கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்: பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06

Page 1
பத்தி எழுத்துக்க பல் திரட்டுக
 


Page 2

Some Sri Lankan Tamil Novels: Critical Insights

Page 3

ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுக்களும் வரிசையில் இது ஆறாவது நூல்)
கே. எஸ். சிவகுமாரன்
மீரா பதிப்பகம் வெளியீடு - 4

Page 4
நூற்பெயர்
பெயர்
9-U இலக்கிய வகை நூலாசிரியர்
Φ ής5οιε
நூலாசிரியரின் முகவரி :
தற்போதைய முகவரி
பிரசுர திகதி பிரசுரம்
அச்சு
விலை
Title
Subtitle
Genre
Author Copyrights Author's Address Present Address
Date of Publication
Publishers
Printers
Price
ஈழத்து தமிழ் நாவல்களிற் சில - திறனாய்வு பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுக்களும்-6
திறனாய்வு
கே. எஸ். சிவகுமாரன்
ஆசிரியருடையது 21. முருகன் இடம் கொழும்பு-6. இலங்கை, கே. எஸ். சிவகுமாரன்
ரீ லங்கன் ஸ்கூல், த. பெ. 198. த. கு. ; 117 ஓமான், ஜூலை 28. 1999
மீரா பதிப்பகம்
191/23, ஹைலெவல் வீதி கிருலப்பனை, கொழும்பு-06. பேஜ் செட்டர்ஸ், 72. மெஸெஞ்சர் வீதி, கொழும்பு 12 தொ. பே: 330333 ரூபா 190/-
Some Sri Lankan Tamil Novels: Critical Insights Column and Miscellaneous Writings - 6 Literary Criticism
K. S. Sivakumaran
Author's 2il, Murugan Place, Colombo -06, Sri Lanka. K. S. Sivakumaran Sri Lankan School, P. 0. Box : || 98, P.C. || || 7 Sultanate of Oman.
July 28, 1999
Meera Pathippagam
9/23, Highleval Road, Kirulapone, Colombo -06. Page Setters 72, Messenger Street, Colombo -2. Phone: 330333 Rs... 90/-
ii

ċFLDiTiiILIGooTD
றெக்குறைய 40 ஆண்டுகளுக்குரிய ஈழத்தத் தமிழ் நாவல்கள் தொடர்பான திறனாய்வுக் குறிப்புக்கள் அடங்கிய இந்நூலை எனத மறைந்த பெற்றோர் கைலாயர் செல்லநயினார், கந்தவனம் தங்கத்திரவியம் ஆகியோருக்கும் எனத தணைவியார் புஷ்பவிலோச்சனி சிவகுமாரன், எனத புதல்வர்கள் ரகுராம், அனந்தராம், அவர்களுடைய துணைவியர் முறையே மிஷேல் ரகுராம், ஷெரீ அனந்தராம் ஆகியோருக்கும் சம்ர்ப் பிக்கிறேன்.
Dedication
This book is a compendium of critical introduction to Sri Lankan novels in Tamil, during nearly 40 years. It is dedicated to my late parents Kailayar Sellanainar and Kandavanam Thangathiraviyam and also to my wife Pushpavilochani Sivakumaran and my sons and daughters-in-law Raghuram and Michele and Anantharam and Sharee
iii

Page 5
கே. எஸ் . சிவகுமாரன் எழுதியவை
Tamil Writing in Sri Lanka
சிவகுமாரன் கதைகள்
கலை இலக்கியத் திறனாய்வு
கைலாசபதியும் நானும்
Aspects of culture in Sri Lanka Le Roy Robinson in coversation with K. S. Sivakumaran
திறனாய்வுப் பார்வைகள்
ஈழத்து இலக்கியம்: நூல்களின் அறிமுகம்
3Qb60)LD
ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு
திறனாய்வு: அண்மைக்கால ஈழத்துச்
சிறுகதைத் தொகுப்புகள்
. மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
لم ف{ i
. ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
literature in the 20th century.
iv
(1974)
(1982)
(1989)
(1990)
(1992)
(1996)
(1996)
(1998)
(1998)
(1998)
(1999)
(1999)
. Sri Lankan Tamil Literature - an entry in Encyclopedia of world
(1999)

பொருளடக்கம்
பதிப்புரை
என்னுரை
நாவல் இலக்கியம்
தமிழிற் புனைகதை
குட்டி
வீடு யாருக்கு?
நிலக்கிளி
பெனடிக்ட் பாலன் காவலூர் ராசதுரை
அ. பாலமனோகரன்
அவர்களுக்கு வயது வந்து விட்டது
ஒளி நமக்கு வேண்டும்
I
. மழைக்குறி
efLigj
மீட்டாத வினை
அக்கரைகள் பச்சையில்லை
ஒட்டுமா ஒரு வெள்ளைப் பூ சிரிக்கிறது
நாணயம்
சில நாவல்கள்
. பஞ்சமர்
சரித்திரம் தொடர்கிறது
நெருப்பு மல்லிகை
. காட்டாறு
அருள் சுப்பிரமணியம் செ. யோகநாதன் அகஸ்தியர் சி. சுதந்திரராஜா எஸ். பொன்னுத்துரை ஏ. ரி. நித்தியகீர்த்தி அருள் சுப்பிரமணியம் ஐ. சாந்தன்
எம். பீ. முஹம்மது ஜலீல் புலோலியூர் க. சதாசிவம் செங்கை ஆழியான் கே. டானியல்
எம். பி. முஹம்மது ஜலீல் செம்பியன் செல்வன்
செங்கை ஆழியான்
vii
viii
27
33
36
39
4l
43
45
47
52
56
6
67
75
79
82

Page 6
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
t31.
32.
33.
34.
35.
36.
37.
38.
கனவுகள் ஆயிரம் செ. யோகநாதன் பனிமலர் அ. ஸ. அப்துல் சமது இரவல் தாய்நாடு செ. யோகநாதன் முட்டத்தினுள்ளே புலோலியூர் க. சதாசிவம்
துயிலும் ஒரு நாள் கலையும் கோகிலா மகேந்திரன் ஷர்மிலாவின் இதய ராகம் ஜெக்கியா ஜுனைதீன்
தூவானம் கவனம் கோகிலா மகேந்திரன் நான் நீதியின் பக்கம் அருள் சுப்பிரமணியம் பூலான் தேவி மொழிவாணன் பொற்சிறையில் வாடும் புனிதர்கள்
தெணியான் புதிய பாதை சுமதி அற்புதராஜா
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
செ. குணரத்தினம் இரண்டாவது சாதி செ. கணேசலிங்கன் லயத்துச் சிறைகள் தி. ஞானசேகரன் சில நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகள் அதிகம் அறியப்படாத ஈழத்து நாவல்கள்
மீரா பதிப்பக வெளியீடுகள்
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
கே. எஸ். சிவகுமாரன்
நீங்கள் நலமாக.
Dr. எம். கே. முருகானந்தன்
மெல்லத் தமிழ் இனி.
புலோலியூர் செ. கந்தசாமி
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
கே. எஸ். சிவகுமாரன்
vi
7א
89
98
104
107
l4
2
125
28
140
143
148
152
170
1998
1998
1999
1999

பதிப்புரை
திறனாய்வுத் துறையில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் காத்திரமாக விமர்சனங்களைப் பதிவு செய்திருப்பவர் கே. எஸ். சிவகுமாரன்.
தாய் மொழியில் கற்கும் இன்றைய மாணவர்களுக்கு வேற்று மொழி இலக்கியங்களின் இருப்பினை அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் அதி புலமை மிக்க சிவகுமாரன் போன்றவர்கள் ஒரு பாலமாக அமைகின்றனர். ܫ
தான் திறனாய்வு செய்யும் நூலினைப் பற்றி நடுவுநிலை நின்று கூறும் நற்பண்பு கே. எஸ். சிவகுமாரனிடம் உள்ளதனால்தான் தலைமுறை கடந்தும் அவர் தனது பெயரினைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்.
கடந்த அரை நூற்றாண்டு காலங்களில் ஈழத்தில் வெளிவந்த சிறுகதை நூல்கள் பற்றியதனது திறனாய்வினைத் தொகுத்து ஏலவே மூன்று நூல்களை தந்த இவர், இலங்கையில் வெளியான நாவல்கள் பற்றி அவ்வப்போது தான் கூறிய கருத்துக்களை இந்நூலில் தொகுத்துத் தருகின்றார்.
ஈழத்து நாவல்கள் பற்றிய தகவல்களைத் தர வல்லதும் புதிய நூற்றாண்டில் தமிழ் நாவல் பற்றி அறிய விரும்புவோருக்கு ஒரு உயர்வான உசாத்துணை ஆவணமாகவும் விளங்கத் தக்க ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில எனும் இவ் அறுவடையினை மீரா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடாக வெளிக் கொணர்வதில் அகமகிழ்கின்றோம். நன்றி. மீண்டும் சந்திப்போம்!
புலோலியூர் ஆ. இரத்தின வேலோன் கொழும்பு -06. 25-07 - 1999
vii

Page 7
என்னுரை
பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுக்களும் என்ற வரிசையில் இது 6வது நூல், நான் எழுதியவற்றுள் 12ஆவது அறுவடை
எனது ஏனைய நூல்கள் போலவே. இந்த நூலும் மாணவர்கள். ஆசிரியர்கள். திறனாய்வாளர்கள். சிறப்பு வாசகர்கள் போன்றோருக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்.
இந்த நூலிலே சில முக்கிய ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய திறனாய்வுகள் இடம்பெற்றுள்ளன. வெளிவந்த அத்தனை நாவல்களையும் நான் படித்தேன் எனக் கூறமாட்டேன். ஆயினும் எனக்குக் கிடைத்தவற்றுள் பெரும்பாலானவை தொடர்பாகச் சிறிய அளவிலாகுதல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சில நாவல்கள் பற்றி ஆங்கிலத்தில் மாத்திரம் எழுதியுள்ளேன். அவை இதில் சேர்க்கப்படவில்லை.
உங்கள் ஆதரவு தொடருமாயின் பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுக்களும் வரிசை பெருகும்.
இப்பத்தி எழுத்துக்கள் வெளிவர உதவிய பத்திரிகை ஆசிரியர்கள் ஆர். சிவகுருநாதன். மறைந்த பொன். இராஜகோபால் மற்றும் சிற்றேடுகளின் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்நூலை பதிப்பதற்கு மிகுந்த அக்கறை காட்டிய மீரா பதிப்பகத்து. நண்பர் புலோலியூர் ஆ. இரத்தின வேலோனுக்கும். அச்சிடுவதில் கவனம் செலுத்தியநண்பர் ரஞ்சகுமாருக்கும், பெறுமதி வாய்ந்த வாசகர் களாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Sri Lankan School கே. எஸ். சிவகுமாரன்
P.O.Box : 198, P.C: 17
Sultanate of Oman
ஜூலை 28, 1999
viii

நாவல் இலக்கியம்
நாவல் என்பதனை ஆங்கிலத்தில் நொவல்' என்கிறார் கள். புதிய, புதுமையான, புதினமான படைப்புக்கு நொவல்' என்று பெயர். புதியது என்ற அர்த்தத்தில் மற்றொரு சொல் முன்னர் பயன்பட்டு வந்தது. அதன் பெயர் 'ஒரிஜினல்" இந்த சொல் 'ஆதி தொடக்கம் இருந்து வருதல்' என்பதைக் குறிப்பதாக முன்னர் கருதப்பட்டது. காலக் கிரமத்தில் 'ஒரிஜினல்' என்ற சொல்லுக்கான அர்த்தம் வேறுபடத் தொடங்கியது. தனித்துவமான, சுதந்திரமான புதிய பார்வை அல்லது நடையைக் குறிப்பதற்கு 'ஒரிஜினல்" என்ற சொல் இப்பொழுது பயன்பட்டு வருகிறது. ஆனால் நாவல் (நொவல்) இலக்கியம் என்பது சில சிறப்பியல்புகளைக் கொண்டது. இக்கட்டுரையின் நோக்கம் நாவல் இலக்கியம் பற்றிய பொதுவான சில விவரங்களைத் தருவதாகும்.
நாவல் என்றால் என்ன?
அது உரைநடையிலானது. கணிசமான அளவு நீளங் கொண்டது. விவரணைச் சித்திரம் போன்றது. ஒருங்கிணைந் ததும் கலைப் பண்பு கொண்டதுமான வடிவத்தினாலானது.
நாவல் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது. மனித வாழ்க்கையின் சிலபண்புகளையும், தர்சனஉண்மைகளையும்,

Page 8
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
கற்பனை நயத்துடன் பதிவு செய்கிறது. வாழ்க் கைப் போக்குகளின் சில சம்பவங்களைத் தேர்ந்து கோவைப் படுத்திச் சுவையாகக் கூறுவது நாவல். நாவலின் குணாம்சங் கள். வரைவிலக்கணங்கள் யாவும் காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்திருக்கின்றன. w
"நாவல் வாழ்க்கையைச் சித்திரிக்கிறதுதான்; ஆனால் நவீன வாழ்க்கை அர்த்தமற்றதாக. அபத்தமாக, சிக்கலாக, நேர்கோடுகளற்றதாகவும் இருக்கிறதே! எனவே நாவல் இலக்கியத்திற்கு அன்று வகுக்கப்பட்ட இலக்கணங்கள் இன்று பொருந்தாவே" என்று ரொப்கிறிலே என்ற பிரஞ்சு பரிசோதனை நாவலாசிரியர் கூறுகிறார். இந்தக் கூற்றை மெய்ப்பிப்பதுபோல இன்று வெளியாகும் பெரும்பாலான நாவல்கள் அகவயப் பட்டனவாகவும், அகவுலக அனுபவங்களைச் சித்திரிப்பன வாகவும் இருக்கின்றன.
ஆனால் ஒரு கேள்வி
வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தால் அதனைச் சித்திரிக்கும் வடிவமும் அர்த்தமற்றதாக இருக்க வேண்டுமா? வாழ்க்கையின் அர்த்தமற்ற போக்குகளைப் பதிவு செய்து பொருள் கொண்டு விளக்கும் பணியை நாவல் மேற்கொள்ளும் போது அர்த்தமற்ற தன்மையிலிருந்து அர்த்தத்தை ஏற்படுத்த இந்தக் கலை வடிவம் உதவத்தானே செய்கிறது?
கடந்த இருநூற்றெழுபது வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நாவல் இலக்கியம் இன்றைய வாசகனுக்குத் தரும் அனுபவமோ அனுபவந்தான்.
மத்தியதர வர்க்கத்தினரின் எழுச்சி. சமுதாயத்தில் தனி மனித வாதம் போன்ற காரணங்களினால் 18ஆம் நூற்றாண் டளவில் நாவல் இலக்கியம் உருவாகியது என்பார்கள். கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும், ஜப்பானிலும், ஸ்பெயினிலும்,
2

கே. எஸ். சிவகுமாரன்
பிரான்சிலும் நாவல் போன்ற நீண்ட கதைகள் பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே வெளிவந்திருந்தன என்பதையும் மறக்கலாகாது. இவற்றுள் சேர்வான்டிஸ் என்ற ஸ்பானிய எழுத்தாளர் எழுதிய டொன் குவிக்ஸோ (1605) குறிப்பிடத் தக்கது. உலக மொழிகளில் வெளிவந்த பண்டைக் கால நாவல்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கெல்லாம் கூடுதலான பரிச்சய முடைய ஆங்கில மொழி நாவல்களை எடுத்துக் கொள்வோமே. டேனியல் டிபோ எழுதிய ரொபின்சன் குரூஸோ, ஸாமுவெல் ரிச்சட்சன் எழுதிய பாமெலா போன்றவை ஆரம்ப நாவல் முயற்சிகள் எனலாம்.
விவரணச் சித்திரங்கள்
நாவல் ஒரு கதையைக் கூறுகிறது. அக்கதையில் வரும் சம்பவங்கள். செயல்கள், பாத்திரங்கள் போன்றவற்றின் வருணனை ஆகியன விவரணச் சித்திரங்களாக உருப் பெறுகின்றன.
பாத்திரங்களின் சிந்தனைகள் உரையாடல்களாவும், தற்பாவிதங்களாகவும் எழுதப்படுகின்றன.
நாவலில் வரும் மாந்தர்களின் செயலுக்கு ஏதேனும் ஒரு நோக்கம் இருத்தல் வேண்டும். அந்த நோக்கத்தை விளக்கு வதாக அல்லது எடுத்துக் கூறுவதாக நாவல் அமைகிறது. இன்னொரு விதத்தில் கூறினால் நாவலில் இடம்பெறும் செயல்களுடன் சம்பந்தப்பட்டவையாக நாவலின் விவரணை யும். நாடகப் பண்பும் விளங்குகின்றன. எனவே நாவலின் விவரணை என்பது நாவலில் இடம்பெறும் செயல்கள் பற்றிய விளக்கமே.
நாவல் என்பது எழுத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கலைப் படைப்பு என்றோம். எனவே நாவலாசிரியரின் குரலை அங்கு நாம் கேட்க முடியாது. அதேவேளையில் நாவலாசிரியருடைய
3

Page 9
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
நோக்கத்தின் தொனியை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். காலம். இடம் (வெளி) ஆகிய இரண்டையும் கடந்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுடன் தனது தொனியை நாவலாசிரியன் பரிவர்த்தனை செய்கிறான்.
நாவல் முழுமையான ஒரு படைப்பல்லவா? கலைப் பிரக்ஞை கொண்டதாக. திட்டவட்டமான வரையறை களையுடையதாக, முதலும் இறுதியும் அமைந்தனவாக இருத்தலே விரும்பத்தக்கது. காவியத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக நாவல் இருந்தாலும், நாவல் காவியமே அல்ல. அது ஒரு தனியான இலக்கிய வகை.நாவலைச்செய்யுள் அல்லது கவிதையில் எழுதுவாரில்லை. உரை நடையிலேயே நாவல் எழுதப்படுகிறது.
யதார்த்த வெளிப்பாடு
உரைநடையில் தொடர் நிலைப்பாடும் தொடர்புப் பிணைப்பும் உண்டாகையால், நாவல் எளிதிற்புரிகிறது. கவிதை யைக் காட்டிலும், சிறுகதையைப் பார்க்கிலும், கூடுதலான யதார்த்த வெளிப்பாடாக நாவலே அமைகிறது. நாவலில் ஒர் இலகுத் தன்மையைக் காண முடியும். அதாவது கவிதை போன்று இறுக்கமுடையதாக, கட்டுக்கோப்புள்ளதாக நாவல் இருக்க வேண்டியதில்லை. ஒரு நெகிழ்ச்சித் தன்மை நாவலில் இருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது.
நாவலில் பல பாத்திரங்கள் வருகிறார்கள். சிக்கலான பல கதைப் பொருள்கள் இருக்கும். பாத்திரங்களோ இஷ்டப்படி வளர்ச்சி காணும்.
நாவலில் இடம்பெறும் சம்பவங்கள் கற்பிக்கப்பட்ட சம்பவங்கள் தான். நாவல் என்பது வெறும் வரலாறோ சரிதையோ அல்ல. வரலாற்றுநாவலிலோ சரிதை நாவலிலோ, கற்பனையும், தேர்வுமுறையும் இடம்பெறத்தானே செய்கின்றன.
4.

கே. எஸ். சிவகுமாரன்
நாவல் வாழ்க்கையைச் சித்திரிக்கிறதுஎன்பது உண்மைதான். அதே வேளையில் உள்ளது உள்ளபடி, அப்படியே இயற்பண்பு ரீதியில். (நச்சுரலிஸப் பாணியில்) வாழ்க்கையின் பொதுவான உண்மைநிலைகளை நாவல்சிலவேளைகளில் சித்திரிக்கிற எனலாம்.
நாவலாசிரியன் தான் நடமாட விட்டுள்ள பாத்திரங்கள். காலகட்டத்தில் எவ்வாறு முதிர்ச்சியடைகின்றன என்பதைக் காட்டுகிறான். பழைய அனுபவங்கள் நிகழ்காலச் செயல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாவலாசிரியன் காட்டு கிறான். தனது பாத்திரங்கள் உயிர்ப்புள்ள. நிஜ பாத்திரங் களாக இயங்க வேண்டும் என்றும் விரும்பி, நாவலாசிரியன் தத்ரூபமாகப் பாத்திரங்களைப் படைக்க முற்படுகிறான்.
அடிநாதக் கருத்து என்ன?
ஒரு நாவலை நாம் விமர்சிக்க முற்படும்பொழுது, அந்த நாவலின் கதைப் பொருள் அதாவது அடிநாதக் கருத்து என்ன என்ற அடிப்படைக் கேள்வியுடனேயே ஆரம்பிக்கிறோம். பாத்திரங்கள், கதைப்பின்னல், சம்பாஷணை, எழுத்து நடை, என்ன விதமான நாவல், யாருடைய கண்ணோட்டத்தில் நாவல் கதை தீட்டப்படுகிறது போன்ற விவரங்கள் எல்லாம் இந்த அடிப்படைக் கேள்வியைச் சார்ந்தே எழுகின்றன. நாவலின் அடிநாதக் கருத்தை வெளிக் கொணர உதவும் வாகனங்களே ബ്രങ്ങങ്ങTuങ്ങബ.
நாவலில் வரும்பாத்திரங்கள்.நாவலைப் படிக்குமுன்னரே இருந்தனவாகவும், படித்து முடிந்த பின்னரும் தொடர்ந்து இருந்து வருவனவாகவும் அமைதல் வேண்டுமென்று ஹியூ வோல்போல் கூறுவார். நாவலாசிரியரின் கை வண்ணத்தால் பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் காண்பவர்கள் போல நாவலிலும் தென்படுவார்கள். மறக்கமுடியாத பாத்திரங்களாக அமைந்து எமதுவாழ்க்கையையும் பாதிக்கத்தக்கவர்களாக அமைகிறார்கள்.

Page 10
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
சில நாவல்கள் காரணமாகச் சமூகச் சீர்த்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, சார்ள்ஸ் டிக்கின்ஸ் எழுதிய நாவல்கள் காரணமாக வறிய மக்களின் சில குறைபாடுகளை நீக்க உதவக்கூடிய சீர்திருத்தங்கள் இங்கிலாந்தில் கொண்டு வரப்பட்டன. அதே போல ஹெரியெட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய அங்கிள் டொம்ஸ் கயின் என்ற நாவல் காரணமாக, அடிமை வாழ்வை எதிர்க்கக் கூடிய மனோபாவம் அமெரிக்காவில் எழுந்தது. தூய உடை சம்பந்தமான சட்டங்கள் உருவாக ஆப்டன்சின்ளேயர் எழுதிய த ஜங்கிள் என்றநாவல் காரணமாக இருந்தது.
நாவல்கள் பலரகம்
நாவல்கள் பல ரகம் - வரலாற்று. மர்ம. துப்பறியும். கடிதப் பரிமாற்ற, வீரதீர, அந்நியமயமான, சுயசரிதை, சமூகப்பிரச்சார, பாட்டாளி மக்கள் நல, உளவியல், பயங்கர, விஞ்ஞான, சிருங்கார, உடனிகழ் காலப்பிரமுகர்கள் பற்றிய, இன்னும் பிற ரக நாவல்கள் எல்லாம் வெளிவந்துள்ளன.
இந் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, ஆஸ்திரேலிய, கனேடிய, ஆசிய, மேற்கிந்திய தீவு நாவல்கள் மார்க்சிசம், பிரொய்டிசம், எக்ஸிஸ்டென்ஷலிஸம் போன்ற தத்துவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.
உலகத்துத் தலைசிறந்த நாவல்களாக ஒரு சிலவே
கருதப்படுகின்றன. அவற்றுள் டோல்ஸ்டோய், தொஸ்தே
யெவ்ஸ்கி ஆகிய இரு ரஷ்யர்களின் படைப்புகளும் சிரமேற் கொள்ளப்படுகின்றன.
தினகரன் வாரமஞ்சரி
30-08-1981

தமிழிற் புனைகதை
ஆங்கிலத்தில் "பிக்ஷன்" என்பதை தமிழில் புனைகதை என்கிறோம். புனைகதை. நவீன இலக்கிய வகைகளில் ஒன்று. பொதுவாக நாவலையும் சிறுகதையையும் புனைகதை எனக் கூறுவது வழக்கம். தமிழிற் புனைகதை கடந்த நூற்றாண்டு தொடக்கம் வளரத் தொடங்கியது. தற்காலத் தமிழ் இலக்கிய மாணவரும் புதிய எழுத்தாளர்களும் புனைகதையின் உறுதிப் பொருள்களைக் கற்றுணரல்விரும்பற்பாலதெனக் கருதி, அவை பற்றித் தமிழில் கிடைக்கக்கூடிய நூல்களை அறிமுகம் செய்து வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில், இலக்கிய வரலாறுகளில் புனைகதைபற்றி இடம் பெற்ற பகுதிகளைப் பார்ப்போம். தமிழ் இலக்கிய வரலாறு / விமர்சனம் போன்ற துறைகளில் ஈழத்தவர்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக காலஞ்சென்ற பேராசிரியர் வீ. செல்வநாயகத்தைக் குறிப்பிடலாம். அவருடைய தமிழ் இலக்கிய வரலாற்றுச்சுருக்கம் என்ற நூலின்முதலாவதுபதிப்பு 1951ஆம் ஆண்டிலேயே வெளிவந்துவிட்டது. அந்தச் சிறுநூல் இன்றும் மதிப்பிழக்கவில்லை. அதில் சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வகைகள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.
7

Page 11
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
காலஞ் சென்ற பேராசிரியர் மு. வரதராசன் தமது இலக்கிய மரபு (1960) என்ற நூலில் புனைகதை பற்றி அழகாக விபரித்து இருப்பதையும் குறிப்பிடலாம். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு (13ஆம் பதிப்பு-1978) என்ற நூலிலும் தமிழ்ப் புனைகதைகள் பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன. ஈழத்து இலக்கிய வளர்ச்சியை (1964) எழுதிய காலஞ் சென்ற இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்துச் சிறுகதை, நாவல் போன்றவற்றில் எடுக்கப்பட்ட முயற்சிகளை குறிப்பிட்டுள்ளார். மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியப் பகுதியில் ப்னிபுரியும் கலாநிதி இரா. தண்டாயுதம் தற்காலத் தமிழ் இலக்கியம் (1973) என்ற தமது நூலில், தமிழ் சிறுகதைகள், நாவல்கள் பற்றியும் "இலங்கைத் தமிழ் இலக்கியம்" என்ற தலைப்பில், ஈழத்துச்சிறுகதைகள்.நாவல்கள்பற்றியும் தகவல் தருவதுடன், செ. கணேசலிங்கனின் சடங்கு என்ற நாவல் பற்றிய விமர்சனத்தையும் எழுதியுள்ளார். "எழில் முதல்வன்" என்ற புனைபெயரில் பிரபலமான விமர்சகர்: கலாநிதி மா. ராமலிங்கம் தமது 20ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் (1973) என்ற நூலில், தமிழில் புனைகதை பற்றி பயனுள்ள விமர்சன நோக்குகளை வெளிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வளாக தமிழ்த்துறை வெளியிட்ட ஆக்க இலக்கியமும் அறிவியலும் (1977) என்ற நூல் புதிய கண்ணோட்டங்களில் புனைகதைத் துறையை அணுகுவதைக் காணலாம். பேராசிரியர் கா.சிவத்தம்பிஎழுதிய ஈழத்தில் தமிழ் இலக்கியம் (1978) வரலாற்றுப் பின்னணியில் புனைகதை பற்றியும் சில செய்திகளைக் குறிப்பிட்டுச் செல்கிறது. சி. மெளனகுரு. மெள. சித்திரலேகா, எம்.ஏ.நூ.மான் ஆகியோர் எழுதிய20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (1979) என்ற நூலில் ஈழத்துப் புனைகதைகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
; 8

கே. எஸ். சிவகுமாரன்
மேற்கண்ட நூல்கள். சிறுகதை நாவல் பற்றி பொதுவாகவும் போக் கோடு போக்காகவும் கூறுபவை. இவற்றைவிட சிறுகதை பற்றியும், நாவல் பற்றியும் குறிப்பாக எழுதப்பட்ட சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன.
சிறுகதை பற்றி சிறுகதை ஒரு கலை (1958) என்ற நூலை ப. கோதண்டராமன் வெளியிட்டிருந்தார். ஆரம்ப எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள நூல் எனலாம். வளரும் தமிழ் (சோமாலெ), இலக்கிய விமர்சனம் (சிதம்பர ரகுநாதன்), இலக் கரிய கலை (அ. ச. ஞானசம்பந்தன்), படித்திருக்கிறீர்களா? விமர்சனக்கலை/ எதற்காக எழுதுகிறேன் (க.நா.சு), கலைக் களஞ்சியம், கதையின் கதை (கலைமகள் வெளியீடு), கதையுலகில் உல்லாச யாத்திரை (பி. யூரீ ஆச்சார்ய) போன்றவற்றில் சிறுகதை பற்றி ஒரளவு விரிவான குறிப்புகள் அடங்கியுள்ளன. ஆயினும் தமிழ் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட முதலாவது சிறுகதை விமர்சன நூலாகிய தமிழிற் சிறுகதையை (1966) சாலை இளந் திரையன் எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுகதைச் செல்வம் (1966) ஒரு பயனுள்ள நூல். பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதிய தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1967) தலைப்புக்கு ஏற்ற அதன் நோக்கத்தை விமர்சன நோக்கில் ஆராய்கிறது. செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்துச் சிறுகதை மணிகள் (1973) ஈழத்துச் சிறுகதைகளை விமர்சிக்கும் நூலாகும். இவற்றை விட எண்ணற்ற விமர்சனங்களும் கட்டுரைகளும் நூல் வடிவம் பெறாமல் உள்ளன. இவற்றையெல்லாம் இலக்கிய மாணவரும். எழுத்தாளர்களும் தேடிப் படித்துப் பயனடையலாம்.
சிறுகதைபற்றிய நூல்களைவிட,நாவல்கள் தொடர்பான நூல்கள் எண்ணிக்கையில் கூடியதாக இருக்கின்றன. க. நா. சுப்பிரமணியம் எழுதியமுதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957) ஒரு
9

Page 12
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
புதிய விமர்சன முயற்சியாக அமைந்துள்ளது. நாவல் இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் ஈழத்து இலக்கியம் பற்றியதாக மாத்திரம் இருந்தாலும் கூட. தனியான ஒரு நூலாக முதலில் வெளிவந்தது ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி (1957) ஆகும்.இதனை சில்லையூர் செல்வராசன் எழுதினார். ஆயினும், தமிழ் நாவல் இலக்கியம் (1968) என்ற பேராசிரியர் க. கைலாசபதியின்நூலும், இன்றும் இத்துறைபற்றிய தலைசிறந்த நூல்எனக் கருதப்படுகிறது. கலாநிதிமா.இராமலிங்கம் எழுதிய நாவல் இலக்கியம் (1975) என்ற நூலும் விதந்து கூறப்படத்தக்கது. தமிழ் நாவல் முன்னோட்டம் (கலாநிதி தா. வே. இராமசாமி) நாவல் வளம் (கலாநிதி - இரா. தண்டாயுதம்) தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் (கி.வா. ஜகந்நாதன்) ஆகியன பற்றியும் இங்கு குறிப்பிடலாம். விமலா மனுவெல் எழுதிய நவீன புனைகதையில் மனிதன் (1973) என்ற ஆங்கில நூலையும் இங்கு குறிப்பிட வேண்டும்.தி.பாக்கியமுத்துபதிப்பித்த விடுதலைக்கு முன் தமிழ் நாவல்கள் (1974) ஒன்பது நாவல்களின் விமர்சனங்களையும் அவற்றிற்கு நாவலாசிரியர்கள் அளித்த பதில்களையும் கொண்டது. தி. பாக்கியமுத்து பதிப்பித்த மற்றொரு தொகுதியான தமிழ் நாவல்களில் மனித விமோசனம் (1976) நல்ல விமர்சனங்களைக் கொண்டுள்ளது. நா. சுப்பிரமணியம் எழுதியவீரகேசரி பிரசுர நாவல்கள் (1977)ஈழத்துத் தமிழ் நாவல்கள் நூல் விபரப்பட்டியல் (1977) ஆகியனவும் தகவல் தருபவை. பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய நாவலும் வாழ்க்கையும் (1978) சமூகவியல் ஆய்வாக அமைந்துள்ளது. இரா. இராஜசேகரன் பதிப்பித்த தமிழ் நாவல்- ஐம்பது பார்வை (1978) என்ற நூலும் சுவாரஸ்யமானதுடன், சுமார் ஐம்பது நாவல்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது. கலாநிதிதா. வே. வீராசாமி எழுதிய தமிழ் சமுக நாவல்கள் (1978) என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. சோ. சிவபாத சுந்தரம் / சிட்டி ஆகியோர்
10

கே. எஸ். சிவகுமாரன்
எழுதிய தமிழ் - நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) பயனுள்ளது. ஈழத்துத் தமிழ் நாவல்கள் பல செய்திகளை ஈழத்து நாவல் இலக்கியம் (1978) என்ற நா. சுப்பிரமணியத்தின் நூலில் காணலாம். பேராசிரியர் நா. வானமாமலை பதிப்பித்த தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு (1977) மற்றும் ஒரு தரமான விமர்சன நூல் ஆதலால், யாவரும் படிக்க வேண்டியுள்ளது.
இவ்வறிமுகக் கட்டுரையில் இடம்பெறாத, வேறு சில நூல்களும் இருக்கலாம். இவை என் கைகளுக்குக் கிட்டாமையால், அவைபற்றி கூறமுடியாதிருக்கிறது. ஆயினும் அவற்றின் பெயர்கள் சிலவற்றையாவது தெரிவிக்கலாம். இருபதல் சிறுகதை, (செல்வி பியூலா மேர்ஸி) குபரா சிறுகதைகள் - ஆய்வு (ரா. மோகன்),தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது (சி.சு.செல்லப்பா) விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள் (கலாநிதி மா. ராமலிங்கம்) தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் (கலாநிதி, இரா. தண்டாயுதம்) ஆகியன. இந்நூல்கள் அனைத்தையும் தமிழிலேயே படித்துப் பார்க்கும் ஓர் இலக்கிய மாணவர் புத்தறிவு பெற்று, புனைகதைத் துறையை நன்கு அறிந்துகொள்வதுமாத்திரமன்றி தெளிவான நோக்கத்துடன், இவ்வாக்க இலக்கியப் பணியில் இறங்கவும் முடியும்,
வானொலி வாரமஞ்சரி ஜூலை 1979
11

Page 13
பெனடிக்ட் பாலன்
O
குL2
t
குட்டி என்ற பெயரில் வெளி வந்த ஒரு புத்தகம், பல காரணங்களுக்காக விரிவானதொரு விமர்சனத்தை வேண்டி நிற்கின்றது. ஆயினும் இடவசதியின்மை குறித்து, அறிமுகத் தோரணையில் ஒரு மதிப்புரையை மாத்திரமே தற்பொழுது எழுதவேண்டியுள்ளது. மேனிலைப் பாங்கில் நாம் இப் புத்தகத்தைப் படித்த பொழுது, இருவிதமான உணர்வுகளைப் பெற்றோம். ஒன்று சிருஷ்டி எழுத்தாளனாக, யோ. பெனடிக்ட் பாலனின் வருங்காலம் மிக மிக நம்பிக்கையூட்டுவதாய் உள்ளது. இரண்டு ஈழத்து உடனிகழ்கால சிருஷ்டித் துறையில் குட்டி மற்றுமொரு சாமான்யமான (வேண்டுமென்றால், தீ போல. அடிக்கடி பிரஸ்தாபித்துக் கொள்ளக் கூடியது என்று சொல்லலாம்) எழுத்துருவம்,
முற்போக்கு (அதாவது மார்க்ஸிய அர்த்தத்தில் - அதுகூட, அண்மைக் காலமாகச் சிதைந்து வருகிறது.) எழுத்தாள வட்டாரத்தைச் சேர்ந்தவர்களில், வேலியை அகற்றிப் போட்ட முதல் எழுத்தாளர் யோ, பெனடிக்ட் பாலன் (அதாவது புத்தக வடிவத்தில் வந்தவற்றைக் கொண்டு மாத்திரம் சொல்கிறேன்) என்று சொல்லலாம்.
12

கே. எஸ். சிவகுமாரன்
"வடிவத்திற்காக மட்டுமல்ல, நடைக்காகவும். பல்வேறு உத்தி முறைகளைக் கையாள முடியும், கையாள வேண்டும் (வரவேற்கத் தக்க விஷயம்) வசனத்தின் லாவகத்தையும். அதன் ஆற்றலையும் உணர்த்துவதற்கும், மொழியின் வளர்ச்சிக்கும் இது அவசியம் என்பதையும் இக்குறுநாவலின் நடையின் மூலம் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்" என்று முன்னுரை ஆசிரியர் கூறுகின்றார். இந்த அம்சத்திற்காக மாத்திரம் (அதாவது யோ. பெனடிக்ட் பாலன் முற்போக்கு வட்டத்தைச் சேர்ந்தவராயிருப்பதால் முற்போக்கு வட்டாரத்தைச் சேராத வேறு யாரும் எழுதியிருந்தால், பிரமாதப்படுத்தத் தேவையில்லை)
குட்டி கதாசிரியர் பாராட்டத்தக்கவராகிறார். முதல் முயற்சியாக இருப்பதால், அவரை உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். அதே நேரத்தில் குட்டியில் உள்ள குறைபாடுகளை நாம் சுட்டிக் காட்டுவதும் அவசியம். காரண காரியங்களின் துணைகொண்டு குட்டியில் அப்பட்டமாகப் புலப்படும் குறைபாடுகளை இக்குறுகிய மதிப்புரையில், வாசகர் களுக்கும். கதாசிரியருக்கும் விளங்கப்படுத்த முடியாமைக்கு வருந்துகிறேன்.
பொதுப்படையாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம் نها இங்கு தொட்டுக் காட்டுகின்றேன்.
ஜேம்ஸ் ஜோய்ஸ், லா. ச. ரா. ஸ்ரிண்ட்பேர்க் போன்ற மேதைகளுடன் அனாவசியமாக யோ. பெனடிக்ட்பாலனின் பெயரையும் இழுத்து, அவரைச் சீர்குலைக்க நாம் விரும்ப வில்லை. அல்லது "புஷ்டியான வார்த்தைகளின் அதே அளவு கனத்தை குறியீடுகளில் வலுப்படுத்தி, வார்த்தையளவு உணர்ச்சியை வாசகன் மனதிலே ஏற்படுத்த முடியும் என்பதையும், குறியீடுகளை வெகுநுட்பமாகக் கையாண்ட திலிருந்து ஆசிரியர் நிரூபித்திருக்கிறார்" என்று மிகைப்பட அவர் நடைபற்றி நாணி குறிப்பிடவும் விரும்பவில்லை.
13

Page 14
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
குட்டி என்ற கதை முழுமையான திருப்தியைத்தரவில்லை. சிற்சில இடங்களில் பிரமாதமாக கவிதைச் சுருதியில் அமைந் துள்ளது. பற்பல இடங்களில் சாமான்யமான சுவையைத்தான் அனுபவிக்க முடிகிறது.
சூசான் ஸ்லேட் என்ற அமெரிக்கப் படம், செம்பியன் செல்வன் எழுதிய ஒரு கதை. தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சிலரால். 'வம்பிலே பிறந்தவன்' என்ற தொடரை உபயோகிக் காமலே நளினமாகக் கையாளப்பட்ட கதைகள் ஆகியவற் றைக் கதாசிரியர் அறிந்தோ அறியாமலே பார்த்துப் படித்த அருட்டுணர்வினால் எழுந்தது போலும் குட்டி.
கதை ஒன்றும் அசாதாரணமானதல்ல. சாமான்யமான கதைக்கருவில் ஆழத்தையும், வீச்சையும் எப்படிக் காண்பது? மேதாவியான கலைநுட்ப வல்லான் மாத்திரம் ஒரு வேளை தனது அபாரத்தன்மையால் ஆழமுண்டு என்ற பிரேமையைத் தோற்றுவிக்கலாம். ஆனால் பெனடிக்ற்பாலன் கலாரூபத் திற்குக் கிட்டவும் நெருங்கவில்லை.
குட்டி உளவியலுக்கு இணக்கமாகச் சிற்சில இடங்களில் மாத்திரமே அமைந்திருக்கின்றது. எனவே கதை எழுதப்பட்ட விதம் நம்பத்தகுந்ததாய் (Not Authertic) இல்லை. அதாவது உண்மையிலேயே சொல்ல வேண்டிய முறையில் சொல்லப் படவில்லை.
கதையில் வரும் மூன்று பாத்திரங்களும் தமக்குள் பேசிக்கொள்வதையும், ஒருவரோடொருவர் பேசிக் கொள்வ தையும், கதாசிரியரின் விவரணையையும், கிரமமாக அமைந்த சொற்கள் வாசகர்களுக்குப் புலப்படுத்துகின்றன. உணர்ச்சிப் பரிமாறலையோ, உணர்ச்சித் "தொற்றுவித்தலையோ" குட்டி நெடுங்கதையில் இடம்பெற்ற சொற்கள் முழு அர்த்தச் செறிவுடன் தொனிக்கத் தவறுதலினால், கதை தடைப்பட்டு
4

கே. எஸ். சிவகுமாரன்
நிற்கின்றது. - அதாவது பொருத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அர்த்த புஷ்டியான சொற்கள் இலாவகமாக இடம் பெறவில்லை.
அதிவிசேடமில்லாத சாதாரணக் கதையை வாசகர்கள் படிக்க வேண்டுமாயின், கதையின் உத்தி புதுமையாகவோ, கவர்ச்சிகரமாகவோ இருப்பது அவசியம். குட்டி, கதாசிரியர் கையாண்ட உத்தி ஈழத்துத் தமிழ் வாசகர்களுக்கு ஓரளவுக்குக் கவர்ச்சியளிப்பது. ஆனால் நிச்சயமாகப் புதுமை யாயில்லை. ஏற்கனவே புத்தகவடிவில், எஸ். பொன்னுத் துரையும், மற்றும் சில ஈழத்து எழுத்தாளர்களும் இவ்வுத்தியில் எழுதிவிட்டார்கள். பிரக்ஞை ஒட்ட உத்தியின் ஒரு சாயல் இவ்வுத்தி,
உத்தியை மிளிரச் செய்வது நடை. இக்கதாசிரியர் கையாண்டநடை, எஸ்.பொன்னுத்துரையின் எழுத்துநடையை அப்படியே அடிச்சுவடுபோல பின்பற்றிச் செல்கின்றது. எனவே, உத்தியிலும், நடையிலும், உள்ளடக்கத்திலும், முன்னோடி யாகப் பரிசோதனையாகக் குட்டி நெடுங்கதை இல்லை.
ஒரேநடையை எல்லாவிதமான உத்திகளுக்கும் உபயோ கப்படுத்திவிடலாம் என்று சொல்வதற்கில்லை. எஸ்.பொன்னுத் துரையின் எழுத்து நடையைக் கண்மூடித்தனமாகப் பின் பற்றுமளவிற்கு எஸ். பொன்னுத்துரையின் நடை முழுமை யானதோ, அதிவிசேடமானதோ அல்ல. உண்மையில் பொன்னுத்துரையின் பலமும், பலவீனமும் அவரது சம்பிரதாய (அவரே சம்பிரதாயமாக ஆக்கிக் கொண்ட) எழுத்து நடையிலேயே தங்கியிருக்கின்றது.
பெனடிக்ற்பாலனின் கதை வடிவத்தில் நாடகப் பண்பும், எழுத்து நடையில் கவிதைச் செறிவும் இருக்கின்றன என்று சிலர் மிகைபடக் கூறக்கூடும். கவிதையின் பண்புகளில் ஒன்று
15

Page 15
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதாகும். ஒரே பொருளைத் தரும் பல்வேறு சொற்களைக் காலம், இடம் பாராது வீசி எறிவதானால், அப்பொருளின்நுண்ணிய அர்த்தச் செறிவுகளை நுட்பமாகத் தொனிப்பதிலும் பார்க்கச் சிதறச் செய்து விடுகின்றன. கதாசிரியன் எழுத்துநடை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் இங்கு வழிகாட்ட வரவில்லை. ஆனால் கதாசிரியன் கையாண்ட குறிப்பிட்ட எழுத்துநடை வாசகர்கள் எவ்வளவு தூரம் அழுத்தமாகப் பதிய வைக்கின்றது அல்லது பதியவைக்கத் தவறுகின்றது என்பதற்கு உதாரணமாகவே இதனைச் சுட்டிக் காட்டினேன்.
பெனடிக்ட்பாலனின் எழுத்து நடையில் கவர்ச்சியுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அக்கவர்ச்சி உள்ளிருந்து வெளிப்பட்ட கலாரூபமான, கவிதையூற்றான சிந்தனைப் பின்னலின் மழலைச் சொல்லுருவமாக எனக்கு உணர்வளிக்க வில்லை. மாறாக பிரயாசையாக எழுதப்பட்ட, செயற்கையான எழுத்துநடையாகவே எனக்குப்படுகின்றது.
குட்டி, யோ. பெனடிக்ட்பாலனின் தனிமனித எழுத்து வளர்ச்சியைப் பொறுத்தவரையில் கவனத்தை ஈர்ப்பது: குறிப்பிடத்தக்கது.இன்னும் முயற்சி செய்தால் வெகுவிரைவில் முன்னணிக்கு முன்னோடியாக' விரைந்து விடுவார். ஒரு இலக்கியப் படைப்பாகப் பூரண திருப்தியை குட்டி தரவில்லை. தேனருவி
1963

காவலுர் ராசதுரை
வீடு யாருக்கு
கொ ழும்பு போன்ற பெரிய நகரங்களில் வாழும் தமிழர்கள் வாழ்வின் வேடிக்கை நிலைகளை நன்கு அறிந்த கொள்ள காவலூர் ராசதுரையின் குறுநாவல் உதவுகின்றது. மேற்பரப்பில் வேடிக்கையாக இருந்தாலும் சராசரித் தமிழன் காரியத்தில் கண்ணுள்ளவன் என்பது சுட்டிக் காட்டப் படுகின்றது. தமிழ் பேசும் ஈழத்தவர்களும் இந்தியர்களும் (தேசியப் பிரஜைகளும், அல்லாதவர்களும்) கூடுதலாக வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பாகங்களில் தான் வாழ்கின்றார்கள்.
கொழும்பில் (எங்கேயோ) சிங்கள முதலாளி ஒருவரின் வீட்டில் யாழ்ப்பாணக் குடும்பம் ஒன்றும், இந்தியக் குடும்பம் ஒன்றும் வாடகைக்குக் குடியிருக்கின்றன. யாழ்ப்பாணக் குடும்பத்தில் தந்தை, மணமாகிய மகன் (அவன் மனைவி யாழ்ப்பாணத்தில்), மணமாகாத மகள் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். இந்திய குடும்பத்தில் தந்தை, தாய், மணமாகாத மகன் ஆகியோர் இருக்கின்றார்கள். காத்திராப் பிரகாரமாக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இவர்கள் வீட்டுக்கு வந்த தினம் கட்டாயமாக நாட்டை விட்டுத் துரத்தப்படுவோம் என்ற அச்சத்தில், இந்தியக் குடும்பம் மறைவிடம் தேடுகின்றது. இந்த இக்கட்டான நிலையைத் தனக்குச் சாதகமாக யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சகோதரர்கள்
17

Page 16
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
தேசிய மரபிற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆயினும் பெரிய ஆழமான வர்த்தகப்புலியாகியசிங்களமுதலாளி சிறந்த புத்திபடைத்த இந்தத் தமிழ் பேசும் திராவிடக் குழுக்களுக்கு மனவிரக்தி ஏற்படும் விதத்தில் உச்சாணிக் கொப்புக்கே சென்றுவிடுகிறார். உண்மையில் இதுதமிழ் எதிர்ப்போ, இந்திய விரோதமோ அல்ல. வர்க்கப் போராட்டமே அடிப்படையில் உள்ளது. இதுவே கதைப் போக்கு. ஆனால் அதுவல்ல முக்கியம். புறக்கோட்டை, பஞ்சிகாவத்தை போன்ற இடங்களில் இடம்பெறும் துரித வர்த்தகத்தின் முறையை அம்பலப்படுத்துவதே இந்நாவலின் உள் நோக்கம்.
பாதகமான சினிமாத்துறை பதம் ஒன்றின் மூலம் கூறுவதனால் இந்த "இந்தியத் தொடர்பு" பிரச்சினைக்குரிய புறக்கோட்டையைச்சேர்ந்தநாடார் ஒருவரின்பாத்திர அமைப்பு மூலம் விபரிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடும்பத்திற்கே உரிய குப்பைகூழப் பழக்கமும் நகைச்சுவையாக விபரிக்கப்படுகின்றது. பணம் குவிக்கும் சிங்கள வீட்டுச் சொந்தக்காரரின் டாம்பீகமும் கதையில் கூறப்படுகின்றது. இந்தக் கதாபாத்திரங்கள் பொதுப்படையானவை அல்ல. பிரதிநிதிகள் மாத்திரமே என்பது உண்மையே. ஆயினும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் நாவலில் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாகநல்லநகைச்சுவைநாவல்முழுவதிலும் வியாபித்திருக்கின்றது. தமிழ்ச் சமூகத்தினர் வேடிக்கையான நிலைமைகளில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை தமிழர் ஒருவர் சித்திரிக்கிறார்.
கொழும்புமாநகரசபையைச் சேர்ந்த சிங்கள உறுப்பினர் ஒருவர் மூலம் தமிழ் பேசும் இலங்கையர்பற்றியதனது கருத்தை ராசதுரை தெரிவிக்கிறார். இந்த நாடார்களின் நற்பண்புகளும் கூறப்பட்டுள்ளது. கதை சொல்லும்போது ஆசிரியர் சில உண்மைகளை எடுத்துக்கூறி இருக்கிறார்.நாவலின்சுமுகமான வாசிப்புக்கு இவை தடங்கலாக இல்லை. அதாவது அவை வெளி ஒதுங்கிநிற்கவில்லை.
" பூரணி - 1973
18

es)I. LII rooIDGGOTIT36J air
நிலக்கிளி
நிலக்கிளி என்றநாவலைநாம்மதிப்பிடும் பொழுதுஇரண்டு விடயங்களை மனத்தில் இருத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஒன்று - நிலக்கிளி பாலமனோகரனின் முதலாவது நாவல், இரண்டு - நிலக்கிளி ஈழத்து தமிழ்ப் புனைகதைத் துறையில் புது முயற்சி. கதையில் வரும் இடங்களும் சம்பவங்களும் நகர்ப்புறத்து வாசகர்களுக்குப் Lig/60)LDuJIT607606).
நகர்ப்புறத்துஉயர்மட்டப்பாத்திரங்களை வைத்துகதை பண்ணும் முயற்சிகளில் ஈடுபடாது. காட்டுப்பிரதேச குக்கிராம மக்கள் சிலரைப் பாத்திரங்களாகக் கொண்டு நாவல் எழுத முன்வந்த பாலமனோகரனை நாம் முதலில் பாராட்ட வேண்டும். ஏனெனில் ஆசிரியர் நமது முதல் நாவலிலேயே நம்மில் பலர் அறிந்திராத உலகத்தைக் காட்ட முன்வந்துள்ளார்.
கதாநாயகி நாவல் ஆரம்பத்தில் சிறுமியாக
அறிமுகப்படுத்தப்படுகின்றாள். எனவே வளரிளம் பருவத் தினருக்கே உரித்தான மனோரதிய (Romantic) பாங்கு டையவள் என்பதை ஆசிரியர் மறைமுகமாகத் தெரிவிக் கின்றார்.

Page 17
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
"பதஞ்சலிக்குத்தண்ணி முறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்துகிடக்கும் இருண்டகாடுகள், அவற்றின் ஊடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானம் இசைக்கும் காட்டுப்பறவைகள் - இவை அனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை. பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கும் பதஞ்சலி நடந்து திரிவது கிடையாது. சதா மான் குட்டியின் துள்ளலும் துடிப்பும் தான்"
கதாநாயகன் கதிராமன் வெளியுலக நடப்புகள் அதிகம் தெரியாத, அவற்றின் பாதிப்புக்களுக்கு உட்படாத ஒருவன் என்பதற்கு அவன் காடு சார்ந்த பிரதேசச் சூழ்நிலையில் வளர்ந்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். முரலிப் பழம் பறித்தல், கரடியைக் கொல்லுதல், குழுமாடுபிடித்தல், உடும்பு பிடித்தல், காட்டில் விறகு வெட்டுதல் , தேன்வதை தேடுதல், மான்குட்டி வளர்த்தல், காடு வெட்டி வீடு கட்டுதல் போன்ற வற்றில் அவன்நிபுணத்துவம் பெற்றிருந்தான். பாலமனோகரன் கதிராமனை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார்.
"தண்ணி முறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலம் கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒரு தடவை நின்றுதான் பின் அடித்துக் கொள்ளும். அவ்வளவு கம்பீரம், கதிராமனுடையநடையிலும் அதே கம்பீரம் காணப்பட்டது. சிறுவயது முதல் பாலும் தேனும் காட்டு இறைச்சிகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட உடல், கடுமையான உழைப்பினால் உறுதிகொண்ட தசைகள், தகப்பன் வழிவந்த உயர்ந்த நெடிய தோற்றம், கரிய மேனி, சுருண்ட கேசம் இவை அத்தனையும் ஒன்றாகத் திரண்டு கதிராமன் என்ற உருவில் நடமாடின. காடு அவனுக்குச் சொந்தம். அவன் காட்டுக்குச் சொந்தம். காட்டோடு அவன் கொண்ட உறவு அவனின் தோற்றத்தில் நன்கு தெரிந்தது."
20

கே. எஸ். சிவகுமாரன்
நாவலாசிரியர் கதிராமன் தொடர்பாக 36ம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
c. "22 வயதைக் கடந்து விட்ட அவன் இப்போ ஒரு சின்னப் பையன் அல்ல. வாழ்க்கையில் தெரிய வேண்டிய விஷயங்கள் சில எல்லோருக்குமே அந்தந்த வயதில் எப்படியோ தெரியத் தான் செய்கின்றன. ஆனால் பதஞ்சலியின் தந்தை யார் என்று தெரியாத காரணத்தால் அவளை ஒருவரும் மணக்க முன்வர மாட்டார்கள் என்பதுதான் புதிராக இருந்தது. காட்டிலே வளர்ந்த அவனுக்கு தெரிய வேண்டியவை தெரிந்திருந்தாலும் தெரியக் கூடாத சிலநாகரிகங்கள் இன்னமும் தெரியாமல்தான் இருந்தன."
முரட்டுத் தன்மையும் மென்மையும் ஸ்பரிசிக்கும்போது ஏற்படும் அனுபவத்தை ஆசிரியர் விளக்குவதைப் பாருங்கள்.
"எருக்கும்பியில் முளைக்கும் தளதளவென்ற செங்கீரை யின் குளிர்மை நிறைந்த அவளின் ஸ்பரிசம், அவனுக்குப் புதியதோர் அனுபவம்."
கதை நிகழும் தண்ணி முறிப்புக் குளத்தின் வரலாற் றையும் நாவலில் சேர்த்துக்கொள்ளும் ஆசிரியர் சிதைந்து போன குளக்கட்டைப் பெரியதொரு காட்டாறு முறித்துச் சென்றதனால் தண்ணி முறிப்பு என்ற பெயர் பெற்று தற்போது அழைக்கப்படுகின்றது எனவும் விளக்குகின்றார்.
விறுவிறுப்பாகக் கதையைநகர்த்திச் செல்லும் ஆசிரியர். பதஞ்சலியின் புனிதநீராட்டு வைபவம் பற்றிக் குறிப்பிடும்போது சிறிது நகைச்சுவையையும் தெளித்துள்ளார்.
ஏழாம் அத்தியாயத்தில் ஆசிரியர் மூன்று வருடம் தாண்டி வந்து விடுகின்றார். பதினாறு வயதை உடைய பதஞ்சலியை ஆசிரியர் இவ்வாறு வர்ணிக்கின்றார்.
21

Page 18
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
"கிடுகிடென வளர்ந்து மதாளித்து குலை தள்ள விருக்கும் வாழையின் செழுமை, அவள் உடலில் தெரிந்தது."
தண்ணிர் முறிப்புக் கிராமம் மெல்ல வளரும் ஒரு குடியேற்றத் திட்டம் என்பதனையும் அவர் எடுத்துரைக்கிறார்.
பாம்பு கடித்து மரணமெய்தும் உமாபதி பற்றிய விவரணையும், வைத்தியரைத் தேடிச் செல்லும் கதிராமனின் அனுபவமும் ஒரு சஸ்பென்ஸ்" அடிப்படையில் ஒரு திறில்லர்' போன்று எழுதப்பட்டுள்ளது. பதஞ்சலியின் பிறப்புப் பற்றி விளக்கும் ஆசிரியர் அவளின் தாய் நாதியற்ற நிலையில் சிரித்துச் சந்தோஷமாக இருக்க முற்பட்டபோது குக்கிராம மக்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார். இது எவ்வளவு உண்மையானது!
பதஞ்சலி தனது பாட்டனார் இறந்த பின்னர் தனது வருங் காலத்தை எண்ணிச் சிந்தனை செய்யும்போது அவளுடைய பாத்திர வார்ப்பை மேற்கொள்ளும் ஆசிரியர் வாசகர்களுக்கு விமர்சனப் பாங்கில் அவளை அறிமுகப்படுத்துவதால் கலை நயம் சிறிது குறைகிறது. அதாவது பாத்திரத்தின் தன்மையை வாசகர்கள் தாமே புரிந்து கொள்ளாமல் நாவலாசிரியரின் உதவியில் தங்கியிருக்க வேண்டிய விதத்தில் பாத்திரப் படைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது.
குக்கிராம வளர்ச்சியை ஆசிரியர் விபரிக்கும் பொழுது:
"தண்ணீர் முறிப்பு இப்போ ஒரு சிறிய காட்டுக் கிராமம் அல்ல. குளக் கட்டு உயர்த்தப்பட்டு திருத்தியமைக்கப் பட்டபோது அதன் கீழ்க் கிடந்த காடுகள் அந்தக் காரியாதிகாரி பிரிவில் உள்ள கிராமத்தவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காடுகள் மறைந்து களனிகளாகிவிட்டிருந்தன. சமுத்திரம் போலநீரைத் தேக்கிக்
22

கே. எஸ். சிவகுமாரன்
கொண்டிருந்த அந்தக் குளத்தில் இருந்து இடையறாது தண்ணி பாய்ந்து கொண்டிருந்தது. வளமான மண்ணும் நீர் வசதியும் நிறைய இருந்ததால் வயல்களில் பொன் விளைந்து இருந்தது. அந்தப் பொன் விளையும் பூமியை நோக்கிப் பலர் வந்தனர். வயல்களில் சதா ஒன்று மாறி ஒன்றாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. உழவு, சூட்டடிப்பு, பலகை அடிப்பு போன்ற பல வேலைகளுக்கு அதிகமானோர் உழவு இயந்திரங்களையே உபயோகித்தார்கள்"
வளர்ச்சிக்கு ஏற்ப தேவைகள் ஏற்படுவதையும் தேவையைநிறைவேற்றமனிதன் எடுக்கும் முயற்சியையும் கூற முற்பட்ட ஆசிரியர் கோணாமலையார், கதிராமனுக்கு பெண் தேடும்பொழுது பெண்ணைவிட சீதனமாகக் கொடுக்கவிருந்த உழவு இயந்திரத்தையே கூடுதலாக விரும்பினார் என்று கூறுகிறார். எனவே வம்பில் பிறந்த பெண்ணை மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க அவர் விரும்பவில்லை. கதிராமனையும் பதஞ்சலியையும் ஒன்று சேரக் காணும் போது கோணாமலையாருக்கு ஆத்திரம் எழுவது இயல்பே.
கதிராமனும் பதஞ்சலியும் வாழ்க்கையில் முழு அனுபவம் பெறாதவர்கள் என்பதனை ஆசிரியர் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றார்:
"தன்னைச் சூழ்ந்து நிற்கும் வசை இன்னதென்று தெரியாமலே அது விளைத்த வேதனைகள் காரணமாக பதஞ்சலிகலங்கிக் கொண்டிருந்தாள். காரணமும் நோக்கமும் தெரியாமல் இருந்த அவளின் உணர்ச்சியோடு ஒரு முழுமையான வடிவத்தை கோணாமலையாரின் "போய் அந்த வம்பில் பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக் கொண்டிரு" என்ற வார்த்தையும் வலியுறுத்திக் கொண்டிருந்தன.
23

Page 19
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
இருவரின் உறவும் நெருக்கமடைவதை "எந்த நிலை யிலும் கலங்கிப் போகாத அவனது ஆண்மை அவளுக்கு அளவற்ற ஆறுதலை அளித்தது. மிகவும் குறுகிய கால வேளைக்குள் அடுத்தடுத்து பல அவலங்களை அனுபவித் திருந்த அவளுக்கு கவலைப்படாதே என்று அவன் கடிந்து கூறியது மிகவும் இதமாக இருந்தது."என ஆசிரியர் கூறுகிறார்.
அவர்கள் முதலிரவை குறியீடு மூலம் ஆசிரியர் சித்திரிக்கிறார்:
"எங்கையோ பிறந்த சின்ன நீரோடை ஒன்று கலகல வென்று சிரித்தபடியே ஆடிவந்து, இருண்ட காட்டின் மத்தியில் ஆழமும் அமைதியுமாய்க் கிடந்தோர் நீர் மடுவில் விழுந்து நழுவிச் சங்கமித்தது."
கோணாமலையாருக்கு உழவு இயந்திரம் தேவை. புதுத் தம்பதிகளுக்கு, "வாழ்வதற்கு ஒரு குடிசை வேண்டும். அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு காய்கறித் தோட்டம் வேண்டும். இவற்றைவிட முக்கியமாக கமம் செய்ய விளைநிலம் வேண்டும்."
"எளிமை நிறைந்த வாழ்விலே ஆசைகள் மிகக் குறைவு. மிகச் சிலவான ஆசைகளும் எளிமையாகவே இருப்பதனால் அவை இலகுவில் நிறைவேறிவிடுகின்றன. அவை நிறைவேறிய ஆத்ம திருப்தியுடன் வாழும் எளிமையான மக்களின் மனங்களில் நிராசைகளோ ஏமாற்றங்களோ நிரந்தரமாகத் தங்கியிருந்து சினம், பொறாமை, கவலை முதலியவற்றைப் பெரிய அளவிற்பிறப்பித்துஅவர்களை அலைக்கழிப்பதில்லை", என்று நாலாசிரியர் பாலமனோகரன் கூறுகிறார். இது எவ்வளவு தூரம் சரியானதென்று கூறமுடியாமலிருக்கின்றது. ஏனெனில் எளிமையுடன் ஆரம்பித்த கோணாமலையார் ஆசையைப் பெருக்கிக் கொள்கிறார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
24

கே. எஸ். சிவகுமாரன்
பதஞ்சலி ஒரு நிலக்கிளி போன்றவள் என்பதை நாவலா சிரியர் ஒப்பிடும்பொழுது சிறிது அசட்டு அபிமான உணர்ச்சி (Sentimental)ஆக இருக்கிறது. நாவலின் முற்பகுதியை வெகு யதார்த்தமாக எழுதிச் சென்ற நாவலாசிரியர், பிற்பகுதியில் மிகவும் நொய்மையான விஷயங்களைக் கையாள வேண்டி இருப்பதனால், தாம் சிருஷ்டித்த பாத்திரங்களில் தம்மையே மறந்து போகிறார் என்பது எனது அவதானிப்பு. மற்றைய பாத்திரங்கள் தொடர்பாக இதனைக் கூறமுடியாவிட்டாலும் பதஞ்சலி சம்பந்தமாக இந்த 'சென்டிமென்டல்' பண்பு இருப்பதை உணர முடிகின்றது.
"நிலக்கிளிகளைப் பொந்து வாசலில் சுருக்கு வைத்துச் சுலபமாகப் பிடித்துவிட முடியும்" என்றுநாவலில் வரும்பாத்திரம் ராசு கூறுகிறான்.ராசுவின் சொற்கள் சுந்தரலிங்கத்தின்மனதில் ஆழமாகப் பதிந்ததினால் போலும் அந்தக் கோரப் புயலில் பதஞ்சலியை அவன்அணைக்க முடிந்தது. சுந்தரலிங்கம் இந்த நாலில் வரும் ஒரு முக்கிய பாத்திரம்,
"எலும்பின் நிணக் கலன்களையும் உறைய வைக்கும் கடும் குளிரில் பதஞ்சலி சுந்தரத்தை நெருக்கமாகக் கட்டிக் கொண்டாள். உள்ளத்தின் விளைவை இதுவரை கட்டுப் படுத்தியிருந்தவள் இப்போதுதன் உடலின் விளைவைக் கட்டுப் படுத்த முடியாமல் தவித்தாள்" என்கிறார் ஆசிரியர்.
"பதஞ்சலி குழந்தை மனத்தோடு விகற்பமின்றி சுந்தரத்திடம் போய் அணைந்து கொண்டாள்" என்றும் கூறுகிறார். "சுந்தரத்தின் அணைப்பு இன்னதென்று அறிந்த அவள் எதையுமே தீர்க்கமாகச் சிந்திக்க முடியாமல் அப்படியே சோர்ந்து போய் நின்றுவிட்டாள்."
இலட்சிய பாத்திரங்களான சுந்தரமும் பதஞ்சலியும் ஆளை ஆள் தொட்டுப் பேசுவதனால் கற்பு இழக்கப்படுகிறது
25

Page 20
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
என்று கருதிக் கொள்கிறார்கள். அந்தச் சூறாவளிச் சம்பவத் தின் பின்னர் குற்ற உணர்வுடன் இயங்குகிறார்கள்.
இதற்கிடையில் கோணாமலையாரின் வீழ்ச்சியும், நாவலின் இறுதியில் சித்திரிக்கப்படுகின்றது. அவர் இறக்க கதிராமனின் பிள்ளை பிறக்கின்றது. இது விதியின் காரணமாக தற்செயலாக நடக்கும் நிகழ்ச்சி என்று ஆசிரியர் காட்ட முற்படுகின்றார். இந்த இடத்தில் பழமை நாட்டம், மிகை உணர்ச்சி போன்றவை ஆசிரியரை அறியாமலே வந்து குடிபுகுந்து கொள்கின்றன. al
கதைப் புத்தகங்களை அடுப்பில் போட்டுக் கொழுத்த பதஞ்சலி முற்படுகிறாள். அவள் செய்கை மூலம் நவீனத்துவத் தொடர்பை விட, இலட்சிய வாழ்வை மேற்கொள்வது மேல் என ஆசிரியர் விரும்புகிறார் போல் தெரிகின்றது.
நிலக்கிளி போன்ற பதஞ்சலி, சொந்த சின்ன வாழ்க்கை வட்டத்திலேஉல்லாசமாகச் சிறகடிக்க விரும்புகிறாள். அந்தச் சின்ன சொந்த வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பது ஆசிரியரின் முடிவு.
நாவலின் பிற்பகுதி மேலும் செப்பனிட்டு எழுதப்பட்டிருக் கலாமென்பது எனது அபிப்பிராயம், மிகவும் சுவாரஸ்யமான முறையில் நாவல் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு சில குறை பாடுகளை ஆசிரியர் நீக்க முற்பட்டிருக்கலாம்.
தினகரன் வார மஞ்சரி 19-01-1973
26

அருள் சுய்பிரமணியம்
அவர்களுக்கு வயது வந்து விட்டது
முதிர்ச்சித்தன்மை பிரதிபலிக்கும்முற்போக்கானபுனை கதை இது. வாசகரைக் கவரும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.
குறுகிய வகுப்புவாதத்தைச் சாடும் இந்த நாவல் தேசிய அடிப்படை நோக்கம் கொண்டது. பேராசிரியர் கா. சிவத்தம்பி தமது முன்னுரையில் கூறியிருப்பது போன்று-"தேசிய ஒருமைப் பாட்டுக்கான யதார்த்த பூர்வமான தளத்தை இது போன்ற நாவல்களே ஏற்படுத்துகின்றன."
அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்கிறார் நாவலாசிரியர். அதாவது நாவலில் வரும் பாத்திரங்களின் மன வளர்ச்சியைச் சொல்லாமல் சொல்கிறார் அருள்சுப்பிரமணியம். யார் இந்தப் பாத்திரங்கள்?
இருபது வருடங்கள் வரை நல்ல பிள்ளையாக வளர்ந்த அரியமும், சீதாவும் தமது பருவக் கோளாறினால் பெற்றோர் அறியாமல் காதல் வலையில் சிக்குகிறார்கள். அரியம் கொழும்பில் சிங்களப் பெண்ணுடனும், சீதா திருகோண மலையில் அயல் வீட்டுவாலிபனுடனும் காதல் கொள்கின்றனர். அரியம், மொனிக்கா என்ற சிங்களப் பெண்ணை மணம் முடித்து வீடு வருகின்றான். அதனால் அவன் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள மறுக்கும் சீதாவின் காதலனான மாணிக்கத்தின் பெற்றோர், கூடுதலான சீதனமும் கேட்கின்றனர். அரியத்தின்
27

Page 21
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
தூண்டுதலால் சீதா மாணிக்கத்தை மறக்க முற்பட்டு. அண்ணனுடனும், மன்னியுடனும் கொழும்பு செல்கின்றாள். இதனால் சீதாவின் அறிவுப்பக்குவம் சுட்டப்படுகின்றது. வாலிபக் காதலும் பொருளாதாரப்பிணைப்பில் முகிழ்க்கின்றது அல்லது மடிகின்றது என்பதை ஸ்தூலமாக ஆசிரியர் இங்கு வெளிப் படுத்துகின்றார். காதல் என்பதை அறிவுபூர்வமாகவும் அணுக வேண்டுமென்பது புலப்படுத்தப்படுகின்றது.
அரியம் பெற்றோருக்குப் பயந்த பிள்ளை. ஆயினும் பெற்றோர் தனது முடிவை ஏற்றுக் கொள்ளும் விதத்தில், துணிவுடன் சில காரியங்களைச் செய்கின்றான். வெளிப் படையில் அவன் செயல்தயக்கமுடையதாகத் தோன்றினாலும், கோழை போல் அவன் செயல் இருந்தாலும், உணர்ச்சி வசப்படாத அறிவுபூர்வமான நடவடிக்கைகள் மூலம், தனது துணியை அவன் செயற்படுத்துகிறான். இங்கு அவனுக்கு வயது வந்து விட்டதை அதாவது அவன் வளர்ச்சி பெற்றிருப்பதை ஆசிரியர் தொனிக்கச் செய்கிறார்.
மொனிக்காவும் அரியத்துடன் முதலில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது வளரிளம் பெண்ணொருத்தியின் பக்குவத் தன்மையைக் காட்டுகிறாள். அன்னிய சூழ்நிலையில் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளும்போதும்,அவளின் அனுபவ முதிர்ச்சியை நாம் காண்கின்றோம்.
இந்த மூன்று பாத்திரங்களின் அனுபவ முதிர்ச்சியுடன், முத்தர் என்ற வயது வந்த பாத்திரத்தின் அறிவு முதிர்ச்சியும். நாவலின் இறுதியில் சித்திரிக்கப்படுகினறது. அதாவது தவிர்க்க முடியாத நிலை ஒன்று ஏற்படும்போது, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய அனுபவ முதிர்ச்சி இங்கு ஏற்படு கின்றது.
4. மொனிக்காவின் தாய், அரியத்திடம் நடந்து கொள்ளும் முறையும், தன் மகளின் கற்பு அரியத்தினால் பறிபோன பின்னரும், அரியத்துடன்நியாயமான முறையில் அறிவுபூர்வமாக விவாதிக்கும் பண்பும், அந்தப் பாத்திரத்தின் முதிர்ச்சியைக் காட்டுகின்றது.
28

கே. எஸ். சிவகுமாரன்
அதேபோன்று. அரியத்தின் நண்பன். அரியத்தின் பெற்றோரிடம், அரியத்தைப் பற்றி எடுத்துக் கூறி. எக்கச் சக்கமான ஒரு சூழலைத் தன்வயப்படுத்தி இக்கட்டைத் தளர்த்தும் பண்பு வளர்ச்சியைக் காட்டுவன.
இவ்வாறாக, இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் வயது வந்தவர்களாக - அதாவது சகல விதத்திலும், குறிப்பாக அறிவு முதிர்ச்சி பெற்றவர்களாக - வளர்வதை ஆசிரியர் வளர்ச்சிக் கிரமமாகக் காட்டியுள்ளார். இன்னொரு விதத்தில் கூறினால், வளரிளம்பருவத்தினரின் காதற் கதைக்கு, ஆசிரியர் கொடுத்திருக்கும் ஆழமும் வீச்சும், அருள் சுப்பிரமணியத்தின் வளர்ச்சியையே காட்டுகின்றன.
நாவலின் முக்கிய பண்பு என்ன? இனத் துவேஷத்துக்கு சாவுமணி அடித்து, தேசிய ஒருமைப்பாட்டைவலியுறுத்துதல். இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்கள், சில கட்டங்களில் சிங்கள மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்பு எவ்வளவு பிற்போக்குத் தன்மையும், அறியாமை சார்ந்ததாகவும் இருக்கின்றது என்பதை இந்நாவல் மூலம் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
அருள் சுப்பிரமணியம் சுவாரசியமான நாவல் ஒன்றைத்தான் தந்துள்ளார். அதன் மூலம் அவர் ஒரு சமூகப் பணியையும் நிறைவேற்றியிருக்கின்றார். நமது நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களில் பதினொரு லட்சம் மக்களே வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்றார்கள். எஞ்சிய இருபத்தினாலு லட்சம் மக்களும் இதர மாகாணங்களில் வாழ்கின்றார்கள், என்பது வரலாற்று உண்மை. இந்தப் பதினொரு லட்சம் மக்களுக்கு மற்றொரு உலகம் இருப்பதை ஆசிரியர் சித்திரிக்கின்றார். அங்குள்ள மக்களும் நம்மைப் போன்றவர்களே என்பதை ஆசிரியர் தமிழ் பேசும் பிரதேச மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார். இவ்விதம் ஆசிரியர் காட்ட முற்படும்பொழுது தேசியமனப்பான்மையும், மனிதாபிமானமும் தொனிக்கின்றது.
29

Page 22
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
நாவலில் இடையிடையே வரும் பகுதிகளில் அவர் தமது சமூக அவதானிப்புகளைப் பொருத்தமாகத் திட்டியிருக்கிறார். "வேரறுக்க முடியாமல் விளைவித்து விட்ட சில சமதர்ம அருட்டுணர்வுகளினால்" ஆசிரியர் வயப்பட்டிருக்கிறார். 27ம் பக்கத்தில் அவர் கூறுவதை உதாரணமாகக் காட்டலாம். "சிங்களவர் என்றாலே காடையர்கள் ஆக உருவகப்படுத்தப் பட்டு அதே மனோநிலையில், தமதுசிந்தனைகளை வளர்த்துப் பழகியிருந்த ஒரு சூழலில் இருந்து வந்த அரியத்துக்கு, சிங்களவர்களும் மனிதர்கள்தான் என்பதான உணர்வை ஏற்படுத்திவிட்டது - தயாவதியினதும், அவளது மகளினதும் அன்பான நடத்தை"
அதேபோன்று சிங்களவர் தமிழரை விரும்புவதற்கான காரணங்களில் ஒன்றாக இதனைக்குறிப்பிடலாம். "தமிழனுக்கு உரித்தான பாரம்பரிய விரத அனுட்டானங்களில் விளைந்த துப்பரவுகள்"
சமூகப் பிரக்ஞை இல்லாமல், மேம்போக்கான நாகரிகங் களைக் கடைப்பிடிக்கும் நவீன யுவர் சிலரை ஆசிரியர் சாடு கிறார். தயாவதி அரியத்திடம் பேசும் முறை மிகவும் ஆழமான, ஆய்வறிவுசார்ந்த பேச்சாகும். வாசகர்கள்இந்தப்பகுதிகளைப் படித்துப் பார்த்தால் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வீர்கள்:
"நிர்ப்பந்தங்களினால் உருவாக்கப்படும் மாற்றங்கள் பந்தங்களை மேலும் இறுகச் செய்வதற்கு உதவி செய்யாது. அவை பாசங்களில் இடைவெளியை உண்டாக்கிவிடும்" என்ற பகுதியும் கவனிக்கத் தக்கது.
"அன்பெனும் உயரிய உணர்ச்சிக்கு முன்னால் ஏளனமான குற்றச்சாட்டுகள். வகுப்புவாதக் கூச்சல்கள் எல்லாம் நிற்க முடியாது விழுந்து விடும்" என்கிறார் ஆசிரியர்.
அவர்களுக்கு வயதுவந்து விட்டது என்றநாவல் வெறுமனே தனி நபர்களின் உணர்ச்சி வெளிப்பாடு மாத்திர மல்ல. நாவலாசிரியர் அருள் சுப்பிரமணியம், அரியம் என்ற
30

கே. எஸ். சிவகுமாரன்
கதாநாயகன் மூலம் சமூகச் சீர்கேடுகள் பற்றியும் சிந்திக்க வைக்கிறார் என்பதும் கூட. அரியத்திற்கும் மாஸ்டருக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணைஇங்கு குறிப்பிடத்தக்கது:
"ஒரு சிலரின் கைகளில் மாத்திரம் இருக்கும் ஒருநாட்டின் பொருளாதாரம், அரசியல் ஆதிக்கம் ஆகியன சகல தரங்களிலும் உள்ள மக்களிடம் பரவலாக்கப்படும் வரை உணர்ச்சிகரமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்" என்ற பகுதி இங்கு குறிப்பிடத் தக்கது.
அரியத்திற்கும் மாஸ்டருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் - நாட்டின் வரலாற்றுண்மைகளை அலட்டிக் கொள்ளாமல் தெரிவிக்கின்றது.
"இண்டைக்கு நாடு சுதந்திரமடைஞ்சு போச்சு. கல்வி எல்லா மக்களிடையேயும் பரவலாக்கப்பட்டு விட்டது. அவங்களும் முன்னுக்கு வந்திற்றாங்கள். அதை நாங்கள் வரவேற்கத்தான் வேணும். ஆனா திறமையான ஒருவன் இருக்கும்போது திறமையில்லாத இன்னொருவன் தெரிவு செய்யப்படுவது துக்கமான விசயந்தான். அந்த ஊழல் ஒழிக்கப்படத்தான் வேண்டும்." என்று அரியம் கூறுவது அழுத்தமாக அமைந்துள்ளது.
கிழக்குப் பகுதியிலே மட்டக்களப்பு - திருகோணமலை ரயில் சேவை பற்றிக் குறிப்பிடும் போது அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன.
"நம் நாட்டின் அத்தியாவசியமான பொருளாதாரப் புள்ளி விவரங்களை மனதில் தெரிந்துவைத்திருப்பதைக் காட்டிலும், இன்னொரு நாட்டின் நடிக நடிகைகளின் அப்பட்டமான வியாபாரத்தன்மையான புள்ளிவிபரங்களை மனதில் உருப்போட்டுக் கொள்வது பெருமை என்றல்லவா நினைக் கிறார்கள் இப்பொழுது" என்கிறார் ஆசிரியர்.
மலசலத் தொழிலாளர் பற்றிய சிந்தனைகளும் குறிப்பிடத் தகுந்தவை.
31

Page 23
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
"இருவரும் ஒருவர் பிடியை மற்றவர் கையில் கொடுக்காத வகையில் - கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்" என்ற உருவகமும் சுவையாக அமைந்துள்ளது.
இந்த நாவலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் மற்றொன்று - ஆசிரியர் எந்தவித ஒழிவு மறைவுமின்றி இயல்பான முறையில் சம்பவ விவரணைகளையும் உரையாடல்களையும் எழுதி யிருப்பதாகும். உதாரணமாக "ரகசியமான முறையில் சில சேட்டைகளில் ஈடுபட்டிருந்தாலும்கூட, கெட்ட பெயரைச் சம்பாதிக்கவில்லை." என்ற பகுதியைக் குறிப்பிடலாம்.
ஆசிரியரின் நோக்கில் நின்று நாவல் எழுதப்படும் அதே வேளையில், ஆசிரியருக்கு முரண்பாடான கருத்துக்களையும் பாத்திரங்களைப் பேசவைப்பதன்மூலம், ஒருதலைப்பட்சமுள்ள பிரசார முறையை சுப்பிரமணியம் தவிர்த்துக் கொள்கிறார்.
கூட்டுமொத்தமாகச் சொன்னால், கிழக்கிலங்கையிலும் சமுதாய விழிப்புடைய ஒர் இளம் எழுத்தாளர் பரம்பரை தலையெடுப்பதை அருள் சுப்பிரமணியத்தின் நாவல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஈழத்து நாவல் இலக்கியத் துறைக்கு ஒரு முக்கிய பங்களிப்பு அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்து விட்டது.
தினகரன் வாரமஞ்சரி
28-01-1974
இந்த நாவல் பிரதிபலிக்கும் சமுதாயச் சூழல் 2000ஆம் ஆண்டை நெருங்கும் இக்கால கட்டத்தில் இல்லை என்பதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
32

செ. யோகநாதன்
ஒளிநமக்கு வேண்டும்
fறுகதையை விட நாவலை விரும்பும் வாசகர்களின் தொகை அதிகரித்துவருகிறது.நீண்ட முழுநாவலையும் இந்த வாசகர்கள் அதிகம் விரும்புவதில்லை. இரண்டுக்கும் இடைப் பட்ட குறுநாவல்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. உடன் நிகழ்கால ஐரோப்பிய, அமெரிக்க ஆப்பிரிக்க நாவல்களும் அளவில் சிறியதாக குறுநாவல்களாக வெளிவருகின்றன. அல்பேர் கெமு என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய அவுட்சைடர் என்ற பிரபல நாவல் 120 பக்கங்களை மாத்திரமே கொண்டது. குறுநாவல்துறையைப் படுத்தியவர் அல்பேட்டோ மொறாவியா என்ற இத்தாலிய எழுத்தாளர் என்றே நினைக் கிறேன். இந்தக் குறுநாவல்களை இத்தாலிய மொழியில் நொவெல்லா என்று அழைக்கிறார்கள்.
தமிழிலும் குறுநாவல்கள் பிரபல்யம் அடைந்து வரு கின்றன. சிறுகதை ஒன்றில் சொல்ல முடியாததைப் பரந்த அளவில் குறுநாவலில் சொல்லிவிட முடிகிறது. சிறுகதை மூலம் தெரிவிக்க முடியாததைப் புதுக் கவிதை மூலம் இறுக்கமாக, அழுத்தமாகத் தெரிவிக்க முடிகிறது. எனவே தமிழில் குறுநா வலும் புதுக்கவிதையும் இப்பொழுது "பொப்" பாடல்கள் போல் பிரபல்யம் அடைந்து வருவதில் வியப்பில்லை. காலத்தின் தேவையை ஒட்டிஇலக்கிய, கலைவடிவங்களும் அமைகின்றன.
செ. யோகநாதன் 1963க்கும் 1972க்கும் இடையில் எழுதிய
33

Page 24
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு இப்பொழுது வெளி வந்திருக்கிறது. புத்தகத் தலைப்பில் சுட்டப்படுவதுபோல'ஒளி நமக்கு வேண்டும். விரக்தியும் தோல்வி மனப்பான்மையும் நமக்குக் கூடாது என்ற அடிப்படையில் இந்த புத்தகத்தில் இடம்பெறும் ஐந்து குறுநாவல்களும் அமைகின்றன.
இதில் இடம்பெறும் தோழமை என்றொரு சொல் என்ற கதை யூனெஸ்கோ திட்டத்தின் கீழ் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டு வருகிறது.20 வருடங்களும் முன்று ஆசைகளும் என்ற கதை சிங்களத்தில் விரைவில்பிரசுரிக்கப்படவிருக்கிறது. இந்தக் கதையில் நிகழும் ஒரு சம்பவமும் ஹென்றி ஜயசேனா வின் நாடகமாகிய அப்பட்ட புத்தேமகக் நந்தவில் வரும் சம்பவமும் உண்மை நிகழ்ச்சி ஒன்றைத் தழுவியவையாகும்.
பல்கலைக்கழக வாழ்க்கையில் ஏற்படும்நிகழ்ச்சிகளைப் பல பட்டதாரி மாணவர்கள் தமது கதைகளில் சித்திரித் திருக்கிறார்கள் ஆனால் காலஞ்சென்ற கதிர்காமநாதனும், செ. யோகநாதனும் அந்த வாழ்க்கை முறை வெளியே உள்ள சமூகத்தின் பிரதிபலிப்பே என்பதைத் தத்துவார்த்தமாக விவரித்திருக்கின்றனர். தனிமனிதன் அல்லது தன்னலப் போக்கை வெறுத்தல், சமூகநீதிநிலவசுட்டுப்போராட்டத்தை மேற்கொள்ளல், மாறிவரும் சமூகத்திற்கேற்ற கல்விச் சீர்த் திருத்தங்களைச் செயற்படுத்துதல், வைதிக பழமைப் போக்கை மாற்றுதல் போன்றவை யோகநாதனின் குறு நாவல்களில் காணப்படும் அம்சங்கள். ஜானகி - பிராமணப் பெண் ஒருத்தி தனது குலமரபை ஒதுக்கி விதவைத் தாய்க்கும் தனக்குமாகச் சீவனோபாயம் நடத்துகிறாள். குலப்பெருமை பேசிய அவள் சகோதரனும் பிழைப்புக்காக லொறிவண்டி ஒன்றில் கிளினர் வேலை பார்க்கிறான். தாழ்த்தப்பட்ட வகுப்பினள் என்று கூறப்படும் ஒரு பெண் இந்தப் பிராமணப் பெண்ணுக்கு வாழ்க்கை உபதேசம் செய்கிறாள். வேஷ தாரித்தனமும் பழையநாட்டமும் கண்டிக்கப்பட்டு புத்தொளிக் கான ஆயத்தங்கள் செய்யப்படுவதை இந்தக் கதை உணர்த்துவிக்கிறது.
34

கே. எஸ். சிவகுமாரன்
20 வருடங்களும் முன்று ஆசைகளும் தம்மிகா (மத்தியதர சிங்கள விவசாயி ஒருவரின் மகள்) சுமணதாஸ் (கல்லுடைத்து வாழ்க்கை நடத்தும் வறிய கிழவி ஒருத்தியின் மகன்), தர்மபால (கமக்காரர் ஒருவரின் மகன்), சிவகுமார் (சில்லறைக் கடைக்காரர் ஒருவரின் மகன்) ஆகிய பாத்திரங்கள் மூலம் பல்கலைக்கழக வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஆசிரியர் வெவ்வேறு குணநலங்கொண்ட பாத்திரங்கள் மத்தியில் சமூக யதார்த்த பிரக்ஞையை உண்டுபண்ணுகிறார் இந்தப் பாத்திரங்களுக்கு இடையில் ஏற்படும் தொடர்பு உண்மையை தரிசிக்க வைக்கிறது. தன்னலம் பேணல், குறுகியமனப்பான்மை ஆகியன துன்பீற்றை விளைவிக்கும். ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்குத் தேவையான ஐக்கிய நடவடிக்கைகள் வேண்டும். எந்த விதமான ஒதுங்கிய மனப்பான்மையும் சுயநலமும் ஊறு விளைவிக்கின்றன என்பதே நாவலின் வெளிப்படை. ஆனால் இதனை வெறுமனே புகைப்பட யதார்த்தமாகக் காட்டாது காரணகாரியத்துடன் ஆய்வுமுறை ரீதியில் இந்த யதார்த்தத்தை யோகநாதன் கொண்டு வருவது தனிச்சிறப்பு.
தோழமை என்றொரு சொல் - இந்தக்கதை "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற முதுமொழியை வலியுறுத்துவதாக அமைகிறது. அந்த நாள் வரவேண்டும். கல்விச் சீர்த்திருத்தத்தைக் கோருகிறது. இது இப்பொழுது நடைமுறையில் இருந்து வருவது கண்கூடு.
திருச்சிற்றம்பலம் - சுய இரங்கல் மனப்பான்மை களைந்து எறியப்பட்டுவாழ்க்கையில் ஒளிபிறக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது.
ஒளி நமக்கு வேண்டும் - இன்று நமது காலத்திற்கு மிகப் பொருத்தமான தாரக மந்திரமாகும்.
தமிழ் நாட்டுச் சிற்றேடு "வைகை” 1978
35

Page 25
எஸ். அகஸ்தியர்
நீ
முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், சுமார் ஆறு வருடங்களுக்கு முன் வெளியிட்டநீ என்ற "உணர்வூற்றுருவகச் சித்திரத்"தை அண்மையில் மீண்டும் படித்துப் பார்த்தேன். தினமும் ஒரு மணிநேரம் ஒரு வாரகாலமாக இதனைப் படித்துப் பார்த்தும் எனக்கு ஆசிரியரின் நோக்கத்தை எளிதில் இரசித்துக் கொள்ள முடியாதிருக்கிறது. இந்தச் சிறு நூலுக்கு (72 பக்கங்கள் - சுத்தமான பதிப்பு, அழகான அமைப்பு, பிழையற்ற அச்சக்கோர்ப்பு - ஆசிர்வாத அச்சகத்திற்குப் பாராட்டுதல்கள்) கவிஞரும் விமர்சகருமான இ. முருகையன் முன்னுரை எழுதியுள்ளார் அவரைப் போலவே, எனக்கும் இந்த நூலில் விபரிக்கப்படும் - சித்திரிக்கப்படும் தன்மை முழு வதையும் பூரணமாக விளங்கிக் கொள்ள இயலாதிருக்கிறது.
முதலில் உணர்வூற்று உருவகச்சித்திரம் என்றால் என்ன என்று நாம் அறிந்துகொள்ள முயல்வோம். இதற்கு பதிப்பாளர் ஒரு விளக்கம் தருகின்றார். (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமே இதனை வெளியிட்டது) பதிப்பாளர் மு. வி. ஆசிர்வாதம் கூறுகிறார்: "கதாபாத்திரங்களின்றிக் கதையை உருவாக்கி வாசகர்களின் மனதில் உணர்ச்சிக் குவியலைப் புகுத்துவதில் இவ் உணர்வூற்றுருவகச் சித்திரம்
36

கே. எஸ். சிவகுமாரன்
வெற்றி பெற்றுள்ளதென்றே கூறலாம். தொழிலாளர்களதும், தாழ்த்தப்பட்ட மக்களதும் நெஞ்சக் குமுறல்கள் பின்னிப் படர்ந்துள்ள உணர்ச்சிச் சித்திரமே இவ் உணர்வூற்றுருவகச் சித்திரம் என்று கூறினும் மிகையாகாது. இந்நூலில்-நீநானாய நீ, நியான நீ நியாயழிந்த நீ நீஎன்ற நீ நீக்குள் நீ நீநீறான நீ என்னும் ஏழு தலைப்புகளில் முதற்கண் தமது மனத்தெழுந்த உணர்வுகளை வடித்திருக்கிறார் திரு. அகஸ்தியர்"
இது இவ்வாறிருக்க, ஆசிரியர் முன்னுரையில் என்ன விளக்கங்களைத் தருகிறார் என்று பார்ப்போம்.
முதலாளித்துவத்தின் அகோரக் கொடுமைகளையும், அட்டுழிய அடக்கு முறைகளையும் எதிர்த்து, வர்க்க பேதமற்ற புதிய சமுதாயத்தையும், சமாதானத்தையும் நிறுவத் தியாகம் செய்த, செய்யும் முழு உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு இந்நூல் காணிக்கை. பொதுவான இயற்கைச் சொத்துகளை மனிதன் மனித வர்க்கத்தின் ஒருவனாக நின்று பொதுவாக அனுபவிக்கும் வரை போர் நிகழ்ந்தே தீரும். உலகத்துப் பொதுச் சொத்துக்களை இதே உலகில் மனிதன். பொதுவாக அனுபவிக்கும் வரை, இந்தக் கொந்தளிப்பும் போராட்டமும் வீறு பெற்றுக் கொண்டேயிருக்கும்"
சரி. அகஸ்தியரின் கோட்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் அவர் தமது கருத்துகளை மக்கள் மத்தியில் பரவலாக்க எந்த அளவு வெற்றி பெற்றுள்ளார் என்பதே அடிப்படைக் கேள்வி. பலரும் கூறுவது போன்று ஆசிரியரின் இந்த முயற்சி ஒரு பரிசோதனை என்பதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை. முற்போக்கு வட்டார எழுத்தாளர்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை என்றகுற்றச்சாட்டுஇந்த முயற்சியினால் பொய்யாகிறது. எனவே பரிசோதனையை மேற்கொண்டமைக்காக அகஸ்தியரை நாம் பாராட்டத்தான் வேண்டும். அதே வேளையில் யாவும்
37

Page 26
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
எளிமையாக எழுதப்படும் இக்காலத்தில் இது போன்ற பரிசோதனைகள் பரவலாக மக்கள் மத்தியில் செல்ல மாட்டாதென்பதை நாம் வலியுறுத்த வேண்டும். எனவே அகஸ்தியர் தமது ஆற்றலை மேலும் விருத்தி செய்வதற்கு இலகுவான முறையில் எழுதப் பழக வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.
"எவரும் உணர்வுகளால் மாத்திரம் வாசகனிடம் கருத்தைப் பரிவர்த்தனை செய்யமுடியும் என்ற கருத்தைநான் ஏற்றுக்கொள்ளவில்லை. காலம்தான் பதில் கூறவேண்டும்" என்கிறார் ஆசிரியர். உண்மை. வருங்காலத்தில் இத்தகைய உணர்வூற்றுச் சித்திரங்களை லயித்துப்படிப்போர் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருப்பார்கள். அதனால், ஆசிரியரின் ஆற்றல் எல்லாம் விழலுக்கு இறைத்தநீராகிவிடும். எனவே, பரிசோதனைகளையும் நடைமுறைக்கேற்றவகையில் மேற்கொள்வதே விரும்பத்தக்கது. ஜேம்ஸ் ஜொய்சையும், கப்காவையும், புறுாஸ்ரையும், டொஸ்பாஸோவையும் யார் படிக்கிறார்கள்? அவர்கள் பரிசோதனைகாரர்களே. ஆனால் பொது மக்களுக்கு அவை எல்லாம் தனிமனிதப் புலம்பல் களாகவே இருக்கின்றன. மக்கள் ஒன்றிப்போகும்படைப்புகளே, பரிசோதனைகளே வேண்டற்பாலன. அகஸ்தியர் அகவயச் சார்பை இனி விலக்கி விடுவார் என்று எதிர்பார்ப்போம்.
ஜனவேகம்
19-07-1975
38

சி. சுதந்திர DTITBIT
IOøypzigt'
df. சுதந்திரராஜா எழுதிய முதல் நாவல் மழைக்குறி இது ஒரு குறுநாவலே. பதின்மூன்று அத்தியாயங்கள். நூற்று நாற்பத்திரண்டு பக்கங்களில் எழுதியிருக்கிறார். ஆசிரியர் ஏற்கனவே பல சிறுகதைகளையும் விமர்சனங்களையும் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஒலிபரப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் இளைஞராயிருந்தபோதிலும், எடுத்துக் கொண்ட பொருள் பற்றிய தெளிவான அறிவு பெற்றிருக்கிறார் என்பதை இந்த "நாவல்" மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. இந்தக் குறுநாவல் என்ன கூறுகிறது? புத்தகத்தின் பின் அட்டையைச் சிறிது புரட்டிப் பார்ப்போம்.
"கொடுமையும் அக்கிரமும் நிந்தனையும் விரவிய இந்தச் சமூக அமைப்பு நிலைத்து நிற்பதற்கு எந்தவித நியாயமு மில்லை. ஏகாதிபத்தியம் எச்ச சொச்சங்களை மட்டுமே விட்டுவிட்டுச் சென்றதொன்று அல்ல. வாங்குதல் விற்றல் மூலம் ஈட்டப்படுகின்ற உபரிப் பெறுமானம் எத்தனை க(ா)டைத் தனமாக மானிதத்தை நெறிப்படுத்தி இலாபமீட்டியிருக்கிறது. இத்தகு சூழலில் வியர்வைகளை மண்ணுக்கும் வேதனை களைத் தமக்குள்ளும் கொண்டு நசிகின்ற விவசாயிகள் மகோன்னதமாய்த் தொடங்கிவிட்ட போராட்டத்தில் கூலி உழைப்பாளிகளின் அத்துவிதத்தை சர்வதேசிய ரீதியில்
39

Page 27
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
ஆனால் தேசிய களத்தில் யதார்த்தமாய் அணுகுவதே இந்நாவலின் அமைப்பாகும். மனிதகுல நீதிக்காக மனிதனே. வீறு கொண்டெழுகின்ற கோலத்தின் நிகழ்வுகளுக்கு விஞ்ஞான பூர்வமாய் அந்த வியத்தகு மானித உந்தலுக்கான காரணிகள் பின்னமைவில் உணர்த்தப் படுகின்றன. குறியீட்டு வடிவெடுத்த அடிமை விலங்குகள் நொறுக்கப்படுகின்றன. விமோசன வழிக்கு ஒளியூட்டுகின்றன. இந்நாவலின் நாயகன் உண்மையை வெறுமனே உணர்ந்தவனல்ல. நிலைநாட்டியவன். அதனால் மரணத்தில் வாழ்பவன். வர்க்கப் போராட்டத்தை நீதிப்படுத்துவதுடன் மழைக்குறி நிற்கவில்லை. நசிந்து கொண்ட வர்க்கம் சர்வ - ஆதிக்கமும் அடைவதையும் கோடி டுகின்றது" என்று புத்தக அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட வாசகம், மழைக்குறியைப் பொறுத்த வரையில் சரியாக இருக்கிறதுஎன்பது எனது கருத்து.நாவலின் நாயகனின் பெயர் சின்னத்தம்பி. இவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு வேளாளப்பையன்.கம்பளையில் யாழ்ப்பாணத்தார் ஒருவர் கடையில் சிப்பந்தியாக வேலைபார்க்கிறான்.38 வயது. மணமாகாதவன். முதலாளியுடன் ஒத்துப் போயிருந்தால், குட்டி முதலாளியாக இருப்பான். ஆனால் அவன் ஒரு தடித்த கொம்யூனிஸ்ட் மாற்றத்தை வேண்டிநிற்பவன். வர்க்கபேதமற்ற சமூக அமைப்புக்காகப் போராடி வருபவன். "இந்த நாத்தல் உலகத்தை மாற்ற வேணும் எண்ட துடிப்புத்தான் எனக்கு இருக்கிற ஒரேயொரு துடிப்பு" (பக். 10). விவசாயிகளையும் மாணவர்களையும் இணைத்துப் புரட்சிப்பாதையில் செல்ல விரும்புபவன். இவனுடைய இந்த முயற்சிகளே ஒவ்வோர் அத்தியாயத்திலும் விவரிக்கப்படுகின்றது. கடைக்காரச் சிப்பந்தியாகத் தொழில்புரிந்துகொண்டுபுரட்சிச்சிந்தனையும், உணர்வையும் வளர்க்க உதவும் ஒரு தமிழனின் கதையே இந்நாவல்.
தினகரன் வாரமஞ்சரி 12-10-1975
40

எஸ். பொன்னுத்துரை
FLb5
நடுத்தர வர்க்கக் குடும்ப வாழ்க்கையில் பாலுணர்ச்சி இயக்கவிசையாக அமையுமாற்றைச் சித்திரிக்கும் வகையிற் சடங்கு நாவலை எஸ். பொன்னுத்துரை எழுதினார்" என்று பேராசிரியர் நா. சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். இவர் தமது நூலாகிய ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (1978) என்ற நூலிலே, சடங்கு பற்றி இவ்வாறு எழுதுகிறார்:
"எஸ். பொன்னுத்துரையின் சடங்கு நாவல் கொழும்பில் எழுதுவினைஞராகப் பணிபுரியும் யாழ்ப்பாணத்தவரொருவரின் சமுதாய பொருளாதார பகைப்புலத்திற்பாலுணர்ச்சி வகிக்கும் முக்கியத்துவத்தையும் அது அவரை இயக்குமாற்றையும் ஆறு தினங்களின் தொடர் நிகழ்ச்சிகள் மூலமும் மன உணர்வுகள் மூலமும் புலப்படுத்துவதாக அமைகிறது. யாழ்ப்பாணத்தி லிருக்கும் குடும்பத்தைப் பிரிந்து கொழும்பில் பணிபுரியும் பல எழுதுவினைஞர்களின் பிரதிநிதியாக அமையும் செந்தில் நாதன் நீண்ட நாட்பிரிவுக்குப் பின்னர் தமது மனைவியை நாடி யாழ்ப்பாணம் செல்கிறார். அவரது உள்ளத்தில் மனைவி அன்னலட்சுமியிடம் பெறப்போகும் இன்பம் பற்றிய உணர்வே விஞ்சிநிற்கிறது. அங்கு சென்று நான்கு நாட்கள் தங்கியபின் பல்வேறு தடைகளால் ஆசாபங்கடைந்து கொழும்புக்கு
41

Page 28
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
மீள்கிறார். இத்தடைகள் குடும்ப நிர்வாக அனுபவமுள்ள மாமியான செல்லப்பாக்கிய ஆச்சியின் உருவிலும் உடல்நலம் பேணல், மது, இயற்கை ஆகியவற்றாலும் ஏற்படுகின்றன. செந்தில்நாதன் தான் நாடிவந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட 'சடங்கில் நிறைவுகாண முடியாத ஏமாற்றத்துடன் சம்பிரதாய பூர்வமான 'ருது சோபன சடங்கொன்றில் கலந்து கொண்டு தமது சமுதாயக் கடமையை நிறைவேற்றிவிட்டுக் கொழும்புக் குத் திரும்புகிறார்".
"யாழ்ப்பாணக் கிராமப்புறத்திற்கே உரிய இயல்பான குணாம்சங்களும் பொருளாதார குடும்ப நிர்வாக அறிவு நுட்பமும் வாய்ந்தவர்களாகப் படைக்கப்பட்டுள்ள செல்லப் பாக்கிய ஆச்சி செந்தில்நாதனின் உணர்ச்சி முனைப்புகளை நுட்பமாகக் கட்டுப்படுத்தும் எதிர்வகையாக அமைகிறார். கணவனுக்கும் தாய்க்குமிடையில் சடங்கின் 'காரணியாக அமைகிறாள் அன்னலட்சுமி. இம்மூன்று பாத்திரங்களையும் அவற்றின் சூழலுக்குரிய இயல்பான குணாம்சங்களுடன் இயங்க வைப்பதில் ஆசிரியரின் கைவந்த கலைவண்ணம்புலனாகிறது"
பேராசிரியர் நா. சுப்பிரமணியத்தின் கணிப்பீட்டை நான் ஏற்றுக் கொள்வதனால், அதனை இங்கு சேர்த்திருக்கிறேன்
1978
42

ஏ. ரி. நித்தியகீர்த்தி
மீட்டாத வீணை
ரெ. ரி. நித்தியகீர்த்தியின் மீட்டாத வீணை மனதிற் பதியத்தக்க ஓர் இனிய நாவல். நித்தியகீர்த்தி பல சிறுகதை களை எழுதியுள்ளார். இதுவே அவருடைய முதல் நாவலாகும். ஓர் இளம் எழுத்தாளரின் முதல் நாவல் என்ற முறையில், இதன் வடிவமும் வண்ணமும் சிறப்பாக அமைந்துள்ளன. சுவையான கதை ஒன்றை உள்ளடக்கும் நாவல் என்ற விதத்திலும் வளரிளம் பருவத்தினரின் சாதனையை யதார்த்தப் புனை கதையாகப் படைப்பதிலும் மீட்டாத வீணையை ஒர் உன்னத விவரணைப் பாடலாக வருணிக்கலாம்.
ஆம், இது மற்றுமோர் இளைஞர் நாடகக்கதையே, ஆனால் வெறுமனே அது இளைஞர் காதற் கதை மாத்திரமன்று. அந்த விதமான இலக்கிய வடிவ எல்லைக் கோட்டுக்குள் நின்று கொண்டே, ஆசிரியர் உள்ளீடாக ஏதோ ஒன்றை உணர்த்து விக்கிறார். அது என்ன? மாகாண ரீதியான நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்கள் தொடர்ந்து இருந்துவர அனுமதிக்கப்படின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதையே இந்த நாவல் உணர்த்தி நிற்கிறது. அந்த விதத்தில் இது ஒரு சமூக நாவலே. ஆனால் நாவலாசிரியரின்
43

Page 29
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
உண்மையான நோக்கம் இதுவல்ல என்பதை நாவல் அமைக்கப்பட்ட நிகழ்ச்சிச் செறிவு முறை காட்டிவிடுகிறது. நாவலில் நடமாடும் பாத்திரங்கள் சமூகப் பின்னணியின் மதிப்பீட்டடிப்படையில் வார்க்கப்பட்டவையாக எனக்குத் தெரியவில்லை. மாறாக உளவியல் அடிப்படையில் (ஆனால் உணர்வூற்றுப் பாத்திரங்களாக பெரும்பாலும் தேவியும் செல்லமும் ஏன் இளங்கோவும் ஏனையோரும்) இயங்குகின்றனர். இப்படிக் கூறுவதனால் நாவலாசிரியர் கற்பிதக் கதை ஒன்றைத் தந்திருக்கிறார் என்றில்லை. எந்த ஒரு நல்ல நாவலும் சமூகத் தளத்திலிருந்தே உயிர்ப்பைப் பெறுவது போன்றே இந்த நாவலும் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கின்றது. அதாவது யாழ்ப்பாணப்பிராந்தியத்தில்தாழ்ந்தநடுத்தரவர்க்கத்தினரின் சமூகநிலையை இளைஞர்கள் காதல் சம்பந்தப்பட்ட வரையில் இது சித்திரிக்கிறது. ஆயினும் சமூகப் போக்கிற்கான காரண காரியத்தை ஆழ மாகவும் பகுத்தாராயும் போக்கிலும் நாவலாசிரியர் திட்டவில்லை என்பதும் சமூகப்பிணிகளுக்கான பரிகாரங்களைச் சுட்டத் தவறியதும் என்னளவில் குறைகளே. ஆனால் இது நாவல் ஆசிரியரின் கன்னிப் படைப்பு என்ற முறையில் இச்சிறு குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாது விடுவோம். ஆசிரியர் இனி எழுதும் பொழுது சமூகப் பணியை முன்வைத்து எழுதினால் பயனுண்டு என்ற ஆலோசனையை மாத்திரம் இப்பொழுது தெரிவிக்கிறோம்.
தினகரன் வாரமஞ்சரி 2-10-1975
44

அருள் சுய்பிரமணியம்
அக்கரைகள் பச்சையில்லை
இது ஒரு விறுவிறுப்பான புனைகதை மாத்திரமல்ல, பொருத்தமுடைய செய்தி ஒன்றையும் கூறாமல் கூறுகிறது. அதனால் இந்த நாவல் எமது கவனத்தை ஈர்க்கிறது. வெளிநாட்டுச் சரக்குக் கப்பல்களில் வேலை செய்வதற்காகச் செல்லும் ஈழத்து இளைஞர்கள் தமது கசப்பான அனுபவங் களின் பின்னர், விரக்தியுடன் நாடு திரும்புகின்றனர் என்பது நாவலின் செய்தி. இத்தகைய சரக்குக்கப்பல்களில் மாலுமிகள் படும் பாட்டை தமிழ் வாசகர்களுக்கு முதல் தடவையாக எடுத்துக் கூறுவதாலும், இந்த நூல் விதந்து கூறக்கூடிய தகுதியைப் பெறுகின்றது.
யதார்த்த பூர்வமாகவும் (Realistic) இயற்பண்புரீதியிலும் (Naturalistic) கடலில் செல்லும் கப்பல் ஒன்றில் நாளாந்தம் நடக்கும் விஷயங்கள் புனைகதைப் பாணியில் எடுத்துக் கூறப்படுகின்றன. கப்பலில் காண்பவையாவும் வெகுநுட்பமாகச் சித்திரிக்கப்படுகின்றன. உலகிலேயே சிறந்த இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருகோணமலைத் துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்க்கைமுறை, கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிடப்படும் பொழுது, சிறிது வேறுபட்டு இருப்பதை இந்த
45

Page 30
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
நாவலைப் படிக்கும் நாம் அறிந்து கொள்கிறோம். கிழக்குத் துறைமுகத்தில் சிங்களத் தொழிலாளர்களும். தமிழ்த் தொழிலாளர்களும் நடத்தும் உரையாடல்களில் இருந்து இதனை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. முரண்பாடுகளும் வேற்றுமைகளும் கொண்டவிடத்திலும் தொழிலாளரிடையே ஐக்கியம் நிலவுவதை காட்ட ஆசிரியர் முற்படுகிறார்.
நாவலின் தனித்தனியான உறுதிப்பண்புகளைக் கலாரீதியாக இணைத்துக் கட்டுக் கோப்பாக வழங்க நாவல் ஆசிரியர் தவறிவிடுகிறார் என்பதனையும், நாம் இங்கு அவதானித்தல் வேண்டும். ஒரு கலைத்துவப் படைப்பு என்ற முறையில் இந்த நாவல் திருப்தியளிக்கத் தவறினாலும், விறுவிறுப்பான சுவையான படைப்பு என்ற முறையில் அதற்கென்று ஓரிடத்தைப் பெற்று விடுகின்றது.
வானொலி மஞ்சரி Dπήτά 1979
46

ஐ. சாந்தன்
ஒட்டுமா
1971. இல் எழுதப்பட்டு, 1976இல் தினகரன் வார மஞ்சரியில் தொடராக வெளியிடப்பட்டுச் சில மாற்றங்களுடன் 1978 டிசம்பரில் வரதர் வெளியீடாக ஒட்டு மா வெளிவந்தது. இது ஒரு குறுநாவல். பார்வை (1970), கடுகு (1975), ஒரே ஒரு ஒளரிலே (1976) ஆகியன ஐ. சாந்தனின் பிற நூல்கள். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட சிறுகதைத்தொகுதிக்குச் சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. இவர் எழுதிய முதல் சிறுகதை 1966இல் கலைச்செல்வியில் வெளியாகியது. கணைய7ழி, இலஸ்ரேட்டட் விக்லி ஒப் இந்திய7 போன்ற இந்தியப் பத்திரிகைகளிலும் இவருடைய ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
ஒட்டுமா வளரிளம் பருவத்தினரின் காதற் கதை. சாந்தனின் எழுத்தாற்றலை வெளிக்கொணரும் ஒரு படைப்பு. சிங்கள-தமிழ் உறவுகளை நாசூக்காக ஆராயும் ஒரு சித்திரம். ஒரு தமிழ் வாலிபன், ஒரு சிங்கள யுவதி (இருவரும் தத்தமது இனங்களின் தனித்தன்மையில் மேலோட்டமாக மட்டுமே பெருமை கொள்பவர்கள்)இருவருக்குமிடையில் ஒருவித உறவு ஏற்படுகின்றது. அது காதலா? காமமா? பரஸ்பர மதிப்பும் அபிமானமுமா? விளக்க முடியாது. ஒட்டுமிரு உள்ளங்கள்.
47

Page 31
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
ஆனால் அவ்வொட்டுதலை வெட்ட இருவருமே தவிர்க்க முடியாமல் தள்ளப்படுகின்றனர். அதுவே யதார்த்தமாக மிளிர்கின்றது. தமது உறவை அவர்கள் ஏன் துண்டித்துக் கொள்கின்றனர் என்பதை நாவலாசிரியர் சொல்லாமற் சொல்லும்பொழுது அங்கு கலை மிளிர்கின்றது. எனவேதான் சிங்கள - தமிழ் உறவை ஆராயும் ஈழத்துத் தமிழ்ப் புனை கதைகளில் (குறிப்பாக அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயதுவந்துவிட்டது) குறிப்பிடத்தக்க படைப்பாக ஒட்டுமா அமைகின்றது.
"ஒட்டுமா" என்பதற்குப்பின்னால் ஒரு கேள்விக்குறியைப் போட்டாலும், நாவல் அர்த்தமுடையதாகின்றது. "ஒட்டுமா" என்ற சாதாரண வார்த்தைப் பயன்பாட்டிலும் நாவல் நம்மைச் சிரத்தை கொள்ளச் செய்கிறது.
சிங்கள -தமிழ் உறவை ஒரு தமிழ் எழுத்தாளன் எவ்வாறு அணுகுகிறான். அதே உறவை ஒரு சிங்கள எழுத்தாளன் எப்படிக் கணிக்கிறான். என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பது பயனுடையது. துரதிர்ஷ்டவசமாகச் சிங்கள எழுத்தாளர்கள் ஒரிருவரே தமிழ் மக்களின் பண்பாடுகளைக் கணிக்க முற்பட்டுள்ளனர்.
ஒட்டுமாவில் வரும் பீரிஸ் என்ற சிங்களத் தம்பதி தமது வீட்டில் முதற் தடவையாக மூன்று மாணவர்களைக் குடியமர்த்துகின்றனர். அம்மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள். "தமிழ்ப் பையன்கள் அமைதியாக இருப்பார்கள். தொல்லை கலாட்டா இல்லாமல் இருக்க முடியும் " என்பதற்காக அம் மாணவர்களைக் குடியமர்த்தியதுடன், "எங்கள்பிள்ளை, எங்களை விட்டு, வேற்று நாட்டில் தனியாக இருப்பதால் அவனைப் போன்ற சில பிள்ளைகளை நாங்கள் இங்கே கவனமாகப் பார்த்தால், அவனுக்கு அங்கே நல்லவை நடக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு இது சில வேளை வேடிக்கையாகப் படலாம்.
48

கே. எஸ். சிவகுமாரன்
ஆனால் நாங்கள் அப்படி நினைக்கிறோம்"
"இல்லை நாங்களும் அந்த எண்ணத்தை மதிக்கிறோம்" சதா சொன்னான்.
"நன்றி" அவர் தொடர்ந்தார்.
போன்ற பகுதிகள் இரு இனத்தவரிடையே காணப்படும் சில பொதுவான குணப் பண்புகளைக் காட்டுகின்றன.
தமிழ் மாணவர் மீது அன்பு செலுத்தத் தொடங்கும் பீரிஸ் தம்பதியின் நிலாந்தி என்ற கர்வம் பிடித்த பெண், சதா என்பவனிடம் மையல் கொள்கிறாள்.
யாழ்ப்பாணத்தைப் பற்றித் தெற்கில் உள்ள சிங்களவர் என்ன நினைக்கிறார்கள்?
"யாழ்ப்பாணத்தில் சிங்களவரை மதிக்கமாட்டார்கள். ஆட்கள் வந்தால் சிரட்டையில் தான் தண்ணி கொடுப்பார் களாமே" இந்த எண்ணங்களை நீக்குவதற்கு யாழ்ப்பாணத் துக்கு அவர்கள் வந்ததாக வேண்டும் என்று தமிழ் மாணவர்கள் அச்சிங்களத் தம்பதியிடம் கூறுகிறார்கள். பீரிஸ் தம்பதியின் தூரத்து உறவினனும் சக மாணவனுமான காமினி, தமிழர்களில் நிறைய அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தான். இவர்களைப் போல் ஒவ்வொருத்தரும் இருந்தால் இந்த நாட்டின் தலை விதியே வேறுமாதிரி அமைந்திருக்கும் என்று சதா நினைத்தான். இதற்கிடையில் ஆனந்தன் என்ற சிரேஷ்ட மாணவன் சதாவுக்கு நண்பனாகி அவனுக்கு ஆலோசனை கூறுகிறான். "இந்த மாதிரி கலப்புத் திருமணங்களில் (சதாநிலாந்தி) இன ஒற்றுமை பிறக்காது. பிள்ளைதான் பிறக்கும்" அநேகமாக அதே தொனியில், சின்னையா என்ற சதாவின் நண்பன் யாழ்ப்பாணத்தில் கூறியதாக வரும் ஒரு பகுதியும் அமைகின்றது.
"இது சும்மா இரண்டு தனி மனுசர் செய்யிற வேலை. ஒரு
49

Page 32
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
அவதி அவ்வளவுதான். சாதிப் பிரச்சினையைத் தீர்க்கிற தெண்டா. அதன்ரை அடிவேரைத் தேடிப் பிடிச்சு, அதை ஒரு முழு சமூகமாற்றமாகக் கொண்டு வரவேணும். இது பைத்திய கார வேலை".
சதா சிந்திக்கிறான். "பரம்பரையாகத் தமிழர்களாக வாழ்ந்து ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம் என்று வாழ்கின்ற இன்னொரு குடும்பத்துடன் சம்பந்தஞ் செய்வதையே "சாதி" என்கிற பெயரால் தடுக்கிற இந்தச் சமூகம், இனம்,மதம், மொழி எல்லாவற்றிலுமே வேறுபட்ட ஒரு பெண்ணை அவன் மணப்பதை அனுமதிக்கத் தயாராகியிருக்குமா?"
தான் சிங்களத்தி, அவன் தமிழன் என்று உணர்ந்து, இன உணர்வுபெற்ற நிலாந்தி, சதா ஒருநாள் கண்ணியமாக (நிலாந்தியின் தம்பி தமிழ்த் தூஷண வார்த்தையை அர்த்தம் தெரியாமல் சொன்னான் என்று சதா பெரிதுபடுத்தவில்லை யாகையால்) நடந்து கொண்டதற்காக அவன்மீது மரியாதை கொள்கிறாள்.
பீரிஸ் சொல்கிறார். "இனங்களும் சேர்ந்தால் தான் நல்ல மனித இனம் உருவாக முடியும்,எங்கட இலங்கையிலை, அடுத்த சந்ததியும் அதற்கடுத்த சந்ததிகளும் புதுவலிமையும் திறமையுமுள்ளவர்களாகி எங்கட நாட்டைச் சொர்க்கமாக்க முடியும்" இந்தக்கூற்றை சதா சந்தேகிக்கிறான். அதற்கு ஆனந்தன் விளக்கங் கூறுகிறான். "அப்படியான ஒரு மாற்றத்தை, முழுச் சமூக தேசிய மாற்றமாகவே மிஸ்டர் பீரிஸ் எதிர்பார்த்திருக்க வேணும். ஆனா அந்த முயற்சியைத் தனியத் தான் மட்டும் செய்தால், அது ஒரு பைத்தியக்காரத் தனமாகிவிடும் என்று அவர் நினைத்திருக்க வேணும்"
சதாவும் தந்தையும் உரையாடும் பகுதியும் அலாதி. தந்தை ஓரிடத்தில் கூறுகிறார். "ஊருலகத்தைப் பற்றிக்
50

கே. எஸ். சிவகுமாரன்
கவலைப்படவில்லஎன்று சொல்றது சொல்ல வடிவாயிருக்கும். ஆனா. அந்த ஊருலகத்துக்குள்ளை. ஊருலகத்தோடதான் நாங்கள் வளரவேண்டியிருக்கு"
இனச்சேர்க்கையைப் பற்றியபிரிஸ் "எங்கள் இரத்தங்கள் வெவ்வேறு. அவை கலக்க முடியாது" என்று கூறி சதாவை எச்சரிக்கிறார். ஆனால் ஆனந்தன் அதற்கு விளக்கங் கொடுக்கையில் "பீரிஸ் மாறினதாகச் சொல்ல ஒன்றுமே இல்லை" என்கிறான். நிலாந்தியை மறந்து விடுவதே ஒரே யதார்த்த வழி என்றும் ஆனந்தன் யோசனை கூறுகிறான்.
இறுதியில் நிலாந்தியும் சதாவும் சந்தித்தபொழுது, நிலாந்தி தனது தமையன் லண்டனில் வெள்ளைக்காரி ஒருத்தியை மணந்ததாகச் செய்தி கிடைத்ததிலிருந்து தனது குடும்பம் துன்பத்தில் வாடுவதாகக் கூறி, தன்னை மறந்து விடும்படி சதாவைக் கேட்கிறாள். "என் சுயநலத்திற்காக உங்கள் வாழ்க்கையும் பாழடிக்கிறேன்" என்று கூறுகிறாள்.
இறுதியில் நாவல் என்ன கூறுகிறது? கலாசாரங்கள்
தனித்துவமானவை. செயற்கை ரீதியாக இணைந்து சுவை
யூட்டினாலும், அவை ஒன்றாகா என்ற சாந்தனின் இந்தக்
கருத்து, சிங்கள - தமிழ்ப் பிரச்சினையை அணுகும் மற்றொரு பார்வை.
தினகரன் வாரமஞ்சரி
03-01-1980
51

Page 33
எம். பீ. முகம்மது ஜலீல்
ஒரு வெள்ளைப் பூசிரிக்கிறது
ஒரு கிரேக்க துன்பீற்று நாடகம் எழுப்பக் கூடிய சலனத்தை இந்த நாவலின் இறுதிக்கட்டம் எழுப்புகின்றது. இந்தவிதமான உணர்வை ஒரு நாடகத் தன்மை வாய்ந்த இயல்பான (MELODRAMATIC எனப்படும் அதித நாடகப் பண்பல்ல) முடிவைத் தமிழ் எழுத்துகளில் படிப்பது அபூர்வம். தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் எம். வி. வி. யின் நாவல்களில் இவ்விதமான ஒரு "திகைப்புணர்ச்சியை", மலினப்படுத்தாத கலைப் பண்புடன் காண முடிகிறதுதான் என்றாலும், இது வெகு அபூர்வமாகவே தமிழ் எழுத்துக்களில் படிக்கக்கூடியதாய் இருக்கின்றது.
மு. வரதராசனாரின் நாவல்கள் போன்று இலட்சியப் பாத்திரங்களையும், ஆய்வறிவாளர்களைக் கவரக்கூடியநல்ல சிந்தனைகளையுங் கொண்ட இந்த நாவலுக்கு ஒரு விதமான உணர்ச்சியனுப்வத்தைக் கொடுப்பது,நாயகனின் எதிர்பாராத சாவுதான். அந்தக் கட்டத்தில் அவன் இறப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இலட்சியங்களிலேயே வாழ்ப வனின் முடிவு இவ்வாறுதான் அமையும் என்பது எதிர்பார்த்த தொன்று தான்.
52

கே. எஸ். சிவகுமாரன்
வாசகர்கள் இந்த நாவலைத் தாமே படித்துப் பார்த்தால் தான் இதனை உணர்வார்கள். இந்த நாவல் மிக மிக இலகு வாசிப்புக்குரியது. அதாவது ஜனரஞ்சக எழுத்துக்களை மாத்திரம் விரும்பும் வாசகர்களுக்கு இந்த நாவல் பிடிக்கும். கொஞ்சம் காத்திரமான படைப்புகளை விரும்புபவர்களும், நாவலின் சுவாரஸ்யத்தில் குறை காணார். ஆனால் பாத்திர வார்ப்பிலும் சம்பவக் கோவையிலும் சிறிது முரண்படு நிலைகளை நாவலாசிரியர் (இது இவருடைய கன்னிப்படைப்பு) கொணர்ந்திருப்பாராயின் நாவல் கனம் பெற்றிருக்கும்.
கிழக்கு மாகாண நாவல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏரம்ப மூர்த்தி (அரங்கநாயகி என்ற தழுவல் நாவலை எழுதியவர்) வ. அ.இராசரத்தினம், அருள் சுப்பிரமணியம், வை. அஹமட், ஜோன் ராஜன், எஸ். பொன்னுத்துரை ஆகியோரின் படைப்புக்களே நூல் வடிவில் நான் படித்தவை. வேறு சில என் பார்வைக்குக் கிட்டவில்லை. எம்.பி. முஹம்மது ஜலீலின் இந்த நாவலின் பகைப்புலம் மட்டக்களப்பும் கல்முனையுமாகும். ஆனால் இதனை ஒரு பிரதேசநாவலெனக் கொள்ள முடியாது. அப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சமூகச் சூழலில் சித்திரிப்பதாகவோ, அப்பிரதேச வட்டார மொழியில் பாத்திரங்கள் பேசுவதாகவோ நாவல் எழுதப்படவில்லை. உண்மையில் ஒரிரு தனி மனிதர்களின் வடிவங்களையும் எண்ணங்களையும் சித்திரிப்பதாகவே நாவல் அமைந்துள்ளது. அதற்கேற்பச் சம்பவங்களும் புகுத்தப்பட்டுள்ளன. ஆனால் அச்சம்பவங்கள் நம்ப முடியாதவை என்று கூறுவதற்கில்லை.
வெறும் அறிவின் துணை கொண்டு வாழ்க்கையை நடத்திவிட முடியாது என்பதே நாவல் மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் தொனி. இந்தத் தொனிப்பொருள் நாவலாசிரியரின் நோக்கமாக இருந்ததா என்பது அவருக்கே தெரிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் கஸ்ஸாலி என்ற கதாநாயகன் முழுக்க
53

Page 34
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
முழுக்க அறிவால் உலகின் நியாய தர்மங்களை நியாயப்படுத்தப் பார்க்கிறான். நியாய தருமங்களே உலகம் என்றும் நினைத்துச் செயல்படுகிறான். அவன் கணிப்பில் தவறுண்டு என்பதை உணர்ந்ததும் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. இந்த அதிர்ச்சிக்கு அந்த "வெள்ளை மனது" தயாராக இருக்கவில்லை. விளைவு-மாரடைப்பு. கதாநாயகன் சாகாமல் தப்பியிருப்பானாயின் நாவலைப் பத்தோடு பதினொன்று என்றுதான் நாம் கணிக்க வேண்டியிருக்கும்.
இருந்தபோதிலும்,நாவலில் கடைசிப்பந்தியாக ஆசிரியர் எழுதியிருப்பது நாவல் எழுப்பும் ஒரு சோக உணர்வைச் சிதற அடித்து விடுகிறது.
"மனிதன் என்றும் இருக்கும் பிரமிட் கோபுரமல்ல, அவன் காலவெள்ளத்தில் அழிந்துபோகும் வெறும் களிமண்வீட்டைப் போன்றவன் என்பது உண்மைதான். ஆனால் அவனுடைய செயல்கள் பிரமிட் கோபுரம் போல் என்றும் நிலைக்கக்கூடியன என்பதும் உண்மையே" என்றுநாவலாசிரியர் எழுதுவதுபடிக்க நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் நாவலின் சுவையை இந்த வியாக்கியானம் கெடுத்துவிடுகிறது. ஒரு நல்ல பிறமொழிப் படத்தைப் பாருங்கள். இறுதிக் கட்டத்தில் வியாக்கியானம் இல்லாமல் பார்ப்பவர் சிந்தனைக்கும் அனுபவத்திற்கும் விட்டு விடுகிறார்கள். இதுவே கலைநயம்,
அதேவேளையில் ஆசிரியரின்நல்ல கருத்துக்களை நாம் புறக்கணிக்க முடியாது. நல்ல வேளையாக அவர் நாவலில் கொண்டு வந்து செருகாமல், "எண்ணம்" என்ற தலைப்பில் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. ஓர் உதாரணம்:- "மனிதனைநல்லவன்-கெட்டவன் என்று வகுப்பது அவனுடைய உள்ளந்தான். அந்த எண்ணங்களும் உணர்வுகளுமே மனிதனின் குணத்தை உருவாக்குகின்றன. அந்தக் குணத்தின்படி செயல் அமைகின்றது. உள்ளமும் அதன்
54

கே. எஸ். சிவகுமாரன்
வெளிப்பாடான செயலும் நல்லதாயிருந்தால் அவனைச்சரியான பாதையில் நெறிப்படுத்தி வாழ்க்கையை அழகுபடுத்துகிறது. அவனுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை விளைவிக்கின்றது. கெட்டதாக இருந்தால் பிழையான பாதையில் செல்ல வைத்து வாழ்க்கையை அவலட்சணமாக்குகிறது. அவனுக்கும் மற்றவர்களுக்கும் தீமையை விளைவிக்கின்றது."
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய மறைந்த மூத்த எழுத்தாளர், இளங்கீரன் "தனித்துவமான அபூர்வமனிதர்களை ஒதுக்கி விடாமல் அவர்களை நாவலில் கொண்டு வருவதும் ஏற்கத்தக்கதே. இன்னும் சொல்லப்போனால், சமுதாயத்தின் ஆத்மாவாக, அதன் மனச் சாட்சியாக அதன் உன்னதமான உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருப்பவர்களும் இந்தச் சிலரில்தான் இருக்கிறார்கள். இந்த அபூர்வ மனிதர்களை - அதுவும் நாவலின் உள்ளடக்கத்தையும், அதன் நோக்கத் தையும் கருதிப் பாத்திரங்களாகப் படைப்பதும் இலக்கியத்தின் சிருஷ்டித் தத்துவத்துக்கு உட்பட்டதுதான்" என்று கூறியிருப்பது விமர்சன முதிர்ச்சிக்குச் சான்றாக இருக்கிறது.
எம். பி. முஹம்மது ஜலீல் என்ற புதிய நாவலாசிரியர் தொடர்ந்தும் நல்ல நாவல்களை எழுதுவார் என்ற நம்பிக்கையை இந்த முதல் நாவலே காட்டி விடுகிறது. ஆசிரியரின் கல்வியறிவும், அனுபவமும் அவருக்குப் பெருந்துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
யாழ்ப்பாணமுஸ்லிம், கண்டி முஸ்லிம், கிறிஸ்தவநேர்ஸ், இந்துக் காதலி, கல்முனை மனைவி, அம்பாறை வட்டாரப் பேராசிரியர் - இப்படிப் பல தகைமைகளை ஒன்று சேர்த்து
நாவல் படைத்திருக்கும் ஜலீல் அவதானிப்புக்குரியவர்.
தினகரன் வாரமஞ்சரி 13-01-1980
55

Page 35
புலோலியூர் க. சதாசிவம்
நாணயம்
புலோலியூர் க. சதாசிவம் எழுதியநாணயம் என்றநாவலில் பல பாத்திரங்கள் வருகின்றன. பல சம்பவங்கள் இடம் பெறுகின்றன. பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. நாணயம் என்ற சொல்லுக்கு விளக்கங்கள் தரப்படுகின்றன. ஆனால் நாவலின் மையக்கருத்து என்ன? "வினை விதைத் தவன் வினை அறுப்பான்" என்ற முதுமொழியின் விரிவுரை எனலாம்.
வட்டிக்கடை வைத்திலிங்கம் என்பவர் அடாது செய்து வெற்றிப் பெருமிதத்தில் வாழ்ந்து கடைசியில் சீரழிந்தவர். நாவல் அவருடைய உயர்வையும் தாழ்வையுந்தான் மையப் பொருளாகக் கொண்டு விளங்குகிறதோ என்றால் அது வுமில்லை. வைத்திலிங்கத்தின் மகன் இராமலிங்கத்தின் ஊதாரித்தனம், ஊழல்கள். சண்டித்தனம், பழிவாங்கும் முயற்சியில் வன்செயலில் ஈடுபடல் ஆகியனவும் நாவலில் வருகின்றன. வைத்திலிங்கத்தின் மகள் மங்களத்தின் பகட்டு வாழ்வு, பணத்தின் மூலம் விரும்பாக் கணவனை அடிமையாய் வைத்திருக்க முற்படும் மனோபாவம், கணவனைத் துச்சமாக மதித்தல், பழையகாதலனுடன் ஓடிவிடல் போன்ற சம்பவங்கள் நாவலில் வருகின்றன.
56

கே. எஸ். சிவகுமாரன்
வைத்திலிங்கம் தன்னுடைய வீழ்ச்சிக்குத் தானே காரணமாக அமைந்தார் என்று கூறுவதிலும் பார்க்க அவருடைய பிள்ளைகளே நாசமாகிப் போவதுமல்லாமல், அவருடைய அந்திமக் காலத்தின் போதும் அவர்கள் தந்தையுடன் இருக்கவில்லை என்பதும் நாவலில் வலியுறுத்தப் படுகின்றது. வைத்திலிங்கம் யாருக்குத் தீங்கு செய்தாரோ (அதாவது தமது சொந்தத் தமையனாரான பொன்னையா வுக்கு) அவரே, வைத்திலிங்கத்தின் ஈமக்கிரியைகளை நடத்த வேண்டியிருந்தது. ஒரு முரண்நிகழ்வுதான். எனவே இந்த நாவலில் யார் கதாநாயகன் என்பது தெளிவாகவில்லை. ஆயினும் நாவலின் பெரும்பகுதி பொன்னையா வீட்டில் நடப்பவற்றையே கூறுவதனாலும் "நாணயம்" என்ற சொல்லுக்கு இலக்கணமாக அவர் வருவதனாலும் பகையை மறந்து தன் தம்பியின் இறப்பின்போது அவரின் பூதவுடலுக்குக் கொள்ளி வைக்க முன் வருவதனாலும் பொன்னையாவை நாணயஸ் தராக ஒருவாறு கருத முடிகின்றது.
இந்த நாவலின்முற்பகுதியும்பிற்பகுதியும் திருமண, மரண வீடுகளில் நடைபெறும் கிரியைகளை அச்சொட் டாக விபரிக்கின்றன. நாவலாசிரியர் புலோலியூர் க. சதாசிவம் இவ்விடங்களில் ஒரு நிருபராக நின்று சொல்ல வேண்டிய தெல்லாவற்றையும் சொல்லித்தீர்த்துவிடுகின்றார். செ. கணேச லிங்கனின் சடங்கு போன்றநாவல்களில்யாழ்ப்பாணத்தமிழரின் சடங்குகள் பற்றிய விபரங்கள் ஏற்கெனவே விபரிக்கப் பட்டுள்ளன என்பதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும். எனவே நாவலாசிரியர் க. சதாசிவத்தின் வருணனைகள், தாம் எடுத்துக்கொண்ட கதைக்கு அத்தியாவசியந்தானா அல்லது இடைச் செருகலா என்று நாம் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் பொழுது ஆடம்பரத்தையும், அனாதையான நிலை யையும், இந்துமதத்தர்மங்களின் அர்த்தத்தையும், அவற்றிற்கு முரணான முறையில் அதர்மச் செயற்பாடுகள் நடைபெறு
57

Page 36
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
வதையும் காட்ட, நாவலில் வரும் இந்த முன். பின், விவரணத் தொகுப்புகள் உதவுகின்றன எனலாம்.
... .
வைத்திலிங்கத்தின் மருமகன் டொக்டர் ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறார் என்றபிரமையை ஆரம்பத்தில் ஊட்டும் நாவலாசிரியர், சப்பென்று அப்பாத்திரத்தை ஆக்கி விடு கின்றார். உளவியல் வைத்தியர் சமூகக் காரணங்களை ஆராய்ந்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தில் ஒரு புதிய பாத்திரமாக அறிமுகமாகப் போகிறார் என்று வாசகர்களாகிய நாம் காத்திருக்கிறோம். ஆனால் நாம் அடைவது ஏமாற்றமே. பணந்தான் எல்லாத் தீங்குகளுக்கும் காரணம் என்ற சாதாரணமாக யாவரும் அறிந்த உண்மைக்குத்தான் அவரும் வருகின்றார். அது மாத்திரமல்ல, பெரும்பாலான ஏனைய பாத்திரங்கள் போலவே, டொக்டரின் பாத்திர வார்ப்பும் நமது மனதில் பதியத்தக்கதாக அமையவில்லை.
நாவலின் பிற்பகுதியில் அரசியல் நிறைய வருகிறது. ஈழத்துநாவல்களில் அரசியல் வந்தே தீரவேண்டும் என்ற ஒரு நியதிபோலும், நாவலாசிரியர் புலோலியூர் க. சதாசிவம் தமது இந்த நாவலை ஒரு அரசியல் விழிப்பை ஏற்படுத்தும் நாவலாகக் கருதி எழுத முற்பட்டாரோ என்று சந்தேகிக்க வேண்டி யிருக்கிறது.
நான் முன்னர் குறிப்பிட்டது போல, நாவலில் ஒரு மயக்கம் இருக்கிறது. எது மையம், எவை முக்கியமான பாத்திரங்கள், எவை எடுத்துக் கொண்ட பொருளுடன் இணைந்து செல்பவை போன்ற விபரங்களைத் தேர்ந்தெடுத்து இறுக்கமாக நாவலை ஆசிரியர் எழுதியிருக்கலாம்.
புலோலியூர் க. சதாசிவம் சில நல்ல கதைகளை எழுதி யிருக்கிறார். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறார்.இவரிடம் அபரிமிதமான திறமை, கலைஞனின்
58

கே. எஸ். சிவகுமாரண்
உள்ளம், சமூகப்பிரக்ஞை, துருவும் மனப்பாங்கு ஆகிய யாவும் உறைந்துள்ளன. ஆனால் நாணயம் என்ற இந்த நாவலைப் பொறுத்த மட்டில் ஒரு ஆரம்ப எழுத்தாளரின் கன்னிப் படைப்பாக இருக்கிறதேயன்றி. முதிர்ச்சி, புதிய அனுபவம் அல்லது அறிவைப்பரிவர்த்தனை செய்யும் படைப்புஆகநாவல் இல்லை. அதேசமயம் நாவலில் தனிச்சிறப்புகள் இல்லை என்று கூற முடியாதிருக்கிறது.
நாணயம் என்றஇந்தநாவலின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, வடமராட்சிப் பகுதி மக்களின் மொழியைக் கலைத்துவமாகக் கொண்டு வந்திருப்பதைக் குறிப்பிடலாம். ஆனால் அது மாத்திரம் நாவலின் முழுமைக்கு உதவப் போவதில்லை. நாவலின் பண்புகளில் மொழிநடையும், வருணனைத்திறனும் சிலவாகையால்,முழுப்பயன்பாட்டுக்கும்இப்பண்புகள்பங்களிக் கின்றனவேயன்றி இப்பண்புகளில் மாத்திரமே நாவலாகா.
நாவல் மனிதனைப் பற்றிச் சொல்வதனால் மாத்திரம் அல்லது அவன் வாழும் ஊர், சஞ்சாரம் செய்யும் இடங்கள், சூழல், கலாசாரம் ஆகியவற்றுடன், வடமராட்சியின் குணவிஷேசங்களைக் கூறுவதனால் மாத்திரம் நாணயம முக்கியமானபடைப்பு என்று கூறமுடியாது. எல்லா அம்சங்களும் தேவைகருதிப் பொருந்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாவல் மூலம் ஒரு தரிசனம் படிப்பவருக்குத் தெரிய வேண்டும்.
1970களில் சமூக தேவையையொட்டி சில நாவல்கள் வரவேற்பைப் பெற்றன, ஊக்குவிக்கப்பட்டன. தட்டிக் கொடுக் கப்பட்டனதான். ஆனால் காலத்தின் போக்கிற்கேற்ப கலை இலக்கியங்களின் போக்கும் மாறுபடுகின்றன என்பதால், வெறும் சாதாரண அல்லது ஏற்கெனவே சித்திரிக்கப்பட்டுள்ள சமூகக் கதைகளை மீண்டும் மீண்டும் எழுதுவது அவ்வளவு பயனைத் தராது. அந்த விதத்திலேயே, அநேகமாக எல்லா நாவல்களையும் படிப்பவனாகிய என் போன்ற வாசகனுக்கு
59

Page 37
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
நாணயம் புதிய தரிசனத்தை அல்லது அனுபவத்தைத் தரவில்லை என்று கூற முடிகின்றது. அதேசமயத்தில் ஈழத்து நாவல்களையே படித்துப் பார்க்காத வாசகர்கள் நம்மிடையே இருப்பார்களாயின் நாணயம் போன்ற நாவல்களை அவர்கள் படிக்காமலிருப்பது அவர்களுக்குத்தான் இழப்பாக அமையும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
சதாசிவத்தின் நாணயம் என் போன்ற வாசகனுக்குப் பூரண திருப்தி தரவில்லை என்பது ஒர் அம்சமே. அதனால் நாவல் ஒரு தோல்வி முயற்சி என்றாகாது. நாணயம் என்ற இந்த நாவலில் வரும் வருணனைகளும், விவரணைகளும், உரையாடல்களும், ஈழத்துவாழ்வின் சிலபகுதிகளைநமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. பல தகவல்கள் நமக்குத் தெரிய வருகின்றன.நாவலாசிரியரின் அவதானிப்புக்களும், கிராமியப் பண்பாட்டில் அவர் காலூன்றி நிற்பதற்கான எடுத்துக் காட்டுக்களும் அவரின் நேர்மையையும், முயற்சியையும் விளக்குகின்றன. சதாசிவத்தின் நோக்கம் நன்று. முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் ஆகக் குறைந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பாவது இந்த நாவல் வெளியாகியிருக்க வேண்டும்.
இலங்கை வானொலி புத்தக விமர்சனம்
31-03-1981
60

செங்கை ஆழியான்
சில நாவல்கள்
சமூகப் பிரக்ஞையும் பொறுப்பும் இருப்பதனால் காத்திரமான விஷயங்களை எளிய முறையில் இவரால் கூறி விட முடிகிறது.
செங்கை ஆழியான் ஈழத்து எழுத்துலகில் மிகப் பிரபல்யமான பெயர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சிறுகதை,நாவல், நாடகம், கட்டுரை, பாடநூல்கள் யாவும் எழுதுபவர். காரியாதிகாரியாக பணியாற்றி அரசாங்க அதிபராகப் பதவி வகித்தவர். சாகித்திய மண்டலப் பரிசு உட்படப் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
நந்திக்கடல், ஆச்சி பயணம் போகிறாள். அலைகடல்தான் ஓயாதோ, சித்திரா பெளர்ணமி, முறைத்து ஒற்றைப் பனை, இதயமே அமைதி கொள். கொத்தியின் காதல், வாடைக் காற்று, பிரளயம், செங்கை ஆழியான் கதைகள், இரவின் முடிவு, காட்டாறு, கங்கைக் கரை ஓரம், யானை, கனவுகள் கற்பனைகள் ஆசைகள், ஒரு மைய வட்டங்கள், காற்றில் கலக்கும் பெருமுச்சுக்கள், அக்கினிக் குஞ்சு, நடந்தாய் வாழி வழுக்கியாறு, கிடுகு வேலி ஆகியன நூல் வடிவில் வந்த புத்தகங்களில் நான் படித்தவை. இவருடைய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட வாடைக் காற்று திரைப்படம், ஈழத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில்
61

Page 38
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
வெற்றிகரமாக அமைந்த ஒரு சிலவற்றுள் ஒன்று. காட்டாறு நாவல் என்னை பெரிதும் கவர்ந்த படைப்பு.
நடந்தாய் வாழி வழுக்கியாறு. யொகாறா, அக்கினிக் குஞ்சு, கிடுகு வேலி, ஒரு மைய வட்டங்கள் ஆகிய நூல்களை ஒரே சீராய் அண்மையில்படிக்க நேர்ந்தது. அதன்விளைவாக எனது மனப் பதிவுகளை. இப்பத்தியிலே எழுத விரும்புகிறேன்.
நடந்தாய் வாழி வழுக்கியாறு
சிவப்பு நிறக் காளை மாடு ஒன்றைத் தேடிக் கிராமத்து முதியவர்களும், அச்சமூக அமைப்பின் வகைப் பிரதிநிதி களுமான சிலரும் நாகரிக இளைஞர் ஒருவனும் அளவெட்டி யிலிருந்து வழுக்கியாறு செல்லும் பாதையூடாக மானிப்பாய் வரை மேற்கொள்ளும் பயணமும், தேடல் முயற்சியும், சுற்றுப் பிரகார அவதானிப்புகளும், ஐதீகக் கதைகளும் இயல்பான பிராந்திய மொழிஉரையாடலும் இடம்பெறும் புகைப்படக்கதை இது. விறுவிறுப்புக் குன்றாமல், மனித இயல்பு அவதானிப்பு களைத் தெரிவித்து ஆசிரியர் விபரிக்கிறார். ரூபவாஹினியினர் தொலைக்காட்சி நாடகமாக இதனைத் தயாரிக்கலாமே! யாழ்ப்பாணக் குடா நாட்டின் ஒரே ஒரு ஆறு பற்றிய படப் பிடிப்பாகவும் இது ஆக்கத்திற்கு வகை செய்கிறது. புத்தகம் ஒரு சிரித்திரன் பிரசுரம், சுந்தர் முன்னுரை எழுதி இருக்கிறார்.
அக்கினிக் குஞ்சு
இந்தப் புத்தகத்திலே இரண்டு குறுநாவல்கள் அடங்கி யுள்ளன. யாழ். இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது.
மறைந்த இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள்
முன்னுரை எழுதி இருக்கிறார். 1976இல் எழுதப்பட்ட
இம்முன்னுரையில், செங்கை ஆழியானின் முன்னைய படைப்பு
கள்பற்றியசில குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.யாழ்.இலக்கிய
வட்டத்தலைவர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களின் தகவலின்
62

கே. எஸ். சிவகுமாரன்
படி யாழ், இலக்கிய வட்டம் இதுவரை 29 வெளியீடுகளைக் கொண்டுவந்துள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க பணி.பின் அட்டையில் செங்கை ஆழியான் பற்றியும் அவருடைய காட்டாறுநாவல்பற்றியும் ஆங்கிலத்தில் என்னால் எழுதப்பட்ட ஒரு குறிப்புக் காணப்படுகிறது. நன்றி
யொகாறா
இத்தொகுதியிலே, முதல் குறுநாவல் யொகாறா'
கிழக்கிலங்கையின் வடக்குப்பகுதியில்வதியும் முஸ்லிம் களிடையே வழங்கும் பேச்சுத் தமிழில், முஸ்லிம் பாத்திரங் களினுடாக பெண்மை - தாய்மை பண்புகளை எடுத்தோதும் மெய்சிலிர்க்கும் கதையை அனாயாசமாக எழுதி இருக்கிறார். வீரமும், கற்பும், தாய்மையும், தியாகமும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமா சொந்தம்? தமிழ் பேசும் இஸ்லாமிய நங்கையருக்கும் இவை அணிகலன்கள் தான் என்று கூற வைக்கிறார் செங்கை ஆழியான். முஸ்லிம் மக்களிடையேயும் கயவர்கள் இருப்பதை ஆசிரியர் காட்டுகிறார். கிராமியச் சூழல்களையும், மனித தொடர்புகளையும் உன்னிப்பாக அவதானித்து எழுத்தில் வடிக்கும் சாமர்த்தியம் செங்கை ஆழியானுக்கு கை வந்து விடுகிறது. பாராட்டுக்கள்.
அக்கினிக் குஞ்சு - இந்தத் தொகுதியில் இடம்பெறும் இரண்டாவது குறுநாவல். துணிவுடன் இன்றைய யாழ். இளைஞரின் பரிதாப நிலையைப் படம் பிடித்து, ஈற்றில் தனது கருத்தை வலியுறுத்தி எழுதியமைக்காக ஆசிரியரை மெச்ச வேண்டும். இக்குறுநாவலிலே இரண்டு பகுதிகளை இனங் காணலாம். முற்பகுதியில் இளைஞரின் கண்ணோக்கில், இன்று எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டுகளும் அவதிகளும், வதைகளும் புலப்படுத்தப்படுகின்றன. பிற்பகுதியிலே நமது இளைஞர்கள் ஏன் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்
63

Page 39
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
என்றாலும் அவை தவறானவை. கண்டிக்கத்தக்கவை. பெரும் பயனை ஏற்படுத்தப்போவதில்லை என்றும், ஆரம்பநடவடிக்கை யாக நமது இனத்துக்குள்ளே இருக்கும் சமநிலையற்ற தன்மையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
நாவலாசிரியர் எடுத்துக்கூறும் நியாயங்களைச் சிலர் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். ஆனால் வன்செயல், ஆயுதப் போராட்டம், பழிக்குப் பழி வதை போன்றவை எல்லாம் இன உணர்வுக்கு அப்பாற்பட்ட யதார்த்தச் சூழல்களினால் பயனற்றுப் போய்விடுகின்றன என்பதை நமது இளைஞர்களும் கருத்திற் கொண்டு புத்திசாதுரியமாக நடந்து கொண்டால், இச் சுதந்திர பூமியிலே சாதிக்க முடியாததுதான் எது? இளம் கன்று பயமறியாதுதான். வன்செயல் வன்செயலுக்குத் தூண்டுமாயினும் தொடர்ந்து நாமும் வன்செயலில் ஈடுபடுவது பேரழிவுக்கு வகை செய்யுமன்றி, ஆக்கத்துக்கு வகை செய்யாது.
ரஜனி மலர் 1, இதழ் 1 வெளியீடாக வந்திருப்பது கிடுகு வேலி. இது ஈழநாடு புதினத் தாளில் ஏற்கனவே பிரசுரமானது. படித்திருக்காதவர்களுக்கு இப்பொழுது படித்துச் சுவைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ரஜனி வெளியீட்டில், டாக்டர் சுகந்தன் பதில்கள், விளம்பரங்கள் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. ந. பாலேஸ்வரி என்ற திருகோணமலை பெண் எழுத்தாளரின் பிராயச்சித்தம் என்ற புதிய நாவல் அடுத்து வெளிவரவிருக்கிறது.
நமது எழுத்தாளர்களுக்கு கை கொடுக்க முன்வந்த ரஜனி வெளியீட்டாளர் ஜே. எம். ஆர். குகநாதனுக்கு நன்றி!
இனி கிடுகுவேலிக்கு வருவோம்.
ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த யாழ்ப்பாணக்
64

- கே. எஸ். சிவகுமாரன்
கலாசாரம், புறக்காரணங்களால் எவ்வாறு மாறுபடுகின்றது என்றும், மனித உறவுகளில் பணவசதி எப்படி மாற்றத்தைக் கொண்ட வருகிறது என்றும். கணவன் - மனைவி உறவுகள் எவ்வாறு பூசி மெழுகலின்றி அமைவதை நேரிடையான வார்த்தைகளில் தனக்கே உரித்தான நடையிலே செங்கை ஆழியான் இந்தக் குறுநாவலில் காட்டுகிறார்.
கிடுகுவேலிகளுக்குப் பின்னால் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு உழைப்பின் பயன்பாடு, குற்றமற்ற இளைஞரும் மொழியறியா ஆயுதப் படையினரிடம் சந்தேகத்துக்குள்ளாகி வதையுறல், சீதனம் வாங்கும் சமுதாயத்திலே முற்போக்காக நடந்து கொள்ளும் பழையவரும் புதியவரும் பழகும் விதம் என்பன செங்கை ஆழியான் காட்டும் கோலங்கள்.
இக்கதையில் வரும் நிர்மலாவின் பாத்திர உருவாக்கம் மனதில் பதிக்கிறது. சண்முகம் நடந்து கொள்ளும் விதமும் இயல்பாக இருக்கிறது. சண்முகத்தின் தாயும், தங்கை கிளியும் நடக்கும் விதம் பண நாயக உலகத்தின் மனிதப் பண்புகளும் மாற்றத்துக்கு உட்பட்டவை என்பதைக் காட்டுகின்றன. சில செய்திகளை நாவலாசிரியர் கூறாமற் கூறுவது, அவருடைய முதிர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஒரு மைய வட்டங்கள்
சென்னை என்.சி.பி. வெளியீடு இது.இந்தப்புத்தகத்திலே செய்கை ஆழியான் தமது படைப்புகளைத் தாமே விமர்சனம் செய்கிறார்.ஒரு மைய வட்டங்கள் பற்றி எழுதுகையில், "ஈழத்தில் இரு இனமக்கள் ஒன்றாக வாழ்கின்ற காட்டுக் கிராமம் ஒன்றின் கதையைச் சித்திரிக்கிறது. சிங்களமக்களும்,தமிழ்மக்களும் ஈழத்தை பொறுத்த மட்டில் ஒரு மைய வட்டங்களே. பெரிய வட்டம் தன்னும் சிறிய வட்டத்தை அமுக்கிவிட முயல சிறிய
65

Page 40
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
வட்டம் தனித்துவமாக விளங்க முயல்கின்ற இன்றைய அரசியல் சூழ்நிலையில், தேசிய ஒருமைப்பாட்டைப் பேணி வாழ்கின்ற ஒரு அமைதியான கிராமத்து மக்களின் மன விரிசல்களையும், உணர்வுகளையும் வாழ்க்கைப் போராட்டங் களையும் இந்த நாவல் பேசுகின்றது. புதிய களங்களையும் பகைப்புலங்களையும் மக்களிடம் அறிமுகம் செய்துவைப்பதும் ஏற்றத் தாழ்வற்ற அதி உன்னத சமூகத்தை உருவாக்க முயல் வதும் என்நாவல்களின் நோக்கங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாவல், கூலித் தொழிலாள மக்கள் பற்றிய கதை. சிங்களவரும், தமிழரும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழும் சிங்களக் கிராமத்தில் (சிங்களக் குடியேற்றம் காரணமாக சிங்களவர் அதிக எண்ணிக்கையுடையவர்களாகக் காணப்படும் கிராமத்தில்) நடைபெறும் கதை. சிங்களவர் மத்தியில் இன வெறியற்றவர்கள் இருப்பதையும், சிங்கள மொழியில் சரளமாகப் பேசி, சிங்கள மக்களுடன் மனிதர் களாகப் பழகியும், மதிக்கப்பட்டு வரும் தமிழர்களின் வீரத்தையும், மனிதாபிமானத்தையும் கூறும் கதை. காம உணர்வு மிகையானவர்கள் படிக்கும் பாடமும் கூறப்படுகிறது. ஆசிரியரின் வருணனைகளும், காதற் காட்சிச் சித்திரிப்பும் சுவையாக இருக்கின்றன. வடபகுதி தமிழ் மக்களின் மனித உறவுகளில் புதிய காட்சியை ஆசிரியர் காட்டுகிறார்.
கூட்டுமொத்தமாகப்பார்த்தால் செங்கை ஆழியான் இன உறவுகள் சம்பந்தமாக யதார்த்த நோக்கைக் கொண்டிருக் கிறார் என்றே என்னளவில் கூறுவேன். அதனால் இவருடைய எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கின்றன.
வீரகேசரி வாரவெளியீடு
இது வீரகேசரி வாரவெளியீட்டில் நான் வாரவாரம் எழுதிய "சாளரக் காட்சிகள்" என்ற பத்தியில் இடம் பெற்றது. இடம் பெற்ற திகதியைக் குறிக்க மறந்து விட்டேன்.
66

கே. டானியல்
Ш65ғlрf
நமது நாட்டுச் சிரேஷ்ட எழுத்தாளர்களில் ஒருவர் கே. டானியல், நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். நாவலாசிரியராகவே இவர் தனிச் சிறப்படைகிறார். இரு பாகங்களைக் கொண்ட இவருடைய பஞ்சமர் என்ற நாவல் குறிப்பிடத் தக்கதொன்று. எழுபது அதிகாரங்களைக் கொண்ட இந்த நீண்ட நாவலைப் படிக்கும் பொழுது பிரதாப முதலியார் சரித்திரம், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதியநாவல்கள் ஆகியவற்றைத்தனித்தனியாகப் படிக்கும் பொழுது ஏற்படக் கூடிய அனுபவமே எனக்கு ஏற்படுகிறது. அதாவது டொக்குமென்ட்ரி" (மெய்நிகழ்வுமட்டும் காட்டுகின்ற பாணியும்) சஸ்பென்ஸ்(அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கும் பண்பு) அம்சமும் பஞ்சமர் நாவலில் விரவியிருக்கக் கண்டேன்.இந்தநாவல் என்ற எழுத்துக் கொத்தை வெளியிட்டிருப்பவர் ஜி.எல்.எம்.ப்ரகாஷ். பாலம் என்ற சிற்றேட்டை வெளியிட்டவர். ஈழத்து இலக்கியத் துறையில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகளைக் கவனித்து வருபவர்களுள் ஒருவர்.
நமது நாட்டிலே அறுபதுகளின் கடைக்கூறிலே இடம் பெற்றிருக்கக்கூடிய சில சம்பவங்களை அடியொற்றி
67

Page 41
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
எழுதப்பட்டுள்ளது இந்த நாவல். யாழ்ப்பாணக் குடாநாட்டிலே நிகழக்கூடிய சாதிப் பிரச்சினை சம்பந்தமான துர்ப்பாக்கிய சம்பவங்கள், இந்நாவலில் இடம் பெறும் சம்பவங்கள் எனலாம்.
சாதித்துவேஷம் தலைவிரித்தாடும் ஒரு சமூகத்திலே வர்க்க நலன் பேணும் பண்பு மேலோங்குவது அப்படியொன்றும் விசித்திரமானதல்ல. நாவலாசிரியர் டானியல், இந்தச் சாதி வேறுபாட்டையும், வர்க்க வேறுபாட்டையும் தொடர்பு படுத்தி இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை என்ற கருத்தைக் கொண்டவர் என்பது நாவலைப் படிக்கும் எவருக்கும் தெரிய 6)/(bLD.
அந்த விதத்தில் பஞ்சமர் ஒரு வரவேற்கத்தக்க நாவல் என்றாகிறது. இருபதாம் நூற்றாண்டின் கடைக்கூறில் வாழும் ஓர் உலக மனிதன், நிச்சயமாக அழிந்தொழியும் நிலவுடமை அமைப்பையோதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதையோ வரவேற்கான். மாறாக இந்த அநீதி களுக்கு எதிராகக் குரல் கொடுப்பான்.
எனவே பஞ்சமர் மனித இனத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லத் தூண்டக்கூடிய ஒரு முற்போக்கு நாவல் என்ற முறையில், இந்த நாவலின் தொனிப் பொருளை நான் கொள்கை அளவில் வரவேற்கிறேன். அதேசமயம், நாவலாசிரியர் தமது கருத்தை வலியுறுத்த வேண்டிக் கையாளும் பிரச்சினை தீர்வுக்கான மார்க்கத்தை நான் ஆதரிக்கவில்லை. அதாவது வதைகளும், வன்செயல்களும் அவை எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் கண்டிக்கப் படத்தக்கவை, வெறுக்கப்படத் தக்கவை என்பது என் அபிப்பிராயம்.
68

கே. எஸ். சிவகுமாரன்
"எல்லோருக்கும் எல்லாச் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்தல்" என்பதைக் கொள்கையளவில் நாம் ஏற்றுக் கொண்டாலும் நடைமுறையில் இது சாத்தியமாகின்றதா என்றும் பார்க்க வேண்டும். அதேசமயம் தனிமனித சுதந்திரம் பேணப்படவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. குறிப்பாகச் சிந்தனைச் சுதந்திரம் தனிமனித அடிப்படையில் செயற்பட அனுமதித்தல் வேண்டும். "எல்லாச் சுதந்திரம்" என்று நாவலாசிரியர் கூறும்பொழுது, தனிமனித சுதந்திரத்தையும் அவற்றில் அடக்குகிறார் என்றே கொள்ளவேண்டியிருந்தாலும், அவர் எழுதியமுன்னுரையிலிருந்து இதனைத் தெளிவாக அறிய முடியவில்லை.
இன்னொன்று:இலக்கியத்துக்கு இலக்கிய அளவுகோல் என்ற வரம்புக்குள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் இலக்கியமோ, கலையோ அதன் கலாசார, சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியில் வைத்தே மதிப்பிடப் படுகிறது. எனவே இந்தப் பின்னணியை மறைத்து விட்டு வெறுமனே இலக்கியத்திற்கு இலக்கிய அளவுகோல்' என்ற அடிப்படையில் எந்தவொருநவின விமர்சகனுமே ஒரு படைப்பை அணுக DLLIT6õ.
அதேசமயம் ஒரு படைப்பாளி தனது கருத்தை அல்லது உணர்வை அல்லது அனுபவத்தை வெளிப்படுத்த எடுத்துக் கொள்ளும் ஓர் இலக்கிய ஊடகம், குறைந்த பட்சமாகுதல் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அம்சங்களைத் தழுவியிருக்க வேண்டும்.
இந்த இடத்தில்தான். உள்ளடக்கம் உருவத்தைத் தீர்மானிக்கிறது என்ற கூற்று பொருத்தமாக அமைகின்றது.
ஒரு படைப்பாளி தனது உள்ளடக்கத்துக்குச் சிறந்த
69

Page 42
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
முறையில் வடிவங் கொடுக்கத் தக்க வாகனம் நாவல்தான் என்று கருதினால், அவன் அந்த நாவல் என்ற இலக்கிய வகையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிப் பொருள்களை அனுசரித்தே பெரும்பாலும் எழுதுதல் வேண்டும். இதனால் அவன் பரிசோதனையாக மீறவேண்டிய இடங்களில் மீறக் கூடாது என்றாகாது.
இறுதி ஆய்வில், எழுத்தாளன் எந்த விதமான இலக்கிய வகையைப் பயன்படுத்தினாலும், அது வாசகனுக்கு ஒரு பயன்பாடும் நிறைவும் ஏற்பட உதவ வேண்டும். அவ்வாறில்லா விட்டால் எழுத்தாளனின் நோக்கம்நிறைவேறவில்லை என்றே பெறப்படும்.
இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது டானியலின் பஞ்சமர், சமீபகால தமிழ்நாவல்வகையில் சேர்க்கப்படக்கூடிய ஒரு நாவல் எனலாம்.
இந்தவிதமான அரசியல் சார்ந்த உடனிகழ்கால நாவல்களுக்கு முன்னோடியாக நமது நாட்டு எழுத்தாளர் செ. கணேசலிங்கனே இருக்கிறார். இவருடைய முதல் ஐந்து நாவல்களும் தமிழ்நாட்டிலேயும். ஈழத்திலும் அவைபோன்ற "கொமிட்டட்" (கட்டுப்பாடுடைய) அரசியல் நாவல்கள் எழுதப்படத் துரண்டுகோலாய் அமைந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
செ. கணேசலிங்கன். கே. டானியல், யோ. பெனடிக்ட் பாலன், சி. சுதந்திரராஜா, எஸ். அகஸ்தியர், வை. அஹமட் போன்றோரின் முயற்சிகள் ஏதோவொருவிதத்தில் இந்தப் புதுமாதிரியான நாவல் எனலாம். இத்தகைய நாவல்களை அளவிடுவதற்காக, திறனாய்வுக் கருவிகளும் சம்பிரதாய மானவையாக இருக்கமாட்டா. இத்தகைய நாவல்களை
70

கே. எஸ். சிவகுமாரன்
"டொகு-நாவல்கள்' என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். உதாரணமாக ட்ரூமன் கப்டோ, நோர்மன் மெய்லர் போன்ற அமெரிக்கநாவலாசிரியர்கள் மெய்நிகழ்வுமட்டும் காட்டுகின்ற வகையில் நாவல்களை எழுதியுள்ளனர். உண்மைச் சம்பவங்களை இருவர் வாக்கில் குறித்துச் செல்லும் ஒருவித எழுத்து முயற்சியிது. ட்ரூமன் கப்டோ எழுதிய இன் கோல்ட் பிளட்' என்ற நாவல் திரைப்படமாகவும் வெளிவந்ததை நீங்கள்
அறிந்திருப்பீர்கள்.
எனவே, பஞ்சமர் போன்ற நாவல்கள், நாவல் இலக்கிய வகைகளுக்குள் அடங்கக்கூடிய ஓர் இலக்கிய வகைதான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், கேள்வி என்னவென்றால், அது எவ்வளவுதூரம் நம்பும் தன்மை உடையது? வாசகன் முழு ஈடுபாட்டுடன் நாவலைப்படிக்கக்கூடியதாக இருக்கிறதா?நாவலைப்படித்து முடித்த பின் வாசகன் பெறும் புதிய அனுபவம் என்ன? அவன் சீறி எழுகின்றானா?நாவலில் விபரிக்கப்படும் கொலை பாதகச் சம்பவங்களைப்படித்து அநீதிக்கு எதிராகத் தனது குரலையும் பதிவு செய்ய முற்படுகின்றானா?
இந்த மாதிரியான கேள்வி அல்லது கேள்விகளேநாவலின் பயன்பாட்டைக் கணிக்க உதவும். இக்கேள்விகளுக்குப்பதில் தரும் விதமாக இந்த நாவலைப் படித்தபின் என்னில் எழுந்த உணர்வுகளைத் தருகிறேன்.
பஞ்சமர் என்ற இந்த நாவலை ஆரம்பம் முதல் இறுதிவரை ஆர்வங் கெடாது வாசித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. இதற்குக் காரணம் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்ற ஐயப்பாட்டைப் புகுத்தியும் நாவல் எழுதப்பட்டிருப்பதுதான். அதாவது ஒரு துப்பறியும் நாவலுக்கு
7

Page 43
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
இருக்க வேண்டிய சஸ்பென்ஸ"ம் விருப்பை வெளிப்படுத்தும் மனோபாவமும் நாவலாசிரியர் டானியலின் எழுத்தில் காணப்படும் அம்சங்கள்.
கணேசலிங்கனின் வாாத்தைகளில் சொல்வதாயிருந் தால், 'சென்ஸேஷனல் தன்மை பஞ்சமரில் நிறைய உண்டு. இன்னுமொரு படி சென்று கூறுவதானால் 'செக்ஸேஷனல்" என்றும் அடையிடலாம்.
மேட்டுக்குடியினரின் கள்ளக் காம உறவுகளைப்படிக்கும் போதுமத்தியதரத்தைச் சேர்ந்த வாசகன் த்றில்'அடைவதில் வியப்பேதுமில்லை. அதேசமயம் ஆகக் கீழ்மட்டத்தவருக்கும், ஆக மேல்மட்டத்தவருக்கும். இந்த செக்ஸ் என்பது ஒர் உணர்வார்வ (த்ரில்), அல்லது பரபரப்பானதொன்றல்ல. அது ஒரு முறைமை படாத விவகாரம். (கசுவல் அ.பேர்). நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் இந்த இணைவிழைச்சு எழுச்சி (செக்ஸ்),நவநாகரிகப்பண்புக்குமாறான (ஸ்கண்டலஸ்)தாகப் படுகின்றது. அது போகட்டும்.
டானியல் இந்த நாவலில் மேட்டுக்குடியைச் சேர்ந்த மணமான பெண்களும். கன்னியரும். தமது செக்ஸ் தேவை களுக்காகத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படு பவர்களின் சேவையினை நாடுவதாகக் குறிப்பிடுகிறார். 'சாதிமான்' என்று கூறிக் கொண்டே வர்க்கநலன் பேணும் இந்த மேட்டுக் குடியினர். வெளிப்படையாகச் சாதி முறைமை பேணுகின்றனர். அதே சமயம், இரகசியமாகப் பள்ளத்தி லிருப்பவர்களுடன் உட லுறவை வைத்துக கொள்கின்றனர். இந்த இருமைப் போக்கை இரட்டுறவாழ்வைக் காட்ட டானியல் அவ்வாறு எழுதுகிறார் என்று வைத்துக் கொண்டாலும், சேரி வாழ்பவர்களிடையே தகாத காம உறவுகள் இருக்கவே மாட்டாவெனவும் கூற முடியாது. தகாத உறவு என்பதைச்
72

கே. எஸ். சிவகுமாரன்
சித்திரிக்க வேண்டுமாயின். அது எந்த வர்க்கத்தில் காணப்பட்டாலும் உள்ளது உள்ளபடி காட்டப்பட வேண்டும். மேட்டுக் குடியினர் மாத்திரமே 'காமக் கிழத்தி'களாக இருக்கிறார்கள் என்ற பொருள்படவோ, குடிசை வாழ் மாந்தரே அசுத்தமானவர்கள் என்று பொருள்படவோ எழுதுவது வாழ்க்கையைப் புறநிலையில் நின்று அவதானித்ததாக
g)60)LDu Tg5!.
நிலவுடைமையாளரின் அட்டூழியங்களை அப்படியே சித்திரிக்கும் வேளையில், அவர்களிடையே நல்ல. வரவேற்கத்தக்க. நவீன சிந்தனைப் போக்குடைய எவருமே இரார் என்றதொனியில் ஆசிரியர் எழுதுவது நாவலில் ஒரு சமநிலையைக் கொண்டுவரத் தவறிவிடுகிறது.
லண்டன் பாரிஸ்டர் ஒருவர் முற்போக்கானவர் என்று காட்டிப்பின் அவரும் வர்க்க நலன் பேணுபவர்தான் என முடிவு கட்டுவது இயல்பானதாக எனக்குப்படவில்லை. பஞ்சமர்களில், ஒருவராக இல்லாத ஐயண்ணனாரும், குமாரவேலுவும் கமக்காரச் சாதியினருடன் தொடர்பு கொண்டவர்கள்தானே? உண்மையில் பஞ்சமரின் எழுச்சிக்கு அவர்கள் தானே மூல காரணமாக இருக்கிறார்கள். எனவே உயர்ந்த சாதி எனக் கூறப்படும் சாதியில் பிறந்தவர்கள் எல்லோருமே வர்க்கத் தைத்தான் துரக்கிப்பிடிப்பார்கள் என்றோ தாழ்ந்த சாதி எனக் கூறப்படும் சாதியில்பிறந்தவர்கள் எல்லோருமேதாழ்வுச்சிக்கல் உடையவர்கள் என்றோ கருதப்படும் விதத்தில் பாத்திரங்கள் படைக்கப்படுவது இந்த பலன்ஸ் நெறியில் நின்று விலகக் காரணமாகிறது. பஞ்சமரிடையே காணப்படும் நல்ல / தீய பண்புகள். மேல் வர்க்கத்தினரின் கொடிய / வரவேற்கத்தக்க பண்புகள் ஆகியவற்றை எதார்த்தமாகச்சித்திரிக்க ஆசிரியர் முற்பட்டிருப்பாராயின் சமநிலை நாவலில் ஏற்பட்டிருக்கும்.
73

Page 44
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
இந்த நாவல் கூறவருவதுஎன்னவென்றால், முதல்தடவை யாக, பஞ்சமர் எனப்படுபவரே. தமக்கிடையேயுள்ள வேறுபாடு களைக் களைந்து முதலில் ஒன்றுபட்டு, அணிசேர்ந்து தமது எதிரிகளுடன் போராட முனைகிறார்கள் என்பதுதான். அவர்களுடைய இந்த முயற்சிபாராட்டப்படும் அதேவேளையில், நிறைவேற்றப்படும் அதேவேளையில், அவை நாவலில் விவரிக்கப்படும்பாங்கு ஒரு வீரகதைக்குரிய(ரொமான்டிக்)தாக அமைகிறதை அவதானிக்கலாம்.
செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம் முதல் காவலூர் ஜெகநாதனின்நாளை வரை இத்தகைய புதியவகைநாவல்கள் எல்லாம் இந்த நியோ ரொமான்டிக்' (நவ வீரகாதைப் பண்புடைய) வகையைச் சேர்ந்தவை எனலாம்.
பஞ்சமர் நாவலைப்படித்ததும் எனக்கு இந்த நிலவுடைமை யாளர் மீதும், மனிதாபிமானமற்ற முறையில் உடன் மனிதப் பிறவிகளை வதைப்பவர்கள் மீதும், புத்தறிவு பெற்றிருந்ததும் போலிச் சம்பிரதாயங்களைத் தமது அனுகூலத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் மீதும் ஆத்திரம் எழுந்தது. அந்த விதத்தில் பஞ்சமர் தூண்டி இயக்கக் கூடிய (பேர்ஸ்வேஸிவ்) ஒரு நாவல் எனலாம்.
தினகரன் வாரமஞ்சரி
24-10-1982
74

எம். பி. முஹம்மது ஜலீல்
சரித்திரம் தொடர்கிறது
ஈழத்து முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள் நம்மிடையே குறைவு. அவர்களுள் ஒருவர் எம். பி. முகம்மது ஜலீல். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிழக்கிலங்கையை மையமாக வைத்து இரு நாவல்களை இதுவரை எழுதியிருக்கிறார். முதலாவது நாவல் ஒரு வெள்ளைப் பூ சிரிக்கிறது.
அந்த நாவல் முடியும் இடத்திலிருந்து இரண்டாவது நாவலாகிய ஒரு சரித்திரம் தொடர்கிறது ஆரம்பமாகிறது எனலாம்.
இந்த இரு நாவல்களும் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை யைச் சித்திரிக்கின்றன என்று கூறுவதிலும் பார்க்க, சில இலட்சியக் கருத்துக்களுக்குக் கதை வடிவம் கொடுக்கின்றன என்பது பொருத்தமாயிருக்கும். இந்நாவல்களில் முஸ்லிம் பாத்திரங்கள் வருகின்றன என்பது உண்மைதான். ஆயினும் முஸ்லிம் சூழலை விவரிப்பதற்கு அல்லது இஸ்லாமியப் பண்பாடுகளை விளக்குவதற்கு முதலிடம் இந்நாவல்களில் தரப்படவில்லை.
75

Page 45
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
முன்னைய நாவலில், கஸ்ஸாலி என்றொரு வெள்ளை மனதுடையவன் வருகிறான். அவன் வாழ்க்கையில் சில அதிர்ச்சி தரும் கட்டங்களை எதிர்நோக்கிய போது. பலவீனமுற்று மாரடைப்பினால் உயிரிழக்கிறான். அவன் மரணத்திற்கு இஸ்ஸத்தின் என்றோர் அயோக்கியன் காரணமாயிருக்கிறான். கஸ்ஸாலியின் சமூகப்பணி இடையில் முறிய, முதல் நாவலான ஒரு வெள்ளைப் பூ சிரிக்கிறது முடிவடைகிறது.
முடிந்த கட்டத்திலிருந்து இரண்டாவது நாவல் ஆரம்பமாகி, கஸ்ஸாலியின் கைம் பெண் கதீஜா தன் பிள்ளைகளையும் கொன்றுதானும் சாவதுடன் முடிவடைகிறது. இப்படி இரண்டு நாவல்களும் சாவில் முடிவடைகின்றன. ஆயினும் இலட்சிய புருஷர்களுக்காகக் காத்திருப்பது போல சரித்திரம் தொடர்ந்து நகர்கிறது.
முன்னைய நாவலில், கிரேக்க துன்பீற்று நாடக நாயகன் போல கஸ்ஸாலி என்ற பாத்திரம் வந்தால், இரண்டாவது நாவலில், அவன் விதவையான கதிஜா காவிய நாயகியாக வருகிறாள். இவள் தனது கணவனின் சமூகத் தொண்டைத் தொடர்ந்து ஆற்ற முன் வருகிறாள்.
கதிஜா, சப்ரி (காலஞ் சென்ற தன் கணவனின் நண்பன்), இஸ்மாயில், அவள் தந்தை) இஸ்ஸத்தீன் (கதீஜாவின் சகோதரியின் கணவனும், கஸ்ஸாலியின் மரணத்திற்கு மறைமுகமாகக் காரணஸ்தனாக இருப்பவன்) ஆகிய முக்கிய பாத்திரங்கள் இந்நாவலில் வருகின்றன. இவர்களைவிட மஜீத். ஒரு பேராசிரியர். சப்ரியின் தாய், கதிஜாவின் தாய் ஆகியோரும் நாவலிலே கணிசமான பகுதியில் இடம் பெறுகின்றனர்.
கதிஜாவுக்கும் சப்ரிக்கும் இடையேயுள்ள தொடர்பை
76

கே. எஸ். சிவகுமாரன்
இஸ்ஸதீன் கொச்சைப்படுத்துகிறான். புதியபயன்மதிப்புகளை உணரத் தவறும் இஸ்மாயில், தமது கிராமிய நிலச் சுவாந்தார முறையில் அட்டகாசம் செய்கிறார். கதிஜாமுட்டாள்தனமாகத் தன் பிள்ளைகளையும் கொன்றுதானும் சாகிறாள். இந்த முடிவின் பிரகாரம் நாவலாசிரியர் தோல்வி மனப்பான்மை ரீதியில் நாவலைத் தீட்டியிருக்கிறார் எனலாம்.
நாவலில் உயிர் இல்லை என்றேநான்கூறுவேன்.இதற்குக் காரணம் பாத்திரங்கள் ஒன்றில் கறுப்பாக அல்லது வெள்ளையாக வருகிறார்கள் என்பது தான். பாத்திரங்களின் மனவுணர்வுகளோ அனுபவ வெளிப்பாடுகளோ உள்ளிருந்து வெளிப்படுபவையாக இல்லாமல், நாவலாசிரியரின் விவரணங்கள் மூலந்தான் வருகின்றன. ஆசிரியரின் கூற்றுகளிலேயே நாம் பெரும்பாலுந் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
முற்போக்கான கருத்துக்களைக் கலா ரீதியாகக் கொடுக்க நாவலாசிரியர் தவறிவிட்டார் என்றே கூறவேண்டும்.
மக்களிடத்தில்பிரபல்யம் அடைந்துவரும் சில சுலோகங் களைக் கொளுவிவிடுவதற்கான வாகனங்களாகவே இப்பாத்திரங்கள் வருகின்றன.
உரையாடல் கூட கொச்சைத் தன்மையை இழந்து நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதனால் நம்புந் தன்மையும், உயிரும் அற்றுப் போய்விடுகிறது. ஆசிரியர் கூற்று நல்ல தமிழில் அமைய, பாத்திர உரையாடல் கூடியவரை அப்பிரதேச மக்களின் சாதாரணப் பேச்சு வழக்கில் அமைந்திருந்தால், கதையின் நம்புந் தன்மை இன்னும் அதிகரித்திருக்கும். தவிரவும், பிரதேசப் போக்கை ஒருவாறு அறிந்துணரவும் வாய்ப்பிருந்திருக்கும்.
77

Page 46
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
கதையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை வாசகள் ஒருவாறு ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே ஒட்டம் தடைப்படுகிறது.
கலாரீதியாக, உயர்ந்த இரசனையுடைய வாசகன் ஒருவனைத் திருப்திப் படுத்த இந்தநாவல் தவறினாலும் இது வாசிக்கத் தக்க நாவல் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. ஏனெனில் சமுதாயத்திற்குப் பயன்தரும் நாவல் ஒன்றை ஜலில் எழுதியிருக்கிறார். வெறும் கற்பனையும் அதீத சம்பவங்களும் கொண்டநாவல்களை எழுதுவதைவிட ஓரளவுயதார்தமேனும் கொண்ட, சமூகப் பண்புடைய நாவல்களை எழுதுவது வரவேற்கப்படுவதனால், இந்த நாவலும் தகுதி பெறுகிறது.
இந்நாவலாசிரியர் இலட்சியப் பாத்திரங்களைப் படைப்பதுடன் நின்றுவிடாது சமுதாயச் சித்திரிப்புள்ள யதார்த்த நாவல்களையும் எழுதினால் விரும்பத்தக்கதாய் இருக்கும்.
தினகரன் வாரமஞ்சரி 19-07-1982
78

செம்பியன் செல்வன்
நெருப்பு மல்லிகை
செம்பியன் செல்வன் (ஆ. ராஜகோபால்) எழுதிய பரிசு நாவலின் பெயர் நெருப்பு மல்லிகை
இருபத்தொன்பது அதிகாரங்களில் சுமார் 254 பக்க நாவலை எழுதியிருக்கிறார்.
"சிறகொடிந்ததாய்ப்பறவை ஒன்றுகுஞ்சுகளைக் காக்கச் சிறிதுசிறிதாகப்பருக்கை தேடிற்று. அந்தத்தாய்ப்பறவையைக் கொத்திக்குதறக்தயாராகிஇருக்கிறது. ஒருவல்லுறு" என்பது இந்த நாவல் சூசகமாகக் கூறும் செய்தி.
குறைந்த சாதிக்காரப் பெண்ணைச் சீதனமின்றி ஒருவன் மணமுடித்தான். அதன் பலாபலன் அவன் கூட்டத்தினர், அவனையும் குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்தனர். அவனுக்கு அவள்மேல் அளவுக்கு மீறிய காமமும், காதலும் ஏற்பட்டன.இரண்டுபிள்ளைகளைத் தந்துவிட்டு அவன் இறந்து விடுகிறான். அவள் கஷ்டப்பட்டுப் பிள்ளைகளை வளர்த்து விடுகிறாள். அவளை மோகித்த ஒரு கயவன் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் கஷ்டங் கொடுக்கிறான். இறுதியில் அவள், அவனையும் அழித்துத் தானும் அழிந்து போகிறாள். இது நாவலின் கதைப் போக்கு.
நெருப்பு மல்லிகை ஒரு எச்சரிக்கைக் கருவியாக அவள் முற்றத்தில் செந்நிற மலர்களைச் சிந்திக் கொண்டிருந்தது.
.79

Page 47
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
இது நெருப்பு மல்லிகைக் கதாநாயகிக்குக் குறியீடு எனப் படுகின்றது.
இந்த நாவலில் பெரும் பகுதி கதாநாயகி கமலம் படும் கஷ்டங்களைக் கூறுகிறது. நாவல் ஆரம்பமே ஆலாபனமாக இருக்கிறதேயன்றி நேரிடையாக விஷயத்துக்கு வரக் காணோம். நாவலாசிரியர் தமது சொந்தக் கருத்தைத் தருவதில் செலுத்தும் கவனம் சிறிது கூடுதலாகத் தென் படுகிறது.
அதேசமயம் கமலமும், கணவனும் சம்பாவிக்கும் தாம்பத்திய உறவு விஷயங்கள் இயற்கையாக இருக்கின்றன. கணவனை இழந்த கமலம் இடியப்பக் கடை வியாபாரம் செய்து பிழைக்கிறாள். அவள் மகள் அழகியிலும் அழகி. அவள் பெயர் வாணி, மகன் பெயர் பத்மன். முதல் அதிகாரத்தில் கயவன் தம்பிஐயாவை நாவலாசிரியர் அறிமுகப்படுத்தி விடுகிறார். பொருத்தமாக இருக்கிறது. தம்பிஐயாவுக்கு ஒரு அக்கா. "அவர் ஊரில் என்னமாதிரி குள்ளநரித்தனம் பண்ணிச் சம்பாதித்தாலும் வீட்டில் அக்காவுக்கு அடக்கம்தான். அவருக்காக தன்னைத் தொட்டுத் தாலி கட்டிய புருஷனைக் கூட வேண்டாம் என்று விட்டுவிட்டு வந்தவளாயிற்றே!"
தம்பிஐயாவும் அக்கா வள்ளிப்பிள்ளையும் தவறான வழியில் பணம் சம்பாதித்த முறை பற்றி நாவலில் எடுத்துக் கூறப்படுகின்றது.
தம்பிஜயாவின் பொறுப்பிலுள்ள ஒரு காணியில் நாவல் நாயகி கமலம், மற்றும் தம்பிஐயாவின் வைப்பாட்டி போன்றவர்களும் வசிக்கிறார்கள். அதேஇடத்தில்நாயகிக்கு சமயத்தில் உதவும் "குளறி"சின்னம்மாவும் வாழ்கிறாள். அவள் ஒரு சுவாரசியமான பாத்திரம்.
இந்த நாலில் வரும் சின்னம்மாவும் வள்ளிப்பிள்ளையும் இரு முக்கிய பாத்திரங்களாவார். இவர்களோ வடபிரதேச சராசரிப் பெண்ணைச் சித்திரிக்கிறார்கள் எனலாம். வள்ளிப்பிள்ளை தம்பிக்கு கல்யாணம் பேச முற்பட்டபோது தனக்குக் கமலம் வேண்டும் என்று தம்பிஜயா தமக்கையிடம் 80

கே. எஸ். சிவகுமாரன்
கூற அவள் முயற்சியில் ஈடுபடுகிறாள்.
செல்லம் என்ற மனையாளுடன் தகாத உறவு வைத்திருக்கும் தம்பிஐயா ஒரே சமயத்தில் பல பெண்களுடன் காமக்களியாட்டம் நடத்த விரும்புபவன். செல்லத்துக்குக் கமலத்துடன் கோபம், போட்டி.
இந்தக் கதையில் ஒரு புத்த குருவும் வருகிறார். சிங்களவர். கருணானந்தா என்று பெயர். அவர் அரசியல் பேசுகிறார்.
"தனி ஒருவனின் மகிழ்வில் உழைக்கும் பெரும் கும்பல் துயரப்படுவதை எந்த மதமும் ஏற்றதில்லை. ஆனாலும் ஒவ்வொரு மதப் பிரிவிலும் இப்படி ஒரு முதலை வாழ்வு இருப்பதை ஏன் தவிர்க்க முடிவதில்லை" என்று அவர் தன்னுள் கேட்டுக் கொள்கிறார். r செம்பியன் செல்வன் இந்த நாவலின் அறிமுகத்தில் கூறுகிறார். "பிரதேச நாவல்களில் கிராமியம் சார்ந்தவை ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெறியில் இயங்கும் தன்மையன. தனித்துவமானவை. ஆனால் நகர்ப்பிரதேசங்களில் பல திசைகளில்இருந்தும் பல்வேறு தேவைக்காக மக்கள்நகர்ந்து வந்துகுடியேறியதால் ஒரு கலப்பினவாழ்க்கை நெறிப்பண்புகள் காணப்படுகின்றன. சடங்கு, சம்பிரதாயங்கள். மொழிவழக்கு. மதங்கள்.இனங்கள்.நடைமுறைப்பழக்கங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட தொடர்புக் கலப்பால் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத சம்பவங்கள்கூட நகள்முழுவதையும் பாதித்துவிடும் ஆபத்துத் தோன்றுகிறது. எதிலும் ஒரு தெளிவான உரையைக் காண முடியவில்லை என்ற உண்மையை இந்த நாவல் புலப் படுத்துகிறது.
இந்தக் கூற்றுக்குச் சரியாகவே நாவலும் அமைந் திருக்கிறது. ஈழத்துத் தமிழ் நாவல்களில் இதுவும் ஒரு குறிப் பிடத்தக்க நாவல்தான் என்பது உண்மையே.
வீரகேசரி வார வெளியீடு 02-08-1982
81

Page 48
செங்கை ஆழியான்
காட்டாறு
ஈழத்து நாவலாசிரியர்களிலே, எண்ணிக்கையில் அதிக நாவல்களைத் தந்திருப்பவர் "செங்கை ஆழியான்' என்ற புனைபெயரில் எழுதும் க. குணராசா. இவர் எழுதி வெளியாகி யுள்ள நாவல்களின் தொகை அதிகம். இவர் பலநூறு சிறு கதைகளை எழுதியிருக்கிறார். நாடகங்களும், விமர்சனங் களும் எழுதியுள்ளார். 40க்கும் மேற்பட்ட புவியியல் பாட நூல்களை எழுதியிருக்கும் தமிழ் மொழிமூலம் கற்ற புவியியல் சிறப்புப் பட்டதாரி. இலங்கை நிர்வாக சேவையில் இடம்பெற்ற எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். 'செங்கை ஆழியான்' காரியாதிகாரியாகப்பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டு புனைகதை படைத்துள்ளார். இவர் எழுதியவாடைக்காற்று என்ற நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது. பல்கலைக் கழக மாணவர்களின் சிறுகதைத் தொகுப்புகளின் இணை யாசிரியராகவும் இவர் தொழிற்பட்டுள்ளார்.
சில தசாப்தங்களாக எழுதிவரும் செங்கை ஆழியான் 1961 வாக்கில் எழுத்துலகில் பிரவேசித்தார். அவரே கூறுவது போன்று அவருடைய எழுத்துலக வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதிரா இளமை, அனுபவக் குறைவு, கற்பனாவாதப் போக்கு போன்றவை இவருடைய
82

கே. எஸ். சிவகுமாரன்
ஆரம்ப கால எழுத்துகளில் காணப்பட்டன. சமூக நோக்கு தெளிவாகப் புலப்படாவிட்டாலும், வாசகர்களுக்குச் சுவை யான படைப்புக்களைத் தர வேண்டும் என்பதே அவருடைய முதல் நோக்கமாக இருந்தது. இந்த வரிசையில் அலைகள் ஓயாதோ, நந்திக் கடல், சித்திரா பெளர்ணமி, நாகநாட்டு இளவரசி போன்ற சரித்திர நாவல்களையும், ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, கொத்தியின் காதல் போன்ற நகைச்சுவை நாவல்களையும் எழுதினார்.
செங்கை ஆழியானின் கருத்துப்படி சமுதாய ஊழல் களைச் சுட்டிக் காட்டும் நோக்கம், 1964ஆண்டளவில் ஏற்படத் தொடங்கியது. அதாவது, சமுதாயப் பிரச்சினைகளை வெறுமனேசித்திரிப்பது.பரிகாரம் சுட்டிக் காட்டப்படுவதில்லை என்ற அடிப்படையில் அவர் பிரளயம், மயான குழி, வாடைக் காற்று, இருட்டு போன்ற நாவல்களை எழுதினார். சமூக மாற்றத்தைக் கல்வியறிவுப் பரம்பல் மூலம் கொண்டு வரலாம் என்று "செங்கை ஆழியான்" இக்கால கட்டத்தில் நம்பினார்.
1977இல் வெளியானகாட்டாறு என்றபரிசுநாவலுடன் இவர் தமது மூன்றாவது இலக்கிய வாழ்க்கைக் கட்டத்தில் இறங்குவதாகக் கூறிக்கொள்கிறார். சமூகக் குறைபாடு களுக்குத் தீர்வு காண, ஆசிரியர் என்ன விடைகளைத் தருகிறார்?வாழ்க்கையைப் பொருள் கொண்டு அவர் விளக்கிய விதம் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகக் காட்டாறு, யானை போன்ற நாவல்கள் விளங்குகின்றன என்று "செங்கை ஆழியான்" கருதுகிறார்.
இவர் எழுதி அச்சிடாமல் வைத்திருக்கும் சிலநாவல்கள், இவரை ஒரு "கொமிட்டட்" (இலட்சியம் ஒன்றிற்குத் தன்னை அர்ப்பணித்த) எழுத்தாளராக இனங்காட்டும் என்ற நம்பிக்கை
83

Page 49
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
யுடன் "செங்கை ஆழியான்" பேசுகிறார்.
நகர்புறத்தவர் கிராமங்களுக்குச் செல்லும் பொழுது பெறும் வித்தியாசமான அனுபவத்தைச் சிறை பிடிப்பது தமது நோக்கம் என்கிறார் இந்த ஆசிரியர். கிராமிய சமுதாயத்தின் பலம் / பலவீனம் இரண்டையும் சித்திரித்துக் காட்டல் ஆசிரியரின் நோக்கமாகையால், இலக்கியக்களம் புதியதாய் அமைகிறது. வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டியதற்கான உணர்வைத் தமது எழுத்துக்கள் மூலம் பரிவர்த்தனை செய்யமுற்படுவதாக அவர் கூறிக்கொள்கிறார். வாசகர்களுக்கு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவதும், வேறுபட்ட புதிய பகைப்புலத்தை ஒவ்வொரு முறையும் வாசகர்களுக்குக் காட்டுவதும் தமதுஎழுத்தின் சிறப்பம்சங்கள் என்று இந்த எழுத்தாளர் கூறுகிறார்.
செங்கை ஆழியானின் சிந்தனைகள் அவர் தமது காட்டாறு என்றநாவலுக்கு எழுதியமுன்னுரையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த நாவல் பற்றிக் குறிப்பாக அவர் dini)6)ll:-
"விவசாய தொழிலாள மக்கள் கூட்டம் காடுகளை வெட்டிக் கொளுத்திக் கழனிகளாக்கி இயற்கைக்கும் மிருகங் களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையில் இன்னொரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன்.நிலந்தேடியபின் இறுதியில் அதையும் இழந்து சீரழிவதைக் காண முடிந்தது. அழகிய விவசாயக் கிராமங்களைப் பெரிய மனிதர் என்ற போர்வையில் உலாவும் முதலாளித்துவக் கூட்டமும், உத்தியோக வர்க்கமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றன என்பதை என் கண்களால் காண நேர்ந்தது. மண்ணையும் பொன்னையும் மட்டுமா, அவர்கள்
84

கே. எஸ். சிவகுமாரன்
சுரண்டினார்கள்? பெண்களை விட்டார்களா? சுரண்டலின் வகைகள் என்னைப் பதற வைத்தன. கிராமாந்தர வாழ்க்கையில் எதுவுமறியாத அப்பாவி ஏழை விவசாயிகளைப் பரம்பரை நிலப் பரபுத்துவ முதலாளிகளும், விவசாயத்தின் வெற்றியில் அண்மையில் பணந்தேடிக் கொண்ட புதிய முதலாளிகளும், கருவறுத்தார்கள். கிராமப் புறங்களின் அபிவிருத்திக்காக நல்ல மனதுடன் ஒதுக்கப்படுகின்ற கிராம மக்களுக்கான செல்வம், ஐஸ்கட்டி மாறுவதைப் போலக் கைமாறி ஒரு துளியாக நிலைப்பதையும் கண்டேன். இக் கிராமங்களில் ஒரு சிலரால் கல்விச் சுரண்டல் எவ்வாறு திட்ட மிடப்பட்டு நடத்தப்படுகின்றது என்பதையும் காண நேர்ந்தது. பலமுனைகளிலும் தாங்கள் சுரண்டப்படுவதை அறியாது, அறிய வகையற்று, தேங்கிய குட்டையாக கிராம மக்கள் வாழ்ந்து வருவதையும், அதிகாரத்துக்கும் சண்டித்தனங்களுக்கும் பயந்து ஒதுங்கியிருப்பதையும், ஆங்காங்கு சிறு தீப்பொறி களாக இளைஞர் சிலர் விழிப்புக்குரல் எழுப்புவதையும் நான் கண்டேன். என்மனதில் இவையாவும் ஆழப்பதிந்துவெளிவரத் துடியாய்த் துடித்தன. இச்சின்னத்தனங்களை, தேசியத் துரோகிகளை, மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானதுதான் காட்டாறு என்கிறார் செங்கை ஆழியான்.
ஆசிரியரின் கூற்றுக்கிணங்கநாவல் அமைந்திருக்கிறது என்பது உண்மை, செட்டாகவும் எழுதியிருக்கிறார். "வழ வழாத்தன்மை" இல்லை. வேட்டையாடல் பற்றிய விவரணை நேர்த்தியாக இருக்கிறது. நிலக்கிளி என்ற நாவல் அடிக்கடி ஞாபகத்திற்கு வந்தாலும், அந்நாவலின் ஆசிரியர் அ. பாலமனோகரன், மனேரதியப் (Romantic) பாங்கில் எழுத, செங்கை ஆழியான் யதார்த்த நெறியில் நின்று எழுதுகிறார்.
85

Page 50
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
செங்கை ஆழியானின் சிறந்த நாவல்களுள் காட்டாறு குறிப்பிடத்தக்கது.ஆயினும், ஒரு மகோன்னத அனுபவத்தைத் தரும் நாவல்கள் இன்னமும் இலங்கையில் எழுதப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். அவ்வக் கால சமூகத் தேவை களையொட்டிப் புதிய முறையிலான அரசியல் வரலாற்று நாவல்கள் எழுந்திருக்கின்றன. செ. கணேசலிங்கனின் நாவல்களும் இவ்வகையில் தனித்துவமானவை. இளங்கீரனின் நாவல்கள் கதையைச் சுவையுடன் கூறும் சமூக நாவல்கள். அருள் சுப்பிரமணியம், அ. பாலமனோகரன், தி. ஞானசேகரன், புலோலியூர் க. சதாசிவம், சி. சுதந்திரராஜா, தெளிவத்தை ஜோசப், நந்தி, எஸ். பொ. வ. அ. இராசரத்தினம், சொக்கன் ஞானரதன் போன்றவர்களும், இன்னுஞ் சிலரும் ஈழத்துத் தமிழ் நாவல்துறையில் புதுப்புது அனுபவங்களைத் தந்துள்ளனர்.
தமிழ் நாவல் இலக்கியத் துறையில், வட்டாரநாவல்கள் போன்று. ஈழத்துநாவல்களையும் ஒருவித வட்டாரநாவல்கள் என்றே கூறலாம் போல் தெரிகிறது.
காட்டாறு ஆசிரியர் ஆற்றலுடையவர். வெறுமனே ஊழல்களைச் சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடாது மனித உறவுகளின் ஆழம், மனித நேயம் போன்றவற்றையும் இணைத்து, பாத்திரப்படைப்புக்குச் சிறிதுகூடுதலான கவனஞ் செலுத்தி எழுதுவாராயின், அவர் எதிர்காலம் சிறப்புடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தினகரன் வாரமஞ்சரி 03-01-1982
86

செ. யோகநாதன்
கனவுகள் ஆயிரம்
வீரகேசரியில் தொடராக வெளிவந்த கதையே நூலாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் செ. யோகநாதன் பிரபல சிறுகதை, குறுநாவல் எழுத்தாளர், "வசந்தம்" என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தவர். ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர்.
மத்திய கிழக்குக்கு வேலை தேடிச் செல்வது நல்லதா, கெட்டதா?சமுதாயம்பற்றிய சிந்தனையில் மாற்றம் அவசியமா? இல்லையா? மனித உறவுகள் பொருளின் அடிப்படையில் உருவாகின்றனவா அல்லது கருத்தொருமித்ததினால் ஏற்படுகின்றனவா? ஒரே மட்டத்தில் உள்ளவர்களும், வாழ்க் கையை அணுகும் முறை வித்தியாசமாக அமைவதேன்? போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிப்பது போன்று சோஷலிஸ்க் கருத்தை வலியுறுத்தி இந்தக் கதையை செ. யோகநாதன் எழுதியிருக்கிறார்.
கதைச் சம்பவங்கள் நம்புந்தன்மை கொண்டதாக இருப்பினும், கதாபாத்திரங்கள் இயங்கும் முறை கற்பனா சோஷலிஸத்தைப் படம் பிடிப்பது போல இருக்கிறது. இவ் விதமான கதைகளைப் படித்துப் படித்து அலுப்புற்றதனாற் போலும், இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. எழுத்தில் சோஷலிஸ்க் கருத்துக்கள் எல்லாம் விரும்பத்தக்கதாயும்,
87

Page 51
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
வரவேற்கத்தக்கனவாயும் இருக்கின்றன தான். ஆனால் நடைமுறையில் சொல்வது வேறு செய்வது வேறு போல் அல்லவா சிலர் நடந்து கொள்கிறார்கள்.
இந்தநாவலில் கமலா என்றொருபாத்திரம்-சோஷலிஸக் கொள்கைகளினால் கவரப்படுகிறாள். அவள் மீது வெளிப் படுத்தப்படாத காதலை தேவா கொண்டுள்ளான். தேவாவின் தம்பி கோபாலன், தனது ஆளுமை வளர்ச்சியினை பிறர் அங்கீகரிக்காதது கண்டு ஹிப்பியாக மாறிப்பின் சோஷலிஸ்டா கிறான். கோபாலன் மீது கமலா காதல் கொள்கிறாள். தேவாவின் தங்கை அகிலா தமையனின் மத்திய கிழக்கு உத்தியோகத்தினால் தங்களது குடும்ப வாழ்க்கை நிலை உயரும் எனக் கனவு காண்கிறாள். கமலாவின் அண்ணனும், தேவாவின் நண்பனான மனோகரனும் இந்தக் கனவில் நம்பிக்கை கொண்டு மத்திய கிழக்குக்குப் பயணமாகிறான். மத்திய கிழக்குச் சென்ற சிலர் தாம் பட்ட துயர அனுபவங் களைப் பத்திரிகைகளில் எழுதுகின்றனர். அவற்றைப் படித்து விட்டுங்கூட.நம்பிக்கையுடன் (அதே சமயம் வேதனையுடன்) மனோகரன் மத்திய கிழக்குச் செல்கிறான்.
ஒருவேளை இந்தக் கனவுகளின் வேதனைகள் மறைந்து வாழ்க்கை இனிதாகலாம் என்ற நம்பிக்கையில் வாழ்வைத் தொடர்கிறேன்" என்று தேவா கூற வருவதாகக் கதையை முடிக்கிறார் யோகநாதன்.
இந்த நாவலில் கருத்தை முதன்மைப்படுத்தி, அதற் கேற்ப, நம்பத் தகுந்த சட்டத்தை மாட்டிக் குறை கூறாத வகையில் நாவலை யோகநாதன் எழுதியிருந்தாலும், படித்த முடித்ததும் வாசகனாகிய எனக்கு நிறைவு தரவில்லை. காரணம், இதுமாதிரியான கதைகளைப் படித்த அலுப்புற்றது தான். இத்தகைய நாவல்களும் கதைகளும் ஈழத்துப் புனை கதைத் துறையில் ஒரு "வாய்ப்பாடாக" அமைந்துவிடுமோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.!
வீரகேசரி வாரவெளியீடு 05-09-82
88

அ. ஸ். அய்துஸ் ஸ்மது
L16fIDavř
இலக்கிய நயஞ் செறிந்ததாக இலட்சியத்தை நடைமுறை யுடையதாய் எவ்விதம் இணைத்துக் காட்டலாம் என்பதை விளக்குவதாக, கிழக்கிலங்கையின் இஸ்லாமிய மக்கள் எத்தகைய பண்பாட்டுக் கோலங்களைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுவதாக, மனிதப்பண்பாட்டுக் கூறுகளில்இஸ்லாமிய,இந்துதர்மங்கள் எவ்விதம் இணைந்தும் பிரிந்தும் செயற்படுகின்றன என்பதைச் சொல்லாமற் சொல்லுவதாக, போடியார் வாழ்க்கை மரபில் நவீனத்துவமும் சமதர்மமும் தவிர்க்க முடியாமற் செல்வாக்கைச் செலுத்தும் பொழுதே, பழையன கழிந்து, புதியன புகுந்த முறைமையைக் கதை மூலமே காட்டுவதாக ஒருநல்லநாவலை அ.ஸ். அப்துஸ் ஸமது தந்துள்ளார்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்து இது வரை வெளிவந்த நாவல்களில் சந்தேகமில்லாமல் இது தலை சிறந்ததொன்று. தவிரவும் கிழக்கிலங்கைப் பிராந்தியத்தின் ஆக்கப் படைப்புகளில் (நாவல், சிறுகதை, கவிதை,நாடகம்) விரல்விட்டு எண்ணக்கூடிய சிருஷ்டிகளில் இதுவுமொன்று. பொதுவாக ஈழத்துத்தமிழ் இலக்கியத்தின்நவீனமுயற்சிகளில் உதாசீனஞ் செய்ய முடியாததொரு படைப்பாகவும் பனிமலா விளங்குகிறது.
89

Page 52
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
இந்த நாவலைப் படைத்த அ. ஸ். அப்துஸ் ஸமது நமது எழுத்தாளர்களில் மதிப்பிற்குரிய ஒருவர். கடந்த பல வருடங்களாக எழுதி வருகிறார். இலங்கையிலும். தமிழ் நாட்டிலும், பெயர் பெற்ற இவர், பாடநூல்களையும் (இலக்கியப் பொய்கை வரிசை), கவிதைத் தொகுப்பு (முற்றத்துமல்லிகை) மற்றும் நூல்களையும் (இலக்கிய விளக்கத்துணை. இஸ்லாம் வழிகாட்டி) சிறுகதைத் தொகுப்புகளையும் (எனக்கு வயது பதின்மூன்று, பிறைப் பூக்கள்) வெளியிட்டவர். இரண்டாண்டு களுக்கு முன்கண்ணிர்ப் புஷ்பங்கள் தினகரனில் வெளிவந்தது. இலங்கை வானொலியிலே இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை முஸ்லிம் ஒலிபரப்பில்நடத்தினார். இவ்வாறு புகழ்பெற்ற அ.ஸ். அப்துஸ் ஸ்மது அவர்கள் ஆசிரிய கலாசாலை விரிவுரை யாளராகப்பணிபுரிகிறார். எழுத்தாளனிடம் காணப்படவேண்டிய நிதானமும் நிச்சயத் தன்மையும், நேர்மையும் இவரிடமுண்டு. அதே சமயம் எந்தவித பெருமையும் இல்லாத, யாவருடனும் இனிதாக, நட்பாக எளிமையாகப் பழகும் பண்பும் இவரை யாவரும் விரும்பக் காரணமாகின்றன.
சாகித்தியப் பரிசு பெற்றுள்ள அ. ஸ். அப்துஸ் ஸமது, வீரகேசரி நடத்திய பிரதேச நாவல் போட்டியில் வெற்றி பெற்ற வருமாவார். அந்தப் பரிசு நாவல்தான் பனிமலர்.
இந்த நாவலில் அ.ஸ். அப்துஸ்ஸமது எதனைச் சிந்திக்க முற்படுகிறார்? இந்தக் கதையில் நிலப் பிரபுத்துவ மனப் பாங்குக்கும் கல்வி அறிவு வளர்ச்சியினால் ஏற்பட்ட மனப் பாங்கிற்கும் இடையில் நிகழும் போராட்டத்தினை நான் சித்திரிக்க முயன்றேன்' என்கிறார் ஆசிரியர்.இதுசரியே.இவரது முயற்சி பலிதமளித்துள்ளது. இந்நாவலுக்கு ஆசிரியரே முன்னிடு எழுதியிருக்கிறார்.நாவலின் மையக் கருத்துக்களை அவர் பொழிப்பாக எழுதியிருக்கிறார். எனவே இந்தநாவலுக்குச் சுருங்கிய விமர்சனமாக அதுவே அமைந்து விடுகிறது.
90

கே. எஸ். சிவகுமாரன்
வாசகர்கள் அதனைப் படித்துவிட்டு நாவலைப் படிப்பீர்களாயின் உண்மை விளங்கும்.
பனி மலர் நாவலில் என்னைக் கவர்ந்துள்ள அம்சம், அதன் இலக்கிய பயன்பாடுதான். சமூகச் சித்திரிப்பையும், கவினுற, சிருஷ்டித்தன்மை கொண்டதாக ஆக்கும் ஆற்றலை அ. ஸ. அப்துஸ் ஸமதுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்பது மிகையில்லை. கணேசலிங்கன், இளங்கீரன், செங்கை ஆழியான், தி. ஞானசேகரன், பெனடிக்ட் பாலன் போன்ற (எல்லா நாவலாசிரியர்களின் பெயர்களையும் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை) நமது நாவலாசிரியர்களிடத்துக் காணப்படாத ஒரு பண்பை வ. அ. இராசரத்தினம். அ. ஸ, அப்துஸ் ஸ்மது, அருள் சுப்பிரமணியம் போன்றவர்களிடம் காணக் கூடியதாக இருக்கிறது. முன்னையவரிடத்து உள்ளடக்கம் நேரிடை யாகவே சொல்லப்படுகிறது. பின்னையவரிடத்து கவித்துவமாகச் சொல்லப்படுகின்றது. முன்னையவரிடத்து கலைப் பண்பு இல்லை என்று இல்லை. ஆனால் கவனம் அதிகம் செலுத்தப்படுவதில்லை. அதே சமயம் பின்னையவரிடத்து உள்ளடக்கத்தை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தும் பண்பு குறைவாகவே இருக்கும். இவற்றிற்கெல்லாம் காரணம் பூகோள, சுவரத்திய, சமூக அமைப்புகளே என்றும் கூறலாம்.
வடக்கே கஷ்டப்படும் வாழ்க்கை, கிழக்கே அதேயளவு கஷ்டம் தேவைப்படாத இயற்கையோடியைந்த வாழ்க்கை. இதுபற்றி ஆராய்வது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
பனி மலர் இலக்கியநயஞ் செறிந்த நவீனம் என்று கூறும் பொழுது, குறிப்பாக ஆசிரியர் மொழியைக் கையாளும் முறையைத்தான் மனதிலிருத்தியுள்ளேன். வட பகுதியின் வெவ்வேறு பிராந்தியங்களிலுமுள்ள தமிழ் பிரயோகங்களை ஆக்க இலக்கியப்படைப்புகள்மூலம்பார்த்திருக்கிறோம். அதே
91

Page 53
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
போன்று. மலைநாடு. நீர்கொழும்ப, திக்குவல்லை, வன்னி கொழும்பு போன்ற பகுதிகளிற் தமிழ் பேசப்படும் முறைபற்றியும் அறிந்திருக்கிறோம். கிழக்கிலே கன்னங்குடா வாழைச்சேனை. திருகோணமலை, மூதூர் பகுதிகளில் தமிழ் பயிலும் முறை பற்றியும் அறிந்திருக்கிறோம். இப்பொழுது அக்கரைப் பற்றுப் பகுதியின் இஸ்லாமியத் தமிழ் தரும் சுவையை அறியக் கூடியதாய் இருக்கிறது. அப்பகுதிக்கு நான் சென்ற பொழுது, ஆசிரியர் ஸ்மது தரும் மொழி நடை அப்பகுதியின் இயல்பா னதே என்பதை நேரிற் கேட்டறிய முடிந்தது. எனவேதான் பனிமலர் மூலம் ஆசிரியர் ஸ்மது ஈழத்துத் தமிழ் இலக்கியத் துக்குப் பெருமை தரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார் எனக் கூறுகிறேன்.
பனிமலர் நாவலில் வரும் ஆக்கத் திறனுள்ள சில பகுதி களை இனப் பார்ப்போம்.
இந்த நாவலில் வரும் கதாநாயகியின் பெயர் மர்லியா. இவள் படித்த இளம் முஸ்லிம் கன்னி. நாவலின் இறுதிக் கட்டத்திலே தனதுஅந்தஸ்துக்குக் குறைந்த - ஆனால்படித்த பண்புள்ள - ஒர் இளைஞனை விரும்பி மணம் முடிக்கிறாள். இவளுக்குக் காதல் அனுபவம் முன்னர் ஒருவன் மேல் ஏற்பட்டாலும், அனுபவ அறிவு வளர்ச்சிக்கேற்ப நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு இரண்டாமவனுடன் தனது வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்கிறாள். முதலாமவனான ஷாபிதின் அற்ப காரணம் ஒன்றிற்காக இவளைக் கைவிட்டுப் பின்னர், தனது மனைவி மூலம் குழந்தைப் பேறு காண முடியாது என்று கண்டு, மர்லியாவை இரண்டாந்தாரமாக (தனது மனைவியின் பூரண அனுமதியுடன்) மணம் முடிக்க முன் வந்தவன், ஆனால் மர்லியாவோ அவர்களுக்குப் புது வாழ்வை அளிக்கப் பொதுச் சேவை உதவும் என்று ஆலோசனை கூறித் தட்டிக் கழித்து, ரஹீம் என்பவனைத் தனது தந்தையாரான இஸ்மாயில்
92

கே. எஸ். சிவகுமாரன்
ஹாஜியாரின் பணிப்பின் பேரில் மணமுடிக்கிறாள். ஷாபிதீன் கிடைக்காமற் போகவே. ரஹீமுடன் பழகிய போது மர்லியா வுக்குச் சிறிது சபலம் பின்னர் ஏற்பட்டது இயல்பானதே. எனவே புத்திசாலித்தனமாக இரண்டாவது எதிரியைத் தன்னுடைய தாக மர்லியா ஆக்கிக் கொண்டாள். 'காதலிலே தோல்வி யுற்றாள் கன்னியொருத்தி' என்று வாடாமல், புதுமைப் பெண்ணான மர்லியா, இஸ்லாமிய, நிலப்பிரபுத்துவ, கீழைத் தேயக் கட்டுகளை மீறி இயல்பான சுருதியில் செல்வதை நாவலாசிரியர் இங்கு காட்டும் பொழுது, மாகாணக் கட்ட மைப்புகள் மீறப்படுவதைக் காட்டுகிறார். இது இந்த நாவலின் யதார்த்தப் பண்புகளுள் ஒன்று. * பனிமலர் நாவலில் மர்லியாவே பனிமலர் எனச் சுட்டப் படுகிறாள். "நீங்கள் புன்முறுவல் பூத்தபோது நீர்த் துளிகள் தேங்கி நின்ற உங்கள் முகம் பனி மலராகக் காட்சிதருகிறது மர்லியா?" என்று கணவன் ரஹீம் விவரிக்கிறார். அவளுக்குத் தந்தை இறந்த துயரம் முதல் பழைய சோகங்கள் நினைவுக்கு வர முகம் மாறிற்று. அந்த நிலைமையை நாவலாசிரியர், "அவள் முகம் அனல் பட்ட மலர்போல மீண்டும் வாட்டமுற்றது" என்று எழுதும் பொழுது, காட்சிக்கு ஒளியும் நிழலுந் தந்து, தமது கவினாற்றலை வெளிப்படுத்துகிறார்.
இவ்வாறு இலக்கிய இன்பம் அளிக்கும் பல பகுதிகளைச் சுட்டிக்காட்டலாம். உயர்ந்த, அறிவார்ந்த கருத்துக்களை எல்லாம், பாத்திரங்கள் வாயிலாக (இப்பாத்திரங்கள் படித்த, நவீன எண்ணங்கள் கொண்டவை)நாவலாசிரியர் தெரிவிக்கும் பொழுது, மறைமுகமாகக் கதைக்காக மாத்திரம் வாசிக்கும் வாசகர்களுக்கும் நவீன சிந்தனைகளைப் புகட்டுகிறார். அவற்றிற் சில, "வாழ்க்கை என்பது புதிய புதிய சம்பவங்கள் நிறைந்தது. புதிய புதிய சவால்கள் தோன்றுவது. இவை களுக்கு முகங் கொடுக்கும் போது தான் நாம் வாழ்க்கையை
93

Page 54
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
எதிர்நோக்கி வெற்றி பெற முடியும்"
"நான் ஒரு பெண். வாழ்க்கையிலே நான் தோற்று விட்டதாக இன்னும் கருதவில்லை. சில நியதிகளும், சந்தர்ப் பங்களும் நம் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகின்றன. இதனை நமக்கு வெற்றி என்றோ, தோல்வி என்றோ பாகு படுத்திக் கொள்ளத் தேவையில்லை"
மர்லியா முதற் காதலிலிருந்துவிடுபடத் துடிக்கவில்லை. ஆயினும் றஹீம் அவளுடன் பழகிய விதத்தில் மையலுற்றாள். "மர்லியாவின் மனவெளியில் ஒரு நிழல் ஊசலாடியது. அதன் தாக்கம் அவளைக் கிறங்கச் செய்தது. ஐந்து வருடங்களின் முன் வேறொரு நிழல் ஊசலாடியதால் ஏற்பட்ட சுவடு இன்னும் அழியவில்லை. சுவடு என்று கூறுவதைவிட தழும்பு என்று அதைச் சொல்லலாம். (நாவலாசிரியர் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பை அவதானியுங்கள்). ஆம் புரையோடிய புண்ணாகி வழிந்தோடிய கண்ணிர்க் கதையாகிய அச்சுவடு அவள் மனதைவிட்டு இன்னும் அழியவில்லை. இப்பொழுது புதியதொருநிழல்மற்றுமொரு சுவட்டைப்பதிக்கப்போகிறதா?"
உரை நடையில் கவித்துவத்தைத் தமிழ் நாட்டு எழுத் தாளர்கள் இயல்பாகவே கொண்டு வருகிறார்கள். (லா, ச. ரா. மெளனி, சுந்தர ராமசாமி, அசோக மித்திரன், இப்படிப் பலர்) நமது நாட்டு எழுத்தாளர்களில் இலங்கையர்கோன், பால மனோகரன், செ. யோகநாதன், குப்பிளான் சண்முகம் போன்றோர் ஓரிருவர். அ. ஸ. அப்துஸ் ஸமதுவின் நடையே கவித்துவமானதுதான். சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை களைப் படிக்கும் பொழுது பெறும் பரவசமே, ஸ்மதுவின் உரை நடையைப் படிக்கும் பொழுது எனக்கு ஏற்படுகிறது. ஓர் உதாரணம், "இனம் புரியாததாபம், இராகம் கூறமுடியாத இசை, கருத்துக் கூற முடியாத கவிதை."
94

கே. எஸ். சிவகுமாரன்
நவநாகரிகமறியா பானுவும் அவள் மச்சான் ஜெமிலும் (மர்லியாவின் தம்பி) பழகும் விதமும், பேசும் பேச்சும், சாதாரண கிராமியக் காட்சிதான். ஆனால் அந்த உறவுகளைக் காவிய நயஞ் செறிந்ததாக நாவலாசிரியர் ஆக்கித் தருகிறார். பானு வின் இயல்பான பாத்திர வார்ப்பு அவளை உயிருள்ளவளாகக் காட்டுகிறது. அதே சமயம் ஜெமீலைக் காதலிக்கும் றெஸினா வும் (இவள் படித்த உழைக்கும் பெண்) ஜெமீலும் இளைஞர் பற்றி விவாதிக்கும் பாங்கு அறிவுப் பரிவர்த்தனை செய்கிறது. அதே ஜெமீல் வெகுளிப் பெண்ணான பானுவைத்தான் இரசிக் கிறான். நம் நாவலாசிரியர்.துண்டாமற் தூண்டுகிறார். இந்த நாவலில் என்னைக் கவர்ந்த பெண் பாத்திரம் பானுதான்.
மர்லியாவின் முதற் காதலன் ஷாபிதீனும் அவன் மனைவி பரிதாவும் நமது கழிவிரக்கத்தை நாடி நிற்கும் அருமையான தம்பதி. அவர்களுடையதாம்பத்திய உறவை வெளிப்படுத்தும் பொழுதும் நாவலாசிரியர் ஸ்மது முதிர்ச்சியனுபவத்தைத் திரட்டித் தருகிறார். நித்தவூர்க் கடற்கரையில் தம்பதி தனித்திருந்த பொழுது எழுந்த மன நிலையை (பக்கம் 111) உவமேயமாகவே ஆசிரியர் காட்டுகிறார்.
பரிதாவும் மர்லியாவும் பரிமாறிக் கொள்ளும் கடிதங்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களின் அறிவு வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றன. அதே சமயம் பானு, "ஒங்களோட வேலை செய்யிற ரஸினாவும் நீங்களும் ஆடின கூத்த அண்டு நான் பார்த்துக்குத் தானே இருந்தேன். ஜேர்மனிக்குப் போனா, போன வேலையைப் பார்த்துக்கு வாற பொம்புளயோடை நிண்டு படம் புடிச்சிக்கி வந்திரிக்கிங்களே வெக்கமில்லையா?" என ஜெமீலிடம் கூறுகிறாள். கல்வி கேள்வியறியா நங்கைகளுக்கும், படித்த பெண்களுக்கு மிடையில் உள்ள மனோபக்குவங்களை ஆசிரியர் தமது நாவலில் காட்டுகிறார்.
95

Page 55
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
நிலவுடைமையாளர் குடும்பத்திலும் மனமாற்றம் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுப் புரட்சிகரமாற்றங்கள் ஏற்படுவதையும், வெளியே நின்று சுலோகங்களை உதிர்க்காமல், பாத்திரங் களின் இயல்பான பேச்சு மொழியிலேயே ஆசிரியர் சித்திரிக்கிறார். m
ஹாஜியார், மகள் மர்லியாவுக்கு வெள்ளாமைக்காரன் மகன் ரஹீமை மணம் முடிக்க முதலில் சம்மதிக்கவில்லை. அவர் தமது மனைவி ஹாஜனாவிடம் கூறுகிறார்.
"ஹாஜனா, புலி பசித்தாலும் புல்லுத்தின்னாதடி, எண்ட உப்புத் திண்டு வளர்ந்தவன் குடும்பத்தில நான் மாப்பிள்ளை எடுக்கிறதெண்டா, ஊர் என்னப் பழிச்சுப் போடும்டி" அதற்கு மகன் ஜெமீல் கூறுகிறார்.
"வாப்பா - உங்குட உப்ப அவங்க ஒண்டும் தின்னல்ல. புண்ணியத்தில நீங்க உப்புப் போடவுமில்ல. அவங்கட உழைப்புலதான் நாம் சோறு திண்டம். நீங்க போடியார் ஆனீங்க. உலகம் மாறி வருகுது. ஒங்குட பழைய காலத்து முதலாளித் துவப் பெருமையெல்லாம் எப்பவோ அழிஞ்சி போச்சி. நீங்க பெரிய போடியராக பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளராக, ஹாஜியாராக இருப்பதனாலெல்லாம். ஒரு பெரிய அந்தஸ்தை நீங்களே பாவனை பண்ணிக்கொண்டு ஒரு வெறும் வெளியில் உலவுகிறீர்கள்."
அ. ஸ. அப்துஸ்ஸமதுவின்பனிமலர் மட்டக்களப்புப்பகுதி இஸ்லாம் மதத்தினரின் பேச்சு மொழியைக் கையாள்கிறது. மொழியாராச்சி மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நவீன தமிழ் இலக்கிய மாணவர்களுக்கும் ஆய்வுக்குப் பயன்படக் கூடியதொரு நாவல் இது. அடிக்குறிப்புகள்
இந்த நாவலில் வரும் சில பிரயோகங்களுக்கு அடிக் குறிப்புகள் தேவைப்படலாம். அக்குறிப்புகள் இல்லாமலே கதையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆயினும் சில குறிப்புகள்
96

கே. எஸ். சிவகுமாரன்
ஆய்வாளருக்கு உதவுமென்பதால், நாவலாசிரியர் பின்னர் ஒர் இணைப்பை நாவலில் சேர்க்கலாம்.
மட்டக்களப்புப் பகுதிப் பழமொழிகள், பிரயோகங்கள் இந்நாவலில் நிறையக் காணப்படுகின்றன. பனிமலரில் இடம்பெற்றுள்ள இத்தகைய பதங்களிற் சில:
"சுமந்திரம், விசகளம், வெள்ளாமை காரன், முள்ளுமறியாம மவுசு, அம்மி மிதிக்குது அரசிலை தாழுதுடா, படிப்புல நிக்குதுகள், இரணம் திங்க, இரிக்கி, போற எடத்த போக்கிற்று, சுட்டியவாங்க, தாங்கலாக வட்டா, மஞ்சள் அடித்துப்பார்க்க, உட்டுக்கட்டலாம். ஈனநடக்கிற உழுவீங்க, எண்டுலுவா, திருமலை வெசறக் கிட்டுகிறாய் அத உடு, உச்சாரக் கோப்புல, புடிவாதமிருக்கி, தேயிலையைக் குடியன், தெகப்புட்டியில மரிச்சவளப் போல, கேக்கார், காலமும் ஒருத்தும் வரக்க களாக்காறன்வந்துகதவத்தட்டுவான் எண்டு. மனத்தாவத்த கிட்டாதங்க, காக்கா பொண்டி, முழுத்தச் சாப்பாடு, வாறன் கிளி, முகங்கள் வெள்ளையடித்துத் தின்றன. நடந்த புல்சாகாமல், இரிக்கிலுவா, குஞ்சிக் கோழி எண்டாலும் குனிஞ்சிதானே அறுக்கணும், நல்ல பறக்கத் தான நாள், வருத்தமும் வாதையுமான நேரம், வல்லான் விரியே ஆடுமகன் வளியில் கருவி மனிதர்களாம்".
கதைப் பின்னல், பாத்திர வார்ப்பு, உரையாடல். வருணனை, கதை மூலம் உணர்த்தப்படும் செய்தி, சமுதாயச் சித்திரிப்பு. மொழி நடை, ஆசிரியரின் தத்துவம், நாவல் இலக்கியப் பரப்பில் பனிமலர் இடம் போன்றவை பற்றி விரிவாகவும் தனித்தனியாகவும் விமர்சனம் எழுதப்பட வேண்டும். இங்கு எனது நோக்கம் நூல் மதிப்புரையைச் சில அவதானிப்புகளைப் போக்கோடு போக்காகக் கூறுவதாய் அமைந்துள்ளது. இறுதியாய்வில், அ. ஸ. அப்துஸ் ஸ்மதுவுக்கு இது ஒரு வெற்றிப் படைப்பு. நீங்களே படித்துப் பாருங்கள்.
தினகரன் வாரமஞ்சரி 20-02-1983
97

Page 56
செ. யோகநாதன்
இரவல் தாய்நாடு
இன்று ஈழம் பெருமைப்படும் முக்கிய தமிழ் எழுத்தாளர் களில், கலை நயத்துடன் வாழ்க்கைக் கோலங்களைச் சித்திரிக்கும் படைப்பாளியான யோகநாதன் விசேஷமாக குறிப்பிடத்தக்கவர்.
யோகநாதன் கதைகள், ஒளி நமக்கு வேண்டும், கண்ணிர் விட்டே வளர்த்தோம், காவியத்தின் மறுபக்கம், இரவல் தாய் நாடு, கனவுகள் ஆயிரம் ஆகியன இவருடைய நூல்கள். குறுநாவல், சிறுகதை, கவிதை, மொழி பெயர்ப்பு ஆகியன இவர் ஈடுபாடு கொண்ட துறைகள்.
யுகமாற்றம் வேண்டுவோர் அணியிலே தானும் ஒருவன் என்றும், அதற்காகவே தான் எழுதுவதாகவும் கூறிக் கொள்கிறார் யோகநாதன்.
"எனது கதைகள் தானாக உருவானவையல்ல. என் சூழ்நிலை உந்துதல்கள், எனது நம்பிக்கைகள், இளவயதி லிருந்தே நான் பங்குகொண்டு நேசித்து, பயின்று. ஊர்வலம் வந்து எனது இயலுகின்ற உடனடித் தன்மையான எழுத்தை யளித்து வரும் நான் பிணைந்துள்ள இயக்கத்தின் கோட்பாடுகள் - நான் பிறந்ததிலிருந்து இன்று வரை கண்டு,
98

கே. எஸ். சிவகுமாரன்
பேசி. மகிழ்ந்து, கலந்து உறவாடி, துன்புற்று. அந்தத் துன்பங்கள் ஒழிந்து போக விரும்புகின்ற மக்கள் மேல் நான் கொண்ட நேசம் ஆகியவையினாலே என்னில் விளைந்த சிந்தனையும் சீற்றமும், நம்பிக்கையும், நம்பிக்கையீனமும், ஆவேஷங்களும், நெகிழ்வுகளுமே என் கதைகளாக மாறின. எனவே இவையெல்லாம் எனது வாழ்வின் குறிப்புகளே" என்று யோகநாதன் தெளிவாகவே தமது நிலைப்பாடைத் தெரிவித்திருக்கிறார்.
இரவல் தாய்நாடு தொகுதியிலே ஆறு குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றாக இக்குறு நாவல்களைப் பார்ப்போம்.
பதினைந்து வருடங்கள் அமெரிக்காவில் பல ஆராய்ச்சி களை நடத்திப் பெயர் பெற்று தனது பிறந்த நாட்டிற்கு வந்த ஓரிரு தினங்களிலேயே அருளம்பலம் என்ற ஈழத்தவன் கைது செய்யப்பட்டுத் தனது பிரஜா உரிமை பெற்ற நாடாகிய அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பப்படுகிறான். ஈழம் அவனுக்கு இரவல் தாய் நாடாகிறது. அவன் ஏன் அப்படியான நிலைக்கு உட்பட வேண்டும்? அங்குதான் ஈழத்தின் வடபகுதி அரசியல் நிலைமையும் இருபது வருட வரலாறும் வருகிறது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அக்கறையும், அபிலாஷைகளும், அறிவுத் தெளிவும், மனித உரிமைப்பிரக்ஞையும் அருளம்பலத்திற்கும் இருந்தன. ஆனால் அவனுடைய நிஜத்தைத் தவறாக அர்த்தப்படுத்தி ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துகிறார்கள் அரச காவற் படையினர் என்பது கதை கூறும் செய்தி.
பயங்கரவாதம், ஆயுதப்படையினர், அட் டுழியம் போன்றவை பற்றி வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மூலம் நாம் தினமும் அறிந்து வருகிறோம். இவை எல்லாம் இலங்கை க்கு மட்டும் பிரத்தியேகமானவையல்ல. இக்கதையில் நமது
99

Page 57
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
நாட்டு ஆயுதப்படையினர் சம்பந்தப்படுவதாகக் கூறப்படும் சில அட்டுழியங்கள் விபரிக்கப்படுகின்றன. இவற்றில் உண்மை யில்லாமலில்லை. சர்வதேச மன்னிப்பு இயக்கம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சங்கம் போன்றவை இச்செயல்களை அம்பலப்படுத்தியுள்ளன. எனவேநாவலாசிரியர்நன்கு தெரிந்த செய்திகளைப் பின்னணியாகக் கொண்டு பரிதாபத்திற்குரிய ஓர் இனத்தில் பிறந்த ஒருவனின் நியாயமற்ற வீழ்ச்சியைக் கலை நயமாகச் சித்திரிக்கிறார். நர்மதா பதிப்பகத்தார் கூறியிருப்பது போல, "மானுடத்தின் காயங்களை, மொத்த மனிதகுலத்தின் மேன்மைக்காக ஆத்மசுத்தியுடன் பரிசீலனை செய்யும்" ஆக்கங்களில் இக்கதையும் ஒன்று.
இக்கதையிலே, கதை சொல்பவர் அருளம்பலத்துடன் தான் நேரடியாகச் சம்பந்தப்படும் இடங்களில் தன்மையில் கதையை எடுத்துக் கூறுவதுடன், தான் சம்பந்தப்படாத இடங்களிலும் படர்க்கைக் கோணத்திலிருந்தும் கதையைச் சொல்கிறார்.
யோகநாதனின் கதைகளைப் படிக்கும் பொழுது மொழியின் பயன் மதிப்பு நன்கு உணரப்படலாம். ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுள்ள கவிதை சுமந்த சொல்லோவியங்கள்.
இரவல் தாய் நாடு கதையில் பொலிஸ், இராணுவ அட்டுழியம் பற்றி விபரிக்கப்பட்ட அளவிற்கு, பயங்கர வாதத் தின் மறுபக்கம் பற்றியும் கூறப்பட்டிருக்குமாயின் ஒருவித "ஒப் ஜெக்ரிவிற்றி" கதையில் வந்த சேர்ந்திருக்கும். இருந்த போதிலும், ஈழத்தில் சமகால வாழ்க்கையின் ஒரு பரபரப்பான கால கட்டத்தின் சில அம்சங்களை இக்கதை கூற முற்படு கிறது. அந்த விதத்தில் இக்கதை பலருடைய கவனத்தையும் ஈர்க்கும்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரு கோடை
00

கே. எஸ். சிவகுமாரன்
விடுமுறை என்ற நாவலையும் இக்குறுநாவலையும் ஒப்பீடு செய்வது சுவாரஸ்யமாயிருக்கும்.
இரவல் தாய் நாடு என்ற கதை மூலம் பேரினவாதத்தின் சிதறல் நடவடிக்கைகள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படுகிறதென்றால்,சாதிகள் இல்லையடி பாப்பா கதையில், தமிழினத்துள்ளேயே சாதிப் பேரபிமானம் எவ்வாறு வளர்க்கப்பட்டு, "பிரித்து வாழும்" மனப்பான்மை அரசியல் வாதிகளாலும், "நரிமனப்பான்மை"யுள்ளவர்களாலும் தூண்டப் படுதல் காட்டப்படுகிறது. கிராமிய அரசியல் இன்னமும் வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதைநாவலாசிரியர் இங்கு காட்டுகிறார்.
இருள் கொண்ட அறைகள் என்ற கதை யோகநாதன் அக்கறை கொண்டுள்ள மற்றொரு விஷயம் பற்றியது, பெண் விடுதலை. நல்ல கற்பனை எழுத்து. விபசாரம், பெண் ணடிமைத்தனம், ஆண் அதிகாரம் போன்றபோக்குகளைச் சுட்டிக் காட்டி, இன்றைய விழிப்படைந்த பெண் (அவள் தமிழச்சியாயிருந்தால் என்ன) ஆண்வர்க்கத்துடன் தர்க்கிப்பது ஒரு புறமிருக்க செயலிலும் தமது சமத்துவத் தைக் காட்டத் தயங்கார் என்ற கருத்தை நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார். படித்த பெண்கள் மத்தியில் சர்வ சாதாரணமாய் பற்றுக் கொண்டுள்ள நாவலாசிரியர் கருத்துக்கள்.நடைமுறையிலும் இன்று செயற்படுவதைச் சில இடங்களில்நாம் இன்று காண்கிறோம். யோகநாதனின் கதாநாயகி பாலாம்பிகை வெளியே தொழில் பார்ப்பவள் அல்லள்.அவளே அப்படியென்றால், அலுவலகத்தில் எட்டு மணி நேரமும், வீட்டில் எட்டு மணி நேரமும் உழைக்கும் பெண்,குடும்பவாழ்வில் அடிமையாக வாழவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயமாகாது தான்.
101

Page 58
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
இத்தொகுப்பிலே இடம் பெற்றுள்ள கதைகளில் மிகவும் பயனுள்ள - சமூகப் பணியொன்றை செய்யும் படைப்பு கண்ணில் தெரியுதொரு தோற்றம் கதை சிங்கள - தமிழ் உறவை மனிதநேய அடிப்படையில் ஆராய்கிறது. அதே சமயம் இலட்சியம் ஒன்றை அழுத்திக் கூறுகிறது. இந்த இலட்சியக் கோட்பாடு கொள்கையளவில் நன்றாகத் தானிருக்கிறது. ஆனால் நிலைமைகள் வெவ்வேறு வடிவங்களாகப் பரிணமிக்கும் பொழுது அவ்வாறானநிர்மூலப் போராட்டம் சாத்தியமானதுதானா என்ற கேள்வியும் எழுகிறது. சிங்கள - தமிழ் உறவைச் சகல பரிமாணங்களோடும் விமர்சிக்கும் இக் கதை சிங்களத்தில் மொழி பெயர்க்கப்படின் நாவலாசிரியர் நம்பும் அரசியல் ரீதியான மாற்றத்திற்கு உதவினாலும் உதவக் கூடும். இக் கதையில் கதை மெருகு குன்றுவதற்கான காரணம் கொள்கை விளக்கத்தில் செலுத்தப்பட்ட அக்கறை போலும்.
சிங்களப் பெண்ணான நந்தாவதி மூலம் அல்லது அவளை மையமாக வைத்து கண்ணில் தெரியுதொரு தோற்றம் வரையப்பட்டால், இருபது வருஷங்களும் முன்று கதைகளும் என்ற கதை சுமணதாச என்ற சிங்கள இளைஞனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை யாகும். இக்கதையிலே தம்மிகா. தர்மபால என்ற வேறு சிங்களப் பாத்திரங்களும் வருகின்றன. பல்கலைக் கழகத்திலே இனம் இனத்துடன் சேராமலும், வர்க்கம் விட்டு வர்க்கம் பாயும் கற்பனையுடனும் வாழ்பவர்கள். சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் தம்மைப் பற்றிச் சிந்திப்பதனால், ஈற்றில் விபரீதமான முடிவுக்குத் தான் வரவேண்டும் என்றுகதாசிரியர் கூறுகிறார். கல்லுடைக்கும் கிழவியின் மகன் பல்கலைக்கழகத்திலே பரிதவித்துத் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சோகக் கதையைப் படித்தவுடன் கண்ணி விட நேரிடுகிறது.
102

கே. எஸ். சிவகுமாரன்
இத்தொகுதியில் இறுதியாக இடம் பெற்ற தோழமை என்றொரு செயல் அடம்பன் கொடியும் திரண்டால்மிடுக்கு என்ற பழமொழியை நிரூபிக்கும் விதத்தில் ஏழைத் தொழிலாள மக்கள் தமது பகைவனுக்கு எதிராக எழும் துணிவைச் சித்திரிக்கிறது.
ஆக யோகநாதனின் இக்குறு நாவல்கள், வர்க்க நலன், சிங்கள - தமிழ் உறவு பெண் அடிமைத்தனம், ஆயுதப்படையினர் அட்டுழியம், சாதிப்பிரக்ஞை போன்ற விஷயங்கள் பற்றிய விஷயத் தெளிவான பிறப்பை கொண்டவை. இவற்றில் சிலவற்றை ஏற்கனவே படித்திருந்ததனால், புதிய அனுபவம் எதனையும் நான் பெறவில்லை. ஆயினும் கண்ணில் தெரியுதொரு தோற்றம், இருள் கொண்ட அறைகள் ஆகியனவும் இரவல் தாய் நாடு குறுநாவலும் செ. யோகநாதனின் முதிர்ச்சியைக் காட்டுவன. வடிவத்தைப் பொறுத்த மட்டில், குறுநாவல் என்ற இலக்கிய வகையினைக் கையாள்பவர்களுள் யோகநாதனே பெரும்பாலும் கைதேர்ந்தவராக கருதப்படுகிறார்.
இலங்கை எழுத்தாளர்கள் பற்றிய அறிவு நிரம்பிய புது டில்லி லைப்ரரி ஒப் கொங்கிரஸைச் சேர்ந்த வேம்பாக்கம் திரு. கே. சுப்பிரமணியனுக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி வாரவெளியீடு 01-05-1983
103

Page 59
புலோலியூர் க. சதாசிவம்
மூட்டத்தினுள்ளே.
பல நூல்களின் ஆசிரியரும், வானொலிப் பிரதிகள் எழுதும் எழுத்தாளரும், பல பரிசுகளைப் பெற்றவரும், தோட்ட மருத்து வரும், புலோலியைச் சேர்ந்தவருமான க. சதாசிவம் எழுதிய புதிய நாவல் இது.
மலையகத் தமிழரின் அவல நிலையைச் சித்திரிக்கும் பல படைப்புகள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அவற்றைப் படித்தறிந்த நாம் இந்த நாவலில் விவரிக்கப்படும் சம்பவங்கள் மூலம் பழைய பிற்போக்கான வாழ்க்கை முறை தொடர்ந்தும் இருந்து வருவதை மேலும் அறிகிறோம். தோட்டங்களைத் தேசிய மயமாக்கிய பின்னர் தோட்ட வாழ் மக்களுக்குப் புது வாழ்வு கிடைத்துவிடும் என்று எண்ணியதெல்லாம் பகற் கனவுதான். வெள்ளைத் துரைமார்களுக்குப் பதிலாகப் பெரும்பான்மை இனத்தாரின் துரைத்தனம் ஆட்சி செலுத்து வதைக் காண்கிறோம். அதேசமயம் அவர்களிலும் நல்லவர்கள் இருப்பதை நாவல் சுட்டிக்காட்டுகிறது. இடமாறுதலாக வந்த புதிய பெரியதுரை, சோமாவதி குடும்பத்தினர். சக தொழிலாளர்கள் ஆகியோர் 1977 கலவரத்தின் போது நடந்து கொண்ட விதத்தில், நம்பிக்கை முற்றாகவே அற்றுப் போக வில்லை என்பதை நாவலாசிரியர் உணத்துகிறார்.
104.

கே. எஸ். சிவகுமாரன்
முற்று முழுதாக ஒரு சமூக ஆவணம் மாத்திரமே இது என்று இந்நாவலை ஒதுக்கிவிட முடியாது. காதலும் மனித உறவுகளும் திட்டப்படுகின்றன. பெருமாள் என்ற கதாநாயகன் (இவனை ஒர் இலட்சிய பாத்திரமாக ஆசிரியர் பார்க்கமற் போனதுவரவேற்கத்தக்கது) சோமாவதி என்ற சிங்களப் பெண் உட்பட பூவாயி. அஞ்சலை போன்ற பெண்களினால் கவரப் படுகிறான். அஞ்சலை அடுத்த காம்பரா விதவை. குழந்தை அவளுக்கு உண்டு. பச்சாத்தாபத்தினால் அவளுக்கு உதவப் போக, அவளை அவன் வைத்திருக்கிறான் என்று அவப்பெயர் அவனுக்குக் கிடைக்கிறது. அதேபோல, பூவாயி என்ற சிறு பராயத் தோழி அவனிடம் பிரேமை கொள்வதை அவன் அறியாமல்இருக்கிறான்.சோமாவதிஎன்ற பெண்ணும் இவனிடம் மையல் கொள்வதை இவன் அறிகிறானில்லை. இறுதியில், பூவாயி தாயகம் திரும்ப, சோமாவதி பெருமாளை மணக்கின் றாள். காதல் உணர்வுகளை மெல்லியதாகப் பாத்திரங் களிடையே உள்ள உறவுகள் மூலம் நாவலாசிரியர் உணர்த் துகிறார்.
நாவலின் சிறப்பானமற்றோர் அம்சம் அதுநம்பிக்கையை வலியுறுத்துவதுதான். பேரினவாதத்தின் முன்னிலையில்மனித உறவுகள் மிருகத்தனமாக அமைந்தாலும், மனித சமுதாயத்தை விரும்பும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் மத்தியில் இருந்து உண்மை, நேர்மை, அன்பு போன்ற பயன் மதிப்புகள் மீண்டும் வலியுறுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை நாவல் தொடுகிறது.
சமகால வாழ்க்கையைச் சித்திரிக்க முற்படும் பொழுது கட்டுரை வடிவிலமைந்த ஆவண ரீதியான ஆய்வுக்கும், ஆக்கத் திறனுள்ள தேர்வு முறையிலமைந்ததும் பாத்திரப் படிமம் பதியத்தக்க விதத்தில் அமைந்ததுமான படைப்புக்கும் இடையே வித்தியாசமிருப்பதை அவதானித்தல் வேண்டும்.
105

Page 60
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
புலோலியூர் க. சதாசிவம் திறன் வாய்ந்த ஓர் எழுத்தாளர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் தேர்வுகளில் சிறிது சிக்கனம் இருந்தால், அவருடைய நாவல்கள் இயற்பண்பைத் தவிர்த்து யதார்த்தப் பண்பை உள்ளடக்கியதாக அமையும். அவருடைய யுகப்பிரவேசம் சிறுகதைத் தொகுதி தந்த 'கலைத்துவத்தை அவருடைய நாணயம், முட்டத்தினுள்ளே ஆகிய நாவல்கள் இனங்காட்டவில்லை.
சில எழுத்தாளர்களுக்குச் சில வடிவங்கள் கை கொடுக் கின்றன. சிலரது சிறுகதைகள் சிறப்பாய் இருக்கும்,நாவல்கள் சோபிக்கா. அதேபோல் நாவல்கள் பிரமாதமாக இருக்கும் சிறுகதைகள் வாய்க்கமாட்டா. ஒரு சிலர் எல்லா வடிவங் களையும் நன்றாகத்தான் கையாளுகிறார்கள். எனவே குறு நாவல்கள் ஓர் இடைப்பட்ட தரத்தையும், திருப்தியையும் தரக் கூடும். நண்பர் சதாசிவம் இந்தக் குறுநாவல் வடிவத்திலும் தமது ஆற்றலை நிரூபிக்கலாம் அல்லவா?
தினகரன் வாரமஞ்சரி 29-04-1984
106

கோகிலா மகேந்திரன்
துயிலும் ஒருநாள் கலையும்
கோகிலா மகேந்திரன் ஆய்வறிவு(இன்டெலெக்ஷ"வலி) ரீதியாக, அகவயமான யதார்தப்படைப்புகளைப்படைக்கிறார். அவருடைய கதைகளில் கருத்தும் கலையும் கல்யாணஞ் செய்து கொள்கின்றன. உள்ளார்ந்த நேர்மையும், சிலிர்ப்பும், கோகிலாவின் எழுத்துக்களில் சிறப்பம்சமாகின்றன. அவருடைய படைப்புக்களில் சமூக யதார்த்தமும், உளவியல் யதார்த்தமும் இணைகின்றன. எளிமையும் வாய்மையும் அவருடைய எழுத்துக்கு கெளரவமளிக்கின்றன.
இந்தப்பண்புகளினால், தமிழில்எழுதும் பெண்எழுத்தாளர் களிலே ஆகக் கூடுதலான அளவு வெற்றி பெற்றிருப்பவர் கோகிலா மகேந்திரன்.
துயிலும் ஒரு நாள் கலையும் என்ற நாவல் உண்மையில் ஒருநாவலே அல்ல. ஒரு தொடர்கதை அல்லது ஒரு குறுநாவல் எனலாம்.நாவலுக்குரிய பூரணத்துவம், சகலபாத்திரங்களினது முழுமைப் பரிமாணங் கொண்ட சித்திரிப்பு ஆகியன இந்தப் படைப்பில் வந்து அமையவில்லை. முதலில் தொடர் கதையாகவே எழுதப்பட்டுச் சிறிது மாற்றங்களுடன் இப்பொழுது நூல்வடிவம் பெற்றுள்ள இந்த ஆக்கத்தை ஒரே
107

Page 61
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
மூச்சில் மீண்டும் படித்துப் பார்த்தபோது, நிறைவுகள் இருக்கும் அதே சமயம் குறைகளும் இருப்பதைக் காண முடிந்தது.
சிறுமை கண்டு வெகுண்டெழும் நல்ல எழுத்தாளர்களைப் போலவே, கோகிலா மகேந்திரனும் ஒரு நல்ல எழுத்தாளர். மனித பலவீனங்களையும் வேஷதாரித்தனங்களையும் அம்பலப்படுத்துபவர். மக்களிடையே குறிப்பாகப் புதிய பரம்பரையினர் மத்தியிலே பலமிழந்து போகும் பயன் மதிப்புகளை மீண்டும் வலியுறுத்துவதில்நாட்டமுடையவர். வழி தவறிச் செல்வோரின் மீட்சியில் கோகிலா போன்றவர்கள் அக்கறை கொள்வது நம்பிக்கையை ஊட்டுகிறது.
வர்த்தகள் ஒருவரை மணம் முடித்தபள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் மணவாழ்வில் அதிருப்தி காண்கிறாள். கணவனுக்கு மனைவி மீது பொறாமை. இந்தக் கணவன் ஒரு சந்தேகப் பேர்வழி. அவன் கற்றவனுமில்லை. எனவே அவனுக்குப் படித்த மனைவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனைவியோ அன்பைநாடிநிற்கிறாள். கணவனோ ஆதிக்க வெறிபிடித்தவன். சொற்களால் அவளைத்துன்புறுத்துகிறான்.சாதிப்பெருமையும் பணத்திமிரும் பிடித்தவன்.
இதற்கிடையிலே, பள்ளிக்கூடத்திலே சக ஆசிரியர் ஒருவர். இந்த ஆசிரியைமீது அன்பும், கருணையும் காட்டுகிறார். இந்த ஆசிரியர் ஒரு முற்போக்காளர். அவளின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் தன்மையும், மேதாவிலாசமும் கொண்டவர். அவள் வாழ்க்கைத் துயரை நீக்கும் பொருட்டு, கணவனிட மிருந்து பிரிந்து வந்து, தன்னுடன் வாழும்படி அவளை அந்த சக ஆசிரியர் கேட்டுக் கொள்கிறார்.
ஏழு வருடத் தாம்பத்திய உறவின்பின் காலந்தப்பி அவள் கருவுற்றிருக்கிறாள். ஆனால் அவள் கணவனோ, அவளுக்கும் அந்த ஆசிரியருக்கும் தகாத உறவு தொடர்ந்திருப்பதாக
108

கே. எஸ். சிவகுமாரன்
நினைத்துக் கொள்கிறான். எனவே அவள் தனது விடுதலைக் காகவும். மீட்சிக்காகவும் தனது கணவனிடமிருந்து பிரிந்து, சக ஆசிரியர் தேடிக்கொடுத்த வீட்டில் தனித்தே வாழ்கிறாள். மேற்கண்டவாறு இக்கதையின்போக்கை எடுத்துக் காட்டலாம்
இந்தக் கதையில் வரும் இரு முக்கிய ஆண் பாத்திரங் களான கணவனும், தோழனும் கதாநாயகியின் அகவயப்பட்ட கண்களுடகவே நம்முன் காட்சியளிக்கின்றனர். உளப் பகுப்பாய்வுத் தன்மையுடனும் ஆய்வறிவுரீதியாகவும், கதை சொல்லப்படுகின்ற போதிலும், கதாநாயகியின் உளச்சார்பின் வடிவங்களாகவே ஆண்பாத்திரங்கள் தீட்டப்படுகின்றன. கதாசிரியை கோகிலா. கதாநாயகிபூரணியின் சார்பில் நின்றே பேசுகிறார். கதாநாயகி தானே சுயவிமர்சனம் செய்பவளாகப் படைக்கப்பட்டிருப்பின் கதையின் பலமும், ஆழமும் இன்னும் கூடியிருக்கும்.
டேல் கார்னெகியை மேற்கோள் காட்டும் கதாநாயகி, அம்மேற்கோள்களுக்கு இணங்கியவாறு தனது கணவனின் நோக்கினின்று தன்னையே விமர்சனம் செய்து பார்க்க முயற்சி செய்யவில்லை. "லவ் விதவுட் செக்ஸ்" (காமங் களைந்த காதல்) என்பது கதாநாயகியின் இலட்சிய நோக்கு. அதனை நியாயப்படுத்தும் வகையிலே இத்தொடர்கதை எழுதப் பட்டிருப்பது போலத் தெரிகின்றது.
பாலசிங்கம், பூரணியிடமிருந்துசெக்ஸை எதிர்பார்த்ததில் தப்பில்லை. அதே போல, இந்திரன் மாஸ்டர் பூரணிமீது செக்ஸ் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனவும் கூறுமுடியாது. பாலசிங்கம் செக்ஸை மட்டுமே எதிர்பார்த்தான் என்பது கதாநாயகி பூரணி செய்த முடிவு. அப்படித்தான் என்றாலும், விரும்பியிருந்தால், பூரணி அவன் தன்மீது அன்பு செலுத்த உதவும் பொருட்டுச் சிறிது நெகிழ்த்திக் கொடுத்திருக்கலாம். அவனை மாற்றியிருக்கலாம். அவன் காமத்தையே நாட்டங்
109

Page 62
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
கொண்டவன். சுயநலவாதி. அறிவுரீதியாகவும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் என்பது பூரணியின் கணிப்பு என்றால், அவன் சுயநலத்தைக் கைவிடும் வகையிலும், அவன் அறியாமையை நீக்கும் விதத்திலும், அவன் காமத்தை நெறிப்படுத்தும் வகையிலும், அவள் தன்னாலியன்ற முழு முயற்சிகளை எடுத்தாள் என்பதற்கு கதையில் பல சம்பவங்கள் இல்லை. ஆனால் கதாசிரியை கோகிலா. தனது கதாநாயகி, இவ்விதமான சம்பிரதாய முறையிலே, அதுவும் விழிப்படைந்த பெண்ணொருத்தியின் சரிதத்தைப் படைக்க விரும்பவில்லை.
யாழ்ப்பாணச் சமுதாயத்திலே, தார்மீக உரிமையுடனும், உளவியல் சார்ந்த நிலைப்பாட்டுடனும், தனது கதாநாயகி நடந்து கொள்வதை எடுத்துக் காட்ட ஆசிரியர் முற்படுகிறார். கதையின் முடிவு
எழுத்தாளன் இப்படித்தான் எழுதவேண்டும் என்று சட்டதிட்டம் கிடையாது. கதையை எவ்வாறு முடிக்க வேண்டுமென்றுகதாசிரியைவிரும்பினாரோ அவ்வாறுமுடிப்பது அவரது தனியுரிமை. ஆயினும், கதை நிகழ்த்தப்படும் மாதிரியில், முடிவு புரட்சிகரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வாசகள் மனதில் எழுகின்றது. அதாவது: கதாநாயகி தன்னைக் கேவலப்படுத்திய கணவனைத்துறந்து உண்மையிலே தன்மீது கருணை காட்டும் அந்தச் சக ஆசிரியருடன் வாழ்க்கையைத் தொடருவாள் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் அவளோ கணவனைத் துறந்தாலும் கட்டுப்பாடுகளுக்குப் பயந்தோ என்னவோ. சக ஆசிரியருடனும் சேர்ந்துவாழாமல், தனிமையில் வாழ முடிவு செய்து சவால்களை ஏற்கத் தயாராகிறாள்.
* சக ஆசிரியர் தேடிக் கொடுத்த வீட்டில் தனித்தே வாழ முற்படுகிறாள்.
ஆக, ஒரு விதத்திலே சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து
110

கே. எஸ். சிவகுமாரன்
அவள் முற்றாக விடுபடவில்லை. அதேசமயம், இன்னொரு அம்சத்திலே, தனது தனித்துவத்தைக் காட்டுகிறாள். அதாவது ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவள் பிரயோகித்து நிறைவேற்றுகிறாள். ஆண் ஆதிக்கச் சமுதாயத்திலே, ஒரு பெண் சுதந்திரமாகத் தானே முடிவு செய்து நடத்தல், மாற்றத்தின் அறிகுறி எனலாம். அவ்வாறு நோக்கும்போது, அவளுடைய அந்தச் செயல். ஒரு சிறிய அளவிலான புரட்சி எனலாம்.
அதேவேளையில், கதையைக் கொண்டுபார்க்குமிடத்து, அவள் புரட்சியாய் நடந்து கொள்வது வெறுமனே பெண் சுதந்திரத்தைக் காட்டுவதற்கு மாத்திரமல்ல, ஆணின் வேஷ தாரித்தனங்களை அம்பலப்படுத்தி, அவற்றிற்கு எதிராகப் புரட்சிப் பாங்குடன் நடந்துகொள்வதுங்கூட. எனவேதான் கதாசிரியை கோகிலாவின் நிலையினின்று நாம் பார்த்தோமாயின் கதையை அவர் முடித்த விதத்தை நாமும் நியாயப்படுத்த முடிகிறது.
முடிவு எப்படியிருந்திருக்குமாயினும், கதைப்போக்கிலே பாத்திர வார்ப்பிலே சமநிலை இருந்திருக்குமாயின், கதை இன்னும் சிறிது கனதி பெற்றிருக்கக்கூடும். உதாரணமாக, தனது குடும்பத்தின் நலனில் தனது கணவன் சிறிதளவாவது அக்கறை கொண்டிருந்தான் என்பதைக் கதாநாயகி ஒரேயொரு சந்தர்ப்பத்திலேதான் உணருகிறாள்.
தனது கணவனுடன் கொண்ட தனது போட்டாபோட்டித் தன்மையைத் தளர்த்தி, அவனுடைய மட்டத்திற்குச் சென்று அவனுடையநிலைப்பாட்டைப்புரிந்துகொள்ள முற்பட்டதாகப் பாத்திரவார்ப்பு அமையவில்லை. கதாநாயகியின் பார்வையில் கதை சொல்லப்படுவதனால், குறிப்பிட்ட தாம்பத்திய வாழ்க்கையின் முழு அம்சங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு வாசகர்களுக்குக் கிடைக்காமற் போகிறது.
1

Page 63
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
நிறைவுகள்
இந்த நாவல் எளிமையான முறையிலே, நேரிடையாக கலை நுட்பத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக் கப்பட்ட சம்பவங்கள், சொற்கள். கட்டுக்கோப்பு, செட்டு, செறிவு போன்றவை அவர் எழுத்துக்களில் விஷேசமாகக் குறிப்பிடத் தக்க அம்சங்கள்.
பூரணி என்ற கதாநாயகி, பாலசிங்கம் என்ற தனது கணவனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமும், அவன் பற்றிய கணிப்பைத் தெரிவிக்கும் விதமும் அவளது உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகின்றன.
சுவாமி சின்மயானந்தரின் கூற்றை, பூரணி மீது அன்பு செலுத்தும் இந்திரன் மாஸ்டர் நினைவு படுத்துகிறார்: "உங்கடை இதயத்தின்ரை கதவை உங்கள் ஒருத்தராலை தான் திறக்க முடியும். ஏனெண்டால், அது வெளிப்பக்கமாகப் பூட்டப்படவில்லை. உள்ளேயிருந்து தாழ் போடப்பட்டிருக்கு." மணிமொழிகள் பல வரும் இந்தப் படைப்பிலே, மேலும் ஒரு பகுதி குறிப்பிடத்தக்கது.
"எங்கள் எதிரிகளை வெறுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்காக, அனுதாபப்படுவோம். . அவர்களை விமர்சிப்பதற்கு அல்லது அவர்களைப் பழி வாங்குவதற்குப் பதிலாய் அவர்களுக்காய் அனுதாபப்படுவோம். அவர்களை விளங்கிக் கொள்வோம். அவர்களுக்கு உதவுவோம். அவர்களை மன்னிப்போம். அவர்களுக்காக வேண்டுதல் Glaru (86). Tib."
இந்தக்குறுநாவலின்முக்கியதொனிப்பொருளாக இந்தப் பகுதி அமைகின்றது: "எனக்கு முந்தி வாழ்ந்த பல பொம்பிளையஞம் இப்ப என்னோடை வாழ்ந்துகொண்டிருக்கிற பல பொம்பிளையஞம் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி,
- 12

கே. எஸ். சிவகுமாரன்
ஆசைகளை விழிகளில் மட்டுமே தேக்கி, பெருமூச்சுகளால் தங்களைக் கரைச்சுக் கொண்டு, எப்படியோ வாழ்ந்திட்டுச் செத்துப் போயினம். அந்த நித்திரையிலிருந்து எல்லாப் பொம்பிளையஞம் எழும்ப வேணும். நான் முதலில் எழும்ப வேணும்."
பூரணியின்பாத்திர அமைப்புநன்றாய் அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஒரு தடவை அவள் நினைத்துக் கொள்வதை ஆசிரியர் இவ்வாறு தீட்டுகிறார்.
"என்னதான் கருத்துவேற்றுமைகளும் மனக்கசப்புகளும் இருந்த போதிலும் பாலசிங்கத்தைக் காணவில்லை என்றதும் தன்மனதில் இயல்பாகவே ஒரு துடிப்பு ஏற்படுவதைப் பூரணி உணர்ந்தாள். இதுதான் தாலி தந்த உறவின் மகிமையோ என்று நினைத்தாள்."
ஆசிரியை நாவலை முடித்த விதம் புதுமையாக இருக்கிறது.
"அடுத்த நாளே பூரணி புதிய வீட்டுக்குக் குடி வந்து விட்டாள். தனியாகத்தான்." என்ற வரிகளில் எல்லாமே புரிகிறது.
நாவலின் இறுதியிலே புலோலியூர் ஆ. இரத்தின வேலோன ஒரு தரமான விமர்சனத்தை எழுதியிருக்கிறார். சிற்சில இடங்களில் கருத்து வேறுபடினும், அவரது பெரும்பகுதிப் பார்வை என்னளவில் சரியாகவே படுகிறது.
வீரகேசரி வாரவெளியீடு 22-02-1987

Page 64
ஜெக்கியா ஜ"னைதீன்
ஷர்மிலாவின்இதராகம்
நமது ஆய்விலே ஜனரஞ்சக எழுத்தாளர்களுடைய நோக்கு, கலைத் தரம், நம்புந்தன்மை போன்றவை குறைபாடுடையதாகக் கருதப்படினும் அவர்களது ஆக்கங்களை வெறுத்து ஒதுக்குவதற்கில்லை.
குறிப்பிட்ட இந்த நாவல் வெறுமனே உணர்ச்சி மேலீடான நாவல் மாத்திரமன்று. பாரதூரமான விஷயங்களை அனுதாபத்துடன் அணுகும் யதார்த்த படைப்புமாகும்.
உணர்ச்சிகளின் குவியல்களாக அமையாமல் ஆய்வறிவு ரீதியான பாத்திர படிம வளர்ச்சியையும் தன்னகத்தே கொண்டுள்ளதனால் தனிச் சிறப்பையும் கவனத்தையும் பெறுகிறது.
இந்த நாவலின் தனிச்சிறப்பு என்ன என்று என்னைக் கேட்டால் நாவலின் கதை மாந்தர்களின் பரிணாம வளர்ச்சியைப் படிப்படியாக - யதார்த்த ரீதியாக (முரண்பாட்டு மோதல்களுக்கிடையே) ஆசிரியை வார்த்திருப்பதாகும். அது மட்டுமல்லாமல் தாம்பத்திய உறவுகளை இஸ்லாமியக்
14

கே. எஸ். சிவகுமாரன்
கோட்பாட்டு வரையறைகளுக்குள் உளவியல்ரீதியாக ஆசிரியை சித்திரித்திருப்பது வரவேற்கக்கூடியதுமாகும்.
அந்த விதத்திலே இந்த நாவல் புதுமையான நாவல் மாத்திரமல்ல, ஈழத்துத் தமிழ்நாவலின் கதைவீச்சு எல்லையை நகர்த்திச் செல்கிறது என்றும் கூற வேண்டும். 1980 களில் இத்தகைய கதைகளை எழுதுவது அத்துணை எதிர்பார்க்கப் படாததொன்று. ஆயினும் நாவலைக் கவித்துவமாகவும், கலைநயத்துடனும் ஆசிரியை எழுதியிருப்பதனால் கொச்சைத்தன்மை இன்றி கெளரவமான நடையை நாம் காண்கிறோம். −
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய அல்ஹாஜ் எஸ்.எம். ஏ , ஹஸன் சுட்டிக்காட்டியுள்ள பல கருத்துக்களிலே ஒன்று குறிப்பிடத்தக்கது. "மனம் போன போக்கில் வாழ முற்படுவோருக்கு எச்சரிக்கையாக இந்த நாவலைக் கருதினால் என்ன" என்பதே அவர் கூற்று. இது உண்மை எனின் இந்த நாவலில் வரும் இஸ்மத் என்னும் பாத்திரம், குறிப்பாகத் தன்னிச்சையாக நடந்து கொள்வதனால் தான் அவன் நிலை பரிதாபத்துக்குரியது என்று கூறலாம்.
நாவலின் இதர அம்சங்களை விரிவாக நாம் பார்ப்போமாயின், நாவலுக்கு மதிப்புரை எழுதிய பத்திராதிபர் எஸ் டி. சிவநாயகத்தின் அவதானிப்பு ஒன்றை குறித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
சினிமாத்துறையில் அனுபவம் மிக்கவரும், தலைசிறந்த தமிழ்ப் பத்திரிகையாளரும், முதிர்ந்த தமிழ் கலை, இலக்கிய, சமய, அரசியல் அறிஞருமாகிய திரு. சிவநாயகம் எழுதிய குறிப்புகளிற் சில வருமாறு:
இந்தக் கதை எழுதப்பட்டிருக்கும் விதம் காட்சி வட்டங்களாக (Visualprojection) அமைந்து இருக்கிறது. ஒரு
115

Page 65
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
கை தேர்ந்த கமெராமென்தனதுசினிமா கமெராவைநகர்த்தும் போது அதன் லென்சின் ஊடாகப் புலப்படும் தோற்றங்கள் அமைவுறும் கோணங்கள் கதையில் அப்படியே விகசித்துள்ளமையை வாசகர்கள் தம் மனக் கண்ணுரடாகக் காண முடியும். ^১
"ஆகவே இக் கதை ஒரு சினிமாவாகத் தயாரிக்கப் பட்டால் பிரமாத வெற்றி பெறும் என்று இக்கதையைப் படிக்கும் போது நான் எண்ணினேன்" என்று கூறும் சிவநாயகம் மேலும் கூறுகிறார்:
"சினிமா அதுவும் தமிழ் சினிமா, இந்த நாட்டில் அருகி வரும் கட்டத்திற்கு வருகிறது. எனவே இக் கதையை சினிமாவாகத் தயாரிப்பதற்கு யார் முன்வருவார்களோ என்ற தயக்கமும் ஏற்படுகிறது".
"ஆயினும் சினிமாவின் இடத்தை டி. வி. ஈடு செய்கிறதே. யாராவது ஒரு சிறந்த டைரக்டர் நம்மிடையே இருப்பாரானால் அவர் இக்கதையை விடியோ என்ற ஊடகத்தின் மூலம் ஒரு டெலிட்ராமாவாக அமைத்துப் பார்க்கலாம். அது ஒரு வெற்றிக் கதையாகத்திரையில் பிரதிபலிக்கும் என்றநம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் எஸ் டி. சிவநாயகம், நமக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது.
ரூபவாஹினித் தமிழ் பகுதியினர் இதனைக் கவனத்தில் எடுப்பர் என்று நம்புவோமாக.
சரி, நாவலுக்கு வருவோம். இதில் 32 அதிகாரங்கள் இருக்கின்றன.264பக்கங்கள். 22ஆம் அதிகாரத்தில் மாத்திரம் சில பக்கங்கள் அடிதலை மாறி அமைந்திருப்பதனால் வாசகள் மத்தியில் சில குழப்பங்கள் ஏற்படலாம்.
இந்த நாவலில் வரும் அத்தியாயத் தலைப்புகளே இலக்கிய தொடர்புடையதாய் அமைந்துள்ளன. உதாரணமாக: 1 16

கே. எஸ். சிவகுமாரன்
அஸ்தமனத்தில் ஒர் உதயம்,பள்ளிவாழ்க்கையும் பருவக் கோளாறும், உதயத்தில் ஒர் அஸ்தமனம், அன்றில் பறவையின் அதிசயக் காதல், மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு, தங்கக் கூட்டில் பச்சைக் கிளி நதிக்காக ஏங்கிய கடல், மணம் வீசாத செந்தாமரை, விரததாபத்தின் வினோத பயணம், கிளியும், கானகத்துக் குயிலும், சுட்டாலும் மாறாத வெண் சங்கு, கோடையில் ஒரு மின்னல், கானல் நீரில் மயங்கிய மான், தலையில் தவழ்ந்த வெண்ணிலவு, எரிமலையில் பனிப்புயல், வெள்ளத்துக்காக ஏங்கிய கிணற்று நீர், கற்பு சுட்டது கறை அகன்றது. கூண்டுக் கிளியும் சிறைப்பறவையும்.
மேற்சொன்ன தொடர்களில் முரண் நிலைகள் தொங்கி நிற்பதையும் எடுத்துக் கொண்ட அதிகாரங்கள் நாவலின் கதைப்போக்கு எவ்வாறு அமையப் போகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாகவும் அமைகின்றன.
இந்த நாவலிலே, கதைப் பொருள் (தீம்) கதைப் பின்னல் (ப்ளொட்), பாத்திர அமைப்பு (கரக்டரைசேஷன்) உரையாடல் (டயலோக்), விவரணை (டிஸ்கிரிப்ஷன்) விறுவிறுப்பு(டெம்போ) அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று உணர்வு (சஸ்பென்ஸ்) மர்மம் (மிஸ்டரி)புத்தாக்கத்திறன் (இனோவட்டிவ் அபிலிட்டி) வாசகள் அனுபவ வீச்சை விரிவாக ஆக்கும் வாழ்வு (எக்ஸ்ரெண்டிங் த ரேஞ்ஜ் ஒப் எக்ஸ்பிரியன்ஸ் ஒப் த ரீடர்) போன்றவை வரவேற்கத் தக்கவையும் பொருத்த முடையனவாயும் அமைதிருப்பது விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது.
கதையைத் தேர்ந்தெடுத்தல், கதையைச் சொல்லும் விதம் கதாமாந்தரின் குணாதிசயங்களையும் பாத்திரக் கோணங்களையும் பொருள் கொண்டு விளங்க வைக்கும் பண்பு (அதாவது இன்டர்பிரிட்டிங் த கரெக்டர்) ஆகியவை ஆசிரியையின் சுயதிறமையும் நோக்கமுமாகும். எனவே அவை
117.

Page 66
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
சம்பந்தமாக வாசகர்களாகியநாம் ஒன்றும் கூறுவதற்கில்லை. இப்படித்தான் எழுத வேண்டுமென்று பணிப்பதற்குமில்லை.
ஆயினும் சில அவதானிப்புகளைத் தெரிவிக்கலாம்.
நாவலை இரண்டுபிரிவுகளாக நாம் படித்துப்பார்க்கலாம். முதலாவது பகுதியில் இலட்சியம் - யதார்த்தம் ஆகியவற்றிற்கான மோதல்களை நாம் காண்கிறோம்.
ஹனிபா மாஸ்டர், மகள் ஹாமிலா உதாரணங்கள், அத்துடன் தார்மீக நெறிமுறைகள் உயர்ந்த விழுமியங்கள் கற்பு என்பது மனதின் கண்ணிலும் நிறைந்திருக்கிறது என்ற கருத்து - அந்த உயர்ந்த லட்சியத்தினால் நடைமுறை வாழ்வும், உறவுகளும் பாதிக்கப்படல், இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளை கதையினுடாக விளக்குதல்,பாத்திரங்களின் பலதரப்பட்ட உறவுகள் - இவை யாவுமே நாடகத் தன்மை வாய்ந்தவையாகவும் துன்பியல் தன்மையை லேசாக உணர்த்துவதாகவும் அமைவது பாராட்டத்தக்கது.
இந்த நாவலிலே வடிர்மிலா தான் முக்கிய பாத்திரமாக வருகின்ற போதிலும், அவருடைய இதயராகமே நாவல் முழுவதும் ஒலித்த போதிலும் என்னைப் பொறுத்த மட்டிலே அனுதாபத்துக்கும் கருணைக்கும் உட்பட்ட ஒரு பாத்திரமாக நஸிகா வருகிறார்.
வளர்ச்சியின்றி சம்பிரதாயத்துக்கு மட்டும் தூபம் போடுபவர்கள், இந்தப்பாத்திரம் சோரம் போவதை வெறுத்துக் காறி உமிழலாம். ஆனால் அவள் அப்படி நடந்து கொள்வாள் என்பதைக் கதை வாயிலாகக் காட்டி காரண காரணத்தை நாவலாசிரியை தொடர்பு படுத்துவதனால், நாமும் அவள் பாத்திரத்தன்மையை மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது.
118

கே. எஸ். சிவகுமாரன்
அவள் சாவு பயங்கரமானது. நாவலாசிரியை ஜெக்கியா ஜுனைதின் கொஞ்சம் 'மெலோட்ராமட்டிக்" ஆக அதாவது அதிதநாடகத்தன்மை கொண்டதாக அவள் கதையை முடித்து விட்டார். அதனால் இரங்கற்பாங்கு அதிகமாகிறது. அவள் வாழ்ந்து புது வாழ்வு ஆரம்பித்தால் அது ஒரு முற்போக்கான அம்சமாக அமைந்திருக்கும்.
ஷாமிலாவின் காதலன் நாவலில் வரவேயில்லைதான். ஆயினும் அமிர் என்ற அவள் அண்ணன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மர்மமாகவே தொடர்பு படுவதால் ஒரு சில இடங்களில் அமிர் என்ற பெயரிலே அவள் காதலன் தான் நடமாடுகிறானோ என்று சந்தேகிக்க வேண்டியும் ஏற்படுகின்றது. பின்னர் அமிர் தான் அவளது அண்ணன் என்று தெரிய வந்ததும் வியப்பும் தளர்வும் ஏற்படுகின்றன.
இஸ்மத்தின் பாத்திர அமைப்பிலே நல்ல அம்சங்களும் கெட்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அவனை யதார்த்த ரீதியாகவும் ஷர்மிலாவின் இலட்சிய ரீதியாகவும் படைத்துள்ள நாவலாசிரியை, நாவலின் பிற்பகுதியில் ஷர்மிலாவின் பழைய காதல் பற்றி அறிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவும் வியப்பையும் தளர்வையும் தருகிறது.
முன்கூட்டியே இஸ்மத்துக்கு ஷர்மிலாவின் காதல் பற்றித் தெரிந்திருக்குமானால், அவன் ஏன் அனுசரித்து நடந்து கொள்வதற்குப் பதிலாக, அவளுடன் முரண்பட்டு நிற்க வேண்டும்? அவளிடம் அன்புடன் நடந்து கொண்டு அவளைச் சிறிது சிறிதாக மாற்றியிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எனவே இஸ்மத் பாத்திர அமைப்பிலே உளவியல்ரீதியாக கவனம் செலுத்தப்படவில்லை என்றே கூற வேண்டும்.
19

Page 67
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
ஷர்மிலா - பெற்றோர், ஷர்மிலா - அமீர், ஷர்மிலா - குழந்தைகள், ஷர்மிலா - இஸ்மத், ஷர்மிலா - நஹினா, மனித உறவுகள், இஸ்மத் - நஹினா. அவள் கணவன் ஆகியோருக் கிடையே உள்ள உறவுகளும் வெகு நேர்த்தியாகப் பின்னப்பட்டிருப்பதை பாராட்டவே வேண்டும்.
நாவலின் சிறப்பு முழுவதுமே ஆசிரியரின் தெளிவான, இலக்கியச் சுவைமிக்க நடையிலேயே தங்கியிருக்கிறது. இதற்கான உதாரணங்கள் ஒவ்வொரு பக்கத்திலுமே இருக்கின்றன.
ஜெக்கியா ஜுனைதின் போன்ற பெண் எழுத்தாளர்கள் நம்மிடையே இருப்பது உற்சாகந் தருவது மாத்திரமல்ல, துணிவாகவும், அழகாகவும், தெளிவாகவும், சமுதாய, தனிமனிதப் பிரச்சினைகளை ஒரு வரையறைக்குள் நின்று கதை மூலம் சுட்டிக் காட்டி எமது அனுபவத்தை அதிகரிக்க உதவியமைக்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டும்.
சிந்தாமணி 28-07-1989
120

கோகிலா மகேந்திரன்
தூவானம் கவனம்
நமது நாட்டு முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவராகிய கோகிலா மகேந்திரனின் புதிய படைப்பான தூவானம் கவனம் என்ற நாவலை முதலில் நான் படித்த பொழுது அது எனக்கு மிகவும் சிரமத்தை அளித்தது. இந்தச் சிரமம் ஏற்பட பல காரணங்கள்: நாவலின் உருவ அமைப்பு, நாவல் கூறும் பல செய்திகள், எனக்குப் புத்தறிவையும், புத்தனுபவத்தையும் புகட்டியதனால் ஏற்பட்ட திக்குமுக்குத்தன்மை', நாவல் உணர்த்துவிக்கும் எச்சரிக்கையையிட்டு ஏற்பட்ட மனக் கிலேசம்,
பழம் பெரும் விமர்சகர் இராஜநாயகன் அவர்கள் இந்த நாவலின் முக்கிய அம்சங்களைத் தொட்டுக் காட்டியிருக்கிறார்.
".பல இயல் ரீதியாகவும் சமுதாயத்தை நாம் இங்கு தரிசிக்க முடிகிறது. படிப்பு, பணம், பதவி கல்விக் கூடங்களில் ஒநாய்கள். மனித நேயம், விசுவாசம் என்பது பற்றிய கோகிலா மகேந்திரனின் அணுகல் - கணிப்பீடு காட்டுகை என்பவற்றை ஓர் அனைத்துலக எழுத்தாளருக்குரிய இலட்சணங்களாகக் காண்கிறேன். கதையை தொடங்குகிற - முடிக்கிற உத்தி அபாரம். கோகிலாமகேந்திரன்.இங்கு கையாளும்நனவோடை உத்தி இறந்த காலத்துள் ஒரு கட்டத்திலும், எதிர்காலத்தில்
121

Page 68
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
வேறொரு கட்டத்திலும் ஒடிப்பாய்கிறது. இது துணிச்சல் மிக்க புதிய ஒரு பரிசோதனை.
இலங்கைத் தமிழ் எழுத்தைப் பொறுத்தமட்டில் இந்த நாவல் துணிச்சல் மிக்க ஒரு பரிசோதனை படைப்புத்தான்.
"பியூச்சஸிஸ்ரிக்" நாவல் என்று கூறத்தக்க இந்தப் படைப்பு 14 அதிகாரங்களைக் கொண்டது. 17-6-1986ல் ஆரம்பித்து 17-09-1987ல் முடிவடைகிறது. இடையிலே 30-2- 1991ல் நடைபெறலாம் என்று கற்பனை பண்ணப்படும் சம்பவங்களின் தொகுப்பும் இடம் பெறுகின்றது.
ஆக, இந்த நாவல் ஸ்பேஸ், ரைம் எனப்படும் வெளி அல்லது இடப்பின்னணி, காலம் ஆகியவற்றை வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளச் செய்கிறது.
"இந்த நாவலின் கதையம்சம், அந்நிய நாடுகளின் தொடர்பால் எமது நாட்டுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரபாயங்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டும் தொனிப்பொருள் கொண்டது. பிற நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதியாகக் கூடிய(எயிட்ஸ்) முதலிய பயங்கர நோய்களே துவானம்' என்ற சொல்லால் சுட்டப்படுகின்றன. சமகாலத்தில் பேரினவாத ஒடுக்குமுறை என்ற பெருமழையில் சிக்கித் தவிக்கும் நாம் மழை ஒய்ந்த பின்னரும் தொடரக்கூடிய மேற்படி துவானங்கள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணக் கருவில் முகிழ்ந்த கதை வடிவம் இது"
இந்த நாவலிலே வரும் முக்கிய பாத்திரங்களாக வீணா அவள் கணவன் ஜீவன். அவன் நண்பன் மோகன் ஆகியோர் வருகின்றனர். *
வீணா ஒர் ஆய்வறிவாளர். அதாவது ஒரு இன்டலெக் வடி"வல். அவள் ஒர் ஆசிரியை. நாடக நடிப்புத் துறைகளில் பயிற்சி பெற்றவள். ஒவியம், இசை போன்ற பல கலைகளிலும் பரிச்சயமிக்கவள். மரபு ரீதியான பெண்மைக் குணங்களைக் கொண்டிருந்தாலும், அறிவு, அனுபவவளர்ச்சிக்கேற்பதன்னை
122

கே. எஸ். சிவகுமாரன்
இசைவுபடுத்திக் கொள்பவள். தூய்மைக் குணங்களை யுடையவளாயினும், பழைய தாய்மை மரபையும் அனுதாபத் துடன் சந்திப்பவள். புதுமைத் தாய்மையையும் எதிர் கொண்டு இணக்கமடைபவள். ஆரம்பத்திலே அறிவார்ந்த காதல் மயக்கத்தில் கட்டுண்ட அவள் தன் காதற் கணவனின் முகத்திரையை ஊடுருவிப்பார்க்க முடியாதுபோயிற்று.பின்னர் கணவனின் அன்னியமயமானநிலையையும், கீழ்த்தரமான காம உறவையும் அறிந்து வெகுண்டெழுந்தவள். அதன் பின்னர் யதார்த்த நிலையை ஏற்றுக் கொண்டவள். உண்மையில் வீணா என்ற பாத்திரத்தின் துரித வளர்ச்சியைத் தான் இந்த நாவல் சித்திரிக்கிறது.
இவள் கணவன் ஜீவன் ஒரு வித்தியாசமான தோரணை யுடையவனாகவும் கூடியவரை விரும்பத்தக்கவனாகவும் இருந்ததனால், எதையுமே அறிவு ரீதியாக அணுகும் வீணா, ஜீவனின் புருஷத்துவத்திலே தன்னையே இழந்தாள். இவனுக்கும் நாடகத்திலும் ஒவியத்திலும் ஈடுபாடு உண்டு. பல ஆண்களிலே, அவனை மட்டுமே அவள் தேர்ந்தெடுத்துத் தான் பூரணத்துவம் கண்டதாக இறுமாப்புக் கொண்டிருந்தாள். அவனும் நல்லவனாகவே கடைசிவரை இருந்து வந்தா னாயினும் சந்தர்ப்ப சூழல் காரணமாகத் தன்னையும் மீறித் தவறாக நடந்து கொண்டு தன்னையே அழித்துக் கொள்கிறான்.
வீணாவுக்குச் செக்ஸில் அவ்வளவுஈடுபாடு என்று சொல்ல முடியாது. ஆனால் ஜீவனுக்கு மட்டுப்படுத்தப்பட்ட செக்ஸ் உணர்வு இருந்தது.இரண்டரை வருடங்களுக்கு மேலாகத்தன் மனைவியையும், குழந்தைகளையும் யாழ்ப்பாணத்தில் விட்டு விட்டு மத்தியகிழக்கில்இருந்தபோதும் கூடத் தன்னடக்கமாக சந்தர்ப்பம் கிடைத்தும் அதனைப்பயன்படுத்தாது,நிதானமாக நடந்து கொண்டான். ஆயினும் நிர்ப்பந்தத்தினாலேதான் அவன், தனது அறையில் தங்கியுள்ள நண்பன் மோகனின்
123

Page 69
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
தன்னினச்சேர்க்கைக்கு உட்பட்டான். அதன் விளைவுஎய்ட்ஸ்
என்ற கொடிய நோய்க்கு பலியானது தான்.
ஜீவனின் நண்பனாக கூறப்படும் மோகன், ஜீவனின்
வாழ்க்கையிலே பிற்கட்டத்திலே தான் குறுக்கிடுகிறான்.
இவனும் யாழ்ப்பாணத்து மரபுகளைப் பேணுபவனாக ””
இருந்தாலும் சந்தர்ப்பங்களைத் தன்வசமாக்கிக் கொள்பவன். இவன் மத்திய கிழக்கிலே ஒரு தமிழ்ப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டது மாத்திரமல்லாமல், ஸாம்பியா போன்ற இடங்களுக்கும் போய் வந்தவன். இவன் ஒர் எய்ட்ஸ் நோய்க் காவி.
இந்த மூன்று பாத்திரங்களையும் நாம் நோக்கும் போது, அவரவர் கோணத்தில் அம்மூவரும் தம்மளவில் நேர்மை யாகவே நடந்துள்ளனர். அவர்களுடைய பாத்திரப் படைப்புகளில் ஒரு நிதானத்தை, சமநிலையை நாம் காணக் கூடியதாய் இருக்கிறது. அந்த விதத்திலும் கூட கோகிலா பாராட்டுக்குரியவர். பாத்திரத்தன்மையை நாவலாசிரியை பக்குவமாகச் செதுக்கியுள்ளார்.
கதை மூன்றாம் இடத்திலிருந்து ஆசிரியையினால் விபரிக்கப்படுகிறது. கதாநாயகி மெய்வல்லுனர் போட்டிகளிலே இரு தடவை அறிவிப்பாளராகப் பணிபுரிகிறார். அந்த இருதடவைகளிலும் அவள் நினைத்துப் பார்ப்பவை கதையில் விபரிக்கப்படுகின்றன.நடந்தவைநீஜம்,நடக்கப்போகின்றவை கற்பனை. வீணாவின் கணவன் சவூதி அரேபியாவில்இரண்டரை வருடங்களுக்கு மேலாக இருக்கிறான். வேலை பார்க்கிறான் என்பது உண்மை. அவனுக்கு நோய் பிடித்து குடும்பத்தைப் பாழாக்கிச் செல்கிறான் என்பது கற்பனை. எனவே நாவல் முழுவதுமே கற்பனை தான் என்றாலும் நனவோடை' அல்லது பிரக்ஞை ஒட்டம்' என்ற உத்தியிலே எழுதப்பட்டுள்ள இந்த
நாவல் ஒரு புதுமையான நாவல் எனலாம்.
வீரகேசரி வாரமஞ்சரி 11-06-1989
124

அருள் சுய்பிரமணியம்
நான் நிதியின் பக்கம்
5. அருள்சுப்பிரமணியம் எழுதிய குறுநாவல்நான் நீதியின்
USD
திருகோணமலை எழுத்தாளர் க. அருள் சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற தனது முதல் நாவல் மூலம் (1974) தரமான இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இந்த நாவலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நான் கெடமாட்டேன், அக்கரைகள் பச்சையில்லை ஆகியநாவல்களை எழுதினார். அருள் சுப்பிரமணியம் பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
இவருடைய புதிய குறுநாவல் நான் நீதியின் பக்கம். இது ஒரு புதுவிதமான கதை. ஈழத்துத் தமிழ் எழுத்திலும் இத்த கைய ரீதியில் எழுதுபவர்கள் குறைவு. மொழிவாணன் எழுத்து முறையை ஒரளவு குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் இவ்வாறு எழுதுவார்கள். ஆயினும் வீரதீரச் செயல்கள், சர்வதேச விமானச் சேவை, ஆயுத விற்பனை, போதைவஸ்து, போக்குவரத்து போன்றவற்றில் இலங்கையர்கள் - தமிழர்கள் ஈடுபடுவதைச் சித்திரிக்கும்
125

Page 70
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
புனைக்கதை இதுவரை வெளியாகவில்லை. அந்த விதத்தில் இந்தக் குறுநாவல் புதிய அனுபவத்தைத் தருகிறது.
இக் கதை விபரிக்கும் சம்பவங்கள் உடன் நிகழ் காலத்தவை. உதாரணமாக கூலிப்படைகளாக நின்று வன் செயல்கள் புரிவது, ஆயுத விற்பனை, போதைப் பொருள் பரிமாற்றம் போன்றவை பலநாடுகளில் இன்று சாமான்யமாக நடைபெறுபவை. இவை பற்றித் தமிழில் தருவதுடன் இலங்கைத் தமிழர்களையும் பாத்திரங்களாக ஈடுபடுத்துவது புதுமையாய் இருக்கிறது.
இக்கதையில் பல பாத்திரங்கள் வருகின்றன. ஒன்று கூட மனதில் நிற்பவையாய் இல்லை. அது மாத்திரமல்ல, பல பாத்திரங்கள் வருவதனால் குழப்பம் ஏற்படுகிறது. வாசகர்கள் கதையை தொடர்புபடுத்திப் பார்க்கச் சிரமம் ஏற்படுகிறது.
வாசகள் மனதில் குழப்பம் ஏற்படுவதனால் கதை ஒட்டம் பாதிக்கப்படுகிறது. தவிரவும் எழுத்து உத்திமுறையில் மாற்றம் கொண்டு வந்திருப்பதனால் தெளிவான நீரோடை போன்று கதை விறுவிறுப்பாக நகரவில்லை. இக்குறைபாடு இருந்த போதிலும் ஆசிரியரின் திறன் மொழியை ஆக்கத்திறனுடன் பயன்படுத்துவதில் சோபிக்கிறது.
கற்பனையையும், மொழிவளத்தையும் சிருஷ்டித்தன்மை யாக ஆசிரியர் பயன்படுத்துவது பாராட்டும்படியாய் இருக் கிறது. பல இடங்களில் இந்த மொழிப் பயன்பாடு தெரிய வருகிறது. நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் இது வெளிப்படுகிறது. நகைச்சுவை மற்றொரு வரவேற்கத்தக்க அம்சம்.
இந்த நாவலின் சிறப்பம்சம் வெளிநாட்டுஅனுபவங்களை ஈழத்துத் தமிழில் பெயர்த்துத் தருவதாகும். இந்த இடத்தில் இக்கதைக்குப் பின்னுரை எழுதிய அன்புமணி இரா. நாக
126

கே. எஸ். சிவகுமாரன்
லிங்கத்தின் அவதானிப்பு ஒன்று பற்றித் தெளிவாக்க வேண்டும். ரியலிசத்தை யதார்த்தம் என்று சரியாகக் கூறும் அன்பு மணி 'மெலோட்ராமா'வை மனோரதியம் என்று தவறாகக் குறிப் பிடுகிறார். மனோரதியம் என்பதன் ஆங்கிலச் சமபதம் 'ரொமான்டிசிசம்' மெலோட்ராமாவை அதீத நாடகப் பண்பு என்பார்கள். இந்த விபரங்கள் தெரியாத குழப்பங்கள் காரணமாக அன்புமணி இந்தக் குறுநாவல் ரியலிசத்துடன் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். இது தவறு. உள்ளது உள்ளபடி எழுதுவது ரியலிசம் அல்ல. அவ்வாறு எழுதப் படுவதை நச்சுரலிசம் என்பார்கள்.
அருள் சுப்பிரமணியத்தின் கதை நச்சுரலிசம் எனப்படும் இயற்பண்பு வாய்ந்தது என்றால் பொருத்தமுடையதாக இருக்கும். ரியலிசம் எனப்படும் யதார்த்த பண்பு இந்த நாவலில் குறைவாக இருக்கிறது என்பதை நண்பர்கள் அருள் சுப்பிர மணியம், அன்பு மணி ஆகியோர் ஏற்றுக் கொள்வர் என்று நினைக்கிறேன்.
இலக்கியத்தில் யதார்த்தம் என்பது காரண காரிய தொடர்புடைய பின்னணி உண்மை நிலையைக் குறிக்கும். எனவே அச்சொட்டாக எதையும் பிரதி பண்ணுவது யதார்த்தம் இல்லை. அது இயற் பண்பு வாதமாகும். இந்த வித்தியாசங்கள் ஒரு புறமிருக்க வாழ்க்கையின் விழுமியங்களைப் பிரதி பலிக்காத ஆக்கங்கள் இலக்கியமாகாதென்பதையும் நாம் அவதானித்தல் வேண்டும், கம்பன் இலக்கியம். புஷ்பா தங்கதுரை இலக்கியம் அல்ல. எனவே அருள் சுப்பிர மணியத்தின் நான் நீதியின் பக்கம் இலக்கியமல்ல, ஆனால் நிச்சயமாக அது ஒரு புதுமையான புனை கதையாகும்.
தினகரன் வாரமஞ்சரி 29-12-1991
27

Page 71
மொழிவாணன்
பூலான்தேவி
இந்த நாட்டு இலக்கிய ஜாம்பவான்களில் ஒருவராக மொழிவாணனை (நீதிராசா) எந்தவொரு இலக்கிய வரலாற்றாசிரியரும் கூறமாட்டார்கள்.
அவருடைய எழுத்துக்களில் இலக்கிய நயம் உண்டு என்பது வேறு விஷயம். ஆயினும் வெறும் இலக்கிய நயம் மாத்திரம்தலைசிறந்த உயர்மட்ட எழுத்தாளனாக உருவாக்க மாட்டாது. மொழிவாணன் உயர்மட்ட இலக்கிய ரசனையைத் தரும் படைப்பாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவர் நன்கறிந்த ஜனரஞ்சக எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை.
ஜனரஞ்சகம் என்பது அப்படியொன்றும் வெறுக்கத்தக்க அம்சமும் அல்ல. ஜனரஞ்சகம் என்றால் பெரும்பாலான மக்களின்ரசனைக்கு ஈடுகொடுப்பதைத்தான்குறிக்கும். பெரும் பாலான மக்களின் ரசனை மட்டம் பல்வேறு காரணங் களுக்காகப் பக்குவப்படாததாக நுண்ணிய கலையம்சங்கள் இல்லாதவையாகத்தான் இருக்கும்.
இத்தகைய ரசனையுடையவர்களின் ரசமட்டத்தை உயர்த்தவே அறிஞர்களும், கலைஞர்களும்பாடுபடுகிறார்கள்.
128

கே. எஸ். சிவகுமாரன்
கலை பற்றிய தெளிவான சிந்தனை, அறிவு. உணர்வு போன்றவை இல்லாத காரணத்தினாற்றான் பெரும்பாலான நமது மக்களின் ரச மட்டம் வளர்ச்சி குன்றியதாக அமைகிறது.
மொழிவாணனும், தம்மளவில் இந்த ஜனரஞ்சக விரும்பி களின் மட்டத்தை உயர்த்துவதற்கு முயல்கிறார். அதாவது நெறிப்படுத்தப்படாத உணர்ச்சிகளையும் அறிவையுங் கொண்ட மக்களுக்குப்புரியும்படியாகவும், சில சுவாரஸ்யமான செய்திகளை தமது விறுவிறுப்பான நடையில் சொல்வதாலும் பொதுமக்களின் பகுத்துணர்வைச் சிறிது விரிவுபடுத்துகிறார். ஜனரஞ்சக வாசகர்களுக்கு வெறுமனே தீனி போடாமல், அத்தீனிகளைக் கூட நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்து ஊட்டுகிறார்.
இவ்வாறு செய்வதற்கு மொழிவாணனிடம் அசாதாரணத் திறமை வேண்டும்.அவரிடம் ஒருபத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய செய்தி வேட்டைப் பாங்கு இருக்கிறது. கிடைத்த செய்தியை அப்படியே கொட்டிக் குவிக்காமல், அதைத் தரம் பிரித்துப்பகுத்து கொடுக்க வேண்டிய இடத்தில் செட்டாகவும், பொருத்தமுடையதாகவும் வழங்கும் விமர்சன நோக்கு இருக்கிறது. அவ்விதம் வழங்கப்படும் செய்தியை சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்து அளிக்கும் ஆற்றலும் அவரிடம் நிறைய உண்டு.
மொழிவாணன் இத்தகைய ஆற்றல்களைக் கொண்ட ஒர் எழுத்தாளர் மாத்திரமல்லர். அவர் தமிழைக் கையாளும் விதத்திலும், ஒரு கவிஞர் எனலாம். உதாரணமாக, அவர் எழுதிய பத்து நூல்களிலுமிருந்து ஏராளமான உதாரணங் களைக் காட்டலாம்.
பூலான் தேவி என்ற நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.
129

Page 72
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
அத்தியாயம் 1: சின்னச் சின்ன வசனங்கள். முக்கிய விபரங்களைப் பத்து வரிகளுக்குள் அடக்கி விட்டார்.
"வேகமாகச் சென்று கொண்டிருந்தது. படகு-படகில் அமர்ந்திருந்தவன் ஒரு முதுமகன். அவனுக்குஎத்தனை வயது இருக்கும் என்று சரியாகச் சொல்லத் தெரியாது. ஆனாலும் 48, அல்லது, 49 வயது இருக்கலாம்.
படகைச் செலுத்திக்கொண்டிருந்தவள் ஓர் இளம் மங்கை, அவளுக்கு வயது 12.
அந்தப்பன்னிரெண்டு வயதிலேயே அவள் பருவமடைந்து விட்டாள். இதனால் வயதுக்கு மீறிய வளர்ச்சி அவள் மேனியில் மஞ்சம் கொண்டிருந்தது. அவள்முகத்தைப்பார்த்தால், அவள் ஒரு கவர்ச்சிக் கன்னிகையைப் போல் தெரியவில்லை.
இவ்வாறு மொழிவாணன் எழுதிச் செல்கிறார். மேற்கண்ட பகுதியில் இரண்டுபுத்தாக்கங்களை அவர் கொண்டுவந்திருக் கிறார் எனலாம்.
ஒன்று-முதுமகன். மற்றையது-இதனால் வயதுக்கு மீறிய வளர்ச்சி அவள் மேனியில் மஞ்சம் கொண்டிருக்கிறது.
இக்கதையைப் படிக்கும் நாம் முதுமை' 'மஞ்சம்' ஆகிய வார்த்தைகளை எவ்வாறு தமது வசனங்களில் மொழிவாணன் பயன்படுத்துகிறார் என்று அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.
அத்தியாயம்-2: முதல் வசனம், கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்து கொண்டிருந்தது. என்ன நிறைந்து கொண்டிருந்தது என்ன நிறைந்து கொண்டிருந்தது? இருட்டு அதே அத்தியாயத்தில் இருட்டு' என்ற வார்த்தையைவேறுவிதமாகப் பாவிக்கிறார் மொழிவாணன் எப்படி?
"அடுத்து ஒருநாள் இருட்டு அந்தப் பகுதியைச் சுருட்டிக்
கொண்டிருந்தது.
130

கே. எஸ். சிவகுமாரன்
இவ்வாறு மொழியைக் கையாளும் மொழிவாணனை வெறுமனே ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்று ஒதுக்கி விட முடியாது.
மூன்றாம் அத்தியாயம் - "சாகிராமின் மேனியில் சாட்டை சதுரங்கமாடியது. 'அம்மா' உயிர் எழுத்தை உச்சரித்தபடியே உருண்டு சென்றான் சகிராம். சாட்டையை அவன் மேனியில் பேசவிட்டான்.
அத்தியாயம் 6: அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அன்ன நடையில் அவர்கள் இருவரையும் விரட்டிக் கொண்டு வந்தான் இருள் அரக்கன்.
"மகிழ்ச்சி அவர்களின் வார்த்தைகளில் மஞ்சம் கட்டி நின்றது" என்று மொழிவாணன் எழுதும் போது, அவர் கற்பனையையும் எழுத்தாற்றலையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அதே சமயத்தில்வன்செயல், காமம் ஆகிய இரண்டையும் முற்றாகத் தவிர்க்காமலும் சமுதாய பின்னணியில் அக புற மன வளர்ச்சிகளின் போக்கைக் காட்டுபவையாகவும் உலகளாவிய மனித விழுமியங்களின் உயர்வைக் கூறியும் மொழிவாணன் எழுதுவாரானால், என்போன்ற அகோரவாசிப்புப் பசியுள்ள வாசகர்கள் தமது நேரத்தை வீணாக்காமல் நல்ல பயனுள்ள எழுத்தை வாசிக்கிறோம் என்ற நினைப்பில் திருப்தியடைவோம்.
மொழிவாணன் அதனைநிச்சயமாக இனிச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தினகரன் வாரமஞ்சரி 18-09-1990

Page 73
தெணியான்
பொற்சிறையில் வாடும் புனிதர்கள்
கந்தையா நடேசன் (தெணியான்) ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சிறுகதைகள், தொடர் கதைகள், கட்டுரைகள் எழுதிவருபவர். இவருடைய கழுகுகள் பாராட்டைப் பெற்ற நாவல். பத்திரிகை களில் அவ்வப்போது வந்த சிறுகதைகளில் சிலவற்றையும் மல்லிகையில் எழுதிய கட்டுரைகளையும் மாத்திரமே படித்திருக்கிறேன். புத்தக வடிவில் நான் படித்த தெணியானின் முதலாவது படைப்பு பொற்சிறையில் வாடும் புனிதர்கள் . சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் முரசொலி தினசரியில் தொடர்கதையாய் இது வெளிவந்தது.
ஈழத்துபிராமணர்கள், பூசகர்கள் வாழ்வைச்சித்திரிக்கும் ஈழத்து முதற் படைப்பு இந்த நாவல்' என்கிறார் ஆசிரியர்.
வெளியுலகத்துக்குக் கெளரவம் மிக்க உயர்ந்தவர் களாகக் காட்டப்பெறும் பூசகர்கள் உள்ளே குமைந்து புழுங்கி வெளியிடும் வேதனை பெருமூச்சு என் நெஞ்சத்தைச் சுட்டது. நான் அவர்களுக்காகப் பேனா பிடிக்க உறுதி பூண்டேன் என்கிறார் தெணியான்.
தெணியான் ஒருபிராமணர் அல்லர். ஈழத்துச்சோமு'என்ற ந. சோமகாந்தனும், கோப்பாய்ச் சிவம்' என்ற கு. சிவானந்த 132

கே. எஸ். சிவகுமாரண்
சர்மாவும், பிராமண குலத்தில் பிறந்த ஆக்க இலக்கியகாரர். அவர்களும் பிராமண குடும்பங்களிற் காணப்படும் மனிதாயச் சோகத்தைச் சித்திரித்திருக்கிறார்கள். ஆனால் பிராமண ரல்லாத தெணியான் அவர்கள் பிராமணர் வாழ்க்கையின் சில அம்சங்களைத் தொகுத்து விவரணம் எழுதியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.
தெணியான் தமது முற்போக்குக் கோணத்தில் நின்று இக்கதையை வரைந்திருக்கிறார். முற்போக்கு என்றால் மார்க்சியம்' எனப் பொருள்படும் என மார்க்சிய விமர்சகரான பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.
சிவத்தம்பி இன்னுமொன்றையும் சுட்டிக் காட்டுகிறார்.
அவர் கூறுகிறார்:
"சதுர்வர்ணாஸ்ரம் முறையில் முதற்படியிலிருந்தாலும், பிராமணர்கள், யாழ்ப்பாணத்தில் நிலவுடைமையாளராக விளங்கும் வெள்ளாளருடைய மேலாண்மைக்குக் கட்டுப்பட்டே வாழ வேண்டியுள்ளது".
உண்மையிலே தெணியான்இந்தக்குறுநாவலிலே செய்ய முற்பட்டிருப்பது என்னவெனில் பாரம்பரியத்துக்கும், நவீனத் துவத்துக்குமிடையில் நடைபெறும் போராட்டத்தைச் சித்தி ரித்து, பழைய பிற்போக்கான அம்சங்களுக்குச் சவால்விட்டு முன்னேறும் இளைய பரம்பரையினரின் போக்கைக் காட்டுவது
தான.
பேராசிரியர் சிவத்தம்பி, சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
1. தெணியான் விவரணத்திலிருந்து சித்திரிப்புக்கு வந்துள்ளாரா? அதாவது, வெறுமனே செய்திகளைத் தொகுத்திருக்கிறாரா? அல்லது அவற்றினுடே சில ஆழமான
:33

Page 74
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
உண்மைகளைச் சொல்லாமற் சொல்கிறாரா? என்று இக் கேள்வியை விசாலப்படுத்த விரும்புகிறேன்.
2. இக்கதை மூலம் இவர் எதனை உணர்த்த இருக்கிறார்? 3. வாசகன் பெறும் பயன் என்ன?
இவற்றிற்கான பதில்களை எழுத்தாளர் தெணியானிட மிருந்து நாம் அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
°中
நாவலின் உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே இங்கு கூறப் :பட்டிருக்கிறது. இந்த நாவலில் சேர்க்கப்பட்டுள்ள என்னுரை, அறிமுகஉரை, கடிதம் ஆகியன உள்ளடகத்தை விளக்குவன. எனவே, நான் இவற்றை மீண்டும் எடுத்துக் கூறவிரும்பவில்லை.
இலக்கியம் என்னும்பொழுது படைப்பாளன், படைப்பு, வாசகன் என்று வந்து விடுகிறது. படைப்பாளி என்ன நோக்கத்தில் படைத்திருக்கிறான்?படைப்புஅவன் நோக்கில் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? படைப்பாளிக்கு திருப்தி ஏற்பட் டுள்ளதா? வாசகன் ரசனை மட்டம் எத்தகையது? வாசகன் 'படைப்பாளியின் படைப்பையும், படைப்பாளியையும் சந்திக்க முடிகிறதா? அதாவது வாசகன் புரிந்து கொள்கிறானா?
இன்னொரு மட்டத்தில் பார்த்தால் -
வாசகன் அசுவாரஸ்யமாகப் படைப்பை ஏற்றுக் கொள்கிறானா அல்லது முற்றாக நிராகரிக்கிறானா? புத்தறிவும், புத்தனுபவமும் பெறுகிறானா?
தெணியானின் இந்த நாவலை படித்தபோது, ஓர் இறுக்கமான ஆழமான, சிருஷ்டி இலக்கியத்துக்கான அடிச் சட்டமாக அதுஇருப்பதை உணர்ந்தேன். அதாவது யாழ்ப்பாண பிராமணக் குடும்பங்கள் சில பற்றிய செய்திகளை கதை
34

கே. எஸ். சிவகுமாரன்
ரூபத்தில் அறிந்துகொண்டேன்.கதை ஒரு கதையாக சுவாரஸ் யமாகத்தான் இருந்தது. ஆனால் என்னையும் மீறி, உணர்ச்சி பூர்வமாக, அறிவு ரீதியாக என்னால் ஆழ்ந்து போக முடிய வில்லை. காரணம் கதையின் ஊடாக சில பரிமாணங்களை நான் பெற முடியவில்லை.
இதற்கு என்ன காரணம்? எனது அனுபவ வீச்சு, அறிவுத் தரவுகள் போதுமானதாக இல்லையா? அல்லது ஆசிரியரின் முழு ஆற்றலும் தீர்க்கமான ஆழமான முறையில் வெளிப் படாததனால் இந்த இடைவெளி ஏற்பட்டதா?
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்திலே ஒரு கடிதமும் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வ. இராசையா எழுதியுள்ள பகுதிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
'சமூகத்தில் உயர்த்தப்பட்டவர்களாயுள்ள அர்ச்சகர் களது வாழ்க்கைப்பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில் அவ்வளவு வேகம் காணப்படவில்லை. அர்ச்சகர்களிடையேயும், ஆலய நிருவாக உரிமையுடையவர்களது வாழ்க்கையிலும் பார்க்க பிறரது ஆட்சியிலிருக்கும் ஆலயங்களில் பணி புரிகின்ற ஐயர் மாருடைய சீவியம் தான் அவலம் நிறைந்ததாக இருக்கிறது"
'ஆண்டுமுழுவதும் தினசரிநேரம் தவறாமல் பூசை செய்ய வேண்டியிருத்தல், அர்ச்சகர்களதுகுடும்பத்தினர் மடைப்பள்ளி வேலைகளில் சிரமதானம் போல் உழைத்தல், பூசகர்களுக்குத் தொழிற் பாதுகாப்பு இன்மை, நிச்சயம் அற்றதும் பற்றாக் குறையாக உள்ளதுமான வருவாய் ஆலயப் பரிபாலகர்களது கெடுபிடிகள், அவர்களால் இவர்களுக்கு ஏற்படக்கூடிய அவமதிப்புகள், வசிப்பதற்கு வசதியான வீடு இல்லாமை' போன்றவற்றைத் தெணியான் தமது இந்த நாவலில் உள்ளடக்கியிருக்கிறார்.
35

Page 75
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
இந்த விஷயங்கள் யாவும் விவரண ரீதியாகவும், ஒரளவு சித்திரிப்பு ரீதியாகவும் நாவலில் சொல்லப்படுகின்றன. சித்திரிப்பு என்னும்பொழுது கலைநயம் என்ற அம்சம் வந்து விடுகிறது. தமது சிறுகதைகள் பலவற்றில் தமது சிருஷ்டித் திறனைக் காட்டும் தெணியான் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலில் பெரும்பாலும் கதையை சுவாரஸ் யமாக விபரிப்பதில்தான் கவனஞ் செலுத்திஇருக்கிறார்.இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் சிலவற்றின் 'மனப் போராட்டங்களின் துடிப்பும், உணர்வுகளின் ஒட்டமும் சில இடங்களில்தான் செயற்பாட்டுத் தன்மையுடையனவாய் இருக்கின்றன. ܗܝ
என்னை பொறுத்தமட்டிலே, நாராயணக் குருக்கள், ஜமுனா, பாலன், தர்மகர்த்தா, சிங்கப்பூரான் போன்றவர்களின் குணாதிசயங்களை மேலும் கூர்மையாக வெளிப்படுத்த, கதாசிரியர் தெணியான் முயன்றிருக்கலாம். இப்பாத்திரங் களிடையே உள்ள உறவுகளின் மோதல்களும், சங்கமமும் சிறிது நாடகத் தன்மை வாய்ந்ததாகச் சித்திரிக்கப் பட்டிருக்கலாம்.
எந்த ஒரு ஆக்கப் படைப்பிலும் வெறுமனே செய்தி ரீதியாகச் சில தகவல்களைத் தருவது. (அதாவது இயற்பண்பு வாத ரீதியாக உள்ளது, உள்ளபடி கதையை விபரிப்பது) மாத்திரம் போதாது.
தெணியானின் படைப்புகளில் இந்த அம்சம் அல்லது போதாமை இருக்கிறதென நான் கூறவில்லை. உண்மையில் முதலாவது பரம்பரை முற்போக்கு எழுத்தாளர்களிடையே தெணியான் போன்றவர்களின் எழுத்து நவீனத்துவம் அடைவதை நாம் காண்கிறோம். இருந்த போதிலும் அவர் பாத்திர உருவாக்கத்தில் அதிக கவனஞ் செலுத்தி யிருக்கலாம்.
136

கே. எஸ். சிவகுமாரன்
ஜமுனா, பாலன், நாராயணக்குருக்கள். அத்தை. தர்ம கர்த்தா, சந்திரசேகர ஐயர் போன்றவர்களின் அக நோக்கு களையும், சிந்தனைகளையும் இன்னும் விசாலமாகச் சித்திரித் திருக்கலாம்.பாத்திரங்களிடையில் உள்ள உறவுமுறைகளை நாடக ரீதியாக திட்டி இருக்கலாம்.
மூன்றாம் இடத்தில் நின்று கதையை நகர்த்துவது பெரும்பாலும் வசதியானதுதான்.அதாவது, தன்மை, முன்னிலை இல்லாமல், படர்க்கையிடத்தில் நின்று எழுதுவது செளகரியமாக இருந்தாலும், அகச் சித்திரிப்புகளைக் கூட, பாத்திரங்கள் தமக்குள் தாமே பேசுவது போல எழுதவும் இடமுண்டு. இவ்விதம் உத்திப்பயன்பாட்டு மூலம் கதையை இன்னும் சிறிது விஸ்தாரமாக, ஆசிரியர் தாம் கூற வருவதைக் கூறாமற்கூறும்பொழுதுபயன் அதிகமாக அமைகிறதுஎன்பேன்.
தெணியான், ஒரு நல்ல விமர்சகர் போல, ஒரு நல்ல இலக்கியப்படைப்பாளியும் கூட. ஆக்க இலக்கியத்தில் ஈடுபடும் முன்னைய முற்போக்காளரிடையே இவர் தனித்துவம் மிக்கவர்.
வானொலி வாரமஞ்சரி 25-03-90
137

Page 76
சுமதி அற்புதராஜா
Isifu IITGØ25
5டந்த ஏழு ஆண்டுகளில் அறிமுகமாகிய புதிய பெண் எழுத்தாளர் சுமதி அற்புதராஜாவின் கதையைப் பார்ப்போம்.
இவருடைய கதையிலும், மட்டக்களப்பு எழுத்தாளர் களுக்கேயுரிய "ரொமாண்டிக்" மனோபாவம் பிரதிபலிக்கிறது. "ரொமாண்டிக்" என்றால் "காதல் கதை" என்ற அர்த்தத்தில் அல்ல. இங்கு நான் குறிப்பிடுவது இலக்கிய நெறிகளில் ஒன்றாகிய "மனோரதியப் பாங்கை"த்தான் குறிப்பிடுகிறேன். "மனோரதியம்" என்பது கேவலமான ஒன்றல்ல. ஆனால் இன்றைய கால கட்டத்திற்கு அவ்வளவு பொருத்தமானது என்று கூறுவதற்கு இல்லை. அது போகட்டும்.
சுமதி அற்புதராஜாவின் எழுத்தில், கட்டுக்கோப்பு, முதிர்ச்சிநிலைப்பட்ட பாத்திரச்சித்திரிப்பு, இயல்பான எழுத்து நடை ஆகியன குறிப்பிடும்படி இருக்கின்றன.
தமது கதைக்கான முன்னுரையில் அவர் குறிப்பிட்டி
ருக்கும் ஒரு செய்தியை நாம் குறித்துக் கொண்டு அதனை வரவேற்க வேண்டும். அவர் கூறுகிறார்:-

கே. எஸ். சிவகுமாரன்
"இந்த நாவலைப் படிக்கும் போது ஆங்காங்கே வரும் சம்பவங்கள் இந்த நாவல் உருவாக்கப்பட்ட காலகட்டத்தினை உங்களுக்கு எடுத்துக் காட்டும். சாதாரண மக்கள் அன்றாடம் வாழ்க்கையில்முகம் கொடுக்க வேண்டியசிலபிரச்சினைகளை ஓரளவுக்குப் படம் பிடித்துக் காட்ட முற்பட்டிருக்கின்றேன்" நல்லது.
இலக்கிய வடிவான மனோரதியக் கருத்துக்களைக் கொண்ட கதைகள் பழைய கால தமிழ் சினிமாக்கதைகள் போல இருக்குமேயன்றி, உடன்நிகழ்காலசமுதாயச் சித்திரிப்பு களாக அமைய மாட்டா.
சுமதி அற்புதராஜா, தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் இருந்து எழுதும் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களின் கதையைச் சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும். "பெண்" என்ற தொலைப்பட வரிசையில் இடம்பெறும் கதைகளில் எவ்வாறுநவினத்துவம் மிளிர்கிறதுஎன்பதைப்புரிந்துகொள்ள
வேண்டும்.
சமுதாயப்பின்னணியைப் புரிந்துகொள்ள தொடர்புடைய அரசியல், பொருளாதார, இலக்கிய பண்பாட்டுக் கோலங்கள் பற்றிய பின்னணி அறிவும் அவசியமாகிறது. எனவே. உங்களுக்கு நிறையச் சந்தர்ப்பம் கிடைக்க வழியுண்டு. வாசியுங்கள். வாசியுங்கள், வாசியுங்கள். அதன் பின்னர் செப்பமாக சிக்கனமாக எழுதிவாருங்கள்.முயற்சிபலிதமாகும். வீரகேசரி வாரவெளியீடு 05-05-1991
139

Page 77
செ. குணரத்தினம்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
வட மாகாணம், மத்திய, ஊவா மாகாணங்கள், மேல் மாகாணம் ஆகியவற்றைச் சேர்ந்த தமிழ் பேசும் எழுத்தாளர் கள் பெற்றிருக்கும் பிரபல்யம் அளவிற்கு, கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் அதிகம் கவனத்தைப் பெறுவதில்லை. கிழக்கு மாகாணத்திலும் திருகோணமலை, அம்பாறை, மூதூர் மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களைத் தெரிந்த அளவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் ஆற்றல்களை நமது பல்கலைக்கழகப் படிப்பாளிகளும், ஆய்வாளர்களும் கருத்திற்கு எடுக்காது இவர்களைப் புறக்கணிப்பது ஏன் என்று எனக்கு விளங்க வில்லை. ஒரு வேளை இந்த எழுத்தாளர்கள் தமிழ் தேசிய நீரோட்டத்திலும், சோசலிஸப் பார்வை கொண்டும் தமது படைப்புகளை ஆக்காமல், வெறுமனே மனோரதியப்பாங்கான (ரொமான்டிக்) கதை, கவிதைகளை எழுதி வருவதை காரண மாகக் காட்டலாமா என்று கூறி அமைதிகாண முடியும். ஆயினும் மட்டக்களப்பு நகரிலும், நகள் சார்ந்த புறங்களிலுமுள்ள தமிழ் பேசும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது நமது கடமையாகும்.
செ.குணரத்தினம் என்ற பெயரில்இரண்டுபேர் கவிதைகள் எழுதிவருகிறார்கள். மட்டக்களப்பைச் சேர்ந்த குணரத்தினம்
40

கே. எஸ். சிவகுமாரன்
நெடுங்காலமாக வெகுசனத் தொடர்புசாதனங்களைப் பயன் படுத்தி எழுதி வருபவள். மற்றைய குணரத்தினம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் எழுத்துத் துறையிலும், சஞ்சிகைத் துறையிலும் ஈடுபட்டு வந்தாலும் கொழும்பு தமிழ் சங்கத் தலைவர் என்ற முறையிலும், நிர்வாகி என்ற முறையிலும் அதிக செல்வாக்கைச்சம்பாதித்துக் கொள் கிறார். ஆனால் செ. குணரத்தினம் என்ற பெயரில் எழுதி வரும் அந்த மட்டக் களப்பு எழுத்தாளரை கெளரவிப் போர் எண்ணிக்கை குறைவு. இது பெயர் மாறாட்டத்தினாலா? இவர் "அமிர்தகழியான்" என்ற புனை பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதுபவர். இவர் தமது 30 வருட எழுத்துலக அனுபவம் காரணமாக ஒன்பது நாவல்களையும், 100க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கு மேற்பட்ட நகைச்சுவை கட்டுரைகளையும் 1000க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதி இருக்கிறார். இவர் எழுதியவற்றுள் இதுவரை நூலுருவம் பெற்றவையான காவடிச் சிந்து முறிமாமாங்கேஸ்வரர் திருத்தல் வரலாறு), தெய்வ தரிசனம் (மட்டக்களப்பு மீனவர் வாழ்வின் சில அம்சங்களை, வரலாற்றுடன் இணைத்துக் காட்டும் சுவாரஸ்யமான நாவல்). நெஞ்சில் ஒரு மலர் (கவிதைத் தொகுப்பு) ஆகியவற்றுடன் இந்தக் குறுங்கதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்ற இக்கதையில் முக்கியமாக அவதானிக்கத்தக்கது மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ், அடுத்ததாக குறிப்பிடத்தக்கது. படித்த இளைஞனும், தனக்கு இயல்பாகச் செய்யக் கூடிய தொழிலை புறக் கணிக்காமல், அதில் பரிச்சயம் பெறுதல் என்ற அனுபவம். மூன்றாவதாக சிறு சிறு வட்டங்களாக வசிக்கும் மக்கள் கூட்டத்திடையேபந்தபாசங்களும்,நிர்ப்பந்தங்களும் தவிர்க்க முடியாதவை என்ற கருத்தோட்டம்.
41

Page 78
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
மேற்சொன்னவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு மேலோட்டமான கதையை செ. குணரத்தினம் எழுதியிருக் கிறார். கதையில் யதார்த்தச் சித்திரிப்பு இருப்பதை விட இயற் பண்புரீதியான பாத்திரப்படைப்பே காணப்படுகிறது. அதாவது ரியலிஸம் வேறு! நச்சுரலிஸம் வேறு! இந்தப் பண்பை பெரும்பாலான மட்டக்களப்புஎழுத்தாளர்கள் புரிந்துகொண்ட தாகத் தெரியவில்லை. மருத நிலப் பண்புகள் மட்டக்களப்பு எழுத்தாளர்களிடையே காணப்படுவதனால் ஒருவித இலட்சிய / மனோரதியப் பாங்கை அந்தப் பகுதி எழுத்தாளர்களிடம் காண முடிகிறது.
இந்தக் கதையைசுவாரஸ்யமாகப்படித்துமுடிக்கலாமே யன்றி,இலக்கியச்சுவையையோ வாழ்க்கைச்சித்திரிப்பையோ பாத்திர உருவாக்கத்தையோ அதிகம் நுகர முடியாதிருக் கிறது. இவருடையதெய்வ தரிசனம் தந்தநம்பிக்கையை இந்தக் கதை தரவில்லை.செ.குணரத்தினம், தமிழில் வெளிவந்துள்ள தரமான தமிழ்நாட்டு, இலங்கைநாவல்களை நிறையப் படிக்க வேண்டும். வாழ்க்கையை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். சமகால வரலாறு, சமூக பொருளாதார, தார்மீகப் பின்னணி களின் பிரதிபலிப்புகளுக்கு முரணாக அமையாது அவற்றின் அடித்தளத்திலிருந்து தமது கதைகளைத் தீட்டிப் புதிய பார்வைகளை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.முப்பது வருட எழுத்துலக அனுபவம், வாழ்க்கை தரிசனங்கள் ஆகியவை அவருக்குச் சாதகமானவை. செம்மையாகப் பார்க்கவும், எழுதவும் அவர் வெகுசீக்கிரத்தில்முயன்று வெற்றி கான்பார்.
வீரகேசரி வாரவெளியீடு O5-05-1991
142

செ. கணேசலிங்கன்
இரண்டாவது சாதி
இலங்கைத் தமிழ் எழுத்தாளர் செ. கணேசலிங்கன் சிறு கதைகள்.நாவல்கள்,சிந்தனைக் கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவற்றைக் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எழுதி வருபவர்.
இரண்டாவது சாதி என்ற அவருடைய சமீபத்திய நவீனம் உட்பட 17நாவல்களையும், 5 சிறுகதைத் தொகுதிகளையும், 6 சிந்தனைக் கட்டுரைத் தொகுப்புக்களையும் எழுதி வெளியிட்டிருப்பதுடன், குமரன் பதிப்பகம் என்ற தமது சொந்த நிறுவனம் மூலம் சில நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். தவிரவும். குமரன் என்ற பெயரில் ஒரு பருவ கால ஏட்டையும் ஆசிரியராக தொழில்பட்டு வெளியிட்டு வந்திருக்கிறார்.
டாக்டர் மு. வரதராசன். காண்டேகர் (மராத்தி மொழி எழுத்தாளர்) போன்றவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்டு ஆரம்ப காலத்தில் எழுதத் தொடங்கியவர். பின்னர் மார்க் சியத்தின் ஆளுமைக்கு உட்பட்டார். மாஒவின்தீவிர கொள்கை களைக் கடைபிடித்து அரசியல் உடன் நிகழ்கால வரலாற்று நாவல்களை எழுதினார். கடப்பாட்டு (கொமிட்டட்) ரீதியாக இவர் எழுதிய படைப்புக்களில், அழகியல்' என்றபடுதாவுக்குள்
143

Page 79
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
அடங்கும் அம்சங்களைக் காண முடியாவிட்டாலும், அரசியற் கோட்பாட்டை (மார்க்சியம்) அலசும் விதத்தில் சில ஆக்கங் களைத் தந்துள்ளார்.
செ. கணேசலிங்கன் பாணியில் அமைந்த உடனிகழ்கால தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் சில, நமது நாட்டு எழுத்தாளரான செ.க.வின் இத்துறைமுன்னோடித்தன்மையை விளக்கும்.
இவர் இப்பொழுது சென்னையில் குடியேறியிருக்கிறார். அங்கிருந்து சில நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது புதியநாவல் இலங்கையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்படவில்லை.இந்நாவலின்கதை மையம் சென்னை. அந்த விதத்தில் இவருடைய களம் விரிவடைவதை நாம் காண் கிறோம். அது மாத்திரமல்ல தமது கதையையும் சுவாரஸ்யமாக எழுத ஆசிரியர் முற்படுவதையும் காண்கிறோம்.
ஆணாதிக்க உலகில் பெண்கள் அனுபவிக்கும் துயரங் களை பாலியல் சம்பந்தப்பட்ட சேட்டைகளையும் ஆதாரம் காட்டி, ஆண்களின் சபலங்களை ஆசிரியர் அம்பலப் படுத்துகிறார். இந்திரா என்ற தமிழ்ப் பெண் திருமணம் செய்து கொண்டாலும் தனது கணவன் தனக்குத் தெரியாமல் பிற பெண்களுடன் கொண்டுள்ள தகாத உறவுகளை அறிந்ததும் தானும் தன்னிச்சையாகப் பிற ஆண் ஒருவனுடன் பாலுறவு தவிர்ந்த மனோ-உறவை ஏற்படுத்துகிறாள். அதே சமயம் கணவனும் மனைவியும் போல இருவரும் ஒரே வீட்டில், தனித்தனி அறையில் வசித்து வருகிறார்கள். இது பூர்ஷ்வா' (உயர் மட்ட மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கைப் போக்கு இவ்வாறு தான் இருக்கும் என்பதுஆசிரியரின் உள்ளக்கிடக்கை)பாத்திரங்கள் என்பது ஆசிரியரின் நையாண்டி மூலம் தெரிய வருகிறது.
இத்தம்பதிகளின் உறவை வெளிச்சம் போட்டுக்
காட்டுவதற்காக இந்திரா என்ற இந்தப் பெண்ணின் தோழி 144

கே. எஸ். சிவகுமாரன்
பவானியின் கட்டுப்பெட்டித்தனமான தாம்பத்திய வாழ்க்கை யைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.
நாவல்கூறவந்த செய்தி அவ்வளவு தெளிவாகக் கூறப்பட வில்லை. அதனை இலகுவாக வாசகர்களுக்கு எடுத்துக்கூறும் விதத்தில் கதையின் கலை வடிவமும் அமையவில்லை. ஆயினும் தமிழிலே முதற்தடவையாக சில தாம்பத்திய உறவு முறைகள் சமூகப் பார்வை கொண்டு விளங்கப் படுத்தப்படுகின்றன.223பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் சிறப்புப்பகுதி 16பக்கங்களில் ஆசிரியர் எழுதியுள்ள "நாவலைப் படிக்கும் முன் சில குறிப்புக்கள்" என்ற எழுத்துத்தான்.
ஆசிரியர் கூறுகிறார். "பெண் விடுதலைக்குத் தடைக் கல்லாக இருக்கும் மேல்மட்ட அமைப்பைச் சார்ந்த மூன்று அம்சங்களை இந்நாவலில் கையாள எடுத்துக் கொண்டேன். ஆபாசம், பாலியல் தொல்லைகள், பாலியல் வன்முறைகள் (கற்பழிப்பு)."
இந்த மூன்று அம்சங்களுடன் எதிர்பாலாருடன் பாலுற வின்பம், ஒரே பாலியலாளரின் உறவிடை ஏற்படும் பாலின்பம் ஆகியன பற்றியும் விளக்கியுள்ளார்.
"பாலுறவிற்கும், உயிரின மறுஉற்பத்திக்கும் தொடர்
'பில்லாதபடியான தடுப்பு முறைகள் வரலாற்றில் முதல்
தடவையாகப் பெண்ணினத்திற்கு வாய்ப்பாக வந்துள்ளது.இது விடுதலை நோக்கிய ஒரம்சமாகும்" என்கிறார் ஆசிரியர்.
ஆசிரியர் தமது கருத்துக்கள் வாசகரிடையே வரவேற் பைப் பெறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
கணேசலிங்கன் கூறுகிறார்.
"பெண்ணியம் சார்ந்த இந்நாவல் கருத்துக்கள் பலருக்கு அதிர்ச்சி தரலாம். திகைப்பும், சீற்றமும் ஏற்படுத்தலாம்.
45

Page 80
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
ஏனெனில் பெரும்பாலோர் பரம்பரையாக மூளையில் படித்த கருத்தியல்களிலேயெ ஊறியுள்ளனர். உணர்ச்சிகள் குன்ற நாவல் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டும் என நம்பு கிறேன்"
கணேசலிங்கன் இப்பொழுதெல்லாம் சிந்தனை செலுத்துவது:
"பாலியலை மனித விடுதலை நோக்குடன் சிறப்பாகப் பெண் விடுதலையுடன் எவ்வாறு அமைக்கலாம் என்பதே சிந்திக்க வேண்டியதாகும்."
இரண்டாவது சாதி நாவலுக்கு முன்னர், ஒரு பெண்ணின் கதை என்ற நாவலையும் 'பெண்ணியம்' சம்பந்தமாக கணேசலிங்கன் எழுதியிருக்கிறார்.
சிமோன் டீ போவே என்ற பிரேஞ்சுப் பெண் தத்துவப் பேராசிரியர் இவர் எக்ஸில் டென் ஷலிஸம் - இருப்பியல் - என்ற தத்துவக் கோட்பாட்டு விற்பன்னரான ஜ்ஷோன் போல் சாத்ரே என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் முறையாகத் திருமணம் செய்துகொள்ளாத லிவிங் ருகெதர் துணைவியாவார். அறுபதுகளில் 'த செகண்ட் செக்ஸ்' (இரண்டாவது பாலினத்தார்) என்ற நூலை எழுதி சர்ச்சையைக் கிளப்பியவர். அவருடைய படைப்பின் தலைப்பையும் கோட்பாட்டையும் நினைவுபடுத்தும் விதத்தில் செ. கணேசலிங்கன் இரண்டாவது சாதியைப் புனைந்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் தீவிர மார்க்சியவாதிகளுக்கு மனோதத்துவ அறிஞரான ப்ரொய்ட், இருப்பியல்வாதியான சாத்ரே போன்றவர்களைப் பற்றிப் பேசினால் ஆவேசம் வந்து விடும். இதற்குக் காரணம் மார்க்சியம் மாத்திரமே ஒரே வழியென்ற குருட்டு நம்பிக்கைதான். ஆனால் மார்க்சியத்தின் குறைபாடுகள் என்பதை விட ஸ்டாலினிஸத்தின் அகோரத்
146

கே. எஸ். சிவகுமாரண்
தன்மை வெளிப்படுத்தப்படும் இந்த நிதர்சன காலகட்டத்தில் வரட்டு சுலோகங்களை உதிர்த்து வந்தவர்கள் கூட, பிற தத்துவ நோக்குகளையும் அவதானிக்கத் துவங்கியிருப்பது ஓர் நல்ல அறிகுறி.
செ. கணேசலிங்கன் தமது இந்தக் குறிப்புகளில் பல பிறநாட்டுச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள் பற்றியும் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.
இந்த நாவலில் 16 அத்தியாயங்கள் உள்ளன. பவானி, இந்திரா, சந்திரன், சிவராமன், சந்தானம், ஆயா, வேலம்மா பேராசிரியை புனிதவதி, ரகுநாதன் போன்ற பாத்திரங்கள் நாவலில் வந்து தத்தமது தத்துவக் கருத்துக்களை உதிர்க் கிறார்கள். சில இடங்களில் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
பெரிய நகரங்களில் தமிழர் உட்பட, மேல்தட்டுமக்களின் வாழ்க்கை முறை - குறிப்பாக கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வறிவாளர்கள், பல்கலைக்கழகத்தினர், பத்திரிகை யாளர்கள், உயர் தொழில் புரிபவர்கள் - வித்தியாசமான பயன் மதிப்புகளையும் விழுமியங்களும் கொண்டவை என்பது வெளிப்படை. அந்த விதத்தில் கணேசலிங்கன் அவற்றிற்குப் பாத்திர உருவம் கொடுத்திருக்கிறார் எனலாம். அதே சமயத்தில் இவற்றில் பரிச்சியம் கொண்ட வாசகர்களுக்கு இக்கதைப் போக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்று
சொல்வதற்கு இல்லை.
தினகரன் வாரமஞ்சரி 12-09-1993
147

Page 81
தி. ஞானசேகரன்
லயத்துச் சிறைகள்
மலையக வாழ்மக்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகளைப் பெரும்பாலான இலங்கையர் நேரடியாக அறிந்திருப்பர் எனக்கூறமுடியாது. தமிழ்ப்புனைகதைகளைப் படிப்பவர்களில் சிலர் மாத்திரம், மலையகத்தைச் சேர்ந்த படைப்புகளைப் படித்துச் சில தகவல்களைச் சேகரித்திருக்கக்கூடும். இத்தகையபடைப்புகள் நூல்வடிவில் 15க்கு மேற்பட்டவையாக இருக்கலாம். கோகிலம் சுப்பையா முதல் தி. ஞானசேகரன் வரை, மலையகத்தைச் சேர்ந்த பலரும், வெளி மாகாணங் களைச் சேர்ந்த பேராசிரியர் சிவஞானசுந்தம் (நந்தி), சி. சுதந்திரராஜா. புலோலியூர் க. சதாசிவம் போன்ற சிலரும் மலையக வாழ்க்கை முறையைச் சித்திரித்து வந்துள்ளனர்.
வைத்தியத்துறையில் ஈடுபட்ட கலைப்பட்டதாரியான தி. ஞானசேகரனின் புதியபடைப்பு லயத்துச்சிறைகள். தோட்ட வாழ் மக்களில் படிக்கத் தெரிந்தவர்கள் - மிக இலகுவான முறையில், சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியவர், வெளிமாகாணத்தைப் (வடபகுதி) பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும், பல ஆண்டுகள் மருத்துவப் பிரயோகம் செய்து வந்தது காரணமாக மலையக
148

கே. எஸ். சிவகுமாரன்
வாழ்க்கையை நன்குணர்ந்து, அனுபவித்து, வெளிப்பாடு செய்திருக்கிறார் எனலாம். அது மாத்திரமல்ல. அவர் அகவயப்படாமல், புறவய நிலைப்பாட்டிலிருந்து எழுதுவது காரணமாக, உண்மையான பகுப்பாய்வு நாவலில் காணப்படுகிறது. இந்த ஆய்வு விழிப்புணர்வு பெற்றுவரும் தற்போதைய இளைஞர்களைச் சிந்திக்க வைக்கும். இந்த நாவலைத் தாமே படித்துப் பயனடைய முடியாத நிலை யிலுள்ள தோட்டத் தொழிலாள மக்களுக்கு இத்தகைய இளைஞர்கள்நாவலிற் சொல்லப்பட்ட விஷயங்களை அவர்கள் புரியும் மொழியில் எடுத்துக் கூறலாம். எனவே தான் நாவலாசிரியரின் நோக்கம் வெற்றி பெறுகிறது எனலாம்.
நாவலாசிரியர் வெறும் அறிவுரைகளை வழங்கவில்லை. Sst hófl(bábá5) 961IL-B5Sj60)m (Development Journalism/Broadcasting) யின் செயற்பாடாக ஒருபுனைகதையைத்தான் தந்திருக்கிறார். அப்புனைகதையில் செய்திகளைச் சிந்தாமல் சிதறாமல் கலை
bluu Tab (Craftmanship) gb(bólioTi.
வெறுமனே விவரணைகள், ஆசிரியர் கூற்றுக்கள், விபரிப்பு கள் போன்றவையின்றி. கதையூடாகவே செய்திகளைப் பரி வர்த்தனை செய்கிறார். தோட்ட வாழ் மக்களின் பேச்சு வழக்கிலேயே உரையாடல்கள் மூலம் கதையைத் துரிதமாகச் சொல்லி முடிக்கிறார். சொல்லாமற் சொல்லும் பண்பும். விறுவிறுப்பும், ஒட்டமும் கதையைக் கலைநயமாகச் சொல்ல வைக்கிறது. அந்த விதத்திலும்,நாவலாசிரியரின் எழுத்தாற்றல் பளிச்சிடுகிறது.
இந்த நாவலை ஒரு சமூக யதார்த்த ஆவணம் எனலாம். படிக்கத் தெரிந்த சம்பந்தப்பட்ட தோட்ட வாழ் மக்கள் காரண காரியத் தொடர்புடன் புத்தறிவு பெறுவர்.
கதைப்போக்கில் தெரிவிக்கப்படும் தோட்ட விஷயங்கள் சிலவற்றைநிரற்படுத்தினால் இந்நாவலில் வரும் சுந்தரம் என்ற
149

Page 82
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
கதாநாயகன் கல்வியறிவுபெற்ற மனிதாபிமானக் கதாநாயகன். தான் வாழும் சமூகம் மேன்மை பெற, நிர்வாக வரையறைக்குள் நின்று, தன்னாலானவற்றைச் செய்கிறான்.
இவன்தாய்தமிழச்சி. தந்தை சிங்களவன்.இதனை அவன் அறியான்.இவன்மாமன்மகள் சுபா, இவன்தந்தையின்மருமகள் சந்திரிகா. முக்கோணக் காதல். சிங்களத் தமிழ் கலாசாரக் கவர்ச்சி. சுந்தரம், யதார்த்த பூர்வமாகவும், உளவியல் பாங்கிலும், தனது கடமைகளை நிறைவேற்ற முற்படுபவன். உதாரணமாக, அவன் படிப்படியாகச் சில அத்தியாவசிய, முன்னுரிமை பேணப்பட வேண்டிய விஷயங்களைத் தோட்ட வாழ் வறிய தொழிலாளர்களுக்கு நம்பத்தகுந்த விதத்தில் எடுத்துக்கூறிச் செயலில் ஈடுபடுத்துகிறான்.
மலசல கூடம் அமைத்தல், பிள்ளை மடுவத்தில் மேலும் பிள்ளைகளைச் சேர்க்க நடவடிக்கை எடுத்தல், மரக்கறிச் செய்கை, அன்றாடத் தேவைகள் பற்றிய கலந்துரையாடல், கொழுந்துகளவெடுத்தலைச் சுட்டிக்காட்டல், பெரியதுரையின் கள்ளத்தனங்கள், அவருடைய கணக்கப்பிள்ளை, களஞ்சியப் பொறுப்பாளர் போன்றவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டே சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சுட்டுதல், பாஸ், பிரதம எழுதுவினைஞர் போன்றோர் இடம், மருந்து, சிகிச்சைச் சாலைகள், மூடநம்பிக்கைகள், பெரியதுரைமேல் சுந்தரம் சந்தேகம் கொள்ளல், சுந்தரம் தொழிலாளர் தலைவனாக மாறிவிடுவானோ என்ற பயம், சுந்தரத்தைத் தன்பக்கம் இழுக்க அவனுக்கு வதிவிடம் வழங்க முன்வருதல், கர்ப்பிணிகளுக்கான வைத்தியப் பராமரிப்பு. குடும்பக் கட்டுப்பாட்டுக் கருத்தரங்கு போன்றவை நாவலின் கதைப்போக்கில் வரும் சம்பவங்கள்.
இவற்றுடன் தோட்டத்திலே தேயிலையைக் களவாக விற்றல் போன்ற ஊழல்களின் அம்பலம், பெரியதுரை /
150

கே. எஸ். சிவகுமாரன்
சின்னதுரை உறவுகள். கொண்டக்டர் அவர் சகோதரிசந்திப்பு. சுந்தரம் - தாய் சம்பாஷணை, துரை சிக்கல்களின் போது ஏனைய தொழிலாளர்களை ஏமாற்றிவிடல், பிரசவப்பிரச்சினை. தொழிலாள மக்களின் வசதி நலக் குறைவு, லயத்துக் காம்பராக்களை சிறையாகச் சுந்தரம் மூலம் உணர்த்துவித்தல் போன்றவை நாவலில் வரும் ஏனைய முக்கிய கட்டங்கள்.
நாவலாசிரியர் தி. ஞானசேகரன் இந்த நாவலில் கூற வருவது என்னவென்றால், தொழிற்சங்க நடவடிக்கை ஒரு புறமிருக்க, சம்பந்தப்பட்டவர்கள்தாமே முன்னின்று மன்றங்கள் மூலம் செயற்பட வேண்டும் என்பதாகும்.
சந்திரிகா - சுந்தரம் - முத்துபண்டா சந்திப்பு காதல் பரிமளிப்பு. கல்யாணம் என்ற எதிர்பர்ப்புடன் முடிவடையும் இந்த நாவல், நாம் அனைவரும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறது.
எழுத்தாளர் ஞானசேகரனின் படைப்புகளில் முதிர்ச்சி யறிவும், கலாரீதியாக கதை செல்லும் பாங்கும் இணைகின்றன. வீரகேசரி வாரவெளியீடு 08-01-1995

Page 83
சில நாவல்கள் பற்றிய சிறு குறிப்புக்கள்
எஸ். அகளில் தியர் எரிநெருப்பில் இடைபாதை இல்லை
இது படிப்பினை தரும் முற்போக்கு நாவல். சாதிவெறி யாழ்ப்பாணத்தில் நிலவிய பாங்கைச் சித்திரிக்கிறது.
தனி மனித பாசம் போன்றவற்றை விட, சாதிப் பெருமை மேலோச்சிய பரிதாப நிலைமையை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
ஈழத்தில் முதலாவது சாதிப்பிரச்சினை வெளிப்பாட்டு நாவலாக இது அமைகிறது என்கிறார் ஆசிரியர்.
«Же «Же сЖе
செ. யோகநாதன்
#re
இது புதுமையான கதை. காட்டுப் பிராந்தியச் சூழலில், அ. பால மனோகரன், செங்கை ஆழியான் போன்றோர் வெகு நேர்த்தியான கதைகளை எழுதியிருப்பது உண்மையே. அந்த வரிசையில் இடம்பெறும் இந்தக் கதை எந்தக் காட்டுப் பிரதேசத்தில்இடம்பெறுகிறது என்று தெரியவில்லை. ஆயினும் சுவாரஸ்யமாகக் கதையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
152

கே. எஸ். சிவகுமாரன்
ஈழத்து நாவல்கள். குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேச எழுத்தாளர்கள் வெறுமனே சாதிப்பிரச்சினை நாவல்களையே அண்மைக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்த வேளையில் புதுமையாக செ. யோகநாதன் இதனை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.
ဧ;• ဧ•ဧ•
கதைவாணன்
காளை விடுதூது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர், சிங்கள / தமிழ் அரசர்கள் கதையொன்றைக் கற்பனையாக, நல்ல தமிழில் சுவாரஸ்யமாக எழுதிப் புதுமை செய்திருப்பது வரவேற்கத் தக்கது. இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும். பார்வை, முதிர்ச்சி, வரலாற்றுப் பரிச்சயம், சுவாரஸ்யம் அனைத்தும் சிறப்பாக உள்ளன.
сосеф
G3 IT. TITGID6tbaopair
யோகராணி கொழும்புக்குப் போகிறாள்
5Tத்திரமானதொருநாவலை ஆசிரியர் எழுதியிருப்பது உற்சாகப்படுத்தப்பட வேண்டிய ஒரு கடமையாகும். கதை சீரான ஓட்டத்தில் சொல்லப்படுவதனால், வாசகனுக்குச்சிரமம் ஏற்படவில்லை.
கட்டப்பட்ட நாவலாய் இருப்பதனால் யதார்த்தம் குன்றி னாலும் கொழும்பு வாழ் தமிழர்களின் வாழ்க்கைக் கோலங்களுள் சிலவற்றை இந்நாவல் திட்ட முற்படுகிறது.
53

Page 84
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
மாத்தளை கார்த்திகேசு
வழிIறந்தது
சிந்தனையைத் தூண்டும் முற்போக்கான மலையக நாவல் இது. அப்பிரதேச மக்களின் வாழ்க்கையை அறிமுகப் படுத்துகிறது. இவருடைய பல்முனைப் பாங்கான திறனாற்றல்
போதிய அளவு கணிக்கப்படவில்லை.
;•• လွီ•
LIDGExiTebİT SÐIGJFITJBIT LIT6O25 IOTou IIIGOTBilbaí
மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சுவாரஸ்யமானநாவல்இது.பாத்திர வார்ப்புகுறிப்பிடத்தக்கது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல், யாழ்ப்பாணம் / மட்டக்களப்பு உறவைச் சித்திரிக்கிறது.
அசோகாம்பிகை ஏற்கனவே ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார்.
န္ဒီ•ကွိ;• ဧ;•
ஏ. கே. குணநாதன் ஊமை நெஞ்சின் சொந்தம்
மட்டக்களப்பைச் சேர்ந்த மற்றொரு எழுத்தாளராக
ஏ. கே. குணநாதனின் முற்போக்கான கதை வரவேற்கத்தக்க தாயினும், சில குண இயல்புகள் குன்றியுள்ளன.
oKo o o
154

கே. எஸ். சிவகுமாரன்
ந. பாலேஸ்வரி
தத்தை விடுதூது
புது முயற்சி என்றாலும், மனதில் பதியவில்லை. இன்று ஆக்க இலக்கியம் வளர்ந்த நிலையில் இது எடுபடாது. ஆய்வாளர் செ. யோகராசா இந்த நூலுக்கு முன்னுரை எழுதத் துணிந்தமை பாராட்டுக்குரியது.
сесхе схе
ஜமுனாராணி நடராஜா பூவிதழில் புன்னகை
திருகோணமலையைச் சேர்ந்த மற்றொரு எழுத்தாளர் நாவலுக்குத் தேவையற்ற விவகாரங்களை எல்லாம் புகுத்தி மழுப்பியிருக்கிறார்.
கதையில் விறுவிறுப்பு இல்லை. கொலை, கற்பழிப்பு போன்றவற்றை நியாயப்படுத்துகின்றார். இது ஒர் இலட்சிய நாவல். பேச்சுமொழி ஒரே குழப்பமாய் இருக்கிறது. ஆங்கிலச் சொற்கள் கொலை செய்யப்பட்டுள்ளன.
ஜமுனாராணியிடம் திறமையிருந்தாலும், இந்த நாவல், தமிழ் சினிமா போன்று அவசரக் கோலத்தில் எழுதப் பட்டிருக்கிறது.
தினகரன் வாரமஞ்சரி
21-05-1995 ဆွီ;• ဧ;• ကွိ;•
155

Page 85
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
கே. ஆர். டேவிட் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது
தோட்டத்துரையின் கொடுமைகளை எதிர்த்துப் பழி வாங்க முயலும் ஒரு பெண்ணின் மனவுறுதியைக் காட்டும் வகையில் இந்நாவல் எழுதப்பட்டிருப்பதாக நா. சுப்பிரமணியன் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற தமது நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
1976
எஸ். அகஸ்தியப்
மண்ணில் தெரியுதொரு தோற்றம்
எஸ். அகஸ்தியர் அனுபவம் வாய்ந்த ஒர் இலட்சிய எழுத்தாளர். அவருடையபடைப்புக்கள் சோஷலிஸ் யதார்த்த வாதம்' என்ற பண்புக்கு அமைய எழுதப்படுபவை. அவருடைய மண்ணில் தெரியுதொரு தோற்றம் எனற நவீனமும் புதுப் பார்வை கொண்டது. தமிழ்ப் பெண் ஒருத்தி சம்பிரதாய மரபுவழிச் சூழ்நிலைகளையும் மீறி தன்னை இயற்கை ரீதியான செயற்பாட்டிற்குள் இணைத்துக் கொள்வதையே நாவல் காட்டுகின்றது. இவ்விதமான நாவல்களை அணுகும் முறை வேறு: அளவிடும் விழுமியங்களும் வேறு: விரிவான தனி ஆய்வுக்கான இடவசதி இங்கு காணாது குறித்து, அறிமுக ரீதியில் இப்படைப்புப் பற்றி இவ்வளவே இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.
வானொலி வாரமஞ்சரி Dmitr år 1978
156

தி. ஞானசேகரன்
குருதிமலை
இது ஒரு முக்கியமான ஈழத்து மலைநாட்டு நாவல். "மலையக மக்களின் வாழ்க்கை ஆரம்ப காலந்தொட்டே சிக்கல்களும் துன்பங்களும் நிறைந்ததாக இருந்து வந்திருக்கிறது. அந்நியர்களின் ஆதிக்கத்தில் தேயிலைத் தோட்டங்கள் இருந்த போது அவர்களின் கெடுபிடிகளில் சிக்கித் தவித்த தோட்டத் தொழிலாளர்கள் தமது திசை நோக்கி ஏக்கத்துடன் காத்திருந்த வேளையில் தான் தேயிலைத் தோட்டங்கள் யாவும் தேசிய மயமாக்கப்பட்டன" என்று பின்னணியை எடுத்துக் கூறிச் செல்லும் நாவலாசிரியர் தமதுஇந்த நாவலை ஏன் எழுதவேண்டி ஏற்பட்டதுஎன்பதையும் விளக்குகிறார்.
"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் பயனாகத் தமக்கு ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படப் போகிறதை தோட்டத் தொழிலாளர்கள் நம்பினர். அதே சமயத்தில் தோட்டங்களை அண்டியுள்ள கிராமப்புற மக்களும் தமது சுபிட்சமான வாழ்வை எதிர்பார்க்கத் தலைப்பட்டனர். இவ்வேளையில் அரசியல்வாதிகள் சிலர் சந்தர்ப்பவாதிகளாக மாறித் தமது பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினர்."
157

Page 86
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
"இதன் காரணமாக சிறு சமூகங்களைச் சார்ந்த மக்களிடையே மனக்கிளர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஒரு சில தோட்டங்களிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்று வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை எதிர்த்து நின்ற தொழிலாளர்கள் சித்திரவதைக்குள்ளானார்கள். அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டன. இருப்பிடங்கள் தீயில் வெந்து சாம்பலாகின.
"இவற்றையெல்லாம் நேரில் பார்த்தபோது நெஞ்சு பதறியது. தோட்டத்தொழிலாளர்கள் இந்நாட்டுமண்ணின்மேல் வைத்துள்ள பாசம் எமது இதயத்தைத் தொட்டது. அவர்களது ஊதியம் போராட்டத்தில் ஒரு தொழிலாளி மரணம் எய்தியது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இதனால் எனக்கு ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாகவே இந்நாவல் உருப்பெறத் தொடங்கியது."
மேற்கண்ட விவரணை நாவல் என்ன கூறுகின்றது என்பதற்கான விளக்கமாகும். ஞானசேகரன் கலைநயமாக, சொற்களுடன் கருத்தில் கொண்டு பொருளைத் தீட்டி யிருக்கிறார். இது ஒரு யதார்த்தப் படைப்பு என்றால் மிகையாகாது.
DrráF 1977
a
158

ராஜேஸ்வரி பாலசுய்பிரமணியம்
ஒரு கோடை விடுமுறை
ஈழத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் எழுத்தாளர் இப்பொழுது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் எழுதிய இந்த நாவல், தமிழ் வாசகர்களுக்கு மேற்குப்புற வாழ்க்கைப் போக்கில் தமிழ் பேசுபவர்கள் எதிர்நோக்கும் அனுபவங்களிற் சிலவற்றைப் படம் பிடிப்பதில் வெற்றி பெறுகிறது. இது ஒர் அரசியல் நாவல் எனவும் கூறலாம். அதே சமயத்தில் பெண் விடுதலைபற்றிய ஓர் அறிமுகநாவல் எனவும் கொள்ளலாம்.
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய நிர்மலா நித்தி யானந்தன் "ராஜேஸ்வரி கதையை வளர்த்துக் கொண்டு போவதிலும் கதாபாத்திரங்களின் சந்திப்புக்கள், உரை யாடல்கள் மூலம் தமிழரது அரசியற் பிரச்சினையைத் தெளிவாக்குவதிலும் ஒரு தீவிரம் இருக்கின்றது" என்று கூறுகிறார். அதே சமயம் கதைப் பின்னணித் தீவிரத்திற்கு அப்படி ஒரு வாழ்க்கையைத் தரிசிக்க முடியவில்லை. பாத்திரங்களுக்கும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஸ்தூலமான உளவியற் பாங்குகள் வளர்க்கப்படவில்லை. இருந்தும் நாவலின் வேகமும், வரட்டுப் பிரச்சாரமின்றி பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையினுாடாக அரசியற் பிரச்சினை
159

Page 87
ஈழத்தத் தமிழ் நாவல்களிற் சில
முன்வைத்தலும் நாவலின் சித்திக்குத் துணை செய்கின்றன" எனவும் கூறுகிறார்.
நாவலாசிரியை எழுதுகிறார் "ஆண்கள் இதுவரை பெண்களைக் கண்ணகியாகவோ, மாதவியாகவோ மட்டுந்தான் பார்த்தார்கள். இனிவரும் ஆண் எழுத்தாளர்கள் பெண்களைப் பெண்களாகவே படைக்கவும் எழுதவும். பார்க்கவும், பழகுவதற்காகவும் படைப்பார்கள்என்றநம்பிக்கை எனக்கு உண்டு."
சுவாரஸ்யமான நாவல்
1981
o o o
160

தெணியான்
கழுகுகள்
இந்த நாவல் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி, மல்லிகை மார்ச் -1982 இதழில் எழுதிய விமர்சனக் குறிப்புகளைத் தருகிறேன்.
கழுகுகள் என்ற இந்த நாவலின் கதை நீண்ட ஒன்றல்ல. ஆறுமுகத்தார் என்னும் இரண்டாந் தாரக்காரரான கிராமத் தரகள் ஒருவரின் உடல் நலச் சிதைவுதான் 'கதை" ஆனால் அந்த உடல் நலச் சிதைவினுாடே அத்தகைய சூழலில் அன்றாடம் நடைபெறும் மானுடத்தின் சிதைவு காட்டப் படுகிறது"
"சொத்துரிமையுணர்வு யாழ்ப்பாணத்து நிலவுடைமை யின் அடிநிலை விவசாயிகளின் வாழ்க்கையை எவ்வாறு சின்னாபின்னமாக்குகின்றதுஎன்பதற்கு இந்தநாவல் ஒருதலை சிறந்த எடுத்துக்காட்டு. சொத்துரிமையுணர்வு மனிதாயதக் கசிவுகளை உறிஞ்சியெடுத்து இந்த மனிதர்களை மானுட நோக்கு எனும் நீர்ப்பசையற்றவர்களாக்கி விடுகின்றது என்பதைத் தெணியான் அணு அணுவாகக் சித்திரித்துள்ளார்.
'வெறும் உடலுறவுக்காகவே ஏற்படுத்தப் பெற்ற ஆறுமுகம் செல்லம்மாவின் திருமண உறவு சொத்துரிமை
161

Page 88
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
யுணர்வினை எவ்வாறுவிகாரப்படுத்தப்படுகின்றதுஎன்பதையும் அவர்கள் இருவரையும் மாத்திரமல்லாது சொத்துடமையும் இல்லாமையும் அந்தச் சமூக மட்டத்தின் உறவுகள் முழுவதையுமே தீர்மானிக்கும் தன்மையும் வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வு பெரிதாகக் காட்டும்.
கழுகுகள் யாழ்ப்பாணத்துக் கிராமங்களின் ஆத்ம அவலத்தைக் காட்டும் நாவல். யாழ்ப்பாணத்து நிலவுடைமை யின் இருண்ட பகுதிகள் இதில் பூதாகரமாய்த் தெரிகின்றன. எமது பாரம்பரியப் பண்பாட்டின் மறுபுறம் இதுதான். இந்த நாவல் யாழ்ப்பாணத்து கிராம வாழ்க்கையினை அறிவதற் கான இன்னொரு வரலாற்று மூலம்,
முக்கியநாவல் எனக் கருதப்படும் இதனை அறிமுகமாக இந்நூலிற் சேர்க்க வேண்டும் என்பதால் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் விமர்சனத்திலிருந்து சில பகுதிகளை இங்கு தந்துள்ளேன்.
1981
162

சி. வி. வேலுய்பிள்ளை
வீடற்றவன்
ஈழத்து மலைநாட்டுத் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் உருவாக விடாமல் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த ஒரு காலமிருந்தது. அந்த அடக்கு முறைகளின் பின்னணியில் 'வீடற்றவன் எழுதப்பட்டுள்ளது."
இந்நாவலில் வரும்பாத்திரங்கள் நடப்பியல் மெய்மையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறார்கள். வெறும் பார்வையாளனாக நில்லாது, பங்கு கொண்டு தனது நீண்ட தொழிற்சங்க அனுபவத்தில் தான் தரிவித்த அலுவல்களை, போராட்டங்களை, முரண்பாடுகளை சி. வி. வேலுப்பிள்ளை இந் நாவலில் நுட்பமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். மலையக நாட்டார் வழக்கில் சி. வி. வேலுப்பிள்ளைக்குள்ள ஆழ்ந்த தேர்ச்சி இந்நாவலில் வரு கதாபாத்திரங்களின் உரையாடலைச்செழுமைப்படுத்துவதில் இவருக்குநிறையவே கைகொடுத்திருக்கிறது. கோகிலம் சுப்பையாவின் "தூரத்துப்பச்சை" தி. ஞானசேகரனின் "குருதி மலை" யோ. பெனடிக்பாலனின் சொந்தக்காரன் என்றநாவல்வழிகளில் 'வீடற்றவன் நாவலுக்கும் நிச்சயமான ஓரிடமுண்டு" --
1981
63

Page 89
கே. டானியல்
IDTá56aí
ன்ெ. கே. ரகுநாதன்,நீர்வை பொன்னையன், தெணியான், எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், டொமினிக் ஜீவா போன்றோர் எழுதும் பாங்கு ஓரளவு கலை நயத்துடன் அமைகிறது.
எஸ். கணேசலிங்கன், பெனடிக்ட் பாலன், சாருமதி போன்றவர்கள் எழுதும் பாணி வேறு ஒரு ரகம்,
செ. யோகநாதன். செ. கதிர்காமநாதன், சாந்தன். சட்டநாதன், அ. செ. முருகானந்தன், காவலூர் ஜெகநாதன், உமா வரதராஜன், திருநாவுக்கரசு, புலோலியூர் க. சதாசிவம் போன்றோர் இன்னொரு பாங்கான நடையில் எழுதுவர்.
சி. வைத்திலிங்கம், வ. அ. இராசரத்தினம், மு. தளைய சிங்கம், காவலூர் ராசதுரை போன்றோர் எழுத்து நடை மற்றொரு பாதை. ح
இந்த நுட்பங்களை விளக்கிக் காட்ட இந்தப் பத்தி எழுத்து இடந் தராது. கதைப் பொருள், சொல்லும் முறை, எழுத்து நடை போன்ற விஷயங்களிலே சில எழுத்தாளர் களிடையே ஒற்றுமை இருப்பதைக் காணலாம் என்றுமாத்திரம் இங்கு கூறிவைக்கலாம்.
164

கே. எஸ். சிவகுமாரன்
டானியலின் எழுத்துக்கள் பலவற்றிலும், அவர் மேல் தட்டு வர்க்கத்தினரின் பொய்மையைத் திரை கிழித்துக் காட்டுவதை நாம் காண்கிறோம்.
பூ மரங்கள் கதையில் காதல் என்பது எவ்விதம் வர்க்கச் சார்புடையது என்பதைக் காட்ட முற்படுகிறது. அதே சமயம் மூடநம்பிக்கைகளையும், அசட்டுத் தனங்களையும், அவை அசட்டுத் தனங்கள் என்று கூறாமலே வாசகள் புரியும்படி எழுதி யிருக்கிறார். இங்குதான் இவருடைய கலைநயம் இருக்கிறது.
இருந்தபோதிலும், டானியல் இக்கதையிலே உருவாக்கும் சோகநயம் இன்னும் காவியத் தன்மை கொண்டதாக அமைந்திருக்கலாம். சம்பாஷணைகள், கதையிற் கையாளப் படும் உத்தி போன்றவை பொருத்தமுடையன.
மக்களிடமிருந்து கற்று, மக்களுக்கே பொருள் விளக்கம் அளிக்கும் டானியல் வரட்டுத்தனமாகத் தீவிரக் கருத்துக் களை முன் வைக்காமல், பக்குவமாகப் படிப்பவர்கள் ஏற்றுக் கொள்ளத் தக்க விதத்திலே கதை எழுதுவது, அவருடைய அனுபவ முதிர்ச்சியைத்தான் காட்டுகிறது.
தினகரன் வாரமஞ்சரி
中°
65

Page 90
எஸ். அகஸ்தியர்
கோபுரங்கள் சரிகின்றன
இது ஒரு புரட்சி விளக்கக் கதை. முதலாளித்துவத்தை நசுக்கத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற சித்தாந்தம் நடைமுறையில் சாத்தியமில்லாமற் போகிறது. ஆயினும், தாம் வரித்த இலட்சியத்துக்கு விசுவாசமாக, எஸ். அகஸ்தியர் தொடர்ந்து எழுதிவருகிறார். கதையைச் சுவைபட எழுதும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது.
உணர்வூற்றுச் சித்திரங்கள், கட்டுரைகள், விமர்சன ஆய்வுகளை அவர் தந்துள்ள போதிலும், அவருடைய புனை கதைகள் படிப்பதற்குச் சிரமத்தை உண்டு பண்ணுகின்றன. உள்ளடக்கம் பழைய வர்க்கப் போராட்டம் சம்பந்தப் பட்டவைதான் என்பதில் பிரச்சினையில்லை. ஆனால் அவருடைய எழுத்துநடை செயற்கைப் பாங்கானது எனலாம்.
சமஸ்கிருத, பாலிச் சொற்கள் வலிந்து புகுத்தப்பட்ட நடை. இவ்விதமான குறைபாடு எஸ். பொன்னுத்துரையிடமும் இருக்கிறது.
எஸ். சுதந்திரராஜா எழுதிய மழை என்ற நாவலுடன் ஒப்பிடும் பொழுது, அகஸ்தியரின் கோபுரங்கள் சாய்கின்றன புதுமையாய் இல்லைத்தான். ஆயினும், கதை நிகழுமிடமும்
66

கே. எஸ். சிவகுமாரன்
தெளிவான கருத்தோட் டமும், அதற்கேற்றவாறு வசனப் ப்ரிவர்த்தனையும் பாராட்டும்படியாக இருக்கின்றன.
பாட்டாளி வர்க்கத்தினருக்காக, எளியமுறையில் எழுதப் பட்ட இந்த முயற்சி ஒரு 'கடப்பாடுள்ள எழுத்துத் தான் (Commited Writing)
தினகரன் வாரமஞ்சரி
* * ભૂe
167

Page 91
மண்டைதீவு கலைச்செல்வி
முற்றுப்பெறாத முடிவுகள்
புதிய பரம்பரைப் பெண் எழுத்தாளரின் இந்தக் கதை படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. எடுத்துக் கொண்ட கதைப் பொருளை கதாபாத்திரத்தின் மனப்பாங்கில் சித்திரிக்க முயன்றிருக்கிறார்.
எழுபதுகளின்முற்பகுதியில்இங்கு அறிமுகமான பொருள் நுகர்வுச் சூழலிலே மத்தியதர இளம் பராயத்தினரின் பயன் மதிப்புகள் எவ்வழி சென்றன என்றறிய இக்கதையில் வரும் பாத்திரங்கள் எடுத்துக் காட்டுக்கள் எனலாம்.
கந்தபுராண கலாசாரம் நிலவிய யாழ்ப்பாணத்திலே, இன்றைய மத்தியதர வர்க்கத் தமிழ் யுவதிகள் எவ்வாறு தனித்துவப் போக்குடையவர்களாகப் பழகுகிறார்கள் என்பதை ஆசிரியை கதையினுடாகக் காட்டுகிறார்.
இவருடைய கதை சொல்லும் பாங்கும், கையாளும் உரையாடலும், பாத்திரத்தை உருவாக்கும் திறனும், இவரு டைய எழுத்துக்கள் எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சியைக் காட்டும் என்பதற்கு அத்திவாரங்கள்.
168

கே. எஸ். சிவகுமாரன்
கதையில் நாயகனும், நாயகியும் இலட்சியப் பாத்திரங் களாக வரினும் தாம்பத்திய உறவு பிசிறிடாமல் இருக்க வழி யொன்றை கதை முடிவில் காட்டுகிறார். அந்த முடிவை ஒரு பெண்தான் எழுத முடியும்.
இக்கதையில் வரும் இரு பெண்களும், தமது வளரிளம் பருவமனோரதியச்சூழலிலிருந்துமெல்லவிடுபட்டுநிதானமாக யதார்த்தத்தை எதிர்நோக்கும் முதிர்ச்சியனுபவம் வரவேற்கத் தக்கது.
தினகரன் வாரமஞ்சரி
ဧ•ဧ• ကွိ;•
169

Page 92
----- {\tة. بjph ta, ؟t'Hausپ;;
அதிகம் அறியப்படாத ஈழத்து நாவல்கள்
இலங்கையைச் சேர்ந்த செ. கணேசலிங்கன், செ. யோகநாதன், கே. டானியல், பிரமிள் என்ற தருமு சிவராமு போன்ற எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் தமது நூல்களிற் சிலவற்றை வெளியிட்டிருப்பதனால், அவர்கள் பற்றிக் காத்திரமான சில தமிழ் நாட்டு வாசகர்கள் அறிந்து வைத்திருக்கக் கூடும்.
இலங்கையில்நாவல் எழுதுபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களிற் சிலருடையநாவல்கள் பற்றி இலங்கை வாசகர்கள் கூட அதிகம் அறிந்து வைத்திருக்கவில்லை. அத்தகையவர் களில் ஒரிருவர் எழுதிய நாவல்கள் தொடர்பான சிறு அறிமுகத்தைத் தருவதே எனது நோக்கம்,
ဏွှိ;• လွီ;• လွီ;•
வ. அ. இராசரத்தினம் கொழுகொம்பு
இது ஒரு காதல் கதை. குடும்பப் பகை காதலுக்குத் தடையாகிறது. பொறுத்திருக்குமாறு நாயகி கனகம்,நாயகன் நடராஜனிடம் வேண்டினாலும் அவன் நம்பிக்கையிழந்து பிலோமினா என்ற வேறோர் பெண்ணைக் கல்யாணஞ் செய்கிறான். சில காலத்தின் பின் மனைவிக்குத் தன் கணவ னின்பழையகாதல்விவகாரம் தெரியவருகிறது. கனகம்மாறாக் காதல்கொண்டுள்ளாள் என்றறிந்தபிலோமினாதன் உயிரையே தியாகம் செய்கிறாள். ஆக, இது ஒரு தியாகக் கதையுமாகிறது.
170

கே. எஸ். சிவகுமாரன்
ஆண்கள் பெண்களின் கொழுகொம்பு என்று கூறும் ஆசிரியர். ஈழத்தில் வடகிழக்குப்பகுதியின் பண்பாடுகளையும் இயற்கை வனப்பையும் கதையோடு இணைந்ததாக வருணித்துச் செல்கிறார். ஐம்பதுகளின் பிற்பகுதியில் வந்த முக்கிய ஈழத்துத் தமிழ் நாவல்களில் இதுவும் ஒன்று.
ဆွီ;• ဆွီ;• ကွိ;•
செ. சிவஞானசுந்தரம் (நந்தி) மலைக்கொழுந்து
இது ஒரு மலைநாட்டுக் காதற்கதை. இங்கு காதலுக்குத் தடையாக இருப்பது தோட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களுக் கிடையிலான போட்டா போட்டியாகும். கதையைவிட மலையக மக்களின் வாழ்க்கைமுறையை ஏனையபிரதேசமக்களுக்குத் தெரியப்படுத்த உதவும் விதத்தில் அமைந்த விவரணை பாராட்டுக்குரியது.
လွီ• ဆွီ;• လွီ။
யோ. பெனடிக்ட் பாலன் 619 69 () ***, 67TD25355TT607
தோட்டத் தொழிலாளர் பிரச்சினையைத் தீட்டும் இந்நாவல் குறிப்பிடத்தகுந்ததொரு நாவல். தாம் வதியும் காம்பராக்களில் தாம் படும் கஷ்டத்தை எடுத்துக் கூறிப் போராட்டத்தை மேற்கொள்ளும் சின்னக்கலப்பன் என்ற தொழிலாளி, தானே தனக்கு வசதியாக ஒரு வீட்டறை கட்டுகிறான். ஆனால் அதனைத் தவிடுபொடியாக்குகின்றனர்
171

Page 93
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
தோட்டத்துரையின் ஆட்கள். ஆனால் போராட்டம் தொழிற்சங்கம் மூலம் தொடர்கிறது. பிரச்சாரவாடை அதிகமாக இருப்பதனால் கலைநயம் குன்றிவிடுகிறது. இருந்த போதிலும், உண்மையான பிரச்சினைகளை, அவ்வாழ்க்கை முறையை அறிந்திராத வாசகர்களுக்கு இந்நாவல் அறியத் தருகிறது.
°
க. சொக்கலிங்கம் (சொக்கன்)
செல்லும் வழிஇருட்டு
இரசாங்கம் தனியார் பாடசாலைகளைப் பொறுப்பேற்கு முன் நிலவிய சீர்கேடுகளைச் சித்திரிக்கும் ஒரு சுவையான நாவல்.பாடசாலை ஆசிரியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை நேர்த்தியாகக் கொண்டு வருகிறார் ஆசிரியர்.
நாடகாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர்,பாடலாசிரியர் ஆகவும் ஆசிரியர் தமது பங்களிப்பைச் செய்து வருகிறார். இலங்கையின் முக்கிய எழுத்தாளர்களில் சொக்கன் பெயர் விடுபட மாட்டாது.
• oo o தெளிவத்தை ஜோசய் காலங்கள் சாவதில்லை
இலங்கையின் மலைநாட்டுமக்களின் வாழ்க்கையின் சில அம்சங்களை மாத்திரம் சுவையாகத் தீட்டும் ஒரு நாவல் காலங்கள் சாவதில்லை. ஆனால், நாவலில் அவர் எழுப்பும்
72

கே. எஸ். சிவகுமாரன்
பிரச்சினைகள் முழுமையாக அலசி ஆராயப்படவில்லை. சம்பளக் கொடுப்பனவுமுறைபற்றியும்,நிர்வாகப் பகுதியினரின் பொருந்தாக் காமம் பற்றியும், அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியுமே நாவல் பேசுகிறது. பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தோட்டமே நாவலின் நிலைக்களன். உண்மையான அடித்தளங்கள் அல்லது அடிப்படையான உண்மைகள் நாவலில் காட்டப்படவில்லை. எமது தோட்டங்களில் அல்லலுறும் இந்திய வம்சாவளியினரின் அவல வாழ்க்கையைச் சித்திரிக்க முயன்ற நாவலாசிரியர், மத்திய கருவினின்றும் விலகி, அநாவசிய அம்சங்கள்பற்றியும் எழுதுகிறார். ஆறுமுகம் என்பவன் இந்த நாவலின் நாயகன். அவன் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாகக் கருதாமல், தனி மனிதத் துயரமாகவே கருதுகிறான். சுரண்டும் வர்க்கத்தினருக்கு எதிராக வர்க்க உணர்வுடன் போராடுவதை விடுத்து, தோட்டச் சொந்தக்காரர் மீது மாத்திரம் தனது தாக்குதலை அவன் மேற்கொள்கிறான். பெரியதுரையிடம்முறையிடுவதுடன் அவன் திருப்தியடைகிறான். ஈற்றில் தோட்ட நிர்வாக பீடத்தின் ஆளுகைக்கு அவனும் பலியாகிறான். அது மாத்திரமன்றி, போராட்ட உணர்வு கொண்ட ஏனைய தொழிலாளர்களையும் அவன் அடக்கமுற்படுகிறான். சகதொழிலாளிகண்ணம்மாவின் காதலனாக ஆறுமுகம் விளங்கி, அந்த மனோரதிய பாங்கிலேயே நாவலும் முடிவடைகிறது.
தெளிவத்தை ஜோசப், திறமையுள்ள ஓர் எழுத்தாளர். உள்ளுரிலும் வெளியூரிலும் அவருடைய எழுத்து பிரபல்யமடைந்துள்ளது. ஆனால் அவர் இயற்பண்புவாத எழுத்துக்களைத் தவிர்த்து, சமூகப் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வாராயின் (சமூகத்தின் மேலோட்டமான வாழ்க்கைப் போக்குகளை மாத்திரம் பதிவு செய்யாமல்) சமூகத்துக்கு அவர் பயனுடையவராக இருப்பார்.
73

Page 94
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில
"புதிய காற்று" திரைப்படக் கதை வசனகர்த்தாவும் இவரே. ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறையைப் பொறுத்த மட்டில் இந்தப் படம் சில வளர்ச்சிப் போக்குகளைக் காட்டி நின்றது.
எஸ். றி. ஜோன்ராஜன் GIITIZIIIf IDTithioam
D ட்டக்களப்புப் பகுதியிலுள்ள கண்ணன் குடாப் பகுதியின் திருமணச் சம்பிரதாயங்களை அழகாக விவரிக்கும் ஒரு காதற் கதை இது. போடியார்கள் எனப்படும் நிலவுடைமையினர் வாழ்க்கைப் போக்கு விவரிக்கப்படுகிறது.
စ:• ကွိ;•ကွိ;•
வை. அஹற்மது புதிய தலைமுறைகள்
கதி ழக்கிலங்கையிலுள்ள வாழைச்சேனைப் பகுதியில், தலைமுறை இடைவெளியைக் காட்டும் இந்த நாவல், சமூகப் பிரக்ஞையோடு எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறை பற்றிய பல தகவல்களைத் தருகிறது இந்த நாவல். வர்க்கப் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவலாகவும் இதனைக் கொள்ளலாம்.
174

ஞானரதன்
புதிய பூமி
ஞானரதன்என்றபனைபெயரில்எழுதும் வீசச்சிதானந்த சிவம் முன்னர் எழுதிய நாவலை (ஊமை உள்ளங்கள்) விட புதிய பூமி ஒருபடி உயர்ந்த யதார்த்தப் படைப்பு எனலாம். நில அளவையாளர் முகாம் ஒன்றில் ரவீந்திரன் என்ற இளைஞன் பெறும் அனுபவமே நாவலின் மையப் பொருள். தமிழரான நில அளவையாளர் ஒருவரின் கீழ் பணிபுரியும் சிங்கள - தமிழ் தொழிலாளர்களிடையே காணப்படும் மனித உறவை விபரிக்க முன்வரும் ஆசிரியர் நில அளவையாளர்களும் தொழிலாளர் களும் நடத்தும் நாளாந்த வாழ்க்கை முறையைக் காட்டு வதுடன் தொழிலாளர்களின் வர்க்க நலனையும் எடுத்துக் காட்டுகிறார்.இனப்பிரச்சினை ஒருவர்க்கப்பிரச்சினையே என்று நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
ஞானரதன் புதியநாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு படைப்பாளியாக உருவாகி வருகிறார்.
கனவு - இதழ் 17 ஆகஸ்ட் 1991 (இலங்கைச் சிறப்பிதழ்)
175

Page 95
நெல்லை க. பேரன்
வளைவுகளும் நேர்கோடுகளும்
நெல்லை க. பேரன் எழுதிய முதலாவது நாவலான வளைவுகளும் நேர்கோடுகளும் அவருடைய சிறுகதைத் தொகுப்பைவிட (ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்) சுவாரஸ்யமாகவும் சிறிது மேம்பட்டதாகவும் இருப்பதை முதலில் அவதானித்தல் தகும். எடுத்துக் கொண்ட வடிவத்திற்கு இணங்கியவாறு நறுக்காக அவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. பேரனின் எழுத்து நடை பெரும்பாலும் நுண்ணியதாகவும், அவதானிப்புகளைப் பொழிப்பாகக் கூறும் இயல்புடையதாகவும் இருப்பதனால், சுவாரஸ்யம் கெடாமல் கதையை அவர் விறுவிறுப்பாகநகர்த்திச்செல்கிறார்.நாவலின் தொனிப்பொருள் தெளிவாகப் புலப்படுத்தப்படாவிட்டாலும் சம்பவங்களும், பாத்திர வார்ப்புக்களும் இயற் பண்பு கொண்ட தாக அமையினும் கூடியவரை யதார்த்த நெறியில் அமைந் துள்ளன. புதிய எழுத்தாளர்களில் இவரும் குறிப்பிடத் தகுந்தவர் என்று கூறுவதற்கு மேலாக இப்போதைக்கு விரிவான ஆய்வுஇங்கு தேவைப்படாது. கொழும்புபோன்றவலயங்களில் இன்றைய தமிழ் இளைஞரின் வாழ்க்கைக் கோலங்கள் எவ்விதம் சிறிது வித்தியாசமாக அமைகின்றன என்பதனை ஆறிய இந்த நவீனத்தைப் படித்துப் பார்க்கலாம்.
வானொலி வாரமஞ்சரி priră 1978
• ဆွီစဆွံ့•
176


Page 96


Page 97
b|1501 dlnuo)Jij 11
திறனாய்வுத்து களுக்கு I (St. காத்திரமாக விமர்ச6 கே. எஸ். சிவகுமாரன்
தான் திறனாய் நிலைநின்று கூறும் ந 2 ள்ளதனால்தான் த பெயரினைத்தக்க6ை
கடந்த அரை ந வெளிவந்த சிறுக திறனாய்வினைத் தெ தந்த இவர் இலங்கை அவ்வப்போது தான் ச தொகுத்துத்தருகின்ற
ஈழத்து நாவல் வல்லதும் புதிய நூற்ற விரும்புவோருக்கு ஒரு மாகவும் விளங்கத்த சில எனும் இந்நூல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1றையில்கடந்த நான்கு தசாய்தங் பட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் னங்களைப் பதிவு செய்திருப்பவர்
வு செய்யும் நூலினைப் பற்றி நடுவு ற்பன்ைபு கே. எஸ். சிவகுமாரனிடம் லைமுறை கடந்தும் அவர் தனது வத்துக் கொண்டிருக்கின்றார்.
ாற்றாண்டு காலங்களில் ஈழத்தில் தை நூல்கள் பற்றிய தனது ாகுத்து ஏலவே மூன்று நூல்களை யில் வெளியான நாவல்கள் பற்றி கூறிய கருத்துக்களை இந்நூலில் ១f.
கள் பற்றிய தகவல்களைத் தர ாண்டில் தமிழ்நாவல் பற்றி அறிய உயர்வான உசாத்துணை ஆவன க்கதுஈழத்துத் தமிழ் நாவல்களிற்
பூர் ஆ. இரத்தின வேலோன் தினக்குரல்