கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்

Page 1

靈
·

Page 2


Page 3

இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
விற்பனை உரிமை குமரன் பப்ளிஷர்ஸ் 123), மெய்கை விநாயகர் தெரு, வழி குமரன் காலணி 7வது தெரு, வடபழனி, சென்னை-600 026.

Page 4
முதற் பதிப்பு: ஜூன், 2002
C) விலை ரூ.70.00
Title
Subject
Author .
Type
Size
Paper
Binding
Price RS.
No. of Pages:
llayuthir Kalathin Oru Malai Neram
Short Stories
Rajeswari Balasubramanian
240
10.5 Point
12.5 x 18Cms
11.6 Kg white
Art Board
70.00
வெளியீடு:
LOGOS PUBLISHERS C36)T(366) வெளியீட்டாளர் 43, Madras Road, ILFord, 7/3, சப்தகிரிகாலனி,
ESSEX IG1 2EY
U.K. ஜாபர்கான்பேட்டை,
E-mail: JESURATNAM@HOTMAILCOM Gé67667-600083.
For Typeset
Sivaa Graphics, Chennai-94 Ph: 4730810

எங்களைப் பற்றி.
ன்றைய உலகின் அத்தியாவசியத் தேவையை எங்கள் எண்ணத்தில் கொண்டு லோகோஸ் நிறுவனம் வெளியீட்டுச் சேவையில் அடியெடுத்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். கீழைத்தேய மெய்ஞானமும், மேலைத்தேய விஞ்ஞானமும் இரு இறகுகளாக இணைகின்ற பொழுது மனித சமுதாயம் சிறகடித்து வானில் சுதந்திரமாகப் பறக்கும் என உறுதியாக நம்புகிறோம்.
சமாதானம், சந்தோஷம், நிறைவான செல்வச் செழிப்பு, ஆழமான அன்பு, முழுமையான புரிந்துணர்வு இவை யாவும் நிறைந்த ஒரு புதிய உலகைப் படைப்பதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம்.
இத்திசையில் லோகோஸின் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து உங்களை நாடி வரும்.
lt is our great pleasure to step into "LOGOS' Publishing Service, having the urgent need of the present day world in Our heart.
We firmly believe that when the wings of the ancient Eastern wisdom and the new age Western science align, the human species freely soars above the sky.
With your co-operation we endeavour to create a new World in which freedom, peace, prosperity, happiness, deep love and clear consciousness will Overflow.
"LOGOS' multiferious efforts in this direction will follow.

Page 5
4
முன்னுரையாக சில குறிப்புகள்
பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் எழுதத் தவறுவது, தயங்குவதை ராஜேஸ்வரி துணிச்சலோ டும் சிறப்போடும் கையாள்வதே அவரது தனிச்சிறப்பாகும். இலண்டன் மாநகரில் இலங்கைத் தமிழர் மட்டுமல்ல இந்தியத் தமிழர், பஞ்சாபியர், சீக்கியர், குஜராத்திரியர் மற்றும் 'கறுத்தவர்' எனக் கூறப்படும். அல்ஜீரியர், மேற் கிந்தியர் பிற ஆப்பிரிக்க நாட்டவர் இன, மத பண்பாட்டு வேறுபாடுகளுடன் வாழ்பவரையெல்லாம் தன் சிறுகதை களில் அடக்கி, பல்வேறு வர்ணங்களில் ஆசிரியரால் காட்ட முடிவதும் பாராட்டிற்குரியது.
எதிர்பாலாரோடன்றி ஓரினப் பாலின்பம் உலகெங்கும் பரந்துள்ளது. ஆயினும் முதலாளித்துவ சமூக அமைப் பிலேயே நேரடியாக அத்தகைய உறவுகள் பற்றிப் பேச, எழுத, சட்ட உரிமைகள் பற்றி வாதிட முடிகிறது. ராஜேஸ்வரி இங்கிலாந்தில் உள்ள இத்தகைய உறவுகள் பற்றி நேரடியாக தன் கதை மாந்தர் மூலம் வெளிக் கொணர்ந்துள்ளார். பல்லின மக்களின் வாழ்க்கை முறைகள், வேறுபாடுகளை அவரது கதைகளில் காணலாம்.
ஒரு காலம் சூரியன் மறையாத பூமிப்பந்தில் ஆட்சி செலுத்தியவர், அவரது பரம்பரையான இன்றைய வாலிபர்கள் உழைக்கும் கறுத்தவர் மேல் காட்டும் கோப மும், மனக் கொதிப்பும் சில கதைகளில் கொப்பளிக் கின்றன. வெள்ளைக்கார இளம்பெண்கள் செல்வ வாய்ப்புள்ள இந்தியருடன் கூடித் திரிவதையும் இந்த இளைஞர்களால் பொறுக்க முடியவில்லை. சண்டைகள் நடைபெறுகின்றன. போலிஸாரும் இனவாதியாக இருப்ப தாக புலம் பெயர்ந்தோர் புலம்புகின்றனர்.
நாஸர்' என்ற தலைப்பில் பூனையைத் தேடும் கதை, வீட்டில் செல்லமாக வளர்க்கும் பூனைக்குட்டி பற்றியது.

5
அதைத் தேடி அலையும் இந்தியப் பெண்ணின் ஆர்வத்துடன் இலண்டன் மாநகர வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகள் கூறப்படுகின்றன. போலிஸ்காரர், காதலர்கள், பூனை திருவோர் என விரியும். முயல், பன்றி, நாய் என இறைச்சி தின்போர் பூனை இறைச்சியையும் கோழிக் கள்ளர் போலத் திருடி உண்பது வியப்பல்ல. -
கர்ப்பம் பற்றிய விபரமறியாத நிலையில் கர்ப்பமடையும் விந்தியாவின் பிரச்சனைகள் பண்பாட்டு ரீதியானவை. வெள்ளைக்காரப் பெண்ணானால் பலரும் தெரியவே குழந்தையைப் பெற்று வளர்ப்பாள். வித்தியா முதலாளித் துவ நாட்டில் வாழ்ந்த போதும் குழந்தையைக் கொல்லவே தீர்மானிக்கிறாள். அவள் வாழ்ந்த சமூகச் சூழல் இத்தகைய செயலுக்குத் தூண்டுகிறது. இந்திய நாட்டு சிசுக் கொலைகள் பற்றிய ஆசிரியரின் ஆத்திரம் மற்றொரு கதையில் கற்கலாம்.
இத்தகைய பண்பாட்டுப் பிரச்சனை இலங்கைப் பெண்ணுக்கும் தமிழ்நாட்டு காதலனுக்குமிடையில் பெற்றோரால் திணிக்கப்படுகிறது. ஆயினும் இலண்டனில் வாழ்ந்த பெண் மசியவில்லை.
இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்’ ரெயிலைத் தவறவிட்டு மற்றொரு பயணியுடன் நடைபெறும் நீண்ட உரையாடல். இரவு நேரம், அவளுக்குத் துணையாகவும் அந்த வாலிபன் அவள் வீடுவரை செல்கிறான். ரெயில் பயணிகள், சுற்றாடல், சுவாத்தியம் உட்பட சுவையான உரையாடல்களிடை ஆசிரியரின் அடிமனக் கருத்துகளும் ஆங்காங்கே தெறிக்கும். "பணக்காரர்கள் வாழும் காடு இது இருள முதலே தங்கள் இரும்புக் கதவுகளை மூடிவிட்டு உலகத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்வார்கள்.
யாழ். டொக்டர், சொத்தாசையுள்ள மனைவி, போட்டிச் சமூகத்தில் தம்மை இனக் காட்டிக் கொள்ள முயலுவதும் முக்கோணமாகக் கதை சொல்லப்படுகிறது.

Page 6
6
கறுப்பர் எதிர்ப்பு, வெள்ளையர் விரக்தியில் போதை மருந்துக்கு அடிமையாவது, முரண்பாட்டை மூர்க்கமாகத் தீர்க்க முற்பட்டு வெள்ளையரே பாதிக்கப்படுகின்றனர் என மறைமுகமாக ஆசிரியர் சுட்டிக் காட்டுவார்.
முற்போக்குவாதியின் காதல் முதலாளித்துவத்தில் பணத் தேவையால் சிதைக்கப்படுகிறது. காதல் என்ற உணர்வு, அதனால் ஏற்படும் வாய்மொழி உறுதிகள் எவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலை நெருக்கடிகளால் சிதைவுறு கின்றன. வெற்றுக் காதலிலும் பார்க்க பணத் தேவை முதன்மை பெற்று, காணாத பெண்ணையும் கலியாணம் கட்டச் செய்கிறது. அங்கு பாலுறவு முதன்மை பெறுகிறது. யதார்த்த நிலையை ஆசிரியர் கூறுவார்.
எழுத்தாளரின் விருப்பு வெறுப்புகள் அவர்களை அறியாமலே எழுத்தில் தெரிந்துவிடும். இனப் பிரச்சனை யில் சிங்களவர் மேலுள்ள வெறுப்பு ஆங்காங்கே வந்து விடும். அதேபோல, யாழ்ப்பாணத்தார் மேலும் சிறிய கசப்பு ஒரிரு கதைகள் மூலம் வெளிப்படும்.
பிரசவ வேதனைத் துன்பம் பற்றி இருகதைகள் வருகின்றன. ஒன்றில் ஏழை நள்ளிரவில் மனைவியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதற்குப் படும்பாடு. அங்கும் ஏழைகளே ஒன்றுபடுகின்றனர். மற்றொன்றில் கணவன் இல்லாத போதும் கிராமப் பெண்கள் ஒன்றுகூடி இணைந்து மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்து கின்றனர்.
வெள்ளைக்காரர் பெயர் சுட்டி அழைப்பதற்கு வாய்ப்பாக இந்தியர், இலங்கையர் தமது பெயரை மாற்றும் முறைகளும் விசித்திரமானவை. சிலர் தமக்கு வாய்ப்பாக வும் பெயர் மாற்றுவதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
முதுமையில் துணை தேடும் வெள்ளையரின் பிரச்சனை பற்றியும் ஒரு கதை. அந்நிலையில் எந்த இன, மதத்தவ

7
ராயினும் அவர்கள் கவலைப்படுவதில்லை. முதுமையும், தனிமையும் கொடியவை.
பஸ் பயணம் லண்டன் வாழ்வின் பல்வேறு முரண் பாடுகளை வெளிப்படுத்துகிறது. ஒரு சிறுகதையில் பல்வேறு இயைபின்மைகளையும் பல்லின மக்கள் வாழ்வையும் சித்தரிக்க முடிந்தது ராஜேஸ்வரியின் தனிச் சிறப்பாகும். ஆசிரியர் கற்ற சினிமா அறிவையும் காண முடிகிறது. காமரா மூலம் கதை சித்தரிக்கப்படுவது போல படித்தும் உணர்வு பெறலாம். 'பாரம்' அத்தனை பாரமான லண்டன் பஸ் பயணம் சார்ந்த பாரமான கதை. அதன் எடையை தராசு கோலில் போட்டுப் பார்க்கலாம்.
80-90 சதவீதமான தமிழ் எழுத்தாளர் யாவரும் ஆண் களே. அவர்களே பெண்களை, அவர்களது உணர்வுகளை, தமது ஆணாதிக்க பார்வையிலேயே விவரிப்பர். பெண் எழுத்தாளரும் ஆண்கள் எழுதிக் காட்டியபடியே எழுதுவது வெறும் ஏமாற்றாகும். ராஜேஸ்வரியின் தனிச்சிறப்பு அவர் இந்த வலையில் விழுந்து விடுவதில்லை. பெண்களின் உணர்வுகளை, அவர்களது யதார்த்த எண்ணங்களை துணிச்சலுடன் தன் நாவல், கதைகளில் வெளிக் கொணர்வதாகும். இதனாலும் அவர் பலரது தவறான குறிப்புகளுக்கும் ஆளாகிறார் என்பது உண்மையே.
ராஜேஸ்வரியின் இத்தொகுப்பிலுள்ள கதைகள் பல்வேறு வகையில், துறைகளில் சிறப்பாக அமைவதை ஆழ்ந்து கற்பவர் அறிவர். அவர் பல நாவல்கள், நூற்றுக் கணக்கான சிறுகதைகள் எழுதிய போதும் அவரது எழுத்தின் சிறப்பை அளக்க இச்சிறுகதைத் தொகுதி ஒன்றே போதும்.
செ. கணேசலிங்கன்
சென்னை 12.5.2002

Page 7
O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
உள்ளே
. நாஸர்
. முதலுறவுக்கு அடுத்த நாள்
. Ms. ஜான் நேதன்
. வித்தியாவின் குழந்தை . இலையுதிர்காலத்தின் ஒரு மாலை நேரம் . மிஸ்டர்ரெய்லர் அன்ட் மிஸஸ் குமார்
. இன்னுமொரு கிளி
. Ungib
. வடக்கத்திமாப்பிள்ளை
அப்பாவின் சிநேகிதி
பாதை தவறிய பைத்தியம் யாழ்ப்பாணத்து டொக்டர் ஒரு முற்போக்குவாதிகாதலிக்கிறான்
மனித உரிமைகள்
எய்தவர் யார்?
ஒருவன் விலைப்படுகிறான்
நண்பன்
ஏழையின் U Toog
24
41
61
75
88
O2
114
127
144
155
165
176
188
199
213
223
232

1. நாஸர்
LDழை வானத்தைப் பொத்துக் கொண்டு கொட்டியது. காலணிகள் நனைந்து நடை சதக் பொதக் என்று சத்தம் போட்டது. வாயு பகவான் வேறு கண்ட பாட்டுக்கு வீசி மழை நீரை உடம் பெல்லாம் தெளித்தான்.
“ஹலோ”
குடையைச் சற்று உயர்த்தி குரல் வந்த திசையை நோக்கினாள் தனது முக்காட்டை உயர்த்தியபடி பக்கத்து வீடு பரீதா அகமட் நின்று கொண்டிருந்தாள்.
உடல் நனைந்த தெப்பம். முக்காடு நனைந்து முகம் பன்னீர் தெளிந்த மாதிரி முத்துக்கள் உருண்டன.
“ஹலோ பரீதா' நான் நடந்தேன்.
அவள் தொடர்ந்தாள். ஏதோ முக்கிய விடத்தைச் சுமந்து வருகிறாள் என்று அவள் நடை சொல்லியது.
“என் பூனைக் குட்டியைப் பார்த்தாயா’ அவள் குரல் நடுங்கியது, குளிரிலா அல்லது சோகத்திலா தெரியாது. பொல்லாத குறும்பான பூனைக்குட்டிக்குச் சொந்தக்காரி அவள். குறும்புப் பூனை எங்கே போனது? நான் அவசர மாகக் கதவைத் திறந்தேன். நனைந்த உடையுடன் 'கார்ப்பெட்டில் ஈரம் சொட்ட அவள் தொடர்ந்தாள்.
“இல்லை. நான் உனது பூனைக் குட்டியைக் காண வில்லை.”

Page 8
10 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
பரீதா என்வீட்டு வலதுபக்கத்து வீட்டுக்காரி. நான்கு குழந்தைகள். மூன்று பையன்கள். ஒரு மகள். பதினாறு வயதாம். கல்யாணம் பேசி நிச்சயித்து விட்டதாக மதிலுக்கு மேலால் தன் வார்த்தைகளை விட்டபோது பரீதா சொன்னாள்.
“கல்யாணம் நிச்சயமாகிவிட்டதா? அப்படி என்றால் இரவில் உன் வீட்டுத் தோட்டத்தில் அந்தப் பெண் முத்த மிட்டுக் கொண்டிருந்த பையன் யார்”
எனது இடது பக்க வீட்டுக்காரி சிந்தியா ஒரு நாள் இப்படித் துள்ளினாள். சிந்தியா ஆஸ்திரியப் பெண் நேர்மையாக நடந்து கொள்பவள், பொய் பேசமாட்டாள். சிந்தியாவுக்கு அறுபது வயதுக்கு மேல். இரவில் மூன்று மணிவரை அவள் வீட்டு வெளிச்சம் அணைக்கபடாது. ஏதோ படிப்பாள் போலும் அல்லது வேறு என்ன பண்ணு வாள் அறுபது வயதில்? பகலில் அவள் தோட்டத்தில் என்னதான் அப்படிப் பண்ணுவாளோ ஏதோ செய்து கொண்டிருப்பாள், அவளுக்கு இரண்டு பெண்கள். முப்பத் தைந்தும் முப்பத்தி இரண்டும்.
மூத்த பெண் அவசர அவசரமாகத் தன் “உடல்’ கனத்தை (எடையை?) குறைத்துக் கொண்டிருக்கிறாள். “சிலிம்’ ஆக இருந்தால் பையன்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாயிருக்குமாம்?
முப்பத்தைந்து வயது. முது கன்னி என்று சொல்ல முடியாதவாறு உடம்பு தேய்ந்து கொண்டு வருகிறது. எப்படி யும் நாற்பது வயதுக்குள் “செட்டிலாகி” விட வேண்டு மென்று சொன்னாள்.
முப்பத்திரண்டு வயதுப் பெண் காரில் ஒடிக் கொண் டிருப்பாள். இரவுப் பூதமாய் சிந்தியா திரிவதாக என் சின்ன மகன் கிண்டலடித்தான்.
வயதுபோனால் நித்திரை வராது அதனால் தான் சிந்தியா ஏதோ பண்ணிக் கொண்டிருக்கிறாள் என்று மகனுக்குச் சொன்னேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 11
“எனது அழகான பூனைக் குட்டி, அடிக்கடி உன் வீட்டுக்கு வருமே ஞாபகமில்லையா”
பரீதா சொட்டு நனைந்த குரலில் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டிலிருந்த ஞாபகம் இருக்கிறது.
ஒரு சில கிழமைகளுக்கு முன் எங்கள் வீட்டுப் பூனை “ஜோசி” பொறாமையுடன் தோட்டத்தில் ஓடி வந்த பூனைக் குட்டியை வெறுத்துப் பார்த்தது.
அந்தப் பூனைக் குட்டியின் கண்களில்தான் எத்தனை குறும்பு. தன் வீட்டுச் சொந்தம்போல் ஒடித் திரிந்தது. நிமிர்ந்து பார்த்து கம்பீரமாய் நின்றது.
அள்ளி எடுத்தேன். அணைப்பில் துவண்டது.
"யார் வீட்டுப் பூனையோ” மகன் பெருமூச்சு விட்டான். என் குழந்தைகளுக்குப் பூனை, நாய் என்றால் மிகவும் பிடிக்கும்.
எங்கள் வீட்டு பெட்டைப் பூனை “ஜோசிக்கு” கர்ப்பத் தடை செய்து விட்டதால் பூனைக் குட்டியைக் கண்டு களிக்கும் இன்பத்தை அடையாதோர், என் பையன்கள். இந்தப் பூனைக் குட்டியை வைத்த விழி வாங்காமல் ரசித்தார்கள்.
பூனைக் குட்டி அடிக்கடி வந்தது. சாப்பாடு போட் டோம். ருசித்து ரசித்து சாப்பிட்டது. பெட்டைப் பூனை "ஜோசி” சின்ன மகனின் செல்லத்தில் சீராடும் பூனைக் குட்டியைப் பொறாமையுடன் பார்த்து பெருமூச்சு விட்டது. சக்களத்திப் பார்வை.
“இது யாரோ எறிந்து விட்ட பூனைக்குட்டி எங்களுடை யது ஆக்கி விடுவோமா” சின்னமகன் வாஞ்சையுடன் கேட்டான்.
“இது அனாதைப் பூனையாய் இருந்தால் எடுப்போம்” என் அனுமதி என் மகனின் கற்பனையை வளர்த்து புதுப் பூனைக்குப் பெயர் வைப்பதில் விரிந்தது.

Page 9
12 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“ஆசை தீர "கிளியோ’ என்று கூப்பிடுவேன்” அவனின் பிரகடனம் தர்ம சங்கடமாக இருந்தது.
s
ஒரு காலத்தில் எங்களால் வளர்க்கப்பட்ட "கிளியோ (கிளியோ பாத்ரா) என்ற பூனை காரில் அடிபட்டு இறந்த சோகம் என் பையன்களை இரண்டு நாள் பட்டினியாய் இருக்கப் பண்ணியது. கிளியோபாத்ராவின் விபத்துக்கு நூறு பவுண்கள் செலவழிச்சும் பிரயோசனமில்லை. "வேண் டாம்.” நான் தயங்கினேன்.
மகன் ஏன் என்று பார்வையால் கேட்டான்.
"வள்ளி என்று கூப்பிடுவோமே" நான் முருகபக்தை. பெண் குழந்தை இருந்தால் வள்ளி என்று பெயர் வைப்பேன். “சரி” "வள்ளி என்று சரியாகவராது அவனுக்கு "வல்லி’ வாஞ்சையுடன் வளைய வந்தது.
பூனை குறுக்காற் போகும் அபசகுனம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. லண்டனுக்கு வந்த நாளிலிருந்து பூனைகள் வளர்க்கிறோம். பூனையில் விழித்துத்தான். மற்ற விடயங்கள் நடக்கும். ஜோசிப்பூனை காலையில் காலைத் தடவும் “நாஸர் என்று பெயர் வைத்தேன் தெரியுமா” பரீதா நான் கொடுத்த சூடான தேனிரைக் கையில் வாங்கியபடி சொன்னாள்.
“வள்ளி” என்று பெயர் வைக்க ஆசைப்பட்ட பூனைக் குட்டி அடுத்த வீட்டுப் பூனைக் குட்டி என்று தெரிய ஒன்றிரண்டு கிழமைகள் எடுத்த அதிர்ச்சியை நாங்கள் நாகரீகமாக மறைத்துக் கொண்டோம்.
“முஸ்லீம்கள் பூனை வளர்ப்பார்களா”
"ஆமா நாய்தான் ஹராம்” பரீதா தன் முந்தானைக்குள் நாஸரை அணைத்தபடி மதிலுக்கு அப்பால் நின்று பதில் சொன்னபோது அவள் முகத்திற் தெரிந்த பூரிப்பும் இப்போது தெரியும் சோகமும் முன்னுக்குப் பின் முரணானவை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 13
“என் மகனுக்கு இந்தப் பூனைக் குட்டியில் பெரிய
விருப்பம். எங்கள் பிள்ளைகளில் ஒன்றாக வளர்த்தோம் அவள் பெருமூச்சு விட்டாள்.
அடுத்த நாள்.
மழை நின்று விட்டது.
ஆறரை மணிக்கு வேலையால் வரும்போது பரீதா தன் மஞ்சள் நிற சுடிதாருடன் மதிலுக்குமேலால் என்னைக் கூப்பிட்டாள்.
பூனை பற்றி போலிஸாரிடம் தகவல் கொடுக்கப் போன போது தான் மிகவும் "மோசமான” நடத்தப் பட்டதாகச் சொன்னாள்.
"இந்தத் தெருவில் எத்தனை கார் உடைபட்டுச் சாமான் கள் களவாடப் படுகின்றது என்று தெரியுமா? எத்தனை வீடுகளில் ஜன்னல்கள் உடைபடுகின்றன என்று தெரியுமா. பூனை பற்றி நாங்கள் கவலைப் படவேண்டுமென்கிறாய். எங்களிடம் எங்கள் உதவி கேட்டு வருபவர்களுக்கே பதில் சொல்ல நேரமில்லை. நீ ஏதோ பெரிய பூனை பற்றிச் சொல்ல வந்து விட்டாயே என்று கேட்டான் அந்த இன’ வாதப் போலிஸ்காரன்” பரீதா திட்டித் தீர்த்தாள்.
பூனையின் படத்தை தெரு மூலையில் கடை வைத்திருக் கும் திரு ரஞ்சித் பட்டேலிடம் கொடுத்திருப்பதாகவும் அவள் அதைத் தன் கடையில் வருபவரிடம் காட்டி பூனை பற்றிய தகவல்களைச் சொல்வதாகவும் சொன்னாள்.
இடது பக்க வீட்டு சிந்தியாவிடம். பரீதாவின் இளம் பூனையைப் பற்றிய விடயத்தைச் சொன்னேன்.
“இருட்டில் அவள் மகளுடன் உன் வீட்டுத் தோட்டத் தில் முத்தமிடும் கள்ளக் காதலனிடம், பூனைக் குட்டியைப் பற்றிக் கேட்டுச் சொல்” என்றாள் சிந்தியா. கலியாணம் நிட்சயமாகியும் பரீதாவின் மகள் காதலனுடன் கொஞ்சு வது சிந்தியாவுக்குப் பிடிக்கவில்லை. என் வீட்டில் பின் பக்கத்துத் தோட்டத்தில் தன் வீட்டு மதில் ஏறி (தேவ

Page 10
14 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஞானிக்கு முதல் இது நடந்தது) காதலனுடன்(?) கொஞ்சும் பரீதாவின் மகள் பற்றி நான் அக்கறை எடுக்கவில்லை என்பது சிந்தயாவின் குற்றச் சாட்டு.
பரீதா தன் மகளின் எதிர்காலக் கணவன் மகளைப் பார்க்க வரும்போது தனக்கு ஒவ்வொரு கிழமையும் செலவுக்கு பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறாள்.
அப்படியானால் அவள் மகளை இருட்டில் தடவுவது யாராயிருக்கும் என்பது எனக்குந் தெரியாது. அதிலும் என் வீட்டுத் தோட்டத்தைத் தங்கள் சொர்க்க பூமியாக்கு வதும் எனக்கு எரிச்சல் வந்தது. எரிச்சல் பரீதாவின் மகளுக் குக் காதல் இருப்பதைப் பற்றியல்ல. பதினாறு வயதில் காதல் வராமல் எந்த வயதில் வருமாம். ஆனால் அவர்கள் எனது அருமையான "கமிலியாச் செடியைத் தங்கள் அணைப்பில் சேர்த்துத் துவம்சம் செய்தது அடியோடு பிடிக்கவில்லை.
இந்த இரவுக் காதல் பற்றி என்ன செய்யலாம் என்று என் பையன்களிடம் ஆலோசனை கேட்டபோது “வை டோன்ட் யூ மைன்ட்யுவர் ஒன் பிசினெஸ் அம்மா” என்று ளைய மகன் கேட்டான். அவனுக்குப் பதினேழுவயது. “சுதந்திரக்" கருத்துக்களில் நம்பிக்கையுள்ளவன். பெரிய மகன் சொன்னான் பிரிட்டிஷ் சட்டத்தின்படி பதினாறு வயதில் பெண்கள் காதல் செய்யலாம் என்றான். அடுத்த வீட்டார் தோட்டத்திலா? நான் எரிச்சல் பட்டுக் கொண் டேன். கடைசி மகன் அண்மையில் அடுத்த வீட்டில் (பரீதா வீட்டில்) அவள் மகனுக்கு அவளின் தமயன் அடித்ததைத் தான் கேட்டதாகச் சொன்னான்.
மகளின் காதல் தெரிந்த தமயன் வெடித்தானா? பரீதா வீட்டில் இல்லாத போது, ஒரு நாள் பெரிய அலறல் கேட்டது. “யூ பிச் வை டிட் யூ டு இற்” என்று பரீதாவின் மகன் ஒருத்தன் பரீதாவின் மகளை அடிப்பதும் அவள் அலறுவதும் கேட்டது. சத்தம் சிந்தியாவுக்கும் கேட்டிருக்க வேண்டும். “பூனை மதிலேறி ஓடி விட்டதாகப் பரீதா

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் * 15
ஒப்பாரி வைக்கிறாள். மகள் ஏறிப் பாயும் போது ஏன் தெரியாதாம்”
சிந்தியாவுக்கு மறுமொழி சொல்லவில்லை நான்.
ஒரு சில தினங்களின் பின் ஒரு இரவு, பூரணை இரவு, லண்டன் தண்ணிலவில் குளிர்த்துக் கொண்டிருக்கும் போது தேவதைபோல் பரீதா முக்காடுடன் கதவைத் தட்டினாள்.
திருவாளர் பட்டேல் தன் பூனை” இருக்குமிடத்தைக் கண்டுபிடித்ததாகச் சொன்னதாகச் சொன்னாள். திரு வாளர் பட்டேல் மிக நல்லவர். பெண்களில் மிக “அக்கறை” கொண்டவர். அழகாகச் சிரிப்பார். “நல்ல விடயம்” என்றேன்.
“மிகக் கெட்ட விஷயம்" பரீதா குமுறினாள். எனக்கு விளங்கவில்லை.
"உனக்குத் தெரியுமா, என் பூனை முன் வீட்டுப் பக்கம் விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பக்கத்தில் காரில் வந்த ஒருத்தி எனது செல்லப் பூனையைக் களவாடிக் கொண்டு போய் விட்டாள். அதைப் பார்த்த ஒருத்தர் திரு. ரஞ்சித் பட்டேலிடம் விஷயத்தைச் சொல்லியிருக் கிறார்.” எங்கள் தெருவில் எதுவும் ரகசியம் பண்ண முடியாது என்று எனக்குத் தெரியும்.
“பூனை எங்கேயிருக்கிறது என்று தெரிந்தால் போய்க் கேட்பதுதானே” குழப்பத்துடன் நான் கேட்டேன்.
“அங்கேதான் சங்கடம். அவள் வீட்டுக்குப் போய்க்
கதவைத் தட்டினால் மூன்று நிறத்தில் மனிதர்கள் என்னைத் தாறுமாறாகப் பேசுகிறார்கள்”
பரீதா வெடித்தாள். பல இன மக்களை ஒரே நேரத்தில் பார்த்த பயம் முகத்தில் பரவிக் கிடந்தது.
“மூன்று நிறமா.”

Page 11
16 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"ஆமா, அவள் வெள்ளைக்காரி, அவளுடன் இருந்த இளைஞன் அவள் மகனாய் இருக்க வேண்டும், நீலக் கண்ணும் வெளுப்பு நிறமுமாக இருந்தான். மற்றவன் அவனின் தோளைத் தடவியபடி இருந்தவன் காதலனாக இருக்க வேண்டும். அவன் கறுப்பன், தடியன், என்னை முட்டாள் என்று பேசினான். பூனை தொலைந்தால் இடியட் பிச் என்று பேசலாமா?” பரீதா பெண்மை சிலிர்க்க கேட்டாள்.
“இப்போது என்ன பண்ணப்போகிறாய்”
“போலிஸாரிடம் போனேன். தாங்கள் நேரமிருந்தால் இது பற்றி விசாரிப்பதாகச் சொன்னார்கள். எனது பூனை எங்கேயிருக்கிறது என்று தெரிந்ததும், ஒரு அக்கறையும் எடுக்காமல் இருப்பது இனவாதம் தானே” அவள் வெடித்தாள்.
கொஞ்ச நாளைக்கு முன் வழிப்பறி செய்து காசு பிடுங்கும் சில கறுப்பர் எனது கடைசி மகனைக் கண்ட மாதிரி உதைத்து விட்டார்கள். நான் போலிஸாரிடம் போனபோது இரண்டு அல்பங்களைத் தந்தார்கள். இவர்கள் தான்” இந்த வட்டாரத்தில் கைதேர்ந்த கேடிகள், இவர்களில் உன்ன யார் உதைத்தார்கள்” பொலிஸார் என் மகனைக் கேட்க “அவர்கள் மூக்கிலும் முகத்திலும் குத்தி விழுத்தி வயிற்றில் உதைத்தார்கள். அவர்களின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான். முகத்தில் குத்தி வழிப்பறி செய்பவன் முகவரியா கொடுத்து விட்டுப் போவான்? “வெள்ளைக் காரர்கள் என்றால் இப்படிச் சொல்வார்களா" பரீதா தன் அபிப்பிராயத்தை அன்று சொன்னாள்.
அதே கால கட்டத்தில் சிந்தியாவின் மூத்த மகள் மிக விலையுயர்ந்த கார் வைத்திருப்பவள். ஆங்கிலேயப் பெண் மணி. ஆனாலும் இந்தக் கார் திருட்டுப் போன கார் என்று சொல்லி அவளை ஒரு நாள் முழுக்க ஸ்ரேசனில்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ふ 17
வைத்திருந்தார்கள். தாங்கள் செய்தது தவறு என்று தெரிந்ததும் மன்னிப்புக் கேட்டார்கள்.
எனது மரியாதையைக் கெடுத்தவர்களைச் சும்மா விடப் போவதில்லை என்று எடை குறைப்பதில் தன் வாழ்க் கையை அர்ப்பணித்திருக்கும் சிந்தியாவின் மகள் எகிறிக் குதித்தாள். போலிஸார் பற்றி மேலிடத்திற்குப் புகார் செய்தாள்.
“எனக்கு உதவி செய்வாயா” குரலில் கெஞ்சல், தண் ணொளி நிலவில் தனியாக நின்று என்னிடம் பரிந்தாள் பரீதா.
உதவி செய்யா விட்டால் விடமாட்டாள் போலும். “என்ன பண்ணணும்"
“அந்த வெள்ளைக்காரி வீட்டுக்கு வந்து அந்தப் பூனையை வாங்கித்தா” ሎ
எத்தனை பெரிய எதிர்ப்பார்ப்பு இது? "உன்னால் முடியாதது, திருவாளர் பட்டேலால் முடி யாதது, பொலிஸாரால் முடியாதது என்னால் முடியும் என்று என்னவென்று எதிர் பார்க்கிறாய்.”
ஆச்சரியத்துடன் கேட்டேன். “உம். நீ வெள்ளைக்காரிகளுடன் வேலை செய்பவர். அவர்களுடன் நன்றாய்ப் பேசுவாய்”
பரீதாவின் எதிர்பார்ப்பு யதார்த்தமற்றதாகத் தெரிந்தது. “எதற்கும் அந்த வெள்ளைக்காரியுடன் போய்ப் பேசிப் பார்” என்று நழுவி விட்டேன். குறும்புத் தனமாய் ஒடித் திரிந்து தொலைந்து போன நாஸரில் கோபம் வந்தது.
அடுத்த இரவு இந்தப் பூனை விடயத்தை முழுக்க மறந்தவளாக நான் டி.வி. நிகழ்ச்சியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தேன்.
இ.கா.-2

Page 12
18 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
முன் கதவில் யாரோ தட்டினார்கள். டி.வி. நிகழ்ச்சியை, பூசை வேளையில் கரடியைப் போல் யார் குழப்புகிறார்கள் என்ற எரிச்சலுடன் வந்தேன்.
முக்காட்டு மறைவைத் தாண்டி ஆயிரக் கணக்கான பெறுமதியான நகைகள் குலுங்க (பரீதா எப்பவும் நிறைய நகை போட்டிருப்பாள். ஏழை என்று சொல்பவள். கழுத்தில் கிடக்கும் நகை மட்டும் ஐயாயிரம் பவுண் வெகுமதி யானவை என்று சொல்லியிருக்கிறாள்) நின்று கொண்டிருந்தாள்.
“பிளிஸ். அவள் அடுத்த தெருவிற்தான். இருக்கிறாள். ஒரு நடை நடந்துவிட்டு வருவோம்.”
“வேலையால் ரொம்பவும் களைத்துப் போய் வந்திருக் கிறேன்.” நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்போது கார் ஒன்று வீட்டு முன் நின்றது.
உயர்ந்த நெடுப்பான உருவம். காரால் இறங்கிய பெண் எனக்குத் தெரிந்தவள்.
“ஹலோ ஆஞ்சலா" நான் ஆச்சரியத்தில் கூவி விட் டேன். வந்த பெண்மணி என்னையும் பரீதாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“ஹலோ ராஜி, நீ இந்தப் பக்கம் இருக்கிறாயா” அவள் குரலிலும் என்னைப் போல ஆச்சரியம்.
பரீதா இப்போது எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
"உனக்கு இந்த வெள்ளைக்காரியைத் தெரியுமா” பரீதா ரகசியம் பேசுவதுபோற் கேட்டாள். "இருவரும் ஒரு காலத்தில் ஒன்றாய் வேலை செய்த வர்கள்” நான் சொல்லி முடிக்க முதல்,
"இவள்தான் என் பூனையைக் களவாடியவள்" பரீதா ஆத்திரத்துடன் கூவினாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 19
"ஏய் வாயை அடக்கிப் பேசு. அனாதையாய் ரோட்டில் திரிந்த பூனைக் குட்டியை அன்பாக நான் பாதுகாக் கிறேன்” ஆஞ்சலா வெடித்தாள்.
“என்ன அனாதைப் பூனை என்கிறாய். என் முன் வீட்டில் விளையாடிய பூனை”
“உன் முன் வீட்டிலல்ல, தெருக்கோடியில் அனாதை யாக நின்றது.”
துறுதுறுவென்ற அந்தப் பூனைக் குட்டி தெருக்கோடி வரைக்கும் போயிருக்கும். அது யாராலும் மறுக்க முடியாது. "நான் போலிஸாரிடம் போனேன். அவர்கள் உன்னைச் சும்மா விடப் போவதில்லை”.
பரீதா அழத் தொடங்கி விட்டாள். பொல்லாத மெளனம். வெண்ணிலாவும் மேகத்தில் முகத்தை மறைத்துக் கொண்டது.
“அது பற்றித்தான் உன்னிடம் பேச வந்தேன்.” ஆஞ்சலாவின் குரலில் தணிவு.
“போலிஸார் வீட்டுக்கு வந்தார்கள்." ஆஞ்சலா சொல்லி முடிக்க முதல் “அப்படியானால் எனது பூனையை என்னிடம் கொண்டு வருவதுதானே"
“.” ஆஞ்சலாவிடமிருந்து பதில் இல்லை. “என்ன கறி செய்து சாப்பிட்டு விட்டாயா" பரீதா அதிர்ந்தாள். ஆஞ்சலா முறைத்துப் பார்த்தாள். ஆஞ்சலாவுக்குப் பூனைக் கறி பிடிக்கும் என்று நான் நம்பவில்லை, அவளு" டன் நான் வேலை செய்த காலத்தில் மிகவும் ஆசாரமான வெஜிடேரியன்' அவள் காதலி கரலைன் இறுக்கமாக இறைச்சி வகைகளுடன் இணையும் போது இவள் அவளை அருவருப்பாக அவதானிப்பதைக் கண்டிருக்கிறேன். காதலுக்கும் கத்திரிக்காய் குழம்புக்கும் வெகுதூரம் என்று ஆஞ்சலா, கரலைன் காதல் விவகாரத்தில் புரிந்தது. “கர

Page 13
2O 8 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
லைன் எப்படியிருக்கிறாள்” மனதில் வந்ததை அப்படியே கேட்டு விட்டேன்.
ஆஞ்சலாவின் புருவங்கள் உயர்ந்தது. நிலவு வெளிச்சத் தில் மங்கலாகத் தெரிந்தது.
“என் பூனையை என்ன பண்ணினாய்" பரீதா அம்பை ஏந்திக் கொண்டு சண்டைக்கு வந்த ராணி போல் (நிறைய நகையணிந்த) தெரிந்தாள்.
“ஏன் இருவரும் உள்ளே வரமுடியாது?’ நான் கதவைத் திறந்து விட்டேன். தெருவில் இரு பெண்கள் அடிபட்டுக் கொள்வதை விரும்பவில்லை. “அந்தப் பூனை என்னிட மில்லை”.
செற்றியில் (சோபாவில்) உட்காரும்போது ஆஞ்சலா முணு முணுத்தாள்.
“அதுதான் கேட்டேனே, சமைத்துச் சாப்பிட்டு Gil Lstuun”
“ஆஞ்சலா வெஜிடேரியன்” இது என் முணு முணுப்பு.
“போலிசார் வந்து நான் ஏதோ பூனைக் கொள்ளைக் காரி மாதிரி வீடெல்லாம் தேடினார்கள்” ஆஞ்சலா போலி சாரிடம் கோபப் பட்டாள்.
“அட, என் பூனையைத் தேட அவர்களுக்கு நேரம் கிடைத்ததா.”
தன் பூனைக்காகப் போலிஸார் எடுத்துக் கொண்ட சிரமத்தில் பூரித்துப் போனாள் பரீதா.
“பூனை." ஆஞ்சலா தயங்கினாள். "நாஸருக்கு என்ன நடந்து." பரீதா துடித்து விட்டாள்.
ஆஞ்சலாவுக்குப் பூனையின் பெயர் நாஸர் என்று கண்டு பிடிக்க ஒரு சில கணங்கள் எடுத்தன.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 21
“ம். எனது சினேகிதியின் குழந்தை மிகவும் சுமவீனமாக இருக்கிறாள், அவளுக்குப் பூனைக் குட்டி விருப்பம் அதனால.”
“நாஸரைத் தானம் பண்ணினாயா." பரீதா கத்தினாள்.
"அந்தப் பூனையும் அந்தச் சிறு பெண்ணுடன் ஒட்டிக் கொண்டது.”
“எனக்கு அதைப் பற்றித் தெரியாது. எனக்கு என் பூனை தேவை"
"பூனை. ஆஞ்சலா இழுத்தாள். பரீதா எரித்து விடுபவள் போல் ஆஞ்சலாவைப் பார்த்தாள்.
“பூனை” ஸ்கொட்லாந்துக்குப் போய் விட்டது.” “எனது சினேகிதி குடும்பம் ஸ்கொட்லாந்துக்குக் குடி பெயர்ந்து விட்டார்கள்” பரீதா விசுக்கென்று எழுந்தாள்.
எனக்குக் குட்பை கூடச் சொல்லவில்லை. கதவைப் பட்டென்று சாத்தி விட்டுப் போனாள். போகும்போது. “எப்படியும் நான் நாஸரை எடுப்பேன். பொலிஸார் என் பூனையை எப்படியும் கண்டு பிடிப்பார்கள்” என்று இரைந்து விட்டுப் போனாள்.
“இப்படியெல்லாம் நடந்ததற்கு மன்னிக்கவும் அந்தப் பூனையை அடிக்கடி ரோட்டுக் கரையிற் பார்த்திருக் கிறேன். அனாதைப் பூனையாக இருக்கலாம் என்று நினைத்துத்தான் கொண்டுபோனேன்.”
ஆஞ்சலா உண்மையைச் சொல்கிறாள் என்று தெரிந்தது. பரீதாவுக்கு பூனையிலுள்ள வாஞ்சை பற்றிச் சொன்னேன்.
“புரிகிறது ஆனால் நானாக அவள் வீட்டுக்கு வந்து பூனை திருடினேனா. அனாதைப் பூனை என்றுதானே
எடுத்தேன்’

Page 14
22 «Х» இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“கரலைன் என்ன சொன்னாள்.”
கரலைனும் ஆஞ்சலாவும் இணைபிரியாக் காதலிகள். அந்தக் காலத்தில் எங்கள் ஆபீஸில் தனித்தும் காண முடியாது. இரு பெண்களுக்கிடையே இப்படி ஒரு காதல் இருக்க முடியுமா என்று மற்றவர்கள் வியக்கத் தக்கதாக அவர்கள் காதல் மிளிர்ந்திருக்கிறது.
ஆஞ்சலா முன் ஒரு காலத்தில் திருமணமாகி ஒரு பைய னுக்குத் தாயானவள். ஒரு கறுப்பு மனிதனைக் கல்யாணம் செய்து அவனுக்கு. இவளில் சந்தேகம் வந்ததால் வந்த சண்டையில் அவன் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக எங்களுக்குச் சொல்லியிருக்கிறாள்.
“கரலைன்." ஆஞ்சலா தயங்கியனாள்.
- “இன்னும் ஒன்றாத்தானே.” சட்டென்று எனக்குப் பரீதா சொன்ன மூன்று நிற மனிதர்கள் ஞாபகம் வந்தது. பழுப்பு நிறத்துடன் நீலக் கண்களுடனிருந்தவன் இவள் மகனாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் "பிச்” என்று பேசிய கறுப்பு மனிதன்?
“ராஜி. நான் கரலைனுடனில்லை நான் இப்போது மார்க் என்பவனைத் திருமணம் செய்திருக்கிறேன்” பரீதா வைத் திட்டிய இவளின் காதலன் பெயரா மார்க்? ஆஞ்சலா அவசரமாகச் சொன்னாள்.
கரலைனின் காதலுக்கு என்ன நடந்தது.
“நான் உண்மையாக "லெஸ்பியன்' இல்லை. என் கணவ னில் (முதல்) உள்ள ஆத்திரத்தில் ஆண்களிலேயே ஆத்திர மும் வெறுப்புமாக இருந்தது. அந்த நேரத்தில் கரலைனுடன் தொடர் பாக இருந்தேன்” ஆஞ்சலா சொல்லிக் கொண் டிருந்தாள்.
பரீதா இவள் பூனைக் கள்ளியில்லை என்பதை நம்பப் போவதில்லை. அதே போல் இவள் “லெஸ்பியனில்லை” என்பதை நம்ப வேண்டும் என்று அவள் எதிர் பார்ப்பது போலிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 8 23
மார்க். அதுதான் உன் கணவர்.”
“ஒரு ஹொலிடேய் போயிருக்கும்போது சந்தித்தேன். சுவாரசிய மென்னவென்றால் அந்த ஹொலிடேய் கரலைன் இல்லாமல் தனியாய்ப் போன ஹொலிடேய் மார்க்கின் சந்திப்பு கிடைத்தது.” குரலில் மகிழ்ச்சி.
எனக்கு என்னவோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக் கப் பிடிக்கவில்லை. பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.
“தேனிர் தந்ததற்கு நன்றி” அவள் எழுந்தாள்.
மார்க் தன்னைத் தாறுமாறாக இடியட் பிச்" என்று திட்டியதாக பரீதா சொன்னதை இவளிடம் கேட்கலாமா என்று ஒரு கணம் சிந்தித்த பின் அதைக் கேட்க வேண்டாம் என்று மனம் சொல்லியது.
கதவு வரையும் வந்த என்னிடம், “என்னை என் கணவருடன் சந்தித்தால் நான் லெஸ்பியனாக இருந்ததைத் தயவு செய்து சொல்லிவிடாதே."
பழைய சரித்திரத்தைப் புதைத்து விட்டாள்! அவள்
மார்க்-ஆஞ்சலா அன்பை நான் வெட்ட வேண்டும். அடுத்த நாள் பரீதா முக்காட்டுக்குள்ளாக என்னைப் பார்த்து முறைத்தாள்.
நாலரைத் ‘திருடியவனிடம் நான் சினேகிதமாகப் பேசியது பரீதாவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. ஆஞ்சலா எப்படி எனக்குப் பழக்கம். அவளின் வாழ்க்கை எப்படியானது என்று நான் பரீதாவுக்குச் சொன்னால் பரீதா என்ன பண்ணுவாளோ தெரியாது.
அதேபோல மதில் ஏறி மறைந்து நின்று என் வீட்டுத் தோட்டத்தில் மாய விளையாட்டு நடத்தும் அவள் மகளைப் பற்றியும் நான் சொன்னால் பரீதா என்ன பண்ணுவாளோ தெரியாது. “நாஸர்" தொலைந்ததால் தெரியவந்த உண்மைகள் என்னுடனிருக்கட்டும்.

Page 15
2. முதலுறவுக்கு அடுத்தநாள்
LTவம் அந்த மாடு! சூடு தாங்காமல் அலறிக் கொண்டிருக்கிறது. அதன் கால்களைக் கட்டிவைத்திருக்கிறார்களா? அல்லது கழுத் தில் கயிறு மாட்டி மரத்துடன் பிணைத்திருக்கிறார்களா? அந்த மாட்டுக்குச் சொந்தக்காரர் தன் உரிமையை நிலை நாட்ட அந்த மாட்டுக்குக் குறிபோட்டுக் கொண்டிருக் கிறார்.
இந்த மாட்டின் வேதனையைப் புரிந்ததோ இல்லையோ மற்ற மாடுகள் வைக்கோல்களை மென்றபடி இந்தக் கோரக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தன. V−
பட்டியில் அடைபட்டிருக்கும் மாடுகளைப் பராமரிக் கும் மனிதன் அலறும் மாட்டை அன்புடன் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
மாட்டின் கதறல் காதைப் பிளக்கிறது. மாட்டின் தோளில் கருகிய நெருப்பின் நாற்றம் மூக்கிலடித்தது.
விமலா திடுக்கிட்டுக் கண் விழித்தாள். எத்தனை விசித்திரமான கனவு மூக்கில் இன்னும் கருகிப் பொசுங்கிய தோலின் நாற்றமடிப்பது போலிருந்தது. உடம்பு வியர்த்துக் கொண்டிருந்தது. இலையுதிர்காலக் காற்றின் வேகம் இருளைத் தாண்டி வந்து ஜன்னலைத் தட்டிக் கொண்டிருந்தது. திரும்பி நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை நான்கு மணியாகிக் கொண்டிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 令25
ஜன்னல் திரைகளையகற்றிவிட்டு உலகத்தைப் பார்த் தாள். வானத்தில் நிறைய நட்சத்திரங்கள். லண்டனில் குளிர்காலத்தில் நட்சத்திரங்களைக் காண்பது அரிது.
ஒரு சில வருடங்களிற்கு முன்னால் இந்தியாவில் அடையாற்றில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தபோது மூன்றாம் மாடியில் குடியிருப்பின் மொட்டைமாடியில் இரவின் தனிமையில் பாயில் படுத்துக்கொண்டு கைக்கு எட்டுமா என்று கற்பனையில் நட்சத்திரங்களை எண்ணிய ஞாபகம். தென்றலில் தள்ளாடிய தென்னோலை போல் அவள் நினைவில் அசைந்தது.
உலகம் நிச்சயமாய் உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டில் ஐந்து மனிதர்கள். அவர்களில் யாருக்காவது இந்தமாதிரிக் கனவு வந்திருக்குமா?
அப்பாவின் முகத்தில் எப்போதும் ஒரே சிந்தனை. இரு பெண்களுக்கும் ஒரு பையனுக்கும் கல்யாணம் செய்து வைத்த பொறுப்புகளின் பாரம் கண்களில் தேங்கி நிற்பது போலிருக்கும். வீட்டில் அம்மா எப்போதும் கடவுளில் பாரத்தைப் போட்டுவிட்டுச் சமயலறைக்குள் தன் வாழ்க் கையை ஒடுக்கிக்கொள்வாள்.
நாற்பது வருடகால சீவியத்தில் அப்பாவிடம் சொல்லி எத்தனை செட் புதுச்சட்டிப்பானைகளை வாங்கியிருப் Liftait P
ஸ்டெய்ன்லஸ் பாத்திரங்கள் அவளுக்குப் பிடிக்கும். குறைந்தது பத்து வருடங்களாவது பாவிக்கும் என்று தன் சிநேகிதிகளுக்குச் சொல்வாள்.
சிநேகிதிகள்! அம்மாவின் சிநேகிதிகள் விமலாவிற்கு
முந்தின தலைமுறையினர் ஆண்களின் பார்வையில் உலகத்தைக் காண்பவர். விமலாவின் ஆபிஸ் சிநேகிதர் களுக்கும் அம்மாவின் அடுப்படிச் சிநேகிதிகளுக்கும்தான் எத்தனை வித்தியாசம்!

Page 16
26 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அம்மாவின் சிநேகிதிகள் ஒரு தலைமுறை கடந்தவர் 56 is இருப்பதால் வித்தியாசமானவர்கள் என்று அவளுக் குத் தெரியும்.
அம்மாவின் தலைமுறையினர் அப்பா போல் ஆண் களுக்காக வாழ்ந்து அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆபிஸ் சிநேகிதி மஞ்சுளா சொன்னாள்.
மஞ்சுளா பட்டேல் லண்டனில் பிறந்து வளர்ந்த இந்தியப் பெண். இந்தியப்பெண்ணா அல்லது இந்தியத் தாய்தகப்பனுக்குப் பிறந்த பிரிட்டிஷ் ஆசியப் பெண்ணா? என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்பவள். விமலா புரண்டு அடுத்த பக்கம் படுத்தாள்.
நிசப்தம்! பக்கத்துவீட்டு நாய் எப்போதாவது குரைக்கும். அதுகூடக் குரைக்கவில்லை. அந்த நாய்க்கும் ஏதாவது பயங் கரக் கனவு வந்து நித்திரை குழம்பியிருக்காதா? வீட்டி லுள்ள அம்மா அப்பாவைவிடத் தம்பிமார் இருவரும் தங் கள் புதுக்கார்களில், அல்லது புது மாடல் கம்ப்யூட்டர் களில் உலகத்தைக் காண்கிறார்கள்.
அம்மாவின் அன்பு அவர்களில் அளப்பரியச் சொரியும். பெரிய தம்பியை ஒரு பெரிய இடத்திலிருந்து மாப்பிள்ளை கேட்டு வந்தார்களாம்.
அம்மா தன்னுடைய பளபளக்கும் பாத்திரங்கள் போல் பளிச்சென்ற சிரிப்புடன் இவளுக்குச் சொன்னாள். பெரிய இடத்து மருமகளின் எவர்சில்வர் பாத்திரங்கள் அம்மா வுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கும். "உனது கல்யாணம் முடிந்தால் மளமளவென்று தம்பிகளையும் கரையேற்றிவிட வேண்டும்.”
கரையேற்றுவதா? நாங்கள் என்ன ஏதோ வெள்ளத்தில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறோமோ?
விமலா அடுத்தப்பக்கம் திரும்பி இருளில் பளிச்சிடும் அலாம்குளோக்கைப் பார்த்தாள். காலைநான்கு முப்ப தாகிக்கொண்டிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 27
நித்திரை இனிவராது. வருவதும் அவளுக்கு விருப்ப மில்லை. இன்னொருதரம் அந்தக் கனவைக் காண அவள் தயாராகவில்லை.
ஆபிஸ், அது வேறொரு உலகம். கமலா இவளை ஏறத் தாழ பார்த்தாள். கமலா இன்னும் நடுத்தரவயசுப் பெண் மணி. விமலாவுடன் வேலை செய்பவள்.
என்ன அப்படிப் பார்க்கிறாய்? கமலாவின் பார்வை யைக் கடந்துகொண்டு படியிறங்கிக் கொண்டிருந்தாள்.
"விமலா. வேலையை விடுகிறாய் என்கிறாயே. யோசித் துத்தான் செய்கிறாயா” கமலா இவளின் வேகத்திற்குப் பின்தொடர்ந்தாள். கமலாவின் குரலில் உண்மையான கரிசனம். விமலாவுக்குத் திருமணமாகப்போவதும், அவள் வேலையை விடுவதும் பல சிநேகிதிகளுக்குத் தெரியும். கமலாவுக்கு தெரியாமற் போனது ஆச்சரியமே.
"அவருக்கு நல்ல வேலை. நான் ஏன் வேலை செய்ய வேண்டும்? என்று அவர் அம்மா கேட்கிறாராம்.”
விமலாவின் குரலில் சந்தோசமா அல்லது தர்மசங்க டமா தெரியவில்லை.
ஏ. கல்யாணப் பெண்ணே. இன்னும் எத்தன்ன நாளுக்கு இந்த ஒட்டமும் நடையும். ஏதோ மகாராணி மாதிரி அவர் உழைப்பில் உல்லாசமாக இருக்கப் போகிறாய்.”
சிந்தியாவின் குரலில் போலிப் பொறாமை. "அதுவிருக்கட்டும். எப்போது "ஹென் நைட்" வைப்பது” ஜனட் சேர்ந்து கொண்டாள்.
கமலாவுக்குப் புரியவில்லை. கமலாவுக்கு இந்தப் பெண்மணியைவிட வயதுகூட, அத்துடன் ஆங்கிலச் சம்பிர தாயங்கள் பற்றித் தெரியாது.

Page 17
28 令 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"என்னது ஹென்நைட்' கமலாவின் அப்பாவிக் கேள்வி அப்போதுதான் வந்து ஹிலரியின் காதில் பட்டது.
'ஒ. கமலா நீ எவ்வளவு இன்னசன்ட்டாக இருக்கிறாய். கல்யாணம் என்ற பொறுப்பான வாழ்க்கைக்குள் காலடி எடுத்துவைக்கமுதல் சுதந்திரமாக ஆடிப்பாடி அல்லது குடித்துக் கும்மாளமடிக்கும் ஒரு சுதந்திர நாள். நீயும் கட்டாயம் வரவேண்டும்.
y
“ஐயைய்யோ.” கமலாவின் அலறல் முடிய முதல் “என்ன உன்னுடைய அவர்விட மாட்டாரா” மஞ்சுளா பட்டேல் பட்டென்று கேட்டாள்.
கமலாவின் முகம் சுருங்குவதைப் பார்க்க பாவமாக
"நீங்கள் எல்லாம் இளம்பெண்கள்.” கமலா சமாளிக்கப் பார்த்தாள்.
“எங்கே ஹென்நைட் வைக்கலாம்?” ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கிளப்பின் பெயரையும், பாரின் பெயரையும் சொல்லிக்கொண்டுவந்தார்கள்.
விமலா அங்கே வேண்டாம் இங்கே வேண்டாமெனத் தட்டிக் கழித்துக்கொண்டிருந்தாள்.
"ஏய் விமலா உனக்கு வெளியில் போகவிருப்பமில்லை அப்படித்தானே.?” நறுக்கெனக் கேட்டாள் வேர்ஜினியா, அம்மாவிடம் ஹென்நைட் போக எவ்வளவு உபத்திரப்பட வேண்டுமென்று விமலாவுக்குத் தெரியும்.
அத்தனைப்பேரின் முகங்களும் விமலாமேல் திரும்பின. எத்தனையோ சோடிக்கண்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்காமல் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
“எங்களையும் இந்த அனுபவங்களையும் ஒருநாளைக்கு நினைத்துப் பார்ப்பாயா?” அப்போதுதான் அவ்விடம் வந்த உஷா மற்றவர்களுடன் சேர்ந்து விமலாவை குறும்பு செய்யத் தொடங்கினாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 29
ஸ்டாவ் ரூம் இந்தப் பெண்களின் கும்மாளத்தில் அதிர்ந்தது. கூட்டித் துடைக்கும் கொலின் என்ற ஆப்பிரிக்க இளைஞன் என்ன இந்த ஆரவாரம்; தலையைச் சொறிந்த படி எட்டிப்பார்த்தான்.
மதிய உணவு முடியும் நேரமானதால் சுமார் நூறு பேர் ஒரேயடியாய் இருந்து சாப்பிடக்கூடிய அந்த இடம், இந்த ஏழெட்டுப் பெண்களின் ஆதிக்கத்தில் அதிர்ந்து கொட்டியது.
“பொருத்தமெல்லாம் பார்த்தாயிற்றுதா ?” கமலா முணுமுணுத்தாள்.
கமலாதான் அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் வயசு வந்த பெண்மணி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். ஆங்கிலப் பெண்களின் பழக்கவழக்கங்கள் சிலவேளை தர்மசங்கடப் படுத்துகிறது என்பதை யாரும் புரிந்துகொள்ளலாம். டைப்பிஸ்டாக இருக்கிறாள்.
பப்ளிக் ஹெல்த் டிபார்மென்டில் ரிசேர்ச்சராக வந் திருக்கும் வேர்ஜினியா மிகவும் துடுக்கானவள். ஆங்கிலப் பெண்கள் அளந்துதான் வார்த்தைகளைக் கொட்டுவார்கள். உம், அது வேர்ஜினியாவிடம் நடக்காது. பிரிக்ஸலில் பல இனமக்களுடன் வாழ்ந்த பழக்கமாகவிருக்கலாம்.
“என்ன பொருத்தம்” ஹிலரி தக்காளிப்பழத்தைக் கடித்தபடிக் கேட்டாள். மஞ்சுளா பட்டேல் கணுக்கென்று சிரித்துவிட்டாள். விமலா எப்போது இந்த இடத்திலிருந்து தப்புவோமென்று தவிப்பது முகத்தில் தெரிந்தது. ஆனாலும் அந்தப் பெண்கள் ஹென்நைட் பாட்டி வைப்பதில் மிக வும் அக்கறையாகவிருந்தார்கள்.
"விமலாவுக்குப் பார், கிளப் ஒன்றும் பிடிக்காவிட்டால் என் வீட்டில் பார்ட்டியை வைத்துக்கொண்டால் போயிற்று" சிந்தியா எல்லோரையும் பார்த்துச் சொன் னாள். பலர் அந்தத் திட்டத்தை ஆதரித்தனர். கூட்டம்

Page 18
зо «» இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
கலைந்தது. கல்யாணப் பெண்ணான விமலாவுக்கு தலை யிடித்தது.
விமலா பார்டிக்கு போவது அம்மாவுக்குப் பிடிக்க வில்லை. "கல்யாண வேலைகள் எத்தனையோ கிடக்கு. அதைப் பாராமல்.’ அம்மாவின் அதிருப்தி வார்த்தை களில் தடக்கிக் கொட்டுப்பட்டன.
"இனி அவர்களை எங்க சந்திக்கப் போகிறேன். அதுவும் நான் இனி லண்டனில் இருக்கப்போவதில்லை.”
இதைச் சொல்லும் போது தொண்டையில் ஏதோ சிக்கிய சங்கடம். இருபத்தியொன்பது வயதில் சுமை. துண்டிக்கப்படப் போவதையுணர்ந்த தவிப்பு குரலில் படர்ந்திருந்தது. "பேர்மின்காம் என்ன சந்திரமண்டலத் திலா இருக்கு?”
அம்மா அப்பாவிதான். கல்யாணமாகி பேர்மின்காம் போவதைமட்டும் விமலா குறிப்பிடவில்லையென்று தெரியாத அம்மா. வாழ்க்கையில் சட்டென்று ஏதோ வொரு தடை விழுந்த பயம்.
கனவில் வந்த மாட்டின் அலறல் தூரத்தில் கேட்பது போலிருந்தது. "கெதியாய் வரப்பார்” அம்மாவின் அரை குறையான சம்மதம் விமலாவால் புரிந்துகொள்ள முடிந்தது.
அம்மாவின் கல்யாணத்தின் போது அவள் ஹென் நைட் பார்டிக்கு போவதைக் கற்பனையும் செய்திருக்க முடியாது. அலங்காரப் பொம்மையாய், கல்யாணச்சந்தை யின் காட்சிப் பொருளாய் அவள் பிரதிபலித்திருப்பாள். நாற்பது வருடத்திற்கு முன் காஞ்சிபுரம் சரசரக்க, நகை யின் கனத்தில் ஞானத்தின் சிவப்பில் அவள் பூரித்திருக் கலாம். அதிலும் அப்பா அம்மாவை கோயிலில் கண்டு காதல் வயப்பட்டவராம்.
“மாப்பிள்ளையை எவ்வளவு காலமாகத் தெரியும்” கமலாவின் குரலில் கலாசாரத்தின் குரல் ஒலித்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 31
கல்யாண நாளில்தான் கமலா தன் கணவரைப் பார்த்தளாம். எவ்வளவு காலம்!
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கல்யாணப் பேச்சே ஆரம்பமானது. காலமும் நேரமும் வந்தால் எல்லாம் நடக்குமென்று அம்மா சொன்னாள்.
"இருபத்தியொன்பது வயதாகப்போகுது நல்ல மாப் பிள்ளை வரும்போது நழுவவிடக் கூடாது.” அம்மாவின் தவிப்பு புரந்தது.
பரமேஸ்வரன், விமலா வீட்டிற்கு அவனின் தாய்தகப் பன், தமக்கைக் குடும்பத்தினருடன் வந்திருந்தபோது அவர்களைத் திருப்திப்படுத்த அம்மா எடுத்த எடுப்பில் தெரிந்தது, அம்மா எவ்வளவு தூரம் இந்தக் கல்யாணத்தை எதிர்பார்க்கிறாளென்று.
“எனது போயிப்ரென்டுடன் எட்டு வருசமாக வாழ் கிறேன். இதுவரை கல்யாணத்தைப் பற்றி யோசிக்க வில்லை.” வேர்ஜினியா வைன் கிளாசை நிறைத்தபடி சிரிக்கிறாள்.
“கல்யாணங்கள் சிறைக்கூடம். பெரும்பாலும் சிறையின் அதிகாரிகள் ஆண்கள் தான்” சிந்தியா பாண் துண்டில் பட்டரை பூசியபடி சொன்னாள். சிந்தியாதனிமையாக வாழ்கிறள். எப்போதோ ஒருகாலத்தில் யாரிடமோ திருமதி யாக இருந்ததாகச் சொன்னாள்.
சிந்தியாவின் வீடு பலதரப்பட்ட பூச்செடிகளால் அலங் கரிக்கப்பட்டிருந்தது. பெரிய ஹோலின் மூலையில் ஒரு குழந்தையின்படம். விமலாவின் பார்வை அதில் படிந் ததைத் சிந்தியா அவதானித்தாள். “ஒரு காலத்தில் என் கணவராக இருந்தவரின் குழந்தைக்காலப்படம். அவனைப் பிரிந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. ஆனாலும் அந்தப்படம் பிடித்துவிட்டது.”

Page 19
32 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"ஆண்கள் எப்போதுமே குழந்தைகள் தான். தங்களுக் குத் தேவையானதை எப்படியும் எடுத்துவிடுவார்கள், குழந்தைகள் மாதிரி பிடிவாதம் பிடிப்பார்கள்.”
கமலா நேரத்தைப் பார்த்துக் கொண்டாள். இரவு எட்டுமணி.
"கமலா வாழ்கையில் இன்றைக்குத்தானா வெளியில் வந்திருக்கிறாய்.” மஞ்சுளா பட்டேலின் குரலில் பரிதாபம். கமலா ஆமாம் என்பதற்குத் தலையசைத்தாள். உஷாவின் வருகை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. அவள் மிகவும் கவர்ச்சியானவள். ரவிவர்மாவின் கனவுச் சிற்பம். உஷாவின் சொந்த வாழ்க்கை. அவளைத் தொடர்ந்து ஹிலரி வந்தாள்.
“சரி உன் எதிர்காலக் கணவரைப் பற்றி எங்களுக்குச் சொல்” ஹிலரி விமலாவின் கன்னத்தில் இடித்தாள். விமலா வெட்கத்துடன் குனிந்துகொண்டாள். கமலா ஆப்பிள் ஜூசை எடுத்துக்கொண்டாள்.
“எல்லாப் பொருத்தமும் பார்த்தாகிவிட்டதா?” கமலா எப்போதோ கேட்ட கேள்வியை இன்னொரு தரம் கேட்டாள்.
"தினப்பொருத்தம் சரியா, கணப்பொருத்தம் சரியா, மஹேந்திரப் பொருத்தம் பார்த்தியா, ஸ்திரிதீர்க்கப் பொருத்தம் எப்படி? யோனிப் பொருத்தம் பொருந்தியதா? ராசிப்பொருத்தம் சங்கடம் தரல்லியா, ராசி அதிபதிப் பொருத்தம் ஆனந்தம் தந்ததா? நாடிப் பொருத்தம் நலமா” மஞ்சுளா அடுக்கிக் கொண்டுபோன கேள்விகள் மற்றவர்களைத் திகைக்கப்பண்ணியது.
“எத்தனைப் பொருத்தம்.” வேர்ஜினியா விழித்தாள். உஷா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கமலா ஆறுதலாக விளக்கினாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 33
"இந்தப் பத்துப் பொருத்தங்களும் சரிவந்தால்தான் திருமணமா” சிந்தியா ஆச்சரியத்தில் கூவினாள். “ஆறு அல்லது ஏழு பொருத்தங்கள் என்றாலும் இருக்கணும். அப்படியில்லை என்றால் குடும்பத்தில் கஸ்ரம் வரும்”
கமலா விளக்கம் கொடுத்தாள். -- ஆங்கிலப் பெண்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
“இந்தியாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சீதனக் கொடுமையால் கணவராலும், மாமியார்களாலும் உயிரோடு கொளுத்தப்படுகிறார்களே அவர்கள் எத்தனை சாத்திரப் பொருத்தத்துடன் தங்கள் கணவரைப் பின்தொடர்ந்திருப்பார்கள் ?”
வேர்ஜினியா சட்டென்று கேட்டாள். "அது அவரவரின் தலைவிதி" கமலா சமாளித்தாள்.
அப்போது அவர்களுடன் வேலைசெய்யும் டைப்பிஸ்ட் மார்கிரெட் வந்து கொண்டிருந்தாள். முகத்தில் சோகம், கைகளில் ஹென்நைட் பார்ட்டிக்கு இனிப்பு வகைகள்.
“என்ன தலைவிதி." மார்க்கிரட் மிகவும் தாராளமான உடம்பைக் குலுக்கிச் சந்தோஷமாக சிரிப்பாள். ஒழிவு மறைவு தெரியாதவள்.
“ஒ யெஸ், ஆண்கள் என்ன செய்தாலும் பெண்கள் அதைத் தலைவிதி என்று ஏற்றுக் கொள்ளவேணுமோ. உம், என் புருஷனுடன் பன்னிரண்டு வருஷம் வாழ்ந்தேன். என்னுடன் வாழ்ந்த காலத்தில் இன்னொருத்திக்கு மூன்று பிள்ளைகள் கொடுத்திருக்கிறான். கேட்டால் “என்னடி நான் கண்ட பாட்டுக்கு அலையிறேனா? உனக்கு ஒருதரம் தானே துரோகம் செய்தேன், அதை உன்னால் மன்னிக்க முடியாதா” என உதைக்கிறான்.
மார்கிரட் அழத்தொடங்கினாள். மற்றவர்கள் பரிதாபப் பட்டனர். “என் காதலன் என்னுடன் பதினைந்து வயது
g).5ft.-3

Page 20
34 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தொடக்கம் சிநேகிதமாயிருந்து கல்யாணம் செய்து கொண்டேன். கன்னிக்காதல். களங்கமற்ற உறவு. எல்லாம் அவன் இன்னொருத்திக்குத் தன்னைப் பறி கொடுத்த வுடன் அழிந்துவிட்டது. எப்படியிருந்தாலும் பல ஆண்கள் ஒருத்தியுடன் திருப்திப்பட மாட்டார்கள்.” சிந்தியா பெருமூச்சுவிட்டாள். அவள் பார்வை மார்கிரெட்டில் திரும்பியது.
"ஏன் உதை வாங்கிக் கொண்டிருக்கிறாய், டிவோர்ஸ் பண்ணிவிடலாம் தானே’ வேர்ஜினியா குறுக்குக்கேள்வி கேட்டாள்.
"ஆமாம் ஆறு குழந்தைகளுடன் டிவோர்ஸ் பண்ணிப் போட்டு என்ன பண்ண” மார்கிரெட் கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள். w
“எனக்கு அந்த அனுபவம் வராது. எனது சிநேகிதி மி கவும் புரிந்துணர்வு கொண்டவர்.” ஹிலரி இன்னுமொரு கிளாஸ் வைனை ஊற்றிக் கொண்டாள்.
கமலாவுக்கு ஹிலரி சொன்னது விளங்கவில்லை என்பது முகத்தில் புரிந்தது.
“அவள் பெண் சிநேகிதியுடன் வாழ்கிறாள். நாங்கள் ஆண்களுடன் வைக்கும் பாலுறவுகளைத் தன் சிநேகிதி யுடன் பகிர்ந்து கொள்கிறாள். லெஸ்பியன் என்றால் ւյrhպLOrr”
உஷா பாதி குறும்பாகவும் பாதி சீரியஸாகவும் கமலா வுக்கு விளங்கப்படுத்தினாள். கமலா தர்மசங்கடத்துடன் ஹிலரியைப் பார்த்தாள்.
“கட்டாயப்படுத்தாத செக்ஸ் லைவ்' மஞ்சுளா பட்டேல் திடீரென்று சொன்னாள். அவள் எதையோ சொல்லத்துடிப்பது மறைமுகமாகத் தெரிந்தது. ஹிலரி சிரித்தாள். “உம். நீங்கள் எல்லாம் என்ன பண்ணிக் கொள்கிறீர்களோ தெரியாது. எங்கள் பதினான்கு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 35
வயதாயிருக்கும்போதே நான் ஒரு லெஸ்பியன் என்று எனக்குத் தெரியும்” ஹிலரி பாதிக் கிளாசை மேசையில் வைத்தாள்.
“நீ ஒருநாளும் ஒரு ஆணையும் தொட்டதில்லையா' உஷா ஆர்வத்துடன் கேட்டாள்.
“இல்லை. எனது சிநேகிதி ஒருத்தியின் பேர்த்டேக்கு நாங்கள் சிலர் போய் அந்த இரவு அங்கேயே தங்கவேண்டி வந்தது. அன்றிரவு நாங்கள் பெட் ஷெயர் பண்ணவேண்டி யிருந்தது. அன்று தான் உலகம் எனக்குத் தெரியத் தொடங்கியது”
“உம் கெதியாய்ச் சொல்” உஷா தட்டிக் கொடுத்தாள். “எனக்கு மிகவும் பிடித்த சிநேகிதியுடன் ஒரு கட்டிலில் படுத்தேன். நிறையச் சாப்பிட்டதாலோ என்னவோ எனக் குச் சக்தி வந்தது. அவள் அன்புடன் தடவிக்கொண்டாள். வயிற்றைத் தடவிவிட்டாள். அவள் பரிசம் மிகவும் சந்தோசமாக இருந்தது. அதன் பிறகு நீண்ட நாளைக்குப் பின். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பின்." ஹிலரி நிறுத்தினாள்.
விமலா இந்தமாதிரிச் சம்பாஷணைகளை எதிர்பார்த்து வரவில்லை என்பது அவளின் தர்மசங்கடமான முகத்தி லிருந்து தெரிந்தது. பரமேஸ்வரனுடன் எத்தனையோதரம் போனில் பேசியிருக்கிறாள். பெரும்பாலும் பொது விடயங்களாகவிருக்கும்.
“ஏய், இன்றைக்கு நாங்கள் உனக்குத் தெரியாததெல் லாம் சொல்லித்தரப்போகிறோம்”
உஷாவின் குறும்பு கமலாவைத் தர்மசங்கடப்படுத்தியது தெரிந்தது. விமலாவைக் கடைக்கண்களாற் பார்த்தாள். விமலா அமைதியாக இருந்தாள்.
“உம் நீ சொல், இது எத்தனையாவது போய்பிரண்ட்” மார்கிரெட் ஆரேன்ஜ் ஜூசை எடுத்துகொண்டாள். "ஐயையோ அப்படி எல்லாம் கேட்காதே. நாங்கள் இந்துப்

Page 21
36ぐ இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
பெண்கள். தாலிகட்டுபவனைத்தவிர யாரையும் தொட மாட்டோம்” கமலா அவசரத்துடன் விமலாவுக்காக வக்காலத்து வாங்கினாள். மார்கிரெட் வாய் பிளந்து பார்த்தாள்.
“பொய். விமலாவுக்கு இருபத்தொன்பது வயது. இதுவரைக்கும் யாரையும் முத்தமிடவில்லை யென்பது நம்பமுடியாத விஷயம்”
"நான் முப்பதுவயதில் திருமணம் செய்தேன். நானும் தான் யாரையும் முத்தமிடவில்லை." லண்டனில் பிறந்து வளர்ந்த மஞ்சுளா பட்டேல் சொன்னாள்.
மற்றப் பெண்கள் ஒருத்தரைஒருத்தர் பார்த்துக் கொண்டனர். "நான் முதற் தரம் முத்தமிடப்பட்டது.” உஷாவின் குரல் சட்டென்று கரகரத்தது.
"பதினாறு வயதில். எனக்குக் கணவராகப் போகிற முப்பது வயது மனிதன் மிருகப்பிடியில்.” உஷா பகிரங்க மாக இப்படிச் சொன்னது அவள் கதையைத் தெரிந்து கொள்ளாத விமலாவுக்கும் கமலாவுக்கும் திகைப்பாக விருந்தது.
“இந்தியாவுக்கு விடுமுறைக்குக் கூட்டிக்கொண்டு போன தாய் தகப்பன் நல்ல பணக்கார இடத்தில் என் னைச் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தங்கள் முப்பது வயது உறவுக்காரனுக்கு என்னைப் பேசி முடித்தார்கள்.”
அறையில் பெரிய நிசப்தம். உஷா தொடர்ந்தாள். "நிச்சய தார்த்தம் நடந்தது. முன்பின் தெரியாத ஊரில் எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள யாருமில்லை. ஒருநாள் ச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை வந்தான். கிளியின் கூண்டுக்குள் பூனை புகுந்த கதை. வீட்டில் யாருமில்லை. |திருமணமுதலே கன்னி கழிந்தது. அவன் இன்னொரு தரம் என்னைத் தொட்டால் தற்கொலை செய்வேன் என்று கத்தினேன், தாய் தகப்பன் பயந்துவிட்டார்கள்.”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 37
“ரொம்பத் துக்கமான கதை.” கமலா விம்மினாள்.
“மஞ்சுளா உனது கல்யாணம் சந்தோஷந்தானே” கமலா ஒளிவுமறைவின்றிக் கேட்டாள்.
அவள் முகத்தில் ஒரு சோகக்கீறு தாண்டிப் போனது. இதுவரைக்கும் ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தவள் ஒரு வைன் கிளாசை ஒரு நிமிடத்தில் குடித்து முடித்தாள். “என்னில் விருப்பமில்லாதவருக்குச் செய்துவைக்கப்பட் டேன். முதலிரவே அசிங்கமாக இருந்தது. என் கற்பனை கள், இளமைக் கனவுகள் சிதறின. கதவு பூட்டப்பட்டதும் ஏதோ கடமை செய்வது மாதிரி ஏறி விழுந்தார். நாங்கள் . சமுதாயத்தில் கெளரவமாக வாழ்கிறோம் என்பதற்காக இந்த அன்பில்லாத உறவுகளைத் தொடரத்தான் வேணும். எனக்கு அடிப்பதோ பேசுவதோ கிடையாது ஆனால் பெரிதாக அன்பாகப் பேசுவது என்பதும் கிடையாது. ஏதோ குழந்தைகள் வளர்கிறார்கள், நாங்களும் வாழ்கிறோம்.”
“ஏதோ கற்பனை என்றாயே அதுஎன்ன” மார் கிரெட் மஞ்சுளாவைப் பார்த்துக்கேட்டாள். “எங்கள் எல்லோருக்கும், ஆண் பெண் வித்தியாசமின்றி ஏற்படும் உணர்வுதான், அதாவது அன்பு என் கணவரிடம் நான் எதிர்பார்த்தது. ஏனோதானே என்று வியாபார அடிப்படையான உறவல்ல. நெருக்கமான உள்ளார்ந்த மான அன்பு. ஒரு அணைப்பு. இரவின் தனிமையில் பாவித்து ருசிக்கும் ஒரு பண்டமாக இல்லாமல் பகிர்ந்து கிடைக்கும் இன்பத்தின் பார்ட்னராக. மஞ்சுளாவின் குரல் அடைத்தது. உஷா தீர்க்கமாக மஞ்சுளாவைப் பார்த்தாள். இருவரும் இந்தியப் பெண்கள். இரு வித்தியாசமான பிரதேசங்களில் தாய்தகப்பன் பரம்பரையைக் கொண்டவர் கள்.
“அதாவது உனக்கு உருப்படியான ஒர்கசம்' கிடைப்ப தில்லை என்று சொல்” உஷா நிதானமாகக் கேட்டாள். "சீ சீ விமலா இருக்குமிடத்தில் இதெல்லாம் பேசக்கூடாது" கமலா கடிந்து கொண்டாள்.

Page 22
38 - இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“என்ன சத்தம் போடுகிறீர்கள்? விமலாவுக்கு இதெல் லாம் தெரிய வேணுமேன்றுதானே இந்த ஹென்நைட் பார்ட்டி வைக்கிறோம்.” ஹிலரி கடிந்து கொண்டாள்.
அதற்காக. கமலா தர்மசங்கடப்பட்டாள். “பெண்கள் எல்லாவற்றையும் ஒளித்து மறைத்து வாழ்வதற்கான இந்த நிலையிலிருக்கிறோம்’ உஷா வெடித்தாள். "ஆமாம்” போட்டாள் மார்கிரெட் இந்தியா இன்னுமொரு வைனை எடுத்துக்கொண்டாள். "விமலா உன் புருஷனை யாரிடமும் பறிகொடுக்காதே’ மார்கிரெட் புலம்பினாள். ஹிலரி இந்தப் பெண்கள் ஒவ்வொருத்தரையும் அளவெடுத்தாள். வேர்ஜினியா சிகரெட் பற்றவைத்துக் கொண்டாள். பின்னர் இவர்களைப் பார்த்துச் சொல்லத்தொடங்கினாள். "நான் இப்போது சேர்ந்து வாழும் எனது காதலன் எனது நான்காவது காதலன். எனது முதலாவது காதல் எனக்கு பதினைந்து வயதில் வந்தது. என்னுடன் படித்த பெண்கள் எல்லோரும் போய்ப்பிரண்ட் வைத்துக் கொண்டிருந்தார் கள். எனக்குப் போய்பிரண்ட் இல்லை என்று கேலி செய்தார்கள். ஒருநாள் என்னுடன் படிக்கும் பீட்டருடன் வீடு போகவேண்டிய நிர்ப்பந்தம். வீட்டுக்குப் போனால் அப்பா அம்மா வெளியில் போயிருந்தார்கள். பீட்டரும் நானும் ஏதோ எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். எனது சிநேகிதிகள் என்னைக் கேலி செய்வதைப் பற்றிச் சொன் னேன். “நான் உனது போய்பிரண்டாக இருக்கிறேன்” என்று சந்தோஷத்துடன் சொன்னான். எனக்கு அது சரி என்று பட்டது. ஒரு ஐந்து நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது. காலுக்கிடையில் அவனது விந்துவும் எனது இரத்தமும் கசிந்தபோது வேதனையில் ஒவென்றழுதேன். போதாக்குறைக்கு அவன் அணிந்திருந்த காலணிகளின் நாற்றமும் வாந்திவரப்பண்ணியது. அதன் பிறகு நீண்டநாட்கள் பையன்களைப் பார்த்தால் எரிச்சல் வந்தது. அதன்பின் யூனிவர்சிட்டியில் பல காதலர்கள். அவர்களில் மிகவும் பிடித்தவன் றிச்சார்ட். அவன் ஒரு ஒவியன். இசையை ரசிப்பவன். பெண்களை மிகமிக ரசிப்ப

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் «Х• 39
வன். காதலின் ஒவ்வொரு கோணத்தின் இனிமையையும் காட்டியவன் அவன்.
"ஆஹா எவ்வளவு அனுபவம்” மார்கிரெட் சந்தோசத் தில் கூவினாள். ஆப்பிளைக் கடித்து வாயை நிரப்பிக் கொண்டாள். “அப்புறம்.” உஷா ஆர்வத்தில் கூவினாள். “கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டான். ஏனோ எனது சுதந்திரத்தைப் பறிகொடுக்க விரும்பவில்லை. மாட்டேன் என்று முறித்துக் கொண்டேன். ஆனால் அவனது தொடர்பு சொர்க்கத்தின் வாசலைக் காட்டிய உறவு. அவன் முத்தங்கள் மதுக்கிண்ணத்தின் மறுபெயர்கள், அவன் அணைப்பு இசையும் நாதமும் இணைந்த நெகிழ்ச்சி. அவனுடன் காதல் புரிவது இன்னொரு பிறவி என்னுள் வாழ்கிறது என்பதைக் காட்டிய அனுபவங்கள்.” வேர்ஜினியா பழைய ஞாபங்களில் ஒருதரம் கண்களைச் சொருகிக்கொண்டாள்.
“உம், நாங்கள் பெண்கள் அதிகம் எதிர்பார்க்க கூடாது. எனது அம்மா சொன்னதுபோல் பெண்கள் ஆண்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும்.” கமலா சாறித்தலைப்பைச் சரி செய்தபடி சொன்னாள். விமலா தன்னைச் சுற்றிய பெண்களைப் பார்த்தாள். எத்தனை அனுபவங்கள்! "ஏய் விமலா உன் னுடையவனிடம் உலகத்தைப் புரிந்துகொள், ரசித்துக் கொள்” மார்க்ரெட் சிரித்தாள்.
“ஹென்நைட் என்றால் என்ன மண்ணாங்கட்டி’ அம்மா எரிந்து விழுந்தாள்.
“நாங்கள் சொன்ன எத்தனையோ விடயங்கள் உன்னைக் குழப்பியிருக்கும்.”
ஒவ்வொருவரின் அனுபவங்களும் வித்தியாசமானவை. நீ கெட்டிக்காரி. உனது புருஷனுடன் சந்தோஷமாக வாழ் வாய், அதாவது உனது புருஷன் உன்னைச் சந்தோசமாக

Page 23
40 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
வைத்திருப்பார் என்று நம்புகிறேன்’ வேர்ஜினியா சிநேகிதிக்கு அன்பு அறிவுரை சொன்னாள்.
கல்யாணம் நடந்தது. பரமேஸ்வரன் பதின்மூன்று பவுணில் ஒரு பெரிய தாலியை இவள் கழுத்திற் போட் டான். கல்யாணத்திற்கு முதல் நிறைய நேரம் தங்கள் எதிர் காலத்தைப் பற்றிப் பேசியிருக்கலாம்.
அவன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். இவள் ஒன்றும் வேலை செய்யத் தேவையில்லை. வீட்டைப் பார்த் துக் கொண்டாற்போதும் என்று சந்தர்ப்பம் வரும்போ தெல்லாம் சொல்லிவிட்டான். பாங்க் எக்கவுண்டையும் ஒன்றாக்கி விடுதல் நல்லதென்றான். உஷா சொல்வது போல் இரவில் கட்டிலுக்கும் பகலில் வீட்டுவேலைக்கும். அவளுக்கு என்று என்ன? அதைப்பற்றி அவன் சிந்தித்த தாகத் தெரியவில்லை. முதலிரவு முடிந்துவிட்டது. காரண மில்லாமல் வேர்ஜினியாவின் வார்த்தைகளில் றிச்சார்ட் வந்துபோனான். பரமேஸ்வரன் கல்யாண களைப்பில் தூங்கிப்போய்விட்டான். கலவி செய்த களைப்பில் ஆழ்ந்த நித்திரை, அவளால் தூங்கமுடியவில்லை. கல்யாணக் களைப்பில் கண்கள் அரைகுறையாக மூடின.
ஏதோ கனவு! பாவம் அந்த மாடு இன்னும் அலறுகிறது. திடுக்கிட்டு எழுந்தாள். மாட்டுக்குச் சூடு போட்டபின் தோலுரிந்த பொசுங்கிய மணம் ! அவள் எழுந்தாள். காலுக்கிடையில் அவனின் விந்தும் இவளின் இரத்தமும் சேர்ந்து மணத்தது, பாவாடை தொடையில் ஒட்டிக் கொண்டு.

3. Ms. ஜான் நேதன்
ரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வர
வில்ல்ை. ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான்.
“என்ன, சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கி விட்டுதா?” அடுத்த மேசையிலிருந்த பீட்டர் சூயிங்கத்தைக் குதப்பிக் கொண்டு கேட்டான்.
“இரண்டு நாள் சிக் லீவ் போட்டதற்கு இரண்டு கிழமை சம்பளத்தை வெட்டியிருக்கிறார்கள். பார்க்க எரிச்சலாக இருக்கிறது.”
“யாரும் வேலை தெரியாத பேர்ஸனல் ஆபீசர் புதிதாக வந்திருப்பார்கள். எங்களின் சம்பளத்தில் மை வைத்துப் பிராணனை வாங்குகிறார்கள்.”
பீட்டர் வழக்கம்போல் ஒரு விமர்சனத்தைக் கொடுத் தான். பீட்டர் ஏதோ சர்ச்சில் பாதிரியாயிருந்து உபதேசம் செய்தால் மிகப் பிரபலமாவான். அவர்களின் டிபார்ட் மெண்ட் செக்ரட்டரி ஆயிஷா முகமட் இவர்களின் சம்பாஷணையைக் கேட்டிருக்க வேண்டும்.
"நான் தேவையான இன்பர்மேஷன் எல்லாம் கொடுத் தேன்; ஏன் இன்னும் அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை?”
ராகவன் தன்னிடம் விசாரணைக்கு வர, ஆயிஷா விளக்கம் கொடுத்தாள்.
“நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் ஆயிஷா. நான் ஒரு தரம் ஐந்தாம் மாடிக்குப் போய் வருகிறேன்.”

Page 24
42 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ராகவன் எழுந்தான். நடையில் அவனின் கோபம் பிரதிபலித்தது.
ஐந்தாம் மாடியில் உள்ளவர்களை முதலாம் மாடியில் வேலை செய்வோர் மாடிப் படிகளில் லிஃப்டுகளிலும் சந்தித்திருக்கிறார்கள். எப்போதாவது இருந்து நடக்கும் ஆபீஸ் பார்ட்டிகளில் சந்தித்திருக்கிறார்கள். "ஹலோ, ஹவ் டு யு டு" என்பதற்கு மேல் பெரிய சிநேகிதம் ஒன்றும் இது வரையுமில்லை. ஐந்தாம்மாடி ஆபீசர்களின் வேலை இடம் முதலாம் மாடியினரை விட வசதியானது என்றொரு தகவ லும் சில வேளை அடிபடும். அதற்குக் காரணம், ஐந்தாம் மாடியில் பெரிய விசாலமான இடம் வெறுமையாய் இருப்பதும் அந்த இடத்தில் அங்கு வேலை செய்யும் சிலர் தங்களுக்கு விருப்பமான பூ மரங்களையோ அல்லது செடி, கொடிகளையோ நட்டு வைத்திருப்பதும் ஒன்றாகும்.
வசந்தகாலத்தில் ஐந்தாம் மாடி கந்தர்வ லோகம் போல் கவர்ச்சியாக இருக்கும். அதற்குக் காரணம், பேர்ஸனல் டிபார்ட்மெண்டில் வேலை செய்யும் அழகிகள் மட்டும் காரணமாய் இருக்கலாகாது.
உதாரணமாக, நான்காவது மாடி எக்கவுண்ட் டிபார்ட் மெண்ட்டை எடுத்தால் கிட்டத்தட்ட எல்லோரும் நடுத்தர ஆண்களும் பெண்களுமாக இருப்பார்கள். வாழ்க்கையின் வசதியின் சின்னங்கள் வயிற்றிலும் கழுத்திலும் கன்னத் திலும் தசைப்பிடிப்பாக வழியும்.
மூன்றாம் மாடி ஐ.டி டிபார்ட் மெண்ட்டை எடுத்தால் செக்ரட்டரிப் பெண்களும் ஐ.டி. பெண்களும் என்று ஒரு சிலரைத் தவிர மற்றெல்லாம் இன்போமேஷன் டெக்னோ லோஜி இளைஞர்களாகத்தான் தெரிவார்கள்.
எப்போதும் பிஸியாக இருக்கும். அதற்குக் காரணம், ஐ.டி. டிப்பார்ட் மெண்ட் முழுக்க இளைஞர்கள், இளைஞ கள் என்பதல்ல. அவர்களின் முகத்தில் பிஸியுடன் சேர்ந்த உற்சாகமாக இருக்கும்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 43
இரண்டாம் மாடி பிளானிங் டிபார்ட் மெண்ட். அரசாங்க சேவையை எப்படிப் பிளான் பண்ணி மக்கள் நலம் பெறத் தக்கதாகச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் பட்டாளம்.
பெரும்பாலானோர் முன் தலையில் மொட்டை விழுந்தவர்கள். சிந்தனையில் தீவிரத்தில் மயிரிழந்த பலர் அங்கிருப்பர்.
முதலாம் மாடிக்காரர். அரசாங்கத் திட்டங்களை அமுல் நடத்தும் ஆபீசர்கள். ராகவன் கடந்த மூன்று வருடங்களாக வேலை செய்கிறான்.
ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன் இரண்டு நாள் "கிக் லீவு’ போட்டது யாருடைய பிழையின் காரணமாகவோ அவனது இரண்டு வார சம்பளத்தை வெட்டி விட்டது.
எரிச்சலுடன் ஐந்தாம் மாடியை அடைந்த போது ஜன்னல்களூடாக லண்டன் யாரோ வரைந்த சித்திரம் போல் அழகாகத் தெரிந்தது.
மிலேனியம் டோம், தேம்ஸ் நதிக்கப்பால் கிரினிவிச் நகரில் கம்பீரமாய் நிமிர்ந்து தெரிந்தது.
லண்டனிலேயே பெரிய கட்டிடமான நாஷனல் வெஸ்ட் மினிஸ்டர் பாங்க் கட்டிடம் தூரத்தில் யாரோ நட்டு வைத்த தூணைப் போல் உயர்ந்து நின்றது. அதை யடுத்து பெரிதும் சிறிதும் குட்டையும் பருமனுமான எத்தனையோ கட்டிடங்கள்.
ஜன்னல்கள் அருகில் அழகிய கோலங்களில் செடிகளும் கொடிகளும். முதலாம் மாடி வழியாக இரட்டைத் தட்டு பஸ் வண்டிகள்தான் தெரியும்.
“யாரைப் பார்க்க வேணும்?” மை அடித்த விழிகளை அகல விரித்தபடி ஒரு பெண் ராகவனைக் கேட்டாள்.

Page 25
44 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“பேர்ஸனல். வெல், சிக் லீவு விடயங்களைக் கவனிக்கும் ஆபீசரைப் பார்க்க வேணும்.”
அழகிய விழிகள் உள்ளவர்கள் நடனத்திற்கு ஒரு முத்தி ரைக்கு விரல்களைப் பதம் பிடிப்பது போல் ஒய்யாரமாகத் தன் கைகளை நீட்டி “அதோ, அந்த மேசையில் இருப்பவரைக் கேள்” என்றாள்.
அவள் காட்டிய மேசையிலிருப்பவர் மிகவும் உயர்ந்து வளர்ந்த ஒரு கறுப்பு ஆபீசர்.
இவனைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்து ‘குட் மார்னிங்' என்றார்.
"குட் மோர்னிங்" -அவன் முனங்கித் தள்ளினான். சம்பளத்தை வெட்டிய ஆபீசர் இவராகத்தான் இருந்தாலும் அந்த சிநேகிதமான அவரின் முகமலர்ச்சியைத் தாண்டிப் போய் ராகவனால் சண்டை போட முடியாது போலிருந் 2gil.
“என்னிடம் என்ன உதவியை எதிர் பார்க்கிறீர்கள் ?” தனது சம்பளம் வெட்டுப்பட்ட கதையை, கோபத்தை அடக்கிக் கொண்டு செல்லி முடித்தான்.
“சரியான நேரத்தில் சரியான தகவல்கள் வந்து சேரா விட்டால் இப்படியும் நடக்கும். எனிவே, சம்பள விடயங் களைப் பார்ப்பது நானில்லை. அதோ இருக்கிறாளே எம்எஸ் நேதன், அங்கே போய் விசாரியுங்கள்.”
அவர் சுட்டு விரல் காட்டிய இடத்தை ராகவன் நோக்கி நடந்தான்.
இவனுக்கு முதுகுப் பக்கம் தெரிந்தாற்போல் கொம்பி யூட்டரில் தட்டிக் கொண்டிருக்கும் பெண்ணின் அருகில் போய் “ஹலோ." என்றான்.
அவளும் “ஹலோ” என்று சொல்லிக் கொண்டு திரும் பிய போது ஜன்னலால் வந்த சூரிய வெளிச்சத்தில் கண்கள்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 45
கூசியது போலும். ஒரு தரம் கண்களை வெட்டி விட்டு “என்ன வேண்டும்” என்று கேட்டாள்.
அவளுக்கு அவன் வாய் மறுமொழி சொல்வதற்கு முன் அவன் கண்கள் அவளின் அந்த எடுப்பான தோற்றத்தை இளமையைத் தாண்டிக் கொண்டு பறை சாற்றியது அவளது எடுப்பான அல்லது மிடுக்கான(?) தோற்றம்) படம் எடுக்க, சிந்தனையோ இவள் எந்த நாட்டு இளவரசி என்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டது.
அவனது மறுமொழி சட்டென்று வராததால் “சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்களா?” தோற்றத்தைப் போல் குரலில் மிடுக்கும் (அல்லது எடுப்பு)
“நிச்சயமாகச் சரியான இடத்துக்குத்தான் வந்திருக் கிறேன்” அவன் குரலில் குறும்பு.
அவளுக்கு அது பிடிக்கவில்லை. “என்ன எதிர்பார்க் கிறீர்கள் ?”
இரண்டு மாதம் பழகியவளாக இருந்திருந்தால் 'என் மனைவியாக இருக்கும் உதவியைச் செய்வாயா? என்று கேட்டிருப்பான். ஆனால் முன் பின் தெரியாத பெண் னிடம் அலட்ட வில்லை. தன் சம்பளப் பிரச்சனைய்ை சுருக்கமாகச் சொன்னான்.
அவள் புருவத்தைச் சுருக்கிக் கொண்டாள். "நீங்கள் பிழையான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். நான் சம்பளம் விடயம் பார்ப்பதில்லை. ஆபீசர்களின் மேலதிக படிப்பு சம்பந்தமான பகுதியைப் பார்க்கிறேன். யார் உங்களை என்னிடம் அனுப்பியது?”
அவன் அந்தக் கறுப்பு ஆபீசர் இருந்த இடத்தைக் காட்டினான்.
“ஜோசுவா. ஏன் தேவையில்லாமல் பிழையான தகவல்களைச் சொல்கிறாய்?”

Page 26
46 8 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஜோசுவா என்ற மனிதனுக்கு இவள் மகாராணியா?
அவள் குரலில் கோபத்துடன் இரைந்தாள். பக்கத்திலிருந் தவர் பார்த்தார்கள். ராகவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. “ஒ ஐயாம் சாரி ஜான், நான் காட்டியது பிழை என்றால் மன்னித்து விடு" உயர்ந்த உருவம் தாழ்ந்த குரலில் குழைந்தது.
"மிஸ்டர் நேர்விங்டன்தான் இந்த டிபார்ட் மெண்டைப் பார்ப்பார். அவர் இரண்டொரு நாள் லீவு என்று நினைக் கிறேன்." அவள் உத்தியோக தோரணையில் சொல்லி விட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தாள்.
"சிரமம் தந்ததற்கு மன்னிக்கவும்” அவன் முணுமுணுத் தான்.
அவள் இவனைப் பார்க்காமல் குட்பை சொன்னாள்.
அவனுக்கு எரிச்சலாக வந்தது. எத்தனை உதாசீனமான போக்கு! இவளுக்கு யாரில் கோபம்?
அவன் கீழே வந்து ஆயிஷாவிடம் ஒரு தரம் தன் சம்பள விடயம் பற்றி ஒப்பாரி வைத்துவிட்டுத் தன் இருக்கைக்குப் போனான்.
அவள் எந்த ஊராக இருக்கலாம்? நிச்சயமாக ஆசியப் பெண்தான். மேற்கத்திய நாட்டில் பிறந்து வளர்ந்த ஆசியப் பெண் என்பது அவள் மிடுக்கிலேயே தெரிந்தது.
ஜான் நேதன் என்பது ஆசியப் பெயரில்லை. ஜேன், ஜனட், ஜனிஸ் என்ற பெயர்களைச் சுருக்கி ஜான் என்று கூப்பிடுவார்கள். நேதன் என்பது யூதப் பெயர். அந்தப் பெண்ணைப் பார்த்தால் யூதப் பெண்ணாகத் தெரிய வில்லையே. ஒரு வேளை யூதக் கணவனைத் திருமணம் செய்திருப்பாளோ?
“ஐந்தாவது மாடியில் புதிதாக வந்திருக்கும் இந்தியன் பியூட்டியை சந்தித்தாயா?" பீட்டர் இன்னொரு சூயிங்கத்தை வாயில் போட்டபடி கேட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் «Х• 47
“வாட்". ராகவன் பீட்டரை விழித்தான்.
“அதுதான், என்னைப் பார்க்க உனக்கு என்ன துணிவு என்று அடித்துக் கேட்கிற மாதிரி பார்வை பார்ப்பாளே ஒரு பெண். இரண்டு மூன்று கிழமைக்கு முதற்தான்வந்து சேர்த்தாள்.” பீட்டர் சொல்லிக் கொண்டே போனான்.
இந்தியப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தது சரிதான். ஆனால் அவள் பெயரைப் பார்த்தால்.
அவன் அதன் பிறகு அவளைப் பற்றி யோசிக்க நேர. மில்லை. வேலைப் பளுவில் மறந்து விட்டான்.
இரண்டொரு நாட்களுக்குப் பின் ஐந்தாம் மாடிக்கு மிஸ்டர் நேர்விங்டனைத் தேடிச் சென்ற போது அவள் இவனைக் கண்டும் காணாதது போல்தன் வேலையில் மூழ்கியிருந்தாள். தெரிந்த அடையாளத்துக்கு ஒரு புன் சிரிப்பே போதுமே! அது கூட இல்லை.
மிஸ்டர் நேர்விங்டன் இவன் சம்பள விஷயம் பற்றி மிகவும் அனுதாபம் காட்டினார். உடனடியாக இவனுடைய பைல்களைப் பார்ப்பதாகச் சொன்னார்.
அவன் நன்றி சொல்லி விட்டுத் திரும்பிய போது அவள் ஸ்ராவ் ரூமுக்குப் போவது தெரிந்தது. இன்னொரு தரம் அந்தக் கண்கைைளச் சந்திக்க வேண்டுமென்ற ஆசை அடங்கி விட்டது.
அது நடந்து இரண்டு மூன்று மாதங்களாகிவிட்டன.
ஆபீசிலிருந்து ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இடம் மாறிப் போகிறார். எல்லாரையும் பார்ட்டிக்கு வரச் சொல்லி ஈ-மெயில் அறிவித்தது.
அவனுக்குத் தலையிடியும் தடுமனும் வேலைக்கே வரவில்லை. பார்ட்டிக்கும் போகவில்லை.

Page 27
48 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“பேர்ஸனல் டிபார்ட் மெண்டிலுள்ள ஜான் உங்களைப் பற்றி விசாரித்தாள்.” ஆயிஷா சொன்னபோது, ராகவன் திடுக்கிட்டான்.
லஞ்ச் ரைமில் கேட்டான்.
“ஆயிஷா அந்த இந்தியப் பெண் என்னைப் பற்றி விசாரித்தது அன்று சொன்னது பொய்தானே!"
ராகவனின் கோபம் ஆயிஷாவுக்குச் சிரிப்பைக் கொணர்ந்தது.
"அழகான பெண், அதுதான்.” ஆயிஷா இழுத்தாள். அவன் கோபத்தை அடக்கிக்கொண்டான். அன்று புதிய டெலிபோன் டிரக்டரி (ஆபிஸ் டிரக்டரி) வந்திருந்தது.
ஐந்தாவது மாடிப் பேர்ஸனல் ஆபீசர்களின் பெயரில் ஜானகி சுவாமிநாதன் என்ற நீளப் பெயரைப் பார்த்ததும் அவனுக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது.
ஜானகி சுவாமிநாதன் என்ற பெயரையா ஜான் நேதன் என்று மாற்றியிருக்கிறாள்?
சுவாமிநாதன் ‘சாம்' என்றும் அன்னலெட்சுமி ஆன்" என்றும் லண்டனில் மாறுவது மிகவும் சர்வ சாதாரணம். ஒரு தாவலில் மேலே போய், "ஹலோ ஜானகி சுவாமி நாதன்' என்று வாய் நிறைய அழைக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் நேரம் இருக்கவில்லை.
ஜூன் மாதம் என்று பாராமல் லண்டன் காற்றிலும் மழையிலும் அடி பட்டு அழுதுகொண்டிருந்தது.
சனிக்கிழமை நடந்த கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியா இந்தியாவை வென்று விட்டது. டி.வி.க்கு முன் நிஷ்டை செய்து காய்ச்சலும் வந்து விட்டது. ராகவனின் தடுமனும் இருமலும் இன்னும் விட வில்லை. ஆபீசிலிருந்து அண்டர் கிரவுண்ட் ஸ்ரேசனுக்குப் போய்க் கொண்டிருந்த போது அவளும் வந்து கொண்டிருந்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 8 49
“ஹலோ ஜானகி சுவாமிநாதன்!” அவன் அப்படிச் சொன்னது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது என்பது முகத்தில் தெரிந்தது.
“ஏன் அழகான பெயரை அப்படி மாற்றினிர்கள்.?”
அவள் மறுமொழி சொல்லவில்லை, “இந்தியப் பெண் என்று சொல்லிக் கொள்ள வெட்கமா ?”
அவன் விடாமல் கேள்வி கேட்பது அவளுக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.
"இந்தியாவைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல என்ன இருக்கிறது? இத்தனை தூரம் வந்து இரண்டு வெற்றிக்கு மேல் எடுக்க முடியாத வீரம்" -அவள் பொரிந்தாள்.
“கிரிக்கெட்டில் தோல்வி என்றால் பெயரை மாற்று வதா?” அவன் சிரித்தான்.
"அப்படியில்லை. ஜானகி என்ற பெயர் எனக்குப் பிடிக்கவில்லை.” மிடுக்கான தோற்றத்துக்கும் இப்போது உடைந்து போன வசனங்களுக்கும் ஒரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
“எனது பெயர் ராகவன், என்ன காரணத்துக்காவும் பெயரை மாற்ற மாட்டேன்.”
"அது உன் விருப்பம்." பிளாட்பாரத்துக்குப் போனாள். இருவரும் இரு எதிர் திசைகளில் ஏறிக் கொண்டார்கள். ஜானகி என்ற பெயர் எனக்குப் பிடிக்காது’ -அவளின் உடைந்த குரல் மனத்தைக் குடைந்தது. ஜான்’ என்று சுருகிக் கொண்ட ஜானகியிடம் அவனுக்குப் பரிதாபம் வந்தது.
"பின்னேரம் பாருக்குப் போகிறேன். வருகிறாயா? உனது மூக்கடைப்புக்கு ஒரு நல்ல விஸ்கி எடுத்தால் சுகமாயிருக் கும்" -பீட்டர் சூயிங்கம் குதம்பிய மொழியில் உதிர்த்தான்.
“உம் உம்" ராகவனுக்கு முழு மூச்சான வேலை.
இ.கா.-4

Page 28
50 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஜானகி என்ற பெயர் வேண்டாம். என்று சொல்லும் ஜான் யாரோ சிநேகிதர்களுடன் பாரில் உட்கார்ந்திருந் தாள்.
இந்தியப் பெயர் வேண்டாம், இந்திய கலாச்சாரமும் வேண்டாம் என்பதன் பிரதிபலிப்பா இது?
இவனைக் கண்டதும் அவள் முகத்தில் ஆச்சரியம் சந்தோஷமானதா அல்லது சங்கடமானதா என்று அவனால் எடை போட முடியவில்லை.
இரண்டு தரம் விஸ்கி ஒடர் பண்ணியவுடன் மூக் கடைப்பு போய்விட்டது. ஜானகி சிவப்பு வைன் கிளாசு டன் இவனைக் கடைக்கண்ணால் பார்ப்பது அவனுக்குத்
தெரியும்.
எட்டு மணியளவில் ஒவ்வொரு வராய் 'பாரை விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
அவன் ஸ்ரேஷனுக்கு வந்த போது அடுத்த பிளாட் பாரத்தில் நின்றிருந்தாள். ஐந்து மணியிலிருந்து ஒரு மணி வரை கடல் அலை போல் மோதும் மனித சமுத்திரம் ஸ்ரேஷனில் இல்லை. அங்குமிங்கும் ஒன்றிரண்டு மனிதர் கள். அவளைத் தவிர எந்த ஆசிரியர்களும் அந்த பிளாட்
பாரத்தில் இல்லை.
சிக்னல் ஃபெயிலியர் காரணமாக இவன் போகும் ரெயில் பத்து நிமிடம் லேட்டாக வரும் என்ற அறிவிப்பு வந்ததும் அவனுக்கு எரிச்சல் வந்தது. தடுமன், இருமல், தலையிடி, இப்போது விஸ்கி எடுத்து தலைச்சுற்று வேறு.
சட்டென்று படியேறி அடுத்த பிளாட்பாரம் போனான். ஏன் அப்படிச் செய்தான் என்று தெரியாது.
"ஹலோ ஜானகி” அவள் இவன் வரவை கடைசி வரைக் கும் எதிர்பார்க்க வில்லை என்று முகத்தில் தெரிந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 51
"இந்தியப் பெயரில் விருப்பமில்லை. இந்தியப் பெண் ணாக இருக்கவும் விருப்பமில்லையா என்று கேட்கப் போகி றிர்களா?” அவள் நிதானத்துடன் கேட்டாள்.
"நான் எதுவும் கேட்பதாக வரவில்லை” அவன் மழுப் பினான்.
"அப்படியானால் ஏன் இந்த பிளாட்பாரத்தில் நிற்கிறீர் கள்?” அவள் குரலில் கிண்டல்.
“தெரியாது.” -அவன் உண்மையைச் சொன்னான். "வாட்’ அவள் குழப்பத்துடன் கத்தினாள். “ரெயின் லேட்டாகப் போகிறது. சிக்னல் பெயிலியராம்” அவன் பேச்சை மாற்றினான்.
“அதற்கென்ன, எப்படியும் ஒரு ரெயின் வரும்தானே?” “இந்த இடம் என்ன ஒன்பது மணிக்குப் பிறகு பாது காப்பாக இருக்காது” அவன் குரலில் இருந்த உண்மையான பரிவு அவளை அவனைப் பார்க்க வைத்தது.
“ஸ்ரேஷனில் தனியாக நிற்கும் பெண்களில் பரிதாபப்பட உங்களுக்கென்ன லாபம்?”
அவனுக்கு எரிச்சல் வந்தது. எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர இவளுக்கு வேறெதுவும் தெரியாதா?
“ஜானகி, ஆபீசில் தெரிந்த பெண்ணொருத்தியை அபாயமான இடத்தில் பார்த்தபடியாற் சொல்கிறேன். அட்வைஸ் பிடிக்காவிட்டால் மன்னித்துக்கொள்."
அவன் எடுத்தெறிந்து பேசியது அவளைப் புண்படப் பண்ணியிருக்க வேண்டும்.
மெளமாக இருந்தாள். ஸ்ரேஷன் வெளிச்சத்தில் அவள் கண்கள் பனித்து, பளபளத்தது தெரிந்தது.

Page 29
52 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ரெயின் வரும்பாடாயில்லை. வாசனைத் திரவியத்தின் மணம் அவனை என்னவோ செய்தது.
ஜான் நேதன் என்று அவளை அறிமுகம் செய்து கொண்ட சம்பவத்தை நினைத்துக் கொண்டான்.
"ஏன் உங்கள் உண்மைப் பெயரை இப்படி அநியாய மாக்கி வைத்திருக்கிறீர்கள்?” -ராகவன் ஜானகியைப் பார்த்துக் கேட்டான்.
ஏதோ பேச்சுக்காகக் கேட்கவில்லை. இந்தக் கேள்வியை எப்போதோ கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததால் சட்டென்று கேட்டுவிட்டான்.
அவள் மறுமொழி சொல்லவில்லை. மழையில் நனை யும் லண்டன் தெருக்களில் பார்வையைப் பதித்திருந்தாள். அவள் போகவேண்டிய இடம் இன்னும் அரை மணித்தி யால தூரத்தில் இருக்கிறது. ஒன்பது மணி இருளில் லண்டன் தெருக்கள் மங்கலாயின.
டக்சி வீட்டுக்கு முன்னால் நின்றது. அவள் இறங்கி டக்சிக்காரனுக்கு காசைக் கொடுத்தாள். அவன் பார்வை எங்கோ பதிந்திருந்தது. பக்கத்தில் உள்ள அண்டர்கிர வுண்ட் ஸ்ரேஷன் என்னவாக இருக்கும் என்று மனம் தேடிக் கொண்டிருந்தது.
“காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்.” மழை தூறிக் கொண்டிருந்ததால் அவள் தன் ஹாண்ட்பாக்கைத் தலை யில் வைத்து மழைத் துளிகளிலிருந்து தலைமையிரைக் காப் பாற்றப் பாடுபட்டாள்.
அவள் அப்படிக் கேட்டாள் என்று எதிர்பார்க்காமல் அவன் முகத்தில் தர்மசங்கடம் பளிச்சிட்டது.
அப்போது அவளின் வீட்டுக் கதவு திறந்தது. தாயாய் இருக்க வேண்டும். மகளின் இளவயது இல்லையே தவிர முகபாவம் அப்படியே இருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 53
மகளோடு இன்னொரு அந்நியனைக் கண்டதும் அந்தத் தாயின் முகத்தில் அதிர்ச்சி ஒரு கணம் வந்து மறைந்தது.
“காபி சாப்பிட்டுப் போங்கள்” ஜானகி இரணடாம் தரம் கேட்டாள்.
"ஆமாம் தம்பி, மழையும் காற்றுமாயிருக்கிறது” அந்தக் தாயின் குரலின் கனிவு. ஜானகி சில வேளை எடுத்தெறிந்து பேசும் சுபாவத்திற்கு எதிர்மாறாக இருந்தது. தாயையும் மகளையும் தவிர வேறொருத்தரும் இல்லாத வீடென்று தெரிந்தது. சுவரில் ஒரு பெரியவரின் படம் மாலையுடன் அஞ்சலி செய்தது.
அதைத் தவிர சுவரில் நிறையப் படங்கள். ஜானகியின் இளம் வயதை ஞாபக மூட்டுவதாக இருந்தன. அத்தோடு ஒரு இளம் பையனின் படமும். அது ஜானகியின் தமையன் என்று யாரும் சொல்லத் தேவையில்லை. மகளும் தாயும் குசினிப் பக்கம் போனார்கள். ஏதோ பேசுவது கேட்டது.
ஜானகி ஒரு சில நிமிடங்களில் காபியுடன் வந்தாள். தாய் ஏதோ செய்வதாகத் தெரிந்தது. “தம்பி சாப்பிட்டுப் போனால் என்ன. தோசை செய்து வைத்திருக்கேன்” அந்தத் தாயின் தமிழ் இவனைக் குளிப்பாட்டியது. ராகவன் ஒரு தமிழன் என்று ஜானகி சொல்லியிருப்பாள் போலும்! இதுவரைக்கும் அவன் ஜானகியுடன் தமிழில் பேசவில்லை. அவளும் பேசவில்லை.
அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. இந்த வீட்டுக்குள் வரும் யோசனையே இல்லாமல் ஜானகிக்குத் துணையாக டாக்சியில் வந்தானே தவிர விருந்து சாப்பிட வரவில்லை.
தாயின் வற்புறுத்தல் மட்டுமல்ல. நீண்ட நாளாக வீட்டுச் சாப்பாடு கிடைக்காத ஏக்கமும் இருந்தது.
இவன் தன்னுடன் வேலை செய்பவன் என்று ஜானகி இவனை அறிமுகம் செய்து வைத்தபடியால் என்ன டிப் பாட்மெண்டில் வேலை செய்கிறீர்கள் என்று விசாரித்தாள். தான் ரிட்டயர் பண்ணிய ஆசிரியை என்று சொன்னாள்

Page 30
54 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஜானகியின் தாய். ராகவன், தாய் கேட்ட கேள்விக்குச் சுருக்கமாக பதில் சொன்னாள்.
சில நாட்களுக்குப் பின் லிப்ட்டில் ஜானகியை சந்தித் தான். அவள் எப்போதும் போல் தேவையுடன் பேசிக் கொண்டாள். அவளின் தாய் மாதிரி கலகலவென்று பேச வில்லை. அவன் தன் வீட்டில் தோசை சாப்பிட்ட தோழமை அவள் தொனியில் இல்லை.
அடுத்த கிழமை அவசர வேலையாய் ஐந்தாம் மாடிக் குப் போனபோது “உங்களுக்குப் போன் பண்ணலாம் என்றிருந்தேன்” ஜானகி தயக்கத்துடன் சொன்னாள்.
"ஏன் டக்ஸியில் துணையாக வரவேண்டுமா” அவன் குறும்பாகக் கேட்டான்.
அவள் முதல் முறையாக வாய் விட்டுச் சிரித்தாள். மிக இனிமையான ஒசை, அழகான பாவம், அணைத்துக் கொள்ளத் தூண்டும் தோற்றம். அவன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டான்.
“என் தகப்பன் இறந்து இரண்டாவது வருட ஞாபகப் பூசை வைக்கிறாள் அம்மா. உங்களை சாப்பிட வரச் சொன்னாள்.”
அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சரி என்று சொன்னான். ஜானகியை விட அவளின் தாயின் அன்பு அவனைக் கவர்ந்திருந்தது.
அவன் றெட் பிறிட்ஜிலுள்ள அவள் வீட்டுக்குப் போன ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்த காலப் பூக்கள் அவர் களின் வாசலை அலங்கரித்திருந்தன.
“வாங்க தம்பி” தாய் அன்புடன் வரவேற்றாள். வீட்டில் இன்னும் சிலர் வந்திருந்தனர். நாராயணன் என்று தன்னை அறிமுகம் செய்த மனிதர் ஜானகியின் தமயன். அவருடன் அவரது ஆங்கில மனைவியும் இரு அழகான

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 55
குழந்தைகளும் பாட்டியுடன் செல்லம் பண்ணிக் கொண் டிருந்தன.
எத்தனை அன்பான குடும்பம்? ஜானகி மட்டும் ஏன் பெரும்பாலான நேரங்களில் எதையோ பறிகொடுத்தவள் போலிருக்கிறாள்?
காலையில் பதினொரு மணிக்குப் போனவன் எப்படித் தான் நேரம் போனதென்று தெரியாமல் சந்தோசமாகப் பொழுது போக்கினான்.
பின்னேரம் ஜானகியின் தமயன் குடும்பம் போனபின் ஜானகி மேல் மாடிக்குப் போன பின்னர் “நீங்கள் வந்ததற்கு நன்றி தம்பி,” அந்தத் தாயின் கண்களில் நீர் பனித்தது. ஏதோ சோகத்தைத் துளி காட்டும் கண்ணிர் அந்தத் தாயின் கண்களில் நிறைந்தது.
"நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அடிக்கடி பர்மிங்காம் போய் அம்மா கையால் சாப்பிட முடியாத துக்கம் இன்று போய்விட்டது.”
'தம்பி இங்கிலாந்திலேயே பிறந்தீர்களா?” அவன் ‘ஆமாம்" என்று தலையாட்டினான்.
"அப்பா- அம்மா எந்த நாடு? என்ன ஊர்?” வழமை யான- முதுமையான கேள்வி.
"நாங்கள் தமிழர் என்பதே போதுமென்று நினைக் கிறேன். ஆதிமூலம் அறிந்து என்ன லாபம்” அவன் கிண்ட லாகச் சொன்னான். தாய் பெருமூச்சு விட்டாள்.
அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. பழமைவாதியாய் தெரியும் இந்தத் தாயின் மனதைப் புண்படுத்தி விட்டேனோ?
“மன்னிக்கவும், நான்பாரம்பரியத்தைக் காட்டி மனித உணர்வுகளைச் சிறை பிடிக்க விரும்பவில்லை. நாங்கள் எல்லோரும் ஏதோ ஒரு பகுதியிலிருந்து வந்தவர்கள்.

Page 31
. 56 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம் ,
அரையும் குறையும் என்றாலும் ஏதோ ஒரு தாய்மொழியில் பற்று வைத்திருப்பவர்கள். அந்த நேசம்தான் ஜானகி என்னைப் பழக வைத்தது.”
அவன் நீண்ட வசனங்கள் பேச விரும்பவில்லை என்றா லும் அந்தத் தாய்க்கு அவன் நம்பிக்கையை அதாவது “எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் இம்மண்ணில் வாழ்ந்து மடிந்து போகும் நிரந்தரமற்ற வாழ்க்கையைக் கொண்டவர்கள்” என்று சொல்ல வேண் டும் போல் இருந்தது.
தாய் அழுதுவிட்டாள். அவன் பதைபதைத்தான். ஏன் வந்தோம் என்றாகி விட்டது. ஜானகி மாடியில் என்ன பண்ணுகிறாள்? அவள் வந்தால் இந்தத் தாய் அழுவதை நிறுத்திக் கொள்ளலாம்.
'தம்பி, என் மகனும் இப்படித்தான் சொன்னான். அவன் அப்படிச் சொன்னதற்காக அவனை வீட்டை விட்டே துரத்தி வீட்டார்." அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் கேள்விக்குறியுடன் புருவத்தை உயர்த்தினான்.
“தம்பி அவர் இறந்த பிறகு என் வீட்டுக்கு வந்த முதல் இந்தியர் உம் உம். தமிழர் நீங்கள், மனம் இன்றைக்கு மிகவும் குழம்பிவிட்டது. எலிஸ்பெத்தை- அது தான் என் மகனின் மனைவி- என் மகன் நாராயணன் வரும்பிய போது என் கணவர் அவன் கலாச்சாரத்தை மறந்து, பண்பை விட்டு, இன்னொரு சாதியில்- இன்னொரு இனத் தில் திருமணம் செய்வதை எதிர்த்தார். கொடுமையாக என் மகனை வைதார். தான் இறக்கும் வரை அவன் முகத்தில் விழிக்கப் போவதில்லை என்று சபதம் செய்து கொண்டார்." அவள் சுவரில் மாட்டியிருந்த அவர் படத் தைப பார்த்து அழத் தொடங்கி விட்டாள். அழுவது அவருக்காகவா அல்லது அவர் விதித்து வைத்திருந்த சட்ட திட்டங்களுக்காகவா? அவன் மெளனமாக இருந்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 57
“மனம் நிம்மதியடைய யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருக்கய்யா." அந்தக் தாயின் துயரம் நெஞ்சைப் பிளந்தது.
“ஜானகியைத் தன் ஆசைப்படி ஆசாரம் பார்த்து, சாதி பார்த்து, தராதரம் பார்த்து கல்யாணம் செய்து கொடுத் தார். அவள் நிலை என்னைப் பைத்தியமாக்குகிறது.”
ஜானகி திருமணமானவளா? -அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
“என்ன நடந்தது?” என்று தன்னை அறியாமல் கேட்டு விட்டான்.
“என்ன நடந்ததா. ஒன்றுமே நடக்கவில்லை ஒரு விதத்தில்." அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டு விம்மி னாள். அவனுக்குப் புரிந்ததும் புரியாமலும் இருந்தது.
"அப்பாவின் கட்டளையை கடவுள் கட்டளையாக நினைத்து வளர்ந்தவள், வாழ்ந்தவள் ஜானகி. அப்பாவின் ஆசைக்கு தடை சொல்லாமல் கல்யாணம் செய்து குடித் தனம் செய்ய இந்தியா போனாள்.”
தாய் இன்னொரு தரம் அந்தப் பெரியவரின் முகத்தை வெறித்துப் பார்த்தாள்.
“லண்டன் மருமகளின் காதிலும் கழுத்திலும் பாங்க் கிலும் இருந்த பளபளப்பைப் பார்த்த குடும்பம். அவள் மனதில் இருந்த பண்புக்கு மதிப்புக்குக் கொடுக்கவில்லை தம்பி."
அவன்கதை கேட்க அங்கு வர வில்லை. அந்தத் தாயோ தன் மனதிலிருந்து பாரத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற ஆவேசத்தில் பேசிக் கொண்டிருந் தாள்.
"நாங்கள் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் லண் டனுக்கு வந்தவர்கள். வரும்போது எந்தப் பண்பாட்டை

Page 32
58 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
மனதில் வைத்திருந்தோமோ அதே பண்பாட்டில் கிட்டதட்ட இன்னும் வாழ்கிறோம். ஊரிலுள்ள எங்கள் சொந்தத்தை ஆத்மீக உணர்வுடன் அணுகுகிறோம். ஆனால் உலகம் மாறும் வேகத்தில் சிலர் உண்மைக்கும் கற்பனைக் கும் வித்தியாசம் தெரியாது வாழ்க்கையைக் குழப்புகிறார் கள். நான் ஒரு இந்தியப பெண் என்ற உணர்வுடன் வாழ்ந்த என் மகளை இந்தியா அருவருப்பாகப் பார்த்த தைத் தாங்காமல் அவர் மாரடைப்பில் போய்விட்டார். கட்டிய தாலியின் கனம் கழுத்தை அழுத்த, என் மகள் லண்டன் வந்து சேர்ந்தாள். புராணத்தில் ஒரு ஜானகி. என் வயிற்றில் ஒரு ஜானகி, அந்த ஜானகியை தீயில் இறக்கினார்கள். இந்த ஜானகியை தீயால் அழிக்கப் பார்த்தார்கள்."
அந்தத் தாயின் கண்கள் கடலாயின. ஒரு வருடத்தில் ஐயாயிரத்துக்கும் மேலான இந்தியப் பெண்கள் சொந்த வீட்டிலேயே தீயில் வெந்து சாகிறார்கள். காரணங்கள் ???
அவன் நெஞ்சை நெருப்புச் சுட்டது. ‘என்னை ஏன் பார்க்கிறாய் என்பது போல் நெருப்பாய் பார்ப்பாளே அந்த இந்திய பியூட்டி' இப்படித்தான் ஜானகியை பீட்டர் வர்ணித்தான். அப்படியானவளையா சந்தேகித்தார்கள்?
அவள் லண்டனில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் சந்தேகப்பட்டு அவள் புகுந்த இடம் அவளைப் பரலோகம் அனுப்ப முயற்சித்ததா?
"தம்பி லண்டனில் இருக்கிற சுதந்திரம் பெண்ணுக்கு இந்தியாவில் இருந்தால் இண்டைக்கு இந்தியா எப்படி இருக்குமோ தெரியாது. லண்டனில் வாழ்கிற இந்தியப் பெண்கள் தங்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் சுதந் திரங்களுக்குள்ளேயே தாங்கள் வளர்க்கப்பட்ட இந்தியக் கலாச்சாரத்திற்கு மதிப்புக் கொடுத்து சிறைபட்டு வாழ்வதை தூரத்திலிருப்பவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் *59
ஜானகி வருவது கேட்டது. தாய் அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
ஜானகி தாயையும் அவனையும் மாறி மாறிப் பார்த் தாள். தாயின் கண்ணிருக்குக் காரணம் அவளுக்குத் தெரியும். ஜானகியை ஜான் என்று மாற்றிக் கொண்டதன் துயரக் கதையை அவன் இனிக் கேட்பானா? அவன் பார்வை அவளில் ஒரு நிமிட நேரம் அலைந்தது. ஜானகி யில் பல உருவங்கள் தெரிவதான உணர்ச்சி.
ஜான் நேதன்" என்று சொல்லிக் கொண்டதற்குப் பின்னணியாய் இருந்த சரித்திரம் அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
“தம்பிக்கு என்ன வயது?” அந்தத் தாய் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகக் கேட்டிருக்க வேண்டும்.
"கல்யாண வயது என்று அம்மா சொல்லிக் கொண் டிருக்கிறாள்" அவனை அறியாமல் அவன் குறும்புத்தனம் வெளிவந்தது.
ஜானகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் வீட் டுக்குப் போக ஆயத்தம் செய்த போது ஜானகியின் தாய் வடை, முறுக்கு என்று ஏதோ எல்லாம் கட்டிக் கொடுத் தாள்.
“என் மருமகள் சைவமாகி விட்டாள். அவளுக்காக நிறையச் செய்தேன்." பூரிப்புடன் சொன்னாள் தாய். மரு மகனின் வைத்திருக்கும் அன்பு வார்த்தையில் வெடித்தது.
இந்தியக் கலாச்சாரத்தை மதிக்கும் ஜானகியின் மைத்துணி, இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்த ஜானகியைச் சந்தேகிக்க அவள் கணவன்! உலகம் விசித்திரமானது.
அவனை வழியனுப்ப ஜானகி வாசல் வரை வந்தாள். அவன் பெயர் ராகவன். அவள் பெயர் ஜானகி. அவன் மெளனமாகப் பெருமூச்சு விட்டான்.

Page 33
60 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டி டென்னிஸ் போட்டி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஆபீசில் சம்மர் காலப் பார்ட்டி வழக்கம் போல் நடந்தது. பரந்து விரிந்த பார்க்கில் ஆபீசைச் சார்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்குமிங்கும் உட்கார்ந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஜானகி இவனை வேண்டுமென்றே ஒதுக்கி நடத்துவது போலிருந்தது. அவனுக்குக் காரணம் தெரியும். பின்னேரம் ஏழுமண வரைக்கும் பார்ட்டி தொடர்ந்தது.
சிலர் தள்ளாடினார்கள். சிலர் பாடினார்கள். ஒரு சிலர் ரவுண்டர்ஸ் விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டிருந் தார்கள். நூற்றுக்கணக்கான ஆபீசர்களில் எத்தனை நிறம், எத்தனை மொழி, எத்தனை வித்தியாசமான குணங்கள். ஒரு இடத்தில் வேலை செய்வதனால் உண்டான ஒற்றுமை யுடன் உரையாடினார்கள். ஸ்ரேஷனுக்கு வரும் வழியில் எத்தனையோ பேருடன் அவளும் வந்தாள்.
"அம்மா எப்படி?” அவன் ஏதோ பேச வேண்டும் என்ப தற்காகக் கேட்கவில்லை. உண்மையாகவே அந்த அன்ன மிட்ட அன்னையை நினைத்துக் கேட்டான்.
ஜானகி நிமிர்ந்து பார்த்தாள். மிக மிக சோகமான பார்வை. "அம்மா விடம் உங்களைப் பற்றி இனி விசாரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” ஜானகி சொன் னாள். அவன் மெளனமானான். “இதோ பாருங்கள், நாங் கள் சில பலவீனங்களால் நிலை தடுமாறிப் போகிறோம். அப்படி அம்மாவும் தடுமாறி உங்களிடம் என்னைக் கேட் கக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிச் சொன்னேன்.” ஜானகி நடந்து சென்றாள், துணிவாக,

4. வித்தியாவின் குழந்தை
"வயிற்று வலி என்று இரண்டு மூன்று நாளாய் அவதிப் படுகிறாள்” அந்தத் தாய் தன் மகளின் தலையைத் தடவிய படி டொக்டரிடம் சொன்னாள்.
கசுவல்டி டிப்பார்ட்மெண்ட் (casuaty dept) எத்த னையோ விதமான நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
இரவு ஏழு மணிக்குப்பின்தான் கசுவல்டி டிப்பார்ட் மெண்ட்ஸ் பிஸியாயிருக்கும். ஆம்புலன்சிலிருந்து இறக்கப் பட்ட இரத்தம் கசியும், மூச்செடுக்கக் கஷ்டப்படும் நோயாளியைக் கவனிக்க நேர்ஸ்சும் டொக்டர்களும் அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பெஞ்சுகளில் எத்தனையோ பேர் பொதுமையாய்க் காத்திருந்தாலும் ஒரு சிலரின் முனங்கல்கள், வலி தாங்காத அழுகைகள், குடிவெறியில் உளறிக் கொண்டு தள்ளாடும் ஒலங்கள் என்பன அந்த இடத்தை நிரப்பின.
வயிற்று வலியுள்ள மகளுடன் வந்த இந்தியத் தாய் ஆகஸ்ட் மாத வெயிலின் புழுக்கம் இன்னும் அடங்காத தால் உண்டான வியர்வையைத் தன் சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
டொக்டர் நோயாளி படுத்திருந்த கட்டிலைச் சுற்றி யிருந்த ஸ்கிரீனை இழுத்து மூடினார்.

Page 34
62 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
y
"உனது மகளின் வயிற்றைப் பரிசோதிக்க வேணும்' டொக்டர் தாயிடம் சொன்னார். நோயால் அவதிப் பட் டுக் கொண்டிருந்த பெண்ணுக்குப் பதினாறு வயதிருக்கும்.
பாடசாலைக்கு போகும் வயது. நோயின் வலியால் கன்னங்கள் சிலிர்த்து முகம் வீங்கி, கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. -x
“இரண்டு மூன்று நாள் வலி என்றால் ஏன் டொக் டரிடம் காட்டவில்லை” நோயாளி இளம் பெண்ணின் அவஸ்தையைப் பார்த்த டொக்டர் தாயைக் கேட்டார்.
“அவள் டொக்டரிடம் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.”
டொக்டர் இப்போது அந்தப் பெண்ணின் பாவா டையை இடுப்பு வரைக்கும் நகர்த்தி விட்டு இரு கைகளா லும் வயிற்றைச் சாடையாக அமர்த்திப் பரிசோதித்தார். உடனே அந்தப் பெண்ணை ஊடுவிப் பார்த்தார். டாக்டர் ஒரு ஆங்கிலேயன். முப்பது வயது இருக்கலாம். "உனது வயிறு நோ." டொக்டர் நோயாளிப் பெண்ணை யும் அவள் தாயையும் மாறிமாறிப் பார்த்தார்.
“தாயே." டொக்டர் தனது அமைதியான குரலில் தாயை விழித்துப் பார்த்தார்.
தாய் என்ன கேட்கப் போகிறீர்கள். என்பது போல் டொக்டரைப் பார்த்தாள்.
நாற்பது வயதுள்ள இந்தியத்தாய். தாய்மையின் கனிவு முகத்தில் பிரதிபலித்தது. மகளின் தலையைத் தடவிக் கொண்டதிலிருந்து அவளின் பாசம் தெரிந்தது.
டாக்டர் ஒரு நிமிடம் தாயையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 63
"அம்மா. உனது மகள் தாயாகப் போகிறாள். அவள் வலி பிரசவ வலி. முதற் பிள்ளை என்ற படியால் இரண்டு நாளைக்கு மேல் நோ தொடர்கிறது.”
“என்ன” அந்தத் தாய் அலறினாள். மகளைத் தடவிக் கொண்டிருந்த கைகளை அகற்றி விட்டுப் பேயைப் பார்ப் பது போல் பார்த்தாள். கண்கள் விரிந்து கன்னங்கள் ஒரு கணத்தில் சிவந்து விட்டது. “என்ன டாக்டர் சொல்கிறீர் கள்” அந்தத் தாயின் குரல் ஓங்கிக் கேட்டது.
"ஐயாம் சாரி அம்மா, உன் மகள் கர்ப்பமாக இருக் கிறாள்”
“.டாக்டர் அவளுக்குப் பதினைந்து வயதுதானாகிறது” தாயின் முகம் வெளுத்துப் போயிருந்தது. அவள் குரல் நடுங்கியது. “பன்னிரண்டு வயசிலே தாயாகலாம்” டொக்டர் முணுமுணுத்தார். மகள் வலியில் துடித்தாள். டொக்டர் பிரசவ. வார்ட்டுக்குப் போன் பண்ணினார். மகள் நோவால் துடி துடிக்க அவள் தாய் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
தாய் குலுங்கிக் குலுங்கியழுதாள். மகள் கால்கள் இரண்டையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு புரண்டு துடித் தாள். இவள் எப்படியோ ஒரு உயிரின் வெளிப்பாட்டைத் தடுக்கும் முயற்சி. டொக்டர் ஏதோ எழுதியபடி அந்தப் பெண்களைப் பார்த்தார். ஒரு சில நிமிடங்களில் நோயாளி பிரசவ வார்ட்டுக்குக் கொண்டு போகப் பட்டாள்.
தாய் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பது முகத்தில் தெரிந்தது. இடி விழுந்தாற்போல் அவள் முகம் வெளிறிக் கிடந்தது. சாதாரண வயிற்று வலி என்று டொக்டரிடம் கொண்டு வந்த மகள் தனக்கு ஒரு பேரப் பிள்ளையைத் தரப் போகிறாள் என்று கேள்விப்பட்ட செய்தியின் அதிர்ச்சி அவளைத் திக்கு முக்காடப் பண்ணியிருந்தது.

Page 35
64 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"அம்மா. உங்கள் மகளின் நிலை சரியாக இல்லை. பன்னீர்க்குடம் உடைந்து நீர் போய் பிரசவ வழி இப்போது காய்ந்தளவுக்குப் போய் விட்டது. அவளின் பிரசவக் குத்தும் சரியாக இல்லை. குழந்தையின் இருதயத் துடிப்பும் கவலைக்கிடமான நிலையிலிருக்கிறது. மருந்து கொடுத்து பிரசவ வலியைத் துரிதப் படுத்த யோசிக்கிறோம். நாங்கள் எடுக்கும் இந்த முடிவுக்கு நீங்கள் கையெழுத்து வைக்க வேண்டும்." டாக்டர் ஏதோ சொல்லிக் கொண்டே போனார். அந்தத் தாய் அழுது கொண்டேயிருந்தாள். “என் கணவருக்குத் தெரிந்தால் என்னைக் கொலை செய்து விடுவார்” தாய் விசும்பினாள். தாயின் குரல் நடுங்கியது.
"காலம் கடந்தால் உங்கள் மகளின் நிலை கவலைக் கிடமாகலாம். எப்போதிருந்து இரத்தம் கசியத் தொடங் கியதோ தெரியாது. அவளுக்கு இரத்தம் கொடுக்க வேண்டி யும் வரலாம்.”
டாக்டர் அந்தத் தாயைத் துரிதப் படுத்தினார்.
"அவளைச் சாகவிடுங்கள்.” ஒரு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பரிவுடன் மகளின் தலையைத் தடவிக் கொண் டிருந்த தாய் ஆத்திரம் வெடிக்கச் சொன்னாள். மகள் இருந்த பக்கத்தையே திரும்பிப் பார்க்காமல் அந்தத் தாய் விம்மினாள்.
அவமானம் முகத்திற் பரவிக் கிடந்தது.
“உங்கள் மகள் பதினைந்து வயதுப் பெண், அவளின் சிகிச்சைக்கு அனுமதி கொடுப்பது சட்டப்படி உங்கள் கடமை”
டாக்டர் கடுமையாகச் சொன்னாள்.
மகளின் வேதனைக் குரல் அந்த அறையை நிரப்பியது. இரண்டு தாதிகள் அந்தப் பெண்ணுக்குத் தேவையான வற்றை செய்து கொண்டிருந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ぐ 65
தாய் பெரிதாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவளின் ஆத்திரத்தில் புரிந்தது ஒன்று. அவள் மகள் கர்ப்பமானது அந்தத் தாய்க்கு இந்த வினாடி வரை தெரியாமல் இருந்த தென்பது.
"அம்மா இந்த நேரம் கோபம் காட்டக் கூடிய நேர மல்ல. உதவி செய்ய வேண்டிய நேரம்” ஒரு நேர்ஸ் அந்தத் தாயிடம் அன்பாகச் சொன்னாள். “பிரசவ நோ உலகத்தி லேயே மிகக் கொடிய நோ” இன்னுமொரு நேர்ஸ் தொடர்ந்தாள் “நாங்கள் கவுரமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இவள். இவள் என் வயிற்றில் பிறந்ததற்காக நான் வேதனைப் படுகிறேன்” தாய் அழுது கொண்டே டாக்டர் காட்டிய பத்திரத்தில் கையொப்பம் வைத்தாள்
மூன்று நாட்களாகி விட்டன.
பதினைந்து வயதுப் பெண்ணுக்கு ஒரு ஆண்குழந்தை அவள் தன் முலையைச் சூப்பும் அந்தப் புதிய பிறவியைச் கண் கொட்டாமற் பார்த்தாள்.
எல்லாம் 'ஏதோ கனவில் நடப்பது போலிருக்கிறது குழந்தையின் வாயால் பால் வழிய வழிய அந்த மூன்று நாள்ப் பிறவி உறுஞ்சி உறிஞ்சி எடுக்கிறது. அவளுக்கு மார்பு வலிக்கிறது. முலையை எப்படிக் குழந்தையின் வாயில் வைப்பது என்று தெரியாமல் முலைகாம்பின் நுனியை மட்டும் சூப்பக் கொடுத்ததால் காம்பின் நுனி இரத்தம் கண்டு விட்டதால் அந்த நோ உயிரைப் பிடுங்குகிறது.
கால்களை ஒரு பக்கமாகத் திருப்பிய போது பெண்ணு றுப்பில் போட்டிருந்த தையல்கள் பிரிந்து வெடிப்பது போல் நொந்தது.
அவள் கண்களில் நீர் வடிந்தது. ஆங்கில நாட்டில் பிறந்த இந்தியப் பெண். தாய் தகப்பன் அடக்கி வைத்து வளர்க்கப் பட்ட அருமை மகள். உலகம் தெரியாமல் வளர்க்கப் பட்டாள் இன்று. அந்த இளம்தாய் தனது மூன்று நாள் மகனைத் தன் முலையோடு அணைத்துக் கொண்டபோது
இ.கா.-5

Page 36
66 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஏதோ விரும்பாத ஞாபகங்கள் அவள் மூளைக்குள் முள்ளாய்க் குத்தின.
அம்மாவின் தங்கையின் மகன்- ஒன்றைவிட்ட தமயன் ஸ்கொட்லாந்திலிருந்து லண்டனுக்கு வந்த போது அவனுடன் களங்கமற்றுப் பழகியதின் விளைவு?
ஒன்றரை மாத லீவு முடிய அவன் வீடு திரும்பிய போது இதுவரை பழகாத விளையாட்டெல்லாம்' இப்படி விளையாட முடியுமென்று அவளுக்குத் தெரியாது. தாய், தகப்பன் இவளை 'உலகம் தெரியாமல் வளர்த்தவர்கள்.
குழந்தை உறங்கி விட்டது. உற்றுப் பார்த்தாள். அவனின் மூக்கு அப்படியே இருக்கிறது. அவளின் இதழ்கள் முல்லை மலர்போல் அழகானவை. அந்தப் பச்சை மண்ணும் நித்தி ரையில் சப்பிக் கொண்டபோது அந்த இதழ்கள் அவனு டையது போலிருந்தது.
மூன்று நாட்களாக அவள் தனிமையில் வாடுகிறாள். குழந்தை பிறந்தபோது அவளின் தாய் வாயிலும் வயிற்றி லும் அடித்துக் கொண்டாள். "எந்தப் பயலிடம் பெண்மை யைப் பறி கொடுத்தாய்” என்று பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை அடியாய் அடித்தாள். நேர்ஸ் வந்து தடுத்திருக்காவிட்டால் கொலையே நடந்திருக்கும்.
பன்னிரண்டு வயதில் பருவமெய்தியவள். பதினான்கா வது வருடக் கடைசியில் ஒன்றை விட்ட தமயன்பதினெட்டு வயதுக்காரனுடன் ஒடி ஏறித்து விளையாடிய பின் பீரியட் நின்றதைப் பற்றி அதிகம் கவலைப் படத் தெரியக் கூடத் தெரியவில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் பீரியட் வராததால் அவள் பயப்படத் தொடங்கினாள். இன்று? இவளைப் பார்க்க யாரும் வராததால் டாக்டரும் நேர்ஸ்சும் சோசியல் சேர்விசுற்கு அறிவித்த போது ஒரு ஆசிய சோசியல் வேர்க்கர் வந்திருந்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் X 67
கன்னத்தருகில் படரும் நரை மயிரும், கண்ணாடியுமாய் வந்த அந்த மாது இந்த இளம் தாயிடம் 'ஏன் உன்னைப் பார்க்க யாரும் வரவில்லை' என்று விசாரித்த போது என்ன மறு மொழி சொல்வது என்று தெரியாமல் தேம்பத் தொடங்கி விட்டாள்.
குழந்தையை அணைத்துக் கொண்டழும் அந்தப் பதினைந்து வயதுக் குழந்தையை அன்புடன் அணைத்துக் கொண்டாள் அந்த மாது.
"உனது குடும்பத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா” அந்த மாது உத்தியோக தோரணையற்ற முறையில்
கேட்டாலும் அந்த விசாரணை அந்த இளம் பெண்ணைப் பயப்படுத்தி விட்டது.
“எனது வயது பதினைந்து, எனது பெயர் வித்யா. நான் இரண்டு தம்பிகளுக்கு அக்கா. என்னை ஒரு நாளும் என்பெற்றோர் என் சிநேகிதிகளுடன் விளையாடப் போக அனுமதித்தது கிடையாது.” வித்யாவின் குரல் உடையத் தொடங்கியது.
"உனது சினேகிதனின். உனது குழந்தையின் தகப்பனின் பெயர் என்ன.”
வித்தியா ஓவென்று அழத் தொடங்கி விட்டாள், "அவன் பெயரைச் சொன்னால் அவன் இறந்து விடுவான் என்று சொன்னான். அவன் செத்துப் போனால் அவள் தாய் தாங்கமாட்டாள் என்றும் சொன்னாள்.”
வித்தியா அப்பாவித்தனமான- கட்டுப்பாடாக வளர்க் கப்பட்ட முட்டாள்ப் பெண்ணாக அந்தச் சோசியல் சேவிஸ் மாதுவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பரிதாபத் துடன் இந்த அப்பாவிப் பெண்ணைப் பார்த்தாள். “யாரும் உதவியுமில்லாமல் எப்படி இந்தக் குழந்தையைப் பாது காக்கப் போகிறாய்” பரிதாபத்துடன் கேட்டாள். “வித்யா என்றால் ஞானம் என்று தெரியுமா” அந்த மாது தான்

Page 37
68 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
கொண்டு வந்திருந்த பைலில் ஏதோ எழுதியப கேட்டாள்.
வித்யா திரு திருவென்று விளித்தாள். பிள்ளை வந்தது. பிறந்தது. இப்போது தன் அருகில் இருப்பது எல்லாம் நம்ப முடியாதது. “யாருக்கும் தத்துக் கொடுக்கும் யோசனை யிருக்கிறதா.”
வித்தியா பேயடித்ததுபோல் அந்த மாதைப் பார்த்தாள்.
"உனது வயது பதினாறு கூட இல்லை. தாய் தகப்பன் உதவியும் இல்லை. இந்த நிலையில் உன்னையும் இந்தக் குழந்தையையும் உன்னால் பரிபாலிக்க முடியும் என்று நினைக்கிறாயா"
சோசியல் சேர்விஸ் மாது போனபின் வித்தியா பிரமை பிடித்ததுபோல் படுத்திருந்தாள். பக்கத்துக் கட்டிலில் ஒரு ஆங்கிலேயத் தம்பதிகள் நீண்ட காலம் பிள்ளைக்காகத் தவித்தவர்கள் போலும் தங்கள் குழந்தையை மாறி மாறிக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த கட்டிலில் இவளை விட இன்னுமொரு வயது கூடிய பெண்ணாகத் தெரிந்த கறுப்பு இளம் தாயொருத் தியை அவள் தாய் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அவர்களின் பேச்சில் அந்த இளம்பெண்ணுக்கு வித்தியா போல் தவிக்கிறாள் என்பது புரிந்தது. “குழந்தை பிறந்ததைப் பற்றிக் கவலைப்படாதே, நீ தொடர்ந்து பாடசாலைக்கு போ நான் பிள்ளையை வளர்க்கிறேன்” கறுப்புத்தாயின் அன்பு வித்தியாவைப் பெருமூச்சுவிடச் செய்தது. வித்தியா தன் தாயை நினைத்துக் கொண்டாள். அவளைக் கண்டே மூன்று நாளாகிறது.
இன்னுமொரு கட்டிலில் ஒரு வயதுபோன ஆசிய மனிதனும் இளம் மனைவியும் தங்களுக்குப் பிறந்திருக்கும் குழந்தையின் அழகைப் பற்றி கட்டிலைச் சூழ்ந்து நிற்கும் உறவினர்களுக்குப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 69
அந்த மனிதனுக்கு அந்த மனைவி இரண்டாவது மனைவியாயிருக்க வேணும். கணவனை மிகவும் அதிகார மாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
முதற் கட்டிலில் ஒரு தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்க்காமல் ஏனோ தானோ என்று நடந்து கொண் டார்கள். பிள்ளை பிறந்ததை அவர்கள் விரும்பவில்லை.
ஆறாவது கட்டிலில் ஒரு இளம் தம்பதிகள்- ஆங்கிலேயர் கள் அடிக்கடி நேர்ஸைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற பயம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக ஒட்டிக் கிடந்தது. வித்தியா தன் குழந்தை யைப் பார்த்தாள். அவள் வாழ்க்கை தலைகீழாகி, விட்ட தைத் தெரியாத அந்தக் குழந்தை நிம்மதியாகத் துரங்கிக் கொண்டிருந்தது. வித்தியா கண்களை மூடிக் கொண்டாள். தலை விண் விண் என்று வலித்தது. முலைகள் வேறு நோ வெடுத்தது. கால்களுக்கு இடையில் போட்ட தையல்கள் ஒவ்வொரு அசைவிலும் உயிரைப் பிடுங்கியது.
குழந்தை நிம்மதியாக நித்திரையாகியிருந்தது. இவளுக்கு நாற்பது வயதாகும் போது, அவள் மகன் இருபத்தைந்து வாலிபனாக இருப்பான். நினைவுகள் தெறித்தன. அப்பா யார் என்று கேட்டால் என்ன சொல்வது? என் ஒன்று விட்ட தமயன் உனது அப்பா என்பதா? உடம்பு நோ எடுத்தது. சூடு பரவி தலைஇடித்தது. அன்று பின்னேரம் தாய் வந்திருந்தாள். வித்தியா எழுந்து உட்கார்ந்தாள். “மூதேவி, சண்டாளி, தேவடியாள், குடும்பத்தைக் கெடுத்த நாய்.” தாய் திட்டிக் கொண்டேயிருந்தாள். குழந்தையை ஏனென்றும் கண் எடுத்துப் பார்க்கவில்லை. “இந்தச் சவத்தை ஏனடி சாக்காட்டாமலிருக்கிறாய்” ‘சவம்' என்று குறிப்பிட்ட வித்தியாவின் குழந்தை மூன்று நாள் முதிர்ச்சி யில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
தாய் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தடித்த மீசை யுள்ள மனிதன் வந்து சேர்ந்தான்.

Page 38
70 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"ஏய் என்ன அப்பாவி மாதிரிப் பார்க்கிறாய்? எவனோ டேயோ படுத்து இந்த முண்டத்தைப் பெற்றுப் போட்ட உனக்கு எத்தனை தரம் செருப்பாலடித்தாலும் என் ஆத்திரம் தீராது.”
தாய் புலம்பிக் கொண்டேயிருந்தாள். மீசைக்காரன் இவளைப் பார்த்துச் சிரித்தான். இவளைத் தன் உடமை யாய்ப் பார்த்துச் சிரித்த சிரிப்பு. "கவலைப் படாதே நீயும் உன் குழந்தையும் சுகமாக இருக்க நான் உதவி செய்வேன்” வித்யாவைப் பார்த்துச் சொன்னான். அவனின் சிரிப்பைப் பார்த்ததும் அவள் அடிவயிற்றில் ஏதோ பூச்சி நெளிவது போலிருந்தது.
“என்ன அப்படிப் பார்க்கிறாய். உன் முண்டத்தை ஒரு நல்ல குடும்பத்தில் ஒப்படைக்க இவர் உதவி செய்யப் போகிறார்” தாய் எரிந்து விழுந்தபடி சொன்னாள்.
வித்தியா வழக்கம் போல் மெளனமாக இருந்தாள். "உன்னை நான் வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தால் உன்னையும் என்னையும் கொலை செய்வதாக உனது தகப்பன் சொல் கிறார், இந்த மனிதன் உனது முண்டத்தைக் கொண்டு போனதும் நான் உன்னை எனது சகோதரி வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன், அவளும் அவள் குடும் பத்தினரும் உன்னை அன்போடு பார்த்துக் கொள்வார் கள்.”
வித்யா தான் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையா இல்லையா என்று நம்ப முடியாமலிருந்தாள்.
“ஸ்கொட்லாந்துக்கு என் தங்கச்சிக்கும் குடும்பத்தினருக் கும் நீ பெரிய ஆபரேசன் செய்யப்பட்டுச் சுகமில்லாமல் ஹொஸ்பிட்டலில் இருப்பதாகத்தான் சொல்லியிருக் கிறேன், குழந்தை பற்றி மூச்சு விடாதே” தாய் பேசிக் கொண்டே யிருந்தாள். “உன்னை வீட்டுக்குப் போகலாம் என்று டொக்டர் சொன்னதும் நான் மற்ற அலுவல்களை பார்க்கிறேன்"

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 71
தாய் போய் விட்டாள். போக முதல் மீசைக்காரன் இவளை வந்து தடவிப் பார்த்தான். தாய் தெரிந்தும் தெரியாததும் போல் நடந்து கொண்டாள்.
அன்றிரவு வித்தியாவுக்குச் சரியான காய்ச்சல். பால் வலியால் முலை கனத்தது. அந்த நோ வேறு.
அடுத்த நாள் பின்னேரம் டொக்டர் வந்த போது இவளின் கடுமையான காய்ச்சல் நிலை கண்டு இரத்தப் பரிசோதனை செய்தார்.
யாருடைய உடம்பிலோ யாரோ ஏதோ வெல்லாம் பண்ணிய உணர்ச்சி. மனசும் உடலும் மரத்துப் போன மாதிரி வித்யா பிரமை பிடித்திருந்தாள்.
குழந்தை பசி தாங்காமல் அழுதபோது நொந்த முலை யில் சிசுவை மேயவிட்டாள்.
அன்றிரவு குழந்தைக்கும் காய்ச்சல் கண்டது. நடுச்சாமத் தில் இவளின் ரெம்பரேச்சரைப் பார்க்க வந்த நேர்ஸ் இவள் குழந்தைக்குப் பால் கொடுப்பதைக் கண்டதும் பதை பதைத்து விட்டாள்.
“காய்ச்சல் இப்படிக் காயும் போது குழந்தைக்கும் பால் கொடுக்கலாமா" வித்தியா வழக்கம் போல் திரு திருவென விழித்தாள்.
"உனது உடம்பில் இன்வெக்சன் (infection) பரவியிருக் கிறது. குழந்தை பிறக்க முதலே பன்னிர்குடம் உடைந்து ஒழுகிக் கொண்டிருந்ததாலும், இரத்தம் போய்க் கொண் டிருந்ததாலும் கிருமிகள் தொற்றியிருக்கலாம்."
அந்த நேர்ஸ் சொன்னவை பாதி புரிந்தது. பாதி புரியவில்லை.
“காய்ச்சல் நேரத்தில் குழந்தைக்குப் தாய்ப்பால் கொடுக்
கக் கூடாது" நேர்ஸ் குழந்தையைத் தாயிடமிருந்து தூக் கினாள்.

Page 39
72ぐ இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“பால் கொடுத்தால் என்ன நடக்கும்” வாழ்க்கையில் முதற் தரம் ஒரு உருப்படியான கேள்வியைக் கேட்கும் உணர்வு. வித்தியா கேட்டாள்.
“உன் உடம்பில் தொற்றியிருக்கும் கிருமிகளின் கொடுமை தாங்காமல் உனக்கே நூற்று மூன்றில் காய்ச் சலடிக்கிறது. இந்தப் பச்சை மண்ணுக்குத் தொற்றினால் என்ன நடக்கும். இந்தப் பொல்லாத உலகத்தைப் பார்த்தே நாலு நாட்கள்தான். அதற்கிடையில் ஏன் அந்த அழகிய குழந்தைக்கு இத்தனை வேதனை."
நேர்ஸ் பொரிந்து தள்ளிவிட்டுப் போய் விட்டாள். நேர்ஸ் போத்தல் பால் கொடுத்து முடியக் குழந்தையைக் கொண்டு வந்து வித்தியாவின் கட்டில் அருகிற் போட் டிருந்த தொட்டிலிற் போட்டு விட்டுப் போனாள்.
வித்தியா கண்களை மூடிக் கொண்டு யோசனை செய்தாள். மீசைக் காரனின் காமச் சிரிப்பு நினைவிற் சிதறியது. குழந்தை போத்தல் பால் குடித்ததாலோ ஏதோ உடம்பை நெறித்து அழத் தொடங்கி விட்டது.
இன்னொரு நேர்ஸ் வந்தாள். "அம்மாவின் அணைப்புத் தேவையாக்கும்” குழந்தையைத் தூக்கி வித்தியாவின் அருகில் கிடத்தினாள்.
தாயின் சூட்டில் குழந்தை நெளிந்து முகத்தைத் திருப்பி முலையைத் தேடியது.
இரவு நிசப்தம். சில தாய்மார் அரைகுறை நித்திரையில் தங்கள் குழந்தைகளுக்கும் பால் கொடுத்துக் கொண்டிருந் தார்கள்.
நேர்ஸ் நீண்ட நேரம் அந்த வார்ட்டுக்கு வரவில்லை. கண்களில் நீர் வடிய கருத்தினில் ஆத்திரம் பொங்க அவள் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தாள்.
குழந்தை ஆசை தீர உண்டுவிட்டு அம்மாவின் அர வணைப்பில் தூங்கி விட்டது. அம்மாவின் உடம்புக் கிருமி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 73 கள் அந்தப் பிஞ்சு மண்ணில் பதிந்து தெரியாத தூக்கம். அடுத்த நாள் டொக்டர் வந்த போது குழந்தைக்கும் காய்ச் சல் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தை சோர்ந்து விட்டது. ஒரு மணித்தியாலத்தில் எத்தனையோ தரம் வாந்தி எடுத்து விட்டது. அன்று பின் னேரம் வந்தபோது குழந்தைக்கு வலியும் வந்து விட்டது, வலி வந்து குழந்தையின் கை கால்கள் திமிர்த்திய போது வித்யா கண்ணிர் விட்டாள். சிறு குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் காய்ச்சல் வந்தால் சில நேரம் வலி என்று அந்த டொக்டர் அவளுக்கு விளக்கம் கொடுத் தார். வழக்கம்போல் அவள் மெளனமாக இருந்தாள்.
குழந்தைக்குத் தாய்ப்பாலோ, போத்தல் போலோ கொடுக்காமல் இன்ராவீனஸ் ட்ரிப் (intravenus drip) கொடுத் தார்கள். ஆன்டிபயோட்டிக் கொடுத்தார்கள்.
எட்டு மாதத்தில் பிறந்த குழந்தை, கிட்டத்தட்ட ஐந்து இறாத்தல் எடையாய்ப் பிறந்தது. அந்த எட்டு மாதங்களில் பெரும்பாலும் அவள் தன் அறையிலேயே ஒதுங்கிக் கிடந்தாள். முடியுமானமட்டும் தன்னால் ஆன எக்ஸ் சைஸ் எல்லாம் எடுத்து உடம்பை வருந்தினாள். எப்ப டியோ தன் வயிறு வளராமல் இருக்கப் பிரயத்தனம் செய்தாள்.
பதினைந்து வயது இளம் முலை, பீரியட் வராமல் விட்ட நான்காம் மாதம் நீல நாளங்கள் புடைத்துக் கொண்டு வளர்ந்ததைப் பீதியுடன் பார்த்தாள். குனிந்து பார்த்தால் பெண் உறுப்பு தெரியாமல் வயிறு வளர்ந்தபோது பயம் பிடித்துக் கொண்டது. பாடசாலையால் வந்து தன் அறை யுள் அஞ்ஞாத வாதம் செய்தபோது தன்னுடைய சினேகிதி களுடன் வெளியில் விளையாட விடவில்லை என்று முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறாள். என்று தாய் தன் னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். ரீனேஜர் மாதிரி 'ரைட்" ஆக உடையணியாமல் தொள தொள வென்று உடுப்புக்கள் போட்ட போது தாய் சொன்னாள்

Page 40
74 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இந்த டீனேஜர்கள் இப்படித்தான் தனக்கு விருப்பமான என்ன வெல்லாமோ செய்து கொண்டு திரிகிறார்கள் என்று சிரித்துக் கொண்டாள்.
எட்டு மாதம் வித்தியா நரக வேதனைப் பட்டாள். வசந்தகால விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த ஸ்கொட் லாந்து உறவுக்காரரின் ஞாபகம் முள்ளாய்த் தைத்தது. ஒன்றைவிட்ட தமயன் இருளில் தந்த முத்தம் பட்ட இடம் இப்போது தகித்தது. வித்தியா முகட்டைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள். விடுமுறையின் ஒரு சில தினங்களின் விளையாட்டின் வினை அவளது வாழ்வோடு விளையாடுகிறது. சுக மில்லாமல் வந்த இரண்டாம் நாளே அவள் குழந்தை இறந்து விட்டது. வித்யா இறந்த குழந்தையின் விறைத்த உடலையணைத்து அழுதாள். தாய் இரண்டாம் தரம் வந்தபோது குழந்தை எப்படி இறந்தது என்பதை டொக்டர் விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார். குறை மாதத்தில் பிறந்த பிள்ளைக்கு வந்த காய்ச்சலின் தாக்கத்தால் மூளைப் பாதிப்பும் வலிப்பும் ஏற்பட்ட விபரம் வித்தியாவுக்குச் சொல்லப் பட்டது.
வித்தியா சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உலகம் தெரியாத பதினொன்று வயதுப் பெண்ணாகத் தொடங்கித் தன் குழந்தையைத் தானே கொலை செய்யு மளவுக்கு மாற்றிய கொடிய உலகத்தை அவள் பார்த்து நடுங்கினாள். கடுமையான காய்ச்சலாக இருந்த போது குழந்தைக்குப் பால் கொடுத்த நினைவு நெருப்பாய்ச் சுட்டது. “சனியன் செத்தது நல்லது” தாய் இவள் காதில் முணு முணுத்தாள்.
"அப்பா கொஞ்ச நாளைக்கு முகத்தை நீட்டிக் கொண் டிருப்பார். பின்னர் எல்லாம் சரியாகப் போய் விடும், யாரும் சினேகிதர்களின் சகோதரர்களுடன் பழகாதே. படித்து முடி. நல்ல இந்து மாப்பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன்." அவள் தாய் இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

5. இலைய்திர்காலத்தின் ஒரு மாலை நேரம்
தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில் ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த போது தான், தான் ரெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காததன் தவறு புரிந்தது.
லட்சுமி தன்னைத்தானே மனத்துக்குள் திட்டிக்கொண் டாள். ஆபீசிலிருந்து புறப்படும் போது டாக்டர் ஜேன் சிம்சனும், டாக்டர் லெஸ்லி பிரவுனும் லட்சுமியுடன் கலகலவென்று பேசிக்கொண்டு வந்தார்கள்.
லட்சுமி அவர்களின் குவாட்டமாலா நாட்டுப் பிரயா ணக் கதைகளைக் கேட்டு அக மகிழ்ந்து போனாள். அந்தச் சந்தோசத்தில் ரெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்க வில்லை.
அவர்கள் இரண்டு ஸ்ரேசன்களுக்கு முன் இறங்கிவிட் டார்கள். இவள் தான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் ஹான்ட் பாக்கைத் தூக்கிக்கொண்டு எழும்பினாள். ட்ரெயின் நிற்கவில்லை.
சட்டென்று மனதில் ஒரு பயம். அடுத்த ஸ்ரேசனில் நிற்காவிட்டால் ? ஆறு மணிக்குப் பின் சின்ன ஸ்ரேசன் களில் ட்ரெயின் நிற்காது. ட்ரெயின் நிற்கவேயில்லை.
பின்னேரம் ஆறு மணியைத் தாண்டிவிட்டது. இலையுதிர்க் கால மேகம் ஏக்கம் பிடித்த பெண் போல் ஏனோதானோ வென்று சிவப்புக்கரைகளைக் காட்டியது.

Page 41
76 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இவள் இறங்கவேண்டிய இடத்தைவிட்டு இரண்டு ஸ்ரேசன்கள் தள்ளி ட்ரெயின் ஓடிவிளையாடும் பிள்ளைபோல் நின்றது.
முன்பின் தெரியாத இடம். ட்ரெயின் போய்விட்டது. அடுத்த பக்கத்தில் போய் லண்டனுக்குப் போகும் ட்ரெயின் எடுத்து வீட்டுக்குப் போகவேண்டும்.
மாலைநேரம் வரையும் வேலை செய்த களைப்பில் மக்கள் சோர்ந்த முகங்களுடன் அவசர நடைபோட்டனர்.
இவர்கள் படிகளால் ஏறி அடுத்த பிளாட் பாரத்தைக் கடந்து பிரதான வீதிக்குச் செல்லும் பாதையில் பரபர வென எறும்புகள் மாதிரிப் போய்க்கொண்டிருந்தனர்.
அடுத்த ட்ரெயின் எடுத்து வீட்டுக்குப் போவதா அல்லது பிரதான தெருவுக்குப் போய் எந்த பஸ் வரும் என்று பார்த்து வீட்டுக்குப் போவதா?
அவள் குழப்பத்துடன் ஒரு தரம் தயங்கினாள். எல்லா ஸ்ரேசன்களுக்குப் பக்கத்திலும் பஸ் ஸ்ரோப் இருக்காது. குறைந்தது ஐந்து நிமிட நடைத் தூரத்திலொன்று தான் இருக்கும்.
அப்படித்தான் பிரதான தெருவுக்குள் போனாலும் எந்த பஸ் என்று கண்டுபிடித்து, அல்லது எத்தனை பஸ் எடுக்க வேண்டும் என்று கண்டுபிடித்து. இதெல்லாம் யோசிக்கும் போது தன்னில் இன்னும் கூடக் கோபம் வந்தது. வீட்டுக் குப் போனதும் “ஏன் லேட்?" என்ற கேள்வி மட்டும் வராது.” “என்ன தேவையில்லாத வம்பளப்பு” என்று தொடரும்.
லட்சுமி பெருமூச்சு விட்டாள். அடுத்த பிளாட்பாரத் திற்கு இறங்கி வந்த போது இவளுடன் ட்ரெயினிலிருந்து இறங்கிய மூன்று இளைஞர்களும் பிளாட்பாரத்தில் நிற்பது தெரிந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 77
இவர்களும் என்னைப்போல் அரட்டை அடித்துக் கொண்டு வந்து அறிவிப்பைக் கேட்காமல் விட்டுவிட்டார் களா? அவள் அவர்களைக் கேட்க விரும்பினாள்.
அவர்களில் ஒருத்தன் வெள்ளைக்காரன். இன்னொருத் தன் கருப்பன், மூன்றாமவன் கலப்பு சாதிக்காரன்.
மிகவும் சத்தம்போட்டுக் கெட்ட வார்த்தைகளில் ஒருத்தரை ஒருத்தர் கேலி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இந்தப் பிளாட்பாரத்திலிருப்பது அவர்களுக்குத் தெரியாதா? அவள் மெளனமாக ஒரு ஓரத்தில் ஒதுங்கினாள்.
லண்டன் போகும் ட்ரெயின் ஒன்றும் வந்தபாடில்லை. ஏதோ ஒரு இடத்தில் ஸிக்னல் F பெயிலியரோ என்னவோ, அவள் தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
சட்டென்று ஏதோ பாலைவனத்தில் நிற்பது போன்ற பிரமை, ட்ரெயினில் வரும் வரைக்கும் சக பிரயாணிகளா கத் தெரிந்தவர்கள், இப்போது சலனத்தையும் குழப்பத் தையும் உண்டாக்குவது அவள் மனப்பிரமையா?
நூற்றுக்கணக்காக இந்தப் பிளாட்பாரத்தில் இறங்கிய மனிதக் கூட்டத்தின் ஒரு சுவடுகூட இல்லை. மெளன மாகப் போய்ச் சேர்ந்த அந்த மந்தைக் கூட்டம் ஒரு அசாதாரணமாகத் தெரிந்தது.
எல்லோரும் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருப் பார்கள். இவளோ என்றால்.
சட்டென்று ஞாபகம் வந்தது. இவள் இருக்குமிடத்திற்கு செல்லுபடியான டிக்கட் இவளிடமில்லை.
சடசடவென்று படியேறிப் போய் ஸ்டேசன் மாஸ்டர் கதவைப் பார்த்தால் அது பூட்டி இருந்து. ஆறுமணிக்குப்

Page 42
78 - இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
பின் இந்த ஆபீஸ் திறக்காது என்று தெளிவாக எழுதிப் போடப்பட்டிருந்தது.
கீழே இறங்கி வந்தாள்.
இளைஞர்கள் ஆளுக்கொரு பியர்க்கான்களுடன் ஒருத்தரை ஒருத்தர் ஒடிப்பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
இலையுதிர்காலக் காற்று குளிரை முகத்தில் வாரியடித் தது. லட்சுமி ரிக்கட் எடுக்கும் மெஷின் பக்கம் போனாள். அதே நேரம் இவளை மோதித் தள்ளுவது போல் அந்தக் கறுப்பு இளைஞன் ஒடிக் கொண்டு திரிந்தான்.
அந்தக் களேபாரத்தில் இவள் போகும் ஸ்ரேசனுக்குத் தேவையான ரிக்கட்டுக்குப் பதில் லண்டனைச் சுற்றிப் பார்க்கும் ரிக்கட்டுக்கு விரலைப் பதித்தபடியால் அநியாய மாக இரண்டு ஸரேர்லிங் நட்டம்.
‘என்ன கெட்ட காலமோ? அவள் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது தூரத்தில் ட்ரெயின் வருவது கேட்டது. ஆவலுடன் பையைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்கவும், ட்ரெயின் இவளைத்தாண்டி ஓடிவிடவும் சரியாக இருந்தது.
இந்த நேரத்தில் எந்த ட்ரெயினும் இந்த ஸ்ரேசனில் நிற்காதா? யாரிடமாவது கேட்க வேண்டுபோல் இருந்தது.
நேரம் மங்கிக்கொண்டு வந்தது.
அவர்கள் தூரத்திலும் இவளுக்கு அண்மையிலுமாக அடிக்கடி சீண்டி விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் கள், இரண்டாவது பியர்க்கானை உடைத்தார்கள். அவர் கள் போதைவெறியில் உளறிக்கொண்டிருந்தார்கள். 'என்ன இவர்கள் பியர்க்கானையும் சுமந்து கொண்டாதிரிவார் கள் ? போதை தலைக்கேறினால் என்ன பண்ணுவார் களோ? அவள் பிளாட்பாரத்தை வெறித்துப் பார்த்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 79
‘ஏழுமணிவரைக்கும் ஒரு ட்ரெயினும் நிற்காது" யார் இது? அக்கம் பக்கம் யாருமில்லையே?
அவள் திரும்பிப் பார்க்கும் போது மேலேயிருந்து கீழே வரும் படிகளில் ஒரு வெள்ளைக்காரன் வந்து கொண் டிருந்தான்.
“இதெல்லாம் லண்டன்ைத் தாண்டிவிட்ட குட்டி ஸ்ரேன்கள். ஆறுமணிக்குப்பின் அடிக்கடி ட்ரெயின் நிற்காது. கடைசி ரெயின் ஏழரை மணி. அதன்பின் அடுத்த நாள் காலையில் ஆறரை மணிக்குத்தான்.”
அவன் இவளை உற்றுப் பார்த்துக்கொண்டு சொன் னான்.
“என்ன முட்டாள்தனம் செய்து விட்டேன்? பிரதான தெருவுக்குப் போய் டாக்ஸியாவது எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம்.”
அழவேண்டும் போல் இருந்தது.
புதிதாக வந்தவன் இவள் இருந்த பெஞ்சில் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
ஒரு நாற்பது வயதிருக்கலாம். இலையுதிர்காலத்தின் குளிர்காற்றில் அவனின் பொன்நிறத் தலைமயிர்கள் அலையாடின. உயர்ந்த தோற்றம், மிடுக்கான குரல், நீலநிற விழிகள் இவளை உற்றுப் பார்த்தன. அவள் தர்மசங்கடத் துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
"நீண்ட நேரமாகக் காத்திருக்கிறாயா? அவனாகப் பேச் சைத் தொடங்கினான். ஆமாம் என்பது போல் தலை யாடடினாள.
அவன் பரிதாப தோரணையில் முகத்தை வைத்துக் கொண்டு தலையாட்டினான்.

Page 43
80 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அவள் பார்வையைத் தூரத்திற் பதித்தாள். ஸ்ரேசனை யண்டிய தெருவில் எப்போதோ இருந்து ஒரு கார் போய்க்கொண்டிருந்தது. ஏதோ அமைதியான ஊர்போல இருந்தது.
"பணக்காரர்கள் வாழும் காடு இது. இருள முதலே தங்கள் இரும்புக் கதவுகளை மூடிவிட்டு உலகத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்வார்கள்” அவன் மிகவும் சீரியஸான குரலில் சொல்லி விட்டு மெல்லமாகச் சிரித்தான். அவள் சாடையாகத் திரும்பிப் பார்த்தாள்.
‘ஒரு பக்கத்தில் வெறிகார இளைஞர்கள், மறுபக்கத்தில் பைத்தியமா? அவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.
தன் கெட்ட காலத்தை நொந்துகொண்டாள். அவர் களைச் சுற்றி இருள் பரவத் தொடங்கியது. அவன் பார்வை இவளிற் படுவது போன்ற உணர்ச்சி. திரும்பிப் பாரத்தாள்.
அவன் பார்வை அடிவானத்தில் பதிந்திருந்தது.
"அந்த வானத்தின் விளிம்பில் வரைந்திருக்கும் அழகிய சித்திரத்தைப் பார்’ அவன் கனவிற் சொல்வதுபோற் சொன்னான்.
“இலையுதிர்காலம் எனக்குப் பிடிக்கும்’ இவள் கேட்கிறாளோ இல்லையோ என்ற ஒரு சிந்தனையுமற்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
சிவப்பையும் மஞ்சளையும் குழைத்து எறிந்தமாதிரி வானத்தில் ஒரு தோற்றம்.
"கடவுள் ஒரு அற்புதக் கலைஞன். இப்படி ஒரு வர் னிப்பை பிக்காஸோவோ, ரெம்பிராண்டோ, மைக்கல் ஆஞ்சலோவோ, கொன் ஸ்ரபினோ, ரேர்ணரோ படைக்க முடியும் என்று நினைக்கிறாயா?”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 81
அவள் மறுமொழி சொல்லவில்லை. குளிர்காற்றில் அவள் தலைமயிர் செல்லம் பண்ணியது. “இந்தியப் பெண்ணா ?” அவன் கேட்டான். இப்போது அவள் தைரி யத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 'உனக்கேன் தேவையில்லாத கேள்விகள்’ என்ற தோரணை அவள் முகத்தில், "உங்கள் பெண்களின் நீண்ட தலைமயிரை நான் ரசிப்பேன்’ அவன் இவளை உற்றுப் பார்த்துக்கொண்டு சொன்னான்.
'முடியை மட்டுமா ரசிப்பாய்." அவளுக்குத் திட்ட வேண்டும் போல் வந்தது.
இவளின் உதாசீனம் அவனுக்கு எரிச்சலைத் தந்ததோ என்னவோ கொஞ்சநேரம் மெளனமாக இருந்தான். கால்களையுதறிக் கொண்டான். பின்னர் ஏதோ நோவில் அவதிப்படுபவன்போல் முனகிக்கொண்டான். “எனது முழங்கால்களுக்குப்பின்னால் நோ இருக்கிறது. அது வெரிக் கோஸ் வெயினால் வந்தது என்று நினைக்கிறாயா?” அவளை ஏதோ வருடக் கணக்காகத் தெரிந்தவன் மாதிரி அவன் தொடருவது அவளுக்கு எரிச்சலைத் தந்தது. அத் தோடு மட்டுமல்லாது தனக்கு என்ன வருத்தமாக இருக்க வேண்டும் என்று இவளை விசாரிப்பது இன்னும் வியப்பாக இருந்தது.
அவள் திரும்பிப் பார்த்தாள். அவனுடைய நீலவிழிகள் சிரித்துக் கொண்டிருந்தன. “என் கால்களின் நோ பற்றி உன்னிடம் ஏன் கேட்கிறேன் என்று யோசிக்கிறாயா?”
அவள் மறுமொழி சொல்லமுதல் அவன் கொஞ்சம் நெருங்கிவந்து இவளின் கைப்பையுள்ளால் துருத்திக் கொண்டு வெளியே பார்க்கும் ஒரு புத்தகத்தைத் தன் விரல்களால் தட்டிவிட்டான்.
அவள் சட்டென்று சிரித்துவிட்டாள். இப்போது அவ னும் சிரித்தான். அவள் பைக்குள்ளால் துருத்திக்கொண்டு
இ.கா.-6

Page 44
82 * இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தெரிவது "கிழக்கு லண்டன் பப்ளிக் ஹெல்த் றிப்போட்' ஆபீசில் வைத்துப் படிக்க நேரமில்லாதபடியால் வீட்டுக்குக் கொண்டு போகிறாள்.
“ஒவ்வொருவரும் என்ன வேலை செய்வார்கள் என் பதை அவர்களின் செய்கையோ, பேச்சோ காட்டிக் கொடுத்துவிடும்" அவன் அவசரமில்லாமல் சொன்னான்.
“இரண்டு நாளாக எனக்கு இரண்டு கால்களும் நோவாக இருக்கிறது” அவன் சொல்லிக் கொண்டே தன் ஜின்சை முழங்கால்கள் வரை உயர்த்தினான். பழுப்பான கால்களில் நாளங்கள் ஒன்றும் புடைத்துத் தெரியவில்லை.
"உனக்கொன்றும் வெரிக்கோஸ் வெயின்ஸ் இல்லை. எங்கேயோ அடிபட்டிருப்பாய் அல்லது கால்களை ஒரே நிலையில் வைத்தபடி நீண்ட பிரயாணம் செய்திருப்பாய்” அவள் சொன்னதை ஆர்வமாய்க் கேட்டான். “தாங்க் யூ” சொன்னான். "நீ கெட்டிக்காரி” என்றான். “காலையில் தான் அமெரிக்காவிலிருந்து வந்தேன். இரண்டு வாரங் களாக ஒரே அலைச்சல்.” வார்த்தைகளை நடுவில் நிறுத்தி விட்டு இவளைப் பார்த்தான்.
“வாழ்க்கை மிகவும் குறுகியது. வானத்துக் கோடுகளின் அழகை ரசிக்க நேரமில்லாமல் ஒடிக்கொண்டிருக்கிறோம்” அவன் பேசி முடித்தான்.
நேரம் ஆறு நாற்பத்தைந்தைக் காட்டியது. அவள் நேரத் தைப் பார்ப்பதைக் கண்டதும் அவன் இன்னொரு தரம் இவளை ஏறிட்டுப் பார்த்தான்.
இந்தியப் பெண்களின் முடியைப்பற்றிப் பேசியவன், இப்போது என்னத்தைப்பற்றிப் பேசப் போகிறான்? இவன் ஏன் விடாமல் தொண தொணக்கிறான். பெரும்பாலான ஆங்கிலேயர்கள் வாயைத் திறக்க மாட்டார்களே.' “வீட்டில் கணவன் பேசுவாரா?” குரலில் கிண்டல். அவள் மறுமொழி சொல்லவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 83
"காதலன் காத்திருப்பானா?” அவள் முறைத்துப் பார்த் தாள். இவளின் பார்வையில் தெறித்த நெருப்பைத் தொட விரும்பாதவன் போல விலகியிருந்தான்.
"ஐயாம் சொறி. குழந்தைகள் காத்திருப்பார்களா?” குரலில் உண்மையான பரிதாபம். தாய்மையின் தவிப்பை யுணர்ந்து உண்மையான அனுதாபம் குரலில் ஒலித்தது.
“எங்கே போகவேண்டும்?" அவள் இடத்தைச் சொன்னாள்.
"ட்ரெயினுக்குக் காத்திருந்தது. பரவாயில்லை. பஸ்ஸில் போக யோசித்தாயானால் எட்டுமணிக்குத்தான் போய்ச் சேர்ந்திருப்பாய். ஏழு மணிக்கு வீடு சேர்ந்து விடுவாய்” குரலிலுள்ள அனுதாபம் உண்மையானது.
தூரத்தில் அந்த இளைஞர்கள் கட்டிட ஜன்னலில் ஏறிக் குதித்துக் கொண்டிருந்தார்கள்.
“முட்டாள்கள் தவறி விழுந்து தலையை உடைத்துக் கொண்டு கஷ்டப்படப் போகிறார்கள்” அவன் பேசிக் கொண்டேயிருந்தான்.
“எனது சிநேகிதன் ஒருத்தனுக்கு இவர்கள் வயதுதா னிருக்கும், போனகிழமை இதே நேரம் இறந்து விட்டான்.” அவள் திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தாள். "இருபது வயது. எயிட்ஸ் வந்து இறந்துவிட்டான்.”
"ஐயாம் சொறி” அவள் சொன்னாள். “என்ன பரிதாபப்பட வேண்டி இருக்கிறது. ஒவ்வொருத் தரும் தெரிவு செய்த பாதை எப்படிப் பிரயாணம் முடியும் என்று நினைக்கிறார்களோ அப்படித்தான் போய்ச் சேரு வார்கள். இருபது வயதில் இறப்பு என்பது பரிதாபம்தான்." அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இப்போது கிட்டத்தட்ட இருள் மூடிவிட்டது. லைட்

Page 45
84° இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
வெளிச்சத்தில் அவனது பொன்நிறத் தலைமயிர் கோலம் போட்டது.
அவன் இவளை உற்றுப்பார்த்தான். அவள் தர்மசங்கடப் பட்டாள்.
“மன்னிக்கவும். நான் உன்னைப் பார்க்கவில்லை. உனக்கும் பின்னால் வானத்தின் கோடியில் வெடித்து முளைக்கும் தங்கநிலாவைப் பார்க்கிறேன்” அவன் வானத் தில் பார்வையை ஊன்றி இருந்தான்.
அவள் திரும்பிப் பார்த்தாள். அரைகுறை மாலை வெளிச்சத்தில் பழுத்த இலைகளைத் தாங்கிய மரங்களுக்கு மேலால் பிரசவ வேதனையில் பிரிந்து வடியும் குருதியின் நடுவில் தெரியும் குழந்தையின் முகம் போல இளம்பிறை வானத்தின் விளிம்பில் தலைகாட்டிக்கொண்டிருந்தது.
“என்ன அழகான காட்சி” அவன் முணுமுணுத்தான். அவன் முகம் மிகவும் சந்தோசமாக இருந்தது. அவள் அவனைப் பார்த்தாள்.
"உனது இதழ்கள் மிகவும் அழகானவை” அவன் சட் டென்று சொன்னான். அவள் திடுக்கிட்டு விட்டாள்.
தூரத்தில் ட்ரெயின் வரும் சத்தம் கேட்டது. அவள் அவசர அவசரமாகத் தன் பையை எடுத்துக்கொண்டு எழும்பினாள்.
இந்தியப் பெண்களின் தலைமுடி பற்றி ஒரு மயக்கம். வானத்து வர்ணங்களில் ஒரு வர்ணனை. இப்போது என்ன வென்றால். அவள் அவனைப் பார்க்காமல் நடந்தாள்.
ட்ரெயின் நின்றது.
அவள் சட்டென்று ஏறிக்கொண்டாள். அவனும் தொடர்ந்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ぐ85
"கிங்ஸ் லேனுக்குப் பக்கத்திலேயே உனது தெருவும்” அவன் வலிய வந்து பேசுவது அவளுக்குத் தர்மசங்கடத் தைக் கொடுத்தது. அவனுடன் பேசப் பிடிக்கவில்லை என்பது அவனுக்குப் புரியாதா? அவள் மறுமொழி சொல்லவில்லை.
"ட்ரெயினால் இறங்கியதும் கிங்ஸ் லேனுக்குத்தான் நான் போகிறேன். இந்த இருட்டில் நீ தனியாகப் போகாமல் என்னுடன் வரலாம் என்று சொல்லத்தான் கேட்டன்” இவளின் தர்மசங்கடத்திற்கு காரணத்தைக் கண்டு பிடித்தவன் போற் சொன்னான்.
“தாங்க்யூ. இரண்டு மூன்று தெருக்கள் தள்ளித்தான் நான் இருக்கிறேன். இந்த நேரத்தில் வீட்டுக்குப் போய்ப் பழக்கம்” ஏதோ கெளரவத்திற்குச் சொன்னாள். அவனைப் பார்க்காமல் சொன்னாள். முடியைப்பற்றிப் பின்னர் இதழ் கள் பற்றிச் சொன்னவன் கண்களையும் காதுகளையும் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டாலும் என்று தர்ம சங்கடப்பட்டாள்.
"உன்னை இழுத்துவைத்துப் பேசிக் கொண்டிருந்தது அநாகரீகம்தான். ஆனாலும் எனக்கு எதையும் அறிய ஆவல். இந்தியப் பெண்களுடன் பேசிப் பழக்கம் அதிக மில்லை. பாங்கில் ஒரு பெண் இருக்கிறாள். செக்கை வாங்கிக் கொண்டு பணம் தருவாள். தாங்க்யூ சொல்வேன். சுப்பர் மார்க்கட்டில் ஒரு சிலர் இருக்கிறார்கள். செக் அவுட்டில் சாமான்களுக்குக் காசு கொடுத்தபின் தாங்க்யூ சொல்வார்கள். ஆனால் ஒரு இலையுதிர்காலத்தின் மாலைப் பொழுதில் தனிமையாக அந்த ஸ்ரேசனில் நீ நின்ற மாதிரி யாரும் சந்திக்கவில்லை.”
இவனுக்குச் சரியான பைத்தியம் தான். அவள் இன்
னொருதரம் நேரத்தைப் பார்த்தாள். இன்னும் ஐந்து நிமி டங்களில் இவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும்.

Page 46
86 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"உனக்குத் தெரியுமா. அந்தக் குடிகாரப் பையன்களைப் பார்த்து நீ பட்ட தர்மசங்கடத்தை. நான் மேலே படிகளில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது உன்னைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதுதான் நானாக வந்து உன்னிடம் பேச்சுக்கொடுத்தேன்.”
அவள் ஒரு தரம் திடுக்கிட்டாள். அடுத்த கணம் நன்றிக்கு அடையாளமாக அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். இவளின் முகம் மலர்ந்த போது அவன் முகம்மும் மலர்ந்தது.
“இந்த நிமிடம் என்று கையில் பெயின்டும் பிரஷ்சும் இல்லையே என்று யோசிக்கிறேன்” அவளையுற்றுப் பார்த்த படி சொன்னான். அவள் புரியாமல் விழித்தாள்.
"உன்னை யார் என்று கண்டுபிடித்த நான். என்னை யார் என்று சொல்லவில்லையே? நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாய்.” அவன் பார்வை அவள் முகத்தின் எந்தப் பாகத்தில் தங்கி நிற் கின்றது என்று அவளுக்குத் தெரியும். தர்மசங்கடத்துடன் முகத்தைத் திரும்பிக் கொண்டாள். நாக்கால் உதடுகளைத் தடவிக் கொண்டாள்.
"most voluptuous lips' gyaljait (upgogiCupgoglgigs/Tait. Li Gut யின் நின்றது. அவள் அவசரமாக இறங்கிக் கொண்டாள். அவனும் தொடர்ந்தான். அவனிடமிருந்து ஒடித் தப்பும் வேகம் அவள் நடையிற் தெரிந்தது.
“ஹேய்! என்னைப் பார்த்துப் பயந்து ஓடாதே. உனது இதழ்களை ஒரு கலைஞனாக ரசித்தேன்” அவள் திரும் பிப் பார்த்தாள். அவள் றோட்டைக் கடக்க வேண்டும்.
"இதோ பார் இந்தியப் பெண்ணே! அழகை ரசிப்பவன் கலைஞன். நான் ஒன்றும் பெண்களைச் சுற்றும் பொறுக்கி இல்லை.” அவள் றோட்டைக் கடக்கக் காத்திருந்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 87
அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனா லும் இந்த மாலைப்பொழுதில் ஒரு அந்நியன் அவளின் இதழ்களை வர்ணிப்பது அவளால் தாங்கமுடியவில்லை.
ட்ரெயினில் அரட்டை அடித்துக்கொண்டு வந்த தன் பொறுப்பற்ற தன்மைக்கு இப்படிப் பைத்தியங்களிடம் மாட்டியது நல்ல பாடமாக இருக்கட்டும்.
கார்களின் தொகை குறைந்த போது அவள் றோட் டைக் கடக்கத் தொடங்கினாள்.
"இதோ பார், என்னைப்பற்றித் திட்டிக்கொண்டு ஒடாதே. பெண்களின் உடம்பை வெறியோடு பார்க்கும் காமுகன் இல்லை. நான் கலைஞன்.படம் எடுப்பவன் போல் நானும் படம் போடுகிறேன். சூரிய அஸ்தமனத்தின் காட்சியோடு சேர்ந்து." அவள் றோட்டில் இறங்கி விட்டாள்.
“ஹேய் இந்தியப் பெண்ணே, நான் பெண்களில் ஆசைப்படுபவனல்ல. நான் ஒரு ஹோமோ செக்சுவல்”
அவன் சொன்னது அவளுக்கு மட்டுமல்ல, தெருவில் போன எல்லோருக்கும் கேட்டது. மிகத் தெளிவாகக் கேட்டது. அடுத்த பக்கத்துக்குப் போனவள் திரும்பிப் பார்த் தாள். அவளைப்போல் எத்தனையோ பேர் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“ஐயய்யோ நாங்கள் அறிமுகம் செய்து கொள்ள வில்லையே, எனது பெயர்.”
அவனுக்கும் அவளுக்குமிடையிலுள்ள றோட்டில் பெரிய லாரிகள் போட்ட சத்தத்தில் அவனுக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவள் அவசரத்துடன் ஓடினாள். அவள் அவசரத்துடன் ஓடினாள்.
உயிர் நிழல்'99

Page 47
6. மிஸ்டர் ரெய்லர் அன்ட் மிஸஸ் குமார்
Lங்குனி மாதக் குளிர் காதைத் துளைத்துக் கொண்டு இரத்தத் துணிக்கைகளை உறைய வைத்து விட்ட உணர்ச்சி. திருமதி குமார் தனது கம்பளிக் கையுறைகளைப் போட்டுக் கொண்டாள். கம்பளி மவ்ளரால் காதுகளை மறைத்துச் சுற்றிக் கொண்டாள். கால்களுக்குக் கம்பளிச் சொக்ஸ்களை மாற்றிக் கொண்டாள்.
தள்ளுவண்டியில் அமர்ந்து தன் பாட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது திருமதி குமாரின் பேத்தி அனுஷா, மூன்று வயதான அனுஷாவின் பட்டுக் கன்னங்கள் குளி ரில் சிவந்துபோய் யாழ்ப்பாணத்துக் கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை நினைவூட்டியது.
முதலாவது தலைமுறைப் பாட்டி மூன்றாவது தலைமுறைப் பேத்தியைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு நடந்தாள்.
திருமதி குமாருக்கு இதுதான் லண்டனுக்கு வந்த முதல் வருடம். வந்து இரண்டு மாதம்தானாகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு எந்த மனித உரிமையும் மறுக்கப்பட்ட போது ஒவ்வொருத்தராகவும் ஒரு சில குடும்பமாகவும் உலகத்திலுள்ள எழுபத்தி ஆறு நாடுகளில் அகதிகளாய்த் தஞ்சம் புகுந்தபோது பிறந்த மண்ணை விட்டு நகர மாட்டேன் என்ற திருமதியின் பிடிவாதம் ஒரு சில மாதங் களுக்கு முன் தகர்ந்து விட்டது.

Ο
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ※ 89
திருமதி குமார் குழந்தையைக் கவனமாகத் தள்ளிக் கொண்டு ரோட்டில் இறங்கினாள். இந்த நேரம் ரோட் டெல்லாம் தாய்களும் குழந்தைகளுமாகத் தெரிவார்கள்.
“ஹலோ மிஸஸ் குமார்’ தூரத்தில் திருமதி நடராஜா வந்து கொண்டிருந்தாள். திருமதி நடராஜாவுக்கு முப்பத் தைந்து வயதிருக்கும். இப்போது வண்டியில் தள்ளிக் கொண்டு வரும் மகள்தான் முதல் குழந்தை.
“என்ன செய்ய, எங்கட தகுதிக்கு மாப்பிள்ளை வர்ற வரைக்கும் இருக்கத்தானே வேணும்" திருமதி குமார் எந்தக் கேள்வியும் கேட்க முதலே ஒருநாள் திருமதி கமலா நடராஜன் தானாகப் பெருமூச்சுடன் சொன்னாள்.
திருமதி செல்வமணி செந்தில்குமார் ஒரு காலத்தில் அவள் பதினாறு வயதாக இருக்கும்போதே தனக்குத் தகுதி யற்ற திருவாளர் செந்தில் குமாரில் காதல் வயப்பட்டவள். அதெல்லாம் ஐம்பது வருடத்தைத் தடவிய சரித்திரம். “இவனுக்குச் சரியான சுகமில்ல பாருங்கோ. இந்த இளவு பிடிச்ச குளிர்ல யார்தான் சுகமாக இருக்க முடியும்” கமலா நடராஜன் வானத்தைப் பார்த்துத் திட்டிக் கொண் Lo.
“என்ன செய்ய, எங்கட தலைவிதி இப்படியாப் போச்சு. அநியாயம் பிடிச்ச சிங்களவரால எங்கட நிலை இப்படி யாய்ப் போய்ச்சு.” கமலா தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல முணுமுணுத்துக் கொண்டாள்.
கமலா தனது மகனை நேர்ஸரியிற் சேர்த்து விட்டு வேலைக்குப் போவாள். பகல் பன்னிரண்டு மணிக்கு கமலாவின் மகனை அவள் சினேகிதி தன் குழந்தையுடன் சேர்த்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவாள்.
“ஹலோ கமலா, ஹலோ மிஸஸ் குமார்” மிஸஸ் பார்னட் இவர்களுடன் வந்து சேர்ந்தாள். அவள் தள்ளிக் கொண்டு வந்த வண்டியில் அவளின் இரட்டை இரட்டை

Page 48
90 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
குழந்தைகள் இரண்டும் ஒன்றை ஒன்று சீண்டிக் கொண் டிருந்தன.
நேர்ஸரி வந்துவிட்டது. "ரெயின்போ நர்ஸரி அழகான வர்ண வேலைப்பாடுள்ள வாசலைக் கொண்டது. குழந்தை களுக்குப் பிடித்த அழகிய வர்ணங்களில் மிருகங்கள், பறவைகள், மலர்கள், வாவிகள், மனிதர்கள் என்பன சித்திரமாகத் தீட்டப்பட்டிருந்தன. திருமதி குமாரின் கண்கள் வழக்கம்போல் வாசலைத் திரும்பிப் பார்த்தன. ஒரு வினாடி ஏமாற்றம் கண்களில் நிழலாடியது.
ஒருநாளும் நேரம் தவறாத மிஸ்டர் ரெய்லர் இன்னும் வரவில்லை. ஆங்கில மனிதர்களின் மிகக் கண்டிப்பான பழக்க வழக்கங்களிலொன்று நேரம் தவறாமை. அது திருமதி குமாருக்குத் தெரியும். அவள் யாழ்ப்பாணத்தில் பிரபலமான பெண்கள் கல்லூரியொன்றில் ஆங்கிலப் பேராசிரியையாக இருந்தவள்.
நேர்ஸரி ஆசிரியர் மிஸஸ் வால்ட்டர்ஸ், மிகவும் கொழுத்துப் போன தன் உடலை அசைத்தபடி வெளியே வந்து குழந்தைகளுடன் வந்திருக்கும் தாய்கள், பாட்டிகள் அல்லது குழந்தைப் பாதுகாப்பாளர்கள் எல்லோருக்கும் "குட்மோர்னிங்” என்றாள்.
கமலா குழந்தையை நேர்ஸரியில் சேர்த்த வினாடியிற் பறந்து விட்டாள். அடுத்த சில நிமிடங்களில் பக்கத்திலிருக் கும் பாதாள ரயிலுக்கு ஒடி ரெயின் எடுக்க வேண்டிய அவசரம் அவளுக்கு.
திருமதி குமார் பேத்திக்கு “பை பை” சொல்லிட்டுத் திரும்பினாள். லண்டன் தெருக்கள் காலை ஏழேமுக்கால் மணியிலிருந்து எட்டேகால் மணி வரைக்கும் பாட சாலைக்குச் செல்லும் மாணவர் பட்டாளத்தால் நிரம்பி வழியும். எட்டு மணியிலிருந்து எட்டேமுக்கால் வரையும் ஆபிசுக்குப் போகும் ஆண்கள் பெண்களால் அவசரப்படும்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 91
அதன்பின் ஒன்பதரை வரைக்கும் நேர்ஸரிக்குப் போகும் இரண்டு முதல் ஐந்து வயது (சிலவேளை சில நேர்ஸரிகள் ஆறு மாதக் குழந்தையிலிருந்து பாதுகாப்பார்கள்) வரைக் கும் உள்ள குழந்தைகளின் தள்ளுவண்டிச் சத்தத்திலும் தாய்களின் (அல்லது பாட்டி, பாட்டன், ஆயாக்களின்) சத்தத்தில் கலகலக்கும்.
திருமதி குமார் நேர்ஸரிக் கேற்றைத் தாண்டியபோது அந்தக் கார் கிறீச் என்ற சத்தத்துடன் சட்டென்று நின்றது.
"மோர்னிங். மோர்னிங். மிஸஸ் குமார்” மூச்சிறைக்க மிஸ்டர் ரெய்லர் இறங்கினார். காரின் பின் ஸtட்டில் பாது காப்பாகக் கட்டி வைத்திருந்த அவருடைய மூன்று வயதுப் பேரன் “குட்மோர்ணிங் மிஸஸ் குமார்” மழலையில் கொஞ்சியது.
ஒரு நிமிடத்துக்கு முன்னால் திருமதி குமாரின் மனதில் படர்ந்த ஏமாற்றம் பட்டென்று மறைந்தது. முகம் மலர்ந்தது. "மோர்ணிங் மிஸ்டர் ரெய்லர்” வழக்கம் போல் மலர்ச்சியுடன் சொன்னாள்.
"உனது குரல் இனிமையானது” என்று மிஸ்டர் ரெய்லர் ஒரு நாள் சொன்ன போது தனது அறுபத்தியாறு வயதையும் மறந்து திருமதியின் முகம் சிவந்து விட்டது. இப்போது அவள் குரலைச் சாதாரணமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள்.
“எனக்குச் சரியான சுகமில்லை, அது தான் கொஞ்சம் நேரமாகிவிட்டது' இவள் கேட்க முதலே அவர் சொன்னார்.
இவள் தன் வருகையைக் காணாமல் ஏமாந்ததை அவள் முகமே காட்டிக் கொடுத்ததை அவள் மறைத்துக் கொள்ள வில்லை.

Page 49
92 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தன் உடம்பை தேவையில்லாமல் கெடுத்துக் கொண்ட தற்காகத் தன்னைத் தானே சிலவேளை அவர் நொந்து கொள்வார். இளம் வயதில் நிறையக் குடிப்பாராம். நிறைய புகை பிடிப்பாராம். அவர் அவசரமாக பேரனைக் கொண்டுபோய் நேர்ஸரியில் சேர்ந்தார். மிஸஸ் வால்ட் டர்ஸ் இவரில் மிகவும் மதிப்பானவள். மிஸ்டர் ரெய்லர் இந்த நேர்ஸரியின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபவர்.
அடிக்கடி ஜம்பிள் சேல் (பழைய சாமான்கள் விற்பது) வைத்து நேர்ஸரிக்குப் பணம் சேர்த்துக் கொடுத்தார். அப்படி ஒரு சேலிற்தான் திருமதி குமாருடன் முதற்தரம் பேசினார். ஆசிரியர்களைக் கண்டால்- அதிலும் வயது போன ஆசிரியர்களைக் கண்டால் அருவருப்பாகப் பார்க்கும் சில ஆங்கிலேயர்களின் பார்வையால் துன்பப் பட்டவள் திருமதி குமார். கடைசிக் காலத்தில் இப்படியா நாட்டைவிட்டு ஓடி வந்து அவமானப்பட வேண்டும் என்று பெருமூச்சு விடுவாள். பழைய சாமான்களை விற்றுக் காசு சேர்க்கும் சேல் நாளில் திருமதி குமாரும் நேர்ஸரிக்கு வந்திருந்தாள். லண்டனுக்கு வந்து ஒரு சில மாதங்களா யிருந்தாலும் இயற்கையாகவே அவளுக்கு இருந்த ஆர்வம் லண்டன் வாழ்க்கையை ஆராயத் தொடங்கியிருந்தது.
“ஹலோ.” பழைய சாமான்கள் விற்றுக் கொண்டிருந்த மிஸ்டர் ரெய்லர் திருமதி குமாரை வரவேற்றார்.
“என்ன, நேர்ஸரிக்கு உங்கள் பேரப்பிள்ளையைச் சேர்ந்திருக்கிறீர்களா ?”
திருமதி குமார் ஆமாம் என்பதற்கடையாளமாகத் தலை யாட்டினாள்.
"கடந்த பத்து வருடமாக இந்த நேர்ஸரியுடன் தொடர் பாக இருக்கிறேன். எனது மூன்று பேரப்பிள்ளைகள் இந்த நேர்ஸரியில் ஆரம்பப் படிப்பைத் தொடங்கினார்கள். இப்போது எனது நாலாவது. கடைசிப் பேரப்பிள்ளை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் «Х» 93
சேர்ந்திருக்கிறான்’ மிஸ்டர் ரெய்ல்ர் சொல்லிக்
கொண்டே போனார்.
"பை த வேய்; எனது பெயர் மைக்கல் ரெய்லர்” அவர்
தன்னை அறிமுகம் செய்தார்.
“எனது பெயர் செல்வமணி செந்தில்குமார்” என்று சொன்னாள்.
இவளது நீண்ட பெயர் அவருக்குத் தர்மசங்கடத்தை உண்டாக்கியிருப்பது முகத்தில் தெரிந்தது. பெரும்பாலான ஆங்கிலேயர் இந்திய- இலங்கையர்களின் பெயர்களை உச்சரிக்கத் தெரியாமல் திண்டாடுவதை அவள் அறிவாள்
"மிஸஸ் குமார் என்று கூப்பிடலாம்” என்று அவள் சொன்னதும் அவர் நிம்மதியுடன் சிரித்தார்.
அதன்பிறகு இரண்டு கிழமைக்குப் பின் அவள் நேர்ஸரி யில் அனுஷாவைச் சேர்த்து விட்டுத் தெருவில் இறங்கிய போது சட்டென்று தொடங்கிய மழையில் தெப்பமாக நனைந்து விட்டாள். -
“உனக்கு ஆட்சேபணையில்லையென்றால் எனது காரில் வரலாம்” மிஸ்டர் ரெய்லர் கார்க் கதவைத் திறந்து விட்டார்.
பதினாறு வயதுப் பெண் போலத் தயங்கினாள் அவருக்குச் சிரிப்பு வந்திருக்க வேண்டும்.
“கடத்திக் கொண்டு போகமாட்டேன்." அவள் தயக்கத்துடன் ஏறிக் கொண்டாள். அதன்பின் நேர்ஸரிக்குப் பக்கத்திலுள்ள காப்பி ஷொப்புக்குள் கூப்பிட்டபோதும் அவள் அப்படித்தான் தயங்கினாள்.

Page 50
94 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
மிஸ்டர் ரெய்லருக்கு நிறைய சினேகிதிகள் இருப்பது தெரிந்தது. தனது மனைவி பத்து வருடங்களுக்கு முதலே இறந்து விட்டதாகச் சொன்னார். அதன்பின் மகன், மகள், குழந்தைகளுடன் பொழுது போவதாகச் சொன்னார்.
அவள் தன்னைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. அவள் தனது நாற்பத்தி நான்காவது வயதில் கல்யாண மாகி, நான்காவது வருடமே இலங்கைச் சிங்கள ராணுவத் தின் கொடூரத்தால் கணவனையிழந்த துன்பத்தைச் சொன் னால் கத்திவிடுவார் என்பதால் தானும் ஒரு விதவை என்று மட்டும் சொல்லிவைத்தாள்.
“எங்காவது போய் உடம்பில் உள்ள அந்தக் காற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது” அவர் இருமி யபடி சொன்னார். மூச்சு வாங்கியது.
அவர் இவள் காரின் பின்பக்கத்தில் ஏறியுட்கார்ந்த போது சொன்னார்: “ஏதாவது பார்க்குக்குப் போவோமா.” அவர் அப்படிக் கேட்பார் என்பதை அவள் எதிர்பார்க்க வில்லை. அவள் இருபது வயதுப் பெண்ணல்ல. ஆனாலும் பண்பாடு என்ற வார்த்தை, நினைவில் வந்து தட்டி நின்றது. அவருடன் காப்பிக் கடைக்குப் போயிருக்கிறாள். பார்க்கில் சோடியாகத் திரியவில்லை.
“ஹம்ஸ்ரட்ஹித் பத்து நிமிட ட்ரைவிலிருக்கிறது’ மிஸ்டர் ரெய்லரின் குரலில் “தயவுசெய்து என்னோடு வரமாட்டாயா" என்ற எதிர்பார்ப்பு இணைந்து தொனித் 卤
நேர்ஸரிக்குப் பன்னிரண்டு மணிக்குப் போய் அனு ஷாவை எடுக்க வேண்டும். இப்போது நேரம் பத்து மணி. பார்க்குக்குப் போகவும் வரவும் இருபது நிமிடம்தான் எடுக்கும். அங்கு காற்று வாங்க ஒரு மணித்தியாலம் எடுத்தாலும் பன்னிரண்டு மணிக்கு முதல் நேர்ஸரிக்கு வந்து விடலாம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 95
கார் அவள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் அவளை இறக்கி விட்டுப் போயிருக்கலாம். ஆனாலும் கார் பார்க்கை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவள் நான் பார்க்குக்கு வரமாட்டேன், என்னை இறக்கிவிடு என்று சொல்லவில்லை. அவர் கார் கண்ணாடியில் இவளைப் பார்த்துச் சிரிப்பது அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது. "நாங்கள் வயது வந்த மனிதர்கள்” மிஸ்டர் ரெய்லர் சட்டென்று சொன்னார். இந்த வயதிலும் இவள் தன்னைச் சிறையில் வைத்திருப்பதை அவரால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. "மற்றவர்கள் சிரிக்கத் தக்கதாக எதுவும் செய்யவில்லை” அவர் சொல்லிக்கொண்டே யிருந்தார்.
அவள் ஞாபகம் எங்கோ பறந்தது. யாழ்ப்பாணத்து வட மராட்சி சைவ வேளாளர் குடும்பத்துச் செல்வமணி தனது 25வது வயதில் தனது தகப்பனுக்கு இதே வார்த்தைகளைச் சொன்னாள்.
தனது ஒரே ஒரு மகள் தங்கள் சாதிக்குத் தாழ்ந்த கோவி யனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்த வைத்தியலிங்கம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். “ஊர் உலகம் எங்களைப் பார்த்துச் சிரிக்கும்” என்று கர்ச்சித்தார். யாழ்ப் பாணத்து சைவ வேளாள அகங்காரம் அவர் குரலில் வெடித்தது.
ஆங்கில ஆசிரியையாகச் செல்வமணி படிப்பித்துக் கொண்டிருந்தாள். பதினாறாவது வயதில் அவள் மனதில் குடியேறிய அடுத்த தெரு செந்தில்வேல் கொழும்பில் அரசாங்க உத்தியோகத்திலிருந்தான்.
“என் உயிர் இருக்கும் வரைக்கும் நீ அவனைச் செய்ய விடமாட்டேன். அப்படிச் செய்தாயானால் உங்கள் இருவரையும் சமாதி வைப்பேன்" வைத்தியலிங்கத்தின் சபதம் அவளுக்குத் தெரியும். தகப்பனைவிடப் பிடிவாதம் பிடித்தவள் மகள். ஒரே ரத்தத்தின் பிரதிபலிப்பு. காதலித்த வனின் கற்பனையில் காலம் ஓடியது. அவளுக்கு நாற்ப

Page 51
96 - இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தாவது வயதில் தகப்பன் இறந்த பின் வாழ்க்கையெல்லாம் அவள் செய்திருந்த சபதம் நிறைவேறியது. 1973ஆம் ஆண்டு நாற்பது வயது செல்வமணி குமாரைக் கொழும்பில் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள்.
யாழ்ப்பாணத்துச் சாதித் தடிப்பு அவர்கள் இருவரையும் இலங்கையின் மத்திய பகுதிக்குத் துரத்தியது. மகள் அருந்ததி எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் பிறந்ததும் தனது குடும்பம் முழுமையான திருப்தி.
எழுபத்தியேழாம் ஆண்டு இலங்கைச் சிங்கள வெறிக்கு நூற்றுக்கணக்கான தமிழர் ரத்தம் ஆறாகப் பெருகியபோது செல்வமணி தாலியும் பறிபோனது.
“என்ன மெளனமாக இருக்கிறாய், பார்க்குக்கு வரப் பிடிக்காவிட்டால் திரும்பிப் போவம்” கார் ட்ரவிக் லைட்டில் நின்றபோது மிஸ்டர் ரெய்லர் செல்வமணியைக் கேட்டார்.
“வேண்டாம், நான் ஏதோ யோசித்து விட்டேன்” அவள் குரல் தழுதழுத்தது.
ஹம்ஸ்ரட்ஹித் அமைதியாகத் தெரிந்தது. பார்க்கின் நடுவிலுள்ள குளத்தில் அன்னங்கள் அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தன.
லண்டனுக்கு வந்து அவள் ஒருநாளும் இப்படி பார்க் குக்கு வரவில்லை. யாழ்ப்பாணத்தில் சுப்பிரமணியம் பூங்காவும் கொழும்பில் விக்டோரியா பார்க்கும் நினைவில் வந்து மறைந்தன.
கண்டியில் உள்ள பார்க்கில் செந்தில் குமாருடன் மகள் அருந்ததியுடனும் சென்ற கடைசிப் பிரயாணம் ஞாபகம் வந்ததும் கண்களில் நீர் பணித்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் る 97
ஏன் இன்னும் மெளனமாக வருகிறாள் என்று யோசித்த படி திரும்பியவர் அவள் கண்களில் கட்டிய நீரை கண்டு பதறிவிட்டார்.
"ஐயாம் சொறி, இங்கே உன்னை அழைத்து வந்ததற்கு மிகவும் மன்னிப்பு கேட்கிறேன்.”
“உங்களில் ஒன்றும் கோபமில்லை. என் கணவரின் ஞாபகம் வந்தது” அவள் வாய் விட்டழுது விட்டாள். என்றோ இறந்த அன்பனைப் பற்றி இன்றைய நண்பனிடம் சொல்லும் போது துக்கம் பெருக்கெடுத்தது. "ஐயாம் சொறி” பக்கத்திலுள்ள பெஞ்சில் உட்கார்ந்தார்கள். இந்த மனிதனுக்கு எப்போதாவது தனது இறந்தகாலத்தைச் சொல்ல முடியுமா? அவள் மெளனமாக இருந்தாள். அவர் களைச் சுற்றிய உலகம் மிகவும் அமைதியாக இருந்தது. அவளுக்கு இது புதிய அனுபவம். வாடிய வயதில் வளைய வரும் நினைவுகள் துயர் தந்தன. அவர் இருமினார். நோயாய் இருந்திருக்க வேண்டும், நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.
“நெஞ்சுத் தடிமலாக இருந்தால் குளிரில் திரியக் கூடாது” பரிவுடன் அவள் கடிந்து கொண்டாள். இனிய நண்பனில் இளம் வயதினர் கடிந்து கொள்ளும் தொனி அவள் குரலில்.
அவர் அவளை நேராகப் பார்த்தார். அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. மிஸ்டர் ரெய்லரின் நீலக் கண்கள் தெளிவாக இருந்தது.
“ஏதோ வருத்தம் வந்து கெதியாய் இந்த உலகத்தை விட்டுப் போனால் நல்லதில்லையா?”
அவரின் குரலின் விரக்தி அவளின் ஆத்மாவை உலுக் கியது. "எங்கள் பேரப் பிள்ளைகளும் பெரிய பள்ளிக்கூடம் போகத் தொடங்கிவிட்டால் எங்களுக்கு எனன இருக் கிறது?” குழந்தைகள் அடுத்த பள்ளிக்கூடம் போய்விட்டால்
இ.கா.-7

Page 52
98 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அவர் நேர்ஸரிக்கு வரமாட்டார். அவள் மறுமொழி சொல்லவில்லை. மகளும் மருமகனும் வேலைக்குப் போன பின் அவள் நேரம் பேத்தி அனுஷாவுடன் கழிகிறது. மகள் இன்னுமொரு பிள்ளை வேண்டாமென்று சொல்லிவிட் டாள். இன்னும் இரண்டு வருடங்களில் அனுஷா முழு நேரப் படிப்புத் தொடங்கியதும் மிஸஸ் குமார் என்ன செய்வாள்? எத்தனையோ தமிழ் முதியவர்கள் போல் லண்டன் தெருக்களில் குளிரில் நடந்து நேரத்தைக் கடத்துவாளா?
“ஒல்ட் பீப்பிள் சென்டருக்குப் போவாயா?” மிஸ்டர் ரெய்லர் கேட்டார். அவர் குரல் அடைத்திருந்தது. கடைசிக் காலத்தின் முடிவு அவரைத் துன்பப்படுத்துகிறது என்று தெரிந்தது. ஒல்ட் பீப்பிள் சென்டர் பற்றி அவளுக்குத் தெரி யாது. ஆனாலும் நேரத்தைக் கழிப்பதற்காக எத்தனையோ இலங்கைத் தமிழ் முதியவர்கள் ஷாப்பிங் சென்டர்களில் நடந்து திரிவது தெரியும்.
நினைவுகள் வந்து நெஞ்சை அடைத்தன. கொடுமை கொடுமை முதுமை கொடிது, தனிமையான முதுமை மிகவும் கொடியது.
"அறுபத்தைந்து வயது வந்ததும் வாழ்க்கை கிட்டத்தட்ட வெறுமையாகிவிட்டது” அவர் குரலில் அப்படி ஒரு விரக்தியை அவள் கேட்டதில்லை.
பார்க்கில் ஒன்றிரண்டு இளம் சோடிகள் கைகோர்த்துக் கொண்டு நெருக்கமாக போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு காலத்தில் இவர்களும் சோடியிழந்த தனிப் பிறப்பாய்த் தவிப்பார்களா?
இருவரும் மெளனமாக நடந்து வந்து காரில் ஏறினார் கள். அடுத்த நாள்- அதற்கடுத்த நாள் மிஸ்டர் ரெய்லர் நேர்ஸரிக்கு வரவில்லை. அவர்கள் இருவரும் காப்பி சாப்பிடும் ஷொப்புக்கு போக யோசித்தாள். மிஸ்டர்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் «Х• 99
ரெய்லர் சுகமாக இருந்தால் ஒடித் திரிவார் என்று அவளுக் குத் தெரியும். அடுத்த கிழமை, மிஸ்டர் ரெய்லரின் மகள் தனது மகனை நேர்ஸரிக்குக் கொண்டு வந்தாள்.
“எப்படி உன் தகப்பன்” மிஸஸ் குமார் ஆர்வத்துடன் கேட்டாள். இந்தப் பெண்ணிடம் அவளது தகப்பனைப் பற்றிக் கேட்டால் ஏதும் நினைப்பாளா? ஆங்கிலேயர் அப்படி நினைப்பார்களா? “ஒ நீங்கள் மிஸஸ் குமாரா” மிஸ்டர் ரெய்லரின் மகள் தகப்பன் மாதிரியே மிகவும் அன்பான பெண்ணாகத் தெரிந்தாள்.
ஆமாம் என்பது போல் செல்வமணி தலையாட் டினாள்.
"ஐயாம் சொறி, உங்களிடம் தான் ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருப்பதைச் சொல்லச் சொன்னார். வேலைக் கஷ்டத்தில் சொல்ல மறந்துவிட்டேன்.”
"பரவாயில்லை. எந்த ஹொஸ்பிட்டலில் இருக்கிறார்? தன் படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் செல்வமணி செந்தில்குமார். மிஸ்டர் ரெய்லரின் மகள் சொன்ன விலாசத்தை எடுத்துக் கொண்டு திரும்பினாள். ஒரு கிழமைக்கு முன் தன்னைப் பார்க்குக்கு அழைத்துச் சென்ற மனிதனாகத் தெரியவில்லை. நோயின் கொடுமை உருவையே மாற்றியிருந்தது.
“எப்படியிருக்கிறார் மிஸ்டர் ரெய்லர் ?” மிஸஸ் குமார் நேர்ஸைக் கேட்டாள்.
“நிலைமை சரியில்லை” நேர்ஸ் சோகத்துடன் சொல்லி விட்டு நகர்ந்தாள். இந்த மனிதருடன் செலவழித்த ஒன்றிரண்டு மாதங்கள் ஞாபகம் வந்தது.
அன்றைக்கு பார்க்கிலிருந்து வரும்போது “ஏன் என்னை மிஸ்டர் ரெய்லர் என்றே சொல்கிறாய்? மைக்கல் என்று சொல்லேன்” என்றது ஞாபகம் வந்தது. உத்தியோக

Page 53
100 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தோரணையற்ற உறவை உண்டாக்க அவர் குரலில் ஒரு தாபம்.
செயற்கையாக மூச்செடுக்கும் அந்த மனிதனை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மைக்கல். மைக்கல். அவள் மனதுக்குள் முணுமுணுத் தாள்.
"குட்பை மைக்கல்” அவள் நீர் வழிந்த கண்களுடன் வீடு திரும்பினாள். வீடு வெறுமையாக இருந்தது. பேரப் பிள்ளை சரியான நித்திரை.
“2030ஆம் ஆண்டுகளில் சாதாரண மனிதரின் வயது 110-130 வரை நீளலாம்” டெலிவிஷன் அறிவிப்பாளர் விஞ் ஞானப் புரோக்கிராம் ஒன்றில் சொல்லிக் கொண்டிருந் தார்.
"மிஸ்டர் ரெய்லருக்கு அறுபத்தி ஆறு வயதுதான்” மகள் அருந்ததிக்குச் சொல்வது போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“ஆகவும் வயது போய் மற்றவைக்குத் தொந்தரவாய் ஏன் வாழனும்?” செல்வமணி திரும்பவும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். மைக்கலின் ஆசை அதுதான் என்று அவளுக்குத் தெரியும். மற்றவர்களின் தயவில் வாழ்வதை மைக்கல் விரும்பவில்லை.
"அம்மா நான் உங்களைப் பார்ப்பன்தானே” அருந்ததி அவசரமாகச் சொன்னாள். செல்வமணி மறுமொழி சொல்லவில்லை. தனக்கும் கைகால் ஓடாத வேளையில் எவ்வளவு காலம் அருந்ததி லீவெடுப்பாள் ? சம்பளமில்லா மல் லீவெடுத்தால் குடும்பம் நடத்தப் பணம் எங்கே வரும்? கஷ்டம் தாங்காமல் அருந்ததி தாயைக் கொண்டு போய் ஒல்ட் பீப்பிள் ஹோமில் சேர்க்க மாட்டாள் என்று என்ன

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் x 101
நிச்சயம்? முன்பின் தெரியாத, மனம் பேதலித்த முதியவர் களுடன் அவள் வாழ்க்கை முடியப் போகிறதா?
அடுத்த நாள் நேர்ஸரிக்குப் போகும்போது மிஸ்டர் ரெய்லரின் சிநேகிதர் கிழவன் ஒருத்தர் வந்து கொண் டிருந்தார்.
“ஹலோ மிஸஸ் குமார்” கிழவர் நெருங்கி வந்தார். "மிஸ்டர் ரெய்லரைப் போய்ப் பார்த்தேன்” செல்வமணி துயரத்துடன் சொன்னாள்.
கிழவர் இவளை உற்றுப் பார்த்தார். “மைக்கலுக்கு உன்னில் பெரிய விருப்பம் தெரியுமா ?” கிழவர் உருக்கத்துடன் சொன்னார்.
செல்வமணி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“என்னை மைக்கல் என்று கூப்பிடேன்” என்று சொன்னபோது மிஸ்டர் ரெய்லரின் குரலில் கனிந்த உருக்கத்திற்கு அர்த்தம் தெரியும்.
கமலா நடராஜன் வந்து கொண்டிருந்தாள். தராதரம் பார்த்து உறவைத் தெரிந்து கொள்பவள் அவள்.
செல்வமணி, மைக்கலுடன் பழகும் உறவை அவளால் விளங்கிக் கொள்ள முடியாது. விளங்கினாலும் அவள் 'தராதரம் பார்த்து உறவுகளைக் கேலி செய்வாள். மைக் கலைப் பார்க்க வேண்டும். செல்வமணி மெளனமானாள்.
மைக்கல் பிழைக்கமாட்டார் என்று அவளுக்குத் தெரியும்.
இந்தியா டுடே' 99

Page 54
7. ‘இன்னுமொரு கிளி'
LDTர்வின் பேக்கர் வருவதைக் கண்டதும் எனக்கு ஏதோ செய்கிறது. எப்போதும் போல் “ஹலோ குட்மார் னிங்” சொல்லிக்கொண்டு போகத்தான் யோசிக்கிறேன். நீண்ட நாட்களாக நான் அவளைச் சந்திக்கவில்லை. திடீர் சந்திப்பு தயக்கத்தைத் தருகிறது. ஆனால் அவளது நெருங்கிய முகத்தைப் பார்த்ததும் “ஹலோ ஹவ் ஆர் யூ” என்று கேட்கத்தான் தோன்றியது. ஒரு காலத்தில் நெருங்கிய சிநேகிதிகள், இன்று அன்னியர்கள் போலப் பழக வேண்டிய நிர்பந்தம். ஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஆபீசுக்கு வந்த போது அவளின் அழகிய சிரிப்பில் வீணை ஒலித்ததைக் கற்பனை செய்தவள் நான். குலுங்கும் பூந்தோட்டம் பவனி வரும் அழகு அவளுடையது. மார் வினுக்கு அப்போது இருபத்தைந்து வயது. இளமை பொழி யும் அந்தக் கண்களில் இப்போது வயது போன வறட்சி தெரிகிறது.
“ஹலோ ராஜி” -அவள் என்னை உற்றுப் பார்த்தாள். பரிதாபமாக இருந்தது.
“எப்படியிருக்கிறாய்?" என்றேன். ஒக்டோபர் மாதக் குளிர்காற்றில் அவளின் பொன்னிறத் தலைமயிர்கள் அலை பாய்ந்தன.
“ஸோ, ஸோ.” -வறட்சியான சிரிப்பு.
அதற்குமேல் அவளிடம் பேச்சைத் தொடரத் தயக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் சுவாத்தியத்தைப் பற்றிப் பேசுவார்கள். அதையாவது பேசலாமா?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 103
'சங்கீதா வேலை விடுவதாக கேள்விப்பட்டேன்.” மார்வின் அப்படிச் சொன்னது எனக்கு இன்னும் தர்ம சங்கடமாக இருந்தது.
மார்வினும் சங்கீதாவும் ஒருத்தரை ஒருத்தர் நேரடி யாகப் பகைத்துக் கொள்ளாத உறவைக் கொண்டவர்கள். இருவரும் ஒருத்தரில்.
"சங்கீதாவுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று கேள்வி” என்றேன்.
"ஊரிலா அல்லது லண்டனிலா ?” மார்வின் ஏன் இதையெல்லாம் கேட்கிறாள் என்று எனக்குத் தெரியும். நான் மறுமொழி சொல்லவில்லை. மார்வின் என்னை ஊடுருவிப் பார்த்தாள்.
“ராஜி லஞ்ச் டைம் சந்திக்க முடியுமா ?” நான் 'உம்' சொல்லிவிட்டு படியேறுகிறேன். அவள் தனது டிபார்ட்மென்டுக்குள் போகிறாள்.
ஆறு மாதங்களுக்கு மேலாக வேலைக்கு வராமல் இருந்த வள் இப்போதுதான் வந்திருக்கிறாள். சோர்ந்து போன தோற்றம், உடைந்து போன வாழ்க்கையின் தோற்றம், முப்பது வயதில் முதிர்ச்சியடைந்த அலுப்பு.
எனது டிபார்ட்மெண்டுக்குள் நுழைந்ததும் சங்கீதாவின் சிரிப்பு என்னை வரவேற்கிறது.
இன்னும் சில வாரங்களில் “திருமதியாகப்” போகும் பெருமை பொலிகிறது அவள் சிரிப்பிலும் நடத்தையிலும். எஸ்தர் என்கோமா- செம்பாவுவே நாட்டைச் சேர்ந்த சிநேகிதி, எப்போதும் எதையும் இரண்டாம் தரம் கேட்டு விளங்கிக் கொள்பவள். என் மெளனத்தை அவதானித்து விட்டு,
“லவ் இஸ் த மேட்டர்” என்று கேட்டாள்.

Page 55
104 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
s
“மார்வின் பேக்கர் வேலைக்கு வந்திருக்கிறாள்' என்றேன். எஸ்தருக்கு எந்த விஷயத்தையும் இரண்டு முறை சொல்லி அலுத்து விட்டேன்.
எஸ்தரின் கண்கள் என்னை ஒரு தரம் ஏறிட்டுப் பார்த் தன. ஏதோ கேள்வி கேட்கப் போகிறாள் என்பது முகத்தில் தெரிந்தது.
“ஏன் அப்படிப் பார்க்கிறாய்?”
எரிச்சலைக் காட்டாமற் கேட்டேன்.
“மார்வின் பேக்கர் கல்யாணம் செய்து விட்டாளா?” எஸ்தர் என்கோமாவின் கேள்வி எனக்கு எரிச்சலை உண் டாக்கியது.
“மார்வின் கணவன்- பழைய கணவன்தான்; ஊருக்குப் போய்க் கல்யாணம் செய்து கொண்டு வந்திருக்கிறான். மார்வின் மனத் துயர் காரணமாக ஆறு மாதம் லீவில் நின்று விட்டு வந்திருக்கிறாள்” எஸ்தர் என்கோமாவுக்கு விஷயங்களை விளங்கப்படுத்திச் சொல்லி அலுத்துக் கொள்வதில் நானும் ஒருத்தி.
சங்கீதா படியிறங்கிப் போவது தெரிந்தது. நான் கொம் பியூட்டரைத் தட்டிவிட்டு வேலையைத் தொடங்கினேன். சங்கீதா மார்வினைச் சந்திக்கப் போவது நிச்சயம் என்று மனம் சொல்லியது. எனது பின்னால் சங்கீதாவின் குரல் கேட்டது. “அவள் வந்திருக்கிறாள்.” நான் சங்கீதாவைத் திரும்பிப் பார்க்காமல் கொம்பியூட்டர் இ.மெயிலைப் பார்க்கிறேன். சங்கீதாவைத் திரும்பிப் பார்க்கவில்லை.
“மார்வின் பேக்கர் வேலைக்கு வந்திருக்கிறாள்” -சங்கீதா என் தோளைத் தட்டுகிறாள். சங்கீதாவின் குரலில் குரோதம்.
“மார்வின் பேக்கர் வேலையை விட்டுப் போனதாக எனக்குத் தெரியாதே' -நான் சங்கீதாவைத் திரும்பிப் பார்க்கிறேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 105
“உம் உம் இன்னொருத்தனைப் பிடிப்பது அவளுக்கு கஷ்டமா” -சங்கீதாவின் குரலில் விஷம் தோய்ந்து தெறிக் கிறது.
எனது மெளனம் அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
“மார்வினில் உனக்கு ஏன் கோபம்” -நான் சங்கீதாவை நேரே பார்த்துக் கேட்கிறேன். கேட்கக் கூடாத கேள்வியது. இரு பெண்களும் 'ஒருத்தனைக் காதலித்தார்கள்' ஆபீஸில் கூட்டம் தொடங்கிவிட்டது. டேவிட்டும் ஸ்ரிவனும்ஹோமோசெக்சுவல் தம்பதிகளின் கிசுகிசுப்பு எங்களைத் தாண்டிப் போகிறது. எப்போதும் யாரிலோ ஆத்திரப்படும் லோரு ஹான்ஸனின் அவசர நடை தூரத்தில் கேட்கிறது. ஒக்ஸிஜன் சிலிண்டருடன்- தள்ளு வண்டியில் வரும் மி ஸஸ் ஹரிசனின் இருமல் டிபார்ட்மெண்டை நிறைக்கிறது. சங்கீதா எனக்கு மறுமொழி சொல்லவில்லை. சங்கீதா வின் அழகிய விழிகளின் ஆத்திரம் எனக்கு விசித்திரமாக இருக்கிறது.
“ரமேஷின் வாழ்க்கையை அநியாயமாக்கிய மார்வினில் எனக்குக் கோபம்- இந்தியர்கள் என்றால் இந்த வெள்ளைக் காரர்களுக்கு ஒரு இளப்பம். காதல் பண்ணுவது, கல்யாணம் செய்வது, விவாகரத்து செய்வது எல்லாம் இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு" -சங்கீதா பொரிந்து தள்ளினாள். உலகத்து இந்துக்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கும் ஆவேசம்.
சங்கீதா எப்போதும் கவர்ச்சியாக உடுப்பாள். எடுப்பான தோற்றம். இந்தக் குளிரிலும் ஒரு மெல்லிய சேர்ட்டும் ஸ்கேர்ட்டும் போட்டிருக்கிறாள். ஸில்க் சேர்ட்டைத் தாண்டி அவள் இளமை எட்டிப் பார்க்கிறது. ரமேஷ் பெய ரைச் சொன்னால் ஏதேதோ எல்லாம் எட்டிப் பார்க்கும். “ரமேஷ் பாவம். இரண்டாம் தரம் கல்யாணம் செய்ய என்ன கஷ்டப்பட்டிருப்பானோ” -சங்கீதா பெருமூச்சு

Page 56
106 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
விட்டாள். என்ன முதலைக் கண்ணிர்? இந்திய ஆணுக்கு பெண்ணொன்று பிடிப்பதா கஷ்டம்? எனது மானேஜரின் அறைக் கதவு திறப்பது கேட்டது. சங்கீதா தன் இடத் துக்குப் போய்விட்டாள். பக்கத்தில் நின்றிருந்தால் இன்னும் எதையோ எல்லாம் பொரிந்து தள்ளியிருப்பாள்.
கொம்பியூட்டரில் கண்கள் எனது சிந்தனைகள் மார்வினின் சோகக் கண்களைத் தொடர்கிறது.
ஐந்து வருடங்களுக்கு முன் எக்கவுண்டு டிபார்ட்மெண் டில் ரமேஷ் என்ற இந்திய வாலிபன் வந்தபோது அதே காலகட்டத்தில் அந்த டிபார்ட்மெண்டின் செக்ரட்டரி யாக வந்தவள் மார்வின் பேக்கர்.
யூனிவர்சிட்டியில் பொலிட்டிக்கல் சயன்ஸ் படித்து விட்டு ஒன்றிரண்டு வருடம் உலகம் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை எக்கவுண்ட் டிபார்ட் மெண்ட் செக்ரட்டரியாக வந்தவள் ஒரு சில கிழமைகளில் ஐந்து மாடிக் கட்டிடத்தில் பணிபுரியும் முன்னூறுக்கு மேற்பட்ட உத்தியோகத்தரில் எத்தனை பேரைச் சிநேகிதம் செய்து கொண்டாள்! செக்ரட்டரி உத்தியோகத்தில் சந்தோஷத்துடன் தங்கி விட்டாள். ஒதுங்கிப் போகும் அந்நிய மனப்பான்மை யில்லாமல் அவள் சிநேகிதமாகப் பழகினாள்.
அவளையும் ரமேஷையும் ஒரு நாள் லிப்டில் சந்தித்த போது அவர்களின் கண்களின் மொழிக்கு ஒரு விளக்கமும் தேவைப்படவில்லை.
முதல் வருட கிறிஸ்துமஸ் பார்ட்டியில் இரவு இரண்டு மணி வரை நடனமாடிய ஜோடிகளில் மார்வினும் ரமேஷ"ம் ஒரு ஜோடி.
"இந்து சமயத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தருவாயா" -முகம் சிவக்க அவள் கேட்டபோது நான் அவள் மூக்கைக் கிள்ளியபடி “ரமேஷ் சொல்லித் தரவில்லையா” என்றேன்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் * 107
ஆங்கிலேயப் பெண்ணுக்கும் நாணம் வரும் என்று அன்றுதான் எனக்குத் தெரியும்.
அன்று பின்னேரம் வழக்கத்திற்கு மாறாக அண்டர் கிரவுண்டு ரெயிலுக்கு வந்தாள் மார்வின்.
"ஏன் ரமேஷ் லிப்ட் தரமாட்டானா?” -நான் வழக்கம் போல் அவளைச் சீண்டினேன். அவள் என்னை நேரே பார்த்தாள். ஏதோ சொல்ல நினைப்பது கண்களில் பளிச் சிட்டது.
“என்ன சொல்லப் போகிறாய்? இன்னும் எட்டு மாதத்தில் பிள்ளை பிறக்கப் போகிறது என்று சொல்லப் போகிறாயா?”
எனது கேள்விக்கு அவள் சட்டென்று சிரித்தாள். “ரமேஷ் என்னைக் கல்யாணம் பண்ண ஆசைப் படுகிறான்” -மார்வினின் குரலில் தேன் பாய்ந்தது.
முகத்தில் நிலவு பொலிந்தது. தற்கால ஆங்கிலேயப் பெண்களுக்கு கல்யாணத்தில் நம்பிக்கையில்லை. இவள் வித்தியாசம்.
அவளை ஏறிட்டுப் பார்த்தேன். “எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை.” மார்வின் ஏன் எனக்கு இதைச் சொல்லவேண்டும்?
ட்ரெயின் ஏதோ ஒரு ஸ்ரோப்பில் நின்றது. பின்னேரம் ஆறு மணிக்கு ரின்னில் அடைபடும் சிறு மீன்கள் போல் மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள்.
“இந்தியர்கள் குடும்பத்தில் மிகவும் அக்கறையானவர் கள்தானே ?” அவள் தனது சந்தேகத்தை என்னிடம் கேட்டாள்.
“உலகத்தின் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் குடும்பத்தில் மிகவும் அக்கறையானவர்கள்.”

Page 57
108 x- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
நான் சொல்வதை அவள் கேட்டாளோ என்னவோ தனது ஸ்ரோப் வர இறங்கிக் கொண்டாள்.
ஒரு சில கிழமைகளின் பின் சங்கீதா வேலைக்கு வந்து சேர்ந்தாள். வந்து சேர்ந்த ஒரு சில தினங்களிலேயே மார் வினைப் பற்றித் திட்டத் தொடங்கிவிட்டாள்.
“வெட்கம் கெட்ட பிறவிகள் லிப்டில் முத்தமிட்டுக் கொண்டு வந்தார்கள்” சங்கீதா முழங்கினாள். “நோ கிஸ்ஸிங் இன் த லிப்ட் என்ற நோட்டிஸ் போடுவமா ?” எனது கிண்டல் அவளின் கோபத்தைக் கூட்டியது. எனது புராஜெக்ட் விடயமாக நான் எக்கவுண்ட் டிபார்ட்மெண் டுக்குப் போகவேண்டியிருந்தது.
ரமேஷ் பிஸியாக இருந்தான். வழக்கமாகவே என்னு டன் அதிகம் பேச மாட்டான். மார்வினும் நானும் ஒரள வுக்கு நெருங்கிய சிநேகிதிகள் என்று தெரியும்.
“எப்போது அந்த விசேட நாள்?" நானாக ரமேஷைக் கேட்டேன். மார்வின் இவன் தன்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கேட்டேன். தர்மசங்கடத்துடன் தலையைச் சொறிந்து கொண்டான்.
மார்வினும் ரமேஷ"ம் திருமணம் செய்யப் போகிறார் கள் என்ற செய்தி அடிபட்ட போது எரிச்சல்பட்டவள் சங்கீதா ஒருத்திதான்.
"ஏன் இந்த இந்தியர்களுக்கு இந்த வெள்ளைத் தோலில் இந்தப் பைத்தியமோ” சங்கீதா முணுமுணுத்தாள்.
காதல் என்ன ‘கலர்' பார்த்தா வரும் ? வெள்ளைக் கவுன் போட்டு மார்வின் ஒரு இளவரசி போல் தெரிந்தாள். ரமேஷ் வழக்கமான இந்தியர்களை விட உயரமானவன். மிகவும் கம்பீரமாகத் தெரிந்தான். எத்தனை அழகான தம்பதிகள்!
"உனது தாய் மிகவும் சந்தோஷப்படுவாள்” ரமேஷ"க் குச் சொன்னேன். அவனது தாய்க்கு பிரயாணம் செய்வது

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 109
பிடிக்காதாம். அவள் இந்தியாவிலிருந்து வரவில்லை. ரமேஷின் தகப்பன் மிகவும் அடக்கமான மனிதர். தனது மருமகளின் அழகில் சொக்கிப் போய்விட்டார்.
“எனது ஒரு மகன் அமெரிக்காவில் படிக்கிறான். ஜப்பா னியப் பெண்ணுடன் சிநேகிதம் என்று கேள்வி” ஒறேன்ஸ் ஜூசைப் பருகியபடி சொன்னார். ‘என்ன செய்வது, எல்லாம் தலைவிதி' என்று பெருமூச்சு பேச்சிற் தொனித் 竺碍
“ஏதோ அவர்கள் சந்தோஷமாக இருந்தாற் சரி” பெரு மூச்சுடன் ஆசீர்வதித்தார்.
"...(9 חgr"
எனது சிந்தனை கலைந்தது.
எஸ்தர் என்கோமா எனது செம்பாவுவே சிநேகிதி ஏதோ கேட்க வந்திருந்தாள். ஸ்ரேசனரி அறைக்குப் போய் பேப்பர் எடுக்காமல் என் மேசையைச் சுரண்டுவது எஸ்தரின் கொள்கை.
“என்ன” என்று கேட்டபடி திரும்பினேன். “மார்வின் ஒவர் டோஸ் எடுத்தாளாம் உண்மையா?” மார்வின் ஆறு மாதம் வேலைக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்பது அநாகரிகம். “எப்படியிருக் கிறாய்?” என்று நான் ஒரு தரம் போன் பண்ணிய போது “ராஜி, தயது செய்து என் தனிமையைக் குலைக்காதே’ என்றாள்.
அதன்பின் இன்றுதான் அவளைச் சந்தித்தேன். எஸ்தருக்கு எத்தனையோ விடயம் தெரிந்திருக்கிறது.
“எனக்கு மார்வினின் தனிப்பட்ட விடயங்கள்
தெரியாது”
"நீ நெருங்கிப் பழகினாயே?”

Page 58
11 O - இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"ஆங்கிலேயர் சிலவேளை தனிமையைச் செல்வமாக நினைக்கிறார்கள்.” நான் உண்மையைச் சொன்னேன்.
“ம். ம். இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையைத் தாங்கத் தெரியாது”
எஸ்தர் சப்புக் கொட்டிவிட்டுச் சென்றாள்.
*
டெலிபோன் அடித்தது. “லன்ச் ரைம் வேண்டாம். ஆபீஸ் முடியவிட்டுக் கொஞ் சம் நேரம் செலவழிப்பாயா?” மார்வினின் கேள்வியிற் கெஞ்சல்.
ஒக்டோபர் குளிர் காதிற் புகுந்து உடம்பைச் சிலிர்க்கப் பண்ணியது.
*உன்னிடமிருந்து ஒதுங்கிக் கொண்டது கோபமா?” அவள் சிவப்பு வைனை ஊற்றியபடி கேட்டாள்.
இல்லை' என்று தலையாட்டினேன். “ரமேஷின் நடத்தையால் எல்லா இந்தியர்களிலும் எனக்கு நம்பிக்கையில்லாமற் போய்விட்டது போலிருந்தது” வைனை மட மடவென்று குடித்தபடி அவள் சொன்னாள். இவளின் நடத்தையாற்தான் ரமேஷ"க்கும் இவளுக் கும் பிரச்சினை என்று ஆபீஸில் கிசுகிசுப்பு என்று இவனுக் குத் தெரியும் என்று எனக்கும் தெரியும்.
இருவரும் ஒரு வைன் பாரில் உட்கார்ந்திருந்தோம். குளிர்ந்த அந்த மாலை நேரத்தில் ஆப்பிள் ஜாசைக் குடிக்க இன்னும் குளிர்ந்தது.
"உன்னுடன் தொடர்பு கொள்ளாமலிருந்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.”
அவள் கண்கள் கலங்கின.
அவளது கரங்களை அன்புடன் தடவினேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 111
"தனிமை சிலவேளை நல்லது. உனது நிலையில் அதை விரும்புகிறாய்."
"ஐ-லவ் ரமேஷ்" -திடீரென்று அவள் சொன்னாள். அவள் அழத் தொடங்கி விட்டாள். "அவன் இப்போது வேறொருத்தியின் கணவன்.” அவளுக்கு நான் ஞாபகமூட்ட வேண்டுமா? "ஏன் இன்று ஆபீசுக்கு வந்தேன் என்றிருக்கிறது. ரமேஷ் வேறு இடத்திற்குப் போனாலும் என்னைக் கண்டதும் இன்னும் பழைய கிசுகிசுப்புப் போகவில்லை என்று தெரிகிறது.”
"அது இயற்கைதானே.” “எது இயற்கை?" -அவள் குரலில் ஆத்திரம். “மற்றவர்களைப் பற்றி வம்பளப்பது” “எனது வாழ்க்கையின் சோகத்தைத் தெரியாமல் இப்படியெல்லாம் பேசிக் கொள்வது நியாயமில்லை.” அவள் குரல் உயர்ந்தது.
நான் இன்னுமொரு ஆப்பிள் ஜூசுக்கு ஆர்டர் கொடுத் தேன். முகம் சிவந்து, கண்கள் பொல பொலவென்று ஊற்றெடுக்கிறது. ரமேஷில் இவ்வளவு அன்புள்ளவள் ஏன் அவனை விவாகரத்து செய்து கொண்டாள்?
அவன் ஊருக்குப் போய் திருமணம் செய்து கொண் டதை நினைத்ததும் பழைய ஞாபகங்கள் வந்து விட்டதா?
“நல்ல காலம், சங்கீதா அவனைச் செய்யாமல் விட்டாள்.”
மார்வின் விரக்தியாகச் சிரித்தாள்.
“அவனை உனக்கு வேண்டாம். அவன் யாரைச் செய்தாலும் உனக்கென்ன?” குழப்பத்துடன் கேட்கிறேன்.

Page 59
112 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"எங்களுக்குத் தெரிந்த பெண் நான்பட்ட துயர்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவனைச் சும்மா விட்டிருக்கலாமா” "நீ பட்ட துன்பமா ?” எனக்கு புரியவில்லை. மார்வின் மற்ற ஆண்களுடன் நெருங்கிப் பழகுவது பிடிக்கவில்லை என்று ரமேஷ் கண்டித்தபடியாற்தானே பிரச்சினை தொடங்கியது? அப்படியில்லையா?
“ஏன் மற்றவர்கள் சொல்வதை நீயும் நம்புகிறாயா ராஜி?”
மார்வினின் நேர்மையை நான் சந்தேகிக்க மாட்டேன். ஆனாலும் அந்த வதந்திகள்?
“மற்றவர்களை நம்ப வைப்பதில் ஆண்கள் கெட்டிக் காரர்கள். தன் குறையை உலகத்துக்கு மறைக்கவே ஒழுக்கத் தைப் பற்றிக் கதை கட்டினான். அப்படியான மனிதனுடன் எப்படி வாழ்வது?”
மார்வினின் கேள்வி நியாயமானது. "உனக்கென்ன வயதாகி விட்டதா? ஒரு நல்ல மனி தனைச் சந்திக்கலாம்.” நான் முடிக்கவில்லை. “ஒன்றி ரண்டு குட்டி குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.” அவள் என்னைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு சொல்கிறாள்.
குழந்தைகள் என்றால் அவளுக்குக் கொள்ளையாசை தனது திருமணத்தைப் பற்றிச் சொல்ல முதலில் தனது குழந்தை ஆசையைப் பற்றிச் சொன்னவள்.
பாவம், ஒரு கல்யாணம் உடைந்து விட்டது. இன் னொரு கல்யாணம் சரிவருமா?
"பை த வே, சங்கீதாவுக்கும் விரைவில் கல்யாணம் நடக்கப்போகிறது.”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - 113
“கேள்விப்பட்டேன்” அவள் சுருக்கமாகச் சொல்கிறாள். ஒரு காலத்தில் ரமேஷில் சங்கீதா ஒரு பிடிப்பு வைத் திருந்தாள். எனது ஆபீஸிலுள்ள முன்னூற்றி அறுபது பேருக்குத் தெரிந்த ரகசியம்.
“ரமேஷின் மனைவியை சந்தித்தாயா?” மார்வின் கேட்டது ஆச்சரியமாக இருக்கிறது.
"மார்வின் நீதான் என் சிநேகிதியாக இருந்தால், நீ என்னுடன் தொடர்பை அறுத்துக் கொண்ட போது ரமேஷ"டன் எனக்கு என்ன பேச்சு? அத்தோட ரமேஷ் வேறு இடத்துக்கெல்லோ போய்விட்டான்.”
“பாவம் அந்தப் பெண்” கைப்பையைத் தூக்கிக் கொண்டு எழுகிறாள் மார்வின்.
“ஏன் பாவம் என்கிறாய்?” V “அவளும் என்னைப் போல் ஒரு கிளியாகத்தான் ஏமாறப் போகிறாள்"
அவள் சொன்னது விளங்காமல் திகைக்கிறேன்.
“அவளுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையிருக் கும் என்று நினைக்கிறாயா?” மார்வின் என்னைக் கேட்கிறாள்.
“பெரும்பாலான ஆண்களுக்கு அது விளங்குவ தில்லையே."
“என்ன சொல்கிறாய்?”
"ரமேஷ"க்குத் தகப்பனாக முடியாது. அதுதான் எங்கள் விவாகரத்துக்குக் காரணம்.”
நான் திடுக்கிட்டு நிற்கிறேன்.
“தனது ஆண்மையை நிலைநிறுத்த இன்னொரு பெண்ணையும் கெடுக்கலாமா ?”
மார்வினின் கேள்விக்கு எனக்கு மறுமொழி தெரியுமா? இந்தியா டுடே 98
இ.கா.-8

Page 60
8. LumTIȚih
"ørப்ரல் மாதத்திலும் இப்படி ஒரு குளிரா” பஸ்ஸில் ஏறி ஒரு முதிய பெண்ணைக் கேட்டபடி அவளுக்கு கை கொடுத்து உதவி செய்தாள் பஸ் கண்டக்டர் ஜெனிபர். கிழவி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். பஸ்ஸில் ஏறிய ஆங்கிலேயே மாதுவுக்கு எழுபது வயது இருக்கலாம். என்ன குளிரோ மழையோ ஆங்கிலேயர் தங்களை அலங்கரிக்கத் தவற மாட்டார்கள் என்பது போல் அந்தமாது தனது சுருங்கிய முகத்தில் சிவப்புப் படர்ந்த "மேக் அப் போட் டிருந்தாள். கையில் ஒரு சிறிய கறுப்புக் கைப் பையுடன் தளர்ந்த நடையுடன் ஒருவாறு ஏறியுட்கார்ந்தாள்.
அவளைத் தொடர்ந்து ஏறியவன் ஒரு கறுப்பன். பஸ் புறப்படப் போகிறதே என்ற அவசரத்தில் ஒடி வந்த இளைப்புடன் பஸ்சில் ஏறினான். அவன் தன்னளவு உயர முள்ள ஒரு கறுப்புப் பெட்டியையும் சுமந்து வந்திருந்தான். பெட்டியின் தோற்றத்திலிருந்து அது ஒரு 'கித்தார்' பெட்டி என்று தெரிந்தது.
பஸ் கண்டக்டர் பெண் அவனையும் அந்தப் பெட்டியை யும் மாறிப் மாறிப் பார்த்தாள். அவன் அவளைத் தாண்டிப் போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டான். அவன் உட்காரவும் பஸ் புறப்பட்டது. அந்தக் குலுக்கலில் அவன் வைத்திருந்த பெட்டி, முன்னாலிருந்த பிரயாணியின் தலையைத் தட்டிவிட்டது. முன்னாலிருந்த பிரயாணி ஒரு வெள்ளையர். முதியவர். கோட் சூட் போட்டிருந்து

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ぐ 115
தொப்பியும் அணிந்திருந்தார். அடிபட்ட தன் தலையைத்
தடவிய படி பின்னால் திரும்பிப் பார்த்தார்.
கறுத்த கித்தார் பெட்டிக்கு பின்னால் தெரிந்த உயர்ந்த
வளர்ந்த, திடகாரத்திரமான கறுப்பு முகத்தைக் கண்டதும்
எரிச்சலுடன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார் ஆங்கிலேயப் பெரியவர்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. காற்றும் மழையும் வேறு. பஸ் கண்டக்டர் பெண் ஜெனிபர் பஸ்ஸின் முன் வரிசைக்குப் போய் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றதும் வாத்தியப் பெட்டி யுடனிருந்த கறுப்பு மனிதனுக்குப் பக்கத்திலிருந்த பிரயாணி இறங்க மிகவும் சிரமப்பட்டார்.
கித்தார் பெட்டிக்காரன் எழும்பி இடம் கொடுக்க முயற்சிக்கும் போது அவனுடைய கித்தார்ப் பெட்டி இன் னொரு தரம் முன்னாலிருந்த ஆங்கிலேயரின் தலையில் கொஞ்சி முடித்தது.
“அட என்னய்யா? இந்த பஸ்ஸில் வைத்து என்னைக் கொலை செய்வது என்பது உன் யோசனையா” கிழவரின் குரல் உயர்ந்தது.
"ஐயாம் சாரி. மன்னிக்கவும் மன்னிக்கவும்” உண்மை யான மன்னிப்புக் கேட்கும் பாவனையில் கறுப்பன் கிழவனிடம் பேசினான். அதே நேரம் அடுத்த பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றதும் ஒரு வெள்ளையன் ஒரு பெரிய 'காட்போட்' பெட்டியுடன் ஏறினான். அந்தப் பெட்டியில் ஒட்டை போட்டு, கைப்பிடியுமிருந்தது. ஏதோ ஒரு மிரு கத்தை மிருக வைத்திய சாலைக்குக் கொண்டு போகிறான் என்று தெரிந்தது.
அவனைத் தொடர்ந்து ஒரு பெண் இரட்டைத் தள்ளு வண்டியுடன் மூச்சு வாங்கியபடி ஏறினாள். பஸ் கண்டக்

Page 61
116 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
டர் அந்தத் தள்ளு வண்டியை மடித்து வைப்பதில் உதவி
செய்தாள்.
அதே நேரம் இரு பெண்கள் கலப்பு நிறத்தவர்கள் பெரிய
ஷாப்பிங் பைகளுடன் ஏறினார்கள்.
பஸ் கிட்டதட்ட நிறைந்து விட்டது. அதன்பின் அடுத்த பஸ் ஸ்டாப்பில் ஏறியவர்கள் இருக்க இடமின்றி நின்று கொண்டிருந்தார்கள்.
அது 38ஆம் நம்பர் பஸ், ஹக்னி என்ற கிழக்குப் பக்கத்தி லிருந்து லண்டனின் நடுமையமான விக்டோரியா பஸ் நிலையத்தில் நிற்கும் பஸ்.
பஸ் இஸ்லிங்டனைத் தாண்டும்போது பஸ்சில் எள்ளுப்போட முடியாத நெருக்கம். நேரம் காலை ஒன்பது மணி என்ற படியால் பாடசாலைக்குப்போகும் மாணவர் களின் தொகையும் குறைந்து ஆபீஸ் போவோர் தொகை யும் குறைந்து கடை கண்ணி, சோசியல் செர்வீஸ், ஆஸ்பத் திரிக்குப் போவோர் போன்றவர்கள் தொகைதான் கூடி யிருந்தது. பஸ் இஸ்லிங்டன் ஸ்ரீட்டைத் தாண்டி நோஸ்பரி அவனியூவில் திரும்பியது. திரும்பிய போது எதிர்திசையில் வந்த பெரிய லாரிக்கு வழி கொடுக்க ஒரு பக்கம் திரும்ப பஸ் குலுக்கலுடன் சரிந்தது.
பஸ் சரிந்ததால் பிரேக் போட பெட்டி தரையில் சரிந்தது. பெட்டிக்காரன் அவசரத்துடன் பெட்டியைக் கட்டிக் கொண்டான். இரட்டைப் பிள்ளைகள் தாயின் மடியி லிருந்து சரிந்து முன்னிருந்த பிடியில் அடிபட்டு ஆவென்று அலறத் தொடங்கினார்கள்.
பெரிய ஷாப்பிங் பைகளுடன் வந்திருந்த கலப்பு நிறப் பெண்கள் அவர்களின் பிடியைத் தவறவிட்டதால் ஷாப் பிங் பைகள் பிரிந்து அதனுள் வைத்திருந்த சில மீன்கள் பஸ்ஸில் அங்கும் இங்கும் சிதறி விழுந்தன.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 117
ஒரு சிலர் அருவருப்புடன் முகத்தைச் சுழித்தனர். ஒரு சிலர் விழுந்த மீன்களை எடுத்துக் கொடுத்து உதவி செய்தனர். ஒரு சிலர் வேடிக்கை பார்த்தனர்.
'காட்போட்' பெட்டிக்காரன் “ஓ பேபி நீ ஒன்றும் பயப்படாதே" என்று காட்போட் பெட்டியின் ஒட்டையில் தன் உதட்டை வைத்து கிசுகிசுத்தான்.
“பெட்டியில் என்ன வைத்திருக்கிறாய்” பக்கத்திலிருந்த நவநாகரீகமான பெண் ஆச்சரியத்துடன் கேட்டாள்.
பெட்டிக்காரன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். இவளிடம் உண்மையைச் சொல்வதா இல்லையா என்பதை யோசிக்கிறான் என்பது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“பெண் சாதியிடம் சண்டை போட்டு விட்டு உன் குழந்தையைக் கடத்திக் கொண்டு போகிறாயா’ அவள் குறும்பாகக் கேட்டாள்.
"வாட்?" காட்போட் ப்ெட்டிக்காரன் பேசினான்.
"ஒ பேபி கவலைப்படாதே என்று கொஞ்சினாயே. உன் காதலியின் தலையைப் பிடுங்கியா வைத்திருக்கிறாய்” அவள் அவனைச் சீண்டும் குரலில் கேட்டாள்.
“வை டோன்ட் யூ மைன்ட்யுவர் ஒன் பிஸினஸ்” காட் போட் பெட்டிக்காரன் எரிச்சலுடன் தலையைத் திரும்பிக் கொண்டான்.
அதே நேரம் கறுப்பு வாத்தியப் பெட்டிக்காரனும் அவனுக்கு முன்னாலிருந்த ஆங்கிலேயர் கிழவனும் உரத்த குரலில் தர்க்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
“வயது போன என் தலையை உனது பிளடிகித்தார் பெட்டியால் மூன்று தரம் இடித்து விட்டாய்” கிழவர் தொப்பியைக் கழட்டித் தலையைத் தடவிக் கொண்டார்

Page 62
118 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“மன்னித்துக் கொள்ளுங்கள், நான் வயதுபோன மனிதர் களை எனது வாத்தியப் பெட்டியால் தாக்கித் தொலைக்க வேண்டும் என்று புறப்படவில்லை. பஸ் எக்கச் சக்கமாகத் திரும்பும்போது ஏதோ அடிபட்டது. அதற்காக ஏன் இப்படிஅலட்டிக் கொள்கிறீர்கள்.”
"ஆமாம், கொலை கூடத் தான் செய்துவிட்டு மன்னிக் கவும், தவறுதலா நடந்து விட்டது என்று சொல்வாய் போலிருக்கிறது” கிழவன் எரிந்து விழுந்தார்.
இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் தாள, ராக, பல்லவி வாசித்து பஸ்ஸை இரண்டு படுத்திக் கொண்டிருந்தார்கள். அதன் தாய் இருபது வயது தான் இருக்கும், குழந்தைகளின் வாயில் ஏதோ இனிப்புகளை வைத்து சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
மீன்களைக் கொட்டிய பெண்கள் தாங்கள் ஏதும் மீன் களை தவற விட்டோமோ என்ற யோசனையில் பஸ்ஸின் சீட்டுகளின் அடியில் எட்டிப் பார்த்து அங்கிருந்தவர்களின் எரிச்சலை வாங்கிக் கட்டினார்கள்.
கறுப்பு வாத்தியக்காரனும் கிழவனும் உச்ச ஸ்தாயியில் மோதிக் கொள்வது எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது.
பெண் கண்டக்டர் ஜெனிபர் அன்று மிகவும் சோகத் துடன் வேலைக்கு வந்திருந்தாள். அவள் கணவன் மார்ட் டின் நல்ல வெறியில் நடுச் சாமத்தில் வந்து சேர்ந்தான். அவனின் இரவுச் சாப்பாட்டை ஜெனிபர் வைத்து விட்டுத் துரங்கப் போய் விட்டாள். அவள் காலை எட்டு மணிக்கு வேலை தொடங்குபவள். காலையில் ஏழு மணிக்கு எழுப்பிப் பாட சாலைக்குப் போகும் பன்னி ரெண்டு வயது மகனை எழுப்பி (அது கிட்டத்தட்ட இருபது நிமிடம் நடக்கும் போராட்டம்) அவனுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்து, கணவன் மார்ட்டினுக்குக் காலைச் சாப்பாடு செய்து (ஆங்கிலேயக் காலைச் சாப்பாடு தான்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (X 119
மார்ட்டின் சாப்பிடுவான், அதாவது நான்கு சோ ஹேச்சர்ஸ், இரண்டு முட்டையில் தயாரித்த காரம்பில்ட், மூன்று பேக்கன் துண்டுகள், நாலு ரோஸ்ட், பெரிய டம் ளரில் காப்பி) வைத்து விட்டு மார்ட்டினை எழுப்புவாள்!
மார்ட்டின் ஒரு பிரைவேட் கம்பனியில் தொழிலாளி uurT35 GaduGM6v GolaFuiu6spoTGåT (Removel man) L6a95@yub 35GoGMTägglu'u போய் வருவான். கிழமையில் மூன்று தரம் குடிக்கப் போவான். சிலவேளைகளில் நல்ல வெறியில் வந்து எதையோ, அல்லது யாரையோ திட்டிக் கொள்வான்.
நேற்று இரவு அவன் கறுப்பு இனமக்கள், ஆசிய மக் களைத் திட்டிக் கொண்டான். இங்கிலாந்திலுள்ள கோடீஸ்வரர்கள் தொகையில் ஆசியர்களின் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை) தொகை இருநூறாகி விட்டது. வானொலி அறிவித்த போது மார்ட்டின் கோபத் துடன் கத்தினான்.
“எங்கள் நாட்டைச் சுத்தப்படுத்தி, பாதாளரெயிலைச் சுத்தப்படுத்தி, ஆஸ்பத்திரிகளை கழுவித் துடைக்க வந்தவர் கள் இன்று இங்கிலாந்துக் கோடீஸ்வரர்களின் தொகையில் மூன்றாம் இடத்தைப் பெறுவதா” அவன் சீறினான்.
மாட்டிறைச்சியை ரோஸ்ட் செய்து, உருளைக் கிழங் கைப் பொரித்துக் கொண்டிருந்த ஜெனிபருக்கு அவனின் கோபத்தின் காரணம் புரியவில்லை.
அவளுக்கு நாற்பத்து ஐந்து வயது. கடந்த இருபது வருடங்களாக வேலை செய்கிறாள். ஏதேதோ வேலை. எத்த னையோ இடங்களில் கறுப்பு மக்களுடன், ஆசிய மக்க ளுடன் வேலை செய்திருக்கிறாள். சாப்பாட்டுக் கடையில் வெயிட்டர்காக வேலை செய்தபோது ஆசிய நாட்டு மாண வர்களுடன் வேலை செய்திருக்கிறாள். ஆஸ்பத்திரியில் கழுவித்துடைத்த போது கறுப்பு இன மக்களுடன் வேலை செய்திருக்கிறாள். அவர்களைப் போலத் தான் ஜெனிபரும்

Page 63
120 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஒரு தொழிலாளி. மார்ட்டின் ஏன் தேவையில்லாமல் யாரையோ திட்டுகிறான் என்று அவளுக்குத் தெரிய வில்லை. அவளின் 38ம் நம்பர் பஸ்ஸில் வருபவர்கள் பெரும்பாலும் கறுப்பர்கள். டால்ஸரனிருந்து விக்டோரியா ஸ்டேஷன் வரும் வரை அந்த பஸ்ஸில் ஏறுபவர்கள் பெரும்பாலும் கறுப்பர்களும் ஆசிய மக்களும், துருக்கிய, சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த மக்களுமே யாவார்கள்.
“கறுப்பு மனிதர்களை ஏன் திட்டுகிறாய்”
அவள் கேட்டபோது மார்ட்டினின் கோபம் தலைக்கு மேல் போய்விட்டது.
"ஏன் உன்னுடன் வேலை செய்யும் கறுப்பு நாய்களு டன் சரசம் செய்கிறாயா” குடித்த கண்கள் கோபத்தில் சிவக்க அவன் சீறினான். கறுப்பர்களுக்கு நடக்கும் அநீதி பற்றி அவள் சொல்ல நினைத்தாள். ஆனால் அவள் மறு மொழி பேசவில்லை. பேசிப் பிரயோசனமில்லை மார்ட் டின் வெறியிலிருக்கும் போது மெளனம் நல்லது. நேற்றிரவு குடியில் வந்தவன் அவள் வைத்திருந்த சாப்பாடு காய்ந்து கரிந்து போய் விட்டதாகவும் இதெல்லாம் அவள் வேலை செய்கிற திமிரில் ஏனோ தானோ என்று தன்னை நினைக்கிறாள் என்று அதிகாலையில் திட்டித் தீர்த்தான். வேலையை விட்டுவிட்டு வீட்டோடு இருக்க அவளுக்கு ஆசைதான். ஆனால் வீட்டுப் பொறுப்புகள்? அந்த எரிச்ச லில் வந்தவளுக்கு இன்று பஸ்ஸில் நடக்கும் கூத்து இன்னும் எரிச்சலை தந்தது.
ஆங்கிலேய மூதாட்டி தள்ளாடிய நடையில் வந்தவள் கறுப்பனுடன் சண்டை பிடிக்கும் ஆங்கிலேயக் கிழவ னுக்கு உதவப்போனாள்.
"ஆமாம் பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டில் எதைக் கொண்டு வருவது எதைக்கொண்டு வரக்கூடாது என்று முறை வழியில்லை. ஏதோ இடம் கொடுத்தால் எதையும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 121
கொண்டுவந்து எங்களைக் கொலையும் செய்து விடுவார் க்ள்” கிழவி பிரசங்கம் செய்தாள்.
"இன்னொரு தரம் என் தலையில் இவன் வாத்தியப் பெட்டி அடித்தால் என் தலை பிளக்கும்” கிழவர் ஆவேசத் துடன் சொன்னார்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. கிழவனின் சத்தத்தில் அழுது புலம்பி குழந்தைகளும் அடங்கி விட்டன.
இருந்தவர்களின் கால்களுக்கு நடுவில் தொலைந்து போன மீன்களைத் தேடிக் கொண்டிருந்த கலப்பு நிறப் பெண்கள் வெள்ளைக்காரக் கிழவனை முறைத்துப் பார்த்தார்கள்.
"ஆமாம் எங்கள் மீது பழிபோட்டுச் சிறையிலடைக்க நீங்கள் முன்னுமே நிற்பீர்களே” ஒருத்தி வெடித்தாள்.
“அபாயமான பொருட்களைப் பொது பஸ்சில் கொண்டு போவது சட்டப்படி குற்றம்” கிழவர் கையை ஆட்டி உறுமினார்.
“பார்க்கத் தெரியவில்லையா அந்தப் பெட்டி ஒரு சங்கீதப் பெட்டி என்று” மீன்காரப் பெண் தன் பெரிய மார்பு குலுங்க ஆரவாரித்தாள்.
"ஆமாம் ஒரு தரம் சங்கீதப் பெட்டி என்பீர்கள். அடுத்த தரம் அபாயமான மந்திரப் பெட்டிகள் என்று சொல்வீர் கள். உங்களை இந்த நாட்டுக்குள் வர விட்டதே பிழை” மேக் அப் கிழவி பிரசங்கம் செய்தாள்.
"நாங்கள் வந்திருக்காவிட்டால் உங்கள் தெருக்கள், ஆஸ்பத்திரிகள், அண்டர்கிரவுண்ட் ரெயின்கள் எல்லாம் நாறிக்கிடக்கும்”
"நீங்கள் வந்துதான் எங்கள் நாட்டின் மூலை முடுக் கையே நாறப் பண்ணிர்கள்”

Page 64
122 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
கிழவனும் கிழவியும் போட்டி போட்டுக் கொண்டு சத்தம் போட்டார்கள்.
“பேசாமல் சத்தம் போடாமலிருங்கள்” காட்போட் பெட்டிக்காரன் அமைதியாகச் சொன்னான்.
அடுத்த ஸ்டாப் சாட்லஸ் வேல்ஸ் தியேட்டர். பஸ் நின்றது. வெளிநாட்டுக் கம்பனிகள் இந்தத் தியேட்டரில் நடத்தும் விடயங்களின் விளம்பரம் தெரிந்தது. ஜெனிபர் ட்ரைவரிடம் சென்றாள். பஸ்ஸில் நடக்கும் சண்டையைப் பற்றிச் சொன்னாள். பஸ் ட்ரைவர் சீக்கியன், மஞ்சள் தலைப்பாகையுடனிருந்தான். சண்டை அளவுக்கு மீறிப் போய்க் கைக் கலவரமாவதை அவன் விரும்பவில்லை. தர்மசங்கடத்துடன் தாடியைத் தடவிக் கொண்டான்.
"சண்டை பிடிப்பவர்களில் யாரோ ஒருத்தர் இறங்கா விட்டால் நிலைமை அபாயகரமாகப் போகலாம்” அவள் அலுப்புடன் முறையிட்டாள். ஜெனிபர் இளகிய மனம் படைத்த பெண். சீக்கிய ட்ரைவருடன் ஒரு சில வருடங் களாக வேலை செய்கிறாள். டிரைவர் பஸ்ஸில் உள்ளவர் களைக் கண்டிப்பாகப் பார்த்தான். “நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால் நான் வண்டியை எடுக்க மாட்டேன்” சீக்கியன் கடுமையாகச் சொன்னான்.
"நான் என்ன சொல்லிவிட்டேன். இந்தப் பெரிய பெட்டியால் என் தலையில் இடித்தது பிழை என்றுதானே சொன்னேன்”
தொப்பிக்காரக் கிழவர் நியாயம் கேட்டார்.
“அவன் என்ன திட்டம்போட்டா உன்னைத் தாக்கி
y y
got fact
மீன்கார ஜோடியில் ஒன்று கிழவனிடம் கேட்டது.
“நாத்தம் பிடித்த உன் வாயைப் பொத்திக் கொண்டிரு” மேக் அப் கிழவி சொன்னதுதான் தாமதம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 123
மீன்காரப் பெண் கிழவியின் முடியில் கை வைத்து விட்டாள்.
ஜெனிபர் ஓடிவந்து இடையில் புகுந்திரா விட்டால் கிழவியின் பல் உடைந்திருக்கலாம். (பற்கள் செயற்கையான வையாகத் தோன்றின.)
"நான் சொன்னேனே இவர்களை அடக்க முடியாது” ஜெனிபர் அழாக் குறையாகச் சொன்னாள் என்ன வேலை யிது? இந்த இழவு பிடித்த வேலையைச் செய்யாமல் வீட்டில் இருக்க அவளுக்கு வசதியில்லை.
“என்ன நாடகம்? எவ்வளவு நேரம் இந்த பஸ் நிற்கும்? நான் வெட்டனரி கிளினிக்குப் போக வேண்டும்” காட் போட் பெட்டிக்காரன் கெஞ்சாத குறையாகக் கேட்டான்.
"நான் எப்படி பஸ் எடுக்க முடியும்? இவர்கள் போடும் சண்டை நிற்பதாயில்லை. நான் இறங்கச் சொன்னால் யாரும் இறங்கப் போவதுமில்லை”
சீக்கியன் பஸ்ஸில் இருந்தவர்களை முறைத்துப் பார்த் தான். அதே வழியில் போகும் எழுபத்தி மூன்றாம் பஸ் வந்து கொண்டிருந்தது.
ரொட்டனாமிலிருந்து விக்டோரியாவுக்குப் போகும் பஸ் அது. சண்டையால் பிரயாணம் தடைப்படும்; சில பிரயாணிகள் இறங்கினார்கள். விக்டோரியா ஸ்டேசனுக் குப் போக வேண்டியவர்கள் அவசரமாக இறங்கிப் ஓடி போய் எழுபத்தி மூன்றாம் நம்பர் பஸ் நின்றதும் ஏறிக் கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நம்பர் பஸ் வண்டி வந்து கொண்டிருந்தது.
முப்பத்தி எட்டாம் பஸ் போகும் கொஞ்ச தூரத்திற்கு பத்தொன்பதாம் பஸ்சும் போகும். அந்தத் தூரத்திற்குப் போவோர்கள் இறங்கி ஓடினார்கள்.

Page 65
124 x- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
சண்டை போட்ட பஸ்ஸில் சண்டை போடுபவர்களும்
வேறு ஒரு சிலரும் மிஞ்சியிருந்தார்கள்.
“இந்தப் பாரமான பெட்டியுடன் பஸ்ஸில் பிரயாணம் செய்யக் கூடாது என்று சட்டம் போட முடியாதா” கிழவர் இன்னும் சமர் செய்யும் தோரணையை விடவில்லை.
“சட்டம் வருவதற்குள் நாங்கள் செத்துப் போவம், நீங்கள் ஒருத்தர் இடம் மாத்தினால் என்ன?” ஜெனிபர் அன்புடன் கேட்டாள். கறுப்பன் அவளை ஆறுதலுடன் பார்த்தான். “ஆமாம் உங்கள் தரவழிப் பெண்கள் எப்போதும் கறுப்பனை ஆதரித்துத்தானே பேசுவீர்கள்” கிழவி தனக்குக் கொஞ்ச நேரத்துக்குமுன் உதவி செய்த ஜெனிபரைப் பார்த்து அருவருப்புடன் கூறினாள்.
"மேல்த் தட்டில் பஸ்ஸில் நல்ல இடமிருக்கிறது. நீங்கள் போகலாம்தானே” ஜெனிபர் கிழவரைக் கேட்டாள்.
“நான் கிழவன்- ஏன் படிகளில் ஏறித் தொலைக்க வேணும். நான் பிறந்த நாட்டில் எனக்குப் பிடித்த பஸ்சில் இருக்கவும் வழியில்லயா”
கிழவர் பரிதாபமாகக் கேட்டார். வாத்தியப் பெட்டிக் காரன் அதிகம் பேசவில்லை.
"ஐயோ எனக்கு நேரமாகிறது” காட்போட் பெட்டிக் காரன் சத்தம் போட்டான்.
“ஏன் உனது செல்லப் பிராணிக்குப் பசி வரப் போகிறதா” பக்கத்திலிருந்த பெண் இவனைச் சீண்டினான்.
அவன் முறைத்துப் பார்த்தான்.
“ஆமாம். எனது செல்லப் பிராணிக்குப் பசி வந்தால் உங்களில் யாரையாவது விழுக்கப் பார்த்தாலும் ஆச்சரிய மில்லை”
அவன் ஆத்திரத்துடன் சொன்னான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 125
“என்ன மிரட்டுகிறாய். அப்படி என்னதான் உன் பெட்டியிலிருக்கிறது” அவள் பக்கத்திலிருந்தவனை வெறித் துப் பார்த்து கேட்டாள்.
"பாம்பு மலைப் பாம்புக் குட்டி. ஐந்தடிக் குட்டி இந்தப் பெட்டியில் சுருண்டு படுத்திருக்கிறது.” அவன் அவசர மில்லாமல் விளங்கப்படுத்தினான்.
"ஐயோ பாம்பு” அவள் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்ததோட மற்றவர்களும் அவசரப்பட்டார்கள்.
“எங்கே பாம்பு” பல குரல்கள் ஒரே நேரத்தில் கேட்டன.
இங்கிலாந்தில் பாம்புகள் குறைவு. எங்கேயோ நிறையப் புற்கள் இருக்கும் இடத்தில் கறுப்பு 'அடர்' என்ற பாம்பு எப்போதாவது இருந்து மற்றவர்களுக்குக் காட்சி கொடுக் கும். பட்டணத்தில் மனிதர்கள் சிலர் பாம்பை வீட்டில் வளர்ப்பார்கள். இவன் என்ன வென்றால்.
“எங்கே பாம்பு” -ஜெனிபர் வெடித்தாள்.
“எனது காட்போட் பெட்டியில். ஏன் செல்லப் பிராணி களைப் பஸ்சில் கொண்டு போகக்கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கிறதா’ அவன் திமிராகக் கேட்டான். லண்ட னில் மிருக பாதுகாப்பு சட்டம் மிகவும் முக்கியமானது. அவன் சொன்னதும் பஸ் காலியாகி விட்டது. வாத்தியப் பெட்டியில் இன்னொருதரம் இடிபட்டுக் கொண்டு கிழவர் விரைவாக இறங்கினார்.
இப்போது சத்தம் போடவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்ற அவசரம். மலைப்பாம்புக் குட்டியிட மிருந்து தப்பினால் போதுமென்று விழுந்தடித்துக் கொண்டு இறங்கினார்கள்.
கிழவி தள்ளாடியபடி இறங்கியது. இரட்டைப் பிள்ளை கள் அவசரமாக மேல் தட்டில் ஏற்றப்பட்டனர்.

Page 66
126 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
மீன்கார ஜோடி எப்போதோ மறைந்து விட்டார்கள். பஸ் காலியானபோது அவர்களின் பையிலிருந்து விழுந்த மீன் ஒன்று பாம்புக்காரனின் காலடியில் கிடப்பது தெரிந்தது.
பாரமான வாத்தியப் பெட்டியுடன் கறுப்பன் அதே வழியில் வந்து கொண்டிருந்த முப்பத்தி எட்டாம் நம்பர் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். * ,
பாம்புக்காரனைத் தவிர யாரும் கீழ்த் தட்டு பஸ்ஸில் இருக்கவில்லை.
"நீ இறங்க மாட்டாயா" ஜெனிபர் பயத்துடன் கேட் டாள். அவளுக்கு பாம்பு என்றால் மிகப் பயம். அதுவும் அவன் வைத்திருப்பது மலைப்பாம்பு.
"இல்லை. ஏனென்றால் எனது இடம் இன்னும் இரண்டு ஸ்டாப் தள்ளித்தான் இருக்கிறது”
சீக்கிய ட்ரைவர் ஜெனிபரைப் பார்த்துச் சிரித்து விட்டு பஸ்சை ஸ்டாட் பண்ணினான். "உனது சனங்கள் வித்தி யாசமானவர்கள். பாம்பைக் கொஞ்சுவார்கள். மனிதர் களை உதைப்பார்கள்.”
‘என்ன வாழ்க்கை ? எத்தனையைச் சுமக்க வேண்டி யிருக்கிறது?’ அவளைத் திட்டும் கணவன், அவளைத் திட்டும் பிரயாணிகள், போதாத குறைக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்யும் மலைப் பாம்பு?
ஜெனிபர் பெருமூச்சுவிட்டாள். பஸ் லண்டனின் நடுமையத்தை நோக்கி ஓடியது.
கணையாழி, ஆகஸ்ட் 1999.

9. வடக்கத்தி மாப்பிள்ளை
லட்சுமியால் அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்குவது என்று தெரியவில்லை.
தான் இந்த விஷயத்தைச் சொன்னதும் தன்னைத் தலையிற் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள் என்று எத்தனை ஆசையுடன் காத்திருந்தாள் லட்சுமி.
எரிச்சலுடன் லட்சுமி நடந்தாள். இரவு வீட்டில் நடந்த கூத்தால் அவள் மனம் மிகவும் கலங்கி விட்டிருந்தது.
அண்டர் கிரவுண்ட் ஸ்ரேசன் வாயைப் பிளந்து கொண்டு அவளை வரவேற்றது. கீழே போகும் எஸ்கலேட் டர் வேலை செய்யவில்லை. தடதடவென்று நடந்தாள்.
முன்னால் ஒரு முதிய கறுப்புப் பெண்மணி காலில் ஏதோ சுகமில்லை போலும் மிகவும் மெல்ல மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு ஆங்கில இளைஞன் அந்தக் கிளவியை அன்புடன் கைபிடித்து உதவி செய்து கூட்டிக் கொண்டு போனான்.
இன பேதமற்ற ஆதரவான மனிதர்கள். கறுப்பியும் வெள்ளையனும் எத்தனை அன்புடன் ஒருத்தரில் ஒருத்தர் ஈடுபாடாய் போகிறார்கள்? அவள் நினைவில் நெருஞ்சி முள் வைத்தது.
இருபத்தினட்டு வயதான ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இன்னும் தன் குடும்பத்தில் ஒரு குழந்தை போல நடத்தப்படுவதை அவனால் நம்ப முடியவில்லை.
"உனக்கென்னம்மா உலகத்தைப் பற்றித் தெரியும்” தாத்தா பரிவுடன் கேட்டார். அவருக்கு எண்பது வயதா

Page 67
128 x- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
கிறது. அவருக்கும் இவனுக்கும் மூன்று தலைமுறை இடை வெளியிருக்கிறது.
"நீ அனுபவமில்லாதவன் அறிவுடன் சில விஷயங்களை யோசிக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு உன் எதிர்காலத் தையும் பாழாக்கிக் கொள்ளாதே" பாட்டி ஆதரவுடன் இவள் தலையைத் தடவி விட்டாள்.
“கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.” மாமா ஏதோ நிறையச் சொல்ல வந்து இவளின் எரிக்கும் பார்வை யைச் சந்தித்ததும் பேச்சைத் தொடரவில்லை.
லட்சுமி அவசரமாக ரெயினில் ஏறிக் கொண்டாள். இவளைத் தொடர்ந்து வந்து அவசரமாக ரெயினில் ஏறியவன் இவளில் மோதிக் கொண்டதற்கு மிகவும் மன்” னிப்பும் கேட்டுக் கொண்டான்.
யார் என்னில் முட்டியவன் என்று நிமிர்ந்து பார்த்தவள் இவளைப் பார்த்தவனின் முகத்தைப் பார்த்ததும் நெஞ்சில் இன்னொருதரம் நெருஞ்சி முள் வைத்துக் கொண்டது.
நாராயணனின் அழகிய விழிகள் அவள் முகத்தில் மேய்வதை ஆண்டாண்டுகளாக ரசிக்கலாம். இவனும் ஒரு இந்தியன், இவனின் பெயரும் நாராயணனாக இருக்கலாம். ராஜேந்திரனாக இருக்கலாம் அல்லது அவனின் தகப்பன் சுந்தரலிங்கமாக இருக்கலாம்.
ஆபிசுக்குப் போகும் வழியிலுள்ள இந்தியனிடம் (அல்லது பாகிஸ்தானியனாக இருக்கலாம் அப்படி இருக் காது, கடைக்காரனின் மனைவி பொட்டு வைத்திருந்தாள்) கார்டியன் பேப்பர் வாங்கிக் கொண்டாள்.
“என்ன முகம் ஒரு மாதிரியிருக்கிறது” திருமதி கடைக்காரி கேட்டாள், லட்சுமி எப்போதாவது இருந்து இரண்டொரு வார்த்தை அந்தக் கடைக்காரப் பெண்ணிடம் பேசியிருக்கிறாள்.
“நல்ல மழையில்லையா” அல்லது "என்ன குளிர்” என்பது போன்ற இரட்டைச் சொல் பரிமாறல்கள் தான். இன்று திருமதி கடைக்காரி நான்கு சொற்கள் பேசினாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் X 129
"நீங்கள் இந்தியரா” லட்சுமி சட்டென்று கேட்டாள். "ஆமாம் அதற்கென்ன திடீரென்று” என்பது போல் திருமதியின் முகம் குழப்பத்தைக் காட்டியது.
லட்சுமி பேப்பருக்குப் பணம் கொடுத்த போது ஏன் தான் தேவையில்லாத கேள்வி கேட்டேன் என்பது போல் கடிந்து கொண்டாள். தர்ம சங்கடத்துடன் கடையைவிட்டு வெளியேறினாள். நாராயணன் இன்று போன் பண்ணு வான்.
"உனது தாய் தகப்பனுக்கு எஸ்தர் விஷயம் பற்றிச் சொன்னாயா” என்று கேட்பான்.
கேள்வி மனதில் வந்ததும் அவசரமாகக் கைப் பையைத் திறந்து ‘வாக்மேனை'க் காதில் பூட்டிக் கொண்டாள். ஜோன் லெனனின் இமாஜின்’ என்ற பாட்டு மூலைக்குள் துளாவியது. ரேப்பை ஆப் பண்ணிவிட்டு விறு விறு என்று நடந்தாள்.
றிஸப்ஸனிலிருந்த மிஸஸ் பீட்டர்யன் குட்மோர்னிங் சொன்னாள். கதவைத் திறந்த போது இவளுடன் வேலை செய்யும் மிஸ்டர் மூர்த்தி இலங்கையைச் சேர்ந்தவர் குட்மோர்னிங் சொன்னார்.
இருவரும் இரு வேறு டிப்பார்ட்மெண்டுகளில் வேலை செய்வதால் அடிக்கடி காண்பதில்லை. மிஸ்டர் மூர்த்திக்கு இவளின் தகப்பனின் வயதிருக்கலாம். அவர் எக்கவுண்ட் டிப்பார்ட்மென்டில் வேலை செய்கிறார். இவள் ஐ.டி. டிப்பார்ட்மென்டில் வேலை செய்கிறாள்.
ஆபிஸ் கிட்டத்தட்ட வெறுமையாய் கிடந்தது. இப் போது தான் ஒன்பது மணி. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபீஸ் திறந்துவிடும்.
ஸ்ராவ் ரூமுக்குப் போய்க் காப்பி போடும் போது பின்னால் வருவது யார் என்று திரும்பிப் பார்க்காமலே புரிந்து கொண்டார். உஷாபோடும் பேர்வியும் லட்சு மிக்கு பழக்கம். உஷா வந்து கொண்டிருந்தாள். உஷா இந்தியத்தாய் தகப்பனுக்கு லண்டனின் பிறந்தவள்.
இ.கா.-9

Page 68
130 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
லட்சுமி மெளனமாயிருப்பது எல்லோருக்கும் ஆச்சரிய மான விஷயம். லட்சுமி கலகலப்பானவள். மனம் திறந்து பேசுவாள். நிறையச் சினேகித சினேகிதியர் இருக்கிறார்கள்.
“என்ன முகம் நீண்டுபோயிருந்தது” உஷா தனது அழ கிய விரல்களால் இவளின் முகத்தைத் தடவி விட்டாள். உஷா மிகமிக நேர்மையானவள். நேர்மை மிகவும் முக்கிய மான விஷயம்' என்று சொல்வாள். உஷாவுக்கும் லட்சு மிக்கும் ஒரே வயது. உஷா திருமணமாகி மூன்று வருடமா கிறது. இப்போது கணவனைப் பிரிந்திருக்கிறார். தாய் தகப்பனின் சொற்படி இந்திய மாம்பிள்ளையைக் கட்டிக் கொண்டாள்.
ஆங்கில நாட்டில் பிறந்து வளர்ந்த, தாய் தகப்பனுக் காகத் தாய்நாடு சென்று தங்கள் வாழ்க்கையை அமைப்ப வரில் உஷா போல் எத்தனையோ பெண்கள் லண்டனில் வாழ்கிறார்கள்.
"கல்யாணம் பேசுகிறார்களா" லட்சுமி காப்பி டம்ளரை எடுத்தபோது உஷா குறும்பாகக் கேட்டாள்.
லட்சுமி உஷாவை "உனக்கு எப்படித் தெரியும்” என்பது போல் நிமிந்து பார்த்தாள். இருவர் கண்களும் ஒரு கணம் ஒருத்தரை ஒருத்தர் அளவிட்டன.
“மிஸ்டர் நாராயணனை உனது அம்மாவுக்குப் பிடிக்க்லியா” உஷா நேர்மையாக கேட்டாள்.
"குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கல” லட்சுமியின் கண் களில் சட்டென்று நீர் கனத்தது.
உஷாவிடம் லட்சுமி தன் காதலன் நாராயணன் பற்றி அதிகம் பேச மாட்டாள். உஷாவின் கல்யாணம் உடைந்து கொண்டிருப்பதற்கு இந்திய ஆண்களின் அடக்குமுறைத் தனம் தான் காரணம் என்று உஷா செர்ல்லியிருக்கிறாள். உஷா லட்சுமியை ஏறிட்டுப் பார்த்தாள். இருவருக்கும் ஒரே வயது. இருவரும் எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள். இந்து

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 131
சமுதாயத்திலிருந்து வந்தவர்கள். உஷா சட்டென்று லட்சுமி யைக் கட்டியணைத்துக் கொண்டாள். "ஐ விஷ்யு ஹப்பி” லட்சுமிக்குப் பேச்சுவரவில்லை.
உஷாவுக்கு நாராயணனைப்பற்றி தெரியும். லட்சுமியின் காதல் விவகாரத்தில் உஷா மிகவும் கவனமாக இருக்கச் சொன்னாள்.
“நீ கலியாணம் செய்த இந்தியன் சரியில்லாவிட்டால் எல்லா இந்தியர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறாய்” லட்சுமி பதட்டத்துடன் கேட்டாள்.
“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்ப தில்லையா” உஷா பெருமூச்சுவிட்டாள். இருபத்தி எட்டு வயதில் வாழாவெட்டியான துயர் முகத்தில் தெரிந்தது.
“எங்கள் தாய் தகப்பன்மார் கற்பனைகளில் வாழ்கிறார் கள். இந்துக் கலாச்சாரம் உலகத்திலேயே மிகச் சிறந்த கலாச்சாரம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள் கிறார்கள்” வாழ்க்கையின் ஏமாற்றம் வார்த்தைகளில் தெரிந்தது.
காப்பியைக் கையில் எடுத்தபடி உஷா நடந்தாள். அவள் அழகை ரசிக்க வேண்டிய வயதில் அழுகிறாள். ஆபீஸில் இன்னும் சந்தடி கூடவில்லை.
“எங்கள் இந்துக் கலாச்சரத்தின் கோரம் தாங்காமல் தானே, சாதி மத பேதத்தின் கொடூரம் தாங்காமல் தானே புத்த மதமும், ஜைனமதமும், சீக்கியமதமும் தோன்றின. இன்று உலகத்திலேயே கூடிய மக்களைக் கொண்ட சைனாவிலும் ஜப்பானிலும் ஏன் உலகத்திலேயே பல பாகங்களிலுள்ள இடங்களிலும் பெளத்தமதம் வளர்கிறது. என்றால் அந்த வளர்ச்சிக்கு காரணம் இந்து மதத்தில் உள்ள சாதிக் கொடுமை, பெண்ணடிமைத்தனம், உயர்ந்த வன், தாழ்ந்தவன் என்பவைதான் காரணமென்று தெரிய வில்லையா”

Page 69
132 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
உஷா இந்துக் கலாச்சாரத்துடன் வளர்க்கப்பட்டவள். மேற்கு லண்டனிலுள்ள இந்தியத் தாய் தகப்பனின் மகள். இப்படி எத்தனையோ கேள்விகள் கேட்டாள்.
கல்யாணத்தில் எத்தனையோ கற்பனைகளை வளர்த்துக் கொண்டவள், கல்யாணம் முடித்து இரண்டாம் மாதம் வீங்கிய கன்னத்துடன் ஆபீசுக்கு வந்தாள். லட்சுமி திடுக் கிட்டு விட்டாள்.
"இதெல்லாம் கல்யாணத்தில் சர்வ சாதாரணம் என்று அம்மா சொல்கிறாள்” முகத்தில் சிவக்க வேண்டிய உஷாவின் பட்டுக் கன்னங்கள் இரண்டுமாதக் கல்யாணத் துடன் உரிமையானவனால் கறுப்பாக்கியது தெரிந்தது.
“நாராயணன் அப்படியிருக்க மாட்டான்’ லட்சுமி அவசரப்பட்டுச் சொன்னாள்.
நாராயணனை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இன்போமேஷன் டெக்னோலோஜி ட்ரெயினிங் ஒன்றில் சந்தித்தாள்.
மேற்படிப்புக்காக லண்டன் வந்திருப்பதாகச் சொன் னான். அவனது அடக்கமான குணம், அழகான தோற்றம் பெண்களை கவுரமாக நடத்தும் தன்மை என்பன அவனுள் கலந்து விட்டன.
ட்ரெயினிங் முடியவிட்டுத் தங்கள் விசிட்டிங் கார்ட் டைப் பரிமாறிக் கொண்டபோது மேலதிமாக ஏதும் தொடர்பு வரும் என்று அவள் நினைக்கவில்லை.
லண்டன் சவுத் பாங்கில் நாஷனல் பிலிம் தியேட்டரில் இந்தியப் படங்கள் நடந்த போது லட்சுமியின் மாமாவுடன் "மிராள் சென்’ என்ற டைரக்டரின் படம் பார்க்கப் போனாள்.
நாராயணன் ஒரு ஆங்கிலேயச் சினேகிதனுடன் படத் திற்கு வந்திருந்தான். ஆசியர்கள் மூன்றாம் தரக் குப்பைப் படத்துடன் மாரடிப்பவர்கள். நாராயணன் வித்தியாச மானவன். இருவரும் ஹலோ சொல்லிக் கொண்டார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் «Х• 133
அவன் இவள் மாமா வேறெங்கேயோ நகர்ந்ததும் “உங்கள் பார்ட்னர்.” என்று அவன் மெல்லத் தொடங்கினான். பார்வையில் ஒரு ஏமாற்றம். அவள் அவசரமாக "ஐய்யய்யோ அது எனது மாமா அம்மாவின் கடைசித் தம்பி எங்கள் இருவருக்கும் முற்போக்கான படங்கள் பிடிக் கும்” அவசர அவசரமாகச் சொன்னாள். அவன் முகத்தில் திடீர் மலர்ச்சி,
“மன்னிக்கவும்.” நாராயணனின் முகம் சிவந்தது. கணகள் இவளை மேய்ந்தன.
“உங்களைத் தவறாக நினைத்ததற்கு மன்னிக்கவும்” அடுத்தநாள் அவனாகப் போன் பண்ணினான். அவர் சிரித்தாள். இன்னொருதரம் சவுத் பாங்க்கில் சந்திப்போம்” அவள் ஏதோ பேச்சுக்குச் சொன்னாள்.
"ஏன் ஒரேயிடத்தில் சந்திக்க வேண்டும்." அவன் தர்ம சங்கடப்படுவது அவனுக்குத் தெரிந்தது. ஒரு சில வினாடிகள் மெளனமானாள்.
"அல்பேர்ட் ஹோலில் இந்தியன் புரோக்கிராம் ஒன்றி ருக்கிறது.” அவன் குரலில் தயக்கம் ‘என்னுடன் நீ வந்தால் நான் சந்தோஷப்படுவேன்' என்று அவன் ஆயிரம் தடவை: சொல்வது கேட்டது.
“கென்சிங்டன் ஸ்ரேசனில் சந்திக்கிறேன்” அவள் அவன் தயக்கத்தையும் போக்கினாள். லண்டனில் பிறந்து வளர்ந்தவள்.
அப்போது லண்டனில் வசந்த காலம். கென்சிங்டன் ஸ்ரேசனில் அவள் இறங்கிய போது அவன் குட்டி போட்ட பூனை போல் அந்தரத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.
இவள் ட்ரெயினால் இறங்கியதை அவன் காணவில்லை. தூரத்தில் நின்று கொண்டு அவனையுற்று நோக்கினாள். ஆறடி உயரமிருக்கலாம். சாதாரணமாகவே இந்தியர்கள்.

Page 70
134 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஐந்தடி ஆறங்குலத்திலிருந்து ஐந்தடி பத்தங்குலமாகத்தானி ருப்பார்கள் என்று நினைத்திருந்தாள். அவனின் கம்பீரத் தோற்றம் அவளைக் கவர்ந்தது.
"நான் ஒரு பிராமணன். ஆனால் நாத்திகவாதி” அவன் அவர்கள் ட்ரெயினிங் எடுத்த நாளில் சொன்ன போது அவள் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. லண்டனில் பிறந்து வளர்ந்த லட்சுமிக்கு இந்தச் சாதி "சாத்திரங்கள் தெரியாது.
"நாராயணன் ஐயர்! இந்தியாவை இப்படியாக்கியதற்கு இந்த ஐயர்கள் தான் காரணம்” உஷா ஒரு நாள் வெடித்தாள். ஆரியர் வருகையும் இந்தியாவையும் பற்றி லட்சுமி ஏன் என்று கேட்டது போல் லட்சுமி விழித்தாள். "இவர்கள் வந்து இந்திய பூர்வீக குடிகளைத் தங்கள் பொய்கள் மூலம் அடிமைபடுத்தி நிறத்தின் அடிப்படையில் சாதியைக் கொண்டு வந்தார்கள்.
ஆண்கள் கடவுளுக்குச் சமம் என்றார்கள். பெண்கள் ஆண்களின் சுய தேவைகளுக்காகப் படைக்கப்பட்டவர்கள் என்று மனு போன்றவர்கள் எழுதித் தொலைத்தார்கள்” அடிபட்ட தன் கன்னத்தைத் தடவியபடி கூறினாள் உஷா. "நாராயணன் நாத்தீகன்” லட்சுமி தனக்குத் தெரிந்த விஷயத்தைச் சொன்னாள். உஷா இவளைப் பரிதாபமாகப் பார்த்தாள். "இந்தியக் கோயில் எதற்கும் போயிருக்கிறாயா” கோயில்களா? கல்யாணத்துக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? உஷா லட்சுமியின் கண்களை உற்றுப் பார்த்த படி கேட்டாள். காதல்கள் இருவர் மனத்தில் தோன்றுகிறது. கடவுள்கள் ஏன் தலையிடவேண்டும்? இந்திய மண்ணை மிதிக்காதவள் லட்சுமி. இல்லை என்று தலையாட்டினாள். “கோயில்களிலுள்ள கடவுள் சிலைகளைக் காட்டி இந் தப் பிராமணர்கள் காசு கேட்டுச் செய்யும் கொடுமையைப் பார்த்தால் இந்தியாவில் இன்னொரு சமயம் எப்பவும் உருவாகலாம். என்ற யோசனைதான் வரும்” உஷா தான்

«Ο
Х•
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 135
இந்தியக் கோவில்களில் பிராமணர்களால் பட்ட துன்பத் தைச் சொன்னாள், லட்சுமி குழம்பி விட்டாள். “இந்தியா வில் தெருக்களில் பிச்சைக்காரனும், கோயில்களில் பணத் திற்காகப் பிராமணனும் துரத்துவார்கள்”. அன்றெல்லாம் வேலை ஒடவில்லை. உஷா பிராமணத்துவம் பற்றி பெரிய பிரசங்கம் செய்து முடிந்தாள். ஸ்ராவ் கன்டீனுக்குப் போனபோது மிஸ்டர் மூர்த்தி பேப்பர் படித்துக் கொண் டிருந்தார்.
இவளைக் கண்டதும் "இந்தியாவில் நடக்கும் கஷ்டத் தைப் பார்த்தால் ஜனநாயகம் தற்கொலை செய்யும்” என்றார்.
இந்தியாவில் வாஜ்பாஜி அரசாங்கம் விழுந்த பின் நடக்கும் அரசியல் நாடகத்தைத்தான் அவர் குறிப்பிடு கிறார் என்று தெரியும்.
“இந்தியாவில் கிரிமினல்களும், கள்ளக்கடத்தற்காரர் களும், பாராளுமன்றத்தை ஆட்டிப் படைக்கிறார்கள்.”
மூர்த்தி தொடர்ந்தார். அவள் தர்ம சங்கடத்துடன் தலையசைத்து விட்டு வெளியேறினாள்.
தன் இடத்திற்கு வந்து உட்கார்ந்ததும் நையீரிய நாட் டைச் சேர்ந்த நிகோஷி என்ற பெண் இவளை பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள்.
“உன் துணைவர் போன் பண்ணினார். ஸ்ராவ் கன்டீனுக்குப் போயிருக்கிறாய் என்று சொன்னேன்”
லட்சுமி நன்றியுடன் சிரித்தாள். நாராயணனுக்கு என்ன மறுமொழி சொல்வது? அவன் இன்னொருதரம் போன் பண்ணுவான். இனிய மறுமொழியை எதிர்பார்ப்பான். இரவு அம்மா அழுத அழுகையைச் சொல்லாத அப்பா உறுமிக் கொட்டிய வார்த்தைகளைச் சொல்வதா? மாமா சொல்லிய அறிவுரைகளைச் சொல்வதா? பாட்டனாரின் அறிவுரைகளைச் சொல்வதா? பாட்டியின் கெஞ்சலைச் சொல்வதா?

Page 71
136 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
நிகோஷி நையீரிய நாட்டைச் சேர்ந்தவள். அழகிய கறுப்பு பெண். அவள் கண்களைப் பார்த்தால் கவிதை பிறக்கும். அலைபாயும் அந்தக் கண்களில் டிப்பார்மெண்ட் மனேஜர் டேவிட் ஹமில்டன் தடுக்கி விழுந்தது ஆச்சரிய
மில்லை.
நிகோஷியும் டேவிட்டும் நிறத்தில், நிலத்தில் வேறு துருவமானவர்கள். கல்யாணமாகி இரண்டு வருஷமாகிறது. இப்போது நான்கு மாதம் கற்பவதி, டேவிட் அவளை இப்போதே பூவொருதட்டும் பொன்னொரு தட்டுமாகச் செல்லம் பண்ணுகிறார். இரண்டு கலாச்சாரத்தின் ஒற் றுமை ஒரே கலாச்சாரத்தில் கல்யாணம் செய்த உஷாவுக் கில்லையே.
டெலிபோன் மணியடித்தது.
அவள் மனம் படபடத்தது.
நாராயணனுக்கு என்ன பதில் சொல்வது?
அவன் குரலைக் கேட்டால் அழுதுவிடுவாள் போலிருந் 竺矶
"மகளே எங்கள் சாதியில் குல கோத்திரத்தில் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்” தகப்பனின் கெஞ்சல் எரிச் சல் வந்தது. அப்பா யாழ்ப்பாணத்து வேளாள சாதியைத் தவிர வேறெதையும் மதிக்காதவர். அவளின் மாமா எப் போதும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறுகிய மனப் பான்மையைக் கண்டிப்பவன்.
தகப்பனிடம் நாராயணனைச் சொன்னபோது அவர் கள் சந்தோசப்படுவார்கள். லண்டனில் பிறந்து வளர்ந்த படித்த பெண் தங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாப்பிள்ளை யைத் தேர்ந்தெடுப்பாள் என்ற அவர்களின் ஆசைக்கு இவள் மண் அள்ளிப் போட்டுவிட்டதாகத் தூற்றுகிறார் கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 137
"வடக்கத்தியானா" அப்பா அலறினார். வடக்கத்தியான் என்ற வார்த்தையே லட்சுமியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்துக் கலாச்சாரத்தோடு வளர்ந்த ஒருத்தனை, அதுவும் ஒரு பிராமணனைப் பார்த்ததில் அவர்களுக்குச் சந்தோஷம் வரும் என்று எவ்வளவு தூரம் நம்பியிருந்தாள். கடந்த இரவு எல்லோரும் வீட்டிலிருந்த போது இந்த விஷயத்தைச் சொன்னாள்.
அம்மாவும் பாட்டியும் பாயாசத்திற்கு இனிப்புக் கூடி விட்டது என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பாவும் மாமாவும் விஸ்கி வெறியில் தமிழ் நாட்டில் ஜெயலலிதா செய்யும் கலாட்டாவைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பின் பேச்சு சீரியசாகப் போனது.
ஆடிட்டருக்கு ஜெயலலிதாவும் அவரின் உடன்பிறவாச் சகோதரி (!!) சசிகலாவும் கொடுத்த ஹைஹில்ஸ் பூசையை மாமா ஆத்திரத்துடன் சொன்னார். “தமிழனுக்கு மான மில்லாமல் போய்விட்டது.” சோகத்துடன் பெருமூச்சு sú7u LITft.
இந்த நேரம் பார்த்து அவள் "தாத்தா, மாமா. அப்பா.” என்று தொடங்கினாள்.
இவள் குரலில் தொனித்த சீரியஸ்னெஸ் அவர்களின் சம்பாஷணையைத் தடைப்படுத்தியது.
“நானும் சிலவேளை மட்ராசில் போய் செற்றில் பண்ணலாமென்றிருக்கிறேன்” அவர்கள் இவளைப் புரியா மல் அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லாமல் அமைதி யாக இருந்தார்கள்.
பாட்டியார் சத்தியசாயி பாபா பக்தை. புட்டப் பெட் டிக்கு அடிக்கடி போவாள். பேத்தியாரையும் தனது பக்திப் பாதையில் திருப்ப அவள் எத்தனையோ காலமாய்த்தவம் செய்கிறாள்.

Page 72
138 X இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
மாமா நேரடியாகக் கேட்டார் “மெட்ராஸ் பெடியனில காதலா’
அவளின் வேலை மிகவும் இலகுவாகி விட்டது. தலையாட்டினாள். ஆமாம் என்பதைச் சொல்ல அப்பா நரசிம்ம ரூபமெடுத்தார்.
"வடக்கத்தியாளு” அப்பா அலறினார். “இந்தியரைப் பற்றி உனக்குத் தெரியுமா” என்று அவர் தொடர்ந்தார். “அவர்கள் பெண்களைச் சரியாக நடத்த மாட்டார்கள்” தாத்தா அவசரப்பட்டார்.
தாத்தா ஒரு நாத்திகர். பாட்டி பெரிய பக்தை. அவர் அவள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஐம்பது வருட சுதந்திர சீவியம். அவர் லைப்ரரிக்குப் போக பாட்டி கோவி லுக்குப் போகிறார். “நாராயணன்." அவள் தயக்கத்துடன் தொடங்கினார்.
“நாராயணனோ நரசிம்மனோ அதெல்லாம் உனக்குச் சரி வராது" அப்பாவின் குரல் கோபத்திலும் வெறியிலும் தள்ளாடியது.
“அவனுக்கு இந்தியாவில் இன்னொரு பெண்சாதி இருக்கும்” அப்பா தான் ஏதோ போய்ப் பார்த்த மாதிரியான தொனியில் சொன்னார்.
அம்மாவின் முகத்தில் மழைக்கு இருண்ட மேகத்தின் இருண்ட தோற்றம். தாயின் பேதைமனம் மகளின் நல்வாழ்க்கைக்குப் பிரார்த்தித்தது. மகளுக்குக் கொடுத்த சுதந்திரத்தை இப்படியா துர்ப்பிரயோகம் செய்கிறாள்.
அவர்களின் சொந்தக்காரப் பெண் ஒருத்தி வெள்ளை யனைச் செய்தாள். இரண்டு வருடத்தில் விவாகரத்து நடந்தது. "மகளே ஒருநாளும் வெள்ளையனைப் பார்க், காதே" இவளிடம் கெஞ்சினார்கள். அது நடந்து நான்கு வருடங்களாகி விட்டன.
ஒன்றை விட்ட மாமா ஒருத்தர் கலப்பு சாதியில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட போது யாரும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 139
கல்யாணத்திற்குப் போகக் கூடாது என்று அப்பா சத்தம் போட்டார். அப்பாவுக்குத் தெரியாமல் லட்சுமியும் அவளின் தம்பி பாரதியும் சென்றார்கள்.
பாரதி அமெரிக்காவுக்குப் போய்விட்டான். ஸ்பானி யர்ட்ஸ் பெண்ணை விரும்புகிறான் போலும். கடைசிக் கடிதத்தில் தான் ஸ்பானிஷ் படிப்பதைப் பற்றியெழுதி யிருந்தான். அது பற்றித் தாய் தகப்பனுக்குத் தெரியாது.
டெலிபோன் மணியடித்தது.
நாராயணனா?
மாமா போன் பண்ணினார்.
அவளிடம் மிக நெருக்ககமாகப் பழகும் ஒரு பிறவி. ‘எப்படியிருக்கிறாய் அன்புடன் கேட்டார் மாமா. அவளுக்கு அழுகை வந்தது. "புரிகிறது உனது துக்கம்" மாமா அனுதாபத்துடன் சொன்னார்.
“ஐ லவ் நாராயணன்" அவள் குழந்தை போலத் குமுறி னாள். இருபத்தி எட்டு வயதுப் பெண்ணை முப்பது வயது பிரமச்சாரி மாமாவிடம் ஆதரவு தேடியது.
“நீ லண்டனில் பிறந்து வளர்ந்தவள். உலகத்தை நேர்மையாகப் பார்க்கப் பழகியவள்”
மாமா சொல்லிக் கொண்டிருந்தார். என்ன சொல்ல நினைக்கிறார் மாமா?
“லண்டனில் பிறந்து இந்தியாவுக்குப் போய்த் திருமணம் செய்யும் இளம் தம்பதிகள் பலரின் கதை விவாகரத்தில் முடிகிறது என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன’ மாமா யதார்த்தத்தை விளக்க விரும்பினார்.
“நாராயணன் நல்லவர்”
“நீ கிடைக்கும் வரை அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்”

Page 73
140 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"மாமா நீங்களுமா என் செலக்சனைப் பிழை என்று சொல்கிறீர்கள்” அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்.
“லட்சுமி, நான் உனது தகப்பன் போல குறுகிய மனப் பான்மை கொண்டவனல்ல. யாழ்ப்பாணத்தார், தங்களை விட மற்றவர்களை, மட்டக்களப்பாரை, மலையகத்தாரை, மன்னார், வவுனியா, இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களைத் தங்களைவிடத் தாழ்த்தித்தான் பார்க்கிறார்கள். உன் விஷயத்தில் அதுவும் ஒரு யாழ்ப்பாணத்தைத் தேர்ந்தெடுக் காத ஆத்திரத்தில் உன்னைத் திட்டுகிறார்கள். ஆனால் லண்டனில் பிறந்து வளர்ந்த உனக்கும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நாராயணனுக்கும் எத்தனையோ கருத்து வேறு பாடுகள் காலப்போக்கில் வரலாம்”
மாமாவுடன் தொடர்ந்து பேச அவள் விரும்பவில்லை. உஷாவின் வாழ்க்கை அவளுக்குத் தெரியும், “தனது சேவகிபோலத்தான் என்னை நடத்தினார். இருவரும் வெளியில் போய் வேலை செய்கிறோம் என்று உணர்ச்சி யில்லாமல் வீட்டு வேலைகள் முழுவதையுமே என் தலை யிற் கட்டிவிட்டார். உதவி செய்யக் கேட்டால் வாயைப் பொத்தடி” என்று கை வைத்து விட்டான். உஷாவின் அழுகை ஞாபகம் வந்தது. நாராயணனின் கேள்விக்கு எப்படி மறுமொழி சொல்வது என்று தெரியவில்லை.
“உனது தாய் தகப்பனுக்கு எங்கள் விஷயம் சொன் னாயா’ அவன் ஆர்வத்துடன் கேட்டான். குரலில் நம்பிக்கை. அவளுக்கு அழுகை வந்தது. தாய் தகப்பனுக்காக இவனின் அன்பை, காதலை எப்படி மறக்க முடியும்?
“இல்லை” மனதறிந்த பொய் சொன்னாள். உண்மை சொன்னால் அவளுக்குத் தாங்க முடியாது.
“சீக்கிரமாகப் பேசு, நான் எனது தாய் தகப்பனுடன் இரவைக்குப் பேசப் போகிறேன்” அவன் நம்பிக்கையுடன் சொன்னான்.
“என்ன லவர் போயா" உஷா கண் சிமிட்டினாள். லட்சுமி தலையாட்டினாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 141
"சீதனம் எவ்வளவு கேட்கிறார்” உஷா கிண்டல் செய்தாள்.
லட்சுமி முறைத்தாள். "ஏய் ஏன் முறைக்கிறாய். அவர் கள் கேட்கும் சீதனம் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அடுப்படியில் நடக்கும் ஐயாயிரம் பெண் களின் கொலைகளில் உனது கொலையும் அடங்கும்.”
லட்சுமியின் உடல் பயத்தில் சில்லிட்டது. ‘என்ன முறைக்கிறாய்? உனக்குத் தெரியாதா. இந்தியாவில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பெண்கள் சீதனக் கொடுமையால் கொலை செய்யப்படுகிறார்கள் என்று” லட்சுமி மறுமொழி சொல்லவில்லை.
லட்சுமி நினைத்தால் தாய் தகப்பன் சம்மதத்தைத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு நாராயணனைச் செய்யலாம். அவளால் அப்படிச் செய்ய முடியாது. ஒரே ஒரு மகள். தாய் தகப்பனின் பாசத்தை அவள் அறியாம லில்லை.
வீடு வந்த போது வீடு செத்த வீடு போல இருந்தது. தகப்பன் இவளைப் பார்க்க மாட்டேன் என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
பாட்டியும் பாட்டனும் தங்கள் வீடுகளுக்குப் போய் விட்டார்கள் போலும். இவள் தன் அறையில் போய் முடங்கிக் கொண்டாள். சாப்பிடவுமில்லை. நாராயணனு டன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு ஒடி விட வேண்டும் போலிருந்தது.
“பசிக்கலியா” தாய் எட்டிப் பார்த்தாள். மகள் முகத் தைத் திரும்பிக் கொண்டாள். தாய் மகளின் பக்கத்தி லிருந்து கொண்டு பெருமூச்சு விட்டாள்.
“虏上 விரும்பினால் யாரையும் திருமணம் செய்யலாம். இருபத்தியெட்டு வயதில் உனக்கு மனப்பக்குவம், பொருளாதார வசதியிருக்கிறது” தாயின் குரலில் தாங்க முடியாத சோகம். மகள் மறுமொழி சொல்லவில்லை.

Page 74
142 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
"நீ பெண். இந்தியாவில் பெண்களின் நிலை உனக்குத் தெரியாது.” தாய் தொடர்ந்தாள். “எங்களுக்கு என்ன பிள்ளை பிறந்தாலும் பரவாயில்லை" தாய் அழத் தொடங்கி விட்டாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தொரியவில்லை.
அம்மா தொடர்ந்தாள் “நீ பிறந்த போது நீ பெண் குழந்தையாய்ப் பிறந்துவிட்டாயே என்று நாங்கள் துக்கப் படவில்லை. ஆணோ, பெண்ணோ ஏதோ சுகமாய்ப் பிறந் தால் போதும் என்று தான் நினைத்தோம்”
லட்சுமி தாய் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். “சோமநாதர் மகளுக்கு என்ன நடந்தது தெரியுமா” அம்மா லட்சுமிக்கு எத்தனையோ சொல்ல நினைக்கிறாள் என்று தெரியும்.
சோமநாதர் மகள் ஒரு டாக்டர், தன்னுடன் படித்த ஒரு இந்திய டாக்டரைச் செய்தாள். ஒரு பெண் குழந்தை யுடன் லண்டன் திரும்பிவிட்டாள். காரணம் கேட்டால் எனது சொந்த விஷயத்தை பற்றிக் கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டாளாம். அவள் கணவன் இரண் டாம் தாரம் செய்து விட்டானாம். “பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்வது மிகச் சாதாரண விஷய மங்கே”
தாய் லட்சுமியைப் பயப்படுத்தச் சொல்கிறாளா? "இந்தியா சுதந்திரமடைந்தபின் கொலை செய்யப்பட்ட பெண் குழந்தைகள் 6 கோடியாயிருக்கும் என்று செய்திகள் சொல்வதாக மாமா சொன்னார்”
தூரத்தில் எங்கோ கோயில் மணியடித்தது. மனித நேயத்திற்கு எல்லாத் தேசத்திலும் முக்கிய இடம் கொடுப்ப தாகத்தான் லெட்சுமி நினைத்திருந்தாள். தாயும் மகளும் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (X 143
"அம்மா உங்கள் சாதித்தடிப்புணர்ச்சியால் என்னை வேற்றான் ஒருத்தன் செய்வதை எதிர்க்கிறீர்கள். லெட்சுமி யின் குரல் அனலாக வெடித்தது.
"மகளே உனது தலைவிதி எப்படியோ அப்படித்தான் எல்லாம் நடக்கும்.”
தாய் மகளின் அறையை விட்டு வெளியேற எழும் பினாள். அடுத்த நாள் ஆபிஸில் உஷா இவள் முகத்தை ஊடுருவிப் பார்த்தாள்.
"அம்மா அப்பாவை எதிர்ப்பது என்று முடிவு கட்டி விட்டாயா" உஷா தயக்கத்துடன் கேட்டாள். இவள்தான் ஒரு நாள் சொன்னாள்: “வெளியானை செய்தால் பிடிக்கா விட்டால் விவாகரத்துச் செய்து கொள்ளலாம். எங்கள் சாதி, சமயத்தவனை செய்தால் பண்பாட்டுக்காக கலாச் சாரத்திற்காக காலமெல்லாம் கண்ணிருடன் மாரடிக்க வேண்டும்.”
“உஷா வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம், யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்று தெரியாது. அம்மாவின் உபதேசத்திற்கும், உனது புத்தி மதிக்கும் நன்றி. நாராயணன் நல்லவன். அந்த நம்பிக்கையில் வாழ்க்கை யைத் தொடங்கப் போகிறேன்” லெட்சுமி நம்பிக்கையுடன் சொன்னாள்.

Page 75
10. அப்பாவின் சினேகிதி
விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும் பொழுதுதான் அவள் வந்தாள். கையில் போர்டிங் காட்டை வைத்து கொண்டு தான் இருக்க வேண்டிய இடத்தைத் தேடினாள். நீல நிறத்தில் சிவப்புக் கரை போட்ட விபோன் சேலை. அவள் உடலைத் தழுவிக் கிடந்தது.
பத்து வருடங்களின் பின்னும் அவள் பருவம் குலையாத பெண்மை குங்குமப் பொட்டுடன் கொலுவந்தது. அவள் ஒரு ஒவியை. அவளே ஒரு ஓவியமாய் அருகில் வந்தாள். விமானப் பணிப் பெண் அவள் கொண்டுவந்திருந்த பிரயாணப் பெட்டியை வாங்கி மேலேயுள்ள சாமான்கள் வைக்குமிடத்தில் வைப்பதற்கு உதவி செய்தாள்.
என்னருகில் உட்கார்ந்தாள். நான் தர்மசங்கடப் பட்டேன். ஜன்னலுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டியவள் அவள். ஆனாலும் அதுவரைக்கும் யாரும் வராதபடியால் யாரோ ஒரு பிரயாணி தன் பிரயாணத்தை ரத்து செய்திருக் கலாம் என்ற தைரியத்தில் ஜன்னல் பக்க இடத்தை நான் ஆக்கிரமித்திருந்தேன். இடம் கொடுத்தால் மடம் பிடுங்கும் குணம் 'o
எனது தர்ம சங்கடத்தை அவள் கவனித்திருக்க வேண் டும். “பரவாயில்லை. நீங்கள் அந்த இடத்திலேயே இருக்க லாம்” அவள் குரலும் அவள் பருவம் போல் கணிரென் றிருந்தது. அவள் ஒவியங்களை என் தகப்பன் காட்டிய போது பாத்திருக்கிறேன். குழந்தைகளும் பெணக்ளும் அவளுடைய ஸ்பெசாலிட்டி என் முகத்தைப் பார்த்துப்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 145
பேசிய போது அவள் முகத்தில் ஏதோ கேள்வி ஓடியதை நான் கவனிக்காமலிருக்க முடியவில்லை. அவள் முகம் சலனமற்ற குழந்தைத் தனத்தைத் தாண்டி சட்டென்று எங்கேயோ தடுக்கி விழுந்த பாவம் அவள் முகத்தில் தெரிந்தது.
நான் ஒரு சைக்கோலஜிஸ்ட் உடம்பின் நெழிவு சுழிவு களின், கண்களின் அசைவின் உதடுகளின் முறுவலின் மொழிகளையும் புரிந்து கொள்ள முடியும் என்பது அவ ளுக்குத் தெரியாதிருந்திருக்கலாம்.
அப்பாவுக்கும் எனக்கும் வயதில் மட்டுமல்ல, சிந்தனை களிலும் பெரிய மாற்றமுண்டு என்பதை அவள் அறியாள். அவள் சிந்தனையில் வந்த கேள்வி என்னவாக இருக்கு மென்று எனக்குத் தெரியும்.
"உன்னை எங்கேயோ பார்த்த ஞாபகம்” என்று அவள் பார்வை தடுமாறியதை நான் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் என் கண்களுக்குள் புகுந்த நாள் இன்னும் நினைவிலுண்டு.
பத்து வருடங்களுக்கு முன் அப்பாவுடன் அவள் காரில் வந்திறங்கியதை நான் மேல் மாடியிலுள்ள ஜன்னலால் பார்த்தேன். அவளுக்கும் எனது அப்பாவுக்கும் என்ன உறவு என்ன நெருக்கம் என்று எனக்கு அன்றும் தெரியாது, இன்றும் புரியாது.
எங்கள் வீட்டுக்கு அவள் வரத் தயங்குவதையும் அவ ளுக்கு ஆதரவாக அப்பா ஏதோ சொல்வதையும் ஒரு இனி மையான மாலை நேரத்தில் மிகவும் ரசித்தேன். பத்திரி கையாளனுக்கும் ஒரு கலைஞருக்கும் உள்ள வெற்றுறவாக அந்த உறவு தெரியவில்லை.
அப்பா ஒரு பத்திரிகையாளர். அவருடன் எத்தனையோ "சினேகிதிகள் வந்திருக்கிறார்கள்.
இ.கா.-10

Page 76
146 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அம்மா வீட்டில் இல்லாத போதும் அப்பாவின் "சினே கிதிகள்' வந்திருக்கிறார்கள், அம்மா வீட்டில் இருந்தால் காப்பியோ, தேனிரோ போட்டுக் கொடுப்பாள்.
அப்பாவின் சினேகிதிகள் போனதும் அவர்களைப் பற்றி அப்பாவிடம் குறுக்கு விசாரணை செய்வாள். கல் யாணங்களுக்குள் ஒருத்தரை ஒருத்தர் வேவு பார்க்கும் கேள்விகள், பெரும்பாலும் கேள்விகள் அப்பாவின் சினே கிதிகள் திருமணமானவர்களா இல்லையா என்பதிலிருந்து தொடங்கும்.
அப்பா ஒரு நல்ல நடிகன். பத்திரிகையாளனுக்குத் தேவையான அத்தனை நுணுக்கமான குணங்களும் அப்பாவிடமிருந்தன.
எவரையும் தன் சிரிப்பாலும், அளந்தெடுத்த தன் பேச்சாலும் வசீகரிக்கும் என் அப்பா அட்டியலுக்கும் பட்டுச் சேலைக்கும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிடும் என் தாய்க்கு எந்த விதத்தில் பொருந்தமானவர் என்று எனக்குத் தெரியாது. அவரின் மறுமொழிகளில் உண்மையுண்டோ என்னவோ அவள் அடங்கிவிடுவாள். மிக மிகச் சம்பிரதாயமான குடும்பங்களிலிருந்து வந்த என் பெற்றோர்கள் மிக மிகச் சம்பிரதாயமான சடங்குகள் மூலம் தங்கள் குடும்பங்களால் இணைக்கப்பட்டிருக்கலாம். “உங்களுக்கு என்ன சிவப்பு வைன் வேண்டுமா வெள்ளை வைன் வேண்டுமா" விமானப் பணிப் பெண் தன் நிரந்தர கல்யாணிச் சிரிப்புடன் எங்கள் அருகில் நிற்கிறாள்.
விமானம் புறப்பட்டு இருபது நிமிடங்களாக இருக்க லாம். நான் எப்போதோ என் நினைவுடன் இந்தியாவின் தென்னாட்டு மூலைக்குப் போய் விட்டேன். மட்ராசின் ஒரு மாலை நேரம் தென்றலுடன் நினைவில் வந்தது. என் அருகில் இருந்தவள் தனக்கு பழச்சாறு கொடுத்தால் நல் லது என்கிறாள். அப்படித்தான் அம்மாவிடமும் கேட்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 147
"ஏன் காப்பி, டீ எடுத்துக்கவே மாட்டீங்களா” அம்மா எப்போதோ இவளிடம் கேட்டாள்.
"ஏன் வைன் ஒன்றும் பிடிக்காதா அல்லது ஸ்ட்ராங்காக ஏதும் தேவையென்றால்.”
விமானப் பணிப் பெண் தொடர முதல் இவள் குரல் வெட்டுகிறது. .
“பழரசம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் லண்டனிலிருந்து பாரிசுக்குப் போகும் ஒரு மணித்தியாலத் தில் எனக்கு நா வரண்டு விடாது” அவள் குரலில் இசை தவழ்கிறது. உடலில் கலை மிளிர்கிறது. கல்யாணம் ஆகி யிருக்குமா? அவள் கையில் ஒரு மோதிரமில்லை. கழுத்தில் தாலியில்லை. நான் விமானத்தின் ஜன்னலுக்கு வெளியால் பார்வையைச் செலுத்துகிறேன். மேகங்களுடன் விளை யாடிக்கொண்டு விமானம் தவழ்கிறது.
எங்களுக்கு முன்னாலிருந்தவர் இருமுகிறார். விமானம் புறப்பட்ட நேரத்திலிருந்து இரண்டொரு தரம் இருமுகிறார்.
விமானத்தின் ஜன்னலால் மேகம் படராத நேரங்களில் இங்கிலாந்தின் தரைப்பகுதி யாரோ எடுத்த படம் போல் பளிச்சிடுகிறது.
தேம்ஸ் நதி ஒரு பெரிய நாகம் போல் வளைந்து நெளிந்து படம் எடுத்து ஆங்கிலக் கால்வாயில் அமிழ்கிறது. அவள் ஏதோ ஒரு பத்திரிகையை எடுப்பது தெரிகிறது. லண்டனிலிருந்து வருகிறாள். கடைக் கண்கள் அவளின் பக்கம் கள்ளமாகச் சென்ற போது என் நெஞ்சில் நெருஞ்சி தைத்ததோ.
எனது தந்தை ஆசிரியராக இருக்கும் தமிழிப் பத்திரிகை அவள் கைகளில் தவழுகிறது.
கடந்த பத்து வருடங்களில் எத்தனை தரம் என்று தெரி யாது. அப்பா இந்தியாவை விட்டு வெளியே போகாதவர். இவள் அமெரிக்காவில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்

Page 77
148 (X இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இந்தியாவைப் பிரிந்து வாழ்பவள். தமிழில் பற்றுள்ள ஒரு தமிழிப்பெண் இந்தியா வந்திருந்த போது எத்தனையோ பத்திரிகையாளரையோ சந்தித்தது போல் என் அப்பாவின் சந்திப்பும் கிடைத்திருக்கும். தான் ஒவியம் போடுபவர் என்று அம்மாவிடம் சொன்னாள். “பாரிஸிலேயே வாழ் கிறீர்களா' நான் திடுக்கென்று அவளைக் கேட்டது அவளுக்கு ஆச்சரியம் தந்திருக்க வேண்டும்.
“என்ன." அவள் ஒரு கணம் நிதானித்து விட்டு என் முகத்தில் தன் பார்வையைத் தவழ விட்டாள்.
எனது கண்கள் என் தகப்பனின் கண்கள் போன்றவை என்று என் சினேகிதர்கள் சொல்லியிருக்கிறார்கள். பத்து வருட வளர்ச்சியின் முதிர்ச்சி என்முகத்தில் தெரிந்திருக் கலாம். w
அவள் பார்வை ஒரு வினாடி என் கண்களுக்குள் சுரங்கம் தேடின.
என்ன கேட்டீர்கள். அவள் இதழ்கள் அழகானவை முன்பின் தெரியாத ஒரு இளைஞனின் கேள்வியால் தடுமாறுகிறாயா? “இல்லை இல்லை. ஒரு சினேகிதரைப் பார்க்க பாரிசுக்கு வருகிறேன்”
அப்பாவைப் போல் இன்னொரு சினேகிதராக இருக்கலாம்.
அவள் இன்னொரு தரம் என்னைக் கூர்ந்து பார்த்தாள். பத்து வருடத்துக்கு முன் ஒரு நடுக்கலான வயது எனக்கு இப்போது இருபத்தெட்டு வயது. அப்பாவுக்கு மீசையுண்டு. அவரின் மீசைக்கும் முகத்துக்கும் ஒரு தலைப்பாவைத்தால் பாரதியார் மாதிரியிருப்பார்.
லண்டனுக்குப் படிக்க வந்த பின் எனது இளம் மீசையை எடுத்துக் கொண்டேன். காரணம் என்னுடன் படித்த ஒரு ஆங்கிலப் பெண் ஏன் இந்தியர்கள் மீசையைக் கட்டாயப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்ட கேள்வி ஞாபகமாக இருக்கலாம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 149
‘கட்டாயமாக மீசை வைத்திருக்கவோ இல்லையோ எனக்குத் தெரிந்த, எல்லோரும் என் அப்பா உட்பட மிகச் சந்தோசமாக மீசை வைத்துக் கொண்டார்கள்.
நான் லண்டனுக்கு வந்த போது ஜோன் மேஜர் பிரதம ராக இருந்தார். மீசையில்லாதவர். அவர் மந்திரிகளில் கிட்டத்தட்ட யாருக்குமே மீசையில்லை.
ஆங்கிலச் சினேகிதி என் மீசையைப் பற்றிக் கேட்ட அன்றிரவு ஆசை தீர என் மீசையைத் தடவிக் கொண் டேன். இருபத்தி நான்கு வயது மீசை எனது இளமையின் அல்லது ஆண்மையின் பிரதிபலிப்பு என்று என் உள் மனம் சொல்லியிருக்கலாம்.
ப்ராய்ட் இந்த 'மீசை விடயம் பற்றி என்ன கருத்துக்கள் வைத்திருப்பார் என்று யோசித்தேன். செக்ஸ் பற்றி 'நிறையப் பேசிய ப்ராய்ட் ஏன் மீசை பற்றி, அதிலும் இந்தியாவின் மீசை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று ஒரு சில வினாடிகள் சிந்தித்தேன். அடுத்த நாள் யூனிவர் சிட்டிக்குப் போகும் போது எனது மராட்டிய நண்பன் மேலும் கீழும் (என் முகத்தை பார்த்தான். அவன் ஒரு கட்டபொம்மன் மீசை வைத்திருப்பான்.
மீசையை ஏதோ மறைத்து வைத்துவிட்டேன் அல்லது மறந்து விட்டேன் என்பது போல் அவன் பார்வை கேள்வி கேட்டது. நான் அவன் கேள்விக்கு மறுமொழி சொல்ல வில்லை.
“யு லுக் நைஸ்” என்றாள் ஆங்கிலச் சினேகிதி. மராட்டிய நண்பனின் முகத்தில் குறும்பு.
அன்று பின்னேரம் “ஏன் உனது மீசை, முத்தங்களுக்கு இடைஞ்சல் என்று அலிஸன் (எனது ஆங்கிலச் சினேகிதி யின் பெயர்) சொன்னாளா” என்று மராட்டியச் சினேகி தன் கேட்டான்.
அலிஸனை முத்தமிடுமளவு எங்களுக்குள் சினேகிதம் இல்லை என்றேன். அப்பாவுக்கும் இவளுக்கும் முத்த

Page 78
150 X. இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
மிடும் அளவுக்கு நெருக்கம் இருந்திருக்குமா? "உங்களை எங் கேயோ பார்த்துபோல் இருக்கிறது” அப்பாவின் சினேகிதி சொன்னாள்
“மீசையிருந்திருந்தால் அப்பாவைப் போல் இருந்திருப் பேன் போலும்.”
“எங்களைப் போல் ஏழு பேர் இந்த உலகத்தில் இருப்ப தாகச் சொல்வார்கள்"
“எனது இனிய நண்பர் ஒருவருக்கு உங்கள் கண்கள் இருந்தன” அவள் முகத்தில் ஒரு புன்னகை. சோகம் கலந்த புன்னகை, ஒரு மணித்தியால பிரயாணத்தில் லண்டனி லிருந்து பாரிசுக்குப் போகும் பிராயணத்தில் சந்தித்துக் கொண்ட பிரயாணிகள் இப்படிப் பேசிக்கொள்வது அசா தாரணமாகப் பட்டாலும் பெரும்பாலான மனிதர்கள் அந்நியர்களிடம் தங்கள் உள்ளக்கிடக்கையை உண்மை யுடன் சொல்வார்கள் என்ற வார்த்தைகளும் ஞாபகத்துக்கு வராமலில்லை.
"அப்படியா’ நான் தர்மசங்கடப்பட்டேன். இவள் ஒரு ஒவியை பார்த்ததைப் படமாக வரைபவள். அப்பாவின் ஒவியத்தைக் கான்வசிலோ கடதாசியிலோ அவள் வர்ணம் போட்டிருக்கலாம்.
அம்மா சத்தம் போட்டது போல் “அவள் ஒன்றும் உங்கள் சாதாரண சினேகிதியாய்த் தெரியவில்லை”
அப்பா அதற்குச் சொன்ன மறுமொழி எனக்குக் கேட்க வில்லை. அம்மாவுக்குக் கோபம் வந்தால் தான் செய்த பாவத்தில் தான் அப்பாவுக்கு மனைவியாய் வந்தேன் என்று திட்டுவாள்.
அதன் அர்த்தம் தெரியாத வயது. எனக்கு பதினெட்டு வயதில் அம்மா சொல்லும் சில விஷயங்கள் எனக்குப் புரியாது. நான் எனக்கு அப்பா வாங்கிக் கொண்டு வந்த ரவி சங்கரின் சித்தார் சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந் தேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 151
அதற்கு இரண்டு நாளைக்கு முன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்திருக்கும் ஒரு ஒவியையைத் தன் பத்திரி கைக்குப் பேட்டி காணப் போவதாக அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மா இட்லியும் தோசையும் செய்வதில் தன் கவனத் தைச் செலுத்திக் கொண்டிருந்தாள். அப்பா என்ன சொல் கிறார் என்பதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பது அடுத்த அடுத்த நாட்களில் தான் தெரிந்தது.
அமெரிக்க ஓவியை எப்போ மட்ராஸ் வந்தாள் எத்தனை தரம் அப்பாவைச் சந்தித்தாள் என்றெல்லாம் தெரியாது.
சாடையாக மழைத்துளியில் பூமி நனைந்து சிலிர்த்த ஒரு மணம் வருமே அது தெரியுமா? அந்த மணத்தை நான் ரசிப்பேன். அப்படியான ஒரு நாளில் மாலைப் பொழுதில் அவள் வந்தாள்.
“ரகு நான் கடைக்குப் போய் வரேன்” அப்பா கதவைப் பூட்டும் போது சொல்வது கேட்டது. மேல் மாடியில் பின்னேரத் தூக்கமும் சோர்வு கொண் டிருந்த நான் தெருவில் கார் வரும் சத்தம் கேட்டு ஜன்ன லால் எட்டிப் பார்த்தேன். “அவளுக்குத் தேவையான உணவு, அவனுக்குத் தேவையானது உடம்பு. இதுதான் பெரும்பாலான கல்யாணங்கள்” இப்படி எழுதிய அப்பாவின் முகத்தில் அசாதாரணமான ஒரு புன்னகை. நடையில் வழக்கமான கம்பீரத்துடன் ஏதோ ஒரு கவர்ச்சி யாய்த் தெரிந்த கல்யாண வாழ்க்கைக்கப்பால் ஒடிப் போகும் ஒரு சுதந்திரக் குழந்தையின் கம்பீரமும், கவர்ச்சி யும்; அப்பாவுக்குப் பின்னால் அவள் வந்து கொண்டிருந் தாள். அப்பாவின் வழக்கமான சினேகிதி ஒருத்தியாய் அவள் தெரியவில்லை. அவர்கள் இருவரின் பார்வையும் ஏழு ஜன்ம நெருக்கத்தில் பிணைந்திருந்தது. ஒரு நீலநிறச் சேலையும் சிவப்புச் சட்டையும் அணிந்த பெண். மயிலின்

Page 79
152 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
எழில் நடையை ஞாபகப்படுத்தின, அவள் நடை மாடி ஜன்னலால் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அம்மா வீட்டில் இல்லை. இருந்திருந்தாலும் ஒன்றும் நடந்திருக்காது. அம்மா அமெரிக்காவில் அட்டியல்கள் மலிவாகக் கிடைக்குமா என்று விசாரித்திருக்கலாம் “ரகு” அப்பா கதவைத் திறக்கும் போது கூப்பிடுவது கேட்டது. தயங்கியபடி கீழே வந்தேன். வரும் போது படிகளில் மறைந்து நின்று ஒரு கொஞ்ச நேரம் பார்த்தேன்.
அப்பா அவளைப் பார்த்த பார்வை இதயத்தை என் னவோ செய்தது. இத்தனை காதலை இரு கண்கள் வெளிப் படுத்தும் என்று அன்று தான் புரிந்து கொண்டேன். எனது அம்மாவும் அப்பாவும் அன்பான தம்பதிகள் என்று நினைத்திருந்தேன். அந்த நினைவுக்கப்பால் ஏதோ தேடலுக் குப் பதில் கிடைத்த மாதிரியான நிறைவு அப்பாவின் முகத்தில் தெரிந்தது.
அப்பா என்னை அறிமுகம் செய்தார். நான் சங்கோஜத் துடன் ஹலோ சொல்லிவிட்டு மறைந்து விட்டேன். அவள் முகத்தை நான் ஒரு நாளும் மறக்கவில்லை. "நீங்கள் இந்தி யரா” அவள் இப்போது விமானத்தில் எனது பக்கத்தி லிருந்து கேட்கிறாள்.
“உம். உம். இந்தியத் தாய் தகப்பனுக்கு லண்டனில் பிறந்தேன்” அப்பட்டமான பொய்யைச் சொல்கிறேன். உண்மையைச் சொன்னால் உனது தகப்பன் பெயர் என்ன என்று கேட்பார் என்ற பயம். “பாரிசில் ஹொலிடேயா” அவள் ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டாள் போலும்.
“இல்லை நான் ஒரு சைக்கோலஜிஸ்ட், பாரிசில் ஒரு செமினார் நடக்கிறது. அதற்காகப் போகிறேன்”
“செமினார் எதைப் பற்றி" “இடிபஸ் கொம்ளக்ஸ் என்பதைப் பற்றி” அவள் முகத்தை இறுக்கமாகப் பார்த்துக் கொண்டு சொன்னேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 153
அவளுக்குப் புரியவில்லை என்பது அவள் புருவங்களைக் குறுக்கிய விதத்தில் புரிகிறது.
"தாய்க்கும் மகனுக்கும், தகப்பனுக்கும் மகளுக்குமுள்ள உறவு பற்றிய ப்ராய்டின் தியறி பற்றியது”
அவள் மெளனம். எனக்கு ஏனோ புரிகிறது. தந்தையைக் கொலை செய்து தாயை மணம் புரிந்த இடிபஸ் பற்றி இவளுக்குத் தெரியாதாக்கும். அதுவும் நல்லது.
சார்லஸ் டீ கால் விமான நிலையத்தில் விமானம் பதிந்தது. பாரிஸ் வந்து விட்டது. உலகின் காதல் நகரம். அவள் மனதில் ஏதோ காதலை நினைவூட்டியிருக்கலாம். “உங்களைப் பார்த்ததும் யாரோ ஞாபகம் வந்தது” அவள் முணுமுணுத்தாள்.
அவள் எழும்பி நின்று தன் சாமான்களை எடுக்கத் தொடங்கிறாள். அவள் பெருமூச்சு சாடையாகக் கேட்டது. “உங்களையழைக்க யாரும் வராவிட்டால் பாரிஸ் நகரம் வரைக்கும் என்னுடன் வரலாம். பாரிசிலுள்ள என் நண்பன் காரில் வருவான்”
நான் இன்னும் கொஞ்சம் அவளுடன் இருக்க வேண்டும் என்ற அடிமன ஆசையை அடக்க முடியாமற் கேட்கிறேன்.
“வேண்டாம், எனது சினேகிதருடன் பஸ்சில் போகி றேன்” அவள் அவசரப்பட்டாள். என்னுடனிருக்கும் ஒவ்வொரு வினாடியும் அவள் நினைவு அலைபாய்கிறது என்பது ஒரு சைக்கோலஜிஸ்ட் கண்டு பிடிக்க முடியாதா? "நான் டொக்டராக்ப் போகிறேன்" பதினெட்டாவது வயதில் நான் சொன்னபோது அம்மா பெருமகிழ்வுடன் கட்டியணைத்தாள்.
அப்பா நான் தன்னைப்போல் பத்திரிகையாளனாக வந்து கஷ்டப்படாமல் ஏதோ செய்து பிழைத்தால் போதும் என்று எப்போதோ சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர் கள் பல விதமான பெண்களையும் சந்தித்து சங்கடப்படும்

Page 80
154 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
காரணமாக இருக்கலாம். இருபது வயதில் லண்டனுக்கு வர அப்பாவின் தமயன்கள் உதவி செய்தார்கள்.
மெடிசின் படிப்பதை விட்டு சைக்கோலஜி செய்யப் போகிறேன் என்றதும் வீட்டாரின் புத்திமதிக் கடிதம் எத்தனையோ பக்கத்தில் வந்தது.
இப்போது எனக்கு இருபத்தி எட்டு வயது. ஆஸ்திரிய நாட்டில் வியன்னா நகரில் மத்திய தரப் பெண்களை வைத்துக் கொண்டு ப்ராய்ட் செய்த சில பரிசோதனை களை எனது இந்திய மனக் கண்ணோட்டத்தில் எடை போடுகிறேன்.
அம்மா பெண் பார்க்கிறாள். மாட்டேன் என்றேன். அம்மா தன்னைப் போல் ஒரு பெண்ணைத்தான் பார்ப் பாள் என்று தெரியும்.
நான் அப்பாவாக வாழ முடியாது. ஒரு ஒவியையிடம் உள்ளத்தைப் பறிகொடுக்க முடியாது. என்னையுணரும் பெண்வேண்டும்.
“சாத்திரத்தின்படி எல்லாப் பொருத்தமுமுள்ள ஒரு பெண்ணின் சாதகம் வந்திருக்கிறது” அம்மாவின் கடைசிக் கடிதம் இது.
அப்பாவுக்கும் உனக்கும் தான் எல்லாப் பொருத்தமு மிருந்ததே. அப்படியானால் ஏன் அந்த மனிதன். அம்மா விடம் கேட்கலாமா?
அப்பாவின் சினேகிதி மறைந்து விட்டாள். அவள் மாதிரி ஒரு பெண்ணுக்குக் காத்திருக்கிறேன்.
V− இந்தியா டுடே 2000

11. பாதை தவறிய பைத்தியம்
2ைெரத் தழுவி ஓடிக்கொண்டிருந்த சிற்றாறு மதிய வெயிலில் அலுமினியத் தகடாய் பளபளத்துக் கொண் டிருந்த போது அவள் சேலையை முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடந்து வந்தாள். வைகாசி மாதம் என்றபடியால் ஆற்றில் மிக ஆழ மில்லை. ஆறு ஒடுங்கிய கரைகளில் நாணல் வளர்ந்து அந்த நாணல்களுக்கிடையே கொக்குகள் கழுத்தை வெட்டி வெட்டி குனிந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தன.
ஆற்றுக்கு அப்பால் ராணுவ முகாம் இருப்பதால் ஊர்ப் பையன்கள் இப்போதெல்லாம் ஆற்றில் மதிய நேரத்தில் நீச்சலடித்து விளையாடுவதில்லை.
மெல்லிய சிவப்புக் கால்களுடன், நீண்ட கழுத்துக் கொக்குகள் மிக ஆறுதலாகத் தங்கள் இரைபிடிப்பதை சேற்றுக்குள் புதைத்து கிடந்த சில எருமைகள் சோம்பல் தனமாய்ப் பார்த்து விட்டுக் கிடந்தன.
ஆற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு மீன் பிடி தோணிகள் தெரிந்தன.
தென்னம் சோலைகளால் நிறையப் பெற்ற அந்த ஊரில் மாமரத்து நிழலில் படுத்திருந்த ஒன்றிரண்டு வயது போன வர்கள் ஆற்றைக் கடந்து வரும் அந்தப் பெண்களை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
ஊரைத் தழுவியோடும் ஆற்றுக்கப்பால் அரசாங்க வைத்தியசாலை இருக்கிறது. வைத்தியசாலையைத் தாண்டி ராணுவ முகாம் இருக்கிறது. ஊர்ப்பெண்கள் உயிர்

Page 81
1588 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
போனாலும் தனியாக அந்த வைத்தியசாலைப் பக்கம் போக மாட்டார்கள்.
ராணுவ முகாம் இருக்கிறதோ இல்லையோ அதை படுத்த சவக்காலையும் இருக்கிறது. பெண்கள் ஒரு நாளும் அந்தப் பக்கம் தனியாகப் போக ஊர்ச் சம்பிரதாயம் ஒப்புக்கொள்ளாது. கன்னிப் பெண்களை மோகினிப் பேய் பிடிக்கும் என்ற பரம்பரை நம்பிக்கை.
வயதுபோன கிழவிகள் குமரிப்பிள்ளைகளை கொண்டு போவார்கள்; அல்லது கணவன்மார் மனைவியரை அழைத்துச் செல்வர்; பெண்கள் தனிமையாகச் செல்வது சம்பிரதாயமான விடயமல்ல. அவள் தனியாக நடந்து வருகிறாள்.
நாணல் மறைவில் மலம் கழித்துக்கொண்டிருந்த ஒரு கிழவன் அவசர அவசரமாக எழும்பிக் கழுவிக் கொண்டு ஊருக்குள் விரைந்தார். ஈரக்கையை வேட்டியில் துடைத்துக் கொண்டு அந்தக் கிழவர் விரைந்து சென்றார்.
ஊர் நடுவில் ஒரு கடை அந்தக் கடையில் உலக சமா சாரங்கள் அலசப்படும். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பச்சை மிளகாய், வெங்காயம், சோடாப் போத்தல்களுடன் ஒரு வீட்டுக்கு முன்னால் தொடங்கிய கடை இப்போது சாப்பாடுக் கடையாகவும் மாறிவிட்டது.
ஒரு பக்கம் பலசரக்கு, அடுத்த பக்கம் இரண்டு மேசை களும் எட்டுக் கதிரைகளும் போட்ட சாப்பாட்டுக் கடை ரோட்டையண்டி இரண்டொரு பெஞ்சுகள், அந்த இடங்கள் எப்போதும் இளையதோ அல்லது கிழவர்களோ என இல்லாமல் ஊர் ஆண்களால் நிறைந்திருக்கும்.
எந்த வயதுக்காரர் எப்போது இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ராணுவ ஜிப்பைக் கண்டால் கடைக் காரக் கிழவன் தவிர யாருமிருக்க மாட்டார்கள். அடுத்த ஊரில் ஒரு கண்ணி வெடி வெடித்தால் அக்கம் பக்க ஊரெல்லாம் ராணுவ வேட்டை நடக்கும், யமதர்மர்கள் கைகளில் பாசக் கயிறுகளுடன் வருவது போல் சிங்கள

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 157
ராணுவம், பயங்கர முகங்களுடன் பளபளக்கும் ஆயுதங் களுடன் அந்த ஊருக்கும் வருவார்கள். எத்தனையோ தரம் கண்ணில் அகப்பட்ட இளைஞர்களையெல்லாம் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். ஒரு தரம், அந்த ராணுவத் தினர் ஊரார் முன்னால் வைத்து வெறிநாயைச் சுடுவது போல் ஒன்றிரண்டு இளைஞர்களைச் சுட்டுத் தள்ளினார் கள். பார்த்துக் கொண்டிருந்த கிழவி அதேயிடத்தில் மாரடைப்பால் இறந்து விட்டாள். இளைஞர்கள் தப்பி விட வெளிக்கிட்டால் வழியில் அகப்படும் யாரையும் ராணுவம் சுடும்.
இன்றைய மதிய நேரத்தில் அந்தக் கடையில் ஒன் றிரண்டு இளைஞர்கள் சோடா குடித்துக் கொண்டிருந் தார்கள். காலையில் ராணுவ ரோந்து நடந்து முடிந்த படியால் அவர்கள் கொஞ்சம் நிம்மதியாகத் திரிகிறார்கள். மரணத்துக்கும் வாழ்வுக்கு மிடையில் ஊசலாடிப் பழகிய வாழ்க்கை அவர்களுடையது. ஆற்றைக் கடந்த அந்தப் பெண் ஒழுங்கையில் ஏறிக்கடையடிப் பக்கம் வந்தால், நடையில் ஒரு செருக்கு.
அவள் முகத்தில் ஒரு சிரிப்பு. யாரோ தெரிந்தவர் களைப் பார்த்து சிரிப்பது போன்ற சிரிப்பு. உலகமே என் னுடையது என்ற பாவம்.
சோடாக் குடித்துக் கொண்டிருந்த ஒருத்தன் அவளைப் பார்த்தான். அவனுக்கு அந்த ஊரில் இருப்பவர்களையும் அடுத்த ஊரில் இருப்பவர்களையும் நன்றாகத் தெரியும். இவள் புதியவள். முன்பின் இந்தக் கடைப்பக்கம் இவளைக் கண்டதில்லை.
ஊருக்குள் அடிக்கடி வரும் முஸ்லீம் வியாபாரிகளை யும் தெரியும். இவள் முஸ்லீம் பெண் அல்ல. தலையில் சாமான் வைத்த கடகம் இல்லை. மயிரை மறைக்க முக்கா டும் இல்லை. வயது ஒரு நாற்பது இருக்கலாம். சாடையான நரை மயிர்கள் அங்குமிங்கும் தெரிந்தன. கலங்கிய கண்கள், குழப்பமான முகபாவம், ஆனாலும் வாய்திறந்த சிரிப்பு

Page 82
158 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
முகத்தில். அவள் கடையடி வாங்கு ஒன்றில் வந்து இருந் தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவன் எழும்பிக் கொண்டான். ஆண்களுடன் சரி சமமாக ஒரு பெண் உட்கார்ந்தது அதிர்ச்சியான விடயம். சோடா குடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத் துடன் பார்த்துக் கொண்டனர். ஒருத்தன் எழும்பிப் போனான். மற்றவன் கொஞ்சம் குட்டையானவன், முகத் தில் ஒரு நாளும் சிரிப்பைக் கண்டறியாத தோற்றம்.
கடைக்காரக் கிழவனின் மகன் அவளையும் அவளை ஆராய்ந்து பார்க்கும் இளைஞர்களையும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறான். வந்த பெண் சேலைத்தலைப் பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். "உனக்கு என்ன வேணும்” கடைக்காரப் பையனின் குரலில் ஒரு அதட்டல்; அது அந்த இளைஞர்கள் அவதானிப்பால் ஏற்பட்ட பிரதி பலிப்பு. கிழவன் எத்தனையோ அனுபவங்களைச் சந்தித்த வன்; ஏகப்பட்ட மனிதர்களைத் தெரிந்தவன்.
இளைஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ஊருக்கு யார் வந்தாலும் ஒரு சில மணித்தியாலங்களில் வந்தவர்களைப் பற்றிய விபரத்தை அறிந்து விடுவார்கள். அவர்கள் இவளை நோட்டம் விடுகிறார்கள். வந்தவள் தன்னைச் சுற்றி நடப்பது தெரியாமல் சூனியத்தைப் பார்த் துக் கொண்டாள்.
கடைக்காரப் பையன் அவள் அருகில் வந்தான். அவள் முந்தானையால் முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். வாடிய முகம் பசியாயிருக் கலாம்.
“தேத்தண்ணி வேணுமா” பையன் இவளைக் கேட்டுக் கொண்டு அவள் பின்னால் வந்திருக்கும் இளைஞர்களைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.
“மொணாத" அவள் இளித்தாள். கறை படிந்த அருவருப் பாய்த் தெரிந்தன.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 159
அவள் இவன் கேட்ட தமிழ்க் கேள்விக்குச் சிங்களப் பாஷையில் கேள்வியைத் திரும்பிக் கேட்கிறாள். கடைக் காரப் பையனுக்குச் சிங்களம் தெரியாது. அவன் இளை ஞர்களைப் பார்த்தான். இரண்டு மைல் இடைவெளிகளுக் குள் இருக்கும் மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள முடியாத மொழித்தடை! இளைஞர்களில் ஒருத்தன் படித்தவன் போல தெரிந்தவன். அவள் முன்னால் வந்து நின்று அவளையுற்றுப் பார்த்தான். அவன் ‘எத்த னையோ’ பாஷைகள் தெரிந்தவன் என்று புகழப்படுபவன். “தே ஒணத்' அவன் கேட்டான்.
அவள் கிக்கி கிக்கி என்று சிரித்துக் கொண்டாள். சிரித்து முடிய தலையை ஆட்டிக் கொண்டாள் அவனின் கேள்விக் கும் இவளின் சிரிப்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
கடைக்காரப் பையனைத் தேனிர் போடச் சொல்லி அந்த இளைஞன் சைகை செய்தான்.
அவள் சுடு தேனிரை ஊதி ஊதிக் குடித்திருக்கும் போது இவள் வந்தவுடன் எழும்பிப் போன இளைஞன் இப்போது இன்னொருத்தனுடன் வந்து கொண்டிருந்தான்.
புதிதாக வந்தவளைக் கண்டதும் மற்றவர்கள் முகத்தில் மரியாதை தெரிந்தது. அவன் தலைவனாக இருக்க வேண் டும் என்பது முகத்தில் தெரிந்தது. தலைவன் ஸ்டைலாகத் தன் உதடுகளை நாக்கால் நனைத்துக் கொண்டவன் தலையை ஒரு பக்கம் சாய்த்து அவளைப் பார்த்தான்.
“எந்த ஊர்” தலைவன் தமிழிற் கேட்டான். அவள் அவனைப் பேந்த பேந்த விழித்துப் பார்த்தாள்.
“தெமிள தன்னின” அவள் இன்னொருதரம் சத்தம் போட்டுச் சிரித்தாள். அவள் தனக்குத் தமிழ் தெரியாது என்று சொன்னதோ அல்லது தலைவனைப் பார்த்து சிரித்ததோ, ஏதோ ஒரு காரணம் தலைவனின் முகத்தில் கோபத்தையுண்டாக்கி விட்டது.
அவன் மற்றவர்களை வரச் சொல்லி விட்டுத் தூரத்தில் நின்ற மாமரத்து நிழலுக்குப் போனான். மாமரத்தில் குயில்

Page 83
160 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இருந்திருந்து கூவிக் கொண்டிருந்தது. தூரத்தில் மத்தியான பூசைக்கு கோயில் மணியடித்தது.
ரோட்டில் மாட்டு வண்டி ஒன்றிரண்டு கடகடவென ஒடியது. அடுத்த ஊர்க்காரர் காலையில் மார்க்கட்டுக்குப் போய்ச் சாமான் சுமையுடன் தார் கரையும் சுடு ரோட்டில் கால் புதைக்கப் போய்க் கொண்டிருந்தார்கள்.
தலைவனும் அவனுடன் இருவரும் போக மிஞ்சிய குட்டையன் இவளிடம் திரும்பி வந்தான்.
தன்னோடு வரச்சொல்லி சைகை செய்து கொண்டு நடந்தான். அவள் இன்னொருதரம் சத்தம் போட்டுச் சிரித்து விட்டுக் கடைக்காரப் பையனின் தேனிர்க் கிளா சைக் காட்டினான்.
அந்தக் குட்டையன் திரும்பி வந்தான். அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் கையை உதறிவிட்டு சிரித்தாள். குட்டையன் முகத்தில் கோபம் தெரிந்தது.
“சிங்களப் பிசாசு” காறித் துப்பினான். அவள் இன்னொருதரம் சிரித்தாள். கொஞ்ச நேரத்தில் அவனும் போய் விட்டான். கடையில் ஜனமாட்டம் குறைந்தது.
அவள் முந்தானையை விரித்துக் கொண்டு மாமரத்து நிழலில் படுத்து விட்டாள்.
கடைக்கு வந்துபோன ஒன்றிரண்டு பெண்கள் அவளை வியப்புடன் பார்த்து விட்டுப் போனார்கள். அவள் அயர்ந்த நித்திரை ஒன்றிரண்டு மணித்தியாலங்களின் பின் மத்தியானம் அவளைச் ‘சிங்களப் பிசாசு" என்று திட்டிய குட்டயனுடன் இன்னொரு இளம் பெண் வந்தாள்.
அவளைக் கடைக்காரப் பையனுக்குத் தெரியும். அவளும் இயக்கத்தில் இருப்பவள். வேறொரு ஊரைச் சேர்ந்தவள். நித்திரையாயிருந்த அந்தப் பெண்ணை காலால் தட்டி எழுப்பினாள். அவள் கலங்கிய முகபாவத்தடன்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 161
மலங்க மலங்க தன் முன்னாள் நிற்கும் இளம் பெண் ணைப் பார்த்தாள்.
என்ன நினைத்துக் கொண்டாளோ பழைய படி அந்தச் சிரிப்பு அவள் வாயிலிருந்து வந்தது. அவிழ்ந்த கொண் டையை முடித்துக் கொண்டு எழும்பியுட்கார்ந்தாள். இப் போது அவளைச் சுற்றி வேறு பலரும் சூழ்ந்து கொண்டார் கள். குழந்தைகள் அவளைப் போல் சிரித்துக் கொண்டார் கள். தாய்மார் அவர்களை அடக்க முயற்சிக்கவில்லை. மாமர நிழலில் படுத்திருந்த சொறிநாய் தன் நித்திரை குழம்பிய எரிச்சலில் குலைத்துக் கொண்டது. "எழும்பு” அந்த இளம் பெண்ணின் குரலில் அதிகாரம். அவள் எழும்பிக் கொண்டாள்.
பசி என்று சொல்லவோ என்னவோ வயிற்றைத் தடவிக் காட்டினாள். பசியாகத்தானிருக்க வேண்டும், முகம் மிகவும் வாடியிருந்தது. இளம் பெண் தன்னுடன் வரச் சொல்லி சிங்களத்தில் சொன்னாள். கடைக்காரப் பையன் ஒரு துண்டுப் பாணும் இன்னுமொரு கிளாஸ் தேனிரும் கொடுத்தான்.
இளம் பெண்ணுடன் வந்த குட்டயன் ஒரு நோட்டை எடுத்து அநாயாசமாகக் கடைக்காரப் பையனிடம் நீட்டி னான். கிழவி அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண் டிருந்தாள். அந்தச் சிங்களப் பெண் இளம் பெண்ணைத் தொடர்ந்து செல்வதைக் கடைக்காரப் பையன் பரிதாபத் துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படிப் போனவர் கள் எத்தனையோ பேரை அவன் பார்த்திருக்கிறான்.
ஊருக்கு நடுவில் அந்தப் பெரிய வீட்டில் அவர்கள் குடியிருந்தார்கள். வீட்டுச் சொந்தக்காரரை அவரின் பழைய வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டு இயக்கம் இந்த வீட்டைச் சுவீகரித்து விட்டது. பழைய வீட்டுக் காரரின் இரண்டு மகன்களை இலங்கைச் சிங்கள ராணு வம் அரைகுறை உயிரோடு ஒரு மைலுக்கப்பால் உள்ள கடற்கரையில் புதைத்து விட்டது. இரண்டு பெண் குழந்தை களில் ஒருத்திக்குப் போலியோ வாதம் வந்து பெரும்பாலும்
இ.கா.-11

Page 84
162 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
படுக்கையிலேயே இருப்பாள். கடைசி மகள் எப்போதாவது ஒரு நாள் இந்தப் பெரிய வீட்டில் விளக்கு வைப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கில்லை. பெரிய வீட்டையண்டி அவரின் பழைய வீடு, மண்ணால் பூசிய வீடு; ஒலையால் வேய்ந்தது. அவர்கள் அந்த வீட்டில் குடியிருக்கிறார்கள்.
காகங்கள் மரக்கிளைகளில் ஏறி, கோழிகள் கூடுதேடி ஓடி, ஆடுகள் பட்டிகளுக்குள் அடைபடும் நேரம். "அவர் கள் அந்தப் பெண்ணுடன் அந்த வீட்டுக்குவந்தார்கள். உலகம் அவசரமாக இரவுப் போர்வையை இழுத்து முடிக் கொண்டிருந்தது.
"யாரோ உளவு பார்க்க வந்த பெண், என்ன துணிவு” குட்டையன் கிணற்றில் நீர் எடுக்கப் போன வீட்டுக் காரரிடம் சொன்னான். அவன் குரலில் வெறுப்பு, விஷமம், குரோதம் அவர் மெளனமாகத் தலையாட்டிக் கொண்டார். இப்போதெல்லாம் மெளனம் ஒரு சிறந்த ஆயுதம், யாரும் வெல்ல முடியாது. இறப்பு, பிறப்பு, எல்லாம் மெளனங்களால், சோடிக்கப்பட்ட உலகம் அது. மெளனம் உடைந்தது. அழுகை பிளந்தது. கொஞ்ச நேரத் தில் அந்தப் பெண்ணின் அலறல் குரல் கேட்டது. இப்படி எத்தனையோ அலறல் குரல்களை அந்த வீட்டுக்காரரும் போலியோ வந்து படுத்திருக்கும் பெண்ணும் கேட்டிருக் கிறார்கள். மகன்கள் இருவரும் இறந்த பின் அந்த வீட்டுத் தாய்க்கு எதுவும் காதில் ஏறாது. யார் அழுதாலும் அவள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் தோன்றாது.
தாங்கள் ஒரு காலத்தில் பூசையறைகளாகப் பாவித்த அறையிலிருந்து தான் அந்தக் குரல்கள் வருகின்றன என்று தெரியும். கடைசி மகனுக்கு எட்டு வயது. உரல் வைத்து ஏறி நின்று ஜன்னலால் என்ன நடக்கிறது என்று பார்க்கத் தயங்காத வயது.
ஊர் உறங்கும் நேரத்தில் அந்தப் பெண்ணின் முனகல் கேட்டுக் கொண்டிருந்தது. பகலில் கேட்ட அவள் சிரிப்புக் கும் இரவைத் துளைக்கும் இந்த முனகல்களுக்கும் ஒரு நூறாண்டு வித்தியாசம். வானத்தில் முழு நிலா இந்தக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 163
கொடுமையைப் பார்க்க விரும்பாமல் முகில் தேடி மறைய விரைந்தது. மரங்கள் சிலிர்த்துக் கொண்டன. வாயு பகவான் எரிச்சல்பட்டான்.
மாமரத்தில் ஆந்தைகள் சிறகடித்துக் கொண்டன. வீட்டுக்காரர் கிணற்றடிக்குப் போனார். தன்னையறியாமல் அவர் பார்வை அவளுடைய பூசையறைப் பக்கம் திரும்பியது. ஒரு காலத்தில் கணேசரும், லட்சுமியும், சரஸ்வதியும் குடியிருந்த அறையில் அந்தக் குட்டையனும் இளம் பெண்ணும் அகோர கோபத்துடன் காணப்பட்
LITET.
சுவரில் இரத்தக் கறைகள் தெரிந்தன. மூலையில் அந்தப் பெண் முகம் வீங்கி இரத்தம் வழியக் கிடந்தாள். ஒரு நிமி டம் தான் பார்த்திருப்பார். வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. வியர்வை குப்பென்று வந்தது. நேற்றைய பெண் இன்றைய தசைக் குவியலாக இரத்தத்தால் மூடப்பட்டுத் தெரிந்தாள். மனைவி இவரைக் கேள்விக் குறியுடன் பார்த் தாள். "யாரோ உளவு பார்க்க வந்தாளாம் உண்மையறிய அடிக்கினம்" அவர் பாயில் தலையணையைத் தட்டிப் போட்டுக் கொண்டார். உறக்கமோ, விழிப்போ, கனவோ ஏதோவெல்லாம் அவரைச் சுற்றிக் கொண்டன.
ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தார். அவர்கள் எதையோ சாக்கில் போட்டுத் தூக்கிக் கொண்டு போனார்கள். அவர்களுக்கு ட்ரக்டர் உண்டு. வண்டில்கள் பல ஒடும். ஏதோ ஒன்றில் அந்த உடம்பு ஏற்றப்படும். நெல்லும், புல்லும், விறகும், குப்பையும் ஏற்றப்படுவது போல் உயிரற்ற உடம்புகளும் ஏற்றப்படும்.
விடிந்தது.
எட்டு வயது மகள் கடவுள் படங்களுக்கு வைக்க மல்லிகைப் பூ கொய்து கொண்டிருந்தாள். தாய் போலியோ மகளுக்கு முகம் கழுவிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களின் பெரிய வீட்டை அந்தக் குட்டையன் கழுவிக் கொண்டிருந்தான். சிவப்பு நுரை வாசலாற் படிந்தது.

Page 85
164 X இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
புழுதியை இரத்தம் துவைத்து காட்டியது. பூசையறை கழுவப்படுகிறது. இன்னுமொரு பூசை’க்கு ஆயத்தம் நடககலாம.
மத்தியானம், நேற்றைய நேரம் ஒரு குடும்பம் ஆற்றைக் கடந்து ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு தாய் ஒரு கைக் குழந்தை அவள் இடுப்பில் அவளின் முந்தானை யைப் பிடித்துக் கொண்டு குழந்தைகள் ஐந்தும் ஏழுமா யிருக்கலாம். இரண்டு ஆண் குழந்தைகள் அவர்கள் வெயி லில் நடந்து வந்த களைப்பில் சிணுங்கிக் கொண்டிருந்தார்
S6.
மாமர நிழலிற் படுத்திருந்த கிழவனை அவள் மலர்ந்த முகத்துடன் அணுகினாள். கிழவன் எதிர்பார்த்த கேள் வியை அவள் கேட்கிறாள். "ஐயா நேற்று இந்தப் பக்கம் ஒரு வயசுபோன பொம்புள வந்தாங்களா” அவள் குரலில் ஏக்கம். தொலைந்து போன 'பொருளைத் தேடும் தவிப்பு.
கிழவன் வெறுமையாகப் பார்த்தான். "ஆஸ்பத்திரியடி யில் பஸ்ஸால இறங்கி ஆற்றைக் கடந்து வந்ததாக ஆஸ்பத் திரிக் கடையில் சொன்னாங்க” அந்தப் பையன்கள் கண் களில் நீர் படிந்தது. நேற்று வந்தவர்கள் நடந்த பாதையது.
"நான் காணல்ல” கிழவன் சூனியத்தைப் பார்த்துச் சொன்னான். "ஐயா நல்லா யோசிச்சுப் பாருங்க. ஒரு பைத்தியம் எப்போதும் சிரிச்சுக் கொண்டு திரிவா, பாதை தவறி இந்தப் பக்கம் தான் வந்தாங்க” மகள் நம்பிக்கையான மறுமொழிக்குத் துடிப்பது தெளிவாகத் தெரிந்தது.
கிழவன் தலையாட்டினான். தனக்குத் தெரியாதாம். கடையில போய் விசாரிக்கச் சொல்லிக் கிழவன் அனுப் பினான். “எப்போதும் யாரையும் பார்க்கச் சிரிச்சுக் கொண்டிருக்கும் அந்தப் பைத்தியம் என் புருஷனின் தாயுங்க. தமிழ் தெரியாது. நான் முடிச்சிருக்கிறது சிங்கள ஆளுங்க. “அவள் சொல்லிக் கொண்டிருந்தது யாருக்குக் கேட்டும் என்ன பிடியோசனம். சொறிநாய் சோகத்தில் ஊழையிட்டது! -
சக்தி நோர்வே 99

12. யாழ்ப்பாணத்து டொக்டர்
A. ங்கிலேயர்களையும் நம்பமுடியாது. அவர்கள் சுவாத்தியத்தையும் நம்பமுடியாது’ வாய்விட்டுத் திட்டிக் கொள்கிறேன், மப்பும் மந்தாரமுமாய் இருக்கும் வானத் தைப் பார்த்து. மார்கழி மாதத்தில் எப்படி வெயிலை எதிர் பார்ப்பது இங்கிலாந்தில்? ஜன்னல் கண்ணாடிக்குள்ளால் ஊடுருவி உடம்பைத் துளைக்கும் குளிர்பட, ஜன்னல் சேலையைப் பிடித்திழுத்த கையை எடுக்கிறேன். லைப் ரரிக்கு போக வேண்டும். போகாமல் விட்டால் புத்தகங் களுக்குத் தடைக்காசு கொட்டி அழவேண்டும். மழையோ பனியோ கட்டாயம் லைப்ரரிப் புத்தகங்கள் கொடுக்க வேண்டும். ஒவர்க் கோட்டை மாட்டிக்கொண்டு படியில் இறங்கும் போது, சினேகிதி ஸேரா சிம்ஸன் லைப்ரரிக்குப் போகும்போது தன்னை வந்து பார்க்கச் சொன்னது ஞாபகம் வருகிறது.
ஸேரா சிம்ஸனின் வீடு லைப்ரரிக்குப் பக்கத்தில், ஸேரா வைப் பார்க்கப்போவதில் நட்டம் ஒன்றுமில்லை. அவளு டன் அலட்டிக் கொண்டிருப்பதில்தான் நட்டம். ஒரு அரை நாள் அப்படியே போய் விடும்.
ஸேராவைப் பற்றிய யோசனை வந்ததும், ஸேரா தன் வீட்டிற்கு அருகில் குடிவந்திருக்கும் இலங்கை ஆட்களைப் பற்றிச் சொன்னதும் ஞாபகம் வருகிறது. என்னை அறிமுகம் செய்து வைக்க வேண்டுமாம். குடிவந்த ஆட்கள் கேட்டார்களாம், "ஹார்ப்பென்டனில் யாரும் இலங்கை யாட்கள் இருக்கிறார்களோ?” என்று. ஹார்ப்பென்டன் என்ன, உலகத்தின் கடைசிக் கோடியிலும் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள், இருப்பார்கள் என்று சொல்லிச்

Page 86
166 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
சிரித்தேன். ஹார்ப்பென்டன் என்ற சிறு நகர் உலகப் பிரசித்தி பெற்ற பேர்னாட்ஷோ வாழ்ந்த இடம் என்று யாருக்கும் தெரியாது? பெருமையுடன் நிமிர்ந்து சுற்றாட லைப் பார்க்கிறேன். எழுந்து மேதை பேர்னாட்ஷோ இந்த ரோட்டில் எத்தனையோ தரம் நடந்து போய் இருக்கலாம். என் கற்பனை ஒரு வினாடியில் கலைகிறது, தூரத்தில் வரும் பிரின்ஸஸ் காரைக் கண்டதும்.
றோட்டில் இறங்கி நூறு யார் போகவில்லை, ஸேரா வின் பிரின்ஸஸ் கார் பேய் வேகத்தில் வருகிறது. ஹேரா கார் ஒட்டும் விதத்தில் மென்மையான பிரின்ஸஸ் கார் இருவருடமும் தாக்குப் பிடிக்காது என்று அவள் கணவர் ஒப்பாரி வைக்காத குறையாகச் சொன்னது ஞாபகம் வந்தது, அவள் வரும் வேகத்தைப் பார்த்து. புதுக்காரை இப்படியா ஒட்டுவது?
"கெட் இன்” முன் கதவுகளைத் திறந்துவிட்டு இறங்கி டிக்கியைத் திறக்கிறாள். மகனின் தள்ளுவண்டியை வைக்க, இனி ஸேராவிடமிருந்து தப்பிய மாதிரித்தான்!
“எங்கே உம்மைக் காணோம் பல நாட்களாக?” ஸேரா கேட்கிறாள் காரை ஸ்ராட் பண்ணியபடி.
“வீட்டு வேலைகள்” என்று முணுமுணுக்கிறேன்.
“மாலா கேட்டாள் எப்போது நான் உன்னைக் கூட்டிக் கொண்டு வருவதாக” ஹேரா ரவுண்ட எபட்டில் திரும்பிக் கொண்டு சொன்னாள்.
“என்னைச் சந்திக்க வேணுமென்று அவ்வளவு ஆசை யென்றால் உம்முடன் வந்திருக்கலாமே!” எனது கேள்வி ஸேராவை யோசிக்கப் பண்ணியிருக்க வேண்டும்.
“உம், தானே வந்திருக்கலாமே" அவளும் சொல்கிறாள். நான் பெரிது நீ பெரிது என்று போட்டி போடும் இலங்கை யர்கள் நாங்கள். தானே ஏன் வலியப் போகவேண்டும் என்ற தலைக்கணம் பிடித்த பெண்ணாய் இருந்தால் நான் ஏன் போய் நேரத்தை வீணாக்க வேண்டும்?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 167
நான் அதைப்பற்றி ஸேராவிடம் கதைக்கவில்லை. அவ ளுக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். தான் இரு தமிழ் பெண்களை அறிமுகம் செய்து வைப்பதைப் பெரிய சேவை யாகக் கருதி என்னிடம் சொன்னாள். நான் ஸேரா விம்சனுக்காக என்றாலும் மாலாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து மண்டையைக் குழப்பிக் கொள்ளும் வழக்கம் எனக்குக் கிடையாது. யாரும் எப்படியுமிருக்க லாம். ஆனால் நாங்கள் விரும்புகிற விதத்தில் தான் எங்கள் அபிப்பிராயங்களை உண்டாக்கிக் கொள்கிறோம் என்பது என் நம்பிக்கை.
“மாலாவின் கணவர் இருக்கமாட்டார்” ஸேராகாரை நிறுத்தியபடி சொல்கிறாள். “உம்” என்கிறேன். மாலாவின் கணவர் டொக்டர் என்று ஸேரா சொல்லியிருக்கிறாள். மாலாவின் வீடும் ஸேராவின் வீடும் ஒரு பத்து அடி இடைவெளியில்தான் பிரிந்திருக்கிறது. மாலா இந்த வீட்டுக்கு வந்து இரு மாதத்துக்கிடையில் இங்கிலிஸ் பெண் ஸேராவும் இலங்கைப் பெண் மாலாவும் சிநேகிதமாய்ப் போனதுக்கு இந்தக் குறுகிய இடைவெளிதான் காரணமோ ?
கார் டிக்கியுள் இருந்த தள்ளுவண்டியை எடுத்துச் சின்ன மகனை இருத்தியபடி நிமிர்ந்து பார்க்கிறேன். ஸேரா மாலாவின் கதவு மணியை அமர்த்த அவள் வந்து கதவைத் திறக்கிறாள்.
‘மாலா'வாகத்தான் இருக்க வேண்டும். சுமார் இருபத்தி யெட்டு வயசு, ஜீன்சும் புல் ஒவரும் போட்டிருக்கிறாள். தலைமயிர் கழுத்து மட்டத்தில் வெட்டப்பட்டு நாகரீக மாய்ச் சுருட்டப்பட்டிருக்கிறது. மாலா ஸேராவிற்கு ஹலோ சொல்லிவிட்டு என்னைப் பார்க்கிறாள். தெரிந்தும் தெரியாது இரு பாவங்கள் கண்களில் பளிச்சிட்டு மறை கின்றன அவளுக்கு அருகில் போய் அவள் முகத்தையும், முகத்தில் பரவிக்கிடக்கும் புன்சிரிப்பையும் பார்த்ததும் சட்டென்று என் மனதில் யாருடைய ஞாபகமோ வந்து போகிறது.

Page 87
168 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
யாருடைய ஞாபகம்?
மாலாவை முன்பு எங்கோ பார்த்த ஞாபகம். எங்கேயாக இருக்கும்? யாழ்ப்பாணத்துப் பெரிய கடையில்? கொழும் புக் கடைத் தெருக்களிலா? திருகோணமலைக் கோணேசர் கோவில் திருவிழாக் கூட்டத்தில்? மீன்பாடும் தேன் நாடு மட்டக்களப்பு வாவியருகில்?
அவள் என்னைப் பார்த்தும் ஹலோ சொல்கிறாள். நானும் ஹலோ சொல்கிறேன். ஸேரா எங்களை முழுப் பெயரும் சொல்லாமல் அறிமுகம் செய்துவைக்கிறாள். “மாலதி நடேசன் என் பெயர்” மாலதி ஸேராவைப் பார்த்து சிரித்தபடி சொல்கிறாள். நானும் என் முழுப் பெயரையும் சொல்கிறேன். மாலதி முன் அறையைத் திறந்து விடுகிறாள். வெளியில் மழையும் குளிர் காற்றும். நாங்கள் முன் அறைக்குப் போகிறோம். பார்த்தவுடன் தெரி கிறது. பணக்காரத்தோற்றம். அக்ஸ் மினிஸ்டர் காப்பெட், அதற்கு மாட்ச் பண்ண சுவர்ப் பேப்பர். அதன் அழகை மிகைப்படுத்தும் கான்ஸ்டபிள் ஓவியங்கள். எனது மெல்லிய பார்வை தன் அலங்காரத்தை எடை போடுகின் றது என்று மாலதி கண்டுபிடித்திருக்க வேண்டும்.
“இன்னும் சரியாக "பேர்ணிஷ்' பண்ணவில்லை” என்கிறாள். குரலில் பெருமை.
அரைகுறை அலங்காரம் இப்படியென்றால் முழுதும் முடிய எப்படி இருக்கும்?
அவள் கணவன் டொக்டர் என்று ஸேரா சொன்னது ஞாபகம் வருகிறது. லண்டனில் டொக்டர்கள் இப்படி வசதியாக இருப்பதில் எனக்கு என்ன ஆச்சரியம் வர வேண்டும்? மாலதியும் நானும் எப்படிப் பேச்சை ஆரம் பிப்பது என்று யோசிப்பது ஸேராவிற்குப் புரிந்திருக்க வேண்டும். “கெளரிக்கு நிறைய சொந்தக்காரர்கள் லண்ட னில், மாலதி என்னென்று தப்பிப் போகிறாள் என்று தெரியவில்லை" அவள் பேச்சு இருவரையும் சிரிக்கப்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் * 169
பண்ணுகிறது. இலங்கையர்கள் என்றால் ஒருவருக்கொரு வர் சொந்தமாக இருக்க வேண்டுமா?
"நீங்கள் எந்த ஊர்?” மாலதி என்னைக் கேட்கிறாள். மறுமொழி பெரிது. பிறந்த ஊரா? திருமணம் செய்து சீவித்த இடமா? லண்டன் வரமுதல் வாழ்ந்த இடமா? என்ன இருந்தாலும் பிறந்த இடம் தான் சொந்த இடம். “மட்டக்களப்பு” என்கிறேன்.
"ஓ! மட்டக் களப்பா, எந்த கல்லூரியில் படித்தீர்கள் ?” அவள் வியப்பில் தெரிகிறது அவளுக்கும் மட்டக்களப்புக் கும் மட்டக்களப்புக் கல்லூரிகளுக்கும் தொடர்பு இருக் கிறது என்று சொல்லலாமா நான் எந்தக் கல்லூரியிலும் படிக்கவில்லை என்று? வெறும் தமிழ்ப்பாடசாலைப் படிப் புடன் லண்டனில் வாழ்ந்து வேலை செய்கிறேன் என்பது ஏன் கனபேருக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.
நான் மறுமொழி சொல்ல முதல் ஒரு சில கல்லூரி களின் பெயர்கள் அடிபடுகின்றன. நான் அவள் லிஸ்ட் டைக் கட்பண்ணி “நான் மட்டகளப்பு ரவுணில் படிக்க வில்லை” என்கிறேன். ஒரு சிறு ஏமாற்றம் அவள் முகத்தில். தான் படித்த கல்லூரியின் பெயரை முணுமுணுக்கிறாள். என் மைத்துணி அந்தக் கல்லூரியில் தான் படித்தாள் என்று சொல்ல வாயெடுத்த நான் "புளுகுகிறேன்' என்று மாலதி நினைத்தாலும் எனப் பேசாமல் இருக்கிறேன்.
99
"நாங்கள் கன காலம் மட்டக்களப்பில் இருந்தோம். மாலதி சொல்கிறாள். எங்கேயோ பார்த்த ஞாபகம் என்பது வெறும் பிரமையில்லை என்பது தெரியத் தொடங்குகிறது.
“என் தகப்பன் டொக்டராய் இருந்தார்” எங்கே டொக்ட ராய் இருந்தார் என்று ஊரின் பெயரும் சொல்கிறாள். என் இரத்தம் உறைந்த உணர்ச்சி ஒரு நிமிடம். எட்டு வயதுச் சிறுமிகளாய் இருவரும் ஒரு காலத்தில் அறிமுக மாக இருந்தோம் என்பதை அவள் மறந்து விட்டாள்; நான் மறந்து விட்டது போல் என்பது நிச்சயம். அல்லது அவள் தகப்பன் டொக்டராய் இருந்த குக்கிராமத்தில்

Page 88
170 - இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இருந்து ஒரு பெண் லண்டனுக்கு வந்திருக்கிறாள் என்று அவள் கனவிலும் எதிர்பாராமல் இருந்திருக்கலாம்.
“எவ்வளவு காலமாய் லண்டனில் இருக்கிறீர்கள் ?” அவள் தன் குசினிக்குப் போனபடி கேட்கிறாள்.
“பத்து வருடங்கள்’ நான் மேசையில் கிடந்த 'ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்தைக் கையில் எடுத்த படி சொல்கிறேன். ஸேரா வீட்டில் ரெலிபோன் அடிப்பது கேட்கிறது.
“எக்ஸ்கியூஸ் மீ” சொல்லிவிட்டு ஸேரா விழுந்தடித்து ஓடினாள். *
“உங்களுக்குக் குளிர் பழகிப் போயிருக்கும்.” புல் ஒவரின் கொலரையிழுத்துக் கழுத்தை மூடிக் கொண்டு அவள் கோப்பியுடன் உட்காருகிறாள். நெஸ்கபே கோப்பியின் மணம் மூக்கில் அடிக்கிறது.
வெள்ளைக்காரருடன் வெறும் சுவாத்தியத்தையும், குளிரையும் வெய்யிலையும் கதைத்து அலுத்துப் போன என் பத்து வருடசிவியம் இலங்கைப் பெண்ணுடனும் அதே மாதிரி வெற்றுச் சம்பாஷணைகளுடன் தொடரத் தயாரில்லை.
இனி என்ன கேட்பாள்? எத்தனை குழந்தைகள்? அவர் களுக்கு எத்தனை வயது? என்ன படிக்கிறான் பெரிய பையன்? சின்ன பையன் குழப்படி இல்லையா?
திரும்பத் திரும்பச் சொல்லி அலுத்த மறுமொழிகள்.
‘லைப்ரரிக்கு போக வேணும்' நான் எனக்கே தெரியாத அவசரத்தில் எழும்புகிறேன். நான் அப்படித் திடீரென்று எழும்புவது அவளுக்கு ஆச்சரியம் உண்டாக்கியிருக்க வேண்டும். முகத்தில் அது தெரிகிறது. “வெளியில் மழை. ஸேரா காரில் கொண்டு விடலாமே!” அவள் சொல் கிறாள். நான் விழுந்தடித்து ஒடுவதைப் பார்க்க, மழை, மழை, மழை!

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 171
அவளுக்குச் சொல்லலாமா மழையும், மாலதியும், மட்டக்களப்பும் சில மனவேதனையான நினைவுகளைத் தூண்டிவிட்டன என்று.
“ஸேராவுக்குச் சொல்லுங்கள் நான் அவசரமாக லைப்ரரிக்குப் போகிறேன் என்று”
மாலதி "குட் பை” சொல்ல முதல் வாசலைத் தாண்டி இறங்கி விட்டேன். நினைவுகள்? மாலதியுடன் நின்று விட்டனவா?
எங்கள் ஊருக்குப் புதிதாய் வந்துசேர்ந்தார் அந்த டொக்டர். அப்போதிகரிகளுக்கும் டொக்டர்களுக்கும் அந்தக்காலத்தில் எங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இப்போதும் எல்லோருக்கும் தெரிகிறதோ தெரியாது) குடும்பத்துடன் வந்திருந்தார். டொக்டர்கள் கடவுளுக்கு அடுத்தபடி எங்கள் கிராமத்து மக்களுக்கு. காற்சட்டை போட்ட எல்லாருக்கும் சேர், 'ஐயா போட்டு ஊறிப்போன எங்கள் கிராமத்து மக்களின் பணிவு டொக்டர் சுந்தரலிங்கத்தைத் திடுக்கிடப் பண்ணியிருக்க வேண்டும். வந்த புதிதில் அவரது கடவுள் பக்தியும், தமிழ் பக்தியும் எங்கள் ஊர் மக்களின் நம்பிக்கையைக் கூட்டிவிட்டன. யாழ்ப்பாணத்து டொக்டர்கள் எங்கள் கிராமத்து ஆஸ்பத் திரியில் பெரும்பாலும் வருவார்கள். தாங்கள் ஏதோ அபூர்வ பிறவிகளாக நடப்பது எங்களுக்கும் சாதாரண மாகிவிட்டது. எங்களைவிடப் படித்தவர்கள். இன்னொரு பாஷை கூடக் கதைப்பவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத் தாருடன் தாஸ், பூஸ் என்று இங்கிலீஸ் கதைப்பதைக் கேட்க எங்கள் வாய்பிளக்கும். ஆச்சரியத்தில். டொக்டரின் சேவையின் காணிக்கையாக எங்கள் ஊர் ஏழைகளிட மிருந்து புது அரிசிப்பெட்டிகளும், கொத்தான சோளக் குலைகளும், முற்றிப் பழுத்த வாழைக்குலைகளும், கறுத்தக் கொழும்பான்களும் போய்ச் சேரும். ஏன் அவருக்குக் கவர்ன்மென்ட் சம்பளம் கிடைக்கிறது என்பதை யோசிக் காமல் விட்டார்கள். கிராமத்தார் என்று தெரியாது. மாலதி யும் தம்பிகளும் தாய் தகப்பனுடன் கோயிலுக்கு வரும்

Page 89
172 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
போது யார் மாலதியுடன் கதைப்பது என்பதில் எங்கள் தரவளிப்பெட்டைகளுக்குள் போட்டி உண்டாகும். மாலதியின் காஞ்சீபுரப்பட்டு பாவாடை கண்ணைப் பறித்தது ஞாபகம் இருக்கிறது. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் உள்ள டொக்டர் சுந்தரலிங்கம் ஒரு பெனிசிலின் ஊசிக்கு ஐந்து ரூபாய் இல்லாமல் விட்ட தில்லை. ஊசி போட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்ற நம்பிக்கையுள்ள ஏழைகள் பெனிசிலின் ஊசிக்கு இரண்டு மரக்கால் நெல்லுப்பெட்டி விலைப்பட்டு ஒரு கிழமை பட்டினியாய் இருப்பது, அவர் போன்ற புல்லுரு விகளுக்குத் தெரியாது என்பது எங்களுக்குத் தெரியாத அறியாமை. அவர் செல்வத்தையும் பெயரையும் உயர்த்தி யது. தமிழையும் கடவுளையும் ஏன் பயன்படுத்துகிறார் என்பதைத் தெரியாத அறியாமை. அந்த அறியாமையால். ஒருநாள் இருந்தாற்போல் மழை தூறத் தொடங்கியது. ஒழுங்கையில் கோடு கீறி மாங்கொட்டை விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை வர, பக்கத்தில் இலுப்பை மரப்பொந்துகளின் பக்கத்தில் ஒடி ஒளிந்து கொண்டோம். அப்போது தான் ஒழுங்கைக்கு அப்பால் தங்கம்மா இடுப்பைப் பிடித்துக் கொண்டு சங்கடப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த தம்பிகள் வீட்டிற்கு ஒடி விட்டார்கள்.
நான் தங்கம்மாவின் வீட்டுக்குள் ஒடிப்போனேன். தங்கம்மா முகத்தைச் சுளித்தபடி திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். பெரிய வயிறு எத்தனை மாதமோ எனக்கு ஞாபகமில்லை. அவள் புருஷன் வேலைக்கு போயி ருக்க வேண்டும். தலைப்பிள்ளை பெத்தாலும் பெத்தாள், தலைப்புள்ளைக்காறி செத்தாலும் செத்தாள்’ என்று என் பெத்தா (பாட்டி) அடிக்கடி சொல்லுவாள்.
“என்ன?” என்று கேட்டேன். பெரிய மூச்சுவிட்டபடி சொன்னாள், ‘என் அம்மா, பெத்தாக்களுக்கு சொல்ல ஏலுமா' என்று. அம்மா, பெத்தாக்களுக்குச் சொல்ல ஒடிக் கொண்டிருக்கும் போது வழியில் கண்ட கிழங்களுக்கும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ゃ 173
நான் அலட்டியிருக்க வேண்டும். திரும்ப வீட்டிற்கு வரும்போது ஊரில் உள்ள கிழவிகள் எல்லாம் தங்கம்மா வீட்டுத் திண்ணையில் நிறைந்திருந்தனர். தங்கமாவைக் காணவில்லை. கடைசியாகத் தங்கம்மாவைப் பிரசவ வேதனையுடன் கண்ட ஞாபகம் இன்னும் பசுமையாக இருக்கிறது. தங்கம்மா அறைக்குள் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். கிழவிகள் முக்கச் சொல்வது கேட்டது. ஊர் மருத்துவச்சி உள்ளுக்கும் வெளிக்குமாகப் பொறுமையின்றி நடந்து கொண்டு இருந்தாள். மத்தியானம் இரண்டு மணி மழையிருளில் இரவு போல் தெரிந்தது.
நான் சின்னப் பெட்டையாம் கலைத்து விட்டார்கள். கிழவிகள் எல்லாம் அறைக்குள் போனபோது திறப்பு ஒட்டையால் பார்த்தேன். தங்கம்மாவின் பெரிய முக்கல் கேட்டது. தங்கம்மாவைச் சுற்றி கிழவிகள் உருவம் தெரிந்தது. “முக்கு மகளே முக்கு” என்று அவர்கள் உற்சாகப்படுத்துவது கேட்டது.
என்ன நடக்கிறது என்று தெரியாத வயது என்றாலும் மழையும் இடியும் மின்னலும் தந்த பயந்துடன் விறாந்தை மூலையில் குந்திக் கொண்டிருந்தேன். நேரம் போய்க் கொண்டிருந்தது.
தங்கம்மாவின் கணவன் வரவில்லை. ஒரு சில கிழவிகள் திண்ணையில் வந்து கதைத்துக் கொண்டார்கள். குசுகுசு என்று அவர்களின் முகம் பேயடித்தது போல் இருந்தது.
'பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டேன்’
ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவது புத்திசாலித்தனம் என்று சிலர் கதைத்தனர்.
இந்த மழையில் என்னவென்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவது? மாட்டு வண்டி கிரவல் ஹோட்டில் புதையப்போகிறது. சிலர் அப்படிச் சொன்னார்கள். ரவுணுக்குப்போய் கார் பிடிக்க யோசித்தார்கள். அதற்கிடை யில் தங்கம்மாவின் கணவன் தோய்ந்து நனைந்து வந்து சேர்ந்தான். வீட்டில் நடக்கும் காரியங்கள் உடனே

Page 90
174ぐ இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தெரிந்திருக்க வேண்டும். அவர் முகத்தில் அப்படியொரு பயத்தை நான் கண்டதில்லை. சைக்கிளைத்தள்ளிக் கொண்டு ஒடுவது தெரிந்தது. நேரம் ஓடியது.
அறையுள் முக்கலும் முனகலும் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைந்தது. என்ன நடக்கிறது?
கதவு ஒட்டையால் பார்க்கக்கூட முடியாது. கிழவிகள் எல்லாம் திண்ணையில் நிரம்பி வழிந்து கொண்டிருந் தார்கள். போதாக்குறைக்கு தங்கம்மாவின் சொந்தக்காரர் பலர் இலுப்பை மரத்து அடியில் நிறைந்து நின்றார்கள். மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. பலர் தலையில் தளபத்துப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் குடை ஒன்றுமில்லாதவர் சுளகைப் பிடித்திருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சோகம், பயம், பரபரப்பு. கிட்டத் தட்ட ஊரே தங்கம்மாவின் வீட்டைச் சுற்றி நிற்பது போல் இருந்தது.
“கார் கிடைக்கவில்லை, ஆனால் டொக்டரிடம் நேரே போனேன்.” தங்கம்மாவின் கணவன் தயங்கியபடி சொன்னான்.
“டொக்டர் எங்கே?' எல்லோர் முகத்திலும் ஆச்சரியக்குறி.
“தனக்கு வேலையாம்” அவன் கண்களில் நீர் முட்டச் சொன்னான். தலைப்பிள்ளை, சாகத்துடிக்கிறாள். அதை விடப் பெரிய வேலை என்ன டொக்டருக்கு?
வேலை என்று சாக்குப் போக்குச் சொன்ன நேரமெல் லாம் ஒரு ஐந்து ரூபா தன் வலிமையைக் காட்டியதை உணர அப்பாவிக் கிராமத்தவருக்கு அரை மணித்தியாலம் எடுத்தது. ஐந்து ரூபா !
தங்கம்மாவின் கணவன் விறாந்தையில் காத்திருக்க ஒரு கிழவி உள்ளேபோய் தங்கம் மாவின் மூன்றுகல் தோட்டு டன் வெளியே வர, இன்னொரு கிழவி தன் முடிச்சில் கசங்கி மடங்கிப்போய் இருந்த பத்து ரூபா நோட்டுகளை எடுத்து. ஒரு உயிரின் ஜனனத்துக்கும், ஒரு உயிரின்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம * 175
மரணத்துக்கும் இடையில் அந்த மூன்று கல் தோடு கிழவியின் அழுக்கு முடிச்சின் கசங்கிய நோட்டுக்கள் ஒரு டொக்டரின் பண வெறி. எனக்கு விளங்காத வயது விளங் கியபோது சுரண்டல்கள் ஒழியாதா என்ற பெருமூச்சு. டொக்டர் தன் பளபளக்கும் காரில் வந்து இறங்கினார். மழையிருட்டு, தன் டோர்ச்சுடன் தங்கம்மாவிடம் போனார். ஊரே திரண்டு நின்றது. மழையிருட்டையும் பொருட்படுத்தாது. நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. என்ன நடக்கிறது? டொக்டர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தார். தங்கம்மாவின் தாயின் அலறல் என் எலும்புகளையும் உலுக்கின. மழையை, இடியை மின்னலை மீறிக்கொண்டு ஊரே அழுதது. துடித்தது. அலறல் வானைப் பிளந்தது.
அடுத்தநாள் மழை விட்டு விட்டது. தங்கம்மா வாசல் மழையில் கழுவப்பட்டு வெள்ளையாக இருந்தது. ஆண்கள் பாடை கட்ட, பெண்கள் கட்டியழ.
'ரவுண்ட் எபட்டில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்க்க பிரேக் பிடித்திருக்க வேண்டும். பேரொலி. தள்ளுவண்டியில் இருந்த அருணன் பயந்து அம்மா என்று அலறுகிறாள். என் நினைவு கலைய என் குழந்தையைக் குனிந்து அணைத்துக் கொள்கிறேன். வீடு போய்ச் சேர்வதற்கிடையில் நானும் குழந்தையும் நனைந்து சோர்ந்து விடுகிறோம். லைப்ரரிக்குப் போகவில்லை. ஒரு நல்ல புத்தகம் எடுத்து வாசிக்கும் நிலையில் இல்லை IOGTID.
“ஏன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டாய்” ஸேராவின் குரலில் கோபம் வெடிக்கிறது.
தங்கம்மாவின் கதையை எழுதப்போகிறேன். என்று சொன்னால். அல்லது நாங்கள் இலங்கையர்கள், தமி ழர்கள் என்று சொன்னாலும் எங்களுக்குள் எத்தனையோ பேதங்கள்; வர்க்கத்தால், பணத்தால், இருக்குமிடங்களால் என்பதைச் சொன்னால், மாலதியையும் என்னையும் ஸேரா புரிந்து கொள்வாளா?
கணையாழி

Page 91
13. ஒரு முற்போக்குவாதி காதலிக்கிறான்
டெலிபோன் மணியடித்தது. நித்தியா படுக்கையின் மறுபக்கத்திலிருந்து அலாம் குளோக்கைப் பார்த்தாள்.
அதிகாலை ஒன்றரை மணி போன் பண்ணுவது யாரென்று தெரியும். அசையாமல் படுத்திருந்தாள்.
ஆறுதரம் மணியடித்தபின் ஆன்ஸர் மெஷினுக்கு டெலிபோன் மேஸேச் போகும்.
கொஞ்ச நேரத்தின் பின் ஆன்ஸர் போனைப் போட்டுக் கேட்டாள். குமார் ஏதும் பண உதவி கேட்க வேறு ஏதோ காரணங்களைச் சொல்லியிவனைக் குழப்புவான் என்று அவளுக்குத் தெரியும்.
“என்ன இரண்டு மூணு நாளா ஒரு மூச்சையும் காணல்ல. என்னில கோபமா நான் கேட்டது பிடிக்காட்டா நேரில அதைப்பற்றிச் சொல்லலாம் தானே” அவன் குரலில் ஆத்திரமா ஆதங்கமா தெரியவில்லை. யோசித்துப் பார்க்க எரிச்சலாக இருந்தது.
அதே நேரம் கீழ் வீட்டில் ஏதோ பட்டென்று விழுந்த சத்தம்! பெரிய சத்தம். அவளை மட்டுமல்ல அடுத்த வீட்டுக்காரர்களையும் குழப்பியிருக்கும். நித்தியா திடுக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 177
கிட்டு எழுந்தாள் என்னவாயிருக்கும்? யாரும் காயப்பட் டிருப்பார்களா?
மேல் வீட்டிலும் கீழ்வீட்டிலுமுள்ளவர்கள் எல்லோரும் பார்ட்டிக்குப் போய் விட்டார்கள் என்று நினைத்தாள்.
இப்போது என்னவென்றால். ஐயைய்யோ யாரும் திருடனாக இருந்தால்..? பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. காதைத் தீட்டிக் கொண்டு கூர்ந்து கேட்டாள். கீழ் வீட்டில் யாரோ நடமாடும் சத்தம் திருடனாக இருக்க முடியாது. ஏனென்றால் கீழ் வீட்டுப் பூனையின் பெயரைச் சொல்லி ஏதோ பேச்சுக் கேட்டது.
என்ன சத்தம் ? ஏதோ விழுந்துடைந்து யாருக்கும் காயமா? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீழேயிறங்கினாள். இவள் கீழே வரவும் கீழ் வீட்டுக்காரன் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. “உன் நித்திரையைக் குழப்பியதற்கு மன்னித்துக் கொள்:”
மூன்று மாதங்களின் பின். "அன்றைக்கு நான் தவறுதலாக வைன் போகத் தலை யுடைத்துக் கொண்டது மிகவும் அதிர்ஷ்டமான காரியம் என்று நினைக்கிறேன்” மார்ட்டின் தனக்கு முன்னால் தர்ம சங்கடத்துடன் அங்குமிங்கும் பார்த்தபடியிருக்கும் நித்யாவிடம் சொன்னான்.
தேம்ஸ் நதி ஒரத்தில் உள்ள ஹெஸ்ட்ரோட்டில் மிக வும் அமைதியான அந்த நேரத்தில் மோஸாட்டின் பியா னோவின் இசையும், ஜன்னலுக்கப்பால் தேம்ஸ் நதியில் தெறித்து விழும் நிலவு வெளிச்சமும் ரம்மியமாக இருந்தது.
இ.கா.-12

Page 92
178ぐ இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அவள் பார்வை தேம்ஸ் நதிக் கரையில் அக்கரையில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் மிலேனியம் டோமில் பதிந்திருந்தது.
“எலிசபெத்துக்கு நீ என்னுடன் சாப்பிட வரச் சம்மதித் தது ரொம்பவும் ஆச்சரியம் போலிருக்கிறது.” மார்ட்டின் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
கொழும்பில் கோட்டையில் ஒரு சாப்பாட்டுக் கடை யில் கடைசியாகக் குமாரைச் சந்தித்தது ஏனோ ஞாபகம் வந்தது.
அவள் அழுது அழுது மூக்கைச் சீறிக் கொண்டிருந்தாள். அது பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்தது. அவளுக்கு அப்போது இருபத்தைந்து வயது.
"உனக்கு விருப்பமில்லாவிட்டால் நான் கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லேன்” அவன் முணுமுணுத் தான்.
"அப்படியே செய்யுங்கள்” அன்று அவள் மனம் வந்தா லும் அடக்கிக் கொண்டு சொன்னாள் "ஐயையோ எனக் காக உங்க தங்கச்சியின் வாழ்க்கையில் பிரச்சினை வர வேண்டாம்.
பாதிப் பொய், பாதியுண்மை. ஆழ்கடல் வற்றினாலும் எங்கள் அன்புக் கடல் வற்றாது என்று ஏதோவெல்லாம் கடந்து ஐந்து வருடமாக எழுதிக் கொண்டவர்கள், யார் தடுத்தாலும் எங்கள் புனித காதல் குலையாது என்று ஆத்மீகமாய்ச் சொல்லிக் கொண்டவர் கள் இன்று அவனின் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
யார் தடுத்தாலும் உன்னைக் கைவிடேன் என்று உறுதி தந்தவன் இன்று தயவு செய்து மன்னித்து விடு, தங்கச்சிக் கும் எனக்கும் மாற்றுக் கல்யாணம் பேசி வருகிறார்கள், நான் மறுத்தால் என் தங்கை விரும்பும் கணவனை அவள் அடைய முடியாது.”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - & 179
"அப்படி என்றால் என் கதி” என்று அலற நினைத்தவள் அவன் தங்கையின் பெயரை அழுத்தம் திருத்தமாகச் சொன்னது ஒரு தவிப்பையுமடக்கி விட்டது.
“நிலவுத் துண்டுகளும், லைட்டின் பிம்பங்களும் அந்த நீரோட்டத்தில் எப்படித் தெரிகிறது. பார்த்தாயா? இயற்கை யின் வெளிச்சமும் செயற்கையின் அற்புதமும் ஒன்றாய்ச் சேர்ந்து என்ன அழகான பிரமையையுண்டாக்குகிறது”
மார்ட்டின் இப்படிச் சொன்னபோது அவள் கொழும் பிலிருந்து நினைவை லண்டனுக்கு இழுத்தாள்.
“உன்னை முதற்தரம் எலிசபெத்துடன் சந்தித்த போது." மார்ட்டின் மிகுதியைச் சொல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ஸார், சாப்பாடு ஒர்டர் பண்ண ரெடியா” வெயிட்டர் பணிவுடன் கேட்டான்.
"ஆமாம்.” மார்ட்டின் மெனுவைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
y
“வெயிடேரியன் டிஷ்." அவள் முணுமுணுத்தபடி இன்னும் மெனுவில் பார்வையைப் பதித்தபடியிருந்தாள்.
வெயிட்டர் பொறுமையுடன் காத்திருந்தான். அவன் வதக்கிய மாட்டிறைச்சி, பொரித்த உருளைக் கிழங்கு, அரைகுறையாக வெந்த மரக்கறிகள், ஒர்டர் பண்ண அவள் கத்தரிக்காயும் சீஸ்ஸூம் போட்டுச் செய்த முஸாக்கா ஒடர் பண்ணினான்.
"நீ வாழ்க்கை முழுக்க வெஜிடேரியனா” மார்ட்டின் கேள்வி அவளையுலுக்கியது. 'குமார் பிறவிச் சைவம் அவனுக்காகத்தான் சைவ மானேன்' என்று அழ வேண்டும் போல் இருந்தது.
குமார் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. அவள் ன்னும் கன்னி, கத்தரிக்காய் முஸாக்கா’ சாப்பிடும்
வெஜிடேரியன்!

Page 93
180 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
“ஏன் என்னைச் சந்திக்க மாட்டாய்” என்று கேட்டுத் தொல்லை கொடுக்கிறான்.
பத்து வருடங்களுக்குப் பின் லண்டனில் சந்தித்ததும் பழைய ஞாபகங்கள் முள்ளாய்க் குத்தின.
சந்திரிகாவின் தளபதிகள் தமிழ்ப் பகுதிகளைச் செல் களாலும் குண்டுகளாலும் துளைத்துக் கொடுமை செய்ய உயிர் தப்பி ஓடிய லட்சக்கணக்கான தமிழ் உயிர்களில் அவளும் ஒருத்தி.
திருமணமாகி அவன் லண்டனுக்கு வந்த பின் காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி என்று மனதுக் குள் அழுதுகொண்டு ஒன்றிரண்டு வருடங்கள் பறந்தன.
“எப்படி முஸாக்கா.” கேட்டான்.
மார்ட்டின் அவளை பார்த்துக்
"கத்தரிக்காய்க் குழம்பு எனக்குப் பிடிக்கும், ஆனால் முஸாக்கா இப்படி ருசியாயிருக்கும் என்று இன்றுதான் தெரியும்.”
“எதையும் அனுபவித்தாற்தான் தனிப்பட்ட அனுபவம் வரும்” மார்ட்டின் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற் காகத்தான் சொன்னான் என்று அவள் தொனியிற் தென் பட்டது.
இவனுடன் சாப்பிட வந்தது குமாரின் கெஞ்சலுக்கும் அல்லது சாடையாகத் தென்படும் மிரட்டலுக்கும் பயந்தா என்று தெரியாது. இவன் ஆங்கிலேயன். விடயத்தை நேரே சொல்லிப் பழுகுபவன். எலிஸபெத் என்ற பெண்ணின் சினேகிதியாக நித்தியா அறிமுகப்படுத்தப்பட்டு எலிஸபெத் தின் வீட்டுக்கு குடியிருக்க வந்த போது மேல்மாடியில் இருக்கும் இரு ஆண்களையும் அறிமுகம் செய்து வைத்தபின் அவர்கள் இருவரும் ஹோமோ செக்சுவல்ஸ் என்று மெல்லமாகச் சொன்னாள் எலிஸபெத். கீழ்வீட்டிலிருக்கும் மார்டிடன் கல்யாணமாகாத யூனிவர்சிட்டி லெக்ஸரர் என்றும் சொன்னாள். நித்தியாவும் எலிஸபெத்தும் ஒரு சிறிய கொம்பனியில் வேலை செய்கிறார்கள். எலிஸபெத்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 181
நீண்ட நாள் அந்தக் கொம்பனியின் டைப்பிஸ்ட், நிர்வாகி, கணக்காளர் என்ற பல முகங்களில் வேலை செய்கிறாள். எப்படியும் தான் ஒரு தனிக் கொம்பனி தொடங்க வேண்டு மென்று அடிக்கடி சொல்வாள் எலிஸபெத்.
நித்தியா ரிஸ்ப்ஸனிஸ்ட்டா வேலைக்கு வந்தவள் சில கிழமைகளில் எலிஸபெத்தைச் சினேகிதம் பிடித்து விட்டாள்.
மாமா முறையான ஒருத்தரின் வீட்டிலிருந்து ரூட்டிங் நகரிலிருந்து ஹோபோர்ன் நகர் வருவது அதிகாலைக் கும்பலில் பெரிய கஷ்டம் தான்.
“வேண்டுமானால் என் பிளாட்டில் ஒரு அறை காலி யாக இருக்கிறது வந்து பார்”
வெள்ளைக்காரர்களுடன் வாழ்வதை நித்தியா எதிர் பார்க்கவில்லை. ஆனாலும் தலையிடிக்கும் பிரயாணத்தை விடப் புதிய இடம் பரவாயில்லை போலிருந்தது.
கீழ்வீட்டில் மார்டின்னும் இன்னொருத்தனும் இருந் தனர். மார்ட்டின் ஒரு கல்லூரி விரிவுரையாளன் என்று எலியபெத் அறிமுகப்படுத்தினாள்.
“ஹலோ, ஹவ் டு யு டு” என்பதற்கு அப்பால் எப்போதா வது மாடிப்படியால் வரும்போது ஒரு புன் சிரிப்பு, அல்லது குட்மோர்னிங் அல்லது குட் ஈவினிங்.
எலிஸபெத் வெளியில் போயிருந்த நேரம் மார்ட்டின் வைன் பாட்டிலை கைதவறிப் போட்டு உடைத்திருக்கா விட்டால் இவர்கள் இன்று இந்த றெஸ்ட் ரோரண்டுக்கு வந்திருக்க முடியாது.
கத்தரிக்காய் முஸாக்காச் சாப்பாடு நல்லதுதான். அவள் எதையோ யோசித்துக் கொண்டிருக்க அவன் எதையோ கேட்கிறான்.
இன்னும் சில நாட்கள் மார்ட்டின் எலிஸபெத் மற்றும் சிலரும் லேக் டிஸ்ரிக் போகிறார்களாம். நித்தியா வந்தால் சந்தோசமாக இருக்குமாம்.

Page 94
182 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
*列
"ஏன் கொஞ்ச நாளா சரியாகப் பேசாமலிருக்கிறாய் குமார் நேற்றும் கேட்டான்.
1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் பின் கொழும்பி லிருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று யாழ்ப்பாணம் போய் அங்கே ஒரு ரியுட்டரியிற் படிப்பிற்கும் போது நித்தியா குமாரைச் சந்தித்தாள்.
தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகப் போராடாவிட்டால் எங்களுக்கு விடிவுகாலம் இல்லை என்றான். எல்லோரும் என்று அவன் சொன்னபோது ஆண்கள் பெண்கள், படித் தோர், படியாதோர், முதியோர், இளைஞர் என்ற பேத மின்றிச் சொல்கிறான் என்று நினைத்துப் பெருமைப் பட்டாள்.
அவனுடன் சேர்ந்து சில கூட்டங்களுக்கும் போனாள் இன விடுதலையடைய முதல் எங்களுக்குள் நாங்கள் போட்டிருக்கும் அடிமைத்தளைகளை வெட்டியெறிய வேண்டும் என்று முழங்கினான்.
அவள் அவனின் ஆவேசப் பேச்சில் பரவசப்பட்டாள். பேச்சில் நியாமிருக்கிறது என்று நினைத்தாள். தமிழனின் விடுதலைக்கு எத்தனையோ இயக்கங்கள் உருவாகிவிட்டது. நித்தியாவின் தாய்க்கு இவள் குமாருடன் சேர்ந்து கூட்டம். ஆர்ப்பாட்டம் என்று திரிவது பிடிக்கவில்லை.
ஒருதரம் குமார் வீட்டுக்கு வந்த போது 'தம்பி எப்படித்தான் இருந்தாலும் ஒரு குமர்ப்பிள்ளை தனியாக ஒரு இளைஞனுடன் திரிந்தால் நாலு பேரும் நாலு விதமாகச் சொல்லுவினம்.”
அந்தத் தாயின் தவிப்பு அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும் "எங்கள் இருவருக்கும் எத்தனையோ விடயங் களில் ஒற்றுமையிருக்கிறது. எதிர்காலத்திலும் ஒன்றாய் வாழ நாம் இணைந்தால் அதைப் பெரிய பாக்கியமாகக் கருதுவேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் * 183
பண்ணைக் கடற்கரை தவழ்ந்து, முனியப்பர் கோயிலில் முடங்கிப் பதுங்கிய இளம் காற்று இவளைத் தடவி அவன் சொல்வது இனிமையாயில்லையா என்று கேட்பது போலிருந்தது.
ஒரு சில வருடங்களாகத் தெரிந்தவன். எதிர்காலத்தில் ஒன்றாக இணைவது பற்றியும் சொல்கிறான் என்று நினைத்து மகிழ்ந்தாள் நித்தியா.
அதைத் தாயிடமும் சொன்னான் குமார், நித்தியாவின் தாய் குமாரின் தாயைச் சந்தித்த போது, "என்ன? கவிழ்ந்து விட்ட மாடு மாதிரி ஊர் மேயுற உன்னுடைய மகளுக்கோ என் மகனைக் கேட்கிறாய்” குமாரின் தாய் நரம்பில்லா நாக்கால் நித்தாட்சண்யமின்றிக் கேட்ட கேள்வி நித்தியாவின் தாயைக் கூனிக் குறுகப் பண்ணிவிட்டது.
“குமார் உங்கள் தாய் இப்படிப் பேசியிருக்கக் கூடாது” கோபத்தையடக்கிக் கொண்டு நித்தியாவின் தாய் கூறினான்.
குமார் தலையைக் குனிந்து கொண்டான். தங்கைகளுக் காகத் தாய் தன்னை ஒரு மாற்றுச் சடங்குக்கு சரியெனச் சொல்லச் சொல்லிக் கேட்கிறாள் என்று தயக்கத்துடன் கூறினான்.
நித்தியா அழுவதைக் கூட வெட்கம் என எண்ணி னான். முற்போக்கு சொன்ன இவன் இப்படி ஒரு முழுப் பொய்யைச் சொல்வானா என்று அவள் அடிக்கடி யோசித்தாள்.
அவள் அறைக்குள் குறுகிப்போய் நாட்களைக் கழித்த போது புதுமனைவியுடன் லண்டன் வந்து விட்டான்.
இலங்கையிற் பிறந்த தமிழர் உயிர் தப்ப உலகின் பல பக்கங்களும் ஒடிய போது ஒரு மாமாவின் உதவியுடன் நித்தியா லண்டன் வந்து சேர்ந்தாள்.
அவன் இரு குழந்தைகளுக்கு தகப்பன் என்று கேள்விப்
Lu Lintair.

Page 95
184 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தற்செயலாக ஒரு நாள் யாரோ கல்யாணத்தில் சந்தித் துக் கொண்டார்கள்.
கல்யாண மண்டபத்தில் வானரங்களாய் ஒடித்திரியும் சில சிறுவர்களில் இருவரைக் காட்டித் தன் குழந்தைகள் என்று சொன்னான். இவனுக்கும் தனக்கும் பிறந்திருக்க வேண்டிய குழந்தைகள் என்று ஒரு நிமிடம் அவள் மனம் ஏங்கியது.
'உங்கள் மனைவி யார்’ அவள் கேட்கவில்லை. பட்டுச் சேலை மூட்டைகளாய் அல்லது அளவுக்கு மீறி அலங் கரிக்கப்பட்ட நத்தார் மரங்களாய் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருக்கும் பல அட்டியல் கனத்த பெண்களாக இருக்கும் என்று நினைத்தாள்.
எங்கேயிருக்கிறாய், எப்படியிருக்கிறாய் என்று அவன் பழைய இனிய குரலில் அவன் மனைவி பார்க்காத நேரம் கேட்ட போது முட்டாள்தனமாக அல்லது கெளரவத்திற் காக இவளது டெலிபோன் நம்பரைக் கொடுத்தாள்.
“என்ன நித்திரை கொள்ளாமல் லைட்டைப் போட்டுக் கொண்டு விடிய விடியக் கண்விழிப்பதான யோச னையோ?” எலிஸபெத் செட்டில் பார்த்த போது இவள் சிந்தனை கலைந்தது.
நித்தியாவின் தமக்கை இரண்டு குழந்தைகளுடன் சுமாராக வாழ்கிறாள். தம்பி கொம்பியூட்டரில் நல்ல கெட்டிக்காரன். எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். M
குடும்ப கஷ்டம் பற்றி குமார் இவளிடம் மட்டும் படிதமாகச் சொன்னபோது பழைய இனிய ஞாபகங்கள் தந்த வேதனையின் காரணத்தால் இவள் சேர்த்து வைத் திருந்த பணத்தில் கணிசமான பணத்தைக் கொடுத்தாள். நான் எப்படியும் திருப்பித் தருகிறேன் என்று அவன் சொல்லவுமில்லை, எப்படியும் தரப் பாருங்கள் என்று இவள் சொல்லவுமில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 185
ரொக்கமாய்க் கொடுத்த பணத்தின் ருசி மாத மாதம் இவள் கொடுப்பதாக எதிர்பார்த்தது என்று இவனுக்குப் புரிந்த போது தர்ம சங்கடமாக இருந்தது.
“யார் இந்த மனிதன்” எலிஸபெத் கேட்டாள்.
நித்தியாவால் பொய் சொல்ல முடியவில்லை. எலிஸ பெத் நேர்மையானவள்.
நித்தியா அவன் யார் என்று குமாரைப் பற்றிக் கூறிய தும் "உன்னை வைப்பாட்டியாக வைத்திருக்கும் யோச னையா அவனுக்கு” என்று எலிஸபெத் நேரடியாகக் கேட்டு விட்டாள்.
எலிஸபெத்தின் கேள்வியின் தாக்கத்தால் வெல வெலத்துப் போனாள் நித்தியா.
“பெண் உரிமை சமத்துவம் எல்லாம் சிலர் பேசுவது பெண்களைக் கட்டிலிற் பாவித்து முடியுமட்டும் தான்” எலிஸபெத் சீறினாள்.
"நேர்மையுள்ளவன் என்றால் உன்னை எப்போதோ திருமணம் செய்திருக்க வேண்டும்"
“என்ன செய்வது சூழ்நிலை அப்படியாக்கிவிட்டது” நித்தியா முணு முணுத்தாள்.
"உனது இஷ்டம்” எரிச்சலுடன் சொன்னாள் எலியபெத். எலிஸபெத். இப்போது தான் கல்யாணத்தைப் பற்றி யோசித்திருக்கலாம். தனக்கு வருபவன் எப்படியிருக்க வேண்டும் என்ற தன் கற்பனையை சொன்னாள்.
“மார்ட்டின் உனது கற்பனைக்குச் சரிவருவான்” நித்தியா குறும்பாகச் சொன்னாள்.
“மார்ட்டின் உன்னைப் பார்த்து இளிப்பது தெரிய வில்லையா, அவன் பார்வை எங்கேயிருக்கிறது என்று”

Page 96
186 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
நித்தியா இதை எதிர்பார்க்கவில்லை. மார்ட்டின் நடுச் சாமத்தில் வைன் பாட்டிலை உடைத்த சமயத்திலிருந்து ஏதோ ஒரு சாட்டுச் சொல்லிக் கொண்டு இவர்களின் பிளாட்டை எட்டிப் பார்ப்பதை அவள் அவதானிக்காம லில்லை.
எலிஸபெத்தையும் இவளையும் தங்கள் கல்லூரிக் கலை விழாவுக்குக் கூப்பிட்டான்
பின்னர் சாப்பிடக் கூப்பிட்டான். எலிஸபெத் ஏதோ சாட்டுச் சொல்லிப் பின்னடைய நித்தியா அவனுடன் போய் கத்தரிக்காய் முஸாக்கா சாப்பிட்டு வந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பின் குமார் வந்தான். இவள் ஏன் பழையபடி இல்லை என்று குறுக்கு விசாரணை செய் தான்.
“இங்கிலிஸ்க் காரர்களுடன் சேர்ந்து கிளப், பார் என்று அலைகிறாயா” என்று நக்கலாகக் கேட்டான்.
“கல்லூரி கலைவிழாவுக்குப் போனோம். நவீன நாடகம் பார்த்தோம்” அவள் அவன் நையாண்டியைப் பொருட் படுத்தாமற் சொன்னாள்.
"நாங்கள் தமிழர்கள். கண்ணியமாக வாழப் பார்க்க வேணும்' அவன் மிகவும் கறாராகச் சொன்னான்.
கண்ணியம் என்றால் என்ன? கல்யாணம் செய்கிறேன் என்ற உறுதியைக் காற்றில் விடுவதா?
வெறியில் வரும் பெண்கள் விளக்கேற்ற உதவாதவர்கள் என்று விலகிப் போனதா?
இப்போது போரடித்த கல்யாண வாழ்க்கையில் கொஞ்சம் சுவை சேர்க்கவா குமார் இவளைச் சுற்றுகிறான். எத்தனையோ பெரிய படிப்புப் படித்தும் ஒரு பெரிய வேலை கிடைக்காததால் அவன் தற்காலிகமாக ஏதோ செய்கிறான் என்று துயரத்துடன் சொல்லிக் கொண்டாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - 187
லேக் டிஸ்ட்ரிக்டடுக்குப் போவதற்கு முதல்நாள் குமார் போன் பண்ணினான். கண்டபாட்டுக்கு வெள்ளைக்கார ருடன் திரிந்தால் இவனுக்குக் கல்யாணம் நடப்பது கஷ்டம் என்று அக்கறையாய்ச் சொன்னான்.
எலிஸபெத்தின் வீட்டைவிட்டுத் தனியாகப் போயிருந் தால் தான் அடிக்கடி வந்து பார்க்கலாம் என்று ஆசை யாகச் சொன்னான்.
“மார்ட்டின் உன்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டால் என்ன சொல்லப் போகிறாய்” எலிஸபெத் நித்தியாவை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள்.
குமாரின் தாய் மாதிரி மார்ட்டினின் தாயும் “நீ வீட்டை விட்டு வெளியில் திரியும் பெண், குடும்பத்திற்குச் சரியில்லை என்று சொல்வாளா?”
நித்தியா குழப்பத்துடன் கேட்டாள். எலிஸபெத்துக்குச் சிரிப்பு வந்தது. தமிழர்கள் என்பதன் முழுக் கருத்தும் வெற்றுப் பெயர் களுடன் மட்டும் ஒட்டிக் கொள்ள எவ்வளவு தூரம் இவளி டம் பிடுங்கலாமோ எதையெல்லாமோ பிடுங்கலாமோ என்று குமாரும் இவள் என்ன சொல்வாளோ, தான் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டால் நித்தியாவின் மறுமொழி எப்படியிருக்கும் என்று யோசிக்கும்'மார்ட்டி னும் நித்தியாவின் மனத்திரையில் படம் போட்டார்கள்.
டெலிபோன் மணி அடித்தது. தான் எப்படி நடந்தாலும் மனைவி ஒன்றும் கேட்கப் போவதில்லை என்று மனைவி (பட்டுச் சேலை மூட்டை) சொன்னதாகக் குமார் சொன்னான். அதாவது அவன் நித்யாவுடன் "உறவு கொள்வதை மனைவி கண்டுகொள்ள மாட்டாளாம்! அவனைப் போல் அவன் மனைவியும் ஒரு முற்போக்குவாதியாய் இருக்கலாம்.
நித்தியா எரிச்சலுடன் போனை வைத்து விட்டாள்.

Page 97
14. மனித உரிமைகள்
அவனுக்குத் தெரியும் தாய்க்கு ஒன்றும் விளங்க வில்லை என்று. டொக்ரர் உணர்ச்சியற்ற சொற்களாக உதிர்த்துக் கொண்டிருக்கும் வைத்திய விளக்கத்தை, அரை குறையாக விளங்கிக் கொண்ட தகப்பனின் கண்களில் நீர் கோடிடுவதை கடைக்கண்ணால் கவனித்தபோது, அவனின் நெஞ்சு வெடிக்கிறது. தான் சொன்னதை இவர்கள் விளங்கிக் கொண்டார்களோ இல்லையோ, அந்த வெள்ளைக்காரர் தன் விளக்கத்தை முடித்துவிட்டு மெல் லிய இளம் முறுவலுடன் நகர்கிறார்.
தாய் ஏங்கிய விழிகளுடன் மகனைப் பார்க்கிறாள். “என்ன சொன்னார் டொக்ரர்?” என்று அவள் பார்வை கெஞ்சுகிறது. தாயை நேருக்குநேர் பார்த்துச் சஞ்சலப்பட அவள் விரும்பவில்லை.
தகப்பன் முன்செல்ல, மகனும் தாயும் பின் தொடருகின்றனர்.
“என்ன ரஞ்சித் பேசாமல் போகிறாய்?” தாயின் கேள்வி வேதனையுடன் இருக்கிறது. அவளின் மூத்தமகன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான்.
அவன் நிலை எப்படியென்பது அவளுக்குத் தெரியாது. கற்பனையிலும் கண்டிராத மெஷின்கள், தன் மூத்த மகனைச் சுற்றி ஏன் கிடக்கின்றன என்பது அவளால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ● 189
விடாமல் கேட்கிறாள். ஆங்கிலம் தெரியாத தன் நிலையில் அவளுக்கே ஆத்திரம் வருகிறது.
என்ன சொன்னாரா? எப்படிச் சொல்வது தாய்க்கு?
“தமையனின் மூளையில் பெரும்பகுதி சேதமடைந்து விட்டது. எவ்வளவு சேதம் என்று சரியாகத் தெரியாது.” அந்த டொக்ரர் சுற்றி வளைத்து அருமையான நாகரிகமான வார்த்தைகளில் சொன்ன விளக்கத்தின் சாரமிது.
தாய்க்கு என்ன சொல்வது? அண்ணாவின் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையாம் என்று சொல்வதா?
தகப்பன், மனைவியுடனும் மகனுடனும் ஒன்றும் பேசாமல் வெறித்த பார்வையுடன் நிற்கிறார்.
இரண்டு நாளாகத் தந்தை இப்படித்தான் இருக்கிறார். வெறுமை அவர் விழிகளில் தேங்கி நிற்கிறது. ரஞ்சித் தகப்பனை ஒன்றும் கேட்க முடியவில்லை.
மூத்த மகன், அரைகுறை மனிதனாய் ஆஸ்பத்திரியில், இளைய மகன், பொலிஸ் ஸ்ரேஷனில்; இரண்டு நாட் களுக்கு முன்னர் அவர்கள் வாழ்க்கையில் இப்படியொரு துன்பம் வருமென்று யார் நினைத்தார்கள்?
"நாங்கள் பேசாமல் இந்தியாவுக்குப் போயிருக்கலாம். உகண்டாவிலிருந்து வரும்போதே சொன்னேன். இந்த நாடு எங்களுக்குச் சரிவராது என்று.” தாய் மெல்லிய முனகலு டன் சொல்கிறாள். பக்கத்தில் நிற்கும் வெள்ளைக்காரர் க்ளுக்குத் தன் குரல் கேட்கக்கூடாது என்பதற்காக ஆன மட்டும் மெல்லமாக முனகுகிறாள். இங்கிலாந்துக்கு வந்து கஸ்டப்படத் தொடங்கிய நாளிலிருந்து, ஒவ்வொரு கஷ்டம் வரும்போதும் அவள் இப்படித்தான் சொல்வாள்.

Page 98
190 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
பச்சைப் பசேல் என்று பசும்புல்வெளிகள் அவள் மனக் கண்ணில் தெரிவதை, வெறித்த அவள் பார்வையிலிருந்து புரிந்து கொள்வான் ரஞ்சித்.
“என் அருமை பஞ்சாப் நாடு, எவ்வளவு வளம் கொழித் தது தெரியுமா? உனது அப்பா அம்மா கொஞ்சம் காசுக்கு ஆசைப்பட்டு இப்படி நாடோடியாகிவிட்டோம்.”
தாய் பெருமையுடன் சொல்லும் பஞ்சாப் நாட்டைப் பற்றியோ, இந்தியாவைப் பற்றியோ ரஞ்சித்துக்கு எதுவும் தெரியாது. ஆசியனே! ஒடிப்போ!' என்று உகண்டாவில் இடிஅமின் உறுமியபோது, பிரிட்டிஷ் பாஸ்போட்டோடு வேண்டாத விருந்தாளிகளாக இங்கிலாந்துக்கு வந்த நாளிலிருந்து.
ரஞ்சித்துக்கு ஏழுவருடங்களுக்கு முன் நடந்த ஆர்ப் பாட்ட ஊர்வலங்கள் கனவுபோல் தெரியும், அடிக்கடி
"ஆசியனே, திரும்பிப் போ!”
உடுத்த உடுப்பைத் தவிர வேறொரு உடையுமின்றி, ஹித்ரோ விமான நிலையத்தில் விறைக்கும் குளிரில் இறங்கிய போது, கேட்ட கோஷம் அது.
தகப்பன் தர்மசங்கடத்துடன் தாயைப் பார்த்தார். திரும்பிப் போகட்டாம். எங்கே போவது? அவள் பிறந்தது. உகண்டாவில். தாய் தகப்பன் இந்தியர், உகண்டாவில் உள்ள ஆசிய நாட்டார் விரும்பினால் பிரிட்டிஷ் பாஸ் போட் எடுக்கலாம் என்று சொன்னபோது எடுத்த பாஸ்போட்டுடன் வந்திருக்கிறார்.
v வெறிபிடித்த வெள்ளையர் கூட்டம் கத்தியது.
“கறுப்பனே திரும்பிப் போ, எளிய கறுப்பர்களே எங்கள் அழகிய நாட்டை அசுத்தமாக்காதீர்கள்!”
பட்டேல் குடும்பத்தைப் போல் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் திடுக்கிட்டது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ぐ 191
கேவலமான கூலிகளாக ஆபிரிக்க நாடுகளுக்கு வெள்ளை முதலாளிகளால் கப்பலில் கொண்டு வந்த இந்தியப் பரம்பரையில் வந்த பட்டேல்.
9
"அழுகல் கறுப்பனே இவ்விடம் கால் வைக்காதே
பட்டேல் குடும்பம், இந்த வரவேற்புடன் இங்கிலாந்தில் காலடி எடுத்த நாளில் இருந்து, தாய் அடிக்கடி அழுவாள். அவள் சிறு வயதில் பஞ்சாப் நாட்டிலிருந்து, உகண்டா விற்குப் போனவள். தன் இளமை ஞாபகத்தில் பொன் விளையும் பாஞ்சால நாட்டை சொல்லியழுவாள்.
புதிய நாடு, வேலை, வீடு, குளிர், ஐந்து குழந்தைகள்.
பட்டேல் திணறினார்.
கம்பாலாவில் ஒரு கடை வைத்துப் பிழைத்துக் கொண் டிருந்தவர். லண்டனில் வெறுங் கையுடனும், இங்கிலிஸ் சரியாகக் கதைக்கத் தெரியாமலும் வேலை தேடிப்பட்ட கஷ்டங்கள். பெரிய மகன் அப்போதுதான் பதினாறு வயது. பக்டரியில் ஒரு வேலை கிடைத்தது. கொஞ்ச சம்பளத்தில், இரண்டாவது மகனுக்கு, இரண்டு வருடம் முடிய இன்னொரு பக்டரியில் வேலை.
பட்டேல் குடும்பம் தலை நிமிர, முழுக் குடும்பமும் உழைத்தது. கவுன்ஸில் கொடுத்த வசதியற்ற வீட்டை விட்டு வெளியேறி, தங்களுக்கென்று ஒரு வீடு வாங்க அந்தக் குடும்பம் பட்ட பாடு.
ஐம்பதுக்கும் மேல் வயது, பட்டேலுக்கு, ரஞ்சித்துக்கு நினைவு ஒடுகிறது. எப்படித் தன் தகப்பன் இரவு பகலாக உழைத்து ஒரு இடம் வாங்கக் கஷ்டப்பட்டாரென்று.
அதெல்லாம் வெறுங் கதைகளா?
பஸ் இந்தியன் டொக்கைத் தாண்டி ஒடுகிறது. ஆளரவ மற்றுக் கிடைக்கும் அந்தத் துறைமுகத்தைக் கடக்கும்

Page 99
192 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
போது, அவனுக்குத் தமையன் சொன்னவை ஞாபகம் வருகின்றன.
“வெள்ளைக் காரர்கள் ஏன் கறுப்பர்களில் வெறி கொண்டு தாக்குகிறார்கள் என்றால், விழுந்துவிட்ட வெள் ளையரின் பொருளாதார அமைப்பைப் புரிந்து கொள்ள முடியாத கோழைத்தனந்தான். உலகமெல்லாம் கொள்ளை யடித்த பணத்தில் குதூகலமாக வாழ்ந்த காலம் ஒடிவிட் டது. இப்போது உலக நிதி ஸ்தாபனங்களிடம் வாங்கி ஊதாரித் தனமாகச் செலவிடுகிறார்கள். எத்தனை நாளைக் குக் கடன் வாங்க முடியும்? கஷ்டப்பட்டு உழைக்க விருப்ப மற்ற காடையர்கள், கடுங்குளிரிலும், பனியிலும், கண்ணீர் விட்டு, உழைத்துப் பிழைக்கும் கறுப்பர்களைத் தாக்குகிறார் கள். தங்களைவிடக் கறுப்பர்கள் வசதியாகச் சீவிக்கிறார்கள் என்ற பொறாமை. தங்கள் செல்வங்களை நாங்கள் கொள்ளையடிக்கிறோம் என்ற வெறுப்புத்தான், அவர்கள் கண்ட இடங்களில் கறுப்பர்களைத் தாக்கக் காரணம்.”
இடிந்து உடையும் நிலையில் இந்தியன் டொக் கிடப்பது
போல்தான் இவர்களின் வாழ்க்கையுமா.
இவர்களின் ஆவேசத்துக்கு நாங்களா பலி?
அண்ணா என்ன செய்தான்? அவன் எந்தச் சோலி சுரட்டுக்கும் போகாதவன். போன வருடம் கூட லூயிஷ மில் கறுப்பர்களை ஆதரித்து நடந்த கூட்டத்திற்குப் போக மறுத்துவிட்டான்.
"கோழைபோல் ஒளிந்து ஏன் இருக்க வேண்டும். இருட் டிலும் மறைவிலும் எங்களை வைத்து நொருக்குகிறார்கள். ஒடுக்கப்பட்ட எங்களுக்காகப் போராடும் சக்திகளுடன் சேர்ந்து எதிர்ப்பைக் காட்டவேண்டும்” என்று இளைய அண்ணா சொன்னபோது கூட, அண்ணா சொன்னான்: “அஹிம்சையாக இருக்கத்தான் எங்கள் சமூகம் படிப்பித் திருக்கு"

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் Х• 193
ரஞ்சித் பற்களை நறநறவென்று கடிக்கிறான். அஹிம்சை யாம். வீட்டிற்கு முன்னால் காரைத் திருத்திக் கொண் டிருக்கும் போது காடைத்தனமாகத் தாக்கி அண்ணாவை அழித்து விட்டிருக்கிறார்கள்.
அண்ணா நீ இனிக் கதைப்பது சந்தேகம் என்று டொக் ரர் சொன்னார். அப்படியில்லாமல் ஏதும் அற்புதங்கள் நடந்து நீ ‘மனிதனாகி" கதைக்க வெளிக்கிட்டால் உன்னைக் கேட்கப் போகிறேன், அஹிம்சையென்றால் என்னவென்று.
உனக்குத் தெரியாது. உன்னைத் தாக்கிய காடையர் களைக் தாக்கிய குற்றத்திற்காக இளைய அண்ணாவைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். வழியால் போனவர்கள் இளைய அண்ணா தாக்கினாராம், விதண்டாவாதத்தில்.
உனக்கு விளங்காது, பொலிஸார் என்ன சொன்னார்
களென்று.
உன்னை வெள்ளைக்காரர் தாக்கியதற்கு எந்த விதமான சாட்சியுமில்லையாம். சண்டையில் நீ தடுமாறி, றோட்டுக் கல்லில் அடிபட விழுந்து, மண்டையில் காயம் பட்டிருக்கு LOITLO.
இளைய அண்ணா றோட்டால் போனவர்களைக் காடைத்தனமாகத் தாக்கிக் கையில் வைத்திருந்த கார் திருத்தும் ஆயுதத்தால் காயப்படுத்தி விட்டாராம்.
விளக்கமின்றி விசாரணையில் இருக்கிறான், அண்ணா. தன் தமையனைக் கொலைவெறியில் தாக்கியதைக் கண்ட அண்ணா, அப்போது தான் வீட்டுக்குள்ளால் எடுத்து வந்த, கார் திருத்தும் ஆயுதத்தால் தாக்கினான்.
என்ன சொன்னார்கள் பொலிஸ்காரர் தெரியுமா அண்ணா ? பெரியண்ணாவும் இளையண்ணாவும் இவர் களுக்காகக் காத்திருந்து, இவர்களுக்கு உயிர்ச்சேதம் உண்டாக்குமளவுக்கு காயம் உண்டாக்கினார்களாம்.
இ.கா.-13

Page 100
194令 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ரஞ்சித்தின் விழிகளில் நீர் வழிகிறது. ஜன்னல் பக்கம்
முகத்தை வைத்துக்கொண்டு விம்முகிறான். பக்கத்திலிருக்
கும் வெள்ளைக்காரி எதுவித உணர்ச்சியுமின்றி இவனைத் திரும்பிப் பாத்துவிட்டு, தன் பார்வையை எடுக்கிறாள்.
அவர்கள் நாகரிகமானவர்கள். ஒரு மனிதன் செத்துக் கிடந்தாலும் அது தங்கள் விடயமல்ல என்று போகிறவர் கள். நான் மட்டுமென்ன, என்னைப்போல் எத்தனையோ ஒடுக்கப்பட்ட சித்திரவதைப்படுகிற மக்களைப்பற்றி இவர்களுக்கு ஏன் அக்கறை இருக்கும்?
இவர்களுக்கு எப்போதாவது, யாரிடமாவது அக்கறை யிருந்ததா? உலகத்தை ஆண்டவர்களாம்.
ரஞ்சித் முன்னால் இருக்கும் தாயைப் பார்க்கிறான். அவளுக்கு இங்கிலீஸ் தெரியாது. இரண்டு நாளைக்கு முன், ஒரு பின்னேரம் கிட்டத்தட்ட இருண்டு விட்ட நேரம், குசினியில் இரவு வேலைக்குப் போகும் மகன்களுக்கு மண மாக நெய்யில் புரட்டிய சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந் தாள். மூத்த மகனும் இளைய மகனும் வெளியில் கார் திருத்திக் கொண்டிருந்தார்கள்.
மூன்றாவது மகன் ரஞ்சித்தும் இரண்டு, கடைசிப் பெண்களும் ரெலிவிஸன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தகப்பன் வேலையால் வரவில்லை.
கண்மூடித் திறப்பதற்குள் அது நடந்து விட்டது. அலறி கொண்டு ஓடி வந்தவள், இரத்த வெள்ளத்தில் கிடக்கும் மூத்த மகனையும், மூன்று காடையர்களைத் துரத்தும் இளைய மகனையுந்தான் கண்டாள். அவள் இருதயமே நின்று விட்டது. என்ன நடந்தது.?
யாரும் அவளுக்குச் சொல்லவில்லை. கண்மூடித் திறப்ப தற்குள் அம்புலன்ஸ் வந்தது; பொலிஸ் கார் வந்தது. இரு மகன்களும் ஒவ்வொரு திசையில்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 195
பெரிய மகன் ஆஸ்பத்திரியில், மூளையில் பலத்த அடி டொக்ரர் எவ்வளவு சேதம் என்று தெரியாதென்கிறார். இப்படித்தான் இப்போது அந்தக் காட்ையர்கள் அடிக் கிறார்கள். உயிரை வைத்து விட்டு வாழ்வை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.
அண்ணா தனியாக இருப்பதாக நினைத்துப் பின்னால் வந்து அடித்திருப்பார்கள். இருட்டில் தனிமையில் யாரும் சாட்சியில்லாத மாதிரி.
அவர்களுக்கு எதிராக ஒரு குற்றமும் சொல்லமுடியா தாம்; பொலிஸ் சொல்கிறது. அண்ணாவுக்கு அடித்ததாக எந்தச் சாட்சியும் இல்லையாம். ஆனால் இளைய அண்ணா துரத்திப் போய்த் தாக்கினாராம். இரண்டு நாளாக ரிமாண்டில் இருக்கிறார்.
நான் இளைய அண்ணாவைப் பார்க்கப் போக, என்னையும் பொலிஸ்காரர்கள் முழிசிப் பார்த்தார்கள். அபாயகரமான குடும்பம்' என்று என் குடும்பத்திற்கும் "லேபல்' போடப்பட்டிருக்கலாம்.
வீட்டிற்குப் பக்கத்தில் பஸ் நிற்கிறது. தாய் விம்மலுடன் இறங்குகிறாள்.
கலைந்த அவள் தலையையும், கண்ணிர் வழியும் முகத் தையும் பார்த்த ஒரு நாகரிகமான வெள்ளைக்காரமாது, அருவருப்புடன் முகத்தைத் திரும்புகிறாள். அவர்கள் நாக ரிகமானவர்கள், மற்றவர்களுக்கு முன் அழுவது அநாகரிக மாம். அதுவும் பகிரங்கமான இடத்தில் கலைந்த தலையும், கண்ணிரும். தாய் பஞ்சாபியில் புலம்பிக் கொண்டே போகிறாள். ஏன் இவர்களுக்கு இங்கிலீஸில் கதைப்பதற்கும் என்ன என்ற அர்த்தம் நடந்துபோகும் சிலரின் கண்களில் பளிச்சிடுகிறது.
தகப்பன் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக பொலிஸ் ரேஷனுக்குப் போக வெளிக்கிடுகிறார். அவர்களின்

Page 101
196 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
வழக்கறிஞர் வருவதாக இருந்தார். அத்துடன் சிறுபான்மை இனத்து மக்களுக்காக போராடும் சில குழுக்களின் பிரதிநிதிகளும் வருவதாய் இருந்தார்கள். தாய்க்கு இதெல் லாம் பிடிக்காது. பிள்ளை, குட்டிகள் இருக்குமிடத்தில் அதிக அந்நியர் ஏன் என்று கேட்பாள். இன்று தன் இளைய மகனைப் பார்க்க வேண்டும். “ஏன் இளைய மகன்”
அவள் வழக்கம் போல் குசினிக்குள் போய்நின்று அழுதாள்.
இப்போது அடியடியென்று அடித்து நொருக்கியிருப் பாங்களா, உண்மை கேட்டு?
கடவுளே! என் குழந்தைகள், யாருக்கும் ஒரு கஷ்டமும் இதுவரை கொடுத்ததில்லையே. உண்டால் சாப்பாடு, இல்லையென்றால் பட்டினியாகக் கிடந்தோமே. ஏன் எங்களுக்கு இந்தக் கொடுமை?.
என் பெரிய மகன் இரண்டு நாளாகப் பேச்சில்லாமல் கிடக்கிறான். ஒருவரும் உருப்படியாக ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறார்களே!.
என் குடும்பம் என்னவாகப் போகிறது?
“அம்மா !” தாயின் சிந்தனை கலைகிறது. ரஞ்சித் குசினிக்குள் வருகிறான்.
"அம்மா! ஆட்கள் வந்திருக்கினம். ரீ போடுங்கோ” தாய் மீண்டும் மெளனமாகிறாள்.
பெண் குழந்தைகள் மேலே போகிறார்கள். தங்கள் அறைகளுக்கு, எப்படி உண்மையைப் பொலிஸாருக்குச் சொல்வது என்று நெடுநேரம் விவாதம் நடக்கிறது.
ஒரு பாவமுமறியாத இரு வாலிபர்களை இனவெறி பிடித்த வெள்ளையர்கள் தாக்கியது மட்டுமன்றிப் பழியை
யும் ஒரு குற்றத்திற்கும் போகாத இளம் வாலிபர்களிருவரி லும் போட்டு விட்டார்கள் என்பதை நிரூபிப்பதா?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ぐ 197
தகப்பன் பெருமூச்சு விடுகிறார். கண்கள் கலங்குகின்றன. "நாங்கள் யாருக்கு என்ன செய்தோம்? யார் உடமையைப் பறித்தோம்? என் குழந்தை என்ன பாவம் செய்தார்கள்? எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்க உரிமையில்லாத அளவுக்கா அநியாயம் மலிந்து விட்டது, இந்த நாட்டில்?” தகப்பன் உணர்ச்சி வசப்பட்டு கேவிக் கேவி அழுகிறார்.
“ஒரு சிலர் செய்யும் கொடுமைக்காக நாட்டையே கூடாது என்று சொல்வது சரியில்லை" உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் உபதேசிக்கிறார். தங்கள் பகுதியில் உள்ள ஒரு இந்தியக் குடும்பம் தாக்கப்பட்டதையறிந்து அனுதாபம் சொல்ல வந்திருக்கிறாராம்.
தன் அருமையான நேரத்தில் கொஞ்சநேரம் செல வழித்து அநுதாபம் சொல்ல வந்ததை மறைமுகமாகக் காட் டிக் கொள்கிறார். அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பதால். “ஜேர்மனியில் ஒரு சிலர்தான் தொடங்கினார்கள். தேசிய உணர்வையும், அது எவ்வளவு தூரம் போனது? ஒரு கோடி யூதர்களின் தலையெழுத்தை அழித்தது” உள்ளூர் தொழில் கட்சியைச் சேர்ந்தவர் பிரமுகரைப் பார்த்து உறுமுகிறார்.
"நீங்கள் உங்கள் சண்டையில் எங்கள் குடும்பத்தைப் பகடைக்காய் ஆக்காதீர்கள். என் பெரிய மகன் இறந்து கொண்டிருக்கிறான். இளையமகன் விசாரணையின்றி அடைப்பட்டுக் கிடக்கிறான். என் குடும்பம் கெட்டவர் பட்டியலில் பொலிஸார் பைல்களில் இருந்தாலும் ஆச் சரியமில்லை. தயவுசெய்து என் இளையமகனை மீட்கப் போவோமா?” தகப்பனின் கண்கலங்குகிறது.
கூட்டம் வெளியேறுகிறது.
ரஞ்சித்தும் தங்கைகளும் முன்அறையில் கூடுகிறார்கள். “எப்படி ரஞ்சித், பெரியண்ணாவின் நிலை?” தங்கச்சி கேட்கிறாள் தமயனை,

Page 102
198 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
எப்படியா ? “மூளை செத்துவிட்டது. அரைகுறை மனிதனாக உயிரோடு இருக்கலாமாம்” தமயன் வேதனை புரண்ட குரலில் சொல்லிவிட்டுப் போகிறான். இரண்டு நாட்களுக்கு முன் தமயன்கள் இருவரும் திருத்த வெளிக் கிட்ட காரை திருத்தும் நோக்கத்துடன் ரஞ்சித் போகிறான். "அண்ணா! கவனம், இருளப்போகிறது, யாரும் என்ன செய்தாலும் கேட்க ஆட்களில்லை” தங்கையின் குரலைக் கேட்டபடி தமயன் போகிறான்.
கடைசிப்பெண் ரெலிவிஷனைத் திருப்புகிறாள். ஹெல் சிங்கி ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை ரஷ்ஷிய அரசாங்கம் கொடுக்கா மல் தடுக்கிறது என்று மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் கண்டனத்தைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. கார் திருத்தத் தேவையான சாவிகள் எடுக்க உள்ளே சென்ற ரஞ்சித்தை கடைசித் தங்கை கேட்டாள்" அண்ணா ஹெல்சிங்கி ஒப்பந்தம் என்றால் என்ன?”
தமயன் ஒரு கணம் பேசாமல் நிந்றான். என்ன மறுமொழி சொல்வது இந்தப் பிஞ்சு மனசுக்கு. மனித உரிமைகளைப் பற்றி வெறும் மயக்க வாதங்களைப் பற்றி இவளுக்கு எப்படி விளங்கப்படுத்துவது.
நான் இருக்கும் வீட்டிற்கு முன்னால் நிற்க எனக்கு உரிமையிருப்பது பற்றியே சந்தேகமாக இருக்கிறது.
இவளுக்கு என்ன மறுமொழி சொல்வது?
பனிமலர்

15. எய்தவர் யார்?
ஜனட் மிக ஒய்யாரமாக அமர்ந்திருந்து கண்ணாடியில் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கை தன் உதடு களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள். அவளின் செய்கை அவ ளின் காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் அளவுக்கு மீறி தன்னை அலங்கரிப்ப தாகப் பட்டது.
இவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை அவள் கடைக்கண்ணால் கண்டபடி, தன் வேலையைத் தொடர்ந் தாள். அவளுக்கு வயது இருபது, பதினெட்டு வயசிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள். இருந்தாலும் பதினெட்டு வயசில் அவள் இருந்த கவர்ச்சியை விட இப் போது பார்த்தவர்கள் வாயூறும்படி எடுப்பாக இருக்கிறாள்.
'பக்கத்து ரோட்டில் உள்ள பட்டேல் கடையில் ஏன் அடிக்கடி ஜனட் காணப்படுகிறாள்? பீட்டரின் நண்பன் டாரன் என்பவன் சுவிங்கத்தைச் சப்பியபடி பீட்டரைக் கேட்டான் ஒரு நாள்.
பீட்டருக்குத் தெரியாத ரகசியமில்லை. பீட்டரில் உயி ரையே வைத்திருந்தவள் இப்போது அவனை ஏனோ தானோ என்று நடத்துகிறாள். பட்டேல் கடையில் உள்ள முதலாளிகளில் ஒருத்தன் வாட்டசாட்டமானவன்.
வாடிக்கையாளர்களோடு சுமுகமாகப் பழகும் சாட்டில் வாயூறக் கதைப்பான்.
"எப்படி உனது சுகம் டார்லிங்” என்று இளித்தபடி எல்லாப் பெண்களையும் கேட்பான். பீட்டர் ஒருநாள்

Page 103
200 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஜனட்டுடன் கடைக்குப் போனபோது, கடைக்காரன் ஜனட்டை 'டார்லிங்' என்று சொன்னது கோபத்தை உண் டாக்கியது.
"ஏய் பாக்கி! கடைக்கு வர்ற பெண்களெல்லாம் உனக்கு டார்லிங்கா’ பீட்டர் பொருமினான்.
"ஐயாம் சொறி சேர். அந்த மேடத்தின் பெயர் தெரியாது” கடைக்காரன் குத்தலாகச் சொன்னான்.
“இந்தக் கோபக்காரனின் வார்த்தையைச் சட்டை செய் யாதே’ ஜனட் ஒய்யாரமாகக் கடைக்காரனிடம் பீட்ட ரைப் பற்றிச் சொன்னாள்.
பீட்டருக்கு இன்னும் ஆத்திரம் வந்தது. அவனுக்கு இருபத்திரண்டு வயது. உழைப்பில்லை. சோசியல் செக்கி யூரிட்டிக் காசில் ஜனட் சிகரெட் பிடித்தும், லிப்ஸ்டிக் போட்டும் உல்லாசம் காண்பாள்.
காசு பற்றி சண்டை வந்தால் "உதவாத உன்னிடம் என்னத்தைக் கண்டேன். ஒரு பிள்ளை மட்டும் தந்தாய். ஒரு பெண்ணுக்கு எந்த முட்டாளும் பிள்ளை தரலாம். ஆனால் உருப்படியான தகப்பனாக இருக்கக் கொஞ்சம் அறிவு தேவை. அறிவைப் பாவித்து வாழும், உழைக்கும் வாழ்க்கை தேவை” ஜனட் பிரசங்கம் செய்யத் தொடங்கி விடுவாள்.
பீட்டர் அவள் செய்யும் அலங்காரத்தைப் பார்க்கச் சகிக்காமல் ரோட்டில் இறங்கினான். அவன் இருப்பது எட்டாம் மாடி பிளாட் லீப்டுக்குக் காத்திராமல் இறங்கி நடந்தான். எப்படி ரோட்டில் ஏறினோம் என்ற யோசனை யின்றி கோபத்துடன் நடந்தான்.
டொக்டர் கதிர்காமரின் மனைவிக்கு கொஞ்சநாளாக தன் கணவனில் சரியான கோபம். 'உழைக்கத் தெரியாத மனிதன்' என்று கண்ட பாட்டுக்கு பேசுகிறாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 201
டொக்டர் கதிர்காமர் ஒரு ஜெனரல் பிரக்ரிஷனர் (GP) காலை எட்டு மணியிலிருந்து பின்னேரம் ஆறுமணி வரை எத்தனையோ விதமான நோயாளிகளைப் பார்த்து மருந்தெழுதிக் கொடுத்து, அவர்களின் இருதயத் துடிப்பை அளவிட்டு, வயிற்றுப் பிரச்சினைகளை ஆராய்ந்து, இரும லுக்குக் காரணம் தேடி, வலிக்கு ஊசிபோட்டு, அரசாங்கம் கேட்கும் றிப்போர்ட்ஸ் எல்லாம் எழுதி முடித்து வீட்டுக்கு வந்தால் அவர் மனைவி ராதிகா ஏதோ ஒன்றில் அவரில் பிழைபிடிப்பாள்.
அவரைப் போல எத்தனையோ டொக்டர்கள் "லோக் கம்' செய்து (ஏஜென்சி டொக்டர்) எத்தனையோ ஆயிரம் உழைக்கிறார்களாம். அவள் மைத்துனர் அப்படி உழைத்து மெட்ராசில் இரண்டு பிளாட் வாங்கிப் போட்டிருக்கிறா ராம். தங்கச்சி கணவர் லண்டனில் 3வது வீட்டை வாங்கப்
போகிறாராம். திருமதி கதிர்காமர் பட்டியல் போடுவார்.
டொக்டர் கதிர்காமருக்கு அப்படி எல்லாம் ஒடி உழைத்துக் கஷ்டப்பட உடம்பு சரியில்லை. மிகவும் கஸ்டப்பட்டு டொக்டராக வந்தவர்.
யாழ்ப்பாணத்தில் தோட்டம் செய்த தகப்பனின் மகன். ரியூசனுக்குப் போகமுதல் தகப்பனுக்கு தோட்டத்துக்குத் தண்ணிரிறைக்க உதவி செய்ததை நினைத்தால் இன்னும் கண்ணிர் வருகிறது. அவருக்கு இரண்டு குழந்தைகள். பதினாலு வயதும் பன்னிரண்டு வயதும். அழகான இளம் பெண்கள். பரத நாட்டியம் பழகுகிறார்கள். வீணை பழகு கிறார்கள். லண்டனில் மத்தியதரக் குடும்பம் செய்யப் பண்ணும் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
"இந்தப் பெண்களுக்கு அரங்கேற்றம் செய்ய பதினைந்து, இருபது ஆயிரம் பவுண்ஸ் வரப்போகுது” திருமதி கதிர் காமர் ஏதோ இவருக்கு தெரியாததைச் சொல்வது போல் பெருமூச்சு விடுவார்.

Page 104
202 0. இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அவளின் தொணதொணப்புத் தாங்காமல் தனக்குள்ள ஒய்வு நாட்களில் "லோக்கம்' செய்ய முடிவு செய்தார். “எத்தனை கோடி பணிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே’ என்று பாட வேண்டும் போல் வந்தது. தனது இரண்டு பெண்களையும் சரஸ்வதி லட்சுமியாகக் காண் கிறார் அவர். அவர்களின் எதிர்காலம் பயங்கரமாகத் தெரி கிறது. அவர்களின் அரங்கேற்றம் அவர்களின் சொந்தக் காரர்களின் அரங்கேற்றத்தை விடத் திறமையாக நடக்க வேண்டும் என்று திருமதி கதிர்காமர் கட்டளை போட்டு விட்டார்.
அவரின் இளம் வயதில் தெல்லிப்பளையை அண்டிய கிராமத்தில் வளர்ந்த போது பரத நாட்டிய அரங்கேற்ற மெல்லாம் ஏதோ பணக்கார விடயமாகத் தெரியும். கலைக் கும் காசுக்கும் எத்தனை தொடர்பு என்பது லண்டனுக்கு வந்ததும் தான் விசுவரூபமாகத் தெரிந்தது. கலையின் தெய் வீகத் தன்மை காசின் காலடியில் சதிராடுகிறது. பரதத்தின் முத்திரைகள் பணத்தின் பிரதிபலிப்பாகின்றன. தாளமும் லயமும் லண்டன் வாழ் பணக்கார தமிழர்களுக்குப் பிடித்தபடி ஒலிக்கின்றன.
டொக்டர் கதிர்காமர் பெருமூச்சுடன் நடந்தார். பின் னேரம் ஆறுமணியாகப் போகிறது. கடந்த இரண்டு நாட் களாக லோக்கம் செய்து எத்தனையோ நூறு பவுண்ஸ் உழைத்து விட்டார். நாற்பத்தைந்து வயசிலேயே அவருக்கு டையபிற்றிசும் (நீரிழிவு), பிளட் பிரஷரும் வந்து விட்டது. ஊருக்கு உபதேசம் உனக்கல்ல என்பது போல், அந்த டொக்டர் வாழ்க்கையுடன் மாரடிக்கிறார்.
வசந்தகாலம் முடிந்து குளிர் காற்றடிக்கத் தொடங்கி விட்டது. இலையுதிர்ந்து ரோட்டை அலங்காரம் செய் கிறது. மொட்டை மரங்கள் பரிதாபமாகத் தெரிகின்றன.
காரில் ஏறியவர் ஒரு கொஞ்ச நேரம் ஆசுவாசமாகச் சுவாசித்தார். நெஞ்சு கனத்தது. எப்போதோ பயின்ற

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 203
யோகாசனத்தை ஞாபகப்படுத்தி தனது மூச்சை நிதானப் படுத்தினார். இருந்தாலும் தலை ஏதோ கனப்பது போலவும், நெஞ்சு பாரமாக இருப்பது போலவும் பட்டது.
லண்டனில் வாழும் ஆசிய மக்களுக்கு மிகவும் கூடுத லாக இருதய வருத்தங்கள் வருகின்றன என்று அவருக்குத் தெரியும்.
“எனக்கு நாற்பத்தைந்து வயதுதானே” அவர் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். ஐம்பது வயதுக் கிடையில் அவர் மனைவி கேட்பது போல் மெட்ராசில் ஒரு பிளாட் வாங்கிப் போட வேண்டும். பெண்களின் அரங்கேற்றத்தை'ம் ஆடம்பரமாகச் செய்ய வேண்டும். அவர் திடசங்கற்பம் செய்தபடி காரை ஒட்டினார்.
ஜனட்டுக்கு அவள் காதலின் செய்கை எரிச்சலைத் தந்தது.
'எனக்காக என்ன செய்து விட்டான் பீட்டர்?” தனது பொன்னிறத் தலையை வாரிக் கொண்டு யோசித்தாள்.
அவனிடமுள்ள காதலில் பதினாறு வயசிலேயே அவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டவள் அவள்.
குழந்தையின் படிப்பில் பெரிய அக்கறையில்லாமல், ஒன்றிரண்டு தலைமுறையினராக அரசின் உதவிப் பணத்தி லும் அவர்கள் தந்த வீட்டிலும் வாழ்பவர்கள் ஜனட்டின் தாய் தகப்பன். இவள் தன் வழியைப் பார்த்துக் கொண்டு பீட்டருடன் போனது அவர்களுக்கு சந்தோசமே. ஜனட் டின் தமயன் ஒருத்தன் போதை மருந்துக்காளாகி அதனால் இறந்து விட்டான். தங்கை ஒருத்தி கிளப், பார் என்று பதி னான்கு வயதிலேயே சுற்றத் தொடங்கிவிட்டாள். ஜனட் டுக்கு மட்டும் ஏதோ குழந்தைகள் என்றால் ஒரே ஆசை. நிறையப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காதல் போதையில் அலட்டியதை பீட்டர் நம்பி அவளைத் தாயாக்கிவிட்டான்.

Page 105
204哈 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அவள் குழந்தையுடன் சிறைப் பறவையாகிவிட்டாள். குழந்தையுடன் வெளியில் சுற்றித் திரியமுடியாத ஆத்திரம் பீட்டரில் திரும்பியது.
அவன் நல்ல சம்பளமான உத்தியோகத்திலிருந்தால் தன் குழந்தையைப் பார்க்க யாரையும் சம்பளம் கொடுத்துக் கேட்கலாம் என்று யோசித்தபோது, ஜனட்டுக்கு தன் வாழ்க்கையில் எரிச்சல் வந்தது.
“இந்த வயதில் எனக்குச் சிறை வாழ்க்கையா”
தாய்மை என்பதை சுமையாய் நினைக்கும் அறியாமை யுடன் பெருமூச்சுவிட்டாள். அவளது ஏக்கத்தை தன்னை அழகான அலங்கரிப்பதிலும், பக்கத்துக் கடைக்கார பட் டேலுடன் கும்மாளம் போடுவதிலும் மறந்தாள்.
பீட்டருக்கோ அவள் அவனைத் தவிர யாருடனும் பேசுவது பிடிக்காது.
பீட்டர் கொஞ்சம் படித்த குடும்பத்திலிருந்து வந்தவன். இளமைத் துடிப்பின் அகோரத்தில் அப்பாவித்தனமாக அப்பாவாகிவிட்டது அவனுக்குத் துயர்தான். ஆனாலும் ஜனட் ஒரு அழகான பெண் என்பதிலும், அவன் மகள் இரண்டு வயது மெலனி ஒரு தங்கச் சிற்பம் போலிருப்ப திலும் அவனுக்குப் பெருமை என்று ஜனட்டுக்குத் தெரியும்.
தனது எட்டாவது மாடியிலிருந்து வெளியுலகத்தைப் பார்த்தாள். தான் தனிமைப்பட்டிருப்பது போலவும் உலகமே தன்னைப் பார்த்து நகைப்பது போலவும் பேதைத் தனமாக யோசித்தபோது. குழந்தையின் அழுகை அவளை உலுக்கியது.
குழந்தை மெலனி தத்தித் தத்தித் தாயிடம் வந்தாள். ஜனட் குழந்தையைத் தூக்கியதும் திடுக்கிட்டுப் போனாள். உடம்பு நெருப்பாய்க் கனத்தது. நேரமோ பின்னேரம் ஏழு மணியாகப் போகிறது. எந்த டொக்டரின் சேர்ஜரியும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 205
அந்தப் பக்கத்தில் திறந்திருக்காது. ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டுபோய் ‘கசுவல்டியில்' மணிக்கணக்காக நிற்க அவளால் முடியாது.
“பீட்டர் எங்கே தொலைந்துவிட்டான்?”
முணுமுணுத்தபடி கடமையாயிருக்கும் டொக்டருக்கு (On Cal GP) போன் பண்ணினாள் ஜனட்
டாரன் அங்குமிங்கும் பார்த்தபடி பீட்டரின் கையில் அந்தப் போதைப் பொருளை அமர்த்தினான். பீட்டர் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான்.
"உன்னைப் பார்த்தால் உலகத்தைப் பறிகொடுத்தவன் மாதிரி இருக்கிறியே” டாரன் தன் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டான். அவன் மிகவும் உயர்ந்து வளர்ந்த மொட்டையன். தடிமாடு மாதிரி உவமிக்கலாம்.
பீட்டரின் மென்மையான சுபாவத்திற்கும் டாரனின் முரட்டுச் சுபாவத்திற்கும் எத்தனையோ வித்தியாசம். ஆனாலும் இருவருக்கும் சினேகிதமாக போன்தப் பொருட் கள் இருந்தன.
“சொல்கிறேன் என்று கோபிக்காதே." டாரன் பீட்ட ரின் கண்களை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.
"உனது காதலி அந்த டேட்டீ பாக்கியின் கடையில் இளித்தபடி திரிக்கிறாள்” டாரன் பியர்க் கானை முடித்து விட்டுச் சொன்னான். இன்னொரு போதைக் குளிசையை வாயிற் போட்டுக்கொண்டான்.
"ஐ கேற் த பாக்கிஸ்”
பீட்டர் தானும் ஒரு போதைப் பொருளை வாயில் போட்டபடி சொன்னான்.

Page 106
206 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
'ஏன் எங்கள் பெண்கள் இந்த டேட்டி நாய்களுக்குப் பின்னாள் போகிறார்கள்” முட்டாள் டாரன் ஏதோ விரிவுரையாளரிடம் பீட்டரைக் கேட்டான்.
பீட்டர் தன் பொன்னிறத் தலையைத் தடவிக் கொண் டான். அவர்கள் இருந்த ‘பப் இல் நிறையப் பேர் தங்களை மறந்து சந்தோசமாகக் குடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு அரை நிர்வாண ஆட்டக் காரி அந்த மேடைக்கு வந்து எல்லோரையும் சந்தோசிப் பாள் என்று ஒரு அறிவிப்பாளன் மிகவும் உற்சாகத்துடன் சொன்னான்.
அப்போது ஒன்றிரண்டு ஆசிய இளைஞர்கள் அந்த 'பப்'க்குள் வந்தார்கள்.
"இளவரசி டயானாவைப் பார்த்தாயா? அவளுக்குப் பிடித்த ஒரு இங்கிலிஸ் காரன் கிடைக்கவில்லையா? போயும் போயும் ஒரு எகிப்தியனையா பார்க்க வேண் டும்?” டாரன் முழங்கினான்.
“அவர்களிடம் காசு இருக்கிறது. அவர்கள் அதை வைத்துக் கொண்டு பெண்களை தங்கள் பக்கம் இழுக் கிறார்கள்.”
“பட்டேல் கடைக்காரன் ஜனட்டைச் சுரண்டுவது Gurra) TP'
டாரன் இன்னொரு தரம் ஒரு போதைப் பொருளை வாயிற் போட்டான்.
“எங்கள் நாட்டுக்குக் கூலி வேலைசெய்த நாய்கள் எங்கள் வேலைகளைப் பறித்தார்கள். வீடுகளை எடுத் தார்கள். இப்போது எங்கள் பெண்களுடன் படுக்கிறார்கள்” டாரன் கசப்புடன் சொன்னான்.
பீட்டர் மெளனமாக இருந்தான். டாரன் எப்போதாவது உடல் குனிந்து வேலை செய்வான் என்பதை பீட்டரால்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 207
கற்பனை செய்ய முடியாமலிருந்தது. சிறுசிறு கைப்பறிகள் செய்தும், வீடுகளுக்குள் புகுந்து களவாடியும் காசு சேர்த்து தன் போதைப் பழக்கத்தைப் பூர்த்தி செய்பவன் டாரன். அவன் யாருக்கும் தலைகுனிந்து வேலை செய்வானா என்று பீட்டரால் அந்த நிமிடத்தில் யோசிக்க முடியாம லிருந்தது.
வந்திருந்த ஆசிய இளைஞர்கள் மிகவும் எடுப்பாக உடுத் திருந்தார்கள். டாரன் அவர்களை பொறாமையுடன் பார்த்தான்.
“இவர்களுக்கு இப்படியெல்லாம் வாழ எப்படிக் காசு கிடைக்கிறது” டாரன் ஆத்திரத்துடன் சத்தம் போட்டான். இரவு பகலாகக் கடையில் உழைக்கும் பட்டேல் குடும்பம் பீட்டருக்கு ஞாபகத்தில் வந்தார்கள்.
"நாய்கள்! நாய்கள்! எச்சில் பொறுக்க வந்த நாய்கள்! இப்போ எங்கட கடைகளை வாங்கி, வீடுகளை வாங்கி, எங்கட பெண்களுடன் படுக்கிறார்கள்” டாரன் திட்டி னான்.
பீட்டருக்கு ஜனட்டின் ஞபாகம் வந்தது. கொஞ்ச நாட்களாக இவனைத் தொடவே விடமாட்டாளாம். இவனை அவள் வெறுப்பதற்கு அவளை டார்லிங் என்று கூப்பிடும் பட்டேல் ஒரு காரணமா?
பீட்டர் இன்னொரு பியர்க் கானை முடித்துக் கொண் டான். இன்னொரு போதைக் குளிசையையும் வாயிற் போட்டுக் கொண்டான். மனம் ஆத்திரத்தில் தடுமாறியது. தூரத்திலிருந்து குடித்துக் கொண்டிருந்த ஆசிய இளைஞர்களிற்கு கோபம் வந்தது.
டாரன் அந்த வட்டாரத்திலுள்ள நாஷனல் Fப்ரண்டு டன் தொடர்புடையவன். அவன் சேர்ந்திருக்கும் கூட்டம்

Page 107
208 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இங்குள்ள கறுப்பர்களையெல்லாம் நாட்டை விட்டு வெளி யேற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
“நல்லது தானே” பீட்டர் கனவில் சொல்வது போல்
சொன்னான்.
“என்ன நல்லது?’ டாரனின் குரலில் தடுமாற்றம்.
"இந்த நாய்களை எல்லாம் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இவர்களுக்கு எங்கள் வேலை, வீடு, பெண்கள் பின்னர் இந்த நாட்டை சொந்தமாக்கிப் போடுவார்கள்.”
"அப்படிச் சொல்லு பீட்டர். இவர்கள் ஒவ்வொருத்த ரையும் எனது கையால் அடித்து நொருக்கி அவர்களின் தசையைப் பிழிந்து.”
டாரன் சொல்வதைக் கேட்க பீட்டரின் உதிரம் துடித்தது.
ஏதோ ஓ லெவலில்’ ஒன்றிரண்டு பாடங்கள் பாஸ் பண்ணியவன். இங்கிலிசுக்காரனுக்கு என்ன 'ஓ லெவலும் ஏ லெவலும்? நிறமும் மொழியும் தானே தகுதியானது. அப்படியிருந்தும் அவனுக்கொரு வேலையில்லை.
பீட்டர் ஏதோ வேலையிலிருந்தால், அதோ இருக்கும் ஆசியர்களைப்போல் ஆடம்பரமாய் இருக்கலாமே, ஜனட்டை கூட்டிக் கொண்டு வெளியே போய் சந்தோச மாகத் திரியலாமே!
“பீட்டர் வில்லியம், நான் சொல்லுவதைக் கேள். எங்கள் அரசாங்கம் உருப்படியில்லாதது. அரசாங்க மாதிரிகளைப் பார். எத்தனை பேர் ஹோமோ செக்சுவல்ஸ், எத்தனை பேர் லெஸ்பியன் என்று தெரியும். இவர்களுக்கு நாட்டுப் பற்று இருந்திருந்தால் குடும்ப உறவுகளில் அக்கறையிருந் தால் இப்படி வாழ்வார்களா? டாரன் தன் மொட்டைத் தலையை தட்டிக் கேட்டான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 8 209
பீட்டர் வில்லியத்திற்குத் தெரிந்த அளவில் டாரனுக்கு அவன் தகப்பன் பெயர் தெரியாது. தாயரின் பெயரில்தான் அவனுக்குப் பதிவிருக்கிறது. ஆனாலும் அவன் குடும்ப உறவுகள் பற்றி கொஞ்சம் சூடாகத்தான் சொல்கிறான். தகப்பன் தெரியாமல் பிறந்தவன். குடும்பத் தகுதி பற்றிப் பேசுகிறான்.
"இன்னும் ஐம்பது வருடத்தில் இங்கிலாந்தில் வெள் ளைக்காரனுக்கு இருக்க இடமில்லாமல் போகப்போகுது. இவர்கள் பன்றிக் குட்டிகள் மாதிரி பத்தும் பதினைந்தும் பெத்துப் போட்டு, அவர்களை வளர்க்க வீடும் காசும் கொடுக்க வேண்டும்” டாரன் இப்போது அரசாங்கத்தோடு தன்னையும் சேர்த்து நாங்கள்’ என்று பேசினான். பீட்டர் தன்னைச் சுற்றிப் பார்த்தான். அரை நிர்வாண நடனம் பார்த்து ரசிக்கும் எல்லோரிலும் கோபம் வந்தது.
"எல்லோரும் எங்கள் நாட்டை கறுப்பர்களுக்கு தானம் பண்ணப் போறம்” பீட்டர் முணுமுணுத்தான்.
"நாங்கள் முட்டாள்கள். எங்கள் அரசாங்கம் முட்டாள் தனமானது.”
டாரன் தள்ளாடியபடி எழுந்தான்.
இருவரும் வெளியே வந்தார்கள். தன் இயலாமையில் கோபம் வந்து பீட்டருக்கு. இருபத்திரண்டு வயதில் தன் இனியவளை இழப்பதைவிட யாரையும் அடித்து நொருக்கிவிட்டு சிறைவாசத்தை எடுக்கலாம். அவளில்லா மல் வாழும் தனியான வாழ்க்கையை விட வேறு எந்த விதமான வாழ்க்கையும் வாழலாம்.
கடந்த ஐந்து வருடமாக அவர்களுக்கு ஒருத்தரை ஒருத் தர் தெரியும். வாழ்க்கை முழுக்க ஒன்றாய் இருந்துவிட்டு முதுமையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தான்.
இ.கா.-14

Page 108
210 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
அவன் உள்ளம் கொதித்தது.
அவன் நடை வேகமாகியது. இன்று ஜனட்டிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஏன் அந்தப் பட்டேல் கடைக் காரனுடன் தேனொழுக இனிக்கிறாய் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்க வேண்டும்.
அவன் நடை துரிதமாகியது.
“இவர்களுக்கெல்லாம் நாங்கள் சோணையர்கள் என்ற நினைவு. இவர்கள் நாட்டில் நாங்கள் போய் எவ்வளவு முன்னேற்றம் செய்து கொடுத்தோம். இப்ப இவர்கள் எங்கட நாட்டுக்கு வந்து எல்லாத்தையும் குப்பையாக்கி Gîl fTrires56T.”
டாரன் ஒரு ஆசியக் கடையைக் காட்டினான். “இவர்களைக் கண்ட இடத்தில் காலால் மிதிக்க வேண்டும்”
டாரன் தொடர்ந்து உறுமினான்.
டொக்டர் கதிர்காமநாதன் எட்டாவது மாடியிலிருந்து மெலனி வில்லியத்தைப் பார்க்க காரால் இறங்கி வந்தார். தனக்கு முன்னாள் நிமிர்ந்து நிற்கும் அந்தப் பிரமாண்ட மான கட்டிடத்தைப் பார்த்தார். இந்த இடங்களில் லிப்ட் வேலைசெய்யாவிட்டால் அதோ கெதிதான்.
பார்வைக்குப் பிடிக்காதவர்களைச் சந்திக்க அவர் விரும்பவில்லை. நெஞ்சு இன்னும் கூட கணத்தது. இன்னும் சில நாட்களில் ஒரு ECG (எலக்ரோகார்டியாக்கிராம்) செய்து பார்க்க வேண்டும் என்று யோசித்தபடி நடந்தார்.
அவரது அருமைப் பெண்களுக்கு தகப்பன் சுகமில்லா தவர் என்று தெரிந்தால் மிகவும் துக்கப்படுவார்கள். அத னால் அவரது நீரிழிவு வியாதியைப் பற்றிக்கூட அவரும் அவர் மனைவியும் யாருக்கும் மூச்சுவிடவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் X 211
இந்தக் கண்டறியாத 'ஏஜென்சி டொக்டரிங் கைச் செய்யாமல் ஏதோ உழைக்கிற காசை வைத்து சமாளிக்கப் பழகிக் கொண்டால் போதும்.
அவர் திட்டமாக முடிவு செய்துகொண்டார். எப்படித்தான் அவர் மனைவி தலைகீழாகக் குதித்தாலும், இனி இப்படி இரவு பகல் இல்லாமல் பேயாட்டம் போடக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
நேரம் சரியான இருட்டானதென்றபடியால் அவர் கையிலிருந்த விலாசத்தைக் கவனமாகப் பார்த்தார். அவர் பார்க்கப் போகும் பெண்குழந்தை மெலனிக்கு இரண்டு வயதாம். காய்ச்சல் நூற்றி இரண்டைத் தாண்டிவிட்ட தென்று அந்தக் குழந்தையின் தாய் அழுதாள்.
"ஏய் டேட்டி பாக்கி” டாரன் டொக்டர் கதிர்காமநாத னைப் பார்த்துத் துப்பினான். அவர் இதை எதிர்பார்க்க வில்லை. ஏஜென்சி டொக்டராகி இரண்டொரு கிழமை தான். தனியாகப் போகும் டொக்டருக்கு என்னவெல் லாமோ நடக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் தனக்கு இப்பிடி நடக்குமென்று.
“என்ன இந்தப் பக்கம் யாரும் பெண் பிள்ளை தேடு றாயா நாயே" டாரன் டொக்டர் கதிர்காமநாதர் வாய் திறக்க முதல் பளிரென்று ஒரு அறை போட்டான். பார்த் துக் கொண்டிருந்த பீட்டர் வில்லியத்திற்கு வீரம் செறிந்தது. இரண்டு போதை வஸ்து போட்ட ஆங்கிலேயர் உலகத் திற்கு உதவிசெய்யும் ஒரு அப்பாவித் தமிழ் டொக்டரை காலாலும் கையாலும் அடித்தனர்.
தங்களுக்கு வேலையில்லாமல் போனதற்கு ஒரு உதை, கையில் காசில்லாததற்கு ஒரு அடி, தங்கள் பெண்கள் அடுத்த இனத்தானோடு குலவுவதற்கு ஒரு குத்து. இரு இளைஞர்களும் ஒரு முதியவரைப் போட்டு உதைத்துத்

Page 109
212 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தள்ளினார்கள். அந்த நேரம் டாரனின் "மோபைல் டெலிபோன்’ கிணுகினுத்தது.
அடிப்பதை நிறுத்திவிட்டு, டாரன் “ஹலோ சொன் ଘotntଘର୍ଦt.
இந்த நேரத்தில் போதைவஸ்து வியாபாரிகள் போன் பண்ணுவதுண்டு.
“எங்கே உனது சொம்பேறிச் சினேகிதன் ?” ஜனட்டின் கோபக் குரல் டாரனின் காதைப் பிளந்தது.
டாரன் பீட்டரிடம் டெலிபோனைக் கொடுத்தான்.
“எங்கே தொலைந்துவிட்டாய்? மெலனிக்குச் சுக மில்லை. டொக்டர் உடனடியாக வருவதாகச் சொன்னார். இன்னும் காணவில்லை. மெலனிக்கு காய்ச்சல் கூடிவலி வரும் போலிருக்கிறது.” ஜனட் அழுதாள்.
மயங்கிக்கிடக்கும் டொக்டரின் பெட்டியை ஆவேசமாக உடைத்தான் டாரன். ஸ்டெதஸ்கோப், அவசர மருந்துகள் போன்ற சாமான்களோடு அடுத்ததாக அவர் பார்க்கப் போகும் மெலனி வில்லியத்தின் விலாசமும் டாரனின் கையில் சிக்கின.
பீட்டர் அவசரமாக டொக்டரைப் புரட்டினான். அவர் குற்றுயிராய்க் கிடந்தார். அவரைப் பார்க்க ஒரு டொக்டர் தேவை இப்போது.

16. ஒருவன் விலைப்படுகிறான்
தெரிந்த முகங்களை விடத் தெரியாத முகங்கள் தான் அதிகம். கிட்டதட்ட எல்லோரும் பெண்பகுதி ஆட்கள். என்னைப் பொறுத்த வரையில் என் இரண்டொரு நண்பர்கள் மட்டும். ஏதோ திடீரென்று பகிரங்கக் கூடத்தில் அகப்பட்ட பிரமை. என் புது “மாமனார்” அரைவெறியில் பெரிய சிரிப்புடன் அங்கும் இங்கும் திரிந்து வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
மாமியார் நான் பெண் பார்க்க வந்தபோது என்னைப் பார்த்து அரையும் குறையுமாகச் சிரித்தது போல் சிரிக்கா மல் இப்போது வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு குழைந்து குழைந்து வளைய வருகிறார். முதல் அரையும் குறையுமாகச் சிரித்து ஏதும் தன் மகளின் பழைய கதை களைக் கேட்டு நான் கல்யாணத்துக்கு மாட்டேன் என்று சொல்லிப் போட்டாலும் என்ற தவிப்பாக இருக்கலாம். என் மனைவி தன் சினேகிதிகளுடன் வெட்கம் முகத் தில் படர ஏதோ கதைத்ததுக்கொண்டிருக்கிறார். அவள் முகம் அடிக்கடி சிவக்கிறது. சினேகிதன் குசு குசுவென்று ஆளையாள் இடித்துக்கொண்டு ஏதோ ரகசியம் சொல்லிச் சிரிக்கிறார்கள். - W - Y -
நினைக்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் தேனுகாவுக்கும் சட்டப்படி கல்யாணம் நடந்து விட்டது. தாலி இன்னும் கொஞ்சநாளில் கட்டுவதாக ஒப்பந்தம். ஏனோ என்மனம் புழுங்குகிறது. வெளியில் அவ்வளவு சூடு இல்லை. புரட்டாதி தொடங்கிவிட்டது. சமர் முடிந்து குளிர் தொடங்குகிறது. மரமெல்லாம் இலையுதிர்ந்து

Page 110
214 x இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
வெறிச்சென்றிருக்கிறது. பார்வையை யன்னலுக்கப்பால் இருந்து நகர்த்துகிறேன். திருமணப் பதிவுக்கு வந்தவர்கள் சாப்பாட்டு விருந்து முடிய ஒவ்வொருவராக வெளிக்கிடு கிறார்கள். என்னையும் தேனுகாவையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெறிகலந்த பாஷையில் வாழ்த்துகிறார்கள். பிரகாசமான எதிர்காலத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்கிறார்கள். உண்மையாகவா?
இங்கிலாந்துக்கு மூன்று வருடங்களுக்கு முன்வர முதல் அப்படித் தான் நினைத்தேன். லண்டனுக்குப் போய்ப் படித்துப் பட்டம் பெற்று ஒரு நல்ல வேலை எடுத்தால் என் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல கல்யாணத்துக்குக் காத்திருக்கும் என் மூன்று தங்கைகள், அரையும் குறை யுமாகப் படித்தபடி மேற்படிக்கு வழியில்லாத இரண்டு தம்பிகள், ஏக்கத்தால் வருத்தமாகிய் என் தந்தை, எல்லோ ரையும் கவனமாகப் பார்க்கும் என் அருமைத்தாய் எல் லோரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று தான் நினைத் தேன். முதலில் லண்டனுக்கு வரும் நினைவு வந்ததை நினைத்து எனக்கே சிரிப்பாக வந்தது.
ஒரு சாதாரண பாங்க் கிளார்க். என் சம்பளம் எனக்கே சரி. இந்த லட்சணத்தில் குடும்பப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது? வாழ்க்கைச் சுமை தாங்காமல் பிடியாதவர் கள் காலையோ கையையோ பிடித்து வெளிநாட்டுக்கு ஒடிய இரண்டொரு நண்பர்களையும் நானும் பின்பற்ற நினைத்தேன். நீண்ட நாள் யோசித்து முடிவு கட்டிய பின் என் தாய் தகப்பனுக்குச் சொன்னேன். வீட்டில் அரை குறைப் பட்டினி அத்துடன் நான் லண்டனுக்கு போகும் செலவு! என் பெற்றோர் வேதனையோடு சிரித்தார்கள். என் தங்கையின் விரக்தியோடு என்னைப்பார்த்தார்கள். அவர்கள் கண்கள் என்ன மொழி சொல்கின்றன என்று எனக்குத் தெரியும்.
நான் முதல் மகன். என்னவென்று பணம் சேர்த்து அவர்களைக் கரையேற்றுவது. சித்திராவின் விஷயம் வீட் டில் தெரியாது. நாங்கள் இருவரும் அனுராதபுரம் பாங்கில்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 215
ஒன்றாக வேலை செய்கிறோம். இருவரும் ஒருவரையொரு வர் எக்காரணத்தோடும் பிரிவதில்லை. என்ன எதிர்ப்பு வந்தாலும் சமாளித்துக் கல்யாணம் செய்வதாக மிகுந்தலை புத்தர் சிலைக்கு முன்னால் சத்தியம் செய்திருக்கிறோம். சித்ராவைச் செய்தால் ஒருசத சீதனமும்மில்லை, அவள் உழைப்பைத்தவிர! நான் என்னசெய்வேன்? நாங்கள் இருவரும் வீட்டையும் காணியையும் அடகுவைத்து உள்ள கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று, கெஞ்சாத விதத்தில் சொந்தக்காரரைக் கெஞ்சி எல்லாம் காசு சேர்த்து மட்டு மல்லாமல், பிடியாத ஆட்களை எல்லாம் பிடித்து லண்ட னில் உள்ள ஒருவரிடம் “ஸ்பொன்ஸர் லெட்டர்’ எடுத்து முடிய போதும் போதுமென்றாகி விட்டது.
கடன் எடுத்த காசில் கொழும்பில் பெயர் போன ரெயி லரிடம் சூட் தைத்துப் போட்டுக்கொண்டு லண்டனுக்கு வர விமானத்தில் ஏறும் வரைக்கும் எத்தனையோ கற்பனை கள். சொர்க்க பூமியில் கால் வைக்கப் போகிற பூரிப்பு!
விமான நிலையம் கறுப்பர்களுக்குத் தனிவாசலில் ஏயர் ரேர்மினல் நம்பர் 3, ஏளனமான வரவேற்பு. சூட்டும் கோட்டையும் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு. எனக்கு விளங்க வில்லை, வெள்ளைக்காரர் இப்படி இருப்பார்கள் என்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருந்து வந்த நாளில் செய்யாததொழில் இல்லை எத்தனையோ தரம் நினைத்திருக்கிறேன். ஏன் வந்தேன் என்று. கக்கூஸ் கழுவவா? கார் துடைக்கவா? இரவில் கொள்ளிவாய்ப் பேய்கள் போல் கட்டிடங்கள் காவல் காக்கவா?
இரவின் தனிமையில் பனிக்குளிரில் என் சித்ராவை நினைத்துக் கொள்வேன். அநுராதபுரக் காடுகள், அழகிய மிகுந்தலை மலைச் சாரல், நானும் சித்ராவும் ஒன்றாய்த் திரிந்த காட்சிகள் வெறும் கற்பனையாய்ப் போய்விட்டது. எத்தனை கதைகள் எத்தனை கற்பனைகள் எதிர்காலத்தைப் பற்றி!
எல்லாம் வெறும் கதையாகிவிட்டன. எங்கள் முதல் குழந்தை பெண்ணென்றால் “கீதாஞ்சலி” பெயர்வைப்ப

Page 111
216 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
தாகக்கூடக் கதைத்தோம். நினைக்கும் போது நீர் துளிக் கிறது கண்களில், எத்தனையோ கஷ்டப்பட்டு இரவில் வேலை செய்து உழைத்தும் உயர்ந்து கொண்டு போகும் லண்டனில் கலாசாலைக் கட்டணங்களை என்னால் சமா ளிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல வீட்டில் இருந்து அம்மாவின் ஒப்பாரிக் கடிதங்கள் வேறு. கடன் தந்தவர்கள் கடவுள் இல்லை. காசு கேட்டுப் படாத பாடு படுத்து கிறார்கள். எப்படியும் கொஞ்சம் காசு அனுப்பப்பார்! எப்படியும் கொஞ்சம் காசு? ஒரு வருஷப் படிப்பு குட்பை ! இரவு பகலாக உழைத்தேன். பலன் வீட்டில் கொஞ்சம் கடன் அடைப்பட்டது. ஆனால் என் நிலை!
ஹோம் ஒவ்வீசில் இருந்து கடிதம் வந்தது. படிப்பைத் தொடர முடியாவிட்டால் திரும்பிப் போகச் சொல்லி. நான் திரும்பிப்போய் என்ன செய்ய? அரை குறைப்படிப்பு, அத்துடன் என்ன வேலை கிடைக்கும் இலங்கையில். என் கையில் காசில்லை அன்றிக் கொடுக்க லஞசம், காணி யில்லை கிளிநொச்சியில் கமம் செய்ய தர, சித்திராவுக்குக் காசில்லை எனக்குச் சீதனம் தர. என்ன நடக்கும்? என் தங்கைகள் கிழட்டுக் குமர்களாக இருப்பார்கள். வேலை யில்லாத் தம்பிகள் ஊர் சுற்றிக்கொண்டு திரிவார்கள். இருமல்காரத் தகப்பனார் ஏக்கத்தில் எந்த நேரத்திலும் மண்டையைப் போடலாம். இத்தனையையும் பார்த்துக் கொண்டு என்தாய்.! என் தலை விண்விண்ணென்று இடித்தது. என்ன வழி செய்தும் லண்டனில் இருக்க வேண்டும். என்ன வழி.
ஒவ்வொரு நூறு பவுண் வாங்கிக்கொண்டு ஐம்பது அயல் நாட்டாரைச் செய்த ஆங்கிலேயப் பெண்தான் ஞாபகம் வந்தது. என்னையே நினைக்க எனக்கு வெறுப்பு வந்தது. சட்டென்று வாழ்க்கை அறுத்துவிட்டது. என்ன சமுதாயம்? என்ன அரசாங்கம்? என்னநாடு எப்போது எங்களுக்கு விடிவு வரும்? பட்டினிக்குப் பயந்து ஒடி வருகிறோம். இங்கு என்ன செய்கிறோம்? ஒன்றும் என்னால் செய்ய முடியாது. ஒரு இரவெல்லாம் அழுதேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 217
யாருமில்லை மனம்விட்டுக் கதைக்க, வெறும்கட்டிடங் களும் நானும் தான். அடுத்தநாள் என் நண்பன் காந்தன் வந்திருந்தான். என் பிரச்சினைகளைப் பற்றி அவனுக்கு ஒப்பாரி வைத்திருக்கிறேன்.
முதலில் அவன் என்ன கதைக்கிறான் என்றே விழங்க வில்லை. இயற்கையாகவே படபடவென்று கதைப்பான்.
இப்போது நான் இருக்கும் "மூட்' இல் அவன் ஏதோ சீரியஸாகச்சொல்ல வெளிக்கிட்டது எனக்கு விளங்க வில்லை. நிதானமாகச் சொல்லச் சொன்னேன். தன் இருபத்தெட்டு வயது நிரம்பிய, இங்கிலாந்துப் பிரஜா உரிமையுள்ள பிஸினஸ் ஸ்ரடி செய்த ஒரு தமிழ்ப் பெண் ணுக்குத் தகப்பன் மாப்பிள்ளை தேடுகிறாராம். மாணவர் கள் என்றாலும் பறவாயில்லையாம். நல்ல சீதனமாம். என் நண்பன் தெளிவாகச் சொன்னான். நான் அவனை உற்றுப் பார்த்தேன். "நீர் பகிடி விடுவதாக இருந்தால் நான் சிரிக்கிற மூடில் இல்லை” என் குரல் கடுமையாக இருந்தது. அவன் என்னை வெறிக்கப் பார்த்தான். எனக்கு விளங்கியது. அவன் பகிடிவிடவில்லை. எனக்கு முன்னால் சித்ராவின் படம் சிரித்தபடி கிடந்தது. ஆயிரத்து ஐந்நூறு பவுண் சீதனம், இலங்கையில் ஒருவீடு, எனக்குக் கேட்டது நண்பன் என்ன சொல்கிறான் என்று. சித்ராவின் படத்தை என் கைகள் என்னை அறியாமல் இறுக்கிப் பிடித்தன.
ஆயிரத்து ஐந்நூறு பவுண்! எனக்கு இன்னும் இரண்டு வருடப் படிப்பு இருக்கிறது. அதற்கே எண்ணுற்றி ஐம்பது பவுண் வேணும். மிகுதி அறுநூற்றி ஐம்பது பவுண் கிட்ட தட்ட இருபது ஆயிரம் ரூபாய்.
இலங்கையில் ஒரு கிளார்க்கின் விலை கல்யாணத்துக்கு! என் கண்கள் ஜன்னலுக்கு வெளியால் வெறித்துப் பார்த் தன. ஏதோ ஆரவாரம் சனக்கூட்டம் ஏதோ குழப்பம். நானும் அதே நிலைதான். உடம்பில் ஒன்றும் எனக்குக் காயம் இல்லை. உள்ளத்தில் உதிரம் வடிந்தது. சித்திராவின் படத்தை முகத்தில் அணைத்துக்கொண்டேன். லண்ட
னுக்கு வரமுதல் இருவரும் அழுதோம். உயிரைப் பிடுங்கும்

Page 112
218 x- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
வெட்கத்துடன் அவள் என்னை முத்தமிட்டது ஞாபகத் துக்கு வந்தது. என் சித்ரா! என் இதயம் வெடிக்கும் போல் இருந்தது. என்கண்கள் பொங்கி வழிந்து கொண்டிருந்தன. என் நண்பனுக்குத் தெரியும் என்னையும் சித்திராவையும் பற்றி என்னை இப்படிப் பார்க்கத் தர்ம சங்கடம் போலும். அவன் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தான்.
இஞ்ச பாரும் சுந்தரம் நான் உம்மை "அப்செற்" பண்ண விரும்பவில்லை. நீர் இலங்கைக்குப் போய் என்ன செய்யப்போகிறீர். நீர் வாறதுக்காக அடகு வைத்த வீடு கூட இன்னும் எடுக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இருக்கக் கூட இடம் இல்லை. அத்தோடு நீர் தான் சொன்னிர் நல்ல சீதனத்தில் கல்யாணத்தில் வநத்ாலும் பரவாயில்லை என்று” அவன் என் நண்பன். ஆனாலும் எனக்கு அவன் கதைப்பதைக் கேட்க ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அவன் என்ன செய்ய முடியும்? அவனை உற்றுப் பார்த்தேன். என் கண்களில் என்ன உணர்ச்சி இருந்ததோ தெரியாது. அவன் மெல்லமாக எழும்பினான். “ஏதோ யோசியும்” அவன் கதவை நோக்கி நடந்தாள்.
ஏதும் தேவையென்றால் போன் பண்ணும். கதவைச் சாத்தும் போது அவன் சொல்வது கேட்டது. அதாவது சரியென்று பட்டால் பதில் சொல் என்று அர்த்தம் போலும். முடிய கதவுகளைக் கொஞ்ச நேரம்பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோ இரவுகள் நித்திரையின்றி யோசித்து எத்தனையோ பியர்ப்போத்தலை முடித்த பின் இரண்டு கிழமை மூடிய என் நண்பனுக்குப் போன் பண்ணினேன். “யார் என்றாலும் சரி. கல்யாணத்துக்குச் சம்மதம்” என் குரலில் ஒரு உணர்ச்சியும் இல்லை. "சும்மா விசர்க் கதை கதையாம். ஏதோ கண்டறியாதவன் பெண் டில் கட்டுற கதை கதைக்கிறீர். பெண்பிள்ளை பார்க்காம ஒமெண்டால் உம்மைப்பற்றி என்ன நினைப்பினம்" அவன் குரலில் ஆத்திரம் வெடித்தது. “காந்தன் என்னைப் பற்றி உனக்கு தெரியும். சித்திராவைத் தவிர நான் யாரையும் செய்வதாயிருந்தால் அது என்ன வாயிருந்தாலும் என்ன?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 219
பெண் என்றாலும் சரி பேயென்றாலும் சரி. நான் லண்டனில் இருக்க வேண்டும். உழைக்க வேணும். படிக்க வேணும். அதற்கும் கல்யாணம் தான் காசு உழைக்க வழி எண்டால் அதில் என்ன பெண் பிள்ளைபார்க்கிறது? பிடிச் சிருக்கிறது என்று சொல்கிறது’ நான் விரக்தியுடன் கேட்டேன்.
“சுந்தரம் உம்முடைய மனநிலை எனக்குத் தெரியும் ஆனா உம்மை ஆகவும் மலிவாக்காதையும். அந்தப் பெட் டையைக் கல்யாணம் முடித்துப் போட்டு வாழ்க்கை எல்லாம் அவளுடைய ஆட்களோட இருக்கப் போகிறீர் கவனமாக இரும். உமக்குத் தெரியாதோ எங்கட தமிழ் ஆட்களைப்பற்றி” என் நண்பனைத்துக்கப்படுத்த விரும்ப வில்லை. பெண் பார்க்க ஒப்புக்கொண்டேன். எதிர் வரும் சனிக்கிழமை.
ஏதோ சாட்டுக்குப் போனேன். என் மறுமொழி எனக் குத் தெரியும் தானே? எனக்குக் காசு தேவை யார் என்னை வாங்கினாலும் பரவாயில்லை. பெண் அழகேயில்லை. குள்ளமான உடம்பு, கறுப்பு நிறம். அது பத்தாது என்று ஏதோ கலர் மேக்கப் முகம் நிறைய. எனக்குப் பிடிக்க என்ன இருக்கிறது. யோசித்துப் பதில் சொல்வதாகச் சொல் லச் சொல்லி என் நண்பன் சொல்லி இருந்தான். அப்படியே சொன்னேன். நண்பன் சொல்கிறான் என் மதிப்பை விட்டுக் கொடுக்க வேண்டுமாம். என்ன மதிப்பு இருக் கிறது. பணமில்லாதவர்களுக்கு? அடுத்த கிழமை ஹோம் ஒவ்வீசில் இருந்து அடுத்த கடிதம். வலு கடுமையாக இருந்தது. பின்னேரம் பெண்ணின் தகப்பனார் போன் பண்ணினார். “இன்றைக்குத் தான் அப்பாவிடம் இருந்து கடிதம் வந்தது. பிடித்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார் கள்” என்று புளுகினேன். பெண்ணின் படம் தந்திருந்தார் கள். என் தாய் தகப்பனுக்கு அனுப்பச் சொல்லி. நான் அனுப்பவில்லை. அனுப்பியிருந்தால் என் தாய் அழுத் திருப்பாள். லண்டனுக்குப் பயணமாகும் முதல் இரவு தான் என் தாய்க்குச் சித்ராவைப் பற்றிச் சொன்னேன். நீர் பனிந்த கண்களுடன் என்னைப் பார்த்தாள். மண்

Page 113
220 x- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ணெண்ணை விளக்கொளியில் அவள் முகம் சோகமாக இருந்தது. "உனக்கு மூன்று தங்கச்சிகள் இருக்கு. உள்ள காசெல்லாம் உன்னில செலவழிச்சுப் போட்டன். என்னைப் பைத்தியம் வரப் பண்ணாதை” தங்கச்சிகளைப் பார்க்காமல் நான் அவசரப் படப்போவதில்லை என உறுதி கொடுத்தேன்.
“ஏதோ சுந்தரம் துணி வாங்குவதும் திருமணம் செய்வ தும் தனிப்பட்ட ருசி என்பினம்” என்றாள். சித்ரா எனக் குத் தந்த படத்தைக் காட்டினேன். "வடிவான பெட்டை யென்றாள்” அம்மா. அப்பாவுக்குச் சொல்ல வேண்டா மென்றேன். அப்படியான தாய்க்குத் தேனுகாவின் படத்தை அனுப்பியிருந்தால்.
ஆனால் என் நிலையை விளங்கப்படுத்தி எழுதிய பின் என்தாய் எழுதியிருந்தாள் “ஏதோ சரியானதைச் செய் ஆனா ஆனா உன்ர பழைய பெட்டை பாவம்' நான் சித்திராவுக்கு எழுதவில்லை இன்னும். அந்த அளவு துணிவில்லை.
அன்று இரவு காந்தன் போன் பண்ணினான். பெண் ணின் தகப்பனார் போன் பண்ணியதையும் நான் ஒம் என்று சொன்னதையும், பெண்ணின் தகப்பனார் திருமண எழுத்துக்கு விரைவில் ஆயத்தம் செய்வதாகச் சொன்னதை யும் காந்தனுக்குச் சொன்னேன். அவன் கொஞ்ச நேரம் பேசவில்லை.
“சுந்தரம் கொஞ்சம் பிந்தி முடிவு செய்திருக்கலாம்” என்றான். “ஏன் என்ன சாதி என்ன ஊர் என்ன என்று விசாரிக்க நேரம் வேணுமா? நான் ஏளனமாகக் கேட்டேன். எனக்குத்”தெரியும் பெண் வீட்டார் இந்தனைக்கும் ஆட்கள் வைத்து என் குடும்ப விவகாரத்தை அறிந்திருப்பார்கள் என்று. பெண் என்ன சாதி என்ன சமயம் என்பதில் நான் நம்பிக்கை இல்லாதவன் என்று காந்தனுக்குத் தெரியும்.
“சுந்தரம் உமக்கு ஒண்டு சொல்ல வேணும்” என்று தயங்கினான் காந்தன். அவன் தயக்கம் எனக்குச் சிரிப்பாக

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 8 221
yy
இருந்தது. “என்ன ஏதும் மர்மமோ பெட்டையைப்பற்றி நான் அவனைப் போல் குரலை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டேன்.
“பெட்டையைப் பற்றிக் கூடாத கதை" அவன் குரல் வெறுப்பாக இருந்தது. “சித்ராவைப்பற்றியும் இனிக் கூடாத கதைதான். என்னோட ஆடினதென்று" நான் நிதானமாகச் சொன்னேன். "இது கொஞ்சங் கூட” காந்தன் தயங்கினான். "ஏன் பெட்டை ஆருக்கோ பிள்ளைவாங்கியதோ" நான் விளையாட்டாகக் கேட்டேன்.
"ஒம் கனமாக செலவழிச்சினமாம் அபோஷனுக்கு” என் கைகள் போனைத் தன்னையறியாமல் வைத்தன. சட் டென்று எனக்கு விளங்கியது. மலிவு விற்பனையில் ஏன் மாப்பிள்ளை பிடிக்கிறார்கள் என்று.
என்ன மனிதர்கள் ? என்னையும் சித்திராவையும் நினைத்துக்கொண்டேன். எத்தனை தரம் தனிமையாக இருந்திருக்கிறோம். என்னை நம்பித்தானே வந்தாள்? நினைத்திருந்தாள். சித்திரா பத்துத்தரம் அபோஷன் செய் திருக்க முடியும். ஆசையில்லாமல் இல்லை அணைக்க, ஆனால் நான் மிருகமில்லை.
ஏனோ தேனுகாவில் பரிதாபம் வந்தது. அழகில்லாத குள்ளமான அந்தப் பெண் ஒரு மிருகத்திடம் ஏமாந்திருக் கிறாள். அவளை மட்டுமா பிழை சொல்ல முடியும்? அவள் தாய் தகப்பனையும் போல் தங்கள் மகளும் வாழவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? அப்படி நினைத்தார் களா? அல்லது நான் ஒரு விசரன் அழுகிய சரக்கை ஆயி ரத்து ஐந்நூறு பவுணுக்கு என் தலையில் கட்டப்பார்த் தார்களா? உலகம் இருண்டது. என்னவாய் இருந்தாலும் தேனுபாவம். என்ன வாழ்க்கை என்ன வாழ்க்கை? என்னி டம் உள்ள காசெல்லாம் சேர்த்து “பப்புக்குப்" போய் நன்றாகக் குடித்தேன். விடியும் வரைக்கும் அழுதேன்.
அடுத்த நாள் நண்பன் காந்தன் போன் பண்ணினான். “என்ன மாட்டன் என்று போன் பண்ணிப் போட்டியா"

Page 114
222 8 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
என்றான்? “நான் ஆட்களின்ர கதையை நம்பத் தயா ரில்லை. கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிப் போட்டன்” அவன் தொடர்ந்து கதைக்கவில்லை. என் திருமணப் பதிவுக்கு வரவுமில்லை. அவனைப் பொறுத்தவரையில் ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம்!
வேறு என்ன? திருமணப்பதிவு நடந்துவிட்டது. இரவு பத்து மணிக்குமேல். முழு வெறியில் அரைகுறையாய்த் தான் லண்டனுக்கு வந்து பட்டபாட்டைச் சொல்லிவிட்டு என் மாமனார் குறட்டை விடுகிறார். பிள்ளைகளை "நல்ல விதத்தில்” தான் வளர்க்கப் பட்ட பாட்டைப் பற்றி என் மாமியார் குரல் தழுதழுக்கச் சொல்லும்போது கண்கள் அடிக்கடி கலங்கின. மனக் கண்ணில் தன் மகளின் அரை குறைப் பிரசவம் தெரிந்ததோ என்னவோ? நான் மெளன மாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெண்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் போது குறுக்கிடுவது சரியில்லை. சித்திராவிடம் இருந்து படித்த பாடம் அது.
சித்திரா. என்ன செய்வாள். இப்போது. என் கடிதம் கிடைத்திருக்கும். “ஒ”வென்று அழுதிருப்பாள். என்ன வென்று அவள் சிங்களச் சினேகிதிகள் கேட்டிருப்பார்கள். என்ன சொல்லியிருப்பாள் ?
இங்கிலாந்தில் என் அன்புக்குரியவன் விபத்தில் அகப் பட்டுச் செத்துப்போனான் என்று சொல்லியிருப்பாளா? அல்லது.!
தற்கொலை செய்து கொள்ள முடிவு கட்டியிருப் பாளா..? அதற்கு மேல் யோசிக்கப் பயமாக இருந்தது. பார்வையைத் திருப்பினேன். அழகிய ஜன்னல் சீலை “நல்ல வடிவு என்ன” தேனுகா கேட்டாள். 'ஓம்' என்றேன். "மலிவு விற்பனையில் வாங்கினோம்” என்றாள். நான் அவளைப் பார்த்தேன். நான் சொல்லவில்லை என்னையும் மலிவாக வாங்கியிருக்கிறார்கள் என்று!
லண்டன் முரசு

17. நண்பன்
கிTலையிளங்காற்று உடம்பில் பட்டதால் ஏற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன. அறையுள் இருளும் ஒளியுமான ஒரு கலப்பு வெளிச்சம். திறந்திருந்த ஜன்னல் ஊடாக குளிர்மையான தென்றல் தவழ்ந்து கொண்டிருக் கிறது. ஆனாலும் என் உடம்பின் எரிவு அதன் குளிர் மையை மிகைப்படுத்துவதால் ஏற்படும் விறைப்பினால் போர்வையைத் திரும்பவும் இறுக்கிக் கொள்கிறேன். காலை அடிச்சும் பார்க்கிறேன். தாங்க முடியவில்லை அவ்வளவு வலி.
மெல்லமாகத் திரும்பிகிறேன். திரும்பிய வேகத்தில் அவளுடைய மெல்லிய ஒரே சீரான சூடான மூச்சுக் காற்று என் கன்னத்தைத் தடவிச் செல்கிறது. எனது பக்கம் திரும்பிப்படுக்கிறாள். பின்பக்கத்தில் என்மகளின் கால், அவள் மேல் என் மனைவியின் மேல் -என் மனைவியின் மேல் கிடக்கிறது. அவளையே பார்த்துக் கொண்டிருக் கிறேன். இரவு நடந்த சம்பவங்கள் திரையிடுகின்றன. நினைக்க நினைக்க நெஞ்சு எரிந்து கொண்டிருக்கிறது.
அவளும் சூடாகத்தானே பேசினான். அவளை அடித் தது தப்பில்லை என நினைத்துக் கொள்கிறேன். எல்லோ ருக்கும் என்னைப் பிடுங்கத்தான் தெரியும். என்னைப்பற் றிய உறவுகள் எல்லாம் சுயநலம்தான். எனக்குத் திரும்பவும் ஆத்திரம் வருகிறது. மூன்று தங்கச்சிகள் கல்யாணம் முடிக்கவில்லை. நான் மூத்தவன். எனக்குப் பின்னாலும்

Page 115
224 C- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
என் தங்கைகளுக்கு முன்னாலும் இன்னும் மூன்று சகோத ரர்கள். ஆனாலும் எனக்குத் தான் கூடப் பொறுப்பாம். காரணம் நான் தான் வீட்டைப்பாராமல் காதல் கல் யாணம் செய்துக்கொண்டேனாம். படிப்பித்து விட்டார் களாம். குடும்பத்தை பாராமல் இருக்கிறேனாம். பெரிய படிப்புத்தான். படித்துவிட்டு மூன்றாம் தர 'கிளார்க்' வேலையில் ஒரு ஒண்டிக் குடித்தனத்தில் வாழ்வதைவிடப் படிக்காமல் சுருட்டுச் சுத்திப் பிழைத்திருக்கலாம்.
மாதக் கடைசி நெருங்க, நெருங்க அவர்களின் பிடுங்கல் தொடங்கிவிடும். எங்கள் சண்டையும் தொடங்கி விடும். எல்லா வித பாசம், அன்பு எல்லாமே பொருளாதார அடிப்படையில் அமைந்தது தானோ? காலைத் தூக்கு கிறேன் வலிக்கிறது. அன்றைக்கு பஸ்சுக்கு ஒடும் பொழுது தவறி விழுந்தேன். சின்னக் காயம் என விட்ட தவறு இப் போது காயமும் பெருத்து, காயச்சலும் வந்து பாடாய்ப் படுத்துகிறது.
இன்றைக்கு எப்படியும் வேலைக்குப் போகமுடியாது? ஆஸ்பத்திரிக்குப் போயே ஆக வேண்டும். எங்கே போவது? பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போவதா? ஐந்து ரூபாய் இருந் தால் பிள்ளைக்குப் பால் வாங்கலாம். அதில்தானே இரவு சண்டை நடந்தது. மனிதன் வேலையால் களைத்து வரும் போது வீட்டில் நிம்மதியாக இருக்க முடிகிறதா? அது இல்லை, இது இல்லை என்று பாட்டுத்தான். எனக்குத் திரும்பவும் எரிச்சல் வருகிறது. மெல்லமாக எழுகிறேன். எப்படியும் நேரத்தோடு போனால்தான் "கியூவில் நின்று மருந்து எடுக்கலாம். ஆஸ்பத்திரியை நினைத்தாலும் எனக்கு வேறொன்றும் நினைவுக்கு வருகிறது. என்னுடன் படித்த ஒருவன் டொக்டராக இருக்கிறான். மெல்லமாக பழைய காலத்தை அசை போட்டபடியே எழுகிறேன். நான் எழுந்து குளிக்கும் அறை என்னும் மறைவுக்குப் போகிறேன். சத்தம் கேட்டு என் மனைவி அசைவதும் தெரிகிறது. அவளைப் பார்க்காத மாதிரி அவளைப் பார்க்கிறேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 8 225
கன்னம் வீங்கியிருக்கிறது. பாவம் ! குழந்தையைத் தன்னிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு குசினிப் பக்கமாகப் போகிறாள்.
நான் பல் விளக்கி முகம் கழுவுவதற்கிடையில் என் மகனின் அழுகுரல் கேட்கிறது. நான் முகம் கழுவிக் கொண்டிருக்கிறேன். அவன் அழுது கொண்டேயிருக் கிறான். அவள் வந்து தூக்கவில்லை என்பது தெரிகிறது. எனக்கு ஆத்திரம் வருகிறது. ஏன் ஆத்திரப்படுகிறேன், என்று தெரியாமல் அவளில் ஆத்திரப்படுகிறேன். முகத் தைத் துடைத்தபடி வந்த எனக்கு நேற்று வந்த அம்மாவின் கடிதம் கண்ணில் படுகிறது. இன்னும் எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது.
எல்லோருக்கும் என் உழைப்பு வேணும். இல்லையென் றால் உன்னைப் பற்றிக் கவலைப்பட யார்? என் ஆத்தி ரத்தையெல்லாம் சேர்த்துக் கத்துகிறேன். “இந்த வீட்டில் இந்தச் சனியனை அடக்கவும் ஆருமில்லையோ? என் கத்தலில் என் ஒரேயொரு குழந்தை ‘சனியன்' என அழைக்கப்பட உருவம். மெல்லமாக தன் விழிகளை உருட்டி என்னை விழித்துப் பார்க்கிறது. அவள் முணுமுணுத்தபடி குசினிக்குள்ளால் வருகிறாள். 'ஓம் இந்த வீட்டில் எல்லாம் சனியன்தான். அதுமட்டுத்தான் சொல்லத்தெரியும்.
நான் போட்ட சத்தத்தில் என் புண் கால் விண், விண் ணென்று வலித்துக் கொண்டிருக்கிறது. அவள் முணுமுணுக் கிறாள். எனக்கொன்றும் தெரியவில்லை. படாரென்று சத்தம். அடுத்த கன்னமும் வீங்கட்டுமே. காலைச் சாப்பா டும் இல்லை. கோப்பி கூட இல்லை. ஒரு இழவும் எனக்கு வேண்டாம். செத்துத் தொலைந்தால் கூரைச்சல் இல்லை. செத்துப் போகும் ஞாபகம் வந்ததும் நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறேன். நெருப்பாய்க் கொதிக்கிறது.
காலைப் பார்க்கிறேன். என்னுடைய காலைப்போல் இன்னொரு கால் என்ற அளவில் பெருத்துக் கிடக்கிறது.
இ.கா.-15

Page 116
226 & இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
உழைக்கிறேன் தான். இந்த வருத்தத்தில் ஆஸ்பத்திரிக்குப் போக டாக்ஸிக்குக் கொடுக்க காசில்லை. நான் இந்த லட்சணத்தில் இருக்கிறேன். வீட்டில் சீதனம் கொடுக்கவும் நான்தான் உதவி செய்ய வேண்டுமாம். ஏதோ வைத்து விட்டதை எடுக்க ஒடும் அவசரத்தில் இந்த உலகமும் ஒடித்தான் செல்கிறது. எல்லோருக்கும் என்னைப் போல் தான் மற்றவருக்கும் கஷ்டமோ? அதற்காகத்தான். அதைத் தீர்ப்பதற்காகத்தான் இப்படி ஒடிக்கொண்டிருக்கிறதோ,
ஏன் எல்லோருக்கும் கஷ்டமாக இருக்கிறது? அந்தக் காரில் போகும் கனவான் எவ்வளவு சந்தோசமாகப் போகிறான். யார் கண்டார்? என்னைப் போல் உள்ளுக்குள் ஒப்பாரி வைத்துக் கொண்டு வெளியால் சிரிக்கிறவனாய் இருக்கலாம். பஸ்ஸில் ஏறி இடிபட்டு அரசினர் ஆஸ்பத்திரிக் குப் போகிறேன். தலையிடி ஒரு பக்கம், கால்வலி ஒரு பக்கம். உடம்பு நெருப்பாய் தகிக்கிறது. அப்பாடா. ஏழுமணிக்கு இத்தனை சனம் எங்கிருந்து வந்திருக்கும். என்னைப்போல இரண்டும் கெட்டான் பேர்வழிகள் தானோ என்னவோ? இல்லையென்றால் பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போகலாமே?
ஒருபடியாய் துண்டு எடுத்துக் கொண்டு டொக்டரிடம் போவதற்கிடையில் நேரம் எட்டு மணியாகிறது. ஏதோ செய்கிறது நடக்கவே முடியவில்லை. அட யார் அதில் போறது? என்னோட படிச்சவன் இப்ப ஸ்டெத்தும் கழுத்துமாக. அவனை நோக்கி விரைகிறேன். தூரத்திலேயே நான் அவனை அடையாளம் கண்டுபிடிச்சுப் போட்டன். அவனும் என்னையே பார்க்கிறான். யாரோ தெரிஞ்ச முகம் என்று பார்ப்பது தெரிகிறது. ஒரு கண நேரம். பின்னர் அவன் முகத்தில் தெரியும் மாறுதல். நான் அவனிடம் போகிறேன். என்ன தெரிந்தது அவனுக்கு பிடிக்கவில்லை என்பதைக்காட்டும் பார்வை. எனக்குக் கால் முன்னேற மறுக்கிறது. ஒன்று அவனுடைய அலட்சியம். இன் னொன்று என்னுடைய ஏலாமை, இருந்தும் முன்னேறு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 227
கிறேன். யாரவர்? இடையில் ஒருவர் தாஸ் பூஸ் என்று இங்கிலீஸில் முழங்கிக் கொண்டு என்னுடைய டாக்டர் நண்பனை நெருங்குகிறார். அது பத்தாதா அவனுக்கு, அவன் போய் விட்டான். ஒரு விதத்தில் நல்லது. அவனிடம் போய் நான் அவமானப் பட்டிருப்பதைவிட இது நல்லது. அவன் போன திசையில் என் பார்வை நீள்கிறது. மனம் நீண்ட நாளைக்கப்பாற் சென்ற நினைவைத் தொடர்கிறது.
இன்று. அவன் டொக்டராக இருக்கிறான். ஆனால் அன்று கணக்கில் புள்ளிகுறையக் கிடைக்கும் போது சொல்லிக்கொடுத்திருக்கிறேன். பாடசாலையிலோ அல்லது பள்ளிகூடம் விட்ட பின்னரோ விளையாடும் போதோ இருவரையும் ஒன்றாகத்தான் காணலாம். சோதனையின் போது அவனுக்குக் கொப்பியடிக்க உதவி செய்வது எல் லாம் என் மனதில் நிழலாடுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் கீரிமலைக் கடற்கரையில் நீந்தி விளையாடிவிட்டு ஆசை தீரக் கச்சான் வாங்கித் தின்றது ஞாபகத்திற்கு வருகிறது. எண்ணெய் வழிந்த முகத்துடன் எந்நேரமும் பல்லையினித் துக் கொண்டிருக்கும் தில்லைநாதனா இவன்?
பெருமூச்சுடன் திரும்பிய என் பார்வையில் நீண்ட கியூதான் பயமுறுத்துகிறது. டொக்டரைக் கண்டு வருத்தத் தைச் சொல்கிறேன். கால் வருத்தத்தை பார்த்துவிட்டு டொக்டர் என்மேல் பாய்கிறார். கடைசி நேரத்தில் வந்துதான் உயிரை வாங்குவியன், கொஞ்சம் முத்தி வாறதுக்கென்ன. ரெண்டுநாள் முந்தி வந்திருந்தால், இப்படி வீங்காதே? நினைத்த உடனே லீவு எடுக்க நாங்கள் என்ன உயர் அதிகாரிகளா? அந்த டொக்டரின் திட்டுக்களை வாங்கிய படி மருந்தெடுக்கும் அறையை நோக்கி நடக் கிறேன். நடை தளர்கிறது. காலையில் என் மனைவியுடன் சண்டை போடாமல் இருந்திருந்தால் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம். கண்ணை இருட்டிக் கொண்டு வருகிறது. சாப்பாட்டுக்குப் பசிக்கவில்லை. ஆனால் என்னுள் ஏதோ

Page 117
228 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
செய்து கொண்டிருக்கிறது. மருந்தெடுக்கும் அறையிலும் கியூ என்ன அநியாயம் நோய்க்கு மருந்தெடுக்க வந்தாலும் கியூ வருத்தம் இல்லாவிட்டால் இக்கியூவில் நின்றால் நிச்சயம் வருத்தம் வரும். அத்தனை நேரம் எத்தனை கியூவில் எத்தனை இடி வாங்க வேண்டும்? மருந்தெடுத்து ஊசி போட்டுவிட்டு மருந்துகட்டக் கியூவில் நிற்கப் போகிறேன். எனக்குப் போதும் போதுமென்றாகி விடுகிறது.
கை வேறு வலிக்கிறது. கழுத்தைச் சுற்றியிருந்த மப்ளருக் குள் வியர்க்கிறது. நேரம் பதினொரு மணி. தலை சுற்றிக் கொண்டு வருகிறது. எப்போது வீட்டுக்குப் போகலாம். இந்த நினைவு வந்தவுடன் எனக்குப் பக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்க்கிறேன். எனது மகனின் வயதுதான் இருக்கும். அதே களங்கமற்ற முட்டைக் கண்கள். குழந்தைக் குப் பசி போலும், தாயைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. நான் அவளைப் பார்ப்பதைப் பார்த்ததும் தாயின் சீலை யுள் முகத்தை மூடிக்கொண்டு என்னை ரகசியமாகப் பார்க் கிறது. நான் என் வேதனையையும் மறந்து சிரிக்கிறேன். அந்தத் தாய் குழந்தையை அணைத்துக் கொள்கிறாள்.
உடனே ஒடிச் சென்று என் குழந்தையையும் மனைவி யையும் அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருக் கிறது. தாங்கேலாது இடிக்கும் தலையை அன்பு மனைவி யின் மடியில் வைத்துப்படுக்க அவள் நெற்றியைத் தடவி னால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்? பாவம் காலையி லும் அடித்துவிட்டேன். இரவும் அவள் சாப்பிடவில்லை. காலையிலும் நிச்சயமாக அவள் சாப்பிட்டிருக்க மாட் டாள். கோபம் வந்தால் என்னைப் பேசமாட்டாள். தனக் குத் தானே முணுமுணுப்பாள். அதுவும் முடியாவிட்டால் குழந்தையைப் பேசுவாள், எல்லாம் முடியவிட்டு தானே அழுவாள். திரும்பவும் அத்தாயையும், அக்குழந்தையையும் ஒரு தரம் பார்க்கிறேன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் Х• 229
மெல்லமாகப் பார்க்கிறான்; பின்னர் மெதுவாகச் சிரிக்கிறான். பின்னர் தாயிடம் ஏதோ கூறுகிறான். தாயும் மெல்லமாக என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள். இளமை குலுங்கும் வயது. கன்னம் குழிவிழச் சிரிக்கும் சிரிப்பே அலாதியானது. அவனுக்குச் சரியாகப் பசிக்கிறது. காலை யில் கூடச் சரியாக சாப்பிடவில்லை. சிங்களத்தில் சொல் கிறாள். ‘அதிக நேரம் காத்திருக்கிறீர்களா? நானும் சிங் களத்தில் கேட்கிறேன். 'எட்டு மணிக்கு இங்கு வந்திருக் கிறோம் அவள் சொல்கிறாள்.
ஒரு படியாக எங்கள் முறை வந்ததும் மருந்து கட்டும் அறைக்குள் செல்கிறோம். குழந்தை முரண்டு பிடிக்கிறான். அவளால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நானும் சேர்ந்து பிடிக்கிறேன். "நேர்ஸ் சிரிக்கிறாள்' அந்தப் பொல் லாத குழந்தையை என்னவென்று வீட்டில் சமாளிக் கிறீர்கள்? “நான் திடுக்கிடுகிறேன். அவளும் தான் என்பதை அவளுடைய சிவந்த கன்னங்களிலிருந்து தெரிகிறது. “என்னிடம் தான் செல்லம் பண்ணுவான். அவனுடைய அப்பா வந்திருந்தால் இப்படியில்லை இவள் அழுத்திச் சொல்கிறாள்.
என்னையும் அவளையும் அந்த நேர்ஸ் தம்பதிகளாக்கி யது தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவது போல் அவள். திரும்பவும் பேசுகிறாள். ‘வாரும் வீட்டுக்கு அப்பாவிடம் சொல்லி அடி வாங்கித் தருகிறேன். 'பின்னர் ஒரு திருப்தி யுடன் என்னைப் பார்க்கிறாள். என்னுடைய முறை. என் னுடைய காலைப் பார்க்கிறேன். எனக்கே காலையில் சிறிது நாற்றம் கொடுக்கிறது. இந்த நேர்ஸ் பேசுவாளோ?
புண்ணைத் துடைத்துவிட்டு அந்த துடைக்கும் கருவி யால் மெல்லமாக அழுத்துகிறாள் எனக்கு உயிர் போகிறது. 'உள்ளுக்குள் நிறைய சிதழ் இருக்கிறது. எடுக்காவிட்டால் கூடாது. காய்ச்சலும் குறையாது. நேர்ஸ் கடுமையான தொனியில் கூறுகிறாள். என்ன செய்வது? பேசாமல்

Page 118
230 இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
இருக்கிறான். ஒவ்வொருதரம் அவள் அழுத்தவும் எனக்கு மயிர்க்கால்கள் எல்லாம் சில்லிடுகிறது.
என்புண்ணை அழுத்தியதால் அவள் கையிலும் சிதலும் இரத்தமும் படுகிறது. எந்த விதமான அருவருப்பு உணர்ச்சி யுமில்லை. போய்க் கழுவிவிட்டு வந்து மருந்து கட்டிவிடு கிறாள். அவள் யார்? நான் யார்? எந்த உறவுமில்லை. சிதழ் எல்லாம் வெளியில் போனபின் கால் இலேசாக இருக்கிறது. வலி குறைந்திருக்கிறது. வெளியால் வருகிறேன். மூன்று நான்கு மணித்தியாலங்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வர, தலையைச் சுற்றுகிறது. கொதிக்கும் வெய் யில் தலையில் பட்டதும் நடை தள்ளாடுகிறது. இவ்விடத் தில் விழுந்து விட்டால்.?
'யாரோ அனாதை போல் வாட்டில் கொண்டுபோய் விடுவார்கள். நான் எங்கே போனேன் என்றுகூட என் மனைவிக்குத் தெரியாது. இந்நேரம் என்ன பாடு படு வாளோ? எப்போது போய்ச்சேருவேன். உள்ள தைரியம் எல்லாவற்றையும் சேர்த்து நடக்கிறேன். அவளும் குழந்தை யும் எதிர்ப்படுகிறார்கள். பாதையைக் கடக்கிறேன். அவள் கேட்கிறாள். நீங்கள் இந்த ஹோல்டின் பிளேஸ் தானா? 'ஓம்' என்கிறேன். குழந்தை என்னைப் பார்த்துச் சிரிக்கி றான். அவன் கையில் பிஸ்கட் இருக்கிறது. ‘பஸ் கெதியில் வந்துவிடும் அவள் சொல்கிறாள். கடைக்குப் போய் வருவதற்கிடையில் பஸ் போய்விட்டால்? நான் நிற்கிறேன். பஸ் வரவில்லை. அதோ அந்தக் காரில் வருவது யார்? காலையில்தான் அப்படி நடந்து கொண்டிருந்தாலும் இப்போது என்னைக் கண்டால் ஏற்றாமல் போக மாட் டான் என்றே நினைக்கிறேன். ஒ. தில்லைநாதன் அந்த இளமை நினைவுகள் மறந்துவிட்டனவா? உன்னுடைய ஸ்டெத்தை உன்னுடைய இருதயத்தில் வைத்துப் பார். அது எத்தனையோ கதை சொல்லும். மாமரத்தில் விழுந்து காலை ஒடித்தபோது நாங்கள் இருவராக உன்னைத் தூக்கி கொண்டு போய் விட்டது ஞாபகமில்லையா? இப்போ நீ

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 231
ஒரு டொக்டர். நான் ஒரு நோயாளி என்னைப் பார்த் தாலே நான் எவ்வளவு ஏலாமையுடன் நிற்கிறேன், என்று தெரியும்? என் உள்ளம் ஒலமிடுகிறது.
அவன் என்னைக் கண்டுவிட்டான். கார்கூட என்னை நோக்கி வருகிறது. நான் இப்போதும் அவனைப் பார்த்துச் சிரிக்கிறேன். பஸ்ஸ" க்குக் காத்து நின்று களைத்தும் விட்டேன். அந்தக் காலி ரோட்டில் இறக்கிவிட்டு நான் போய்விடுவேன். மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டிருக் கிறேன். நான் அவளைப் பார்த்தபடியே நிற்கிறேன்.
மின்னலென ஒரு வேண்டாவெறுப்புச் சிரிப்பு அவன் முகத்தில் தோன்றி மறைகிறது. பக்கத்தில் இருப்பவனுக்துத் தெரியாமல் அவள் யார்? நிச்சயம் மனைவியாக இருக்க முடியாது. பட்டப்பகலில் இப்படி மனைவியுடன் யாரும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்களே. யாராயிருந்தா லும் எனக்கென்ன? நான் நிற்க முடியாது தவிக்கிறேன். 'ஏற்றிக்கொள்ள மாட்டாயா? கார் போய்விட்டது.
கண்ணை இருட்டிக் கொண்டு வருகிறது. என்ன நடந் தது? நான் மயங்கி விழுந்து விட்டேனா? அந்தத் தாயும் சேயும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தபடி நிற்கிறார்கள். என்னோடொத்த ஏழைகள் தானே அவர்களும், அவள் தந்த கோப்பி என்னைச் சிறிது நேரம் எழும்பி நிற்கச் செய்கிறது. அவர்கள் யார்? நான் யார்? இருவருக்கும் எந்த உறவுமில்லை. ஒரே வர்க்கம். உழைத்து ஒடாய்ப் போகும் வர்க்கம். என் நண்பன்' இப்போது வீட்டிலிருப் பான். நண்பனா ? இல்லை 'ஸ்டெத் போட்ட உயர் வர்க்கம்.

Page 119
18. ஏழையின் பாதை
2தெல் காற்று உடலை துளைத்தெடுத்தது. தன் னுடைய ஒரே ஒரு அழுக்குப் படிந்த போர்வையை- அது வீட்டில் படுக்கும் போதும் வெளியில் போகும்போதுப் போர்வைதான் -நன்றாக மூடிக்கொண்டு நடந்தான். கிறவலும் களியும் படர்ந்த ரோட்டில் விரைவாக நடக்கச் சிரமமாக இருந்தது.
தூறிக் கொண்டிருப்பது சாதாரண தூறல்தான். எனினும் நேற்றுவரை பெய்தது பெரும் மழை. ஆதலால் பாதையெல்லாம் சதக் சதக் என்றிருக்கிறது. இந்த ரோட் டில் யார் டாக்ஸி கொண்டு வருவார்கள்! அவனுக்கு அந்தச் சம்பவம் நினைவிருக்கிறது.
போன மாரிக்கு இப்படித்தான் மழை பெய்தது. பக்கத்து வீட்டுப் பரமுவின் பிள்ளைக்கு வலி. ஆனால் எவரும் கார் கொண்டு வர மறுத்து விட்டார்கள். கடைசியில் மாட்டு வண்டில் ஏற்றிப் பாதிதூரம் போவதற்கிடையில். முருகனின் மயிர்க் கால்கள் இதை நினைக்கும் போது குததிடுகின்றன. நெஞ்சுக் குழிக்குள் ஏதோ பேசுவது போன்றிருந்தது. "உனக்கென்னவும் நடந்தால் நான் என்ன செய்வேன் நாகம்மா’ அவன் வாய் விட்டுக் கூறிவிட்டு நடக்கிறான்.
வெளியிலே தாங்க முடியாத ஊதற் காற்று. உள்ளம் ரெண்டு நெருப்பாகச் சுடுகிறது. சேறும் சகதியுமான பாதையின் சிதறல்கள் அவன் உடுப்பையும் நாசப்படுத்திக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (X 233
கொண்டிருந்தன. மழை இலேசாகக் கூடிக் கொண்டிருந்தது. கையில் குடையில்லை. போர்வையை இழுத்துத் தலையில் மூடிக்கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பிரதான பாதையை அடைந்தபோது தெப்பமாக நனைந்து விட் டான். மழை 'சோ' வெனக் கொட்டத் தொடங்கிவிட்டது. தகரத்தால் வேய்ந்த தேநீர்க் கடைக்குள் புகுந்து கொண்டு, நனையாத ஒரு பகுதியால் தலையைத் துடைத் துக் கொண்டான். நேரஞ் செல்லச் செல்ல அவன் தாங்க முடியாத தவிப்பில் உழன்று கொண்டிருந்தான்.
“இந்த நேரம் நாகம்மா என்ன செய்வாள்? வீட்டுக் கிழவி பார்த்துக் கொள்ளும்தான். எண்டாலும் கிழவிக்குப் பார்வையே சரியாகத் தெரியாது. கிளவிக்கே டாக்டரும் சொன்னார். பிள்ளை இருக்கிற நிலை சரியில்லை எண்டு. இப்ப என்ன தான் நடக்குதோ? ஒரு வாடகைக்காரேனும் வராதா?’ ‘சர்’ என்று தண்ணீர் ஏற்றிக் கொண்டுவரும் மஞ்சளும் கறுப்புமான அந்த.
காரில் அடிபடாத குறையாக ஒடிப்போய் மறிக்கிறான். அநியாயம். அதற்குள் ஒருவர் இருக்கிறார். பாய்ந்து விழுகி றார் முருகன் மேல். அவன் தலையை சொறிந்து கொண்டு விலகுகிறான். தேநீர்க் கடைக்கார பியதாச கேட்கிறான். “என்னண்ணே சமூசாரத்துக்கு சொகம் இல்லே?" “ஓம் அப்பா இதுதான் மாசம். அடுத்த கிழமைதான் தேதி எண்டு சொன்னா. இண்டைக்கு வேலையால போறன்,துடித்துக் கொண்டிருக்கிறா. காலையிலே சாடை யாக வலி இருக்குதெண்டு சொன்னா. முதலாளிகிட்டே லீவு கேட்டேன். மாட்டேன் எண்டிட்டார். நான் என்ன செய்ய.”
சொல்லி முடிப்பதற்குள் நா தழதழத்து விட்டது.
“டாக்கிக்காரன் அந்த ரோட்டுக்கு வர மாட்டுது. அண் டைக்கு மழை பெய்ஞ்ச உடனே கிறவல் கரைஞ்சு கார்

Page 120
234 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஒண்டு புதைஞ்சு கரைச்சல் பட்டது. அதனால் அவர்கள் 6nu fyr of T L LITrit”
முருகனுக்கு திகில் பற்றிக் கொண்டு வந்தது. யாரும் வராவிட்டால். பியதாச அந்தக் குடிசைத் தேநீர்க் கடையில் இருப்பவன் என்றாலும் டாக்ஸிக்காரர் கன பேரையும் தெரியும். “பியதாச, உனக்குத்தான் கன பேரைத் தெரியுமே. யாரையும் சொல்லிப் பாரன்”
"நான் சொல்லிறன். ஆனால கிறவல் ரோட்டுப் பக்கம் யார் வரப் போறாங்க.?”
நேரம் போகப் போக முருகனுக்கு ஏதோ செய்து கொண்டிருந்தது.
“காலையில் ஒரு நாள் லீவு கேட்டன். குடுத்தானா அந்தப் பாவி! காசில்லாதவனுக்கு எத்தனை கஷ்டம்” முருகன் தன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தபோதும் பியதாசாவுக்கு கேட்டது.
“மொதலாளின்னா அவன் நம்மளை நாய் மாதிரி நினைக்கிறான். நான் சண்டை பிடிச்சேன். இப்ப நட்டம் எண்டாலும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று ரூபா கிடைக் கிறது. எல்லோரும் கடை போடக் காசுக்கெங்கே போவது” "ஜீவிக்கிறதுன்னா மனுஷனா ஜீவிக்கிறது. இல்லேன்னா மனுசனா வாழுறதுக்குப் போராடிச் சாவது” பியதாச பேசிக் கொண்டே போகிறான். நேரம் போயக் கொண்டே இருக்கிறது. கடை பூட்டும் நேரமாகிறது. இருவரும் பாதை யைப் பார்த்தபடி இருக்கிறார்கள்.
ஜன நடமாட்டமும் வாகன நடமாட்டமும் குறைந்து விட்டன. பியதாசவும் முருகனும் ஒன்றாக ஒரு தொழிற் சாலையில் வேலை செய்தவர்கள். முதலாளிகளின் கொடுமை தாங்க மாட்டாமல் பியதாச சண்டை பிடித்து வேலை போய்விட்டது. இப்போது இந்தச் சின்னத் தேநீர்க் கடைதான் தஞ்சம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் x 235
“முருகண்ணே பார்த்துக் கொண்டிராம சின்னரா சாவின்ர காற ஒரு தரம் கேட்டுப் பார்க்கிறது!” பியதாசா சொல்கிறான். முருகனுக்கு நம்பிக்கையில்லை. கல் வீட்டுக் காரச் சின்னராசா அழுக்குப் படிந்த முருகன் போன் றோரை ஏற்றியதாகச் சரித்திரம் இல்லை.
பாதையில் ஒருவன் சின்னராசாவின் பக்கத்து வீட்டுக் காரன் காரால் அடிபட்டுக் கிடக்கப் பார்த்தும் பாராம லும் போனவன். எத்தனை சொல்லியும் "இந்த இரத்தக் காயத்தை ஏற்றினால் காரை அல்லவோ பேந்து கழுவ வேண்டும்” என்று சொல்லிவிட்டான். அவனிடமாவது இந்த நடுநிசியில் போவதாவது.
மழை இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறது. பியதாச கடையைப் பூட்டித் திறப்பைக் கையில் எடுத்துக்கொண்டு "வாண்ணே போவோம்” என்று சொல்லியபடி நடக் கிறான். றோட்டில் கால் வைக்கவும் ஒரு டாக்ஸி வரவும் சரியாக இருந்தது.
காரை மறிக்கிறான் பியதாச “எங்க போக” டாக்ஸி காரன் கேட்கிறான். இடத்தைச் சொல்கிறான் முருகன்.
“என்னால் முடியாது. அந்தக் கிரவல் றோட்டில் கார் புதைஞ்சா? முதலாளிக்கு ஆர் பதில் சொல்றது” அவர் களின் பதிலை அவன் எதிர்பாராமல் அவன் காரை "ஸ்ராட்” பண்ணுகிறான்.
முருகன் கெஞ்சுகிறான். “அவசரம் வயிறு நொந்து கொண்டிருக்கு. ஆஸ்பத்திரிக்குப் போக வேணும். சிக்கலான கேஸ் என்று டாக்குத்தரே சொல்லி விட்டார்” சொல்லி முடிப்பதற்குள் முருகனின் நா தழு தழுக்கிறது. "அந்தக் கிரவல் ரோட்டில் காரக்கொணந்தா ஆஸ்பத் திரிக்கு இண்டைக்குப் போக முடியாது. அடுத்த கிழமை தான் போகலாம்” டாக்ஸி படாரென்று பறக்கிறது.

Page 121
236 - இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
ஒடிக்கொண்டிருக்கும் டாக்ஸியைப் பார்த்து முருகன் மறிக்கிறான். “தாய் தங்கச்சி இல்லாதவன்கள் இரக்கமே இல்லையா? அவனிட்ட இரக்கம் இருந்தாலும் அவன் முதலாளிக்கிட்டே இரக்கமில்லையே அதற்கு என்ன பண்ணுகிறது” இருவரும் நடக்கிறார்கள். சின்னராசாவின் கதவை தட்டு தட்டென்று பல முறை தட்டியும் பதில் இல்லை. பியதாசா சத்தம் போட்டு "சின்னராசா மாத் தையா” என்கிறான். நேரம் இரவு பத்து மணி இருக்காது. ஆனாலும் வீடு இருளாகக் கிடக்கிறது.
திரும்பவும் பியதாச சத்தம் போடுகிறான். முனகிய படியே கதவைத் திறக்கிறான். மாத்தையா, அவர் பெரிய கடை முதலாளி. கார் வைத்திருக்கிறார். பியதாச நிலைமை விளக்குகிறான். சின்னராசா முகத்தில் எரிச்சல் படர்கிறது. “கார் ஒட்ட முடியாது. றைவர் இல்ல. எனக்கும் சுக மில்லை” பியதாசவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வருகிறது. இரண்டு மணிக்கு முன்னால் தானே ஒட்டிக் கொண்டு போனவனுக்கு இப்ப என்ன சுகமில்லாமப் போட்டுது?
“உயிர் விஷயம் கொஞ்சம் தயவு காட்டுங்க” முருகன் கெஞ்சுகிறான். “நாங்க கார் வைச்சிருந்தா இவைக்கு ஒட்ட வேணுமாக்கும்.” எரிந்து தள்ளிய சின்னராசா கதவைப் படாரென்று சாத்துகிறான். இனி என்ன செய்வது? இந்த உலகத்தின் மீதே தாங்க முடியாத வெறுப்பு ஏற்படுகிறது முருகனுக்கு.
பிரசவ வேதனையுடன் துடிக்கும் மனைவியை நினைத் தால் என்னவோ செய்கிறது முருகனுக்கு. இந்நேரம் வீட்டில் என்ன நடந்திருக்குதோ? ஏழைகளுக்கு எத்தனை துயரம்.
நாளும் கிழமையும் வர முதல் ஆஸ்பத்திரியில்தான் சேர்க்க நினைத்தான். அதற்கிடையில் இப்படி ஆகிவிட்டது. “முருகண்ணே இனி என்ன பண்ணேனும், கரத்தையில்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 237
கொண்டு போவம். அந்தக் கிரவல் றோட்டில் கரத்தைக் காரங்களும் வாராங்களோ என்னவோ தெரியாது.”
"அறுவான்கள் சும்மா கிடந்த ஒழுங்கையைக் களிமண்ணும் கிறவலும் போடாம வைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். இலக்சனுக்கு எங்களிட்ட வோட்டுக் கேட்க ரோட்டுப் போட்டுத் தாறன் எண்டு சொல்லிப் பேய் காட்டிப் போட்டார்கள்! இப்ப பார் என்ன அலைச்சல்” ஆத்திரம் தீர திட்டுகிறான் முருகன்,
“ஒவ்வொரு மழைக்கும் இப்படிக் கஷ்டப்படுகிறோம். அவங்களுக்கு இது தெரியுமா? வோட்டுக் கேட்க வருவான்கள். ஐஞ்சு வருஷம் போன பிறகு, இந்த வருஷம் இந்தப் பக்கம் வரட்டும்.” பியதாசாவின் கண்களில் ஆத் திரம் கொழுந்தது விட்டெரிந்தது. இந்த அநியாயக்காறன் கள் இப்படிப் பேய்க் காட்டுவது எப்பதான் முடியுமோ? இந்த மாதிரி நடக்கும் வரைக்கும் முடிவில்லை. நாமதான் அவங்களுக்கு வேற முடிவைக் காட்ட வேண்டும்.
வண்டிக்காரக் காந்தனின் வீட்டை நெருங்கியபோது வீட்டில் பேச்சுக்குரல் கேட்கிறது. "கந்தா” எனக் கூப்பிடு கிறான் முருகன். கந்தன் வெளியே வருகிறான். “மனுசிக்கு சுகமில்லை. வயிறு நோகுதொண்டு துடிக்குது. கார்க்காரன் ஒருவனும் அந்த ரோட்டுக்கு வரமாட்டான் எண்டு சொல் லிப் போட்டான்கள். கரத்தையை ஒருக்காக் கொண்டு வாவன்.”
முருகனிடம் கார்க்காரரிடம் கெஞ்சிய கெஞ்சல் இல்லை. தன்னோடு ஒத்த தொழிலாளியிடம் உரிமையுடன் கதைக்கிறான். “கரத்தையைக் கொண்டு வாறதும் கஷ்டம் தான். இது அந்த களி ரோட்டால எப்ப ஆஸ்பத்திரிக்கு போய்ச் சேரப் போகுதோ ? காந்தனும் சொல்கிறான் அதுவுமில்லாமல் நிக்கிறான். முருகனின் நா தழதழக்கிறது. கரத்தை கட்டப்படுகிறது. கிரவல் ரோட்டால் வீட்டுக்குப்

Page 122
238 X- இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
போய்ச் சேர நடுச் சாமத்தை எட்டி விட்டது. அங்கே சோர்ந்து கொடியாய்க் கிடக்கிறாள் நாகம்மா.
இரத்தத்தில் தோய்ந்த பச்சை உருவம். புது உலகத்தைக் கண்ட பயத்தில் கத்திக்கொண்டிருக்கிறது. கிழவி சொல்கிறாள். “எங்கேயப்பா போகிறாய். உன்னைத் தேடி உன்ர மூத்த மகனையும் அனுப்பிப் போட்டன். பிள்ளை பிறந்து அரை மணியாகிவிட்டது. இன்னும் நஞ்சுக்கொடி விழல்ல. இரத்தமும் கணக்கப் போட்டுது. உந்த கரத்தை யிலே ஏத்தி எப்ப கொண்டு போய் சேர்க்கிறது”
நாகம்மாவுக்கு உணர்வில்லை. முகம் வெளிறி இருந்தது. முருகனுக்கு தொண்டையில் ஏதோ இருப்பது போன்றிருந் தது. தொட்டுப் பார்த்தான். இரத்தம் பிசிபிசுவென ஒட்டு கிறது. உடம்பு சில்லிட்டிருக்கிறது. கைத் தாங்கலாகப் பியதாசவும், முருகனும் காந்தனும் தூக்கிப் போடுகிறார் கள். வண்டி விரைகிறது.
ஒழுங்கைகள் கழிந்து கிரவல் ரோட்டில் வந்தது வண்டியை இழுக்க முடியாமல் மாடுகள் திணறுகின்றன. மழை இன்னும் தூறிக் கொண்டே இருக்கிறது. கிழவி குடையை விரித்துத் தாயையும் பச்சைக் குழந்தையையும் மூடுகிறாள். சாதாரணமாகப் பத்து நிமிஷத்தில் கடக்க வேண்டிய ரோட்டைக் கடக்க இவ்வளவு நேரமாகி விட்டது.
பிரதான பாதைக்கு வந்ததும் வண்டி பறக்கிறது. வண்டி யின் குலுக்கலில் நகம்மாவின் உடுப்பில் இரத்தக் கசிவு கூடிக்கொண்டே இருக்கிறது. ஆஸ்பத்திரியில் நாகம்மா வைச் சேர்க்கும் போது மெல்லிய நாடித்துடிப்பு மட்டும் தான் இருக்கிறது, நேரம் ஒடிக் கொண்டிருக்கிறது.
ரோட்டுக் கூரையில் வண்டி நனைந்து கொண்டிருந்தது. காந்தன் பீடி புகைக்கிறான். பியதாசவும் முருகனும் ஒரு தரம் வாட்டுக்குள் போகலாமா என்று காவலாளியைக் கேட்க அவன் அவர்களை விரட்டுகிறான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & 239
மூவரும் திரும்பவும் ரோட்டுக்கரையில் உள்ள கடை யின் அருகில் ஒதுங்கிக் கொள்கிறார்கள். முருகன் சொல் கிறான்.
“நீங்களும் ஏன் இந்த இருட்டிலையும், மழையிலையும் கிடக்கணும், நாளைக்கு வேலைக்குப் போறவர். நான்தான் பாவம் செய்தவன். நீங்க போங்க”
"பாவமும் புண்ணியமும் எங்களை ஒன்றும் சொய்யாது. ஏமாற்றலும், சுரண்டலும் தான் பொழியுது” பியதாச வானத்தை அண்ணாந்து பார்த்தபடி சொன்னான்.
வானம் இருண்டுபோய்க் கிடந்தது. மருந்துக்கொரு நட்சத்திரம் இல்லை. அவர்கள் போகவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டுப் போவதாகச் சொல்லுகிறார்கள். முருகனுக்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் காவற்கார னைக் கெஞ்சுகிறான். இரக்கமற்ற காவற்காரன் விரட்டு கிறான். அந்த இருளில் முருகனின் ஒரு ரூபா காவற் காரனின் கையில் நழுவுகிறது.
“சரி கெதியாப் போட்டு வா. ஒட்டமும் நடையுமாய் யாரும் தன்னைக் கலைத்துவிடுவார்களோ என்ற பயத் துடன் முருகன் வாட்டுக்கு போகிறான். ஏதோ ஆரவாரம். பிரசவ அறையுள் இருந்து ஓடிவரும் நர்ஸ் அவனிடம் ஏதோ சொல்கிறாள். “பிளட், பாஸ், டிக்கட்” ஏதோ அவனுக்குத் தெரியாத சொற்கள்.
“மிஸி” அவன் குரலைக் கேட்ட தாதி, “நீர்தானே நாகம்மாவின் புருஷன் "ஓம் மிஸ்" உம்முடைய மனுசிக்கு நிலைமை மோசம். இரத்தம் கொடுக்க வேணும். யாரையும் கூட்டிக்கொண்டு வரமுடியும்ா.”
"ஒம் மிஸ்" "இரத்தம் குடுத்தாலும் நிலைமை சொல்வதற் கில்லை. ஏன் இவ்வளவு நேரமும் கொண்டு வராமல் என்ன செய்தியள்”
"மிஸ் கொண்டுவரக் கார் கிடைக்கல்லே!”

Page 123
240 «Х• இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்
கண்ணிர்துளிகள் கன்னத்தில் புரண்டோடுகின்றன. “கெதியா ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாரும்” ஒட்ட மும் நடையுமாய் முருகன் பியதாசவையும், காந்தனையும் இழுத்துப் போகிறான்.
டாக்டர் பிரசவ அறையில் இருந்து சோர்ந்த முகத்துடன் வருகிறார். "ஐயா" என்கிறான். “நீ நாகம்மான்ர புருஷனோ”
“ஒம் ஐயா.” “உங்களுக்கென்ன மூளையில் களிமண்ணோ, நேர காலத்துடன் கொண்டு வாறத்துக்கு என்ன? முக்கால் உயிர் போன பிறகு கொண்டுவந்தால்.”
டாக்டர் போகிறார். மூவரும் சிலையாக நிற்கிறார்கள். தாதி வருகிறாள். "நாங்கள் என்ன சொய்யலாம். எங்களால் ஒன்றும் செய்ய முடியல்ல” முருகன் விறைத்துப் போய் நிற்கிறான்.
பொழுது புலர்ந்து கொண்டே வருகிறது. தூறலில் நனைந்த வண்டிப்பக்கம் போகிறார்கள். வண்டிச் சில்லுகளிற் சிக்குண்டு கிடக்கிறது முருகனின் விழிகள். சில்லுக்கடியில் கிடக்கும் பேப்பரில் கொட்டை எழுத்து களில் பின் வரும் செய்தி விளாசப்பட்டிருக்கிறது.
“வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் நலத்திற்காகக் கண்டிக்குப் புதுப் பாதை போடப்படும்’ தேசிய அரசாங்கத்தின் அறிக்கை.
முருகன் பாய்ந்து எடுக்கிறான் அந்தப் பேப்பரை மழையில் இளகிய பேப்பர் அவன் கையில் நசிகிறது.
வீரகேசரி


Page 124


Page 125
இலங்கை கிழக்கு கோளாவில் கிராம வருடங்களாக இல
புகழ்பெற்ற இராஜே சிறுகதைத் தொ நூல்களும் | stCg: படைப்பாற்றல் மிச் சிறுகதைகள் கொ மேலும் புகழ் சேர்க்
 

எம்.ஏ. பட்டமும், திரைப்படத் றப்புப் பட்டமும் பெற்ற முதல்
ழ் மகளிர் அணியில் ள்ள பெண்ணியவாதி. தமிழ் பெண்ணிய எழுத்தாளராக ஸ்வரி ஆறு நாவல்கள், ஐந்து குதிகள், மூன்று ஆய்வு தி நன்கு அறிமுகமாகிய $க எழுத்தாளர். 18 சிறந்த ண்ட இந்நூல் அன்னாருக்கு கும்.