தெஹற்ஸிப் அப்பாஸி. இவள் ஒரு பத்திரிகையாளர். இவளுக்குத் திருமணமான பத்திரிகை ஆசிரியர் மீது காதல். பத்திரிகாசிரியன் ஒரு கிறிஸ்தவன். இவளோ ஒரு முஸ்லிம். சர்தாரி பேகம் தனது தந்தையாரின் சகோதரி என்று அறிந்திராத தெஹற்ஸிப், மைய வீட்டில் தனது தந்தையைக் கண்டு அதிர்ச்சியுறுகிறாள்.
துருவித்தேடும் பத்திரிகை எழுத்தில் (Investigative Journalism) நாட்டமுடைய தெஹற்ஸிப், தனது மாமியாருக்குப் பக்கவாத்தியம் வாசித்து வந்த ஒருவருடன் சேர்ந்து கொண்டு, சர்தாரி பேகம் முன்னர் வசித்து வந்த ஆக்ராவுக்குச் செல்கிறாள். அங்கு சர்தாரியின் கணவன் சர்திக் மூஸ்வியையும், தனது மாமியாரின் சட்டரீதியற்ற காதற்கணவன் ஹேம்ராஜின் கைம் பெண்ணையும் சந்திக்கிறாள். ஹேம்ராஜிக்கும் சர்தாரிக்கும் பிறந்த குழந்தையான சகீனாவைத் தன் மகளாக, சர்தாரியின் சட்டரீதியான கணவன் ஏற்று இருந்ததையும், பின்னர் அக்குழந்தையைப் புறக்கணித்ததையும் அறிந்து கொள்கிறாள். சகீனா தனது தாய் கொடூர நெஞ்சமுடையவள் என்று வாதிடுகிறாள். பின்னர், எல்லோரும் சர்தாரி பற்றிய தமது கருத்துக்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
ஆந்து - முஸ்லிம் திருமணத்தை சர்தாரி ஏற்பாடு செய்ததனால் தான் அவர் மீது கல்லெறியப்பட்டு, அவர் உயிரிழக்க நேர்ந்தது என்று ஒரு மெளலவி குறிப்பிடுகிறார். இதற்கிடையில், பெண் பத்திரிகையாளர், மணமான தனது பத்திரிகை ஆசிரியர் மீதான காதலைத் துறந்து, பத்திரிகையிலிருந்து விலகி, வேறொரு பத்திரிகையில் சேர்ந்து சர்தாரி பற்றிய கட்டுரையை எழுதுகிறார். இதுதான் படக்கதை. சுவாரஸ்யமான
L-s).
56

பல் மொழி நடிகை:
ஸ்மிதா பட்டேல் டுமராட்டி)
சிதம்பரம் என்ற படத்தை உங்களிற் சிலர் பார்த்திருக்கக் கூடும். கலைத்தரமான படங்கள் பற்றித் தெரிந்து வைத்திருப்பவர்களும், இப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், மலையாளமும், தமிழும் பேசும் இப்படத்தை நெறிப்படுத்தியிருந்த வர், தரமான படங்களைத் தந்த மறைந்த, ஜி. அரவிந்தன். அந்தப் படத்தில் அருமையாக நடித்திருப்பவர் மறைந்த மராட்டிய நடிகை ஸ்மிதா படடேல். இவர் நடித்து நான் பார்த்து வியந்து போன மற்றொரு படம் பூமிகா. மராத்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டாலும், அம்மொழியுடன் ஹிந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் இவர் நடித்துப் புகழ் சேர்த்திருக்கிறார்.
1955ஆம் ஆண்டு பிறந்து 1986ம் ஆண்டு தனது 31வது வயதில் இறந்து போன ஸ்மிதா பட்டேல், ஷப்னா ஆஸ்மி போன்று தலைசிறந்த ஒரு நடிகை, கலைத்தரமான படங்களுக்கு இவர் அளித்த பங்களிப்பை நினைவூட்டுமுகமாக, 1997
57

Page 37
சினமா சினமா : ஒர் உலகவலம்
ஜனவரி மாதம் திருவனந்தபுரத்திலே நடந்த இந்தியாவின் 28 வது அனைத்துலகத் திரைப்பட விழாவிலே இவர் நடித்த சில படங்களும் காட்டப்பட்டன. பத்து ஆண்டுகளுக்குள் (1974-1985) வெவ்வேறு மொழிகளில், 54 படங்களில் அவர் நடித்தார்.
சிதம்பரம் படத்தில். ஸ்மிதா பட்டேலுக்கு சிவகாமி என்ற தமிழ் பெண்ணின் பாத்திரம் கொடுக்கப்பட்டது. இவள் முனியாண்டியின் மனைவி. தனது சொந்த ஊரான தமிழ் நாட்டின் சிதம்பரத்திலிருந்து, கேரளத்தின் குன்றுகள் சார்ந்த பிராந்தியத்துக்குக் கணவனுடன் செல்கிறாள். அன்பார்ந்த புருஷனுடன் இனிதே வாழ்ந்த இவள் மீது. எஜமான் சங்கரன் மையல் கொள்கிறான். இவளுடைய ஆளுமையிலும் புதிய நெகிழ்வுகள் ஏற்படுகின்றன. சங்கரனுக்கும் சிவகாமிக்கும் உள்ள உறவு கூறாமற் கூறப்படுகிறது. நெறியாளரின் ஆற்றல் பாராட்டும் படியாய் உள்ளது. தனது இல்லக்கிழத்தி தனிமையை விரும்புவதும் மலையின் பசுமையை நாடுவதும் ஏன் என்று முனியாண்டிக்குப் புரிவது கஷ்டமாக இருந்தது. அவனுக்கு வாழ்க்கை விளக்கமாகப் புரியவில்லை. தனது கணவன் மீதும் சங்கரன் மீதும் எவ்வாறு அன்பைப் பகிர்ந்துகொள்வது என்று சிவகாமி திண்டாடுகிறாள். அந்த ஊசலாட்டத்தை நடிகை ஸ்மிதா பட்டேல் வெளிப்படுத்தும் பாங்கு கலை நயமாய் அமைகிறது. வறட்சி நிலத்தில் மழை பொழிந்தால், எவ்விதமான குதூகலம் ஏற்படுமோ அவ்விதமே பாத்திரங்களும், பார்வையாளரும் படத்தின் ஈற்றில் களிப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
தமிழ்த் தேவாரப் பண்ணிசை படத்தில் ஒலிப்பது இனிய அனுப வம், மற்றைய படமான பூமிகா 1977இல் வெளிவந்தது கொழும்பில் நடைபெற்ற ஓர் இந்தியத் திரைப்பட விழாவிலே இது காண்பிக்கப் பட்டது. உங்களிற் சிலர் பார்த்திருப்பீர்கள். ஷியாம் பெனிகல் நெறிப் படுத்தியது. இந்தப்படத்தின் கதாநாயகி ஒரு நடிகை. இப்பாத்திரத்தை வெகு அற்புதமாகச் சித்திரித்தவர் ஸ்மிதா பட்டேல். இந்தப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காகச் சிறந்த நடிகை விருது இவருக்கு வழங்கப்
Ull-gil.
58

கே.எஸ். சிவகுமாரன்
சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நடிகைகள் அனுபவிக்கும், ஏன், அனைத்துப் பெண்களுள் பெரும்பாலானோர் எதிர்நோக்கும், சவால்களைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவற்றின் சில கூறுகளை ஹன்ஸா வடகார் என்ற நடிகையின் வரலாற்றிலிருந்து அனுபவத்தைக் கிரகித்து பெற்ற உணர்வுடன் ஸ்மிதா பட்டேல் இப்படத்தில் நடித்துக் காண்பித்தார். குழப்ப மனோநிலை படைத்த பலராலும் துன்புறுத்தப்பட்ட, ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண் ஹன்ஸா வட்கார். அந்தப் பாத்திரமே உளவியற் பாங்கில் ஸ்மிதா பட்டேலினால் நடித்துக் காண்பிக்கப்பட்டது. திரைப்படத்துறையில் அவருடைய பங்களிப்பின் வீச்சைக்கண்டு 1985இல் இந்திய ஜனாதிபதியின் பத்மபூரீ பட்டம் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1984இல், மொன்றியோல் திரைப்பட விழா எட்டாவது தடவையாக நடைபெற்ற போது, அவ்விழாவின் நடுவர்களில் ஒருவராக ஸ்மிதா பட்டேல் செயற்பட்டமையும் இங்கு அவதானிக்கத்தக்கது. லா ரொச்சேல், பாரிஸ் ஆகிய மாநகரங்களில் ஸ்மிதா பட்டேல் நடித்த படங்களிற் சில ஒருங்கே காட்டப்பட்டுள்ளன. பள்ளிக்கூட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்ற ஸ்மிதா பட்டேல், பட்டப்படிப்பை முடித்த பின், மும்பாய் தூர்தர்ஷன் தொலைக் காட்சி அறிவிப்பாளராகப் பணி புரிந்தார். பூனேயிலுள்ள திரைப்படத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையம் ஆசியாவிலே பிரபல்யம் பெற்ற ஒரு பயிற்சி நிலையம். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்கள், நெறியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் இங்கு பயிற்சி பெற்றுத் தேறியவர்கள் தான். நமது பாலு மகேந்திராவும் இவர்களுள் ஒருவர். நமது எழுத்தாளர் செ. கணேசலிங்கன், மற்றும் கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரும் இந்தப் பயிற்சி நிலையத்தில் திரைப்படத்திறனாய்வு தொடர்பான பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள்.
பூனே பயிற்சி நிலையத்திலிருந்து வெளியேறிய நெறியாளர்களில் ஒருவர் அருண் கோப்கார். இவர் அங்கு மாணவராயிருந்த பொழுது தயாரித்த குறும் படத்திலே முதன் முதலாக ஸ்மிதா பட்டேல் நடித்தார். அதன் பின்பு, வழியாம் பெனிகல் நெறிப்படுத்திய சரண்தாஸ்சோர் என்ற
59

Page 38
சினமா சினமா: ஓர் உலகவலம்
சிறுவர் படத்திலும், அதே நெறியாளர் உருவாக்கிய மன்தன் என்ற படத்தில் ஹரிஜனப் பெண்ணாகவும் நடித்தார். பால் கூட்டுறவுப் பண்ணையொன்றில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திவிடும் இப்பெண் பாத்திரம், ஸ்மிதா பட்டேலுக்குப் புகழை ஈட்டிக்கொடுத்தது. கேத்தன் மெஹற்தா, மற்றோரு முக்கியமான வட இந்தியத் திரைப்பட நெறியாளர். இவர் நெறிப்படுத்திய படங்களில் ஒன்று பவ்னி பாவாய், கட்டுக்கள் கலைந்த பூர்வீகக் குடிப்பெண்ணாக ஸ்மிதா பட்டேல் நடித்திருக்கிறார்.
ஆர்த் என்று படத்திலே “சின்னவீட்டுப் பெண்’ னாகவும் இவர் நடித்து வித்தியாசமான பாத்திரங்களில் தன் திறமையை வெளிக் கொணர்ந்திருக்கிறார். ஸ்மிதா பட்டேலின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் வணிகநலப் படங்களிலும் தனது நேர்த்தியான நடிப்பை ளிெப்படுத்தியமைதான் என்று இவரின் திறனை மதிப்பீடு செய்த விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஷியாம் பெனிகல் நெறிப்படுத்திய பல படங்களிற் செழுமை பெற்ற ஸ்மிதா பட்டேல், 1975இல் பெனிகலின் நிஷாந்த் படத்தில் நடித்த பின்னர்தான் விமர்சகர்களின் கவனத்தை முழுமையாகப் பெற்றார். 1980இல் மேர்ஸா நெறிப்படுத்திய அல்பேட்டோ பின்டோ கோகஸ்ஸா கியூம் ஆத்தா ஹாய் என்ற படத்தில் நடித்து சலசலப்பை ஏற்படுத்தினார். அதே ஆண்டில் மிர்னால் ஸென் என்ற தலைசிறந்த வங்காள நெறியாளர் உருவாக்கிய அகேலர் சந்தன என்ற படத்தில் நடித்து வங்காளப் பார்வையாளர்களையும் கவர்ந்த கொண்டார். முன்ஷி பிரேம்சந்த் எழுதிய கதையொன்றைத் தழுவி சத்காதி என்ற தொலைக்காட்சித் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது அதிலும் ஸ்மிதா பட்டேல் நடித்திருக்கிறார். இதன் நெறியாளர் மறைந்த உலகப் புகழ் பெற்ற சத்யஜித் ராய் என்றால் சொல்லவும் வேண்டுமா? மராத்திய மொழித் திரைப்படநாடக நெறியாளர்களுள் முன்னணியில் நிற்பவர் ஜப்பார் பட்டேல். இவர் நெறிப்படுத்திய படங்களுள் ஒன்று உம்பர்த்தா. இப்படத்திலும் சாகர் சர்ஹாதி நெறிப்படுத்திய பஸார் போன்ற வணிகப் படங்களிலும் ஸ்மிதா பட்டேல் நடித்திருக்கிறார். அமிதாப் பச்சன். ராஜ் கோஸ்லா, சுனில் தத், ராஜ் என் ஸிப்பி, ஜேஏதுத்தா போன்ற வணிகத் திரைப்படப் பிரமுகர்கள் ஸ்மிதா பட்டேலின் தயவை நாடி நின்றனர்.
0. 0x8
60

இந்தியசினமா: திரைப்படங்கள் சில
உலகிலேயே ஆகக்கூடுதலான படங்கள் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. அங்கு வெளிவரும் படங்களை, வசதியை முன்னிட்டு, கலைத்துவமான படங்கள், மரபு வழிப்படங்களாக முக்கியத்துவம் பெறும் படங்கள், மசாலா! பணப் பெட்டியை நிரப்பும் படங்கள், படுமோசமான படங் கள் எனலாம். 1995 மும்பாயில் இடம் பெற்ற, இந்தியாவின் 26ஆவது அனைத்துலகத் திரைப்பட விழாவிலே கலைத்துவமான இந்தியப் படங்களும் இந்தியன் பனோரமா) மரபுவழிப் படங்களில் முக்கி யத்துவம் பெறும் இந்தியப்படங்களும் (மெயின் ஸ்ட்ரீம்) காண்பிக்கப்பட்டன. இவை எவையென்று எமது வாசகர்கள் அறியவிரும்பக்கூடும். அதனால், பட்டியல் இதோ, இந்தியாவின் சிறந்த மாநிலப் படங்களாவன:
த்ரோஹற்கால் கோவிந்த நிஹலானி ஹிந்தி, ஆரண்யக (ஏ.கே.பேர் ஹிந்தி, முக்தா (ஜப்பார் பட்டேல் மராத்தி, சர்தார் (கேட்டன் மெஹற்தா ஹிந்தி, ஏக்தி கூஞ்ஞா (பாப்பாரே-ஹிந்தி, ஆரண்ய
61

Page 39
சினமா சினமா : ஓர் உலகவலம்
ரோதனா (பிப்லப் ரே செளத்ரி-ஒரியா, மீமன்க் ஸா (சஞ்ஜில ஹஸோரிக்கா-அஸாமிய, உவீல் சேயார் (தபன் ஸிம்ஹ-வங்காளம்), 1942-எ லவ் ஸ்டோரி (வினோத் சொப்ரா-ஹிந்தி, ஸ்வஹம் (ஷாஜி என் கருண் மலையாளம், பொன்தன்மாடா (டிவிசந்திரன்-மலையாளம்), பரிணாயம் (ஹரிஹரன்-மலையாளம்), சம்மோஹனம் (சி.பி. பத்மகுமார்மலையாளம்), கலிலியோ (ஜேம்ஸ் ஜோசப்-மலையாளம்), தர்பன் (கே.பிக்ரம் சிங்-ஹிந்தி, சரச்சார் புத்ததேப் தாஸ்குப்தா -வங்காளம்), தரமான ஒரு தமிழ் படமும் காட்டப்படவில்லையா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கலைத்துவப் படங்கள் வரிசையில் அவை இடம் பெறவில்லை. “பிரதான நீரோடை’ வரிசையில் இரண்டு படங்கள் இடம் பெற்றன. அவையும் அவற்றுடன் காட்டப்பட்ட ஏனையவையும் வருமாறு:
தார் (யாவஷ் சொப்ரா-ஹிந்தி), மகளிர் மட்டும் (சிங்கீதம் பூரீநிவாசராவ் -தமிழ்), அண்ணா முத்யாலய சுப்பையா-தெலுங்கு, கொமிஷனர் (ஷாஜிகைலர்ஷ் -மலையாளம்), கிழக்கு சீமையிலே கே.பாரதிராஜா-தமிழ், நட ஹூத்திதவாரு தொரை பகவான்-கன்னடம், ஏர்ற சைன்யம் (ஆர்.நாராயண மூர்த்தி-தெலுங்கு, பாலோப்பசார் அஷரோய் (சஞ்சீவ் தேய்-வங்காளம்), கர்ந்தி வீர் (மெஹ9ல் குமார்ஹிந்தி), சலாமி (ஷாருக் சுல்தான் - ஹிந்தி), யெஹற் தில்லகி (நரேஷ் மெல்ஹோத்ரா-ஹிந்தி, சைன்யம் (ஜோஷி-மலையாளம்), கதைசாராத விவரணப்படங்களும், (ஆவண ரீதியான முறையில் கலைத்துவமாக எடுக்கப்பட்டவை) காட்டப்பட்டன. விபரம் வருமாறு:
மைஹார் ராக் அருணாப்பட்டாசேர் ஜூ-ஹிந்தி, டொக்டர் குலாம் ரசூல் (சி.கே.எம்.ராவ்-ஹிந்தி, லிரிக்ஸ் ஒப் நோ லைப் (ஆலோக்தாஸ்ஹிந்தி), Portrait of a Pioneer (மதுராபண்டிட் ஜஸ்ராஜ் ஆங்கிலம்), The Trapped, (6.35.Qg|T6-9 ridia) i), (Of Tagore and Cinema), அருண் குமார் ரோய்-ஆங்கிலம்) There's more of School (சந்திர முக்கர்ஜி-ஆங்கிலம்The Clap Trap ஜில் மிஸ்குவாட்டா-ஹிந்தி), Father Son and Holy (அனந்த் பட்டவர்த்தன்-ஹிந்தி, தீர்த்த யாத்ரா (என்.பி.ரகுநாத்-மலையாளம்), மன்ஸார் (கோபி தேசாய் ஹிந்தி, (Orchids
62

கே.எஸ். சிவகுமாரனர்
of Manipur) -9.sulb furth griLDIT-LDGoofufi) (N.M. No 25- The Last Childhood (guá, éliss TLS - geriidatio). (Classical Idiom in Indian Painting) (அபிஜித் சட்டோபத்யாய்-ஆங்கிலம்), அபிஹற்ஜாத்டரிக் (ஈஷ்வர் சக்ரபொர்த்தி-வங்காளம்) மராத்தி மொழி பேசப்படும் மஹாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பாயில் இந்த சர்வதேசத் திரைப்பட விழா இடம் பெற்றதனால், மராத்தி மொழியில் வெளியாகிய குறிப்பிடத் தகுந்த படங்கள் காலவரன் முறையாகக் காணப்பட்டன. அவையாவன:
சாந்த் துக்காரம் தம்ளே/பட்டிலால்), ராம ஷாஸ் திரி (கஜனை ஜகிர்தார்), ஷியாம்சி ஆய் ஆச்சார்யா அத்ரே, லக்காச்சிகோஷ்ட்டா (ராஜா பரான் ஜ்பே), பிரமச் சாரி (மாஸ்டர் வினாயக) மனுஸ் (விமாந்தாராம், சிம்னி பங்க்ஹாரே (தாட்டா தர்மதிகாரி, சங்த்ய அய்கா (அனந்த்மனே), ரங்கல்ல ரதி ஆஷா (ராஜா வக்கூர் ஷாந்த் தாட்டா கோர்ட் சலு அஹே (சத்ய தேவ் தூபே, சம்னா (ஜப்பார் பட்டேல்), சதி மன்ஸே (பால்ஜி பெந்தர் ஷப்யிட் (ராஜ் தட்), 2222 June நிச்சிகெட்/ஜயபட்வர்தன்), செளகட் ராஜா (சஞ்ஜே சர்க்கார், ஆக்ரி யெட் (அமோல் பலேகார்), சூர்யோதய் (கஜன் விபாரி பொராட்டே)
63

Page 40
குறுந்திரைப்படங்கள்: (B) பி.லெனின்/கா. சிவபாலன்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது நல்ல எழுத்துக்கு மாத்திரம் அணிகலன் அல்ல, நல்ல கலைவெளிப்பாட்டுக்கும் அது பொருந்தும். குறும்படங்களில் சில ஆவண ரீதியானவை. வேறு சிலவற்றில் கதையிருக்கும், மற்றும் சிலவற்றில் படிமங்கள் மூலம் கதை கூறாமற் கூறப்படும். சிலவற்றில் கதையே இல்லாமல், அனுபவம் உணர்த்துவிக்கப்படும். இவ்வாறாக 13 படங்கள் காட்டப்பட்டன. இணைந்து முழுமையாக்குவதற் கான ஒரு கதை (ஆங்கிலம்-கெளதம் ஹல்டர்) தந்தை, புதல்வன், புனித யுத்தம் (ஹிந்தி/ஆங்கிலம் அனந்த் பட்டவர் தன்) குற்றவாளி (தமிழ் -பீ. லெனின்) அச்சத்தின் நினைவுகள் (ஹிந்தி-மதுபூரீ தத்தா), ஊடாக தமிழ் - பி. சிவகாமி, பாகர நாட்டம் அம்மன்னூர் (மலையாளம் எம். ஆர் ராஜன்) கால ஓட்டத்தில் ஓவியம் (ஆங்கிலம் - சர்பஜித் சென்) ரஸயாத்ரா (ஆங்கிலம்|ஹிந்தி - நந்தன் குத்தியடி) ஸோனா மாட்டி (மர்வாரி-ஸெக்ஜோ சிங்) தத்வ ஹிந்தி-சாகரி சப்ரா), யெல்ஹென ஜாகோய் (மணி புரி- அரிபாம்சியா ஷர்மா) விசுத்த வண்ணங்கள்
64

கே.எஸ். சிவகுமாரனர்
(ஆங்கிலம் கே. ஆர். மோஹன்ன்) உறைந்த வாழ்க்கை (ஆங்கிலம்! ஹிந்தி-சுபதாரோ செளத்ரி).
இவற்றிலே, பெண் நெறியாளர்ளாகிய மது பூரீதத்தா, பி. சிவகாமி, ஸெக்ஜோ சிங், சாபரி சப்ரா ஆகியோரின் படங்கள் குறிப்பிடதக்கவை. குற்றவாளி, கால ஓட்டத்தின் ஒலியம் ஆகிய இரண்டிலே லெனின் படம் அற்புதமானது. பிரபல நெறியாளர். மறைந்த போன பீம்சிங்கின் புதல்வரான லெனின், இந்தியாவிலேயே தலைசிறந்த படத் தொகுப் பாளர்களில் ஒருவராகக் கருதப்படுவர். காதலன் படத்தின் தொழில் நுட்பச் சிறப்புக்கு இவர் ஆற்றலும் ஒரு காரணம். அனேகமான தமிழ்ப் படங்களின் எடிட்டராக சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கும் லெனின் பழகுவதற்கு இனியவர். தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் அவர் நண்பர்கள். புதுடில்லித் திரைப்பட விழாவில், நெறியாளர் கே.எஸ். சேதுமாதவனும், லெனினும் ஒன்றாகக் காணப்பட்டார்கள். இவர்கள் இருவரும் என்னுடன் நட்புறவாகப் பழகினர், லெனின் நெறிப்படுத்திய முப்பது கோடி முகங்கள், சொல்லடி சிவசக்தி, எந்தரோ மஹனாபஹற் வலு ஆகிய தொலைத் திரைப்படங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை என்கிறார் கள். நமது உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் இவற்றைத் தருவித்துக் காட்டினால் என்ன? ஆற்றிலே போட்டாலும் என்பது இவருடைய புதிய தொலைத் தொடர் என அறிகிறோம். பி.லெனின், ‘நொக் அவுட் என்ற குறுந் திரைப்படத்தைச் சில வருடங்களுக்கு முன் தந்திருந்தார். அந்தப் படத்தைவிடச் சிறப்பானது "குற்றவாளி" பரிணாமன் எழுதிய கதையைத் தழுவி தேவபாரதி அமைத்த திரை நாடகத்தை வைதீயின் ஒளிப்பதிவுடன், சொல்லாமற் சொல்லும் கதையாக, நெறிப்படுத்தி அனுபவத்தை விரிவுபடுத்த எடுத்த லெனின் முயற்சி பாராட்டத்தக்கது. சேது அமைத்த இசை மேனி சிலிர்க்கச் செய்தது.
ஒரு சிறைக் கைதி- சந்தர்ப்ப வசத்தால், 'குற்றவாளியாகிறான். ஆயினும் நேர்மையானவன். உள்ளார்ந்த விதத்தில் அவன் ஓர் உயர்ந்த கலைஞன். வீணை இசை விற்பன்னன். சிறை மதில்களுக்கப்பால், சிறையதிகாரியின் இல்லம். அவருடைய சிறுமி வீணை இசை கற்றுக் கொள்கிறாள். ஆயினும் தேர்ச்சி முழுமை பெறவில்லை. இடையில் சுருதி சுத்தமாக இல்லை. சிறைக்கைதி அதனைச் செப்பனிட்டு
65

Page 41
சினமா அசீனமா : ஓர் உலகவலம்
அவளுக்குக் கற்றுத்தர விரும்புகிறான். எப்படி? நாளாந்தம் சிறுகச் சிறுகப் பொருள்களைச் சேகரித்து ஏணியொன்றை உருவாக்குகிறான். அதனை வைத்து சிறையதிகாரியின் வீட்டுக்குச் சென்று, அந்தச் சிறுமியின் வீணையை அவளிடமிருந்து பெற்று. கம்பிகளை மெருகாய் நீட்டி, உருப்படியை மெய்மறந்து மீட்டிக் கொடுக்கிறான். சிறுமி பக்தையானாள். கைதியான தனது குருவை வணங்குகிறாள். காரியம் முடிந்ததம், திரும்பவும் மதிலேறி, சிறைச்சாலைக்குச் செல்கிறான். சிறைச்சாலை அதிகாரி, இவன் ஏணியில் ஏறியது. தப்பிச் செல்லவே என்று சந்தேகித்து இவனைத் துப்பாக்கியால் சுட எண்ணிருந்த போதிலும், உண்மையறிந்து வாளாதிருக்கிறார்.
படத்தில் ஒரு வசனம் கூடக் கிடையாது. குறுகிய நேரத்தில் ஓர் அனுபவத்தைப் பரிவர்த்தனை செய்வதில் பி. லெனின் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம்.
குறும் படங்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இலங்கையரான காசிநாதர் சிவபாலன் எழுதி, நெறிப்படுத்தித் தயாரித்த உரையாடல் இல்லாத ‘இனி எனினும் என்ற படமும் ஞாபகத்துக்கு வந்தது. இந்தப் படத்துக்கு ஆங்கிலத்தில் ‘ரிப்பிள்' என்றும், சிங்களத்தில் 'யளித் ஹமுவேவா என்றும் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளன. கா. சிவபாலன் ஒரு சட்டத்தரணி, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த வர், கலையுலக அனுபவம் நிரம்பவும் பெற்றவர். இரண்டு, மூன்று தசாப்தங் களுக்கு முன் கொழும்பு மேடை நாடகங்களில் பெரும் பங்களிப்புச் செய்தவர். ஏர்ணஸ்ட் மக்கன்டையர் என்ற ஆங்கில மேடை நெறி யாளிடம் பயிற்சி பெற்றவர். மக்கன்டையர் பாதி தமிழராயினும், அவருக் குத் தமிழில் பயிற்சி இல்லை. கா. சிவபாலன், மகாகவியின், கோடையை அண்மையில் மேடையேற்றியிருந்தார்.
இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்) மது அம்பாட்டின் படப் பிடிப்பில், இந்தப் படத்தை நெறிப்படுத்தியிருக்கிறார். குமாரி என்ற தமிழ் தெரியாச் சிங்களப் பெண்ணும் ராஜேந்திரகுமார் என்ற தமிழ் இளைஞரும் இக்கதையில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். கதை என்று ஒன்றில்லை. “கப்பிங்”, “ஸைக்கோயிங்” “சைட் அடித்தல்”
66

கே.எஸ். சிவகுமாரன்
என்றெல்லாம் கொச்சையாகப் பேசப்படும் வளரிளம் பருவத்தினரின் நடத்தைகளில் ஓர் அனுபவத்தைப் படம் சித்திரிக்கிறது. இது ஒர் ஒரு தலைக் காம உணர்வுக் கதை. தன்னை “ஹீரோ” என்று நினைத்துக் கொள்ளும் ஒரு பையன், தன்னைக் கவர்ந்த ஒரு பெண்ணைக் கண்டு கிளர்ச்சியடைகிறான். அவள் இவனைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. இது ஒருவிதப் புறக்கணிப்பு இருந்த போதிலும், கலை விழா, கிரிக்கெட் ஆட்டம், விமான நிலையம் போன்ற இடங்களில் அவள் தென்படும் பொழுது இவனும், அங்கிருந்து அவளுக்காக ரசிப்பதுடன், அவள் போற்றும் கிரிக்கெட் வீரன் தானே என்று கற்பனை யும் பண்ணிப் பார்க்கிறான். தனது காதலை இந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்த முடியாத இந்தப் பையன், இறுதியில் அதிர்ச்சிக்கும், விரக்திக்கும், வெறுப்புக்கும் உள்ளாகிறான். ஏனெனில், அவள் திருமணம் செய்து குதூகலமாய் மாப்பிள்ளையோடு செல்வதைக் காண்கிறான்.
கதை ரீதியாகவே சினிமாவைப் பார்த்துப் பழகிவிட்ட நாம், சினமா என்னும் அசையும் படிமங்ககள் மூலம் குறிப்பாக உணர்த்தி நிற்கும் அனுபவத்தை எளிதில் வரவேற்கத் தயாராய் இருப்பதில்லை. எனவே, இந்தக் குறும் படம் உப்புச் சப்பற்றதாக முதலில் தென்பட்டால், நாம் வியப்படையத் தேவையில்லை. ஆயினும், கமரா கதையை ஆர்ப்பாட்ட மின்றிச் சொல்லும் பொழுது உணர்வுகளும், பிரதி பலிப்புக்களும் செம்மையாகத் தென்படும். மது அம்பாட்டின் படப்பிடிப்பு சர்வ சாதாரணமாகத் தென்பட்டாலும், அவர் ஒவ்வொரு பிரேமுக்குள்ளும் கொண்டு வரும் சேர்க்கை அவதானிக்கத்தக்கது. இது பரீட்சார்த்தமாக எடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க குறும்படம் எனக் கூறலாம். இப்படத்தின் இசையை திருகோணமலை டி. பத்மநாதன் வழங்கியிருக்கிறார். ஆயினும், படத்தின் தேவைக்கேற்ப அது இணையாமல், துருத்திக் கொண்டு நின்றமை ஒரு குறைபாடே கதாநாயகனாக நடித்தவரிடத்தில் இயல்பு இல்லாமல், வெறித்த காமப் பார்வை மாத்திரமே மேலோங்கி நின்றதையும் குறிப்பிடல் வேண்டும். இலங்கையில் அகன்ற திரையில் தமிழ்ப்படங்களைத் தயாரிப்பதைவிட இவ்வாறான குறும்படங்களும்,
தொலைத் திரைப்படங்களும் தயாரிக்கப்படல் பயனுடையது.
0.
67

Page 42
1îfî'ı96ip öflgOTLOT: அயர்லாந்து நடிகர்
கமலஹாசன் போன்ற நடிகர்கள் கற்றது கை மண் அளவு என்றறிந்ததனாலோ என்னவோ, தொடர்ந்து கற்றுவருகின்றனர். நிறையப் படிக்கி றார்கள், தேடித்தேடி நல்ல படங்களைப் பார்க்கிறார் கள்; அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இவரைப் போலவே பெரும்பாலான உலக நடிக/நடிகையர் செய்துவருகின்றனர். கமலஹா சனின் நடிப்பசைவுகளை நீங்கள் கூர்ந்து அவ தானிப்பீர்களாயின், அங்கு சார்ளி சப்ளின், சிவாஜி கணேஷன், டஸ்டின் ஹொஃப்மன் போன்றோரின் சாயல்கள் படிந்திருப்பதைக் காண்பீர்கள். பெரும் பாலான உலக நடிகர்களும், இந்தியாவில் கலைத்து வமான படங்களில் நடித்து வருபவர்களும், திரைப் படக் கல்லூரிகளில் பயின்றவர்களாயிருப்பதைக் காண்பீர்கள்.
மேலைத் திரையுலகில் காலத்துக்குக்காலம் அற்புதமான நடிக நடிகையர் உருவாகிவருவது போல, தமிழ் போன்று ஏனைய மொழிகளிலும் நல்ல நடிகர்கள் தோன்றியிருக்கிறார்கள்; தோன்றிக்
68

கே.எஸ். சிவகுமாரனர்
கொண்டேயிருக்கிறார்கள். நடிகர்கள் என்று நாம் கூறும் போது, அது இருபாலாரையும் குறிக்கும். மார்லன் பிராண்டோ டஸ்டின் ஹொஃப்மன், ரொபர்ட் ரெட்ப்பர்ட், ரொபர்ட் டீ நீரோ போன்றவர்கள் சில தசாப்தங் களுக்கு முன் சோபித்தவர்கள். தற்சமயம், ஹியூ க்ராண்ட், கெவின் கொஸ்ட்னர், டொம் க்ரூயிஸ், டனியல் டே லூயிஸ் போன்றவர்கள் வெவ்வேறு பாணி நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 9)GJŕí5Grfl(a), L-gófluců (Su-- Göly4,GÚloů (Daniel Day-Lewis) குறிப்பிடத்தக்கவர். இவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது பயனுள்ளது. ஏனெனில், இவர் நடித்த படங்கள் அனைத்தும் விமர்சகரின் பாராட்டைப் பெற்றுள்ளன.
சில வருடங்களுக்கு முன் Last of the Mohicans (மொஹிக்கன் வாரிசின் கடைசிக் கொழுந்து என்ற படம் கொழும்பில் காட்டப்பட்டது. அந்தப் படத்தைப் பார்த்திருக்கும் உங்களில் சிலருக்கு டேனியல்டேலியூவிஸ் என்ற நடிகர் ஏற்கெனெவே அறிமுகமாகியிருப்பார். நவீன ஆங்கிலக் கவிதையுலகிலே பெயர் பெற்ற பெயர் சிசில்டே லீயூவிஸ் ஐரிஷ் அயர்லாந்து மொழி பேசுபவரான இவர், பிரிட்டனின் ஆஸ்தானக் கவிஞராக விளங்கியவர். இவருடைய மனைவி ஒரு நடிகை. பெயர் ஜில் போல்கன். இவர்களுக்குப் பிறந்தவர்தான் டனியல், ஒரு நல்ல நடிகனுக்கு இருக்கவேண்டிய குணாதிசயங்களில் ஒன்று, அவன் சகல விதமான பாத்திரங்களையும் ஏற்றுச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். அவன் அவயவங் கள், அவன் மெளனம், அவன் அசைவுகள். அவன் குரல் வேறுபாடு கள், அவன் வார்த்தைகளை உச்சரிக்கும் முறை போன்ற பலவும் அவன் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு அப்பாத்திரமாகவே மாறி, அதே சமயம் தான் நடிக்கிறேன் என்ற உணர்வை மனதின் பின்புலத்தில் கொண்டு நடிக்க வேண்டும் என்பர். இதனாலேயே, ஷேக்ஸ்பியர் நாடகங்கள்! படங்களில் நடித்தவர்களான லோரன்ஸ் ஒலிவியேர், ஜேம்ஸ் மேஸன், கிகில்ட் போன்றவர்களும் ஏனைய ஒரு சிலரும் தலைசிறந்த நடிகர்கள் என நாம் கொள்கிறோம். சிவாஜி கணேஷன், நாகேஸ்வரராவ், நஸ்ஸிருத்தீன் ஷா, ஒம்பூரி, மிதுன் சக்ரபர்த்தி
69

Page 43
சினமா சினமா : ஓர் உலகவலம்
போன்றோரும் கமலஹாஸன், ரஜனிகாந்த், ரகுவரன் போன்றவர்களும் பல்வேறு ரசனை மட்டத்திலுள்ளவர்களையும் தமது நடிப்பினால் பரவசப்படுத்தியுள்ளனர்.
டனியல் டே லியூவிஸ் நடித்த மற்றொரு படமான My Beautiful Laundrette (எனது அழகிய சலவைக்காரி) என்ற படமும் கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலில் காட்டப்பட்டது. நீங்கள் ஒரு வேளை இதனையும் பார்த்திருக்கக் கூடும். இவருடைய ஏனைய படங்களிற் சில: My Left Foot (GTGöTg5! QL-g5! LJ |Tg5 tô), Stars and Bars (g) TTG) Ở g; (615 tù தடைகளும்), A R00m With a View (பார்வை தரும் அறை ஒன்று, The Age Of Innocence (9.5uT LICBG us, b), In The Name of The Father (LigT666; BITLDiggit Guusiai). In the Name of The Father படம் புதுடில்லியில் இடம்பெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது.
இந்த அற்புத நடிகர் மேல் தட்டுப் பாத்திரங்கள், கீழ் நிலை யிலுள்ள பாத்திரங்கள், வீரர்கள், அறிவாளிகள் என்பன போன்ற எந்த விதமான பாத்திரங்களையும் அற்புதமாகச் செய்கிறார். அழியாத கோலங்கள் நாயகன், குணா, வறுமையின் நிறம் சிவப்பு, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்த கமலஹாசன் தான், மகளிர் மட்டும் படத்திலும், சதிலீலாவதியிலும் வித்தியாசமாக நடிக்கிறார். அதேபோல, முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, தளபதி போன்ற படங்களில் நடித்த அதே ரஜினிகாந்த்தான் பாட்சா, முத்து போன்ற படங்களிலும் நடிக்கிறார். சரத்பாபு, சரத்குமார் போன்றவர்களும் வெவ்வேறு பாத்திரங்களில் தமது திறமையை வெளிக்காட்டியிருப்பதை இங்கு நாம் நினைவு கூரலாம்.
கடந்த 10 வருடங்களாக டனியல் டே-லியூவிஸ் நடித்துவருகிறார். My Left Foot என்ற படத்தில் ஒலிவர் என்ற எழுத்தாளர் ஒருவரின் பாத்திரத்தை ஏற்று வெகு அற்புதமாக நடித்தமைக்காக இவருக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. பிறரை அவதானிப்பதாலும், அவர்கள் பேசும் முறை, அவர்கள் அங்க அசைவுகள் போன்றவற்றை மனத்திலி
70

கே.எஸ். சிவகுமாரன்
ருந்துவதனாலும் தாம் பயன்பெறுவதாகக் கூறும் இந்த பிரிட்டிஷ் நடிகர், பத்திரிகையாளர்களைக் கண்டால் பயப்படுகிறார். எல்லோருடனும் சகஜமாகப் பேச விரும்பினாலும் தன்னைப்பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை என்கிறார். எவ்வளவு தன்னடக்கம்! டனியல் பிறந்தபோது அவர் தந்தைக்கு வயது 53. கவிஞரும் நாவலாசிரியருமான சிசில் டே-லியூவிஸ் 1968-1972 காலப் பகுதியில் பிரிட்டிஷ் ஆஸ்தானக் கவிஞராக விளங்கியவர். 1930களில் டபிள்யூ. எச்.ஒடன், ஸ்டீபன் ஸ்பெண்டர், சிசில் டே-லியூ-விஸ் போன்ற கவிஞர்கள் ஆங்கிலக் கவிதைக்கு நவீனத்துவத்தைக் கொண்டு வந்தனர். 1972 ல் சிசில் டேலியூவிஸ் புற்று நோயினால் காலமானார். டனியலின் மூத்த சகோதரி விவரணம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். பெயர் தமாஸின். இவர்களுடைய தாய் யூத வம்சத்தினள். இந்த இனக்கலப்பும். இந்நடிகரின் ஆளுமைக்கு உதவியதாக இருக்கலாம்.
இளமையில் தச்சுவேலை போன்ற தொழில்களிற் பயிற்சி பெற்ற இவர், பின்னர் பிரிஸ்டல் ஒல்ட் விக், லிட்டில் தியேட்டர், வெஸ்ட் என்ட் போன்ற நாடகக் கம்பனிகளிற் சேர்ந்து நடிகராகப் பரிமளிக்கத் தொடங்கினார். ஆயினும் அவர் நாடகத் துறையை அதிகம் விரும்பியதாகத் தெரியவில்லை. அவருக்குப் பிடித்த நாடகங்களான இரண்டாம் ரிச்சர்ட் மக்பெத், த டச்சஸ் ஒப் மாஃபி போன்றவற்றில் நடிக்க விருப்பம் என்கிறார். மோட்டோர் பைசிக்களை வேகமாக ஒட்டிச் செல்ல விரும்பும் இவர் ஒரு முறை மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிய பொழுது, பொலிஸார் இவரைப் பிடித்துத் தண்டம் விதித்தனர்.
டனியல் டே-லியூவிஸ் போன்ற நடிகர்களின் ஆற்றலை நாம் பார்க்கும் போது, கலை மூலம், நாம் புரிந்து கொள்ளாத சிலவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
இனி, புதுடில்லித் திரைப்பட விழாவிலே நான் பார்த்து அனுபவித்த In The Name of The Father (L)5IT60.667 (5|TLDéé)6öT G|Ljufficij) LJLub பற்றிய சில குறிப்புகள். அயர்லாந்து தேசத்தவரான ஜிம் ஷெரிடன்
71

Page 44
சினமா சினமா : ஒர் உலகவலம்
நாடகத்துறை விற்பன்னர். 1982ல் இவர் நெறிப்படுத்திய My Left Foot (எனது இடது கால்) என்ற படத்துக்கு இரண்டு ஒஸ்கார் விருதுகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து The Field வெளிக்களம்), In The Name of The Father (granai 5TLDÈglaó QuUffico), Into The West (மேற்கினுள்ளே) ஆகிய படங்களை நெறிப்படுத்தியிருக்கிறார். இவரே, திரை நாடகத்தை அமைத்து, நெறிப்படுத்தியுள்ள பிதாவின் நாமத்தின் பெயரில்' Temy Sense என்ற மற்றொரு மகத்தான பிரிட்டிஷ் நடிகையும் நடிக்கிறார்.
இது ஓர் உண்மைக் கதையைத் தழுவியது. 1975ஆம் ஆண்டு சிறு நகரத்திலே இரு மதுபான விடுகளில் குண்டுகள் வெடித்தன. அதற்குப் பொறுப்பாக, இளைஞனான ஜெரி கொன்லன் இருந்தான் என பிரிட்டிஷ் அரசாங்கம் தவறாகக் குற்றஞ் சாட்டியது. சதிகாரர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொன்லன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்த இளைஞனும் ஏனைய நால்வரும், 15 வருடங்கள் சிறையிலிடப் பட்டனர். அதன் பின்னர் சட்டவிதிப்பு ஒன்றின் படி இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களுடைய விடுதலைக்குக் காரணமாக இ! வழக்கறிஞரும், வழக்குரைஞருமான Gareth Pience. சட்டததுறையிலேயே பல ஊழல்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து இந்த பெண் சட்ட அறிஞர் விவாதிக்கிறார். Conian வழக்கில் சில சாட்சியங்கள் மறைக்கப்பட்டமை தெரிய வந்தது. பொலிசாரின் சில பாதகங்கள் மூடிமறைக்கப்பட்டமை அம்பலத்துக்கு வந்தன. நீதிவழுவா பிரிட்டிஷ் சட்டத்துறை என்று கருதப்பட்ட துறையே விமர்சனத்துக்கு உள்ளாகியது. இவற்றைத்தான் பிதாவின் நாமத்தின் பெயரில் என்ற படம் சித்திரிக்கிறது.
இது ஓர் அற்புதமான திரை நாடகம். அதாவது, நாடகத்தை சினமாவாகப் படம் பிடிக்கவில்லை. சினமா இலக்கணங்களுக்கேற்ப நாடகத் தன்மை கொண்ட விறுவிறுப்பு முரண்பாடுகள் கட்டுக்கோப்பான உரையாடல்கள் என்பவற்றைக் கொண்ட திரைச்சித்திரமாக இந்தப் படம் மிளிர்கிறது. பீட்டர் பைசிக்கின் படப்பிடிப்பு பிரமாதம். சிறைச்சாலை மண்டபத்திலும், மூன்று நான்கு அடுக்கு மாளிகைகளைக் கொண்ட
72

கே.எஸ். சிவகுமாரன்
சிறை அறைகளுக்குள்ளும் நடக்கும் மனித உணர்வு வெளிப்பாட்டுச் சித்திரங்களை இப்படம் தருகிறது. கொன்லொன் பிடிக்கப்படும் கட்ட மும், குண்டு வெடிப்பின் போது ஏற்படும் பரபரப்பும், மனித வேட்டை களும், பொலீஸாரின் உசார் நிலையும் நன்றாகப் படம்பிடிக்கப் பட்டுள்ளன. கேணலாக டனியல் டே-வியூவிஸும் அவருடைய பிதாவாகப் பீட்டர் போர்ட்லெத் வைக்கும், பெண் வழக்கறிஞராக எமா தொம்சனும் கவித்துவமாக நடிக்கின்றனர். அதாவது, செட்டாக, செம்மையாக சிக்கனமாக, நெறிப்படுத்தப்பட்டவர்களாக, இக்கட்டான கட்டங்களை இவர்கள் கொண்டுவரும் முறைமை பாராட்டத்தக்கது. In The Name of The Father இலங்கையில் காட்டப்பட்டால் தவறாது
அதனைப் பாருங்கள்.
73

Page 45
8666OTIgu I fe0TLOIT ஜேம்ஸ் கமரூன்
அகன்ற திரையில் டைட்டானிக்’ (Titanic) ஆங்கிலத் திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். ‘விடியோ’ வில் பார்த்தால், திரைப்படத்துறையின் பூரண அம்சங்களையும் நீங்கள் நுகர முடியாமற் போகலாம். சொன்னாற் போல, Video வின் சரியான, உச்சரிப்பு ‘வீடியோ’ அல்ல, ‘விடியோ’ என்பது தான் சரி. சினமா அல்லது திரைப்படம் என்றால் என்ன என்று ஒரு சில வரிகளில் கூறுவதாயிருந்தால், இப்படிச் சொல்லலாமோ? காட்சியும், ஒலியம், நிழலும், இணையும் அசையும் .LDصا وعالا
டைட்டானிக்’ படம் அத்தகையது. திரைப்பட வரலாற்றிலே அதன் வருகை ஒரு பெரு நிகழ்ச்சி. நவீன தொழில் நுட்ப சாதனங்களைக் கொண்டு, கனேடிய ஜேம்ஸ் கமெரூன் நெறிப்படுத்திய மருட்சி தரும் மிகப் பெரிய படம் இது. காட்சிப் புலனுக்குப் பெரு விருந்தளிக்கும் உயர் மட்ட, முற்றிசைவான தோர் ஆவண நாடகச் சித்திரம் இப்படம் எனலாம்.
74.

கே.எஸ். சிவகுமாரனர்
பிரமிப்பூட்டும் தொழில் நுட்ப/கலை நய நுணுக்கத்தையும் மீறி படத்தின் வெளிப்பாடாக அமைவது மனித இயல்புகளின் விசித்திரப் போக்காகும். மிகவும் நுண்ணிதாகக் கட்டமைக்கப்பட்டது இந்தப் படம் என்பதைத் திரைப்படத்துறை மாணவர்கள் அவதானித்துக் கொள்வார்கள், கலைத்துவமான படைப்பு ஒன்றுக்குத் தேவைப்படும் அனைத்து உறுதிப்பொருள்களையும், சரியான/அவசியமான அளவுகளில் கலவை செய்து உருவாக்கப்பட்டது இந்தப்படம். இவை காரணமாக
s
“டைட்டானிக்’ ஒரு “கலைத்துவமான’ படம் எனக் கூறலாம்
போலிருக்கிறது.
இந்தப் படத்திலே, வெளிப்படையாகவே, சில குறைபாடுகள் இருக்கின்றன. மறுக்கவில்லை. ஆயினும், கூட்டு மொத்தமாக நுகரும் பொழுது, திருப்தியே ஏற்படுகிறது. இந்தப்படத்திலே, சிறப்பான அம்சங்கள் என நான் காண்பவற்றை இவ்வாறு நிரற்படுத்தலாம் என நினைக்கிறேன்.
* பலமும், ஆழமும் கொண்ட காதற்கதை. * வர்க்க முரண்பாடுகளின் ஆய்வு. * மேல் தட்டுப் பயணிகளின் சொகுசான போக வாழ்வின்
சில அம்சங்களின் நுண்ணயம் வாய்ந்த சித்திரிப்பு. * கப்பல் மூழ்கையில் சிக்குண்டவர்களின் பரிதவிப்
* படம் முழுவதிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் சோக் நுண் ணுணர்வும் உணர்ச்சிக் கனிவும் உணர்ச்சித் தடுமாற்றமும்.
* அடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்ற ஆர்வத்தை
எழுப்பும் உத்தி
* மருட்சிக்கு உட்படும் மனித இயல்புகள்
* பொறாமை, விரக்தி என்பனவற்றினூடாக மனிதனின்
விலங்குணர்ச்சியின் சித்திரிப்பு
75

Page 46
சினமா சினமா : ஒர் உலகவலம்
* விலை மதிப்புள்ள பொருளின் மதிப்பு பயனற்றதாகிவிடுதல். * சுயநலமற்ற காதலின் முன்னர், விலை மதிப்புள்ள
பொருள்களின் சிறுமை.
திருவள்ளுவர் கூறியது போல், 'உறங்குவது போலும் சாக்காடு என்பதற்கான விளக்கமாகக் காதலின் அமைதியான உயிர்ப் பிரிவு. இவையாவும், நான் கண்ட “சக” ப்ளஸ் புள்ளிகள். பேரிடரின் போது மரணத்தை எதிர்கொண்டு நோக்கும் தைரியமும், வீரப்பண்பும் படத்தில் சித்திரிக்கப்படுகின்றன. காதலர் மாத்திரமல்லாது. கப்பற் சிப்பந்திகளும், கீழ்த்தட்டுப் பயணிகளும் மரணத்தைத் தழுவச் சித்தங்கொள்வது படம் பார்ப்பவரைப் புல்லரிக்கச் செய்கிறது. 1912 இல் கூட, "டைட்டானிக்’ என்ற இந்த உல்லாசக் கப்பலின் வீணாரவாரம் நொய்மையாகப் படத்தில் சித்திரிக்கப்படுகிறது. இவை யாவும், ஆர்வமிக்க பர்வையாளனைப் பரவசப்படுத்துகிறது.
இப்படத்தின் வியப்புமிகு படப்பிடிப்பு விமானத்திலிருந்தும், சமுத்திர நீரின் அடியிலிருந்தும், நேர்முகமாகவும், பலகோணங்களில் நின்று எடுக்கப்பட்ட சலனச் சித்திரங்களாக அமைகின்றன. இத்தகைய நிதர்சனப் படப்பிடிப்பு, முதல் நிலை அனுபவத்தை (கண்முன்னே நடப்பவை என்ற பிரமையை ஏற்படுத்தும் விதத்தில்) தருகிறது. இப்படத்தின் ஒளியமைப்பும், பதிவும் பாராட்டும்படியாக இருக்கின்றன. மற்றொரு ரசிக்கத்தக்க அம்சம், இப்படத்தின் இசையமைப்பு, கப்பலின் வாத்திய கோஷ்டியினர் இசைக்கும் ‘வியன்னா வோல்ட்ஸ், போன்ற வண்ணமெட்டுகளும், இன்றைய எனது அபிமான மேலைப்பாடகி களுள் ஒருவராகிய செலீன் டியோனின் மயக்கமிகு குரல் வளமும் என்னைப் பரவசப்படுத்தின. படத்தின் பின்னணித் தொலை உணர்வும் சூழலும் படிப்படியாக வளர்த்து செல்லும் பாங்கும் அவதானிக்கத்தக்கது. காதலரிருவரும் சந்திக்கும் முதற் கட்டத்திலேயே நிகழப்போகும் சோக முடிவைக் காட்டாமற் காட்டிவிடுகிறார் நெறியாளர் கமெரூன். நடிகர்களின் சுத்தமான ஆங்கில உச்சரிப்பு, அவர்களின் யதார்த்த பூர்வமான நடிப்பு (மூதாட்டியாக நடிப்பவரின் பங்கும் குறிப்பிடத்தக்கது) ஆகியனவும்,
76

கே.எஸ். சிவகுமாரனர்
தங்குதடையின்றிப் படம் சொல்லும் செய்தியைக் கலாபூர்வமாக அணுக வகை செய்கிறது. சுருங்கக் கூறினால், டைட்டானிக் முழு நிறைவுடன் உருவாக்கப்பட்ட ஒரு நேர்த்தியான நயத்தகு படம். ஏராளமான செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்குக் கிடைத்த 'ஒஸ்கார் விருதுகள் இப்படத்தின் முக்கியத்துவத்தை ஓரளவு உணர்த்தும். விருதுகளல்ல அளவுகோல், கலைப்பரிவர்த்தனையே முக்கியம். ஸ்டிவன் ஸ்பில்பேர்க் நெறிப்படுத்திய “ஸ்கின்ட்லர்ஸ் லிஸ்ட்’ சிறப்பான படம் தான். ஆயினும் அவருடைய ஏனைய படங்கள் தொழில் நுட்ப ஜாலவித்தைகள் என்றால், கமெரூனின் "டைட்டானிக், "கலை" என நெருங்கத்தக்க ஒரு மகத்தான படம்.
0
77

Page 47
PD 6Döbö öfl6OTLOIT பல்வேறு வெளிப்பாடுகள்
ஸிம் என்ற படம் கினிபிஸோ/நெதர்லாந்து தயாரிப்பு. கியூபாவில் திரைப்பட நெறியாளர்க்கான பயிற்சியைப் பெற்ற ஸானாந்ஹடா நெறிப்படுத்திய இந்தப் படம், ஆபிரிக்கக் கிராமமாகிய ஸிமில், கொலோனியல் ஆதிக்க ஆட்சியாளர்களுக்கெதிராக ஆங்காங்கே எடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை களைத் தொகுத்துத் தருகின்றது. கதை நிகழும் ஆண்டு 1963. நல்ல நெல் விளைச்சல், எதிர்கால
நம்பிக்கை, மக்களிடையே எழுகிறது. அங்கு ஒரு
முக்கிய கமக்காரன் லாலா. அவனுடைய மகன் ரவுல் நகரத்துக் கல்விக் கூடத்தில் கல்வி கற்ற பின்னர் கிராமம் திரும்புகிறான். ஆயினும், அவனை எங் கேயாகுதல் சென்றுவிடுமாறு தந்தை கேட்டுக் கொள்கிறார். காரணம், பொலிசார் அவனைத் தேடிவருவதுதான். ரவுலின் இளைய சகோதரன் பெடான் வன்செயலில் நாட்டம் காட்டாதவன். ஆயினும், இராணுவப் பொலீசார் தனது மூத்த சகோதரனைத் தேடிய பின்னர் அவனைக் கொன்று விட்ட போது, அதனால் ஆத்திரமடைந்து அவன் குடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டத்துக்குத்
78

கே.எஸ். சிவகுமாரன்
தலைமை தாங்கி, தனது தமையனின் பகையைத் தொடர்கிறான். இதுதான் கதை. இப்படத்தில் ஆபிரிக்க மக்களின் சில வ்ரீழ்க்கைண் கோலங்களை நாம் கண்டறிந்துகொள்ள முடிகிறது.
ckkck
ஹொங்கொங்கிலிருந்து ஒரு சீன மொழிப்படம். கதிரவன் தங்கமாய் மாறிய தினம்’ என்பது இதன் பெயர். இதன் நெறியாளர் ஒர் எழுத்தாளரும் நாடகாசிரியருமாவார். பெயர்யிம் ஹோ, லண்டன் திரைப்படக் கல்லூரிப் பட்டதாரி டோக்கியோ திரைப்பட விழாவிலே சிறந்த திரைப்பட நெறியாளருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் கதைப் போக்கு இதுதான். குவான் ஜியான் என்ற சிறுவன், தனது தந்தையாரைத் தனது தாய் பத்தாண்டுகளுக்கு முன் கொலை செய்தார் என்ற சாட்சியங்களைப் பொலீசாருக்குச் சமர்ப்பிக் கிறான். விபரங்களையறிந்து பொலீசார் திகைக்கின்றனர். குவான் நேர்மையானவன் என்பதால் பொலீசார் புலன் விசாரணை செய்கின்றனர்.
இந்தத் தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்கவில்லை. தாயாருக்கு இன்னொருவருடன் தொடர்பிருந்தது. தந்தை இறந்த பின் தாயார் தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டாள். தனது தந்தையார் நஞ்சூட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற பையனின் கூற்றைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்தவர்கள், அது உண்மையில்லை என்று நிரூபிக்கின்றனர். ஆயினும், மேலும் புதிய சாட்சியங்கள் கிடைத்துப் புலன் விசாரணை நடக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், படம் தொடர்ந்து பார்க்கக் கூடிய தாய் இருக்கவில்லை. எனவே வெளியேறிவிட்டேன்.
米米米
ஹொங்கொங்கிலிருந்து மற்றொரு படம், ’வசந்தத்துடன் எனக் Gla, TC5 alb$L (I have Date with Spring) Sibg5 5606) L 69(5 பாடலின் முதல்வரி. இதனைப் பல ஆண்டுகளுக்கு முன் பட்டர்பிளை என்ற பாடகி பிரபல்யப்படுத்தியிருந்தார். அவளுடன் வேறு மூன்று பாடகிகளும் இணைந்து களிப்பூட்டி வந்தனர். இப்போது பட்டர்பிளை
79

Page 48
சினமா சினமா : ஓர் உலகவலம்
வெளி நாட்டிலிருந்து திரும்பியிருக்கிறாள். பிரிந்தவர் கூடினால் என்ற கதைதான். இந்தப் படம் வர்த்தக வணிக நோக்குக் கொண்ட நமது ஹிந்தி ! தமிழ் சினிமாப் பாணியில் அமைந்திருக்கிறது. இதன் நெறியாளர் கோ சீ சும்.
323:2:2
ஹங்கேரிய நெறியாளர் பீட்டர் கார்டோஸ் நெறிப்படுத்திய படமும் அடங்கும். இப்படம் புறூக்லீனிலுள்ள தனது தம்பி எட்டு வயதில் வீட்டை விட்டு ஓடியது தொடர்பாக தோமஸ் கோர்டன் என்ற ஹங்கேரியன் அமெரிக்காவிலுள்ள புறூக்லினில் 38 வருடங்கள் வாழ்ந்துவிட்டு நாடு திரும்பியதும், அங்கு தனது சகோதரன் மாத்திரம் இருப்பதைக் கண்டு அவனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறான். பெரிய பணக்காரனாகிவிட்ட இவன், தனது அழகான மனைவியிருக்கத் தனது சகோதரனின் மனைவியுடன் தகாத உறவுகளை வைத்துக் கொள்கிறான். இத்தகைய படங்களே மேலை நாடுகளில் வெளிவருகின்றன. இவற்றை நாம் புரிந்துகொள்ள நமது பண்பாட்டு நெறிகள் தடைக் கற்களாகக் குறுக்கிடுகின்றன.
米米米
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற ஹங்கேரிய நெறியாளர் பீட்டர் கொதார் நெறிப்படுத்திய படம், புற எல்லை காவல் அரண் (Outpost). இக்கதை ரோமேனியாவில் இடம்பெறுகிறது. கிஸேலா வைஸ் ஒரு பெண் பொறியியலாளர். இவள் தூர இட மொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறாள். முன்பின் கண்டறியாத ஒருவனுடன் அவள் தனது நிறுவனத்தினால், புதிய வேலைத் தளத்திற்கு அனுப்பப்படுகிறாள். அவனுக்குப் பதிலாகவே அவள் புதிய இடத்தில் வேலையைப் பொறுப்பேற்க இருக்கிறாள். ஆனால், அவனோ உயிரிழந்தவன் போல, வெறித்த பார்வையுடையவனாகக் காணப் படுகிறான். ஈற்றில் அவள் புதிய இடத்துக்குச் சென்றதும், கடும் வேலை களைச் செய்யப்பணிக்கப்படுகிறாள். அவநம்பிக்கை வாழ்க்கைப் போராட்டத்தை மேற்கொள்ள அவள் தயாராகிறாள். இது ஒரு பெண்ணின் திடமான மனப்போக்கைச் சித்திரிக்கும் படம்.
80

கே.எஸ். சிவகுமாரன்
பிரான்ஸின் சிரேஷ்ட நெறியாளர்களில் ஒருவர் க்ளோட் சப்ரோல், இவருடைய புதிய படம் கல்லறையில் ஒரு தீர்ப்பு (Judiement in Stone) மேலைச் சினமாவில் நன்கு அறிமுகமாகிய நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர். லியூக் பெஸோன் நெறிப்படுத்திய லியோன் என்ற படத்தில் இடம்பெற்ற வன்செயல்களைப் போலவே, இங்கும் அத்தகைய செயல்கள் இருக்கின்றன. வர்க்கப் போராட்டம் பற்றியது இப்படம் என்று நெறியாளர் சப்ரோல் கூறிய போதிலும், மன விகாரம் கொண்ட இரு பெண்கள் கொலை, களவு அட்டூழியம் போன்றவற்றில் ஈடுபடுவதும் அவர்கள் தமக்குள்ளே ஓர் அர்த்தத்தைக் கற்பிப்பதும், இப்படத்தின் மூலம் அறியக் கிடக்கிறது. இதே மாதிரி முன்னரும் ஒரு ஹொலிவூட் படம் வந்தது. அங்கும் இரண்டு பெண்கள் தான். பொழுது போக்காக வன்செயல்களில் ஈடுபடுவது இந்த மேலை நாட்டாருக்கு வழக்கம் போலும்
米米米
பிரான்ஸும் ஜேர்மனியும் இணைந்து எடுத்த படம் 'லிஸ்பன ஸ்டோறி நெறியாளர் விம் வென்டர்ஸ். போர்த்துக்கலின் தலைநகரான லிஸ்பனில் கதை நிகழ்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான படம். பிலிப் வின்டர் என்பவன் திரைப்பட ஒலித்துறையில் பொறியியிலாளன். இவனுடைய நண்பன் பெயர் பிரெடெரிக் மொன்ரோ, இந்த நண்பன் லிஸ்பனில் வசிப்பவன். மெளனப் படமொன்றுக்கு ஒலி சேர்த்துத் தருமாறு மென்ரோ, விண்டரைக் கேட்டிருந்தான். அதற்காகவே விண்டர் லிஸ்பன் சென்றிருந்தான். ஆனால், மொன்றோவைச் சந்திக்க முடியவில்லை. ஆயினும் எடிட்டிங் மேசையில் இந்தப் படத்தின் சுருள் இருக்கிறது. விண்டர் ஒலி சேர்க்க முனைந்து வேலை முடியும் தறுவாயில் காடையர்கள் அவனுக்குத் தொல்லை தருகிறார்கள்.
மொன்றோவின் அயலவர்களும் அவனுக்கு ஆத்திரமூட்டு கின்றனர். இதற்கிடையில் டெரேஸ் என்ற போர்த்துக்கேயப் பெண் மீது அளவு கடந்த உடற்தாகம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒரு திரைப்படக் கலை நுட்பவியலாளனின் அனுபவம் படத்தில் சித்திரிக்கப்படுகிறது.
{ 0.
81

Page 49
"2 6D85 feOTLOIT
காமஞ் சார்ந்தபடங்கள்
Erotic Tales Guflangulai) (pg as Gug, முப்படத் தொகுதி மும்பாய் திரைப்பட விழாவிலே காட்டப்பட்டது. புதுடில்லியில் இரண்டாவது தொகுதி காட்டப்பட்டது. இதிலும் மூன்று குறும் படங்கள் இடம்பெறுகின்றன. ரெஜினா ஸிக் லர் என்ற ஜேர்மனியப் பெண்மணி, இந்த வரிசைப் படங் களின் தயாரிப்பாளர். மூன்று படங்களையும் வெவ் வேறு பேர் நெறிப்படுத்தியுள்ளனர். ஸின்ஸியா டொரினி நிக்கலஸ் ரோக், யானுாஸ் மயீல்ஸ்கி ஆகியோர் இந்த நெறியாளர்கள்.
'கெரமெலா,' "ஹொட்டேல் 'பரடைஸ், "டெவிலிஷ் எஜூகேஷன்' ஆகியன இக் குறும் படங்களின் பெயர்கள்.
முதலாவது படம்: மணமாகிய ஒரு பெண் தனது இளமையைப் பேண விரும்புகின்றாள். மந்திரம் செபிக்கப்பட்ட இனிப்புக்களைச் சாப்பிடச் சாப்பிட அவள் வயது படிப்படியாய் குறைந்து
82

கே.எஸ். சிவகுமாரன்
வருகிறது. ஈற்றில் அவள் தேய்ந்தே போகிறாள். இத்தகைய கதைகள் சிறுவர்களைத் தான் திருப்திப்படுத்தும்.
இரண்டாவது படம் இதுவும் நம்ப முடியாத கதைதான். அடுத்த நாள் அவளுக்குத் திருமணம். ஆனால், முதல் நாள் இரவு அவள் இன்னொரு ஆணுடன் கைவிலங்கு பூட்டப்பட்டுப் படுத்திருக்கிறாள்.
காலையில் விழித்தெழுந்ததுந் தான் அவள் உண்மையை உணர்கிறாள். பின்னர் கைவிலங்கை அகற்றி விடுகிறாள். இந்தக் கதைக்கு உளவியல் ரீதியான விளக்கம் இருக்குமோ எனக்குத் தெரியாது. ஈழத்து பெண் எழுத்தாளர் பவானி ஆழ்வாப்பிள்ளையும் இந்த மாதிரியான ஒரு கதையை தந்துள்ளார்.
மூன்றாவது படம் இடையர்குலச் சிறுமியொருத்தி சிற்றின்பந் தொடர்பாகப் பெறும் முதல் அனுபவங்கள் காட்டப்படுகின்றன. இதுவும் கற்பனை சார்ந்த படம். ஆயினும் கலைத்துவமாகப் படம் பிடிக்கப் பட்டுள்ளது. இளமை, அழகு, அறியாப் பருவம், பரிவு, மென்மை, ஸ்பரிசம், அனுபவம், நிறைவு, பேரானந்தம் என்று பட நிகழ்ச்சிகள், மனதைக் கவரும் இன்னிசை, இயற்கைச் சூழல் ஆகிய பின்னணி களுடன் சங்கமமாகும் பொழுது ஆபாசமில்லை, கவிதைதான் காட்சி யாகிறது.
எரோட்டிக் டேல்ஸ் என்ற இந்த முக்குறும் படத் தொகுதிக்கும். பூலான் தேவியின் கதையான கொள்ளைக்கடத்தல் ராணி என்ற படத்திற்கும் விழாவில் காட்டப்பட்ட பரபரப்பு, வேறு எந்தப் படங்களுக் கும் காட்டப்படவில்லை. பார்வையாளர் தியேட்டரில் இடம் கிடைக்காது மூச்சுத் திணறினர். அவ்வளவு நெருக்கம். 2500 ஆசனங்களையும் பயன்படுத்தி, தரையிலும் முண்டியடித்து உட்கார்ந்து பார்த்தனர். பண்டிட் குவீன் படக் காட்சியில், அப்படத்தில் நடித்த சீமா பிஸ்வாஸ், பூலான்தேவி, நெறியாளர் ஷேகர் கப்பூர் ஆகியோரும் மேடையில் தோன்றினர்.
米米米
83

Page 50
β6ότιριτάθ60Τιρτ , βρή 9 βυά56)J6υιό
(B)பண்டிற் குவின், பிரசாரப்படுத்தப்பட்டமாதிரி கலைத்துவமான படம் அல்ல. ஒரு நல்ல ஹிந்திப் படம் என்று கூறவும் முடியாத அளவுக்குச் சாதாரணமாய் அமைந்துள்ளது. கதாநாயகி மீது பச்சாதாபம் காட்டும் அளவிற்குப் படக் கதையில் நெகிழ்ச்சியில்லை. வன்செயல்கள், தூஷண வார்த்தைகள், கற்பழிப்புக் காட்சிகள் ஒன்றிரண்டு, தூரத்தில் முன் முழு நிர்வாணக் காட்சியும் சலனமும் ஆகியன படத்தில் இடம் பெற்றுள்ளன.
米来>k
'பாரிஸில் ஜெபர்ஸன்' என்றொரு படம். அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை வரைந்து கையொப்பமிட்ட தோமஸ் ஜெபர்ஸன், பிரான்சில் அமெரிக்கத் தூதுவராகவும் பணி புரிந்தார். இது நடந்தது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி பிரான்சில் 1789ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுமுன்னர், 14 ஆவது லூயி மன்னனும் மாரி அன்டனெட் என்ற மகாராணியும் ஆண்ட காலத்தில் ஊழல்களும், அநீதிகளும் இடம் பெற்றன. அக்காலத்திலேதான் ஜெபர்ஸன் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றினார். அங்கு நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளையும், நிலவிய வறுமையையும் வெறுத்த ஜெபர்ஸன் பிரெஞ்சுக் கலாசாரத்தையும், நாகரிகத்தையும் பெரிதும் விரும்பி வரவேற்றார். அதே சமயத்தில் ஜனநாயக அமைப்புடனான அரசாங்கமொன்றை பிரான்சில் உருவாக்க ஜெபர்ஸனின் உதவியை பிரெஞ்சு தாராளப் போக்குடையவர்களும், ஆய்வறிவாளர்களும் விரும்பினர்.
ஜெபர்ஸன் தனது தாரத்தை இழந்தவர். வளரிளம் பருவ மகள் ஒருத்தியும் உள்ளாள். அவள் நிற வேறுபாடு காட்டுபவள். அமெரிக் கரான ஜெபர்ஸனுக்கு பிரான்சில் ஐரோப்பிய காதல் அனுபவம் ஒன்று ஏற்பட்டது. அவர் காதல் வயப்பட்ட பெண் மணமாகியவள். ஆங் கிலேய, இத்தாலியப் பெற்றோருக்குப் பிறந்தவள். அதே சமயம் அவருக்குத் தன் மகளையொத்த வயதுடைய நீக்ரோ அடிமை வேலையாள் மீதும் காம உறவு ஏற்படுகிறது. இதனையறிந்த அவருடைய காதலி அவரை விட்டுச் செல்கிறாள். நீக்ரோப் பெண் தாயாகிறாள்.
84

5க.எஸ். சிவகுமாரனர்
அவளுங்கூட, ஜெபர்ஸனின் பூர்வீகத்தினள். உடற் தொடர்பு கொண்ட நீக்ரோக் குடும்பம் ஒன்றின் வாரிசு. புதிய சூழலில், அடிமைத்தனம் பற்றிய அவருடைய கோட்பாடுகள் நடைமுறை வாழ்க்கையில் தவிடு பொடியாகின்றன. இன்னொரு விதத்தில் கூறினால், படம் ஜெபர்ஸனின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது.
பெரிய அளவில், படித்த, பண்பட்ட ரசனையுடைய பார்வை யாளரைத் திருப்திப்படுத்தும் இப்படத்தை நெறிப்படுத்தியிருப்பவர் ஜேம்ஸ் ஜவரி திரை நாடகத்தை எழுதியிருப்பவர் போலந்திற் பிறந்து, இந்தியர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட ஆங்கில நாவலாசிரியை ரூத் ஜப்வாலா. படத்தைத் தயாரித்திருப்பவர், இந்தியாவில் பிறந்து பாரிசில் வாழும் இஸ்மாயில் மேர்ச்சன்ட் இந்த இஸ்மாயில் மேர்சன்ட், ஜேம்ஸ் ஜவரி, ரூத்ஜப்வாலா கூட்டிணைப்பில் பல அற்புதமான ஆங்கிலப் படங்கள் வெளியாகி உலக திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் GlufosfairgrgOT. (The Householder), Goq56so usi GUITaT (Shake speare Wallah), 2GTi Lu siggit (The Europeans), GLJTGi(SLTafurtsgir (The BOStonians) வெளியே பார்க்கும் வசதி கொண்ட அறை மொரிஸ், ity, GuJITsii, digit 9|Lq GoLD5GT, (Slaves of New York), (5/debungs ப்ரிட்ஜ், ஹோவார்ட்ஸ் என்ட், தினத்தின் எச்சங்கள் (Remins of the Day) ஆகியன அற்புதமான படங்களாகும் இவை, ஹென்றி ஜேம்ஸ், விர்ஜினியா ஊல்ப் போன்ற எழுத்தாளர்களின் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவை. இஸ்மாயில் மேர்ச்சண்ட அண்மையில் காலமானார்.
米>k来
ஜேர்மனியைச் சேர்ந்த தோமஸ் ஸ்டிலர் நெறிப்படுத்திய படம் எரியும் நத்தை (The Burning Smail). ஒரு தாய்க்கும் 14 வயது மகனுக்குமிடையில் ஏற்படும் பாசமும், அதன் வெளிப்பாடு சுமுகமாய் அமையாமற் போவதானால் பையனுக்கு ஏற்படும் மனவிரக்தியும், அதிலி ருந்து அவன் விடுபட தீவிரவாதிகளுடன் இணைவதையும், தாய் வேறு ஒரு காதலனின் உறவைப் பெறுவதனால் மகன் மீது முழு அக்கறை
செலுத்த முடியாதிருப்பதையும் கதை கூறுகிறது.
oKo
85

Page 51
2 6086 aféOILOIT மேலும் சில படங்கள்
கொல்கத்தா திரைப்பட விழாவிலே பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்காமற் போன படங்கள் பல. அவற்றிலே, ஒரு சில பற்றிய தகவல்களைச் சேகரிக்க முடிந்தது. வாசகர் நலன் கருதி, ஒரு தொகுப்பு கீழே தரப்படுகிறது. “வலி ஒப் ஏப்ரஹாம்” (ஆபிரஹாமின் பள்ளத்தாக்கு) என்றொரு படம். போர்த்துக்கல், பிரான்ஸ், ஸுவிற்ஸலாந்து ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு. கதை வசனம், நெறியாள்கை மனோவேல் டி ஒலிவெய்ரா, தலைசிறந்த பிரெஞ்சு நாவலாசிரியர் குஸ்டாவ் ஃப்ளோபெயார் எழுதிய “மதாம் பொவாரி” என்ற நாவலை நினைவூட்டுவது இப்படக் கதை. ஆயினும் இப்படக் கதாநாயகியான எமா அழகி மாத்திரமல்ல, ஆபத்தானவளும் கூட, அவள் கணவன் ஒரு வைத்தியர். அவனை அவள் காதலிக்கவில்லை. அவள் உண்மையிலேயே காதலித்தவனும் அவளை ஏமாற்றி விடுகிறான். ஆயினும் அவள் வாழத்துடிக்கிறாள்.
86

கே.எஸ். சிவகுமாரன்
பிரான்சில் இருந்து வந்த எட்டுப் படங்களில் ஒன்று “ஃபான், ஃபான்’ அந்த நாட்டின் உடன் நிகழ்கால நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அலெக்ஸோந்ரே ஜார்டின் அவரே திரைக்கதையைமைத்து நெறிப்படுத்திய படம் இது அலெக்ஸோந்ரே தனது இல்லக்கிழத்தியான லோரேயுடன் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையை நடத்தி வந்த போதும், ஃபான் ஃபான் என்ற உயிரோட்ட முள்ள, உணர்ச்சி மிகுந்த, இந்திரியக் கவர்ச்சி காட்டும் காமக் கிழத்தியிடம் கட்டுப்படுத்த முடியாத மோகம் கொள்கிறான். அவனு டைய தீவிர காம உணர்ச்சி அவளுக்கு ஒரு சவாலாகப் படுகிறது. தன்னாலியன்ற மட்டும் அவனுடைய கற்பனையுடன் கூடிய உடற்பசி ஆசைகளை நிறைவேற்றி வைக்க அவள் முயல்கிறாள். அவனோ வெளிப்படையாகத் தான் ஒரு காமுகன் என்பதைக் காட்டிக் கொள்வதில்லை. இதனால் கதையில் போராட்டம். ஆசை, அன்பு, வேதனை, சோகம், இப்படி உணர்ச்சிக் கொந்தளிப்புகள் சித்திரிக்கப் படுகின்றனவாம்.
பிரான்சின் மற்றொரு படம் “டொக்சிக் அஃப் பயர்' இப் படத்திற்குக் கதை வசனம் எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் ஃபிலோமனே எஸ்பொஸிட்டோ என்ற பெண். சிற்பக்கலையில் பட்டம் பெற்ற இவர் இன்றைய பிரெஞ்சுப் பெண் நெறியாளர்களில் குறிப்பிடத்தக்கவர். பெனிலோப் என்ற பெண்ணுக்கு ஜோர்ஷே என்ற பெயரில் ஒரு காதலன். அவன் மீது அவள் தீராக் காதல் கொண்டதனால், அவன் வெறுப் படைந்து அவளிடமிருந்து ஓடும் அளவிற்கு அவள் அவனுக்கு அன்புத் தொல்லை கொடுத்து வருகிறாள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைக் காட்டும் கதை மன வாட்ட நோய்க்கு ஆளான அந்தப் பெண் அவனைத் தேடி ஓடும்போது, தனது சிநேகிதி ஸோயியின் நினைவு வந்து, அவள் வீட்டில் இரண்டு நாள் தங்கியிருக்கிறாள். தன் சிநேகிதியிடம் தன் உணர்ச்சி, எண்ணம் யாவற்றையும் வெளிப்படுத்தி விடுகிறாள். ஸோயிக்கு இலட்சியக் காதல் கணவன் ஜோர்ஷே போன்ற ஒருவன் தான். எனவே, பெனிலோப் அவனையே தன் சிநேகிதிக்கு அர்ப்பணிக்கிறாள்.
87

Page 52
Φ60τωρητάθ6οτρτ , βρή 5 6υά562)6υώ
இந்தப் படத்தில் ஒரு சிறு பகுதியையே நான் பார்க்க முடிந்தது. இதில் கதாநாயகியாகவும், சிநேகிதியாகவும் நடிக்கும் இஸபெல் அட்ஜானி திரையில் மிக அழகாகத் தோன்றுகிறார்.
"லிட்டில் ட்ரீம்ஸ்" (சின்னச் சின்னக் கனவுகள்) இது ஒர் அரசியல் சார்ந்த படம். 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சுவெஸ் யுத்தத்தின் போது தந்தையையிழந்த காரெப் என்ற பையன், தனது தாயுடன் வசித்து வந்தான். முன்னாள் எகிப்திய ஜனாதிபதி கமல் அப்தெல் நஸாரிடம் அளவு கடந்த பாசம் கொண்டிருந்த இந்தப் பையன், எகிப்தியஇஸ்ரேலிய யுத்தத்தில் ஈடுபட்டுத் தாய், வீடு, உட்படச் சகலரையும் இழக்கிறான். அவனது சின்னச் சின்னக் கனவுகள் தவிடுபொடியாகின்றன. இப்படத்தின் நெறியாளர் இங்கிலாந்தில், திரைப்பட, தொலைக் காட்சி நெறியாள்கை கற்றவர். இவர் பெயர் காலித் எல் ஹகார்
அடுத்த படம் “ப்ரொம் கார்க்ஹென் டு ரைன்" (கார்க் ஹென்னி லிருந்து ரைன்வரை) என்ற ஈரானியப் படம். நெறியாளர் எப்ராஹிம் ஹட்டமிகியா. இவர் யுத்தம் சார்ந்த விவரணப் படங்களை நெறிப் படுத்கி: வர். இப்படக் கதாநாயகன் சாயிட் ஈரான்-ஈராக் யுத்தத்தில் .ே டவன் வைத்திய பரிசோதனைக்காக அவன் ஜேர்மனி வருகிறான். ஈரானிய இராணுவத்திற்கு எதிராக ஈராக் இரசாயன ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்ட போது, அவன் கண்ணில் கோளாறு ஏற்ப்பட்டிருந்தது. ஜேர்மனியில் தனது கணவருடன் குடும்பம் நடத்தும் தன் சகோதரியின் வீட்டில் தங்கிச் சிகிச்சை பெறுகிறாள். பழைய நினைவுகளில் அவர்கள் சஞ்சரிக்கின்றனர்.
மேற்சொன்னவற்றை விட, வேறு பல படங்களும் இவ்விழாவில் இடம் பெற்றன. த ஹொனர் ஒப் த ரைட் (அல்ஜிரியா/பிரான்ஸ்), த கொஞ்ச் ப்ளு பிரிஸன் (பங்களாதேஷ்), டேயன்ஸ் (பெல்ஜியம்! பிராண்ஸ்/நெதாலன்ட்ஸ்), ப்ரொம் த ஈஸ்ட் (பெல்ஜியம்/பிரான்ஸ்! போர்த்துக்கல்), கனெஷ் சாட்டேகே 270 ஆண்டுகள் எதிர்ப்பு (கனடா), ஃபான்டம் லைஃப் (கனடா), தேர்ட்டி டூ ஷோர்ட் ஃப்லம்ஸ் எபவுட் க்ளென் கோல்ட் (கனடா), கலெண்டர் (கனடா/ஆர்மேனியா -/ஜேர்மனி),
88

கே.எஸ். சிவகுமாரன்
த ஸ்டோரி ஒப்கியூ ஜூ (சீனா), த வுமன் ப்ரொம் த லேக் ஒப் சென்டட் சோல்ஸ் (சீனா), ஃபோர் பன் சீனா/ஹொங்கொங், டார்க்னஸ் இன் டலின் (எஸ்தோனியா/பின்லாந்து,
1, 2, 3 சன் (பிரான்ஸ்), பட்டர்ஃப்ளை சேஸ் (பிரான்ஸ்), த விஸிட்டர்ஸ் (பிரான்ஸ்), கொரில்லா பேத்ஸ் அட் நூண் (ஜேர்மனி, சைல்ட் மேடர்ஸ் (ஹங்கேரி ஜேர்மனி சதர்ன் உவிண் ட்ஸ் இந்தோனீசியா/பிலிப்பைன்ஸ்தாய்லாந்து/ஜப்பான்), த டெத் ஒப் எ நியாபொலிட்டன் மதமடீசியன் இத்தாலி, ஜோனா ஹ0 லிவ்ட் இன் த உவேல் இத்தாலிபிரான்ஸ்), த்ரீ டேய்ஸ் (லித்துவானி, லைக் வோட்டர் ஃபோர் சொக்லட் (மெக்ஸிகோ), லோலோ (மெக்ஸிகோ), மரிட் லைஃ ப் (மெக்ஸிகோ), லிட்டில் ப்ளொன்ட் டெத் த நெதர் லன்ட்ஸ்), கோயிங் ஹோம் (த நெதர்லன்டஸ்/பெல்ஜியம்/ஜேர்மனி). டெளபா-டெளபா (ரஷ்யா), கவ்ஸ் (ஸ்பெயின்).
க்ரீன் ஹென்ரு (சுவிட்ஸர்லாந்து, ரிமெயன்ஸ் ஒப் த டேய் (பிரிட்டின்), உவைல்ட் உவெஸ்ட் (பிரிட்டின்), இன் கஸ்டடி (பிரிட்டின்/இந்தியா), செயின் ஒப் டிசையர் (அமெரிக்கா), ஃபைன்டிங் க்ரிஸ்டா (அமெரிக்கா), ஃபரீ உலிலி (அமெரிக்கா), ஹெவின் உன் ஏர்த் (அமெரிக்கா, இன் சேர்ச் ஒப் அவர் ஃபாதர்ஸ் (அமெரிக்கா), எம் பட்டர்ஃப்ளை (அமெரிக்கா), மன்ஹட்டன் பை நம்பாஸ் (அமெரிக்கா),
ஸ்லீப்லெஸ் (அமெரிக்கா), அண்டர் கவர் ப்ளூஸ் (அமெரிக்கா)
d
(x-
89

Page 53
2 6086 feoIIs) T:
இன்னும் சில படங்கள்
மீரா நாயர் பற்றி நிச்சயமாகத் கேள்விப் பட்டிருப்பீர்கள், அல்லது ஒரு படி மேலே சென்று அவருடைய படங்களைப் பார்த்திருப்பதுடன், அவரைப் பற்றி மேலும் அறிந்திருப்பீர்கள். சலாம் பொம்பே, மிஸிஸிப்பி மசாலா ஆகியன இவரு டைய படங்கள், தரமிருக்கிறதோ இல்லையோ, முழுத் திரைப்பட உலகத்தையும், பார்க்க வைத் தன. விளம்பரம் பெருமளவு பங்கை இவ்விஷயத் தில் காரியசித்தியாக்கியது. என்னைப் பொறுத்த மட்டில் மீரா நாயர் ஒர் இந்தியப் பெண் நெறியாள ராக இருந்தபோதிலும், வெறும் சலசலப்பை ஏற்படுத்து பவர். முழு நீளக் கதைப் படங்களைத் தரு முன்னர், மீரா நாயர் ஆவண ரீதியான விவரணச் சித்திங்களைத் தந்து கொண்டிருந்தார். ஜமா மஸ்ஜிட் ஸ்ரீட் ஜேர்னல் ஜமஸ். சஞ்சிகை), ஸோ ஃபார் ஃபுரம் இந்தியா இந்தியாவிலிருந்து வெகு தூரம்), இந்தியா கபரே (விருந்தினருக்கு இந்திய உண்டிச் சாலை அளிக்கும் பாடல், சில்ட்ரன் ஒப் எ டிசை யர்ட் செக்ஸ் (விரும்பிய பால் உடைய
90

கே.எஸ். சிவகுமாரனர்
சிறுவர் சிறுமியர் ஆகியன இவருடைய ஆரம்பகால (70-80களில் முயற்சிகள். பின்னர்தான், 1988ல் இவருடைய 'சலாம் பொம்பே' பிரசித்தி பெற்ற கான் திரைப்பட விழாவிலும், இவருடைய மற்றைய படமான மிஸிமிஸிப்பி மசாலா', 1991ல் வெனில் திரைப்பட விழாவிலும் காண்பிக்கப்பட்ட போது, மீரா நாயர் மீது திரைப்பட விமர்சகர்கள் கவனஞ் செலுத்தத் தொடங்கினர். பெங்களூரில் அனைத்துலகத் திரைப்பட விழா 1992இல் நடைபெற்றபொழுது, மிஸிஸிப்பி மசாலா" வையும், கொழும்பில் ஓர் இந்தியத் திரைப்பட விழா இடம்பெற்ற பொழுது, 'சலாம் பொம்பே'யையும் நான் பார்க்க நேர்ந்தது. புதுடில்லியிலே இடம்பெற்ற திரைப்பட விழாவிலே, மீரா நாயரின் புதிய படமான 'த பெரேஸ் ஃபாமிலி' (பெரேஸ் குடும்பம் காட்டப்பட்டது. நெறியாளரின் முன்னைய படங்களைவிட, இப்படம் தரத்தில் கொஞ்சம் உயர்ந்தது எனலாம்.
கிறிஸ்டீன் (Christine Bell) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய நாவலைத் தழுவிய இப்படம். நமது வாசகர் நலன் கருதி, இப்படக் கதையின் சுருக்கம் இதோ: ஹஸ்வான் ரவுல் பெரேஸ் (Juan Raul Perez- ஸ்பானிய மொழியில் J என்ற எழுத்து H என்ற ஆங்கில எழுத்தைக் குறிக்கும் என்பதை அவதானிக்க) என்பவன் கியூபா நாட்டுச் சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகள் வரை செலவிட்டவன். இவனுடைய மனைவி கார்மெலா, அமெரிக்காவிலுள்ள மியாமியில் வாழ்ந்து வருகிறாள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவன், ஏனையோருடன் படகொன்றில் அமெரிக்கக் கரையை நோக்கிச் செல்லும்பொழுது, படகிலே, கட்டுமட்டான உடலைமைப்பைக் கொண்ட டொட்டி பெரேஸைச் சந்திக்கிறான். இவளுக்கு “ரொக் என் ரோல்” என்ற 1950, 1960களில் பிரபல்யம் பெற்ற நாட்டிய/இசையில் பிரீதி. அது மாத்திர மல்லாமல், பிரபல அமெரிக்கா "கவ் போய்” நடிகர் ஜோன் வெயின் மீதும் ஆசை. இந்த நடிகரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்பது இவளது விருப்பம். போதை வஸ்துக்கு அடிமைப்பட்டிருந்த இவள், இப்பொழுது, அதிலிருந்து விடுபடத் தொடங்கியிருந்தாள். மிகவும் நெருக்கமாக - உடலைத் தொட்டுத் தொட்டுப் பேசும் இவள்
91

Page 54
சினமா சினமா : ஒர் உலகவலம்
உண்மையில் கல்மிஷமில்லாதவள் தான். ஆயினும், அவளுடைய தேகவனப்பும், அரைகுறை ஆடையும் எவரையும் காமச் சிந்தனைக் குத் தூண்டிவிடும். முன்னாள் சிறைக் கைதியும், இவளும் ஒன்றாகவே படகிலிருந்து இறங்கித் தரையை மிதித்த பொழுது, அமெரிக்க குடிவரவு உத்தியோகத்தர் இவர்களுடைய பெயர்ப் பொருத்தத்தையும், இவர்களுடைய அந்நியோன்யத்தையும் கண்டு, இவர்கள் தம்பதிகள் எனக் கருதி, அவ்வாறே பத்திரங்களில் பதிவு செய்தார். இது காரணமாக ஹர0 வானின் மனைவி கார்மெலா தன் கணவன் குடிவரவு முகாமில் வந்து இறங்கியுள்ளானா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தவிரவும் 20 வருடங்களுக்கு முன் தன்னை விட்டுப் பிரிந்த கணவன் முகத்தைக் கூட அவள் மறந்துவிட்டாள். இந்த இடைக் காலத்தில் இத்தம்பதியருக்கிடையே எந்தவித தொடர்புமே இருந்திருக்கவில்லை. ஹ0 வானும், தன் குடும்பத்தினர் தன்னை மறந்தே விட்டனர் என்று அறிந்து முகாமில் மனஞ் சோர்ந்து இருந்தான். ஹ0 வானும் டொட்டியும் களவாக அமெரிக்கா வந்தவர்கள். தமது வருகை சட்டதீரியான அங்கீகாரம் பெற, டொட்டி, பெரேஸ் குடும்பத்தினர் என்று காட்ட வேறு பலரையும் தனது உறவினர்கள் எனச் சேர்த்துக் கொள்ள முனைகிறாள்.
ஹ0 வானுக்கு தன் மனைவி கார்மெலா மீது அன்பு இருந்தாலும், விசுவாசமாக இருந்தாலும், டொட்டி மீதான மோகம் அவனுக்கு முள்ளாகக் குத்துகிறது. இதற்கிடையில், கார்மெலாவுக்கும், மியாமி பொலிஸ் உத்தியோகிகத்தன் ஒருவனுக்குமிடையில் உறவு இறுக்கா மாகிறது. ஹ0 வான் நேரிலேயே இதனைக் கண்டு கொள்கிறான். 70களில் பெருந்தொகையான கியூபா நாட்டவர்கள் அமெரிக்காவில் குடிபுக மேற்கொண்ட அவஸ்தைகளையும், பணம், அதிகாரம், பேராசை போன்ற உந்துசக்திகளினால் அமெரிக்கா வாழ்வு நிலை அவலமாவதை யும் படம் சித்திரிக்கிறது.
இந்தப் படத்தில் வரும் நடிக, நடிகையர் முகத் தோற்றங்களும், உடல்வாகுகளும், லத்தீன்-அமெரிக்க நாட்டு மக்களுக்கு உரிய வித்தியாசமான அழகு, சாஸ், பல்மின்ரியறி, அல்பிரட் மொலினா,
92

கே.எஸ். சிவகுமாரனர்
மரீஸாதோமே, அன்ஜலிகா ஹoஸ்டன் ஆகிய நடிக நடிகையர் பார்ப்பதற்கு பரவசமூட்டும் கூரிய முகஅங்க அமைப்புகளைக் கொண்ட வர்கள். அவர்கள் நிறம் முழு வெள்ளையும் இல்லை. முழு கறுப்பும் இல்லை - ஒருவிதமான பழுப்பு நிறம். நக்மா, சங்கவி, மனிஷா போன்ற வர்களின் நெருக்கமான காட்சிகளைப் பார்த்து மகிழ்பவர்கள் மதீஷா தோமேயின் அங்க அசைவுகளைக் கண்டு எவ்வாறு பாதிக்கப் படுவரோ நாம் அறியோம். இந்திய நெறியாளர் மீரா நாயரின் கியூபாப் பிரஜைகள் பற்றிய படம் அப்படி என்றால், பிரான்சிலிருந்து வந்த படங்கள் எப்படி என்று பார்ப்போம்.
ஜ்ஷோன் மாரி பொயே (பிரஞ்சு மொழி உச்சரிப்பு வேறு என்பதைக் கவனியுங்கள்) நெறியப்படுத்திய கார்டியன் ஏஞ்சல்ஸ் (பாதுகாக்கும் தேவதைகள்) நகைச்சுவைப் பாணியில் அமைந்ததெனலாம். மது, மாது, கலை என்று அலைந்து திரியும் ஒரு சுயநலவாதியின் கதையிது. மிஷேல் ஸ்பினோஸா நெறிப்படுத்திய படம் 'லாஸ்ட் சான்ஸ் ஹொட்டேல்' (கடைசி வாய்ப்புக் ஹொட்டேல்) என்ற படமும் நகைச்சுவை சார்ந்ததொரு படம். கீ டி மோப்பஸான் என்ற பிரபல பிரெஞ்சுச் சிறுகதையாசிரியர் எழுதிய கதை போன்றதோர் கதை இது தமது வாழ்க்கை வெறுமையைப் போக்க இருவர் மீண்டும் தமக்கிடையே காதல் தீயை வளர்த்துக் கொள் கின்றனர் என்பது இப்படத்தின் சாரம் எனலாம்.
நான்கு நண்பர்களினதும், இறந்துபோன அவர்களுடைய நண்பன் ஒருவனின் விதவையின் பிள்ளைப்பேறு பற்றியும் கூறும் கதை லே பெரில் ஜெஜூன் செட்ரிக் க்ஸாப்பிஸ்ச் நெறிப்படுத்தியது. மற்றுமொரு பிரெஞ்சுப்படம் த சன் ஒப் கங்கோன்' கங்கோனின் மகன்) நெறியாளர் பஸ்கோல் ஓபியே. அநாதைப் பையன் ஒருவன் தன் தந்தை யார் என்று விசாரிப்பதாகப் படக்கதை அமைகிறது. பாரிஸ் நகர வாழ்க்கை. அங்கு வரும் உல்லாசப் பயணிகளின் அனுபவங்கள் போன்ற காட்சிகள் விரிவாகின்றன. பிரான்ஸ்- பெல்ஜியம் கூட்டிணைப்பில் உருவாகிய படம். பிட்வீன் த டெவில் ஆன்ட்த டீப் ப்ளு சீ" இருதலைக் கொள்ளி எறும்பு) இதன் நெறியாளர் மாரியன் ஹன்செல் என்ற பெண்மணி நிக்கி என்ற சீனச் சிறுமி ஒருத்திக்கும், போதைவஸ்துக்கு அடிமையான ஒரு
93

Page 55
சினமா சினமா : ஒர் உலகவலம்
கப்பற் சிப்பந்திக்குமிடையில் ஏற்படும் உறவு படத்தில் சித்திரிக்கப்படுகிறது சுவாரஸ்யமான முறையில் மனித உறவுகள் சித்திரிக்கப்படுகின்றன.
ஜெயங்கா என்ற படத்தை நெறிப்படுத்தியிருப்பவர், பாரிசில் வாழும் விஜேசிங் என்ற இந்திய எழுத்தாளர். இவர் எழுதிய நாவலின் பெயர். ஜெயகங்கா - இன் சேர்ச் ஒப் த ரிவர் கொடஸ்க நதித் தேவதையைத் தேடி ஜெயகங்கா) படத்தின் கதையைப் பார்த்தால் ஹிந்தி, தமிழ்ப் படங்களைப் போன்றிருக்கிறது எனலாம். நிஷாந்த் என்ற இந்தியன் பாரிசில் வசிக்கிறான். அங்குள்ள சவக்காலையில் ஜெயா என்ற ஓர் அபூர்வப் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் தனக்கு இரு வாழ்க்கை கள் இருப்பதாகக் கூறுகிறாள். ஒன்று தனது நிஜ வாழ்க்கை, மற்றையது நட்ஜா என்ற பெண்ணினுடையது. இவள் 1920 களில் வாழ்ந்து வந்த ஓர் அழகி. ஜெயாவுக்கு கங்கை நதி மீது அளவற்ற பிரேமை. ஒரு நாள் அவள் காணாமற் போய்விடுகிறாள். அவளைத் தேடி நிஷாந்த கங்கை நதிக்கு வருகிறான். அங்கு ஜெயாவைப் போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். அவள் பெயர் ஸெக்ரா. அவள் கவிதை எழுதுபவள். ஒரு நகர்த்தகி விலை மாதர் கூடத்தில் தொழில் பார்ப்பவள். அங்கிருந்து வெளியேறித் தன்னுடன் வந்துவிடுமாறு ஸெகராவை நிஷாந்த் தூண்டுகிறான். கங்கை நதி ஓரம் மேற்கொள்ளும் பயணத்தில் தன்னுடன் இணையுமாறு அவன் கேட்கிறான். இந்தக் கதை என்ன கூறவருகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் நடிப்பவர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
94

2 6086 fe0TLOIT
சில துணுக்குகள்
வாசகர் நலன்கருதி, மும்பாயில் நடைபெற்ற, இந்தியாவின் 26ஆவது அனைத்துலகத் திரைப்பட விழாவிலே காட்டப்பட்ட உலகத் திரைப்படங்களில் ஒரு சிலவற்றின் கதைப்போக்கை மிகச் சுருக்கமாகத் தருகிறேன்.
Mammo- பாகிஸ்தானில் வசித்துவரும் கைம் பெண் ஒருவர், தமது தாயகமாகிய இந்தியாவுக்குத் திரும்பி வந்ததுமே, பாகிஸ்தானுக்கு அனாதரவாகத் திருப்பியனுப்பப்படுகிறார்.
Silent Movie Lover-GudgITGOT) ULii.56fc) நடித்த நடிகர் ஒருவர். பழமைப் பசுமை நினைவு களிலேயே சஞ்சரித்து வருகிறார். தனது கனவுலக வாழ்க்கையில் ஓர் இளம் பெண்ணையும், அவள் குழந்தையையும் அவர் இணைத்துக் கொள்கிறார்.
AVetik- ஆர்மேனியாவைச் சேர்ந்த முன் னாள் தேசபக்தன் ஒருவனின் நினைவுகளும், மனப்பதிவுகளும், திரைப்பட ரீதியாக ஒட்டிணைப் புச் செய்யப்பட்டுள்ளன (Montage). வழக்கம்
95

Page 56
சினமா சினமா : ஓர் உலகவலம்
போல முதல், இடை. கடை என்ற பகுதிகளடங்கும் கதை சொல்லும் பாணி கிடையாது.
Exile- செம்மறி ஆடுகளைத் திருடும் ஒருவன், நாடு கடந்தப் பட்ட நிலையில், இளம் பெண்ணொருத்தியுடன் தொடர்பு கொள்ளலும், அவள் அவன் வாழும் தீவை, பூமியில் சுவர்க்கம் ஆக்குவதையும் காட்டுகிறது.
Exotica- அயல் நாட்டுப் பண்புகள், உடற்காமம், கனவுகள், ஆட்டிப்படைப்புகள் சகிதம் நடமாடும் மனம் பேதலித்த பாத்திரங்கள் சிலரின் கதை இது.
Le Sexe Des Etoiles – 5LÉl6û GTGöip QU60öT600fl6T 55:JUGTITff ஒரு பெண்ணாக மாறிவிட, அவரை அவராகவே ஏற்றுக்கொள்ள அப்பெண் எடுக்கும் முயற்சி
Ordinary Magic - ஜெப்ரி என்ற பெயர் கொண்ட கணேஷ் இந்தியாவில் சில காலம் வாழ்ந்துவிட்டுத் தனது தாயகம் சென்று, தனது அயலில் காந்திய வழி முறைகளைப் பயன்படுத்தி வாழ்கிறான்.
Movements in Desire - LÉld, GDITGLOT3, -960LD555ung UGOpu வாழ்க்கையை மறந்த கத்தரீனும் வின்செனட்டும், ரயிலில் சந்தித்துத் தமது ஆசைகளைக் கொட்டித்தீர்த்து அனுபவிப்பதுடன் காதலும் கொள்கின்றனர்.
Fun - வேடிக்கை விளையாட்டக ஒரு முதிய மாதை பொனியும், ஹிலாரியும் கொலை செய்துவிடுகின்றனர். பழி' என்றால் என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை.
Shipwrecked~ நாடு கடத்தப்பட்ட ஒருவன், பல ஆண்டுகளுக் குப் பின் தனது தாய் நாட்டிற்குத் திரும்புகிறான். தான் இழந்த பழைய வாழ்வையும், தனது குடும்ப உறவுகளையும் புதுப்பித்துக் கொள்ள முற்படுகிறான்.
96

கே.எஸ். சிவகுமாரன்
The Story of Xinghua - தனது கணவனினால் துன்புறுத்தப் பட்டும், கோழையான தனது கணவனினால் கைவிடப்பட்டும் அலைந்த ஸின்குஹற்வா தனது புதிய வாழ்வை ஆரம்பிக்கிறாள்.
Strawberry and Chocolate - 9,607 Gold Lili, 5 SalTib Qasrub யூனிஸ்ட் ஒருவன், கலைத்துவமிக்க தன்னினச் சேர்க்கையாளன் ஒருவனைச்சந்தித்துத் தனது பயன்மதிப்புகளை மாற்றிக் கொள்கிறான்.
Take Care of Your Scarf. Tatjana - audi(8LT, foots géluj இருவரும் நாட்டின் கிராமப் பகுதி கூடாகக் காரை ஓட்டிச் செல்கையில், மடைத்தனமாகச் சிக்கல்களில் மாட்டிக்கொள்வதுடன், தம்முடன் பயணம் செய்யக்கோரிக்கை விடுத்த இரண்டு பெண்களையும் சிக்கலில் மாட்டி வைக்கின்றனர்.
D'Artagnan's Daughter - மன்னருக்கெதிரான சதித்திட்டத்தை முறியடிக்க, வயதாகிப்போகும் வாள் சண்டை வீரருக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில், வீரப்பிரதாபங்களுக்குப் பெயர்போன நங்கை நடந்து கொள்கிறாள்.
Dead Tired - புகழ்பூத்த ஒருவர் அருகே அழகிய பெண் ணொருத்தியிருந்தபோதிலும், அவள் மீது பிரயோக்கப்படும் தூஷணை கள். தாக்குதல்கள், அவள் கைதாகுதல் போன்றவற்றை அவரால் தடுக்க முடியவில்லை.
Schindler's Lisit- க்மராக்கோ என்ற இடத்தை நாற்ஸிகள் முற்றுகையிட்டுள்ளனர். அந்த இராணுவத்தைச் சேர்ந்த ஒர் அதிகாரி, கறுப்புச்சந்தை விவகாரங்கள். பெண்பித்து போன்றவற்றில் ஈடுபட்டி ருந்தாலும், மனச்சாட்சி, மனிதாபிமானம் போன்றவற்றிற்கு உட்பட்டவன். யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை ஓரளவுக்காகுதல், தன்னா லியன்ற உதவிகளைச் செய்து தடுக்க முற்படுகிறான்.
40
97

Page 57
9 6O85 afteOTIOIT
சில அனுபவங்கள்
இது ஒரு திரைப்பட விமர்சனக் கட்டுரை அல்ல. மேற்கு வங்காள மாநிலத் தலை நகரான கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்தியாவின் 25 ஆவது அனைத்துலகத் திரைப்பட விழா பற்றிய அறிமுகத் தகவல்களை இங்கு தருகிறேன். இலங்கை உட்பட 40 நாடுகளின் அண்மைக்காலப் படங்கள் இங்கு காண்பிக்கப்பட்டன. ஆர்மீனியா, எஸ்தோனியா, லித்துவேனிய போன்ற நாடுகளின் படங்களும் இவற்றில் அடங்கும். “உலக சினமா என்ற வரிசையில் 71 படங்களும், “இந்திய பனோரமா' என்ற வரிசையில் 18 முழு நீளக்கதைப் படங்களும், 19 குறும் படங்களும் காட்டப்பட்டன. இவை தரமுயர்ந்த படங்களென்றால் வணிக ரீதியாக வும், ஓரளவு பரவாயில்லை என்று கூறக் கூடிய 12 படங்கள் ‘மெயின் ஸ்றீம் என்ற வரிசையிலும் காண்பிக்கப்பட்டன. "வோல்டர் வெற்றிவேல் அரண்மனைக்கிளி' ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இந்த வரிசையில்தான் இடம் கிடைத்தன.
98

கே.எஸ், சிவகுமாரன்
தலைசிறந்த உலக திரைப்பட நெறியாளர்களுள் ஒருவரான, இத்தாலியைச் சேர்ந்த மைக்கல் அஞ்சலோ அந்தோனியோனி இத்திரைப்பட விழாவிற்கு வந்திருந்தமை ஒரு பெரும் பேறு. இவர் நெறிப்படுத்திய 12 கதைப்படங்களும், 4 குறும்படங்களும் பிரத்தியேக மாகக் காட்டப்பட்டன. அதே போல, இத்தாலியைச் சேர்ந்த மற்றொரு மேதையான மறைந்த பெடரிக்கோ ஃபெலின் நெறிப்படுத்திய 4 படங்களும், ஸ்வீடினைச் சேர்ந்த இன்னுமொரு மேதையான இங்மார் பேர்க்மன் நெறிப்படுத்திய 4 படங்களும் ஒல்லாந்தைச் சேர்ந்த ஃபொன் ரேடிநேக்கர்ஸ் நெறிப்படுத்திய 5 படங்களும், அவருடைய துணை வியார் லிலி நெறிப்படுத்திய 2 படங்களும் விழாவில் இடம் பெற்றன. கிரேட்டா கார்போ என்ற முன்னாள் அழகு நட்சத்திரம் பேசி நடித்த 14 படங்கள் பிரத்தியேகமாக இடம் பெற்றன. இவற்றைவிட மொங்கோலிய நாட்டில் தயாரிக்கப்பட்ட 6 படங்களும், மறைந்த இந்திய நெறியாளர் விஜே பாஹ்ட்டின் 4 படங்களும், மறைந்த மற்றுமொரு நாடக சினமா விற்பன்னர் உத்புல் தத்தின் 5படங்களும் திரைப்பட விழாவை நிறைவு செய்தன. மொத்தமாக 157 கதைப்படங்களும், 23 குறும் படங்களும் காண்பிக்கப்பட்டன. இவற்றில் 118 கதைப்படங்கள் உலக நாடுகளைச் சேர்ந்தவை, 39 இந்தியாவில் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப் பட்டவை, 4 குறும் படங்கள் வெளி நாடுகளிலிருந்தும் 19 இந்தியாவி லிருந்தும் இடம் பெற்றன.
"செயிலம’ நகரம்) என்ற சிங்களப்படம் உலக அரங்கில் காண் பிக்கப்பட்டது. இப்படத்தின் நெறியாளர் எச்.டி.பிரேமரத்ன, அவருடைய துணைவியார், படத்தின் நடிகை அனோஜா விரசிங்க, மற்றும் இலங்கையின் தலைசிறந்த நெறியாளர்களாகிய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சுமித்ரா பீரிஸ், பேராசியர் விமல் திசாநாயக்க, அஷ்லி ரத்னவிபூஷண. அமரநாத் ஜயதிலக, திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் கெளதம தாஸ, ரூபவாஹினி மா அதிபர் சுனில் சரத்பெரேரா, 'விராகய தயாரிப் பாளர் சந்திரா மல்லவாராச்சி, கே. எஸ். சிவகுமாரன் போன்ற இலங்கையர் கொல்கத்தா திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவிலே பழம்பெரும் தென்னிந்திய நடிகை கலாநிதி பானுமதி ராமகிருஷ்ணா கெளரவ விருந்தினராக மேடையில் கெளரவிக்கப்பட்டார்.
99

Page 58
சினமா சினமா: ஓர் உலகவலம்
மற்றொரு தென்னிந்திய நடிகையான ரேவதி அட்டகாசமின்றி சாதாரண ரசிகை போல வந்து தேர்ந்தெடுத்த நல்ல படங்களைப் பார்த்து மகிழ்ந்தார். அவரை நேரில் பார்க்கும் போது இந்தச் சின்னப் பெண்ணுக்குள் இவ்வளவு நடிப்புத் திறமையா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரபல நடிகையும் நெறியாளருமாகிய அபர்னா ஸென். நடிகை நீனா குப்தா போன்றவர்களும் நல்ல படங்களத் தேடிப் பார்த்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து பல பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்களில் ‘சுபமங்களா ஆசிரியர் கோமல் சாமிநாதனும் ஒருவர். இவர் திரைப்படக் கதாசிரியர், நெறியாளர், நடிகர், எழுத்தாளர், நாடக விற்பன்னர் என்ற விபரங்கள் நாம் அறிந்ததே. இப்படவிழாவிலே கருத்தரங்குகள், விவாதங்கள் போன்றவையும் இடம் பெற்றன.
இடம் பெற்ற படங்களில் பல உலகின் ஏனைய அனத்துலகத் திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றவை. இப்படவிழவையொட்டி முத்திரை வெளியீடு, ஓவியக் கண்காட்சி போன்றவை சத்தியஜித்ராயை கெளரவிக்குமுகமாக இடம்பெற்றன. வெளி நாடுகளிலிருந்து 100 பிரதிநிதிகளும், இந்தியாவிலிருந்து 3000 பிரதிநிதிகளும் இலவச மாகப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். 300க்கும் அதிகமானவர்கள் பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள். வெளி நாட்டு விருந்தாளிகளுக்குப் பத்து நாட்களுக்கு ஹிந்துஸ்தான் இன்டர் நாஷனல் ஹொட்டேலில் தங்குமிட விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சின் கீழ் உள்ள திரைப்பட விழா இயக்குநர் சபை இயங்குகிறது. இந்தக் திரைப்பட விழாவிலே அடி நாதமாக ஒலித்த சேதி, காதல் பற்றியதுதான். அந்தச் சொல்லுக்கு எத்தனை விதமான விளக்கங்கள். இவ்விளக்கங்கள் இப்படங்கள் உணர்த்தின. நெறிமுறை விழுமியம், பயன்மதிப்பு போன்ற சொற்களுக் கான அர்த்தங்கள் இன்று உலகெங்கிலும் தலை கீழாக மாறிவிட்டன. எப்படி என்பதைச் சில படங்கள் மூலம் எடுத்து விளக்க வேண்டி யுள்ளது.
0.
0.
100

9 6D85 fleOTLDIT
சில பதிவுகள்
சீனப் பெண் நெறியாளர் இருவரைத் திரைப்பட விழாக்களின் போது சந்திக்க நேர்ந்தது. இவர்களில் ஒருவர் ஸியாஒயென் வொங் பீஜிங் திரைப்படக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். தானே திரை நாடகம் எழுதி தொகுத்து நெறிப் UG55u glauci,60Lu ULub. The Monkcy Kid, குரங்குச் சேட்டைக் குழந்தை. இந்த அருமையான படம், புதுடில்லி அனைத்துலகத் திரைப்பட விழா வில் காட்டப்பட்டது. உயரமான, மெல்லிய தோற்றங் கொண்ட இந்தப் பெண், நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். பச்சாதாபத்துடன் பழகுகிறார். இவரு டைய சிறு பராய வாழ்க்கையை மையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்தப் படம். சீனா வில், கலா சாரப் புரட்சி ஏற்பட்ட 1960கள். அக் காலகட்டத்தில் ஒன்பது வயதுப் பெண்ணாக இருந்த ஒரு சிறுமியின் அனுபவம் மூலம் கதை சொல்லப்படுகிறது. வெளிக் கட்டுப்பாடுகளின் மத்தியில் ஒரு குழந்தையின் இயல்பான மனோபாவமும், செயல்களும், இயற்
101

Page 59
சினமா சினமா ; ஓர் உலகவலம்
பண்பு ரீதியில் படம் பிடிக்கப்படுகின்றன. இரத்த வெள்ளமும், பயங்கரச் சூழலும் கவிந்து மக்களுக்குப் பீதியை ஏற்படுத்தின. தனி மனிதர் அடிபணிந்து போக வேண்டியிருந்தது. இதனைத் தான் நெறியாளர் சொல்லாமற் சொல்கிறார். அதே வேளையில், உளவியல் ரீதியில் மனித உறவுகளை அலட்டிக் கொள்ளாமல் சித்திரிக்கிறது.
The Monkey Kid ஓர் அரசியல் விமர்சனப் படம் என்றால், க்ரோவேசியாவிலிருந்து வந்த படமும் அதே மாதிரியே. இங்கு உளவியலும், மர்மமும் சேர்ந்துள்ளன. பெயர் நெளசிக்கயா, நெறியாளர் விக்கோ ரூயிச் கதை 1939இல் நடைபெறுகிறது. நடிப்புத்துறையில் பயிற்சி பெற்று வருகிறான் ஓர் இளைஞன் வாடகைப் பணமில்லாது, அவனுக்குத் தொடர் மாடியில் அறையொன்று கிடைக்கிறது. இந்தப் ப்ளாட்டின் சொந்தக்காரியின் பெயர் திருமதி ஸ்லாஞ்சர். இந்த அறைக்கு இவன் வரும் முன்னர், வேறு மூன்று பேர், காலத்துக்குக் காலம் தங்கியிருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் இந்த மூவரின் சடலங்களிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு சிலந்தி காணப்பட்டது.
இந்த நடிகனின் மாடிக்குச் சற்றுத் தூரத்தேயுள்ள அறையில் நெளசின்னயா என்ற பெயரில் ஒரு பெண் வசித்து வருகிறாள். அவள் நாட்டிய நாடகக் குழுவொன்றிலே ஒரு பாடகி. நல்ல அழகி. மர்மமான போக்குடைய இந்தப் பெண் எப்பொழுதுமே நீலப் பொட்டுகள் கொண்ட கறுப்பு அங்கியை அணிந்துகொள்வாள். இவள் இந்த இளைஞனைத் தன்வசப்படுத்த முயல்கிறாள். இவனின் அறையில் உள்ள ஜன்னலில் ஒரு சிலந்தி, வலை பின்னுகிறது. அதனைக் கொல்ல இளைஞன் முயல்கிறான். ஆனால், அந்த வீட்டுச் சொந்தக்காரி அதனைக் கொல்ல வேண்டாம் என்று தடுக்கிறாள். இந்தக் தொடர்மாடி வீட்டில் பதற்றம் நிலவும் இவ்வேளையில், ஜேர்மனியைச் சேர்ந்த நாட்ஸிகள் க்ரோவேசியா மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான்
கதை.
சிலந்தி-பெண் - நாற்சிஸம் - கலைஞர்கள். இவர்களுக்கும் இவற்றிற்கும் இடையே உள்ள சம்பந்தத்தைப் பார்வையாளராகிய நாமே
102

கே.எஸ். சிவகுமாரன்
பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்த படத்திலும் அரசியல் தொனிக் கிறது. யானையும் பைசிக்களும் என்பது படத்தின் பெயர். நெறியாளர் ஹவானாவைச் சேர்ந்த ஹூவான் கார்ளோஸ் டபியோ, இளைஞன் ஒருவன் ரொபின்ஹoட் என்ற படம், ஒரு புரொஜெக்டர் (படம் காட்டும் யந்திரம்) சகிதம் தனது பிறப்பிடமான கியூபாத் தீவுகளுக்கு வருகிறான். அவன் காட்டும் படம், தீவு வாசிகளின் கற்பனைகளைத் தூண்டி விடுகிறது. ஒரே படத்தைத் திரும்பிப் பார்க்க, அவர்களுக்குப் புதுப் புது எண் ணங்கள் உருவாகின்றன. குடியேற்றவாதம், புரட்சி, விடுதலை, வாழ்க்கை நெறிமுறைகளின் நின்றும் வீழ்ச்சி ஆகியவற்றை அப்படம் மூலம் அவர்கள் அறிந்துகொள்வதுடன், தாமும் அவற்றால் உந்தப் பட்டுச் செயலாற்றத் துடிக்கின்றனர். இது கியூபா நாட்டுப் படம் என்பதை நாம் மனதில் வைத்திருந்தால், இதன் பிரசாரத் தன்மை அவ்வளவு பெரிய Një ëlg) 60TuJIT5 g(Ibë, 5Tgj. Not Angels, But Angels Gg GJasgj6çit அல்ல, ஆனால், தேவதைகள் என்பது அடுத்த படம் , செக்கஸ்லோவாக்கியா நாட்டுப் படைப்பு இதனை நெறிப்படுத்தியவர் விக்டர் க்ரோடெச்சி. இவரே திரை நாடகத்தை எழுதியிருக்கிறார். கதை ப்ராக் நகரில் நடைபெறுகிறது. அங்குள்ள இளம் ஆண் தன்னினச் சேர்க்கையாளர் பற்றியது படம். பொருளாதார நிலைமை காரணமாக சிறுவர் காமவிவகாரங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உல்லாசப் பயணி கள் சிறுவர்களைத் தன்னினச் சேர்க்கைக்காகப் பயன்படுத்துகின்றனர். இது இச்சிறுவர்களின் அவல நிலை பற்றிய ஆவணச் சித்திரம்.
திருடப்பட்ட உவகை என்ற எகிப்தியப் படம், திருமணம் செய்ய விரும்பும் இரு காதலர்கள் பற்றிய படம். தாம் திருமணஞ் செய்யுமுன்னர், தமது பெரும் கடன் பழுக்களைத் தீர்க்க அவர்கள் முற்படுகின்றனர். இதனை நெறிப்படுத்தியவர் தாவுத் அப்தெல் சயீத். சுமாரான ரசனைதரும் படம். இந்தத் திரைப்பட விழாக்களிலே இடம்பெறும் எல்லாப் படங்களுமே தரமுயர்ந்தவை என்று கூறிவிட முடியாது. சில, பொறுமையைச் சோதிக்கும் படங்கள். அடுத்ததாக, யெமன்ஜாவின் புதல்விகள். நெறிப்படுத்தியவர் பின்லாந்தைச் சேர்ந்த பியா டிக்கா என்ற
103

Page 60
சினமா சினமா : ஒர் உலகவலம்
பெண், படக்கதை இடம்பெறும் நாடு, ப்ரெஸில், சினி, சிஸி இருவரும் பின்லாந்து நாட்டுச் சகோதரிகள், சிஸி ப்ரேஸிலில் மூன்று ஆண்டுகள் வசித்து வந்த பின்பு பின்லாந்திலுள்ள தனது சகோதரி சினியுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எனவே, சினி, சிஸியைத் தேடிப்ரெஸில் வருகிறாள். அவள் காணாமற் போய் இரண்டு மாதங்களாகின்றன என்கி றான் சிசியின் கணவன். எனவே சினி, அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறாள். கறுப்பு இனத்தைச் சேர்ந்த தியாகோவும் துணையாகச் செல்கிளான். காரில் அவர்கள் ரியோ டீ ஜெனேரோ முழுவதும் தேடிப் பார்க்கிறார்கள். தேடும் முயற்சியின் போது இலத்தின் அமெரிக்க கலாசாரத்துக்கும், மேற்கு ஐரோப்பிய நாகரிகத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை இருவரும் உணர்ந்துகொள்கின்றனர்.
சகோதரியைக் கண்டு பிடிக்காத நிலையில் மர்மமான முறையிலே அவளைக் கண்டு பிடிக்கிறான் சினி. பொறுமையாய் இருந்தால், இப்படத்தில் ப்ரெஸிலில் உள்ள சில இடங்களைக் கமரா மூலம் நாம் பார்க்கலாம். பின்லாந்திலிருந்து மற்றொரு படம் லெனின்க்ராட் மாட்டுப் பையன்கள் மோசஸைச் சந்திக்கிறார்கள். நெறியாளர் ஆகி கெளரிஸ்மாகி, இ.பு :வாரஸ்யமில்லாத படம். மற்றுமொரு சலிப்புத்தரும் படம் டிசே (ரா, இதுவும் பின்லாந்து படம். நெறியாளர் மீகா கெளரிஸ்மாகி, இதுவும் ஆவணச் சித்திரமேயன்றிக் கதை சார்ந்த படமாக எனக்குப் புலப்படவில்லை.
104

gd 6D5 ël6OTIOIT சில செய்திகள்
பிருத்வி ராஜ்கப்பூர் என்ற ஒரு சிறந்த நடிகர் இருந்தார். வடஇந்தியர். அவருக்கு மூன்று புதல்வர்கள்-ராஜ், ஷமி, ஸவழி, மூவரும் இந்தி சினமாவில் புகழ்பெற்ற நடிகர்கள். இளையவரான ஸஷிகப்பூர், ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கிறார். இந்தக் கப்பூர்கள் ஹிந்தித்திரைப்பட உலகத்துக்குப் பெரும் பங்களித்துள்ளனர். கப்பூர் பரம்பரையினர் தொடர்ந்தும், தமது இளவல்கள் மூலம் செல் வாக்கைச் செலுத்தி வருகின்றனர். இன்னொருவரின் பெயர் அண்மைக்காலமாக அரசியல் மட்டங்களி லும் பேசப்படுகிறது. ஆம், அவர் ஆந்திர மாநில முதல்வரும், பழம்பெரும், திராவிட மொழிப் படங் களின் (பாதாள பைரவி, மாயா பஸார் தெய்வீகப் பாத்திர மேற்று (கிருஷ்ணன்) நடித்தவருமான என். டி. ராமராவ் தான்
ஆந்திரபிரதேசத்தில் மின்னுற் பத்தி ஆலை யொன்றை அமைக்க ஸஷி விரும்புகிறார். தமது செல்வங்களைத் திரைப்படம் தயாரிப்பதில் முதலீடு
105

Page 61
சினமா சினமா : ஒர் உலகவலம்
செய்வதைவிட, கைத்தொழில்களில் செய்யலாம் என்று கப்பூர்கள் நம்புகிறார்கள். மும்பாய் படங்களுக்கு இப்பொழுது மவுசு குறைந்து வருகிறது. ஹிந்தி நெறியாளர்கள் கூட ‘கலைப்படங்களை வெளிநாட்டு ரசனையாளர்களின் திருப்திக்காகத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். தொலைக்காட்சிக்கான குறுந்திரைப்படங்களில் ஈடுபாடு காட்டி வருகின்ற னர். ஒரு காலத்தில் ஆர். கே. ஸ்டூடியோஸ் மும்பாயில் பிரல்யம் பெற்று விளங்கியது. ராஜ் கப்பூரின் வெற்றிப்படங்கள் சில ஹி 420. சங்கம் போன்றவை) இந்தியா பூராவுமே வெற்றிபெற்ற படங்களாக (முழுக்க முழுக்க கலைப்படைப்புகளாக அமையாவிட்டாலும் கூட) விளங்கின. அக்காலகட்டங்களில் ரஷ்ய மக்கள் ராஜ் கப்பூரைப் பெரிதும் விரும்பினர்.
ஸவகி கப்பூர் நடித்த படங்கள், கலைத்துவமாகப் படங்களைப் பார்க்கும் சில விமர்சகர்களைத் திருப்திப்படுத்தின. உதாரணமாக, அபர்ணா ஸென் என்ற வங்காளப் பெண் நெறியாளரும் சத்யஜித்ராயின் படங்களில் நடித்தவருமான, கலைத்துவ சினமா பிரகிருதி நெறிப்படுத்திய 36. CHOWRANGEE LANE, GJg5 (T pb tqģ5g5 LULLDTGIT 2) ğ GIUGJ (கன்னடஹறிந்தி நெறியாளர் கிரிஷ் கர்னாட் நெறிப்படுத்தியது, “கல்யுக்” ஆகிய படங்களில் ஸஷி கப்பூரின் நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ராஜ்கப்பூரின் ஆவாரா ரஷ்யாவில் வெற்றி பெற்றதுபோல, தமது “அஜூபரு’ம் வெற்றிபெறும் என்று ஸஷி எதிர்பார்த்தது பலிக்கவில்லை. பரிசோதனை நாடகங்களை மேடையேற்ற “பிரித்வி தியேட்டரை” ஸஷி நிர்மாணித்தார். ஆயினும், கப்பூர்கள் தயாரித்த படங்கள் பணப்பெட்டிகளை (BOX-Office) நிரப்பமுடியாமற் போன தால் ஏழு க்ரோர் ரூபா கடனாளிகளாக மாறினார்கள்.
எனவே, இழப்பை ஈடு செய்ய படத்துறையல்லாத துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன் முதற்படியே, ஆந்திராவில் முதலீட்டு முயற்சி. ஆந்திராவிலுள்ள ரெனிகுண்டாவில் 80 மெகவோட்ஸ், பூரீ களாகஸ்தியில் 20 மெகவோட்ஸ் ஜெனரேட்டர் களைப் பொருத்த முயற்சி எடுக்கப்படுகிறது. அமெரிக்க, ஒல்லாந்து
106

கே.எஸ். சிவகுமாரனர்
நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து இந்த மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
ஐரோப்பியத் தொலைக்காட்சியில் அமெரிக்க செல்வாக்கு
ஐரோப்பிய நாடுகளின் பண்பாட்டுக் கோலங்களுக்கு மாசு கற்பிக் கும் விதத்தில் அமெரிக்கக் கலாசாரத்தை, ஐரோப்பிய தொலைக்காட்சி நிலையங்கள், திணித்து வருகின்றன என்று பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. அந்த நாட்டின் பண்பாட்டுத்துறை அமைச்சர் யாக்டு போன் (JacquesToubon), ஐரோப்பிய ஒன்றிணைப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
தகவற் சமுதாயம் (Information Society) ஒன்றை உருவாக்கி, தகவற் துரித நெடுஞ்சாலைகளை/நெடுந்தொடர்புப் பாதைகளை (Information Superhighways) அமைக்க எடுக்கும் முயற்சிகளை அமெரிக்க, ஜப்பானிய ஆக்கங்களே ஆக்கிரமித்துக்கொள்ளும் என்று பல ஐரோப்பியத் தொலை தொடர்பியலாளர்கள் அஞ்சுகின்றனர்.
மும்பாய் படவிழாவில் ஒஸ்கார் நியமனப் படங்கள்
Pulp Fiction, Red, Strawberry and Chocolate. g., thug." குறிப்பிடத்தக்கவை. இவற்றில் கடைசி இரண்டு படங்களும் மகத்தான மனித உணர்வுப் பரிமாற்றப் படங்கள். எனக்குப் பிடித்தன. முன்னைய படத்தில் வன்செயல்கள் அதிகம் இருந்ததால் எனக்கு அதிகம் பிடிக்கவில்லை. இந்தப் படத்தில் பிரபல நர்த்தகர் ஜோன்ட்ராவால்டா (John Travolta) blq3, dipstit.
“சிகப்பு” என்ற படம், “Blue”, “White”, “Red” என்ற மூன்று தொடர்படங்கள் அடங்கிய தொகுதியில் (Trilogy) இடம்பெற்றது. இப்படங்களின் நெறியாளர் பெயர் கீஸ்லொவ்ஸ்கி (Kieslowski) இவர் போலந்தில் பிறந்து பிரான்ஸில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவருபவர்.
107

Page 62
சினமா சினமா : ஒர் உலகவலம்
இன்றையத் தலை சிறந்த ஐரோப்பியத் திரைப்பட நெறியாளர்களில் நடுவராகக் கருதப்படுகிறார்.
மூன்றாவது படமாகிய, "ஸ்டோபரி அன்ட் சொக்ளெட்” என்ற கியூபா நாட்டுப் படத்தில், யோர்ஷே பெருகொரியா (Jorge Perugorit) என்ற நடிகர் மிகமிக நுண்ணிதப் பாங்காக நடிக்கிறார். இது கியூபா நாட்டுப்படம். இந்த மூன்று படங்களைப் பற்றிய பார்வைகளைப் பிறிதோரிடத்தில் பார்ப்போம்.
108

தமிழ் சினமா முன்னைய பிறமொழி இசை
தற்சமயம் விரல்விட்டு எண்ணக்கூடிய இசை யமைப்பாளர்கள் தமிழ்ப் படங்களுக்கு இசை யமைத்து வந்தாலும், இளையராஜாவும். ரகுமானும் மாத்திரமே தமது முத்திரைகளைப் பதித்து வரு கின்றனர். எனினும் புதிய பலரின் இசைக் கற்பனை கள் வரவேற்கத் தக்கனவாய் உள்ளன. எத்துறைகளி லும் காலத்துக்குக் காலம் மாற்றம் ஏற்படுவதுபோல், தமிழ்த் திரைப்பட இசைத் துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வந்திருக்கிறது. ஜி.ராம நாதன், கே. வி. மஹாதேவன், ஸி. ஆர். சுப்பராமன். விஸ்வநாதன் ராமமூர்த்தி, பின்னர் தனியே விஸ்வநாதன், டி. ஜி. லிங்கப்பா, சுதர்ஸனம், வெங்கட் ராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, தஷிணாமூர்த்தி, வேணு என்ற பல திறமையான இசையமைப்பாளர்கள் கடந்த அரை நூற்றாண்டாக இசை மெருகு அளித்து வந்துள்ளனர். பொதுசனத் தொடர்சாதனங்கள் மின்னியக்கப் பாவனை, கணினிப் பிரயோகம், செய்மதிப் பரிவர்த்தனை போன்ற வழிகளில் உலகமே ஒரு தனிக்கிராமமாக மாறிவிட்டது. உலகின்
109

Page 63
சினமா சினமா : ஓர் உலகவலம்
எந்த எந்தப் பாகத்தில் என்ன நடக்கின்றதோ அந்த அந்த நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்புக்களை நமது கலை, இலக்கிய, பண்பாட்டுக் கோலங்களில்
5.T600TG) ITLs).
தமிழ்த் திரைப்படத்துறையை எடுத்துக் கொண்டால், கதைப் போக்கு, நடிப்பு, தொழில் நுட்பம், நெறியாள்கை போன்ற எல்லா அம்சங்ளிலும் இந்த மாற்றத்தை நாம் காணலாம்; ஆயினும், இவற்றை நுட்பமாக நாம் அவதானிக்கத் தவறிவிடுகிறோம். தமிழ்த் திரைப்படங் களில், நடனம், இசை ஆகியன குறிப்பாக, அனைத்துலகப் போக்கை அனுசரிக்கின்றன என்றால் மிகையாகப் படலாம்; ஆயினும் அது பரிசோதனை வடிவத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது. இளைய ராஜா லண்டன் பிலாமோனிக் ஒர்கெஸ்றாவை வழிநடத்த அழைக்கப் பட்டார் என்றால் அது எவ்வளவு மகத்தான சாதனை. உலகளாவிய தன்மை அவர் இசையில் இருக்கிறது என்பதனாலே தானே இந்த வரவேற்பு, கணினியைக் கொண்டு நாட்டுப் பாடலும், பிறமொழி இசையும் விரவிவர ரஹற்மான் இசைப்பதில் ஒரு தனிச் சிறப்பு உண்டல்லவா? ரஹ்மானின் இசைப்போக்கை நாம் பிறிதாக ஆராய வேண்டும். இளையராஜா ‘அன்னக் கிளி’ முதல் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை அதிகம். எல். வைத்தியநாதன் பங்களிப்பும் கவனத்துக் குரியது.
முன்னோடிகள்
இளையராஜா, ரஹ்மான் மற்றும் ஓரிருவர் மூலம் உடனிகழ்கால இசைப்பாடல்கள் மேனாட்டிசையைத் தழுவியும், தழுவாமலும் வந்தாலும், முன்னோடிகளாக நாம் ராஜேஸ்வரராவ், ஸி. ஆர். சுப்பராமன். ஜி. கே. வெங்கடேஷ், சித்தல்கார் ராமச்சந்திரா, வேதாசலம், டி. ஜி. லிங்கப்பா, சுதர்சனம் போன்றவர்களின் முயற்சிகளை மறந்த விடலாகாது. “தெய்வநீதி’ , “இதுநிஜமா?’ போன்ற படங்களில் மேனாட்டிசை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், எஸ். எஸ். வாசனின்
110

கே.எஸ். சிவகுமாரன்
'மங்காம்மா சபதம்”, “சந்திரலேகா’ போன்ற படங்களிலேயே 140 களின் பிற்பகுதியில் பிறமொழி இசை முழுக்க முழுக்கத் தழுவப்பட்டது.
பரத நாட்டிய விற்பன்னர், நடிகை, அரசியல்வாதி, வைஜயந்தி மாலாவின் தாயாரும், விமான ஒட்டி, முதலாவது ஆண் நர்த்தகரும், நடிகருமான ரஞ்சனும் 'மங்கம்மா சபதம்’ என்ற படத்தில் நடித்தனர். வசுந்தரா நடித்தது மாத்திரமல்ல, ஆடவும் பாடவும் செய்தார். அவர் பெயர் வசுந்தராதேவி, "ஐயையையோ சொல்ல வெட்கமாகுதே' என்ற பாட அவர் மேனாட்டுப் பாணியிலும், மெட்டிலும் பாடினார். அதேபோல முழுவதுமே "வோல்ட்ஸ்” எனப்படும் நாட்டியமெட்டுப் பின்னணியில் ஒலிக்க ஆடினார்.
சந்திரலேகா
ஜெமினியின் மற்றொரு படம் “சந்திரலேகா’, தமிழிலும், ஹிந்தியிலும் 1948ல் வெளிவந்தது. இந்தப்படத்தில் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, இலத்தின் அமெரிக்க இசை, போர்த்துக்கேய நாடோடி மெட்டுக்கள், ஓபரட்டா, நாட்டியம், பரத நாட்டியம், ஜிப்ஸி, வோல்ட்ஸ் ஆகிய இசை நாட்டிய வடிவங்கள் இடம்பெற்றிருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக டி. ஆர். ராஜகுமாரி பாடும் “பாலன் கருணைபுரிவான்’ கர்நாடக மெட்டாக இருந்தால், “பாடாதே’ (கலைவாணர் என். எஸ். கிருஷ்ண்ணின் துணைவியார் டி. ஏ. மதுரம பாடியது "டொங்கி செரனேட்’ என்ற சேர்க்கஸ் மெட்டைத் தழுவியது. ஸ்ரொம்பேர்க் ஆக்கிய பாநாடக நாட்டிய நப்பாநெட்டா) உருவாக்கமான “த பயர் ஃபளை’ (The Fire Fly) என்ற அமெரிக்கப் படத்தில், அலன் ஜோன்ஸ் பாடிய பாடலே “டொங்கி செரனேட்’, ‘சந்திரலேகா’ படத்தில் வருவதும் மனமோகனகரமே” என்ற பாடலின் பின்னணியில் ஒலிக்கும் வாத்திய இசை ஒரு "வோல்ட்ஸ்” மேனாட்டு இசைமேதை ஸ்ட்ரெளஸ் (Straurs) சமைத்தது. அதேபோல "நாட்டியக் குதிரை’யும் “கோனி ஐலன்ட்” என்ற படத்தில் வரும் பாட் டைத் தழுவியது.
11

Page 64
சினமா அசீனமா : ஒர் உலகவலம்
இலத்தின் அமெரிக்க இசை
ஹிந்தி இசையமைப்பாளர் சித்தல்கர் ராமச்சந்திரா ஆரம்பத்தில் தமிழ் படங்களுக்குத்தான் இசையமைத்தார் என்பது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். இலங்கையிற் பிறந்து, தமிழ் நாட்டில் கொடிகட்டிப் பறந்தவரான தவமணிதேவி. “வனமோஹினி” என்ற படத்தில் நடித்து அந்தக் காலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியவர். தவமணி தேவியும் சித்தல்கரும் பாடிய “மாறிமாறிவரும் காலம்’, சித்தல்கர் தனித்துப்பாடிய “உயர்வோமே” ஆகிய பாடல்களும் மேலை இசைக் தழுவல்கள் எனலாம். 'வனமோஹினி 1941இல் வெளிவந்தது. “ஜெயக் கொடி’ (1939) என்ற படத்திற்கும் சி. ராமச்சந்திரா இசையமைத்துள்ளார்.
“நாம் இருவர்” (1947) படத்தில் டி. கே. பட்டம்மாள் பாடும் “வெற்றியெட்டுத்திக்கும்’ என்ற பாரதி பாடலின் பின்னணி மத்தள இசை, பேபிகமலாவிற்காக ராஜேஸ்வரி பாடும் ‘காந்தி மஹான்' ஆகியன மேனாட்டிசைப் பாடும், வாத்தியத்தில் ஒலிக்கும் இசை என்பதை அவதானிக்கலாம். சுதர்சனம் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் "நாம் இருவர்” மத்தள இசையின் அருட்டுணர்வினால் “சந்திரலேகா’ மத்தள இசை உருவாகியது எனலாம். “சந்திரலேகா’ வின் இசையமைப்பாளர் ராஜேஸ்வரராவ்,
இரட்டையர்களாக முன்னர் விளங்கிய விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் குருவான ஸி. ஆர். சுப்பராமன் “தர்மதேவதா”, “விஜயகு மாரி” போன்ற படங்களில் இலத்தின் அமெரிக்க இசையை அறிமுகப் படுத்தியவர். நடிகை பூரீவித்யாவின் தாயாரான எம். எல். வசந்த குமாரியுடன் “மணமகள்’ படத்தில் கர்நாடக பாணியில் சுப்பராமன் பாடினார். அதே சமயம் “தர்மதேவதா” வில் கே. ராணியுடன் லத்தின்அமெரிக்க இசையில் கானமிசைத்தார்.
தமிழ்ப் படங்களில் லத்தின் அமெரிக்க இசையின் செல்வாக்குத் தான் முன்னர் அதிகமாகக் காணப்பட்டது. “விஜயகுமாரி”யில் ரி. ஆர். ராஜகுமாரி பாடும் “பொழுது விடிந்தாராஜா ராணி நான்’, டி. ஜி. லிங்கப்பாவின் இசையமைப்பில் உள்ள “சின்னத்துரை” படத்தில்
லிங்கப்பாவும், ரத்னமாலாவும் பாடும் “ஓ ராஹினி”, “ராணி’ (சி. ஆர்.
112

கே.எஸ். சிவகுமாரனர்
சுப் பராமன் இசை) படத்தில் பி. பானுமதி பாடும் “ரின் ரிண்டா” “தர்மதேவதா” (கப்பராமன்) படத்தில் ராணி பாடும் ‘ஆடுவேன், பாடுவேன் தில்லானா’ போன்றவற்றில் இந்த சம்பா, றும்பா. மம்போ. கொம்போ போன்ற இலத்தின் அமெரிக்க இசை (ஸ்ாபானிய இசை வடிவங்கள் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ள பாங்கைக் காணலாம்.
நடிகை ஈஸ்வர்யாவின் பேத்தியும். அற்புதமான நடிகை லகூழ்மி யின் தாயாருமான ருக்மணி, நடித்த “பூரீவள்ளி”, “முல்லைவனம்” போன்ற படங்களில் மேனாட்டிசைச் செல்வாக்கைக் காணலாம். கமல் தாஸ் குப்தாவின் வாத்திய இசை “சகுந்தலை” (1940)யில் ஒலித்தது. எம். எஸ். சுப்புலகூழ்மி கர்நாடக ராகத்தில், மேனாட்டில் பாடும் முறைபோல பாடப்பட்ட “எங்கும் நிறை நாதப்ரம்மம்”, “எந்தனிடது கண்ணும் தோளும்” ஆகிய பாடல்களும். ‘மானசமர்ஷணம்’ படத்தி லுள்ள இசையும் (சுப்புலக்ஷமி நடித்தது இங்கு குறிப்பிடத்தக்கவை. அதே போல, டி. கே. பட்டம்மாள் பாடிய “குழலோசை கேட்டாயோ' (படம் ஞாபகமில்லை), “வனசுந்தரி”, “ஞானசவுந்தரி” போன்ற படங்களிற் பி. ஏ. பெரியநாயகி பாடிய பாடல்கள் எல்லாம் மேனாட்டு இசையைத் தழுவியவைதான். ஜி. ராமநாதன் இசையமைத்த "பொன் முடி’யில் வரும் “செந்தமிழ் நாட்டிலே’ பாடலின் பின்னணி இசையமைப்பு “ஆரவல்லி’ படத்தில் ஜிக்கி பாடிய “சின்னப் பெண்ணான போதிலே’ (டொறிஸ்டே பாடிய கே செரா. செரா), “மோஹினி’ (சுப்புராமன்) படத்தில் வரும் பாட்டுக்கள், "பணம்’ படத்தில் ஜி. கே. வெங்கடேஷாம் எம். எல். வசந்தகுமாரியும் பாடும் “ஏழை நின் கோயிலை நாடினேன்" (விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை), பாலசரஸ்வதிதேவி பாடும் "மல்லிகைப் பூ ஜாதிரோஜா” (லாபலோமா) என்ற “ராஜி என் கண்மணி” படப்பாட்டு எல்லாம் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகின்றன. “பீநட் வெண்டோர்’ என்ற இலத்தின் - அமெரிக்க மெட்டில் எம். எஸ். வசந்தகுமாரி, சுப்பராமன் (1949) இசையமைத்த ‘மாயாவதி” என்ற படத்தில் பாடியிருப்பதாக அறிகிறோம்.

Page 65
கே. எஸ். சிவகுமாரன் எழுதிய நூல்கள்
1.
2.
17.
8.
19.
சினமா சினமா ஓர் உலகவலம் (2006) இந்திய - இலங்கை இலக்கியம் : ஒரு கண்ணோட்டம் (2005) திறனாய்வு என்றால் என்ன? (2005 சொன்னாற்போல - 2 (2004)
அசையும் படிமங்கள் (2001) LDL GlJģģ5 திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (2000) ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (1999) மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (1999) திறனாய்வு அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் (1999)
இருமை : சிறுகதைத் தொகுப்பு (1998) ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் திறனாய்வு (1996) திறனாய்வுப் பார்வைகள் (1996) கைலாசபதியும் நானும் (1990) கலை இலக்கியத் திறனாய்வு (1989) சிவகுமாரன் கதைகள் (1982) Le Roy Robinson in Conversation with K.S. Sivakumaran on Aspects of culture in Sri Lanka (1992) Thamil writing in Sri Lanka (1974) Encyclopedia of World Literature Encyclopedia of 20th Century World Literature
114


Page 66


Page 67
சினமா பற்றி கே.எஸ். சிவகு எழுதிய அசையும் படிமங்கள் நுட்பவியல் தொடர்பிலான பல த எடுத்தியம்பியது. இந்திய சினம என்னும் விரிந்த தளத்தினுள் மூச்சிலேயே முழுமையாகப் படித்து
இந்நூல் எம்முள் வளர்க்கின்றது.
ஆசிரியரே கூறுவதுபோல
கலையின் போக்கும் வளர்ச்சியும் அறிந்து கொள்ள ஒரு உசாத்து அமைந்திருப்பது மிகவும் சந்தோ குறிப் பரிடத் தக்க அமிசமாக இத்திரைப்படங்கள் எல்லாவற்ை
தகவல்களைச் சேகரிப்பதிலும் தெ அவர்கள் பெரும் நேரத்தையும் 2 பாராட்டிற்குரியதும் முன்மாதிரி
 

மாரன் சிலகாலங்களுக்கு முன்னர் னும் நூல் அத்துறையின் தொழில் கவல்களை வாசகர்களுக்கு விரிவாக
வுக்கும் அப்பால் உலக சினமா
ரும் பிரவேசித்து நூலினை ஒரு முடிக்க வேண்டும் என்ற ஆவலை
சர்வதேச ரீதியில் திரைப்படக் வ்வாறாக அமைகின்றது என்பதை ணை ஆவணமாகவும் இந்நூல் ம் தருகின்றது. இந்நூலின் வரவில் வும் அது விளங்குகின்றது. றயும் பார்ப்பதிலும் அவை பற்றிய ாகுப்பதிலும் கே.எஸ். சிவகுமாரன்