கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்

Page 1


Page 2


Page 3

இந்திய - இலங்கை இக்ைகியம்
G95 656õòB6OOIT) LÍDò
கே. எஸ். சிவகுமாரன்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 தொலைபேசி : 24342926 தொலைநகல் 0091-44-24346082 L66öt seg55 ci) : manimekalaiGDeth.net WebSite : www.tamivanan.com

Page 4
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம்
உரிமை
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம் வெளியிட்டோர்
நூல் விவரம்
离
寿
为多
丸、
இந்திய விலை : ரூ. 75.OO
இந்திய-இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கே. எஸ். சிவகுமாரன்
தமிழ்
2005
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
மேப்லித்தோ
கிரெளன் சைஸ் (12% x 18% செ.மீ)
11 புள்ளி
XX + 288 = 308
ஐஸ் கிராஃபிக்ஸ் கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ் சென்னை - 26, () 23725639 ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட் சென்னை - 94.
தையல் மணிமேகலைப் பிரசுரம்
சென்னை - 17

- iii
என்னுரை
அன்பு இதயங்களுக்கு,
வணக்கம். இனிய நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்களின் ஆதரவில் வெளியாகும் எனது இரண்டாவது நூல் இது. அவருடைய மணிமேகலைப் பிரசுரம், எனது நூலான, திறனாய்வு என்றால் என்ன?’ என்னும் புத்தகத்தை 2004இல் வெளியிட்டது. தமிழ்நாட்டிலும், ஏனைய உலக நாடுகளிலும் கூர்மையான வாசகர்களிடையே, குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களிடையே அந்நூல் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இதற்காக ரவி தமிழ்வாணனுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நூலும் உங்களுக்குப் பயன்படும் என்பது எனது திடமான நம்பிக்கை. இந்திய - இலங்கை கலை, இலக்கியம் தொடர்பான பல செய்திகளையும், குறிப்புக்களையும், திறனாய்வுகளையும் இத்தொகுப்பு மூலம் தர நான் முற்பட்டுள்ளேன். ஆய்வு செய்யும் மாணவர்களுக்கும், ஏனைய இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த நூல் உவகை தரும் தொகுப்பாக அமைகிறது என்பது எனது நம்பிக்கை.
‘சினமா' உட்பட என் மனத்திரை’யில் எழுந்த சில படிமங்களுக்கு எளிய நடையில் எழுத்துருவம் வரைய இங்கு நான் முற்பட்டுள்ளேன்.
ஆமாம், இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் பல, இலங்கைப் பத்திரிகைகளான 'தினக்குரல்’ (ஞாயிறு இதழ்), ‘வீரகேசரி’ (வெள்ளிக்கிழமைகளில் வெளிவந்த கலைக்கேசரி) ஆகிய புதினத்தாள்களில் ‘பத்தி (Column) எழுத்துக்களாக வாராந்தம் வெளிவந்தன. இவற்றுள் ஓரிரண்டு, 'தினகரன்' (வாரமஞ்சரி), போன்ற செய்தித்தாள்களில் வெளிவந்தன. இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து நீங்கள் புத்தக வடிவில் படிக்கும்பொழுது

Page 5
iV
பெறும் அனுபவம் உங்கள் சிந்தனைக்கும் தகவற் பெருக்கத்துக்கும் பெரிதும் உதவும் என நினைக்கிறேன்.
இந்த அறிமுகம் உட்பட, பத்து தலைப்புக் களில் இப்பத்தி’களின் கோவையை இங்கு சேர்த்துள்ளோம்.
女女女
ஆங்கில இலக்கியம் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆபிரிக்கா மற்றும் பொதுநல அமைப்பு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில், தனித்தனிக் குணவியல்புகள்
கொண்டு வளர்ச்சி பெறுவது போன்று, தமிழ் இலக்கியமும்,
தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சில வட இந்திய நகரங்களிலும் தனித்தனி இயல்பு கொண்டதாய் வளர்ந்து வருவதை நாமறிவோம்.
நான் ஓர் இலங்கையனாகையால், அதிகமாக ஈழத்து இலக்கியங்கள், கலைகள் தொடர்பாகவே ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறேன். ஆயினும், இந்தியத் தமிழ் எழுத்துக்கள் பற்றியும் இடைக்கிடையே 1960 முதல் தமிழ்நாட்டுச் சிற்றேடுகளிலும், ஈழத்துக் கலை, இலக்கிய ஏடுகளிலும் எழுதி வந்துள்ளேன்.
அவ்வாறு நான் எழுதிய கட்டுரைகளை எனது ஒத்த வயதுடைய முதுநிலைப் பெரும் படைப்பாளிகள் அறிந்து வைத்திருக்கக் கூடும்.
எழுத்து, சரஸ்வதி, தமிழ் சினமா, தீபம், யாத்ரா, படிகள், சலனம் என்பன போன்றவற்றில் நான் எழுதியிருக்கிறேன்.
சி.சு. செல்லப்பா, விஜயபாஸ்கரன், நா. பார்த்தசாரதி, க.நா. சுப்ரமண்யம், வெங்கட் சாமிநாதன், வல்லிக் கண்ணன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், நீல. பத்மநாபன், ஆதவன், வேம்பாக்கம் சுப்பிரமணியன், வாஸந்தி, இந்துமதி, லக்ஷமி கண்ணன், அம்பை, மாதவன், சிற்பி பாலசுப்ரமணியன், மீரா, சி.மணி, தமிழவன், எஸ்.வி. ராஜதுரை, ஞானி, ஞாநி,

V ,
அக்னிபுத்திரன், கோமல் சாமிநாதன், பிரபஞ்சன், ஜெயகாந்தன், மாலன், பாலகுமாரன், சுஜாதா, நகுலன், ஞானக்கூத்தன், பூரீராம், வண்ணநிலவன், வண்ணதாசன், க்ரியா ராமகிருஷ்ணன், கனகசபாபதி, மோகன், வீ. அரசு, முத்துசாமி, தியோடோர் பாஸ்கரன், ராஜ கௌதமன், ரவிக்கு மார், லா.ச.ரா., தேவசகாயகுமார், கண்ணன், மனுஷ்யபுத்திரன் என்போர் என்னையும், எனது எழுத்துக்களையும் ஓரளவு அறிவர் எனலாம். இவர்களுள் வேம்பாக்கம் சுப்ரமணியன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகிய மூவரும் எனது வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்ட இனிய நண்பர்கள்.
இவர்கள் பெயர்களை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ‘பூவோடு சேர்ந்த நார்’ ஆக நான் இருப்பதைக் காட்டுவதற்கும், இந்தியத் தமிழ் எழுத்துக்களையும் நான் காலத்திற்குக் காலம், எனது திறனாய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்பதற்குமாகவே.
தொடரும் பக்கங்களில் இந்திய எழுத்தாளர்கள் இருவர் பற்றிய எனது கணிப்பைப் பார்க்கலாம்; படிக்கலாம்.
இன்னுமொரு நூலில் மேலும் பல இந்திய எழுத்தாளர்கள் பற்றிய பார்வை வெளிவரும்.
இனி, உங்கள் கைகளில் இந்நூல். கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
அன்பு மறவாத கே. எஸ். சிவகுமாரன்
21, Murugan Place, ஜூலை 2005
Colombo - 06
SRILANKA
TPhone : 011-94-1-2587617
e-mail: kSSivan(ajuno.com
kssivan 19@sltnet.lk

Page 6
இவர்கள் என்ன கூறினார்கள்?
கே.எஸ். சிவகுமாரனின் பங்களிப்புக்களில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது. 1985 முதல் 2005 வரையிலான அவர் பங்களிப்புக்கள் பற்றிய பார்வைகள் புறம்பாகப் பதிவு செய்யப்பட வேண்டியவை.
இங்கு 1960 முதல் 1982 வரையிலான அவர் குறித்த மதிப்பீடுகளைச் சுருக்கமாகத் தருகிறோம். 1. சிற்பி (சி. சிவசரவணபவன்) கலைச்செல்லி - 1960
சில நல்ல மொழி பெயர்ப்புக் கதைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ள இளைஞர் மட்டு நகர் கே.எஸ். சிவகுமாரன், சினிமா உலகைப் பற்றியும் பின்னணிப் பாடகர்களைப் பற்றியும் நிறைய எழுதிவரும் ரேவதியும் இவர்தான். 2. மகேன் (பாலுமகேந்திரா) - தேனருலி - செப்டம்பர் 1963
ரேவதி என்னும் புனைபெயரில், கே.எஸ். சிவகுமாரன் சினிமா சம்பந்தமான கட்டுரைகளையே ஆரம்பத்தில் எழுதி வந்தார். 1959 இல், நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம்’ என்னும் கட்டுரையுடன்தான் இவரது இலக்கிய விமர்சன வாழ்க்கை &bulbul DIT dispg).
3. கனக செந்திநாதன் - ஈழத்து இலக்கிய வளர்ச்சி (964)
அரசு வெளியீடு, கொழும்பு
தமிழ் சினிமா தொடக்கம் நொபேல் பரிசு பெற்ற எழுத்தாளர் வரை, சகலவற்றையும் அறிமுகப்படுத்தும் ஆவல் மிக்கவராகக் காணப்படுகிறார். இளம் எழுத்தாளருக்கு உபயோகமாகும் வகையில் மேனாட்டுக் கதாசிரியர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்பொழுது ஆங்கிலப் பத்திரிகையிலே தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துதல் நற்பணியாகும். விமர்சகனுக்கு, எழுத்தாளனை, வாசகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஒருவித கடமைப்பாடும்
 

vii
இருப்பதனாலேதான் இவரை நான் விமர்சகர் வரிசையில் சேர்த்துள்ளேன். w 4. மு. தளையசிங்கம் - ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - செய்தி
13.4.1964
பெனடிக்ட் பாலன், செம்பியன் செல்வன் போன்றவர்களின் பரம்பரையில் இப்போது மிக ஆழமான பார்வையுள்ளவர் இவர் ஒருவரேதான். சிருஷ்டி இலக்கியத்தில் அவ்வளவு ஈடுபடுவதாகத் தெரியாவிட்டாலும், பழைய சிருஷ்டி எழுத்தாளர்களைவிட இவரிடம் கூடுதலான பார்வை ஆழம் இருக்கிறது. விமர்சனத் துறையிலாவது இவர் எதிர்காலத்தில் நம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவார் என்பதே எனது எண்ணம்.
5. மு. தளையசிங்கம் - ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - செய்தி
1.O.1.1965
நற்போக்கு ஒருவகை சிங்கள இலக்கியக் கொழும்பு வட்டமாகவும், மு. தளையசிங்கம், சிவகுமாரன் தருமசிவராமு போன்றோர் ஒருவகை பேராதனை வட்டமாகவும் இப்போது தெரிகிறார்கள் என்று சொல்லலாம்.
6. சுஹேர் ஹமீட் - தமிழ்நாடகமும் பொதுஜனத் ஒதாடர்பும் -
gւeՍծ 1973 கே.எஸ். சிவகுமாரன் போன்ற ஓரிருவர் மாத்திரம்தான் எழுதி நாடகக் கலைஞர்களை ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்படித் தனி மனிதர்களால் ஒரு கலையின் வளர்ச்சிக்கு உதவ முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விஷயம்.
7. சானா (எஸ். சண்முகநாதன்) - கலைச்செண்டு - ‘ருப்புத்தோரா மஸ்தானா’ சிறப்பு மலர் - 13.10.1973 கே.எஸ். சிவகுமாரன் ஒரு சிறந்த விமர்சகர். நாடகத்தில் ri-Gust G6Odluest. ஒளிவு மறைவின்றிக் கருத்துக்களைப் பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்துவதற்குத் தயங்காதவர்.

Page 7
Viii
8. கவசம் - ஏப்ரல் 1974
ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு - இப்படிப் பல கோஷங்கள் - இந்தக் கோஷங்கள் எதிலாவது சேர்ந்து முன்னேறத் துடிப்பர் பலரும். ஆனால், இந்தக் கோஷ்டிகள் எதிலும் சேராமல் தப்பிக் கொண்டவர் எழுத்தாளரும், விமர்சகருமான கே. எஸ். சிவகுமாரன். இன்றைய இளந்தலைமுறை, தங்கள் விமர்சனக் கூட்டங்களுக்கு, தனிப்போக்குடைய இவரையே விரும்பி அழைக்கின்றனர். காரணம், இவர் தன் மனதில் பட்டதை அப்பட்டமாகச் சொல்லிவிடுவார்.
9. ரங்கன் - தேசிகன் பாமா ராஜகோபால் - இலக்கிய
உலகம் - தினகரன் வாரமஞ்சரி - 27.5.1979
கலை இலக்கியத்துறையில் ஆக்கபூர்வமான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதிய, இளைய தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர், நாடகக் கலைஞர்களை ஊக்குவித்த கே.எஸ். சிவகுமாரனின் சிருஷ்டிகளைச் சமீப காலமாகப் பத்திரிகைகளில் காணவில்லை.
O. தேவி - ஓராண்டு மதிப்பாய்வு - மல்லிகை ஓகஸ்ட் 1975
வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு, நம்பிக்கை ஊட்டக்கூடிய விதத்தில், அவர்களது படைப்புகளைப் பற்றிக் குறிப்புக்கள் எழுதிவரும் சிவகுமாரன் நிறைய விஷயங்களைக் கூறுவதற்கு முன்வந்தாலும் ஆழமான விமர்சனப் பார்வை இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.
1. பேராசிரியர் கா. சிவத்தம்பி - ஈழத்தில் தமிழ் இலக்கியம்
(973 - தமிழ் புத்தகாலயம், சென்னை. தமிழிலக்கிய வளர்ச்சி நெறிகளை ஆங்கில மொழி வாசகர்களுக்கு எடுத்துக்கூறும் முக்கிய பணியினைச் செய்து வரும் கே.எஸ். சிவகுமாரன் பெயர் விமரிசக ஆய்வாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுதல் அவசியமாகும்.

İX
12. ரங்கன் - தேசிகன் பாமா ராஜகோபால் - இலக்கிய
உலகம் - தினகரன் வாரமஞ்சரி - 11.11.1979
நீண்டகால இடைவெளிக்குப் பின் நமக்குப் பிடித்தமான நல்ல விமர்சகரான கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துக்களைப் படிக்கக் கூடியதாக இருக்கிறது.
13. பாமா ராஜகோபால் - வாரம் ஒரு சந்திப்பு - தினகரன்
வாரமஞ்சரி - 23.3.1980 இந்த நாட்டின் தமிழ் எழுத்தாளர்களையும் குறிப்பாகத் தமிழ் நாடகக் கலைஞர்களையும் பிற மொழி பேசுபவர்கள் அறிந்து புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் அவர்களையெல்லாம் அறிமுகம் செய்து வைத்தவர்தான் இந்தக் கே.எஸ். சிவகுமாரன், ஆங்கில எழுத்துக்கள் மூலந்தான் எழுத்துத்துறைக்குள் காலடி வைத்ததனாலோ என்னவோ, அவரது பார்வை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளோ, சதுரத்துக்குள்ளோ நின்று கொண்டிராம்ல், விரிந்து விரிந்து சென்று கொண்டிருக்கறது. கலை, இலக்கியம், வானொலி - எந்தத் துறையை அவர் தொட்டாலும் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யத் துடிக்கிறார் என்பதனை உணர்ந்து கொள்ளலாம். மேனாட்டுக் கலை இலக்கியங்களை நம்மவர்களும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கோடு எழுத்துலகுக்குள் நுழைந்தவர் சிவகுமாரன்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் சிவகுமாரனைத் தமிழ் ஆங்கில வாசகர்களும், கலை வானொலித்துறை சம்பந்தப்பட்டவர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பிலுள்ள புளியந்தீவு, ‘சிவா'வைப் பெற்ற ஊர். கைலாயர் செல்ல நயினார் - கந்தவனம் தாங்கத் திரவியம் தம்பதிகள் இவரைப்பெற்ற பெருமைக்குரியவர்கள்.
சிவகுமாரன் எழுத்துத் துறையோடு நெருக்கமான தொழில்களையே கடந்த 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். Ceylon Chamber of Industries 565 foods &bd fluft gup

Page 8
X
உறுப்பினராக நுழைந்தவர். பின்னர் உள்ளூராட்சிச் சேவை அதிகார சபையில் தமிழ் மொழிபெயர்ப்பாளரானார். இதனையடுத்து வானொலிக்குள் நுழைந்துகொண்டார். 1969லிருந்து 1979 வரை அவர் வானொலியில் நிரந்தரமாகப் பணியாற்றிய காலம் அவருக்கு நல்ல அனுபவங்களைக் கொடுத்தது. வானொலியைப் பொறுத்தவரையில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் கைவரப் பெற்றவர் 86ોum.
1966 ஆம் ஆண்டு முதல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வர்த்தக, தேசிய சேவைகளில், பகுதி நேர அறிவிப்பாளராகப் பணி புரிந்தார். ෂි 6කuff செய்தியறிக்கைகளையும் வாசித்திருக்கிறார். பகுதிநேர ஆங்கில அறிவிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
நிரந்தரமாக வானொலியில் இவர் செய்திப் பகுதியிலேயே கடமையாற்றினார். தமிழ்ச் செய்தி மொழி பெயர்ப்பாளராகவும் உதவி ஆசிரியராகவும், பொறுப்பாசிரியராகவும் பதவி வகித்திருக்கிறார். அவற்றோடு செய்தி சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார்.
1962 முதல் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவரும் சிவகுமாரன், ஜேர்னலிசத்தில் இரண்டு டிப்ளோமாக்களைப் பெற்றிருக்கிறார்.
தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் ஆங்கிலப் பத்திரிகைகளில் இவர் எழுதிவருவதனைக் குறிப்பிடுவதோடு, நமது நாடகக் கலைஞர்கள் பற்றித் தமிழ் அறியாத பிற சமூகத்தவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பினையும் செய்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். இந்தப் பணியினைச் சாதாரண ஒரு பணியாகக் கருதிவிட முடியாது. நமது கலைஞர்களுக்கு ஓர் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் சிவகுமாரனுக்கும் பங்குண்டு. சிலரைப் புறக்கணித்துச் சிலரைத் தூக்கிவைத்து வட்டத்துக்குள் நிற்கும் கோஷ்டி எதுவும் சிவாவுக்கு இல்லை.

xi
4. ரங்கன் - தேசிகன் (பாமா ராஜகோபால்) - இலக்கிய
නූ_coඝගී - தினகரன் விாரமஞ்சரி - 8.6.1980 தமிழ் நாடகங்களைத் தவறாமல் பார்த்து, அவற்றைப் பற்றித் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகளில் தவறாமல் எழுதி வருபவர் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன். இவரே இந்தப் பணியினைக் காழ்ப்புணர்ச்சியின்றிச் சிறப்பாகச் செய்யமுடியும். நவீன தமிழ் நாடகமேடை பற்றி கே.எஸ். சிவகுமாரன் எழுதினால், அது பயனுள்ள முயற்சியாக இருக்கும்.
5. ரங்கன் - தேசிகன் - பாமா ராஜகோபால் - இலக்கிய
உலகம் - தினகரன் வாரமஞ்சரி - 24.8.1980
கலை இலக்கிய விமர்சகரான கே.எஸ். சிவகுமாரன் எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் மூலம் நமது பெயர்களைச் சிங்கள வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
8. திரேசா - சியாமளா - ஞதளிவூத்தை ஜோசப்) குறிப்புகள் -
நித்திரன் origidsoft - 3.5.1981 சமீபத்தில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலைக்கோலம் நிகழ்ச்சியிலே கே.எஸ். சிவகுமாரனின் தேசிய ஒருமைப்பாடுகள் பற்றிய பேச்சு இடம் பெற்றது. தேசிய ஒருமைப்பாடு ஒரு வழிசார்ந்ததுதானா என்று கேட்ட அவருக்கு சபாஷ். 17. திருமதி பி.ப. செல்வராசாகோபால் - பதிப்பாசிரியை -
ஈழத்துப் பூராடனாரின் ‘சிந்தனைச்சரம்' - 1981
பத்திரிகைகளின் வாயிலாகப் பரந்த அறிமுகங் கொண்ட கே.எஸ். சிவகுமாரன், கலை. இலக்கியம், நாடகம், சினிமா ஆகிய துறைகளில், ஈழத்தில் துறைபோன விமர்சகராவார். இற்றைவரை பல பத்திரிகைகளில் வெளிவந்த பல நூற்றுக்கணக்கான விமர்சனக் கட்டுரைகள், விமர்சனக் கலை நுட்ப வழிகாட்டிகளாகும். உலகவலம் நிறை விமர்சனத்தில், யாராயினும் - உள்ளதை உள்ளாங்கு கூறுவதிலும் இவர் சிவகுமாரர்தான். சுருங்கக் கூறி நல்ல அறுவடை எனச் சிந்திக்கச் செய்வதில் சமர்த்தர். ஆங்கிலத்தில் Tamil Writing

Page 9
xli
in Sri Lanka என்ற நூலின் ஆசிரியர். மட்டக்களப்பைத் தாயகமாக R6o Luu6) si. ஆங்கில இலக்கியம், தமிழிலக்கியம், மேலைப்பண்டைய உயர் பண்பாடு ஆகியவற்றில் பட்டதாரி. அமெரிக்கத் தூதராலயத்தில், அனைத்துலகத் தொடர்பு முகவர் நிலைய ஆங்கிலப் பகுதிப் பொறுப்பாளர். 18. ராமேஷ் - ரவீந்திரன் (தெளிவத்தை ஜோசப்) - வாரம் ஒரு சிறுகதை லிருந்து - தினகரன் வாரமஞ்சரி 3.11.1981 ஈழத்து இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுள்ள கே.எஸ். சிவகுமாரன் ஆங்கில / தமிழ் வானொலி, தமிழ் / ஆங்கில பத்திரிகை ஆகியன மூலம் நன்கு அறியப்பட்டவர். இலக்கிய உலகில் ஒரு விமர்சகராகவே அறியப்பட்டுள்ள கே.எஸ். சிவகுமாரன், இலக்கிய உலகுக்கு ஒரு சிறுகதை ஆசிரியராகவே அறிமுகப்படுத்தப்பட்ட செய்தி பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
1959 இலிருந்து 1965 வரை பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். பெரும்பான்மையான இவரது கதைகள் மேல் மட்ட வாழ்க்கைச் சித்திரிப்புகளே என்றாலும் உளவியல் பண்பு கொண்டவையாகவும் அந்த அறுபதுகளில் ஒரு புதுவிதமான அனுபவத்தை வாசகர்களுக்குக் கொடுக்கும் தன்மையுடையனவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே.எஸ். சிவகுமாரனிடம் இந்தப்பண்பு (தனக்குப் பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவது) இல்லாததுதான், அவரைப் பெரிய விமர்சகர்களிலிருந்து பிரித்தும் ஒதுக்கியும் வைத்துவிடுகிறதோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.
தமிழ் எழுத்துகள் பற்றி, தமிழ் எழுத்தாளர்கள் பற்றி தமிழறியா வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கே. எஸ். சிவகுமாரனின் பணி மகத்தானது. ஆங்கில வாசகர்களும், தமிழ் இலக்கியம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் ஈழத்தின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் சுமார் 25 வருடங்களாக எழுதிவரும் சிவகுமாரன் ஆங்கில இலக்கியம் பற்றியும், ஆங்கில விமர்சனம் பற்றியும் தமிழில் நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

xiii
ஈழத்தின் சகல ஏடுகள், சஞ்சிகைகள், வானொலி மட்டுமன்றித் தமிழ் நாட்டின் அன்றைய எழுத்து’, ‘சரஸ்வதி முதல் இன்றைய படிகள்’வரை சகல சாதனங்களையும் இவர் பயன்படுத்துகிறார்.
கே.எஸ். சிவகுமாரன் ஒரு பி.ஏ. பட்டதாரி. இவர் முன்பு இலங்கை வானொலியின் செய்திப் பகுதியில் கடமை புரிந்தார்.
தற்போது அமெரிக்கத் தூதராலயத்தின் தகவல் பிரிவில்
கடமையாற்றுகின்றார்.
தமிழகத்தின் க.நா.சு. மாதிரி, ஜெயகாந்தன் மாதிரி, ஜானகிராமன் மாதிரி என்று சொல்லிப் பழகிவிட்ட நமக்கு கே.எஸ். சிவகுமாரன் மாதிரி அங்கே யார் என்று ஒரு வினாடி யோசித்தால் இவருடைய இலக்கிய முக்கியத்துவம் புலப்படும்.
9. எஸ்தி (எஸ். திருச்செல்வம்) - அறுவடை - தினகரன்
வாரமஞ்சரி 21.3.82
கே.எஸ். சிவகுமாரனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஈழத்துப் புனைகதை இலக்கியத்திலும், விமர்சனத்துறையிலும் அவர் ஒரு "கிங். இது வெறும் புகழ்ச்சி வார்த்தையல்ல. இலக்கிய நெஞ்சங்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை இது. அரசாங்கத் திணைக்களமொன்றில் மொழி பெயர்ப்பாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், பின்னர் வானொலியின் செய்திப் பிரிவில் ஆசிரியராகவும் 1979 வரை கடமையாற்றியவர்.

Page 10
XV
நூலாசிரியரின் நூல்கள்
தமிழ்
திறனாய்வு என்றால் என்ன? 2005 சொன்னாற்போல-2 2004 அசையும் ப்டிமங்கள் 2001 மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் 2000 ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில 1999 மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் 1999 திறனாய்வு: அண்மைக்கால ஈழத்துச்
. .. '' v, சிறுகதைத் தொகுப்புகள் 1998 இருமை - சிறுகதைத் தொகுப்பு 1998 ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் திறனாய்வு 1998 ஈழத்து இலக்கியம்: நூல்களின் அறிமுகம் 1996 திறனாய்வுப் பார்வைகள் 1996 கைலாசபதியும் நானும் 1990
கலை இலக்கியத் திறனாய்வு 1989 சிவகுமாரன் கதைகள் 1982
ஆங்கிலம்
1. Le Roy Robinson in conversation with K.S. Sivakumaran on
Aspects of Culture in Sri Lanka 1992
2. Thamil Writing in Sri Lanka 1974

உள்ளே.
திறனாய்வுக் குறிப்புக்கள் 1 கல்விக் கோட்பாடுகளும் இலக்கியக் கோட்பாடுகளும் . 5 பின் நவீனத்துவத்தின் இயலாத் தன்மை . 9 ஊடகத்துறையில் புதியவர்கள் தயவுடன் கவனிக்க. 12 அழுத்த நெஞ்சுடைய இளைய ஊடகத்தினர். 18 சுய கண்டனம் . 21 தினக்குரலில் நான் விரும்பக்கூடியவை. 24 உங்களுக்குப் பொய் சொல்லப்படுகிறது. 30 யாழ்ப்பாணம் போய் வந்தேன். 35 'தராக்கியை நினைத்தால். 4. இஸ்லாமியப் பெண் கவிஞரின் கவிதா ஒவியங்கள். 44 இளைய அப்துல்லாஹ்வின் இரு நூல்கள். 48 இஸ்லாமியப் படைப்பாளிகளும் நானும் . 53 சினமா, சினமா : சில சிந்தனைகள். ... correira. 57 திரைப்பட இரசனை மாற்றம் 60 நல்ல திரைப்படங்களை இனங்காண
உதவும் கேரள திரைப்படச் சங்கங்கள். 64 ஆரண்யம் ஊடாகத் திரைப்பட இலக்கியம் . 68 மேலைக் கலை, இலக்கியச் செய்தித் துணுக்குகள் . 72. மெல்லெனக் காமத்தைத் தீண்டும்’ ஐரோப்பியப் படங்கள் இரண்டு 77 அந்நாள் ப்ரெஞ்ச் ‘புதிய அலை சினமா’. 81 அமெரிக்க நினைவுகள். 85 சின்சினாட்டி மேலும் சில தகவல்கள். 88 சின்சினாட்டி கல்விக்கூட அனுபவங்கள். 91 மேற்குலகில் நெடு நாட்கள். 95 நூற்பயன் 113 விசாரம் - )دالا . பொன்னம்பலம். 114 அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும். 117
லெ.முருகபூபதி தொகுத்த ராஜபூரீகாந்தன் நினைவுகள். 121

Page 11
XVi
மறந்து போகாத சில. 123 சூரன் கதை 128 தமிழினி மஞ்சரி ஒக். 2004 132 தாவீது அடிகள் 134 சத்தியசாய் பாபா 135 குப்பிளான் ஐ. சண்முகன் 137 நெஞ்சில் நிலைத்து நிற்கும் சில இதழ்கள். 141 பாரதப் போரில் மீறல்கள் 145 வே. வரதசுந்தரத்தின் நூல்கள் சில. 149 வுாழ்வியல் வசந்தங்கள் 151 ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய கட்டுரைகள். 154 நாட்குறிப்பு மூலம் கதை சொல்லல். 188 நிருபமா மேனன் ராவின் “ரெயின் ரைசிங்’ கவிதை நூல். 191 விமர்சகர்களின் பார்வைக்கெட்டாத சில பக்கங்கள். 194 செய்திகள் வாசிப்பவர் எஸ். புண்ணியமூர்த்தி. 198 சிறுவர் இலக்கியத்திற்கு அணிசேர்க்கும்
திவ்வியராணியின் “கதையும் கருவும். 202 மற்றுமொரு மாலை 2O7 செ. சுதர்சன் காட்டும் கவிதா உலகம் .τι το 209 ‘கருவறை எழுதிய தீர்ப்பு’ - புதுமையான ஒரு கதை. 212 வீடு : ஆய்வறிவாளரிடமும் ஒரு குறியீடு!. 215 தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்த தருமு சிவராமு. 228 ஈழத்து இலக்கியம் : நூல்களின் அறிமுகம் . 236 க.செ. நடராசாவின் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி. 241 தமிழியற் சிந்தனை 242 கனக. செந்திநாதன் ஈழத்து இலக்கிய வளர்ச்சி. 248 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம். 252 ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி. 258 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம். 262 சுவாமி விபுலாநந்தர் தொடர்பான வெளியீடுகள். 269
சு. வித்தியானந்தனின் மணி விழா மலர். 286

xvii
பதிப்புரை
LDனத்தில் பட்டதைப் பளிச்சென்று ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிவிப்பவரே சிறந்த விமரிசகர். இந்த வகையில் திரு.கே.எஸ். சிவகுமாரன் ஒரு மிகச் சிறந்த விமரிசகர் நிறையப் படித்தவர். இப்போதும் பல்துறை விஷயங்களை அதிகம் படிப்பதால்தான் எந்த விஷயத்தைப் பற்றியும் இவரால் ஆழமாகவும் விரிவாகவும் ஒரு பரந்துபட்ட பார்வையுடனும் எழுத முடிகிறது.
அமைதியானவர்; இனிய குரலுக்குச் சொந்தக்காரர் என்பதால்தான் இலங்கை வானொலியில் நீண்ட காலப் பங்களிப்பை இவரால் செய்யமுடிந்தது. பொதுவாக, ஒரு துறையில் பிரகாசிப்பவர்கள் மற்றொரு துறையிலும் விற்பன்னராக இருப்பது அபூர்வம். இப்படிப்பட்டவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் இவர். ஒலிபரப்புத் துறையோடு நின்று விடாமல் கொழும்பில் வெளிவரும் முக்கிய இதழ்களில் தொடர்ந்து

Page 12
xviii
இப்போதும் எழுதிக்கொண்டிருக்கின்ற வெற்றிகரமான எழுத்தாளராகத் திகழ்கிறார்.
குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி. அவர்களின் அரசு பதில்கள் எனக்கு மிகவும் பிடித்தவை விஷயம். காரணம், எல்லா விஷயங்களைப் பற்றியும் கூர்மையான நுணுக்கமான பார்வை இருக்கும். சுருக்கமாக நச்சென்று இருக்கும். கமல்ஹாசன் நடித்த குணா படம் எப்படி? என்ற வாசகரின் கேள்விக்கு அரசு எழுதிய பதில் : குணா கொஞ்சம் கோணார். ஒரே எழுத்தில், ஒரு பக்கத்தில் சொல்லவேண்டிய கருத்துகளைச் சொன்ன இது போன்ற அறிவாற்றலை திரு.கே.எஸ். சிவகுமாரனிடமும் நான் காண்கிறேன்.
திரு. எஸ். ஏ.பி. அவர்களுக்கு அடுத்தபடியாக நான் ரசித்துப் படித்தவை எழுத்தாளர் திரு. சுஜாதாவின் எழுத்துகள். இவருடைய 40 ஆண்டுக்காலப் படைப்புகளுள் நான் படிக்காமல் விட்டவை மிக மிகக் குறைவு. திரு.கே.எஸ். சிவகுமாரனை இலங்கையின் சுஜாதா என்று சொல்வது மிகைப்படுத்தாத பாராட்டு மட்டுமல்ல, பொருத்தமானதும் கூட என்பது என் கருத்து. சொன்னாற் போல என்ற தலைப்பில் இவர் தொடர்ந்து எழுதி வரும் பல்வேறு கட்டுரைகள் படிப்பதற்கு மிகவும் சுவையானவை. அலட்டல்

xix
ல்லாத, சுயமாக விமரிசனம் செய் கொள்கி
த ġbi \fמ இவருடைய பாணி, தனிப்பாணி!
திறனாய்வு என்றால் என்ன? என்ற அருமையான இவருடைய புத்தகத்தை மணிமேகலைப் பிரசுரத்தில் வெளியிட்டிருக்கிறோம். இதன்பிறகு இலங்கை எழுத்தாளர்களிடையே எங்களின் மதிப்பு உயர்ந்தது என்பது நிதர்சனமான உண்மை! “திரு.கே.எஸ். சிவகுமாரன் போன்றோரின் புத்தகங்களையும் இவர்கள்தாம் வெளியிட்டிருக்கிறார்கள்!” என்று பலரும் குறிப்பிட்டதோடு மட்டு மில்லாமல் ஏராளமான ஈழ எழுத்தாளர்கள் தம்முடைய படைப்புகளை எங்கள் மூலம் வெளியிடத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
இவரிடம் நான் காணும் முக்கியமானதொரு நற்பண்பு நட்புக்கு இவர் கொடுக்கும் முக்கியத்துவம். இந்த இயல்பு காரணமாக இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் மிகப் பெரிய நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிறார். தமிழில் புலமை மிக்கவர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குவது சற்றுக் கடினம். ஆனால் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த சொல்லாற்றல் மிக்கவராக இருக்கிறார் என்பதை இவருடைய

Page 13
XX
ஆங்கிலக் கட்டுரைகளை Island பத்திரிகையில் படித்தால் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய இவருடைய அறிவு அபரிமிதமானது. பிரபல எழுத்தாளர்களைப் பற்றி அவர்கள் மூத்த தலைமுறையாக இருந்தாலும் சரி, தற்போதைய எழுத்தாளர்களைப் பற்றியும் சரி, சிறந்த கணிப்பீட்டை வைத்திருக்கிறார்.
இந் நூலில் இந்திய இலக்கியத்தைப் பற்றிய கண்ணோட்டம் சற்றுக் குறைவாகத்தான் உள்ளது. “17.12.05 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் வெளியீட்டு விழாவில் தங்களின் நூல் அவசியம் இடம்பெற வேண்டும்” என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந் நூலை மிகத் துரிதமாக எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். இன்னும் நிறைய இந்திய இலக்கியக் கண்ணோட்டம் அடுத்த இவருடைய நூலில் இடம்பெறும் என்பதை நம் வாசகர்களுக்கு மகிழ்வோடு தெரிவித்து திரு.கே.எஸ். சிவகுமாரன் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, நிறைவு செய்கிறேன்.
அன்பன்,
JnGPIdhه تاكا,eکهoی۔

திறனாய்வுக் குறிப்புக்கள்
திறனாய்வு அல்லது விமர்சனம் அல்லது புத்தக மதிப்புரை அல்லது நூல் நயம் அல்லது நூல் ஆய்வு என்றெல்லாம் மகுடமிட்டு, நூல்கள் பற்றி நமது அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகிறோம் அல்லவா? ஆயினும், இப்பதங்களுக்கும், தொடர்புள்ள வேறு சில பதங்களுக்கும் இடையிலே சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்வதில்லை.
உதாரணமாக, ஆராய்ச்சி, ஆய்வு, இலக்கிய வரலாறு போன்றவை மிக மிக உயர்மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திறனாய்வு முயற்சிகளாகும். இலக்கியத் திறனாய்வும் அவ்விதமானதே. புத்தக மதிப்புரை, நூல் நயம், நூல் விமர்சனம் போன்றவை ஒரு படி கீழே செயற்படும் எழுத்து ஆகும். பத்தி எழுத்துக்கள், அதிலும் கீழ்மட்டமுடையவை.
இவ்வாறிருக்க, நம்மில் பலர் திறனாய்வுப் போக்குடைய சகல எழுத்துக்களையும் திறனாய்வென்றோ, விமர்சனமென்றோ கவனக்குறைவாகக் கணித்து விடுகின்றனர். இது தப்பு.
இன்னும் கேலிக்கூத்தான கணிப்பு எதுவெனில், நையாண்டி, நக்கல், மொட்டைக் குறிப்புகள், கண்டனம், கிளுகிளுப்பான செய்திகள் போன்றவையும் விமர்சனம் என அழைக்கப்படுவதுதான். இது மிகவும் பரிதாபத்திற்குரிய சங்கதி. திறனாய்வு, விமர்சனம் என்று எதை அழைப்பது

Page 14
2 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கணணோட்டய
என்பது பற்றிச் சரியான விளக்கம் பெறாதவர்கள்தான், இந்தப் புதிய கண்டனப் போக்கை விமர்சனம் என்று மருளுவர்.
இந்தக் “கன்னாபின்னா' எழுத்துக்கள் விமர்சனம் என்று தவறாகச் சிலரால் கருதப்படுவதனால், திறனாய்வுச் FrTuLu 6) 35 Git இருந்தபோதிலும், கடந்த 45 வருடங்களுக்கும்மேலாக நான் எழுதும் எழுத்துக்களைப் 'பத்தி எழுத்துக்கள்’ என்று சுருக்கிக் கொள்கிறேன்.
நெல்லுக்கும் பதருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாத சூழலில், 'திறனாய்வு’ என்ற புனிதமான அர்த்தம் பொதிந்த வார்த்தையைக் கொச்சைப் படுத்தாமல், 'பத்தி எழுத்து என்று எனது எழுத்துக்களைக் கூறிக் கொள்வதில் நான் சங்கடப்படவில்லை. அங்கு நேர்மையுண்டு என்று நினைக்கிறேன்.
கலை, இலக்கியத்துறைகளில் உண்மையாகவே ஈடுபாடு கொண்டுள்ள வாசகர்கள், திறனாய்வுத் துறை தொடர்பாக வெளிவந்துள்ள சில நூல்களைக் கற்கவேண்டும்; படித்துப் பார்க்க வேண்டும். சுவாமி விபுலானந்தர் முதல் கைலாசபதி, சிவத்தம்பி, முருகையன், மு. தளையசிங்கம், ஊடாகப் பல்கலைக்கழக மட்ட ஆசிரியர்கள் வரை பலர் பல நல்ல நூல்களைத் தந்துள்ளனர் எமது பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் அனைவருமே நல்ல திறனாய்வுகளை எழுதி வருகின்றனர். இவர்களுக்குத் திறனாய்வு என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது.
அதேவேளையில், பல்கலைக்கழகங்களுக் வெளியேயிருந்தும் பல நல்ல திறனாய்வுக் கட்டுரைகள் மதிப்புரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கே.எஸ். சிவகுமாரன் 3
தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் திறனாய்வு தொடர்பான பல நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை நமது இளைய புதிய விமர்சகர்கள் (குறிப்பாக ‘புதிய வாசிப்பு’களை மேற்கொள்பவர்கள்) தேடிப்படித்து, அறிந்து, உணர்ந்துவிட்டார்களாயின் பின்னர், தமது நக்கல், கண்டனப்பாணியான விமர்சனங்களை எழுதத் துணிய மாட்டார்கள்.
திறனாய்வு தொடர்பான நூல்களை நானும் எழுதியுள்ளேன் என்று கூறுவது எனக்கு விளம்பரம் தேடுவதற்காக அல்ல; மாறாக, நிறையத் தகவல்களை நீங்கள் இந்நூல்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவே.
அத்தகைய நூல்களில் சில:
கலை, இலக்கியத் திறனாய்வு, கைலாசபதியும் நானும், திறனாய்வுப் பார்வைகள், ஈழத்து இலக்கியம்: நூல்களின் அறிமுகம், ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள், திறனாய்வு, அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள், மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள், ஈழத்துத் தமிழ் நாவல்கள், திறனாய்வு என்றால் ଢTର୍ତTତ୪t?
இந்நாட்களில், சில சிற்றேட்டுப் புதிய விமர்சகர்கள் அமைப்பியல்வாதத்தின் பின் எழுந்த போக்கை (Post Structuralism) பின்பற்றுகிறார்கள். 1980களிலேயே மேற்கில் (குறிப்பாக ஃபிரான்ஸில்) செயலிழந்து போன இந்தத் திறனாய்வுப் போக்குகளை (கட்டவிழ்ப்பு, சுயவாசிப்பு போன்றவை) இப்பொழுதுதான் தமிழ்நாட்டுச் சிற்றேட்டு விமர்சகர்கள்’ மூலம் அறிந்து, நையாண்டியும்,

Page 15
4. இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மேம்போக்கான அவதானிப்பு அடங்கிய குத்தலுமாகச் சில ‘விமர்சனங்களை இந்தச் சிற்றேட்டு எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இவர்களுடைய குறைபாடுகள் நூல்களை முழுமையாகப் படித்து நூலாசிரியனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமை, இலக்கிய வரலாறு முழுமையாகத் தெரியாமை, பல்நெறி சார்ந்த பார்வை இல்லாமை, ஆழமின்மை, விஷமத்தனம், இளந்தாரிகளுக்குரிய கேலிச்சேட்டை, மொட்டையாக அபிப்பிராயம் தெரிவித்தல், கண்டனமும் ஹாஸ்யமும் தொனிக்கும் சுய திருப்தி (Sadism) ஒழுங்கான - கட்டுக்கோப்பான முறையில் கருத்துகளைத் தெரிவிக்க இயலாமை போன்றவையாகும்.
ஜனநாயகக் கோட்பாட்டில் கருத்துச் சுதந்திர முண்டாயினும், அதனைத் தெரிவிக்கும் பாங்கில் ஒரு நெறிமுறை, நேர்மை வேண்டும். அடிப்படைகளைப் புறக்கணித்துவிட்டுக் கண்டனமே விமர்சனம் என்று மருளுவது அறியாத்தன்மையாகும்.
ஒரு மூத்தவன் என்ற முறையில் நமது இளைய சந்ததியினருக்குச் சரியான பாதைக்கு வழிகாட்டுவது எனது கடமை என நினைக்கிறேன். தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்’ என்பது போல, நமக்குச் சொந்தமான இந்த இளைய விமர்சகர்கள் தமது தப்புக்களைச் சிறிது சரி செய்து கொள்ளவேண்டும் என்ற அன்பு நோக்கத்தினாலேயே இக்கருத்தைத் தெரிவிக்கிறேன். முதலில் படியுங்கள். பின்னர், வேண்டுமானால், நூல் ஆசிரியரை மறந்துவிட்டு, உங்கள் 'வாசிப்புகளை’ மேற்கொள்ளுங்கள். எதனையும் அரைகுறையாகச் செய்யாதீர்கள்.
来

கே.எஸ். சிவகுமாரன் s 5
கல்விக் கோட்பாருகளும் இலக்கியக் கோட்பாடுகளும்
மேற்கண்ட தலைப்பிலே கல்வியியற் பேராசிரியர் சபா. ஜெயராசா ஒரு பயனுள்ள நூலை எழுதியிருக்கிறார். இவர் முன்னர் சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதிப் பெயர் பெற்றவர். ஆழமான அறிவுடைய இவர் அந்நாட்களில் எழுதியவை தெளிவில்லாத, குழப்பமான எழுத்து நடையில் அமைந்திருந்தன. ஆனால், இப்பொழுதோ தெளிவான சிந்தனை, தெளிவான எழுத்து நடை லாவகத்தைத் தந்துள்ளன.
இரு துறைகளிலும் (கல்வி, இலக்கியம்) புலமை பெற்ற ஜெயராசா திறனாய்வு’ தொடர்பாகவும் எழுதியிருப்பது எனது கவனத்தைக் கவர்ந்தது. ‘விஞ்ஞானத்தின் புறவயத்தன்மைகளையும், கலையின் அகவயத்தன்மைகளையும் உள்ளடக்கியும், நிராகரித்தும் திறனாய்வு வளர்ச்சி பெற்று வந்துள்ளது' என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நூலாசிரியர் மேலும் கூறுவார்: “ஒரு படைப்பாளி கூறவந்த செய்தி என்ன? அந்தச் செய்தியின் நடப்பியல் தளம் என்ன? வாழ்நிலை இருப்புடன் இணைந்த பரிமாணம் என்ன? கூறவந்த செய்தியை அழுத்தவும், வலியுறுத்தவும், நயப்பூட்டவும் அவர் பயன்படுத்தும் கலை நுட்பங்கள் யாவை? உளவியல் உபாயங்கள் யாவை? போன்றவை திறனாய்வின் பாற்படும்.”

Page 16
6 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பேராசிரியர் சபா. ஜெயராசா சில மேனாட்டுத் திறனாய்வாளர்களை அறிமுகஞ் செய்து வைக்கிறார். இவர்களுள் சிலரை நான் இனிமேல்தான் தேடிப்படிப்பேன். கேற்பமிலே, லூஸ் கிரிகா (G)றே, ஐஸர் ஊல்ப்கா (G)ங், காயத்ரி ஸ்பிவாக், டெரி ஈகி (G)ள்டன், உம்பே (B)ட்டோ ஈகோ (G), டி.எஸ். எலியட், உவிலியம் எம்ப்ஸன், ஸ்டான்லி பி (F)ஷ், நோர்த்ரொப்ப் (F)றை, ஜூலியா க்றிஸ் டேவா, ஹெலன் சிக்ஸ்ஸோ, எட்வர்ட் ஸெயிட், யாக் டெரிடா, ஜே.ஜே. மக்கா(G)ன், போல் டிமான், ஐ.ஏ. ரிச்சட்ஸ், யாக் லகான், எப்.ஆர். லீவிஸ், ஆர். ஒ. ஜக்கொப்ஸன், எப்.ஆர். ஜேம்சன், ரேமண்ட் உவிலியம்ஸ், விர்ஜினியா ஊல்ப் (F), எம்.எம்.ப. (IB) கதின், ஆர்.பா.(B)ர்த்ஸ், சிமோன்டிபோ(B)வே, வ்ளாடிமர் ப்ரொப், மிஷேல் பூக்கோ - இப்பெயர்கள் எல்லாம் முக்கியமான மேலைத்தேய திறனாய்வாளர்களுடையவை. இவர்களுள் சிலரின் எழுத்துக்களை மாத்திரமே நான் வாசித்துள்ளேன். இவர்களுடைய எண்ணங்கள், அணுகுமுறைகள் போன்றவற்றை ஆங்கிலமொழி வாயிலாகப் படித்துப் பயன்பெற முடியாமற்போனால், இச்சிறு அறிமுகங்களை நூலாசிரியர் தமிழில் தருவதால் நாம் பயனடைகிறோம். சபா. ஜெயராசா மூன்று ஈழத்துத் தமிழர்களைத் திறனாய்வுக் கோட்பாட்டாளர் என்று துணிகிறார். அவர்கள் ஏ.ஜே. கனகரட்னா, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரே.
இம்மூவரைப் பற்றியும் பேராசிரியர் சபா ஜெயராசா எழுதிய குறிப்புக்கள் அவதானிப்புக்கு உட்பட்டவை.
இந்த நூலில் எனக்குப் பிடித்த அம்சங்களில் ஒன்று சில ஆங்கிலப் பதங்களை விளக்கி, அவற்றிற்கீடான தமிழ்ச் சொற்களையும் தந்திருப்பதாகும்.

கே.எஸ். சிவகுமாரன் 7
சிலவற்றின் விளக்கங்கள் : மொடர்னிஸம் (நவீனத்துவம்)
இலக்கிய மரபுகளை உடைக்கும் நடவடிக்கையாக நவீனத்துவம் எழுந்தது. நவீன உலகம் பற்றிய நம்பிக்கை வறட்சி இவர்களது எழுத்தாக்கங்களிலே பொதுவாகக் காணப்பட்டது. உலகம் உடைந்தும் நலிந்தும் விட்டதென்பது இவர்களின் தரிசனம்.
போஸ்ட் மொடர்னிஸம் (பின் நவீனத்துவம்) - தொடர்புகளை அறுத்தல், பரந்த நிலையிலே தொகுத்துக் கூறுதலைக் கைவிடுதல், பெரும் இலக்குகளை அறுத்தல், பெரும் இலக்குகளைப் புறக்கணித்துச் சிறிய இலக்குகளுக்கு அழுத்தங்கொடுத்தல் முதலியன பின் நவீனத்துவப் பரிமாணங்கள். சுரண்டப்படுபவர்கள் மற்றும் நிராகரிக்கப்படுபவர்கள் ஆகியோர் ஒன்றிணைவதைச் சிதறடிக்க முயல்கின்றன. போஸ்ட் ஸ்ட்ரக்ஷரலிஸம்
பின் கட்டமைப்பியல் - இலக்கிய மொழியின் மீதும், குறிப்பாகக் குறிப்பான்கள் மீதும், இலக்கியக் கட்டமைப்பை உடைத்து மீள வாசித்தலின் மீதும் அந்த வாதம் கவனம் செலுத்துகின்றது. ஸ்ட்ரக்ஷரலிஸம் (அமைப்பு வாதம்)
அமைப்பு வாதம் அல்லது கட்டுமான வாதம் விலாடி மியுறோம் என்பவரின் நாட்டார் கதைகள் தொடர்பான ஆய்வுகளிலே தெளிவாகக் காணப்படுகிறது. நாட்டாரியல், மொழியியல், பண்பாட்டியல், மானிடவியல் போன்ற

Page 17
8 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
துறைகளில் வளர்ச்சி பெற்ற இவ்வாதம் அல்தூசரால் மேலும் உன்னதமாக விளக்கப்பட்டது.
இந்த நூலிலே பிளேட்டோ, ரூஸோ, கொமீனியஸ், ஜோன் டுவே, மொன்டிசூரி, தாகூர், போலே பிறிறி, பூக்கோ போன்றோரின் கல்விக் கொள்கைகள் விளங்கப்படுத்தப் படுகின்றன.
இலங்கையில் குறிப்பாகக் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கட்டுடைப்புவாதம் சில விமர்சகர்களிடையே பிரபுல்யம் பெறத் தொடங்கியது, சரிநிகர், நிகரி, மூன்றாவது மனிதன் போன்ற ஏடுகளில் இந்த ‘விமர்சகர்’களின் கருத்தியல்கள் வலியுறுத்தப்பட்டன. காலந்தாழ்த்தித் தமிழில் அறிமுகம் பெற்ற இந்த 'இஸம்கள் எல்லாம் இப்பொழுது செல்லாக் காசாகப் போயின. இருந்தபோதிலும் மதுசூதனன், தயானந்த (ஒலிபரப்பாளர்) போன்றோரின் "விமர்சனங்களைக் கேட்கும் பொழுது இந்தப் போக்கு இன்னமும் கைவிடப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. வாழ்க. என்னைப் பொறுத்தமட்டில் மரபுவழித் திறனாய்வாளனாகவே நான் இருக்க விரும்புகிறேன்.
来

கே.எஸ். சிவகுமாரன் s 9
பின் நவீனத்துவத்தின் இயலாத் தன்மை
Post Modernism என்ற மேனாட்டு இலக்கியப் போக்கை ‘பின் நவீனத்துவம்’ என்று தமிழ் நாட்டு விமர்சகர்கள்’ கூறியதையடுத்து, இங்குள்ள சிலரும், அங்குள்ளவர்கள் போல, திக்குத் தெரியாத காட்டில் அலை மோதுவதைப் பார்த்து என்னுள் பரிகசித்துக் கொள்வேன். காரணம், அரை வேக்காடாக அவர்கள், பொருள் கொண்டு மருளுவது போல, இங்குள்ள புதிய பரம்பரையினரிற் சிலர் (இவர்களுக்கு ஆங்கில மொழியறிவு போதாது என்பது வெளிப்படை) மரபு வழி திறனாய்வைப் புறக்கணித்து எள்ளிநகையாடுவர். இப்பொழுது இவர்கள் அட்டகாசம் சிறிது ஓய்ந்திருக்கிறது. இது, காலம் இவர்களுக்குக் கற்றுத் தந்த பாடம்.
அமரர் க. கைலாசபதியின் ஆளுமைக்குள் உட்பட்ட கோ. கேசவன் என்ற திறனாய்வாளர் (இவரும் மறைந்துவிட்டார்) இந்நூற்றாண்டு முற்பகுதியிலேயே இந்த பின் நவீனத்துவம்’ பற்றிய பகுப்பாய்வு ஒன்றைத் தருக்கரீதியான முறையில் நிகழ்த்திக் காட்டினார். அதில் ஒரு பகுதி “காலக்குறி’ (மே, ஜூலை 2000) என்ற தமிழ்நாட்டுக் காலாண்டிதழில் வெளியாகியிருந்தது. இதனை, "ஆழமானவர்கள்’ என்று கருதிக்கொள்ளும் விமர்சகர்களும், வாசகர்களும் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.

Page 18
10 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மிகமிகச் சுருக்கமாக அக்கட்டுரையின் சில பகுதிகளை மாத்திரமே இங்கு தருகிறேன்.
‘பின் நவீனத்துவம் (இதனை நவீனத்துவத்தைத் தொடர்ந்து வந்த நவீனத்துவப் போக்கு என்று கூறுவதையே நான் விரும்புகிறேன்.) மரபு வழித் திறனாய்வுப் போக்குகளின் பலவற்றை நிராகரிக்கிறது. நிராகரிக்கப்படும் கருத்தாக்கங்கள் எவை?
பொதுமைப்படுத்தல், சாராம் சவாதம், மொத்தத்தத்துவம், அடித்தளவாதம், வரலாற்றுவாதம், பகுத்தறிவின் பயங்கரம், தர்க்கத்தின் வன்முறை.
அடிப்படைகள் எல்லாவற்றையும்
நிராகரித்துவிட்டால், இந்த இயக்கத்தினர் முன்மொழிகின்ற கருத்தாக்கங்கள் ஏதும் உள்ளனவா? ஆம்.
சிதறுதல், பன்மைத்தன்மை, கருத்து விலகல், வித்தியாசம், இந்த ‘நவீனத்துவம்’ (Modernism), பின் நவீனத்துவம்' (Post - Modernism), ‘அமைப்பியல்வாதம்’ (Structuralism), lait 960)LD il fugia IIIgip (PostStructuralism) போன்றவை எல்லாம் கால ஓட்டத்தில் மேற்கிலேயே அடிபட்டுப் போய்விட்டன. பல்கலைக்கழகங்களில் மாத்திரம் பாட நெறிகளாகப் படிப்பிக்கப்படுகின்றன.
எதற்கும், கோ. கேசவனின் கட்டுரை, “பின் அமைப்பியல் வாதமும் திறனாய்வும் (கே.எஸ்.சிவகுமாரன் நூல் : திறனாய்வு என்றால் என்ன? பக்கம் 169-172), சபா ஜெயராசாவின் ‘கல்விக் கோட்பாடுகளும் இலக்கியக் கோட்பாடுகளும்’ என்ற நூலையும் படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கே.எஸ். சிவகுமாரன் 10 11 * . . . .۔
ஏ.ஜே. கான் (ஏ.ஜப்ருல்லாகான்) என்பவர் ‘நம் காலத்திற்கான நவீன மொழிப்பரப்பு’ என்ற துணைச் சொற்றொடருடன் வெளிக்கொணர்ந்த தலித் இயக்கம், சார்பான தரமுயர்ந்த ஏடு, ‘காலக்குறி. இது இப்பொழுதும் தொடர்ந்து வருகிறதோ தெரியாது.
மே - ஜூலை 2000 இதழில் பல அருமையான விஷயங்களைப் படித்துப் புத்தறிவு பெற்றேன்.
அவற்றுள் ஒன்று நமது நாட்டுச் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகவும் அருமையான மொழி பெயர்ப்பாளராகவும் அரசியல் விமர்சனப்பத்தி எழுத்தாளராகவும் சுடர்விடும் சி. சிவசேகரம் தந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகள்.
கவிதைகளின் தமிழ் மொழியாக்கம் ஒருபுறம் பரவசப்படுத்த சரியான உச்சரிப்பை (ஸ்பானிய மொழி உச்சரிப்புக்கிணங்க) அவர் தமிழில் தருவதும் பெரியதோர் பங்களிப்பு. நமது ‘விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் தரும்போது, கேவலம் பிழையான இந்திய ஆங்கில உச்சரிப்பில் அங்குள்ளவர்கள் செய்வது போல, இங்குள்ளவர்களும் பின்பற்றுவது கேலிக் கிடமானது.
நிக்கராஹவாவின் (Nicaragua) போராளி விவசாயிக் கவிஞர்கள் படைப்புகளைச் செம்மையான தமிழில் சிவசேகரம் தந்திருப்பதுடன் ஒரு குறிப்பையும் தந்துள்ளார். அறிவுப் பெருக்கம் நிச்சயம் உண்டு.
இந்த இதழிலே, மெளனியின் தத்துவ நோக்கையும், தொடர்பான அம்சங்கள் பற்றியும் ஜமாலன் பகுப்பாய்வு செய்திருப்பது சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கு ஒர் நல்ல

Page 19
12 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
உதாரணம். “மெளனி பற்றி ஏ.ஜே. கனகரத்னா எழுதிய முன்னோடிக் கட்டுரை பற்றி நாம்தான் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், தமிழ் நாட்டவர்கள் இதன் சிறப்புப் பற்றிப் பேசுவதேயில்லை. இலங்கையிலும், அந்நாட்களில் எனது சிற்றறிவுக்கேற்ப ‘மெளனி பற்றிய தரமான (என்னளவில்) அறிமுகக் கட்டுரையை எழுதியிருந்தேன். ஆனால், இங்குள்ள "ஆழமான விமர்சகர்கள் அதைப் படித்தார்களோ தெரியவில்லை. ஜமாலன் கட்டுரை அபாரம்.
திரைப்படம் சம்பந்தமான கட்டுரைகளும் காலக்குறி’ இதழில் இடம் பெற்றுள்ளன : ஹே ராம்! (குருபரன்) 31ஆவது உலகத் திரைப்பட விழா (தலித் மொழியான்), முதல் தமிழ் ஆவணத் திரைப்பட விழா, இயக்குநர் அருண்மொழியுடன் நேர்காணல். இவை தவிர ஆபிரிக்க இலக்கியத்தின் மொழி போன்ற, வேறு பல விஷயங்களும் இச்சிற்றேட்டில் அடங்கியுள்ளன. ஆய்வாளர்கள் தேடிப்படித்துப் பாருங்கள்.
ஊடகத்துறையில் புதியவர்கள் தயவுடன் கவனிக்க.
2டெகத்துறையில் புதிதாகச் சேர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றும் வயதில் இளையவர்களைப் பொதுப்படையாக நாம் கண்டனம் செய்து வந்தாலும், அவர்களிடையே திறனாற்றல் உள்ளவர்களும் இருந்து வருகிறார்கள் என்பதை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். அதேசமயம் அவர்கள் விடும்

கே.எஸ். சிவகுமாரன் 13
கவனக் குறைவான தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பொதுப்படையாக அனுசரிக்க வேண்டியவற்றை நாம் எடுத்துக்கூறுவதுமில்லை. ஆக்கபூர்வமான திறனாய்வும் கணிப்பும் இங்கு தேவைப்படுகின்றன.
L 1 Ꭷ) ஊடகங்கள் இந்நூற்றாண்டில் செயற்படுகின்றன. அவற்றுள் முக்கியமானவையாக தொலைக்காட்சி, வானொலி இரண்டையும் குறிப்பிடலாம். இதழியல், தனியாக ஆராயப்பட வேண்டியது.
முதலில் வானொலியை எடுத்துக் கொள்வோம். வானொலி தொடர்பாகப் புதிய இளையோர் செய்யவேண்டிய சில செயல்களைப் பார்ப்போம்.
முதலிலே, நீங்கள் அறிவிப்பாளராகச் சேர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு முதலில் அவதானிக்க வேண்டிய பண்புகள்: பணிவு, பிறரை மதித்து மரியாதை செய்தல், யார் யார் இன்னாரென்று அறிந்து கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து மனத்திரையில் பதிவு செய்து கொள்ளல், கலையகத்தில் முதுநிலை அறிவிப்பாளர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள், கலையகச் சாதனைகள் எவை, எவ்வாறு இயங்குகின்றன என்று அறிந்து கொள்ளல், இசைத்தட்டு, சி.டி. (இறு வெட்டு) போன்றவற்றை உங்களுக்காக இயந்திரத்தில் சுழற்றுபவர்களுடன் நட்பு ரீதியில் பவ்வியமாகப் பழகுங்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கில அறிவும் போதாது.
கூடியவரை பேச்சுச் சிங்களத்தைப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். தொழில்நுட்ப சங்கேதப் பிரயோகங்களின் தாற்பரியங்களை அறிந்துகொண்டு உரிய இடத்தில்

Page 20
14 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அப்பதங்களைப் பயன்படுத்தி, தொடர்பு முறிவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் யாவருடனும் இயல்பாக நட்பு ரீதியில் பழகுங்கள், ‘நான்’ என்ற மமதையை ஒதுக்கி வையுங்கள். பாரம்பரியத் தொடர்நிலையே புதிய வடிவங்கள் பெறுகின்றன என்பதை மறவாதீர்கள். தொலைபேசியில் எவருடனும் தொடர்பு கொள்ளும் வேளையில் தொலைபேசி நாகரிகத்தைப் பேணுங்கள்.
இவை இவ்வாறு பின்பற்றப்படும் அதேவேளையில் இரண்டு தமிழ் நூல்களை நீங்கள் தேடிப்படிக்க வேண்டும். இது மிகப்பிக அவசியம். அந்நூல்களாவன: ஒலிபரபுக்களை (எழுதியவர் சோ. சிவபாதசுந்தரம்). வானோசை (எழுதியவர் ஸ்ருவர்ட் உவேல், தமிழாக்கம் சி.வி. ராஜசுந்தரம்). இந்நூல்கள் கொழும்பு பொது நூல் நிலையத்திலும், இ.ஒ. கூட்டுத்தாபன நூலகத்திலும் இருக்கக்கூடும். இந்நூல்களை ஏன் படிக்கவேண்டும் என்றால், ஒர் அறிவிப்பாளருக்கு இருக்கவேண்டிய தகைமைகள், ஆற்றவேண்டிய பணிகள் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டிருப்பதனாலாகும்.
இது தவிர, நீங்கள் அரசியல் செல்வாக்கினால், வானொலியில் புகுந்து கொண்டிருந்தாலும், அதனை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நெடு நாட்களுக்கு வானொலியில் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடும்.
குறைந்தபட்ச கல்வித் தகைமை இல்லாமல் எந்த ஊடகத்திலும் தொடர்ந்து பணியாற்ற முடியாது போய்விடும். எனவே, குறைந்தது க.பொ.த. பத்திரம் (உயர் நிலை) இல்லாமல், தமிழை ஒரு பாடமாகப் பயிலாமல், இத்துறைக்கு வருவது புத்திசாலித்தனமல்ல. ஏனெனில்,

கே.எஸ். சிவகுமாரன் 15 ܗܝ
தமிழ் மொழியையும், அதன் சிறப்புகளையும் அறியாது, தமிழை ஒலிவாங்கி முன்னால் உச்சரிப்பது சாத்தியமில்லை. தமிழ் மொழி தலைசிறந்த உலக மொழிகளில் ஒன்று. பழைமையும், புதுமையும் கொண்டது. பல வழக்குகள் அதற்கு உள்ளன. அதன் நெளிவு, சுளிவுகளை அறியாமல் "கன்னாபின்னா’ என்று உழறும் பாணியைத் தவிர்க்கவும், பொருத்தமுடைமையான சொற்களை உரிய இடத்தில் பாவிக்கும் தன்மையைப் பெறவும், தமிழ் மொழி, தமிழிலக்கியம் ஆகியனவற்றில் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. ‘தமிழிலக்கியம்’ என்றதும் பெரும்பாலானோர் சங்ககாலம் முதல் 17 ஆம், 18ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை எனக்கொள்வதை நாம் காண முடிகிறது. உடன் நிகழ்கால எழுத்துக்களும் இலக்கியத்தன்மை பெறுகின்றன என்பதையும் அறிந்து வைத்து அவற்றைத் தேடிப் படிப்பதும் அவசியம்.
அறிவிப்பாளர் என்று வந்துவிட்டால் வெறுமனே
தமிழ் அறிவோ, தமிழ் இலக்கியமோ போதாது. குறைந்தது ஆங்கில மொழியிலாவது பரிச்சயம் இருத்தல் வேண்டும்.
நாம் நிறையக் கற்க வேண்டியுள்ளது. கற்றது கை மண்ணளவு அல்லவா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்கவேண்டியுள்ளது. பல்துறை அறிவு அவசியம் தேவைப்படுகிறது. உள்நாட்டு அரசியல் போக்குகள், வெளி நாட்டுச் செய்திப் பின்னணிகள், பிற நாட்டுப் பெயர்களின் உச்சரிப்புகள், B, G, J, ஷ, ஸ, PZ போன்ற எழுத்துக்களை எவ்வாறு உச்சரித்தல் வேண்டும் என்ற அறிவு, ஸ்பானிய, பிரெஞ்சுப் பெயர்கள் உச்சரிக்கப்படும் முறை - இவை எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

Page 21
16 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அரசியல், பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, அறிவியல், அறவியல், தத்துவம், சமயம், இலக்கியம், உளவியல், இசை, நடனம், நாடகம் போன்ற துறைகளில் ‘ஸ்நானப் பிராப்தியாவது இருத்தல் வேண்டும்.
தப்பித்தவறி பிழைவிட்டாலும், அப்பிழையை மீண்டும் விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ர, ற, ந, ன, ண, ல, ள, ழ போன்ற எழுத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்திருத்தல் அவசியம். இன்னொரு விஷயம். அநாவசியமாகக் கதைக்காமல், உரிய அளவுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். பொருத்தமில்லாமல் அடைமொழிகளைப் பயன்படுத்தாதீர்கள்.
சினிமாப் பாட்டுகளை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அமைவதனால், உலகத் திரைப்பட வரலாறு, தமிழ்த் திரைப்பட வரலாறு, முக்கியமான இசையமைப்பாளர்கள், பாடக, பாடகியர், வாத்தியக் குழுவினர், பாடலாசிரியர்கள் போன்றோர் பற்றிய விபரங்கள் உங்கள் விரல் நுனியில் இருக்குமாறு விபரங்களை அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
குறிப்பிடும்படியான அறிவிப்பாளர்கள் தமது மறக்கமுடியாத பங்களிப்புகளைச் செய்து போயினர். அவர்களைப் பற்றியும், அவர்கள் பாணிகளையும் தெரிந்து வைத்திருத்தல் நலம்.
ஜனரஞ்சக அறிவிப்பாளர்கள் தரம் வேறு. சிறந்த அறிவிப்பாளர்கள் தரம் வேறு. அண்மைக் காலங்களில் ஒலித்த குரல்கள் பி.எச் அப்துல் ஹமீட், எஸ். நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, ராஜேஸ்வரி சண்முகம், ஜெயகிருஷ்ணா, புவனலோஜினி, கணேஸ்வரன், ஜிப்ரி

கே.எஸ். சிவகுமாரன் - 17
சந்திரமோகன், ஜெயலஷ்மி, நாகபூஷணி போன்றவர்கள் என்னைப் பொறுத்தமட்டில் தனித்துவ ஆளுமையைக் கொண்டு நாளுக்கு நாள் முன்னேறி வந்துள்ளனர். இவர்கள் இலங்கை வானொலி வர்த்தக சேவையைச் சேர்ந்தவர்கள். புதிய சிலர் மாற்று வானொலி நிலையங்களில் சோபிக்கின்றனர். லோஷன், ரவூப் போன்றவர்கள் இவர்களுள் சிலர்.
ஏனையவர்கள் தரத்தில் குறைந்தவர்கள் இல்லையாயினும் அவர்களுடைய ஆளுமை இன்னமும் முழுமையாக வெளிப்படத் தொடங்கவில்லை.
எனவே, புதிய இளைய பரம்பரையினர் குறிப்பிட்ட, தேர்ச்சி பெற்ற அறிவிப்பாளர்களின் பாணியைப் பின்பற்றாமல், அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதைக் கற்க வேண்டும்.
இப்படியெல்லாம் எமக்கு அறிவூட்ட நீர் யார் என்று என்னிடம் கேட்காதீர்கள். அரைநூற்றாண்டுக்கும் மேலாக வானொலியுடன் சம்பந்தப்பட்டு படிப்படியாக முன்னேறியவன் என்று நினைப்பதால் இவ்வாறு நட்புரிமையுடன் எழுதத் துணிந்தேன்.
来

Page 22
18 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அழுத்த நெஞ்சுடைய இளைய ஊடகத்தினர்
பழையன கழிதலும், புதியன புகுதலும் கால நியதி ஏற்றுக்கொள்கிறோம். பழையன யாவும் புதிய வளர்ச்சிக்கேற்ப இயைந்து போகாவிட்டால் தேக்கமுறும், இல்லாமலே போய்விடும். இது வரலாற்றில் நாம் கண்ட உண்மை. இயங்கியல் பற்றி நாம் அறிவோம்.
அதே சமயம், புதியன யாவும் புதுப்புனைவானவை அல்ல என்பதையும் நாமறிவோம். பழைமையில் காலூன்றி புதிய மெருகு பெறும் புத்தாக்கங்களே சிறிது காலத்திற்காகுதல் நிலை கொள்ளும் புது வளர்ச்சிக்கு உதவி நிற்கும். இவை எல்லாம் சாதாரணமாகவே நாம் அறிந்தவைதான்.
இந்தப் பின்னணியிலே, நாம் நமது நாட்டுத் தமிழ் ஊடகங்களைப் பிரயோகிக்கும் புதிய பரம்பரையினர் மீது சிறிது கவனஞ் செலுத்துதல் மிக அவசியமானதொரு தேவை. கடந்த அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட ஊடகத்துறை, 1950, 1960, 1970, 1980களில் பெரும் மாற்றங்களைக் கண்டது. இம்மாற்றங்கள் புலனாகாதவை. ஆயினும், இக்காலப் பகுதிகளில் நிலவிய அரசியல், சமூக, தொழில்நுட்பப் போக்குகளின் பின்னணியில் இவற்றை நாம் பகுத்தாய்ந்து பார்த்தால் ஈழத்துத் தமிழ் ஊடகங்கள் பிரமாதமான வளர்ச்சியைக் கடந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களில் பெற்று வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 19
புதுமைச் சிந்தனையுடைய, தாய் மொழிக்கல்வி வாய்ப்புப் பெற்ற இளம் வயதினர் ஈழத்துப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி நிலையங்களுள் புகுந்தனர். ஆயினும், பற்பல காரணங்களுக்காகத் தகுதி 6) I Turibga) is G56T (Survival of the Fittest) g5 LD5. தனித்திறன்களைத் தங்க வைத்துக்கொண்டனர். ஏனையோர் மேற்சொல்லப்பட்ட பற்பல காரணங்களுக்காகச் செல்வாக்கை இழந்தனர்.
தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஆயினும், நடைமுறையில் தனித்தமிழ் கல்வி மாத்திரம் போதுமானதாயில்லை என்பதை நாமறிவோம்.
பல்நெறி சார்ந்த அறிவும் ஆற்றலும் போட்டா போட்டி உலகில் மிகவும் அத்தியாவசியம். குறைந்தது பட்டப்படிப்பாகுதல் தேவை. அது இல்லாமற்கூட, தேடும் முயற்சியும் அக்கறையும் கல்லாதது உலகளவு என்ற உணர்வும், பிறமொழிப் பரிச்சயமும் கனிவும் பவ்வியமும் அடக்கமும் ஊடகத்துறையினருக்கு மிக மிக அவசியம்.
இவைதான், அடிப்படைத் தகைமைகளிற் சில என்றால், இவற்றில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற எத்தனை இளம் பராயத்தினர் நமது ஊடகங்களில் பணிபுரிகிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
அரசியல்வாதிகள் இன்று செல்வாக்குடையவர்களாக இருப்பர். நாளை, அவர்கள் புறந்தள்ளப்படலாம். அரசியல்வாதிகளின் தற்போதைய அதிகாரத்தைக் கொண்டு ஊடகத்துறையினுள் நுழையும் அப்பாவிகளான இளநெஞ்சங்கள், எந்தவிதமான அடிப்படை

Page 23
20 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அரிச்சுவடிகளையும் அறியாமல், தாமே இந்நாட்டு மன்னர் என்ற தோரணையில் அட்டகாசம் செய்து தம் இயலாமையைக் காட்டும்போது நாம் வெட்கித் தலை குணிகிறோம்.
ஒரு தொழிலுக்கு முதற்தடவையாகச் செல்பவர், முதலிலே தம் தொழிலிடப் பின்னணியையும், அதன் வரலாற்றையும் அறிந்து மனதிற் பதித்து வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் அந்தந்த ஊடகத்தின் மரபு வழி அனுசரணைகளை நன்கு புரிந்துகொண்டு, தமது வழிகாட்டிகளின் ஆலோசனைகளின்படி சிற்சில மாற்றங்களைக் காலத்தின் தேவைக்கேற்பச் செய்து கொள்ளலாம்.
பிழைகள் விடுவது சகஜம். பிழைகள் விட்டால்தான் இன்னும் சிறப்பாகச் செய்து கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதேவேளையில் பிழையென்பதையறிந்தும் தொடர்ந்து அதே பிழைகளைச் செய்துவருதலும் வந்தாலும், பிழையைச் சரியெனக் கூறி விதண்டாவாதம் செய்தலும் அதிக பிரசங்கித்தனமானது மட்டுமல்ல, அறியாமையின் வெளிப்பாடுமாகும். நமது புதிய பரம்பரை ஊடகத்தினரிடையே புதுத்திறன் வாய்ந்தவர்களை இனங்காணும் அதே வேளையில், மிக மோசமாக இயங்குபவர்களின் சிறு பிள்ளைத்தனமான செயல்களை அறிந்து வாசித்து, கேட்டு, பார்த்து நான் மனம் வருந்துகிறேன். く
அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.
மேலை நாடுகளில் பாத்திரமல்ல, அயலில் உள்ள இந்தியாவிற்கூட ஊடகத்துறையினருக்காக,

கே.எஸ். சிவகுமாரன் 21
பழையவர்களுக்கும் புதியவர்களுக்குமாக அடிக்கடி பயிற்சிக்களங்களும் கருத்தரங்குகளும் செய்முறைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இற்றைவரையிலுமான புதுப்புது உத்திமுறைகளைப் புதியவ்ர்களும், பழையவர்களும் கற்றுக்கொள்கின்றனர்.
ஆயினும், நமது நாட்டில் இவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனாற்றானோ என்னவோ, தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்' என்பது போல, நமது இளம் ஊடகத்தினர் நடந்து கொள்கின்றனர்.
இவர்களுடைய நெஞ்சழுத்தத்தைக் கண்டு தார்மிக ஆத்திரம் எழுகிறது. ஆத்திரம், அவர்களை அடக்கி ஆளவேண்டும் என்பதற்காகவல்ல; நம்மிடமுள்ள சிற்றறிவுடனும், நாம் பெற்ற சிறு அனுபவத்துடனும் அவர்களை வழிகாட்டவேண்டும் என்ற வேணவாதான்.
சரி, இவர்கள் என்னதான் பிழைவிடுகிறார்கள்? அதுவா? அவை பற்றி உணர்ச்சிவசப்படாமல் நாம் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொள்வோம்.
来
சுய கண்டனம்
சிம்பிரதாயமான முறையிலல்லாது சிறிது வித்தியாசமாக நானே எனது நூல் வெளியீட்டில் விழாத் தலைவரின் கெளரவமான தலைமைத்துவத்தைப் பாதிக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரலை அடிதலைமாறிச் செய்வது போன்ற பாங்கிலும், மேடையில் கம்பீரத்துடன் அமர்ந்து

Page 24
22 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இருக்காமல் அங்குமிங்கும் அலைந்து திரிந்தும், அளவுக்கு மீறிக் கதைத்தும், சிறப்புப் பிரதிகளைப் பெறுபவர்கள் ஒருபுறமிருக்க, வந்திருந்தோர் எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்தும், சிலருடைய பெயர்களைப் பிழையாகச் சொல்லியும் சிலரின் பெயர்களைச் சொல்லாமல் விட்டும், தலைவர், பேச்சாளர்களை வரவேற்று அறிமுகஞ் செய்த பின்னர் தேவாரம் பாட வைத்தும், பாடியவருக்கு நன்றி சொல்லாமலும், நன்றியுரை கூறிய பின்னரும் தொடர்ந்து வேறு சிலரை அறிமுகஞ் செய்தும், சபையோரின் பெர்றுமையைச் சோதித்தும், கோமாளித்தனமாக நடந்துகொண்டேன். மனம் வருந்துகிறேன், அங்கு கூடிப்பிருந்த அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.
இது நடந்தது கடந்த 2005 மே மாதம் 8ஆம் திகதி மாலை கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில், நூலின் பெயர் - சொன்னாற்போல-02.’ தலைவர் வி.ஏ. திருஞானசுந்தரம். நூல் நயவுரை நிகழ்த்தியவர்கள் சற்சொருபவதிநாதன், வசந்தி தயாபரன். தேவாரம் பாடியவர் பூரணி.
ஜெயலக்ஷமி சந்திரசேகர், நீண்ட காலமாக இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருபவர். இசைத்துறையில் ‘டிப்ளோமா' பட்டம் பெற்றவர். பண்பான குரலிலும், உச்சரிப்புத் தெளிவுடனும் செய்திகளை வாசிப்பவர். இவர் பெயரை மறந்து வேறு ஒரு பெண் அறிவிப்பாளரின் பெயரை இவருடைய பெயராகக் கூறியது எனது தப்பு. இந்த அறிவிப்பாளர் தன்னை நான் அவமானப்படுத்திவிட்டேன் என்று நினைத்து என் மேல் குரோதம் கொண்டாலும் நான் வியப்படையமாட்டேன். இத்தனைக்கும் ஜெயலக்ஷ்மியும்,

கே.எஸ். சிவகுமாரன் 23
‘தென்றல் சந்திரமோகனும் சில வருடங்களுக்கு முன்னர் என்னை வானொலியில் பேட்டி கண்டிருந்தனர். சில பெயர்கள் ஞாபகத்திற்கு வராமல் இடக்குப் பண்ணுகின்றன. இதேபோல, எனக்கு மரியாதை செய்யும் பொருட்டு என் அழைப்பை ஏற்று வந்து, எனது நூலின் பிரதிகளை வாங்கிச் சென்ற இளம் பெண் அறிவிப்பாளர்களின் பெயர்களையும் ஞாபக மறதியால் கூறவில்லை. எல்லோருடைய பெயர்களையும் அறிவித்திருந்தும், ‘தென்றல்’ அறிவிப்பாளர்களின் பெயர்களை நான் அறிவிக்காமல் விட்டது பெருந்தப்பு.
இந்த நான்கு பெண்களும் இவர்கள்தான் அனுசூஜா ஆனந்தரூபன், பிரியதர்ஷினி அம்பிகைபாலன், ஷெளலானி மயில்வாகனம், நிஷாந்தினி கந்தையா.
இன்னுமொரு தவறு: இந்த நூலுக்கு முன்னுரை எழுதியவர் 'தினக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியர் வி. தனபாலசிங்கம். அவருக்கு அன்பளிப்பாக எனது நூலைக் கொடுப்பதை மறந்து அவரிடம் நூலின் பெறுமதியைப் பெற்றமை.
இவையும், என் நினைவுக்கு வராத பலவும் என் மனதை வாட்டுகின்றன. இனிமேல் எனது எந்தவொரு புத்தகத்திற்கும் விழா எடுக்கப்போவதில்லை என்ற முடிவுடன் இருக்கிறேன்.
பல அறிஞர்கள், வணிகப் பிரமுகர்கள், சமயக் குரவர் ஒருவர், அரசியல்வாதி ஒருவர், எழுத்தாள நண்பர்கள், வானொலிக் கலைஞர்கள், கல்விமான்கள் என்று பலரும் வந்து மண்டபத்தை நிரப்பியமை மகிழ்ச்சியைத் தந்தது. நூலும் விலைப்பட்டது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்

Page 25
24 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தலைவர் பொன்னாடை போர்த்தி, என்னை ஒரு முக்கியஸ்தனாக உயர்த்திவிட்டார்.
பண்பான, நெறிப்படுத்தப்பட்ட முறையில் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர், நண்பரும் ஊடகத்துறை நிபுணருமான வி.ஏ. திருஞானசுந்தரம், சிறப்புமிகு உரையை நிகழ்த்தி என்னையே நான் அறிந்துகொள்ள உதவினார். சற்சொருபவதிநாதனும், வசந்தி தயாபரனும், கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலரும் ஒத்தாசைகளைப் புரிந்து என்னை மகிழ்வித்தனர்.
来
தினக்குரலில் நான் விரும்பக்கூழயவை
6
தினக்குரல்" புதினத்தாள் 9ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையிட்டு மகிழ்ச்சியடையும் அதே வேளையில் தொடர்ந்தும் நமது சமூகத்திற்குப் பயனுள்ள ஊடகமாக அது செயற்படவேண்டும் என வாழ்த்துகிறேன். முகாமைத்துவ பீடம், ஆசிரிய பீடம், விளம்பர பீடம், கணினி பீடம், ஒப்புநோக்காளர் பீடம், அச்சியந்திர பீடம், விநியோக பீடம் மற்றும் ஆதரவளிக்கும் அலுவலர் குழாம் - அத்தனை பிரிவுகளுக்கும் பாராட்டுதல்கள்.
'தினக்குரல் இந்நாட்டின் தலைநகரிலிருந்து தினமும் வெளிவரும் நான்கு தேசிய அளவிலான தமிழ்ப் புதினத்தாள்களுள் ஒன்று. ஒவ்வொன்றும் தத்தமக்குரிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றிற்கும் பிரத்தியேகமான வாசகர்கள் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில் 'தினக்குரல்’, ‘வீரகேசரி’, ‘சுடர்ஒளி, 'தினகரன்’ ஆகிய அத்தனைப் புதினத்தாள்களையும்

கே.எஸ். சிவகுமாரன் 25
அவற்றின் தனித்தன்மைக்காக நான் விரும்பிப் படிப்பதுண்டு.
இப்புதினத்தாள்களில் வெளிவரும் நாளாந்தச் சிறப்புப் பகுதிகளில் உள் நாட்டுச் செய்திப் பிரசுரம் முக்கியமானதொன்று. ஆயினும், நான் அக்கறை கொள்ளாத அம்சங்கள், இந்தச் செய்திகளும், உலகச் செய்திகளும், விளையாட்டுச் செய்திகளும், திரைப்படச் செய்திகளுந்தான். இது தனிப்பட்ட ஒருவரின் உதாசீனம் என்று வைத்துக்கொள்வோம்.
அண்மையில், கடந்த ஆண்டு கடைக்கூறில் - ஞாயிறு தினக்குரலுக்குப் பேட்டியளித்த தமிழ் நாட்டுப் பேராசிரியர் அரசு, இங்குள்ள தமிழ்ச் செய்தித்தாள்கள் அம்ைப்பில் பின்தங்கியுள்ளன என்ற கருத்தைத் தெரிவித்தார். இது உண்மைதான்.
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அரைத்தமாவையே திரும்பத் திரும்ப அரைத்துச் சுவையை மழுங்கச் செய்யும் விதத்தில் போர் தொடர்பான செய்திகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இது காலத்தின் தேவை என்பது உண்மையேயாயினும் அளவுக்கு மீறிய இச்செய்திகளையும் செய்தி விமர்சனங்களையும் அதிக பக்கங்களில் வெளியிடுவது காரணமாக வேறு முக்கிய அம்சங்களுக்கு அதிக இடமில்லாமற் போய்விடுகின்றது.
எந்த ஊடகத்துக்குமே அது யாருக்காக, என்ன நோக்கத்திற்காக, யாரால் பயன்படுத்தப்படுகிறது என்பதில் ஒரு தெளிவு இருத்தல் வேண்டும். உதாரணமாக ‘சன் டிவி’ மற்றும் அரச (தென்றல்), தனியார் துறை, வானொலி நிலையங்கள், அதிகம் படித்திராத, பாமரப்

Page 26
26 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பார்வையாளர்களுக்கும் நேயர்களுக்கும் மட்டரகமான முறையில் ‘களிப்பூட்டும் தன்மையை அளிக்கின்றன என்பதை இவற்றினுாடாக வரும் சில நிகழ்ச்சிகளைக் கொண்டு நாம் அறிந்து கொள்வது அவ்வளவு சிரமமான காரியமல்ல.
'தினக்குரல் ஏனைய புதினத்தாள்கள் போன்றே, நிLOது அன்றாட வாழ்வையும் எதிர்கால நிச்சயமின்மையையும் எடுத்துக்காட்டுவதாக இருந்து வருகிறது. அதே வேளையில் 'தினக்குரல் புதினத்தாள் மற்றையவற்றினின்றும் வேறுபட்டதாகத் தன்னை இனங்காட்டிக் கொள்வது விரும்பத்தக்கது.
Variety is the spice of Life GT657 in Lig, Git. ஒரு தீவிரவாசகன் என்ற முறையில் தினக்குரலில் எத்தகைய புதினங்கள் வந்தால் அல்லது ஏற்கெனவே இடம்பெறுபவற்றில் சிறிய மாற்றங்களைக் கொண்டு வந்தால், நான் திருப்தி அடைவேன் என்பதை இங்கு கூற அனுமதியுங்கள். இவற்றை நடைமுறைப்படுத்துவது முகாமையாளர்கள், பிரதம ஆசிரியர் என்போரைப் பொறுத்தது. எனது ஆலோசனைகள்தான் சரியானவையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
தி ஐலண்ட், வீரகேசரி, நவமணி ஆகிய செய்தித்தாள்களில் சிறப்பம்சப் பகுதிகளின் ஆசிரியராகவும் பண்பாட்டுப் பக்க ஆசிரியராகவும் நாளிதழின் இணை ஆசிரியராகவும் வார இதழின் பிரதம ஆசிரியராகவும் வானொலியில் செய்திப் பொறுப்பாசிரியராகவும் ஏறக்குறைய 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவன் என்ற முறையிலேயே எனது விருப்பங்களைத் தெரிவிக்க இங்கு நான் துணிந்தேன்.

கே.எஸ். சிவகுமாரன் 27
இனி, நான் விரும்புபவை எவை என்று பார்ப்போம்.
முதற்பக்கச் செய்திகளின் தலைப்பை, அளவுக்கு மீறிய ‘கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்காமை, பக்க அமைப்பில் செய்திகளைச் சுருக்கமாகத் தரும் விதத்தில் (ஏனைய பக்கங்களில் தொடர்வதைத் தவிர்த்து) முக்கியமான உள்நாட்டு, வெளி நாட்டுச் செய்திகளைத் தருதல், ஆகக் குறைந்தது மூன்று அல்லது நான்குக்கு மேற்படாத வகையில் அரசியல்வாதிகளின் நிழற்படங்களைப் பிரசுரித்தல், நமது அன்றாட வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில் கிராமியச் சூழலைச் சித்திரிக்கும் நிழற்படம் ஒன்றைப் “பெட்டி கட்டி வண்ணத்தில் பிரசுரித்தல் விரும்பத்தக்கது.
ஆசிரியத் தலையங்கங்களில் செய்தித்தாளின் எண்ண்ங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாங்கில் வெளிப்படுத்தல், குறிப்பிட்ட அந்த எண்ணக் கருவை விளக்கமாக விபரிக்கும் வகையில், தெளிவான நடையில் கட்டுரை ஒன்றைச் சேர்த்துக் கொள்ளல் நன்றாயிருக்கும். 母
மக்கள், இடங்கள், நிகழ்வுகள் தொடர்பாகவே புதினத்தாள்கள் செய்திகளையும் படங்களையும் விளக்கக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன. எனவே, இவை பல்துறை சார்ந்தவையாக இருத்தல் நாளிதழின் 'கனதி’க்கு மெருகூட்டும். ஆசிரியத் தலையங்கங்கள் இரண்டு இடம் பெறலாம். (ஒன்று காத்திரமான தொனியில், மற்றையது இலகு நோக்கில் எழுதப்பட்டவையாக இருப்பின்) இடம்பெறுமாயின் பல்சுவை தரும். ஆசிரியத் தலையங்கங்கள் மூலமே குறிப்பிட்ட நாளிதழின் “போக்கு என்ன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். வெவ்வேறு

Page 27
28 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
முதுநிலை செய்தியாளர்கள் இவ்விதமான ‘இலகு நோக்கு ஆசிரியத் தலையங்கங்களை எழுதப் பயிற்சி பெறலாம்.
ஆசிரியத் தலையங்கங்களும் சிறிய அளவிலான மூன்று கட்டுரைகளும் இடம்பெறும் விதத்தில் அமையக்கூடிய உள் (நடு) பக்கத்தில் கேலிச் சித்திரமும் நாட்டு நிலைமையைப் படம்பிடித்துக் காட்ட உதவும்.
“OP-ED’ எனப்படும் ஆசிரியத் தலையங்கங்கள் இடம்பெறும் பக்கத்தின் எதிர்ப்பக்கத்தில் அரைவாசிப் பகுதி உலக அறிவைப் பகிர்ந்து கொள்ளும் பக்கமாகவும் அடுத்த அரைவாசிப் பகுதி வாசகர்களின் கருத்துகள், அபிப்பிராயங்கள் போன்றவற்றின் தொகுப்பாகவும் அமையலாம். ஆயினும் இவற்றை “Edit பண்ணிச் சுருக்கமாகத் தரலாம்.
இவை எப்பொழுதும் இம்மாதிரித்தான் வெளிவருகின்றன என்று 'தினக்குரல் ஆசிரியர் (நடைமுறை அனுபவத்தை நீண்ட நாட்களாக பெற்று வந்துள்ளவர்) கூற முன்வந்தாலும் ஒரிரு மாற்றங்களைக் கொண்டு வருவது சிறப்பாக இருக்குமென நான் நினைக்கிறேன்.
ஞாயிறு தினக்குரலில் நிறைய அரசியல், போர், சமாதானம், அனர்த்தங்கள் போன்றவையே அதிக இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. பற்பல புனைபெயர்களில் பெரிய அறிஞர்களும் ஆய்வறிவாளர்களும் பல்கலைக்கழக மட்டப் பகுப்பாய்வாளர்களும் இந்த வாராந்த இதழில் எழுதி வருகிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இவற்றைப் படிக்கும் பொழுது சொன்னதையே திரும்பச் சொல்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கே.எஸ். சிவகுமாரன் 29
அறிவியல், அறவியல், அரசியல், உளவியல், சமூகவியல், பொருளியல், கலைகள், இலக்கியங்கள், சமயம் போன்றவை பற்றிய சிறு சிறு கட்டுரைகளைத் தெளிவாக எழுதக்கூடியவர்களிடமிருந்து பெற்றுப் பிரசுரிக்கலாம். புதினத்தாளின் அலுவலகங்களிற்கூட ‘இலைமறை காய்போல' இருந்து வருபவர்களின் திறன் கண்டு அவர்களை எழுதச் சொல்லலாம்.
சினமா' அல்லது திரைப்படச் செய்திகளும் நிழற்படங்களும் நிறையவே எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவருகின்றன. இவற்றைப் படிக்கும் பொழுது தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையின் சீர்கேடுகளையே நாம் படித்து அருவருப்படைகிறோம். 'தினக்குரல் இவற்றைத் தவிர்த்து, உலகளாவிய விதத்தில் திரைப்படக் கலை வளர்ந்து வரும்போக்கை வாசகர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பயன்தரும் படங்களைப் பற்றிய செய்திகளையும் மதிப்புரைகளையும் வெளியிடலாம்.
‘பனுவல்’ என்ற பக்கத்தைப் படிக்கும் பொழுது, தமிழ்நாட்டில் நிலை தடுமாறும் சிற்றேடுகளின் தத்துவ நோக்குகளை இங்குள்ளோர் கேள்வி விசாரணையின்றி, உ ள் வாங் கி அக் கருத் தோ ட் டங்க  ைள ப் பிரதிபலிக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அபிப்பிராய சுதந்திரம் எவருக்குமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் கொடுப்பது விரும்பத்தக்கது. இந்தப் பக்கத்தில் எழுதுவதற்கு நான் அஞ்சுகிறேன். காரணம், அப்பக்கத்தில் வரும் விஷயங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் நான் என்னை தமிழ்நாட்டு விமர்சகர்’களின் சிந்தனைகளை கிரகித்துக்கொள்ளும்

Page 28
| 30 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
விதத்தில் வளர்த்துக் கொள்ளாததால் இச்சிந்தனைகளை சீரணிக்க முடியாதிருப்பதேயாகும்.
'தினக்குரலில் வெளிவரும் ஒவ்வொரு அம்சம் பற்றியும் எனது அவதானிப்புகளை (அவதானங்கள் என்று படித்த சிலரும் எழுதக்கண்டு ஆச்சரியப்படுகிறேன்.) தெரிவிக்க விருப்பமாயினும், ஒரிரு துறைகள் பற்றியே இங்கு கருத்துத் தெரிவித்துள்ளேன்.
'தினக்குரலில் உயர் பதவிகள் வகிக்கும் செய்தியாளர்கள் சிலருடன் (நான் ‘வீரகேசரி’யில் இருந்த பொழுது) நெருங்கிப் பழக நேர்ந்ததால் அவர்களுடைய திறனாற்றலை நான் நன்கு அறிவேன்.
அனைவரும் உயர்ச்சி பெறுக.
来
உங்களுக்குப் பொய் சொல்லப்பருகிறது
உலகின் தலையாய ஆய்வறிவாளர்கள் (Intellectuals) ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு “You are being lied to”. (உங்களுக்குப் பொய் சொல்லப்படுகிறது) இதனைத் தொகுத்திருப்பவர் Russel Kick (ரஸல் கிக்).
154Gurujaj:56) The Disinformation Company Ltd Grailip பெயரில் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தை இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்த நூல் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட தடவைகள் மீண்டும் மீண்டும் பிரசுரமாகியுள்ளது. 400 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஒரு வழிகாட்டி எனவும் கருதப்படலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 31
ஊடகத் திரிபுகள், வரலாற்றை மூடி மறைத்து மழுப்பும் செயல்கள், பண்பாட்டு ரீதியான புராணப் பழைமைத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான ஒரு வழிகாட்டி இது எனக் கொள்ளலாம்.
இந்நூலின் தொகுப்பாசிரியர் ரஸல் கிக், VillageVoice (கிராமத்தின் குரல்) என்ற ஏட்டில் அடிக்கடி எழுதி வருபவர். அமெரிக்காவின் ஆய்வறிவாளர்கள் இந்த ஏட்டில் எழுதி வருவர்.
உலகப் புகழ் பெற்ற ஆய்வறிவாளர் Noam Chomshy (நோஆம் சொம்ஸ்கி) எழுதிய கட்டுரையொன்றும் குறிப்பிட்ட இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இவருடைய கருத்துகள்: செய்தி என்பது பிரசாரம், ஊடகம் என்பது பெரிய வணிகத்துறை.
g) fög5 b5IT GO Gav (“You Are Being Lied To”) அமெரிக்காவில் 2002-2004 காலப்பகுதியில் நான் வசித்து வந்த பொழுது படித்துப் பார்த்துப் புத்தறிவு பெற்றேன். மேற்குலகில் உடனிகழ்கால ஊடகத்துறை இயங்கி வரும் பாங்கையும், புதிதாகத் தெரிய வந்த தகவல்களையும் உள்ளடக்கிய பல கட்டுரைகளைப் படித்து ஆய்வறிவு ரீதியான சுவையைப் பெற்றேன்.
இக்கட்டுரைகளுள் சில:
“ஊடகத்துறையில் பொய் பேசுபவர்கள், (ஹொவர்ட் ப்(B)ளும்) மனித இயல்பின் யதார்த்தங்கள் (ரீயேன் எய்ஸ்லர்) இவை என்னைப் பெரிதும் கவர்ந்தன.”
இந்நூலின் வெளியீட்டாளர்கள் எவற்றைப் பொய்யானவை என நிரூபிக்க முயல்கின்றனர்? பின்வருவனவற்றை எழுதுபவர்கள்:

Page 29
32 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஆய்வாளர்கள், புலன் விசாரணைகளை மேற்கொள்பவர்கள் (செய்தியாளர்கள்), அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுடையவர்கள், பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள், ஊடகக் காவல் நாய்கள், அறிவியல் சார்ந்த மெய்யியலாளர்கள், சமூக ரீதியான திறனாய்வை மேற்கொள்பவர்கள். இவர்கள் காட்டும் உலகம் பொய்யானது என்கிறார்கள் கட்டுரையாளர்கள்.
முக்கியமான செய்திகள் புறக்கணிக்கப்படுகின்றன. வேண்டுமென்றே அமுக்கப்படுகின்றன. நிகழ்வுகளின் உத்தியோகபூர்வமான அறிக்கைகளில் நிறைய “ஓட்டைகள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
உலகின் உண்மையான ஆபத்துக்கள் பற்றி அதிகம் பேசாது, நடைமுறையில் இல்லாத ஆபத்துக்கள் பற்றி டமாரம்’ அடிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் “உங்களுக்குப் பொய் சொல்லப்படுகிறது’ என்று கட்டுரையாளர்கள் கூறுகிறார்கள்.
பல விடயங்கள் பற்றித் துருவி ஆராயும் இக்கட்டுரைகள் பின்வரும் தலைப்புகளுள் வகுக்கப்பட்டுள்ளன:
‘செய்தி ஊடகமும் செல்வாக்கைத் திறமையாகக் கையாளும் போக்கும்; அரசியல்; உத்தியோக பூர்வ பிறிது வகைக் கூற்று; சமூக ரீதியான புனைந்துரை; திரும்பவும் சொல்வதற்கான நிர்ப்பந்தம்; தடுமாறல்; உருளல்; விஞ்ஞானத்தினால் பார்வையிழத்தல்; மிகப் பெரிய சித்திரம் ஆகியனவாகும்.
இப் புத்த கத்தில் பின்னிணைப்புக் கள், கட்டுரையாளர்கள், செவ்வியாளர்கள் பற்றிய விபரங்கள்,

கே.எஸ். சிவகுமாரன் 33
கட்டுரைகள் எழுதப்பட்ட வரலாறு ஆகியனவும் அடங்கியுள்ளன.
ஊடகத்துறை அமெரிக்காவில் எவ்வாறு இயங்குகின்றது என்பதை இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். அமெரிக்காவில் மாத்திரமல்ல இங்கும் அப்படித்தான்.
★★大
நீங்கள் ஆங்கிலப் புதினத்தாள்களைப் படிப்பவர்களோ தெரியாது. அம்மொழிப் பத்திரிகைகளில் நமது நாட்டுப் பேரினவாதம் பற்றி அண்மையில் நான் எழுதிய கட்டுரைகள் இரண்டு பற்றி உங்கள் பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறேன். முடியுமானால், படித்துப் பாருங்கள்.
(p56)|Tagil 5LG60J, Daily News (April 14, 2005)
இதழில் வெளிவந்தது. 15ஆம் பக்கத்தில் இடம்பெற்ற இக்கட்டுரையின் பொழிப்பு வருமாறு:
“எமது வரலாற்றுணர்வு அப்பட்டமாகவே சார்பு நோக்குக் கொண்டது. இந்த நாட்டில் ‘பிறத்தியார் இருந்து கொண்டு, சமத்துவம் கோரி, தமது எண்ணிக்கைக்கும் மேலான விதத்தில் அதிகபட்ச தேவைகளைக் கோரி நிற்கிறார்கள் என்றே நமது பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது.
மேல் பாங்காக நோக்கின் வாயளவில் நாம் ஐக்கியத்தையும் அதன் தேவையையும் பேசி வந்தாலும், உண்மையிலேயே நாம் ஒரு சில குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகளினதும் தீவிர

Page 30
34 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தேசப்பற்றுக்காரரினதும் சமூக விஞ்ஞானிகளினதும் ஆணைகளுக்குக் கட்டுப்பட்ட கைதிகளாக மாறியிருக்கிறோம்.
இதற்குக் காரணமே தவிர்க்க முடியாமலும் தடுக்க முடியாமலும் ஊடகத்துறையைத் தமது ஆளுமைகளுக்கும் திரிபுதாளங்களுக்கும் உட்படுத்தும் அதிக பலம் வாய்ந்த அரசியல்வாதிகளின் தீவிரப் போக்குக்கு நாம் அடிபணிவதே.
இனங்களுக்கிடையே சுமுக உறவுக்குத் தடையாக இருப்பது மொழியாற்றலுடன் கூடிய தொடர்பின்மைதான். இனங்களுக்கிடையிலான பொதுப் பண்புகளை வலியுறுத்தாது, விகற்பங்களே முதன்மைப்படுத்தப் படுகின்றன.”
இக்கட்டுரையை முழுமையாகப் படித்தால், நான் என்ன கூற வருகிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
9Gd5 5. "Gaopu Sunday Observer (April 24, 2005) பக்கம் 12, வார இதழில் வெளிவந்தது. அக்கட்டுரை இதழியல் சம்பந்தப்பட்டது. பேரினவாதம் சிங்களப் பத்திரிகைகளிலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தொனிப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சிறுபான்மையினர் 'பறையர்கள்’ (அதாவது நாட்டுக்குப் பிறத்தியார் என்ற கருத்தியலின்படி) என்ற நினைவூட்டல் இந்த இதழ்களில் வருவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. படித்துத்தான் பாருங்கள்.
来

கே.எஸ். சிவகுமாரன் 总5
யாழ்ப்பாணம் போய் வந்தேன்
UTன் யாழ்ப்பாணம் போய் வந்தேன். இதில் என்ன புதுமை இருக்கிறது என்பீர்கள். என்னைப் பொறுத்தமட்டில் இது புதுமைதான். எப்படியோ? பதினைந்து வருடங்களுக்குப் பின், ஈழத் தமிழர் பண்பாட்டைக் குறியீடாகக் காட்டி நிற்கும் அந்த மகத்தான மண்ணில் கால் வைத்துப் பெருமிதம் அடைந்தது எனக்குத்தான் பெருமை. மண்ணையும் மக்களையும் குறைந்தது மூன்று நாட்களுக்காகுதல் (2004, அக்டோபர் 9 முதல் 11 வரை) மதித்துக் கண்டுகளித்து, உவகையுடன் உறவாடி, சல்லாபித்து சிரித்து மகிழ்ந்து வந்திருக்கிறேன்.
கிழக்கைச் சேர்ந்த வட புலப் பூர்வீகம் கொண்ட பெற்றோருக்கு மூத்த மகனாய்ப் பிறந்து (1936இல்), 1953 முதல்கொழும்பில் நிரந்தரவாசியாக இருந்து வந்த என்னை, இதுவரை எவருமே நினைக்காது புறக்கணித்து வந்த என்னை, எனது 68 ஆவது வயதில் வட, கிழக்கு மாகாணப் பண்பாட்டுத் திணைக்களம் நான் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில், எண்மருள் ஒருவனாகக் கெளரவித்து, ஆளுநர் விருதைப் பெருமை தரும் யாழ் நகரில் எனக்கு வழங்கியமை எனக்குப் புல்லரிக்கும் அனுபவத்தைத் தந்தது. மறக்க முடியுமா இந்த அன்பின் வெளிப்பாட்டை.?
பூரீதேவி, வில்வரத்தினம், நந்தினி சேவியர் போன்ற யாழ் மண்ணைச் சேர்ந்த எழுத்துலக நண்பர்கள் அடங்கும் குழுவினர், கலை, இலக்கியத் துறைகளில் நன்கு பரிச்சயம்

Page 31
36 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கொண்ட ஆர். தியாகலிங்கம் தலைமையில் இந்த விருதை எனக்கும் வழங்க முன்வந்தமை, கிழக்கில் உதித்த எனக்கு, பிராந்திய மனப்பான்மையின்றி, என்னைக் கெளரவித்தமை பெரியதொரு செயலாகும்.
யாழ்ப்பாண மக்களும் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அளித்த விருந்தோம்பல் பண்பிலிருந்து அறிந்துகொண்டேன்.
என் தந்தையின் ஊரான திருகோணமலையில் வட, கிழக்கு மாகாணத்தின் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை, இளைஞர் விவகார அமைச்சு இயங்கி வருவதை நாமறிவோம். இந்த நிர்வாகத்தின் ஆளுநராகப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பணி புரிகிறார். அவரின் பிரதம நிர்வாகச் செயலாளராகத் திரு. ரங்கராஜ் பதவி வகிக்கிறார். அவரே இன்முகத்துடன் எனக்குப் பொன்னாடை போர்த்தி ஒரு சின்னத்தையும், பணப்பரிசிலையும் ஒப்படைத்தார். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கும் ஆர். தியாகலிங்கம் பெரிதும் உவகையுடன் என்னை உபசரித்தமையும், டெயிலி நியூஸ், தி ஐலண்ட் ஆகிய பத்திரிகைகளில் புதன்கிழமை தோறும் நான் எழுதும் பத்திகளைத் தவறாது படித்து வருவதைத் தெரிவித்தமையையும் நினைக்கும் போது, எனக்கு இந்த வயோதிப காலத்திலும் புத்துணர்ச்சி ஏற்பட்டது.
ஈழத்தின் மிகச் சிறந்த கவிஞர்களுள் இருவராகிய அகளங்கனும், வில்வரத்தினமும் மிக அக்கறையுடன் சபையோருக்கு அறிவித்த பாங்கும் என்னைப் பரவசப்படுத்தியது. பெண் எழுத்தாளராக ஒளிர்விடுவது ஒரு புறமிருக்க ஈழத்து தமிழ் எழுத்துக்கே மிகத் துலக்கமான

கே.எஸ். சிவகுமாரன் 37
முறையில் புத்தாக்கம் செய்து வரும் கோகிலா மகேந்திரன் கனிவுதரும் உபசரிப்பினாலும், உரையாடலினாலும் எனக்கு என்னிலேயே நம்பிக்கை தரும் ஊட்டத்தை உணர்த்தி நின்றார்.
கன நாட்களாகச் சந்திக்காதிருந்த சொக்கன், சோ. பத்மநாதன், செம்பியன் செல்வன், பேராசிரியர்கள் சண்முகதாஸ், மனோகரி சண்முகதாஸ், சபா ஜெயராசா, மெளனகுரு மற்றும் கலாநிதி சுெ யோகராஜா, மட்டுநகர் முத்தழகு, கலாநிதி க. குணராஜா (செங்கை ஆழியான்), அ. யேசுராசா, நந்தினி சேவியர், ச.வே. பஞ்சாட்சரம், மட்ராஸ்மெயில் போன்ற நண்பர்களையும் முதற்தடவையாகச் சந்தித்த மயிலங்கூடலூர் நடராசன், தாமரைச் செல்வி போன்ற புதியவர்களுடனும் கலந்து பேசி மகிழ்ந்தேன்.
ஏ. ஜே. கனகரத்னா, சாந்தன், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரையும் யாழ் நகரிலிருந்து வெளியாகும் பல சிறு வடிவ நாளிதழ்களின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களையும் சந்திக்காமல் திரும்பியது மனவருத்தத்தைத் தந்தது.
நான் சந்தித்துப் பேச விரும்பிய ஒருவரின் பெயர் அழைப்பிதழில் காணப்பட்டாலும், அவர் வருகை தராதது, சிறிது ஏமாற்றத்தைத் தந்தது. அவர் யாருமல்லர் கவிஞர் புதுவை இரத்தினதுரையே. மற்றொருவரும் வரவில்லை. குழந்தை சண்முகலிங்கம், முதிய நல்லாசிரியர் வயிரமுத்து சிவசுப்பிரமணியம் ஆகிய இரு புலமையாளர்கள் ஆளுநர் விருதைப் பெற்றுக் கொள்ள வரவில்லை.
சண்முகலிங்கம் சங்கோஜியோ தெரியாது. அவரின் நாடகத்துறைப் பணிகள் தொடர்பாக அவரைப் பேட்டி

Page 32
38 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
காணவும் நான் விரும்பியிருந்தேன். சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு, புளியந்தீவு, ஆனைப்பந்திப் பாலர் பாடசாலையில் நான் படித்த போது (1942-46) ஆசிரியராகப் பணி புரிந்தவர். சுவாமி விபுலானந்தர் தொடர்பாக ஆய்வுகளைச் செய்திருப்பவர். அவரைச் சந்தித்து அவர் ஆசியைப் பெறவும் விரும்பியிருந்தேன். முடியாமற் போய்விட்டது. -
இனி, இந்தக் கலை, இலக்கியப் பெருவிழா பற்றிய சில தகவல்களை வாசகர் நலன் கருதி மேற்கோள்களாகத் தருகின்றேன்.
எழுத்து வன்மையும், அழகியல் பார்வையுங் கொண்ட ஈழத்துச் சிறந்த புனைகதையாளர்களில் ஒருவரான நந்தினி சேவியர் எழுதுகிறார்: ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை 1998“ ܖ தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் தொண்டாற்றிய 66 கலைஞர்கள்ைக் கெளரவ ஆளுநர் விருது வழங்கிக் கெளரவித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக எமது திணைக்களம் நடத்தும் இலக்கியப் பெருவிழா 2004 பல்துறை சார்ந்த கலைஞர்கள் எண்மர் கெளரவிக்கப்படவுள்ளனர்.
எனவே, ஆளுநர் விருது பெற்ற கலைஞர்கள் போலவே இம்முறை விருது பெறுபவர்களும் எமது பண்பாட்டுச் செழுமைக்குத் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்களாவர்.
இம்முறை ஆளுநர் விருதைப் பெற்றவர்கள்:
வயிரமுத்து சிவசுப்பிரமணியம் (ஆய்வாளர்), மு. கனகசபை (ஒவியர்), பிஸ்டனிஸ் லாஸ் (ஒவியர்), அரியான்

கே.எஸ். சிவகுமாரன் 39
பொய்கை கை.செல்லத்துரை (நாட்டாரியல் விற்பன்னர்), கே.எஸ்.சிவகுமாரன், (அது நானே. நீங்கள் தான் அறிவீர்களே), குழந்தை ம. சண்முகலிங்கம் (நாடகத்துறை விற்பன்னர்), இரா.சடாட்சரதேவி - குந்தவை (சிறுகதைப் படைப்பாளி), எஸ்.எல்.எம்.ஹனிபா (புனைகதை ஆய்வாளர்).
எதிர்மன்ன சிங்கத்தைத் தொடர்ந்து, உதவிப் பணிப்பாளராகப் பதவியேற்றுச் சிறப்பான முறையில் சேவித்து வரும் என்.பூரீதேவி எழுதுகிறார்.
GG
. தளர்விலாநல்ல முதுசொம் கொண்ட மூதறிஞர்களுக்கு விலையொன்றில்லை. ஆயினும் இவ்விருதினால், நாமே நம்மை நமதருந் தமிழை கெளரவப்படுத்தி நிற்கின்றோம். காதலால் கண்ணில் நீர் பனிக்கக் கை கூப்பி வாழ்த்துகின்றோம். வாழ்க நல்விருந்தாளர்.”
வலயக் கல்வி அலுவலக (யாழ்ப்பாணம்) பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் எழுதுகின்றார்:
“. நடப்பு நாட்களின் சுவாசத்தில் உலகின் தலை சிறந்த முதன்மை இலக்கியங்களைத் தாயக எழுத்தாளர்கள் படைக்க அரசும், மாகாண சபையும் ஆலாபனை செய்தல் வேண்டும்.”
அமைச்சின் செயலாளர் ஆர்.தியாகலிங்கம் எழுதுகின்றார்:
“இது வழிவழியாகத் தொடரும் தமிழுக்கு அணி
செய்யும், தமிழறிஞர்களைக் கெளரவிக்கும் சிறப்பு நிகழ்வு பாரம்பரியம் மட்டுமல்ல, கலை,கல்வி, இலக்கியம், பண்பாடு

Page 33
40 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சார்ந்த ஆய்வரங்குகளையும், நடத்துதல் அவ்வத்துறை சார் கலைஞர்கள், அறிஞர்கள் என்போருக்கு ஆளுநர் விருது வழங்கிக் கெளரவித்தல், இலக்கியப் பல்துறை சார் நூல்களுட் சிறந்தவற்றைத் தேர்வு செய்து பரிசளித்தல் போன்றவற்றை அதன் காத்திரமான அம்மசங்களாகக் கொண்டுள்ளன.”
இந்த மூன்று நாட்களிலும் நடந்த ஆய்வு உரைகள், விவாதங்கள், கலைநிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி போன்றவை பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. ஆளுநர் விருது தொடர்பாகவும் யாழ்ப்பாணம் சென்று நான் திரும்பியது பற்றியும் மாத்திரமே இங்கு எழுதியிருக்கிறேன்.
ஆமாம், இந்தப் புதிய ஊடகவியலாளருக்கு என் பெயர் சரியாகத் தெரியாதோ? தொலைக்காட்சியில் என் பெயரையும் குறிப்பிட்டார்களாமே. என்னவென்று? எஸ்.கே.சிவகுமாரன் என்று. எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற மறைந்த ஒருவர்தான் இவரும் என்று நினைத்தனரோ? இத்தனைக்கும் இந்த அரச, தனியார் மின்னியக்க ஊடகங்களில் பெரிய பதவிகளை வகிப்பவர்கள் எல்லோரும் எனக்குத் தெரிந்தவர்கள்தான். இந்த நிலையில், கடந்த 50 வருடங்களாக கே.எஸ்.சிவகுமாரன் என்று எழுதியும், ஒலிபரப்பியும் வரும் என்னை அவமானப்படுத்துவது போன்று எஸ்.கே. சிவகுமாரன் என்று குறிப்பிடுவது இவர்களுடைய தொழிற் சீர்மையைச் சந்தேகிக்க வைக்கிறது. செய்திப் பிரிவுகளில் பணிபுரிபவர்களே பெயர், இடம், காலம், நேரம் போன்றவற்றைச் சரிபார்த்து எழுத வேண்டாமா? விழித்துக் கொள்ளுங்கள்.
来源

கே.எஸ். சிவகுமாரன் 41
‘தராக்கி’யை நினைத்தால்.
அநியாயமாகக் கொலையினால் உயிரிழந்தாலும், கவரிமான் போல் உயிர் நீத்த ஈழத்து ஆய்வறிவாளர்களுள் ஒருவர் 'தராக்கி’. இவரைப் பற்றிய விபரங்கள் இவர் இறப்பின் பின்னரே வந்து கொண்டிருக்கின்றன.
இவர் இயற்பெயர்தர்மரத்தினம் சிவராம் என்பதும், இவர் மட்டக்களப்பில் பிறந்தவர் என்பதும் நாம் அறிந்ததே. சிவராம்’ என்ற பெயரை உள்ளடக்கிய மற்றுமொரு முக்கியமானவரும் நம்மிடையே இருந்து மறைந்தார். அவர் வேலணையில் பிறந்து, திருக்கோணமலையில் வாழ்ந்து பின்னர் சென்னையில் சிற்றேடுகளில் சிலவற்றில் முக்கியத்துவம் பெற்று மறைந்து போனார். அவர் பெயர் தர்மலிங்கம் சிவராமலிங்கம். ஆனால், அவர் அறிமுகம் தருமு. சிவராமு’ உட்பட பல புனை பெயர்களில் பிரசித்திபெற்றது.
‘சிவராம் என்ற பெயருடைய இருவரும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியுள்ளனர்.
ஆயினும், தர்மரத்தினம் சிவராமின் ஆங்கில எழுத்து முழு இலங்கைக்கும் சொந்தமானது. அவர் தமிழனாய்ப் பிறந்தமை தமிழர்களுக்கும், தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் கூட பெருமை தரவல்லது. இது ஏனெனில், அவர் ஒர் ஆய்வறிவாளராகவும், பகுப்பாய்வாளராகவும், அண்மைக்காலப் புலனாய்வுத் துறைகளில் அதிகபட்ச அறிவும், அனுபவமும் கொண்டவராகவும் இருந்தமையே. தமிழ் பேசுபவர்கள்

Page 34
42 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மாத்திரமல்ல, ஆங்கிலம் தெரிந்த ஏனைய இனத்தவர்களும், அவர் ஆய்வுத் திறமையையும், பகுத்துணர்வையும், வெகுவாகப் பாராட்டி வந்துள்ளார். சிவராமின் கருத்துகளையோ, அவதானிப்புக்களையோ முற்றுமுழுதாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. ஆயினும், அவர் தருக்க ரீதியாக இராணுவ நடவடிக்கைகளை எடுத்துக்கூறிய பாங்கு பலரையும் வியப்பிலாழ்த்தியது.
மட்டக்களப்புப் பூமியிலிருந்து சுவாமி விபுலானந்தருக்குப் பிறகும் சில அறிஞர்கள் உதித்துப் பணிபுரிந்து சென்றாலும், பல ஆண்டுகளுக்குப் பின் அங்கிருந்து உலகப் பிரசித்தி பெற்ற ஆய்வறிவாளனாக த. சிவராம் (தராக்கி) பெயர்தான் நம் முன் நிற்கும். அந்த அளவிற்கு அவர் ‘மாமனிதர் தகுதியைப் பெற்றவர் என்பது மிகையான கூற்றல்ல. அவர் பூதவுடல் உரிய காலத்திற்கு முன்னரே அநியாயமாகப் பறிக்கப்பட்டாலும், அவர் புகழுடம்பும் சாதனைகளும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டன.
来 来 来
சிவராம் இன்னார் என்றறியாது அவரை நான் 1980களின் முற்பகுதியில் சந்தித்திருக்கிறேன். அப்பொழுது நான் அமெரிக்கத் தகவல் நிலையத்தில் ஆங்கில ஊடகத்துறை உதவியாளராகப் பணிபுரிந்தேன். அப்பணியின் ஒரு கூறாக, அமெரிக்க நிலையத்தில் (நூல் நிலையம்) புத்தகங்களை வாசகர்கள் படிப்பதற்கு எடுத்துச் செல்ல பதிவு செய்யும் உதவியாளனாகவும் செயற்பட்டேன்.
ஜெஹன் பெரேரா, டி.சிவராம் ஆகிய இருவரும் Terrorism எனப்படும் பயங்கரவாதம் தொடர்பான

கே.எஸ். சிவகுமாரன் 43
நூல்களையும், புனைகதைகளையுமே அதிகம் பெற்றுச் செல்வர். இவர்களுடன் உரையாட வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.
பின்னர் "தி ஐலன்ட்’ என்ற ஆங்கிலத் தினசரியில் ஞாயிறு இதழ், நாளிதழ் ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் (Features) பகுதிகளுக்குப் பொறுப்பான பிரதி (Deputy) ஆசிரியராகப் பணிபுரிந்தபோது அப்பத்திரிகையில் பணிபுரிந்த D.B.S. ஜெயராஜ் ஒரு நாள் ஈசிவராமை எனக்கு ஒர் பத்திரிகையாளர், தமிழ் இலக்கியங்களில் அதிக நாட்டமுடையவர் என்று கூறி அறிமுகஞ் செய்து வைத்தார். அடிக்கடி உரையாட வாய்ப்புகின்டக்காவிட்டாலும் நானும், சிவராமும் பத்திரிகை அலுவலகத்தில் சந்திக்கும் பொழுது புன்னகைத்துக் கொள்வோம்.
ஒரு நாள் அவர் என்னுடைய மேசைக்கருகே வந்து குசலம் விசாரித்தார். எங்கு நல்லதை நான் காண்கிறேனோ, அதை வெளிப்படையாகவே கூறிவிடும் சுபாவம் என்னுடையது. அந்த நோக்கிலே, “நீங்கள் அழகாக எழுதுகிறீர்களே, பாராட்டுகள்’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"நீங்கள் இதைச் சொல்கிறீர்கள். எனது நண்பர்கள் எல்லாம் ‘கே.எஸ்.சிவகுமாரன் போல விளங்கக்கூடிய ஆங்கிலத்தில் எழுதுங்கள்’ என்று என்னைக் கேட்கிறார்கள்’ என்றார்.
நீங்கள் மேல் சொன்னவற்றை நம்பத்தான் வேண்டும். இதை ஏன் எழுதுகிறேன் என்றால், சிவராம் நேர்மையாக, நேரடியாகவே எதையும் பேசியும், எழுதியும் வந்தவர் என்பதைக் கூறத்தான். அவருடைய பரந்த

Page 35
44 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மனப்பாங்கு மெச்சத்தக்கது. அவர் ஒரு பல்நெறி சார்ந்த அறிவுடையவராய் விளங்கினார்.
இச்சம்பவத்தின் பின், சிவராமை நான் சந்தித்தது வெகு அபூர்வமாகத்தான். அது கூட வெறும் புன்னகையுடன் கழிந்துவிடும்.
சிங்களத் தேசியவாதத்திற்கு மறுமுனையாக சிவராமின் தமிழ்த் தேசியவாத நிலைப்பாடு அமைந்தது தவிர்க்க முடியாத விளைவே. V
米
இஸ்லாமியப் பெண் கவிஞரின் கவிதா ஒவியங்கள்
கிழக்கிலிருந்து ஒரு பெண் குரல் காத்திரமான சிற்றேடுகளில் கவிதையாக, ஐந்தாறு ஆண்டுகளாக, ஒலித்து வந்திருக்கிறது. அந்தக் குரலுக்குரியவர் "அனார்’. இயற்பெயர் இஸாத் ரெஹானா அளிம். இந்த இஸ்லாமியப் பெண்ணின் கவிதைகளை முதற்தடவையாக ஒவியம் வரையாத தூரிகை’ என்ற தொகுப்பின் மூலம் படிக்கிறேன். 25 கவிதைகளடங்கிய இத்தொகுப்பு மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தின் பிரசுரம்.
இத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளில் உள்ளடக்கம் எதுவென உதாரணங்களுடன் 'ஆழியாள்’ விளக்கியிருக்கிறார். இந்தப் பெயரில் எழுதுபவர் யார் யார் என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. இவருடைய கணிப்பின்படி, “இக்கவிதைகளின் குரல் சில சமயங்களில் மூன்றாம் உலகப் பெண்களுக்கான பொதுக் குரலாகவும்,

கே.எஸ். சிவகுமாரன் 45
ஈழத்து சமகால அரசியல் பிரச்சினைகளை அணுகும்போது தமிழ்ப் பேரினவாதத்திற்கு எதிரான குரலாகவும் ஒலிப்பதோடு, ஏக்கம், கோபம், தாபம், காதல், தனிமை, கேள்வி, இழப்பு, நம்பிக்கை, எதிர்ப்பு என பல உணர்வுச் சந்தங்களின் வெளிப்பாடாகவும் அமைகின்றது.”
இந்த அவதானிப்பை விட வேறு என்ன நான் சொல்ல வேண்டியிருக்கிறது?
நான் ஒன்று செய்யலாம். தனித்தனியே ஒவ்வொரு கவிதையையும் பகுப்பாய்வு செய்யாமல், கவித்துவமான சில வழிகளை எடுத்துக்காட்டி, நீங்களும் சுவைக்கச் செய்யலாம். தேய்பிறை: மனச்சிறகுதிரும், பனிபெய்து நிலாக்கரைய, இரவின் வாய்மூலம்
சூரியனைப் பற்ற வைக்க : சூரியனைப் பற்றவைக்க உன்னால் முடியாது.
ஓவியம்: தரையில் கரைந்து சிந்தும் ஒவியம் இது. ஈரம் சொட்டும் காதல் : மாணிக்கம் சுடருமிரு கண்களால் எனைக் கரைத்து வரையாதே
ஒட்டுண்ணி ; உன் புகைப்பட உருவத்தின் மீது காயப்படுத்தாத கண்ணாடியாக இருக்கிறேன். நீதான் கண்டு கொள்வதே இல்லை.
காயமே மருந்தாகி இப்புதிய கழுதைகளுக்கு இதுகாலம் தந்த பாடம் அல்ல, காயம் தந்த ஞானம்.
மெளனச் சிலுவைகள்: மனத்தினை நீநிழலாய் மூடு.
துஷ்பிரயோகம் : பிணத்தின் கால்களில் மலர் வளையமாய்ச் சாத்திவிட்டாய் பேசாதிருப்பதனால்,

Page 36
46 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
யாருக்கும் கேட்பதேயில்லை; துளைகள் அடைபட்ட புல்லாங்குழலினுள் செத்துக் கொண்டிருக்கிற கீதம்.
வன்மப்படுத்தல் -
தாமரைக்குளத்துக் காதலி : கொச்சிக்காய் கடித்த உதடுகளாக,
மேகமும் வானமும்:
மர)ணப்பந்தல்: நினைவுகளில் விழுந்த அடி கடும் சிவப்பேறியிருக்க,
ஓவியம் வரையாத தூரிகை : கிழிந்த ஆசைகளையும் கீறல் விழுந்த காயங்களையும் சுமந்து, நிழல்கள் கரையென்று வெளிச்சம் வழக்குரைக்க வாழ்க்கை வளையும் இன்னும், சோகங்கள் என் வானில் பரவும் வெயில்,
வஞ்சனை -
இலையுதிர்க்கும் பாட்டு: அது காயத்தின் கீதாஞ்சலி
தவறிய தடங்கள்
சிசு வதை
ஊமைக்காவியம்: விடியலை விழுங்கிய மலட்டு இரவு போல்
மலட்டுச் சித்திரங்கள்
காயங்கள்: இரவுப் பெரும் நுளம்பு
சிலை செதுக்கிய சிற்பம்: சங்கிலிக் கண்ணுள்ளும் என் புன்னகை கிடந்து நசிபடும்.

கே.எஸ். சிவகுமாரன் 47
கோரிக்கை -
ஒவியச் சிலந்திக் கூடு : மெளனத் துயரினால் பூசி மெழுகப்பட்ட உதடுகள். மெளனச் சுமைக்குள் ஜீவித வெடிப்புகளுக்கிடையில் கூடி பின்னிய ஓவியச் சிலந்தி நானும்.
இந்தத் தொகுப்பில் கவிஞர் ‘அனார்’ எழுதியுள்ள கவிதைகள் உள்ளடக்க ரீதியாக வரவேற்கத்தக்க சிந்தனைகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் கொண்டுள்ளன. ஆயினும், வாய்ப்பாட்டு ரீதியாக எல்லாக் கவிதைகளுமே இயலாமையையும் சோகத்தையும் கூறி நிற்பதினால், ஆக்கபூர்வமான மாற்று நடவடிக்கைகளை அதிகம் கூறவில்லை. ‘நெகட்டிவ்’ (தடையறிவிக்கிற) பாங்கில் இருப்பதனால் செயலூக்கம் தரும் விதத்திலும் சில கவிதைகள் எழுதப்பட்டிருக்குமாயின், ஒருவித சமநிலையைக் கண்டிருப்போம். அனுபவ ரீதியான வெளிப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை என்பதற்குச் சில வாய்ப்பாட்டு ரீதியான கருத்தியல்கள் அதிகமாகக் காணப்படுவதே காரணம் என நினைக்கிறேன்.
ஆயினும், கிழக்கிலிருந்து ஒர் இஸ்லாமியப் பெண், தமிழ் மொழியை வெகு இலாவகமாகக் கையாண்டு, புதுப் புனைவாகச் சில சித்திரங்களைத் தீட்டியிருப்பது பாராட்டிற்குரியது. இன்னும் பல கவிதைகளை, எட்ட நின்று, நுண்ணியதாகப் படம் பிடிக்கும் கவிதைகளை அவர் எமக்குத் தருவதற்கான மனப் பக்குவம் அவரிடம் விரைவில் வந்து சேர்ந்துவிடும்.
米

Page 37
48 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இளைய அப்துல்லாஹ்வின் ャ இரு நூல்கள்
இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நூல்கள் பற்றிய திறனாய்வு சார்ந்த அவதானிப்புகளைப் பார்ப்போம்.
முதலிலே, இளைய அப்துல்லாஹ் என்ற எழுத்தாளர் எழுதிய "பிணம் செய்யும் தேசம்', 'துப்பாக்கிகளின் காலம்’ ஆகிய நூல்களை எடுத்துக் கொள்வோம். நூலாசிரியர் இலங்கையிற் பிறந்தவர் என்பதனையும் ஐரோப்பிய நாடுகளில் ஊடகத்துறை உட்படப் பல தொழில்களில் அனுபவம் பெற்றவர் என்பதனையும், தற்சமயம் கொழும்பில் வசிக்கிறார் என்பதையும் செவிவழியாக அறிந்து கொண்டேன்.
இவருடைய நன்றி’க் குறிப்பையும் இடம்பெறும் முன்னுரையையும் முதலாவது, நூலில் படித்த பொழுது, இவருடைய எழுத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் என்னிடம் இல்லை என்பதை அறிந்து கொண்டேன். இதற்குக் காரணம் இவர் ‘கட்டு டைப்பு’ ரகப் படைப்பாளியாக இருப்பாரோ என்ற ஊகிப்புதான். அந்த ரக எழுத்துக்களுக்கு நான் மசிவதில்லை. எம்.என்.எல். அனஸ் என்ற இயற்பெயர் கொண்ட இந்தக் கவிஞர் பற்றிய மேலும் விபரங்களை லண்டனிலுள்ள மு. நித்தியானந்தன் தருகிறார். அது மாத்திரமல்ல ‘நவீனகாலப் போர்த் திறனாய்வுச் சாயலிலும் கவிஞரின் திறன்களைப் பறைசாற்றுகிறார். அவர் மேலும் கூறுகிறார்:

கே.எஸ். சிவகுமாரன் 49
“யாழ் மண்ணிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட கொடூரத்தை இஸ்லாமியப் பின்னணியில் நோக்கும் இளைய அப்துல்லாஹ்வின் கவித்துவ வெளிப்பாடு ஈழத்துக் கவியுலகில் தனித்துக் கேட்கும் குரல்" எனவும் முன்னுரையாளர் துணிகிறார்.
எனவேதான், இந்த மாதிரியான படைப்புக்களை நேர்மையாகத் திறனாய்வு செய்ய எனக்குத் தகுதியில்லை என்கிறேன். மரபுவழித் திறனாய்வாளனாகிய நான், இம்மாதிரியான நூல்களில் சில அம்சங்களை மாத்திரமே ரசிக்க முடிகிறது. அதனை எடுத்துக்கூறவும் முடிகிறது.
இளைய அப்துல்லாஹ் கூறுகிறார்: “இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தைப் பலர் விளங்குவதாயில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்லர். அவர்கள் இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்”
இத்தொகுப்பிலே 117 ‘கவிதைகள்’ இடம் பெறுகின்றன. 286 பக்கங்கள். இவை யாவும் அரசியல் சார்ந்த சொற் சேர்க்கைகள். ஒவ்வொரு உருப்படியையும் வாய்விட்டுப் படித்துப் பார்த்தேன். மரபுவழி வந்த எனக்கு இவ்வெழுத்துகள், எனக்குப் பழக்கப்பட்ட தொனியில் கவிதைகளாகப் படவில்லை. இருந்தபோதிலும் சில படிமங்களும், உவமை, உருவகங்களும் இடைக்கிடை பெய்யப்பட்டிருப்பதை உணர்வினால் அனுபவிக்க முடிந்தது.
இவற்றுள்ளும், “சுமை கணக்கும் அதிர்வலைகள்’ என் இரசனையைப் பொறுத்தமட்டில், ‘கவிதை'யாகவே அமையக்கண்டு, கேட்டு, (வாய்விட்டுப் படித்ததன் மூலம்) பரவசப்பட்டேன்.

Page 38
50 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இத்தகைய படைப்புகளை புதிய ‘விமர்சகர்கள்’, ‘அகவிழி ஆசிரியர் மதுசூதனன், ‘பனுவல் தொகுப்பாளர் "அஷ்வகோஷ், ஒலிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா, விமர்சகர்’ எம்.ஏ.நுஃமான், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றவர்கள்தான் நேர்மையாக விமர்சிக்கத்தக்கவர்கள்.
இந்த நூல் மூலம், ஐரோப்பாவில் வெளிவந்த தமிழ் மொழிச் சிற்றேடுகள் சிலவற்றின் பெயர்களை அறிந்துகொண்டேன். அவையாவன: உங்கள் தகவலுக்காக இதோ மனிதம், தூண்டில் அ.ஆ.இ, சுவடுகள், அம்மா, காலம், பனிமலர், உயிர்ப்பு, மெளனம், தாகம், ஒகை பின்னர் எக்ஸில், உயிர் நிழல், தேசம் தமிழினி.
இளைய அப்துல்லாஹ்வை நவமணி வார இதழில் அதன் ஸ்தாபக பிரதம ஆசிரியராகப் பதவி வகித்த பொழுது (1996-1997) முதலிற்கண்டேன். அப்பொழுது அவர் 'கன்னாதிட்டி சிவத்தாருக்கு கண்டி அப்துல்லாஹ் வாத்தியார்’ என்ற அருமையான அங்கதச் சுவைத் தொடரை எழுதி வந்தார். அதன் பின்னர் அவரை இலங்கை வானொலி நிலையத்திலும் கண்டிருக்கிறேன். அவர் 20 வருடங்களாக ஊடகத்துறையில் ஈடுபட்டிருப்பதுடன் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராகவும் திகழுகிறார் என்ற புதுத்தகவல் பெற்றேன்.
இளைய அப்துல்லாஹ்வின் மற்றொரு புத்தகம், துப்பாக்கிகளின் காலம். ஒட்டமாவடி அறபாத் என்ற முக்கியமானதொரு இஸ்லாமியத் தமிழ்மொழி எழுத்தாளர் இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரையை எழுதியிருக்கிறார். அவர் தரும் தகவலின்படி, இளைய

கே.எஸ். சிவகுமாரன் 51
அப்துல்லாஹ் தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
1986இல் ‘சிந்தாமணி'யில் எழுதத் தொடங்கியவர். கட்டுரை, சிறுகதை, கவிதை எழுதுபவர். ஐரோப்பிய தமிழ்ச் சிற்றேடுகளுடன் நன்கு பரிச்சயங் கொண்டவர். 1997 - 98இல் ‘விடியலை நோக்கி’ என்னும் சமாதான சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் தந்தவர்.
ஓட்டமாவடி அறபாத் எழுதுகிறார்: “முஸ்லிம் மக்களின் மனக்குமுறல்களைப் பதிவு செய்யும் நோக்கில் பல படைப்பாளிகள் தோன்றினர். அம்ரிதா ஏ.யெம், அரபாத் ஷகிப், ஸபீர் போன்றவர்கள் தமது படைப்புகள் மூலம் முஸ்லிம் தேசத்திற்கெதிரான வன்முறைகளைப் பதிவு செய்ய முன்வந்தனர்.”
தமிழ் நாட்டுச் சிற்றேடுகளின் ஆதிக்கம், செல்வாக்கு போன்றவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட, தமிழ் மாத்திரமே தெரிந்த தமிழ், இஸ்லாமிய எழுத்தாளர்களுள் சிலர், “கண்டனக்காரர்களாகவும் விமர்சகர்களாகவும், கட்டவிழ்ப்புக்காரர்களாகவும் தலையெடுத்தனர். 1990களின் பின்னர் இவர்களுள் தீவிரமான போக்குடையவர்களும் இருக்கின்றனர். இவர்களுள் சிலருடைய ஆக்க இலக்கியங்கள் வித்தியாசமாகவும் இலக்கியத் தடத்தை முன்னெடுத்துச் செல்பவையாகவும் அமைந்தன. அவர்களுள் பலர் கிழக்கு மாகாணத்தை, குறிப்பாக மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர். இப்பொழுது மடிந்துபோன “சரிநிகர், 'நிகரி” போன்ற அரசியல் வார இதழ்கள் இவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து வந்தன.”

Page 39
52 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஓட்டமாவடி அறபாத்தின் மற்றொரு கூற்று:
“வடபுலத்திலிருந்து காத்திரமான முஸ்லிம் சிறுகதையாளர் கிடைத்திருக்கின்றார் என்பது ஆறுதலான விஷயம். துப்பாக்கிகளின் காலம் நமது இறந்த காலத்தின் மரணம், அச்சம், வலிச் செறிவை பதிவு செய்த முக்கிய ஆவணம் வாழ்க்கை மீதான காதலின் இழப்பு, மண் மீதான ஈர்ப்பின் பிரேமை, மனித நேயமற்ற போரின் வடு என ஒரு நீண்ட அனுபவத்தின் ஒட்டு மொத்தத் திரட்டு
துப்பாக்கிகளின் காலம்’ எனில் மிகையல்ல.”
இதற்குமேல் நான் என்னத்தைச் சொல்வது? இந்தப் புதிய் ‘போர்க்கால இலக்கியம்' பற்றிப் புதிய விமர்சகர்கள் கூறுவதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. புதிய தமிழ் எழுத்தை விளக்கப் பழைய திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்தாளர்கள் அதிகம் உதவமாட்டார்கள். அதாவது, கண்டனம்’ என்ற தொனியைத் தொக்கி நிற்கும் பதமான விமர்சனம்’ எழுதத் தகுதியுடையவர்கள் இந்தப் ‘புதிய விமர்சகர்களாகத்தான் இருப்பார்கள். திறனாய்வாளர்கள் அல்லர்.
ஆசிரியரே தமது துப்பாக்கிகளின் காலம்’ பற்றி. என்ற பகுதியில் தம்மைப் பற்றிய, முன்பறிந்திராத தகவல்களுடன், உருக்கமாக விடுத்திருக்கும் கோரிக்கை மனிதாபிமானிகளின் உணர்வலைகளைச் சிந்திக்கச் செய்யும்.
இத்தொகுப்பில் இடம் பெறும் கதைகள் தக்கவரைக் கொண்டு சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து தமிழறியா வாசகர்களிடம் செல்ல ஆவன செய்யப்பட
வேண்டும்.
来

கே.எஸ்.--சிவகுமாரன் 53
இஸ்லாமிய படைப்பாளிகளும் நானும்
Tென்னைப் பொறுத்தவரையில் எந்தவித பாகுபாடுமின்றி எனது வாசிப்புக்குட்பட்ட நூல்கள் எதனையும் எழுதியவர் யாரென்று வித்தியாசம் காட்டாமல் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் 'திறனாய்வு சார்ந்த’ பத்தி எழுத்துக்களை எழுதி வந்திருக்கிறேன் என்பதனை எனது எழுத்துக்கள் அனைத்தையும் படித்தவர்கள் அறிவர். பெரும்பாலானவர்கள் எனது ஆங்கில எழுத்துக்களைப் படித்திருக்கமாட்டார்கள் என்பது பெருமளவு உண்மைதான். தமிழில் நான் இதுவரை காலமும் எழுதிய பத்திகள் அனைத்தையும் எல்லோருமே படித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாதுதான்.
நண்பரும், சட்டத்தரணியும், நல்ல எழுத்தாளர்களுள் ஒருவருமான கிழக்கிலங்கையைச் சேர்ந்த எஸ். முத்துமீரான் ‘பனுவல் பக்க பேட்டியில் (மே 22.2.2005) என்னைப் பற்றி எழுதியதிலிருந்து அறிந்து கொண்டேன். முத்துமீரான் சுட்டும் கண்டனங்கள் இவை:
1. எல்லா விமர்சகர்களும் குழுநிலை சார்ந்த விமர்சகர்களாவே இருக்கிறார்கள், கே.எஸ். சிவகுமாரனாக இருந்தாலும் சரி
2. கே. எஸ். சிவகுமாரன் என்பவர் ஒரு சில படைப்பாளிகளின் ரசிகனாகவே இருப்பார். எதற்கெடுத்தாலும் எந்த மேடையிலும் பிள்ளையார் சுழி போடுவது போல் நுஃமானையும், இளங்கீரனையும், பித்தன் ஷாவையும், மருதூர்

Page 40
54 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கொத்தானையும் மட்டும் முஸ்லிம் எழுத்தாளர்களாக அறிந்து வைத்திருக்கிறார். 3. அதன் பின்பு தான் எழுதி வந்ததை வாசிப்பார்
மேடையில்,
4. சிவகுமாரன் முஸ்லிம் உருவகக் கதை எழுதியவர்களையோ, வேறு கவிஞர்களையோ, சிறுகதையாளர்களையோ தேடி ஆய்வது கிடையாது, தெரியாது.
5. இவருடைய விமர்சனங்கள் என்றுமே எடுபடவில்லை.
6.
இவர் ஒரு திரைப்பட விமர்சகர் மட்டுமே.
நண்பர் முத்துமீரான் என்னைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு அவருக்கே உரித்தானவை. அது அவருடைய அபிப்பிராயம். ஆயினும், சில கண்டனங்கள் தொடர்பாகச் சிறிது விளக்கம் அளிப்பது எனது உரிமையும் அல்லவா? இவைதான் என் விளக்கங்கள்: 1. நான் எந்தவொரு குழுவுக்கும் சார்பாகவோ, எதிராகவோ இருப்பது குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எனது நிலைப்பாடு எது என்பதைப் பொறுத்திருக்கும். உதாரணமாக, நுஃமானின் அகம் சார்ந்த கவிதைகளை ரசிக்கும் நான் அவரின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல, சோலைக்கிளியின் புத்தாக்கம் சிலவற்றை வியக்கும் நான் அவரின் சொற்பதங்கள் சிலவற்றை ரசிப்பதில்லை. அதே போல, முத்துமீரானின் அண்மைக்காலக் கவிதைகள் சிலவற்றை விரும்பும் நான் அவரின் அக்கால உருவகக் கதைகளை வரவேற்கவில்லை. முத்துமீரானின் திறனாற்றலை மதிக்கும் நான் அவருடைய அறியாமை காரணமாக எழுந்த,

கே.எஸ். சிவகுமாரன் 55
எழுந்தமானமான தாக்குதல்களை விரும்புவதில்லை. யேசுராஜாவின் கவிதைகளை ரசிக்கும் அதே வேளையில் சாந்தனின் கதைகளையும் பாராட்டுவேன். தெணியானின் நாவல்களை விரும்பும் நான் சோமகாந்தனின் படைப்புகளையும் வரவேற்பேன்.
இங்கு குழுநிலைச் சார்பு இல்லை என்பதை எவருமேயறிவர். இதனாலேயே 50 வருடங்களாகத் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
மருதூர்க் கொத்தன், பித்தன் போன்றவர்களின் தொகுப்புகளை நான் இன்னமும் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்கையில் அவர்களை மாத்திரமே நான் முஸ்லிம் எழுத்தாளரென்று கூறுவது என்னையே நான் ஏமாற்றிக் கொள்வதற்குச் சமமாகிவிடும்.
புத்தக அறிமுக உரைகளைப் பெரும்பாலும் நான் எழுதியே வாசிப்பது என்பது உண்மையே. அதற்குக் காரணம் எடுத்துக்கொண்ட பொருளுடன் நின்றுவிட வேண்டும் என்பதற்காகவே. சில வேளைகளில் எழுதி வாசிக்காமல் வெறுமனே பேசியும் இருப்பதைக் கிழக்கில் வசிக்கும் நண்பர் முத்துமீரான் நேரில் கண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை.
முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்கள், உருவகக் கதையாளர்கள் மாத்திரமின்றி, எவருடைய எழுத்துக்களையுமே நான் தேடி வாசிப்பதில்லை. ஆய்வு செய்வதில்லை என்பது உண்மைதான். ஆயினும், நூல் வடிவில் மதிப்புரைக்காக அனுப்பப்படும் அனைத்தையும் நான் வாசித்துத் தொடர்ந்து எழுதிக்கொண்டே வருகிறேன் என்பது உண்மை. தவிரவும் வெளிவருபவை பற்றித் தேடி

Page 41
56 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஆய்வது, ஆய்வாளர்களின் வேலை. நான் முழு நேர Professional reader அல்ல என்பதை நண்பர் முத்துமீரான் அறிந்துகொள்ள வேண்டும். ஆய்வாளர் செய்யவேண்டிய வேலையைப் பத்தி எழுத்தாளனிடமிருந்து எப்படி எதிர்பார்க்க முடியும் நண்பரே!
“இவருடைய விமர்சனங்கள் என்றுமே எடுபடவில்லை” என்ற தங்கள் கூற்று எனக்கு எந்த விதத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் நான் விமர்சனம் செய்வதில்லை. திறனாய்வு சார்ந்த பத்திகளை நான் மனதறிந்து எழுதி வருகின்றேன் என்பதை எனது நூல்கள் மூலமும் பத்திகள் மூலமும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். நண்பர் இவற்றைப் படிக்கச் சந்தர்ப்பம் கிட்டவில்லை போலும். பரவாயில்லை விமர்சனம்', 'திறனாய்வு’, ‘மதிப்புரை', 'பத்தி எழுத்து’ போன்றவற்றிற்கான எனது விளக்கத்தை அறிய திறனாய்வு என்றால் என்ன?’ என்னும் எனது மணிமேகலைப் பிரசுர நூலைத் தயவு செய்து படித்துப் பாருங்கள். எனது எழுத்துக்கள் தங்களிடம் எடுபடவில்லை என்பது புரிகிறது.
இன்னொரு தகவல். இஸ்லாமிய எழுத்தாளர்களின் படைப்புக்கள் தொடர்பாக எண்ணிக்கையில் அதிகம் எழுதப்பட்டவை என்னுடைய பத்தி எழுத்துக்களில்தான் இருக்கும். எனது நூல்களில் குறிப்பிடப்படும் இஸ்லாமியப் படைப்பாளிகளின் பங்களிப்புக்களை நான் எவ்வாறு காண்கின்றேன் என்பதை அறிய எனது தமிழ் - ஆங்கில நூல்களையும் கட்டுரைகளையும் தயவு செய்து படித்துப் பாருங்கள். எதற்கும் என் மீது உரிமையுடன் தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு எனது நன்றிகள்.
来

கே.எஸ். சிவகுமாரன் 57
சினமா, சினமா : சில சிந்தனைகள்
Cinema என்ற ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பு ‘சினமா. இதனைத் தமிழ் நாட்டு ஊடகத்தினர் "சினிமா என்றே எழுதியும் உச்சரித்தும் வருகின்றனர். அதே போன்று Film என்ற ஆங்கிலச் சொல்லை அவர்கள் ‘பி(F)ல்ம்' என்பதற்குப் பதிலாக ‘பி(F) லிம்’ என்பார்கள். எதற்குமே தமிழ் நாட்டு ஊடகத்தினரின் பிழையான ஆங்கில உச்சரிப்பைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் நமது ஊடகத்தினருள் சிலரும் தப்பாகப் பிரயோகிக்கின்றனர்.
கணனி வேறு, கணினி வேறு. இரண்டையும் குழப்பியடிக்கும் போக்குகள் காணப்படுகின்றன. கணனி என்றால் அது Calculator ஐக் குறிக்கும். ’கணினி’ என்றால் Computer g3 (5155Gylf,
Video என்பதை 'வீடியோ’ என்கிறார்கள். இது தவறு. ‘விடியோ’ என்பதே சரி.
இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளை அளிக்கும் அறிவிப்பாளர்கள் பிழையாகவும் அரைகுறை ஆங்கிலத்திலும் தமிழைப் பேசுவது அருவருப்பை உண்டு பண்ணுகிறது. அதே போல, இங்குள்ளவர்களும் தாம் பிழை விடுகிறார்கள் என்று அறியாமல், ஆங்கிலத்தையும் தமிழையும் கொலை பண்ணும் போது அவர்களுக்காகப் பரிதாபப்பட நேர்கிறது.
உதாரணமாக, ‘ரிலாக்ஸ் டைம்’ என்று கூறித் தமது அறியாமையைக் காட்டிக் கொள்கிறார்கள். Relaxation Time" என்றே கூற வேண்டும் அல்லவா?

Page 42
58 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்ட்ம்
gyG335 GB untG), “ LITL' Go Gör” (Top Ten) என்பதனை ‘டொ(T)ப் டெ(T) ன் எனக் கூற வேண்டும்.
‘ஜேர்மனி’ என்பது ஒரு நாடு. ‘ஜேர்மன்’ என்பது அங்கு பேசப்படும் மொழி அல்லது அங்குள்ள மக்களின் இனம். இந்த வேறுபாட்டை அறியாமல் ‘அவர் ஜெர்மன் சென்று விட்டார்’ எனக் கூறுகிறார்கள்.
தமிழ் நாட்டு ஊடகவியலாளர் தமிழ்ப் பெயர்களைப் பிழையாக எழுதியும், உச்சரித்தும் வருவதையும் நாம் அறிவோம். உதாரணமாக, நமது ஊரின் பெயர்களை - மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்றவற்றை அவர்கள் ‘ப(B)ட்டிக்கலோவா’ ‘ட்றிங்கோமலி’ எனவும் 'ஜாப்னா’ என்றும் எழுதுவார்கள். ஐயோ, எத்தகைய மூடத்தனம்!
தமிழ் நாட்டிலிருந்து நாம் கற்க வேண்டியன பல இருந்தபோதிலும், கேவலமானவற்றையே நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறோம். அங்குள்ள ஊடகத்துறையும், திரைப்படங்களும் நமக்கு ஊறு விளைவிக்கின்றன. நமது சின்னஞ்சிறு ஊடகத்தினரும் அவர்கள் செய்வதே சரி என்று வாதிடவும் தயார்.
தமிழ் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. எனவே, அங்குள்ள ஊடகத்தினரும், திரைப்படக்காரரும், ஜனரஞ்சகம்’ என்ற பெயரில் பாமரத்தனமாக எழுதியும், ஒலிபரப்பியும் திரைப்படம் எடுத்தும் வருகின்றனர்.
நமது இளைய பரம்பரையினர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இங்குள்ள தொலைக்காட்சி

கே.எஸ். சிவகுமாரன் 59
நிலையங்கள், குறிப்பாக, தனியார் துறை நிலையம் ஒன்று, “சுனாமி பாதிப்புக்கு உட்பட்டவரைத் தானாகவே முன் வந்து உதவிக்கரம் நீட்டியமையை நாம் வெகுவாகப் பாராட்டி, நன்றியைத் தெரிவிக்கின்றபோதிலும், அந்த நிலையம் சில நல்ல நிகழ்ச்சிகளைத் தந்து வருகின்றபோதிலும், தமிழ் நாட்டு நிலையம் ஒன்றின் கீழ்த்தரமான நிகழ்ச்சிகளை இங்கும் மறு ஒளிபரப்புச் செய்து நமக்கு ரசனைக் குறைப்பை உண்டு பண்ணுகிறது.
பைத்தியக்காரத்தனமான, யதார்த்தத்துக்குப் புறம்பான சம்பவங்களையும், உரையாடல்களையும், “தொலை நாடகங்களாகக் காட்டுகின்றது. திரைப்படம் என்ற பெயரில், கற்பனைக்குட்பட்ட கீழ்த்தரமான சம்பவங்களை, நிஜமென நம்பும்படி செய்து காட்டுகின்றன. தமிழ் நாட்டில் மாணவர்கள், நீதி மன்றத்தினர் சமூகப் பணிப்பாளர்கள் போன்றவர்கள் நிஜ வாழ்விலே, திரைப்படங்களில் சித்திரிக்கப்படுவது போன்று இயங்குவதில்லை.
சென்னையிலுள்ள ‘சன்’ (Sun) நிலையம் நல்ல நிகழ்ச்சிகளையும் தந்து வருகிறது. உதாரணமாக, “வணக்கம் தமிழகம்’, ‘செய்தியறிக்கைகள்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும், நமது தனியார் தொலைக்காட்சி நிலையங்கள், கேவலமான நிகழ்ச்சிகளையும், நாடகத் தொடர்களையுமே அங்கிருந்து பெற்றுக் காட்டி வருகின்றது.
அரச வானொலி, தொலைக்காட்சி, அச்சூடகங்கள் என்பவற்றை ஒப்பீட்டடிப்பையில் பார்க்கும் பொழுது சற்றே உயர்ந்து நிற்கிறார்கள். இங்குள்ள மின்னியக்க ஊடகங்கள், தமிழ் நாட்டு நடிகைகளை - இவர்களில் சிலருக்குத் தமிழே வராது - அறிக்கையாளர்களாக

Page 43
60 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
(Presenters), தமது ஊடகங்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவர்களுடைய ஆங்கில உச்சரிப்பும் பிழையானது. இவர்கள் “ஆங்கிலத் தமிழ்’ பேசுவது காதுகளை ‘ராவி விடுகிறது.
இங்குள்ளவர்களுள் பலர் சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நமக்கென்று ஒரு தனித்துவம் வேண்டாமா? சிந்தித்துச் செயற்படுவோம்.
来源
V திரைப்பட இரசனை மாற்றம்
ஆண் வலிமையை (ஆதிக்கம்) வலியுறுத்தும் ஹொலிவுட் படங்களை அன்றைய வளரினம் பருவத்தினனான நான் ரசித்துப் பார்த்து 62CD Hero Qing, என்னையே நினைத்துக் கொண்டு உலவிய காலம் (1950, 1960கள்) ஒன்றிருந்தது.
1970 களில் ஐரோப்பியப் படங்களை - பிரான்ஸ், ஸ்வீடன், ஜப்பான், இத்தாலி, ஜேர்மனி, பிரிட்டன், போலந்து, ஹங்கெரி, ரூமானியா, செக்கஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் படங்களைப் பார்த்துப் புத்தறிவும், புத்தனுபவமும் பெற்ற காலமும் உண்டு.
1980 களில் இலத்தின் அமெரிக்கா, கனடா, இந்தியா, (வங்காளம், மராத்தி, ஹிந்தி, ஒரியா, பஞ்ாபி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மொழிப்படங்கள்) ஈரான், போத்துக்கல், சீனா, எகிப்து போன்ற நாடுகளின் படங்களைப் பார்த்து வியந்ததுண்டு.

கே.எஸ். சிவகுமாரன் 6
1990 safai Digital Filming, Computer Graphics போன்றவற்றின் பிரயோகம் காரணமாக முன்னர் “சினமா என்று கருதப்பட்ட உறுதிப் பொருள்கள் (Elements) பின்னுக்குத் தள்ளப்பட்டு திரைப்பட வடிவமே மாறுதலுக்கு உட்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
ஹொலிவுட், (B)பொலிவுட், ஹொங்கொங், தாய்வான் போன்ற திரைப்பட மையங்களிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த படங்கள் உள்ளத்தைத் தொடத் தவறின.
"சினமா உத்திகள் சிக்கலாக அமையத் தொடங்கின. பார்த்துப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்குப் படங்கள் தயாரிக்கப்பட்டுப் புதிய பரம்பரையினரைப் பரவசத்திலாழ்த்தின.
இந்நூற்றாண்டில் வெளிவந்த அத்தகைய படங்களுள் Matrix - 1,2,3, என்ற வரிசையில் வெளிவந்த படத்தைக் குறிப்பிடலாம்.
9jö51till: 56ñ65), Clint Eastwood, Alan Ladd போன்றவர்கள் நடித்த படங்கள் வன்செயலையும், மனித சுபாவத்தையும் வேறுபடுத்திக் காட்டிய நேர்த்தியான Lul sig, GTIT5 Gaugifolii.56O7. Shane, Fistful of Dollars போன்றவை அந்த ரகத்தைச் சேர்ந்தவை. வன்செயலும், காமக் கிளர்ச்சி யூட்டும் காட்சிகளும் அமைந்த படங்கள் அன்று முதல் இன்று வரையும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. போரும், காதலும் (வன்செயலும், மெல்லுணர்வும்) இணைந்து அல்லது தனித்துக் குவியமாக்கப்பட்ட படங்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன.

Page 44
62 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அட்டகாசமின்றி, அமைதியான நீரோடை போன்று அழகியல் தன்மை வாய்ந்த படங்களும் கலை நயப்படங்களாக அவ்வப்போது வருவதுமுண்டு. இந்த தசாப்தத்தில் ஈரானியப் படங்கள் தலைசிறந்த
சினமா'வைத் தந்து கொண்டிருக்கின்றன.
இவற்றின் மத்தியிலே ஆண்மையின் வீரசாகசச் செயல்களைச் சித்திரித்த ஓரிரு ஆங்கில படங்கள், அசிங்கமாக இல்லாமல் நேர்த்தியான முறையில் களிபுயூட்டும் அம்சங்கள் அடங்கிய திரைப்படங்களாக வெளிவந்தன.
அவற்றுள் நான் ‘நல்ல படங்கள் எனக் கருதும் சில படங்களின் பெயர்களைத் தர விரும்புகிறேன்.
இவற்றை நீங்கள் ஏற்கனவே பார்த்துக் களிப்படைத்திருக்கக் கூடும். அப்படங்களாவன :
Dirty Harry, The God Father, The Terminator, The Dirty Dozen, The Matrix, Dr. No, Raging Bull, Bullit, EnterThe Dragon, Apocalypse Now, The Maltese Falcon, The Seventh Samurai, Shaft, The Great Escape, The Hustler, The French Connection, Easy Rider, The Bridge on the River Kwai, Cool Hard Luke.
மேற்கண்டவை நான் பார்த்த வன்செயல் மிகுந்த படங்களுள் சிலவே. வேறு சில படங்களும் உள்ளன.
அன்றைய வன்செயல் நாட்டத்தின் தீவிரம் குன்றி மனோதத்துவத்தைப் பிரதிபலிக்கும் படங்களிலும், உளவியல் சார்ந்த சமுதாயச் சித்திரிப்புக்களிலும், மனித உறவுகளை நாடகத் தன்மையுடன் தீட்டும், காவிய நயந்தரும் படங்களிலும், வாழ்க்கை முன்னர் ஒருபோதும்

கே.எஸ். சிவகுமாரன் 63
சித்திரிக்கப்படாத கோணங்களில் ஒவியமாகத் தீட்டும் படங்களையும் பார்த்துப் புத்தனுபவம் பெறுவதில், படிப்படியாக எனது ரசனை மேம்படத் தொடங்கியிருக்கிறது.
இந்தப் பின்னணியில், நல்ல திரைப்படம் என்று நாம் மதிப்பிடக்கூடிய படங்களுள் பல, தலை சிறந்த இலக்கியங்களின் திரைவடிவங்களாகவும் அமைகின்றன.
நாவல்களையும் , சிறு கதை களையும் , நாடகங்களையும் தழுவிச் சில ஐரோப்பிய, அமெரிக்க அவுஸ்திரேலிய, இந்திய படங்கள் வெளிவந்துள்ளன.
டி.எச். லோரன்ஸ், ஜோசப் கொன்ராட் தொமஸ் மான், தொமஸ் ஹார்டி, ஹென்றி ஜேம்ஸ், (F) பெளள்ஸ், (G) கோல்டிங், டொக்ட்ரோப், லோரி, ஸ்கொட், (F) பிர்ஸ்ஜெரல்ட், (F)ப்பொணிக (G) ட், ஹரல்ட் (P) பின்டர், ஜ்ஷோன்க்ளோட் கரிய்யியேர், கொப்போலோ போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் உட்பட லியோ டோல்ஸ்டோய், தொங்தோயெவ்ஸ்கி, சார்ல்ஸ் டிக்கின்ஸ், ஜேன் ஒஸ்டின், சார்லட் (B)ப்ரொன்டே, விர்ஜினியா ஊல் (F) ப் போன்ற பற்பல இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புகள் ‘நல்ல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.
தருணம் வாய்க்கும் பொழுது இவற்றைப் பாருங்கள். உங்கள் ரசனை நிச்சயமாக மாறிவிடும்.
来

Page 45
64 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நல்ல திரைப்படங்களை இனங்காண உதவும் கேரள திரைப்படச் சங்கங்கள்
இந்தியாவிலே தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கலைத்துவம் வாய்ந்த பல படங்கள் பிற மொழிகளிற்றான் அதிகம் வெளியாகின்றன. வங்காள மலையாள, ஹிந்தி, அஸாமி, மராத்தி, ஒரிய மொழிப் படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த இடங்களில் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களும் கலைத்துவமானவை என்றில்லை. ஆயினும், சில படங்கள் அற்புதமானவையாக அமைந்தமையை அவற்றைப் பார்த்தவர்கள் அறிந்து, புரிந்து கொள்வர். வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் திரைப்பட அறிவு அங்கெல்லாம் சிறப்பாய் இருப்பதற்கு ஒரு காரணம்.
இலங்கையில் முன்னர் திரைப்படச் சங்கங்கள் சிறப்பாகச் செயற்பட்டு வந்தன. இது, 1950, 1960, 1970 காலப் பகுதிகளில் நடந்த சம்பவம். சிங்கள மொழிப் படங்கள் சில சிறப்புத் தன்மை கொண்டிருந்தமைக்கான காரணங்களுள் ஒன்று அம்மொழி நெறியாளர்களுள் சிலர் திரைப்படச் சங்கங்கள் அறிமுகப்படுத்திய பிற நாட்டுத் திரைப்படங்களின் அழகியல் மற்றும் கூறுகளை அவதானித்துச் செயற்பட்டமையே.
கேரளத் திரைப்பட இயக்க வளர்ச்சி பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் ஆங்கில மொழியில் படித்தேன். அதில் பெறப்பட்ட தகவல்களை மிக மிகச் சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இத்

கே.எஸ். சிவகுமாரன் 65
தகவல்களிடையே எனது சொந்த அவதானிப்புகளும் விரவி நிற்கும்.
1913 இல் சினிமா அறிமுகமாகிறது. இந்தியாவில் முதலாவது திரைப்படச் சங்கம் (1937) மும்பாயில் ஆரம்பிக்கப்படுகிறது. 1942 இல் இந்திய ‘புனையா மெய் a'at disil IL (Documentary film makers) GibstSuitatisair சேர்ந்து மற்றொரு மும்பாய் திரைப்படச் சங்கத்தை ஆரம்பிக்கின்றனர். ஆயினும், 1947 இல் சத்தியஜித் ராய், நிமாய் கோ (G) வு, சித்தானந்த தாஸ்குப்தா ஆகியோர் ஆரம்பித்த கொல்கத்தா திரைப்படச் சங்கமே தரமான முறையில் திரைப்பட வளர்ச்சிக்கு உதவ முன் வருகிறது.
ஹொலிவுட் படங்களை மாத்திரமே அறிந்திருந்த மக்கள் இத்திரைப்படச் சங்கங்கள் உலக நாடுகளின் சினிமாவை அறிமுகப்படுத்தத் தொடங்குகின்றன.
கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் சித்ரலேகா திரைப்படச் சங்கம் 1965 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1970 களில் நூற்றுக்கணக்கான திரைப்படச் சங்கங்கள் கேரளா முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டன. 1970 களில் இலங்கை உட்பட பல நாடுகளில் அரசியல் கிளர்ச்சிகள் இடம் பெற்றன. பாரிஸ் மாணவர் கிளர்ச்சி, வியட்நாம் யுத்த எதிர்ப்பு, ஹிப்பிஸம், நக்ஸல்பாரி கிளர்ச்சி (இங்கும் ஜே.வி.பி. கிளர்ச்சி) ஆகியன சிறு உதாரணங்கள். மலையாள இலக்கியம் உடன் நிகழ்கால உலகப் போக்குகளை உள்வாங்கிச் சீரணித்து புத்தாக்கங்களைத் தந்த போதிலும், ஐரோப்பிய படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் முன்னர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இங்கு தான் திரைப்படச் சங்கங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Page 46
66 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பி. பாஸ்கரன், சேதுமாதவன், ராமு கரியாட், வின் சென்ட், பேக்கர் போன்ற நெறியாளர்கள் புத்தனுபவத்தினால் பயன் பெற்றனர் எனலாம்.
ஆரம்பத்தில் கதைச் சித்திரங்களுக்கே (Feature Films) திரைப்படச் சங்கங்கள் முக்கியத்துவம் அளித்து வந்தன.
p6MVGörGivGOL-6őT (Eisenstein), G3LujjLDGT (Bergman), யான்ஸ்கோ (Jansco), ஸனுஸி (Zanussi), குருஸோவா (Kurusowa), God, ITL TL" (Godard), LIT did G3, Tail Gh)5. (Tarkovsky) 6\ugh) GlaDITGirgiv6) (Kieslowsky) 246)GuTiflaör படங்களை மலையாளிகள் அடிக்கடி பார்த்து வந்தனர். சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பியப் படங்களைப் பார்த்து வந்த அவர்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் படங்களையோ ஆபிரிக்க நாடுகளின் படங்களையோ பார்க்கும் வாய்ப்பு கிடையாது இருந்து வந்தனர். அதே போன்று, பினுவெல் (Bunvel) ரெனேய் (Resnais) பஸோலினி (PaSolini) போன்றோரின் படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் மலையாளிகளுக்குக் கிடைக்கவில்லை. இன்றும் ஆசியாக்கண்டத்தின் (இலங்கை, கொரியா, சீனா, தாய்வான்) படங்களைப் பார்க்கவும் முடியாமற் போய்விட்டது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள படங்களைப்
பற்றியும் அதிகம் அறிந்திராத மக்களாக மலையாளிகள் இருந்தனர். சத்தியஜித் ராய், மிர்னால் ஸென், ரிட்விக் 55 "LATěji (Ritwik Ghatak) Gulu ITLib GoLu(B) 676), LDGOoîGo35GITGiv போன்ற நெறியாளர்கள் அறியப்படாதிருந்தனர்.
கேரளாவில்கூட டெ(P)க்கர், ஜோன் ஏப்ரஹாம், அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற மலையாள

கே.எஸ். சிவகுமாரன் 67
நெறியாளர்களின் படங்களைப் பெரும்பாலானவர்கள் அறிந்திலர். திரைப்படச் சங்கங்கள் மலையாள நெறியாளர்களின் படங்களைப் பகுப்பாய்வு செய்து மதிப்பிட முன்வரவில்லை. கேரளத்தின் ஜனரஞ்சகப் படங்களைக்கூடத் திறனாய்வு செய்ய அவர்கள் (திரைப்படச் சங்கத்தினர்) முன்வரவில்லை.
இது இவ்வாறிருக்கையில், ஜனரஞ்சக சினிமா நெறியியலாளர்கள், கலைத் திரைப்பட உத்திகளை ஆங்காங்கே தழுவ முற்பட்டனர். திரைப்படச் சங்கத்தினரோ ஜனரஞ்சக சினிமாவை முற்றாகவே நிராகரித்தனர். இது காரணமாக அவர்களிடையே ஒருவித உயர்நாகரிகப் பண்பு (Elitist) உருவாகியது.
திரைப்படம் சம்பந்தமான த்ரிஷ்யகலா (Drishyakala) போன்ற ஏடுகளிலும் கூட பிறநாட்டுப் படங்களைப் பற்றியே பேசப்பட்டாலும், இந்திய, மலையாளப் படங்கள் பற்றிய அணுகுமுறை காணப்படவில்லை. திரைப்படத் துறையின் புதிய சித்தாந்தங்கள் - அமைப்பியலின் பின்பு அறிமுகமாகிய வாதம் (Post-structuralism), பெண்ணியம் - பற்றியும் மலையாளத் திரைப்படங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
பின்னர், நிலைமை மாறுகிறது. தூரதர்ஷன், விடியோசந்தை, செய்மதி ஒளிபரப்பு போன்றவை திரைப்படச் சங்கங்களின் முக்கியத்துவத்தை நிலைகுலையச் செய்தன. ஏனெனில், நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்த ஊடகங்கள் மூலம் கிடைத்துவரத் தொடங்கியமையே. விடியோ கமராக்களும், கணினி, வரையுருவக் கலைச்சித்திரங்கள் (Graphics) விரல்சார்ந்த எண்மானிகள் (Digital) போன்ற தொழில்நுட்ப முறைகள் திரைப்படத்

Page 47
68 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
துறையில் பிரயோகிக்கப்பட்டமை, திரைப்படச் சங்கங்களின் நோக்கத்தை விரிவுபடுத்த, விஸ்தரிக்க வகை செய்தன.
அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், கே.பி. குமரன், ரவீந்திரன், டி.வி. சந்திரன், பவித்திரன், கே.ஆர். மோஹனன் போன்ற மலையாள நெறியாளர்கள் கேரளத் திரைப்படச் சங்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்களை இச்சங்கங்கள் அதிகம் பயன்படுத்தவில்லை எனல்ாம்.
திரைப்படக் கலையின் இலக்கணங்கள் 21 ஆம் நூற்றாண்டில் மீளவும் வகைப்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம். இது சரியா?
来
ஆரண்யம் ஊடாகத் திரைப்பட இலக்கியம்
கிடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தலித் இலக்கியம்’ பற்றிய பேருணர்வு பொங்கி வருவதை அவதானிக்கலாம். ஆக்கப் படைப்புக்களாகவும் ஆய்வுக் கட்டுரைகளாகவும் பல வெவ்வேறு சிற்றேடுகளில் அவை வெளிவந்து கொண்டிருக்கின்றன. @Tഞ ഞെTu ஊடகங்களிலும், தவிர்க்க முடியாமல், இந்தப் போக்கை இனங்கண்டு சிறிதளவேனும் இடங்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் சம்பந்தப்படுபவர்கள் மிக ஆழமாகப் படித்தவர்களாயிருப்பதுதான்.

கே.எஸ். சிவகுமாரன் 69
நெடு நாட்களாவே நான் தமிழ் நாட்டு எழுத்துக்களையோ, இலங்கையிலிருந்து வெளியேறி வெளி நாடுகளில், அந்நாடுகளின் உடனிகழ்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களின் எழுத்துக்களையோ படிப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் அத்தகைய எழுத்துக்கள் ஒன்றிரண்டைப் படித்த பின் எழுந்த அதிருப்தியே. அவற்றிடையே நல்ல எழுத்துக்கள் வெளிவந்திருக்கலாம். அவற்றைப் படியாதது எனது குறைபாடுதான். ஆயினும், பெரும்பாலான தமிழ் நாட்டுத் தற்கால எழுத்தாளர்கள் விமர்சனம்’ என்ற பெயரில், துவேஷமாகவும், ஆளை ஆள் தூற்றுவதாகவும் எழுதிவருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வெங்கட் சாமிநாதன் - தரும சிவராமு போன்றவர்களால், கீழ்த்தரமாக 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து வைக்கப்பட்ட “பகிரங்கமாக ஊத்தைத் துணி வெளுக்கும் போக்கு இலங்கையிலும் சில இளசுகளால் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்தப் பின்னணியில், ஆரண்யம் மூன்றாவது இதழை (சித்திரை, வைகாசி, ஆணி, 2000) தட்டிப் பார்க்கவும். சில கட்டுரைகளைப் படிக்கவும் நேர்ந்தது. சுதேசமித்திரன், பூறிபதி பத்மநாபா என்பவர்கள் இதன் ஆசிரியர்கள். 'தரு’ வெளியீடாக இந்தக் காலாண்டு ஏடு கோயமுத்தூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. இப்பொழுதும் வருகிறதோ தெரியாது.
குறிப்பிட்ட இந்த இதழிலே சிறுகதை, கவிதை, கட்டுரை, கவிதை ரசனை, மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம், சிறப்புப் பகுதி, திரைக்கதை என்னும்

Page 48
70 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தலைப்புகளின் கீழ் ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய விடயங்கள் அடங்கியுள்ளன.
திரைப்படமும் திரைப்பட இலக்கியமும் முக்கியமான ஆய்வுப் பொருளாக இடம் பெற்றுவரும் இந்நாட்களில், மூன்று கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றிருப்பதை இப்பத்தியைப் படிக்கும் சிறப்பு வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
தலித் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திறனாய்வாளர்களுள், மூவர் எழுதுபவை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இந்த மூவரையும் சென்னையில், 2000 ஆம் ஆண்டில் இடம் பெற்ற தமிழ் இனி (?) கூடலின் போது சந்தித்துப் பேசி வியப்புற்றேன். அம்மூவரும் யாவர்? பிரேம் - ரமேஷ், ராஜ் கெளதமன், சாரு நிவேதிதா.
கிரிஷ் கர்னாட் என்ற அண்டை நாட்டுக் கலைஞரைப் பற்றியறிந்திருப்பீர்கள் - நெறியாளர், நடிகர், நாடகாசிரியர், லலித் அத்துலத் முதலியின் சமகால மாணவர் (ஒக்ஸ்பர்ட் பல்கலைக் கழகத்தில்) தமிழ்ப் படங்களிலும் நடித்திருப்பவர். இவருடைய மேடை நாடகம் ‘நாக மண்டலம் சுமதி சிவமோகன் (பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கி விரிவுரையாளர்) இதனைச் சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பில் அவர் மேடையேற்றினார்.
கிரிஷ் கர்னாடின் (Girish Kamad) ‘நாக மண்டலம் தொடர்பாக ‘கதை மொழியில் உருமாறும் பாம்புகள்’ என்ற தலைப்பில் வியத்தகு ஆழமான கட்டுரையை பிரேமும் ரமேஷம் எழுதியிருக்கின்றனர். அவசியம் படித்துப் பாருங்கள். இது போன்ற பத்திகளில் விரிவாகவும் ஆழமாகவும், எழுத முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள்.

கே.எஸ். சிவகுமாரன் 71
திரைப்படம் சம்பந்தமான மற்றொரு பங்களிப்பு எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற மலையாள எழுத்தாளரும் நெறியாளரும் எழுதிய ‘பெருந்தச்சன்’ என்ற திரைக்கதையின் பிரசுரமாகும். பிரசாந்த் என்ற தமிழ் நடிகர் நடித்த முதல் படம் இந்த மலையாளப் படந்தான். இதனை பல ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இடம்பெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவிலே பார்த்திருந்தேன். அவ்வளவாகப் பிடிக்காவிட்டாலும், மலையாள ஐதீகக் கதை மரபை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. வாசுதேவன் பெருந்தச்சன் பற்றிய பின்னனி விபரங்களை ‘ஆரண்யம் ஏட்டில் தந்திருக்கிறார்.
6) 6). TGT நெறியாளர்களுள் அதிகம் பேசப்பட்டவர் ஜோன் ஏப்ரஹாம். இவருடைய திரைப்படக் கதையை எழுதியவர் வெங்கட் சாமிநாதன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பெயர் 'அக்ரஹாரத்தில் கழுதை’, ஜோன் ஏப்ரஹாம் பற்றிய ஒரு நூலிலிருந்து (சமீபத்தில் இலங்கை வந்திருந்த ஆர்.ஆர். சீனிவாசன் எழுதிய) ஒரு பகுதி வெளியாகியிருந்தது.
திரைப்படம் சம்பந்தமான இம்மூன்று கட்டுரைகளையும் விட விக்ரமாதித்யன், பெருமாள் முருகன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் என்னளவில் பயனுடையவை. உங்களுக்கும் இவையும், இவ்வேட்டில் இடம்பெற்ற ஏனையவையும் ஏதோ விதத்தில் காத்திரமான வாசிப்புக்கு உதவும்.
ஆமாம், நமது நாட்டுப் புதுக் கவிஞர்கள் (வில்வரத்தினம் முதல் ஈழத்துச் சிற்றேடுகளில் நன்றாகவே எழுதிவரும் கவிஞர்கள் பற்றிய ஆய்வு இன்னுமே

Page 49
72 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
マー
மேற்கொள்ளப்படவில்லை) யார் என்று நமக்கு ஒரளவு தெரியும். இங்கு ‘புதுக் கவிதையாளர்களை நான் மனதில் இருத்தவில்லை. 1990களில் புதிதாக எழுதத் தொடங்கியவர்கள் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன்.
தமிழ் நாட்டில் அப்துல் ரகுமானோ, மேத்தாவோ என்னை வியப்பிலாழ்த்தவில்லை. மாறாக, சிற்பி பாலசுப்பிரமணியத்தின் ‘கவிதைகள் எனக்குப் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் குறிப்பிடத்தகுந்த புதிய கவிஞர்கள் யாரோ?
விக்ரமாதித்யன் கூறுகிறார். “சமயவேல்க்குப் பிறகான இளங் கவிஞர்களுள் யூமா, வாசுகி, யவனிகா பூனிராம், கைலாஷ் சிவன், பாலைநிலவன், என்.டி. ராஜ்குமார் ஆகிய ஐந்து பேரையும் முக்கிய கவிஞர்களாகச் சொல்ல வேண்டும்.”
நி ချွံချွံz:၄၈rf? படித்திருந்தால் நீங்கள் என்ன
னைக்கிறீர்கள்?
来源
மேலைக் கலை, இலக்கியச் செய்தித் துணுக்குகள்
1. ஐம்பெருங் காப்பியங்களுள் மிக முக்கியமான 'சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’ ஆகிய இரண்டும் ஆங்கிலத்தில் மீண்டும் தரப்பட்டுள்ளன. இந்த மொழியாக்கத்தைத் தந்துள்ளவர் லக்ஷ மி ஹோல்ம்ஸ்டோர்ம் (Holmstrom) என்பவராவார். இவர் தலைசிறந்த தமிழ், ஆங்கில மொழி

கே.எஸ். சிவகுமாரன் 73
பெயர்ப்பாளர்களுள் ஒருவர் எனக் கருதப்படுகிறார். இவரைப் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியவில்லை. இவருடைய எழுத்துக்களை லண்டனில் வசித்து வரும் எஸ். பத்மநாப ஐயர் என்ற பிரபலஸ்தர் தமது வெளியீடுகளில் சேர்த்திருப்பதாக அறிகிறோம். அதனைக் கொண்டு பார்க்கும் பொழுது, லக்ஷமி ஹோல்ம்ஸ்ட்றோம் இலங்கையுடன் தொடர்பு கொண்டவராயிருப்பாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சென்னை ஓரியன்ட் லோங்மன் பதிப்பகம் இந்த நூலைச் சுமார் எட்டு வருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. தமிழின் இந்த இரட்டைக் காப்பியங்களை ஏற்கெனவே அலெய்ன் டானியோலு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். சிலப்பதிகாரத்தை கவிஞர் ஆர். பார்த்தசாரதி ஆங்கிலத்தில் தந்துள்ளார். 2. ஆங்கிலத்தில் எழுதும் அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுள் நொபேல் பரிசைப் பெற்றிருந்த பட்ரிக் வைட் நன்கு அறியப்பட்டவர். அதே போல ஜிலியன் மியேர்ஸ், லி.பி. (B) ஹத்தோர்ண் ஆகியோரும் ஏனைய நாடுகளின் வாசகர்கள் கவனத்தைப் பெற்று வருகின்றனர்.
3. “நொவெல்லா' (Novella) என்பது ஒர் இலக்கிய வகை என்பர். இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியா, சென்னை ஆகிய இடங்களில் எழுத்துக்க பவனி வரும் எஸ். பொன்னுத்துரை என்ற எழுத்தாளருக்குப் பிடித்த மேனாட்டு எழுத்தாளர் ஒர் இத்தாலியர். அவர் பெயர் அல்பே(B)ட்டோ மொறாவியா. அவருடைய நாவல்களை ‘நொவெல்லா’ என்பர்.

Page 50
74
இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அவற்றுள் ஒன்றின் பெயர் "இரு பெண்கள்’ (TWO Women). இதனை இத்தாலிய நவ யதார்த்த (NeoRealism) சினமாவாகத் தலைசிறந்த இத்தாலிய நெறியாளர் ஒருவர் (பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை; 1950களின் பிற்பகுதியில் இதனை நான் பார்த்த ஞாபகம்) தந்த பொழுது அது அற்புதமான திரைக்காவியமாக உருப்பெற்றது.
அந்தப் படத்தில் ஸோபியா லொறேன் பாலியல் வல்லுறவுக்குள்ளான (முசொலினியின் போர் வீரர்களால்) தாயாக நடித்தார். அதே நிலைக்கு உள்ளான மகளாக நடித்தவரின் பெயரையும் மறந்துவிட்டேன்.
சரி, ‘நொவெல்லாவுக்கு வருவோம். இது இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வரும் பதம். ‘நொவெல்லா'வைத் தமிழில் குறுநாவல்’ என்கிறார்கள். இது சரியாக எனக்குப் படவில்லை. காரணம்; பொ(B)க்காச்சியோ என்ற இத்தாலிய முன்னோடி எழுத்தாளர் எழுதிய கதைகளைக் குறிப்பதற்காகவே ‘நொவெல்லா’ என்ற பதம் முதலில் பயன்படுத்தப்பட்டது. உருவம் சரிவர வாய்க்காத, கட்டமைப்பு இல்லாத கருப்பொருள் (Plot) இன்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சேர்த்து எழுதப்பட்ட ஒரு படைப்பை “நொவெல்லா என்றார்கள். அதாவது, “உப கதை’ என்று நாம் கூறக்கூடிய எமது புராதனக் கதைகளுக்குப் பொருத்தமான வரைவிலக்கணம் போன்றது இந்த இத்தாலிய பதம். குறுநாவலை நாம் Short Fiction என அழைக்கலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 75
4. எனக்குப் பிடித்த தமிழ் நாட்டு எழுத்தாளர்களுள் ஒருவர் "அசோகமித்திரன்’ என்ற ஐ. தியாகராஜன். இவரைப்பற்றி அமெரிக்கப் பேராசிரியர் பீட்டர் மைக்கல்சன் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதனைப் பத்து வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. ஆங்கில இலக்கியப் பேராசிரியர் ஒருவர் (பீட்டர் மைக்கல்சன்) தமிழ் எழுத்தாளரின் எழுத்தை எவ்வாறு பார்க்கிறார் என்பது சுவாரஸ்யமான விடயம்.
சுமார் 10 வருடங்களுக்கு முன், அசோகமித்திரனுக்கு *ராமகிருஷ்ணன் ஜய்தயால் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருது தேசிய ஒருமைப்பாடு, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு போன்றவற்றை அழுத்தி எழுதும் எழுத்தாளர்களுக்காக வழங்கப்படுவது. இந்த விருதைப் பெற்ற ஏனைய இந்திய எழுத்தாளர்களுள் முக்கியமானவர்கள்: பி(B) ஷாம் ஸாஹ்னி, குஷ்வன்ட் சிங், யூ.ஆர். அனந்தமூர்த்தி, பி(B)ரேந்திரகுமார், ப(B)ட்டாச்சார்ய, பி. லங்கேஷ்.
5. அமெரிக்காவிலே சுமார் 3 கோடியே 80 லட்சம் கறுப்பர்கள் பிரஜைகளாக வசிக்கிறார்கள். அமெரிக்காவின் மொத்த சனத்தொகையில் இது 13.3. சதம் எனத் தெரிய வருகிறது. கறுப்பினர்களை இப்பொழுது நீக்ரோ என அழைப்பது குற்றமாகும். gyalja),6061T Blacks 6T6örgylb Afro-Americans GTGipslip அழைப்பது நாகரிகம். கறுப்பர்கள் வரலாறு மிக முக்கியமானதொன்று. பெப்ரவரி மாதம் கறுப்பர்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய வெள்ளையருக்கும், ஹிஸ்பானியர்களுக்கும்

Page 51
76 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கறுப்பர்களின் பங்களிப்பை உணர்த்தி கெளரவிக்க இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பண்பாட்டுப் பிரிவு, 2000ஆம் ஆண்டு ஸ்பைக் லீ (Spike Lee) என்ற தலைசிறந்த கறுப்புத் திரைப்பட நெறியாளரின் பட விழாவைத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையத்தில் நடத்தியது.
அங்கு காட்டப்பட்ட படங்களாவன: Do the Right Thing, School Daze, Mo'Better Blues, Jungle Fever, Malcolm X. இப்படங்கள் யாவும் இன உறவுகளைச் சாங்கோபாங்கமாக, உண்மைச் சித்திரங்களாகத் தீட்டும் வகையில் வெளிவந்தன. இவற்றுள்ளே எனக்கு அதிகம் பிடித்த படம் ‘மல்கம். டெனிஸ் வொஷிங்டன் என்ற கறுப்பு நடிகர், முக்கிய பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். இந்தப் படம் மீண்டும் காட்டப்பட்டால், இதனைப் பார்க்கத் தவறாதீர்கள்.
போராளிகள் இப்படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.
மறைந்துபோன நமது கவிஞர் ஈழவாணன், 1970களில் ‘அக்னி’ என்ற கவிதை சார்ந்த ஏட்டை வெளியிட்டு வந்தார். ஒரு இதழ் கறுப்பு இலக்கியத்திற்காக ஒதுக்கப்பட்டது. அதிலே மல்கம் X இன் ஆங்கிலக் கவிதைகளில் சிலவற்றை நான் தமிழாக்கித் தந்துள்ளேன். படித்துப் பாருங்கள். நூல் நிலையங்களில் ‘அக்னி’ கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
米

கே.எஸ். சிவகுமாரன் 77
மெல்லெனக் காமத்தைத் தீண்டும்’ ஐரோப்பியப் படங்கள் இரண்டு
Sex, Lust, Obscenity, Eroticism GL IITGilp giSall பதங்களுக்குச் சரியான தமிழ்ப் பதங்கள் எவை என்று பார்த்தால் தெளிவான விளக்கங்களைப் பெற முடியாமல் இருக்கிறது. தமிழிலும் வெறுமனே ‘செக்ஸ்’ என்கிறார்கள். இது ஒருவரின் பாலையும் குறிக்கும். அதேவேளையில் 35 TLD உறவுகளையும் குறிக்கும் விதத்தில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல ‘ஆபாசம்’ என்ற வார்த்தையும் பிரயோகிக்கப்படுகிறது. இந்த மயக்கமான நிலையில் நான் சொல்லவருவதை எந்தப் பதங்களைக் கொண்டு விளக்கலாம் என்று திண்டாடுகிறேன்.
இந்த இலட்சணத்தில் ‘காமம்’ என்ற சொல் தரும் அர்த்தத்தில் நான் சொல்லவருவதை எப்படியோ சொல்ல முனைகிறேன். “காமம்’ என்ற சொல்லே அருவருப்பானது என்று நம்பும்படி சூழல் சார்பான மனக்கட்டுப்பாட்டுக்கு (Conditioned) நாம் அடிபணிந்து வந்துள்ளோம். ஆயினும் 21 ஆம் நூற்றாண்டில் இந்த 'Sex (காமம் என்று தற்போதைக்குக் கூறிக்கொள்வோமே) என்பது பலவிதமான ஊடகங்கள் ஊடாகப் பகிரங்கமாகப் பேசப்படுகிறது; பார்க்கப்படுகிறது. ஆயினும், சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் அறநெறிகள் வலியுறுத்தப்பட்டு வந்த காலத்தில் (ஆங்கிலத்தில் Victorian Morality, Puritanism) என்போம். இந்தக் ‘காமம்’ நயமற்றதொரு கீழ்த்தரமான, பூட்டிய அறைக்குள் நடக்கும் பவித்திரமான இரகசிய உடலுறவு என வேஷத்தாரித்தனத்துடன் (Hypocritically) அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

Page 52
78 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஆனால், இப்பொழுது செய்தித் தாள்கள், தொலைக்காட்சி, இணையதளங்கள், திரைப்படங்கள் போன்ற காட்சியூடகங்களும், ஆண் - தன்னினச் சேர்க்கை, பெண் - தன்னினச் சேர்க்கை, ஜனனேந்திரிய கவச உறைகள், பாடசாலைகளிலும், பல்கலைக்கழங்களிலும் பாலியற் கல்விப் போதனை என்றெல்லாம் வந்துவிட்ட பின்னர் இன்னமும் நாம் இந்த விவகாரங்களை மூடி வைக்க முடியாது.
சீர்கெட்ட சமுதாயப் போக்கைத் தடுக்க இவை பற்றிப் பகிரங்கமாகவே நாம் பேசி விவாதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது.
தமிழிலக்கியத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை சிற்றின்பம் இயல்பான பாடுபொருளாக, கதைப்பொருளாக இருந்து வருவதை நாம் தட்டிக் கழிக்க முடியாது. சங்கப் பாடல்கள், சங்கமருவிய காலப் பாடல்கள், பல்லவர், சோழ, நாயக்கர் கால இலக்கியங்கள், 19ஆம், 20ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள், அண்மைக்கால இலக்கியங்கள் எல்லாவற்றிலுமுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான எடுத்துக்காட்டுகளை நான் சுட்டிக் காட்டாமலே நீங்கள் அறிவீர்கள்.
அது சரி, 'ஆபாசம் (Obscenity) - காம மெல்லுணர்வு (Eroticism) என்பதற்குமிடையே வேறுபாடு வேண்டாமா என்று நீங்கள் கேட்பீர்கள். நியாயம்தான். குரூரமான, கலை நயமற்ற, கரடுமுரடான, நாகுக்கற்ற காம வெளிப்பாடுகளை 'ஆபாசம்’ என்றால், கவித்துவமான காம உணர்வின் வெளிப்பாட்டை ‘காமஞ்சார்ந்தது’ என்போம். முன்னையது நாகரிகமற்றது. காட்டுமிராண்டித் தனமானது. பின்னயதை ரசிப்பதில் நான் பின்னிற்பதில்லை.

கே.எஸ். சிவகுமாரன் 79
என்னடா இது! பேரப்பிள்ளைகளையும் கண்ட இவன் இந்தக் ‘காமம்' பற்றி எல்லாம் எழுதுகிறானே என்று நீங்கள் என்மேல் வைத்திருக்கும் மரியாதையைக் குறைத்துக் கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆயினும், யதார்த்த நிலையில் நின்று பார்த்தால், இயல்பான பாலுணர்வு அப்படியொன்றும் பரிகாசத்திற்குரியதல்ல என்பதை ஏற்றுக்கொள்வீர்கள்.
இந்தப் பூடகத்துடன் பல வருடங்களுக்குப் பின் தியேட்டரில் இருந்து பார்த்து ஓரளவு திருப்தியுற்ற இரு ஐரோப்பியப் படங்கள் பற்றி மிகச் சுருக்கமாக உங்களுக்குத் தரலாம் என நினைக்கிறேன்.
2005, ஏப்ரல் மாத நடுக்கூறில் கொழும்பில் நான் பார்த்த இந்த இரு படங்களும் சுமார் 30, 40 வருடங்களுக்கு முன் வெளிவந்தவை. இவை நிச்சயமாகக் கலைப்படங்கள் அல்ல. ஆனால், காமத்தைத் தீண்டும்’ (Touching) மெல்லிய உணர்வுகளைப் பிரத்தியட்சமான நிர்வாணக் காட்சிகளாகத் தந்தன. அதாவது இக்காட்சிகள் (Blue Film) எனப்படும் ஆபாசப் படக்காட்சிகள் போல் படம் பிடிக்கப்படவில்லை. . இந்த இரண்டு படங்களும் ஆங்கிலம் பேசுபவையாக இருந்த போதிலும், அவற்றின் பின்புலம் இங்கிலாந்தும் பிரான்ஸுமாகும்.
இத்தாலியின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவர் அல்பேர்டோ மொறாவியா (Alberto Moravia) என்பதை ஆங்கில நாவல்களைப் படித்த வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். ஆய்வறிவாளர் க. கைலாசபதி 'தினகரன்’
ஆசிரியராகப் பணிபுரிந்த பொழுது, நமது முன்னணி மூத்த எழுத்தாளரும், கண்டனக்காரருமான திறைமைசால் எஸ்.

Page 53
80 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பொன்னுத்துரை தாம் விரும்பிய நாவலாசிரியராக அல்பேர்ட்டோ மொறாவியாவைத் தேர்ந்தெடுத்ததை நாம் இங்கு நினைவூட்டலாம்.
egyGöGuj-GLIT Go)LDITDIT6ílu IIT GTCupSu "The Red Cherry' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இதே தலைப்புடைய படம். அறிவு ரீதியாகச் சிந்திக்க முடியாத, இயந்திரப் பாங்கான, வளரிளம் பெண்ணொருத்தியின் உளப்பாங்கு, உடற்தேவை ஆகிய அம்சங்களை உளவியல் பாங்காகச் சித்திரிக்கிறது. இதற்கு மேலே நான் கூறினால், அது இப்படத்தின் திறனாய்வாக அமைந்து விடக்கூடும். அதுவல்லவே இப்பத்தியின் நோக்கம்?
அடுத்த படம் Patricia. இது திருட்டுக்காம நிகழ்வுகளையும், மனித உடல்களின் அழகியற் தன்மையையும், ஒர் ஒவியனின் மனப்பாங்கு எவ்வாறு ஓர் சித்திரத்தை வரையத் தூண்டுமோ, அதேபோன்று இப்படத்திலும் பெண்ணுடல் அழகு, படம் பிடிக்கப்படுகிறது.
இந்த Lesbianism என்ற பண்பு பல தசாப்தங்களுக்கு முன்னரே படங்களில் காட்டப்பட்டு விட்டதை இப்படம் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.
பெண்ணுடலின் கவர்ச்சியை அல்லது கவித்துவமான அழகுடல் வனப்பைக் கலை நயமாக ரசிப்பது அழகியற்றன்மையாக அமைந்தால் பெண்ணை வெறுமனே ஒரு போகப் பொருளாகப் பார்ப்பது ஆணாதிக்கச் செயற்பாடு என்றுதான் நாம் பார்க்கவேண்டும்.
Sex is Beautiful. Stilgait GIGörgot 156060135iisair? 15Tait நடத்தைக் கெட்டவனா?
来

கே.எஸ். சிவகுமாரன் 81
அந்நாள் ப்ரெஞ்ச் “புதிய அலை சினமா
1950களில் ‘நியூ வேவ்’ எனப்படும் ஒரு புதிய அலையாக ப்ரெஞ்ச் சினமா அடுத்தடுத்து சில படங்களை உலகத் திரைப்பட உலகுக்கு அளித்து பரபரப்பை ஊட்டியது.
தலைசிறந்த 'கலைத்துவமான படங்கள்’ (Artistic Films) அந்நாட்களில் ஐரோப்பாவிலிருந்தே வந்தன. 1950களில் பல ஐரோப்பிய நாடுகள் திரைப்படத் துறையை ஒரு கலையூடகமாகவே கருதிச் சில அற்புதமான படங்களைத் தந்து கொண்டிருந்தன. அதே சமயம் அத்லாந்திக் சமுத்திரத்துக்கப்பால் அமெரிக்காவில், ‘ஹொலிவுட்’ என்ற பிராந்தியத்திலிருந்து வணிகத்தையும் கலையையும் இணைக்கும் ஒரிரு நெறியாளர்கள் சில வியத்தகு படங்களைத் தந்து கொண்டிருந்தனர். இருந்தபோதிலும், பெரும்பாலான ஹொலிவுட் படங்கள் வாய்ப்பாட்டு ரீதியான களிப்பூட்டும் படங்களாக வெளி வந்தன.
யதார்த்தத்தையும் கலா ரசனையையும் வெளிப்படுத்தும் படங்களை, அவை எங்கிருந்து வந்தாலும் பார்த்துப் பகுத்தாய்வு செய்வதற்குப் பழகிக் கொண்ட பிரான்ஸ் தேசத்துத் திரைப்படத் திறனாய்வாளர்கள், ஹொலிவுட் படங்களினதும் தமது நாட்டுப் படங்களினதும் கலை வறுமையைச் சுட்டிக்காட்டி, ப்ரெஞ்ச் மொழியில் வெளிவந்த தரமான ஓர் ஏட்டில் அடிக்கடி எழுதி வந்தனர். அந்த ஏட்டின் பெயர் கஹியே டு சினமா’ (Cahiers Du Cinema).

Page 54
82 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
வழமையான வாய்ப்பாட்டுக் களிப்பூட்டும் படங்களைப் பார்த்துப் பழகிவிட்ட (பாமர இரசனைத் தன்மையை அடிப்படை அளவுகோல்களாகக் கொண்ட பார்வையாளர்களுக்கு, திரைப்பட ரசிகர்களுக்கு எரிச்சலையூட்டின. எனவே, ‘நீங்கள் எல்லாம் சும்மா கண்டித்துக் கொண்டிருக்கிறீர்களே! உங்களால் நீங்கள் சொல்லும் கலைத்தரமான படங்களை நெறிப்படுத்தித் தர முடியுமா?’ என்று இந்த மட்டரகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதான் தருணம் என்று, ப்ரெஞ்சுத் திரைப்பட நெறியாளர்கள் அடுத்தடுத்து உலக கவனத்தை ஈர்த்தவையும் சிக்கனமான செலவில் எடுக்கப்பட்டவையும் பரிசோதனையாக அமைந்தவையுமான பத்துப் பன்னிரண்டு படங்களைக் குறுகிய காலத்தில் தந்தனர்.
இந்த நெறியாளர்களின் பெயர்களையாகுதல் நாம் அறிந்து வைத்திருந்தால், இவர்களின் படங்களை நாம் எப்பொழுதாகுதல் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது, அப்படங்களை இன்றையத் திறனாய்வு விரிவாக்கக் கண்களுடாகப் பார்த்துப் பகுத்தாய்வு செய்து கொள்ள முடியும்.
இன்னொன்று இவர்களுடைய பெயர்கள் ஆங்கில எழுத்துக்களில் தரப்பட்டாலும், அவற்றின் ப்ரெஞ்ச் உச்சரிப்பு வேறானது. இந்தியத் தமிழ்ச் சிற்றேடுகளில் தரப்படும் உச்சரிப்பைப் பழகிக்கொள்ளாதீர்கள். பிரான்ஸில் வசிக்கும் ஈழத்தில் பிறந்தவர்கள் தமிழில் ப்ரெஞ்சுப் படங்களைத் திறனாய்வு செய்திருந்தால், அவற்றைப் படியுங்கள். வெறுமனே யமுனா ராஜேந்திரன்

கே.எஸ். சிவகுமாரன் 83
என்பவரின் தீவிர இடதுசாரிப் பார்வையமைந்த தூதரக எழுத்தாளர்கள் எழுதுவது போன்ற எழுத்து நடையிலமைந்த கட்டுரைகளில் மாத்திரம் தங்கியிருக்காதீர்கள்.
ப்ரெஞ்சு ‘நியூவேவ்’ படங்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை, மறைந்த ‘ஈழவாணன் நடத்திய ‘சாரல்’ (1965) இதழில் எழுதியிருந்தேன்.
‘புதிய அலை 1960களுடன் ஒய்ந்தது. சில தமிழ் நாட்டுச் சிற்றேட்டுக்காரர் விடாப்பிடியாகப் ‘புதிய அலை', ‘புதுக்கவிதை' போன்ற பதங்களை இன்றும் எதற்கும் பயன்படுத்தி வருவது அவர்களது தகவலறிவுப் பரப்புப் பற்றாக்குறையாக இருப்பதைத்தான் காட்டுகிறது.
கொழும்பு நியூ ஒலிம்பியா தியேட்டரில் முதலாவது ‘புதிய அலை’ப் படம் "BreathleSS’ 1960களில் காட்டப்பட்ட பொழுது, பேராசிரியர் கா. சிவத்தம்பி, சில்லையூர் செல்வராசன், நான் உட்பட ஓரிரு நம்மவரே பார்த்தோம். தமிழ் பேசும் கலைஞர்கள் பெரும்பாலும், மாற்று மொழி கலை வடிவங்களையோ, பண்பாடுகளையோ அறிந்து கொள்வதில் அக்கறை காட்டி ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மையைப் பறிபோகச் செய்வது வருத்தத்தைத் தருகிறது.
தமிழ் மாத்திரமே தெரிந்த நமது 'சிறுசுகள்’, இந்தியத் தொலைக்காட்சி நிலையங்கள் (ஹிந்தி, தமிழ், தெலுங்கு) தரும் பண்படுத்தப்படாத ரசனை வெளிப்பாடே களிப்பூட்டும் (Entertaining) சிறந்தவை எனப் பொய்மையில் மூழ்கிக் கிடக்கின்றனர். இனிய இளைய பரம்பரையினரே, 5u Jay Golfulgi Please come out of your box. 2 Isils(aliji(gill பரிச்சயமான ஊடக வரம்புகளினின்றும் சிறிது வெளியே

Page 55
84 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
வந்து மாறிவரும் உலகத்தின் நன்மை தரும் விடயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
சரி, யார் இந்த ப்ரெஞ்ச் திரைப்படத் திறனாய்வாளர்கள் - நெறியாளர்கள்? இவர்களுடைய படங்கள் எவை?
gairt Gör GMTj; Gol35nTrT " (Jean Luc Godard - Breathless- epigaira)LD)
JITGiron) alsTleil:Guit (Francois Trufaud-400Blows நானூறு பிரம்படிகள்)
6)Tu? LD (36) (Louis Malle - Lift to Scaffold ஸ்கட்பீல்ட்டுக்கான ஏற்றம்)
Sy@avijGŠT GODTG63T (Alain ResnaigmóGJITGLIDIT GOALDTG&T அமோர் ஹிரோஷிமாவில் காதல்)
Qungi alb (Roger Vadim) gyd Ga57 Gudgint (Agnes Varda) க்ளோட் ஷப்ரோல் (Claude Chabrol). இந்தத் திறனாய்வாளர்கள் நெறியாளர்களாக மாறுவதற்கு உதவியவர் மேலே குறிப்பிடப்பட்ட ‘கஹறியே / டு / சினமா’ ஏட்டின் ஆசிரியரான ஒந்ரே ப(B)ளின் (Andre Bazin).
‘ஞாயிறு தினக்குரல்’இல் சில வாரங்களாக வெளிவந்த விழிப்புணர்வூட்டும், கட்டுரையாளரின் கருத்துக்களை நியாயப்படுத்தும் கட்டுரையை அவசியம்
நமது ஈழத்துத் திரைப்படத் துறையினர் படித்துக் கவனத்திற்கெடுத்துக்கொள்ள வேண்டும். ‘மாரி

கே.எஸ். சிவகுமாரன் 85
மகேந்திரன்’ என்பவர் இந்தப் பயனுள்ள கட்டுரைகளை எழுதியிருந்தார். இவர் இயக்கிய படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு இன்னமும் கிட்டவில்லை.
தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவர் (தேவதாசன்) உட்பட நாம் அனைவரும் முதலில் ‘நல்ல சினமா’ எது என்பதை இனங்கண்டு கொள்வோம்.
来 அமெரிக்க நினைவுகள்.
அமெரிக்கக் கண்டத்திலே ஒஹாயோ என்றொரு மாநிலம் உண்டு. அந்த மாநிலம், அந்நாட்டின் கிழக்குக்கும், மத்திய நிலப்பரப்பிற்கும் இடையில் உள்ளது. அம் மாநிலத்தருகில் ஒன்றையொன்று தொடுமளவிற்கு இரு வேறு மாநிலங்களும் இருக்கின்றன. அவற்றின் பெயர்கள் gi5urTGOTIT (Indiana), Gas Girl 3 (Kentuky). G567LS GTGöIsogJLib Dsiv 5G5äGg5 KFC GTGOTL'ull uGib Kentucky Fried Chicken ஞாபகத்திற்கு வரலாம். அமெரிக்கக் கலாச்சாரம் உலகெங்கும் பரப்பிவரும் பல்வேறு வர்த்தக ரீதியான வாழ்நிலைக் கூறுகளில், சிற்றுண்டி உணவு வகைகளும் அடங்கும். அவற்றுள் ஒன்றே கென்டகி FC எனப்படும் பொரித்த கோழியிறைச்சி.
கென்டகியின் வடக்குப் பகுதியும் சின்சினாட்டியின் (Cincimati) தெற்குப் பகுதியும் ஒன்றையொன்று தொட்டு நிற்பன. அனைத்துலக விமான நிலையம் இந்த இரு இடங்களையும் தொடும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தியானா, கென்டகி, ஒஹாயோ ஆகிய மாநிலங்களையும்

Page 56
86 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மும்மாநிலங்கள் (Tri-States) என்பர். இந்த மாநிலங்களின் பூர்வீகக் குடிகள் செவ்விந்தியர் (Native Indians) என்பர். இவர்களுடைய பண்பாட்டுக் கோலங்களின் எச்சசொச்சங்களின் அடையாளங்களை இன்றும் நாம் காணலாம்.
ஒஹாயோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸ் (Columbus). இம்மாநிலத்தின் ஏனைய பெரும் நகரங்களுள் சின்சினாட்டி, க்ளிவ்லன்ட் (Cleaveland) ஆகியனவும் அடங்கும்.
இம்மூன்று மாநிலங்களிலும் உள்ள பெரும் நகரங்களுள் சின்சினாட்டி முக்கியமான ஒரு நகரமாகும். இங்கு பெரிய பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றின் பெயர் சின்சினாட்டி பல்கலைக்கழகம் (University of Cincinnati). இப்பல்கலைக் கழகத்திலே ஈழத்து மாணவர்களும் படிக்கிறார்கள். இவர்களுள் சிலர் தமிழர்கள். எனக்குத் தெரிந்தமட்டில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பேராசிரியர்களும் அங்கு பணி புரிகிறார்கள்.
சின்சினாட்டியில் பெரும்பாலான மக்கள் ஐரோப்பாவிலிருந்து குடியேறி அமெரிக்காவின் பொதுவான பண்பாட்டம்சங்களை உள்வாங்கி அமெரிக்கர்களாகவே மாறிவிட்டவர்கள். ஐரோப்பாவின் ஜேர்மனி, இத்தாலி, கிரேக்கம் மற்றும் ரஷ்யா, போலந்து, உக்ரெய்ன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களே இந்த வெள்ளைத் தோலினர். இவர்களை கோக்கேஷியன் (Caucasian) 6T65TLuj.
வெள்ளையருக்கு அடுத்தபடியாக, கறுப்பு அல்லது கறுப்பும் வெள்ளையும் கலந்த தோலினர் இருக்கிறார்கள்.

கே.எஸ். சிவகுமாரன் ;87
gaujesGOGMT sy înflikts - egy@LDfējisj (Afro-Americans) GTGömulj. இவர்களுள் பெரும்பாலானவர்கள் வறியவர்களாவர். இவர்களை வெள்ளையர் சமூகம், அமெரிக்கர்களாகத் தவிர்க்க முடியாமல் ஏற்று சுமுகமாக உறவு கொண்டிருந்த போதிலும், இந்தக் கறுப்பர்கள் வன்செயல்கள், குற்றச் செயல்கள், விபசாரம் போன்றவற்றில் ஈடுபடுவதனால் பலரின் வெறுப்பையும் பெற்று வருகின்றனர்.
வெள்ளையர், கறுப்பர் ஆகியோரையடுத்து, ஸ்பானிய மொழி பேசுபவர்கள் (Hispanics) இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை சின்சினாட்டியில் அதிகமில்லை. இந்த நகரில் ஜப்பானியர், சீனர், கொரியர், வியட்நாமியர், தாய்லாந்து நாட்டினர், இந்தியர் போன்றவர்களும் ஆங்காங்கே சிதறி வசிக்கின்றனர். இலங்கையரின் எண்ணிக்கை ஒரு நூறு குடும்பங்களுக்குள் அடங்கிவிடும். இவர்களுள் சிலர் நெடுங்காலமாகவே அங்கு குடியேறி, வீடு வாசல்களுடன் வசித்து வருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் சிங்களவர். தமிழ்க் குடும்பங்களைப் பொறுத்தமட்டில் 25 குடும்பங்கள் சின்சினாட்டியின் வடதிசையில் வாழ்கின்றன.
வெள்ளையர் பெரும்பான்மையினராக இருக்கும் சின்சினாட்டியின் தெற்குப் பகுதியில் 26 மாதங்கள் நான் நிரந்தர அமெரிக்க வாசியாக வசித்து வந்தேன். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அங்கு 'சிரேஷ்ட பிரஜைகள்’ (Senior Citizens) என்றழைக்கின்றனர். அவர்களுக்குச் சில சலுகைகளும் உள்ளன.
அதே நேரம், அமெரிக்கர்களோ ஏனையோரோ தமது உயிரியல் சார்ந்த வயது பற்றி (Biological) அங்கு

Page 57
88 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதனால் தான் 85 வயதுடையவர்களும், உடல்வாகு கொண்டு இளமைத் துடிப்புடன் வாழ்கின்றனர். இதுவும் அவர்கள் வெற்றியின் ரகசியம் என்று தான் சொல்ல வேண்டும்.
米 சின்சினாட்டி-மேலும் சில தகவல்கள்
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தை ஊடுருவிச் செல்லும் நதியின் பெயர் அம்மாநிலப் பெயரைக் கொண்டது. வடக்கு கென்டக்கி மாநிலத்தையும், சின்சினாட்டியையும் இணைப்பதற்காக ஒஹாயோ நதியின் மேலே அழகானதோர் பாலம் பெரும் தூண் ஒன்றை உள்ளறுத்துப் பொருத்தப்பட்டுள்ளது. இந்தத் தொங்கு Luitag5air Guuji GTITLIGSri (Roebling Suspension Bridge). ஒஹாயோ நதி மேலே, சின்சினாட்டியில் வட்டவடிவிலான இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றுண்டு. அதனைப் படகு இல்லம் (Boat House) என்பர். சிற்றுண்டிச்சாலை உட்பட பல வசதிகளையும் கொண்ட இக்கட்டிடத்திலிருந்து சுற்றுப்புறமான காட்சிகளைப் பார்ப்பது மிக ரம்மியமாய் இருக்கும். உல்லாச வேளைக்கு உகந்த இடம் இது கற்பனைகள் இறக்கை கட்டிப் பறக்கும் இடமும் இது தான்.
சின்சினாட்டியில் ஈடின் பூங்கா (Eden Park) என்று ஒன்றுண்டு. பசுந்தரை, ஆங்காங்கே விருட்சங்கள் பூங்கொத்துகளை அள்ளிச் சொரியும் மலர்ச் செடிகள் ஆகியன நிறைய இடைவெளியிடையே காணப்படும். சிமெந்து இருக்கைகளும் நிலை கொண்டுள்ளன. இவற்றின்

கே.எஸ். சிவகுமாரன் 89
மத்தியிலே ஞாபகார்த்த சிறு கோபுரமும், சற்றே உயர்ந்த தளத்தில் இரு போர் வீரர்களின் மனித உயர அளவுச் சிலைகளும் நிமிர்ந்து நிற்கின்றன. இந்த ஞாபகார்த்தச் சின்னங்கள், இரண்டாவது உலக மகா யுத்தத்தில் (19381945) உயிரிழந்தவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ளன.
சின்சினாட்டி தீயணைப்பு நூதனசாலையும் (Fire Museum) பிரசித்தி பெற்ற, நினைவுகூரத் தக்க கட்டிடம்.
ஒஹாயோ நதிக்கு மேலே, சின்சினாட்டியைச் சுற்றிலும் நெடியதும், குறுகியதுமாக பல பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவில், பூரணை நிலவில், இப்பாலங்களினின்றும் சுற்று வட்டாரத்தைப் பார்த்து லயிப்பதும் அழகிய அனுபவமாக அமையும்.
g5lb (56örgl (Mount Adams) at airGnosTCD Lug5uigi) நின்று சின்சினாட்டி நகரை நோக்கி நாம் பார்வையைச் செலுத்தினால் அந்த நகரக் கட்டடங்களையும் பிரத்தியேகமான கட்டடக் கலையின் நுணுக்க விஷயங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அங்கு வானளாவிய கட்டடங்கள் அரிது. ஆயினும், பல மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள் நிறைய உள்ளன. சினேர்ஜி வயல் (Chnergy Field) என்ற வட்ட வடிவக் கட்டடமும் இங்கு உண்டு. சின்சினாட்டி நகருக்கு எரிபொருளை (மின்சாரம், வாயு போன்றவை) வழங்கும் நிறுவனத்தின் பெயர்சினேர்ஜி’.
சின்சினாட்டி வர்த்தக நிலையம் ஒரு மைய நிறுவனம். அதனைச் சுற்றி நேர்த்தியான கட்டடங்களில் வர்த்தக நிறுவனங்கள் வணிகப் பொருட்களை விற்பனை செய்கின்றன.

Page 58
90 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இதனைவிட வணிக மாவட்டம் எனக்கூறக்கூடிய பகுதியும் இருக்கிறது. அங்கே பெரும் வர்த்தக நிலையங்களும் நிறுவனங்களும், வங்கிகளும், பத்திரிகை அலுவலகங்களும், அரச அலுவல்கள் நிறுவனங்களும் இருக்கின்றன.
நூல் நிலையக் குன்று என்று ஒரு பகுதியும் சின்சினாட்டியில் இருக்கிறது. அங்குள்ள பொது நூல் நிலையமும், பத்துக்கும் மேற்பட்ட கிளை நூல் நிலையங்களும் பிரசித்தி பெற்றவை.
பிரதான நூல் நிலையத்தில் எனது முயற்சியின் பேரில் இரண்டொரு நூல்கள் இடம்பெற்றுள்ளன. அவை எனது நூல்களாயிருந்த போதிலும், அவை தமிழில் எழுதப்பட்டிருப்பதனால் ஈழத்துத் தமிழ் இலக்கியம் அங்கு பிரதிநிதித்துவம் பெறுகிறது எனலாம். ஆங்கில மொழி நூல்களையே கொண்ட இந்த மூன்று மாடிக் கட்டிடத்தில் ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய மொழிகளின் நூல்களுள் சிலவும் இடம்பெறுகின்றன.
இந்திய மொழி நூல்கள் மத்தியில் தமிழ் மொழி நூல்கள் இல்லாததைக் கண்டு நான் எனது தமிழ் நூல்கள் இரண்டை அங்கு அன்பளிப்புச் செய்தேன். அவையாவன:
இருமை’ (சிறுகதைத் தொகுதி), ‘அசையும் படிமங்கள்’ (திரைப்படத்துறை சம்பந்தப்பட்டது).
சின்சினாட்டியில் நவீன தேவைகளுக்கான பல அலுவலகங்கள், கட்டிடங்கள் மற்றும் பலவும் இருப்பது காரணமாக இது நவீனத்துவப் பாங்கான ஒரு பெரு நகரமாக விளங்குகின்றது.

கே.எஸ். சிவகுமாரன் 91
கலை நிகழ்ச்சிகளுக்கான பல அரங்குகள், நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட திரையரங்குகள், நூதனசாலைகள், சித்திரக்கூடங்கள், இசையரங்குகள், பெரும் புத்தக விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், பல இனத்தவர்களுக்குமான தனித்தனிச் சிற்றுண்டிச் சாலைகள் போன்று இன்னும் பல சின்சினாட்டி நகரில் உள்ளன.
மெக்சிக்க, இத்தாலிய, தாய், சீன, ஜப்பானிய, கொரிய, இந்திய, எகிப்திய, துருக்கிய என்றவாறு பற்பல சிற்றுண்டிச் சாலைகளில் உணவு வகைகள் கிடைக்கும். வட இந்திய, தென்னிந்திய (உடுப்பி) உணவகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. ‘அரலிய’ என்ற பெயரில் சிங்கள மக்களின் சாப்பாடுகளை, அமெரிக்கர்களும் ரசித்துண்ணக்கூடிய முறையில் திருமதி பொன்சேக ஒர் சிற்றுண்டிச்சாலையை பல வருடங்களாக நடத்தி வருகிறார்.
இருபத்தாறு (26) மாதங்கள் சின்சினாட்டியில் நான் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் மறக்கமுடியாதவை. என் மனத்திரையில் அடிக்கடி வந்து என்னைப் பரவசமூட்டுகின்றன.
来 சின்சினாட்ழ கல்விக்கூட அனுபவங்கள்
அமெரிக்கா - ஒஹாயோ - சின்சினாட்டி, சின்சினாட்டி நகரின் தெற்கிலே ஒரு வட்டாரம். அதன் பெயர் அன்டர்ஸன். அவ்வட்டாரத்தின் கல்வித்துறை நடவடிக்கைகளைக் கவனிக்கும் அரச அலுவலகத்தின் பெயர் Forest Hill Education Office.

Page 59
92 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அந்த அலுவலகத்தின் நிர்வாகத்துள் வரும் 30க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்களுள் மூன்று பாடசாலைகள் முக்கியமானவை: அன்டர்ஸன் ஹைஸ்கூல், டேர்பின் (Tupin) ஹை ஸ்கூல், நேகல் (Nagel) மிடில் ஸ்கூல்,
ஹை ஸ்கூல் என்பது உயர்நிலைப் பாடசாலை, ஒன்பது முதல் 13ஆம் வகுப்பு வரையிலுமான வகுப்புகள். மிடில் ஸ்கூல் என்பது இடைநிலைப் பாடசாலை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை.
2002-2004 காலப்பகுதியில் முன் சொன்ன மூன்று பாடசாலைகளிலும் ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் ஆகியனவற்றுடன் சமூகக் கல்வி, வரலாறு (ஐரோப்பிய/ அமெரிக்க), சமூகப் பிரச்சினைகள் (Social Issues), இதழியல் (Journalism) ஆகிய பாடங்களை நடத்தும் வாய்ப்புக் கிட்டியது. இவை யாவும் நிரந்தர ஆசிரியர் என்ற முறையில் அல்லாது, பதில் ஆசிரியர் (Substitute Teacher) என்ற முறையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தப் பதவியைப் பெறுவதற்குக் கூட பல தடங்கல்கள் இருந்தன. நிரந்தரவாசித் தகைமை, அமெரிக்க அரசினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டப்படிப்புத் தகைமை, சமஷ்டி நுண்விசாரணைப் பணிமனை (FBI) விண்ணப்பதாரி குற்றச் செயல்களில் ஈடுபட்டவில்லை என்ற உறுதிப்பத்திரம் ஆகியன அத்தியாவசியமானவை. இலங்கை கலைமாணி பட்டம் எனக்கிருந்தாலும், அரசு ஏற்றுக் கொள்ளும் ஒரு நிறுவனம் எனது பட்டச் சான்றிதழில் உள்ள பாடங்கள் அமெரிக்கப் பாடங்களுக்குச் சமமானவையா என்பதைத் தீர்மானித்துச் சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டு,

கே.எஸ். சிவகுமாரன் 93
நான்கு வருட தாராளக் கலைமாணி (Liberal Arts) பட்டம், அமெரிக்கத் தகைமைக் கிணங்க எனக்குண்டு என்ற சான்றிதழ் வழங்கியது.
பதில் ஆசிரியராகப் பதவி ஏற்பதற்கு இருக்க வேண்டிய தகைமைகள் இருந்ததைக் கண்ட கல்வி அலுவலகம், என்னை நேர்காணல் ஒன்றுக்கு அழைத்தது. அங்கு என்னைப்போல் வேறு அமெரிக்க ஆண்களும் பெண்களும் சமுகமளித்தனர். வெள்ளை நிற அமெரிக்கர்கள் மத்தியில் நான் ஒருவனே ஆசிய / இலங்கைத் தமிழன். நேர்காணலின் பின் எல்லோருக்கும் ஆற்றுப்படுத்தும் பயிற்சி ஒருமணி நேரம் இடம் பெற்றது.
கலந்து கொண்ட பதில் ஆசிரியர்களின் விபரங்கள் இணைப்பாளர் ஒருவருக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இவரே தொலைபேசியில் எந்த எந்த நாட்களில் எந்த எந்தப் பாடசாலைக்கு எந்த எந்த வகுப்புக்குச் செல்லவேண்டும் என்று ஒரு நாள் முன்னரே (சில வேளைகளில் ஒரிரு மணித்தியாலங்களுக்கு முன்னரே) அறியத் தருவார். எனது இணைப்பாளர் இனிய சுபாவம் கொண்ட ஒரு பெண்மணி அவர் எக்கச்சக்கமாக எனக்கு வாய்ப்புகளைத் தந்தாலும் எல்லா வகுப்புகளுக்குமே செல்வது சாத்தியப்படவில்லை. இதற்குக் காரணம் வாரத்தில் இரண்டு ஒய்வு நாட்களில் மட்டுமே நான் கற்பிக்கச் செல்லமுடியும். ஏனெனில், எஞ்சிய ஐந்து நாட்களில் நான் வேறு நிரந்தரப் பதவி வகித்து வந்தேன். அந்த வேலை Shift அடிப்படையில் அமைந்தது. பள்ளிக்கூட நேரங்களில் (காலை 7.30 - பி.ப. 2.00) இந்த நிரந்தர வேலையில் நான் ஈடுபட்டிருப்பேன். நிரந்தர வேலை இருந்ததனால், உடல் நலச்சேவை p5676)LD56it (Health Benefits) g(Dig,667.

Page 60
94 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அந்த நிரந்தர வேலை எதுவென்றால், Lazarus - Macy என்ற பல்கூட்டுப் பெருங்கடையில் (Departmental Stores) விற்பனை உதவியாளர் பதவியாகும்.
பதில் ஆசிரியராக முதல் நாள் மிகப்பெரிய பாடசாலையான அன்டர்ஸன் ஹைஸ்கூலுக்குச் சென்றேன். அப்பாடசாலையின் உப தலைவர் என்னைக் குதூகலமாக வரவேற்று, பள்ளிக்கூடச் செயலாளருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் எனக்கு பதில் ஆசிரியர் என்று முத்திரைப் பொறிப்பை (Badge)யும், விபரங்கள் அடங்கிய பற்றுச் சீட்டையும் தந்தார். அதனைப் பெற்றுக்கொண்டு நான் 11 ஆம் வகுப்புக்குச் சென்றேன். முதலாவது பாடம் லத்தீன். நான் லத்தீன் படிக்கவில்லை. ஆயினும், கிரேக்க / லத்தீன் பண்பாடுகள் தொடர்பாக எனது பட்டப்படிப்புக்கு நான் பயின்றிருந்தது காரணமாக, பண்டைய ரோமாபுரி இலக்கியங்கள் பற்றி மாணவருடன் உரையாடினேன். நான் புதியவன் என்ற முறையிலும் வித்தியாசமான நிறமுடையவன் என்ற முறையிலும், பிரிட்டிஷ் உச்சரிப்பில் ஆங்கில மொழியைப் பேசினேன் என்ற முறையிலும் மாணவ - மாணவியர் உன்னிப்பாக எனது விரிவுரையை (பேச்சை)க் கேட்டுக் கொண்டது மாத்திரமல்லாமல், மிக உற்சாகத்துடன் கலந்துரையாடினர். இது எனக்குத் தென்பைத் தந்தது. பாட முடிவின் போது, அத்தனை மாணவர்களும் (இருபத்திரண்டு) என்னிடம் வந்து கை (gold,5); "You're awesome. cool.” GTGig) LITTITL Lq667 Tjö56ir. நான் உச்சி குளிர்ந்து போனேன். இந்த மாணவ, மாணவியருக்கு 17, 18 வயது இருக்கும்.
பதில் ஆசிரியர் ஒருவருக்கு ஒரு நாள் சம்பளம் 77 டொலராகும்.
来

கே.எஸ். சிவகுமாரன் 95
மேற்குலகில் நெரு நாட்கள் - 1
'தினக்குரல் தந்த இடத்தினுாடாகப் பற்பல விஷயங்கள். தொடர்பாக நாம் தகவல்களையும், குறிப்புக்களையும், திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகளையும் பகிர்ந்து கொண்டோம். வாசகர்களாகிய நீங்கள் இடையிடையே அறியத் தந்த எதிர்வினைகள் மூலம், இப்பத்தி மேலும் செழுமை பெற்றது எனலாம்.
இனி இரண்டு ஆண்டுகளாக நான் எங்கே சென்றிருந்தேன் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. ஆம், நான் மேற்கில் நெடு நாட்கள் இருந்து விட்டேன், உண்மையிலேயே ‘மேற்கில் நெடு நாட்கள்’ (Too - Long in the West) 6T667L g5! List a gib5u Triggast 6TCup5u ஒரு நூலின் பெயர். யார் அவர்? அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் ஆங்கில இலக்கியப் புலமையாளர். டி.எஸ்.எலியட் (T.S. Eliot) என்ற ஆங்கிலக் கவிஞனைப் பற்றி ஆதாரபூர்வமாகவும், அதிகாரபூர்வமாகவும் எழுதப்பட்டது இந்நூல் என, அரைநூற்றாண்டுக்கு முன் அங்கீகாரம் பெற்றது.
எலியட் அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்த தலை சிறந்த 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். சென்ற நூற்றாண்டுச் சிறந்த ஆங்கிலக் கவிஞர்களுள் டபிள்யூ பி. Gul '6) (W.B. Yeats), GTGiogist Luggall (Ezra Pound), டபிள்யூ. எச். ஒடன் (W.H.Auden) போன்றோரும் அடங்குவர்.

Page 61
96 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இது இப்படியிருக்கையில் நான் சொல்ல வந்ததைச் சொல்ல மறந்து விட்டேன். பார்த்தீர்களா, வயது போனால் இப்படித்தான். போகட்டும். மேற்குலகோரைப் போலவே, இளமையாய் (தோற்றத்தில் இல்லாவிட்டாலும்) இருக்க நாம் முயல்வோம். சொன்னாற் போல, “முயற்சி உடையார் 2gypåéru IGOLu ITj (Try, try, try again) GT6ön (g Gl DGSTIL L Tiflsår தாரக மந்திரம். அவர்கள் எப்பொழுதுமே ‘பொஸிட்டிவ் (எல்லாம் நன்மைக்கே) ஆகச் சிந்தித்து முன்னேறுபவர்கள். அதனால்தான் விண்வெளியில் சஞ்சரித்துச் சந்திரனுக்கும் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
விண்வெளி என்றதும் விண்வெளிப் Court stuSula statDITGOT (Aerospace Engineer) GTGolgi ep55 மகன் ரகுராமின் (37) பணி ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கைத் தமிழர் ஒருவர் முதற் தடவையாக இத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றமை ஒரு சாதனை என்பது உண்மையே. ஆயினும், இதனை நானே எடுத்துக் கூறுவது சுயதம்பட்டந்தான். இருந்தாலும் தந்தை என்ற முறையில் நான் பெருமிதம் அடைகிறேன். ராம், இத்துறையிலும் வேறு படிப்புத் துறைகளிலும் முதுமாணிப்பட்டம் பெற்றிருந்தாலும், அவர் தற்சமயம் விண்வெளித் துறையில் தொழில் பார்க்காமல், கணினித் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணிபுரிகிறார்.
இவற்றையெல்லாம் ஏன் இங்கு குறிப்பிடவேண்டும்? நியாயமான கேள்விதான். விஷயம் இருக்கிறது. கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் படித்து, பட்டம் பெற்று பணிபுரியும் எனது மகன், தனக்கிருக்கும் உரிமை காரணமாக அந்த நாட்டுக்கு வந்து வசிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

கே.எஸ். சிவகுமாரன் 97
நான் ஒர் எழுத்தாளன் என்பதனால் பிற நாட்டு வாழ்க்கைப் போக்கு எப்படியிருக்கும் என்று அறிய, ஆர்வமுள்ள இயல்பு இருந்ததனால், 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி அமெரிக்காவிற்குப் புறப்பட்டேன்.
செல்லும் வழி தென் கிழக்காசியாவூடாக இருந்தமை எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. தென்னாசியாவில் வாழும் நாம் பெரும்பாலும், இலங்கைக்கு வெளியே சிந்திப்பதாயிருந்தால், அயல் நாடாகிய இந்தியா அல்லது கனடா அல்லது ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் நாடுகள் பற்றிய அதிகம் அறிந்து கொள்கிறோம்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் / வடகொரியா கம்பூச்சியா, தாய்லாந்து, தாய்வான் போன்ற தென் கிழக்காசிய நாடுகள் பற்றியோ, ஜப்பான், கரீபியத் தீவுகள், மெக்ஸிகோ, மத்திய, தென் அமெரிக்கா போன்ற நாடுகள் பற்றியோ அவற்றின் பண்பாட்டுக் கோலங்கள் பற்றியோ அதிகம் அறிந்தோமில்லை. மாலை தீவு, மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) போன்ற இடங்களில் உள்ள இஸ்லாமிய நாடுகள் பற்றி ஒரளவுக்காகுதல் நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கின்றோம். எனவே, சிங்கப்பூர் எயர் லைன்ஸ் விமானத்தில் ஏறித்தாய்வான் வழியாக அமெரிக்கத் தென்மேற்கு மாநிலமான கலிபோர்னியாவின் தலைநகரான லொஸ் அன்ஜலிஸ் விமான நிலையத்தில் ஏப்ரல் 19ஆம் திகதி (இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேர வித்தியாசம் சுமார் 8 முதல் 10 மணித்தியாலங்களாகும். (அதாவது, நமது நாட்டில் சூரியன் உதித்த பின்னர் தான் மேற்கில் உதயமாகிறது.) சிங்கப்பூர் விமான நிலையத்தில்

Page 62
98 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சில மணி நேரம் கழிக்கவும் / களிப்படையவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்பப்பா! எத்தனை விதமான கோலங்கள். பல்வேறு நாட்டவரின் கூடலாக மாத்திரமின்றி, தென் கிழக்காசியாவின் வேறுபட்ட மக்களின் நாகரிகப் போக்குகளையும் பேச்சோசைகளையும் கண்டு கேட்க முடிந்து வியப்புற்றேன்.
நாம் நினைக்கிறோம் - நாமே இற்றைவரையிலான (Up to date) தன்மைகளைக் கொண்ட நவநாகரிக மக்கள் என்று. இது எவ்வளவு தவறானது என்பதைப் பிரத்தியட்சமாகவே நான் கண்டேன். தாய்வான் தலைநகரானதாய்பேய் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பரிச்ோதனையை மேற்கொண்டார்கள். சிறிது நேரம் அங்கு தங்கியிருந்த வேளையில், மேற்கும் கிழக்கும் சந்தித்தாற் போன்று. அங்கு பல்வேறு வகையான ஆளுமைகளைக் கொண்ட பல்வேறு மக்களின் நடையுடை பாவனைகளைப் பார்த்துப் பரவசமானேன்.
来
மேற்குலகில் நெரு நாட்கள் - 2
Tய்வான் தலைநகர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு புறப்பட்ட விமானம் அடுத்த நாள் மாலையில் லொஸ் அன்ஜலிஸ் விமான நிலையம் வந்தடைந்தது. குபேர நாடாகிய அதிசய உலகம். அமெரிக்காவில் கால் வைத்ததும், நிர்வாக அனுசரணைகள் நடைபெற்றன. நடைமுறைகள் சாதகமாக அமைந்ததனால், அமெரிக்காவின் நிரந்தரவாசியான அனுமதிச் சான்றிதழ் கிடைத்தது.

கே.எஸ். சிவகுமாரன் 99
இனிச் செல்லவேண்டியது அமெரிக்காவின் ஒஹாயோ (Ohio) மாநிலத்தின் இரண்டாவது மாநகரமாகிய சின்சினாட்டிக்கு (Cincinnati). அடுத்த நாள் காலைதான் டெல்டா (Delta) விமானம் புறப்படும். அதுவரை லொஸ் அன்ஜலிஸ் விமான நிலையத்தையும், அதனை அண்டிய பகுதிகளையும் சுற்றிப் பார்த்தேன்.
பார்த்த வேளையில், பல்வேறு மாதிரி மாந்தர்கள் பூமிப் பந்தின் வெவ்வேறு பாகங்களிலுமிருந்து வந்து பயணம் செய்வதைக் கண்டேன். அங்கு ஆங்கில, ஸ்பானிய, இத்தாலிய, வியட்நாமிய மொழிகளில் பேசுவோரையும், ஜப்பானிய, தென்னமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களையும் கண்டு, கேட்டு கதைத்து மகிழ்ந்தேன்.
இரவு, அங்கு பகலாய் பரபரப்புடன் ஒளிர்விட்டது. மெக்ஸிக்கன் உண்டிச்சாலையில், இரு இந்தியத் தம்பதிகளுடன் (ஆந்திர மாநிலத்தவர்) சம்பாஷித்து, உறைக்க உறைக்க உணவருந்தியிருந்த வேளையில், வயதில் இளமையான ஒர்தத்துவத்துறை பேராசிரியரான அமெரிக்கர் நம்முடன் சேர்ந்து கொண்டார். நான் தமிழில் ஓரிரு வார்த்தைகளை என்னையறியாமலேயே எமது சம்பாஷணையில் சேர்த்துக் கொண்டேன். தெலுங்கு பேசும் இளந்தம்பதியருக்கு எனது மொழி புரிந்தது. அமெரிக்கர் சுறுசுறுப்பானார். М
நீங்கள் எந்த மொழிச் சொற்களைப் பாவித்தீர்கள்? என்று அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் என்னை வினவினார். தமிழ்’ என்று தமிழிற் பேசுவது போல உச்சரித்தேன். ‘அது Tamilஆ என்றார். ‘அதுவே என்றேன்.

Page 63
100 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
'நீங்கள் இந்தியரா? இல்லையே! இலங்கையன்’ என்றேன் விளக்கமாக,
“I am a Sri Lankan” 6 TGðTGömpað.T.
அவர் மளமள என்று இலங்கையைப் பற்றித் தான் அறிந்ததையெல்லாம் எடுத்துக் கூறினார். எனக்குச் சந்தோஷம். பெரும்பாலான சராசரி அமெரிக்கர்களுக்குப் பிற நாடுகள் பற்றிய அறிவு பூஜ்யம் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இந்த நண்பர் சிறிது வித்தியாசமானவர். காரணம் - இவருக்கு நிறையத் தகவல் தெரிந்திருந்தமை. இவர் தந்தை பங்கொக்கில் (தாய்லாந்துத் தலைநகரில்) அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்தவர். தவிரவும், இவர் மெய்யியல் பேராசிரியராய் இருப்பதனால் இணையான அறிவுத்துறைச் செல்நெறிகளிலும் ஆர்வங்காட்டி வந்ததனால் இலங்கை பற்றியும் அறிந்திருந்ததில் வியப்பில்லை.
பயணிகள் தங்குமறையில் சிறிது நேரம் கண்ணயர்ந்தேன். பொழுது விடிந்தது. பொற்கோழி கூவவில்லை. ஆயினும், மதுரமான ஸ்பானிய மொழி இலத்தின் அமெரிக்க வாத்திய இசை கண்விழிக்கச் செய்தது.
காலைக் கடன்களைத் துப்புரவான 'Rest Roomஇல் (மலசல கூடத்தை, றெஸ்ற் ரூம்’ என்றுதான் பெரும்பாலான அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்). முடித்துவிட்ட புதுத்தெம்புடன் சின்சினாட்டிக்குச் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்தேன்.
நான் அமர்ந்திருந்த பாதைமுனைக் கோடியில் (Terminal) வெவ்வேறு திசைகளுக்குச் செல்லும் பயணிகள்

கே.எஸ். சிவகுமாரன் 101
காத்திருந்தனர். அவர்களுள் ஒருவர் எனது அவதானிப்புக்குட்பட்டார். தோற்றத்தில் இந்தியர் போல் காணப்பட்ட அந்த இளைஞர் உடையணிந்த முறையில் (சிறு காற்சட்டை, டீ - ஷேட், பெல்ட், ஸ்போர்ட்ஸ் ஷ"ஸ்) அமெரிக்கராய் தோற்றினார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறுவலித்தோம். பின்னர் பேசத் தொடங்கினோம். அவர் தன் பெயரைக் கூறவில்லை. நானும் அப்படித்தான். இலக்கியம், கலை, சமயம், மேலை / கீழைத்தேயப் பண்பாட்டுக் கோலங்கள் பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் உரையாடினோம். அவர் அமெரிக்க உச்சரிப்பில், நான் பிரிட்டிஷ் உச்சரிப்பில், நேரம் கழிந்தது பயனுள்ளதாய். நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது. அவர் கனடாவின் டொறோன்டோவுக்குச் செல்லவிருந்தார்; விடைபெற்றோம்.
அந்த ‘அவர் யார் என்று நான் முன்னமே அறிந்திருந்தால், ஒரு செவ்வியை மேற்கொண்டிருப்பேன். ச்சா! தவறிய சந்தர்ப்பமாயிற்று. தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் நெடுநாட்களாக வாழ்ந்து, இன்று ஹொலிவுட் திரைப்பட நெறிய்ாளர்க்ளுள் பிரபல்யம் பெற்றுவரும் ஷியாமளன் 60751-35/TaöT (Shyamalan Knight)9lij53)606765j. 'sgyDTags grija' (The Sixth Sense) GTGilp Saoul ILIL.55air epauhபரவலாக கவனிப்பைப் பெற்ற ஷியாமளன் நைட் இன்று மேலும் இருபடங்களை நெறிப்படுத்திப் பாராட்டைப் பெற்றுள்ளார்.
நிற்க, இவர் இன்னார் என்று முன்னமே தெரிந்திருந்தால், மேலும் பல தகவல்களை அவரிடமிருந்து பெற்றுத் தங்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கலாம்.

Page 64
102 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அவர் அட்டகாசமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், அமைதியாக இருந்தார். உண்மைக் கலைஞர்கள் அப்படித்தான் அடக்கமாக இருப்பர். சாதாரணமான சாமான்யராக அவர் என்னுடன் உரையாடினார். அப்படியிருந்ததனாற் போலும் நான் அவர் பெயரையறிந்து கொள் ଗର୍ଗ க இருட் o இத்தவறை நான் விட்டிருக்கக் கூடாது.
Appearences are deceptive (Goal uGifjšGg5s sibspub Gav வேளைகளில் ஏமாற்றும் இயல்புடையது) என்பது உண்மைதான். பின் அவர்தான் ஷியாமளன் நைட் என்பதனை எப்படியறிந்து கொண்டேன்?
அவர் புகைப்படத்துடன் ஒரு சிறுகுறிப்பு ஒர் அமெரிக்க சஞ்சிகையில் வெளியாகியிருந்தது. அப்பொழுதுதான் என் உதாசீனத்தைப் புரிந்துகொண்டேன். பல பிரமுகர்கள் சில வேளைகளில் தாம் இன்னாார் எனக்காட்டார் (Incognito). தனியாக சுகானுபவத்தைப் பெறுவார்கள். இதுவும் அப்படியே.
லொஸ் அஞ்ஜலிஸிலிருந்து புறப்பட்ட விமானம் சில மணி நேரம் கழித்து சின்சினாட்டியை மதியத்தில் வந்தடைந்தது. அங்கு என் வருகைக்காக ஆவலுடன் என் மூத்த மகன் ராமும், மருமகள் மிஷேலும் காத்திருந்தனர். மகிழ்வுடன் வரவேற்றனர். புதிய வாழ்க்கை முறை அத்தருணம் ஆரம்பமாகியது.
来

கே.எஸ். சிவகுமாரன் 103
மேற்குலகில் நெருநாட்கள் - 3
அமெரிக்க மாநிலங்களிலொன்று ஒஹாயோ (Ohio). அதனை அண்டியுள்ள மாநிலங்கள் இந்தியானா (Indiana). கென்டக்கி (Kentucky), அந்த நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் இம்மும்மாநிலங்களும் (Tristates) அமைந்துள்ளன. ஒஹாயோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸ். அதற்கடுத்த பெருநகரங்கள் என சின்சினாட்டி (Cincinnati), க்ளிவ்லன்ட் (Celaveland) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
KFC எனப்படும் கென்டக்கி பொரித்த கோழியிறைச்சியை எமது நாட்டிலும் தயாரித்துத் தருகிறார்கள் அல்லவா? அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ‘கண்டுபிடித்த’ உணவுப் பதார்த்தம் இப்பொழுது உலகளாவிய விதத்தில் அறிமுகமாகியிருக்கிறது.
கென்டக்கியின் வடபகுதி சின்சினாட்டி நகரின்
தெற்குப் பகுதியைத் தொடுகிறது. அந்த இடத்திற்தான் அனைத்துலக விமான நிலையம் இருக்கிறது.
நான் அங்கு சென்றிறங்கியதும் எனது மூத்த மகன் ராமும், அவருடைய துணைவியார் மிஷேலும் என்னை அன்புடன் வரவேற்றுத் தமது காரில் தமதிருப்பிடம் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் வாகனங்கள் வலது பக்கத்துப் பாதையில்தான் செல்லும். ஆயினும் கார் சாரதி காரின் இடது பக்கத்து முன் ஆசனத்திலிருந்து தான் வாகன்த்தைச் செலுத்துவார். இது நீங்கள் அறிந்ததொன்றே.
அங்கு அகன்ற பெரிய தெருக்களில் நான்கு ஒடு பாதைகள் உள்ளன. ஒரே திசையில் செல்லும் வாகனங்கள் இரண்டு (ஒன்று விரைவாகச் செல்வதற்கு, அடுத்து

Page 65
104 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அவ்வளவு விரைவு தேவைப்படாமற் செல்வதற்கு) பாதைகளைப் பயன்படுத்தலாம்.
பொது மக்கள் போக்குவரத்துக்கான பஸ் வண்டிகள் சில இடங்களில் இருந்தாலும், பொதுவாக அங்குள்ள மக்கள் எல்லோரிடத்திலும் வாகனங்கள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது இரண்டு வாகனங்களையாகுதல் வைத்திருப்பார்கள். இது ‘டாம்பீகம்” அல்ல. அத்தியாவசியத் தேவையின் நிமித்தம் எனக் கொள்க.
அமெரிக்காவில் போர்ட் (Ford), ஷெவலே (Chervelot) போன்ற உள்நாட்டு மோட்டார் வண்டிகளைப் பலர் பயன்படுத்தினாலும், ஜப்பானியக் கார்களுக்குத்தான் 'மவுசு அதிகம். அவை செய்நேர்த்தியும் அதிகபட்ச வசதி சாதனங்களும், கொண்டவை. கொரியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மோட்டார் வண்டிகளுக்கும் ‘கிராக்கி’ உண்டு.
சின்சினாட்டியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலான மக்கள் ஜேர்மனியப் பூர்வீகத்தைக் கொண்டவர்கள். அதனைப் பெருமையாகப் பேசிக் கொள்பவர்கள் அயர்லாந்து, இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள், வியட்நாம், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களும், அமெரிக்கப் பூர்வீகக் குடியினரான செவ்விந்தியர்களின் வாரிசுகளும் சின்சினாட்டி என்ற பெருநகரத்தில் வசிக்கிறார்கள்.
கணிசமானவர்கள் என்றில்லாவிட்டாலும் [5f1IOJ, இருநூறு இந்திய, பாகிஸ்தானிய மக்களும் ஏறத்தாழ

கே.எஸ். சிவகுமாரன் 105
இருபது, முப்பது இலங்கை குடும்பத்தினரும் இங்கு வசிக்கின்றனர். 'குத்துமதிப்பின்படி இலங்கையின் வடபகுதி மக்கள் என ஏறத்தாழ இருபது குடும்பங்கள் இங்கு நிரந்தரமாக வாழ்கின்றன. சிங்கள மக்கள் சிலரும் நெடுங்காலமாக வசிக்கின்றனர்.
ஃபொன்சேக (Fonseka) குடும்பத்தினர் சுவையான இலங்கைச் சாப்பாட்டை மேல் நாட்டுப் பாணியில் சமைத்துத் தருகின்றனர். தமது ‘அரலிய சிற்றுண்டிச் சாலையில், வெள்ளைப்பூடு ரொட்டி (Gartic Bread), ‘கட்டசம்பல் வெவ்வேறு காரமட்டத்திலான இறைச்சிக் குழம்பு, தேங்காய்ப்பூ மாசிச் சம்பல் போன்றவற்றை வெள்ளைக்காரர்களுக்கு ஏற்ற விதத்தில் பக்குவமாகத் தருகின்றனர்.
சின்சினாட்டியின் தெற்குப் பகுதியில் வெள்ளைத் தோலுடையவர்களே அதிகம். அங்கு தான் பஸ் ஒடும் பாதைக்கருகே தனியான விசாலமான வசிப்பிடம் (Apartments) 6 637 stS6) வசித்து வந்தேன். வெள்ளையருக்கடுத்ததாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் காணப்படுகிறார்கள். 6/56) Li Taofid (Hispanic) என்றழைக்கப்படும் ஸ்பானிய மொழி பேசும் மெக்ஸிக்கோ, பியூற்டோ ரிக்கோ (Puerto Rico) மத்திய தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் அம்மாநகரில் வசிக்கிறார்கள்.
ஒய்வுக்கே நேரமில்லை என்று கூறுமளவிற்கு ஆண்களும், பெண்களும் கடுமையாக உழைக்கிறார்கள். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைப் பார்க்கின்றனர். வருவாய் அதிகம் இல்லாவிட்டால் செலவுகளைச் சமாளிப்பது பெரும் கஷ்டமாகிவிடும். எனவே தான்

Page 66
106 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அவர்களுக்கு நேரம் பொன்னானது. சகலதையும் வசதியாகப் பெற அவர்களுக்கு நிறையப்பணம் தேவைப்படுகிறது. ஒரு பொத்தானை அமுக்கினால் போதும். சகல தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன என்று கூறுமளவிற்கு அவர்கள் வசதிகளைப் பெற்றுவிடுகின்றார்கள்.
ஹொலிவுட் படங்களிலும், தொலை 15TL-5 i 5 Gif3), Lb (Soap Operatic & Teleplays) சித்திரிக்கப்படுவது போன்று அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையில்லை. அதே போன்று அமெரிக்க அரசியல்வாதிகளின் கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றை மாத்திரம் மையமாக வைத்து அமெரிக்க மக்களின் மனப்பாங்கையும், வாழ்க்கை முறையையும் கணிக்க முடியாது. பண்பாடு வித்தியாசப்படினும் அவர்களும் நம்மைப் போன்றவர்களே.
来 மேற்குலகில் நெரு நாட்கள் - 4
சின்சினாட்டி, அன்டர்சன் பட்டணப் பகுதியில் எனது மகன் குடும்பத்தினருடன் ஒரிரு மாதங்கள் இருந்து வந்தேன். அவர்களிருவரும் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும்வரை நான் தனியாக இருந்து புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளைப் படித்து வந்தேன்.
எத்தனையோ வானொலி நிலையங்களிலிருந்து ஒவ்வொரு ரக நேயருக்கும் களிப்பூட்டும் வகையில் விதவிதமான இசை ஒலித்தது. இடையில் செய்திகள்

கே.எஸ். சிவகுமாரன் 107
(வெளிநாட்டுச் செய்திகள் எப்போதாவது தான் ஒலிப்பரப்பாகும்.) காலநிலை அறிவிப்பு, நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள். எல்லா வானொலி நிலையங்களும் விளம்பரங்களை விடாமல் சேர்த்துக் கொள்கின்றன.
இவற்றுள், ஒரு நிலையம் மாத்திரம் (தேசிய பொது மக்கள் வானொலி - NPR) விளம்பரமின்றி, செய்திகள், செய்தி விளக்கங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றுடன் அற்புதமான இசையை வழங்கிவருகின்றது.
இந்த இசை மேனாட்டு சாஸ்திரிய இசை (பெயித்தோவன், வாக்னர், மோற்ஸாட், சைகொவ்ஸ்கி, ஹைடன், பாஃம்ஸ் போன்ற இசை மேதைகளின் ரம்மியமான வாத்திய இசை) மாத்திரமல்ல, ஒலி ஒத்திசைவு மீட்டல்கள் (Symphony Orchestration) மற்றும் பல்வேறு நாடுகளில் இசைச் செல்வங்கள் மேனாட்டிசைப் பாணியில் தழுவியளிக்கப்படும் பாங்கு போன்ற மதுரமான இசையனுபவத்தை இந்த நிலையம் வழங்குகிறது.
. நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். என்.பி.ஆர். வானொலியையே நான் அதிகம் கேட்பேன். இலங்கை உட்படப் பல வெளி நாட்டுச் செய்திகளும், அமெரிக்கா முழுவதிலுமான முக்கிய செய்திகளும், மாநில, சின்சினாட்டிச் செய்திகளும் ஒலிபரப்பாகின. இதுவும் இசையும் என்னை நிர்ப்பந்தம் செய்தன.
வாசிப்பும், வானொலியும் தவிர இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். 200க்கும் மேற்பட்ட நிலையங்கள் - சனல்ஸ், சின்சினாட்டியில் மாத்திரம் மூன்று முக்கிய நிலையங்கள். இவை தேசிய

Page 67
108 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நிலையங்களுடன் இணைந்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இவை மாத்திரமா? ‘கேபிள்’, “சற்றலைட்' மூலம் சுமார் 1,000 நிலைய நிகழ்ச்சிகளை விரும்பினாலும் பார்க்கலாம்.
ஆயினும், இரண்டு நிலையங்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களையே நான் அதிகம் பார்ப்பேன். இவை IFC (அனைத்துலகத் திரைப்படக் காட்சி) நிலையமும், ‘ஸன்டான்ஸ்’ நிலையமுமாகும். Sundance நிலையத்தின் உரிமையாளர் தலைசிறந்த அமெரிக்க நடிகரும், நெறியாளருமான ரொபர்ட் ரெட்பர்ட் ஆவார். உலகத் திரைப்பட விழாக்களை நேரில் சென்று பார்க்கக் கடந்த ஏழு வருடங்களாக எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனை ஈடு செய்யவோ என்னவோ, இந்த இரு நிலையங்களிலும் காட்டப்படும் அனைத்துலகப் படங்களையும் பார்த்து மகிழ ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
இவ்வாறு எத்தனை நாட்களுக்கு நான் ‘ஹாயாக’ இருக்க முடியும்? வேலை தேடும் படலம் ஆரம்பமாகியது. தடையாக இருந்தது போக்குவரத்துப் பிரச்சினை. எனக்கோ கார் இல்லை. வெவ்வேறு இடங்களுக்கும் சென்று வேலை தேட, பஸ் வண்டிகளும் எனது இருப்பிடத்திலிருந்து செல்லா. மூன்று சில்லு (ஒட்டோ) வண்டிகள் கிடையா. வாடகைக்காரும் இலகுவில் கிடைக்கமாட்டாது.
என்ன செய்வது? பஸ் ஒடும் பாதையில் எனக்கொரு ‘அப்பார்ட்மன்ட்’ பார்க்க வேண்டியிருந்தது. எனது மருமகள் மிஷேல் (இவர் ஜப்பானிய மோட்டார் நிறுவனத்தில் நிர்வாகப் பணியை மேற்கொள்வதுடன்,

கே.எஸ். சிவகுமாரன் 109
சட்டத்தரணியாகவும் விளங்குகிறார். எனக்காக ஒரு நல்ல வசிப்பிடத்தைத் தேடித் தந்ததுடன், வாரத்தில் ஐந்து நாட்களுக்கு நான்கு மணி நேரம் செய்யக்கூடிய வேலையையும் தேடித் தந்தார்.
அவர்களுடைய பெரிய வீட்டிலிருந்து ஏழு நிமிடக் கார் ஒட்டலின் பின் அடையக்கூடிய இடத்தில் வசிப்பிடம் எனக்குக் கிடைத்தது. மெளன்ட் வொஷிங்டன் பகுதியில் பஸ் ஓடும் சற்றன் (Sutton) நெடுஞ்சாலையில் ஒரு குடியிருப்புக் கிடைத்தது. பெரிய படுக்கை அறை, சாப்பாட்டு அறையும், அதனையொட்டிய சமைக்கும் பகுதியும் (ஸ்டோவ்' மின்சார அடுப்பு, குளிரூட்டிப் பெட்டி) இருந்தன. இவற்றைவிட, வசதியாக உட்கார்ந்து பேசிப் பழகப் பெரிய பகுதி, குளியலறை மற்றும் சாமான்கள், உடை போன்றவற்றை வைப்பதற்கு நான்கு அலுமாரிகள் (Closets), உடைகளைத் துவைத்துக் காயவைக்கும் இயந்திரம் போன்ற சகல வசதிகளும் கொண்ட எனது apartment எனக்குப் பெரும் செளகரியத்தைத் தந்தது.
1935 என்ற இலக்கம் கொண்ட அந்த வீட்டுத் தொகுதியில் என்னுடன் மொத்தம் ஐந்து தனியாட்கள் வசித்தனர். என்னைத் தவிர்த்து ஏனையோர் வெள்ளை நிற அமெரிக்கர்கள். எனது வசிப்பிடத்துக்கு 425 டொலர் மாதாந்த வாடகை. இலங்கைக் கணக்கில் நீங்களே நாணயமாற்றைச் செய்து விடுங்கள்.
வசிப்பிடம் கிடைத்துவிட்டது. இனி, வேலை?
来

Page 68
110 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மேற்குலகில் நெருநாட்கள் - 5
ன்ெனைப் பற்றித் தகவல்களைத் தரும் அதே வேளையில் அமெரிக்க வாழ்க்கை முறையில் சில பண்புகளையும் உங்களுக்குத் தருகிறேன் என்று எனக்கொரு நம்பிக்கை. இது சரியா? அன்பர்களே நீங்களே சொல்லுங்கள். எதற்கும் இந்த அத்தியாயத்துடன் மேற்கில் நெடு நாட்களை முடித்துவிட்டு, அடுத்த சுவாரஸ்யமான அம்சங்களைப் பார்ப்போமா?
சரி, எனது முதல் உத்தியோகம், கணினியைப் பயன்படுத்தித் தரவுகளைப் பதிவு செய்யும் வேலை. ஹமில்டன் கவுன்டி பதிவாளர் அலுவலகத்தில், இந்தத் தரவுகளை விண்ணப்பங்களிலிருந்து பெற்ற கணினியிலேயே பதிவு செய்து, சேமித்து வைப்பது எனது பங்கு - வேலை. இதற்கு ஆகக் குறைந்த சம்பளமாக மணித்தியாலயத்துக்கு ஐந்து டொலர் 25 சதம் தந்தார்கள்.
நீங்கள் பெரிய பட்டதாரியாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் புத்தக ஞானத்தைவிட Skils எனப்படும் தொழிற் தேர்ச்சியே அதிகம் விரும்பப்படுகிறது.
நான் பார்த்த வேலை தற்காலிகமானது. முழு நேர வேலையொன்றைத் தேடினால்தான் ஆரோக்கிய நலன் வசதிகளைப் பெற முடியும். இந்த Health Benefits இல்லாவிட்டால், அமெரிக்காவில் வசிப்பது மிகக் கடினம். ஏனெனில், வைத்தியசாலையில் தங்கியிருந்து நீங்கள் சிகிச்சை பெறுவதாயிருந்தால், நாளொன்றுக்கு சுமார் 4,000 டொலர்களைச் செலவிட வேண்டியிருக்கும். நகைப்பாயிருக்கிறதா?

கே.எஸ். சிவகுமாரன் 111
எனவேதான், சுடச்சுட முழு நேர வேலையொன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியுங்கண்டேன். வேலை எனக்கோ புதியது. அமெரிக்கா எங்கும் கிளை விரித்திருக்கும் ஒரு பெரிய சங்கிலி விற்பனை நிலையத்தில் (Stores) விற்பனை இணையாளர் (Sales Associate) பதவி எனக்குக் கிடைத்தது. வாடிக்கையாளருடன் சுமூக உறவு, விற்பனைப் பொருட்களைக் கவர்ச்சியான விதத்தில் காட்சிப் பொருளாக (Display) வைத்திருத்தல், காசு இயந்திரத்தில் விற்பனைகளைப் பதிவு செய்தல், பணப்புழக்கம் போன்றவை எனது கடமைகள்.
இந்த ஸ்டோர்ஸ் 'லாஸரஸ் மேஸிஸ்’ தைக்கப்பட்ட ஆண், பெண் உடைகளையும் மற்றும் மின்னியக்கப் பொருட்கள், நூதனப் பொருட்கள், உடை தாங்கிகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வந்தது. எனக்கு ஆரம்பத்தில் ‘லகேஜ் விற்பனைச் சாவடியிலும், பின்னர் ஆண்களுக்கான சகல உடைகள் விற்பனைச் சாவடியிலும் வேலை கிடைத்தது. இரண்டு வருடங்கள், மணித்தியாலயத்துக்கு 8% டொலர் எனச் சம்பளம் வழங்கினார்கள்.
முற்றிலும் வெள்ளையரைக் கொண்ட ஆண்கள் பகுதியில் இரண்டு ஆசியர்கள் தொழில் பார்த்தார்கள். ஒருவர் நான், மற்றவர் ஒரு பாகிஸ்தானியப் பெண்மணி.
எமது நாட்டு மக்கள் இயல்பாகவே விருந்தோம்பல் பண்பு கொண்டவர்கள். நானும் அதனைப் பிரயோகித்து, சரளமாக உயர் மட்ட ஆங்கிலத்தைப் பேசி, சிரித்த முகத்துடன் பண்பாக வாடிக்கையாளருடன் தொடர்பை வைத்துக்கொண்டேன். எனது விற்பனைச் சாதனை (Sales Productivity) அதிகரிக்கவும், வாடிக்கையாளரின் நன்மதிப்பு

Page 69
112 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நிர்வாகத்தினருக்குத் தெரிய வந்ததனாலும், ஆண்கள் பகுதியின் சிறந்த விற்பனையாளர்களுக்கான 32 Badges ஐப் பெற்றுக் கொண்டு பெருமிதமடைந்தேன். இருந்தாலும், மேலதிகப் பணம் தேவைப்பட்டது. எனவே, ஆசிரியத் தொழிலைத் தேடினேன். நிரந்தர ஆசிரியர் பதவி வேண்டுமானால் முதுமாணிப் பட்டமும், கல்வித்துறையில் டிப்ளோமாவும் தேவை.
என்னிடம் கலைமாணிப் பட்டம் மாத்திரமே இருந்தது. அது Substitute Teacher (மாற்று ஆசிரியர்) பதவி பெறப்போதுமானதாய் இருந்ததது.
Forest Hills கல்வி மாவட்டத்தில், உயர் கல்வி நிறுவனங்கள் மூன்றில் (High School) இந்தப் பதவியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. Lazarus-Macy's இல் முழு நேர வேலையுடன், ஒய்வு நாட்களில் மாற்று ஆசிரியராகப் பணிபுரிந்தேன். ஆங்கில இலக்கியம் தான், எனது முக்கிய பாடம் என்றாலும் சமூகக்கல்வி, இதழியல், ஒலிபரப்பு, திரைப்படம் போன்ற பாடங்களை நடத்தவும் வாய்ப்புக் கிடைத்தது.
எனக்கு இந்தப் பணி மகிழ்ச்சியைத் தந்தது. மாணவர்களும், மாணவியரும் என்னை நன்கு புரிந்துகொண்டு அமோகமான வரவேற்பைத் தந்தார்கள் என்பது நிஜம். நாளொன்றுக்கு 77 டொலர் சம்பளமாகப் பெற்றேன்.
அமெரிக்காவின் கல்வி முறைகளுக்கிணங்க நான்
பெற்ற அனுபவத்தை 2004 ஜூலை 19ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் சில

கே.எஸ். சிவகுமாரன் 113
கல்விமான்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனவே, அது பற்றி இங்கு எழுத மாட்டேன்.
பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளன. முழு நேர / பகுதி நேர வேலைகள் இப்பொழுது எனக்கில்லை.
gaOLuigi) Cincinnati Enquirer 6T6isp -gyi.5a5 தினசரியில் ஓரிரு கட்டுரைகளை எழுதினேன். அமெரிக்காவிலிருந்துகொண்டே ‘ஈமெயில்’ மூலம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்” நாளிதழின் Artscope அனுபந்தத்தில் (Gleanings) என்ற தலைப்பில் ஒரு கலை இலக்கியப் பத்தியை (Column) 2003ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி முதல் வாராவாரம் புதன்கிழமைகளில் எழுதி வருகிறேன். நீங்கள் படித்துப் பார்க்கவே மாட்டீர்களா?
来
நூற்பய்ன்
Tெனது பார்வைக்கு வந்த சில நூல்களின் பயன்பாட்டை உள்வாங்கி தகவல் திரட்டாக உங்கள் பார்வைக்குத் தருகிறேன். பத்தி எழுத்தின் குறுந்தன்மை கருதி, குறிப்புக்கள் முக்கிய தரவுகளை மாத்திரம் கொண்டவையாய் அமையும். இக்குறிப்புகள் பின்வருபவை ஆகா! ஆய்வு, திறனாய்வு, மதிப்புரை, அறிமுகம். மாறாக பத்திக்குப் பொருத்தமான சில வரிகளைக் கொண்டதாகவே அமையும்.

Page 70
114 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
விசாரம் - மு. பொன்னம்பலம்
நமது சிந்தனை, கருத்தியல்கள் போன்றவற்றினின்று நாம் கடக்கவேண்டிய கட்டுக்கள் எவை என்பதை வெகு சுவாரசியமாக இருவர் உரையாடுவது போன்ற வடிவத்தில், விவாதிக்கத்தக்க சிந்தனைகளைத் தரும் நூல் இது. அண்மைக்கால ஈழத்து இலக்கியப் போக்கில் இது புது வருகை, நூலாசிரியர் மு. பொன்னம்பலம் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, திறனாய்வு போன்ற இலக்கிய வகைகளைப் பயன்படுத்தி முக்கியத்துவம் பெற்ற ஒருவர். மறைந்த மு. தளையசிங்கத்தின் இளவல்.
இது ஒரு தத்துவ விசாரணை நூல் எனவும் கூறலாம். கநா. சுப்ரமணியம் (க.நா.சு) என்ற தமிழ் நாட்டின் மறைந்த எழுத்தாளர் ‘இலக்கிய விசாரம்’ என்ற நூலை எழுதியிருப்பதையும் இங்கு குறிப்பிடலாம். க.நா.சு. என்பவரைத் தெரிந்திராத இளைய வாசகர்களுக்கும் ஒரு தகவல். அவரை ‘விமர்சகர்’ என்றும் சிலர் அழைப்பர். ஆயினும், அவரை ஆக்க இலக்கியப் படைப்பாளி என்றே நான் அழைக்க விரும்புகிறேன்.
அவர் எழுதிய நாவல்களுள் ‘ஒரு நாள்’, ‘வாழ்ந்தவர் கெட்டால்', 'அசுரகணம்' ஆகியன குறிப்பிடத்தக்கவை. ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் அவர் எழுத்துக்கள் பயன் தருபவையாய் அமைந்தன.
மு.பொ. கூறுகிறார்; ”
“விசாரம் - உண்மையைத் தேடிச் சென்ற உபநிஷத கால நசிகேதனிலிருந்து புத்தர், மஹாவீரர், சங்கரர் ஊடாக கிழக்கு நாட்டின் ஆத்மீகப் பண்பாடாக, இயங்கியல்,

கே.எஸ். சிவகுமாரன் 115
பார்வையின் மைய ஊற்றாக இருந்து வந்துள்ளது. கிரேக்க நாட்டின் தத்துவ மேதைகளான சோக்கிரட்டிஸ் - பிளேட்டோ உரையாடல்கள் இவற்றின் தொடர்ச்சியே’
திசை என்ற சிறு வடிவ செய்தித்தாளை, கவிஞர், புனைகதையாளர், பத்தி எழுத்தாளர் அ. யேசுராசாவுடன் சேர்ந்து மு.பொ. கொணர்ந்தவர் என்பதும் நினைவு கூரத்தக்கது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சி பெற்ற மு.பொ. பரந்த, விரிந்த படிப்பும், அனுபவமும் கொண்டவர்.
குறிப்பிட்ட இந்த நூல் (விசாரம்) அவர் எழுதியவற்றுள் மிக முக்கியமான நூல்.
‘தமிழில் தனித்துவமான சிந்தனைக்கு வித்திட்டவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பித்திருக்கும் மு.பொ.வின் இந்த நூலிலே அருமையான 18 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஆய்வாளர்களுக்கும், புதிய சிந்தனையாளர்களுக்கும் பயன்படக்கூடிய கட்டுரைகள் இவை.
இவற்றுள்ளே நான் ஏற்றுக்கொள்ளும் சில சிந்தனைகளை, அங்கும் இங்குமிருந்து பெற்றுத் தருகிறேன்.
‘கடக்கப்பட வேண்டிய கட்டுக்கள்’ என்ற கட்டுரையிலிருந்து.
“இல்லை, அறிவு ரீதியான சிந்தனைகளைவிட, மனிதனோடு காலாகாலமாக ஓடிவரும் அவனது இனம், தேசம், மொழி பற்றிய சிந்தனைகள் சக்தி மிக்கவை. தாய் ஒருத்தியோடு ஒட்டிவரும் தாய்ப்பாசம், தாய்மை என்பவை

Page 71
(116 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
போல் ஒரு மனிதனுக்கு அவனோடு ஒட்டி வரும் இனத்துவ, தேசிய, மொழி உணர்வு சக்தி மிக்கது மட்டுமல்ல, விடுதலை முகமும் கொண்டது.’ (பக்.46)
‘எழுத்தும் வாழ்வும் என்ற கட்டுரையிலிருந்து. “ஒரு படைப்பாளன் என்பவன் படைப்பில் ஈடுபடும்போது தன் அகச் சூழல்களுக்குள் செல்கிறான். அங்கே அவனுக்கு உயர் இலட்சியங்களும் ஒழுக்கக் கோட்பாடுகளின் உண்மையும் தரிசனமாகின்றன. அந்நேரங்களில் அவன், தான் படைத்தளிக்கும் பாத்திரங்களாகவே மாறுகின்றன. ஆனால், படைப்பு முடிந்ததும் அவன் மீண்டும் விவகார உலகால் விழுங்கப்பட்டு, தனது சிருஷ்டியின்போது ஏற்பட்ட தரிசன ஆளுமை யிலிருந்து விடுபடுகிறான். சாதாரண ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக வாழத் தொடங்குகிறான். இதையே 'பிறழ்வுற்ற ஆளுமை' என உளவியலாளர் விளக்குகின்றார்.’ (பக்- 66/67)
“பெண்ணியம்’ என்ற கட்டுரையிலிருந்து.
“அதுதான், ஏற்கெனவே கூறிய கட்டற்ற விடுதலையும், அதன் வழிவரும் கட்டற்ற அன்பும் இந்தப் பார்வையில் பெண்ணின் எந்த அங்கமும் போகப் பொருளாகவும், ஆபாசமாகவும் பார்க்கப்பட மாட்டாது. மாறாக, எல்லாம் அன்பின் உயிர்ப்பாகப் பார்க்கப்படும். அவன் கூறி முடித்தான்.’ (பக்-82)
‘கவிதையின் எதிர்காலம்’ என்ற கட்டுரையிலிருந்து.
“. ஆதிப் பொதுக் கவிதை தோன்றியபோது மனித சிந்தனைக்கு இன்றைய விஞ்ஞான அறிவு இருக்கவில்லை. இன்றோ எல்லா விதிமுறைகளின் (Know How)

கே.எஸ். சிவகுமாரன் 117
அறிதலுடனான உச்ச வளர்ச்சியில் நிற்கிறது. அதனால், இந்தக் கட்டுடைப்பு கவிதைக்கு மட்டும் நேரவில்லை. இன்றுள்ள சகல கலை, இலக்கிய உருவங்களுக்கும் நேர்ந்துள்ளது என்றேற்படுகிறது. அதனால், சிந்தனையின் அடிப்படை மாற்றத்தைக் காட்டி நிற்கும் கலை, இலக்கிய விரிவும் அவற்றின் உருவ மாற்றங்களும் நிகழப் போகின்றன. இதை விளங்கிக்கொள்ள அதற்குரிய கருத்தியலும் தரிசனமும் வேண்டும்.’ (பக்.94).
இவ்வாறு பல சிந்திக்கத்தக்க கருத்தியல்களைத் தெளிவாக நூலாசிரியர் மு.பொ. விளக்குகிறார். படித்துப் பயன்பெறுவோம்.
来
அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்
சிப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி புரியும் வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், முதுமாணிப் பட்டம் பெற்ற எழுத்தாளர், பேச்சாளர், கதாப் பிரசங்கி, கவிஞர், ஒலிபரப்பாளர் என்பவற்றைத் தமிழ் உலகம் நன்கறியும்.
இவருடைய புதிய புத்தகங்களுள் ஒன்று பயன்மிக்கது. கலை, இலக்கிய ஆய்வாக அமையும் இந்நூலின் பெயர் 'அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத்திறன்களும். யாழ் திருநெறித் தமிழிசைச் சங்கம் இதனை வெளியிட்டுள்ளது. பல இந்து தத்துவங்களை வெளிப்படுத்தும் தில்லை நடராஜனின் படமும், பார்வதி என்ற சக்தியின் சித்திரமும் புத்தகத்தின்

Page 72
118 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அட்டையை அலங்கரிக்கின்றன. புகைப்படங்களும் அடங்கிய இந்த 45 பக்க நூலிலே பயன்மிக்க விளக்கக் கட்டுரைகள் 25 அடங்கியுள்ளன. ஆசிரியரின் விளக்கக் கட்டுரைகள் பின்வரும் தலைப்புக்களில் அடங்கியுள்ளன : அக்கர இலக்கணம், கணிதம், வேதம், புராணம், உப புராணங்கள், வியாகரணம், நீதி சாஸ்திரம், சோதிட சாஸ்திரம், தரும சாஸ்திரம், யோக சாஸ்திரம், சகுன சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், நாடகம், நிருத்தம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அசுவபாரீட்சை இரத்தினப் பரீட்சை
அறுபத்து நான்கு கலைகளும் யாவை?
அக்கர இலக்கணம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதி சாஸ்திரம், சோதிட சாஸ்திரம், தரும சாஸ்திரம், யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், சகுன சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுர பாடனம், நாடகம், நிருத்தம், சுத்த பிரமம், வீணை, வேணு ஆகியன அவற்றுட் சில.
க. நாகேஸ்வரனின் முகவுரையிலிருந்து சில பகுதிகள்:
“ விஞ்ஞான மும் கலை யும் சிற் சில அடிப்படைகளிலே வேறுபடுவதுண்டு. ஆய்வு நிலை எடுகோள் நோக்கு விஞ்ஞானத்திற்குரியது. உணர்வு நிலை அனுபவம் பெற வைப்பவை கலைகள். உள்ளம் கலைகளிலீடுபாடுகொள்வதால் மனிதருக்குத் தெய்வீக உணர்வு நலன் வாய்க்கப் பெறுகின்றது.”
பல்திறன் வாய்ந்த நாகேஸ்வரன் 1980 களில் ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், இலங்கை

கே.எஸ். சிவகுமாரன் 119
வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அனுபவம் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்களாவன : கலாசுரபி, தடுத்தாட் கொண்ட புராணம், சிவதத்துவ மலர், சத்தித்துவ மலர், நவநாதம், பக்திமலர்.
ஓய்வு பெற்ற பேராசிரியர்
சி. தில்லைநாதன் எழுதுகிறார்:
"தமிழைப் பொறுத்தவரையில் அறுபத்து நான்கு கலைகள் பற்றிய குறிப்பு முதலில் காணப்படுவது சிலப்பதிகாரத்திலேயே, ‘எண்ணெய்கலையோர் எண்ணான் கிரட்டியிருங்காலை பயின்ற பண்ணியன் மடந்தையர் முதலான சிலப்பதிகார அடிகள் அதனை உறுதிப்படுத்துவனவாகும்.”
அவர்மேலும் கூறுவார் :
“கலை என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் பழங்காலந் தொட்டுக் கல்விப் பொருளைப் பொதுவாகக் குறிக்கும் ஒன்றாகக் கையாளப்படுவதையும் காணலாம்.
‘கலை பயிலும் கருத்தாக’ என்று திருநாவுக்கரசரும் கலையவன் மறையவன்’ என்று திருஞானசம்பந்தரும் ‘கற்றறியேன் கலை ஞானம்’ என்று மாணிக்கவாசகரும், ‘கலைகளும் வேதமும் நீதி நூலும்’ என்று திருமங்கையாழ்வாரும் கூறியுள்ளவற்றை உற்று நோக்குமிடத்து அது விளங்கும்.
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’ என்று சகலகலாவல்லியைத் துதிக்கிறார் கம்பர்.”

Page 73
120 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தொல்காப்பியம் தொடர்பான பல விபரங்களை ஆசிரியர் நாகேஸ்வரன் திரட்டித்தந்து விளக்குவது எனக்குப் பெரும் பயனை அளித்தது.
தமிழ் இலக்கிய மாணவர்களுக்கும் தமிழர் பெருமை பற்றியறிய விரும்பும் அனைவருக்கும் பெரிதும் பல தகவல்களையும் விளக்கங்களையும் தரும் இந்நூல் அடிப்படை ஆய்வுக்குரிய நூலாகப் பயன் தரும்.
நிறைய புகைப்படங்கள், அடிக்குறிப்புகள் எடுத்துக்காட்டுக்கள் கொண்ட இந்நூலிலே அங்குமிங்குமாக நான் பொறுக்கியவற்றுள் ஒரிரண்டை இங்கு தருகிறேன். ஈழத்திலே நாடகத் துறையில் எழுத்து, அரங்கநிலை போன்றவற்றிற்குப் பங்களித்தவர்கள் பெயர்களை நாகேஸ்வரன் இவ்வாறு நினைவுபடுத்துகிறார்: “பேராசிரியர்கள் க.கணதிப்பிள்ளை, சுவாமி விபுலானந்த அடிகள், சு. வித்தியானந்தன், கா. சிவத்தம்பி, க. கைலாசபதி, அ. சண்முகதாஸ், சி. மெளனகுரு, க. சிதம்பரநாதன், குழந்தை சண்முகலிங்கம், காரை சுந்தரம்பிள்ளை, கலாநிதி க. சொக்கலிங்கம், நடிகமணி வி.வி. வைரமுத்து, கலைப்பேரரசு ஏ.டி. பொன்னுத்துரை, டி. அரசு திருமதி கோகிலா மகேந்திரன், கந்தையா பூரீகணேசன், தாளிசியஸ், சட்டத்தரணி தேவராசா, மெட்ராஸ் மெயில், முல்லைமணி, அகளங்கன், பாலேந்திரா, திருமறைக் கலாமன்றத்து வண. சேவியர் அடிகளார், அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, கலாநிதி இ. பலசுந்தரம், அந்தனி ஜீவா, இணுவில் வீரமணி ஐயர்.”
இவற்றை விட வேறு பலர் கொழும்பிலும், ஏனைய இடங்களிலும் பெரும் பங்களிப்பதையும் மறக்கலாகாது.
来源

கே.எஸ். சிவகுமாரன் 121
லெ.முருகபூபதி தொகுத்த ராஜமுநீகாந்தன் நினைவுகள்
லெ. முருகபூபதி தொகுத்த ராஜரீகாந்தன் நினைவுகள்’ என்ற நூலை எடுத்துக் கொள்வோம். அதற்கு முன் இந்த இருவரைப் பற்றியும் சில தகவல்கள். புதிய இளம் வாசகர்கள் இவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் அறிந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். n
ராஜபூரீகாந்தன் மறைந்துபோன அற்புதமான எழுத்தாளரும் நாளிதழாசிரியருமாவார். 'தினகரன்’ நாளிதழின் ஆசிரியராய் சிறிது காலம் பதவி வகித்தவர். தரமான மொழி பெயர்ப்பாளர். இந்த இடத்திலே ஒன்றை நான் தெரிவிக்க வேண்டும். இவர் எழுதிய ‘ஜேன் ஆச்சி’ என்ற கதையை ஆங்கிலத்தில் நான் தந்துள்ளேன். இது 'A Lankan Mosaic GTGisp dista,Ga gLlbouri) pair Gilgil, ராஜபூரீகாந்தனின் பன்முக ஆளுமையின் ஒரு சில குணாதிசயங்களை இந்நூலில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளலாம்.
லெ. முருகபூபதியின் பாட்டனார் சிதம்பர ரகுநாதன் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கக் கூடும். சிதம்பர ரகுநாதன், 'பஞ்சும் பசியும்', 'கன்னிகா போன்ற சிறப்பான நாவல்களை எழுதியதுடன், 'திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற பெயரில் பல நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன். ‘இலக்கியத் திறனாய்வு’ என்ற பயனுள்ள நூலையும் எழுதியிருக்கிறார். தவிரவும், ‘புதுமைப்பித்தன்’, ‘பாரதி” ஆகியோர்

Page 74
122 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தொடர்பாக ஆய்வுநூல்களையும் எழுதியிருக்கிறார். அந்தப் பரம்பரையில் உதித்தவர் லெ. முருகபூபதி.
‘ரஸ்ஞானி’ என்ற பெயரிலே இவர் பத்தி எழுத்துக்களை ‘வீரகேசரி’யில் அந்நாட்களில் எழுதியவர். அன்புள்ளம் கொண்ட இவர் பரந்த மனப்பான்மை கொண்டவர். இன்முகத்துடன் எவருக்கும் மரியாதை செய்பவர். இவரும் ஒர் ஆக்க இலக்கியப் படைப்பாளி. இப்பொழுது இவர் தெளிந்த சிந்தனையாளராகவும் மிளிர்கிறார்.
மறைந்த மூத்த எழுத்தாளர் கே. கணேஷ’க்கு (அற்புதமான ஒர் இலக்கியச் சோலை அவர் இலக்கிய அறிஞர்) இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
நண்பர் முருகபூபதி ‘நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்’ (1995) என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அதனை நான் படிக்கவில்லை.
‘ராஜபூரீகாந்தன் நினைவுகள்’ என்ற நூலில் முருகபூபதி எழுதியிருக்கும் முன்னுரை ஒரு கைகோர்த்த எழுத்தாளனின் இதயபூர்வமான சிறந்த எழுத்து நடைக்கு ஒர் உதாரணம்.
முருகபூபதி மிக மிகச் சுவாரஸ்யமாக, ஒரு செய்தியாளர் போன்றும் செய்தி விபரிப்பாளர் போன்றும் (Commentator) இந்நூலில் எழுதுவது சுவையளிக்கின்றது. இந்தப் பயன்தரும் நூலில் முருகபூபதியைப் பற்றிய பல தகவல்களும் ஆவணமாகின்றன.
இந்தப் புத்தகத்திலே இரு நண்பர்களின் இதயங்களை நாம் உருக்கம் சொரியும் விதத்தில் உணர்ந்து

கே.எஸ். சிவகுமாரன் 123
கொள்கிறோம். இனிய நண்பர் ராஜபூரீகாந்தனின் தன்னலமற்ற வெளிப்பாடுகளை, நெஞ்சை அள்ளும் விதத்தில் நண்பர் முருகபூபதி சில ஈழத்து இலக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் வேளையில் நான் கண்கலங்கினேன்.
இந்த நூலிலே ராஜபூரீகாந்தன் சம்பந்தப்படும் நிழற்படங்கள் சிலவும் அடங்கியுள்ளன. முதல் 70 பக்கங்களிலும் முருகபூபதி நாம் மறந்துவிட்ட பல வரலாற்றுச் செய்திகளைத் தந்து அந்தப் பின்னணியில் ராஜபூரீகாந்தனின் உளப்பண்புகளை எக்ஸ்ரே போலப் பதிவு செய்திருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜபூரீகாந்தனின் கடிதங்கள் அவர்தம் Close - up காட்சிப் படிமங்களைத் தருகின்றன.
来
மறந்து போகாத சில.
ைெத்ெதிய கலாநிதி எம்.கே. முருகானந்தத்தின் ‘மறந்து போகாத சில.’ என்ற திறனாய்வு சார்ந்த கட்டுரைகள் நிரம்பிய நூல் சகல மட்ட வாசகர்களுக்கும் பயனளிக்கக் கூடியது. எம்.கே.எம். அவர்கள் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் மாத்திரமல்ல; பக்கச் சார்பற்ற தலை சிறந்த திறனாய்வாளர்களுள் ஒருவருமாவார்.
பயன்மிக்க மருத்துவ விளக்க நூல்களையும் அவர் தந்திருக்கிறார். கலை இலக்கியங்களில், குறிப்பாகத் திரைப்படத்துறை சம்பந்தமாகவும், அவர் ஈடுபாடு கொண்டு பல கட்டுரைகளைத் தந்திருக்கிறார்.

Page 75
124 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
விஞ்ஞானத்தையும் கலையையும் நிதானமாக அணுகும் அவரது இலகு தமிழ் எழுத்து, பலதரப்பட்ட வாசகர்களுக்கும் பயனளிக்கிறது.
ஈழத்து அண்மைக்கால தமிழ் எழுத்துக்களுள் குறிப்பிட்ட சில எழுத்துக்களை அவர் பரிசீலனை செய்து நமக்குச் செம்மையான முறையில் விளக்கிக் காட்டியிருக்கிறார்.
மறந்து போகாத சில...' என்ற 164 பக்க நூலை எடுத்துக் கொள்ளுங்கள். மீரா பதிப்பகம் வெளியிட்ட இந்த 2004 ஆம் ஆண்டு நூல் அழகாக அச்சிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் முன் பக்கத்தில் விஸ்வலிங்கத்தின் காவடியாட்டம் மரச் சிற்பம்’ இடம் பெறுகிறது. பின் அட்டையை, ரமணியின் போராளிகள் சிலை அலங்கரிக்கிறது. இவை கூட எம்.கே. முருகானந்தத்தின் கலா நெஞ்சத்தைக் காட்டி நிற்பன.
மு. பொன்னம்பலம் கூறுவது போல, நடுநிலையும்
கலைத்துவமும் கைகோர்த்து நிற்கும் விமர்சனங்கள்’ இந் நூலாசிரியரின் பெரும் பங்களிப்பு எனலாம்.
இந்த நூலிலே இடம் பெறும் பொதுக் கட்டுரைகளுடன் சில படைப்பாளிகளின் ஆக்கங்கள் பற்றிய எம்.கே.எம். இன் பகுப்பாய்வு முறையையும் நாம் அறிந்து பயன்பெறக் கூடியதாக இருக்கிறது.
நீர்வை பொன்னையனின் ‘மேடும் பள்ளமும், தெணியானின் ‘காத்திருப்பு’, மு.பொ.வின் ‘சூத்திரர் வருகை’, புலோலியூர் க. சதாசிவத்தின் ‘அக்கா ஏன் அழுகிறாள்?’ புலோலியூர் ஆ.இரத்தின வேலோனின் ‘விடியலுக்கு முன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்

கே.எஸ். சிவகுமாரன் 125
தாயும் சேயும் க. நடனசபாபதியின் பருவமானவர்கள்’ ஆகிய ஆக்க இலக்கியங்கள் தொடர்பான கணிப்பு, ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும்.
எம்.கே.எம். பரிசீலிக்கும் ஏனைய நூல்கள் தகவம் பரிசுச் சிறுகதைகள்', கே.எஸ். சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள், பிரெடிக் டக்ளஸின் (தமிழில் இரா. நடராஜன்) ’கறுப்பின அடிமையின் சுய வரலாறு’ ஆகியனவாகும்.
திரைப்படத் திறனாய்வாக நூலாசிரியர் The Legend of Bhagat Singh', 'My Wife is an Actress'. 'Mr. and Mrs. Iyer' "நதிக்கரையினிலே’ ஆகிய படங்கள் தொடர்பான பார்வையைத் தருகிறார்.
இவற்றைவிட ஓவியம் / சிற்பம் தொடர்பாக மூன்று கட்டுரைகளும், மேடை சம்பந்தமான ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வாளர்களுக்கு இந் நூல், அறிவுப் பசியை பவ்வியமான முறையில் தீர்த்து வைக்கும்.
இனி, இந்நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம். இப்பகுதிகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் எனக்கு உடன்பாடானவையாக இருப்பதுடன் நூலாசிரியரின் பண்பட்ட எழுத்து நடைக்கும் சான்றாக விளங்குகின்றன.
இன்றைய விமர்சனங்கள் பற்றிய “சில உரத்த சிந்தனைகள்’ என்ற கட்டுரையில் உள்ள அத்தனை பகுதிகளும் யதார்த்தபூர்வமானவை.
105 ஆம் பக்கத்தில் எழுதுகிறார் : “பத்தி எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும்? புதியன பற்றி எழுத வேண்டும். பல்துறை பற்றி எழுத

Page 76
126 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
வேண்டும். எழுத்தில் கவர்ச்சியும், வாசகர்களோடு அந்நியோன்யமான தொடர்பு கொண்டிருப்பது போன்று நேரடியாகப் பேச வேண்டும். அவர்களை வாசிக்க, கேட்க, பார்க்கத் தூண்ட வேண்டும்.
அதே நேரத்தில் இது புத்தகம், சினிமா, நாடகம், பத்திரிகை போன்றவற்றை விற்பனையாக்கும் மலிவான தந்திரமாக இருக்கவும் கூடாது. எல்லா மட்டத்தினருக்கும் புரியும்படியான தனித்துவப் பண்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.”
பக்கம் 112இல் இவர் கூறுகிறார்: “எந்தவொரு கலைப்படைப்பும் சமூக நோக்கு உள்ளதாக இருக்க வேண்டும். அப்படைப்பை மெருகூட்டும் அழகியல் அம்சம் கைகோர்த்து வரவேண்டும். இவற்றிற்கு மேலாக அந்தக் கலைவடிவத்தின் உயிர் நாடியான தனித்துவப் பண்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.”
“வெறுமனே பொழுதுபோக்கிற்காகவும், உள்ளக் கிளர்ச்சிக்காகவும் வியாபார நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டும் தயாரிக்கப்படும் படைப்புகள் அபத்தமானவை. விமர்சகர்களால் கண்டிக்கத் தக்கன. மக்களால் ஒரம் கட்டப்பட வேண்டியன.”
LuфdLD 20 :
“குறியீடுகளை இடமறிந்து தெளிவான நோக்கோடு பயன்படுத்துவது படைப்பாளியின் ஆற்றலில் தங்கியுள்ளது. குறியீடுகள் கவிதைகளில் மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல. சிறுகதைகளிலும் அவற்றைக் கலை நயத்தோடும், அறிவுபூர்வமாவும் பயன்படுத்துவது படைப்பாளியின் ஆற்றலில் தங்கியுள்ளது. குறியீடுகளின்

கே.எஸ். சிவகுமாரன் 127
சரியான பிரயோகம், படைப்பாளி தான் சொல்ல வருபவற்றை மறைமுகமாக வாசனுக்கு உணர்த்துவதுடன் அப்படைப்புக்கு இலக்கியச் செழுமையையும் கொடுக்கின்றன.”
பக்கம் 23 :
“படைப்பாளிகள் பற்றிய தனித்தனியான ஆழமான விமர்சனங்கள் முன் வைக்கப்படாததால், எழுத்தாளர்கள் தமது படைப்பாற்றல் பற்றிய தெளிவான கணக்கீடுகளை அறிய வாய்ப்பின்றி விமர்சகர்கள் முக்கியத்துவப்படுத்திய சமூக, அரசியல், வரலாற்றுச்சூழலுக்கு அமைவாகக் கற்பனை உலகத்திலிருந்து வறட்டுத்தனமாக எழுதித் தம்மையும் விமர்சகர்களையும் மட்டுமே திருப்திப்படுத்தினார்களே அன்றித் தம்மைச் செழுமைப்படுத்தவோ, வாசகர்களின் உணர்வுத்திறனை விருத்தி செய்யவோ முனையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆயினும், கவிதைத் துறை எப்படியோ தப்பிப் பிழைத்து விட்டது.”
LusigsLib 33:
“எது எப்படி இருந்தபோதும், கவிதை என்றால் அதில் கவித்துவம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கவித்துவம் என்றால் என்ன? கவித்துவம் என்பது எந்தக் கட்டுக்களுக்குள்ளும் சிறைப்படாத அற்புத அனுபவம். அது வார்த்தைகளால் வரையறுத்துச் சொல்ல முடியாத, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் வாசகனின் அக மென்னுமுணர்வில் எதையாவது எப்படியாவது தொட்டுவிட வேண்டிய அனுபவப் பகிர்வாக அமைய வேண்டும். மலருக்கு மணம் போல, கவிதைக்குக் கவித்துவம் இருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்தெடுக்க முடியாது.”

Page 77
128 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இவ்வாறு நூல் முழுவதும் பெறுமதியான கருத்துக்களைத் தெரிவிக்கும் எம்.கே. முருகானந்தன் ஒரு சிறந்த கலைஞன் மாத்திரமல்ல, தலை சிறந்த திறனாய்வாளன் என்பதனையும் இங்கு நிரூபித்திருக்கிறார்.
来
சூரன் கதை
இயற்கை அழிவுகள், மனித அழிவுகள், போதியளவு முக்கியஸ்தர்கள் தொடர்பான பதிவுகள் இல்லாமை போன்ற காரணங்களினாலும் ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுச் சாதனைச் செய்திகள் பதிவுறாமலும், கிடைக்காமலும் போய் விடுகின்றன.
இந்தப் பின்னணியிலேயே இப்போதெல்லாம் அத்தகைய பதிவுகளை எழுத்தாளர்கள் தாமாகவும் பிறரைக் கொண்டும் பதிவுகள்’ என்ற முறையில் சிலவற்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்னைப் பொறுத்தவரையில் இத்தகைய நூல்களே இப்பொழுது அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. நூல்களாக மாத்திரமன்றி இணைய தளங்களிலும் இவை அவசியம் இடம் பெற வேண்டும்.
சிலம்பு பதிப்பகம் வெளியிட்ட 'சூரன் சுயசரிதை' என்ற நூலை அதன் பயன்பாடு கருதி அறிந்து கொள்வோம். இந்நூலின் பதிப்பாசிரியர் ராஜ பூரீகாந்தன் என்ற மறைந்த எழுத்தாளரும் இதழாசிரியருமாவார் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

கே.எஸ். சிவகுமாரன் 129
பதிப்பாசிரியர் பற்றிய அவதானிப்பு கவனத்துக்குரியது. தகைசார் ஓய்வு நிலைத் தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி, ராஜ பூரீகாந்தன் தொடர்பாக இவ்வாறு பதிவு செய்கிறார்:
“இந்நூற் பொருளின் சமூகவியல், வரலாற்று அம்சங்களிலும், அடிப்படையிலும், திரு. சூரன் அவர்களின் வாழ்க்கைப் பணிகள் பற்றியும் ஆழ்ந்த, அகன்ற புலமை ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.’
“தான் பிறந்து முகிழ்ந்த மண்ணிலே தனது காலடிகளை வலுவுடன் ஊன்றி அவர் தன் வளர்நிலையில் தேசிய, சர்வதேசிய ஒலிகளுடனும், காற்றுடனும் இணைத்துக் கொள்ளும் வல்லமையினையும் பெற்றிருந்தார். அந்த இணைவுகளின் சிறப்பு அவர் தொடர்ந்தும் கலைத் தேடல்களும் புலமைத் தேடல்களும் மிக்க பெளவியமான மனிதராக விளங்கினார்.”
காத்தார் சூரன் (1881 - 1956) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் தமது சுயசரிதையை அரை நூற்றாண்டுக்கு முன்னர் எழுதியிருந்தார். அது பரவலாக அறியப்படவில்லை. புதிய பரம்பரையினரோ முக்கியமானவர்கள் பற்றி ஒன்றுமே யறிந்திராத நிலையிலிருந்து வருவதும் பரிதாபத்துக்குரியதே.
இந்தப் பின்னணியில் ராஜ பூரீகாந்தன் இச் சுயசரிதையை ஏன் பதிப்பித்தார் என்பது புரிந்து கொள்ளத் தக்கதே. பதிப்பாசிரியரே கூறுகிறார்:
“இந்நூல் அரை நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு சுயசரிதை மட்டுமல்ல, சமூக விஞ்ஞானிகளுக்கும், மொழியியல் ஆய்வாளர்களுக்கும்,

Page 78
130 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சைவ மதவாதிகளுக்கும், வேர்களைத் தேடியறியத் துடிக்கும் இளந் தலைமுறையினருக்கும் மிகுந்த பயனுள்ள ஆவணமும் ஆகும்.
இச்சரிதவியலை நூலாகப் பதிப்பதன் நோக்கம் இவை மட்டுமேயாகும்.”
பதிப்புரையில் பலதரப்பட்ட தகவல்களை ராஜ பூீரீகாந்தன் தருகிறார். முன்னுரையில் கா. சிவத்தம்பி ஓர் ஆய்வையே தந்துள்ளார். படித்துப் பயன் பெற வேண்டிய தரவுகள் இவ்விரண்டும் ஆகும்.
சிவத்தம்பி அவர்களின் கூற்று ஒன்று இங்கு
கவனிக்கத்தக்கது. அது வருமாறு :
“இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது சூரனை நமது மத இலக்கிய பாரம்பரியத்தில் அதிகம் பேசப்படுபவரான நந்தனாருடன் ஒப்புமை காணத்தக்க ஒருவராகப் பார்க்கவே பலர் விரும்புவர். ஆனால், இவரது சேவைக்கான உரிய மதிப்பை வழங்க வேண்டுமெனில் இவரை ஆறுமுக நாவலரது சேவையின் விஸ்வதரிப்பாகவே கொள்ளல் வேண்டும்.”
சூரன் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சமூக, வரலாறு ஆகியன தொடர்பான வியாக்கியானங்கள் 31 முதல் 148 வரையுமுள்ள பக்கங்களில் தரப்படுகின்றன. இலகுவான முறையில் பலதரப்பட்ட செய்திகளைத் தமது சுயசரிதையில் ஆசிரியர் தருகிறார்.
அதிலிருந்து சில பகுதிகள் :
Luislib 55 :

கே.எஸ். சிவகுமாரன் 131
“நெல்லியடி வயிரவக் கோயிலடிச் சந்தியிலிருந்து வதிரி வேதக் கோயிலுக்கு விஸ்ப்பாண்டவரையும் இரு குருமாரையும் ஏற்றிச் செல்ல ஒரு இரதம் என்னால் செய்யப்பட்டது. அதன் வடிவம் சகடை போன்றது.”
“நாலு சில்லு, இரு சில்லில் முடக்குச் சாவி, அந்த முடக்குச் சாவிகளால் தான் இரதத்தை இயக்குவது. குறித்த சகடை போன்ற இரதத்துக்கு மேற்பாப்பலகை பரவி அதற்கு மேல் மூன்று கதிரைகள் வைத்து அக்கதிரைகளிலேயே மேற்படி மூவரும் அமர்ந்திருக்க அவர்களுக்கு மேல் ஓர் வட்டக் குடை போலப் பந்தல், இரதம் இயங்கும் பொழுது சுழன்றபடி நிற்கும் சகடை இரதத்துக்குள்ளே மூன்று பேர் முடக்குச் சாவிகளால் சில்லை உருட்ட இயக்குபவர் இருவர் மேலே சுழலும் குடைப்பந்தரின் அச்சுக் கம்பியை இறக்க ஒருவர் இரதத்தை இயங்கச் செய்வர்.
*மூவரும் அங்கிருப்பதை ஒருவரும் காண முடியாது. இரதம் மேள வாத்தியத்துடன் ஆமை, அட்டை வேகத்தில் நகர்ந்து செல்லத் தெருக்கான்களுக்குச் செல்லாமலும், மூட்டுக்களில் அதட்டித் திருப்பி விடவுமாக முன்னுக்கு நான் ஒரு கம்பிற் பிடித்தபடி சென்றேன். இந்த இரதம் சென்ற காட்சி அக்காலம் (1916 இல்) சனங்களுக்குப் பெரிய அதிசயமும் அற்புதமாகவிருந்தது.”
கதை சொல்வது போலவும், பேச்சுத் தமிழிலும், நிறுத்தக் குறியீடுகள் இன்றியும் சுயசரிதையாளர் எழுதுவது படிப்பவருக்குச் சுவையளிக்கும்.
இன்னொரு பகுதி:
ւս*Ց5ւհ 65 :

Page 79
132 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
எங்கள் பாடசாலையைப் பற்றிப் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென்று விரும்பி, (அப்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சைவப் புதினப் பத்திரிகை ‘இந்து சாதனம்’ ஒன்றுதான்.) அந்தப் பத்திரிகையில் எங்கள் பாடசாலை விஷயம் போடுவார்களோ என்பது எங்களுக்குச் சந்தேகமாயிருந்தது. ஏனெனில் அவர்கள் வைதீக சைவர். அக்கால நிலைமை எங்களுக்கும் அவர்களுக்கும் யாழ்ப்பாணமும் நெல்லியடியும் போல் வெகு தூரம். இங்குள்ள சைவக் குருமாருக்கு ஒழுங்கை தெருக்களைக் கடந்து காணிகளில் நாங்கள் புகுந்து நின்ற காலம்.”
சூரன் பயன்படுத்திய ஓர் உவமையை இங்கு குறிப்பிடலாம். அது இது தான்: ‘மலை வயிறு நொந்து சுண்டெலிக் குஞ்சை ஈன்றவாறான பழங்கதை போல (பக்கம் 144).
来
தமிழினி மஞ்சரி ஒக்டோபர் 2004
)ெண்டனிலிருந்து வெளியாகும் தமிழினி மஞ்சரி இதழ் - 1 பார்வைக்குக் கிடைத்தது. வ.மா. குலேந்திரன் என்பவர் இதன் ஆசிரியர். இந்த மஞ்சரியுடன் தொடர்பு கொண்டவர்களாகப் பல எழுத்தாளர்களின் பெயர்களைக் கண்டேன். அவர்களுள் எனக்குத் தெரிந்த பெயர்கள்: கே. விஜயன், கல்லாறு சதீஸ், ஈ.கே. ராஜகோபால், என். லோகேந்திரலிங்கம், லேனா தமிழ்வாணன், மானா மக்கீன்
அறுபத்து நான்கு பக்கங்களைக் கொண்ட முதலாவது இதழில் நான் படித்துப் பயன் பெற்றவை பின் வரும் ஆக்கங்கள்:

கே.எஸ். சிவகுமாரன் 133
‘தமிழ் உலகின் முதல் வரலாற்று நாவல் "மோகனாங்கி (இ.சி. சுந்தரலிங்கம்)
தாவீது அடிகள்’ (அருள் மா. இராசேந்திரன்) ‘சக்தி ஒரு அதிசயம் (ஒம் பூர்ணானந்த வித்தியாகர்) இவற்றைவிட வேறு பல ஆக்கங்களும் உள்ளன. அவரவர் விருப்புக்கு ஏற்றவையாய் அவை அமையக் கூடும். நான் பயன் பெற்ற கட்டுரைகளிலிருந்து கிரகித்த சில தகவல்களை உங்கள் வாசிப்பிற்காக இங்கு தருகிறேன்.
‘மோகனாங்கி. இது 1896 இல் வெளியாகியது. இதன் சுருக்கம் 1919 இல் ‘சொக்கநாத நாயக்கர்’ என்ற பெயரில் வெளியாகியது. இந்நாவலை எழுதியவர் திருகோணமலையிற் பிறந்த தி.த. சரவணமுத்துப் பிள்ளை. இந்த நாவலின் பின்னணி 17ஆம் நூற்றாண்டில் திருச்சிராப் பள்ளியிலிருந்து ஆட்சி புரிந்த சொக்கநாத நாயக்கரின் (1659 - 1673) ஆட்சிக் காலம். காதல் / போர் இக்கதையின் முக்கிய அம்சங்கள். தமிழில் எழுந்த முதலாவது வரலாற்று நாவல் இது எனப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் கூறுகிறார். இந்நாவலை சோ. சிவபாத சுந்தரம், பெ.கோ. சுந்தர ராஜன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
கட்டுரையாளர் இ.சி. சுந்தரலிங்கம் இவ்வாறு எழுதுகிறார்: ஈழத்தின் கடைசிச் சுதந்திர இராச்சியமாகத் திகழ்ந்த
கண்டி அரசு, நாயக்க வம்ச மன்னர்களாலேயே அரசாளப்பட்டது. இவர்கள் தமிழுடனும், தமிழர்களுடனும் தொடர்பு கொண்டவர்கள். கடைசி மன்னன் பூரீ விக்கிரம ராஜ சிங்கன் (இவனது சொந்தப் பெயர் கண்ணுச்சாமி) சிங்கள இராச்சிய வெறியர்களின் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டவன். (ஆண்டு 1818)

Page 80
134 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இந்த நாவலில் காணப்படும் ஈழத்துப் பேச்சு வழக்குகளாவன: “வலோத்காரம், வீட்டுக்குக் கிட்ட, சொன்னனான், கன நாளாச்சு, வரக்காட்டிறன் பிள்ளை, சீ அறுக்கு, மெத்த, நேர சென்று, விசர்’
தமிழினி மஞ்சரி ஒக்டோபர் 2004இல் தாவீது அடிகள் பற்றிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அடுத்து, அதனைப் பார்ப்போம்.
来
தாவீது அழகள்
திமது 74 ஆவது வயதில் உயிர் நீத்த தாவீது அடிகளின் முழுப்பெயர் வண. பிதா, ஹயசிந்து சிங்கராயர் டேவிட். இவருக்கு 35 மொழிகளில் ஆழ்ந்த புலமை, 70 மொழிகளில் பரிச்சயம் இருந்தன. இவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் சீடர் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை இவரே ஆக்கினார்.
லண்டன் பல்கலைக்கழக இளங்கலைமாமணிப் பட்டம் பெற்ற இவர் வரலாற்றுத் துறையைச் சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தார். தனிநாயக அடிகள் தாவீது அடிகளின் ஆதர்ஸ் அறிஞர்.
பல வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மொழித்துறை ஆய்வை மேற்கொண்டு சிறப்புப் பட்டங்களைத் தாவீது அடிகள் பெற்றிருந்தார்.
தனிநாயக அடிகள் வெளியிட்ட ஆங்கில மொழி ஏடான Tamil Culture என்ற ஏட்டில் 12 கட்டுரைகளைத்

கே.எஸ். சிவகுமாரன் 135
தாவீது அடிகள் எழுதியுள்ளார். தாவீது அடிகளார் பற்றிய கட்டுரையை எழுதியவர் அருள் எம். இராஜேந்திரன். அடக்கமாக இருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பயனுள்ள கட்டுரை / கடிதம் போன்றவற்றை எழுதி வருவது பலருக்கும் தெரியாது. இவர் ஒரு நாடக ஆசிரியரும் கூட
来 சத்தியசாய் பாபா
G
LTரிடம் அன்பைச் செலுத்துகின்றோமோ அவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புதல். அன்பு செலுத்தப்படுபவரை முழுமையாக (நிறை குறைகளோடு) ஏற்றுக்கொள்ளல். அன்பிற்குரியவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்தல், அன்பு செய்வது என்பது தேவையானதை நம்மால் முடிந்த அளவு தருவது; பெறுவதில் நாட்டம் கொள்வது அல்ல.
இம்மூன்று கட்டுரைகளிலும் பல தகவல்களை நான் பெற்றுக் கொண்டேன். நீங்களும் பெறக்கூடும். இந்த இதழிலே ஈழத்தைச் சேர்ந்தவர்களும், பிற நாடுகளில் பங்களிப்பைச் செய்பவர்களுமான சிலர் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் ஈழத்தில் வாழும் இருவர் பற்றியும் ‘தமிழினி’ பார்வை அமைந்துள்ளது. பி.எச் அப்துல் ஹமீத் Highly admirable Broadcaster என்பது ஒரு தலைப்பு. இது ஆங்கிலத்தில் Highly admired Broadcaster 67667 goggigi) Galatio7GLDáiaxalit? அதேபோல, கணிப்பான் என்பது Calculator ஐயும் கணினி என்பது Computer ஐயும் குறிக்கும் என்பதை நம்மில் சிலர் அறிந்திராதது போல, தமிழினி’யும் இருக்க வேண்டுமா? மற்றையவர் நாடறிந்த சிறப்பான கவிஞர்களுள் ஒருவர்.

Page 81
136 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பெயர் புதுவை இரத்தினதுரை. இவரைப் பற்றிய தகவல்கள் புத்தூரில் இருந்ததால் புதுவை இரத்தினதுரை என அறிமுகமானவர். 40 ஆண்டுகளாகக் கவிதை எழுதுகிறார். இவருடைய புனை பெயர்களுள் சில வரத பாக்கியான், ரஞ்சினி ரத்தினம், ஈழத்தின் கலை, கலாசாரப் பண்பாட்டுப் பொறுப்பாளர்.
米
முன்னர் இலங்கையில் முக்கிய கலைஞர்களாகத் திகழ்ந்து தமது ஆற்றலைப் பிற நாடுகளிலும் நிகழ்த்திக் காட்டுபவர்களுள் விமல் சொக்கநாதன், லோகன் லோகேந்திரலிங்கம், க. பாலேந்திரா ஆகியோரும் அடங்குவர். V,
விமல் சொக்கநாதன் ஒலிபரப்புத் துறையில் 50 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். எழுத்து, சட்டம், சினிமா, நாடகம் ஆகியவற்றில் ஈடுபாடு, அத்துடன் BBC தமிழோசை ஒலிபரப்பு அனுபவமும் உண்டு. லோகேந்திரலிங்கம் கனடா ‘உதயன் ஏட்டின் ஆசிரியர், கவிஞர். பல விருதுகள் பெற்றவர்.
来
பாலேந்திரா கால் நூற்றாண்டாக "அவைக்காற்றுக் கழகம்’ மூலம் பல தரமான நாடகங்களை இயக்கி வருகின்றார். பொறியியலாளர். இவர் துணைவியாரும் இவரது நாடக முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். மேற்சொன்ன நண்பர்களை நான் அறிவேன். நான் அறிந்திராத ஒருவர் செந்தி செல்லையா. 'தமிழன் வழிகாட்டி கைந்நூலை வெளியிடுபவர். வட அமெரிக்காவின் மிகப் பெரிய தமிழ் வர்த்தகக்

கே.எஸ். சிவகுமாரன் 137
கண்காட்சியை நடத்துபவர். ‘பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம்’ என்ற தலைப்பில் ஈழத்தின் 55 ஊர்களின் வரலாற்றுத் தொகுப்பினை வெளியிட்டவர். கனடிய அஞ்சல் தலையைச் சில பிரமுகர்களுக்காக வெளியிட்டவர். தமிழினி வ.மா. குலேந்திரன் இச்சஞ்சிகை மூலமும், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின்நூல்களை வெளியிடுவதன் மூலமும் இப்பொழுது இலங்கையில் அறிமுகமாகி வருகிறார்.
来源
குப்பிளான் ஐ. சண்முகன் : அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புக்கள்
இந்த நாட்டின் அழகியல் சார்ந்த சிறுகதைகள் எழுதியவர்களுள் குப்பிளான் சண்முகமும், எம்.எல்.எம். மன்சூரும் குறிப்பிடத்தகுந்தவர்களுள் இருவர் எனலாம். இருவரும் அரிதாகவே ஆக்க இலக்கியங்களில் இப்போது ஈடுபட்டுள்ளனர்.
குப்பிளான் சண்முகன் பத்தி எழுத்து போன்றவற்றையும் எழுதுவார். அவரின் எழுத்துக்கள் சிலவற்றில் தேர்ந்தெடுத்த சில கட்டுரைகள், அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புக்கள் என்ற நூலாக வெளிவந்தது. அதனை இப்பொழுதுதான் படிக்க நேர்ந்தது. பயனுள்ள நூல் எனக் கூறலாம். ஏனெனில் பல எழுத்தாளர்கள் பற்றிய தகவற் பின்னணியுடன் கூடிய திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஈழத்து தமிழ் இலக்கியம் தொடர்பாக அறிய விரும்பும் இளைய பரம்பரையினருக்கு இது பெரிதும் உதவும் என நினைக்கிறேன்.

Page 82
38 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இப்பொழுதெல்லாம் நாம் மறந்தே போய்விட்ட நெல்லை பேரனின் நினைவாக இந்த நூலை சண்முகன் வெளியிட்டிருக்கிறார். \
“இனவெறிப் போரின் வக்கிரங்களுக்குப் பலியான மனிதாபிமானி நெல்லை பேரன் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் நினைவாக என்று கூறியுமிருக்கிறார்” சண்முகன்.
இந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எஸ். ரஞ்சகுமார் (முன்னணி புதுப்புனைவாக்க எழுத்தாளரும் திறனாய்வாளருமாவார்) கூறுகிறார்:
“குப்பிளான் ஐ. சண்முகனின் படைப்புகளிலும், லா.ச.ரா., கு.ப.ரா., தி. ஜானகிராமன் ஆகியோரின் படைப்புகளிலும் நாம் காணும் மென்மை, கம்பீரம், மோகனமான தமிழ் நடை, பீறிடும் அன்பு, நாசுக்கான கேலி போன்றவற்றைக் கண்டு நிறைவும் மகிழ்வும் எய்தலாம்.”
குப்பிளான் ஐ. சண்முகன் கூறுவது போல இந்நூல் ஏன் முக்கியமானதென்றால் அவருடைய கூற்றையே கேளுங்கள்.
“ஏறத்தாழ 40 வருடகால இலங்கைத் தமிழிலக்கியச் சூழலின் ஒர் எழுந்தமானமான சூழலைப் பதிவாக இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுமெனவே நினைக்கிறேன். அத்துடன் வெளிப்படையான நிகழ்வுகளின் பின்னாலிருக்கும் இருண்ட பகுதிகளின் மீதும் இந்நூல் ஒளிப் பாய்ச்சும் எனவும் கருதுகிறேன். ஆரம்பத்தில் ஆரோக்கியக் குறிகாட்டிப் பின் ஆழிந்து போனவர்களையும் இந்நூல் இனம்காட்டும் எனவும் நம்புகிறேன்.”

கே.எஸ். சிவகுமாரன் 139
சரி, இவர் அறிமுகம் செய்பவர்கள் யார்?
சாந்தன், பேரன், ஜனகன், ராஜேஸ் கண்ணன், குந்தவை, ஜானகிராமன் ஆகியோராவர்.
அத்துடன் இங்கிருந்து 12 சிறுகதைகள் என்ற தலைப்பிலும் எழுதுகிறார். அறிமுகங்களுடன் நின்றுவிடாது "விமர்சனமும் செய்கிறார் ஆசிரியர்.
இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதாவது, நான் ஆங்கிலத்தில் எழுதும் திறனாய்வுகளை வெறுமனே அறிமுகம் செய்பவர் என்றே ஒரு சில தமிழ் எழுத்தாளர்கள் கூறும் பொழுது எனக்குப் பெருந்துக்கம் ஏற்படுகிறது. இது ஏனெனில் அறிமுகத்திற்கும் திறனாய்வுக்குமுள்ள வித்தியாசங்களை நம்மவர் அதிகம் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம்தான். போகட்டும்.
குப்பிளான் சண்முகன் பின்வருபவர்களின் ஆக்கங்களைத் திறனாய்வு சார்ந்த பத்திகளாக எழுதியிருக்கிறார்.
செங்கையாழியான், சிற்பி, லோகேந்திரலிங்கம், யோகேஸ்வரன், செம்பியன் செல்வன், பெனடிக்ட் பாலன், பார்த்திபன், தெணியான், அ. யேசுராசா.
திரைப்படம், நாடகம், ஒவியம் ஆகிய துறைகளிலும் சண்முகன் நாட்டங்காட்டியுள்ளார். இவர் பார்வைக்கு உட்பட்டவை:
சித்தார்த்த, புதிய காற்று, கடலிலிருந்து வீடு, இரண்டு பிரான்சியத் திரைப்படங்கள், அழகிய மூன்று

Page 83
140 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கவிதை நாடகங்கள், ஜெயலட்சுமி சத்தியேத்திராவின் ஒவியம், பருத்தித் துறை ஒவியக் கண்காட்சி ஆகியனவாகும்.
இந்த நூலின் இறுதிப் பகுதி, குறிப்புக்கள். இதில் ‘அலை’ என்ற அருமையான சிற்றேட்டில் (அ. யேசுராசாவின் பங்களிப்பு இது. இப்போது நின்றுவிட்டது. ‘தெரிதல்' என்ற மற்றொரு சிறப்பான சிற்றேட்டை யேசுராசா இப்போது கொண்டு வருகிறார். இதனையும் இளைய பரம்பரையினர் தேடிப் பார்க்க வேண்டும்) எழுதியவையும் ஏனையவும் அடங்கியுள்ளன.
இனி இச்சிறு கட்டுரைகளில் எனக்குடன்பாடான கருத்துக்கள் பல இருந்தாலும், சிலவற்றுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.
ஈழத்துப் பெண் எழுத்தாளர்களுள் குந்தவை, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பவானி ஆர்வாப்பிள்ளை, கவிதா (பிரதியமைச்சர் இஸ்ஸதீனின் துணைவியார்) ஆகியோர் முக்கியமானவர்கள் என்று 1996ல் சண்முகன் எழுதியிருக்கிறார். நிரம்பச்சரி. வேறு சில பெண் எழுத்தாளர்களும் தத்தம் அணுகுமுறைகள் வழியாகத் தனித்துவம் காட்டியிருக்கிறார்கள். தகவல் தேடுபவர்களின் நலனுக்காக நான் படித்த பெண் எழுத்தாளர்கள் சிலர்:
கோகிலா மகேந்திரன், குறமகள், பத்மா சோமகந்தன், மண்டூர் அசோகா, யோகா பாலச்சந்திரன், அன்னலட்சுமி ராஜதுரை, தாமரைச்செல்வி, கமலினி செல்வராசன் போன்றோர் ஒரு சிலரே. புதிதாய்ப் பலர் எழுதுகிறார்கள். அவர்களுடைய தொகுப்புகளை நான் இன்னமும் பார்க்கவில்லை. யோகேஸ்வரி கணேசலிங்கம், திவ்வியாராணி சிதம்பரப் பிள்ளை அவர்களுள் இருவர்.

கே.எஸ். சிவகுமாரன் 141
குப்பிளான் (59) ஐ. சண்முகம் எழுத்துக்களின் இளமையின் வெளிப்பாடு கவின் சொற்களால் ஆக்கம் பெற்று, இலேசான முறையில் க்லைத்தரம்' என்றால் என்ன என்பதைச் சொல்லாமற் சொல்லி விளக்குகிறது.
நெஞ்சில் நிலைத்து நிற்கும் சில இதழ்கள்
நமது முதுநிலை எழுத்தாளர் டொமினிக் ஜீவா முறையான கல்வி பயிலாத ஒருவராயினும், பல்கலைக்கழக மட்ட அறிஞர்களையும் விஞ்சிவிடும் அளவிற்குப் பட்ட அறிவும் பட்டனுபவமும் பெற்ற ஒரு சிந்தனையாளர் என்பதையும், தீவிர இலக்கியப் பற்றுக் கொண்ட மனித நேயர் என்பதையும் நாமறிவோம்.
பல சிரமங்களுக்கும் மத்தியில் மாதாந்தம் 'மல்லிகை என்ற இலக்கிய ஏட்டைத் தமது ஆர்வம் காரணமாக வெளிக்கொண்டு வரும் பிரயாசையாளர். ஆவணப் பதிவுகளாக அனைத்து ஈழத்துப் படைப்புகளும் அமைந்துவிட வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருபவர். அவர் இது வரை தனதும் பிறரினதுமாகப் பற்பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். அவற்றுள் ஒன்று ‘நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்’ இதனைத் தாமே தொகுத்திருக்கிறார்.
3. பல்கலைக்கழக மட்ட ஆய்வு மாணவர்களுக்குப்
பெரிதும் பயன்படக் கூடியது.
இந்நூலின் பதிப்புரையுடன் ஆசிரியரின் நிழற்படம் (ஆரம்ப காலப்படம்) இடம்பெற்றுள்ளது. அதன் கீழே

Page 84
142 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அவர் உபயோகித்த Bicycleன் பெயர் ஹொட்டன் ஹோல்' என்றிருக்கிறது. இது பிழையான உச்சரிப்பு. அந்நாட்களில் அதிவேகமாக ஒடிய ஒரு பந்தயக் குதிரையின் பெயர் ‘கொட்டின் ஹோல்’ (Cotton Hall) என்பதை மனதிற்கொள்க.
பல்கலைக்கழக மட்டங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் ஆய்வாளர்களின் பங்கு குறைவாக இருக்கும் இந்நாட்களில், தெளிவத்தை ஜோசப், “செங்கை ஆழியான்’ என்ற க. குணராசா போன்ற ஒரிருவர் நம்மிடையே ஆர்ப்பாட்டமின்றிப் பல தகவல்களைத் திரட்டித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டுரையை எவ்வாறு சுவாரஸ்யமாக இலகு தமிழில் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு முதுநிலை எழுத்தாளர் மதிப்புக்குரிய வரதர் எழுதிய கட்டுரை. அவருடைய ஆர்வத்தினால் வெளிவந்த 'மறுமலர்ச்சி’ இதழ் (1946 - 1948) பற்றிச் சுவையாகப் பல தரவுகளை அவர் தருகிறார். மறைந்த அறிஞர், எழுத்தாளர் 'சொக்கன்’ இந்த இதழ் தொடர்பாக தினகரனில் (1980) எழுதிய கட்டுரைத் தொடரும் நினைவுறுத்தப்படுகிறது.
‘ஈழகேசரி’யின் இலக்கியம் தொடர்பான பங்களிப்பைச் செங்கை ஆழியான்’ ஆய்வுக் கட்டுரை ரீதியில் அருமையாகத் தருகிறார். ‘ஈழகேசரி’ (1930-1958) ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதோர் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை ஆழமான வாசகர் அறிவர்.
ஆய்வாளர், பேராசிரியர் செ. யோகராசா அண்மைக் காலங்களில் கிழக்கிலங்கைக் கலை, இலக்கிய முயற்சிகள்

கே.எஸ். சிவகுமாரன் 143
பற்றி அதிகம் எழுதி வருவதை நாம் மனமுவந்து வரவேற்கிறோம். மண்டூரிலிருந்து வெளிவந்த ‘பாரதி” என்ற சிற்றேடு தொடர்பாகப் பல அரிய தகவல்களைத் தருகிறார். இந்த ஏடு 1940களில் வெளிவந்தது.
1950களின் பிற்பகுதியிலிருந்து வெளியான சிற்பி சிவ சரவணபவனின் அருமையான சிற்றேடான “கலைச்செல்வி ஆற்றிய பணியை நம்மில் பலர் சிறிதளவாகுதல் அறிந்திருப்போம்.
களுத்துறையிலிருந்து 1958இல் ‘ஈழதேவி என்ற ஏடு வெளிவந்து கொண்டிருந்தது என்றும் அதன் அருட்டுணர்வினால் 'சிற்பி’, ‘கலைச்செல்வியை ஆரம்பித்தார் என்றும் அவருடைய கட்டுரையிலிருந்து அறிந்து கொள்கிறோம். அது மட்டுமல்லாமல், நமது முன்னோடி எழுத்தாளர்கள் பற்றிய பல விபரங்களைக் கட்டுரையாசிரியர்தருகிறார். ஈழத்து இலக்கியப் போக்கின் செல்நெறியை நாம் அறிந்து கொள்கிறோம்.
“சிரித்திரன்' சஞ்சிகை ஈழத்துப் புதுப் புனைவான உயர் மட்ட நகைச்சுவை ஏடு என்பதை நாம் அறிவோம். அது பற்றிய சுவையான பல தகவல்களைச் செங்கை ஆழியான் தருகிறார்.
(1963-1995) வெளிவந்த “சிரித்திரன்’ தமிழில் வெளிவந்த ஒரேயொரு காட்டுன் சஞ்சிகை. தமிழ் கூறும் நல்லுலகில் இதுவொன்றே என்ற பெருமைக்குரிய என்கிறார் கட்டுரையாசிரியர். ر.
கொழும்பிலிருந்து மற்றோர் ‘பாரதி' (முற்போக்கு இலக்கிய பரம்பரைக்கு வித்திட்ட ஏடு என்பார் தெளிவத்தை ஜோசப்) 1940களின் பிற்பகுதியிலிருந்து

Page 85
144 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
வெளிவந்தது. அது பற்றி ஆய்வாளர் தெளிவத்தை தரும் பயன்மிகு கட்டுரை, புதிய பல தகவல்களை எனக்குத் தந்தது. இது ஒரு நீண்ட கட்டுரை.
இக்கட்டுரை போலவே, தெளிவத்தை ஜோசப், மலையக சஞ்சிகை வரலாற்றின் வெள்ளி முனைப்பாக தீர்த்தக்கரை பற்றி வித்தியாசமான ஆய்வைத் தருகிறார். இந்தத் தீர்த்தக்கரையில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூல் வெளிவந்திருப்பதை நண்பர் தெளிவத்தை ஜோசப் மூலம் அறிந்தேன். இன்னமும் பார்க்கக் கிடைக்கவில்லை. தீர்த்தக்கரையில் அற்புதமான இரு சிறுகதை ஆசிரியர்கள் எழுதினார்கள். அவர்களுடைய பெயர்கள், புனை பெயர்கள் ஆனந்தராகவன், கேகாலை கைலநாதன். இவர்கள் ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை?
‘நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்’ என்ற இந்த அருமையான நூலிலே தொகுப்பாசிரியர் டொமினிக் ஜீவா 113 முதல் 138 வரையிலுமான பக்கங்களில் 'மல்லிகை தொடர்பாகவும் அவருடைய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களைத் தருகிறார்.
பல அருமையான சிற்றேடுகள் இங்கு வெளியாகி மறைந்துள்ளன. அவை பற்றிய விபரங்களைப் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னும் தேடிச் சேகரித்து ஆய்வுகளை மேற்கொள்ளலாமே?
‘கற்பகம்’ மூன்று இதழ்களே வெளிவந்தன. அதில் வெளிவந்த நல்ல சிறுகதைகளைத் தொகுத்து ‘கற்பகம் சிறுகதைகள்’ என்ற நூலை வெளியிட்டார். அவ்வேட்டின் ஆசிரியர் 'தம்பு-சிவா’ எனப்படும் சிவசுப்பிரமணியம்.

கே.எஸ். சிவகுமாரன் 145
இவர் புதிய பெண் எழுத்தாளர் மாதுமை சிவசுப்பிரமணியத்தின் தந்தையாவார். இந்த அறிமுக விழாவிலே நூலில் இடம்பெற்ற கதைகளை முகம்மது சமீம், தெளிவத்தை ஜோசப், சிவா சுப்பிரமணியம் ஆகியோர் பகுப்பாய்வு செய்தனர். ‘விபவி (நீர்வை பொன்னையன் இந்நிறுவனத்தின் இணைப்பாளர்)யின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆய்வரங்கில், ‘கற்பகம்’ தொடர்பான பல விபரங்களைத் தொகுப்பாசிரியர் தந்திருப்பது பாராட்டுக்குரியது.
தமிழின்பம், ஈழச்சுடர், கதம்பம், நந்தலாலா, யாத்ரா, மூன்றாவது மனிதன், தேனருவி, மலர், ஞானம், முனைப்பு, களம் போன்ற பல ஏடுகள் (சிலவற்றை நான் பார்க்கவோ படிக்கவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது) தொடர்பான மதிப்பீட்டு நூல்கள் ஆவணமாக அமையும் அல்லவா?
来源
பாரதப் போரில் மீறல்கள்
‘அகளங்கன் (நா. தர்மராஜா) ஒரு விஞ்ஞான, கணிதத்துறை பட்டதாரி ஆசிரியர். ஆயினும் இலக்கியத் துறையில் அவர் ஆற்றிவரும் பங்கு அளப்பரியது.
ஏறக்குறைய 30 நூல்களின் ஆசிரியர். கவிதை, குறுங்காவியம், ஆய்வு, வானொலி நாடகம், சமயம், இலக்கிய நாடகங்கள், கட்டுரைகள், விளக்க / பொழிப்பு உரைகள் போன்ற துறைகளில் எல்லாம் எழுதும் இவர் சிறந்த பேச்சாளருமாவார்.

Page 86
146 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இவருடைய அருமையான ஒலிபரப்புக்கள் வானொலியில் இடம்பெற்றுள்ளன. மேடையிலும் இவர் நன்றாகப் பேசுவார் என்று அறிகிறேன். பண்பாகப் பழகும் இந்த அறிஞரின் ஆய்வுக் கட்டுரைகளை நான் அதிகம் விரும்பிப் படிப்பதுண்டு.
‘அகளங்கனின்’, ‘பாரதப் போரில் மீறல்கள்’ என்ற நூல் மிகவும் பயன்தரும் ஒன்று.
இந்த நூல் என்ன கூறுகின்றது? அணிந்துரை எழுதிய சி.ஏ. இராமஸ்வாமி கூறுகிறார்:
“மகாபாரதத்தில் எங்கே, யார் எல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வாக்குறுதிகளையும் சத்தியத்தையும் மீறியிருக்கிறார்கள் என்று மிகவும் உன்னிப்பாகக் கவனித்து ஒரு புதுவிதமான சிந்தனை ஒட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர் அகளங்கன்” அகளங்கன் தரும் தகவலின்படி, இந்நூல் “வியாச முனிவர் பாடிய மகா பாரதத்தையும் அதனடிப்படையில் சில மாற்றங்களுடன் வில்லிபுத்தூராழ்வார் தமிழில் பாடிய வில்லி பாரதத்தையும் ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
“இந்த நூலைப் படிக்கும்போது தமிழீழப் போராட்டத்தின் நிகழ்காலச் சம்பவங்கள், வாசகர்கள் நினைவுக்கு வருமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம்” என்று ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’ (இந்நூலைப் பதிப்பித்தவர்கள்) மேலாளர் கூறுகிறார்.
“மகாபாரதப் போரில் 47.23,910 பேர் உயிரிழந்தனர். 18 நாட்களுக்கு இந்தப் போர் இடம் பெற்றது. இதில்

கே.எஸ். சிவகுமாரன் 147
தப்பியவர்கள் 10 பேர். துரியோதனனது தரப்பில் கிருபாச்சாரியார், அசுவத்தாமா, இருதவர்மா ஆகியோரும், பாண்டவர் பக்கத்தில் கிருஷ்ண பகவான், சாத்யகி, பஞ்ச பாண்டவர்கள் என ஏழு பேரும் மட்டும் தப்பினர்” என்ற விபரத்தையும் ஆசிரியர் தருகிறார்.
நீங்கள் ‘ராஜாஜி' என்ற சி. ராஜகோபாலச்சாரியார் உரைநடையில் தந்த ‘வியாசர் விருந்து' என்ற அருமையான நூலைப் படித்துச் சுவைத்திருக்கக் கூடும். நூற்பயனும் பெற்றிருக்கக் கூடும். அதுபோல ரா.பி. சேதுப்பிள்ளையின் ஆற்றொழுக்கான இலக்கிய நடையில் எழுதப்பட்ட நூல்களைப் படித்துச் சுவைத்திருக்கவும் கூடும். அந்த வரிசையிலே ‘அகளங்கனின் இந்த நூல் இலக்கியச் சுவையையும், நுட்பப் பார்வையையும் தரும் நூலாக அமைகிறது.
சிவநெறிப் புரவலர் சீ. ஏ. இராமஸ்வாமி கூறியிருப்பது போல் “பல்கலை வல்லுனரான அகளங்கன், தாம் கற்கும் நூல்கள் அனைத்திலும் வித்தியாசமான கண்ணோட்டத்தில், ஆழமாகச் சொல்லில் புதைந்துள்ள நுட்பங்களையும், மறை பொருளாக இருப்பவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தயங்குவதில்லை.”
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, நூலாசிரியரின் விளக்கவுரைக்கு உதாரணமாகப் பின்வரும் பகுதி அமைகிறது.
வதந்தி பரவியது. தருமனும் பொய் சொன்னான்’ என்ற பகுதியில் (56ஆம் பக்கம்) ஒர் எடுத்துக்காட்டு.
“அசுவத்தாமா இறந்தது மெய் என்று பொய் சொல்லவேண்டும் என்று தருமனிடம் சொன்னான்

Page 87
148 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கிருஷ்ணன். தன் காதுகளைப் பொத்திய தருமன், “பொய் சொல்லி அரசாள்வதிலும் பார்க்கச் செத்து மடிவதே மேல் என்று மறுத்தான். நீதி நெறி தவறாத சத்திய சீலனான தருமனே கூடப் பொய் சொல்லத் துணிந்துவிட்டான்.
“அசுவத்தாமா சொல்லப்பட்டான் என்ற வதந்தி பரப்பிவிடப்பட்டது. தனது மகனான அசுவத்தாமாவை எவராலும் கொல்ல முடியாது என்று நம்பியிருந்த துரோணாச்சாரியார் வதந்தியிலே ஏமாந்து நம்பிக்கை இழந்து உண்மை நிலையை அறிவதற்காக தன்னருகில் போர் புரிந்து கொண்டு நின்ற சத்தியவானான தருமனிடம் கேட்டார்.
“தருமனும் 'உண்மையே’ என்று பொய் சொல்லி பெரும் நம்பிக்கைத் துரோகம் செய்தான். நம்பிக்கைத் துரோகம் போல் பெரிய பாவம் வேறெதுவும் இல்லை.”
இவ்வாறு எடுத்துக் கூறும் அகளங்கன் தனது நூலின் முடிவில் ‘மகாபாரதம்’ என்ற இந்தியக் காப்பியத்தின் வெளிப்பாட்டு அம்சங்களின் சாரத்தை எடுத்துக் கூறுகிறார்.
அகளங்கன் கூறுகிறார்:
“மகாபாரதம் வெறும் கட்டுக்கதையல்ல. யாரோ பாண்டவர்களதும் யாரோ கெளரவர்களதும் கதையைக் கூறும் காவியமுமல்ல. நடைமுறையில் நாம் காணும் மனிதர்களின் மனிதப் பலவீனங்கள், பலங்களின் தொகுப்பு இலக்கியம். அது என்றும் வாழும் இலக்கியம். அது மக்களை என்றும் வாழ்விக்கும் சஞ்சீவி இலக்கியம்.”
来

கே.எஸ். சிவகுமாரன் 149
வே. வரதசுந்தரத்தின் நூல்கள் சில
திருகோணமலை தந்துள்ள தமிழ் - ஆங்கில யலாளர் வேதநாயகம் வரதசுந்தரம்.
வேதந தசுநத
‘சன்’ (இது இப்பொழுது வெளிவருவதில்லை), தி ஜலன்ட் ஆகிய நாளிதழ்களின் செய்தியாளராகவும் தினபதி’, ‘சிந்தாமணி’ (இவை இப்பொழுது வெளிவருவதில்லை.) ‘சஞ்சீவி’, ‘அர்ச்சனை’, ‘சந்நிதி, ‘ஷ்ரைன்’ ஆகிய இதழ்களின் பெரும் பங்களிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
இவர் கவிதைகளையும் எழுதுவார். திருகோணமலை பத்திரகாளி அம்மன் மீது பாராயணத்துக்கு உகந்த 108 பாடல்களைப் பாடியுள்ளமையும் அவதானிக்கத் தக்கது. 1980களின் பிற்பகுதியில் தி ஐலன்ட்’ பத்திரிகையில் நீதித்துறைச் செய்தியாளராக வரதசுந்தரம் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிந்திருக்கிறார்.
‘சாயி வந்தனன், வாழ்வு தந்தனன்’ என்பது சமீபத்தில் எழுதியதொரு புத்தகம்.
மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்திருக்கும் இந்நூலைப் படித்துப் பார்க்கலாம். "சுடர் ஒளி நாளிதழில் வெளிவந்த இந்த வெளிப்பாடுகள் 31 கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தெ. ஈஸ்வரன், த. சித்தி அமரசிங்கம், சைவ அநவந்த விநாயகமூர்த்தி ஆகியோரின் பதிவுகள் இந்நூலின் பயன்பாட்டை எடுத்துரைக்கும்.
இந்த நூலிலிருந்து திரட்டப்பட்ட சாயி பாபா அவர்களின் கூற்றுக்கள் சில நாம் அடிக்கடி நினைவுறுத்தி

Page 88
150 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அனுசரிக்கப்பட வேண்டியவை என நினைக்கிறேன். அவற்றுள் மாதிரிக்குச் சில. * இகழ்ச்சியும், புகழ்ச்சியும் உலகத்து இயற்கை. அவை ஆத்மாவை என்றும் பாதிப்பதில்லை. அவை புறவுடலை மட்டுமே சீண்டிவிடலாம். * இறையருள் என்பது மழை, சூரிய ஒளி போன்றது. அவ்வருளைப் பெற வேண்டுமானால், நீங்கள் சாதனை செய்யவேண்டும். ஆன்மிகப் பாதையில் காலடி வைக்க வேண்டும். * இறை நாமத்தை உச்சரிக்கும் உதடுகளிலும் பார்க்கச்
சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை.
* உலகில் உள்ளது ஒரேயொரு மொழி; அது இதயத்தின் மொழி. உலகில் உள்ளது ஒரேயொரு மதம்; அதுதான் அன்பு என்னும் மதம். உலகில் ஒரேயொரு தெய்வம். அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். உலகில் உள்ளது ஒரே மனித இனம். * ஒவ்வொரு மனிதனிடம் உள்ள மிகச் சிறந்த அம்சம் அன்பு. இத்தகைய அன்புணர்வு இல்லாதவிடத்து வெறுப்பு, அழுக்காறு போன்ற தீய குணங்கள் தலையெடுக்கத் தொடங்கும். எனவே, அன்பே உங்கள் வாழ்வின் மூச்சாகட்டும்.
வே. வரதசுந்தரத்தின் மற்றொரு அரிய தகவல்களடங்கிய நூல் ‘திருக்கோணேஸ்வரத் திருத்தல யாத்திரை. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் (7ஆம் நூற்றாண்டு) பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோணேஷ்வரர் தலம் அமைந்துள்ள ஊர் திருகோணமலை என்பதை நாமறிவோம். இந்த நூலுக்கு சி. குருநாதன்,

கே.எஸ். சிவகுமாரன் 151
ம.வ. கானமயில்நாதன், என். பத்மசீலன் ஆகியோர் அணிந்துரை போன்றவற்றை எழுதியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியர் வரதசுந்தரத்தின் எழுத்து நடை சிறப்பாக இருப்பதற்குக் காரணம் தினபதி’, ‘சிந்தாமணி’ ஊடகங்கள் அவருக்கு மேடையாக அமைந்ததே.
திருகோணமலை வரலாற்றைத் திரித்துக் கூறுபவர்கள், அவசியம் இந்த நூலினைப் படித்து தெளிவு பெற வேண்டும்.
விஸ்வராணி வரதசுந்தரம் தொகுத்த காளியம்மன் பாடல்களும் நூலாக வெளிவந்திருக்கிறது.
来
வாழ்வியல் வசந்தங்கள்
அண்மைக் காலங்களில் நல்ல கட்டுரையாளர்களின் எண்ணிக்கை குறைத்து விட்டதென்றே கூற வேண்டும். நல்ல பயனுள்ள வாழ்வியல் கட்டுரைகளை எழுதி வரும் பால வயிரவநாதன் இந்த இடைவெளியை நிரப்பி வருகிறார் எனலாம்.
‘வாழ்வியல் வசந்தங்கள்’ என்ற தலைப்பிலே இவர் எழுதிய 28 கட்டுரைகள் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. பள்ளிக்கூட மாணவர்களுக்கு மட்டுமன்றிப் பெரியவர்களும் பயனடையக் கூடிய விதத்தில் தெளிவான நடையில் பால வயிரவநாதன் எழுதி வருவது பாராட்டத்தக்கது. இந்த நூல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு.

Page 89
152 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இந்த நூலுக்குப் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அருமையான விளக்கக் கட்டுரையை அணிந்துரையாக எழுதியிருக்கிறார். அதிலே ஒர் அச்சுப் பிழை (Delocalization என்பதே சரி) வந்துவிட்டது. - பால வயிரவநாதனின் முதலாவது நூலாகிய இந்தப் புத்தகத்தில் ஆசிரியருடைய ஆளுமையை நாம் படித்துணருகிறோம். இக்கால கட்டத்தில் அவசியம் வேண்டப்படும் அறநெறிகளை, அவர் யாவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் தர்க்க ரீதியாக வெளிப்படுத்துவதும் வியந்து பாராட்டத்தக்கது. இந்து பண்பாட்டுத் திணைக்களத்தில் பணி புரியும் இந்த ஆசிரியர், நமது தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான செ. யோகநாதன் கூறியிருப்பது போல ‘குடத்துள் விளக்கு, பாலைவனத்திடையே பசுஞ்சுனை, தென்றலெனத் தழுவிச் செல்லும் குன்றின் விளக்கு’ என நாமும் வாழ்த்துவோம்.
இந்நூலில் அடங்கிய எல்லாக் கட்டுரைகளுமே என்னைச் சிந்திக்க வைத்தன. அவற்றுள்ளே எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஓரிரு பகுதிகளைத் தந்து எனது கூற்றின் மெய்மையை நிரூபிக்க விரும்புகிறேன். * பாராட்டுதல் என்பது உடன் கிடைக்கின்ற வெகுமதி அத்துடன், எமது பாராட்டுதல் என்பது மனப்பூர்வமாக அமைதல் வேண்டும். வெறும் உதட்டளவில் பாராட்டுதல் தகாது. பாராட்டும் பண்பு நம் உள்ளத்தின் விசாலத்தைக் காட்டி நிற்கின்றது. எவரையும் நாம் அவர்கள் எம்மிலும் உயர்ந்தவர்கள் என்ற நோக்கில் அணுகும் போது நமது மமதை, அகங்காரம், ஆணவம் அருகிவிட ஏதுவாகின்றது.

கே.எஸ். சிவகுமாரன் 153
་་
கதா புன்முறுவலுடன், மனப்பாரமின்றி இருக்கப் பழகுங்கள். எவருடனும் கோபதாபம், காழ்ப்புணர்வுகளை நீக்குங்கள். அன்பு, கருணை, ஜீவகாருண்யம் இவைகளை நாம் காணும் சகல ஜீவராசிகளிடமும் செலுத்துங்கள். உலகத்தை ரசியுங்கள். வீண் எரிச்சல், புகைச்சல் கொள்ளாதீர்கள். அப்பொழுது பாருங்கள் நமக்குள்ளே உருவாகும் களிப்பு நம்மைப் பிறரால் வசிகரிக்கச் செய்யும் அழகினை ஏற்படுத்திவிடும். இதுவே உண்மை அழகு.
ஆத்மாக்கள் பேச மொழி வேண்டியதில்லை. மொழியில்லாத பரிபாஷையில் பேசப்படும் போது செயற்கைத்தனமில்லை. இது உணர்வு அலைகளின் மோதலால் ஏற்படும் மென் அசைவுகள், குறிப்பிட்ட அலை வரிசையில்தானே வானொலியில் இசை வருகிறது. காதலும் அத்தகையதே.
இந்த நூலை, நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும்
(அனைத்துலக ஆங்கில மொழிப் பாடசாலைகள் உட்பட) பெற்றுத் தமது நூலகங்களில் வைத்திருக்க வேண்டும். இந்நூலைப் படிக்கும் மாணவர்களுள் பெரும்பகுதியினர் புதிதாகச் சிந்தித்துச் செயல் புரியும் நல்லவர்களாக மாற வழியுண்டு.
来

Page 90
154 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூழய கட்டுரைகள்
வெளியீடுகள் - 1
பல்கலைக்கழகங்களில் சில மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும், போதிய அளவு தேடல்களைச் சிரமத்துடன் அவர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரியவில்லை நூற்றுக்கணக்கான ஈழத்துத் தமிழ்
வெளிவந்துள்ளன. அவற்றுள் சில ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் தேடிப் படிப்பதற்குப் பலருக்கு ஆர்வமில்லை. வாய்ப்புமில்லை எனலாம். சில வெளியீடுகள் கிடைக்காமலும் இருக்கலாம்.
நமது தமிழ் மக்கள் ஆய்வுகள், கட்டுரைகள் சம்பந்தமான பதிவுகளை அல்லது வாழ்க்கை அல்லது பங்களிப்புகள் போன்றவற்றைப் பதிவு செய்து வைக்கும் பழக்கம் உடையவர்கள் அல்லர். இதனாலேயே தனிப்பட்டவர்கள் தமது அனுபவங்களைச் சுயமாகவே எழுத்தில் பதிவு செய்து வைக்கிறார்கள். அத்தகையவர்களுள் நானும் ஒருவன். அதனாலேயே அண்மைக் காலங்களில் எனது பத்திகள், பொதுவான பின்னணியில் எனது பங்களிப்புக்களையும் உள்ளடக்கி வருகின்றன. இது சுய தம்பட்டமல்ல. காலத்தின் தேவை. கால வெள்ளத்தில் அள்ளுண்டு போகாமல், இவற்றை நாமே நமக்காகப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று நான் பிரக்ஞையுடன் செய்து வருகிறேன்.

கே.எஸ். சிவகுமாரன் 155
நிற்க, இங்கு இரண்டொரு வெளியீடுகள் பற்றிய குறிப்புக்களைத் தருகிறேன். இவ்வெளியீடுகளைத் தேசிய சுவடித் திணைக்களத்திலோ, பல்கலைக்கழக நூல் நிலையங்களிலோ, கொழும்புத் தமிழ்ச் சங்கம் போன்ற நிறுவனங்களிலோ, பொது நிலையங்களிலோ மாணவர் தேடிப் படித்துப் பயனடையலாம் என நினைக்கிறேன்.
ஆழிப் பேரலை மூலம் நமது சொத்துகள் அள்ளுண்டு போகாமல் இருக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கை அவசியம். தமிழ் நூல் நயம் 1996
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு, இதழ் ஆசிரியர்கள் சி.ஐ. அசியான், டி.ஆர்.எஸ். செல்வேந்ரா. இந்த ஏட்டிலே பல பயனுள்ள கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள்ளே இலக்கியம் கற்றல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை குறிப்பிடத்தக்கது. அதனை எழுதியவர் கே.எஸ். சிவகுமாரன். அமைச்சர் மு. ஷெய்கு இஸ்ஸத்தீன் வேதாந்தி என்ற பெயரில் அருமையான கவிதைகள், கதைகளை எழுதி வருபவர் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த ஏட்டிலே ஞானரதம் என்ற கவிதையை அவர் எழுதியிருக்கிறார். இலங்கையில் தமிழ் நாடகக் கலை பற்றிய கட்டுரையை ஆசிரியர் மா. கணபதிப் பிள்ளை எழுதியிருக்கிறார். இவற்றைவிட மாணவர்களே எழுதிய பல கட்டுரைகள், கதைகள் மற்றும் விஷயங்கள் அறிவைப் புகட்டுகின்றன. d56Tab - (8to 1998 toGoff O9
அக்கரைப் பற்றிலிருந்து வெளியாகிய இந்த ஏட்டின் இணை ஆசிரியர்களாக பரராஸ் வாரித் தம்பியும் அன்டனி பால்ராஜம் இருந்திருக்கிறார்கள். முன்னையவர் ‘தேனருவி

Page 91
156 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
என்ற மறைந்து போன ஏட்டின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றவர். பின்னையவர், பிரபல சிறந்த சிறுகதை ஆசிரியரும், பத்தி எழுத்தாளருமான உமா வரதராஜன் ஆவார். இந்த இதழில் சனாதனனின் ஒவியமும் இடம் பெற்றுள்ளது. நிறையக் கவிதைகளும், நான்கு சிறுகதைகளும் பயனுள்ள கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. வாசகர் கடிதங்களும் மதிப்பீட்டு அடிப்படையில் அமைந்துள்ளன.
, மறைந்துபோன சசி கிருஷ்ணமூர்த்தி “Far Away SunSet' (தூரத்துச் சூரிய அஸ்தமனம்) என்ற ஜப்பானியத் திரைப்படக் கதையைத் திறனாய்வுக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ஈழத்து அரசியலும் கூத்துக்கலையும் தலித்தியப் பார்வையில் சிறு குறிப்புகள் என்ற தலைப்பிலே சீவரத்தினம் ஆய்வு ரீதியில் சில விளக்கங்களைத் தந்திருப்பது ஆய்வு மாணவர்களுக்குப் பெரும் பயனளிக்கும்.
சி. ஜெயசங்கர் தகவல் யுகமும் ஈழத்து தமிழர் அரங்கும்’ என்ற கட்டுரையில் சிந்திக்கப்பட வேண்டிய பல விஷயங்களைச் சற்று ஆக்ரோஷமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவருடைய கருத்துகள் சிலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் நளின் சில்வா போன்ற இனவாதிகள் எழுதும் எழுத்துக்கள் போன்று இவருடைய சிந்தனைப்போக்கும் அமைந்திருப்பதே.
மு.பொ. என்று பரவலாக அறிமுகமாகியுள்ள மு. பொன்னம்பலம் 'ஆத்மாவின் கவிதைகள் பற்றிய தனது அளவு கோல்களைத் தெரியத் தருகிறார். அத்துடன் அவர் பகுப்பாய்வு முறை ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும்

கே.எஸ். சிவகுமாரன் 157
இருக்கிறது. மு.பொ. சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் என்பதும், திறனாய்வாளராகவும் அவர் பங்களித்து வருகின்றார் என்பதும் வெளிப்படையாகிறது.
ஆத்மா பற்றி ஒரு வார்த்தை. இவர் பெயர் எம்.ஐ. ஜபார். இன்று, மின்னியக்க ஊடகத்துறையில் அதிகார பூர்வம்ாகவும், நிறைந்த தகவல்களைக் கொண்டவராகவும் பாராட்டும்படியான அளிக்கையாளராகவும் (presenter) ஜபார் விளங்குகிறார். இதற்கு உதாரணமாக 'ஐ' சனலில் ‘பிரவாகம் என்றோர் அரை மணி நேர நிகழ்ச்சியைத் தயாரித்து அளித்து வருகிறார். அனைத்துலகச் சிறந்த படங்களை விளக்கி, அப்படங்களிலிருந்து சில காட்சிகளையும் காட்டி நேர்த்தியான நிகழ்ச்சியை இவர் தந்து கொண்டிருககிறார். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கதைகள் இரண்டை எடுத்துக் கூறி திறனாய்வு சார்ந்த அறிமுகத்தை அருந்ததி ரத்னராஜ் எழுதியிருக்கிறார்.
எம்.ஏ. நுஃமான் ‘விமர்சனக் குறிப்புகளுடன் (இவர் தமது நூல்களை ‘விமர்சனம்’ என்றே கூறுவார்) மேலோட்டமாக மு. நூக்காவின் ‘ஒரு துண்டு வானம் தொகுதி பற்றி எழுதியிருக்கிறார்.
மெளன குருவுக்குச் சில எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்களும் இந்த ஏட்டில் இடம்பெற்றுள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள ஆக்கங்கள் பற்றி இங்கு நான் எழுதவில்லை.
ஏனைய ஏடுகளில் வெளியாகிய முக்கிய கட்டுரைகள் பற்றிய விபரங்களைப் பின்னர் பார்ப்போம்.
来

Page 92
158 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பார்த்தேன் - தமிழ்மொழித் தின விழாமலர் (1995) வடக்கு- கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்
G
ன்றைய கல்வி பற்றிய சிந்தனைகள்’
(கலாகீர்த்தி பேராசிரியர் சி. தில்லைநாதன்), தமிழ்ப் பணிகளும் உணர்வுப் புலப்பாடும்’ (பேராசிரியர் அ. சண்முகதாஸ்), தமிழ் மொழியின் செழுமையை நோக்கி (இ. முருகையன்), “சடங்குகள்’ (எஸ். எதிர்மன்னசிங்கம்), ‘சதிர் ஆட்டத்தின் மறுமலர்ச்சியே - இன்றைய தெய்வீகக் கலையாம் பரதக்கலை (மாலதி சிவகுமார்), ‘ஈழத் தமிழரின் பூர்வீக இசைப் பாரம்பரியம்’ (பேராசிரியர் சபா. ஜெயராசா), 'பல்லவர் - பாண்டியர் காலமும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்’ (பேராசிரியர் துரை மனோகரன்), ‘கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் ஒரு துணிக்கையே இலங்கைத் தீவு’ (க. தங்கேஸ்வரி), தமிழிலுள்ள நடன சாஸ்திர நூல்கள் - ஒரு குறிப்புரை (பேராசிரியர் வி. சிவசாமி), ‘இலங்கையின் நூலக வரலாறும் அதன் சேவையும் (சைவப் புலவர் அ. பரசுராமன்), “கம்பனும் இளங்கோவும்’ (கலாநிதி க. சொக்கலிங்கம் - சொக்கன்), 'மனிதனைத் தேடும் நாடகக் கல்வி’ (கலாநிதி ம. சண்முகலிங்கம்), 'உமறுப் புலவரும் சீறாப் புராணமும்’ (ஏ.எஸ். உபைதுல்லா).
“பார்த்தேன்’ ஏட்டில் இன்னும் பல கட்டுரைகள் (எனது கட்டுரையொன்று உட்பட), கதைகள், கவிதைகள் இடம்பெற்ற போதிலும் மேற்சொன்ன கட்டுரைகள் ஆய்வு மாணவர்களுக்குப் பெரும் பயனளிக்கும் என நம்புகிறேன். மாணவர்கள் இவற்றைத் தேடிப் படியுங்கள்.
来

கே.எஸ். சிவகுமாரன் 159
முத்தழகு - ஈழத்துப் பாடல்கள்
Rழத்து இசைப் பாடல்களில் சில ஒரு வெளியீட்டில் இடம்பெற்றன. பாடகர் வி. முத்தழகு ‘ஸப்தஸ்வரம் என்ற பெயரில் ஒர் இசை நிகழ்ச்சியைக் கொழும்பு லயனல் வென்ட் சபா மண்டபத்தில் நடத்திய அக்கால ரசிகர்களைப் பெரிதாக மகிழ்வித்தார். இசையமைத்தவர், திறனாற்றுள்ள எம்.எஸ். செல்வராஜா. இந்த நிகழ்ச்சி 1977ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது.
வி. முத்தழகு பின்வருபவர்கள் இயற்றிய பாடல்களைப் பாடினார். ஈழத்து ரத்தினம், எருவில் மூர்த்தி, இறைதாசன் (இவர் யார் தெரியுமோ, நமது பி.எச் அப்துல் ஹமீட்தான்), கே. கண்ணன், சி. சண்முகம், பாரா சின்னத்தம்பி, யூ.எஸ். ஹமீட் இப்பாடல்கள் இந்த வெளியீட்டில் இடம் பெற்றுள்ளன. வானொலி அறிவிப்பாளர்கள் இப்பாடல்களையும், இசையையும், பாடகரின் விபரங்களையும் அறிந்துகொள்ள இது உதவும்.
来
முனைப்பு -2 (1989 சித்திரை)
G வியாபகன்' என்ற புனை பெயரில் எழுதியவரின் சில குறிப்புகள் மின்னியக்க ஊடகவியத் துறையினருக்கும், பகுத்தறிந்து வாசிப்பவர்களுக்கும் பல தகவல்களைத் தருகின்றன. ஏ.எம். ராஜா, க.நா. சுப்பிரமணியம் பற்றிய அடிப்படைத் தகவல்களை இப்பத்தியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், ‘இஸ்லாமிய இலக்கிய அறிஞர் ஜே.எம்.எம். அப்துல் காதிர் (எஸ்.ஏ.ஆர்.எம். செய்யது ஹஸன் மெளலானா) கட்டுரையும் பயனுள்ளது.

Page 93
160 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ഗ്രഞ്ഞ, -3 (1989 9ഖഞ്ഞ്)
மருதூர் பாரி, இவ்வேட்டின் ஆசிரியர். கல்முனை, மருதமுனை, பொது நூலக வீதியில் இருந்து இந்த வித்தியாசமான ஏடு வந்து கொண்டிருந்தது. எம்.ஐ.எம். றஊப், எம்.ஐ.ஏ. ஜபார் ஆகியோர் உதவி ஆசிரியர்கள்.
கவிஞர் நீலவாணன் பற்றி ‘மருதூர் கொத்தன்' எழுதிய கட்டுரை பல தகவல்களைத் தருகிறது.
ഗ്രഞ്ഞഗ്ഗ - 4 (1990 തെ)
'ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் - சில குறிப்புகள்’ என்ற கட்டுரை ஆய்வாளர்களுக்கு உதவும். எழுதியவர், ‘சாகித்யன்'. இன்னொரு கட்டுரை ‘ஈழமுரசு முல்லை மணி’ எழுதியது. ‘இஸ்லாமிய பண்பாட்டினை இலக்கியத்தில் கண்டவர். அஸ். அப்துல் ஸ்மது. மறைந்த அ.ஸ்.அ. பற்றிய விபரங்கள் தரப்படுகின்றன.
女
உலக நாடக தின விழா (3.8.2000, 8.4.2000) சிறப்பு வெளியீடு - நுண்கலைத் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு - நாடகத்துறை தொடர்பாக ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் உதவக்கூடிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. சு. சிவரெத்தினம் இதனைத் தொகுத்துள்ளார்.
‘உலக நாடக அரங்க தினம் (மார்ச் 27) பின்னணி (தெ. கிருபாகரன்), ‘இன்றைய பல்கலைக்கழக மரபு மாறவேண்டியது வரலாற்றின் நிர்ப்பந்தம் (பேராசிரியர் சி. மெளனகுரு), ‘சமூகத்தின் அரங்கு (க, சிதம்பரநாதன்),

கே.எஸ். சிவகுமாரன் 161
பெண்நிலை வாதமும் மாற்று அரங்கும் (பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு), தலைக்கோல்' (பாலகுமார்), அனைத்தும் உட்கொண்ட அரங்கு (சி. மெளனகுரு), வெ. தவராசாவுடனான நேர்காணல் (சு சிவரெத்தினம்), “கிழக்குப் பல்கலைக்கழக உலக நாடக தின விழா - சமூக கலைச் செயற்பாட்டில்’ (வடிவேல் இன்பமோஹன்) 1950களுக்குப் பிந்திய ஈழத்து நாடக வரலாற்றில் மட்டக்களப்பின் இடம் (சு. சிவரெத்தினம்) ஆகியனவும் உதவும்.
米 கலாயோகி ஆனந்த குமாரசாமி நூற்றாண்டு மலர்
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தகவல் சேவையால் வெளியிடப்பட்டது. (பிரசுர ஆண்டு குறிப்பிடப்படவில்லை) என்ற குறிப்புடன் வெளியாகி இந்தச் சிறு ஏடு என்னிடம் இருந்தது.
இன்று உலகில் ஒரு சிரேஷ்ட கலா மேதையாக ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்படும் கலாயோகி ஆனந்த கென்டிஷ் குமாரசாமி 1877 ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி பிறந்தார். இதில் அடங்கிய கட்டுரைகள் கலாயோகி குமாரசாமி அவர்கள் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகின்றன. இக்குறிப்பு முகப்பில் கலாயோகியின் புகைப்படத்துடன் எழுதப்பட்டுள்ளது.
கலாநிதி சூஸன் எல். ஹன்டிங்டன் எட்வின் ஆரியதாச பேராசிரியர் க. கைலாசபதி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த ஏடு ஆய்வாளர்களுக்குப் பயன்படும். இதனைத் தேடிப் பார்த்துப் பயன்பெறுவது ஆய்வாளர்களின் பொறுப்பு.

Page 94
162 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பேராசிரியர் கைலாசபதியின் கட்டுரையில் காணப்பட்ட சில கருத்துகள்:
“தனது மரபில் உலக மரபையும் உலக மரபிலே தனது மரபையும் கண்டு கொள்ளும் மனப்பக்குவம் ஆனந்த குமாரசாமி அவர்களின் தனிச் சிறப்பியல்பு.”
“என்னைப்பற்றிக் குறைந்த அளவு தகவல்களை வெளியிட்டால் போதும். நான் பின்னணியில் இருக்கவே விரும்புகிறேன்.”
“கிழக்கையும் மேற்கையும் இணைத்து அமைதி காணக்கூடிய தகுதியும் பயிற்சியும் ஆனந்த குமார சாமிக்கு இயல்பாக அமைந்தன.”
“இலங்கையின் பல பகுதிகளிலும் கவனிப்பாரற்றுக் கிடந்த கட்டிடங்களையும் கலைச் சின்னங்களையும் கண்டு நெஞ்சைப் பறிகொடுத்தார்.”
“இந்தியா, இலங்கை முதலிய நாடுகளிலே கைப்பணிகளும், கலைகளும் நிலையிழந்து மதிப்பிழந்து மங்கிப்போவதைக் கண்டு மனம் நொந்தார்.”
“இலங்கையராக இருந்த ஆனந்த குமாரசாமி இந்தியராக இயங்கத் தொடங்கிவிட்டார்.”
来
கண்டி இலக்கியச் செய்தி மடல் 12ஆவது இதழ் நிறைவு மலர்
இது ‘துரைவி’ நினைவுச் சிறப்பிதழ். இரா.அ. இராமன் ஆசிரியர். இக்பால் அலி துணை ஆசிரியர். 1999 ஏப்ரலில், V

கே.எஸ். சிவகுமாரன் 163
ஈழத்து தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாக மலையக இலக்கியத்துக்கு தமது நூல் வெளியீட்டுப் பணி மூலம் பெரும் பங்களிப்புச் செய்த ஒர் இனிய பண்பாளரைப் பற்றிய தகவல்கள் இந்த வெளியீட்டில் இடம் பெற்றுள்ளன. பேராசிரியர்கள் சி. தில்லைநாதன், துரை மனோகரன் உட்பட பலர் இதில் எழுதியுள்ளனர். இதுவும் ஆய்வுக்குப் பயன்படக் கூடிய வெளியீடு.
குன்றின் குரல் - ஆண்ரு 19, 6bp - , (8to - e.g66, 20OO
1ெழுத்தாளர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் சமூக அறிவு அவசியம் தேவை என்பதை நாம் அறிவோம்.
சிங்கள மொழியில் விஜிய நாணயக்கார என்ற சமூக விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் எழுதிய கட்டுரையை ஜே.ஜேஸ் என்பவர் தமிழில் அழகாகத் தந்துள்ளார். இது இந்த ஏட்டில் இடம்பெற்றிருக்கிறது. படித்துப் பயன்பெறலாம். மொனிக்கா கிளின்டன் என்பவர் எழுதிய கட்டுரை உலகமயமாக்கல் தொடர்பான கண்டனப் பாங்கில் அமைந்திருக்கிறது. இதுவும் ஒரு பார்வை.
来
கலையமுதம் ஐப்பசி - மார்கழி 1994
LTழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் காலாண்டு இதழில் இலக்கியமும் விமர்சனமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை எழுதியிருப்பவர் ஜோசப் ஜெயகாந்தன். இவர் திறனாய்வுக்குப் பதிலாக விமர்சனம் என்ற சொல்லே பொருத்தமுடையது என்கிறார். இது அவருடைய நோக்கு.

Page 95
164 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஏற்கலாம். ஏற்காமல் விடலாம். இக்கட்டுரையில் Eliot என்பதை Eliyard என்று எழுதியிருக்கிறார்.
இக்கட்டுரையை விட நாட்டுக் கூத்துக் கலை, அகத்தியர், அரங்க வலைகள் போன்ற பயன்தரக்கூடிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ன.
தமிழர் தகவல் - 1998 பெப்ரவரி
திரு. எஸ். திருச்செல்வத்தை (எஸ்தி) பிரதம ஆசிரியராகக் கொண்டு பல வருடங்களாக கனடாவிலிருந்து தொடர்ந்து வெளிவரும் ஏடு தமிழர் தகவல்' முகவரி: P.O. Box: 3, Station F Toronto, Ontario, Canada M4Y 2L4.
இந்த ஏழாவது ஆண்டு பூர்த்தி மலரில் ஆய்வுக்கு உதவக்கூடிய சில கட்டுரைகளும் வேறு சிலவும் அடங்கியுள்ளன. அவற்றுள்ளே இன்டர் நெட்டில் ஈழத் தமிழ் (உதயணன்) இசைக் கலைஞர் ஒருவரின் ஒலிபரப்புக்கலை அனுபவம் (நவராஜகுலம் முத்துக்குமார சுவாமி), வசந்தா நடராஜன் பற்றி திரு எழுதிய கட்டுரை ஆகியன பல தகவல்களைத் தருகிறது. அதேபோல நிலா குகதாசன் பற்றிய திருவின் அறிமுகமும் பல தரவுகளைத் தருகின்றது. சர்வதேசத் தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளனர். (ஆ வேலுப்பிள்ளை) மற்றுமொரு தகவல் கட்டுரை. இவை யாவும் ஆய்வாளர் சேகரிக்கக்கூடிய தகவல்களைத் தருகின்றன.
米
6yds6feb
தலித் (Dai) இலக்கியத்தைப் பிரபல்யப்படுத்தும் நோக்கிலே தரமானதோர் ஏடு பிரான்ஸிலிருந்து

கே.எஸ். சிவகுமாரன் 165
வெளிவந்துகொண்டிருந்தது. அங்கு சென்ற நமது ஈழத்தவர்களே இந்த ஏட்டை நடத்தி வந்தனர். ஆர். இன்பவல்லி என்பவர் இதன் வெளியீட்டாளர். பிரெஞ்சு மொழியில் கவிதை எழுதும் கலாமோஹனும் இந்த ஏட்டுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.
தமிழ் நாட்டு எழுத்தாளர்களும் இந்த ஏட்டில் எழுதி வந்தார்கள். ஒரு சில கட்டுரைகள், குறிப்பாக சாரு நிவேதிதா எழுதிய பத்திகள் விரும்பத்தகாதவையாக இருந்த போதிலும் ஓரிரு ஆய்வுக் கட்டுரைகள் பயனுடையவையாக அமைந்தன. உதாரணமாக 2000 ஆம் ஆண்டு (Vol 11, No 10) ஏட்டில் ஜமாலன்’ என்பவர் எழுதிய ‘உடலரசியல்' என்ற கட்டுரையைக் குறிப்பிடலாம். நிறப்பிரிகை’ என்ற பெயரில் தமிழ் நாட்டில் இருந்தும் ஓர் ஏடு வந்து கொண்டிருந்தது. இதில் அ. மார்க்ஸ் என்ற விமர்சகர் சம்பந்தப்பட்டிருந்தார்.
இந்த அ. மார்க்ஸ் ஒரு பேராசிரியர், நூலாசிரியர். இவருடைய விமர்சனப் போக்குடன் எனக்கு உடன்பாடில்லை. ஆயினும், அவருடன் ஒத்துப் போகக்கூடிய வாசகர்கள், அவரின் பேட்டியொன்றிலிருந்து பல தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அ. மார்க்ஸின் நேர்காணல் “எக்ஸில் ஏட்டில் இடம்பெற்றுள்ளது. நேர் கண்டவர் ஷோபா சக்தி. காலச்சுவரு
தமிழ் நாட்டுத் திறனாய்வாளர்களுள் எனக்குப் பிடித்த ஒரு மார்க்ஸிய இலக்கியவாதி ராஜ் கெளதமன். இவர் 1970களிலேயே எழுத்து’ என்ற தமிழ் நாட்டுத் திறனாய்வு ஏட்டில் எழுதி வந்தவர்.

Page 96
166 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தமிழ்நாட்டுத் திறனாய்வாளர்களுள் நான் விரும்பிய மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர் சிதம்பர ரகுநாதன் (கன்னிகா, பஞ்சும் பசியும் போன்ற பல நூல்களின் ஆசிரியர்). அவர் எழுதிய புதிய நூலொன்றின் பெயர் ‘புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும், கூடவே சாதியமும்’. இந்தப் புத்தகத்தைத் திறனாய்வு செய்துள்ள ராஜ் கெளதமன் பல புதிய தரவுகளைத் தருகிறார். பயனுள்ள இந்தக் கட்டுரை *காலச்சுவடு’ என்ற தமிழ் நாட்டுச் சிற்றேட்டில் வெளிவந்திருக்கிறது. (இதழ் 29 - ஏப்ரல் / ஜூன் 2000) இந்த இதழில் இடம்பெற்றுள்ள மற்றொரு பயனுள்ள கட்டுரை பிரேம் எழுதிய ‘கதை வழி நீடிக்கும் கவலைகளின் வம்சாவளி’
இலங்கையைச் சேர்ந்த தா. சனாதனன் என்ற ஒவியர் ‘ஈஸ்ட்மன் கலர் பூசிய யாழ்ப்பாணத்துக் கடவுளர்கள்’ என்ற தலைப்பில் நுண்கலைத்துறை மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த கலாநிதி என். சண்முகரத்தினம், காலச்சுவடு ஏட்டில் எழுதிய ‘முதலாளித்துவத்திற்கு அப்பால்’ என்ற கட்டுரையும் சமூகவியல் மாணவர்களுக்குப் பயன்படும்.
来源
செ. இராஜதுரை மலர்
С கிலாநிதி செல்லையா இராஜதுரை’ என்ற பெயரிலே மலர் ஒன்று சுமார் மூன்று வருடங்களுக்கு முன் வெளியாகியது. ‘சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட

கே.எஸ். சிவகுமாரன் 167
முன்னாள் அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான செல்லையா இராஜதுரையின் பங்களிப்புக்களை முன்னிட்டு நிறையப் படங்களுடன், மலர்க் குழுவின் ஆலோசனைப்படி சென்னை மணிமேகலைப் பிரசுரம் இந்தப் பயனுள்ளநூலை அச்சிட்டு வெளியிட்டிருந்தது.
இராஜதுரை ‘லங்கா முரசு’ என்னும் மாத இதழை வெளியிட்டவர். ‘சுதந்திரன்’ நாளிதழில் இணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பின்பு தமிழகம்’, ‘முழக்கம், ‘சாந்தி’ ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர். இந்த விபரங்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
இராஜதுரை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்குப் பல தரவுகளை இந்த நூல் தருகிறது.
来
சுபமங்கள - பெப்ரவரி 1993
LDறைந்த கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்த ‘சுபமங்களா’ என்ற தரமான இலக்கிய ஏட்டிலே, விரிவாக ஆராயக்கூடிய பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. உதாரணமாக, “இந்தியச் சூழலில் இன்றைய தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையை ‘தமிழவன்’ என்னும் பேராசிரியர் கார்லோஸ் எழுதியிருக்கிறார். (பெப். 1993). நமது பேராசிரியர் சி. தில்லைநாதன், ‘எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களிடையே கைலாசபதி எழுதிய கட்டுரையும் பல தகவல்களைத் தருகின்றது. “சிம்பொலிஸம் (குறியீட்டியல்) பற்றி மறைந்த சி.சு. செல்லப்பா (எழுத்து ஆசிரியர்) எழுதியிருக்கிறார்.

Page 97
168 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
HðsbGu 8 (G) - GT6ölso (Andre Gide) 19OuGhar 6I('på5/T6)Tj பற்றிய அறிமுகத்தைப் பிரம்மராஜன் தருகிறார்.
来 ஈழச் சுடர் - சித்திரை / வைகாசி 1965
‘சிவனருள் என்ற புனைபெயரில் எழுதி வந்த ஒரு உயர் பதவி வகித்தவர் வெளிக்கொணர்ந்த இந்த இலக்கிய ஏட்டில் நல்ல கட்டுரைகள் வெளியாகியிருந்தன.
குறிப்பிட்ட இந்த இதழிலே, யாழ்ப்பாணம் பாலை நிலமாகுமா?’ (கலாநிதி டபிள்யூ, எல். ஜெயசிங்கம்), ‘தேவாரகாலத் திருக்கேதீச்சரம் (கலாநிதி ஆ கந்தையா) போன்றவையும் ஆய்வுக்குரியவை.
来 இன்னுமொரு காழை
ர். பத்மநாப ஐயர் என்ற இலக்கிய அபிமானி இலங்கையிலிருந்த பொழுது எம் போன்ற எழுத்தாளர்கள் பயனடையும் விதத்தில் சில இந்திய தமிழ்ச் சிற்றேடுகளை விலைக்கு வாங்கிப் படிக்கப் பெரிதும் உதவி வந்தார். இவர் இப்பொழுது லண்டனில் வசித்து வருகிறார்.
இலங்கையிலிருந்து சென்று வெளி நாடுகளில் வசிக்கும் இலக்கியப் பிரியர்கள் மத்தியில் பெரும் புகழுடன் பணி புரிந்துவரும் இவரைப் பாராட்டிப் பல விருதுகளை வழங்கியிருப்பதுடன் நேர்காணல்களையும் அட்டைப்படத் தகைமையையும் வழங்கி வந்துள்ளனர். கனடாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் உதவியுடன் சில ஆங்கில நூல்களையும்

கே.எஸ். சிவகுமாரன் 169
வெளியிட்டு உள்ளார். தமிழ் நூல்களைப் பொறுத்தமட்டில் இவர் தொகுத்துள்ள ‘இன்னுமொரு காலடி’ என்ற வெளியீடு கவனத்தை ஈர்க்கிறது. இது 1998 ஏப்ரலில் வெளியாகியது.
ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கக்கூடிய 355 6JL '60)LI I Go progj GJ5TLjuT5 tWam@btinternet.com என்ற மின்னஞ்சல் முகவரி உதவக்கூடும்.
புகைப்படங்களும், வண்ணச் சித்திரங்களும் அடங்கிய இந்த ஏட்டில் 81 விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள்ளே பின்வரும் கட்டுரைகள் ஏதோ விதத்தில் உதவுமென நினைக்கிறேன்.
தமிழ் தழுவும் உலகமும், உலகம் தழுவும் தமிழும் (நா. கண்ணன்), நில அமைவும் இலக்கியமும் (சிற்பி பாலசுப்பிரமணியம்), கலேவலா தமிழில் ஒரு பின்லாந்துக் காவியம் (ஆர். சிவலிங்கம்), யாழ்ப்பாணத்து ஒவியங்களின் சமகால வெளிப்பாடு (அருந்ததி ரட்ணராஜ்), தாய் மொழியும் ஐரோப்பிய முதன்மொழிகளும் (ச. சச்சிதானந்தம்).
கதைகள், கவிதைகள், ஒர் ஆங்கிலக் கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளன.
பத்மநாம ஐயர் தொடர்ந்து தமது வெளியீடுகளைத் தருகிறாரா என்பது தெரியவரவில்லை.
来
களம் - 7 (ஜனவரி 1997)
அக்கரைப்பற்றிலிருந்து வெளிவந்த களம் நின்று போய்விட்டது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள்

Page 98
170 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அடங்கிய இந்த இதழில் தகவல்கள் தரும் கட்டுரைகளாக மலரும் நினைவுகள் (ஏ. இக்பால்), எமது படைப்பாக்க முயற்சிகளில் மேலைத் தத்துவத்தின் செல்வாக்கு (கொ.றோ. கொன்ஸ்டன்டைன்), போரின் முகங்களும், இன்றைய ஈழத்துத் தமிழ்க கவிதைகளும் (மு. பொன்னம்பலம்), தமிழ்க் கலைகளின் தமிழ்த் தன்மை தொடர்பாக (எஸ். சிவசேகரம்) ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். இந்த ஏட்டின் பிரதிகளை நீங்கள்தான் தேடிப் படிக்க வேண்டும்.
来
ஒலை - 26 (மே 2004)
கொழும்புத் தமிழ்ச் சங்க மாதாந்த மாசிகையில், தமிழ் மொழியும் தமிழ்ச் சங்கங்களும் (க. செபரத்தினம்), சொல்வளம் பெருக்குவோம் (8), (த. கனகரத்தினம்), இலங்கையின் தமிழ் நூல் வெளியீட்டு முயற்சிகள் (த. சித்தி அமரசிங்கம்) ஆகிய கட்டுரைகள் ஆய்வுக்கு உதவக்கூடும். படித்துப் பாருங்கள்.
来
“கலைச்செல்வி' - ஆண்டு மலர் (1959)
UTழ். தமிழ் இலக்கிய மன்றம் 46 வருடங்களுக்கு முன் வெளியிட்ட இந்த மலர் இலக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சிற்பி என்ற சிவ சரவணபவன் வெளிக்கொணர்ந்த அருமையான மாத இதழ் கலைச்செல்வி ஈழத்து இலக்கியத்துக்கு முக்கியமளித்து பிரபல்யப்படுத்த இந்த ஏட்டின் மூலம் இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் அறிமுகமாகினர்.
ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது:

கே.எஸ். சிவகுமாரன் W 171
“ஆறுமுகநாவலரும், தாமோதரம்பிள்ளையும், ஞானப்பிரகாசரும், விபுலானந்தரும், கணேசையரும் வாழ்ந்து வளர்ந்த மண் நாம் பிறந்த மண்.
“அந்தப் பெருமக்கள் வளர்த்து வந்த இலக்கிய பாரம்பரியத்தை தனித்துவம் மிகுந்த ஆக்கத்திறனை, தன்னலமற்ற மிகுந்த ஆக்கத்திறனை, தன்னலமற்ற தமிழ்ப் பணியை ஏற்றிப் போற்றுவதும், என்றென்றும் வளர்ப்பதும் எமது தலையாய கடமை. இதற்காகத்தான் சென்ற ஆண்டில் “கலைச்செல்வியை வெளியிடத் தொடங்கினோம். இந்த இலட்சியத்தின் வெற்றி பற்றிக் காலந்தான் கருத்துரை கூற முடியும்.”
ஆண்டு மலரிலேயே ஆய்வுக்குரிய சிறப்புக் கட்டுரைகள் என இவற்றைக் குறிப்பிடலாம் :
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ‘நெய்தல், சி. வைத்தியலிங்கத்தின் எழுத்துலகில் நான், கண்க செந்திநாதனின் “அஞ்சிலைக்கை வேடனார், அன்பின் வடிவானார், சி. பொன்னம்பலத்தின் யாழ் நாட்டு இறந்த நகர்ச் செல்வங்கள், ஈழத்துச் சோமுவின் (என். சோமகாந்தன்) 'மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்’
பாரபட்சமின்றித் தரவுகளையும் தகவல்களையும் ஆய்வாளர்களுக்கு உதவும் விதத்தில் தந்து வந்த தொடர்ந்து தந்ததுவும் முன்னோடிகளில் கனக செந்திநாதன், ஈழத்துச் சோமு, அன்புமணி, செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, எஸ். திருச்செல்வம், கே.எஸ். சிவகுமாரன் போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது.
ஆயினும் புதிய பரம்பரை ஆய்வாளர்கள் தேடல் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவதில்லை என்பது

Page 99
172 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
வெளிப்படை. இதனாலேயே அவர்களைத் தூண்டக்கூடிய வகையில் இத்தொடரை நான் மேலோட்டமாக எழுதி வருகிறேன்.
米
பழகள்-09, பெப்ரவரி-1981
இது பெங்களூரில் வெளிவந்த ஏடு. சிவராமன், தமிழவன் போன்றோர் இதனைக் கொணர்ந்தனர்.
மூன்றாம் உலக விஞ்ஞானம் ஒரு விவாதம், விஞ்ஞானத் தத்துவமும் மார்க்சியமும், (சிவராமன்), குண்டுச் சட்டியும் வாழ்ககையும் (தமிழவன்), இலங்கை இந்தியச் சூழலும் விவாதமும், உள்ளும் வெளியும் போன்ற சில பகுதிகள் பல தகவல்களைத் தருகின்றன.
来
சிங்கள ஏடு - மாவத 44, 46
சிங்களச் சிற்றேடுகள் சிலவற்றில் தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளும், விபரங்களும் இடம் பெற்றமையையும் இங்கு குறிப்பிட வேண்டும். 1987, 1988 காலப்பகுதிகளில் ‘மாவத வெளிவந்தது. 44ஆவது ஏட்டில் ஆர். சிவானந்தன், ஆதவன் ஆகியோரின் கவிதைகள் சிங்களத்தில் தரப்படுகின்றன. Community என்ற ஆங்கில ஏட்டின் 6ஆவது இதழில் கே.எஸ். சிவகுமாரன் எழுதிய இளங்கீரனின் ‘தென்றலும், புயலும்’ நாவல் பற்றிய திறனாய்வுக் கட்டுரையை எஸ். விஜயசூரிய சிங்களத்தில் தந்துள்ளார். சிங்கள இலக்கியம் பற்றிய பல கட்டுரைகள் இந்த ஏட்டில் இடம் பெற்றுள்ளன.

கே.எஸ். சிவகுமாரன் 173
இந்த ஏட்டில் 46ஆவது இதழில் (ஏப்ரல்-ஜூன்) சிங்கள-தமிழ் உறவுகள் பற்றிய ஆசிரியத் தலையங்கம் இடம் பெற்றுள்ளது. கே.எஸ். சிவகுமாரன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்று ‘இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியங்களும் சாதனைகளும்’ என்ற தலைப்பில் காமினி வேரகம சிங்களத்தில் தந்துள்ளார். காவலூர் ராசதுரை எழுதிய ‘இலங்கைத் தமிழ் சினிமா’ என்ற கட்டுரையை ஈ.எம்.'திஸ்ஸகுமார சிங்களத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘தமிழ்ச் சிறுகதைப்போக்கு’ என்ற கட்டுரையும் சிங்களத்தில் வெளிவந்துள்ளது. −
கைலாசபதியின் திறனாய்வுப் போக்கு’ என்ற கட்டுரையை என். சண்முகரெத்தினம் சிங்களத்தில் தந்திருக்கிறார்.
இவற்றுடன் எஸ். சிவகுருநாதன், எஸ்.ஜி. புஞ்சிஹேவ ஆகிய இருவரும் சில தமிழ்க் கவிதைகளைச் சிங்களத்தில் தந்துள்ளனர். மு. பொன்னம்பலம், ஏ. சங்கரி, உ. சேரன் ஆகியோரின் கவிதைகள் சிங்கள வடிவம் பெற்றுள்ளன. தமிழ் சஞ்சிகைகள் பற்றி இப்னு அஷமத் எழுதியிருக்கிறார். டி.பி.எஸ். ஜெயராஜ் ஆங்கிலத்தில் எழுதிய அரசியற் கட்டுரையொன்றை ஆர்தர் ஜி. வீரசேன ஆங்கிலத்தில் தருகிறார்.
இலங்கையில் பிறந்த இசைவாணர் எஸ். வைத்தியநாதனுடன் ஒரு செவ்வி இடம் பெற்றுள்ளது.
இது 14.07.1987 இல் கே.எஸ். சிவகுமாரன் தொகுத்துப் பிரசுரித்த "தி ஐலன்ட் கல்ச்சர் பக்கத்தில்

Page 100
174 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இடம்பெற்ற பேட்டியின் சிங்கள ஆக்கம். ஆனந்தராகவன் எழுதிய ஒரு சிறுகதையை எம்.எச்.எம். ஹம்ஸ் சிங்களத்தில் தந்துள்ளார். ‘இலங்கைத் திரைப்படங்கள்’ பற்றி கே.எஸ். சிவகுமாரன் 24.08.1987 இல் "தி ஐலன்ட்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றின் சாராம்சமும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.
அவ்வை ருத்ரமூர்த்தியின் கவிதை ஒன்றையும், ஈழ கணேஷின் கவிதையொன்றையும், சீதா ரஞ்ஜனி சிங்களத்தில் தந்துள்ளார். இந்த ‘மாவத்த ஏடு முன்னர் 185/1, பியகம வீதி, பியகம, என்ற இடத்திலிருந்து வெளியாகியது.
ஆய்வாளர்கள், தமிழுடன், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளில் தமிழ் இலக்கிய ஆக்கங்கள பற்றி வெளிவந்த கட்டுரைகளையும் தேடிப் படிக்கவேண்டிய அவசியமும் உண்டு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
米
ஞானம்-ஜூலை 2000, ஓகஸ்ட் 2001
Tெழுத்தாளர் தி. ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தரமான சிற்றேடு “ஞானம்'.
மேற்குறிப்பிட்ட இரு இதழ்களிலும் பயன்படக்கூடிய ஆதார விபரங்கள் அடங்கிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
சுடர் 01, ஒளி 2 இல் அன்புமணி மட்டக்களப்பு பிரதேச நாடக வளர்ச்சி’ பற்றிய பல தகவல்களைத் தருகிறார். ஆய்வாளர்கள் இத்தகவல்களையறியாமல் ஆய்வை மேற்கொள்வது பாரபட்சமாக அமையும்.

கே.எஸ். சிவகுமாரன் 175
'மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை மேலும் அறிந்து கொள்ள அவருடனான நேர்காணல் பெரிதும் உதவும்.
ஞானம் 15இல் இரா. சிவலிங்கம் எழுதிய 'வன்னி மண்ணில் சிலம்பு கூறல் முல்லை மணி பற்றிய ந. பார்த்திபனின் அறிமுகம், துரை மனோகரனின் பத்தி போன்றவற்றிலிருந்து பல தரவுகளை ஆய்வாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
来
சிற்றிதழ் செய்தி ஆய்வு இதழ் ஒக்.1998
பொள்ளாச்சி நேசன் என்ற தமிழ் நாட்டு எழுத்தாளர் வெளியிட்ட பயன்தரும் மடலில், ‘தென்னிந்தியா அல்லது சென்னை ராஜதானி’ என்ற கட்டுரை, “சிறுவர் இதழ்களின் வரலாறு’ மதிவண்ணன் ஆகியன குறிப்பிடத்தக்கன.
பொள்ளாச்சி நேசன் இப்பொழுது இணையத் தளத்தில் பல அரிய விஷயங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.
கணையாழி ஏப்ரல் 1997
கி. முத்தையா எழுதிய ‘கோல்ட்வெல் ஒப்பிலக்கணத்தின் அரசியற் பின்னணி” கேரள மாநிலத் தலைநகரில் வாழும் தமிழ் எழுத்தாளர் நீல. பத்மநாதன் பகிர்ந்துகொள்ளும் ‘எழுத்து அனுபவங்கள்’, வே. சபாநாயகம் எழுதிய 'கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ ஆகியனவும் தகவல்களைத் தருபவை.

Page 101
176 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சொல் புதிது ஜன/மார்ச் 2000
‘சூத்ரதாரி' என்னும் பெயருடைய ஒருவர் கொண்டு வந்த இதழில் பிரேம் எழுதிய சிலப்பதிகாரம், மணிமேகலை, பெண்மையியல், நாடகம், தொல் படிமங்கள் - ஒரு முன்னுரிமை (ஜெயமோகன் தொகுப்பு) ஆகியன குறிப்பிடத்தக்க தரவுகளைத் தருகின்றன.
来
கோடு, ஏப்ரல்/ஜூன் 2000
ஜெயந்தன் என்ற தமிழ் நாட்டு எழுத்தாளர் கொணர்ந்த 'தோழி’ என்ற ஏடு இப்பொழுது வருகிறதோ தெரியவில்லை.
வே.மு. பொதியவெற்பன் எழுதிய ‘பார்க்கத் தவறிய பக்கங்கள்’ சில மேற்கொள்களைத் திரட்டித் தரும் சிறு கட்டுரை.
யமுனா ராஜேந்திரன் ஒரு சிறந்த திரைப்பட விமர்சகர் என்று இலங்கை இளம் கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன்’ என்பவர் ஒருமுறை ‘சரிநிகர்’ பத்திரிகையில் எழுதியிருந்தார்.
இது எவ்வளவுதூரம் சரியோ தெரியாது. ஆயினும் யமுனா ராஜேந்திரன் (இவர் ஒர் ஆண்) சில புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்று அறிகிறோம். இவர் எழுதியவற்றுள் ஒன்று உண்மையில் வெறும் தொகுப்பே. ‘மணிரத்தினத்தின் சினிமா என்பது அது.
இந்தப் புத்தகத்தை மதிப்புரைக்கு உட்படுத்துகிறார் வெங்கட்சாமிநாதன் என்ற விமர்சகர் ஆய்வாளர்களுக்குப்

கே.எஸ். சிவகுமாரன் 177
பெரிய அளவில் பயனுடையதாக அமையாவிட்டாலும் இந்த மதிப்புரையிலிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையில் பிறந்து இந்தியத் திரைப்படத்துறைக்குப் பெரிதும் பங்களித்து வரும் பாலு மகேந்திரா என்ற திரைப்பட நெறியாளரும் எழுத்தாளருமான கலைஞனைப் பற்றி “கோடு’ என்ற இந்த ஏடு "சினிமாவை சினிமா என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்டிருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படக் கலைஞன்” என்று வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
க. பஞ்சாங்கம் எழுதிய கட்டுரை ஒன்றும் கவனத்தை ஈர்க்கிறது. "பின் அமைப்பியல்வாதிகள்’ என்று இங்கு கூறிக்கொள்பவர்களின் ஆய்வுக்குப் பயன்படக்கூடிய கட்டுரை இது.
தமிழவன் (கார்லோஸ்) என்பவர் இப்பொழுது போலந்துப் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். இந்த விபரத்தை அவர் எனக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சலின் மூலம் அறிந்து கொண்டேன்.
தமிழவன்’ ஜி.கே. எழுதிய மர்ம நாவல்' என்ற பெயரில் பின் அமைப்பியல் போக்கில் ஒரு நாவலை எழுதியிருக்கிறாராம். அதனை நான் இன்னமும் படிக்கவில்லை. ஜி.கே. ஒர் இலங்கைக்காரர்.
1983 இல் நடந்த ஈழ நாடு இனக்கலவரத்தில் வெளியேறியவர். மும்பை வழியாக லண்டன் சென்றுவிட்டது என்ற குறிப்பு இந்த அபத்தம் நிறைந்த மொழி விளையாட்டிற்கு ஒரு சமகாலத் தன்மையையும்

Page 102
ተ78 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சேர்த்து விடுகிறது என்று பஞ்சாங்கம் (இவரும் ஒரு பேராசிரியர்) எழுதியிருப்பதும் அவதானிக்கத்தக்கது.
கோடு, ஆசிரியர் ஜெயந்தன் எழுதிய பத்தி (பல்சரக்கு) கூட பல தகவல்களைத் தருகின்றன. சுப்ரபாரதி மணியனின் ‘சாயத்திரை’ என்ற படைப்பு பற்றிய மதிப்புரை, இரா. நெடுஞ்செழியன் பற்றிய குறிப்பு வெ.சா. (வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்) என்ற ஏட்டைப் பற்றியே குறிப்பு, வெளியீட்டு விழா ஒன்று பற்றிய குறிப்பு ஆகியன அடங்கியுள்ளன. படித்துப்பாருங்கள்.
来
பிரவாஹினி
வெள்ளவத்தையில் உள்ள தர்மராம வீதி 58ஆம் இலக்க இல்லத்திலிருந்து பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) ஒரு மாதாந்த செய்தி மடலை வெளியிட்டு வருகிறது. ஆய்வாளர்கள் பயன்பெறத்தக்க பல பெண்ணியத் தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
ஆனி மாத இதழில் லஷ்மி ஹோல்ஸ்ரோம் என்பவர் பற்றிய விபரங்கள் தரப்படுகின்றன. இவரைப் பற்றியறிந்திராத நான் வியப்புடன் பல தகவல்களைப் பெற்றேன். வேறு பல தகவல்களும் பிரயோசனமானவை.
米 இலக்கு - சிறப்பு மலர் 1998
இலங்கையில் பிறந்து சென்னையில் வாழ்ந்து தற்சமயம் கனடாவில் வசித்து வரும் தேவகாந்தன் நடத்திய இந்தச் சிற்றேட்டில் பல தரவுகளை நாம் பெற்றுக் கொள்ள

கே.எஸ். சிவகுமாரன் 179
முடியும். உதாரணமாக, தமிழ் ஆய்வியல் வரலாற்றில் கலாநிதி க. கைலாசபதி (கலாநிதி நா. சுப்பிரமணியன்) கதா என்ற அமைப்பாளர் கீதா தர்மராஜன் என்பவருடனான பேட்டியொன்றின் தமிழாக்கம் (லதா ராமகிருஷ்ணன்) ஜெயமோகன் என்பவரின் (இவர் தமிழ் நாட்டில் ஒரு முக்கிய எழுத்தாளராகக் கருதப்படுகிறார். ‘அமைப்பியல்' தொடர்பாக சி. சிவசேகரம் எழுதிய கண்டனக் கட்டுரை, 'பாரதியும் நாவலரும் (பேராசிரியர் க. கைலாசபதி) ஆகியன பெரிதும் உதவும்.
米
நவீன விருட்சம் - ஒக்டோபர் 1996-மார்ச் 1997
அழகிய சிங்கர் ஒரு தமிழ் நாட்டு எழுத்தாளர்.
இவருடைய உண்மைப் பெயர் என். சுப்பிரமணியன் என இருக்கலாம். சரியாகத் தெரியாது. இவர் நடத்திய சிற்றேடுதான் ‘நவீன விருட்சம். இந்தக் காலாண்டு இதழில் வித்தியாசமான பரீட்சார்த்த எழுத்துக்கள் உள்ளடங்கி யிருந்தாலும் என்னைப் பொறுத்தமட்டில் அவை தரமுடையவையாக இருக்கவில்லை.
ஆயினும் குறிப்பிட்ட இந்த இதழில் அருமையான எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் (ஐ. தியாகராஜன்) தொடர்பாக பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உதாரணமாக எஸ். வைத்தீஸ்வரன் என்ற கவிஞர் எழுதியிருக்கும் குறிப்புகள், அழகிய சிங்கர் எழுதிய குறிப்புகள், அசோகமித்திரனை ஆய்வுக்கு உட்படுத்தும் ஆய்வாளர்களுக்கு உதவும்.
来

Page 103
18O இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சதுக்கப் பூதம் - ஏப்ரல் 2000
Tெம். செங்குட்டுவன் என்பவர் வெளிக்கொணர்ந்த இந்த ஏடு பிறமொழிக் கதைகளைத் தமிழில் தந்தாலும், அச்சிட்ட முறையைப் பார்த்ததும், வாசிக்க வேண்டுமென்ற ஆவல் குன்றிவிடுகிறது.
ஆயினும், சில விஷயங்கள் ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடியவை. ஜெயமோகன் எழுதிய 'விஷ்ணுபுரம் என்ற படைப்பைப் பற்றிய தகவல்களை ஆசிரியரே தருகிறார்.
பிரயாசைப்பட்டு எழுதப்பட்ட நடையினைப் படித்துப் புரிந்து கொள்வது சற்று சிரமமாயினும், ஜெயமோகனின் போக்கு எப்படிப்பட்டது என்பதையறிய இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்கலாம். இதனை எழுதியிருப்பவர் தேவதேவன்.
来
கனவு - இதழ் 28. மார்ச் 1997
சிப்ரபாரதி மணியன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இந்த இதழில் தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம் (ஞானி), தலித் எனும் சொல் (கருணா மனோகரன்) ஆகியோரின் கட்டுரைகள் பயனுள்ள பார்வைகளைத் தருகின்றன. யமுனா ராஜேந்திரன் என்பவர் திரைப்பட விமர்சகராகத் தமிழ் நாட்டின் சில வட்டாரங்களில் கருதப்பட்டு வருகிறார். அவருடைய திரைப்பட விமர்சனங்கள் நிறையவே இந்த இதழில் வந்துள்ளன. * ...
米

கே.எஸ். சிவகுமாரன் 181
மனத்திரை
C தெணியான்' என்றால் ஈழத்துத் தமிழ் உலகம் ஒருவித மரியாதையையும் அன்பையும் அப்பெயரை உடையவருக்குச் செலுத்தும். காரணம்: பண்பாளர், அன்புள்ளங் கொண்டவர், திறனாற்றல் மிக்க புதுமைப் படைப்பாளி. அவர் பெயர் கந்தையா நடேசு. அறுபது வயதையும் தாண்டிவிட்ட அவருக்குச் சமர்ப்பணமாய் வெளிவந்த மணி விழா மலர் (2003) பிரயோசனப்படக் கூடியதொரு தொகுப்பு. தொகுத்தவர் கொற்றை கிருஷ்ணானந்தன். முகவரி: கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை.
இத் தொகுப்பு ஆய்வாளருக்கு எவ்வாறு பிரயோசனப்படுமெனில் -
தெணியானின் பங்களிப்புகள், பலரால் பல கோணங்களில் பகுப்பாய்வு செய்யப்படுவதுடன், அவருடைய ஆளுமையின் பல்வேறு நிலைகளைப் படம்பிடித்துக் காட்டுவதுடன், அவர் காலச் சூழலையும் விபரிக்கின்றன.
எழுத்தாளர்களின் படைப்புகளை நாம் படிக்கையில், அவர்தம் வாழ்க்கைப் பின்னணி, அவர் வாழ்ந்த காலம், அவரின் வாழ்க்கைத் தரிசனங்கள் / உலக நோக்கு ஆகியவற்றையும் கருத்திற்கொண்டே நாம் திறனாய்வு செய்ய வேண்டுமென்பது எனது அணுகுமுறை.
ஆயினும் எனது அணுகுமுறைக்கு முரணாகவும் அணுகுமுறைகள் இருக்கலாம். இதற்கு ஒர் உதாரணம், 'நந்தலாலா’ ஏட்டின் ஆசிரியர் ஜோதிகுமார். இவருடைய GoFGiuG SIGölgo (www.athivugal.com) g)GOOGOOTuug5Gö66)

Page 104
182 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
வெளியாகியிருக்கிறது. ஆமாம், ஈழத்து / தமிழ் நாட்டு / பிற நாடுகள் தமிழ் எழுத்துக்கு முக்கிய இடம் கொடுத்து வரும் மின் ஏடு "பதிவுகள்’ எனலாம். கனடா டொரொன்டோவில் தளம் கொண்டது இவ்விணையதளம். இதன் ஆசிரியர் வி.என். கிரிதரன். கட்டு பத்த பல்கலைக்கழகக் கட்டிடக்கலை பட்டதாரி மறைந்த அ.ந. கந்தசாமியின் மருமகன். கிரிதரன் பல நூல்களை ஏற்கனவே வெளியிட்டவர். படைப்பாளி. திறனாய்வாளருமாவார். வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன், தேவகாந்தன், கே.ஏஸ். சிவகுமாரன் போன்றோரின் பத்திகள் இந்த மின் ஏட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 565TL. IT62a5labig5I (www.athivugal.com) 6Taisip g)60)680Tu தளத்திலும் ஈழத்து இலக்கியம், அரசியல் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன.
நிற்க, எழுத்தாளர்கள் தொடர்பான சிறப்பு மலர்கள் தேடலையும், ஆய்வையும் மேற்கொள்பவர்களுக்குப் பெரிதும் பலனளிக்கின்றன என்பது பொய்யல்ல.
தெணியான் தொடர்பான பகுப்பாய்வுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதன் மூலம் வாசகர் தெணியான் தொடர்பானதொரு வெட்டு முகப் பார்வையைப் பெற்றுக் கொள்வதுடன், குறிப்பிட்ட நூலைத் தேடிப் பெறவும் வகை செய்யப்படுகிறது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி
இவர் சில முக்கியமான அவதானிப்புகளைத் தெரிவிக்கிறார். சொன்னாற்போல, ‘அவதானிப்பு’ (Observation) சில வேளைகளில் பிழையாக அவதானங்கள்

கே.எஸ். சிவகுமாரன் 183
(Cautions) என்று சிலரால் பயன்படுத்தப்படுகிறது. இது பிழையல்லவா? முற்போக்கு எழுத்தாளர்களின் கருத்து நிலை, ஆள் நிலை வளர்ச்சிப் போக்குப் பற்றி விரித்துரைத்த கா. சிவத்தம்பி இப்படிக் கூறுகிறார்:
“தெணியான் பிரதானமாக ஒரு நாவலாசிரியரே. தன்னுடைய பார்வையின் கண்டுபிடிப்புகளையும், அந்தக் கண்டுபிடிப்புகளின்தளமாக அமையும் மனித உறவுகளையும் சித்திரிப்பதற்கு இவருக்கு நாவலென்ற அகண்ட கன்வஸ் தேவைப்படுகிறது.”
'நந்தி’ (செ. சிவஞானசுந்தரம் - வைத்திய கலாநிதி)
“டானியலின் நாவல்களில் எழுதப்படாத, அவரின் எழுத்து வரிகளுக்கு நடுவிலே, வாசகர்களைச் சிந்திக்க வைக்கும் கருவூலமும் உணர்வு ஊற்றும் உறைந்து கிடக்கும்”
ஆ. கந்தையா
“சாதியத்தினூடாக மானுடமும், மானுடத்தினூடாகச் சாதியமும் அவரது கதைககளில் பார்க்கப்படுகின்றன. ஆகவே, அவரது கதைகள் காலத்தை வென்று நிற்கும்.”
டொமினிக் ஜீவா
“படைப்பாளி ஒரு வட்டத்திற்குள் நின்று நின்று சுற்றிச் சுழன்று வருபவன் அல்லன். அதனால் அவனது ஆளுமை வலுவடையாது. அதேசமயம் தனக்கு முன்னால் நடக்கும் மானுடக் கொடுமைகளை மறந்துவிட்டு வெறுங்கற்பனைகளில் மிதப்பவனும் அல்ல. இந்த நாட்டு ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சியில் பெரிதும் நாட்டம்

Page 105
184 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கொண்டு செயலாற்றி வரும் தெணியானிடம், இளந்தலைமுறையினர் கற்றுத் தெரியக்கூடிய பல அனுபவப் பாடங்கள் உள்ளன.
தெணியான் தனது ஒவ்வொரு படைப்பிலும் தனது ஆக்கத் திறனைப் புதுப்பித்து மெருகு ஊட்டிக் கொண்டிருக்கிறார். தனது ஒவ்வொரு புதிய படைப்புகளின் உள்ளடக்கத்திலும், உருவத்திலும், நடையிலும் புதுமை செய்ய முனைந்து கொண்டிருக்கிறார்.” எம்.கே. முருகானந்தன்
“மரபு வழித் திறனாய்வுக்குப் புறம்பாகப் புதிய மேன்ாட்டுத் திறனாய்வு முறைகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எமக்கெல்லாம் தமிழில் விளக்கிக் காட்டும் பல்கலைக்கழக ஆசிரியர்களுள் இருவர் குறிப்பிடத்தகுந்தவர்கள்: பேராசிரியர்கள் சபா. ஜெயராசா, கிருஷ்ணராஜா” சபா ஜெயராசா கூறுகிறார் :
“மார்க்சிய நவமார்க்சிய அழகியல் மரபுகளை அடியொற்றிய கலையாக்கங்களுக்குரிய எடுத்துக்காட்டுகளைத் தரக்கூடிய எழுத்தாளர் வரிசையில் தெணியானுக்குத் தனித்துவமான ஒர் இடம் உண்டு.”
‘பொற்சிறையில் வாடுவோரை உள்ளத்தால் நேசிக்கும் உயர், பண்பாளன்’ என்கிறார் கவிஞர் சோ. பத்மநாதன். கலாநிதி செ. யோகராசா
“உன்னதமான பாத்திர உருவாக்கம் என்பது ஆழமான அனுபவம், கூர்மையான அவதானிப்பு,

கே.எஸ். சிவகுமாரன் 185
நிதானமான எழுத்து முயற்சி, ஞாபக சக்தி எழுத்துடனான ஒன்றிப்பு, தேர்ந்த வாசிப்பு, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி முதலானவற்றிலேயே உருவாகும். இந்தியாதி தன்மைகள் தெணியானிடம் காணப்பட்டமையாலேயே "மரக்கொக்கு நாவல் ஊடாக விஜயலட்சுமி என்றொரு சிறந்த பாத்திரத்தினை ஈழத்து நாவலுலகம் பெற்றுக் கொண்டது.”
பேராசிரியர் நா. ஞானக்குமாரன்
“உள்ளார்த்தமாக அன்போடு பழகுகின்ற ஆத்மாக்களை இன்றைய சமூகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சூழல்களில் தெணியானின் பழக்கமும் நெருக்கமும் உண்மையில் எனக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.”
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) :
“தெணியான், ஈழத்து நாவலாசிரியர்களில் முக்கியமானவர். விடிவை நோக்கி, கழுகுகள், பொற்சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு, காத்திருப்பு, கானலில் மான் முதலான நாவல்களை ஈழத்து இலக்கியத் துறைக்குத் தந்துள்ளார்.”
“நகரத்திலும், அது சார்ந்த பகுதிகளிலும் காண முடியாத வாழ்க்கை முறையை இவரால் சித்திரிக்கப்படும் கிராமப்புறங்களில் நீங்கள் காண்பீர்கள்.”
கந்தவேள் :
“மலிவான புகழுக்கு மயங்காத / மல்லிகையின் எழுத்து முகம் / அல்லவா நீங்கள்!”

Page 106
186 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மேமன் கவி :
“தெணியான் யாழ்ப்பாண சமுதாயத்தின் தவிர்க்க
முடியாத ஒரு தேவைப்பாடாகத் தோற்றம் பெற்றார்.” (எஸ். வன்னியகுலம்)
“கட்டுரை இலக்கியம் பற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படின் தெணியானுக்கு கணிசமானதோர் இடம் கிடைக்கும் என்பது உறுதி” (ரட்னம்)
கலாநிதி எஸ். சிவலிங்கராசா :
“எமது பிரதேசத்தில் வழங்கி வரும் உறவுமுறைச் சொற்கள் பலவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாத்த பெருமை தெணியான் முதலான ஆக்க இலக்கியக்காரர்களையே சேரும். “யாழ்ப்பாணப் பிராமண சமூகம் பற்றியதான முதல் நாவல் (பொற்சிறையில் வாடும் புனிதர்கள்).”
தெணியான் (க.நடேசு) :
“ஒரு படைப்பிலக்கியத்தை நான் உருவாக்க முன்னர் ஏன் எழுதப் போகிறேன்? எதனை எழுதப் போகின்றேன்? எப்படி எழுதப் போகின்றேன்? என்ற வினாக்களுக்கு என்னுள்ளே விடைகளைக் காண்பதன் மூலம் இலக்கு, உள்ளடக்கம், உருவம் என்பவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இதுவே ஒரு சிருஷ்டியை நான் செய்யும் போது முதலில் எனக்குள் செய்து முடிக்கும் ஆரம்பப் பணி.”
தம்பையா தயாபரன் :
“தெணியானின் தோறறமும் அவரின் “மனரிஸ்’ங்களும், உடைகளும் என்னை அவரை

கே.எஸ். சிவகுமாரன் 187
எப்போதுமே ஆர்வத்துடன் பார்க்க வைத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி, சிகரெட்டை அனுபவித்துப் புகைப்பதில் கூட.”
“எமது சமூகத்தின் பிரச்சினைகளைத் தமிழ்த் தலைவர்களுக்கு உறுதியுடன் எடுத்துச்சொன்ன அவரின் வாதப் பிரதிவாதத் திறமைகளை இன்னும் நம் மனக்கணக்கில் வைத்து பூசிக்கின்றோம்.” (வையாபுரி பி.பி. வேலாயுதம்)
ஆர். சண்முகநாதன் :
“மரக்கொக்கு வடமராட்சி மண்ணுக்கு உரித்தான சாதியின் கெடுபிடியினை சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் எனத் தம்மை முத்திரை குத்திக்கொண்டு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள், அதிகாரத்தொனி, வறட்டுகெளரவம் எடுத்துக்காட்டுவதுடன், குறிக்கப்பட்ட சமூகத்திலுள்ள பெண்களின் வாழ்வியல் நிலை எவ்வளவுக்குத் தள்ளப்பட்டது என்பதைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டது. 1994 இல் இந்த நாவலுக்கு அகில இலங்கை சாகித்திய மண்டல பரிசு கிடைக்கப் பெற்றது.”
“சமூக அநீதிகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து அவற்றை அம்பலப்படுத்தி நீதி தேட முனையும் இலக்கியவாதிகள் கூட பேராளிகள்தான். இந்த வகையில் தெணியான் ஆக்ரோசமான ஒரு போராளியாகவே காட்சியளிக்கிறார். அவருடைய பேனா நிறையவே சாதித்துள்ளது.” (வ. வரதன்)
"பூமகள் ச.ச நிலைய மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக கேட்போரைக் கவரும் கணிர் என்ற

Page 107
188 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
குரலில் அறுத்தறுத்துப் பேசும் ஒரு சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற விவாதியுமாவார் தெணியான்.”
இந்த நூலிலே, மூன்றாவது மனிதன்' சிற்றேட்டுக்குத் தெணியான் அளித்த செவ்வியில் (2003 பெப்ரவரி - மார்ச் மாத இதழ்) இவரைப் பற்றிய சுயவிபரத் தகவல்கள், இவருடைய படைப்புகள், வெளிவந்த நூல்கள் தொகுத்த நூல்கள் போன்ற விபரங்களும் தரப்படுகின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பல்கலைக்கழக ம பீ டத் திறனாய்வாளர்களுக்கும் , பத்தி எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த மணி விழா மலர் நிச்சயமாகப் பயன்தரும்.
来
நாட்குறிப்பு மூலம் கதை சொல்லல்
நாட்குறிப்பு மூலம் கதை சொல்லல் புனைகதைத் துறையில் ஒர் உத்திமுறை. கற்பனைகளாகவும் அப்பதிவுகள் அமையலாம். நிஜங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவையாகவும் அக்கதைகள் அமையலாம். இங்கிலாந்தில் மருத்துவம் பயின்ற பலர் கதைகளையும் எழுதியுள்ளனர். இங்கிலாந்தில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் கூட. அப்படிப்பட்டவர்களுள், ரஷ்ய எழுத்தாளர் / நாடகாசிரியர் அன்டன் செகோவ் (Anton Checkov) î6ity, 5FLDj Gost ””G DIT b (W. Somerset Maughm) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிறுகதை வடிவத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்திச் சுவையான, சத்தான கதைகளை எழுதியவர்கள்

கே.எஸ். சிவகுமாரன் 189
செக்கோவும், மோமும். தமிழ் நாட்டில் கூட ‘லசுஷ்மி" (வைத்திய கலாநிதி திருமதி திரிபுர சுந்தரம்) எழுதிய படைப்புகளுள் சில அவருடைய வைத்திய அனுபவங்களைக் கொண்டவைதான்.
நமது நாட்டில் தலைசிறந்த திறனாய்வாளர் ஒருவர் இருக்கிறார். ஆனால், நாம் அவரை, வைத்திய நூல்களை அழகு தமிழில் தந்திருக்கிறார், சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறார் என்று மாத்திரமே அறிந்திருக்கிறோம். ஆயினும், அவருடைய மறந்து போகாத சில.’ என்ற நூலைப் படித்தால் போதும், ஒரு திறனாய்வாளராக, அதுவும் அற்புதமான திறனாய்வாளராக, அவர் இன்னமும் ஏன் பரவலாக அறியப்படவில்லை என்று ஏங்க வைக்கிறது.
அந்த எழுத்தாளர் வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.
எம்.கே.எம். எழுதிய ‘ஒரு டாக்டரின் டயறியில் இருந்து' என்ற சுவையான நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ந்தேன். உண்மையனுபவங்களைச் சுவைபட வியத்தகு சிறுகன்த வடிவத்தில் அவர் தருவது பரவசப்படுத்துகிறது. இயல்பான பேச்சு வழக்கில் உரையாடல்களைத் தருவது மட்டுமல்லாமல், ஒரு நல்ல சிறுகதைக்கு எடுத்துக்காட்டாக, இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் அனுபவ வெளிப்பாடாக அமைகிறது.
யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் ஒரு
‘Doctor’ ஆகப்பெற்ற மனித நிலைப்பாடுகளையும்,
உணர்வுகளையும் சொற்சித்திரமாக அவர் நமது மனத்திரையில் கொண்டு வருகிறார்.

Page 108
190 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
உண்மையிலேயே, ஈழத்து புதுவடிவ எழுத்துக்களில் இது முதல் முயற்சி எனலாம். 45 வருடங்களுக்கு முன் ‘டயறிக் காதலி' என்ற பெயரில் பரிசோதனையாக ஒரு சிறுகதை பிரசுரமாகியது. அதனை எழுதியவர் நான்தான். (என்ன இது, எந்த வேளையிலும் உங்களைப் பற்றியே எழுதுகிறீர்களே என்று சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. என்ன செய்வது, வரலாற்றுச் செய்திகளில் நானும் அகப்பட்டுக் கொள்கிறேனே! பின்னர் எப்படியாம்)
மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை ஆக்கியோனிடமிருந்து பெற்றுக் கொள்ள 2559545 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இனி, சில பகுதிகளைப் பார்ப்போம். (பக்கம், 7)
66
. ஆஸ்பத்திரி, தவிர்ந்த ஏனைய இடங்களில் மனிதர்களைச் சந்திக்கும் போதாவது அவர்களை நோயாளிகளாக அல்லாது, சாதாரண மனிதர்களாகவே (டொக்டர்கள்) காண அவாவுகிறார்கள். தாங்களும் ‘டொக்டர்’ என்ற உணர்வு இல்லாமல், சாதாரண மனிதர்களாக ஒரு சில கணங்களேனும் வாழ வேண்டும் என்று ஏங்குவார்கள். ஆனால், டொக்டர்களின் இந்த ஏக்கம், என்றும் ஏக்கமாகவே இருக்கிறது. ஏக்கம் நீங்கிச் சந்தோஷமாகப் பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.”
புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். அனுபவமும், அறிவுப் பெருக்கமும் பெற்றே தீர்வதுடன், சுவையான கதை சொல்லற் பாணியையும் அனுபவிப்பீர்கள்.
米

கே.எஸ். சிவகுமாரன் 191
நிருபமா மேனன் ராவின் 'ரெயின் ரைசிங்’ கவிதை நூல்
கேரளத்தில் பிறந்து, கர்நாடகக் கணவரைப் பெற்று வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் வாழ்ந்து, கொழும்பு உட்பட பல மாநகரங்களில் இந்திய ராஜ தந்திரியாகப் பணியாற்றி வரும் நிருபமா மேனன் ராவ் ஆங்கில இலக்கியத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற ஒருவர். அமெரிக்க ஹார்வட் பல்கலைக்கழகத்தின் அதியுயர்ந்த பட்டத்தையும் பெற்றவர். இவருக்குப் பிடித்த துறைகளில் வரலாறும் ஒன்று.
இவர் எழுதிய 34 கவிதைகள் அடங்கிய தொகுப்பின் பெயர் 'மழை எழுச்சி” (Rain Raising) ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பினும் இக்கவிதைகள் தமிழ் வாசகர்களையும் பரவசத்துக்குள்ளாக்கும்.
கவிதைகள் மூன்று பகுதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுநூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கவிஞர் நிருபமாவின் உலக நோக்கு, தமது வேர்களைத் தேடும் முயற்சி, தமது ஏக்கங்கள், சந்தோஷங்கள், வியப்புகள் போன்றவை இக்கவிதைகளின் உள்ளடக்கம் எனலாம்.
இத்தொகுதியிலுள்ள அத்தனை கவிதைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பகுப்பாய்வு செய்து விளக்குவது சுவாரஸ்யமான ஓர் அம்சமாக அமையும். ஆயினும் இங்கு ஒரு சிலவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து எனது புரிதலையும் வெளிப்பாட்டையும் பதிவு செய்கிறேன். உண்மையிலேயே நீங்கள் இவற்றைப் படித்துப் பார்த்து உங்கள் மெய்ப்பாடுகளை உணர்ந்து கொள்வதே சிறப்பு.

Page 109
192 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
"A Poem begins with delight and ends in wisdom' என்றான் அமெரிக்கக் கவிஞன் ரொபர்ட் ஃப்ரொஸ்ட் (Robert Frost). இதனை நாம் தமிழில் இவ்வாறு தரலாம். உவகையில் பிறந்து மெய்யறிவில் முடிவுறும் கவிதை. அக்கவிஞனின் அவதானிப்பை மெய்ப்பிப்பது போல நிருபமா மேனன் ராவின் சில கவிதைகள் அமைந்திருப்பதைப் பாராட்டலாம்.
ஆங்கில மொழியின் அர்த்தபுஷ்டியான சொற்கள் கவிஞருக்குச் சேவகம் புரிகின்றன. அவர் கையாளும் அசாதாரணமான சொற்பிரயோகங்கள் புதுப்புதுப் படிமங்களை நம் கண்முன் கொண்டு வருகின்றன.
இனி ஒரு சில கவிதைகளின் உள்ளடக்க மொழியைப் பார்ப்போம்.
கேரளாவில் தாய்மை வழிப் பாரம்பரியம் உண்டு. நாயர் வம்சத்தில் தரவாட் என்பது அத்தகைய வம்சக் குடும்பத்தைக் குறிக்கும். பிற இடங்களில் வசித்து விட்டுத் தன் பூர்வீகத்தை அறிந்துகொள்ள முற்படும் இப்பெண் கவிஞர், தனது நினைவுகளைப் படிமக் காட்சிகளாகத் தமது முதற் கவிதையில் தரவாகத் தருகிறார். தனது பிறப்பிடம் தமக்கு அந்நியமாய் போய் விட்டதைக் கவிஞர் உணர்கிறார்.
அடுத்த கவிதையில் தமது படிப்பின் நினைவுகளை இரை மீட்கிறார். ஆற்றொழுக்கான ஆங்கிலக் கவிதை மொழியில் அவர் சித்தரிப்பு அமைகிறது. இதே மாதிரித் தனது மகனின் ஒவியத்தைப் பார்த்தபொழுது ஏற்படும் மனப்பதிவுகளை ஆசிரியை அடுத்த கவிதையில் தருகிறார். கேரளப் பட்டணமாகிய கொட்டாக்கல்லில் ஆயுர்வேத

கே.எஸ். சிவகுமாரன் 193
மூலிகைகள் காணப்படும் செடி கொடிகளையும் அவற்றின் நோய் குணமாக்கும் தன்மையையும் சொற் சித்திரங்களாகக் கவிஞர் படம் பிடிக்கிறார். “ஃப்ரீடம்” (சுதந்திரம்) என்ற கவிதையில் பெண் தெய்வங்களின் இருள் சூழ் பின்னணியையும் வெள்ளொளிக்காக அவை காத்திருப்பதையும் அவர் காட்டுகிறார்.
பெரு நாட்டிலும் சேவை செய்த நிருபமா மேனன் ராவ் அங்கு அவதானித்தவற்றின் நினைவுகளையும் மறந்து விட்டவற்றையும் நினைவுகூரும், தலைப்பில்லாக் கவிதையில் சொற்பிரயோகம் செய்கிறார். "Stations” (நிலையங்கள்) என்ற கவிதையிலும் நினைவூட்டல்கள் படிமங்களாக அமைகின்றன. “சந்தியா’ என்ற கவிதையில் தமது திருமண நிகழ்வுகளை நினைவுப்படுத்தித் தாம் இப்பொழுது மூப்படைவதைக் காட்டுகிறார் கவிஞர்.
எனக்குப் பிடித்த கவிதைகளுள் ஒன்று “Return to the city' (நகரத்திற்குத் திரும்புதல்) தாம்பத்திய உறவின் பலாபலன்களைத் தேடும் முயற்சிக்காக, கவிஞர் சொல்லாமற் சொல்வது சுவையூட்டுகிறது. ஆங்கில இலக்கியம் படித்தவராகக் கவிஞர் இருப்பதனால் கவிதாமொழி இயல்பாகவே அவருடைய ஆங்கிலக் கவிதைகளில் வந்து அமர்கின்றது.
“மார்ச் 27இல் என்ற கவிதையில் ஒர் ஒப்புவமைக் காட்சி தீட்டப்படுகிறது. இங்கு ஒரு சோக உணர்வும், பழைமை சிறியதாய் போய்விடும் பாங்கும் உணர்த்தப்பட்டுள்ளன.
நிருபமா மேனன் ராவ் தமது தொகுப்பின் அடுத்த பகுதியை Ghandari என்ற கவிதையுடன் ஆரம்பிக்கிறார். இங்கு வெளிப்படையாகக் காட்டாமல் உயிரற்ற

Page 110
194 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நிலைமைகள் வரலாற்றை வார்த்தைகளால் கவிஞர் சிந்திவிடுகிறார்.
முடிவு என்ற கவிதையில் பெண்மை முடிவுறா வண்ணம் சிறைப்பட்டிருப்பதைக் கூறுகிறார் கவிஞர். இதே மாதிரி தனிப்பட்ட பெண் விடுதலை ஏக்கத்தை Internal Emigration (உள்ளக குடியகல்வு) என்ற கவிதை காட்டுகிறது.
எல்லாக் கவிதைகள் பற்றியும் நான் அறிந்தவாறு விளக்கிக்கூறி என் ரசனையை வெளிப்படுத்த விருப்பம், ஆயினும் இப்பத்தியிலே இது சாத்தியமில்லை. நீங்களே கவிதைகளைப் படித்துப் பார்த்து அவற்றின் தராதரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
சுருக்கமாகச் சொன்னால் நிருபமா மேனன் ராவின் உவமை, உருவங்கள் குறிப்பாக இந்திய வாழ் நிலைப் பின்னணியில் வரும்போது புதுப்புனைவாக அமைகின்றன. இந்திய - ஆங்கில இலக்கியத்திற்கு புதுவரவாக அமையும் இக்கவிதைத் தொகுப்பு அந்நாட்டு ராஜ தந்திரிகளின் பங்களிப்புகளுள் சிறப்பிடம் பெறுகிறது.
来
ഖിഥീrീബിള് ഗ്ഞഖ്ബ'L
சில பக்கங்கள்
LOTனாமக்கீன் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக எவ்வாறு தன்னை இனங்காட்டிக் கொள்கிறார் என்று
நோக்கினால், அவரின் பல முயற்சிகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன.

கே.எஸ். சிவகுமாரன் 195
இவருடைய கதை மலர்கள் தொகுதியிலே ஆறு சுயமாக எழுதப்பட்ட கதைகளும், இரண்டு மொழியாக்கங்களும் இடம்பெறுகின்றன. கதாசிரியர், நாடகாசிரியர், நாடக நெறியாளர், பத்தி எழுத்தாளர், நிறுவனச் சார்பில்லாத சுதந்திரப் பத்திரிகையாளர், இசை / கலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்றெல்லாம் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரேயிருந்து எழுதி வரும் தமிழ்மணி மானாமக்கீனின் பணிகளைச் சரிவரத் தெரிந்து கொள்ளாத, எடைபோட முடியாதவர்கள் தம்மை விமர்சகர்கள்’ என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு, மானாமக்கீன் போன்றவர்களை 'ஆழமற்றவர்கள்’ என்று நையாண்டி பண்ணி, அங்கதமாக எழுதிக் கண்டனம் செய்வது சிரிப்புக்கிடமானது. வேறு என்ன? சரி, இனி இவரது கதைகளுக்கு வருவோம். ரெவலூஷன்
புதுமைப்பித்தன் எழுதுவது போல நையாண்டியும், பச்சாதாபமும் பிரதிபலிக்கும் எழுத்து நடை, தமிழ், முஸ்லிம், வடக்கு - கிழக்கு ஒருமைப்பாட்டைக் கொண்டு வரும் மனிதாபிமானக் கண்ணோட்டம், சமூகப் பார்வையை முற்போக்கான சிந்தனை மூலம் உணர்த்துவித்தல், சுரண்டலைத் தவிர்க்கத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுத்தல், ஈற்றில், சுலோகங்களை உபயோகிப்பவர்களிற் சிலர் தாமே ஏழை அப்பாவிகளைச் சுரண்டுதல் என்ற ரீதியிலே கதையை விறுவிறுப்பாகவும் நேர்த்தியாகவும் கதாசிரியர் நகர்த்திச் சென்றுள்ளார்.
இது ஈழத்துச் சிற்றேடுகளில் உயர் மதிப்பீட்டிற்குரிய இதழான கலைச் செல்வியில் பரிசு பெற்ற கதையாக 37 வருடங்களுக்கு முன் வந்த நல்லதொரு கதை.

Page 111
196 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
மானாமக்கீனின் ஆற்றல் அப்பொழுதே ஒளிகாட்டத் தொடங்கிவிட்டது. ரஹ்மத் உம்மா
1959இல் எழுதப்பட்டு 1964இல் பிரசுரமான முஸ்லிம் கதை மலரில் இடம்பெற்றது இக்கதை, ஓர் அற்புதமான பாத்திரத்தை, சிறுகதைப் பண்புகளுக்கேற்பக் கதாசிரியர் இங்கு வடித்துள்ளார். சொற்செட்டு பிரமாதம். ‘எங்கள் தெரு மக்கள் இதனை மிக மிகச் சாதாரணமான ஒன்றாகக் கருதிச் சில நாட்களில் மறைந்தே போனார்கள்’ என்ற முத்தாய்ப்பு வசனம், கதைச் சித்திரிப்பின் யதார்த்தப் பண்பை வெளிப்படுத்துகிறது. அவள் ஒரு தொடர்கதை அல்ல...!
இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சியிலே 1972ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்ட கதை இது. வேஷதாரித்தனம் கொண்ட இளைஞர்கள் சிலரால், நெறியான வாழ்க்கை நடத்தும் இளம் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை நேரடியாகக்கதை சொல்லும் பாணியில் இக்கதை தீட்டுகிறது. சுமாரான கதை. வானொலிக்காக எழுதப்பட்டதனால், உரத்துப் படிக்கும் பொழுது சுவை தெரிகிறது.
அவருக்கு ஹஜ்ஜூ அருத்த வருஷம்
இந்தக்கதை, மேலே மதிப்பீட்டுக்கு உட்பட்ட
தியாகத்திருநாள் கதைகள்’ தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. குறிப்புக்களை மேலே பார்க்க.
உயிர்க்கூட்டமெல்லாம் ஒன்றே.
1997இல் எழுதப்பட்டது இக்கதை. இலங்கையில் பேசப்படும் வெவ்வேறு ரகத் தமிழில் நன்கு பரிச்சயம்

கே.எஸ். சிவகுமாரன் 197
கொண்ட மானாமக்கீன், தமிழ் நாட்டு வட்டார முஸ்லிம் தமிழில் எழுதியிருப்பது மட்டுமல்ல, இனக்கலவரத்தைத் தூண்டுபவர்கள் பற்றிய பார்வையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். மனுக்குலம் யாவும் ஒன்றே எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓரினம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் (கேளிர் அல்ல) என்ற உண்மையைச் சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர். எங்கட வுட்டுல ரெண்டு ஜன்னல்
1970களின் கடைசிப் பகுதியில் எழுதப்பட்ட இக்கதை இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறுகதை எல்லைக்குள் எழுத ஆசிரியர் முற்பட்டாலும் கதையில் சிக்கனம் இல்லை. இன்னுஞ் செப்பனிட்டிருக்கலாம். ஒரளவு சுமாரான கதை. அவனுக்கு நள்ளிரவில் பிரசவம்
ஷாக்கீர் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய இந்த ஈராக் நாட்டுக் கதையை மானாமக்கீன் தமிழாக்கஞ் செய்தார். இது 1971இல் தமிழ் நாட்டு 'மஞ்சரியில் பிரசுரமாகியது. பச்சாதாபம், பரிவுணர்வு போன்றவற்றைத் தோற்றுவிக்கும் இக்கதை மூலம் மருத்துவர்களுக்கு இருக்கவேண்டிய குணநலன்கள், கதையில் வரும் வைத்தியர்களுக்கு இருக்கவில்லை என்பதைக் கதை கூறுகிறது. தமிழாக்கம் பரவாயில்லை. முயற்சியில் வெற்றி தெரிகிறது. கணவனும் காதலும்
டபிள்யூஏ.ஆர்.ஆட் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய தாய்லாந்து கதையின் தமிழாக்கம், 1956இல் வீரகேசரியில், ஒவியர் வி.கே.யின் சித்திரத்துடன் பிரசுரமாகியது. ஒட் ஹென்றி என்ற அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரின்

Page 112
198 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கதைகளில் ஏற்படும் எதிர்பாராத முடிவு இக்கதையிலும் திகழ்கிறது. தமிழாக்கம் நன்று. எனவே இனியும் இவரது ஆக்கங்களை விமர்சகர்கள் உதாசீனம் செய்வது நல்லதல்ல.
来
செய்திகள் வாசிப்பவர்: எஸ். புண்ணியமூர்த்தி G இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்று இப்பொழுது அழைக்கப்படும் “ரொறிங்டன் சதுக்க’ வானொலி நிலையம் அந்நாட்களில் ‘இலங்கை வானொலி" என்றழைக்கப்பட்டது. அந்நாட்களிலும் பின்னரும் மிக முக்கியமான ஒலிபரப்பாளராகத் திகழ்ந்தவர்
எஸ். புண்ணியமூர்த்தி. இவர் இப்பொழுது ஒர் அமெரிக்கப் பிரஜை.
இவருடைய சுயசரிதையை ஆங்கிலத்திலே பி. கிருஷ்ணசாமி எழுதியிருக்கிறார். கிருஷ்ணசாமி மலையக எழுத்தாளர். அந்நாட்களில் தமிழராகிய ரெஜி மைக்கல் ஆசிரியராக இருந்த ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற தமிழ் நாட்டு ஆங்கிலப் பத்திரிகையில் பணி புரிந்தவர்.
புண்ணியமூர்த்தி தொடர்பான இந்த ஆங்கிலப் புத்தகத்தின் அறிமுகம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.
136 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்திலே தமிழ் ஒலிபரப்பு வரலாற்றுச் செய்திகளும், ஒலிபரப்பாளர்

கே.எஸ். சிவகுமாரன் 199
'மூர்த்தி சம்பந்தப்பட்ட முக்கியமான நிழற்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இலங்கை வானொலியுடன் சம்பந்தப்பட்டவர்களின் வரலாற்றுப் பதிவுகள் நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜோர்ஜ் சந்திரசேகரன், ராஜகுருசேனாதிபதி கனகரத்தினம் போன்றவர்கள் தமது அனுபவங்களை நூலாகத் தந்துள்ளனர் என்று அறிகிறோம். அதே போல வீ. சுந்தரலிங்கம் எழுதிய நூலும் குறிப்பிடப்படுகிறது. அதையும் படிக்க முடியாமற் போய்விட்டது. உவைஸ”ர் ரஹ்மான் என்ற ஊடகவியலாளர் எழுதிய ஒரு நூலில் அவருக்குப் பிடித்த அறிவிப்பாளர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன.
இ. இரத்தினம், 'சானா' (சண்முகநாதன்), வீ.ஏ. சிவஞானம் ஆகியோர் சம்பந்தப்பட்ட நூல்கள் கடந்த 6 மாதங்களுக்குள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரிசையில் புண்ணியமூர்த்தி தொடர்பான புத்தகம் வெளிவருகிறது. ஊடகத்துறையில் மிகவும் உச்சத்திற்குச் சென்றுள்ள வீ. ஏ. திருஞானசுந்தரம், தினகரனில் தொடர்ச்சியாக இலங்கை வானொலி பற்றி எழுதியிருந்தார். இது புத்தகமாக வெளிவந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி வானொலியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். நடிகராகவும், 'இளைஞர் மன்றம்’ போன்ற நிகழ்ச்சிகளை அளித்தவராகவும் ஒலிபரப்பாளராகவும் விளங்கியவர். இவரும் தமது மனப்பதிவுகளை நூலாக்க வேண்டும்.

Page 113
200 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தமிழ் / ஆங்கில வானொலி ஒலிபரப்பாளர்கள் பற்றி ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதும் 'பத்தி'யில் நான் அடிக்கடி எழுதி வந்திருக்கிறேன்.
புண்ணியமூர்த்தி தொடர்பான இந்தப் புத்தகத்தில் அரிய பல செய்திகள் அடங்கியுள்ளன. வீஏ. கபூர் எவ்வாறு முக்கியமானதொரு ஒலிபரப்பாளர் என்று கருதப்பட்டாரோ, அவ்வாறே எஸ். புண்ணியமூர்த்தியும் கணிக்கப்பட வேண்டிய ஒருவர்.
புண்ணியமூர்த்தி வெறுமனே ஓர் அறிவிப்பாளராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ தமது பங்களிப்பைச் செய்யவில்லை. இ.ஒ. கூட்டுத்தாபனத்தின் முதலாவது தமிழ்ச் செய்திப் பிரிவின் கடமை ஆசிரியராகவும் (Duty Editor) பொறுப்பாசிரியராகவும் பணி புரிந்தார்.
1952 வாக்கில் இவரும் கபூரும் இசையும் கதையும் நிகழ்ச்சியை வழங்கிய நாட்கள் தொடக்கம் நான் இவர்களின் அபிமானியாக இருந்து வந்திருக்கிறேன். புண்ணியமூர்த்தியுடன் ‘செய்தி அறையில் பணிபுரிந்து, இவரைத் தொடர்ந்து நானும் தமிழ்ச் செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தேன் என்பது பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
இந்த நூலிலே புண்ணியமூர்த்தி என்ற தனது நண்பன் பற்றி எழுதுகிறார் கிருஷ்ணசாமி. ஒலிபரப்பாளரின் துணைவியார், பிள்ளைகள், நல்லூர்க் கந்தனிடம் பின்னையவர் கொண்டுள்ள பக்தியும், கல்வியும் ஆகிய விபரங்களைத் தருவதுடன், புண்ணியமூர்த்தியின் ஒலிபரப்புப் பிரவேசம், ஒலிவாங்கியின் முன்னால் அவர் சாதித்தவை, ‘ரேடியோ சிலோன்’ பற்றிய தகவல்கள், அவர்

கே.எஸ். சிவகுமாரன் 201
நிகழ்த்திய ‘செவ்விகள்’ போராட்டங்கள், அரசியல் தலையீடுகள், ஜேர்மனி வழங்கிய புலமைப் பரிசில், இராமகிருஷ்ண மடத்துடன் கொண்ட தொடர்பு, பிரான்ஸ் விஜயம், பி.பி.ஸி. (BBC) அனுபவங்கள், குழிபறிப்புகள், இந்தோனேசிய விஜயம், பொதுநல அமைப்பு நாடுகளின் மகாநாட்டுச் செய்தி ஒலிபரப்பு, சுத்தானந்த பாரதியாருடன் சம்பந்தப்பட்டமை போன்ற பல ருசிகரமான தகவல்களையும் ஆசிரியர் தருகிறார்.
இவற்றைவிடப் புண்ணியமூர்த்தியைப் பற்றிப் பிறர் எழுதிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரத்தினம், ஞானம் இரத்தினம், ஆ. சிவநேசச் செல்வன், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் இவற்றை எழுதியுள்ளனர். மற்றும் முன்னாள் அரசியல்வாதி எஸ். தொண்டமான், முன்னாள் ஒலிபரப்பு மா அதிபர் நெவில் ஜயவீர ஆகியோர் புண்ணியமூர்த்திக்கு எழுதிய கடிதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
1953 முதல் இன்றுவரை இலங்கை வானொலியுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகுதிநேர அறிவிப்பாளனாகவும், செய்தி ஆசிரியனாகவும், கலை, திறனாய்வு ஒலிபரப்பாளராகவும் நான் இருந்து வருகிறேன். என் மனத்திரையில் குஞ்சிதபாதம், எஸ்.பி. மயில்வாகனம், எஸ். புண்ணியமூர்த்தி, ஜிமி படு) ரூச்சா போன்றவர்களின் படிமங்கள் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கின்றன.
米

Page 114
2O2 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சிறுவர் இலக்கியத்திற்கு அணிசேர்க்கும் திவ்வியராணியின் “கதையும் கருவும்’
உள்ளத்தைப் பண்படுத்தவல்ல தமிழ்மறையான திருக்குறளுடன் உளவியற் கோட்பாடுகளை இழைத்துச் சிறப்பான சிறுகதைகளாக இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார் ஆசிரியை திவ்வியராணி சிதம்பரநாதன்.
உயர்மட்டக் கல்வித்தகைமைபெற்ற ஆசிரியை திவ்வியராணி சிதம்பரநாதன் தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் வலுவூட்டற்பிரிவில் பிரதம செயற்றிட்ட அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய 20 கதைகள் அடங்கிய நூல் சிறுவர் இலக்கியத்துக்கு அணிசேர்க்கும் மிக முக்கியமானதொரு நூல் எனலாம். சகல தரப்பினரும் பயனடையக்கூடிய கதைகள் இதில் அடங்கியுள்ளன.
சுவாமி ஆத்மகனாநந்தா, “கலாநிதி விமலா கிருஷ்ணபிள்ளை, முதுநிலை விரிவுரையாளர் க. சுவர்ணராஜா ஆகியோர், ஆசிரியையின் திறனாற்றலை நன்கு விளக்கியுள்ளனர்.
சுவாமி ஆத்மகனாநந்த: “பல நல்ல கருத்துக்களையும், வழிமுறைகளையும், சிறுகதைகள் வாயிலாகத் தெளிவாகவும், அறிவு பூர்வமாகவும் நூலாசிரியர் இந்நூலில் வழங்கியுள்ளார். தேவையான இடங்களில் மேலை நாட்டு மன இயல் வல்லுநர்களின் தாக்கத்தினால் மன இறுக்கங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாகி அவதியுறும் அனைவர்க்கும் இந்நூல் பயன்மிக்கது.”

கே.எஸ். சிவகுமாரன் 203
விமலா கிருஷ்ணபிள்ளை “உள்ளத்தைப் பண்படுத்தவல்ல தமிழ் மறையாம் திருக்குறளுடன் உளவியற் கோட்பாடுகளை இழைத்துச் சிறுகதைகளாகப் புனைந்து வெளியிட்டுள்ளார் திவ்வியராணி அவரின் புதுமையான படைப்பில் பிராணிகள், சடப்பொருட்கள் ஆகியன குறியீட்டுச் சின்னங்களாக உயிர்ப்புப் பெற்று மனிதருடன் உரையாடி உறவு கொள்வது சுவாரசியமாகவும் விசித்திரமாகவும் அமைந்துள்ளது.
திருக்குறளின் அறிவுறுத்தல்களை ஆழமான உளவியல் கருத்துக்களுடன் இணைத்துச் சிறார்களும் கிரகித்துக்கொள்ளக்கூடிய எளிய உரைநடையில் தந்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
தமது நூல் பற்றி ஆசிரியை இவ்வாறு கூறுகிறார்:
“தனி மனிதனது ஆளுமை விருத்தியடைவதற்கும், அவனது வாழ்வின் தரம் சிறப்புறுவதற்கும், தன்னையும் பிறரையும் நன்கு விளங்கிக்கொள்வதற்கும் உளவியல் அறிவு வழிவகுக்கின்றது. கதைகளில் திருக்குறள், உளவியற் கருத்துகள், தத்துவார்த்தக் கருத்துக்கள், விழுமியப் பண்புகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
கதையின் மேலோட்டமான கருத்தை விளங்கிக்கொள்ளும் பிரிவினர் கண்ணாடியில் தமது வெளி விம்பத்தைப் பார்த்துத் திருப்தி அடைபவர்களாவர்.
ஏனையோர் கதையினுள்ளே ஆழமாக மறைந்து கிடக்கின்ற மனவெழுச்சிகள், உணர்வுகள், சிந்தனைகள் ஆகியவற்றைத் துருவி ஆராய்ந்து கதையின் உண்மைப்
பொருளை அல்லது எண்ணக் கருவைக் கண்டறிவர்.

Page 115
204 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இவர்கள் உள் விம்பத்தை நோக்குபவர்கள். எப்பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பினும் இக்கதைகளினுாடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள எண்ணக்கருக்களை விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.’
ஆசிரியையின் எதிர்பார்ப்பு நிறைவுறுகிறது என்பதை இக்கதைகளை வாசிப்பதன் மூலம் உணர முடிகிறது.
திருக்குறளை வைத்துச் சிலர் கதைகளை எழுதியுள்ளனர். என்றாலும், நவீன சிந்தனை வளர்ச்சிக்கேற்ப, காரண காரிய விளக்கமாக, ஆய்வு ரீதியில் ஆசிரியை அற்புதமாக இக்கதைகளைப் படைத்திருக்கிறார். இவை சிறுகதைக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கின்றனவா என்பது பிறிதாக ஆராயப்பட வேண்டிய விடயம். ஆயினும் ‘கதைகள்’ என்ற முறையில் இந்த முயற்சியைப் பாராட்டி, வரவேற்க வேண்டும்.
இப்புத்தகத்தில் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல முதற்கதையே - "மேல் இருந்தும் - உத்திச் சிறப்புடன் எழுதப்பட்டிருக்கிறது.
இக்கதை மூலம் வள்ளுவரின் இக்குறளை, ‘மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும் கீழ் அல்லவர்.’
என்று பொருள் கொண்டு விளக்கிய விதம் புதுமையாக உள்ளது.
StreSS என்ற ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் கொடுத்து அதனைத் தமிழில் தகைப்பு’ என்கிறார் நூலாசிரியர். புதுப்புனைவும், பொருத்தமுமுடையது இது.

கே.எஸ். சிவகுமாரன் 205
பழைமை பேணும் அதே வேளை, புதுமைகளையும் உள்வாங்கும் மனப்பாங்கினை விருத்தி செய்யப் பெற்றோர் முன்வர வேண்டும் என்கிறார் ஆசிரியை.
மற்றொரு கதையினுடாகச் சில அவதானிப்புகளை ஆசிரியர் தருவது நடைமுறை சார்ந்ததாக அமைகிறது.
நுண்மதி விருத்தி ஏற்படும்போது கற்கும் ஆற்றல், நியாயங் காணும் ஆற்றல், தீர்மானம் செய்யும் ஆற்றல், பிரச்சினை தீர்க்கும் ஆற்றல், சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் என்றவாறு பல ஆற்றல்கள் இணைந்த கூட்டு மொத்தச் செயற்பாடுகள் விருத்தியுறுகின்றன.
பரிவுணர்வுக்கும், அனுதாப் உணர்வுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை ஆசிரியை நன்கு விளக்கியிருக்கிறார்.
Id, Ego, Superego GTGöIAD g(G5GOLDLČI LIGðiðILf5GOMGITULjub அவர் தந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை திவ்வியராணி சிதம்பரநாதன் பல துறையறிவு பெற்றவர் என்பது மாத்திரமல்லாமல், அதனைச் சீரான முறையில் கதைகள் மூலம் நாமறிந்து பயன்பெறவும் உதவுகிறார். இதற்கு ஒரு சான்று "மஞ்சள்’ நிறம் பற்றிய வியாக்கியானம்,
'கூராமை நோக்கிக் குறிப்பறிவான எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி.
என்ற அருமையான குறளை விளக்கிக் கதை புனைந்த ஆசிரியை, 'ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகிற்கு ஒர் அணிகலன் ஆவான்’ என்கிறார்.

Page 116
2O6 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஒரு பிள்ளையின் உடல், உள, மனவெழுச்சி, சமூக, நன்னடத்தை, அழகியல், ஆன்மீகம் ஆகியவற்றில் பூரண விருத்தி ஏற்படும் பட்சத்திலேயே அவன் முழு மனிதனாகின்றான் என்ற அவரது கருத்தும் குறித்துக்காட்டப்படக் கூடியது.
அன்பைப் பெறாத ஒருவர் வறண்ட பிரதேசத்திலுள்ள பட்ட மரத்திற்குச் சமம் என்ற கருத்தைத் தெரிவிக்கும் வள்ளுவர் கூறும் சிறப்பு :
‘அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை பண்பாற்கண் வற்றல் மரம்தளிர்த்தற்று.”
’கனவுகள்’ பற்றிய விளக்கமும் வரவேற்கத்தக்க முறையில் தரப்படுகிறது. எல்லாக் குறள்களினதும் முழு விளக்கமாக எல்லாக் கதைகளும் இல்லாவிட்டாலும், பெரும்பாலானவை பொருத்தமாக உள்ளன.
ஆசிரியை தனது ‘விரைந்து தொழில் கேட்கும்’ என்ற கதையின் இறுதியில் கூறும் வார்த்தைகள் இதமளிக்கின்றன. சிறந்த மனப்பாங்குகளை விருத்தி செய்வதனூடாகச் சிறந்த மதிப்பீடுகளை மேற்கொண்டு சிறந்த புலக்காட்சியைப் பெற முயல்வோமாக என்பதுவே அது.
சிறுகதைகள் எழுதப் பயிலும் மாணவ - மாணவியர் உள்ளடக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும் என்பதும் இந்நூலின் சிறப்புக்களுள் ஒன்று.
来
மற்றுமொரு மாலை

கே.எஸ். சிவகுமாரன் 2O7
‘நல்ல கவிதைகளைப் படித்து அனுபவித்துப் பயன்பெற எனக்கு விருப்பம். அப்படியான கவிதைகளை நெடுங்காலமாகப் படித்துப் பரவசப்பட்டிருக்கிறேன். அக்கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும், ஆங்கிலம் வாயிலான பிற மொழிகளிலும் ஆக்கப்பட்டவை.
இங்கு ‘நல்ல கவிதை’ எது என நான் கருதுபவை, எனது அகவுணர்வு சார்ந்தவையாகத்தான் இருக்கின்றன. எனது இரசனை அளவுகோல்கள் அடிப்படையில் சம் பிரதாயமான  ைவ யாக வும் நோ க் கில் புதுப் புனை வாக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாகவும் அமையும்.
1960களில் நானும், அக்காலத்தில் ‘புதுக்கவிதை' என்றழைக்கப்பட்ட முயற்சிகளுக்கு வக்காலத்து வாங்கியவனாக இருந்ததோடல்லாமல், அத்தகைய ‘கவிதைபோன்ற சிலவற்றை எழுதியும் இருக்கிறேன்.
அக்காலத்தில் எழுத்து’ என்ற ஏட்டில் வெளிவந்த ஓரிரண்டு கவிதைகளே (மயன், வைதீஸ்வரன், மணி போன்ற தமிழ் நாட்டுக் கவிஞர்களின் ஆக்கங்களே எனக்குப் பிடித்தன.) என்னைப் பரவசப்படுத்தின. இலங்கையிற் பிறந்த தருமலிங்கம் சிவராமலிங்கத்தின் (தரும. சிவராமு) கவிதைகளையோ பின்னர் ‘வானம்பாடி ஏட்டில் எழுதிய அப்துல் ரகுமான், மேத்தா, மீரா போன்றவர்கள் எழுதிய கவிதைகளையோ நான் விரும்பவில்லை. இதற்கு மாறாக வானம்பாடி’க் கவிஞர்களுள் சிலரது கவிதைகள் எனது இரசனை உணர்வுக்கு இதமளித்தன.
இவ்வாறு எழுதியதன் மூலம், நான் எவற்றை நல்ல

Page 117
208 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கவிதைகள்’ எனக் கொள்கிறேன் என்பதைச் சூசகமாகத் தெரிவித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஆகவே, எனது அளவுகோல்கள் இங்கு அகவய வெளிப்பாட்டு விருப்பைக் காட்டி நிற்கின்றன.
இன்னமும் தான் நம்மில் சிலர் ‘புதுக்கவிதை', 'புதிய அலை என்றெல்லாம், எழுதப்படும் - காட்டப்படும் சகல முயற்சிகளுக்கும் பட்டஞ் சூட்டுவது காலப் பொருத்தமின்மையாகிவிடுகிறது. இலங்கை, இந்திய, வெளி நாட்டுப் பத்திரிகைகளில் புற்றீசல்களாக இப்பொழுது ‘கவிதை' என்ற பெயரில் தமிழ்மொழியிலும் சில ஆக்கப் படைப்புக்களும், ‘வெற்று வசனங்களும் வெளியாகி வருகின்றன. எழுதப்படும் வசனங்கள், சுலோகங்கள், பொருத்தமில்லாப் படிமப் பிரயோகங்கள் அனைத்தும் ‘கவிதை’ என்ற பெயரில் வெளியாகி அருமருந்தன்ன பக்கங்களை வீணாக்கி வருகின்றன.
எனவேதான் ‘புதுக்கவிதை’ என்ற பெயரில் வெளியாகியுள்ள, வெளியாகிக் கொண்டிருக்கும் எழுத்துக்களை நான் படிப்பதுமில்லை; ‘புதுக்கவிதை' என்ற பிரயோகத்தை வெறுத்தும் வருகிறேன்.
இந்தப் பின்னணியில் செ. சுதர்சன் என்ற இளைஞர் கொணர்ந்துள்ள 'மற்றுமொரு மாலை' என்ற 66 பக்கச் சிறுநூலைப் படித்துப் பார்த்தேன். உடுப்பிட்டி ஏகலைவன் வெளியீடு இது. சிவசம்புப் புலவர் வீதியில் இது அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் எஸ். நேசலிங்கம் ஒவியங்களை வரைந்து கொடுத்துள்ளார்.
பேராசிரியர் துரை மனோகரன், “ஞானம்' ஆசிரியர் வைத்தியக் கலாநிதி தி. ஞானசேகரன், 'ஏகலைவன்’ பிரதம ஆசிரியர் இ.சு. முரளிதரன் ஆகியோர் பார்வைகள்

கே.எஸ். சிவகுமாரன் 209
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையிலும் நீங்கள் இந்த நூலை அணுகலாம். எனது பார்வையூடாகவும் இந்நூலைப் படிக்கலாம் அல்லது எனது பார்வையை நிராகரிக்கலாம். அது அவரவர் சார்பைப்
பொறுத்தது.
米
செ. சுதர்சன் காட்ரும் கவிதா உலகம்
G LDற்றுமொரு மாலை கவிதைத் தொகுப்பு மூலம் செ. சுதர்சன் என்ன கூறவருகிறார் என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
‘கட்டவிழ்ப்புக்காரர்கள்’ (Deconstructionists) வேண்டுமென்றால் தமது வித்துவத்தைக் காட்டி, தமது விகற்ப்ப் பார்வைகளை அம்பலப்படுத்திவிடட்டும்.
சரி, சுதர்சன் என்ன கூறவருகிறார்? “எனது தேசம் அலை அடுக்குகளால் ஆகியது. அதில் அவ்வப்போது எழுந்த வலிகள், ஒலங்கள் முதலியவையே எனது பெரும்பாலான கவிதைகள். அவற்றில் யுத்தம் நிர்மூலமாக்கிய கனவுகள், கடந்தகால, சமகால அரசியல், சமூக நிகழ்வுகளின் அபத்தங்கள் முதலானவற்றின் பிம்பங்களை நீங்கள் காண முடியும். சமூகம், குடும்பம், தனியன் என்ற ஒவ்வொன்றுக்குமான பிரச்சினைகளை என் உணர்வுகளும் பிரதிநிதியாக நின்று பேசியுள்ளன. சில ‘பொதுமையானவை. ஒரிரு கவிதைகள் கவியரங்கப் பாணி கொண்டவை.”
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் உள்ளடக்கம் எதுவென்பது புலப்பட்டுவிட்டது. மொத்தமாக 25 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

Page 118
210 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இவற்றுள்ளே ‘நல்ல கவிதைகள்’ என்று நான் கருதும் கவிதைகளில், எனக்குப் புத்தாக்கமாக்கப்பட்ட சில கவிதை வரிகளை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
உறுதிகோரல்
'இருளதன் சிரிப்பினை எரித்திட எழுவோம்.'
‘குருதிகள் எம் மண்ணில் குத்தாத வரம் கேட்போம் பரிதியை நாம் தொட்டுப் பந்தாட விடை கேட்போம்.’
குளிர் காய்தல்
‘சுவாலை வலஞ்சுழியாக எரியட்டும்.’ காத்திருப்பு
'கிழுவை மர இலைகள்
உடைத்துப்போடும் நிலா ஒளி. ஊழின் மீதான பாடல்
“உறவுக் குறுணிகளைப் பெருக்க
கிழக்கின் மீதான பறத்தலை நிகழ்த்தின
வெளியேற்றுதலை
மீட்புச் செய்ய
ஊழைக் கூட்டிற்று
நாட்களின் உருட்சி.
来

கே.எஸ். சிவகுமாரன் 211
கவிஞர் செ சுதர்சன் தனது சொந்த அனுபவங்களை ஆவணமாகப் பதிவு செய்திருக்கும் அதேவேளையில், வடக்கின் யதார்த்தத்தையும் மறைபொருளாகவும், வெளிப்படையாகவும் சுட்டிக் காட்டுகிறார்.
சில கவிதைக் கூற்றுக்களில் ஒலியின்பத்தை நான் காணமுடியாவிட்டாலும், மேற்காட்டிய வரிகளில் கவிதை நயம் சுரப்பதைக் காண்கிறேன்.
கவித்துவம் சுதர்சனிடமிருப்பது வெளிப்படை. சுருங்கச் சொல்ல விளங்கவைக்கும் பண்பு சிறப்பாய் அமைகிறது. தேர்ந்தெடுத்த சொற்களைத் தேர்ந்தெடுத்த இடங்களில் அவர் பெய்திருப்பது அவர் செய் நேர்த்தியைக் காட்டி நிற்கின்றது.
கலாநிதி துரை மனோகரன் கூறியிருப்பது போல, “சுதர்சனின் கவிதைகளுக்கு ஒரு பொதுவான இயல்பு உண்டு.’துரை மனோகரன் விளக்குகிறார்.
“தாம் கூறவந்தது இதுதான் என்று வெட்ட வெளிச்சமாகவே தெரிவித்துவிடாது, கவிதையின் போக்கிலேயே அதன் தொகையையும், பொருளாழத்தையும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளுமாறு செய்வது.”
“மற்றுமொரு மாலை”, அண்மைக்காலத்தில் வெளிவந்த ஒரிரு “நல்ல கவிதை'த் தொகுப்புக்களுள் குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.
இந்த நூலின் அமைப்பும் நேசனின் சித்திரங்களும் தொகுப்புக் கவிதைகளுக்கு மேலும் அணி செய்கின்றன.
来源

Page 119
212 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
‘கருவறை எழுதிய தீர்ப்பு - புதுமையான ஒரு கதை
6 கிருவறை எழுதிய தீர்ப்பு’ என்ற தலைப்பிலே கதாசிரியர் தி. ஞானசேகரன் முற்றிலும் புதுமையானதொரு கதையை அண்மையில் எழுதியிருந்தார். கருத்தரித்தல் பற்றிய சில தகவல்கள் கதையோட்டத்துடன் தரப்படுகின்றன. சிறுகதைக்கேயுரிய பண்புகளைக் கொண்டதாகவும், செட்டாகவும் கதாசிரியர் வடிவமைத்திருக்கிறார். கதை முடிவும் எதிர்பாராததொன்று. அதேவேளையில் இன வேறுபாடுகளிடையே கூட முரண்பாடு நிலை இருப்பதையும் காட்டியுள்ளார். இது ஒர் அருமையான கதை என்பது எனது மதிப்பீடு.
இந்தக் கதை உட்பட 11 கதைகள் அடங்கிய தொகுப்பு அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்.
இத்தொகுப்பில் விசேடமாகக் குறிப்பிட வேண்டியவற்றுள் ஒன்று, இதில் இடம்பெற்றுள்ள அணிந்துரையாகும் அணிந்துரை மாத்திரமல்ல, அருமையான திறனாய்வாகவும் பேராசிரியர் கா. அருணாசலம் தந்துள்ளார்.
தி. ஞானசேகரனின் ஏனைய கதைகள் பற்றிய எனது மதிப்பீட்டுக் குறிப்புகள்.
இத்தொகுப்புக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு உள்ளடக்கும் கதை நேரிடையாகக் கதையைச் சொல்லிவிடும் உத்தியைக் கையாள்கிறது. அநாவசியமான பூச்சுகள் கிடையா. அதிக பூடகம் இல்லை. பேரினவாதச்

கே.எஸ். சிவகுமாரன் 213
செயல்களுக்கு எதிரடி கொடுப்பதும், தற்பாதுகாப்புக்காக எதிரியைத் தாக்குவதும் வேறு வழியில்லாமல் செயற்படுத்த வேண்டியதொன்று என்ற கருத்தை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். கதை எழுப்பும் சலனம் பாதிக்கப்பட்டவர்களைப் பெரிதும் ஆட்கொள்ளும். சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவசியம் உடனடியாக மொழியாக்கம் செய்ய வேண்டிய கதை இது. பகிடி வதை (Ragging): விவரணப்பாங்கில் அமையாது உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வரையப்பட்டிருக்குமாயின், கட்டுக்கோப்பும் சிறப்பாக அமைந்திருக்கும். பகிடி வதை என்ற பெயரில் விபரீத, அநாகரிகச் செயல்கள் இடம்பெறும் காட்சிகளைத் தந்து அதன் மூலம் படிப்பினையையும், காருண்ணியத்தையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.
புன்னாலைக்கட்டுவனில் பிறந்து மலையகத்தில் நெடுங்காலமாக வாழ்ந்து, அப்பிரதேசத்திலுள்ள அடிமட்ட மக்களின் அவல வாழ்க்கை நிலைமைகளைத் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர் நிறையவே தகவல்கள் கிடைக்கின்றன. கதை முடிவும் எதிர்பாராதவிதமாக அமைகிறது. அண்மையில் எழுதப்பட்ட கதையாக இருந்தபோதிலும் புதுப்புனைவாக இக்கதையமையவில்லை என்பது எனது கணிப்பு. கதையின் பெயர் சீட்டரிசி.
மலையகப் பின்னணியில் எழுதப்பட்ட மற்றொரு கதை ‘திருப்புமுனைத் தரிப்புகள்’. கற்றலுக்கு வேண்டிய சூழல் மலையகத்தில் இன்னமும் இல்லை என்பதைக் கதாசிரியர் பல நிகழ்ச்சித் தொடர்கள் மூலம் காட்டுகிறார். ‘சூழலில் இருந்த கவனச் சிதறல்கள் யாவும் அவனது வைராக்கியத்தில் கரைந்துபோயின’ என்றும் கூறி கதையை முடித்து நம்பிக்கையூட்டுகிறார் ஆசிரியர்.

Page 120
214 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
‘சோதனை’ என்ற கதை இன்றைய நடப்புக்களின் விஸ்தரிப்பு. தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்தைகளை எடுத்துரைக்கும் கதை, விறுவிறுப்பான நடையில் ஆசிரியர் எழுதுகிறார்.
கால் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கதை ‘உள்ளும் புறமும்’. கதை கூறும் செய்தியை நாம் வரவேற்றாலும், கதை எழுதப்பட்ட முறை பத்திரிகைக் கதை போன்று சம்பிரதாயமானது.
இதேமாதிரி, *கோணல்கள்’ கதையும் அமைந்துள்ளது. அதேவேளையில், 70 களிலே புதிய கோணத்தில் நின்று, கதையின் மையக் கருத்தை யதார்த்தபூர்வமாக ஆசிரியர் எழுதியுள்ளார்.
எழுபதுகளில் எழுதப்பட்ட மற்றொரு கதை ‘எங்கோ ஒரு பிசகு'. ஆயினும் படிப்பவர் சிந்திப்பதற்கு ஒரு நியாயமான கேள்வியை ஆசிரியர் எழுப்பியுள்ளார். மிகவும் சுவாரஸ்யமான முறையில் கதையை ஆசிரியர் எழுதிச் செல்கிறார். சாதிப் பிரக்ஞை கொண்ட பிரகிருதிகளின் மறுபக்கத்தை ஆசிரியர் காட்டியிருக்கிறார்.
முப்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட காதற்கதை 'குமிழி. ஒரு தலைக்காதற்கதையைச் சுவையான முறையில் ஆசிரியர் எழுதுகிறார். ஏமாந்த ஒர் நெஞ்சத்தின் உணர்வுகளும் குறிப்பாக உணர்த்துவிக்கப்படுகின்றன.
1965இல் எழுதப்பட்ட கதை, கடமை’. இக்கதையில் ஒரு டொக்டர் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறார். தனது கடமையைச் செய்துவிட்டதில் திருப்தி கொள்கிறார். கதை நன்றாகவே எழுதப்பட்டுள்ளது.

கே.எஸ். சிவகுமாரன் 215
கூட்டுமொத்தமாகப் பார்க்கும் பொழுது நாவல் இலக்கியத்துறையில் முக்கிய இடம்பெற்றுள்ள தி. ஞானசேகரன், சிறுகதை இலக்கியத்துறையிலும் நன்கு பரிச்சயம் பெற்ற எழுத்தாளராகத் திகழ்கிறார் எனலாம். இவருடைய புதிய பார்வைப் பின்னல்கள் வரவேற்கத்தக்கவை.
来 வீடு:ஆய்வறிவாளரிடமும் ஒரு குறியீடு
இந்தியத் தலைநகரான புதுதில்லியில் வசித்து வரும் தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான கலாநிதி லஷ்மி கண்ணன் ஆங்கில -தமிழ் இலக்கிய உலகில் மிகப் புகழ் பெற்றவர். தில்லி, ஹைதராபாத், கல்கத்தா பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டு இவற்றை எழுதிவரும் இந்த எழுத்தாளரின் புனை பெயர் 'காவேரி. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்தியவர். அடக்கமானவர். பழகுவதற்கு இனியவர். தி ஜானகிராமன் எழுதிய ‘மரப்பசு உட்படப் பல நல்ல தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். இவருடைய கணவர் மிகவும் ஆழமாக இலக்கியப் போக்குகளை அவதானித்து வருபவர். மிகவும் பண்புடையாளர். இத்தம்பதிகளை ஜனவரி 1993-ல் புதுதில்லியில் சந்தித்தபொழுது திரு. கண்ணன் இந்திய மத்திய அரசாங்கத்தில் ஒர் உயர் அதிகாரியாகவும், லக்ஷமி விளம்பர நிறுவனமொன்றில் ஆலோசகராகவும் பணி புரிந்து கொண்டிருந்தனர். அமெரிக்க எழுத்தாளரான

Page 121
216 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஸோல்பெலோ தொடர்பான ஆய்வுக்காக லசுஷ்மி கண்ணன் அவர்களுக்கு ’டாக்டர்’ (கலாநிதிப்) பட்டம் வழங்கப்பட்டது.
இந்த எழுத்தாளரின் படைப்பு ஒன்றை முதற் தடவையாக 80களில் ‘%’ (கால்) என்ற பெயரில் கல்கத்தாவிலிருந்து வெளியாகிய ஒர் உயர்ந்த தமிழ் சிற்றேட்டில் படித்தேன். அந்த ஏடு பற்றிய எனது மதிப்புரை வீரகேசரி வார வெளியீட்டில் வெளியாகியது. தமது கதை பற்றிய எனது மதிப்பீட்டையும் பெரிதாக மதித்து தனது 'ஒசைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில் எனது கருத்தையும் சேர்த்திருந்தார். இந்தத் தொகுப்பில் அருமையான கதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகள் ஆங்கிலத்தில் ‘ரிதம்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.
இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால்’ என்ற நாவலை துரூ த வெயில்ஸ்’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இவ்வாறு நல்ல பல தொண்டுகளைச் செய்து வரும் லக்ஷமி கண்ணன் நாடு கடத்தப்பட்ட கடவுளர்’, ‘ஒளியும் பழுப்பும்', 'தக்ளோ அன்ட் த க்ரே', மனப்பதிவுகள்’, ‘இம்ப்ரெஷன்ஸ்’ ஆகிய ஆங்கில நூல்களையும், 'ஆத்துக்குப் போகணும்' என்ற தமிழ் நாவலையும், சிறுகதைகள், நெடுங்கதைகள் அடங்கிய மற்றொரு நேர்த்தியான தொகுப்பான ‘வெண்மை போர்த்தியது' என்ற நூலையும் தந்திருக்கிறார்.
அமெரிக்காவிலுள்ள அயோவா மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு நடைபெறும் அனைத்துலக எழுத்தாளர் சந்திப்பு, பட்டறையில் இந்தியாவின் சார்பில் இவர் கலந்து

கே.எஸ். சிவகுமாரன் 217
கொண்டிருக்கிறார். இவரைப் போலக் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் அமரர் க. கைலாசபதி, (நமது நாட்டுப் பேரறிஞர்) "அசோகமித்திரன்’ (தியாகராஜன்), தலைசிறந்த தமிழ் நாட்டு எழுத்தாளர் (இவர் ஆங்கிலத்திலும் எழுதுபவர்), சிவசங்கரி (தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளர்) இவர் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.
‘ஓய்வில்லாமல் உழைத்து வரும் இந்திய மத்திய தர
வர்க்கத்துக்கு, வேலை பார்க்கும் பெண்களுக்கு’, ‘ஆத்துக்குப் போகணும்' என்ற நாவலை லக்ஷமி கண்ணன் சமர்ப்பித்திருக்கிறார்.
பல நல்ல விமர்சகர்களின் பாராட்டை இந்த நாவல் பெற்றிருக்கிறது. எண்பதுகளில் வெளிவந்த தரமான ஒரு படைப்பு ‘ஆத்துக்குப் போகணும்’ எனலாம். 160 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் இரு பாகங்களைக் கொண்டது.
இந்த நாவலைப் படித்துப் பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டாத வாசகர்களின் நலன் கருதி அதனைச் சிறிது விபரமாக அறிமுகப்படுத்தி எனது கணிப்பைத் தெரிவிக்கலாம் என்று விழைகிறேன்.
இது ஒரு பரிசோதனை நாவல். தொடக்கத்தில் காயத்ரி’ என்ற சிறு பெண் மைசூரில் தனது தாத்தா, பாட்டியுடன் ‘ரீட்ரீட்” என்ற இல்லத்தில் வசித்து வந்த பொழுது இடம்பெற்ற சம்பவத்துடன் ஆரம்பமாகி முதலாவது அதிகாரம் முடியுந்தறுவாயில் மூன்றாமிடமாகிய படர்க்கையில் எழுதப்பட்ட கதை, திடீரென்று தன்மை ஒருமையில் கதை சொல்லப்படுவதாக மாறுகிறது.

Page 122
218 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
காயத்ரியின் கணவர் பெயர் சங்கர், தில்லியில் வாழும் இந்தத் தம்பதிகள் மைசூர் சென்றிருந்த பொழுது காயத்ரியின் பழைய வீட்டைப் பார்க்க நேர்ந்தது. அந்த வீடு இப்பொழுது கன்னடக்காரர் ஒருவருக்குச் சொந்தம். பார்த்ததும் காயத்ரிக்குப் பழைய ஞாபகங்கள் வரத் தொடங்குகின்றன. அவற்றில் சிலவற்றை விபரித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் தில்லி வாழ்க்கைச் சம்பவங்களை ஒப்பிட்டு வர்ணிக்கும் பண்பும் வந்துவிடுகிறது.
காயத்ரி, சந்திரனுக்கு அரவிந்த் என்றொரு மகன். தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கிறார்கள்.
அரசாங்கக் குடிமனை ஒன்றைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள அவர்களுக்குப் பணம் வேண்டியிருக்கிறது. அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். இக்கதையில் வரும் கதாநாயகி காயத்ரியே கதையைச் சொல்கிறார். அவர் நாட்டியம் கற்றிருந்தும் தில்லி எலிப்பொறி வீட்டிற்குள் ஆடிப்பழக அவருக்கு வாய்ப்பில்லை. காயத்ரியின் சிநேகிதிரமா. அவள் கல்லூரி ஒன்றில் ஆசிரியை. இலக்கியத்தில் ஈடுபாடுடையவள். குழந்தைகளும் உள்ளார்கள். கணவன் துரைசாமி, ஆண் திமிர் பிடித்தவன். ரமா மார்க்சியச் சார்புடையவள்.
காயத்ரியும் சங்கரும் தனியே படுத்திருக்கும் பொழுது சங்கர் கூறினான்: '
‘உன்னுடன் இந்த மாதிரி இருந்தால் எனக்கு எப்படி இருக்குது தெரியுமா?
D. D.

கே.எஸ். சிவகுமாரன் 219
'நடுக்கடலில் புயலுடன் போராடிய கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்ச கிடைத்த மண்போல. அலைந்து திரிந்த யாத்திரிகன் கடைசியில் ஒரு முழுமையான ஆசிரமத்தை அடைந்தாற்போல. பட்டுப்போல இந்தச் சருமம் இந்த அருமையான உடம்பு. இதில் எனக்கு வீடு வந்து சேர்ந்தாற் போல இருக்கு காயத்ரி. இதற்கு மேல் எனக்கென்ன வேண்டும்’ என்று இருட்டில் அடித் தொண்டையில் நெகிழ்ந்தார் சங்கர்.
இந்த நாவலில் வீடு ஒரு குறியீடு.
காயத்ரி, ரமாவுடன் ஆய்வறிவு ரீதியில் உரையாடிய பின்னர் தனக்குள் இவ்வாறு கூறிக்கொள்கிறாள்.
‘வீடு நம்மைக் கொள்ளும் கலம். 9.gif வீடேயானாலும் நம்மைக் கட்டிப் போடும். உடம் பேயானாலும் நம் மன அலைகளுடைய அதிர்வுகளைப் பதிவு செய்யும் சமயத்தின் கணிப்பை பிய்த்துக் கொண்டு விடுதலை தேடி வெளிவரப் பார்க்கிறோம். அதில் பாதி தோல்வியடைந்து நம் உடம்பிற்குள் நாமே ஏமாற்றமடைந்த குத்தகைக்காரர் போல வேண்டா வெறுப்பாக அரை மனதுடன்
வாழ்கிறோம்.”
காயத்ரி மேலும் மேலும் விளக்கமாய்ச் சிந்திக்கிறாள்.
‘விடுதலை எதிலிருந்து? நம்மிடமிருந்தே நம்மைக் கட்டிப்போடும் இந்தச் சாதாரண தன்மையிடமிருந்து நம் உடம்பான இந்தக் கூட்டைவிட, வீட்டைவிட ஏன் நம்ம விதியைவிட பெரியதாக வேண்டும். உடம்பிலிருந்து உதைத்துக்கொண்டு திமிறி வெளியேறனும் ராஜகோபாலன் மாதிரி’

Page 123
220 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இந்த ராஜகோபாலன் இரு பெண்களாலும் (காயத்ரி/ரமா) விரும்பப்படுபவர். இரு பெண்களும் (Intelectuals) ஆய்வறிவாளர்கள். எனவே பெண் நிலை பற்றி இருவரும் ஆராயும் பகுதிகள் சுவாரஸ்யமாய் அமைகின்றன. ரமாவின் கணவன் துரதிஷ்டவசமாக இந்த அமைப்பிற்குள் வரத் தகுதியற்றவன். அவனைவிட அவள் பல விதத்திலும் பல மடங்கு உயர்ந்தவள்.
காயத்ரி சிந்திக்கிறாள்.
‘வாழ்க்கை இப்படி வெதுவெதுப்பாகப் போகிறதே என்று தீவிரமாக ஆராய்ந்து அதில் எங்களுடைய உஷ்ணமான மூச்சுப்பட்டு விஷயம் சூடேறத் தொடங்கி பிறகு கொதித்து பொங்கி வரும் நிலையில் அதில் மனைவாழ்வு என்பது எப்படிப் பச்சைத் தண்ணிரைத் தெளித்துப் பொசுக்கென்று அணைத்துவிடுகிறது.
லசுஷ்மி கண்ணனின் எழுத்தின் வசீகரத்தைப் பாருங்கள்.
"தீ வைக்கும் கேள்விகளை மெளனம் ஊமையாக விழுங்கிக்கொண்டது. மெளனம் விழுங்கிக்கொண்டே போயிற்று.”
கலாநிதி லசுஷ்மி கண்ணன் அவர்கள் ஒர் ஆங்கில இலக்கியப் பேராசிரியையாக இருந்தவர். அது காரணமாக அவர் தமிழிலும் எழுதும்போது பரிமாண வீச்சும், சொற் பிரயோகமும் ஆழ அகலமாகத் தொழிற்படுகின்றன.
காயத்ரியின் தாய் மைசூரில் வசிப்பவர். அவர் படித்த ஒரு மாது. மகளுக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள் சில, இதனை நிரூபிக்கும். அது வெறும் அறிவளவில்

கே.எஸ். சிவகுமாரன் 221
மேற்கொண்ட சவப் பரிசோதனை போலத்தான் ஆகும். கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த வேளையில் அலுவலக அலுவல்கள் குறுக்கிடுகின்றன. கடிதம் மரபுரிமை மைசூர் வீடு சம்பந்தமாக இருந்தது. பின்னர் கடிதத்தைப் படித்து முடிக்கிறார். காயத்ரி தில்லியினுள் தனது எலிப்பொறி போன்ற வீட்டில் வடிவாகக் குளிக்கவும் முடியாது என்கிறாள்.
“பெண்களுக்கு வெள்ளிக்கிழமை ஸ்நானம் என்பது என்னைப் போன்ற தொழிலாளிக்கு ஒரு எட்டாத சொகுசான அம்சமாகப் போய்விட்டது” (பக். 34)
காயத்ரியின் நினைவுதான் குழந்தையாய் இருந்தபொழுது முனியம்மா தன்னைக் குளிக்க வைத்த நிகழ்ச்சிகளுக்குச் செல்கின்றது.
அதன் பின்னர் நாளாந்தப் புதுடில்லி வாழ்க்கைக் கோலங்கள். அவற்றில் ஒன்று காயத்ரி தான் முதுமை அடைவதைக் கண்ணாடியில் பார்க்கும்போது உணருகிறாள்.
“நாளுக்கு நாள் அழிந்துதான் போயின்டிருக்கேன். அதனால் என்னவாம்? அழிவு மனித உடலுக்கு உரிமையாச்சேரி” என்று கண்கள் எரிந்தன. முகமூடி கழன்ற நேரம் சமயம் ஸ்தம்பித்து நின்றது.”
காயத்ரி நாட்டியம் கற்றவள். காயத்ரி சொல்கிறாள்: “நாட்டியம் என்ற உயர்ந்த கலையைக் கேவலம் ஒரு உடற்பயிற்சி போல சுருங்கவைத்து சிறுமைப்படுத்தி விட்டதன் விளைவு இந்த ஒடிசலான, வளைந்து கொடுக்கும்

Page 124
222 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
உடம்பு, சமயம் என்ற அவசர உந்தலில் முதன்மை பெறும் அம்சங்களான உத்தியோகம், குழந்தை, வீட்டுவேலை என்பதற்கு இடங்கொடுத்து கலை என்பது எங்கோ வழுக்கி, இறங்கி கீழ் ஸ்தானம் பெற்றுக் கொண்டுவிட்டது. சமயம் மட்டும் கிடைத்தால்..?’ (பக்-37)
காயத்ரி ஒரு சனிக்கிழமை மகனைப் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு கொணர்ந்ததைக் கூறும்பொழுது:
“விபரிக்க முடியாத ஒரு பரவசம் மனதையும் உடம்பையும் பரவலாக வியாபித்தது. எனக்குள்ளே ஏதோ ஒன்று பூச்சொரியலாகச் சொரிந்தது. அந்தச் சொரியலில் நான் நனைந்தேன் என்கிறாள்.’ (பக்-39)
அடுத்த நாள் எழுத்தாளர் கூட்டம் ஒன்றிற்கு காயத்ரியும், கணவன் சங்கரும் போவதாகவும் அங்கு காயத்ரியின் சினேகிதி ரமாவைச் சந்திப்பதாகவும் இருந்தது. அதற்கு முன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் ப்ளாட் ஒன்றை வாங்குவது பற்றிக் கணவனும் மனைவியும் பேசிக் கொண்டார்கள்.
ஆசாத் பவனில் நடந்த எழுத்தாளர் கூட்டத்தில் இந்திய மொழிகளில் எழுத்தாளர்களை ரமா காயத்ரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களில் ஒருவர் ஸின்ஹா என்ற ஹிந்தி எழுத்தாளர். இத்தகைய உயர் மட்டச் சந்திப்புகளின்போது வழமையாக இடம்பெறும் ஒரு கட்டத்தை லகஷ்மி கண்ணன், காயத்ரி என்ற பாத்திரம் மூலம் இவ்வாறு வர்ணிக்கிறார்.
“ஸின்ஹாவுடைய கண்கள் நிலைகொள்ளாமல் அலைந்தன. இந்தப் பழக்கத்தை இந்த மாதிரி கும்பல்களில்

கே.எஸ். சிவகுமாரன் 223
நிறைய முறை கவனித்திருக்கிறேன். நம்முடன் பேசும்போது யாராவது பெரிய புள்ளிகளைக் கோட்டைவிடக் கூடாதே என்ற கவலையுடன் அந்த நபரின் கண்கள் பரபரக்கும். அப்படியே கண்விளிம்பில் ஏதோ ஒரு புள்ளியோ, அல்லது உப-புள்ளியோ பார்க்க நேரிட்டால் உடனே ஒரு வாக்கியத்தில் அநாகரிகமாகக் கத்தரித்துக் கொண்டு ‘ஹி. ஹி... இதோ வந்து ட்டேன்’ என்று பல்லை இழித்துக்கொண்டு நழுவுவார்கள்.”
அக்கூட்டத்தில் ஹிந்தி, வங்க இலக்கியம், தமிழ் இலக்கியம் பற்றிய பேச்சுக்கள் இடம்பெற்றன. ரமா தற்கால தமிழ் இலக்கியம். ஸோஸியோலஜியின் பார்வையில்’ என்ற விஷயம் பற்றிப் பேசினார். அக்கூட்டத்தில் மூர்த்தி என்ற தமிழ் எழுத்தாளரும் சமுகமளித்திருந்தார். அவர் பெண்களை வெறுப்பவர். ரமாவின் கணவன் துரையும் பெண்களைக் கேவலமாக மதிப்பவன். அக்கூட்டம் முடியும் தறுவாயில் ஜோஷி என்ற எழுத்தாளர் வந்து ரமாவிடம் மன்னிப்புக் கோரினார். அவருடைய பேச்சைக் கேட்க முடியவில்லையே என்பதற்காக ரமாவின் கணவன் துரையைப் பார்த்து,
“நமஸ்தே, நீங்கதானே ரமாஜியின் கணவர்?’ என்று அவனிடம் ஜோஷி வினவினார். அதற்கு அவன்,
“ஆமாம். ரமாவை என் மனைவி என்றும் சொல்லலாம்” என்று பதிலளித்தான். (பக்.48)
இக்கதை இடம்பெறும் சமயத்தில் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொலையுண்டார். ஒக்டோபர் 31, 1984 நடப்பு நிகழ்ச்சிகளையும் இந்தியத் தலைநகரில் அப்பொழுது நடந்த அட்டூழியங்களையும் மிகத் திறம்பட

Page 125
224 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நாவலாசிரியர் வருணிக்கிறார். இரண்டொரு பக்கங்களில் உருக்கமான, தாக்கமான எழுத்து.
தலைநகரின் கலகம் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஓரளவு அடங்கியது. இருபது நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு மைசூரில் இருக்கும் தனது பெற்றோரையும், சிதம்பரத்தில் இருக்கும் தனது கணவரின் பெற்றோரையும் பார்த்து வரலாமென காயத்ரி தீர்மானிக்கிறாள்.
“சிதம்பரத்தில் ரமாவின் பிறந்தகம், புக்ககம் இரண்டுமே இருந்தன”அவளைப்பற்றி காயத்ரி கூறுகிறாள்:
“அவளைப்பற்றி நினைத்துக்கொண்டாலே தொண்டை அடைத்துக் கொள்கிறது. கோழைத்தனமும், பேடித்தனமும் குடிகொண்டிருக்கும் தன் அப்பாவிற்கு மூளைக் கோளாறின் அறிகுறிகள் கொண்ட அம்மாவிற்கு மற்றும் ஏராளமான கசப்பு நினைவுகளை அள்ளித் தெளித்திருந்த புக்ககத்தினருக்கு, தானே ரமா உழைத்துச் சம்பாதித்த பணத்தினால் ஏதேதோ தேவைப்படும் சாமான்களைத் தாராளமாகச் செலவு பண்ணி வாங்கியனுப்பியிருந்தாள். இத்தனை நடந்த பின்னும் அவள் இரத்தத்தில் ஊறும் இந்த ஆழமான குரும்பாசம் இன்னும் வற்றவில்லை. அவள் குடும்பத்தினரின் நெஞ்சழுத்தமும், நெறி தவறிய நடத்தையும் இன்னும் அவள் மனதை முழுக்க சாகடிக்க முடியவில்லை. இத்தனை கசப்பு அனுபவங்களுக்கும் இடையே ஏதோ ஒன்று அவளிடம் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. தனக்கு நேர்ந்த துரதிஷ்டத்தை, இழப்புகளை வலுவுடன் ஏற்றுக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல போகும்

கே.எஸ். சிவகுமாரன் 225
அவள் போக்கு. இதையெல்லாம் தெரிந்த எனக்கு நெஞ்சை பிழியும் சங்கரின் மனதை நெகிழவைக்கும் எனக்கு மட்டும் எழுதத் தெரிந்தால் ? ரமா, விலா நீங்களாவது எழுத்தாளர்களாக இருப்பதன் பேரில் சொல்ல முடியாததை, அல்லது சொல்லக்கூடாததை உங்கள் குரல் வளையை அழுத்தவிடாமல், ஓரளவாவது எழுத்தில் நழுவிக்கொள்ளாமல். ஆனால் நான்?’ (பக் 53-54)
காயத்ரி மைசூர் சென்ற பின்னரும், ரமாவின் வியாக்கியானம் ஒன்றை நினைத்துப் பார்க்கிறாள்.
“சமீபத்தில் உளவியல் ஆராய்ச்சியின்படி இந்த விஞ்ஞானக் காலப்பிரிவில் பெரும்பான்மையாகப் படித்தவர்கள் (ஆய்வறிவாளர்கள்) என்று குறிப்பிடப் பட்டவர்கள் விஷயங்களைப் புத்திசாலித்தனத்துடன் அலசிப் பேச வேறு வழியின்றி தனி மொழி'யாடுவதாகவும் அதாவது தமக்குள் தாமே பேசிக் கொண்டு தனிமையை விரட்டப் பார்க்கிறார்கள் என்றும் சில உண்மைக்கூறுகள் தெரிந்து வந்தன. சிலர் விவரித்தார்கள் விஞ்ஞானத்தில் விரிவடைந்து உலகம் பெருகிக்கொண்டே போகப் போக, மனிதன் எதிரிடையாக சிறுமைப்பட்டுப் போனான் என்றும், குறிப்பாகப் பெரிய பெரிய தலைநகரங்களில் அறிவு ஜீவிகளின் மனதை ஏகாந்த உணர்வு இம்சிக்க, அர்த்தமுள்ள உரையாடலிற்கு பட்டினிபோடும் செயற்கையான சமூகத்தில் இவர்கள் கடைசியில் தங்களையே துணையாகத் தேடிக் கொண்டு தனிமொழியாகும் விசித்திர பழக்கத்தைக் கையாளுகிறார்கள் என்றது உளவியல் ஆய்வு. அப்பொழுதுதான் எழுத்திலும் இதனுடைய பாதிப்பு உண்டு என்பதை அவர்களுக்கெல்லாம் ரமா விளக்கினாள்.’ (பக். 56-57)

Page 126
226 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
காயத்ரி, ரமாவின் பெற்றோர்களையும் மாமன் மாமியையும் சந்தித்துப் பெற்ற அனுபவங்கள் அலாதியானவை. மாதிரிக்கு:
“அது சரி, துரை எப்படியிருக்கான்? பாவம் அதைச் சொல்லு. அவ பாட்டுக்கு குழந்தைகளையும், வீட்டையும் அவன் தலையிலே கட்டிட்டு வேலை பார்க்கப் போறான். இதில் எழுதி வேற பிரபலமாகணும்னு ஒரு அரிப்பு எடுத்திருக்கு போலிருக்கு” என்று மனைவியை ஜாடையாகப் பார்த்துச் சிரித்தார் ஹரிஹரன். இதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் ருக்மணி சேர்ந்து கொண்டாள்.”
“சமையல், வீட்டு வேலை எல்லாவற்றையும் அரைகுறையாய் போட்டுட்டு வேலை, எழுத்துன்னு பொறுப்பில்லாமல் போனால் எங்க பிள்ளைக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கிறதோ இல்லையோ என்று பொரிந்தாள் ருக்மணி’ (பக்.70)
மிகவும் சங்கடப்பட்ட காயத்ரி ரமாவின் முழுமைத் தன்மையை உணருகிறாள்:
“என்ன ‘அகம் இது கேலிக்கூத்தாக அறிவாற்றலும் திறமையும் கொண்ட இந்த ரமா, இதில் ஒரு “அகத்தின்’ குறுகலான கணக்கீட்டின்படி வெறும் ஒரு மூன்றாவது பெண்ணாகவும், அவள் பிறப்பே, ஒரு விபத்தாகவும் கருதப்பட்டவள். இன்னொரு ‘அகத்தில் அவள் நிறைய சீர் வரதட்சிணை கொண்டுவராத "சாதாரண” மாட்டுப் பெண்ணாகக் காட்சியளித்தாள். இரண்டுமே அவளுக்கு அபயம் அளிக்கும் வீடாகவும் இல்லாமல், ரமாவின் மீது வலுக்கட்டாயமாக மூர்க்கத்தனமாய் வேண்டுமென்றே ஒரு செயற்கையான ‘சாதாரணத் தன்மையைப் போர்த்திப் பிறகு

கே.எஸ். சிவகுமாரன் 227
அந்த வரையறைக்குள் அவளைச் ‘சமாளித்து சரிக்கட்டலாம் என்று பார்க்கிறது! இந்த மனிதர்களின் கண்கள் இருண்டு கிடக்கிறது. அந்த இருட்டில் ரமாவை ஒரு சாதாரண பெண்ணாகச் சரி பார்த்து சமாதானம் செய்து கொள்கிறார்கள். குருடர்கள் உண்மையிலேயே ஒரு சின்னஞ்சிறு சாதாரணச் சிறுவனுக்குள் ஒளித்திருக்கும் முருகனை அடையாளம் கண்டுகொள்ள ஒரு ஒளவை மூதாட்டியல்லவா தேவைப்படுகிறது.” (73-74)
காயத்ரியின் நனவோடை சிறுமிக்காலத்திற்குச் செல்கிறது. சந்தன மரம் ஒரு படிமம். ரமாவும் சந்தன மரம்போல,
“ரமா, நீ இப்படியே இவர்கள் கண்களுக்கு ஒரு சாதாரண மரமாய், எல்லா சராசரி பெண்களையும் போல நாடோடியாக, கல்யாணம் என்ற ஒரு சம்பிரதாயத்துக்கு கட்டுப்பட்டு, குழந்தைகளைப் பெத்துண்டு, சமைத்துண்டு கூடவே உத்தியோகத்தின் பொறுப்புகளை கழுதை மாதிரி சுமந்துண்டு, சம்சாரம் பார்த்துண்டு மலிவான புடவைகளை நேர்த்தியாகக் கட்டிண்டு இருந்த வா.”
கதை தொடரலாம். ஆனால் லக்ஷமி கண்ணனின் இந்த நாவல் இத்துடன் முடிவடைகிறது.
‘ஆத்துக்குப் போகணும் ஒரு ‘இன்டலெக்சுவல் நாவல். நல்ல வாசிப்பை விரும்புகிறவர்கள், தேர்ந்தெடுத்த எழுத்தை நாடுபவர்கள் நிச்சயம் கலாநிதி லக்ஷமி கண்ணனின் இந்தப் படைப்பை வரவேற்பார்கள்.
来

Page 127
228 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்த தருமு சிவராமு
திருமு சிவராமுவை உங்களுக்குத் தெரியுமா? மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், ஈழத்தில் ‘எழுத்து போன்ற தமிழ் நாட்டுச் சிற்றேடுகளைப் படித்தவர்கள், தருமு சிவராமு, சிவராம், பிரமீள், அருப்ராம் என்ற பெயர்களை அறிந்து வைத்திருப்பார்கள். இவர் ஓர் ஓவியர், கவிஞர், விமர்சகர், நூலாசிரியர்
வேலணையில் பிறந்து, திருகோணமலை, வித்தியாலய வீதி 8ஆம் இலக்க இல்லத்தில் வளர்ந்து வந்தவர். 1939ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20ஆந் திகதி பிறந்த இவர், 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகிய எழுத்து' என்ற இப்பொழுது மடிந்துபோன, விமர்சனச் சாயல் படிந்த, சென்னைச் சிற்றேட்டில் எழுதிய ‘நான்’ என்ற கவிதை வெளியாகியது. அதன் பின்னர், இவர் தமிழ் நாட்டிலே, கலை இலக்கியப் பிரக்ஞை கொண்ட, ஒரு சிறு (ஆனால் காத்திரமான) வட்டத்தினரிடையே அறிமுகமானார். அங்கு இவர் ஒரு ‘புதுக்கவிதையாளராகவும், விமர்சகராகவும், சிற்றேட்டு உலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, வரவேற்பைப் பெற்று வந்தார்.
தமிழ் நாட்டு, மறைந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர் ‘மெளனி’யின் சிறுகதைத் தொகுதியொன்று வெளிவரக் காரணமாக இருந்தார். இலங்கைப் பத்திரிகைகளில் இவர் எழுத விரும்பவில்லை. ஆயினும் என்னுடைய வற்புறுத்தல் காரணமாக, தினகரன் வாரமஞ்சரியில், 'மெளனி பற்றிய கட்டுரையை எழுதினார். இவருடைய புகைப்படத்துடன்

கே.எஸ். சிவகுமாரன் 229
அக்கட்டுரை வெளியாகியிருந்தது. இதனைத் தவிர ‘செய்தி’ என்ற பத்திரிகை நீங்கலாக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவர் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் இரண்டொன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.
தருமலிங்கம் சிவராமலிங்கம் அபூர்வமான எழுத்தாளர் இப்பொழுது ‘அஜித்ராம் பிரேமிள்’ என்ற பெயரில் எழுதி வந்தார். இவர் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அங்கு சிறு பத்திரிகையாளரிடையே நடைபெறும் குழு மனப்பான்மைச் சண்டைகளில் ஈடுபட்டு சி.சு. செல்லப்பா, மெளனி, க.நா. சுப்ரமண்யம், சிட்டி போன்ற “மணிக்கொடி’ மூலம் பிரபல்யமான எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். வெங்கட் சாமிநாதன் என்ற புதுதில்லி வாழ், தஞ்சாவூர்க்காரரான விமர்சகர் மற்றும் ந. முத்துசாமி, சா. கந்தசாமி போன்ற இக்கால எழுத்தாளர்களுடன், ஆரம்பத்தில் நட்பும் பின்னர் மனக்கசப்பும் கொண்ட உறவுகளைக் கொண்டிருந்தார்.
இங்குள்ள பெரும்பாலான வாசகர்களுக்கு இவருடைய அன்றைய பெயரான தருமு. சிவராமுதான் நினைவில் இருப்பதனால், இவரை நாம் அப்பெயர் கொண்டே அழைப்போம்.
தருமு. சிவராமு வெறுமனே ஓர் ஆக்க இலக்கியவாதியோ, விமர்சகரோ அல்லர். இவர் ஆன்மிகம், சோதிடம், எண் சாஸ்திரம் என்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
நாம் அறிந்தமட்டில், இவர் எழுதிய நூல்கள் வருமாறு:

Page 128
230 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கவிதைத் தொகுப்புகள்: கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல் நோக்கிய பயணம்.
விமர்சனம் சார்ந்த தொகுப்புகள்: விமர்சன ஊழல்கள், தமிழின் நவீனத்துவம்.
புனைகதைத் தொகுப்புகள்: லங்காபுரி ராஜா, ஆயி.
நாடகத் தொகுப்பு: நக்ஷத்ரவாசி.
ஏனைய நூல்கள்: படிமம், சாது, அப்பாத்துரையின் தியானதாரா, பூனிலங்காவின் தேசியத் தற்கொலை,
தருமு சிவராமுவைப் பற்றி இப்பொழுது நாம் பேச வேண்டிய அவசியம் என்ன? அவருடைய கடிதம், கவிதை, கட்டுரை, பேட்டி ஆகியன அடங்கிய ஒரு தொகுப்பு வெளியாகியிருக்கிறது. 1993 ஒக்டோபரில் சென்னையில் வெளியாகிய இந்தப் புத்தகம், நமது பார்வைக்கு இப்பொழுது கிடைத்திருக்கிறது.
607803, நெய்வேலி, 26ஆவது வட்டம், பீ 40/ஏ மொஸ்கோ சாலையிலிருந்து ‘மீறல்' என்ற சிற்றேடு நான்கு இதழ்களை வெளியிட்டது. கடைசி இதழை 'பிரேமிள்’ சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. பிரேமிள் "அஜித்ராம் பிரேமிள்’ என்று எழுதி வந்தவர் தருமு சிவராமுதான். இந்தத் தொகுப்பில் பூgதரன், ராஜசுந்தரராஜன், அழகியசிங்கர், நகுலன் ஆகியோர் தருமு. சிவராமு பற்றி எழுதியிருக்கின்றனர். ‘விருகூழ்ம்' என்ற மற்றொரு சிற்றேட்டின் ஆசிரியரான கலாப்ரதீப் சுப்ரமணியன், தருமு சிவராமுவைப் பேட்டி கண்டிருக்கிறார். இத்தொகுப்பு வெளிவர இந்திய, கொழும்பு, திருகோணமலை நண்பர்கள் பண உதவி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. போதிசத்வன், குருநாத் கே. ரஞ்சன் ஆகிய இருவர், இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளனர்.

கே.எஸ். சிவகுமாரன் 231
இந்தத் தொகுப்பிலே, ஆலா, அங்குலிமாலா என்ற தலைப்புகளில் இரண்டு சிறுகதைகள், ஒரு சில ரிப்பேர்கள். அதாவது ‘ரிப்பயர்கள்' - என்ற பெயரில் ஒரு கட்டுரை, அதிரடிக் கவிதைகள் (23) உம் முன்னுரையும், கவுண்டர் கல்ச்சர் லிமிட்டெட், கிழக்குவாசல், உதிர நதி, முடிச்சுக்கள் ஆகிய தலைப்புக்களில், கவிதைகள் ஆகியன தருமு சிவராமுவின் ஆக்கங்கள். இவற்றுடன் பிரேமிள் பேட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜசுந்தரராஜன், நகுலன், அழகிய சிங்கர் ஆகியோரின் தருமு. சிவராமு பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்புக்கு டி. அஜித்ராம் பிரேமிள்தானே முன்னுரை எழுதியிருக்கிறார்.
தருமு சிவராமு எழுத்து’ பத்திரிகையில் எழுதிவந்த ‘கவிதைகளையோ, விமர்சனங்களையோ நான் புரிந்துகொள்ள முடியாமற்போனது எனது பலவீனம். அதேவேளையில், அவருடைய புதுக்கவிதைகள், படிமப் பிரயோகம் என்ற பெயரில் வெறும் போலித்தன்மையான அலங்கார வெளிப்பாடுகள் என்றும் கருதி வந்தேன். ‘விமர்சனம்’ என்ற பெயரில் ஒர் ஒழுங்கு முறையின்றி, நெறிமுறைகளின்றி, கரடுமுரடான தமிழில் (இதற்குக் காரணம் ‘எழுத்து ஏட்டின் நடை அப்படிப்பட்டதாக இருந்தமை) பண்டிதத்தன்மை விளங்க, அவர் எதையெதையோ எழுதி வந்ததனால், அவரை விமர்சகர் என்று கருத முடியாமற் போய்விட்டது.
பின்னர், அவர் எழுத்துக்களைப் படிக்கச் சந்தர்ப்பம் இல்லாமற்போய்விட்டது. ஆனால், இப்பொழுது, இந்தத் தொகுப்பைப் படிக்கும்பொழுது, அவருடைய பரிணாம வளர்ச்சியை நாம் இனங்காணலாம்.

Page 129
232 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
212 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பிலே, 107 பக்கங்களில் இவருடைய பேட்டி இடம் பெறுகிறது. இந்தப் பேட்டியில் இவருடைய கலை, இலக்கிய, பண்பாட்டு, சமய, சமூக, அரசியல் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இவர் எத்தனையோ நூல்களைப் படித்தவர் என்பது தெரிய வருகிறது.
இந்தப் பேட்டியின் பெரும்பகுதி, பிராமணியம் எனப்படும் ஆரிய ஆதிக்கத்தைக் கண்டனம் செய்வதாக அமைகிறது. நையாண்டி, இழிவரல் போன்ற அம்சங்களைப் பதில்களில் நாம் அவதானிக்க முடிகிறது. சுந்தர ராமசாமி, வெங்கட்சாமிநாதன் என்ற இரு தமிழ் நாட்டுப் பிராமணிய எழுத்தாளர்களின் மீதான கேலியும், கண்டனமும் பெரும் பகுதியாக அமைகிறது. முத்துசாமி என்ற மற்றொரு பிராமண எழுத்தாளரும் தாக்குதலுக்கு உட்படுகிறார். இவர்கள் எல்லோரும் தருமு சிவராமு பிராமணர் அல்லாதவர் என்பதனால், தருமு சிவராமுவை நேரிலும், எழுத்திலும் அவமானப்படுத்தியதாக அறிய நேர்கிறது. இந்தப் பேட்டி மூலம் தருமு சிவராமுவின் வாதத்திறன், அவருடைய தமிழ் அபிமானம், எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய மனிதாபிமானம் ஆகியன புலப்படுத்தப்படுகின்றன.
திருகோணமலை கவிராயர் என்ற திரு. பொ.பொ.
சிவசேகரம், தருமு சிவராமுக்குப் 15 வயதாக இருக்கும்
பொழுது இவருக்குத் தமிழ் கற்பித்தவர் என்று அறிகிறோம். இவருடைய பேட்டியிலிருந்து சில வரிகள்:
“உண்மையை அடைவதற்கு ஒரே வழி மெளனம்தான்.

கே.எஸ். சிவகுமாரன் 233
இனக்குழுவாதப் பார்வை உள்ள ஒருவர் எவ்வளவு பெரிய திறமையானவராக இருந்தாலும், போகப்போக அந்தத்திறனை இந்த இனக் குழுப்பார்வை அரித்து ஒட்டை போட்டுவிடும். Alternative culture (மாற்றுப் பண்பாடு) பற்றி பேசுகிறவர்களில் எவருக்கும் தங்கள் Cultureகளின் (பண்பாடுகளின்) ஆழமான தளங்கள் தெரியாது. சம்பிரதாய கலாசாரத்துக்கும் அதே கலாசாரத்தின் ஆழத்திலுள்ள அதன் உண்மையான வடிவுக்கும் இடையே உறவு இல்லை என்பதுதான் என்னைப் போன்றவர்களின் பார்வை.
O ஞானமரபினுடைய Plagiarism, பூசகமரபு. உண்மையில் ஆன்மிகம் என்பது மரபுகளுக்கு அப்பாற்பட்டது. மரபுகளை மறுப்பவர்களுக்குத்தான் ஆன்மிக தரிசனம் ஏற்படும். காரைச் சித்தரின் ‘கண்க வைப்பு’ என்ற நூலிலே, இலங்கையின் கதிர்காமம், திருக்கேதீச்சரம், திருகோணமலை ஆகியவை கூட சித்தர்களின் சமாதிகளில் எழுந்த ஸ்தல ஆலயங்கள் தாம் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழின் தொன்மையும், சமஸ்கிருதத்தின் தொன்மையும் ஒரே ஆத்மிக மரபிலிருந்து கிளைத்து ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்ந்துள்ளவை. பூசாரிகள் சமஸ்கிருதத்தை ஆதிக்க மொழியாக்கிய போது தமிழை ஆதிக்கக் களத்திலிருந்து பகிஷ்கரிப்பதற்காக அதை நீச பாஷை என்றார்கள். தமிழ் பெருமளவுக்குத் தொடர்ந்து ஞானமூர்த்திகளிடமும் சித்தர்களிடமும் பெற்று வந்திருக்கிறது. தமிழின் சாமான்யமான பிரயோகங்களே ஆன்மிகப் பரிபாஷைகள்தாம்.
e இலக்கியம், ஆத்மிக சிருஷ்டிகரத்தின் நிழல்களுள் ஒன்று. பிரபஞ்ச விசாரணைகளின் பல்வேறு

Page 130
234
இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சொரூபங்களும் ஆத்மிகத்தின் நிழல்கள்தாம். நவீனத்தன்மை என்பது மனித நேயம் வாய்ந்த சமூகக் கட்டுமானங்களைப் பொறுத்து மட்டும்தான்
செல்லுபடியாக வேண்டும். இதைச் செல்லுபடியாக
விடாமல் திரும்பத் திரும்பத் தலையெடுக்கின்றன. இன வாதங்களும், ஜாதீயமும், மத மொழி வெறிகளும், இந்த வாதங்களை ஆன்மிகவாதிகளும், மனித சகோதரத்துவத்தை உபாசிக்கும் சமூகவியலாளர்களும்தான் எதிர்த்து வந்திருக்கிறார்கள். நான் ஆன்மிகம் என்று சொல்வதற்கும், பழைமைவாதிகள் தங்கள் அதிகாரங்களைக் காபந்து பண்ண உச்சரிக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை. அக, புற உலகின் அனுபவங்களையும், கொள்கைகளையும் முடிவுகளையும் இடைவிடாமல் கேள்விக் கணைகொண்டு கண்டபடி இருக்கும் விழிப்பு நிலைதான் நான் குறிப்பிடும் ஆன்மிகத்தின் ஊற்றுக்கண். இது காலவரையறை யெதற்குள்ளும் தேங்க முடியாது.
மனப் பீடிப்பாக Sex இல்லாதவர்களுக்குத்தான் செக்ஸ் உணவு போன்றது. உணவுக்குப் பசி அவசியம். செக்ஸிற்கு அன்பு அவசியம். அன்பினால் நிர்வகிக்கப்படும் செக்ஸ் ஒழுக்கமே கற்பு.
கலைச் செம்மைக்கும் சமூகக் கட்டுமான ஏற்றத்தாழ்வுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் செல்வம் கலைச்செம்மை என்று கொள்கிறார்கள். செம்மைகள் யாவுமே விவேகத்திலிருந்து விளைகிறவை. உலகின் சரித்திர புருஷார்த்தங்களாகப் பிறந்த பல மகாமனிதர்கள் ஏழ்மையைத் தாமாகவே

கே.எஸ். சிவகுமாரன் 235
மேற்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் இவர்கள் ஏழை, செல்வர் என்ற பாகுபாட்டிற்கும் அப்பாற்பட்ட விவேகிகள், கலையின் தாரதம்மியம் விவேகத்தைச் சார்ந்தது.”
மேற்கண்ட தருமு சிவராமுவின் கருத்துகளைப் படிக்கும் பொழுது, அக்கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அவருடைய அறிவு வீச்சையிட்டு, அவர் மீது நமக்கு மரியாதையே ஏற்படுகிறது. அவருடைய எழுத்துக்களின் அடிப்படையில், அவர் ஒரு மனிதாபிமானி.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற ‘ஆலா’, இலங்கைச் சூழலில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது ‘சிறுகதை’க்குரியது என்று நான் கருதும் பொதுவான பண்பைக் கொண்டிராததால் எனக்கு இக்கதை புரியவில்லை.
இவருடைய அதிரடிக் கவிதைகள் பிறரைத் தாக்குவதற்காக எழுதப்பட்ட கவித்துவமில்லா, புத்திபூர்வமான வசனத்தொகுப்புக்கள்.
‘ஒரு சில ரிப்பேர்கள்’ என்ற பகுதியில் சில விளக்கங்களைத் தந்து, தன்னைத் தாக்கியவர்களுக்குப் பதிலடி கொடுக்கிறார் தருமு சிவராமு.
‘அங்குலிமாலா தருமு சிவராமுவின் ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. அவர் வெறும் ஆன்மிகவாதி அல்லர். லெளகீக ஆன்மிகவாதி அல்லர். லெளகீக வாழ்விலும், நிதர்சனமாகக் கதை எழுதக் கூடியவர் என்பதற்கு அத்தாட்சி இந்தக் குறுநாவல். இக்கதை பற்றித் தனியாக நாம் பின்னர் ஆராய வேண்டும்.

Page 131
236 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இவருடைய “கிழக்குவாசல்" என்ற நீண்ட கவிதை தனி ஆய்வுக்குரிய சிறந்த படைப்பு, ‘உதிர நதி’, ‘முடிச்சுகள் ஆகிய கவிதைகளும் குறிப்பிடத்தக்கன.
'அஜித்ராம் பிரேமிள்’ என்ற பெயரில் எழுதிவந்த தருமு சிவராமு இலங்கை தந்த ஒரு மேதை.
来
ஈழத்து இலக்கியம் : நூல்களின் அறிமுகம்
RFழத்து இலக்கிய வரலாறு முழுமையாக, பட்சபாதமின்றி இன்னமும் எழுதப்படவில்லை. ஆயினும், ஈழத்து இலக்கியத்தின் சிற்சில துறைகள் பற்றி ஆங்காங்கே சிலநூல்கள் வெளிவந்துள்ளன. மாணவர்கள், இவற்றைத் தேடிப் படிக்க வேண்டும். பல்கலைக் கழக நூலகங்களில், அல்லது பொது நூலகங்களில் இவை கிடைக்கப் பெறலாம். இலக்கிய வெளியீடுகளின் சில சிறப்பு மலர்கள், பல்கலைக் கழக வெளியீடுகள், சிற்றேடுகள், நாளிதழ்களின் ஞாயிறு மலர்கள் போன்றனவற்றில் எல்லாம், ஈழத்து இலக்கியம் தொடர்பாகப் பல பயனுள்ள கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவற்றைச் சேகரித்துப் பேணல் அவசியம். இவற்றிலிருந்து பல விபரங்களை நாம் பெறக் கூடியதாக இருக்கும்.
நமது நாட்டு உயர் வகுப்பு மாணவர்கள், பல்கலைக் கழக மட்ட ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள் எழுதும் நூல்களையும், கட்டுரைகளையும் படித்து அவசியம் பயனடைதல் வேண்டும். உதாரணமாக, பேராசிரியர்

கே.எஸ். சிவகுமாரன் 237
க. கைலாசபதி எழுதிய ‘இலக்கியமும் திறனாய்வும்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது. பல்வேறு இலக்கிய இயக்கங்கள், கோட்பாடுகள் ஆகியனவற்றுக்கு இணங்க இலக்கியத்தைக் குறித்த விபரங்களுடன் விளக்கும் முதலாவது தமிழ் நூல் என இதனை விபரிக்கலாம். இலக்கியம், திறனாய்வு ஆகியன பற்றி மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் தவறாமல் இந்நூலைப் படிக்க வேண்டும்.
ஈழத்து இலக்கியத் துறையை எடுத்துக் கொண்டால், இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு, இலக்கியத்திறனாய்வு, மதிப்புரை, கலை, இலக்கியப் பத்தி எழுத்து என்பன போன்ற பிரிவுகளிலே தனிச் சிறப்பான வளர்ச்சியை நாம் காண முடியும்.
‘ஈழத்தில் தமிழ் இலக்கியம்’ என்ற நூலை, பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியிருக்கிறார். இலங்கையில் திறனாய்வு முனைப்புக்கான காரணிகளை எடுத்துக் கூறும் இவர், இவ்வாறு குறிப்பிடுகிறார்: 1. இலங்கையில் தனிப்பட்ட இலக்கிய ஆர்வமும், குறிப்பிட்ட இலக்கிய முயற்சிகளும் தோன்றிய காலம் தொட்டே, இலக்கியங்களை இலங்கையின் சமூக, பண்பாட்டுக் கோலத்துடன் இணைத்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டப்பட்டு வந்துள்ளது. இலங்கைத் தமிழ் இலக்கியப் பயில்வாளர்கள், இந்தியத் தமிழ் இலக்கியம் பயில்வதிலும் பார்க்கப் பிரதேச, பிற பண்பாட்டுப் பாரம்பரியங்களை அறிவதற்கும், தழுவியமைத்துக் கொள்வதற்கும் இருந்த வாய்ப்புகள். இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பங்கு.

Page 132
238
இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஆக்க இலக்கியக் கர்த்தர்களுக்கும், விமர்சகர்களுக்கு மிடையே ஒருவர் கருத்துரைகளினால், மற்றவர் நன்மையடையும் ஒரு பரஸ்பர நல்லுறவு நிலை.
இக்கூற்றுக்களை - மாணவர் மனங் கொள்ளுதல்
நலம். ஈழத்துத் திறனாய்வு மரபு வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுபவர்கள் யாவர் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி நிரற்படுத்தியுள்ளார்.
1.
2.
3.
ஈழத்து இலக்கிய உரைகாரர்கள். ஆசிரிய பரம்பரை முக்கியஸ்தர்கள். பத்திரிகைத் தொடர்புடைய அழகியல் வாத விமர்சகர்கள், (பத்தி எழுத்தாளர்களைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.) சமூக நோக்குடைய, இலக்கிய விமர்சனத் திறன் வாய்ந்த மறுமலர்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஆக்க இலக்கியப் படைப்பாளிகள். முற்போக்கு இலக்கியவாத முன்னோடிகள். பல்கலைக்கழக வழி வந்த முற்போக்கு விமர்சகர்கள். முற்போக்கு இலக்கியத் தாக்கம் காரணமாக அதனை ஆதரித்தும், எதிர்த்தும் நின்ற ஆக்க இலக்கியக் கர்த்தாக்களாகிய விமர்சகர்கள்.
கல்விப் பயிற்சி வழியாக இலக்கிய விமர்சனத்தைத் தனது ஆய்வுத்துறையாகக் கொண்டுள்ள விமர்சகர்கள். பேராசிரியர் வி. செல்வநாயகம் எழுதிய ‘தமிழ்
இலக்கிய வரலாறு’ என்ற நூலிலே ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றிய சில குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

கே.எஸ். சிவகுமாரன் 239
ஈழத்து இலக்கிய வளர்ச்சி தொடர்பாக மாணவர்கள்
அறிந்து கொள்ளப் பின்வரும் நூல்களைப் படித்துப்
பார்த்தல் அவசியம்.
காலமும் கருத்தும் - பேராசிரியர் ஆ.
வேலுப்பிள்ளை. தமிழிலக்கியத்தில் தமிழ் அறிஞர் பெருமுயற்சிகள் - பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி - கனக செந்திநாதன்.
தமிழியற் சிந்தனை - பேராசிரியர்சு வித்தியானந்தன்.
இலக்கியத் தென்றல், தமிழர் சால்பு - பேராசிரியர் சு வித்தியானந்தன்.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் - கலாநிதிகள் எம்.ஏ.நுஃமான், சி.மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி - கலாநிதி க.செ. 5L -JITFIT.
ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சி - சொக்கன். ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம் - பேராசிரியர் ஆ. சதாசிவம்.
ஈழத்து தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் - பேராசிரியர் கா. சிவத்தம்பி.
ஈழத்து நாட்டுப் பாடல்கள் - பேராசிரியர் இ. பாலசுந்தரம்.
ஈழத்து தமிழ்ச் சுடர்மணிகள் - தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை.

Page 133
240 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
போர்ப்பாறை, மெய்யுள் - மு. தளையசிங்கம். ஒரு சில விதி செய்வோம், கவிதை நயம் - முருகையன்.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி - சில்லையூர் செல்வராசன்.
ஈழத்துச் சிறுகதை மணிகள் - செம்பியன் செல்வன். இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் நாடக அரங்கம் - சி. சிவாநந்தன்
பாவலர் சரித்திர தீபம் - பதிப்பு : பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்.
ஈழத்து இலக்கிய முன்னோடிகள் - பேராசிரியர் க. கைலாசபதி,
செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் - பல்கலைப்புலவர் க.சி. குலரத்தினம்.
தமிழியற் கட்டுரைகள் - கலாநிதி எஸ். சிவலிங்கராஜா, மயிலங்கூடலூர் பி. நடராசன்.
605GT3-L15ulb (5/TQIlb, Tamil Writing in Sri Lanka, J5606) go 35u 5sp60TTula, Aspects of Culture in Sri Lanka பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுகளும், திறனாய்வுப் பார்வைகள் - கே.எஸ்.சிவகுமாரன்
இவை போன்ற நூல்களையும், இவை குறிப்பிட முடியாமற் போன ஈழத்து இலக்கியம் சம்பந்தமான ஏனைய நூல்களையும் மாணவர்கள் படித்துப் பயன் பெறலாம்.
இவற்றை விட சிந்தனை, மல்லிகை, அலை, செய்தி, புதினம், தாயகம், அஞ்சலி, கற்பகம், வசந்தம், தேனருவி, களம், வயல், நோக்கு, வியூகம், புதுசு, கொழுந்து, குன்றின்

கே.எஸ். சிவகுமாரன் 241
குரல் போன்றவற்றையும் மேலும் பற்பல சிற்றேடுகளையும் படித்துப் பார்த்தல் பயன்தரும்.
பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிற்றேடுகள், நாவல்கள் மாத்திரமன்றி மின்மம் (இலெக்ரோணிக்) சார்ந்த ஊடங்கள் மூலமும் ஈழத்துக் கலை இலக்கிய முயற்சிகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
来
க.செ. நடராசாவின் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
கிலாநிதி க.செ. நடராசாவின் ‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ (14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை) என்ற இந்நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் ஆ. சதாசிவம் இப்படிக் கூறுகின்றார் :
"14ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டின் இறுதி வரையான காலப்பகுதியில் ஈழத்தெழுந்த தமிழிலக்கியங்கள் பல கோணங்களிலிருந்து ஆராயப்படுகின்றன. சகசோதிமாலை என்னும் சோதிட நூலின் ஆசிரியராகிய தேனு வரைப் பெருமாளின் காலத்திலிருந்து புலியூரந்தாதியின் ஆசிரியராகிய மயில்வாகனப் புலவரின் காலத்தோடு நிறைவு பெறுகிறது இந்நூல். ஈழத் தமிழ் இலக்கியம், ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி, ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி, பிரபஞ்ச வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் என்னும் நான்கு தலைப்புக்களில் ஈழ நாட்டுத் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் இந்நூலாசிரியர் வழக்கிலுள்ள இலக்கியங்களைப்

Page 134
242 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
பற்றிய செய்திகளை மட்டுமின்றி, வழக்கொழிந்த இலக்கியங்களைப் பற்றி மேலும் மேலும் ஆய்வாளர் தேடி அறிவதற்குத் தூண்டும் செய்திகளையும் விளக்கியுள்ளார். தமிழிலக்கியங்கள் இலக்கணங்களை அறிய விழையும் ஆய்வாளருக்கு இந்நூல் ஒரு களமாக அமையும்.
ஈழத்துப் புலவர் பரம்பரை, அவர்களின் ஆக்கப்பணிகள், அவர்கள் பாரம்பரியங்கள், சமுதாய உணர்வுகள், கற்பனைகள் என்பவற்றை வரலாற்றுக் கண்ணோட்டத்திற் காண விரும்பும் தமிழறிஞர் பலரும் இந்நூலை உவந்தேற்பர் என்பது எமது துணிவு.”
மேற் கண்ட குறிப்புகள் இந்நூ லின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
来
தமிழியற் சிந்தனை
சிப்பிரமணியன் வித்தியானந்தன் சமகால ஈழத்துக் கலாசாரத்துடன் இயைந்த ஒரு பெயரெனின் மிகையாகாது. பல்கலைக்கழகப் பேராசான்களே பெரும்பாலும் சமகாலக் கலாசாரப் போக்கை நிர்ணயிப்பது வழக்கம் என்பது வெளிப்படையாகப் புலனாகாததோர் உண்மையாகும். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக விளங்கிய பேராசிரியர் வித்தியானந்தன் இன்றைய ஈழத்துத் தமிழ் ஆய்வறிவாளர்களுடன் நெருங்கிய விதத்தில் சம்பந்தப்பட்டவர். அவர் பட்டறையில் மிளிர்ந்த பலர் இன்று உயர் கல்வி மட்டத்திலும், ஏனைய துறைகளிலும் ஏற்றம் பெற்றுள்ளனர். இலக்கியத் தென்றல், தமிழர் சால்பு போன்ற அரிய நூல்களை எழுதிப் புகழ் பெற்ற ஆசிரியரின்

கே.எஸ். சிவகுமாரன் 243
பெருந்தொண்டு நாடகத்துறையில் ஆகும். குறிப்பாக ஈழத்து நாட்டுக்கூத்துத் துறைக்குப் புது வளம் பெருக்கியவர் என்ற முறையில் அவர் பங்கு அளப்பரியது.
கல்வித்துறையிலும் கலாசாரத்துறையிலும் வித்தியானந்தன் ஆற்றிய பங்கு பற்றி ஆராய்வதல்ல இவ்விடத்தில் எனது நோக்கம். அவை பற்றித் தனியாக விமர்சித்தல் வேண்டும்.
பேராசிரியர் வித்தியானந்தன் எழுதிய ஏழு தமிழ்க் கட்டுரைகளும் அடங்கிய தமிழியற் சிந்தனை என்ற நூல் பற்றி நயமாகத் தொட்டுச் செல்வதே இங்கு முனைப்பு. யாழ்ப்பாண முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் வெளியிட்ட மூன்றாவது நூலே இது.
ஈழத்து இலக்கியம் என்ற தனியான பிரிவு வளர்ந்து சிறப்புறுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட இக்கால கட்டத்தில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி அறியவும், ஆய்வு நடத்தவும் பெருவிருப்பங்கொண்ட மாணவர்களின் தொகை மேலை நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதிலிருந்தே இதனை அறியலாம்.
ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் அரும் பணிகளை விதந்துரைப்பவையாக இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள் அமைகின்றன.
ஆங்கிலக் கட்டுரைகள் மிகவும் பயனுடையவை. இத்தொகுப்பு உயர் கல்வி மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும், விமர்சகர்களும் பயனடைய உதவுகின்றது. ஆசிரியர் தமது கட்டுரைகளின் நோக்கத்தையும் பயனையும் தாமே முகவுரையில் குறிப்பிட்டிருப்பது படிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கிறது.

Page 135
244 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நாவலரும் தமிழகமும் என்ற கட்டுரையில், தமிழகம் நாவலருக்கு எவ்விதத்தில் கடமைப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டித் தொண்டுகளை விபரிக்கும் ஆசிரியர், தமிழகத்தை ஈழ நாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர் என்ற சோமசுந்தர பாரதியாரின் மேற்கோளையும் ஆதாரம் காட்டுகிறார். தமிழகத்தினர் ஆறுமுகநாவலரின் பணியை அங்கீகரிப்பது எவ்வாறு வரலாற்று அடிப்படையில் தவிர்க்க முடியாததோ, அவ்வாறே விபுலாநந்த அடிகளின் பணியும் ஒப்புயர்வற்றது. ஈழம் ஈன்ற இரு மேதைகளையும் ஆசிரியர் இரண்டாவது கட்டுரையில் ஒப்பிட்டு ஆராய்கிறார். 1943ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் முதலாவது பேராசிரியராக விபுலாநந்த அடிகளே நியமனம் பெற்றாரென்பது அவதானிக்கத்தக்கது; ஏனெனில், கிழக்கிலங்கை, கல்வியிற் பின்தங்கிய பகுதி என்று கருதப்பட்ட போதிலும், அங்கு உதித்த ஒருவர், உயர் கல்வி பீடத்தில் அமரும் வாய்ப்பையும் தம் ஆற்றலினால் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டது.
இன்று, தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில், இலங்கை தென்னிந்தியாவுக்கு வழி காட்டுகிறது என்று படித்தறிந்த தமிழ் நாட்டுக் கலையபிமானிகளும் விமர்சகர்களும் கூறுவர். அதே போன்று, சி.வை. தாமோதரம்பிள்ளை போன்றவர்கள், ‘புதிய இலக்கண நூல்களை எழுதியும், பழைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தும், சிறந்த தொண்டாற்றினார்கள். ஆறுமுக நாவலர், சிதம்பரப்பிள்ளை, குமாரசாமிப் புலவர், த. கயிலாயபிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோரின் பணி பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர், 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மொழி வரம்பிழந்து

கே.எஸ். சிவகுமாரன் 245
அழிந்தொழியாமற் காத்தவர் ஈழத்தவரே. இலக்கண மரபைப் பாதுகாத்து வந்தவர் ஈழத்தவரே எனினும் மிகையாகாது’ என நிலை நாட்டுகிறார்.
ஈழத்தில் தமிழ் கிராமிய நாடகத்துறையில், அதிகார பூர்வமாகப் பேசக்கூடியவராக விளங்கியவர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களே என்பது யாவரும் அறிந்ததே. அவருடைய நுண்மாண் நுழைபுலப்பார்வையில் இடம் பெற்றதாக அடுத்த கட்டுரை அமைந்துள்ளது. மட்டக்களப்பிலும் மன்னாரிலும் ஆடப்படும் நாட்டுக்கூத்துக்கள் பற்றிச் சிறப்பாகவும், கிராமிய நாடகக்கலை பற்றிப் பொதுவாகவும் விளக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மன்னார் மாவட்ட நாடகங்கள், சிங்கள மொழியில் காணப்படுவதை ஆசிரியர் விபரித்துள்ளார். அதே போன்று கன்னட, யக்ஷகான நாடகத்திற்கும் மட்டக்களப்பு வடமோடி நாடகத்திற்கும், பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
ஈழத்தின் சமயம் பற்றியும் கல்வி பற்றியும் அடுத்த கட்டுரையில் விபரிக்கும் ஆசிரியர், “சிங்கள மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தி, அவர்களின் வழிபாட்டு முறைகளிற் சைவ முறைகளையும் புகுத்தி, புத்த சமயத்திற்குப் ‘புனிதத் தன்மையை அளித்தனர் தமிழர்” என்கிறார் ஆசிரியர். தமிழியல் என்னும் பொழுது தமிழர் சமயமும், தமிழர் கலாசாரத்துடன் பிணைந்ததென்பது புலப்படும். அதன் நிமித்தம், இக்கட்டுரையும் மதிப்படைகிறது. “தம்பதேனியாவிலிருந்து அரசு செலுத்திய 3ஆம் பராக்கிரமபாகு என்பவன் காலத்தில், "சரசோதிமாலை என்னும் சோதிட நூலைப் பாடி அவ்வரசன் சபையில் அரங்கேற்றினார் போசராச பண்டிதர்’ என்னும்

Page 136
246 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கண்டியிலிருந்து ஆண்ட இறுதி அரசனாகிய பூg விக்கிரமராசசிங்கனும், தமிழர் கல்வி விருத்தியிற் கவனம் செலுத்தினான்’ என்றும் ‘கண்டியிலிருந்து ஆண்ட இறுதி அரசனாகிய பூரீ விக்கிரமராசசிங்கனும், தமிழர் கல்வி விருத்தியிற் கவனம் செலுத்தினான்’ என்றும் ஆசிரியர் தகவல் தந்துள்ளார். கட்டுரையின் பிற்பகுதியில், ஐரோப்பியர் காலத்தில் ஈழத்தவரின் தமிழ்க் கல்வி, சமய முயற்சிகள் ஆகியன பற்றியும் ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளார்.
மேற்கண்ட கட்டுரையின், தர்க்கரீதியான தொடராக, அடுத்த கட்டுரை அமைந்துள்ளது. ‘ஈழத்திலே தமிழ்க் கல்வியும் பல்கலைக் கழகமும்’ என்ற தலைப்பில் இடம் பெற்ற இக்கட்டுரையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இன்று யாழ்ப்பாணத்திலே தனியான ஒரு பல்கலைக்கழகம் இயங்கும் இவ்வேளையில், பின்னணித் தகவல்கள் பலவற்றைத் தெரிவிப்பதாக இக்கட்டுரை அமைந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
பொதுவாக யாவரும் ஏற்றுக் கொண்ட ஒர் உண்மையை ஆசிரியர் வாயிலாக நாம் படிக்கும் பொழுது புளகாங்கிதம் அடைகிறோம். அவ்வரிகள் “இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தனித்தன்மை வாய்ந்த கலாசாரச் செல்வத்தை உடையவர். எனவே, அவர்கள் மொழியையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் போற்றிப் பேண ஒரு பல்கலைக்கழகம் அவசியமாகும் என்ற உணர்வு கல்வி வல்லாரிடையே உறுதிப்பட்டு வந்தது.”
இந்நூலில் இடம் பெற்ற ஏழு தமிழ்க் கட்டுரைகளிலே, ஈற்றில் அமைந்தது 'இஸ்லாமியரும் தமிழிற் புதிய பிரபந்த வகைகளும்’ என்ற கட்டுரையாகும். இஸ்லாமிய மக்களே தமது மதப் பிரபந்தங்கள் பற்றி

கே.எஸ். சிவகுமாரன் 247
அறிந்திராத வேளையிலும், பேராசிரியர் இந்த விஷயம் பற்றிய தகவல்களைத் திரட்டித்தந்தமை பாராட்டிற்குரியது.
நூலின் இரண்டாம் பகுதியில் இரண்டு ஆங்கிலக் கட்டுரைகளும் நூலாசிரியர் பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. துணை வேந்தரின் நல்ல மாணவர்களில் ஒருவரான பேராசிரியர் கா. சிவத்தம்பியின் இவ்வாங்கில அறிமுகம், தமிழ்மொழி அறியாதவர்களுக்கு நல்லதொரு பணியைச் செய்கிறது.
சிங்களக் கலாசாரத்தில் தமிழ் செல்வாக்கு, ஈழத்து தமிழறிஞர், தமிழ் பற்றி ஆங்கிலத்தில் எழுதியவற்றையும், நடத்திய ஆய்வுகளையும் (1968ம் ஆண்டு வரை) இக்கட்டுரைகள் விளக்குவன. இவை ஆங்கில மொழியறிந்த சகலருக்கும் பெரிதும் பயனுள்ளவை என்பது கூறாமலே விளங்கும்.
இந்த நூலில் இடம் பெற்ற கட்டுரைகளில், கூறியவை கூறும் குறைபாடு காணப்படுகின்றதாயினும், அது, வெவ்வேறு காலகட்டங்களில் கட்டுரைகள் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டதனால் ஏற்பட்டதாகையால், அதனைப் பெரிது பண்ண வேண்டியதில்லை. தவிரவும் மாணவர்களுக்கு மனதில் பதிய வைக்க, ஒரு சில தகவல்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன என்று கூறி அமைதி காணலாம்.
இறுதி ஆய்வில், தமிழியற் சிந்தனை', கல்வி, கலாசாரம், கலை போன்றவற்றில் நாட்டமுடையவர் எவரும் கைவசம் வைத்திருக்க வேண்டிய நூல் எனின் மிகையில்லை.
来

Page 137
248 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
கணக. செந்திநாதன் ஈழத்து இலக்கிய வளர்ச்சி
UெTசகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், இலக்கிய மாணவர்கள், வரலாற்றாசிரியர்கள், அறிஞர்கள் அனைவரும் இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பார்கள். அவசியம் வாங்கிப் படிக்கவும் வேண்டும்.
இப்புத்தகத்தில் தரப்பட்ட விஷயங்கள், பாகுபாடு படுத்தப்பட்ட முறை, வரலாற்றுக் கண்ணோட்டம், பின்னணிச் சக்திகளை இனங்கண்டு கொண்ட முறை, விமர்சன மனோபாவம் ஆகியவை சரியானவையா, உகந்தவையா என்பதெல்லாம் வேறு விஷயம்!
இலக்கிய வரலாற்றைப் பல கோணங்களில் நின்றும் எழுதலாம்; அப்படித்தான் எழுதப்படவும் வேண்டும். ஆனால், அடிப்படை உண்மைகளை மறந்து அல்லது மறைத்து, திரித்து, சார்பாக எழுதுதல் தவறு, மன்னிக்க (pigt liggil.
“A Short History OfModern Ceylon Tamil Literature' என்று ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு தலைப்பு இடப்பட்டுள்ளது. அத்தொடருக்கு இயைந்ததாகப் புத்தகம் அமையாததனாலோ என்னவோ, தமிழில் 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்று செளகரியமாகத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் விபரிக்கப்படும் விஷயங்களும் விவரணைக்கு உட்பட்டவையும் எவ்விதத்தில் ‘இலக்கியம்’ என்றும் வளர்ச்சி’ என்றுங் கூறப்படலாம் என்பது மற்றுமொரு தனி விசாரணை!

கே.எஸ். சிவகுமாரன் 249
இப்புத்தகத்தை ஓர், ‘எழுத்தாளர் வழிகாட்டி’ என்று விபரிப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன். அநேகமாக எல்லா ஈழத்து எழுத்தாளர்களது பெயர்களையும் இப்புத்தகத்தில் காணலாம். சிலரது பெயர்கள் விடுபட்டும் போய் விட்டன. கதை எழுதப் பழகும் இளம் எழுத்தாளர்களது பெயர்களும் நல்ல எழுத்தாளர்களது பெயர்களுடன் சேர்க்கப்பட்டிருப்பது கேலிக்கூத்தாகும் ! தான் ஒரு விமர்சகன் அல்ல, ஓர் இலக்கிய மாணவன், மதிப்புரையாளன், பத்தி எழுத்தாளன் என்று அடிக்கடி வற்புறுத்தி எழுதிவரும் ஓர் எழுத்தாளரது பெயரும் விமர்சகர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது நகைப்பூட்டுவதாகும்! V
1922 - 1963 காலப்பகுதியில், சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் (?) ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள், பண்டித வர்க்க எழுத்தாளர்கள், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி ஆசிரியர் என்ன நினைக்கிறார் என்பதையறிய இப்புத்தகத்தைப் படிக்கலாம்.
மற்றும் பத்திரிகைகள், மலர்கள், பல்கலைக் கழகங்கள், சாகித்திய மண்டலம், சங்கங்கள், நாட்டுப் பாடல்கள், பிற முயற்சிகள் பற்றிய சிறு குறிப்புக்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
இந்த விபரங்களுக்கிடையே ஆசிரியர், ‘இலக்கிய விமர்சனம்’ பற்றிய தனது கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார். அவற்றை அலசி ஆராய்ந்தாலே அது ஒரு தனிப் புத்தகமாக உருப்பெற்று விடும். இப்புத்தகத்திற்கு மறுப்பாகவோ, அனுசரித்தோ வேறு ஒர்

Page 138
250 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இலக்கிய வரலாற்றுப் புத்தகம் அல்லது புத்தகங்கள்
எழுந்தால் ஆச்சரியமில்லை. அப்படி எழுதப்படுவதும் விரும்பத்தக்கது. மொத்தத்தில் அது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் புதிய பரிமாணங்கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை.
ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி பற்றிய ஒரு புத்தகம் முதன் முறையாக வந்திருக்கிறது. அந்த விதத்தில், வெளி நாட்டவர் உட்படப் பலருக்கும் தகவல்கள் பலவற்றைத் திரட்டித் தரும் உதவியை இப்புத்தக ஆசிரியர் செய்திருக்கிறார். இதன் ஆசிரியர் கனக செந்திநாதன் அவர்களது முயற்சிக்கும், ஊக்கத்திற்கும், சிரமத்திற்கும் ஆழ்ந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் வாசகர்கள்.
‘கடமைப்பாடு’ என்ற சொற்பிரயோகத்தை, ‘முறையாகத் தமிழ் கற்ற கனக செந்திநாதனா உபயோகித்தார் என்று எமக்குச் சந்தேகம்.
புத்தகத்தின் பிற்பகுதியிலுள்ள நடை பகிரங்கமாக அந்நிய விசாரணையைத் தூவிவிடுகின்றது. தனது கருத்துக்களை, நோக்கை ஒரு நிலைப்படுத்திக் கூற முடியாமற் போனதால் தான் புத்தகத்திலுள்ள கருத்து ‘ஒன்றிப்பு’ சிதைந்து போய்விட்டதோ?
கனக செந்திநாதன் ஒரு நடமாடும் வாசிகசாலை’ ஏற்றுக் கொள்கிறோம். துரதிஷ்டவசமாக நிலையாக நின்று விடும் ஒரு ஸ்தாபனமாகவும் அவர் நிலை பெற்று நிற்கிறார். குறிப்பிட்ட ஒரு பரம்பரையின் சிறந்த பிரதிநிதி. பரம இரசிகர், அழகியல்வாதி, சமகால எழுத்தாளர்கள் அனைவரது எழுத்துக்களையும் படித்தவர். எழுத்தாளரது வளர்ச்சியை அவதானித்தவர். எல்லோரையும் திருப்திப்படுத்த

கே.எஸ். சிவகுமாரன் 251
வேண்டுமென்ற விருப்புடையவராக விளங்கியவர். அவரைக் குறை கூறிப் பயனில்லை. ஏனெனில், அவரை உருவாக்கிய தமிழ் - வட்டார சமூகம் அப்படிப்பட்டதாயிற்றே!
கனக செந்திநாதனது சீரிய எழுத்து முயற்சி இப்புத்தகம் தான் என்றால், இலக்கிய வெள்ள ஓட்டத்தில் அவர் தாக்குப்பிடித்து நின்றிருப்பார்.
அவரை ஒரு சிறுகதை ஆசிரியராக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு அவரை ஒரு ‘விமர்சகராகவோ வரலாற்றாசிரியராகவோ ஏற்றுக் கொள்ள முடியாது. விஷயம் அறிந்த, அறிவாற்றலுடைய, புத்திக் கூர்மையுள்ள இன்றைய இலக்கிய மாணவர்கள், இலக்கிய விமர்சகராக அவரது எல்லைக் கோட்டைச் சட்டென இனங் கண்டு கொள்வார்கள்.
பழைய இலக்கியங்களை மாத்திரம் அறிந்திருப்பதோ, புதிய இலக்கியங்களில் மாத்திரம் பரிச்சயமோ, புதுசும் பழசும் புரிந்து கொண்டதோ அல்ல இலக்கிய விமர்சகனை உருவாக்குவது! இவற்றிற்கும் மேலாகச் சில அடிப்படை விஷயங்கள் உள. இவை இருந்ததாக அவரது எழுத்துக்கள் காட்டவில்லை. வேண்டுமென்றால், இலக்கிய விஷயங்கள் பற்றி அறிமுகஞ் செய்த ஒரு பத்தி எழுத்தாளர், இரசனைக் கட்டுரையாளர் என்று அவரை வருணிக்கலாம்.
தனிப்பட்ட முறையில் கனக செந்திநாதனுக்கு ஒரு திருப்தி. ஆனால், இலக்கிய மாணவர்களுக்கு 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்ற இப்புத்தகம் ஒர் ஏமாற்றம்.
来

Page 139
252 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்
CG
20ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறும் இந்நூல், பல்கலைக்கழகப் பரீட்சைகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், ஈழத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும் ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வமுடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க முறையில் அமைந்துள்ளது” என்ற வெளியீட்டாளரின் (வாசகர் சங்கம் - நூறி மன்ஸில் - கல்முனை - 6) தற்புனைவுப் புகழ்ச்சியுடன் வெளிவந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர்கள், சி. மெளனகுரு, மெள. சித்திர லேகா, எம்.ஏ. நுஃமான் ஆகியோர்.
வெளியீட்டாளர் குறிப்பு எந்த விதத்திலும் பொய்யுரை இல்லை என்பதை இந்தச் சிறு நூல் காட்டி விடுகிறது. ஈழத்து இலக்கிய வரலாறு - ஒர் அறிமுகம், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய தலைப்புக்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஈழத்து இலக்கிய வரலாறு தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். 1859ஆம் ஆண்டில் சைமன் காசிச் செட்டி எழுதிய தமிழ் புழுட்டா’ முதல் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் தமிழியற்சிந்தனை வரை பிரசுரிக்கப்பட்ட நூல்களிலிருந்தும், சிறப்பிதழ்களிலிருந்தும், ஆங்காங்கே எழுதப்பட்டு வரும் கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றிலிருந்தும் இலக்கிய

கே.எஸ். சிவகுமாரன் 253
மாணவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
முன்னர் குறிப்பிட்ட இரு நூல்களையும் விட, 1886 ஆம் ஆண்டில் பாவலர் சரித்திர தீபகம் (ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை), 1916இல் தமிழ்ப் புலவர் சரித்திரம் (குமாரசாமிப் புலவர்), 1939இல் ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் (கணேசையர்), 1962இல் ஈழத்து முஸ்லிம் புலவர்கள் (ஏ.ஆர்.எம்.சலிம்), 1964இல் மட்டக்களப்பு தமிழகம் (வீ.சீ. கந்தையா), இலக்கியவழி (சி. கணபதிப்பிள்ளை), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (ஆ. சதாசிவம்), ஈழத்து இலக்கியவரலாறு (கனக செந்திநாதன்,) 1967இல் ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி (சில்லையூர் செல்வராசன்), ஈழ நாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள் (மு. கணபதிப்பிள்ளை) 1968இல் தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கா. சிவத்தம்பி), ஈழத்தில் நாடகமும் நானும் (கலையரசு சொர்ணலிங்கம்), 1971இல் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள் (பூ பூபாலசிங்கம்), 1972இல் ஈழத்துத் தமிழ் வரலாறு (எவ், எக்ஸ்.சீ நடராஜா), 1973இல் ஈழத்துச் சிறுகதை மணிகள் (செம்பியன் செல்வன்), 1974இல் தமிழ் றைற்றிங் இன் பூரீ லங்கா (கே.எஸ். சிவகுமாரன்), 1977இல் ஈழத்துத் தமிழ் நாவல்கள் - நூல் விவரப்பட்டியல் (நா. சுப்பிரமணியம்), 1978இல் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் (நா. சுப்பிரமணியம்), ஈழத்தில் தமிழ் இலக்கியம் (கா. சிவத்தம்பி), ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியம் (க. சொக்கலிங்கம்), வெளிவந்துள்ள நூல்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றியவை. இவற்றுடன் பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய நூல்களுள் ‘அடியும் முடியும்’, ‘தமிழ் நாவல் இலக்கியம்' ஆகியனவும், மு. தளையசிங்கம் எழுதிய போர்ப் பறை', ‘மெய்யுள்’ ஆகியனவும் ஈழத்து இலக்கிய

Page 140
254 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
முயற்சிகள் பற்றி குறிப்பிடுவன. இவற்றைவிட வாழையடி வாழை (க. செபரத்தினம்), ஆக்க இலக்கியம் (யாழ்ப்பாண வளாக வெளியீடு), இலக்கியமும் திறனாய்வும் (க. கைலாசபதி), கவிதை நயம் (இ. முருகையன் - க. கைலாசபதி) ஆகிய நூல்களும் இத்துறையில் உதவுபவை.
ஈழகேசரி, ஈழநாடு, தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசாபிமானி, தொழிலாளி, புதினம், செய்தி, மறுமலர்ச்சி, கதம்பம், தமிழின்பம், குங்குமம், ஈழச்சுடர், உன்னைப் பற்றி, மலர், தேனருவி, தமிழமுது, மல்லிகை, வசந்தம், கலைச்செல்வி, சுடர், அலை, நெய்தல், வானொலி மஞ்சரி, பாரதி, கவிஞன் போன்ற பத்திரிகைகளில், பல கட்டுரைகளும் விமர்சனங்களும், வெளியாகியுள்ளன. இளந்தென்றல், தமிழ் சாகித்திய விழா மலர், தமிழ் இலக்கிய விழா மலர், தினகரன் நாடக விழா மலர், நாவலர் மாநாட்டு விழா மலர், பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலர், புதுமை இலக்கியம், மறுமலர்ச்சிக் காலம் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ் வெளியீடுகள் போன்றவற்றிலிருந்தும் மாணவர்கள் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய பின்னணியில், நூலாசிரியர்களின் முயற்சியை நாம் கணிக்கும் போது, அவர்களுடைய நோக்கத்தை மனதில் இருத்த வேண்டும். “பொதுவான வளர்ச்சிப் போக்குக்களைத் திரட்டிக் கூறும் நூல்’ என்ற முறையில் இது விரிவான விமர்சனநுால் அன்று. 1975இலும் வெளியிட்ட சிறப்பிதழ்களில், பிற கட்டுரை ஆசிரியர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை ஒட்டியே. குறிப்பாக தமது கணிப்பை நூல் ஆசிரியர்கள் செய்துள்ளார்கள் இருந்த

கே.எஸ். சிவகுமாரன் 255
போதிலும் 1979ஆம் ஆண்டு வரையும் உள்ள முயற்சிகள் பற்றியும் அவர்கள் கூறியிருப்பதனால் புதிய கருத்துக்களைத் தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களே கூறுகிறார்கள் : “சமகால ஈழத்து இலக்கியத்தில் ஏதோ ஒரு துறையிலேனும் ஈடுபாடு கொண்டுள்ள படைப்பாளிகள் அநேகர் உள்ளனர். குறிப்பாகக் கவிதை, சிறுகதைத் துறைகளில் இவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. இவர்கள் எல்லோருடைய பெயர்களும் இந்நூலில் இடம்பெறுவது சாத்தியமல்ல; அது அவசியமும் அல்ல. ஆயினும், பெயர்களை முடிந்த அளவு குறைத்தும் பொதுப்பண்புகளை மட்டும் சுட்டிச் செல்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆகவே ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்கள் என்று கருதக்கூடியவர்களின் பெயர்கள் இந்நூலில் சற்றுக் கூடுதலாகவே இடம்பெற்றுள்ளன. இடம் பெறாதவர்கள், இடம் பெறத் தகாதவர்கள் என்று பொருளாகாது. இந்நூலில் குறைபாடுகள் இருக்கலாம். அவை சுட்டப்படும் போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். ஆயினும், இந்நூல் எழுதப்பட்ட நோக்கத்தை இது நிறைவேற்றும் என்றே நம்புகின்றோம்.”
இந்த நூலில், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள போதிலும் இட நெருக்கடியை முன்னிட்டு இந்த நூல் நயத்தில் விமர்சனம் பற்றி குறிப்பிட்ட கருத்துக்களில் சிலவற்றை மாத்திரம், இங்கு சுட்டிக் காட்டுவோம். இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இலக்கிய வரலாற்றுடன், விமர்சனமும் தொடர்பு கொண்டுள்ளதால், அது பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமுடையதே என நாம் நினைக்கிறோம்.

Page 141
256 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரை எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னோடி எனக் கூறுதல் மரபு. தத்துவங்களையும் இலக்கணங்களையும் ஆதாரங்காட்டிக் கற்பனையும் ரசனையும் கலந்து உரை செய்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுவர் ஆவர். இவருடன் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை, கணேசையர், நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதர் சு. அருளம்பலனார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை, மகாலிங்கசிவம், கனக செந்திநாதன், அ.சு அருள்நந்தி, பொ. கிருஷ்ணபிள்ளை, க.பொ. ரத்தினம், க. வேந்தனார் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தனிப்புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வெளியிடும் மரபினை முதன்முதல் ஈழத்து விமர்சன உலகில் தொடக்கி வைத்தவர் கனக செந்திநாதன். இவருடைய நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளிலும் ரசனை முறையின் பாதிப்பை ஓரளவு காணக்கூடியதாக இருக்கின்றது.
1940களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது. பழைய சிந்தனை மரபுக்கும், புதிய சிந்தனை மரபுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. இலங்கையர்கோனின் கதை ஒன்றில் இந்த நவீன இலக்கிய சிந்தனையின் தோற்றத்தைக் காணலாம். இவரும் சோ. சிவபாதசுந்தரம், சி. வைத்திலிங்கம் ஆகியோரும், ஆரம்பத்தில் விமர்சனத் துறையில் ஆர்வம் காட்டினார்கள். இலக்கிய விமர்சனக் கொள்கைகளை அ.ந. கந்தசாமி, கே. கணேஷ், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, அ.செ. முருகானந்தம் ஆகியோர் முன்வைத்தனர்.

கே.எஸ். சிவகுமாரன் 257
ஆயினும், 50 ஆம், 60 ஆம் தசாப்தங்களில் தான் ஈழத்து இலக்கிய விமர்சன முயற்சிகள் வளர்ச்சியுற்றன. க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, இளங்கீரன், ஏ.ஜே.கனகரத்தின, பிரேம்ஜி, சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முஹிதீன் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
60க்குப் பிறகு இலக்கிய ஆய்வு, இலக்கியப்புலமை, இலக்கிய வரலாற்று உணர்வு ஆகியன ஈழத்தில் வளர்ச்சியுற்றன.
70களில் இலக்கியத்தில் உருவ உள்ளடக்க இயைபினையும் இலக்கியத்தின் கலைப் பெறுமானத்தையும் அழுத்தும் விமர்சனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.ஜே. கனகரத்தின போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் ஆகியோர் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகளை (நற்போக்கு இலக்கியம், பிரபஞ்ச யதார்த்தவாதம்) முன்வைத்தார்கள். மு. பொன்னம்பலம், என்.கே. மகாலிங்கம், இமயவன் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
சமீப காலமாக இலக்கிய விமர்சன முயற்சிகளில், மொழியியல் அறிவின் செல்வாக்கைக் காண முடிகிறது. பல புதிய விமர்சகர்கள் உருவாகியுள்ளார்கள்.
கடந்த 16 வருட ஈழத்து இலக்கிய வளர்ச்சி இனிமேல்தான் முழுமையாக வர வேண்டும்.
இந்நூலாசிரியர்கள் மூவரும், புதிய பரம்பரையின் முன்னோடி ஆய்வறிவாளர்களாக இருக்கிறார்கள் என்பது வாசகர்கள் அறிந்ததே. எனவே, இந்த நூலும் உரிய மதிப்பைப் பெறுகின்றது.
来

Page 142
258 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி பற்றிய இரு நூல்கள் :
ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி
ஈழத்திலே தமிழ் நாவல் வளர்ச்சி கண்டு வருவது கண்கூடு. இந்த வளர்ச்சியை ஒரளவுக்கு விளக்கிக் காட்டும் தகவற் களஞ்சியங்களாக இரண்டு நூல்களே இதுவரை வெளிவந்துள்ளன. ஆய்வு அடிப்படையில் அமைந்த
திறனாய்வு நூல்கள் இத்துறை தொடர்பாக வெளிவருவது அவசியமானதாகும்.
. இக்கட்டுரையாளர் படித்த அந்த இரு நூல்களாவன: "ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி’ (1967), ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ (1978), இந்த இரு நூல்களையும் எழுதியவர்கள், முறையே சில்லையூர் செல்வராசன், நா. சுப்பிரமணியம். இவர்கள் இருவரும் விமர்சகர்களாகக் கருதப்படுவதும் உண்டு.
இக்கட்டுரையில் இந்நூல்கள் பற்றிய மேலோட்டமான சில அபிப்பிராயங்களைப் பார்ப்போம். திறனாய்வு அல்லது விமர்சனம்' என்பது பிரத்தியேகமான தனியான ஒரு கலை என்பதால் அப்பணிக்குரிய பதங்களை உபயோகிக்காமல், ‘மேலோட்டமான’ என்ற எச்சரிக்கை வார்த்தையுடன், இதனை எழுதுகிறோன்.
1891-1962 காலப்பகுதியிலே இலங்கையில் வெளியாகிய நாவல்கள் பற்றிய அரிய பல செய்திகளையும் தகவல்களையும் திரட்டித் தந்ததுடன், அப் படைப்புக்களிலிருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்டியிருக்கும் சில்லையூர் செல்வராசன் மகத்தான ஒரு பணியைச் செய்துள்ளார்.

கே.எஸ். சிவகுமாரன் 259
தமது நூலிலே ஆசிரியர் சில்லையூர் செல்வராசன் இவ்வாறு கூறுகின்றார்:
“ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் ஆராய்வதற்கு முன்னோடியாக ஒரு ‘கையிருப்பு’ நூலாகவே இதை எழுதுகின்றேன். நூலுருவிலும் பத்திரிகைகளிலும் வெளியான ஈழத்துத் தமிழ் நாவல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிய தகவல்களும், என் அபிப்பிராயக் குறிப்புக்களும் இதில் உள்ளன. ஒரு தொகுப்புரை போலமையும் இந்தக் குறிப்புக்கள், இந்தத் துறை பற்றிப் பின்னர் விஸ்தாரமாக ஆராய முனையும் விமர்சன முறையான ஒரு தனிநூலுக்கோ, அல்லது கட்டுரைத் தொடருக்கோ தாபரமாக அமையத் தக்கவாறு இருந்தால் தற்போதுக்குப் போதுமானது என்று கருதுகின்றேன். பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட வாசகம் இது.
ஆசிரியர் தான் திறனாய்வு செய்ய வரவில்லை என்று எவ்வளவு அடக்கமாகக் கூறியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு பல்கலை வேந்தர்.
குறிப்பிட்ட இந்த நூலுக்கு (சென்னை அருள் நிலையம் வெளியிட்டது), முன்னுரை எழுதிப் பல அரிய விபரங்களைத் தந்திருப்பவர், சில்லையூர் செல்வராசனின் மாமனாராகிய மறைந்த தமிழ் அறிஞர் தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை.
‘ஊசோன் பலோனின் கதை’ (1891) என்ற கதையே ஈழத்தில் முதலாவது தமிழ் நாவல் என்று சில்லையூர் செல்வராசன் அன்று எழுதினார். இது முதலாவது நாவலல்ல என்று பின்னர் தெரியவந்துள்ளது. இலங்கையின் முதலாவது

Page 143
260 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
தமிழ் நாவலாசிரியை செ. செல்லம்மாள் (1924) என்றும் அவர் குறிப்பிட்டார்.
முப்பதுகளில் வெளிவந்த ஈழத்துத் தமிழ் நாவல்களைச் செல்வராசன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“அழகுணர்ச்சி, கற்பனாலங்காரம், தனி மனித நல்லொழுக்கம், வீரதீர பிரதாபம் போன்ற இவற்றையே பெரும்பாலும் சுற்றிச் சுழன்ற ஒரே ரகமான, கலாவினோத, மனோரஞ்சகமான நாவல்கள்’ அவர் மேலும் கூறுகின்றார்: “1940ஆம் ஆண்டு வரை, ஒரு ஒழுங்குப் பிரமாணமாக ஒற்றைச் சுவடு கட்டிச் சென்ற ஈழத்துத் தமிழ் நாவல் பாதை, அந்த ஆண்டில் இருந்து பல கிளைகளாகப் பிரிந்து செல்கின்றது.”
சில்லையூர் செல்வராசன் ஓர் 'அக்கடமிக்’ (உயர்கல்விப்பாங்கான அறிஞர்) அல்ல; ஆயினும், விமர்சனச் சாயல் படிந்த அவதானிப்புக்களையும் காரசாரமாக அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தும் பகுப்பாளர் அவர்
ஈழத்து நாவலாசிரியர்களுள் ஒருவரான ‘கசின்’ என்பவர் பற்றி செல்வராசன் எழுதுவதைப் பாருங்கள்:
“சாதாரணமாக ஒரு சிறு கதைக் கருவை வைத்துக் கொண்டு ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுகிற சம்பவங்களையும் இடைச் செருகலாக்கி நடுத்தரக் குடும்பங்களையும், கிராமத்துப் பாத்திரங்களையும் பிற்களத்துக்கு உபயோகித்து, ஒசைப்படாமல் வாசித்து முடிக்கக் கூடிய நாவல்களைப் பரபரப்பில்லாமல் எழுதி முடித்துவிடுவதில் இவர் சமர்த்தர். இவருடைய நாவல்களில் களிப்பான அசமந்த நகைச்சுவை பின்னணியில் இழையோடிச் செல்லும்.”

கே.எஸ். சிவகுமாரன் 261
இளங்கீரனின் நாவல்கள் தொடர்பாக செல்வராசனின் அபிப்பிராயக் கணிப்பு இவ்வாறு சொல்கிறது:
“ஈழத்திலும், பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்கின்ற கிராம மக்களினதும், ஏழை எளியவர்களினதும் வாழ்க்கைப் பிரச்சினையைக் கூர்ந்து நோக்கி, அனுபவ உணர்வோடு, அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மார்க்கங் காணும் முயற்சிகள் என்று இளங்கீரனுடைய மிகப் பிந்திய நாவல்களை வர்ணிக்கலாம்.”
எஸ். பொன்னுத்துரையின் "தீ" என்ற படைப்பை அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்று எவரும் கூறார். அந்த நாவல் பற்றிய தனது பார்வையைச் சில்லையூர் செல்வராசன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் :
பொன்னுத்துரையின் பல்வேறான திறமைகளையும் புலப்படுத்திக் காட்டுகின்ற இந்த நாவல், நாவலுக்குரிய உருவ அமைதிகள் நன்கமையப் பெறாத போதிலும், கதாவஸ்துவைப் பொறுத்த வரையில், தமிழுக்கு ஒரு துணிச்சலான முயற்சியென்பதை மறுக்க முடியாது. உடலுறவுப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்டெழுந்திருக்கும் இந்த நாவலில், பாலுணர்ச்சி விவகாரங்களைப் பச்சை பச்சையாக வர்ணிக்கும் அதே சமயத்தில் அவற்றுக்குப் பக்குவமானவை போலப் போக்குக் காட்டக் கூடிய அந்தஸ்தையும் கொடுத்து எழுதியிருக்கும் ஆசிரியரின் கெட்டித்தனத்தை ஒரு வகையில் மெச்சலாம். கதா சம்பவங்களின் ருசிப் பிசகான அம்சங்களில் புறப்பற்றாக மனம் புதையக் கூடுமானாலும் கதையின் அடி நாதமாக இழையோடும் தனி மனித சோகத் தவிப்பிலும் உள்ளம் பற்றுமாறு தீ அமைத்திருக்கிறதென்று சுருக்கமாகக் குறிப்பிடலாம்.”

Page 144
262 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சில்லையூர் செல்வராசன் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஒரு திறமைசாலி. கவிதையே அவருடைய சிறந்த வெளிப்பாட்டுக் கருவி என்று அவரே கூறியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதை விளக்குவதற்கு அவருடைய கவிதை நூல்கள் நமக்குக் கிடைப்பதாக இல்லை. இவர் எழுதிய அ.ந. கந்தசாமி பற்றிய கவிதை, சிலுவையில் அறையுண்ட முழு நிலா’ என்ற கவிதை யாழ்தேவியில் பயணம் பற்றிப் ‘புதுமை இலக்கியம்’ என்ற மலரிலே எழுதிய கவிதை நூல்கள் துரிதமாக வெளிவர வேண்டிய கால்ம் வந்துவிட்டது.
திறனாய்வுத் துறையில் இவர் ஈடுபட்டு ஆரம்ப மண் கொத்தி வேலைகளைச் செய்திருப்பதனால், அதனைக் கணிப்பதற்கும் இவருடைய விமர்சன அபிப்பிராயக் கட்டுரைத் தொகுப்பும் கிடைக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.
来 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பல்கலைக் கழக ஆசிரியரான (அக்கடமிக்) நா.சுப்பிரமணியம் எழுதிய ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ (1978) என்ற வரலாற்று நூல் பற்றிய அறிமுகத்தைப் பார்ப்போம்.
இது ஒரு திறனாய்வுநூலல்ல. ஆயினும், சில்லையூர் செல்வராசன் எழுதிய நூலைவிடப் பல மடங்கு விஸ்தாரமான (எதிர்பார்க்கக் கூடியதே) பகுப்பாய்வு கொண்ட வரலாற்று நூல். முன்னைய நூலையும் அடிப்படையாகக் கொண்டு விமர்சனச் சாயல் படிந்த அணுகுமுறையிலே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

கே.எஸ். சிவகுமாரன் 263
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியருமாக விளங்கிய சு. வித்தியானந்தன் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையிலே, நூலைத் தக்க முறையிலே அறிமுகஞ் செய்கின்றார். அது வருமாறு :
“ஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் பயிலத் தொடங்கி ஏறத்தாழ நூறாண்டுகளாகின்றன. இக்காலப் பகுதியில் நானுறுக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. இவை தொடர்பான சிறு பிரசுரங்களும் கட்டுரைகளும், தகவல் தேட்ட முயற்சிகளாகவும், பட்டியல் தயாரிப்பு முயற்சிகளாகவும் மதிப்புரை, திறனாய்வு முயற்சிகளாகவும் அவ்வப்போது வெளிவந்துள்ளன. எனினும், முழுமையான நூல் எதுவும் இற்றை வர எழுதப்படவில்லை. அவ்வகையில் திரு.நா. சுப்பிரமணியம் அவர்களின் ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற இந்நூல் கடந்த ஒரு நூற்றாண்டு கால ஈழத்துத் தமிழ் நாவல்களை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து விளக்கும் முதல் நூலாக அமைகின்றது.”
கலாநிதி நா. சுப்பிரமணியத்தின் வரலாற்று நோக்கு எத்தகையது? முன்னுரையாசிரியர் அதனைத் தெளிவுபடுத்துகின்றார்.
“ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி நோக்கும் பண்பு இந்நூலில் அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஈழத்திலே தமிழ் நாவல்கள் எழுதப்படுவதற்குக் காரணமாக இருந்த சூழ்நிலையினை விளக்கி, ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ‘ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்’ என்ற முதலாம் இயல் அமைகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் முற்காலப் பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் ‘சமுதாயச் சீர்திருத்தக் காலம்’ என்ற தலைப்பில்

Page 145
264 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இரண்டாவது இயலில் ஆராயப்படுகின்றன. அக்காலப் பகுதியை அடுத்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலப்பகுதியில் ‘எழுத்தார்வக் காலம்’ என்ற தலைப்பிலும், அடுத்துள்ள 15 ஆண்டு காலப்பகுதி ‘சமுதாய விமர்சனக் காலம்’ என்னும் தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு நாவல்கள், மதிப்பிடப்பட்டுள்ளன. 1973- 1978 காலப் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவலில் ஏற்பட்டுள்ள புதிய போக்கு, “பிரதேசங்களை நோக்கி’ என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து, தமிழ் நாவல்களின் விபரங்களும் அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க ஆய்வுகளின் விபரங்களும், சான்றாதாரங்களும், அட்டவணையும் பின்னிணைப்பாய் அமைந்துள்ளன.”
பேராசிரியர் சு. வித்யானந்தனின் கணிப்பின்படி, நா. சுப்பிரமணியம், “சான்றாதாரங்களைத் தக்க வகையில் பயன்படுத்துவதிலும், தமது கருத்துகளை நிறுவுவதிலும் தன் நம்பிக்கையுள்ள ஓர் ஆய்வாளன்.”
பேராசிரியர் வித்தியானந்தன் கூறியிருப்பது போல, ஆசிரியர் சுப்பிரமணியம் “முதலிற் சூழ்நிலையை விளக்கி, அதன் பின், அக்கால நாவல்களை வகைப்படுத்தி நோக்கி, இறுதியில் மதிப்பீடு செய்யும் முயற்சியை மேற்கொள்கின்றார். இவ்வகையில் இந்நூல் வரலாற்று நூலாகவும், அதே வேளையில் திறனாய்வு நூலாகவும் அமைந்துள்ளது.’ இக்கூற்றைச் சிறிது விரிவுபடுத்திக் கூறுவதாயிருந்தால், திறனாய்வைப் பார்க்கிலும் வரலாற்று எடுத்துரைப்பே முதலிடம் பெறுகின்றது எனலாம்.
அதே சமயம் பேராசிரியர் அ. சண்முகதாஸ் கூறுவது போல, “வரலாறு எழுதப்புகும் ஆசிரியன் ஒருவன், அவன்

கே.எஸ். சிவகுமாரன் 265
முடிபுகளும் மதிப்பீடுகளும் எவ்வாறமையினும், அவ்வரலாற்றுக்குத் தேவையான தரவுகளையும், சான்றாதாரங்களையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். இந்த வகையில் திரு. நா. சுப்பிரமணியம் தன் கடமையினைச் செவ்வனே செய்துள்ளார் என்றே கூற வேண்டும். பல்கலைக்கழகப் பட்டத்துக்காக எழுதப்பட்ட காரணத்தினாலே அத்தகைய எழுத்துக்களிலே எதிர்பார்க்கப்படும் இறுக்கமான கட்டுக்கோப்பு, கூறியது கூறல் என்னும் குற்றத்துக்காளாகாமை, பொருத்தமான சான்றாதாரங்களை வழங்குதல், ஒழுங்கான நடை ஆகிய பண்புகள் இந்நூலிலே அமைந்திருக்கின்றன.”
“சித்திலெப்பையின் ‘அசன் பேயுடைய கதை’ (1885) முதல் ஞானரதனின் ‘புதிய பூமி’ (1977) வரை எழுதப்பட்ட சுமார் 450 நாவல்களில் முக்கியமான நாவல்கள் பற்றிய விபரங்களைத் தந்து அவற்றின் கதைப் பண்பை விளக்கி மதிப்பீடு செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்’ என்கிறார் ஆசிரியர் நா. சுப்பிரமணியம் தமது முகவுரையிலே இந்நூலைப் பதித்தவரான க. சொக்கலிங்கம் (யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்) கூறுகிறார்: “ஆய்வாளர் ஒருவருக்கே உரிய காய்தல், உவத்தல் அற்ற மனோபாவத்துடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். எல்லா வகையிலும் திட்பமும், ஒட்பமும் வாய்ந்ததாய் இந்நூல் வெளியாகின்றது. எதனையும் காரண காரிய ரீதியில் நோக்கும் ஆழ்ந்த தன்மையை இவரின் ஆய்வு நூல் முழுவதிலும் நாம் பரவலாகக் காணலாம்.”
இனி நூலாசிரியரின் திறனாய்வுப் போக்குக்கு
மாதிரியாகவும், வரலாற்று அறிமுகமாகவும், நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

Page 146
266 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
“வீர சாகசச் சம்பவங்களுடன் கூடிய அற்புதக் கதைப் பண்பு வாய்ந்த ‘அசன் பேயுடைய கதை’ ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் என்ற சிறப்பையும் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் இரண்டாவது நாவல் என்னும் சிறப்பையும் பெறுகின்றது. தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879) போலவே இந்நாவலிலும் காவிய மரபின் செல்வாக்கிலிருந்து விடுபடாத ஒரு நிலைமாறுகாலப் பிரசவமாக அமைந்தது.”
“ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு தமிழ் நாவ்ல் எழுதும் மரபு 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. இவ்வகையில் ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு நாவல் எழுதிய முதல்வர் என்ற சிறப்பு சி.வை. சின்னப் பிள்ளைக்குரியது. இவர் ‘வீரசிங்கன் கதை’ (1905) முதலாம் பல நூல்களை எழுதியவர். ஈழத்து வரலாற்றடிப்படையில் எழுந்த முதலாவது வரலாற்று நாவல் ‘விஜய சீலம்’ (1916) எனலாம். ‘வீரசிங்கன்’ நாவலிற் கதை நிகழும் இடம் ஈழம் என்பதைத் தவிர கதைப் பொருளில் ஈழத்துச் சமூகக் களம் முக்கியத்துவம் போதவில்லை.”
“ஈழத்துத் தமிழ் மக்களது சமுதாயப் பிரச்சினைகளைக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் என்ற சிறப்பு திருமதி மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம் (1919) நாவலையே சாரும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழத்தில் நிலவிய சமயச் சார்பான சமுதாயச் சீர்திருத்த உணர்வுக்குத் தடையாக எழுந்த நாவல் இது.”
சி.வை. சின்னப்பிள்ளையின் நாவல்களை அடுத்து 30 களின் இறுதி வரை ஏறத்தாழ 50 நாவல்கள் எழுதப்பட்டன. தொடக்கத்தில் சமகால சமூகப்

கே.எஸ். சிவகுமாரன் 267
பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு நடப்பியல்பு நாவல்கள் எழுந்தன. அவற்றை அடுத்து, மர்மப் பண்பும் சம்பவச் சுவையும் பொருந்திய நாவல்கள் வெளிவந்தன.
“சமுதாயச் சீர்திருத்தக் காலத்திலே எழுதப்பட்ட மர்மப் பண்பு நாவல்களுக்கும், எழுத்தார்வக் கால மர்மப் பண்பு நாவல்களுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. முதல் வகையின சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைக் கூற எடுத்துக்கொண்ட கதைக்குச் சுவை நோக்கி மர்மப் பண்பு புகுத்தப்பட்டவை. எழுத்தார்வக் காலத்திலே மர்மச் சுவையுடன் நாவல்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வமே தூண்டி நின்றது.”
“50களில் ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சிகள் என்ற வகையில் மத்தாப்பு’ (1961), தீ (1961) ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம்.
“பிரச்சினைகளையே கதையம்சமாகக் கொண்டு அவற்றின் வரலாற்று முறையிலான வளர்ச்சியையே கதை வளர்ச்சியாகக் கொண்டு நாவல்களை எழுதும் போக்கு 60 களின் நடுப்பகுதியில் இருந்தே ஈழத்தில் உருவாகியது.”
“செ. கணேசலிங்கன்தாம் சார்ந்திருந்த முற்போக்கு இலக்கியக் கோட்பாடுகளுக்கு ஏற்பச் சமகால வரலாறு எனத் தக்க வகையில் சாதிப் பிரச்சினை தொடர்பான நீண்ட பயணம்’ (1965), சடங்கு' (1966), ‘போர்க்கோலம் (1969) ஆகிய நாவல்களை எழுதினார்.”
நூலாசிரியர் நா. சுப்பிரமணியம் நிறைவுரையாகக் கூறுகிறார் :
“தமிழின் தரமான 50 நாவல்களைத் தெரிவு செய்தால் ஈழத்து நாவல்களான செ. கணேசலிங்கனின்

Page 147
268 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
நீண்ட பயணம்’, ‘செவ்வாணம்’, ‘சடங்கு’, ‘தரையும் தாரகையும்’, ‘போர்க்கோலம்'; எஸ். பொன்னுத்துரையின் ‘சடங்கு"; யோ. பெனடிக்ற் பாலனின் ‘சொந்தக்காரன்'; ஆ. பாலமனோகரின் நிலக்கிளி; அருள் சுப்பிரமணியத்தின் ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது; செங்கை ஆழியானின் “காட்டாறு’ ஆகியன அவ்வரிசையில் இடம்பெறத்தக்க தரமான படைப்புகள் என்பதை மறுப்பதில்லை.”
இவ்வாறு எழுதிச் செல்லும் நா. சுப்பிரமணியம், ஈழத்துத் தமிழ் நாவல்துறை தொடர்பாகப் பிரத்தியேக ஞானம் படைத்தவராகவும் இருப்பதனால், கடந்த 17 ஆண்டுகளில் வெளியான ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய விபரங்களையும் அவர் தொகுத்து, மதிப்பீடு செய்து தர வேண்டும். அத்துடன் குறிப்பிடத்தகுந்த ஈழத்து நாவல்களைத் தனித்தனியாகத் திறனாய்வு செய்தும் தர வேண்டும்.
கைலாசபதி, சிவத்தம்பி, மு. தளையசிங்கம், இ. முருகையன் போன்ற பரந்த விசாலமான அறிவும், நோக்கும் கொண்ட உண்மையான திறனாய்வாளர்கள் பலர் பெருகுவது அவசியமாகும். நூல்களைக் கொண்டு மாத்திரமே ஒருவர் தம் ஆற்றலை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. அங்குமிங்குமாகவும் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் விமர்சனங்களை எழுதினால் மாத்திரம் போதுமானதாயில்லை. கட்டுக்கோப்பான தனித்தனி ஆய்வு நூல்கள் எப்படியாகுதல் வெளியிடப்படல் வேண்டும். அறிஞர் நா. சுப்பிரமணியமும் தரமான திறனாய்வாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்ளத் திறனாய்வு நூல்களைத் தந்துதவ வேண்டும்.
来

கே.எஸ். சிவகுமாரன் 269 சுவாமி விபுலாநந்தர் தொடர்பான வெளியீடுகள்
சிர்வாமி விபுலாநந்தர் நூற்றாண்டு (1892 - 1992) நினைவு மலர், சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் - தொகுதி 1, தொகுதி 2, ஆகிய பெறுமதியான நூல்களையும், சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை என்ற வரிசையில் சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் - கல்வி (பேராசிரியர் ப.வே. இராமகிருஷ்ணன்), சுவாமி விபுலாநந்தரும், ஆறுமுக நாவலரும் (செ. யோகராசா எம்.ஏ.), சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் (பேராசிரியர் கா. சிவத்தம்பி), முஸ்லிம் நேசர் சுவாமி விபுலாநந்தர் (ஜனாப் ஏ.எம். நஹியா) ஆகிய சிறு நூல்களையும் மட்டக்களப்பில் உள்ள விபுலாநந்தர் விழாச் சபை பிரசுரித்திருக்கிறது. சிறு நூல்கள் வரிசையில் வேறு இரண்டு நூல்களும் (இல1, இல4) பிரசுரமாகியிருக்க வேண்டும். ஆய்வாளர்களும், மாணவர்களும் இந்நூல்களை அவசியம் படிக்க வேண்டும். இந்நூல்களை வெளியிட்டவர்களின் பதிப்பாசிரியர்கள் வித்துவான் சா.இ. கமலநாதன் B.A., வ. சிவசுப்பிரமணியம் B.A., இவர்களில் பின்னையவர், ‘விபுலாநந்த தரிசனம்’ என்ற நூலையும் எழுதியிருக்கிறார். இந்த நூல்கள் அனைத்தையும், மட்டக்களப்புக்கு வெளியே உள்ளவர்களும் வாங்கிப் படிக்க வேண்டும்.
மேற்சொன்ன நூல்கள் அனைத்திலும் சுவை பற்றித் தனித்தனியாக விமர்சனக் குறிப்புகள் எழுதுவது சாத்தியமில்லை. விபுலாநந்தரின் ஆக்கங்கள் பற்றி, ஆய்வறிவாளர்களே ‘ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுத முடியும். எனவே, சம்பிரதாயமாக, ஒரு பத்தி எழுத்தாளர் எழுதக்கூடிய மேலோட்டமான குறிப்புகளை இங்கே தருகின்றேன்.

Page 148
270 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
விபுலாநந்த தரிசனம்
பொருளகராதி உட்பட 20 தலைப்புகளில் சுவாமி விபுலாநந்தருடைய தரிசனம் எது என்பதைத் தான் விளங்கிக்கொண்ட முறையில் ஆசிரியர் வ. சிவசுப்பிரமணியம் அவர்கள் தருகிறார்கள். இது, சுவாமிஜியின் வாழ்க்கை வரலாறு என்றும், போட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நூல் (வேறு மூன்று சரிதைகளும் சம்ர்ப்பிக்கப்பட்டன) என்றும், மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் இலக்கியப் பணிக்குழு இணைப்பாளர் த. செல்வநாயகம் தெரிவிக்கிறார். சுவாமி ஜீவனானந்தா, வடக்கு - கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் க. தியாகராசா ஆகியோரின் அணிந்துரைகளும், நூலாசிரியர் முன்னுரையும் நூலில் இடம் பெற்றுள்ளன.
சுவாமி விபுலாநந்தரின் பெயரையாகுதல் இக்கால இளைய பரம்பரையினர் கேட்டறிந்திருக்கக் கூடும். ஆனால், நூலாசிரியர் சிவசுப்பிரமணியம் பற்றிப் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மட்டக்களப்புப் பிரதேச நாட்டுப் பாடல்களை முதன்முதல் தமிழுலகிற்கு அறிமுகஞ் செய்தவர். 1945 முதல் இன்று வரை எழுதி வருகிறார். கிழக்கிலங்கையின் முதல் சிறுகதை ஆசிரியர், மறைந்த ‘பித்தன்’ அவர்கள் எனச் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆயினும் 1946 இல் இவருடைய முதற் சிறுகதை வெளிவந்ததனால், இவரே முன்னோடி என்று கூறலாமோ? ஆய்வாளர்கள் கவனிக்க. 'மகாத்மா காந்தி’ என்ற இவருடைய சிறுவர் நூல் 1989இல் வெளியாகியது. சமூக, சமயப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த மூத்த ஆசிரியர், அண்மைக்கால எழுத்தாளர்கள் கையாளும் நடையில்

கே.எஸ். சிவகுமாரன் 271
எழுதுவதும், நவீன சிந்தனைப் போக்கில் தமது பார்வையைச் செலுத்துவதும் வரவேற்கத்தக்கது. வியந்து பாராட்டத்தக்கது.
இவருடைய இந்த நூலிலே ‘மட்டக்களப்புத் தமிழ்ப் புலவர்களும் தொண்டர்களும்’ என்றொரு அத்தியாயமும் இடம் பெற்றுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாறுகளை எழுதும் புதியவர்களாகுதல் இருட்டடிப்புச் செய்யாமல், தகவல்களை இது போன்ற நூல்களிலிருந்தாகுதல் பெற்றுக் கொள்வார்களாக!
சுவாமி விபுலாநந்தர் பாரதி புகழ் பரப்பிய முன்னோடி மாத்திரமல்லர், இலங்கையிலே முதலாவது தமிழ் இலக்கியத் திறனாய்வாளருமாவர். இந்த இடத்தை அவருக்குக் கொடுக்க, கற்றறிந்த, "ஆழமான பார்வை கொண்ட இலக்கிய ஆய்வாளர்கள் தயங்குகிறார்கள். சுவாமி விபுலாநந்தரை வெறுமனே 'ரசிக விமர்சகர்’ என்கின்றனர். இவர்களுக்குத் தெரிவதில்லை, ஒரு படைப்பை முதலில் நயங் கண்ட பின்னரே, அது பற்றிய குறைகளை எடுத்துக் கூறலாம் என்பது! வெற்றுச் சுலோகங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட திட்டங்களைப் புகுத்துவது திறனாய்வல்ல. அது போலக் கண்டனஞ் செய்வதும் திறனாய்வல்ல.
来 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர்
இதனைத் தொகுத்திருப்பவர் வித்துவான் சா.இ. கமலநாதன் B.A. இவர் உட்பட, வ.சிவசுப்பிரமணியம், காசுபதி நடராசா, வ. நல்லதம்பி, பண்டிதர் க. நல்லரத்தினம், வித்துவான் க. செபரத்தினம், இரா. நாகலிங்கம்

Page 149
272 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
(அன்புமணி), ந. நடராசா, த. யுவராஜன் ஆகிய மட்டக்களப்பு அறிஞர்களும் மலர்க் குழு உறுப்பினர்களாவர். நாட்டின் பல பாகங்களிலுமுள்ள தமிழறிஞர்கள், சுவாமி விபுலாநந்தர் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் நின்று எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒரு கலைக் களஞ்சியம். இரண்டு ஆங்கிலக் கட்டுரைகள் உட்பட 41 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இயலில் ஈடுபாடுடைய யாவரும் தம் கைவசம் வைத்திருக்க வேண்டிய ஒரு தொகுப்பு இது. அதற்கு மேல் கூறினால் மிகையாகிவிடும்.
米 சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் : தொகுதி , தொகுதி 2.
உத்தேசிக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் இரண்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 33 கட்டுரைகள் இடம் பெறுகின்றன.
இவற்றிலே, மேற்றிசைச் செல்வம், மொழி பெயர்ப்பு (pan), 66565ITGOTSLILD, The Principle of Relativity. His Grand - Sire's Bond, Plato and Indian Thought, Buddhism and Tamil Literature, அறத்துப் பாலாராய்ச்சி, பாவலர் போன்ற கட்டுரைகள் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் படித்துச் சுவையுங்கள்; பயன் பெறுங்கள்.
இரண்டாவது தொகுதியில் 34 கட்டுரைகள். இவற்றில் 20 தமிழில், ஏனையவை ஆங்கிலத்தில், ஊன்றிப் படிக்க வேண்டியவை. யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர் சரித்திரம், பாரதி பாடம், பாரதியார் கவிநயம், பண்டைத் தமிழிசை ஆராய்ச்சி, இலக்கியம் கற்கவும் இலக்கியச் Jiao)aluai RFGLILalb, The Origin and Growth of Tamil

கே.எஸ். சிவகுமாரன் 273
Literature, The Ten Idylls of Early Tamil Literature, The Book of Books in Tamil Land, LIGilgilb 5pg|lb g5uadTourTylb. இன்றைய மாணவர்களும், விமர்சகர்களும் இவற்றைப் படித்துப் பார்ப்பதனால் பயன் பெறுவர் என்று நினைக்கின்றேன். பெற்றேன் இன்பம்.
சுவாமி விபுலாநந்தர் நினைவாகப் பேருரைகள் மிகத் தரமாய், இற்றை வரையும் பெறப்பட்ட அறிவின் துணை கொண்டு அமைந்தன. பேராசிரியர் ப. வே. இராமகிருஷ்ணனின் கட்டுரை தத்துவப் பெட்டகம், மிகையில்லை. படித்துப் பாருங்கள். 'கருணை யோகன்’ என்ற புனை பெயர் சில நல்ல வரிகளைக் கொண்ட கவிதைகளை எழுதிவருபவரும், காய்தல் உவத்தலின்றி அணுகுமுறையை நெறிப்படுத்தி எழுதுபவருமான செ. யோகராசாவின் கட்டுரை நல்லதொரு ஒப்பீட்டுக் கட்டுரை. ஆறுமுக நாவலரையும், விபுலாநந்தரையும் அவர் ஒப்பிட்டு எழுதுகிறார். அவர் கருத்துகளை விமர்சிக்க இங்கு இடமில்லை. பேராசிரியர் சிவத்தம்பியின் சிந்தனைப் போக்கை அறிவோர் அறிவர் விபுலாநந்தரின் சிந்தனைகளை அவர், அவருக்கேயுரித்தான வரலாற்றுச் சமூகப் பார்வை மூலம் வெளிப்படுத்தும் போது நமக்குப் புதிய வெளிச்சத்தில் பழையதைப் பார்க்கும் பார்வை ஏற்பட்டுவிடுகிறது. இஸ்லாம் மதத்தினராகிய ஏ.எம். நஹியா தமிழறிஞர். செட்டாக அவர் எழுதும் தமிழ், கட்டுரையைப் படிக்கத் தூண்டுகிறது. நூலாசிரியரும் ஆய்வாளருமான நஹியா விபுலாநந்தரை ஒரு முஸ்லிம் நேசராகப் பார்க்கிறார்.
இவ்வாறு, பல விதங்களில் நமது அறிவையும், அனுபவத்தையும் வளர்க்க இந்த நூல்கள் அனைத்துமே பெருமளவு பயன்படுகின்றன.

Page 150
274 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சுவாமி விபுலாநந்தரும் முநீலழுநீ ஆறுமுக நாவலரும்
LDட்டக்களப்பு விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை உதவிச் செயலாளர் காசுபதி நடராசா தொகுத்த ஒரு பிரசுரம் அச்சபைத் தலைவர் க. தியாகராஜா அவர்களின் அறிமுகத்துடன் வெளிவந்துள்ளது. சுெ யோகராசா அவர்கள் நிகழ்த்திய சுவாமி விபுலாநந்தர் நினைவுப்பேருரைதான் 36 பக்கங்களில் அமைந்த இந்தச் சிறுநூல், நூல் சிறிதாயினும் அதில் அடங்கியுள்ள காரணகாரியத் தொடர்பு விளக்கமாகத் தரப்படும் தகவல்கள் பெறுமதியானவை.
ஆறுமுக நாவலரையும் விபுலாநந்தரையும், அவர்களின் பங்களிப்புக்களையும் ஒப்பீடு செய்ய முனைந்திருக்கிறார் ஆசிரியர்
சுவாமி விபுலாநந்தரை ஓர் இரசிக விமர்சகர் என்று வானொலி நிகழ்ச்சியிலே இனங்கண்ட செ. யோகராசா அவர்கள், இப்பொழுது, விபுலாநந்தர் ஒர் ஆய்வாளர் என்று ஏற்றுக் கொள்ளுமளவிற்கு விசாலமான அணுகுமுறையைப் பிரயோகிப்பது வரவேற்கத்தக்கதுடன் அவருடைய முதிர்ச்சியையும் காட்டுகிறது எனலாம்.
உண்மையிலேயே ஈழத்து முதலாவது இலக்கியத் திறனாய்வாளர் சுவாமி விபுலாநந்தர் தான் என்பது எனது கணிப்பு. இரசிக விமர்சகர் என்ற ஏளனக் கூற்று செல்லுபடியாகாதது. எனது கருத்தை வலியுறுத்தி ‘பண்பாடு (ஒகஸ்ட் 1991) இதழில் எழுதியிருந்தேன். நூலாசிரியர் செ யோகராசா அவர்கள், தனது நினைவுப் பேருரையை நிகழ்த்த உதவிய உசாத்துணைநூல்களின் பட்டியலைத் தரும்பொழுது “பண்பாடு கட்டுரையைக் குறிப்பிடுகிறாரில்லை; போகட்டும்.

கே.எஸ். சிவகுமாரன் 275
இந்த நூலைப் பொறுத்தமட்டில் ஆசிரியர் காய்தல் உவத்தலின்றி விஞ்ஞான பூர்வமாக ஒப்பீட்டு அடிப்படையில் இரு பெரும் அறிஞர்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தந்திருப்பது பாராட்டத்தக்கது. ஒப்பியல் நெறிமுறைக்கேற்பத் தனது விசாரணையை யோகராசா மேற்கொண்டிருப்பது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. சமயம், தமிழ், கல்வி, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் ஆராய்கிறார்.
“தொகுத்து நோக்கும் போது, நாவலரது சமயப்பணிகள் யாழ்ப்பாணம், தமிழ் நாடு என்றமைய விபுலாநந்தரது சமயப் பணிகள் இலங்கை, இந்தியா எனப் பரந்த களத்தில் இடம் பெறுகின்றன. இருவர் தம் காலப் போக்கும், இலட்சிய நோக்கமும் வேறுபடவே நாவலரது சமயப் பணிகள் சில துறைகளுக்குள் அடங்கிவிடுகின்றன’ என்கிறார். ஆசிரியர் மேலும் கூறுகிறார்:
“நாவலரது தமிழ்ப் பணியின் உந்து சக்தி சைவசமைய வளர்ச்சி நோக்கே என்பதும் விபுலாநந்தரது தமிழ்ப்பணி, பிரக்ஞை பூர்வமாகவே தமிழ் வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பதும் புலப்படுகிறது.” “இருவர்தம் காலப்போக்கும் இலட்சிய நோக்கும் வேறுபட்டிருந்தமையை’ (கல்வி தொடர்பாக) ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் இருவருடைய அணுகு முறைகளையும் ஆய்வாளர் சுெ யோகராசா நல்ல முறையில் எடுத்துக்காட்டுகிறார்.
சுெ யோகராசா போன்ற வடபுலத்துத் தமிழறிஞர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிவதும் மட்டக்களப்பு கலை, இலக்கிய விழிப்புணர்கு ஒரு காரணமாயிருக்கலாம்.

Page 151
276 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும்
கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர் என்பதனாலோ என்னவோ, சுவாமி விபுலாநந்தர் தமிழியலுக்கு ஆற்றிய பங்களிப்பையும், முன்னோடியாக விளங்கிய நிலைமையையும் சிலர் இருட்டடிப்புச் செய்கின்றனர் என்பது எனது ஊகம். இது தவறான ஊகமாய் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். சுவாமி விபுலாநந்தர் தொடர்பாகச் சில நூல்கள், கட்டுரைகள் வந்து கொண்டிருப்பது ஒரு நல்ல அறிகுறி.
சுவாமி விபுலாநந்தர் ‘காலமும் கருத்தும்', என்ற
நூலை எழுதியவர் - கிழக்குப்பல்கலைக் கழக கலை, கலாசாரப் பீடாதிபதியும், நாடக, நாட்டுக்கூத்து விற்பன்னரும், இலக்கிய வரலாற்றாசிரியருமான கலாநிதி சி. மெளனகுரு. இவரைப்பற்றி இன்றைய இளைய பருவத்தினர் அறிந்திராவிட்டால், இவர் எழுதிய நூல்களின் பட்டியல் இதோ 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் (இணை ஆசிரியர்), நாடகம் நான்கு (இணை ஆசிரியர்), சடங்கிலிருந்து நாடகம் வரை, தப்பி வந்த தாடி ஆடு, மெளனகுருவின் மூன்று நாடகங்கள், பழையதும் புதியதும், ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு வரலாறு, சங்காரம், அவைக்காற்றுகைகளும் தாக்கமும். இந்த நூல்களை மாணவர் முதல் ஏனையோர் வரை, குறிப்பாக நாடகத்துறையில் ஈடுபட்டவர்கள் படித்துப் பயனடையலாம் என்பது உறுதி.
இனி, இந்த அறிஞரின் விபுலாநந்தர் பற்றிய நூலுக்கு வருவோம்.
விபுலாநந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நூல் முதலில்

கே.எஸ். சிவகுமாரன் 277
வெளியாகியது. விபுலாநந்த அடிகளாரின் ‘சமூக, கலை, இலக்கிய நோக்கு’ என்ற கட்டுரையும், தமிழ் உணர்வின் வரலாறும் விபுலாநந்தரின் தமிழுணர்வும்’ என்ற கட்டுரையும், விபுலாநந்தர் நயந்த இலக்கிய நாயகர்கள் என்ற கட்டுரையும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
“இக்கட்டுரைகள் சுவாமிகளின் சில கருத்துகளையும் அக்கருத்துக்களின் உருவாக்கத்தில் அவர் வாழ்ந்த காலம், செலுத்திய செல்வாக்கையும் இனங்காண முயல்கின்றன. சுவாமிகள் பற்றிய புற வயமான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இவை உதவும் என்று நம்புகிறேன்.” என்கிறார் ஆசிரியர்.
“விபுலாநந்தர் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் அவரின் முதிர்ந்த கருத்தாக எடுத்துப் பின்பற்ற நினைத்தல் அறிவுடைமையாகாது. அது காலமுரணுமாகும்” என்று ஆசிரியர் எச்சரிக்கை விடுக்கிறார்.
“ஆரம்பத்தில் குமரிக் கண்டத்தையும் தமிழர் பெருமையையும் பெரிதாகப் பேசாத அவர், பின்னர், தமிழர் குமரிக்கண்டத்தில் தோன்றி ஐரோப்பா நோக்கிப் பரவினர் என்ற கருத்தின் பால் ஈர்க்கப்பட்டார்’ என நூலாசிரியர் தகவல் தருகிறார்.
விபுலாநந்தரின் நுண் பொருட்கூறு (Quintessence) என்னவென்றால், “முரண்களைக் க்ாணுதலும் முரண் வழிச் செல்லாது நல்லவற்றை இணைத்து சமரசம் காணும் நோக்கும், மனித குலத்திற்கு நன்மை புரிதல் வேண்டும் என்ற கருத்துமாகும்” என மெளனகுரு எடுத்துக்காட்டுவது உண்மையே.
பல்கலைக்கழக மட்ட அறிஞர்கள் (Academics) கலாநிதி சி. மெளனகுரு பேசும் போதும் சரி, எழுதும்

Page 152
278 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
போதும் சரி, நடிக்கும் போதும் சரி, வாசகர்களிடமோ, பார்வையாளரிடமோ, கேட்போரிடமோ ஒர் இணைப்பை ஏற்படுத்தி விடுகிறார். சிந்தனைத் தெளிவு காரணமாக (அவர் கருத்துக்கள் சில ஏற்றுக்கொள்ளத் தகாதவையாக இருக்கலாம்) வார்த்தைகளும் இலகுவாக, எளிதிற் தொற்றி அர்த்தங்களைப் புரிய வைக்கின்றன, அந்த விதத்தில், இலக்கிய ஆய்வாளர்களுள் கைலாசபதி, மெளனகுரு, நுஃமான், சுப்பிரமணிய ஐயர், துரை மனோகரன் போன்றவர்கள் என்னைப் பொறுத்தமட்டில் நல்ல விரிவுரையாளர்கள். கூறியது கூறல், வழவழாத்தன்மை, நீட்டி முழக்கல் போன்றவை இவர்களிடம் கிடையாது.
சுவாமி விபுலாநந்தரை மெளனகுரு அணுகியிருக்கும் விதம் பாராட்டத்தக்கது. “உலகம் - தமிழ்நாடு என்ற இரு துருவ முரண்பாடுகளில் ஒற்றுமை காணும் அவரது முதுகெலும்பான நோக்கே இயங்கு செயற்படுகிறது எனலாம்” எனக் குறிப்பிடுகிறார்.
தமிழியல் ஆய்வுகளில் ஒப்பியல் கல்விக்கு முக்கிய இடமளித்த முன்னோடிகளுள் ஒருவர் விபுலாநந்தர் என்ற, மறைந்த பேராசிரியர் க. கைலாசபதியின் கூற்றை, கலாநிதி மெளனகுரு உள்வாங்குவது திருப்தியாயிருக்கிறது. (பக்கம் 35) ஆயினும், ஈழத்துத் தமிழ் இலக்கியத் திறனாய்வு முன்னோடி சுவாமி விபுலாநந்தரே என்ற எனது கணிப்புக்கு ஆதரவு தருவதாய் மெளனகுருவின் அவதானிப்பு இல்லை. “இலக்கிய விமர்சனத்துறையிலும் அடிகளாரின் பங்கு குறிப்பிடற்குரியது. கவிதை நயத்தலில் இரசிக விமரிசன முறை ஒன்றினையே அவர் செய்துள்ளார். தம் கால ரசிக விமர்சகர்களிலிருந்து இவர் வேறுபடுவதுடன் இலக்கிய விமர்சனம் கூட மன்பதைக்குத் தொண்டு செய்ய

கே.எஸ். சிவகுமாரன் 279
வேண்டும் என்ற நோக்குடையவராகவும் காணப்படுகிறார்” என மெளனகுரு மழுப்பி மதிப்பைக் குறைப்பது (bellittle) சரியல்ல.
சுவாமி விபுலாநந்தர் தொடர்பாக நூல் இருந்தாலும் நிறையத் தகவல்களை ஆசிரியர் தருகிறார். இந்த விபரங்கள், தமிழ், தமிழர், தமிழிலக்கியம், சமூகம் போன்ற பல துறைகளையும் சார்ந்தவை. இது ஒரு பயனுள்ள நூல்.
来
விபுலாநந்தரின் திறனாய்வு நோக்கு
Rழத்து இலக்கியத் திறனாய்வுத்துறை வளர்ச்சியில், மறைந்த சுவாமி விபுலாநந்தரின் (1892 - 1957) புதுப்புனைவான முன்முயற்சிகள் வியக்கத்தக்கன.
முத்தமிழ் வித்தகராகவும் அறிவியல் பண்டிதராகவும் அவர் செயற்பட்டு மேற்கொண்ட பங்களிப்புகள் இன்னமும் பரவலாகத் தெரியவில்லை என்றே கூற வேண்டும். தமிழ் திறனாய்வுத் துறையில் அவர் முன்னோடி என்பதும் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ளாததொன்று.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காரைதீவில் பிறந்த மயில்வாகனன் 1922 இல் சுவாமி விபுலாநந்தர் ஆனார். தமிழ் நாட்டில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல தலைமையுரைகளை நிகழ்த்தினார். ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். யாழ் நூல்’, 'மதங்கசூழா மணி’ ஆகியன இவர் படைப்புக்களில் முக்கியமானவை. ‘செந்தமிழ்’, ‘தமிழ்ப்பொழில்’, ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘கலைமகள் போன்ற தமிழ் நாட்டு ஏடுகளில் அடிகளின் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. இலங்கை ‘ஈழகேசரி'யிலும் இவர் எழுதினார்.

Page 153
280 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
இக்கட்டுரைகளை மேலோட்டமாகப் படிப்பவர் எவருங்கூட, அடிகளார் எழுத்தில் விமர்சனச்சாயல் இருப்பதை அவதானிக்கக் கூடும். விபுலாநந்த அடிகளின் கட்டுரைகளில் தெரிவு செய்யப்பட்ட சில கட்டுரைகளை, ‘இலக்கியக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் சில வருடங்களுக்கு முன் ஒரு நூலாக வெளியிட்டிருந்தது. கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புத் தேர்வுக்குரிய தமிழ் பாடநூல்களில் ஒன்றாக, 12 கட்டுரைகள், அடங்கிய நூல் 1973 முதல் சில காலம் வரை இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கலை, இலக்கியம் தொடர்பாக அடிகளார் வரித்திருந்த சில கோட்பாடுகள், இன்றைய திறனாய்வுக் கோட்பாடுகளுக்கு இணங்க அமைவதை நாம் காண்கிறோம். இதனை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
米 திறனாய்வுக் கோட்பாடுகள்
இயகவை என்ற கட்டுரையை முதலில் எடுத்துக் கொள்வோம். 1939 ஆம் ஆண்டிலேயே “இலக்கியம் கற்றல், இலக்கியச் சுவையில் ஈடுபடல்' ஆகிய விஷயங்கள் குறித்து அடிகளார் சிந்தித்திருக்கிறார். அவர் சிந்தனையின் விளைவே இக்கட்டுரை.
முதலிலே தமிழ் இலக்கியத்தின் கொடுமுடிகள் எவை என்று அடிகளார் நிரற்படுத்துகிறார். சங்க இலக்கியம் முதல் உ.வே. சாமினாதையர் முயற்சிகள் வரையிலும் உருவாகிய படைப்புகளை அடிகளார் குறிப்பிடுகிறார்.
“இலக்கியம் இவையெனக் கண்டோம். இனி, இலக்கியச் சுவையாவது யாது, அச்சுவையிலிடுபடுவதற்கு

கே.எஸ். சிவகுமாரன் 281
வேண்டிய மனப் பழக்கம் யாது, இலக்கியங் கற்றற்கு இயைந்த கருவிகள் யாவை என்றின்னோரன்ன வினாக்களுக்கெல்லாம் விடையிறுத்தல் வேண்டும்” என்று தமது இரண்டாவது பந்தியிற் கூறிச் செல்வதிலிருந்தே, அடிகளார் விமர்சன நெறி எத்தகையது என்பதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
s ‘அழகியல்' இலக்கியக் கோட்பாட்டை அடிகளார் தமது அழகு தமிழில் நறுக்குத் தறித்தாற் போல் கூறுவது பாராட்டத்தக்கது. அவர் கூறுகிறார்: “மணமானது வெளிப்பட்டுத் தோன்றுமிடத்து அறிவு, இச்சை, துணிவு, என முத்திறப்பட்டு நிற்குமென்பது மன நூலார் கண்ட முடிவு. அறிதல், இச்சித்தல், துணிதல் என்னும் முத்திறச் செயலும் தெளிவு, இனிமை, உறுதி என்னுங் குணங்களை அளாவி நிற்பன. இவை முறையே உண்மை, அழகு, நன்மையென்னும் குணங்களைச் சார்வன. "அவர் மேலும் கூறுவார்: “உண்மை, அழகு, நன்மையாகிய அனைத்தும் உணர்த்துவது நல்லிசைப் புலவரளித்த இலக்கிய நூல்கள்; இவை செய்யுள் எனப்படும்.”
இவ்வாறு எடுத்துக் கூறி விட்டு நேரடியாகவே உதாரணத்திற்கு வந்து விடுவது அடிகளாரின் திறனாய்வுச் செய்முறையைக் காட்டுகிறது. விஞ்ஞானம் கற்ற மெய்ஞ்ஞானியாதலால், ‘விழல்' வியாக்கியானங்களில் இறங்கி விடாமல், கச்சிதமாகத் தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். ‘வில்லிபாரதக் காட்சியை இலக்கிய ரீதியாக விபுலாநந்தர் விளக்கும் தோரணைக்கும், ரசிகமணி டி.கே.சி. இலக்கியக் காட்சிகளை நுகரும் தோரணைக்கும் நிரம்பவும் வித்தியாசங்கள் உள்ளன. பின்னையவர், "ஆகா’ ‘ஒகோ’ என்று ரசித்து விட்டுப் போக, முன்னையவர் திறனாய்வு ரீதியில் ரசிப்பதை நாம் காண்கிறோம்.

Page 154
282 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அத்தகைய வேறுபாடுகளில் ஒன்று ‘ஒப்பியல் ஆய்வு ஆகும். உதாரணமாக, குந்திதேவி, கர்ணன் இறந்தபோது அழுதரற்றும் காட்சியினை, 'ஹோமர் எழுதிய வீரகாவியங்களிலும் காண்டலரிது’ என்கிறார் விபுலாநந்தர். அதே போல, “இனிப் போர்க்களத்திலும் பூஞ்சோலையிலும் யாம் கண்ட காட்சிகளை ஒப்பவைத்து நோக்கி இலக்கியச்சுவை எத்தகையது என ஆராயப் புகுவாகும்’ என்று குறிப்பிட்டுத் தமது திறனாய்வை அடிகளார் தொடர்கிறார்.
தாம் எடுத்துக் கொண்ட செய்யுட்களில், ஒசையும் சுவையும் ஒத்து நடப்பதற்கு எடுத்துக் காட்டாக இச்செய்யுளையும் நோக்குக எனக் கூறி பூபாலரவை. என்று தொடங்கும் செய்யுளைக் குறிப்பிடுகிறார்.
米
augplb (9fggif
விபுலாநந்த அடிகள் திறனாய்வுப் பாங்கில் பாடல்களின் சுவைகளையும், தொனிகளையும் விளக்கிக் காட்டுவதுடன், சில ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
அடுத்ததாக, விபுலாநந்த அடிகளார் 50 வருடங்களுக்கு முன் ‘செந்தமிழ் தொகுதி 38 இல் எழுதிய ‘ஐயமும் அழகும்’ என்ற கட்டுரையில் அவர் திறனாய்வு நோக்கு விதம் செயற்படுகிறது என்று பார்ப்போம்.
மேலை நாட்டு இலக்கியத் திறனாய்வு முறையில் பரிச்சயம் பெற்ற நம்மில் பலர், அம்முறைகளினின்றும் சிறிது வேறுபட்டும் அதே வேளையில் நுண்ணிய நுழைபுலத்தைத் தருவதுமான தமிழ்த் திறனாய்வு இலக்கணங்களை அறியாதிருக்கிறோம். உதாரணமாக, விபுலாநந்தர் கூறும்

கே.எஸ். சிவகுமாரன் 283
ஒரு விளக்கம் இந்த நுண்மான் நுழைபுலத்தைத் தெளிவுபடுத்தும்.
“நல்லிசைப் புலவர் யாத்தமைத்த கவியிலே ஈடுபட்டு நெஞ்சுருகி இன்புறுவோன் அக்கவிதையின்பால் அன்பு செலுத்துகின்றான். கவிதையை யாத்த புலவன், படிப்போருக்கு இன்பம் பயப்பது கருதியே யாத்தான். ஆதலின், படிப்போனுக்கும் படிக்கப்படும் கவிதைக்கும் இடையே அமைந்த தொடர்பு பெருந்திணையன்று. கைக்கிளைத் திணையாமென்பது வெளிப்படை”
விபுலாநந்தரின் மற்றுமொரு விளக்கம் தெளிவாய் அமைவதை இங்கு குறிப்பிடல் அவசியம்.
“ஐம்புலவுணர்வினைக் கூறும் பொருளியல் நூல்களுக்குக் காட்சி கருவியாகும். நோக்கிய கண் இமையால் நோக்கி நோக்கி இன்புறுதற்குரிய ஒவிய நூல்' வட்டிகைச் செய்தி என்றித் தொடக்கத்தவாகிய அழகு நூல்களுக்கு (பைன் ஆர்ட்ஸ்) ஐயம் கருவியாகும். துணிவு தத்துவ ஞானம் என வட நூலார் கூறும் மெய்யுணர்வு நூல்களுக் கருவியானது, ஐயத்தின் வழி அழகு பிறப்பதனை உணர்த்துவதற்கு ஆன்றோர் செய்தளித்த அழகிய செய்யுட்கள் சிலவற்றைக் காட்டுவோம்” என்று விபுலாநந்தர் குறிப்பிட்டுச் செல்வதை நாம் அவதானிக்கலாம்.
来 ஈழத்துத் திறனாய்வுத்துறை வழிகாட்ழ
விபுலாநந்தர் இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு
முன்னரேயே ஈழத்தின் திறனாய்வுத் துறைக்கு வழிகாட்டியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

Page 155
284 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
‘நவறொலும் நூண்யம்போலும் பயிறொலும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் குறட்பாவினுள்ளே நாயனார் இன்பந்தரும் நூல் நயத்தினையும் இன்பந்தரும் பண்புடையாளர் தொடர்பினையும் ஒருங்கு வைத்து, அழகானது அனைத்தற்கரியதாய்த் துய்க்குந்தோறும், துய்க்குந்தோறும் வளர்ந்து தோன்றும் நீர்மையினைக் காட்டினார்’ என்று விபுலாநந்தர் திறனாய்வுச் செய்தியைத் தருவது நமக்கு மகிழ்ச்சி தருவதாய் இல்லையா?
விபுலாநந்தர் நமது நாட்டுத் திறனாய்வு முன்னோடி என்பதை விளக்க அவருடைய கட்டுரையின் ஐயமும் அழகும்) முடிவுரை போதுமானது.
“அன்றோர் ஐயத்தினையின் பாலுரைத்த செய்யுட்களில் தன்மை, உவமை, உருவகம், தவகம் பின்வரு நிலை வேற்றுப் பொருள் வைப்பு, ஒட்டு அதிசயம், தற்குறிப்பேற்றம், நிரணிறை, ஆர்வமொழி, சுவை, ஒப்புமைக் கூட்டம் என்னும் செய்யுளணிகளியைந்து நிற்பதை ஆராய்ந்து காணலாம்.”
“வண்ணமும் வடிவமும் கட்டுரையை ஒவிய விமர்னஞ் செய்யும் அடிகளார், ‘நிலவும் பொழிலும் கட்டுரையில், நிலவும் பொழிலும் தனித்து நின்று பயக்கும் அழகினினும் பார்க்க ஒருங்கியைந்து நின்று தரும் அழகு சிறந்ததென ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இலக்கிய ஆதாரங்களைக் காட்டி விளக்குகிறார்.
சுவாமி விபுலானந்தர் (ரொமாண்டிக்) ‘மனோரதியக் கவிஞர்கள்’ என்றழைக்கப்பட்ட வேர்ட்ஸ்வேர்த், கீட்ஸ், ஷெலி போன்றவர்களின் கவிதைகளைப் படித்து அனுபவித்தவர் என்பது தெளிவு. அவருடைய கட்டுரைகளில் குறிப்பாகக் கவிதை வரிகள் அழகுறத் தமிழில்

கே.எஸ். சிவகுமாரன் 285
பயின்று வந்துள்ளன.
கீட்ஸ் தமது எந்திமியோன் காப்பியத்திற்கு எழுதிய தோற்றுவாயை, விபுலானந்தர் இவ்வாறு தமிழில் தந்தார்.
“திருமதி யழகுடைச்
செழும்பொருள் தானே
உவகை நீர்மெயது
ஆங்கள்வகை
பன்னாட் கழியினும்
கழியாவியல்பிற்
றன்டா வின்பந்
தந்து நிற்பதுவே”
இந்த அடிப்படையில் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் எழுதிய தனிப்பாடல்களின் தொகுதியை அடிகளார் திறனாய்வு செய்து, ‘செந்தமிழ் தொகுதி 38 ல் (1941) வெளியிட்டார்.
‘ஆங்கிலவாணி’ என்னும் கட்டுரையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் விமர்சனப் பாங்காக அவர் தரும் அறிமுகம் வியந்துரைக்கத் தக்கது.
இவற்றை எல்லாம் விட 1922 ஆம் ஆண்டிலேயே ‘செந்தமிழ்’ ஏட்டில் மேற்றிசை செல்வங்களை அவர் திறனாய்வு நோக்கில் அறிமுகப்படுத்தியிருப்பதும் அவரை ஈழத்துத் திறனாய்வு முன்னோடி என்று நம்மைக் கூற வைக்கிறது.
திறனாய்வாளன் ஒப்பு நோக்கி ஆய்வது சம்பிரதாயம். விபுலாநந்தர் 1941 ஆம் ஆண்டிலே ‘சோழ மண்டலத்துத் தமிழும் ஈழத்துத் தமிழும்’ என்ற கட்டுரையைக் கலைமகள்’ இதழில் எழுதியிருக்கிறார். கலைச்சொல் விளக்கம்’, ‘தென்னாட்டில் ஊற்றெடுத்த

Page 156
286 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
அன்புப் பெருக்கு வட நாட்டிற் பரவிய வரன்முறை போன்ற அடிகளாரின் கட்டுரைகளும் அவரைத் தர்க்கபேதமின்றி ஈழத்துக் கலை இலக்கியத் திறனாய்வாளர் முன்னோடியாக நிலை நிறுத்துகின்றன.
来源
சு. வித்தியானந்தனின் மணி விழா மலர்
LTழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணி விழா (1984) மலர், நவீனத்துவ ஒவியர் ரமணியின் அட்டைச் சித்திரம், எழுத்து வரி, வடிவம் ஆகியன சகிதம் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மணி விழாவின் போது இம்மலரும் வெளியிடப்பட்டது. கலை, இலக்கிய, பத்திரிகை நண்பர்கள் கழகத்தின் ஆணிவேரும், உற்சாகம்மிக்கவரும், எதனையும் வினைத்திறமையுடன் செம்மையாக நிறைவேற்றி வைப்பவரும், பக்தி எழுத்தாளரும், பத்திரிகையாளருமான எஸ். திருச்செல்வம், மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக விழாவை நடத்தியது போலவே, இம்மணி விழா மலரையும் உருவாக்கியுள்ளனர். எஸ். திருச்செல்வம், அறுவடை செய்துள்ள இம்மலரிலே ஒரு கலைஞரின், நுட்பமான பத்திரிகையாளனின், தருக்க ரீதியான தொகுப்பாளனின் கை வண்ணம் தெரிகிறது.
உதாரணமாக, தரிசனம்', ‘நன்றி மறவேல்' என்ற தான் எழுதிய பகுதிகளை இளஞ் சிவப்பு நிறக் கடதாசியில் அச்சிட்டுள்ளார். பண்டிதமணி, வ. அய். சுப்பிரமணியம், சை.வே. சிட்டிபாபு போன்ற கல்விமான்களினதும், இ.வே. டேவிட் ராஜ", ந. சபாரத்தினம், எஸ். டி. சிவநாயகம்

கே.எஸ். சிவகுமாரன் 287
ஆகிய தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களினதும், வீ. ஏ. திருஞானசுந்தரம் என்ற ஒலிபரப்பாளரினதும் வாழ்த்துரைகளை இளம் நீல நிறத்திலும் அச்சிட்டு இவற்றின் விசேடத் தன்மையை உணர்த்தியுள்ளார்.
நமது நாட்டுத் தமிழ் தினசரிகளின் ஆசிரியர்களும் தமிழ் ஒலிபரப்பு அதிபரும் ஒரே மலரிலே அழகிய முறையில் பேராசிரியர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பது பரவசமூட்டுகிறது. பேராசிரியரின் அந்திமக்கால வயதுத் தோற்றத்தைத் தத்ரூபமாகக் காட்டும் புகைப்படத்தை வெள்ளைத் தாளில் அச்சிட்டிருக்கிறார். பேராசிரியர் வித்தியானந்தனின் அறிவும், கருணையும், அடக்கமும், திடசங்கற்பமும், தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் போக்கும், சாந்தமான முகமும், நிறைகுடத் தன்மையும், நகைச்சுவைப் பிடிப்பும் எல்லாமே இப்புகைப்படம் மூலம் என் மனத்திரையில் ஒடுகின்றன.
இம்மலரைப் பல பகுதிகளாகப் பிரித்துத் திருச்செல்வம் தொகுத்திருக்கிறார். நுழைவாயில், பேராசிரியரின் பணிகள், பணித்தலங்களில் பேராசிரியர், நிறைமுகம் ஆகியன இடம் பெற்றுள்ளன.
நமது நாட்டு முக்கிய தினசரிகளில் இரண்டின் ஆசிரியர்கள் அறிமுகம், வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியுள்ளனர். முன்னவரின் எழுத்தில் உணர்ச்சிப் பெருக்கைக் காண்கிறோம். பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. பின்னவரின் எழுத்தில் தெளிவான தேர்வு முறையைக் காண முடிகிறது. பொதுவாக எல்லோருடைய எழுத்திலுமே குருபக்தியைக் காண முடிகிறது. உதாரணமாக, பல்கலைக்கழக ஆசிரியர்கள், விமர்சகர்களான

Page 157
288 இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
சி. தில்லைநாதன், ஆ. வேலுப்பிள்ளை, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், பொ. பூலோகசிங்கம், எஸ். இராசரத்தினம், ம. முகம்மது உவைஸ், எஸ். பத்மநாதன், செ. சிவஞானசுந்தரம், சி. மெளனகுரு, பல் எழுத்து விற்பன்னரான சொக்கன், மக்கள் கலை விமர்சகரான த.சண்முகசுந்தரம், எழுத்தாளர்களான சிற்பி, செம்பியன் செல்வன், கவிஞரான கல்வயல் குமாரசாமி, பத்தி எழுத்தாளரான எஸ்தி, மூத்த பத்திரிகையாளரான எஸ்.டி. சிவநாயகம் ஆகிய எல்லோரும் பேராசிரியர் வித்தியானந்தன் மீது எவ்வளவு அபிமானமும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை எழுத்தில் வடித்துத் தந்திருக்கிறார்கள்.
எழுதியிருப்பவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே பல்கலைக்கழக மட்டத்தில் ஆராய்ச்சி பூர்வமாகத் தமது கருத்துக்களைத் தொகுத்துத் தந்திருக்கின்றனர். பேராசிரியர் வித்தியானந்தன் பற்றிய கணிப்பாகவும் அதே சமயம் சமகால ஈழத் தமிழிலக்கியத்தின் விவரணையாகவும் இம்மலரில் அடங்கிய எழுத்துக்கள் அமைந்துள்ளன. எனவே, ஆராய்ச்சியை மேற்கொள்பவர்களுக்கு ஒர் அருமையான உசாத்துணை நூலாகவும் இது அமையும்.
ஆய்வுக்காக அல்லாமல் தகவலுக்காகப் படிக்கும் வாசகர்களுக்கு இவ்வெளியீடு சுவையான தகவல்களைத் தருகிறது. குறிப்பாக, எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் எழுதிய 'முப்பது ஆண்டுகளுக்கு முன் .' என்ற பின்னோக்குச் சித்திரம் சிறந்த, தரமான, சுவையான பத்திரிகை எழுத்துக்குச் சான்றாக இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
来来来


Page 158


Page 159
நூலாதிரியர் பற்றிய
இவர் இலங்கையின் திறனாய்வாளர்களுள் ஒருவர். ஆங்கிலத்திலும் இருபது பு எழுதியிருக்கிறார். இவற்றுள் பெரு இலக்கிய திறனாய்வு பற்றியது மதிப்பீடுகள் பற்றியவையுமாகும்.
இவர் சிறுகை கவிதைகளையும், ஆக்க மொழிபெயர்ப்புகளையும், ஆங் ஆகிய மொழிகளில் தந்திருக்கிறா
இவருடைய ஆங்கிலக் ச Assault" அமெரிக்காவில் சிறந்த இலங்கையில் வடகிழக்கு மாகான தமிழர் தகவல் விருது' மற்றும் வழங்கப்பட்டுள்ளன.
இவருடைய சிறுகதை தெ நுகர்வு அதன் இலக்கணம் போன் நூலின் பெயர் அசையும் படிமங் எழுதிவரும் கே.எஸ். சிவகுமாரன் இவர் ஓர் ஆங்கில மொழி பட்டதா ஆகிய இலங்கைப் பத்திரிகைக ஆசிரியர், சிறப்பம்ச பண்பாடு வானொலி செய்தி ஆசிரியராகவும்
இலங்க்ை தமிழ் எழுத் ஆங்கிலத்தில் எழுதியவற்றுள் இரு இலக்கிய கலைக்களஞ்சியங்கள் இ எழுத்து பற்றி எழுதியிருப்பது பல தற்சமயம் கே.எஸ். சிவகுப * பத்திரிக்கா வாராந்த கலை இலக் தமிழ்ப் பத்திரிகைகள் இலக்கிய ஏ(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்பு
முன்னணி தமிழிலும் த்தகங்களை ம்பாலானவை ம், இலக்கிய
தகளையும்,
இலக்கிய K.S. சிவகுமாரன் கிலம் தமிழ் 前。
6605 o 6rplpes "A Subliminal கவிதைக்கான விருது கிடைத்தது.
ன ஆளுநர் விருது', கனடாவில் இலக்கிய பரிசில்கள் இவருக்கு
ாகுதியின் பெயர் 'இருமை' சினிமா ன்றவற்றை விளக்கும் இவருடைய கள். கடந்த 50 வருடங்களாக ஓர் ஒலிபரப்பாளரும் ஆவார். ரி. வீரகேசரி, நவமணி, தி ஐலன்ட் ளின் இணை ஆசிரியர், பிரதம ஆசிரியர் ஆகிய பதவிகளையும், இவர் கடமை பார்த்திருக்கிறார்.
து பற்றி கே.எஸ். சிவகுமாரன் நூல்கள் வெளிவந்துள்ளன. உலக இரண்டில் இவர் இலங்கைத் தமிழ் ருக்கு தெரியாத விஷயம்.
ாரன் இரண்டு இலங்கை ஆங்கில கிய பத்திகளை எழுதி வருகிறார். டுகள் ஆகியவற்றிலும் எழுதுகிறார்.