கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03
Page 1
di
jTsjLJL |55|T
X☆*
ァい、こ
ஈழததுச
----タ*
ご、Wy、Wィ
、 、 「MY
எழுததுககளும பல
Page 2
Page 3
TITLE: 'eeLATHTHUCH CHIRU KATHAITH THOIHUPUHU :: THIRANARRIVU (SHRI LANKANSHORT STORY COLLECTIONS CRITICAL INSIGHTS)
SU3 TITLE: fPRTHTHI €LUTHITHUKKRLUM PATHIRRDDUHRUM - 3 (COLUMN AND MISCELLANeOUS URITING-3)
GENRE : LeRRR CRITICISM
AUTHOR: K.S. SIVRKUMARAN, 3.A.
Rights: Ruthor's
RUTHOR'S ADDRESS: 21, Murugan Place, Colombo - 6, Sri Lanka. Te: OO94 - 158767
Date of Publication: July 30, 1998
Printer: Sevuandi (Pvt) Ltd. 130, Gunananda Mahuatha, Colombo - 13
PROG: RS 175/-
பொருளடக்கம்
பக்கம்
கே. டானியல் - டானியல் கதைகள். 01 சிற்பி-தொகுப்பாசிரியர் - ஈழத்துப்பரிசுச் சிறுகதைகள். 02 பவானி - கடவுளரும் மனிதரும். 05 நாவேந்தன் - வ்ாழ்வு. 08 போட்டிக்கதைகள். M.A. ரகுமான்- பூ. 14 சத்தியன் - சிரத்தை. 18 செ. கதிர்காமநாதன் - கொட்டும்பனி. 20 என். எஸ். எம் ராமையா - ஒரு கூடைக்கொழுந்து. 24 செ. யோகநாதன் - யோகநாதன் கதைகள். . . . . . . . . . . . . 28 முதளையசிங்கம் - புதுயுகம் பிறக்கிறது.33 பூங்கோதை - வேணிபுரத்து வெள்ளம். 35 செ. யோகநாதன் - ஒளி நமக்கு வேண்டும்.39 புலோலியூர் க. சதாசிவம்- யுகப்பிரவேசம்.42 மண்டூர் அசோகா - கொன்றைப்பூக்கள் .45 நெல்லை க. பேரன் - ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்.46 அ. யேசுராசா - தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்.51 சாந்தன்- கடுகு. 52 மு. திருநாவுக்கரசு - இவர்களும் மனிதர்கள்.55 நா. முத்தையா - தத்துவக் கதைகள்.58 யோ. பெனடிக்ற் பாலன் - தனிச்சொத்து....60 சாந்தன் - ஒரே ஒரு ஊரிலே. 62 லெ. முருகபூபதி - சுமையின் பங்காளிகள்.63 சுதாராஜ் - பலாத்காரம்.64 மருதூர் மஜித் - பன்னீர் வாசம் பரவுகிறது. 66 காவலுார் எஸ். ஜெகநாதன் - வானத்து நிலவு, உடைவுகள்.67
Page 4
பக்கம்
குப்பிளான் சண்முகம் - கோடுகளும் கோலங்களும்.70 க. சட்டநாதன் - மாற்றம்.်.......................................72 காவலூர் எஸ். ஜெகநாதன் - யுகப்பிரசவம்.................76 தெளிவத்தை ஜோசப் - நாமிருக்கும் நாடே.79 மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்- தோட்டக்காட்டினிலே.83 மு. கனகராசன் - பகவானின் பாதங்களில் .87 செ. யோகநாதன் - கண்ணிர் விட்டே வளர்த்தோம். ... .90 மகாஜனக்கல்லூரி மாணவர்கள் - இவர்கள். 93 முல்லைமணி - அரசிகள் அழுவதில்லை.96 எஸ். பொன்னுத்துரை - வி. 00 டொமினிக் ஜீவா - வாழ்வின் தரிசனங்கள். Ol
நாகூர் எம். கனி - தூரத்துப் பூபாளம். sa e as e as a a b * a 9 a ese 103 முத்து ராசரத்தினம் - சிலந்தி வயல். 108 கோகிலா மகேந்திரன் - முரண்பாடுகளின் அறுவடை. 109 எஸ். வி. தம்பையா - கடலில் கலந்தது கண்ணீர் .112 கே. டானியல் - மண். 115
சாந்தன் - கிருஷ்ணன்தூது. SLS L CLLL LLL LLL LLLL LL LL LLL CLLL LL LLL L LLLL LL 0 LL LLLCLSCCLLL 21 என். சோமகாந்தன் - ஆகுதி. 127 உமா வரதராஜன் - உள் மன யாத்திரை . 135 எம். ஐ. எஸ். முஸம்மில் - பிராத்தனை.139 எஸ். எச். நிஹ்மத் - எரிகொள்ளி.143
சுதாராஜ் - கொடுத்தல். 149
நூலாசிரியர் விளக்கமும் நன்றி நவிலனும்
ன்ேபார்ந்த வாசகநேயர்களுக்குவணக்கம்!
இது எனது ஒன்பதாவது நூல். பத்தி எழுத்துக்களும், பல்திரட்டுக்களும் வரிசையில் இது மூன்றாவது வெளியீடு. 1980களின் இறுதிவரை வெளியான சிறுகதைத் தொகுப்புகளுள், நான் படித்துப் பார்க்கக் கூடியதாகவிருந்த சிலபற்றியும், "பூ", "மண்" ஆகிய இரு சிறுகதைகள் பற்றியும் இடம் பெற்ற திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்கள் இத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.
தேனருவி, செய்தி, தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி வாரவெளியீடு போன்ற பத்திரிகைகளில் 1963 முதல் 1988 வரையிலுமான காலப்பகுதியில், இப்பத்தி எழுத்துக்கள் வெளியாகின.
திறனாய்வுப் பார்வைகள், ஈழத்து இலக்கியம்: நால்களின் அறிமுகம் என்ற இந்த வரிசையில் (பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுக்களும்) மூன்றாவது நூலாகிய ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு என்ற இந்த நூலும் கல்வி உயர்தரவகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் போன்றவர்களுக்கு ஓர் ஆதார வளமாக இந்நூல் அமைகிறது. பலபழைய சிறுகதைத் தொகுதிகள் பற்றிய கணிப்புகள் இடம் பெறுகின்றன. எழுத்தாளர்கள் அவர்கள் ஆக்கங்கள் பற்றிய பலர் அறிந்திராத தகவல்களை இந்நூலில் பெறக்கூடியதாக இருக்கும்.
Page 5
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் கொண்டிருந்த திறனாய்வுப் பார்வைகளை இந்நூலிலிருந்து அறிய முடியும்.
1960-1980 காலப்பகுதியில் வெளிவந்த அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும் நான் படித்து மதிப்புரை எழுதினேன் எனக்கூறமாட்டேன். ஒரு சில தொகுப்புகள் பற்றிய பார்வையே இங்கு இடம்பெறுகின்றன.
ஆய்வாளர், திறனாய்வாளர், மதிப்புரையாளர், பத்தி எழுத்தாளர், இலக்கிய நாட்டங்கொண்ட வாசகர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கிய மாணவர்கள் அனைவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
எண்பதுகளிலும், தொண்ணுாறுகளிலும் வெளிவந்த ஏனைய சிறுகதைத் தொகுப்புகளுள் சில பற்றிய பார்வைகள், இந்த தொடர் வரிசையில் இடம் பெறும் அடுத்த நூலில் சேர்த்துக்கொள்ளப்படும்.
தங்கள் ஆதரவிற்கும், இந்நூல் வெளியீட்டில் அக்கறை கொண்டுழைத்த பிரபல எழுத்தாளரும், பத்தி எழுத்தாளருமான ஆ.இரத்தின வேலோனுக்கும், அழகுற அச்சிட்ட செவ்வந்தி நிறுவன உரிமையாளருக்கும் மிக்க நன்றி.
கே. எஸ். சிவகுமாரன் 21, முருகன் பிளேஸ்,
கொழும்பு - 06 ജ്ഞയെ 30, 1998.
茨 ★ ★
Vi
கே. டானியல்
டானியல் கதைகள்
Dறைந்த எழுத்தாளர் கே. டானியல் எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பு இது. இதில் வரும் ' உறவும் நிழலும்' என்ற கதையில், தனது நோக்கத்தைச் செயலாற்றுகையில், விளைவு எதிர்பாராதவிதமாக அமைந்தபொழுது கதாநாயகி தன்னை மாய்த்துக்கொள்கிறாள். புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' கதையுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையானது.
அசை ' என்பது ஆண்மை குன்றிய ஒருவனின் சோகக் கதை. "மனிதனுக்கு வாழ்க்கையிலே பற்றும் நம்பிக்கையும் மேலோங்க வேண்டும் என்ற கருத்தை முதன்மைப்படுத்துவதாக"கக் கூறும் டானியலின் நோக்கம் இக் கதையில் நிறைவுறுகிறது. பாலுணர்வு இல்லாததால், சமூகத்தில் "மாமா" போன்றவர்களின் பங்கு மிகக் குறுகியது என்பதைக் கதை மூலம் உணர்த்துவிக்கும் ஆசிரியர், பொன்னம்மா என்ற பரத்தை மீது மேலிடான உணர்ச்சி எண்ணம் பெருகும் விதத்தில் வாசகர்களைத் தூண்டுகிறார்.
மானம்' என்ற கதையில் நம்ப முடியாத திகைக்க வைக்கும் சம்பவங்களும், ஒருதலைப் பட்சமான பாத்திரச் சித்திரிப்புமுள்ளன. மனித இயல்பின் எதிர்மறைகளைக் கோடிட்டுக் காட்டுவதாக மரண நிழல்' அமைந்துள்ளது.
9 துள்ளது (தேனருவி - செப்டம்பர். 1963)
d. d. Kd. 0x9 0x8 (X-
Page 6
சிற்பி: தொகுப்பாசிரியர்
ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள்
இத்தொகுப்பில்இடம் பெற்ற கதைகள் 1956-62காலப் பகுதியில் எழுதப்பட்ட பரிசுக் கதைகள். இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகளை அவை எழுதப்பட்ட காலத்தை அதிகம் பொருட்படுத்தாமல் மதிப்புரை எழுதினால், இத்தொகுப்பு திருப்தியளிக்கவில்லை என்றே எழுத வேண்டும் 'திருப்தியளிக்கவில்லை' (Less satisfying) என்று பொறுப்புணர்ச்சியுடன் தான் எழுதுகிறேன். தற்காலிகமாக இக்கதைகள் பாராட்டத்தக்கவை என்று ஊக்கமளித்தாலும், காலக்கிரமத்தில் இவை பயிற்சி அப்பியாசங்கள்' என்ற முறையில் மறக்கப்பட்டு விடும் என்பதைத் திடமாகக் கூறிவிடமுடியும்.
செங்கை ஆழியான், முத்து சிவஞானம் ஆகிய இருவரும் பத்திரிகைச் செய்தி நிருபரின் செய்திச் சுருள் படைப்பில் இருந்து சிறுகதை' எழுதப் பழகும் பயிற்சி அப்பியாசங்களாக' (Excercises)த் தங்கள் கதை'களை எழுதியிருக்கின்றனர்.
சிற்பி, 'உதயணன், நவம்'ஆகிய மூவரிடையேயும், 20ம் நூற்றாண்டு முற்போக்கான (பொதுப்படையான அர்த்தத்தில்) எழுத்தாளனின் மனோபாவம் அல்லது வாழ்க்கை நெறி போன்றவை இருக்கின்றன. மனிதாபிமானம், (Humanism) போன்ற மதிப்புள்ள சொற்களைப் பாவித்து அவர்களை உக்கிப்போன உச்சாணிக் கொப்பில் ஏற்றி வைக்க
婷 ❖* *ር
விரும்பாவிட்டாலும், அவர்களிடம் இருக்கும் 'ஏதோஒன்றை, நவீன சிறுகதை வடிவத்தில் வெளிப்படுத்தத் திக்கித்திணறிச் சம்பிரதாயப் பத்திரிகைரகக் கதையுருவில் புனைந்திருக்கிறார்கள். பொழுது போக்குப் பத்திரிகை எழுத்தாளர்களினதும்,ஆதர்ஸ்த்லிருந்து இவர்கள் விடுவித்துக்கொள்வது விரும்பத்தக்கது. அவர்களே விரும்பாவிட்டால் நாம் என்ன செய்வது!
செம்பியன் செல்வன் வளர்ந்து வருபவர். வாலிப வயதில் கற்பனை வேகம் தடம் புரண்டோடத்தான் செய்யும். காலப்போக்கில் முதிர்ச்சியடைய வீச்சும் கனமும் தாமாகவே மெருகடையும். இவரிடம் நம்பிக்கையுண்டு. நாமும் இவருடைய எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும் என்று நம்புகிறோம். எடுத்துக் கொண்டகதையைப் பொறுத்தவரையில் ஒரு ஆங்கிலப் படத்தின் சாயல் தெரிகிறது. கதாசிரியர் அப்படியே கொப்பியடித்து விட்டார் என்று நான் கூறவில்லை. ஏனெனில் படம் இங்கு திரையிடப்படு முன்பே கதை வெளியாகி விட்டது என்று அறிகிறேன். அப்படித்தான் அருட்டுணர்வில் தழுவி எழுதியிருந்தாலும், பாதகமில்லை; வெவ்வேறு திசைகளிலும் நம் எழுத்தாளர்கள் தம் கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்ற திருப்தியிருக்கும். ஆகவும் கண்ட மிச்சம் என்ன? சாதிப் பிரச்சினை, வர்க்கபேதம், தமிழ்ப்பண்பாடு, தற்காலிகமான சிங்களர்-தமிழர் பிரச்சினை, கற்பு 'பொழுது போக்கு உல்லாசங்கள்' ('காதல்' உட்பட) இது போன்றவற்றைத் தானே திருப்பித் திருப்பித் திணிக்கிறார்கள் நம் எழுத்தாளர்கள். போகட்டும்.
பெண் எழுத்தாளரையும், பத்திரிகைத் தர எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியது தான்; ஆனால் அவர் எடுத்துக்கொண்டுள்ளது, சமூக வேறுபாட்டுக் கதைப் பொருள் (Inconsistencies in the attitudes of people of different social starta)வரவேற்கத்தக்கது. உண்மையிலேயே பிரக்ஞை பூர்வமாகவே அவர் இக் கதைப் பொருளைச் சித்திரிக்க வேண்டும் என்று நினைத்துச் சித்திரித்தாரோ அல்லது அது ஒரு 'விபத்தாக அமைந்து விட்டதோ, நானறியேன். சித்திரித்தவரை வெற்றியே.
Page 7
செந்தூரான் தாம் எடுத்துக் கொண்டதைச் சற்று காத்திரமாக, யதார்த்த பூர்வமாக, 'வழ வழா கொழ கொழா' இல்லாமல் சித்திரித்திருக்கிறார். ஈழத்துத் தமிழ் உடனிகழ்கால இலக்கியத்தில் அவரது கதையும், ராமையாவின் கதையும், மலைநாட்டுத் தமிழர் மொழியும், வாழ்வும் என்ற முறையில் முத்தாரமாகத் தற்பொழுது இருந்து வருகின்றன.
நவீன உளவியல் போக்குக் கேற்ற முறையிலும், சிறிது நளினமான கதைப் பொருளைக் கொண்டதினாலும், இறுக்கமாக எழுதப்பட்டதினாலும், அ. முத்துலிங்கத்தின் பக்குவம், மற்றக் கதைகளின்றும் சிறிது எழும்பி நிற்கின்றது. அவ்வளவுதான்.
பகுப்புமுறை கொண்டு இக்கதைகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டிய அவசியம் இங்கில்லாததால், அடிப்படையான சில விஷ யங்களை எடுத்துக்கூறியிருக்கிறேன். வாசகர்கள் அவசியம் இப்புத்த கத்தை வாங்கித் தாமாகவே படித்துப் பார்ப்பது பொருத்தமாயிருக்கும்.
(G56OTE65 : Ghafiullbur - 1963)
Ο 0.
* •x
பவானி
கடவுளரும் மனிதரும்
பவானி ஆழ்வாப்பிள்ளையின் கதைகளிலுள்ள கருப்பொருட்கள் plotsஅதீத நாடகப் பண்பு mdodramatic வாய்ந்தவையாய் இருக்கின்றன. தமிழ் நாட்டில் பத்திரிகை ரகக் கதைகள் Wel - made Stories எழுது பவர்களும், தமிழ்த் திரைப் படங்களில் புகுத்தப்படும் செயற்கையான முதல்,இடை ,கடைப் பகுதிகளை எழுதும் கதாசிரியர்களும் அமைக்கும் மேலீடான உணர்ச்சி வண்ணம் Sentimentality இவர் கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவருடைய கதைகளில் வரும் பாத்திரங்கள் இளங்காதலர் களாகவும், புதிதாக மணமாகிய அல்லது மணமாகப்போகும் இளம் பராயத்தினராயும் இருக்கின்றனர். வளரிளம்பருவத்தினரின் முதிர்ச் சியடையாத, விகற்பமான, ஆசாபாசங்களின், பிரதிபலிப்பாகவே இவ்வாசிரியையின் கதைகள் இருக்கின்றன. இவருடைய கதைகளில் உள்ள உள்ளடக்கத்தை வரவேற்க முடியாதாயினும், இவருடைய கதைகளில் அமைந்த உருவத்தைக் குறை கூறுவதற்கில்லை. சிறுகதை எழுதும் கைவண்ணமும், கவிதாவுணர்வும் இவரிடம் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இன்னொரு கோணத்தில் நின்று பார்க்கையில் மானஸிகக் காதல் என்றும் புனிதக் காதல் என்றும் வெற்றுப் பேச்சுப் பேசாது, ஒரு விதத்துணிவுடன், மனிதர்கள் சுகத்திலும், வாழ்விலும் எழும் சலன
Page 8
எண்ணங்களையும், செயல்களையும் படம் பிடித்திருக்கிறார். இளம் தம்பதிகளிடையே அல்லது காதலர்களிடையே எழும் பந்தமும் பாசமும், மனிதாபிமானமும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் பண்பும் இவருடைய கதைகளில் உள்ளடங்கியவை. எனவே துணிவுக்குப் பாராட்டுதலும், விழைவுக்குக் கண்டனமும் தெரிவிக்க வேண்டியிருக் கின்றது.
இனி, இவரது கதைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
காப்பு' என்ற கதை சிறப்பாக அமைந்திருக்கின்றது. மணமான பெண்ணொருத்தி-குரூபி- தனித்தே ரயிலில் பிரயாணஞ் செய்கையில் மணமாகாத வாலிபன் ஒருவனுடனும், மணமாகிய இன்னொரு அழகிய பெண்ணுடனும் பிரயாணம் செய்ய நேரிடுகிறது. வாலிபன் அழகிய மாது மீது பொருந்தாக் காமங் கொள்கிறான். இச்செய்கையின் தாக்குதலினால் குரூபியின் பேதையுள்ளம் எரிச்சலாகக் கொந்தளிக்கின்றது. அவளது மனவோட்டம் தர்க்கரீதியாக அமைகின்றது. கதையில்உணர்த்தப்படுவது யாதெனில் மணமான பெண்ணுக்கு-அழகிக்குத் - தாலி எவ்விதம் வேலிபோல் நின்று காமுகனுடமிருந்து காப்பாற்றி நின்றதோ - குரூபிக்குத் தனது குரூபமே அவ்விதம் துணை செய்தது என்பதாகும்.
'விடிவை நோக்கி"என்ற மற்றக் கதை ஒன்றும், யதார்த்த பூர்வமாய் அமைந்துள்ளது. கிராமத்திய மக்கள் ஒருசிலரின் மனப்பாங்கை அழகாக வெளிப்படுத்திக் காட்டுகிறார் ஆசிரியை. ஏனைய கதைகளில், மன்னிப்பாரா', 'சரியா தப்பா', 'அன்பின் விலை, ஆகிய மூன்றும் அக்கதைகளில் அமைந்த மேலீடான உணர்ச்சி வண்ணத்தால், கதைகளில் கீழோடும் மனிதாபமான உணர்வு அருவருக்கத்தக்க முறையில் வடிவம் பெற்றுள்ளது. இந்த நாடகப் பண்புமுறை செட்பனிடப்பட்டுக் கலைநயமாக உணர்த்தப்பட்டிருந்தால் ஒருவேளை சிறப்புற்றிருக்கும்.
பிரார்த்தனை', 'ஜீவநதி' ஆகிய கதைகளில் முறையே செயற்கையான வேலிக்குள் அடங்கிய தமிழ்ப் பெண்ணின் கற்பும்,
7
பாசமும் கதைப் பொருளாக உள்ளன. ஆனால் நாடகப் பண்பு அதிகம் உண்டு. 'உன்னை உணர பூரணச் சிறுகதை வடிவம் பெறாமல் அங்கு ஒரு விவரண வருணனையும், இங்கு ஒரு செயற்கைச் சித்திரிப்பும், இடையில் ஒரு மன நெகிழ்வுப் படப்பிடிப்பும் கொண்ட ஒரு கதை. இக்கதையின் உள்ளடக்கம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அசட்டு அபிமான உணர்ச்சியை ஊட்டுவது.
வாழ்வது எதற்காக?' என்பது சினிமா பாணி தியாகத்தை உணர்த்துவிக்கும் ஒருகதை. 'புதிர்' என்பதும் சினிமாப் பாணிக் கதை. 'நிறைவு'ஒரு சாதாரண பத்திரிகைக் கதை. 'அழியாய் புகழ்' அவ்விதமே. 'சந்திப்பு' 'மனிதன்' கதைகள் சுமாராக அமைந்திருக்கின்றன.
பவானி அவர்களின் கதைகள் தொடர்பாக 1960களில் நான் கொண்டிருந்த பார்வையே இது. இன்று பெண்ணிய நோக்கில் ஆராயும் பொழுது அபிப்பிராயங்கள் சில மாறுபடலாம்.
(தேனருவி - பெப்ரவரி 1 1963)
资资资
Page 9
நாவேந்தன்
୩ITy['୩']
ரிவேந்தன் எழுதிய சிறு கதைகளின் தொகுப்பு "வாழ்வு' பதினைந்து வருடங்களாக அவர் எழுதிய கதைகள், இன்றைய தரமான வாசகனுக்குத் திருப்தி தரா. நாவேந்தன் வெகு அண்மைக் காலங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பொன்றைப் படித்துவிட்டுத்தான் அவரிடம் வளர்ச்சி காணப் படுகின்றதா என்று கூறமுடியும். இன்று ஈழத்து எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் காணப்படும் ஒரு பரபரப்பான விழிப்புணர்வுக் காலகட்டத்தில் 'வாழ்வு' என்ற தொகுப்பு வெளிவந்திருப்பதே ஒரு முரண்பாடுதான். தொகுப்பாக வெளியிடும்போது பொறுக்கி எடுத்த கதைகளைத் தேர்ந்து தொகுக்க வேண்டாமா?அல்லது கதைகளைத்தானும் செப்பனிட்ட பின் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? அதுதான் ஆசிரியனுக்கே உரித்தான சுதந்திரம் இருக்கின்றதே என்று துணிந்து வெளியிட்டுவிட்டார். முயற்சிக்காக நாம் உற்சாகப்படுத்துவது, அவசியந்தான். ஆனால் அறுவடை பற்றிய அபிப்பிராயம் கூறுவதற்கு வாசகர்களுக்குத்தான் உரிமையுண்டு.
கதைகள் எழுதப்பட்ட காலம், கதாசிரியரின் கோட்பாடுகள்,
வாழ்க்கை-இலக்கியம் பற்றிய நோக்கு, கதாசிரியரின் வசதிக் குறைவுகள் (Inadequacies in respect of familiarity with modern techniques and craft of short story Writing) Sig.6O)6O16OuJub LD6015) G35T605(6), கனிந்த நோக்குடன் 'வாழ்வு தொகுப்பைப் படித்தால், முகஞ்சுளிக்காமல் பராட்டி விடலாம்.
9
"திரைப் படங்களையும், மர்ம நாவல்களையும் பார்த்துப் படித்துக் காதல் செய்யத் துடிப்பவர்களையும், உணவுக்கு வேண்டியதை உடைக்காகவே செலவழித்து வாழத் துடிக்கின்ற ஆடம்பர பிரியர்களான ஆடவரையும், பெண்டிரையும் ஆன்மீக வழிபாட்டிலேயே தம்மைக் கரைத்துக் கொள்ள விரும்புகின்ற சிதம்பரர்களையும் மறந்து விட்டு இலக்கியம் படைக்க என்னாலியலாது. அத்தகைய கருத்துக்கு உயர்வு கொடுக்கப்படுகின்ற காலத்தில் வாழ்பவனாக நான் இருப்பதால்." என்கிறார் கதாசிரியர்.
நல்லது. நாவேந்தனின் தனியியல்பை (Individuality) இங்கு நாம் காண்கிறோம். ஆனால் அவர் "படைத்துவிட்ட இலக்கியத்தில்" அவரது நோக்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது என்பதே நமது கேள்வி?
"பாத்திரங்களை அளவுக்கு அதிகமாகப் படைத்து விடுவதில் எள்ளளவும் ஒருப்பாடில்லை" என்கிறார். ஆனால் அவரது பாத்திரங்கள் யாவும் "பாத்திரத் தன்மையே" பெறவில்லை என்று நாம் கூறுகிறோம். அடைப்புக் கட்டடத்துள் திணித்து நிரப்பப்பட்ட சொற் கூட்டங்கள் பாத்திரத் தன்மையை உருவாக்க முனைகின்றன. உயிர்தான் வர வில்ைைல.
"மொழி மரபையும், தூய்மையினையும் பேணுதற்கு ஒல்லும் வகையில் முயன்றிருக்கிறேன்" என்கிறார். உண்மையில் பார்க்கப்போனால் நாவேந்தனின் இந்த முயற்சி தான் அவர் கதைகளை விட மேலெழும்பி நிற்கின்றது. அம் முயற்சியிற் கூட சாதாரண கனிஷ்ட வகுப்பு மாணவன் கூடவிடத் தயங்கும் மொழி மரபை மீறுந்துணிவை சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார் கதாசிரியர். அதாவது உடனிகழ்கால இலக்கிய வகையான சிறு கதையை எழுத முனைகையில், தவிர்க்க முடியாமலே பல இடங்களில் மொழி மரபை மீறி இருக்கிறார். இது இயற்கை.
ஆசிரியரது முன்னுரை வாசகத்தைப் பொருட் படுத்தாத அவரது மீறுதல் கதையளவிலாகுதல் வெற்றி பெற்றுள்ளதா என்றால் அதிருப்தியே. இரண்டுங்கெட்டான் நிலை. எனவே ஆசிரியர் சொற்களைத் தூய்மைப் படுத்துவதில் இறங்கி விடுகிறார். பரிதாபமாக இருக்கின்றது.
Page 10
O
இவ்வளவும் கூறுவது ஆசிரியரை இழிவு படுத்தும் நோக்கத்திற் காகவல்ல. உண்மை நிலையை எடுத்துக் கூறுவதற்காகவே. ஆசிரி யரிடம் கற்பனைத் திறனும், திட்ட வட்டமான சில கொள்கைகளும் இருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆசிரியர் சமூக யதார்த்தவாதி யாகவோ, கற்பனாலய வாதியாகவோ, இயற்கை வாதியாகவோ, அழகியல் வாதியாகவோ, வெறுமனே யதார்த்த வாதியாகவோ, மனோவியல் வாதியாகவோ, பண்டிதவாதியாகவோ, எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும். அதைப் பற்றித் தட்டிக் கேட்க வாசகனுக்கு உரிமை கிடையாது. ஆனால் உடனிகழ்கால மற்றைய கதைகளுடன் ஆசிரியரது கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஈழத்துச் சிறு கதை ஆசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களில் ஒருவரான நாவேந்தனையும் பட்டியல் சேர்க்க முனைவது 'சுய ஏமாற்றமாகும்.
தமது ஆற்றலைச் சிறந்த முறையில் பயன் படுத்தித் தரமான படைப்பாளியாக நாவேந்தன் வரவேண்டும் என்பதே எமது அவா. ஆசிரியரால் அது முடியக்கூடியது. நாவேந்தன், நவீன எழுத்தாளர்கள் மீது கொண்டுள்ள போலி வெறுப்பை அறவே அகற்ற வேண்டும்.
நவீன தமிழ்ச் சிறுகதைகளைப் படிக்க வேண்டும். ஆங்கிலமொழி மூலமாகுதல் தமிழ் மொழி மூலமாகுதல் நவீன பிறமொழிக்கதைகளை வாசிக்க வேண்டும். தூய்மை வாதம், மொழி மரபைப் பேணுதல் போன்ற தீவிர தீக்கோழி மனோபாவம் ஒரு கால எல்லை வரை தான் கடைப் பிடிக்கக் கூடியவை என்பதை உணர வேண்டும். நடை முறையில் இவை எல்லாம் சாத்தியமாகா. அப்படியில்லை தொல்காப்பிய காலத்துக்கே தான் திரும்பிப் போக வேண்டு மென்றால், போய் விடலாம். ஆனால் அந்தக் கால மதிப்புகள், சூத்திரங்களுடன் 'சிறுகதை' எழுத முன் வரவேண்டாம். ஏனென்றால் சிறு கதை போன்றவையும் 'வாழும் இலக்கியங்கள்' என்று நிரூபணமாகி வருகின்றன.
நாவேந்தனின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு, முன்னேற்றமடைந்த வாசகனை ஏமாற்ற மாட்டாது என்று நம்புகிறோம்.
(தேனருவி மார்ச் 1 1963)
11
போட்டிக் கதைகள்
போட்டிக் கதைகள்' என்ற தொகுப்பிலுள்ள கதைகள்' பற்றிய
அக்கறை மாத்திரமே இவ்விடத்தில் எமக்கு உண்டு; 'போட்டி' பற்றிய
விபரங்களை அலசி ஆராய இங்கு இடமில்லை.
ஈழத்து எழுத்தாளர்களின் (நோக்கு, அறிவு, அனுபவம், வயது போன்றவற்றில் இளமையுடையவர்கள்) இன்றைய எழுத்துப் போக்கில் ஒரு கோணத்தை இனங் காட்டி நிற்பது இத்தொகுதி.
ஒன்பது கதைகள். நடை அழகினால் மாத்திரம் இரு கதைகள் கவனத்தை ஈருவன; சொல்ல வந்தவற்றை நேரடியாகச் சொல்லிவிட்ட திருப்தியில் அமைந்து விட்ட வியாசங்கள் ஏனையவை. இவை அடிப்படையான, வெளிப்படையாகத் தெரியும் உறுதிப் பொருட்கள்; ஆனாலும் ஒவ்வொன்றிலும் தனித்தன்மையான சிற்சில குணப்பண்புகள்
உண்டு. &
சுருங்கிய மொழியில் அவற்றை நாம் இங்கு எடுத்துரைப்பது, வாசகர்கள் தாமாகவே அபிப்பிராயம் உருவாக்கிக் கொள்வதற்காகத் தான்;விரிவாகவே ரசனைப் பாங்கில் மதிப்புரை இங்கு நாம் எழுதிவிட்டால், அது தனி வாசகனின் அழுத்தமான உணர்வு அதிகமாகத் தொனிக்கும் விமர்சனமாக அமைந்துவிடும்.
கதைத்துறையில் கைவைக்க வந்தபொழுது முதல் முயற்சியாக அமைந்திருப்பதனால், கதைகள் பாராட்டத்தக்கவை என்று
Page 11
12
பெருவாரியானவற்றிக்கு விவரணை கொடுக்கலாம். 'உறுதி, யாருக்குப் பெருமை' முதலாம் அப்பியாசங்கள்' உட்பட உள்ள இந்த நவ கதைகளுள் -
'பூ' பிரமாதமான வடிவங் கொண்ட கதை. கைதேர்ந்த சிருஷ்டிவல்லானின் மெருகைக் காணலாம். கதையை எழுதியவர் பெயர் எம்.ஏ. ரகுமான் என்று காணக்கிடக்கின்றது.
'உணர்ச்சிக்கு அப்பால்' என்ற கதையில், கதையின் முக்கியமான கருத்து சிதறுண்டவிஸ்தரிப்பினால் சிதைந்து விட்டது. 'செம்பியன் செல்வனின் நடையில் கவர்ச்சியுண்டு.
சிதம்பரபத்தினி நேரடியாகவே கதையைச் சொல்லியபோதும், எடுத்துக் கொண்ட கருவி-உத்தி-காலவாதியானது. 'காதல்' என்பது புனிதமாகவும்' இருக்கலாம் என்பதற்கு யதார்த்த நிலையில் அமைந்த ஒரு அழகிய விளக்கம் இக்கதை.
மணிமேகலையின் கதை குமுதம்' கதைப் போக்கில் அமைந்திருப்பதால், ரசனை சீர்குலைந்தாலும், தீவிர தேசிய வாத உணர்ச்சிகளைக் கிண்டல் செய்கின்றது. V
பாலகிருஷ்ணனின் 'வேள்வியில் பிரயத்தனமான எழுத்து நடை சொற்களுக்குரிய மதிப்புகளைக் கீழிறக்கி விடுகின்றது. இதயத்தைத் தொடும் விதத்தில் சித்திரம் வரையப்பட்டுள்ளது.
வெகுளி' என்ற கதை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்த பூனையின் கதையாயிற்று. வெட்கம். வெட்கம்.
நீரோடை நல்லதொரு கருத்தைக் கொண்டது. ஆனால் அதனைக் கதை என்று கூறுவதற்கு ஏற்ற விதத்தில் அது அமைந்திராதது துரதிஷ்டமே.
13
மொத்தத்தில் - பாதை தெரிந்து, பாதையை இனங் கண்டு கொண்ட இன்றைய நிலையில்- பாதை நெடுவழியாயினும் அதில் நடந்து பயில விழையாமல்-பம்மாத்துப் பத்திரிகை ரகக் கதைகளில் மனதைப் பறிகொடுத்து விட்ட இளம் எழுத்தாளர்கள் - முளையிலே கிள்ளி எறிந்து விடப்படாதிருக்க வேண்டுமாயின்- நல்ல கதைகளை முதலிற் படிக்க வேண்டும்;இதன் பின் எழுதத் தொடங்க வேண்டும்.
பள்ளிக்கூட மாணவர்களின் கதைகளடங்கிய கல்லூரிச் சஞ்சிகை போன்றது போட்டிக் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு.
(தேனருவி : 1963)
Page 12
14
எம். ஏ. ரகுமான்
L.
பிரிதலித்து மணஞ் செய்தனர் இருவர். மனைவி கர்ப்பமுற்றாள். கர்ப்பக் கோளாறினால் தாம்பத்திய உறவுதுண்டிக்கப்பட்டது. தம்பதிகள் சிலகாலம் பிரிந்திருக்க நேர்ந்தது. மனைவி மாற்றான் ஒருவனுடன் உடலுறவு கொண்டிருந்தாள். கரு வளரத் தொடங்கியதும், தனது கணவனுடன் வலிந்து உறவாடினாள். அவன் டொக்டரின் கட்டளைக்குப் பயந்து இசைய மறுத்தான். அவள் மரணமெய்தினாள். அவள் கர்ப்பிணியானதால் மரணமெய்தினாள் என்று டொக்டர் மூலம் அறிந்த கணவன், பூவிலே மகரந்தம் சேர்த்த வண்டு நானல்லன்' என்று முடிக்கிறான். இது கதையின் கருப்பொருள், சம்பவக் கோவை. கதையின் கதைப் பொருள் அடிநாதக் கருத்து என்ன? அது டி.எச். லோரன்ஸ் என்ற ஆங்கில நாவலாசிரியரின் பாணியில் அமைந்திருக்கின்றது. அதாவது சட்டர்லி சீமாட்டியின் காதலன்' என்ற நாவலின் சாயலானது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இயற்பண்பு வாதம் (Naturalism) என்று கூறும்பொழுது அது ஒரு தனி வகை. அந்த வகையான இலக்கியத்தை லோரன்ஸ் படைக்கவில்லையாயினும் வேறு அர்த்தத்தில் லோரன்ஸை இயற்பண்புவாதி என்று அழைக்கலாம். அந்த அர்த்தத்தில் பார்த்தால் 'பூ' ஒரு லோரன்ஸ்ஸின் இயற்கைவாதக் கதை எனலாம்.
'பூ' யதார்த்த பூர்வமானதாகவும் இயல்பான தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது.
15
ஒப்பாரியின் ஒலியுடன் கதை ஆரம்பமாகின்றது. ஒப்பாரியை வைப்பவர் ஒரு தாய் என்பதும் இறந்தவள் மகள் என்பதும் அவ்வாய்மொழி இலக்கியப் பாடல் முதலிலேயே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி விடுகின்றது.
உரைநடையில் அமைந்த முதற் பந்தியில், தன்மை ஒருமையில், ஒரு கதாபாத்திரம் பேசுவதைக் கேட்கிறோம். அப்பாத்திரம், முன்னிலையில் உள்ள வேறு ஒரு பாத்திரத்துடன் பேசுகின்றது. ஆனால் அந்த வேற்றுப் பாத்திரம் - கல்யாணி - பூத்துச் சொரிகையிலே பூகருகிப் போய்விட்டவள். எனவே தன்மையில் உள்ள பாத்திரம் தன்னுள் தான், பேசிக் கொள்கிறது.
இரண்டாவது பந்தியில் - வெளிநடப்பில் நடக்கும் உரையாடல் ஒன்றைத் தன்னுள் பேசிக் கொண்டிருக்கும் பாத்திரம் இடைநிறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. அப் பேச்சு "என்பின் குழலட்டையை சுண்டு கிறது." தாய்க் கிழவியின் ஒப்பாரிக் குரல் மூலம் தனக்குரித்தான கல்யாணி இறந்துவிட்டாள் என்ற செய்தியை ஏற்கனவே அறிந்திருந்த பாத்திரம் "நேர்ஸின் விழிகள் துளாவிய கணப்பொழுதில், மெளன பாஷையில் ஊர்ஜிதமாக அறிந்து கொள்கின்றது."
மூன்றாவது பந்தியில் பாத்திரம் தான் அறிந்த செய்தி, தனது வெளியுலக நடப்பில், தன்னுடலை எவ்விதம் தாக்குகின்றது என்பதை விளக்குகின்றது. ககனத்து ஒளிமுழுதும் அஸ்தமிக்க. அமாவாசை மையிருட்டு அகண்டாகாரமாக விரிகின்றது. இருள் குதிர்ந்த அந்தப்பாளையிலே சினைத்திருந்த அக்கினிக் கோலங்கள் எல்லாம் என் சென்னியிலே அறுந்து விழுந்து, கேசத்தைப் பொசுக்கி விட்டதைப் போன்று, சிகை எரிந்த நாற்றமோ? பிணம் வெந்து கக்கும் புலால் நாற்றமோ? விழி மதகுகளைத் தகர்த்துப் பெரும் கண்ணீர்"
கவிதாவழியாகக் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சி நிலையை விபரிக்கப் புகுந்த கதாசிரியர், ஓரளவுக்கு அவ்வுணர்ச்சி நிலையை வாசகனுக்குத் தொற்றுவிப்பதில் வெற்றிகண்டாலும், பிரயாசையாக உருவகங்களைப் புகுத்தியிருப்பது, அந்தரங்கமான இதயத்தூய்மையான ஒரு சோக நிலையைத் தடைப்படுத்துவதாக அமைந்துவிட்டது.
Page 13
16
திரைப்பட ரீதியில் நிகழ்ச்சிச் சித்திரங்களைத் தொடுத்துச் செல்லும் உத்தி, வசீகரமாக அமைந்துள்ளது.
அடுத்த பந்தியில் நேர்ஸின் சப்பாத்துக் குதி பற்றிய விவகாரத்தைத் தனது விரல் பொருந்த மறுக்கும் 'கிறாதியூடாக வாசகர்களைப் பார்க்கச் செய்கிறார் ஆசிரியர். திரைப்படப்பிடிப்பாளரின் 'கமரா செய்யும் தொழிலை இங்கு கதாசிரியர் செய்கிறார். "மரங்கொத்திப் பறவை மரத்தினைக் குடையும் பொழுது ஏற்படும் ஒலியினைப் பிரதி பண்ணுகின்றது," என்பதும் ஒரு சினிமா உத்தியாகும்.
நேர்ஸின் குதியுயர்ந்த சப்பாத்து பாத்திரத்தின் நினைவோட்டத்தில் பின்னோக்கிச் செல்கின்றது.
கல்யாணியை தான் முதலில் சந்தித்த காட்சியை, நேர்ஸின் சப்பாத்துடன் தொடர்பு படுத்துகின்றது. சுருங்கிய சொற்றொடர்களில் கல்யாணியைக் கல்யாணம் செய்துகொண்ட விவகாரம், அடுத்த பந்தியில் பாத்திரத்தின் எண்ணோட்டம் மூலம் எடுத்துரைக்கப்படுகின்றது.
அடுத்த பந்தியில் உள்ள உவமைகளும், உருவகங்களும் ஒருசில நிதர்ஸன வாழ்க்கைப் போக்குகள் பற்றிய செப்பலும், இறுக்கமாக அமைந்திருக்கின்றன.
" என் முன்னால் நடமாடும் ஒவ்வொருத்தியையும், கற்பனையிலே என் காதலியாக்கி. தினம் தினம் புதிது புதிதாக யாரையோ காதலிக் கிறேன் என்று ஊமைக் கற்பனைகளிலே கூச்சம் போக்கி. * வார்த்தைகள்தொண்டையில் சிக்கிய மீன் முட்களாகின்றன. "
அடுத்து விபரிக்கப்படும் கதை நிகழ்ச்சி, கல்யாணியின் திருமணத்தின் பின் 15 நாட்களுக்குப் பின் நடந்ததொன்றாகும்."விழிகளில் நீர் உற்கைகள் உதிருகின்றன. கன்னத்திலே மஞ்சாடிக் குழி சுழிய உதட்டினை விரிக்காது உதிர்ந்து விடும் அந்தக் குஞ்சிரிப்பினை எங்கே கற்றுக் கொண்டாய். போன்ற ஆசிரியரது வருணனைக் கற்பனை நயமானவை, கைதேர்ந்த எழுத்தாளர் ஒருவர்தான் இவ்விதமான 'ஒரிஜினல் பாவனையில் எழுத முடியும்.
17
பழைய சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் அதே நேரத்தில் கதாபாத்திரம் நிதர்ஸனமாக நடக்கும் ஒரு உரையாடலையும் கேட்கின்றது. CUT-BACK உத்திகொண்டு ஆசிரியர், இரு கண்காணிப் பெண்கள் பற்றி இங்கு கூறியிருப்பினும், அது கதையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராததால் அனாவசியமானது.
தம்பதிகளின் மூன்றாண்டு வாழ்க்கையின் பின், கல்யாணி கர்ப்பவதியான நிகழ்ச்சியைச் சொற் சிக்கனத்துடன் விபரிக்கும் ஆசிரியர், நடையில் அழகியல் இனிமை துவள்கின்றது.
"நீ மட்டும் அன்றலர்ந்த மலரின் மலர்ச்சியினால் உன் முகத்தை நிரப்பிக்கொண்டு மொட்டின் இதழ்களைப் பூட்டவிழ்க்கும் இரகசியத்தினை அம்பலப்படுத்தும் குறுநகை அரும்புகின்றாய். அதனைத் தலைகவிழ்ந்து நிலத்திலே உதிர்தலுக்குப் பெயர்தான் நாணமோ?"
பின், கதையில் கல்யாணியின் 'சிசேரியன் ஒபரேஷன் ' பற்றிக் கூறப்படுகின்றது. இக்கட்டத்தில் விபரிக்கப்படும்:
"ஐயோ, யார் குழந்தை வேண்டுமென்றது? தாயைக் காப்பாற்றித் தாருங்கள் டொக்டர், அது போதும் என்று அலறிவிட்டேன். உணர்ச்சிகளைப் போர்வையிட்டு பேசுவதுதான் நாகரிகமாம் - அந்தக் கணம், உணர்ச்சிச் சுழலிலே சகலவற்றையும் இழந்துவிட்ட துரும்பாகத் தவிக்கின்றேன் " என்ற பகுதி யதார்த்த பூர்வமாக அமைந்துள்ளது.
டொக்டர் மயில்வாகனத்தின் "வாலிப எழுச்சிகளின் உயிர் முடிச்சுகளைத் திருகி" கூறும் விபரம் அடுத்த பந்தியில் கூறப்படுகின்றது. அதற்கடுத்த பந்தியில் கதையின் உச்சக்கட்டம் வந்து, பொருத்தமான
உள்ளுறை உவமையுடன் கதை முடிகின்றது.
(செய்தி:-09 - 05 - 1965)
இதனை எழுதிய எம்.ஏ. ரகுமான், இப்பொழுது சென்னையில் வசிக்கிறார். (இக்கதை, எந்தவொரு சிறுகதைத் தொகுப்பிலும் இடம்
பெறாதபோதிலும்,புதியவாசகர்கள்நலன்கருதி 1960களில், செய்திஇதழில் வெளிவந்த இந்த எனது பத்தியைச் சேர்த்துள்ளேன். )
ཎྜི་ཏཎྜི་པཎྜི་
Page 14
18
சத்தியன்
சிரத்தை
Iட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் ஒரு தினுசு, கேட்பதற்கு வேடிக்கை. ஆனால் அதிலும் ஒரு கவிதைச்சுவை. ஏனைய பிரதேசங்களில் பேச்சுத் தமிழும் அசைவில், ஒசையில், உச்சரிப்பில் வார்த்தை ஒழுங்கு களில் தனித்து நிற்பவை. எந்த மொழியும் அப்படித்தான். ஆங்கிலத்தை ஆங்கிலேயன் பேசுவது போலவா அமெரிக்கன் பேசுகிறான்? இந்தியன் பேசுகிறான்? நீர்கொழும்புச் சிங்களவன் பேசுவது போலவா பிபிளைச் சிங்களவன் சிங்களம் பேசுகிறான்? இது இயற்கை.
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் எழுதப்படும் சிறுகதைகளைப் படிப்பதற்கு எனக்கு விருப்பம். ஸென்டிமென்டல்'- பற்று. அப்படிப்பட்ட சிறுகதைகளில் இரண்டு தான் என் நினைப்பில் நிற்கின்றன. ஒன்று:எஸ். பொன்னுத்துரை எழுதிய 'பூஜ்யம். மற்றது ஆர். தங்கத்துரை எழுதிய சூனியம்' (தலைப்பு சரியென்று தான் நினைக்கிறேன்). மட்டக்களப்புப் பேச்சுத்தமிழில் எனக்குப் பரிச்சயம் உண்டு என்றபடியால் மேற்கூறிய இரு கதைகளையும் பேச்சுத்தமிழ்' என்ற முதற் காரணத்திற்காக என்னால் இரசிக்க முடிந்தது. வேறு சில எழுத்தாளர்களும் இம்மாதிரி எழுதிய கதைகள் என் கண்களுக்குப் படாமலிருக்கக்கூடும். நான்கூட இனம் இனத்துடன்’ என்றொரு கதை எழுதினேன். அதில் பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை; இருந்தாலும் ஒரு சில மட்டக்களப்பு வார்த்தைகளை அதில் பெய்திருந்தேன்.
19
சமீபத்தில் ஒரு மட்டக்களப்புக் கதை' படித்தேன். சிரத்தை என்ற பெயரில் சத்தியன் என்பவர் இளம்பிறை' என்ற பத்திரிகையில் எழுதியிருந்தார். கதையில் அங்கு ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் கதையைச் சொன்ன முறை (treatment) நன்றாக இருந்தது. அத்துடன் மட்டக்களப்புத் தமிழிலும் எத்தனையோ உட் பிரிவுகள் இருக்கின்றன என்ற உண்மையும் அக்கதை மூலம் எனக்குத் தெரிய வந்தது.
சுவாமி விபுலானந்தரின் பிறப்பிடமாகிய காரைநகர் என்ற கிராமத்தில் பேசும் தமிழ், புளியந்தீவு என்ற டவுனில்' பேசும் தமிழிலிருந்து சிறிது வேறுபட்டு நிற்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.
சிரத்தை' என்ற கதையில் வினோதமாக ஒலித்த பகுதிகளை வாசகர்களுடன் சேர்ந்து மீண்டும் இரசிக்க விரும்புகிறேன்.
கடப்புல - வரக்காட்டல்ல, வாகா' - கிணத்தடியில புள்ளைய உட்டுத்து வந்தவன் மாதிரி-ஒள்ளுப்பமும், ஒள்ளம்-தப்பிலிவேலை - அப்பனையும், அம்மையையும் திண்டன்- வெட்டுக்குத்துக் காலத்தில வட்டைக் கப் போவன் - கந்துதொவைக்குமாப் போல, இரிக்கிற சதிரத்தவெயில் கருக்கும்-என்ட உதடு பயத்தங்கிளிர சொண்டுமாதிரி நல்ல செகப்பா இரிக்காம்-என்ட தலமயிர் நல்ல சுருட்ட-இறால் சுருண்டமாதிரி-என்டமுகம் பாவப்பழம் மாதிரி-கொழறுவதான வாப்பாக்குது-மரத்தார உழுந்தவன மாடு வெட்டுற கணக்காத் தான் இரிந்திச்சி எனக்கு. கண்ணகத்தா யறிய-உடுறன்-ஊசேத்தி-எல்லுாவா கொள்ளப்பேர்-வளிய உழுந்துற்றான்-வகுறுபத்துது - கொள்ளக்கூடாத கனவு- வெள்ளப்புல வட்டைகபோற-ஊத்துக்கு-இயினக்கி, எழகிஎளந்தாரிப்புள்ளயன் -பொயித்து-மனே - அம்மாச்சி-வைக் கல்ல வெளஞ்சத்த சாக்குலையும் கட்டலாம்-வினையகாறன்.
மேற்கண்ட பகுதிகளைக் கதையுடன் தொடர் படுத்தப் படித்தால் தான்- அவற்றின் கற்பனை நயமும் கவிதைச் சுழற்சியும் இனிக்கும். சத்தியன் தொடர்ந்து இம் மாதிரிக் கதைகள் எழுதினால் படிப்பதற்கு வளமான சிறுகதைகள் ஈழத்திலும் உண்டு என்று நினைத்துக்
கொள்ளலாமல்லவா?
(செய்தி 18 - 07 - 1965)
Page 15
20
செ. கதிர்காம நாதன்
கொட்டும் பணி
Dறைந்த எழுத்தாளர் செ. கதிர்காமநாதனிடம் வயதையும் மீறிய 'சமூக அலசற் பார்வை' இருந்தது. அவர் பார்க்கும் பார்வை உடனடி யதார்த்தம் தொனிப்பதாக இருக்கின்றது. சமூகப் பிரச்சினைகளை அவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதை அவரது கதைகள் மூலம் அறியக் கூடியதாகவும் இருக்கின்றது.
செ. கதிர்காமநாதனின் கதைகளைப் பற்றிய பொதுவானதொரு மதிப்பீட்டைப் பின்வரும் மேற்கோள்கள் காட்டும்.
"இந்நூலிலுள்ளவை, பல்கலைக் கழக வாழ்க்கை முடிந்த பின்னர் பரந்த உலகைக் கண்ட பாரநெஞ்சுடன் எழுதப்பெற்றவை. உலக வாழ்க்கையை நேர்நின்று நோக்கும் முயற்சியின் எதிரொலியை இவற்றிற் கேட்கலாம்". (பேராசிரியர் கைலாசபதி)
"ஆசிரியர் தம் வாழ்விற் பெற்ற அனுபவமும் கொதிப்பும் கதைகள் பூராவும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். இவற்றில் உள்ள சிறப்புப்பண்பு தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட சமுதாய உணர்வாகும்" (செ.கணேசலிங்கன்)
கதாசிரியர் கதிர்காமநாதன் தனது இலக்கியக் கோட்பாடாக எதனை வரித்துள்ளார் என்று நாம் முதலில் பார்க்க வேண்டும். இது அடிப்படையான கேள்வி. அவர் கூறுகிறார்:
21
" கலையும் இலக்கியமும் மக்களுக்காக என்ற கோட்பாட்டை நான் தழுவி நிற்பவன், ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கையின் பிரதிபலிப்பும் விளைவுகளுமே என் கதைகளின் உள்ளடக்கம். வாழ்க்கை தாங்கொணாத, அழுத்திக் கொல்கிற சுமையாக ஏன் இருக்கிறதென்பதைத் துருவி ஆராயும் உளப்பாங்கே எனது கதைகளின் ஊற்றுக்கண்..."
"இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான கதைகளுக்கு யாழ்ப்பாணத்துக் கிராமங்களே பகைப்புலம். கிராமிய மக்களின் சமூகப் பொருளாதார அமைப்பில் சாதியும் நிலமும் கீழ்மட்ட அரசாங்க தொழில்களும் மிக இன்றியமையாத இடத்தைப் பெறுவன. குறிப்பாக கிராமிய விவசாயிகளின் பொருளமைப்பில் நிலம், ஆடு, மாடுகள் முதலான கால் நடைகள் முக்கிய சொத்துடைமையாயுள்ளன."
"இருள் சூழ்ந்த வாழ்க்கையில் யுக மாறுதல்களை வேண்டி நிற்கும் துடிப்பு நிறைந்த கிராமிய மக்களுக்கு" இப்புத்தகத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.
தனது காலத்துச் சமூக மாற்றங்களை அவதானிக்காமல் பாரா முகமாக எந்தக் கலைஞனும் இருத்தல் கூடாது. தனது நேரடிச் சூழலையும் சமூகப் பின்னணியையும் வைத்துத் தனது அனுபவங்களைக் கதைகளாக இவ்வாசிரியர் தீட்டுகிறார். அதனால் கதைகள் யதார்த்தமாக இருக்கின்றன.
கதைகள் எனக்குப் பிடித்திருந்தாலும் கதாசிரியரின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் கதைகளின் எளிய காவியத் தன்மைக்கு ஏற்றவாறு இலகுவான நேரடி வர்ணனையாக இல்லை. அகவாய்வுக் கதைகளுக்கு உபயோகிக்கப்படும் ஒருவித மயக்க உரைநடையில் கதைகள் எழுதப்பட்டிருப்பதால் கதை விளக்கும் அனுபவம் நேர்மையானதாக இல்லை. ஆனால் இங்கு அவதானிக்க வேண்டிய விஷயம் கதைகள் கொண்டுள்ள உருவத்தைப் பற்றியதல்ல. கதாசிரியரின் நோக்கமும், செயலாற்றலும் பற்றிய அக்கறைதானாகும். அதாவது கதைகள் எவ்வளவு தூரம் அவருடைய நோக்கத்துக்கு இணங்க அமைந்துள்ளன என்பதாகும்.
Page 16
22
"குளிர் சுவாத்தியம் ஒத்து வராது" என்பது படிப்பதற்குச் சுவையானதொரு கதை. அதிலே தமிழ் வாத்தியார்களின் நிலைமை, இடமாற்றத்துக்கான அவர்களின் பரிதவிப்பு ஆகியவை சம்பவப் பின்னணியாகவுள்ள நிதர்சன உண்மைகள். கதையைப் படித்து முடித்ததும் ஒருவித மனிதாபிமான உணர்வு படிப்பவர்களிடையே பரிவர்த்தனை செய்யப்படுகிறது. கதையில் லேசான நகைச்சுவை இழையோடுகிறது.
"அதனாலென்ன பெருமூச்சுத்தானே" சுவையாக எழுதப்பட்ட மற்றுமொரு கதை. இந்தக் கதை சித்திரிக்கும் பிரச்சினையின் தன்மையில் உள்ள ஆழம் ஒரு புறமிருக்க இக்கதையில் உபயோகிக்கப்படும் கதாபாத்திர மேற்கோள்கள் யதார்த்தமாகவும் கவிதைச் சுருதியிலும் இருப்பதால் இன்பமூட்டவும் செய்கின்றது.
" சில்லென்று பூத்த." கதையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. தாம்பத்திய உறவில் உள்ள நுண்ணிய தன்மைகளில் ஓரிரண்டை உளவியல் ரீதியாக எடுத்துக் காட்டுகிறார்.
"ஒரு கிராமத்துப் பையன் கல்லுரிக்குச் செல்கிறான் "கதையின் புறநிலை விஸ்தரிப்பு புவியியற் பாணியாக இருக்கின்றது. இந்தக் கதையில் ஆசிரியர் சாடும் வர்க்கத்தினர் மீது நாம் பொங்கி எழா வண்ணம் எம்மை தடுத்து வைப்பது ஆசிரியரின் மெருகுக் குறைவான கலை நயந்தான்.
"அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கட்டும்" என்ற கதை பட்டணத்துச் சீர்கேடுகளில் ஒன்றான நேர்முகப் பேட்டி ஊழல்கள் பற்றிப் பேசுவது. இதுவும் படிக்கச் சுவையாக உள்ளது.
மேற்சொன்ன ஐந்து கதைகளும் எனக்குப் பிடித்தவை. ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் சில கதைகளைப் படிக்கும்பொழுது நான் பெறும் அனுபவம் எவ்விதம் இருக்குமோ ஏறத்தாழ அதே அளவு அனுபவத்தை கதிர்காமநாதனின மேற்சொன்ன ஐந்து கதைகளையும் படிக்கும் பொழுது நான் பெற்றேன்.
23
இவற்றைவிட 'கொட்டும்பனி' 'சோழகம்' 'அழுவதற்கும், சிரிப்பதற்கும்; நிந்தனை, யாழ்ப்பாணம் இங்கே வாழ்கிறது ஆகிய கதை களும் சுமாரான கதைகளாக இடம் பெற்றுள்ளன.
ઊ8. கதிர்காமநாதனின் 'கொட்டும் பணியில் 'நல்ல சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஆனால் 'சிறுகதை' என்ற வடிவம் ஆசிரியர் கூற
வரும் அனைத்தையும் கூற வைப்பதற்கு ஏற்றதொரு வாகனமாக இல்லை.
(வீரகேசரி வாரவெளியிடு 11 - 03- 1969)
Page 17
24
என். எஸ். எம். ராமையா
ஒரு கூடைக் கொழுந்து
ைெறந்த எழுத்தாளர் என்.எஸ்.எம்.ராமையாவின் இச்சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய மு. நித்தியானந்தன்,
"1960 களில் எழுத்துத் துறைக்குள் நுழைந்த என். எஸ். எம். ராமையா தன் எழுத்தின் வளத்தால் கடல் கடந்த இடங்களிலும் கெளரவத்தைப் பெற்றிருக்கிறார். குறைவாக எழுதிக் கணிசமான வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மலையகம் என்ற பிராந்தியத் திற்கேயுரிய விசேஷமான தன்மைகளைக் கொண்டெழுந்த மலையகச் சிறுகதை இலக்கியத்திற்கு உருவம் சமைத்தவர் என்றவகையில் ராமையா வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறார்," எனக் கூறியுள்ளார்.
ராமையா எழுதிய பன்னிரண்டு சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் கு.அழகிரிசாமியின் கதைகள் போன்று கருத்தைச்சொல்லாமற் சொல்லும் பண்பு கொண்டவை இக்கதைகள்.
உதாரணமாக, பிஞ்சுக் குவியல் என்ற கதையின் தலைப்பே ராமையாவின் மனிதாபிமான, குழந்தைப் பரிவு உள்ளத்தைக் காட்டிவிடுகின்றது. கதையில் வரும் கிழவி, குழந்தை உள்ளத்தைப் புரியாதவள் என்பதை, கடைசி வாக்கியத்தில் - "உதடுகள் வெறுப்போடு முணுமுணுத்துக் கொண்டிருந்தன " - சுட்டாமற் கட்டுகிறார். கிழவி
25
அவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணமில்லாமலில்லை. பொருளாதார, உளவியல் காரணங்களே அவை. அவளால் ஒன்றுஞ் செய்யமுடியாத நிலை வரும்பொழுது மீண்டும் மடுவத்திற்கு வேலை செய்யச் செல்கிறாள். ஒரே கதையில், பல நிலைகளை ஆசிரியர் கொட்டாமற் சிந்தாமற் சித்திரித்துக் காட்டுவது பாராட்டுக்குரியது.
வேட்கை" என்ற கதையும் ஒரு வயோதிபப் பாத்திரம் பற்றியதுதான். இக்கதையில் கவனத்தை ஈர்ப்பது என்னவென்றால், கிழவன் பாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் முறைதான். குறை நிறைகளுடன் கூடிய ஒரு தோட்டத்துப் பாத்திரமாக வரும் கிழவனின் வேட்கை நிராசையாகப் போவதைப் படிக்கும்பொழுது வாசகரிடத்தில் எழும் ஒருவித அனுதாபம் அந்தச் சோகக் கதையைச் சொல்லாமற் சொல்கிறது.
தரிசனம்' கதையிலும் ஒரு கிழவியே கதாநாயகி. மலை நாட்டுக் கதைகளில் பெரும்பாலானவை, அப்பகுதி மக்களின் அவல நிலையையே சித்திரிப்பவை. அவலச் சூழல்களிலுங்கூட வாழ்க்கையின் வினோதங்கள், வேடிக்கைகள், இலேசான சம்பவங்கள் போன்றவையும் இடம் பெறுகின்றன தானே? ராமையா இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டுவதன் மூலம், வாசகர்கள் மலைநாட்டு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காண்பதற்கு நமக்கு வகை செய்து தருகிறார்.
'மழை' என்ற கதையில், "தோட்டத்திலே இருக்கிற எல்லாச் சனங்களுக்கும் நல்ல காரியம் ஒண்னு செய்யிறது முக்கியமோ, இல்லே, உங்க அஞ்சாறு பேரோட லாபம் முக்கியமாங்கிறதை கொஞ்சம் யோசிக்கணும் " என்று தலைவர் கூறுகிறார். இக்கதையின் மோதல் அல்லது 'முரண்பாடு 'விவகாரம் , கொழும்பில் வசிக்கும் என் போன்ற வாசகர்களுக்குச் சரியாகப் புரியவில்லை. கதை புரிகிறது. ஆனால் கதாசிரியரின் கருத்து நியாயமானதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக என்னளவில் இல்லை.
மற்றொரு கிழப் பாத்திரத்தையும் ஒரு குமரியையும், "எங்கோ ஒரு தவறு கதையில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர்,கதையைச்சுவையாகச்
Page 18
26
சொல்வதுடன் (இக்கதையில் வரும் சிங்களப் பாத்திரம் அலாதி ) தவறு எங்கேயிருக்கிறது (வலியரும் மெலியாரும் )என்பதை வாசகர்கள் தாமே உணரும்படி விட்டுவிடுகிறார். இங்கும் ராமையாவின் கலைநயம் பளிச்சிடுகின்றது.
'நிறைவு என்ற கதையை முடிக்கும்போது , "அன்றைய அந்தச் சம்பவத்தின் போது ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியும், பயமும் இப்போது எண்ணிப் பார்க்கும்போது பொருளற்ற கவிதை போல, நிழலே அற்றதாக உணர்கிறேன். ஆயினும், அந்தச் சிறுவனைப் பார்க்கும்போதும் நினைக்கும் போதும் ஏற்படும் அந்தநினைவு மட்டும் குறையவில்லை. ஏனோ தெரியவில்லை,"என ராமையா முடிக்கிறார். இந்த "ஏனோ தெரியவில்லை" என்ற தோரணையே, ஆசிரியரின் 'தேடல் மனப் பாங்கை பகிரங்கப்படுத்துகிறது. இன்னொரு விதத்தில் கூறினால், முன்னுரை யாசிரியர் கூறுவதுபோல, "கலைஞனது தேடல் இலக்கின் பரிமாணங்கள் அகன்று செல்கின்றன "
என். எஸ். எம். ராமையாவை ஒரு நல்ல சிறுகதை ஆசிரியராக அறிமுகப்படுத்திய கதையே, "ஒரு கூடைக்கொழுந்து"ஆயினும் அதற்குப் பிறகு அவர் எழுதிய கதைகள் அதனைக் காட்டிலும் சிறப்பாக அமைந்தன. ஈழத்து இலக்கியம்' என்ற பிரக்ஞை பூர்வமானஉணர்வு ஏற்படத் தொடங்கிய காலகட்டத்தில் ராமையா, திருச்செந்தூரன், காவலுார் ராசதுரை, பொ. தம்பிராசா, அ. ரஃபேல், மகேஸ் வைரமுத்து , அ.முத்துலிங்கம் , போன்ற வேறு சில எழுத்தாளர்களையும் , தினகரன் முன்னாள் ஆசிரியர் கைலாசபதி அறிமுகப்படுத்தி வைத்தார். அக்கால கட்டத்தில், முன்மாதிரியாக ராமையாவின் கதைகளும் அமைந்தன. இப்பொழுது படிக்கும்பொழுது 'ஒரு கூடைக் கொழுந்து பிரத்தியேகச் சிறப்புடையதாகத் தெரியவில்லை. -
தனி நலச் சார்பிலிருந்து,குடும்பநலச் சார்பாக உணர்வு பிறப்பதை ‘தீக்குளிப்பு எடுத்துக் காட்டுகிறது. ரஞ்சிதம் என்ற பாத்திரம் எடுக்கும் முடிவு மனிதாபிமானமுடையதாக அமைகின்றது.
27
முதிச்சியடையாத பாத்திரம் என்று தனது கொச்சைத் தமிழில் தனது சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக 'ரணம்' என்ற கதையிருக்கின்றது. படிப்பதற்குச் சுவையாக இருக்கின்றது.
தோட்டத்து மக்களிடையே மாத்திரமல்ல, பிற சமூகத்தினரிட முங்கூட அறியாமையும், ஈனத்தனமும்,சமயத்தின் பேரில் படுபாதகங்களும் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டும் விதமாகவும்,கடவுளுக்குத் திருவிழா எடுக்கப் போய்ப் படுகொலை செய்த ஒருவனுக்குச் சார்பாக மற்றொருவன் பரிந்து பேசி அவன் தூக்குமேடைக்குச் செல்வதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில் தொனிக்கும் இழிவரலைக் கொண்டு வரும் விதமாகவும் ஆசிரியர் ரகுபதி ராகவ' என்ற கதையை எழுதியுள்ளார்.
நகைச்சுவையுடன், நல்ல கருத்துக்களைக் கொண்ட (நகர - கிராம வாழ்க்கை ஒப்பீடு:தேனிக்கள் போன்று ஒற்றுமையாயிருக்க வேண்டிய அவசியம்) கதையாகவும் முற்றுகை' அமைந்துள்ளது. ராமையாவின் நகைச்சுவை முறுவலைக் கொண்டுவந்து, அதேவேளையில் சிந்திக்கவும் தூண்டுகிறது.
கடைசிக் கதையான, "கோவில்" கதை , சுவாரஸ்யமாக ஆரம்பித்துச் சப்பென்று முடிந்து விடுகிறது. இங்கு ஒரு கிழவனின் மூலம் தோட்டத்து மக்களது வாழ்வின் ஒரு பகுதியைச் சொல்லி விளக்குகிறார்.
ஆக, என். எஸ். எம். ராமையாவின் கதைகள் (1961 முதல் எழுதப்பட்டவை ) தோட்டத்து வாழ் மக்களின் வாழ்க்கையைக் கலை நயமாகப் படம் பிடிக்கின்றன. அவ்விதமான வாழ்க்கை முறை இன்று முற்றாகவே மாறிவிட்டது என்றும் கூறுவதற்கில்லை. பல கோடி அனுபவம் நிறைந்த தமது வாழ்க்கையில் ஒரு சிலவற்றை அறிந்துணர ஒரு வாய்ப்பை இத்தொகுதி நமக்குத் தருகின்றது. ராமையாவின் வானொலி நாடகங்களும் பிறவும் நுல் வடிவம் பெறவேண்டும்.
தினகரன் வாரமஞ்சரி - 06-07-1969)
资责责
Page 19
28
செ. யோகநாதன்
யோகநாதனர் கதைகள்
பிமிழ் நாட்டிலும் நன்கு அறிமுகமாகிய செ. யோகநாதனின்
முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது. 1964ல் வெளியாகியது. யோகநாதன் ஏனைய நல்ல எழுத்தாளர்களைப் போலவே வாழ்க்கையை விமர்சனம் செய்பவர். முரண்பாடுகளை அவர் குத்திக் காட்டுகின்றார். அல்லது எள்ளிநகையாடுகிறார். பாத்திரங்களின் மனவோட்டத்தில் தாமும் சேர்ந்து அவற்றின் அக உலகங்களில் துழாவுகின்றார். சொற்களை ஆளும் சக்தி பெற்றமையை பல இடங்களில் காட்டுகின்றார். பொருத்தமான படிமங்களையும், உவமை உருவகங்களையும் அழகாகப் பயன்படுத்து கின்றார்.
வாசகர் கற்பனைக்குப் போதிய இடம் கொடுக்கின்றார். கவிதை லயமான மொழிநடையில் லாகிரி மயக்கத்தை இடையிடையே தருகிறார். பிரத்தியட்ச வாழ்வினைத் தனது கண்ணோட்டத்தில் படம் பிடிக்கும் ஆசிரியர், உற்சாகம் காரணமாக சில இடங்களில் யதார்த்த சித்திரிப் புக்களை மிகைப்பட எழுதினாலும் அவருடைய சமூகப் பார்வையைக் குறைகூற முடியாதிருக்கின்றது. சிற்சில இடங்களில் அவருடைய சொற் கூட்டங்கள், ஓசை நிரப்பிகளாகவே இருக்கின்றன.
இவ்வாறு வளரும் பருவத்தில் ஏற்பட்ட ஓரிரு குறைகளும் நிறைகள் பலவும் கொண்ட இவரது ஆரம்பகாலக் கதைகள் இவர்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தின.
29
கலைஞன் என்ற கதையில் பூஷ்வா மனப்பான்மையுடைய எழுத்தாளர்களை எள்ளிநகையாடுவதையும், சமூகத் தளங்களின் வேறுபாட்டைத் சித்திரித்துக் காட்டுவதையும் ஆசிரியர் முதல் நோக்கமாகக் கொண்டுள்ளார். எழுத்தாளர் கந்தசாமி பின்வருமாறு நினைப்பதாகக் கதாசிரியர் வரைந்துள்ளார்.
"இந்த உலகம்தான் எவ்வளவு இனிமையானது; ஆனால் தூய்மையின் தன்மையை நோக்காது அழுகையில் மனத்திருப்தியடையும் இந்த கீழ் ஜென்மங்கள், இவ்வினிமைக்குக் குந்தகம் ஆகின்றார்களே" என்றும் " மனித சமுதாயம் இன்பத்தைத் துய்ப்பதற்காக கலைஞன் தன்னுடைய பேனாவின் வன்மையால் உல்லாசப் பூங்கா அமைத்துக் கொள்கிறான்" என்றும், அந்த எழுத்தாளரின் ரொமான்டிக்' பண்பை யோகநாதன் சித்திரித்துக் காட்டுகின்றார்.
"நன்னிலைச் சமுதாயத்திற்கு இடங்கள் தரும் முன்னணிகளாக, அவர்கள் இருவரும் நடந்து வருகிறார்கள். சமூகத்தின் இழிவைத் துடைக்கும் ஆவேசம் எழுத்தாளரின் நெஞ்சில் வீறுகொண்டு ஆடியது. என்றுமே சேரியின் அழுகலுள் நுழையாத கந்தசாமி, சமுதாய ஊழலைச் சுத்திகரித்துச் சொல்லும் வீரனின் பெருமிதத்தோடு முன்னே நடக்கின்றான்.எழுத்தாளரின் கண்கள் சாத்தானை இழுத்து அடித்துச் சாட்டையின் சீற்றத்தோடு வாசலுள் தாவுகின்றன.”
மேற்கண்ட வரிகளில் யோகநாதனின் மறைமுகமான கிண்டல் நடை பொருத்தமாக வந்து அமைந்துள்ளது.
சோளகம்" கதையின் முதல் பந்தியிலேயே யோகநாதனின் தனித்தன்மையான வெளிப்பாட்டுத் திறனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சாதாரணமாகச் சொல்லிவிட்டால் உப்புச் சப்பற்றதாகிவிடும் என்று நினைத்து அவர் குண கூடார்த்தமாகவும், கலா ரீதியாகவும் குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் வறுமை நிலைமை அவர் உணர்த்தும் அழகைப் பாருங்கள்.
Page 20
30
"அமைதியை வழங்கிய காற்றின் ஊடாக அந்தக் கிராமத்தின் இதயக் குரல் இருண்ட நடு நிசியிலும், மினுமினுப்பும் கை விளக்குகளின் அசைவினில் அடிநாதமாகத் தெரிகின்றது"
இதயக் குரல் அடிநாதமாக ஒலிக்கின்றது என்று கூறாமல், (ஒலிக்கிறது என்பதையும் உட்படுத்தி) வறுமையான இருதயக் குரலை உணர முடிகின்றது என்று காட்டுவதற்காக, அடிநாதமாகத் தெரிகின்றன என எழுதுகின்றார்.
இந்தக் கதையை (Montage) மொன்டாஜ் ஸ்ருதியில் பூரணம் என்ற பாத்திரத்தின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கின்றார். இடையிடையே பாத்திரங்கள் சார்பாக அவர்கள் மொழியில் தனது பார்வையைச் செலுத்தியும் மாற்றிடையே பாத்திரங்களின் சுய நினைவோட்டத்தைப் பின்னிப் பின்னியும் எழுதுகின்றார். ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்க்கைப் போக்கையும் வறுமையையும் சுருக்கமாக விளக்குகின்றார். அவர் இக்கதையில் கையாளும் உவமைகள் மீனவர்களுக்குப் பழக்கமான அல்லது உரித்தானவையாக உள்ளன.
இரண்டு மூன்று இடங்களில் மனதைத் தொடும்படி பாத்திர வார்ப்பையும், சம்பவக் கோவையையும் முனைப்படுத்திக் காட்டுகின்றார். 28ம் பக்கத்தில் உள்ள இரண்டாவது பந்தியில், "பூரணம் தும்புக் கட்டைகளை கயக்கிக் கொண்டு அழுத மனதைத் தெரியவிடாமல் வெளியே சிரிக்கின்றாள்" என்றும், கதை முடிவில்.
"பூரணம் இந்தச் சோளகம் முடியப் பிறகு பாரணை. இனி உங்களுக்கு ஒரு குறையும் நான் வையேன்"-"கணபதி ஏழு வருடங்களுக்கு முன்பாக இருந்து சொல்லிக்கொண்டுவரும் வார்த்தைகள் அவளது காதோடு கேட்கின்றன. அந்தச் சொற்கள் வெறும் ஒலி வடிவில் எழுந்து காற்றில் கலந்து மறைந்துவிட்டன. ஆனால் வரப்போகும் சோளகங்கள்." என்றும் வரையப்பட்டுள்ள பகுதிகள் உணர்ச்சி நிரம்பிவழியும் பகுதிகள் எனக் கூறலாம்.
31
மலரும் கொடியும்' என்பது ஓர் மனோதத்துவக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. மொழி அழகும் வண்ணப் படிமங்களும் கொண்டது. கதையின் சிற்சில இடங்களில் போலி உணர்ச்சி பரவசம் ஆசிரியரை அறியாமலேயே பற்றிக்கொண்டு வந்து விடுகின்றது. தக்க இடங்களில் உணர்வலைகளை வாசகர்களுக்கு ஆசிரியர் தொற்ற வைக்கின்றார். என்றாலும், கடைசியில் படித்து முடிக்கும்பொழுது ஆணித்தரமாக அவர் என்ன கூற வருகின்றார் என்பது புலப்படவில்லை.
'நிறங்கள்' என்ற கதையில், முதலில் கதை நிகழும் இடத்தையும் கதாபாத்திரங்களின் நிலை பற்றியும் தனது விவரணை மூலமாகவும் வழிப்போக்கர்களின் வாய்மொழி மூலமாகவும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு பின்,கறுப்பி என்ற பாத்திரத்தின் ஊடாக, ஆசிரியர் தனது பார்வையைச் செலுத்துகின்றார்.
உதாரணமாக, 10 ஆம் பக்க ஆரம்பத்தில் - "மெல்லிய சுடர் ஒன்று தார் வீதியில் கருமையில் இருந்து கிளம்பிப் பறப்பதுபோல அவள் கண்மணிப் பார்வையுள் மனத் திரை விரிக்கின்றது" என்று எழுதியிருக் கின்றார்.
இது கதாசிரியரின் பாத்திர அசைவு வர்ணனை, அதற்கு அடுத்த வரியிலே நேரடியாகவே பாத்திரத்துள் தானே புகுந்து விடுகின்றார். "அந்தச் சுடரிலே தான் எத்தனை வர்ணவரிகள், அதன் கண்ணிமைக்கும் மென் எழிலில்தான் எத்தனை இன்பத்தின் கதிர்கள்! இவ்வாறு மூன்றாவது நிலையில் இருந்து விவரணையையும் பாத்திரம் தானே தன்னுள் பேசுவது போலவும் பின்னிப் பின்னி எழுதிச் செல்கிறார். அதாவது பாத்திரத்தின் சார்பாக பாத்திரம் பேசுவது போன்று கதாசிரியர் கூறியபின், கதையோட்டத்தைச் சடுதியில் முறித்து, முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி பற்றி வர்ணித்துச் செல்கிறார். இப்பொழுது கறுப்பியின் தாயாகிய பொன்னியின் சார்பாக அவள் மன நினைவுக் கோவைகளையும், தனது சார்பாக வெளிநடப்புகளையும் விஸ்தரிக்கின்றார்.
Page 21
32
"நெஞ்சம் கருக்கிருட்டு ஒழுங்கையில் சிக்கிய மாலைக் கண்ணனாகிவிட்டது" என்ற அவரது உருவகம் இறுக்கமாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம். மாறி மாறிப் பின்னோக்கியும் நிகழ்கால எடுத்துரைப்பாகவும் கதையை அவர் நகர்த்திச் செல்கின்றார்.
இந்தக் கதையைப் பெண் குலத்தின் இயல்பான நெகிழ்ந்த நெஞ்சத்தை முரண்பாட்டுப் பகைப்புலத்தில் யதார்த்தபூர்வமாகச் சித்திரிக்கின்றார். முதன்மையான இக்கதைப் பொருளுடன் துணைக்கதைப் பொருட்களையும், வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். கறுப்பியின் பாத்திர வார்ப்பும் உளவியல் சித்திரிப்பும் அவற்றிற் சில.
யோகநாதன் கதைகள்' உருவ அமைப்பில் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. பின்னர் அவர் எழுதிவரும் குறுநாவல்களில் உள்ளடக்கச் சிறப்பு மேலோங்கி நிற்கின்றது. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவத்தைப் பயன்படுத்துவதில் அவர் இப்பொழுது போதிய கவனம் செலுத்தி வருகின்றார் என்பதற்கு அவருடைய குறுநாவல் தொகுதி சான்றாக இருக்கின்றது.
(தினகரன் நாளிதழ் 15 - 10 - 1973)
★ 茨 ★
33
மு. தளையசிங்கம்
புதுயுகம் பிறக்கிறது
Dறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கதைகள் செக்ஸ் பற்றியவை. எந்தவித அவசங்களுமின்றி அனுபவிக்கப்பட வேண்டிய வாழ்க்கையின் ஓர் அம்சமே காம உறவு என்பது ஆசிரியரின் பார்வை. செக்ஸ் ஒரு குறியீடாக இக்கதைகளில் வருகின்றது.
'வீழ்ச்சி' என்ற கதை ஏனைய கதைகளுக்கு ஓர் அறிமுகமாக அமைகிறது. தனது நாளாந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடங்கல்கள், தடைகளை மீற எதிர்நீச்சலடிக்க முனையும் ஒருவனின் இயலாத் தன்மையை கதை காட்டுகிறது. தனது காலத்தின் இழிவான, கடையான தன்மைகளிலிருந்து மீள எத்தனிக்கும் ஒருவன் அவ்வாறு மீள முடியாதிருப்பதையும் பத்தோடு பதினொன்றாகத் தானும் மாறுவதையும் கதை கூறுகிறது. ஆய்வறிவாளன் ஒருவனின் வீழ்ச்சியையும் ஆன்மாவின் வீழ்ச்சியையும் கதை சித்திரிக்கிறது.
புதுயுகம் பிறக்கிறது' என்ற கதையில் இடதுசாரிப்போக்குடைய ஒருவன் (அவன் மனைவி கூறுகிறாள்! உனது முற்போக்கு எனது கடவுளைக் கொன்றுவிட்டது) தனது சொந்தப் பிரச்சினைக்குக் கடவுளே காரணமென்கிறான். இறுதி இலக்கு எவ்வளவு முக்கியமோ, இலக்கை யடையும் வழியும் அதேயளவு முக்கியமானதுதான் என்பதையே ஆசிரியர் இங்கு காட்ட முற்படுகிறார்.
Page 22
34
கோழை ஒருவன் முதற் தடவையாகத் தன்னை எதிர்கொள் வதையும், கால தாமதமாக ஞானோதயம் அவனுக்குப் பிறப்பதையும் தேடல் கதை விளக்குகிறது. அவன் தன்னையே தன்னில் தேடிப் பார்த்தபோது, தான் இத்தனை காலமும் வாழவில்லை என்பதை உணர்கிறான்.
'கோட்டை' குறியீடான மற்றொரு கதை. புதுமைக்கும் பழமைக்கும் இடையில் மோதல், புதியவற்றை நிறுவ முற்படும் பொழுது ஏற்படும் இடைஞ்சல்கள், சமுதாயத்தின் அடிவேர்களைத் தனி நபர்கள் தகர்க்க முற்படும்பொழுது ஏற்படும் தோல்வி ஆகியனவற்றைக் கதை கூறுகிறது.
யாழ்ப்பாணக் கலாசாரத்தில் வளர்ந்த ஒருவன் உண்மையை நேர்கொண்டு பார்க்க எடுக்கும் தார்மீக ஆவேச நடவடிக்கைகளை இரத்தம்' கதை கூறுகிறது.
மரணத்தையும் மீறி நிற்கும் இலட்சியங்கள் பற்றிக் கோயில்கள் கதை கூறுகிறது. பிறத்தியான் மற்றொரு தேடல் முயற்சி.
தெய்வீகச் சிருஷ்டிக்கு அடையாளமாக உடலுறவு அமைவதைக் தொழுகை' என்ற கதை சித்திரிக்கிறது.
அதேவேளையில் வாழ்க்கையின் இறுதி நோக்கையடையத் தடங்கலாக செக்ஸ் அமைவதை, சபதம்" கதை காட்டுகிறது. 'வீழ்ச்சி என்ற கதை ஒரு கோணத்தைச் சித்திரித்தால், வெளி மற்றொரு கோணத்தைக் காட்டுகிறது. இங்கு மானிடன் தெய்வத்துடன் சங்கமமா கிறான். தர்க்கயுகத்தினதும், ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளினதும் தோல்வியை இக்கதை காட்டுகிறது.
தளையசிங்கத்தின் கருத்துப்படி, அளவுக்கு மீறிய காமம், காம நோய்களைக் கொண்டு வருகிறது. ஆனால் மனித உணர்வுகள் அனைத்தையும் புறக்கணித்து புத்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதனால் உலகளாவிய அழிவே ஏற்பட்டு விடுகிறது.
வெளியில் வரும் கதாநாயகன் ஒரு வேதாந்தி. அவன் அமைதியாக இருக்கிறான். அதுவே ஆட்சேபனையைத் தெரிவிக்க உகந்த வழி. அதுவே பிரம்மம் என்று தளையசிங்கம் நம்பினார்.
(Arts Magazine English Service, S.L.B.C. 1974)
35
பூங்கோதை
Bவணிபுரத்து வெள்ளம்
பூங்கோதை என்ற புனைபெயரில் எழுதிய பெண் எழுத்தாளர் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக நல்ல முறையில் எழு தப்பட்டுள்ளன. சமூக அக்கறை ஆசிரியையிடம் இருப்பதைக் கதைகள் புலப்படுத்துகின்றன. கதை புனையும் ஆற்றலும் அவரிடமிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. நல்ல தெளிந்த தமிழில் நேரடியாகவே கதையைச் சொல்லும் முறை சிறப்பாக அமைந்துள்ளது.
வர்க்க பேதங்கள் காரணமாக சமூகப் பிரச்சினைகளும், அதனை யொட்டித் தனிமனிதப் பிரச்சினைகளும் எழுகின்றன என்ற உண்மையை விளக்குவதாகப் பல கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான பாத்திரங்கள் சமுதாயத்தின் அடித்தளத்தைச் சேர்ந்தவர்களாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கதாசிரியை பூங்கோதை, அவர்கள் பிரச்சினைகளை அனுதாபத்துடன் நோக்குகிறார். பாத்திரங்களில் பெரும்பாலானோர் பெண்களாகவும் இருப்பதை நாம் காணலாம். பெண் உள்ளத்தின் மனப் போராட்டங்களைச் சித்திரிக் கையிலும், அசட்டு அபிமான உணர்ச்சியை அதாவது 'ஸென்டிமென்டலிஸப்' பண்பை ஆசிரியை தவிர்த்திருப்பது பாராட்டத்தக்கது. தனிமனிதப்
Page 23
36
பிரச்சினைகள் தான் என்றாலும், பாத்திரங்கள் அவற்றில் மூழ்கி, விரக்திப் போக்கைக் கடைப்பிடிக்காமல் உறுதியான நம்பிக்கைகளுடன் இயங்குவதும் அவதானிக்கத் தக்கது. மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமான முறையில் கதைகள் எழுதப்பட்டுள்ளன.
இனி இவற்றை ஒவ்வொன்றாகச் சிறிது பார்ப்போம் -
'பிழைப்பு' என்ற கதையில் வேலைக்காரப் பெண்ணொருத்தியின் மனநிலையை அழகாகப் படம் பிடித்துள்ளார். எஜமானியின் காருண்யமற்ற செயலால் அவள் வேலையிழக்கிறாள். நோய்வாய்ப்பட்ட தனது தாயைச் சென்று பார்த்ததற்காக, அவள் தான் வேலை செய்த வீட்டிலிருந்து விரட்டப்படுகிறாள். " வயிற்றுப் பசி பூர்த்தியான பின்தான், உள்ளத்தின் பசிபூர்த்தியாக வேண்டுமா?" என்று அவள் எழுப்பும் கேள்வி அவளுக்கே புதிராக இருக்கின்றது என்கிறார் ஆசிரியை.
இந்தக் கதையில் எஜமானி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பது உணர்த்து விக்கப்படுகிறது. இதற்குக் காரணம் உயர்ந்த வர்க்கத்தினர் மனிதாபிமானமற்றவர்களாக இருப்பதே என்பது ஆரியையின் கருத்து. இது ஒரு பொது விதி என்றும் சொல்வதற்கில்லை. புறநடையாக, உயர்ந்த வர்க்கத்திலும், நெஞ்சிரக்கம் உள்ளவர்கள் இருக்கக்கூடும் எனக் கூறிவிட்டு, அடுத்த கதைக்கு வருவோம்.
குடிசையில் ஒரு பிறந்த நாள்'- இதுவும் உயர்ந்த வர்க்கத்தினரின் ஈவிரக்கமற்ற அல்லது பாராமுகமான செயல்களினால், நலிவுற்றோர் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறுகின்றது. ஒரு ரிக்ஷாக்காரன் தனது மகனின் பிறந்தநாளைத் தனக்கு இயன்ற வகையில் கொண்டாட நினைத்தும், அது முடியாமற் போனதைக் கதை கூறுகிறது. அத்துடன் தனது மகன் விபத்தில் காலிழந்ததற்கும், வீட்டுச் சீமாட்டி கட்டணம் செலுத்தத் தாமதித்ததற்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் உணர்த்துவிக்கப்படுகின்றது.
பதவி, பவிசு வந்தாலும், பழமையை மறந்து ஆடாத ஆட்ட மெல்லாம் ஆடுவர் சிலர் என்ற உண்மையை, காலங்கள்' என்ற கதை
37
கூறுகிறது. ஆதங்கம் கொண்ட பெண் தன் பால்ய நண்பன் தன்னை மணஞ் செய்வான் என்று காத்திருந்து, ஏமாற்றம் அடைகிறாள். தான் அடைந்த அவமானத்தைத் துடைக்க அவளும், அவனைச் சின்னத் தனமாக நடத்திவிடுகிறாள். இதுதான் கதையின் முக்கிய நிகழ்ச்சி.
திக்கற்றோர் வாழ்வு மரத்துப்போய் விடுவதால்,அவர்கள் இயந்திரம் போல, விருப்பு வெறுப்பற்ற நிலையில் இயங்குகிறார்கள். இந்த அவல நிலை, ஏனையோருக்கு அசாதாரணமாகப் படுகின்றது. அவர்கள் ஆராய்ந்து பாராமல் இந்த வன்மை படைத்தவர்களை, பைத்தியம்' என்று கூசாமல் அழைத்துவிடுகிறார்கள். இதையே, ராதாவுக்குப் பைத்தியம்' என்ற கதை விளக்குகின்றது. ஒருசிலர் வன்மையுடன் விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு வேறுசிலர் காரணமாக இருக்கின்றனர்.
அந்த வேறு சிலர், மற்றையோரைப் புறக்கணித்து விட்டுச் சுயநலம் கருதிப் பின்னர், புறக் கணித் தோரை நாடுகின்றனர். புறக்கணிக்கப்பட்டோர் தாயை இழந்த நிலையிலும் யாசித்தோருக்கு உதவுகின்றனர். இதுதான் இந்தக் கதையின் விளக்கம்.
மேலிடத்தாரின் கருணை எத்தகைய உள்நோக்கம் கொண்டது என்பதைக் "கருணையின் மறுபுறம்" என்ற கதை அழகாகத் தீட்டுகின்றது. ஆயினும் இந்த வேஷதாரித்தனத்தை அம்பலப்படுத்தவும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாக இந்தக் கதையில் வரும் பாரதி என்ற பாத்திரத்தைக் காட்டலாம்.
பெண்ணின் மன உறுதியைக் காட்டுவதாக 'விண்ணப்பம்' என்ற கதை அமைந்துள்ளது. இந்தக் கதையில் வரும் கல்யாணி என்ற பாத்திரம், "வாழ்க்கையின் சுகங்களை விலகி நின்று ரசிப்பதிலும் ஒரு தனியான சுகம் இருக்கத்தான் செய்யும். பருவந் தப்பிய மழையால் யாருக்கும் பிரயோசனம் இருக்க முடியாது" என்கிறாள்.
Page 24
38
சங்கமித்தா - கதையில் அதிகாரவர்க்கம் ஏழைகளிடத்தில் நடந்துகொள்ளும்போது தனக்கு என்ற முறையில் மேலும் சுரண்டுமே யொழிய, உறவு நிலையை கருத்துக்கு எடுத்துக் கொள்ளாது என்பது வலியுறுத்தப்படுகின்றது.
வேலைக்காரப் பெண்ணுடன் உறவு வைத்து, அதன் பயனாகப் பிறந்த குழுந்தையுடனும் தகாத உறவு கொள்ள முற்படும் ஒருவனை, முகத்திலடித்தவாறு சவால்விடும் புதுமைப் பெண்ணாகச் சங்கமித்தாவுக்கு இலட்சிய வடிவம் கொடுத்துள்ளார் கதாசிரியை பூங்கோதை.
நியமம்' என்ற கதையில், தலைப்புக்கு ஏற்ப, விதியின்படியே யாவும் நடக்கின்றன என்பது உணர்த்துவிக்கப்படுகின்றது. இது சரியான கருத்தா என்பதை வாசகர்கள் தாமே தீர்மானித்தல் வேண்டும்.
வேணிபுரத்து வெள்ளம்' - சுந்தரம் என்பவனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் இருவர் வெள்ளத்தின் பின்னர் சந்திக்க நேரிட்டபோது ஏற்படும் அதிர்ச்சியுடன் கதை முடிகிறது. இந்தக் கதையில் பாத்திர வளர்ச்சி இன்னும் விரிவாக வடிவம் பெற்றிருக்கலாம். சிறுகதையின் இயற்கூறுகள் மேலும் சிறப்பாக இணக்கம் பெற்றிருக்கலாம். பிழைக்கத் தெரிந்தவன்சந்தர்ப்பவாதிகளின் பேச்சும் செயலும் எப்படிப்பட்டவை அவர்கள் எவ்வாறு சாதாரணமானவர்களை ஏமாற்றுகிறார்கள் ஆகியவற்றை கதை வடிவில் ஆசிரியை எடுத்துக் கூறுகிறார். இந்தக் கதையில் ஆங்கில வார்த்தைகளும், இந்தியக் கதையிற் காணப்படும் ஆங்கில உச்சரிப்புக் கொண்ட சொற்களும் காணப்படுகின்றன.
'இப்படியும் சில மனிதர்கள்'-ஏமாளிகளை நடிக்கத் தெரிந்தவர்கள் எவ்வாறு வசப்படுத்தி தம் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள் என்பதையும், அனுபவப்பட்ட பின்னர்தான் அவர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதையும் கதை விளக்குகின்றது.
(தினகரன் நாளிதழ் 30 - 04 - 1974)
39
செ. யோகநாதன்
ஒளி நமக்கு வேண்டும்
சிறுகதையைவிட நாவலை விரும்பும் வாசகர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. நீண்ட முழு நாவலையும் இந்த வாசகர்கள் அதிகம் விரும்புவதில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட குறுநாவல்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. உடன் நிகழ்கால ஐரோப்பிய - அமெரிக்க- ஆபிரிக்க-நாவல்களும் அளவில் சிறியதாக - குறு நாவல்களாக வெளிவருகின்றன. அல்பேர்கெழு (ALBERTCAMUS) என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய பிறத்தியான்' (OUTSIDER) என்ற பிரபல நாவல் 120 பக்கங்களை மாத்திரமே கொண்டது. குறுநாவல் துறையைப் பிரபல்யப்படுத்தியவர் அல்பேட்டோ மொறாவியா (ALBERTO MORAVIA) என்ற இத்தாலிய எழுத்தாளர் என்றே நான் நினைக்கிறேன். இந்தக் குறுநாவல்களை இத்தாலிய மொழியில் நொவெல்லா' என்று அழைக்கிறார்கள்.
தமிழிலும் குறுநாவல்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. சிறுகதை ஒன்றில் சொல்ல முடியாததைப் பரந்த அளவில் குறுநாவலில் சொல்லிவிட முடிகிறது. சிறுகதை மூலம் தெரிவிக்க முடியாததைப் புதுக் கவிதை மூலம் இறுக்கமாக, அழுத்தமாகத் தெரிவிக்க முடிகிறது. எனவே தமிழில் குறுநாவலும் புதுக் கவிதையும் இப்பொழுது பொப்' (POPULAR) பாடல்கள் போலப் பிரபல்யம் அடைந்து வருவதில் வியப் பில்லை. காலத்தின் தேவையை ஒட்டி இலக்கிய, கலை வடிவங்களும் அமைகின்றன.
Page 25
40
செ. யோகநாதன் 1963க்கும் 1972க்கும் இடையில் எழுதிய ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு இப்பொழுது வெளிவந்திருக்கின்றது. புத்தகத் தலைப்பில் சுட்டப்படுவதுபோல ஒளி நமக்கு வேண்டும், விரக்தியும் தோல்வி மனப்பான்மையும் நமக்குக் கூடாது என்ற அடிப்படையில் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் ஐந்து குறுநாவல்களும் அமைகின்றன.
இதில் இடம்பெறும் தோழமை என்றொரு சொல்' என்ற கதை யூனெஸ்கோ திட்டத்தின் கீழ் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டு வருகிறது. 20 வருடங்களும் மூன்று ஆசைகளும்' என்ற கதை சிங்களத்தில் விரைவில் பிரசுரிக்கப்படவிருக்கின்றது. இந்தக் கதையில் நிகழும் ஒரு சம்பவமும் ஹென்றி ஜயசேனாவின் நாடகமாகிய 'அப்பட்ட புத்தே மகக் நத்த" வில் வரும் சம்பவமும் உண்மை நிகழ்ச்சி ஒன்றைத் தழுவியவைகளாகும்.
பல்கலைக்கழக வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் பல பட்டதாரி மாணவர்கள் தமது கதைகளில் சித்திரித்திருக்கிறார்கள். ஆனால் காலஞ்சென்ற கதிர்காமநாதனும், செ. யோகநாதனும் அந்த வாழ்க்கை முறை வெளியே உள்ள சமூகத்தின் பிரதிபலிப்பே என்பதைத் தத்துவார்த்தமாக விவரித்திருக்கின்றனர். தனி மனிதன் அல்லது தன்னலப் போக்கை வெறுத்தல்,சமூக நீதி நிலவ கூட்டுப் போராட்டத்தை மேற்கொள்ளல், மாறிவரும் சமூகத்திற்கேற்ற கல்விச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்துதல்,வைதிக பழமைப் போக்கை மாற்றுதல் போன்றவை யோகநாதனின் குறுநாவல்களில் காணப்படும் அம்சங்கள்.
ஜானகி-பிராமணப் பெண் ஒருத்தி தனது குலமரபை ஒதுக்கி விதவைத் தாய்க்கும் தனக்குமாகச் சீவனோபாயம் நடத்துகிறாள். குலப்பெருமை பேசிய அவள் சகோதரனும் பிழைப்புக்காக லொறி வண்டி ஒன்றில் கிளினர் வேலை பார்க்கிறான். தாழ்த்தப்பட்ட வகுப்பினள் என்று கூறப்படும் ஒரு பெண் இந்தப் பிராமணப் பெண்ணுக்கு வாழ்க்கை உபதேசம் செய்கிறாள். வேஷதாரித்தனமும் பழமை நாட்டமும் கண்டிக்கப்பட்ருப் புத்தொளிக்கான ஆயத்தங்கள் செய்யப்படுவதை இந்தக் கதை உணர்த்துவிக்கின்றது.
41
20 வருடங்களும் மூன்று ஆசைகளும் - தம்மிகா(மத்தியதர சிங்கள விவசாயி ஒருவரின் மகள்), சுமணதாஸ் (கல்லுடைத்து வாழ்க்கை நடத்தும் வறிய கிழவி ஒருத்தியின் மகன்), தர்மபால (கமக்காரர் ஒருவரின் மகன்), சிவகுமார் (சில்லறைக் கடைக் காரர் ஒருவரின் மகன்) ஆகிய பாத்திரங்கள் மூலம் பல்கலைக்கழக வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஆசிரியர் வெவ்வேறு குணநலங்கொண்ட பாத்திரங்கள் மத்தியில் சமூக யதார்த்தப் பிரக்ஞையை உண்டு பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்களுக்கு இடையில் ஏற்படும் தொடர்பு உண்மையைத் தரிசிக்க வைக்கிறது. தன்னலம் பேணல், குறுகிய மனப்பான்மை ஆகியன துன்பத்தை விளைவிக்கும். ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்குத் தேவையான ஐக்கிய நடவடிக்கைகள் வேண்டும். எந்த விதமான ஒதுங்கிய மனப்பான்மையும் சுயநலமும் ஊறு விளவிக்கின்றன என்பதே நாவலின் வெளிப்படை. ஆனால் இதனை வெறுமனே புகைப்பட யதார்த்தமாகக் காட்டாது, காரண காரியத்துடன் ஆய்வு முறை ரீதியில் இந்த யதார்த்தத்தை யோகநாதன் கொண்டு வருவது தனிச்சிறப்பு.
தோழமை என்றொரு சொல்' - இந்தக் கதை "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற முதுமொழியை வலியுறுத்துவதாக அமைகிறது.
அந்த நாள் வரவேண்டும்-கல்விச் சீர்திருத்தத்தைக் கோருகிறது. இது இப்பொழுது நடைமுறையில் இருந்து வருவது கண்கூடு.
திருச்சிற்றம்பலம்'- சுய இரங்கல் மனப்பான்மை களைந்து எறியப்பட்டு வாழ்க்கையில் ஒளி பிறக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது.
'ஒளி நமக்கு வேண்டும்'- இன்று நமது காலத்திற்கு மிகப் பொருத்தமான தாரக மந்திரமாகும்.
(தினகரன் வாரமஞ்சரி : 06 - 01 - 1974)
ஜிஐ ஜி ஜி
Page 26
42
புலோலியூர் க. சதாசிவம்
யுகப் பிரவேசம்
புலோலியூர் க. சதாசிவம் எழுதிய பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு யுகப் பிரவேசம்'. இந்தத் தொகுப்பு ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடமொன்றினைப் பெறத்தக்கது. இதற்கான காரணம், இதில் அடங்கியுள்ள கதைகள் உள்ளடக்கச் சிறப்பும், உருவ அழகும் ஒரே சமயத்தில் கொண்டிருக்கின்றன. இதன் உள்ளடக்கம் நவீன உடன் நிகழ்கால வாழ்க்கையின் சித்திரிப்பு. அதேபோன்று உள்ளடக்கத் தன்மைக்கேற்ற விதத்தில் உருவமும் இணைந்து அழகூட்டுகின்றது.
சதாசிவம் எழுதிய, யுகப் பிரவேசம்' உருவச் சிறப்பினால் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்படிக் கூறுவதனால், அதன் உள்ளடக்கம் சிாமான்யமானதென்று அர்த்தமல்ல. உள்ளடக்க ரீதியாக இவை சமூகத்தின் முரண்பாடுகளை, சொல்லாமற் சொல்லிச் சித்திரிக்கின்றன. முரண்பாடுகள் எப்பொழுதுமே இருந்து வருகின்றன. ஆனால் அவற்றிற்கான காரணம் என்ன என்று அலசுவதிலேயே உள்ளடக்கம் யதார்த்தத் தன்மையைப் பெறுகிறது.
புது வாழ்வு தாம்பத்தியங் கூடப் பொருளாதாரப் பின்னணியில் வடிவமும், இயக்கமும் பெறுகிறது என்பதை உணர்த்தும் அதே வேளையில், மன நெகிழ்ச்சிக்கும் இடங்கொடுத்து, குறியீட்டுடன் முடிவடைகின்றது. 'அனில் கோதிய நல்ல ரக மாம்பழம்' என்பது கதாநாயகி செல்லம்மாவின் நிலையைப் பொருத்தமாக விளக்குகிறது.
43
'அக்கா ஏன் அழுகிறாள்? இந்தக் கதையும் சோக உணர்வை நெறிப்படுத்திய வார்த்தைப் பிரயோகம் மூலம் வெளிப்படுத்துகின்றது. காசு என்பதே உறவின் எல்லையைத் தீர்மானிக்கிறது என்பது இங்கே உணர்த்துவிக்கப்படுகின்றது.
மண் உழைத்து உழைத்துப் பாடுபடும் வர்க்கம், சொகுசான வாழ்க்கை நடத்தும் மற்றைய வர்க்கத்துடன் சம்பந்தப்படும் பொழுது, விளைவு திருப்திதராததுடன், பலத்த ஏமாற்றத்தையும் அளிக்கின்றது என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது. ܗܝ
'அலை நுட்பமான முறையில் பெண்மையின் மென்மையையும், தியாக மனப்பான்மையையும் சித்திரிக்கும் அதே வேளையில், இனபேதம், வர்க்கப் பேதம் ஆகியனவற்றையும் மீறி மனிதாபிமானம் ஆட்சி செலுத்துகிறது என்பதை ஆசிரியர் அழகிய முறையில் காட்டுகிறார்.
'அஞ்சல்' திரைப்படக் கதைபோன்று (ஏளன அர்த்தத்தில் அல்ல) பழமைச் சிறப்புடன் கூடிய இந்தக் கதை எனக்குப் பிடித்தவற்றுள் ஒன்று. இங்கும் குடும்பநல சுகாதாரம் என்று இப்போழுது கெளரவமான முறையில் அழைக்கப்படும் குடும்பத்திட்டத்தை மறைமுகமாக கதாசிரியர் வலியுறுத்துகிறார் என நினைக்கிறேன்.
'நெடுஞ்சாலை' நகைச் சுவையுடன் எழுதப்பட்ட இந்த சுவாரஸ்யமான கதையில், "மாற்றமே இயற்கையின் நியதி" என்ற கருத்து தொட்டுக் காட்டப்படுகின்றது.
மூட்டத்தினுள்ளே' கதையில் தோட்டப் பகுதிகளில் நிலவி வரும் அறியாமை, மூட நம்பிக்கைகள் போன்றவை அநீதிக்கு எவ்வாறு துணை செய்கின்றன என்பது மையக் கருத்து.
இது இவர்களுக்கு சுவையான முஸ்லிம் உரையாடல்களைக் கொண்டு வறுமையுற்ற வர்க்கத்தினரின் வாழ்வின் ஒரு கோணத்தை
Page 27
44
ஆசிரியர் தீட்டுகிறார். தாம் பத்திய உறவின் முதிர்ச்சியும் சித்திரிக்கப்படுகின்றது.
இனி ஒரு விதி தொழிற் சங்க நடவடிக்கை மூலம் அநியாயம் சுட்டிக் காட்டப்படின், அது தாக்கமுடையதாக அமைந்து, ஈற்றில் வெற்றியைக் கொடுக்கும் என்பது கதாசிரியர் உணர்த்தும் செய்தி.
யுகப்பிரவேசம்'- "சமுதாய அமைப்பு நிலையானதல்ல. காலத்தின் தேவைக்கேற்ப அது- மாறிக் கொண்டேயிருக்கும்" என்பதைக் காட்டும் இந்தக் கதையில் வரும் ஏனைய சில பகுதிகளும் மனம் கொள்ளத்தக்கவை.
'ஒருநாட்பேர் - மானம்' என்ற சொல்லிற்குரிய அர்த்தங்கள்,
ஆளுக்கு ஆள் வேறுபடுவதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
(வீரகேசரி வாரவெளியீடு 05 - 05 - 1974)
女 ★ ★
45
மண்ரூர் அசோகா
கொண்றைப் பூக்கள்
இருக்கவிலக்கியத்துறையில் ஈடுபட்ட பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவராகக் கருதப்படும் மண்டூர் அசோகா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு கொன்றைப் பூக்கள' தான் வாழும் கிராமத்தின் பின்னணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவ வரையறைகளுக்குள் நின்று அவர் தமது கதைகளை எழுதுகிறார்.
'கனவுகளும் கண்ணீர்ப் பூக்களும் என்ற கதையில் வரும் தேவி என்ற பாத்திரம் முதிர்ச்சியனுபவத்துடன் நடந்து கொள்ளும் விதத்தில், கதையில் நம்புந்தன்மையும் நேர்மையும் தொனிக்கின்றன. உளவியல் பார்வையில் இப்பாத்திர வளர்ச்சியை ஆசிரியை மேற்கொள்கிறார். அசட்டு அபிமான உணர்ச்சி இல்லை என்பதுடன், தேவி மீது ஓர் அனுதாபம் ஏற்படும் விதத்திலும் கதை பின்னப்பட்டுள்ளது.
'பொய்யான சுமைகளும் எரியும் இதயங்களும்' என்ற கதையில் கெளரி என்ற வெகுளிப் பெண்ணின் மன வளர்ச்சியைச் சித்திரிக்கிறார். இத்தகைய ஆழ்ந்த அனுபவச் சித்திரிப்பை பல எழுத்தாளர்களிடம் காண்பதரிது.
சாயும் கோபுரங்கள்' 'பாரம் கீழிறங்கியது' ஆகிய கதைகளும் குறிப்பிடத்தக்கவை. துன்பச் சுருதியே கதைகளில் இழையோடுகிறது. இவருடைய ஏனைய நூல்களைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் ஏற்பட
வில்லை.
(Daily Mirror: 1974)
Page 28
46
நெல்லை க. பேரன்
ஒரு பட்டதாரி நெசவுக்குப் Bபாகிறாள்
Dறைந்த எழுத்தாளர் நெல்லை க. பேரன் எழுதிய சிறுகதை' களில், பதின்முன்று கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு இது. செய்தித்தாள் நிருபர் ஒருவர் எழுதும் கட்டுரைகள் அல்லது செய்தி அறிக்கைகள் போன்று பல கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது, ஒன்றும் வியப்பில்லை. ஆசிரியரின் நிருபர் தொழில் அனுபவம் கதை களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இலக்கியத்தில் உண் மையான ஆர்வமும், ஆற்றலும், மனிதநேயப் பண்பும் கொண்டவர் பேரன். அவருடைய கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை, கருத்துக்கள் மக்கள் மத்தியில் இலகுவான முறையில் செல்ல வேண்டுமென்று விரும்புபவர். இருந்தபோதிலும், 'சிறுகதை' என்ற வாகனம் மூலம் அவர் தமது கருத்து அல்லது செய்தியைக் கூற முன்வரும்போது அந்த வாகனம் அல்லது ஊடகத்தின் தன்மையை அவர் நன்கு புரிந்திருப்பதாகத் தெரியவில்லை. உற்சாகம் காரணமாக அவர் தமது கருத்துக்களை கதை என்ற பெயரில், கதை சார்ந்த கட்டுரைகளாகவே கூறுகிறார் என்பதை இந்தத் தொகுப்பைப் படிக்கும் எவரும் உணர்வர்.
"கலை, இலக்கியம் சமூகப்பணி செய்யவேண்டும் என்ற கோட்பாட்டில் நான் அசையாத நம்பிக்கை கொண்டவன் " என்கிறார் பேரன். மிகவும் நல்லது. ஆனால், கலை, இலக்கியம் என்று வரும்
47
பொழுது அவற்றின் தன்மைகளுக்கேற்ப உருவம்' என்ற ஓர் அம்சமும் இணைந்திருப்பதை நாம் மறக்கலாகாது. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஜானகிராமன், யோகநாதன், கதிர்காமநாதன், யேசுராசா, குப்பிளான் சண்முகன் மற்றும் பலர், தத்தம் நிலைகளில் நின்று தமக்கேயுரிய விதத்தில் கதைகள் எழுதுகின்றனர். ஆனால், சிறுகதைக்குரிய வடிவம் (ஒர் ஒருமைப்பாடு, கட்டுக்கோப்பு, அமைதி, சிக்கனம், கவிதைப்படிமச் சிறப்பு) அவர்களுடைய கதைகளில் இடம்பெறுவதைக் காணலாம். நெல்லை க. பேரனின் கதைகள் வெறுமனே அறிவு ரீதியாக மாத்திரம் செய்திகளைச் சொல்லுகின்றன. உணர்வுபூர்வமான முறையிலும் அனுபவங் களைப் பரிவர்த்தனை செய்துகொள்ள பேரன் சில உத்திகளைக் கையா
ண்டிருக்கலாம்.
புதுக் கவிதைகள்' சிலவற்றில் சமூகப் பணியை வலியுறுத்தும் சுலோகங்கள் இடம்பெறுகின்றன. சுலோகங்கள் மாத்திரம் கலையாகுமா? கவிதைப் பண்புகள் கொண்டிருப்பின், அவற்றை நவீன கவிதை என வரவேற்க நாம் தயங்கோம். அதுபோலவே, சிறுகதைகளிலும், சிறு கதைக்குரிய பண்புகள் அமையாவிடின், உள்ளடக்கம் மேன்மையாக இருந்தாலும் வாசகர் மனதில் ஓர் ஈர்ப்பைத் தருவிக்க அவை தவறிவிடும். நெல்லை பேரன் போன்றே சிறுகதைகள்' எழுதும் பல புதிய பரம்பரையினர் இருப்பதை நானறிவேன். இவர்களின் வளர்ச்சி கருதி, இவர்களுடைய இந்தக் குறைபாட்டை வலியுறுத்தல் தகும். தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ( கா. சிவத்தம்பி) , சிறுகதை ஒரு கலை (ப.கோதண்டராமன் ), சிறுகதைச் செல்வம் (சாலை இளந்திரையன் ), தமிழில் சிறுகதை ( சாலை இளந்திரையன்), ஈழத்துச் சிறுகதை மணிகள் (செம்பியன் செல்வன்), தமிழ்ச் சிறுகதை வரலாறு (வேதசகாயகுமார் ), போன்ற நூல்கள் " சிறுகதை வடிவத்தை நன்கு விளக்கிக் காட்டுகின்றன.
Page 29
48
"நெல்லை பேரன், வடமராட்சிப் பகுதிக் கிராமப்புறச் சூழல் களையும், அங்குள்ள மக்களின் பிரதேச மொழி வழக்கையும்" கையாள் கிறார். இந்தத் தொகுப்பை அப்படியே நாடி பிடித்துத் தொட்டுக் காட்டுகிறார் பேராசிரியர் க.கைலாசபதி. முன்னுரையில் அவர் கூறி யிருப்பதைவிட விரிவாக ஒன்றும் கூறுவதற்கில்லை.
ஆயினும், ஒரு முக்கிய வேறுபாட்டை இங்கு நாம் சுட்டிக் காட்டவேண்டும். ரியலிஸம்" எனப்படும் யதார்த்த வாதத்திற்கும், நாச்சுரலிஸம்" எனப்படும் இயற்பண்பு வாதத்திற்கும் உள்ள வேறுபாடே இது. பேரனின் கதைகள் உருவத்தில் கவர்ச்சியிழப்பதற்கான காரணம், அவர் தமது கதைகளை இயற்பண்பு வாதத்தில் எழுதியிருப்பதே. உதாரணமாக 'குடிலின் அடியில்' என்ற கதையில், கதையின் மையக் கருத்துடன் தொடர்பு கொள்ளாத, அநாவசிய விவரங்களை ஆசிரியர் சேர்த்திருப்பதைக் குறிப்பிடலாம்.
இயற்பண்பு வாதிகள், தேர்வு முறையின்றி அப்பட்டமாகப் பிரத் தியட்ச வாழ்வைப் படம் பிடிப்பார்கள் ( எஸ். பொ. வின் முன்னைய கதைகள், எமிலி ஸோலாவின் நாவல்கள், DOS PASSOS என்ற அமெரிக்க முற்போக்கு எழுத்தாளரின் படைப்புகள் உதாரணங்கள்) யதார்த்தவாதிகள், சம்பவங்கள் அல்லது கருத்துக்களில் காரண காரியத் தொடர்பை, தேர்வு ஒழுங்கின் பிரகாரம் சித்திரிப்பார்கள். குடிலின் அடியில்' என்ற கதையில் வரும் கடைசிப் பந்திக்கு முந்திய பந்தியில்தான் கதையின் நோக்கம் தெரிவிக்கப்படுகின்றது. எஞ்சிய எட்டரைப் பக்கங்களும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட விவரணை.
இரண்டாவது கதையான, 'கடவுள் உள்ளே இருக்கிறார், எழுதப்பட்ட முறையில் வடிவம் ஓரளவு வந்தடைகின்றது. ஆனால் வெறும் சித்திரிப்புடன் நின்று விடுகிறது. வழிகாட்டலும் சமூகப் பணியன்றோ? பேரனின் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லாம், பட்டதாரிகள் உத்தியோகத்தைவிட்டு, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றில் இறங்குவதே மேல் என்ற கருத்துடையவர்கள். இவர்கள் இதனைச் சமூக நெறியாகக் கொள்ளாது, தமது தனித்துவ மேம்பாட்டுக்கு,வருவாய்
49
அதிகரிப்புக்கு உதவும் ஒரு செயல் என்றே கருதுகின்றனர். அதாவது பிரசாரக் கதைகளைப் பேரன் எழுதுகிறார். எந்தக் கதையில்தான் பிரசாரம் இல்லை? ஆனால், பிரசாரம் தொக்கி நிற்பதில்தானே கலைத்துவம் மிளிருகிறது. ராஜாஜியின் மதுவிலக்குப் பிரசாரக் கதைகளிலும் கலைத்துவம் இருக்கத்தான் செய்கிறது. பேரன் தமது சிந்தனைகளை நெறிப்படுத்தி எழுதியிருப்பின் சிறப்புப் பெற்றிருப்பார்.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை அனைத்தும் சுவாரஸ்யமாக
எழுதப்பட்டுள்ளன என்பதை விசேடமாகக் குறிப்பிடவேண்டும்.
'ஒரு படித்த விவசாயின் பயணம்' இந்த வகையில் ஒரு நல்ல ങ്ങg.
'எண்பது ரூபா 'கதை அழகான சித்திரம். குலப் பெருமை' வடிவம் பெற்றுள்ளது.
'அண்ணா வந்தார் கதையில் , நாயகன் மனமொடிந்து போவது நம்பிக்கையை ஊட்டவில்லையே.
" மாற்றங்கள்" மாற்றமே இயற்கையின் நியதி என்பதைக் கூற வந்தாலும், கதைப் பின்னணி அவ்வளவு வலுவானதல்ல.
"அவர்கள் என் சுதந்திரத்தைப் பறித்துவிட்டார்கள்", தலைப்பு நீண்டதைப் போன்றே, நீண்ட விவரணை கொண்ட வியாக்கியானமாகவே அமைகிறது.
"இராமச்சந்திரன் உறங்குகிறான் ", நசிவான சிந்தனையன்றோ?
"உண்மைகள் பொய்ப்பதில்லை", முன்னைய தசாப்தத்தில் எழுதப்பட்ட ஒரு பத்திரிகை ரகக் கதைபோல இருக்கிறது.
"ஒளியை நோக்கி" நோக்கம் நன்று.
"கெளரவம் என்ற ஒன்று"மரபு வழிப்பட்ட கருத்தோட்டக் கதைகளில் ஒன்று.
Page 30
50
"ஒருபட்டதாரி நெசவுக்குப் போகிறாள்" என்ற கதையிலும், தத்துவாக் குறைபாடு உண்டு. வர்க்க உணர்வும்,சிந்தனையும் வெளிப்படுத் தப்படாததால், சிறுகதைகளில் ஆழம் இல்லாதுபோய்விடுகிறது. விமர்சிக்கப்படும் பொருள் ஆழமாக இருந்தாலன்றோ, விமர்சனமும் ஆழமானதாக அமையும். அவ்வாறு அமையாத பட்சத்தில், புதிய பரம்பரையினரை ஊக்கப்படுத்துமுகமாகக் குறிப்புகள் எழுதுவதைவிட வேறு மார்க்கமில்லை.
நெல்லை க. பேரன் புதிய பரம்பரையினரில் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கினார். இவருடைய இலக்கிய நெஞ்சம் பல துறைகளில் ஈடுபடச் செய்யத் தூண்டியது. இருந்த போதிலும் இவர் சிறுகதைகள் எழுது வதையே பெரிதும் விரும்பினார் போல் தெரிந்தது. பேரன் தமது ஆற்றலை வெளிப்படுத்த வேறு இலக்கிய வடிவங்களையும் கையாண்டிருக்கலாம்.
சிறுகதை எழுதுவது மிக மிகக் கடினம். சிறுகதையின் வீழ்ச்சிக்காலம் இது என்பார்கள் விமர்சகர்கள். குறுங்கதைகள்' சிறு கதையின் இடத்தைப் பிடிக்க முற்படுகின்றன. ' புதுக் கவிதைகள்', கவிதையின் வாரிசாக வர முற்படுகின்றன. புனைகதைக்கு ஒரு வளர்ச்சிக் கிரமம் உண்டு. கலை நுட்பம் உண்டு. வெறும் சிந்தனைகளும், உணர்வுகளும் இலக்கியமாகா. கருத்தும் கருவும், கலைநுட்பமும் வண்ணமும் ஒருங்கே அமையப்பெறின் அது அழகு பெறுகின்றது. அதனால் கவர்ச்சியைக் கொள்கிறது. படிப்ப வரிடையே பரவசத்தை ஏற்ப்டுத்துகின்றது. பரவசம் காரணமாக அறிவும் , உணர்வும் அனுபவங்களைப் பெறுகின்றன. அனுபவம் விரிய ஆழம் உண்டாகின்றது. ஆழத்தின் அடியில் உண்மை படிந்துள்ளது.
கொடூர யுத்தத்தின் காரணமாகத் தனது உயிரைக் குடும்பத் தினருடன் ஒரே சமயத்தில் இழந்த, கலை உள்ளங்கொண்ட பேரனுக்கு இதயபூர்வமான அஞ்சலி.
(தினகரன் வாரமஞ்சரி : 14 - 09 - 1975)
ர்,ல்,
容。
51
5). (8uIör|JIIJFT
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
இதில் பத்துக் கதைகள் அடங்கியுள்ளன. அகவய நிலையில் நின்று அவை எழுதப்பட்டுள்ளன. தனிப்பட்ட அனுபவங்களின் நேர்மையான நேர்த்தியான வடிப்பு. அலட்டிக் கொள்ளாததாலே சம்பவக் கோவையை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தும் பண்பு, கதை நிகழுமிடங்களின் குறுகிய வட்டம் ஆகியனவற்றைக் குறிப்பிடுவதுடன் அனுபவம் பரந்து பட்டதாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மீனவர் சூழலும், பேச்சும் இயற்பண்பு வாத சாயலில் அமையாமல், தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்கின்றன "புற நிலைகளின் பாதிப்பு களையும் மீறி வாழ்ந்து காட்டுகிறவர்களையும், யதார்த்தத்தில் காண முடிகின்றது. அத்தகையவர்களென விசுவாசிக்கப்பட்டவர்கள் மாறிப் போவதே, அப் பாத்திரத்தின் தவிப் பாகவும் விளங்க முடியாமையாகவும் உள்ளது" என்கிறார் யேசுராசா.
இத்தொகுப்பிலுள்ள கடைசி இரண்டு கதைகளும் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்த்துவிக்கின்றன.
தொலைவு கதையில் சொல்லப்படும் அனுபவங்கள் நிதர்சன
OT66O)6.
(தமிழமுது : 1975)
茨 茨 ★
Page 31
52
சாந்தன்
கடுத
(Gamb எழுத்தாளர் சாந்தனின் இரண்டாவது புத்தகம் இது. முதலாவது பார்வை' இதில் சிறிய சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. கடுகு' என்ற இரண்டாவது தொகுப்பில் 25 குறுங்கதைகள்' இடம் பெற்றுள்ளன. இந்தக் குறுங்கதைகளுக்கும் புதுக் கவிதைக்கும் அதிகம் வித்தியாசமில்லை. 'புதுக் கவிதைகள்'பாரம்பரியக் கவிதைக்கு வாரிசாக வர முற்படுகின்றன. அவற்றில் கவிதை நயமுண்டோ, இல்லையோ, அவை புதுக்கவிதை என அழைக்கப்படுகின்றன. சுருங்கிய சொல்லில், படிமங்கள் ஊடாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதே புதுக்கவிதையின் அடிப்படைத் தொழிற்பாடு. குறுங்கதைகளும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்ன. குறுங்கதைகளை வரி வரியாக வெளியிட்டால், புதுக்க விதைகளின் வாசகர்கள் மருண்டாலும் மருளலாம். குறுங்கதைகள் குறள் போன்று சில சமூக அவதானிப்புக்களை வெளிப்படுத்துகின்றன.
சாந்தன் எழுதிய குறுங்கதைகளில் சமூகப் பார்வையுண்டு. ஆனால் அது எந்தவிதமான சமூகப் பார்வை என்பதே முக்கியம். சாந்தனுக்கு ஊழல்களும், வேஷதாரித்தனமும் எரிச்சலைக் கொடுக்கின்றன. முற்போக்கு என்று சொல்லிக் கொண்டே, பிறவிப் பிற்போக்குவாதிகள், சமூகத்தை ஏமாற்றிப் பிழைக்கும் விதத்தை, சாந்தன் பின்வரும் கதைகளில், நையாண்டியாகத் தெரிவிக்கிறார்.
பெயர் (மக்கள்'என்ற வார்த்தையின் துஷ்பிரயோகம்) ப்ரீவில் குட்டி முதலாளிகள் போக்கு), சூழ்நிலை (முற்போக்கு என்று காட்டிக்
53
கொள்ளாவிட்டால், உத்தியோகம் போய்விடும் என்ற பயம்),புறப்படு தோழா (உண்மையான பற்றின்றி இரண்டு பக்கமும் தாளம் போடல்) ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். சமூக ஊழல்கள் பற்றியதாக, 'முதலாளிகள் பலவிதம்', இரண்டு உவமைகள்', 'சோடனை' ஆகியன அமைந்துள்ளன.
முரண்' என்ற தலைப்பில் அவர் எழுதிய குறுங்கதையில்,
"இலக்கியங்கள், மானுடத்தின் முன்றேற்றத்திற்குக் கருவிகள் ; அவற்றிற்கு, நிச்சயமான, காத்திரமான சமுதாயப் பணி உண்டு" என்று ஆவேசமாகப் பேசிய மக்கள் இலக்கியக்காரன்,அப்படியான படைப்புகள் தாம் காலத்தால் மலியாமல் நின்று நிலைக்கும் என்கிறார்.
சரி, காலத்திற்குக் காலம், சமுதாயங்கள் மாற, இலக்கியங்களும், அவற்றின் பணியுங் கூட மாறுமே? அப்படியானால் நின்று நிலைக்கின்ற இலக்கியங்களை, மியூசியத்திலா வைக்கப் போகிறீர்கள்? என்று எதிர்க் குரல் கேட்டது.
இந்தக் கதையில் "காலத்தால் மலியாமல் நின்று நிலைக்கும் என மக்கள் இலக்கியகாரர் ஒருவர் மிகைப்படுத்துவதாகக் கூறியிருந்தாலும் உண்மையில் நிலையானதொன்று என ஒன்றும் இல்லை என்பதையும், மாற்றமே இயற்கையின் நியதி என்பதையும், இயக்கவியல் பார்வையுடைய மக்கள் எழுத்தாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காலத் திற்குக் காலம், விழுமியங்களும், பயன்மதிப்புகளும் மாறுவதால், நிரந்தர இன்பம் தருவன என்று கூறுவதற்காக இலக்கியமே இல்லை என்பதைச் சாந்தனுக்குச் சுட்டிக் காட்டல் அவசியம்.
முழம்' என்ற இன்னொரு கதையில் 18 பேருக்கு காயமாம். 4 பேர் உடனேயே செத்துப்போனாங்களாம்.
"அதிலை தமிழர் எத்தனை பேர்? சிங்களவர் எத்தனை பேர்?" 'என்று வரும் பகுதிகளில், நம்மினத்தவரின் மனிதாபிமானத்தையும் மீறிய கொச்சையான இனப்பற்றைக் காட்டுகிறார்.
Page 32
54
காட் இல்லாமல் 2 1/2றாத்தல் லக்ஸ்பிரே தகரம் வாங்குவதையும் ஒரு வீரதீரச் செயலாகக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று உணர்த்தப் படும் 'கனவுகள்' உட்பட பல கதைகளில் சாந்தன் நல்ல நகைச்சுவையையும் தருகிறார்.
'கடுகு" தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் சுவையான கிண்டலுடன் அமைந்துள்ளது. படிப்பவரின் சிந்தனைக்கும் இடமளிக்கும் இந்தக் கதைகளில் உருவம் செட்டாக அமைந்திருப்பதும் குறிப் பிடத்தக்கது.
(garajäb : 30 - 08 - 1975)
55
மு. திருநாவுக்கரசு
இவர்களும் மனிதர்கள்
இவர்களும் மனிதர்கள்' என்ற தொகுப்பு விதந்து பாராட்டத் தக்கது. 1970 ஆம் ஆண்டிற்கும் 1973 ஆம் ஆண்டிற்கு மிடையில் மு. திருநாவுக்கரசு குரும்பசிட்டி) எழுதிய 12 கதைகளின் தொகுதியே இது. இந்தக் கதைகள் சிறப்பாயிருப்பதற்கான காரணம் கதாசிரியரின் முதிர்ச்சி நிரம்பிய தத்துவப் பார்வையும், சிறுகதைக்குரிய சொற் செட்டும், மனதில் பதியத்தக்க படிமங்களின் சேர்க்கையும், எல்லாவற்றிற்கும் மேலாக நெறிப்படுத்தப்பட்ட மனிதாபிமானமுமாகும்.
இவருடைய கதைகள் என்ன கூறுகின்றன என்பதையறியுமுன், இவருடைய எழுத்தின் நோக்கம் என்ன என்பதை இவர் மூலமாகவே அறிவோம்.
"ஒருகதைக்கு அழகான வசன அமைப்பு முக்கியமல்ல. அந்தக் கதையிலே இழையோடுகின்ற, சமூகத்திற்குப் பயனர் தரக்கூடிய, உயிர்த் துடிப்புள்ள கருத்துத் தான் முக்கியம். சமூகத்தோடு தொடர்பு வைக்காமல், மனிதர்களிடமிருந்து விலகி வெகு தூரத்தில் நின்று எழுதும் எழுத்தாளன் இலக்கிய அரங்கில் வாழலாம். ஆனால் அவனால் வளர முடியாது. தேசத்தின் போக்கை மாற்றியமைக்கும் பெரும்பணி எழுத்தாளனுக்கு உண்டு. சமூகத்தில் விழிப்புணர்ச்சியை உண்டுபண்ண வேண்டிய கடமை எழுத்தாளனுக்கு உண்டு. ஏன்? ஒரு மனிதனைத்
Page 33
56
திருத்தவேண்டிய உரிமைகூட எழுத்தாளனுக்கு உண்டு" இதிலிருந்தே மு. திருநாவுக்கரசு திட்டவட்டமான கருத்துக்களை உடைவர் என்பது
புலனாகின்றது . இரசிகமணி கனக செந்திநாதன் கூறியிருப்பதுபோல, குரும்பசிட்டியிலே பல பிலபல எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கனக செந்திநாதன், வ.நடராசா, வி. கந்தவனம், ஏ. ரி. பொன்னுத்துரை, ஆ. தம்பித்துரை,வை. இளையதம்பி, மு.க. சுப்பிரமணியம், இரா. கனகரத்தினம் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இப்பொழுது மு. திருநாவுக்கரசுவும் பெயர்பெற்று வருகிறார். இவர் நாடகாசிரியராகவும், வானொலி எழுத்தாளராகவும், இருப்பதனாற்றான், இவருடைய சிறுகதைகளில் உருவம் அக்கறையுடன் நேர்த்தியாக வந்து அமைகின்றது. இந்தத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய வி. கந்தவனம் ஓர் உண்மையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். "அவரது கதைகளில் உணர்வு இருக்கிறது. ஆனால் உணர்ச்சி வயப்படும் கட்டங்கள் குறைவு. உணர்ச்சிவயப்படும் ஒருசில கட்டங்களிலும் அவர் தமது சமநிலைத் தன்மையை இழந்து விடவில்லை." திருநாவுக்கரசு 'சமநிலைத் தன்மையை இழக்காததே அவருடைய தனிச் சிறப்பு. மாறாக அவர் இழந்திருப்பாராயின் அவர் கதைகள் அதீத நாடகப் பண்புடையதாக ( மெலோட்ராமட்டிக் ) அமைந்திருக்கும்.
இனி, இவருடைய கதைகள் பற்றிச் சிறிது பார்ப்போம். இந்தக் கதைகளை மீண்டும் நான் எடுத்துக் கூறப்போவதில்லை. வாசகர்களே படித்துப் பாருங்கள். ஆனால் இவற்றில் சிலவற்றில் உள்ள சிறப்பம் சங்களை மாத்திரம் இங்கு நோக்குவோம்.
தொகுப்புத் தலைப்புக் கதையான, 'இவர்களும் மனிதர்கள்' என்ற கதையில், வர்க்கநலன் கொண்ட 'எஸ்டாபிளிஷ்மன்ற் எவ்வாறு பாரபட்சமாகவும், ஊழல் நிரம்பியதாகவும் நடந்துகொள்கிறது எனக் காட்டியுள்ளார். ஒரு திரையில் காட்சிகள் எவ்வாறு துரிதமாகத் தோன்றி மறைகின்றனவோ, அவ்வாறே இக்கதையிலும், அந்தத் தாய் படும் அவஸ்தையை வரைந்துள்ளார்.
57
புதுயுகம்'மற்றொரு வரவேற்கத்தக்க, சமூக நெறியுடன் இணைந்த தார்மிகக் கதை எனலாம். "தன்னுடைய மானத்தை விற்ற பணத்தை, இன்னொரு பெண்ணின் மானத்தைக் காக்கக் கொடுக்கிறாள். லட்சுமி ஜானகியைத் திருத்தி விட்டுத்தான் போகிறாள். ஜானகிக்கென்று ஒரு புதுயுகம் பிறக்கும். அங்கே கடுமையான உடல் உழைப்புத்தான் மூலதனமாக இருக்கும்" என்று கதை உறுதியாக (பொஸிட்டிவ்வாக) முடிவடைகின்றது.
வானம் பார்த்த பூமி ' யில் உண்மையான பரிவு- சுயநலமற்ற குணநலன் எவ்வாறு நடைமுறையில் செயற்படுகின்றது என்பதை ஆசிரியர் காட்டுகிறார்.
ஞானப்பால்' கதையில் தர்மகர்த்தா குழுந்தையைச்சுவரில் மோதும் வண்ணம் வீசும் காட்சியை மனத் திரையில் பதிவு செய்யும் பொழுது, உணர்வே சில்லிடுகிறது. கொடுமைகள் எடுக்கும் வடிவங்களைத் திருநாவுக்கரசு சாதாரணமாகவே கூறுகிறார். அதனால்தான் அவருடைய படிமங்கள் வலுவாக இருக்கின்றன.
வாழ்க்கை ஒப்பந்தம்' மற்றும் தர்மம்', 'கெளரவம்' ஆகியன ஜெயகாந்தன் பாணியிலான சிறந்த சீர்திருத்தக் கதைகள். அது மாத்திரமல்ல, நவீன சிந்தனா வளர்ச்சியுடன் ஒட்டியதாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. போலிக் கெளரவங்களையப்பட்டு, வாழ்க்கையின் உண்மையான தரிசனங்களை ஆசிரியர் திருநாவுக்கரசு காட்டுவது சிறப்பாக இருக்கிறது. 'அவன் மனிதனானபோது', 'முகத்திரை' ஆகியனவும் அடக்கத்தின் எல்லையை மீறும் தார்மிக ஆத்திரத்தைக் காட்டுவன. 'ஏமாற்றம்' 'இதயத்தில் வாழ்கிறான்' ஆகிய கதைகளும் தேவலை. ஆக, மு. திருநாவுக்கரசுவின், இவர்களும் மனிதர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பு படித்துப் பயனடையக்கூடிய ஒரு நல்ல புத்தகமாகும்.
(தினகரன் வாரமஞ்சரி 26 - 10 - 1975)
Ng
Page 34
58
நா. முத்தையா
தத்துவக் கதைகள்
ஆத்ம ஜோதி' ஆசிரியர் நா. முத்தையா சிறுவர்க்கான அழகிய பதினெட்டுக்கதைகளை எழுதி 'தத்துவக் கதைகள்' என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவங்களையும், இந்துக்களின் வாழ்க்கை நெறியையும் சுட்டுவனவாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன. தவிரவும், சிறு வயதில் நாம் படித்த பழமொழிகளின் விளக்கத்தைத் தருவனவாகவும், இவற்றில் பெரும்பாலானவை அமைந்துள்ளன. இந்து நாகரிகம் பல்கலைக்கழக மட்டத்தில் பாடமாக அமைவது காரணமாகவும், சமய நெறிக்கும் புதிய கல்வித் திட்டத்தில் முக்கி இடம் அளிக்கப்பட்டிருப்பது காரணமாகவும், சிறு வயதிலிருந்தே மாணவர் உண்மை விளக்கங்களை அறிந்து கொள்ளல் அவசியமாகிறது. இன்னொன்று- பலவிதமான கருத்துக் கோவைகளுக்கு உட்படும் இளம் பிராயத்தினர், ஒருவித சமநிலையைப் பெற, சமயம் பற்றியும், பண்டைப் பண்பு பற்றியும் அறிந்திருத்தல் விரும்பத்தக்கதல்லவா?
இந்த நூலில் இன்றைய அறிவு வளர்ச்சிக் கொவ்வாத கருத்தை அல்லது செயலை வலியுறுத்தும் கதைகளும் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில், 'கிணற்றுத் தவளை', 'நரியனார் பட்ட பாடு, 'அக்கரை பச்சை,"அழகியின் ஆசைகள், மூன்று மண்டையோடுகள் மனிதரில் மனிதன், மரணத்தின் நினைவு போன்ற கதைகள், மாணவர் தமது வாழ்நாளில் எதிர்நோக்க வேண்டியிருக்கும் எக்கச்சக்கமான
59
கட்டங்களை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதைச் சொல்லித் தருகின்றன.
கடவுள், ஆன்மா என்பனவற்றில் நம்பிக்கை உள்ளவர்களை இரு பிரிவினராக வகுக்கலாம். ஒரு சாரார்- நம்பிக்கை, பக்தி, விசுவாசம், அன்பு போன்ற சொற்கள் காட்டும் பாதையில் செல்பவர்கள். இன்னொரு சாரார், அறிவு, ஞானம், தத்துவம், விசாரணை, நியாயம், தர்க்கம் போன்ற சொற்கள் குறிக்கும் வழிகளில் செயற்படுபவர்கள். இந்த இருமரபுகளில் எது சிறந்ததென்ற விவாதம் இன்னும் ஒரு முடிவுக்கும் வந்தபாடில்லை. வரப்போவதுமில்லை. துறவறமா இல்லறமா, ஆத்திகமா நாத்திகமா, பக்தியா ஞானமா என்ற கேள்விகளுக்கு முடிவு காண முடியாது. சமரசமே காணப்படலாம்.
இத் தொகுப்பில் தர்ம சாஸ்திரக் கதைக்கு உதாரணமாக 'தியாக' த்தையும்,பக்தி மார்க்கக் கதைக்குச் சான்றாக பூஜை'யையும் குறிப்பிடலாம். உலகப் பேறுகளில் சிறந்தது பேரறிவே, மனிதன் பக்குவ நிலைக்கேற்ப, அறிவின் விளக்கமும் அமையும். உண்மை என்பதை ஓர் உரையாலும் விளக்கலாம்; பல நூல்களாலும் விளக்கலாம். இந்த நூலின் உள்ளடக்கம் பேரறிவைத் தூண்ட உதவும் என்பது மிகையாகாது. இதற்கு அணிந்துரை எழுதிய 'நந்தி, மனிதரில் தெய்வம் என்றெல்லாம் புகழ்மாலை சூட்டப்படு வதற்குப் பதிலாக மனிதரில் மனிதனாகவே இருந்தால் போதும் என்ற தத்துவம் தன்னில் பதிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொல்ல முடியாத கருத்துக்களைத் தன்னும், கதைகள் மூலம் சொல்ல முடியும். வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் போன்றவற்றில் கதைகள் மூலம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுன்றன. சித்திரம் மூலம் கதை சொல்லும் பண்பும் வளர்ந்து வருகின்றது. சிறுவர்களின் கவனத்தையும், ஊக்கத்தையும் கற்கும் ஆவலையும், ஒருங்கே வளர்ப்பதற்கு, அறிஞர் காட்டும் வழியும், முன்னோர்கள் கதைகள் மூலம் செய்ததைப் பின்பற்றும் வழியுந் தான் என்பது தெளிவாகிறது.
(தினகரன் வாரமஞ்சரி 01 - 02 - 1976)
Page 35
60
யோ. பெனடிக்ற் பாலன்
தனிச்சொத்து
யோ. பெனடிக்ற் பாலனின், தனிச் சொத்து தொகுப்பிலும் 45 குட்டிக் கதைகள் அடங்கியுள்ளன. இந்தக் கதைகள் மார்க்சிய அடிப்படையிலான தத்துவக் கதைகள் எனலாம். இந்தத் தொகுப்புக்கு, 'முகமன் உரை அல்ல' என்ற பெயரில், கலாநிதி சி. சிவசேகரம், அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். அவருடைய சாட்டையடியில், சில சாம்பிள்கள் - முற்போக்கு என்பது ஒரு சம்பிரதாயமான மரியாதைக்குரிய லேபலாகி வழங்குகிறது. முற்போக்குக் கலை இலக்கியம் என்ற பேரில் உலாவும் பெருவாரியான அசட்டுத்தனங்களிலும் அயோக்கியத் தனங்களிலும் முற்போக்கும் கிடையாது, கலையும் கிடையாது. புரட்சி வெறும் கோஷங்களாகவும் ஸோஷலிஸம் சிறு பிள்ளைத்தனமான சீர்திருத்தவாதமாகவும் சித்திரிக்கப்படுகிறது. குட்டிக் கதைகள் மிக நுணுக்கமாக ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை விளக்கவல்லன. நம் மொழியைப் பொறுத்தவரையில், இக்கருவியை மதவாதிகளும், பிற்போக்கு வாதிகளும், அசட்டுத் தத்துவக்காரர்களும் பயன்படுத்த முனைந்த அளவுக்கு முற்போக்குவாதிகள் பயன்படுத்தவில்லை எனலாம்.
கலாநிதி சிவசேகரம் கூறியிருப்பது போல, தனிச்சொத்து தொகுதியில் இடம் பெற்றுள்ள "சுலோகப் பிரயோகங்களை"த் தவிர்த் திருக்கலாம். இருந்தபோதிலும், வாசகரை நவீன பாணியில் சிந்திக்க
61
வைக்க இந்தத் தொகுதி உதவுகிறது. ஆசிரியர் முன்னுரையாக எழுதியுள்ள 'அடித்தளம்' என்ற பகுதியை வாசகர்கள் அவசியம் படித்துப் பார்த்தல் வேண்டும். தர்க்க ரீதியாக அவர் எழுதியுள்ளார். செம்பியன் செல்வன், யோ. பெனடிக்ற் பாலன், சாந்தன் போன்றோர் ஒருவித மினி இலக்கியத்தை அளித்து வருகிறார்கள். இங்கு ஏளனத்திற்காக, மினி இலக்கியம்' என்று கூறவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிவிட்டு, இந்தவித இலக்கியம் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
(தினகரன் வாரமஞ்சரி 01 - 02 - 1976)
Page 36
62
சாந்தன்
ଘ୍ରାBot glit) ଯାଗmitBଗl)
பிரிந்தனின் 'கடுகு" மினி இலக்கிய வகையைச் சார்ந்தது. ஆனால், "ஒரே ஒரு ஊரிலேயும், என்னளவில், அது போன்றேயிருக்கிறது. இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய செம்பியன் செல்வன் கூற்றுகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
1960 ஆம் ஆண்டில், தமிழ் மூலம் கல்வியினால், மாணவர் களிடத்து தேசியம், இனம், மொழி, மார்க்சியம், இலக்கியம் போன்றன பற்றிய அறிவு உணர்வு பூர்வமாகத் தொழிற்படலாயின. இவ்வுணர்ச்சிகள் எல்லாவற்றிலுமோ, ஒரு சிலவற்றிலுமோ பாதிக்கப்பட்டவர்களாகச் சிறு வர்கள் விளங்கினர். சிலர் முற்று முழுதாக மார்க்சிய கருத்துக்களையும், சிலர் அறிவு ஜீவிகள் (ஆய்வறிவாளர்?) போன்று பல்துறைக் கருத்துக்களையும், பொருட்களையும் படைப்பின் கருவாகவும், தொனியாகவும் கொண்டனர். பெருபான்மை மக்களுக்காகப் படைக்கப்பட்டு வந்த மார்க்சிய எழுத்துக்கள், விமர்சகர்களான ஒரு சிலரின் தேவை நோக்கம் கருதி எழுதப்படலாயின. எழுத்தாளர்கள், வாழ்வின் அனுப வங்கட்குப் பதிலாகத் தத்துவங்களின் தரிசனங்களாக அனுபவங்களைக் காணத் தொடங்கினர். ஆகவே அனுபவங்கள், வெளியீடுகள் பொதுமை யாயின, வரட்சியாயின. பெரிய பெரிய சமூக வட்டங்களைச் சேரவேண்டிய இலக்கியங்கள் சின்னஞ்சிறு வட்டங்களைச் சென்றடையலாயின". இவ்வாறு எழுதியுள்ள நண்பர் செம்பியன் செல்வன், சாந்தன் கதைகள் பற்றி விமர்சித்திருப்பதும் எனக்கு உடன்பாடேயாதலால், பிரத்தியேகமாக நான் வேறு கூறுவதற்கில்லை.
தினகரன் வாரமஞ்சரி 01 - 02 - 1976)
63
லெ. (Updb364, uġ5
சுமையினர் பங்காளிகள்
இந்தத் தலைப்பில் பத்துச் சிறுகதைகளடங்கிய தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது. நீர்கொழும்புப் பகுதி மீனவர்களது நாளாந்த வாழ்க்கையின் கொச்சையான அம்சங்கள் சில இவற்றில் தொகுக் கப்பட்டுள்ளன. மேலோட்டமாக நோக்கினால், இவை சுவாரஸ்யமாக (அதாவது நீர்கொழும்புத் தமிழை அறிந்து கொள்ளலாம் என்ற முறையில் மாத்திரம்) இருக்கின்றன; ஆனால் 'ஆழமாக நோக்கினால், இத்தொகுப்பில் இடம் பெற்றவை சிறு கதைகள்' தானா என்ற கேள்வி முதலில் எழுகிறது. (அதாவது சிறு கதைக் குரிய அம்சங்கள் பொருந்தியுள்ளனவா என்ற ஐயப்பாடு). அடுத்தது, இக்கதாசிரியர் லெமுருகபூபதி இக்கதைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார்? சமூகப் பின்னணியை அவர் இனங்கண்டு அந்தத் தளத்தில் பாத்திரங்களை வார்த்திருக்கிறாரா அல்லது வெறும் நடைச் சித்திரங்களாகப் பாத்திரங்கள் வார்க்கப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளும் எழுகின்றன. ஆசிரியரைத் தட்டிக் கொடுக்க, அவர் சிறுகதைகள் பாராட்டத்தக்கவை என்று கூறிவிட முடியும். ஆனால் ஆழமான கருத்துக்களை வேண்டி நிற்கும் ஆசிரியர் 'ஆழமாகத் தமது படைப்புகளை உருவாக்க முடியாமற் போனது பெரும் ஏமாற்றமே.
(தினகரன் வாரமஞ்சரி 15 - 02 - 1976),
★ ★ ★
Page 37
64
சுதாராஜ்
பவாத்காரம்
IDனித பலவீனங்களை நன்கு அவதானித்து சுயமாகவும் சுவையாகவும் சுதாராஜ் எழுதுகிறார். இந்தத் தொகுப்பு பற்றிய சிறந்த அறிமுகத்தை தேவன் யாழ்ப்பாணம் தொகுப்பிலேயே எழுதியிருக்கிறார்.
இந்நூலில் உள்ள பத்துக் கதைகளில் ஆறு சமூகக் குறைபாடுகள் பற்றியவை. இரண்டு பாலியல் தெடர்பானவை. வீண் சந்தேகத்தினால் ஒரு குடும்பம் குலைவது இன்னொரு கதை. சமூகப் பலவீனம் பற்றியது மற்றது. ஆகவே தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறார் என்பது தெளிவு. சமூகக் குறைபாடுகளைச் சாடுகிறார்.
நையாண்டி செய்கிறார். நகைச்சுவை படவும் சொல்கிறார். தன்னைச்சுற்றி
இருப்பவர்களை, நடப்பவைகளைக் கூர்ந்து நோக்குகிறார் என்பதும் இந்நூாலை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியவரும். அநியாயத்தை, ழுக்கக் கேட்டைக் கண்டு இவர் சீறுவதும் குமுறுவதும் நன்கு புலனாகின்றது.
இவருடைய கதைகளில் ஐந்து கொழும்பு மாநகரிலும், நான்கு யாழ்ப்பாணத்திலும், ஒன்று கொழும்பு - யாழ்ப்பாண மெயில் வண்டியிலும் நடைபெறுகின்றன. இவருக்கு நன்கு பரிச்சயமான இவ்விடங்கள் கதை களுக்கு ஏற்ற உண்மைத் தன்மையைக் கொடுக்கின்றன.
மூடமான பிச்சைக்காரன், பிச்சைக்கார கண்மணி, தூய காதலி வனிதா, சின்னாம்பி, சிங்களப் பரீட்சையில் கோட்டைவிடும் எழுத்தன்,
65
அவன் மனைவி லலிதா, நாகரிக நங்கை வத்சலா, மற்றவர் குடியைக் கெடுக்கும் சபாபதி, குஞ்சுப்பிள்ளை சோடி, பெட்டைக் கோழியின் மனைவியாக வரும் மிஸஸ் அருள்நாயகம், பிள்ளையில்லாத திருவாட்டி சொர்ணம் தில்லைக்கூத்தன், ரயில் பிராயாணிகள் எல்லோருமே எம்மைச் சுற்றி நடமாடுபவர்கள்தான். அதனாலும் இக்கதையில் எவ்வித போலித்தன்மையும் காணமுடியாது. சுற்றிவளைக்காமல், நேரடியாக, ஆனால் கவர்ச்சியாகக் கதைகளைச் சொல்லலும் திறன் இவருக்குக் கைவந்திருக்கின்றது.
அசிங்கமெனப்படும் விஷயங்களைக்கூட நாசுக்காக, மறைக் காமல் ஆனால் மொட்டையில்லாமல் சொல்லிவிடுகிறார். சிக்கல் சிடுக்கு இல்லை. சம்பாஷணைகளை கதைகளில் தாராளமாக கையாளு கிறார். இதனால் இவற்றில் ஒரு இயற்கைத் தன்மை காணப்படுகின்றது.
சுதாராஜின் கதைகளில் நேர்மையும் நோக்கமும் இருப்பதைக் காணமுடிகிறது. ஆணித்தரமான அனுபவங்களை நேர்த்தியாக, நயமாக அவர் வெளிப்படுத்துகிறார். தேர்வுமுறையிலமைந்த கலைவடிவங்களாக அவருடைய கதைகள் அமைந்துள்ளன. பயணம்' என்ற கதை சிறப்பாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் மேலோட்டமான கலாசாரத்தின் ஒரு கூறை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
தினகரன் வாரமஞ்சரி 28 - 01 - 1978)
Page 38
66
மருதூர் மஜீத்
பள்ளிர் வாசம் பரவுகின்றது
இத்தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் சில மலர்ந்த மணங்களுக்கு'அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சில, ஆழ்ந்த துயருணர்வை ஏற்படுத்துகின்றன. சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
'உண்மை ஊமையாய் ஊரெல்லாம் அலைகிறது','குப்பையிலே ஒரு குண்டுமணி, தலைப்புக் கதை ஆகியன, இத்தொகுப்பில் இடம்பெறும் சிறப்பான கதைகள் எனலாம். ஏனைய எட்டுக் கதைகளும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன.
இயல்பான, மட்டக்களப்புப் பகுதி முஸ்லிம்களின் பேச்சு மொழியைக் கதைகளில் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மெல்லிய உணர்வுகளை எழுப்பும் இலகுவான கதைப் பின்னல் காரணமாகக் கதைகள் அழுத்தமான முறையில் எழுதப்படவில்லை.
(வீரகேசரி வாரவெளியீடு 09 - 12 - 1979)
ர்.tல்
67
காவலூர் எஸ்.ஜெகநாதன் வானத்து நிலவு உடைவுகள்
நீயிரத்துத் தொளாயிரத்து எழுபதுக்களில் புதிய எழுத்தாளர்கள் ஈழத்தில் எழுதத் தொடங்கினர். அவர்களுள் ஒருவர் காவலுார் எஸ்.ஜெகநாதன். பிரச்சினைக்குரியவராகக் கருதப்படும் ஜெகநாதன் சிறுகதை, உருவகக்கதை, கவிதை, நாவல், இலக்கியக் கட்டுரை, விமர்சனம் போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டுள்ளார். சிறுவர் இலக்கியத் திலும் நாட்டமுடையவராக அவர் இருக்கிறார்.
மெய்கண்டானின் நட்சத்திர மாமா சிறுவர் ஆண்டுத்தொகுதிப் பிரசுரம் - 3 ஆக காவலூர் எஸ். ஜெகநாதனின் 'வானத்து நிலவு வெளிவந்துள்ளது. இத் தொகுதியில் பத்தொன்பது கதைகளும், ஒருபாடலும் இடம் பெறுகின்றன. பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட இக் கதைகள் சின்ன வசனங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நல்ல கருத்துக்களை உளவியல் ரீதியாகச் சிறுவர் உள்ளத்தில் புகுத்தும் முயற்சியில் ஜெகநாதன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூறவேண்டும் ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் படித்து முடித்ததும் எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. சிறுவர் இலக்கியங்களில் ஈடுபடும் எழுத்தாளர்கள் நினைவு கொள்ளத்தக்க இரண்டொரு விஷயங்களை ஜெகநாதன் நினைத்துச் செயற்படுவதையும் நாம் காண்கின்றோம்.
இன்றைய சிறுவர்களை நாம் பழைய யார்க்கோல்கள் கொண்டு அளவிட முடியாது. காரணம் அவர்கள் அறிவு, அனுபவ வளர்ச்சி
Page 39
68
துரிதமாக நடைபெறுகிறது. அவர்கள் எதனையும் விமர்சனக் கண்ணோட்டத் துடனேயே பார்க்கிறார்கள். நம்பக்கூடியவற்றைத் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் வெறும் இராசாராணிக் கதைகளையும், மந்திர தந்திரக் கதைகளையும் அவர்கள் விரும்புவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இக்கால விஞ்ஞான உண்மைகளுக்கு இணங்கியதான தருக்க ரீதியான விடைகளைத் தரும் கதைகள் தான் வேண்டியுள்ளன.
'வானத்து நிலவு வாசகர்கள் ஆறு வயதுக்கும் பன்னிரண்டு வயதுக்கும் உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என ஆசிரியர் நினைத்திருந்தால், அவர் தமது கதைகளில் கையாண்டிருக்கும் உத்தி முறைகள் பொருத்தமாய் அமைந்து பயனளித்துள்ளன எனலாம்.
இக் கதைத் தொகுதியைப் படிக்கும்படி எனது ஒன்பது வயது மகன் அனந்தராமிடம் கொடுத்தேன். அவன் விளையாடப்போகும் அவசரத்தில், இரண்டொரு கதைகளைப் படித்துவிட்டு, ஏனையவற்றை என்னையே படித்துக் காட்டுமாறு வேண்டினான். சில சொற்றொடர்கள், புணரியல் போன்றவை அவனுக்குத் தானே வாசித்துப் பார்க்கக் கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே உரக்கக் கதைகளைப் படித்தேன். அவன் அக்கதைகளைக் கேட்டுப் பிரமிப்பும் சந்தோஷமும் அடைந்தான். அவனுக்கு ஓர் அண்ணன் இருப்பதனாலோ என்னவோ அல்லது இலகுவில் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்ற சுய கெளரவ நினைப்பினாலோ அண்ணன் காட்டிய வழி' என்ற கதை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் எஞ்சிய கதைகள் பிடித்தன என்றும் கூறினான்.
அனந்தராமின் அண்ணன் ரகுராமிடம் (வயது 12), 'வானத்து நிலவைக் கொடுத்தேன். அவனுடைய அபிப்பிராயத்தின்படி தொகுதியில் உள்ள சில கதைகள் நன்றாக இருக்கின்றன.வேறு சில சின்னப்பிள்ளை களுக்காக எழுதப்பட்ட செயற்கையான கதைகள்.
இந்த விவரங்கள் இங்கு ஏன் கூறுகிறேன் என்றால், புத்தகம் யாருக்காக எழுதப்பட்டது? எந்த வயதினருக்குப் பொருத்தமானது
69
என்பதைச் சிறுவர் ரசனையின் அடிப்படையில் எடுத்துக் கூறுவதற்காகத் தான். ஏற்கனவே ஐந்துவயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் 'வானத்து நிலவுக்கதைகளைப் பெரும்பாலும் இரசிப்பர்.
பொறுப்புள்ள ஒரு தந்தை என்ற முறையிலும், இலக்கிய ஆர்வலர் என்ற முறையிலும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள அம்மா, வானத்து நிலவும், சிறு கதைப் போட்டி (புதிய முறையில் எழுதப்பட்டுள்ளது), தங்கை ஒரு தீபம், அண்ணன் காட்டிய வழி, குழந்தை உள்ளம், விளக்குப் பூச்சிகள், மனிதன் இல்லை, அன்னை வளர்ப்பதிலே (பழைய கதையின் புதிய வடிவம்), அவன்தான் மனிதன், வீரன் யார் ஆகிய கதைகளை நான் பெரிதும் விரும்புகிறேன்.
காவலுார் எஸ். ஜெகநாதன் திறமைசாலி என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. பல எழுத்துப் போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அசுர வேகத்தில் எழுதுபவர். எழுதியவற்றில் பல தேறியுமுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய இலக்கியப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதையின் குறுநாவல் வடிவமாக உடைவுகள்'அமைந்துள்ளது. காவலுார் எஸ். ஜெகநாதனின் படைப்புகளுக்கு விமர்சகராக விளங்கிவரும் கலா. குமரிநாதன், உடைவுகள்' பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமாகவே இருக்கிறது. அவர் கூறுகிறார். "தீண்டாமை என்னும் சுவரை உடைப்பது கலப்புத் திருமணத்தால் இயலாத உசிதமற்ற தீர்வு என்பதை இக் கதையின் மூலம் அழுத்திக் காட்டியுள்ளார் கதாசிரியர். கதையின் நாயகன் தனது வாழ்க்கைச் சம்பவங்களை மனம் உடைந்த நிலையில் நினைப்பதை உணர்ச்சிபூர்வமாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பது, வாசகர் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது."
(தினகரன் வாரமஞ்சரி : 30 - 12 - 1979)
Page 40
70
குப்பிளான் சண்முகம்
BabiliБdijalili. Billblitiallјић
அழகியல்வாதியின் அகவயரீதியான பார்வையுடன் கூடிய கதைகளை எழுதியிருக்கும் ஆசிரியர் பெரும்பாலானவறறில் வளரிளம் பருவத்தினரின் உடல் வேட்கையையே சித்திரிக்கின்றார். மனோரதியப் பாங்கில் கதைகள் அமைந்தாலும், நிதர்சனத்தில் அடியூன்றிய அழகியல்வாதியின் பார்வையைக் கதைகளுடே காண முடிகிறது. வாழ்க்கை என்பது கற்பனையே, எதிர்பார்ப்புகளிலேயே வாழ்க்கையில் விறுவிறுப்பு காணப்படுகிறது. வாழ்க்கை என்பது அழகிய கோடுகளும், மாதிரிகளும் கொண்டது போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட சண்முகம், தமது பாத்திரங்கள் இத்தகைய வாழ்க்கை நோக்குடையவையாக அமையத் தீட்டியுள்ளார்.
இவருடைய கதைகள் கவிதை மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கையின் நிதர்சன நெருக்கடிகளின் மத்தியில், நின்று நிதானித்து அவகாசமாக வாழ்க்கையையும் இயற்கையையும் சுவைக்கத் தவறிவிடுகிறோம். எத்தனை கோடியாக அமையும் இன்பங்களின் படிமங்களை அழகுற சண்முகம் கவிதை லயமாக கொண்டு வருகிறார்.
கிராமிய, வெகுளித்தனமான இளைஞர்கள் யதார்த்த பூர்வமாகச் சிந்திப்பதையும், அந்தந்த நிமிடங்களில் வாழ்வதே இன்பம் என ஆசிரியர்
71
நம்புவதையும் காட்டுவதாக இருளில் இருந்து ஒளி பிறக்கிறது' என்ற கதை அமைந்துள்ளது. அழுகியல்வாதிக்கும் சமூகக் கடப்பாட்டுடன் எழுதுபவனுக்கும் இடையில் உள்ள பேதங்களைத் தடங்கல்' என்ற கதை விளக்குகிறது. 'ஒரு பாதையின் கதை' தற்பாஷித உத்தியில் (MONOLOGUE) தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஒரு பழமை வாதியைப் பற்றியது.
வெறுமனே மனோரதியப் பாங்குடன் (ROMANTIC) நின்றுவிடாது, ஆழமாக, சமூகப் பார்வையுடன் குப்பிளான் சண்முகம் எழுதுவாராயின் சிறப்பாக இருக்கும்.
Page 41
72
க. சட்டநாதன்
மாற்றம்
விழுபதுகளில் அறிமுகமாகிய தனித்தன்மை வாய்ந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் க. சட்டநாதன். இவருடைய கதைகளில் ஒரு முதிர்ச்சியனுபவத்தைக் காணக் கூடியதாக இருக்கின்றது. "ஆழம்' என்ற வார்த்தைக்கு இப்பொழுது அர்த்தமில்லாமற் போய்விட்டது. இடம் பொருள் தெரியாமல் இவ் வார்த்தையைப் பிரயோகித்து, பலர் மலினப் படுத்திவிட்டதால் சட்டநாதன் கதைகளை 'ஆழமுடையவை என்று கூறாமல் முதிர்ச்சியனுபவத்ததைப் பரிவர்த்தனை செய்பவை என்போம்.
மாற்றம்' என்ற இவருடைய சிறுகதைத் தொகுதியில் ஆறு கதைகள் அடங்கியுள்ளன. சட்டநாதன் சிறு பத்திரிகைகளுக்குத்தான் அதிகம் எழுதியிருப்பதனாலோ என்னவோ, அவருடைய பெயர் ஜனரஞ்சக வாசகர்களுக்கிடையில் பிரபலம் பெறாமல் இருக்கலாம். ஆனால் ஓர் அற்புத தமிழ்ச் சிறுகதையாசிரியனை யாவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதனால் சற்று விஸ்தாரமாகவே அவரைப் பற்றி இங்கு எழுதினேன்.
சுந்தர ராமசாமி என்ற தமிழ் நாட்டு எழுத்தாளரின் கதைகளைப் படிக்கும் பொழுது எழும் லேசான சுக அனுபவம் சட்டநாதன் கதைகளைப் படிக்கும் போது ஏற்படுகின்றது. சமூகப் பார்வையும், உளவியல் நுணுக்கமும், மனித உறவுகளைப் புரிந்துகொண்ட தன்மையும் லலிதச் சித்திரிப்பும் ஒருங்கு சேர்வதனால் இவரது கதைகளில் கலைநயம் பளிச்சிடுகின்றது.
73
சட்டநாதன் பேசுகிறார் - "இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகார முனை மழுங்க, பெண் தன்னைச் சுற்றிப் பிணைந்து கிடக்கும் தளைகளைத் தகர்த்து விட்டு விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது. ஆண் பெண் உறவு - உணர்வு விவகாரங்களைக் கடந்து சமூகத்துடனான மனித உறவுகளின் சித்திரம்தான். அனுபவங்களையெல்லாம் சிதறப் பிடிக்கும் எத்தனங்கள் தான் எனது கதைகள்".
இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கும் கதைகளில் தாம்பத்திய உறவைப் புரிந்துகொண்ட முதிர்ச்சித் தன்மை முதலில் கவனத்தை ஈர்க்கின்றது. அடுத்ததாக மத்திய, கீழ் மத்திய தர வர்க்க மக்களின் விழுமியங்கள் பற்றிய அறிவை அனுபவ பூர்வமாக இக்கதைகள் தருவதை அவதானிக்கலாம். மூன்றாவதாக, வர்க்கம் என்றும் சாதி என்றும் சூள்கொட்டிக் கோஷம் கிளப்பாமலே இலேசாகவே அநீதி களையும் முரண்பாடுகளையும் வாசகர் தாமே அறிந்துணர இக்கதைகள் வகை செய்கின்றன.
உறவுகள்" என்ற கதையை எடுத்துக் கொள்வோம்.
"கோவியப் பெட்டை தானே தட்டிப் பார்த்தால் எடுபட்டிடுவாள்" என்ற எண்ணத்துடன் ஒருத்தியை வலிந்து காதலித்துப் பின்பு மணமுடித்துப் பின்னர், தாழ்வுச் சிக்கல் காரணமாக (அவள் அவனிலும் கூடிய சம்பளம் பெறும் உத்தியோகம் பார்ப்பவள்) எழுத்துலகில் நாட்டம் கொண்டவள், நிதானமானவள்) அவளைவிட்டுச்செல்கிறான் சாதியும் சீதனமும் பார்க்கும் குடும்பத்தில் பிறந்த ஒருவன். இக்கதை முழுவதையும் வாசகர்கள் தாமே படித்தால்தான், அனுபவம் புலப்படும். கதையின் இறுதியில் ஆசிரியர் இவ்வாறு முடிக்கிறார்.
"அவளுக்கு அப்பொழுது ஏனோ லுாஸினின் கதையொன்றில் வரும் ஒறிகன் என்ற பெண்ணும், இப்சனின் நோராவும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களைப்போல இவளால் தாம்பத்திய உறவை வெட்டிக்
Page 42
74
கொள்ள முடியவில்லைத்தான். ஆனால் அவர்களைப் போலவும் நடந்து கொள்ளாமல் இவள் இருப்பதற்கு அவளே வழி செய்திருப்பது இவளுக்கு ஒருவகையில் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியே அவளுக்கு இப்போதைக்குப் போதுமானது. அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிந்தாள்."
இப்படியும் காதல் வரும் மற்றொரு புத்தனுபவம் தரும் கதை. இரண்டு ஆய்வறிவாளர் (ஆணும் பெண்ணும்) ஜெயகாந்தன் கதைகளில் வரும் சில பாத்திரங்கள் போன்று தமக்குள்ள உறவை நியாயப்படுத்தச் சந்தர்ப்பம் துணை செய்வதையும், அச்சந்தர்ப்பம், கதாநாயகியான விமலாவின் அந்தஸ்துக்கு ஒருபடி கீழ் நிலையிலுள்ள வர்க்க மட்டத்தின் சிக்கலான உறவுகள் தான் என்பதும் புலப்படுவன. தவிரவும், இழிவால் (சீதனமில்லாததனால் மணம் முடிக்காமல் இருக்கும் எட்டுச் சகோதரிகளுக்கு ஒரு தம்பி பிறக்கப் போகிறானாம்), சாதித்தளைகளை மீறிய பெண் விடுதலைச் சித்திரிப்பு போன்றவற்றையும் இக் கதையில் காண முடிகின்றது.
மாற்றம்' - ஒரு பரம்பரையை, ஒரு சமூகத்தை, ஒரு மரபை விமர்சிக்கும் வகையில் அற்புதமாக எழுதப்பட்ட கதை. பாத்திரங்களின் சாதி உணர்வையும் மீறி பணம்' என்னும் உறவுப் பொருள் ஆட்சி செலுத்துவதையும், உறவுகள் (வேறுபல காரணங்களுக்காக) மாற்றமடையும் என்பதையும் காட்டுகின்றது. சாதி, அந்தஸ்து,பரம்பரைப் பெருமை போன்றவை வெளிப் பூச்சுக்கள், உள்ளே பழிவாங்கும் திட்டமும், செக்ஸம், சொந்தம் என்ற உணர்வும் ஆளுமை செலுத்துகின்றன. கதையைப் படித்தால் வாசகர், இவற்றை அறிவார்கள்.
'பிச்சைப் பெட்டிகள்' -மனித குணத்தின் விசித்திரப் போக்குகளை ஒரே காட்சியில் காட்டும் அற்புதக் கலையழகு. ஒரு பஸ் வண்டிப் பயணத்தில் ஆறுபேர் நடந்து கொள்ளும் விதமும், அவர்களுடைய போக்குகளில் ஏற்படும் மாற்றமுஞ் சித்திரிக்கப்படுகின்றன.
தாம்பத்தியம்' 'அந்தக் கிராமத்துச் சிறுமி ஆகியன எஞ்சிய கதைகள்.
75
"இக்கதைகளில் வருபவர்கள் தமது சிநேகத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்கள். மனித நேசம் சாஸ்வதமானது" என்னும் சட்டநாதன் இன்னும் நிறையக் கதைகளை எழுத வேண்டும்.
கசட்டநாதன், சாந்தன், அயேசுராசா, குப்பிளான் சண்முகம், காவலூர் ஜெகநாதன் போன்ற எழுத்தாளர்கள் லேபல் ஒட்டிய சமூகவியல் சார்ந்த புனைகதைகளை எழுதாவிட்டாலும் அவர்கள் கலைத் திறனுாடாகத் தெரிய வருவது அவர்களுடைய பொதுவான சமூகப் பிரக்ஞைதான். இவர்களில் சட்டநாதன் வெகு விசேஷம் என்பது எனது அபிப்பிராயம்.
தினகரன் வாரமஞ்சரி :20-07-1980)
女 ★ ★
Page 43
76
காவலூர் எஸ்.ஜெகநாதன் யுகப்பிரசவம்
Dறைந்த காவலூர் ஜெகநாதன் எழுதிய பத்தொன்பது கதைகளின் தொகுப்பு யுகப்பிரசவம். தமிழ் நாட்டுப் பத்திரிகைகளிலும், ஈழத்துப் பத்திரிகைகளிலும் இவை ஏற்கெனவே வெளிவந்தவை. பல பரிசுகளைப் பெற்றிருக்கும் ஜெகநாதனின் கதைகளைப் படித்துப் பார்க்கும் பொழுது, அவற்றில் ஒரு விதமான வாய்ப்பாட்டம்சத்தை இனங் காண முடிகிறது. அதாவது இன்ன பொருளை வைத்து இன்ன மாதிரி எழுதினாற்றான் விமர்சகரிடையே அங்கீகாரம் பெறலாம் என்று கருதி எழுதினாற் போலப் பல கதைகள் அமைந்திருக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று கூறுவதானால், அவர் ஒரு தொழிற்சாலை போன்று செயற்பட்டு உணர்ச்சியும், கலையழகும் சேராத சில வாய்ப்பட்டம்சங்களைத் தமது கதைகளில் திணித்திருக்கிறார் என்று கூறலாம்.
அதே சமயத்தில், காவலுார் ஜெகநாதன், வட பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட மாந்தர்களைத் தமது கதைகளில் யதார்த்தபூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் எனலாம்.
"தாம் ஒரு காலத்தில் அடக்கியாண்டவர்களின் எழுச்சியையும் ஏற்றத்தையும் புரிந்து கொள்ள இயலாமல் கறுவிக் கொள்ளும் உயர் சாதிக்கார சுப்பிரமணியம்; பிறருக்கு நல்லதைச் செய்து வாழ்ந்தும் தனக்கு உதவ வேண்டிய நேரத்தில் ஒருவரும் இல்லையே என்று
77
ஏங்கும் கிருஷ்ணபிள்ளை, வேறொரு சாதிப்பெண்ணை விரும்பி மணமுடித்ததற்காகத் தன் சாதிக்காரரால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் கல்லுடைத்து மனைவியுடன் பிரச்சினைகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர் நோக்கும் உயர்சாதி இளைஞன், அவன் மனைவி றோசலின், சாதிக் குரோதங்களைத் தனது வியாபார முன்னேற்றத்திற்காகப் பய்ன் படுத்தும் கடைக்காரச் செல்லையா, அவரின் மிருகத்தனமான தாக்குதலைப் பொறுக்க மாட்டாமல் 'ஒருக்காத்தான் சாகிறது' என்று கூறியபடி விறுக்கிட்டு எழும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் ஒருவன், கூட்டுறவுச் சங்கக் கடையில் கூசாமல் கொள்ளையடித்துக் கொண்டே ஊரிலே நல்லவராகவும் நாணயக்காரராகவும் பெயர் வாங்கியுள்ள பொன்னம்பலம்; கடைச்சிப்பந்தி திடீரெனச் செத்ததால் சீசன் வியாபாரம் பட்டுப்போகுமே என்று கவலைப்படும் கடை முதலாளி வீரவாகு, தான் தவழ்ந்த மண்ணிலேயே அதற்காக உயிரைக் கொடுத்த வாலிபன் மாடசாமி, இனவெறியைச் சுயநலத்திற்காகத் தூண்டிவிடும் அரக்கத்தனத்தை எதிர்த்து "வலையைவிட மனிசந்தான் பெரிசு" என்று மனிதாயத்தை வலியுறுத்தும் மீனவர் மாணிக்கம், உழைப்பாளிகளின் ஒற்றுமையை உணர்ந்து கொள்ளும் கிழவன் மாரி, வாழ வேண்டும் என்ற நினைப்பையே இழந்துவிட்டுச் சாவுக்காகக் காத்திருக்கும் செல்லம்மாக் கிழவி; தலை முறைகளிடையே தோன்றும் இடை வெளிகளைப் புரிந்துகொள்ள மாட்டாமல் தவிதவிக்கும் மாரிமுத்துக் கிழவர், கண்போல் காத்துவந்த தனது காணித் துண்டைக் கவர வருபவர்களைக் கொல்லவும் துணிந்துவிடும் கிழவன் இராமையா; ஊரின் காவல் தெய்வம் மாதிரி இருக்கும் கனகம்மா, கணபதியுடன் ஓடிப் போனவள் என்று எல்லோரும் விலக்கி வைத்தும் வைராக்கியத்துடன் வாழ்க்கையில் வெற்றி காணும் வேதவல்லி, விவசாயத்தைக் கைவிட்டு ஓமானுக்கு உழைக்கப் போகும் மகனைத் திட்டித் தீர்த்துவிட்டு வயோதிகத்திலும் மண் வெட்டியைத் தூக்கும் கமக்காரர் பரமலிங்கம்; இனிமைக் கனவுகளில் இலயித்து ஏமாற்றப்பட்டு விடும் இளம் கன்னியர், கணபதிப்பிள்ளையரின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி நித்திய ஏமாளியாகவே இருக்கும் நாகன்; (இத்தொகுப்புக்கான முன்னுரையில், பேராசிரியர் க. கைலாசபதி) ஆகிய பாத்திரங்கள் ஜெகநாதனின் கதைகளில் வருகிறார்கள்.
Page 44
78
சாதி, வர்க்கம் என்ற வாய்ப்பாடுகளுக்குள் நின்று கொண்டு சமூகம், காலம், மாற்றம் ஆகியன குறித்து, மீனவர், விவசாயிகள் கூலிகள் பற்றி ஜெகநாதன் கதைகள் படைத்துள்ளார்-எழுத்தாளனின் சமூகப்பணியை நிறைவேற்றும் விதத்திலே, தன்னம்பிக்கையும் தளரா உறுதியும் கொண்ட பாத்திரங்களை ஜெகநாதன் அறிமுகப் படுத்தியுள்ள போதிலும் அவை உயிர்ப்பும், முழுமையும் பெற்றவையாக எனக்குத் தென்படவில்லை. தவிரவும் சொற்சிக்கனமும், பொருத்தமுடைமையும் இலாகவமும் ஒன்றுசேரக் காணோம். சில இடங்களில் சொன்னதையே திருப்பிச்சொல்லிக் கதையை நீட்டி முழக்குகிறார்.
இருந்த போதிலும் புதிய எழுத்தாளர்களில் காவலுர் ஜெகநாதனும் முக்கியமான ஒருவர் என்பதை மறுப்பதற்கில்லை.
(தினகரன்: 1980)
79
தெளிவத்தை ஜோசப்
நாமிருக்தம் நாடே
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் தாமிருக்கும் நாட்டைப் புறக்கணித்துப் பாரத நாட்டிலேயே அதிக விஸ்வாசம் கொண்டிருந்தரர்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மீது முன்னர் ćDффLILL-19 (b.bфstyl.
ஆனால் இப்பொழுது "நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் என்ற உணர்வு வலுப்பெற்று வருவதை, மலைநாட்டு ஆய்வறிவாளர்களும், எழுத்தாளர்களும், நாடகாசிரியர்களும் ,திரைப்படத் தயாரிப்பாளர்களும் வலியுறுத்தி வருவதிலிருந்து நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதே அடிநாதத்தை மீண்டும் ஒலியெழுப்புவது போன்று, நாமிருக்கும் நாடே' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் உதயமாகிய 'வைகறை வெளியிட்டுள்ளது. தொகுதித் தலைப்பைக் கொண்ட கதையும் இதில் இடம் பெற்றிருக்கின்றது. அக்கதை பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்கின்றது. அக்காலத்தில் இங்குள்ள மலைநாட்டு மக்களிடையே தேசிய உணர்வு நன்கு நெறிப்படுத்தப்படவில்லை என்பதை இக்கதை மூலம் ஓரளவு அறிந்து கொள்வதுடன் கதாசிரியர் தெளிவத்தை ஜோசப் , அக்காலத்திலேயே சமூகப் பிரக்ஞை கொண்டிருந்தார் என்பதையும் அவதானிக்கிறோம்.
Page 45
80
தெளிவத்தை ஜோசப் ஒரு பிரபல ஈழத்து எழுத்தாளர் என்பது நாமறிந்த விஷயம். மலைநாட்டு (பதுளைப்பகுதி ) எழுத்தாளர் என்ற முறையிலும், கலைப் பண்பு மிளிர எழுதும் முன்னணி எழுத்தாளர் என்ற விதத்திலும், 1960 க்கள் உருவாக்கிய முக்கிய படைப்பாளியான ஜோசப்பின் கதைகள் அடங்கிய முதலாவது தொகுதியான இந்நுாலை நாம் ஒரு நல்ல சிறுகதைத் தொகுதி என்றே வரவேற்கிறோம். அவருடைய நாவல்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.
1963 - 1977 காலப்பகுதியில் வெளியான பதினொரு கதைகளின் தொகுப்பே இந்நூால். இக்கதைகளை இப்பொழுது படிக்கும்பொழுது, கதைகள் எழுதப் பட்ட காலப் பகுதியில் ஆசிரியரின் எழுத்தாற்றல் எந்நிலையில் இருந்தது, கதைகள் சொல்லும் காலமும் கருத்தும் எத்த கையன என்பதையும் நாம் அறிய முடிகின்றது.
மலைநாட்டு வாழ்க்கை அனுபவமே இல்லிாத என்போன்ற நகர்ப்புற வாசிகளுக்கும் தனது எழுத்தாற்றல் காரணமாக அந்த அனுபவத்" தை ஜோசப் பரிவர்த்தனை செய்து வெற்றி காண்கிறார் என்றால், அவருடைய எழுத்து பயனுடைத்தாகின்றது என்பது தான் அர்த்தம்.
இத்தொகுதியில் இடம்பெறும் 'அது' என்ற கதையைத் தவிர ஏனையவை, வாழ்க்கையை - பதுளைப் பிராந்தியத் தோட்டத் தமிழ் மக்களின் - படம் பிடித்துக் காட்டுவதுடன், அவ்வாழ்க்கை முறையின் அர்த்தங்களையும், அனர்த்தங்களையும் சொல்லாமல் சொல்லிவிடுகின்றது. சமூகக் கண்ணாடியாக இலக்கியம் விளங்க வேண்டுமாயின், சமூகப் பணியை எழுத்தாளர் நிறைவேற்ற வேண்டுமாயின், எழுத்தாளனும் ஓரளவு ஆய்வறிவுரீதியாக இயங்க வேண்டும். அதற்குக் காலமும், அனுபவமும் அறிவும்,முதிர்ச்சியும் தேவை. தெளிவத்தை ஜோசப் இனி எழுதவிருக்கும் கதைகள் எப்படிக் கலையையும் உண்மையையும் பின்னிப்பிணைத்ததாக இருக்கப் போகின்றன என்பதற்குக் கட்டியங் கூறும்விதத்தில், கலையழகு ஒருபடி கூடவும், யதார்த்தப் பண்பு ஒருபடி குறைந்தும் எழுதப்பட்ட அவருடைய முக்கிய கதைகள் அமைந்துள்ளன. இத்தொகுப்பில்
81
இடம்பெற்ற கதைகளில் உருவ அமைதி சிறப்பாக அமைந்த அளவிற்கு கதைகளின் யதார்த்தப் பண்பு,ஆய்வறிவு ரீதியாகப் பயன்படுத்தப்பட வில்லை என்பதையே இங்கு சொல்ல வருகிறேன்.
தெளிவத்தை ஜோசப்பின் இக்கதைகள் பற்றிச் சுருக்கமாக, ஆனால் சமூகவியல் அடிப்படையில் , மற்றொரு மலைநாட்டு இளம் ஆய்வறிவாளர் மு.நித்தியானந்தன், இத்தொகுதியிலேயே எழுதியிருக்கிறாள்.
'லயத்தில் வாழும் மக்களிடையேகூட சாதியுணர்வு இருக்கிறது என்பதையறிய அதிசயமாக இருக்கிறது. தீட்டு ரொட்டி' இதனை யுணர்த்துவதுடன், சின்னஞ் சிறுசுகளின் கல்மிஷமில்லா வெள்ளை இதயத்தையும் அற்புதமாகச் சித்திரிக்கின்றது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்,மலைநாட்டுத் தோட்டம் ஒன்றில் எவ்வளவு சுயநலமாக நடந்து கொள்கிறார் என்பதைச் சோதனை வெளிப்படுத்துவதுடன், அப்பகுதிச் சிறாரின் கல்விநிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
தார்மீக நெறியும் புத்திசாலித்தனமும் சமூகச் சீரழிவின்போது எவ்வாறு திசைகெட்டுப் போகின்றன என்பதை 'மண்ணைத் தின்று. என்ற கதை உணர்த்துகின்றது. 'ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள்' 'நாமிருக்கும் நாடே ஆகிய கதைகள் மூலம் தமது பிராந்திய மக்களின் வாழ்க்கை முறையை ஆசிரியர் கிண்டல் செய்கிறார். வாழ்க்கை செம்மையாக அமைய வேண்டும் என்பதையே ஜோசப் இக்கதைகளைக் கொண்டு வலியுறுத்துகிறார். பாவ சங்கீர்த்தனம்', 'அது' ஆகிய இரண்டு கதைகளும் 'கலைமகள்' பத்திரிகையில் வெளியானவை. அப்பத்திரிகைக்கு எழுதப்பட்டதனாலோ என்னவோ, இக்கதைகளின் சுருதி வேறு விதமாக அமைந்திருப்பதை நாம் சட்டென்று உணரக்கூடியதாக இருக்கின்றது.
கூனல்", மீன்கள்', ஆகியன ஒருவித திகைப்புணர்ச்சியை
ஏற்படுத்திச் சமூகத்தில் உதிரிப் பாத்திரங்களின் நிலையை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
Page 46
82
பாட்டி சொன்ன கதை' ஒரு நல்ல வழிகாட்டல்' கதையாக eg 6OLDuu,
சிலுவை' ஒரு சோகக் கதையாகவும் அமைகிறது.
கூட்டு மொத்தமாகப் பார்த்தால், இத்தொகுதி பயனுள்ள ஒரு தொகுதி என்றே கூற வேண்டும். தெளிவத்தை ஜோசப் ஆற்றல் நிறைந்த கதை சொல்லும் கலை கைவரப் பெற்ற, கருணையுள்ளம் படைத்த, சமூக அவதானி என்று கூறும் அதே வேளையில், ஆய்வறிவு ரீதியாகவும் பகைப்புலனைப் புரிந்து கொள்ளுவாராயின் பெரும் பயன் கிட்டும் என்றும் சேர்த்துக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
தெளிவத்தை ஜோசப்பின் புதிய ஆக்கங்கள், விமர்சனப்பத்திகள்,
முகவுரைகள் யாவுமே வேறொரு தளத்தில் நின்று மீள ஆராயப்பட வேண்டியவை.
(தினகரன் வாரமஞ்சரி : 20 - 01 - 1980)
83
மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
தோட்டக்காட்டினிவே.
Iத்தளை சோமு தொகுத்துள்ள இந்தப் புத்தகத்தில் ஒன்பது நல்ல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தொகுதிகள் வெளிவந்தால் தான் நல்ல சிறுகதை எழுத்தாளர்களை இனங்கண்டு கொள்ளலாம். பத்திரிகையில் வரும் சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு விமர்சகர்களுக்கு இல்லாமற் போகலாம். எனவே,எழுத்தாளர்களை இனங்கானத் தொகுப்பு நுால்கள் உதவுகின்றன.
மாத்தளை சோமு, மலரன்பன்,மாத்தளை வடிவேலன் ஆகியோர் திறமையுள்ள சிறுகதை ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்நூல் வெளியான பின்பே நான் உணரலானேன். யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான், வன்னியான், தீவான், தோட்டக்காட்டான், சோனகன் என்று தமிழர்கள் தம்மையே இனம் பிரித்துப் பேசுவதனாலோ என்னவோ, நமது நாட்டில், நமது மொழி பேசுபவர்களிடையே உண்மையான இனப்பற்று இல்லை எனலாம்.
மலைநாட்டு எழுத்தாளர்களை நாம் உரிய முறையில் இதுவரை சரியாகக்கணிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் போதிய தொகுதிகள் இல்லாமையே. இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் ஓரளவு கணிசமான தொகை தமிழ் பேசும் இனத்தவர் தோட்டக் காட்டான்
Page 47
84
களாகவே இருக்கிறார்கள். இழிவாகப் பயன்படுத்தும் ஒரு தொடரைத் துணிகரமாக ஆக்க பூர்வமான முறையில் ஓர் ஆக்கத்துறைக்குப் பயன்படுத்திப் பெயரிட்டுள்ள மாத்தளை சோமு , மெச்சத் தக்கவர்.
இக்கதைத் தொகுதியைப் படித்த பின்னர் எனக்கு எழுந்த எண்ணங்கள் (1) தொகுப்பாசிரியரின் தொகுப்புத் தலைப்பு,மலைநாட்டு எழுத்தார்களின் உள்ளக் கிடக் கையைக் காட்டி நிற்கின்றது. தோட்டக்காட்டான்கள் என்றழைக்கப்படுபவர்களிடையே எழுத்தாற்றல் மிக்க மனிதாபிமான கலைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஈழத்தின் மற்றெந்தப் பகுதி எழுத்தாளர்களின் ஆற்றல்ஞக்கு எந்த விதத்திலும் தரங் குறைந்தவர்களில்லை.
(2) மலரன்பன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் ஆகிய எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.
(3) மலரன்பனின் ' உறவுகள்' மாத்தளை சோமுவின் 'நாய்கள் மனிதராவதில்லை 'மாத்தளை வடிவேலனின் 'வெட்டு மரங்கள் ஆகிய மூன்று சிறுகதைகளும் காலதேச வரம்புகளைக் கடந்த அடிப்படை மனித உறவுகளைச் சித்திரிக்கும் நேர்த்தியான கதைகள்.
(4) மாத்தளை சோமு 'அவன் ஒருவனல்ல ' என்ற கதையில் ஒருவித இலட்சியத் தனிமனித கதாபாத்திர வார்ப்பு தெரிகிறது. இலட்சியத்தைக் குறை கூறவில்லை. ஆனால் இந்த ஒரு மாஸ்டர் தானா அவ்விதமான பண்பு கொண்டவராக இருப்பார். வேறும் ஆசிரியர்களும் முற்பட்டால், அப்பிரதேசக் கல்வி வளர்ச்சிக்கு உதவலாம் தானே? எனக்குப் பாத்திர வார்ப்பு யதார்த்தமாக அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. 'நாய்கள் மனிதராவதில்லை 'கதையில் காணப்படும் ஓட்டமும், வேகமும், படிமச் சித்திரிப்பும் நல்ல உத்திகள். புதுமையாக இருக்கின்றன. ஆசிரியரின் ஆற்றல் நன்கு வெளிப்படுகின்றது. 'லயத்துப் பயல் ' சம்பவங்கள் நடக்கக்கூடியவை. ஆனால் அவற்றை வெறுமை யாகச் சித்திரித்தால் மாத்திரம் போதுமா? ஏன் அவ்விதமான அந்நியப்
85
போக்கான உறவு இரு பால்யத் தோழர்களுக்கும் பின்னர் ஏற்பட்டது என்பதை நாமறிவோம். உறவைத் துண்டித்துக் கதாநாயகன் தன் 'லயத்து ' க்குச் செல்கிறான். சென்று அவன் எடுக்கும் தீர்மானம் என்ன என்பதைச் சுலோகங்கள் இன்றிக் கோடி காட்டியிருந்தால் நன்றாகக் கதை முடிந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
( 5 ) மலரன்பன் பார்வதி' கதையில் கணவன் கடைசியாக எடுக்கும் நடவடிக்கை வெவ்வேறு விதமாக அமையலாம். கதாசிரியர் காட்டும் வழி அவற்றுள் ஒன்று. ஆனால் ஒரே வழியல்ல. பார்வதியின் தர்மசங்கடம் நமக்குப் புரிகிறது. ஆனால் கற்பு என்றும், நிர்ப்பந்தம் என்றும், அவல நிலை என்றும் சித்திரிக்க வேண்டுந்தானா? புதுமைப் பித்தனின் அம்மாளுவுக்குப் பின் இப்படியாக கதைகள் பல வந்து போய்விட்டன. நீடித்த அனுபந் தருவனவாகத் தான் அவை இல்லை. 'தார்மீகம்" கதையில் இனவேறுபாடுகளையும் கடந்த மனித உறவு பற்றி கூறப்படுகின்றது. அதே வேளையில் கொழும்பு போன்ற இடங்களைப் பார்க்கிலும் மலைநாட்டில்தான் வகுப்பு வெறியர்களின் கோரச் செயல்கள் பயங்கரமாக இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. நகர்ப்புறங்களில் பெயருக்காகுதல் பொலிஸ் என்று ஏதோ ஸ்தாபனம் இருக்கிறது. தோட்டக் காட்டில் பந்தோபஸ்து குறைவு . "உறவுகள்' - குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் உள்ள உறவுகளைப் பணம் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டுகின்றது.
மாத்தளை வடிவேலனின், ' புத்தாண்டு புதிதல்ல" என்ற கதை நிரந்தரமாகத் துன்பத்தையனுபவிப்பவர்களின் வைராக்கிய உணர்வைக் காட்டுகின்றது. கூடவே முதுமையானவர்களின் இளகிய மனதையும் காட்டுகின்றது. ‘வெட்டு மரங்கள் கட்டுரைப் பாங்காக அமைந்தாலும் சம்பவக் கோவையுடன், அனுதாபத்தை விளைவிக்கும் புதிய பார்வையுள்ள கருத்தை உள்ளடக்கியிருக்கின்றது. கறிவேப்பிலைகள் " கதையும் நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் இது போன்ற கதைகளை ஜெயகாந்தன் மூலம் படித்ததனாலோ என்னவோ, புத்தறிவோ, புத்தனுபவமோ பெமுடிவதில்லை.
Page 48
86
புதிய எழுத்தாளர்கள் வாய்ப்பாடுகளுக்குள் கதைகளின் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் அடக்காமல், சாமான்யத்திலும் வித்தியாசமானதை இனங்கண்டு கவித்துவமாக எழுத முற்படல் பயன் தரும் என நினைக்கிறேன்.
நல்ல இலக்கியங்கள் ' என்று கூறப்படும் பண்டைக்காலம் முதல் இற்றைவரையுமுள்ள உலகப் படைப்புகளைப் படிக்கும்பொழுது வாய்ப்பாட்டிலக்கியங்களைப் (உள்ளடக்கத்திலும் சரி ) படிக்க மனம் வருவதில்லை. இந்தக் குறிக்கோள் இலக்கியங்கள் ஆழகாகவும் வீச்சுள்ளதாகவும் இருந்தால் வரவேற்கலாம். இல்லாவிட்டால் 'சமூகப் பணி 'என்ற போலிப் போர்வையில் (சமூகப் பணி என்பதை வலியுறுத்தும் அதே வேளையில் ) கற்பனையும் கவித்துவமும் குன்றிய படைப்புகளைக் காரசாரமாகவே விமர்சிக்க வேண்டி ஏற்படுகின்றது.
'தோட்டக் காட்டினிலே' தொகுப்பு அதிர்ஷ்டவசமாக அவ்விதம் விமர்சிக்க வேண்டிய தொகுதியாக இல்லை. மாறாக, ஒரு நல்ல தொகுதியாக இருக்கிறது. மூன்று புதிய எழுத்தாளர்களை நாம் இனங்கண்டுகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு அருமையான ஒரு திறனாய்வை பேராசிரியர் க. கைலாசபதி எழுதியிருக்கிறார். இந்நூலில் அது முன்னுரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் அழுத்தமாக விழுந்துள்ள பகுதி "மனித உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை என்று சிலர் 'தத்துவம்' போதித்தாலும், கூர்ந்து நோக்கினால், இவையும் மனிதரது வர்க்க நிலைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அமையவே செயற்படுகிறது தெளிவாகும் "
சுருங்கக் கூறினால் தோட்டக் காட்டினிலே' இதைத் தான் சொல்லாமற் சொல்கிறது.
(தினகரன் வாரமஞ்சரி 16 - 03- 1980)
တ္တိဒ္ဓိဝှ တ္တိရှို့ဝှ တ္တိရှို့ဝှ
87
மு. கனகராசன்
பகவானினர் பாதங்களில்
பீட்டை, அச்சமைப்பு, அச்சுத்தாள், அலங்காரம் அத்தனை அம்சங்களிலும் மாத்திரந்தான பகவானின் பாதங்களில்'(மு.கனகராசனின் கதைத்தொகுப்பு) அலாதியாயிருக்கிறது? கதைகளில், கதை சொல்லும் நேர்த்தியில், கவிதை மொழியில் - அனைத்திலுமே ஒரு கவிஞனின் உள்ளத்தையும்,கலைநயம்' என்றால் என்ன என்றறிந்த சமூகப் பிரக்ஞையுள்ள ஓர் எழுத்தாளனின் சிந்தையையும் நாம் காண்கிறோம்.
மு. கனகராசனை நமது சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவராக இதுவரை நமது இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடத்தவறிவிட்டனர். இத்தொகுப்பு வெளிவரும் வரை கனகராசனின் ஆற்றலை முழுமையாக எவரும் அறிந்திருக்கவும் வாய்ப்பிருக்கவில்லை.
கவிஞன், நாடகாசிரியன், மொழிபெயர்ப்பாளன், கட்டுரையாளன், விமர்சகன், என்றறியப்பட்ட கனகராசன் சிறுகதைத் துறையிற்றான் சிறந்து விளங்குகிறார் எனலாம். அவர் எழுதிய பதினொருகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவை 1962க்கும் 1978க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. நிவேதம்'என்ற கதையைத் தவிர ஏனைய கதைகள் எனக்குப் புரிந்தன. உங்களுக்கும் அப்படித்தானிருக்குமென நம்புகிறேன். புரிவது மட்டுமல்ல, அவை யாவும் அழகாக ஆழமான அர்த்தங்களைக் கவினுறப் பரிவர்த்தனை
Page 49
88
செய்கின்றன. சலனங்களை மீட்டுகின்றன. மீண்டும் மீண்டும் படித்து மகிழத் தூண்டுகின்றன.
நீர்வை பொன்னையன், என். கே. ரகுநாதன். செ.கதிர்காமநாதன், செ. யோகநாதன், போன்ற படைப்பாளிகளிடந்தான் (அதாவது 1970க்கு முற்பட்ட முற்போக்கு வட்டத்துள்) கலைநயம் அல்லது கலைமெருகு ஏதோ உறைந்து கிடக்கிறது என்று கண்டால், கனகராசனை இதுவரை இனங்காணாமற்போனது போனதுதான். இந்தப் புத்தகம் வந்திராவிட்டால் இக்கதாசிரியர் பற்றி நாம் அறியத் தவறியிருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த இரு தசாப்தங்களிலும் எழுதிய முற்போக்குச் சிறுகதை யாசிரியர்களில் கதைக்கனதியும், கலைப்பிரமானமும் இணைய எழுதிய சிறந்த படைப்பாளி கனகராசனே என்பதை எவருமே ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதைபற்றியும், ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றுத் தமது தொகுப்பிலேயே சேர்த்திருக்கிறார் கனகராசன். அத்தனை பேரும் கனகராசனின் அழகுணர்ச்சியைக் கூறாமலே கூறுகின்றனர். இளங்கீரன், எஸ். பொன்னுத்துரை, சு. வே போன்ற சிரேஷ்ட படைப்பாளிகள், தெளிவத்தை ஜோசப், லெ. முருகபூபதி, சிவா சுப்பிரமணியம், எம்.எச்.எம். ஷம்ஸ் போன்ற முன்னணி புதிய படைப்பாளிகள், சில்லையூர் செல்வராசன், சபா. ஜெயராசா போன்ற கவிஞர்/விமர்சகர்கள், நீள்கரை நம்பி ஆகியோர் அநேகமாகக் கதைகளின் மையத்தைத் தொட்டுத் தமது உணர்ச்சித் தெறிகளை வியப்புணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
கதைகள் பெரும்பாலும் வளரிளம் பருவத்தினரின் அனுபவங் களையே படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆனால், வெறும் 'செக்ஸ்' எழுத்தாளர்களின் கொச்சைத் தன்மைக்கும், கனகராசன் செக்ஸைக் கையாளும் விதத்திற்குமிடையிற்தான் எவ்வளவு இடைவெளி!
இக்கதைகளின் விமர்சகர்கள் எவ்வாறு வியக்கிறார்கள் என்பதை வாசகர்களும் அறியச் சில மாதிரிகள்.
89
ஒ. கனகராசன்! அவளை - அவளுடைய முழுமையை எப்படிச் சொல்லிவிட்டீர்கள்" (இளங்கீரன்), "அசோகமித்திரன் என்ன. கனகராசன்"(நீள்கரை நம்பி), "ஆர்ப்பாட்டமோ, அதிகாரத்தனமோ இன்றி இலக்கியம் செய்கின்றாரே - அதே தோரணை" (தெளிவத்தை ஜொசப்) "வெறுஞ் சுலோகங்கள் கொண்ட சுவரொட்டிகளாக்கப்படாது நிதான மாகவும் கலை பொதிந்த கவின் காட்சிகளாகவும்" (சபாஜெயராசா), புதுப்புனைவாக்கம் வரவேற்கத் தக்கதாய் இருப்பதுடன் ஓர் ஆழ்ந்த சோகஞ்சார்ந்த வியப்புணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது"(கே.எஸ்.சிவகுமாரன்) "உலகை எழுப்பி உண்மையைப் பார்க்க வைக்கும் மேன்மைக் கலைஞர் வெகுசிலர். அவர்களின் படைப்புகள் தனிரகம். இந்த வெகுசிலரில் ஒருவர் மு. கனகராசன்" (சில்லையூர் செல்வராசன்), ஒருமாதிரியான விடயங்களை அருவருப்பு தோன்றா வகையில், நளினமாகவும் குறியீட்டு முறையிலும் சொல்லும் பாணிக்கதையை விரசமில்லாத வகையில் முடித்த பாங்கு என்பன கருத்தாவின் திறமைக்கு முத்திரையிட்டு நிற்கின்றன" (சு.வே), "இனக்கலவரத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட தீ'வெறும் கதை'அல்ல" (சிவா சுப்பிரமணியம்), "கதாசிரியரின் தலையீடு இன்றி, முழுக்கதையிலும் கல்யாணிகளின் எண்ணச்சலனங்களே விரவி வருவதனால் பாத்திரங்கள் நினைவிலே பதிகின்றன"
(எம்.எச்.எம்.ஸம்ஸ்), கதையோட்டம் கைதேர்ந்த கவித்துவத்தைப்பறை
சாற்றுகிறது" (லெ. முருகபூபதி), " அறுபதுகளின் தலைமுறையின் நேர்த்தியான சிறுகதை முனைப்புக்கு மூத்த தலை முறையின் படைப்பாளியின் ரஸனையே ஆசியுமாம்" (எஸ். பொன்னுத்துரை).
சும்மா சொல்லக்கூடாது, இத்தனை ரசனைகளும் உண்மை யைத்தான் கூறுகின்றன. வெறும் புகழ்ச்சியில்லை! நீங்களும் படித்துத்தான்
பாருங்களேன்!
(வீரகேசரி வாரவெளியீடு : 14 - 04 - 1981)
တ္တိဒ္ဓိဝှ တ္တိဒ္ဓိဝှ တ္တိမ္ပိ
Page 50
90
செ. யோகநாதன்
Jitli zīLBL ITījBTLD)
G|തpu சமூகத்தில் தமிழ்ப் பெண்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் அல்லது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்குவன போல, செ. யோகநாதன் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
அவ்வாறான சிறுகதைகளின் தொகுப்பு 'கண்ணீர் விட்டே வளர்த்தோம். இத் தொகுப்பில் 14 கதைகள் அடங்கியுள்ளன. ஆசிரியர் 1967க்கும் 1978க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதிய கதைகளே இவை. இவருடைய பிற நூல்களாவன, "யோக நாதன் கதைகள்,' ஒளி நமக்கு வேண்டும், 'காவியத்தின் மறுபக்கம்' ஆகியனவாம்.
1960 களில் உருவாகிய நல்ல எழுத்தாளர்களில் ஒருவரே யோகநாதன். இவருடைய எழுத்துகளில் சமூகப்பார்வையும், கலைப் பிரக்ஞையும் ஒன்று சேர்வதனால் இவரை ஏனைய சுலோக எழுத்தாளர்களின் பட்டியலில் சேர்க்க முடியாதிருக்கிறது. இவர் வசந்தம் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.
'கண்ணீர் விட்டே வளர்த்தோம்' தொகுப்பிலுள்ள கதைகள் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றனவாயினும், அடிநாதமாகப் பெண் விடுதலை பற்றியே முரசறையப்படுகிறது.
9
"மூடு திரையில்" திருமணமாகாத நிலையில் உள்ள ஒருத்தி தனது தந்தையின் ஆதரவுடன் குறைந்த சாதிக்காரன் ஒருவனை நாடிச்செல்கிறாள்.
"பண்பாட்டின் பொய் இருளினுள் புதைந்து கிடக்க விரும்பாத ஒளியை நோக்கித் தானே ஓடினாள்," என்பது ஆசிரியர் கூற்று. சற்றே மிகைப்பட எழுதப்பட்ட "சொர்க்க பூமியில்" வரும் பெண், நேரடி அனுப வத்தின் பின் சொந்த நாட்டுப் பண்பாட்டின் மகத்துவத்தை உணர்கிறாள்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அழகு, பண்பு, கல்வி ஆகியவை இருந்தும், வறுமை காரணமாக துர் நடத்தையில் ஈடுபடும் பெண் ஒருத்தி அருந்ததி. இன்னொரு அழகான பெண் கல்மிஷமின்றிப் பழகிய காரணத்தைக் காதல் என்று மருண்டு தத்தளிக்கும் ஒருவனின் நிலைமைக்குச் சினிமாவும், பத்திரிகைக் கதைகளும் காரணமாகின்றன என்கிறார் ஆசிரியர். இன்னொரு கதையில் சிங்களப் பெண் தனது வயிற்றைக் கழுவுவதற்காக நாகரிகமான முறையில் ஒருவனுடன் சல்லாபித்துச் சாப்பிடுதல் சித்திரிக்கப்படுகிறது.
இளமைப் பருவமே இன்றைக்குக் காலாசார அழுக்குகளில் விழுந்து போய்க் கிடக்கையில், அதனால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண் ஓர் இளைஞனுடன் கடிதத் தொடர்பு வைத்தமைக்காக அவள் தாய் பெரிது படுத்துவதைத் தாங்காத அந்த இளம் பெண் உயிர் துறக்கிறாள் மற்றொரு கதையில்.
வேறு சில கதைகளில் குடியேற்றவாத எதிர்ப்பை உணர்த்தும் அனுபவம் புலப்படுகிறது. (பெறுமதியற்ற ஓவியங்கள்), தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்ணினத்தின் எழுச்சி (நேற்றைய அடிமைகள்) பாதிக்கப்பட்டவர் இணைந்து செயலாற்றல் (ஏழை சொல் அம்பலமேறும்) மற்றும் 'ஊனம், புதிய நட்சத்திரம். இன்றைய இளைஞர் சிலரின் சீர்கேடுகளைச் சித்திரிக்கையில் வெடிக்காரன்,'கண்ணீர் விட்டே வளர்த் தோம்' ஆகியன சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோரின் ஊழல்களுக்கு
Page 51
92
எதிராகத் துணியும் போக்கைக் காட்டுகின்றன. பட்டி மாடு" கதையில் உடற் பசியும், வர்க்க உதாசீனமும் காட்டப்படுகின்றன.
யோகநாதன் கதைகளில் சமுதாயச் சித்திரிப்பு கலைநயமாக அமைவதைப் பெரும்பாலான கதைகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது. அதே வேளையில் அவருடைய கதைகள் பெரும்பாலும் நீண்டு போய் விடுகின்றன. குறுநாவல் எல்லைக்கும் போய்விடுகின்றன. இதனால் சிறு கதைக்குரிய சலனங்களை எழுப்பத் தவறி விடுகின்றன. என்றாலும் கதையை அவர் சுவைபட எழுதுவதனால் இக் குறைபாட்டை அதிகம் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
தவிரவும் கவிதை,சிறுகதை, குறுநாவல், நாவல் போன்றவற்றிற்கு இலக்கணம் வகுக்கவே முடியாத மாதிரி இவற்றின் வளர்ச்சி பல்கிப்பெருகி வருகின்றதல்லவா? செ. யோகநாதன் திறனாற்றல் உள்ள எழுத்தாளர் தான். சொல்லும் செயலும் சிந்தனையும் ஒன்றாகின் அவர் மீதான மதிப்பு இன்னும் கூடத்தான் செய்யும்.
(வீரகேசரி வாரவெளியீடு 17.05.1981)
93
மகாஜனக்கல்லூரி மாணவர்கள்
6Haitialf
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி படைப்பிலக்கிய மன்றம் வெளியிட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு இவர்கள்' இச்சிறுகதைத் தொகுப்பு, இளம் பராயத்தினர் உலகில் காணும் புதுமையைக் காட்டி நிற்கிறது.
ஆதவன்,சேரன், செந்தில் மோகன், விஜயேந்திரன்,ரவி.பாலசூரியன் ஆகிய ஆறு புதிய எழுத்தாளர்கள் ஆரம்ப காலத்தில் எழுதிய சிறு கதைகள் சில இவை. 1975-80 காலப்பகுதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் இவை முதற் பரிசு பெற்றனவாம்.
க. ஆதவன்-யாழ் பல்கலைக் கழக மெய்யியல் உதவி விரி வுரையாளர்-கவியரசன் என்ற பெயரில் நவமான நவீனத்துவக் கவிதைகளை எழுதிவரும் உசேரன் (மஹாகவியின் புதல்வன்) , பல்கலைக் கழக இறுதியாண்டு மாணவர்- இளவாலை விஜயேந்திரன், குண்டசாலை விவசாயக் கல்லுாரி மாணவர்- சொ. செந்தில்மோகன், அ. ரவி, பா. பாலசூரியன் ஆகியோர் பல்கலைக் கழகப் பிரவேசத்தை எதிர் நோக்கியிருக்கும் மாணவர்கள்.
Page 52
94
இன்னுமொரு தகவல், ரவி, பாலசூரியன் இவர்கள்' தொகுப் பாசிரியர் சபேசன் ஆகிய மூவருமே புதுக' என்ற புதிய சிற்றேட்டை வெளியிடுகிறார்களாம்.
இத் தொகுதிக்கு கவிஞர், விமர்சகர், விரிவுரையாளர் எம்.ஏநுஃமான் ஓர் அறிமுகத்தை எழுதியிருக்கிறார். இவருடைய கணிப்பு பெரும்பாலும் எனக்கு உடன்பாடனது தான்; என்றாலும் "சிறுகதை அமைப்பைப் பொதுவாக இவர்கள் எல்லோருமே இலாகவகமாகக் கையாண்டுள்ளனர்" என்ற கூற்றை ஆதரிக்க முடியாதிருக்கிறது. உண்மையில் இத் தொகுப்பில் பலவீனமே, இக் கதைகளில் உருவம் சிதைந்திருப்பதுதான். ஆதவன், சேரன், ரவி மூவரும் உள்ளடக்கத்துக்கு இணங்கிய உருவ அமைப்பைக் கையாள, செந்தில் மோகன், பாலசூரியன், விஜயேந்திரன் ஆகிய மூவரும் மனம் போன வாக்கில் கதைச்சாரத்தைச் சொற் சித்திரங்களாக வடிக்க முனைந்துள்ளனர்.
"எதிர் திசையில் மெதுவாக நகர்ந்தது உலகம்" என்று தமது கதையைச் சேரன் முடிக்கிறார். இதற்கு விரிவுரை செய்யும் நுஃமான், "உலகை விட்டு அவன் (கதாநாயகன்) விலகிச் செல்வதற்கான குறீயீடாக நாம் அதைக் கருதலாம்" என்கிறார். மாறாக, மனோரதியச் சூழலில் இருந்து விடுபட்டு, உலகுடன் ஒன்றுபட்டு யதார்த்தைத்தை எதிர்கொள்ள அவன் தயாராகிச் செல்கிறான் என்றும் நாம் விளக்கம் கொள்ளலாம். இரு இடங்களில் மாறுபட்ட கருத்தைக்கொண்ட நான், கதைகள் பற்றிய நுஃமானின் ஏனைய கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.
ரவி எழுதிய கதையின் கடைசிப்பகுதி அர்த்தமுடையதாகவும், இயல்பானதாகவும் அமைகிறது. கதாநாயகன் தன் மனக்கிளர்ச்சியை எதிரொலிக்கும் வகையில், வீட்டில் சிறு அட்டகாசம் செய்கிறான். அபத்தம்' பொருத்தமான தலைப்பும் கூட.
ரவி, சேரன், ஆதவன் கதைகள் எனக்குப் பிடித்தவை. ஏனைய கதைகள் வாழ்க்கையின் சுகங்கள், சுமைகள், ஏக்கங்கள், நம்பிக்கைகள், அடாத செயல்கள் போன்றவை பற்றி இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயம் எப்படி நோக்குகின்றது என்பதைக் காட்டுவன.
95
இக் கதைகளை எழுதியவர்கள் எல்லோருமே கவித்துவப் பார்வை கொண்டவர்களாகவே தெரிகிறது. எனவே சொற்செட்டு, சிக்கனம் ஆகிய அம்சங்களையும் கவனித்து, சமுதாயத்தை மேலும் ஆழமாகப் பரிசீலித்து எழுதுவார்கள் என்று நம்ப இடமுண்டு. இத்தொகுப்புக்கு சேரன் அட்டை ஓவியம் தீட்டியிருக்கிறார். அதன் அர்த்தமோ, கலையம்சமோ எனக்குப் புரியாதது அவர் குற்றமுல்லை. இதுவும் ஒரு குறியீடோ?
தினகரன் வாரமஞ்சரி : 10 - 01 - 1982)
Page 53
96
முல்லைமணி
அரசிகள் அழுவதில்லை
புல்லைமணி என்ற புனைபெயரில் எழுதும் வி. சுப்பிரமணியம் நகைச்சுவை நிரம்பிய பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவருடைய கதைகளின் தொகுப்பான 'அரசிகள் அழுவதில்லை' என்ற நுாலை அண்மையில் நான் படிக்க நேர்ந்தது. அக் கதைகளில் ஒன்றின் பெயர் 'உறவுகள். அக்கதையிலே கமலா என்றோர் ஆசிரியை வருகிறாள். அவளுக்குச் சேகர் என்றொரு காதலன் இருந்தான். அவன் அவளை இவ்வாறுதான் ஒருமுறை வர்ணித்தான்
"விலாட்டு மாம்பழக் கன்னம். கருவலைக் கூந்தல். ஒளிக்கீற்று நெற்றி. தயிர் வண்ணப் பல்வரிசை."
மேற்கண்ட உருவகங்களை ஒருவிதத்தில் புதுப் புனைவானவை எனலாம். ஓர் எழுத்தாளனின் கற்பனைத் திறனை நாம் பெரும்பாலும் புறக் கணித்துவிட்டு அவன் கூறும் செய்தியையே கருத்திற் கொண்டு வந்துள்ளோம். கருத்துடன் கற்பனையும், கவித்துவமும் சேரின் புத்தாக்கம் பிறக்கிறது.
முல்லை மணியின் கதைகளில் கருத்து இருக்கிறது. கவித்து வமான கற்பனையும் இருக்கிறது. ஆயினும் உணர்வைக் கிளறும் உணர்ச்சிப் பரிவர்த்தனை மழுங்கி நிற்க, அறிவார்ந்த பகுப்பு முறை
97
வியாக்கியானம் மேலெழும்பித் தளம்புகிறது. இது பிழையல்ல. அதேசமயம் ஓர் ஆக்கப் படைப்பு உணர்ச்சியையுந் தழுவிச் சென்றால் தான் நிறைவு ஏற்படுகிறது:
முல்லைமணியிடம் பாராட்டத்தக்கதாகக் காணப்படும் பண்பு, செட்டுச் செட்டாக நிகழ்ச்சிகளைக் கோத்துச் செல்லும் பாங்கு. 'வழ வழா கொழ கொழா' வார்த்தைகளைத் துருவித்தான் கண்டு பிடிக்க வேண்டும். அந்த அளவிற்கு அவர் 'வார்த்தையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்.
முல்லைமணியின் கதைகளைப் பத்திரிகை ரகக் கதைகள் என்று எவ்வாறு ஒதுக்கி விட முடியாதோ, அவ்வாறே அவற்றை வாழ்க்கையின் ஆழமான சித்திரிப்புகள் என்று ஏற்றுவிடவும் முடியாது. அவருடைய கதைகள் அவதானிப்புகளாக மனித சமூக பிரக்ஞை கொண்ட ஓர் எழுத்தாளரின் அக்கறைகளாக அமைகின்றன என்று நாம் கணித்து விடலாம்.
< 。 அரசிகள் அழுவதில்லை' என்ற இக் கதைத் தொகுப்பிலே, இக்கதைகள் பற்றிய இரண்டு விமர்சனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. விமர்சகர்களாகிய பேராசிரியர் கைலாசபதியும், எழுத்தாளர் 'அன்பு மணி என்ற இரா - நாகலிங்கமும் தத்தமது மட்டங்களில் இருந்து விமர்சித்திருக்கிறார்கள். சொல்லாமலேயே கைலாசபதியின் விமர்சனம் ஆழமுடையதாக இருக்கிறது. அன்புமணி இலக்கியத்தை இலக்கியமாக மாத்திரமே பார்க்கிறார். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது, வாழ்க்கையை விமர்சிப்பது வாழ்கையைப் பண்படுத்துவது என்பது அவருடைய அளவுகோல். பேராசிரியரின் அளவுகோலில் அடிநாதமாக ஒலிப்பது சமுதாயவியல் நோக்கும், வரலாற்றியல் நோக்கும் உள்ளடங்கிய பல்நெறி சார்ந்த பார்வையாகும்.
கதையை கதையாக மாத்திரம் கூறினாற் போதும் என்று எண்ணும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் ஒரு ரகத்தினர். முல்லைமணியும்
அன்புமணியும் இந்த விதத்தில் ஒற்றுமை கண்டனர். வாசகரும் பல ரகத்தினர். எனவே இரசனை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.
Page 54
98
எனது இரசனையை எனது பார்வையில் தெரிவிப்பதாக இருந்தால், சில கதைகள் பற்றி இவ்வாறு தான் குறிப்பிடுவேன்அரசிகள் அழுவதில்லை -மட்டக்களப்புப் பகுதி மீனவரின் பேச்சு மொழியினை அறிமுகப்படுத்துகிறது. மேலைப் பண்பாட்டைத் தழுவும் மத்தியதர வாழ்க்கைப் போக்கைக் கிண்டல் பண்ணுகிறது. வறுமையிலும் செம்மையான உண்மையான தாம்பத்திய வாழ்வை, கீழ் மட்த்தினர் அனுபவிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் பந்தங்கள், பாசங்களைவிட்டு உள்ளத்தை மரமாக்கிக் கொள்கின்றனர். ஏழைகளால் அது முடியவதில்லை, இவையே ஆசிரியரின் பார்வை.
பிணைப்பு'-நிலப் பிரபுத்துவ மரபில் வந்தோர், நிதர்சனத்தை மறந்து, நிலம் தம்மோடு கூடப் பிறந்தது என்ற கற்பனையில் திளைத்துத் தமது மண்ணாசையை வெளிப்படுத்துகின்றனர் என்பதற்கு இக்கதை சான்று. கிராமியப் பண்பாட்டை இக்கதையில் காணலாம்.
துணை'- புத்தகப் பூச்சி நடைமுறை வாழ்க்கையில் கஷ்டப்படு வார் என்பதைக் காட்டும் கதை.
'வீட்டில் நடந்தது'எங்கு, காலத்தின் போக்குக்குத் தழுவியுட்படாத மரபு நிலவுகிறதோ அங்கு அதிர்ச்சி காணக் கிடைக்கும் என்பதைக் காட்டும் கதை. "தம்பையர் வெறுப்பது காதல் கலியாணம். விரும்புவது முதலாளித்துவ சமுதாயம். எது நடக்கக் கூடாது என்று கருதினாரோ அது நடந்துவிட்டது அவர் வீட்டில்." என்று ஆசிரியர் கதையை முடிக்கிறார்.
'ஐராங்கனி-தமிழ் தெரிந்த சிங்களப் பெண்ணைத் தமிழன் ஒருவனும், முஸ்லிம் ஒருவனும் காதலிக்கின்றனர். அவளோ அவர்களைச் சகோதரர்களாகக் கருதுகிறாள் - அதுவல்ல பிரதானம். ஆசிரியர் அப்பாத்திரம் மூலம் சொல்லவரும் கருத்து முக்கியமானது ஜராங்கனி கூறுகிறாள் - "எமது ஈழத் திருநாட்டில் ஏற்பட்ட துன்பங்களுக்கெல்லாம் நம் நாட்டிலுள்ள பல்வேறு இனத்தவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான் காரணம். இனக் கலவரத்தில் எனது தமையனைப் பறிகொடுத்த பின்னர் தான் எனக்கும் இந்தப் புத்தி வந்தது. தமிழ்ப்
99
பண்பாட்டிலே வாழ்ந்தவன் தமிழன் எனத் தவறாக இனங் காணப்பட்டுக் காடையரால் கொல்லப்பட்ட சம்பவம் என் மனதிலே ஆறாத புண்ணை ஆக்கியிருக்கிறது, இப்படியான நிகழ்ச்சிகள் இன்னும் நம் நாட்டில் நடைபெற வேண்டுமா? இதைத் தடுக்கக் கூடியவர்கள் நிச்சயம் அரசியல்வாதிகளல்ல. பல்வேறு சமூகத்தினரையும் புரிந்து கொள்ள நான் எடுத்துக் கொண்ட முயற்சியின் அங்கம் தான் எனது தமிழ்ப்படிப்பும் உங்கள் நட்பும்." இக்கதையில் போராதனைப் பல்கலைக்கழகச் சூழலை ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.
உறவுகள்'-"அவள் வேண்டியது தன் அன்பைச் சொரிய ஒரு ஜீவன் - அவள் மீது அன்பைச் செலுத்த ஒரு ஜீவன்"- கத்ாநாயகி 62(Ub கொம்பானியனையே நாடினாள். காதலனையோ கணவனையோ அல்ல, என்பது கூறாமல் கூறும் செய்தி. மாமூல் கதைகளினின்றும் வேறுபட்டு நிற்கிறது.
'கிராமங்கள் கற்பழிக்கப்படுகின்றன'-கதைத் தலைப்பும், ஆசிரியர் கூற்றும் காட்டுவதைப் பார்த்தால் கிராமங்கள் நகர்ப்புறங்களாக மாறுவது வரவேற்கப்படவில்லை. இக்கதையில் வரும் பாத்திரம் பசுமை நினைவுகளுக்கு ஏற்ப யாவுமே முன்னர் இருந்தது போலவே இருக்கும் என்று நம்பி ஏமாறுகின்றான். யாவும் மாற்றத்திற்கு உட்படுவது வளர்ச்சியின் அறிகுறியன்றோ? −
'அவளும் தோற்றுவிட்டாள்"-யானை பிடிக்கும் அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது.
'என்ன அநியாயம் சேர்'- நல்ல நகைச் சுவையுடன் கிராமிய
பாத்திரத்தை அறிமுகப் படுத்துகிறது. இரண்டு பெண்டாட்டிக் காரரின் திண்டாட்டம் விவரிக்கப்படுகிறது.
காத்திருக்க வேண்டும்'-மேனாட்டுக் கதையொன்றைப் படித்த அருட்டுணர்வினால் எழுதப்பட்டது போலும்.
(தினகரன் வாரமஞ்சரி : 28 - 03- 1982)
Page 55
100
எளில் பொன்னுத்துரை
5i
பிலைசிறந்த ஈழத்து எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ்.பொன்னுத்துரையின் இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளில் தேர்' என்ற கதை சிறப்பானது. உல்லாசப் பேர்வழியொருவரின் முதுமையையும் அவரின் நினைவுகளையும் சித்திரிக்கிறது. யாழ்ப்பாணத்தான் தனது சூழலில் சராசரி வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறான் என்பதைக் குறியீடாக உணர்த்தி நிற்கிறது.
'அம்பு' என்ற கதை, சோமாதேவி என்ற வரலாற்றுப் பாத்திரத்தின் காமவிழிப்புணர்வை எடுத்துக்காட்டுகின்றது.
அரைவேக்காட்டு அரசியல்வாதிகளையும், ஆய்வறிவாளர் களையும் ஏளனமாகச் சித்திரிக்கின்றது அணி' என்ற கதை.
'வேலி'யில் கிராமத்துச் சூழலில் விஸ்வாசமுள்ள மனைவி யொருத்தியின் கற்புநெறி காட்டப்படுகின்றது.
முஸ்லிம் விதவையொருத்தி தன் கணவனின் நல்லடக்கத்தின் பின் சிந்திக்கும் போக்கை முஸ்லிம் பேச்சு வழக்கினைப் பயன்படுத்தி அழகாக ஈரா' என்ற கதையில் எழுதியுள்ளார். நற்பண்பு வாய்ந்த ஒரு பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருவதுபற்றி மட்டக்களப்புப் பேச்சு மொழியில் சிந்திப்பதாக 'விலை' என்ற கதை அமைகிறது. இந்து, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தத்துவங்களை விளக்குவனவாகச் சில கதைகளும் இடம் பெற்றுள்ளன.
(தினகரன் வாரமஞ்சரி 06-06 - 1982)
1 O1
டொமினிக் ஜீவா
வாழ்வின் தரிசனங்கள்
Iெழ்வின் தரிசனங்கள் தொகுப்பில் 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் ஜீவாவின் கருத்தோட்டமும் வெளியிடப் பட்டுள்ளது. "அழுத்தமான மனப் பிரிவுகளை (மனப்பதிவுகள்?) ஏற்படுத்தும் சிருஷ்டிகளே காலப் போக்கில் நின்று நிலைத்து வாழ்ந்து வரக்கூடும் என்ற அசைக்க முடியாத மன நம்பிக்கை உள்ளவன் நான். கூர்மையான மனச்சாட்சி உள்ளவர்களின் இதயங்களில் ஒரு மின்னல் சுடரொளியைத் துடிக்க வைக்கும் ஆற்றல் சிறுகதைகளுக்கு இருக்க வேண்டும் எனப் பெரிதாக அடிக்கடி ஆசைப்படுபவன்" என்று கூறும் ஆசிரியர் டொமினிக் ஜீவா, "கதை என்பதே ஓர் உள்ளடக்கம் தான். இன்றைய சமுதாயத்தின் மனித மனங்களின் உணர்வுகளை, முக்கிய பிரச்சினைகளைப் பற்றி இரசிகர்களுடன் உரையாட இந்த உத்தி முறை பயன்படுத்தப்படுகிறது. யார் இந்த உத்திமுறைகளைக் கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் வெற்றிகரமாகப் பயன் படுத்துகிறாரோ அவரே சிறந்த படைப்பாளி எனக் கணிக்கப்படுகின்றார்" எனவும் கூறியிருப்பதை அவதானிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில், அவருடைய கதைகளைப் படிக்கும்பொழுது, வாசகருடன் உரையாடும் உத்திகளை ஜீவா சுவாரஸ்யமாகக் கையாள்கிறார் எனலாம். இந்த சுவாரஸ்யமே அவருடைய கலைநயம் என்பேன்.
Page 56
102
மார்க்சிய சொற் பிரயோகத்தில் கூறுவதாயிருந்தால், பூர்ஷ்வா வாழ்க்கையை ஒரு புரொலிட்டேரியன் எவ்வாறு பார்க்கிறான் என்பதை இக்கதைகள் காட்டி நிற்கின்றன.
மத்தியதர நாகரிகப் போர்வையணிந்த பிச்சைக்காரன் (இந்நாட்டு மன்னர்கள்)கதை, இனக்கவர்ச்சியால் மனதைப் பறிகொடுத்த மேலிடத்துப் பெண், காதலன் கண்ணிழந்ததும் ஏறிட்டுப் பார்க்காள் (நீர் மேல் எழுத்து)என்று கூறவரும் கதை; சுயநலத்துக்கும் மேம்பாட்டுக்குமாக பேரினவாதம் பேசும் மேலிடத்தார் கதை (கிடந்தான் அவன்); இயலாமை காரணமாகப் பெருநகர பூர்ஷ்வா ஏமாற்று முறைகளை பிராந்தியப் பிரகிருதிகளும் பின்பற்றுதல் (உவர்த்தரையில்களைச் செடிகள் பூக்கின்றன); பள்ளத்துச் சிறுவனின் இதய சுத்தியுடன் மேட்டுக் குடியினரின் செருக்கை ஒப்பிடும் (வாழ்வின் தரிசனங்கள்) கதை, மத்திய தர வர்க்கத்தினரின் தந்திரம் மேலோங்குகையில் அவர்களிடையே காணப்படும் சாதிப்பேராபிமானம் சிதைந்து விடும் (உண்மையின் கால்கள்)என்ற கதை, மத்தியதர வர்க்கத்தில் பெண்கள் நாகரிகமாகத் திருடுதல் பற்றிய (சமூகப் பொம்மைகள்) கதை, காசுக்காகக் கீழ் சாதிக்காரனோடும் ஒட்டும் உயர்சாதிக்காரன் (பணச் சடங்கு) கதை; தப்பும் தவறும் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாது, அதைச் சுட்டிக் காட்டியவன் அம்பட்டன் என்பதனால் அவன் மீது அசூசை கொள்ளும் வாத்தியாரின் (தப்புக் கணக்கு) கதை; கிராமத்தவர்கள் வாய்சவால்களாலும்,அடாபிடித் தனங்களாலும் (வெங்காயப்புழு) எடுபட்டுப்போகும் கதை; பரவணிக்குப் பரவணி வர்க்க நலன் ஊறிப்போயிருக்கும் (ஷணம்) என்று கூறும் கதை ஆகியவையும் முதற் கதையான சக்கரம் சுழன்றது' என்ற கதையும் டொமினிக் ஜீவா சிறுகதை ஆசிரியராக, அவர் எவ்வாறு கணிக்கப்படலாம் என்பதைக் காட்டுகின்றன.
ஜீவாவும் ஏனைய எழுத்தாளர்கள் போல நாவல் எழுதும் பொழுது, அவரது கலைத்திறன் நன்கு பளிச்சிடும் என எதிர்பார்க்கிறேன். வாழ்வின் தரிசனங்கள்' என்ற தொகுதியைக் கருத்துக்கு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அவரும் ‘கலைநயமாக எழுதும் ஒரு முக்கிய சிறுகதை எழுத்தாளர் தான் என்பதை மறுப்பதற்கில்லை.
(தின்கரன் வாரமஞ்சரி : 23 - 05 - 1983)
103
நாகூர் எம். கனி
தூரத்துப் цLITатић
母赫 தொகுப்பிலே 12 கதைகள் இருக்கின்றன. இக் கதைகளை ஆசிரியர் 1967ஆம் ஆண்டிற்கும் 1982ஆம் ஆண்டிற்கும் இடையில் எழுதியிருந்தார். சுமார் 15 வருட காலத்திலே சிறுகதை எழுதும் அனுபவத்தை அவர் படிப்படியாகப் பெற்று வந்துள்ளார். இவருடைய ஆரம்பகாலக் கதைகளில் சிறுகதைக் கட்டமைதி மெருகுபெறவில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் அவர் எழுதிய கதைகளைப் படிக்கும் பொழுது சிறுகதைக் கலையில் அவர் போதிய பரிச்சயம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
நாகூர்கனி இத்தொகுப்பு மூலம் ്ത്ര சமூகப் பணியைச் செய்துள்ளார். அதாவது கொழும்பு வாழ் இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்க்கைக் கோலங்களை ஏனைய சமூகத்தினருக்குத் தமிழ்மொழி மூலம் அறிமுகஞ்செய்திருக்கிறார். கூடவே அரபு மொழிச் சொற்களையும் பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் உண்மையான இஸ்லாமிய நெறிகள் சிலவற்றை விளக்கும் பொருட்டுக் கதைகளைப் புனைந்திருக்கிறார் என்பதைவிட நாளாந்த வாழ்க்கையைச் சித்திரிக்கும் கதைகளுடாக இஸ்லாமிய நெறிகளை இனங் கண்டுள்ளார் எனலாம். அந்த விதத்தில் ஒரு சில இஸ்லாமிய இலட்சியங்களைப் பிரபல்யப்படுத்த சிறுகதை' என்ற இலக்கிய வகையை கனி தேர்ந்துள்ளார் எனலாம்.
Page 57
104.
அதே சமயம் இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய சபா. ஜெயராசா கூறியிருப்பதும் அவதானிக்கத்தக்கது.
"இஸ்லாமியப் பண்பாடு தோய்ந்த எழுத்தாக்கங்கள் இந் நாட்டின் ஏனைய பண்பாடுகளுக்குரிய பொதுவான பிரச்சினைகளையும் மூலகங்களையும் அணுகி எழும்பொழுது அவை ஏனைய பண்பாடுகளுக்கு முரிய பொதுச் செல்வங்களாகிவிடுகின்றன." இவ்வாறு முன்னுரையாசிரியர் கூறியிருப்பது போல நாகூர் எம். கனியின் தூரத்துப் பூபாளம்'என்ற இத்தொகுப்பிலே இன்றைய சமுதாய வாழ்க்கையே படம் பிடித்துக் காட்டுப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளிலே சகலரும் முஸ்லிம் பாத்திரங்கள்தான். இஸ்லாமியத் தத்துவங்களை விளக்குவதற்கு உதவும் பாத்திரங்கள்தான். அதே சமயம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பலவித இன்னல்களும் நாம் வாழும் முழுச் சமுதாயமும் எதிர் நோக்குபவைதான்.
இவருடைய கதைகள் யாவுமே இஸ்லாமிய நெறிக்கு உட்பட்ட முற்போக்குக் கதைகள் தாம். கதைகள் பாராட்டும் படியான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன. மைமுனா ஒரு. என்ற கதையை எடுத்துக் கொள்வோம். இக் கதையிலே அனாதரவான ஓர் ஏழை முஸ்லிம் தாயின் முற்போக்கான சிந்தனைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவளுடைய சிற்தனைகளை இல்லாமிய வரலாற்றிலிருந்தே ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அந்தத் தாயார் ஒரு கட்டத்திலே கணக்காளர் களுக்கு இலவசமான பயன் தரக் கூடிய ஆலோசனையையும் தெரிவிக்கிறார். பணக்காரர் தம்மிடம் குவிந்திருக்கும் பணத்தை முதலீடுசெய்து முஸ்லிம் விதவைகளுக்கென ஒரு கைத்தொழில் பேட்டையை உருவாக்க வேண்டும் என்பதும் முஸ்லிம் பெண்களே அதனை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறிய ஆலோசனை செயற்படவில்லை. வாழவழியில்லையே என்ற ஆறாத்துயரினால் இரத்த அமுக்கம் ஏற்பட்டு இறந்து விடுகிறாள். இது தான் கதை. அபரிமித செல்வம் இருப்பவர்கள் இல்லாதவருக்கு கொடுத்துதவுவது ஒரு சமுதாயக் கடமை என்பதை ஆசிரியர் மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.
105
உடன் நிகழ்காலச் சமுதாயத்தை சித்திரிக்கும் மற்றுமொரு சிறந்த கதை நான் ஒரு தத்துவமானேன். மத்திய கிழக்கிலே வேலைவாய்ப்புத் தருவதாகக் கூறி ஏய்த்துப் பிழைக்கும் ஏஜண்டுகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுகிறது இக்கதை. அதேசமயம் ஏமாந்த சோணகிரி ஒரு வரையும் நல்ல முறையிலே அறிமுகப்படுத்துகிறது. கதையினுாடே ஒரு பச்சாதாப உணர்வு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இக்கதை எழுதப்பட்ட முறையும் வர வேற்கத்தக்கதாய் அமைந்துள்ளது.
மத்திய கிழக்குக்குச் சென்று உழைத்து வந்தாலும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் சமுதாயம், பெண்களை வாழ விடுவதில்லை என்பதை 'அரங்கேற்றமா? நாடகமா? கதையிலே ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். பர்ஷானா என்ற ஒரு பெண் கடல் கடந்து சென்று உழைத்து வந்தாலும், லாபம் பெறாத மேகமாக, பிறருக்காக மழைபொழியும் கருவியாக மாறுகிறாள். இக்கதையிலும் உடனிகழ்கால வாழ்க்கைக் கோலங்கள் சித்திரிக்கப்படுகின்றன.
கடன் இல்லாத ஹஜ்' என்ற கதையும் இஸ்லாமியத் தத்துவத்தை விளக்கும் கதையாகும்.கடனாளியாக ஹஜ் யாத்திரையை மேற்கொள் வதைவிட அந்தயாத்திரையைச்செய்யாமல் இருப்பதே மேல் என்ற கருத்து வெளிப்படுத்துப்படுகிறது.
இஸ்லாமிய நெறிகளை வலியுறுத்தி விளக்கம் கொடுக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க கதை கீழ் வானில் ஒரு சூறைக்காற்று.அபரிமித உழைப்பு ஏழைகளுக்குச் செல்கையிலுங்கூட பயனுடையதாக, வறியவர்களில் ஒருவருக்கு முழுமையாகச் செல்லல் நல்லது என்ற கருத்துப்பட இக்கதையை ஆசிரியர் எழுதியிருக்கிறார். தூரத்துப் பூபாளம்' என்ற கதையிலே நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்கள் சீர்குலைந்து நவமான சிந்தனைகள் இளைஞர்கள் மத்தியில் எழுவதை கதாநாயகியின் அனுபவத்திலிருந்து ஆசிரியர் காட்டுகிறார்.
இத்தொகுப்பிலே மிகவும் சிறப்பாக அமைந்த கதை 'ஜிலேகா சுலைகா. மிக மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம்
Page 58
106
வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க ஒன்று. பாய் சமூகம் பற்றிய பல செய்திகளை இக்கதை மூலம் நாம் அறிகிறோம்.
"ஓர் இஸ்லாமிய எண்ணத்தின் நடைமுறை இதோ நடந்து போய்க் கொண்டிருக்கிறது" என்று கதாநாயகி சுலோகாவை விபரித்துக் கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்தும் இஸ்லாத்தைத் தழுவினாலும், அம்மதத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி முற்போக்கான ஒரு வழியை இக்கதை மூலம் ஆசிரியர் காண்பிக்கிறார்.
இக் கதை பற்றிய விளக்கமும் சேர்க்கப்பட்டிருப்பது பயனுடையதாக இருக்கிறது. மேமன் இனப் பெண் முற்போக்கான சிந்தனை கொண்டவள். ஒரு சோனகனை மணம்முடிக்க முன்வருவதை இக்கதை கூறுகிறது. சிறுகதைக்குரிய உருவம் இக்கதையில் நேர்த்தியாய் வந்து அமைகிறது.
ஓர் இதயம் அழுகிறது' என்ற கதையிலே, ஏழ்மை காரணமாக தான் காதலித்த பெண்ணை மணம் முடிக்க இயலாது போன ஓர் அச்சுக்கோப்பாளனின் கதை கூறப்படுகிறது. குடும்பச் சுமைகாரணமாக ஓயாது உழைத்துத் தங்களையே வருத்திக் கொள்ளும் எத்தனையோ ஏழைக் குடும்பங்களின் சோகக் கதைகளில் இதுவும் ஒன்று.
"வெள்ளை போலும் நிறத்தான்" என்ற கதையிலும், இஸ்லாம் மூலம், வெள்ளை நிற உடைகளை முஸ்லிம் பெண்கள் அணியும் உண்மை புலப்படுத்தப்படுகிறது.
வழக்கமாக ஒரு பெண்ணைத்தான் ஓவியத்துடன் ஒப்பிடுவார்கள். ஆனால் 'அவன் ஓர் ஓவியம்' கதையில் ஆசிரியர் ஓர் ஆணை ஓவியமாக்குகிறார். "இஸ்லாமிய சமுதாயத்தில் ஓர் உண்மை முஸ்லிம் தோன்றிவிட்டான். இருண்டவானில் நம்பிக்கை நட்சத்திரம் உதித்துவிட்டது. எத்தனையோ ஏழைக் குடும்பங்களின் மண வாழ்வுக்கு
107
மங்காத விளக்கொன்று தூண்டப்பட்டுவிட்டது. அந்த விளக்கொளியில் அவனது எண்ணங்கள் சுவரில் சிறிய சித்திரமாக ஏன் அவனே ஓர் ஓவியமாகத் திகழ்கின்றான். ஓவியத்திற்கு உயிர் வருமா? பூரண வாழ்க்கைத் திட்டத்தைக் கொண்டுள்ள ஒ. முஸ்லிம் சமூகமே, ஓவியத்திற்கு உயிர் தருவாயா? தராவிட்டால் அவன் என்றும் உயிரற்ற ஓவியந்தான். என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
கதை ஒரு முற்போக்கான எண்ணங்கொண்ட முஸ்லிமின் முன்மாதிரியான செயல் பற்றியது. அந்த விதத்தில் இக் கதையின் உள்ளடக்கத்தை நாம் வரவேற்கிறோம். கதை யதார்த்தமாகச் சூழலைச் சித்திரிக்கிறது. சம்பாஷணைகள் இயல்பாக அமைகிறது. அதேசமயம் கதையின் கட்டமைதி இறுக்கமாக இல்லை, தர்க்க ரீதியான முடிவுக்கு வாசகர் வரும் விதத்தில் கற்பனைச் செறிவைக் காட்டாமல் வியாக்கியானம் தந்து எழுதுவது தவிர்க்கப்பட்டிருக்கலாம். எனவே உருவக் குறைபாடுடைய கதை என்று இதனைக் குறிப்பிடலாம். உள்ளடக்கச் சிறப்புக்கேற்ப உருவமும் இணைந்திருக்கு மாயின் இக்கதை மேலும் பாராட்டைப் பெற்றிருக்கும்.
மும்டாஸ்' என்ற கதையும் இறுக்கமாகச் செப்பனிடப்பட்டிருக் குமாயின் கனதி கூடியிருக்கும். 'சிறுகதைக்குத் தேவையற்ற பகுதிகளை வெட்டிச் சரி செய்துவிட்டால், ஒரு நல்ல கதையிது. இந்தக்கதையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் நற்பண்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொடிய நோய்க்கு அவள் பலியாகாமல் இருந்திருப்பாளாயின், அவள் மைத்துனனுக்கு அருமையான மனைவியாக இருந்திருப்பாள். இக்கதையிலே நாயகன் கூட ஒருவித இலட்சியத்துக்காக தனது சுயநலனைத் தியாகம் செய்து தான் அண்டி வாழ்ந்த மாமன் மாமிக்கு உதவுகிறான். அப்படியிருந்தவன் தன் மைத்துணி இறந்தபின் நடைப்பிணமாகிறான். இதுதான் கதை. கூட்டுமொத்தமாகப் பார்த்தால் தூரத்துப் பூபாளம்' அண்மையிலே வெளிவந்துள்ள நல்ல சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று எனலாம்.
(வீரகேசரி வாரவெளியீடு : 28 - 08 - 1983)
Page 59
108
முத்து ராசரத்தினம் சிவந்தி வயல்
இத்தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகளில் அன்றாட வாழ்விற்கே அல்லற்படும் வறிய மக்களின் துன்ப நாடகங்கள் சித்திரிக்கப்படுகின்றன. ஐஸ்கிரிம் விற்பவன், கடலைக்காரன், அச்சுக் கோப்பவன்,அரிசியாலைத் தொழிலாளி,வேலையற்ற ஆனால் கலையில் பிடிப்புக் கொண்ட குடிகாரன், மத்திய தரத்தினரின் வீடுகளில் பணிபுரியும் ஹரிசனப் பெண்கள் போன்றவர்கள் இக்கதைகளில் வரும் பாத்திரங்கள். காமம், நொருங்கிய இதயங்கள், சமூக சமநிலை தளம்பல், போன்றவை கதைகளில் அடி நாதம்.
இக்கதைகளை எழுதிய முத்து ராசரத்தினம் ஒரு தொழிலாளியாக இருந்தவர். அச்சுக் கோத்தவர். வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சொந்த அனுபவங்களை எழுத்தில் வடித்திருக்கிறார் எனலாம். கதைகளில் உள்ளடக்கம் முக்கியத்துவம் அவதானிக்கப்படும் அதே வேளையில், உருவ அமைதியில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அனேகமாக எல்லாக் கதைகளும் தன்மை ஒருமை நிலையில் நின்று எழுதப்பட்டுள்ளன. இவரைப் பற்றிய அண்மைக்கால விபரங்கள் எதுவும் தெரியவில்லை. "
(தினகரன் வாரமஞ்சரி 15 - 05 - 1983)
★ ★ ★
O9
கோகிலா மகேந்திரன்
முரண்பாடுகளின் அறுவடை
[ர்மது நாட்டிலே பல பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். நொறுங்குண்ட இதயம்’ என்ற நாவலின் ஆசிரியையே ஈழத்து முதல் பெண் நாவலாசிரியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கள நாயகி போன்ற அத்தகைய பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை நாம் இன்னும் படிக்கச் சந்தர்ப்பம் கிடையாததனால் பாலேஸ்வரி போன்றவர்கள் எழுதியவையே நமது ஆரம்ப வாசிப்பாக அமைகிறது.
பாலேஸ்வரி, குறமகள், பத்மா சோமகாந்தன், பவானி, சாந்தினி (மகேஸ்வரி வயிரமுத்து), சசிதேவி தியாகராஜா, அன்னலட்சுமி ராஜதுரை, கமலா தம்பிராஜா போன்றவர்கள் சமூக தனி மனிதப் பிரச்சினைகளைப் பொது நோக்கிலும் தனிமனித நோக்கிலும் தீட்டியுள்ளனர்.
பின்னர், பூங்கோதை, மண்டூர் அசோகா,குந்தவை, சிதம்பரபத்தினி, யோகா பாலச்சந்திரன், ராஜம் புஷ்பவனம், கவிதா, தேவி, பூரணி, தாமரைச்செல்வி, அருண் விஜயராணி, தமிழ்ப்பிரியா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், நயீமா பவழிர், சித்திபரீடா, பிரொஸா ஹுசைன், பரந்தன் கலைபுஷ்பா, கே.வியரம், சிவமலர் செல்லத்துரை, தேவ மனோகரி, ஹம்சத்வனி, ஜனகமகள் சிவஞானம் போன்றோர் நமது கவனத்தை ஈர்த்து வந்துள்ளனர்.
Page 60
110
புனை கதைத் துறை தவிர ஏனைய எழுத்து வகைகளில் திருமதி நவரத்தினம் (முன்னாள் கல்வித் திணைக்களஅதிபர்), திருமதி கங்கேஸ்வரி கந்தையா, திருமதி மீனாட்சி பொன்னுத்துரை, திருமதி பாலாம்பிகை நடராஜா, பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, சற்சொரூபதி நாதன், திருமதி சிவச்சந்திரன் போன்ற பலர் நமது கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்துள்ள கோகிலா மகேந்திரன், தவிர்க்க முடியாத அளவிற்கு தமது முத்திரையைப் பதித்து எழுதும் ஒரு பெண் எழுத்தாளர். மனித சொரூபங்கள்' என்ற தொகுதியை நாம் படிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. முரண்பாடுகளின் அறுவடை என்ற தொகுப்பைப் படித்துப் பரவசப்பட்டோம். 14 கதைகளும் ஏதொவொருவிதத்தில் முரண்பாடுகளைத்தான் தீட்டுகின்றன. எந்தவொரு கதையுமே சோடை போகவில்லை. கதையில் ஜீவனும் வார்ப்பும் இணைவதனால், கதை உள்ளடக்கம் வேறு, உருவம் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாதவாறு கதைகள் எழுதப்பட்டுள்ன.
கோகிலாவின் எழுத்துக்களில் உண்மைகள் பளிச்சிடுகின்றன. மனித உறவுகளை உளவியற்பாங்குடன், சமூகப் பின்னணியில் அவர் தொட்டுக் காட்டுகிறார்.
இவர் படித்த பெண்ணாகவும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளி யேயுள்ள அனுபவ வாய்ப்புகளைப் பெற்றுமிருப்பதனாலும் இவருடைய பார்வைகள் அகலமும் ஆழமும் பெறுகின்றன. -
பிரண் ஆதிக்கச் சமுதாயத்தில் பெண்ணடிமைத்தனம் செயற்படும் விதத்தையும், அதே சமயம் இச் சம்பிரதாயங்களையும் மீறி, மனித இதயங்கள் சுருதியுடன் பேசுவதையும் அலட்டிக் கொள்ளாமலே கோகிலா வெளிப்படுத்துகிறார். ஆண்- பெண் உறவுகளை உளவியல் அடிப்படையில், ஒரு முதிர்ச்சித் தன்மையுடன் விளக்கிக் காட்டுகிறார் ஆசிரியை. இதற்கு, உதாரணமாக 'அன்பிற்கு முன்னால், தலைமுறைகள் முரண்படும்போது, 'அர்த்தமுள்ள ஒரு வாழ்வு'ஓர் உள்ளம் பேசுகிறது.
111
'வதை, 'அர்ச்சிக்கப்படாத விக்கிரகங்கள், 'உள்ளத்தால் அடிமைகள்' ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம்.
இக்கதைகளில் வரும் பெண்களுடன் சம்பந்தப்பட்ட ஆண்கள் ஏன் அப்படி இதமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு உளவியற் காரணங்களையும் காட்டாமற் காட்டுகிறார் ஆசிரியை. எனவே வெறுமனே ஒரு பெண்ணின் ஒருதலைப்பட்சமான பார்வை என்றோ, கருத்தென்றோ தட்டிக்கழிக்க முடியாதவாறு, ஆணின் சார்பிலும் நின்று கதாசிரியை எழுதுவது இவருடைய கதைகளுக்கு நம்புந்தன்மையை ஏற்படுத்துகிறது.
சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள்,தலைமுறை இடைவெளி, வறுமையின் எல்லை, சீதனத் தொல்லை, மனிதாபிமானம், வாழ்க்கைநெறி, ஆசிரிய உலகம், சிறுவர் உளப்பாங்கு, மாற்றத்திற்கு அனுசரணையாய்ப் போதல், கலைக்கு விலைபேசல், புதியனவற்றை இனங்கண்டு சுதாகரிக்க மறுத்தல் போன்ற விஷயங்களைக் கதைகளாகப் புனைந்திருக்கும் ஆசிரியை பாராட்டுக்குரியவர்.
பெண்ணின் மனதைப் பெண்ணே அறிவாள் என்பதனாலோ என்னவோ கோகிலா மகேந்திரனின் பெண் பாத்திரங்கள் தத்ரூபமாக வார்க் கப்பட்டுள்ளன. குறிப்பாக 'அன்பிற்கு முன்னால்' நிமிரும் ஊனங்கள்', 'அர்ச்சிக்கப்படாத விக்கிரகங்கள்', 'உள்ளத்தால் அடிமைகள்' ஆகிய கதைகள் கலைநயமாய் அமைந்துள்ளன.
(வீரகேசரி வெளியீடு 06 - 05- 1984)
★ 女 ★
Page 61
12
எஸ். வி. தம்பையா
கடவில் கலந்தது கண்ணிர்
1988 - 1966 காலப்பகுதியிலே எஸ். வி. தம்பையா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இது. நல்ல தமிழிலே அருமையான கருத்துக்களைச் சுமந்து கற்பனையாக எழுதப்பட்ட இக்கதைகள் 80களில் வாச்கனைத் திருப்திப்படுத்துமா என்பது ஒரு புறமிருக்கட்டும், அதே சமயம் அவை எழுதப்பட்ட காலத்தின் பின்னணியிலே, அன்றைய இளவட்ட எழுத்தாளன் எவ்வாறு வாழ்க்கையை நோக்கியிருக்கிறான் என்பதையறியவும், சிறுகதை வளர்ச்சிப் பாதை எத்தகைய கட்டங்களாக அமைந்திருந்தது என்பதையறியவும் பழைய சிறுகதைகளின் இத்தகைய தொகுப்புக்கள் இன்றைய வாசகனுக்கு உதவுமல்லவா? அந்த விதத்திலே இத்தொகுப்பை வெளியிட்டமைக்காக ஆசிரியர் எஸ் வி. தம்பையாவைப் பாராட்டவே வேண்டும்.
இத்தொகுப்புக்கு, இன்றைய முன்னணிப் படைப்பாளிகளுள் ஒருவரான 'தெணியான் முதிர்ச்சி மிளிரும் ஓர் அருமையான மதிப்பீட்டைத் தந்துள்ளார். 'தெணியான் தமது முன்னுரையிலே கூறியிருப்பது இங்கு மீண்டும் குறிப்பிடத்தக்கது- f
"காதல், இளமை நினைவுகளை வென்று நிற்கும் தாய்மையின் சிறப்பு, குடியினால் வரும் கேடு, வர்க்க அவலம், போலி வாழ்வினால் விளையும் ஏக்கம், உடைமைகள் பொதுமையாவதாலே தீரும் சமுதாயப்
113
பிரச்சினை, யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சத்தியின் கெடுபிடி, சாதிக் கொடுமை, மூடக் கொள்கையால் நேரும் கேடு எனப் பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கியனவான படைப்புகள் இத்தொகுதியில் சிருஷ்டிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய உள்ளடக்கங்களைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள படைப்புக்கள் இக்காலத்துக்கு மாத்திரமல்ல, எதிர்காலத்துக்கும் ஏற்றவையாகவும், நிலைத்து வாழத் தகுந்தவையாகவும் விளங்குகின்றன"
மலேசியப் பத்திரிகைகளான தமிழ் முரசு', 'தமிழ் மணி', பதிப்பு' மற்றும் 'தினகரன் வாரமஞ்சரி', 'பொன்னி" ஆகிய இதழ்களில் இக்கதைகள் பிரசுரமாயிருந்தன. ஆசிரியர் எஸ். வி. தம்பையா (தம்பையா என்ற பெயரிலே மேலும் இரு எழுத்தாளர்கள் எழுதுவதனால், இவருடைய முதல் எழுத்துகளையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றேன்) தமது தொகுதி பற்றி என்ன எழுதியிருக்கிறார் -
"நான் வாழ்ந்த சூழலில் என்னை பாதித்த மனதை உறுத்திய சம்பவங்களை அந்த அந்தக் கால சூழலுக்கேற்ப ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பரீட்சார்த்தமாகவே எழுதியுள்ளேன். அன்று எழுதிய எல்லாமே இன்று எனக்கு உடன்பாடு என்று சொல்ல முடியாவிடினும், அந்த அந்தக் காலகட்டத்தில் எழுதியது அப்படியே இருக்கட்டும் என்பதால் எவ்வித மாற்றமும் செய்யாதுவிட்டுள்ளேன். இது என் சிறுபிள்ளை வேளாண்மை"
இந்தப் பெருந்தன்மையான கூற்றைக் கவனியாது அபிப்பிராயம் கூற வருவதே தப்பு. தாம் அன்று எழுதியதை அப்படியே மாற்றஞ் செய்யாது தந்திருக்கையில், இன்றைய அளவுகோல்களைக் கொண்டு அளவிடுதல் நியாயபூர்வமானதல்ல.
50களிலும் 60களிலும் தி.மு.க. எழுத்தாளர்கள், மு.வ, அகிலன், நயா, சிரஞ்சீவி,கல்கி போன்றவர்களுடைய எழுத்துக்களின் செல்வாக்குத் தொடர்ந்து இருந்து வந்தமையினால், தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் இந்தச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் Ởn-L-TTgbj.
Page 62
14
எஸ்.வி. தம்பையா அவர்களும் இந்த எழுத்து நடைக்கு, இந்தப்பாத்திர அமைப்பு முறைக்கு, இந்தக்கதைப் பின்னல் சாயலுக்கு உட்பட்டிருந்தார் என்பதை, இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள சில கதைகள் காட்டுகின்றன. உதாரணமாக மு.வ. வின் நடைச் சாயலை பட்டமரம், 'அணையா விளக்கு' போன்ற கதைகளின் நடைப்பாங்கில் காணலாம். இது ஒன்றும் பாரதூரமான குற்றமல்ல.
மூன்று, நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கவில்லை. எனவே ஆசிரியர் "சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும்' பண்பிலே திருப்தியுறாது, விஸ்தாரமாகவும், விளக்கமாகவும் கதைகளை எழுதியிருக்கிறார். அதே சமயம், தெணியான்' அவர்கள் குறிப்பிட்டிருப்பதுபோல, உவமான உவமேயங்களை அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.
பாட்டாளி வர்க்கத் தொழிலாளியாக இருந்து கொண்டே தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் நன்கு கற்றுத் தெளிவான, தூய்மையான, மதிக்கத் தக்க எண்ணங்களையும் ஆசிரியர் வளர்த்து வந்திருக்கிறார் என்பதற்கு இத்தொகுதியே சான்று. இளைஞனாக இருந்தபொழுது எழுதினாலுங் கூட மனித உறவுகளை முதிர்ச்சி கொண்ட பார்வையாளனாக அவர் அவதானித்துத் தமது கதையில் சித்திரிப்பது பாராட்டுக்குரியது.
எஸ்.வி. தம்பையா அவர்கள் சிலகதைகளில் சம்பவ எடுத்துரைப புகளைக் குறைத்துக் கொள்ளவில்லை. உண்மைதான், ஆனாலும் நிச்சயமாக அவர் தமிழ் நடை நனைந்த கொப்பின் பூவிதழ்கள் அல்ல.
வைர மணிச் சிதறல்கள்.
(தினகரன் வாரமஞ்சரி : 14.10.1984)
★ ★ ★
115
கே. டானியல்
шDяIії
IDறைந்த பிரபல புனைகதையாளர் கே. டானியல் வெகு அண்மையில் எழுதிய சிறுகதை மண்'. இது 'ஈழமுரசு' இரண்டாவது ஆண்டு மலரிலே (52.1986) பிரசுரமாகியிருக்கிறது. முற்றிலும் உரையாடல் களைக் கொண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை, டானியல் எழுத்துத் துறையில் கண்ட பிரமாதமான வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றது. உள்ளடக்கம், உத்தி, உருவம், உரையாடல், மண் வாசனை, எதார்த்தம், வட்டார/தொழிற் குலப் பேச்சோசை மொழிப் பாங்கு அத்தனையும் ஒருங்கு சேர நேர்த்தியாய் வந்தமர்ந்த கதை இது.
சாதாரண சம்பவந்தான். ஆனால் அதற்கு முற்போக்கான, மரபுமீறிய எண்ணக்கருவை ஏற்றிப் புதுப்புனை வாக்கமாக ஆசிரியர் கதையை அமைத்துள்ளார். இயற் பண்பும் (நச்சுரலிஸ்டிக்) யதார்த்தமும் (ரியலிஸ்டிக்), துரித சம்பவக் கோவையும் (ரப்பிட் சீக்குவென்ஷல் ப்ரோஸஸ்) கலாரூபமாக அமைந்ததனால், கதை வாசகன் ஆர்வத்தை ஒரே சீராக வைத்திருக்க முயல்கிறது. இந்த விதங்களில், இச் சிறுகதையின் உத்திமுறை (டெக்னிக்) வெற்றியளித்துள்ளது என்றே கூறலாம்.
பிள்ளைப் பேறுடன் கதை ஆரம்பமாகிறது. 'பெற்மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்பது போல, பெற்ற மனமும் கல்லாக' மாறவும்,
Page 63
116
மண்ணின் மேலுள்ள பற்றையும், கலாசார வேர்களில் ஊறிய திளைப்பையும், பழைய பரம்பரையினரின் வைராக்கியத்தையும் வெளிப்படுத்துவும் கருவியாய் அமைவது போன்று கதை முடிகிறது.
யாழ்ப்பாணக் கமக்காரத் தம்பதிக்கு ஆறு தடவை பிள்ளை உண்டாகியும் ஒன்றும் உயிர் தரிக்கவில்லை. ஏழாவது தடவையாக சந்நதியான் பிறந்தான். அருமை பெருமையாக வளர்ந்தான். தாய் மாமன் தனது மகள் வள்ளியம்மையை அவனுக்குக் கொடுக்கு முகமாக அவனின் மேற் கல்விக்கு நிதியுதவி வழங்கினார். அவனோ லண்டனில் மேற்படிப்புப் படிக்கப் போகு முன்னரே தனது பெற்றோரின் எளிமை கண்டு வெட்கமுற்றுத் தனது பெயர் முதல் சகலவற்றையும் மாற்றிக் கொள்கிறான். சுய பாரம்பரியத்தில் அவன் வேர்கொள்ளவில்லை. லண்டனில் மாற்று மத, மாற்று இனப்பெண்ணை மணமுடித்து, நாடு திரும்பி கொழும்பு வந்து, யாழ்ப்பாணத்திலுள்ள தனது பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறான். காசும் அனுப்புகிறான். கல்வியறிவு இல்லாத அப் பெற்றோர் கடிதம் கண்டு துயரடைகின்றனர். கமக்காரர் முதுமையுற்றாலும், தமது சொந்தக் காலில் நின்று,தனது சொந்த மண்ணில், கத்தரிச்செடி நட்டுத் தானும், சுயமரியாதையுடன் சீவனோபாயம் நடத்த முன்வருகிறார். பையன் அனுப்பிய பிச்சைக்காரக் காசான ரூ200/-ஐயும், கடிதத்தையும் நெருப்பில் போட்டுக் கொளுத்துகிறார். பழைய மரபின் ரோசத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.
கதையின் முற்பகுதியிலே, வயிறு நோகும் கர்ப்பவதி, களைப்படைந்து அயர்ந்து தூங்கும் தனது கமக்காரக் கணவனை எழுப்புகிறாள். தூரத்தில் உள்ள தனது ஆத்தையையும் மருத்து விச்சியையும் அழைத்து வருமாறு அவனை பால் நிலவு பொழியும் இரவில் அனுப்புகிறாள்.
அடுத்த பகுதியிலே, ஆத்தையும் அவளும் உரையாட, மருத்துவிச்சியும் வந்து விடுகிறாள். தனது குலத்துக்குரிய மொழியிலே,
117
"பிள்ளை நாச்சியார் என்னெனை செய்யுதாக்கும்? நான் வந்திட்டன் நாச்சியார். ஏன் பயப்படுதாக்கும். நயினார் வெளியிலை போகவாக்கும். ராசநோக்காடு கண்டிட்டு தாக்கும்" எனக் கூறுகிறாள்.
பின், ஆத்தையை விளிக்கிறாள் -
"பெரிய நயினாத்தி சுடு தண்ணியைக் கெதியாய் வைக்கவாக்கும். ச்.ச்.ச். நாச்சியார் எப்பன் பல்லைக் கடிச்சுக் கொண்டு.ம்"என்கிறாள்.
இதற்கிடையில் கமக்காரக் கணவர் செல்லி என்ற இந்த மருத்துவச்சியிடம்,
"என்னெடி செல்லி சத்தம் ஒண்டையுங் காணேல்லை. ஏதும் வில்லங்கமேயெடி?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திகிறான்.
அதற்கு அவள் கூறுகிறாள். "நயினார் எப்பன் பேசாமல் இருக்கவாக்கும். எல்லாம் செல்லி சரியாச் செய்வன்."
இந்த ரீதியிலே சம்பாஷணை செல்கிறது. குழந்தையும் பிறக்கிறது.
அதற்குப் பின் துரித கதியில் காட்சி மாறுகிறது. பையனுக்கு இரண்டு வயது முடியப் போகிறது. அவன் மாமன் மகளுடன் சாணைக் கூறைபோட ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. பின் சம்பிரதாயங்கள் சம்பாஷணை மூலமே எடுத்துக் கூறப்படுகிறது. பரியாரி (சிகையலங்காரம் செய்பவர்), கட்டாடி (சலவைசெய்பவர்)ஆகியோர் சம்பந்தப் படுகின்றனர். மாப்பிள்ளையின் பெயர் சந்நதியான் (முருகன்) ஆகையால் பெண்ணுக்குப் பொருத்தமாக வள்ளியம்மை என்று பெயர் வைக்கப்படுகிறது. في
தொடர்ந்து பையனின் படிப்பு ஐந்தாம் வகுப்பு, இங்கிலிஷ் படிப்பு, எட்டாம் வகுப்புச் சித்தி ஆகியன பெற்றோர் உரையாடல் மூலம் தெரியவருகிறது.
Page 64
18
சந்நதியான் நாகரிகமடையத் தாயின் பாரம்பரிய உடை தரிக்கும் முறை விகற்பமாகப்படுவதைத் தாயிடம் கூறியிருக்கிறான். தனது பெயரும்'ன்'ல் முடிவதால் இதனை மாற்றப் போவதாகவும் கூறியிருக்கிறான். ஆறுமத்தான் என்ற அந்தத் தந்தைக்கு ஆத்திரம் வருகிறது. முத்தாச்சி என்ற அவளின் பெயரையும் பாலகுமாரி என்று மாற்றிவிடலாமே என்று குத்தலாகக் கூறுகிறார் தந்தை.
i பையன் கொழும்புக்குப் போய்ப் படிக்க விருக்கிறான், தாய் மாமன்தான் செலவை ஏற்றுக் கொள்கிறான். அதன் பின் அவன் டொக்கருக்குப் படிப்பதற்காக லண்டனுக்குச் செல்லவிருப்பதாகக் கொழும்பிலிருந்து தனது பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறான். லண்டனுக்குப் போகு முன் யாழ்ப்பாணம் வந்த போது மச்சாள் வள்ளியம்மையைக் கலியாணம் செய்து கொண்டு அவளையும் கூட்டிச் செல்லுமாறு பெற்றோர் கேட்கின்றனர். அவன் மாட்டேன் என்கிறான். தான் ஆம்பிள்ளை என்றும், வயது முதிரும் வள்ளியம்மையைத் தான் முடிக்கப்போவதில்லை என்றும் அவன் மறுக்கிறான்.
கிழவருக்குக் கோபமும், ஆத்திரமும் வருகிறது.
"ஓம் நீர் ஆம்பிளை, கிழண்டினாய் போலை கலியாணம் முடிக்கலாம். பொம்கிளை கிழண்டினா முடிக்கப்படாதாக்கும்! கேளடி ஆத்தை உவனை" என்கிறார். w
தாயும் "டெ தம்பி நன்றி மக்கப்படாதடா மோனை. உன்ரை படிப்புக்கு கொம்மான் தான்ரா காசு சிலவளிச்சவன்!"
"அதை மறக்கப்படாதடா!"
"நான் லண்டனிலை இருந்து உழைச்சு அவற்றை கடனைக் குடுக்கிறன்" என்கிறான் மைந்தன்.
119
மகன் லண்டனுக்குப்போய் இரன்டு வருடத்தில் படிப்பை முடித்துவிட்டு கொழும்பு திரும்பி பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறான்.
"என்மேல் பிரியமான அம்மா அறிவது! நான் இலண்டனிலிருந்து ஐந்து வருடப் படிப்பை இரண்டு வருடத்தில் முடித்துவிட்டு வந்து விட்டேன். அங்கு என்னோடு படித்த ரோசி என்ற பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு வந்து விட்டேன். அவளின் தாய் ஒரு வெள்ளைக் காரிச்சி, தேப்பன் ஒரு இலங்கையர். அடுத்த வாரம் உங்களைப் பார்க்க வருகிறேன். அவவைக் கூட்டி வரவில்லை. ஏனென்றால், வீட்டோடு சேர்த்தால் போல உங்கே கக்கூசு குளியல் அறை இல்லை. கட்டில் மெத்தை இல்லை. புழுக்கக் காலமாக இருப்பதால் அவளுக்குத் தேவையான வசதி இல்லை.
ஐயா சுகமில்லாமல் இருக்கிறார் என உங்கிருந்து வந்த ஒருவர் சொன்னார். இத்துடன் ரூபா இருநுாறு மணி ஒடர் மூலம் அனுப்புகிறேன். பெற்றுக் கொள்ளவும். நான் கடைசிவரை உங்களைக் காப்பாற்றுவேன். நான் காப்பாற்றாமல் வேறுயார் உங்களைக் காப்பாற்றுவது. இப்படிக்கு
Odo60.
மகனின் உதாசீனமும், ஆணவச் செருக்கும் பிரதிபலிக்கும் கடிதத்தைக் கண்டு உரோசமுள்ள தந்தைக்கு ஆத்திரம் வருகிறது.
உவன் எங்களைக் காப்பாற்றப்போகிறானாம்" என்று கூறிய அவர், கடிதத்தையும் காசுத்துண்டையும் விளக்கில் கொளுத்தி எரிக்கிறார்.
"இஞ்சபார் இந்த விசர் மனிசனை! இந்த வருத்தத்தோட, மண்வெட்டியோடை நடக் கேலாமை சந்நிதியானே! மம்பெட்டி தூக்கிக் கொத்தேலாமை வில்லங்கப்படுகுது" என்றாள் மனைவி.
அவர் மனைவியிடமும் கடிதத்தை வாசிக்க உதவியவளையும் இவ்வாறு கூப்பிட்டு காரியத்தில் இறங்குகிறார்.
Page 65
120
"எடி இஞ்சை வாடி மாட்டெடியிலை கிடக்கிற எருவிலை அள்ளியந்து கொட்டெடி, எடி கறுத்தாற்றை இளையவள் கொப்பரெட்டைச் சொல்லு நாளைக்கு நடுகிறத்துக்கு நாலு பிடிகத்தரி நாத்துக் கடனாகத் தரச் சொல்லி"
கதையும் முடிகிறது.
இக் கதையைப் படிப்பவர்கள் இக்கதையின் கதாநாயகனான
தந்தையின் பாத்திரம் மிகவும் காத்திராய் அமைவதை அவதானிப்பார்கள்.
பையனின் நோக்கிலிருந்து கதை எழுதப்படவில்லை என்பது வெளிப்படை.
கதை நிகழும் காலப் பகுதி 40 அல்லது 50களாக இருக்கலாம். பண்பாடு மாற்றம், பயன் மதிப்புகள் மாற்றம், காலப் போக்கில் மாற்றம் போன்ற வற்றினுாடே நிகழும் ஒரு சம்பவக் கோவையை ஆசிரியர் டானியல் அழகுறச் சித்திரித்திருக்கிறார்.
(தினகரன் வாரமஞ்சரி : 30-08 - 1986)
121
சாந்தன்
கிருவர்னன்தூது
ஒட்டுமா என்ற நாவலையும், பார்வை, கடுகு, ஒரேயொரு ஊரிலே, கிருஷ்ணன்தூது, முளைகள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கும் இளைஞர் ஐ. சாந்தன் தமிழில் இன்று எழுதும் படைப்பாளிகளில் விசேட கவனத்தைப் பெறத்தக்கவர் என்பது பல விமர்சகர்களின் அபிப்பிராயம்.
இந்தியாவிலும் (தமிழ்நாடு, பிற மாநிலங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களையும் உட்படுத்தி) ஈழத்திலும் இன்று தமிழில் எழுதுபவர்களில் உலகளாவிய, இலக்கியப் பண்பு கொண்ட கதைகளைப் படைத்து வருபவர்களில் சாந்தனும் ஒருவர் என்பது எனது நீண்டநாட்கணிப்பு.
பொறுக்கி எடுத்து ஓர் இருபது சிறுகதையாசிரியர்களைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் பிரதிநிதிகளாகக் காட்டும்படி பிறமொழியினர் கேட்டால் சாந்தனும் அப்பட்டியலில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமேயில்லை.
அவருடைய கதைகளைப் படித்ததும்,அவர் தொடர்பாக எழும் எண்ணங்களைத் தொகுத்துத் தருதலே இந்தக் கட்டுரையின் நோக்கம். எனது பார்வை கனதியாக இல்லை என்று சில கண்டனக்காரர்
Page 66
122
கருதக்கூடும். திறனாய்வு என்றால் கண்டனமே என்று மருளும் பாமரத்தன்மையினரைப் பொறுத்தருள்வோம் என்று கூறுவதை விட வேறு என்ன சொல்ல முடியும்.
அனுபவ உணர்வு
சாந்தன் தன் அனுபவத்தில் உணர்வதை அப்படியே சிறைபிடித்துப் பொருத்தமான சொற்களிலே தந்துவிடுகிறார். இது என்ன பிரமாதம்? எல்லா எழுத்தாளர்களுமே இதைத்தானே செய்கிறார்கள் என்று கூறிவிடலாந் தான். ஆனால் உண்மையிலேயே எல்லா எழுத்தாளர்களாலும் அப்படிச்செய்ய முடியுதில்லையே! திறனாற்றலுடைய எழுத்தாளன் தான் அத்தகைய இலாகவத்தைத் தனது எழுத்தில் கலாரூபமாகக் கொண்டுவர முடிகிறது. ஆற்றல் இல்லாமல் கடமைக்காக, கடப்பாட்டுக்காக எழுதுபவர்கள் வலிந்து தான் அவ்வாறு அனுபவங்களைச் சிறைப்பிடிக்க முயலுகிறார்கள். அம்முயற்சியைத் தேர்ச்சி பெற்ற வாசகன் அல்லது திறனாய்வாளன் எளிதில் இனங்கண்டு கொள்கிறான்.
திறனாற்றல் உண்மையான எழுத்தாளனுக்கு எவ்வாறு வந்து வாய்க்கிறது என்று கேட்டால், அது அவனது சத்திய வேட்கையிலிருந்து தான் கிடைக்கிறது என்று சொல்ல வேண்டும். அதாவது அவனது உள்ளத்தில் ஒளியிருப்பதனால்,அவன் வாக்கிலும், எழுத்திலும் ஒளி துலங்குகிறது.
எழுத்தில் நேர்மை
உள்ளத்தில் எப்படி ஒளியுண்டாகிறது?
எழுத்தாளன் தன்னளவிலாகுதல் நேர்மையாக இருப்பதனாற்றான்; இங்கு நாம் கவனிக்க வேண்டிய சொல், 'நேர்மை" ஆம். சாந்தனின்
123
எழுத்தில் நேர்மையிருக்கிறது. அவர் தனது அனுபவத்துக்கும் அறிவுக்குமெட்டிய வகையில் தாம் சொல்ல வருவதை, உணருவதை (அவருடைய கருத்து அல்லது பொருள் கொண்டு விளக்குமுறை சரியாக இருக்கலாம் அல்லது அது தப்பாக இருக்கலாம். அது வேறு விவகாரம்) நேர்மையாகவே கூறிவிடுகிறார்.
இதனாற்றான் சாந்தனின் எழுத்தில் கவர்ச்சியிருக்கிறது. அந்தக் கவர்ச்சி சில வேளைகளில் புளகாங்கிதத்தைத் தருகிறது. சில சில வேளைகளில் தார்மிகமான கோபத்தை உண்டு பண்ணுகிறது. இந்தக் கோபம் ஆசிரியர் மீது எழுவதல்ல. அவர் நடமாட விட்டிருக்கும் சில பாத்திரங்கள் மீதுதான் இந்த ஆத்திரம் எழுகிறது.
ஆசிரியர் சாந்தன் தான் சிருஷ்டிக்கும் பாத்திரங்கள் தொடர்பாக எடுக்கும் நிலைப்பாடு பெரும்பாலும் சரியானதாகவே இருக்கிறது. இவ்வாறிருப்பதனால் அவர் வாசகனைத் தம்மோடு அழைத்துச் செல்கிறார். அந்த விதத்தில் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.
இந்தத் தொடர்பு டக்கென்று ஏற்பட்டு விடுவதனால், கதாசிரியரின் கருத்தும், பார்வையும், அனுபவமும் வாசகனுக்குப் பரிவர்த்தனை செய்யப்படுவதில் தடை ஏற்படுவதில்லை. இங்கு ஆசிரியரின் நோக்கம் நிறைவேறுகிறது.
சாந்தனின் கதைகளில் அவதானிக்கக் கூடிய மற்றொரு முக்கிய மான பண்பு - அவருடைய எழுத்து நடையாகும். வாசகனும் எழுத்தாளனும் சம்பாஷிப்பது போன்ற தோரணையில் (புதுமைப்பித்தனின் உத்தியும் இதுதான்!) பெரும்பாலும் அமைந்திருப்பதுதான். அதாவது போர்மல்" ஆக, சம்பிரதாயமாக, இலக்கண சுத்தியுடன் எழுதப்படாமல், மனசு நினைத்துக் கதைப்பது போல, சாந்தன் எழுதுவார். இதுவும் அவருடைய கதைகள் வெற்றியடைய உதவும் ஓர் உத்தி எனலாம்.
Page 67
124
Lബിu ിങ്ങ്ബ
இன்னொன்று-அவருடைய கதைகளில் காணப்படும் ஒரு பவ்வியமான நகைச்சுவை, அதனை விரசமாக்காமல் சொல்லும் தோரணை. குறிப்பாக கிருஷ்ணன் தூது கொத்தில் வரும் முதல் கதையான நீக்கல்கள்'கதையைக் குறிப்பிடலாம். நமது ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கும் இது கைவந்த கலை என்று சொல்ல முடியாதிருக்கிறது.
சாந்தனுடைய கதைகள் மூலம் அவருடைய ஆளுமை புலப்படுகிறதா என்று பார்த்தால், முழுக்க முழுக்க சாந்தனின் ஆண்மையும் ஆளுமையும் அவருடைய கதைகளில் கலந்திருப்பதைக் காணலாம். படைப்பாளியும் எழுத்தும் பிணைந்திருப்பதைக் காணலாம். இது ஒன்றும் வியப்பானதல்ல! ஏனெனில் நான் முன்னரே கூறியது போல, சாந்தன் நேர்மையாகவே தமது எழுத்தைப் படைக்கிறார். அங்கு பேர்ஸனாலிட்டி தெரிகிறது.
சாந்தன் எழுதும் கதைகளைப் படிக்கும் பொழுது பெறப்படும் அவருடைய ஆளுமைத் தோற்றம் என்ன என்பது அடுத்து எழும் கேள்வி. இங்குதான் சாந்தனின் கதைகளில் உள்ள உள்ளடக்கத்துக்கு நாம் வருகிறோம்.
அவருடைய கிருஷ்ணன் தூது என்ற கதைக் கொத்தை எடுத்துக் கொள்வோமானால், இத் தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கதைகள் சிங்கள -தமிழ் இனங்களின் உறவு பற்றியதாய் இருக்கக் காண்கிறோம்
இக் கதைகளைப் படிக்கும் பொழுது, சாந்தன் ஒரு தமிழன் என்ற வகையில் தமிழன் பெருமையில் இறுமாப்புக் கொள்பவர் எனக் கொள்ளலாம். சாந்தன் தனிப்பட்ட முறையில் தற்பெருமை பிடித்தவர் என்று நான் கூறவில்லை. தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில்,
தான் ஒரு தமிழன் என்றே உணர்ந்து கொண்டு தமது அனுபவங்களை ஒவ்வொரு கணமும் எதிர்நோக்குகிறார்.
125
பெருமையின் பளு
இளந்தமிழன் சாந்தனுக்குத் தனது இனத்துக்கேயுரிய பாரம்பரியப் பெருமையின் சுமை, அவரை அழுத்துகிறது. அந்தப்பளுவின் ஆக்கிர மிப்பிலேயே அவர் பிரச்சினைகளை அணுகுகிறார்.
அதே சமயத்தில் சாந்தன் தன்னையுங் கடந்த மனிதனாகிறார். இறுதியாய்வில் சாந்தன் ஒரு மனிதனாகவே, விரும்பத்தக்க ஓர் உலக மனிதராகவே தமது கதைகளில் காட்சி தருகிறார்.
உலக இலக்கியங்களில் இந்தப் பச்சாத்தாபத்தை, இந்தப் பண்பபைத்தான் நாம் காண்கிறோம் ஆக, சாந்தன் என்பவர் மனிதநேயத்தை நாடும் ஒரு கைதேர்ந்த எழுத்தாளன் என்று கூறுவதில் நியாயமிருக்கிறது.
சாந்தனைப் போல சிறுகதைகள் எழுதும் எழுத்தாளர் நம்மிடையே வேறு எவருமிலர். அதாவது தனித்துவமான ஓர் எழுத்தாளர் அவர். இதனை விரிவாகச் சொன்னால், சாந்த்ன் மாதிரிச் சாந்தனே தான் எழுதலாம். மற்றைய எழுத்தாளர்களும் தத்தமக்குரிய இயல்பிலேயே எழுதலாம்.
அதேசமயம் நமது எழுத்தாளர்கள் பலரையும், வசதியை முன்னிட்டு, ஒரு சில வகைகளுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் சாந்தனை அவ்வாறு அடக்க முடியாதிருக்கிறது. நமது சிறுகதையாசிரியர்கள் வெளியிட்ட தொகுப்புகளை மனதிற் கொண்டு பார்ப்பின் இலங்கையர்கோன், வரதர், வ.அ. இராசரத்தினம், செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, கே. டானியல், எஸ்.பொன்னுத்துரை, என்.கே.ரகுநாதன்,நீர்வை பொன்னையன், அ. முத்துலிங்கம், காவலுார் ராசதுரை, மு. தளையசிங்கம், பவானி, எம்.எஸ்.எம்.இராமையா, தெளிவத்தை ஜோசப், செ.யோகநாதன் செ.கதிர்காமநாதன், சட்டநாதன், மு. கனகராசன், சாந்தன், காவலுார் ஜெகநாதன், மண்டூர் அசோகா, சுதாராஜ், லெ. முருகபூபதி,
Page 68
126
மு.திருநாவுக்கரசு, பூங்கோதை, புலோலியூர் க. சதாசிவம், குப்பிளான் சண்முகம், அ. யேசுராசா, தோட்டக் காட்டினிலே என்ற சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்ற மாத்தளை எழுத்தாளர் ஆகியோர் நல்ல தரமான கதைகளை எழுதியிருக்கின்றனர். இவர்கள் தனித்துவமானவர்கள்.
சிக்கன நெறிமுறை
இருந்த போதிலும் கதையும், கலையும் இணைய எழுதும் அண்மைக்கால எழுத்தாளர்களில் சாந்தன், சட்டநாதன், மு. கனகராசன் ஆகிய மூவரும் அருமையாக எழுதுகிறார்கள். இவர்க்ளில் சாந்தனின் பெயரை முதலிற் குறிப்பிட வேண்டியுள்ளது. காரணம் அவருடைய கதைகளில் சிக்கன நெறி மேலெழுந்து நிற்பது தான். ஒவ்வொரு சொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவசியமான சொல்லாக இருக்கிறது. வழவழாத்தன்மை இல்லை.
நான் கூறுவது மிகையல்ல என்பதற்கு அத்தாட்சியாகப் பேராசிரியர் கைலாசபதியும் தமிழ்நாட்டு எழுத்தாளர் கோரியும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சாந்தனின் கதைகளை ஒவ்வொன்றாக எடுத்து விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. கதைகளில் சாந்தனைக் காணலாம். பயிற்றப்பட்ட வாசகனுக்கு அவர் கதை பரிச்சயமாகும். அரைவேக்காடாக இருந்து கொண்டு பெரிய ஆழமுடையவர் என்று தன்னைப் பாவனை பண்ணிக் கொண்டு பாமரத்தனமாக எதையும் எடைபோடும் பிரதிநிதிகளுக்குச் சாந்தனின் கதைகளும் அவர் பற்றிய மதிப்பீடும் ஆழமற்றனவாய் இருக்கும். பாவம்! விட்டு விடுங்கள். இவர்கள் காலவோட்டத்தில் அடிபட்டுப் போய்விடுவார்கள்.
(தினகரன் வாரமஞ்சரி 12.09. 1987)
127
என். சோமகாந்தன்
ஆததி
ஈழத்துச் சோமு' என்ற என். சோமகாந்தன் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வெளியிட்ட பல சிறுகதைகளில் சில கதைகள் மாத்திரமே ஆகுதி' என்ற இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. இக்கதைகள் 1959க்கும் 1986க்கும் இடையிலே எழுதப்பட்டவையாகும்.
சோமகாந்தனின், சமகால இலக்கிய பங்களிப்புகளுடன் ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் சம்பந்தப்பட்டிருப்பதை வரலாற்றாசிரியர்கள் அறிவர்.
ஓர் எழுத்தாளனின், படைப்பை அவன் எழுதிய காலகட்டப் பின்னணியிலே வைத்துப் பார்ப்பது வழமை, அவசியமும் கூட. ஆயினும் அக்கதைக் கருத்து, சமகாலக் கருத்தோட்டத்திற்கமையாதிருப்பின், அதனைச் சுட்டிக் காட்டுவது திறனாய்வாளரின் கடமையாகும்.
முதலிலே பலரலும் பாராட்டப்பட்ட 'ஆகுதி' என்ற கதையை எடுத்துக் கொள்வோம். 'ஆகுதி' என்ற சொல்லே பிரத்தியேக அர்த்தங் கொண்டது. நாளாந்தப் பாவனையில் இல்லாதது. 'ஆகுதி சமயக் கிரியைகளுடன் தொடர்புள்ளது. ஒமகுண்டல நெருப்பு அல்லது தீ எனப்படும் ஐம்பூதங்களில் ஒன்றைக் குறிப்பது. இக்கதையிலும் ஆகுதி
Page 69
128
ஒரு குறியீடாக இடம் பெறுகிறது எனலாம். ஆக்கமும் அழிவும் ஆகுதியினால் ஏற்படுகிறது. நிர்மலப்படுத்தும் கருவி நிர்மூலத்தை ஏற்படுத்தவும் தயாராய் நிற்கிறது.
இக்கதை பற்றி மேலும் விபரிக்கு முன், கதாசிரியர் சோமகாந்த்ன் சம்பந்தமான ஒரு விபரத்தையும் நாம் நினைவிலிருத்த வேண்டும். சோமகாந்தன் பிறப்பால் ஒரு பிராமணர். எனவே வைதீக அனுஷ்டானங்கள் தொடர்பான நேரடியான அனுபவம் பெற்றவர். குருக்கள் வர்க்கக் கலாசாரத்தின் பண்புகளையும், அக் கலாச்சாரப் பின்னணியின் சிறப்பான இலட்சியங்களுக்கு வடிவங் கொடுக்கும் ஜெகன்னாத குருக்களின் பாத்திரத்தையும், சோமகாந்தன் போன்ற எழுத்தாளர்களே எம் மனத்திரை முன் கொண்டு வர முடியும். அதாவது நேரடி அனுபவ வீச்சு உயிர்ப்புள்ள எழுத்துக்கு இடமளிக்கிறது. -
சில தசாப்தங்களுக்கு முன் முற்போக்கான எழுத்து என்றால், வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் இடர் பாட்டை மட்டும் சித்திரிப்பவை என்று கருதப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டிலே ஜெயகாந்தனின் பிரபல்யத்திற்குப் பின்னர் தமிழ் உடனிகழ்கால எழுத்து முயற்சிகள் கதையாக பரிமாணங்களைப் பெறத் தொடங்கின. இதுபற்றி மேலும் விளக்காமல், எடுத்துக் கொள்ளப்பட்ட கதைக்கு வருவோம்.
முற்போக்குச் சிந்தனைகளை வரவேற்கும் சோமகாந்தன், தன் அனுபவத்திற்குட்பட்ட விதத்திலே, பிராமணர் ஒருவரைக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுத வந்தமை உண்மையிலே ஒரு முற்போக்கான முன்னேற்றம் தான்.
ஜெகன்னாத குருக்களின் சங்கடமான நிலையை மேனிலைப்
படுத்துவதுடன் கதை முடிகிறது. இக்கதையிலே கூறாமற் கூறிவிடும் உத்தியை ஆசிரியர் வெற்றிகரமாகப் பயன்படுத்தி உள்ளார் எனலாம்.
சைவ நெறியை உள்ளத்தாலும், உணர்வாலும், கிரிகைகளாலும் கடைப் பிடிக்கும் குருக்கள், பெளதிக வாழ்வின் ஆஷாட பூதித்தனங்
129
களுக்கு எதிராகச் செயலற்றுப் போகும் யதார்த்தத்தைத் தான் ஆசிரியர் சோமகாந்தன் இக்கதையிலே படம் பிடிக்கிறார்.
சமயமே இன்று நிறுவன ரீதியாக்கப்பட்ட பின்னர், வெறும் சமயக் கிரியைகள், சமயத்தின் தத்துவத்தையோ, உட் கருத்தையோ புரியாதவர்களினால் சின்னாபின்னப்படுத்திச் சீரழிக்கவைப்பதை, கோயில் தர்மகர்த்தா, ஏகாம்பரம்பிள்ளையின் செயல் மூலம் காட்டுகிறார் ஆசிரியர்.
"எரியும் குண்டலத்தில் ஏகாம்பரத்தார் போத்தலுடன் சரித்து ஆகுதியாக்கிவிட்ட நெய், சீற்றங் கொண்ட அக்கினியைச் சுவாலித்தெழும் பெருந் தணலாக மாற்றி விட்டது" என்று கதாசிரியர் சோமகாந்தன் கவித்துவமாகவே எழுதி இருக்கிறார்.
ஒரு கிரேக்க துன்பீற்று நாடகத்திலே வரும் காவிய நாயகனின் வீழ்ச்சி போன்று "ஜெகன்னாத குருக்கள் திக்கித்துப் போய் விட்டார்” என்று ஆசிரியர் விபரிக்கிறார். "அம்பாளின் கர்ப்பக் கிரக விளக்கு மாதிரி ஊதுபத்தி கருகிக் கொண்டிருந்தது" என்ற வாக்கியத்துடன் கலாசாரப் பண்புகளின் கருகிய நிலையையே ஆசிரியர் காட்டி விடுகிறார்.
ஆகுதி" கதையை அடுத்து 1986இல் எழுதப்பட்ட மற்றைய கதையான 'விடியலுக்கு வருவோம். இந்தக் கதையிலும் ஒரு குருக்கள் வருகிறார்- வைதீஸ்வர ஐயர் - இவரும் வைதீகப் பிராமணர். ஆயினும் மனச்சாட்சியின் முன் சமத்துவத்தைப் பேணுபவர். வைராக்கியமுடையவர்.
அந்தக் கோயிலின் படியை அவர் விட்டிறங்கிபத்து ஆண்டுகளாகப் போகின்றன. ஆனாலும் அவரின் வைராக்கியம் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று கதாசிரியர் ஓரிடத்திலே குறிப்பிடுகிறார்.
கதாசிரியர் சோமகாந்தனின் முற்போக்குச் சிந்தனை வைதீஸ்வரனின் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
Page 70
130
அவருக்குத் தெரிந்தளவில் வேதாக்ம, சாஸ்திர, புராணங்க ளெதுவும் ஆசார சீலராக ஆலயத்துள் வந்து கும்பிடுவதை எதிர்க்கவில்லை. வழமையாக இருந்து வந்த பழமை கால தேச வர்த்தமானங்களை ஒட்டி மீறப்படுவது குற்றமுமல்ல என்று மனச்சாட்சி அவருக்கு எடுத்துச் சொன்னது.
இந்தக் கதையிலே, ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக கோயில் தர்மகர்த்தா ஒருவர் நடந்து கொள்ளும் விதம் பற்றி குறிப்பிடப்படுகிறது. அரசியல் லாபம் தீட்டக் குறைந்த சாதியர் எனக் கூறப் படுபவர்களுக்காகவும் கோயிலைத் திறந்து விடும்படி பணித்த தர்மகர்த்தா, தேர்தலில் தோல்வி கண்டதும், அடக்கப்பட்டவர்களுக்குக் கோயில் திறக்கப்படக் கூடாதென்று பின்னர் பணிக்கிறார். அர்ச்சகரோ இந்தத் திகிடுதத் தங்களுக்கெல்லாம் வளையாதவர். வைராக்கியமும் மனிதா பிமானமும் படைத்தவர். அவர் புரட்சிகரமாக நடந்து கொள்கிறார். தனது ஆலயக் குருக்கள் தொழிலை விட்டு விவசாயம் செய்யப் புறப்படுகிறார்.
முற்போக்காக நடந்துகொள்ளும் பிராமணர்களை வைத்துப் பலர் கதைகளை ஏற்கனவே தமிழ் நாட்டில் எழுதி உள்ளனர். ஜெயகாந்தன் அவர்களில் ஒருவர். பிராமணரான லா.ச. ராமாமிருதமும் அற்புதமான தொரு குறுநாவலை எழுதி இருக்கிறார். நண்பர் சோமகாந்தன் போன்றோர் நமது நாட்டிலே முற்போக்குப் பிராமணர்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.
சோமகாந்தன் 'விடியல்' என்ற இக்கதையிலே தமது முற்போக்குப் பிரதிமையை ஏற்றி வைதீஸ்வர ஐயரைப் படைத்திருக்கிறார் எனலாம். இப்படிக் கூறுவதற்குக் காரணம், அந்தப் பாத்திரம் இறுதியில் நடந்து கொள்ளும் விதம் சிறிது மிகையாக இருக்கிறது. அதாவது இயல்பாகவும் நம்பும் படியும் கதை வாசகருக்குப் பரிவர்த்தனை செய்யப்படவில்லை. சில இலட்சியப் பாத்திரங்கள் நாவலில் இடம்பெறுமளவிற்குச் சிறுகதையில் இடம்பெறுவதில்லை எனலாம். இதற்குக் காரணம், இரு
131
வடிவங்களின் வேறுபாடுதான். நாவலில் விஸ்தாரமான சித்திரிப்புக்கு இடமிருக்க, சிறுகதையிலே கவிதை போன்று உணர்ச்சி அல்லது சலனம் சட்டெனத் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.
நாக விகாரை' என்ற கதை மூலம் ஒருதலைப் பட்சமான இன வேறுபாட்டுச் சரிக்கட்டல்களை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இக்கதை 1959ஆம் ஆண்டு எழுதப்பட்டதை நினைவிலிருத்தினால் இக்கதையில் காணப்படும் ஓரிரு குறைகளைப் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். சிங்கள மக்களிடையே பேரினவாத உணர்ச்சி மேலோங்கி இருந்த காலகட்டத்தை கதை சொல்கிறது. இந்த விதத்தில் வரலாற்று நிகழ்ச்சியை அது பதிவு செய்கிறது. ஆனால் அந்தப் பேரினவாத உணர்வு 1983 ஜூலை மாதத்திற்குப் பின்பு அதே வேகத்தில் இருப்பதாகக் கூற முடியாது. உலகத்தின் கவனத்திற்குத் தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சினைகள் வந்த பின்னரும் அட்டூழியங்களின் விளைவுகள் மனதை யுறுத்தியதன் தொடர்ச்சியாகவும் பேரின மக்களின் போக்கில் இயல்பாகவே நெகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுக்க இயலாது. தவிரவும், தமிழ் மக்கள் அன்று போல் அகிம்சை வாதிகளாய் இப்பொழுது இல்லை. வன்செயல் எங்குமே தலைவிரித்தாடும் பொழுது நிதானம் தப்பி விடுகிறது. ஆனால் எழுத்தாளர்கள் என்றும் நிதானத்தைக் கைவிடப்படாது என்பது என் கட்சி.
ஆகவே, இக் கதையில் வரும் சம்பவங்களை இலட்சியச் சாயல் கொண்ட நிதர்சனக் கோவை என்று கூறி அமைதி காணும் அதே வேளையில், கதைக் கட்டுக்கோப்பு, சிக்கனம், உணர்ச்சிப் பரிமாற்றம் ஆகிய அம்சங்களில் கதை, ஓர் ஆரம்ப கால எழுத்தாளரின் ஆக்க முயற்சியைப் பறைசாற்றுகிறது எனலாம்.
1963இல் பிரசுரமான பவளக்கொடி'யை 1987இல் படிக்கும் பொழுது, இது மாதிரிக் கதைகள் பலவற்றைப் படித்திருப்பது காரணமாக, புதிய அனுபவம் பெற வாய்ப்பில்லாது போய் விடுகிறது. ஒரு நடிகை பாத்திரமாகி விட்ட லயிப்பைக் கூறும் இக்கதை அவளின் ஆசை
Page 71
132
நிராசையாகப் போன அதிர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டது. இதே கருப்பொருளை சோமகாந்தன் இப்பொழுது கதையாகக் கொள்வாராயின், நிச்சயமாக அதனை வேறு வடிவத்தில்தான் எழுதுவார் என நினைக்கிறேன்.
குளத்தங்கரை அரச மரம்' என்ற தலைப்பிலே, தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான வ. வே.சு. ஐயர் ஒரு கதை எழுதி இருந்தார். அந்த உத்தியிலே அதே தலைப்பிலே, சோமகாந்தன், 1961ஆம் ஆண்டு கதை ஒன்றை எழுதினார். புதிதாக மணம் முடித்த இருவர் இரண்டாண்டுகளுக்கு இன்பமாக இருந்து விட்டுப் பின் அழகான ஆண்பிள்ளை ஒன்றைப் பெற்றெடுக்கத் தீர்மானிப்பதைக் கதை கூறுகிறது. முதலுக்கும் முடிவுக்கும் காரணத் தொடர்பில்லாமை இருப்பது கதையின் குறைபாடு எனலாம், ஆயினும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறை இன்று வளர்ந்திருக்கும் நிலையில் அன்று வளர்ந்திருக்கவில்லை. அக்கால கட்டத்திலே, பல கதைகள், ஈழத்துச் சோமு எழுதியுள்ள இந்தக் கதைபோலவே அமைந்திருந்தன. எனவே காலச் சூழலில் இருந்து பிரித்துப் பார்க்காமல் கதையை நோக்கினால், அவசரப்பட்டு பிள்ளைகளைப் பெற வேண்டாம் என்று வரவேற்கத்தக்க கருத்து கதையில் இருப்பதை நாம் காண முடிகிறது.
இத் தொகுப்பிலே பத்திரிகைக் கதை என்று விபரிக்கப்படும் கதைகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. இங்கு பத்திரிகைக் கதை என்று நான் குறிப்பிடுவது கதைக்காகக் கதை என்ற முறையில் கதையைக் கட்டுவதும், வெறுமனே லட்சியத்தைச் செருகுவதுந்தான். உதாரணமாக தெளிவு' என்ற கதையை எடுத்துக் கொண்டால், அங்கே மணமான பெண் கணவன் இல்லாமல் தனியே நாட்டியம் பார்க்கச் சென்று அசம்பாவிதமான அனுபவத்துக்கு உட்பட்டு, பின் "அத்தான்! உங்களை விட்டு விட்டு நான் ஒருநாளும் போக மாட்டேன்" என்று உணர்ச்சிவசப்படுகிறாள். கணவன் தினமும் தாமதமாய் வீடு திரும்புவது ஓவர்டைம் 'கொடுப்பனவுக்காகத்தான் என்ற ஒரு திகைப்புச் செய்தியும் கதையில் வருகிறது. பெண் விடுதலை பேசப்படும் இந்நாட்களில் இக்கதையில் வரும் பெண் நடந்து கொண்ட விதம் இருபது
33
வருடங்களுக்கு முன்தான் பொருத்தமுடையதாக இருக்கும். இந்த நாட்களில் உழைக்கும் பெண்கள் அலுவலகத்திலும் வீட்டிலுமாக 16 மணித்தியாலங்கள் உழைக்கிறார்கள். அவர்கள் கூடித்தான் வெளியே செல்ல வெண்டும் என்றில்லை அந்த நாட்களில் கணவன்மார் தான், அலுவலகத்தில் 'மாரடித்துவிட்டுப் பின்னர் தமது குடும்பத்தினருடன் வெளியே போய் வர வேண்டிய நிலையும் இருந்தது.
சுருக்கமாகச் சொன்னால் 'தெளிவு' என்ற கதை 1960களில் நமது எழுத்தாளர்கள் கொண்டிருந்த பார்வையைக் காட்டுகிறது.
அதே அறுபதுகளில் மனப்பாம்பு' போன்ற அருமையான கதைகளையும் நமது எழுத்தாளர்கள் படைத்தனர். சோமகாந்தனுக்குச் சொற்கள் கீழ்ப்படிகின்றன. விறுவிறுப்பான, அதே சமயம் இறுக்கமான நடையிலே நல்லதொரு படப்பிடிப்பை ஆசிரியர் இந்தக் கதையிலே நிகழ்த்தி இருக்கிறார்.
இந்த வருணனையைப் பாருங்கள்:
"தேங்காயத் துருவல் போலச் சொர சொரக்கும் ஒட்டிய கன்னங்களுக்குப் பவுடர் பூசி, உதட்டுக்குச் சாயம் தடவி எடுப்பிழந்த அங்கங்களை ஏறத் தூக்கி, எழில் கூட்டி அப்போது தான் மலர்ந்த குமரிகளென ஒயில் காட்டி நகரவீதிகளில் வரும் கன்னிகைகள் போல அந்த விளக்குகள் தெருவுக்குப் பகட்டுச் செய்தன."
இக் கதையிலே மணம் முடித்து மனைவியுடன் வாழ முடியாத நிலையிலிருக்கும் ஓர் இளம் அரசாங்க உத்தியோகத் தனது தர்மசங்கடமான அனுபவம் ஒன்றைக் கதை கூறுகிறது. அதே வேளையில் பயன் மதிப்புகள், சலனங்கள், வாழும் சூழல், பகட்டு போன்றவற்றின் மோதல்களுக்கிடையில் அவன் நிதானம் அடைவதும் கதையில் கூறப்படுகிறது.
'அது வேறு உலகம்' என்ற கதையில் உளவியல் ரீதியாக ஒரு பிரச்சினை அணுகப்படுவதைக் காண்கிறோம்.
Page 72
134
"வெறுமனே தூய்மைவாதம் பேசி, மற்றவர்கள் வாழ்க்கையில் நுழைந்து அவர்களைப் பற்றிய ரிஷிமூலம், நதிமூலம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது அவரது சமூகம். கணேஷ் திருந்திக் கொள்ள முடியாதபடி உண்மையில் கெட்டுப் போனவன் தானா என்ற சந்தேகம் அவர் மனதில் நுழைந்து, குழப்பத்தை உண்டாக்கிவிட்டது" என்று ஆசிரியர் எழுதுகிறார்.
1959 ஆம் ஆண்டிலே, சோமகாந்தன் எழுதிய 'வாத்தியம் பேசவில்லை' என்ற கதை அற்புதமான மனிதாபிமான கதை. ஆசிரியரின் முற்போக்கான பார்வையை அன்றே காணமுடிகிறது. அந்த வாத்தியார் பாத்திரம் அலாதியாக உருவம் பெற்றிருக்கிறது.
காசுக்காக அல்ல' என்ற கதையிலே, கயமைத் தன்மையுடைய ஒருவர், தாம் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மூலம், எவ்வாறு நெகிழ்ந்து விடுகிறார் என்பதை கச்சிதமாகக்காட்டி விடுகிறார் ஆசிரியர்.
கடைசியாக, நிலவோ நெருப்போ' என்ற முதற் கதையும் குறிப்பிடத்தக்க படைப்பு எனலாம்.
'பசி வந்து விடுமே என்ற பயத்தில் கட்டுண்டு அவர்கள் சேர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் பயத்துக்குப் பயந்து நாட்டாண்மைத் தரகர் நாடியொடிந்து நிற்கிறார்" என்று இக்கதை முடித்திருக்கும் தோரணை முதிர்ச்சி அனுபவமிக்க ஓர் எழுத்தாளனுக்கே வரக்கூடியது. இத்தனைக்கும் இக்கதை 1962இல் எழுதப்பட்டது.
சோமகாந்தனின் ஆகுதி சிறுகதைத் தொகுதி வந்திருக்கா விட்டால், அவருடைய படைப்பிலக்கிய ஆற்றலை இன்னும் வாசகர்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கும்.
(வீரகேசரி வாரவெளியீடு . 10 - 02 - 1987)
135
உமா வரதராஜன்
உள் மன யாத்திரை
ம்ேபாறை மாவட்டத்தைச் சேர்ந்த அற்புதமான எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஓர் இளைஞர் உடையப்பா மாணிக்கம் வரதராஜன். உமா வரதராஜன் என்ற இவர் சிறுகதை, விமர்சனம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். 'வியூகம்' என்ற புதுவிதமான தோற்றங் கொண்ட சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
உமா வரதராஜன் என்ற பெயரிலே இவர் எழுதிய சிறுகதைகள் பல சிற்றேடுகளில் வெளிவந்துள்ளன. 1976 முதல் 1988 வரை இவர் எழுதியுள்ள 13 கதைகளின் தொகுப்பு 'உள்மன யாத்திரை'.
பிரபல தமிழ்நாட்டு ஓவியர் கே.எம். ஆதிமூலம் அவர்களின் முன்பக்கப் பின்பக்க ஓவியங்கள் நூலின் கவர்ச்சிக்கு அழகூட்டுகின்றன. அட்டையிலே முகந்தெரியாத பெண்ணொருத்தியின் உருவக்கோடுகளும், நெஞ்சுறுதி, அடக்கம் போன்றவற்றைப் புலப்படுத்துவனபோல அவள் நிற்கும் தோற்றமும் அவள் ஆளுமையை வெளிப்படுத்து வனவாக இருக்கின்றன. பின் அட்டையிலே ஆசிரியரின் தோற்றம்போலும் நிழலும் ஒளியும் பிணையும் சித்திரம்.
உமா வரதராஜனின் கலாசாரப் பின்னணி கலப்புச் சார்ந்தது. தமிழ்நாடும், கிழக்கிலங்கையும் அவர் பண்பாட்டின் பின்னணிக் கோலங்கள். ஆயினும் இலங்கையராகவே அதுவும் போலித் தன்மை சற்றேனும்
Page 73
136
இல்லாத, நிஜத்தைத் தரிசிக்க முற்படும் ஓர் தூயகலைஞராகவே உமா வரதராஜன் தன்னை இனங்காட்டிக் கொள்கிறார். அந்தவிதத்திலே இவர் எழுதித்தில் உண்மை தெறிக்கிறது. அதுகாரணமாக சமூகப்பணி, உள்ளடக்கக் கதைப் பின்னல், கனதிக்குறைவு போன்ற குறைபாடுகளும் பாரதூரமானவை என்று சொல்லுமளவிற்கில்லை.
இவருடைய கதைகளைப் படிக்கும் பொழுது ஒரு தனியான சுகம் ஏற்படுகிறது. இந்தத் தனியான சுவை இவருடைய எழுத்தாற்றலினால் உருவாகிறது. சொற்களின் மகத்துவத்தை ஒரு கவிஞனுக்குரிய செட்டான ஆக்கத் திறனை உணர்ந்தவராக உமா வரதராஜன் இருப்பதனால், இவர் கதைகளில் ஒளி உண்டாகிறது. உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையிலும் ஒளி உண்டாம் என்பதுபோல இவர் கதைகள் கலாரசனையை ஆழமாக்குகின்றன.
உமா வரதாஜன் தமது கதைகளை 'உள்மனயாத்திரை' என்றே
குறிப்பிடுகிறார். அதாவது இவருடைய கதைகள் பெரும்பாலும் புறச்சூழல்
விவகாரங்களை விட, மனது சம்பந்தப்பட்டவையாக இருப்பதைக் காண்கிறோம்.
நாட்டின் பெரும்பாலான எழுத்தாளர்கள் சமூக யதார்த்த்தத்தைத் தழுவ, ஓரிருவர் உளவியல் யதார்த்தையும் தழுவிச் சென்றுள்ளனர். அந்த விதத்திலே, சட்டநாதன், கோகிலா மகேந்திரன், கவிதா, உமா வரதராஜன் இன்னும் ஓரிருவர் போன்றவர்கள் வித்தியாசமாக எழுதுபவர்கள். இவர்களுள்ளும் உமா வரதராஜன் கதைகளைப் படிக்கும்பொழுது, தமிழ்நாட்டு சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன் போன்றவர்களின் கதைகளைப் படிக்கும் பொழுது ஏற்படும் பரவச உணர்ச்சி எனக்கு ஏற்படுவதுண்டு.
உமா வரதராஜனின் கதைகள் உண்மைபோல் சுடுவதற்குக் காரணம், அவை உண்மை வடிவமாக அமைவதுதான். அக்கதைகள் பெரும்பாலும் இவருடைய சொந்தக் கதைகளாக இருப்பதனால்,
137
எழுத்தில் உண்மை ததும்பி நிற்கிறது.தனது சொந்த அனுபவங்களைத்தான் இவர் உணர்ச்சி கொந்தளிக்கும் சொல் ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார். இவருடைய கதைகள் ஒவ்வொன்றுமே ஒரு தன்னுணர்ச்சிப் பாடல் எனலாம். ஒரு நல்ல சிறுகதையை ஒரு நல்ல லிரிக்'குடன் ஒப்பிடுவர். அவ்விதம் பார்க்கும் பொழுது உமா வரதராஜனின் கதைகளை லிரிக்ஸ்' எனலாம். 'லிரிக்ஸ்' என்றால் தன்னுணர்ச்சிப் பாடல்கள்.
உமா வரதராஜனுக்கு சினிமா பிரக்ஞை அதிகம் என்று தான் கூறவேண்டும். இவருடைய கதைகளை உருவ ரீதியாகப் பகுத்துப் பார்ப்போமாயின் இவற்றிலே ப்ரேம், ஷொட், சீன், சீக்குவென்ஸ், எப்பிஸோட் என்றவாறு திரைப்பட உறுதிப் பொருட்களை இனங்காண முடியம். எனவே உமா வரதராஜனின் கதைகளைக் குறும்படங்களாக அல்லது குறுந்தொலைக்காட்சி நாடகங்களாக நாம் காணமுடியும்.
'உள்மன யாத்திரை' என்ற இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் கவிஞரும், விமர்சகரும், மொழியியல்துறை அறிஞருமான எம்.ஏ. நுஃமான். மார்க்சிய விமர்சனத்திலே அதிக நாட்டங் கொண்ட நுஃமான், மார்க்சியமே இல்லாத வரதராஜனின் கதைகள் பற்றி கூறியிருக்கும் சில வரிகள் இங்கும் குறிப்பிடத்தக்கவை;
"ஒரு நுண் உணர்வு மிக்க வாசகனைப் பொறுத்தவரை படைப்பாளியின் மனோபாவத்தைவிட படைப்பு வெளிப்படுத்தும் வாழ்க்கை உண்மைகள் அல்லது சமூக யதார்த்தம், அது ஏற்படுத்தும் கலைப்பயிற்சி என்பவையே முக்கியமானவையாகும். உமா வரதராஜனின் படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும், அவை ஏற்படுத்தும் கலைப் பாதிப்பும் ஆழமானது. சமூகத்தில் ஊடுருவியுள்ள பொய்மையை போலித்தனங்களை, முரண்களை அவை அம்பலப்படுத்துகின்றன. அவற்றோடு ஒத்து மறுக்கும், அவற்றுக்கிடையே அகப்பட்டு நசுங்கும் மனித உள்ளத்தின் அவஸ்தையை வாசகன் மனதிலும் தொற்ற வைக்கின்றன. இதுவே இவரது கலையின் வெற்றியாகும்." நுஃமான் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
Page 74
138
உமா வரதராஜனின் கதைகள் எந்தப் பத்திரிகைகளில் வெளிவந்தவை என்பதிலிருந்தே, இவரது ஆளுமை எத்தகையதாய் இருக்கும் என்பதை வாசகர்கள் ஒருவாறு ஊகிக்க முடியும். கணையாழி, கால், கீற்று, களம் ஆகிய சிற்றேடுகளிலும், வீரகேசரியிலும் இவர் கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய கதைத் தலைப்புகள் கூட கவித்துவமானவை தான்.
இக் கதைகள் எல்லாமே படிப்பதற்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருவன. ஆயினும் படிப்பவரின் சொந்த அனுபவ வீச்சுக்கு ஏற்ப கதைகளிலிருந்து பெறப்படும் அனுபவப் பரிவர்த்தனையின் ஆழம் அமையும். என்னைப் பொறுத்தவரை உமா வரதராஜனின் கதைகள் அத்தனை ஆழமானவை என்று கூற முடியாவிட்டாலும், அதாவது புத்தம் புதுவிதமான அனுபவமாக இல்லாவிட்டாலும்-இவர் கையாளும் சொற்கள் நிச்சயமாக புதுப்புனைவானவை எனக் கூறுவேன்.
முரசொலி 10 - 08 - 1988)
139
எம். ஐ. எஸ் முஸம்மில்
பிரார்த்தனை
பீவிதை வேறு, செய்யுள் வேறு, கதை வேறு, சிறுகதை வேறு. சிறுகதை என்றால் சிறிய கதை அல்ல. சிறுகதை' தன்னுணர்ச்சிப் பாடல் போன்ற ஓர் இலக்கிய வடிவம் என்பர். இந்த நூற்றாண்டிலே தமிழுக்கு அறிமுகமாகி நன்கு வளர்ச்சி பெற்று வரும் ஓர் இலக்கிய வகை சிறுகதை.
சிறுகதை என்றால் என்ன, தமிழ்ச் சிறுகதைகள் எத்தகையவை போன்ற ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் ஏராளமாகவே தமிழில் வெளிவந்துள்ளன. இலக்கிய மாணவரும், எழுத்தாளரும் இவற்றைத் தேடிப் படித்தறிந்து வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் 21ஆம் நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நவீன வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் தகவல்/தரகுப் பரிவர்த்தனை வியத்தகு வகையில் செயற்படுகிறது. இந்த நிலையிலே பின்னணி அறிவை விசாலப்படுத்த வேண்டியது எழுத்தாளனின் தேவையாகிறது. வரலாற்று, நிதர்சனப் பரிச்சயம் எதிர்காலப் போக்கை நிர்ணயஞ் செய்தல் ஆகியன எழுத்தாளனிடமும் இருக்க வேண்டிய பண்புகளாகும். காலத்தின் தேவைக்கேற்ப நமது அணுகு முறைகளை விசாலப்படுத்த வேண்டும். உள்ளத்தாலும், அறிவாலும் நவீன முறைகளில் எழுத்தாளனும் பரிச்சயங் கொண்டிருத்தல் இன்றியமையாதது.
Page 75
140
எழுத்தாளன், வாசகன் இருவருமே இவ்வாறு இற்றைவரையும் ஏற்பட்டுள்ள மாறுதல்களில் பரிச்சயங் கொண்டிருப்பதனால், எழுத்தாளரிடமிருந்து சிறப்பான படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
புத்தனுபவம், புத்தறிவு, கூருணர்ச்சித் தன்மை, மெருகுற வாய்ப்பு போன்றவற்றை ஒவ்வொரு புதியபடைப்பிலுமிருந்து வாசகன் எதிர்பார்க்கிறான். பயிற்சியும், தேர்ச்சியும் பெற்ற வாசகனே இவ்வாறு எதிர்பார்க்கின்றான்.
நன்கு பயிற்சிபெற்ற எழுத்தாளன்,நன்கு பயிற்சி பெற்ற வாசகனுக்காக எழுதுகிறான். சாதாரண வாசகனுக்காக ஆரம்ப எழுத்தாளன் எழுதுகிறான் எனச் சமாதானப்படுத்திக்கொண்டாலும் ஓர் இலக்கிய வகையை படைப்பதிலும் எடை போடுவதிலும் முதிர்ச்சி எதிர்பார்பார்க்கப்படுகிறது.
இந்தப் பீடிகையுடன், நண்பர் எம்.ஐ.எம். முஸம்மில் எழுதிய 11 கதைகளையும் படித்துப் பார்த்தேன். 1977க்கும் 1981க்குமிடையே இக்கதைகளை இவர் எழுதியிருக்கிறார். இவை பத்திரிகைகளிலும், வானொலியிலும் வெளியானவை. இந்தச் சாதனங்களின் தேவைக்கேற்ப பத்திரிகை ரகக் கதைகளாகவே இவர் எழுதியிருக்கிறார். எனவே இக் கதைகள் எழுதப்பட்ட காலம், களம் ஆகியவற்றை மனத்திலிருத்தியே இக்கதைகளை நாம் ஆராய வேண்டும்.
நண்பர் முஸம்மிலின் கதைகளில் அருமையான கருத்துக்கள் பொதிந்துள்ளன. 1981ஆம் ஆண்டிலே இவர் எழுதிய அவள் ஏன் போகிறாள்?' என்ற கதை பெருமளவுக்குச் சமகால அனுபவத்தைப் பரிவர்த்தனை" செய்கிறது எனலாம்.
எழுத்தாளனுக்கு அனுபவம் ஓர் அத்தியாவசியமான தேவை. கிராமங்களிலே வாழும் ஓர் எழுத்தாளன், தனது சுற்றாடல் வாழ்க்கையைச் சித்தரிப்பது என்றால், ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தனது அனுபவத்தைப் பெற வேண்டும். தவிரவும் கிராமியப்புற வாழ்க்கை,
, 141
நகர்ப்புற வாழ்க்கை போன்று அவ்வளவு சிக்கலானதல்ல. நண்பர் முஸம்மில் தமது கதைகளின் சூழலையும், பாத்திரங்களின் தேர்வையும் பெரும்பாலும் கிராமத்தையொட்டியே வைத்துள்ளார்.
முஸம்மிலின் கதைகள் சமுதாயச் சீர்கேடுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. சீதனம் வாங்கும் பழக்கம், கன்னி கழியாமை பொய்க்காதல், போலி அந்தஸ்து சாதியில் எளியவராயினும் மனிதத்துவம் கொண்ட மாந்தரை இழிவு படுத்துதல், வரட்டுக்கெளரவம் நன்றி மறத்தல், ஆற்றாமை, பொறாமை போன்றவற்றை ஆசிரியர் வெறுக்கிறார். இந்த வெறுப்பை வெளிப்படுத்தும் விதத்திலேயே இவருடைய கதைகள் கட்டப்பட்டுள்ளன. கட்டமைப்பு இன்னுஞ் செம்மையாகவும், நுணுக்கமாகவும், அழகியற்றன்மை கொண்டதாகவும் அமைந்திருந்தால் பகுத்தாயும் வாசகர்களை மேலும் பரவசப்படுத்தியிருக்கும்.
வாசகர்கள் பலதரப்பட்டவர்கள் என்பதையும் நாம் இங்கு மறக்கக் கூடாது. சாதாரண வாசகர்கள் - அதாவது விசேஷ கலை,இலக்கியப் பயிற்சி குன்றியவர்கள் - கதையில் வரும் கருத்து நன்றாக அமைந்திருந்தால் நிச்சயம் அதனை வரவேற்பர். அதேசமயம், எளிமையான முறையிலே, நேரிடையாகக் கதை சொல்லப்படுவதையே விரும்புவர். பத்திரிகைக் கதைகள் பெரும்பாலும் பூரண வடிவம் பெறாதவையாகவும், இலக்கிய நயங் குன்றியதாகவும் அமைகின்ற போதிலும், வாசகனுக்குச் சிரமந் தராது துலாம்பரமாக, விளக்கமாக, அறநெறிகளை அறிமுகப்படுத்துபவை. அந்த விதத்திலே இக்கதைகள் மாணவருக்குத்தான் பெரிதும் பயனளிக்கிறது எனலாம்.
ஆக, எழுத்தாளன் எத்தகைய வாசகர்களுக்காக எழுதுகிறான் என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும். நண்பர் முஸம்மில் தானுணர்ந்த, அவதானித்த சில வாழ்க்கைப் போக்குகளைச் சாதாரண வாசகனுக்குச் சொல்ல விரும்பி, பத்திரிகை, வானொலி போன்ற ஊடகங்களின் தேவைக்கேற்பத் தமது கதைகளை எழுதியிருக்கிறார்.
Page 76
142
'வைராக்கியம்', 'புதிய உலகை நோக்கி', 'சோதனைமேல் சோதனை'அவர்கள் பலிக்கடாக்கள் அல்ல,'அவள் ஏன் போகிறாள்?, ஆகிய கதைகள் மூலம் எல்லாவிதமான வாசகர்களையும் அவர் சிந்திக்க வைக்கிறார்.
இத்தொகுதியைத் தந்துள்ள நண்பர் எம்.ஐ.எம். முஸம்மில் ஓர் இளைஞர். இவரை உற்சாகப்படுத்திவதும், வழிகாட்டுவதும் நமது கடன். எழுத, எழுத எழுத்துக்கலையின் நுட்பங்களை இவர் எளிதில் கற்றுத் தேர்ந்துவிடுவார். இவருடைய முதல் முயற்சியே வரவேற்கத்தக்கதாய் இருக்கும் பொழுது ஏனைய படைப்புகளை இவர் பட்டை தீட்டப்பட்ட கலை வடிவங்களாக உருவாக்குவார் என்பதில் ஐயமும் வேண்டுமோ!
(தொகுப்பு முன்னுரை : 20 - 08 - 1988)
*
43
எஸ். எச். நிஹற்மத்
GTI falatāsTani Gimfo
விஸ். எச். நிஹ்மத் எழுதிய 12 சிறு கதைகளின் தொகுப்பு 'எரிகொள்ளி.1981 முதல் 1988 வரை பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, மல்லிகை, சிரித்திரன், களம், சஞ்சீவி, ஆனந்த விகடன் ஆகிய பத்திரிகைகளில் இவை பிரசுரிக்கப்பட்டன.
இப்பத்திரிகைகளின் தேவைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாவை. அத்தேவைகள் எவ்வாறு வித்தியாசப்படுகின்றன என்பதை நிஹ்மத் நுட்பமாகப் புரிந்து கொண்டு உரிய பத்திரிகைக்கு உரிய கதையை எழுதியிருக்கிறார் எனலாம். வெற்றியும் பெற்றிருக்கிறார். இது பாராட்டத்தக்க அம்சம்.
ஓர் எழுத்தாளன் தனது படைப்புகள் பரவலாகப் படிக்கப்பட வேண்டும் என்று விரும்புவது இயல்பே. எனவே, தனது சிந்தனையை, கற்பனையை, நோக்கை, எழுத்து வன்மையை வெவ்வேறு மட்டத்திலுள்ள வாசகர்களும் படிக்க வேண்டும் என்று கருதுவதில் தவறில்லை. தனது நோக்கத்தை நிறைவேற்ற ஆசிரியர் எந்தவிதமான உத்தியையும் பயன்படுத்தலாம்.
'எரி கொள்ளி' என்ற உருவகமும் படிமமும் கதைத் தலைப்பாக அமைந்தமையையும் பாராட்ட வேண்டும். வழமையாக எரி நட்சத்திரம் போன்ற பிரயோகங்கள் தலைப்பாக அமைவதுண்டு. 'கொள்ளி' என்ற
Page 77
T44
வார்த்தை இலங்கையில் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பாவித்து நமது பண்பாட்டுக் கோலங்களில் ஒன்றை உருவகமாக ஆசிரியர் சித்திருத்திருக்கிறார்.
இத்தொகுதிக்கு ஆசிவனேசச்செல்வன் முன்னுரை எழுதியிருக் கிறார். "மனித மனங்களினுாடே இழையோடும் நுணுக்கமான சங்கதிகளைப் பாத்திரங்களினுாடாகப் படம் பிடித்துக் காட்டும் ஆற்றல் கைவந்த ஒருவனே எழுத்தாளனாகிறான்" என்ற முன்னுரை ஆசிரியரின் கூற்றை மெய்ப்பிப்பவை நிஹ்மத்தின் கதைகள்.
அடுத்து, இரண்டு விஷயங்கள் பாராட்டப்பட வேண்டியவை. முதலாவதாக ஆசிரியர் விஞ்ஞான ஆசிரியராக இருப்பதனால் சிந்தாமல் தவறாமல் வார்த்தைகளின் முக்கியத்துவம் கருதிச் சிக்கனமாக எழுதியிருக்கிறார். இது கவிஞனுக்கும், சிறுகதை எழுத்தாளனுக்கும் முக்கியமான தேவைகள். இரண்டாவதாக ஆசிரியரின் சுய நம்பிக்கையும் சுய உற்சாக மூட்டலும் வர வேற்கத்தக்கன.
இதயம் திறந்து' என்ற-பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்தும் உடன்பாடானது.
"பிரச்சினைகளை மட்டுமே சொல்வதும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை வெளிப்படையாகச் சொல்லி விடுவதும் நல்ல சிறு கதைகளுக்குரிய பண்புகள் அல்ல என்று நான் கருதுவதனால் எனது சிறுகதைகள் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி அவற்றுக்குரிய தீர்வினை மறைமுகமாகவே சொல்கின்றன. இந்தச் சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் சாக்கடைப் பிரச்சினைகளுக்குரிய பூக்கடைத் தீர்வுகளை எனது கதையில் வருகின்ற ஏதாவது பாத்திரத்தினுாடாகச் சொல்லிவிடுவதில் நான் மிகவும் கவனமாய் இருக்கிறேன்" என்று நிஹ்மத் கூறுகிறார். இவருடைய கதைகளில் இவர் சொன்னதைச் செய்தும் விடுகிறார்.
45
இனி இவருடைய கதைகள் பற்றிச் சுருக்கமான சில குறிப்புகள். முதலில் 'ஆனந்தவிகடனில் வெளிவந்த இரண்டு கதைகளையும் பார்ப்போம்.
ஒரு கணவன்
ஒரு மனைவி
ஒரு டைரி
ஒரு சுவாரஸ்யமான கதை மாத்திரமல்ல நல்ல நோக்கத்தை நாசூக்காகத் தெரிவிக்கும் விதமும் ரசிக்கத் தக்கது. சின்னச் சின்ன வாக்கியங்கள் கவித்துவமாகத் தெரிவிக்கும் பாங்கு; உதாரணம் - 'ஒரு வெறியனின் பசிக்கு என் புனிதம் இரையானது ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். தாம்பத்திய உறவை நம்பிக்கை வலுவூட்டும் விதத்தில் எழுதியிருப்பதும் பாராட்டத் தக்கது.
'ஆனந்த விகடனில் வெளியாகிய மற்றொரு கதையான சரசுவுக்கு ஒரு சவுதிக் கடிதம்' ஓர் உருக்கமான கதை. நாமே சவூதிக்குப் போய்க் ‘ காட்சியை நேரில் காண்பது போன்ற பிரமையைக் கதையில் கொண்டு வருகிறார். அத்துணை லாவகம் அவருடைய எழுத்து நடையில், சின்னச் சின்ன வாக்கியங்கள். சித்திரத்தைச் சிக்கனமாகச் சொற்களில் வடிக்கும் பாங்கு ஆகியவை உற்சாகப் படுத்தப்படல் வேண்டும். நவீன எழுத்துக்கு நல்ல உதாரணம்.
திசைமாறும் ஓடங்கள்' என்ற கதையில் வரும் வர்ணனைகள் ரசிக்கும்படியாய் இருக்கின்றன. உதாரணம்.
"வெண்கலத் தட்டில் வெள்ளிக் கரண்டியால் தட்டப்பட்டது போன்ற அந்தக் குரலின் திடகாத்திரமான இனிமையில் மயங்கிய சபையோர் சடுதியில் மெளனமாயினர்." திடகாத்திரமான' என்ற சொல் எவ்வளவு புதுமையாய் இந்த இடத்தில் வந்து அமர்கிறது. கெட்டித்தனந்தான்.
Page 78
146
இந்தக் கதை சிறிது நீண்டு விட்டது. இறுக்கம் தளர்ந்து விட்டது. கதையில் பொதிந்துள்ள நையாண்டி புரிகிறது. ஆயினும் கருத்தளவில் வரவேற்கத்தக்க கதையாக எனக்குப் படவில்லை. வாழ்க்கையின் யதார்த்த நிலை இலட்சியத்தை மழுங்கடிக்கப் பார்க்கிறது என்ற தொனியில் கதையை ஆசிரியர் எழுதியிருந்தாலும் பெண்ணிலை வாதிகளின் எதிர்ப்புக்கு இக் கதை உட்படும் என்று தான் நினைக்கிறேன்.
'விதி விரட்டியபோது' என்ற கதையையும் ஆசிரியர் இறுக்கமாக எழுதியிருக்கலாம். கதைக் கருவும் புதுமையானது என்று சொல்வதற்கில்லை. கதை முடிவும் வரவேற்கத்தக்கதாய் இல்லை என்பது எனது அபிப்பிராயம். எனது அபிப்பிராயம் என்பதற்காக ஆசிரியர் கொண்டுள்ள பார்வை பிழை என்றோ எழுதிய முறை பிழையன்றோ அர்த்தமாகாது. இந்தக் கதையிலும் சூழல் தனி மனித முடிவு எடுக்கத் தடங்கலாய் அமைகிறது என்ற உண்மை புலப்படுகிறது.
நதிகளின் நடுவில் ஒரு முயல்' என்ற தலைப்பு மூலமே கதையின் கதாநாயகனின் இயலாமையை சூழலினால் அவன் பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தப் பொறாமை ஊழல் அரசியல் செல்வாக்கு போன்ற தீய சக்திகளுக்கு எதிராகப் போராடுவது நல்ல நோக்கமுள்ள இலட்சிய வாதிகளுக்குக் கஷ்டந்தான். ஆயினும் தோல்வியையும், வெற்றியாக மாற்றும் வண்ணம் ரவிசங்கர் தனது இடமாற்றத்தை ஏற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது.
'எரிகொள்ளி' என்ற கதையிலே எரியும் விறகுத் தடியுடன் கதாநாயகி குசினிக்குள் இருந்து வெளியேறுவதாகக் கதையை ஆசிரியர் முடித்திருக்கிறார். அது ஒரு சின்னமாகவும் படிவமாகவும் அமைவது பொருத்தமாயிருக்கிறது. ஒரு கோழை தனது வீரத்தை வீட்டில் காண்பிப்பான் என்பார்கள். அது போல இக் கதாநாயகன் தனது வீட்டில் செய்யும் அட்டகாசங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாற்போன்று கதை உணர்த்தாமல் உணர்த்துவது ரசிக்கத்தக்கது.
147
பரிதா வெளிநாடு போகிறாள்' என்ற கதையில் சூழலின் கண்
மூடித்தனமான எதிர்ப்பையும் மீறிக் கதாநாயகி துணிவுடன் நடந்து
கொள்வது வரவேற்கத் தக்கது. சில தேவைகள் என்ன காரணங்களினால் ஏற்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
அவள் ஒரு பீ.ஏ.' என்ற கதையிலும் சமூதாயச் சூழலின் தீட்சண்யமான ஒரு போக்கை எடுத்துக் காட்டிக் கதாநாயகி மீது பச்சாதாபம் கொள்ள வைத்திருக்கிறார் ஆசிரியர். இதுவும் ஒரு நல்ல கதை என்பது எனது அபிப்பிராயம்.
'ஏனோ அழுதான்' என்ற நிஹமத்தின் சமீபத்தியக் கதை மிகமிக நன்றாய் இருப்பதற்கான காரணம் உடன் நிகழ்கால 'சிஸ்டம்' எப்படி இருக்கிறது, ஊழல் எப்படி மலிந்து கிடக்கிறது, என்பதை விபரமாக எழுதியிருப்பதனால்தான். கல்வித்துறையில் இருந்து வரும் நிர்வாக ஊழல்களை நாம் அறிந்து கொள்ள இக்கதை மூலம் வாய்ப்பு ஏற்ப்ட்டிருக்கிறது.
சபலங்கள்' என்ற கதையை சுவாரஸ்யமாகவும் உள்ளார்ந்த நகைச்சுவையுடனும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆசைகள், சபலங்கள் படித்த பொறுப்புள்ளவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன என்பதைக் கிண்டலாகக் காட்டியிருக்கிறார்.
குருதிச் சடங்கு' என்ற காதற் கதையும் துன்பீற்றுக் கதைதான். சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். ஆசிரியர். படிப்பதற்குச் சுவையாக
இருக்கிறது.
இத் தொகுதியிலும் முதலாவது கதை, 'விதிக்கு ஒரு சவால் ஆக்க பூர்வமான செயலை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
சாதகமற்ற சூழலையும் சாதகமாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றலிலேதான் வீரம் விளைகிறது என்பதை இக்கதையில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
Page 79
48
இக் கதைத் தொகுப்பு மூலம் நிஹமத்தின் ஆற்றல் வெளியாயிருக்கிறது. சமுதாயத்தில் காணப்படும் அசாதாரணமான சம்பவங்களை, முரண்பாடுகளை உளவியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மேலும் நுட்பமாக ஆசிரியர் தொடர்ந்து எழுதி வரவேண்டும். மகோன்னத படைப்புகளை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம்.
(தினகரன் வாரமஞ்சரி 17 - 12 - 1989)
149
சுதாராஜ்
கொடுத்தல்
பிரசிரியர் சுதாராஜ் (எஸ். ராஜசிங்கம் ) ஏற்கனவே பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு) இளமைக் கோலங்கள் (நாவல்) ஆகிய நூல்கள் மூலம் பிரபல்யம் பெற்றவர். ஆயினும் கொடுத்தல் தொகுப்பு மூலம் இன்றைய முன்னணி ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகக் கெளரவம் பெறுகிறார் எனலாம். எப்படி? ஆக்கத்தை அல்லது படைப்பை இலக்கியமாக்குந்தன்மையை அவர் அறிந்திருப்பது தான். இந்த அருந்திறனை ஒவ்வொரு கதையிலும் அவர் வெளிக் கொணர்வதை வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர் கதைகள் மனிதனின் இக்கட்டான கட்டங்களைச் சமூகப் பின்னணியிலே நம் கண் முன் கொண்டு வந்து சலனத்தை எழுப்புகின்றன. இச் சலனத்தை எழுப்புவது தான் இலக்கியத்தின் பணி. இந்த நாட்டில் நன்மதிப்புப் பெற்ற ஒரு கலைஞனான சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் எவருமே பின்பற்ற முடியாத பளிங்குக் கற்போன்ற தனது தெளிவான நடையிலே, இக்கதையின் ஆன்மாவை (அவரே கூறுவது போன்று பண்பான உள்ளங்களின் நெகிழ்ச்சியில் கிளர்ந்தெழுந்த வடிவங்களே கலையாகும்) எடுத்துக் காட்டியிருக்கிறார். கதைகள் ஒவ்வொன்றும் அருமையானது. செக்கோவ், புதுமைப் பித்தன் கதைகளைப் படிப்பதுபோல அமைகிறது.
இக்கதைகள் பன்னிரண்டையும் ஒவ்வொன்றாக எடுத்து அலசுவது இங்கு பயன்தராது. மனித நேயம் என்பதே இவருடைய கதையின் அடிநாதம். இவர் ஒரு மின்பொறியியலாளரான படியால் அறிவியல் நோக்கிலே பிரச்சினைகளை அணுகுகிறார். தனி மனிதனான படியால்,
Page 80
150
சமூகத்தில் வேர் விட்டுள்ள ஊழல்களை அகற்றியெறிய இயலாதிருப்பதும் கதைகளில் உணர்த்தப்படுகிறது.
மேட்டுக் குடியினர், மத்திய தரத்தினர், ஒடுக்கப்பட்டவர் போன்ற வர்க்கத்தினர் பற்றி நிறையக் கதைகள் நம்மிடையே உள்ளன. ஆனல் கீழ் மத்திய தரத்தினரின் இக் கட்டான கணங்களை எழுதுபவர் குறைவு. சுதாராஜ் மாத்திரம் இவர்களைப் பற்றிய பல கதைகளைக் கலாபூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, சாரதியாக இருந்து ஓய்வுபெற்ற அந்தஸ்து குறைந்த ஆறுமுகம், மாஸ்டராக இருந்து முதியோர் இல்லத்துக்குப்போயுள்ள கிழவன், நாயிலுங்கடையனாக மாறிய கிழவன் சைவக்கடை வயித்தி ஆகியோர், உச்சத்திலிருந்து வீழ்ச்சியடைப வர்களின் பரிதாப நிலையைப் பச்சாத்தாபத்துடன் சித்திரித்து வெற்றிகாண் கிறார் சுதாராஜ். -
இப்படியான பாத்திரங்களின் மீட்சிக்கு எவ்வாறு நாம் உதவலாம் என்று எம்மை எண்ணத் தூண்டுகின்றன இக்கதைகளில் இத் தூண்டுதலே இலக்கியம் உந்து செயலுக்கு உதவும் பணியைச் செய்வதை நாம் காண்கிறோம். எந்தவிதமான வெளிக்கோஷங்களும் இல்லாமலே உள்ளார்ந்த பண்பாக பிரசாரம் அமைகிறது. வெற்றியும் பெறுகிறது. நல்ல இலக்கியங்கள் எல்லாம் கலை நயம் என்ற இந்த அம்சத்தைக் கொண்டிருப்பதனால் தான் நுாற்றாண்டு நுாற்றாண்டாக நயந்தருகின்றன.
"ஏகபத்தினி விரதம்," "ஒரு தேவதையின் குரல்," "உதிரிகள் அல்ல," "நன்றியுள்ள மிருகங்கள்," "கணிகின்ற பருவத்தில்," "பொழு துபட்டால் கிட்டாது,"திருப்பங்கள்," ஆகியன மானிட இக்கட்டுக்களை (உலகில் எங்கும் இவை நடக்கக் கூடியவை ) நேர்கொண்டு பார்க்க வைக்கின்றன.
சிங்களத்தில் வகுப்புவாதத்தையும் மீறி மனித சமூக நீதிக்கர்க குரல் எழுப்புவதையும் வர்க்கத்தால் ஒன்று பட்டவர்கள் தமிழ்/சிங்களம் என்று பார்க்காமல் மனித நேயத்தில் துடிப்பதையும், சிங்களத் தொழிலாளி குற்றுயிராகக் கிடக்கத் தனது தந்தையின் மரண வீட்டுக்குச் செல்லும்
151
மைந்தன் பயணத்தைத் தொடராமல் தொழிலாளிக்காக குரல் எழுப்புவதும்- மனித நேயத்தினால் எழும் தூய உணர்ச்சித் தூண்டுதல்கள். சுதாராஜின் பொறுப்புள்ள, மென்மையான,தூய இதயத்தையே இக்கதைகள் காட்டுகின்றன.
இவருடைய ஒவ்வொரு கதையும் மனசை உலுப்பிவிட்டாலும், 'பாதைகள் மாறினோம், நன்றியுள்ள மிருகங்கள், படுக்கை' ஆகிய கதைகளைப் படித்ததும் கண்ணீர் மல்கினேன். எவ்வளவு உருக்கமாக சுதாராஜ் எழுதுகிறார். போலியுணர்ச்சி (ஸென்டி மென்டலிஸம் ) என்று கூறவே முடியாது. கணிகின்ற பருவத்தில் என்ற வளரிளம் பருவத்தினர் அடோலஸன்ட் கதையை எவ்வளவு முதிர்ச்சித் தன்மை வாய்ந்த ஒர் உணர்வுக் கதையாகத் தீட்டுகிறார்.
நாடறிந்த நமது மூத்த சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிய மதிப்பீடு
களும். மறுமதிப்பீ டுகளும், காலத்தை ஒட்டிப் புதிய பார்வையுடன்
இன்னும் அணுகப்படவில்லை. அதுரை 1960 வரை எழுத்துலகில் புகுந்தவர்கள் கொடிகட்டிப் பறக்கவே செய்வர்.
எழுபதுகளில் சாந்தன், சட்டநாதன், கனகராசன், திருநாவுக்கரசு, புலோலியூர் க. சதாசிவம், காவலுார் ஜெகநாதன், பூங்கோதை, சுதாராஜ் முருகபூபதி (தொகுப்பு வெளியிட்டவர்களைப் பொறுத்தமட்டில்) போன்ற வர்கள் எனக்குப் பரவசத்தையே தந்துள்ளனர். எழுபதுகளில் தொகுப்பு வெளியிடாமலே நல்ல அருமையான கதைகளை எழுதிய பலர் இருக் கின்றனர்.
கொடுத்தல், அழகிய ஒரு தொகுப்புங்கூட. ரமணியின் மூவர்ண அட்டை. ஏகனின் (குணசிங்கம்) இன்றைய படிம வரை படங்கள், சுத்தமான படிப்பு 150பக்கங்கள் சுந்தரின் அருமையான அறிமுகம் இத்தனையும் புத்தகத்தின் பெறுமதியை மேலும் அதிகரிக்கின்றன. சுதாராஜ் இதுவரை புறக்கணிக்கப்பட்டுள்ள ஓர் உண்மைக் கலைஞன். அவர் புதிய முயற்சிகளை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறோம்.
(தினகரன் வாரமஞ்சரி : 26 - 02 - 1989)
★ ★责
Page 81
152
IGDITifful
தொகுப்பின் நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் தற்சமயம் ஒமான் தலைநகராகிய மஸ்கெட்டில் இயங்கும் பூரீலங்கன் ஸ்கூலில், லண்டன் உயர்தர/சாதாரணதர மாணவர்களுக்கு ஆங்கில மொழியையும், ஆங்கில இலக்கியத்தையும் கற்பித்து வருகிறார். இவர் முன்னர் மாலைதீவுத் தலைநகரான மாலேயிலுள்ள மதீஜியா ஸ்கூலிலும் இதே பாடங்களை, இதே வகுப்பு மாணவர்களுக்குப் போதித்து வெற்றி கண்டவர்.
இவர் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆங்கில சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணிபுரிகிறார்.
ஆங்கிலத்தில் இவருடைய இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. 96O)6) JuJT6).J607, Tamil writing in Sri Lanka and Aspects of culture in Sri Lanka (Le Roy Robinson in conversation with K.S.Sivakumaran)
வெகுசன ஊடகத்துறை பற்றிய ஆங்கில விரிவுரையாளராகவும் இவர் கல்விக்கூடங்களில் பணிசெய்துள்ளார். ஆங்கிலப் பத்திரிகைகள், ஏடுகள் ஆகியனவற்றில் நிறையவே எழுதிவரும் இவர், ஆங்கில மொழி வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்.
தி ஜலன்ட்' பத்திரிகையில் பண்பாடு பக்கத் தொகுப்பாசிரியராகவும், சிறப்புச் சித்திராம்சப்பகுதிகளின் இணை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் தனது பட்டப்படிப்புக்கு ஆங்கில இலக்கியத்தையும் ஒரு பாடமாகப் பயின்று சித்தி பெற்றவர்.
153
விரைவில் அமெரிக்காவில் வெளியாகவிருக்கும் 20ரி Century World Literature என்ற கலைக்களஞ்சியத்தில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி இவர் எழுதிய பொழிப்புரையும் இடம் பெறவிருக்கிறது.
அறுபதுகள் தொடக்கம், உலக கலை, இலக்கியங்கள் பற்றி ஈழத்துத் தமிழ் வாசகர்களுக்கு இவர் பல தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்.
கே. எஸ்.சிவகுமாரனின் ஆங்கில மொழி வாயிலான பங்களிப்புகள் பல தமிழ் வாசகர்கள் அறிந்திராதவையாதலால், இவ்விபரங்கள் இங்கே தரப்படுகின்றன.
கே. எஸ். சிவகுமாரன், 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆந் திகதி, மட்டக்களப்பு நகரின் புளியந்தீவில் பிறந்தவர். மறைந்த இவருடைய பெற்றோர்கள், கைலாயர் செல்லநயினார் (பிறப்பிடம் திருகோணமலை), கந்தவனம் தங்கத்திரவியம் (பிறப்பிடம் மட்டக்களப்பு). சிவகுமாரனின் தந்தை வழி, தாய் வழிப் பாட்டன்களும், பாட்டிகளும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். இவருடைய இளைய சகோதரர்களில் ஒருவர் திருக்குமாரன், 1996ல் திருவடி எய்தினார். மற்றையவர் ஞானகுமார் கொழும்பில் வசிக்கிறார்.
சிவகுமாரனின் துணைவியார், புஷ்பா சிவகுமாரன். பரீட்சைத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக விருந்து இளைப்பாறியவர். தனியார் அனைத்துலகப்பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு ரகுராம், அனந்தராம் என்ற இரு புதல்வர்கள், வெளிநாடுகளில் உயர்தொழில் புரிகின்றனர்.
கே.எஸ். சிவகுமாரன், மட்டக்களப்பு அர்ச் - மிக்கேல் கல்லூரி, அரசினர் கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி, மருதானை சென். ஜோஸப்ஸ் கல்லுாரி ஆகியனவற்றில் கல்வி கற்று, வெளிவாரி பரீட்சார்த்தியாகத் தோன்றி பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப்
Page 82
154
பட்டம் பெற்றவர். ஆங்கிலம், தமிழ், கிரேக்க/ரோமப் பண்பாடு ஆகியனவற்றைப் பாடங்களாக எடுத்துப் பட்டதாரியானார்.
தமிழ் மொழியில் இவர் எழுதுபவற்றைக் கொண்டு அறிஞர்களும், ரசிகர்களும், எழுத்தாளர்களும் இவரை ஈழத்து விமர்சகர்களில் ஒருவராகக் கருதுகின்றனர். ஆயினும் இவர் தன்னைப் பத்தி எழுத்தாளர் என்றே காரணகாரியத்துடன் கூறிக் கொள்வார்.
இவர் எழுதிய சிறுகதைகள் சிலவற்றின் தொகுப்பு இருமை என்ற பெயரில் 1997ல் வெளியாகியது. இவர் கவிதைகளும் எழுதியிருக்கிறார்.
Page 83
Page 84
تصا
ཇ་ み
பே
நா
6T6
LD
பிற
Lice
"g நீங் (3u
மதிப் புை
எந்த ஒரு ே
༄ད་
།ད།
བ།
- a.
ཕ༣་
-
ཕ༣་
سمصیبر
அந்நூல்களை வா
Yi,
ملر
செய்துள்ளீர்கள்.
தொல்காப்பியர் தொனிக்கே
தமிழர் வாழ்வும் வழிபாடும் என்ற நு
மதிப்புரைகள்
།
། ܕܗܘ ཕ༣་ ィー二
மேற்கோள் காட்டியிருப்பது கட்டுை
།ཚོ་
பத்தி விமரிசனம் , சொல்லாக்கங்களைத் தெளிவு படு
தெளிவாகவும் உள்ளது. குறிப்பாக
உளவியல் இலக்கியத் திறனாய்
என்னும் உண்மை அக் கட்டுரையில்
சிறப்பாக உள்ளன. இவை அனைத் தங்கள் நூலுக்குத் திறனாய்வு வ என்று உறுதியாக நம்புகின்றேன்.
حمير
YA اگر ح ہX
艺/と、
*-\必- ·
て- -----;\, !r r r , , ,て『『 でくさく、?〜|-... ~~く
零。 کلسیت
(,
' حلالی
(,
புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் ராசிரியராக விளங்கிய அ. பாண்டுரங்கன் லாசிரியரின் திறனாய்வுப்பார்வைகள் iற நாலைப் பற்றி 10-11-1996ல் எழுதிய ப்புரை தினகரன் வாரமஞ்சரியில் சுரமாகியிருந்தது. அதிலிருந்து சில திகள்:
றனாய்வின் அடிப்படை அம்சங்களை கள் விளக்கியிருக்கும் பாங்கு புலமை ாடும் - அதே வேளையில் எலியட்டையும், எஸ்ராபவுண்டையும் ரையின் ஆழத்துக்குச் சான்றளிக்கின்றது. ர, திறனாய்வு போன்ற கலைச் த்தியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. < ய்வு குறித்து நன்றாக விமரிசனம் - "
கொள்கையும் முழுமையானது அன்று 7 தெளிவுபடச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . ...
ாட்பாடு, தமிழியற் சிந்தனை, பண்டைத் ால்கள் குறித்துத் தாங்கள் எழுதியுள்ள T. " சகர்கள் படிக்கத் தூண்டும் வகையில் துக்கும் தங்களைப் பாராட்டுகின்றேன். ரிசையில் நல்ல வரவேற்பு இருக்கும்
し*つ。
一ー、- い。い*ー ¬. ܡ
r .ܚܣܝܢܐ ' "مہ سہی
マ「ミ>ーrtー。 - - - عما ۹ ہے ".*^{^۔ عزا ۹- عی
ܡ ܢ ܕ ܕ ܢ t*む ཕ༣་ ཕ༣། * ر* ༄ད་ ܣܬ ཕ༣། : من( エ〈、トー・ダー、 一* ܪ ܐ ۔۔؟--سی 士 ずに ܫܡܐ y ーシー ! - ལ་༽ ) ༧ 干しない <۔سی۔سی۔بی۔سی۔ 「うしォ二ーャうしォつ、こ°- ر' ؟ کہہ \} لکھ'
.C = ཕ༣། ༣ < کہ--- حیح" کلیہ--
k سے~-صر حصہ سمعہ ۔ یہ ہر ص, ܕܝܼܠ:Tیہ