கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நம் முன்னோர்

Page 1
blf U.
முது வங்காவின் கடந்த
மற்றும் மு:
Աpgsւում5 մմւ 3:Հiմլրունքն
Tit LS.
Ti ri
| ס
கூறி
ՃՅոshia: (Գոսsսուքս
 

ால சோனாக மய ஸ்லிம்கள்
பின் ஹாஜி எபென்டி
ம் ஸாஹிம்
S S S S

Page 2

நம் முன்னுேர்
றி லங்காவின் கடந்த கால சோனகர், மலாயர்
முஸ்லிம்கள்) ól சிம்பு தமிழ்ச்: 2. ് dorf)
夢7cm)。 9 முகம்ம کھیل
து ஸ்மீர் பின் ஹாஜி
இஸ்மாயில் எபெண்டி
தொகுப்பு
எம். வ,ே எம். ஸாஹிர் (வாயிர்)
23S4.
சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்
O. S. M.A. 6öksel ER 6-3, ANNYNNALZAWA FAD, GANDPASS
co) შეწ8ნ 2 61400

Page 3
*பதிப்பு 1979
த டயமண்ட் பிரிண்டர்ஸ், கொமம்ப-3.
 

இதனுள் அடங்கும் யூரீ லங்காவின் கடந்த கால சோனகர், மலாயர், மற்றும் முஸ்லிம்கள் சிலர் பற்றிய சுருக்கக் குறிப்புக் கள், முகம்மது ஸ்மீர் பின் ஹாஜி இஸ்மாயில் எபெண்டி அவர் களின் ஏறக்குறைய ஐம்பதாண்டு முயற்சியிருல் சேகரிக்கப்பட்ட ஒன்ருகும். பழைய பதிவுகளை ஆராய்ந்தும் வேறு விதத்தில் சிரமப்பட்டும் அவர் இவ்விவரங்களைச் சேகரித்திராவிட்டால், அவற்றில் அனேகம் எம்மத்தியிலிருந்து மறைந்து போயிருக் கும். அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளைத் தொகுத்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளிக்கின்றேம்,

Page 4

:
5
10.
II. 12. 13.
4.
5.
6.
丑7。
8.
9.
உள்ளே
பேருவலை பெரிய முதலி மரைக்கார் அகமது லெப்பை சின்னலெப்பை மரிக்கார் மூரிஷ் வைத்தியர் சேகாதி மரிக்கார் காஸிம் லெப்பை மரிக்கார் முதலியார் இலங்கைச் சோனகரால் பேணப்பட்ட வம்சாவளிப் பட்டியல்கள் 1804 இல் பிரித்தானியரின் பகைவர்களாகப்
பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சோனக மனிதர் எழுவர்
ஒளது கண்டு மரிக்கார் ஹசன் (ஒசன்) லெப்பை எஸ். டீ. இஸ்மாயில் ஹாஜி செய்கு இஸ்மாயில் லெப்பை அப்துல் லத்தீபு
அல்லது லெவ்வை சின்னலெவ்வை .
எம். சீ. சித்திலெப்பை. . O. மீரா லெப்பை பக்கீர் தம்பி முகம்மது காஸிம் அப்துர் ரஹ்மான்
<9 pu9 lurrapunt O ( )
ஐ. எல். எம். அப்துல் அளிஸ் 0 0 00 ஏ. எம். வாப்பிச்சி மரிக்கார் .
ஏ. எம். சரீபு 9 8 KM) 8 to 0 0 0; எம். எல். எம். ஸெய்னுதீன் ஹாஜியார் .
ஐ. எல். எம். நூர்தீன் ஹாஜியார்
புகீகம்
1.
13
19
23
25
26
35
38
:
66
75
77
SO

Page 5
0.
2.
霹罗,
23.
易4。
25. 26.
27. a8.
9.
30.
31.
32.
3.
S4
6.
7.
寻8。
அகமது லெப்பை மரிக்கார் ஹஸன்
மீரா லெப்பை மரிக்கார்.
மீராலெப்பை மரிக்கார் முகம்மது உதுமா
நெய்ன மரிக்கார் கரீம் ஜி ஜபர் ஜீ எஸ். எல். தெய்னு மரிக்கார். டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான் . பூதென் பூதில் உம்பிச்சி என். டீ. எச். அப்துல் கபூர் என். எச். எம். அப்துல் காதர் எம். ரீ. அக்பர் محی எம். சீ. அப்துல் காதர் எஸ். எல். மஹ்மூது ஹாஜியார் . 4 a 0 ஸேர் முகம்மது மாக்கன் மாக்கர் எபெண் டி. ரீ. பி. ஜாயா es டபிள்யு. எம். ஹாஷிம் 8 - வைத்ய திலக்க ராஜகருளு ஹாஜி முகாந்திரம்
செய்கு முகம்மது உடையார் . ஏ. எம். ஹாமிது w எஸ். எம், இஸ்மாயில் எம். எல். எம். றியாழ் "மோர்ஸ்" அல்லது முகம்மதியர் சம்பந்தமான
விசேட சட்டங்கள்
83.
:
100.
101
109
114.
118
126.
131
138
140
143 145
148 151
170

பேருவலை பெரியமுதலி மரைக்கார்
பேருவலையில் வாழ்ந்த பெரியமுத்லி மரைக்கார் என் பாருக்கு கி.பி. 1016 இல் சிங்கள மன்னனெருவன் வழங்கிய பழங்கால செப்புப் பட்டயம் ஒன்றிலிருந்து பெறப்படும் கீழ்க்காணும் பகுதி, வாசகர்களின் கவனத்தைக் கவருவதாக இருக்கின்றது:
'.பேருவலையில் கப்பல்க்ளே நங்கூரமிடிடதற் காகவும், அவற்றை ஏனைய நாடுகளுக்கு அனுப்பி கிரா மத்தை முன்னேற்றமடையச் செய்ததற்காகவும் பேரர சன் பேருவகையுற்று, அவற்றுக்குப் பகரம்ாக. பெரியமுதலி மரைக்கார் வழிவரும் ஆண்மக்கள், பேர். அவர்களின் பிள்ளைகள் உயிரோடிருக்கும் வரை அர் கள் “ராஜகாரிய" (அதாவது, அரசாங்கத்துக்காகப் பல்லக்குத் தூக்கும் சேவை) செய்வதோ, அல்லது பன் வரி செலுத்துவதோ தேவையில்லை. அவரின் நற்பெய ரும் நன்மதிப்பும் எஞ்ஞான்றும் குறைவின்றிப் போற் றப்படல் வ்ேண்டும். தங்கள் மதக் கடமைகளைச் செய் வான் வேண்டி விண்ணப்பத்தின்பேரில் அவர்கள் பள்ளி வாசல்களைக் கட்டவுள்ளனர். அவை பேணிக் காக்கப் படல் வேண்டும். அத்துடன் அதன் பொருட்டு அவர்கள் விண்ணப்பிக்கும் எந்த ஒரு நிலமும் அவர்களுக்குக் கொடுபடல் வேண்டும்.
அவர் தீவின் எப்பாகத்திலும் கப்பற்சரக்கு வாணிபம் செய்ய அனுமதிக்கப்படுகிறர். 9 ۔۔۔۔ 1. s

Page 6
இச் சோனக வணிகரது விண்ணப்பத்திற்கிணங்க இஃது அவ்வரசனுல் வழங்கப்பட்டது. சரித்திரச் சான்றுகளின்படி அவ்விண்ணப்பம் "செப்போலைப் பத்திரம்” என அறியப்படு கிறது.
பெரியமுதலி மரைக்கார் அவர்கள் நாட்டுக்காற்றிய
சேவையைக் கருத்திற் கொண்ட அன்றைய ஆட்சியாளன்
பின்வரும் உரிமைப் பத்திரத்தை அவருக்கும் அவருடைய சந்ததியினருக்கும் அளித்தான்:
"பெரியமுதலி மரைக்காரும் அவருடைய சந்ததி யினரும் சிறைத் தண்டனை, அல்லது மரண தண்டனையி லிருந்து இத்தால் விலக்க்ளிக்கப்படுகின்றனர். மாட் சிம்ை தங்கிய மன்னன், அவனது அரசுக்கு அவர்கள் புரிந்த சேவையின் காரணமாகப் பேருவகையுற்றதால் அவர்கள் அவ்வாறு கெளரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப் படுகின்றனர். மேலும், அரசாங்கம் அவர்களை எக் காலமும் எல்லாக் குழப்பங்களிலிருந்தும் இன்னல்களி லிருந்தும் காப்பாற்றல் வேண்டும். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவும் பள்ளிவாசல்களைக் கட்டவும் சுதந்திரமுடையோராய் இருப்பதோடு, தாங்கள் விரும் பிய எந் நிலத் துண்டிலும் வணக்கஸ்தலங்களை அமைக்க விரும்ப முடியும். கப்பல்களைக் கட்டவும் அவற்றின் மூலம் ஏனேயே நாடுகளுடன் வாணிபம் செய்யவும் அவர் களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.
(ஒப்பம்) புஹ்மன் (ராஜ வீர புஹ்மன்)"
இவன் இலங்கையின் அரசன் அல்லன் எனவும், ஆளுல் ஒரு குறுநில மன்னனுக இருந்திருக்கலாம் எனவும் கலாநிதி போல் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கிருர், அத்துடன் மன்ன னுக்காற்றிய பெருஞ்சேவையின் பெறுபேருக அவர் "செப் புத் தட்டு" (செப்புப்பட்டயம்) வடிவான ஒரு "முத்ரிகா”
( 2)

வையும் பெற்ருர், இஃது, அதனை வைத்திருப்பவர்களுக்கு அந்நாளில் அரிதான அனேக சிறப்புரிமைகளை அளித்தது. இந்த விசேட சலுகைக்காக
(9)
(ஆ)
பெரியமுதலி மரைக்கார் அவர்கள் தென்னிந்தியா விலுள்ள சாலிம்ங்கலத்திலிருந்து எழுவரை அரச பல்லக்கைச் சுமக்க அழைத்து வந்தார். அவர்களா G3anuntri : Gua? அரசன், வலி முனி, வவி அருணன், வலி சல்மன், வள்ளி அரசன், பரமுத்தி, வள்ளியன்.
பெரியமுதலி மரைக்கார் அவர்கள், பேருவலை வணி கத்துறைக் களத்தைப் பராமரித்து வந்தார். அத் துடன் ஏனைய பகுதிகளிலிருந்து புதிய குடியிருப்பா ளர்களைக் கொணர்ந்து அங்கு குடியேற்றியதன் மூலம் சனத் தொகையையும் அதிகரித்தார். தென்னிந்தி யாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்த எழுவரு டன், நாட்டுக்கு உபயோகமுள்ள மற்றும் அனேக ரும் வந்தனர். சிலர் தையற்காரர்களாகவும் நெச வாளர்களாகவும் இருந்ததோடு, ஏனையோர் தச்சர் களாகவும் வணிகர்களாகவும் இருந் தனர். மன்னன் மிக்க மகிழ்வுற்று அவர்களுக்கு நாட்டில் குடியமர எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான். அவர் கள்தாம் 'சலாகம’ அல்லது சாலிய இனத்தின்
மூதாதையராவர்.
பெரியமுதலி மரைக்கார் அவர்களின் வழிவந்தோரில் சோனகரின் தலைவரான பஸ்தாமியார் லெப்பை மேஸ்திரி யார் மீராலெப்பை மேஸ்திரியார் என்பாரும் ஒருவராவார். அவர் அகமது லெப்பை எனும் தம் மகனை கி. பி. 1760இல் மரதானப் பள்ளிவாசவின் பொறுப்பாளராக விட்டுச் சென்ழுர்,
(3)

Page 7
அகமது லெப்பை
சின்னலெப்பை மரிக்கார்
அக்மது லெப்பை சின்னலெப்பை மரிக்கார் என்பாரைக் காலிச் சோனகரின் தலைவராக நியமித்து அப்போதைய ஆட்சியாளர் வழங்கிய நியமனப் பத்திரம் பின்வருமாறு:
❖፩፥ مصر *சோனகரான செய்யிது நாதி நெய்ந்த மரிக்கார் ஜ்ெப்பை நெய்ை மரிக்கார், எம்மால் சமீபத்தில் காலிப் பட்டின சோனகரின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட தாலும், அதிகாரத்திலுள்ள இச் சமூகத்தின் மற்றத் தலை வ்ர், தாம் சேவையில் மூத்தவராக இருப்பாதல் முன்னைய வரை விட முன்னுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டு மென இப்போது விண்ணப்பம் செய்திருப்பதாலும், யாம் சொல்லப்பட்ட தற்போதைய தலைவரின் வேண்டுகோளைப் பரிசீலனை செய்து, அவர், சோனகரான இஸ்மாயில் லெப்பை மேஸ்திரி காதர் என்பாரைத் தம் "Canne Kappel"ஆக அமர்த்தும் அதிகாரத்தோடு, காலியின் நான்கு எல்லைக்குள் வதியும் சோனக கமுகத்ன்ெ முதல் தலைவராக நியமிக்கப்பட விரும்பத்தக்கவர் எனக் கொள் கின்ருேம்,
அக் காரணத்தால், s சம்பந்தப்பட்ட எவராயினும் அஃது அவருக்குக் கடமையாதலால், சொல்லப்பட்ட அகமது லெப்பை சின்னலெப்பை மரிக்கார் என்பாரைச் சோனகரின் முதல் தலைவராக ஏற்று, அவருக்கு மிதிப்பும் மரியாதையும் அளித்து, அவராணை ஏற்று ஒழுகவும் கட் டளையிடப் படுகின்றர். கொழும்பு, 28 ஜூலை 1757."
(4)

மூரிஷ் வைத்தியர்
மீராலெப்பை மேஸ்திரியார் சேகாதி மரிக்கார் (மத்திச் சம் மீராலெப்பை மேஸ்திரியார் செய்கு அப்துல் காதிரி மரிக்கார்) என்பார் ஒரு பிரபல மருத்துவராவார். அவர் கறுவா பட்டை கழற்றுவோரின் காவலரதும் (சாலிய தள பதிகள்) கொழும்பில் டச்கக்காரரின் கீழ் சேவை புரிந்த சோனக படையணியினதும் மருத்துவராக நியமிக்கப்பட் டார். 1806இல் பிரித்தானியரால், உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுகாதாரத் திணைக்களத்தின் சுதேச அத்தியட்சகராக அவர் நியமிக்கப்பட்டார். தேசாதிபதி நோத் பிரபுவின் ஆணையின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட 1806 ஓகஸ்ட் 1ஆம் தேதிய "மோர்ஸ்’ அல்லது முகம்ம தியர்கள் சம்பந்தமான விசேட சட்டங்களில் கையொப்ப மிட்டவர்களில் அவரும் ஒருவராவார். 1823இல் சோனக சமூகத்தின் தலைவராகவும் நடுத்தீர்ப்பு வழங்குபவராகவும் நியமிக்கப்பட்ட அவர் 1840 பெப்ரவரி 25ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.
இலங்கையின் பிரதம் நீதியரசரும் மாட்சின்ம தங்கிய மன்னரின் பேரவைத் தலைவருமாக இருந்த ஸேர் அலக்சாந் தர் ஜொன்ஸ்டன் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, 1834 ஜூன் 19 ஆம் தேதி அரச ஆசிய கழக இலங்கைக் கிளைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட மீராலெப்பை மேஸ்திரி யார் சேகாதி மரிக்காரின் உருவப்படம் கலாநிதி ஸேர் போல் பீரிஸின் கவனத்தக்கு வந்தது. அவர் அதைக் கொழும் பிலுள்ள தேசிய பொருட்காட்சி சாலைக்கு அனுப்பி வைத் தார். அங்கு அது இப்போது காட்சிக்கு விைக்கப்பட்டுள் ளது. குறிப்பு இல. C/448 í
மூரிஷ் வைத்தியரின் முன்ம்ரபு பின்வருமாறு 6ólífg)sir ኅDòl፥ ,
1. சின்னசிய, கோனியாவைச் சேர்ந்த சுல்தான் ஆப் தீனின் மைந்தர் இளவரசர் ஜமால்தீன் என்பார் கி.பி.
(5)

Page 8
800இல் பேருவலையில் குடியேறி மருத்துவத் தொழிலில் ஈடு பட்டார். இது சிங்கள அரசன் மூன்ருவது தாப்புலவின் ஆட்சிக்காலத்திலாகும். அவ்வரசன் ஒரு மருத்துவக் கல் லூரியை நிறுவினுன்.
2. வைத்தியர் பெரியமுதலி மரைக்கார் (கி.பி.1016): எதிர்க்கரையான இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புடவை நெய்வோரை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர். (இப் புடவை நெய்வோரே தற்போதைய ‘சலாகம* வம்சத்தின ரின் மூதாதையர்). அதற்காக அக்கால சிங்கள அரசனுல் அவருக்கு அரச அங்கீகாரம் (செம்புப் பட்டம்) அளிக்கப் lull-gil.
3. வைத்தியர் மின்ன மரிக்கார் பஸ்தாமியார் (கி.பி. 1515) போர்த்துக்கேய அரச குடும்பத்தின் மருத்துவராக நியமிக்கப்பட்டவர்.
4. வைத்தியர் உதுமா லெப்பை மேஸ்திரியார் சேகாதி மரிக்கார் மேஸ்திரியார் (கி. பி. 1640). டச்சு அரசாங்க மருத்துவர்.
5. வைத்தியர் பஸ்தாமியார் லெப்பை மரிக்கார் மீரா லெப்பை மேஸ்திரியார். டச்சு அரசாங்க மருத்துவர். பதவி உயர்த்தப்பட்ட நிலையில் சாலிய தளபதிகளைத் தம் பொறுப் பிற் கொண்ட மருத்துவராகக் கொழும்புக்கு அனுப்பப் LI L - Tif. a -
6. வைத்தியர் மீரா லெப்பை மேஸ்திரியார் சேகாதி மரிக்கார். போற்றப்படும் "மூரிஷ் வைத்தியர்’.
மூரிஷ் வைத்தியரின் குடும்பம் பற்றிய ஒரு குறிப்பு மகா முதலியார் ஏப்ரஹம் டி சேரத்தின் 'குல லேக்க பொத்த’வில் காணப்படுகிறது.
மீரா லெப்பை மேஸ்திரியார் சேகாதி மரிக்கார், மர தானைப் பள்ளிவாசல் அமைந்துள்ள காணிக்கு மூல உரிமை கொண்டாடிய பஸ்தாமியார் லெப்பை மரிக்கார் மீரா
(6)

லெப்பை மேஸ்திரியார் அவர்களின் மூத்த புதல்வராவார். சொல்லப்பட்ட மேஸ்திரியார், டச்சு, பிரித்தானிய அர: சாங்கங்களின் கீழ் பிரபல மருத்துவராகத் தொழில் புரிப வராக இருந்தார். மரதானப் பள்ளிவாசல் அமைந்திருக் கும் காணிக்கு நீண்ட காலமாகவும் பிரச்சினையின்றியும். அவர் சொந்தம் கொண்டாடி வந்ததன் மூலம், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக அதை அவர் 1744இல் உறுதியெழுதி எடுக்க முடிந்தது. இப்போதைய கொழும்பு மரதானப் பொலிஸ் நிலையத்துக்கும் தெமட்டகொடை வீதிச் சந்திக் கும் இடையிலான ஒரு காணித் துண்டும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. சொல்லப்பட்ட இரு காணிகளையும் மேஸ்திரியார் ஏற்கெனவே எடுத்ததன் நோக்கம், அவை அவர் புரிந்த மருத்துவத் தொழிலுக்கு மூலிகைகளை வழங்க வேண்டி இருந்தபடியாலாகும்.
கால கதியில் அவர் இப்போதைய மரதானப் பொலிஸ் நிலையம் இருக்கின்ற இடத்துக்கருகில் ஒரு கட்டடத்தை நிர் மாணித்து, ஆங்கு தமது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த இல்லிடம் காலப்போக்கில் சேகா மரிக்கார் (செய்கு அப்துல் காதிர் மரிக்கார்) என்பாரின் உடைமையாக வந்தது.
சொல்லப்பட்ட மேஸ்திரியார் அவரின் இல்லிடத்துக்கு எதிர்ப்பக்கக் காணியில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினர். ஆரம்பத்தில் அது அனேகமாக அவராலும் அவரின் குடும் பத்தாராலுமே தொழுகைக்காகப் பாவிக்கப்பட்டது. பின் ‘னர், சுற்ருடலிலுள்ள ஏனைய முஸ்லிம்களும் அப்பள்ளி வாசலைத் தங்கள் தொழுகையிடமாகப் பாவிக்கத் தொடங் கினர். காலகதியில் அப்பள்ளிவாசல் முஸ்லிம் சமூகத்தின ரால் விசாலமாக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்டது. அதுதான் இன்று மரதானப் பள்ளிவாசலாகப் பர்ணமிக்கிறது.
மரதான சீமன் வீதியிலுள்ள சசின்னப் பள்ளிவாசல்", மிகவும் பிந்திய காலத்தில் "பெரிய பள்ளிவாசல்" ஜமா அத்தார் சிலரால் கட்டப்பட்டது. உறுதி இல, 2032; தேதி: 12. 8. 1856 பிரசித்த நொத்தாரிசு ஜீ. டபிள்யு
(7)

Page 9
ஸ்டொக் என்பவரால் உறுதிப்படுத்தப்பட்டது. கொழும் பில் 1505இல் இரண்டு பள்ளிவாசல்களும், 1824இல் பதி னேழு பள்ளிவாசல்களும் காணப்பட்டன.
மூரிஷ் வைத்தியரைப் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் ஸேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன், 1827 பெப்ர வரி 3ஆந் தேதி அரச செயலாளருக்கு அனுப்பிய கடிதத் தின் அடிக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறர். பெரிய பிரித்தானியாவினதும் அயர்லந்தினதும் அரச ஆசிய கழக savu gossiaos (Transactions of the Royal Asiatic Society of Great Britain and Ireland) Qa5(Tg5S 1, Luish 537g)á இச்சொற்ருெகுதிகள் காணப்படுகின்றன:
*(R) அப்பொழுது பேருவலையில் வாழ்ந்த பெரும் முகம் மதிய வணிகர் ஒருவருக்கும் அவருடைய எக்காலத் துக்குமான பரம்பரையினருக்கும் என அறுநூரு அல்லது எழுநூரு ஆண்டுகளுக்கு முன்னர் இலங் கையின் சிங்கள அரசர்களில் ஒருவன் வழங்கிய மிகப் புதுமையானதும் மிகத் தொன்மையானது மான செம்பாலான பட்டயம் ஒன்றின் நகலொன்று என்னிடம் உள்ளது. எதிர்க்கரையான இந்தியாவி' லிருந்து புடவை நெய்வோரை முதன்முதலாக அந்த வணிகர் இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக அது குறிப்பிட்ட சில சிறப்புரிமை களையும் சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கின் றது. அந்த நெசவாளர்களே இலங்கையில் எந்தக் காலத்திலாயினும் குடியேற்றப்பட்ட நெசவாளர் களாவர். இந்தப் பட்டயத்தின் காரணமாக அந்த வணிகரின் நேரடிச் சந்ததியினர், அந்நாட்டின் சிங்கள அரசால் அவர்களின் மூதாதையர்களுக்கு வழங்கப்பட்ட அந்தச் சிறப்புரிமைகளின் ஒரு பகுதி யைப் பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ் இப்போ தும் அனுபவிக்கின்றனர்.அவை இலங்கையின் போர் த்துக்கேய, டச்சு, ஆங்கிலேய அரசாங்கங்களால் உறுதிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்தக்
(8)

குடும்பத்தின் தலைவர் உயர் நீதிமன்றத்தின் கட்டுப் பாட்டின் கீழ் 1806இல் மருத்துவத் திணைக்களத் தின் சுதேச அத்தியட்சகராக என்னுல் நியமிக்கப் பட்டார். தீவிலுள்ள சுதேச வைத்தியர்களில் மிக்க அறிவுள்ளவர்களில் ஒருவர் என நாட்டின் குடிமக்களால் அவர் கருதப்பட்டதோடு, சுதேச மருத்துவ நூல்களில் மிகச்சிறந்த ஒரு தொகுதியைத் தம்வசம் கொண்டவராகவும் விளங்கினர். அவற் றில் அனேகம் அவருடைய குடும்பத்தில் எழுநூறு, எண்ணுாறு ஆண்டுகளுக் கிடைப்பட்ட காலமாக இருந்து வந்திருக்கின்றன. அந்தக் காலப் பகுதி முழுவதிலும் அக்குடும்பத்தில் குறைந்தது ஒருவரா தல் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள வேண்டி யது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இலங்கை யில் முகம்மதிய சுதேச வைத்தியர்களால் மருத்துவ நோக்கங்களுக்காக மிகப் பழங்காலந் தொட்டு பாவிக்கப்பட்ட அத் தீவின் எல்லா மூலிகைகளைப் பற்றியும் மிகவும் விவரமான ஓர் அறிக்கையை அவர் எனக்குச் சமர்ப்பித்தார். 1810இல் மாட்சிம்ை தங்கிய மன்னரின் அரசாங்கம் எனது ஆலோசனை யின் ப்ேரில் இலங்கையில் ஓர் அரச தாவரத் தோட் டத்தை அமைப்பதற்கான பெருநோக்கங்களில், இந்த மூலிகைகளையும் உணவுக்காகவோ வர்த்தக நோக்கங்களுக்காகவோ உபயோகிக்கக்கூடிய தீவின் மற்றும் எல்லாச் செடியினங்களையும் மரக்கறி வகைகளையும் பயிரிடுவதும் விருத்தி செய்வதும் ஒன் ருக அமைந்திருந்தது." மருத்துவத் துறையிலும் தத்துவ ஞானத்திலும் அக்கால சோனக மருத்துவர்களுக்கிருந்த அரும்பெரும் அறிவுத் திறன் பற்றி ஸேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் அதே கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிருர்: -
"(T) அவர்கள் இலங்கைக்கு அறிமுகப்படுத்திய மருத்து வம் பற்றிய பிரதான நூல்களில் ஒன்று, அவிசின்
(9)

Page 10
N
குவின் நூலாகும். அரிஸ்டோட்டல், பிளாற்ருே, 1ளக்லிட் கலென் டொலமி ஆகியோரின் நூல் களின் மொழிபெயர்ப்புக்களேயும் அவர்கள் இங்கு அறிமுகப்படுத்தினர். நான் இலங்கையின் இருந்த போழுது அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதி பிளே முகம்மதிய மத அறிஞர்களும் வணிகர்களும் என்னிடம் கொண்டு வந்தனர். அந்த நூல்கள் ஆரம்பத்தில் தங்கள் மூதாதையரால் பக்தாதி லிருந்து தருவிக்கப்பட்டன் வென்றும் அவை இலங் கையில் அவர்களின் அந்தந்தக் குடும்பத்தினரிடம் சில நூறு ஆண்டுகளாக இருந்தன என்றும் அவர் கள் கூறினார்." 1800ஆம் ஆண்டளவில் இம் மூரிஷ் வைத் தியர், "மரக்கலப் பள்ளி'யினதும் அதன் 'வத்த"யினதும் (மர தானேப் பள்ளிவாசலும் அதன் வளவும்) பொறுப்பாளராக இருந்தார். ஜமாஅத்தின் முக்கிய உறுப்பினர்களுக்காக (பிரேத அடக்கத்துக்காக) அவர் அவ் வளவைப் பகுத்தார். அவரது குடும்ப நிலத் துண்டின் இலக்கம் #1 ஆகும், அம் மையவாடியை முடிவிடுமாறு 1878 மே 21இல் ஒரு பிர கடனத்தின் மூலம் அரசாங்கம் கட்டளேயிட்டது. ஆனூல், இவ்வைத்தியரின் வழித்தோன்றல்கள் அக்கட்டளேன்பத் தொடர்ந்து மீறி, அவர்களின் இறந்தோர் சடலங்களே அங் கேயே அடக்கம் செய்தனர். அவர்கள் மீது வழக்குத் தொட ரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சில உறுப்பினர்கள், அவர்களின் இறந்தோர் சடலங்களே அங்கு அடக்கம் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி வேண்டி நின்றனர். எனவே, ஒரு
* -- எதிர்ப் பக்கத்தில் காணப்படுவது மூரிஷ் வைத்தியரது உருவப்படத்தின் புகைப்படப்பிரதி. "கூபா" தொப்பியணி ந்து, 19ஆம் நூற்றுண்டின் ஆரம்ப கால உயர்குடிமகனின் உடையில் காட்சி தருகிருர் வழக்கத்துக்கமைய காலணி கழற்றி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய பொருட் காட்சி சாஃபில் வைக்கப்பட்டிருக்கும் இவ்வுருவப்பட மூலப் பிரதியின் பின்புறத்தில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது: "*(TIM அலக்சாந்தர் ஜொன்ஸ்டஞல் அன்பளிப்புச் செய்யப் பட்டது 19 ஜூலே 1834."
( 10))
 


Page 11
கட்டளைச் சட்டம் பிரேரிக்கப்பட்டு, 1882 ஜூன் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. எனினும், அப்போது குப்பியாவத்தை மையவாடியில் பிரேத அடக்கம் நடந்து கொண்டிருந்ததனல் இக்கட்டளைச் சட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் இக் குடும்ப மையவாடி யின் அரைவாசி இலங்கை அரசாங்க ரெயில்வேயிஞல் சுவீ கரிக்கப்பட்டது. அவ்விடத்தில் இப்போது ஓர் அரச மரம் நிற்கிறது. பள்ளிவாசல் வளவில் ஒரு புளிய மரத்தடியில் இருந்த மூரிஷ் வைத்தியரின் கல்லறை மட்டமாக்கப்பட்டு, அவ்விடம் ஜமாஅத்தாரின் உபயோகத்துக்காக வாகனம் நிறுத்துமிடமாக ஆக்கப்பட்டுள்ளது.
1931 இல் இவ் வைத்தியரின் பேரரான வைத்தியர் ப்ஸ்தாமியார் அப்துல் கரீம் என்பாரின் சடலத்தையும் 1955 டிசம்பர் 27 இல் அவரின் வழித்தோன்றல்களில் ஒருவரான புரக்டர் எஸ். டீ. எம். புர்ஹான் என்பாரின் சடலத்தையும், அவர்கள் கொண்டாடி வந்த உரிமைக்கிணங்க 41ஆம் இலக்க நிலத் துண்டில் அடக்கம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. ஆனல், அம் முயற்சி வெற்றிபெறவில்லை.
இம் மூரிஷ் வைத்தியரின் சந்ததியில் உதித்த ஒருவர் வைத்திய கலாநிதி எம். நாபிக் புர்ஹான் ஆவார். அவர் மருத்துவத் தொழிலில் சிறப்பெய்திய ஒருவர். எப்.ஆர்.சீ. எஸ். பட்டம் பெற்ற முதலாவது இலங்கை முஸ்லிம் அவரே. ஏ. சீ. அப்துல் காதிர், ஏ. சீ. ஜமால்தீன் ஆகிய இருவ ரும் இந்த மூரிஷ் வைத்தியரின் கொள்ளு பேரர்களாவர். மரதானப் பள்ளிவாசல் பரிபாலன சபைச் செயலாளராக ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் கடமை புரிந்த உயர் நீதிமன்ற புரக்டரான எஸ். டீ. எம். புர்ஹான் என் பாரும் அவரின் சந்ததியில் உதித்தவராவார்.
உயர் நீதிமன்ற புரக்டர் முஹ்யித்தீன் புர்ஹான், அகில இலங்கை வை. எம். எம். ஏ. கூட்டவையின் ஆரம்ப உறுப் பினரும் பதின்மூன்முவது தலைவருமான மர்ஸஅக் புர்ஹான் ஆகியோரும் அவரின் சந்ததியில் உதித்த மற்றுமிருவராவர்.
12)

சேகாதி மரிக்கார்
(உதுமா லெப்பை ஐரித்த செய்கு அப்துல் காதிக்கிக்ார்)
இலங்கையில்:ட்ச்சுக்காரர் ஆட்சி ஒரு முடிவு நிலக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் கொழும்பு டாம் வீதியில் ஒரு பிரபல சோனக குடும்பம் வாழ்ந்து வந்தது. இப் பொழுது 263, 26, 269ஆம் இலக்கங்களைக் கொண்ட இல் லங்களும் 263ஆழி இலக்க குடியிருப்புத் தோட்டமும் அமைந் திருக்கும். இடக்கங்களே அக் குடும்பத்தினர் வசித்த இட மாகுமீ "டாழ்வீதி" எனும் சொல்லிலிருந்தே அது சதுப்பு நிலத்திலிருந்துமீட்கப்பட்ட காணி என்பது தெளிவாகிறது. மேற்குறிப்பிட்ப்பட்ட குடியிருப்புத் தோட்டம் இன்றும் 'தண்ணிக்கரைத் தோட்டம்’ என்றே அறியப்படுகின்றது. இக் குடும்ப்ம்'கோனியாவிலிருந்து கி.பி. 800இல் இலங்கை யில் குடியேறிய அரபு மகனன இளவரசர் ஜமால்தீனின் கும். இந்தக் காணித் துண்டு, மஃதூம் கண்டு
* ôifašistrit பாருக்குச் சொந்தமாக வந்தது. அதில் அவர் குடியிருந்திர்ே. அவரது எடுப்பான தோற்றத்தின் காரண Loitas அவரை 'மாப்புளே’ (மாப்பிள்ளை) என அழைத்த னர். அவரின் மகன் உதுமா லெப்பை மரிக்கார் (இறப்பு 1800) ஆவார், அவரது உடல் மரதானப் பள்ளிவாசல் வளவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இரு புதல் வர்கள் இருந்தனர். "கொடி போட்ட மரிக்கார்' எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்ட முகம்மது ஹனீபா, மரிக்கார் என்பாரும் சேகாதி மரிக்கார் எனப் புகழ்பெறும் செய்கு அப்துல் காதிர் மரிக்கார் என்பாருமே அவர்களா 'வர். முன்னவர் பற்றிய தகவல்கள் அறியக் கிடைக்கவில்லை. பின்னவர் 18ஆம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் பிறந்த வர். அவரது முதலாவது விவாகத்தின் காரணமாக அவ ருக்கு உதுமான் (பிறப்பு 1799) அல்லது உதுமா லெப்பை மரிக்கார் என்பவர் பிறந்தார். அவரின் இரண்டாம் தார
(13)

Page 12
மான், ஒசன் லெப்பை (கப்போடயார்) என்பாரின் பசு ளான கதீஜா உம்மா மூலம் அவருக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பிறந்தனர். அவர்களாவோர்:
1. முகம்மது காளிம் அல்லது கச்சு லெப்பை அல்லது
Tவிம் லெப்பை ரிக்காரர். .ே முகம்மது ஹ"சைன் அல்லது லெவென மரிக்கார். 3. டம்மு ஹானி. 4. ஐதுரூஸ் அல்லது ஐதுரூஸ் லெப்பை மரிக்கார். 5. பொன்னு அல்லது பொன்னுச்சி உம்மா.
பிரபல கொடை வள்ளலான அல்ஹாஜ் என். டி. எச். அப்துல் கபூர் அவர்களின் தகப்பனுர், உம்மு ஹானி அவர் களின் மகனுவார் பிரபல சோனகத் தலைவரான ஐ எல். எம். அப்துல் அளபீஸ் அவர்கள் ஐதுரூஸ் மரிக்கார் அவர்களின் மகளுவார்.
சோனகர், கல்வியிலும் வழிகாட்டவிலும் வாய்ப்புக் குறைந்தவர்களாக இருந்த காலத்தில் சேகாதி மரிக்கார் அவர்களின் வழித் தோன்றல்கள் புகழ்பெற்று விளங்கினர். சேகாதி மரிக்கார் அவர்களின் வாழ்க்கையும் சுவாரசியத் தில் குறைந்ததன்று. அவரது கல்வித் தகைமை பற்றி எது வும் அறிய முடியவில்லே. எனினும், ஸேர் அலக்ஸாந்தர் ஜொன்ஸ்டன், தாம் மூன்றுவது ஜோர்ஜ் மன்னருக்கு 1806ல் அனுப்பிய அறிக்கையில் இலங்கைச் சோனகர் பற்றிக் குறிப் பிட்-அவர்களின் சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள், கலாசாரம் ஆகியவை பற்றிக் குறிப்பிட-தகவல் சேகரிக்கக் கலந்தாலொசித்த சோனகத் தஃபீவர்களுள் சேகாதி மரிக் கார் அவர்களும் ஒருவராவார். இலங்கைச் சோனகர் சம் பந்தமான எந்த ஒரு விடயம் பற்றியும் தேசாதிபதிகள் கலந்தாலோசிக்க வேண்டிய பெருமகஞக அவர் இருக்க வேண்டுமென ஸேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் கருத்துக்
1. கப்பலுடையார்.
(14)

கொண்டார். எனவே, அவரது அறிவுரையின் பேரில் சோனகத் தஃலவர்கள் சேகாதி மரிக்கார் அவர்களே அதன் பொருட்டான தங்கள் விருப்பாளாகத் தேர்ந்தெடுத்தனர். அதன் பிரகாரம் அவர் 1818 ஜூன் 16ஆம் தேதி லேர் ரொபட் பிரெளன்ரிக்கினுல், கொழும்பினதும் சல்பிற்றிக் கோரஃளயினதும் தலைமைச் சோனக மனிதராக நியமிக்கப் பட்டார். அதே பதவிக்கு அவர் ஸேர் எட்வட் பார்ன்ஸி குனூல் 1824 மே 22ஆம் தேதி மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அந்நாளில் கொழும்பு மரதானப் பள்ளிவாசல் செடி கொடிகளால் சூழப்பட்ட ஒரு சிறிய மண்டபமாகவே இருந் தது. சேகாதி மரிக்கார் அவர்கள் ஜமாஅத்தாரையும் தம் நண்பர்களே யும் அழைத்து பள்ளிவாசஃலப் புனரமைக்கப் பணம் வசூலித்தார். அவ்வித கூட்டு முயற்சியால் பள்ளிவா சல் பெருப்பித்துக் கட்டப்பட்டது. கட்டடம் கி. பி. 180 ஜூன் 14ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அவர் அப்பள்ளி வாசவின் நம்பிக்கைப் பொறு ப் பா எா ராக ஒசன் லெப்பை என்பாரை நியமித்தார். அவருக்கு ப் பின் காளி லெப்பை ப்ரிக்கார் அப்பதவிக்கு நி ய மிக் க ப் பட்டார். முகம்மதியர், அல்வது "போர்ஸ்" (மு.அர்ஸ்) என அறியப்பட்ட சோனகர் தொடர்பான சட்டதிட்டங் கஃள ஆக்குவதற்கு உதவும் பொருட்டு அவர் சோனக "கமிஷன"ராகவும் கடமை புரிந்தார். 1820இல் அரசாங்கத் தால் அவர் கிழக்கு மாகான நடுவஸ்தராக நியமிக்கப்பட் டார். 1835இல் அவர் கிழக்கு மாகாண முதலியாராக இருந்தார். அங்கு அவர் தம் மூத்த மகனுன காலி லெப்பை மரிக்காரைத் தமது உத்தியோகப் பணிகளில் பயிற்றுவித் தார். அவர் எத்துனே மதிப்புப் பெற்றவராக இருந்தா ரெனில், குடும்ப சர்ச்சைகளில் அவரது சொல்லே
(15)

Page 13
மேலோங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரின் கருத்துரைப்படி உடனே நீர்வுகளும் பெறப்பட்டன. எந்தப் பொதுவிடயத்திலும் அவர் அரசாங்கத்துக்கு அறிக்கை செய்யுமுன் தம் சமுதாயத்தினரைக் கலந்தாலோசித்தார். இப்பெருமகனின் உருவப்படம் கிடைக்கப் பெருமல் இருப் பது, அல்லது இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கதே. நாட் டுக்கும் சமுதாயத்துக்கும் பயன்மிகு சேவைகள் செய்து, தம்போன்ற உபயோகமுள்ள பிள்ளேகளேப் பெற்றெடுத்த அவர் 1847.6.14ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.
அவரின் மூத்த மகன் காஸிம் லெப்பை மரிக் <nt if முதலியார் 1857இல் தேசாதிபதியால் " கேட் முதலியா'ராக நியமிக்கப்பட்டார். அவரின் இன்னுெரு மகனன ஐதுரூஸ் லெப்பை பரிக்கார் என்பார் பல அரசாங்கத் தினேக்களங் களில் காசாளராகக் கடமை புரிந்தார்.
கீழ் வருவது, மரதானேப் பள்ளிவாசல் |புனரமைக்கப் பட்ட சமயம் அப்பள்ளிவாசவின் முகப்பில் செதுக்கப்பட்ட அறபுப் பாடலின் மொழிபெயர்ப்பாகும். பாடல், போழ்து பள்ளிவாசல் சுதீபாகக் கடமை புரிந்த சேகு முஹறி யத்தீன் சின்ன மீரா ஒளதுகா லெப்பை என்பாரின் படைப் பாகும்:
கஃபாவை நிறுவியவரின் உள்ளத்தைத் தூய்மை யாக்கியவனுன் அள்ளாஹ்வின் திருநாமத்தால், யாம் அள்ளாஹ்வின் இந்த வீட்டுக்கான அத்திவாரத்தை *ளுஹா' நேரத்தில் இடுகிருேம். அவ்வாறு செய்வதால் யாம் இம் முற்பகல் வேளையில் 'தக்வா"வின் வழி நடந்தோம். இது கண்ணியமும் நன்மையும் நிறைந்த நஜப் மாதத்தின் ஆரும் நாளாகும். ஆந்நாள் தான் இமாம் அவர்கள் அவனே (அள்ளாஹ்)வைப் புகழ்ந்து
(16)

நின்ருர், அத்துடன் மற்றெல்லோரும் ஆங்கு பெரு மானுர் (ஸல்) அவர்கள் மீது (அள்ளாஹ்வின்) ஆசீர் வாதத்தை இறைஞ்சியவர்களாக ஒன்றினேந்து நின்
றனர்.
ஆசூரா நாளில் (முஹர்ரம் 10ஆம் நாள்) மூஸா (அலே) அவர்களின் வேலே பூரணமாக்கப்பட்டது போல, ஹாஷிம் கோத்திரத்தை விட்டு பெருமாஞர் (ஸல்) அவர்கள் மதீனு சென்ற நாளிலிருந்து ஆயிரம், இருநூறு ஐம்பதுடன் ஆரும் ஆண்டிலான (1858) சிறப்பும் பொலிவும் ஒருங்குநிறை ஹஜ் நாளில் (துல்ஹஜ் 10ஆம் நாள்) இந்தக் கட்டடமும் முடிக்கப்பட்டது. எங்கள் இறைவா! உன்முன் மண்டியிட்டு, உன்னேப் பெருமைப் படுத்தியோருக்கு வெற்றியையும் மன்னிப்பையும் கருனே பையும் ஈந்தருள்வாயாக பள்ளிவாசல்களேக் கட்ட விதந்துரைத்தவர் மீதும் யாம் உனது ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கின்ருேம். அவர் உன் அன்புமிக்க அடி யானும் மக்காவில் தொழுதவரில் சிறந்தவருமாவார்
1858 ஆம் வருடம் ஹஜ் மாதம்."
சேகாதி மரிக்கார் அவர்களுக்கு பிரித்தானியர் வழங்கிய நியமனப் பத்திரத்தின் உண்மைப் பிரதி
"அதி உன்னத பாத் ஒடரின் நைட் கொமாண் டரும் இலங்கைத் தீவின்-அதன் சார்பு நிலங்களுட்படபிரித்தானிய குடியிருப்புக்களினதும் ஆள்நிலப் பகுதிகளி னதும் தேசாதிபதியும் முதற்பெரும் படைத் தலைவரு மான மேன்மை தங்கிய லெப்டினண்ட் ஜெனரல் ஸேர் எட்வட் பார்ன்ஸ் அவர்களால்
(17)

Page 14
உதுமா லெப்பை மரிக்கார் சேகாதி மரிக்காரின் உன்னத சிறப்பியல்புகளிலும் ஆர்வத்திலும் நல்லெண் ணத்திலும் திறமையிலும் எமக்கு மிக்க நம்பிக்கையிருப் பதால், யாம் இத்தால் அவரை எமது அரசாண்மை காலத்தில் கொழும்பினதும் சல்பிற்றி கோரளேயினதும் தஃலமைச் சோனக மனிதராக நியமிக்கிருேம்.
அத்துடன், சொல்லப்பட்ட உதுமா லெப்பை மரிக்காரி சேகாதி மரிக்காருக்கு, அவருடைய முன்னுேர் கள் கொழும்பினதும் சல்பிற்றிக் கோரளேயினதும் தலே மைச் சோனக மனிதர் எனும் பதவி மூலம் அனுபவித்த, சட்டத்தால் ரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட வாறல்லாத அவ்வித எல்லா சிறப்புரிமைகளேயும் பாம் இந்த ஆவணத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்து கிருேம்.
சொல்லப்பட்ட உதுமா லெப்பை மரிக்கார் சேகாதி மரிக்கார் என்பாரைக் கொழும்பினதும் சல்பிற்றிக் கோற2ளயினதும் தஃலமைச் சோனக மனிதர் என ஏற்க வும் அவருக்கு மரியாதையளிக்கவும் கீழ்ப்படியவும் சம் பந்தப்பட்ட எல்லா ஆட்களும் இத்தால் பணிக்கப்பட்டு ஏவப்படுகின்றனர்.
அது காரணத்தால் யாம் இந்த ஆவணத்தை அதன் மீது எமது அதிகார முத்திரையைக் கொழும்பில் 1884 மே 23-ஆம் தேதி இட்டு அவருக்கு அளித்துள்
Grrrl."*
மேன்:ைதங்கிய தேசாதிபதியின் கட்ட&ளப்படி ,
ஜி. ஒ. சிமோர்
(18)

காவலிம் லெப்பை மரிக்கார் முதலியார்
காஸி லெப்பை மரிக்கார் என அறியப்பட்ட காஸிம் லெப்பை மரிக்கார் அவர்கள் உதுமா லெப்பை பரிக்கார் சேசாதி மரிக்கார் அவர்களின் மூத்த புதல்வராவார்.1805 டிசம்பர் 5ஆம் தேதி பிறந்த அவர் கப்போடயார் குடும் பத்தைச் சேர்ந்த ஒசன் வெப்பை என்பாரின் மகளே மணந் தார். அவர் மூலம் அவருக்கு இருகுழந்தைகள் பிறந்தன. அவை குழந்தைப் பிராயத்திலேயே இறந்துவிட்டன. மனேவி பின் மறைவுக்குப் பின்னர், கொழும்பைச் சேர்ந்த சுல் தான் கண்டு யூசுப் லெப்பை என்பாரின் மகளான முஹ்யித் தீன் கண்டு நாச்சியா அல்லது மதுங்க நாச்சியா என்பாரை அவர் 1842 மே 28 ஆம் தேதி இரண்டாந் தாரமாக ஏற்ருர், அவரும் நான்கு ஆண்களேயும் நான்கு பெண்களேயும் ஈன்றெ டுத்துவிட்டு, 1900 மே 26 ஆம் தேதி கொழும்பு டாம் வீதியிலுள்ள இப்போதைய 283 ஆம் இலக்க இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.
அவரின் பிள்ள்ேகள் :
1. ஹப்ளா உம்மா: திருகோணமலையில் 18436.1 இல்
பிறந்தார். சீ. எல். சம்சுதீன் என்பாரை மணந்தார்.
2. முகம்மது யூசுப் 18.12.11 இல் திருகோணமலே பில் பிறந்தார். அவரது முதல் விவாகத்தின் மூலம் அவருக்கு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தனர். அவரின் இரண்டாந் தாரமாக அமைந்தவர் சித்தி லெப்பை எனப் புகழ்பெற்ற முகம்மது காஸிம் என் பாரின் சகோதரியாவார். கொழும்பு மாநகர சபை யில் நிறைவேற்று உத்தியோகத்தராக இருந்த முகம் மது யூசுப் 1917 இல் கண்டியில் காலகதியடைந்தார்.
(19)

Page 15
ஸ்ப்ரா உம்மா 1847, 5.8 இல் திருகோணமலையில் பிறந்தார். அகமது வெப்பை மரிக்கார் என்பாரை மனந்தார்.
ஹனீபா உம்மா 188.9.18இல் திருகோணமலையில் பிறந்தார். காதர் சாகிப் சின்னலெப்பை என்டாரை
பனந்தார்.
ஆயிசா அல்லது மூமினு உம்மா 1850, 115 இல் கொழும்பில் பிறந்தார். அவர், மரதாஃப் பள்ளி வாசல் நம்பிக்கைப் பொறுப்பாளரும் கஷ்டோவிட்டி யில் அடங்கியிருக்கும் செய்கு உமர் பாகீபுல் யமனி அவர்களின் கலீபாவுமான காதர்சாகிப் அவியா மரிக்கார் ஆவிம் ஹாஜியார் என்பாரை மனந்தார்.
அப்துல் மஜீது 1853.9.28 இல் திருகோனாலேயில் பிறந்தார். அவர் எைiனம்பு நாச்சியா என்பாரை மணந்து பின்னர் உம்மு ஹானி என்பாரை மனந்தார். அவர் கொழும்புக் கச்சேரியில் காசாளராகவும் பின் .எழுது வினேஞர் சேவையிலும் கடமையாற்றினூர் הח זהה.
அப்துல் கபூர் 18.5.10 இல் பிறந்தார். முகம்மது ப்ெபை பரிக்கார் என் பாரின் கஃா மகேந்தார். சுங்கத் தினேக்களத்தில் எழுதுவிஃனஞராகக் கடமையாற்றிய அவர் 1940.830 இல் இறந்தார்.
அப்துல் காதர் அல்லது அப்துல் ஜப்பார்: 1863.3.34 இi பிறந்தார். கப்போடபார் அகமது லெப்பை மரிக்கார் என்பாரின் மகளான ஆயிசா உம்மாவை பாது ந்தார். சாற்றட் வங்கியில் கடமையாற்றிய அவர் 1980,519 இல் இறந்தார்.
(20)
 

காலிம் லெப்பை மரிக்கார் முதலியார் அவர்கள் தம் தந்தையார் போலவே பொதுநலன் விழைபவராகவும்மார்க்க சேவையில் ஈடுபாடுடைய பக்திமாகஞம்ை விளங்கினுர். அவ சின் மூத்த மகனு ைமுகம்மது யூசுப் என்பாரின் ஊக்கு வித்தலின் பேரிலேயே அறிஞர் சித் தி லெ ப் பை அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியிலும் பொது முன் னேற்றத்திலும் பெரிதும் ஈடுபாடு கொண்டார்.
காளிம் லெப்பை மரிக்கார் முதவியார் அவர்கள் திருகோணமலேயில் தம் த த் தை யாரு டன் இ&ணந்து செயலாற்றினுர், அதில் திறமை காட்டிய அவரை ஸேர் ரொபட் வில்மட் ஹோட்டன் என்பவர் 1834, 10 23 இல் கிழக்கு மாகாணம் முழுவதற்கும் பிரதம முதலியா ராக நியமித்தார். பின்னர் அவர் பதவி உயர்த்தப்பட்டு, 1855, 6, 19 இல் ஸேர் ஹென்றி ஜோஜ் வோட் என்பாரால் மேற்கு மாகாண அரசாங்க அதிபர் தினேக்களத்தின் முதலியா ராக நியமிக்கப்பட்டார். முகாந்திரம், ஆரச்சி, கங்கானி, லஸ்கொரின் (காவற் படையினர்) ஆகியோரும் அவர்களு டன் தொடர்புடைய ஏஃனயோரும் அவரது அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வரப் பட்டனர். 1855 இல் அவர் கொழும் புக் கச்சேரியில் காசாளராகக் கடமையாற்றிஞர். 18533.3 இல் அவர் முத்துக் குளிப்புக்குப் பொறுப்பான காசாள ராக நியமிக்கப்பட்டார். கொழும்புச் சோனக மக்களின் வேண்டுகொளின் பேரில் மரதானேப் பள்ளிவாசலில் நடை பெற்ற பொதுக்கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத் தின் பிரகாரம் அவர் 1859.12.25 இல் கொழும்பின் தலே மைச் சோனக மனிதராக நியமிக்கப் பட்டார். அதன்பின் னர் அவர் பொதுத் திறைசேரியின் காசுக் கணக்கராக நியமிக்கப்பட்டதோடு 1867 ஜூலை 3 இல் ளேபர் ஹேர்க்குலிஸ்
(21)

Page 16
ஜோஜ் ரொபட் ரொபின்சன் என்ாரால் கேட் முதலியாராகவும் நியமிக்கப்பட்டார்.
சேவை மிகுந்த ஒரு வாழ்க்கைக்குப் பின்னர் இறை படி சேர்ந்த அவரின் பூத உடல் 1877.8.16 ஆம் தேதி ஜூம்ஆத் தொழுகைக்கு முன்னர் மாதானேப் பள்ளிவாசல் வளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னுரின் மகளான ஆயிசா (மூமிஞ), தன் தந்தை பற்றிக் கூறிய சில விடயங்களே ஆயிசா அவர்களின் பேரப் பிள்ளேயான ஏ. ஐ. எல். மரிக்கார் என்பார் பின்வரு
மாறு ஞாபகப் படுத்துகிருர்:
"என் தந்தை திருகோணமலே, அல்லது கண்டியி விருந்து குதிரை வண்டியில் நாட்கணக்கின் பிரபா னம் செய்து கொழும்பை அடைவார். அவர் தொழில் புரிந்த தினேக்களங்களின் ஆங்கிைேயத் த ஃ வர் சுள், என் தந்தை அலுவலகத்தில் இல்லாவிட் டால், அவசர வேலேகள் இருப்பதனுல் உடனே அலுவல் சத்துக்கு வரும்படி வீட்டுக்குச் செய்தி அனுப்புவார் கள். அவர் தலேப்பாகை அணிந்தவராக காற்சட்டை புடனும் தளர் மேலங்கியுடனும் காட்சியளிப்பதை அக்கால சோனகர் விரும்பாது தமக்குள் குசுகுசுப்பார்க எாம். அவ்வுடை அந்நாளில் முஸ்லிம்களுக்கு JE FS3) kati" ஓர் உடையாகக் கருதப்பட்டது."
津责
22)

இலங்கைச் சோனகரால் பேணப்பட்டி வம்சாவளிப் பட்டியல்கள்
சோனகர், வம்சாவளிப் பட்டியல்களப் பேணி வரு உவர்களாக இருந்தனர். அவ்வித இரு பட்டியல்கள் பதிவு களிலிருந்து தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை நெடுங் காலத்துக்கு முன் ஆரம்பித்து 1886 இல் முடிவுறு கின்றன. முதற் பட்டியவிலுள்ளவர்கள் தாங்கள் முதலா வது கலீபா ஹழறத் அபூபக்கர் (ரழி) அவர்களின் வழி வந்தவர்களென உரிமை கொண்டாடினர். சோனகர்களின் ஆரம்ப குடியிருப்புக்களில் ஒன்ருன அளுத்கமையில் அவர் கள் வாழ்ந்தனர்.
LIDATI IIJ LI L-LI IL I Gill):
1. முனு அசன் நெய்னு லெப்பை 醒 േഴ്സ്
الطفو
முகம்மது லெப்பை அகமது லெப்பை (மாத்தறையில் மணமுடித்தார்) 7. முகம்மது அப்துல் காதிர் இரண்டாம் பட்டியல்:
1886 இல் முகம்மது இஸ்மாயில் எனப்பெயரிய கதீப் ஒரு வர் அளுத்கமையில் வாழ்ந்தார். அவருடைய தந்தை கதீப் அகமதுலெப்பை அவருடைய தந்தை கதீப் ஐதுருஸ் லெப் பை அவருடைய தந்தை செய்கு அப்துல் காதிர் லெப்பை அவர் கதீப் அசன் லெப்பையின் மகனுவார். அவருடைய தந்தை மீரா அசன் லெப்பை அவருடைய தந்தை அசன் நாயுடு லெப்பை. கதீப் அசன் நாயுடு லெப்பையின் தந்தை மூணு கோஜா தீனின் மகனுவார். அவர் மூஞ அசன் என்பா ரின் மகளுவார். அவர் முனு கெளதுல் கரமைனின் மகனு வார். அவருடைய தந்தையின் பெயர் பஃருதீன் பக்தாதி.
(23)
கோஜா அகமது லெப்பை Cз51 அகமது லெப்பை - அசன் நெய்னு லெப்பை ടു" : ""

Page 17
கீழ்வரும் வம்சாவளிப் பட்டியல் இன்றுவரை மிக நுணுக்கமாசுப் பேணப்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. அஃது இத்திவில் கி. பி. 800 இல் கோனியாவிலிருந்து இங்கு வந்திரங்கிய அறபி ஒருவரான இளவரசர் ஜமால்தீன் என்பாரின் பரம்பரையிலிருந்து ஆரம்பிக்கின்றது:
1. பெரிய முதலி மரைக்கார் 3. செய்கு அகமது 3 செய்கு அப்துல் காதிர் , செய்கு இப்ராஹீம் 5 செய்கு அகமது ,ே மமுணு மேஸ்திரியார் 7. கப்போடயார் 8. பெரிய தம்பி 9. ஐயூ நாயுடு கணக்கப்பிள்ளே 10. கொரக்கதீவு கப்போடயார் 11. வீரமன் நாயுடு 12. மஃதுரம் நாயுடு 13. சுப்போடயார் 14. உதுமான் நாயுடு 15. நாது நாயுடு 16 சேகாதி மரிக்கார் 17 மின்கு மரிக்கார் 18. பஸ்தா மியார் லெப்பை 19, மீரா லெப்பை மேஸ்திரியார் 20. கப்போடயார் லெப்பை மரிக்கார் (காவியில் மணமுடித்து சேர்ச் வீதியில் வாழ்ந்தார்.) 21 முகம்மது பளூன்-1958ல் கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள "ஜெம் ஹவு'ளில் வாழ்ந்தவர்.
சோனகர் சிறந்த அறபுப் பெயர்களேக் கொண்டவர் களாக இருந்தனர். எனினும், சில சமயம் சிதைந்த சுருக்கப் பெயர்களேக் கொண்டும் அழைக்கப்பட்டனர். உதாரண மாசு, இப்ராஹீம் லெப்பை அபூபக்கர் லெப்பை மரிக்கார் எனும் பெயர் "இப்ரால அபக்கவ மரிக்கார்" எனவும் செய்கு அப்துல் காதிர் மரிக்கார் எனும் பெயர் "சேகாதி மரிக்கார்' எனவும் மருவின், எனவே, மேற்போந்த பட்டி பல்களிலுள்ள பெயர்கள் பல அவற்றின் சிதைவுருவிலேயே உள்ளன. தங்கள் மூதாதையரின் பெயரைக் கொண்டு தங் கள் அடுத்தபடியான வழித் தோன்றல்களேப் பெயரிடுவது அன்றைய வழக்கமாக இருந்து வந்துள்ளபடியால் ஒரே பெயர் மீண்டும் மீண்டும் வருவதாக உள்ளது.
(24)

1804 இல், பிரித்தானியரின் பகைவர்களாகப் பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சோனக மனிதர் எழுவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைச் சோனகர் நால்வரும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைச் சோனகர் மூவரும் உட்பட 69 பேர் பிரித்தானியரின் பகைவர்களாக 1804 ஜான் மாதம் 4ஆம் தேதி பிரகடனம் செய்யப்பட்டனர்.
ஆள்வாறு பிரகடனம் செய்யப்பட்ட சோனக மனிதர் மட்டக்களப்பு மாவட்டம்:
1. மீரா ஒசன் அவ்வக்கர் (முன்பு காரியப்பா) ராப்முனே. 2. ஒசின் லெப்பை உதுமா லெப்பை (முன்பு காரியப்
பா) ராய்முண். அவ்வக்கர் ஈஸ்ா (முகாந்திரம்); சம்மாந்துறை, அனிஸ் லெப்பை (டச்சு படைச் சேவையில் முன்னுள் மலாய் உத்தியோகத்தர்) மருதமுனே, திருகோணமலே மாவட்டம்
5. சேகு நீதி (தோப்பூர் வாசி) தோப்பூர். 6. பீர் முகம்மது சோனக மனிதரின் பாதிரி 7. சலம்பதி உடையார் (குச்சவெளி இரண் டாம்.
கிராமத் தஃலவர்); குச்சவெளி இத்தகவல், பொலிஸ் நீதிபரிபாலன (1803-4)த்தின் கீழ்க் காணப்படும் பிரகடனங்கள், கட்ட8ளச் சட்டங்கள் சாசனங்கள், அரச பேரவைக் கட்டளைகள் (1853 இல் பதிப் பிக்கப்பட்ட) ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை அர சாங்க சட்டவாக்கச் சட்டங்கள், தொகுதி I (1798-1833 பக்கங்கள் 75, 76, 77, 78 இலிருந்து பெறப்பட்டது.
(25)

Page 18
ஒளது கண்டு மரிக்கார்
ஹசன் (ஒசன்) லெப்பை
புதிய சோனகத்தெருவிலுள்ள பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தில் ஹசன் லெப்பை அவர்கள் அதிமுக்கிய பங் கெடுத்தார். புதிய சோனகத்தெருவில் இப்பள்ளிவாசலோ டிஃணந்த மையவாடியைச் சுகாதார கட்ட&ளச் சட்டத்தின் கீழ் 1874 ஒக்ரோபர் 21 ஆம் தேதியிலிருந்து மூடிவிடும் படி கட்டஃா பிறப்பிக்கப்பட்டது. ஹசன் லெப்பை அவர் கள் முஸ்லிம் மக்களுக்காக மையவாடியொன்றைத் தேட முனேந்தார். அவருக்கு பள்ளிவாசலின் செல்வம் படைத்த முகாமையாளர்கள் (மத்திச்சம்மார்) பக்கபலமாக இருந்த னர். நிதி சேகரிக்கப்பட்டு மானிகாவத்தையில் 37 ஏக்கர் 3 நூட் 13 பேர்ச் காணி வாங்கப்பட்டது. (வரைபட இல. 1826; நில அளவை: ஜி. எல். ஷ்ரெய்டர் உறுதி இல. 85; நொத்தாரிசு, சீ. எச். ஆலிப் தேதி, 10-11-1890) இக் காணி முஸ்லிம்களின் சடலங்களே அடக்கம் செய்வதற் காகப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளருக்குக் கையளிக்கப்பட்டது.
ஹசன் லெப்பை அவர்களின் புதல்வர்கள் உதுமான் ஹாஜியும் அப்துல் மஜீதுமாவர். ஹசன் லெப்பை அவர் கள் துருக்கி அரசுக்கான அயல்நாட்டுப் பேராளு (கொன் எல்) மாவார். அவருக்குப் பின் அவருடைய மகன் அப்துல் மஜீது அவர்கள் அந்தப் பதவியை வகித்தார். 1900 இல் கொன்ஸ்ல் மஜீது அவர்கள் துருக்கி சுல்தானில் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கெடுத்தார். அந்தக் கொண்டாட்ட தினத்தில் அவர் ஹமீதியாப் பாட சாலேக்கான அடிக்கல்லே நாட்டியதோடு, கொழும்பு பிர தான வீதி (மெயின் ஸ்டிரீட்) யில் 'இப்ராஹிம் பின்
(26)

அகமது" எனும் கடைக்கான அத்திவாரத்தையும் இட் шүтгf.
கொன்ஸல் மஜீது அவர்கள் பெண் மக்கள் இருவரின் தந்தையாவார். திருமதிசுள் எம். ஏ. சீ. முகம்மது, gry). அப்துல் அளவீஸ் என்போரே அவர்கள்.
காலியில் துருக்கி அரசுக்கான துனேக் கொன்ஸ்லாக இருந்த முகம்மது மாக்கன் மாக்கர் எபெண்டி என்பார் கொன்ஸ்ல் மஜீதுக்குப் பின் அப்பதவியை வகித்தார்.
ஹசன் லெப்பை அவர்களின் அடுத்த புதல்வரான உது மான் ஹாஜி அவர்களும் ஷம்ஸி லெப்பை மதார் லெப்பை அவர்களும் அன்னுருக்குப் பின் மாளிகாவத்தை மையவாடியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக ஆகினர். மதார் லெப்பை அவர்களின் இறப்புக்குப்பின் உதுமான் ஹாஜி அவர்களின் மகன் நூர்தீன் என்பாரும் உதுமான் ஹாஜி அவர்களின் இறப்புக்குப்பின் அவரின் இளேய மகன் எ"ஃமான் என் பாரும் அப்பதவிகளே வகித்தனர்.
மாளிகாவத்தை மையவாடியின் உபயோகிக்கப்படாத ஒரு பகுதி அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டது. ஓ. எச். எம். ஸ்"ஃலமான் அவர்கள் இம்மையவாடியின் உறுதியை யும் எல்லா உரிமைகளேயும் தனிநலன்களேயும் புதிய சோன கத் தெரு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்புக் குழுவிடம் ஒப்படைத்தார். 1875 இல் இக்குழுவின் சார் பாகவே இம்மையவாடிக்கான காணி வாங்கப்பட்டது. ஒருபோது, சோனக இஸ்லாமிய கலாசார நிலேயத்தின் துனத் தலைவராக இருந்த அவர் மாளிகாவத்தைக் காணி யில் பத்து ஏக்கரை இந்நிலேயத்தின் பேரில் உறுதிமாற் றித் தருவதாக வாக்களித்திருந்தார்.
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியிலுள்ள ஒரு தகடு ஹசன் லெப்பை அவர்களின் பெயரை நினைவு கூருகிறது. அவரது உருவப்படமொன்று 1877 இல் ஜோன் கப்பர் என்பாரால் 'ஓல்ட் சிலோ"னில் பிரசுரிக்கப்பட்டது.
(27 )

Page 19
எஸ். டீ. இஸ்மாயில் ஹாஜி
அறபிகள் இலங்கைக்குக் சப்பலேறி வந்தனர். இலங் கையை வந்தடைந்தபோது அவர்கள் பாரசீக, இந்தியக் கரைகளேத் தழுவியே வந்தனர். கடற்கரையோரமாகச் செலுத்தப்பட்ட இந்நாவாய்கள் பேருவலே, காவி. வெலி காமம், திறம்பாந்தோட்டை, திருகோணமலேத் துறைமுகங் களேத் தழுவின. அவர்கள் தங்கள் நாட்டுப் பொருட் சுளேக் கொண்டுவந்து இலங்கையின் விளபொருட்களே எடுத்துச் சென்றனர். பெருமானுர் (ஸல்) அவர்கள் தோன்றி இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்தோதியதன் பின் அவர்கள் இலங்கையில் குடியேறியிருந்த அறபிகளுக்கு இஸ்லாத்தை எடுத்து வந்தனர். பக்தாதில் இஸ்லாம் பர வியதும் டாக்தாது கலீபா அவர்கள் இலங்கைக்கு மத போதகர்களே அனுப்பி வைத்தார். அவர்களில் ஒருவர் அபூ பகாபா ஆவார். அவர் கொழும்பில் ஒரு பள்ளி வாசலே எழுப்பினுர், அவரின் சீருடல் அப்பள்ளிவாச லின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரின் அடக்கஸ்தலத்தின் மீது நட்டப்பட்டிருத்த கல்லறை நடுகல், இலங்கையில் டச்சுக்காரர் ஆட்சியின்போது கொழும்பு டச்சு திஸ்ாவையிஞல் அகற்றி எடுத்துச் செல் வப்படும் வரை ஏறக்குறைய எண்ணுாறு வருடங்களாக அங் கேயே இருந்தது.
பேருவலேயானது அறபு மக்கள் நடமாட்டத்தின் ஒரு நடுநாயகமாக விளங்கியது. அவர்கள் பள்ளிவாசல்களேயும் தங்களுக்கென சொந்த மையவாடிகளேயும் கொண்டிருந் தனர். திரு. பீ. இராமனுதனது "எத்னலொஜி ஒப்
(28)

சிலோன் மோர்ஸ்" (இலங்கைச் சோனகர் இவ்வரலாறு) எனும் நூஃலத் திறனுப்வு செய்த ஐ. எஸ். எம். அப்துல் அனீஸ் அவர்கள் அத்திறனுப்வில் பின்வருமாறு குறிப்பிடு फ्र!'|':
"இத்தீவில் முகம் மதியக் குடியேற்றத் தைக் குறிப்பிட்டுக் காட்டும் அ டு த் த மிகப் பழைமையான பதிவுச் சான்று எது வெனில், இப்போது பேருவலே முகம்மதிய மையவாடியிலுள்ள ஹிஜ்ரி 331 எனக் கல் #&חיו&gid:Qhתtתו (זו היט נוט றில் பொறிக்கப்பட் டிருக்கும் கல் வெட் டாகும் என நினேக்கி றேன். 1908 ஒக்ரோ பர் 15 ஆந் தேதி "டைம்ஸ் ஒப் சிலோ ன்" (காலேப் பதிப்பு) இல் வெளியிடப் பட்டபடி அதனேக் கொழும்பைச் சேர்ந்த ஜனுப். எம். ஏ. சீ. முகம்மது கண்டுபிடித்தார்.'
கி. பி. 140 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட சிங்கள தூத காவியமான "கிரா சந்தேசய" எனும் நூல் பேரு வ&லயைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது (இந் நூலாசிரியர் தூது செல்லும் கிளிக்கு அது செல்ல வேண்டிய திசையை ஆற்றுப்படுத்தி செல்லும் வழியில் பேருவலேக்குள் பிரவேசிக்குமாறு அறிவுரை பகர்கிருர்)
29

Page 20
"பலவரைக் கொடிகள் பல அலங்கரிக்கும் இல்லங் களும் எழில் நகைகள் நிரம்பி வழியும் கடைகளும் நிறைந்திருக்கும் பேருவலேயினுள் கடல் மார்க்கமாக நீ மனநிறைவுடன் நுழைவாயாக. ஆங்கு தங்கக் காதணி களே அணிந்த சோனக மகளிர் வாழ்கின்றனர்."
கொழும்பு முகத்துவாரத்தில் வதித்த முஸ்லிம்களுக்கு சுதீப் ஒருவரின் அவசியம் ஏற்பட்டது. அவர்கள் கி. பி. 1410 இல் பேருவலேக்குத் தூதுக்குழுவொன்றை அனுப்பி அங்குள்ள காழியிடம் தங்கள் தேவையை எடுத்துரைத் தனர். ஆகவே, அறபுத் தஃலவர் ஒருவர் தெரிவு செய்யப் பட்டு முகத்துவாரத்துக்கு பல்லக்கில் அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவர் பள்ளிவாசல் கதீபாகக் கடமை யாற்றினூர், அவரின் வழித்தோன்றல்களும் அங்கு வேலேயை மேற்கொண்டனர். அவர்களில் இறுதியானவர் முன்னே நாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வைத்திய கலாநிதி எம். எபீ. எம். கலீல் அவர்களின் தந்தையான கதீப் காளிம் லெப்பை மரிக்கார் ஆவார்.
கரையோர மக்களின் உளப்போக்கு கொழும்பை நோக்கியே இருந்தது. எனவே, அவர்கள் கொழும்பை நோக்கிக் குடிபெயர்ந்தனர். பேருவலேயிலுள்ள மரதான் (கொரக்கதீவு)ப் பள்ளிவாசல் வட்டாரத்தில் 'சப்போட யார்' குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குடும் பம் பாணந்துறைக்குக் குடிபெயர்ந்தது. அந்தக் குடும்பத் தில் ஒருவர் சோனகர் தலேவராக நியமிக்கப்பட்டார். அந்த நியமன விவரம் வருமாறு:
'எனவே கப்பல் உடையார் சேகு இப்ராஹீம் லெப்பை மரிக்காரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவைப் பரிசீலனே செய்ததன் பின், அவரை மேற்சொல்லப் பட்ட சல்பிற்றி, ரைகம் கோறளைகளேயும் பானந்
(30)

துறை மாவட்டத்தையும் சேர்ந்த சோனகரின் தஐ. வராக நியமிக்க யாம் தீர்மானித்து முடிவு செய்ததன் பேரில், அவர் இந்த ஆவணத்தின் மூலம் அப்பது விக்கு நியமிக்கப்படுகிருர், பண்டைய காலத்திலிருந்து அப்பதவிக்கு இருந்து வந்த சலுகைகளும் மதிப்பும் அவருக்குமுண்டு. ஆனல், அதற்காக கப்பல் உடை யார் சேகு இப்ராஹீம் லெப்பையான அவர் இங்கு சேவைக்காக சல்பிற்றி கோற&ளயிலிருந்து மூன்று தொழிலாளர்களேயும் அத்துளூகம கிராமத்திலிருந்து இரு தொழிலாளர்களேயும் பானந் துறையிலிருந்து பதினெட்டுத் தொழிலாளர்களேயும் அல்லது எல்லா மாக இருபத்திமூன்று தொழிலாளர்களே அனுப்பி வைக்கக் கடமைப்பட்டிருத்தல் வேண்டும்."
கொழும்பு மாளிகையில் 1785 ஜூலை 22 ஆம் நாள் கொடுக்கப்பட்டது."
இந்தக் கப்போடயார் குடும்பத்தில் சிலர் கொழும் பில் குடியேறினர். சின்னலெப்பை மரிக்கார் எாகிப் துரை எனும் ஒருவர் உம்மு ஹானரி உம்மா என்பாரை 1851 ஒக்ரோபர் 18 ஆம் தேதி (ஹிஜ்ரி 1267, துல்ஹஜ் 22) கொழும்பு புதிய சோனகத்தெரு 47 ஆம் இலக்க இல்லத்தில் மணமுடித்தார். அவர்களுக்கு 1854 ஓகஸ்ட் 23 ஆம் தேதி (ஹிஜ்ரி 1270 துல்கஃதா 28) ஒரு மகவு பிறந்தது. அதற்கு இஸ்மாயில் எனப் பெயரிட்டனர். இஸ்மாயில், பகல் வேளேயில் அறபி-குர்ஆன் திண்: பள்ளிக்கூடத்துக்குச் சென்றதோடு, இரவு வே3ளயில் பிறி தொரு திண்ணேயில் "வாத்தியார்' (உபாத்தியாயர்) $(''); வரின் கீழ் தமிழ் கற்ருர் அறபு மொழி இளம் இஸ்மா பபிலேக் கவர்ந்தது. எனவே, அவர் உயர்தர அறபு மொழியை மத்ரளாவில் கற்ருர், அதிசீக்சிரமே அவர், அறபு மொழி செய்கான உஸ்தாதுல் காமில் வல் ஆரிப் ஹழ்றத் அப் துள்ளாஹ் இப்னு உமர் பாதிபுல் யமனி ஹற்றமிப்பா சிபாமிய்யா அவர்களின் கவனத்துக்குள்ளாஞர். இஸ்மா பில் அவர்கள் எகிப்திய நூல்களேயும் பத்திரிகைகளையும்
( 3 )

Page 21
படித்து அறபு இலக்கியங்களே எழுதிஞர். அவர் எழுதிய செய்குமார் வம்சாவளிச் செய்யுள்கள்-வில்ளிலா-செய்கு அவர்களுக்குப் பெருமகிழ்வூட்டியது. 1883 இல் எகிப்திவி ருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அறயி பாஷா முதலியோர் வந்திருந்த காலம் அது. இஸ்மாயில் அவர் களின் அறபுமொழி அறிவு, தங்கள் மொழி அறிவுக்குச் சமமானதென அவர்கள் கண்டனர். இஸ்மாயில் அவர் களும் அவர்களோடு நீங்காத தொடர்பு வைத்திருந்தார்.
இஸ்மாயில் அவர்கள் கொழும்பு பிரதான வீதி 7ஆம் இலக்க இடத்தில் மாணிக்கக்கல், நகை, விந்தைப் பொருட்கள் ஆகியவை அடங்கிய வியாபாரமொன்றைத் தொடங்கினுர், வியாபாரம் சிறப்பாக நடந்தது. போது மான தொகை பணம் சேர்ந்தவுடன், முஸ்லிம் நாடுகளுக் குச் செல்லவும் திறற் கடமையை நிறைவேற்றவும் அவர் நாடிஞர். இப்பிரயாணத்தில் தம்முடன் நண்பர்கள் சில ரையும் சேர்த்துக்கொள்ள அவரால் முடிந்தது. ஐ. எஸ். சின்னலெப்பை ரிக்கார், எம். எல், எம். வெய்னுதீன், ஏ. எல். எம். சம்ஸி லெப்பை மரிக்கார், அவரின் அற்பு மொழி மாணவரான எஸ். எல். மஹ்மூது ஆகியோரும் சமையற்காரர் ராவுத்தர் ஹாஜியும் அவருடன் 1884 மார்ச் 27ஆம் தேதி எஸ். எஸ். மல்வா எனும் கப்பலில் பிர யாணமாயினர். பம்பாய் சென்றடைந்ததிலிருந்து அவர் பின்வருமாறு எழுதுகிருர்: "நாம் இங்கு அவுஸ்திரேலியக் கம்பனியொன்றின் கப்பலுக்கு மாறினுேம், மே 21 ஆம் தேதி நாம் சுயெஸ்ஸை அடைந்தோம். அங்கு நம் க வி யைச் சேர்ந்த இலங்கை வாசியான எாது ஹாஜி பின் சுல்தான் பாபாவைச் சந்தித்தோம், தாம் செப்ரோ வுக்குச் சென்று அறபி பாஷாவின் இல்லத்துக்குச் சென் ருேம், அங்கு அவரின் உறவினர் சளுக்கு எல்லாக் கடிதங் க3ளயும் ஒப்படைத்தோம். எகிப்திலுள்ள எல்டோ முக்கிய இடங்களும் எங்களுக்குச் சுற்றிக் காண்பிக்கப்பட்டன. அறபி பாஷாவுக்கான எல்லா வேலைகளும் முடிந்த பின் நாம் துருக்கிக்குப் பயணமானுேம், அங்கு ஸ்தம்பூலுக்குச்
(32)
 

சென்று மகிழ்ச்சிகரமான எல்லா விடயங்களிலும் கலந்து கொண்டோம். பயாஸித் ஸ்டூடியோவில் கூட்டமாகவும் தனியாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்ட நாம் பின்னர் ஹஜ்ஜுக்காக மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். மதி ஞவிலுள்ள எங்கள் திருநபி (ஸல்) அவர்களின் புனித அடக்கஸ்தலத்துக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு நாம் கொழும்புக்குக் கப்பலேறினுேம்.'
விவரம் நீண்டதாயினும் இவ்வாறு தான் அவர்களின் பயணம் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இஸ்மாயில் அவர்கள் இஸ்மாயில் லெப்பை மரிக்கார் ஆலிம் என அறியப்பட்டார். அவர் தமது பெயரை ஹாஜி இஸ்மாயில் எபெண்டி என மாற்ற முடிவு செய்தார். சுல்தானினதும் கதிவேயினதும் பெரிய அளவான புகைப்படங்களே அவர் கொண்டு வந்தார். இக்கோஷ்டி யினர் தங்கள் பிரயாணத்தின் போது சப்பாத்து அணிந் தனர். எனினும், கொழும்பை வந்தடைந்ததும் சப்பாத்து அணிவதைக் கைவிட்டனர். ஆனூல், ஹாஜி இஸ்மாயில் அவர்களோ சப்பாத்து அணிவதை விட்டுவிடவில்லே. அவர் தம் வருங்கால மனேவிக்கும் சப்பாத்து எடுத்து வந்தார். அவர் சப்பாத்து அணிவது எத்தனையோ மர்களின் கோபத் தைத் தூண்டிவிட்டது. வைபவங்களுக்கு அழைக்கப்பட்ட இல்லங்களுக்குச் சென்று அங்கு வாசற்படியில் அவர் சப் பாத்துக்களேக் கழற்றி வைத்த போதெல்லாம் அவர்கள் அவற்றுள் படிக்கத்திலுள்ள எச்சிலேக் கொட்டிவிட்டனர். இ ல் லங்க ளில் வைக்க விலக்கப்பட்ட உருவச் சில களோடு புகைப்படங்களேயும் அவர்கள் ஒப்பிட்ட கார னத்தால் ஹாஜி இஸ்மாயில் அவர்களால் எடுத்துவரப் பட்ட சுல்தானினதும் சுதீவேயினதும் இரு புகைப்படங் களும் அவருக்கெதிராகக் "குப்ார்" பத்வாவைக் கொடுக்கக் காரணமாயிருந்தன.
புகழ்பெறு "கப்போடயார்' குடும்பத்தைச் சேர்ந்த அகமது அலி மரிக்காரின் புதல்வியை அவர் 1886 ஜூ8) 27 இல் கொழும்பு புதிய சோனக்த்தெரு 39 ஆம் இலக்க
(33)

Page 22
இல்லத்தில் மணமுடித்தார். அவரது திருமண அழைப் பிதழ் வருமாறு:
"எஸ். டீ. இஸ்மாயில் ஹாஜி
in
அவர்களே அவரது திருமண வைபவத்தின் நிமித் தம் இம்மாதம் 25 ஆம் தேதி பி. ப. 7-00 மணிக்கு நடைபெறும் இராப் போசனத்துக்கு அன்புடன் அழைக்கிருர்." இத்திருமண வைபவத்துக்கு எகிப்திலிருந்து இலங் கைக்கு நாடுகடத்தப்பட்டோரும் சமுகமளித்திருந்தனர். முஸ்லிம் நாடுகளில் வியாபாரத் தொடர்பு கொண்ட வர்களோடு அவர் பரந்த அளவில் வியாபாரம் நடத்தி ஞர், சப்பாத்து அணிவதையும் இல்லங்களில் புகைப்படங் கள் மாட்டுவதையும் எதிர்க்கும் மக்களிடையே வதிவது அவருக்கு சகிக்க முடியாத ஒன்ருகிவிட்டது. அவர்கள் அவரை "சப்பாத்து ஆவிம்" எனப் புனேபெயரிட்டழைத் தனர். எனவே, அவர் சோனக வாடியைவிட்டு நீங்கி, ஏறக்குறைய ஆறுமைல் தொஃலவிலுள்ள வெள்ளவத்தை யில் குடியேறி வாழ்ந்தார்.
அவர் 1896 ஜனவரி 11ஆம் தேதி (ஹிஜ்ரி 1313 ரஜப் ேெ) வெள்ளவத்தைப் புகையிரத நிலேயத்தில் ஏற்பட்ட புகை பிரத விபத்தில் உயிரிழந்தார். மரதானப் பள்ளிவாசல் பரி பாவனக் குழுவிலும் கொழும்பு முகம்மதியூ கல்விக் கழக (ஜம்இய்யத்துல் இஃதிக்கானுல் உலூம்)த்திலும் அவர் ஒரு முக்கிப் உறுப்பினராகத் திகழ்ந்தார். 1896 டிசம்பர் 27ஆம் தேதி நடந்த கல்விக் கழக கூட்டத்தில் இஸ் மா பில் எபெண்டி அவர்கள் உட்பட மூன்று உறுப்பினர்கள்மீது அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மா னம் வருமாறு:
எமது கழகத்தின் மூன்று உறுப்பினர்களது மர னத்தை பாம் துக்கத்துடன் குறிப்பிடுகிருேம். அவர் J, GTT (Gəlirri"; 1. சேகு லெப்பை அகமது லெப்பை நொத்தாரிசு. 2. எாஹிப் துனா இஸ்மாயில் லெப்பை மரிக்கார்
ஆலிம் ஹாஜியார் எபெண்டி, 3. சேகா லெப்பை காளி லெப்பை மரிக்கார் நம்பிக்
கைப் பொறுப்பாளர்.
(34)

செய்கு இஸ்மாயில் லெப்பை அப்துல் லத்தீபு அல்லது லெவ்வை சின்ன லெவ்வை
புதிய சோனகத் தெரு பெரிய பள்ளிவாசல் கதீப் ஹ"ளைன் லெப்பை மஹல்லம் செய்கு இஸ்மாயில் லெப்பை என்பார் 1832 மார்ச் 26 இலிருந்து 1844 ஜனவரி 18 வரை சோனகரின் முன்னுரற்றுக்கு மேற்பட்ட விவாகங் களேப் பதிந்துள்ளார். அவரது "கடுத்தம்' புத்தகத்தில், மணமக்கள், வலி, சாட்சிகள் ஆகியோரின் பெயர்கள் மாத் திரமன்றி அவர்களின் முகவரிகளும் பதியப்பட்டுள்ளன.
அவரின் மகளுன லெவ்வை சின்ன லெவ்வை அல்லது அப்துல் லத்தீபு என்பாரும் பெரிய பள்ளிவாசலின் கதீபாக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை 1845, பெப்ரவரி 13 ஆம்நாள் இலங்கையின் தேசாதிபதி லெப்டினண்ட் ஜென ரல் ஸேர் கொலின் கம்பெல் என்பாரைக் கொண்டு அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.
பெரிய பள்ளிவாசலில் அவரின் தகப்பஞரது கல்லறைக் குப் பக்கத்தில் அவரது உடலே அடக்கம் செய்து கொள் ளத் தேசாதிபதியால் பின்வரும் மேலாண்மையுரிமை வழங் கப்பட்டது: "இல, 1112
குடியேற்றதாட்டுச் செயலாளர் அலுவலகம், கொழும்பு, 16 மே 1906, II,
கடந்த ஏப்ரில் 6 ஆம் தேதிய உங்கள் மனுவைப் பெற் றுக் கொண்டதை அறிவிக்குமாறும் அதில் விடுக்கப்பட்
(35)

Page 23
டிருந்த கோரிக்கையை வழங்குவதில் மேன்மை தங்கிய தேசாதிபதி மகிழ்ச்சியடைகிருர் என்பதைப் பகரு மாறும் யான் தேசாதிபதியால் பணிக்கப் படுகிறேன்.
2. அதேசமயம், இத்தாள் வழங்கப்படும் அனுமதி யைப் பயன்படுத்தும் அவசியம் ஏற்படுவதற்கு இன் னும் பல்லாண்டுகள் கழியும் எனத் தாம் நம்புவதா கத் தெரிவக்க வேண்டுமென்றும் மேன்மை தங்கிய தேசாதிபதி விரும்புகிருர்,
இங்ஙனம்,
உங்கள் கீழ்ம்படிவுள்ள ஊழியன்,
குடியேற்றநாட்டுச் செயலாளருக்காக,
சேகு இஸ்மாயில் லெப்பை
அப்துல் லத்தீபு. முகம்மதிய உயர் மதகுரு, 83, புதிய சோனகத் தெரு, கொழும்பு.
அப்துல் லத்தீபு அவர்களும் அவருடைய பரம்பரை யும் கதீப் என்ற முறையில் ஆற்றிய சேவை சம்பந்தமாகி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற நூற்ருண்டு விழா பற்றி 1945 மார்ச் 10 ஆம் தேதிய 'சிலோன் டெயிலி நியூஸ்" இதழில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது:
"பதவி அங்கீகாரம் வழங்கப்பட்ட முதலாவது மதி குருவான காலஞ்சென்ற சுதீப் செய்கு இஸ்மாயில் லெப்பை அப்துல் லத்தீபு என்பாரின் குடும்பத்தாரி பள்ளிவாசல் ஜமாஅத்தாருக்கு ஆற்றிய நூருண்டுசேவை யை நினைவுகூருமுகமாக ஜமாஅத்தாரின் ஒரு விசேஷ்
(36)

கூட்டம் ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசவில் கூடியது. அவருக்குப் பின் அவர் மகன் காலஞ்சென்ற கதீப் அப்துல் லத்தீப் அப்துல் கபூரும் அவருக்குப் பின் அவர் மகன் காலஞ்சென்ற கதீப் அப்துல் கபூர் அப்துல் ஜவாதும் அப் பணியைத் தொடர்ந்தனர். அப்பணி இப்போது பின்னவரின் மகனுன கதீப் அப்துல் ஜவாது முகம்மது வாரிது என்பாரால் தொடரப்படுகிறது, பள்ளிவாசலின் ஜமா அத்துக்கு அவர் ஆற்றிய தடையற்றதும் ஒப்பற்றது மான் சேவையைப் பாராட்டுமுகமாக அனேக பேச் சாளர்கள் ஆர்வ உணர்ச்சி மிகுந்த புகழுரைகளே வழங்கி னர், 1845 பெப்ரவரி 13 ஆம் தேதி இலங்கையின் தேசாதிபதி ஸேர் கொலின் கம்பெல் அவர்களால் அவரது நியமனம் விசேஷமாக உறுதிசெய்யப்பட்டது பற்றி இங்கு குறிப்பிடப்பட்டது.
இக் குடும்பத்தார் தங்கள் பரம்பரையை ஞானி செய்கு மஃருபுல் கர்க்கீ அவர்களின் வழிவந்த தலைமைச் சோனக மனிதரான மஹ்மூது நெய்னு மரிக்கார் என்பா ருடன் தொடர்பு படுத்துகின்றனர்.

Page 24
எம். சி. சித்திலெப்பை
இலங்கைக் கரையோரங்களிற் குடியேறிய துறபிகள் தீவின் உட்பிரதேசங்களிலும் தமது வாணிபத்தைக் கொண்டு நடாத்தினர். அவர்களின் வியாபாரச் சரக்குக்கள் நாட்டு மக்களால் விரும்பி வாங்கப்பட்டன. சித்திலெப்பையவர் சுளின் மூதாதையர் அறபிகளாயிருந்தனர். அவர்கள் கண்டி மாவட்டத்துள் ஊடுருவியிருந்தனர். சித்திலெப்பையவர் களின் தந்தையான எம். எல். சித்திலெப்பை அவர்கள் இலங்கை வாசிகளில் முதலாவது புரக்டர்களில் ஒருவரா வார். அத்துடன் அவர் 1833 இல் தலமைச் சோனக மனிதராகவும் இருந்தார்.
சித்திலெப்பையவர்களின் மூத்த சகோதரர் அறபு மொழி கற்ற ஓர் ஆலிமாவார். அவரின் கீழேயே சித்தி லெப்பையவர்கள் திருக் குர்ஆனே ஒதவும் தமிழையும் ஆங் கிலத்தையும் கற்கவும் செய்தார். வாலிபத்தையடைந்த சித்திலெப்பையில் இளமையின் புரட்சி எழுச்சியுறுவதை அவதானித்த அவரின் மூத்த சகோதரர் அவரைத் தம் மரணப்படுக்கையருகில் அழைத்து பின்வருமாறு அறிவுரை பகர்ந்தார்:
"என் அருமைச் சகோதரனே! நான் உன்னிலிருந்து பிரியும் நேரம் வந்துவிட்டது. நீயோ எல்லா விடயங்களி லும் "காபிர்"களுடனேயே கருமமாற்றுகிருப். உனது "சமா 'இனக் காப்பாற்ற திருநபி (ஸல்) அவர்கள் தலையிடு வார்களாக என் நான் பிரார்த்திக்கின்றேன். இதுதான் எனது மறுமை வாழ்விலும் எனது நீங்காத பிரார்த்தனேயாக இருக்கும்." இவ்வாறு கூறிக்கொண்டே அவர் இறையடி சேர்ந்தார்.
(38)

மாயவித்தை சம்பந்தமானl ஆராய்ச்சியையோ, ஆளி கள் பற்றிய ஆராய்ச்சி யையோ கைவிட முடிய
அவர் மத சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்i டார். அத்துடன் ஆங்கிலl
மொழியிற் புலமை பெற்று 1862 ஆம் ஆண்டில் ம வட்ட நீதிமன்றப் புரக்ட ராகத் தகைமை பெற்ருர், இரண்டு வருடங்களுக்குப் பின் னர் அவர் உயர் நீதிமன்றப் புரக்டராக ஆனதோடு பகிரங்க நொத்தாரிசாகவும் தொழில் புரிந்தார்.
அறபு மொழியைக் கசடறக் கற்ற அவர் இமாம் கஸ் ஸாலி (ரஹ்), இப்னு அல் அறபி (ரஹ்) முஹ்யித்தீன் அப் துல் காதிர் ஜீலானி (ரழி) ஆகிய பெரும் ஞானிகளினதும் ஏ&னய முஸ்லிம், முஸ்லிம் அல்லாத பெரியார்களினதும் நூல்களைப் பெரிதும் வாசித்தா ர். அ உது மா லெப்பை மரிக்கார் சேகாதி மரிக்கார் அவர்களின் பேரரான காளி லெப்பை மரிக்கார் முகம்மது யூசுபு அவர்களின் மைத் துனி யை மணமுடித்தார்.
சித்திலெப்பையவர்கள் அக்கால ஆவிம்களே விஞ்சியவ ராக விளங்கினர். முஸ்லிம்கள் உள்ளூர், இந்திய ஆலிம் களால் தப்பாக வழிநடாத்திச் செல்லப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர் என அவர் கருத்துக் கொண்டார். அவர்கள்
(39)

Page 25
இஸ்லாமிய போதனேகளுக்குக் கொடுத்த விளக்கங்களே சித்திலெப்பையவர்கள் கண்டித்தார். எனவே, உலமாக்கள்
"குப்ரீ பத்வாவை வழங்கினர்.
வாப்பிச்சி மரிக்கார் அவர்களுடன் அவர் கொழும்பில் ஆரம்பித்த கல்வி இயக்கத்துக்கு அவரது சேவை தொடர்ந்து தேவைப்பட்டதால் கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அவர் கொழும் பில் தங்கி, இடையிடையே கண்டிக்குச் சென்று வந்தார்" அவரது "அஸ்ராருல் ஆலம்' நூலில் அவர் வாப்பிச்சி மரிக் கார் அவர்களுக்குப் பெரியதொரு புகழுரை வழங்குகிருர், முஸ்லிம்களுக்கு அறிவு புகட்டுமுகமாக அவர் "முஸ்லிம்" எனும் ஒரு வார சஞ்சிகையை வெளியிட்டார். அஃது ஆங்கி லத்திலும் தமிழிலும் வெளிவந்தது. "ஞான தீபம்' எனும் ஒரு மாசிகையையும் அவர் வெளியிட்டார். இந்த இரு வெளியீடுகளிலும் அவர் இஸ்லாத்தின் போத&னகளே விளக் கிஞர். இஸ்லாத்தை அறிந்து கொள்வத ற்கு முஸ்லிம்கள் அறபு மொழி கற்கவேண்டுமென வேண்டிக் கொண்ட அவர், 'ஹிதாயத்துல் காளிமிய்யா", 'து'ஃபத்துன்னஹ்வு', "சுறுத்துஸ் ஸலாஹ்', அறபு மொழிப் பயிற்சி நூல், பகுதி 1, பகுதி 2 ஆகியவற்றை எழுதி வெளியிட்டார். அவ ரின் ஏனேய நூல்களாவன,தமிழ் ஆரம்ப நூல், ஹசன் பேயின் புதுமைக் கதை, துருக்கிய-கிரேக்க யுத்த வரலாறு, இலங் கைச் சோனகர் சரித்திரம் என்பனவாகும்.
முஸ்லிம்களுக்கு அறிவு புகட்டும் அவரது பரந்த திட்டம், இறுதியில் ஸாஹிராக் கல்லூரியாகப் பர்ணமித்தது, வாப் பிச்சி மரிக்கார் அவர்களின் வரையா வள்ளற்றன்மையும் ஏனேய சோனக தனவந்தர்களின் பேருதவியும் அதன் ஸ்தா பகத்துக்குப் பெரிதும் துணே புரிந்தன. மத்திய மாகாணத்
(40)

தில் பல பகுதிகளில் அனேக தமிழ், அறபி பாடசாலைகளே அவர் நிறுவினுர், அவைகளிற் சிலவற்றின் செலவை அவரே ஏற்று நிர்வகித்து வந்தார். கண்டியில் அவர் ஆரம்பித்த மகளிர் பாடசாலையில் அவரின் சகோதரி த&லமை ஆசிரியை யாக விளங்கினூர்,
இலங்கை முஸ்லிம்கள் அப்போதிருந்த பிற்போக்கான நிலேயிலிருந்து தங்களே உயர்த்திக் கொள்ளும் பொருட்டு ஒருமித்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களேத் தூண்டுவதில் சித்திலெப்பையவர்கள் தாம் புதினப்பத்திரிகை களில் எழுதிய கட்டுரைகள் மூலமும், நூல்கள் மூலமும் பொதுக் கூட்டங்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் மூல மும் பெருமுயற்சி செய்தார். அவரது முயற்சி வீண்போகி வில்லே. அவரின் நண்பர்களும் ஆர்வலர்களும் அனேகராயி னும் அவரை எதிர்ப்போர்களும் இல்லாமல் இருக்கவில்லே. கல்வி சம்பந்தமாகவும் தத்துவ ஞானம் சம்பந்தமாகவும் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழ் மொழியிலேயே இருந்தன. அவற்றில் இறுதியான நூல் "அஸ்ராருல் ஆலம்' என்பதா கும். இஸ்லாமிய மெஞ்ஞான நூலான இது அவரது இறப் புக்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் அச்சிலிருந்து வெளி யேறியது. இந் நூலேச் சில ஆண்டுகளுக்குமுன் பிரபல இந் திய முஸ்லிம் எழுத்தாளரான ஆர் பி. எம். கனி அவர்கள் முற்றும் புதிய நடையில் தயாரித்து அதற்கு "மெய்ஞ்ஞானப் பேரமுதம்' எனப் பெயரிட்டு வெளியிட்டார்.
மனுேதத்துவம், சூனியம் முதல் ஆன்ம சக்தி வரையுள்ள பல்வேறு சாதனங்களின் தராதரங்களேயும் இஸ்லாமிய யோக பார்க்கத்துக்கும் அஷ்டாங்க யோகம் போன்ற சாத னங்களுக்கும் இடையிலுள்ள தாரதம்மியங்களேயும் வான நூலின் அகமியங்களேயும் இந்த நூலில் சித்திலெப்பை அவர் கள் விவரிக்கிருர், சைகுல் அக்பர் முஹ்யியத்தினுல் அறபி
(ரஹ்) அவர்களின் "புளூஸ்-சல் ஹிக்கம்", "புத்து ஹாத் துல் மக்கிய்யா' இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின்
'இஹ்யா உலு முத்தீன்", அப்துல் கரீம் ஜீலி (ரஹ்) அவர் களின் "இன்ஸ்ானுல் காமில்", அப்துல் வஹ்ஹாப் ஷஃ
( 41 )

Page 26
ராணி (ரஹ்) அவர்களின் "யவாக்கிதுல் ஜவாஹிர்' போன்ற நூல்களிலுள்ள ஞானமுத்துக்களே அவர் இதில் சேர்த்துள் GITTF .
'ஆலம் கியால்" எனும் அத்தியாயத்தில் நாத்திகர்களி னதும் அறியொணுமைக் கொள்கையினரதும் தத்துவங்களே அவர் கண்டிக்கிருர், பிரபஞ்சத்தை இனம் பிரிக்கும் சக்தி, சடம் ஆகியவற்றில் முன்னேயது தன்னிருப்பானதும் நிரந்தர யதார்த்தமானதுமாக இருப்பதோடு பின்னேயது அதன் வெளிக்கோலம் மாத்திரமேயாகும் என்றும், இந்த யாதர்த்த மானது முஸ்லிம்கள் கருதும் இறை உள்வியல்பு போன்றதே என்றும் அவர் நிரூபிக்க முஃனந்தார். இந்த நூல் வெளியான வுடனேயே அதை ஆக்கியோனின் எதிர்ப்பாளர்கள் 'சக்தி" பற்றி அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு தங்கள் முழுப்பவத்தையும் திரட்டி வாத விவாதங்களிலும் ஈடுபட்டனர். தங்கள் எதிர்வாதி மரணத்தின் வாசலில் நிற்கிருர் என்பதை அப்போது அவர்கள் அறியவில்லே. அவர் களில் உள்ளூர் வைத்தியரான முகம்மது லெப்பை மரிக்கார் என்பார் முன்னணியில் நின்றர். அவர் அப்போது நோயில் வாடிக்கொண்டிருந்த இந் நூலின் ஆசிரியருக்கு-சித் தி லெப்பைக்கு-ஒரு கடிதம் எழுதிஞர். சித்திலெப்பையவர்கள் தம் சுகபீனத்தையும் பொருட்படுத்தாது அக்கடிதத்துக்குப் பதில் வரைந்தார். எனினும், அப் பதிலால் திருப்தியடை பாத முகம்மது லெப்பை மக்கார் அவர்கள் ஓர் எதிர்ப் பதிலே அனுப்பினுர் நோய் முற்றிய நிலையில் தேக நிலே மோசமாகிக் கொண்டிருந்த சித்திலெப்பையவர்களால் அக் கடிதத்தைக் கவனிக்க முடியவில்லே. அதற்குச் சில நாட்களுக் குப் பின்னர், அதாவது, 1898 பெப்ரவரி 5ஆம் நாள் அவர் இறையடி சேர்ந்தார். அவரது மறைவு தீவெங்குமுள்ள முஸ்லிம்களேப் பெருத் துயரில் ஆழ்த்தியது. அவரது மறைவு அவரது நூலுக்கெதிரான குற்றச் சாட்டுக்களேக் களேந்தெறி யும் என அப்போது கருதப்பட்டது. ஆணுல், அவரின் எதிர்ப் டாளர்கள் தங்கள் காரியத்தைத் தொடர்ந்தனர். முகம்மது லெப்பை மரிக்கார் அவர்கள் 'தத்துவகாரக் கண்டனம்"
( 42 )

எனும் ஒரு நூலே வெளியிட்டார். அதிலே அவர் காலஞ் சென்ற நூலாசிரியரைச் சாடிஞர். அதன்பின், "அஸ்ராருல் ஆலம்' சமயக் கோட்பாட்டுக்கெதிரான விளக்கங்களைக் கொண்டிருப்பதால் அந்நூலே முஸ்லிம்கள் வாசிக்கக் கூடா தென உலமாக்களும் 'பத்வா" வழங்கினர். 'தஸவ்வுப்" (மெஞ்ஞான்) விளக்கங்களிலேயேஇந்தக் கருத்து வேறு பாடு கள் ஏற்பட்டன.இவ்வித கருத்து வேறுபாடுகள் 'தளிவ்வுப்" உலகில் எப்போதிருந்தோ நிலவி வருவனவாகும்."நிலையற்ற உலகமானது 'அஃருழை" (பண்பை) மாத்திரமே கொண்டுள் ளது." மஃரூழ்' (யதார்த்தம்) ஆனது.அதன் ஒரே சீரான, நிரந்தரப் பண்பில் "ஆலம்' எனும்வகையில் அடங்காது என சித்திலெப்பை அவர்கள் கருத்துக்கொண்டார்.
"அஸ்ராருல் ஆல'த்தில் சித்திதெப்பை அவர்கள் கூறுகிருர்:
"இவையெல்லாவற்றையும் நான் நூல் வடிவில் தர வேண்டுமென நினைக்கிறேன். இந்த உலமாக்கள் எனக்கு எதிராக உள்ளனர். நான் எவருக்கும் பயப்படவில்லே. "இல்ம்" (அறிவு) உடைய மக்கள் எனது கைங்கரி யத்தை மதிப்பர், விலேமதிக்க முடியா மாணிக்கங்களே யெல்லாம் நான் சேகரித்து அவற்றை லாபமாகவும் கருத்துச் செறிவுடனும் தந்துள்ளேன். உவமாக்கள் எனது நூலே நன்னுேக்கத்துடன் வாசிப்பார்களாஞல் அவர்கள் உண்மையைக் காண்பர். அவர்கள் எனது நூலே எதிர்ச்சார்பான மனநிஃப்யுடன் நோக்குவார்களா ஞல் அது முற்றும் பிழையானதெனக் காண்பர். நான் அவர் ஃளப் பயப்படத் தேவையில்லே. கடந்த கால் நூற்ருண்டுகாவமாக எல்லா வகையினரான உவமாக் களும் பெருந்தொகையாகத் திரண்ட முஸ்லிம்களின் கூட்டமும் எனக்கெதிராக எழுந்த போதிலும் எனது கைங்கரியம் "ஸ்லாமத்' எனும் துறைமுகத்தில் வந் திறங்கியது.
அறிவின் என் வித்துக்கள் நிலத்திற் பரவி, வளர்ந்து நல்ல பிரதிபலஃவத் தருகின்றன. என்னே ஆதரிப்ப
(43)

Page 27
வர்கள் என் நூல்களின் சிறப்பைக் காண்கின்றனர். என்னே எதிர்ப்பவர்கள் நான் இறந்து பல வருடங் களுக்குப் பின் என் மீது கண்ணீர் சிந்துவர். சித்தி லெப்பை நட்டிய வித்துக்கள் சுவைமிகு கணிகளேத் தருகின்றன என அவர்கள் பட்சாதாபப் படுவர்.எனது கைங்கரியத்தின் பிரதிபலனே அவர்கள் காண்பர். நான் நட்டிய மரங்களுக்கு அவர்கள் கண்ணீர் கொண்டு நீர்ப் பாய்ச்சுவர். என் கருத்துக்கள் பரவும். நான் இறந்த பின் அவர்கள் என் நண்பர்களாகி விடுவர். என்னுல் அவர்கள் நன்மையடைவர் என்னே எதிர்த்த அவர்கள் என்னே துன்புடன் நினேப்பவர். எனக்கு நன்றி சுறி எனக்காகப் பிரார்த்திப்பர். இப்போது நான் அவர் களுக்காகப் பிரார்த்திப்பதோடு அவர்களே மன்னிக்வும் செய்கிறேன்."1
உலக முஸ்லிம்களிடையே பெரிதும் கருத்துவேறு பாடு நிலவிய விடயங்களிலும் r, சித்திலெப்பை அவர் கள் தம் கருத்தைத் தெரிவிததுண்டு.
அவர் கருத்துத் தெரிவித்த மத தத்துவஞானம் சம் பந்தமான இன்னுெரு விஷயம் "ஹக்', 'கல்க்" பற்றிய தாகும். பிரபஞ்சம் முழுவதும் மிகவிரிவான ஒரு கண்ணுடி போன்றதென்றும் அள்ளாஹவின் இயற்பண்புகள் (சிபாத் துக்கள்) அந்தக் கண்ணுடியில் பிரகாசிக்கின்றன என்றும் அவர் கூறிஞர் மரத்தின் நிழல் தண்ணிருக்குள தெரிந் தாலும் தண்ணீருக்குள் ஒன்றுமில்லே என்பது போல, பிர பஞ்சமானது யதார்த்ததில் அப்படியே என்று அவர் கருத் துத் தெரிவித்தார்.
சித்தி லெப்பை அவர்களின் ஞாபகார்த்தமாக இலங் கை அரசாங்கம் சமீபத்தில் ஒரு முத்திரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 1. இப்பத்திகள் அஸ்ராருல் ஆலத்திவிருந்து நேரடியாக எடுக்கப்படவில்லே அதில் சித்திலெப்பை அவர்கள் கூறிய கருத்துக்களின் பொழிப்பாகும்.
(44)

மீரா லெப்பை பக்கீர் தம்பி
இந்நூற்ருண்டின் ஆரம்ப பகுதியில் பிரபல நகை, மாணிக்க வியாபாரியாக இருந்த பீ. ரி. மீராலெப்பை மரிக் கார் என்பாரின் தந்தையான மீரா லெப்பை பக்கீர் தம்பி அவர்கள் நெப்போலியன் போனபாட் பேரரச ஆஃனக் குழுத் தலைவரிடமிருந்து பின்வரும் "கெளரவக் குறிப்பு" (Honourable Mention) GFT Går 1575 GOp 'n GLibrari :
**Exposition universelle de 1855. Industrie Beaux Le Jury International Decerne La Mention Honorable a Mr. Lebbe Packier Tamby Colombo (Ile de CEILAN), auteur de'ime.
Collection de pierres precieus EXPOSIT DU ROYAUME UNI DE GRANDE BRETAGNE & D'IRLANDE Division dc L’INDUSTRIE 1st Class No: PALAIS de 1' INDUSTRIE PARIS le 15th Nove Imber 1855
LE PRESIDENT DE LA COMMISSION IMPERIALE NAPOLEON BONAPARTE.
"1855 இன் அகில உலகக் கண்காட்சி. கவின்கலேக் கைத் தொழிலில் ஒரு தொகையான பல்லின மாணிக்கக் கற் களேக் காட்சிக்கு வைத்தற்காக சர்வதேச ஜூரிகள், (இலங்கைத்தீவு) கொழும்பைச் சேர்ந்த மீராலெப்பை பக்கீர் தம்பி அவர்களுக்கு "கெளரவக் குறிப்பு' சான்றி தழை வழங்கியுள்ளது. இந்தக் சண்காட்சி, பெரிய பிரிக் தானியாவினதும் அயர்லந்தினதும் ஐக்கிய ராச்சியத் தின் கைத்தொழிற் பிரிவு 1 ஆம் இலக்க கைத்தொழில் மாளிகைக்குச் சொந்தமானது.
பாரிஸ், 15 நவம்பர் 1853. நெப்போலியன் போன பாட் பேரரச ஆஃணக்குழுத் தலைவர்."
(45)

Page 28
முகம்மது காவலிம் அப்துர் ரஹ்மான்
அப்துர் ரஹ்மான் அவர்களின் பரம்பரை பெருமை வாய்ந்த ஒரு பரம்பரையாகும். அவரின் தாயார் பாத்திமா அவர்கள், வெலிகமையில் அடங்கியிருக்கும் புகழ்பெறு மறைஞானியான குத்துப் செய்கு இஸ்மாயில் யமனி அவர் களின் மகளாவார். அவரின் மனேவியான கதீஜா அவர் களும் மாத்தறையில் அடங்கியிருக்கும் மறைஞானியான குத்துப் செய்கு யஹ்யா அல் யமனி (ஹாஜியார் அப்பா) அவர்களின் தாய்வழி மாமனின் மகனாவார்.
அப்துர் ரஹ்மான் அவர்கள் ஒரு வர்த்தகராகவே தமது வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்குக் கொழும் புக் கோட்டையில் ஒரு புடவைக் கடையும் புறக்கோட் டையில் ஒரு பலசரக்குக் கடையும் இருந்தன. அவர் மளிகைச் சரக்குக்களே வீடுகளுக்கு விநியோகிக்கும் ஒருவ ராகவும் இருந்தார். அவரது நேர்மையான கொடுக்கல் வாங்கலானது பெருந்தொகையான வாடிக்கைக்காரர்க3ள அவர் பால் ஈர்த்தது. அவரது நேர்மையின் புகழ் அவரது கெளரவத்தை மென்மேலும் அதிகரித்தது. அவர் இறக்கு மதி செய்த பொருட்களே ஏற்றிவர அவருக்குக் கப்பல்கள் இருந்தன. "எஸ். எஸ். ரஹ்மானிய்யா" எனும் கப்பல் அவரின் பெயரால் அழைக்கப்பட்ட ஒன்ருகும். எவ்வள வுக்கெவ்வளவு உழைத்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் வறியோர்க்கும் சிறந்த நோக்கங்களுக்கும் வாரி வழங் கிஞர்.
அவரின் நடவடிக்கைகள் புகழ் வாய்ந்தனவாகவும் போற்றப்பட்டனவாகவும் இருந்தன. உள்ளூர் சோனகரின்
(46)

நலன்களே ஊக்குவிக்கும் பொரு ட் டு ம் பேணும் பொருட்டும் அவர் 1876இல் கொழும்பு மாநகர சபை: யின் ஓர் ஆசனத்துக்கு நிய மிக்கப்பட்டார். அங்கு அவர் பெற்ற அழியா இட மாவினது, மாதிரே சடை உறுப்பினராக இருந்த அதே சமயம் அவரை உத்தியோ கப் பற்றற்ற மாநகர நீத வானுகவும் நியமிக்கச் செய்il தது. அக்கால இலங்கை: வாழ் சோனகர், சட்ட வாக்க சபையில் பிரதிநிதித் துவம் வேண்டி விடுத் த கோரிக்கைக்கிணங்க தேசா திபதி கோர்டன் என்பவர் .. ரால் அப்துர் ரஹ்மான் அவர்கள் முதல் முகம்மதிய உறுப் பினராக 1889 ஒக்ரோபர் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் எவ் வளவுக்கு உணரப்பட்டதெனில் அவரது ஐந்து வருடகால எல்லே முடிவுற்றதும் தேசாதிபதி ஹவ்லொக் என்பாரால் அவர் மேலும் ஐந்து வருட காலத்துக்கு நியமிக்கப்பட் டார். எனினும் அவர் அவ்வளவு காலம் உயிர் வாழ ନୀର୍ବା) *\].
அந்நாட்களில் நியமன உறுப்பினர்கள் பொதுவாக பிரித்தானியரின் கைப்பிள்ளைகளாகவே இருந்தனர். அவர் கள் தங்கள் ஆசனங்களில் ஏறக்குறைய மெளனிகளாகவே இருந்தனர். ஆணுல், அப்துர் ரஹ்மான் அவர்களோ அதற்கு விதிவிலக்கானவராக இருந்தார். நாடு, அல்லது
(47)

Page 29
தமது சமூகம் சம்பந்தப்பட்ட பிரேரஃணகளிலும் விவா தங்களிலும் அவர் தமது உள்ளக்கிடக்கையைத் தெள் :ளத்தெளிய அள்ளி இறைத்தார். அவரின் அக்கருத்துக்கள் ஏனேயோர் உளத்தில் அனுதாபத்தையும் பிரச்சினேகளில் தெளிவையும் ஏற்படுத்துவனவாக இருந்தன. தமது சமூ கத்தின் நலன்கள் தொடர்பாக அவர் சொரிந்த கருத் துக்களே 1894 ஆம் ஆண்டின் சட்டவாக்க சபை ஹன் சாட் அறிக்கைகளில் கானவாம்.
அக்கால சோனகர் தங்கள் சமூக, கல்வி சம்பந்தப் பட்ட விடயங்களில் பின்தங்கியிருந்தனர். இத்துறையில் துரித நடவடிக்கை அவசியமென அப்துர் ரஹ்மான் அவர் கள் உணர்ந்தார். முஸ்லிம் விவாகங்களேப் பதிவு செய்வ தற்காக 1886 இன் 8 ஆம் இலக்க, 1888 இன் 2 ஆம் இலக்க விவாகப் பதிவுக்கட்டளேச் சட்டங்களுக்கு அவசிய திருத்தங்கள் சேர்க்கப்படல் வேண்டுமென அவர் ஆணித் 25 TLD i'r dir; எடுத்துரைத்தார். அதுவரை கதீப்பாரின் *கடுத்தம்" மாத்திரமே நிலையற்ற முறையில் இருந்த எழுத்திலான அத்தாட்சியாகும். ஆகவே, முஸ்லிம் விவா கங்களைச் சட்ட பூர்வமான முறையில் கட்டாயமாகப் பதியச் செய்தது அப்துர் ரஹ்மான் அவர்களின் கருத் துரையால் எழுந்த ஒரு திட்டமேயாகும். அதுமட்டு மன்று. அதற்கான குறிக்கப்பட்ட கட்டணத்தை அறவிட முடியாது போனுல் அக்கட்டணம் கைவிடப்பட வேண்டு மெனவும் அவர் வற்புறுத்தினூர், ஒரு சிறிய விஷயத்தை யும் அவர் விட்டு வைக்கவில்லை,
முஸ்லிம் பெண்கள் கல்வியானது இஸ்லாமிய முறைக்கு அப்பாற்பட்டதென அன்று பிழையாகக் கருதப்பட்டது. வயது வந்த பெண்களில் மிகவும் குறைந்த ஒரு தொகை பினர் ஏதோ ஒருவகையான கல்வியை அன்று "பிரத்தி யேக' பாடசாலைகள் என அழைக்கப்பட்ட பாடசா?ல
(48)

களில் பெற்று வந்தனர். ஆணுல், அங்கு பெற்ற கல் வியோ மிகவும் தரம் குன்றியதாக இருந்தது. சட்டவாக்க சபையில் பெண் கல்விப் பிரச்சினே விவாதத்துக்கு எடுத் துக்கொள்ளப்பட்ட பொழுது, முஸ்லிம் பெண்களின் கல் விக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று
அப்துர் ரஹ்மான் அவர்கள் வற்புறுத்தினுர், முஸ்லிம்
பெண்களின் தேவைகளேக் கவனிக்க பெண் வைத்தியர் களேயும் பெண் கைகுத்துவோரையும் நியமிக்கச் செய்ததில் மூலகர்த்தாவாக விளங்கியவர் அவரே.
கொழும்பில் நிறுவப்பட்ட முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலேக்கான கட்டடத்தின் அரைவாசிச் செலவை அவரது அயரா வற்புறுத்தலின் காரணமாக 1898 இல் குடியேற்ற நாட்டுச் செயலாளர் அரசாங்கக் கணக்கில் அங்கீகரித்தார்.
அப்துர் ரஹ்மான் அவர்கள் மக்கள் சேவையில் எவ்வளவு ஈடுபாடு உடையவராய் இருந்தாரெனின் தம் உடல் நிலே பற்றிக் கவனம் செலுத்த அவருக்கு நேரம் கிடைக்கவில்லே, நலிவுற்ற உடம்பினராயினும் பொலிவுற்ற ஆன்ம சக்தியோடு அவர் தமது முயற்சி யைச் சுய தியாகத்தோடு தொடர்ந்தார். அவரது உளத் தில் பெண்கள் நலன் அதிகம் குடிகொண்டிருந்தது.
சட்டவாக்க சபையில் அவரது இரண்டாவது ஐந்து வருட கால எல்லேயில் அரைவாசி முடிவதற்குள், அதா வது 1899 ஜூன் 12 ஆம் தேதி அவர் காலன் கைவசப் பட்டார்.
( 49)

Page 30
அறபி பாஷா
பிரபல அறபுமொழி எழுத்தாளர்களில் ஒருவரான மஃறிவியின் சுற்ருென்றைச் சரித்திராசிரியர் ஜே. ஏ. வில் பெரேரா என்பார், புரக்டர் ஏ. ஸி. எம். அப்துல் காத ரின் "நிவ் ஸ்பியர்' எனும் வெளியீட்டின் பக்கங்களில் எடுத்தாள்கிருர், அது வருமாறு:
'682 முஹர்ரம் 14 (1283 ஏப்ரில் 14) இவ் இந்தியாவின் ஒரு பகுதியான இலங்கை ? ஆட்சியாள னிடமிருந்து தூதுவர் சிலர் எகிப்துக்கு வருகை தந்த னர். தூதுவர்களே அனுப்பிய இளவரசன் அபூ நிக்பா விபாதஸ் 3 என அழைக்கப் பட்டான். அத் துதுவர் 13 முழம் நீளமும் மூன்று விரல் அகலமுமுடைய ஒரு தங்கப் போன்றயைத் தம்முடன் எடுத்து வந்த னர். அது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பனேயோலே போன்ற ஒரு பொருளேக் கொண்டிருந்தது. அதனேக் கெய்ரோவிலிருந்த எவரும் வாசிக்க முடியவில்.ே தூதுவர்களேக் கேட்டதன் பேரில் அந்தச் சுவடியானது மரபுமுறையான முகமன்ேபும் நட்புறவையும் உள்ள டக்கியிருந்தெனத் தெரிய வந்தது. சுல்தானுடன் நெருங்கிய இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு யமன் தேசத்து ஆட்சியாளருடன் தாம் நேசத் தொடர்பை முறித்துக் கொண்டுள்ளதாக அர சன் பிரகடனப்படுத்தியிருந்தான். தம்மிடம் யாஃவி, மாணிக்கக்கற்கள் பெருமதிப்புள்ள பற்பல பொருட் கள் ஆகிய இன்னுேரன்ன அளப்பரிய வளங்கள் இருப்பு
1. அரபிபாஷா அவரிகள் ஓர் இலங்கை முஸ்லி மல்லாவிடினும் அவர் இங்கிருந்தபோது இந் நாட்டு முஸ்லிம் களின் நலனுக்காக உழைத்து அவர்களது வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திஞர். எனவே எம் மக்கள் மத்தியில் ஓர் இலங்கை முஸ்லிபாகவே அவர் கணிக்கப்படுகிருர், 2 அன்று இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியென்றே சிலர் நினோத்தனர்.
3. புவனேகபாகு
( 50 )

தாகவும் சுல்தானுக்கு ஒரு வெகுமதி அனுப்பியுள்ள தாகவும் அவன் மேலும் அறிவித்திருந்தான். இக்கால கட்டத்தில் இலங்கை அரசு இருபத்தேழு அரண்களே யும் பெருமதிப்புள்ள செம்மணிக்கல் (ரூபி) உட்பட பலதரப்பட்ட மாணிக்கக்கற் சுரங்கங்கஃபும் கொண்டிருந்தது, கண்ணோக் கவர்வனவும் பேரொளி பிலும் விலைமதிப்பிலும் இணேயற்றனவும் சுடர் வீசு வனவுமான எல்லாவித மாணிக்கக் கற்களாலும் அரச திறைசேரி நிரம்பி வழிந்தது."
எவ்வாருயினும் இலங்கையானது தொன்றுதொட்டே எகிப்திய சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு நாடாகும், அறபிகள், "செய்லான்' அல்லது "செரந்தீபு' (அன்று இலங்கை அறியப்பட்ட பெயர்) பற்றி அறிந் திருந்தனர். எகிப்தியரும் அவர்களின் இந்திய, சீன கடற் பிரயாணங்கள் மூலம் இலங்கையை அறிந்திருந்தனர்.
மத்திய கிழக்கையும் ஆபிரிக்க வடகரையையும் உதுமா னிய துருக்கியர் தம் அதிகாரத்துள் வைத்திருந்த சமயம் எகிப்து பெரிய பிரித்தானியாவின் ஆட்சிச் செல்வாக்கின் கீழ் இருந்தது. துருக்கிய சுல்தான், அல்பேனிய இளவர சன் ஒருவனின் வழித்தோன்றவே எகிப்தின் தேசாதிபதி யாக நியமித்திருந்தார். தேசாதிபதியோ தம்மை "கதீவே" எனும் பெயரின் கீழ் எகிப்தின் ஆட்சியாளராக ஆக்கிக் கொண்டார். எகிப்தின் உள்ளூர்க் குடிமக்களோ தங்கள் தாய்நாட்டின் மீது பிரித்தானியரின் ஏகபோக ஆதிக்கத் துக்கு விரோதமாக செயற்படத் தொடங்கினர். சுதந்திரக் கோரிக்கை மூலம் எழுந்த தேசியவாதம் எனும் அலே நாடெங்கும் பரவத் தொடங்கியது. இச் சமயத்தில்தான் மும்முர தேசியவாதியான அறபி பாஷா, அம் மக்கள் மத்தியில் தேசியவாதக் கருத்தைப் பகிரங்கமாக எடுத் துரைக்கும் ஒரு தலைவராக விளங்கினர். அவர் எகிப்திய ரைப் பிரித்தானியருக் கெதிராக ஒரு பகிரங்கப் புரட்சி யில் ஈடுபடுத்திஞர். எனினும், அப்போராட்டம் ஒரு சக்தி பற்ற ஆரம்பமாகவே அமைந்தது. படைபலம் கொண்ட
( 51 )

Page 31
பிரித்தானியர் அப் புரட்சியை இலகுவாக அடக்கிவிட்ட னர். அறபி பாஷா கைதுசெய்யப் பட்டார். சரணுகதியின் அடையாளமான வெள்ளேக் கொடியைக் கரவெண்ணத் துடன் பாவித்து, அலக்சாந்திரியாவில் தமது புரட்சியைத் தொடர்ந்து நாடாத்தும் நோக்கத்துடன் தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக அதைச் சாதமாக ஆக்கிக்கொண்டார் என அவர்மீது கொடுங்குற்றம் சாட் டப்பட்டது. அறபி பாஷாவும் அவருடைய சகாக்களும் மரணதண்டனை விதிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்படும் வரை சிறைவைக்கப் பட்டனர்.
இக் கால இடைவெளியில் பரபரப்பூட்டும் ஒரு புது மைச் சம்பவம் நிகழ்ந்தது. ஐரிஷ் பாராளுமன்ற நடவடிக் கைக் குறிப்புக்களில் இச் சம்பவம் காணப்படுகின்றது. அதாவது, பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒருவரான ஓட்ொனஃச் சேர்ந்த ஓடொ னல் என்பார் ஆற்றிய சொற்பொழிவே அந் நிலயை ஏற்படுத்தியது. தமக்கு அறயி பாஷா பற்றியும் அவரது வழக்கு விசாரனே பற்றியும் அனுமதேயக் கடிதமொன்று கிடைத்துள்ளதாக அவர் அறிவித்தார். அக் கடிதம் வரு LDITU:
"அன்புள்ள ஐய! எங்கள் மதிப்பு வாய்ந்த முதிய வரின் முகத்தை நேருக்கு நேர் நோக்கக் கூடிய துணிவு படைத்தவர் நீங்கள் என்பதை அறிந்திருப் பதனுல், பகைவரை ஏமாற்றும் நோக்கத்துக்காக போர் நிறுத்த அடையாளக் கொடியை உபயோகிப்பது சம் பந்தமாக வூல்ஸ்லியின் படைவீரர் குறிப்புப் புத்தகத் தைப் பார்க்கும்படி நான் உங்களே மன்ருடுகிறேன். திரு. கிளாட்ஸ்டோன், இராணுவச் சட்டத்தை ஆரா பும் சமயம் அவர் கண்டுபிடித்த அத்தாட்சியானது அவரது கவனத்திலிருந்து தப்பியிருக்கலாம்.
உங்கள் உண்மையுள்ள, (ஒப்பம்) ஒர் அரசியல் எதிரி."
1. அப்போது பிரதமராயிருந்த திரு கிளாட்ஸ்டோன்.
(52 )

தரைப்படை ஒழுங்கு விதிகள் பற்றிய இக் குறிப்புப் புத்தகத்தின் பிரகாரம், அறபிபாஷா அகப்பட்டுக் கொண்ட ஓர் இக்கட்டான சூழ்நிலை போன்ற ஒரு சூழ்நிலையில் போர் நிறுத்தத்துக்கான கொடியைப் பாவிக்க அனுமதி யிருக்கின்றது.
மேலும் ஓடொனல், பாராளுமன்றத்தில் இதுபற்றிக் கேள்வி எழுப்பினர்
பிரதம அமைச்சரைக் கேட்பதற்கு - அறபி LIT୍ht தமது படைகளே பும் துப்பாக்கி 2ளயும் அலக்சாந்திரியாவிலிருந்து வாபஸ் பெறும் பொருட்டு புத்த நிறுத்தக் கொடியைப் பாவித்தது மன்னிக்க முடியாத கொடும் குற்றமென அவர் பிர நடனப் படுத்தியுள்ளதால், ஸேர் கார்னட் வூல்ஸ்வி பின் ஆக்கமான "படைவீரர் குறிப்புப் புத்தகம்' எனும் நூலே, அதிலே அறபி பாஷாவால் கையாளப்பட்ட இம் மோசமான செயல்முறை பிரித்தானிய இராணு வத்தால் போதிக்கப்பட விதந்துரைக்கப்பட்டிருப் பதால், பிரித்தானிய இராணுவத்தின் புழக்கதிலிருந்து FīL- 3. KIF LI JEW GAI ri -I ifit .5-יפוu LL.htm( :ת ாடுப்பாரா?" பரபரப்பூட்டும் இச் செய்தி சம்பந்தப்பட்ட அதிகாரி களிடையே ஒரு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தி யது. இந்தப் பிரச்சினே பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு ாடுக்கப்படு முன்னரே மரணதண்டனே விதிக்கப்பட்டிருந்த அற பாஷாவும் அவருடைய தோழர்களும் கொல்லப்பட டார்களென்றும் ஆளுல் அறபி பாஷா of Sir T விக்கப்படும் ஒரிடத்துக்கு அவர்கள் எகிப்திவிருந்து நாடு கடத்தப்படுவார்களென்றும் உத்தியோகபூர்வமாக அறி விக்கப்பட்டது மரணதண்டனே மாற்றப்பட்டுவிட்டதென்ற பரபரப்பூட்டும் தகவலும் இலங்கைக்கு அவர்களே நாடு கடத்த எடுக்கப்பட்ட முடிவும் அறபி பாஷாவுக்கு மகிழ்ச்சி பைக் கொடுத்திருக்கலாம். ஏனெனில், இலங்கைத் தீவா னது முதல் மனிதர் ஆதமின் பாதம் பதிந்த நாடு என்று
(53 )

Page 32
அன்று கருதப்பட்டது. அத்துடன் தொன்றுதொட்டு | G மிகக்கும் அறபு நாடுகளுக்குமிடையே இருந்த தொடர்பும் உலகறிந்ததே.
1882 டிசம்பர் 26 ஆம் நாள் கால அறபி பாவாவும் அவரின் தோழர்களும் "எம்ரியொட்ஸ் எனும் கப்பவில் அலக்சாந்திரியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட் டனர். 1883 ஜனவரி 10 ஆம் நாள் அக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கையின் லெப்டின்ன்ட் கவர்னராக இருந்த ஜே. டக்லஸ் என்பார், அன்று மாஃ: டொக்டர் ஒபிரின் என் பாருடன் சென்று, அறபி பாஷா வும் அவரது குழுவும் அடுத்த நாள் காலே இறங்கவும் கொழும்பிலுள்ள"பிரேபுருக் திவுஸ், ஸ்டுரான் ஹவுஸ் லேக் திரவுஸ் ஆகிய டங்களில் தங்குவதற்காக அழைத்துச் செல்லப்படவும் ஒழுங்கு செய்ததோடு வேறு இல்லங்கா யும் அவர்களின் உபயோகத்துக்காக ஒதுக்கிக் கொடுத்து ர்ே. தேசாதிபதியின் கட்ட&ளப் first F, Grottish Galtair ஆன் கம் ஆரியைச் சேர்ந்த லெட்வட் என்பவரால் எல்லா இல்லங்களுக்கும் தளபாட வசதிகள் செய்துகொடுக்க Lil' liar.
பிரித்தானிய அரசாங்கம் அநபி பானாவுக்கு 800 பவுனே பும் ஏனேயோருக்கு 400 பவுணிலிருந்து குறைவுபடும் ஒரு தொகையையும் வருடாந்தக் கொடுப்பனவாகக் கொடுத் கதி நாடு கடத்தப்பட்ட இக்குழுவில் ஐம்பத்தாறு பேர் இருந்தனர். அவர்களும் அவர்களின் குடும்பங்களும் தங் சுளேப் புதிய சூழ்நிலைக்கேற்ப சரிப்படுத்திக் கொண்டனர். வெளிநாடொன்றுக்கு நாடு கட க்கப்பட்டிருந்த நிலயிலும் அந்நாட்டு மக்களிடையே அமைவடக்கமானதும் கண்ணிய மானதுமான ஒரு நிலையை அறபி பாஷா பெற்றிருந்தார். அவர்களின் முதல் ஆர்வம் ஆங்கில மொழியைக் கற்பதன் மேல் அமைந்திருந்தது வியப்பாகத் தோன்றலாம். இக் விகங்கரியத்தில் அவர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
(54)
238

அறபி பாஷாவின் தலமையில் அவருக்கு உற்ற துனே யாட்கள் அறுவர் இருந்தனர். துல்பா பாஷா, முகம்மது பஹ்மி, முகம்மது ஸ்மிது, அலி பஹ்மி, அப்துல் ஆல், யஃகூப் ஆகியோரே அவர்கள். அவர்களில் அப்துல் ஆல் கொழும்பில் மரணமடைந்தார். அவரது உடல் குப்பியா வத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள் ளது முகம்மது பஹ்மி, கண்டியில் மரணமடை ந்தார். அவ ாது உடல் கண்டி மஹியாவ் பள்ளிவாசல் வளவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அறபி பாஷாவின் பிள்ளைகளிற் சிலர் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். கல்வியில் அவர்களுக்கிருந்த ஆர்வம் சிறப்பானது. அவரின் ஒரு மகன் பறங்கிப் பெண் ஒருவரை மணந்தது காரணமாக அது பாஷாவின் குடும்பத்துக்கும் இலங்கைக்குமிடையே குடும்பத் தொடர்பு ஏற்பட வழிகோவியது. அப்பெண் இஸ்லாத்தைத் தழுவி ஜமீலா என பெயர் கொண்டார். அவர்களுக்கு பிரட் அறபி எனப் பெயரிய ஒரு மகன் இருந்தார். உண்மையில் பரீத் அறபி என்பதன் ஆங்கில மரபுருவே அது, அவர் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் கல்வி பயின்று பின்னர் எகிப்துக்குத் திரும்பிவிட்டார்.
இலங்கை முஸ்லிம்கள் அறபி பாஷாவையும் அவரின் குழுவினரையும் திறந்த மனதுடன் வரவேற்றுக் கெளரவித் தனர். அவர்களுக்கிடையில் நெருங்கிய நேசமும் தொடர் | 412 ஏற்பட்டன. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அம் மக்களே உள்ளூர் முஸ்லிம்கள் வரவேற்றுப் போற்றி, இங்கு அவர்கள் செளகரியமாகத் தங்க எல்லா வசதிகளேயும் செய்து கொடுத்தனர். அத்துடன் அவர்கள் தங்கள் பிறந்தகத்துக் குத் திரும்பும் திட்டத்துக்கும் தம்மாலான எல்லா உதவி களேயும் அளித்தனர்.
அறபி பாஷாவும் குழுவினரும் இலங்கை வந்தடைந்த சிறிது காவத்தில் ஹாஜி இஸ்மாயில் எபெண்டி எனப் பின் னர் அறியப்பட்ட இஸ்மாயில் லெப்பை மரிக்கார் ஆலிம் என்பாரின் தலைமையில் ஒரு குழு ஹஜ்ஜுக்குச் செல்ல
(55)

Page 33
ஆயத்தம் செய்தது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அறபி பாஷா குழுவினர் எகிப்திலுள்ள தங்கள் உறவினர் களுக்கும் நண்பர்களுக்கும் கடிதங்களேயும் வெகுமதிகளேயும் அனுப்பி வைத்தனர். அறபி பாஷாவும் அரசினரிடம் மன் எரிப்புக் கோரி மனுவொன்றை அனுப்பி வைத்தார். இம்மனு அந்த ஹஜ் யாத்திரிகர்களால் தயேனே உறையொன்றுள் பதுக்கப்பட்டு மிகக் கவனமாக எடுத்துச் செல்லப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இந்த மனுவினுல் எதுவித பயனும் ஏற். ப_வில்லை. ஏனெனில், நாடு கடத்தல் சம்பந்தமான பிரசுட ஒனம் வெளியிடப்பட்டு ஒரு சிறு காலமே கடந்திருந்ததனுள் இப் பிரச்சினையைப் பற்றி ஆலோசிக்கக் கூட சம்பந்தப் பட்ட அதிகாரிகள் விரும்பவில்லே. இச் சந்தர் ப்பத்தில் இலங் கையின் தேசாதிபதியாக னேர் வில்லியம் கிரகரி இருந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சியென்றே கூற வேண்டும். ஏனெனில், அவர் எகிப்திலிருந்த சமயம் அறபி பாஷாவுடன் தொடர்பு கொண்டவராக இருந்தார். அறபி பாஷா இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்த வேளே தேசாதிபதியுடனுன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டாரெனினும் அவ சரமாக மன்னிப்பைப் பெற்றுத் தமது தாய்தாட்டுக்குத் திரும்புவதற்குத் தேசாதிபதியாலும் எதுவும் செய்ய முடியா தென்று அவருக்குத் தோன்றியது.
உள்ளூர் முஸ்லிம்களுடன் சுதந்திரமாகக் கலந்துறவாடி பதன் மூலம் அவர்களின் கல்வி, மத, சமூக நடவடிக்கை களில் அறபி பாஷா கலந்து கொண்டார். அதனுல் இரண்டு பகுதியினரும் எவ்வளவோ கற்றுக் கொண்டனர். சிறப்பாக அவர் முஸ்லிம்களின் கல்வி எழுச்சியில் தமது அயரா ஆதரவை ஸேர் ராஸிக் பரீத் அவர்களின் பாட்டஞரான வாப்பிச்சி மரிக்கார் அவர்களின் தலமையில் நல்கினுர், உண்மையில் வாப்பிச்சி மரிக்கார் அவர்களுடன் அறபி பாஷா எவ்வாறு இனேந்திருந்தாரெனின் அறபி பாஷா அவரை "அல்-வாப்பிச்சி" என்றே அழைத்தார். அவ்வாறு அழைத்த தற்குக் காரணம் தமது தோழமை உணர்ச்சியை எடுத்துக் காட்டுவதற்காகவாகும். ஸாஹிரா மத்ரஸா அதன் குழந்
(56)

ாதைப் பருவத்தில் இருந்த :சமயம் அதன் பரிசளிப்பு |விழாவில் தம்மைத் தலைமை I வகிக்கும்படி சுே ட் டு க் :கொண்டதை அறபி பாஷா தமக்களிக்கப்பட்ட ஒரு தனி
கெளரவமெனக் கருதிஞர். இவ் வைபவத்துக்கு அவர் சமுகமளித்தமை அங்கு குழுமியிருந்த அனைவரா |லும் பெரிதும் உணரப்பட் டது. அத்துடன் அது ஸாஹி | ராவுக்கு ஒரு கெளரவத்தை ந்யும் கொடுத்தது.
அறபி பாஷா இலங்கை பிலிருந்த சிறிது காலத்தில் அவருடன் நெருங்கிப் பழி கியவர்களில் ஹாஜி இஸ்மா பில் எபெண்டி அவர்களும் ஒருவராவார். அவர் அறபு மொழி யிலும், மதி அறிவிலும் தமக்கிருந்த புலமை காரணமாக அறபி பாஷாவின் நெருங்கிய நண்பராக விளங்கியது மட்டு பன்றி அறயி பாஷா அவர்கள் வெளியிட நேரிட்ட աI -ն ցլյITմ: கருத்துக்களேயும் அனேகமாக மற்றவர்களுக்கு மொழி பெயர்த்து அறிவிக்கும் ஒருவராகவும் விளங்கிஞர் அறபி பாஷாவினதும் ஏனேய பாஷாக்களினதும் சமூகத்தில் அவர் எந்நேரமும் கலந்துறவாடுபவராக இருந்தார். அவர்களும் அவரை அதிகம் விரும்பிப் போற்றினர்.
ஸாஹிரா மத்ரஸாவில் நடைபெற்ற விசேட விளேயாட் டுப் போட்டி வைபவமொன்றில் அறபி பாஷா கலந்து கெளரவித்தார். இவ் வைபவத்தின்போது அவர் ஒரு தென் னங் கன்றை ஞாபகார்த்தமாக ஸாஹிரா மத்ரஸா irgītei நட்டிஞர். அது சில ஆண்டுகளுக்கு முன் வரை நிலத்திருந் தது. அம் மரம் வாப்பிச்சி மரிக்கார் அவர்களால் அன்பளிப்
(57)

Page 34
புச் செய்யப்பட்ட கட்டடத்தை நோக்கி வளைந்திருந்ததனுல் அது அக் கட்டடத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் என ஸாஹிரா அதிபர், மரதனேப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு அறிவித்ததன் பேரில் அம்மரம் வெ. டப்பட்டது. எனினும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்மதத்தின் ஒரு காயை எடுத்து அம் மரம் இருந்த இடத் துக் கருகின் அவர்கள் நட்டுவித்தார்.
1901ஆம் ஆண்டு உதயமானதும் அறபி பாஷா அவர் களுக்கு அளிக்கப்பட்ட ன்னிப்பும் வந்து சேர்ந்தது. அவரின் தோழர்களும் தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இச் செய்தியை அறபி பாஷா அவர்கள் ஆனந்தித்தாலும் கண்ணர் Tஆம் வரவேற்ருர், தாயகம் திரும்பக் கிடைத்த பேறு ஆனந்தத்தையும் நண்பர்களே விட்டுப் பிரியும் துயரம் கண் வீைரையும் வரவழைத்தன.
அறபி பாஷாவுக்கும் அவரின் தோழர்களுக்கும் ஒரு மாபெரும் பிரிவுபசாரம் நடைபெற்றது. ஹமீதியாப் பாட சாஃப் வனவில் நடந்த அக்கூட்டத்தில் அறபுத் துதிப் பாடல் களும் சுகமே தாயகம் போய்ச் சேர்வதற்கான பிரார்த் தஃன களும் இடம் பெற்றன. நாடு கடத்தப்பட்ட அவர்களிற் சிலர் காலத்துக்குக் காலம் மன்னிப்பு வழங்கப்பட்டதன் பேரில் முன்னரேயே இந்நாட்டை விட்டுச் சென்றிருந்தனர். எனினும், கடைசிக் குழுவிலேயே அறபி பாஷா சென்ருர், அவரது பிரிவு அங்கு கூடியிருந்த முஸ்லிம்களின் இதயத்தைப் பிழிந்தது.
அறபி பஷா இத் தீவிலிருந்து இறுதியாகச் சென்றது கரீம் ஜீ ஜிடர்ஜி அவர்களின் இல்லமான பம்பளப்பிட்டிய ssfassyfi, in "FF5)7 farr“ விவிருந் தாகும் அங்கு அறவி பாஷா அவர்கள் அன்ஞரின் விருந்தினராக இருந்தார்.
1901 செப்ரெம்பர் 18ஆம் நாள் அறபி பாஷா அவர் கள் அவரின் நண்பர்கள் மத்தியிலிருந்து எலாத்துடனும் -offi, ணிைருடனும் இத்தீவின் சுரையை விட்ட i-T (ly T.
(58)

கொழும்பைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு சோனக குடும்பத்தில் அப்துல் ஆளபீஸ் பிறந்தார். அவரின் பாட் டனுர் உதுமா வெப்பை மரிக்கார் செய்கு அப்துல் காதிர் மரிக்கார் (சேகாதி மரிக்கார்) ஆவார். அவர் சோனகரின் ஒரு பிரதான் பிரிவுத் தஃவராக விளங்கிஞர். அவரின் தந்தை ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் அவர்கள் காசாளர் பதவி வகித்தவர். ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் மீது நம் பிக்கை கொண்ட அரசாங்கம் அவரை 1879 இல் குப்பியா வத்தை முஸ்லிம் மையவாடியின் நம்பிக்கைப் பொறுப் பாளர் மூவரில் ஒருவராக நியமித்து அதனே அவருக்குக் கையளிக்கவும் செய்தது,
(59 )

Page 35
அப்துல் அளிஸ் அவர்கள் பிறந்தது 1867 ஒக்ரோபர் 27 ஆம் தேதியாகும் அவர் அவரின் தந்தையின் கீழ் குர் ஆன்யும் தமிழையும் கற்ருர், ஆங்கில அறிவைப் புறக் கோட்டை அரசாங்க ஆண்கள் பாடசாலேயில் பெற்ருர், மத அறிவை நன்கு பெற்ற அவர் தமிழிலும் பாண்டித் தியம் பெற்றதோடு அனேக ஆங்கில நூல்களேயும் படித் தார். 1888 இல் அல் ஜாமிப்பத்துல் இஸ்லாமிய்யாக் கழ கத்தில் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். வைத்தியசாலேயிலிருந்து முஸ்லிம்களின் சடலங்களே அடக் சத்தின் பொருட்டு பெற்றுக்கொள்வது இக்கழகத்தின் நற்பணிகளில் ஒன்ருகும். நறிஞர் சித்திலெப்பை அவர்கள் ஆரம்பித்த 'முஸ்லிம் நேசன்' எனும் பத்திரிகையின் பதிப்பாசிரியர் பதவியை 1889 இல் அவர் ஏற்றுக்கொண் டார். ஏ. எம். வாப்பிச்சி மரிக்கார் அவர்களின் ப்ொரு ஞதவியுடன் சித்திலெப்பை அவர்கள் ஆரம்பித்த கல்வி இயக்கத்துக்கு அப்துல் அளிபீஸ் அவர்கள் தமது முழு ஆதரவையும் வழங்கினூர். இந்த இயக்கம் கொழும்பு முஸ்லிம் கல்விக் கழகத்தை ஸ்தாபித்து எாஹிராக் கல் லூரியை நிறுவியது. இக்கழகத்தின் செயலாளராக அப்துல் அளிஸ் அவர்கள் விளங்கிஞர். ஸாஹிராக் கல் லூரியின் முகாமையாளராக விளங்கிய வாப்பிச்சி மரிக் கார் அவர்கள் வழங்கிய நற்சான்றுரையே அப்துல் அளிஸ் அவர்கள் அளித்த மகத்தான உதவியை எடுத்துக் காட்டுவதாக விளங்குகின்றது. "இக் கைங்கரியத்தில் எனக்கு துணிவுடன் உதவிய குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பாக ஐ எல். எம். அப்துல் அளவீஸ் அவர்களுக்கு அவர் அளித்த அறிவுரைக்காக என் மனமார்ந்த நன்றி உரித்தாகும்" என்று அவர் கூறிஞர்.
வழக் கறிஞரா ன ஏ. ஸி. முகம் மீது என் பார் ஸாஹிராக் கல்லுரி பரிசளிப்பு விழாவொன்றில் அப்துல் அளிஸ் அவர்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது, "இக்கல்வி நிவேயத்தின் நெம்புகோலே அவர் தாம்" என்ருர்,
( 60 }

1900 இல் "சோனகர் சங்கம்' எனும் ஒரு சங்கத் தைச் சோனகர்கள் ஸ்தாபித்து அதன் தலைவராக அப்துல் அளtஸ் அவர்களேத் தேர்ந்தெடுத்தனர். விக்டோ ரியா ராணியினதும் ஏழாவது எட்வட் மன்னரினதும் மறைவை யொட்டி அவர் அனுதாபத் தந்திகளே அனுப்பி வைத்தார். துருக்கி அரசாங்கக் கொன்சல் அத்தாவுள் ளாஹ் பே என்பார் கொழும்பைத் தாண்டி சிங்கப்பூர் சென்ற சமயம் அப்துல் அளிஸ் அவர்கள் அவருக்கு வாழ்த்துரை யொன்றை வாசித்தளித்தார். முதல் முஸ்லிம் அட்வகேட்டான அப்துல் காதர் அவர்களுக்கு அவர் ஒரு வாழ்த்துரையை வழங்கினுர். டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான் அவர்களேச் சட்டவாக்க சபைக்கு ஒர் முகம் மதிய உறுப்பினராக நியமித்ததற்காக தேசாதிபதி ஸேர், வெஸ்ட் ரிட்ஜ்வேக்கு ஒரு நன்றித் தீர்மானத்தையும் அவர் நிறைவேற்றிஞர்.
"மறுமை வாழ்க்கை பற்றிய முஸ்லிம்களின் கொள்கை' எனும் விடயம் பற்றி சோனக சங்க மண்டபத்தில் அப்துல் அஸிஸ் அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்த் தினூர் மறுமை வாழ்க்கை பற்றிய அவரது விளக்கா மானது இமாம் கஸ்ஸாலி (ரஹ்), மிர்ஸா குலாம் அகமது ஆகியோரது விளக்கத்தின் மீது அமைந்திகுந்தது. இந்தச் சொற்பொழிவு இந்நாட்டுப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அது பலரின் பாராட்டுதலைப் பெற்
1898 இல் அப்துல் எனும் ஓர் அறபுத் தமிழ்ப் பத்திரிகையை வெளியிட் டார். அது கல்லச்சில் வெளிவந்தது. 1901 இல் "முஸ்லிம் காடியன்" எனும் ஒரு தமிழ்ப் பத்திரிகையை அவர் ஆரம்பித்தார். பின்னர் அது ஒரு தமிழ்-ஆங்கில சஞ் சிகையாக வெளிவந்தது. முஸ்லிம் விவாகங்களேக் கட்டா யம் பதிவு செய்யச் சட்டம் இயற்றப்படல் வேண்டுமென இச்சஞ்சிகை மூலம் அவர் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தார். கிறிஸ்மஸ் வெளியீடொன்றில் பிரசுக்கப்பட்ட,
(61)

Page 36
குடியேற்ற நாட்டுச் சேயலாளரான பேர் ஹியூ கிளிபட் என்பாரின் இஸ்லாத்துக்கு விரோதமான கண்டனங்களுக்கு அவர் சிறந்த் பதிலடி கொடுத்தார். 1907இல் 'அல்-முஸ் விம்" எனும் ஒர் ஆங்கில-தமிழ் பத்திரிகையை அவர் பிரசுரித்தார். சட்ட வாக்க சபையில் இன அடிப்படையி வான பிரதிநிதித்துவம் பற்றியும் முஸ்லிம் கல்வி பற்றியும் அவர் இந்நாட்டுப் பத்திரிகைகளுக்கு வழங்கிய கருத்துரை கள் பொதுக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
முதல் முஸ்லிம் அட்வகேட்டான் அப்துல் காதர் அவர் கள் துருக்கித் தொப்பி அணிந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிள் முன் தோன்றுவது தடுக்கப்பட்ட பொழுது அப்துல் அன்பீஸ் உட்பட முஸ்லிம்களின் தூது கோஷ்டியொன்று பிரதம நீதியரசர் பேர் .ே பி. யாடை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது முறையீட்டைச் சமர்ப்பித்தனர். அதனுல் எதுவித பலனும் கிடைக்காததால் முஸ்லிம்கள் 1905 டிசம் பர் 31 ஆம் தேதி மாதானேப் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கூட்டினர். மாட்வின்பு தங்கிய மன்னரிடம் நிவாரணம் வேண்டி அப்துல் அளிஸ் அவர்கள் அங்கு ஒரு பிரேரஃணயைப் பிரேரித்தார்.
சட்டவாக்க சபையில் தமிழ் பேசும் மக்களே ஒரு தமிழ் உறுப்பினர் பிரதிநிதித்துவம் செய்தார். 1880 ஆம் ஆண்டள வில் முஸ்லிம்கள்-அவர்களிற் பெரும்பான்மையினர் சோனக இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர்-சட்டவாக்க சபை பில் தாங்கள் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரால் பிரதிநிதித்துவம் செய்யப்படல் வேண்டுமென் அடிக்க்டி வேண்டுகோள் விடுத்து வந்தனர். அப்போது சோனகர், தமிழ்பேசும் மக்களெனவும் அவர்கள் தமிழின்த்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டவர்கள் எனவும் கூறி, அந்த அடிப்படை
(62)

யில் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் அதனே எதிர்த்
தார். சோனகர் தமக்கென்று ஒர் உறுப்பினரைச் சட்ட
வாக்க சபையில் கொண்டிருக்க வேண்டுமென்று சித்தி லெப்பை அவர்கள் முன்னின்று நடாத்திய போராட்டத்தை அப்துல் அஸிஸ் அவர்கள் தொடர்ந்தார். சோனகரின் வேண்டுகோளே இராமநாதன் அவர்கள் சட்டவாக்க சபை யில் எதிர்த்ததோடு, அரச ஆசிய கழகக் கூட்டத்தில் 'Ethnology of the 'Moors' of Ceylon' (gali Ghari Gifter கர் இன வரலாறு) எனும் ஓர் ஆய்வுக் கட்டுரையையும் வாசி த்தார். அதிலே அவர், சோனகர் தமிழரின் பரம்பரையினர் எனும் தமது வாதத்தை நிரூபிக்க முயன்ரூர். அப்துல் ஆள்பீஸ் அவர்கள் சோனகர் சங்கத்தின் ஆதரவின் கீழ் இராமநாத னது இந்த ஆய்வுக் கட்டுரைக்கான திறஞய்வொன்றே வெளியிட்டார். அந்த நூலிலே அவர், இலங்கைச் சோன கர் ஒரு புறம்பான இனம் என்றும் அவர்கள் இலங்கையில் குடியேறிய அறபியரின் சந்ததியினர் என்றும் நிரூபித்தார். இந் நூல் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தால் தமி பூழில் வெளியிடப்பட்டுள்ளது.
1903 இல் அப்துல் அன்பீஸ் அவர்கள் மரதாசீனப் பள்ளி வாசவின் முகாமை நம்பிக்கைப் பொறுப்பாளராக ஐந்து வருடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக் காலவரை பறை முடிவில் பேலும் ஐந்து வருடங்களுக்கு அவர் தேர்ந் தெடுக்கப்பட்டார். அது ஜமாஅத்தின் ஒரு பிரிவினரால் எதிர்க்கப்பட்டு இதுதியில் "பிரிவி கவுன்வில்' வரை போயிற்று, "பிரிவி கவுன்வில் அவரது தேர்வை அங்கீகரித் தது.
முகம்மது மாக்கன் மாக்கர் எபெண்டி அவர்கள் துருக் நிய கொன்சலாக நியமிக்கப்பட்ட பொழுது அளிக்கப்பட்ட
( ნ3)

Page 37
இராப் போசன விருந்துக்கு அப்துல் அளிஸ் அவர்கள் திலேமை தாங்கினுர், 1911 ஆம் ஆண்டில் குடிசன புள்ளி விவர அறிக்கைக்கு அவர் 'சோனகர், குழந்தைப் பிறப்பில் கையாளும் வழக்கங்களும் அவர்களின் சாமத்தியச் சடங்கு களும்' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கினூர்.
1905 இல் சட்டவாக்க சபையில் அப்துர் ரஹ்மான் அவர்களின் பிரதிநிதித்துவ காலம் முடிவடைந்தபோது அந்த இடத்துக்கு அப்துல் அளிஸ் அவர்கள் நியமிக்கப் படல் வேண்டுமென்று முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு மனு வொன்றை அனுப்பினர். எனினும், முன்னேயவரின் காலம் நீடிக்கப்பட்டது. 1908 இல் அப்துல் அளிஸ் அவர்கள் முகம்மதிய விவாகப் பதிவுக் கட்டளேச் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வரைந்தார். இஸ்லாமிய சட்டங்களிலிருந்து வில காமல் முஸ்லிம் பெண்கள் சமூக, அறிவியல், ஆத்மீகத் துறைகளில் இஸ்லாத்தின் பொற்காலப் பெண்கள் போல் முன்னேற "பர்தா' விஷயத்தில் சீர்திருத்தங்களே அவர் சமர்ப்பித்தார்.
மார்க்க அறிவைப் பெறும் விஷயத்திலும் அவர் சீர் திருத்தங்களே வேண்டினுர், குர்ஆன், ஹதீஸ், மெனலூது ஆகியவற்றை அறபு மொழியில் ஒதுவதால் நன்மை கிடைக் கும் என்று உலமாக்கள் கூறுவது மட்டும் போதாது என அவர் கருத்துக் கொண்டார். உண்மையிலே தேவைப்படு வது, மார்க்க கிரந்தங்களின் மொழிபெயர்ப்பும் விளக்கமும் தாம் என அவர் கருத்துத் தெரிவித்தார். "பப்டிஸ்ட்" இளேஞர் கழகம் அதனது மண்டபத்தில் இஸ்லாம் பற்றி ஒரு சொற்பொழிவாற்ற அவருக்கு வாய்ப்பளித்தது.
1912 இல் அப்துல் அளிஸ் அவர்கள் யாழ்ப்பாணத் துக்கு விஜயம் செய்து ஆங்கு ஜும்ஆத் தொழுகைக்குப் பின் னர் ஒரு மார்க்க சொற்பொழிவாற்றினுர், யாழ்ப்பான முஸ்லிம்கள், கதீப்மார்களேக் கொண்டு ஜும்ஆப் பிரசங்கங் களேத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்ய வேண்டுமென்று அவர் வேண்டினுர், அதன் பின்னர் அறபு மொழியில் மாத்தி ரம் "குத்பா' ஒதும் வழக்கம் நின்றுவிட்டது.
(64)

சித்திலெப்பை அவர்கள் தமது "அஸ்ராருல் ஆலம்" எனும் நூலில் நாஸ்திகளின் வாதத்தைத் தவறென நில் நாட்டி விஞ்ஞானிகள் கூறும், காரணங்களுக்கெல்லாம் முடிவான காரணமான "சக்தி'யானது, முஸ்லிம்கள் கூறும் விவேகமுள்ள, எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரவும் உணர முடியா "ஸ்ாத்' ஆகும் என நிரூபிக்க முயன்ருர், தமது கோட்பாடு சரியானது என வாதித்த நிலையில் சித்திலெப்பை அவர்கள் காலன் கைவசப்பட்டார். அப்துல் அளிஸ் அவர் கள் தமது "சத்தின் ஞாஞர்த்தம்' எனும் நூலிலே சித்தி லெப்பை அவர்களின் கருத்தை ஆதரித்து இவ் வாதத்தைத் தொடர்ந்தார், ஸேர் ஸ்ெப்யிது அமீர் அலீ, பீ.எமீ.
எல்.எல்.டீ. அவர்கள் அப்துல் அஸ்ரீஸ் அவர்களுக்குப் LGT
"உங்கள் 1898 டிசம்பர் 13 ஆம் தேதிய கடிதம் கிடைத்தது. அதிலே, ஸ்பென்ஸர் என்பாரின் கருத்துப் படி, வரம்பற்றதும் நிலபேறுடையதும் எதிலிருந்து எல்லாப் பொருளும் வெளியாகின்றதோ அதுவுமான மூலசக்தி அல்லது ஆற்றலானது இயல் கடந்த சொற் கருத்தில் முஸ்லிம்களாகிய நாம் "இறை" எனக் கூறும் "ஸ்ாத்" ஆகுமா எனக் கேட்டிருந்தீர்கள். நான் அதை விளங்கிக் கொண்ட வகையில், எல்லா இயல் கடந்த கருத்துக்களேப் பொறுத்த வரையிலும் அவை ஒன்றே யாம் எனக் கூற விரும்புகின்றேன்."
சிலுவைக்கும் இளம் பிறைக்குமிடையிலான மோதல்
நிகழ்த்திஞர். அது நூல் வடிவில் வெளியிடப்பட்டது.
ஐ. எல். எம். அப்துல் அளிபீஸ் அவர்கள் 1915 செப்ரெம் பர் 11 ஆம் தேதி இறையடி சேர்ந்தார். அவரின் ஒரே மகன் ரிஷாத் ஏ. அஸிஸ் ஆவார். நாபிக் புர்ஹான், எம். மர்ஸ் நிக் புர்ஹான் ஆகியோர் அவரின் பேரர்களாவர்.
(-65.

Page 38
ஏ. எம். வாப்பிச்சி மரிக்கார்
கி. பி. 1016 ஆம் ஆண்டளவில் சில அறபிகள் இலங் கையில் குடியேறினர். அவர்களுள் வைத்திய வல்லுநர் களும் திறமைமிக்க கொத்தர்களும் இருந்தனர். அவ் வறயி களில் ஒருவர் செய்கு பரீதாவார். அவ் வறயிகள் இங்கு வரவேற்கப்பட்டதோடு பற்பல தொழில்களிலும் ஈடுபடுத் தப்பட்டனர். ஏறக்குறைய 1770 ஆம் ஆண்டு வரை அவர் களது வரலாறு வாய்வழி வந்த வரலாருகவே அமைந்தது. 1770 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பதிவேடான "தோம்பில்" பரீது எனும் ஒருவரைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. தங்கள் வம்சாவளி மூதாதையரின் பெயரை மேற்கொள்வது முஸ்லிம்களின் வழக்கமாக இருந்தபடியால் பரிது எனும் இப் பெயரும் செய்கு பரிதிலிருந்து வரப்பெற்ற பெயராகும்.
பரிது எனும் அவரின் வழிவந்த பணக்காரச் சீமாட்டி ஒருவருக்கு கொழும்பில் அம்பகஹவத்த எனும் இடத்தில் ஒரு விசாலமான காணி இருந்தது. அச்சீமாட்டி மறைந்ததும் அவரது சொத்துக்கு வாப்பிச்சி மரிக்காரும் வாரிசானுர், தம் பங்கைப் பெற்றுக் கொண்ட வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் ஏனைய பங்குகளையும் உரியவர்களிடமிருந்து விலக்கு வாங்கிக் கொண்டார். அக் காணியில் ஒரு பகுதியைப் பள்ளிவாசலுக் கென ஒதுக்கி அதனே அன்பளிப்புச் செய்த அவர் பின்னர் அதில் 'பரீத் தக்கியா' எனும் பள்ளிவாசசீலக் கட்டினர்.
கட்டட நிர்மான வல்லுநர்களின் கீழ் வாப்பிச்சி மரிக் கார் அவர்கள் தொழில் சுற்றுக்கொள்ளும் ஒருவராய் இருந் தார். அவரைப் போன்ற கட்டடக் கலைஞர்கள் கிரனடா மாளிகைகளே உருவமைத்து உருவாக்கிக் கொடுத்த திறமை சாலிகளின் வழிவந்தோராவர். கட்டடங்களுக்கு "மூரிஷ்' சிற்பக் கஃலத் திறனைக் காட்டும் மேல் வளைவுகள் அமைப் பதும் கைத்திறனேக் காட்டும் வகையில் அவற்றுக்குச் சாந் தடிப்பதும் திறமைமிக்க இந்த மூரிஷ் கொத்தராலேயே
(66)


Page 39
செய்யப்பட்டது. தம் தொழிலில் வல்லுநரான வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் கட்டடங்களேத் தனியாகவே நிர்மானிக் கும் பணியில் இறங்கி ஓர் ஒப்பந்தக்காரராக விளங்கினர். கொழும்பு பிரதம தபால் கந்தோர் கொழும்பு நூதனசாலே, கொழும்பு சுங்கம், புறக்கோட்டையிலுள்ள பழைய கொழும்பு நகர மண்டபம், கொழும்பிலுள்ள கோல்பேஸ் ஹோட்டல், விக்டோரியா ஆகேட், பின்வே மொயர் கட்ட டம், மணிக்கூட்டுக் கோபுரம், பட்டன்லேக் பட்டரி, பழைய கண் ஆஸ்பத்திரி ஆகியவற்றைக் கட்டியெழுப்பியவர் அவரே என அவற்றின் செங்கல்லும் காரையும் நின்று நிலவும் அத்து&ண காலமும் அவரது பெயர் நினைவு கூரப்படும். புறக் கோட்டையிலுள்ள பழைய நகர மண்டபத்தை அவர் 889 பவுனுக்கு ஒப்பந்தம் செய்து சுட்டிக் கொடுத்தார்.
1877 ஜனவரியில் கொழும்பு நூதனசாலே, தேசாதிபதி கிரகரி என்பவரால் திறந்து வைக்கப்பட்டபோது அங்கு கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் அனேக முஸ்லிம்களும் இருந்தனர். திறப்பு விழா முடிவுற்ற தும் நீங்கள் என்ன கெளரிவத்தை விரும்புகின்றீர்கள்' எனும் கேள்வி தேசாதிபதியிடமிருந்து வாப்பிச்சி மரிக்காரை நோக்கி எழுந்தது. அதே கேள்வி, அக்கட்டட மரவே&லயில் வாப்பிச்சி மரிக்கார் அவர்களுக்கு உதவி புரிந்த தச்சரிடமும் கேட்கப்பட்டது. அவர் ஒரு கெளரவப் பட்டத்தை விரும்பி நின்ருர், அது அவ்வாறே வழங்கப்பட்டது. வாப்பிச்சி மரிக் கார் அவர்களோ பற்றுறுதியுள்ள ஒரு முஸ்லிமாவார். அங்கு திரண்டிருந்த முஸ்லிம்களேக் கண்ணுற்ற அவர் வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆவுக்குப் போகாமல் முஸ்லிம்கள் நாதன சா8லயில் காலத்தைக் கழிப்பாரோ எனப் பயந்தார். எனவே, நூதன சாலேயை வெள்ளிக் கிழமைகளில் மூ டி விடும் கெளரமே தமக்குப் போதும் என அவர் வேண்டிக் கொண் LITrf.
கண்டி மன்னனின் சிம்மாசனம் நூதனசாலையில் காட் சிக்கு வைக்கப்பட்ட சமயம், பார்வை நாட்களில் வெள்ளிக் கிழமையும் குறுக்கிட்டது. வெள்ளிக்கிழமை நூதன சாலே
( 68:

மூடப்பட வேண்டிய நாளானதால் குறுக்கிட்ட அச் சில வெள்ளிக் கிழமைகளில் நூதன சாலேயைத் திறந்து வைக்க அப்போதைய பிரதமர் டீ. எஸ் சேனநாயக்க அவர்கள் வாப்பிச்சி மரிக்காரின் பேரரான ஸேர் ரா விக் பரீத் அவர் களின் விருப்பத்தைப் பெறவேண்டி இருந்தது.
செல்வம் வரப் பெற்றதும் வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் தமது சமூகத்தின் சமய, பொருளாதார, சமூக, கல்வி நலன் சுளேப் பற்றி எண்ணலுற்ஞர். மரதாசீனப் பள்ளிவாசல் வள வான "மரக்கலப் பள்ளிய வத்தை"யின் சுற்றுப் புறத்தில் அவர் அப்போது வாழ்ந்தார். அப் பள்ளிவாசலுக்கு அவர் திமிதி ஆதரவை அளித்தார். அவரது குடும்ப வாசஸ்தவம் ரெயில்வே விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட போது அவர் வொக்சோல் விதியில் ஒரு வீடு கட்டிக் குடியமர்ந்தார். அங் கிருந்த வேஃாயிலும் அவர் மரதாசீனப் பள்ளிவாசல் நலனில் அக்கறை செலுத்தினர். பின்னர் அம்பகஹவத்தையில் ஒரு புது விடு கட்டி அதிற் குடியேறிஞர். மரதாசீனப் பள்ளிவாசல் ஜமாஅத்தில் அவர் ஒரு முக்கிய உறுப்பினராக விளங்கிஞர். சித்திலெப்பை அவர்கள் "அஸ்ராருல் ஆலம்' எனும் நூலில் வாப்பிச்சி மரிக்கார் பற்றிக் குறிப்பிடும்போது, "எனக்குக் கொழும்பில் இரு நண்பர்கள் இருக்கின்றனர் ஒருவர். பாடசாலைகளே ஆரம்பித்தும் தமது பணத்தைத் தாராள மாகச் செலவு செய்தும் கல்வி சம்பந்தமாகப் பெரிதும் அக் கறையெடுக்கும் வள்ளலான அரசி மரிக்கார் வாப்பிச்சி மரிக்கார் ஆவார். அவர் எல்லா நல்ல நோக்கத்துக்காகவும் செலவு செய்ய முன்வருகின்ற ஒருவர். மற்றவர் தஞ்சாவூரைச் சேர்ந்த குலாம் முஹியத்தீன் ஸாகிப் பஹாவுத்தீன் ஆவார்" எனக் கூறுகிருர்,
தமது கல்வி இயக்கத்துக்காக வாரி வழங்கக் கூடிய ஒரு வரை சித்திலெப்பை அவர்கள் வாப்பிச்சி மரிக்காரிற் கண் டார். சித்திலெப்பை அவர்களும் வாப்பிச்சி மரிக்கார் அவர் சுளும் பாடசாலேயொன்றை நிறுவத் தகுந்த இடமொன்றை தேடிக் கொண்டிருந்த போது, மரதாஃனப் பள்ளிவாசல் வள் வில் கைவிடப்பட்டிருந்த ஒரு பகுதி அந்நோக்கத்தை நிறை
(69)

Page 40
வேற்றும் எனக் கண்டனர். மரதானேப் பள்ளிவாசல் பரி பாலன குழுவின் துனேத் தஃலவராக வாப்பிச்சி மரிக்காரி அவர்கள் விளங்கிய சமயம் அது. இவ்விருவரும் அக்காணியை, பாடசாஃயொன்றை அமைக்கக் குத்தகைக்கு விடுமாறு பரி பானைக் குழுவிடம் வேண்டினர்.
"ஜம்மிய்யத்துல் இஃதிகானுல் உலூம்" எனும் கொழும்பு முஸ்லிம் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் தமது சொந்தச் செலவில் பாடசாஃக்கான ஒரு கட்டடத்தைக் கட்டி அதன் பராமரிப் புக்காக நான்கு வீடுகளேயும் கட்டிக் கொடுத்தார். அது சம யம் கொழும்பு நான்காம் குறுக்குத் தெருவில் கரீம் ஜி ஜபர்ஜி என்பவருக்காக "மஸ்ஜிதே கரிம்" பள்ளிவாசஃ அவர் கட்டிக் கொண்டிருந்தார். எனவே, அவர் ஜபர் ஜி அவர்களே அணுகி விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஜபர் ஜீ அவர்களும் முஸ் லிம்களின் கல்வி நலனுக்காக மரதானேப் பள்ளிவாசல் வள வில் மேலதிக கட்டடமொன்றுக்காக நிதியுதவி அளித்தார்.
குப்பியாவத்தை மையவாடி முஸ்லிம்களுக்குக் கையளிக் கப்பட்ட போது (1879, 8, 18 ஆம் தேதிய முடிக்குரிய கொடை 3825), அன்றிலிருந்து மூன்ருண்டுகளுக்குள் அம் மையவாடியைச் சுற்றி மதில் கட்ட வேண்டுமென அரசாங் கம் ஒரு நிபந்தனே விதித்திருந்தது. "போரா" இனத்தினருக் காக அம் மையவாடியில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ள கரீம் ஜி ஜபர் ஜி அவர்கள் வாப்பிச்சி மரிக்கார் அவர்களே அணுகிஞர். "முஸ்ல்மான் ஐக்கிய பேரவை"யிடம் அப் போது போதிய நிதி இருக்கவில்லே, வாப்பிச்சி மரிக்கார் அவர்களும் "போரா" இனத்துக்கென அந்நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, அதற்குப் பகரமாக அவர்களேக் கொண்டு மையவாடியைச் சுற்றி மதில் கட்டுவித்தார்.
கொழும்பு கெட்டவலமுல்ஃவயில் வதிந்த முஸ்லிம் களுக்கு பள்ளிவாசலொன்றின் அவசியம் உணரப்பட்ட போது அவர்கள் வாப்பிச்சி மரிக்காரை அணுகினர். அவர் டெப் என் பாரிடமிருந்து கிளிப்டன் ஒழுங்கையில்
(70)

ஒரு வீட்டை விலக்கு வாங்கி அதைப் பள்ளிவாசலாக மாற்றினர். அதற்கு எதிர்ப்புறத்தில் வாழ்ந்த ஏ. எல். எம். மீரலெப்பை மரிக்கார் என்பாரை அப் பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமித்தார்.
மரதானப் பள்ளிவாசல் வளவில் கட்டப்பட்ட பாட சாலே வேலே முடிவடைந்ததும் மத்ரஸ்த்துல் ஸாஹிரா இயங்க ஆரம்பித்தது. அதன் பராபரிப்புக்காகக் கட்டப் | பட்ட வீடுகள் 1908 இல் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட் டன. பின்னர், அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நஷ்ட ஈட்டைக் கொண்டு இப்போதைய ரி. பி. ஜாயா வீதியான டார்வி வீதியில் வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் பல வரிசை வீடுகளேக் கட்டினுர்,
கொழும்பு முஸ்லிம் கல்விக் கழகத்தின் முகாமையாள ரும் பொருளாளருமாக வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் இருந் தார். 1907 இல் அட்வகேட் அப்துல் காதர் அவர்கள் கொழும்பில் தொழிற் பயிற்சி செய்து கொண்டிருந்த சமயம், வாப்பிச்சி மரிக்கார் அவர்களே முகாமைப் பளுவில் இருந்து விடுவிக்க எண்ணிய கல்விக் கழகம், அப்துல் காதர் அவர்களே ஸாஹிராக் கல்லூரியின் முகாமையாளராக நியமித்தது. சில மாதங்களுக்குப் பின் அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப் புக்குத் தமது வதிவிடத்தை மாற்றிக் கொண்டதால் அப்பதவி யிலிருந்து நீங்க நேரிட்டது
1907 இல் கொழும்புச் சோனக மக்களால் வாப்பிச்சி மரிக்கார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாழ்த்துரை வருமாறு:
'அரசி மரிக்கார் வாப்பிச்சி மரிக்கார் அவர்கள்
கொழும்பு முகம்மதிய ஆண்கள் மரதாசீனப் பாடசாலேயின் முன்னேய முகாமையாளர் (மத்ரஸ்த்துல் ஸாஹிரா) El
கடந்த பதினுன்கு ஆண்டு காலமாக முகம்மதிய ஆண் கள் மரதாஃனப் பாடசாஃலயை ஆர்வத்துடனும் சுறுசுறுப்
(71)

Page 41
புடனும் பரிபாலித்ததன் மூலம் தாங்கள் ஆற்றிய சேவைக்காக எங்கள் மனமார்ந்த பாராட்டுதலேச் சமர்ப் பிப்பதில் கொழும்பு முஸ்லிம் கல்விக் கழக உறுப்பினர் களாகிய யாம் மகிழ்ச்சியடைகிருேம். அத்துடன், மேற் சொன்ன முகாமைப் பதவியிலிருந்து தாங்கள் இளேப் பாறும் இச் சந்தர்ப்பத்தில், தங்களின் இக் கைங்கரியத் திற்காகவும் இந்நாட்டின் முகம்மதிய இளைஞர்களுக்கு மதக் கல்வியையும் லோகாயதக் கல்வியையும் அளிக்கும் பொருட்டு மேற்சொன்ன பாடசாவேயை நிறுவுவான் வேண்டி தாங்கள் தாராளமாக உவந்தளித்த பண உதீ விக்காகவும் எங்கள் சார்பிலும் கொழும்பு முகம்மதிய சமூகத்தின் சார்பிலும் எமது உளங்கனிந்த நன்றியறி தலேயும் தெரிவித்துக் கொள்கின்ருேம். மேலும், அதன் பராமரிப்புக்காகத் தாங்கள் அளித்த தாராள அறக் கொடைக்காகவும் மேற்சொன்ன கல்வி நிலேயத்தின் கருமங்களே இதுகாலவரை யாம் சீர்படுத்தவும் கொண்டு நடாத்தவும் உதவிய தங்களது உற்சாகமான ஒத்துழைப் புக்காகவும் எங்கள் மனமார்ந்த நன்றியறிதலேத் தெரி வித்துக் கொள்ளுகின்ருேம், இக்கழகத்தின் உறுப்பின ரும் பொருளாளரும் என்ற முறையில் எதிர்காலத்தில் அலுவல்களே நடாத்த எங்களுடன் இணேந்து நீண்ட காலம் ஒத்துழைக்க சரீர சுகமும் வலிமையும் தாங்கள் பெறுவீர்கள் என யாம் நம்புவதோடு, உங்கள் முயற்சி யினுல் இப்பொழுது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மத்ரஸாப் புதிய இறகின் மேன்மாடியில் (இஃது எதிர் காலத்தில் முஸ்லிம் வாசிக சாஃப் அல்லது நூனிலேய மாகவும் சொற்பொழிவு மண்டபமாகவும் இருக்கும்) பாரியதான தங்கள் புகைப்படமொன்றைத் தங்கள் அற ஆர்வச் செயல்களின் நினேவுச் சின்னமாக வைக்க
ம்ை பாம் நீர்மானித்துள்ளோம்.
(72)

இறுதியாக, எல்லாம் வல்ல அள்ளாஹ் தங்களுக்கு நீண்ட ஆயுளேயும் சிறந்த உடன லத்தையும் சந்துஷ்டி யையும் செல்வ வளத்தையும் தந்தருள்வானுக எனப் பிரார்த்திக்கின்ருேம்.
தங்கள் அன்பாதரவுள்ள, காளிம் லெப்பை செய்கு அப்துல் காதர் மரிக்கார், (தஃலவர், கொழும்பு முஸ்லிம் கல்விக் கழகம்) 1. முகம்மது இஸ்மாயில் அப்துல் ரஹ்மா ன்
முதலியார் 2. எம். அப்துல் காதர், அட்வகேட், யாழ்ப்பாணம் 3. கொலந்தர் மரிக்கார் மீராலெப்பை மரிக்கார் 4. ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் அப்துல் அளிஸ் 5. சுலேமான் லெப்பை நூஹ" லெப்பை 6. இஸ்மாயில் லெப்பை மரிக்கார் முகம்மது யூஸ்"ப்
ஆவிம் 7. உதுமா லெப்பை மரிக்கார் அகமது லெப்பை
மரிக்கார் ஆலிம் 8. வாப்பூ மரிக்கார் அப்துல் ஜப்பார் 9. அனணு லெப்பை மஹல்லம் சேகு லெப்பை 10. அபூபக்கர் லெப்பை மரிக்கார் உதுமா லெப்பை
பரிந்தார்."
மரதானேப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஒருவர் இறந்தபோது, அவர் தமது இறுதி நாட்களில் கொழும்புக் கோட்டையிலுள்ள அப் பள்ளிவாசலின் ஒரு சொத்தை அவருடைய மருமகனுக்குக் குத்தகைக்குக் கொடுத்திருந்தது தெரிய வந்தது. அதற்குக் காரணம், அவரது கூற்றுப்படி பள்ளிவாசல் அவருக்கு ஐநூறு ரூபா கடன்பட்டிருந்ததாகும். வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் அந் தத் தொகையைச் செலுத்தி குத்தகை ஒப்பந்தத்தை விடுவித்தார்.
வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் தாம் பாடசாலேக்காகக் கட்டிய முதற் கட்டடத்துக்கு ஒரு விஸ்தரிப்பாக தமது செலவில் 1909 இல் ஒரு மேன்மாடிக் கட்டடத்தைக் கட்டி
(73)

Page 42
ஞர். கல்விக் கழகத்தின் ஒரு பிரிவினர் 12,750 ரூபாவைத் திரட்டி இப்போதைய நிவ் ஒலிம்பியாப் படமாளிகையின் பக்கத்தில் அமைந்துள்ள வீடுகளேக் கட்டும் பொருட்டு அத் தொகையை வாப்பிச்சி மரிக்கார் அவர்களிடம் ஒப் படைத்தனர். கொழும்பு முஸ்லிம் கல்விக் கழகத்தின் செயல்திறன் நீண்டகாலம் நீடிக்கவில்லே, வாப்பிச்சி மரிக் கார் அவர்கள் அக் கழகத்தின் ஏக உறுப்பினராக இருந்து ஸாஹிராக் கல்லூரியைத் தனியாகத் தமது செலவில் பரி பரிபாவிப்பவரானுர், அவ்வப்போது முஸ்லிம் பெருங்குடி மக் களிற் சிலர் நிதியுதவி அளித்து வந்தனர்.
டார்வி வீதியில் அமைந்திருந்த கட்டடங்களின் வாட கையிலிருந்து கிடைக்கும் வருமானம் ஸாஹிராக் கல்லூரி யின் பாரமரிப்புக்குப் போதாதெனக் கண்ட வாப்பிச்சி மரிக்கரர் அவர்கள் வெள்ளவத்தையிலிருந்த தமது சொத் துக்களின் வருமானத்தை அதற்காக உவந்தளித்தார். 1921 அளவில், முகாமையாளர் என்ற வகையில் ஸாஹிராக் கல் ஆாசியின் அலுவல்களே நடாத்த அவரால் நாள்தோறும் செல்ல முடியவில்லே. அவரது உடல் வலு குன்றியிருந்தது. ஒனவே, அவர் அப்போது செயலற்றுப் போயிருந்த கொழும்பு கல்விக் கழகத்தின் உறுப்பினர் இருவரே ஆனழத்து ஸாஹிராக் கல்லூரியின் நிர்வாக "நிஜலயை விளக்கினூர். பின்னர் அவர் அக் கல்லுரரியின் நிர்வாகப் பொறுப்பை மரதானப் பள்ளிவாசவிடம் ஒப்பட்ைத்தார்.
வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் பயபக்தி நிறைந்த ஒரு முஸ்லிமாவார். அவர் பள்ளிவாசல்களுக்கு உதவிஞர். அவற்றை நிர்மானித்தார். மார்க்க அறக் கொடைகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாக விளங்கினூர், அவர் வியாங் கொடை கஹட்டோவிட்டவில் அடங்கியிருக்கும் செய்கு அப்துள்ளாஹ் இப்னு உமர் பாத்தீப் அல் யமனி அவர் களின் முரீதாவார்.
"உமது சட்டையைத் துணிக்கேற்ப வெட்டிக்கொள்." இதுதான் வரப்பிச்சி_மரிக்கார் அவர்களின் பொன்மொழி. 1925 மே 14 ஆம் தேதி தமது மிக முதிர்ந்த வயதான 96 ஆவது வயதில் அவர் இறையடி சேர்ந்தார். கெளரவ டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் அவரின் ஒரே மகனுவார்.
74)

ஏ. எம். சரீபு
கிழக்கு மாகாணம் முஸ்லிம் பெருங்குடி மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். அம் மக்கள் அறபு மொழி பயில்வதையே அன்று "இல்ம்" எனக் கருதினர். அவர்களது தாய்மொழி தமிழ். எனவே, அங்கு ஆங்கிலம் கற்றவர்கள் ஒருசிலரே இருந்தனர். அவர்களில் காத்தான் குடியைச் சேர்ந்த ஏ. எம். சரீபு அவர்களும் ஒருவராவார். அறபு, தமிழ் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அவர் ஆங்கில மொழியையும் நன்கு கற்று நீதிமன்றப் புரக்டராகத் திகழ்ந்தார்.
1890 இல் கொழும்பில் முஸ்லிம் வழக்கறிஞர்களின் தேவை உணரப்பட்டது. எனவே, கொழும்பில் வந்து குடி யேறுமாறு சரிபு அவர்கள் வேண்டப்பட்டார். அவரும் அவ் வேண்டுகோஃள ஏற்று கொழும்பில் குடியேறிஞர். 1899 இல் சட்டவாக்க சபையில் முகம்மதிய ஆசனம் காலியானது. அச்சமயம் மலாயரான இஸட். எச். மந்தாரா அவர்கள் ஒரு புரக்ட்ராகவும் பி. டபிள்யு பாவா அவர் கள் ஓர் அட்வகேட்டாகவும் தொழில்புரிந்து வந்தனர். முஸ்லிம்கள் மூன்று பிரிவினராகப் பிரிந்து மேற்கூறிய மூவரையும் சட்டவாக்கசபை ஆசனத்துக்காக ஆதரித்தனர். பி. டபிள்யு. பாவா அவர்கள் காலியைச் சேர்ந்த அகமது பாவாவின் மகனுவார். அகமது பாவா அவர்கள் கேகாவே, வதுளே நீதி மன்றங்களில் புரக்டராகத் தொழில் நாடாத்தி வந்தார். அவர் சோனகரின் விவாக வழக்கங்கள் பற்றி அரச ஆசிய கழக வெளியீட்டுக்கு ஆய்வுக் கட்டுரை யொன்றை அனுப்பிவைத்தார். அதிலே அவர், "மன மகன் மணவறைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை எப் படிப் பட்டவளே மணக்கப் போகிருேம் என்று சோனகர் அறியார் என்றும் அவர்களிடையே காதல் திருமணம் என்பது இல்லேயென்றும்" குறிப்பிட்டார்.
(75)

Page 43
பி. டபிள்யு. ப்ாவா அவர்களின் தாயார் ஓர் ஐரோப் பிய மாதுவாகும். எனவே, பி. டபிள்யு, பாவாவுக்கு சட்ட வாக்கசபை முகம்மதிய ஆசனத்துக்காக முழு ஆதரவு கிடைக்கவில்லே. இஸ்ட் எச். மந்தாரா அவர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட வாதம் யாதெனில், அவர் அப் போதுதான் முன்னேறி வரும் ஓர் இளம் புரக்டர் என் பதும் அத்துடன் மிகவும் சிறுபான்மை இனமான மலாய் வகுப்பைச் சோர்ந்தவர் என்பதுமாகும். ஏ. எச். சரீபு அவர்களோ தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்ததோடு அவரது அறபு மொழி அறிவும் அறபு தெரிந்த ஆலிம் களினதைவிட தரத்தில் அதிகம் உயர்ந்திருந்தது. அவர் பலவிதத்திலும் அறிஞர் சித்திலெப்பை அவர்களுக்கு இண்ே பாக இருந்தார். முற்கால பிரபல முஸ்லிம் மத அறிஞர் களினதும் முஸ்லிம் சட்ட வல்லுநர்களினதும் அறபு நூல் களே அவர் வாசித்திருந்தார். கெய்ரோ, பஞ்சாப்பிலுள்ள சாதியான் ஆகிய இடங்களிலிருந்து வந்த வெளியீடு களோடு அவருக்குத் தொடர்பிருந்து வந்தது. கொழும்பு பழைய சோனகத் தெருவிலிருந்த செய்கு அப்துல் காதிர் (பகலா சாகிப்) அவர்களுடைய இல்லத்தில் அவர் மார்க்க வகுப்புக்களே நடாத்தி வந்தார். சட்டவாக்க சபையில் காலியான முகம்மதிய ஆசனத்துக்கு சரிபு அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்ருக இருந் தது. எனவே, அரசாங்கம் அவரை நியமித்தது.
கொழும்பு பணக்கார முஸ்லிம் சமூகம் அவருக்கு கிராண்ட்பாளில் ஒரு பெரும் இல்லத்தையும் சட்டவாக்க சபைக் கூட்டங்களுக்கும் வேறு உத்தியோகபூர்வ அலுவல் களுக்கும் செல்வதன் பொருட்டு இரு குதிரைகள்-சில சமயங்களில் நான்கு குதிரைகள்-இழுத்துச் செல்லகூடிய ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மோசமான தேகநிலை காரணமாக அவர் கொழும்பிலிருந்த அலுவல்களே விட்டுவிட்டு 1900 இல் மட்டக்களப்புக்குத் திரும்பினுர்,
(76)

புறக்கோட்டையில் பிர 鹭 பல வியாபாரியாக விளங் கிய ஐ. எல். முகம்மது லெப்பை என்பாரின் மைந் தரே லெய்னுதீன் ஆவார். கிராண்ட்பாளில் வாழ்ந்தி : அவர் ஆங்கிலக் கல்வியை வெஸ்லி கல்லூரியில் பெற் ரூர். அவரும் அவரின் சகோதரரான இஸ்மாயில் என்பாரும் அவர்களின் தந்தையின் வாணிக நில யத்தில் சேர்ந்து வியாபாரம் நடத்தினர். அவர்களின் தந்தை அப்போது தரகு வணிகராகவும் الالها T إلينا اتات வர்த்தகராகவும் விளங்கி -ஞர். 1880 இல் அவரது :
விற்பனைப் பொருட்காட்சி அறைகள் புறக்கோட்டைப் பிர தான வீதியிலிருந்த ஹமீதியாக் கட்டடத்தில் இருந்தன.
1883 இல் எஸ். டி. இஸ்மாயில் லெப்பை பரிக்கார்
ஆலிம் (பின்னர் ஹாஜி இஸ்மாயில் எபெண்பு என அழைக் கப்பட்டார்) என்பாரின் தலைமையில் ஸெய்னுதீன் அவர் களும் வேறு சில முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்தனர். அப்போது எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தவர்களான அறபி பாஷாவினதும் அவரின் தோழர்களினதும் மனுவொன்றை "கதிவே'வுக்கு அவர்கள் எடுத்துச் சென்றனர்.
(77)

Page 44
னெய்னுதீன் அவர்களும் குழுவும் எகிப்தில் பரவலா கப் பயணம் செய்து ஹஜ்ஜாக்காக மக்காவுக்குச் செல்ல முன்னர் கொன்ஸ்தாந்திநோபிளுக்குச் சென்றனர். செய் னுதீன் அவர்கள் இலங்கை திரும்பியதும் அவர் ஆபிரிக்கா விலும் ஐரோப்பாவிலும் தாம் அறிமுகம் செய்துகொண்ட வியாபார நிறுவனங்களுக்கு இலங்கையின் விளேபொருட் களான கொக்கோவா, சோளம், தேங்காய் போன்றவற் ருேடு தோல், தும்பு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை யும் பெருமளவில் ஏற்றுமதி செய்தார்.
1900 இல் அவர் கொழும்பு மாநகர சபைக்குப் புறக்கோட் டை வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1900 ஒக்ரோபர் 10ஆம் தேதிய "லிவர்பூல் கிரசண்ட்" எனும் பதிப்பில் வெளியான இத்தேர்தல் பற்றிய விவரம் விருமாறு:
"சென்ற ஓகஸ்ட் 24ஆம் தேதி சனிக்கிழமை புறக் கோட்டை வட்டாரத்துக்கு நகர உறுப்பினர் ஒருவரின் தேர்வு நகர மண்டபத்தில் நடைபெற்றது.முதலில் தேர் தற் களத்தில் இரு அபேட்சகர்கள் இருந்தனர். ஜனுப் ளெய்னுதீனும் திரு. ஜோன் க்ளோவிஸ் டி சில்வாவுமே அவர்களாவர்.பின்னவர் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.குறித்த நேரமான மு.ப.8.00 மணிக்கு தேர்தல் நடந்தது. பதில் மேயரும் தலைவருமான திரு. ஹேபட் வைட் தலைமை தாங்கிஞர். அத்துடன் அவ் வட்டாரத்தைச் சேர்ந்த சில முஸ்லிம், சிங்கள குடியிருப்பாளர்களும் அங் கிருந்தனர்.
புறக்கோட்டை வட்டாரத்துக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட ஜனுப் எம். எல். எம். ஸெப்னு தீன் தகுதியானவரும் உகந்தவருமென, கோட்டை பிரபல வர்த்தகரான திரு. சீ. பி. புரோடி மரபு முறையாகப் பிரேரித்தது கொண்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. ஜனுப் ஐ. எல். எம். இஸ்மாயில் மரிக்கார் அப் பிரேரணையை அனுவதித்தார். அதன்
(78)

Lisi GI ri. மாநகரசபை உறுப்பினரான திரு. பி. பி டயஸ், அபேட்சகருக்குச் சார்பாக 850 பெயர்களேக் கையளித்தார். தலைவர் அந்தப் பட்டியலே ஆராய்ந்த தன் பின்னர் ஜனுப் ளெய்னுதீன், புறக்கோட்டை வட்டாரத்துக்கான மாநகர சப்ை உறுப்பினராகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளதாகப் பிரகடனப்படுத்திஞர். ஜனுப் ஸெப்னுதீன்,சுருக்கமாக நன்றி தெரிவித்துவிட்டு, தஃவருக்கு ஒரு நன்றியுரையையும் வழங்கினூர், தலே வரும் சுருக்கமாக அதற்குப் பதில் நன்றியுரை வழங்கி ஞர். சனிக்கிழமை முழுவதும் ஜனுப் ஸெய்னுதீன் அவ ரின் இல்லத்துக்கு அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க வந்த பெருந் தொகையான நண்பர்களுக்கும் ஆதரவா ளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கிஞர்."
இலங்கை வாழ் முஸ்லிம்கள், மற்றும் உலக முஸ்லிம் களுடன் சுல்தான் அப்துல் ஹமீத் கானின் வெள்ளிவிழா வைப் பள்ளிவாசல்களேயும் இல்லங்களேயும் மின் விளக்கு களாலும் மற்றும் அலங்காரங்களாலும் அலங்களிப்பது கொண்டு விமரிசையாகக் கொண்டாடினர். இது நடந்தது ளெய்னுதீன் அவர்கள் மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாளுக்கு முதல் நாளாகும், ஸெய்னுதீன் அவர்களின் இல்லத்துக்கு அருகே இருந்த முஸ்லிம்கள் இந்த அலங் காரங்களேத் திருப்பிச் செய்வது கொண்டு அவரது வெற்றி யைக் கொண்டாடினர்.
ஸ்ெப்னுதீன் அவர்கள் புறக்கோட்டை வட்டாரத் துக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டு 1907 வரை உறுப் பினராகச் சேவை புரிந்தார். அவரது வாழ்க்கை வரலாறு 1907 இல் பதிப்பிக்கப்பட்ட "இம்ப்ரஷன் ஒப் சிலொனில்" வெளியிடப்பட்டது.
தந்ே
21' G)ቻቮG} *
* كفة النيتين.
(79) الدينية

Page 45
ஐ. எல். எம். நூர்தீன் ஹாஜியார்
நூர்தீன் ஹாஜியார் அவர்கள் யூசுப் லெப்பை ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் திராஜியார் அவர்களின் மகனுவார். ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் ஹாஜியார் வர்த்தகரும் நிலச் சிவாந்தாருமாவார்.அவர் கொழும்பு பெரிய பள்ளிவாசாலின் நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்ததோடு புறக்கோட் டையில் ஒரு பெறுமதி மிக்க நிலத்தை அப் பள்ளிவாசலுக் காக அன்பளிப்புச் செய்தார்.
அவரின் ஆண்வழி'மூதாதையர் வருமாறு: யூசுப் லெப்பை (ஜெம்மி), உதுமா லெப்பை, ஐதுரூஸ் லெப்பை, இஸ்மாயில் லெப்பை அவரின் மூதாதையர் வெலிகாமத் திலிருந்து கொழும்புக்குக் குடிபெயர்ந்து வந்தவர்களாவர். யூசுப் லெப்பை அவர்களுக்கு நான்கு ஆண் மக்களும் ஒரு பெண் மகவும் இருந்தனர். அவர்களாவோர்: ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் ஹாஜி, முகம்மது லெப்பை மரிக்கார் ஹாஜி, சின்ன லெப்பை மரிக்கார் ஹாஜி, மரிக்கார் ஹாஜி, திருமதி வாப்பு மரிக்கார் ஹாஜி.
ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் ஹாஜியாருக்கு அவரின் முதல் மனேவியான பாத்துமுத்து நாச்சியா மூலமாக இரு ஆண்மக்களும் ஒரு பெண் மிகவும் பிறந்தனர். நூர்தீன் ஹாஜி பார்சோப்பு வாப்பா),முஹ்யியத்தீன் ஹாஜியார்ஸ்"ாலேஹா என்போரே அவர்கள். அவரது இரண்டாவது விவாகம் எஸ். எம். அஸனு நாச்சியா என்பவருடன் நிகழ்ந்தது. அவர் மூலமாக அவருக்கு ஆண்மக்கள் நால்வரும் பெண் மக்கள் இருவரும் கிடைத்தனர். அவர்களாவோர்: ஸ்"ஃ) மான் லெப்பை ஹாஜி, பூசுப், அப்துல் ரஹ்மான், அப் துல் ஹமீது, அம்ஸா, ஸ்பியா.
1900 இல் ஐ. எல். எம். நூர்தீன் ஹாஜியார் அவர் கள் அவரின் தந்தைக்குப் பின் பெரிய பள்ளிவாசலின் நம் பிக்கைப் பொறுப்பாளராக ஆஞர். அவர் ஹல்ஸ்டோபில்
(80)

ஒரு நிலத்தைப் பள்ளிவாசலுக்கு அன்பளிப்புச் செய்தார்." அவர் அவரது சொந்தச் செலவில் பெரிய பள்ளிவாசல் வளவில் ஹமீதியாப் பாடசாஃக் கட்டடத்தைக் கட்டி அதற்குத் துருக்கி சுல்தானுள்ள சுல்தான் அப்துல் ஹமீதின் பெயரை இட்டார். துருக்கித் தொப்பி போராட்டக் குழுவில் அவர் ஒர் உறுப்பினராவார். முதலாவது உலகி மகாயுத்த காலத்தில் (1914-18) அவர் டரற் வீதியில் அவர்தம் மருமகளுன எஸ். எல். நெய்னு மரிக்கார் ஹாஜி யாரின் இல்லமான "முயிர்பர்னில்" வாழ்ந்து வந்தார். அப்போதெல்லாம் அவர் தமது அலுவலக அறையில் தொங் கவிடப் பட்டிருந்த ஐரோப்ப - ஆசிய வரை படத்தில், புத்த களத்தில் துருக்கியின் வெற்றி தோல்விகளேக் குறித்து வருவார். நூர்தின் ஹாஜியார் அவர்களுக்கு யூனுனி வைத் திய அறிவு ஒரளவிருந்தது. அவ் வைத்திய முறையை அவர் தம் குடும்பத்தாரிற் கையாண்டு வந்தார். செவ்வரித்தைப் பூவிால் அவர் வடித்த ஒருவகைக் குடிநீர் மிகவும் பிரபல் யம் வாய்ந்ததாக இருந்தது. அது குழந்தைகளுக்கு அடிக் கடி கொடுக்கப்பட்டது.
நூர்தின் ஹாஜியார் அவர்கள் கோட்டாறைச் சேர்ந்த காதிரிப்யா செய்கு அவர்களின் சிறந்த ஒரு முரீதாவார். அவர் மார்க்க விடயத்தில் அவரின் மக்களுடனும் பேரப் பின்ளேகளுடனும் மிகவும் கண் டி ப் புடன் நடந்து கொண்டார். அவர்கள் குர்ஆன் ஓதுவதில் மிகவும் சிறந்த வர்களாக விளங்கினர். அவரின் மூத்த மகன் எச். என். எச். ஜலாலுத்தீன் ஹாஜியார் அவர்கள்"ஹாபிழ்" களான (திருக்குர்ஆண் மனனம் செய்தோர்) இலங்கைச் சோனகர் ஒருசிலரில் ஒருவராவார். அவர் அவரின் தத்தையான நூர்தீன் ஹாஜியார் அவர்களுடன் ஹஜ்ஜ"க் கடமையை நிறைவேற்றச் சென்ற சமயம் புனித மதீனுவைத் தரிசித்து அங்கு மஸ்ஜிதுந் நபவியில் பெருமானுர் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தந்ேதிற்கண்மையில் நின்றவாறு ஒரே மூச்சில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனமாக ஓதி முடிக்கும் அய பேற்றைப் பெற்ருர் ஜலாலுத்தீன் ஹாஜியார்
( 81 ) б

Page 46
அவர்கள் ஹாஜி முகம்மது மாக்கன் மாக்கர் எபெண்டி அவர்களின் அத்தியந்த நண்பராய் விளங்கியதோடு, தமது சுசுயீனத்தையும் கருதாது 1924 இல் சட்டவாக்க சபைக்கு அகில இலங்கை முஸ்லிம் ஆசனத்துக்காக அவர் தேர்ந் தெடுக்கப்பட மும்முரமாகப் பாடுபட்டார்.
நூர்தீன் ஹாஜியார் அவர்களின் மூத்த மகளான ளெUாஹரா உம்மா, எஸ். எல், நெய்ஞமரிக்கார் ஹஜியாரை மணந்ததோடு இஃாய மகளான உம்மு நபீஸா, என். டி. எச். அப்துல் கபூர் ஹாஜியாரை மணந்தார். மற்ற ஒரு மகளான உம்மு ஸ்"ஃபஹா, ஐ. எல். எம். அப்துல் காதரை மணந்தார். அவரின் இளேய மகனுன முஹ்யித்தீன் என்ப வர் பீ. ரீ. மீராலெப்பை அவர்களின் மகளான ஹளஞ.
உம்மாவை மணந்தார்.
நூர்தீன் ஹாஜியார் அவர்கள் அவரது மரணத் தறு வாயை அறிந்திருந்தார்.அவர் வுழுச் செய்து இரு ரக்அத்துக் கள் தொழுதுவிட்டு சஃபாவை முன்னுேக்கித் தமது கட்டிவில் படுத்துக் கொண்டார். "அல்லாஹ" அக்பர்'என்று கூறி "தக்பீர்' கட்டியவுடன் அவரது இறுதிமூச்சு பிரிந்தது.
அவரின் சகோதரரான ஐ. எல். எம். முஹ்யியத்தின் ஹாஜியார் அவர்களும் கொடை வள்ளலாகவும் மார்க்க பக்தி நிறைந்தவராகவும் விளங்கிய ஒருவர். வர்த்தகரான அவர் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளராக வும் விளங்கிஞர். அவர் சேகாதி மரிக்கார் காளி லெப்பை மரிக்கார் முதவியார் அவர்களின் பேத்தியான ஸ்பியா
உம்மா என்பவரை மணந்தார்.
(82)

அகமது லெப்பை மரிக்கார் ஹஸன் மீரா லெப்பை மரிக்கார்
அகமது லெப்பை மரிக்கார் ஹஸன் மீரா லெப்பை ரித்தார் அவர்கள் அவரின் மருமகனு ை'தி ப்ெபை மரிக்கார் ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் அவர்களுக்கு மரதிா னேப் பள்ளிவாசவின் அபிவிருத்திக்காக ஒரு தொகைப் பணத்தை வழங்கிச் சென்மூர். 1842 இல் அவர் மரதாசீனப் பள்ளிவாசலுக்காக நிலமொன்றை வாங்கவும் ஒருதொகைப் பணத்தை வழங்கினூர்,
பகிரங்க நொத்தாரிசு ஜோன் டிரிபேக்ஸால் உறுதிப் படுத்தப்பட்ட 1855, 11 ஆம் தேதிய 8545 ஆம் இலக்க உறுதி மூலம் (புதிய சோனகத் தெரு மையவாடியை FF விப்பதற்காக) அவர் உமர் :ப பரிக்கார் உதும்" லெப்பை மரிக்கார் என்பாரின் பின்வளவை 130 பவுனுக்த வாங்கினர். அதில் 73 பவுனே அவர் தம்கணக்கில் செலுத்தி ஞர் மிச்சப் ப்னம் ஜமாத் அத்தாரால் சேகரிக்கப்பட்டது.
மீரா லெப்பை மரிக்கார் முகம்மது உதுமா நெய்னு மரிக்கார் மீரா வெப்பை மரிக்கார் முகம்மது உதுமா நெய்கு மரிக்கார் 1870 இல் முஸல்மான் ஐக்கிய பேரவையின் செயலாளராக இருந்தார். ஏறக்குறைய அந்த ஆண்டிலேயே அந்தப் பேரவை, வைத்திய சா8லயில் மரணமடையும் முஸ்லிம்களின் சடங்களே இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய ஒரு மதகுருவுக்குக் கொடுக்க அரசாங்கத்துடன் ஏற்பாடு செய்தது.
குப்பியாவத்தையில் முஸ்லிம்களுக்கென ஒரு மைய வாடியைப் பெற இப் பேரவையின் செயலாளர் என்ற முறையில் நெய்னு மரிக்கார் அவர்கள் அரசாங்கத்துடன் ஏற்பாடு செய்தார்.அம் மையவாடியின் ஆரம்ப நம்பிக்கைப் பொறுப்பாளர் மூவரில் அவரும் ஒருவராவார்.
(83)

Page 47
கரீம் ஜி ஜபர் ஜி
இலங்கையில் ஷியா வகுப்பைச் சேர்ந்த பிரபல்ய முஸ் லிம்கள் இருவர் இருந்தனர் அவர்கள் "போரா' வர்த்தகர் கள் என அழைக்கப்பட்டனர். ஒருவர் ஜபர் ஜி என்பாரின் மகஞன கரீம் ஜீஜபர் ஜி ஆவார். மற்றவர் குலாம் ஹ"சைன் செய்கு தையிப் ஆவார். இவ்விருவரும் உள்ளூர் முஸ்லிம் களுடன் அன்னியோன் யமாகக் கலந்துறவாடியதுடன் உதவி யும் புரிந்தனர்.
மத்ரஸ்த்துல் ஸாஹிரா வுக்குத் தேவையான தளபா டங்களே நல்கியது கொண்டு இவ்விருவரும் GTL: மரிக்கார் அவர்களின் கல்வி இயக்கத்தை ஆதரித்தனர். குப்பியாவத்தை மையவாடி உள்ளூர் முஸ்லிம்களுக்கா கக் கொ டு க் க ப் பட்ட பொழுது மூன்று வருடங் களுக்குள் முழு மையவாடி யையும் சுற்றி மதில் அமைக் !
ஷியா வகுப்பினருக்காக அம் மையவாடியில் ஒரு பகு தியைப் பெற்றுக் கொண்டு இவ்விருவரும் தங்கள் செல வில் அம் மையவாடியைச்
சுற்றிமதிலெழுப்பிக்கொடுத்தனர்.ஸாஹிராப் It lift, Isir பராமரிப்புக்காக 1906 இல் வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் சுட்டிய வீடுகளில் ஒன்றின் செலவை கரீம் ஜி ஜபர் ஜீ அவர் கள் வழங்கினர். அவர் கொழும்பு நான்காம் குறுக்குத் தெரு
84)
 
 
 

வில் கட்டடமொன்றையும் நிலத்தையும் "மஸ்ஜிதே கரிம்" என அழைக்கப்படும் ஷியாப் பள்ளிவாசலுக்காக அன்பளிப் புச் செய்தார். ஆட்டுப்பட்டித் தெருவில் வதிந்த சோனகரின் அறபு, தமிழ், ஆங்கிலக் அவர் GPT
பாபிஸ்" பாடசாவேயை ஆரம்பித்தார்.
1900 இல் முழு முஸ்லிம் உலகமும் துருக்கி சுல்தான் அப் துல் ஹமீது கானின் வெள்ளி விழாவைக் கொண்டாடிய பொழுது சரீம் ஜீ அவர்களும் அதிற் பங்கு ETT „Tri அவருக்கு இந்தியாவிலும் ஆபிரிக்காவிலும் மாஃலத்தீவிலும் பரவல்ான வியாபாரம் இருந்ததோடு பலவகையான பொருட்களும் அங்கு விற்கப்பட்டன.
இலங்கையில் "போரக்"களே ஒரு முக்கிய ஸ்தானத் துக்கு கொண்டு வந்தவர் கரீம் ஜி ஜடர் ஜி எனக் கூறலாம். அவர் விளேத்து பயிரின் பவனே இன்று போரா"க்கள் அனுபவிக்கின்றனர் என்று சொல்ல வேண்டும்.
1895 ஜனவரியில், முஸ்லிம் பெண்களினதும் பிள்ளே களினதும் உபயோகத்துக்கென ஒவ்வொன்றும் ஆறு கட்டில் களேக் கொண்ட இரண்டு "வோட்கள்" லேடி றிட்ஜ்வே வைத்தியசாலைக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவற்றி லொன்று கிரீம் ஜி ஜபர் ஜி அவர்களால் அவர்தம் பீாலஞ் சென்ற பாரியாரின் ஞாபகார்த்தமாக கட்டிக் கொடுக்கப் பட்டது. மற்றது முஸ்லிம் பொதுமக்களால் சுட்டிக் கொடுக் கப்பட்டது.
எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்த அறபி பாஷா வும் அவரது குடும்பமும் அவர்கள் மீண்டும் எகிப்துக்குச் செல்லமுன் கடைசி சில வாரங்களேக் கரிம் ஜி ஜபர்ஜி அவர்
(85 )

Page 48
களின் இல்லமான "ஈஸ்ா விலா"விலேயே கழித்தனர்" அங்கிருந்துதான் அறபி பாஷா 1901 செப்ரெம்பர் 18 ஆம் நாள் எகிப்துக்குப் பயணமானுர்,
1905 இல் துருக்கித் தொப்பி விவகாரம் உள்ளூர் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த பொழுது கரீம் ஜீ ஜபர் ஜீ அவர்கள் அவரின் நண்பரான L JILĦIL I r II Iii பாரிஸ்டராகத் தொழில் புரிந்து கொண்டிருந்த ரபீபுத்தீன் அகமது அவர்களே முஸ்லிம்கள் கொழும் பில் ஒழுங்கு செய்திருந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற வரவழைத்தார் ஜனுப் அப்துல் காத சிவ கள் துருக்கித் தொப்பி அணிந்து உயர்நீதி மன்றத்தில் ஆஜ ராவதைத் தடுத்ததை எதிர்த்து அந்தப் பொதுக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக் கூட்டத்தில் கரிம் ஜி ஜபர்ஜி அவர்களைப் பற்றி மெளலவி ரபீயுத்தின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"இங்கு வரவேண்டுமென்ற உங்கள் அழைப்பை நான் முதலில் பெற்றதும் அதனே ஏற்றுக் கொள்வதில் சிறிது தயக்கம் காட்டினேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில், அலிகாரில் இந்திய முகம்மதிய ரின் வருடாந்த தேசிய சம்மேளனத்தில் உரையாற்று வதற்காக நான் அங்கு சமுகமளிக்க வேண்டிய ஓர் உடன்பாடு ஏற்கெனவே இருந்தது. ஆணுல் பம்பா பில் எங்கள் மத்தியில் எவ்வளவு பிரபல்யமாயிருந் தாரோ அவ்வளவு பிரபல்யத்துடன் உங்கள் மத்தியில் விளங்கும் என் சிறந்த நண்பர் கரீம் ஜீ ஜபர் ஜி அவர் களிடமிருந்து வலுக்கட்டாயப்படுத்தும் ஒரு தந்தி கிடைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனத் தீர்மானிப்பதற்கு எனக்கு அதிக நேரம்
(86)

செல்லவில்லே, ஏனெனில், அவ்விதம் செய்ய என்ஃனத் தூண்டிய இரண்டு பிரதான வலுவான இஃணப்புக்கள் இருந்தன. முதலாவது இனப்பு யாதெனில், இஸ்லா மிய சகோதரத்துவமாகும். அது இந்த உலகம் என் றும் காணுத அதி உன்னத சகோதரத்துவமாகும். நாம் நிலத்தாலோ, நீராலோ எவ்வளவுதான் பிரிக்கப் பட்டிருந்தாலும் எமது பரஸ்பர நேசத் தொடர்புக் காகவும் சகோதர உணர்ச்சிக்காகவும் எல்லாத் தேசிய வரலாறுகளிலும் நாம் பிரித்தும் காட்டப்பட் டுள்ளோம். மற்ற இனங்கள் என்னதான் நினைத்தா லும் சகோதரப் பெருமக்களே முகம்மதியர்களாகிய நாம் முகம்மதியர்களாகப் பிறக்கவும் வாழவும் கிடைத்த தானது இவ்வுலகில் நாம் பெற்ற மாபெரும் அருட் பாக்கியம் என்றே நம்புகிருேம். அது மாத்திரமல்ல. எமது அன்ருட வாழ்வில் நாம் உணவு கொள்ளும் எல்லாச் சமயத்திலும் எவ்விதம் நாம் எங்கள் ரட்சகனு க்கு நன்றி செலுத்துகிருேம்? எம் நாளாந்த உணவைத் தந்ததற்காகவும் எங்களே முகம்மதியர்களாக ஆக்கி, முகம்மதியர்களாகவே வாழச் செய்ததற்காகவும் நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிருேம் அல்லவா?"
கரீம் ஜீ ஜபர் ஜீ அவர்கள் உண்மையிலே ஒரு பெரிய
மனிதர்.ஒரு வர்த்தக அரசன் என்ற முறையில் அவர் பெரிதும் கெளரவிக்கப்பட்டது மாத்திரமல்ல; அவரது சிறந்த மன மொத்த செயல்களுக்காகவும் அவர் பெரிதும் நேசிக்கப் பட்டார். இலங்கை மக்கள் அவரது நாமத்தைக் கெளர விப்பதுடன் அவரது ஞாபகார்த்தத்தையும் மனதில் வைத் துப் பாதுகாப்பர்.
( 87 )

Page 49
எஸ். எல். நெய்னு மரிக்கார்
சோனகர்களில் ஒரு கூட்டம் பேருவலேயிலிருந்து பாணந் துறைக்குக் குடிபெயர்ந்து கொழும்பில் வர்த்தக நிஃiயங்களே நிறுவியது. வியாபாரம் வளர்ந்ததும் அவர்கள் நிரந் தரமாகவே கொழும்பில் தங்கினர். இக் குடும்பங் களில் ஒருவரான சாகிப் இதுரை முகம்மது லெப்பை மரிக்கார் என்பவர் 1817 gai மீரா லெப்பை ஸ்டிஃபா லெப்பை குமாஸ்த்தர் என் பாசின் மூன்றுவது மகளான அசன் சுண்டு நார்சியா என் பாரை மணந்தார். அவர் களுக்குப் பிறந்த மகனுன் fiu"?arr7 GGERL 63Lun ருக்கு 1858 இல் ஒரு மகன் பிறந்தார். அவர் தா ன் நெப்னு மரிக்கார்,
நெய்னு மரிக்கார் அவர் கள் அறபுக் கல்வியை வீட்டி - - - - - - - &&லும் தமிழை ஓர் இராப் பாடசாலேயிலும் ஆங்கிலக் கல்வியை வெஸ்லிக் கல்லூரியிலும் பெற்ருர், அக் கல்லூரி பழைய சோனகத் தெருவில் இருந்த அவரது இல்லத்துக்கு அடுத்து இருந்தது. அன்றிருந்த வழக்கப்படி பாடசாலை இல் வாத நேரங்களில் அவர்தம் தகப்பஞரின் கடைக்குச் சென்று வியாபார முறைக3ளக் கற்றுக் கொண்டார்.
1892 இல் அவரின் தசப்பஞர் இறக்கவே அவர் புறக் கோட்டை பிரதான வீதியிலிருந்த தகப்பனுரின் வியாபாரத்
(88)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைக் கொண்டு நடாத்திஞர். அப்போது புதிய சோனகத் தெரு 43 ஆம் இலக்க இல்லத்தில் வசித்து வந்த அவர் 1900 இல் டரற் வீதியில் "முயிர்பெர்ன்" என அழைக்கப் பட்ட ஒரு விசாலமான இல்லத்தை விவேக்கு வாங்கிஞர்.அவ் வீட்டின் விசாலமான முற்றவெளியில் அவர் "விக்டோரியா டிரப்பரி ஸ்டோர்ஸ்" என்ற கடையை நிறுவினர். அவர் ஒர் "இன்டெண்டிங் ஏஜண்டாக" இருந்து ஐரோப்பாவிலிருந்து சரக்குகளே வரவழைத்து இலங்கையிலுள்ள வியாபாரிகளுக்கு, விநியோகம் செய்தார். அவரது வர்த்தகக் கையிருப்பு பல இலட்சம் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டது.
தற்பொழுது கொழும்பு பேஸ்ஃவன் வீதியிலிருக்கும் வெஸ்லிக் கல்லூரிக் கட்டடத்தைக் கட்டுவதற்காக நெய்ஞ மரிக்கார் அவர்கள் நன்கொடை வழங்கிஞர். அக் கல்லூரி பின் பிரதான வாசலுக்கருகில் உள்ள தகட்டில் ஏனேயோரின் நன்கொடையுடன் அவரின் நன்கொடையும் நன்றியுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, வாப்பிச்சி மரிக்கார் அவர் களின் கல்வி இயக்கத்தில் அவர் மும்முரமாக ஈடுபட்டு ஸாஹிராக் கல்லூரிக்கு உதவி வழங்கிஞர். அவரின் மனேவி யின் தகப்பஞரான ஐ. எல். எம். எச். நூர்தீன் ஹாஜியார் அவர்கள் ஹமீதியாப் பாடசாலேக்கு உதவி வழங்கினூர்,
அப்பொழுது வழக்கிலிருந்த இலங்கை முஸ்லிம்களின் விவாகங்களேப் பதிவு செய்யும் முறையானது, சீதனம் முத லியன பற்றிய பிரச்சினேகள் எழும்பொழுது சம்பந்தப் பட்டவர்களுக்கு உதவுவதாக இருக்கவில்லே. அன்று சீதனத் தொகை "கடுத்தத்திலேயே பதியப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்கு மாகாணத்திலே இவ்வித பூசல்களேத் தீர்த்து வைப்பது மிகவும் கஷ்டம் என அரசாங்கம் கண்டது. முஸ்லிம் விவாகப் பதிவுக் கட் டஃளச் சட்டம் முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாகப் பிர யோகிக்கப் படாமல் இருந்ததால் அரசாங்க அதிபரான திரு. லுஷிங்க்டன், 1907 இல் நெய்னு மரிக்கார் அவர் களுக்கு இதுபற்றி எழுதிஞர். ஏனெனில், அன்று கொழும்பு முஸ்லிம்களின் தஃலவர் அவரே என்று கருதப்பட்டது.
( 89)

Page 50
நெய்னு மரிக்கார் அவர்கள் உலமாக்களேயும் பொது மக்க3ளயும் கொண்ட ஒரு கூட்டத்தை அவரது இல்லத்தில் கூட்டி, விவாகப் பூசல்களேத் தீர்ப்பதில் அரசாங்கத்துக் குள்ள கஷ்டங்களே விளக்கிஞர். அதன் பின்னரும் பல கூட்டங்கள் கூட்டப்பட்டன. இறுதியில் முஸ்லிம்களின் விவாகங்க3ளப் பதிவது கட்டாயமாக்கப்படல் வேண்டுமென அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
1886 இல் முஸ்லிம் விவாகப் பதிவுக் கட்டளைச் சட் டம் யாக்கப்பட்ட நாளிலிருந்து புதிய சோனகத் தெரு பள்ளிவாசல் ஜமாஅத்தார் அதனே எதிர்த்தே வந்தனர். எனினும், அக்கட்ட&ளச் சட்டம் எல்லா முஸ்லிம்கள் மீதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கவில்லே. அது சம்பந்தமாக நெய்னு மரிக்கார் அவர்களின் ஆலோசஃனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக எம். ஐ. முகம்மது அலீ, ஜே. பீ. அவர்களின் தலைமையில் அப் பள்ளிவாசலில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் லிவர்ப்பூவில் பிரசித்தி பெற்ற முஸ்லிமான செய்கு அப்துள்ளாஹ் குல்வி பூபம் அவர்களின் "கிரசன்ட்"டில் வெளியிடப்பட்டன:
"முகம்மதிய விவாகங்களைப் பதிவு செய்தல் சம்பந்த மாகக் கலந்துரையாட 1907 ஜூலே 12 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புதிய சோனகத் தெரு பள்ளிவாசலில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கான் பகதூரும் பாரசீக கொன்சலும் சமாதான நீதவானுமான ஜனுப் முகம்மது இஸ்மாயில் முகம்மது அணி தவேமை தாங்கி ஞர். ஜஞப் ஏ கே. உதுமான் ஹாஜியார் செயலாள ராகக் கடமையாற்றினுர், ஆலிம்களேயும் முல்லாக் களேயும் உள்ளடக்கிய பிரபல முகம்மதியர்களேக் கொண்டாதாக அக் கூட்டம் அமைந்தது. இப்பதிவுக் கட்டளேச் சட்டம் முகம்மதிய மார்க்கத்துக்கு முரணுன தாலும் அதனுல் எதுவித பயனும் இல்லாததாலும் அது கொண்டுவரப் படக் கூடாதென அங்கு ஏகமன தாகத் தீர்மானிக்கப்பட்டது. அக் கூட்டம் ஏறக்கு றைய ஐயாயிரம் பேரைக் கொண்டிருந்தது."
90)

எனினும், முகம்மதிய விவாகப் பதிவுக் கட்டளைச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, முஸ்லிம் களின் விவாகப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது.
நெய்னு மரிக்கார் அவர்களின் மூதாதையர் மரதா 2ளப் பள்ளிவாசல் ஜமாஅத்தின் உறுப்பினராக இருந்தனர். பள்ளிவாசலுக்காக 1840 இல் ஒரு சொத்தை வாங்க அவர்கள் பண உதவி வழங்கினர். நெய்னு பரிக்கார் அவர் சுள் 1899 இல் மரதாசீனப் பள்ளிவாசலுக்காக ஒரு கட்ட டத்தை-இரண்டு ஹவுல்களே-க் கட்டிஞர். அந்த "ஹவுஸ்" கள் பற்றி திரு. ஆர். எச். பளட், ஜீ. ஜீ. எஸ். குறிப் பிடுகையில், "ஸாஹிராப் பள்ளிவாசலின் "வுமூ" எடுக்கும் இடம், அதன் வட்டவடிவமான வளே முகட்டினூடாகப் பார்க்கும் பொழுது அளவு கடந்த வனப்புடையதாக விளங்குகின்றது" என்ருர்,
ஸாஹிராக் கல்லூரியின் வருமானத்துக்காக வீடுகளேக் கட்டுவதற்கு ஏற்பட்ட செலவான 12,750 ரூபாவில் அவர் இரண்டாயிரம் ரூபாவை வழங்கிஞர். ரப்பிச்சி மரிக்கார் அவர்கள் ஸ்பாஹறிராவுக்காகக் கட்டிய இரண்டாவது கட்ட டத்துக்கான தளபாடங்களுக்காக அவர் 250 ரூபாவை வழங்கினுர்,
மரதானப் பள்ளிவாசல் நிறைவேற்றுக் குழு உறுப் பினர் என்ற வகையில் அவர் பலமுறை பொருளாளராகத் தெரிவு செய்யப் பட்டார். ஹமீதியாப் பாடசாஃவயைப் பரிபாவித்த ஜம்மிய்யத்துல் ஹமீதிய்யாவின் பணஉதவி புரியும் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.
வேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் அவரது
"ரயட் அன் மார்ஷல் லோ ஒப் #1{##TGör, 1915'" (1915
இல் இலங்கையில் நடந்த கலகமும் Lugal. Tl"Fl Fll
(91)

Page 51
மும்) எனும் நூலில் நெய்னு மரிக்கார் அவர்கஃனப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிருர்:
"உதாரணமாக கொழும்பு முகம்மதியர்களில் பெரும் தனவந்தர்களில் ஒருவரான ஜனுப் எஸ் எல். நெய்ஞ. மரிக்கார் என்னிடம் பின்வருமாறு கூறிஞர் அதாவது. முகம்மதியர்களுக்கெதிராக ஒரு மரணப் படுகுழி தோண்டப்பட்டிருப்பதாகத் தோன்றியதும், GUTolkit ரால் எதுவித பயனும் இல்ஃலயென் ரூனதால் அவர் விக்டோரியாப் பூந்தோட்டத்துக் கெதிரே இருந்த அவரது இல்லத்தின் வாயிற் கதவுகளே மூடும்படி கட் டளேயிட்டுவிட்டு தன்ஃனயும் தன் குடும்பத்தையும் காப் பாற்றிக் கொள்வதற்காக சில துப்பாக்கிகளேயும் சுழல் துப்பாக்கிகளேயும் பெற்றுக் கொண்டார். இரவு அண் மிய தும் அவரின் தோட்ட வேஃபயாள் ஓடோடி வந்து சிங் களவர் ஐம்பதின்மர் மட்டில் வந்து ஐம்பது ரூபா உடனே தரவேண்டுமென்று கோருவதாகவும் இல்லா விடில் வாயிற் கதவு பலாத்காரமாகத் திறக்கப்பட்டு விடும் கொள்ஃாயடிக்கப்படுமென்று கூறுவதாகவும் அறி வித்தான். அவர்கள் வீட்டுத் தோட்டத்துள் நுழைந் தால் சுடப்படுவர் என ஜனுப் நெய்னு மரிக்கார் அறி வித்ததும் அவர்கள் மெதுவாக அவ்விடத்தை விட்டதன்றனர். ஜீவரின் பகளின் இஒTவரTவி துருக்கிக் கொன்சல் ஜஞப் ஒ. எல். எம். மாக்கள் மாக்கரும் நகரக் காடையர்களின் அச்சுறுத்தல் பற்றி யும் வன்செயல்கள் பற்றியும் இதுபோன்ற சம்பவங் களே என்னிடம் கூறிஞர்."
உதுமா லெப்பை மரிக்கார் அகமது லெப்பை மரிக்கார் ஆலிம் பெருந் தனவந்தர்களில் ஒருவர். அவர் பரவலான இரும்பு வியாபாரம் செய்ததுடன் அனேக நிலையான சொத் துக்களேயும் கொண்டிருந்தார். அவருக்கு அனேக ஆண்மக்கள்
(92)

இருந்தனர். அவர்கள் அவரது வியாபாரத்தின் ஒவ்வொரு திரிவையும் நிர்வகித்தனர். 1917 இல் அவர் காலம் சென்ற பொழுது அவரது ஆதனம் இருபது இலட்ச ரூபா ஆசி" வில் மதிப்பிடப்பட்டது. அவரது மரபி" சாசனம் நிதிமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவரின் மரபுரிமையாளர் கள் அந்த உயில் எதிர்த்தனர். அவர் உயில் நிரூபிக்கப் படாததால், அவர் இறுதிப் பத்திரம் எழுதாமலே இறந்த தாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேன்முறையீட்டை யும் உயர் நீதிமன்றம் நிராகரித்ததால் பிரிவி கவுன்சி"லுக்கு மேன்முறையீடு செய்ய ஆயத்தங்கள் செப்பப்பட்டன. முஸ்லிம்களில் வயது வந்தவர்கள் சிலர், வழக்குத் தொடர் வதை விட்டுவிட்டு உரியவர்களுக்கு சொத்தைப் பங்கிட்டு விடும்படி மரபுரிமையாளர்களுக்கு அறிவுரை பகர்ந்தனர்.
சம்பந்தப்பட்ட அனேவரும் அவ் விவகாரத்தில் எஸ்.எல். நெய்னு மரிக்கார் ஹாஜியார் அவர்களை நடுவராகக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அவர் பங்கீடு செய்தது இறுதி முடிவு என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நெய்னு மரிக்கார் அவர்கள் அவரது பிந்திய வயதில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டார். அவருடைய வியா பார நிறுவனம் கொழும்பு புறக்கோட்டை கெய்சர் Gw75 188 ஆம் இலக்க இல்லத்தில் இருந்தது. அதற்கு முன்னர் அவர் 1920 இல் "வீரப்பாஸ்" எனும் ஸ்தாபனத்துடன் சேர்ந்து மோட்டர் வாகன வியாபாரத்தில் ஈடுபட்டு பிரித்தானியாவிலிருந்தும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலி ருந்தும் மோட்டார் வாகனங்களே இறக்குமதி செய்தார்.
அவர் 1926 டிசம்பர் 24 ஆம் தேதி இறையடி சேர்ந் தார். அவர் ஆண்மக்கள் மூவரதும் பெண்மக்கள் ஐவரதும் தந்தையாவார்.
(93)

Page 52
டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான்
கெளரவ டபிள்யு, எம்.'
அப்துர் ரஹ்மான், ஏ. எம் வாப்பிச்சி மரிக்கார் அவர்' களின் மகளுவார் கொழும் பில் 1888இல் பிறந்த அவர் காஸ்வேக் வீதி அரசாங்க பாடசாலேயிலும் அத ခြွရံဂါ பின்னர் வெஸ்லி கல்லுரரி யிலும் கல்வி பயின்ருர், 1888 இல் தம் தகப்பனுரு டன் கட்டடத் தொழிவிற் சேர்ந்தார். 1900இல் சட்டது: வாக்க சபைக்கு முகம்மதிபதி உறுப்பினராக அவர் நிய மிக்கப்பட்டார். அவரைக் கெளரவிக்கு முகமாக ஐ.: எல். எம். அப்துல் அஸிஸ் அ வ ர் சு ஸ் தலேமையில் சோனகர் சங்கம் ஓர் இராப் போசனம் வழங்கியது. அவர் சட்டவாக்க சபையில் பல குழுக்களில் கடமையாற்றியிருக் கிருர்,
குற்றவாளிகளே எவ்வாறு நடத்த வேண்டுமென்பது பற்றி ஆராய 1903 நவம்பர் 14 ஆம் தேதி சட்டவாக்க சபையின் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஏ. ஜே. வஸ்ஸெல்ஸ் (அற்ருேனி ஜெனரல்), லூஸ், எச். எச். சமரென், எச். எல். க்ரோபோட், எஸ். பொயிஸ், அப்துர் ரஹ்மான் ஆகியோர் அதில் அங்கம் வகித்தனர்.
சுங்கவரி திருத்தச் சட்டமூலத்தைப் பரிசீலனே செய்வ தற்காக 1903 ஜனவரி 23 அம் தேதி நியமிக்கப்பட்ட குழு
(94)
 
 
 
 
 
 
 
 
 
 

வில், அற்ருேனி ஜெனரல், கணக்காய்வாளர் மா அதிபதி. ஐரோப்பிய உறுப்பினர், வாணிக உறுப்பினர், பிரதம சுங் சுத் திரட்டாளர் ஆகியோருடன் முகம்மதிய உறுப்பினரான அப்துர் ரஹ்மான் அவர்களும் அங்கம் வகித்தார்.
1903 பெப்ரவரி 10 ஆம் தேதி சட்டவாக்க சபையில் கெளரவ அப்துர் ரஹ்மான் அவர்கள் சட்ட நிறைவேற்று சபை விஸ்தரிப்பை ஆதரித்தார். காப்புவரி வசதிச் சட்ட மூலத்தைப் பரிசீலனே செய்ய 1905 டிசம்பர் 15 ஆம் தேதி அற்ருேனி ஜெனரல் அவர்களால் பின்வருவோரைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்படல் வேண்டுமென்ற ஒரு பிரேர&ன சட்டவாக்க சபையில் பிரேரிக்கப்பட்டது: அற். ருேனி ஜெனரல், கணக்காய்வாளர் மா அதிபதி, பிரதம சுங்கத் திரட்டாளர், கெளரவ ஜே. பேகுலன், கெளரவ எம். எப். வோக்கர், கெளரவ அப்துர் ரஹ்மான்.
1908 நவம்பர் 22 ஆம் தேதி, மேன்மை தங்கிய தேசாதி பதியின் உரைக்கு நன்றியுரை வழங்க நியமிக்கப்பட்ட குழு வில் பொருளாளர், மராமத்து பணிப்பாளர், பதிவாளர் மா அதிபதி, கீழ்ப் பிரதேச சிங்கள உறுப்பினர், தோட்டத் தொழில் உறுப்பினர், ஐரோப்பிய உறுப்பினர் ஆகியோரு டன் அப்துர் ரஹ்மான் அவர்களும் அங்கம் வகித்தார்.
ஏரித் திட்டத்துக்காக கடன்களிலிருந்து பெருந்தொகைப் பணம் செலவழிக்கப் படுவதை அப்துர் ரஹ்மான் அவர்கள் 1909 பெப்ரவரி 10 ஆம் தேதி சட்டவாக்க சபையில் எதிர்த் தார். எத்தனேயோ அவசர வேலேகள் செய்யப்பட வேண்டி யிருக்கும் ஒரு கட்டத்தில் அவ்வித ஒரு பொருட் செலவு அவசியமில்ஃவயென அவர் கூறிஞர்.
அரசாங்க சேவையிலுள்ள தக்க ஊழியர்களே போட்டிப் பரீட்சையின்றி சில உயர் பதவிகளுக்கு நியமிக்க தேசாதி பதிக்கு அதிகாரம் இருத்தல் வேண்டுமென்று 1909 பெப்ர வரி 25 ஆம் தேதி சட்டவாக்க சபையில் அப்துர் ரஹ்மான் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். பாடசாலேயிலிருந்து வெளி யேறும் இளைஞர்களுடன் அரசாங்க சேவையிலுள்ளவர்களேப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமென்று கேட்பது நியாயமல்லவென்றும் அவர் குறிப்பிட்டார்.
( 95)

Page 53
விவசாய கழகம், ஒரியண்ட் கிளப், சிலோன் டேர்ப் கிளப், விபரல் லீக் ஆகியவற்றில் அவர் உறுப்பினராக இருந்தார். சமூக சீர்திருத்தக் கழகத் துனேத் தலவராக வும் விளையாட்டுக்களே ஆதரிக்கும் ஒருவராகவும் அவர் இருந்ததுடன் மரதாசீனப் பள்ளிவாசல் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும் இலங்கை முஸ்லிம் கல்விக்கழகத் தினதும் முஸ்லிம் ஆன்மீக கழகத்தினதும் மோர்ஸ் ஸ்போட் கிளப்" பினதும் தலைவராகவும் அவர் விளங்கிஞர்.
இலங்கை முஸ்லிம்களின் தலையணியாய் இருந்த துருக் சித் தொப்பி அணிந்து எம். சி. அப்துல் காதர் அவர் கள் நீதிமன்றத்தில் வழக்காட முனைந்த நேரத்தில் அதற்கு இடளிமக்க மறுத்ததைத் தொடர்ந்து 1905 இல் முஸ்லிம் களின் மாபெரும் கூட்டமொன்று மரதானப் பள்ளிவாசல் முற்றவெளியில் நடைபெற்றது. அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்களே தலைமை தாங்கினர்.
அதன்பின்னர் குடியேற்ற நாட்டுச் செயலாளரிட மிருந்து துருக்கித் தொப்பி விவகாரம் பற்றி பின்வரும் கடிதம் அப்துர் ரஹ்மான் அவர்களுக்குக் கிடைத்தது:
"குடியேற்றநாட்டுச் செயலாளர் அலுவலகம், கொழும்பு, 22 ஜூன் 1906,
El
தலேயில் துருக்கித் தொப்பி அணிந்து தீவின் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக இடமளிக்க வேண்டுமென இறைஞ்சி இலங்கை முகம்மதியர்களிடமிருந்து கிடைத்த மகஜர் மன்னர் முன் வைக்கப்பட்டதென்றும் மாட்சிமை தங்கிய அவர் அம் மகஜரைப் பெற்ருர் எனினும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் மனுதாரர்களின் திருப் திக்கேற்ருங்கு ஏற்கெனவே தீர்க்கப்பபட்டிருப்பதாகத் தாம் அறிவதாக அவர்களுக்கு அறிவிக்கும்படி ஆஃண்பிட் டுள்ளார் என்றும் குடியேற்ற நாடுகளின் அரச செயலா ௗரிடமிருந்து ஒரு கடிதம் மேன்மை தங்கிய தேசாதி
96)

பதிக்குக் கிடைத்துள்ளதாக உங்களுக்கு அறிவிக்கும் படி நான் அவரால் பணிக்கப்படுகிறேன்.
இங்ங்னம், ஐய, உங்கள் கீழ்ப்படிவுள்ள ஊழியன்,
ஜே. ஸ்மித், குடியேற்ற நாட்டுச் செயலாளருக்காக."
துருக்கித் தொப்பி விவகாரத்தில் பின்வருமாறு தீர்வு காணப்பட்டது. "உயர் நீதிமன்றத்தின் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பு: 1905.8.19 ஆம் தேதிய கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமான வழக் கறிஞர் அங்கியுடனும் கழுத்துக் கரைப்பட்டியுடனும், முகம் மதிய மக்கள் வைபவ வே&ளகளில் வழக்கமாக அணியும் நீண்ட கறுப்பு மேலங்கியும் அணியப்படின் முகம்மதிய வழக் கறிஞர்கள் தாங்கள் விரும்புமிடத்து முகம்மதிய மக்களால் வழக்கமாக அணியப்படும் சிவப்புநிறத் துருக்கித் தொப்பி அணிந்து உயர் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமக்கப்படுவர்.
1906 Tril 1,
ஒப்பம்
அல்பிரட் வஸ்கல்ஸ், எச். எல். வெண்'. ஜே. பி. மிடில்டன் ஏ. வுட்ரண்டன்."
1917 இல் 'சிலோன் இண்டிபெண்டெண்ட் திரு பருக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், டென்ஹாம்
(97)

Page 54
என்பார் அவரது சொற்பொழிவில் சமர்ப்பித்த கருத்துைரை களுக்குத் தமது பூரண கருத்தொருமிப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அப்பேட்டியில் பின்வருமாறு குறிப்
பிடப்பட்டது:
"முஸ்லிம்களிடையே ஆங்கிலக் கல்வி அதலபாதாளத் திலேயே இருக்கின்றது. சனத் தொகையைக் கருத்திற் கொண்டால் அவர்களிடையே படித்தவர்களின் விகிதா சாரம் மிகவும் சிறிதாகவே உள்ளது. என் தந்தையா ரால் ஏறக்குறைய இருபத்தாறு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஸாஹிராக் கல்லூரி எங்கள் மத்தி யில் உள்ளது. அதன் கட்டடத்தை விசாலிக்கவும், விஞ்ஞான ஆய்வுகூடமொன்றை நிறுவுவதன் மூலமும் கூடிய தொகையான திறமையான ஆசிரியர்களே நிய மிப்பதன் மூலமும் அப் பாடசாலேயை முன்னேற்றவும் எல்லாவித சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. இவ்வாறு சட்டவாகக் சபை முன்னுள் முகம் மதிய உறுப்பினரான அப்துர் ரஹ்மான் அவர்கள் குறிப்பிட்டார்.
இலங்கை முஸ்லிம்களின் நிலே பற்றிக் கூறும்போது அப்துர் ரஹ்மான் அவர்கள் பின்வருமாறு கூறினும்: "அது மிகவும் வருந்தத் தக்க மோசமான நிலே, எம் முஸ்லிம் ம க் களின் வெளிப்படையான வாழ்வு வளத்துக்குக் காரணம், அவர்கள் தங்களுக்குப் பரம்பரையாகக் கிடைத்த ஆதனங்களேக் கொண்டு கஷ்டமின்றி வாழ்கின்றனர் என்பதாகும். இப்பொழு தெல்லாம் வர்த்தகத்தில் பெரும் போட்டி ஏற்பட்டுள் ளது. சோனகரின் கையிலிருந்த வர்த்தகம் இப்பொழுது மற்றவர்களாலும் பங்குகொள்ளப் படுகின்றது. கடந்த
(98)

ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக முஸ்லிம் இளேஞர் களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அ ஆ ர்கள் உத்தியோகங்களிலும் எழுதுவினைஞர் சேவையிலும் ஈடுபட்டிருக்கிருர்கள். அத்துடன் ஆங் கிலக் கல்வியிலும் அதிக அக்கறை காட்டுகிருர்கள். இந் நடவடிக்கை முழு மூச்சுடன் தொடரப் படா விடில் இன்னும் இருபது அல்லது முப்பது வருடங் களில் முஸ்லிம்கள் அடிமை ஊழியம் செய்பவர்களாக ஆகிவிடுவர் என அஞ்சுகிறேன்."
மரதானப் பள்ளிவாசல் முகாமைக் குழுவைக் கூட் டிணைப்பதற்கான ஒரு சட்டமூலத்தை என். எச். எம்.அப்துல் காதர் 1924 இல் சட்டவாக்க சபையில் சமர்ப்பித்த பொழுது அப்துர் ரஹ்மான் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து, மரதானேயில் நிரந்தரக் குடியிருப்பாளர்களா யிருக்கும் ஜமாஅத்தார்களின் நன்மைக்காக அதில் சில காப் புரிமைகள் சேர்க்கப்படல் வேண்டுமென கருத்துத் தெரி வித்தார். அவரின் ஆலோசஃனகள் அச் சட்டமூலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
அப்துர் ரஹ்மான் அவர்கள் 1933 ஏப்ரில் 6 ஆந் தேதி இறையடி சேர்ந்தார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை யாவார். அவர்களில் ஒருவர் ஸேர் ராஸிக் பரீத் அவர்களா

Page 55
பூதென் பூதில் உம்பிச்சி
பூதென் பூதில் உம்பிச்சி அவர்கள் கொழும்பில் வதிந்த வர்த்தகச் சீமானுவார். அவர் தமது வாழ்க்கையை ஓர் எளிய முறையிலேயே ஆரம்பித்தார். அவர் மலபாரிகளில் ஒருவாரயினும் தமது செல்வத்தை இந்நாட்டு நலனுக்காக, சிறப்பாக முஸ்லிம்களுக்காக வாரி வழங்கினூர்.
ஸாஹிராக் கல்லூரியின் அறபு ஆசிரியரும் பின்னர் மரதானப் பள்ளிவாசல் கதீபாகவும் இருந்த எச். எஸ். இஸ்ளதீன் ஹாஜியார் அவர்கள் உம்பிச்சி அவர்களிடம் சென்று பள்ளிவாசல் காணியில் ஸாஹிராக் கல்லூரிக்காக சில கட்டடங்களேக் கட்டி வழங்கும்படி வேண்டினுர், அதற் கிணங்க அவர் 25,000 ரூபா செலவில் பாலர் வகுப்புக்கான கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தார்.
புதிய சோனகத் தெரு 156 ஆம் இலக்கத்திலுள்ள ஜிப்ரிய்யத்துல் அலவிய்யாத் தக்கியாக் கட்டடத்தை வாங்க அவர் பெருந்தொகையான பணத்தை உதவி ஞர். புறக்கோட்டையிலுள்ள நபீஷிய்யா மிஸ்ரிய்யா என்னும் இரு பெரும் கட்டடங்களேயும் அவர் அறக்கொடை களாக வழங்கிஞர். அவற்றின் வருமானம் புனித ரமழான் மாதத்தில் உள்ளூர் முஸ்லிம் கைம்பெண்களுக்கும் அணுதை களுக்கும் உதவி தேவைப் படுபவர்களுக்கும் பகிர்ந்தளிக் கப் படுவதாயிருந்தது.
அவர் ஆட்டுப்பட்டித் தெருவில் பள்ளிவாசலொன்றைக் கட்டி அதன் பராமரிப்புக்காக வருமானம் பெறக் கூடிய வகையில் அதனுேடு சேர்த்து சில கட்டடங்களேயும் கட்டி ஞர், அவரின் அறச் செயல்களைக் கருத்திற் கொண்டு அவ ருக்கு சமாதான நீதவான் பட்டமும் வழங்கப்பட்டது.
அவரது உடல் அவர் கட்டிய பள்ளிவாசல் முற்றத் தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
(100)

என். டீ. எச். அப்துல் கபூர்
இலங்கையின் கரையோ ரங்களில், சிறப்பாக பேரு வஃலயில் குடியேறிய அறபி கள் மாணிக்கக் கற்களேப் பற்றிய தனித்திறமை வாய் ந்த அறிவுடையோராய்: விளங்கினர். அவர்கள் நாட் டின் மாணிக்கக் கற் சுரங் சுங்கள் அமைந்துள் விள இடங்களுக்குச் சென்று: மாணிக்கக் கற்களே அகழ்ந்: தெடுக்கும் வேலேயில் பெரி தும் ஈடுபட்டனர். அப்துல்: கபூர் அவர்களின் மூதாதை: பரும் அவ்வேலேயில் ஈடுபட்i டனர். அ வர்களுக்குக்: கிடைத்த மாணிக்கக் கற்! களே அவர்கள் கொழும் புக்கு எடுத்து வந்தனர்.
猪
கொழும்பில் அமைந்திருந்த 'மு'அர்ஸ்' என பின்னர் அறி யப்பட்ட "பொன்" அல்லது "யோனகர்'களின் களஞ்சியங் களிலிருந்துதான் அன்று திறமைவாய்ந்த அறபுக் கடலோடி கள் இலங்கை விளைபொருட்களே வாங்கிச் சென்றனர்.
அப்துல் கபூர் அவர்களின் மூதாதையர் படிப்படியாக கொழும்பைத் தங்கள் நிரந்தர வதிவிடமாக ஆக்கிக்கொண்டு பஸ்துன் கோற&ாயைச் சேர்ந்த எஹெலியகொடைப் பிர தே சத் தி ல் மாணிக்கக் கல் அ கழு ம் தொழிலத் தொடர்ந்தனர்.
(O1)

Page 56
அப்துல் கபூர் அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெய காணப்படும் முதல் தஸ்தாவேஜா, 1840 இல் மரதாஃனப் பள்ளிவாசலுக்காக சொத்து ஒன்றை வாங்க உதவிய எழு பத்தினுன்கு பேர்களின் பெயர் காணப்படும் ஒரு பட்டியலா கும். அதிலே சம்ஸ்-தீன் லெப்பை காளி லெப்பை என்பவ ரின் பெயர் காணப்படுகிறது. காளி லெப்பை அவர்களுக்கு ஆண் மக்கள் பலர் இருந்தனர், அவர்களாவோர் நூர்தின் ஹாஜியார், கொழும்புக் கச்சேரியில் ஷரொப் முதலியாக இருந்த சம்ள"தீன், ரஹ்மத்துள்ளாஹ் அல்லது பெரிய தம்பி, அப்துர் ரஹ்மான் ஆகியோரே அவர்கள்.
காளி லெப்பை அவர்களின் ஆண் வழி மூதாதையர் முறையே, சம்ஸ"தீன் லெப்பை, பஹாவுதீன், நூர்தின், ரஹ்மத்துள்ளாஹ், அப்துர் ரஹ்மான் ஆகியோராவர்.
உதுமா லெப்பை மரிக்கார் சேகாதி மரிக்கார் அவர் களின் மகளான உம்மு ஹானி எனும் விதவையை காளி லெப்பை அவர்கள் மணந்தார். உம்மு ஹாளி, எஸ். எம். காளி லெப்பை மரிக்கார் முதலியாரின் இளைய சகோதரி
LI TGħI f'Tri.
நூர்தீன் ஹாஜியார் அவர்கள் தமது சொந்த வியாபா ரத்தைக் கொண்டு நடத்தியதோடு, சோஃவரி அறவிடப்படு வதற்காக கொழும்பிலுள்ள ஆதனங்களே மதிப்பீடு செய்ய கொழும்பு மாநகர சபையால் தெரிவு செய்யப்பட்ட ஆனே யாளர்களில் ஒருவராகவுமிருந்தார்.
அவரின் சகோதரரான சம்ஸாதீன் ஷ்ரொப் முதவியார் அவர்கள் தோற்றத்தில் ஓர் அறபியைப் போன்றிருந்தார். எவ்வளவுக்கெனில், தேசாதிபதி கிரகரியும் ஸ்டான்லி பிரபு வும் அவரது தோற்றத்தைக் கொண்டு அவர் ஓர் இலங்கை வாசி என்பதைச் சந்தேகித்தனர். அவரின் இன்னுெரு சகோ தரரான சீ. எல். ரஹ்மத்துள்ளாஹ் அல்லது பெரியதம்பி என்பார் மாணிக்கக் கல் வியாபாரியாக விளங்கிஞர். அவரது வியாபார நிறுவனத்தில்தான் அப்துல் கபூர் அவர்கள்
(102)

மாணிக்கக் கல் வியாபாரம் பற்றிக் கற்றுக் கொண்டார். என். டீ. எச். அப்துல் ஹமீது, கபூர் ஆகியோர் நூர்தீன் ஹாஜியார் அவர்களின் ஆண் மக்களாவர்.
கபூர் அவர்கள் 1894 இல் கொழும்பு பிரிஸ்டல் ஹோட் டல் கட்டடத்தில் தனது மாணிக்கக்கல், நகை வியாபா ரத்தை ஆரம்பித்தார். கப்பல்களுக்குச் சென்று மாணிக்கக் கற்களேயும் நகைகளேயும் விற்க அவருக்கு விசேஷ அனுமதி இருந்தது. 1901 இல் வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் இங்கு வருகை தந்தபோது அவர்களுக்காக கண்டி காட்சி மாடத்தில் முத்து, வைரம், நீலமணிக் கல், செம்மனிக் கல், கலேத்திறப் பொருட்கள் முதலியவற்றைக் காட்சிக்கு வைக்க அவருக்கு விசேட கட்டளே மூலம் அனுமதி வழங்கப்பட்டது. 1924 இல் வெம்ப்ளி பொருட்காட்சியில் அவரது விற்பனைச் சாவடிக்கு ஒரு முக்கியத்துவ இடம் கொடுக்கப்பட்டது. இங் கிலாந்தின் மேரி மகாராணி அவ் விற்பனைச் சாவடிக்குத் தாமே சென்று பொருட்களேயும் வாங்கிஞர். அவரது வெற் றிக்குக் காரணம் தெள்ளத்தெளிந்த அவரது நாணயமாகும்.
அவர் தமது சொந்தச் செலவில் உலகப் பொருட்காட்சி களில் பங்குகொண்டார். அது அவரது புகழை மேலோங்கச் செய்ததுடன் இலங்கைக்கும் பிரசித்தியைத் தேடிக் கொடுத்தது. 1903 இல் ஐக்கிய அமெரிக்காவில் நடந்த சென் லூயிஸ் பொருட்காட்சி, 1912 இல் நடந்த அகில இலங்கைப் பொருட்காட்சி, 1984 இல் நடந்த பிரிட்டிஷ் எம்பயர் பொருட்காட்சி, 1925 இல் நடந்த பிலடெல்பியா பொருட்காட்சி ஆகியவை அவர் பங்கெடுத் துக்கொண்ட சில பொருட்காட்சிகளாகும். ஐக்கிய அமெ ரிக்காவில் அதுவரை காட்சிக்கு வைக்கப்பட்ட மாணிக்கக் கற்களில் அவரின் கற்கள் மிகச் சிறந்த சேர்ப்பு எனக் கருத்துக் கொள்ளப்பட்டது. வெம்ப்ளி பொருட்காட்சி முடிந்து அவர் இலங்கை திரும்பியபோது அப்போதைய இலங்கைத் தேசாதிபதி 'அவர் செய்த மிகச் சிறந்த வேல்" க்காக அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
(103)

Page 57
அவரது வள்ளற்றன்மையால் பலன்பெற்ற அனேக நிறுவனங்களில் எபாஹிராக் கல்லூரியும் ஒன்ருகும். அவர் கல்லூரிக்காக பதினூறு வகுப்பறைகளேக் கட்டிக் கொடுத் தது மாத்திரமன்றி ஒரு பூரண விஞ்ஞான ஆய்வு கூடத்தை யும் கட்டிக் கொடுத்து அதற்குத் தேவையான உபகரணங் கஃளயும் வழங்கிஞர், மேலும், ஸாஹிராக் கல்லுரரி மாணவர் விடுதிக்காக ஒரு கட்டடத்தை நிறுவ அவர் ஒரிலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்தார். அத்துடன் மகரகயிைல் பதினெட்டு ஏக்கர் காணியைப் பயிற்சி நெறிப்பாடசாஃவ களுக்கென அன்பளிப்புச் செய்தார். ஸாஹிராக் கல்லூரி பின் கிளேப் பாடசாஃவகளும் அவரது தாராளத் தன்மையி லிருந்து தப்பவில்ஃப், அதேபோன்று இலங்கை முழுவதி லுமுள்ள அனேக பள்ளிவாசல்கள் ரத்மலானே செவிடர் குருடர் பாடசாலை, மகரகமை ஆண்கள் கைத்தொழிற் பாடசாலே ஆகியவையும் அவரது வள்ளற்றன்மையினுல் பயனடைந்தன. கொழும்பு மெசஞ்சர் வீதியிலுள்ள மஸ்ஜித் முஹ்யியத்தீன் பள்ளிவாசல்க் கட்டியெழுப்புவதற்கான செலுவில் பெரும் பகுதியை அவரே ஏற்றுக் கொண்டார். அப் பள்ளிவாசல் மனங்கவர் மிஞராக்களுடனும் குதிரை லாட வடிவான மேல்வளவுகளுடனும் ஸ்ரஸ்னிய சிற்பக் கலேயை எடுத்துக்காட்டா நிற்கின்றது.
அறபுமொழிக் கல்விக்காக மகரகமையில் கபூரிய்யா அறபிக் கல்லூரி எனும் இஸ்லாமிய மத நிறுவனத்தை அவர் நிறுவினுர். அதன் பராமரிப்புக்காக அவர் கிராண்ட் பாவில் அறக்கொடையாக வழங்கிய கட்டடத்தின் அன் றைய பெறுமதி ஐந்து லட்சம் ரூபாவாகும். முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக "கபூர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி" நிறுவப்பட்டது. அதற்கு அறக்கொடையாக அவர் கொழும்புக் கோட்டையில் வழங்கிய கட்டடத்தின் அன் றைய பெறுமதி நாற்பது இலட்சம் ரூபாவாகும்.
1949 மார்ச் 1 ஆம் தேதி பாஹிராக் கல்லூரியில் அப் துல் கபூர் அவர்களின் உருவப் படத்தைத் திரைநீக்கம் செய்து வைத்து மகா தே சா தி ப தி யான ஸேர்
(104)

ஹென்றி மூர் பேசிய பொழுது, "இந்த உருவப்படம் காலஞ் சென்ற அல்ஹாஜ் என். டீ. எச். அப்துல் கபூர் அவர்களின் வாழ்க்கைப் பணிக்கு என்றும் நின்று நிலவக் சுடிய நிஜனவுச் சின்னம் என்பது மாத்திரமல்ல, அது மற்ற வர்களும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட உதவும் ஓர் ஊக்கப்பாடுமாகும்" என்ருர், அவர் மேலும் கூறியதாவது: "அவர் எங்கு சென்ருலும் தமது வியாபா ரத்தின் நற்பெயரைக் காப்பாற்றினூர். அங்கெல்லாம் அவர் இலங்கையின் நலனேக் கருத்திற்கொண்டார்.அவரது வியா பாரத் திறமையும் அவர் அடைந்த செல்வத்தின் அளவும் மிகப் பெரியனவாயினும் அவர் ஒர் எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். அவ் வாழ்க்கை ஒரு முஸ்லிம் பக்திமானின் வாழ்க்கையாகவே இருந்தது. அவர் எப்பொழுதும் அவரது செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வதில் இன்பம்
எாஹிராத் கல்லூரியின் அன்றைய அதிபரான ஏ. எம்" ஏ அளிஸ் அவர்கள் அப்துல் கபூர் அவர்களேப் பற்றிக் குறிப் பிடுகையில் பின்வருமாறு கூறிஞர்: "அவரது தருமம் உள் நாட்டு, அல்லது பேரரச கெளரவப் பட்டங்களேப் பெறுவதற் காக அமையவில்லை; அல்லது ஆட்சிபீட சபைகளில் இடமெ டுக்கும் ஒன்ருகவும் இருக்கவில்லே. அவரது தருமத்தில் வெளிப்பகட்டு இடம்பெறவுமில்லே பாராட்டும் புகழும் வேண்டப்படவுமில்லே. ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய பண்பேபோல், அவர் எவ்வளவுக்கு தாம் செய்த தருமத்?ை மறைமுகமாக வைத்திருந்தாரென்ருல் அவரது வலக்கரம் கொடுத்ததை இடக்கரம் அறியவில்லே."
கார்னெஜிஸ்"டனும் ரொக்பெலருடனும் அவரை ஒப் பிட்ட அளபீஸ் அவர்கள், பேலும் கூறிஞர்: "அவர் தமது வாழ்நாளில் மட்டும் வரையாது வழங்கவில்லை. தமது மறைவுக்குப் பின்னரும் வாரி வழங்கக் கூடிய அறக்கொடை சுளேயும் அளித்துச் சென்ருர்."
(105)

Page 58
அப்துல் கபூர் அவர்களின் நேர்மையை நிரூபிக்கத் தமது வாழ்நாளில் நடந்த ஒரு சம்பவத்தை அன்றைய பிரதிநிதிகள் சபைச் சபாநாயகரான ஏ. எப். மொலமுரே அவர்கள் ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத் தில் பின்வருமாறு எடுத்துக் கூறிஞர்: "ஒரு வியாபாரி என்ற முறையில் நேர்மையில் அவருக்குச் சமமான ஒருவரைக் காண்பதரிது. ஏனெனில், என் தந்தை அவருக்கு ஒர் இரத்தினக் கல்லேக் கொடுத்து அதற்கு நாற்பத்தையாயி ரம் ரூபா வேண்டுமெனக் கேட்டார். ஆணுல், அப்துல் கபூர் அவர்களோ அதன் சரியான பெறுமதியை, அதாவது அறு பத்தையாயிரம் ரூபாவை என் தந்தைக்குக் கொடுத்தார்.'
இலங்கைச் சோனகர் சங்கம் அரசியலமைப்புச் சீர் திருத்தம் பற்றி அரச ஆஃணக்குழுவின் தலைவருக்கும் உறுப் பினர்க்கும் சமர்ப்பித்த மகஜரொன்றில் அப்துல் கபூர் அவர்களேப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: "இலங்கைச் சோனகர் ஒருவர் கொழும்பு நகரின் மைய மான ஒரிடத்தில் நாட்டுக்காக ஐம்பதிலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான அறக்கொடைச் சொத்தொன்றை வழங் கியதானது இத்தீவின் வரலாற்றிலேயே இதற்கு முன் நிகழ்ந்திராத ஒரு சம்பவமாகும்."
1945 இல் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் வைத்திய கலாநிதி டபிள்யு. பாலேந்திர அவர்கள் அப்துல் கபூர் அவர்கள் பற்றிக் குறிப் பிடுகையில் பின்வருமாறு கூறிஞர்: "நீங்கள் இந்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள். இந்நாட்டுத் துறை முகத்தைக் கப்பல்கள் வந்தடையும்பொழுது நீங்கள் காண் பது என்ன? நான் பலதடவையும் அவைகளில் வந்துள்ளேன். நீங்கள் காண்பது, துறைமுகத்தை நோக்கி வானுேங்கி நிற்கும் "ஜெம் பலஸ்'-ஜெம் மியுளியம்-ஆகும். துறை முகத்தை விட்டு நீங்கி காவிருமுக மைதானம் வழியே போகும் போது என்ன காண்கிறீர்கள்? சோனகரின் நேர் மையான வர்த்தகத்தின் பயனுக எழுந்த கட்டடத் தொடர் களாகும். ஆணுல், "ஜெம் பலஸில்" ஏதோ விசேஷம் காணப்படுகிறது.
(106)

"இதோ இங்கே இருக்கிருர் இந்நாட்டின் பிரஜை ஒருவர். பட்டை நீட்டப்படாத இரத்தினக் கற்கஃாக் கொண்டு செல்வத்தை உருவாக்குகிருர், அவற்றைத் தூர இடங்களான நிவ்யோக், பாரிஸ், மற்றும் உலகில் ஏனேய பாகங்களுக்கு எடுத்துச் செல்கிருர், அதன் மூலம் இந் நாட்டுக்கு ஏராளமான செல்வத்தை எடுத்து வந்து கட்டடங் களே எழுப்புகிருர், அவை இந்நாட்டிலுள்ள மிக உயரமான கட்டடங்களிற் சிலவாக அமைந்துள்ளன. ஆணுல், அவர டைந்த செல்வங்களில் ஒரு பகுதியை அவரது சகோதர மக்களின் நன்மைக்காக வழங்குகிருர், அவ்வித மனிதர் ஒருவரை உருவாக்கக்கூடிய ஒரு நாகரிகம் உண்மையிலேயே மிக உயர்ந்த ஒரு நாகரிகமாகும்.
அந் நாகரிகம் உலகின் ஏஃனய நாகரிகத்தை விட வித்தியாசமானது. அது மறுமையை எதிர்நோக்கும்படி கூறும் ஒரு நாகரிகமாகும். அது நாட்டின் செல்வ வளத் தை, அழகுப் பொருட்களே, மனிதனுக்கு உபயோகமான வற்றைப் பயன்படுத்தும்படி அறிவுரை நல்கும் அதே சமயம் அவற்றைத் தன் சொந்த உபயோகத்துக்கு மாத்தி ரம் வைத்துக் கொள்ளாது ஏனேயவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கும்படி கூறும் ஒரு நாகரிகமாகும். உண்மையில் அது மிக உயர்ந்த ஒரு நா ரிகமே."
அப்துல் கபூர் அவர்களிடம் மாணிக்கக் கற்களினதும் நகைகளினதும் ஒப்புவமையற்ற ஒரு சேகரிப்பு இருந்தது. 1929 இல் அவர் கொழும்புக் கோட்டை சேர்ச் வீதியில் "ஜெம் மியுளிய'த்தை நிறுவினுர், அதனேத் திறந்துவைத்து உரையாற்றிய அன்றைய தேசாதிபதி ஸேர் ஹேபட் ஸ்டான்லி அவர்கள், தென் கென்சிங்க்டன் பேரரச நிறு வனத்தில் நிரந்தர கண்காட்சிக்காக பெறுமதி வாய்ந்த
(107)

Page 59
இலங்கை மாணிக்கக் கற்களே வழங்கியதற்காக அப்துல் கபூர் அவர்களே வெகுவாகப் பாராட்டினுர்,
மதத்தில் அவருக்கிருந்த பக்தி மிக ஆழ்ந்ததும் உணர்ச்சி மிக்கதுமாகும். கடுங் கதிர் காலத்திலும் பிரயாணம் செய்ய நேர்ந்த போதெல்லாம் அவர் ஐங்காலத் தொழு கையைத் தவறவிட்டது கிடையாது. அவரது முழு வாழ்க் கையும் பக்திமேலிட்ட ஒன்ருக இருந்தது. அவர் உலகின் பாகங்களுக்கும் பரவலாகப் பிரபரணம் செய்துள்ளார். மக்கா, மதீனு, டமஸ்கஸ் பக்தாத், கெய்ரோ, இந்தியா ஆகிய இடங்களிலுள்ள இஸ்லாமிய முக்கியத்துவம் வாய்ந்த திலங்களேயும் அவர் தரிசித்துள்ளார். அனேக "சாதாத்" மார்களும் "செய்கு"மார்களும் கொழும்பில் தங்கிய போதெல்லாம் அப்துல் கபூர் அவர்களின் அதிசிறந்த விருத்தோம்பலிலிருந்து தப்பவில்ஃல. "ஐவிக்கல் ஹோல்" (இப்போதைய பூரீ கொத்த) அவரது பிற்காலத்தைய வாசஸ்தலமாகும்.
அப்துல் கபூர் அவர்கள் அவரின் ஏனேய சேவைகளோடு சிறப்பாக அவரது வள்ளற்றன்மைக்காக என்றும் நினைவு கூரப்படுவார். அவரது பெயர் அனேக வெளிநாடுகளில் பிரபல்யம் பெற்று விளங்குகிறது, அவரது இறுதி மூச்சு அவரது கொள்ளுப்பிட்டி இல்லத்தில் 73 ஆவது வயதில் அடங்கியது. மரதானேப் பள்ளிவாசல் வளவில் அடக்கம் செய்யப்படக் கூடிய கெளரவத்தை அவர் பெற்ருர்,
அவரின் மூத்த மகன் நகரசபை உறுப்பினரும் முன்னுள் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பளில் ஏ. கபூர்
ஆவார்.
羲
 
 

என். எச். எம். அப்துல் காதர்
என். எச். எம். அப்துல் காதர் அவர்கள் என். ம். எச். அப்துல் கபூர் அவர்களின் இளேய சகோதரராவார்.
அப்துல் காதர் அவர்கள் அவர் காலத்தில் வாழ்ந்த புரக்டர்களில் தலேசிறந்த
னேந்து வருடம் முஸ்லி சுளேப் பிரதிநிதித்துவம் வகி த்தார். அவர் உலதை ell.", டுப் பிரிந்த வேளையில் கொழும்பு மாநகர சபை யில் சிர்ேஷ்ட உறுப்பின ராக இருந்தார். இலங்கை முஸ்லிம் லீக்கின் வரலாற் றில் மிக நெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்தில் அதன் தஃலவர் பதவியை அவர்
முறையில் இலங்கையில்: திரைப்படத் தொழி ஃ) ஆரம்பித்தவர்களில் శ్రీమిళ్ల ரும் ஒருவராவார்.
சட்டவாக்க சபையில் டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான்
அவர்களின் இடத்துக்கு அப்துல் காதர் துவர்கள் 191 ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்டார். முஸ்லிம் சமூகம் சம்பந்தப்பட்ட எல்லா அலுவல்களிலும் அப்துல் காதர் அவர்கள் ஒரு நடுநாயகமாக விளங்கினூர். களத்தில்
(109)

Page 60
குதிக்க அவர் எப்போதும் தயாராக இருந்ததோடு எதைக் கூறவேண்டுமோ அதைப் பயமின்றிக் கூறிஞர்.
1908 இல் புறக்கோட்டை வட்டாரத்தின் உறுப்பின ராக கொழும்பு மாநகர சபையில் பிரவேசித்த அவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக அதன் உறுப்பினராகத் திகழ்ந்தார். இறுதி பதவிக்காலம் தவிர்ந்த மற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர் போட்டியின்றியே தெரிவுசெய் யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவ ரின் சகாக்களாக இருந்தோர் ஸேர் ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் அல்விஸ் ஹேக்டர் ஜயவர்தன, டயஸ் எச். எல் டிமெல் போன்ற பிரபலஸ்தர்களாவர்.
தீவில் ஏனேய சமுதாயங்களுக்கு அளிக்கப்படுவது போன்ற கல்வி வசதி முஸ்லிம்களுக்கும் சமமாக அளிக்கப் படல் வேண்டுமென அவர் வாதாடிஞர். கல்வியின்றி முன் னேற்றம் இருக்க முடியாது என்பது அவர் ஏற்றுக்கொண்ட வாதமாகும், அவரது குடும்ப ஆண் பிள்ளேகள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்களாயினும் அவர் தம் பிள்ளைகளேக் கல்வியில் ஊக்குவித்தார். 49 ஆவது வயதில் இறந்த அவரின் மூத்த மகனுன வைத்திய கலாநிதி மர்ஸ்"க் ஏ. காதர், இங்கிலாந் தில் படிப்பில் தலைசிறந்து விளங்கியதோடு காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான வைத்திய வல்லுநராகவும் தேர்ச்சி பெற்ருர்,
என். எச். எம். அப்துல் காதர் அவர்கள் முஸ்லிம் லீக் கின் தலைவராக இருந்தபோது அவரது தலேமைப் பதவி ஒரு போதும் எதிர்ப்புக்குள்ளாகவில்லே. அரசியலமைப்புச் சீர் திருத்தம் சம்பந்தமாக அரசாங்கத்துடனும் ஏனைய சமூகங் களுடனும் நடந்த பேச்சுவார்த்தைகளில் அவர் போன்ற ஒருவரின் தலேமையில் இயங்கிய முஸ்லிம் லீக்கின் கருத் துரைகளுக்கு கெளரவமளிக்கப்பட்டது.
(110)

மரதானப் பள்ளிவாசல் நிறைவேற்றுக் குழுவின் தலே வராக அவர் இருபத்தைந்து வருட காலம் கடமையாற்றி ஞர். 1921 இல் அவர் ஸாஹிராக் கல்லூரியின் முகாமை யாளராஞர். அக் கல்லூரி அவரது சிறந்த நிர்வாகத்தின் கீழும் ரி. பி. ஜயா அவர்களின் தலேமையின் கீழும் வெகு விரைவாக முன்னேறியது.
முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பாடசாலேகள் அன்று அரசாங்கத்தின் சிறு உதவியையே பெற்றுக் கொண்டிருந் தன. எனவே, முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் 1,50,000 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டு மென அப்துல் காதர் அவர்கள் சட்டவாக்க சபையில் ஒரு பிரேரனே கொண்டு வந்தார். கே. பாலசிங்கம் அவர்கள் அந்தப் பிரே ரனேயை அணுவதித்தார். ஆணுல், பிரேரனே தோல்வியுற்றது. எனினும், கொழும்பு ஸாஹிராக் கல்லுர ரிக்கு அரசாங்கத்திடமிருந்து 25,000 ரூபா கொடையாகக் கிடைக்கும் அளவுக்கு அந்தப் பிரேரணை வெ ற்றி கண்டது.
சட்டவாக்க சபையில் அப்துல் காதர் அவர்கள் 191 இலிருந்து 1931 வரை முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருந் தார். முஸ்லிம்களின் நலனே அவர் மிக நுணுக்கமாகவும் கர்சனேயுடனும் கவனித்து வந்தார். அத்துடன் நாட்டு நலனேப் பொறுத்த வரையில் தான் ஆற்ற வேண்டிய பங்கை அவர் அதிகமாகவே செய்து வந்தார்.
சட்டவாக்க சபையில் அவர் ஒரு பிரபல உறுப்பினர். உறுதியானதும் சுதந்திரமானதுமான பேச்சு, விடாப்பிடி யாக நின்று கருமம் சாதிக்கும் ஆற்றல், கருத்துக்களேக் கூறுதல் ஆகியவற்றுக்குப் பேர் போனவர். முஸ்லிம் விவாகக் கட்டளேச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு அவ்ரே பிர
(111)

Page 61
தான காரணியாக இருந்தார். கல்வி, மத விடயங்களில் அவர் முஸ்லிம் சமூகத்துக்கு ஒர் அரணுக அமைந்தார்.
கரவின்றிப் பேசுகின்ற அவரது தன்மை சில சமயங் களில் அவரைப் பிரச்சினேகளிலும் மாட்டச் செய்தது. ஒருமுறை ஒரு முஸ்லிம் டொக்டருக்கு அநீதி இழைக்கப் பட்டதாகத் தாம் கருதிய ஒரு விடயம் சம்பந்தமாக அவர் ஒர் உயர் அதிகாரியைச் சட்டவாக்க சபையில் குற் றம் கூறிஞர். அதற்காக அவர் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. குடியேற்றநாட்டுச் செயலாளராயிருந்த ஸேர் ஆதர் பிளச்சர் அதிலே தலையிட்டு அதனை ஒரு நீர் வுக்குக் கொணரும் வரை அப்துல் காதர் அவர்கள் அந்த வழக்கை வாதாடிஞர். அந்த வழக்கைத் தொடர்ந்து, சபையில் ஆற்றப்படும் எல்லா உரைகளுக்கும் கூற்றுக் களுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலக்களிக்கச் செய்யும் ஒரு சட்டமூலத்தை ஸேர் வைத்தியலிங்கம் துரை சுவாமி அவர்கள் சட்டவாக்க சபையில் சமர்ப்பிக்க வேண்டி
ஒற்பட்டது.
என். எச். எம். அப்துல் காதர் அவர்கள் தாம் செய்த எல்லாக் கருமங்களிலும் உறுதியையும் முன்னறி வையும் கடைப்பிடித்தார். திரைப்படத் தொழிலில் தம் ஆண்மக்களுக்குச் சிறந்த ஓர் எதிர்காலம் உண்டென்பதை ஏற்கெனவே அவர் கண்டுகொண்டார். அத்த தம்பிக்கை பொப்பாகவில்லே,
அப்துல் காதர் அவர்கள் 1917 இல் "சிலோன் இண்டி பெண்ட"னுக்கு அளித்த பேட்டியொன்றின் மூலம் அவரது சிறப்பியல்பை அறிந்துகொள்ளலாம்:
"முகம்மதியர்கள் மத்தியில் விரும்பத்தகாத ஒரு தர்ம முறை நிலவுகின்றது. அதாவது, கந்தூரிச் சாப்பாடு
(112)

கொடுத்தலாகும். அதனுல் எதுவித நன்மையான பய ஆறும் ஏற்படுவதில்லே. உண்மையிலேயே ஏழைகளுக்கு உணவளித்தால் அது தர்மமே யாம். ஆணுல், இந்தச் சாப்பாடுகளில் நடப்பது அதுவன்று. என்ஃனப் போன்ற பணக்காரர்கள்தாம் உபசரிக்கப் படுகின்றனர். ஏழை களுக்கு உணவளிப்பதை நான் எள்ளளவேனும் மறுத் துப் பேசவில்லே. ஆளுல், தருமம் என்று சொல்லிக் கொள்ளும் இந்தக் கந்தூரிச் சாப்பாடுகளில் சிறிதே ஆறும் கவனிக்கப் படாதவர்கள் ஏழைகள் என்பதே எனது அனுபவமாகும். இந்தச் சாப்பாடுகளுக்குச் செல வழிக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியைக் கல்விபோன்ற சிறந்த நோக்கங்களுக்காகச் செலவிடலாம். அதுவே
நன்மை பயக்கும்."
அறுவைச் சிகிச்சை ஒன்றின் பின் 1938 ஓகஸ்ட் 30 ஆம்
தேதி அவர் உயிர் பிரிந்தது. அவரது எதிர்பாராத மறைவு அவரின் ஆதரவாளர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாகவிருந்தது.
என். எச். எம். அப்துல் காதர் அவர்கள் பன்னிரண்டு
ஆண்களதும் மூன்று பெண்களதும் தந்தையாவார். ஆன்
மக்களெல்லோரும் பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற
வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு மாநகர மேய
ராக இருந்து இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக் கின்ற ஜாபிர் ஏ. காதர் அவர்கள் அவர்களில் ஒருவராவார்டு

Page 62
இந்நாட்டின் கல்வி, நீதி ஆகிய துறைகளில் நீதியர சர் எம். ரி. அக்பர் அவர் கள் ஆற்றிய தொண்டு குறிப்பிடத் தக்கது. பணக் கார தென்னந்தோட்டச் சொந்தக்காரரான எம்.எஸ் ஜே. அக்பர் என்பாரின் த ல் வ ர | ன அவர் கொழும்பு ருேயல் கல்லூரி மானர்களிடையே திறமை சாவியாக விளங்கிய தோடு அனேக பரிசில்களேயும் பெற் ரூர். விண்டன் மெட்ரிகுலே ஷன் பரிட்சையில் முதலாம் பிரிவில் சித்திபெற்ற அவர் 1897 இல் கேம்பிரிஜ் பல் சுவேக் கழகத்தில் சேர்வதற் காகப் புலமைப் பரிசில் ஒன் : னறயும் பெற்ருர், அங்கே அவர் ஒரு பொறியிலாளராகத் தகைமை பெற எந்திர வியல் கற்ருர் எனினும் பின்னர் சட்டத்துறையில் தகை மை பெற்று "கிரேஸ் இன்' வழக்கறிஞர் மன்ற வழக்கறிஞ Tஞா.
1905 இல் அவர் இலங்கை திரும்பிய பின் வழக்கறி
ஞர் தொழிலே நடாத்திக் கொண்டிருந்த அதே சமயம் இலங்கைச் சட்டக் கல்லூரியில் குற்றவியல் நீதிமுறைச் சட்டத்திலும் நடவடிக்கைகளிலும் முஸ்லிம் நீதிமுறைச் சட்டத்திலும் விரிவுரையாராகவும் பரீட்சகராகவும் கடமை
(114)
 

யாற்றிஞர். அவர் அரசாங்க வழக்கறிஞர் மன்றத்தில் சேர்ந்து 1907 இல் முடிக்குரிய வழக்கறிஞரானூர். பின்னர் தகுதி அடிப்படையில் அவர் முறையே சொலிசி" ஜெனரலாகவும் மாவட்ட நீதிபதியாகவும் ஆனதோடு அற்ருேனிஜெனரலான சி.எச். எல்பிஸ்டன் அவர்கள் நீண்ட விடுமுறையில் சென்ற சமயம் பதில் அற்ருேனி ஜெனர எாகவும் கடமையாற்றிஞர்.
அக்பர் அவர்கள் பல்கலைக்கழக ஆனேக்குழுவின் தலே வராகச் செயலாற்றிஞர். அவரது சிபார்சின் பேரில், இலங்கைப் பல்கலைக்கழகமானது ஒருமைப் பல்கங்க் கழகமாகவும் மனப் பல்கலைக் கீழிகமாகவும் அமையவேண்டு மென்றும் அது கண்டி தும்பரப் பள்ளத்தாக்கில் நிறுவப் படல் வேண்டுமென்றும் 1928 இல் சட்டவாக்க சபை தீர் மானித்தது.
அக்பர் அவர்கள் தமது வாக்குச் சாதுர்யத்தால் தாம் கலேமை தாங்கிய பல்கலைக்கழக ஆணைக்குழுவின் சிபார்து களே ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தைச் சட்டவாக்க சபையில் திறமையாக வழிநடாத்தினர். அவர் அவ்விடயத் தில் அப்போதைய பெரும் சூரர்களான ஸேர் ஜேம்ஸ் பீரிஸ், | Genf GNLY i'r sŵrazTri:Llenorth இராமநாதன், திரு ஜி. ஏ. வில் போன் ருேளின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்கவேண்டி இருந்தது. அக்பர் அவர்கள் அவ்விடயத்தில் மிக உயர்ந்த நோக்கங் க3ளக் கொண்டிருந்தார். தாம் குறிப்பிடும் பல்கலைக் கழகம் முழு ஆசியாவிலும் அரும் பெரும் கல்வி Elia) Lorral; அமைய வேண்டுமென்பதே அவரின் அவாவாக இருந்தது.
பல்கலைக்கழக அதிகாரிகள் ஒரளவு காலம் கடந்தும் அனேகமாக விருப்பக் குறைவோடும் பல்கலைக் கழகத்தின்
(115)

Page 63
மண்மண்டபம் ஒன்றின் அரைப் பகுதியை "அக்பர் மண்ட
பம்" எனப் பெயரிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாமை அலங்கரித்த முதல் முஸ்லிம் அக்பராவார். "மன்னரின் வழக்குரைஞர்" (கே. சீ) என்ற தரத்துக்கு உயர்த்தப்பட்ட முதல் இலங்கை முஸ்லிமும் அவராவார். அவர் இளேப்பாறும் சமயம் மிக
சிரேஷ்ட "புவின் ஜட்ஜ்" ஆக இருந்தார்.
இந்நாட்டின் முஸ்லிம் நீதிமுறைச் சட்டம் சம்பந்தப் பட்ட வரையில் அக்பர் அவர்கள் தலைசிறந்த பணியாற்றி ஞர். முஸ்லிம் சொத்துரிமைச் சட்டம், வக்ப்" சட்டம் ஆகியவை சம்பந்தமாக சட்டமியற்றப்பட்ட போது அக்பர் அவர்கள் அதிற் பிரதான பங்குகொண்டார். அதுகால வரை விதவை, அநாதை இஃாப்பாற்று நிதியின் ஏற்பாடு களுக்குள் வராமல் தடுக்கப்பட்டிருந்த முஸ்லிம் அரசாங்க ஊழியர்க்கு அவ்வுரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு காரணமாக இருந்தவர் அக்பர் அவர்களேயாவார்.
கல்வித் துறையில் முஸ்லிம்கள் பின்தங்கிய நி3லயில் இருப்பதை உணர்ந்த அவர் இலங்கை முஸ்லிம் கல்விக் கழகத்தில் பல ஆண்டுகள் ஆரம்ப செயலாளராகக் கடை புரிந்து ஹானஸ்னி ஆண்கள் பாடசாலேயையும் பாத்திமா பெண்கள் பாடசாலேயையும் நிறுவுவதில் வெற்றி கண்டார். ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் பள்ளிவாசலொன்றைக் கட்டியெழுப்பக் காரணமாயிருந்தவர் அவரே.
அக்பர் அவர்கள் தலேசிறந்த முஸ்லிம் ஞானிகளினதும் எ'அபியாக்களினதும் நூல்களேக் கற்ருர், அத்துடன் பல்வேறு மதங்கள் பற்றியும் கற்றறிந்தார். இலங்கைக்கு வருகை தந்த பாவாக்களேயும் செய்குமார்களேயும் பீர்களேயும்
(116)

மெய்ஞ்ஞான ஊற்றிலிருந்து நீர் பருகும் பொருட்டு அவர் சந்தித்தார். இஸ்லாத்தைப் பற்றிய ஆழ்புலமை வாய்ந்த அவரின் அனேக கட்டுரைகள் அனேக முஸ்லிம் சஞ்சிகை களில் வெளியாயின. ஆணுல், அவற்றை இன்று தேடிப்பெற முடியாமல் இருப்பது உண்மையிலே வருந்தத்தக்கது.
அக்பர் அவர்கள் சொலிசிட்டர் ஜெனரல் என்ற தோர ணேயில் சட்டவாக்க சபையில் உத்தியோகப் பற்றற்ற உறுப் பினராக விளங்கிஞர். "முகம்மதியர்' என்ற பதத்தை "முஸ்லிம்' என மாற்றவேண்டுமென்று 1924 இன் பருவ காலப் பத்திரம் XXXV இல் சிபார்சு செய்த, சட்டவாக்க சபையால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக அக்பர் அவர் கள் விளங்கிஞர். அக் குழுவிலே என். எச். எம். அப்துல் காதர், எச். எம். மாக்கன் மாக்கர், ரீ, பி. ஜாயா, எஸ். ஆர். முகம்மது சுல்தான் ஆகியோர் அங்கம் வகித்தனர். அவர்கள் செய்த சிபாரிசு வருமாறு:
"முகம்மதியன் எனும் சொல், அது எந்த விதமாக எழுதப்படினும் பிழையான ஒன்ருக இருப்பதோடு உபயோகிக்கப்படக் கூடாததுமாகும். திருநபி (ஸல்) அவர்களால் போதிக்கப்பட்ட மதத்தைப் பின்பற்றும் ஒருவரைக் குறிக்க உபயோகிக்கப் பட வேண்டிய சரி யான சொல் "முஸ்லிம்" என்பதாக இருத்தல் வேண் டும் என்பதோடு, மதத்தைக் குறிப்பிடும் பொழுது உபயோகிக்கப் பட வேண்டிய சொல் 'இஸ்லாம்" என்பதாகவும் இருத்தல் வேண்டும். இந்த இரு வார்த் தைகளே குர்ஆனில் உபயோகிக்கப் பட்டுள்ளன."
அக்பர் அவர்களின் பல்திறமையை அவர் ஒரு குத் துச் சண்டை வீரராகவும் ஜூடோ வீரராகவும் இருந்தார் என்பதைக் கொண்டு அறிய முடிகின்றது. 1944 ஏப்ரில் 22 இல் தமது 64 ஆவது வயதில் அவர் இறையடி சேர்ந்தார்.
(17)

Page 64
எம். சி. அப்துல் காதர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முகம்மது கரீம் அவர்கள் அப்துல் காதர் அவர்களின் தந்தையாவார். அவர் வர்த் தகத்தில் ஈடுபட்டிருந்ததோடு தம் கருத்துக்களில் பழை மை தழுவுகின்றவராயுமிருந்தார். மேல்நாட்டுக் கல்வியா னது இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்கு முரணுக அமையும் என அவர் பயந்தார். ஆஞல், அவரின் துனேவியாரோ அதற்கு மாருன, கருத்துக் கொண்டவராக இருந்ததோடு தம் மைந்தரான இளம் அப்துல் காதரை யாழ்ப்பான புதுச் செட்டித்தெரு உயர் பாடசாலேயில் ஆரம்ப கல்விக் காகவும் அனுப்பி வைத்தார்.
படிப்பில் திறமைசாலியாக விளங்கிய அப்துல் காதரை அவரின் ஆசிரியர்கள் உயர்கல்வி கற்க உற்சாகப் படுத்தி னர். இலங்கையில் நடந்த சென்னே பிரசிடென்சி மெட்ரிகு லேஷன் பரீட்சையில் திறமை சித்திபெற்ற அவர் பல்கலைக் கழகத்திற் சேர்வதற்காக புலமைப் பரிசிலொன்றையும் பெற்ருர்,
சென்னே பிரசிடென்சி கல்லூரியில் பட்டப் படிப்பு பெற்று இலங்கை திரும்பிய அப்துல் காதர் அவர்கள் அவ ரது தாயகக் கல்லுரியில் சிறிது காலம் கணிதம் படிப்பித் தார். சட்டப் படிப்பு அவரை ஈர்த்ததால் அத் துறையில் அவர் தேர்ச்சி பெற்று இலங்கைத் தீவின் உயர்நீதிமன்ற அட்வகேட்டாகத் தேறினுர். 1904 ஒக்டோபர் 7 ஆம் நாள் அவர் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலேயில் மேற்கத் திய உடையில் தம் சிரசில் துருக்கித் தொப்பி அணிந்த வராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். பட்ட தாரியாகவும் அட்வகேட்டாகவும் விளங்கிய முதல் இலங் கைச் சோனகர் அவரே என்ற பெ ரு மை அவரை ச் சார்ந்தது.
(118)

த்தில் அவருக்குச் சிறந்த
கொழும்பு உயர்நீதி
r. ற்பயிற்சி இருந்தது. அப்
குவ தரக் கி 무 சுெ
ஒரு சமயம் அவர் நீதியரசர் 3.ಇಂಗೆ S. f, guilt
, |ს, 3
முன்னிஃலயில் மேன்முறையீட்டு வழக்ெ எறில் வாதாட ஆஜராகவேண்டி ஏற்பட்டது. அது நடந்தது 1905 மே 2 ஆம் தேதியாகும். அங்கே ஒர் எதிர்பாராத அதிர்ச்சி ஆப்
(19)

Page 65
துல் காதர் அவர்களுக்கு ஏற்பட்டது. அதாவது, நீதிமன்றத் தக்கு அவரது மரியாதையைக் காட்டுமுகமாக அவர் அணிந் திருந்த துருக்கித் தொப்பியை அல்லது சாப்பாத்துக்களேக் சுழற்ற வேண்டுமென நீதியரசர் லயாட் அவரைக் கேட்டுக் (al-istar Trif.
அப்துல் காதர் அவர்களோ உறுதியான உளம் கொண் டவர். நீதிமன்றத்தின் ஆண்ண பற்றி அவர் அச்சம் கொள்ள வில்லே, அவர் இரண்டையும் செய்ய மறுத்தார். துருக்கித் தொப்பி அணிந்து வருவது நீதிம்ன்றத்துக்குச் செலுத்தும் இஸ்லாமிய மரியாதையாகும் என்றும் தன் காலணிகளைக் கழற்றுவது என்பது முடியாத காரியம் என்றும் கூறிய அவர் நீதிமன்றத்தை விட்டு வெளிறிேஞர். ஆனேயேற்க மறுத் தாராயினும் ஒரு சிறந்த சட்டவறிஞர் என்ற முறையில் அவர் பின்னர் நீதியரசரை அவரது அறையில் சந்தித்து நிலமையை விளக்கினூர். எனினும், அதனுல் எதுவித பய ணும் ஏற்படவில்லே.
இச் செய்கை மூலம் அவர் அப்போதைய சட்டவு லகுக்கு ஒன்றை எடுத்துக் காட்டிஞர் தம் சமூகத்தின் மரபுரிமையைக் காப்பது தமது தொழிலேவிட நனி சிறந்த தெனத் தாம் கருதுவதை அவர் உலகுக்கு உணர்த்தினுர், தமது தொழிலுக்கு அதஞல் ஏற்படிக்கூடிய அபாயத்தை அவர் பொருட்படுத்தவில்லை. அவரது துணிகரமான செயல் முஸ்லிம் சமூகத்தின் மெச்சுதலேப் பெற்றது மாத்திரமன்றி ஒரு வெள்ளைக்கார நிதியரசரின் நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்களின் எதிர்ப்பையும் தூண்டுவதாக அமைந்தது. அத்துடன் அது ஒரு பராமுகமான சமுதாயத்தைத் திடீ ரெனச் செயலாற்றவும் செய்தது. அப் போராட்டத்திலே தலேமை தாங்கியவர் அப்போது சோனக சங்கத் தல் வராக இருந்த ஐ. எல்.எம்.அப்துல் அளிஸ் அவர்களாவார்.
எம். சீ. அப்துல் காதர் அவர்கள் நடந்துகொண்ட முறை சரியானதே என்பதை விளக்க அவர்கள் கூட்டாகச் செயற்படத் தொடங்கினர். சோனகரின் தூதுகோஷ்டி
(20)

யொன்று நீதியரசர் லயாடைச் சந்தித்தது. நீதியரசரோ தமக்கே உரித்தான ஏகாதிபத்தியப் போக்கில் உத்தியோக பூர்வமான முறையில் அவ்விடயம் பற்றிக் கதைக்க விரும்ப வில்லே. எனினும் தனிப்பட்ட முறையில் அதுபற்றிக் கதைப் பதாகுல் அவர்களேச் சந்திக்க விருப்பங்கொண்டார்.எனவே, 1905 ஜூலே 17 ஆம் தேதி அவர்களே அவர் அவருடைய இல்லமான "டொரிங்க்டன் ஹவுஸில்" சந்தித்து அவர்கள் சொல்வண்தக் கேட்டார். தூதுகோஷ்டியினர் அவர்களின் கருத்தை விவரமாக எடுத்துக் கூறி, முஸ்லிம் சமூகத்தின் மரபுரிமையை மிக மோசமாகப் பாதிக்கும் அவரது கட்ட ளேயை மாற்றினுலன்றி எதிர்காலத்தில் அது பாரதூர மான விளேவுகளே ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருப்பதா சுத் தாம் அஞ்சுவதாகவும் கூறினர்.
முறையான தீர்ப்பொன்றை அளிப்பதற்காக அவர் களது கோரிக்கையை எழுத்திற் சமர்ப்பிக்குமாறு நீதியர சர் தூதுகோஷ்டியினரைக் கேட்டுக் கொண்டார். அப்துல் காதர் அவர்கள் உயர்நீதிமன்றத்துக்கு மகஜரொன்றைச் சமர்ப்பித்தார். எனினும், தம் கட்டளையைக் காப்பாற்றிக் கொள்வற்காக நீதியரசர் லயாட் முயற்சித்ததனுல் துருக் கித் தொப்பி அணிந்து நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தடை செய்ய 1905 செப்ரெம்பர் 19 ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு கூட்டு நடவடிக்கை எடுக்க முனேந்ததில் வியப்பில்லே. இத் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடாத்து வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உயர்மட்ட நிலேயில் நடவடிக்கை மேற்கொள்ள "துருக்கித் தொப்பிக் குழு"வொன்றும் நியமிக்கப்பட்டது. அதிற் பின்வருவோர் அங்கம் வகித்தனர்:
1 ஜனுப் எம்3 எல். எம். ஸெய்னுதீன் ஹாஜியார்,
மாநகர சபை உறுப்பினர் :ே ஜனுப் முகம்மது மாக்கன் மாக்கர், துருக்கிக்
கொன்சல்
(121)

Page 66
5.
卫星。
.
교 ".
E.
Ig. ரே. 8.
ஜனுப் எம்.ஐ. முகம்மதுஅலீசமாதான நீதவான் துருக்கித் துனேக் கொன்சல் ஜனுப் எஸ். எல். எம். மஹ்மூது ஹாஜியார், சமாதான நீதவான் ஜனுப் ஐ. எல். எம். எச். நூர்தீன் ஹாஜியார் ஜனுப் கரீம் ஜீ ஜபர் ஜி ஜனுப் எஸ். எல். நெய்னு மரிக்கார் ஹாஜியார், பொருளாளர், துருக்கித் தொப்பிக் குழு ஜனுப் சீ எம். மீரா லெப்பை மரிக்கார் ஜனுப் ஏ. எல். அப்துல் கரீம் ஜனுப் ஒ. எல். எம். அகமது லெப்பை மரிக்கார் ஆலிம் சாகிப்
ஹாஜி இப்ராஹிம் பின் அகமது ஜனுப் ஐ. எல். எம். அப்துல் அளபீஸ், செயலா ளர், துருக்கித் தொப்பிக் குழு ஜனுப் ஐ. எல். எம். முகம்மது மீரா லெப்பை மரிக்கார்,
ஜனுப் என். டீ. எச். அப்துல் கபூர் ஜனுப் பி. ரீ. மீரா லெப்பை மரிக்காரி ஜனுப் என். ஈ. எம். பக்கீர் ஜனுப் முகம்மது அப்துல் காதர் ஆலிம் சாகிப் ஜணுப் கே. ஏப்ரஹ்ம் சாகிப் ஜனுப் எம். கே. எம். முகம்மது சாலிஹ" ஜனுப் எம். ஏ. கச்சி முகம்மது ஜனுப் பி. பி. உம்பிச்சி
உடையில் முஸ்லிம்களின் மரபுரிமையை மறுக்கும் இத்
நீர்ப்புக் சேர்ந்தனர்.
கெதிராக முஸ்லிமல்லாதாரும் முஸ்லிம்களுடன்
ஐ. எல். எம். அப்துல் அளிஸ் அவர்களின் தலைமை
யில் இயங்கிய குழுவானது ஸெத் கரீம் ஜீ ஜயர் ஜீ அவர் களின் ஆலோசனேயின் பேரில் புகழ் பெற்ற இந்திய முஸ் விம் பாரிஸ்டரான மெளலவி ரபீயுத்தீன் அகமது அவர்
(122)

ரஹ்மான் அவர்கள் அக் கூட்டத்துக்குத் தலமை தாங்கிஞர் .
உணர்ச்சியூட்டும் தமது உரையில் மெளலவி ரபீயுத்தீன்
அகமது அவர்கள், தாம் இந்திய உயர் நீதிமன்றத்தில்
எப்பொழுதும் தலேயணி அணிந்தே ஆஜரானதாகவும்
அதுபற்றி ஒருபோதும் தாம் கேட்கப்படவில்லேயென்றும்
எடுத்துரைத்தார். அத்துடன் விக்டோரியா மகாராணியின் முன் அவரது வீட்டுக் கோயிலில் தாம் துருக்கித் தொப்பி பணிந்து தோன்றியதாகவும் அவர் கூறிஞர். அவ்வாறிருக்க, துருக்கித் தொப்பி அணிந்து நீதிமன்றத்தில் ஆஜராவது எப்படி நீதிமன்றத்தை அவமதிப்பதாக நீதியரசர் லயாட் கருத முடியும் என்பது தமக்கு விளங்கவில்லேயென்றும் அவர் எடுத்துரைத்தார்.
பிரித்தானியரின் நீதிமுறையையும் நியாய தர்மத்தை யும் மத உணர்ச்சிகளேப் பேணுவதில் அவர்களுக்குள்ள நளக்கத்தையும் புகழ்ந்துரைத்த அவர், நீதியரசர் லயாடி னது கட்டளேயானது பிரித்தானிய பரிபாலன முறைக்கு முற் றும் முரணுனது எனக் கண்டித்தார். இதுபற்றி பிரித்தானிய அரசுக்கு மேன்முறையீடு செய்ய வேண்டுமென் அக் கூட் டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சட்டவறிஞர்களின் மரபங்கியுடன் முகம்மதிய சட்ட அறிஞர்கள் துருக்கித் தொப்பியணித்து நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமென குடியேற்ற நாட்டுச்
(123)

Page 67
செயலாளர், துருக்கித் தொப்பிக் குழுத் தலேவருக்கு அறி வித்தார்.
இலங்கையில் பிரித்தானிய பேரரச ஆட்சி நிலவிய ஒரு காலத்தில் பிரித்தானிய நீதியரசரொருவரின் ஆனே யை ஏற்காமல் இலங்கை முஸ்லிம்களின் மரபுரிமைமைக் காத்த பெருமை எம். சீ. அப்துல் காதர் அவர்களேயே சாரும்.
அப்துல் காதர் அவர்கள் ஓர் அட்வகேட் மாத்திர மல்ல, முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பல துறைகளி லும் ஈடுபட்ட ஒருவர். கொழும்பு அல் மத்ரஸ்துல் ஸாஹி ராவின் முகாமைப் பதவியையும் அவர் ஒரு சிறிது காலம் வகித்தார். சட்ட உலகம் அவரைப் பெரிதும் வேண்டி நின்றதை அவரால் மறுக்க முடியவில்லை. எனவே, காத்தான் குடியைச் சேர்ந்த அவரின் நண்பரான புரக்டர் ஏ. எம். சரிபு அவர்களின் அறிவுரையின் பிரகாரம் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் தொழிற் பயிற்சி புரிவதற்காக அவர் காத் தான்குடியில் குடியமர்ந்தார்.
சட்டத் துறையில் ஈடுபட்ட போதிலும் அவர் கொழும்பு முஸ்லிம் கல்விக் கழகத்திலும் முகம்மதிய பதிவுக் கட்ட ளேச் சட்டத் திருத்தக் குழுவிலும் சிறப்புமிக்க ஓர் உறுப் பினராகக் கடமையாற்றினுர், அக் குழுவில் கெளவர டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான், கெளரவ எச். எம். மாக்கன் மாக்கர் போன்ற முஸ்லிம் தஃலவர்களும் செய வாற்றினர்.
எம். சீ அப்துல் காதர் அவர்கள் அரசியல் அறிவுத் திறன் மிக்கவராக இருந்தார். இலங்கை அரசியமைப்பைத் திருத்துவதற்காக லண்டனிலுள்ள குடியேற்றநாட்டு அலு
(124)

வலகத்துக்குச் சென்ற முஸ்லிம் தூதுகோஷ்டியில் அவரும் அங்கம் வகித்தார். திருவாளர்கள் ரி. பி. ஜாயா, எம். எம். மஹ்ரூபு, எப். குலாம் ஹாசைன் ஆகியோரும் அத் தூது கோஷ்டியில் சென்றவர்களாவர். தேர்தல் மூலம் அரசாங்க சபையில் குறைந்தது மூன்று இனவாரியான ஆசனங்களே முஸ்லிம்களுக்காக ஒதுக்க வேண்டுமெனக் கேட்பதே அத் தூதுகோஷ்டியின் பணியாக இருந்தது.
முஸ்லிம் விவாக, விவாக நீக்கச் சட்டமானது அப்துல் காதர் அவர்கள் அங்கம் வகித்த ஒரு குழுவின் சிபார்சின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டது. அவர் பொதுநல சேவையில் எவ்வளவு ஆர்வம் கொண்டவராக இருந்தா ரெனின், "பிரண்ட் இன் நீட்" கழகத்திலும் "புரவின் சியல் ருேட் கமிட்டி"யிலும் ஓர் உறுப்பினராக இருந்தார். அவர் மட்டக்களப்பு முதல் நகரசபையின் ஓர் உறுப்பின ராவார். அத்துடன் முதற் "காழிமார்" சபையிலும் அவர் அங்கம் வகித்தார். அவர் எங்கு சேவை செய்தாலும் தியாக உணர்வுடனும் பொதுநலன் கருதியும் அதனேச் செய்தார். மட்டகளப்பில் ஏறக்குறைய நாற்பது வருட காலம் அவர் சட்டப் பயிற்சி செய்தார்.
எம். சீ. அப்துல் காதர் அவர்கள் பயபக்தி நிறைந்த ஒரு முஸ்லிமாவார். ஜங்காலத் தொழுகையை நேரந் தவருது தொழுது வரும் பழக்கம் அவரிடமிருந்தது. 1946 மே 21 ஆம் தேதி அவர் காத்தான்குடியில் இறைடி சேர்ந் தார். அவரது பூதவுடல் "கப்றை" நோக்கி எடுத்துச் செல்லப்படுவதற்கு பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரும் அவர் கடமையான தொழுகையை நிறைவேற் றியவராக இருந்தார்.
(125)

Page 68
எஸ். எல். மஹ்மூது ஹாஜியார் و . . . . . . . . . . . . . . . . . . . . . . . . نه براسان به به سه فی از சின்னலெப்பை மஹ்மூது அவர்கள் 1868 செப்ரெம்பரில் பிறந்தார். அவர் புறக்கோட்டையில் செல்வம் கொழிக்கும் Friis, T. TITI, இருந்岛 W. F. ன்னலெப்பை என்பாரின் | udas ளுவார். ஆங்கிலக் கல்வியை வெஸ்லி கல்லூரியில் பெற்ற ಡಾನ್ಗ್ರ: 鄒塑gg அடுத்து η Ταή). 羧 உ இஸ்மாயில் லெப்பை மேரிக்கார் ஆலிம் அவர்களி இடம் அறபு மொழி கற்ருர். வர் அவரின் இளேய சகோ தரரான எஸ். எல். அப்துல் 醫 縫談 ாஹி முடன் வியாபாரத்தில்
டுபட்டார்
1883 இல் அவர் அவரின்
綠 品 விஜயம் செய்த முதல் భ 影犯 நாடு எகிப்தாகும், எகிப்தி 羲 ် ဖျွိ|aင်္ဂါ ந்து இஸ்தாம்பூலுக்குச்
*சென் ற அவர்கள் அங்
கிருந்து ஹஜ்ஜுக்காக மக் "காவுக்குச் சென்றனர். அறபு ந டுக iன் வர்த்தகர்களுடன் தொடர்பு ஏற்படுத் திக் கொண்ட 0முது ஹாஜியார் அவர்கள் இலங்கை விளைபொருட்களே அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய் ததோடு ளபொருட்களே இல் ங்கைக்கு இறக்குமதி
மத்திய கிழக்கு - * ரெட் தார். ஸாஹிரா மத்ரஸாவின் (ஸாஹிராக் கல்லூரி)
(126)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பராமரிப்புக்காகக் கட்டப்பட்ட வீடுகளுக்கான செலவு 12,750 ரூபாவில் மஹ்மூது ஹாஜியார் அவர்களின் பங்கு 2,000 ரூபாவாகும். அவர் இங்கிலாந்தில் இருந்த சமயம் விவர்பூலுக்கும் விஜயம் செய்தார். செய்கு அப்துள்ளாஹ் அவர்கள் அங்கு இஸ்லாமிய பிரசாரம் நடாத்திக் கொண் டிருந்தார். அங்கு மஹ்மூது ஹாஜியார் அவர்கள் விஜயம் செய்த போது ஆங்கிலப் பத்திரிகைகள் அவரைச் சிங்கள் முஸ்லிம் எனக் குறிப்பிட்டன.
1900 இல் சட்டவாக்க சபையில் முகம்மதிய ஆசனம் வெறுமையான போது சோனகர்களில் ஒரு பகுதியினர் அவ ரது பெயரைத் தெரிவுக்காகச் சமர்ப்பித்தனர். ஹமீதிய்யாப் பாடசாஃவயை நிர்வகித்த ஜம்மிய்யத்துல் ஹமீதிய்யாக் கல் விக் கழகத்தின் செயலாளராக அவர் விளங்கினூர்.
இலங்கையில் குடியமர்ந்த ஆரம்ப முஸ்லிம்கள் சாபிஈ மத்ஹபைப் பின்பற்றுவோராக இருந்தனர். அவர்கள் 9 ஆம் நூற்ருண்டின் முஜத்திதான கெளதுல் அஃலம் முஹ் பியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களின் காதி ரிப்யாத் தரிக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
1860ஆம் ஆண்டளவில் பெஸ்ஸிலிருந்து(மொரொக்கோ) பெரியாரான செய்கு ஒருவர் கொழும்புக்கு வருகை தந்தார். அவர் அப்போது மக்காவிலிருந்து கொண்டு சாதுவீ (ரஹ்) அவர்களின் தரிக்காவைப் பிரச்சாரம் செய்துகொண்டிருந் தார். குத்புஸ் ஸ்மான் செய்கு பைாலிஹ"ல் பாஸி உஸ் சாதுவி என்பதே அவர்களது நாமமாகும். பெருமானுர் (ஸல்) அவர் களின் புனித பிறப்பிடத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தரிக்காவாதலால் காதிரிய்யாக்களில் பெருந்தொகையா ஞேர் அத் தரிக்காவிலே சேர்ந்தனர். அவ்வியக்கம் "பாவிப் பத்துல் சாதுவிப்யா என அழைக்கப்பட்டது.
மஹ்மூது ஹாஜியார் அவர்கள் அத் தரிக்காவைப் பின்பற்றியவர்களில் பிரதான ஒருவராக விளங்கினூர். "ஸாவியா' என அழைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பெரு மளவில் கட்டப்பட்டன. களுத்துறை மாவட்டத்தைச்
(127)

Page 69
சேர்ந்த மொல்விமஃப் பள்ளிவாசலொன்றில் முதன் முதல் சாதுவிய்யாக்கள் அவர்களிள் ஹாளரா"வை நடத்த முனைந் தனர். அந்த "ஹாளரா' முறை காதிரிய்யா ஜமாஅத் தீார்களுக்குப் புதிதாக இருந்தது. அந்த ஹாளரா? முறைக்கு காதிரிப்யாக்கள் மறுப்புத் தெரிவித்தனர். இவ் விதம் மறுப்புத் தெரிவிப்பவர்களேச் சாதுவிப்யாக்கள் "முன்கிர்" என்றனர். காதிரிய்யாக்களும் சாதுவிய்யாக் களே அதே புனேபெயர் கொண்டு அழைத்தனர். ஹாளரா" நடத்துவதைத் தடுத்ததற்காக "மறுப்புத் தெரிவித்தவர்" க3ளக் குற்றவியல் சார்ந்த அச்சுறுத்தலுக்காகத் தண்டிக்கு மாறு கேட்டு சாதுவிப்பாக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். (வழக்கு இல. 5167, ப்ொலிஸ் நீதிமன்றம், களுத்துறை: 1888 ஜூன் 28) நீதவான் திரு சி. எச். வீவிங் முன்னிஃலயில் வழக்கு விவாசர8ண எடுத்துக் கொள் ளப் பட்டது கொழும்பிலிருந்து புகழ் வாய்ந்த வழக் குரைஞர்கள் இருதரப்பார் சார்பிலும் தோன்றினர். லீனிங் என்பாருக்குப் பின் வழக்கை விசாரித்த பொலிஸ் நீதவான் திரு. டபிள்யூ. ஈ. டேவிட்ஸன் என்ப்ார் வழக்னிசுப் பல நாள் விசாரித்ததன் பின் குற்றம் சாட்டப்பட்ட எல்லோ ரையும் விடுவித்தார்.
சோனகர் குடியிருப்பான புதிய சோனகத் தெருவிலும் பழைய சோனகத் தெருவிலும் அவற்றைச் சூழவுள்ள இடங் களிலும் சோனகர் வாழ்ந்தனர். முதலாம் உலக மகா யுத் தத்தின் பின்னர் ஏ. எம். வாப்பிச்சி மரிக்கார், ஹாஜி இஸ் மாயில் எபெண்டியின் குடும்பத்தினர், எம். எல். எம், இஸ் மாயில், எஸ். எம். எல். எம். ஹனிபா ஆகியோரும் ரனேய சிலரும் கொழும்பு தெற்குக்குக் குடிபெயர்ந்தனர். அதைக் கண்ட ஏனைய சோனகர்களும் தங்கள் குடியிருப்புப் பிரதே சத்திலிருந்து கொழும்பு தெற்குக்குக் குடிபெயரத் தொடங் கினர். 1930 ஆம் ஆண்டளவில் சோனகர்களில் பெருந் தொகையாஞேர் கொழும்பு தெற்கில் குடியேறியிருந்தனர். அவர்களில் காதிரிய்யாக்களும் சாதுவிப்யாக்களும் இருந்த னர். முன்னர் அவர்களின் இறந்தோர் சடலங்கள் பாளிகா வத்தை, குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடிகளில் அடக் பீம் செய்யப்பட்டு வந்தன. வெள்ளவத்தை, தெஹிவளை,
(128)

கிரிலப்பொனே ஆகிய பிரதேசங்களில் நிரந்தர குடியிருப் பாளர்களாய் இருந்தவர்களின் சடலங்கள் தெஹிவளை ஹோஸ்ப்பிட்டல் வீதி ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடி யில் அடக்கம் செய்யப்பட்டு வந்தன. கொழும்பு தெற் குக்குக் குடிபெயர்ந்த சிலரும் அப்பள்ளிவாசலுக்கு இறை வணக்கத்துக்காகச் சென்றதோடு தங்கள் இறந்தோர்களின் சடலங்களேயும் அங்குள்ள மையவாடியில்ேயே அடக்கம்
1935 இல் வெள்ளவத்தையில் வதிந்த பிரபல சாதுவீ ஒரு வர் காலம் சென்ருர் அவரது உடல் தெஹிவளை காதிரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட் டது. பள்ளிவாசலில் ஜனுளாத் தொழுகை நடாத்தப்பட்டது. பள்ளிவாசவின் கதீப்ர்ன் எம். எம். நூஹ" லெப்பை அவர் களும் நம்பிக்கைப் பொறுப்பாளர் கே. எம். அப்துல் மஜீது அவர்களும் அதிற் கலந்து கொண்டனர். தொழுகையில் கலந்துகொண்டவர்களில் காதிரிப்பாக்களும் இருந்தனர். கூடியிருந்த சாதுவிப்பாக்கள் சந்தூக்கைச் சுற்றி "ஹாளரா" நடாத்தத் தொடங்கினர். அதைக் காதிரிய்யாக்கள் எதிர்க்
வே பள்ளிவாசலில் ஒரு குழப்ப நில் ஏற்பட்டது.
மஹ்மூது ஹாஜியார் அவர்கள் பள்ளிவாசலின் கதீப் அவர்களேயும் நம்பிக்கைப் பொறுப்பாளரையும் பற்ணிவாச லின் புறத் திண்ணைக்கு அழைத்துச் சென்று "ஹ்ாளரா" வின் தாத்பரியத்தை விளக்கிக் கொண்டிருந்தார். அதற் கிடையில் சாதுவிப்பாக்கள் "ஹாளரா'வை முடித்துக் கொண்டு மையித்தை அடக்கத்துக்காக எடுத்துச் சென்ற னர். சுதீப் அவர்களும் நம்பிக்கைப் பொறுப்பாளரும் சாதுவிப்யருக்களுக்கு விரோதமாக பொலிஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். (வழக்கு இல. 29671), சர்துலிப் யாக்கள் குற்றவியல் சார்ந்த பலாத்காரத்துக்காகவும் பய முறுத்தலுக்காவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். மஹ்மூது ஹாஜியார் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் சாட்சியமளித்தார். அதிலே அவர், மையித்தைக் கொண்டு வந்தவர்களுக்கு பள்ளிவாசலில் "ஹாளரா" வைக்க எல்லா வித உரிமையும் இருக்கின்றது எனக் குறிப்பிட்டார். பின்னர் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது:
இவ்விதம் காதிரிப்யா-சாதுவிப்யாப் பிரச்சினேயை மண்முது ஹாஜியார் அவர்கள் திரித்துவைத்தார். அவர் செய்கு அப்துல் கனி ஸாஹிபுல் காதிரி ஆரிப் பில்லாஹ்
(129) 9

Page 70
அவர்களின் முரீத்ாக ஆணுர், இஸ்லாமிய மறைஞானத் தில் (R"பித்துவத்தில்) அவருக்குப் பெரிதும் ஈடுபாடிருந் தது. அறபு மொழியிலும் அவர் திறமை மிக்கவர். 'திக் ரின் பலதரப்பட்ட நிலேயில் லயித்திருந்தபோது அவர் மிக உயர்ந்த ஆன்மீக நிலேயை அடைந்தார். சந்தடியற்ற தோட்டமொன்றில் அமைந்த இல்லமொன்றில் செய்கு அவர்களால் மஹ்மூது ஹாஜியார் அவர்கள் "கல்வத்தில் வைக்கப் பட்டார். அப்போது அவர் ஹிஜ்ரி 1345 சஃபான் பிறை 12 இல் மிக உயர்நிலையிலான ஆன்மீக காட்சியொன் றைக் கண்டார். அக் காட்சியில் அவர் கிழ்று (அலே). முகம்மது கெளதுல் காலிதீன், ஹழறத் குத்துபுல் மஜீத் காதிரொலி கஞ்ச்னொபாய் சாஹ"ல் ஹமீது குத்புர் ரப்பானி முஹ்யியத்தீன் அப்துல் காதீர் ஜீலானி குத்புல் ஆக் பர் செய்கு அபுல் ஹஸன் அளியுஷ் ஷாதுலி ஆகிய பெரியார் களேக் கண்டார். அவ்வில்லம் முதலியார் ஆலிம் அவர்களின் இல்லமாகுமென செய்கு அவர்கள் அவருக்கு அறிவித்தார்.
புதிய சோனகத் தெரு பெரிய பள்ளிவாசலின் நம்பிக் கைப் பொறுப்பாளராக இருந்த அவர் அப்துல் கனி பாவா வின் ஸாலிஹா தக்கியாவின் முக்கிய உறுப்பினராகவும் ஜமாஅத்துல் ஸாஹிலிப்பா புர்தா மஜ்லிஸின் தஃலவர்களில் ஒருவராகவும் விளங்கினூர்,
சமாதான நீதவானுக அரசினரால் நியமிக்கப்பட்ட அவர் "துருக்கித் தொப்பிக் குழு"வின் ஓர் உறுப்பினரு Liris gil Tif l.
அவர் 1940 ஜூன் 24 இல் இறையடி சேர்ந்தார். அப் போது அவரது வயது 72 ஆகும். புதிய சோனகத் தெரு ஸ்ாவிஹாத் தக்கியாவில் அப்துல் கனி பாவா அவர்களின் சமாதிக் கருகில் அவரது உடலே நல்லடக்கம் செய்யக் கரு திய போதிலும் அவரின் உறவினர்கள் அதனே அனுமதிக்க வில்லே. அவரது உடல் மாளிகாவத்தையில் அவரின் தந்தை பாரின் கப்றுக்கருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
(130)

காலியைச் சேர்ந்த உதுமாலெப்பை மரிக்கார் என் பவருக்கு ஆண்மக்கள்(மூவர் இருந்தனர். நெய்னு மரிக்கார், மாக்கன் சிக்கார், ஹாஜி அகமது என்போரே அவர்கள். நெய்னு மரிக்கார் அவர்களுக்கு அனேக ஆண்மக்கள் இருந் தனர். அவர்களில் மூத்த வர் முகம்மது இஸ்மாயில் என்பவராவார். அவர் என். எம். இஸ்மாயில் எனும் அவரது பெயரின் கீழ் ஒர் மாணிக்கக்கல், நகை வியா பாரத்தை ஆரம்பித்தார். அவரது இறப்புக்குப் பின் அவரின் ஆண்மக்கள் மூவ ரான் மஹ்மூது அவீ. முகம் இமது ஜமீல்,முகம்மது காஸிம் :என்போர் அந்த வியாபார நிறுவனத்தின் பெயரை "எம். அலீ அன் பிரதர்ஸ்" என மாற்றி, விக்டேரியா ஆகேடில் மிகவும் லாபகர மான ஒரு வியாபாரத்தை நடத்தினர். அத்து டன், வட்டவல தேயிலேத் தோட் டத்தினதும் சொந்தக்காரர்களாக ஆகினர். முகம்மது காஸிம் என்பார் இலங்கைக் கிரிக்கட் சங்கத்தின் கெளரவ செயலாளராக ஏறக்குறைய பத்து வருட காலம் சேவை செய்து புகழீட்டிய ஒருவர்.
ஹாஜி அகமது என்பாருக்கு கபீர் எனும் ஒர் ஆண் மிகவு மாத்திரமே இருந்தது; அவர் காலி கோட்டைப்
(131)

Page 71
பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுதுகொண்டிருக்கும் பொழுது காலன் வசப்பட்டார். அப்போது அவர் இளம் பிராயத் திலே இருந்தார்.
ஓ.எல். எம். மாக்கன் மரிக்கார் அவர்கள் காலிமுனேயில் 1860 இல் ஓர் மாணிக்கக்கல், நகை வியாபாரத்தை ஆரம்பித் தார். அது சிறப்பாக நடைபெற்றது. கொழும்பு, கப்பல் கள் வந்து சேரும் துறைமுகமாக ஆக்கப் பட்டதும், அவ் வியாபாரத்தை அவர் கொழும்புக்கு மாற்றினூர், அவ் வியாபார நிறுவனம் கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டல் 1ஆம் இலக்க இடத்தில் இருந்தது. வியாபாரம் அதிகரித்ததஞல் 1905 இல் அவர் கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டவின் மேலும் விசேட ஓரிடத்துக்கு வியாபாரத்தை மாற்றிஞர். அவரின் வாடிக்கைக்காரர்களில் பிரித்தானிய அரச குடும் பத்தினரும் பிரபுக்களும் இருந்தனர். ஏழாவது எட்வட் மன்னன், ஐந்தாம் ஜோஜ் மன்னன் ஆகியோரும் பிரபுக் களிடையே மன்செஸ்டர் கோமகன், சதர்லண்ட் கோமகன், ஐலஸ்போட் கோமான், எலெஸ்மியர் கோமான், அபர் கொம்பே பிரபு ஆகியோரும் அவரின் வாடிக்கைக்காரர்களா வர். 1901இல் ஐந்தாம் ஜோஜ் மன்னரும் ருெக்ஸ்பரி கோமக னும் கண்டியில் "கிங்க்ஸ் பவிலிய"னில் நடைபெற்ற மானிக் கக்கல் கண்காட்சியைப் பார்வையிடச் சென்றனர். அங்கு அவர்கள் மாக்கன் மாக்கர் கடையில் மாணிக்கக்கற்களே வாங் கியதோடு அங்கிருந்த பலதரப்பட்ட மாணிக்கக்கற் சேர்ப்புக் காக அவர்களே வெகுவாகப் பாராட்டியும் சென்றனர்.
மாக்கன் மாக்கர் அவர்கள் லண்டன், பாரிஸ் சந்தை களுக்கு மாணிக்கக்கற்களே அடிக்கடி ஏற்றுமதி செய்தார். புகழ்பெறு 105 கரட் நிறைகொண்ட வைடூரியமும் "ப்ளூ ஜயண்ட் ஒப் த ஒரியண்ட்" என வர்ணிக்கப்பட்ட 500 கரட் நிறைகொண்ட நீலமணிக் கல்லும் "வண்டர் ஸ்டார் ஒப் ஏசியா" என வர்ணிக்கப்பட்ட 325 கரட் நிறை கொண்ட ஆறு நூலும் அவர் வசமிருந்த பொக்கிஷங்களா கும். மேலும், பழங்கால சோனகப் புதுமணப்பெண்களால்
(132).

அணியப்பட்ட பழம்பாணியான நகைகளும் அவரது வியா பார நிறுவனத்தில் இருந்தன.
ஒ. எல். எம். மாக்கன் மாக்கர் அவர்கள் 1901 ஜூலை 4 ஆம் தேதி காலம் சென்ருர், அவரின் இறப்புக்குப் பின் அவரின் நான்கு ஆண்மக்களான முகம்மது மாக்கன் மாக்கர், சம்ஸ்"தீன் மாக்கன் மாக்கர், அப்துல் வதுரத் மாக்கன் மாக்கர், முகம்மது ஸாலிஹ் மாக்கன் மாக்கர் ஆகியோர் அவ் வியாபார நிறுவனத்தின் சொந்தக்காரர்களாயினர். ஸாலிஹ் மாக்கன் மாக்கர் அவர்கள் இளமையிலேயே காலம் சென்ருர், அவர் ஐம்பதினுயிரம் ரூபாவை முஸ்லிம் மாணவர்களுக்கு உதவும் நோக்கமாக "ஸாலிஹ் மாக்கள் மாக்கர் முஸ்லிம் கல்வி நம்பிக்கைப் பொறுப்"பை நிறுவுவ தற்காக விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
1942 இற்கு முன், கெய்ரோவில் செபர்ட் ஹோட்டல், கொண்டினண்டல் சவோய் ஹோட்டல், செமிராமிஸ் ஹோட்டல் ஆகியவற்றிலும் ஜெருசலத்தில் கிங்க் டேவிட் ஹோட்டவிலும் அவ் வியாபார நிறுவனம் கிளேகளேக் கொண்டிருந்தது.
பதின்மூன்று பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தில் முகம்மது மாக்கன் மாக்கர் அவர்கள் ஐந்தாவதாகப் பிறந் தார். அவர் பிறந்தது 1879 செம்ரெம்பர் 7 ஆம் தேதி காலி கோட்டை சேச் வீதியிலுள்ள 47 ஆம் இலக்க இல் லத்திலாகும். அவர் புறக்கோட்டை வெஸ்லி கல்லூரியில் கல்வி பயின்ருர், கல்லூரியின் கிரிக்கட் விளேயாட்டுக் கோஷ்டி யில் எம். எம். முகம்மது எனும் பெயரின் கீழ் அவர் விளேயாடி ஞர். விளேயாட்டில் அவரது சமகாலத்தவர்கள் கோஷ்டிக் கப்டனுன சி. ஈ. பெரேராவும் உலக உத்தியோகபூர்வ "ரெகோட் கீப்பரான எஸ். பி. புனுண்டருமாவர். அவர் மருத்துவ புகுமுகப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய தன் பின் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
அவர் காலியில் துருக்கிக் கொன்சலாக இருந்தார். பின் னர் 1903 இலிருந்து 1915 வரை கொழும்பில் துருக்கிக்
(133)

Page 72
கொன்சலாக இருந்தார். 1906 இலிருந்து 1931 வரை காலி மாநகர சபை உறுப்பினராக விளங்கிய அவர் 1940 இலி ருந்து 1943 வரை கொழும்பு மாநகர சபையின் உறுப்பின ராக விளங்கிஞர். "துருக்கித் தொப்பிக் குழு"வில் அங்கம் வகித்த அவர் அகில இலங்கை சோனக சங்கத்தின் ஆரம்ப தலைவராகவும் பல வருட காலம் சேவை செய்தார். பின் னர் அவர் அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் ஆரம்ப தஃலவராகவும் விளங்கினுர்,
காலியிலுள்ள இப்ராஹிமிய்யா அபிறக் கல்லூரி அவ ரின் தாயாரான திருமதி ஓ. எல். எம். மாக்கன் மாக்கர் அவர்களால் ஆரம்பிக்கப் பட்டது. அதன் பராமரிப்புக்காக அவர் அறக்கொடைகளே விட்டுச் சென்ருர்,
பின்னர் ஹாஜி முகம்மது மாக்கன்மாக்கர் எபெண்டி என அழைக்கப்பட்ட முகம்மது மாக்கன் மாக்கர் அவர்கள் 19 () ஜூலை 24இல் கொழும்பு டரற் வீதி "முயிர்பேனில்" வசித்த எஸ். எல். நெப்ஞ மரிக்கார் ஹாஜியார் அவர்களின் மூத்த புதல்வியான நூர் நயிமா என்பவரை மணந்தார்.
மக்காவையும் மதீனுவையும் இனக்கும் ஹிஜாஸ் ரெயில்வே 1907 இல் ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதற் காக இலங்கை முஸ்லிம்கள் துருக்கி சுல்தானுக்கு ஒரு வாழ்த்துரையை துருக்கிக் கொன்சலான முகம்மது மரக்கன் பாக்கர் அவர்கள் மூலம் அனுப்பிவைத்தனர். ஆதற்கான கூட்டம் கொழும்பு புதிய சோனகத் தெரு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்றது.
முகம்மது மாக்கன் மாக்கர் அவர்கள் 1906 இல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றினூர், அவருடன் அபூபக்கர் முதலியாரின் மகளான அவரின் அன்னே ஆமி ைஉம்மா வும் முதலியார் காஸிம் லெப்பை மரிக்காரின் மகளான அவரின் பாட்டி பாத்துமுத்துவும் கூடச் சென்றனர். அவ ரின் தாய் வழி மாமனுண் அவூ லெப்பை மரிக்கார் அவர் களும் "இஃவான்'களான எஸ். எல். எம். எச். அப்துல் வஹாப், எச். எஸ். எம். இஸ்ளதீன் ஆகியோரும் அக் குழு
(l 34)

வில் இடம்பெற்றனர். அவர்கள் அரேபிய பாஃலவனத்தை ஒட்டகைகளிற் கடந்து செல்லும் பொழுது அனேக துணி கர நிகழ்ச்சிகளே எதிர்நோக்க வேண்டியிருந்தது. அங்கே "பதவி' (காட்டறயிகள்) களுடன் மோதவேண்டிய நிலே அவர்களுக் கேற்பட்டது.
துருக்கிக் கொன்சல் என்ற முறையில் அவர் 1909 இல் இஸ்தம்பூலுக்கு விஜயம் செய்தார். அதிலே அவருடைய சகோதரர் அப்துல் வதுரதும் கலந்து கொண்டார். அங் கிருந்து அவர்கள் ரோமாபுரி, பாரிஸ், லண்டன் ஆகிய நகரங்களுக்கும் வியாபார நோக்கமாகச் சென்றனர். அவர் லண்டனிலிருந்த பொழுது அவரை குரூ பிரபு அவர் கள் ஏழாவது எட்வட் மன்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
முகம்மது மாக்கன் மாக்கர் அவர்கள் முஸ்லிம்களின் கீல்வி நலனில் பெரிதும் அக்கறை கொண்டார். ஸாஹிராக் கல்லூரியின் பராமரிப்புக்காக டாலி வீதியில் கட்டப்பட்ட வீடுகளின் செலவான 12,750 ரூபாவில் அவர் ஆயிரம் ரூபா வைத் தம் கணக்கில் வழங்கினர். அவர் எம். ரீ. அக்பர் அவர் களுடனும் மற்றும் சிலருடனும் சேர்ந்து இலங்கை முஸ்லிம் கல்விக் கழகத்தை நிறுவிஞர். அக் கழகமானது ஹ"ளிைனி ஆண்கள் பாடசாலையையும் பாத்திமா பெண்கள் பாடசாலே யையும் ஸ்தாபித்து நடாத்தி வந்தது.
1921 ஒக்டோபர் 5 ஆம் தேதி இலங்கை முஸ்லிம் மகளிர், தேசாதிபதி ஸேர் ஹென்றி மனிங்கின் பாரி யாரான மனிங்க் அம்மையாருக்கு ஒரு வரவேற்பளித்தது. முகம்மது மாக்கன் மாக்கர் அவர்களின் கொள்ளுபிட்டி இல்லமான 'விலா ஸ்தம்பூ"வில் நடைபெற்ற அவ் வர வேற்பு வைபவத்தில் மனிங்க் அம்மையாருக்கு வாழ்த்துப் பத்திரமொன்று அளிக்கப்பட்டது. அவ் வரவேற்புக் குழு வில் இடம் பெற்ருேர், திருமதி எஸ். எல். நெய்னு மரிக் கார், திருமதி ஈ. ஜி. ஆதமலி, திருமதி சி. எம். மீராலெப்பை மரிக்கார், திருமதி எம். ஏ. சீ. முகம்மது, திருமதி டபிள்யு.
(135)

Page 73
எம். அப்துர் ரஹ்மான், திருமதி எஸ். எல். மஹ்மூது ஹாஜியார், திருமதி ஏ. ஏ. எம். சலீம், திருமதி எம். ஆர். அக்பர், திருமதி கெளஸ் முஹ்யிதீன், திருமதி என். என்.எச். ஜலாலுதீன், திருமதி எச். எம். மாக்கன் மாக்கர் ஆகி யோராவர்.
1924 இல் சட்டவாக்க சபையில் அகில இலங்கை முகம் மதிய ஆசனத்துக்கு முகம்மது மாக்கன் மாக்கர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931 இல் அவர் அரசாங்க சபைக்கு மட்டக்களப்பு தெற்குத் தேர்தல் தொகுதி உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அத் தேர்தலில் அவர் திரு. ஈ. ஆர். தம்பிமுத்து என்பாரைத் தோற்கடித்து, அப்பகுதி முஸ்லிகளிடையே ஓர் அரசியல் விழிப்புணர்ச் சியை ஊட்டிஞர். அவர் போக்குவரத்து மராமத்து அமைச் சராக நியமிக்கப் பட்டார். இந்நாட்டில் வருமான வரியை அறிமுகம் செய்வதற்காக அமைச்சரவை நீர்மானித்த பொழுது அவரது வாக்கே தீர்மான வாக்காக அமைந்தது. 1938 இல் அவருக்கு லேர் பட்டம் வழங்கப்பட்டது. அப் போது அவருக்கு அவரது பிறந்த ஊரான காலியில் பிர மாண்டமான ஒரு பொது வரவேற்பு அளிக்கப் பட்டது. அதிலே அவர் இலங்கையில் ஒரு சிங்கள அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவாகப் பேசிஞர். அவ்விதம் பகிரங்கி மாக ஆதரவளித்த முதல் முஸ்லிம் அவராவார். ஆணுல், அவ்வரசாங்கம் நீதியையும் நியாயத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினூர், உண்மையிலே அகில இலங்கைச் சோனகர் சங்கத்தின் சிங்கள சார்புப் போக்கானது "ஐம்பதுக் கைம்பது" கோஷ்டியினரின் முதுகெலும்பை நொறுக்கியது என்று கூற வேண்டும்.
1. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. ஜி
ஜீ. பொன்னம்பலத்தின் அரசியல் கோரிக்கை,
(136)

அவருக்குப் பின் சோனகர் சங்கத்தின் தஃலவரான ஸேர் ராவிக் பரீத் அவர்கள் இந்த "ஐம்பதுக் கைம்பது" கோஷம் நிற்கும் வரை சங்கத்தின் அக் கொள்கையில் விடாப்பிடி யாக நின்ருர்,
ளேயர் முகம்மது மாக்கன் மாக்கர் அவர்கள் இலங்கை யின் முதற் பாராளுமன்றத்தில் செனெற்றராக 1947 இல் நியமிக்கப் பட்டார். 1952 மே 10 ஆம் தேதி (ஹிஜ்ரி 1371 சஃபான் 15) அவர் காலம் செல்லும் வரை அவர் அப்பத யில் நீடித்திருந்தார். அவரின் பாரியார் அவருக்கு முன் னரே காலம் சென்ருர், கெளரவ டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான் அவர்களும் எச். என். எச். ஜலாலுத்தீன் ஹாஜி" பார் அவர்களும் அவரின் அத்தியந்த நண்பராவர்.
இலங்கைப் பல்கலைக் கழக பேராதனே வளாகத்தில் பள்ளிவாசலொன்றைக் கட்டுவதற்காக மாக்கன் மாக்கர் அவர்கள் ஐம்பதினுயிரம் ரூபாவை அளித்துச் சென்ருர்: அத்துடன் முஸ்லிம் மாணவர்களின் உயர் கல்விக்காகவும் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் அவர் பெருமளவான அறக்கொடைகளேயும் அளித்துச் சென்ருர்,
அவரின் ஆண்மக்கள் மூவரும் பிரபலம் வாய்ந்தவர் களாவர். அவர்களில் மூத்தவான அகமது ஹானஸன் மாக்கன் மாக்கர் அவர்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டவர். கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். இன் ஞெருவரான அலவி மாக்கன் மாக்கர் அவர்கள் பிரசித்தி பெற்ற பட்டயக் கணக்காளராவார். இளையவரான வைத் திய கலாநிதி அஜ்வாத் மாக்கன் மாக்கர் அவர்கள் இலங் கைப் பல்கலைக் கழக மருத்துவப் பேராசிரியராக இருந்தார்.
ATATATWANJANATATLANTANTAVA,
(137)

Page 74
ரீ. பீ. ஜாயா
துவான் பிரானுதீன் ஜாயா அவர்கள் மலாய் இனத் தைச் சேர்ந்தவர். அவர் பயிற்சிபெற்ற ஒரு பட்டதாரி ஆசிரி யராக விளங்கிஞர். மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல் ஆாரியிலும் பின்னர் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றிய அவரை மரதாசீனப் பள்ளி வாசல் நிறைவேற்றுக் குழு வினர் கொழும்பு ஸாஹி ராக் கல்லூரியின் அதிபராக நியமித்தனர். அவர் ஒரு சிறந்த கல்வித்துறை வித்த கராக இருந்ததோடு முன் னேறிவரும் முஸ்லிம் இனே ஞர்களேப் பயிற்றுவிக்கத் தகுந்த சிறந்தவொரு முஸ் விமாகவும் விளங்கினுர், இஸ்லாமிய வரலாற்றில் அவருக்கிருந்த அறிவு மிக ஆழமாதுே. எமானுஜிராக் கல்லூரியின் முன்னேற்றத் துக்காக பள்ளிவாசற் குழு அவருக்கு முழு ஆதரவை பும் அளித்தது. பாடசாஃ அதிபர் என்ற முறையில் அரசாங்கம் அவருக்கு வழங் கிய சம்பளம்போதாதெனக் கண்ட மரதாசீனப் பள்ளி வாசற் குழுவினர் அவருக்கு மேலதிகமாக மாதம் ஆயி ரம் ரூபாவை வழங்கியது.
ஜாயா அவர்கள், ஸாஹிரா ஆசிரியர் குழாத்தைச் சிற ந்த பட்டதாரிகளேக் கொண்டு நிவேப்படுத்தியதோடு கல்லூரி மாணவர்களுக்காக விடுதியொன்றையும் நிறுவினுர், இரண் டாவது உலக மகாயுத்துத்தின் போது ஸாஹிராக் கல்லூரிக் கட்டடம் இராணுவத்தினரின் உபயோகத்துக்காக எடுக்கப்
(138)
雛
 

பட்டது. அப்போது அவர் கம்பனே, அளுத்கமை, கொம் பனித்தெரு, மாத்தனே ஆகிய இடங்களில் ஸாஹிராக் கல்லுரரிக் கிளேகளேத் தோற்றுவித்தார். இன்று பல துறைகளிலும் சிறந்து விளங்கும் அனேக முஸ்லிம் பெரு மக்கள் ஜாயா அவர்களின் கீழ் விமாஹிராவில் படித்தவர்கள் என்று கூறலாம். அவர் கொழும்பு ஹமீதிப்பாப் பாட சாஃலயினதும் டென்ஹாம் பாடசாலேயினதும் முகாமை பாளராகவும் விளங்கிஞர்.
அரசியற் களத்தில் இறங்கிய அவர் 1924 ஆம் ஆண்டில் சட்டவாக்க சபைக்கு அகில இலங்கை முஸ்லிம் தொகுதிக் காக மூன்ருவது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். சட்டவாக்க சபையில் இனவாரியான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டுமெனக் கேட்டு அவர் லண்டனுக்கு ஒரு முஸ்லிம் தூதுக் குழுவை அழைத்துச் சென்ருர், அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைவராக அவர் பல வருட காலம் சேவை புரிந்தார்.
1936-5 வருட காலத்தில் அவர் அரசாங்க சபையில் ஒரு நியமன அங்கத்தவராக நியமிக்கப் பட்டார். பின்னர் 1947 இல் இலங்கையின் முதற் பாராளுமன்றத்துக்கு அவர் கொழும்பு மத்திய தொகுதியின் இரண்டாம் உறுப்பினரா கத் தேர்ந்தெடுக்கப்பட்டு டீ. எஸ். சேனுநாயக்கவின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராஞர். பின்னர் பாகிஸ்தானில் இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்ட அவர் அங்கே அவ் வரசாங்கத்தினதும் மக்களின தும் நன்மதிப்புக் குள்ளானூர், அ வ ர து சேவைக்காகக் கராச்சிப் பல்கலேக்கழகம் அவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது. அவர் இலங்கை திரும்பியதும் அவருக்கு இலங் கையின் நான்காவது பாராளுமன்றத்தில் மலாப் மக்களுக் கான நியமன அங்கத்துவப் பதவி கொடுக்கப் பட்டது. அனேக மலாயர் சங்கங்களின் தஃலவராகச் சேவை செய்த பெருமை அவருக்குண்டு.
அவர் மிகவும் பயபக்தியுள்ள ஒரு முஸ்லிமாக விளங்கி ஆர். இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்காக மக்கா செல் லும் பாத்திரிகர்களுக்காக மக்காவில் ஒரு கட்டடத்தைச் சுவீகரிப்பதற்காகப் பேச்சு வார்த்தைக் நடாத்தவும் ஹஜ் கடமைக்காகவும் அவர் சவூதி அரேபியா சென்ற சமயம் ನಿಲ್ಟಣ್ಣೀ சில நாட்களுக்கு முன்னர் அவர் இறையடி சேர்ந்தார். அங்கே அவரது உடல் 'ஜன்னத் துல் பகீ" இல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
(139)

Page 75
டிபிள்யு. எம். ஹாஷிம்
டபிள்யு. எம். ஹாஷிம் அவர்கள் 1880 ஜனவரி 26 இல் பிறந்தார். அவரது பிறப்பு சேகாதி மரிக்கார் காளி வெப்பை மரிக்கார் முதலியாரின் மகனுன சீ. எல். எம். அப்துல் மஜீது அவர்களாற் பதிவு செய்யப்பட்டது. அவர் டபிள்யு. எம்: ஹாஷிம் அவர்களின் தாயாரின் சகோதரியின் கணவராவார்.
டபிள்யு. எம். ஹாஷிம் அவர்கள் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் கல்வி பயின்ருர், நொத்தாரிசு பரீட்சைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது அவரை அவரின்
(140)
 

மூத்தோர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுமாறு கேட்டனர். அவ ரின் மூத்த சகோதரரான டபிள்யு. எம். அப்துல் ஜப்பார் அவர்கள் அவரின் மாமஞரான ஐ. எல். எம். நூர்தீன் ஹாஜியார் அவர்களின் இரும்பு வியாபார நிறுவனத்தில் முகாமையாளராகப் பணியாற்றினுர், மற்றுமொரு சகோதர ரான டபிள்யு. எம், தாஹா என்பாரும் அதே வர்த்தக நிலையத்தில் கடமையாற்றினுர், அப்துல் ஜப்பார் அவர்கள் அவரின் சகோதரர்களான தாஹாவுக்கும் ஹாஷிமுக்கும் கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதி 71 ஆம் இலக்க இடத்தில் ஒரு பிரத்தியேக வியாபாரம் தொடங்க உதவி செய்தார். அது நடந்தது 1906 இலாகும். ஹாஷிம் அவர்கள் முயற்சியுள்ள ஓர் இளேஞராக விளங்கினுர், அவரது வர்த்த கம் விருத்தியடைந்தது. இச் சந்தர்ப்பத்தில் கிழக்கில் செல் வம் தேடி தாஹா அவர்கள் புறப்பட்டுப் போளுர்,
1907 டிசம்பர் 14 ஆம் தேதி ஹாஷிம் அவர்கள் ஓ. எல். எம். அகமது லெப்பை மரிக்கார் ஆலிம் என்பாரின் மகளே மணந்தார். அகமது லெப்பை மரிக்கார் அவர்கள் ஒரு பெரிய வர்த்தகராகவும் நிலச் சுவாந்தாராகவும் விளங் கிஞர். ஹாஷிம் அவர்களின் மற்றுமோர் உறவினரும் பெரிய வர்த்தகருமான எஸ். எல். நெய்னு மரிக்கார் ஹாஜியார் அவர்களும் ஹாஷிம் அவர்களுக்கு அவரது வியாபாரத்தில் ஊக்கமளித்தார். முஸ்லிம்களினதும் முஸ்லிமல்லாதாரின் தும் நலனுக்காக ஹாஷிம் அவர்கள் வழங்கிய பண உதவி அளவு கடந்தது.
ஹாஷிம் அவர்களின் வள்ளற்றன்மையையும் கல்வி சம் பந்தமான சேவையையும் மதித்த அரசாங்கம், ஐந்தாம் ஜோர்ஜ் மன்னன் அரியாசனம் ஏறிய இருபத்தைந்தாவது நிறை வாண்டில் அவருக்கு சமாதான நீதவான் பட்டத்தை
(141)

Page 76
வழங்கியது. மாளிகாவத்தை டென்ஹாம் பாடசாலே அவரா லேயே நடாத்தப்பட்டது. அப் பாடசாலேயின் நிர்வாக நிதிக்கு அவரே அதிக தொகை வழங்குபவராக இருந்தார். அவரின் மூதாதையர் மரதானப் பள்ளிவாசலுக்கும் பெரிய பள்ளிவாசலுக்கும் அதிக அளவு உதவி செய்தனர். ஹாஷிம் அவர்கள் எல்லாக் காதிரிப்யாத் தக்கியாவினதும் கந்தூரி வைபவங்களுக்கு உதவி புரிந்தார். சோனக இஸ்லாமிய கலாசார நிஜலயத்தின் ஆரம்ப உறுப்பினரும் ஆரம்ப துனத் தலேவரும் அவராவார். அத்துடன் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் துணைத் தஃலவராகவும் அவர் சேவை செய்தார்.
"சோனகர்", "யோனக்க', 'சிலோன் முஅர்" என் னும் வார்த்தைகளே அகற்றி அவற்றுக்குப் பதிலாக "இலங்கை முஸ்லிம்" எனும் வார்த்தை உபயோகிக்கப் படல் வேண்டுமென கொழும்பு நகர மண்டபத்தில் urtarifsir மெளலானு அவர்களின் தலைமையில் ஒரு 'பத்வா' கூட்டம் நடைபெற இருந்தது. ஹாஷிம் அவர்கள் சோனகர் சங்கத் தின் துணைத் தலைவர் என்ற முறையில் மரதானப் பள்ளி வாசல் கதீப் முகம்மது ஹாசைன் ஆலிம், வை. எம். காலிது, பி. டி. எம். காளிம், ஏ. எல். எம். லாபிர் எச். ஏ. எஸ். எம், ரபீயுதீன், ஏ. எம். ஏ. கபூர், ஏ. ஐ. எஸ். மரிக்கார், எம். எம். ஸ்"ஃமான், எம். எபீ. எம். பு:ஆத், ஐ. எல். எம். தெளபீக் ஆகியோருடன் இனேந்து அக் கூட்டம் நடை பெருமற் செய்வதில் வெற்றி கண்டார்.
ஹாஷிம் அவர்கள் 1960 ஜூலே 6 ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.
(142)

வைத்ய திலக்க ராஜகருணு ஹாஜி முகாந்திரம் செய்கு முகம்மது உடையார்
முகாந்திரம் முகம்மது உடையார் அவர்கள் ஒரு யூனுணி வைத்தியராவார். அவர் இலங்கைக்கு வந்த மூரிஷ் அரச வைத்தியர்களின் வழிவந்தவர். பூரீ சங்கபோ, பூரீ பராக் கிரமபாகு ஆகிய பழைய சிங்கள அரசர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தே அரசாங்க சேவையில் சிறப்பிடம் வகித்த பிரசித்தி பெற்ற சிலரில் அவரின் மூதாதையரும் இடம் பெறுகின்றனர். கேகாலத் தொல் பொருளாராய்ச்சியின் "கெட்டபேரிய சன்னஸ்", பக்கம் 99 இல் அவரது குடும்பம் பற்றிக் குறிப்பிடப் படுகிறது.
அவரின் மூதாதையர்களில் ஒருவர் ஸ்பெயின் வடகிழக்கு கிரனடாவைச் சேர்ந்த சிறப்புமிக்க கற்றறிவாளரும் விஞ் ஞானியுமான அபூபக்கர் முகம்மது அப்துல் மாலிக் இப்னு துபைல் ஆவார்.
முகாந்திரம் முகம்மது அவர்களின் மூதாதையர் அனேவ ரும் யூனுனி ஹக்கீம் (மருத்துவர்)களாக விளங்கினர். 1672 இல் அவரின் முப்பாட்டனுரான ராஜகருணு பெஹெத்கே முதியன்சே அப்துல் காதிர் அவர்கள் அக்காலத்தைய மிகவும் பிரபல்யம் வாய்ந்த மருத்துவராக விளங்கியதோடு அவருக்கு "அதிகார்" பட்டமும் வழங்கப்பட்டிருந்தது. பூட்டஞரான பல்கும்புறே வைத்யதிலக்க ராஜகருணு கோபாலன முதியன் சலாகே பெஹெத் கே சேகு முகம்மது உடையார் அவர்கள் அரச மருத்துவராக விளங்கிஞர். அரசவையின் ஓர் உறுப்
(143)

Page 77
பினராகவும் அவர் இருந்தார். பாட்டஞரான சேகு மதார் உடையார் அவர்கள் யூனுனி மருத்துவராகத் தொழில் புரிந்த தோடு பரணகுரு கோறளையின் தலைமை ஆரச்சியாகவும் கடமை புரிந்தார். அவருக்கு அவரின் சேவைகளுக்காக அனேக பரிசில்கள் கிடைத்தன. முகாந்திரம் அவர்களின் தகப்பஞரான செய்கு அப்துர் ரஹ்மான் பாதிலியாரும் மருத்துவத் துறையில் அவர் தம் மூதாதையரைப் பின்பற்றிய வராக இருந்தார். அப்பகுதி எல்லாச் சிங்கள இல்லங்களி லும் அவரது பெயர் அடிபட்டது.
1885 இல் பிறந்த முகாந்திரம் செய்கு முகம்மது உடை யார் அவர்கள் அவரின் மூதாதையரின் பெருமைமிக்க தொழிலே நடத்துபவராக இருந்தார். 1902 இல் மருத்துவப் பயிற்சியைத் தொடங்கிய அவர் தரும நோக்கங்களுக்காக எத்தனேயோ அறக்கொடைகளே ஈந்ததன் மூலமும் ஏழை களுக்கு உதவியதன் மூலம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிருர், அவர் சாந்த குணமும் விருந்தோம்பும் பண்பும் படைத்தவர்
(144)

ஏ. எம் ஹாமிது
: அஸஞ மரிக்கார் ஹாமிது அவர்கள் இலங்கைச் சோன கர்களின் ஒரு பிரபுத்துவ 9:: பிறந்து செல் Hவத்தின் அரவண்ணப்பில் வளர்ந்தவர்.அவரின்தந்தை எஸ். எம் அண்ணு மரிக்கார் அவர்கள் கொழு iம்பு புறக்கோட்டை சைணு
:வீதியில் பீங்கான் வியாபா புரம் நடாத்தி வந்தார். 黜*g அவரின் முன்னுே
ரான சுல்தான் மரிக்கார், அபூலெப்பை மரிக்கார் என் ஐபவர்களால் 1840 இல் ஸ்தா பிக்கப்பட்ட வியாபாரமா
கும். ஹாமிது அவர்கள்
வியாபார நிலேயத்தை நிறுவினுர், அந் நிறுவனம் நான யத்துக்கும் நேர்மைக்கும் இருப்பிடமாக விளங்கியதால் சர்வதேச புகழைப் பெற்றது. "எஸ். எம். அளபணு மரிக் கார் அன் கம்பனி" என அறியப்பட்ட அந் நிறுவனம் பெரும் இலங்கை வியாபார நிறுவனங்களில் ஒரு நூற் ருண்டைக் கண்ட சிலவற்றில் ஒன்ருகும்.
ஹாமிது அவர்கள் புறக்கோட்டை காஸ்வேக்ஸ் வீதிப்
பாடசாஃலயில் ஆரம்ப கல்வியைப் பெற்று பின்னர் முகத்து
(145) O

Page 78
வார சென். தோமஸ் கல்லூ ரி யி ற் பிரவேசித்தார். அவரின் சகாக்களில் ஒருவர் "தேசத்தின் தந்தை' என வர்ணிக்கப்பட்ட இலங்கையின் முதல் பிரதமரான டீ. எஸ் சேஞநாயக்க ஆவார். டீ. எஸ். சேனுதாயக்க அவர்கள் அவரின் உற்ற நண்பராகவும் விளங்கினுர்,
மேலேத் தேயத்தினதும் கீழைத் தேயத்தினதும் ஒரு கலப் பாக விளங்கிய ஹாமிது அவர்கள் அவற்றின் கலாசாரங் களில் சிறந்தவற்றைத் தம்மில் எடுத்துக் கொண்டார். கல்வியறிவைத் தேடுவதிலும் அவர் மிகவும் ஆர்வங் கொண்டவராக விளங்கிஞர். அறிவுத் துறை சார்ந்த கழகமான அரச ஆசிய கழகம் இலங்கைக் கிளேயில் அவர் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்தார். அத்துடன் வை. எம். ஸ்வீ. ஏ. யிலும் அவர் ஒரு மதிப்புக்குரிய உறுப்பினராக விளங்கினுர், அவரது சாந் த மா ன, தற்பெருமையற்ற நடவடிக்கைகளால் நன்மதிப்பும் நம்பிக் கையும் அவரை வந்தடைந்தன.
அவர் அகில இலங்கை சோனக சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராவார். அதன் நடவடிக்கைகளில் அவர் மிக நெருக்கமாக ஈடுபாடு கொண்டார். இலங்கை அரசியலமைப்புக்குச் சீர்திருத்தம் கொண்டுவர அனுப்பப் பட்ட சோல்பரி ஆஃணக்குழுவின் முன் ஸேர் ராஸிக் பரீத் (அப்போது ஏ. ஆர். ஏ. ராளிக்) தலைமையில் சாட்சிய மளித்த அகில இலங்கை சோனகர் சங்கத்தின் உறுப் பினர்களில் அவரும் ஒருவராவார். மரதானப் பள்ளி வாசல் நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர் அதன் செயலாளராகவும் பொருளாளராகவும் பணி மாற்றிஞர். கெளரவ டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான்,
(146)

அல்ஹாஜ் என். டீ. எச். அப்துல் கபூர், ஐ. எல். எம். அப்துல் அளிஸ், என். எச். எம். அப்துல் காதர், எம். ரீ" அக்பர் போன்ருேருடன் அவர் செயலாற்றிஞர்.
அவர் அலவியாத் தரிக்காவைப் பின்பற்றிய பக்திமா
ஞகவும் கொழும்பு ஜிப்ரிய்யத்துல் அலவியாத் தைக்கா வைப் பரிபாலித்த "R"ம்ரத்துல் அலவிய்யா'வின் முன் மாதிரியான ஒரு தலைவராகவும் விளங்கினுர். சோனசு இஸ்லாமிய கலாசார நிலையத்தின் ஸ்தாபக உறுப்பினர் களில் அவரும் ஒருவராவார். அத்துடன் அதன் வளர்ச் சிக்காக அனேக விதத்தில் உதவியும் புரிந்தார். அதன் மார்க்க குழுவின் தலைவராக விளங்கிய அவர் அக் குழுக் கூட் டங்களுக்குச் சமுகமளிக்கும் போது உரிய நேரத்தில் சமுகம் தந்து ஏனேய உறுப்பினர்சளுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங் கினூர்,
சாரமும் சப்பாத்தும் அணிந்து குடையுடன் புன்முறு வல் பூத்த முகத்தினராகக் காட்சி தந்து கொண்டிருந்தவர் ஏ. எம். ஹாமிது ஆவார். எந்தக் குழந்தையும் அவரைப் பார்த்தவுடனேயே அவரை அறிந்து கொள்ளும், அவர் ஒரு சிறந்த பக்திமானுக விளங்கியதுடன் அவரது வாழ்வின் இறுதிப் பாகத்தை அனேகமாக இஸ்லாமிய நடவடிக்கை களின் முன்னேற்றத்துச்காகவே செலவு செய்தார்.
(147)

Page 79
எஸ். எம். இஸ்மாயில்
இலங்கைச் சோனகரிடை கு H 曬 யே ஒர் எழுச்சி ஏற்பட்டுக் 撒黯播 கொண்டிருந்த ஒரு சகாப் தத்தில், காலியில் பிரசித்தி பெற்ற சோனகக் குடும்பம் ஒன்றில் முகம்மது இஸ்மா யில் பிறந்தார். அவரின்: தந்தையார் காலிக் கச்சேரி பயில் காசாளராகக் கடமை, யாற்றியவர். முன்னேயதலே வர் ளது வழிகாட்டலின் பேரில் பிற்போக்கான நிலை யிலிருந்து தம்மை விடுவித் துக் கொண்டிருந்த இலங் கைச் சோனகர், தாம் ஓர் அரசியற் சிந்தனேயில் அகப் பட்டுத் தடுமாறிக்கொண் டிருப்பதைக் கண்டனர்." 醬 அரசிய3லப் பொறுத்தவரையில் முஸ்லிம் தலைமை பீடத்தில் இருந்த போட்டி பொருமை காரணமாக மதத்தின் உயர் அந்தஸ்து கீழ்த்தர அரசியலுடன் கலக்கப்பட்டது. சோனகர் தங்கள் தனித் தன்மையை இழந்து தங்கள் தேசிய பிறப்புரி மையையும் இழக்கும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
இக் கால கட்டம் பெரும் நெருக்கடி வாய்ந்த ஒன்றுக இருந்தது. இத் தடுமாற்றத்தை நீக்கத் துணிவான நடவடி க்கை எடுத்தாலன்றி முழுச் சமூகமுமே கஷ்டப்பட வேண்டிய நி3ல இருந்தது. அப்போது சட்டத்தின் சிக்கல்களே விக்ள
(148)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் திறம் வாய்ந்தவரும் புகழேணியில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தவருமான புரக்டர் இஸ்மாயில் அவர்கள் இவ் வாபத்தைக் கண்டார். இந்த ஆலே அவரை பும் தாக்காமல் விடவில்லே, தம் கண் முன் தோன்றும் இவ் வபாயத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள சோனக சமூகம் அவரின் உதவியை நாடியது. அவர் அகில இலங்கை சோனக சங்கத்தின் ஓர் ஆரம்ப உறுப்பினராக ஆனதோடு ஏ. ஐ. எல். மரிக்கார் அவர்களுடன் சேர்ந்து அதன் இணேச் செயலாளராகவும் கடமையாற்றிஞர்.
அவர் சோனகரின் சிந்தனேயைக் கிளறிஞர். "Whither M005'?-சோனகர் எத்திசையில்?-என்னும் எழுச்சியைத் தூண்டும் ஒரு சிறுநூலே வெளியிட்டார். அதில் அடங்கி யிருந்த கருத்துக்கள் சிலரின் கண்களைத் திறந்தன. அதே நேரத்தில் பிடிவாதம், ஏனேயோரின் பார்வையை மறைத்
ഴ്ച്,
ஸேர் முகம்மது மாக்கன் மாக்கர், ஸேர் ராஸிக் பாத் போன்ருேரின் தலைமையில், எதிர்ப்புகளுக்கிடையே அவரது சங்கம் தேசிய அரசியல் உரிமைகளுக்காகப் போராடியது. இஸ்மாயில் அவர்களின் கூற்றுக்கள் சிந்தனையைக் கிளறின. அதே சமயம் அவை எதிர்ப்பையும் அதிகரிக்கச் செய்தன. அவரின் உண்மையான நோக்கத்தையும் அரசியல் மதிநுட் பத்தையும் நிரூபிக்க அதிசீக்கிரமே காலம் வந்தது. ஐக்கிய முஸ்லிம் அரசியல் கூட்டு மகஜரொன்றை அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனும் யோசனையை அவர் ஒதுக்கித் தள்ளிஞர். ஏனெனில், அது சோனகரின் இனவாரியான தனித்துவத்தை இழக்கச் செய் வதோடு அவர்களது அரசியல் தற்கொலேக்கும் வழிகோலும் என அவர் கருதிஞர். பிரத்தியேக பிரதிநிதித்துவம் பெறு வதிலேயே சோனகரின் விமோசனம் தங்கியுள்ளது என அவர் கருத்துக் கொண்டார். அரசியலமைப்புச் சீர்திருத்தத் தில் சோனகருக்கு போதிய அளவான பிரதிநிதித்துவமும் பாதுகாப்பும் அளிக்கப்படல் வேண்டுமெனக் கோரி மகஜ ரொன்று தயாரிக்கப் பட்டது.
(49)

Page 80
சோல்பரி சீர்திருத்த ஆனேக்குழுவுக்கு அம் மகஜரைத் சமர்ப்பித்த அகில இலங்கை சோனகர் சங்கத்தின் பேச்சுப் பாங்களுக அவர் இருந்தார். சோனகரின் பிரச்சினேகளே அதி திறமையாக அவர் விளக்கியதால் இந்நாட்டின் ஏனேய இனங்கள் மத்தியில் இலங்கைச் சோனகரும் ஒரு தனித்து வம் வாய்ந்த இனமாகக் கருதப்பட்டனர்.
சோனக சமூகத்தின் எல்லா முற்போக்கான இயக் கங்கள் சம்பந்தமாகவும் அவரது அறிவுரை நாடப்பட்டது. அத்துடன் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தை நிறுவுவது பற்றியும் அதன் ஆரம்ப நடவடிக்கைகளிலும் அவரது கருத்து வேண்டப்பட்டது. அப்போதெல்லாம் அவர் சிறந்த அறிவுரை வழங்கிஞர். அவரின் ஆழ்ந்த சிந்தனே யின் பலனுக எழுந்த யோசஃனகள் இலங்கைச் சோனகரின் முன்னேற்றத்துக்காகப் பல துறைகளிலும் வழி யைத் திறந்து கொடுத்தன. அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்பிய எல்லா விடயங்களிலும் சோன்க சமூகத்தின் தஃலவர்கள் அவரின் முதிர்ந்த அறிவுரையை நாடி நின்றனர்.
சமுதாயத்தில் அவர் கெளரவிக்கப்பட்டதோடு மக்க ளின் நம்பிக்கைக்கும் உள்ளாளூர், சோனக இனத்தைப் பாதிக்கக் கூடிய, பிரச்சினேகளேக் கிளறிய எல்லா விடயங் களிலும் அவரின் சுற்றுக்கள் தெளிவாகவும் தர்க்கரீதியாக அம் அமைந்தன. சோனகர், அவர்களின் முன்னேற்றப் பாதையில் ஒரு திருப்புமுனையில் இருந்த ஒரு காலகட்டத்தில் அவர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார்.
(150)

எம். எல். எம். றியாழ்
எம். எல். எம், நியாழ் அவர்கள் மீராலெப்பை மரிக் கார் என்பாரின் மூத்த மகனுவார். ஒரு தொழிற்சங்க வாதியாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை சுவாரஸ்யம்ான்து. இலங்கையில் நிறுவப்பட்ட முதல் தொழிற் சங்கத்துக்காக உழைத்த அவர் பதினேழு ஆண்டுகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகத் திகழ்ந்தார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி அவற்றை வென்று கொடுத் தவர் அவர் அவரே அவரது வாழ்க்கையைப் பற்றிப் பின் வருமாறு கூறுகிருர்
"நான் 1894 இல் கொழும்பு பழைய சோனகத் தெரு 4 ஆம் இலக்க இல்லத்தில் பிறந்தேன். எனது இல்லம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனுக்கும் வெஸ்லி கல்லூரி புறக்கோட்டைக் கிளேக்கும் அடுத்து இருந்தது. கொழும்பு புதிய சோனகத் தெரு பெரிய பள்ளிவாசலைச் சேர்ந்த ஹமீதியாப் பாடசாலேயில் நான் குர்ஆஃன ஒதக் கற்றுக் கொண்டேன். நான் எனது ஆரம்ப கல்வியை சென்ட்ரல் கல்லூரியிலும் வெஸ்லி கல்லுரரியிலும் பெற்றேன். ஹாவட் புலமைப் பரிசிலேப் பெற்ற தான் ருேயல் கல்லூரியிற் சேர்ந்து அங்கே 1914 இல் கேம்ப்ரிஜ் சிரேஷ்ட பாடசாலேத் தராதரப் பரீட்சையில் சித்திபெற்றேன். எனக்கு அப் பரீட்சையின் பெறுபேறு மூலம் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் விதிவிலக்கு அளிக்கப் பட்டது. 1914 இல் திரு. சீ. ஹார்ட்லி, ருேயல் கல்லுரரியின் அதிபராக இருந்த பொழுது கல்லூரி உடற்பயிற்சிப் போட்டியில் சம்பியன் பட்டத்தைத் தட்டிக் கொண்டேன். பரடே ஹவுளின் மின்
(151)

Page 81

பொறியியலாளராகத் தகுதி பெற நான் இங்கிலாந்து செல்லவிருந்தேஞயினும் முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பமானதால் அவ்வாறு செய்ய முடியாமற் போய் விட்டது.
பின்னர் நான் வர்த்தகத்திலீடுபட்டு டபிள்யு. ஜி. போல்ஸ் அன் கம்பனியில் தொழில் பயிலுநராகச் சேர்ந் தேன். பின்னர் அந்தக் கம்பனியின் சார்பாக இலங்கை யிலும் இந்தியாவிலும் பிரதிநிதித்துவம் வகித்தேன். காலப் போக்கில் சுவிட்சர்லாந்தில் இரு வர்த்தக நிறுவனங்களின தும் மூன்று பிரித்தானிய வர்த்தக நிறுவனங்களினதும் ஏக பிரதிநிதியாக ஆனேன். வியாபாரத்தில் நான் முன்னேறி றம் கண்டதோடு மேற்கூறிய வர்த்தக நிறுவனங்களும் எனது வேலையில் திருப்தி கொண்டன.
ஏறக்குறைய இச் சமயத்தில் தான் இந்தியாவிலே "கிலாபத்" இயக்கம் தோன்றியது. மெளலானு செளக் கத் அலீ, டொக்டர் சிக்லு ஆகியோரின் இலங்கை வருகை என்னே அரசியலில் குதிக்கச் செய்தது. ரீ. பி. ஜாயா அவர் களதும் இலங்கை முஸ்லிம் சங்கத்தின் தலைவரான எம். கம்ார் காஸிம் அவர்களதும் ஆதரவு எனக்குக் கிடைத்தது. இச் சங்கம் பயன்மிகு சேவைகளேப் புரிந்து கொண்டிருந்தது. வெளிநாட்டிலிருந்த துருக்கிய செம்பிறைச் சங்கம் இச் சங் கத்தின் சேவைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இச் சங்கத்தின் உயிர்நாடியாய் விளங்கியவர்கள் மேற்குறிப்பிட்ட இருவரும் நானும் ஜனுப் ரளின் அப்துல் காதருமாவோம். அப்போது "இஸ்லாம் மித்திரன்' பத்திரிகையைப் பதிப்பித்துக் கொண் டிருந்தவர் எம். உதுமான் அவர்களாவார். அவர் எதுவித புதுக்கருத்தையும் பொறுக்காதவர். அவற்றை மும்முரமாகக் கண்டித்தார். அவர் எங்களே "லண்டன் குஞ்சுகள்' என வர்ணித்தார். எங்கள்ேப் பற்றி அப் பத்திரிகையில் வெளி
(153)

Page 82
யார் கூற்றுக்கள் சில சமயம் உண்மையென்று கருதப்பட் டன. அதன் பெறுபேருக எம் சங்க உறுப்பினர்கள் என். எச். எம். அப்துல் காதர் என். டி. எச். அப்துல் கபூர் ஆகியோரால் சங்கக் காரியாலயம் அ  ைம ந் திருந்த கட்டடத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். எனவே, இடவாய்ப்பு இல்லாமற் போனதால் இலங்கை முஸ்லிம் சங்கத்தின் நடவடிக்கைளேத் தொடர முடியாமற் போய் விட்டது. அதனுல் அச் சங்கம் இளமையிலேயே மரணத் தைத் தழுவ வேண்டி ஏற்பட்டது.
மெளலான செளக்கத் அலீ அவர்களதும் முகம்மது அலீ அவர்களதும் கிலாபத் இயக்கம் என்னில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தான் திருவாளர்களான ஏ. ஈ. குணசிங்ஹ, விக்டர் கொறயா, ஈ. சீ. டி. சில்லா, பி. எப். டி. சில்வா ஆகியோரைச் சந்தித்த போதெல்லாம் பிரித் தானியரின் குடியேற்ற ஆட்சியின் கீழ் எங்கள் நாட்டின் துர்ப்பாக்கிய நிலை பற்றியும் தொழிலாளர்கள், சிறப்பாக அரசாங்க, தனியார் துறைகளிலுள்ள கொழும்புத் தொழி லாளர்கள் எவ்வாறு சுரண்டப்பட்டுத் துன்புறுகின்றனர் என்பது பற்றியும் அடிக்கடி, கலந்துரையாடினேன். இந்தப் பிரச்சி:னயைத் தீர்க்க ஒரேயொரு வழி தொழிலாளர் சங்கமொன்றை நிறுவுவது தான் என நாம் கண்டோம். அந்தப் பணியை திரு. ஏ. ஈ. குணசிங்ஹ பாரமெடுத்து, துறைமுகத் தொழிலாளரை அவர் கூட்டினர். இரகசியக் கூட்டங்களேயே நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஆரம்பத்தில் ஏற்பட்டது. நாட்டின் வர்த்தகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஐரோப்பிய முதலாளி களின் எதிர்ப்பு அதற்கிருந்தது. அச்சமயம் கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்ற வேலைகள் வோபேஜ் கம்பனி
(154)

யாலேயே செய்யப்பட்டது. அக் கம்பனியின் தஃலவராக இருந்தவர் பார்வி இனத்தைச் சேர்ந்த மெஹ்தா என்ப வராவார். அவர் தொழிலாளர்களை அடிமைகளாகவே கருதினூர், அத் தொழிலாளர்கள் இந்த அடக்குமுறையை எதிர்த்து நிவாரணம் வேண்டி திரு. ஏ. ஈ. குணசிங்ஹவிடம் முறையிட்டனர். அப்போது நான் இவ்வியக்கத்தின் முன் னணியில் இருந்தேன். எனவே, அவர்களின் இரகசியக் கூட்டங்களே எனது அலுவலகமான புறக்கோட்டை பூந் தோட்ட வீதியிலிருந்த "அல்ஹம்ராக் கட்டடத்தில் நடத்த அனுமதித்தேன்.
முதற் போராட்டம் ஏற்பட்டது முதலாளித்துவ வியா பார நிறுவனமான வெள்ளவத்தை ஸ்பினிங் அன் வீவிங் மில்ஸ் லிமிற்றெட்டிலாகும். அங்கு வேலே செய்த ெ திாழி கிாளர்கள் எங்கள் சங்க உறுப்பினர்களாயிருந்தனர். அவர் கள் அவர்களின் குறைகளைத் திரு. குணசிங்ஹவின் கவனத் துக்குக் கொண்டு வந்தனர். குணசிங்ஹ அவர்கள் செயற் குழுவைத் தொழிலாளர் சங்கமாக மாற்றியமைத்தார். அது இலங்கைத் தொழிலாளர் சங்கம் என அறியப்பட்டது. குணசிங்ஹ அவர்கள் அதன் தலவராகவும் நான் அதன் துணேத் தலைவராகவும் ப ற்பல வியாபார நிறுவனங்களிலிரு ந்து பதினேந்து பேர் குழு உ றுப்பினர்களாகவும் தெரிவு செய் யப் பட்டோம். இப்போது நாம் சட்டபூர்வமாகத் தொழிற் ப-ஆரம்பித்தோம். முதலாளித்துவத்தின் பிடியில் அகப்பட் டுத் தித்தளித்த தொழிலாளர்களின் பிரச்சினேகளேத் தீர்க்க நடவடிக்கை எடுக்கலானுேம். அவர்கள் எங்கள்தொழிற் சங் கத்தைச் சேர்ந்தவர்களாயினும் அல்லாவிடினும் நாம் பாகு பாடு காட்டவில்லை, மேற்போந்த நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளராக விளங்கியவருக்கு எங்கள் நடவடிக்கை
(155)

Page 83
தெரிய வந்ததும் அவர் தொழிலாளர்களே மேலும் ம்
நிதிது தி மு
முரமாகத் தொந்தரவு செய்யத் தொடங்கிஞர். எங்கள் நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்பட்டதுடன் எங்கள்
தொழிற் சங்கத்துக்கு ஒப்புதல் திரவும் மறுத்துவிட்டார்.
வேறெதுவும் செய்ய முடியாத நிவேயில் நாம் வேலே நிறுத்தத்தில் இறங்கினுேம், நெசவாலேயில் வேலே செய்த அனவரும் - எங்கள் தொழிற் சங்க உறுப்பினரும் அல்லா தாரும்-ஒன்றென இணைந்து வேலே நிறுத்தத்தில் இறங்கினர். வேலேநிறுத்தம் நீடித்துக் கொண்டே சென்றதால் திரு குணசிங்ஹ உடன்பாட்டுக்கு வர முனைந்தார். ஆனூல், அதன் முகாமைப் பணிப்பாளரான திரு. கப்டனுே பிடி வாதமாக நின்று எதுவித பேச்சுவார்த்தைக்கும் உடன்பட மறுத்தார். இச் சந்தர்ப்பத்தில் வேலே நிறுத்தத்தை ஓர் உடன்பாட்டுக்குக் கொண்டுவர திரு. குணசிங்ஹ எனக்கு உரிமையளித்தார். அதற்குப் பிரதான காரணம் அந் நெசவாலேயில் வேலை செய்த தொழிலாளர்களில் பெருந் தொகையான முஸ்லிம்கள் இருந்ததாகும். அவர்கள் சங்கத் துக்கு விசுவாசமாக இருந்தனர். நான் எனக்களிக்கப்பட்ட பொறுப்பை உற்சாகத்துடன் ஏற்றேன். வழியில் ஏமாற் றங்களும் தடைகளும் என்னே வரவேற்றன. ஆணுல், உறுதி தளரவில்லை. வேலே நிறுத்தம் ஒரு மாதம் வரை நீடித்தது. இறுதியாக நாம் இதுபற்றி பம்பாயிலிருந்த ஆலைச் சொந் தக்காரர்களுக்கு அறிவித்தோம். தொழிலாளர்களின் குறை களே ஆராய்ந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இணங்குமாறு அவர்கள் திரு. கப்டனைப் பணித்தனர். அதன் காரணம்ாக தொழிலாளர்களுக்கு இரட்டிப்பான கூலியும்
மேலதிக நேர வேலைப்படியும் சிறந்த வீட்டு வசதியும்
(156)

பிற வாழ்வு நலன்களும் கிடைத்தன. இது தொழிலாளர் களுக்குக் கிடைத்த ஒருபெரும் ஆரம்ப வெற்றியாகும்.
இப்போது ஏனய இடங்களிலும் வேலை செய்த தொழி லாளர்கள் ஒருமித்த போராட்டத்தின் பெறுமதியை உண ரத் தொடங்கினர். தங்கள் வாழ்வு நிலேயை முன்னேற்றிக் கொள்ள தொழிற் சங்கத்தில் சேர்வதுதான் ஒரே வழி என்பதை அவர்கள் உணர்ந்தனர். அரசாங்க தொழிற் சாஃயிலும் ரெயில்வேயிலும் வேலை செய்த தொழிலாள்ர் கள் தொழிற் சங்கத்தில் சேர்ந்து கொண்டனர். செயற் குழுவில் இருந்த நாம் அவர்களின் குறைகளே ஆராய்ந்து அவ்விழி நிலையிலிருந்து அவர்களைக் காப்பா ற்ற நடவடிக் கை எடுக்கலானுேம், அரசாங்க தொழிற்சாலை ஊழியர் களின் கோரிக்கைகளோ ப.ை அரசாங்க சேவையிலிருந்த மற்றும் பல தொழிலாளர்களுடன் நாம் இரகசியப் பேச்சு வார்த்தைகளே நடாத்தினுேம், அவர்களின் குறைகளே மிகக் கவனமாக ஆராய்ந்த திரு. குணசிங்ஹ, அவற்றை அவ் வத் தினேக்களத் தலைவர்களின் கீவனத்துக்குக் கொண்டு வந்தார். போறுமையையும் சாதுர்யத்தையும் கடைப் பிடித்த அவர் தொழிலாளர்களின் நியாயமான குறைகளே, திவர்த்தி செய்வதில் வெற்றி கண்டார். ஆஞல், அரசாங்க தொழிற்சாலேயின் பிரதம் பொறியியலாளரும் ரெயில்வே பிரதம முகாமையாளரும் சிறிதும் கர்சனே காட்டவில்லை. ஏமாற்றமடைந்த தொழிலாளர்களுக்கு வே: நிறுத்தத்தில் குதிப்பதை விட வேறு வழி இருக்கவில்&ல, வேஐ நிறுத்த இயக்கத்தின் தலைவராக குணசிங்ஹ அவர்களும்அவரின் உதவி யாளராக நானும் தெரிவு செய்யப்பட்டோம். வேல் நிறுத் தம் செய்தோரை உற்சாகமாகவும் அமைதியாகவும் இருக் கச் செய்யும் பொறுப்பு எனக்களிக்கப்பட்டது. அதே
(157)

Page 84
நேரத்தில் குணசிங்ஹ அவர்கள் தினக்களத் தலேவர்களு டன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் ஈடுபட்டார்.
எனக்குப் பாரம் சாட்டப்பட்ட பொறுப்பு மிகவும் பாரதூரமான ஒன்ருக இருந்தது. வேலே நிறுத்ததில் ஈடு பட்டிருப்போரை அமைதியாக இருக்கச் செய்வதும் அவர் களின் மன உறுதியைத் தளரவிடாமற் காப்பாற்றுவதும் கஷ்டமான காரியமாகும். இவ்விடயத்தில் காலியைச் சேர்ந்த காஸிம் மாஸ்டர் அவர்கள் எனக்குப் பெரிதும் துணைபுரிந் தார். அவர் சிறந்த நகைச் சுவை மன்னனுசுத் திகழ்ந் தார். வன் செயலில் ஈடுபட நான் சந்தர்ப்பம் அளிக்காத தால் வேலே நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என்னேப் பழித்துரைத்ததுடன் என்னைத் தாக்கப் போவ தாகவும் பயமுறுத்தினர். இறுதியாக இருபது நாள் போராட் டத்துக்குப் பின்னர் உயர் அதிகாரிகள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இணங்கவேண்டி ஏற்பட்டது.
ஒரு தொழிலாளி முன்பெல்லாம் 'சுவி" என அழைக் கப் பட்டான். நான் அவர்களே எல்லாக் கூட்டங்களிலும் "கம்கறுவா" என்றே விளித்தேன். இவ் வித்தியாசமான அழைப்பு தொழிலாளர்களுக்கு ஒரு கெளரவத்தைக் கொடுத் தது. எனவே, "கூலி" என்ற வார்த்தையை அகற்றுவதற் குக் காரணமாக இருந்தவன் நான் என்பதில் பெருமை படைகின்றேன்.
இப்போது அரசாங்கம் தொழிலாளர் சங்கத்துக்கு அங்கீகாரம் அளித்தது. அதனுல் உற்சாகமடைந்த தொழி லாளர் தொழிற் சங்கங்களே நிறுவி தங்கள் உரிமைகளைக் கோரினர். திரு. குணசிங்ஹ, அக் கோரிக்கைளுக்காகப் போராடிய பொழுதெல்லாம் நான் அவரின் உதவியாள ராக இருந்தேன்.
(158)

இச் சமயத்தில் திரு. குணசிங்ஹவின் பகைவர் சிலர் அவரை மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளையொன்றின் மூலம் தொந்தரவு செய்தனர். அதனுல் திரு. குணசிங்ஹ வின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினர். எனவே என் பொறுப்பு அதிகரித்தது. அப்போதெல் லாம் துறைமுக வேலைகள் வேலை ஒப்பந்தக்காரரான சிலோன் வோபேஜ் கம்பனியாலேயே செய்யப் பட்டது. இச்சமயத்தில் தலைவராக விளங்கியவர் இன்ச்கேப் பிரபு ஆவார். அதன் நிர்வாகக் குழுவில் பன்னிரண்டு ஆங்கி லேயர் இருந்தனர். அவர்கள் துறைமுகத் தொழிலாளர் களுக்குக் குறைந்த கூவியையே கொடுத்து வந்தனர். அத் தொழிலாளர்களில் அனேகர் முஸ்லிம்களாக இருந்தனர். அவர்களுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப் பட்டது. இது என் கவனத்துக்குக் கொண்டுவரப் பட்டதும் நான் திரு. குணசிங்ஹவை அணுகி அத் தொழிலாளர்கள் வாழக் கூடியவாருன ஒரு கூலியைப் பெற்றுக் கொடுக்கப் போரா டும்படி கேட்டுக் கொண்டேன். நாம் உபவேலே ஒப்பந் தக் காரரான ஸ்டீபன் கொறயாவை அணுகி அவரின் கீழுள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த கூலி வழங்க வேண்டு ம்ெனக் கோரினுேம், ஆனூல், ஒரு சதத்தாலேனும் அவர் களின் கூலியை அதிகரிக்க அவர் மறுத்துவிட்டார். அதன் பெறுபேருக நடைபெற்ற வேலே நிறுத்தத்தில் துறைமுக வேலேகள் முற்ருக ஸ்தம்பித்தன. அது மூன்று வாரங்கள் வரை நீடித்தது. அதன் பின் இப்பிரச்சினே சுமுகமாகத் தீர்க் கப் பட்டது. இச் சந்தர்ப்பத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அதுவரை தொழிற் சங்க இயக்கத்துக்கு அரை குறை ஆதரவை அளித்துக் கொண்டிருந்த முஸ்லிம் தொழிலா ளர்கள், தொழிற்சங்க இயக்கத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம்
(159)

Page 85
தான் முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு உதவ முடிய மென உணரத் தொடங்கினர்.
இச் சமயத்தில் மெளலான செளக்கத் அலீ, டொக் டர் கிச்லூ, டொக்டர் மஹ்மூது ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர். அவர்கள் இங்கிருந்தபோது கிலாபத் இயக் கம்பற்றி அனேக கூட்டங்களிற் பேசினர். முஸ்லிம் வீரர்களே யும் கிலாபத் இயக்கத்தையும் வரவேற்று தொழிலாளர் இயக்கத்தின் சார்பாக ஒரு மாபெரும் கூட்டம் பிரைஸ் பாக்கில் நடைபெற்றது. அவர்களின் பேச்சைச் சிங்களத் திலும் தமிழிலும் நான் மொழிபெயர்த்தேன். மெளலான செளக்கத் அலீ அவர்கள் என் மொழிபெயர்ப்பால் ஈர்க்கப் பட்டு அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் அவர் பேச்சுக் களே மொழிபெயர்ப்பதற்காக என்ன அழைத்துச் சென் ரூர். இச் சந்தர்ப்பத்தைத் தீவிலுள்ள எல்லா முஸ்லிம் களினதும் நல்லெண்ணத்தைப் பெற நான் பயன்படுத்திக் கொண்டேன். மெதுவாக, ஆணுல் உறுதியாக முஸ்லிம் சமூகம் என்னே அதன் கனிஷ்ட தல்வர்களில் ஒருவராக எண்னத் தொடங்கியது. நான் தொழிலாளர் இயக்கத் தில் ஒரு சிறந்த ஆதரவாளனுக இருந்தபோதும் பொதுவாக முஸ்லிம்களின் நலனேயும் சிறப்பாகத் தொழிலாளர் நலஃ
பும் பாதுகாப்பவனுக இருந்தேன்.
குடியேற்ற நாட்டு ஆட்சியிலிருந்து ஒரு சுதந்திரமான ஆட்சிக்கு இந்நாட்டை மாற்ற வேண்டுமென்று நாம் கிளர்ச்சி செய்தோம், இலங்கை மக்கள் தங்கள் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒரளவு ஏற்கத் தகுதியுடையவர் களாக இருக்கின்றனர் என உணர்ந்த பிரித்தானிய அர சாங்கம், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஐவரைக்
(160)

கொண்ட ஒர் அரச ஆண்க் குழுவை இங்கு அனுப்பியது. நாட்டின் அரசியல் நிலைமையை ஆராய்வதும் அரசியல் சீர்திருத்தங்களச் சிபார்சு செய்வதுமே அவர்களது : யாக இருந்தது. இலங்கைத் தேசிய காங்கிரஸ், டொன் மூர் ஆஃணக் குழுவின் முன் சாட்சியமளித்த பொழுது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளேக் கொண்ட ஓர் ஆள்சபை நிறுவப்படல் வேண்டுமெனக் கோரினார். ஆணுல், வாக்குரிமையானது ஓரளவாதல் கல்வித் தகைமை, அல்லது ஆதனம் உள்ளவர்களுக்கு அளிக்கப்படல் வேண்டு மிென்க் கூறப்பட்டது. அதற்கு நேர்மாற்றமாகத் தொழி லாளர் இயக்கம், வயது வந்தோர் வாக் குரி  ை பூ ஸ் தெரிவு செய்ய ப் படும் ஒரு சுயாட்சி அ ர சா ங் + த் தைக் கோரியது. ஸேர் பாரொன் ஜயநிவக்க ஆவர்,ன் தீஃமைதாங்கிய இலங்கைத் தேசிய காங்கிரஸ் ܐܝܠܐ -LIL_4 எல்லா இயக்கங்களும் வயது விந்தோர் வாக்குரிமையை எதிர்த்தனர். ஆஞல், திரு. குணசிங்ஹ, வயது &b'MiG" #წ Tr* வாக்குரிமையைக் கோரி நின்மூர் அவருக்குப் பக்கபலமாக நின்ற ஒரேயொரு முஸ்லிம் நானுவேன். முஸ்லிம்கரோ பெரும்பாலும் வயதுவந்தோர் வாக்குரிமையை பபந்தனர். *தனுல் தமக்குப் பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காமல் போகலாம் என எண்ணினர்.
தொழிலாளர் இயக்கத்தின் இந்தக் கோரிக்கையை F. பி. ஜாயா, டபிள்யு. எம். அப்துர் ரஹ்மான் ஆகியோ ரும் எதிர்த்தனர். நான் பணக்கார முஸ்லிம்களின் பழிப் 4ரைக்கும் சிறுமைக்கும் ஆளானேன். உண்மையிஐேபுே பழைமை தழுவும் சில முஸ்லிம்களால் நான் Lilia fia, பட்டேன். முஸ்லிம்களால் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவாருண மூன்று இனவாரியான ஆசனங்களே அரசாங்க #gitutioff] முஸ்லிம்களுக்காக ஒதுக்கும் பொருட்டு அரசி பலமைப்பு திருத்தப்படல் வேண்டுமெனக் கேட்டு ரி. பி. ஜாயா அவர்கள் லண்டனிலுள்ள குடியேற்றநாட்டுக் காரி யாலயத்துக்கு அனுப்பப் பட்டார். எனினும் டொனுெ மூர் ஆஃணயாளரோ தொழிலாளர் இயக்கத்தின் :ேள்
(I61) 1.

Page 86
கையைச் சிபார்சு செய்தனர். அள்ளாஹ்வின் அருளால் இது எதிர்ப்புக்களிடையே நான் அடைந்த பெரும் வெற்றி களில் ஒன்ரூகும். முஸ்லிம் உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவு இல்லாவிட்டால் நான் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது. அதனுல் நான் எதிர்பார்த்தது ஒர் ஐக்கிய இலங்கையையே ஆகும்.
1915 இல் சில கருத்துப் பிசகல்களினுல் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கலவரத்தைத் தொடர்ந்து பிரித்தானிய அரசாங்கத்தால் வரவழைக்ப்பட்ட பஞ்சாபி போர் வீரரின் மிருகத்தனமான கடூரமான செய்கைகளே வஞ்சம் தீர்ப்பதற்காக சில சிங்கள் இ&ளஞர்கள் திரு. விக்டர் கொறயாவின் தலைமையில் ஒரு துக்க தினத்தை ஏற்பாடு செய்தனர். அத் தினம் தொடர்ச்சி பாக நான்கு ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வந்திருந்தது. திருவாளர்கள் ஈ. ரீ. டி. சில்வா, அட்வகேட் சீ. ஏ. பீ. விஜேரத்ன, ஏ. ஈ. குணசிங்ஹ போன்ருேரும் அதற்கு ஆதரவளித்தனர்.
1919 ஒக்ரோபரில் திரு. விக்டர் கொறயாவின்தலேமை யில் அத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அது அந்நாளே ஞாப கார்த்தம் செய்வதற்கு மாத்திரன்றி LIGO”) LIE JT " ŝiriĝo சட்டத்தின் கீழ் சிங்களவர் அனுபவித்த இன்னல்களுக் குக் காரணம் முஸ்லிம்களே என்பதனுல் எல்லா முஸ்லிம் க3ளயும் சிங்களவர் பகிஷ்கரிக்க வேண்டுமென ஒரு நீர் மானம் எடுக்கவும் நடைபெற்ற ஒரு கூட்டமாகும். அத் நீர்மானம் திரு. விக்டர் கொறயாவிஞல் பிரேரிக்கப் பட்டது. அக் கூட்டத்திற் கலந்து கொண்ட இருபதியிைரக் துக்கு மேற்பட்ட மக்கள் டவர் ஹோவிலிருந்து மரதா శీFL புகையிரத நிலேயம் வரை பரந்திருந்தனர்.
நானும் கூட்ட அரங்கின் ஒரு மூலயில் நின்றவண் னம் பல பேச்சாளர்களால் முஸ்லிம்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சசாட்டுக்களையும் பழியுரைகளேயும் கேட்டுக் கொண்டிருந்தேன். எனது இரத்தம் கொதித்தது. என் உவர்ச்சிகளே என்னுல் அடக்க முடியாமற் போகவே,
(162)

நான் தலைமை வகித்தவரின் ஆசனத் தருகே விரைந்து சென்றேன். முஸ்லிம்களுக்கெதிராகக் கூறப்பட்ட நியாய மற்ற பழியுரைகளுக்குப் பதில் கூற எனக்குச் சந்தர்ப்பம் அளிக்கும்படி வேண்டினேன்.
விக்டர் கொறயா அவர்கள் நியாய தர்மம் படைத்த வர். அவர் எனது வேண்டுகோளே ஏற்று என்னேக் கூடி யிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் பேசும் வேளேயில் கூச்சல் போடாது பேச்சுக்குக் காது தாழ்த்தும்படியும் அவர் சூட்டத்தினரை வேண்டிக் கொண்டார். அங்கே அமைதி நிலவவே நான் அவர்கஃா விளித்து சிங்களத்தில் உரையாற்றினேன். அவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களே நிராகரித்துப் பேசிய துடன் அக்கலவரத்தின் போது அவர்களின் மிதமிஞ்சிய போக்கையும் பற்றி விளக்கினேன். கலவரத்துக்குக் கார னம் கருத்துப் பிசகே எனக் கூறிய நான் அதுகாலவரை முஸ்லிம்கள் சிங்களவருடன் நேசமாகவும் சமாதானமாக வும் வாழ்ந்தனரென்பதை நிரூபித்தேன். சோனகர்களில் அனேகரின் உடம்பில் ஒடும் இரத்தம் சிங்கள இரத்தமே என்பதை நான் வலியுறுத்தினேன். சிங்களவர் முஸ்லிம் களேத் தம் இனத்தவராகவே கருதியதோடு முஸ்லிம் களும் சிங்களவரைத் தங்கள் சகோதரர் போலவே கெளரவித்தனர் என எடுத்துக் கூறி, அவ்வாறே நாம் நூற்ருண்டு காலமாக வாழ்ந்தோம், இனி மேலும் அவ் வாறே வாழ முடியும் எனவும் கூறினேன். நான் உணர் ச்சிவசமாகப் பேசிக் கொண்டிருந்த அதேவேளையில் ஒரு கூரிய கத்தியை இழுத்தெடுத்து எனது இடக் கரத்தைக் றிேனேன். அதிலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாகக் ழே வழிந்தது. என் உடம்பில் சிங்கள இரத்தம் இல்லை என்பதை நிரூபிக்குமாறு நான் சவால் விட்டேன். இச் செய்கை அங்கு கூடியிருந்தவர்களின் மனதைப் பிழிந் திருக்க வேண்டும். எல்லோரும் "சாது, சாது, முஸ்லிம் கள் எங்கள் சகோதரர்கள்' என இன்னுேரன்ன விதமா கச் சப்தமிட்டனர்.
எனது தாழ்மையான கருத்துப்படி இச் சிறு சம்பவம் முஸ்லிம்கள் மீது சிங்களவருக்கிருந்த மனக்கசப்பை நீக்கிய தோடு அவர்களிடையே ஓர் அன்னியோன்னிய நேச மனம் பான்மையை வளர்க்கவும் உதவியது எனக் கூறுவேன்.
(163)

Page 87
முஸ்லிம்களேப் பகிஷ்க்ரிக்கக் கூட்டப்பட்ட சட்டம், இறுதியில் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோருவதில் முடி வுற்றது. அம் மக்கள் எல்லோரும் டவர் ஹோவிலும் அதைச் சூழவுள்ள இடங்களிலும் கூடி மலர்களேயும் மலர் வ&ளயங்களையும் ஏந்திய வண்ணம் ஊர்வலமாக தெட்ட கற்றப் பள்ளி வாசல் நோக்கி நடந்தனர். 1915 இல் நடந்த சம்பவம் பற்றி தங்கள் ம ன வ ரு ந் தி செய்கை மூலம் காட்டுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தனர். ஆயிரக் கணக்கான அம் மக்கள் தெவட்டகதிற பள்ளிவாசஃல அடைந்தவுடன் அக் கூட்டத்துக்குத் தலேமை வகித்த விக்டர் கொறடா அவர்கள் பன்னிரண்டு வீர வான்களுடன் பள்ளிவாசல் 'வியார"த்துக்குச் சென்று மரியாதை செலுத்தி மலர் வண்யங்களேயும் மலர்களேயும் சமாதியின் கால்மாட்டில் சமர்ப்பித்தார்.
அவர்கள் பள்ளிவாச8ல் விட்டு வெளிவந்ததும் கூடிபி ருந்த பெருந் திரளான மக்களே நோக்கி உரை நிகழ்த்தி னர். 1915 இன் சம்பவங்களே மறந்து சிங்களவரும் முஸ் விம்களும் அவர்களின் தாய்நாடான "லங்கா"வின் முன் னேற்றத்துக்காக உழைக்க வேண்டுமென்று அவர்கள் கேட் டுக் கொண்டனர்.
லண்டனில் நடந்த ஒரு தொழிற்சங்க சம்மேளனத்துக்கு பிரித்தானிய தொழிற் கட்சியினுல் திரு. குணசிங்ஹ அழைக் கப்பட்டார். அவர் தொழிலாளர் சங்கத்தினதும் இலங்கைத் தொழிலாளர்களினதும் சார்பில் அதிற் கலந்துகொண்டார். இக்கால் இடைவெளியில் நான் அவருக்காகப் பதிற் கடமை யாற்ற நியமிக்கப் பட்டேன். அது நெருக்கடி நிறைந்த ஒரு காலகட்டமாக இருந்தது. முதலாளித்துவ வாதிகள் குண சிங்ஹ அவர்கள் இலங்கையில் இல்லாத இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கத்தால் தட்டிக் கொடுக்கப் பட்ட வர்களாக தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கின்ர். பிரித்தானிய பொறியியல் நிறு ଲା । ଦୀty of t୍t மெஸர்ஸ் ஹோர் அன் கம்பனி லிமிட்டட் அந்
ܕܕ
(164)

நிறுவனத்தின் தொழிற் சாலேயில் வேலை செய்த தொழிலா எார் சங்கீ உறுப்பினர்களுக்கு தொந்தரவு கொடுத்தது.தொழி லாளர் சங்கத்தின் பதில் தலைவர் என்ற முறையில் நான் சமாதான ரீதியில் தீர்வுகாண முனைந்தேன். அது எதுவித பலனையும் தராததால் தொழிலாளர்கள் வேலே நிறுத்ததில் இறங்கத் தீர்மானித்தனர். அவ்வித ஒரு நீடவடிக்கைக்கு நான் விரும்பவில்லையாயினும் பெரும்பான்மையின் திர் மானத்துக்கு இணங்கவேண்டி இருந்தது. வேலே நிறுத்தம் நாட்கனக்கில் தொடர்ந்தது. டொக்டர் முத்தையா, ச. எச். இஸட், பெர்ணுண்டோ, புரக்டர் மார்ஷல் பெரேரா போன்ருேர் இச் சந்தர்ப்பத்தில் எனக்குப் பேருதவி புரிந் தனர். அவர்களின் ஆலோசனேயின் பேரில் நான் மேற் போந்த கம்பனியின் நிர்வாகப் பணிப்பாளரான ஷிப்டன் என்பாருடன் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு சிறந்த களவானுக விளங்கிஞர். எதுவே எங்களுக்கும் இந்நிறுவ னத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் தொழி i சிங்கத்துக்குச் சார்பாக முடிந்தன. தொழிலாளர் கள் மகிழ்ச்சியுடன் வேலைக்குத் திரும்பினர். இச் *岛岛厅凸 பத்தில் தான் முதலாளித்துவ வாதிகள் ஒன்று கூடி "வேஜ் வழங்குவோர் கூட்டுக் குழு"வை நிறுவி தொழிலாளர் சங்கத்தையும் தொழிற் சங்க இயக்கத்தையும் அங்கீகரித் தனர். இது இலங்கையில் தொழிற் சங்க வரலாற்றில் ஒரு மாபெரும் வெற்றியாகும்.
எங்கள் நோக்கம் உழைக்கும் மக்களின் வாழ்வு வசதி யை முன்னேற்றுவதாகவே இருந்தது. அவர்களுக்குச் சிறந்த வீட்டு வசதி இருக்கவில்&. பிள்ளைகளுக்குக் கல்வி ஊட்டக் கூடிய சிறந்த பாடசாலே வசதி இருக்கவில்: போதிய சுகாதார வசதி இருக்கவில்ஃ. இஃாப்பா ற்றுச் சம்பள வசதியோ, சேமலாப நிதி வசதியோ இருக்கவில்ல; உண்மையிலே ஒரு தொழிலாளி அடிமையாகவே நடத்தப் ' ' TIGT
இச் சந்தர்ப்பத்தில் கொழும்பு டிராம்வேய்ஸ் விஜி" டெட், தொழிலாளர் சங்கத்துக்கு ஒரு சவாலாக அனத்
(165)

Page 88
தது மாத்திரமன்றி தொழிலாளர்கள் மீது அடக்கு முறை யையும் கையாண்டது. அந்நிறுவனத்தின் முகவர்களாக இருந்தவர்கள் மெஸ்ர்ஸ் பூஸ்டட் பிரதர்ஸ் ஆவர். டிராம் வேயில் வேலே செய்த ஊழியர்களின் நிவாரணத்துக்காக குணசிங்ஹ அவர்களும் அவரைச் சேர்ந்தோரும் முயற்சி செய்தனர். டிராம் சாரதிகளும் கொண்டக்டர்களும் மிகக் குறைந்த கூலியைப் பெற்றதுடன் அவர்கள் நாட் சம் பளக்காரர் என்றே கணிக்கப் பட்டனர். உவகில் அவர்கள் போன்ற ஏண்ய தொழிலாளர்களுக்கு இருக்கும் வாழ்வு வச திகள் அவர்களுக்குக் கொடுபடவில்லே. பிரித்தானிய எஜமா னர்கள் அத் தொழிலாளர்களின் மன்ருட்டத்தைக் கிஞ் சித்தும் பொருட்படுத்தவில்லே. அத்துடன் அவர்களிற் சிலரை வேலே நீக்கமும் செய்தனர். எனவே, அத் தொழி லாளர்கள் வேலே நிறுத்தத்தில் இறங்கினர். பொதுமக் கள் பாதிக்கப்பட்டார்களாயினும் அவர்கள் அதை மகிழ்வு டன் ஏற்றுக் கொண்டனர். நான் தலேவராக இருந்த "வண்டி ஒட்டிகள் தொழிற் சங்கம்", அலுவலக ஊழியர் களே ஏற்றிச் செல்ல உதவியது. வேலே நிறுத்தம் தொடர் கையில் மரதானே வீதியில் பொவிஸ் நிலேய தலைமைக் காரியாலயத்தருகில் ஒரு கலவர நிலே ஏற்பட்டது. குண சிங்ஹ அவர்கள் "செஞ் சட்டையினரை' ஆதரித்த மக்களே ஆகவசப் படுத்த அவ்விடத்துக்குச் சென்ருர்,
கடமையில் இருந்த பொலிஸார் செஞ் சட்டையின ரைத் தாக்கினர். பொலிஸ் நடவடிக்கையை அங்கிருந்த மக்கள் கூட்டம் விரும்பவில்லை. திரு. குணசிங்ஹ, பொனிஸ் தாக்குதலுக்கு முழு வேகத்துடன் எதிர்ப்புத் தெரிவித் தார். பொலிஸ் நடவடிக்கையை விரும்பாத மக்கள் கூட் டம் மரதானப் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தைத் தாக்க முனேந்தது. குணசிங்ஹ அவர்கள் அம் மக்களே மிகச் சிரமத்துடன் பலாத்காரத்தில் இறங்க விடாமல் அமைதியாக இருக்கும்படி செய்தார்.
(166)

அதுசமயம் சட்டவாக்க சபை கூடியிருந்தது. தொழிலா ளர் இயக்கத்தின் பெரும் ஆதரவாளரான திரு.சீ.எச். இஸட். பெர்ணுண்டோவும், திருவாளர்கள் ஈ. ஏ. பீ. விஜேரத்ன, அரு ணுசலம் மகாதேவா ஆகியோரும் இப் பிரச்சினே யைச் சபை யில் எழுப்பினர். ஊரடங்குச் சட்டத்தை அமுல் நடாத்த அரசாங்கம் எண்ணியது. பெர்ணுண்டோ அவர்களும் மகா தேவா அவர்களும் அவ்வித ஒரு நடவடிக்கைக்கு அவசிய மில்லேயெனக் கூறி நிலைமையை ஒரு சுமுகமான முடிவுக் குக் கொண்டுவர முடியுமென ஆலோசஃன தெரிவித்தனர்.
அதே வேஃளயில் நானும் திரு. குணசிங்ஹவும் புறக் கோட்டையில் கொன்ஸிஸ்டரி கட்டடத்துக்கு எதிர்ப்புறத் தில் ஒரு கூட்டத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தோம். தொழிலாளர்களே அமைதியாக இருக்கும்படி கேட்பதே எங்கள் வேலையாக இருந்தது. சட்டவாக்க சபைக் கூட்டம் முடிந்து திரும்பிய பெர்ணுண்டோ அவர்களும் மகாதேவா அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப் படலாம் என்றும் நானும் திரு. குனசிங்ஹவும் கைதுசெய்யப் படலாம் என்றும் அவர்கள் அக் கூட்டத்தில் அறிவித்தனர். அவ் விருவரும் என்ஃன பும் திரு. குணசிங்ஹவையும் எங்கள் வீடுகளுக்கு அழைத் துச் சென்றனர்.
மரதான்ேப் பொலிஸார் என்னேயும் திரு. குணசிங்ஹ வையும் சுட்டுக் கொல்வதில் கவனமாயிருந்தனர். சனக் கூட்டம் மீண்டும் ஒன்று கூடி பலாத்காரத்தில் இறங்கு வதற்கு ஆயத்தமாக இருந்தது. ஆதாம் என்னும் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் எங்கள் இருவரையும் சுட்டுக் கொல் லும்படி மறைமுகமாகப் பணித்திருந்தார். அவர் மரதா னேப் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது சீமன் வீதியில் கூடியிருந்த ஒரு சனக் கூட்டத்தின் மத்தி பில் திரு. குணசிங்ஹவைப் போன்ற ஒருவரைக் கண் ணுற்று அவரைச் சுட்டுக் கொன்ருர், ஸ்தலத்திலேயே மாண்ட அவர் இளம் புரக்டரான திரு. எல். பீ. குணவர்தன
(167)

Page 89
என்பவராவார். என்ன நடக்கின்றதென்று பார்க்க வந்த வர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பளியானுர், வெறிபிடித்த பொலிஸ் சார்ஜண்ட் அத்தோடு நிற்கவில்&. அங்கு தென் பட்ட துருக்கித் தொப்பி அணிந்த ஒரு முஸ்லிம் இளேஞ ரைக் கண்ணுற்று அவர் நானென நிரேத்து சுட்டுக் கொன்ருர், இச் சந்தர்ப்பத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் கட்டு மீறியதில் வியப்பில்லே, மரதாசீனப் பொலிஸ் நிலே யத்தைத் தீக்கிரையாக்குவதாக அவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.
திரு. ஏ. ஈ. குணசிங்ஹவும் முகம்மது றியாழும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்களென அடுத்த நாட் காஃல புதினப் பத்திரிகைகள் தலேப்புச் செய்தியை வெளியிட்டன. இச் செய்தி தொழிலாளர் வர்க்கத்தை நிலகுலேயச் செய்தது. அரசாங்கத் தொழிற்சாஃல ஊழியர் களும் துறைமுக ஊழியர்களும் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொண்ட னர். பொலிஸார் தங்கள் தாவனத்துக்குப் பின்வாங்கினர். அதன்பின் செஞ்சட்டையினர், திரு. விக்ரமசிங்ஹ என்ப வரின் தலைமையில் மரதானேயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். கொழும்புச் சரித்திரத்தில் குற்றவியல் குற்றங்களுக்காகவும் அதுபோன்ற பிற செயல்களுக்காகவும் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படாமல் விட்ட முதல்முறை அதுவாகும். பழிவாங்க நினைத்துக் கொன் டிருந்த மக்கள் கூட்டத்துக்கு உண்மையில் எரேக்கும் திரு. குணசிங்ஹவுக்கும் என்ன நடந்ததென்று தெரியவில்லே.
உதவி குடியேற்றநாட்டுச் செயலாளரான திரு. மேர்பி என்பார் என் இல்லத்துக்கு வந்து என்னேக் கலவரம் நிகழ்ந்த மரதானப் பகுதி முழுவதும் மக்கள் காணக் கூடியவாறு அழைத்துச் சென்ருர், நான் உயிரோடு இருக் கிறேன் என்பதைக் காட்டுவதற்காகவே அவ்வாறு செய்
(168)

தார். அதே போன்று குடியேற்ற நாட்டுச் செயலாளரான திரு. எப். ஜி. டிரல் என்பார் திரு. குணசிங்ஹவை அழைத் துச் சென்ருர், டிராம்வே வேலே நிறுத்தம் வெற்றிகர மாகத் தீர்க்கப்படும் என அவர் கூடியிருந்த மக்களுக்கு உறுதி வழங்கி அவர்களேக் கலந்துபோகும்படி வேண்டிக் கொண்டார். அதன்பின் வேலே நிறுத்தத்தில் ஈடுபட்டவர் கள் வேலைக்குத் திரும்பினர். பின்னர் தொழிலாளர் சங் கத்தின் குழு பலநாட்கள் முயற்சி செய்து டிராம்வே நிறு வனத்துடன் ஒர் உடன்பாட்டுக்கு வந்தது. இது உண்மை யிலேயே தொழிற் கட்சிக்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி யாகும். தொழிலாளர்களே அவர்களின் எஜமானர்களின் இரும்புப் பிடியிலிருந்து விடுவிக்கும் இப் போராட்டங்களில் முஸ்லிம் பாட்டாளி மக்கள் எனக்குப் பேருதவி புரிந்தனர் என்பதை நான் குறிப்பிட வேண்டும்.
நான் நேரடி அரசியலில் குதித்தது 1924 ஆம் ஆண்டி லாகும். 1924 செப்ரம்பரில் நடைபெற்ற சட்டவாக்க சபைத் தேர்தலில் அகில இலங்கை முகம்மதிய மூவாச னங்களுக்காகப் போட்டியிட்டு நான்காவதாக வந்தேன். இத் தேர்தல், கல்வி அறிவையும் ஆதனத் தகைமையை பும் அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை மூலம் பிரதிநிதிகளேத் தெரிவு செய்யும் ஒன் ருக இருந்தபடியால் இலங்கைத் தொழிலாளர் இயக்கத் தின் துணைத் தஃலவராக இருந்த நான் தோல்வியடைந்த தில் வியப்பில்லே.
எனினும் 1926 இல் நான் கொழும்பு மாநகர சபைக்கு தொழிற் கட்சியின் அபேட்சகராக சென்செபஸ்தியன் வட்டார உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப் பட்டேன். 1927 இலிருந்து 1943 வரை நான் தொடர்ந்து மாநகர சபை உறுப்பினராக இருந்தேன்."
இவ்வாறு தொழிலாளர் நலனுக்காகப் போராடிய ஒரு கர்ம் வீரர் சில ஆண்டுகளுக்கு முன் காலஞ் சென்ருர்,
(169)

Page 90
"மோர்ஸ்' அல்லது முகம்மதியர் சம்பந்தமான விசேட சட்டங்கள்
பிரித்தானியர் இந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய போது, முஅர்ஸ்" அல்லது சோனகர் அவர்களின் மதச் சட்டதிட்டங்களில் தலைசிறந்த முஸ்லிம் நீதிபதிகளின் கீழ் முறையாக ஆளப்பட உதவ வேண்டியது அவசிமெனக் கண் டனர். 1798 இல் தேசாதிபதி பிரடரிக் நோத் என்பார் சமர்ப் பித்த அறிக்கையில், கடந்த காலங்களில் இலங்கைச் சோனகர், அவர்கள் சம்பந்தமான சட்டதிட்டங்களில் உள்ளூர் நீதிமன்றங்கள் எவ்வாறு தலேயிடாத விதமாக வாழ்ந்தனர் என்பது சுட்டிக் காட்டப் பட்டது. அவரது அறிக்கையின் ஒரு பகுதி வருமாறு:
"அரசாங்க வருமானத்துக்கு இம் மக்களிடமிருந்து ஏறக்குறைய அதே தொகையை வசூலிக்க நான் எண்ணி புள்ள அதே நேரத்தில் முஸல்மான் சட்டத்தின் எல்லா அம்சங்களிலும் நான் கலந்தாலோசிக்கத் தக்கவாறு ஒரு முப்தியையும், மூரிஷ் குடிமக்கள் தஃலவர்களின் கீழ் ஒன்று பட்டு அதிகமாக வாழும் தீவிலுள்ள பல்வேறு பகுதி களுக்கு நீதிபதிகளான "காழி"கள் அறுவரையும் தீவுக்கு வரவழைப்பதன் மூலம் ஒரு சரியான கெளரவமுள்ள அரசாங் கத்தின் செளகரியங்களே அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வும் எண்ணியுள்ளேன். இந்தப் பணியாளர் குழாத்துக் கான செலவுகளின் பெரும்பாகம் முனல்மான்களின் உதவு தொகைகள் மூலம் பெறப்படும். அது டச்சுக் காலத்தில் வசூலிக்கப்பட்டதை விடக் குறைவானதாகவே இருக்கும். . இந்த லெப்பைகள் நாட்டின் முதலாளிகளிலும் சுறுசுறுப்பான வர்த்தகர்களிலும் பெருந்தொகையினராவர். அவர்கள் விடா முயற்சியுள்ளவர்கள். அத்துடன் உண்மை யிலேயே அமைதியானவர்கள். அவர்களிடையே பூசல்கள்
(170)

ஏற்படின் அவற்றைத் தீர்மானிக்கக் கூடியவாறு அவர் களின் சட்டங்களிலெல்லாம் பொதுவான அறிவுள்ள ஒருவர் அவர்களிடையே இல்லே என்பது வியப்பான ஒன் நல்ல".
பிரித்தானிய அரசாங்கம் முஸ்லிம் சட்டங்களே உத்தி யோகபூர்வமாக ஏற்றுக் கொண்டு அவற்றை வகுக்க சோனகர்களே அழைத்தது. அச் சட்டங்களே ஒரு கட்டளைச் சட்டத்தில் சேரிப்பதற்காகவே அவ்வாறு செய்தது. எனவே, சோனகர்களில் பலர் முஸ்லிம் சட்டங்களே வகுக்க அமர்ந்து அவ்வாறு வகுக்கப்பட்ட சட்டங்களே அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தனர். 1806 ஓகஸ்ட் 5 ஆம் தேதி பிரதம நீதியரசர் அவற்றை ஆள்சபையில் சமர்ப்பித்தார். கொழும்பு மாகாண சோனகர்களால் கடைப்பிடிக்கப்படுவனவும் அவ்வினத்தின் தற்போதைய நடைமுறைக்கேற்ப ஏற்றதாக்கிக் கொள்ள அம் மாவட்ட தஃமைச் சோனக மனிதர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனவுமான முகம்மதிய சட்டக்கோவை அது என் அவரால் எடுத்துக் கூறப்பட்டது.
அச்சட்டங்கள் தீவு முழுவதும் கடைப்பிடிக்கப் படல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அச் சட் டம் "மோர்ஸ் அல்லது முகம்மதியர்கள் சம்பந்தமான விசேட சட்டங்கள்' என அழைக்கப் பட்டது.
கீழ்வரும் சோனக கொமிஷனர்கள், அச் சட்டங்களே
வகுக்க அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டவர்களாவர்
1. மம்முஞப் புள்ளே ஸ்"லேமா லெப்பை மரிக்கார்
2. சேகு இஸ்மாயில் லெப்பை நெய்னு மரிக்கார்
3. உதுமா லெப்பை மேஸ்திரியார் சேகாதி மரிக்கார்
4. மகல்லம் முஹ்யிதீன் லெப்பை
5. சேகு மீரா லெப்பை உதுமா லெப்பை மரிக்கார்
6. இப்ராஹிம் புள்ளே சின்ன லெப்பை
(171)

Page 91
15.
லெப்பை மரிக்கார் ஐரே லெப்பை மரிக்கார் அகமது லெப்பை சேகு அப்துல் காதிர், பேச்சு மொழி பெயர்ப்பாளர்
ஒமர் நெப்னு புள்ளே சேகு லெப்பை காளி லெப்பை மம்மு நெய்னு லெப்பை அவன் மீரா லெப்பை மகம்மது லெப்பை ஒளதுகண் புள்ளே ஒளினு லெப்பை காளி லெப்பை சேகு மீரா லெப்பை ஐதுரூஸ் லெப்பை சுல்தான் கண்டு
லெப்பை மரிக்கார் உமரு லெப்பை மரிக்கார்
16. சேகு மீராப் புள்ளே அவ்வக்கர் லெப்பை அல்வர்ஸ்
17. லெப்பை மரிக்கார் ஸ்ம்ஸ்" லெப்பை மரிக்கார் 18. மீரா லெப்பை மேஸ்திரியார் சேகாதி மரிக்கார் 19. ஸாஃப்மா லெப்பை யூஸ்"பு நெய்னு 20. சுலேமா லெப்பை பக்கீர் புள்ளே 21. மம்மு நெய்னு புள்ளே ஸம்ஸ"தீன் லெப்பை 22. அகமது லெப்பை அலீ மரிக்கார் 23. லெப்பை மரிக்கார் உதுமா லெப்பை மரிக்கார்
24. லெப்பை கண்டு ஸ்ெய்து 52. ஒஸன் லெப்பை கப்பித்தான் அகமது லெப்பை 26. மாதிரு லெப்பை சேகாதி மாக்கர் 27. முகம்மது காளிம் அகமது லெப்பை 28. லெப்பை நெய்னு மரிக்கார் அகமது அலீ மரிக்கார்
சுப்பித்தான்.
. . C. C. O O காழும்பு தமிழ்ச் FEAGLAD
நூலகம்
(172)
23S 14

孪
劃
கடந்த கால சோனக மனிதர் ஒருவர்
15:37 (TF 55Fri Gorf Observer)

Page 92