கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1962-1979)

Page 1

&AW
斋
霹

Page 2


Page 3

ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
(1962-1979) (ஒரு பன்முகப் பார்வை) LjrTa55íb — 1
கே.எஸ். சிவகுமாரன்
மணிமேகலைப்பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 0091-44-2434 2926 O091-44-2434 6082 filsöT g6556) : manimekalait Gdata.One in g60600TL 56Tih : www.tamilvanan.com

Page 4
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம் தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
> ஈழத்துச் சிறுகதைகளும்
ஆசிரியர்களும் (1962-1979)
கே.எஸ்.சிவகுமாரன்
தமிழ்
2008
முதல் பதிப்பு
11.6 G.s.
கிரெளன் சைஸ்
(12% X 18 A. Gigi.S.)
11 புள்ளி
Vi + 184 Ξ 192
நூலின் இந்திய விலை
ரூ.50.00
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
.gj.g. ' GLITft
நூல் கட்டுமானம்
வெளியிட்டோர்
ஒவியர் ராம்கி
எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர்
பி.வி.ஆர். பிரிண்டர்ஸ்,
சென்னை-14.
X>
தையல்
> மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை - 17.

jii
நூலாசிரியரின் விளக்கம் لاهای
(9airly நெஞ்சங்களுக்கு, வணக்கம்.
அருமை நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்கள்,
தமது மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது. அவருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். இலங்கைக்கு வெளியே அதிகம் என்னைத் தெரியாத புதிய இளம் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் அவர் தனது பரந்த விநியோக முறை மூலம் என்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அது மாத்திரமல்லாமல், செவ்வனே எனது நூல்களை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். நன்றிகள்.
ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் முன்னைய நூல்கள் இப்பொழுது கிடைக்காததனாலும், அவர்களுடன் பலர் இப்பொழுது நம்மிடையே இல்லாததனாலும், ஆய்வு செய்பவர்களுக்கான தடயங்கள் பூரணமாகக் கிடைப்பது இல்லை.
1960கள் முதல், கூடியவரை, இலங்கையில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகள் பற்றி திறனாய்வுக் குறிப்புகளை இலங்கை நாளிதழ்களிலும், வாரப் பதிப்புகளிலும் தமிழில் எழுதிவந்தேன், வருகிறேன். தமிழில் இடம் பெறாதவை பற்றி ஆங்கிலத்தில் எழுதிவந்தேன். வருகிறேன். எனது இந்த மதிப்புரைகள் சிறிது வித்தியாசமானவை.
அது எவ்வாறெனில், தொகுப்புகளில் இடம் பெற்ற ஒவ்வொரு கதையையும் நான் பகுப்பாய்வு செய்துள்ளேன்.

Page 5
Μ இவ்வாறு பலரும் செய்வதில்லை. எனவே, இந்த நூலிலே 1962 முதல் 1979 இறுதிவரை வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற கதைகள் தொடர்பான விபரங்களை ஆய்வாளர்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். மூல நூல்களே இல்லாத நிலையில் அவற்றை எழுதிய்வர்கள் தமது கதைகள் மூலம் எதனைச் சித்திரித்தார்கள், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை எவ்வாறு வளர்ச்சி பெற்று வருகிறது என்பதை ஆய்வாளர் மாத்திரமன்றி, அக்கதைகளை எழுதியவர்களும் கூட (சிலர் தமது கதைகள் பற்றி நான் எழுதியிருப்பது பற்றி அறிந்திராமலும் இருக்கலாம்) சில கணிப்புகளை அவதானிக்கக் கூடும்.
இந்த நூல் என்னைப் பொறுத்தமட்டில், முக்கியமான
தொன்று. இது ஏனெனில், இனக்கலவரங்கள் இலங்கையில் ஏற்படும் பொழுது நூலகங்களைத் தீயிட்டு எரிப்பர். தமிழ் நாட்டில் எனது நூல்கள் வெளிவந்தால், அவை அங்குள்ள நூலகங்களில் பத்திரமாக இருக்க வகையுண்டு.
தவிரவும், திறனாய்வாளனாக நான் எவ்வாறு அக்காலம் முதல் இயங்கிவருகிறேன் என்பதைத் தமிழ்நாட்டு ஆய்வறிவாளர் களும், ஆய்வாளர்களும், திறனாய்வாளர்களும், மதிப்பீட்டாளர் களும், உயர்கல்வி மாணவ மாணவியினரும் அறிந்து கொள்ளவும், பாரபட்சமின்றி எனது பணிகளை எடை போடவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
கடந்த 50 வருடங்களாக எழுதிவரும் நான், அநேகமாக என் பார்வைக்கு வரும் சகல நூல்களையும் படித்து எழுதி வருகிறேன். அவ்வாறு தொடர்ச்சியாக இவ்விதம் எழுதி வருபவர் அநேகமாக நானாகத்தான் இருக்கும். இடையிலே சில வருடங்கள் நான் மாலைதீவு, ஓமான், அமெரிக்கா போன்ற இடங்களில் வசித்ததனால், ஒரு சில ஈழத்து நூல்களைப் படித்திருக்கும் வாய்ப்பு கிடைக்காமற் போயிருக்கும்.

Μ இந்த நூல் - பாகம் 1, 1962 முதல் 1979 இறுதிவரை வெளிவந்த சிறுகதைகள் பற்றிய கணிப்பு. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் யார் யாரென்று அறியாதவர்கள் கூட இலங்கையில் குறிப்பாக இளம் பராயத்தினர்) இருக்கிறார்கள். இக்கதைகளை எழுதியவர்களுள் சிலர் கூடத் தமது கதைகள் பற்றி நான் எழுதியிருப்பதைத் தன்னும் அறியாதவர்களாக இருக்கக் கூடும். அந்த விதத்திலும், இந்த எனது நூல் ஒரு களஞ்சியமாகக் கருதப்படலாம்.
இந்நூலின் பாகம் -2 ஆம் விரைவில் வெளிவர நிர்வாக அதிபர் ரவி தமிழ்வாணன் அவர்கள் உதவுவார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளேன். 1980 தொடக்கம் இற்றைவரை எனது மதிப்பீட்டு அளவுகோல்கள் மாறியுள்ளன என்பதையும் தயவுசெய்து நினைவிற் கொள்க.
சிறுகதைகள் தவிர ஈழத்துத் தமிழ்நாவல்கள் தொடர்பான எனது மதிப்புரைகளையும், திறனாய்வுகளையும் பிறிதாக வெளியிட உத்தேசம், இறைவன் அருள் புரிவானாக.
வாசகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும், கணிப்புக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் - வணக்கம்.
அன்புடன் கே.எஸ்.சிவகுமாரன்
21, Murugan Place Off Havelock Road, Pamankada, Colombo-6, Sri Lanka.
O11-94-1-2587617 O11-O77-960 6283
E-mail : sivakumaranksGyahoo.com
kssivan316Ghotmail.corn Sivakumaran.ks3GDg mail.Com

Page 6
-i2ിച്ച
食 ܬܥܶܬܵZ &ZNS @ பதிப்புரை
冕
از: نه؟
நூ ல் திறனாய்வு இலக்கியவாதிகள் தமிழில் குறைவு. அந்த வகையில் இலங்கை எழுத்தாளர், திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் தமிழுக்கு கிடைத்து இருப்பது பெருமகிழ்ச்சி. இவர் கலை இலக்கிய உலகில் 50 ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியின் பயனே இந்நூல். சிறுகதை உலகில் சில முக்கிய படைப்பாளி களின் படைப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு திறம்படத் திறனாய்வு செய்திருக்கிறார். இலக்கிய ஆர்வலர் மற்றும் தமிழ் வாசகர்கள் வரவேற்பார்கள் என
நம்புவோம்.
-பதிப்பகத்தார்

14.
15.
16.
17.
18.
19.
20.
y
vii
உள்ளடக்கம் རྩོལ་
நூலாசிரியரின் விளக்கம் iii
பதிப்பாசிரியர் உரை o vi
தமிழிற் புனைகதை இலங்கையர்கோனின் அழகியல் பாங்கு --------------------- 7 செ.கணேசலிங்கனின் நிதர்சனக் கதைகள் -------------------24 வஅ.இராசரத்தினத்தின் கட்டமைப்புத்திறன்---------------3
டொமினிக் ஜீவாவின் அடித்தள மக்களின் விழிப்புக்குரல் --44
காவலூர் இராசதுரையின் மன அலைகள் -------------------- S2 நீர்வை பொன்னையனின் நிதர்சன நீட்சியழகு----------- 59 வரதரின் முன்னோடிக்கதைகள் ----------------------69 முகிழ்ந்த எழுத்தாளர் சிலரின் முதல் முயற்சிகள் ---------73 பரிசுகள் பெற்ற முன்னைய சிறுகதைகள் ------------- 84 Gs._rഞ്ഞിധങിങ്'(േg|&sങ്ങp --------------------------- 88 நாவேந்தனின் தமிழ் தூய்மை வாதம் ------------------90 கல்லூரிச் சஞ்சிகைக் கதைகள் போன்றவை --------------- 95
பவானி (ஆழ்வாப்பிள்ளை) - பெண்ணியக் கதை முதல்வர் -98 எம்.ஏ.ரஹ்மானின் முன்னோடிப் பரிசோதனைக் கதை ------ 102 மட்டக்களப்புப் பிராந்திய பேச்சு வழக்கில் கதை --------- 108 செ.கதிர்காமநாதனின் மார்க்சியத் தேடல் - கொட்டும்பனி-1
என்.எஸ்.எம்.ராமையாவின்
தோட்டவாழ் மக்களின் படப்பிடிப்பு----------- 16

Page 7
viii
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
32.
33.
34.
35.
36.
37.
ܢܸܫܬ݁ܽ
'G' ഉന്ദ്ര ക്രി. ----------------------- 129 பெண்நோக்கில் சில கதைகள் -------------------------- 132
செ.யோகநாதனின் சமூகப் பார்வை------------------------- 38 மண்டூர் அசோகாவின் பெண்மை நோக்கு ----------------143 புலோலியூர் க.சதாசிவத்தின்
சிறுகதை வடிவ அக்கறை-----------------------145 س நெல்லை க.பேரனின் செய்தி ஆர்வம் SSLSLLLSSSSSMM SLLSLCSLSLSSLLSSLLSSLCSSMLSSSLCSSSLSLSLSSLLSSLLSSLSSLSSLLLSLLLSkkSL SSLLSLSLS149 --س
அயேசுராசாவின் அனுபவதரிசனங்கள் -------------------156 சாந்தனின் நையாண்டிக் கதைகள்--------------- 158 மு.திருநாவுக்கரசின் சிக்கனச் செதுக்கல் ------------------ 162 pTഗ്രട്ടഞ്ഞുകൃurഖിങ് ക്ലgഖ് &ങ്ങഴ്ചക്ക് -------------------- 167
செ.யோகநாதனின் முன்மாதிரியான
uിG#rgഞങ്ങ് &ഞ്ഞുകൂട് ---------------------- 122
மு.தளையசிங்கத்தின் கதைகளில்
யோ.பெனடிக்ற் பாலனின் மார்க்சியத்
தத்துவார்த்தக் கதைகள் 170
சாந்தனின் மினிக் கதைகள் 172
லெமுருகபூபதியின் நீர் கொழும்புத் தமிழ் ------------- 174 GrUTജിങ് (prഞഥഴ്ച 8pങr sഞgട് -------------------- 76 மருதூர் மஜீத்தின் மட்டக்களப்பு முஸ்லிம் தமிழ் ---------- 179 காவலூர் எஸ்.ஜெகநாதனின்
சிறுவர்களுக்கான கதைகள் -------------------- 180

தமிழிற் புனைகதை
இற்ங்கிலத்தில் "பிக்ஷன்" (Fiction) என்பதைத் தமிழில் புனை கதை என்கிறோம். புனைகதை, நவீன இலக்கிய வகைகளில் ஒன்று. பொது வாக நாவலையும் சிறுகதையையும் புனைகதை எனக்கூறுவது வழக்கம். தமிழிற் புனைகதை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வளரத் தொடங்கி யுள்ளது. தற்காலத் தமிழ் இலக்கிய மாணவரும் புதிய எழுத்தாளர்களும் புனைகதையின் உறுதிப் பொருள் களைக் கற்றுணரல் விரும்பற்பால தெனக் கருதி, அவை பற்றித் தமிழில் கிடைக்கக் கூடிய நூல்களை அறிமுகம் செய்து வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில், இலக்கிய வரலாறு களில் புனைகதை பற்றி இடம் பெற்ற பகுதிகளைப் பார்ப்போம். தமிழ் இலக்கிய வரலாறு/விமர்சனம் போன்ற

Page 8
2 AZیy مجھے تھےZy قبره قطعی هے Zzق
துறைகளில் ஈழத்தவர்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக, காலஞ்சென்ற பேராசிரியர் வீ.செல்வநாயகத்தைக் குறிப்பிடலாம். அவருடைய தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலின் முதலாவது பதிப்பு 1951 ஆம் ஆண்டிலேயே வெளி வந்துவிட்டது. அந்தச் சிறு நூல் இன்றும் மதிப்பிழக்கவில்லை. அதில் சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வகைகள் பற்றியும் விபரிக்கப் பட்டுள்ளது. காலஞ் சென்ற பேராசிரியர் மு.வரதராசன் தமது இலக்கிய மரபு (1960) என்ற நூலில் புனைகதை பற்றி அழகாக விபரித்து இருப்பதையும் குறிப்பிடலாம். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு (13ஆம் பதிப்பு - 1978) என்ற நூலிலும் தமிழ்ப் புனைகதைகள் பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன. ஈழத்து இலக்கிய வளர்ச்சியை (1964) எழுதிய காலஞ் சென்ற இரசிகமணி கனக செந்திநாதன், ஈழத்துச் சிறுகதை, நாவல் போன்ற வற்றில் எடுக்கப்பட்ட முயற்சிகளை குறிப்பிட்டள்ளார். மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியப் பகுதியில் பணிபுரிந்த கலாநிதி இராதண்டாயுதம் தற்காலத் தமிழ் இலக்கியம் (1973) என்ற தமது நூலில், தமிழ் சிறுகதைகள், நாவல்கள் பற்றியும் "இலங்கைத் தமிழ் இலக்கியம்" என்ற தலைப்பில், ஈழத்துச் சிறுகதைகள், நாவல்கள் பற்றியும் தகவல் தருவதுடன், செ.கணேச லிங்கனின் சடங்கு என்ற நாவல் பற்றிய விமர்சனத்தையும் எழுதியுள்ளார். "எழில்

3 تیتر محی ھے - لیے 6 محی محمد نzzzzzzz/7/7مجھےagے
முதல்வன்" என்ற புனைபெயரில் பிரபலமான விமர்சகர் கலாநிதி மா.ராமலிங்கம் தமது 20ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் (1973) என்ற நூலில், தமிழில் புனைகதை பற்றி பயனுள்ள விமர்சன நோக்குகளை வெளிப்படுத்தி யிருக்கிறார். முன்னைய யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை வெளியிட்ட ஆக்க இலக்கியமும் அறிவியலும் (1977) என்ற நூல் புதிய கண்ணோட்டங்களில் புனைகதைத் துறையை அணுகுவதைக் காணலாம். பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய ஈழத்தில் தமிழ் இலக்கியம் (1978) வரலாற்றுப் பின்னணியில் புனைகதை பற்றியும் சில செய்திகளைக் குறிப்பிட்டுச் செல்கிறது. சி.மெளனகுரு, மெள.சித்திரலேகா, எம்.ஏ.நூஃமான் ஆகியோர் எழுதிய 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (1979) என்ற நூலில் ஈழத்துப் புனைகதைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
மேற்கண்ட நூல்கள் சிறுகதை, நாவல் பற்றி பொதுவாகவும், போக்கோடு போக்காகவும் கூறுபவை. இவற்றைவிடச் சிறுகதை பற்றியும், நாவல் பற்றியும் குறிப்பாகச் எழுதப்பட்ட பல நூல்களும் அண்மைக் காலத்தில் தமிழில் வெளிவந்துள்ளன.
சிறுகதை பற்றி, சிறுகதை ஒரு கலை (1958) என்ற நூலை ப.கோதண்டராமன் வெளியிட்டிருந்தார். ஆரம்ப எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பாகவும் பயனுள்ள நூல் எனலாம். வளரும் தமிழ் (சோமாலெ). இலக்கிய விமர்சனம் (சிதம்பர ரகுநாதன்), இலக்கியகலை

Page 9
4. ஈழத்துச் சிறுகதைகளுரம்
(அ.ச.ஞானசம்பந்தன்), படித்திருக்கிறீர்களா? விமர்சனக் கலை/எதற்காக எழுதுகிறேன் (க.நா.சு), கலைக் களஞ்சியம், கதையின் கதை (கலைமகள் வெளியீடு), கதையுலகில் உல்லாச யாத்திரை (பி.பூரீ ஆச்சார்ய) போன்றவற்றில் சிறுகதை பற்றி ஒரளவு விரிவான குறிப்புகள் அடங்கியுள்ளன. ஆயினும் தமிழ் சிறுகதைகளை அடிப் படையாகக் கொண்ட முதலாவது சிறுகதை விமர்சன நூலாகிய தமிழிற் சிறுகதையை (1966) சாலை இளந்திரையன் எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுகதைச் செல்வம் (1966) ஒரு பயனுள்ள நூல். கா.சிவத்தம்பி எழுதிய தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1967) தலைப்புக்கு ஏற்று அதன் நோக்கத்தை விமர்சன நோக்கில் ஆராய்கிறது. செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்துச் சிறுகதை மணிகள் (1973) ஈழத்துச் சிறுகதை களை விமர்சிக்கும் நூலாகும். இவற்றைவிட எண்ணற்ற விமர்சனங்களும் கட்டுரைகளும் நூல் வடிவம் பெறாமல் உள்ளன. இவற்றையெல்லாம் இலக்கிய மாணவரும், எழுத்தாளர்களும் தேடிப் படித்துப் பயனடையலாம். கடந்த 50 ஆண்டுகளில் மேலும் பல நூல்கள் வெளி வந்துள்ளன.
சிறுகதை பற்றிய நூல்களைவிட, நாவல்கள் தொடர்பான நூல்கள் எண்ணிக்கையில் கூடியதாக இருக்கின்றன. க.நா.சுப்பிரமணியம் எழுதிய முதல் ஐந்து நாவல்கள் (1957) ஒரு புதிய விமர்சன முயற்சியாக அமைந்து உள்ளது. நாவல் இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் ஈழத்து இலக்கியம் பற்றியதாக மாத்திரம் இருந்தாலும்

5 تیتری محمد ۔جمے کے محی محمد ق4 ویسے تھ7/7zzمجھےgے
கூட, தனியான ஒரு நூலாக முதலில் வெளிவந்தது ஈழத்து தமிழ் நாவல் வளாச்சி (1957) ஆகும். இதனை சில்லையூர் செல்வராசன் எழுதினார். ஆயினும், தமிழ் நாவல் இலக்கியம் (1968) என்ற க.கைலாசபதியின் நூலும், இன்றும் இத்துறை பற்றிய தலைசிறந்த நூல் எனக் கருதப்படுகிறது. மா.இராமலிங்கம் எழுதிய நாவல் இலக்கியம் (1975) என்ற நூலும் விதந்து கூறப்படத்தக்கது. தமிழ் நாவல் முன்னோட்டம் (தா.வே.இராமசாமி) நாவல் வளம் (இரா.தண்டாயுதம்) தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் (கி.வா.ஜகந்நாதன்) ஆகியனபற்றியும் இங்கு குறிப்பிடலாம். விமலா மனுவெல் எழுதிய நவீன புனை கதையில் மனிதன் (1973) என்ற ஆங்கில நூலையும் இங்கு குறிப்பிட வேண்டும். தி.பாக்கியமுத்து பதிப்பித்த விடுதலைக்கு முன் தமிழ் நாவல்கள் (1974) ஒன்பது நாவல்களின் விமர்சனங்களையும் அவற்றிற்கு நாவலாசிரியர்கள் அளித்த பதில்களையும் கொண்டது. தி.பாக்கியமுத்து பதிப்பித்த மற்றொரு தொகுதியான தமிழ் நாவல்களில் மனித விமோசனம் (1976) நல்ல விமர்சனங்களைக் கொண்டுள்ளது. நா.சுப்பிரமணியம் எழுதிய வீரகேசரி பிரசுர நாவல்கள் (1977), ஈழத்துத் தமிழ் நாவல்கள் நூல் விபரப்பட்டியல் (1977) ஆகியனவும் தகவல் தருபவை. கா.சிவத்தம்பி எழுதிய நாவலும் வாழ்க்கையும் (1978) சமூகவியல் ஆய்வாக அமைந்துள்ளது. இரா.இராஜ சேகரன் பதிப்பித்த தமிழ் நாவல் - ஐம்பது பார்வை (1978) என்ற நூலும் சுவாரஸ்யமானதுடன், சுமார் ஐம்பது

Page 10
6 ஈழத்துச் சிறு சதைகளுரம்
நாவல்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது. தா.வே.வீராசாமி எழுதிய தமிழ் சமூக நாவல்கள் (1978) என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. சோ.சிவபாத சுந்தரம்/சிட்டி ஆகியோர் எழுதிய தமிழ்-நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) பயனுள்ளது. ஈழத்துத் தமிழ் நாவல்கள் பல செய்திகளை ஈழத்து நாவல் இலக்கியம் (1978) என்ற நா.சுப்பிரமணியத்தின்நூலில் காணலாம். நா.வானமாமலை பதிப்பித்த தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு (1977) மற்றும் ஒரு தரமான விமர்சன நூல் ஆதலால் யாவரும் படிக்க வேண்டியுள்ளது.
இவ்வறிமுகக் கட்டுரையில் இடம்பெறாத, வேறு பல நூல்கள் இருக்கின்றன. இவை என் கைகளுக்குக் கிட்டாமையால், அவை பற்றி கூற முடியாதிருக்கிறது. ஆயினும் அவற்றின் பெயர்கள் சிலவற்றையாவது தெரிவிக்கலாம். இருபதில் சிறுகதை, (செல்வி பியூலா மேர்ஸி) குபரா சிறுகதைகள்-ஆய்வு (ரா.மோகன்), தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது (சி.சுசெல்லப்பா), விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள் (மா.ராமலிங்கம்), தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்) இரா.தண்டாயுதம்) ஆகியன. இந்நூல்கள் அனைத்தையும் தமிழிலேயே படித்துப் பார்க்கும் ஓர் இலக்கிய மாணவர் புத்தறிவு பெற்று, புனை கதைத் துறையை நன்கு அறிந்து கொள்வது மாத்திரமின்றி தெளிவான நோக்கத்துடன், இவ்வாக்க இலக்கியப் பணியில் இறங்கவும் முடியும்.

இலங்கையர்கோனின் அழகியல் பாங்கு
.ழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறை முன்னோடிகளுள் ஒருவர் இலங்கையர் கோன். இலங்கையர் கோன் புனை பெயர். உண்மையான பெயர் ந.சிவஞானசுந்தரம். சிறுகதைத் துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத் தகுந்தவர்கள். சிவஞானசுந்தரம் விமர் சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார். இவர் எழுதிய விதானையார் வீட்டில், கொழும்பிலே கந்தையா, லண்டன் கந்தையா போன்ற வானொலி நாடகங்கள் பிரபல்ய மடைந்தன. மாதவி மடந்தை, மிஸ்டர் குகதாஸன், முதற்காதல், வெள்ளிப் பாதசரம் ஆகியன இவர் எழுதி வெளி வந்த நூல்கள். அரசாங்கச் சேவையில் காரியாதிகாரியாகப் பணிபுரிந்த இவர் 15-11-61இல் காலமானார்.

Page 11
8 ஈழத்துச் சிறுகதைகளுர4
இலங்கையர் கோன் என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்ட சிவஞானசுந்தரம், இலங்கையில் இலக்கியக் கோனாக விளங்க விரும்பியிருக்கலாம். அவருடைய உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவனவாக அவர் எழுதிய சிறுகதைகளும், அவற்றில் இடம் பெறும் சொற் பிரயோகங் களும் அமைகின்றன.
'மணிக்கொடி' போன்ற இந்தியப் பத்திரிகைகளில் தமது சிறு கதைகளைப் பிரசுரித்த இலங்கையர் கோன், ஈழத்து வரலாற்றுச் சம்பவங்களைக் கற்பனை கலந்து எழுதியிருப்பதும், ஈழத்துப் பொது வழக்கில் உள்ள மரபுச் சொற்களைக் கொண்டு கதைகளைத் தீட்டியிருப்பதும், சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகத் தமது கதைகளில் நடமாடவிட்டிருப்பதும், பழந்தமிழ் இலக்கியத்தில் அவர் நன்கு பரிச்சயம் கொண்டிருந்தார் என்பதை உணர்த்தும். கவிதா படிமங்களைப் பயன்படுத்தி யிருப்பதும் அவர் அக்காலத்திலேயே தனிப்பண்புகளைத் தமது எழுத்துக்களிற் பொறிக்க முனைந்தார் என்பதைக் காட்டுவன.
அக்காலப் பின்னணியில் இலங்கையர் கோன் படைப்புகள் அத்துணைச் சிறப்பிடம் பெற்றிருந்தாலும், ஈழத்து இலக்கியப் போக்குகளும், நெறிகளும் இன்று வழிப்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளன என்பதைத் தொட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

9 ”یکتری محمد - مجھےصحیحمہ ق4 برعی یعے تح7/7ZZZمجھے تھے
வெள்ளிப்பாதசரம் என்ற தொகுதியில் இடம் பெற்ற பதினைந்து கதைகளையும், ஒரே சீராய் நாம் படித்துப் பார்க்கும் போது, ஆசிரியர் தொடர்பாகத் தென்படுபவை: இலங்கையர் கோன் ஒரு மனோரதியவாதி (Romanticst) அல்லது கற்பனாலயவாதி, மனிதாபிமானம் உடையவர், உத்தியோக அந்தஸ்து, மேதாவிலாசம் போன்றவற்றைப் பாராட்டுபவர். சாதிகளைப் பெயர் சொல்லியே அழைப்பவர். தமிழின் இனிமையில் வயப்பட்டவர். இழுமென் மொழியைப் பயன்படுத்துபவர். சமூக யதார்த்தப் பின்னணியில் பாத்திரங் களை வார்ப்பதை விட, மேம்போக்கான சில குணநலன் களின் அடிப்படையில் பாத்திரங்களைச் சித்திரிப்பவர். ஆழமான உணர்ச்சிகளைப் படிப்பவர்கள் மத்தியில் எழுப்பு வதை விட மேலோட்டமான முறையில் சில கோடிகளை மட்டும் காட்டுபவர். சில வேளைகளிற் தாமே வலிந்து அறநெறிசார்ந்த உண்மைகளைக் கதையிற்புகுத்துபவர். இவை பொதுப்படையான அவதானிப்புக்கள்.
இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் பற்றி ஒவ்வொன்றாக ஆராயுமுன்னர், மற்றும் ஒரு அடிப்படை யான குறிப்பையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையர்கோன், உள்ளடக்கச் சிறப்பில் கவனஞ் செலுத்தவதைவிட உருவ அமைப்புக்கே அதிக கவனம் செலுத்தியுள்ளார். உருவ அமைப்பு என்னும் பொழுது கவிதை நடையே, இங்கு மனதிற்கொள்ளப்படுகிறது. புனைகதை மூலம் தமிழ் உரைநடைக்கு வளமூட்டிய ஈழத்து எழுத்தாளர்களுள், இலங்கையர்கோனுக்கு நிச்சயமான

Page 12
70 ஈழத்துச் சிறுகதைகளுரம்
தோர் இடமுண்டு. இலங்கையர்கோன் உள்ளத்திலே ஒரு கவிஞன் என்பதனாற்றான், அவருடைய சொற்சித்திரப் படிமங்கள் புதுப்புனைவாய் அமைந்துள்ளன. VN
"அனுலா", "சீகிரிய", "யாழ்ப்பாடி" ஆகியன இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்து கற்பனை யுடன் எழுதப்பட்ட சிறுகதைகளாகும். "மரியா மதலேனா", "தாய்’ அகியன விவிலிய கதைகளின் வெளிப்பாடு. இலங்கையர் கோனின் இலக்கியக் கோட்பாடும், விமர்சனப் போக்கும் 'நாடோடி" என்ற கதையில் அற்புதமாக வெளிக் காட்டப்பட்டுள்ளன. "மேனகா' பெளராணிகக் கதை சார்ந்தது. எஞ்சியவை பாத்திரங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டன.
"மேனகா" என்ற கதையிலிருந்து சில பகுதிகளைச் சிறிது பார்ப்போம் :
"விசுவாமித்திரரை வருத்தியது இளமையின் மனக்காதல் அன்று, நடுத்தரவயதின் மனக் கலப்பற்ற கொடிய உடல் வேட்கை, தசையின் பிடுங்கல். வெளிக்கு ரிசி பத்தினியே போன்ற தன்மையான சுபாவத்திற்குள் வடவைத் தீ போன்ற காமத்தை மறைத்து வைத்திருப் பவளான மேனகை, ஆயிரம் அமரர்களின் பொதுமகளான அவளுக்குப் புது மணப் பெண்ணின் மனத்தில் தோன்றுவது போல சிறிது நாணங்கூட ஏற்பட்டது. இரவு முழுவதும் தாரகைகள் நடமாடியதனால் செம்பஞ்சுக்குழம்பு தோய்ந்திருந்த வானரங்கைத் துடைத்துச்சுத்தம் செய்வன

്യ കീബ് ബ്ര4് ബ2-79) ബ്ര 77
போல் அருணத்தோட்டி கீழ்த்திசையில் எழுந்தான். பூத்துக் குலுங்கும் மகிழின் கீழ் வெண்பட்டணிந்து கருங்கூந்தல் தோளிற் புரள, தெய்வமயன் கடைந்து நிறுத்திவிட்ட தந்தப்பாவை போல மேனகை நின்றாள். பிரபஞ்சத்தை கண்கண்ட விந்து ரூபத்தையும் கண்காணாத நாத ரூபத்தையும் மனத்தில் இருத்த முயன்றார்."
புராணக் கதையாக இருந்தாலும் கதை சொல்லும் நேர்த்தியும் வார்த்தைப் பிரயோகமும் இங்கு வாசகர்களைக் கவர்ந்திழுக்கிறது.
தாழை நிழலிலே
இக்கதையின் முற்பகுதி ஆசிரியரின் ஏதோவொரு கவிதையின் விரிவாக்கம் போன்று அற்புத ரசனை உணர்வைப் படிப்பவர் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது. மரபுத் தமிழ், இலக்கியத்தின் தீந்தமிழ்ச் சொற்களால் ஆசிரியர் தீட்டும் வண்ணம், ஓவியம் உவகையையும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இலங்கையர்கோன் இந்தக் கதையில் இலங்கையின் கீழ்க்கரையை அடுத்த ஓர் ஊரிலே செம்படவர்கள் வாழும் பகுதியில் இளவரசி நிகர் அமீனா என்ற சிறுமியின் படிமத்தையும் அவள் சூழலையும் கவிதைப்பண்புகள் நிரம்பிய சொல்லோவியமாகத் தீட்டுவது நயக்கத்தக்கது. ஒசைச் சிறப்பும் இதமான மெல் உணர்வும் வெளிப்படும் ஆசிரியர் நடைச்சிறப்பு அவருடைய ஆக்கத்திறனுக்குச் சான்று.

Page 13
ፖ2 ஈழத்துச் சிறுகதைகளுர4
'மாட்டேன்' என்ற பொருள் படும் "ஒண்ணா" வார்த்தையின் பயன்பாட்டை ஆசிரியர் உரையாடலில் சரிவரப் பயன்படுத்தியுள்ளார். "அமீனாவின் புன்னகை உதய சூரியன் அழகுபோல் என்மனதில் பட்டது. அவளுடைய கன்னங்கள் சில கடற் சிப்பிகளிற் காணும் ரோஜா வர்ணம் போல தமிழ்ப் பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத் திலகம் போல் செந்நிறம் பாய்ந்தன" என்று எழுதும் ஆசிரியர் அரசிகள் அழுவதில்லை, தரையை நோக்குவது இல்லை என்றால் அரசி போல் வீற்றிருந்த அமீனாவின் சொந்த வாழ்வில் கணவன் விட்டுப் பிரிந்த போது அவள் சாதாரண பெண்ணாகி விடுகிறாள் என்பதைக் கதையில் காட்ட முனைகிறார்.
'இது தானா அழகிய தாழை மலர்? அதன் மென்மை யான சுகந்தம் எல்லாம் இதுதானா? மனிதர்களின் அசுர மூச்சினால் அழகிய மலரும் வாடி அதன் இனிய வாசனையும் தீர்ந்துபோய் விட்டதா என்ன?" என்று முடிக்கும் பொழுது கதை எழுப்பும் சோகப்பண் திடுமென முறிந்து அபசுர மாகியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
மரியா மதலேனா
“படுகுழியில் வசந்தம் காந்தச் சூழல், வாழ்க்கை ரசத்தின் மண்டி, சுத்தப் பிரமுகர்கள், நன்னடத்தையின் சித்திரங்கள், வாழ்க்கைக் கிண்ணத்தில் சுவை மிகுந்த மதுரசம், நாலு திசைகளில் இருந்தும் வாழ்வின் சண்ட மாருதங்கள், வைகறையின் ஒளியின் முன் கலையும் இருள்

ceg 1%/7z/ffases274.5 7962-19779 73
போல, முடியிழந்த கோபுரம் போல, தாயின் குரல் கேட்ட புள்ளினம் போல, அந்தராத்மாவின் இன்பப்புனல்" என்பன போன்ற உவமேயங்கள் கொண்ட விவிலிய சார்புடைய இந்தக்கதை சுமாரானது. இதன் சிறுகதை வடிவம் சிறப்பாக அமையவில்லை என்றே கூற வேண்டும்.
சக்கரவாகம்
"காதல் என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது. விவாகரத்து, கற்பத்தடை முதலியவற்றைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், வாழ்க்கை, கொடிய வறுமையிலும் செம்மையாய், பிணக்குகள் தடியடிச் சண்டைகளுக்கிடையிலும் ஆழ்ந்த அனுதாபமும் அன்புங் கொண்டதாய் பூவுலக மோட்சமாய் பரிமளித்தது. நாற்பது வருஷம் நாற்பது நாள்” இந்தக் கதை தாம்பத்திய உறவைச் சித்திரிக்கிறது.
வெள்ளிப்பாதசரம் கதைத் தொகுதிக்கு மதிப்புரை எழுதிய கி.வா.ஜெகந்நாதன், "கணவன் மனைவி உறவு ஓர் அற்புதமான, தெய்வீக உறவு. ஆரவாரமற்ற ஆழ்கடலின் அமைதியுடன் விளங்கும் உறவு. இதனை நன்குணர்ந்து ஆசிரியர் ஒரு தம்பதியின் உறவைப் பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார்" எனக் கூறியிருக்கிறார்.
அநாதை
இக்கதையில் வரும் நகைச்சுவை அம்சம்; “என்
ஊற்றுப்பேனாவை (அது உண்மையில் மை ஊற்றுகிற

Page 14
7t ஈழத்துச் சிறு சதைசளுரம் பேனா தான்) மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். உடனே என் நாற்காலியின் சாய்வுப் பகுதியில் பிரம்புப் பின்னலில் தொளைகளில் பூச்சிகளுக்கு என் வீரத்தமிழ் இரத்தம் மணந்து விட்டது. இன்னுமொரு பத்து நிமிஷங்களுக்காவது அவைகளுக்கு நல்ல வேட்டை கண்ணிர் பட்ட இடங்களில் அவள் முகத்தில் பூசியிருந்த வாசனை மா அழிந்திருந்தது. நீலிக்கண்ணிர் என்று முதலில் நினைத்தநான் பவுடர் அணியும் பெண்களுக்கும் உணர்ச்சி உண்டு என்று அறிந்ததும் அதனால் உண்டான என் ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டேன். என்னுடைய உத்தி யோக பரம்பரை என்னுடைய வெளிப்படைச் சிரிப்பைக் கொன்று விட்டது. எனக்குச் சிரிக்கத் தைரியமில்லை. ஏன் சிரிப்பதற்கு ஆண்மையில்லை என்று கூட சொல்லி விடலாம்."
வளர்த்த தாயின் உண்மையான பாசத்தை எடுத்துக் காட்ட ஆசிரியர் முனைந்தாலும் ஆழமான முறையில் அந்த அனுபவத்தைப் பரிவர்த்தனை செய்யும் விதமாக கதை அமையவில்லை. இது, ஒரு சாதாரணக் கதை. ஆசிரியரின் உத்தியோக அந்தஸ்து தான் கதையில் மேலெழுந்து நிற்கிறது. சாதி உணர்வும் தென்படுகிறது.
அனுலா
இது ஒரு வரலாற்றுக் கற்பனை, இதில் வரும் வருணனை ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. உதாரணமாக "தங்கத் தகட்டில் ரசம் பாய்ந்தது போல் சந்திரனை

75 محی ترقی بحر سے ۶4ی محمد قz ہونے تحZZZتر%مجھے تھے
மறைத்துப் புகார் படர்ந்திருந்தது. தொலைவில் நகர் எல்லையில் இருந்துவரும் இணைக்குகைகளின் உறுமல் நிசப்தமான இரவைக் காலத்துண்டுகளாக வெட்டி வெட்டி வைத்தது. அனுலா சர்வாலங்காரபூஜிதையாய், சுகந்தம் கமழ கை வளை ஏங்க, அரச பரம்பரையில் தோன்றாத அனுலா என்பவள் தன் காமக்கூத்தாட்டம் மூலம் எவ்வாறு ஈழத்தின் முதல் அரசி ஆனாள்" என்பதை விவரிக்கிறது இந்தக் கதை, கதை சொல்பவரே கூறுவது போல சுவாரஸ்யமாகவே கதை
கூறப்படுகிறது.
வெள்ளிப்பாதசரம்
கற்பனாலய போக்குடைய (ரொமான்டிஸிஸம்) சிருங்கார (ரொமான்டிக்) கதை இது. வல்லிபுரக்கோவில் கடைசித் திருவிழாக் காட்சியை கவின் பெற விபரிக்க முற்படும் ஆசிரியர் யாழ்ப்பாணக் கமக்காரரின் நாளாந்த கஷ்டமான சீவியத்தையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். தம்பதிகளுக்கிடையில் ஏற்படும் ஊடலும் கூடலும் நயமாகச் சித்திரிக்கப்படுகிறது என்பதைத் தவிர கதையின் உள்ளடக்கம் பற்றி விசேஷமாக ஒன்றையும் கூற முடியாதிருக்கிறது.
வழக்கம் போல ஆசிரியரின் உவமைகளும் வருணனைகளும் குறிப்பிடத்தக்கன. சில உதாரணங்கள்: அஸ்தமிக்கவும் சூரியனைக் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக் கொண்டிருந்தன. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தன் வாழ்க்கைத்

Page 15
76 ஈழத்துச் சிறு சதைசகும்
துணைவியைத் தேடிக் கொண்டான். அவனுடைய கலகலத்த வாயும் விடையில்லாத ஒரு கேள்வியைப் கேட்பது போல அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவளுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்கமாட்டாதது போல ஒசியும் நூலிடையும் நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருந்தும் வந்த மனிதர்கள் நிரம்பியிருந்தனர். சின்ன மனிதர் களைப் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்த வெளிப்பிரதேசத்தில்தான் மனிதனின் ஜீவநாடி நாகரிக முறைகளால் மலிந்துபடாமல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது." மனிதக் குரங்கு
முக்கிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகையில்
சிறு சிறு வசனங்களில் வர்ணிப்பதைக் காணலாம். உதாரணம் (உதடுகளை மூடிக்கொள்ள முடியாதபடி முன்னோக்கிய மேற்பல்வரிசை; சிறிது பரிதாபகரமான
கண்கள்; புருவங்கள் இல்லை என்று சொல்லிவிடலாம். குரு தலையலங்காரம், இலங்கைக்கு வருமுன்னரேயே பொருளாதார நோக்கம் கருதி கால் அங்குலத்திற்கு மேல் நீளாது வெட்டி விடப்பட்ட தலைமயிர். சிறிய காதுகள்,
வறுமையினால் இளமையிலேயே நரையும் திரையும் தேங்கிவிட்ட கன்னங்கள்)

77 محی ترقی محمد سمیٹے ۶6ی محمد قZ ترقی کے تح%7ZZZمجھیے تھے
நகைச்சுவை கலந்த ஆசிரியரின் கூற்று (ஏன் இப்படி? அசிங்கமான வருணனை செய்வதைவிட அது ஒரு குரங்கு என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்)
அதே வேளையில் பாத்திரம் தொடர்பாக ஆசிரியர் மனிதாபிமான நோக்கத்தையும் காண முடிகிறது. (அது ஒரு குரங்கு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால், அப்ப்டிச் சொல்வதற்கில்லை. அது ஒரு மனிதன். அவனை வெகு நாட்களாகவே அறிந்திருக்கும் பாக்கியத்தைப் பெற்று இருந்தேன். ஆமாம் பாக்கியம்தான். பூர்வ புண்ணியத்தின் பயன் என்று கூடக் கூறுகிறோம்.)
மனிதப் பண்பு மிகுந்த குரங்கு முகத்துடையவனுக்கு விசுவாசமற்ற ஒருத்தி மனைவியாய் வாய்த்தாள் என்று கூறாமல் கூறும் ஆசிரியர் அவளை வர்ணிக்கும் தோரணை :
"அவள் பெயர் காமசெளந்தரி, சிவகாம செளந்தாரி என்பதன் திரிபு, காலப் போக்கில் சிவம் உதிர்ந்தது. காமமே செளந்தர்யமாய், செளந்தர்யமே காமமாய், காதலாய், கணம் யுகமாய், யுகம் கணமாய் அவையெல்லாம் பிந்தி நடந்தவை. மூன்று நாள் வயது சென்ற கொழுக்கடைபோல செந்நிறம் பாய்ந்து வீங்கிய கன்னம்" (மூன்று நாள் வயது சென்ற என்ற) தொடர் புதுப் பிரயோகம் என்பதை அவதானிக்க) ஆசிரியரின் வேறு சில அங்கதச் சுவை பொருந்திய தொடர்கள் :
"கறுத்தக் கோட் அணியும் இளம் பட்டினிப்
oy ff
பட்டாளம்." "மண மாசிலான், மனத்தின் பொதில”

Page 16
፲፰ ஈழத்துச் சிறுகதைகளுரம்
இப்பொழுது ஈழத்து எழுத்தாளர்கள் அரிதாகவே
பயன்படுத்தும் காலாவதியான சொற்கள் வக்கீல், குமாஸ்தா, காரியாலயம்.
இத்தனை உருவ, அழகியல் சிறப்புகள் இருந்தாலும் இக்கதை நிறைவு பெற்றதாக அமையவில்லை. "அவளுடைய செவ்வரி படர்ந்த கண்களின் பார்வை வெட்டும், புன்னகையும் பேச்சும் என் மனத்தில் கேள்விக் குறிகளாய் நிலைத்து நின்றன" என்ற கூற்றுடன் சிவகாம செளந்தரியை விசுவாசமற்றவள் என்று காட்ட முனையும் ஆசிரியர், அவள் மணமாகி ஏழு மாதங்களுக்குள் ஒரு ஆண்மகவைப் பெற்றமை, அவளுடைய நடத்தையைக் காட்டுவதாகவும் கதாநாயகனான கொரில்லா, வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவன் என்றும் கூறாமல் கூறுகிறார். கதையில் அழுத்தம் அல்லது நம்பும் தன்மை மிகக் குறைவாக இருப்பதாலும், எடுத்துக் கொண்ட தொனிப் பொருளைக் கட்டுக்கோப்பாக நெறிப்படுத்த முடியாததனாலும் இக்கதை உரிய நிறைவைத் தரவில்லை என்றே கூற வேண்டும்.
நாடோடி
ஆசிரியரின் இலக்கியக் கோட்பாட்டை அறிய இக்கதை உதவுகிறது.
“ரொமாண்டிக்' அல்லது கற்பனாலய அல்லது
மனோரதியப் போக்குடைய கவிதையைத் தாமும் ரசிக்கிறார் என்பதை உணர்த்துவிக்கும் ஆசிரியர், நவீனத்துவ

ஆசிZசஞரzச் 1982-1979 79
இலக்கிய நோக்கும் கொண்டவர் என்பதைக் காட்டுவதாக
அமைவது.
"அவனுடைய கவிதை யாப்பிலக்கணத்தின் வரம்பு களையும் தகர்த்து எறிந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் புரண்டு சென்றது. வாயில் இருந்து வெளிவரும் வார்த்தைகளுக்கு இலக்கண வரம்பு செய்யலாம். இருதயத் தின் ஆழத்தில் இருந்து உற்பத்தியாகும் உணர்ச்சிக்கு இலக்கணம் செய்ய முடியுமா?” என்ற பகுதி கதாநாயகன் ஒரு மனோரதிய வாதியாயினும், அவன் சமூகப் பிரக்ஞை கொண்டவன் என்பதைப் பாத்திர வாயிலாகவே ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
"உலகத்திலே நடக்கும் ஆபாசங்களையும் துரோகங் களையும் மனிதர்களைப் பீடித்திருக்கும் அர்த்தமற்ற நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் காணும் பொழுது என் உள்ளம் குமுறுகிறது. அதனால் பாடுகிறேன். பாட்டு எனக்குச் சாந்தியளிக்கிறது."
ஆசிரியர் தமது சமூகச் சூழலின் பின்னணியில் முரண் நகைத் திறனாக (Satre) எழுதும் தோரணை பூரண முதலியார் ஒரு குணக்குன்று. அவருடைய உள்ளம் குழந்தையினது போல கள்ளங் கபடமற்றிருந்தது. மிக விசாலமான பரந்த மனப்பான்மை உடையவர்” ஒரு யாழ்ப்பாணத்தமிழரைப் பற்றி அவ்வளவு சொல்வது பெரிய காரியமல்லவா?
விமர்சனத்தில் அழுத்தம் எதற்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்கும் முறை:

Page 17
20 ஈழத்துச் சிறுகதைகளுசம் "இலகுவான, இயற்கையான தமிழ் நடையைத்தான்
யாரும் விரும்புவார்கள். யாவருக்கும் புரியும்படி எழுதுவது ஒரு தனிக்கலை. யாப்பிலக்கண விதிகள் எல்லாம் பா இயற்றுவதற்கு முயலும் குழந்தைப் புலவனுக்கு ஒரு வழி காட்டியாக அமைந்தனவே அன்றி கை தேர்ந்த புலவனின் சொற்பெருக்கையும் கற்பனா வேகத்தையும் தடை செய்யும் முட்டுக்கட்டைகள் அல்ல. அத்தோடு விஷயத்தின் உயர்வுக்கும், அதை வரிசைப்படுத்திக் கூறும் நயத்திற்குமே முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும்."
அரச கேசரியில் இரகுவம்ச மொழிபெயர்ப்புப் பற்றிக் குறிப்பிடுகையில், "நைந்த உயிரற்ற வெறும் பொற்குவியல்” என்றும்.
"பழமை பழமை என்று பிதற்றிக் கண்களை மூடிக் கொண்டு தம் அற்ப திறமையில் இறுமாந்து உட்கார்ந்து இருக்கும் இவர்களுக்குப் புதுமையும் முற்போக்கும் எங்கே பிடிக்கப் போகிறது?" என்றும் பாத்திரவாயிலாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
"திருக்கோவையாரைப் படித்துவிட்டு அதில் வெட்ட வெளிச்சமாக இருக்கும் அழகையும் ஜீவனையும், ஒசையையும், தேனையும், அமுதத்தினையும் சுவைத்து உணர அறியாது அதற்குள் வேறு ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்துகிடக்கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப் புலிகள்" என்பது ஆசிரியரின் கருத்தாகக் கொள்ளக் கூடியது. கதை நிகழும் கால கட்டம் 16 ஆம்

27 ”ی ترتی ھے - یے یحیی کے قZ ترجم%7zzzمجھے تھے
நூற்றாண்டாயினும், இலங்கையர்கோன் இன்றைய இலக்கிய உலகிலும் பின்தங்கிய மனப்போக்கு இருந்து வருவதை இக்கதையில் உணர்த்தி நிற்கிறார்.
5uU
இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட கதையை ஒரு கவிஞனின் கருணைப் பார்வையில் ஆசிரியர் விபரிக்கிறார்.
மச்சாள்
இலங்கையர் கோன் கடைசியாக எழுதிய கதைகளில் இதுவும் ஒன்று. ஓர் எட்டு வயதுச் சிறுவன் தனது மச்சாள் (தமையன் அவளைக் கல்யாணம் கட்டுவான் என்று நம்பி யிருந்தான் அப்பையன்) பற்றிய மனப் பதிவுகளை வெளிப்படுத்துவதாக இந்தக் கதை அமைந்துள்ளது. நயமான கற்பனையும் கவிதை சார்ந்த நடையும் கொண்ட இக்கதையில் உரையாடல்களைப் பேச்சு வழக்கில் அமைத்து உள்ளார். "தாழை நிழலிலே’ அரசிகள் அழுவதில்லை என்று ஆசிரியர் உணர்த்துவிக்கும் அக்கதையில் வரும் அமினா அரசியாக ஈற்றில் வீற்றிருக்க முடியவில்லை என்றார். இக்கதையில் வரும் மச்சாள் எதற்கும் மனங் கலங்காத வெகுளிப் பெண்ணாக வந்தாலும் அவளுடைய ஆளுமை அரசிகளுக்குரியதொன்றெனக்காட்ட முனையும் ஆசிரியர் கதையின் இறுதியில் "அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்துவிட்ட மரகதங்கள் போல

Page 18
22 ஈழத்துச் சிறுகதைகளுரம்
மின்னின. கண்ணிர்? ஆனால் அரசிகள் அழுவதில்லையே!” என்று கூறி முடிக்கிறார். துறவியின் துறவு
சிங்கள இளைஞன் ஒருவன் பெளத்த குருப் பட்டத்தைத் துறக்கும் நிகழ்ச்சி விபரிக்கப்படுகின்றது. பெளத்த மத நம்பிக்கையின் பின்னணியில் இக்கதை எழும்பும் சலனம் உணர்ந்து ஆராயத்தக்கதே. முதற் சம்பவம்
பதினொரு வயதுடைய மற்றொரு சிறுவனைப் பற்றியது. யாழ்ப்பாணக் கிராமியச் சூழலில் இதில் விபரிக்கப்படும் சம்பவம் அதற்குரிய முக்கியத்துவத்தின் தாற்பரியத்தைக் காட்டி நிற்கிறது. • யாழ்ப்பாடி
மணற்றிடல் என்ற தீவை வலகம்ப்ாகு என்ற சிங்கள மன்னன் யாழ்வாணன் ஒருவனின் இசைத்திறன் அறிந்து பரிசிலாக வழங்கினான் என்றும், அதுவே இப்பொழுது யாழ்ப்பாணம் என்று வழங்கப்படுகிறது எனவும், கற்பனை சார்ந்த வரலாற்றுக் கதை ஒன்றை ஆசிரியர் விபரிக்கிறார்.
édflu
சீகிரிய என்ற கதையும் இலங்கைத் சரித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சம்பவத்தின் கதை வடிவ மாகும்.

23 محی سمتری محمد حملے صحیرہ قب4روعeے تحZZZZZمجھے لیے
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை அடைந்துள்ள வளர்ச்சியைக் கவனிக்கவும் மதிப்பிடவும் இலங்கையர் கோனின் சிறு கதைகள் உதவினாலும், அதாவது மிக நீண்ட வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட ஈழத்துச் சிறுகதையின் போக்கையும் தரத்தையும் இக்காலக் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவினாலும், வெள்ளிப் பாதசரம் என்ற இந்தத் தொகுப்புநிறைவுதருவதாக இல்லை. எனினும், இலங்கையர் கோன் திறன் படைத்த கவியுள்ளம் கொண்ட ஓர் எழுத்தாளன் என்பதை மறுக்க முடியாது.
(இலங்கை வானொலி மஞ்சரி செப். ஒக் 1979)

Page 19
24
செ.கணேசலிங்கனின்
நிதர்சனக் கதைகள்
영 ரே இனம்', 'நல்லவன்', சங்கமம்'ஆகிய சிறுகதைத் தொகுதிகள் செ.கணேசலிங்கனின் ஆரம்ப
காலத்தவை.
1960-61 காலப்பகுதியில் இவர் எழுதிய 18 கதைகள் சங்கமம் தொகுப் பில் அடங்கியிருக்கின்றன. வல்லிக் கண்ணன் இதற்கு ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். இனி கதைகளைப்
பார்ப்போம்.
சங்கமம்
சிறுகதைக்குரிய கதைப் பொருளும், உணர்ச்சிமயப்படுத்தி வாசகனை வாசிக்கச் செய்யத் தூண்டும் நாடக உணர்வும் இக்கதை யில் இருக்கின்றன. ஆனால், இவற்றை வாசகனின் மனதில் உணர்வுடன்
தொற்றவைப்பதில் ஆசிரியர்

25 ”ی ترقی ھے -جیے حتی محمد قZ ترین تح%7zzzمجھے gے
வெற்றியடையவில்லை. அதற்குக் காரணம் இக்கதையில் உள்ள வலுவற்ற கதைக்கருப் பொருள்களாகும். அத்துடன், ஆசிரியர் கையாண்ட ஒருமைப்பாடற்ற உருவ அமைப்பும் உதவி செய்வதாயில்லை. பொதுவாக இவர் கையாண்ட எழுத்து நடை, அதாவது சிறிய, சிறிய வாக்கியங்களில் செயல்களை எடுத்துரைப்பது சிறப்புடையது. ஆனால், அந்நடை இத்தகைய கதைகளை எழுதும் பொழுது உதவியளிக்கத் தவறிவிடுகிறது. கதைகளுக்கேற்றவாறு, அவற்றின் உருவ அமைப்பையும், வேறுபடுத்தி ஆசிரியர் அமைத்திருக்கலாம்.
கவலை இல்லாதவன்
சிறுகதையாக அமைய வேண்டிய இக்கதை, பத்திரிகைச் செய்திச்சுருள் (Newsree) போலாகிவிட்டது. ஏழைகளின் துன்பம் அனைத்திற்கும் காரணம் அறியாமை தான் என்ற கருத்தைச் சித்திரிக்க முயன்ற ஆசிரியர், இரு சம்பவங்ளைப் பிரதானப்படுத்தி எழுதுகின்றார். பின், கதை மையத்திலிருந்து, சமூக நிலை பற்றிய வியாக்கியானத்திற்கும் பாய்ந்து விடுகிறார். இடையில் கதை சொல்பவர், கதை சொல்லும் நேரத்தில் பின்னணியில் நடக்கும் சம்பவங் களையும் எடுத்துரைக்கிறார். இது என்னவோ, பிரக்ஞை ஒட்ட உத்தி என்று மாத்திரம் மருளத் தேவையில்லை. இத்தகைய முறையினால், கதை, சிறுகதை என்ற வகையின் உறுதிப் பொருளம்சத்தில் நின்று விலகிவிடுகிறது. இருந்தாலும், "தனி மனிதர் மேல் பழிபோடும் காலம் மலையேறிவிட்டது. எவ்வளவு அறிவை வளர்த்து மனதை

Page 20
Ad
26 ஈழத்துச் சிறுகதைசளுரம்
விரித்தாலும், அது சில வேளைகளில் குறுகிய வேலியுள்
என்பன போன்ற நறுக்குத்தறித்த வசனங்கள் பொருத்தமாய் உள்ளன.
↑ Ꮺ
அடங்கப்பார்க்கிறது.
GU6ör
இது ஓர் ஈழத்துச் சிறுகதை என்ற முத்திரையுடன் உண்மையிலேயே மண்வாசனையை இக்கதையில் நுகர முடிகின்றது. இது ஒர் அருமையான கதை. கலை நுட்பமாகக் கதையை முடித்திருப்பது பாராட்டத்தக்கது. "அவன் இதயம் அதிர்ந்து கண்கள் துளிர்த்தன” என்ற வாக்கியம் வெகு அழகாக சின்னத்தம்பியின் மன நிலையைப் படம் பிடிப்பதுடன், வாசகர் உணர்வையும் உலுக்குகின்றது. வெறித்த பார்வை
இக்கதையில் வரும் சுந்தரம் என்ற பாத்திர வருணனையும், பாத்திரச் சிருஷ்டியும் வெகு தத்ரூபமாக அமைந்துள்ளன. கதையின் உச்சக் கட்டத்திற்கு விறு விறுப்புடன், வாசகர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் பட்டென்று பத்திரிகை ரகக் கதை போல, கதையை முடித்திருப்பது செயற்கைத் தன்மையாயுள்ளது. கதை யளவில் ஒரளவுக்கு வெற்றிதான் என்றாலும், செயற்கை யான முடிவு உள்ளத்தைத் தொடவில்லை.
புயல்
இது ஒரு சுமாரான கதை தான் என்றாலும் ஓரளவுக்குத் தமிழ் வாசகர்களுக்குப் பிரச்சினை அம்சத்தை

27 محى محترتی ھے لیے ۶6یZz Z ترقی کے تح%7ZZZمجھے یgے
உள்ளடக்கியது. காதலரிருவர் ஒன்று சேர முடியவில்லை. காதலி வேறு ஒருவனை மணம் முடித்து போலி வாழ்க்கத் நடத்துகிறாள். காதலன், தன்னைப் புதிதாகக் காதலிக்கத் தொடங்கிய ஒரு சிங்களப் பெண்ணை மனமிரங்கி மணம் முடிக்கிறான். ஆனால், அவளோ இனக் கலவரத்தில் இறக்கிறாள். அவன், தனது பழைய காதலியையும், கணவனையும் யதேச்சையாக ஒரு நாள் காண நேர்ந்தது. புயல் கிளம்பியது. காதலி கணவனைத் துறந்து, காதலனைத் தஞ்சமடைகிறாள். தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரிய பின், தன் காதலனிடம் அவள் சென்றிருப்பின், அது தமிழ்ப் பெண்ணுக்கு இழுக்கு என்று சொல்ல முடியாது. ஆசிரியர் மறைமுகமாக இதனை உணர்த்துகிறார். "அவன் கண்களில் கண்ணிர்த்துளிகள் அரும்பு முன்னரே, அவற்றை வெந்த உள்ளம் ஆவியாக்கி விட்டது" ஒரு நல்ல வசனம். போராட்டம்
மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட யதார்த்த பூர்வமான கதையிது. நல்ல வேளையாகச் சிறுகதை போல அமைந்து விட்டது. வரலாற்றில் இடம் பெறத்தக்க ஒரு பழைய நிகழ்ச்சியைக் கதையில் வெற்றிகரமாகப் புகுத்தியிருக்கிறார்.
மேற்கு வேலி
சுவையான ஒரு கதையிது. நகைச்சுவை இழையோட தத்ரூபமாக ஆசிரியர் வருணித்துச் செல்வது இரசிக்கத் தக்கது.

Page 21
28 Aழத்துச் சிறுகதைகளுரம்
வியாபாரம்
கிழக்கு மாகாணச் சூழ்நிலையில் முக்குவச் சட்டம் சம்பந்தமாக எழுதப்பட்டது. இச்சட்டம் பற்றிய அறிவு எனக்கில்லாததால், மொத்தமாக ஒன்றும் கூற முடியாது இருக்கின்றது. கதை சுவையாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், சம்பாஷணைகள் இயற்கையாயில்லை.
உயிர்
பள்ளிக்கூடங்களை அரசாங்கம் எடுத்தபொழுது காட்டப்பட்ட எதிர்ப்புக்களில் ஒன்றைப் பற்றிக் கூறுகிறது கதை, கதை முடிவில் ஓர் இயற்கைத் தன்மையிருக்கிறது. போலீஸ்காரன் ஒருவனைச் சுட்டுவிட்டு ஒடும் ஒரு விசுவாசமுள்ள மாணவன், தற்கொலை செய்து கொள்ளவே முயல்கிறான். ஆனால், கடைசி நேரத்தில், அவ்விதம் செய்யாமல் சரணாகதியடைகிறான். அவனது இந்த நிலை தான், கதைக்குப் பலத்தைக் கொடுக்கின்றது. பொதுநலத்தில் சுய நலமும் கலந்திருக்கிறது என்பதைத் தான் இக்கதை சொல்லாமற் சொல்கின்றது.
பொழுதுபோக்கு
மேல்தளத்திலுள்ளோரை (தாம் சார்ந்த கொள்கை நெறி காரணமாக)ச் சித்திரிக்கும் பொழுதெல்லாம், அவர்கள் குறைபாடுகளை மிகைப்படுத்தி எழுதுவது சோஷலிஸ் யதார்த்தவாதிகளின் வழமை. எனவே, இக்கதையில், வெளிப்படையாகவே தனது முற்போக்குத் தன்மையை

seg 4%zźzZzaseøazó YS762-1979 29
ஆசிரியர் காட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற் கில்லை. ஆனால் அவர் கதையைக் கூறியிருக்கும் முறை செயற்கையாயிருப்பதால், இந்த பூஷ்வா கதையை "பூ இவ்வளவுதானா?” என்று கூற வைக்கிறது.
மரணத்தின் அணைப்பில்
இம்மாதிரியான முற்போக்குக் கதைகளே 2( 60%T60)Lמ யில் வரவேற்கத்தக்கவை. இதில் சித்திரிக்கப்படும் சம்பவம் நடக்கவும் கூடியது; நடக்கக் கூடுவது சந்தேகத்திற்குமுரியது. இக்கதையில் உருவ அமைப்பு செவ்வனே அமையா விட்டாலும், உள்ளடக்கம் போற்றத்தக்கது. கற்பு எங்கே?
மு.வரதராசனாரின் பாணியில் எழுதப்பட்ட கதை போன்ற இந்த சுவாரஸ்ய விசாரத்தில் ஆசிரியர் தனது மனதிலுள்ளவற்றை எழுத்தில் வடித்த திருப்தி பெற்றிருப்பார். எமக்கும் அவர் திருப்தி மகிழ்ச்சிதருகின்றது.
காணிக்கை
ஒரு பாத்திரம் தனது தாயின் ஞாபகார்த்தமாகச் செலுத்தும் உரைநடைக் காணிக்கை.
மொத்தத்தில் செ.கணேசலிங்கனின் இத்தொகுப்பில் முன்னைய தொகுப்புகளை விடச் சிறந்த சிறுகதைகள்
இருக்கின்றன. அவரிடத்தில் ஆர்வம் இருக்கிறது. அறிவு இருக்கிறது. புகைப்படக் கருவிக் கண்கள் இருக்கின்றன.

Page 22
30 ஈழத்துச் சிறுகதைகளுர4
அதே நேரத்தில், காதல் என்ற பொருள் பற்றிய ஒரு சோர்வு மனப்பான்மையும் (MelanchoicView), தான் முற்போக்கு என்று கருதும் கருத்துக்களைத் திணித்து கட்டம் கட்டுவதுடன் நின்று விடும் சுயதிருப்தியும் காணப்படுகின்றன. அது மட்டும் போதாது ஒரு எழுத்தாளன் இலக்கியக் கலைஞனாக மாறுவதற்கு என்பதை அவர் உணர்ந்து கொஞ்சம், லாவகமாக எழுதுவாராயின் நிச்சயமாக அவர் பெருமைக்குரியவராவார்.
(விவேகி : ஒகஸ்ட் 1962)

37
வ.அ.இராசரத்தினத்தின் கட்டமைப்புத்திறன்
6) O. இராசரத்தினம் எழுதிய கதைகளின் தொகுப்பான “தோணி"யிலிருந்து "தோணி" என்ற கதையை எடுத்து இங்கு பரிசீலிப் போம். இக்கதை நன்றாக எழுதப் பட்டது மாத்திரமல்லாமல், 1954 இல் எழுதத் தொடங்கியவர்களின் கதை களுடன் ஒப்பிடும் பொழுது மிக மிக வெற்றிகரமாக அமைந்தும் இருந்தது.
மிக அழகிய வருணைனையுடன் கதையை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். ஆனால் ஒரு சொல்லாகுதல் அனாவசி யமானது என்று ஒதுக்கித்தள்ள முடியாது. முதலாவது பந்தியிலே வாசகர்களுக்கும் ஆசிரியருக்கு மிடையே ஒரு தொடர்பு உண்டாகி விடுகின்றது. -

Page 23
32 ዳማፈeméሃሪ” சிறுகதைகளுரம்
"கிராமம் என்றா சொன்னேன்? பூமிசாத்திர சமூக, சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது" என்று எழுதும் பொழுது கதாபாத்திரத்தின் குணாதிசயங்களுள் ஒன்றைக் கோடி காட்டி விடுகிறார் ஆசிரியர்.
தன்மை, ஒருமையில் கதையைப் புனையும் ஆசிரியர், கதாபாத்திரம் எழுத்தறிவித்தகனல்ல என்பதை உணர்த்து விக்கிறார். அடுத்த வசனத்தில், கதாபாத்திரம் ஒலைக்குடிசை களுக்கிடையே வாழ்பவன்,' என்பதை வெகுநயமாகக் கூறுகிறார். கேள்விகளைக் கேட்டு ஒரு ஏளனச் சவாலுடன் எழுதுவது ரஸ்மாயுள்ளது.
"ஒரு குடிசையிலிருந்து மற்ற குடிசைகளுக்குப் போகப் பெண்களின் தலை வகிடு போல ஒற்றையடிப்
jp
பாதைகள் செல்கின்றன." என்ற உவமை நயமானது, புதுமையானது என்றுங் கூறலாம். வாசகர் மனதில் பதியுமாறு சுற்றுப் பிரகாரத்தைச் சுருங்கச் சொல்லியும் விளங்க வைத்து விடுகிறது. கதாபாத்திரத்தினை உயிருள்ளதாகப் படைக்க முனைகையில் ஆசிரியர் பாத்திரத்தின் இயல்புக்கும், சுற்றாடல்களுக்கும் ஏற்பவே அதனைச் சித்திரிக்கிறார். வேறு சில ஆசிரியர்கள் போன்று, குடியானவன் அரசியல், வகுப்பு அந்தஸ்து (Class - Status) சித்தாந்தங்கள் பேச வைப்பதாகவோ தாழ்த்தப்பட்டவன் கறுவாக்காட்டு (கொழும்பில் செல்வந்தர் வாழும் பகுதி) மனிதரின் வாழ்க்கை முறையைக் கண்டனம் செய்வதற்காகவோ, இந்த ஆசிரியர் சமூக அரசியல் பிரச்சனைகளைக் கொண்டு குட்டை குழப்ப

33 محی سمتری ہے۔ جمے ۶45ی محمد ق7/7zzzzzzz مجھے بھی
வில்லை. கதையோடு சம்பந்தமான சமுதாய நிலையையே படம் பிடிக்கிறார். அதுவும் நிழற்பட யதார்த்தமாகவல்ல, கலை நயம் கொண்ட யதார்த்தமாக!
அடுத்த மூன்று பந்திகளிலும் கதாபாத்திரத்தின் சூழலையும் குடும்பத் தொழிலையும் வயதுப் பருவத்தையும் சொல்லாமற் சொல்லி விடுகின்றார்.
கதாபாத்திரம் சிறுவன் என்பது. "ஏறு வெயிலில் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைக்கட்டுக் கூடிாகவும் முகடு பிய்ந்து கிடக்கும் எங்கள் வீட்டுக் கூரைக் கூடாகவும் துள்ளிப் பாய்ந்து நிலத்தில் வெள்ளித் துண்டு களைப் போல வட்ட ஒளியைச் சிந்தும். அந்த ஒளி என் புறங்கையில் விழ, அடுத்த கையால் அதை நான் மறைக்க அவ்வொளி அடுத்த கையிலும் விழ, நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக் கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டா இருக்கும்." என்ற வரிகளால் புலப்படுத்துகின்றார். இந்த வரிகளில் உள்ள கவிதைப் பூச்சு ஒலி நயம் மிக்கதாயும், கற்பனை வளமுடையதாயும் இருக்கிறது. அத்துடன் படிப்பவர் உள்ளத்தில் கதையுடன் நெருங்கிய தொடர்பு வைக்கும் ஆவலையும் கிளப்பி விடுகின்றது. பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவுகளே என் ஞாபகத்திற்கு வருகின்றன.
செல்லனை அறிமுகப்படுத்தும் விதமே அலாதி! கதையுடனும் கதாபாத்திரத்திடனும் தொடர்புடையதாகப் பொருத்தமான உவமையுடன் அவனை அறிமுகப்படுத்து

Page 24
34 ஈழத்துச் சிறுகதைசசூசம்
கின்றார். 'பாய்மரக் கம்பு போல' என்ற அவரது உவமை, கதாபாத்திரத்தின் உலக அனுபவம் குறைந்தது என்பதையும் அவன் உலகம் கிராமம் மாத்திரம் தான் என்பதையும் புலப்படுத்துகின்றது.
சிறுவர் "இருவரினது விளையாட்டுக்களை" வருணிக்கையில் கூட ஆசிரியர் கையாண்ட சொற்சிக்கனம் "வழவழா", "கொழகொழா" எழுத்தாளர்களைச் சிந்திக்கச் செய்யும் என்று நம்புகின்றேன். மேலும், அவற்றை விபரிக்கும் பொழுது வெறும் வருணனைகளாயில்லாமல் கூடியவரை செயல்களுடனும் நெருங்கிப் பிணைத்துப் புனைந்திருப்பது ஆசிரியருக்கு உருவமும் கைவந்ததற்கு ஒரு உதாரணம்.
'....... அந்த நம்பிக்கையில் முகத்தில் சுள்ளென்று அடிக்கும் சூரிய கிரணங்களை நெற்றிப் பொட்டில் கைகளை விரித்து மறைத்துக் கொண்டு அந்தத் தோணியைப் பார்த்துக் கொண்டிருப்பேன்."
இவ்வசனத்தைத் தொடர்ந்து சிறுவனின் அபிலாஷை களை மிகவும் குழந்தைத்தனமாகச் சித்திரிக்கும் பொழுது பாத்திரப்படைப்பே வெற்றி பெறுகின்றது. நாமும் பாத்திரத்துடன் ஒன்றிக் கலந்து விடுகிறோம்.
தொடர்ந்தும் வருணிப்பு. வாசகர்களுக்கும் விறு விறுப்பு ஏற்பட்டு விடுகிறது. இடையில் பாத்திரத்தின் கனவுக் காட்சி வருகின்றது. அதிற்கூட ஆசிரியரின் சொற்செட்டே மனதைக் கவருகின்றது. சுருங்கிய சொற்களால் விளங்க வைத்து விடுகிறார்.

eg 4ízrsessző 1962-1979 35
சிறுவன் தனது கனவை நனவாக்க முயல்கிறான். ஆனால், அவன் வயதில் சிறியவனாகையால் அதில் தவறி விடுகிறான். ஆயினும் "தம்பியும் தன் தொழில் பழகுவது போல" அவன் ஒரு முருக்க மரத்துண்டைக்குடைந்து ஒரு பொம்மைத் தோணியையே செய்து விடுகிறான்.இங்கு தான் கதையின் ஆரோகணத்தின் (Climax) முதற் படியைக் கோடி காட்டுகிறார் ஆசிரியர். சிறுவனின் இந்தச் செயல் தந்தையைப் பிரமிக்கச் செய்கின்றது. மைந்தனின் ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யவும் உதவுகின்றது.
"கடைசியர்ய் எங்கோ ஒரு சேவல் கூவிற்று. அதைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் சேவல்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு கூவின' என்று ஆசிரியர் கூறும் பொழுது படிப்போர் இதழ்களில் குறுநகை தவழ்ந் தோடாமற் போகாது.
ஆசிரியரின் நீரோட்டமான, மனதிற் பதிய வைக்கும் உவமான உவமேயங் கொண்ட கவிதைப்பூச்சு நட்ையின் எழிலைச் சற்றுச் சுவைத்துப் பாருங்கள்.
"சுட்ட பிணம் போல வளைந்து நெளிந்து உட்கார்ந்து கொண்டேன். படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில் வாடைக் கடுவல் ஊசி குத்துவதைப் போலச் சுளிர் சுளிரெண்டு அடித்தது. தூரத்தே குடிசைக்குள் இருந்த அகல் விளக்குகள் இருளைக் குத்து குத்தென்று குத்தின." "ஓடைக்கரையை அடைந்தபோது ஆறு, பரமார்த்த குருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப் போலத் தூங்கிக்

Page 25
з6 AZZیy مجھے تھےZy تھ4 قبر تھے یقی حصہ تھے கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப் பொட்டென்று ஆற்றில் எங்கே போகிறோம் என்ற பிரக்ஞை அற்ற வண்ணம் போய்க் கொண்டிருந்தன. கோரைப் புற்களின் மேலே சிலந்தி வலை போல பனிப்படலம் மொய்த்துக் கிடந்தது."
"நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின் முன்னணியத்தில் ஒடுங்கிப் போய்க் கொண்டிருந்தேன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தி போல வானத்தில் விடிவெள்ள் தொங்கிக் கொண்டிருந்தது."
பையனின் ஆசைக்கனவுகள் நிராசையாகும் பொழுது கதையின் ஆரோகண - உச்ச கட்டத்திற்கு வந்து விடுகிறோம். மீன்கள் பிடிப்பவனுக்குச் சொந்தமில்லை என்பதையும், மீன் பிடிகாரர்களின் பொருளாதார நிலையையும் விளக்கத் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் போதுமானதாய் இருக்கிறது. சொல்லாமல் சொல்லி சமுதாயப் பிரச்சினையைச் சித்திரிக்கிறார் ஆசிரியர். இங்கும் தேவையற்ற “வியாக்கியானங்’களில் இறங்கவில்லை ஆசிரியர். கதையின் போக்குடனேயே சமுதாயப் படப்பிடிப்பும் உள்ளது. கதை இயற்கையாகவும், யதார்த்தமாகவும் இருக்கிறது. ஆசிரியர் சமூகப் பிரச்சனை களை வலிந்து எடுத்துக் காட்டவில்லை. காட்டினாற் தான் கலை நயம் கெட்டு கட்டுரையாக மாறிவிடுமே!
கதையின் அவரோகணம் (Anticlimax) உடனேயே வந்து விடுகிறது. இது நல்ல கதைகளில் காணப்படும் அம்சம். எதிர் பாராமலிருக்க அவன் எண்ணங்கள் பகற் கனவாகின்றன.

ഷ്ട ക്രീമഠത്രz് ബ2-799 . 37
ஆனாலும், கதை முடியவில்லை. கதையிலுள்ள சில சம்பவங்கள் உண்மையில் பாத்திரத்தின் வாழ்க்கையிலுள்ள சில சம்பவங்கள் சில விடுபட்டுப் பின்பும் புதிதாகக் குதித்தெழுகின்றன. அப்பொழுது கதாபாத்திரத்தினை வயது வந்த இளைஞனாக அறிமுகப்படுத்துகின்றார்.
கனகம் என்ற பெண் பாத்திரத்தை வாசகருக்கு அறிமுகப்படுத்துகையில் ஆசிரியர் கையாண்ட உவமைகள் சூழலுக்கேற்றவாறு அமைந்திருப்பது ஆசிரியர் கதையின் கட்டுக்கோப்பிலும், உருவத்திலும் எவ்வளவு அக்கறை எடுத்துள்ளார் என்பதைக் காட்டுகின்றது. அதாவது, சம்பந்தமுடைய இரண்டு சம்பவங்களின் கோவைக்குப் பொருத்தமான உவமைகளும், நிகழ்ச்சிகளும் பாத்திரப் படைப்பும் அமைந்திருக்கின்றன.
கனகத்தை அறிமுகப்படுத்தும் தோரணையைப் பாருங்கள்.
"கனகம் எங்கள் கிராமத்துப் பெண்தான். நீரின் இடை மட்டத்தில் ஆடும் பாசிக் கொடியைப் போல எப்போதும் மென்மையாக ஆடிக்கொண்டு தான் அவள் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீனைப் போலச் செக்கச் செவேலென்று அழகாக இருப்பாள். வண்டலில் மின்னும் கிளிஞ்சல்போல் இருக்கும் அவள் கண்களை இன்றைக்கும் முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கலாம்."
கதாபாத்திரத்தின் கனவுகளில் மீண்டும் இடி விழுகின்றது. "தோணி" ஒன்றைச் சீதனமாகப் பெறுவதற்கு,

Page 26
38 ஈழத்துச் சிறு சதைகளுரம் அவன் கனகத்தை மணம் முடிக்கக் காத்திருந்தான். ஆனால், 'விதி'யும் "வறுமை"யும் வேறு விதமாய் விளையாடின. "அமாவாசையன்றிரவு புங்க மரத்தின் கீழே இருந்த வைரவர் கோவிலடியில் செல்வன் அவள் கையைப் பிடித்தான். நண்பனிடம் தோணி சொந்தமாயிருப்பதால் கனகத்தை நிர்க்கதியாக்கிவிட்டான். சேலையும் நகையும் வாங்கிக் கொடுப்பான் என்று ஒரு திருப்தி
ஆனால்.
"இன்னமும் தோணி எனக்குக் கனவுலகப் பொருளாகத்தான் இருக்கிறது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான்." என்று கூறி தன்னைத் தேற்றிக்கொள்கிறான்.
கதை முடிகின்றது.
இந்தக் கதையில் கதையம்சம் என்று குறிப்பிடுவதற் கான நிகழ்ச்சிகள் இல்லை. அப்படியிருந்தும் சிறுகதைக் குரிய வடிவத்தைப் பெற்றுள்ளது. முதல், இடை, கடை மூன்று பகுதிகளையும் இக்கதையில் இனம் கண்டு கொள்ளலாம். கதாபாத்திரப்படைப்பினால் மேலெழுந்து நிற்கிறது இக்கதை. அன்டன் செகோவ் (Anton Chekov) என்ற ருஷ்ய எழுத்தாளரின் கதைகளைப் போலத் தனிமனித குணச்சித்திரங்களை சமுதாயப் படப்பிடிப்புத் துணை செய்யச் சித்திரிக்கிறார் ஆசிரியர். இலட்சியங்கள் நனவாகலாம். ஆனால், அதற்குப் பொருளாதார நிலை தடை செய்கின்றது என்ற வெளிப்படையான கருத்தைக் கதை

39 تیتری محمد نجمیئے ص ۶ی محمد ق%7zzzzzzمجھےagے
மூலம் உணர்த்தும் ஆசிரியர் மறைமுகமாகச் சமுதாய இழி நிலையைக் கிண்டல் பண்ணுகிறார். ஒரு குழந்தைப் பருவச் சிறுவனின் அபிலாஷைகளைக் குழந்தை மனப்பான்மை யுடன் சித்திரிக்கிறார்.
அதே நேரத்தில் குழந்தை மனப்பாங்குடைய கதா பாத்திரம், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது சற்று செயற்கையாகத் தான் இருக்கிறது. இது ஒரு பெரிய குறை என்று சொல்ல முடியாது. ஏனெனில், அப்பாத்திரம் வளர்ந்ததும் பரிபக்குவம் அடைந்திருக்கலாம் அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிரியரின் உரைநடை தமிழ் மரபுக்கு ஏற்றவாறு இருப்பதால் தமிழ் வடிவமே கொண்டுள்ளது.
திரு.வ.அ.இராசரத்தினத்தின் இதர கதைகளையும் படித்துப் பார்க்கும் பொழுது, அவர் ஈழம் பெருமைப்படக் கூடிய தலைசிறந்த சிறுகதையாசிரியர் என்பதையும், ஈழத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய - ஓரிரு - நல்ல எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதையும், தேசிய, யதார்த்த, முற்போக்கு' போன்ற இலக்கியப் பண்புகள் பொதிந்த கதைகளை எழுதியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகின்றது. ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்களில் தோணி சிறப்பானது.
"தோணி என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரேயொரு கதையை மாத்திரம் எடுத்து கதையமைக்கப் பட்ட முறையை விளக்கிக் கூறியிருந்தேன்.

Page 27
40 ஈழத்துச் சிறுகதைசசூசமச்
இனி "தோணி என்ற தொகுப்பை முழுமையாக எடுத்துக் கொள்வோம்.
தமிழ் நாட்டின் தலைசிறந்த சிறுகதையாசிரியர் களுடனும், ஒரளவுக்கு ஒரு சில மோனடாசிரியர்களுடனும், ஒப்பிடத்தக்க அளவிற்குச் சிறுகதைகள் எழுதியுள்ள ஓரிரு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுள் வ.அ.இராசரத்தினமும் ஒருவர்.
இவருடைய கதைகளில் மேனாட்டுச் சிறுகதை யாசிரியர்களைக் குறிப்பாக அன்டன் செகோவைப் படித்த மன அருட்சியின் சாயைகளைக் காண முடிகின்றது. இவருடைய கதைகளில் நிகழ்ச்சிச் சித்திரங்களும் சம்பவங் களும் குறைவாயிருக்கும். பாத்திரச் சிருஷ்டித் தன்மையே மேலேரங்கி நிற்கும். சூழ்நிலை அமைப்பு, விறுவிறுப்பு, கட்டுக்கோப்பு, இறுக்கம் கவிதைப் பூச்சான மொழி வளம் போன்ற சிறுகதை உருவப்பண்புகள் இவருடைய கதை களில் செவ்வனே அமைந்திருக்கும். அதே நேரத்தில், பிரதேசப் பண்புகளும், மொழியழகும், யதார்த்த நயமும், சமூகச் சித்திரிப்பும், கலாரசனையும் பொதிந்து கிடக்கும். இத்தகைய பொதுப் பண்புகளை இவருடைய கதைகளிற் காண்பதால், இவரை ஒரு நல்ல சிறு கதையாசிரியர் என்று தயங்காமல் கூற முடிகின்றது.
இவர் 1951-1954 காலப்பகுதியில் எழுதிய 14 கதைகள் -
அவை எழுதப்பட்ட கால வளர்ச்சியை மனதிற் கொண்டு பார்க்கும் போது - நன்றாகவே எழுதப்பட்டுள்ளன.

47 ریستری ھے۔ حلیے 4ی محور قZ ترتے تھ%7ZZمجھے ayے
அக்கதைகளின் கோவையான இத்தொகுப்பில் தோணி அறுவடை, பிரிவுபசாரம்', 'மனிதன்', 'பாசம்', 'பெண்" ஆகிய நல்ல கதைகளும், ஒற்றைப் பனை, குடிமகன், 'ஏமாற்றம்' ஆகிய சுமாரான கதைகளும், 'கோகிலா போன்ற உருவக் கதையும் 'கலைஞனும் சிருஷ்டியும்' என்ற சரித்திரக் கதையும், 'பாலன் வந்தான், தருமம், நம்பிக்கை" போன்ற பத்திரிகை ரகக் கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
அறுவடை கதை முடிவு பத்திரிகைக்கதை' வாக்கில் அமைந்திருந்தாலும், நிகழ்ச்சிச் சித்திரங்களில் ஒரு வளர்ச்சிப் பாங்கு இருக்கின்றது. யதார்த்த பூர்வமான சூழ்நிலை வருணனையைத் தீட்டும் பொழுது, கலைப் பாங்கான உவமையுருவங்கள் ஆசிரியருக்குத் துணை செய்கின்றன. "வாலைக் குமரி போலத் திமுதிமு என்று வளர்ந்த பயிரின் நெஞ்சம் விம்மிப், பூவாய், பூநிறைந்த குலையாய், பாளையாய்க் காலிற் சதங்கை கட்டிக் கொண்டு, ஆடத் தயாராய் நிற்கும் நர்த்தகியைப் போல கம்பீரப் பார்வை பார்க்கையில் பனிக்காலம் தொடங்கிவிட்டது. “வெறிச்சோடிக் கிடக்கும் கடலின் மேற்பரப்பில் அந்தக் காவற்குடில், கருநீலமாகப் பரந்து கிடக்கும் ஆழியில் வட்டப் பாய் விரித்து நிற்கும் சின்னஞ்சிறிய படகைப் போல் நின்றது. காளான் குடையைப் போல் விரிந்து நிற்கும் (959-6).
பிரிவுபசாரம் மனித உணர்வலைகளைச் சித்திரிக்கும்
y y
ஒரு வெளியுலக நடப்புக் கதை. இப்பொழுது படிக்கும்

Page 28
42 ஈழத்துச் சிறு சதைசளுரம்
பொழுது இது போன்ற எத்தனையோ கதைகளை நாம் படித்த நினைவு வருகிறது. ஆனால், இது எழுதப்பட்ட 1953 இல் இது புதுமையாக இருந்திருக்கக்கூடும்.
'மனிதன்” ஒரு மனிதத்துவ கதை. ஒப்பற்ற ஓர் உணர்வு கதையில் இழையோடுகின்றது. கதையைக் கலை நயமாக ஆசிரியர் முடித்திருக்கிறார். "வறண்ட மூளைக் குள்ளே சிக்கிக் கொண்டு முன்னே ஓடத் தெரியாத கற்பனை போலக் காலம் ஊர்ந்து செல்கின்றது” என்ற வாக்கியம் அழகாக அமைந்திருக்கின்றது.
“பாசம் பழைய பட்டினத்தார் கதைக்கு ஒரு புதிய பார்வை கொடுத்திருக்கும் ஆசிரியர் தனது வளமான நடையில் தமிழ் மணங்கமழச் செய்கிறார். 'நாதியான கடவுளுடன்" பொங்குமாங்கடலை ஒப்பிடுதல், "தண்ணிரில் மிதக்கும் எண்ணெய் போல" செட்டியாரை ஒப்பிடுதல், செவ்வானத்தை மனைவிக்கும், மனிதனின் ஆபாசங்களைச் சுட்டெரிக்கும் "நியமத் தீ"க்கும் ஒப்பிடுதல், இரசிக்கத் தக்கவை.
பெண்” மனோதத்துவப் பார்வை கொண்ட ஒரு கதை. கதையில் தமிழ்ப் பெண்களின் போக்கை எள்ளி நகை யாடினாலும் பாத்திரத் தன்மையைச் செவ்வனே புனைந்து இருக்கிறார்.
“ஒற்றைப்பனை'யில் கிராமத்தின் சண்டை, சச்சரவு களை அல்லது கிராமத்திய மக்களின் அறியாமையை வெகு

യ്യ കീബ്ബ്ര4് 7962-79) ബ്ര 43
அழகான சித்திரமாகத் தீட்டுகிறார். ஆனால் இதன் உருவ அமைப்பு வெற்றி பெறவில்லை.
"குடிமகன்’ ஒரு யதார்த்த பூர்வமான சமூகப் பிரச்சனைக்கதை. இதனைக் கலைநயமாகத் தீட்டியிருப் பதனால், கதையின் உள்ளடக்கம், புதுமையாயில்லா விட்டாலும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.
'ஏமாற்றம் சிறுகதை என்ற வகைக்குள் இது அடங்கா விட்டாலும் சில மனித உண்மைகளைக் கோடிகாட்டி நிற்கும் அல்லது ஆசிரியரின் தனித்தன்மையை எடுத்து இயம்பும் சித்திரமாக அமைந்திருக்கின்றது.
'கோகிலா ஒரு நல்ல உருவகக் கதை (Alegory),
"கலைஞனும் சிருஷ்டியும் வெற்றியடையா விட்டாலும், விவரணநடையில் சொல்லப்பட்ட சரித்திரக் கற்பனை. தருமம்', முற்போக்கு எண்ணங் கொண்ட கதை; வரவேற்கத்தக்கது. ஆனால், சோபிதமடைய வில்லை. நம்பிக்கை' என்ற கதையும் ஒரு பத்திரிகை ரகக்
கதைதான்.
தோணி என்ற சிறுகதைத் தொகுப்பு சிறப்பானது.
(விவேகி : ஒக்டோபர் 1962)
§ණ

Page 29
44
டொமினிக் ஜீவாவின் அடித்தள
மக்களின் விழிப்புக் குரல்
துகை பலவிதத்திலும் சிறந்ததொரு தொகுப்பாக விளங்கு கின்றது. இதில் நல்ல சிறுகதைகள் சில இடம் பெற்றிருக்கின்றன.
இவற்றை எழுதிய டொமினிக் ஜீவா, தான் ஒரு தொழிலாளி என்பதில் பெருமை கொள்பவர். இவரது கதை களில், “சோஷலிஸ யதார்த்தவாதம் என்ற பண்பு விரவி நிற்கும். அதாவது, சாதாரண, தொழிலாள, வறிய மக்களின் வாழ்க்கை நெறி போன்றவை புகைப் பட ரீதியில் படம் பிடிக்கப்பட்டு கதைகள் தீட்டப்படும். டொமினிக் ஜீவா கூறுவது போல, ஒரு சில 'சாய்வு நாற்காலிக் கற்பனைவாதிகள்" எவ்விதம் தமது கதைகளில் மற்றைய பிரச்சனைகள் பற்றி நேரடி அனுபவம் இல்லாததாலும், அப்பிரச்சனைகள்

പ്പു കീമrത്രz 7962-7979 45
பற்றி உண்மையாகவும், யதார்த்த பூர்வமாகவும், சித்திரிக்க முடியாதிருப்பதால் மத்திய தர அல்லது மேல் தளத்துப் பாத்திரங்களைச் சிருட்டித்து அப்பாத்திரங்களின் வாழ்க்கை முறையை (நேரடி அனுபவம் பெற்றிருப்பதால் ஒரு வேளை) சித்திரிக்கிறார்களோ, அவ்விதமே பொதுவாக சோஷலிஸ் யதார்த்தவாதிகளும், அடித்தளத்து மக்களின் அவல நிலையை மாத்திரம் சித்திரிப்பதில் அக்கறை எடுப்பவர்கள்.
டொமினிக் ஜீவா போன்ற சோஷலிஸ் யதார்த்தவாதி களுக்குத் தனித்தே யொரு இலக்கியத் தத்துவார்த்தக் கோட்பாடு (Ideology) உண்டு. ஆசிரியரின் தத்துவார்த்தக் கோட்பாடு பற்றி, விமர்சகன், அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தனது கோட்பாட்டை அல்லது நோக்கத்தை - அது எதுவாயுமிருக்கலாம். வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறாரா இல்லையா என்பதே எமது கேள்வி? இக் கேள்வியை மனதிற் கொண்டு பார்க்கும் பொழுது ஜிவா, தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம்.
பாதுகை' என்ற தொகுப்பில் 1 கதைகள் உள்ளன. தொகுப்பிற்காகச் சில மாற்றங்களை ஆசிரியர் செய்திருப்ப தாகக் கூறுகிறார். இம்மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை யாகவும் ஆசிரியர் சுய திருப்தியில் மயங்கிக் கிடக்காமல், வளர்ச்சியில் நாட்டங் கொண்டுள்ளார் என்ற கருத்தைப் படிப்பவர் மத்தியில் வெளிப்படுத்துவதாகவும் அமைந்து இருக்கின்றன.

Page 30
46 ஈழத்துச் சிறுகதைசசூசமச் கலைமெருகு, கட்டுக்கோப்பு, கவிதைப் பூச்சு, அகவுணர்வுச் சித்திரிப்பு, பொருத்தமான யதார்த்தப் படப்பிடிப்பு, பாத்திரத் தன்மைக்கேற்ப நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக் கிரமத்தில் கோவைப் படுத்துதல் போன்ற உருவ அக்கறையில், ஆசிரியர் கவனம் எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்லாமல் ஆசிரியர் வளர்ந்தும் வருகிறார். தண்ணிரும் கண்ணிரும் என்ற இவரது முன்னைய தொகுப்புக் கதைகளைப் பார்க்கிலும் சிறப்பாகக் கதையெழுதும் கைத்திறனைப் பெற்று வருகிறார் என்பதையும் காட்டுகின்றது.
இக்கதைகளில், நான் மிகவும் இரசித்தது வாய்க்கரிசி என்ற கதையாகும். இதில் ஒரு மனிதாபமான உலகியல் வாழ்க்கையை, வெகு துல்லியமாக ஆசிரியர் விளக்க முனைகிறார். கதை நெடுகிலும் ஓர் இறுக்கமான கட்டுக் கோப்பு இருக்கின்றது. கதை முடிவைத் தான் விரும்பியவாறு எழுத ஆசிரியருக்கு உரிமையுண்டு. இக்கதையின் முடிவு, அவசரமாக எழுதப்பட்டது போல தோன்றுகிறது. தகப்பனாரை உதாசீன்ம் செய்து வந்த தில்லைநாதன் கடைசி நேரத்தில் (மகன் அல்லாத தேவதாஸன், தில்லைநாதனின் தகப்பனாருக்கு அந்திமக் கிரியைகள் செய்ய வரும் பொழுது) "வேதக்காரன்' என்ற காரணங்காட்டி குறைப்பட்டுக் கொள்வது உளவியலிற் கேற்புடையதாக இல்லை!
“காகிதக்காடு' என்ற கதையில் சூசகமாக எதனையோ உணர்த்துவிக்க விரும்புகின்றார் ஆசிரியர் என்பது தெரிகிறது. அது எதுதான் என்று தெற்றெனப் புரியவில்லை. கதையை வெகு அழகாகப் புனைந்திருக்கும் ஆசிரியர் வாசகர் மனதில் தொற்ற வைக்கும் விதத்தில் ஏதோ ஒரு

47 ”ی ترقی محمد سے ۶4ی محمد ق4ریعے تح%7ZZZمجھے لیے
உணர்வைக் கதை மூலம் ஊட்டுகின்றார். அவ்வுணர்வை இனங்கண்டு கொள்வது சிறிது சிரமமாயிருக்கிறது. இது ஆசிரியருக்கு ஒரு வெற்றி எனலாம். ஏனெனில் இன்றைய இலக்கியப் போக்குகள் இத்தன்மை வாய்ந்தனவாய் தானிருக்கின்றன.
‘பாதுகை ஒரு செருப்புத் தொழிலாளியின் அனுபவத்தைக் கூறுகிறது. இதில் இயல்புக்கேற்ற யதார்த்தச் சித்திரிப்பு இருக்கின்றது. கதையின் உயிர் நாடியாக விளங்குவது யாதெனில் கதையில் வரும் முக்கிய கதாபாத்திர மான முத்து முகம்மது என்ற தொழிலாளி. சந்தர்ப்ப வசத்தால் ஒரு திருட்டை அறிந்தே செய்து விடுகிறார். அதை மறைக்க பொய்ச்சத்தியம் பண்ணவும் அவர் கூசவில்லை. ஆனால், அத்தொழிலாளரின் முக்கிய தொழிற் சாதனமாகிய சப்பாத்தைக் கொண்டு சத்தியம் பண்ணச் சொல்லிக் கேட்கப்படும் பொழுது தொழிலாளி மறுத்து விடுகிறார். இதுதான் கதையிலுள்ள முக்கிய நிகழ்ச்சி. இக்கதையின் மூலம் தொழிலாள மக்களும் தவறு செய்யக்கூடும் என்ற உண்மையைத் தயங்காமல் டொமினிக் ஜீவா எடுத்துக் கூறுவது பாராட்டத்தக்கது. ஆயினும் கதையிலுள்ள முக்கிய நிகழ்ச்சியைப் பிரதானப்படுத்திக் கூறுமளவிற்கு இக்கதை யில் ஏதேனும் ஒப்பற்ற உணர்வு, வாசகர்களைத் தொற்றிக் கொள்ளும் விதத்தில் இழையோடுவதாகத் தெரியவில்லை. மற்றபடி கதையின்இதர அமைப்புக் கூறுகள் பாதுகையில் நன்றாய் அமைந்திருக்கின்றன.
நகரத்தின் நிழல்கள்' என்ற கதையில் ஒரு ரிக்ஷோக் காரனுக்கும் கதை சொல்பவருக்குமிடையே ஏற்பட்ட உறவும் சித்திரிக்கப்படுகின்றன. அவ்வுறவின் மூலம்

Page 31
48 ஈழத்துச் சிறுகதைகளுச4
அத்தொழிலாளியின் வாழ்க்கை நிலையைக் கதை சொல்பவரும் வாசகர்களும் அறிந்து கொள்கின்றனர், காண முடிகின்றது. சின்னட்டி என்ற அந்த ரோஷமுள்ள ரிக்ஷோக்காரனைப் பின்வருமாறு ஆசிரியர் அறிமுகப் படுத்துகின்றார்.
"ஒரு கையால் ரிக்ஷோவின் ஏர்க்காலைத் தாங்கிய வண்ணம் மறுகையால் தன் முகத்தில் ஒட்டியிருக்கும் அழுக்கைப் பார்க்கிலும் அழுக்கு மிகுந்த சீலைத் துண்டினால் பசிக்களை இழையோடியிருக்கும் முகத்தில் சற்றே வேர்விடும் வியர்வைத் துளிகளை உரசித் துடைத்த வாறு. நடு வயதைத் தாண்டிக் குடும்பப் பாரத்தால் நசி யுண்டு பசியினால் உடல் உலர்த்தப்பட்டு ரிக்ஷோ இழுப்புத் தொழிலால் கூனிய முகத்துடன் அவன் காட்சி தந்தான்."
மூன்றாவது கதையான தாளக் காவடி என்பதைக் கலை மெருகுடன் எழுதப்பட்ட சுவாரஸ்யமான பத்திரிகைச் செய்திச் சுருள் (Reportage) என்று கூறலாம். சிறுகதைக்குரிய பண்புகள் இதனில் செவ்வனே அமையவில்லை. ஒரு பஸ் கண்டக்டரின் அனுபவத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் டொமினிக் ஜீவாவின், கம்பீரமான கிண்டலான எழுத்து நடை மனதைக் கவருகிறது.
அடுத்த கதையான "பாபச் சலுகை"யில் ஜீவா பிரயோகித்திருக்கும் () "மகிழ்ச்சியுடன் ஊதிப் பெரிதாக்கிய பலூண் வெடித்துச் சிதறியதைக் கண்ணால் காணும் குழந்தையின் மனத்தவிப்பு" போன்ற ஒப்புவமை அல்லது (2) "சாய்வு நாற்காலிக் கனவு வாதிகளைப் போல” என்ற தொடர், அல்லது (3) "கோழிச்சண்டையில் வெற்றிபெற்ற சேவல் இறக்கையை அடித்து "கொக்கரக்கோ' என்று

49 عمحترتی ھے - یے یہ ہی محمد ن7/7zzzzzمجھےgے
கூவிவிட்டு அலட்சியமாக அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நிற்குமே அதைப்போன்ற" என்பனபோன்ற ஆசிரியரின் பிரயோகங்கள் குறிப்பிடத்தக்கவை. சாதிப்பிரச்சனை பற்றிய பிரக்ஞையைக் கதைப் பொருளாகக் கொண்ட இக்கதையில் செயல்களும், உரையாடல்களும் பொருத்த மாகப் பிணைந்திருக்கின்றன.
மனத்தத்துவம் என்ற கதை மனோதத்துவப் பார்வை சற்றே மிளிரப் புனையப்பட்ட சுவையானதொரு மத்திய தரக் கதை. அது கடித வடிவத்தில் அமைந்திருக்கின்றது.
மிருகத்தனம் என்ற கதையில் அமானுஷ்ய அன்பை யும், மானிட அன்பையும் ஒன்றுபடுத்தி அதே நேரத்தில் வேறுபடுத்தி அழகாகக் காட்டுகிறார் ஆசிரியர். “குளத்து விரால் மீன்களைப் போன்று எண்ணங்கள் முடிவற்றுப் பரிவட்டமிட்டன. அவற்றின் பிரதிபலிப்புகள் போல இடையிடையே பெருமூச்சுகள்" போன்ற கலைநயமான வார்த்தைப் பிரயோகங்களைஇக்கதை கொண்டிருந்தாலும் சிறுகதைக்குரிய அந்தத் தனித்துவச் சிறப்பு இக்கதையிற் குறைவு.
பத்திரிகை ரகக் கதைப்போக்கில் குறளி வித்தை என்ற கதையிருந்தாலும் அதில் கையாளப்பட்டிருக்கும் கவிதைப் பூச்சுநிரம்பிய யாழ்ப்பாணத்துக் கொச்சை மொழி பொருத்தமாகவும் சுவையாகவும் இருக்கின்றது.
உதாரணமாக, "எணேய், ஆச்சி எணேய் ஆச்சி!” என்று பல தடவைகள் தம்பிப்பிள்ள்ை குரல் கொடுத்த பின்னர் தான் நாகம்மா விழித்துக் கொண்டாள். "என்னடா? காலங்காத் தாலை ஏன் கத்துறாய்?" என்று அலுத்துக் கொண்டாள்.

Page 32
50 ஈழத்துச் சிறு சதைசளுதம்
"பூமணிக்கு என்னமோ, வயித்துக்குள்ளே செய்யுதா மெனை" என்று குரல் கொடுத்தான். இதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பதைத்து வாரிச் சுருட்டிக் கொண்டு விறாந்தைக்கு வந்தாள் நாகம்மா.
பூமணியின்நிலை அவளுக்கு விளங்கிவிட்டது. "குறுக் காலை போறவனுக்குச் சொன்னால் கேட்டால் தானே? டேய் கன்னிப் புள்ளைத்தாச்சியடா! எப்ப எண்டு சொல்ல முடியாது. புள்ளை பெறச் சாமான் எல்லாம் வேண்டி வைக்கச் சொன்னான். கேட்டாத்தானே. இப்ப பாரடா" என்று இரைந்தாள். நாகம்மாவின் குணம் அப்படித்தான். எந்தச் சிறிய விடயமானாலும் பந்தல் பிரித்துத்தான் பேசுவாள்.
"புள்ளை இப்ப எப்படி இருக்கடி?. குத்துதே?” என்று கேட்டுக்கொண்டே, உப்பிப் பருத்திருந்த வயிற்றினைக் கட்டினாற் போல இருந்த சேலையை இடுப்பை விட்டுச் சற்று அவிழ்த்து நெகிழ விட்டாள்.
"ஆச்சி! இப்ப என்னணை செய்கிறது?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் தம்பிப்பிள்ளை.
"உதிலைதான் நிண்டுகொண்டு நிக்கிறியே? காலங் கிடக்கிற கிடையிலை என்னால் முடியாது. பேந்து, இந்த மருத்துவிச்சியளைக் கொண்டந்து தன்ர மேனைச் சாக் காட்டிப் போட்டதெண்டு அளவெட்டியாள் ஏறக்கம் பாய்வாள். உதில பரமன்ரை கார் நிக்கும் கூட்டியா'.
இவ்வாறு எழுதிச் செல்கிறார் ஆசிரியர்.

57 تح محترتی ہے۔ میرے صحیہ قZ ترصے تح%7zzzمجھےgے
இரு சகோதரர்களுக்கிடையில் இருந்த உறவு சிறிது காலம் அறுபட்டுப் பின்பு, ஒரு மலசலகூடத் தொழிலாளியின் உந்துதலினால், பிணைப்புண்ட கதை தான் கைவண்டி என்ற அருமையான கதை. இதில் கைவண்டிக்காரனின் பாத்திர அமைப்பு சிறப்பாக உருப்பெற்றிருக்கிறது.
மாட்டுவண்டிச் சவாரியைப் பொறுத்தவரையில் சாத்திரம் பொய்த்ததாகக் கூறும் கதை, சவாரி. இக்கதையில் வரும் பாத்திர வருணனை அருமை எனலாம்.
சமுதாயத்தின் முதுகெலும்பு போன்ற தொழிலாள மக்களின் வாழ்க்கை நிலையை மாத்திரம் சித்திரிக்கும் டொமினிக் ஜீவா, தொடர்ந்தும் உலகானுபவமுள்ள (Universal) பொருட்களைப் பற்றியும், எழுதுவதில் தனது கவனத்தைச் செலுத்துவாராயின், விரும்பத்தக்கது. தண்ணிரும் கண்ணிரும் என்ற தொகுப்பில் காணப்பட்ட உருவக் குறைபாடுகளும், ஒருதலைப்பட்சமான சித்திரிப்பு களும், பாதுகையில் இல்லை. மொத்தத்தில் 'சிறுகதை' என்ற இலக்கிய வடிவத்தில் நமது ஈழத்துச் சிறுகதைகள் வளர்ச்சி பெற்று வருகின்றன என்பதற்கும், ஜீவா வளர்ச்சியடைந்து இருக்கிறார் என்பதற்கும் பாதுகை சான்று பகருகின்றது.
(விவேகி : ஒக்டோபர் - நொவெம்பர் - 1962)
§6

Page 33
52
காவலூர் இராசதுரையின்
மன அலைகள்
jj T வலூர் இராசதுரை எழுதிய பத்துக் கதைகளடங்கிய புத்தகம் குழந்தை ஒரு தெய்வம். சென்னை "சரஸ்வதி வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. 6ք (15 எழுத்தாளன் ஒரேயொரு நல்ல கதை எழுதினாற் கூட அவனுக்குரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். குழந்தை மனப்பாங்கை வைத்துத் தமிழில் ஏற்கெனவே நல்ல கதைகள் வெளி வந்திருக்கின்றன.
இராசதுரை எழுதிய தொட்டாற் சுருங்கி' என்ற கதையில் குழந்தை யுளப்பாங்கு ஊடுருவிச் செலுத்தப் பட்டுச் சித்திரிக்கப்படுகின்றது. தமிழில் உள்ள நல்ல சிறுகதைகளில் இதுவும் ஒன்று. ஆசிரியரின் சொற் செட்டினாலும், சொல்லாமற் சொல்லி

-gá7őzzsesszó 1962-1979 &53
விளங்க வைக்கும் கலைநயத்தாலும் ஜீவமலரின் உணர்வுக் குமுறல்கள் வாசகன் மனத்தில் பெட்ரோல் மீது எறியப்பட்ட தீப்பந்தம் போல் தொற்றிக் கொள்கின்றன. (லா.சா.ராமாமிருதம் என்ற தமிழ்நாட்டு எழுத்தாளரின் எழுத்து நடையின் சாயல் சிறிது இக்கதையில் படிந்து இருந்தாலும் இக்கதையினை 'பிரக்ஞை ஓட்டம்' என்ற உத்தியைக் கொண்ட கதை என்று சொல்ல முடியாது.) கதையை நேரடியாகவே செயல்களுடன் ஆசிரியர் படிப்படி யாக எடுத்துக் கூறுவது இரசிக்கத் தக்கதாய் உளது.
"வார்த்தை செயலாகி, செயல் மாமிசமாகி, வார்த்தையே மாமிசமாகும் விந்தையைப் பற்றிய சிந்தனையே கிடையாத அவளின் பருவத்திற்கு இது பெரும் புதுமையாயிருந்தது" என்று எழுதியிருப்பது மிகமிகக் கவிதா சக்தி நிரம்பிய உணர்த்துதல் என்று எனக்குத் தோன்றுகிறது. கவிதைப் பூச்சு நடையை ஆசிரியர் இடையிடையே பின்னி இருக்கிறார். "கணவன் மழையில் நனைந்து கொண்டு நிற்பதுபோலத் தெரிந்தது" என்ற வாக்கியம் அழகாக அக்காவின் மனோநிலையை உணர்த்தி விடுகின்றது. அத்தான் முன் ஜீவமலர் நிற்கும் பொழுது அனுபவிக்கும் உணர்வை பளுதையும் பாம்புமான அவனில், சர்ப்பாம்சம் இப்படி விகர்ச்சித்துப் படமெடுக்கிற போதெல்லாம், அந்த அரவத்தின் உடலை இருளில் மிதித்தவள் போல அவள் திணறிப்போவாள் என்று வெளிக்காட்டுகிறார். அதற்கடுத்து "அட கோபமென்றால் அடியன். திட்டன்" என்று சேர்த்திருப்பதும் உயிரூட்டமாயுள்ளது.

Page 34
54 ஈழத்துச் சிறுகதைகளுரம் இத்தனைக்கும், இக்கதையில் கதையம்சம் அல்லது கதைச் சம்பவங்கள் மிகச் சாதாரணமானவை. ஆனால் வெகு அழகான வடிவம் கொண்டிருப்பதனாலும், சம்பவங்கள், குழந்தையின் மனோ பக்குவத்துடன் இணக்கமாயிருப் பதனாலும் வெற்றி பெறுகின்றது.
இத்தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை மிகத் தரம் உயர்ந்ததாயுள்ளது. சிறுகதை இலக்கிய வரலாற்றையே மிகத் தெளிவாக முன்னுரையாசிரியர் கா.சிவத்தம்பி விமர்ச்சிக் கின்றார்) அனுபவ முதிர்ச்சி பெற்ற கலைஞன் ஒருவன், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளின் முனைப்பினை எவ்வாறு காண்கின்றான் என்பதை விளக்குவது போல் வீழ்ச்சி" என்ற கதை அமைந்துள்ளது, என்கிறார் முன்னுரை ஆசிரியர். ஆனால், இக்கதையின் மூலம் கதாசிரியர் என்ன உணர்த்த விரும்புகிறார் என்பது புரியவில்லை. இதற்குக் காரணம் அவர் எடுத்துக்கொண்ட உருவ அமைப்பேயாகும். கதை முதலுக்கும், கடைக்கும் ஒருவிதத் தொடர்பும் கிடையாது. கதையில் ஒரு ஒழுங்கு முறை கிடையாது. காலம், இடம் பின்னிக் கிடக்கின்றது. கதையில் பாலச் சந்திரன் முக்கிய பாத்திரமா, அவன் சகோதரிகளின் அவல நிலை பிரதான அம்சமா, அவன் மனைவியின் "செக்ஸினஸ்” அடிப்படையா என்று சரியாகப் புலப்படுத்தப்படவில்லை.
“தேவ கிருபையை முன்னிட்டு வாழும்" என்ற கதையில் யாழ்ப்பாணத்துச் சாதாரண கத்தோலிக்கக் குடும்ப வாழ்வு வெகு அழகாகச் சித்திரிக்கப்படுகின்றது. சுருங்கிய குறிப்புப் பொருள் அல்லது ஒட்டலங்காரம்

ஆசிரியர்களுரம் 1962-1979 55
மூலம் அவர் எடுத்துரைப்பது நயமானது. உதாரணமாக, "கிழவி ஒரு ஸ்தாபனம் - கோயில் - சிற்றமார் மடம் - கூப்பன் கடை மாதிரி" என்று அறிமுகப்படுத்துவது வாசகனின் கற்பனைக்கு இடங்கொடுக்கின்றது. வங்கிசம்' 'சந்திக்கு' போன்ற வார்த்தைகளைப் பாத்திரத்தின் பேச்சு வழக்கிற்கேற்ப உபயோகித்திருப்பது உசிதமானது. 'பனை யளவிற்கு உயர்ந்த தாம்' என்பது இன்னுமொரு உதாரணம். உரையாடல்களில் ஓர் இயற்கைத் தன்மை மிளிர்கின்றது. கிழவியின் சபலம் இயற்கையானது. மனோதத்துவ ரீதியில் அழகாகச் சித்திரித்திருக்கிறார். இங்கு தான், முன்னுரை யாசிரியர் சொல்லியிருப்பது போல, "வசனங் கொண்டு கவிதா உணர்வை" ஏற்படுத்துகிறார்.
"பேடி" என்ற உருவக்கதை மூலம் தற்காலச் சிந்தனை அல்லது தத்துவ ஓட்டத்தைச் சித்திரிக்கின்றார். சிறுகதைக் குரிய முதலிடைகடை அம்சங்களை இக்கதையில் இனங் கண்டு கொள்ள முடிவதால் அதனையும் சிறுகதை என்று ஆசிரியர் கருதினார் போலும்.
"குழந்தை ஒரு தெய்வம்" என்ற கதையில் சபல மடைந்த இருவர் - வேறு ஆணும் மணமான பெண்ணும் - தாம் தவறிழைக்கவிருந்த போது, பெண்ணின் மகன் காரிலடிபட நேரிடும் பொழுது, சுதாரித்துக் கொள்கின்றனர் என்பதைக் கலைநயமாக உணர்த்துகின்றார். இங்கு குழந்தை ஒரு தெய்வம் போல வந்து அவர்களைக் காப்பாற்று கின்றது. இங்கும் லேசான மனோ தத்துவப் பார்வை தொனிக்கின்றது.

Page 35
56 A2த்துச் சிறு சதைசஞரமச்
"மோதிரம்” என்ற கதையில் மனித வாழ்வின் ஒரு கோணத்தைச் சித்திரிக்கிறார் ஆசிரியர். வயிற்றுப் பிழைப்புக் காக காலிமுகம் (கோல்பேஸ்) திடலில் பொறுக்கித் தொழில் பார்க்கின்றான் கதாநாயகன். சமுதாய இழி நிலை மறை முகமாக இங்கு உணர்த்தப்படுகின்றது.
"நாயிலும் கடையர்" என்ற கதை அப்படியொன்றும் பிரமாதமான மனோ தத்துவத்தை உணர்த்துவதாக எனக்குப் படவில்லை. "யாரிடமாவது அன்பு செலுத்த வேண்டியிருப்பதாலும், நாய்கள் மனிதர்களிலும் பார்க்க மேலானவை என்பதாலும்" திருமதி ராஜேந்திரம் அறை வாடகைக்காரரின் வசதிக் குறைவைப் பொருட்படுத்தாது மனுக்குலத்தின் தவறுகளினால் மனம் பேதலித்ததால் எழுந்ததாக அந்த எண்ணமிருக்கலாம். சில வேளைகளில் மனிதர்கள் இவ்வாறு அலுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், இங்கு திருமதி ராஜேந்திரம் வெறுப்படைவதற் கான சம்பவங்கள் எவை என்று கூறப்படவில்லை. மேலும், (கதாபாத்திரம் தன்மை ஒருமையில் கதை சொல்பவர்) நாய்கள் மீது வெறுப்புக் கொள்வதற்கும் ஏதும் தொடர்பு இல்லை. வீணாக வளர்க்கப்பட்டு எழுதப்பட்ட பத்திரிகை ரகக் கதையிது.
"கல்வி" என்ற கதையில் ஒரு பத்து வயதுச் சிறுவனின் மூளை செய்த, வேலையின் விளைவு விவரண நடையில் எடுத்துக் கூறப்படுகிறது. இங்கும் லேசான மனோதத்துவப் பார்வையுள்ளது. ஒரு யதேச்சையான நிகழ்ச்சியால் (வீட்டிற்குப்போய், துவாரத்தைப் போட்டுக் கொள் என்று

57 2ى محترتی ھے۔ صلیے ۶6ی محمد قZ ترمیم تحZZZ/7/7ئمجھےgے
பணம் கொடுத்தவர் சொல்லிய சம்பவம்) ரோசமான பையன் ஒருவனும் தன் நற்குணத்தைக் கை விடுகின்றான் என்றாகிறது. இக்கதையில் ஆழம் கிடையாது. அதாவது உணர்வைத் தொற்றவைக்கும் சம்பவங்கள் இல்லை. சம்பவங்கள் வலுவாக இல்லாவிட்டாலும், கதை உத்தி முறைகளில் புதுமை மிளிர்ந்திருக்குமாயின் கதை சிறப்பாக அமைந்திருக்கும். கதாபாத்திரத்தின் சுயசிந்திப்பைக் கதை சொல்லும் படர்க்கையிடத்துடன் பிணைந்திருப்பது தற்பாஷிம் (Monologue) உத்தி தானாயினும், அது புதுமை என்று மருளத் தேவையில்லை.
"பிள்ளையார் பிடிக்க" என்ற கதையில் ஒரு சாசுவத உண்மை (an eternal truth) புலப்படுத்தப்படுகின்றது. விருப்பு வெறுப்பற்ற அல்லது அறிவுத் தெளிவுள்ள நிலையில் இருக்கும் போது கருத்துக்களை உச்சரிப்பவன் ஒருவன் தன்னைத் தாக்கும் அல்லது தன் உணர்வைத் தாக்கும் சம்பவங்கள் ஏதும் நடைபெறும் பொழுது, தன் நிலை. குலைகின்றான். ஆனால், சுயமாகச் சிந்திக்கும் தன்மையை இழக்கின்றான். தயாளன் என்ற மனோ தத்துவ நிபுணன் தன் நண்பன் விஷயத்தில் உதவி செய்யப் புகுந்து வெற்றி கண்டிருந்தாலும் "புறச்சான்றுகளைக் கொண்டு அகத்தை அளவிடும் சாதனை" தன் மனைவியைப் பற்றி (தன்னுர்வைப் பாதிக்கும் இனத்தவன்) வந்தவுடன் சந்தேகம் கொள்கின்றான். அவன் மனைவி அவனுக்கு எழுதிய கடிதத்தில் "ராமு” என்ற சொல்லை எழுதி விட்டுப் பின் "அடித்திருப்பது" (அழித்திருப்பது) தயாளனின் கற்பனையை

Page 36
58 ஈழத்துச் சிzyசதைசசூர4
விரியச் செய்கிறது. கேள்வி மேல் கேள்வியைத் தன்னகத்தே கேட்டு சந்தேகத்தை வளர்த்துக் கொள்கின்றான். கதை முடிவு கலை நுட்பமானது என்று கூறலாம். தயாளனின் அனுமானம் தவறானது என்பதைக் கதாசிரியர் வலிந்து கொண்டு வந்து விவரண நடையில் விளக்காமல், தயாளன் மனைவியின் சொற்களிலேயே விளக்குவது ஒன்று; இறந்த காலத் தன்மை ஒருமையில் எழுதும் ஆசிரியர் உபகதை' என் பேச்சு வழக்கில் கருதப்படும் விவரண நடை, கதை சொல்லும் பாணியில்(Reportedstyle) எழுதியிருப்பது கதையில் விறுவிறுப்பில்லாமற் போகச் செய்கின்றது. ஒட்டம் தடைப்பட்டுத் தடைப்பட்டு நிற்கின்றது. கதையின் முடிவு அல்லது கதையின் போக்கு எப்படியிருக்கும் என்பதைக் கதை முதலிற் காட்டியிருப்பது நன்று.
"பிரியதத்தத்தினாலே" என்ற கதையின் அடி நாதங்களாகக் காணப்படுபவை, உணர்ச்சிக் குமுறலோ உணர்வுத் தொற்றுதலோ அல்ல; யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க கிராமியப் பேச்சின் கலைப்பாங்கான கவிதானுபவம் தான். சிறுகதைக்குரிய பிரகரணத்தைக் கொண்டிருந்தும், அதனை வளர்க்கக் கதா சம்பவக் கருப் பொருட்களைப் பின்னியிருந்தும், ஆசிரியருக்குப் பழக்க மான அந்த உபகதை' நடையினால் இக்கதையை நடைச் சித்திரம்' என்று தான் என்னால் மதிப்பிட முடிகின்றது.
(agai : cup 1962)

○9
நீர்வை பொன்னையனின்
நிதர்சன நீட்சியழகு
1959, இதற்குப்பின் எழுதத் தொடங்கியவர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருசில இளம் எழுத்தாளர்கள் நல்ல வேகத்துடன் வளர்ந்து வருவதுடன் காலத்தின் இலக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்தும் வந்துள்ளார்கள். இவர்களது வளர்ச்சி, முன்னைய கால எழுத்தாளர்களின் ஆரம்ப வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது மிகவும் திருப்திகர மாயிருக்கிறது என்பது எனது துணிபு.
"முற்போக்கு எழுத்தாளர்கள்" என்று விசேடமாக அழைக்கப் பட்டு வரும் "கொம்யூனிஸ்ட் அரசியற் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கோட்பாடுகளுக்கு கலைவடிவங்

Page 37
60 ஈழத்துச் சிறு சதைசசூசம்
கொடுப்பதில், இன்று நீர்வை பொன்னையனும், எஸ்.அகஸ்தியரும் முன்னணியில் நிற்கின்றனர்.
தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்காக இலக்கியத்தை ஒரு சாதனமாகப் பாவிப்பவர்கள் 'சோஷலிஸ் யதார்த்தவாதிகள். புது எழுத்தாளர்களான, பொன்னையனும், அகஸ்தியரும் உள்ளடக்கத்தில் அக்கறை செலுத்துவதோடு நின்றுவிடாது உருவத்திலும் கவனஞ் செலுத்தி வருவது மகிழ்வுக்குரியது.
1959 முதல் 1961 வரை தான் எழுதிய 15 கதைகளைத் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார் நீர்வை பொன்னையன், கலைப்பிரகரணங்கள் யாவுமே திரும்பத் திரும்ப வருபவை என்பதையும் உருவச்சிறப்பினாற் தான் கலைகள் ஒளியுடன் மிளிர்கின்றன என்ற உண்மையையும் பிரக்ஞையுடன் நீர்வை பொன்னையன் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு, அவரது கதைகளின் உருவ அமைதி (குறிப்பாக மொழி வளம்) சான்று பகருகின்றது.
பொன்னையன் புதுமையில் (அடிபட்ட சொற்றொடர் களுக்குப் புது வண்ணம் தீட்டுவதில்லை) நாட்டமுடையவர் என்பதைக் காட்டியிருக்கிறார். இவருடைய தொகுப்பில் முதல் முதலில் என்னைக் கவர்ந்த அம்சம், இவரது சுயத் தன்மை பயக்கும் உவமை யுருவகங்கள்! எனவே முதலில் நான் இரசித்த சொற்றொடர்களை இங்கு தொகுத்துத் தருகின்றேன்.
"எல்லாம் தலைவிதி என்று அவன் இலவசமான சுமைதாங்கி மேல் பாரத்தைப்போட்டு விட்டான்", "கெம்பி

egy a/%//w/waregyzú 1962-1979 67
VV 4
மிதந்த மார்பகங்கள்", "கனவுகாணும் கண்கள்', 'தும்பைப் பூ கூந்தல்" (ஊர்வலம்)
"முழுப்பாக்கை வாயில் போட்டு டக் என்று கடித்துச்
LV a
சப்பும் பற்கள்", "தொலைவில் ஆடுகள் வெண்திரைக்குப் பின்னுள்ள சிலையின் நிழலாயின", "எங்கும் சுற்றிவரும் இருளின் கருவண்ணத்துக்குள் இயற்கை மறையத் தொடங்கியது", "வெங்கதிரோனுடைய கொடும் நாக்குகள் அந்த வெளியிலேயுள்ள சடப்பொருள்கள் எல்லாவற்றையும் நக்கி எரித்துக் கொண்டிருந்தன” (பாசம்)
"கன்னிப் பெண்ணின் பிறை நெற்றியிலே திலக மிட்டதுபோல, ஒரு தென்னஞ்சோலை வயல் நிலத்து மத்தியிலே கம்பீரமாக நின்றது", "வானமும் பூமியும் கட்டித் தழுவும் எல்லைக் கோட்டில் யாழ்ப்பாணத்தின் பெயர்போன உப்பாறு", "விரைவிலேயே தாயாகப் போகும் கன்னிக் கர்ப்பவதி, தாய்மை உணர்ச்சி பொங்கி வழிய, தனது கணவருடைய முகத்தைப் பார்த்துச் சிரிப்பது போல, மேட்டு நிலம் வானத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்தது", "முகங்களும் செவ்வாழைப் பூப்போல மலர்ந்தன" (மேடும் பள்ளமும்)
"சுரக்காய் போன்ற முட்டிவயிறு", "முள்முரக்கம் பூக்காடு போன்ற பரட்டைச் செம்பட்டைத் தலைமயிர்", "பனங்காய் சூப்பிய மாட்டினுடைய மூஞ்சியைப் போல” (சோறு)
"பனித்துளிகள் பட்டு மலர்ந்த ரோஜா இதழின் மென்மை" (பனஞ் சோலை)

Page 38
62 ஈழத்துச் சிறுகதைகளுரம்
“கருத்திரை விரிப்பு மெள்ள மெள்ளப் படர்ந்து சூனியமாக்குகின்றது,' "அவள் சிரித்தாள் வானத்துத் தாரகைகள் உதிர்ந்து சிதறின" "அப்பார்வையிலும் சிரிப்பிலும் இறைவனுடைய சிருஷ்டித் தொழில் அதன் இரகசியம், பூரணத்துவ எழில், இப்பிரபஞ்சத்தின் இயக்கம் எல்லாமே பொதிந்து கிடந்தன". "நீக்கிறோப் பெண்ணின் தனங்களிலிருந்து பால் பீறிட்டுப் பாய்வதுபோல குன்று களிலிருந்து பாய்ந்து ஓடித்துள்ளி விளையாடி வரும் நீர்வீழ்ச்சிகள்" (வானவில்).
"மழையின் முகில்களைப் போல அவனுடைய வெறும் வயிறு முழங்கியது", "முழுகிவிட்டு வரும் பருவப் பெண்ணின் கூந்தலில் இருந்து நீர் சொட்டுவது போல, தழைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்ற மரவள்ளி இலைகளி லிருந்து மழைத்துளிகள் கொட்டிக் கொண்டிருக்கின்றன" "உளிப் பிடிபோன் குள்ளமான உயரம்", "அடிவானம் தாம்பூலம் தரித்து, ஆகாயத்தில் செங்குழம்பை அள்ளி அப்பிக் கொண்டிருந்தது" (சம்பத்து).
"வேப்பிலைக்கண்கள்” (மின்னல்).
"மனித நெஞ்சின் அமைச்சல் அவரது அங்கங்களை அரித்துக் கொள்ளுகின்றன."
"சுட்ட கத்திரிக்காயாக வெளிறி வெதும்பியிருந்த அவளுடைய உடல்" (கிடாரி).
“(օ)66) լO வெடிப்புக்குள் அவள் கண்கள் பதுங்குகின்றன" (அசை)

63 تیتر محی ہے۔ مجھے معتی محمد قZ ترمیم ترZZZZZZمجھے وے
"மண் றோட்டில் வண்டி போன தடங்கள் மாதிரி" (ւյաaն),
லா.ச.ராமாமிருதம், மெளனி, அழகிரிசாமி, ஜெய காந்தன் ஆகிய தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நடையைச் சார்ந்து எழுதும் நீர்வை பொன்னையனின் கதைகளில் உள்ள உள்ளடக்கம் ஒன்றும் பிரமாதமானதாயில்லை.
இனிக் கதைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஊர்வலம்
"முதலாளி வர்க்கம் கல்நெஞ்சம் படைத்த வர்க்கம்" எனக் கூறும் இக்கதையின் கருப்பொருட்கள் (Piots) இறுக்க மாய் அமைந்திருப்பதனால் கதை சுமாராய் அமைந்துள்ளது. 18 வருடங்களாக உழைத்த ஒரு தொழிலாளியின் மரணத்தின் ஊர்வலத்திற் கூடக் கலந்துகொள்ள, சக தொழிலாளர் களை ஒரு மில் முதலாளி அனுமதிக்கிறாரில்லை. ஆனால் தொழிலாளர்கள் மீறி ஒன்றுபட்டு ஐக்கியமாகி ஊர்வலத்துடன் பெரிதாகச் செல்கின்றனர்.
шптағub
80 வயது இடையன் ஒருவனின் சாவைச் சொல்லும் இக்கதையில் ஆடுகளுக்கும், இடையனுக்கும் இடையே ஒரு பாசம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், அப்பாசத்தினை வாசகர்களுக்கு உணர்த்துவிப்பவை, "ஆடுகளின் உள்ளுணர்வுக்கு அந்த முதிர்ந்த கட்டையோடு ஒட்டியிருந்த உயிரைக் காணவேண்டுமென்ற துடிப்பு உண்டானதோ” என்ற தொடரே. ஆனால், கதையில் இந்தப்

Page 39
64 ஈழத்துச் சிறு சதைசசூர4ச்
பாசத்தை வலியுறுத்தப் போதிய சம்பவங்கள் இல்லை. வெறுமனே மேலோட்டமாகக் கூறினாற் போதாது.
மேடும் பள்ளமும் தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்து, முதலாளி வர்க்கத்தின் கொடூரங்களைத் தகர்த் தொழிக்கலாம். மேடைப் பள்ளமாக்கலாம் என்ற கோட் பாட்டை வெளிப்படையான பிரச்சார வாடையின்றி, சுவையான கதைப்போக்குடன் சொல்கிறார் ஆசிரியர். அந்த அளவில், நைந்து போன பிரகரணமாயிருந்தாலும், உருவ அளவிலாவது வெற்றி பெற்றிருக்கிறார்.
நிறைவு
இவர் எழுதிய கதைகளில் மிகச் சிறப்பானதும் தமிழிலேயே ஒரு சிறந்த படைப்பானதுமான இக்கதையில் ஒரு காவிய ரசனையை அனுபவிக்க முடிகிறது. கவிதை லயம் கதை நெடுகிலும் இழையோடுகின்றது. கலை கலைக் காகவே என்ற கொள்கையை வாழும் எழுத்தாளர்கள் ஆதரிக்க மாட்டார்கள். கதை முதலிற் கலையாக இருப்பதுடன் மக்களுக்காகவும் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி வெகு அற்புதமான தொரு சிறுகதையை மனக்குகை ஓவிய வார்ப்பில் சித்திரித்திருக்கிறார்.
சோறு
உயர்ந்த சாதிக்காரன் ஒருவனின் திவேச வீட்டில், கருக்கல் சோறும், வாழைக்காய், பலாக்காய் கறிகளும்,

യ്യ ക്രീമൈ4 7962-7979 6.5
உண்ட பொழுது, காட்டான் என்ற சிறுவன் தன் வீட்டிலும் யாரோனும் செத்தால் பெரிய விருந்து கிடைக்கும் என்று நம்புகிறான். அவன் தாழ்ந்த சாதிக்காரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது நப்பாசையைச் செயலாக்கத் தனது தம்பியையே நஞ்சூட்டிக் கொல்கிறான். பசியினால் விளைந்த இந்த பாதகத்திற்கு உயர்சாதிக்காரரைக் குற்றவாளியாக்குவது யதார்த்தத்திற்குப் புறம்பானது. ஆயினும் ஆசிரியர் கலை நயமாகக் கதையைப் புனைந்திருப்பது பாராட்டத்தக்கது.
பனஞ்சோலை
காதலித்தவனைக் கைப்பிடிக்க முடியாமற்போன கன்னியொருத்திமாற்றான் ஒருவனை மணமுடித்த பின்னும் பழைய காதலனின் மோகத்தில் திளைத்திருப்பது யதார்த்த மானது என்றுதான் வைத்துக் கொண்டாலும், அபத்தமானது என்பதை அறிய வேண்டும். ஒரு பெண் உடலாற் தான், தன் கற்பை இழக்க வேண்டுமென்றில்லை. உள்ளத்தாற்கூட அவள் தனது கணவனுக்குத் துரோகம் செய்வாளாயின் அது விபசாரத்தை ஒக்கும். இலக்கியம் வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டும். நரகத்தைப் படம் பிடித்தால் மட்டும் போதாது. நரகத்திலுள்ளவர்களை மேலெழுப்ப முடியா விட்டாலும், உயரத்திலிருப்பவர்களை நரகத்திற்குத் தள்ளாமல் மட்டும் இருந்தால் போதுமானது. உள்ளத்தில் எழும் உணர்வு நீசத்தனமாயிருந்தால், அதனை ஒதுக்குவதே பண்புடைமை. ஆனால், இதனை இக்கதையில் வரும் திலகா என்ற பாத்திரம் செய்யவில்லை. கதாசிரியர்கூட, அவளுக்கும்

Page 40
66 ஈழத்துச் சிறுகதைகளுரம்
பழைய காதலனுக்கும் தொடர்பு மேலும் பெருக வேண்டும் என்ற அடிப்படையில் கதையை முடித்திருப்பது நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கது. கதையில் உருவச் சிறப்பிருந்தாலும் உள்ளடக்க அபத்தத்தினால் மதிப்பிழக்கின்றது.
தவிப்பு
மனிதமனம் இளமை, அழகு, பொலிவு, மென்மை போன்ற பண்புகளையே இயல்பாக விரும்புகின்றது. பள்ளத்தில் இருப்பவர்கள் மேட்டிற்கு வர விரும்புவது இயற்கை. ஆனால், மேட்டில் இருப்பவர்களோ பள்ளத் திற்கு வர விரும்பார். தாய்மைப் பேற்றுக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் உணர்வை மனித இயல்போட்டத்திற் கேற்பச் சித்திரிக்கப்படுகின்றது. பொன்னையன் கற்றறிந் தவர் என்பதை இக்கதை மூலம் புலப்படுத்தியிருக்கிறார்.
வானவில்
பெண்மை அழகின் பிறப்பிடம் என்பது உண்மை யானது என்றாலும் அழகுணர்ச்சி வேண்டியதில்லை, பெண்ணை பெண் என்ற முறையில் மனிதாபிமானத்துடன் நோக்கினால் அதுவே போதும் என்ற கருத்தை உணர்த்து விக்கிறார் ஆசிரியர். ஆசிரியரின் கண்ணோட்டம் கலை நயமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பம்பத்து
இது ஒரு நல்ல கதை. உள்ளடக்கமும் உருவமும் ஒன்றுக்கொன்று இணக்கமுடையதாயிருப்பதால் நன்றாக அமைந்துள்ளது.

ஆசிரியர்களும் 1982-1979 67
மின்னல்
"பனஞ்சோலை" என்ற அபத்தக் கதையை எழுதிய ஆசிரியரே இதனையும் எழுதியிருக்கிறார். தனது குறை பாட்டை நீக்குமுகம் போல் எழுதப்பட்டுள்ள இக்கதை மற்றுமொரு வெற்றிகரமான படைப்பு.
சிருட்டி
சிந்தனையைத் தூண்டும் கதை. பசித்தால் பண்புகூடப் பறந்துவிடும் என்ற கருத்தை தெரிவிப்பது. பசித்தாலும் பண்பை இழக்காத மேன் மக்களைத்தான் வையகம் போற்றும் என்பது பொது விதி.
கிடாரி
கீழ்ச்சாதிப் பெண்ணொருத்தி, மேற்சாதிக்கார னொருவனால் கற்பழிக்கப்பட்டுப் பைத்தியமாக்கப்பட்ட சோக நிலையைக் கூறுகின்றது.
ஆசை
வேலையில்லாதிருக்கும் ஒர் இளைஞனின் மனக்குகை அபிலாஷைகளை வடிப்பவை.
புயல்
ஒரு கொந்தளிப்பான கதை.
புரியவில்லை.

Page 41
68 ஈழத்துச் சிறுகதைகளுரமச்
சாதிப் பிரச்சனை பற்றி அறியாத பாலகரின் உணர்வுக் கதை.
மொத்தமாகப் பார்க்கும் பொழுது மேடும் பள்ளமும் என்ற தொகுப்பில் "மேடும்பள்ளமும்' நிறைவு', 'சோறு', தவிப்பு, ‘வானவில்', 'சம்பத்து, மின்னல்" ஆகிய கதைகள் தரமுயர்ந்திருக்கின்றன. நீர்வை பொன்னையனும் ஈழம் பெருமைப்படக்கூடிய ஒரு கலைஞன் என்பதை நிலை நாட்டியுள்ளார்.
இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் பிரேம்ஜி, "யதார்த்தத்துக்கு, கருத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எழுத்தாளர்களிற் சிலர், உருவத்திற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்காத குறைபாடு இல்லாமல் இல்லை" என்ற பேருண்மையைத் துணிந்து, வெளிப்படை யாகக் கூறியதற்கு நன்றி. இலக்கியத்தில் உருவம் என்பதை விட இலக்கிய விமர்சனத்தில் உருவ அக்கறை எடுப்பவர்கள் உள்ளடக்கத்தை உதாசீனஞ் செய்பவர்கள் என்று முற்போக்குக்காரர் தப்பாக விளங்கிக் கொள்கிறார்கள். இந்தத் தத்துவார்த்தக் குழப்பம் நீங்குவதற்கு ஒரே வழி ரஷ்ய இலக்கியம் உட்பட, ரஷ்ய இலக்கிய விமர்சனம் உட்பட, உலக இலக்கிய விமர்சனங்களை, கொள்கை வெறியில் மயங்காமல், சாவகாசமாகப் படித்துப் பார்ப்பதேயாகும்.
(விவேகி : ஜூன் 1962)

வரதரின்
69
முன்னோடிக் கதைகள்
6) ரதரின் முதலாவது சிறு கதைத் தொகுப்பில் அவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் உட்பட மொத்தம் 12 கதைகள் உள்ளன. கயமை மயக்கம் என்ற அத்தொகுப்பில் வரதரது இலக்கியக் கோட்பாடுகளின் விளக்கத்தைக் காணலாம். சி.வைத்திய லிங்கம், சம்பந்தன், இலங்கையர் கோன், சு.வே. போன்ற ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களைத் தொடர்ந்து வந்த "வரதர்' என்ற தி.ச.வரதராஜன் மறு மலர்ச்சி குழுவைச் சேர்ந்தவர். அவரது கோட்பாடுகளில், அவரது முன்னோடி களின் கோட்பாட்டின் தாக்கம் இருப்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் காலத்தின் போக்கிற்கேற்ப அவரது கதைகளும், செம்மை பெற்று வந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. வரதராஜனின் கதைகளைப் பற்றிப் பொதுவாக இங்கு குறிப்பிட்டுச் சொல்கையில் அவரது வெற்றி,

Page 42
ፖ0 - ஈழத்துச் சிறுகதைகளுரம்
தோல்விகளையும் எடை போட முடிகின்றது. வரதர், ஈழத்தின் நல்ல சிறு கதையாசிரியர்களுள் ஒருவர்.
மாதுளம் பழம் விவரண நடையில் (Narative style) எழுதப்பட்ட மெல்லிய ஏளனங்கொண்ட கதை. கதை எழுதப் பட்ட முறை, பக்குவம் பெற்ற இன்றைய வாசகர்களைக் கவரும் தன்மையுடையதாக இல்லை. "கொழுத்துத் தடித்த பணக்கார வீட்டு இளம் பெண்ணின் கன்னத்தைப் போல” என்ற உவமையைப் படித்தபோது குறுநகை முகிழ்கின்றது.
உள்ளுறவு ஊடலின் நிமித்தம் பிரிந்த தம்பதிகளின் பிணைப்பைப் பற்றிக் குறிக்கின்றது. சாதாரண பத்திரிகை ரகக் கதை வாக்கில் அமைந்திருக்கிறது.
வேள்விப்பலி "உயிர்ப்பலியைத் தடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு மனிதன் தன் உயிரைப் பலி கொடுத்தான். ஆனால் தன் உடம்பை என்றோ ஒருநாள் எரித்து சாம்பலாகப் போகின்ற உடம்பை, வளர்க்கவேண்டும் என்பதற்காக எத்தனையோ உயிரை வதைக்கிறானே, அவனும் ஒரு மனிதனா?” என்று அழகாக முடியும் கதையில் ஆசிரியரின் முற்போக்குத் தன்மையைக் காணமுடிகின்றது. இது ஒரு நல்ல கதை. நன்றாகவும் எழுதப்பட்டுள்ளது. அதே கதையில் வரும் மற்றுமொரு வசனமான, "வெற்றியை அனுபவித்ததற் காக நாம் போராடுகிறோம். நம்முடைய வேலை கடமை களைச் செய்ய வேண்டியது. பலனை அனுபவிக்க வேண்டியது நமது சமூகம்" என்பது குறிப்பிடத் தக்கது.
உள்ளும் புறமும் பெரிய மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் சின்னத்தனங்களை ஒருதலைப்

ஆசிரி/சகுzர் 1962-1979 ፖ፲
பட்சமற்ற முறையில் அழகாக எழுதியிருக்கிறார். ஆனால் இதன் உருவ அமைப்பில் கட்டுக்கோப்பு தளர்ந்து காணப் படுகின்றது. இதனை ஒரு Sketch என்று தான் சொல்ல வேண்டும்.
பிள்ளையார் கொடுத்தார் ஒரே மாதிரியான தார்மீக எண்ணங்களைத் திரும்பித் திரும்பி நினைத்துச் சலித்துப் போனவர்களுக்கு இக்கதையில் வரும் ஒரு சம்பவம் சற்று இதமாக இருக்கின்றது. என்னைப் பொறுத்த வரையில் இதன் உள்ளடக்கத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.
வீரம் "இளங்கோ. கயல்விழி. இருவர்களுக்கு மிடையில் இருந்த உறவில் சாதாரண எழுத்தாள வாசகி என்ற தொடர்போடு இனக் கவர்ச்சியும் சேர்ந்திருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். ஆனால் காதல்? அது இன்னும் வரவில்லை. இன்னும் சில மாதங்கள் இப்படிப் பழகி வந்தால் அது வந்துவிடக்கூடும்" என்று எழுதியிருப்பது கதாசிரியரின் முதிர்ந்த அறிவைக் காட்டுகின்றது. ஆசிரியரின் மனிதாபிமான உணர்வை இக்கதையில் இனங்கண்டு கொள்ளலாம். இதுவும் ஒரு நல்ல கதை.
வெறி என்ற கதையில் மனிதனின் பேராசை ஒன்றைச் சித்திரிக்க முனைந்தாலும், செயற்கையாகப் புனையப்பட்டு இருப்பதால் கதையில் உயிரோட்டம் இல்லை. அத்துடன் ஆசிரியர் கதை எழுதும் மாதிரியையும் காட்டிக் கொடுத்து விடுகிறது. சிறுகதை பத்திரிகை ரகக் கதைப் போக்கில் அமைந்து விட்டது.

Page 43
72 ஈழத்துச் சிறு சதைசளுதம்
ஒருகணம் என்ற கதையையும், அது எழுதப்பட்டு இருக்கும் செயற்கையான உருவ அமைப்பினால் இரசிக்க முடிவதில்லை. சிறுகதை' என்ற இலக்கிய வகையில் புது விதமான உருவ அமைப்பும் உள்ளிருந்து முகிழ்வித்தெழுந்த உள்ளடக்கமும் அமையும் இவ்வேளையில் இத்தகைய கதைகள் சிறப்படையாதது ஆச்சரியமில்லை.
புது யுகப் பெண் உள்ளடக்கத்தில் புதுமை கொண்ட இக்கதையும் வரவேற்கத்தக்கது. இது போன்ற கதைகள் மூலம் திரு.வரதரின் முதிர்ச்சியைக் காண முடிகின்றது.
வாத்தியார் அழுதார் மனநெகிழ்வு அழகாகப் படம் பிடிக்கப்படுகிறது.
கற்பு வரதரின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு. இக்கதை, சந்தர்ப்பவசத்தால் உடலால் கற்பிழந்தால் அது கற்பிழந்ததற்குச் சரியாகாது என்று கருத்துப்பட எழுதி யிருக்கிறார். வரவேற்கத்தக்க புது மாதிரியான கதை.
கயமை மயக்கம் இது ஒரு நீண்ட கதை. இடை யிடையே பின்னோக்கி உத்தியைக் கையாண்டு கூடிய வரை இறுக்கமாக எழுதியிருக்கிறார்.
முடிவாக இத்தொகுப்பில் எனக்குப்பிடித்த கதைகள், கயமை மயக்கம்', 'கற்பு, "வாத்தியாயர் அழுதார், புதுயுகப் பெண், உள்ளும் புறமும், "வீரம், பிள்ளையார் கொடுத்தார், வேள்விப்பலி ஆகியவையும்.
(விவேகி : டிசெம்பர் 1962)

73
முகிழ்ந்த எழுத்தாளர் சிலரின் முதல் முயற்சிகள்
ராதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் பன்னிருவரின் சிறு கதைகள் அடங்கிய தொகுப்பான கலைப்பூங்காவுக்கு முன்னுரை எழுதிய க.கைலாசபதி கூறுகிறார் :
"ஒரு குறிப்பிட்ட பருவத்து மாணவர் தமது மனோ நிலையை வெளியிடச் சிறந்த கருவியாகச் சிறு கதையைக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை முற்றாக உணர்ந்து கொள்ளாத, ஒரு விதமான இலட்சிய மனோபாவம், கதைகளுக்கு ஒருமைப்பாட்டை யளிக்கிறது. பல கதைகளிலே சோகச் சுவை காணப்படுகிறது. ஆனால் அதிலும் இலட்சிய வேகமே

Page 44
74 ஈழத்துச் சிறு சதைசளுரம் தெரிகின்றது. அதனை வென்று எல்லா மாணவரும் எழுதியிருக்க முடியும் என்று நான் கூறமாட்டேன்” என்று சரியாகவே கதைத் தொகுப்பை எடைபோட்டிருக்கிறார்.
இக்கதாசிரியர்கள் வயதில் இளைஞராயும், மாணவர் களாயுமிருப்பதால், எடுத்த எடுப்பிலேயே மிகத்தரமான கதைகளை மதிப்பிடும் அளவுகோல் கொண்டு, இவர்களது கதைகளைப் பரிசீலிப்பது முறையாகாது. ஆயினும், இவர்கள் உண்மையிலேயே ஆற்றல் மிகுந்த திறமைசாலிகள் போலத் தோன்றுகிறார்கள். அவர்கள் மேலும் செம்மை பெற்ற எழுத்தாளர்களாக விளங்குவதற்கு அவர்களது குறை நிறைகளை எடுத்துக் காட்டுவது அவசியமாகிறது.
வளர்ந்த எழுத்தாளர்கள் என்றும், முன்னணி எழுத்தாளர்கள் என்றும் தற்பறை சாற்றும் ஈழத்து எழுத் தாளர்களுள் சிலர் எழுதும் கதை போன்ற கட்டுரைகளைப் பார்க்கிலும், இப்பல்கலைக் கழக மாணவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஓரிரு நல்ல சிறுகதைகளை எழுதியிருக் கின்றனர் என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயமாகும்.
கூட்டு மொத்தமாக, இத்தொகுதியைப் பார்க்கும் பொழுது, இதில் ஒரேயொரு கதை மாத்திரமே உள்ளடக்கச் சிறப்புக் கொண்டுள்ளது. அக்கதையின் பெயர் 'சமரசம்' ஏனைய கதைகளில் உள்ள உள்ளடக்கம் புதுமையான தாகவோ, சிறப்பானதாகவோ எனக்குத் தோற்றவில்லை.
னால், 'மலர்கள், அவன் சமாதியில்', 'சுவடு, பாதி மலர்' ஆ அ

75 محی ترتی محمد سمیعے صحیح محمد ق4ریعے تحZZZZZیکھیےgے
ஆகிய நான்கு கதைகளிலும், பரிசோதனை என்று சொல்ல முடியாவிட்டாலும், பிரக்ஞை கொண்ட உருவ மாற்றம் இருப்பதால் பாராட்டுக்குரியவையாகின்றன. 'எட்டு மாதங்கள்' என்ற கதை, தமிழ்வாசகர்களுக்குச் சவால் விடும் - ஆனால், புதுமையென்று சொல்வதற்கில்லை - ஒரு கதை. இக்கதையை நேரடியாகச் சொல்வதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ‘வாழ்க்கைத் துணை, இடி விழ, இறுதி மூச்சு" ஆகிய கதைகளின் உள்ளடக்கம் ஏதோ பிரமாதமானவை என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல கதைப் பொருள்களைக் கொண்டவை. ஆனால், இவற்றின் உருவ அமைப்பு சம்பிரதாயமானது. உள்ளடக்கத் தன்மைக்கேற்ப உருவ உமைப்பும் மாறியிருக்குமாயின், நல்ல கதைகளாக அமைந்திருக்கும். ஏனைய மூன்று கதைகளிலும் ஆரம்பமுயற்சிகளின் சாயல் துலாம்பரமாய்த் தெரிகிறது.
இனி, இவற்றைத் தனித்தனியே எடுத்துப் பார்ப்போம்.
இக்கதைகளில் உள்ள கருப்பொருள்களை (Plots) நான் இங்கு எடுத்துக் கூறப்போவதில்லை. கதைப் பொருளை (Themes) மாத்திரமே எடுத்துக்கூறி, கதைகளில் நான் இரசித்த பகுதிகளைக் சுட்டிக் காட்டுவதுடன் எனது அபிப்பிராயத்தையும் கூறுவேன்.
செ.யோகநாதன்
எழுதிய 'மலர்கள்' என்ற கதையில் அவர், ஒரு பாச உணர்வு இரு பாத்திரங்களுக்கிடையில் எழுவதற்கான முன்

Page 45
76 ஈழத்துச் சிறு சதைகளுரம் _
நிகழ்ச்சியைப் புதிய முறையில் (தமிழுக்குப் புதிது என்ற அர்த்தத்திலல்ல, புதிதாக எழுதத் தொடங்குபவர்கள் கை வைக்கத் தயங்கும் விதத்தில்) சொல்லுகிறார்.
இறந்தகால படர்க்கையிடத்தில் நின்று கதை சொல்லப்படுகின்றது. இடையிடையே Fashback உத்தியைக் கையாண்டு கடந்த கால நிகழ்ச்சிகளும், மனத் திரையில் ஓடுவது போல் சித்திரிக்கப்படுகின்றது. இந்த ஆசிரியர் கையாண்ட சொற் சித்திரங்கள் மனதைக் கவருவன.
"ஒரே செடியில் மலர்ந்த இரு மலர்கள். அவற்றிடையே மாறுபட்ட பண்பா? மணத்தினிற் பேதமா?”
"இதயம் துன்பத்துள் வீழ்ந்து பொசுங்குகிறது", "அவள் புன்முறுவலில் அவன் நெஞ்சம் நனைகிறதோ?”
க.குணராசா (செங்கை ஆழியான்)
எழுதிய அவன் சமாதியில்' என்ற கதையில், காதலன் ஒருவன், தன் காதலி, மாற்றான் ஒருவனை மணந்த பின்பும், தன்னிடம் உடலுறவு கொண்டாட வருவது, தமிழ்ப் பெண்மைக்கு இழுக்கு என்ற இலட்சியத்தில், அவளைக் கொன்று விடுகிறான். தமிழ்ப் பெண்ணுக்கு இழுக்கு' என்ற உணர்வு இலட்சிய அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், மனிதாபிமான நோக்குடன் பார்க்கும் பொழுது, அப்பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்து செய்த பின், தன் காதலனிடம் போயிருப்பாளாயின், அது குறையாகாது. இதனை வெவ்வேறு கோணத்திலும் நின்று பார்க்கலாம். ஆசிரியர் நின்று பார்த்த கோணம் ஒன்று.

77 محی ترقی محمد - یے ص ۶ی محمد قzzzzzتر%مجھےagے
அதில் அவர் அப்பெண்ணைக் கீழ்த்தரமான குணமுடைய வளாகத் தான் படைத்திருக்கிறார்.
"வேண்டாம், வேண்டாம், கற்புக்கரசிகளைத் தான் உங்களுக்குப் பிடிக்குமோ” என்று அவள் ஒரு முறை தன் காதலனிடம் சொல்லும் பொழுதும், காதலன் அவளிடம் "சீ. களங்கப் பிண்டமே. பெண்ணினத்திற்கு மாசுதீராத வசை” என்று பேசுவதிலுமிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவளைக் கொல்வதுடன் தானும் சாகிறான். இக்கதையும் கட்டுக் கோப்பான முறையில் Flashback உத்தி கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. இக்கதாசிரியரிடமும் சுயமான வருணனைத் திறனுண்டு.
"கனலில் இழைத்த உடல், உன் விழிகள் நிதம் கனவில் மிதப்பன, உன் இதழ் நறுமதுவைப் பிலிற்றும், முறுவல் ஒளிக்கதிரை நிகர்த்தும்" ஆகியவை ஒரு பகுதி.
கோகிலா
எழுதிய சமரசம்" ஒரு மனிதத்துவக்கதை. விலங்கினத் திற்கும், மனிதவினத்திற்கும் இடையே பசிக்காக நடை பெறும் போராட்டத்தின் ஒரு சித்திரமாக இது அமைந்து உள்ளது. இரு வர்க்கப் பிரதிநிதிகளும் சாவில் சமரசம் அடைவதாகக் கூறப்பட்டுள்ளது. இக்கதையைப் படித்த பொழுது கலை நயமாக எழுதும் முற்போக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய கதை ஒன்றின் ஞாபகம் என் நினைவிற்கு வந்தது. இக்கதையின் முடிவு தத்துவார்த்தமாக அமைந்திருக்கின்றது.

Page 46
ፖ8 ஈழத்துச் சிறுகதைசசூர4
இக்கதாசிரியை படாடோபமாகச் சொற்களை வாரிச் சொற்சிலம்பம் ஆடாமல், கதையை நேரடியாகவே சொல்வது பாராட்டத்தக்கது. அதாவது, கதை உள்ளடக்கத் திற்குப் பொருத்தமான உருவக் கட்டத்தை அமைத்து இருக்கிறார். ஈழத்துத்தமிழில் சாதம்' என்ற வழக்கு இல்லை என்பதை ஆசிரியை கவனிக்கவில்லை போலும்! இவர்
எழுதியுள்ள சில வரிகள் கதைக்கு உயிரூட்டமாய் உள்ளன.
"ஆறறிவு படைத்த மனிதன் கடவுளின் படைப்பில் உன்னத சிருஷ்டியாகக் கருதப்பட்டு வந்தவன். பகுத்தறிவு படைத்தவன் தன் வயிறு காய்ந்த போது, மாக்களுக்குச் சமநிலையில் கொண்டுவரப்பட்டபோது, மிருகத்தோடு மிருகமாகப் போராடினான். மனிதன் தன் ஸ்திதியிலிருந்து நழுவியது போல, நன்றியுள்ள மிருகங்களின் பரம்பரையில் வந்த நாய் நன்றி மறந்த நிலையில் நன்றி கெட்ட மிருகமாக மாறிப் போராடிக் கொண்டிருக்கிறது."
"வேறுபட்ட இரு வர்க்கத்தின் வாரிசுகளாக விளங்கிய மனிதனும் மிருகமும் போராட்டத்திற்குப் பிறகு ஒற்றுமை யுடன் தமது இறுதி யாத்திரையைத் தொடங்கினார். சாவில் என்றாலும், அவர்கள் சமரசமடைந்ததைக் கண்டு வானம் கறுத்து! மழையாகிய கண்ணிரைத் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது."

ള ക്രീമൈ4് ബ്-ബ 79
வெ.கோபாலகிருஷ்ணன்
எழுதிய இடிவிழ' என்ற கதையில் ஒருத்தன் ஒரு நேரம் நல்லவனாக இருக்கிறான். ஒரு நேரம் கெட்டவனாக இருக்கிறான்! மனிதர் எல்லாம் அப்படித்தானே என்ற உண்மையை வெளிக்காட்ட எழுதப்பட்டது. ஆனால், போதிய வடிவம் அமையாதிருப்பதால் சுமாரான கதை யாகவே இதை எடைபோட முடிகிறது.
அங்கையன் (அகைலாசநாதன்)
எழுதிய சுவடு என்ற கதையின் உள்ளடக்கம் சலித்துப் போன, புளித்துப்போன, அசட்டு அபிமான உணர்ச்சியைத் தூண்டும் கதைப் பொருளை மையமாகக் கொண்டது எனலாம். மணமாகாத கதாநாயகி, தன் காதலனால் கர்ப்பந்தரிக்கின்றாள். காதலனோ வேறு ஒருத்தியை மணஞ் செய்து கொள்கிறான். அந்தப் பெண்ணோ கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த மாமூல் கதையைப் படிக்கச் செய்வது ஆசிரியர் கையாண்ட எழுத்து நடையே யாகும்.
உதாரணமாக, ஆலிலை போன்ற உதரம், கண்ணிலே இனம் புரியாத கேள்வி, இதயத்தின் துடிப்பு. கண்ணிமை களின் படபடப்பு, பருவம் நிறைந்து தளும்புகிறது! அதன் பளபளப்பிலே எவருடைய முகமும் பிரதிபலிக்கத்தானே செய்யும்', 'எறியப்படும் விழிவேல்கள்', 'காந்தம் பாய்ச்சும் கண்கள்', 'எரிமலைப் பவள அதரங்கள்', 'அகல விரியப் பிணைப்பு அறுபட்டது, 'நெஞ்சம் உருகிக் கண்களை

Page 47
80 ஈழத்துச் சிறு சதைகளுரம்
வாசலாக்கி, கண்ணிராகப் பாய்ந்து கொண்டிருந்தது', 'பருவத்தின் வெடிப்பு", "மெய்யின் விதிர்ப்பு' என்பன போன்ற சொற்றொடர்கள் ஆசிரியரின் சுயத் தன்மையைக் காட்டுகின்றன.
வாணி
எழுதிய கதை சாதிக் கட்டுப்பாடு பற்றிய ஒரு சிறிய சித்திரம். இறைவன் எங்கே? என்ற கதை. கிழக்கிலங்கைப் பேச்சில் ஒரு சாயலை நுகர முடிகின்றது. கதைப் பொருள் அடிபட்ட பிரகரணமாயிருப்பதால் சோபிக்கவில்லை. உருவ அமைப்பில் மாற்றமிருந்திருந்தால் ஒரு வேளை சிறப்படைந்திருக்கக் கூடும்.
செ.கதிர்காமநாதன்
எழுதிய 'எட்டு மாதங்கள்' என்றதொரு கதை, பழமையில் மாத்திரமே ஊறித் திளைத்து வெளியில் வராத தமிழ் வாசகர்களுக்கு ஒரு பிரச்சினைக் கதை போலத் தோற்றும். தமிழ்ப் பெண்மையின் தூய்மை பற்றி மிகைப் படுத்திப் பேசுபவர்களுக்கு இது ஆபாசமாகத் தோற்றும். ஆனால், எதையும் கலைக்கண் கொண்டு பார்க்கும் யதார்த்த வாதிகளுக்கு இது ஒரு நல்ல கதை என்று தோற்றும். இக்கதையின் உள்ளடக்கம் உணர்ச்சிகரமான பாத்திரச் சிருஷ்டிக்கு ஏற்புடைத்து. உருவமும், கவிதைப் பூச்சு நடை யாகவே அமைந்திருக்க வேண்டியது. ஆனால், ஆசிரியர்

യ്യ കീബ്ബ്ര4് 7962-799 8፲
கதையை நேரடியாக, எதுவித ஆர்ப்பாட்டமுமின்றிச் சொல்லி விடுகிறார். கதையும் மனதில் பதிந்து விடுகிறது.
துணிகரமான அந்நிய உருவ அமைப்பைக் கொண்டு எழுதி வெற்றியீட்டியதற்கே ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.
செம்பியன் செல்வன் (ராஜகோபால்)
எழுதிய பாதி மலர்' என்ற கதை தாழ்வுமனப்பான்மை யினின்றும் எழுந்த தாபமும், வேட்கையும், சித்த சுவாதீனத்தையும் கொண்டு வரும் என்ற ரீதியில் எழுதப் பட்டிருக்கின்றது.
"திட்டுத் திட்டாக புழுமேய்ச்சற்பட்ட முகமாக மேடுபள்ளங்கள்", "உள்ளத்திலே உணர்ச்சிச் சுழிப்புகள்", "கண்மலர்கள் படபடக்கின்றன," "மலர்விழிகளில் ஒருவித மயக்கம் படர்கின்றது", "வெள்ளத்திலே தோன்றி மறையும் நீர்க்குமிழிகள் போற் சம்பந்த சம்பந்தமில்லாத எண்ணச் சிதறல்கள் இமைத்திரையிற் கழன்று நீந்துகின்றன" என்பன போன்ற இவரது எழுத்து நடையும் மனதைக் கவருவன. இவரும் உருவ அமைப்பில் பிரக்ஞை கொண்ட அக்கறை எடுத்திருக்கிறார் என்பதற்கு அவர் கதையை நிகழ்காலத்தில் சொல்லுவதே சான்றாகவிருக்கின்றது.
அ.சண்முகதாஸ்
எழுதிய ஏமாற்றம்' என்ற கதையில் உள்ள விவரண நடை சற்று அலுப்புத்தட்டுகின்றது. உள்ளடக்கத்திலும் புதுமை

Page 48
82 ஈழத்துச் சிறு சதைசஞரமச்
யில்லாததால் சுமாரான கதையாகவே இதை எடைபோட முடிகின்றது.
எம்.ஏ.எம்.சுக்ரி
'வாரிசு" என்ற கதையில் யதார்த்த ரீதியில் ஒரு அனுபவத்தை உணர்த்த முயல்கிறார். ஆனால், கட்டுக் கோப்பில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. பிரதான கதை நிகழ்ச்சி வலுவாகச் சொல்லப்படவில்லை. கதையில் ஒரு தொடர்பான உணர்வு இல்லாததால் சுமாராகவே எடை போட முடிகின்றது. "பிரேமையின் பரிஸம்" என்ற தொடர் தமிழுக்குப் புதிது என்று நினைக்கிறேன்.
முத்து சிவஞானம்
எழுதிய இறுதி மூச்சு" என்ற கதையில் சமூகத்தின் கீழ்த் தளத்தோரின் ஒரு பகுதியினரின் அவல நிலை, குடி வெறியின் தீமை என்பன பற்றி விவரண நடையில் சொல்லு கின்றது. "சேரி மக்களின் வாழ்க்கைபோல, குடிசை முழுவதும் ஒரே இருள்" என்ற வாக்கியம் ஓரளவுக்குப் பொருத்தமான இடத்தில் விழுந்திருக்கிறது.
க.நவசோதி
எழுதிய “வாழ்க்கைத் துணை' என்ற கதையின் உள்ளடக்கம் ஒருவித தியாகச் செயலை உணர்த்துவது. மிகவும் நைந்துபோன பிரகரணம் என்று சொல்ல முடியா விட்டாலும், ஓரளவுக்கு அறிமுகமானதே. இதனைச்

83 محی ترتی ھے۔ حیے محتی محمد قzو متح%7zzzمجھے پgے
சித்திரிக்கும் பொழுது, ஆசிரியர் கதையை நேரடியாகவே சொல்வது பாராட்டத்தக்கது. ஏற்கெனவே அறிமுகமான சொற்றொடர்களைப் புதிய சொற்களில் கூறியிருப் பாராயின் கதை சிறப்படைந்திருக்கும்.
முடிவாக, நாளைய ஈழத்துப் பேனா மன்னராகப் போகும் இவ்விளைஞரின் சவால், இன்று கொடிகட்டிப் பறப்பதாக எண்ணும் எழுத்தாளர்களுக்கு உஷாராய் அமைந்துள்ளது. கதைப்பூங்கா ஒரு நல்ல தொகுப்பு.
(விவேகி : ஜூலை 1962)

Page 49
84.
பரிசுகள் பெற்ற
முன்னைய சிறுகதைகள்
956-62 காலப் பகுதியில்
எழுதப்பட்ட "பரிசுக் கதைகள்' இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை எழுதப்பட்ட காலத்தை அதிகம் பொருட்படுத்தாமல் மதிப்புரை எழுதினால், இத்தொகுப்பு திருப்தி யளிக்கவில்லை என்றே எழுத வேண்டும். திருப்தியளிக்கவில்லை" (Less satisfying) என்று பொறுப்புணர்ச்சி யுடன் தான் எழுதுகிறேன். தற்காலிக மாக இக்கதைகள் பாராட்டத்தக்கவை என்று ஊக்கமளித்தாலும், காலக் கிரமத்தில் இவை 'பயிற்சி அப்பியாசங்கள்' என்ற முறையில் மறக்கப்பட்டு விடும் என்பதைத் திடமாகக் கூறிவிட முடியும்.

ஆசிரியர்களுரமச் 1962-1979 85
செங்கை ஆழியான், முத்து சிவஞானம் ஆகிய இருவரும் பத்திரிகைச் செய்தி நிருபரின் செய்திச் சுருள் படைப்பில் இருந்து 'சிறுகதை' எழுதப் பழகும் பயிற்சி அப்பியாசங்களாக' (Excercises) தங்கள் ‘கதை'களை எழுதியிருக்கின்றனர்.
சிற்பி, 'உதயணன், நவம்' ஆகிய மூவரிடையேயும், 20ம் நூற்றாண்டு முற்போக்கான (பொதுப்படையான அர்த்தத்தில்) எழுத்தாளனின் மனோபாவம் அல்லது வாழ்க்கை நெறி போன்றவை இருக்கின்றன. அவர்களிடம் இருக்கும் 'ஏதோஒன்றை, நவீன சிறுகதை வடிவத்தில் வெளிப்படுத்தத் திக்கித்திணறிச் சம்பிரதாயப் பத்திரிகை ரகக் கதையுருவில் புனைந்திருக்கிறார்கள். பொழுது போக்குப் பத்திரிகை எழுத்தாளர்களினதும், ஆதர்ஸத்தி லிருந்து இவர்கள் விடுவித்துக் கொள்வது விரும்பத் தக்கது. அவர்களே விரும்பாவிட்டால் நாம் என்ன செய்வது!
'செம்பியன் செல்வன் வளர்ந்து வருபவர். வாலிப வயதில் கற்பனை வேகம் தடம் புரண்டோடத்தான் செய்யும். காலப்போக்கில் முதிர்ச்சியடைய வீச்சும் கனமும் தாமாகவே மெருகடையும். இவரிடம் நம்பிக்கையுண்டு. நாமும் இவருடைய எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும் என்று நம்புகிறோம். எடுத்துக்கொண்ட கதையைப் பொறுத்தவரையில் ஒரு ஆங்கிலப்படத்தின் சாயல் தெரிகிறது. கதாசிரியர் அப்படியே கொப்பியடித்து விட்டார்

Page 50
86 ஈழத்துச் சிறுகதைசகும் என்று நான் கூறவில்லை. ஏனெனில் படம் இங்கு திரையிடப்படும் முன்பே கதை வெளியாகி விட்டது என்று அறிகிறேன். அப்படித்தான் அருட்டுணர்வில் தழுவி எழுதியிருந்தாலும், பாதகமில்லை; வெவ்வேறு திசை களிலும் நம் எழுத்தாளர்கள் தம் கவனத்தைச் செலுத்து கிறார்கள் என்ற திருப்தியிருக்கும். ஆகவும் கண்ட மிச்சம் என்ன? சாதிப் பிரச்சினை, வர்க்கபேதம், தமிழ்ப்பண்பாடு, சிங்களர் - தமிழ் பிரச்சினை, கற்பு : போக்கு உல்லாசங்கள்' ('காதல்' உட்பட) இது பே றவற்றைத் தானே திருப்பித் திருப்பித் திணிக்கிறார்கள் நம் எழுத்தாளர்கள். போகட்டும்.
பெண் எழுத்தாளரையும், பத்திரிகைத் தர எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டியது தான்; ஆனால் அவர் எடுத்துக்கொண்டுள்ளது, சமூக வேறு பாட்டுக் கதைப் பொருள் (inconsistencies in the attitudes of people of different social starta) வரவேற்கத்தக்கது. உண்மையிலேயே பிரக்ஞை பூர்வமாகவே அவர் இக் கதைப் பொருளைச் சித்திரிக்க வேண்டும் என்று நினைத்துச் சித்திரித்தாரோ அல்லது ஒரு விபத்தாக'அமைந்து விட்டதோ, நானறியேன். சித்திரித்த வரை வெற்றியே.
"செந்தூரான் தாம் எடுத்துக் கொண்டதைச் சற்று காத்திரமாக, யதார்த்தபூர்வமாக, 'வழ வழா கொழ கொழா' இல்லாமல் சித்திரித்திருக்கிறார். ஈழத்துத் தமிழ் உடனிகழ் கால இலக்கியத்தில் அவரது கதையும், ராமையாவின்

፰ ፖ محی سمتری ہے۔ حیے برتری محمد 924 تھے تحZZZZZZمجھے aے
கதையும், மலைநாட்டுத் தமிழர் மொழியும், வாழ்வும் என்ற முறையில் முத்தாரமாகத் தற்பொழுது இருந்து வருகின்றன.
நவீன உளவியல் போக்குக்கேற்ற முறையிலும், சிறிது நளினமான கதைப் பொருளைக் கொண்டதினாலும், இறுக்கமாக எழுதப்பட்டதினாலும், அ.முத்துலிங்கத்தின் 'பக்குவம், மற்ற கதைகளின்றும் சிறிது எழும்பி நிற்கின்றது. அவ்வளவுதான்.
பகுப்புமுறை கொண்டு இக்கதைகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டிய அவசியம் இங்கில்லாததால், அடிப்படை யான சில விஷயங்களை எடுத்துக்கூறியிருக்கிறேன். வாசகர்கள் அவசியம் இப்புத்தகத்தை வாங்கித் தாமாகவே படித்துப் பார்ப்பது பொருத்தமாயிருக்கும்.
(தெனகுவி : செப்டம்பர் - 1963)

Page 51
88
கே.டானியலின்
"செக்ஸ்’ அக்கறை
ம்ே , டானியல் எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பு இது. இதில் வரும் உறவும் நிழலும்' என்ற கதையில், தனது நோக்கத்தைச் செயலாற்றுகையில், விளைவு எதிர் பாராதவிதமாக அமைந்த பொழுது கதாநாயகி தன்னை மாய்த்துக் கொள்கிறாள். புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்" கதையுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையானது.
'ஆசை" என்பது ஆண்மை குன்றிய ஒருவனின் சோகக் கதை.
"மனிதனுக்கு வாழ்க்கையிலே பற்றும்

89 ”ی ترقی محمد علیے 4 محمحمد قZ ہونے تح%7ZZZمجھے یgے
நம்பிக்கையும் மேலோங்க வேண்டும் என்ற கருத்தை முதன்மைப் படுத்துவதாக"க் கூறும் டானியலின் நோக்கம் இக்கதையில் நிறைவுறுகிறது. பாலுணர்வு இல்லாததால், சமூகத்தில் "மாமா" போன்றவர்களின் பங்கு மிகக் குறுகியது என்பதைக் கதை மூலம் உணர்த்துவிக்கும் ஆசியர், பொன்னம்மா என்ற பரத்தை மீது மேலீடான உணர்ச்சி எண்ணம் பெருகும் விதத்தில் வாசகர்களைத் தூண்டுகிறார்.
'மானம்' என்ற கதையில் நம்ப முடியாத திகைக்க வைக்கும் சம்பவங்களும், ஒருதலைப்பட்சமான பாத்திரச் சித்திரிப்புமுள்ளன. மனித இயல்பின் எதிர்மறை களைக் கோடிட்டுக் காட்டுவதாக "மரண நிழல்' அமைந்துள்ளது.
(தேனருவி - செப்டம்பர் 1963)

Page 52
90
நாவேந்தனின் தமிழ் துய்மை வாதம்
Ο Τ வேந்தன் எழுதிய சிறு கதைகளின் தொகுப்பு வாழ்வு பதினைந்து வருடங்களாக அவர் எழுதிய கதைகள், இன்றைய தரமான வாசகனுக்குத் திருப்தி தரா. இன்று ஈழத்து எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் காணப்படும் ஒரு பரபரப்பான விழிப்புணர்வு கால கட்டத்தில் 'வாழ்வு' என்ற தொகுப்பு வெளி வந்திருப்பதே ஒரு முரண்பாடு தான். தொகுப்பாக வெளியிடும்போது பொறுக்கி எடுத்த கதைகளைத் தேர்ந்து தொகுக்க வேண்டாமா? அல்லது கதைகளைத் தானும் செப்பனிட்ட பின் சேர்த்துக் கொள்ள

്യമീമൈമ് ബി-7ബ് 97
வேண்டாமா?அதுதான் ஆசிரியனுக்கே உரித்தான சுதந்திரம் இருக்கின்றதே என்று துணிந்து வெளியிட்டுவிட்டார். முயற்சிக்காக நாம் உற்சாகப்படுத்துவது அவசியந்தான். ஆனால் அறுவடை பற்றிய அபிப்பிராயம் கூறுவதற்கு வாசகர்களுக்குத்தான் உரிமையுண்டு.
கதைகள் எழுதப்பட்ட காலம், கதாசிரியரின் கோட் பாடுகள், வாழ்க்கை - இலக்கியம் பற்றிய நோக்கு, கதாசிரியரின் வசதிக் குறைவுகள் (Inadequacies in respect of
familiarity with modern techniques and craft of short story writing) இத்தனையையும் மனதிற் கொண்டு, கனிந்த நோக்குடன் ‘வாழ்வு" தொகுப்பைப் படித்தால், முகஞ்சுளிக்காமல் பாராட்டி விடலாம்.
"திரைப்படங்களையும், மர்ம நாவல்களையும் பார்த்துப் படித்துக் காதல் செய்யத் துடிப்பவர்களையும், உணவுக்கு வேண்டியதை உடைக்காகவே செலவழித்து வாழத் துடிக்கின்ற ஆடம்பர பிரியர்களான ஆடவரையும், பெண்டிரையும் ஆன்மீக வழிபாட்டிலேயே தம்மைக் கரைத்துக் கொள்ள விரும்புகின்ற சிதம்பரர்களையும் மறந்து விட்டு இலக்கியம் படைக்க என்னாலியலாது. அத்தகைய கருத்துக்கு உயர்வு கொடுக்கப்படுகின்ற காலத்தில் வாழ்பவனாக நான் இருப்பதால்." என்கிறார் கதாசிரியர்.
நல்லது. நாவேந்தனின் தனியியல்பை (individuality) இங்கு நாம் காண்கிறோம். ஆனால் அவர் "படைத்துவிட்ட

Page 53
92 ஈழத்துச் சிறுகதைகளுரம்
இலக்கியத்தில்" அவரது நோக்கம் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளது என்பதே நமது கேள்வி.
"பாத்திரங்களை அளவுக்கு அதிகமாகப் படைத்து விடுவதில் எள்ளளவும் ஒருப்பாடில்லை" என்கிறார். ஆனால் அவரது பாத்திரங்கள் யாவும் "பாத்திரத் தன்மையே" பெறவில்லை என்று நாம் கூறுகிறோம். அடைப்புக் கட்டத்துள் திணித்து நிரப்பப்பட்ட சொற் கூட்டங்கள் பாத்திரத் தன்மையை உருவாக்க முனைகின்றன. உயிர்தான் வரவில்லை.
“மொழி மரபையும், தூய்மையினையும் பேணுதற்கு ஒல்லும் வகையில் முயன்றிருக்கிறேன்" என்கிறார். உண்மை யில் பார்க்கப்போனால் நாவேந்தனின் இந்த முயற்சி தான் அவர் கதைகளை விட மேலெழும்பி நிற்கின்றது. அம் முயற்சியிற் கூட சாதாரண கனிஷ்ட வகுப்பு மாணவன் கூட விடத் தயங்கும் மொழிமரபை மீறுந்துணிவை சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார் கதாசிரியர். அதாவது உடனிகழ்கால இலக்கிய வகையான சிறு கதையை எழுத முனைகையில், தவிர்க்க முடியாமலே பல இடங்களில் மொழி மரபை மீறி இருக்கிறார். இது இயற்கை.
ஆசிரியரது முன்னுரை வாசகத்தைப் பொருட்படுத்தாத அவரது மீறுதல் கதையளவிலாகுதல் வெற்றி பெற்றுள்ளதா என்றால் அதிருப்தியே. இரண்டுங்கெட்டான் நிலை. எனவே ஆசிரியர் சொற்களைத் தூய்மைப் படுத்துவதில் இறங்கி விடுகிறார். பரிதாபமாக இருக்கின்றது.

93 تیتری محمد حملے 26ى محمد قZ بوڑھے تZZZو%مجھے لیے
இவ்வளவும் கூறுவது ஆசிரியரை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காக வல்ல. உண்மை நிலையை எடுத்துக் கூறுவதற்காகவே. ஆசிரியரிடம் கற்பனைத் திறனும், திட்டவட்டமான சில கொள்கைகளும் இருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆசிரியர் சமூக யதார்த்தவாதியாகவோ, கற்பனாலயவாதியாகவோ, இயற்கைவாதியாகவோ, அழகியல்வாதியாகவோ, வெறுமனே யதார்த்தவாதியாகவோ, மனோவியல் வாதியாகவோ, பண்டிதவாதியாகவோ, எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும். அதைப் பற்றித் தட்டிக் கேட்க வாசகனுக்கு உரிமை கிடையாது. ஆனால் உடனிகழ்கால மற்றைய கதைகளுடன் ஆசிரியரது கதை களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஈழத்துச் சிறு கதை ஆசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களில் ஒருவரான நாவேந்தனையும் பட்டியல் சேர்க்க முனைவது "சுய ஏமாற்றமாகும்.'
தமது ஆற்றலைச் சிறந்த முறையில் பயன்படுத்தித் தரமான படைப்பாளியாக நாவேந்தன் வரவேண்டும் என்பதே எமது அவா. ஆசிரியரால் அது முடியக்கூடியது. நாவேந்தன், நவீன எழுத்தாளர்கள் மீது கொண்டுள்ள போலி வெறுப்பை அறவே அகற்ற வேண்டும்.
நவீன தமிழ்ச் சிறுகதைகளைப் படிக்க வேண்டும். ஆங்கிலமொழி மூலமாகுதல் தமிழ் மொழி மூலமாகுதல் நவீன பிறமொழிக்கதைகளை வாசிக்க வேண்டும். தூய்மை வாதம், மொழி மரபைப் பேணுதல் போன்ற தீவிர தீக்கோழி

Page 54
94. ஈழத்துச் சிறுகதைகளும்
மனோபாவம் ஒரு கால எல்லை வரை தான் கடைப் பிடிக்கக் கூடியவை என்பதை உணர வேண்டும். நடை முறையில் இவை எல்லாம் சாத்தியமாகா. அப்படியில்லை தொல்காப்பிய காலத்துக்கே தான் திரும்பிப் போக வேண்டு மென்றால், போய்விடலாம். ஆனால் அந்தக் கால மதிப்புகள், சூத்திரங்களுடன் 'சிறுகதை' எழுத முன் வர வேண்டாம். ஏனென்றால் சிறுகதை போன்றவையும் வாழும் இலக்கியங்கள்' என்று நிரூபணமாகி வருகின்றன.
நாவேந்தனின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு, முன்னேற்றமடைந்த வாசகனை ஏமாற்றமாட்டாது என்று நம்புகிறோம்.
(தெனகுவி மார்ச் : 1963)
කුංකුං

95
கல்லூரிச் சஞ்சிகைக் கதைகள் போன்றவை
T ட்டிக் கதைகள் என்ற தொகுப்பிலுள்ள 'கதைகள்' பற்றிய அக்க்றை மாத்திரமே இவ்விடத்தில் எமக்கு உண்டு; 'போட்டி' பற்றிய விபரங்களை அலசி ஆராய இங்கு இடமில்லை.
ஈழத்து எழுத்தாளர்களின் (நோக்கு, அறிவு, அனுபவம், வயது போன்றவற்றில் இளமை யுடையவர்கள்) இன்றைய எழுத்துப் போக்கில் ஒரு கோணத்தை இனங் காட்டி நிற்பது இத்தொகுதி
ஒன்பது கதைகள். நடை அழகினால் மாத்திரம் இரு கதைகள் கவனத்தை ஈருவன; சொல்ல வந்தவற்றை நேரடியாகச் சொல்லி விட்ட திருப்தியில் அமைந்துவிட்ட வியாசங்கள் ஏனையவை. இவை

Page 55
96 ஈழத்துச் சிறுகதைகளுரமச்
அடிப்படையான, வெளிப்படையாகத் தெரியும் உறுதிப் பொருள்கள்; ஆனாலும் ஒவ்வொன்றிலும் தனித்தன்மை யான சிற்சில குணப் பண்புகள் உண்டு.
சுருங்கிய மொழியில் அவற்றை நாம் இங்கு எடுத்துரைப்பது, வாசகர்கள் தாமாகவே அபிப்பிராயம் உருவாக்கிக் கொள்வதற்காகத் தான்; விரிவாகவே ரசனைப் பாங்கில் மதிப்புரை இங்கு நாம் எழுதிவிட்டால், அது தனி வாசகனின் அழுத்தமான உணர்வு அதிகமாகத் தொனிக்கும் விமர்சனமாக அமைந்துவிடும்.
கதைத்துறையில் கைவைக்க வந்தபொழுது முதல் முயற்சியாக அமைந்திருப்பதனால், கதைகள் பாராட்டத் தக்கவை என்று பெருவாரியானவற்றிற்கு விவரணை கொடுக்கலாம். 'உறுதி", "யாருக்குப் பெருமை', 'முதலாம் அப்பியாசங்கள் உட்பட உள்ள இந்த நவகதைகளுள் -
'பூ' பிரமாதமான வடிவங் கொண்ட கதை. கை தேர்ந்த சிருஷ்டிவல்லானின் மெருகைக் காணலாம். கதையை எழுதியவர் பெயர் எம்.ஏ.ரகுமான் என்று காணக்கிடக்கின்றது.
உணர்ச்சிக்கு அப்பால்' என்ற கதையில், கதையின் முக்கியமான கருத்து சிதறுண்ட விஸ்தரிப்பினால் சிதைந்து விட்டது. 'செம்பியன் செல்வனின் நடையில் கவர்ச்சியுண்டு.
சிதம்பரத்தினி நேரடியாகவே கதையைச் சொல்லிய போதும், எடுத்துக் கொண்ட கருவி-உத்தி-காலவாதியானது. 'காதல்" என்பது 'புனிதமாகவும் இருக்கலாம் என்பதற்கு யதார்த்த நிலையில் அமைந்த ஒரு அழகிய விளக்கம் இக்கதை. ۔۔۔ــــــــ۔

=്യ കീമഞ്ജു4് 7962-799 97
‘மணிமேகலையின் கதை குமுதம்" கதைப் போக்கில் அமைந்திருப்பதால், ரசனை சீர்குலைந்தாலும், தீவிர தேசிய வாத உணர்ச்சிகளைக் கிண்டல் செய்கின்றது.
பாலகிருஷ்ணனின் 'வேள்வி'யில் பிரயத்தனமான எழுத்து நடை சொற்களுக்குரிய மதிப்புகளைக் கீழிறக்கி விடுகின்றது. இதயத்தைத் தொடும் விதத்தில் சித்திரம் வரையப்பட்டுள்ளது.
வெகுளி என்ற கதை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்த பூனையின் கதையாயிற்று. வெட்கம், வெட்கம்.
நீரோடை நல்லதொரு கருத்தைக் கொண்டது. ஆனால் அதனைக் கதை என்று கூறுவதற்கு ஏற்ற விதத்தில் அது அமைந்திராதது துரதிர்ஷ்டமே.
மொத்தத்தில் - பாதை தெரிந்து, பாதையை இனங் கண்டு கொண்ட இன்றைய நிலையில் - பாதை நெடுவழி யாயினும் அதில் நடந்து பயில விழையாமல் - பம்மாத்துப் பத்திரிகை ரகக் கதைகளில் மனதைப் பறிகொடுத்து விட்ட இளம் எழுத்தாளர்கள் - முளையிலே கிள்ளி எறிந்து விடப்படாதிருக்க வேண்டுமாயின் - நல்ல கதைகளை முதலிற் படிக்க வேண்டும்; இதன் பின் எழுதத் தொடங்க வேண்டும்.
பள்ளிக்கூட மாணவர்களின் கதைகளடங்கிய கல்லூரிச் சஞ்சிகை போன்றது போட்டிக் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு.
(தேனருவி :1963)

Page 56
98
பவானி (ஆழ்வாப்பிள்ளை) பெண்ணியக் கதை முதல்வர்
கடவுளரும் மனிதரும்
பவானி ஆழ்வாப்பிள்ளையின் கதைகளிலுள்ள கருப்பொருள்கள் (Piots) அதீத நாடகப் பண்பு (melodra - matic) வாய்ந்தவையாய் இருக்கின்றன. தமிழ் நாட்டில் பத்திரிகை ரகக் asagasait Wel-Made Stories 6TQpg|Lualif களும், தமிழ்த் திரைப்படங்களில் புகுத்தப்படும் செயற்கையான முதல், இடை, கடைப் பகுதிகளை எழுதும் கதாசிரியர்களும் அமைக்கும் மேலீடான a 600Tid5 6.16 Taootlib (Sentimentality) இவர் கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

ag AZźZzZzřasesøszó YS962-176979 99
இவருடைய கதைகளில் வரும் பாத்திரங்கள் இளங் காதலர்களாகவும், புதிதாக மணமாகிய அல்லது மணமாகப் போகும் இளம் பராயத்தினராயும் இருக்கின்றனர். வளரிளம் பருவத்தினரின் முதிர்ச்சியடையாத, விகற்பமான, ஆசாபாசங்களின் பிரதிபலிப்பாகவே இவ்வாசிரியையின் கதைகள் இருக்கின்றன. இவருடைய கதைகளில் உள்ள உள்ளடக்கத்தை வரவேற்க முடியாதாயினும், இவருடைய கதைகளில் அமைந்த உருவத்தைக் குறை கூறுவதற்கில்லை. சிறுகதை எழுதும் கைவண்ணமும், கவிதாவுணர்வும் இவரிடம் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இன்னொரு கோணத்தில் நின்று பார்க்கையில் மானசிகக் காதல் என்றும் புனிதக் காதல் என்றும் வெற்றுப் பேச்சுப் பேசாது, ஒருவிதத் துணிவுடன், மனிதர்கள் சுகத்திலும், வாழ்விலும் எழும் சலன எண்ணங்களையும், செயல்களையும் படம் பிடித்திருக்கிறார். இளம் தம்பதி களிடையே அல்லது காதலர்களிடையே எழும் பந்தமும் பாசமும், மனிதாபிமானமும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் பண்பும் இவருடைய கதைகளில் உள்ளடங்கியவை. எனவே துணிவுக்குப் பாராட்டுதலும், விழைவுக்குக் கண்டனமும் தெரிவிக்க வேண்டி யிருக்கின்றது.
இனி, இவரது கதைகளை ஒவ்வொன்றாகப்
Luntil Guitib:
காப்பு' என்ற கதை சிறப்பாக அமைந்திருக்கின்றது.
மணமான பெண்ணொருத்தி-குரூபி-தனித்தே ரயிலில்

Page 57
700 ஈழத்துச் சிறுகதைகளுசமச்
பிரயாணஞ் செய்கையில் மணமாகாத வாலிபன் ஒருவனுடனும், மணமாகிய இன்னொரு அழகிய பெண்ணுடனும் பிரயாணம் செய்ய நேரிடுகிறது. வாலிபன் அழகிய மாது மீது பொருந்தாக் காமங் கொள்கிறான். இச்செய்கையின் தாக்குதலினால் குரூபியின் டேதையுள்ளம் எரிச்சலாகக் கொந்தளிக்கின்றது. அவளது மனவோட்டம் தர்க்கரீதியாக அமைகின்றது. கதையில் உணர்த்தப்படுவது யாதெனில் மணமான பெண்ணுக்கு - அழகிக்குத் - தாலி எவ்விதம் வேலிபோல் நின்று காமுகனிடமிருந்து காப்பாற்றி நின்றதோ - குரூபிக்குத் தனது குரூபமே அவ்விதம் துணை செய்தது என்பதாகும்.
'விடிவை நோக்கி" என்ற மற்ற கதை ஒன்றும், யதார்த்த பூர்வமாய் அமைந்துள்ளது. கிராமத்திய மக்கள் ஒருசிலரின் மனப்பாங்கை அழகாக வெளிப்படுத்திக் காட்டுகிறார் ஆசிரியை ஏனைய கதைகளில், மன்னிப்பாரா, சரியா தப்பா, அன்பின் விலை, ஆகிய மூன்றும் அக்கதை களில் அமைந்த மேலீடான உணர்ச்சி வண்ணத்தால் கதைகளில் கீழோடும் மனிதாபிமான உணர்வு அருவருக்கத் தக்க முறையில் வடிவம் பெற்றுள்ளது. இந்த நாடகப் பண்புமுறை செப்பனிடப்பட்டுக் கலைநயமாக உணர்த்தப் பட்டிருந்தால் ஒருவேளை சிறப்புற்றிருக்கும்.
'பிரார்த்தனை, ஜீவநதி ஆகிய கதைகளில் முறையே செயற்கையான வேலிக்குள் அடங்கிய தமிழ்ப் பெண்ணின் கற்பும், பாசமும் கதைப் பொருளாக உள்ளன. ஆனால்,

707 محی ترتی ھے۔ حلیے ۶6ی محمد قZ ترجمے تح%7ZZZمجھے ہے
நாடகப் பண்பு அதிகம் உண்டு. 'உன்னை உணர பூரணச் சிறுகதை வடிவம் பெறாமல் அங்கு ஒரு விவரண வருணனையும், இங்கு ஒரு செயற்கைச் சித்திரிப்பும், இடையில் ஒரு மன நெகிழ்வுப் படப்பிடிப்பும் கொண்ட ஒரு கதை. இக்கதையின் உள்ளடக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் அசட்டு அபிமான உணர்ச்சியை ஊட்டுவது.
‘வாழ்வது எதற்காக?' என்பது சினமா பாணி தியாகத்தை உணர்த்துவிக்கும் ஒரு கதை. புதிர் என்பதும் சினமாப் பாணிக்கதை. நிறைவு' ஒரு சாதாரண பத்திரிகைக் கதை. அழியாப் புகழ்' அவ்விதமே. "சந்திப்பு', 'மனிதன்' கதைகள் சுமாராக அமைந்திருக்கின்றன.
பவானியின் கதைகள் தொடர்பாக 1960களில் நான் கொண்டிருந்த பார்வையே இது. இன்று பெண்ணிய நோக்கில் ஆராயும் பொழுது அபிப்பிராயங்கள் சில மாறுபடலாம்.
(தெனநவி - பெப்ரவரி : 1963)
st
§6

Page 58
702
எம்.ஏ.ரகுமானின் முன்னோடிப் பரிசோதனைக் கதை
6தலித்து மணஞ் செய்தவர் இருவர். மனைவி கர்ப்பமுற்றாள். கர்ப்பக் கோளாறினால் தாம்பத்திய உறவு துண்டிக்கப்பட்டது. தம்பதிகள் சிலகாலம் பிரிந்திருக்க நேர்ந்தது. மனைவி மாற்றான் ஒருவனுடன் உடலுறவு கொண்டிருந்தாள். கரு வளரத் தொடங்கியதும், தனது கணவனுடன் வலிந்து உறவாடினாள். அவன் டொக்டரின் கட்டளைக்குப் பயந்து இசைய மறுத்தான். அவள் மரண மெய்தினாள். அவள் கர்ப்பிணி யானதால் மரணமெய்தினாள் என்று டொக்டர் மூலம் அறிந்த கணவன், பூவிலே மகரந்தம் சேர்த்த வண்டு நானல்லன்' என்று முடிக்கிறான். இது கதையின் கருப் பொருள், சம்பவக் கோவை. கதையின் கதைப் பொருள்

703 محی ترقی محمد سے صحیرہ ق7%7zzzzzzمجھے وے
அடிநாதக் கருத்து என்ன? அது டி.எச். லோரன்ஸ் என்ற ஆங்கில நாவலாசிரியரின் பாணியில் அமைந்திருக்கின்றது. அதாவது சட்டர்லி சீமாட்டியின் காதலன்' என்ற நாவலின் சாயலானது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இயற்பண்பு வாதம் (Naturalism) என்று கூறும் பொழுது அது ஒரு தனி வகை. அந்த வகையான இலக்கியத்தை லோரன்ஸ் படைக்கவில்லையாயினும் வேறு அர்த்தத்தில் லோரன்ஸை இயற்பண்புவாதி என்று அழைக்கலாம். அந்த அர்த்தத்தில் பார்த்தால் பூ' ஒரு லோரன்ஸ்ஸின் இயற்கைவாதக் கதை எனலாம்.
பூ யதார்த்த பூர்வமானதாகவும் இயல்பான தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது.
ஒப்பாரியின் ஒலியுடன் கதை ஆரம்பமாகின்றது. ஒப்பாரியை வைப்பவர் ஒரு தாய் என்பதும் இறந்தவள் மகள் என்பதும் அவ்வாய்மொழி இலக்கியப் பாடல் முதலிலேயே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி விடுகின்றது.
உரைநடையில் அமைந்த முதற் பந்தியில், தன்மை ஒருமையில், ஒரு கதாபாத்திரம் பேசுவதைக் கேட்கிறோம். அப்பாத்திரம், முன்னிலையில் உள்ள வேறு ஒரு பாத்திரத் துடன் பேசுகின்றது. ஆனால் அந்த வேற்றுப் பாத்திரம் - கல்யாணி - பூத்துச் சொரிகையிலே பூ கருகிப் போய் விட்டவள். எனவே தன்மையில் உள்ள பாத்திரம் தன்னுள் தான், பேசிக் கொள்கிறது.

Page 59
704 ஈழத்துச் சிறு சதைகளுரம்
இரண்டாவது பந்தியில் - வெளிநடப்பில் நடக்கும் உரையாடல் ஒன்றைத் தன்னுள் பேசிக் கொண்டிருக்கும் பாத்திரம் இடைநிறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. அப் பேச்சு 'என்பின் குழலட்டையை சுண்டுகிறது." தாய்க் கிழவியின் ஒப்பாரிக் குரல் மூலம் தனக்குரித்தான கல்யாணி இறந்துவிட்டாள் என்ற செய்தியை ஏற்கனவே அறிந்திருந்த பாத்திரம் "நேர்ஸின் விழிகள் துளாவிய கணப் பொழுதில், மெளன பாஷையில் ஊர்ஜிதமாக அறிந்து கொள்கின்றது"
மூன்றாவது பந்தியில் பாத்திரம் தான் அறிந்த செய்தி, தனது வெளியுலக நடப்பில், தன்னுடலை எவ்விதம் தாக்கு கின்றது என்பதை விளக்குகின்றது. ககனத்து ஒளிமுழுதும் அஸ்தமிக்க. அமாவாசை மையிருட்டு அகண்டாகாரமாக விரிகின்றது. இருள் குதிர்ந்த அந்தப்பாளையிலே சினைத் திருந்த அக்கினிக் கோலங்கள் எல்லாம் என் சென்னியிலே அறுந்து விழுந்து, கேசத்தைப் பொசுக்கி விட்டதைப் போன்று, சிகை எரிந்த நாற்றமோ? பிணம் வெந்து கக்கும் புலால் நாற்றமோ? விழி மதகுகளைத் தகர்த்துப் பெரும் கண்ணிர்.
கவிதாவழியாகக் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சி நிலையை விபரிக்கப் புகுந்த கதாசிரியர், ஒரளவுக்கு அவ்வுணர்ச்சி நிலையை வாசகனுக்குத் தொற்றுவிப்பதில் வெற்றி கண்டாலும், பிரயாசையாக உருவகங்களைப் புகுத்தியி ருப்பது, அந்தரங்கமான இதயத்தூய்மையான ஒரு சோக நிலையைத் தடைப்படுத்துவதாக அமைந்து விட்டது.

705 ۶ی محترتی ہے۔ بڑے ص ۶ی محمد قZ ہونے تحZZZ/ثر%مجھے ہے
திரைப்பட ரீதியில் நிகழ்ச்சிச் சித்திரங்களைத் தொடுத்துச் செல்லும் உத்தி, வசீகரமாக அமைந்துள்ளது.
அடுத்த பந்தியில் நேர்ஸின் சப்பாத்துக் குதி பற்றிய விவகாரத்தைத் தனது விரல் பொருந்த மறுக்கும் கிறாதியூடாக வாசகர்களைப் பார்க்கச் செய்கிறார் ஆசிரியர் திரைப்படப் பிடிப்பாளரின் 'கமரா செய்யும் தொழிலை இங்கு கதாசிரியர் செய்கிறார். "மரங்கொத்திப் பறவை மரத்தினைக் குடையும் பொழுது ஏற்படும் ஒலியினைப் பிரதி பண்ணுகின்றது" என்பதும் ஒரு சினமா உத்தியாகும்.
நேர்ஸின் குதியுயர்ந்த சப்பாத்து பாத்திரத்தின் நினை வோட்டத்தில் பின்னோக்கிச் செல்கின்றது.
கல்யாணியை தான் முதலில் சந்தித்த காட்சியை, நேர்ஸின் சப்பாத்துடன் தொடர்புபடுத்துகின்றது. சுருங்கிய சொற்றொடர்களில் கல்யாணியைக் கல்யாணம் செய்து கொண்ட விவகாரம்; அடுத்த பந்தியில் பாத்திரத்தின் எண்ணோட்டம் மூலம் எடுத்துரைக்கப்படுகின்றது.
அடுத்த பந்தியில் உள்ள உவமைகளும், உருவகங்களும் ஒரு சில நிதர்ஸன வாழ்க்கைப் போக்குகள் பற்றிய செப்பலும் இறுக்கமாக அமைந்திருக்கின்றன.
‘என் முன்னால் நடமாடும் ஒவ்வொருத்தியையும், கற்பனையிலே என் காதலியாக்கி. தினம் தினம் புதிது புதிதாக யாரையோ காதலிக்கிறேன் என்று ஊமைக் கற்பனைகளிலே கூச்சம் போக்கி. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிய மீன் முட்களாகின்றன."

Page 60
706 ஈழத்துச் சிறு சதைகளுரம்
அடுத்து விபரிக்கப்படும் கதை நிகழ்ச்சி, கல்யாணியின் திருமணத்தின் பின் 15 நாட்களுக்குப் பின் நடந்த தொன்றாகும். “விழிகளில் நீர் உற்கைகள் உதிருகின்றன. கன்னத்திலே மஞ்சாடிக் குழி சுழிய உதட்டினை விரிக்காது உதிர்ந்து விடும் அந்தக் குஞ்சிரிப்பினை எங்கே கற்றுக் கொண்டாய். போன்ற ஆசிரியரது வருணனைக் கற்பனை நயமானவை. கைதேர்ந்த எழுத்தாளர் ஒருவர்தான் இவ்விதமான ஒரிஜினல் பாவனையில் எழுத முடியும்.
பழைய சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் அதே நேரத்தில் கதாபாத்திரம் நிதர்ஸனமாக நடக்கும் ஒரு உரையாடலையும் கேட்கின்றது. Cut-Back உத்திகொண்டு ஆசிரியர், இரு கண்காணிப் பெண்கள் பற்றி இங்கு கூறியிருப்பினும், அது கதையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராததால் அனாவசியமானது.
தம்பதிகளின் மூன்றாண்டு வாழ்க்கையின் பின், கல்யாணி கர்ப்பவதியான நிகழ்ச்சியைச் சொற் சிக்கனத்துடன் விபரிக்கும் ஆசிரியர், நடையில் அழகியல் இனிமை துவள்கின்றது.
'நீ மட்டும் அன்றலர்ந்த மலரின் மலர்ச்சியினால் உன் முகத்தை நிரப்பிக்கொண்டு மொட்டின்இதழ்களைப் பூட்ட விழ்க்கும் இரகசியத்தினை அம்பலப்படுத்தும் குறுநகை அரும்புகின்றாய். அதனைத் தலைகவிழ்ந்து நிலத்திலே உதிர்தலுக்குப் பெயர்தான் நாணமோ?"

707 ۶ی ترقی محمد سمیٹے عتی محمد قz ہوتے تھ77zzڑھے سے
பின், கதையில் கல்யாணியின் சிசேரியன் ஒபரேஷன்' பற்றிக் கூறப்படுகின்றது. இக்கட்டத்தில் விபரிக்கப்படும் :
"ஐயோ, யார் குழந்தை வேண்டுமென்றது? தாயைக் காப்பாற்றித் தாருங்கள் டொக்டர், அது போதும் என்று அலறிவிட்டேன். உணர்ச்சிகளைப் போர்வையிட்டு பேசுவது தான் நாகரிகமாம் - அந்தக் கணம், உணர்ச்சிச் சுழலிலே சகல வற்றையும் இழந்துவிட்டதுரும்பாகத் தவிக்கின்றேன்" என்ற பகுதி யதார்த்த பூர்வமாக அமைந்துள்ளது.
டொக்டர் மயில்வாகனத்தின் "வாலிப எழுச்சிகளின் உயிர் முடிச்சுகளைத் திருகி” கூறும் விபரம் அடுத்த பந்தியில் கூறப்படுகின்றது. அதற்கடுத்த பந்தியில் கதையின் உச்சக் கட்டம் வந்து, பொருத்தமான உள்ளுறை உவமையுடன் கதை முடிகின்றது.
(6тағай67 : 09-05-1965)
இதனை எழுதிய எம்.ஏ.ரகுமான், இப்பொழுது சென்னையில் வசிக்கிறார். (இக்கதை, எந்தவொரு சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெறாதபோதிலும், புதிய வாசகர்கள் நலன் கருதி, 1960களில், செய்தி இதழில் வெளிவந்த இந்த எனது பத்தியைச் சேர்த்துள்ளேன்.)

Page 61
708
மட்டக்களப்புப் பிராந்தியப் பேச்சு வழக்கில் கதை
Dட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் ஒரு தினுசு கேட்பதற்கு வேடிக்கை. ஆனால் அதிலும் ஒரு கவிதைச் சுவை. ஏனைய பிரதேசங்களில் பேச்சுத் தமிழும் அசைவில், ஒசையில், உச்சரிப் பில் வார்த்தை ஒழுங்குகளில் தனித்து நிற்பவை. எந்த மொழியும் அப்படித் தான். ஆங்கிலத்தை ஆங்கிலேயன் பேசுவது போலவா அமெரிக்கன் பேசுகிறான்? இந்தியன் பேசுகிறான்? நீர்கொழுப்புச் சிங்களவன் பேசுவது போலவா பிபிளைச் சிங்களவன் சிங்களம் பேசுகிறான்? இது இயற்கை.
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் எழுதப்படும் சிறுகதைகளைப் படிப்பதற்கு எனக்கு விருப்பம். 'ஸெண்டி மென்டல்'- பற்று. அப்படிப் பட்ட சிறுகதைகளில் இரண்டு தான் என் நினைப்பில் நிற்கின்றன. ஒன்று எஸ்.பொன்னுத்துரை எழுதிய பூஜ்யம்'

709 حیتر محی محمد نے 6 محی محمد قZ ہوتی تھے تح%7ZZZمجھے وے
மற்றது ஆர். தங்கத்துரை எழுதிய 'சூனியம்' (தலைப்பு "சரியென்று தான் நினைக்கிறேன்) மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் எனக்குப் பரிச்சயம் உண்டு என்றபடியால் மேற்கூறிய இரு கதைகளையும் 'பேச்சுத்தமிழ்' என்ற முதற் காரணத்திற்காக என்னால் இரசிக்க முடிந்தது. வேறு சில எழுத்தாளர்களும் இம்மாதிரி எழுதிய கதைகள் என் கண்களுக்குப் படாமலிருக்கக் கூடும். நான்கூட இனம் இனத்துடன்' என்றொரு கதை எழுதினேன். அதில் பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை; இருந்தாலும் ஒரு சில மட்டக்களப்பு வார்த்தைகளை அதில் பெய்த்திருந்தேன்.
சமீபத்தில் ஒரு மட்டக்களப்புக் கதை' படித்தேன். சிரத்தை' என்ற பெயரில் சத்தியன் என்பவர் இளம்பிறை' என்ற பத்திரிகையில் எழுதியிருந்தார். கதையில் அங்கு ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் கதையைச் சொன்ன முறை (reatment) நன்றாக இருந்தது. அத்துடன் மட்டக்களப்புத் தமிழிலும் எத்தனையோ உட்பிரிவுகள் இருக்கின்றன என்ற உண்மையும் அக்கதை மூலம் எனக்குத் தெரியவந்தது.
சுவாமி விபுலானந்தரின் பிறப்பிடமாகிய காரைநகர் என்ற கிராமத்தில் பேசும் தமிழ், புளியந்தீவு என்ற 'டவுனில்" பேசும் தமிழிலிருந்து சிறிது வேறுபட்டு நிற்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. w
'சிரத்தை' என்ற கதையில் வினோதமாக ஒலித்த பகுதிகளை வாசகர்களுடன் சேர்ந்து மீண்டும் இரசிக்க விரும்புகிறேன்.

Page 62
770 ஈழத்துச் சிறுகதைகளுரம்
கடப்புல - வரக்காட்டல்ல வாகா - கிணத்தடியில புள்ளைய உட்டுத்து வந்தவன் மாதிரி - ஒள்ளுப்பமும், ஒள்ளம் - தப்பிலிவேலை - அப்பனையும், அம்மையையும் திண்டன் - வெட்டுக்குத்துக் காலத்தில வட்டைக்கப் போவன் - கந்துதொவைக்குமாப்போல, இரிக்கிற சதிரத்த வெயில் கருக்கும் - என்ட உதடு பயத்தங்கிளிர சொண்டு மாதிரி நல்ல செகப்பா இரிக்காம் - என்ட தலமயிர் நல்ல சுருட்ட - இறால் சுருண்டமாதிரி - என்டமுகம் பாவப்பழம் மாதிரி - கொழறுவதான வாப்பாக்குது - மரத்தார உழுந்தவன மாடு வெட்டுற கணக்காத் தான் இரிந்திச்சி எனக்கு. கண்ண கத்தா யறிய-உடுறன்-ஊசேத்தி-எல்லூவா கொள்ளப்பேர் - வளிய உழுந்துற்றான் - வகுறுபத்துது - கொள்ளக்கூடாத கனவு - வெள்ளப்புல வட்டைகபோற - ஊத்துக்கு - இயினக்கி எழகி - எளந்தாரிப்புள்ளயன் - பொயித்து - மனே அம்மாச்சி - வைக்கல்ல வெளஞ்சத்த சாக்குலையும் கட்டலாம் - வினையகாறன்.
மேற்கண்ட பகுதிகளைக் கதையுடன் தொடர்பு படுத்திப்படித்தால் தான் - அவற்றின் கற்பனை நயமும் கவிதைச் சுழற்சியும் இனிக்கும். சத்தியன் தொடர்ந்து இம் மாதிரிக் கதைகள் எழுதினால் படிப்பதற்கு வளமான சிறு கதைகள் ஈழத்திலும் உண்டு என்று நினைத்துக் கொள்ளலா மல்லவா?
(செய்தி : 18-07-1965)

777
செ.கதிர்காம நாதனின் மார்க்சியத் தேடல் - கொட்டும் பணி
ழுெத்தாளர் செ.கதிர்காம நாதனிடம் வயதையும் மீறிய 'சமூக அலசற் பார்வை' இருந்தது. அவர் பார்க்கும் பார்வை உடனடி யதார்த்தம் தொனிப்பதாக இருக்கின்றது. சமூகப் பிரச்சினைகளை அவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதை அவரது கதைகள் மூலம் அறியக் கூடியதாகவும் இருக்கின்றது.
செ.கதிர்காமநாதனின் கதை களைப் பற்றிய பொதுவானதொரு மதிப்பீட்டைப் பின்வரும் மேற் கோள்கள் காட்டும்.
"இந்நூலிலுள்ளவை, பல்கலைக் கழக வாழ்க்கை முடிந்த பின்னர்

Page 63
772 ஈழத்துச் சிறுகதைகளுரம்
பரந்த உலகைக் கண்ட பாரநெஞ்சுடன் எழுதப் பெற்றவை. உலக வாழ்க்கையை நேர்நின்று நோக்கும் முயற்சியின் எதிரொலியை இவற்றிற் கேட்கலாம்." (க.கைலாசபதி)
"ஆசிரியர் தம் வாழ்விற் பெற்ற அனுபவமும் கொதிப்பும் கதைகள் பூராவும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். இவற்றில் உள்ள சிறப்புப்பண்பு தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட சமுதாய உணர்வாகும்". (செ.கணேசலிங்கன்)
கதாசிரியர் கதிர்காமநாதன் தனது இலக்கியக் கோட்பாடாக எதனை வரித்துள்ளார் என்று நாம் முதலில் பார்க்க வேண்டும். இது அடிப்படையான கேள்வி. அவர் கூறுகிறார்.
"கலையும் இலக்கியமும் மக்களுக்காக என்ற கோட் பாட்டை நான் தழுவி நிற்பவன்; ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கையின் பிரதிபலிப்பும் விளைவுகளுமே என் கதைகளின் உள்ளடக்கம். வாழ்க்கை தாங்கொணாத, அழுத்திக் கொல்கிற சுமையாக ஏன் இருக்கிறதென்பதைத் துருவி ஆராயும் உளப்பாங்கே எனது கதைகளின் ஊற்றுக்கண்."
"இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான கதைகளுக்கு யாழ்ப்பாணத்துக் கிராமங்களே பகைப்புலம். கிராமிய மக்களின் சமூகப் பொருளாதார அமைப்பில் சாதியும் நிலமும் கீழ்மட்ட அரசாங்கத் தொழில்களும் மிக இன்றியமையாத இடத்தைப் பெறுவன குறிப்பாக கிராமிய

ஆசிரிய/சருமச் 1962-1979 773
விவசாயிகளின் பொருளமைப்பில் நிலம், ஆடு, மாடுகள் முதலான கால் நடைகள் முக்கிய சொத்துடைமை யாயுள்ளன."
"இருள் சூழ்ந்த வாழ்க்கையில் யுக மாறுதல்களை வேண்டிநிற்கும் துடிப்பு நிறைந்த கிராமிய மக்களுக்கு" இப்புத்தகத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.
தனது காலத்துச் சமூக மாற்றங்களை அவதானிக்காமல் பாராமுகமாக எந்தக் கலைஞனும் இருத்தல் கூடாது. தனது நேரடிச் சூழலையும் சமூகப் பின்னணியையும் வைத்துத் தனது அனுபவங்களைக் கதைகளாக இவ்வாசிரியர் தீட்டுகிறார். அதனால் கதைகள் யதார்த்தமாக இருக்கின்றன.
கதைகள் எனக்குப் பிடித்திருந்தாலும் கதாசிரியரின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் கதை களின் எளிய காவியத் தன்மைக்கு ஏற்றவாறு இலகுவான நேரடி வர்ணனையாக இல்லை. அகவாய்வுக் கதைகளுக்கு உபயோகிக்கப்படும் ஒருவித மயக்க உரைநடையில் கதைகள் எழுதப்பட்டிருப்பதால் கதை விளக்கும் அனுபவம் நேர்மையானதாக இல்லை. ஆனால் இங்கு அவதானிக்க வேண்டிய விஷயம் கதைகள் கொண்டுள்ள உருவத்தைப் பற்றியதல்ல. கதாசிரியரின் நோக்கமும், செயலாற்றலும் பற்றிய அக்கறைதானாகும். அதாவது கதைகள் எவ்வளவு தூரம் அவருடைய நோக்கத்துக்கு இணங்க அமைந்துள்ளன என்பதாகும்.
"குளிர் சுவாத்தியம் ஒத்து வராது" என்பது படிப்பதற்குச் சுவையானதொரு கதை. அதிலே தமிழ்

Page 64
774 ஈழத்துச் சிறுகதைசசூரம்
வாத்தியார்களின் நிலைமை, இடமாற்றத்துக்கான அவர்களின் பரிதவிப்பு ஆகியவை சம்பவப் பின்னணி யாகவுள்ள நிதர்சன உண்மைகள். கதையைப் படித்து முடித்ததும் ஒருவித மனிதாபிமான உணர்வு படிப்பவர் களிடையே பரிவர்த்தனை செயப்படுகிறது. கதையில் லேசான நகைச்சுவை இழையோடுகிறது.
"அதனாலென்ன பெருமூச்சுத்தானே” சுவையாக எழுதப்பட்ட மற்றுமொரு கதை. இந்தக் கதை சித்திரிக்கும் பிரச்சினையின் தன்மையில் உள்ள ஆழம் ஒருபுறமிருக்க இக்கதையில் உபயோகிக்கப்படும் கதாபாத்திர மேற் கோள்கள் யதார்த்தமாகவும் கவிதைச் சுருதியிலும் இருப்பதால் இன்பமூட்டவும் செய்கின்றது.
"சில்லென்று பூத்த." கதையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. தாம்பத்திய உறவில் உள்ள நுண்ணிய தன்மைகளில் ஓரிரண்டை உளவியல் ரீதியாக எடுத்துக் காட்டுகிறார்.
"ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்கிறான்" கதையின் புறநிலை விஸ்தரிப்பு புவியியற் பாணியாக இருக்கின்றது. இந்தக் கதையில் ஆசிரியர் சாடும் வர்க்கத்தினர் மீது நாம் பொங்கி எழா வண்ணம் எம்மை தடுத்து வைப்பது ஆசிரியரின் மெருகுக் குறைவான கலை நயந்தான்.
"அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கட்டும்" என்ற கதை பட்டணத்துச் சீர்கேடுகளில் ஒன்றான நேர்முகப் பேட்டி

775 . ی محتری محور بحیے 26ى محمد قZ ترنعمتح%7ZZZمجھے خطے
ஊழல்கள் பற்றிப் பேசுவது. இதுவும் படிக்கச் சுவையாக உள்ளது.
மேற்சொன்ன ஐந்து கதைகளும் எனக்குப் பிடித்தவை. ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் சில கதைகளைப் படிக்கும்பொழுது நான் பெறும் அனுபவம் எவ்விதம் இருக்குமோ ஏறத்தாழ அதே அளவு அனுபவத்தை கதிர்காமநாதனின் மேற்சொன்ன ஐந்து கதைகளையும் படிக்கும் பொழுது நான் பெற்றேன்.
இவற்றைவிட 'கொட்டும்பனி", "சோழகம்", அழுவதற்கும்', 'சிரிப்பதற்கும்'; நிந்தனை, "யாழ்ப்பாணம் இங்கே வாழ்கிறது' ஆகிய கதைகளும் சுமாரான கதைகளாக இடம் பெற்றுள்ளன.
செ.கதிர்காமநாதனின் 'கொட்டும் பனியில் நல்ல சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஆனால் 'சிறுகதை' என்ற வடிவம் ஆசிரியர் கூறவரும் அனைத்தையும் கூற வைப்பதற்கு ஏற்றதொரு வாகனமாக இல்லை.
(வீரகேசரி வாசவெளியீடு : 17-03-1969)

Page 65
776
என்.எஸ்.எம்.ராமையாவின் தோட்டம் வாழ் மக்களின்
படப்பிடிப்பு
6 ழுத்தாளர் என்.எஸ்.எம். ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து என்ற சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய மு.நித்தியானந்தன், இவ்வாறு கூறுகிறார்.
1960களில் எழுத்துத் துறைக்குள் நுழைந்த என்.எஸ்.எம்.ராமையா தன் எழுத்தின் வளத்தால் கடல் கடந்த இடங்களிலும் கெளரவத்தைப் பெற்றிருக்கிறார். குறைவாக எழுதி கணிசமான வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மலையகம் என்ற பிராந்தியத்திற்கே உரிய விசேஷமான தன்மைகளைக் கொண்டெழுந்த மலை யகச் சிறுகதை இலக்கியத்திற்கு உருவம் சமைத்தவர் என்ற வகையில் ராமையா வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறார்."

777 تھی ترتی ہے۔ہلکے 4ی محمد ق4 روم تحZZ7zZZمجھے کے
ராமையா எழுதிய பன்னிரண்டு சிறுகதைள் இதில் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். கு.அழகிரி சாமியின் கதைகள் போன்று கருத்தைச் சொல்லாமற் சொல்லும் பண்பு கொண்டவை இக்கதைகள்.
உதாரணமாக, பிஞ்சுக் குவியல் என்ற கதையின் தலைப்பே ராமையாவின் மனிதாபிமான, குழந்தைப் பரிவு உள்ளத்தைக் காட்டிவிடுகின்றது. கதையில் வரும் கிழவி, குழந்தை உள்ளத்தைப் புரியாதவள் என்பதை, கடைசி வாக்கியத்தில் - "உதடுகள் வெறுப்போடு முணுமுணுத்துக் கொண்டிருந்தன" - சுட்டாமற் சுட்டுகிறார். கிழவி அவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணமில்லாமலில்லை. பொருளா தார, உளவியல் காரணங்களே அவை. அவளால் ஒன்றுஞ் செய்யமுடியாத நிலை வரும்பொழுது மீண்டும் மடுவத்திற்கு வேலை செய்யச் செல்கிறாள். ஒரே கதையில், பல நிலைகளை ஆசிரியர் கொட்டாமற் சிந்தாமற் சித்திரித்துக் காட்டுவது பாராட்டுக்குரியது.
வேட்கை" என்ற கதையும் ஒரு வயோதிபப் பாத்திரம் பற்றியதுதான். இக்கதையில் கவனத்தை ஈர்ப்பது என்ன வென்றால், கிழவன் பாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் முறைதான். குறை நிறைகளுடன் கூடிய ஒரு தோட்டத்துப் பாத்திரமாக வரும் கிழவனின் வேட்கை நிராசையாகப் போவதைப் படிக்கும்பொழுது வாசகரிடத்தில் எழும் ஒருவித அனுதாபம் அந்தச் சோகக் கதையைச் சொல்லாமற் சொல்கிறது.

Page 66
፲78 ஈழத்துச் சிறுகதைகளுசமச்
தரிசனம் கதையிலும் ஒரு கிழவியே கதாநாயகி. மலை நாட்டுக் கதைகளில் பெரும்பாலானவை, அப்பகுதி மக்களின் அவல நிலையையே சித்திரிப்பவை. அவலச் சூழல்களிலும்கூட வாழ்க்கையின் வினோதங்கள், வேடிக்கைகள், இலேசான சம்பவங்கள் போன்றவையும் இடம் பெறுகின்றன தானே? ராமையா இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டுவதன் மூலம், வாசகர்கள் மலைநாட்டு வாழ்க்கையின் மறு பக்கத்தைக் காண்பதற்கு நமக்கு வகை செய்து தருகிறார்.
'மழை" என்ற கதையில், "தோட்டத்திலே இருக்கிற எல்லாச் சனங்களுக்கும் நல்ல காரியம் ஒண்ணு செய்யிறது முக்கியமோ, இல்லே உங்க அஞ்சாறு பேரோட லாபம் முக்கியமாங்கிறதை கொஞ்சம் யோசிக்கணும்" என்று தலைவர் கூறுகிறார். இக்கதையின் "மோதல்" அல்லது முரண்பாடு விவகாரம், கொழும்பில் வசிக்கும் என் போன்ற வாசகர்களுக்குச் சரியாகப் புரியவில்லை. கதை புரிகிறது. ஆனால் கதாசிரியரின் கருத்து நியாயமானதாக - ஏற்றுக் கொள்ளக்கூடியதாக என்னளவில் இல்லை.
மற்றொரு கிழப் பாத்திரத்தையும் ஒரு குமரியையும், எங்கோ ஒரு தவறு கதையில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர், கதையைச் சுவையாகச் சொல்வதுடன் இக்கதையில் வரும் சிங்களப் பாத்திரம் அலாதி) தவறு எங்கேயிருக்கிறது (வலியரும் மெலியாரும்) என்பதை வாசகர்கள் தாமே உணரும்படி விட்டுவிடுகிறார். இங்கும் ராமையாவின் கலைநயம் பளிச்சிடுகின்றது.

779 9ሪmኃ- ፖ9ፖ፰2/;. ق4 تروع کے تحZZZ7ZZZمجھے ہے
நிறைவு' என்ற கதையை முடிக்கும்போது, "அன்றைய அந்தச் சம்பவத்தின் போது ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியும், பயமும் இப்போது எண்ணிப் பார்க்கும்போது பொருளற்ற கவிதை போல, நிழலே அற்றதாக உணர்கிறேன். ஆயினும், அந்தச் சிறுவனைப் பார்க்கும்போதும் நினைக்கும் போதும் ஏற்படும் அந்த நினைவு மட்டும் குறையவில்லை. "ஏனோ தெரியவில்லை," என ராமையா முடிக்கிறார். இந்த "ஏனோ தெரியவில்லை" என்ற தோரணையே, ஆசிரியரின் தேடல் மனப்பாங்கை பகிரங்கப்படுத்துகிறது. இன்னொரு விதத்தில் கூறினால், முன்னுரையாசிரியர் கூறுவதுபோல, "கலைஞனது தேடல் இலக்கின் பரிமாணங்கள் அகன்று செல்கின்றன."
என்.எஸ்.எம். ராமையாவை ஒரு நல்ல சிறுகதை ஆசிரியராக அறிமுகப்படுத்திய கதையே, "ஒரு கூடைக் கொழுந்து"ஆயினும் அதற்குப் பிறகு அவர் எழுதிய கதைகள் அதனைக் காட்டிலும் சிறப்பாக அமைந்தன. 'ஈழத்து இலக்கியம்' என்ற பிரக்ஞை பூர்வமான உணர்வு ஏற்படத் தொடங்கிய காலகட்டத்தில் ராமையா, திருச்செந்தூரன், காவலூர் ராசதுரை, பொ.தம்பிராசா, அ.ரஃபேல், மகேஸ்வைரமுத்து, அ.முத்துலிங்கம் போன்ற வேறு சில எழுத்தாளர்களையும், தினகரன் முன்னாள் ஆசிரியர் கைலாசபதி அறிமுகப்படுத்தி வைத்தார். அக்கால கட்டத்தில், முன்மாதிரியாக ராமையாவின் கதைகளும் அமைந்தன. இப்பொழுது படிக்கும்பொழுது ஒரு கூடைக் கொழுந்து பிரத்தியேகச் சிறப்புடையதாகத் தெரியவில்லை.

Page 67
720 ஈழத்துச் சிறு சதைசகுக் தனிநலச் சார்பிலிருந்து, குடும்பநலச் சார்பாக உணர்வு பிறப்பதை தீக்குளிப்பு எடுத்துக் காட்டுகிறது. ரஞ்சிதம் என்ற பாத்திரம் எடுக்கும் முடிவு மனிதாபிமானமுடையதாக அமைகின்றது.
முதிர்ச்சியடையாத பாத்திரம் என்று தனது கொச்சைத் தமிழில் தனது சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக ரணம்' என்ற கதை இருக்கின்றது. படிப்பதற்குச் சுவையாக இருக்கின்றது.
தோட்டத்து மக்களிடையே மாத்திரமல்ல, பிற சமுகத்தினரிடமும் கூட அறியாமையும், ஈனத்தனமும், சமயத்தின் பேரில் படுபாதகங்களும் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டும் விதமாகவும், கடவுளுக்குத் திருவிழா எடுக்கப் போய்ப் படுகொலை செய்த ஒருவனுக்குச் சார்பாக மற்றொருவன் பரிந்து பேசி அவன் தூக்கு மேடைக்குச் செல்வதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில் தொனிக்கும் இழிவரலைக் கொண்டு வரும் விதமாகவும் ஆசிரியர் ரகுபதி ராகவ' என்ற கதையை எழுதியுள்ளார்.
நகைச்சுவையுடன், நல்ல கருத்துக்களைக் கொண்ட (நகர - கிராம வாழ்க்கை ஒப்பீடு தேனீக்கள் போன்று ஒற்றுமையாயிருக்க வேண்டிய அவசியம்) கதையாகவும் முற்றுகை' அமைந்துள்ளது. ராமையாவின் நகைச்சுவை முறுவலைக் கொண்டுவந்து, அதேவேளையில் சிந்திக்கவும் தூண்டுகிறது.

727 تھی محتر ”یہ محمد حملے 46 تھی ھے 4 ترجمے تحZZZZZZمجھے لیے
கடைசிக் கதையான, "கோவில்" கதை, சுவாரஸ்யமாக ஆரம்பித்து சப்பென்று முடிந்து விடுகிறது. இங்கு ஒரு கிழவனின் மூலம் தோட்டத்து மக்களது வாழ்வின் ஒரு பகுதியைச் சொல்லி விளக்குகிறார்.
ஆக, என்.எஸ்.எம். ராமையாவின் கதைகள் (1961 முதல் எழுதப்பட்டவை) தோட்டத்து வாழ் மக்களின் வாழ்க்கையைக் கலைநயமாகப் படம் பிடிக்கின்றன. அவ்விதமான வாழ்க்கை முறை இன்று முற்றாகவே மாறி விட்டது என்றும் கூறுவதற்கில்லை. பல கோடி அனுபவம் நிறைந்த தமது வாழ்க்கையில் ஒரு சிலவற்றை அறிந்துணர ஒரு வாய்ப்பை இத்தொகுதி நமக்குத் தருகின்றது. ராமையாவின் வானொலி நாடகங்களும் பிறவும் நூல் வடிவம் பெறவேண்டும். ܀
(தினகரன் வாரமஞ்சரி : 06-07-1969)
st
§6

Page 68
722 செ.யோகநாதனின் முன்மாதிரியான பரிசோதனைக் கதைகள்
திமிழ் நாட்டிலும் நன்கு அறிமுகமாகிய செ.யோகநாதனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது. 1964ல் வெளியாகியது. யோகநாதன் ஏனைய நல்ல எழுத்தாளர்களைப் போலவே வாழ்க்கையை விமர்சனம் செய்பவர். முரண்பாடுகளை அவர் குத்திக் காட்டுகின்றார். அல்லது எள்ளி நகையாடுகிறார். பாத்திரங்களின் மன வோட்டத்தில் தாமும் சேர்ந்து அவற்றின் அக உலகங்களில் துழாவு கின்றார். சொற்களை ஆளும் சக்தி பெற்றமையைப் பல இடங்களில் காட்டுகின்றார். பொருத்தமான படிமங் களையும், உவமை உருவகங்களையும் அழகாகப் பயன்படுத்துகின்றார்.

723 محی محتر محی ہے- یے ص محکمہ قz ہونے تح%7zzzمجھے
வாசகர் கற்பனைக்குப் போதிய இடம் கொடுக்கின்றார். கவிதைலயமான மொழிநடையில் லாகிரி மயக்கத்தை இடையிடையே தருகிறார். பிரத்தியட்ச வாழ்வினைத் தனது கண்ணோட்டத்தில் படம் பிடிக்கும் ஆசிரியர், உற்சாகம் காரணமாகச் சில இடங்களில் யதார்த்த சித்திரிப்புகளை மிகைப்பட எழுதினாலும் அவருடைய சமூகப் பார்வையைக் குறைகூற முடியாதிருக்கின்றது. சிற்சில இடங்களில் அவருடைய சொற்கூட்டங்கள், ஓசை நிரப்பிகளாகவே இருக்கின்றன.
இவ்வாறு வளரும் பருவத்தில் ஏற்பட்ட ஓரிரு குறை களும் நிறைகள் பலவும் கொண்ட இவரது ஆரம்பகாலக் கதைகள் இவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தின.
கலைஞன் என்ற கதையில் பூஷ்வா மனப்பான்மை யுடைய எழுத்தாளர்களை எள்ளிநகையாடுவதையும், சமூகத் தளங்களின் வேறுபாட்டைச் சித்திரித்துக் காட்டுவதையும் ஆசிரியர் முதல் நோக்கமாகக் கொண்டுள்ளார். எழுத்தாளர் கந்தசாமி பின்வருமாறு நினைப்பதாகக் கதாசிரியர் வரைந்துள்ளார்.
"இந்த உலகம்தான் எவ்வளவு இனிமையானது; ஆனால் தூய்மையின் தன்மையை நோக்காது அழுகையில் மனத்திருப்தியடையும் இந்தக் கீழ் ஜென்மங்கள், இவ்வினிமைக்குக் குந்தகம் ஆகின்றார்களே' என்றும்

Page 69
724 ஈழத்துச் சிறு சதைசளுரம் "மனித சமுதாயம் இன்பத்தைத் துய்ப்பதற்காக கலைஞன் தன்னுடைய பேனாவின் வன்மையால் உல்லாசப் பூங்கா அமைத்துக் கொள்கிறான்" என்றும், அந்த எழுத்தாளரின் 'ரொமான்டிக் பண்பை யோகநாதன் சித்திரித்துக் காட்டுகின்றார்.
"நன்னிலைச் சமுதாயத்திற்கு இடங்கள் தரும் முன்னணிகளாக, அவர்கள் இருவரும் நடந்து வருகிறார்கள். சமூகத்தின் இழிவைத் துடைக்கும் ஆவேசம் எழுத்தாளரின் நெஞ்சில் வீறுகொண்டு ஆடியது. என்றுமே சேரியின் அழுகலுள் நுழையாத கந்தசாமி, சமுதாய ஊழலைச் சுத்திகரித்துச் சொல்லும் வீரனின் பெருமிதத் தோடு முன்னே நடக்கின்றான். எழுத்தாளரின் கண்கள் சாத்தானை இழுத்து அடித்துச் சாட்டையின் சீற்றத்தோடு வாசலுள் தாவுகின்றன."
மேற்கண்ட வரிகளில் யோகநாதனின் மறைமுக மான கிண்டல் நடை பொருத்தமாக வந்து அமைந்துள்ளது.
'சோளகம்" கதையின் முதல் பந்தியிலேயே யோக நாதனின் தனித்தன்மையான வெளிப்பாட்டுத் திறனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சாதாரணமாகச் சொல்லி விட்டால் உப்புச் சப்பற்றதாகிவிடும் என்று நினைத்து அவர் குண கூடார்த்தமாகவும், கலா ரீதியாகவும் குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் வறுமை நிலைமை அவர் உணர்த்தும் அழகைப் பாருங்கள்:

്യമീമന്ത്ര4 1962-79) ബ്ര た25
"அமைதியை வழங்கிய காற்றின் ஊடாக அந்தக் கிராமத்தின் இதயக் குரல் இருண்ட நடு நிசியிலும், மினு மினுப்பும் கை விளக்குகளின் அசைவினில் அடிநாதமாகத் தெரிகின்றது."
இதயக் குரல் அடிநாதமாக ஒலிக்கின்றது என்று கூறாமல், (ஒலிக்கிறது என்பதையும் உட்படுத்தி) வறுமை யான இருதயக் குரலை உணர முடிகின்றது என்று காட்டு வதற்காக, அடிநாதமாகத் தெரிகின்றன என எழுதுகின்றார்.
இந்தக் கதையை (Montage) மொன்டாஜ் ஸ்ருதியில் பூரணம்' என்ற பாத்திரத்தின் அறிமுகத்துடன் ஆரம்பிக் கின்றார். இடையிடையே பாத்திரங்கள் சார்பாக அவர்கள் மொழியில் தனது பார்வையைச் செலுத்தியும் மாற்றிடையே பாத்திரங்களின் சுய நினைவோட்டத்தைப் பின்னிப் பின்னியும் எழுதுகின்றார். ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்க்கைப் போக்கையும் வறுமையையும் சுருக்கமாக விளக்குகின்றார். அவர் இக்கதையில் கையாளும் உவமைகள் மீனவர்களுக்குப் பழக்கமான அல்லது உரித்தானவையாக உள்ளன.
இரண்டு மூன்று இடங்களில் மனதைத் தொடும்படி பாத்திர வார்ப்பையும், சம்பவக் கோவையையும் முனைப்புப் படுத்திக் காட்டுகின்றார். 28ம் பக்கத்தில் உள்ள இரண்டாவது பந்தியில், "பூரணம் தும்புக் கட்டைகளை கயக்கிக் கொண்டு அழுத மனதைத் தெரியவிடாமல் வெளியே சிரிக்கின்றாள்" என்றும், கதை முடிவில்.

Page 70
726 ஈழத்துச் சிறு சதைசகும்
"பூரணம் இந்தச் சோளகம் முடிய பிறகு பாரணை. இனி உங்களுக்கு ஒரு குறையும் நான் வையேன்" "கணபதி ஏழு வருடங்களுக்கு முன்பாக இருந்து சொல்லிக் கொண்டு வரும் வார்த்தைகள் அவளது காதோடு கேட்கின்றன. அந்தச் சொற்கள் வெறும் ஒலி வடிவத்தில் எழுந்து காற்றில் கலந்து மறைந்துவிட்டன. ஆனால் வரப்போகும் சோளகங்கள்." என்றும் வரையப்பட்டுள்ள பகுதிகள் உணர்ச்சி நிரம்பிவழியும் பகுதிகள் எனக் கூறலாம்.
"மலரும் கொடியும்' என்பது ஓர் மனோதத்துவக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. மொழி அழகும் வண்ணப் படிமங்களும் கொண்டது. கதையின் சிற்சில இடங்களில் போலி உணர்ச்சிப் பரவசம் ஆசிரியரை அறியாமலேயே பற்றிக்கொண்டு வந்து விடுகின்றது. தக்க இடங்களில் உணர்வலைகளை வாசகர்களுக்கு ஆசிரியர் தொற்றவைக்கின்றார். என்றாலும், கடைசியில் படித்து முடிக்கும்பொழுது ஆணித்தரமாக அவர் என்ன கூற வருகின்றார் என்பது புலப்படவில்லை.
நிறங்கள்" என்ற கதையில், முதலில் கதை நிகழும் இடத்தையும் கதாபாத்திரங்களின் நிலை பற்றியும் தனது விவரணை மூலமாகவும் வழிப்போக்கர்களின் வாய்மொழி மூலமாகவும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு பின், கறுப்பி என்ற பாத்திரத்தின் ஊடாக, ஆசிரியர் தனது
பார்வையைச் செலுத்துகின்றார்.

467zzzaseraá zo62-1979 727
உதாரணமாக, 101 ஆம் பக்க ஆரம்பத்தில், "மெல்லிய சுடர் ஒன்று தார் வீதியில் கருமையில் இருந்து கிளம்பிப் பறப்பதுபோல அவள் கண்மணிப் பார்வையுள் மனத் திரை விரிக்கின்றது" என்று எழுதியிருக்கின்றார்.
இது கதாசிரியரின் பாத்திர அசைவு வர்ணனை, அதற்கு அடுத்த வரியிலே நேரடியாகவே பாத்திரத்துள் தானே புகுந்து விடுகின்றார். "அந்தச் சுடரிலே தான் எத்தனை வர்ணவரிகள், அதன் கண்ணிமைக்கும் மென் எழிலில் தான் எத்தனை இன்பத்தின் கதிர்கள்! இவ்வாறு மூன்றாவது நிலையில் இருந்து விவரணையையும் பாத்திரம் தானே தன்னுள் பேசுவது போலவும் பின்னிப் பின்னி எழுதிச் செல்கிறார். அதாவது பாத்திரத்தின் சார்பாக பாத்திரம் பேசுவது போன்று கதாசிரியர் கூறியபின், கதை யோட்டத்தைச் சடுதியில் முறித்து, முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி பற்றி வர்ணித்துச் செல்கிறார். இப்பொழுது கறுப்பியின் தாயாகிய பொன்னியின் சார்பாக அவள் மன நினைவுக் கோவைகளையும், தனது சார்பாக வெளிநடப்பு களையும் விஸ்தரிக்கின்றார்.
"நெஞ்சம் கருக்கிருட்டு ஒழுங்கையில் சிக்கிய மாலைக் கண்ணனாகிவிட்டது" என்ற அவரது உருவகம் இறுக்கமாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம். மாறி மாறிப் பின்னோக்கியும் நிகழ்கால எடுத்துரைப்பாகவும் கதையை அவர் நகர்த்திச் செல்கின்றார்.

Page 71
728 ஈழத்துச் சிறுகதைகளுரம்
இந்தக் கதையைப் பெண் குலத்தின் இயல்பான நெகிழ்ந்த நெஞ்சத்தை முரண்பாட்டுப் பகைப்புலத்தில் யதார்த்தபூர்வமாகச் சித்திரிக்கின்றார். முதன்மையான இக்கதைப் பொருளுடன் துணைக்கதைப் பொருட்களை யும், வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். கறுப்பியின் பாத்திர வார்ப்பும் உளவியல் சித்திரிப்பும் அவற்றிற் சில.
யோகநாதன் கதைகள் உருவ அமைப்பில் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. பின்னர் அவர் எழுதி வரும் குறுநாவல்களில் உள்ளடக்கச் சிறப்பு மேலோங்கி நிற்கின்றது. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவத்தைப் பயன் படுத்துவதில் அவர் இப்பொழுது போதிய கவனம் செலுத்தி வருகின்றார் என்பதற்கு அவருடைய குறுநாவல் தொகுதி
சான்றாக இருக்கின்றது.
(தினகரன்நாளிதழ் 15-10-1973)

729
மு.தளையசிங்கத்தின் கதைகளில் "செக்ஸ்"ஒரு குறியீடு
ழுெத்தாளர் மு. தளைய சிங்கத்தின் புதுயுகம் பிறக்கிறது என்ற இத்தொகுப்பில் இடம் பெற்ற பெரும்பாலான கதைகள் செக்ஸ் பற்றியவை. எந்தவித அவசரங்களு மின்றி அனுபவிக்கப்பட வேண்டிய வாழ்க்கையின் ஓர் அம்சமே காம உறவு என்பது ஆசிரியரின் பார்வை. செக்ஸ் ஒரு குறியீடாக இக்கதைகளில் வருகின்றது.
வீழ்ச்சி" என்ற கதை ஏனைய கதைகளுக்கு ஓர் அறிமுகமாக அமைகிறது. தனது நாளாந்த வாழ்க்கை யில் எதிர்கொள்ளும் தடங்கல்கள், தடைகளை மீற எதிர்நீச்சல் அடிக்க முனையும் ஒருவனின் இயலாத் தன்மையைக் கதை காட்டுகிறது. தனது காலத்தின் இழிவான, கடையான தன்மைகளிலிருந்து மீள எத்தனிக்கும்

Page 72
730 ஈழத்துச் சிறுகதைசளுரம்
ஒருவன் அவ்வாறு மீள முடியாதிருப்பதையும் பத்தோடு பதினொன்றாகத் தானும் மாறுவதையும் கதை கூறுகிறது. ஆய்வறிவாளன் ஒருவனின் வீழ்ச்சியையும் ஆன்மாவின் வீழ்ச்சியையும் கதை சித்திரிக்கிறது.
புதுயுகம் பிறக்கிறது' என்ற கதையில் இடது சாரிப் போக்குடைய ஒருவன் (அவன் மனைவி கூறுகிறாள்: உனது முற்போக்கு எனது கடவுளைக் கொன்றுவிட்டது) தனது சொந்தப் பிரச்சினைக்குக் கடவுளே காரணமென்கிறான். இறுதி இலக்கு எவ்வளவு முக்கியமோ, இலக்கையடையும் வழியும் அதேயளவு முக்கியமானதுதான் என்பதையே ஆசிரியர் இங்கு காட்ட முற்படுகிறார்.
கோழை ஒருவன் முதற் தடவையாகத் தன்னை எதிர்கொள்வதையும், கால தாமதமாக ஞானோதயம் அவனுக்குப் பிறப்பதையும் "தேடல்" கதை விளக்குகிறது. அவன் தன்னையே தன்னில் தேடிப் பார்த்தபோது, தான் இத்தனை காலமும் வாழவில்லை என்பதை உணர்கிறான்.
கோட்டை'குறியீடான மற்றொரு கதை. புதுமைக்கும் பழமைக்கும் இடையில் மோதல், புதியவற்றை நிறுவ முற்படும் பொழுது ஏற்படும் இடைஞ்சல்கள், சமுதாயத்தின் அடிவேர்களைத் தனி நபர்கள் தகர்க்க முற்படும்பொழுது ஏற்படும் தோல்வி ஆகியனவற்றைக் கதை கூறகிறது.
யாழ்ப்பாணக் கலாசாரத்தில் வளர்ந்த ஒருவன்
உண்மையை நேர்கொண்டு பார்க்க எடுக்கும் தார்மீக ஆவேச நடவடிக்கைகளை இரத்தம்" கதை கூறுகிறது.

y 12/2//aseya rada-7979 737
மரணத்தையும் மீறி நிற்கும் இலட்சியங்கள் பற்றிக் 'கோயில்கள் கதை கூறுகிறது. 'பிறத்தியான்" மற்றொரு தேடல் முயற்சி.
தெய்வீகச் சிருஷ்டிக்கு அடையாளமாக உடலுறவு அமைவதைத் தொழுகை' என்ற கதை சித்திரிக்கிறது.
அதேவேளையில் வாழ்க்கையின் இறுதி நோக்கை யடையத் தடங்கலாக செக்ஸ் அமைவதை, சபதம்" கதை காட்டுகிறது. "வீழ்ச்சி' என்ற கதை ஒரு கோணத்தைச் சித்திரித்தால், 'வெளி மற்றொரு கோணத்தைக் காட்டுகிறது. இங்கு மானிடன் தெய்வத்துடன் சங்கமமாகிறான். தர்க்க யுகத்தினதும், ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளினதும் தோல்வியை இக்கதை காட்டுகிறது.
தளையசிங்கத்தின் கருத்துப்படி, அளவுக்கு மீறிய காமம், காம நோய்களைக் கொண்டு வருகிறது. ஆனால், மனித உணர்வுகள் அனைத்தையும் புறக்கணித்துப் புத்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதனால் உலகளாவிய அழிவே ஏற்பட்டுவிடுகிறது.
வெளியில் வரும் கதாநாயகன் ஒரு வேதாந்தி அவன் அமைதியாக இருக்கிறான். அதுவே ஆட்சேபனையைத் தெரிவிக்க உகந்த வழி. அதுவே பிரம்மம் என்று தளைய சிங்கம் நம்பினார்.
(Arts Magazine - English Service, S.L.B.C. 1974)

Page 73
732
பெண் நோக்கில்
சில கதைகள்
பூங்கோதை என்ற புனை பெயரில் எழுதிய பெண் எழுத்தாளர் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக நல்ல முறையில் எழுதப் பட்டுள்ளன. சமூக அக்கறை ஆசிரியை யிடம் இருப்பதைக் கதைகள் புலப் படுத்துகின்றன. கதை புனையும் ஆற்றலும் அவரிடமிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. நல்ல தெளிந்த தமிழில் நேரடியாகவே கதையைச் சொல்லும் முறை சிறப்பாக அமைந்துள்ளது.
வர்க்க பேதங்கள் காரணமாக
சமூகப் பிரச்சினைகளும், அதனை

733 محی ترتی محمد سمیٹے ع۶4ی محمد قZ ترقی کے تحZZZZZZمجھےgے
யொட்டி தனிமனிதப் பிரச்சினைகளும் எழுகின்றன என்ற உண்மையை விளக்குவதாகப் பல கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான பாத்திரங்கள் சமுதாயத்தின் அடித் தளத்தைச் சேர்ந்தவர்களாய் இருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது. பூங்கோதை, பிரச்சினைகளை அனுதாபத்துடன் நோக்குகிறார். பாத்திரங்களில் பெரும்பாலானோர் பெண் களாகவும் இருப்பதை நாம் காணலாம். பெண் உள்ளத்தின் மனப் போராட்டங்களைச் சித்திரிக்கையிலும், அசட்டு அபிமான உணர்ச்சியை அதாவது 'ஸென்டிமென்டலிஸ்’ பண்பை ஆசிரியை தவிர்த்திருப்பது பாராட்டத்தக்கது. தனிமனிதப் பிரச்சினைகள் தான் என்றாலும், பாத்திரங்கள் அவற்றில் மூழ்கி, விரக்திப் போக்கைக் கடைப்பிடிக்காமல் உறுதியான நம்பிக்கைகளுடன் இயங்குவது அவதானிக்கத் தக்கது. மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமான முறையில் கதைகள் எழுதப்பட்டுள்ளன.
இனி இவற்றை ஒவ்வொன்றாகச் சிறிது பார்ப்போம்.
'பிழைப்பு' என்ற கதையில் வேலைக்காரப் பெண் ணொருத்தியின் மன நிலையை அழகாகப் படம் பிடித்துள்ளார். எஜமானியின் காருண்யமற்ற செயலால் அவள் வேலையிழக்கிறாள். நோய்வாய்ப்பட்ட தனது தாயைச் சென்று பார்த்ததற்காக, அவள்தான் வேலை செய்த வீட்டிலிருந்து விரட்டப்படுகிறாள். 'வயிற்றுப் பசி பூர்த்தியான பின்தான், உள்ளத்தின் பசி பூர்த்தியாக வேண்டுமா?" என்று அவள் எழுப்பும் கேள்வி அவளுக்கே புதிராக இருக்கின்றது என்கிறார் ஆசிரியை.

Page 74
734 ஈழத்துச் சிறுகதைகளுசம் இந்தக் கதையில் எஜமானி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பது உணர்ந்துவிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம் உயர்ந்த வர்க்கத்தினர் மனிதாபிமான மற்றவர்களாக இருப்பதே என்பது ஆசிரியையின் கருத்து. இது ஒரு பொது விதி என்று சொல்வதற்கில்லை. புறநடை யாக, உயர்ந்த வர்க்கத்திலும், நெஞ்சிரக்கம் உள்ளவர்கள் இருக்கக்கூடும் எனக் கூறிவிட்டு, அடுத்த கதைக்கு வருவோம்.
'குடிசையில் ஒரு பிறந்த நாள்' இதுவும் உயர்ந்த வர்க்கத்தினரின் ஈவிரக்கமற்ற அல்லது பாராமுகமான செயல்களினால், நலிவுற்றோர் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறுகின்றது. ஒரு ரிக்ஷாக்காரன் தனது மகனின் பிறந்த நாளைத் தனக்கு இயன்ற வகையில் கொண்டாட நினைத்ததையும், அது முடியாமற் போனதையும் கதை கூறுகிறது. அத்துடன் தனது மகன் விபத்தில் காலிழந்த தற்கும், வீட்டுச் சீமாட்டி கட்டணம் செலுத்தத் தாமதித்த தற்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் உணர்த்துவிக்கப் படுகின்றது.
பதவி, பவிசு வந்தாலும், பழமையை மறந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர் சிலர் என்ற உண்மையை, 'காலங்கள்' என்ற கதை கூறுகிறது. ஆதங்கம் கொண்ட பெண் தன் பால்ய நண்பன் தன்னை மணஞ் செய்வான் என்று காத்திருந்து, ஏமாற்றம் அடைகிறாள். தான் அடைந்த அவமானத்தைத் துடைக்க அவளும், அவனைச் சின்னத் தனமாக நடத்திவிடுகிறாள். இதுதான் கதையின் முக்கிய நிகழ்ச்சி. w

735 تی محتر محی ہے۔ جملے 6 محی کے قZ ترقی کے تح%7ZZZمجھے ے
திக்கற்றோர் வாழ்வு மரத்துப்போய் விடுவதால், அவர்கள் இயந்திரம் போல, விருப்பு வெறுப்பற்ற நிலையில் இயங்குகிறார்கள். இந்த அவல நில்ை, ஏனையோருக்கு அசாதாரணமாகப் படுகின்றது. அவர்கள் ஆராய்ந்து பாராமல் இந்த வன்மை படைத்தவர்களைப் ‘பைத்தியம்' என்று கூசாமல் அழைத்துவிடுகிறார்கள். இதையே, ராதாவுக்குப் பைத்தியம்' என்ற கதை விளக்குகின்றது. ஒருசிலர் வன்மையுடன் விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு வேறுசிலர் காரணமாக இருக்கின்றனர்.
அந்த வேறு சிலர், மற்றையோரைப் புறக்கணித்து விட்டு சுயநலம் கருதிப் பின்னர், புறக்கணித்தோரை நாடுகின்றனர். புறக்கணிக்கப்பட்டோர், தாயை இழந்த நிலையிலும் யாசித்தோருக்கு உதவுகின்றனர். இதுதான் இந்தக் கதையின் விளக்கம்.
மேலிடத்தாரின் கருணை எத்தகைய உள்நோக்கம் கொண்டது என்பதைக் "கருணையின் மறுபுறம்” என்ற கதை அழகாகத் தீட்டுகின்றது. ஆயினும் இந்த வேஷதாரித் தனத்தை அம்பலப்படுத்தவும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாக இந்தக் கதையில் வரும் பாரதி என்ற பாத்திரத்தைக் காட்டலாம்.
பெண்ணின் மன உறுதியைக் காட்டுவதாக 'விண்ணப்பம்' என்ற கதை அமைந்துள்ளது. இந்தக் கதையில் வரும் கல்யாணி என்ற பாத்திரம், "வாழ்க்கையின்

Page 75
736 ஈழத்துச் சிறு சதைகளுரzச்
சுகங்களை விலகி நின்று ரசிப்பதிலும் ஒரு தனியான சுகம் இருக்கத்தான் செய்யும். பருவந் தப்பிய மழையரில் யாருக்கும் பிரயோசனம் இருக்க முடியாது" என்கிறாள்.
சங்கமித்தா - கதையில் அதிகாரவர்க்கம் ஏழை களிடத்தில் நடந்து கொள்ளும்போது தனக்கு என்ற முறையில் மேலும் சுரண்டுமேயொழிய, உறவு நிலையைக் கருத்துக்கு எடுத்துக்கொள்ளாது என்பது வலியுறுத்தப்படுகின்றது.
வேலைக்காரப் பெண்ணுடன் உறவு வைத்து, அதன் பயனாகப் பிறந்த குழந்தையுடனும் தகாத உறவு கொள்ள முற்படும் ஒருவனை, முகத்திலடித்தவாறு சவால்விடும் புதுமைப் பெண்ணாகச் சங்கமித்தாவுக்கு இலட்சிய வடிவம் கொடுத்துள்ளார் கதாசிரியை பூங்கோதை,
நியமம்' என்ற கதையில், தலைப்புக்கு ஏற்ப, விதியின் படியே யாவும் நடக்கின்றன என்பது உணர்ந்துவிக்கப் படுகின்றது. இது சரியான கருத்தா என்பதை வாசகர்கள் தாமே தீர்மானித்தல் வேண்டும்.
வேணிபுரத்து வெள்ளம் என்ற தொகுப்பில் அதே தலைப்பில் வரும் கதையில் சுந்தரம் என்பவனால் ஏமாற்றப் பட்ட பெண்கள் இருவர் வெள்ளத்தின் பின்னர் சந்திக்க நேரிட்டபோது ஏற்படும் அதிர்ச்சியுடன் கதை முடிகிறது. இந்தக் கதையில் பாத்திர வளர்ச்சி இன்னும் விரிவாக வடிவம் பெற்றிருக்கலாம். சிறுகதையின் இயற்கூறுகள் மேலும் சிறப்பாக இணக்கம் பெற்றிருக்கலாம். பிழைக்கத்

737 محی ترقی محمد ۔جمیئے بحیرہ ق%7zzzzzzzمجھےagے
தெரிந்தவன் - சந்தர்ப்பவாதிகளின் பேச்சும் செயலும் எப்படிப்பட்டவை அவர்கள் எவ்வாறு சாதாரணமானவர் களை ஏமாற்றுகிறார்கள் ஆகியவற்றை கதை வடிவில் ஆசிரியை எடுத்துக் கூறுகிறார். இந்தக் கதையில் ஆங்கில வார்த்தைகளும், இந்தியக் கதைகளில் காணப்படும் ஆங்கில உச்சரிப்பைக் கொண்ட சொற்களும் காணப் படுகின்றன.
இப்படியும் சில மனிதர்கள், ஏமாளிகளை நடிக்கத் தெரிந்தவர்கள் எவ்வாறு வசப்படுத்தித் தம் காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார்கள் என்பதையும், அனுபவப்பட்ட பின்னர்தான் அவர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதையும் கதை விளக்குகின்றது.
(தினகரன்நாளிதழ் : 30-04-1974)
§6

Page 76
738
செ.யோகநாதனின்
சமூகப் பார்வை
சிறுகதையைவிட நாவலை விரும்பும் வாசகர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. நீண்ட முழு நாவலையும் இந்த வாசகர்கள் அதிகம் விரும்புவதில்லை. இரண்டுக்கும் இடைப் பட்ட குறுநாவல்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. உடன் நிகழ்கால ஐரோப்பிய - அமெரிக்க - ஆப்பிரிக்க - நாவல்களும் அளவில் சிறியதாக - குறுநாவல்களாக வெளி வருகின்றன. அல்பேர்கெமு (Albert Camus) என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய பிறத்தியான் (Outsider) என்ற பிரபல நாவல் 120 பக்கங்களை மாத்திரமே கொண்டது. குறுநாவல் துறையைப் பிரபல்யப்படுத்தியவர்

739 محى محترمحی کے لیے صی محمد قZ بریعے تح7ZZzZZمجھے وے
அல்பேட்டோ மொறாவியா(Alberto Moravia) என்ற இத்தாலிய எழுத்தாளர் என்றே நான் நினைக்கிறேன். இந்தக் குறுநாவல்களை இத்தாலிய மொழியில் "நொவெல்லா" என்றும் அழைக்கிறார்கள்.
தமிழிலும் குறுநாவல்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. சிறுகதை ஒன்றில் சொல்ல முடியாததைப் பரந்த அளவில் குறுநாவலில் சொல்லிவிட முடிகிறது. சிறுகதை மூலம் தெரிவிக்க முடியாததைப் புதுக்கவிதை மூலம் இறுக்கமாக, அழுத்தமாகத் தெரிவிக்க முடிகிறது. எனவே, தமிழில் குறுநாவலும் புதுக்கவிதையும் இப்பொழுது பொப்' (Popular) பாடல்கள் போலப் பிரபல்யம் அடைந்து வருவதில் வியப்பில்லை. காலத்தின் தேவையை ஒட்டி இலக்கிய, கலை வடிவங்களும் அமைகின்றன.
செ.யோகநாதன் 1963க்கும் 1972க்கும் இடையில் எழுதிய ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு இப்பொழுது வெளிவந்திருக்கிறது. புத்தகத் தலைப்பில் சுட்டப்படுவது போல ஒளி நமக்கு வேண்டும் விரக்தியும் தோல்வி மனப்பான்மையும் நமக்குக் கூடாது, என்ற அடிப்படையில் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் ஐந்து குறுநாவல்களும் அமைகின்றன.
இதில் இடம்பெறும் "தோழமை என்றொரு சொல்' என்ற கதை யுனெஸ்கோ திட்டத்தின் கீழ் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டது. 20 வருடங்களும் மூன்று

Page 77
740 ஈழத்துச் சிறுகதைகளுரzச்
ஆசைகளும்' என்ற கதை சிங்களத்தில் வந்துள்ளது. இந்தக் கதையில் நிகழும் ஒரு சம்பவமும் ஹென்றி ஜயசேனாவின் நாடகமாகிய அப்பட்டபுத்தே மகக் நத்த'வில் வரும் சம்பவமும் உண்மை நிகழ்ச்சி ஒன்றைத் தழுவியவை களாகும்.
பல்கலைக்கழக வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சி களைப் பல பட்டதாரி மாணவர்கள் தமது கதைகளில் சித்திரித்திருக்கிறார்கள். ஆனால் காலஞ்சென்ற கதிர்காம நாதனும், செ.யோகநாதனும் அந்த வாழ்க்கை முறை வெளியே உள்ள சமூகத்தின் பிரதிபலிப்பே என்பதைத் தத்துவார்த்தமாக விவரித்திருக்கின்றனர். தனி மனிதன் அல்லது தன்னலப் போக்கை வெறுத்தல், சமூக நீதி நிலவ கூட்டுப் போராட்டத்தை மேற்கொள்ளல், மாறிவரும் சமூகத்திற்கேற்ற கல்விச் சீர்திருத்தங்களைச் செயற் படுத்துதல் வைதிக பழமைப் போக்கை மாற்றுதல் போன்றவை யோகநாதனின் குறுநாவல்களில் காணப்படும் அம்சங்கள்.
ஜானகி - பிராமணப் பெண் ஒருத்தி தனது குல மரபை ஒதுக்கி விதவைத் தாய்க்கும் தனக்குமாகச் சீவனோபாயம் நடத்துகிறாள். குலப்பெருமை பேசிய அவள் சகோதரனும் பிழைப்புக்காக, லொறி வண்டி ஒன்றில் கிளினர் வேலை பார்க்கிறான். தாழ்த்தப்பட்ட வகுப்பினள்
என்று கூறப்படும் ஒரு பெண் இந்தப் பிராமணப்

747 تیتری محمد - یے 6 محی محمد قZ ترقی بھی تحZZZZZ/مجھے وے
பெண்ணுக்கு வாழ்க்கை உபதேசம் செய்கிறாள். வேஷதாரித் தனமும் பழமை நாட்டமும் கண்டிக்கப்பட்டு புத்தொளிக் கான ஆயத்தங்கள் செய்யப்படுவதை இந்தக் கதை உணர்த்துவிக்கின்றது.
20 வருடங்களும் மூன்று ஆசைகளும் - தம்மிகா (மத்தியதர சிங்கள விவசாயி ஒருவரின் மகள்), சுமணதாஸ் (கல்லுடைத்து வாழ்க்கை நடத்தும் வறிய கிழவி ஒருத்தியின் மகன்), தர்மபால (கமக்காரர் ஒருவரின் மகன்), சிவகுமார் (சில்லறைக் கடைக்காரர் ஒருவரின் மகன்) ஆகிய பாத்திரங்கள் மூலம் பல்கலைக்கழக வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஆசிரியர் வெவ்வேறு குணநலங்கொண்ட பாத்திரங்கள் மத்தியில் சமூக யதார்த்தப் பிரக்ஞையை உண்டு பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்களுக்கு இடையில் ஏற்படும் தொடர்பு உண்மையைத் தரிசிக்க வைக்கிறது. தன்னலம் பேணல், குறுகிய மனப்பான்மை ஆகியன துன்பத்தை விளைவிக்கும். ஒடுக்கப்பட்டோரின் மேம் பாட்டிற்குத் தேவையான ஐக்கிய நடவடிக்கைகள் வேண்டும். எந்த விதமான ஒதுங்கிய மனப்பான்மையும் சுயநலமும் ஊறு விளைவிக்கின்றன என்பதே நாவலின் வெளிப்படை. ஆனால், இதனை வெறுமனே புகைப்பட யதார்த்தமாகக் காட்டாது, காரண காரியத்துடன் ஆய்வு முறை ரீதியில் இந்த யதார்த்தத்தை யோகநாதன் கொண்டு வருவது தனிச்சிறப்பு.

Page 78
742 ஈழத்துச் சிறுகதைகளும்
"தோழமை என்றொரு சொல்' - இந்தக் கதை "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்ற முதுமொழியை வலியுறுத்துவதாக அமைகிறது.
அந்த நாள் வரவேண்டும்' - கல்விச் சீர்திருத்தத்தைக் கோருகிறது. இது இப்பொழுது நடைமுறையில் இருந்து வருவது கண்கூடு.
திருச்சிற்றம்பலம்" - சுய இரங்கல் மனப்பான்மை களைந்து எறியப்பட்டு வாழ்க்கையில் ஒளி பிறக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது.
ஒளி நமக்கு வேண்டும்' - இன்று நமது காலத்திற்கு மிகப் பொருத்தமான தாரக மந்திரமாகும்.
(தினகரன் வாரமஞ்சரி : 06-07-1974)
st
శిష్ట

743
மண்குர் அசோகாவின்
பெண்மை நோக்கு
ஆற்க்கவிலக்கியத்துறையில் ஈடுபட்ட பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவராகக் கருதப் படும் மண்டூர் அசோகா எழுதிய சிறு கதைகளின் தொகுப்பு கொன்றைப் பூக்கள். தான் வாழும் கிராமத்தின் பின்னணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவ வரையறைகளுக்குள் நின்று அவர் தமது கதைகளை எழுதுகிறார்.
கனவுகளும் கண்ணிர்ப்பூக்களும்' என்ற கதையில் வரும் தேவி என்ற பாத்திரம் முதிர்ச்சியனுபவத்துடன் நடந்து கொள்ளும் விதத்தில், கதையில் நம்புந்தன்மையும் நேர்மையும் தொனிக்கின்றன. உளவியல் பார்வை யில் இப்பாத்திர வளர்ச்சியை ஆசிரியை மேற்கொள்கிறார். அசட்டு அபிமான

Page 79
744 ஈழத்துச் சிறுகதைசகும்
உணர்ச்சி இல்லை என்பதுடன், தேவி மீது ஒர் அனுதாபம் ஏற்படும் விதத்திலும் கதை பின்னப்பட்டுள்ளது.
'பொய்யான சுமைகளும் எரியும் இதயங்களும்' என்ற கதையில் கெளரி என்ற வெகுளிப் பெண்ணின் மன வளர்ச்சியைச் சித்திரிக்கிறார். இத்தகைய ஆழ்ந்த அனுபவச் சித்திரிப்பை பல எழுத்தாளர்களிடம் காண்பதரிது.
சாயும் கோபுரங்கள்', 'பாரம் கீழிறங்கியது'ஆகிய கதை களும் குறிப்பிடத்தக்கவை. துன்பச் சுருதியே கதைகளில் இழையோடுகிறது. இவருடைய ஏனைய நூல்களைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை.
ܐܲܡ
§6

745
புலோலியூர் க.சதாசிவத்தின் சிறுகதை வடிவ அக்கறை
புலோலியூர் க.சதாசிவம் எழுதிய பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு யுகப் பிரவேசம். இந்தத் தொகுப்பு ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடமொன் றினைப் பெறத்தக்கது. இதற்கான காரணம்: இதில் அடங்கியுள்ள கதைகள் உள்ளடக்கச் சிறப்பும், உருவ அழகும் ஒரே சமயத்தில் கொண்டு இருக்கின்றன. இதன் உள்ளடக்கம் நவீன உடன் நிகழ்கால வாழ்க்கை யின் சித்திரிப்பு. அதே போன்று உள்ளடக்கத்தன்மைக்கேற்ற விதத்தில் உருவமும் இணைந்து அழகூட்டு கின்றது.

Page 80
746 ஈழத்துச் சிறுகதைசகுரம்
சதாசிவம் எழுதிய, "யுகப் பிரவேசம்' உருவச் சிறப்பினால் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்படிக் கூறுவதனால், அதன் உள்ளடக்கம் சாமான்யமானதென்று அர்த்தமல்ல. உள்ளடக்க ரீதியாக இவை சமூகத்தின் முரண்பாடுகளைச் சொல்லாமற் சொல்லிச் சித்திரிக்கின்றன. முரண்பாடுகள் எப்பொழுதுமே இருந்து வருகின்றன. ஆனால், அவற்றிற்கான காரணம் என்ன என்று அலசுவதிலேயே உள்ளடக்கம் யதார்த்தத் தன்மையைப் பெறுகிறது.
புது வாழ்வு' தாம்பத்தியங் கூடப் பொருளாதாரப் பின்னணியில் வடிவமும், இயக்கமும் பெறுகிறது என்பதை உணர்த்தும் அதே வேளையில், மன நெகிழ்ச்சிக்கும் இடங் கொடுத்து குறியீட்டுடன் முடிவடைகின்றது. அணில் கோதிய நல்ல ரக மாம்பழம்' என்பது கதாநாயகி செல்லம்மாளின் நிலையைப் பொருத்தமாக விளக்குகிறது.
'அக்கா ஏன் அழுகிறாள்? இந்தக் கதையும் சோக உணர்வை நெறிப்படுத்திய வார்த்தைப் பிரயோகம் மூலம் வெளிப்படுத்துகின்றது. காசு என்பதே உறவின் எல்லையைத் தீர்மானிக்கிறது என்பது இங்கே உணர்த்து விக்கப்படுகின்றது.
"மண்" உழைத்து உழைத்துப் பாடுபடும் வர்க்கம், சொகுசான வாழ்க்கை நடத்தும் மற்றைய வர்க்கத்துடன் சம்பந்தப்படும் பொழுது, விளைவு திருப்திதராததுடன், பலத்த ஏமாற்றத்தையும் அளிக்கின்றது என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது.

.747 محی ترقی ھے ۔ حلیے 6 محی محمد قZ ہونے تح%7ZZZمجھے کے
அலை நுட்பமான முறையில் பெண்மையில் மென்மையையும், தியாக மனப்பான்மையையும் சித்திரிக்கும் அதே வேளையில், இனபேதம், வர்க்கப் பேதம் ஆகியனவற்றையும் மீறி மனிதாபிமானம் ஆட்சி செலுத்துகிறது என்பதை ஆசிரியர் அழகிய முறையில் காட்டுகிறார்.
'அஞ்சல்' திரைப்படக் கதைபோன்று (ஏளன அர்த்தத்தில் அல்ல) பழமைச் சிறப்புடன் கூடிய இந்தக் கதை எனக்குப் பிடித்தவற்றுள் ஒன்று. இங்கும் குடும்ப நல சுகாதாரம் என்று இப்பொழுது கெளரவமான முறையில் அழைக்கப்படும் குடும்பத்திட்டத்தை மறைமுகமாகக் கதாசிரியர் வலியுறுத்துகிறார் என நினைக்கிறேன்.
நெடுஞ்சாலை' - நகைச்சுவையுடன் எழுதப்பட்ட இந்த சுவாரஸ்யமான கதையில், "மாற்றமே இயற்கையின் நியதி” என்ற கருத்து தொட்டுக் காட்டப்படுகின்றது.
மூட்டத்தினுள்ளே கதையில் தோட்டப் பகுதிகளில் நிலவி வரும் அறியாமை, மூட நம்பிக்கைகள் போன்றவை அநீதிக்கு எவ்வாறு துணை செய்கின்றன என்பது மையக் கருத்து.
இது இவர்களுக்கு சுவையான முஸ்லிம் உரையாடல் களைக் கொண்டு வறுமையுற்ற வர்க்கத்தினரின் வாழ்வின் ஒரு கோணத்தை ஆசிரியர் தீட்டுகிறார். தாம்பத்திய உறவின் முதிர்ச்சியும் சித்திரிக்கப்படுகின்றது.

Page 81
748 ஈழத்துச் சிறு சதைசளுரம்
இனி ஒரு விதி' - தொழிற் சங்க நடவடிக்கை மூலம் அநியாயம் சுட்டிக்காட்டப்படின், அது தாக்கமுடையதாக அமைந்து, ஈற்றில் வெற்றியைக் கொடுக்கும் என்பது கதாசிரியர் உணர்த்தும் செய்தி.
யுகப்பிரவேசம்'- சமுதாய அமைப்புநிலையானதல்ல. காலத்தின் தேவைக்கேற்ப அது மாறிக் கொண்டேயிருக்கும்' என்பதைக் காட்டும் இந்தக் கதையில் வரும் ஏனைய சில பகுதிகளும் மனம் கொள்ளத்தக்கவை.
ஒரு நாட்போர் - என்ற கதையில் 'மானம்' என்ற சொல்லிற்குரிய அர்த்தங்கள், ஆளுக்கு ஆள் வேறுபடுவதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
(வீரகேசரி வாரவெளியீடு : 05-05-1974)

749
நெல்லை க.பேரனின் செய்தி ஆர்வம்
5ெல்லை க.பேரன் எழுதிய 'சிறுகதை"களில், பதின்மூன்று கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு இது. செய்தித்தாள் நிருபர் ஒருவர் எழுதும் கட்டுரைகள் அல்லது செய்தி அறிக்கைகள் போன்று பல கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது ஒன்றும் வியப்பில்லை. ஆசிரியரின் நிருபர் தொழில் அனுபவம் கதை களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்து கின்றது. இலக்கியத்தில் உண்மையான ஆர்வமும், ஆற்றலும், மனிதநேயப் பண்பும் கொண்டவர் பேரன். அவருடைய கருத்துக்கள் வரவேற்கத் தக்கவை. கருத்துக்கள் மக்கள் மத்தி யில் இலகுவான முறையில் செல்ல வேண்டுமென்று விரும்புபவர். இருந்த

Page 82
750 ஈழத்துச் சிறு சதைகளுரம்
போதிலும், சிறுகதை' என்ற வாகனம் மூலம் அவர் தமது கருத்து அல்லது செய்தியைக் கூற முன்வரும்போது அந்த வாகனம் அல்லது ஊடகத்தின் தன்மையை அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. உற்சாகம் காரணமாக அவர் தமது கருத்துக்களைக் கதை என்ற பெயரில், கதை சார்ந்த கட்டுரைகளாகவே கூறுகிறார் என்பதை இந்தத் தொகுப்பைப் படிக்கும் எவரும் உணர்வர்.
"கலை, இலக்கியம் சமூகப்பணி செய்யவேண்டும் என்ற கோட்பாட்டில் நான் அசையாத நம்பிக்கை கொண்டவன்" என்கிறார் பேரன். மிகவும் நல்லது. ஆனால், கலை, இலக்கியம் என்று வரும்பொழுது அவற்றின் தன்மை களுக்கேற்ப உருவம்' என்ற ஓர் அம்சமும் இணைந்து இருப்பதை நாம் மறக்கலாகாது. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஜானகிராமன், யோகநாதன், கதிர்காமநாதன், யேசுராசா, குப்பிளான் சண்முகம் மற்றும் பலர், தத்தம் நிலைகளில் நின்று தமக்கேயுரிய விதத்தில் கதைகள் எழுதுகின்றனர். ஆனால், சிறுகதைக்குரிய வடிவம் (ஓர் ஒருமைப்பாடு, கட்டுக்கோப்பு, அமைதி, சிக்கனம், கவிதைப்படிமச் சிறப்பு) அவர்களுடைய கதைகளில் இடம்பெறுவதைக் காணலாம். நெல்லை க.பேரனின் கதைகள் வெறுமனே அறிவு ரீதியாக மாத்திரம் செய்திகளைச் சொல்லுகின்றன. உணர்வு பூர்வமான முறையிலும் அனுபவங்களைப் பரிவர்த்தனை செய்துகொள்ள, பேரன் சில உத்திகளைக் கையாண்டு இருக்கலாம்.
వడ్

757 تیتری محمد سمیتےص محکومحمد قz ہوتی تھے تح%7zzzمجھے
*புதுக் கவிதைகள்' சிலவற்றில் சமூகப் பணியை வலியுறுத்தும் சுலோகங்கள் இடம்பெறுகின்றன. சுலோகங்கள் மாத்திரம் கலையாகுமா? கவிதைப் பண்புகள் கொண்டிருப்பின், அவற்றை நவீன கவிதை என வரவேற்க நாம் தயங்கோம். அதுபோலவே, சிறுகதைகளிலும், சிறு கதைக்குரிய பண்புகள் அமையாவிடின், உள்ளடக்கம் மேன்மையாக இருந்தாலும் வாசகர் மனதில் ஓர் ஈர்ப்பைத் தருவிக்க அவை தவறிவிடும். நெல்லை பேரன் போன்றே "சிறுகதைகள்' எழுதும் பல புதிய பரம்பரையினர் இருப்பதை நானறிவேன். இவர்களின் வளர்ச்சி கருதி, இவர்களுடைய இந்தக் குறைபாட்டை வலியுறுத்தல் தகும். தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கா.சிவத் தம்பி), சிறுகதை ஒரு கலை (ப.கோதண்டராமன்), சிறுகதைச்செல்வம் (சாலை இளந்திரையன்), தமிழில் சிறுகதை (சாலை இளந்திரையன்), ஈழத்துச் சிறுகதை மணிகள் (செம்பியன் செல்வன்), தமிழ்ச் சிறுகதை வரலாறு வேதசகாயகுமார்) போன்ற நூல்கள் சிறுகதை வடிவத்தை நன்கு விளக்கிக் காட்டுகின்றன.
姿
6 மில்லை பேரன், வடமராட்சிப் பகுதிக் கிராமப்புறச் சூழல்களையும், அங்குள்ள மக்களின் பிரதேச மொழி வழக்கையும்" கையாள்கிறார். இந்தத் தொகுப்பை அப்படியே நாடி பிடித்துத் தொட்டுக் காட்டுகிறார் க.கைலாசபதி, முன்னுரையில் அவர் கூறியிருப்பதைவிட விரிவாக ஒன்றும் கூறுவதற்கில்லை.

Page 83
752 ஈழத்துச் சிறுகதைகளுரம்
ஆயினும், ஒரு முக்கிய வேறுபாட்டை இங்கு நாம் சுட்டிக் காட்டவேண்டும். ரியலிஸம்" எனப்படும் யதார்த்த வாதத்திற்கும், நாச்சுரலிஸம்" எனப்படும் இயற்பண்பு வாதத்திற்கும் உள்ள வேறுபாடே இது பேரனின் கதைகள் உருவத்தில் கவர்ச்சியிழப்பதற்கான காரணம், அவர் தமது கதைகளை இயற்பண்பு வாதத்தில் எழுதியிருப்பதே. உதாரணமாக 'குடிலின் அடியில்' என்ற கதையில், கதையின் மையக் கருத்துடன் தொடர்பு கொள்ளாத, அநாவசிய விவரங்களை ஆசிரியர் சேர்த்திருப்பதைக் குறிப்பிடலாம்.
இயற்பண்புவாதிகள், தேர்வு முறையின்றி அப்பட்ட மாகப் பிரத்தியட்ச வாழ்வைப் படம் பிடிப்பார்கள் (எஸ்.பொ.வின் முன்னைய கதைகள், எமிலி ஸோலாவின் நாவல்கள், டொஸ் போசஸ் (DOSPASSOS) என்ற அமெரிக்க முற்போக்கு எழுத் தாளரின் படைப்புகள் உதாரணங்கள்) யதார்த்தவாதிகள், சம்பவங்கள் அல்லது கருத்துக்களில் காரணகாரியத் தொடர்பை, தேர்வு ஒழுங்கின் பிரகாரம் சித்திரிப்பார்கள். குடிலின் அடியில்' என்ற கதையில் வரும் கடைசிப் பந்திக்கு முந்திய பந்தியில்தான் கதையின் நோக்கம் தெரிவிக்கப்படுகின்றது. எஞ்சிய எட்டரைப் பக்கங்களும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட விவரணை.
இரண்டாவது கதையான, "கடவுள் உள்ளே இருக்கிறார், எழுதப்பட்ட முறையில் வடிவம் ஓரளவு வந்தடைகின்றது. ஆனால், வெறும் சித்திரிப்புடன் நின்று விடுகிறது. வழிகாட்டலும் சமூகப் பணியன்றோ? பேரனின்

og M4%źzzzaregszó 14964?-14979 75.3
கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லாம், பட்டதாரிகள் உத்தியோகத்தைவிட்டு, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றில் இறங்குவதே மேல் என்ற கருத்துடையவர்கள். இவர்கள் இதனைச் சமூக நெறியாகக் கொள்ளாது, தமது தனித்துவ மேம்பாட்டுக்கு, வருவாய் அதிகரிப்புக்கு உதவும் ஒரு செயல் என்றே கருதுகின்றனர். அதாவது பிரசாரக் கதைகளைப் பேரன் எழுதுகிறார். எந்தக் கதையில்தான் பிரசாரம் இல்லை? ஆனால், பிரசாரம் தொக்கி நிற்பதில் தானே கலைத்துவம் மிளிருகிறது. ராஜாஜியின் மதுவிலக்குப் பிரசாரக் கதைகளிலும் கலைத்துவம் இருக்கத்தான் செய்கிறது. பேரன் தனது சிந்தனைகளை நெறிப்படுத்தி எழுதியிருப்பின் சிறப்புப் பெற்றிருப்பார்.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றவை அனைத்தும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன என்பதை விசேடமாகக் குறிப்பிடவேண்டும்.
ஒரு படித்த விவசாயின் பயணம்'இந்த வகையில் ஒரு நல்ல கதை.
'எண்பது ரூபா" என்ற கதை அழகான சித்திரம். குலப் பெருமை' வடிவம் பெற்றுள்ளது. 'அண்ணா வந்தார்' என்ற கதையில், நாயகன் மனமொடிந்து போவது நம்பிக்கையை ஊட்டவில்லையே. “மாற்றங்கள்", மாற்றமே இயற்கையின் நியதி என்பதைக் கூற வந்தாலும், கதைப் பின்னணி அவ்வளவு வலுவானதல்ல.

Page 84
754. ஈழத்துச் சிறுகதைகளுரம்
"அவர்கள் என் சுதந்திரத்தைப் பறித்துவிட்டார்கள்"
தலைப்பு நீண்டதைப் போன்றே, நீண்ட விவரணை கொண்ட வியாக்கியானமாகவே அமைகிறது.
'இராமச்சந்திரன் உறங்குகிறான்” நசிவான சிந்தனை யன்றோ?
"உண்மைகள் பொய்ப்பதில்லை” முன்னைய தசாப்தத்தில் எழுதப்பட்ட ஒரு பத்திரிகை ரகக் கதைபோல இருக்கிறது.
"ஒளியை நோக்கி, நோக்கம் நன்று.
“கெளரவம் என்ற ஒன்று' மரபு வழிப்பட்ட கருத்தோட்டக் கதைகளில் ஒன்று.
"ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்' என்ற கதையிலும், தத்துவார்த்தக் குறைபாடு உண்டு. வர்க்க உணர்வும், சிந்தனையும் வெளிப்படுத்தப்படாததால், சிறுகதைகளில் ஆழம் இல்லாது போய்விடுகிறது. விமர்சிக்கப்படும் பொருள் ஆழமாக இருந்தாலன்றோ, விமர்சனமும் ஆழமானதாக அமையும். அவ்வாறு அமையாத பட்சத்தில், புதிய பரம்பரையினரை ஊக்கப்படுத்து முகமாகக் குறிப்புகள் எழுதுவதைவிட வேறு மார்க்க மில்லை.
நெல்லை க. பேரன் புதிய பரம்பரையினரில்
குறிப்பிடத் தகுந்தவராக விளங்கினார். இவருடைய இலக்கிய நெஞ்சம் பல துறைகளில் ஈடுபடச் செய்யத்

755 یکتری ھے۔ حیے محیحمہ ق4 تر تھے تح%7ZZZمجھے لیے
தூண்டியது. இருந்தபோதிலும் இவர் சிறுகதைகள் எழுதுவதையே பெரிதும் விரும்பினார் போல் தெரிந்தது. பேரன் தமது ஆற்றலை வெளிப்படுத்த வேறு இலக்கிய
வடிவங்களையும் கையாண்டிருக்கலாம்.
சிறுகதை எழுதுவது மிகமிகக் கடினம். சிறுகதையின் வீழ்ச்சிக்காலம் இது என்பார்கள் விமர்சகர்கள். 'குறுங்கதைகள்' சிறுகதையின் இடத்தைப் பிடிக்க முற்படுகின்றன. புதுக்கவிதைகள், கவிதையின் வாரிசாக வர முற்படுகின்றன. புனைகதைக்கு ஒரு வளர்ச்சிக் கிரமம் உண்டு. கலை நுட்பம் உண்டு. வெறும் சிந்தனைகளும், உணர்வுகளும் இலக்கியமாகா. கருத்தும் கருவும், கலை நுட்பமும் வண்ணமும் ஒருங்கே அமையப்பெறின் அது அழகு பெறுகின்றது. அதனால் கவர்ச்சியைக் கொள்கிறது. படிப்பவரிடையே பரவசத்தை ஏற்படுத்துகின்றது. பரவசம் காரணமாக அறிவும், உணர்வும் அனுபவங்களைப் பெறுகின்றன. அனுபவம் விரிய ஆழம் உண்டாகின்றது. ஆழத்தின் அடியில் உண்மை படிந்துள்ளது.
கொரிர யுத்தத்தின் காரணமாகத் தனது உயிரைக் குடும்பத்தினருடன் ஒரே சமயத்தில் இழந்த சுவை உள்ளங் கொண்ட பேரனுக்கு இதயபூர்வமான அஞ்சவி
(தினகரன் வாரமஞ்சரி : 14-09-1975)

Page 85
756
அ.யேசுராசாவின் அனுபவ தரிசனங்கள்
இதில் பத்துக் கதைகள் அடங்கியுள்ளன. அகவய நிலையில் நின்று அவை எழுதப்பட்டுள்ளன. தனிப்பட்ட அனுபவங்களின் நேர்மையான - நேர்த்தியான வடிப்பு. அலட்டிக் கொள்ளாததாலே சம்பவக் கோவையை நேர்மையாகவும், நேர்த்தி யாகவும் வெளிப்படுத்தும் பண்பு, கதை நிகழுமிடங்களின் குறுகிய வட்டம் ஆகியனவற்றைக் குறிப்பிடுவதுடன் அனுபவம் பரந்துபட்டதாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மீனவர் சூழலும், பேச்சும் இயற்
பண்பு வாத சாயலில் அமையாமல்,

seg 4%z/zaseøazó Y962-7979 757
தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. 'புற நிலைகளின் பாதிப்புகளையும் மீறி வாழ்ந்து காட்டுகிறவர் களையும், யதார்த்தத்தில் காண முடிகின்றது. அத்தகையவர்களென விசுவாசிக்கப் பட்டவர்கள் மாறிப் போவதே, அப்பாத்திரத்தின் தவிப்பாகவும் விளங்க
முடியாமையாகவும் உள்ளது" என்கிறார் யேசுராசா.
இத்தொகுப்பிலுள்ள கடைசி இரண்டு கதைகளும் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்த்து விக்கின்றன.
'தொலைவு' என்ற கதையில் சொல்லப்படும்
அனுபவங்கள் நிதர்சனமானவை.
(தமிழமுது : 1975)

Page 86
7.58
சாந்தனின் நையாண்டிக் கதைகள்
ழுெத்தாளர் சாந்தனின் இரண்டாவது புத்தகம் இது. முதலாவது பார்வை. இதில் சிறிய சிறு கதைகள் இடம் பெற்றிருந்தன. கடுகு
குறுங்கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் குறுங்கதைகளுக்கும் புதுக் கவிதைக்கும் அதிகம் வித்தியாச மில்லை. "புதுக் கவிதைகள்' பாரம் பரியக் கவிதைக்கு வாரிசாக வர முற்படுகின்றன. அவற்றில் கவிதை நயமுண்டோ, இல்லையோ, அவை புதுக்கவிதை என அழைக்கப்படு கின்றன. சுருங்கிய சொல்லில் படிமங்கள் ஊடாகக் கருத்துக்களைத்

7.59 محی اتر محی محمد علیے 24ى محمد قZ ہوتے تھZZZZZمجھے تھے
தெரிவிப்பதே புதுக்கவிதையின் அடிப்படைத் தொழிற்பாடு. குறுங்கதைகளும் சுருங்கச் சொல்லி, விளங்க வைக்கின்றன. குறுங்கதைகளை வரி வரியாக வெளியிட்டால், புதுக்கவிதைகளின் வாசகர்கள் மருண்டாலும் மருளலாம். குறுங்கதைகள் குறள் போன்று சில சமூக அவதானிப்புக் களை வெளிப்படுத்துகின்றன.
சாந்தன் எழுதிய குறுங்கதைகளில் சமூகப் பார்வையுண்டு. ஆனால் அது எந்தவிதமான சமூகப் பார்வை என்பதே முக்கியம். சாந்தனுக்கு ஊழல்களும், வேஷதாரித் தனமும் எரிச்சலைக் கொடுக்கின்றன. முற்போக்கு என்று சொல்லிக் கொண்டே, பிறவிப் பிற்போக்குவாதிகள், சமூகத்தை ஏமாற்றிப் பிழைக்கும் விதத்தை, சாந்தன் பின்வரும் கதைகளில், நையாண்டியாகத் தெரிவிக்கிறார்.
பெயர் (மக்கள் என்ற வார்த்தையின் துஷ்பிரயோகம்), ப்ரீவில் குட்டி முதலாளிகள் போக்கு) சூழ்நிலை (முற்போக்கு என்று காட்டிக் கொள்ளாவிட்டால், உத்தியோகம் போய் விடும் என்ற பயம்) புறப்படு தோழா (உண்மையான பற்றின்றி இரண்டு பக்கமும் தாளம் போடல்) ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். சமூக ஊழல்கள் பற்றியதாக, முதலாளிகள் பலவிதம்', இரண்டு உவமைகள், 'சோடனை' ஆகியன அமைந்துள்ளன.
'முரண்' என்ற தலைப்பில் அவர் எழுதிய குறுங் கதையில்,

Page 87
760 ஈழத்துச் சிறுகதைகளும்
"இலக்கியங்கள், மானுடத்தின் முன்னேற்றத்திற்குக் கருவிகள். அவற்றிற்கு, நிச்சயமான, காத்திரமான சமுதாயப் பணிஉண்டு" என்று ஆவேசமாகப் பேசிய மக்கள் இலக்கியக் காரன், அப்படியான படைப்புகள் தான் காலத்தால் மலியாமல் நின்று நிலைக்கும் என்கிறார்.
சரி, காலத்திற்குக் காலம், சமுதாயங்கள் மாற, இலக்கியங்களும், அவற்றின் பணியுங்கூட மாறுமே? அப்படியானால், நின்று நிலைக்கின்ற இலக்கியங்களை, மியூசியத்திலா வைக்கப் போகிறீர்கள் என்று எதிர்க்குரல் கேட்டது.
இந்தக் கதையில் "காலத்தால் மலியாமல் நின்று நிலைக்கும்" என மக்கள் இலக்கியக்காரர் ஒருவர் மிகைப் படுத்துவதாகக் கூறியிருந்தாலும் உண்மையில் நிலையானது என்று ஒன்றும் இல்லை என்பதையும், மாற்றமே இயற்கை யின் நியதி என்பதையும், இயக்கவியல் பார்வை யுடைய மக்கள் எழுத்தாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள். காலத்திற்குக் காலம், விழுமியங்களும், பயன்மதிப்புகளும் மாறுவதால், நிரந்தர இன்பம் தருவன என்று கூறுவதற்காக இலக்கியமே இல்லை என்பதைச் சாந்தனுக்குச் சுட்டிக் காட்டல் அவசியம்.
முழம்' என்ற இன்னொரு கதையில் 18 பேருக்கு காயமாம். 4 பேர் உடனேயே செத்துப் போனார்களாம்.

76፲ محى محترمحی ہے۔جسے 4ی محمد قھ قریعے تحZZZZZZمجھے تھے
"அதிலை தமிழர் எத்தனை பேர்? சிங்களவர் எத்தனை
பேர்?" என்று வரும் பகுதிகளில், நம்மினத்தவரின் மனிதாபி
மானத்தையும் மீறிய கொச்சையான இனப்பற்றைக் காட்டுகிறார்.
காட்இல்லாமல் 2% றாத்தல் லக்ஸ்பிரேதகரம் வாங்கு வதையும் ஒரு வீரதீரச் செயலாகக் கொள்ள வேண்டி இருக்கிறது என்று உணர்த்தப்படும் கனவுகள் உட்பட பல கதைகளில் சாந்தன் நல்ல நகைச்சுவையையும் தருகிறார்.
"கடுகு" தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் சுவையான கிண்டலுடன் அமைந்துள்ளது. படிப்பவரின் சிந்தனைக்கும் இடமளிக்கும் இந்தக் கதைகளில் உருவம் செட்டாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஜனவேகம் : 30-8-1975)
ܐܲܡ
බ්%

Page 88
762
மு.திருநாவுக்கரசுவின் சிக்கனச் செதுக்கல்
இவர்களும் மனிதர்கள் என்ற தொகுப்பு விதந்து பாராட்டத்தக்கது. 1970 ஆம் ஆண்டிற்கும் 1973 ஆம் ஆண்டிற்குமிடையில் முதிருநாவுக்கரசு (குரும்பசிட்டி) எழுதிய 12 கதைகளின் தொகுதியே இது. இந்தக் கதைகள் சிறப்பாயிருப் பதற்கான காரணம் கதாசிரியரின் முதிர்ச்சி நிரம்பிய தத்துவப்பார்வையும், சிறு கதைக்குரிய சொற்செட்டும், மனதில் பதியத்தக்க படிமங்களின் சேர்க்கையும், எல்லா வற்றிற்கும் மேலாக நெறிப்படுத்தப் பட்ட மனிதாபிமானமுமாகும்.

763 تھی محترتی ہے- یے صحیحمہ قZ ترمیم تح7/7ZZZمجھے
இவருடைய கதைகள் என்ன கூறுகின்றன என்பதை அறியுமுன், இவருடைய எழுத்தின் நோக்கம் என்ன என்பதை இவர் மூலமாகவே அறிவோம்.
"ஒரு கதைக்கு அழகான வசன அமைப்பு முக்கியமல்ல. அந்தக் கதையிலே இழையோடுகின்ற, சமூகத்திற்குப் பயன் தரக்கூடிய, உயிர்த் துடிப்புள்ள கருத்துத்தான் முக்கியம். சமூகத்தோடு தொடர்பு வைக்காமல், மனிதர்களிடமிருந்து விலகி வெகு தூரத்தில் நின்று எழுதும் எழுத்தாளன் இலக்கிய அரங்கில் வாழலாம். ஆனால், அவனால் வளர முடியாது. தேசத்தின் போக்கை மாற்றியமைக்கும் பெரும் பணி எழுத்தாளனுக்கு உண்டு. சமூகத்தில் விழிப்புணர்ச் சியை உண்டு பண்ண வேண்டிய கடமை எழுத்தாளனுக்கு உண்டு. ஏன்? ஒரு மனிதனைத் திருத்த வேண்டிய உரிமைகூட எழுத்தாளனுக்கு உண்டு."
இதிலிருந்தே மு.திருநாவுக்கரசு திட்டவட்டமான கருத்துக்களை உடையவர் என்பது புலனாகிறது.
இரசிகமணி கனக செந்திநாதன் கூறியிருப்பதுபோல, குரும்பசிட்டியிலே பல பிரபல எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கனக செந்திநாதன், வநடராசா, விகந்தவனம், ஏ.ரி. பொன்னுத்துரை, ஆதம்பித்துரை, வை.இளையதம்பி மு.க. சுப்பிரமணியம், இரா.கனகரத்தினம் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இப்பொழுது முதிருநாவுக்கரசும் பெயர்பெற்று வருகிறார். இவர் நாடகாசிரியராகவும்,

Page 89
764 ஈழத்துச் சிறுகதைகளுரமச்
வானொலி எழுத்தாளராகவும், இருப்பதனாற்றான், இவருடைய சிறுகதைகளில் உருவம் அக்கறையுடன் நேர்த்தியாக வந்து அமைகின்றது.
இந்தத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய வி.கந்த வனம் ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். "அவரது கதைகளில் உணர்வு இருக்கிறது. ஆனால் உணர்ச்சி வயப் படும் கட்டங்கள் குறைவு. உணர்ச்சிவயப்படும் ஒருசில கட்டங்களிலும் அவர் தமது சமநிலைத் தன்மையை இழந்து விடவில்லை."
திருநாவுக்கரசு சமநிலைத் தன்மையை இழக்காததே அவருடைய தனிச் சிறப்பு. மாறாக அவர் இழந்து இருப்பாராயின் அவர் கதைகள் அதீத நாடகப் பண்புடைய தாக (மெலோட்ரமட்டிக்) அமைந்திருக்கும்.
இனி, இவருடைய கதைகள் பற்றிச் சிறிது பார்ப்போம். இந்தக் கதைகளை மீண்டும் நான் எடுத்துக் கூறப்போவதில்லை. வாசகர்களே படித்துப் பாருங்கள். ஆனால் இவற்றில் சிலவற்றில் உள்ள சிறப்பம்சங்களை மாத்திரம் இங்கு நோக்குவோம்.
தொகுப்புத் தலைப்புக் கதையான, இவர்களும் மனிதர்கள்' என்ற கதையில், வர்க்கநலன் கொண்ட 'எஸ்டாபிளிஷ்மன்ற் எவ்வாறு பாரபட்சமாகவும், ஊழல் நிரம்பியதாகவும் நடந்துகொள்கிறது எனக் காட்டியுள்ளார். ஒரு திரையில் காட்சிகள் எவ்வாறு துரிதமாகத் தோன்றி மறைகின்றனவோ, அவ்வாறே இக்கதையிலும், அந்தத் தாய் படும் அவஸ்தையை வரைந்துள்ளார்.

து சிவர்சளுரம் 1952-1979 765
புதுயுகம்' மற்றொரு வரவேற்கத்தக்க சமூக நெறியுடன் இணைந்த தார்மிகக் கதை எனலாம். 'தன்னுடைய மானத்தை விற்ற பணத்தை, இன்னொரு பெண்ணின் மானத்தைக் காக்கக் கொடுக்கிறாள். லட்சுமி, ஜானகியைத் திருத்தி விட்டுத்தான் போகிறாள். ஜானகிக்கென்று ஒரு புதுயுகம் பிறக்கும். அங்கே கடுமையான உடல் உழைப்புத் தான் மூலதனமாக இருக்கும்” என்று கதை உறுதியாக (பொஸிட்டிவ்வாக) முடிவடைகின்றது.
"வானம் பார்த்த பூமியில் உண்மையான பரிவு, சுயநல மற்ற குணநலன் எவ்வாறு நடைமுறையில் செயற்படுகின்றது என்பதை ஆசிரியர் காட்டுகிறார்.
ஞானப்பால்" கதையில் தர்மகர்த்தா குழந்தையைச் சுவரில் மோதும் வண்ணம் வீசும் காட்சியை மனத் திரையில் பதிவு செய்யும் பொழுது, உணர்வே சில்லிடுகிறது. கொடுமைகள் எடுக்கும் வடிவங்களைத் திருநாவுக்கரசு சாதாரணமாகவே கூறுகிறார். அதனால்தான் அவருடைய படிமங்கள் வலுவாக இருக்கின்றன.
‘வாழ்க்கை ஒப்பந்தம்' மற்றும் தர்மம்', 'கெளரவம்" ஆகியன, ஜெயகாந்தன் பாணியிலான சிறந்த சீர்திருத்தக் கதைகள். அது மாத்திரமல்ல, நவீன சிந்தனா வளர்ச்சியுடன் ஒட்டியதாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. போலிக் கெளரவங்களையப்பட்டு வாழ்க்கையின் உண்மை யான தரிசனங்களை ஆசிரியர் திருநாவுக்கரசு காட்டுவது சிறப்பாக இருக்கிறது. அவன் மனிதனான போது',

Page 90
766 ஈழத்துச் சிறு சதைசகும்
'முகத்திரை' ஆகியனவும் அடக்கத்தின் எல்லையை மீறும் தார்மிக ஆத்திரத்தைக் காட்டுவன. "ஏமாற்றம்' இதயத்தில் வாழ்கிறான்' ஆகிய கதைகளும் தேவலை, ஆக.மு.திருநாவுக்கரசின், இவர்களும் மனிதர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பு, படித்துப் பயனடையக்கூடிய ஒரு நல்ல புத்தகமாகும்.
(தினகரன் வாரமஞ்சரி : 26-70-1975)
st
§6

கா.முத்தையாவின் தத்துவக் கதைகள்
767
"ஆத்ம ஜோதி ஆசிரியர் நா.முத்தையா சிறுவர்க்கான அழகிய பதினெட்டுக்கதைகளை எழுதி தத்துவக் கதைகள் என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவங் களையும், இந்துக்களின் வாழ்க்கை நெறியையும் சுட்டுவனவாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன. தவிரவும், சிறு வயதில் நாம் படித்த பழமொழி களின் விளக்கத்தைத் தருவனவாகவும், இவற்றில் பெரும்பாலானவை அமைந் துள்ளன. இந்து நாகரிகம் பல்கலைக் கழக மட்டத்தில் பாடமாக அமைவது காரணமாகவும், சமய நெறிக்கும் புதிய கல்வித் திட்டத்தில் முக்கிய இடம் அளிக்கப்பட்டிருப்பது காரண மாகவும், சிறுவயதிலிருந்தே மாணவர் உண்மை விளக்கங்களை அறிந்து

Page 91
፲6ዶ ஈழத்துச் சிறு சதைகளுரம்
கொள்ளல் அவசியமாகிறது. இன்னொன்று - பலவிதமான கருத்துக் கோவைகளுக்கு உட்படும் இளம் பராயத்தினர், ஒருவித சமநிலையைப் பெற, சமயம் பற்றியும் பண்டைப் பண்பு பற்றியும் அறிந்திருத்தல் விரும்பத்தக்கதல்லவா?
இந்த நூலில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கொவ்வாத கருத்தை அல்லது செயலை வலியுறுத்தும் கதைகளும் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில், கிணற்றுத் தவளை, நரியனார் பட்ட பாடு, 'அக்கரை பச்சை', 'அழகியின் ஆசைகள்', 'மூன்று மண்டையோடுகள்', 'மனிதரில் மனிதன்', "மரணத்தின் நினைவு" போன்ற கதைகள், மாணவர் தமது வாழ்நாளில் எதிர்நோக்க வேண்டியிருக்கும் எக்கச்சக்கமான கட்டங் களை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதையும் சொல்லித் தருகின்றன.
கடவுள், ஆன்மா என்பனவற்றில் நம்பிக்கை உள்ளவர் களை இரு பிரிவினராக வகுக்கலாம். ஒரு சாரார், நம்பிக்கை, பக்தி, விசுவாசம், அன்பு போன்ற சொற்கள் காட்டும் பாதையில் செல்பவர்கள். இன்னொரு சாரார், அறிவு, ஞானம், தத்துவம், விசாரணை, நியாயம், தர்க்கம் போன்ற சொற்கள் குறிக்கும் வழிகளில் செயற்படுபவர்கள். இந்த இரு மரபுகளில் எது சிறந்ததென்ற விவாதம் இன்னும் ஒரு முடிவுக்கும் வந்தபாடில்லை. வரப்போவதுமில்லை. துறவறமா, இல்லறமா, ஆத்திகமா, நாத்திகமா, பக்தியா, ஞானமா என்ற கேள்விகளுக்கு முடிவு காண முடியாது. சமரசமே காணப்படலாம்.

eg 477z//sessző 74762-1979 769
இத் தொகுப்பில் தர்ம சாஸ்திரக் கதைக்கு உதாரண மாக தியாகத்தையும், பக்தி மார்க்கக் கதைக்குச் சான்றாக பூஜையையும் குறிப்பிடலாம். உலகப் பேறுகளில் சிறந்தது பேரறிவே. மனிதன் பக்குவ நிலைக்கேற்ப, அறிவின் விளக்கமும் அமையும். உண்மை என்பதை ஓர் உரையாலும் விளக்கலாம்; பல நூல்களாலும் விளக்கலாம். இந்த நூலின் உள்ளடக்கம் பேரறிவைத் தூண்ட உதவும் என்பது மிகையாகாது.
இதற்கு அணிந்துரை எழுதிய நந்தி", "மனிதரில் தெய்வம் என்றெல்லாம் புகழ்மாலை சூட்டப்படுவதற்குப் பதிலாக மனிதரில் மனிதனாகவே இருந்தால் போதும் என்ற தத்துவம்" தன்னில் பதிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொல்ல முடியாத கருத்துக்களைத் தன்னும், கதைகள் மூலம் சொல்ல முடியும். வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் போன்றவற்றில் கதைகள் மூலம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. சித்திரம் மூலம் கதை சொல்லும் பண்பும் வளர்ந்து வருகின்றது. சிறுவர்களின் கவனத்தையும், ஊக்கத்தையும் கற்கும் ஆவலையும், ஒருங்கே வளர்ப்பதற்கு, அறிஞர் காட்டும் வழியும், முன்னோர்கள் கதைகள் மூலம் செய்ததைப் பின்பற்றும் வழியுந்தான் என்பது தெளிவாகிறது.
(தினகரன் வாரமஞ்சரி:7-2-1976)

Page 92
፲ፖ0
யோ.பெனடிக்ற் பாலனின்
மார்க்சியத் தத்துவார்த்தக் கதைகள்
8 u T 9 பெனடி க்ற்
பாலனின், தனிச் சொத்து தொகுப்பி லும் 45 குட்டிக் கதைகள் அடங்கி யுள்ளன. இந்தக் கதைகள் மார்க்சிய அடிப்படையிலான தத்துவக் கதைகள் எனலாம். இந்தத் தொகுப்புக்கு, முகமன் உரை அல்ல" என்ற பெயரில், சி.சிவசேகரம், அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். அவருடைய சாட்டையடியில், சில சாம்பிள்கள் - முற் போக்கு என்பது ஒரு சம்பிரதாய மான மரியாதைக்குரிய லேபலாகி வழங்குகிறது. முற்போக்குக் கலை இலக்கியம் என்ற பேரில் உலாவும் பெருவாரியான அசட்டுத்தனங் களிலும் அயோக்கித்தனங்களிலும் முற் போக்கும் கிடையாது. கலையும்

y M777/7sevai 7962-7979 777
கிடையாது. புரட்சி வெறும் கோஷங்களாகவும் ஸோஷலிஸம் சிறு பிள்ளைத்தனமான சீர்திருத்தவாத மாகவும் சித்திரிக்கப்படுகிறது. குட்டிக் கதைகள் மிக நுணுக்கமாக ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை விளக்க வல்லன. நம் மொழியைப் பொறுத்தவரையில், இக்கருவியை மதவாதிகளும், பிற்போக்குவாதிகளும், அசட்டுத் தத்துவக் காரர்களும் பயன்படுத்த முனைந்த அளவுக்கு முற்போக்கு வாதிகள் பயன்படுத்தவில்லை எனலாம்."
சிவசேகரம் கூறியிருப்பது போல, தனிச்சொத்து' தொகுதியில் இடம் பெற்றுள்ள 'சுலோகப் பிரயோகங் களைத் தவிர்த்திருக்கலாம். இருந்தபோதிலும், வாசகரை நவீன பாணியில் சிந்திக்க வைக்க இந்தத் தொகுதி உதவுகிறது. ஆசிரியர் முன்னுரையாக எழுதியுள்ள அடித்தளம்' என்ற பகுதியை வாசகர்கள் அவசியம் படித்துப் பார்த்தல் வேண்டும். தர்க்க ரீதியாக அவர் எழுதியுள்ளார். செம்பியன் செல்வன், யோ.பெனடிக்ற் பாலன், சாந்தன் போன்றோர் ஒருவித "மினி இலக்கியத்தை அளித்து வருகிறார்கள். இங்கு ஏளனத்திற்காக 'மினி இலக்கியம்' என்று கூறவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிவிட்டு, இந்த வித இலக்கியம் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
(67ørøsgøí aumgruogiesmî : 07-02-7976)

Page 93
1/2
சாந்தனின் "மினி"கதைகள்
சிந்தனின் கடுகு" மினி இலக்கிய வகையைச் சார்ந்தது. ஆனால், ஒரே ஒரு ஊரிலேயும், என்னளவில், அது போன்றே யிருக்கிறது. இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய செம்பியன் செல்வன் கூற்றுகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
"1960 ஆம் ஆண்டில், தமிழ் மூலம் கல்வியினால், மாணவர் களிடத்தில் தேசியம், இனம், மொழி, மார்க்சியம், இலக்கியம் போன்றன பற்றிய அறிவு உணர்வு பூர்வமாகத் தொழிற்படலாயின. இவ்வுணர்ச்சிகள் எல்லா வற்றிலுமோ, ஒரு சில வற்றிலுமோ பாதிக்கப்பட்டவர்

്യ, മീമന്ത്ര4 7962-7ബ 773
களாகச் சிறுவர்கள் விளங்கினர். சிலர் முற்று முழுதாக மார்க்சிய கருத்துக் களையும், சிலர் அறிவு ஜீவிகள் (ஆய்வறிவாளர்?) போன்ற பல்துறைக் கருத்துக்களையும், பொருட்களையும் படைப்பின் கருவாகவும், தொனியாகவும்" கொண்டனர். பெரும்பான்மை மக்களுக்காகப் படைக்கப் பட்டு வந்த மார்க்சிய எழுத்துக்கள், விமர்சகர்களான ஒரு சிலரின் தேவை நோக்கம் கருதி எழுதப்படலாயின. எழுத்தாளர்கள், வாழ்வின் அனுபவங்களுக்குப் பதிலாகத் தத்துவங்களின் தரிசனங்களாக, அனுபவங்களைக் காணத் தொடங்கினர். ஆகவே, அனுபவங்கள், வெளியீடுகள் பொதுமையாயின, வறட்சியாயின, பெரிய பெரிய சமூகங்களைச் சென்றடையலாயின."இவ்வாறு எழுதியுள்ள நண்பர் செம்பியன் செல்வன், சாந்தன் கதைகள் பற்றி விமர்சித்திருப்பதும் எனக்கு உடன்பாடேயாதலால், பிரத்தியேகமாக நான் வேறு கூறுவதற்கில்லை.
st
乐

Page 94
አአ4
லெ.முருகபூபதியின் நீள்கொழும்புத் தமிழ்
ர்ேமையின் பங்காளிகள் தலைப்பில் பத்து சிறுகதைகளடங்கிய தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது. நீர் கொழும்புப் பகுதி மீனவர்களது நாளாந்த வாழ்க்கையின் கொச்சையான அம்சங்கள் சில இவற்றில் தொகுக்கப் பட்டுள்ளன. மேலோட்ட மாக நோக்கினால், இவை சுவாரஸ்ய மாக (அதாவது நீர்கொழும்புத் தமிழை அறிந்து கொள்ளலாம் என்ற முறையில் மாத்திரம்) இருக்கின்றன; ஆனால் ஆழமாக" நோக்கினால் இத்தொகுப் பில் இடம் பெற்றவை சிறுகதைகள்' தானா என்ற கேள்வி முதலில் எழுகிறது. (அதாவது சிறுகதைக்குரிய அம்சங்கள்

M%7zzzarezzá fo62-1979 775
பொருந்தியுள்ளனவா என்ற ஐயப்பாடு) அடுத்தது, இக்கதாசிரியர் லெமுருகபூபதி இக்கதைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார்? சமூகப் பின்னணியை அவர் இனங் கண்டு அந்தத் தளத்தில் பாத்திரங்களை வார்த்திருக்கிறாரா அல்லது வெறும் நடைச் சித்திரங்களாகப் பாத்திரங்கள் வார்க்கப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளும் எழுகின்றன. ஆசிரியரைத் தட்டிக் கொடுக்க, அவர் சிறுகதைகள் பாராட்டத்தக்கவை என்று கூறிவிட முடியும். ஆனால் ஆழமான கருத்துக்களை வேண்டி நிற்கும் ஆசிரியர் ஆழமாகத் தமது படைப்புகளை உருவாக்க முடியாமற் போனது பெரும் ஏமாற்றமே.
(தினகரன் வாரமஞ்சரி - 75- 02 = 1976)
st
කුං

Page 95
776
சுதாராஜின் நேர்மைத் திறன் கதைகள்
Desafis பலவீனங்களை நன்கு அவதானித்து சுயமாகவும் சுவை யாகவும் சுதாராஜ் எழுதுகிறார். இந்த பலாத்காரம் என்ற தொகுப்பு பற்றிய சிறந்த அறிமுகத்தை தேவன் யாழ்ப் பாணம் தொகுப்பிலேயே எழுதி யிருக்கிறார்.
இந்நூலில் உள்ள பத்துக் கதை களில் ஆறு சமூகக் குறைபாடுகள் பற்றியவை. இரண்டு பாலியல் தொடர் பானவை. வீண் சந்தேகத்தினால் ஒரு குடும்பம் குலைவது இன்னொரு கதை. சமூகப் பலவீனம் பற்றியது மற்றத.

777 تیتر محی ھے لیے یہ قب4روع سے تح%7zzzمجھے وہ
ஆகவே தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறார் என்பது தெளிவு. சமூகக் குறைபாடுகளைச் சாடுகிறார். நையாண்டி செய்கிறார். நகைச்சுவை படவும் சொல்கிறார். தன்னைச் சுற்றி இருப்பவர்களை, நடப்பவற்றை கூர்ந்து நோக்குகிறார் என்பதும் இந்நூலை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியவரும். அநியாயத்தை, ஒழுக்கக் கேட்டைக் கண்டு இவர் சீறுவதும் குமுறுவதும் நன்கு புலனாகின்றது.
இவருடைய கதைகளில் ஐந்து கொழும்பு மாநகரிலும், நான்கு யாழ்ப்பாணத்திலும், ஒன்று கொழும்பு - யாழ்ப்பான மெயில் வண்டியிலும் நடைபெறுகின்றன. இவருக்கு நன்கு பரிச்சயமான இவ்விடங்கள் கதைகளுக்கு ஏற்ற உண்மைத்
தன்மையைக் கொடுக்கின்றன.
முடமான பிச்சைக்காரன், பிச்சைக்கார கண்மணி, தூய காதலி வனிதா, சின்னாம்பி, சிங்களப் பரீட்சையில் கோட்டைவிடும் எழுத்தன், அவன் மனைவி லலிதா, நாகரிக நங்கை வத்சலா, மற்றவர் குடியைக் கெடுக்கும் சபாபதி, குஞ்சுப்பிள்ளை சோடி, பெட்டைக் கோழியின் மனைவி யாக வரும் மிஸஸ் அருள்நாயகம், பிள்ளையில்லாத திருவாட்டி சொர்ணம் தில்லைக்கூத்தன், ரயில் பிரயாணிகள் எல்லோருமே எம்மைச் சுற்றி நடமாடுபவர்கள்தான். அதனாலும் இக்கதையில் எவ்வித போலித்தன்மையும் காணமுடியாது. சுற்றிவளைக்காமல், நேரடிய, ,ே ஆனால்

Page 96
፲ፖ፰ ஈழத்துச் சிறுகதைகளும்
கவர்ச்சியாகக் கதைகளைச் சொல்லும் திறன் இவருக்குக்
கைவந்திருக்கின்றது.
அசிங்கமெனப்படும் விஷயங்களைக்கூட நாசுக்காக, மறைக்காமல், ஆனால் மொட்டையில்லாமல் சொல்லி விடுகிறார். சிக்கல் சிடுக்கு இல்லை. சம்பாஷணைகளைக் கதைகளில் தாராளமாகக் கையாளுகிறார். இதனால் இவற்றில் ஒரு இயற்கைத் தன்மை காணப்படுகின்றது.
சுதாராஜின் கதைகளில் நேர்மையும் நோக்கமும் இருப்பதைக் காணமுடிகிறது. ஆணித்தரமான அனுபவங் களை நேர்த்தியாக, நயமாக அவர் வெளிப்படுத்துகிறார். தேர்வுமுறையிலமைந்த கலைவடிவங்களாக அவருடைய கதைகள் அமைந்துள்ளன. பயணம்' என்ற கதை சிறப்பாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் மேலோட்டமான கலாசாரத்தின் ஒரு கூறை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
(தினகரன் வாரமஞ்சரி : 28-07-1978)

779 மருதூர் மஜீத்தின் மட்டக்களப்பு முஸ்லிம் தமிழ்
பன்னீர் வாசம் பரவுகின்றது தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் சில 'மலர்ந்த மணங்களுக்கு'அர்ப்பணிக்கப் பட்டுள்ள்ன. சில, ஆழ்ந்த துயருணர்வை ஏற்படுத்துகின்றன. சில அனுபவங் களைப் பகிர்ந்து கொள்கின்றன.
'உண்மை ஊமையாய் ஊரெல்லாம் அலைகிறது, குப்பையிலே ஒரு குண்டுமணி, தலைப்புக் கதை' ஆகியன இத்தொகுப்பில் இடம் பெறும் சிறப்பான கதைகள் எனலாம். ஏனைய எட்டுக் கதைகளும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன.
இயல்பான, மட்டக்களப்புப் பகுதி முஸ்லிம்களின் பேச்சு மொழியைக் கதைகளில் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மெல்லிய உணர்வு களை எழுப்பும் இலகுவான கதைப் பின்னல் காரணமாகக் கதைகள் அழுத்த மான முறையில் எழுதப்பட வில்லை.
(வீரகேசரி வாரவெளியீடு; 09-12-1979)

Page 97
780
காவலுள்
எஸ்.ஜெகநாதனின்
சிறுவர்களுக்கான கதைகள்
ற்ே யிரத்துத் தெளாயிரத்து எழுபதுகளில் புதிய எழுத்தாளர்கள் ஈழத்தில் எழுதத் தொடங்கினர். அவர் களுள் ஒருவர் காவலூர் எஸ்.ஜெக நாதன். பிரச்சினைக்குரியவராகக் கருதப்படும் ஜெகநாதன் சிறுகதை, உருவகக்கதை, கவிதை, நாவல், இலக்கியக் கட்டுரை, விமர்சனம் போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டு உள்ளார். சிறுவர் இலக்கியத்திலும் நாட்டமுடையவராக அவர் இருக்கிறார்.
மெய்கண்டானின் நட்சத்திர மாமா சிறுவர் ஆண்டுத் தொகுதிப் பிரசுரம் - 3 ஆக காவலூர் எஸ்.ஜெகநாதனின் வானத்து நிலவு வெளிவந்துள்ளது. இத் தொகுதியில்

737 محی ترتی ھے- کے ص ۶ی محمد قz ہوتی zzzثر%مجھے وے பத்தொன்பது கதைகளும், ஒரு பாடலும் இடம் பெறுகின்றன. பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட இக் கதைகள் சின்ன வசனங்களைக் கொண்டு எழுதப் பட்டுள்ளன. நல்ல கருத்துக்களை உளவியல் ரீதியாகச் சிறுவர் உள்ளத்தில் புகுத்தும் முயற்சியில் ஜெகநாதன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூறவேண்டும். ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் படித்து முடித்ததும் எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. சிறுவர் இலக்கியங்களில் ஈடுபடும் எழுத்தாளர்கள் நினைவு கொள்ளத்தக்க இரண்டொரு விஷயங்களை ஜெகநாதன் நினைத்துச் செயற்படுவதையும் நாம் காண்கின்றோம். -
இன்றைய சிறுவர்களை நாம் பழைய யார்க்கோல்கள் கொண்டு அளவிட முடியாது. காரணம் அவர்கள் அறிவு, அனுபவ வளர்ச்சி துரிதமாக நடைபெறுகிறது. அவர்கள் எதனையும் விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள். நம்பக்கூடியவற்றைத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் வெறும் இராசாராணிக் கதைகளையும், மந்திர தந்திரக் கதை களையும் அவர்கள் விரும்புவதாகத் தெரியவில்லை. அவர் களுக்கு இக்கால விஞ்ஞான உண்மைகளுக்கு இணங்கிய தான தருக்க ரீதியான விடைகளைத் தரும் கதைகள் தான் வேண்டியுள்ளன.
'வானத்து நிலவு' வாசகர்கள் ஆறு வயதுக்கும் பன்னிரண்டு வயதுக்கும் உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என ஆசிரியர் நினைத்திருந்தால், அவர் தமது கதைகளில் கையாண்டிருக்கும் உத்தி முறைகள் பொருத்த மாய் அமைந்து பயனளித்துள்ளன எனலாம்.

Page 98
782 ஈழத்துச் சிறு சதைகளுரம்
இக்கதை தொகுதியைப் படிக்கும்படி எனது ஒன்பது வயது மகன் அனந்தராமிடம் கொடுத்தேன். அவன் விளையாடப்போகும் அவசரத்தில், இரண்டொரு கதைகளைப் படித்துவிட்டு, ஏனையவற்றை என்னையே படித்துக் காட்டுமாறு வேண்டினான். சில சொற்றொடர்கள், புணரியல் போன்றவை அவனுக்குத் தானே வாசித்துப் பார்க்கக் கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, உரக்கக் கதைகளைப் படித்தேன். அவன் அக்கதைகளைக் கேட்டுப்பிரமிப்பும் சந்தோஷமும் அடைந்தான். அவனுக்கு ஓர் அண்ணன் இருப்பதனாலோ என்னவோ அல்லது இலகுவில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற சுய கெளரவ நினைப்பினாலோ அண்ணன் காட்டிய வழி என்ற கதை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் எஞ்சிய கதைகள் பிடித்தன என்றும் கூறினான்.
அனந்தராமின் அண்ணன் ரகுராமிடம் (வயது 12) 'வானத்து நிலவைக் கொடுத்தேன். அவனுடைய அபிப் பிராயத்தின்படி தொகுதியில் உள்ள சில கதைகள் நன்றாக இருக்கின்றன. வேறு சில சின்னப்பிள்ளைகளுக்காக எழுதப்பட்ட செயற்கையான கதைகள்.
இந்த விவரங்களை இங்கு ஏன் கூறுகிறேன் என்றால், புத்தகம் யாருக்காக எழுதப்பட்டது? எந்த வயதினருக்குப் பொருத்தமானது என்பதைச் சிறுவர் ரசனையின் அடிப்படையில் எடுத்துக் கூறுவதற்காகத்தான். ஏற்கனவே ஐந்து வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் 'வானத்து நிலவுக்கதைகளைப் பெரும்பாலும் இரசிப்பர்.
பொறுப்புள்ள ஒரு தந்தை என்ற முறையிலும், இலக்கிய ஆர்வலர் என்ற முறையிலும் இத் தொகுப்பில்

783 تیتری محمد سمیتے ۶6ی محمد قZ تریعے تح7/7zzzھے
இடம் பெற்றுள்ள அம்மா, வானத்து நிலவும், சிறுகதைப் டோட்டி (புதிய முறையில் எழுதப்பட்டுள்ளது), தங்கை ஒரு தீபம், அண்ணன் காட்டிய வழி, குழந்தை உள்ளம், விளக்குப் பூச்சிகள், மனிதன்இல்லை, அன்னை வளர்ப்பதிலே (பழைய கதையின் புதிய வடிவம்), அவன்தான் மனிதன், வீரன் யார் ஆகிய கதைகளை நான் பெரிதும் விரும்புகிறேன்.
காவலூர் எஸ்.ஜெகநாதன் திறமைசாலி என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. பல எழுத்துப் போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அசுர வேகத்தில் எழுதுபவர். எழுதியவற்றில் பல தேறியுமுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய இலக்கியப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதையின் குறுநாவல் வடிவமாக "உடைவுகள்' அமைந்துள்ளன. காவலூர் எஸ்.ஜெகநாதனின், படைப்பு 5ளுக்கு விமர்சகராக விளங்கிவரும் கலா. குமரிநாதன், 'உடைவுகள்' பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமாகவே இருக்கிறது. அவர் கூறுகிறார்: "தீண்டாமை என்னும் சுவரை உடைப்பது கலப்புத் திருமணத்தால் இயலாத உசிதமற்ற தீர்வு என்பதை இக் கதையின் மூலம் அழுத்திக் காட்டியுள்ளார் கதாசிரியர். கதையின் நாயகன் தனது வாழ்க்கைச் சம்பவங்களை மனம் உடைந்த நிலையில் நினைப்பதை உணர்ச்சிபூர்வமாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பது, வாசகர் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது."
(தினகரன் வாரமஞ்சரி : 30-12-1979)

Page 99
784
இவர்களுடைய சிறுகதைகள் இங்கு ஆராயப்படுகின்றன :
இலங்கையர்கோன் செ.கணேசலிங்கன் வ.சு.இராசரத்தினம் டொமினிக் ஜீவா காவலூர் இராசதுரை நீர்வை பொன்னையன் வரதர்
கே.டானியல் நாவேந்தன் பவானி (ஆழ்வார்ப்பிள்ளை) எம்.ஏ.ரஹ்மான் சத்தியன் செ.கதிர்காமநாதன் என்.எஸ்.எம்.ராமையா செ.யோகநாதன் மு.தளையசிங்கம் மண்டூர் அசோகா புலோலியூர் க.சதாசிவம் நெல்லை க.பேரன் மு.திருநாவுக்கரசு யோ.பெனடிக்ற் பாலன் சாந்தன் லெ.முருகபூபதி சுதாராஜ் மருதூர் மஜித காவலூர் ஜெகநாதன் இன்னுஞ்சிலர்


Page 100
ஆசிரியரைப்பற்றி.
கொழும்புவைச் சே நூலாசிரியர். 68 வயது இ6ை தமிழிலும் ஆங்கிலத்திலும் புல் பறிக்கவர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுக எழுத்துப் பணியில் சிற விளங்கும் இவர், தமிழில் பத் மேற்பட்ட நூல்களையும் ஆங்கி
எழுதியுள்ளார்.
裘 பெரும்பாலும் அமெரிக்க ஈழத் தமிழ் இலக்கியத்தின்
விளங்குகிறார். கதைகள், திறன் என இவர் தொடாத துறைகளே
இவரின் எழுத்துகளை
“Literary Journalism’ e.g68 அதிர்ந்து பேசாத அமைதியான
ஆசிரியர் அவைய ாள்ளவிட்டாலும் ஆசிரியரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$685 )ந்து கே.எஸ். சிவகுமாரன் திற்கு
லத்தில் இரு நூல்களையும்
வில் வாழும் இவர், நவீன 4 பிரிக்கமுடியாத அம்சமாக ) ாய்வு நாவல், இலக்கியம்
இல்லை.
'ப் புரிந்து கொள்வதற்கு றது என்பது உண்மை. குணம் கொண்டவர்.
க்கமாக தற்புகழ்ச்சி திறன் மதிப்பிடற்கரியது