கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 05

Page 1
டுகளின்
blTODITGOOI
(36OITL9.
dj dit
முன
கே. எஸ். சிவகு மார
 
 
 


Page 2


Page 3

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
கே. எஸ். சிவகுமாரன்
பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் வரிசையில் இது ஐந்தாவது நூல். அறிவியல் வளர்ச்சித் தகவல்கள் அடங்கியது.
வெளியீடு கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு வ - கி மாகாணம்
திருகோணமலை,

Page 4
Title: MOONTRU NOOTANDUHALIN
MUNNOADCHI CHINTHANAIHAL
(Pioneer Thought in Three Centuries - Scientific Development in 17th, 18th, and 19th Centuries)
Sub Title: Paththi Eluthukalum Pal Thirattuhalum
(Column and Miscellaneous Writing. 5) ”مجھے بر/ برکھzحے
eure: SCIENTIFIC PHILOSOPHY
Author: K. S. SIVAKUMARAN.
Right: Author's
Author's Address: 21, Murugan Place
OFF Havelock Road, Colombo - 6 Sri Lanka Tele Phone: 0094- 1 - 587617
Date of Publication: March 1999
Publisher: Ministry of Education, Cultural
Affairs & Sports N. E. P. Printer: Printing Department, Trincomalee.
Price: ހ/2ޗ

17ஆம், 18ஆம், 19ஆம்
நூற்றாண்டுகளின் மேலைச் சிந்தனைகளும்
அறிவியல் வளர்ச்சியும்

Page 5

பொருளடக்கம்
நூலாசிரியர் விளக்கமும் நன்றி நவிலலும்
17ஆம் நூற்றாண்டில் மேனாட்டு விஞ்ஞானம்;
சில முக்கிய செய்திகள்
17ஆம் நூற்றாண்டு கண்ட ஐரோப்பிய விஞ்ஞானப்போக்கு
18ஆம் நூற்றாண்டு: பெருந் தத்துவ ஞானிகளின் யுகம்
18ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம்: மதமும் அறிவியலும் தர்க்கித்த காலம்
19ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம்: முக்கியமான சிந்தனைப் போக்குகள்
19ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பம்

Page 6

.
2,
3.
4.
5.
10.
1.
ஆசிரியர் எழுதிய நூல்கள்
Tamil Writing in Sri Lanka (1994)
சிவகுமாரன் கதைகள் (1982)
கலை இலக்கியத் திறனாய்வு (1989)
கைலாசபதியும் நானும் (1990)
Aspects of Culture in Sri Lanka Le Roy Rebinson in Conversation With K. S. Siva Kumaaran (992)
திறனாய்வுப் பார்வைகள் (1996)
ஈழத்து இலக்கியம் : நூல்களின் அறிமுகம் (1996)
இருமை (1998)
ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் : திறனாய்வு (1998)
திறனாய்வு : அண்மைக்கால
ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் (1998
மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (1999)

Page 7

Western Scientific
Thought in 7th, 8th, and 9th centuries
This book is Dedicated
to my Second Son
Anantharam and
gharee.

Page 8

மூன்று நூற்றாண்டுகன்ே முன்னோடிச் சிந்தனைகள்.
நூலாசிரியரின் விளக்கமும் நன்றி நவிலனும்
அன்பார்ந்தவாசக நேயர்களுக்கு வணக்கம்.
பொது வாசகர்களுக்காகத் தகவல் தரும் பத்திகளை பல பத்திரிகைகளில் நான் எழுதிவந்துள்ளேன். 1950 களின் பிற்பகு
தியில் தொடங்கிய இந்த எழுத்து முயற்சிகள் இன்னும் ஓய்ந்த
rudvanov

Page 9
I ymaro நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
இச்சிறு ിക இடம் பெறும் பத்திகள், 1981 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 20 வரை தினகரன் வாரமஞ்சரியில் வெ: யானவை. இவற்றைப் பிரசுரித் தமைக்காக இப்பத்திரிகையின் அக்கால பிரதம ஆசிரியர், ஆர் சிவகுருநாதனுக்கு நன்றி செலுத்த நான் கடமைப் பட்டுள்ளேன்.
21 ஆம் நூற்றாண்டிற்குள் நாம் பிரவேசிக்க இன்னுஞ் சில மாதங்களே இருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சி பற்றி, உடனிகழ்கால வாசகர்களாகிய நாம் ஒரளவு அறிவோம். அதேவேளையில், முன்னைய நூற்றாண்டு வளர்ச்சி பற்றி மேலோட்ட மாகவேனும் நாம் அறிந்து கொள்ளல் அவசியம் என நான் கரு தினேன். தமிழ்மொழி மாத்திரமே தெரிந்த இன்றைய இளம் வாசகர்களுக்கு இந்நூலில் இடம் பெறும் சில தகவல்கள் பயனளிக்கும் என நினைக்கிறேன். எனவே தான் இதனை உங்களிடம் சமர்ப் பிக்கிறேன்.
இந்நூல், எனது இரண்டாவது மகன் அனந்தராமுக்கும், அவருடைய துணைவி ஷெறீக்கும் சமர்ப்பணம்.
இந்த நூலை வெளியிட முன்வந்த திருகோணமலை கல்வி. பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு, குறிப் பாக அதன் செயலாளர், சுந்தரம் நிவகலாலா அவர்களுக்கும், உதவி இயக்குநர் எதிர்மன்னசிங்கம் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகும்.
எனது எழுத்துக்களுக்கும், நூல்களுக்கும் என்றுமே ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.
கே. எஸ். சிவகுமாரன் 21, 2 முருகன் இடம் கொழும்பு -6 9الاالله . ده . سنتا فه - - -

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் f
17 ம் நூற்றாண்டில் மேனாட்டு விஞ்ஞானம்: முக்கிய செய்திகள்
ஈழத்து விமர்சனத்துறை பல்நெறி சார்ந்ததாக (மல்டி -டிசிப் பிளினெறி) அமைகிறது என்பது பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு பண்பாகும். அலை, இலக்கியத் திறனாய்வாளர்கள் பல துறைகளிலும் பரிச்சயமும் ஞானமும் பெற்றிருத்தல் அவசியம் என்பது இதனால் பெறப்படுகிறது. அத்துறைகளில் ஒன்றே அறிவியல் எனப்படும் விஞ்ஞானமாகும். −
இக்கட்டுரைத் தொடரிலே, வாசகர் நலங்கருதி விஞ்ஞானந் தொடர்பான சில விஷயங்களைத் தொகுத்துத் தர முற்பட்டுள்ளேன்" யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்னும் நோக் குடன், ஆங்கில நூலொன்றிலிருந்து பெறப்பட்ட விவரங்களே இங்கு தரப்படுகின்றன, "த ஸ்டோரி ஒப் ஸயன்ஸ்" (விஞ்ஞானத்தின் கதை) என்ற இந்த நூலை எழுதியவர் ஜே. ஜி. புதூட்டன் என்பவர்.

Page 10
ጰe மூன்று நூற்றாண்டுகefன் முன்னோடிச் சிந்தனைகள்,
17 ஆம், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மேனாட்டு விஞ்ஞான வளர்ச்சி பற்றிய முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம். முதலிலே 17 ஆம் நூற்றாண்டில் நவீன விஞ்ஞான வளர்ச்சி எப்படி அமைந்தது என்று பார்ப்போம்
சிறிது விரிவாக ஒவ்வோர் அம்சம்பற்றியும் பார்க்கும் முன், இந்த அம்சங்களை நிரற்படுத்திக்கொள்வது வசதியாகவும் : மன திற் பதியத்தக்கதாயும் அமைவதைக் கண்டேன் அம்முறையையே இங்கும் தருகிறேன்.
விஞ்ஞானக் கழகங்கள்
பொருளாதார மாற்றங்கள் காரணமாகவே நவீன விஞ்ஞானம் வளர்ச்சியுற்றது என்பர் சில வரலாற்றாசிரியர்கள் .
இத்தாலியில் செல்வம் கொழித்த காலகட்டத்தில், அங்கு விஞ்ஞானமே வளர்ச்சியுறத் தொடங்கியது என்பர் சிலர்.
செலவீனங்களைக் குறைக்கக்கூடிய புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்பட்டன. இவை பற்றி அறிந்துகொள்ள இங்கிலாந்திலும், பிரான்சிலுமுள்ள வணிகர்கள் முற்பட்டனர். இந்த விவரங்களை விஞ்ஞானக்கழகங்கள் கொடுத்துதவின.
கலீலியோ செய்த ஆராய்ச்சியின் விளைவாகவே மத்திய கால "பெண்டியூல' மணிக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
சகலவிதமான எந்திரங்களின் பரிச்சயம் காரணமாக, இவ்வுல கமே யந்திரமயமானது தான் என்ற கருத்தை மக்கன் ஏற்கத் தொடங்கினர்.
17 ஆம் நூற்றாண்டிலே , வர்த்தக விருத்தியும் கைத்தொழில் வளர்ச்சியும். விஞ்ஞான முன்னேற்றமும் ஒனறோடொன்று நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தன.
ஐரோப்பாவிலே முன்னர்காணப்பட்ட விலைவாசி அதிகரிப்பைக் குறைக்க , 17 ஆம் நூற்றாண்டு மத்தியிலே ஆரம்பித்த சர்வதேச வர்த்தக முறையும், போட்டா கோட்டியும் உதவின.
17 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகள், விஞ்ஞானத்தை நடை முறையிற் பிரயோகிப்பது பற்றியே அதிக அக்கறைகாட்டினர்.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் 3
விஞ்ஞானிகள் 17 ஆம் நூற்றாண்டில் எடுத்த முடிவுகளுக்குரிய உறுதியான அடிப்படைகளை உருவாக்க, சரியான் அளவை முறை அத்தியாவசியமானது என்றுணர்ந்தனர்.
கருத்துக்களின் உண்மை
தமது கருத்துக்கள் உண்மையின் அடிப்படையில் அமைந்தனவா என்பதை உறுதிப்படுத்த பரிசோதனை முறை உதவியது என விஞ்ஞா னிகள் கண்டனர், அதுவே விஞ்ஞான நோக்கின் முக்கிய பண்பாகும்.
பொருளாதாரப் போட்டா போட்டி காரணமா பெரும்பா லான உடலுழைப்பாளர், தமது கருவிகளில் பரிசோதனை செய்து பார்த்து அவற்றைச் செம்மைப்படுத்தினர்.
யந்திரமயமான கணிதவியல் சார்ந்ததே இவ்வுலகம் என்ற கருத்தைப் பரப்பியவர் டெஸ்கார்ட்டிஸ்.
இங்கிலாந்தில் கைத்தொழில் துரிதமாக வளர்ச்சிபெற்ற காலை, பேக்கன் வாழ்ந்தார்.
அன்னப் பட்சிகள் பொதுவாக வெண்ணிறமுடையன வாயினும் ஆஸ்திரேலியாவில், கறுப்புநிற அன்னங்களுமுண்டாம், எனக் காண்ப் . لقــا تـالـه
பேக்கன் முக்கிய கண்டு பிடிப்புகள் எதனையும் செய்யவில்லை. விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக முதலாளித்துவ சமுதாயம் உருவாகத் தொடங்கியது.
பெரும்பாலான விஞ்ஞானிகளுக்குத் தமது கண்டுபிடிப்புகள் பொருளாதார நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டன என்ற எண்ணம் இருந்ததில்லை. எனவே பொருளாதார அடிப்படையில், அறிவியலை நிறுவும் மார்க்சிய விளக்கம் அடிப்படையில் குறை பாடுடையது என்பர்.
குறிப்பிட்ட சில தரவுகள் அல்லது உதாரணங்களைக் கொண்டு பொது விதிகளை உருவாக்கும் முறையை, பொது முடிவின் வகைத்
தேர்வு என்பர்.
பல உதாரணங்கள் சேகரிக்கப்பட வேண்டுமென்பதனால், இந்

Page 11
மூன்று நாற்றாண்டுகளின் முன்ன்ோடிச் சிந்தனைகள்
தத் தொகுப்பு ஆய்வு. அவதானிப்பின் அடிப்படையில் அமைந்தது. பரிசோதனை முறையின் அடிப்படையில் அவருடைய சிந்தனை
அமைந்ததனால், 17 ஆம் நூற்றாண்டுச் சிந்தனைப் போக்கில்,
பிரான்சிஸ் பேக்கனின் கருத்துக்கள் பெருவரவேற்பைப்பெற்றன.
இயற்கையறிவு விருத்தி
டெஸ்கார்ட்டிஸ் கணிதத்தின் அடிப்படையில் தமது தந்துவத்தை அறிமுகப் த்ெதினார்.
"நான் நினைக்கிறேன்; எனவே நான் இருக்கிறேன்" என்ற அடி 1ழக்கை மையமாகக் கொண்டு டெஸ்கார்ட்டிஸ் ஈ மது சிந் திக்கும் முறையை ஆரம்பித்தார்.
டெஸ்கார்ட்டிஸ் ஒரு பெரிய விஞ்ஞானியாகப் பெயர்பெறா விட்டாலும் அவரே நவீன தரிசன நோக்குடையவர்களின் முன் னோடி என்பர்.
பரிசோதனைகள் மூலம் இயற்கை அறிவை விருத்தி செய்வதற் காக வேத்தியல் கழகம் அமைக்கப்பட்டது. مى
திட்டவட்டமான தருக்கவியல் விதிகளைப் பின்பற்றுவதனால், தெளிவு நிச்சயமான உண்மைகள் ஆகியவற்றைக் கணிதவியல் உள்ளடக்குகின்றது.
டெஸ்கார்ட்டிசின் முறை தெரிந்த முடிவுகளிலிருந்து புது முடிவு களை வருவிக்கும் முறை) விதி தருமுறையாதலால், அடிப்படை விஞ்ஞானக் கோட்பாடுகளை நிறுவப் பரிசோதனைகள் முக்கிய வை என்பதை டெஸ்கார்ட்டிஸ் முழுமையாக உணரவில்லை. ங்கினங்கள் சிந்திக்கக் கூடியவை என்று தம்பாததனால், அவறeற இயந்திரங்களாகவே டெஸ்கார்ட்டிஸ் கருதினார்.
விஞ்ஞான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஐரோப்பா எங் கணும் அறிவியற் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
வேத்தியல் கழகம் அமைத்த செயற் குழுக்களில் வணிகர் நாட்டங்கொள்ளக் காரணமாக இருந்தது எதுவெனில் இலாப மீட்டக்கூடிய பொருள் உற்பத்திக்கு இச் செயற்குழுக்கள் உதவு மென்று நம்பியதனாலாகும்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ் பேக்கன், நெனே, டெஸ்கார்ட்டிஸ் ஆகியோர் பற்றிக் குறிப்பாகவும் அந் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சி பற்றிப்பொதுவாகவும் அடுத்துப் பார்ப்போம்.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் 5。
பதினேழாம் நூற்றாண்டு கண்ட ஐரோப்பிய விஞ்ஞானப் போக்கு
முதலில் 17 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய விஞ்ஞானப் போக்
கின் முக்கிய பண்புகளை நிரல்படுத்திப் பார்த்தோம், இனி இப்
பண்புகளைச் சிறிது விரிவாகவும், இத்துறையில் முன்னோடிகளாக விளங்கிய இருவர் பற்றிக் குறிப்பாகவும் ஆராய்வோம்.
ஐரோப்பா ஈன்றெடுத்த பெரும் விஞ்ஞானிகளில் தொலமி, கொப்பர்னிக்கஸ், அரிஸ்டாட்டில், ஆர்க்கிமீடிஸ், கலீலியோ, கேலன், வெசேலியஸ், ஹார்வி போன்றோர் முன்னோடிகள் என்பர். இத்த கைய முன்னோரின் அறிவினால், ஏனையோர் பயனடைந்தனர்.
நவீன விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார மாற்றங்களுடன் தொடர்பு கொண்டது, மாற்றங்களே நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு முக்கியகாரணமென்பர் பலர். வர்த்தக விருத்தி, முதாளித்துவத்தின் ஆரம்பக் கூறுகள் ஆகியன இடைக் காலத்திலே காணப்பட்ட போதும், 16ம், 17ம் நூற்றாண்டுகளிலேயே வர்த்தக அதிகரிப்பு, கைத்தொழில் வளர்ச்சி ஆகியன தீவிரமாக ஏற்பட்டன.
இத்தாலியில் வளர்ச்சி
செல்வந்த நாடாக விளங்கிய இத்தாலியிலே விஞ்ஞானம் வளரத் தொடங்கியது. பின்னர் ஒல்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் விஞ்ஞான அறிவு பரவத் தொடங்கியது. தொழில் நுட்பவியலும் விஞ்ஞானமும் ஒன்றையொன்று பாதிக்கத்தொடங் கின. கடற் பயணத் தேவை காரணமாக வானியல் துறையில் அக் கறை காட்டப்பட்டது. கொப்பர்னிக்கஸ், டைச்சோப்ராஹ், கெப்லர் கலீலியோ, நியூட்டன் ஆகியோர் இதில் சிறந்து விளங்கினர். மூக்குக் கண்ணாடி உற்பத்தியின் வளர்ச்சியாக, தொலைக் கண்ணாடி (டெலஸ்கோப்), நுண்ணோக்குக் கண்ணாடி (மைக்கிராஸ்கோப்) ஆகியன கண்டு பிடிக்கப்பட்டன. ஒல்லாந்து இத் துறையில் முன் னண்ணியில் நின்றது,
ஜெர்மனி, ஹங்கேரி, ஒல்லாந்து ஆகிய நாடுகளில் சுரங்கத் தொழில் ஆரம்பிக்கப் பட்டதனால், "வககி பூம்" சம்பந்தமான பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. காற்றுக்குழாயை ஒட்டோ பொன்நெரிக் கண்டு பிடித்தார். வாயுக்கள் பற்றி பொய்ல் ஆராய்ச்சி செய்தார். குழாயை வைத்து, ஹார்வி, இரத்த ஓட்டம் பற்றி

Page 12
a மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்.
ஆராய்ச்சி செய்தார். 1712இல், நியூகொமன் நீராவி இயந்திரத் தைக் கண்டு பிடித்தார். அளவைக் கருவிகளான தேர்மோ மீட்டர் எனப்படும் உஷ்ணமானி, (கலீலியோ) பராமீட்டர் (டொரிசெலி), ஸ்லைட் ரூல் (குண்டர்) மைக்ரோமீட்டர் (கஸ்கொயின்), பெண்டி யூலம் மணிக்கூடு (ஹியூஜென்), ஆகியனவும் சுண்டு பிடிக்கப்பட்டன,
பொருளாதார ரீதியில் போட்டி ஏற்பட்டதனால், பல தொழி லாளர்கள் தாம் புரியும் தொழில்களில் பரிசோதனைகள் நடத்தித் தாம் உருவாக்கிய பொருள்களைச் செம்மைப்படுத்தினர். 16ஆம் நூற்றாண்டின் இறுதியில், பெருந் தொகையான சுரங்கத் தொழி லாளிகள், கண்ணாடித் தொழிலில் ஈடுபட்டார்கள், கடலோடிகள், கருவி உற்பத்தியாளர் போன்றோர் காணப்பட்டனர். இவர்கள் கல்வி கற்றவரல்லர். முதலாளித்துவ சமுதாயம் உருவாகத் தொடங் கியதும், தொழிலாளரும் மேல் குடிமக்களும் இணைந்து, தொழில் நுட்ப வியலில் அதிக அக்கறை காட்டத் தொடங்கினர்.
அதேசமயத்தில் கலீலியோ, நியூட்டன் போன்றவர்கள் பல்கலைக் கழகங்களில் பணி:த்தனர். நியூட்டன் விஞ்ஞானத்துக்கும் சமயத் துக்கு மிடையில் உள்ள தொடர்பில் நாட்டங் காட்டினர். அவ் வாறே பொய்லும் அக்கறை செலுத்தினார்.
இரு பெரும் சிந்தனையாளர்
17ஆம் நூற்றாண்டில் அறிவு வளர்ச்சிக்கு உதவியவர்களில் இருவர் முக்கியமானவர்கள், பிரான்விஸ் பேக்கன் (1561 - 1626 ), ரெனே டெஸ் கார்ட்டிஸ் ( 1596 - 1650) ஆகிய இருவரும் பெரிய சிந்தனையாளர்கள். பரிசோதனை முறை, இயற்கையைக் கட்டுப் படுத்தல் ஆகியவற்றில் பேக்கன் அக்கறை காட்டினார். கணித, இயந்திரவியல் சார்ந்த வடிவத்தில் பிரபஞ்சத்தைக் கண்டார் டெஸ் கார்ட்டிஸ்.
கைத்தொழில் ரீதியாக இங்கிலாந்து துரிதமாக முன்னேறிய காலத்திலேயே பிரான்சிஸ் பேக்கன் வாழ்ந்தார், இயற்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், விஞ்ஞானம் மனித வாழ்க்கையை மாற் றியமைக்கக் கூடுமென பேக்கன் சிறு வயலிருந்தே நம்பிக்கை கொண்டிருந்தார். இதற்கான வழியை அவர் பிரயோக விஞ்ஞா னத்திற் கண்டார், பரிசோதனைக்கு முக்கியத்துவம் அளித்த பேக் கன், அவதானித்தல், தரவுகளைச் சேகரித்துப் பரிசோதித்தல் ஆகி யன மூலம் சில பொதுவான மதிப்பீடுகளைச் செய்ய முடியும்

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் 7
என்றார். அரிஸ்டாட்டில் சிந்தனை வழியாகச் சில முடிவுகளுக்கு வந்தார், பேக்கன். பரிசோதனை வழியாகச் சில முடிவுகளுக்கு வந்தார் இருந்தபோதிலும் விஞ்ஞான அணுகுமுறையை அவர் அறிந்தவர் எனக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் அவருடைய வைத்தியராக ஹார்வியே இருந்து வந்தார். உவில்லியம் கில்பர்ட், கலீலியோ ஆகியோரின் அரிய கண்டு பிடிப்புகளின் முக்கியத்து வத்தையும் அவர் உணர்ந்தவர்.
பேக்கனின் அணுகுமுறை வழமையான நவீன விஞ்ஞான முறை யினின்று வேறுபட்டது என்பர். எவ்விதமான தரவுகளைத் தேடு தல், எவ்விதமான பரிசோதனைகளை மேற்கொள்ளல் போன்ற ஐதீகங்களுக்கு இடங் கொடாமல், அவர் எல்லாவற்றையுமே தமது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். தமது ஆய்வுக்குச் சாதகமான உதாரணங்களைத் தேடாமல், சாதகமற்ற வற்றைத் தேர்ந்து, பின் நிராகரித்தார். பேக்கன் முக்கிய கண்டு படிப்புகள் எதனையும் செய் யாவிட்டாலும். அவருடைய செல்வாக்குக் காரணமாக வேத்தியல் சங்கம் உருவாயிற்று. 18ஆம் நூற்றாண்டில் பிரஞ்சிய கலைக் களஞ்சியத்தினர் பேக்கனின் முயற்சிகளினால் கவரப்பட்டனர்.
டெஸ் கார்ட்டிஸ் என்பவர் பேக்கன் பின்பற்றிய முறையினின்றும் வேறுபட்ட அணுகு முறையைத் தழுவினார். அதாவது கணிதத்தை அடிப்படையாகக் கொண்டதும், ஒன்றிலி ருது ஒன்று பெறப்படும் என்ற முறையைத் தழுவியதுமாக டெஸ்கார்ட்டிஸ் முறை அமைந்தது இந்த முறையினால் தெளிவும், நிச்சயத்தன்மையும் ஏதுவாயிற் று. டெஸ்கார்ட்டிஸ் ஒரு முக்கிய கணிதவல்லாருமாவார். அவரே, கேத் திர கணிதம், அட்சர கணிதம் ஆகியவற்றின் சேர்க்கையான ஒன்றிணைந்த கேத்திர கணிதமுறையைத் கண்டுபிடித்த வருமாவார்.
டெஸ்கார்ட்டிஸ் கணிதமும் சரி, தத்துவமும் சரிகேத்திர கணித வாக்கிலேயே விளக்கினார். வெளிப்படையான உண்மையொன்றிலி ருந்தே அவருடைய விவாதம் ஆரம்பிக்கும். உதாரணமாக - "நான் நினைப்பதால், நான் இருக்கிறேன்" இந்த அடிப்படையில் இறை வன் இருப்பதாகவும் பொருள் இருப்பதாகவும் அவர் கூறினார். பிறப்பிலேயே எம்மில் சில எண்ணங்கள் பொதிந்திருப்பதாகவும், ஆனால் நாம் படித்தமை காரணமாக எம்மிடையே குழப்பம் ஏற் வட்டுப் பிழைகளை விட்டு விட்டோம் என்றும் டெஸ்கார்ட்டிஸ் நம்பினார், எனவே தெளிவான, நியாய பூர்வமான கருத்துக்கள்ை

Page 13
மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
8
மாத்திரமே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலி யுறுததினார். தமது கொள்கைக்கு ஏற்ப அவர் எழுத்தும் எளிமை நிரம்பியதாக இருந்தது. உள்ளத்தில் ஒளியுண்டாக வாக்கிலும் ஒளி பிறந்தது. இதனால் அவருடைய ஆக்கங்கள் மக்களிடையே பிரபல்யம் பெற்றதும். ஜனர்ஞ்சகமாய் மிளிர்ந்ததும் வியப்பில்லை.
பேக்கனைப் போன்றே, டெஸ்கார்ட்டிஸ்ம் கலீலியோவின் ஆக்கங் களைப் புரிந்து கொண்டதாகவோ ஆவற்றின் முக்கியத்தை உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அறிவியலின் அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவ, பரிசோதனை எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் அறிந்ததில்லை.
டெஸ்கார்ட்டிஸ் ஒரு முக்கிய விஞ்ஞானி என்று கூறுவதைவிட, ஒரு முக்கிய தத்துவஞானி எனலாம். அவரே நவீன தத்துவஞானி கள் வரிசையில் முதலாமவர் என்பர் தரிசனவியலாளர். அறிவு வேறு. சடப் பொருள் வேறு என்று அவர் கூறினார். இயந்திரம் போல் தன்னியக்கமானதே சடப் பொருள் என்று டெஸ்கார்ட்டிஸ் கூறி னார். விலங்கினத் : த அவர் சடப் பொருள் பகுதிக்குள் அடக்கி னார். சமயமும் அறிவியலும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண் டிருந்தமையாள். இரண்டுக்குமிடையில் முரண் எதுவுமில்லை என்றும் டெஸ் கார்ட்டிஸ் குறிப்பிட்டார்.
அறிவியற் கழகங்கள்
பல்கலைக் கழகங்களுக்கு வெளியேயும் விஞ்ஞான்த்துறையில் ஆர்வம் காணப்பட்டதன் காரணமாக, அறிவியற் கழகங்கள் உரு வாயின, ரோமா புரியிலே 1601ஆம் ஆண்டிலே இத்தகைய கழகம் ஒன்று உருவாகியதாம். அதில் அங்கம் வகித்தவர்களில் ஒருவர் கலீலியோ என்று அறியப்படுகிறது. .
புளோரன்ஸ் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட சங்கம் விஞ்ஞா னக் கருவிகளைச் செம்மைப்படுத்துவதில் அக்கறை காட்டியது. இச் சங்கம் இது தொடர்பாக வெளியிட்ட நூல் 18ஆம் நூற்றாண்டில் பிரபல்யம் பெற்றதாம். இவ்வாறே பிரான்ஸ் , இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கழகங்கள் அமைக்கப்பட்டன.
அடுத்ததாக 18ஆம் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சியை திரல் படுத்திப் பின் சிறிது விரிவாகக்பார்போம்.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் 9'.
18ஆம் நூற்றாண்டு: பெருந் தத்துவஞானிகளின் யுகம்
அறிவியல் வளர்ச்சிப் போக்கை நாம் அவதானிக்கையில், அறி வியலுடன் தொடர்பு கொண்ட பெருந்தத்துவ ஞானிகள் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பதை அறிந்துகொள்கிறோம்.
அவர்களில் ஒருவரே ஜோன்லொக் "மனிதனைப் புரிந்து கொள் ளல்" என்பது பற்றிய அவருடைய கட்டுரை (1690) நீண்டதொரு தத்துவார்த்த விவாதத்தையே ஆரம்பித்து வைத்தது. இவர் நண் பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் நுண்விசாரணைகளை நடத்தினார். பிறக்கும்பொழுதே மனதென்பது ஒன்றுமெழுதா வெற்றுத்தாள் போன்றது என லொக் நம்பினார். "மனிதப் பண்பு

Page 14
վի மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்த கண்க:
களைப் புரிந்து கொள்ளல் சம்பந்தகான வியாசம்' என்ற லொக்கின் கட்டுரை 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலே ஈணிைசமான அளவு விவாதிக்கப்பட்டது. ஓரளவு செல்வாக்கையும் அவர் பெற்றார். நிறம், சுவை, வாசம் போன்றவை பற்றிய கணிப்பு அகவயப்பட்ட தாகத்தான் இருக்குமென்றார். அதாவது எல்லா வித ஃான சூழ்நிலை களிலும் ஒரே தன்மையுடைத்தாகச் சுவை இருப்பதில்லை என்று லொக் நம்பினார்.
மற்றொரு தத்துவவாதியான மேற்திரானியார் பேர்க்லி, சமய நம்பிக்கைகள் பலவீனமடைவது கண்டு, அதனைப் பலப்படுத்தச் சில சிந்தனைகளை வெளியிட்டார். மதத்திற்கு விஞ்ஞானத்திற்கும் இடையில் எப்பொழுதுமே முரண் இருந்துவரும் எனறு பேர்க்லி நம்பினார்.
இதற்கிடையில். "அனுபவவாதிகள்' என்று தம்மை அழைக் துக் கொண்ட தத்துவஞானிகள் சிலர், அனுபவத்தின் பெறுபேDே சிந்தனைகள் என்ற சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
நாம் சிந்திக்க முடிவதால், எமதுசிந்தனைகள் மாத்திரமே நிச் சயமாகக் கூறத்தக்கவை, அதாவது சிந்தனைகள் இருப்பது பற்றி மாத்திரந்தான் நிச்சயமாகக் கூறமுடிபு இவ்வாறு கருத்து வெளி பிட்டவர் ஹியூம் என்றவர் மற்றொரு தோ டா டை கட்டிக்காட் டினார். அதாவது ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரண மிருக்கும் என்ற பியூம் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால்தான் சாரம் அல்லது பொருள் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள் எமுடியும் என்றார். இரண்டு சடபவங்கள் இடம பெற்றால், ஒன்று மற்றொன்றின் விளைவாகத்தான் இருக்க வேண்டுமென்று இல்லை எனவும் வியூம் நம்பினார். அதே சமயம் காரணத்துக்கும் காரியத் துக்கும் உள்ள தொடர்பை நி ைஎநிறுத்துவதற்குச் சி' வெளிப்படை யான உதார விணங்கள் போதுமானதாயில்லை என்றாரவர். உதா ரனமாக சூரியோதயம் ஏற்படும் என்று முதல் நாளிரவே கூறமுடியு மாயினும், அது போன்ற ஹேஷ்யங்கள் காரவினத்துக்கும் காரியத் துக்கும் உள்ள தொடர் பை நிரூபிக்கமாட்டா எனவும் ஹியூர் சுட்டிக் காட்டினார். எமது சொந்தக் கருத்துக்கள் இருப்பதை நாம் அறி வோம். அவை இருக்கின்றன என்ற உணர்வே, உண்மையில் நிச் சயமாக நாம் கூற கூடியாது என அவர் முடிவி செய்ததனால், அவருடைய கருத்துக்களில் விசேஷ அக்கறையை விஞ்ஞானிகள் காட்டத் தொடங்கினர்.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
மற்றொரு முக்கிய தத்துவஞானியின் பெயர் காண்ட். இவர் எழுதிய நூலொன்றின் பெயர். "தூய மெய்யறிவு பற்றிய திற னாய்வுக் கட்டுரை". அறிவு எப்படி முக்கியமானதோ அப்படியே அனுபவமும் முக்கியமானதுதான் என்று காண்ட் நம்பினார்.
அறிவாராய்ச்சித் திறனும், அறிவியலும் தங்கு தடையின்றி வளர்ச்சிபெற அனுமதிக்கப்படுமாயின் புதியதொரு பார்வை ஏற்படும் என்று கற்றறிந்த சில பிரெஞ்சுத் தத்துவவாதிகள் வலியுறுத்தினர். அவர்கள் விஞ்ஞானத்தின் பல கிளைகளிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினர்
"பார்வை' என்னும்பொழுது இன்னொரு விஷயம் நினைவிற்கு வருகின்றது. எமது புலன்கள் வாயிலாக நாம் பெறும் அனுபவமே புலனுணர்வு எனப்படுகிறது.
பிரெஞ்சுத் தத்துவ ஞானிகளின் முக்கிய நோக்கம், மூட நம்பிக் சி: களைக் கடிகளவதாகவே இருந்தது. பிரெஞ்சு ஆய்வறி வாளர்கள் மதத்தில் ஆர்வங் காட்டினர். விஞ்ஞான நோக்குக்கு எதிரியாக மூடநம்பிக்கைகள் இருந்தமையால் அதனை அழிக்க பிரெஞ்சு தத்து வவாதிகள் முற்பட்டனர்.
இயல்பு சார்ந்த, உன்னதமான பண்புடைய காட்டு மிராண்டி யும் நம்மிடையே இருக்கலாம் என்று ரூஸோ கூறி அக்கருத்தைப் பிரபல்யப்படுத்தினார்.
வோல்டேர் என்ற மற்றொரு பிரெஞ்சுத் தத்துவவாதி, ஸ்தாபன ரீதியாக இயங்கிய மதத்தையும், சடங்குகளையும் தாக்கினஈர்.
மதத்தைப் பகிரங்கமாகக் கண்டிப்பதை அதிகாரிகள் அனுமதிக் காததனால், கிறித்துவத்தைக் களஞ்சியவாதிகள்" எனப்பட்டோர் ம:ற முகtாகவே தாக்க முடிந்தது. இவர்கள் வெளியிட்டகலைக் களஞ்சியம் தடை செய்யப்பட்டுப் பகிரங்கமாகவே எரிக்கப்பட்டது.
இதற்கிடையில், உணர்ச்சி முனைப்புடைய இயக்கம் (ரொமாண் டிக் மூவ்மன்ட்) ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியது. அறிவிய
லில் பாத்திரம் அக்கறை காட்டுவதை எதிர்க்கும் இயக்கமாக இந்த உணர்ச்சிப் பண்பை அழுத்திக் கூறும் இயக்கம் பரவத் தொடங்கியது.

Page 15
I மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
பதினெட்டாம் நூற்றாண்டு விஞ்ஞானம்: மதமும் அறிவியலும் தர்க்கித்த காலம்
பதினெட்டாம் நூற்றாண்டு பெருந்தத்துவ ஞானிகளின் யுகம் என்று அறிந்து கொண்டோம். இனி இவர்களுடைய சிந்தனைகள் எவ்வாறு அமைந்தன என்று பார்ப்போம்.
லொக், பேர்க்ளி, ஹியூம், காண்ட் போன்ற அறிஞர்கள் விஞ்ஞா னத்தையும் மெய்ஞானத்தையும் இனைத்துப் பார்க்கத் தொடங் கினர். இந்த முயற்சியின்போது வாதப் பிரதிவாதங்கள் எழுந்தமை ஒன்றும் வியப்பில்லை.
ஜோன் லொக் (1632-1704) பொய்ல், நியூட்டன் ஆகியோரின் நண்பராவர். வேத்தியல் கழகத்தில் ஓர் அங்கத்தவர். மருத்துவத் துறையில் சில பரீட்சார்த்தங்களை நடத்தியவர். முன்னர் குறிப் பிட்டதுபோல், 'மனிதனைப் புரிந்து கொள்ளல் பற்றிய கட்டுரை" (1890 )யின் ஆசிரியர்.
அறிவின் ஊற்று என்ன?
எந்த ஒர் அடிப்படைப் பிரச்சினைக்கும் உண்மையான தீர்வு காண வேண்டுமாயின் மனித.ஆற்றலை ஆராய்வது அவசியம்.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் 3.
மனித மூளை எதையெல்லாம் சிந்திக்கக் கூடியது என்பதையறிய வேண்டும். இவ்வாறான முடிவுகளுக்கு லொக்கும் அவருடைய நண் பர்களும் வந்தனர். அதன் பெறுபேறாகவே நுண்ணிதான விசா ரனைகளை லொக் மேற்கொண்டார். தனது சொந்த மனதையே லொக் ஆராயத் தொடங்கினார். ஆராய்ந்து அறிவின் ஊற்றே அனுபவத்தான் என்ற முடிவுக்கு வந்தார். அனுபவவாதம் எனப்படும் தத்துவப் போக்கின் பிதாமகர் லொக்கே தான்.
17ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் போக்குப் பற்றிக் கூறும் பொழுது டெஸ்கார்ட்டிஸ், பகுத்தறிவே அறிவின் மூலாதாரம் என நம்பினார் என்ற கருத்துப் போலவே கேத்திர கணிதத்திற் போன்று, பிறப்பிலேயே இருந்துவரும் கருத்துகளினின்று கிரகித்த அறிவே எமது சிந்தனைகளும் நம்பிக்கைகளுமாகும் எனவும் நம்பினார். பிறப்பிலேயே கருத்துக்கள் பொதிந்துள்ளன என்ற அபிப்பிராயத்தை லொக் ஏற்றுக் கொள்ளவில்லை. அனுபவத்தின் விளைவே கருத்துக் கள் என லொக் நம்பினார்.
மனிதன் பிறக்கும் பொழுது அவன் மனம் வெள்ளை மனமாகத் தான் இருக்கிறது. ஐம்புலன்கள் மூலம் அவன் அறிவைப் பின்னர் பெறுகிறான். இவ்வாறு பெறப்பட்ட அறிவு நினைவு கூரப்பட்டு ஓர் ஒழுங்குமுறையில் அமைக்கப்படுகிறது. எண்ண்ாங்கள் அல்லது சிந்தனைகளை இருவகையினதாகப் பகுக்கலாம், அவையாவன: புல லுனர்வுக் கருத்துக்கள், சிந்திப்பதன் மூலம் உருவாகும் கருத்துக்கள். ஐம்புலனுணர்வு மூலம் பெறப்படும் எளிய எண்ணங்களை மனது சிந் திப்பதன் மூலம் சிக்கலான 24 வடிவங்களாக மாற்றுகிறது. உதா ரணமாக, கடினம், மெருகு. உள தாவண்ணக், சதுரப்பாங்கு ஆகியன மேசையென்ற படிமத்தை உருவாக்குகின்றன என்றார் லொக்,
அணுக் கொள்கை
பெளதிக விஞ்ஞானத்திற் பயன்படுத்தப்படும் "அணுக் கொள் கையை" , உளவியலிலும் லொக் பயன்படுத்தினார். புறம்பாக உள்ள வெளியுணர்வுகளினால் கொணரப்பட்ட "அணு" க்களே உளப்பாடு என்றும், அவை மூளைக்குச் செல்லும் பொழுது சிந்திப்பது கார ணமாகச் சிக்கல் தன்மை பெறுகிறது என்றும் லொக் விளக்க முற் , LITAT

Page 16
ாேன்று நார் நான் கோபீன் முன்னோடிச் சிந்தனை:
புறப் பொருள்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட லொக் பெள திகத்திற் கூறப்படுவது போன்று, பிரதான தன்மைகள் இரண்டாம் நிலைத் தன்மைகள் என்று பொருள்களைப்பிரித்தார். அளவு, வடிவம், அசைவு, எண் ஆகியன பிரதான தன்மைகள். இவை வெளிப்படை, ஆனால் நிறம், உருசி, மனம் ஆகியவற்றின் தன்மை கிளை உணரும் பாங்கு ஆளுக்கு ஆள்வேறுபடும், அகவயப்பட்டது இது என்றார் லொக். வெவ்வேறு குழவில் வெவ்வேறு உளப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய எண்ணங்களே இரண்டாம் நிலைத் தன்மைகள் என்று அவர் விளக்கினார்,
இவ்விதமாக விஞ்ஞானப் பார்வை கொண்ட லொக்கின் கருத் துக்களைப் பலரும் ஏற்றுக் கொண்ட போதும் போற்றிரானிையார் பேர்க்ளி (1885-1758) இக் கருத்துக்கனினால் வெகுண் டெழுந்தார். விஞ்ஞானம் கண்டு வரும் வெற்றிகள் Wாரணமாக மெய்ஞானம் என அவர்கருதிய மதநம்பிக்கைகள் பலவீனமடைந்து வருவதை பேர்க்ளி உணர்ந்தார். சமய, தார் மிக அனுபவங்கின் மூலமே மெய் நிலை பற்றிய ته றிவு உதய பாகிறது என்றார வர் எனவே புல இறு Eார்வோ, விஞ்ஞானமுறையோ உண்மையான அறிவைத் தரமாட்டா என்பது பேர்க்ளியின் தத்துவப் பிரகடனம்,
லொக் உதாரணங்காட்டிய பிரதமத் தன்மைகள் கூட அகவ பப்பட்ட வெளிப்பாடுதான் என்றார்,
உதாரணமாக ஒரு கோணத்தில் நின்று ஒரு மேசையை நோக்கி னால், அது வட்டமாகவும். இன்னொரு கோணத்தில் நின்று நோக்கி னால் முட்டை வடிவமாகவும் தென்படும் என்று பேர்க்ளி சுட்டிக்கிாட் | CIl i Ji - நோக்குவார் நின்று நோக்கும் துTரக் தைப் பொறுத்து மாறுபடும் என்றார். எனவே அவருடைய கருத் துப்படி மனம் அல்லது மூளை அல்லது சிந்தனையின்றி ஒன்றுமே இருக்க மாட்டாது.
 ாைர்வுக் காட்விகள்
லொக், பேர்க்ளி ஆகியோரின் சிந்தனைப் போக்கு இவ்வாறு அமைய டேவிட் திமியூம் (1711-7), நமது சிந்தனைகள் மாத்திரமே நிச்சயமாகக் கூறத்தக்கவை என்ற முடிவுக்கு வந்தார், உணர்வுக் காட்சிகள் ஒன்று சேருவதன் மூலம், பொருள், சாரம், ஆன்மீகம்

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தன்ைகள் 重点
போன்றவை பற்றிய நமது அறிவு உருவாகிறது என்பது இறியூமின் கருத்து. உதாரணமாக, கடினம், மெருகு, ஊதாவண்ணம், வட்ட வடிவம் போன்ற புற உணர்வுக் காட்சிகளை ஒன்று சேர்த்தபின், மேசையொன்று இருப்பதாக நாம் உணர்கிறோம் என்று விளக்கி னார் ஹியூம் இருந்தபோதிலும் இவ்வுணர்வுக் காட்சிகளுக்கிடை யில் தொடர்புகள் இருந்தேயாக வேண்டும் என்றில்லை.
எந்தவொரு காசியத்துக்கும் ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையைப் பொறுத்தே, பொருள்கள் இருக் கின்றன என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என ஹியூம் குறிப்பிட்டார். நடப்புகள் தொடர் நடப்புகளைச் சங்கிலித் தொட ராக உருவாக்குகின்றன என்ற முறையில் காரணங்களை இனங்கான முடியாது என்றும் எறியூம் வலியுறுத்தினார். இது விஞ்ஞானநோக் குக்கு முரணாக இருந்தது.
இருந்தபோதிலும், லொக், ஹியூம் ஆகியோரின் தத்துவங்களி வின்று பரிமான வளர்ச்சியை இம்மானுவல் காண்ட் (1727-1801) கண்டார். அனுபவம் மூலம் பெறப்படும் அறிவுடன், மூளையின் இயக்கம் மூலம் பெறப்படும் அறிவும் ஒன்று சேர்ந்து பரிமாணம் பெறுவதாக காண்ட் குறிப்பிட்டார். "தூய மெய்யறிவு பற்றிய திற னாய்வு" (7:1) என்ற இவருடைய நூலில், அறிவைக் கிரகிக்கும் பொழுது மனம் செலுத்தும் பங்களிப்பு பற்றி ஆராயப்படுகிறது அனுபவவாதம், பகுத்தறிவுவாதம் ஆகியன காண்ட்டில் அமைதி கண்டன, அறிவு இருவகைப்படும் என்றாரவர். அனுபவம் மூலம் தரப்படும் அறிவு, சிந்தனை மூலம் பெறப்படும் அறிவு எனபனவே அவ்வறிவுத் திரட்டு என்றார்காண்ட்,
தொடர்பற்ற புலக்காட்சிகளுக்குத் தொடர்புநிலையை உரு வாக்க, காரணங்களைக் கண்டு பிடிக்க நமது மனது முற்படுகிறது என்று கூறிய காண்ட் ஹியூமின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்தார். காலம், இடத்தைப் பொறுத்து நமது" எண்ணங்கள் எவ்வாறு இருக் கின்றனவோ அவ்வாறே அனுபவங்களும் எம்மனதில் ஓர் ஒழுங்கு முறையில் திரட்சியாகின்றன என்று காண்ட் விளக்கினார்.
காண்ட் ஒரு பெளதிசு விஞ்ஞானியாகையால், விஞ்ஞானமும் கணிதமும் எவ்வாறு சாத்தியமாகின்றன என்பதை ஒரு தத்துவஞானி என்ற முறையிலும் விளக்க முற்பட்டார். காலத்தையும் கால இடை மீட்டையும் நாம் கணிக்கும் முறையின் விளைவே கணிதப்பாங்கான

Page 17
15 భూగ్రాT_Tణాశి-శివr చూడాTTL* F * =ణాచాTF:
இயக்கம் என்றும், இதே முறைதான் , கணிதத்தை விஞ்ஞானத்தில் பிரயோகிக்க உதவுகிறது என்றும் காண்ட் குறிப்பிட்டார்.
இயற்கை விதிகள்
18ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாகரிகத்தின் தொட்டிலாக பிரான்ஸ் இருந்தது என்பர். அறிவு விசாலமாகிய காலம் அது பகுத்தறிவும், விஞ்ஞானமும் தங்குதடையின்றி வளர்ச்சி பெறும" யின் புதியதொரு பார்வையே உருப் பெற்றுவிடும் என்று பிரான்சிய கற்றறிந்தோர் நம்பினர். சிந்தனைச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம், பகுத்தறிவு, விஞ்ஞானம், முன்னேற்றம் ஆகியன வளர்ச்சி பெறவேண்டு மென்றனர். ஓர் ஒழுங்கு முறையில் சந்தேகங்களைக் கிளப்பி ஆராய்தல் டெஸ்கார்ட்டிஸ் ) , சமூக முன்னேற்றத்துக்கு விஞ் ஞானத்தைப் பயன்படுத்துதல் (பேக்கன் , களஞ்சியம்போன்று அறி வைப் பெருக்குதல், பெளதிக விஞ்ஞான உண்மைகளைக் கண்டு பிடிக்கும் முறை (நியூட்டன்), மூளை இயங்கும் பாங்கு (லொக் போன்ற பண்புகளை பிரெஞ்சு ஆய்வறிவாளர் தமதாக்கிக் கொண்
- JJr.
பெளதிகவியவில் ஈர்ப்பு விதி இருப்பது போன்று, இயற்கை பற்றிய விதிகளை உளவியல், அரசியல், பொருளாதாரம், வரலாறு சமயம்போன்ற துறைகளிலும் இருக்கக்கண்டனர் இவ்வறிஞர்கள்"
நடேரோ என்ற பிரெஞ்சு அறிஞர் கூற்றுப்படி "இயற்கைக்கு முரணான, இயற்கைக்கு வெளியாகவுள்ள எதுவுமே இயற்கையில் இருக்க முபTது. மொன்டஸ்பூேவின் கருத்துப்படி அடிமைத்தனம் இயற்கைக்கு எதிரானது. ரூஸோவின் பிரகடனத்தின் படி, காட்டு மிராண்டி கூட உன் க்காதமான, இயற்பிகப்பண்புடைய வனாக இருக் கக்கூடும். எனவே மனிதன் இயற்கையோடியைந்த வாழ்வை தடத்த அறிவியல் உதவும் என்றும், சமுதாயத்தை அர்த்தமுடையதாக ஆக்கி வகை செய்யும் டிான்றும் அவர்கள் நம்பினர். சமுதாயம் இயற்கையான முறையில் வளர்ச்சி பெறுமாயின், மனிதனுடன் கூடப்பிறந்த நற்குணங்கள் ஆனந்தமான செம்மையான வாழ்க் கைக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர்கள் கூறினர், இது கிறித் துர் சமய மரபுக்கருத்துக் முரண்பட்டதாகும். பாளியாக மனிதன் பிறக்கிறான். அவனுடைய சூழல் அவ்வளவு முக்கியமானதல்ல என்ற கருத்துக்கு முரண்பட்டகருத்தாகும். பிரெஞ்சு ஆய்வறிவாளர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் ,#ל
மதமும் கடவுளும்
டீடெரோவைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு இருபத்தொரு தொகுதிகளாகக் கலைக்களஞ்சியம் ஒன்று 1751க்கும் 1765க்கும் இடை யில் வெளியிடப்பட்டது. இந்த பிரெஞ்சியப் பங்களிப்பில் வோல்டேர். ரூஸோ, மொன்டஸ் கியூ டி அலம்பேயர் புபோங், குர்கோ ஆகிய பிரெஞ் சிய ஆய்வறிவாளர் சம்பந்தப்பட்டனர். எல்லாருமே ஒத்த கருத்துண்ட யவர்கள் அல்லராயிலும் முற்போக்கான சிந்தனையாளர்களாகி அவர் கள் விளங்கினர். கிறித்துவ மதத்திற்குச் சாதகமான கருத்துக்களை அவர்கள் தெரிவிக்காததால், இவர்கள் தயாரித்த கலைக்களஞ்சியம் தடைசெய்யப்பட்டு, பகிரங்கமாகவே தீயிலிடப்பட்டது. ஆயினும் கடைசி பதினான்கு தொகுதிகளும் இரகசியமாக வெளியிடப்பட் டதிTம.
பிரெஞ்சு ஆய்வறிவாளர்களில் பலர் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொண்ட போதிலும், மதம் இயற்கையோடியைந்ததாக இருக்க வேண்டும் என்றனர். இவர்களில் வேறு சிலர் கடவுள் இல்லை என்று கருதிய நாஸ் திகராவர். வோல்டேர் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொண்டவர். ஆயினும் மதம் நிறுவனரீதியாகப் பின்பற்றப்படுவதை எதிர்த்தவர். மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
இதற்கிடையில் 18ஆம் நூற்றாண்டுக் கடைசிக் கூற்றில் களஞ் சியவாதிகளின் தத்துவக்கருத்துக்களுக்கு மறுதலையாக ஜெர்மனியில் ஒரு சிந்தனைப் போக்கு வளர்ந்தது. "இயற்கைத் தத்துவம்" என்ற இப்போக்கில் முக்கியஸ்தர்களாக வினங்கியவர்களில் பிரபல ஜெர்மானிய மகாகவி (1749-1832) தத்துவஞானி ஷெலிங், உயிரி யல்வாதி ஒக்கென் ஆகியோரும் அடங்குவர்.
பகுத்தறிவுவாதத்துக்கு எதிரிடையாக எழுந்த உணர்ச்சியழுத்த இயக்கத்தினர், யுக்தி பூர்வமாகப் பார்ப்பதைவிட, உணர்ச்சி கலந்த பார்வைக்கே அழுத்தம் கொடுத்தனர். ஜெர்மனியில் ஆரம்பித்த ஒரு பரவலான, விரிவான "ரொமான்டிக்" (கற்பனாலய மனோரதிய, கட்டற்ற புனைவாற்றல் கொண்ட, இயல்பல்லாப் பண்பு வாய்ந்த, பலவண்ன வளமுனைப்பு வாய்ந்த) இயக்கத்தின் ஓர் அம்சமாகவே இந்தத் தத்துவப் போக்கும் அமைத்தது.
இனி 18ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிப் போக்கின் முக்கிய பண்புகளை நிரற்படுத்திப் பார்ப்போம்.

Page 18
五3 மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் $à,5ಐCT#ಣಿ:
பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானம்: முக்கியமான சிந்தனைப் போக்குகள்
ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் பார்த்ததுபோல, 19ஆம் நூற் றாண்டு விஞ்ஞானப் போக்கின் முக்கிய அம்சங்களை முதலில் நிரல்படுத்துவோம்.
நாஸ்திகக் கோட்பாடு
19ஆம் நூற்றாண்டு ஆய்வறிவுப் போக்கின் முக்கிய பண்புசளில் ஒன்றென்னவெனில், அறிவியலுக்கு அளிக்கப்பட்ட கெளரவமும் சிரத்தையுமாகும்.
நேர்காட்சி வாத சமயமுறை என்ற போக்கை கொம்டே என் பவர் எடுத்தியம்பினர்.
பிரபஞ்சத்தில் யாவுமே அடிப்படையில் தார் மிகம் அல்லது ஆன்மிகம் சம்பந்தப்பட்டதே என்று ஹெஜல் நம்பினார்.
மூளையில் ஏற்படும் இரசாயனச் செயற்பாடுகள் காரணமாகவே சிந்தனை ஏற்படுகிறது என்று ஜோன் டின் டோல் விளக்கினார்.
உலகில் உள்ள சக்தியின் முழு அளவும் மாறாதது என்ற கருத் தை முன் வைத்தது சக்தியின் சேமிப்பு அவசியம் என்ற சித்தாந்தம்.
நேர்காட்சி சமயவாதிகள் என்பவர்கள் ஒருவிதத்தில் நாஸ்திகக் கோட்பாடுகளையே பின்பற்றினார்கள்.
19ஆம் நூற்றாண்டின் முக்கிய விஞ்ஞானக் கோட்பாடுகள் கடவுள் இருக்கிறார் என்ற கொள்கையையே உலுக்கிவிட்டன கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று சந்தேகிப்பவர்களை அறியொனாமைக்கொள்கையினர் என்பர்- 19ஆம் நூற்றாண்டில் ஒரிரு கத்தோலிக்கர்களே விஞ்ஞானிகளாக விளங்கினர்.
சுடர்விட்டுப் பிரகாசித்துச் சுழன்றோடும் வாயுவாகவே சூரிய மண்டலமுறை உருவாகியதாக லப்லேஸ்- கருதினார்.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் 9
========= 9 S S SLSLSLSLALSLSASSSLSLSSSSSASLSALALLSAS SMLS SATTTAAA AAAAS TAM S LLAAAAAAS
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை சமூகவியலுக்கும் பிரயோ கிக்கலாம் என்று ஸ்பென்சர் முயன்ற போதும் அம்முயற்சி பெரு வெறறியளிக்கவில்லை, பரிணாம வள ர் ச் சி என்ற பிரயோகம உயிரியலுக்கே பொருத்தமானது. அத்துறைக்கு வெளியே இப்பிர யோகம் பயன்படுத்தப்பட்டால் அது "மாற்றத்தையே குறிக்கும். 4.ார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு குறிப்பிட்ட துறைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தக் கூடியதாயிருத்தது.
முன்னேற்றப் போக்கு 19 ஆம் நூற்றாண்டிலே அறிவியற்றுறை மிகவும் கணிசமான முறையில் முன்னேறியது. விஞ்ஞானத்தின் செல்வாக்கு அதிகரித்தது. அமெரிக்காவிலே வளர்ச்சிகாண ரயில் சேவை முக்கிய காரணமாக அைெரிந்தது,
தொழில் நுட்பவியல் முன்னேற்றமும், சனத்தொகை அதிகரிப் பும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாய் இருந்தன. தொழில் நுட்பவியல் முன்னேற்ற முயற்சிகள் முதலில் பிரிட்டனிலேயே ஆரம் பித்தன.
ஜெர்மனியரே இரசாயனக் கைத்தொழிலில் முன்னணியில் நின்ற ள *. அதே போன்று ஒளியியல் சார்ந்த கைத்தொழிலிலும் அவர் களே கடந்த நூற்றாண்டில் முன்னணியில் நின்றனர்,
முன்னேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என 19ஆம் நூற்றாண்டு மக்கள் நம்பினர். மனித இனம் படிப்படியாக மிகச் சிறந்த முறையில் வாழ்ந்து வருகிறது என ஸ்பென்ஸர் கூறினார்,
1830க்கும் 1885க்கும் இடையில் மிகவும் முக்கியமான விஞ்ஞான அபிவிருத்தி பிரிட்டனிலேயே ஏற்பட்டது. பிரிட்டனே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் நின்றது.
வெடிபொருள் தேவை ஏற்பட்டதன் காரணமாகவே (முதலா வது உகை யுத்தத்திற்காக) பல நாடுகள் இரசாயனக் கைத்தொ ழில்களை ஆரம்பித்தன. இரு உலக மகாயுத்தங்கள் காரணமாக, மனிதன் பூரணத்துவமாக மாறி வருகிறான் என்ற கோட்பாடு பலமிழந்தது.
உலகின் கேந்திரம்
கல்வி வசதிகள் காணப்பட்டமையால் 19 ஆம் நூற்றாண்டின் முதற் காற்கூற்றில், பாரிஸ் உலகின் விஞ்ஞானக் கேந்திரமாக விளங்கியது. w

Page 19
ኃ0 மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
19ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பம்
அறிவியல் போக்கையறிந்தாற்றான், உலக இலக்கிய வளர்ச்சி குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டு ஏன் அமைந்தது என குறிப்பிட முடியும். தவிரவும் 20ஆம் நூற்றாண்டுத் திறனாய்வுப் போக்கின் முக்கியபண்பாகப் பல்நெறி சார்ந்த அணுகுமுறை அமைவதனால், பல்லறிவுகளில் ஒரு துறையாகிய அறிவியல் பற்றி நாம் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது.

இprறு நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் et
இ சரி, 19ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியைச் சிறிது dil2 a) i i i „ʻn, 'i uir iluʼJ(5uir ub
சக்தி, பருப்பொருள்
சக்தி, பருப் பொருள் ஆகியன சேமிக்கப்படுவதன் அவசியம் பற்றியும் பரிணாம வளர்ச்சிச் சிந்தனை உருப்பெற்றது பற்றியும் நாம் சிறிது அறிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் பல்துறைக ளாகப் பல்கிப் பெருகியது. அறிவியலுக்குச் சிரத்தை ஏற்படத் தொடங்கியது.
கொம்டே (1798-1857) என்ற பிரெஞ்சு தத்துவஞானி நேர் காட்சிவாத சமய முறையை அறிமுகப்படுத்தினார். இதன் பிரகாரம் இறைமையியல், ஆய்வுத் துறை, நுண்பொருட் கோட்பாட்டியல் ஆகியவற்றிற்குப் பதிலாக விஞ்ஞானத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
சகல விதமான சிந்தனைகளுக்கும் விஞ்ஞான முறை அனுசரிக் கப்பட்டது. வரலாறு விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட்டது.
முதல் தடவையாக மெய்ஞானிகளின் கருத்துக்களும், விஞ்ஞா னிகளின் கருத்துகளும் மோதுண்டன.
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலையாய தத்துவவாதி யாக ஹெஜல் (1770-1831) விளங்கினார். ஆயினும் இவர் விஞ் ஞானத்துறையின் வளர்ச்சி பற்றி யாதுமே அறிந்திலர் எனக் கூறப் படுகிறது. இவ்வுலகிலே, சடப்பொருள் உட்படயாவுமே அடிப்படை யில் தார்மிகம் அல்லது ஆன்மிகம் சம்பந்தப்பட்டவைதான் என்று ஹெடில் கூறினார். வரலாறு, தார்மிகம் போன்றவற்றிற்கு இந்தக் கோட்பாடு பொருந்துமாயினும் இயற்கை விஞ்ஞானங்களுக்கு இது பொருந்தவில்லை.
பருப்பொருளை முற்றாக அழிக்க முடியாது என்று காணப் பட்டது. சக்தி பே5ாணப்பட்டுச் சேமிக்கப்பட வேண்டும் என்று கரு தப்பட்டது. இந்நடவடிக்கைகள் ஒரு கருத்துக்கு இட்டுச் சென்றன. இப்பிரபஞ்சத்தின் அடிப்படையான நிதர்சனப் பொருள், சடப் பொருளே என்று உணரப்பட்டது. விஞ்ஞான பூர்வமான விதிகளுக்கு

Page 20
மூன்று நூற்றாண்டுகEரின் முன்னோடிச் சிக்கன்கள்:
இனங்கவே பருப்பொருள் இயங்குகிறது. உயிரற்ற பொருள்கள் போலவே, உயிருள் எள பொருள்களும் விஞ்ஞான விதிகளுக்கு இனங் கியதாக அமைந்தன என்று இரசாயன நிபுணர்கள் சுட்டிக் காட் டினர். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, வாழ்க்கை கூட இயந் திர ரீதியாகவே அமையத் தொடங்கியது.
மதமும் விஞ்ஞானமும்
அணுக்களும், அணுத்திரண்மங்களும் இணைத்து அழகிய, பல் வடிவுடைய ஒளியூடுருவும் பொருள்களாக உருப்பெறுவது போல இவ்வணுக்களும் அணுத் திரண்மங்களும் உயிருள்ள செடி கொடிகள் விலங்கினங்கள் மற்றும் சிடப் பொருள்களாகப் பல்வேறு வடிவம் பெறுகின்றன. இக்கருத்தை முன்வைத்தார் ஜோன் டிஸ்டோல் என்ற பெளதிசவியல் நிபுணர். மூளையின் இரசாயனச் செயற்பாட் டினாலேயே மூனை சிந்திக்கிறது. மூளை பாதிக்கப்பட்டாலும், மனம் இயல்பாக இயங்க மாட்டாது. எனவே பருப் பொருளின் விளைபொருளே மனம், திருச்சபையே விஞ்ஞான முன்னேற்றத்துக் குத் தன்டைக் கல்லாக இருந்தது என டின்டோல் குறிப்பிட்டிருந்தார்.
மதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையிலான முரண்பாடும் போராட்டமும் 19ம் நூற்றாண்டு இறுதி வரை காணப்பட்டன. அருட்டுனர்வினாலும், அருள் வெளிப்பாட்டுச் செய்தியினாலும் அறிவு பெறப்படுகிறது என்று டபிள்யூ ஜி. வோர்ட் கருதினார். இயற்கை முறைகளுக்கு அடங்கிாத பொருள்களிலும் அவர் நாட் டங் காட்டினார்.
அதே சமயம் தோமஸ் ஹக்ஸ்வி போன்றோர், அனுபவம் மூலம் மாத்திரமே அறிவு பெறப்படுகிறது என்றும் விஞ்ஞான முறை இதற்குத் தேவை என்றும் கூறினார். இயற்கை முறைகளுக்கடங்காத வற்றை இவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார், சமயம் பற்றிய தமது கோட்பாட்டை விளக்க "அக்னொஸ்டிக்" என்ற பதத்தை (கடவுள் இருக்கிறார் என்பதைச் சந்தேகித்தல்) அவர் உபயோகித்தார்.
இறைவன் உலகைப் படைத்தான் என்று நியூட்டனும் அவரு டைய சமகாலத்தவரும் நம்பினர். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் மாறுபட்ட கருத்து நிலவியது.

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
சூரிய மண்டலமானது ஒளிப்பிழம்பான சுழலும் வாயுவிலிருந்து தோன்றியதாக லப்லேஸ் கருதினார். இக்கிரகங்கள் பின்னர் குளிர்ச்சி பெறத்தொடங்கின என்றார் அவர். பல கோடி ஆண்டுகளாகப் பூமியின் மேற்பரப்பு படிப்படியான முறையில் மாறுபடத் தொடங் கியது. மலைகள் சில எழுந்தன; சில புதைந்தன. கண்டங்கள் சமுத்திரத்தில் அமுங்கின; சில மீண்டும் மேலெழுந்தன. இவ்வாறு ஹட்டன் வியல் ஆகியோர் விவரித்தனர்.
பூர்விக உயிர் வடிவங்கள் புல்லாய், புழுவாய், செடியாய். மரமாய், விலங்கினமாய் மாறி இறுதிபில் மனித வடிவம் பெறுவ தாக டார்வின் எடுத்துக் கூறினார்.
பரிணாம வளர்ச்சி
பெரும் தத்துவ ஞானியாகக் கருதப்படாவிட்டாலும், செல் வாக்கு நிறைந்தவராக விளங்கிய ஹெர்பட் ஸ்பென்சர் (1820-1903) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைச் சமூகவியலுக்குப் பிரயோகித் துப்பார்த்தார். உளவியலுக்கும், நெறியியலுக்கும் பயன்படுத்தினார். ஆனால் இம்முயற்சி பெரு வெற்றியை அளிக்கவில்லை, உயிர் வாழும் பொருள்களுக்குப் பொருந்தக்கூடிய "இயற்கைத் தேர்வு" முறையை வானசாஸ்திரம் அல்லது புவியியன் ஆகியவற்றின் தோற்றத்துக்குப் பயன்படுத்த முடியாது. உயிரினத் தோற்றம் அல்லது பரிணாம வளர்ச்சி என்ற பதம் உயிரியலுக்கு அப்பால் பயன்படுத்தப்படும் பொழுது மாற்றத்தையே குறிக்கும்.
19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான முன்னேற்றம் கானப்பட்டது உண்மை தான். ஆனால் அதிக முன்னேற்றம் தொழில் நுட்பத் துறையிலேயே காணப்பட்டது.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கைத்தொழில் அபிவிருத்தி பிரமாதமான வளர்ச்சியைக் கண்டது. இதனால் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. 18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆரம்பித்த கைத் தொழிற் புரட்சி, துரித கதியில் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கைத்தொழில் முன்னேற்றத்துக்கு விஞ்ஞானம் அதிக பங்களிப்பைச் செய்யாவிட் டாலும், பிற்பகுதியில் புத்தம் புதிய கைத்தொழில்கள் உருவாக விஞ்ஞானமே காரணமாயமைந்தது.

Page 21
94. மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்
ரயில், நீராவிக் கப்பல் ஆகியன போக்குவரத்து முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தன. மூலப் பொருள்களையும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையும் ஏற்றியிறக்க ரயில் பயன்படுத்தப்பட்டது.
மின்சாரஞ் சார்ந்த கைத்தொழில்களும் இரசாயனம் சார்ந்த கைத்தொழில்களும் அதிகரித்தன. ஜெர்மனியில் செயற்கைச் சாயங் கள் கண்டு பிடிக்கப்பட்டன. இரசாயனத் துறையில் முன்னோடிக ளாக ஜெர்மானியர் விளங்கியதனால், சாயப் பொருள்கள், வாச னைப்பொருள்கள், மருந்து வகைகள், வெடிமருந்துப் பொருள்கள் ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆராய்ச்சி செய்ய ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டதனாலும் ஜெர்மனியில் கண்ணாடிப் பொருள்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டன. புகைப்படக் கருவிகள், நுண்ணோக்காடி மற்றும் விஞ்ஞான உபகரணங்கள் யாவும் ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டன.
19ம் நூற்றாண்டின் இறுதியில் கைத்தொழில் மயமான ஐரோப் பாவில் பல்கிப் பெருகிய மக்கள் கூட்டத்தினர் அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியாமற் போய்விட்டது. எனவே வடஅமெரிக்காவில் இருந்து உணவு இறக்குமதி செய்யப் பட்டது.
வாழ்க்கைப் போக்கு தவிர்க்கமுடியாமல் முன்னேற்றத்தைத்தான் காணும் எனப் பொதுமக்கள் அபிப்பிராயப்பட்டனர். கைத்தொழில் தொழில் நுட்பவியல் முன்னேற்றங்கள் இவ்வாறு எண்ணத்தூண்டின. யாவும் பரிணாமவளர்ச்சி கொண்டவைதான் என ஸ்பென்ஸர் கருதினார்.
ஆயினும் லெளகிக முன்னேற்றம் ஏற்பட்டதேயொழிய உன்னத மனித மனம் உருவாகுதல் கஷ்டம் என்பதை இரு உலக மகா யுத்தங் கள் காட்டின
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் விஞ்ஞான முன்னேற்றம் பிரமாதமாக அமைந்தது. லியல், பாரடே, ஜால், டார் வின், மக்ஸ்வெல், ஆகிய முக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் இவ் வாறே 19ம் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சி அமைந்து எனலாம்.

வெளியீட்டாளர் குறிப்பு
எமது கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்டு னால் வடக்கு - கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டுவருவது யாவரும் அறிந்ததே அதன் தொடரில் நாடறிந்த எழுத்தாளரும் விமர்சகருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களால் ஆக்கப்பெற்ற மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் ந்ெதனைகள் எனும் நூலும் இப்பொழுது எம்மால் வெளியிடப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் இறுதி விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் நாம் எமது கடந்த நூற்றாண்டுகளின் கணக்கெடுப்பைச் சிந்தனா பூர்வமாக மேற் கொண்டால்தான் 21ம் நூற்றாண்டை ஆய்வறிவுத்தளத்தில் எதிர்வு, கொள்ள உதவிகரமாயிருக்கும். இந் நூலாக்கத்தின் கட்டுரைகள் 70 களிலேயே தினகரனில் தொடராக வெளிவந்தவை. ஆயினும் இவை நூலாகத் தொகுத்து வெளியிடப்படும் காலகட்டம் முக்கியத் துவ ம்
வாய்ந்தது.
எமது நூல்வெளியீடுகளில் இது காலவரை ஆக்க இலக்கியங்கள் கல்வியியல், அவசியமான பாடநூல்கள் என்பனவும் இடம் பெற்றமை யாவரும் அறிவர். அதிலே அறிவியல் சார்ந்து வெளியாகும் இந்நூல் இவறுமொரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. இதனை வெளியிட அநுமதி தந்த கே. எஸ். சிவகுமாரன் அவர்களுக்கும் இவ் வெளியீட்டுத்துறை மில் ஆக்கமும் ஊக்கமும் காட் டி வரும் எமது செயலாளருக்கும், அம்சுருவாக்கிய பதிப்பகத்திணைக்களத்தினருக்கும் எமது நன்றிகள்.
எஸ். எதிர்மன்னசிங்கம் உதவிப்பணிப்பாளர் கல்வி. பண்பாட்டலுவல்கள்
விளையாட்டுத்துறை அமைச்சு வ. கி. மா.
திருகோணமலை3

Page 22


Page 23


Page 24
நூலாசிரியரின் நூலுக்கு அணிந்துரை கார்த்திகேசு சிவத்தம்பி, கே. எழுதியவற்றில் இருநது பகுதிகள்.
"மேலை நாட்டுக் கை ஏற்படும் முக்கிய ஆங்கிலத்தில்நடைபெறும் பற்றிய எழுத்துக்கள் கன தொழிற்பாடாகும். இ
ஈடுபாடுள்ள, ஆனால் ஆங் ஆர்வலர்கள் பெரிதும் பt
‘ஆங்கிலத்தில் எழுத்தாளர்களுக்கும், ஆற் இவரதுஎழுத்துக்கள் பெரி மாணவர் மட்டத்தில் வகுப்புவரை)சிவகுமாரன் வ இதுவேயாகும். இன்றைய அமைப்பிலே கே. எஸ். முக்கியமான ஒரு இடத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறனாய்வுப் பார்வைகள்(1996) எழுதிய முதுநிலைப் பேராசிரியர் எஸ். சிவகுமாரன் தொடர்பாக
பிரித்தெடுக்கப்பட்ட சில
லை, இலக்கியத் துறைகளில் வளர்ச்சிகளைப் பற்றிய, கலை,இலக்கிய விவாதங்கள் னிக்கப்பட வேண்டிய ஒரு வற்றால் அத்துறைகளில் கிலப் பரிச்சயமற்ற தமிழ் பன்பெற்றனர்.”
ՑԵԼՔԼOT601 பரிச்சயமில்லாத றல்கொண்ட வாசகர்களுக்கும், தும் உதவுகின்றன. குறிப்பாக (ஏ. எல். முதல் பட்டதாரி பாசிக்கப்படுவதற்கான காரணம்
கல்வி முறையின் சிவகுமாரன் போன்றவர்கள் தப் பெறுகின்றனர்.”