கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 07

Page 1


Page 2


Page 3


Page 4

மரபுவழித் திறனாய்வும்
ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (Traditional Literary Criticism in Sri Lankan Tamil Literature)
கே. எஸ். சிவகுமாரன்
வெளியீடு: மீரா பதிப்பகம் 1923, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு - 06

Page 5
நூற்பெயர் உபபெயர் இலக்கியவகை நூலாசிரியர் உரிமை
நூலாசிரியரின் முகவரி
பிரசுர திகதி
វិទ្យាer
விலை
Title
Subtitle
Genre
Author
Authors Address
Date of Publication
Publishers
Printers
Price
மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் : பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுக்களும் - 7
திறனாய்வு
: கே. எஸ். சிவகுமாரன்
ஆசிரியருடையது 21, முருகன் இடம், கொழும்பு-6, இலங்கை.
தொலைபேசி:587617 ஜனவரி 01, 2000
: மீரா பதிப்பகம்
19123, ஹைலெவல் வீதி, கொழும்பு-6. தொலைபேசி:826336
பேஜ்செட்டர்ஸ்,
72, மெஸெஞ்சர் வீதி, கொழும்பு-13 தொலைபேசி330333
: es 125.00
: Traditional Literary Criticism in Sri Lankan
Tamil Literature
: Column and Miscellanous Writing -7
: Literary Criticism
: K. S. Sivakumaran
: 21, Murugan Place,
Colombo -6, Sri Lanka. Telephone : 587617
: January 01, 2000
: Meera Pathippagam
191/23, High Level Road, Kirulapone, Colombo -6. Telephone : 826336
: Page Setters
72, Messenger Street, Colombo-12. Telephone : 330333
: Rs 125.00

This book is dedicated to the Luriter's brother late Sellanainar Thirukumaran and his youngest brother Sellanainar Gnanakumar and their respective families.
நூலாசிரியரின் மறைந்த சகோதரர் செல்லநயினார் திருக்குமாரனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், இளைய சகோதரர் செல்லநயினார் ஞானகுமாருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும்
சமர்ப்பணம்.

Page 6
6.
1O.
11.
13.
பொருளடக்கம்
பதிப்புரை V
என்னுரை wi
திறனாய்வு:சில பொதுப்பண்புகள் Ο1
திறனாய்வு:அணுகுமுறைகள் 25
திறனாய்வு செய்முறை assessessessessessessessessessessessessesses 3
திறனாய்வு: கலைநயம் 42
திறனாய்வு:ஈழம் 52
சில ஈழத்து விமர்சன நூல்கள் 62
திறனாய்வு:கவிதை 67
திறனாய்வு:நாடகம் 72
திறனாய்வு:சமூகவியல் போக்கு 8O
திறனாய்வாளர் கைலாசபதியும் நூலாசிரியரும் 85
கைலாசபதியின் அணுகுமுறை 91
கைலாசபதியின் திறனாய்வும் குறைபாடுகளும் 1OO
திறனாய்வும் சமூகப்பண்பும் 110
ஜனாப் எஸ்.எம். ஹனிபா கூறுகிறார் 117
பின் அமைப்பியல்வாதமும்திறனாய்வும் 118
திறனாய்வு என்ற போர்வையில் கண்டனச்சரங்கள் . 122
iV

O பதிப்புரை
நமது நாட்டிலே சிறுகதை, நாவல், கவிதை போன்ற இலக்கியப் பரிமாணங்களிலே கணிசமானோர் தமது பங்களிப் பினை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் திறனாய்வுத் துறை போன்ற சில துறைகளில் ஒரு சிலரே தமது உள்ளார்ந்த ஈடுபாட்டினைக் காட்டி வருகின்றனர். இந்த வகையில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக திறனாய்வுத் துறையில் ஈடுபட்டு உண்மையான அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் தனது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களது பணி பாராட்டிற்குரியது.
கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மட்டு மல்லாது ஈழத்தமிழ் இலக்கியத்தின் வேறுபட்ட பரிமாணங் களையும் அறிந்து கொள்ள அவாவுறும் ஆர்வலர்களுக்கும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களது நூல்கள் பெரும் வரப்பிரசாதமாக அமைகின்றன. ஆங்கில இலக்கியங்களை அறிந்து கொள்வதற்கு சிவகுமாரன் போன்றவர்கள் பாலமாக அமைந்து ஆற்றும் சேவையும் மனங் கொள்ளத்தக்கது.
சிறுகதை, நாவல் போன்ற துறையில் தனது ஆய்வினை மேற்கொண்டு ஏலவே பல நூல்களை நமக்களித்த நண்பர் சிவகுமாரன் இந்நூலில் திறனாய்வு பற்றியும், ஈழத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வின் முன்னோடி என்பதற்கு விவாதமற்ற உதாரணமாகத் திகழும் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்றியும், அவர்களது பணிகள் பற்றியும் தனது குறிப்புக்களைத் தந்துள்ளார்.
இன்றைய உயர்கல்வி மாணவர் மட்டத்தில் பெரிதும் வேண்டப்படும் இத்தகைய உசாத்துணை நூல்களை ஈழத்து இலக்கியத் தளத்திற்கு வரவு வைக்கும் கே. எஸ். சிவகுமாரனின் அவர்களது பணி மென்மேலும் தொடர வேண்டும் என வாழ்த்து கிறோம். கே. எஸ். சிவகுமாரனின் பெறுமதி மிக்க இந்நூலினை வழமைபோலவே மீரா பதிப்பகத்தின் மூலமாக வெளிக் கொணர்வதில் பெருமை கொள்கிறோம். Y rivy -
01-01-2000 புலோலியூர் ஆ. இரத்தின வேலோன்
V

Page 7
என்னுரை
வணக்கம்.
எனது 63ஆவது வயதில் இந்த நூல் வெளியாகிறது. இது நூல்வடிவிலான எனது 13ஆவது ஆக்கம். கலை இலக்கியத் திறனாய்வு (1989), கைலாசபதியும் நானும் (1990) ஆகிய எனது இரு முன்னைய நூல்களும் ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியாயின. இவற்றை வெளியிட உதவியவர், கல்ஹின்ன தமிழ் மன்ற நிர்வாகச் செயலாளரும், முதுநிலைப் பத்திரிகையாளரும், வழக்கறிஞரும், நூலாசிரியருமான ஜனாப் எஸ். எம். ஹனிபா அவர்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பத்தாண்டு கழிந்தும், இந்நூல்கள் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களால் இன்றும் தேடிப் படிக்கப் படுகின்றன என்பதை அறிந்து மகிழ்வுறுகின்றேன்.
திறனாய்வு தொடர்பான அடிப்படை விஷயங்களை
இந்நூல்கள் விளக்கிக் கூறுவதனாலும், இவற்றின் பிரதிகள்
கடைகளில் கிடைக்காமையினாலும், இவற்றை மறுபிரசுரஞ் செய்யுமாறு இம்மாணவர்களுள் சிலர் என்னிடம் சில மாதங்களுக்கு முன் கேட்டுக் கொண்டனர்.
இதனை நிறைவேற்றுமுகமாகவே புதிதாக, புதுப்பிக்கப் பட்ட வடிவமாக, குறிப்பிட்ட இரு முன்னைய நூல்களையும் உள்ளடக்கியதாக, மரபுவழித் திறனாய்வும் ஈழத்து இலக்கியமும் என்ற இந்த நூல் வெளியாகிறது.
நூலாசிரியனை மரணிக்கச் செய்து விட்டுத் தாம் கண்ட கோலமே கோலம் என மருளும் பின் நவீனத்துவத் திறனாய்வு முறை சில இளம் வட்டத்தினரால் புகுத்தப்படுவதனால், இதுவரை காலமும் நான் பின்பற்றிய திறனாய்வு முறையை மரபுவழித் திறனாய்வு என்கிறேன். அதனாலேயே இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Vi

பின் அமைப்பியல் வாதம் தொடர்பான ஒரு குறிப்பும் நூலில் இடம்பெறுகிறது.
இந்த இடத்தில் வ. இராசையா, சிதம்பரநாதன் போன்ற ஆசிரியர்களின் திறனாய்வுப் பாடங்கள் கல்வி அனுபந்தங் களில் (தினசரிகளில்) வருவது கண்டு, மரபுவழித் திறனாய்வு க்கு இன்னும் சாவு மணி அடிக்கப்படவில்லை என்று அமைதி காண்கிறேன்.
இந்த நூல் தமிழ்த்துறை மாணவர்களுக்கு விசேஷ மாகவும், எழுத்தாளர்கள், திறனாய்வாளர்களுக்கும் பெரிதும் உதவும் எனக் கருதிய மீரா பதிப்பகத்தின் ஆ. இரத்தின வேலோன் அவர்கள் இதனை வெளியிட முன் வந்துள்ளார்கள்.
எனது முன்னைய நூல்களையும் பிரசுரித்த மீரா பதிப் பகத்தினருக்கு மிக்க நன்றி.
இந்த நாட்டின் ஆக்க இலக்கியகாரர்களும் திறனாய் வாளர்களுமான புலோலியூர் ஆ. இரத்தின வேலோனும், ரஞ்சகுமாரும் என்னோடு இந்த முயற்சியில் சம்பந்தப்படுவது மனதுக்கு உற்சாகத்தைத் தருகிறது.
Sri Lankan School ' கே. எஸ். சிவகுமாரன் B. O. Box : 198 O1-01-20OO P.C. : 117
Sultanate of Oman e-mail: kssivanOomantel.net. On
vii

Page 8
இந்நூலாசிரியர் எழுதியவை
1. Sri Lankan Literature - an entry in Encyclopedia of World Literature in the 20th Century - Published by St. James Press, 2700 Drake Road, Farmington Hill M 148331 USA IBSN : 1–55862-377-9(v.4)
2. ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (1999) 3. மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச்
சிந்தனைகள் (1999) 4. திறனாய்வு அண்மைக்கால ஈழத்துச்
சிறுகதைகள் (1999) 5. ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்:
திறனாய்வு (1998)
இருமை (சிறுகதைத் தொகுப்பு) (1998)
ஈழத்து இலக்கியம் : நூல்களின் அறிமுகம் (1996)
திறனாய்வுப் பார்வைகள் ( 1996)
Aspects of Culture in Sri Lanka:
Le Roy Robinson in conversation
with K. S. Sivakumaran (1992) 10. கைலாசபதியும் நானும் (1990) 11. கலை இலக்கியத் திறனாய்வு (1989) 12. சிவகுமாரன் சிறுகதைகள் (1982) 13. Tamil Writing in Sri Lanka (1974)
மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் என்ற இந்த நூல், ஆசிரியரின் முன்னைய இரு நூல்களைத் தழுவிப் புதுப்பித்து வெளியிடப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்நூல்களின் பிரதிகள் இப்பொழுது கிடையாமையினாலும், இவற்றிற்கான தேவை பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ஏற்பட்டிருப்பதனாலும்,
இந்நூல் வெளியிடப்படுகின்றது.
viii

திறனாய்வு: சில பொதுப்பண்புகள்
திறனாய்வு - (தமிழ்), விமர்சனம் - (வடமொழி) ஆகிய இரண்டு பதங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன.
நமது பழைய தமிழ் நூல்களில் "விமரிசம்" "விமரிசனம்" என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திறனாய்வு தொடர்பாகப் பலரும் பலவிதமாக விபரித்து எழுதியுள்ளனர்.
திறன் சக ஆய்வு சமன் திறனாய்வு என்பது வெளிப்படை. ஒன்றின் திறனை அறிவது அவ்வளவு இலகுவானதல்ல.
திறனறிதல் ஒன்றும் புதிதானதல்ல. திருக்குறள் காலத் திலிருந்தே இப்பதம் புழக்கத்தில் உள்ளது. அதே சமயம் ஒரு பயிற்சி நெறியாகப் பழங்காலத்திலே திறனறிதல் மேற்கொள் ளப்படவில்லை.
நமது மொழியைப் பொறுத்தமட்டிலே தி. செல்வ கேசவராய முதலியார் எழுதிய பல கட்டுரைகள், குறிப்பாக மகாகவி கம்பன் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் திறனாய்வு அடிப்படையில் அமைந்திருந்தன.
இவரைத் தொடர்ந்து மறைமலை அடிகள் எழுதிய சில கட்டுரைகள் ஓரளவு திறனாய்வுப் போக்கிலே அமைந் திருந்தன. "ஓரளவு" என்று குறிப்பிடப்படுவது ஏனெனில்,

Page 9
கே. எஸ்.சிவகுமாரன்
இக்கட்டுரைகளிலே குறிப்பாக "முல்லைப் பாட்டு" பற்றிய கட்டுரைகளிலே பழைய உரையாசிரியர்களின் போக்கும் காணப்படுவதனால் தான்.
"கம்பராமாயண ரசனை'யாக வ. வே. சு. ஐயர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் ஆரம்பகால நவீன திறனாய்வுக் கட்டுரைகளாகும்.
கு. ப. ராஜகோபாலன், பே. கோ. சுந்தரராஜன் (சிட்டி) ஆகிய இருவரும் எழுதிய கண்ணன் என் கவி என்ற புத்தகம் உடனிகழ்கால திறனாய்வு முயற்சியின் ஆரம்ப வெளிப்பாடு எனலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியை "ரசனை'ப் பாங்காக மட்டுமன்றி, நெறிப்படுத்தப்பட்ட திறனாய்வு அடிப்படை அம்சங்களையும் உள்ளடக்கியதாய் இந்த நூலை இவர்கள் எழுதியுள்ளனர்.
ஈழத்தைப் பொறுத்த மட்டிலே மறைந்த சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள் நவீன திறனாய்வு முயற்சி களுக்கு முன்னோடி எனக் கொள்ளலாம்.
இலக்கியத் திறனாய்வின் போது ஏக காலத்தில் பல விஷயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
"இலக்கியம் மொழியால் ஆக்கப்படுவதால், முதலில் மொழித்திறன் பற்றிய ஆய்வும், மொழி குறிக்கும் பொருள், காலதேச வர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்டனவாய் இருப்பதால், சரித்திரம் சமுதாயம் என்பன பற்றிய ஆய்வும், இலக்கியத்தைப் படிப்போர் அனுபவத் தெளிவுடன் இன்பமும் பெறுகின்றனராகையால், இன்ப நுகர்ச்சியின் இயல்பு பற்றிய ஆய்வும் குறைந்த பட்சம் இன்றியமையாததாகின்றன" என்று கூறுகிறார் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி.

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
20ஆம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ் ஆய்வறி வாளர்களில் ஒருவரும், திறனாய்வுத் துறையில் முதலிடம் பெறுபவருமான அமரர் கைலாசபதி மேலும் தெளிவு படுத்துமுகமாகப் பின்வருமாறு கூறுவார்:
"சுருக்கமாகக் கூறுவதானால், ஒர் இலக்கியப் படைப்பின் மொழி நுட்பம், வாழ்க்கை நோக்கு அல்லது தத்துவம், இன்பச்சுவை என்பன ஒன்று சேர்ந்தே அதற்கு நிறைவை அளிக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஒன்றையொன்று ஆதாயமாகக் கொண்டன" (பார்க்க: திறனாய்வுப் பிரச்சினைகள் - க. கைலாசபதி)
ஆங்கிலக் கவிஞரும், திறனாய்வாளருமான டி. எஸ். எலியட் கூறியிருப்பதுபோல: "கலைப்படைப்புகளை விளக்கித் தெளிவாக்குதல், அழகுணர்வைச் செம்மைப் படுத்துதல் ஆகியன திறனாய்வு மூலமே செயற்படுகிறது. பதரையும் நெல்லையும் இனங்காணத் திறனாய்வு அவசிய மாகிறது". திறனாய்வாளன் ஓர் இலக்கியப் படைப்பை ஆய்ந்து, ஓய்ந்து, தேர்ந்து வெளியிடுகிறான்.
ஈழத்தில் மற்றொரு தமிழ் ஆய்வறிவாளரும், கல்வி மானுமாகிய பேராசிரியர் கா. சிவத்தம்பி திறனாய்வு ஒரு தேடுதல் முயற்சி என்பார்.
"இலக்கியத் தன்மை, அதன் நோக்கம், அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் ஆகியன பற்றிய ஆய்வு நிலை நின்று தேடுதல் இலக்கிய விமர்சனமாகும்."
நமது நாட்டு ஆய்வறிவாளர்களிலே கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவருடன், மூன்றாவதாகக் குறிப்பிடப்பட வேண்டிய திறனாய்வாளர் மு. தளையசிங்கம்.
முன்னைய இருவரையும் போலவே மறைந்த தளைய சிங்கம் ஓர் "தேடல்" முயற்சியிலேயே ஈடுபட்டார். முன்னைய
3

Page 10
கே.எஸ்.சிவகுமாரன்
இருவரும் இலக்கிய வரலாற்றாசிரியர்களாய் நூல்கள் பல எழுதியிருப்பது போலவே இவரும் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூலை எழுதியிருக்கிறார்.
திறனாய்வின் அடிப்படை அம்சங்கள் என்னும்பொழுது அத்துறை பற்றிய அம்சங்கள் மாத்திரமன்றி, அத்துறையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான அடிப்படை அம்சங்களும் கவனத்துக்குட்பட்டவை.
ஈழத்திலே பல திறானய்வாளர்கள் அல்லது விமர்சகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பல்கலைக்கழக ஆசிரியர்களாகவும், கல்விப் போதனாசிரியர்களாகவும் இருக்கிறார்கள். பலர் அருமையான ஆழமான கட்டுரைகளை எழுதி வருகின்றனர். துரதிருஷ்டவசமாக இவை நூல் வடிவில் வெளியாகவில்லை. சில நூல்களுக்குச் சிலர் எழுதிய முன்னுரைகள், ஆராய்ச்சி பூர்வமாக எழுத்துக்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த பலவிதமான பார்வைக் கட்டுரைகள் அத்தனையையும் திரட்டி ஒரு பெரிய நூலாக வெளியிட்டாலே அது ஒரு பாரிய செயலாக அமையும்.
குறிப்பிட்ட இந்தக் கல்விமான்களுடன் பத்திரி கைகளில் பத்திகள் எழுதுபவர்கள் பலரும் சில வேளைகளில் விமர்சனச் சாயல் கொண்ட திறனாய்வுகளை மேலோட்டமாகச் செய்துள்ளனர்.
செம்பியன் செல்வன், சில ஈழத்துச் சிறுகதைகளைத் தொகுத்துச் சில விமர்சனக் குறிப்புகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பலருக்கும் இந்தத் திறனாய்வு அல்லது விமர்சனம் என்பதைத் தரம் பிரித்துப் பார்க்கும் திறனில்லைபோல் தெரிகிறது.
வசதியை முன்னிட்டோ, சோம்பல் காரணமாகவோ, அறியாமையினாலோ, அபிப்பிராயம் கூறுபவர்கள் அனை
4

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
வருமே விமர்சகர்களாகக் கருதப்படுகின்றனர். அதனாற்றான், பலரும் சில தடவைகளில் விமர்சகர்களாகக் கருதப்பட்டு வந்துள்ளனர்.
ஒரு படைப்புப் பற்றிய விரிவான (ஆழமான) ஆய்வைத் திறனாய்வு எனலாம்.
சுருங்கச் சொல்லி (மேலோட்டமாக) விளக்குவதை மதிப்புரை எனலாம்.
மதிப்புரை பக்கவரையறைக்கு உட்பட்டது. திறனாய்வுக்கோ அத்தகைய கட்டுப்பாடு இல்லை. அனைவரும் புரிந்து கொள்வதற்காக எழுதப்படுவது மதிப்புரை. எனவே எளிமை, சுருக்கம் அவசியமாகிறது.
இலக்கியப் பயிற்சி மிக்கோருக்காக விரிவாக, அடிக்குறிப்புகளுடன், விரிவுரைகளுடன் திறனாய்வு எழுதப்படுகிறது.
புகழ்வதும், கண்டிப்பதும் திறனாய்வன்று. முழுக்க முழுக்கப் புகழ்மாலையும் அல்லது முழுக்க முழுக்கக் கண்டனமும் விமர்சனமாகாது. இலக்கியக் கொள்கைக்கேற்பத் திறனாய்வுப் போக்கு அமைகிறது.
(
பத்தி எழுத்தாளர்கள் (COLUMNISTS) இலக்கியப் பத்திரிகையாளர்கள் (LTERARY OURNALISTS) காலந்தோறும் கலை, இலக்கியம் தொடர்பான பத்திரிகைகளையும், மதிப்புரைகளையும் எழுதி வருகிறார்கள்.
இந்தப் பத்தி விமர்சனம் பற்றிய சில குறிப்புகள் இங்கு அவசியமாகிறது. திறனாய்விலிருந்து அல்லது இலக்கிய விமர்சனத்திலிருந்து இது சிறிது வேறுபட்டது என்பதை விளக்கச் சில வரிகள்:

Page 11
கே.எஸ். சிவகுமாரன்
மேலோட்டமான விமர்சனக் குறிப்புகள், தகவல்கள், அறிமுகம், மதிப்புரைகள் இப்பத்திரிகைகளில் அடங்கு கின்றன.
இடவசதியின்மை, ஜனரஞ்சகம், கண்டனத் தவிர்ப்பு (விமர்சனம் என்றால் கன்னா பின்னா என்று திட்டிக் கண்டிப்பதல்ல), திட்டவட்டமான முடிவுரைகளை வழங் காமை, பொருளைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறல், கவர்ச்சித் தலைப்பு, இடம் பொருள் ஏவலுக்கேற்ப அழுத்தம் மாறுபடல் போன்றவை பத்தி எழுத்துக்களுக்கும் பொதுவான அடிப்படை அம்சங்கள்.
திறனாய்விலே பல உட் கூறுகள் இருக்கின்றன; இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, மதிப்புரை, இலக்கியப் பத்தி எழுத்து, அறிமுகம். இலக்கியக் கொள்கை எத்தனை வகைப்படும் என்பன போன்ற விபரங்களை அறிய பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலைப் படித்துப் பாருங்கள்.
நமது நாட்டு இலக்கிய வரலாறுகள் பல வெளி வந்துள்ளன.
இவற்றிலே மறைந்த பேராசிரியர் வி. செல்வநாயகம் எழுதிய நூலில் அவரது சமகால இலக்கியம் பற்றிய சில விபரங்கள் அடங்கியுள்ளன.
நமது நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் (அநேகமாக எல்லோருமே) விரிவுரையாளர்களுடன் (தமிழ்த் துறைக்கு வெளியேயிருந்தும் பேராசிரியர் சி. சிவசேகரம் ஓர் உதாரணம்), வெளியேயிருந்தும் சில திறனாய்வாளர்கள் ஈழத்து இலக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து நூல் வடிவிலும், கட்டுரைகளிலும் தந்துள்ளனர்.
6

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
அவ்வாறு வெளியேயிருந்து பங்களிப்பைச் செய்தவர்கள்: மறைந்த, கனக செந்திநாதன், மறைந்த சில்லையூர் செல்வராசன், மறைந்த மு. தளையசிங்கம் ஆகியோரும், முருகையன், கே. எஸ். சிவகுமாரன், ஈழத்துச் சோமு, செம்பியன் செல்வன், ந. ரவீந்திரன், அ. யேசுராசா, தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, எஸ்தி, மு. பொன்னம்பலம், சி. சிவசேகரம், அன்புமணி, முகம்மது சமீம், மானாமக்கீன், மஃரூப் ஆகியோரும் இன்னுஞ் சிலருமாவர்.
நூல்வடிவிலில்லாது அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கும் இலக்கியக் கட்டுரைகளும், திறனாய்வுகளும், மதிப்புரை களும், பத்தி எழுத்துக்களும், அறிமுகங்களும் தொகுக்கப் படல் வேண்டும்.
அண்மைக்காலங்களில் புதிய இலக்கியப் பத்தி எழுத்தாளர்களாகப் பரிமாண வளர்ச்சி பெற்று வரும் புலோலியூர் ஆ. இரத்தின வேலோன், மற்றும் ஓரிருவர் தமது ஆக்கங்களை நூல் வடிவில் கொண்டு வர முயல வேண்டும். இவ்விதம் சிறு சிறு நூல்களும் திறனாய்வின் சகல அம்சங்களையும் பிரதிபலிக்கக் கூடிய நூல்களும் வெளி வந்தால், திறனாய்வின் அடிப்படை அம்சங்கள் பற்றித் தெளிவு ஏற்படக் கூடியதாய் இருக்கும். - தமிழ் நாட்டிலே பல திறனாய்வு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேராசிரியர் கைலாசபதியின் ஆரம்ப முயற்சிகளைத் தொடர்ந்து, பலர், அங்கு நல்ல திறனாய்வு நூல்களை எழுதியிருக்கின்றனர்.
திறனாய்வுக் கொள்கைக்கும், செயல்துறை விமர்சனத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?
7

Page 12
கே.எஸ்.சிவகுமாரன்
"இலக்கியப் படைப்புகளை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உரிய பொதுவான அடிப்படைகளையும், அளவுகோல்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர் சனத்துள் அடக்குவர்.
ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய படைப்பை நுணுக்கமாக ஆராய்வது, விளக்குவது அல்லது மதிப்பிடுவதைச் செயல்முறை விமர்சனத்தின் பாற்படுத்துவர்.
எனினும், செயல்முறை விமர்சனமும் வெளிப்படை யாகவோ மறைமுகமாகவோ விமர்சனக் கொள்கையாலேயே நிர்ணயிக்கப்படும் என்பது ஒரு பொதுவான உண்மையாகும்" (இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்)
கலை, இலக்கிய உலகங்களில் திறனாய்வு இன்றியமை யாததொன்று. கலையும் திறனாய்வும் பிரிக்க முடியாத நிலையில் ஒன்றோடொன்று பிணைந்து இருக்கின்றன.
ஒரு நல்ல கலைஞன் ஒரு நல்ல விமர்சகனுமாவான். ஒரு நல்ல திறனாய்வாளன் கலை உணர்வு கொண்ட வனுமாக இருப்பான். கவிதை புனைகதை, நாடகம், திரைப் படம், இசை, நாட்டியம், ஓவியம் போன்ற கலை இலக்கியத் துறைகளில் விமர்சனம் பெரும் பங்கு எடுக்கின்றது.
திறனாய்வு என்பது முடிந்த முடிபல்ல. கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய திறனாய்வாளன் ஒருவனின் தனிப்பட்ட கருத்தே திறனாய்வாகும்.
தனிப்பட்ட கருத்தை அவன் தனது கல்வி, கேள்வி, அறிவு, அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்பத் தெரிவிக்கிறான்.
உண்மையில் நாம் ஒவ்வொருவரும் விமர்சகரே. விரல் சூப்பும் சிறு குழந்தை கூட தனக்கு மகிழ்ச்சி ஏற்படும் போதும், அதனை வெளிக் காட்டிச் சிரிக்கும் போதும் தனது விமர்
8

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
சனத்தையே அங்கு செய்கிறது. அதாவது எதிரொலியின் வெளிப்பாடே விமர்சனமாகும்.
திறனாய்வு என்றால் குற்றம் குறை கண்டுபிடிப்பது மாத்திரமல்ல; அல்லது செஞ்சோற்றுக் கடனாக உபசார வார்த்தைகளால் பன்னிர், மல்லிகைப் பந்தல் போடுவதுமல்ல, மேலும் பல அம்சங்களையும் உள்ளடக்கிய ஒன்றாகும்.
நாம் ஒவ்வொருவருமே திறனாய்வாளர் என்றாலும் சில பிரத்தியேக பயிற்சிகளால் எம்மில் சிலர் ஒரு கலைப் படைப்பை நுட்பமாக அணுக முடிகிறது. தீர்க்கமாக அல்லது ஊடுருவிப் பார்க்க முடிகிறது. இந்தப் பயிற்சி அடிப்படைக் கல்வி கொண்டு உருவாகி, பின்னர் பல்முனைக் கலை இலக்கியப் பரிச்சயத்தினால் கூர்மை பெறுகிறது. திறனாய் வாளன் தனது பார்வையை விருத்தி செய்து கொள்கிறான்.
திறனாய்வில் எல்லாவற்றையுமே விமர்சித்து விடலாம் என்றில்லை.
ஒரு விமர்சகர் ஆய்வறிவு ரீதியாக பார்த்தால், இன்னொருவர் உணர்ச்சி மயமாகவே பார்ப்பார்.
மற்றொருவர் வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பிறிதொருவர் சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்.
ஒருவர் 'கலை என்பதே மாயத் தோற்றம்’ என்ற நிலை பிறழ்ந்த அடிப்படையில் விமர்சித்தால், வேறொருவர் நிதர்சன உலகில் காலூன்றிக் கொண்டு, பார்ப்பார்.
ஒருவர் வேண்டியவர் என்றபடியால், தாராளமாக விமர்சிப்பர். மற்றவர், வேண்டாதவர் என்ற காரணத்தால் காரசாரமாகத் திட்டுவர்.
இன்னொருவர் பத்திரிகை ரக விமர்சனம் எழுதுவார். ஒருவர் விரிவாக நுணுக்கமாக எழுதுவார்.
வேறு சிலர் பத்திரிகைகளில் எழுதும்போது மொட்டையாக அபிப்பிராயம் தெரிவிப்பர்.
9

Page 13
கே. எஸ்.சிவகுமாரன்
இப்படி விமர்சனம் பலவகை. விமர்சகர்களும் பல வகை
யினர்.
கலைகளும் பலவகை. உலகமே பலவிதம். அதற்காக ஒருவர் கூறியது சரியென்றோ, பிழை யென்றோ விவாதிக்கும் கேள்வியே இல்லை. அது, அது அவரவர் அபிப்பிராயம் என்று எடுப்பதுதான் சரி. ஆனால், எல்லாவித அபிப்பிராயங்களிலும் உண்மை ஒளிந்து கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.
உண்மையைத் தேடுவது தானே நூற்றாண்டுகளாக மனிதன் எடுக்கும் முயற்சி.
ஒரு காலத்தில் பிறக்கும் தத்துவம் வருங்காலத்தில் வலுவிழப்பது சகஜம்தானே?
காலம் மாறினால் கருத்தும் மாறுவது இயற்கை. மாற்றமே இயற்கையின் நியதி.
கண்ணியம், நேர்மை, தரிசனம், சத்தியம் ஆகியன இல்லாவிட்டால் கலைஞர்கள், விமர்சகர்கள் என்று நாம் கூறிக் கொள்வதில் எள்ளளவும் பயன் இல்லை. விமர்சனம் மருந்து போன்றது. உயிரைப் பறிப்பதோ, கொடுப்பதோ விமர்சனம் அல்ல. இறுதி ஆய்விலே, ஓர் இலக்கியப் படைப்பின்
பயன்பாட்டைக் காலம் தான் தீர்மானிக்கின்றது.
( ( )
லெஜிஸ்லற்றிவ் கிறிற்றிஸலிஸம் (LEGISLATIVECRITICSM) Supbflé,56) digSp56mSenoid (THEORETICAL CRITICISM), Lq6io கிறிப்டிவ் அல்லது அனாலிடிக்கல் (DESCRIPTVE OR ANALYTICAL) கிறிற்றிஸலிஸம் என்று மூன்று வகையாக ஆங்கில இலக்கிய விமர்சன முறையை வகுக்கலாம் என்கிறார் ஜோர்ஜ் வொட்ஸன் என்ற விமர்சகர்.
10

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இப்படித்தான் கலைகள் அமைய வேண்டும் என்று சட்டதிட்டம் செலுத்துதல்; அழகியல் ரீதியாக கலைகளை அணுகுதல் பகுப்பாராய்வு என்று இவற்றை விளக்கலாம்.
1920ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் NEW CRITICSM என்றொரு புதிய இலக்கிய விமர்சன இயக்கம் ஆரம்பமாகியது.
இதில் நாட்டம் கொண்டவர்கள், ஒரு படைப்பை வெவ்வேறு பகுதிகளின் இணைப்பைக் கொண்டும், படைப்பில் உள்ள சிக்கலான விஷயங்களை மனதில் கொண்டும் படைப்புக் கொடுக்கும் முழு அனுபவத்தைக் கிரகிக்கும் விதத்திலும், விமர்சனம் அமைய வேண்டுமே யன்றி, தார்மீக வரலாற்றுச் சமூகப் பார்வைகளைக் கொண்டு மதிப்பிடுவது தவறு எனக் கூறுகிறார்கள்.
எல்லா விதமான பார்வைகளும் அதனதன் அளவில் விரும்பத்தக்கதாயினும் சமூகப் பணிப் பண்பை முதல் நோக்கமாகக் கொண்டு விமர்சிப்பதே சிறப்பாகத் தெரிகிறது. தவிரவும் காரணங்கள், சான்றுகள் இல்லாது திறனாய்வு செய்தல் உகந்ததாகா.
புத்தக மதிப்புரை, ஆய்வு, ரசனை, இலக்கிய சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனம், அறிமுகம் மற்றும் வரலாற்றுச் சமூக தத்துவார்த்த உளவியல் சார்ந்த மதிப்பீடுகள், மொழிச் சிறப்பு ஆய்வு போன்ற பல்வேறு விஷயங்களும் இலக்கியத் திறனாய்வில் உட்படத் தக்கவை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆயினும், கண்டதைச் செப்புவது விமர்சனமாகாது. அதற்கென்று ஒரு நெறி வேண்டும்.
இலக்கிய விமர்சனம் என்பது கற்கவேண்டிய உத்தியே அன்றி, அறிவுக்குவியலை ஆளும் சக்தி பெறப் பயிலும்
பாடம் அல்ல.

Page 14
கே.எஸ்.சிவகுமாரன்
வாழ்க்கையைப் போன்று விமர்சனத்தின் எல்லைக் கோடுகளும் விரிந்தவை.
கலை என்பது எவ்விதம் தூய்மையானது அல்லவோ அதே போன்று திறனாய்வு என்பதும் தூய விவகாரம் அல்ல.
இலக்கிய திறனாய்வில் தூய அழகியல் மூல அளவோ, பரிமாணமோ இல்லை. அழகியல் உள்ளடக்கமும், அகவய வெளிப்பாடும் மாத்திரம் அல்லாது, முதிர்ந்த, ஆழமான, விசாரணையும் முக்கியமாகச் சேர்ந்தே அழகியல் முறையான விமர்சனம் உருவாகின்றது.
ஓர் ஆசிரியனின் அல்லது கலைஞனின் அடிப்படைக் கோட்பாடுகள், உத்தேசங்கள், பயன்மதிப்புகள் ஆகியவற்றை யும் அவன் வாழும் காலத்தையும் எடை போட்டே ஒப்பியல் ரீதியில் அவனது படைப்புகள் பற்றிய மதிப்பீடு எழுகின்றது. ஒரு படைப்பு தன்னை எப்படிக் கவர்கின்றது என்பதை திறனாய்வாளன் பலவிதங்களில் விளக்குகின்றான்:
தத்துவார்த்தமாக செயல்முறையாக உறுப்பார்த்தமாக உளவியல் சார்ந்ததாக மதிப்பீட்டை செய்வதுடன் ரசனை வெளிப்பாடாகவும், விளக்க அறிமுகமாகவும், பல விதங்களில் விமர்சகன் விரிவாகச் செயற்படலாம். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பயனுடைத்தானவை.
செய்யுளுக்கு அணி இலக்கணம் செய்தல், உரை எழுதுதல், அரங்கேற்றம் செய்தல் முதலியன அன்று திறனாய்வுக் கலையாகக் கருதப்பட்டன.
புதுவெள்ளம் எனப் பாய்ந்து வந்த மேலைத் தேசச் செல்வாக்கினால் உருமாறிய அல்லது புதுப்பாதைகளில் சென்ற தமிழ் இலக்கியக் கடல் மொத்தத்தில் பயனையே பெற்றது.
பண்டைய தமிழ் மொழி நவீன உலக மொழிகளில் ஒன்றாகவும் கருதப்படுவதற்கான காரணம், அது காலத்தின்
12

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
போக்கிற்கு ஏற்றவாறு நெளிந்து வளைந்து கொடுப்பதனால் தான்.
ஆங்கிலம் போன்ற பிறமொழிகளைக் கற்ற தமிழர்கள் சிறுகதை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம் போன்ற புது இலக்கியத் துறைகளில் அக்கறை காட்டினர்.
தமிழ் சிறுகதையின் தந்தை எனக் கருதப்படும் வ. வே. சு. ஐயரே தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சனத் தந்தை என்று சிலர் கூறுவர். அவர் எழுதிய கம்பராமாயண ரசனை, ஆங்கில இலக்கிய விமர்சன அடிப்படையில் எழுதப்பட்டது. கம்பனை ஹோமர், வால்மீகி போன்ற பிற மொழிக் கவிஞர்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி பூர்வமான முறையில் அவர் எழுதி யுள்ளார். தற்கால விமர்சனத்தின் போக்கிற்கு அடிகோலிய வராகவும் வ. வே. சு. ஐயரைக் கருதுவதில் தவறில்லை என்பர் ક6oii.
டி. கே. சி. ஓர் இரசிகர். இதய ஒலியில் விமர்சனச் சாயல் சிறிது உண்டு. முத்து சிவன், மு. வரதராசன், சிதம்பர ரகுநாதன், அ. ச. ஞான சம்பந்தன், ஏ. வி. சுப்பிரமணிய ஐயர், மு. அருணாசலம், ப. கோதண்டராமன், க. நா. சுப்பிரமணியம், எழில் முதல்வன், வெங்கட் சாமிநாதன், கேசவன், தோதாத்ரி சி. சு. செல்லப்பா, சிட்டி, சோ. சிவபாதசுந்தரம், சாலை இளந்திரையன், தமிழவன் போன்ற பலர் விமர்சன சாயல் படிந்த நூல்களையும் விமர்சனம் பற்றிய நூல்களையும் தமிழ் நாட்டிலே எழுதி இருக்கிறார்கள்.
தமிழில் திறனாய்வுக் கலைபற்றி ஆதார பூர்வமாக அறிந்து கொள்ள, பேராசிரியர் கைலாசபதியின் நூல்கள் பெரிதும் உதவும். அவருடைய நூல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் ஆராய்ச்சி பூர்வமான திறனாய்வு நூல்களாக விமர்சனம் பற்றியவையாக இருக்கின்றன.
a
13

Page 15
கே.எஸ்.சிவகுமாரன்
இலக்கியமும் திறனாய்வும் என்ற அவருடைய நூல் குறிப்பாகப் பயிலப்பட வேண்டியதொன்று. இந்த நூல் தவிர, 'கலைச்செல்வி' என்ற மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை வெளியீடான 1971ஆம் ஆண்டிற்குரிய ஏட்டில் எழுதப்பட்ட தற்காலத் தமிழ் இலக்கியத் திறனாய்வுப் போக்குகள் என்ற கட்டுரையும் இலங்கை கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழு வெளியிட்ட ஏட்டில் 'ஈழத்து விமர்சனத் துறை பற்றி எழுதப்பட்ட கட்டுரையும் இவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியவை.
தமிழில் மூன்று விதமான விமர்சனப் போக்குகள் இருக்கின்றன என்று கைலாசபதி தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் கூறுகிறார்: 'சங்க இலக்கியங்கள் என்று வழங்கப்படும் சான்றோர் செய்யுட்களைத் தொகுத்தளித்த ஆசிரியர்களில் இருந்து, பழந்தமிழ் இலக்கியத்திற்கு விளக்கம் செய்த இடைக்கால ஆசிரியர்கள் வரை, நூல்களின் தரத்தையும், நலத்தையும் மனம் கொண்டு இலக்கியப்பணி புரிந்தவர்கள் எல்லோரும், ஏதாவது ஒரு வகையில், திறனாய்வு நோக்கமுடையோராய் இருந்தனர் என்பதில் ஐயமில்லை.
மொழியியல், உளவியல், மானிடவியல், சமூகவியல், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளில் தாக்கத்தை இன்றைய இலக்கியத் திறனாய்விலே காணலாம். எனினும் அது தன்னளவில் முழுமையான இலக்கியப் பிரிவாக வளர்ந்திருக்கின்றது." -
அதே வேளையில், நவீன தமிழ் இலக்கிய விமர்சனம் முற்று முழுதாகப் பிறநாட்டுத் திறனாய்வின் எதிரொலியே என்று தவறாகக் கருதப்படக் கூடாது என கலாநிதி கைலாசபதி வலியுறுத்துகிறார்.
14

மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இதற்குக் காரணம் காட்டும் அவர், "மேற்கு நாடுகளில் நவீன திறனாய்வுக் கொள்கைகளும், நடைமுறைகளும் தோன்ற ஏதுவாக இருந்த அதே காரணங்கள், தமிழ்ச் சமுதாயத்திலும் கடந்த சில தசாப்தங்களாக உருவாகி வந்திருக்கின்றன. அதாவது, புதிய திறனாய்வு தோன்றி வளர்வதற்கு இன்றியமையாக் கூறுகள் எமது மொழியில் இருக்கின்றன. பழைய அளவைக் கட்டளைகளில் இருந்து விடுபட்டு, திறனாய்வாளர் தமது கவனத்தைச் செலுத்தத் தக்க, தகுதிபெற்ற, புத்தம் புதிய ஆக்கங்கள், எதிர்கால இலக்கியத்தைப் பற்றிய நம்பிக்கையையும், உள்ளக் கிளர்ச்சியையும் நல்ல திறனாய்வு தோன்றுவதற்குமுரிய முன்னிடுகளாக இருந்தன."
திறனாய்வுத் துறையில் ஈடுபட்டவர்களை மூன்று பெரும் பிரிவினராக வகுக்கலாம்.
வ. வே. சு. ஐயர் முதல் மார்க்கபந்து வரை ஆராய்ச்சி சம்பந்தமான திறனாய்வுகளை ஒரு சிலர் செய்தனர்.
ஆனால், அவை "நவீன திறனாய்வு முலாம் பூசப்பட்ட புதிய விருத்தியுரைகளாகவே அமைந்திருப்பது உறுதிப் படுத்தப்படும்" என்று கைலாசபதி கூறுகின்றார்.
டி. கே. சி. போன்றவர்கள் இரண்டாவது பிரிவினர்.
மூன்றாவது பிரிவினராக கு. ப. ராஜகோபாலன், சிட்டி, புதுமைப்பித்தன், க. நா. சு. சி. சு. செல்லப்பா, கனகசபாபதி, வெ. சாமிநாதன், சித்திரபாரதி, எழில் முதல்வன், பிச்சமூர்த்தி, ரி. கே. துரைசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
எழுத்து, நடை, கணையாழி, கசடதபற, ஞானரதம், தீபம், பரிமாணம், வைகை, யாத்ரா, படிகள் போன்ற பத்திரிகைகளில் இவர்களுடைய விமர்சனங்கள் வெளி வந்திருக்கின்றன.
சமகால விமர்சகர்களில் ஈழத்து விமர்சகர்கள் தமிழ் நாட்டிலும் கெளரவிக்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டு விமர்சகர்
15

Page 16
கே.எஸ்.சிவகுமாரன்
களில் வையாபுரிப்பிள்ளை, பொ. திரிகூட சுந்தரம்பிள்ளை, சிதம்பர ரகுநாதன், வல்லிக் கண்ணன், ஆர். கே. கண்ணன், தி. க. சிவசங்கரன், நா. வானமாமலை, ஏ. வி. சுப்பிரமணிய ஐயர் போன்றோரும் ஈழத்தவர்களில் சிலரும் ஆழமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்பர். தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பல புதிய விமர்சகர்கள் தோன்றி வருகிறார்கள்.
வரலாற்றுப் பார்வை, சமூகநோக்கு, அழகியல் அக்கறை ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று அனுசரணையாகவும்,
ஒன்றையொன்று பின்னிச் சார்ந்தவையாகவும் கொண்டு கலை, இலக்கியங்களை ஆராய்வதே மேல்.
( )
விமர்சனம் / கட்டுரை CRTICSM என்றால் "கண்டனம்" என்று பொருள் கொள்வது இயல்பே; ஆனால் கலை இலக்கியங்களுக்கு 'கிரிட்டிஸிஸம்" என்ற வார்த்தையைப் பிரயோகிக்கும் பொழுது அது பிரத்தியேகமான பொருளைக் கொடுக்கிறது. கலை இலக்கியங்கள் பற்றிய மதிப்பீட்டைத் தமிழில் திறனாய்வு என்று கூறுவது வழக்கம். திறனாய்வும் கண்டனமும் சேர்ந்ததே "கிரிட்டிஸிஸம்"
CRITICISM என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம், "கவனமாக மதிப்பீடு செய்தல் அல்லது தீர்ப்பளித்தல்" என்பதாகும்.
கிரேக்க மொழியில் "கிரிட்டிக்" என்றால், "தீர்ப்பளிக்கத் தகைமை பெற்றவன்" எனப் பொருள்படும்.
எனவே, திறனாய்வாளன் நொட்டை சொல்பவன் மாத்திரமல்லன், கண்டனக்காரன் மாத்திரமல்ல; பாராட்ட
16

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
வேண்டியவற்றைப் பாராட்டிக் கவனமாக மதிப்பீடு செய்து தனது அபிப்பிராயத்தை ஒளிவு மறைவின்றி உள்ளது உள்ளபடி கூறுபவனுமாவான்.
இலக்கிய விமர்சகன், நாடக விமர்சகன், திரைப்பட விமர்சகன், இசை விமர்சகன், சித்திர விமர்சகன், நாட்டிய விமர்சகன், வானொலி, தொலைக்காட்சி விமர்சகன் என்று இவ்வாறு பல விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
பாரபட்சமற்ற விமர்சனமே ஆக்கப்படைப்புக்கு உதவும். அல்லாவிட்டால் குழு சார்பான விமர்சனம் பெருகிவிடும். அதே வேளையில் முற்றிலும் சார்பற்ற விமர்சனம் எழுதுவது கடினம். ஏனெனில் விமர்சகனும் மனிதனே. அவனது விருப்பு வெறுப்புகளுக்கு அமையவே அவனது விமர்சனக் கோணம் அமைகிறது.
பெறுமானமற்ற படைப்புக்கு வக்காலத்து வாங்குவதும் பொதுப்படையான விமர்சன அபிப்பிராயத்திற்கு எதிர்ப்புக் காட்டுவதற்காக விமர்சகர்கள் அல்லாதவர்களை விமர்சனம் எழுதச் சொல்லி எழுதுவித்து வெளியிட்டு மேற்கோள் காட்டி வரலாற்றில் இடம் பெறுவதற்காகச் செயற்கையாக முயற்சிகள் எடுப்பதும் அந்த நேரத்தில் பலனளித்தாலும் கால ஓட்டத்தில், தற்காலிக அல்லது "திடீர் விமர்சகர்" பெயர் அடிபட்டுப் போய்விடும்.
நாடகத்தை எடுத்துக் கொண்டால், ஒரு நாடக விமர்சகன் அவசியம் நாடகங்களைப் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், நாடகவியலைக் கற்றறிய வேண்டும்.
விமர்சனத்தைக் கட்டுரை இலக்கியத்துக்குள் அடக்குவதா? அல்லது தனியாக வகுப்பதா? கட்டுரை இலக்கியம் என்று ஒன்று தமிழில் இருக்கிறதா? அப்படி யாயின் அதுபற்றி ஏன் விரிவாகவோ, ஒரு வரியிலோ இலக்கிய வரலாற்றாசிரியர்கள் எழுதவில்லை? இலக்கியக் கட்டுரை களைக் கட்டுரை இலக்கியம் என்பதா என்பது இன்னொரு
17

Page 17
கே. எஸ்.சிவகுமாரன்
கேள்வி, இலக்கியம் பற்றிய கட்டுரைகளை மாத்திரம் இலக்கியக் கட்டுரைகள் என்பதா அல்லது இலக்கியப் படைப்புக் கொடுக்கும் அறிவும் அனுபவமும் கலந்த சுவையைத் தரும் கட்டுரையை இலக்கியக் கட்டுரை என்பதா? இவை எல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.
குறிப்பிட்ட படைப்பைப் பற்றிய மதிப்பீட்டை விமர்சனம் என்றால், ஒரு படைப்பு இயல் சம்பந்தமான விளக்கக் கட்டுரையை (உதாரணமாக நாவல் என்றால் என்ன என்று விளக்கும் கட்டுரையை) விமர்சனக் கட்டுரை என்பதா? இலக்கியக் கட்டுரை என்பதா? ஒரு படைப்பை வரலாற்றுப் பின்னணியில் மதிப்பிட்டு இலக்கிய வரலாறு எழுதும் பொழுது அதனை விமர்சன முயற்சி என்று கூறுவது தவறா? இவை எல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.
திறனாய்வு பற்றித் தமிழகத்திலே வெளிவந்த நூல்களில் ஒன்றுதான் இலக்கிய விமர்சனம் என்ற நூல். சிதம்பரரகுநாதன் எழுதிய இந்நூல் 1948இல் முதன் முதலில் வெளிவந்தது. இன்றுவரை பல பதிப்புகள் வெளியாகியுள்ளன. சிதம்பர ரகுநாதன் ஓர் ஆக்க இலக்கியக்காரருங் கூட, நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், ஆராய்ச்சி, விமர்சனம் போன்ற துறைகளில் ஈடுபட்டவர். இவர் பத்திரிகாசிரியராகவும் விளங்கினார்.
"இலக்கிய விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம், இவைகளின் ஜிவிதத் தைக் கொண்டு, தமிழுக்கு, இலக்கிய விமர்சனம் புதிதல்ல என்று சாதித்துவிட முடியாது, ஏனைய நாட்டு இலக்கியங்களின் மேதாவிலாசத்தோடும் தத்துவங்களோடும் நம் நாட்டின் இலக்கியத் தத்துவங்களையும், அசுர சாதனங் களையும் எடை போடுவது இந்த இருபதாம் நூற்றாண்டில் தான் தலையெடுத்திருக்கிறது" என்று கூறும் சிதம்பர ரகுநாதன், "இந்தத் தலைமுறையைத் தொடங்கி வைத்தவர்
18

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
காலஞ்சென்ற வ. வே. சு. ஐயர் என்றே சொல்லலாம்" என்கிறார்.
அ. சீனிவாசராகவன், எஸ். வையாபுரிப்பிள்ளை, புதுமைப் பித்தன் என்ற சொ. விருத்தாசலம் ஆகியோரின் விமர்சன நூல்கள் குறிப்பிடத் தக்கவை என்பதும் ரகுநாதனின் அபிப்பிராயம்.
இலக்கிய கர்த்தாவின் இதய அனுபவத்தை எடை போட்டு நிறுப்பது விமர்சனம் என்னும் ரகுநாதன் "காமம் செய்யாது கண்டதை மொழிவதுதான் விமர்சனம். காமம் செப்புவது சுலபம். கண்டது மொழிவதோ என்றால் அதுதான் கஷ்டமான காரியம்" எனவும் கோடிட்டுக் காட்டுகிறார்.
இலக்கியம் மனித சிந்தனையின் அளவு கோலாக இருக்க, சமுதாயமும் நாகரிகமும் செயலின் அளவு கோல்கள் என விவரித்த ஆசிரியர், இலக்கிய விமர்சனத்தின் சமுதாயத் தேவையை இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"ஒரு நூலின் தேவை. அதிலுள்ள கருத்துக்கள் சமுதாயத்துக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளன என்பதை பொறுத்ததுதான், அதன் மதிப்பும்.
இலக்கிய விமர்சகன் அந்த மதிப்பைத்தான் எடைபோட வேண்டும்.
விமர்சனம் ஒரு நூலின் மதிப்பையும், அதிலுள்ள கருத்துக்களை ஆசிரியன் எப்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுகிறான் என்பதையும் பொறுத்திருக்க வேண்டும்"
இங்கு ரகுநாதன் விமர்சனத்தின் ஒரு பண்பைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதை அவதானிக்கலாம்.
மேலும் விளக்குவனபோல, ரகுநாதனின் மற்றைய கூற்றுக்கள் அமைந்துள்ளன.
"ஆசிரியன் எடுத்துக் கொண்ட கருமத்தில் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறான். அல்லது தவறி இருக்கிறான்
9

Page 18
கே.எஸ்.சிவகுமாரன்
என்பதைக் கொண்டே அந்த நூலின் மேன்மை, தாழ்மையை நிர்ணயிக்க வேண்டும்.
அதுபோலவே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களையே உண்மையெனக் கருதி, அதற்கு அப்பாற்பட்ட உண்மைகளை ஏற்க மறுப்பதும், அதை நிராகரிப்பதும் விமர்சகர்களின் வேலையல்ல.
இலக்கியம் வரம்புகளைக் கடந்து நின்று இதய நீதி கூறுவது.
ஒப்புக் கொள்ளப்பட்ட, விரும்பப்பட்ட அபிப்பிராயம் என்பதையும் கடந்து நின்று புதுப்புது விஷயங்களை, புரட்சிகரமான கருத்துக்களைப் படைக்கக் கூடியது.
ஆகவே நிரூபணம் செய்யப்பட்ட விஷயங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை இலகுவில் ஒதுக்கிவிட (փլգայո Ցl.
அந்த விஷயத்தின் தன்மையை, பாரபட்சமற்று உணர்ந்து, அதற்குரிய மதிப்பைச் செலுத்துவதே விமர் சகனின் கடமையாய் இருக்க வேண்டும்.
ஆகவே, ஒரு நூலில், அதன் மதிப்பை அதன் தன்மையைக் கொண்டே அளவிட வேண்டும் என்றாகிறது.
நூலைத்தான் மதிப்பிட வேண்டுமேயொழிய, நூலாசிரியனின் கருத்துகளில் தலையிட்டு அவனைத் தடைப்படுத்த எண்ணக் கூடாது.
நூலாசிரியனுக்கும் விமர்சகனுக்கும் நூல் ஒன்றுதான் தொடர்புச் சங்கிலியாக இருக்க வேண்டும். அதாவது விமர்சகன் நூலாசிரியனின் உரிமைகளில் தலையிடக் கூடாது."
மேற்சொன்ன கருத்துக்களில் இருந்து, சிதம்பர ரகுநாதன் ஒரு நடுநிலைமை வகிக்கும் பாரபட்சமற்ற விமர்சகர் என்பது தெரியவருகிறது.
20

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இலக்கிய விமர்சனம் என்ற தமது நூலில், சிதம்பர ரகுநாதன் கலை, கலை மரபு, மொழி, கவிஞன், கவிதை, சிறுகதை, நாடகம், வசனம் போன்றவை பற்றியும் சில விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
மனித சிந்தனையும், அனுபவமும் கலை என்பவர், சிந்தனை மட்டும் போதாது என்றும், அதை வெளியிடவும் கலைஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் ஆசிரியர்.
மேலும் அவர் கூறுகிறார், கலைஞன் என்றால் அவனுக்கு சிந்தனா சக்தியும், கற்பனையும் மட்டும் போதாது. அதை ஒரு சாதனம் மூலம் உருவாக்கவும் தெரியவேண்டும்.
எத்தனையோ உள்ளங்களில் தாறுமாறாய் உலைந்து கிடக்கும் எண்ணங்களைக் கலைஞன் ஒழுங்கு செய்து, அவற்றை வெளியிலும் கொண்டு வந்து விடுகிறான்.
நமது மனசிலே கிடந்து வெளிவர முடியாமல் புழுங்கித் தவிக்கும் இன்பத்தை, வேதனையைக் கவிஞன் கற்பிதம் பண்ணி எழுதிவிட்டால் நாம் ஒரு நிவர்த்தி கண்டு துள்ளுகிறோம்.
ஆகவே, கலையைப் படைப்பதற்குச் சிந்தனை மட்டும் போதாது; அதை வெளியிடவும் தெரிய வேண்டும். கற்பனையும் சிருஷ்டி சக்தியும் கூடிப் பிறக்கும் குழந்தைதான் கலையாயிருக்க முடியும்."
கலைஞர்களைக் கவின் கலைஞர்களென்றும் பயன் கலைஞர்களென்றும் பிரிக்கும் நூலாசிரியர் ஜனசமூ கத்துக்கும் கலை உள்ளத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தும் ஒரு சாதனம் கலை எனக்கூறி, இரு கலைகளும் இருந்துதான் தீரவேண்டும். இரண்டு கலைஞர்களும் வாழட்டும் என்று நிதர்சன நிலையை அங்கீகரிக்கிறார்.
2

Page 19
கே.எஸ்.சிவகுமாரன்
கலை மரபில் உருவம் வகிக்கும் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டும் ரகுநாதன், மேலை நாட்டுக் கீழை நாட்டுக் கலைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
உதாரணமாக: "மேல் திசைக் கலை, இயற்கையை அப்படியே மொழி பெயர்க்க எண்ணுகிறது."
"நமது கலை இயற்கையைத் தழுவித் தனது இதய பாவத்தையும் கலந்து தருகிறது.
மேல் நாட்டார் தமது கலையில் ஜீவனைக் கொண்டு வருவதோடு மட்டுமன்றி, அதில் இதயத்தையும் படைப் பதற்காக, இயற்கையைத் தம்முடையதாக்குகிறார்கள். அதாவது புறத்தோற்றத்தின் அமைப்பை அப்படியே மேல்நாட்டார் சமைக்கிறார்கள்.
கீழ் நாட்டார் அகத் தோற்றத்தின் பாவத்தைத் தெரிவிக்க உறுப்பமைப்புகளில் அதீதத் தன்மை கொடுத்து இதயப் பண்பை வலியுறுத்துகிறார்கள்" என்ற வரிகளைக் குறிப்பிடலாம்.
சிதம்பர ரகுநாதனின் முதிர்ச்சியைக் காட்டுவது போல இலக்கியத்தில் உருவம் வகிக்கும் பங்குபற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:-
"எந்தக் கலையும் மனிதனுடைய சிந்தனையில் பிறந்து கண், மூக்கு உள்ள ஓர் உருவம் பெற்றதோடு, உயிரும் பெய்யப் பெற்றதுதான் என்றே சொல்ல வேண்டும்.
அதாவது இதய அனுபவத்தின் வெளியீடு மனித சிந்தனை வழியாகப் பிறவாதது கலையல்ல.
உணர்ச்சிக் கலப்புகளின் வார்ப்பு, அமைப்பு, விஸ்தீரணம் இவையெல்லாம் கர்த்தாவின் மனோபாவத்துக்கு
22

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
விட்டுவிட வேண்டியவை; விடாவிடில் அந்தச் சுதந்திரத்தை அவர்கள் தாமாகவே தட்டிப் பறித்துக் கொள்வார்கள்.
ஆனால் கட்டுக் கோப்புக்கு ஓர் உருவம் வேண்டும். அரங்கின்றி, வட்டாடி விட முடியாது. இந்தக் கட்டுக் கோப்பு, இப்படித்தானிருக்க வேண்டும் என்று வாதாடுவதும் கூடாது.
எனினும், பல கட்டுக்கோப்புகள் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. சில தனித்தும் நிற்கின்றன."
இவ்வாறு குறிப்பிடும் ரகுநாதன், வடிவம் புதுப்புது வடிவங்களைப் பெற்று வருவது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். "இலக்கியக் கனவுகளும் அபிலாஷைகளும் விருத்தி அடைந்து, இலக்கியம் வளர வளரப் புதுப்புதுச் சட்டைகளும், சட்ட விஸ்தீரணமும், நெளிவு, சுழிவுகளும் தாமாகவே அமைந்து விடுகின்றன."
ஆதலால், ‘என்றைக்கும் இலக்கண விசாரம் அதிகம் தேவையில்லை. அதைப் பற்றிச் சர்ச்சை செய்வது வெறும் கிளியந்தட்டு விவகாரம்’ என்கிறார் ரகுநாதன்.
உலகில் தலை சிறந்த இலக்கியங்கள் எனக் கருதப்படுபவை எந்தவிதமான காலதேச வர்த்தமானத்தாலும் சிதைவுபட்டு விடாத, மனித குணங்களை அடிப்படையாகக் கொண்டவற்றைப் பொறுத்ததுதான்.
உலக மகா சிருஷ்டி கர்த்தாக்கள், இதைத்தான் செய்கிறார்கள் என்கிறார் இந்த மார்க்சிய விமர்சகர்,
கலைக்கு உருவம் அவசியமானது என்று வலியுறுத்தும் சமுதாய இலக்கியப் பார்வை கொண்ட இவ்விமர்சகர், பிரசாரம் பற்றிக் கூறியிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. அவர் கூறுபவற்றைப் பாருங்கள்:-
23

Page 20
கே.எஸ்.சிவகுமாரன்
"நேரடியான பிரசாரத்தால் கலையின் உயர்வு மழுங்கி விடுகிறது. கலையில் பிரசாரம் பிறந்த மேனியாக வந்தால், மக்கள் மசிவது கஷ்டம். அதற்குப் பதிலாகக் கதையோடு கதையாய் அவர்களை இழுத்துச் சென்று அவர்களை அறியாது தம் வழியிலே இழுப்பது தான் கலைஞர் தொழில்."
சிதம்பர ரகுநாதனின் கன்னிகா, பஞ்சும் பசியும், வென்றிலன் என்றபோதும், புதுமைப் பித்தன் வரலாறு, ரகுநாதன் கவிதைகள், கங்கையும் காவிரியும், சமுதாய இலக்கியம் போன்ற நூல்களும் படித்துப் பயன் பெறத் தக்கவை. நவீன தமிழிலக்கியத்தில் சிதம்பர ரகுநாதன் அல்லது திருச்சிற்றம்பலக் கவிராயரின் பங்களிப்பு குறைந்ததல்ல.
G OG ÓG
24

திறனாய்வு: அணுகுமுறைகள்
ஒரு படைப்பைப் பற்றி விரிவாக (ஆழமாக) ஆராய்வது திறனாய்வு என்றால், மேலோட்டமாக ஆராய்வது மதிப்புரை எனலாம். ‘ரிவியூ (REVEW) (மதிப்புரை), 'கிரிட்டிசிஸம்" (CRITICSM) (திறனாய்வு அல்லது விமர்சனம்) என்பர் ஆங்கிலத்தில்,
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒராசிரியர் விளக்கியிருக்கிறார்.
'மதிப்புரை, பக்க வரையறைக்கு உட்பட்டது. திறனாய்வு பக்கவரையறைக்கு அடங்காதது.
மேலோட்டமாகவும், எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளத் தக்க நடையிலும் எழுதவேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
திறனாய்வு மிக அழகாகவும் அகலமாகவும், இலக்கியப் பயிற்சி மிக்கோருக்கென எழுதப்படுவது.
எனவே தாம் மதிப்பிடும் நூலுக்கு மதிப்புரை வெளியிடுவதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டிய பணியை மேற்கொள்ளும் மதிப்புரையாளர் திறனாய்வுக் கண்ணோட் டத்தில் எழுதலாம்.
25

Page 21
கே.எஸ். சிவகுமாரன்
ஆனால், திறனாய்வாகவே எழுத முடியாது. திறனாய்வாக எழுதவேண்டுமெனில் அம்மதிப்புரை யாளர் தனியான கட்டுரையாகவோ, நூலாகவோதான் எழுத வேண்டும். (இலக்கியத் திறனாய்வு - ஓர் அறிமுகம் - சி. இ. மறைமலை)
பல்கலைக் கழக விமர்சகர்கள் பலரும், ஆக்க இலக்கி யத்தில் ஈடுபட்ட சிலரும் நல்ல திறனாய்வாளர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைப் பத்தி எழுத்தாளர்கள் சிலர் நல்ல மதிப்புரையாளர்களாக இருக்கிறார்கள். யார் யார் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து, இந்த வேறுபாடு அமைகிறது.
கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம், ஓவியம், சிற்பம், நாட்டியம், இசை போன்ற பலவிதமான கலை, இலக்கியங்கள் பற்றியும் திறனாய்வு செய்யப்படுவதை நாம் அறிவோம். அதாவது ஓர் ஆக்கம் பற்றி அபிப்பிராயம் சொல்லப்படுவதுதான் திறனாய்வு. விமர்சனம் செய்யும்போது, பலரும் பல விதமான அணுகுமுறைகளை அனுசரிக்கின்றனர். இன்னொரு விதத்தில் கூறுவதாக இருந்தால், விமர்சனத்தின் போது சில சில விஷயங்களுக்கு அழுத்தம் கொடுக்கப் படுகிறது. அந்த அழுத்தம் என்ன என்பது விமர்சகரைப் பொறுத்தது.
திறனாய்வாளரின் இலக்கியக் கொள்கை என்ன என்பதைப் பொறுத்து, அவரது திறனாய்வுக் கொள்கையும் அமையும். அத்திறனாய்வுக் கொள்கைக்கேற்ப அழுத்தம் அமையும்.
இலக்கியக் கொள்கையைப் பின்வருமாறு பகுப்பர்; அவயவக் கொள்கை (ORCANC), அறவியற் கொள்கை (DDATIC) உணர்ச்சிக் கொள்கை (EMOTIVE), அழகியற் கொள்கை (AESTHETIC), சமுதாயக் கொள்கை (SOCIOLOGCAL)
26

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இவ்வாறு பகுக்கப்படும் இலக்கியக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு திறனாய்வுக் கொள்கைகளும் அமையும் என்று கண்டோம். இத்திறனாய்வுக் கொள்கைகளை அனுசரணைக் கொள்கை (MITATIVE), பயன்வழிக் கொள்கை (SUBJECTIVE APRECIATION), புறநிலைக் கொள்கை அல்லது விடயக் Glasт6тбоa, (ORJECTIVE APROACH) 6.160тi i Slflt Luri.
இவை பற்றிய விவரங்களையறிய பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலைப் பார்க்கலாம்.
மேற்சொன்ன இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுக் கொள்கைகள் ஆகியன யாவும் பயனுடையன. அதே வேளையில், பல்நெறி சார்ந்த விமர்சன (MULTI-DISCIPLINARY) முறையே பெரிதும் விரும்பப்படுகிறது.
எனவே, திறனாய்வில் கவனிக்கப்பட வேண்டியவை எவை என்று கூறும் பொழுதுகூட, யார் எதற்கு அழுத்தம் கொடுக்கிறார் என்ற கேள்விக்குரிய பதில் முக்கியமானது.
அதே சமயத்தில் எல்லா விதமான பார்வைகளிலும் சில அடிப்படை அனுசரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டி யுள்ளன.
உதாரணமாக, ஓர் ஆக்கத்தை, அதாவது ஒரு நாவலை அல்லது நாடகத்தை அல்லது திரைப்படத்தை விமர்சிக்க நாம் எடுத்துக்கொள்ளும் போது அப்படைப்பு என்ன கூறுகின்றது? எப்படிக் கூறுகின்றது; ஏன் அப்படிக் கூறுகின்றது? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண முயல்கிறோம்.
ஒரு படைப்பின் உறுதிப் பொருள்களை வாசகனுக்கு விளக்கிக் காட்டுவது விமர்சகனின் கடமை.
எனவே திறனாய்வாளன், அந்தப் படைப்பின் அடிநாதக் கருத்து என்ன என்பதை முதலில் இனங்கண்டு கொள்ள
27

Page 22
கே.எஸ்.சிவகுமாரன்
முற்படுகின்றான். அந்த அடிநாதக் கருத்து கதைப்பொருள் (THEME) விமர்சகனுக்கு உடன்பட்ட கருத்தாக இருக்கலாம்; அல்லது இல்லாமல் இருக்கலாம்.
ஆயினும், விமர்சகன் அக்கருத்தை மாத்திரம் இனங்கண்டு கொள்வதுடன் நின்று விடுவதில்லை.
அக்கருத்தைப் படைப்பாளி கலை நயமாகக் கூறி யிருக்கிறானா என்று பார்க்க முற்படுகிறான்.
கலைநயம் என்னும் பொழுது, அப்படைப்பு உள்ளடக் கத்துக்கு இணங்கிய உருவம் கொண்டுள்ளதா என்பது போன்ற வடிவ அம்சங்களில் கவனஞ் செலுத்துகிறான்.
அதன் பின், குறிப்பிட்ட உருவத்தில் அல்லது வடிவத் தில் படைப்பு அமைவது நியாயந்தானா என்று பார்க்க எத்தனிக்கிறான்.
ஒரு படைப்பு என்ன கூறுகின்றது, எப்படிக் கூறுகின்றது என்ற அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில் கண்டதும் விமர்சகன் தனது இலக்கியக் கொள்கை, திறனாய்வுக் கொள்கை ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் நின்று விமர்சிக்கும் படைப்பை ஏற்றுக் கொள்கிறான், அல்லது நிராகரிக்கிறான்.
ஒரு படைப்பு சில திறனாய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதும், சில விமர்சகர்களால் நிராகரிக்கப் படுவதும் அந்தந்த விமர்சகர்களின் நிலைப்பாட்டைப் பொறுத்தது என நாம் முன்னர் கூறினோம்.
அதே சமயத்தில், ஒரு விமர்சகன் பொறுப்பின்றி அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும் இடமில்லை.
கூடியவரை விமர்சகன் படைப்பாளியின் அனுபவம், நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நின்றே, படைப்பை அணுக வேண்டும்.
28

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
அதாவது, படைப்பாளியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
படைப்பு எழுந்த சமூகப் பின்னணியை அறிந்து அப்பின்னணியின் முக்கியத்துவத்தை இனங்கண்டு அந்தப் படைப்பை வைத்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, கற்பனைப் போக்குடைய வரலாற்று நாவல்களைக் கல்கி ஏன் எழுதினார்? மெளனி, லா. ச. ரா. போன்ற சிறுகதை ஆசிரியர்கள் ஏன் உருவாகினார்கள்? இலங்கையில் பெரும்பாலான எழுத்தாளர்கள் சமூகப் பிரக்ஞை கொண்டவர்களாக இருப்பதற்கான வரலாற்றுக் காரணம் என்ன? தமிழ்த் திரைப்படம் அண்மைக்காலத்தில் புதுமையுடன் மிளிர ஏன் தேவை ஏற்பட்டது? சிங்கள நாடகங்கள் மேடையேற்றத்தில் ஏன் சிறப்பாக அமை கின்றன? நல்ல கவிதைகளுக்கும் ‘புதுக்கவிதை' என்ற பெயரில் எழுதப்படும் உணர்ச்சியற்ற சுலோகங்களுக்கும் இடையில் விகற்பங்கள் எப்படி ஏற்படத் தொடங்கின? பரத நாட்டியம் ஏன் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறாமல், ஒரு சிலரே ஈடுபடக்கூடிய மரபு தவறா நாட்டியமாக இருக்கிறது? நாட்டுக் கூத்து ஏன் காலச் சிக்கனத்துடன் இந்நாட்களில் காட்ட வேண்டி ஏற்பட்டது போன்ற பல கேள்விகள் எழும். இவற்றின் விடைகள் சமுதாயப் பின்னணியை ஆராயும் போது கிடைக்கும்.
இங்கு நான் கூற வருவது என்னவென்றால் SOCIAL CONTEXT எனப்படும் சமுதாயப் பின்னணியில் படைப்பை வைத்தணுக வேண்டியது, விமர்சகர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பண்பு ஒன்று என்பதுதான்.
கலை இலக்கியங்கள் சமுதாயத்தின் விளை பொருள்கள். அவை வெறும் கலை, கலைக்காகவல்ல. மக்களுக்குப் பயன்பாடுடையவையாக இருத்தல் வேண்டும். அப்படிக் கூறுவதனால் வெறும் பிரசார வெளிப்பாடுகளாகக்
29

Page 23
கே.எஸ்.சிவகுமாரன்
கலை இலக்கியங்கள் இருத்தல் வேண்டும் என்று பொருள் ஆகாது.
சமுதாயத்திற்குப் புத்தறிவும், புத்தனுபவமும், புத்துணர்ச்சியும் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும். படைப்பாளியின் தனித் தன்மையும், திறனும் இப்பரிவர்த் தனையின் போது இணைந்தே வெளிப்படும்.
எல்லாவிதமான விமர்சன அணுகு முறைகளிலும் பல்நெறி சார்ந்த அணுகு முறையே முழுமையானது. அதே வேளையில், 'பிரக்டிக்கல் கிரிட்டிசிஸம்" என்றழைக்கப்படும் புறநிலைக்கொள்கை, ஒரு படைப்பை நன்கு விமர்சிக்கத் துணைசெய்கிறது.
"ஓரளவு சான்றாதாரங் காட்டத் தக்கனவாயுள்ள வடிவக் கூறுகள், அழகியற் பண்புகள், அமைப்பு ஒழுங்கு, இலக்கண அமைதிகள் ஆகியவற்றைத் துணைகொண்டு இலக்கி யத்தை அணுகுவதற்கு இக்கொள்கை வகைசெய்கிறது. (க. கைலாசபதி - இலக்கியமும் திறனாய்வும்) PRACTICAL CRTICISM என்பதனைச் செய்முறைத் திறனாய்வு எனலாம். கே. எஸ். சிவகுமாரனின் பத்தி எழுத்துக்கள் இந்த விதமான திறனாய்வுப் பார்வை சார்ந்த எழுத்துக்களாகும்.
30

திறனாய்வு செய்முறை
ஆங்கில இலக்கிய விமர்சனத்துறையிலே செய் முறைத் திறனாய்வு (ப்ரக்டிக்கல் கிரிட்டிசிஸம்) என்பதும் ஒருவகை. என்னைப் பொறுத்த மட்டில் தனிப்பட்ட முறையிலே, பல்நெறி சார்ந்த (மல்டி டிசிப்ளினரி) ஆய்வு முறையே சிறந்தது. ஆயினும் ஆரம்ப இலக்கிய மாணவர்களுக்கு இலக்கியப் பயிற்சியளிக்கும் விதத்திலே செய்முறை விமர் சனம் உதவுகிறது.
செய்முறை விமர்சனம் எவ்வாறு அமையும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் தமிழிலே பல கட்டுரைகள் வெளி வந்துள்ளன.
குறிப்பாக தமிழ் நாட்டில் வெளியாகிய "சரஸ்வதி, ‘எழுத்து போன்ற சிற்றேடுகள் முன்னோடி எனலாம். 1970ஆம் ஆண்டிலே “ஞானரதம்' என்ற ஏடு வெளிவரத் தொடங்கியது. ஜெயகாந்தன் அவ்வேட்டின் ஆசிரியராக இருந்த போதிலும், அதில் ஏழாவது இதழிற்குப் பொறுப்பாக, அவ்வேட்டின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ந. முத்துசாமி இருந்தார். குறிப்பிட்ட அவ்விதழிலே, புதுமைப்பித்தனின் கதைகள் பற்றிய செய்முறை விமர்சனம் ஒன்று வெளியாகியிருக்கிறது. மதுரையில் நடந்த தமிழ்நாடு வாசகப் பேரவையின் புதுமைப் பித்தன் நினைவுச் சொற்பொழிவு வரிசையில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வுரைதான் இக்கட்டுரை. தலைப்பு 'புதுமைப் பித்தனின் மனக்குகை ஓவியங்கள்." ஆய்வுரை நிகழ்த்தியவர் சுந்தர ராமசாமி.
31

Page 24
கே. எஸ். சிவகுமாரன்
சுந்தர ராமசாமியின் இந்த ஆய்வுரை தலைசிறந்ததொரு செய்முறை விமர்சனம். விமர்சகர் பல கேள்விகளை எழுப்பி, புதுமைப் பித்தனின் கதைகளை வாசகர்களுக்கு விளக்கு கிறார். அக்கேள்விகள் புதுமைப் பித்தன் கதைகளுக்கு மாத்திர மின்றி, எல்லாப் படைப்புகளுக்குமே பெரும்பாலும் பொருந்து வன. இவை பிரயோசனமான கேள்விகள்.
சுந்தர ராமசாமியின் விமர்சன அளவுகோல்கள் இங்கே திரட்டித் தரப்படுகின்றன. முதலிலே, சுந்தர ராமசாமியின் இந்த வாசகத்தைக் கவனியுங்கள்.
‘புதுமைப் பித்தனுடைய எழுத்துக்கு, அதன் சகல குணாம்சங்களிலும், நடை, எடுத்தாளும் விஷயம், அவ் விஷயத்தைக் கையாண்ட கோணம், சொல்முறை, உருவம், ஆரம்ப முடிவுகள், வருணனைகள், பாத்திர சிருஷ்டி, எழுத்தில் நீக்கமற கலந்து நிற்கும் விமர்சனப் பாங்கு, இன்னும் இழைகண்டு சொல்ல முடியாததும், இரசனைக்கு மட்டும் அனுபவ சாத்தியமாக முடியாததும், இரசனைக்கு மட்டும் அனுபவ சாத்தியமாகிறதுமான சூட்சுமமான அம்சங்களையும் உணர்ந்து பார்த்தால், அவர் சூட்டிக் கொண்ட பெயர் அசைக்க முடியாதபடி அவருக்குப் பொருந்துவதை உணரலாம்.
மேற்கண்ட பந்தியிலேயே, செய்முறை விமர்சனத்தில் அடங்க வேண்டிய அம்சங்களை எல்லாம் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புதுமைப் பித்தன் தொடர்பாகக் கேள்விகளை சுந்தர ராமசாமி எழுப்பினாலும், பொதுவாக எல்லாப் படைப்பு களுக்கும் பொருந்திய கேள்விகள் இவைதான்:
'திட்டம் என்பதிலும், பயிற்சி என்பதிலும் நம்பிக்கை கொண்ட கலைஞர் தானா இவர்? தனது உணர்ச்சிகளை புத்தி மண்டலத்தில் உயர்த்தி, இழை எடுத்து சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு ஆசை இருக்கிறதா? புலன்கள் வாயிலாக நாம் பெறும் அனுபவம், உண்மையாய் அமைவது கடினம்.
32

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
பொய்யாய்ப் போய் விடுவது சுலபம் என்ற ஜாக்கிரதை உணர்வு இவரிடம் தொழிற்பட்டிருக்கிறதா? சைக்கிள் சக்கரத்தில் நாம் பார்க்கும் விதமாய் சிறுகதையின் ஜீவ தாதுவுை மையத்தில் பொருத்தி, வெளிவட்டத்திலிருந்து கம்பிகளை இழுத்து உறுதிப்படுத்தும் பொறுமை, அதன் அவசியம், அதற்கான பயிற்சி, இவற்றிற்கெல்லாம் இவர் கட்டுப்பட்டவர்தானா?
'கதையிலிருந்து அநாவசியத்தால், அவசியம், மேலும் துலங்கும் என்பதை இவருடைய கதைகள் எப்போதும் நமக்கு உணர்த்துகின்றன என்று சொல்ல முடியுமா? கதை அரங்கில் கதாபாத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது திரைக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்ப்பது (அதாவது தனது சொந்த அபிப்பிராயங்களுக்கும் இடம் போட்டுக்கொண்டு எழுதுவது) விவேகமல்ல என்ற விதியை விடாமல் பின்பற்றக் கூடியவரா இவர்? கதையைக் கடைசிவரையிலும் நடத்திக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதிலோ, அல்லது சென்றுவிட முயல வேண்டும் என்பதிலோ, இவர் காட்டும் நிர்ப்பந்தம் எவ்வளவு? சிக்கலான தடத்தில் போகிறபோது, சீதையைப் போல் விலை உயர்ந்த ஆபரணங்களைக் சுழற்றிப் போட்டுக் கொண்டே போகாவிட்டாலும், ஒரு லட்சிய வாசகன் எட்டிப் பிடித்து விடுவதற்கு அவசியமான படிகளையேனும் கொடி காட்டிட வேண்டும் என்று பொறுப்புணர்ச்சி எப்பொழுதும் காட்டியவர் என்று, இவரைப் பற்றிச் சொல்ல முடியுமா?
"தடம் தெரியாமலும், தனக்கே புரியாமலும் பேனா ஒட ஆரம்பித்தால், இழுத்து நிறுத்தி மூடியை அதன் வாயில் சொருகிவிடுவது விவேகமான காரியம் என்பதில் இவருக்கு நம்பிக்கை உண்டா?"
33

Page 25
கே. எஸ். சிவகுமாரன்
'மாற்றமே இயற்கையின் நியதி' என்பதில் நம்பிக்கை யில்லாதவர்கள், வளர்ச்சியின்றித் தேக்க நிலையிலே உழல்பவர்கள் என்பதில் ஐயமில்லை.
"எவ்வகையான வேறுபாடுமின்றி, தோன்றிய காலத்தில் இருந்தது போலவே தமிழ்மொழி இருந்து வருகிறது என்று கருதுவோர் தமிழ் வரலாறும், தமிழிலக்கிய வரலாறும் அறியாதார் என்றுதான் கூற வேண்டும். இயற்கைச் சக்திகளுக்கு விரோதமாக யாரும் சொல்ல முடியாது. ஒரு கடிகாரத்தை நிறுத்தி விட்டால் காலம் கழியாமல் நின்று விடுமா?"
-எஸ். வையாபுரிப் பிள்ளை
இலக்கியத் திறனாய்விலும், இலக்கிய வகைகளை ஆராய்வது உள்ளடங்கியுள்ளது.
தமிழ் உரைநடை வளர்ச்சி கண்டிருக்கும் வேளையிலே உத்திமுறைகள் சரளமாக, இயல்பாகப் பயன்படுத்தப்படும் கட்டத்திலே, பழைய ‘உபகதை சொல்லும் பாணியில் கதை எழுதினால், திறனாய்வாளர்கள் அக்குறைபாட்டைச் சுட்டிக் காட்டவே செய்வர்.
திறனாய்வுத் துறையிலே தமது முத்திரையைப் பதித்துள்ள, இந்நூற்றாண்டுத் தலை சிறந்த தமிழ் ஆய்வாளர்களிலே ஒருவரான, மறைந்த (3L gráfuri க. கைலாசபதி செய்முறைத் திறனாய்வு பற்றிக் குறிப்பிட் டிருப்பதை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமுடையது.
"பாடசாலைகளிலும், பல்கலைக் கழகத்திலும் பொது வாக இலக்கியத் திறனாய்வு என்பது செய்முறைத் திறனாய்வாக, திறனாய்வுப் பயிற்சி முறையாக அமைகிறது. இது தவிர்க்க இயலாதது. இந்நிலையில் கொள்கைகளிலும், கவிதையின் இயல்புகள் குறித்த விளக்கமே வேண்டப் படுவது. ஆயினும் செய்முறைத் திறனாய்வு, அதாவது சொற்களின் ஆய்வு, முடிந்த முடிபன்று."
34

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
"செய்முறைத் திறனாய்வு எமது இலக்கிய உலகிற் காணப்படும் 'அநுபூதி நெறி ரசனை’ என்ற தீய்வினைத் தவிர்க்கும் மாற்றுமுறையாக அமைய முடியும்.
கவிதையை முழுமையாக நோக்கவும் அதனடியாக அழகுணர்ச்சியைப் பெருக்கவும் நெறிப்படுத்தவும் திறனாய்வு ஏதுவாக இருக்க வேண்டும் என்பது உண்மையே.
செய்முறைத் திறனாய்விலே மாணாக்கர் கவிதையைப் ‘பிய்த்துப் பிடுங்கிச் சிதைக்கிறார் என்று சிலர் கூறுவர். ஆனால் ஆரம்ப நிலையில் அது இன்றியமையாததாகும்.
இல்லாவிடில், பகுத்தாய்வுக்கும் உறுப்பாய்வுக்கும் இடந்தராத மூடுமந்திரமாகவே கவிதை இருக்கும்.
உண்மைக்கும் போலிக்கும் வேறுபாடு காணப் படாமலே இலக்கியப் பயிற்சி அமைந்துவிடும்.
அதாவது செய்முறைத் திறனாய்வு மூலமாகவே கவிதை ஆய்வானது அகநிலைப்பட்டதாயன்றிப் புறநிலை சார்ந்ததாய் அமையும் வாய்ப்பைப் பெறுகிறது.
விதிமுறையாலன்றி விவரண முறையாலும், விளக்க முறையாலும் இலக்கியத்தைச் சுவைக்கும் நெறி வளர்ச்சி பெறமுடியும்.
செய்முறைத் திறனாய்வின் மூலமாகவே நவீனகாலத்து வாசகன், நேரடியாக இலக்கியத்தைத் தனக்குத் தொடர்புடை யதாகக் காண இயலும்."
இலக்கியமும் திறனாய்வும் என்ற தமது நூலிலே பேராசிரியர் கைலாசபதி எழுதியிருப்பதை மேலே கண்டோம். செய்முறைத் திறனாய்வு பெரும்பாலும் வடிவம் சம்பந்தப்பட்டதாகவே இருப்பதுண்டு. அப்படிக் கூறுவத னால், உள்ளடக்கம் பற்றிய அக்கறை இல்லை என்றாகாது. வடிவமே பொருள் என்பது இந்த முறையின் ஓர் அம்சமாகும். பயிற்சி, திறனாய்வுத் திறனைப் பெற்றுக் கொள்ள உதவுகிறது. "வாசகரது தனி விருப்பு, பாவனை, தற்போக் கெண்ணம், திடீர் ஆர்வக் கருத்து என்பன போன்ற முன்னறிந்து கூற
35

Page 26
கே.எஸ்.சிவகுமாரன்
முடியாத காரணக் கூறுகளைச் சாராமல், ஒரளவு சான்றாதாரங் காட்டத்தக்கவாயுள்ள வடிவக்கூறுகள், அழகியற் பண்புகள், அமைப்பு ஒழுங்கு, இலக்கண அமைதிகள் ஆகியவற்றைத் துணை கொண்டு இலக்கியத்தை அணுகுவதற்கு இம்முறை உதவுகிறது" என்று விவரித்துள்ள பேராசிரியர் கைலாசபதி, "இன்று வழக்கிலுள்ள திறனாய்வுக் கொள்கைகளுள் இதுவே வகுப்பறைகளில் கைக்கொள்வதற்குச் சாதகமாயுள்ளது" என்றும் வலியுறுத்துவதை (மேற்படி நூல் பக்கம் 113) நாம் காண்கிறோம்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்ட தமிழ் 9 (நான்காம் பதிப்பிலே) "மதிப்பீட்டியல்" என்ற ஒரு பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது.
கவிஞர், விமர்சகர் இ. முருகையன் இதனைப் பதிப்பித்துள்ளார். நூலமைப்புக் குழுவிலே நமது நாட்டுப் பிரபல எழுத்தாளர்கள் சு. வேலுப்பிள்ளை, சண்முகம் சிவலிங்கம், சபா ஜெயராசா, த. கனகரத்தினம், க. கந்தசாமி, எம். சி. சலீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
"புகழ்ச்சியும், இகழ்ச்சியுமே மதிப்பீடு (விமர்சனம் அல்லது திறனாய்வு) என்று சிலர் கருதுகிறார்கள். அது சரி அன்று. எழுத்தாக்கம் ஒன்றை விளக்கியுரைப்பதும், அதன் பண்புகளை ஆராய்ந்து கூறுவதுமே மதிப்பீடாகும்." (மேற்படி நூலின் 254ஆம் பக்கம்)
செய்முறைத் திறனாய்வுக்குரிய சில அடிப்படைக் கேள்விகள் இப்பாடத்திலும் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். அவை நமது திறனாய்வு முயற்சிகளுக்குப் பயனளிக்கக்கூடும் என்று கருதி, அவற்றைத் திரட்டித் தருகிறேன்.
"எங்கள் வாசிப்பு, புத்திசாலித்தனமாக அமைய வேண்டு மாயின் எழுத்தாக்கங்களை மதிப்பீடு செய்யப் பழகுவது 36

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
அவசியமானதாகும். மதிப்பீடு என்பதுதான் என்ன? நம்முன் உள்ள வாக்கியங்களின் தராதரங்களையும் பண்பு விகற் பங்களையும் கண்டு தெரிந்து கொள்வதே மதிப்பீடு." புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மதிப்பீடாகாது என்று வலி யுறுத்துவதுடன், எழுத்தாக்கமொன்றை விளக்கியுரைப்பதும், "அதன் பண்புகளை ஆராய்ந்து கூறுவதும் மதிப்பீடாகும்" என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, நமது எழுத்தாளர்களிற் சிலர் "கண்டனமே" விமர்சனம் என்றும் "அழுத்தம் திருத்தமாக" ஒரு படைப்பாளியை "அடிப்பதுமே" விமர்சனம் எனக்கருதி, அதுவே ஆழமான விமர்சனத்திற்குச் சான்று எனத் தவறாகக் கருதி வருகின்றனர்.
திறனாய்விலே கவனிக்க வேண்டியவை எவை என்று குறிப்பிட்ட இந்தப் பாடத்திலே சில கேள்விகள் தரப் பட்டுள்ளன. அவையாவன:- 1. எழுத்தாளன் கூறும் கருத்து யாது? வெளிப்படையான நேர்க் கருத்தைவிட, குறிப்புக் கருத்தான உட்பொருள் கள் உண்டா? அவை யாவை? 2. எழுத்தாளன் கையாண்ட சொற்கள் எத்தகைய உணர்ச்சிகளை எழுப்புகின்றன? இவ்வுணர்ச்சி, சந்தர்ப் பத்துக்கேற்ற அளவான உணர்ச்சியா? மிகையுணர்ச் சியா? அல்லது உணர்ச்சித் துடிப்பே இல்லாத வெறும் பிணம் போல அச் சொற்கள் கிடக்கின்றனவா? 3. சொற்களைத் தொடுத்துள்ள முறையிலே சிறப்பான ஓசை நயம் ஏதும் தோன்றுகிறதா? அது கருத்துக்கும், உணர்ச்சிக்கும் செய்யும் துணை யாது? அல்லது ஓசை நயம், கருத்துப் போக்கும் உணர்ச்சிப் போக்கும் இடை யூறாக உள்ளதா? 4. கையாண்ட சொற்கள் எப்படிப் பட்டவை? எழுத்தா ளனின் தனித் தன்மையைக் காட்டுகின்றனவா? அவன் வாழ்ந்த பிரதேசம், அவன் வாழ்ந்த காலம் அவனுடைய
37

Page 27
கே.எஸ்.சிவகுமாரன்
தொழில், சமூக நிலை என்பவற்றைத் தெரிவிக்கின்
றனவா? சிறப்பான சொற் பிரயோகங்களால், ஆசிரியரின் கருத்துக்களும் உணர்ச்சிகளும் பெறும் நயங்கள் எவை?
நட்டங்கள் எவை?
எழுத்தாளனின் தொனி எப்படி உள்ளது? எழுத்தாளன் தனக்குத் தானே பேசுகிறானா? பொது மக்களை நோக்கிப் பேசுகிறானா? தான் படைத்துக்கொண்ட ஒரு பாத்தி ரத்தை நோக்கிப் பேசுகிறானா? அன்றேல், தானே பாத்திரமாக மாறி நின்று பேசுகிறானா? விடயங்கள் நன்கு அறிந்தவன் என்ற முறையிலே அதிகாரத் தோரணையில் எழுதுகிறானா?
எழுத்தாளன் வாசகனுக்குத் தரும் மதிப்பு எப்படிப்
பட்டது? வாசகனைத் தனக்குச் சமனாக மதிக்கிறானா? தாழ்ந்தவனாக மதிக்கிறானா? எழுத்தாளன் கையாண்ட எந்தச் சொற்களை ஆதாரமாகக் கொண்டு, நாம் இது பற்றி முடிவு கட்டலாம்? எழுத்தாளனின் கொள்கைகள் பற்றி ஏதும் அறிய முடிகிறதா? அவனுடைய வாழ்க்கை நோக்கு எப்படிப் பட்டது? தத்துவச் சார்பு யாது?
கவிதையிலே, குறிப்பாக உணர்த்தப்படும் பொருள்,
ஓசை நயம், கற்பனை, உவமை, உருவகம் போன்ற அணிச் சிறப்புகள் கவனிக்கப்பட வேண்டியவை.
கவிதை மதிப்பீட்டிற்குரிய சில கேள்விகளும்
மேற்சொன்ன பாடத்திலே தரப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-
1.
கவிதையின் வெளிப்படைப் பொருள் யாது? குறிப்புப் பொருள் உண்டா? அது யாது? உவமை, உருவகங்களாலான உத்திகள், கவிதையின் கருத்துக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கும் எவ்வாறு உதவுகின்றன?
38

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
3. கவிதையின் ஓசை எப்படிப்பட்டது? அவ்வோசை பொருட்பேற்றுக்கும் உணர்ச்சிப் பேற்றுக்கும் எவ்வாறு
உதவுகிறது?
4. கவிதையின் முழு மொத்தமான பயன் யாது?
இலக்கியத்திலே சமூகவியற் பார்வை உள்ளதா என்பதைப் பார்க்கையில், செய்முறைத் திறனாய்வு எவ்வாறு அமைய வேண்டும்?
இலக்கியப் படைப்பாளி, வாசகர், இலக்கியப் படைப்பு ஆகிய மூன்று அம்சங்களுக்கு இடையே உள்ள தொடர்பினால் உருவாக்கப்படுவது சமூகவியற் பார்வை என்ற உண்மை நிலை தெளிவாகியுள்ளது என்று பேராசிரியர் க. கைலாசபதி விளக்கம் அளிக்கிறார்.
யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை அதன் முதலாவது வெளியீடாக ஆக்க இலக்கியமும் அறிவியலும் என்ற தொகுப்பை, 1977ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதிலே திறனாய்வாளர் கைலாசபதி அவர்கள் ஆற்றிய உரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
அழகியலைப் பற்றிப் பேசினால் அது "பூர்ஷ"வா" (பணக்கார மத்தியதர வர்க்கம்) தத்துவம் என்றும் பொருள்படச் சில தீவிர மார்க்சியவாதிகள் வலியுறுத்துவர்.
அதே சமயம், நிதானமான மார்க்சிய விமர்சகர்கள் அழகியலைப் புறக்கணிப்பதில்லை என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
பேராசிரியர் க. கைலாசபதி வலியுறுத்தி வந்த திறனாய்வு நோக்கு எத்தகையது என்பதையறிய அவருடைய கட்டுரைப் பகுதியிலிருந்து சில பகுதிகளை நாம் படிக்க வேண்டி யுள்ளது. இதோ சில வரிகள்:-
39

Page 28
கே.எஸ்.சிவகுமாரன்
"பூர்ஷ"வா சமூகவியல்வாதிகளைப் போலவே நமது பெரும்பாலான எழுத்தாளரும் ஒன்றிணைக்கப்பட்ட தத்து வார்த்த நோக்கின்றித் தமது சின்னஞ்சிறு உலகங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறு பூர்ஷ"வா சமூகவியல்வாதிகள் மனித சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிப் போக்கு, வர்க்க வேறுபாடுகள், உற்பத்தி உறவுகள் முதலிய அடிப்படைகளை மனங்கொள்ளாமல், வர்க்க வித்தியாசங்களைக் கடந்தன வாகக் கருதப்படும் மாணவர்கள், இளைய தலைமுறையினர், கார்சாரதிகள், விபசாரிகள், நாடோடிகள், புலம் பெயர்வோர்கள் முதலிய சிறு சிறு குழுக்களைப் பற்றி "சமூகவியல்" ஆய்வுகள் நடத்தி வந்துள்ளனரோ, அவ்வாறு நமது எழுத்தாளரும் வர்க்கங்களை மறந்து தனி மனிதர்களைப் பற்றியும் சிறுசிறு குழுக்களைப் பற்றியும் எழுதி வந்துள்ளனர்.
பூர்ஷ"வா சமூகவியலாளர் "பூர்வீகக் குடிகள்" குறித்தும் "புராதன மக்கட் கூட்டம்" பற்றியும் சுவையான மானிடவியல் ஆய்வுகள் நடத்தி வந்திருப்பதைப் போலவே நமது எழுத்தாளரும் பழங்காலத்து ராஜா ராணிக் கதைகளையும் கொண்டிருக்கின்றனர்.
சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி, நுணுக்கமாக விளிப்பது, நடப்பியலைக் கண்டு மனமுடைவது, அதனைக் கிண்டல் செய்வது, சிறுமையைக் கண்டு சீறுவது, சில சமயம் உலகினையே சபிப்பது என்றெல்லாம் எத்தனையோ மனப்போக்குகளை நவீன இலக்கியத்திற் காணக்கூடியதாய் உள்ளது.
இப்போக்குகள் ஒவ்வொன்றும், நமக்குகந்த உத்திகளை உருவாக்கியுள்ளமையும் தெளிவு.
எனினும் நிதானமாக நோக்கினால், இப்போக்குகள் அனைத்தும் பூர்ஷ"வா உலக நோக்கின் விகற்பங்கள் என்னும் உண்மை புலப்படும்."
40

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
மேற்கண்டவாறு அமரர் கைலாசபதி "ஆக்க இலக் கியமும் சமூகவியலும்" என்ற தமது கட்டுரையிலே (நூல்ஆக்க இலக்கியமும் அறிவியலும் பக்கம் 46-48) குறிப் பிட்டுள்ளார். AO
அதே சமயம் அவர் வலியுறுத்திய மற்றொரு கருத்தையும் இங்கு அடிக்கோடிடுவது முறையாகும். அக்கருத்து இதுதான்:
"குறுகிய அர்த்தங் கற்பித்து இத்தகைய எழுத்தாளர்கள் நேரடியாகவே "பூர்ஷ"வா" வர்க்கத்தின் நலன்களைப் பிரக்ஞை பூர்வமாகக் கட்டிக்காக்க முனைபவர்கள் என்றோ, அல்லது ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் என்றோ நாம் விவரிக்க வேண்டியதில்லை.
உண்மையில் முதலாளித்துவ சமுதாயத்தின் பெளதிக நிலைமைகளின் வரம்புக்குள் நின்று கொண்டு இவர்கள் உலகை நோக்குவதால், அதனால் கட்டுப்படுத்தப்பட்டு * விடுகின்றார்கள்.
இவர்கள் பூர்ஷ"வாத் தத்துவார்த்த எல்லையைத் தாண்ட மாட்டாதவராய் உள்ளனர்.
பூர்ஷ"வா சமுதாயத்தை எத்துணை விமர்சித்தாலும் அதிற் காணப்படும் பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஒரே வழி அவற்றை இல்லாமற் செய்வதே என்னும் அடிப்படை உண்மையை உணராமையே இவர்களது குறைபாட்டிற்குக் காரணமாகும்.
எனவே தாம் அங்கீகரித்துள்ள சமுதாயத்தின் பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் சித்திரிப்பதல்லாது, யதார்த்தத்தில் அவற்றுக்குத் தீர்வு காணக்கூடிய மார்க்கத்தை அவர்களாற் காட்ட முடியாதிருக்கிறது."
AG 9 9
41

Page 29
திறனாய்வு - கலைநயம்
'கலை நயம் என்றால் என்ன? முதலில் அழகியல் வாதம் (AESTHETICISM), கலை நயம் (ARTISTIC QUALITIES) 6T66T p Lugg,5i) (55 &LDLdr 60Tg56)6) என்பதை அவதானியுங்கள்.
'கலை கலைக்காகவே' என்பதுதான் அழகியல் வாதத்தின் சாரம்.
அழகியல் வேறு; கலை இலக்கியப் படைப்புகளில் கட்டமைதி கவினுற, நயமாக அமைதல், உறுதிப் பொருள் களின் பொருத்தப்பாடு போன்றவற்றை உள்ளடக்கும் கலைநயம் வேறு.
ஒரு படைப்பில் 'கலை நயம் குன்றியுள்ளது என்று ஒருவர் கூறும் பொழுது, அப்படைப்பின் உள்ளடக்கத்தை அவர் மழுங்கடிக்கிறார் என்று திரித்துக் கூறுவது தவறு.
கருத்தும் வடிவமும் இணைந்ததுதான் கலைநயம். நல்ல கருத்துக்களை உகந்த விதத்தில் சொல்லும் பொழுது 'கலை நயம் ஏற்படுகிறது.
அதே சமயம் நல்ல கருத்துக்கள், குறிப்பிட்ட இலக்கிய அல்லது கலைக்குரிய வகையின் அங்கீகரிக்கப்பட்ட வடிவ உறுதிப் பொருள்களின் அடிப்படையில் தரப்படாவிட்டால், 'கலை நயம் குன்றிவிடுகிறது.
42

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
உள்ளடக்கமும் உருவமும் சேர்ந்த விதத்தின் சிறப்பே 'கலை நயம்’.
ஒருவரின் நடைச் சிறப்பு மாத்திரமே 'கலை நயம்' அல்ல.
அது ஓர் அம்சமே.
கருத்து, கதை சொல்லப்படும் விதம், கதைக் கட்டமைதி, கதாபாத்திர வார்ப்பு மொழியைப் பயன்படுத்தும் முறை (புதுப்புனைவு, கற்பனை சிருஷ்டித்திறன்) கதையைப் படித்த பின்னர் வாசகர் மனதில் எழும் திருப்தி, செயலூக்கத் தூண்டல் போன்றவையும் 'கலை நயம் தான்.
விமர்சகர் பூர்ஷ"வா வர்க்கத்தைச் சேர்ந்தவராயினும் ஒரு படைப்பைக் கருத்துக்காக மட்டும், அல்லது உருவத்திற்காக மட்டும் தூக்கிப் பிடித்து விமர்சிப்பதில்லை; இரண்டையும் சேர்த்துத்தான் மதிப்பிடுகிறார்.
பின்னர், எந்த அம்சம் அப்படைப்பில் தலை தூக்கி நிற்கிறது என்பதையும் போக்கோடு போக்காகச் சொல்லிச் செல்கிறார்.
பாட்டாளி வர்க்கப் படைப்புகளை அலசும் பொழுது, விமர்சன மதிப்பீட்டு அளவுகோல்கள் வேறாகவும், மத்தியதர வர்க்கப் படைப்புகளை அணுகும் பொழுது திறனாய்வு அளவை முறை வேறாகவும் இருத்தல் விரும்பத் தக்கது.
அங்கீகரிக்கப்பட்ட இலக்கிய வகையில் (GENRE) இலக்கிய வகை அமைந்திருக்கிறதா என்று பொதுப்பட பார்க்கும் அதே சமயம், உருவம் (FORM) என்று வரும்பொழுது, பாட்டாளி வர்க்கப் படைப்புகளுக்கு மத்திய தர வர்க்கப் படைப்புகளில் எதிர்பார்க்கப்படும் கட்டமைதி இருக்கின்றதா என்று வலியுறுத்தாமல் விட்டு விடலாம்.
உள்ளடக்கம் என்று வரும்பொழுது, எது எதில் "முற்போக்கான" (வர்க்கப் போராட்டம் மாத்திரம்தான் முற் போக்கு அல்ல) கருத்துக்கள் இருக்கின்றனவோ, அதைச் சிலாகித்துப் பேசலாம்.
43

Page 30
கே.எஸ்.சிவகுமாரன்
என்னைப் பொறுத்த மட்டில், நமது சமுதாய அமைப் பிலே வாழ்க்கையிலே இரண்டு வர்க்கங்களின் தாக்கங்களும் இருப்பதனால், பூர்ஷ"வா (BOURGEOIS) எழுத்தையும் நான் வரவேற்கிறேன். ப்ரோலிட்டேரியன் (PROLETARIAN) (பாட்டாளி) எழுத்தையும் வரவேற்கிறேன்.
இரண்டு எழுத்துக்கள் மூலமும் வாழ்க்கை அணு பவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
எனவே, ஒன்றை மறுத்து அல்லது கண்டித்து மற்றதை மாத்திரம் கட்டிப்பிடிக்க முடியாதிருக்கிறது.
'கலை நயம்’ என்ற பதம் எல்லா மார்க்சிய விமர்சகர் களுக்கும் பீதியை உண்டு பண்ணுவதில்லை. சிலருக்கு மாத்திரமே, அது அருவருப்பை உண்டு பண்ணுகிறது.
உதாரணமாக, பல உலக மார்க்சிய விமர்சகர்கள் (அவர்கள் பூர்ஷ"வா வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா யிருந்தாலும்) பூர்ஷ"வாப் படைப்புகளையும், ப்ரோலிட் டேரியன் படைப்புகளையும் 'கலை நயம் என்ற அம்சத்தின் அடிப்படையிலும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளிலேயே இருக்கின்றன. அமெரிக்க நாவலா சிரியர்களை விமர்சிக்கும் சோவியத் விமர்சகர்களும் கலை நயத்தை ஒதுக்கவில்லை. லூசூன், மா ஓ போன்றவர்களும் 'கலை நயத்தை ஒதுக்கவில்லை.
இன்னுமொரு விஷயம் - பூர்ஷ"வா விமர்சகர்கள் எல்லோருமே; மார்க்சிய அர்த்தத்தில் கூறப்படும் "முற்போக்குக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல.
இக்கூற்றுக்களுக்கு ஆதாரமாக மார்க்சிய மேதைகளின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறலாம்.
பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸ், இங்கிலாந்து பூர்ஷ"வா எழுத்தாளர்களைப் பற்றிக்
44

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
குறிப்பிடுகையில், "அரசியல்வாதிகள், பிரசாரகர்கள், தார்மீகவாதிகள் அனைவரும் ஒருங்கே தெரிவித்த கருத்துக்களை விட இந்த எழுத்தாளர்கள், (டிக்கன்ஸ், தக்கரே, திருமதி கஸ்கெல், எமிலி புரொண்டே) கலை நயத்துடனும், சொற்றிறனுடனும் அரிய பல அரசியல், சமுதாய உண்மைகளைத் தெரிவிக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
கலைத் திறனற்றவர்கள், தமது கலை வறுமையை மறைக்கவும், இலகுவில் பாட்டாளி வர்க்க மக்களின் கருத்தைக் கவரவும், சுலோகங்களில் தமக்குள்ள பிடிப்பை வெளியுலகுக்குக் காட்டவும் முற்படுவர் எனவும் எங்கல்ஸ் முன்னமே கூறியிருக்கிறார்.
எழுத்தாளர்கள் எந்தவித நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல், தமது இலட்சியங்களுக்கு ஏற்பச் சுதந்திரமாக சிருஷ்டி இலக்கியத்தில் ஈடுபடலாம் என லெனின் கூறியுள்ளார்.
கலைத் துறையில் படைப்பாளிக்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும் என ட்ரொட்ஸ்கி கூறியிருக்கிறார்.
மா ஒ என்ன சொன்னார்? குறிப்பிட்ட கலை வடிவத்தையோ சிந்தனையையோ நிலை நிறுத்தவும், மற்றையதை மழுங்கடிக்கவும் கூடியதாகச் சட்ட திட்டங்களைப் பயன்படுத்துவது கலைக்கும் அறிவியலுக்கும் பெருந் தீங்கு விளைவிக்கும் என்றார்.
இப்படிக் கூற்றுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு வலியுறுத்த வேண்டியது என்னவென்றால், நடைமுறைக்குகந்ததாக இலட்சியம் அமைய வேண்டும். சில இலட்சியங்கள் கொள்கையளவில் நன்றாகத்தான் இருக்கின்றன. நடைமுறையில் சாத்தியமாவதில்லை.
அதற்கு முக்கிய காரணமே அவ்விலட்சியங்களைப் புரட்சிகரமாகக் கூறுபவர்களே, உதாரண புருஷர்களாய் இருப்பதில்லை.
45

Page 31
கே.எஸ்.சிவகுமாரன்
சமதர்மம், ஊழல் நீக்கல், வர்க்க பேதமற்ற சமுதாயம் போன்றவற்றை விரும்புபவர்கள் பாட்டாளி வர்க்கத்தில் மாத்திரம்தான் இருக்கிறார்கள் என்றில்லை.
எனவே, பூர்ஷ”வா இலக்கியம் என்றும் பூர்ஷ~வா விமர்சனம் என்றும் ஏனையவற்றை ஒதுக்கிவிட்டு (எந்தவித சமரசமும் ஏற்படுத்தாமல்) பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டுவர முடிவதில்லை.
அப்படித் தான் கொண்டு வந்தாலும் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமா, ஆயுதப் படையினரின் நிர்வாக அதிகாரமா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
'கலாசாரப் புரட்சிகள் தனிமனித - மனுஷி சர்வாதி காரத்திற்குத் தான் இட்டுச் செல்லும் என்பது அண்மைக்கால வரலாறு.
கலை நயம், அழகியல் ஆகிய சொற்கள் ஒரே பொருளைக் குறிப்பன அல்ல.
கலை நயம் (ARTISTIC QUALTIC) என்பது உள்ளடக்கத் துடன் இணைந்த உருவ அமைப்பின் சிறப்புகள், அதாவது பொருத்தப்பாடும் சிருஷ்டித் திறனும் மதிப்பீட்டில் கவனத்தைப் பெறுகின்றன.
இதை மேலும் விளக்க, விரிவுரை எழுதவேண்டும். அழகியல் (AESTHETICSM) என்பது அகவயச் சார்பான இரசனை அழகு என்பதும் காண்டலும் கற்பனை அனுபவ முமே என்பதும் அழகியல் வாதம்.
இது பற்றியும் பிரத்தியேகமான கட்டுரை தேவைப்படும். பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலில் இது பற்றிச் சிறிது விளக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடுகளுக்கு அடிப்படையாக உள்ள கருதுகோள் களாக நான் கருதுபவற்றுள் சில:
46

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் 1. படைப்பில் உண்மையும் நேர்மையும் இருத்தல்
வேண்டும். 2. படைப்பாசிரியர் எடுத்துக் கொண்ட பொருளைக் கலை நயமாகக் கூறியிருத்தல் வேண்டும். உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான உருவத் தொடர்பமைதி - சிருஷ்டித் தன்மை, புத்தாக்கமான பொருத்தமுடைய பிரயோகங்கள் ஆகியன இருத்தல் வேண்டும். படைப்பாளியின் படைப்பினால் பெறப்படும் பயன். மதிப்பீடு செய்பவன் பெறும் அனுபவம். கலை நயம் என்பது முற்றிலும் உருவம் பற்றிய விஷயம் இல்லை. 'கலை நயம்’ என்பது இங்கு உள்ளடக்கம், உருவம் இரண்டையும் தொட்டுச் செல்கிறது.
உருவமும் உள்ளடக்கமும் பிரிக்க முடியாதவைதான் என்றாலும், செய்முறை விமர்சனத்தில் ஈடுபடும் ஒருவன் அவற்றைப் பிரித்துப் பார்த்தே திறனாய்வு செய்யவேண்டி யிருக்கிறது.
படைப்பின் கட்டமைப்பு, நுணுக்கமாக ஆராயப்படு வதற்கு இது தேவை.
அதே சமயம் இறுதி ஆய்வில், நிறைவு பெற்ற ஒரு படைப்பில் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிரிக்க இயலாது என்பது மனங்கொள்ளத்தக்கது. இலக்கியக் கொள்கைகள் பல. விமர்சன அணுகுமுறைகள் பல. இலக்கியமே பல வகை. இந்த நிலைமையில், ஒரேயொரு விமர்சன அணுகு முறைதான் சரியானது, ஏனையவை எல்லாம் பிழையானவை என்று எந்த ஓர் இலக்கியவாதியும் கூறமாட்டார்.
47

Page 32
கே.எஸ். சிவகுமாரன்
'கலை கலைக்காகவே என்ற கோட்பாடு அற்றுப் போய்விட்டபின், சிலர் 'கலை நயம்’ என்பதை 'அழகியல் வாதத்துடன் சமன் படுத்துகிறார்களே. இது என்ன?
ஓ அதுவா? ‘அழகியல் வாதம்' என்ற கோட்பாடு கடந்த நூற்றாண்டின் இறுதியிலே இற்றுப் போய் விட்டது. 'கலை கலைக்காக’ என்பது இக்கோட்பாட்டின் சாரம். கலை, இலக்கியத்தில் பிரசாரம் இருக்கப்படாது. கலை என்பது அரசியலுக்கும், வர்க்க நிலைக்கும் அப்பாற்பட்டது போன்ற கருத்துக்கள் எல்லாம் இந்த அழகியல் வாதத்தின் அடிப்படையில் எழுந்த பிற்போக்கான கருத்துக்கள் தான்.
ஆனால் இவற்றிற்கும் 'கலை நயம்’ என்பதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
கொஞ்சம் தீவிர மார்க்சீய விமர்சகர்களாக இருந்து, இப்பொழுது நிதானமான நிலைக்கு வந்துள்ள எஸ். என். நாகராஜன், பரிமாணம் “ஞானி, படிகள் ‘தமிழவன்’ எஸ். கே. ஆர். மற்றும் ‘குனா’, எஸ். வி. ராஜதுரை, இலக்கிய வெளிவட்டாரம் குழுவினர் போன்ற தமிழ் நாட்டு விமர்சகர்களின் எழுத்தையாவது (ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் வெளிவரும், மாறிவரும் மார்க்சீய அளவு கோல்கள் பற்றி அறிய வாய்ப்பில்லாது போனாலும்) படித்துப் பார்த்தால், வரட்டுக் கூச்சலையும் திரிபு நடவடிக்கைகளையும் சிலர் மேற்கொள்ளார். மிஞ்சிப் போனால், டெரி ஈகிள்டனின் (TERRY EAGLETON) நூல்களையாவது ஆங்கிலத்தில் படித்துப் பார்க்கட்டும்.
பட்டியல் தொகுத்து வாசகருக்கு அபிப்பிராயம் தெரிவிப்பது என்றால், அங்கு விமர்சனப் பாங்கே வந்து விடுகிறது.
பட்டியல் தருவது, ஒருவித தேர்வு, அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது.
48

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
அந்தத் தேர்வு, விமர்சனக் கருதுகோள்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
விமர்சகன் என்பவன், அந்தக் கோபுரங்களில் இருப்பவன் அல்லன். குறைகளும் நிறைகளும் உள்ள ஒரு சாதாரண மனிதன். பல மட்டங்களில் விமர்சகன் செயற்படு பிரக்ஞை life) jLDIT5C36), LITERARY JOURNALISAM 36) ri-Guit G60Lu பத்தி எழுத்து விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
பாட்டாளி வர்க்க இலக்கியம் இருப்பது போல பூர்ஷ"வா வர்க்க இலக்கியமும் இருக்கையில் பிரச்சினை எங்கு எழுகிறது?
இதில் பிரச்சினைக்கே இடமில்லை. சமுதாயம் இரண்டு வர்க்கத்தையும் கொண்டது போல, இலக்கியமும் இரண்டு வர்க்கச் சார்புடையதாக இருக்கிறது.
பூர்ஷ"வா வர்க்கச் சார்புள்ள இலக்கியத்தை, புரோ லிட்டேரியன் சார்புள்ள அளவு கோல்களைக் கொண்டு மதிப் பிடுவதும், பாட்டாளி வர்க்கச் சார்புள்ள இலக்கியத்தை மத்திய தர வர்க்கச் சார்புள்ள அளவு கோல்களைக் கொண்டு மதிப்பிடுவதும் தான் சிக்கலை உண்டாக்குகிறது.
பூர்ஷ"வா இலக்கியமும் புரோலிட்டேரியன் இலக்கி யமும் நமக்குத் தேவை.
அப்பொழுதுதான் மற்றப் பக்கத்தையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
அதிதீவிர வாதமும், வன்செயலும், வீரதீரமும் தான் பாட்டாளி வர்க்க இலக்கியம் என்று சிலர் கூறினால், அவருடைய கணிப்பில் நான் பூர்ஷ"வா விமர்சகனாகத் தான் படுவேன்.
விஷயம் என்னவென்றால் பூர்ஷ"வா வர்க்கத்தினன் கூட புரோலிட்டேரியன் சார்பாக இருக்கலாம் என்பது மறந்து விடப்படுகிறது.
49

Page 33
→ கே.எஸ்.சிவகுமாரன்
‘பூர்ஷ"வாக்களும் "முற்போக்காக (எனது அளவைக் கற்களின் அடிப்படையிலே) எழுதுகிறார்கள், புரோலிட்டே ரியன்களும் முற்போக்காக எழுதுகிறார்கள்.
அதனாலேதான் செ. கணேசலிங்கனின் அரசியற் சார்பு கொண்ட நாவல்களும் எனக்குப் பிடிக்கின்றன. சுந்தர Jim LoymfuSeir அரசியல் சார்பு கொண்ட நாவல்களும் பிடிக்கின்றன.
டானியல், இளங்கீரன், பெனடிக்ட் பாலன், யோக நாதன், காவலூர் ஜெகநாதன், சுதந்திரராஜா, அகஸ்தியர் போன்றோரின் "கொமிட்டட் நாவல்களும் பிடிக்கின்றன. செங்கை ஆழியான், ஞானசேகரன், புலோலியூர் சதாசிவம், செம்பியன் செல்வன், சொக்கன், நந்தி, அருள்சுப்பிரமணியம், அ. ஸ. அப்துஸ் ஸமது, வ. அ. இராசரத்தினம், பால மனோகரன் போன்றவர்களின் சமூக நாவல்களும் பிடிக்கின்றன.
இங்கு பெயர் குறிப்பிடப்படாத மற்றைய நாவலாசிரி யர்களின் எழுத்தும் பிடிக்கிறது.
சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜானகிராமன், க. நா. சு. ந. சிதம்பர சுப்பிரமணியன், ஆதவன், சா. கந்தசாமி போன்றவர்களின் படைப்புகளும் பிடிக்கின்றன.
ரகுநாதன், சமுத்திரம், டி. செல்வராஜ், க. செயப் பிரகாசம், ராஜம் கிருஷ்ணன் போன்ற நாவலாசிரியர்களையும் பிடிக்கிறது.
சுஜாதா, ஆர்லி, எம். வி. வி, அகிலன், நா. பார்த்தசாரதி போன்ற நாவலாசிரியர்களையும் பிடிக்கிறது.
இலக்கியத்தில், பூர்ஷ~வா வர்க்கத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் எழுத்து மாத்திரமா வரவேற்கப்பட வேண்டும்.
SO

மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இதற்கான பதிலை, கவிஞர் எம். ஏ. நுஃமான் என் சார்பிலே தருகிறார்:
"சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமே இலக்கியத்தில் இடம் உண்டு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
முற்போக்கு எழுத்தாளர்கள் சமூக அரசியல் பிரச்சினைகள் பற்றியே எழுத வேண்டும். இவற்றுக்குப் புறம்பான (காதல் போன்ற) தனிப்பட்ட விஷயங்களை எழுதக் கூடாது என்று பல முற்போக்காளர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
இது அபத்தமான கருத்து என்பது என் அபிப்பிராயம். முற்போக்காளர்கள் தனிப்பட்ட விஷயங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும், முற்போக்கை எதிர்க்கும் அந்த இலக்கியவாதிகள் அரசியல் விஷயங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் அபத்தமானது, இலக்கியத்துக்குப் புறம்பானது. இது என் கருத்து" (அழியா நிழல்கள் என்ற தனது கவிதைத் தொகுப்பிலே எம். ஏ. நுஃமானின் முன்னுரைப் பகுதி).
51

Page 34
திறனாய்வு : ஈழம்
தமிழ் கூறும் நல்லுலகிலே ஈழத்து விமர்சனத்துறை (திறனாய்வு) கற்றோர் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு மதிக்கப்படுகிறது.
இது உண்மை, வெறும் தற்புகழ்ச்சியல்ல.
குறிப்பாக இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, மதிப்புரை, கலை விமர்சனம் ஆகிய பிரிவுகளிலே தனிச் சிறப்பான வளர்ச்சியைக் காணலாம்.
இந்த வளர்ச்சியைத் தமிழ் நாடு, மலேசியா போன்ற பல்கலைக் கழகங்கள் மாத்திரமல்லாது, தமிழியல் பயிற்று விக்கும் பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களும் ஏற்றுப் போற்றியிருக்கின்றன.
பல்கலைக் கழக மட்டத்தில் மாத்திரமன்றி, எழுத்தாளர் கள் மட்டத்திலும் ஈழத்து விமர்சனத்துறை, அங்கீகாரம் பெற்றிருக்கிறது. உதாரணமாக இலக்கிய விமர்சன ஏடாக 1959இல் ஆரம்பிக்கப்பட்டுச் சில வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து நின்றுபோன "எழுத்து" (சி. சு. செல்லப்பா அதன் ஆசிரியர்) என்ற ஏடும், "சரஸ்வதி" (விஜயபாஸ்கரன், அதன் ஆசிரியர்) என்ற மற்றோர் அற்ப ஆயுள் சஞ்சிகையும், பின்னர் “தாமரை’, ‘தீபம்', 'கணையாழி', 'வைகை", "படிகள்', 'பரிமாணம்’, ‘யாத்ரா' போன்ற சிற்றேடுகளும் ஈழத்து விமர்சகர்களின் கட்டுரைகளைப் பிரசுரித்து வந்துள்ளன. அவ்வப்போது இலங்கை விமர்சன முயற்சிகளைப் பாராட்டி விதந்துரைத்துள்ளன.
52

மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இலங்கையர்கோன், சோ. சிவபாத சுந்தரம் போன் றோரின் விமர்சனக் கட்டுரைகள் தமிழ் நாட்டில் முன்னர் பிரபல்யம் பெற்றதாகவும் அறிகிறோம்.
நவீன திறனாய்வுப் போக்குகள், தமிழ் நாட்டில் பிரபல்யம் பெறக் காரணமாயிருந்தவர்கள் ஈழத்தவரே என்று கூறினும் மிகையாகாது. பேராசிரியர்கள் கனகசபாபதி கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகிய இருவரும் நாம் பெருமைப் படக்கூடிய இரு ஆய்வறிவாளர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
பேராசிரியர் சிவத்தம்பியின் விமர்சன முயற்சிகள் பெரும்பாலும், வரலாற்றுக் கண் கொண்டவையாகவும் மார்க்சிய அழகியல் சார்ந்தவையாகவும் இருக்கக் காணலாம். 1. இலங்கையில் தனிப்பட்ட இலக்கிய ஆர்வமும், குறிப்பிட்ட இலக்கிய முயற்சிகளும் தோன்றிய காலந்தொட்டே, இலக்கியங்களை இலங்கையின் சமூகபாட்டுக்கோலத்துடன் இணைத்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டப் பெற்று வந்துள்ளது. 2. இலங்கைத் தமிழ் இலக்கியப் பயில்வாளர்கள், இந்தியத் தமிழ் இலக்கியப் பயில்வாளரிலும் பார்க்கப் பிரதேச, பிற்பண்பாட்டுப் பாரம்பரியங்களை அறிவதற்கும், தழுவியமைத்துக் கொள்வதற்கும் இருந்த வாய்ப்புகள். 3. இலங்கைப் பல்கலைக் கழகங்களின் பங்கு, 4. ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்கும், விமர்சகர்களுக்கு மிடையே ஒருவர் கருத்துரைகளினால், மற்றவர் நன்மை யடையும் ஒரு பரஸ்பர நல்லுறவு நிலை."
மேற்கண்டவாறு இலங்கையின் விமர்சன முனைப்புக் கான காரணிகள் சிலவற்றைப் பேராசிரியர் சிவத்தம்பி எடுத்துக் கூறியுள்ளார். (ஈழத்தில் தமிழ் இலக்கியம் என்ற அவரது நூலைப் பார்க்கவும்)

Page 35
கே. எஸ். சிவகுமாரன்
ஈழத்து இலக்கிய விமர்சன மரபு வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுபவர்கள் யாவர் என்றும் சிவத்தம்பி நிரற்படுத்தி யுள்ளார். 1. ஈழத்து இலக்கிய உரைகாரர்கள், 2. ஆசிரியப் பரம்பரை முக்கியஸ்தர்கள், 3. பத்திரிகைத் தொடர்புடைய அழகியல் வாத விமர்சகர்
956T, 4. சமூக நோக்குடைய, இலக்கிய விமர்சன திறன் வாய்ந்த மறுமலர்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஆக்க இலக்கியப் படைப்பாளிகள், முற்போக்கு இலக்கியவாத முன்னோடிகள், பல்கலைக்கழக வழிவந்த முற்போக்கு விமர்சகர்கள், முற்போக்கு விமர்சகர்கள், முற்போக்கு இலக்கியத் தாக்கம் காரணமாக அதனை ஆதரித்தும், எதிர்த்தும் நின்ற ஆக்க இலக்கிய கர்த்தாக்களாகிய விமர்சகர்கள், 9. கல்விப் பயிற்சி வழியாக இலக்கிய விமர்சனத்தைத் தமது ஆய்வுத் துறையாகக் கொண்டுள்ள விமர்சகர்கள், (ஈழத்தில் தமிழ் இலக்கியம்)
ஈழத்து நவீன தமிழ் இலக்கிய விமர்சகர்கள் யார்? அவர்களுடைய பின்னணி என்ன? அவர்களுடைய இலக்கிய காலச் சூழ்நிலை என்ன? அவர்கள் கொண்டுள்ள நேரடி அல்லது மறைமுக நோக்கங்கள் என்ன?- இவை அடிப்படையான கேள்விகள்.
:
கோட்பாடு அடிப்படையில், கையாளப்படும் விமர்சன முறை அடிப்படையில் அவர்களை வேறுபடுத்த முடியும்.
சில விமர்சகர்கள் சித்தாந்த அடிப்படையில் எழுத, வேறு சிலர் விவரணப் பாங்கில் எழுதுவார்கள்.
ஒரு சிலர் வரலாற்றுக் கண்கொண்டு எழுதினால், வேறு சிலர் அதனைப் புறக்கணித்து எழுதுவார்கள்.
54

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
சிலர் தார்மிக நெறிக்கு ஆட்படுவார்கள். பலர் சம்பிரதாயமாக இருப்பார்கள். ஒரு சில விமர்சகர்கள் அகவயப்பட்டு எழுதும் வேளை யில், வேறு சிலர் பகுப்பாய்வு முறையில் விமர்சிப்பார்கள்.
சிலருக்குப் பண்டித மனப்பான்மையுண்டு. வேறு சிலருக்கு நவீனத்துவ சிந்தனைகள் உண்டு. இவ்வாறு விமர்சகர்களை வகுக்க முடியும். விமர்சகர்கள் எந்தப் பின்னணியில் நின்று எழுதுகிறார் கள்? அவர்களுடைய வாசகர்கள் யார்? அவர்களுடைய நோக் கங்கள் என்ன என்பதை நாம் முதலில் கவனித்தல் வேண்டும். ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையில் மூன்று விதமான விமர்சகர்கள் இருக்கிறார்கள் எனக் கூறமுடியும்.
முதலாவது பிரிவினரைப் பல்கலைக் கழக விமர்சகர்கள் என அழைக்கலாம்.
இந்த விமர்சகர்கள் பல்கலைக் கழக வளாகங்கள் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் பேராசிரி யர்களும், விரிவுரையாளர்களும் ஆவர்.
இவர்கள் பெரும்பாலும் தமது வர்க்கத்தினருக்கே (அதாவது சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக) எழுதுகிறார்கள்.
இலக்கியத்தைப் பாடமாகக் கொண்ட மாணவர்கள் இந்த விமர்சகர்களினால் பெரும் பயன் அடைகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தை ஒரு பாடநெறியாகப் பயிலும் மாணவர்களை வழிப்படுத்தி, ஆற்றுப்படுத்துபவர்கள் இந்தத் திறமைசார்ந்த பல்கலைக் கழக விமர்சகர்களே.
உண்மையில் 'இலக்கிய திறனாய்வு" என்ற தனிப் பிரிவுக்குள் அடக்க முடியாவிட்டாலும், இலக்கிய விமர்சனம் சார்ந்த, மொழி, மொழியியல், வரலாறு, சரிதை போன்றவற்றில்
55

Page 36
கே.எஸ்.சிவகுமாரன்
ஆய்வை மெற்கொள்பவர்களையும், பல்கலைக்கழக விமர்சகர்கள் என அழைக்கலாம்.
இவர்களை ஆங்கிலத்தில் THE ACADEMICS என்பார்கள். இவர்கள் அனைவரும் ஒத்த தரமுடையவர்கள் என்றோ - பல்கலைக்கழக விமர்சகர்கள் பிரிவில் மாத்திரம் அடங்குப வர்கள் என்றோ கருதப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
உதாரணமாக, கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களை, ஏனைய பிரிவுகளிலும் அடக்கலாம்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சகர்களில் இரண்டாவது பிரிவினரை, ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்ட விமர்சகர்கள் எனலாம்.
இவர்கள் விமர்சனத்தில் முழுமூச்சுடன் ஈடுபடாமல் ஒரு துணைச் சாதனமாகவே விமர்சனத்தைக் கையாளுகின்றனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விமர்சகர்கள் போன்று புலமை உடையவராக இல்லாவிட்டாலும் தமது படைப்பின் அழகியல் அம்சங்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்துடனும், நல்ல இரசனையை வளர்ப்பதிலும் ஈடுபாடு கொண்டவர் களாக இருக்கிறார்கள்.
இவர்களுள் காலஞ்சென்ற மு. தளையசிங்கம், முருகையன், நுஃமான், சண்முகம் சிவலிங்கன், செ. கணேச லிங்கம், எஸ். பொன்னுத்துரை, மு. பொன்னம்பலம், அ. யேசு ராசா, டானியல் அன்டனி, மு. கனகராசன், தெணியான், ரஞ்சகுமார், ஷரீப், தெளிவத்தை ஜோசப், சாந்தன், சொக்கன், சி. சிவசேகரம், செ. யோகராசா, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன், அ. ந. கந்தசாமி போன்றோர் ஒரு ક6of .
சோ. சிவபாதசுந்தரம், இலங்கையர்கோன், வைத்தி லிங்கம், சோ.நடராஜா, யோ. பெனடிக்ட்பாலன், தெளிவத்தை
56

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
ஜோசப், ஈழவாணன், செம்பியன் செல்வன், வரதர், வி. கந்தவனம், சபா ஜெயராசா, இமையவன், காவலூர் இராச துரை, ஈழத்துச் சோமு, கனக செந்திநாதன், சு. வே. சொக்கன், சிற்பி, சரவணபவன், க. நவசோதி, புலோலியூர் ஆ இரத்தின வேலோன், நெய்தல் நம்பி போன்றவர்களையும் இன்னும் சிலரையும் இந்தப் பிரிவில் அடக்கலாம்.
ஆனால், சக எழுத்தாளர்கள் இவர்களுடைய விமர்சனங் களைப் பொருட்படுத்தாததைக் கண்டால், இவர்கள் பல் கலைக்கழக வட்டாரத்திற்கும் பொது வாசகர்களுக்குமாக எழுத வேண்டி ஏற்படுகிறது.
எனவே, இவர்களுடைய நடை ஒரு வித பாண்டித்திய (அதாவது "ஆழமான விமர்சனம்" என்ற பிரமையை அளிக்கத் தக்க) நடையாக அமைகிறது. அடிக்குறிப்புக்கள், "ஆழத் திற்கு" ஒர் இலட்சணமாம்.
மூன்றாவது பிரிவு விமர்சகர்கள் வெகுசனத் தொடர்புச் சாதனங்களான வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, பொது வாசகர்களுக்காக எழுதும் பத்தி எழுத்தாள (COLUMNISTS) விமர்சகர்கள் இவர்கள் ஒரு சிலரே.
சாதாரண மக்களின் இரசனையை உயர்த்துவதில் இந்த விமர்சகர்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
இவர்கள் சாதாரண வாசகர்களுக்கு எழுத வேண்டி யிருப்பதனால் பண்டித மனப்பாங்கைக் கைவிட வேண்டி யுள்ளது.
அடிக்குறிப்புகளையும், விளக்கங்களையும் விரிவான பார்வைகளையும் தவிர்க்க வேண்டியுள்ளது.
பத்திரிகைத் தேவையை முன்னிட்டுச் சுருக்கமாகவும், மேலோட்டமாகவும் எழுத வேண்டியுள்ளது. இத்தகைய பத்திரிகை ரக விமர்சகர்களில் கே. எஸ். சிவகுமாரன்,
57

Page 37
கே. எஸ்.சிவகுமாரன்
தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜிவா, காவலூர் ஜெகநாதன், பாமா, ராஜகோபாலன், ஈழவாணன், யோகா பாலச்சந்திரன், எஸ். திருச்செல்வம் போன்றோரைக் குறிப்பிடலாம். இப்பொழுது உமா வரதராஜன், புலோலியூர் هوایی இரத்தின வேலோன் போன்ற புதிய பத்தி எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர்.
இந்தப் பிரிவினரைப் பெயரிட்டு அழைப்பது கடினம், முழுநேர விமர்சகர் (PROFESSIONAL) என்பதா?
பத்திரிகையாளர் என்பதா? கலை இலக்கியங்களில் நிறைய ஈடுபாடு கொண்டவர் (MAN OF ARTS AND LETTERS) 6T6Tugit? W
இவர்களைக் கட்டுபாடுகளுக்கு உட்படாத சுதந்திர (FREELANCE) விமர்சகர்கள் என அழைக்கலாம்.
இப்படிக் கூறுவதனால் இத்தகையவர்களுக்குக் கொள்கை, கோட்பாடு, விமர்சன நோக்கு, பணி போன்றவை இல்லை என்றாகாது. m
இங்கு கூறவருவது என்னவென்றால், இவர்கள் பல்கலைக்கழக அங்கீகாரமோ, சக எழுத்தாளர் அங்கீகாரமோ இருக்க வேண்டும் என்ற பயமில்லாது, சாதாரண வாசகர்களுக்காகத் தமது இயல்பில் நின்று எழுதுகிறார்கள்.
இவர்களுக்குப் பொதுவாக உயர் கல்விப் பயிற்சி இருப்பதுண்டு. ' ஆனால், "அக்கெடெமிக்ஸ்" போன்று இவர்களால் எழுத (platur Sl.
திறனாய்வாளர்களாக இவர்கள் வகிக்கும் பங்கைப் புறக்கணிக்க இயலாது இருக்கிறது. காரணம் மக்கள் தொடர்பு இவர்களிடையே கூடுதலாக இருக்கிறது.
சாதாரண மக்களின் இரசனையை உயர்த்துவதில் இந்த விமர்சகர்களே, பெரும்பங்கு வகிக்கிறார்கள். இத்தகைய திறனாய்வாளர்கள் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும்
58

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
கட்டுரை, மதிப்புரை, தகவற்களம், பத்தி போன்றவற்றை எழுதுபவர்கள்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட முதலாவது விமர்சனப் பிரிவினரிடம் இருந்து (பல்கலைக்கழக விமர்சகர்களிடம் இருந்து) பொதுவான அறிவை இந்த மூன்றாவது பிரிவினர் பெற்றுக்கொள்வார்கள்.
இந்த மூன்றாவது இலக்கிய விமர்சகப் பிரிவினர், இரண்டாவது பிரிவினரான ஆக்க இலக்கிய விமர்சகர்களிடம் இருந்தும், சிருஷ்டித்தன்மை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்கின்றனர்.
மூன்றாவது ரக விமர்சகர்கள் தாமும் இலக்கிய சிருஷ்டித்துறையில் ஈடுபடுவதனால், நுட்பங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆக்க இலக்கியத்திலும் ஈடுபட்டுள்ள நான் என்னை மூன்றாவது பிரிவினருக்குள் அடக்கிக் கொள்வேன்.
ஒரு குறிப்பிட்ட படைப்பு முதல் முயற்சியாக இருக்கும் பட்சத்திலும் சாமான்யமாக இருக்கும் பட்சத்திலும், அந்தப் படைப்பை "ஆழமாக" விமர்சிக்க முயன்றால், விளைவு எப்படியிருக்கும் என்பதை ஊகித்துப் பாருங்கள்.
இத்தகைய விமர்சகர்களின் முதல் நோக்கம், சாதாரண வாசகர்கள் மத்தியில், நல்ல இரசனையை உண்டு பண்ணு வதும், ஆற்றல் இலக்கிய படைப்பாளிகளை நல்ல வழியில் ஊக்குவிப்பதும், பிறருக்கு அறிமுகம் செய்து வைப்பது மேயாகும்.
எனவே மூன்றாவது ரக விமர்சகர், முதலாவது, இரண்டாவது ரக விமர்சகர்கள் போன்று எழுத முற்பட்டால், நோக்கம் கைவிடப்பட்டதாகிவிடும்.
தவிரவும், பத்திரிகைத் தேவையை முன்னிட்டு சுருக்கமாகவும், மேலோட்டமாகவும் எழுத வேண்டியுள்ளது.
59

Page 38
கே.எஸ். சிவகுமாரன்
மூன்றாவது பிரிவு விமர்சகர்களை எள்ளி நகையாடும் சிலர் தாம் மெத்தப் படித்த ஆழமுடையவர்கள் என்று தாமே நம்பிக்கை கொள்பவர்கள். இவ்வாறு எள்ளி நகையாடப்பட்ட போதிலும், மூன்றாவது பிரிவு விமர்சகர்களுக்கு இருக்கும் ஆற்றல், இலக்கிய கூர் உணர்வோ, பரந்த விரிந்த பல்வகை அறிவோ, அந்தக் கண்டனக்காரர்களுக்குப் பொதுவாக இருப்பதில்லை என்பது கசப்பான ஓர் உண்மை.
"விமர்சகர்கள் என்றால் பத்திரிகையில் எழுதுவோர் மாத்திரமல்ல, விமர்சனம் என்ற பெயரில் வியாபாரக் கும்பல்கள் நடத்தும் விற்பனைக் கூட்டங்களில் துணிந்து நின்று விமர்சிப்பதும் விமர்சனம்தான்" என்கிறார் பேராசிரியர் சி. சிவசேகரம் ("மு. போ. இலக்கியம் என்றொரு யானை இருந்ததாம்"-அலை 18)
விஷயம் என்னவென்றால் மூன்று விதமான விமர் சகர்களும் நமக்குத் தேவை என்பதே.
ஒவ்வொரு தரத்திலும், விமர்சனம் தேவை. மூன்றாவது தர விமர்சகர்கள் எழுதுபவற்றுள் பெரும் பாலானவை தொகுப்பாக வராவிட்டால் நீடித்த வாழ்வுடைய தாக அமையமாட்டா.
அதே வேளையில், சாதாரண வாசகர்கள், நேரமின்மை காரணமாகவும், ஆழமாக அறியவேண்டிய அவசியமின்மை காரணமாகவும், மூன்றாவது ரக விமர்சகர்களின் எழுத்துக் களையே, பரவலாகப் படிக்கிறார்கள்.
காரணம், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சிறிய அளவில் அமைந்த விமர்சனங்களாக அவை இருப்பது தான். மூன்றாவது பிரிவு விமர்சகர்கள் ஆழமற்ற விமர்சனங் களையாகுதல் எழுதாவிட்டால், ஈழத்துத் தமிழ் வாசகர்கள், உடனுக்குடன் இலக்கியச் செய்திகளையும், தகவல்களை யும், அறிமுகங்களையும், பார்வைகளையும் அறியும் வாய்ப்பு இருக்கமாட்டாது என்பது, ஒவ்வொருவரும் அறிந்த உண்மை
60

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
உண்மையில், இந்த மூன்றாவது ரக விமர்சனப் பிரிவு ஈழத்துத் தமிழுக்குப் புதிது. ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில், இத்தகைய 'பிறீலான்ஸ்" விமர்சகர்களின் செல்வாக்கு அளப்பரியது.
"அக்கரைச் சீமையிலே" (புதினம் வரதர்) "சருகுகள்" (செய்தி-இராமச்சந்திரன்) "சருகுகள்" (மல்லிகை - டொமினிக் ஜீவா) ஆகிய பத்திகள் மூலமும் "கனப்பரிமாணம்", "மனத்திரை", "சித்திரதரிசினி' இலக்கிய வினாவிடை ஆகிய பத்திகள் மூலமும் (தினகரன் வார மஞ்சரி) "நாற்சாரம்", "எண் திசைக் கோலங்கள்" போன்ற பத்திகள் (வீரகேசரி) மூலமும் வேறு பல பத்திகளையும் நான் எழுதினேன்.
நவீன இலக்கிய விமர்சனம், சமகால இலக்கியம் பற்றியது மாத்திரமன்று.
பழைய இலக்கியங்களின் புனர் மதிப்பும் நவீன விமர்சனமே.
நவீன ஈழத்து இலக்கிய விமர்சனம் பற்றி மேலும் அறிந்து கொள்ள பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய ஈழத்தில் தமிழ் இலக்கியத் திறனாய்வு முயற்சிகள் (இலங்கை கலாசாரப் பேரவை தமிழ் இலக்கிய விழா மலர் 16.1.72) மா. பீதாம்பரம் எழுதிய ஈழ நாட்டு உரையாசிரியர்கள் (கணேசையர் நினைவு மலர் - 1960) கைலாசபதி எழுதிய இலக்கியமும் திறனாய்வும் (திருத்தப்பட்ட சென்னை வெளியீடு) தாமரையில் மறு பிரசுரம் செய்யப்பட்ட கைலாசபதியின் "தற்கால விமர்சனப் போக்குகள்" என்ற கட்டுரை ஆகியவற்றையும் பார்க்கவும்.
()
61

Page 39
சில ஈழத்து விமர்சன நூல்கள்!
"இலக்கிய விமர்சனம், இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு ஆகியவை தனித்துறைகள் எனினும், அவை முற்றிலும் வேறுபட்டவை அல்ல. ஒன்றை ஒன்று சார்ந்தும் உள்ளடக்கியும் செல்வன. அவ்வகையில் விமர்சன பூர்வமான இலக்கிய வரலாற்று நூல்கள் சிலவும் இங்கு தோன்றின. இவ்வகையில் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு, பலருக்கு ஆதர்சமாகவும், முன்னோடி யாகவும் அமைந்தது. (இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் சி. மெளனகுரு, மெளனகுரு சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்)
முக்கிய நூல்கள் : இந்த வரிசையில் பின்வரும் நூல்கள், இலங்கை விமர்சனத் துறை வளர்ச்சியை ஓரளவு காட்டி நிற்கின்றன. எனது ஈழத்து இலக்கியம் நூல்களின் அறிமுகம் என்ற நூலையும் பார்க்கவும்.
காலமும் கருத்தும் (ஆ. வேலுப்பிள்ளை), தமிழ் இலக்கியத்தில் ஈழத் தமிழறிஞர் பெரு முயற்சிகள் (பொ. பூலோகசிங்கம்), ஈழத்து இலக்கிய வளர்ச்சி (கனக செந்திநாதன்), ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சி (சொக்கன்), ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (நா. சுப்பிரமணிய ஐயர்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (ஆ. சதாசிவம்), ஈழத்தில் தமிழ் இலக்கியம், ஈழத்துச் சிறுகதையின் தோற்றமும், உயர்ச்சியும், நாவலும் வாழ்க்கையும், தனித் தமிழ் இலக்கியத்தின் அரசியற்
62

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
பின்னணி, (இந்த நான்கு நூல்களையும் எழுதியவர் கா. சிவத்தம்பி), இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (மெளனகுரு, சித்திரலேகா, நுஃமான்), ஈழத்து நாட்டுப் பாடல்கள் (பாலசுந்தரம்), ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு (எப். எக்ஸ். சி. நடராஜா), ஈழத்து நாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள் (தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை), பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், இரு மகா கவிகள், அடியும் முடியும், ஒப்பியல் இலக்கியம், தமிழ் நாவல் இலக்கியம், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், திறனாய்வுப் பிரச்சினைகள், பாரதி பாடபேதம், இலக்கியமும் திறனாய்வும் (இந்தப் பத்து நூல்களையும் எழுதியவர் க. கைலாசபதி), கவிதை நயம், (க. கைலாசபதி, இ. முருகையன்), தமிழியற் சிந்தனை, இலக்கியத் தென்றல், தமிழர் சால்பு (சு. வித்தியானந்தன்), போர்ப்பறை, மெய்யுள் (மு. தளைய சிங்கம்), ஒரு சில விதி செய்வோம் (இ. முருகையன்), ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி, (சில்லையூர் செல்வராசன்), ஈழத்துச் சிறுகதை மணிகள் (செம்பியன் செல்வன்), இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் நாடக அரங்கம் (சி. சிவானந்தன்), பாரதி முதல் பாரதிதாசன் வரை (எஸ். தில்லைநாதன்), ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (க. செ. நடராஜா), இலக்கியச் சிந்தனைகள் (க. கைலாசபதி), சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள் போன்றவை இந்நூல்களின் சிலவாகும். மேலும் புதிதாகப் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள்ளே பேராசிரியர்கள் கா. அருணாசலம், துரை மனோகரன் எழுதியவைகளும் அடங்கும்.
நூல் வடிவில் இடம்பெறாத பல கட்டுரைகளை இலங்கை விமர்சகர்கள் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள். இலக்கியம் மாத்திரமன்றி மேடை நாடகம், திரைப்படம், நாட்டியம் போன்றவை பற்றியும் பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
63

Page 40
கே.எஸ்.சிவகுமாரன்
ஈழத்தில் தமிழ்க் கலைகள், இலக்கியங்கள் பற்றி ஆங்கில மொழி மூலமும் விமர்சனப் பார்வை செலுத்தப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, கா. இந்திரபாலா மற்றும் தில்லைநாதன், சண்முகதாஸ், சில்லையூர் செல்வராசன், சமுத்திரன், நவாலியூர் சச்சிதானந்தன், செ. கனகநாயகம், சுரேஷ் கனகராஜா, ஏ. ஜே. கனகரத்தினா, சி. சிவசேகரம், நா. சுந்தரலிங்கம், எஸ். சிவநாயகம், ஆர். முருகையன், எஸ். கணேசலிங்கன், யோகா பாலச்சந்திரன், கே. எஸ். சிவகுமாரன் போன்றோர் ஆங்கிலத்தில் விமர்சனம் செய்திருக்கின்றனர். தமிழ் ரைட்டிங் இன் பூரீலங்கா (கே. எஸ். சிவகுமாரன்) ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு சிறு நூல். அதேபோல "ASPECTS OFCULTURE 1N SRI LANKA"வும் நான் எழுதியவற்றுள் மற்றொன்று.
"தி ஆர்ட்ஸ் திஸ் வீக்", "ஆர்ட்ஸ் மகசின்", "தி ஆர்ட்ஸ் சீன்", "லிட்டரறி குவாட்டர்" ஆகிய ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் கே. எஸ். சிவகுமாரன் ஈழத்துத் தமிழ்க்கலை, இலக்கியங்கள் பற்றிக் கடந்த முப்பது வருடங்களாக விமர்சித்து வருகிறார்.
ஈழத்தில் விமர்சனத்துறை பத்திரிகைகள், நூல்கள் வாயிலாக மாத்திரமன்றி, வானொலி, தொலைக்காட்சி, கருத்தரங்குகள், கலை இலக்கிய விழாக்கள் போன்றவை மூலமும் வளர்ச்சி பெற்று வருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, "கலைக்கோலம்" என்றொரு நிகழ்ச்சி மூலம் கலை, இலக்கிய விமர்சனங்களைத் தக்கவரைக் கொண்டு ஒலிபரப்பி வருகிறது. அதற்கு முன்னர் தனியாகத் திரைப்பட விமர்சனங்களும், புத்தக விமர்சனங்களும் முறையே கால்மணி நேரம் இரு வாரத்துக்கொரு முறை ஒலிபரப்பாகின. கே. முரளிதரன், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோர் இக்கால்
64

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
மணி நேரத் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். இது, அறுபதுகளின் மத்தியில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். இந்த விமர்சன நிகழ்ச்சிகளை விடக் கலந்துரையாடல்கள், பேச்சு, சித்திரம் போன்றவை மூலம் விமர்சன நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
எனவே, இலங்கையில் கடந்த முப்பது, நாற்பது வருடங்களாக விமர்சனத்துறை வளர்ந்து வருகிறது எனலாம். ஈழத்து இலக்கிய வளர்ச்சி நெறிக்கேற்ப, விமர்சனப் பாங்கும் வெவ்வேறு அழுத்தம் பெற்று வந்திருக்கின்றது. இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய அடிப்படைப் பண்புகள் பற்றிய விவாதங்கள், இவ்விஷயங்கள் பற்றிப் பரவலாக வாசகர்களும் மாணவரும் அறிந்து கொள்ளவும் பங்கெடுக்கவும் உதவிற்று. இதனால், அழகியல், சமூகப் பணி, சமூகப் பிரக்ஞை, உருவம், உள்ளடக்கம் போன்றவை மாத்திரமன்றி, முற்போக்கு, நற்போக்கு, பிரபஞ்சயதார்த்தவாதம் ஆகியன பற்றியும் கருத்து மோதல்களும், தெளிவும் ஏற்படலாயிற்று.
ஈழத்தில் புதிய எழுத்தாளர்களும் விமர்சகர்களும் உருப்பெறத் தொடங்கிப் புதிய பார்வைகளைச் செலுத்த முற்பட்டனர். கலை இலக்கியம் பற்றி "உயர்ந்தோர் குழாம்" மாத்திரம் அக்கறை கொள்வதில்லை. வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மூலமான ஜனரஞ்சகத் தன்மையும் மிளிர விமர்சனப் பாங்கு செழுமை பெறுகின்றது.
சுருங்கச் சொன்னால், ஈழத்து விமர்சனத் துறை வளர்ச்சி காரணமாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நன்மை பயப்பனவாகவே இருக்கின்றன. எழுத்தாளர்களுக்கு, மாணவர்களுக்கு, கலை இலக்கியங்களில் ஈடுபட்டவர் களுக்கு, பொது மக்களுக்கு அனைவருக்கும் புதிய தகவல்களையும் புதிய வளர்ச்சிப் போக்கினையும் காட்டுவதாக ஈழத்தின் விமர்சனத்துறை இருந்து வருகிறது.
65

Page 41
கே.எஸ்.சிவகுமாரன்
உதாரணமாக, ஐம்பதுகளில் பயன்பெற்ற மாணவனை விட, இப்பொழுது பயன்பெறும் மாணவன், புதிய விமர்சன ஞானத்தால் கூடுதலான பயனைப் பெறுகிறான். ஈழத்தில் பலவிதமான விமர்சன அணுகு முறைகளையும் காணக் கூடியதாக இருக்கின்ற போதிலும், பல்நெறி சார்ந்த விமர்சனப் பாங்கே முக்கிய இடம் பெறுகிறது. இதனால் கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், பண்பாட்டம்சங்கள், வரலாறு போன்ற பல துறைகளிலும் பரிச்சயம் தேவை. இவற்றின் இணைவாக ஒரு முழுமையான இரசனையையும் கண்ணோட்டத்தையும் யாவரும் கொண்டுள்ளனர்.

திறனாய்வு - கவிதை
கவிதை, விமர்சனம் ஆகிய துறைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பதற்கு மேலாக நான் ஒன்றும் புதிதாகக் கூறிவிடப் போவதில்லை. ஆயினும், இரு துறைகளிலும் தலைசிறந்து விளங்கும் இரண்டு ஈழத்து அறிஞர்கள் எழுதிய நூல் ஒன்றை, இப்பகுதியில் அறிமுகம் செய்து வைக்க விரும்பு கின்றேன்.
விமர்சகர் கைலாசபதியும், கவிஞர் முருகையனும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் கவிதை நயம் என்ற நூலில் வெளியாகியிருக்கின்றன. இந்த நூல், செய்முறை விமர்சனம் (பிறக்ரிக்கல் கிரிட்டிஸிஸம்) என்ற பாங்கில் அமைந்திருக் கிறது. அவர்கள் கூறியிருக்கும் இத்துறைகள் பற்றிய கருத்துக்கள் வருமாறு:
"கவிதை என்பது, முதலாவதாக மிகப் பழைமை வாய்ந்த இலக்கிய வடிவம். எனவே, அது நன்கு மெருகேற்றப் பட்டுள்ளது.
இரண்டாவதாக, எந்தப் பொருளையும் கவிதை யாக்கலாம். கவிதைக்கென்றே பிரத்தியேகமான - சிறப்பான பொருள் கிடையாது.
மூன்றாவதாக, சொற்கள்தான் கவிதையிலே அதி முக்கியமாக விளங்குகின்றன. கவிதையின் கதையானது சொற்களின் கதையாகும்.
67

Page 42
கே.எஸ்.சிவகுமாரன்
நான்காவதாக, கவிதையிலே இசைத் தன்மை அல்லது ஒசைச் சிறப்பு உண்டு. கவிதை என்றால் வாய்விட்டுப் பாடக்கூடியதே. அதன் காரணமாக, பாட்டு என்றும் கவிதையைக் குறிப்பிடுகிறோம். "உரையும் பாட்டும்" என்றே பழைய தமிழ் ஆசிரியரும் கூறுவர்.
பொதுவாகக் கூறுமிடத்து, எல்லாக் காலத்திலும் கவிதையின் பொருள் வேறுபட்டுக் காணப்படினும், அது படிப்போருக்கும், கேட்போருக்கும் இன்பத்தையும் உயர்ந்த இலக்கியங்களையும் அளிப்பதாக இருக்கிறது. கவிதையின் பண்பும், பயனும் அது எனலாம். இதனை அனுபவிக்க உதவுவதே கவிதை நயப்பின் நோக்கமாகும். விமர்சனம் பற்றி
‘சேரவாரும் செகத்தீரே என்று ஒரு கவிஞன் பாடியதைப்போல், கவியின்பம் காண வாரீர் என்று அழைப்பதே திறனாய்வாளரின் முக்கிய நோக்கம். கவிதையைச் சித்திரவதை செய்வது அன்று. திறனாய்வு என்பது அறுவை வைத்தியம் போன்றது எனச் சிலர் தவறாகக் கருதுவது உண்டு. புறத்தோற்றத்தைக் கொண்டு அவ்வாறு கருதுகின்றனர் என்றும் கூறலாம்.
கவிதை என்பது பல கூறுகளினால் ஆகிய கூட்டுப் பொருள், சொல், பொருள், ஓசை, அலங்காரம், சொல்லுக்கு அப்பால் குறிப்பாக நிற்கும் உணர்வு ஆகிய பல் அம்சங்கள் அதனுள் அடங்கியுள்ளன. இத்தகைய பல உறுப்புகள் அளவாகக் கலந்து பிரிக்க முடியாத வண்ணம் இயைந்து இருப்பதுதான் கவிதை. தனிக் கவிதையில் அல்லது காவியத்தில் பல்வேறு அம்சங்களின் பொருத்தப்பாடு ஊன்றிக் கவனிக்கத் தக்கது. இப்பொருத்தம் அல்லது பொருத்தமின்மை ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி, ஒரு முடிவுக்கு வர உதவுவதே திறனாய்வின் நோக்கமாகும்.
68

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
கற்பனை, ஒலிச்சிறப்பு, யாப்பு, அமைதி, அணிநலம், தொடைநயம், குறிப்புப் பொருள், சுவைகள் ஆகியவை வளம் பொலியுமாறு கவிதை படைக்கப்படுகிறது என்று கூறு கிறோம். இவையெல்லாம் சொற்களின் அமைப்பிலும் அவற்றை புலவன் கையாளும் வகையிலும் தங்கியுள்ளன. சொற்களை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதிலும், அவற்றிடையே மண்டிக் கிடக்கும் உயிராற்றலை வெளிக்கொணர்வதிலுமே கவிஞனின் தனிச் சிறப்பு காணப்படுகிறது. சிறந்த சொற்கள் சிறப்பான ஒழுங்கில் அமைந்தது கவிதை என்பர். கற்பனை:-
கற்பனை என்பது ஒரு கவிதையை ஆக்கும் போது, கவிஞன் ஆற்றுகின்ற படைப்புத் தொழிலின் ஒரு பகுதியாகும். இப்படைப்புத் தொழில் மூன்று படிகளில் அல்லது கட்டங்களில் நிகழ்வதென நாம் கருதலாம். அனுபவம், கருத்து, படிமம் என்பனவே அம்மூன்று கட்டங்களிலும் முறையே இடம்பெறும் அம்சங்களாகும். அனுபவம் புற உலகிலிருந்து ஈட்டப்படுவது. ஐம்புலன்களின் வாயிலாகக் கிட்டுவது, பலதரப்பட்ட புலப்பாடுகளின் சேமநிதியாக உள்ளது. கருத்து அனுபவங்களினின்றும், சிந்தனையாலும், உள்ளுணர்வாலும் வடித்தெடுக்கப்படுவது. பொதுமைப் பண்பு கூடியது. மனநிகழ்வாகவே பெரும்பாலும் நிற்பது. படிமமோ, கருத்துக் கட்டி கருத்துக்களை உணர்த்தக் கூடிய ஒரு சில புலப்பாடுகளின் கூட்டுச் சேர்க்கை. படிமங்களை ஆக்கும் செயல்முறையே கற்பனையாகும். மிகையுணர்ச்சி
மிகையுணர்ச்சி என்பது, கேவலம் உணர்ச்சியின் தோற்பகட்டு மாத்திரமன்று: அல்லது அளவுக்கு மீறிய உணர்ச்சிப் பரவசம் அன்று. ஆனால், எத்தகைய செய்கைகளுடனும் தொடர்பற்ற முறையில் உணர்வுகளை வெறுமனே வளர்த்தலாகும். ஓர் உணர்வையோ கருத்தையோ
69

Page 43
கே. எஸ். சிவகுமாரன்
வரையறுத்து கூர்மையாக்கிக் கூறமுடியாத ஒருவன், இலக்கிய வழக்குச் சொற்களிலே தஞ்சம் புகும்போது, மிகை உணர்ச்சி தோன்ற வழிபிறக்கிறது. கூறமுற்பட்ட அனுபவத்திற்கு உகந்த சொற்கள் வந்து பொருந்தாமையால், வேறு சொற்களால், கூறி முடிக்கப்பட்ட அனுபவம் உண்மையாக இருக்காமற் போவதில் வியப்பெதுவும் இல்லை. குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலே அளவுக்கு அதிகமாக ஒருவரது ஏற்புடைமை இருப்பின் அதனையே மிகையுணர்ச்சி என்கிறோம்.
இலக்கியத்தில் காணும் மிகையுணர்ச்சி, வாழ்க்கை யிலிருந்துதான் ஊற்றெடுக்கிறது. வயதுபோனவர்கள் சிறிது உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டு இருக்கும் போது, கண் கலங்குகின்றனர். மது அருந்தியதும் சிலருக்கு உளம் நெகிழ்ந்து விடுகிறது. சில்லறை விஷயங்களுக்கெல்லாம் தளதளத்து விடுவதைக் காண்கிறோம். இத்தகைய சந்தர்ப்பங் களில், மிகையுணர்ச்சி கழிவிரக்கத்தின் சாயலிலோ, அன்றி பச்சாதாபத்தின் சாயலிலோ, அதீத பற்றாகவோ இருக்கிறது. உளவியல் அடிப்படையில் நோக்குமிடத்து சாதாரணமாக ஒருவர் உணர்ச்சி வசப்பட்டால் அவ்வுணர்ச்சியே செயலுக்கு தூண்டுதலாக அமைவதைக் காணலாம். உரிப்பொருள்:-
கற்பனையின் செயற்பாட்டினால் உருவாக்கப்படும், உவமை, உருவகம், குறியீடு முதலாயின கவிதையின் அக உறுப்புகள். சொற்களின் பொருட்பேறு, ஓசை நயம் முதலாயின கவிதையின் புறக்கருவிகள், அணிகலன்களாகும். இத்தகைய உருவ அமைதியைப் பெற்றுத் திகழும் கவிதையின் உயிர்போல மிக முக்கியமாக விளங்குவது அதன் உள்ளுறை அல்லது உரிப்பொருளாகும். இந்த உரிப்பொருள் ஓர் எண்ணமாகவோ உணர்ச்சியாகவோ இருக்கலாம். எண்ணமும் உணர்ச்சியும் பிரிக்க இயலாதவாறு ஒன்றி
70

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இயங்கி, இரண்டறக் கலந்த கலவையாகவும் இருக்கலாம், ஒன்றை அறிவிப்பதன்று கவிஞனின் நோக்கம், ஒன்றை உணர்த்துவதே.
உலகு பற்றிய நோக்குகளும், கருத்துக்களும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையினும், மிகப்பொதுவான வகையிலே ஒரு குறைந்தபட்ச முரண்பாடு காண்பது இயலக்கூடிய காரியமே.
ஆரோக்கியமாக உயிருடன் நடமாடும் அவயவி கவிதை. அந்த அவயவியின் மகோன்னதத்தைக் கண்டுணர் வதே, திறனாய்வின் தேறிய நற்பலனாம்.
மேற்சொன்னவை கவிதை நயம் என்ற நூலில் காணப் படும் வரிகள். உயர் வகுப்பு மாணவர்கள் உட்பட கவிதைப் பிரியர்கள் அனைவரும் கவிதை பற்றி குண கூடார்த்தமான (ABSTRACT அப்ஸ்ராக்ட்) முறையில் அல்லது திட்டவட்டமாக அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.
71

Page 44
திறனாய்வு : நாடகம்
"ஈழத்தில் தமிழ் நாடக விமர்சனப் போக்கு" என்று கூறக்கூடிய ஒருநிலை இல்லை. ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சனத்துறை என்று எதையும் குறிப்பிடக் கூடிய அளவுக்குத் தனித்துவமான ஒரு வளர்ச்சி நிலையை நாம் காண முடியாதிருக்கிறது.
இலக்கியத்தை, ஆக்க இலக்கியத் துறை, கவிதை, நாடகம், புனைகதை என்ற வகைகளாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரித்துப் பார்க்கும்போது கவிதை, புனைகதை ஆகிய துறைகளில் விமர்சனப் பார்வை இருக்கும் அளவிற்கு, நாடகத்துறையில் போதுமான அளவு விமர்சனங்கள் தமிழில் எழவில்லை. இதற்குக் காரணங்கள் பல.
1. நாடக இலக்கியத் துறையில் முழுக் கவனம் செலுத்தப்
Li T66)). 2. நல்ல தரமான நாடகங்கள் பரவலான முறையில்
எழுதப்பட்டும், மேடையேற்றப்பட்டும் இல்லாமை. 3. நாடக இலக்கியங்கள் பற்றிய விமர்சனங்களும் மேடை நாடகங்கள் பற்றிய காத்திரமான, ஆழமான விமர்சனங் களும் எழுதப்படாமை. 4. அவ்வாறு எழுதுவதற்கு எவரேனும் முனைந்தாலும்,
அவற்றைப் பிரசுரிக்கத் தகுந்த சாதனங்கள் இல்லாமை.
இந்தக் காரணங்கள் பொதுப்படையானவை. ஆயினும், இந்த எல்லைக் கட்டுகளை மீறி அங்கொன்றும் இங்கொன்று
72

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
மாக ஒரு சில விமர்சனங்கள் வெளி வந்திருக்கின்றன என்ற உண்மையையும் நாம் கவனித்தல் வேண்டும். அவ்விதம் வெளிவந்த நாடக விமர்சனங்கள் எந்த வடிவத்திலும் எந் தெந்தச் சாதனங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.
வெகுசனத் தொடர்பு சாதனங்களில் இரண்டான பத்திரிகைகளிலும் வானொலியிலும் இந்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இவற்றைத் தவிர பட்டிமன்றம், குறிப்பிட்ட நாடகங்கள் பற்றிய கருத்தரங்குகள் போன்ற வற்றிலும், விமர்சனக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக் கின்றன. பத்திரிகைகளைப் பொறுத்த மட்டில், நாம் பெரும்பாலும் நாளிதழ்களையே விமர்சனக் கட்டுரை களுக்காக எதிர்பார்க்க வேண்டியுள்ளது. சிற்றேடுகளும் நாடக விமர்சனக் கட்டுரைகளைத் தாங்கி வெளி வந்துள்ளன. ஆனால், இவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, இனங் கண்டு கொள்ளக்கூடிய விமர்சனப்பாங்கை நாம் காண முடியாதிருக்கிறது. தினப் பத்திரிகைகள், சில வேளைகளில் தமிழ் நாடக விமர்சனக் கட்டுரைகளைப் பிரசுரித் திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் உண்மையான விமர்சன நெறியில் எழுதப்பட்டவை என்று கூற முடியா திருக்கிறது.
ஆங்கிலப் பத்திரிகைகளை நாம் எடுத்துக் கொண்டால் அங்கு நாடக விமர்சனங்களை எழுதுபவர்கள் பெரும்பாலும் கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட பத்திரிகை அலுவலகச் சிறப்பம்ச ஆசிரியர்களாக இருப்பதை நாம் அறிய முடிகிறது, அவ்வாறு பத்திரிகை அலுவலகத்தினர் விமர்சனம் செய்ய முடியாத நிலையில் இருந்தால், வெளியில் இருந்து நாடகத்துறை விமர்சகர்களின் கட்டுரைகளை அப் பத்திரிகை கள் வாங்கி வெளியிடுகின்றன. இது சிங்களப் பத்திரிகை
73

Page 45
கே.எஸ்.சிவகுமாரன்
களை விட ஆங்கிலப் பத்திரிகைகளுக்குப் பெரிதும் பொருந்தும். ஈழத்தில், குறிப்பாகக் கொழும்பில் மேடை யேற்றப்பட்ட தமிழ் நாடகங்கள் பற்றிய விமர்சனங்கள் தமிழ்ப் பத்திரிகைகளைவிட, ஆங்கிலப் பத்திரிகைகளிலேயே கூடுதலாக வெளிவந்திருக்கின்றன என்பதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
நாடகத்துறை விமர்சனத்திற்குத் தினப்பத்திரிகைகள் போதிய இடம் கொடுக்கத் தவறுவதனால், ஒரு சில பத்தி எழுத்தாளர்கள் தமது பத்திகளில் இந்த நாடகங்கள் பற்றியும் நாடகத்துறை பற்றியும் மேலோட்டமாக எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு பத்தி எழுத்தாளர் விஸ்தாரமாகக் குறிப்பிட்ட ஒரு நாடகம் பற்றி முறையான விமர்சனப் பாங்கில் எழுத முடியாதிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். இதற்கு முக்கிய காரணம், இடவசதி யின்மையே. தமிழிலும், குறிப்பாக ஈழத்துத் தமிழ் நாடகங்கள் பற்றி ஒரு சில விமர்சனக் குறிப்புகள், இந்தப் பத்திகள் மூலமே வெளியாகியிருக்கின்றன என்பதையும் நாம் மறக்கலாகாது.
வானொலியைப் பொறுத்தமட்டில் 'கலைக்கோலம்" போன்ற நிகழ்ச்சிகளில் ஒரு சில மேடை நாடகங்கள் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகம் சம்பந்தமான கலந்துரையாடல்களும், நாட்டுக்கூத்து, நாடகப் பாடல்கள் போன்றவை பற்றிய விளக்கவுரைகளும் இடம் பெற்றிருக் கின்றன. 'ஆர்ட் மகசீன்' என்ற ஆங்கில வானொலி நிகழ்ச்சியிலும் தமிழ் நாடகங்கள் பற்றிய விமர்சனங்கள் ஒலிபரப்பாகி வருகின்றன. ஆனால் இந்த வானொலி விமர்சனங்களின் பிரதிகள் கோவைப்படுத்தப்படாதிருப்பத னால் அந்த விமர்சனங்கள் பற்றிய மதிப்பீடுகளைத் தெரிவிக்க முடியாதிருக்கின்றது. வானொலி நிகழ்ச்சிகள் "காற்றோடு போய் விடுகின்றன" என்பது வானொலி தொடர்பு சாதனத்தின் குறைபாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
74

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
நாடக விழாக்கள் சம்பந்தமாகவும் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் பற்றியும் சில கருத்தரங்குகள், குறிப்பாகக் கொழும்பில் நடைபெற்றிருக்கின்றன. இவற்றின் மூலம் விமர்சனக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஈழத்துநாடகத்திறனாய்வு
ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி பற்றி க. சொக்கலிங்கம் ஒரு நூலை எழுதியிருக்கிறார். நமது நாட்டு நாடக வரலாற்றின் தோற்றம், நாட்டுக் கூத்தில் ஆரம்பிப்பதாக ஆசிரியர் கூறுகிறார். அதே சமயத்தில் முதல் மேடை நாடகம் 1859ஆம் ஆண்டு இடம் பெற்றதாகவும், 1977இல் மேடை யேற்றப்பட்ட "புதியதொரு வீடு" வரையிலுமான நமது நாடக வரலாற்றை ஆசிரியர் எழுதியிருப்பதாகவும் முன்னுரையில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிடுகிறார். உண்மையில் 'சொக்கன்' 1917ஆம் ஆண்டு தொடக்கம் 1973ஆம் ஆண்டுவரை ஈழத்திலே வெளியான தமிழ் நாடக நூல்களின் ஆய்வையே தந்துள்ளார். அதாவது "அச்சிற் பதிப்பித்து வெளியான நூல்களே" ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
"மேடை நாடகங்கள் பற்றிப் பெருமளவு ஆய்வுகளும் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாடக இலக்கியம் பற்றிய அறிவியல் முறை ஆய்வு நிகழாமை பெருங்குறையாகும்" என்று பி. நடராசன், த. பஞ்சலிங்கம் ஆகிய இருவரும், சொக்கனின் நூலுக்கு எழுதிய பதிப்புரையில் குறைபட்டுக் கொள்கின்றனர்.
நாடக இலக்கியம், நாடக இயல் போன்றவை பற்றியும் பத்திரிகைகளில் சில பத்தி எழுத்தாளர்கள் எழுதியிருப்பதை இங்கு நினைவூட்ட வேண்டும்.
இருந்த போதிலும், சொக்கனின் இந்த நூல் மிகவும் பிரயோசனமானதொன்று.
75

Page 46
கே.எஸ். சிவகுமாரன்
அதே சமயத்தில், "உண்மையில் எம்மிடையே நாடக வரலாறு என்பது, இலக்கிய வரலாற்றின் கிட்டிய சொந்தக் காரனாகவே கொள்ளப்பட்டது, கொள்ளப்படுகின்றது" என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அதாவது "நாடக வரலாறு" என்பது நாடகங்களின் வரலாறு மட்டுமல்ல; நாடகத்தின் தளமும் களமுமாகிய அரங்கின், அவ்வரங்கின் தோற்ற வளர்ச்சிக்குக் காரண மாயிருந்த நிறுவனங்களின் வரலாற்றை மனங் கொள்ள வேண்டும். நாடகத்திற்கும் உள்ள ஊடாட்டத்தை அறிய முனைய வேண்டும். எமது நாடக வரலாற்றாய்வின் முக்கிய பண்பாக இது அமைய வேண்டுமென்பது நாடகத்துறை பற்றி அதிகார பூர்வமாகப் பேசக்கூடிய கா. சிவத்தம்பியின் கருத்து (இ. சிவானந்தன் எழுதிய இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் நாடக அரங்கம் என்ற நூலுக்கான முன்னுரை).
நாடக வரலாற்றை, இலக்கிய வரலாறு போன்று எழுத முடியாது. இரண்டுக்குமான அணுகுமுறைகள் வேறு வேறு என்று வலியுறுத்தும் பேராசிரியர் சிவத்தம்பி, "இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றைப் பொறுத்த வரையில், நாடக வளர்ச்சியின் கலைப்பரிமாணமும் சமூகப் பரிமாணமும் மத்தியதர வர்க்க நிலையிலிருந்து அடிநிலைக்குச் சுவறும் நிலையில் மிக முக்கியமான ஓரிடத்தை இலங்கைப் பல்கலைக்கழகம் என்னும் சமூகக் கல்வி நிறுவனம் பெற்றிருந்தது" என்கிறார்.
இ. சிவானந்தன், அரங்கியல் நெறிநின்ற நாடக வரலாற்றை எழுதியிருக்கிறார். ஆயினும் அவர் கொடுத்துள்ள தரவுகள், கட்டுபெத்தைப் பல்கலைக்கழக முயற்சிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பின் விரும்பத்தக்கதாய் இருந்திருக்கும். தவிரவும், முடிந்த முடிபான ஆராய்ச்சியாக இந்நூல் இல்லை என்பதை நூலாசிரியரும் ஏற்றுக் கொள்வார் என முன்னுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.
76

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
சிவானந்தன் 1927ஆம் ஆண்டுக்கும் 1977ஆம் ஆண்டு க்குமிடைப்பட்ட பல்கலைக் கழக நாடக அரங்கு பற்றிய தரவு களைத் தொகுத்து தனது பார்வையை தெரிவித்திருக்கிறார்.
ஈழத்துத் தமிழ் நாடகத்துறை பற்றி வெளியாகிய மூன்றாவது நூல், ஈழத்தில் தமிழ் நாடகம் என்றதொரு சிறிய அறிமுக நூல். அந்தனி ஜீவா எழுதியிருக்கும் இந்நூல், 1978இல் அவர் திருப்பூரில் படித்த ஒரு கட்டுரையாகும். சொக்கனின் நூல் 1977லும், சிவானந்தனின் நூல் 1979லும் வெளிவந்திருக்கின்றன. அந்தனி ஜீவாவின் புத்தகம் 1981இல் வெளியாகியிருக்கிறது. எனவே, நூலாசிரியர் அந்தனி ஜீவாவின் கூற்றான, "நாடகங்களைப் பற்றியோ, அல்லது நாடகக் கலைஞர்களைப் பற்றியோ எந்தவித திறனாய்வு களும், கணக்கெடுப்பதும் சரிவர வெளி வந்ததில்லை. ஈழத்தில் தமிழ் நாடகத்தின் வளர்ச்சியையும் தோற்றத்தையும் முழுமையாக ஆராயும் முயற்சி எதுவும் இது காலவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை" என்பது பொய்யாகிறது.
"சமய நம்பிக்கைக்காகத் தம் உயிரைக் கொடுத்த தென்னிந்தியக் கத்தோலிக்கரான முத்துக்குமார புலவர் "தேவசகாயம்" என்ற நாடகத்தை வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதினார்" என்று நூலாசிரியர் கொடுக்கும் தகவல் போதுமானதாயில்லை.
அதே சமயத்தில், அந்தனி ஜீவாவின் மற்றொரு கூற்று தெளிவாக இருக்கிறது.
"தற்காலத் தமிழ் நாடகமேடையின் விழிப்புணர்ச்சிக்கு காரணமாக அமைந்தது, பல்கலைக்கழக முயற்சிகளும், திராவிட முன்னேற்றக் கழக பிரசார நாடகங்களின் வழிவந்த முயற்சிகளுமாகும்."

Page 47
கே.எஸ்.சிவகுமாரன்
1978க்குப் பின்னர் ஈழத்துத் தமிழ் நாடக மேடை வளர்ச்சி காண்பதாக அந்தனி ஜீவா கருதுகிறார்.
"ஈழத்துத் தமிழ் நாடக மேடை, உலக நாடக அரங்கின் தரத்திற்கு வளர்ச்சி அடைந்துள்ளதை வரலாற்று ஆய்வாளர்களே ஒப்புக் கொள்வார்கள்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆசிரியர்.
1972க்கு முற்பட்ட, கொழும்பு தமிழ் நாடகங்கள் பற்றி "பூரணி" (ஐப்பசி-மார்கழி 1972) இதழில் நான் எழுதியிருக்கிறேன்.
1965இல் மேடையேறிய ஜோர்ஜ் சந்திரசேகரனின் "இது ஒரு காதல் கதை" முதல், கொழும்பில் மேடையேறிய முக்கிய நாடகங்கள் பற்றியும், ஆறு நாடகங்கள் என்ற நூல் பற்றியும் நான் திறனாய்வு செய்துள்ளேன்.
1969இல் 'தினகரன்", நாடக விழா மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் பல பயனுள்ள கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இதனைவிட, 'நுட்பம்', 'பொதிகை’, 'இளந்தென்றல்’, ‘மானுடம் போன்ற பல்கலைக்கழக வெளியீடுகளிலும், நாடகம் சம்பந்தப்பட்ட பல அரிய கட்டுரைகள் வெளியாயிருக்கின்றன.
அண்மைக் காலங்களில் ஈழத்து நாடக மேடை பற்றிப் பல விவாதங்கள் பத்திரிகைகளிலும், கலந்துரையாடல் களிலும் இடம் பெற்றுள்ளன. நாடகத்துறை பற்றி இன்று எழுதுவோர் பலர். நாடகக் கலைஞர்களே பெரும்பாலும் இத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலையரசு சொர்ணலிங்கம், ஏ. ரி. பொன்னுத்துரை, கே. எஸ். பாலச்சந்திரன், சண்முகநாதன் (சானா) போன்றவர்களும் ஈழத்து நாடகத்துறை சம்பந்தமாக எழுதியுள்ளனர். இவையும் விமர்சனத்துறையில் அடங்குபவைதான்.
78

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
அண்மைக் காலங்களில் ஈழத்து நாடகத்துறை பற்றி பூரீ கணேசன், ஜெயசங்கர், அராலி சண்முகம்பிள்ளை, சிதம்பர திருச்செந்திநாதன், குழந்தை சண்முகலிங்கம் போன்றவர் களும் திறனாய்வு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பல்கலைக்கழக மட்ட ஏடொன்றில் (அமெரிக்க) பேராசிரியர் கா. சிவத்தம்பி நாடகத்துறை பற்றி எழுதியிருக் கிறார்.
பேராசிரியர்கள் வித்தியானந்தன், சிவத்தம்பி, கைலாச பதி, இந்திரபாலா, திருகந்தையா, சண்முகதாஸ், மெளனகுரு, தில்லைநாதன், நுஃமான், சி. சிவசேகரம் மற்றும் சித்திரலேகா மெளனகுரு, அ. யோகராசா, முருகையன், யாழ்ப்பாணம் தேவன், சில்லையூர் செல்வராசன், அந்தனி ஜீவா, சுஹைர் ஹமீட், கே. எஸ். சிவகுமாரன் போன்றோர் ஈழத்து நாடகத்துறை பற்றிக் கட்டுரைகளும் திறனாய்வுகளும் எழுதியுள்ளனர்.

Page 48
திறனாய்வு - சமூகவியல் போக்கு
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒருதலை சிறந்த ஆய்வறிவாளர். நாடறிந்த எழுத்தாளர். இன்றைய முன்னணித் திறனாய்வாளர்களில் மிக முக்கியமானவர். நெறிப்படுத்தப் பட்ட ஈழத்து இலக்கியச் சொல் நெறிப்பாங்கை இனங்கண்டு, ஆற்றுப்படுத்திய இரு தமிழறிஞர்களில் ஒருவர், (மற்றையவர் மறைந்த பேராசிரியர் கைலாசபதி அவர்கள்) நாடகத்துறை பற்றி ஆழ்ந்த பரிச்சயங் கொண்டவர். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் நாடகத்துறை விளங்கிய மாற்றை ஆராய்ந்து கலாநிதிப்பட்டம் பெற்றவர். இந்த ஆங்கில நூலுக்காகத் தமிழ் நாடு அரசாங்கமும் பரிசளித்துள்ளது.
அரசியல் தொடர்புச் சாதனமாக தமிழ்த் திரைப்படம் என்ற மற்றுமோர் ஆங்கில நூலைச் சிவத்தம்பி எழுதியிருக்கிறார்.
இவற்றைத் தவிர, நாடகத்துறை பற்றிய பிறநாட்டு ஆங்கில பருவகால ஏடுகளிலும் கட்டுரைகளை எழுதியிருக் கிறார்.
நமது நாட்டு இனப்பிரச்சினைக்கான காரணங்களை ஆங்கில வாசகர்களும் அறியுமாறு தெளிவாக "லங்கா கார்டியன்' என்ற மாதமிருமுறை சஞ்சிகையில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.
தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் சிறப்பு ஆய்வாளராகப் பங்கு கொண்ட சிவத்தம்பி அவர்கள், ஒரு மேடை வானொலி
8O

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
நடிகருங்கூட. இலங்கையர்கோன் எழுதிய விதானையார் வீட்டில் என்ற தொடர் நாடகத்திலே (ஐம்பதுகளின் பிற்பகுதியிலும் அறுபதுகளின் முற்பகுதியிலும் என்று நினைக்கிறேன்) விதானையாராக வந்து, பாத்திரத் தன்மைக்கு உயிரூட்டியவர்.
வெகுசனத் தொடர்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள பேராசிரியர் சிவத்தம்பி, இத்துறை பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களை தியடோர் பாஸ்கரன் போன்ற தமிழ் நாட்டு விமர்சகர்கள் ஆதாரம் காட்டி, மேற்கோள் தந்துள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் சிவத்தம்பி அவர்கள். சென்னை திரைப்படச் சங்கத்திலே பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மொழியில் சிவத்தம்பி உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார், அவ்வுரையின் தமிழ் வடிவம் இப்பொழுது ஒரு நூலாக வெளிவந்துள்ளது. தமிழ்ச்சமூகமும் அதன் சினிமாவும் என்ற இந்த நூலை சென்னை புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் சிவத்தம்பி உரை நிகழ்த்திய போதும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற விவாதம் சுவாரஸ்யமாக இருந்ததனால், அதனையும் உள்ளடக்கித் தமிழில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
"ஹிந்து" நாளிதழின் திரைப்பட விமர்சகர் சசிகுமார், பழம்பெரும் திரைப்பட நெறியாளர் ஏ. எஸ். ஏ. சாமி (வேலைக்காரி புகழ்) போன்றவர்களும் தமிழ்நாடு அரசு திரைப்படப் பயிற்சி நிறுவன மாணவர்கள் போன்றோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
தமது நூலின் 'நுழைவாயிற் குறிப்புகள்’ என்ற பகுதியில் ஆசிரியர் எழுதுகிறார். "தமிழ் சினிமாவானது தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அமைப்புக் களிடையே எவ்வாறு ஒரு தொழில் நுட்பக் கலை வடிவமாக அமைந்துள்ளது என்பதை விளக்கும் முறையிலேயே உரை
81

Page 49
கே.எஸ்.சிவகுமாரன்
அமைந்திருந்தது. உரையின் பொழுது சினிமாவின் தொழில் நுட்ப அம்சம், அது கைத்தொழிலாகவிருக்கும் தன்மை, அது வெகுசனரஞ்சக வடிவமாக இருக்கும் தன்மை, ஆகிய அம்சங்கள் மேற்கிளம்பவே, கலந்துரையாடலின் பொழுது அவ்விடயங்கள் பற்றிய கருத்துக்களே அதிக அழுத்தத்துடன் எடுத்துக் கூறப்பட்டன".
சினிமா என்பது என்ன? பேராசிரியர் சிவத்தம்பி விளக்குகிறார்:
"சினிமா என்பது பிரதானமாக "அசையும் பிம்பங்களின் வழிவரும் கட்புலக் கவர்ச்சி. இந்தக் கட்புலக் கவர்ச்சியைக் கமராவினாலே அதன் கண்மூலம் நிகழ்த்துதல், ஒலி என்பது ஒளியின் விளக்கத்துக்கான துணைக்காரணம். சினிமாவில் ஒசைக்கு மாத்திரமல்ல நிசப்தத்துக்கும் முக்கிய இடமுண்டு. நுட்பமாகச் சித்திரிக்கப்படல் வேண்டுமென்ற சினிமா பற்றிய சில அடிப்படை முக்கிய பண்புகள் வற்புறுத்தப்படல் வேண்டும்".
தமிழ்ச் சினிமா பற்றி ஆசிரியரின் கணிப்பு பின்வருமாறு: "தமிழ்ச் சினிமா என்பது தமிழ் மொழியின் பேச்சுப் பகுதிகள் கொண்ட சினிமா என்பது வெளிப்படை. தமிழ்மொழி சுட்டும் பண்பாட்டு வட்டத்தின் சமூகப் பிரச்சினைகளைச் சித்திரிக்க முயல்வதைக் காணலாம். தமிழர் பண்பாடு என்னும் கோட்பாட்டை வாழ்க்கையுடன் இணைத்தல் வேண்டுமென்ற ஒரு கருத்து நிலை வற்புறுத் தப்பட்டமையை இத்திரைப்படங்களில் காணலாம். தமிழ்ச் சினிமாவின் கதைப் பின்னல் முரண்பாட்டின் தெரிநிலை ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், சில தோற்ற வேறுபாடுகளே செய்யப்பட்டுள்ளன. முதன்மைப் பாத்திரங்களின் தனித் தன்மை மிதமிஞ்சிக் காட்டப்படுகின்றன. துணைப் பாத்திரங்களின் தனித் துவத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. நாயக
82

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
பாத்திரங்களின் தனிமனிதச் சிறப்பு மிகைப்படுத்தப்படுகிறது. நாயக பாத்திரங்கள், குடும்பம் போன்ற சமூக நிறுவனங்களின் அன்றாடப் பிணைப்புகளுக்கும் அப்பாற்பட்டவர்களாகக் காட்டப்படுகிறது. இந்த மிகைப்படுத்தப்பட்ட தனி மனிதத்துவம் காரணமாக தமிழ் சினிமாவிலே சித்திரிக்கப் பெறும் சமூக மாற்றம் தனிமனித நிலைப்பட்டதாகவே சித்திரிக்கப்படுகின்றது. பிரச்சினையின் உக்கிரத்தைப் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் நிலைக்குப் பதிலாகப் பாத்திரத்தினாற் பிரச்சினைகள் விளக்கமுறுவதாகச் சித்திரிக்கப்படுகின்றது. தமிழர் பண்பாட்டின் பல கருத்துரு விழுமியங்கள் பிண்டப் பிரமாணமான விடயங்களாக வற்புறுத்தப்பட்டன. இது தமிழ் சினிமாவின் முக்கிய பண்புகளில் ஒன்று. தமிழ்ச் சினிமாவின் பண்பு எனச் சுட்டிக் காட்டத்தக்க ஒரு நகைச்சுவை முறைமை இல்லை யெனினும், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனாற் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்ட நகைச்சுவை முறைமை சமூக ஒவ்வாமை களைச் சுட்டிக் காட்டுவது, சனரஞ்சகமாக இருந்தது.
"தமிழ் சினிமாவின் தனிப்பண்புகளில் ஒன்று, தமிழ் சினிமாவின் பாடல்கள் பெறும் இடமாகும். தமிழ்த் திரைப்படம் கவிதையைப் பயன்படுத்தும் முறைமை பிரமிக்கத் தக்கது. சினிமா என்னும் மேல் நாட்டு வழி வந்த தொழில் நுட்பக் கலைவடிவில், தமிழ் மயப்படுத்தப்பட்ட நடைமுறையில் இசைக்கு முக்கிய இடமுண்டு. இசையொலி களைத் தாழ நிறுத்தி, பாடலில் பொருள் முனைப்பும் பெறும் வகையில் இசையமைக்கப் பெற்றும், பாடல்களின் பொருளுக் கேற்பவும் பாத்திரத்தின் மன நிலைக்கேற்பவும் பாடப் பெறவும் தொடங்க பாடல் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. திரைப்படத்திற் சம்பவங்கள், பாத்திரங்களின் மனநிலைகள் பற்றிய குறிப்புரையாகவும் விளக்கமாகவும் பாடல்கள் அமைந்தன. பண்பாட்டுச் சின்னங்களை உவமையாகவும்
83

Page 50
கே.எஸ்.சிவகுமாரன்
உருவங்களாகவும் கொண்ட பாடல்கள் உணர்ச்சி நிலைக்கு ஏற்ற வகையில் பாடப்பட்ட பொழுது அவை சனரஞ்சகமாயின. பாரம்பரியப் பண்பாட்டின் சின்னங்கள் உயிர்ப்புக்கள் இக் கவிதைகளில் இடம் பெறத் தொடங்கின". Aw
"தமிழ் நாட்டிற் சினிமா முக்கியமான சமூக ஈர்ப்பினைப் பெற்றதற்குக் காரணம் அது நவீனமயம்பாட்டு முகவைச் சக்தியாக அமைந்தமையே" என்று கூறும் சிவத்தம்பி, தமிழ்த் திரைப்படத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கிறார்?
"1950-1970இன் பிரதான பண்பாகக் காணப்பட்டவை பல இன்று மாறியுள்ளதால் தமிழ் சினிமாவின் அமைப்பில் இன்று சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்று ஏற்றுக்கொள்கிறார்.
புது நடிக நடிகையர் வருகை (பழையவர்கள் விநியோகச் செல்வாக்கு மூலம் தமது படிமத்தை மறக்கவொண்ணாமற் பண்ணுகின்றனர்). அதி மனித கதாபாத்திரங்கள் இல்லை, சூழலால் நிர்ணயிக்கப்படும் கதாநாயகன் பாத்திர வயதுக்கேற்ற நடிக, நடிகையர் போன்றவற்றை மாற்றங்களின் சில என்கிறார் ஆசிரியர்.
1970களின் பிற்பகுதி முதல், தமிழ்த் திரைப்படத் துறை பலவிதங்களில் மாற்றமடைந்து வருகிறது என்பது எனது அவதானிப்பு. இதுபற்றி தனியாக ஆராய வேண்டும்.
பேராசிரியர் சிவத்தம்பி, ஆய்வறிவுசார் அலசல் ஒன்றை இப்புத்தகத்தில் மேற்கொண்டுள்ளார். விரிவான ஆராய்ச்சி எந்த எந்த வழிகளில் மேற்கொள்ளப்படலாம் என்பதற்கான ஒரு வழிகாட்டியாகவும் இந்த நூல் அமைகிறது. வெகுசனத் தொடர்பு இயல் மாணவருக்குப் பெரிதும் உதவக்கூடியது தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும்.

திறனாய்வாளர் கைலாசபதியும் நூலாசிரியரும்
மறைந்த பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்பல துறைகளில் ஈடுபட்டுப் பெரும் பணி செய்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. ஓர் எழுத்தாளனாக, ஒரு பத்திரிகை ஆசிரியனாக, ஒரு கல்விமானாக, ஒரு திறனாய்வாளனாக, ஓர் ஆய்வறிவாளனாக அவர் ஆற்றிய பணிகள் நமது நாட்டிற்கும், தமிழியலுக்கும், மனுக்குலத்திற்கும் பயனளித்துள்ளன. வெகுஜனத் தொடர்புச் சாதனங்களை அவர் பயன்படுத்திய முறையும் பாராட்டத்தக்கது. நல்ல பேச்சாளனாக, ஒலிபரப்பாளனாக, எழுத்தாளனாக, மொழிபெயர்ப்பாளனாக, நூலாசிரியனாக, போதனாசிரியனாக விளங்கிய அவரிடத்து ஒரு காந்த சக்தி காணப்பட்டது. ‘செய்வன திருந்தச் செய்’ என்பதில் அசையாத நம்பிக்கையுடையவர் கைலாஸ். அவரை அணுகியவர் எவரையும் இதய சுத்தியுடன் ஆதரித்து, குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி, அன்பு செலுத்தி, ஆதரவான முறையில் வழிநடத்தி வந்துள்ளார். அவ்விதம் பயனடைந்த பலரில் இந்நூலாசிரியன் ஒருவன்.
1954இல் அவரை முதன் முதலில் இலங்கை வானொலிக் கலையகம் ஒன்றிலே கண்டேன். பழக்கம் ஏற்படவில்லை. வெள்ளவத்தை 40ஆம் ஒழுங்கையில் எனது பெற்றோருடன் வசித்த வேளை, அவர் 42ஆம் ஒழுங்கையில் தமது மாமனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்பொழுதும் தொடர்பு ஏற்படவில்லை.
85

Page 51
கே.எஸ்.சிவகுமாரன்
'தினகரன்" ஆசிரியராக அவர் பதவியேற்ற பின்னரே, நான் அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இந்த அறிமுகம், சுமுகமாக அமையச் சூழ்நிலை உதவிற்று. அச்சமயம், இன்றைய பெரும் பத்திரிகை ஆசிரியர் களும், நாடறிந்தவர்களும், சட்டத்தரணிகளுமான ஆர். சிவகுருநாதன் அவர்களும், க. சிவப்பிரகாசம் அவர்களும் அச்சமயம் "தினகரன்" ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தனர். இவர்கள் ஏற்கனவே என்னை அறிந்தவர்கள். எனவே, தமது சக ஆசிரியர்களுக்குப் பரிச்சயமாயிருந்த என்னை ஒருவித மரியாதையுடன் அணுகிச் சம்பாஷிக்கத் தொடங்கினார் அமரர் கைலாஸ். அவருடன் உரையாடுவதே ஒரு தனியின்பம்; பயனுள்ள கருமம்.
அந்நாட்களில் ஆங்கிலம் மாத்திரம் பேசுவது, ஆங்கில இலக்கியத்தைப் பற்றி வானளாவப் புகழ்வது, மேலைக் கலையுலகம் பற்றிப் பிரஸ்தாபிப்பது போன்ற தமிழிற் சிந்திக்காத ஒருவனாக நான் சஞ்சரித்து வந்தேன். இந்தக் குறைபாட்டை இனங்கண்டு கொண்டதனாலோ என்னவோ கைலாஸ் என்னைச் சரியான வழியில் திசை திருப்ப எண்ணங் கொண்டார் போலும். தமிழிற் சிந்தித்து தமிழிலக்கியம் பற்றி எழுதும்படி பணித்தார்.
அக்காலத்தில் சிறுகதை, புதுக்கவிதை, திரைப்படப் பாட்டுக்கள் போன்றவற்றில் நான் பிரீதி கொண்டிருந்தேன். இருந்தபோதிலும், ஆங்கிலத்திலே கலை இலக்கிய விமர்சன நூல்களைப் படித்தும் வந்தேன். எனது ‘நெகட்டிவ்' (NEGATIVE) இயல்புகளைப் பொசிட்டிவ்' (POSITIVE) ஆக்கும் எண்ணத்துடன் அவர் கூறினார்: "நீர் ஒன்றில் ஆக்க இலக்கியகாரனாக இருக்க வேண்டும். அல்லது விமர்சகனாக வளர வேண்டும். ஆக்க இலக்கியம் படைக்கப் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். உமது உலக இலக்கிய அறிவு, தமிழுக்குச் செழுமையூட்ட வேண்டுமாயின், நீர் நமது தமிழ்
இலக்கியங்களைப் படித்து விமர்சனங்கள் எழுதினால் என்ன?
86

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
அது உமக்கும் நல்லது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும் உதவினாலும் உதவும்" என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். விமர்சகனாக நானும் மாறலாம் என்ற தைரியத்தையும் உற்சாகத்தையும் வழிகாட்டலையும் தந்த அந்தப் பேரா சானுக்கு, நான் பணிவுடையேன்.
அவர், ப்ளக்கனோவின் நூல் ஒன்றைத் தந்து அதனைப் படிக்குமாறு கூறினார். 1959ஆம் ஆண்டு ஜனவரியில் ‘எழுத்து' என்ற விமர்சன ஏடு தமிழ் நாட்டில் முதல் தடவை யாகப் பிரசுரமானபோது, அதனை எனக்கு அறிமுகப் படுத்தியவரும் கைலாஸ்ே. நம்பினால் நம்புங்கள், சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றி ஒன்றுமே அறிந்திராத எனக்கு நுழைவாயில் அமைத்துத் தந்தவர் கைலாஸ். பின்னர் பேராசிரியர் சிவத்தம்பி, எம். எஸ். எம். இக்பால், சில்லையூர் செல்வராசன். பி. ராமநாதன், (ஜவாஹர்) கனகரத்தினம் இவர்கள் மூலமே புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரையிலுமான, சிதம்பர ரகுநாதன் முதல் வல்லிக் கண்ணன் வரையிலுமான, விந்தன் முதல் ஜானகிராமன் வரையிலுமான, கு. ப. ரா. முதல் ந. பிச்சமூர்த்தி வரையிலுமான, சிட்டி முதல் க. நா. சு. வரையிலுமான பல தமிழ் நாட்டு இலக்கியக் கர்த்தாக்கள் பற்றியும், விமர்சகர்கள் பற்றியும் அறிய நேர்ந்தது. இது ஐம்பதுகளின் கடைக்கூறில் நிகழ்ந்தது. -
"நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம்" "நான் விரும்பும் நாவலாசிரியர்" போன்ற தொடர்களில் எழுதும்படி என்னைப் பணித்து, எமது பெரிய எழுத்தாளர்கள் மத்தியில் எனக்கும் இடமளித்து, எனது கட்டுரைகளை வெளியிட்டார். "பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்" என்பது போல நானும் ஓரளவு பிரபல்யம் பெறத் தொடங்கினேன். இதற்கிடையில் எழுத்து’, ‘சரஸ்வதி போன்ற பத்திரிகை களிலும் எனது கட்டுரைகள் வெளியாயின.
எனது வழிகளில் கலை, இலக்கியங்களை அணுக அவர் தடையாக இருக்கவில்லை. ஆயினும், சமூகவியல் அடிப்
87

Page 52
கே.எஸ். சிவகுமாரன்
படையில் நோக்குவதே பொருத்தமுடையது என்று அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இதற்கிடையில், கைலாஸ் அவர்களை அறியுமுன் நமது நாட்டு மற்றொரு தலைசிறந்த ஆய்வறி வாளரான பேராசிரியர் கா. சிவத்தம்பியை அறிமுகஞ் செய்து கொண்டிருந்தேன். அவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். நான் படித்து வந்த கொழும்பு அர்ச். ஜோசப் கல்லூரித் தமிழ் மன்றமும் அவருடைய கல்லூரித் தமிழ் மன்றமும் ஏதோ விவாதம் நடத்திய போது, நானும் பங்கு கொண்டேன். அப்பொழுது தான் ‘சிவா’ அவர்களுடன் அறிமுகமாகினேன்.
கைலாஸ"ம், சிவாவும் எனது பலவீனங்களை நன்கு அறிந்திருந்தும் உற்சாகமூட்டி விமர்சனத் துறையில் கவனஞ் செலுத்த வழிகாட்டினர்.
கைலாசபதி அவர்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங் கிய பொழுதுதான், எனது பல குறைபாடுகள் தெரிய வந்தன. முதலில் "டொக்மட்டிக்" (DOGMATIC) ஆக இருக்க வேண்டாம் என்றார். மேலைத்தேய விமர்சனப் பார்வைகள் மாத்திரமே முற்று முழுதாகச் சரியானவை என்று கருத வேண்டாம் என்றார். உயர்ந்த கருத்துக்களையும் எளிமையான, இலகுவான முறையில் தெரிவிக்க வேண்டும் என்றார். பத்தி எழுத்தின் மூலம், பொதுவாக விமர்சகர்களுக்குப் பயனளிக்கும் தொண்டைச் செய்கிறேன் என்று என்னை உற்சாகப் படுத்தினார். எனது பத்திரிகை எழுத்துக்கள் நூல் வடிவம் பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். எனது முதல் நூல் ஆங்கிலத்திலே வெளி வந்த பொழுது அதற்கு அணிந்துரை வழங்கினார். பட்டப் படிப்பையும், ஆராய்ச்சி களையும் நான் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வந்தார். கலை இலக்கியங்கள் மாத்திரமன்றி, பல துறைகளைப் பற்றியும் ஈடுபாடு கொண்டு அவற்றின் செய்திகளைத் தமிழில் தரவேண்டும் என்றார். அவர் தெரிவித்த ஆலோசனை யின் பேரிலேயே, தினகரன் வாரமஞ்சரியிலே ‘அறிவியல் வளர்ச்சி என்ற கட்டுரைத் தொடரை எழுதினேன்.
88

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இந்தக் கட்டுரைகள் மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் என்ற பெயரிலே வடக்கு கிழக்கு மாகாணத்தினால் 1999இல் வெளியிடப்பட்டது.
எனது நூல்கள் ஆங்கிலத்திலே அதிகம் வரவேண்டும் என்றார். நானும் ஓர் ஆங்கில இலக்கியப் பட்டதாரி என்பதை நானே மறந்துவிடும் போதெல்லாம், அதனை நினைவூட்டி, என்னிடமே மேலை இலக்கியங்கள் பற்றிய சில பல தகவல்களைக் கேட்டறிவார். உண்மையிலேயே நமது நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களிலே (ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாகப் பயின்ற பட்டதாரிகளான ஏ. ஜே. கனகரத்னா, சி. வி. இராஜசுந்தரம், மஹ்ரூப், நிர்மலா நித்தியானந்தன், சுரேஷ், கனகராசா, செ. கனகநாயகம் போன்றவர் உட்பட) பேராசிரியர் கைலாசபதியைப் போன்று சமகால ஆங்கில விமர்சன நூல்களைப் படித்தவர் எவருமிருந்திரார் என நான் துணிந்து கூறுவேன். அவர் மூலமாகவே நான் சில நூல்களைப் படித்துத் தேற முடிந்தது. உதாரணமாக மார்க்சிய விமர்சகர் GEGT6ão Gol6u6io, “35 éâáfllqėš5&56ïo QuiquJud” (THE CRITICAL IDIOM) என்ற ஆங்கில நூல்வரிசை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
வானொலியில் செய்தியாளனாகவும், ஒலிபரப்பாளனா கவும் நான் பணி புரிந்த வேளை, எனது முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்தினார்.
ஆங்கில வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் நமது கலை இலக்கிய முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருவதை மாத்திரம் பலர் பாராட்டுவதுடன் நின்றுவிடும் பொழுது, கைலாஸ் அவர்கள், எனது பணிகளில் ஓர் அம்சமே அது என்றும் அடிப்படையில் நமது நாட்டு முன்னணித் தமிழ் விமர்சகர் களில் ஒருவனாக நான் என்னைக் கருதிக் கொள்ள வேண்டும் என்றும் 'பத்தி எழுத்துடன் நின்று விடாது, பரந்து விரிந்த ஆழமான முயற்சிகளைத் தான் எதிர்பார்ப்பதாகவும் வலி யுறுத்தி வந்தார்.
89

Page 53
கே.எஸ். சிவகுமாரன்
கைலாஸின் உற்சாகமான வரவேற்பையும், ஆதரவை யும், அன்பையும், மதிப்பளித்து விவாதித்து, தன்வழிக் கருத் துக்கள் பொருத்தமுடைமை என்று நிலை நாட்டும் பண்பை யும், சுவையான ஆய்வறிவுப் பரிவர்த்தனையையும் பெற்று வந்தேன்.
கைலாசபதி தன்னை ஒரு சமூகவியல் ஆய்வறிவாள னாகவே இனங் காட்டிக்கொண்டார். அவருடைய கருத்துப்படி, இக்காலத்தில் இலக்கிய கர்த்தா ஒருவர் விவேகத்துடனும் ஆற்றலுடனும் செயற்பட வேண்டுமாயின் கணிசமான உலகியல் அறிவும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டுவ தன்றி, சமுதாயத்தின் இயக்கவியல் பற்றிய ஞானமும் வாய்க்கப் பெற்றிருத்தல் அவசியமாகும். திறனாய்வு மனித வாழ்க்கையை விவரித்து விளக்கங் கூறும் அறிவுத்துறைகள் பலவற்றைச் சார்ந்து நிற்கிறது. மனிதப் பண்பியல் துறைகளான வரலாற்றியல், தொல்பொருளியல், மெய்யியல், அழகியல், மொழியியல் முதலியனவற்றுடன், சமூக விஞ்ஞானத் துறைகளான மானிடவியல், சமூகவியல், உளவியல், அரசியல், பொருளியல், மக்கட் பண்பாட்டியல் என்பனவும் இலக்கிய ஆய்வுக்கு இன்று இன்றியமையாதன. தனித்தும் சார்ந்தும் இயங்கும் இப்பண்பே நவீன இலக்கியத் திறனாய்வை முற்கால இலக்கிய ஆய்வுகளிலிருந்து வேறு படுத்திக் காட்டுகிறது. (முன்னுரை சமூகவியலும் இலக்கியமும் 1979. சென்னை என். சி. பி. எச்.)
u 696 5 gol & Tijë 5 (MULTI - DISCIPLINARY ) gj64ub, அணுகுமுறையும் தமிழிற்கு அறிமுகமாகிப் பரவலாகி வருவது கைலாசபதி மூலமே என்பது மிகையல்ல. அது மாத்திரம் போதாதா, பெயர் நீடித்து நிற்க? இந்த நூற்றாண்டிலே, ஈழம் உலகுக்கு அளித்த தமிழ் ஆய்வறிவாளர் கைலாசபதி என்பதை, அடுத்த சில தசாப்தங்கள் நிருபிக்கத்தான் போகின்றன.

கைலாசபதியின் அணுகுமுறை
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி கலை, இலக்கிய கல்வி, சமூக, அரசியல் துறைகளிலே பரிமாணங் கொண்ட பங்களிப்பினைச் செய்து விட்டு மறைந்த ஓர் ஆய்வறிவாளர். இன்டலெக்சுவல் (INTELLECTUAL) என்ற ஆங்கிலப் பதத் திற்குச் சமமாக ஆய்வறிவாளர் என்ற பிரயோகத்தைப் பிரபல் யப்படுத்திய முதல்வர்களில் அவர் முக்கியமானவர்.
இந்த ஆய்வறிவாளர் விமர்சகர் அல்லது திறனாய் வாளராகவும் கணிக்கப்படுகிறார். ஏனைய திறனாய்வாளர் போன்று கைலாசபதியை மதிப்பிட முடியாது இருக்கிறது. இதற்குக் காரணம், இவர் இலக்கிய வரலாற்றாசிரியனாக நின்றே தமது திறனாய்வைச் செய்திருக்கிறார். அதாவது, ஒரு மதிப்புரையாளனாகக் குறிப்பிட்ட ஓர் ஆக்கத்தைப் பற்றியோ, ஆசிரியனைப் பற்றியோ இவர் எழுதியவை எண்ணிக்கையில் அதிகமில்லை. ஒரு சில நூல்களுக்கு முன்னுரை எழுதும் பொழுதுகூட பொதுப்படையான அடிப்படைச் சிந்தனை களைத் தான் தொட்டுச் சென்று வலியுறுத்தி வேண்டி யவற்றை வலியுறுத்த இருக்கிறார்.
புறநடையாகக் காவலுார் ஜெகநாதன், சாந்தன் ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகளுக்கு எழுதிய முன்னுரைகளை ப்ராக்டிக்கல் கிரிட்டிசிஸம் (PRACTICAL CRTICSM) கைலாசபதியின் வாக்கியத்தில் கூறுவதானால், புறநிலைக் கொள்கை என்ற வகையில் அடக்கலாம்.
91

Page 54
கே.எஸ்.சிவகுமாரன்
ஆக கைலாசபதி மதிப்புரைகளை எழுதுவதை விட தனி இயக்கங்கள், போக்குகள், தனியாட்கள் போன்றவற்றைப் பற்றிய அறிவாராய்ச்சி குறிப்புக்களையும் திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். அதாவது அவர் இலக்கிய வரலாற்றைப் புதிய முறையில் அணுகி, இலக்கிய வரலாற்றாசிரியர்களுக்குக் குறிப்பாகவும், இலக்கிய மாணவர் களுக்கு பொதுவாகவும் எழுதும் ஓர் ஆய்வறிவாளர். எனவே தான் கைலாசபதியை ஒரு சாமான்ய விமர்சகராகக் கருத
முடியாதிருக்கிறது.
அவருடைய ஆரம்ப நுால்களில் ஒன்றான பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் என்ற நூலை எடுத்துக் கொண்டால், சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம், சோழர்காலம் ஆகிய காலங்களில் எழுந்த தமிழ் இலக்கியங்களை வர்க்க அடிப்படையில் அணுகிப் புதிய கருத்துக்களை அவர் தெரிவித்திருப்பதை நாம் காண்கிறோம். கைலாசபதி தெரிவித்துள்ள கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் நாட்டு தமிழ் இலக்கிய நவீன ஆய்வாளர்களில் ஒருவராகிய கோ. கேசவன் மண்ணும் மனித உறவுகளும் என்ற நூலை எழுதி இருப்பதை அவதானிக்கிறோம். இது போன்றே நாவல், ஒப்பியல், 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் புதுப் புனைவாளர்கள், சிந்தனையாளர்கள் போன்ற விஷயங்கள் குறித்து, தமிழ் இலக்கிய வரலாறாகவே கைலாசபதி எழுதுவதை நாம் காண்கிறோம்.
கைலாசபதி ஓர் இலக்கிய வரலாற்றாசிரியன் என்ற முறையில் முழுமையான கணிப்பை மேற்கொள்ள நூல் வடிவம் பெறாத பல கட்டுரைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் நூல் வடிவம் பெற்றால் தான், கைலாசபதியின் ஆளுமையை ஓரளவு கணிக்க முடியும்.
இலக்கியத் திறனாய்வு தொடர்பாக, குறிப்பாக ஈழத்து இலக்கிய விமர்சனம் தொடர்பாக கைலாசபதி பின்பற்றிய
92

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
அணுகுமுறையை விளக்கிக் காட்டுவதே இவ்விடத்தில் எனது நோக்கம். இந்த முயற்சிக்கு ஆதாரமாகக் கைலாச பதியின் மூன்று பிரசுரங்களை எடுத்துக் கொள்வோம். அவையாவன: இலக்கியமும் திறனாய்வும் (1973-1976), இலக்கிய சிந்தனைகள் (1983) (இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழும் விமர்சன இலக்கியமும் என்ற கட்டுரை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது), ஈழத்தில் இலக்கியத் திறனாய்வு (இக்கட்டுரை இந்தியாவில் வெளியாகிய சுடர் மலர் என்ற ஏட்டில் இடம்பெற்றது).
முதலிலே ஈழத்தில் இலக்கிய திறனாய்வு என்ற கட்டுரையில் கைலாசபதி தெரிவிக்கும் கருத்துகளைப் பார்ப் போம்.
திறனாய்வு என்பது இக்காலத்தில் எதனைக் குறிக்கும்? இதற்கு ஒரளவு நிறைவான பதிலைப் பேராசிரியர் தருகிறார்: அழகைச் சுவைப்பதுடன், அதனோடு பிரிக்கஇயலாத வாறு பிணைக்கப்பட்டிருக்கும்செய்திகளையும் சிந்தனை களையும் கருத்துருவங்களையும் கண்டுகொள்வதும் அவற்றை மதிப்பிடுவதும்அவற்றுக்கு விளக்கம் உரைப்பதும் திறனாய்வின் பண்பும் பயனும் ஆகும். இன்றைய திறனாய்வு, விவரித்து விளக்கும் முறையைப் பற்றுக் கோடாய்க் கொண்டது என்பதில் தவறில்லை.
உரையாசிரியர் மரபு போன்று, திறனாய்வு மரபு இலங்கை யில் உண்டா? ஆம். இடைக்கால உரையாசிரியர் மரபு நமது நாட்டிலும் செழித்து வளர்ந்து வந்திருப்பதாகக் கைலாசபதி தெரிவிக்கிறார். இதற்கு ஆதாரமாக மா. பீதாம்பரன் எழுதிய ஈழநாட்டு உரையாசிரியர்கள் (கணேச ஐயர் நினைவு மலர்1960) என்ற கட்டுரையைக் குறிப்பிடுகிறார். சித்தியாருக்கு உரைகண்ட ஞானப்பிரகாச முனிவரிலிருந்து சங்க நுாற் செல்வர் க. அருளம்பலனார் வரை இம்மரபு குறிப்பிடத்தக்க விதத்தில் ஈழத்தில் நீடித்துள்ளது என்பது கைலாசபதியின்
93

Page 55
கே.எஸ்.சிவகுமாரன்
அவதானிப்பு. பண்டித முறைத் திறனாய்வு, மரபுவழித் திறனாய்வு என்று இம்முறையைக் கைலாசபதி விவரிப்பார். இந்தப் பண்புள்ளோர் சிலரில் சி. கணேச ஐயர், வ. மு. இரத்தி னேஸ்வர ஐயர், விபுலானந்த அடிகள், பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை,சோ. இளமுருகனார், பண்டிதர் க. வீரகத்தி ஆகியோரின் பெயர்களைக் கைலாசபதி குறிப்பிடுகிறார்.
இரசனை முறைத் திறனாய்வு அல்லது சுவையுணரும் நோக்குத் திறனாய்வு என்ற வகையில் விபுலானந்த அடிகள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோரும் க. ச. அருள் நந்தி, தி. சதாசிவ ஐயர், அ. வ. மயில்வாகனன், மா. பீதாம்பரன், கனக செந்திநாதன், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை, பண்டி தர் க. பொ. இரத்தினம் போன்றோரும் பங்களிப்பு செய்ததாக கைலாசபதி குறிப்பிடுகிறார்.
இங்கு எனது ஒரு ஆய்வுக்கணிப்பு கருத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
முதலிரு பிரிவினருக்கும் இலக்கியத்தின் பயன், இலக் கியத்தில் இடம்பெறக்கூடிய பொருள், இலக்கிய ஆசிரியர்கள் கையாளவேண்டிய மொழிநடை என்பன பற்றி கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்று கைலாசபதி திட்ட வட்டமாக தெரிவிக்கிறார்.
ஈழத்து நவீன திறனாய்வாளர்களின் முன்னோடியாக இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சோ. சிவபாதசுந்தரம் ஆகியோரைக் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். கலைப்புலவர் க. நவரத்தினம், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, மு. இராம லிங்கம் ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்கிறார்.
எனது கணிப்பின்படி, ஈழத்தின் முன்னோடித் திறனாய் வாளர் சுவாமி விபுலானந்தர் ஆவார். எனது திறனாய்வுப் பார்வைகள் (1998).
தனிப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் மட்டுமன்றிப் பொதுவாக இலக்கியம் தொடர்பான பல்வேறு செய்திகள்
94

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
குறித்தும் கொள்கை அடிப்படையிலும் உண்மை விளக்கம் தரும் நோக்கிலும் சிலர் எழுதினர். கே. கணேஷ், அ. ந. கந்த சாமி ஆகியோர் இத்தொடர்பில் விதந்துரைக்கப்பட வேண்டி யவர்கள் என்கிறார் கைலாசபதி,
ஐம்பதுகளின் இறுதியிலிருந்து க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரத்னா, சி. முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் தீவிரமாக செயற்பட்டு வருபவர்கள் என்று குறிப்பிடும் பேராசிரியர், ஈழத்து இலக்கியங்கள் மட்டுமன்றிப் பொதுவாகத் தமிழ் இலக்கியத் திறனாய்வும் ஆழ அகலம் பெற இவர்கள் பங்களித்துள்ளமை நன்கு தெரிந்த செய்தியாகும் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தமது கட்டுரையிலே, பேராசிரியர் கைலாசபதி தொடர் ந்து கூறியிருப்பதாவது:
இவர்களுக்கு (முற்கூறப்பட்டவர்கள்) காலத்தால் சிறிது பின்னதாக கே. எஸ். சிவகுமாரன், ஆ. சிவநேசச்செல்வன், சபா ஜெயராசா,சித்திரலேகா மெளனகுரு, எம். ஏ. நுஹ்மான், செ. யோகராசா, க. நவசோதி முதலியோர் திறனாய்வுத்துறையில் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். இலக்கிய உலகின் வளர்ச்சியினால், பல்கலைக்கழக தமிழ்த் துறைகளும் திறனாய்வுக்கு உரிய இடத்தை அளிக்கத் தொடங்கியுள்ளன. முற்கூறிய சிலருடன், சி. தில்லைநாதன், பொ. பூலோக சிங்கம் ஆகிய இருவரும் இலக்கிய ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் ஈழத்தில் எழுதப்பெற்ற இலக்கிய ரசனைத் திறனாய்வு செய்யும் முயற்சி கள் இப்பொழுது ஆழமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுடர் மலர் (1978) என்ற தில்லி ஏட்டில் வெளியாகிய கட்டுரையில் இடம் பெற்ற சில குறிப்புக்களை மேலே பார்த்தோம். இக்குறிப்புக்களிலிருந்து பேராசிரியர் கைலாச பதியின் அணுகுமுறை எவ்வாறு செயற்பட்டுள்ளது என்பதை
95

Page 56
கே.எஸ். சிவகுமாரன்
ஒருவாறு நாம் மனங்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவருடைய அணுகுமுறையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள இலக்கிய சிந்தனைகள் (1983) என்ற நுாலில் இடம்பெற்ற கட்டுரையை எடுத்துக் கொள்வோம். இந்த நூலைத் தொகுத்து பதித்திருப்பவர், பிரபல படைப்பாளியும் மார்க்சிய கலை இலக்கிய விமர்சகருமான செ. கணேச லிங்கன் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இத்தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள், பேராசிரியர் கைலாசபதியின் சமூகவியல் அழுத்தம் பெற்ற சிந்தனைகளைத் தழுவியதாய் இருப்பதுதான். சமூகவியல் பார்வை தவிர்க்க முடியாமல் மார்க்சியஞ் சார்ந்ததுதான் என்பதை வாசகர்கள் அறிவார்கள்.
தமிழின் நவீன இலக்கிய விமர்சனம் தோற்றுவதற்குரிய முன்னிடுகள் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி எடுத்துக் கூறும் பொழுது, ஆய்வறிவு முறை, மரபு எதிர்ப்பு உணர்வு, புதிது புனையும் ஆர்வம் ஆகிய அடிப்படை முதல் தேவைகளைச் சுட்டிக்காட்டுகிறார். சி. வை. தாமோதரம் பிள்ளையை மூல பாடத்திறனாய்வு முன்னோடியாக இனங்காணும் பேராசிரியர், பிள்ளையவர்களிடம் முனைப்பான விமர்சன வீச்சு காணப் பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.
நவீன இலக்கிய விமர்சன அணுகு முறை பற்றிப் பேசும்பொழுது, விமர்சன இலக்கியம் தன்னளவிலே செழித்து வளர்ந்துவிட இயலாது. மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், சமயம் முதலிய ஏனைய துறைகளில் நிகழும் ஆய்வுகளுக்கியைந்த முறையிலேயே இலக்கிய விமர்சனமும்இடம்பெறும் என்ற பண்பையும் திறனாய்வாளர் கைலாசபதி வலியுறுத்தியிருக்கிறார். இதனையே தமது சமூக வியலும் இலக்கியமும் (1979) என்ற நூலின் முன்னுரையிலே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிடுகிறார். அவருடைய அணுகு முறை என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்று கைலாசபதி கூறுகிறார்.
96

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
திறனாய்வுத் துறையில் முக்கிய கவனஞ் செலுத்தத் தொடங்கிய காலமுதல் கலை, இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும் சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆராய்ந்து வைத்திருக்கிறேன். மார்க்சி யத்தைத் தழுவிக்கொண்ட நாள்முதலாக அதனை முனைப் பான கூறுகளில் ஒன்றாகிய சமூகவியலை எனது பல்வேறு ஆய்வுகளுக்கும் பற்றுக்கோடாகக் கொண்டு வந்துள்ளேன். சமூகவியலில் உண்டாகிய ஈடுபாடே ஒப்பியல் ஆய்விற்கு என்னை இட்டுச் செல்கிறது. இவற்றின் பயனாக இலக் கியத்தை அறிவியல் அடிப்படையில் அணுகக் கற்றுக் கொண்டேன்.
கைலாசபதி மேலும் கூறுவார்: நவீன காலத்திலே திறனாய்வு தனிப்பட்ட ஓர் ஆய்வுப்பிரிவாக இயங்கி வருகிறது.நோக்கம், ஆய்வு முறை, பண்பு, பயன்பாடு இவற்றில் தனக்கெனச் சில சிறப்பியல்புகளைக் கொண் டுள்ளது. இலக்கண விதிகளை மட்டும் அது பிரமாணமாகக் கொள்வதில்லை. மனித வாழ்க்கையை விவரித்து விளக்கங் கூறும் அறிவுத்துறைகள் பலவற்றை அது சார்ந்து நிற்கிறது. மனித பண்பியல் துறைகளான வரலாற்றியல், தொல்பொரு ளியல், மெய்யியல், அழகியல், மொழியியல் முதலியவற்று டன் சமூக விஞ்ஞான துறைகளான மானிட வியல், சமூகவியல், உளவியல், அரசியல், பொருளியல், மக்கட் பண் பாட்டியல் என்பனவும் இலக்கிய ஆய்விற்கு இன்று, இன்றிய மையாதன. தனித்தும், சார்ந்தும் இயங்கும் திறனாய்வை முற்கால இலக்கிய ஆய்வுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டு கிறது.
பேராசிரியர் கைலாசபதி "தமிழும் விமர்சன இலக்கி யமும்" என்ற தமது கட்டுரையிலே (இலக்கிய சிந்தனைகள் என்ற நூலில் இடம்பெற்றது), பண்டிதத் திறனாய்வு, புதுமை மோகத் திறனாய்வு என்ற இரு போக்குகள் பற்றியும் விளக்கிக் காட்டுகிறார். இத்தகைய இரு முனைப்பட்ட விமர்சன அணுகு
97

Page 57
கே. எஸ். சிவகுமாரன்
முறைக்கு மாற்று மருந்தாகவும், உண்மையான நவீன விமர் சனத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவது சமூகவியல் அணுகு முறையாகும்.இது கணிசமான அளவுக்கு மார்க்சி யத்தினால் நெறிப்படுத்தப்படுவதொன்று எனக் கொள்ளலாம். இவ்வாறு தமது அணுகுமுறையை நியாயப்படுத்தும் கைலாசபதி, இந்த அணுகுமுறையின் சிறப்பியல்புகளையும் எடுத்துரைக்கிறார்.
"இலக்கியத்தை அடிப்படையில் சமூக விளை பொரு ளாகக் கொண்டு, அதனை உரிய வரலாற்றுச் சூழலில் வைத்து நோக்கி, அதன் உயிராற்றல் காலத்துக்குக் கட்டுப்பட்டும், காலத்தை வென்றும் நிற்கும் தன்மையை விளக்குவதே சமூகவியல் அணுகுமுறையின் பிரதான அம்சங்களாகும்.
வரலாற்றுப் பார்வை, வர்க்க ஆய்வு, அழகியல் அக்கறை ஆகிய மூன்றையும் இணைத்து விமர்சிக்கும் பார்வை கைலாசபதியுடையது. பொதுவுடைமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கைலாசபதி, சிவத்தம்பி, முருகையன், கே. சண்முகலிங்கம், என். சண்முகரத்தினம், எம். ஏ. நுஃமான், சி. மெளனகுரு, இளைய பத்மனாபன் முதலியோர் அண்மைக் காலத்திலே, "விமர்சனத்திலே ஆழமான பார்வையையும் நுட்பமான திறன்முறைகளையும் புகுத்தியவராவார்" என்கிறார் பேராசிரியர். விமர்சன இலக்கியம் ஆற்றலும் ஆழமும் பெற வேண்டுமாயின் 'அது உலகத்தை மாற்றியமைப்பதற்கும் உழைக்கும் வர்க்கமும் அதன் நேச சக்திகளும் ஓயாது பயன்படுத்தும் அறிவாயுதமாகவும் இருத்தல் வேண்டும்’ என்கிறார் கைலாசபதி. அவ்வாறு பார்க்கும் பொழுது செ. கணேசலிங்கன், சி. சிவசேகரம் என்ற இரு தீவிர மார்க்சிய விமர்சகர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டா ரென்பதையும் குறிப்பிட வேண்டும்.
இறுதியாக இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலிலே பேராசிரியர் கைலாசபதி தெரிவித்திருக்கும் கருத்துக்களைத் தொகுத்து நோக்குவோம்.
98

மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
செய்முறைத் திறனாய்வு எமது இலக்கிய உலகிற் காணப்படும் 'அநுபூதி நெறி ரசனை’ என்ற தீங்கினைத் தவிர்க்கும் மாற்று முறையாக அமைய முடியும். ஆரம்ப நிலை யில் அது இன்றியமையாததாகும். இல்லாவிடில் பகுத் தாய்வுக்கும் உறுப்பாய்வுக்கும் இடந்தராத மூடு மந்திரமாகவே கவிதை இருக்கும். செய்முறைத் திறனாய்வு மூலமாகவே, கவிதை ஆய்வானது அகநிலைப்பட்டதாயன்றிப் புறநிலை சார்ந்ததாய் அமையும் வாய்ப்பைப் பெறுகிறது. விதி முறையாலன்றி விவரண முறையாலும், விளக்க முறை யாலும் இலக்கியத்தைச் சுவைக்கும் நெறி வளர்ச்சி பெற (փլգԱյլն.
பேராசிரியர் கைலாசபதியின் கருத்துக்களைத் தொகுத்து நோக்கும் போது ஈழத்திலே பல நெறிகளையும் உள்ளடக்கிய சமூக வரலாற்றுப் பின்னணியில் இலக்கியத்தை மதிப்பிடும் போக்கு வளர்ந்து வருவதை அவர் விரும்பி வலியுறுத்தினார் என்பது தெரியவருகிறது. சமூகவியல் பார்வை கைலாசபதி யினுடையது. இதில் மார்க்சியம் கலந்திருப்பதையும் அவதானிக்கலாம். அதே சமயம், வரட்டு மார்க்சிய சுலோகங் களை உச்சரிக்காமலே, கல்விமான் என்ற முறையிலே, பரவலாகவும் ஆழமாகவும் அவர் இலக்கியத்தை விமர்சித்தார். இன்றைய இலக்கிய போக்குகளின் கலாசார வேர்கள் 19ஆம் நூற்றாண்டிலிருப்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள் பற்றிய புனர் மதிப்பீடுகள் கைலாசபதியின் தனியான சிந்தனைகள்.

Page 58
கைலாசபதியின் திறனாய்வும் குறைபாடுகளும்
சமகாலத் தமிழ் இலக்கியப் போக்கில் ஈழத்தவர் ஆற்றி வரும் பங்கு முக்கியமானதாகவும் முன்னோடியானதாகவும் அமைவதை தமிழ் பேசும் நல்லுலக இலக்கிய மாணவர் மாத்திரமன்றி, தமிழியல், தமிழ் இலக்கியம் போன்ற துறை களில் ஈடுபட்டுள்ள பிற மொழியினரும் அறிவர். அத்தகை யோர் ஆற்றிவரும் பங்குகள் அனைத்தையும் பற்றியோ, அத்தனை பேரின் பெயர்ப் பட்டியலையோ தருவது உசித மன்று. எனவே இத்துறையில் பங்காற்றி வரும் ஈழத் தவர்களில், விமர்சனம் அல்லது திறனாய்வுத் துறை சம்பந்தமாகச் சில முக்கிய பணிகளைச் செய்து மறைந்த ஒருவர் பற்றி, அவர் எழுதியுள்ள நூல்களைக் கொண்டு மாத்திரம் (நூல் வடிவில் இடம்பெறாத அத்தனை கட்டுரைகள், விரிவுரைகள், பேச்சுக்கள் போன்றவற்றைக் கணக்கெடுக்க வில்லை) இங்கு ஆராய்வோம்.
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி பற்றியே இங்கு கணிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவர் பல்கலைக் கழக ஆசிரியராக மட்டுமன்றி, பத்திராதிபராகவும் திறனாய் வாளராகவும் நின்று ஈழத்து சமகால இலக்கியத்துக்கும், தமிழ் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் ஆகிய துறைகளுக்குமாகப் பல்வேறு நிலைகளில் நின்று புத்தாக்கம் பயக்கும் புதுமை நெறிகளைச் சுட்டியும், வழிகாட்டியும் தொழிற்பட்டார்.
100

மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
நூலாசிரியனாக அவர் திறனாய்வுத் துறைக்காற்றிய பண்பு நெறிகளே இங்கு உணர்த்தப்படுகின்றன.
கைலாசபதி கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்தார். இவருடைய கட்டுரைகள் அடங்கிய நூல்கள் வருமாறு:
இரு மகா கவிகள், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், கவிதை நயம் (முருகையனுடன் இணைந்து எழுதியது), TAMIL HEROIC POETRY இலக்கியமும் திறனாய்வும், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், திறனாய்வுப் பிரச்சினைகள், மக்கள் சீனம்காட்சியும், கருத்தும், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், இலக்கியச் சிந்தனைகள். இவருடைய நூல்கள் இன்னும் பல உண்டு.
இந்நூல்கள் அனைத்தும் பற்றிய அறிமுக ரீதியிலான ஆய்வு வேண்டற்படாததாகையால், இவற்றுள் முக்கியமான சில நூல்களை மாத்திரம் கணிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன்னர் கைலாசபதியின் இலக்கியக் கோட்பாடுகள் பற்றி அண்மைக்காலமாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் வெங்கட் சாமிநாதன், படிகள் என்ற சிற்றேட்டினர், அலை என்ற ஈழத்துச் சிற்றேட்டினர், மற்றும் சிலர் கைலாசபதிக்குரிய இடத்தைச் சந்தேகிக்கா விட்டாலும், அவருடைய தீவிர இலக்கியக் கோட்பாடுகள், மாறிவரும் போக்குகளில் செல்லாக் காசாகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
கைலாசபதியின் இலக்கியக் கோட்பாடு தான் என்ன? அவரே கூறுகிறார்: கடந்த இருபத்தைந்து வருடங் களுக்கு மேலாக நான் எழுதி வெளியிட்டிருப்பவற்றைப் பார்க்கும் பொழுது, அவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் சமுதாயத் தொடர்பமைவு உள்ளனவாய் இருக்கக் காண் கிறேன். (முன்னுரை- சமூகவியலும் இலக்கியமும், 1979) 36)é du 1356T Fepas6Slugp155 (SOCIOLOGICAL ASPECT IN
101

Page 59
கே. எஸ்.சிவகுமாரன்
LITERATURE) முக்கியத்துவம் அளிக்கும் ஒரு விமர்சகராகவும், மார்க்சியத்தைத் தழுவியவராகவும் கைலாசபதி தன்னை இனங்காட்டிக் கொள்கிறார். எனவே, இலக்கியக் கொள்கைகள் பலவற்றில் ஒன்றாகிய சமுதாயக் கொள்கையைக் கைலாசபதி அனுஷ்டிக்கிறார் என்பது தெளிவாகிறது.
ஆகவே, கைலாசபதியின் இலக்கியக் கொள்கையை முற்றாக ஏற்றுக்கொள்ளாதோர், அவருடைய விமர்சன முறையை ஆட்சேபிப்பதில் ஆச்சரியமில்லை.எனினும், அவ்வாறு எதிர்ப்பவர்கள் காரணமின்றி எதிர்க்கவுமில்லை. மார்க்சிய விமர்சன முறை, இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட விமர்சன அணுகுமுறைகளில் ஒன்று. ஆனால் அது மாத்திரமே ஒரே ஒரு சரியான பார்வையுடைய விமர்சன முறையுமன்று. கைலாசபதி என்ன செய்கிறார் என்றால், சமுதாயப் பார்வையை எதிர்ப்பவர்களாக ஏனைய பார்வையுடையவர்களை ஒதுக்கி விடுகிறார். உதாரணமாக, அழகியலும் இலக்கியத்துடன் இணைந்ததுதான் என்று கூறுபவர்கள், சமுதாயப் பார்வைக்கு எதிரானவர்கள் என்று கைலாசபதி தப்பாகக் கணிக்கிறார். இங்குதான் அவருடைய பலவீனம் தெரிகிறது.
உதாரணமாக, இலக்கியமும் திறனாய்வும் (இரண்டாம் பதிப்பு 1976) என்ற தமது நூலிலே அவர் இவ்வாறு எழுதுகிறார், "தூய அழகியல் வாதத்துக்கு எதிர் விளைவாகவே சமுதாயக் கொள்கை நடைமுறையில் செயற்படுகிறது எனலாம்". இவ்வாறு கூறும் கைலாசபதி நான்கு விதமான திறனாய்வுக் கொள்கைகளை விவரித்துவிட்டு, "தற்காலத் தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள்" என்ற பிற்சேர்க்கை யில் வருமாறு எழுதுகிறார்.
"அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மிகக் குறைந்த அளவு திறனாய்வும் நோக்கும் போக்கும் தமிழில் இன்னும் கெட்டியாக உருப்பெறவில்லை.இது, நமது கவனத்துக்கும் சிந்தனைக்கும் உரிய செய்தியாகும்". (பக்கம்:134-இலக்கி யமும் திறனாய்வும்).
இத்தகைய தாராள (LIBERAL) மனப்பாங்கு கொண்ட பேராசிரியர் / திறனாய்வாளர் கைலாசபதி சமுதாயக்
102

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
கொள்கைக்கு அழுத்தங்கொடுத்து (அழுத்தங் கொடுப்பது சரி, மற்றக் கொள்கையாளர் எல்லோரையுமே ஒரே வார்ப்பில் "அழகியல்வாதிகள்" என்று கூறுவதுதான் சரியில்லை) விமர்சிப்பதுதான் சற்று முரணாகத் தென்படுகிறது.
திறனாய்வாளர் கைலசாபதியின் முரண்கள் எவ்வாறிருப் பினும், அவருடைய ஆங்கில, கிரேக்க இலக்கியப் புலமை, தமிழ் விமர்சனத்திற்குச் செழுமையூட்டியிருப்பதையும் வெறும் "நயங்காணல்" அல்லது "ரசனை வெளிப்பாடு" போன்ற ஆரம்ப நிலையில் இருந்த தமிழ்திறனாய்வைச் சுமார் இருபது இருபத்தைந்து வருஷங்களுக்குள் அவர் சாஸ்திரிய ரீதியாக நெறிப்படுத்தியிருப்பதையும் மறக்க முடியாது. இவருடன் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியும் குறிப்பிடத் தக்கவராவார்.
மார்க்சிய கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இந்த இரு மார்க்சிய விமர்சகர்களையும் தள்ளி விட்டு ஈழத்து இலக்கிய விமர்சனமோ பொதுவான தமிழ் இலக்கிய விமர்சனமோ வளர முடியாது.
பெங்களூரிலிருந்து வெளியாகிய படிகள் என்ற இலக்கிய சிற்றேடு பேராசிரியர் கைலாசபதி பற்றி, பெப்ரவரி 1981 இதழில் கூறியிருப்பது ஒரு முக்கியமான அவதானிப் பாகும்.
"வெறும் அபிப்பிராயங்கள் தமிழகத்தில் விமர்சனமாக இருந்த சூழலில் ஓர் உலுக்கு உலுக்கி விமர்சனம் விஞ்ஞான அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்றும் அபிப்பிராயங் களாக இருந்த விமர்சனம் சமூகவியல் குணங்கள் கொள்ள வேண்டும் என்றும் மிக வலிமையாக ஓங்கிப் பேசிய கவர்ச்சியான குரல் கைலாசபதியினுடையது"
பேராசிரியர் கைலாசபதி சமகால இலக்கியப் போக்கில் ஆற்றிவரும் பங்கைக் கணிப்பது போன்று, பேராசிரியர் சி. கி. மறைமலை எழுதிய இலக்கியத் திறனாய்வு- ஓர் அறிமுகம் (1979) என்ற நூலில் எழுதிய வாசகம் அமைந்துள்ளது. "கைலாசபதியின் பல்துறை அறிவும், பரந்த கல்வியும், அவரது திறனாய்வுக்குத் தனி மெருகு அளிக்கின்றன. கைலாச
103

Page 60
கே.எஸ்.சிவகுமாரன்
பதியின் கருத்தை ஏற்க மறுப்போரும் அவரது தருக்கவியல் அணுகு முறையை, செய்திகளைக் கோர்வைப்படுத்தி, அவற்றின் நிறை குறைகளை ஆய்ந்து, கொள்வன கொண்டு கொள்ளாதனதள்ளி, திட்டவட்டமான ஒரு முடிவு உரைக்கும் அறிவியற் பாங்கான வழி முறையைப் பாராட்டவே செய்வர்" ஒப்பியல் இலக்கிய ஆய்வுத் துறைக்குக் கால்கோள் நாட்டிய பெருமையொன்றே கைலாசபதியின் முக்கியத் துவத்தை உணரவைக்கும். பல்லவர் கால இலக்கியம் பற்றியும் அகல்யை பற்றியும், பாரதி பற்றியும், க. நா. சு. பற்றியும், கவிதை பற்றியும், நாவல் பற்றியும் புதுமையான கருத்துக்களைக் கைலாசபதி தெரிவிக்கிறார். இவை, ஆராயத் தக்கனவாயினும், விமர்சகரின் தற்புனைவான சிந்தனை களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. "புத்திலக்கிய விமர்சகர்கள் பலருக்கும் அவர் ஆதர்சனமாக விளங்குகிறார்" என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை வரை, செல்வக்கேசவராய முதலியார் முதல் சிவகுமாரன் வரை, வ. வே. சு. ஐயர் முதல் இன்றைய சிறுகதையாசிரி யர்கள் வரை, பிரதாப முதலியார் சரித்திரம் முதல் இன்றைய நாவல்கள் வரை, மனோன்மணியம் முதல் இன்றைய முற்போக்கு நாடகங்கள் வரை, அவர் பரவலாக யாவற்றையும் பண்டித மேதாவித்தனத்துடனும், நவீனத்துவ மார்க்சியப் பார்வையுடனும் விமர்சித்திருக்கிறார்.
கலாநிதி தி. சு. நடராஜன் (தமிழ் இலக்கிய விமர்சகர்கள்கட்டுரைத் தொகுப்பு -1979) கூறியிருப்பது போல "கைலாசபதி கல்வி நெறி மரபின் ஆய்வறிவாளராகவும், அதே நேரத்தில் விமர்சனப் பாங்குடையவராகவும் விளங்குகிறார்." சமகாலத் தமிழ் இலக்கியமும் கைலாசபதியின் திறனாய்வும் பிரிக்க முடியாதவை. அதே சமயத்தில், கைலாசபதியின் குறைகள் (இலக்கியத் திறனாய்வு அடிப் படையிலே) பற்றியும் இங்கு சிறிது பார்த்தல் அவசியம்.
O4

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
பேராசிரியர் க. கைலாசபதி தமிழ் நாவல் இலக்கியம் என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் சமூகவியல் அடிப்படையில் எழுதப்பட்டதனால், க. நா. சு. குழுவைச் சேர்ந் திருந்த வெங்கட் சாமிநாதன் மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்றழைத்து அந்த நூலை விமர்சித்தார். அதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில், க. நா. சு. வையே கைலாசபதி விமர்சித்து மல்லிகையில் எழுதினார். அக் கட்டுரைகளே புத்தக வடிவில் வெளிவந்திருக்கின்றன. இலக்கிய விமர்சன முயற்சிகளில் மேற்சொன்ன அப்பியாசங் களும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாயினும், இவை பொதுவாக நல்ல ரசனையைத் தருவன அல்ல.
பேராசிரியர் கைலாசபதி, எழுத்தாளர் - விமர்சகர் க. நா. சுப்பிரமணியம் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். க. நா. சுவை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், நமது இலக்கிய உலகில் நிலவும் ஒரு திறனாய்வுப் போக்கைத் திறனாய்வு செய்வது தனது நூலின் நோக்கம் என்று கூறும் ஆசிரியர், க. நா. சு. தற்சமயம் முழு மூச்சாகப் போர்க்களத்தில் யுத்த சன்னத்தனாய் நிற்கவில்லையாயினும், அவரது சீடர்கள் ஆங்காங்கு குரல் எழுப்பிய வண்ணமுள்ளனர் என்றும் குறிப் பிடுகிறார்.
வர்க்க முரண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தச் சமூகவியலாளர், திறனாய்வு என்பது எப்பொழுதுமே வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலும் வர்க்க முரண்பாடு களின் அடிப்படையிலும் தோன்றும் தத்துவப் போராட்டங் களின் வெளிப்பாடாகவுமே அமைந்து வந்துள்ளது என்கிறார்.
திறனாய்வு என்ற சொல் விமர்சனம் என்று பழகி விட்ட பதம் கொடுக்கும் அர்த்தத்தைத் தருவதல்ல. அதே வேளையில், பேராசிரியர் கைலாசபதி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கடல் கடந்த தமிழ் மலர் சுடர் (1978)இல் எழுதிய ஈழத்தில் இலக்கியத் திறனாய்வு என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
105

Page 61
கே.எஸ். சிவகுமாரன்
"நவீன காலத்திலே திறனாய்வு என்னுஞ் சொல் குறிப்பதையே முற்காலத்திலும் இலக்கண நூல்கள் குறித்தன என்பதற்கில்லை. பண்டைக் காலத்தில் அணியிலக்கணம் திறனாய்வின் ஒரு பகுதியையே சிறப்பாக ஆராய்ந்தது, உவமை, உருவகம் முதலியன செய்யுளுக்கு அழகு செய்வன வாய், மெருகூட்டுவனவாய் அமைவன என்பதே அணியிலக் கணத்தின் அடிப்படைக் கருத்தாகும். அதற்கமைய அணி களை நுணுக்கமாக வகுத்தமைத்தனர் அணியிலக்கண நூலாசிரியர்கள். ஆனால் இன்று நாம் திறனாய்வு எனக் கருது வது அணியிலக்கணத்தை மட்டுமன்று. அழகைச் சுவைப் பதுடன் அதனோடு பிரிக்க இயலாதவாறு பிணைக்கப் பட்டிருக்கும் செய்திகளையும், சிந்தனைகளையும், கருத்துருவங்களையும் கண்டு கொள்வதும், அவற்றை மதிப்பிடுவதும் அவற்றுக்கு விளக்கம் உரைப்பதும் திறனாய் வின் பண்பும் பயனும் ஆகும். முற்காலத்தில் அணியிலக் கணம் விதிமுறையில் அமைந்தது எனக் கொண்டால், இன்றைய திறனாய்வு விவரித்து விளக்கும் முறையைப் பற்றுக்கோடாய்க் கொண்டது என்பதில் தவறில்லை."
இவ்வாறு கூறிச் செல்லும் கைலாசபதி, விமர்சனத்தை ஓர் ஆய்வறிவு சார்ந்த துறைக்கு உள்ளேயே வகுக்க முற்படுகிறார். உண்மையில் நமது நாட்டு முன்னணி விமர்சகர்களைக் குறிப்பாகப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை விமர்சகர்கள் என அழைப்பதை விட ஆய்வறிவாளர் (INTELLECTUALS) என விவரிப்பதே பொருந்தும். இன்டலெக்ஷ"வலுக்குப் ‘புத்திஜீவி” என்பது எவ்வளவு பொருத்தமில்லையோ, அதே போல 'கிரிட்டிஸிஸம்" என்பதற்குத் திறனாய்வு என்ற சொல் பொருத்தமில்லை. விமர்சனம்’ என்பதே உரிய சொல் எனக் கருதி வந்தேன். ஆனால் விமர்சனம் என்றால் கண்டனம் என்று சிலர் மருளுவதனால் கிரிட்டிசிசத்துக்கு 'திறனாய்வு" என்று கூறுவதே பொருந்தும்.
106

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
பல்கலைக்கழக மட்ட விமர்சகர்களை ஆய்வறிவாளர் கள் என நான் கருதுவதற்குக் காரணமாக இருப்பதே பேராசிரியர் கைலாசபதியின் ஒரு கூற்றாகும்.
"இன்று திறனாய்வுக்கலை ஈழத்தில் முக்கியமான ஒரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. தாய்மொழி மூலம் உயர்கல்வி நடைபெறும் சூழ்நிலையில் பலதுறைக் கல்விப்பயிற்சி பெற்றவர்கள் இலக்கியத்துறையில் எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும், வாசகராகவும் நுழைகின்றனர். தமிழ் கற்றோரின் தனிப்பட்ட உரிமையாக, இலக்கியம் இனி இருத்தல் இயலாது. இந்நிலை, புதிய எதிர்ப்பு ஆற்றலையும், புதிய ஆசிரியர்களுக்குக் கொடுக்கிறது. இதேவேளையில், புதிய புதிய அரசியல் பொருளாதார பிரச்சினைகளுயும் நாட்டவரை எதிர்நோக்குகின்றன. தமிழுணர்ச்சியோ இலக்கிய இன்பமோ மட்டும் இலக்கியத்திற்குப் போதுமான வையல்ல. இவை யாவற்றுக்கும் ஈடுகொடுக்கும் வகையில், அதே வேளையில் உலக இலக்கியத்தில் உயர்ந்த குறிக்கோள்களைத் தழுவியும் இலக்கிய ஆக்கம் நடைபெற வேண்டிய நிலை இன்றுள்ளது. இதற்கும் திறனாய்வுக்கலை பக்கத்துணையாகவும் சில வேளைகளில் வழிகாட்டியாகவும் பணிபுரிய வேண்டியிருக்கிறது".
பத்திரிகை ரக விமர்சகர்கள் எல்லோரும் பல்கலைக்கழக மட்ட பல்துறையறிவு பெற்றிருப்பார்கள் என்று கூற முடியாதிருப்பதனால் பத்திரிகை ரக விமர்சகன் என்றும் ஆய்வாளன் என்றும் பிரிப்பது நமது வசதிக்கு உகந்ததாக இருக்கிறது.
ஆய்வறிவாளன் கைலாசபதி மேற்கண்ட மேற் கோளின்,"உலக இலக்கியத்தின் உயர்ந்த குறிக்கோள்களைத் தழுவியும். இதற்கும் திறனாய்வுக்கலை பக்கத்துணையாயும் சில வேளைகளில் வழிகாட்டியாயும் பணி புரிய வேண்டி யிருக்கிறது எனக் கூறியிருப்பதையும் அவதானிக்கவும்,
107

Page 62
கே.எஸ்.சிவகுமாரன்
சமூகவியல் அடிப்படையில் கலை இலக்கியத்தை நோக்கும் ஆய்வறிவாளர் கைலாசபதி, க. நா. சு. வைக் கண்டிக்கும் பொழுது ஜேம்ஸ் ஜோய்ஸ் என்ற ஐரிஷ்காரரைக் குருநாதராகக் கொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், இதே கைலாசபதி "நான் விரும்பும் நாவலாசிரியர்" என ஜேம்ஸ் ஜோய்ஸைத் தானே குறிப்பிட்டது தான். பிரபல ஆங்கில இலக்கிய மார்க்சிய விமர்சகர்களான ரேமண்ட் உவில்லியம்ஸ், ஆர்ணல்ட்கெட்டில் போன்ற வர்கள் ஜேம்ஸ் ஜோய்ஸ் பற்றி விதந்துரைப்பதும் அவதானிக் கத்தக்கது.
எனவே க. நா. சு. வைக் கண்டிக்க கைலாசபதி உபயோகித்த ஓர் அஸ்திரம் பயனற்றதாகிவிட்டது. ஓர் ஆய்வறிவாளர் என்ற முறையில் விமர்சனத்தை விமர்சனம் பண்ணும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். சமர் என்ற ஏட்டிற்கு எழுதிய கட்டுரைகளில் பிரச்சினைக்குரிய சில கருத்துக்களைப் பேராசிரியர் தெரிவிக்கிறார்.இவற்றிற்குப் பதில் எழுதும் முறையில் அலை சில கட்டுரைகளை வெளியிட்டது.
க. நா. சு. பற்றி கைலாசபதியின் மதிப்பீடு என்ன வென்றால், க. நா. சு. ஒரு ரசிக விமர்சகர், கலை கலைக்காகவே என்ற கொள்கையுடையவர். வேதாந்தத்தில் புகலிடம் தேடிய பின்னர் விமர்சனம் அவரைப் பொறுத்தவரையில் செத்து விட்டது என்றே கூற வேண்டும் என்கிறார் கைலாசபதி,
வேதாந்தத்தில் தஞ்சம் புகுவதும், விமர்சனப் பாங்கற்ற விதத்தில் மார்க்சியத்தில் தஞ்சம் புகுவதும் அநேகமாக ஒன்றுதான். விமர்சகன் ஏதோவொரு தத்துவ அடிப்படையில் தொழிற்படுகிறான். ஆனால் ஆய்வறிவாளனோ குறிப்பிட்ட தத்துவங்களைக் கடந்து, பல் தத்துவங்களையும் கூட்டு மொத்தமாகப் பார்த்து, சார்பற்ற முறையில் வழிகாட்டுவது அவசியமாகிறது .
108

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
க. நா. சு. வை ஒரு தரமான இலக்கிய விமர்சகர் என்று இப்பொழுது கூற முடியாவிட்டாலும் அவர் ஒரு கால கட்டத்தில், தன்னளவில் செலுத்திய பங்கைக் குறைவாக மதிப்பிடமுடியாது. தவிரவும் க. நா. சு. ஒரு தரமான புனை கதை எழுத்தாளர். அவருடைய பொய்த்தேவு, ஒருநாள், அசுரகணம் ஆகிய நாவல்கள் தமிழுக்கு அழகூட்டின.அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பொஸான்ஸ் கிநோவி என்ற சிறுகதையும் அவருடைய ஆளுமையைக் காட்டி நிற்கின்றது.
நமக்கு, க. நா. சு. வும் கைலாசபதியும் இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளே ஏற்பட்டிருக்கா. திறனாய்வுப் பிரச்சினைகளை இனங்கண்டு கொண்டால்தான் வளர்ச்சிக்கு ஆவன செய்யலாம். எனவே, க. நா. சு. வும் கைலாசபதியும் தத்தம் நிலைகளில் நின்று தமது பணிகளைச் செய்துள்ளார் கள் எனக் கூறலாம்.
109

Page 63
அழகியலும் சமூகப் பண்பும்
அழகியல் (AESTHETICSM) பற்றிய முடிவுறா விவாதங்கள் மீண்டும் ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி. மேலும் தெளிவு பெறவும், நமது எழுத்தாளர்கள் எந்த அணியைச் சேர்ந்தாலும், படைப்பாளிகள் என்ற முறையில் பொதுவான இலக்கியப் பண்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் இத்தகைய விவாதங்கள் உதவுகின்றன.
டானியல் அன்ரனியை ஆசிரியராகக் கொண்டு சமர் என்ற பெயரில் ஒரு கலை இலக்கிய விமர்சன வெளியீடு தரமான கட்டுரைகளையும் ஆக்கங்களையும் கொண்டு வெளிவந்துள்ளது.
"ஆரோக்கியமான சூழ்நிலையில் விவாதங்களையும் விமர்சனங்களையும் வழி நடத்தல், திறந்த மனங்கொண்ட விசாரணைகளையும், சுய பரிசீலனைகளையும் வரவேற்றல், அறிவார்ந்த தளத்தில் நின்று விமர்சன பூர்வமாகத் தங்கள் பார்வையை முன் வைத்தல், விரும்புவோர் கலை, இலக்கிய முயற்சிகளை அரசியற் தளத்திற்குக் கலாபூர்வமாக நகர்த்திச் செல்லல்" போன்ற நோக்கங்களைக் கொண்டது 'சமர்'. இந்த வெளியீட்டில் பேராசிரியர் க. கைலாசபதி, சித்திரலேகா மெளனகுரு ஆகியோர் எழுதிய அழகியல் சம்பந்தமான இரு கட்டுரைகள் அவதானிப்புக்குரியவை.
சித்திரலேகாவின் பின்வரும் அவதானிப்புக்கள் யாவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.
110

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
1.
இலக்கியப் பொருளுக்கு முதன்மையும் முக்கியத்துவமும் அளித்தபோது அது கையாளப்பட்ட விதம், அல்லது அணுகப்பட்ட விதம் தொடர்பான ஆய்வுகள் அதிகளவு இடம்பெறவில்லை. இதனால் கலைப்படைப்பில் அழகியல் பற்றிய உணர்வு எழுத்தாளர்களிடையே சரிவரச் செயற்படவில்லை. உண்மையில் படைப்பின் அழகி யலும், உள்ளடக்கமும் வேறு வேறல்ல. அழகியல் பற்றிப் பேசுவோர் பிற்போக்கானவர் என்ற (தவறான) கருத்தும் வளர்ந்து வந்துள்ளது. இன்று இலக்கியத்துடன் அரசியல் நிலைப்பாட்டையும் சமூகப்பாட்டையும் வற்புறுத்துபவர் பலர் இலக்கிய அழகியல் பற்றியும் கவனம் கொண்டுள் ளனர்.
தனிப்பட்ட படைப்பாளிகள் எவரும் ஆழமான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதில்லை. இதனால் இளம் எழுத்தாளர் களும் இலக்கிய மாணவர்களும் தெளிவான ஒரு பின்னணியில் காலூன்ற முடியாத நிலை தோன்றி யுள்ளது. இது மட்டுமன்றி எழுத்தாளர்களே தங்கள் பலம் பலவீனம், குறை நிறை ஆகியவற்றையும் உணர்ந்து
மேலும் முயற்சி செய்ய முனையாமைக்கு இலக்கியம்
பற்றிய முறையான ஆய்வின்மையும் எழுத்தாளர் களிடையே காணப்படும் மனப்பான்மையும் பலத்த காரணிகளாயுள்ளன. சமூக பயன்பாட்டுணர்வு இலக்கிய அரங்கில் நிலை பேறடைந்து விட்ட இக்கட்டத்தில் எமது குறைகளையும் மனந்திறந்து பேசுவதும் விவாதிப்பதும் புதிய நிலைமை களுக்குத் தயார்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. இலக்கியமானது முதல்நிலையில் மனித அனுபவ வெளிப்பாட்டுடன் சம்பந்தப்பட்டது. அனுபவங்களை உரைகல்லாகக் கொண்டு தத்துவங்களைத்தேடுவது எத்தகைய உன்னத கருத்துக்களாயினும் வாழ்க்கையின்
நிரூபணங்களாக வெளிப்படுத்தாவிடத்து இலக்கியமாக
11

Page 64
கே.எஸ்.சிவகுமாரன்
வன்றி வெறும் கருத்தளவிலேயே நின்றுவிடும். எனவே தான், கருத்துக்களை விடவும் வடிவங்களை இலக்கியத் தில் கொண்டு வரவேண்டியுள்ளது.
அதே இதழில் பேராசிரியர் கைலாசபதி அழகியல் பற்றிப் பேசுவோரை வன்மையாகக் கண்டிக்கிறார். ஆய்வறிவு ரீதியாக அவர் இந்த பிரச்சினை பற்றித் தெளிவாக சில கருத்துக் களைத் தெரிவித்த போதிலும், அவை பிரச்சினையை மிகமிக இலகுபடுத்துவதிலும் எதிரும் புதிருமாகக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றனவேயன்றி ஆக்க பூர்வமாக அமைய வில்லை. உண்மையில் எதிரும் புதிருமான முரண்பாடுகளின் இணைப்பில் புதிய வளர்ச்சியைக் காண இயலுமல்லவா? பேராசிரியர் கைலாசபதியே இதனை வேறு ஓரிடத்தில் அழுத்தந்திருத்தமாக ஒப்புக்கொள்கிறார். "தமிழ் நாவ லிலக்கிய உலகம் இரு துருவங்களாக பிளவுபடுகிறது. அதீத தனி மனித நாவல்கள் ஒருபுறம்,வேகம் பெற்றுவரும் சமுதாயச் சக்திகளைக் கூட்டாக எடுத்துக் காட்டும் நாவல்கள் மறுபுறம். இவை ஒன்றுக்கொன்று முரண்படுவனவே. ஆயினும் நாவலிலக்கியம் தனி மனிதரையும் சமூக இயக்கங்களையும் இணைக்கவல்லது." (முன்னுரை. தமிழ் நாவல்களில் மனித உரிமையும் மக்கள் போராட்டமும். பதிப்பாசிரியர்: பாக்கியமுத்து கிறிஸ்தவ இலக்கிய சங்கம்). இதே முன்னுரையில் கைலாசபதி மேலும் கூறுகிறார்: "நம் காலத்துக்கு உகந்த அழகியலையும் சிருஷ்டிக்கும் மாபெரும் பொறுப்பு, எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. மனித உரிமை களின் தன்மையையும் போராட்டங்களின் ஊற்றுக்களையும் எவ்வளவு தூரம் உள் நின்று உணர்ந்து கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தே அவற்றை அழகியல் அடிப்படையில் ஆக்கும் சக்தியும் அவர்களுக்கு வந்து அமையும். அப்பொழுது தான் உலக நாவல் இலக்கிய வரிசையில் தமிழ் நாவல்களுக்கும் உரிய இடம் கிடைக்கும்"
112

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இவ்வாறு ஓரளவு "தாராளக் கொள்கையை" கடைப் பிடிக்கும் கைலாஸ், ஏன் சில சந்தர்ப்பங்களில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற போக்கில் இரு துருவங்களைச் சட்டென்று இனங்கண்டு ஒதுக்கிவிடுகிறார் என்பதுதான் புரியவில்லை. மேலே குறிப்பிட்ட தொகுப்பிலேயே இனியவன்' , தி. க. சிவசங்கரன் போன்ற மார்க்சியப் பார்வை கொண்ட விமர்சகர்களுக்குமிடையிலுள்ள வித்தியாசம் கவனிக்கத்தக்கது.
"கலைத்துவம் என்னும் கோட்பாடும் அதனைப் பயன் படுத்துவோருடைய வர்க்க நலன், அக்கறை, பிரமை முதலி யவற்றுக்கு இயைய வெவ்வேறு பொருள் குறிப்பதாய் அமையும்" என்று பேராசிரியர் கைலாசபதி கூறும் பொழுது, உண்மையான இலக்கிய மாணவர்களின் பயிற்சியையும், நேர்மையையும் விமர்சன ஆற்றலையுமே சந்தேகித்து ஒதுக்குகிறார். அது சரியான பண்பு அல்ல.
பேராசிரியர் கைலாசபதி "சமர்" ஏட்டில் எழுதிய கட்டுரையில் பிரச்சினைக்குரிய தகுதிகள் இருப்பதுபோல நியாயமான, தருக்க ரீதியான கருத்துக்கள் இருப்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
"இலக்கியத்தில் கலையழகு" பற்றிக் கூறுபவர்களின் கருத்து எவை என்று அனுமானமாகக் கட்டுரை ஆசிரியர் ஏழு அம்சங்களை நிரற்படுத்தியுள்ளார். அவற்றில் உண்மைகள் காணப்படுகின்றனவென்றாலும், அவை முற்று முழுதான உண்மைகளல்ல என்பதை நிதானமாக படித்தால் புரியும். உதாரணமாக "உளவியல் பிரச்சினைகளே நவீன இலக்கியத்திற்கு ஏற்றவை" என்று அழகியல்வாதிகள் வலியுறுத்துவதாகக் கட்டுரை ஆசிரியர் கூறுகிறார். நவீன எழுத்தாளன் சமுதாயத்தை-புற உலகை-புறக்கணித்து அக உலகு பற்றி மாத்திரம் எழுதுவதே கடினம். ஆனால் ஜெயகாந்தன் போன்று கலைநயமாக இரண்டையும் சேர்த்து,
13

Page 65
கே. எஸ்.சிவகுமாரன்
இணைத்து எழுதலாந்தானே?இந்திரா பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களும் தத்தமது மட்டங்களில் நின்று சமுதாயத்தைச் சித்திரிக்கின்றனர் தானே? காந்தியவாதம் விமர்சகருக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்ப தற்காக அத்தத்துவக் கதைகளை வரவேற்காமல் விடலாமா? விஷயம் என்னவென்றால், அத்தகைய நாவல்களில் காணப் படும் கலைநயத்தை, பொதுவுடைமைக் கருத்து நாவல்களிற் காணமுடியாதிருப்பதுதான். புதிய உள்ளடக்கத்திற்கு பொருத்தமான புதிய உருவம் அமைவது இயல்புதான். விமர்சன நோக்கும் வேறுபடுந்தான். ஆனால் ‘புதுக் கவிதை' என்ற பெயரில் வெளிவரும் சுலோகங்கள் "படிமங்களாக" மட்டும் இருப்பதை நாம் பார்க்கிறோம். புதிய விமர்சனத்திலும் கூட புதிய உள்ளடக்கம் என்ற போர்வையில் புதிய உருவமான "புதுக் கவிதை" யை நியாயப்படுத்த முடியாதிருக்கிறது. இந்த நிலையில், உப்புச்சப்பு இல்லாதவற்றை, குப்பையிற்றான் போடவேண்டும். வெறும் கருத்துக்காகப் பாராட்டு வதென்றால், கட்டுரைகள் தேவையில்லை. நாடகத்திற்குப் பதிலாக MAGIC SHOWS போதும். "கலை" என்பது தனியுடைமைச் சமுதாயத்திலுஞ் சரி பொதுவுடைமைச் சமுதாயத்திலுஞ் சரி அழகியல் சார்ந்ததே. "அழகியல்" என்ற சொல்லே கோளாறுக்குக் காரணம். "செம்மை" அல்லது "செய்வன திருந்தச் செய்யும்" பண்பையே வடிவம் அல்லது அழகு என்று நான் கருதுகிறேன்.
நமக்கு வேண்டியவை சமூகப் பண்பும் செம்மைப் பொலிவும் இணைந்தவை. நமக்குள்ள வேறுபாடுகளைக் கூர்மைப் படுத்த இரு துருவங்களாக நம்மையே பிரித்துக் கொள்ள இந்த "அழகியல் பிரச்சினை" உதவுகிறதேயன்றி, வேற்றுமையிலும் ஒற்றுமை காண உதவவில்லை. இவ் விதமான சமரசம் முற்றாகத் தோற்றுவிட்டது என்றும் கூறுவதற்கில்லை.
114

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
இவ்வளவுங் கூறுவதனால், பேராசிரியர் கைலாசபதியின் ஆளுமையைக் குறைவாக மதிப்பிடுவதோ, அவர் பெருமை யை மறைப்பதோ அல்ல. நமது நாடு பெருமைப்படத்தக்க இந்நூற்றாண்டின் சிறந்த ஆய்வறிவாளர்களுள் அவர் முன்னணியில் நிற்கிறார். ஆனால், அவருடைய கருத்துக்கள் சில வளர்ச்சிக்குத் தடையாக, அநாவசியமான முட்டுக் கட்டைகளைப் போட்டன என்பதே எனது முறையீடு.
"கலை இலக்கியத்தைப் போல, இயற்கையையும், மனிதனையும், சமூகநிலைகளையும் பற்றிய மனிதனின் புரிதல்களையே இயற்கை விஞ்ஞானங்களும், சமூக விஞ்ஞானங்களும் வெளிப்படுத்திய போதிலும் இவற்றினால் பதிலியாக்கப்பட முடியாத வேறு ஏதோவொன்றிருப் பதனாலேயே நாம் இலக்கியத்தையும் கலையையும் மேலதிகமாகக் கோருகிறோம். பதிலியாக்கப்பட முடியாத அந்த அம்சம் கலைத்துவமும், அது தரும் உணர்வுப் பாதிப்புந்தான். அனுபவப் பாதிப்பு,அதனின் வெளிப்பாடாக வரும் விஷயம், தேர்வு, அழுத்தம், உத்தி, மொழிநடை. பிரக்ஞை என்பன இக்கலையம்சத்தைச் சாத்தியமாக்கும் கூறுகளாகும்" (அலை-13 ஆவது இதழ்)
உள்ளடக்கச் சிறப்புக்காகப் பாராட்டப்பட்ட நமது முன்னணி எழுத்தாளர்களின் தமிழ்ச் சொல் வறுமையை யேசுராசா இந்த இதழில் உதாரணங்களுடன் விளக்கி யிருப்பதும் வரவேற்கத்தக்கது.
மு. புஷ்பராஜன், பேராசிரியர் வெவ்வேறு இடங்களில் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துக் கூறித் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். புஷ்பராஜன், கைலாசபதியை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதியிருப்பது வரவேற்கத் தக்கதே யல்ல. அதே வேளையில், கலைநயம் கெட்டுப்போன ஆக்கப்படைப்புக்களை அவர் சரியாக உதாரணங்காட்டி யிருப்பது வரவேற்கத்தக்கது. மு. தளையசிங்கம் ஏன் மதிப்
115

Page 66
கே.எஸ்.சிவகுமாரன்
பிடுகிறார் என்பதற்கான விளக்கமும் பெரும்பாலுஞ்சரி. "புதுக் கவிதை" பற்றி வானமாமலை, கைலாசபதி, முருகையன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களில் நிற்கும் உண்மையைத் தட்டிக்கழிக்க முடியாது. அதே வேளையில், தோணி வருகின்றது முன்னுரையில் கைலாசபதி, மகாகவி பற்றிக் குறிப்பிடாததும் விசனிக்கத்தக்கது.
16

ஜனாப் எஸ். எம். ஹனிபா கூறுகிறார்:
பேராசிரியர் கைலாசபதி 'தினகரன்" ஆசிரியராக இருந்த பொழுதுதான் திரு. கே. எஸ். சிவகுமாரன், அவரை தினகரன் அலுவலகத்தில் சந்தித்து இருக்கிறார்.
கே. எஸ்.சிவகுமாரனின் வாழ்க்கையில் ஒரு திருப் பத்தை ஏற்படுத்திவிட்ட கைலாசபதி அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட நிலையான உறவுகள் பற்றியும் கைலாசபதி அவர்கள் காட்டிய பாதையில் தான் சென்று வெற்றி கண்டுள்ளது பற்றியும் கே. எஸ். சிவகுமாரன் எடுத்துக் கூறியுள்ளார்.
மிகவும் பணிவான பேராசிரியர் கைலாசபதி தமிழுல கனைத்திலும் பிாபல்யமானவர்.
அவர் காட்டிய நல்ல வழியில் நன்மை பெற்றதற்கான நன்றிக் கடனைச் செலுத்தியிருக்கும் கே. எஸ். சிவகுமாரன் உயரிய பண்பினர். எவ்வித பயனும் எதிர்பாராமல் நல்ல ஆலோசனை கூறித் தன்னை வழிப்படுத்திய பேராசிரியர் கைலாசபதி பற்றி நன்றியுணர்வுடன் திரு.கே.எஸ். சிவ குமாரன் எழுதியிருப்பது ஒன்றே அவரின் உயரிய பண்பிற்குப் போதிய சான்று.
எஸ். எம். ஹனிபா
இல.10, நாலாவதுலேன் நிர்வாக செயலாளர் கொஸ்வத்தைரோட் தமிழ் மன்றம். ராஜகிரிய
1O-01-1990
17

Page 67
Ul6T அமைப்பியல் வாதமும் திறனாய்வும்
இலக்கிய திறனாய்வில் ஈடுபாடு கொண்ட ஒருவனா கவும் அத்துறை சார்ந்த பத்தி எழுத்தாளர்களுள் ஒருவனாகவும் நான் இருப்பதனால் எனது அணுகுமுறை பல்நெறி (MULTI DISCIPLINARY APPROACH) & IT fig5. 9,605u T6) 5.76i.T அமைப்பியல் வாதம், அமைப்பியல் வாதத்தைத் தொடர்ந்து வரும் அமைப்பியல் வாதம் (POSTSTRUCTURALSM) போன்ற நெறி முறைகளில் நான் அதிகம் அக்கறை காட்டுவதில்லை. ஆயினும் உயர் கல்விப்பாங்கான சில வட்டாரங்களில் இவ்விதமான ஆய்வுகள் கால நடைமுறைக்கேற்றவாறு இடம்பெறுகின்றன.
உயர் வகுப்புக்களில் பயிலும் மாணவர்கள் நலன் கருதி இந்த விஷயம் குறித்து சில தகவல்களைத் தொகுத்துத் தருகிறேன்.
அமைப்பியல் வாதம் என்பது ஒருவித தத்துவார்த்த இயக்கம் எனலாம். இருந்தபோதும் 21ஆம் நூற்றாண்டுக்குள் நாம் புகுந்த பின்னர் புதிய சிந்தனையாளர்கள் இந்த அமைப்பியல் வாதத்தை முழுதாகவே நிராகரித்துவிடக்கூடும். உண்மையிலேயே பின் அமைப்பியல்வாதிகள் (POSTSTRUCTURALISTS) இன்னும் பல படிகள் சென்று ஆக்கிரமிக்கின்றனர். அமைப்பியல்வாதிகளின் ஆளுகைக்குள் மொழியியல் (LINGUISTICS) LD60fgs 360T gué) (ANTHROPLOGY) goosdui
118

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
திறனாய்வு (LTERARY CRTICSM) போன்ற துறைகள் தவிர்க்க முடியாமல் சூட்டப்பட்டன.
இந்நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஒரு புனை கருத்து (THEORY) முன் வைக்கப்பட்டது. தீர்க்கமான திட்ட வட்டமான உள்பொருள் உண்டு என்று வாதிப்பதற்குப் பதிலாக எந்தப் பொருளும் உறவுகளின் வகை முறைப் பகுப்பாய்வாக அமைய வேண்டும் என்பது இந்த புனை கருத்து.
ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த மொழி ஆய்வாளரான Cufflé0T66T Ln 6m)66most (FERDINAND DESAUSSURE) SysL60Tib ஒன்றை வெளிப்படுத்தினார். அது என்னவெனில் மொழி என்பது விதிக்கட்டில்லாத அடையாளங்களின் வகைமுறை. (LANGUAGE IS A SYSTEM OF ARBITRARY SIGNS). 95.76 g) அடையாளம் காட்டுபவருக்கும் (SIGNIFIER) அடையாளம் காட்டப்படும் பொருளுக்குமிடையே (SiGNIFIED) உள்ளார்ந்த உறவுகள் இல்லை என்பது அவரின் கருத்தாக்கமாய் இருந்தது.
சமூவியல் துறையில் பயன்படுத்தும் பொருட்டு இந்த கோட்பாடு விரைவிலேயே மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்தக் கருத்துப் படிவத்தை (CONCEPT) 5(36mm 6 SeO)6]-Gijsm 6iu (CLAUDE LEVISTRAUSS) 6T6iTu6 it பிரபல்யப்படுத்தினார்.
இது இவ்வாறிருக்க, இருபது ஆண்டுகளுக்கு முன் மறைந்த பிரெஞ்சு எழுத்தாளர் ரோலன்ட் பார்த் (ROLAND BARTHES) ஒரு விவாதத்தை முன் வைத்தார்.
ஒரு பாடத்தின் அல்லது ஓர் எழுத்துப்பிரதியின் (TEXT) உள்ளார்ந்த வடிவமைப்புக்களை திறனாய்வாளன் இனங்காண வேண்டும். இந்த வடிவமைப்புக்களே, உண்மை யதார்த்த நிலையுடன் தொடர்பின்றி தனித்து நின்று
119

Page 68
கே.எஸ்.சிவகுமாரன்
காணக்கூடிய அர்த்தங்களைத் தீர்மானிக்கின்றன. (A CRTIC SHOULD DENTIFY THE STRUCTURES WITH IN A TEXT THAT DETERMINE ITS POSSIBLE MEANINGS INDEPENDENTY OF ANY REFERENCE TO THE REAL)
'u60bLûUIT6fl'oppÉ5 6$l’LIT6ot (THE AUTHORIS DEATH) என்பது பார்த்தின் (BARTHES) வியாக்கியானம், அதே வேளை யில் நோஆம் சொம்ஸ்கி (NOAM CHOMSKY) இன்னொரு பிரிவை, வித்தியாசத்தை இனங்கண்டார். அதாவது மேலிடான வடிவமைப்புக்கள், ஆழமான வடிவமைப்புக்கள் என்பவை இந்த வித்தியாசமாகும்.
இந்த விதமான போக்குகளின் தொடர்ச்சியாக ஜூலியா க்றிஸ்டேவா (JULA KRISTEVA) புதுப்புனைவானதொரு விளக்கத்தை முன் வைத்தார். அவர் கவிதை ஒலியை பாலீடுபாடு உந்தலுடன் (SEXUALIMPULSE) சமன்படுத்தினார். அடுத்து வருவது கட்டவிழ்ப்பு (DECONSTRUCTION) என்ற கைங்கர்யம். நான் மரபொழுங்கு சார்ந்த ஒரு திறனாய் வாளன் (இலக்கிய கலை பத்தி எழுத்தாளன்) ஆகையால் கட்டவிழ்ப்புப் போக்கை வரவேற்க முடியாதிருக்கிறது.
untas Gllfilm (JACQUES DERRIDA) 6T6Tu6ui 9 i55 போக்கின் முன்னோடி. பார்பரா ஜோன்ஸன் (BARBARA JOHNSON) இந்த வரிசையில் மற்றொருவர். ஒப்பீடு செய்தல், பகுத்தாராய்தல் போன்ற மரபுநெறித் திறனாய்வு முறைகளை கட்விழ்ப்புவாதிகள் நிராகரிக்கின்றனர். கூர்ந்து நோக்கி விளக்கிக் காட்டுதல் இவர்களுக்குப் பிடிக்காதது.
கட்டவிழ்ப்புவாதிகள் கண்டனத்துக்கு உட்பட்டது சரியானது. ஆவண வீறாப்பான நம்பிக்கை கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கைகளைக் கொண்ட இந்த கட்டவிழ்ப்புவாதிகள் (DECONSTRUCTIONISTS) வேண்டு மென்றே இருண்மையை (OBSCURITY) உண்டு பண்ணு கின்றனர்.
20

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
பிரான்ஸிலேயே பின் அமைப்பியல் வாதம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே மடிந்து விட்டது. ஆயினும் நம்மவர்கள் தமிழ்நாட்டுச் சிற்றேடுகளில் அரைகுறையாக விளக்கப்படும் கருதுகோள்களைத் துாக்கிப் பிடித்துச் சன்னதமாடுவது வேடிக்கையாகவும் கேலிக்கூத்தாகவும் அமைகிறது. படைப்பை ஆக்கிய படைப்பாளியை மறந்து விட்டு விமர்சகனின் அரசியல் சார்ந்த வாசிப்பைத் திணிப்பது என்ன அநியாயம்.
வீரகேசரி வார வெளியீடு
18-O7-1999
121

Page 69
திறனாய்வு என்ற போர்வையில் கண்டன சரங்கள்
ஈழத்து விமர்சன மரபு விழி பிதுங்கிக் கிடக்கின்றது என்று குறைப்பட்டுக்கொள்கிறார் எழுத்தாளரும் விமர்சகருமான கே. எஸ். சிவகுமாரன். சுமார் 40 ஆண்டுகள் எழுத்துத்துறையிலும் குறிப்பாக பத்தி எழுத்தாளராகவும் விமர்சகராகவும் காலுான் றியவர் இவர். இதற்குக் காரணம் இன்றைய இள வட்டங்கள் என்கிறார். தற்போது ஓமானில் (OMAN) இலண்டன் உயர்தர சாதாரணதர வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத் தைக் கற்பிக்கின்றார். தற்போது இலங்கை வந்துள்ள இவருடன் இலக்கியம் குறித்து சில நிமிடங்கள் உரை யாடியதன் விளைவு இந்த விபரங்கள். கேள்வி :ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தோரின் ஆக்கங்களை விமர்சனம் செய்கின்ற பொழுது அதனை ஈழத்து இலக்கியம் என்ற நோக்கில் விமர்சனம் செய்ய விரும்புவீர்களா? அப்படி செய்வது சரியா? பதில் : அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு என்னைத் தெரியாது. அவர்களது நுால்களைப் படிக்கவும் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பல சிற்றேடுகளில் ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் கனடா அவுஸ்திரேலியா போன்ற இடங்களிலும் வசித்து
22

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
வரும் இளம் பிராயத்தினர் தமது ஆக்க இலக்கியங் களையும் விமர்சனங்களையும் எழுதி வருவதாக அறிகிறேன். இவை பற்றி ஈழத்துப் பத்திரிகைகளில் பதிப்புரைகள் வரும் போது அங்குள்ள இலக்கியப் போக்குகளை ஒரளவு அறிய முடிந்தது. ஆயினும் அங்கு நான் கேள்விப்பட்டதைக் கொண்டு மாத்திரம் கூறுகிறேன்.நெறிமுறையான இலக்கிய வளர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.
அத்துடன் 80 களின் தொடக்கத்தில் தமிழ் நாட்டுச் சிற்றேடுகளில் சேற்றை வாரி இறைத்தது போல் மேற்கூறிய இடங்களில் உள்ள சிற்றேடுகளிலும் ஒருவரை ஒருவர் தாக்கி குட்டை குழப்பும் கைங் கர்யத்தில் இறங்கியுள்ளனர். இதில் நாம் விசனிக்க வேண்டியது என்னவென்றால் ஈழத்தில் உள்ள இளம் வட்டங்களும் இத்தகைய போக்குகளையே முன் மாதிரியாகக் கொண்டு திறனாய்வு என்ற பெயரில் கண்டன சரங்களை வீசி நிலைமையை மேலும் மோசமாக்குகின்றனர். புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று கூறப்படும் ஒரு இலக்கிய வகை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இத்தகைய ஈழத்து ஆக்கங்களை ஈழத்து எழுத்தென்றும் கூறமுடியாது இருக்கிறது. அதே வேளை நமது நாட்டுக்கு வெளியே உள்ள சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் போக்கு களில் நின்றும் வித்தியாசமான சூழலில் எழுதப் பட்டுமுள்ள ஆக்கங்கள் உருவாக வகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கில இலக்கியம் எவ்வாறு தனித்தன்மை யுடைய, பிரிட்டிஷ், அமெரிக்க, அவுஸ்திரேலிய,
123

Page 70
கே.எஸ்.சிவகுமாரன்
கேள்வி:
பதில்:
கனேடிய, கரிபிய மற்றும் இந்திய, ஆபிரிக்க, ஆங்கில இலக்கியமாக வெவ்வேறு பண்புகளைக் கொண்டி ருக்கிறதோ அதே போல் பிற நாடுகளில் தமிழில் எழுதப்பட்டாலும் அந்தந்த நாடுகளின் தமிழ் இலக்கியம் என்றுதான் அங்குள்ள நமது எழுத் தாளர்கள் எழுதும் எழுத்தை நாம் கணிக்க வேண்டு மென நினைக்கிறேன். புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற தொடரே ஒரு (MSINFORM) தவறான சொல் வழக்காகும்.
ஈழத்தில் ஒரு இறுக்கமான விமர்சன வளம் இல்லையென்று சிலர் குறைபட்டுக் கொள் கிறார்கள். இதனைத் தாங்கள் ஏற்றுக் கொள்கின் ஹீர்களா? இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் இவ்விதமான கேள்விகளுக்கு ஆதார பூர்வமாகப் பதில் அளிக்கத் தக்கவர்கள் நமது பல்கலைக் கழக LDL 6SLdff !ff3, G36MT (ACADA MIC CRITICS). 5 LDg5 நாட்டிலே திறனாய்வு மரபு (ஆறுமுக நாவலரை ஒரு கண்டனக்காரர் என்றே கருதினாலும்) சுவாமி விபுலானந்தர் தொடக்கம் இன்றைய செ. யோகராசா வரை நமது பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் திறனாய்வு சார்ந்த பல ஆய்வுகளை செய்கின்றனர்.ஆகவே ஈழத்தில் ஒரு வளமான விமர்சன மரபு உண்டு.
அதே வேளை இந்த விமர்சனம், திறனாய்வு என்ற பதங்களின் தாற்பரியங்களை நம்மில் பலர் அறிந்திருக்க வில்லையென்றே நினைக்கிறேன். இடம், பொருள் தெரியாமல் இந்தப் பதங்களைப் பயன்படுத்துவதும் சுயமாகப் புதிய கருத்துக்களை முன்வைக்காமல் அடிக்குறிப்புக்கள் கொண்டு நீண்ட கட்டுரைகளை எழுதுவதும் விமர்சனமாகக்
124

மரபுவழித்திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
கருதப்படுகிறது. இதற்காகவே திறனாய்வு சாயல் படிந்த எழுத்துக்களை நான் எழுதும் பொழுது திறனாய்வு என்ற சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கும் விதத்தில் எனது எழுத்தைப் பத்தி எழுத்துக் களென்றே (COLUMN) அழைக்கின்றேன். இப்பொழுதெல்லாம் மரபு நெறி விமர்சனத்தை எள்ளி நகையாடி பின் நவீனத்துவவாதம், கட்ட விழ்ப்பு (DECONSTRUCTION) பின்னமைப்பியல் வாதம் என்ற மேல் நாட்டுப் பார்வைகளை இறக்கு மதி செய்து, அவையே ஆழமான விமர்சனமென்று புதிய பரம்பரையினர் சிலர் தூக்கிப் பிடிப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் நினைப்பது ஒரு புறமிருக்கட்டும். இந்த குறிப்பிட்ட பார்வைகள் ஐரோப்பாவிலே கைவிடப் பட்டு அமெரிக்காவில் சில பல்கலைக் கழகங்களில் மட்டுமே பிரயோகிக்கப்பட்டு வருகின்றன என்பது எனது சிற்றறிவிற்கு எட்டிய தகவல். தமிழ் நாட்டில் அ.மார்க்ஸ், தமிழவன் போன்றோர் இத்தகைய 6JT diss6061T (READING OF THE TEXTS) GeFij கின்றனர்.நமது இளவட்டங்கள் தமிழ் மொழி மூலமே இவற்றை அறிந்து விளங்கியும் விளங்கா மலும் புரிந்து கொண்டு தமது விமர்சனங்களில் பதிய வைக்க முற்படுகின்றனர். தற்போது நீங்கள் ஒமானில் ஆங்கில இலக்கி யத்தை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறீர்கள். அங்கு பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் (TEXT BOOKS) அண்மைக்கால உலக இலக்கிய படைப்புகளும் இடம்பெறுகின்றனவா? இது ஒரு நல்ல கேள்வி. இலண்டன் ஜி.சி.ஈ. உயர்தர, சாதாரணதர வகுப்புகளுக்கு ஆங்கில இலக்கியத்தை நான் கற்றுத்தருகிறேன்.இவற்றில் IN TO THE WIND 616TD glossog55 Qg5me Lib
125

Page 71
கே.எஸ்.சிவகுமாரன்
ஒன்று.இதிலே ஆபிரிக்க, அவுஸ்திரேலிய, ஆங்கி லேய எழுத்தாளர்கள் பலரின் படைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கதைகளை பல மட்டங்களில் நின்று விமர்சித்து தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு. இங்கு நான் பல்நெறி சார்ந்த (MULT DISCIPLNARY) அணுகு முறையைப் பயன்படுத்து கின்றேன். இவ்விதமாக கதைகளைப் பயிலும் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, லெபனான்,கிரீஸ், ஆபிரிக்க நாடுகளின் மாணவர்கள் விரிவான விளக்கங்களை கோரி நிற்பார்கள். எனவே நான் அந்தந்தக் கதைகளின் கலாசார மற்றும் பண்புகளை முதலில் அறிந்து கொண்டே எனது வியாக் கியானங்களை எடுத்துக் கூறுவேன். அவர்களுக்கு ஏற்படும் தெளிவின் எதிரொலியாக அவர்கள் முகம் மலரும் பொழுது எனது சருகு நிலை உள்ளம் புதுத்துளிர் விடும்.
நெய்தல் நம்பி
ஞாயிறு தினக்குரல்
8-07-1999
126


Page 72


Page 73
நூல் ஆசிரியர் பற்றி.
கே. எஸ். சிவகுமார ஒமான் நாட்டின் தலைநக பூரீலங்கன் ஸ்கூலில் ஆங்கி வருகிறார். பேராதனைப் ப பட்டதாரியான இவர் ஆங் பண்டைய/செம்மை பண்ட யுடையவர். கற்பிக்கும் கல் (ஆங்கிலம், சிங்களம், தய பணிபுரியும் கே. எஸ். சிவகு நீண்டகால அனுபவம் பெற் (Literary Columnist) 6T66TI இலக்கியத் திறனாய்வுத் து துள்ளார்.
இவருடைய துணைவிய அவர்களும் கல்வித் துறை செய்துள்ளார் என்பதும் இங்
புலே
 

ன் 1997 செப்டம்பர் முதல் ரான மஸ்கெட்டில் உள்ள ல ஆசிரியராகப் பணிபுரிந்து ல்கலைக்கழக வெளிவாரிப் பகிலம், தமிழ், மேனாட்டு ாடு ஆகியவற்றில் புலமை லூரியில் மொழிகள் துறை ழ்ெ, உருது) தலைவராகப் மாரன் ஊடகத் துறைகளில் p ஒருவர். பத்தி எழுத்தாளன்
முறையில் ஈழத்துத் தமிழ் றைக்கு நிறையப் பங்களித்
ார் புஷ்பா சிவகுமாரன் பில் முக்கிய பங்களிப்பைச் கு குறிப்பிடத்தக்கது. லியூர் ஆ.இரத்தினவேலோன் (தினக்குரல்)