கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாளைக்கு இன்னொருத்தன்

Page 1


Page 2


Page 3
PADAêUA : *C)
9adir, “1997
eolado eag. 36-00
te NAALAKU NNORU THAN
Subject A Collection of Short Stories
Author RAJESWAR BALASUBRAMANLAM
No. of, Pagas 200
Paper 11.0 Ка Creamwove
Size 18 cm. X 12. 5 cm.
Types 10 Point
Price \ : RS. 36.00
Binding Duplex Board
Publisher KUMA ARAN PUBLISHERS
79, 1st Street, Kumaran Colony, Vada palani, Chonnai - 600 026
Printers çhitra Printo Graphic, Madras-600 014.

அர்ப்பணம்
இச்சிறுகதைத் தொகுதி நூலுருவில் வெளிவர உதவிய இலண்டன் வல்தம்ஸ்ரோவைச் (Walthamstow) சேர்ந்த குமரன் ஸ்தாபனத் தொழிலதிபரின் மகள் செல்வி துளசி மகேஸ்வரன் அவர்கட்கு.

Page 4
ஆசிரியரின் பிற நூல்கள்
தேம்ஸ் நதிக்கரையில். ஒரு கோடை விடுமுறை பனி பெய்யும் இரவுகள் அம்மா என்றொரு பெண் உலகமெல்லாம் வியாபாரிகள்
தில்லையாற்றங்கரையில்

என்னுரை
இந்தச் சிறுகதைத் தொகுதி என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். கடந்த இருபத்தைந்து வருடங் களுக்கு மேலாக எழுதி வரும் நான் இப்போதுதான் ஒரு சிறு கதைத் தொகுதியை வெளியிட முடிந்தது.
இந்தத் தொகுதியில் எனக்குத் தெரிந்த பல பெண் களை நீங்களும் சந்திக்கப் பண்ணியிருக்கிறேன். எல்லாக் கதைகளும் யாரோ ஒரு பெண்ணின் சோகத்தைத் தழுவி எழுதப்பட்ட கதைகளாகும்.
ஆண்களால் நிர்ணயிக்கப்பட்ட சட்ட திட்டங்கள். சமூக வழக்கப் பாடுகள், சமய ஒழுங்குகள் என்பனவற்றுக்குள் ஒதுக்கப்பட்டு தங்கள் ஆத்மாவை யிழந்து கொண்டிருக்கும் இந்தக் கதைகள் கண்ணிர் வடிக்கின்றன.
பாலியல் வன்முறைக்கும், அரசியல் கொடுமை களுக்கும், குடும்ப அடக்குமுறைக்கும் தங்களை யிழந்து கொண்ட எத்தனையோ பெண்களை இந்தக் கதைகள் பிரதி upa3asasaprub
ஒரு சில கதைகள் இலங்கையைத் தளமாகக் கொண்டும் ங்ல கதைகள் லண்டன் வாழ்க்கை முறைகளை அடித்தள மாகக் கொண்டும் எழுதப்பட்டன.

Page 5
O
"ரன் பெண்களையும் குழந்தைகளையும் பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று ஒரு சிலர் கேட்டிருக் கிறார்கள். பெண்களைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றி யும் பெண் எழுத்தாளர்கள் எழுதாவிட்டால் யார் யதார்த்த மாக எழுதுவார்கள்?
பெண்களிற் பலர் ஆண்களின் பார்வையின் மூலம் உலகத்தைப் பார்க்கப் பழக்கப்பட்டவர்கள். ஆண்களின் சிந்தனையை தங்கள் சிந்தனையாக்கிக் கொண்டவர்கள்.
வாழ்க்கை நிர்ப்பந்தமும், சமுதாய நிலைப்பாடும் பொரு ளாதார வலிமையற்ற பெண்களை எப்படித் துன்பப்படுத்தும் என்பதைச் சில கதைகள் எடுத்துக் கூறுகின்றன. .
திருமண வாழ்க்கையிலும், அரசியல் நிர்ப்பந்தங்களிலும் எப்படி ஒரு பெண்ணின் உடம்பு பாக்கப்படுகின்றது என் பதை எடுத்துக்காட்டுகின்றது ஒரு சில கதைகள்.
இந்தக் கதைகளில் வரும் பெரும்பாலான பெண்கள் எனக்குத் தெரிந்தவர்கள். நீங்களும் இப்படியான பெண் களைச் சந்தித்திருப்பீர்கள் ஆனாலும் பெரும்பாலான பெண்கள் எங்கள் துன்பத்தைப் பட்டுச் சேலையாலும் சில நகைகளாலும் மறைத்துப் போலிப் புன்னகையிற் துடைத்து விடுகிறோம்.
" என்ன செய்வது பெண்களாகப் பிறந்தால் இதெல் லாம் அனுபவிக்கத் தானே வேண்டும்" என்று சிலர் முணு முணுப்பது எனக்குக் கேட்காமலில்லை உண்மையாக நாங்கள் இந்தக் கொடுமைகளையெல்லாம் தாங்கத்தான் வேண்டுமா? எங்கள் இலக்கியங்கள், புராணக் கதைகள் சமய தத்துவங்கள் எல்லாம் பெண்களை இரண்டாம் தரப் பிரசைகளாகவும். ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆண்டவனாற் படைக்கப் பட்டவர்களாகவும் எடுத்துக் காட்டுகின்றன

7
இந்தக் கதைகள், காவியங்கள், புராணங்கள் ust 6ayb ஆண்களால் எழுதப்பட்டவை. சமயக் கருத்துக்கள் பிரா மணிய ஆண்களால் பரப்பப்பட்டவை. சமுதாயக் கட்டுப் பாடுகளால் வசதிபடைத்த மேல்மட்ட ஆண்களால் நிர்மாணிக்கப்பட்டவை.
அதர்மமான இந்தச் சட்டதிட்டங்களை வாழையடி வாழையாக நாங்களும் ஆமாம் சாமி போட்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
ஆண்களும் பெண்களும் | Gෂ வண்டியை இழுத்துச் செல்லும் இரு மாடுகளுக்குச் சமம். அதில் ஒரு மாட்டை ஏன் ஊனமாகப் பார்க்க வேண்டும்?
ஆண்களும் பெண்களும் எதிர்காலச் சமுதாயத்தைப் பட்ைப்பதில் சரி சம பங்கு எடுப்பவர்கள். அதில் ஒருத்தரின் ஸ்தானப மட்டும் ஏன் உயர்ந்திருக்கிறது?
ப்ாரதி சொன்ன நற்கருத்தை எத்தனை நல்ல தமிழர் கள் செயல்முறைப் படுத்துகிறார்கள்?
.
இன்றைய சினிமாவும், ஏனைய விளம்பர ஸ்தாபனங் களும் பெண்களின் உடம்பை ஒரு கவர்ச்சிப் பண்டமாகப் பார்ப்பதை ஏன் பெண்கள் எதிர்க்கக்கூடாது?
இந்தக் கருத்துக்களால் உந்தப்பட்டுத்தான்" எனது சிறு கதைகள் எழுதப்பட்டன. இந்தத் தொகுதிக்குப் பெண் களிடமிருந்தும் முற்போக்கு ஆண்களிடமிருந்தும் ஆக்க பூர்வமான கருத்துக்கள்ை எதிர்பார்க்கிறேன். நன்றி, அச்சிட உதவும் குமரன் பதிப்பகத்தாருக்கு என் நன்றி.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
47, Norman Avenue ONDON N 22, 5 ES, May 1977.

Page 6
பொருளடக்கம்
வளர்மதியும் ஒரு வாசிங்மெசினும் கற்புடைய விபச்சாரி
மஞ்சுளா
அவள் வந்து நிற்கிறாளாம் உஷா ஓடிவிட்டாள் இன்னும் சில அரங்கேற்றங்கள்
இப்படியும் கப்பங்கள்" நாடகங்கள் தொடரும்" * தாலாம் உலகம்"
இயேசுவுக்குப் பொலிஸ் காவல்" நாளைக்கு இன்னொருத்தன் ரவுண்ட் அப்
ஈஸ்வரா உன் தயவெங்கே? இரவில் வந்தவர் அம்மா ஒரு அகதி
என்னவன் என் வீடும் தாய் மண்ணும்
GF ATášá5G36a) ADAT DET

நாளைக்குஇன்னொருத்தன்
1. வளர்மதியும் ஒரு வாசிங்மெசினும்
வளர்மதிக்கு இரண்டரை வயது. "அம்மா, அப்பா', என்ற வார்தைகளை அழகாகச் சொல்கிறாள். தத்தித்தத்தி நடந்து விழுந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. இப்போது தள்ளுவண்டியில் இருக்கமாட்டாளாம். எந்த நேரமும் ஒட்டமும் நடையும். ஒரு இடத்தில் இருக்கவே
DfTLLT 6TTLD.
இரண்டாவது வருட வளர்ச்சியைப் பரிசோதித்த டொக்டர் வளர்மதி மிக துடிகையான பெண் என்றும் அவள் கெட்டிக்காரியாக வருவாளென்றும் சொன்னார். ஆனாலும் வளர்மதியின் எடை இரண்டு வயதுக் குழந்தைகளுக்கு இருக்கவேண்டியதை விடக் குறைவாக இருப்பதாகவும் அவளின் சாப்பாட்டில் கவனமாக இருக்கவேண்டும் என்றும் வளர்மதியின் தாய் மாலதிக்கு டொக்டர் சொன்னார்.
வளர்மதி மிகவும் துடிகையான பெண் தான். ஆனாலும் நிறம் கொஞ்சம் சிவப்பாக இல்லையென்று மாலதிக்கு 456).j606).

Page 7
10 நாளைக்கு இன்னொருத்தன்
'என்னெண்டு பிள்ளை சிவப்பாக இருக்கும், நீ கரிக் குஞ்சு மாதிரி" மாலதியின் கணவன் சிதம்பரம் பாய்ந்து விழுந்தான்.
அவனுக்கு மாலதியைக் கலியாணம் செய்து ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக்கொண்டது அவ்வளவு பிடிக்க வில்லை. மாலதியும் சிதம்பரமும் கொஞ்சம் மிச்சம் பிடித்து விட்டு குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தான் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் மாலதிக்குக் கற்பத்தடைக் குளிசை ஒத்துக் கொள்ளவில்லை. இரண்டு கிழமைதான் கற்பத்தடைக் குளிசை எடுத்தாள். அந்த இரண்டு கிழமைகளும் சத்தியும் தலைச் சுற்றுமாகத் தவித்து விட்டாள். 3. கற்பத்தடைக் குளிசை எடுப்பது சில பெண்களுக்கு ஒத்துவராது என்று டொக்டர் சொன்னார். குழந்தை இப்போது பெற்றுக் கொள்ளும் யோசனை இல்லை என்றால், ஒன்றில் குளிசை எடுக்க வேண்டும் அல்லது கற்பப்பைக்குள் கொயில்’ போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது சிதம்பரம் "உறை" பாவிக்கலாம் என்று டொக்டர் அட்வைஸ் கொடுத்தார்.
மாலதிக்கு குளிசை சரிவரவில்லை. தலைச்சுற்று, ஓயாத ஓங்காளம், இரண்டு கிழமை எடுத்துப் பார்த்துவிட்டு அவள் குளிசை எடுப்பதை நிறுத்தி விட்டாள். í , í
கற்பப் பைக்குள் "கொயில்" போட்டுக்கொள்வதைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போனபோது பல பெண்களும் பல கதை சொன்னார்கள். பிளாஸ்ரிக்கால் ஆன ஒரு சுருண்ட வளையத்தைக் கற்பப்பைக்குள் திணிப்பார்களாம். அது கற்பம் உண்டாவதை தடுக்குமாம், ஆனால் சில பெண்களுக்கு இந்த கொயில் கற்பப்பையின் சுவர்களில் டிரசி இரத்தப் பெருக்கு, தாங்கமுடியாத நோ என்பன ஒற்றையெல்லாம் உண்டாக்குமாம். ifiss G6.6061T infection வந்தால் மிகப்பார தூரமான விளைவை - கிட்டத்தட்ட் உயிருக்கு ஆபத்தையே உண்டாக்கி விடுமாம். மாலதி

yr Gagohjouf
கொயில் மாட்டிக் கொள்ளவில்லை. டொக்டர் 'இதுதான் கொயில்" என்று காட்டிய பிளாஸ்ரிக் வளையமே அவளுக்குப் பயத்தை உண்டாக்கிவிட்டது.
குளிசை போட்டுக்கொள்ள முடியாது. கொயில் மாட்டிக் கொள்ள முடியாது. இனி என்ன செய்வது? "டையாபுரம்" மாட்டிக் கொண்டால் என்ன? டொக்டர் கேட்டார்.
பெண்ணுறுப்பை- கர்ப்பப் பையிலிருந்து காப்பாற்றும் கவசம்! அவளிடம் டொக்டர் ஒரு டையாபுரத்தைக் கொடுத் தார். மாலதி அதைப் போட வேண்டிய இடத்தில் போட முனைந்து பட்ட பாடு பெரும் பாடாகப் போய் விட்டது.
பெண்கள் தான் எல்லாப் பொறுப்பையும் எடுக்க வேண்டுமா? அவள் பெருமூச்சு விட்டாள். கிளினிக்கில் டொக்டர் சொன்ன மாதிரி சிதம்பரணை உறை போட்டுக் கொள்ளச் (CFT sib6U 6u)T DIT?
"கிளினிக்’க்கு வந்திருந்த பெண்கள் Freeயாகக் கொடுக்கும் "condoms" உறைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். இவளுக்கும் ஒரு பைக்கட்டை அந்த நேர்ஸ் குறும்பாகச் சிரித்தபடி கொடுத்தாள் மாலதி ஒன்றும் புரி யாமல் விழித்தாள். கிளினிக் நேர்ஸ் ஒரு கறுத்தப் பெண், ஆபிரிக்கப்பெண்ணாக இருக்கலாம். நறுக்கு நறுக்கு என்று இங்கிலீஸ் பேசினாள்.
மாலதி லண்டனுக்கு வந்தே இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. ஏஜன்சிக் காரனுக்குக் கொடுத்த காசு இன்னும் கட்டி முடியவில்லை. இந்த வருடம் எப்படியும் தனது தம்பியை எடுத்து விடுவது என்று சிதம்பரம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
இந்த லட்ஷணத்தில் பிள்ளை பெற்றுக்கொள்ள கட்டுப் படி ஆகுமா? அவள் கொண்டு வந்த "உறைகளைச்" சிதம்பரம் பேயைப் பார்ப்பதைப் போல் பார்த்தான்.

Page 8
直塑 நாளைக்கு இன்னொருத்தன்
லண்டனுக்கு வந்து என்னவெல்லாம் செய்யவேண்டிக் கிடக்கிறது? லண்டன் மனிதர்களின் பாஷை; இந்த மண்ணாங்கட்டிச் சுவாத்தியம் எல்லாவற்றையும் தாங்குவது வேறு கதை. இப்போது கவசம் போட்டுக் கொண்டு கலவி செய்வதென்றால்..!
சிதம்பரம் மெளனமாகப் போய்விட்டான். அவனுக்கு இவள் புத்தி சொல்லமுடியாது ஏதோ கவனமாக இருப்பம் என்று முணுமுணுத்தான்.
கொடிய குளிருக்கு எங்கே "கவனம் இருக்கிறது. மனைவியின் அணைப்பில் வரும் சூடு எந்தவிதமான centra! hea o ing S? tid #660) - disuDIT?
அழகான குழந்தை” நேர்ஸ் கம்பளியைச் சுற்றிக் கொண்ட குழந்தையை மாலதிக்கருகில் கிடத்தினாள்.
அழகான குழந்தையாம்! அதுவும் பெட்டைக் குழந்தை!
லண்டனில் என்ன அழகு பார்க்கிறாய்? நாங்கள் எல் லாரும் கறுப்பர்தானே’ சிதம்பரம் வெறித்துப் பார்க்கும் மனைவியைப் பார்த்து ஆறுதல் கூறினான்.
மர்லதி கன்னங்கரேல் என்று பிறந்து தன் விரலை வாய்க்குள் திணிக்கும் தன் மகளைப் பார்த்துக் கொண்டாள். மாலதி மூன்றாவது பெண்ணாக ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவள். பெரிய குடும்பம் என்றால் பணத்தில் பெரிய குடும்பமில்லை. குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரிய குடும்பம். அந்தக் காலத்தில் யார் ஆண்மைக்குக் கவசம்’ போட்டார்கள்? கலகலவென எட்டுக் குழந்தைகள். மாலதி மூன்றாவது பெண். மூத்த இரு அக்காக்களுக்கும் கல்யாணம் முடிய இவள் முப்பது வயதைத் தாண்டி விட்டாள்.
உள்ளது எல்லாம் கொடுத்து சிதம்பரனை கல்யாணம் செய்து கொண்டு லண்டன் வந்து மாலதி மகள் வளர் மதியைப் பெற்றுக் கொண்ட போது அவளுக்கு வயது முப்பத்தி ஒன்று.

ராஜேஸ்வரி 13
*பிள்ளை பிறக்க ஆசையென்றால் இப்போதே பெற்றுக்கொள்- இல்லை என்றால் இடுப்பெலும்பு வளைந்து கொடுக்காது" எல்லாந் தெரித்த ஒரு கிழவி லண்டன் கலியாணவீட்டில் வடையை விழுங்கிக் கொண்டு இவளுக்குப் புத்தி சொன்னாள்.
வளர்மதி என்று பெயர் வைத்ததே மாலதிதான். வ,வா, வில் பெயர் வைக்கச் சொல்லி ஊரிலிருந்து கடிதம் வந்தது. 'வாசுகி என்று வைப்போமோ" சிதம்பரம் கேட்டான். "இந்தப் பெயரை ஆங்கிலேயர் சரியாக உச்சரிப்பார்களா? அவுள் கேட்டாள். அவனுக்குக் கோபம் வந்து விட்டது. வெள்ளைக்காரனுகுத் தக்க பெயர் வைப்பதென்றால் மார்க்கிறட் தச்சர் எண்டு வை" என்று திட்டினான்.
கடைசியாக எப்படியோ வளர்மதி என்று பெயர் வைத் தார்க்ள். மதி என்று தாய் அழகாகக் கூப்பிட வளர்மதியைப் b பார்த்துக் கொள்ளும் ஐரிஸ் பெண் மட்டி" என்று செல்லமாக கூப்பிடுவாள், அவள் குழந்தைகள் 'மாதி”
சையாகச் செர்ல்வார்கள்.
குழிந்தையை ஐரிஸ்காரி பராமரிக்க மாலதி இந்தியன் கடை ஒன்றில் வேலை செய்கிறாள். குழந்தை பிறந்து மூன்றாம் மாதமே வேலை செய்யத் தொடங்கி விட்டாள். குடும்பப் பொறுப்புக்கள் ஏராளம்.
சிதமடிரனின் தம்பியை எப்படியும் எடுத்து விட்டால் அடுத்ததாகத் தன் தம்பியையும் எடுக்கலாம் என்பது மாலதியின் ஆசை.
தெரிந்தி கொஞ்சம் மனிதர்களுடன் சேர்ந்து சீட்டுக் கட்டிய காசை எடுத்துக் கொண்டு தனக்கு தெரிந்த *ஏஜன்சிக்காரனிடம் அலைகிறான் சிதம்பரம். சீட்டுக்காசு ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டும். சில வேளை அவள் வேலை செய்யும் இந்தியக் கடையில் இவளோடு வேலை செய்யும் பெண் வராவிட்டால் மாலதி கூட வேலை செய்

Page 9
14 நாளைக்கு இன்னொருத்தன்
வாள். ஓவர் ரைம் செய்யும் காசை வீட்டுச் சாமான்கள் வாங்கப் பாவிப்பாள்.
குழந்தை வளர்மதியுடன் விளையாட இப்போதெல்லாம் நேரமில்லை, பின் நேரம் வந்தால் சமையல், வீட்டு வேலைகள் என்று நிறைந்து கிடக்கும். அதன்பின் சமையல் பாத்திரங்களைக் கழுவி முடிய நேரம் ஒன்பது மணியாகி விடும். |
சிதம்பரம் ஒரு பெற்றோல் செட்டில் வேலை செய் கிறான். எட்டு மணியிலிருந்து எட்டு மணி நேர வேலை. வீடு வந்து சேர இரவு ஒன்பதரை மணிக்கு மேலாகும். வந்ததும் கதிரையில் "தொம்’ என்று விழுவான். உபும்பு உழைப்புடன் உள்ளச் சுமைகளும் அவனைக் கெதியில் கோபக்காரனாக்கி விடுகிறது. குடும்ப விடயங்களைப் புற்றி இவள் ஏதும் சொல்ல வந்தால் அவன் பொறுமையில்லாமல் எரிந்து விழுவான்.
இந்தியக் கடையில் வேலை செய்யும் மற்றப் பெண் லீவில் ஊருக்குப் போய் விட்டாள். அந்தப் பெ இடத்துக்கு இன்னொரு பெண்ணை நியமனம் செய்ய விரும் பாத கருமி அந்த குஜராத்தி முதலாளி. மாலதிக்குச் சரி யான வேலை. வார நாட்களிலும் வேலை. ஒன்றை விட்டு ஒரு கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் ஒவ்' கிடைக்கும்.
இந்திய முதலாளி இவன் வார விடுமுறையில் வேலை செய்யாவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிபுப் போவ தில்லை. ஆனால் இவளுக்குக் கொஞ்சம் காசு மிச்சம் பிடிக்க ஆசை.
இரண்டு மாதம் இப்படி வேலை செய்தால் காசு மிச்சம் பிடித்து ஒரு washing mechine” வாங்க /யோ சித்திருக் கிறாள், கடையில் தவணையிற்கட்டும் முறையில் "Washing machine' order usar 600f 6f LT6ir. டுத்த கிழமை 4washin6 machine" வீட்டுக்கு வரும். இதிரி இவள் துணி
 
 
 
 

ராஜேஸ்வரி 15
எல்லாவற்றையும் லோண்டரேட்டுக்குக் கொண்டு போகத் தேவையில்லை.
சிதம்பரனுக்கு இவள் ஓய்வில்லாமல் வேலை செய்வது பிடிக்காதுதான். ஆனாலும் வீட்டின் நிர்ப்பந்தம் அப்படி ஆகி விட்டது.
கடந்த ஒன்றிரண்டு நாட்களாக வளர்மதிக்குக் சுக மில்லை. ஐரிஸ்கார ஆயாவிடமிருந்து அவளை வீட்டுக்குக் கொண்டு வரும்போது சோர்ந்து போய் இருந்தாள்.
"குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை" என்று சொன் னாள் ஐரிஸ் ஆயா. வளர்மதி வாடிய வாளைத் தண்டாய்த் துவண்டுபோய் படுத்திருந்தாள்.
இரவில் குழந்தைக்கு கொஞ்சம் 'கல்போல் மருந்து கொடுத்தாள் மாலதி, மாலதிக்கு அன்றிர வெல்லாம் சரி -யான தூக்கம் இல்லை.
வெளியில் சரியான குளிர், பேய்க்காற்றுவேறு, இவள் அடிக்கடி எழும்பிக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாள் குழந்தை வழக்கமாக ஒரு போத்தல் பால் குடித்துவிட்டுப் படுப்பவள், ஒரு துளியும் குடிக்கவில்லை.
காலையில் கொஞ்சம் "வீராபிக்ஸ்' செய்து குழந் தைக்குக் கொடுத்தாள். குழந்தை ஏதோ சிரமப்பட்டு ஒன்றிரண்டு கரண்டி சாப்பிட்டாள்
'ஒடியா டுற வயதில இப்படியெல்லாம் வரும் தானே" ாலதி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு குழந்தையை ஐரிஸ் ஆயாவிடம் கொண்டு போனாள்.
'குழந்தையை டொக்டரிடம் கொண்டு போக வில்லையா?” ஐரிஸ் ஆயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
'இல்லை, குழந்தை காலையில் கொஞ்சம் சாப் யிட்டாள், இன்றைக்குக் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக் கிறாள்.' −

Page 10
நாளைக்கு இன்னொருத்தன்
மாலதி அவசரமாகத் தன் கைக்கடிகாரத்தைப் பார்த். தாள். கையில் ஒரு 60Lulfsi) லோண்டரேட்டுக்குக் கொடுத்துவிட எடுத்த உடுப்புகள் கனத்தன.
நாளைக்கு ‘வாஷிங்மெசின்" கொண்டுவந்து கொடுப்பு தாக கொம்பனி அறிவித்திருக்கிறது. இனி இப்படித் துணி களைச் சுமக்கும் கரைச்சல் இருக்கப் போவதில்லை. மாலதி தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள்.
"பர்சமுள்ள பெண்கள் வீட்டோட இருக்க வேணும்" அவன் குரலில் கிண்டலா அல்லது உருக்கமா தெரியாது. அவன் ஒரு எண்ணெய் வழிந்த முகத்தையுடைய ஒரு கடுமை யான முதலாளி. கட்டையுருவம், கண்கள் எப்போதும் துரு துரு என்றிருக்கும். அந்தக் கண்கள் கொள்ளி வாய்ப் பிசாசு போல் இவளை உறுத்திப் பார்த்தன.
வேலைக்குப் போய்க் கொஞ்ச நேரத்தில் டெலிபோன் அடித்தது. குழந்தையின் நிலை மிகக் கடுமையாக இருப்ப தால் உடனே வீட்டுக்கு வர முடியுமா என்று ஐரிஸ் ஆயா (SSLT6ir.
முதலாளி திட்டுவதைப் பற்றி அக்கறையில்லை. "இப்படிக் கண்ட பாட்டுக்கு லீவெடுத்தால் இனி நான் வேலைக்கு வேறு யாரையும் தான் பார்க்க வேணும்' முத லாளி பட்டேல் முணுமுணுத்தான்.
குழந்தையின் முகத்தில் ஒரு களையுமில்லை. மாலதி கணவனுக்குப் போன் பண்ணி விடயத்தைச் சொல்லிவிட்டுக் குழந்தையை எடுத்துக்கொண்டு டொக்டரிடம் போனாள்.
டொக்டர் குழந்தையை நீண்டநேரம் பரிசோதித்து விட்டுத்தான் குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்கக் கடிதம் தருவதாகச் சொன்னார். உடனே ஆஸ்பத்திரிக்குப் போன் பண்ணிக் குழந்தையை அட்மிட் பண்ண வேண்டியதன் முக்கியத்தை விளங்கப்படுத்தினார்.

r r G3ggsňuv6, f 17
டொக்டர் சொன்ன விளக்கம் ஒன்றும் இவளுக்கு விளங்க. 6f6äv 60d6v. virus moningitis Lusiból 6 gið (65 fuqLDT 6T 6őTO இவளைக் கேட்டார்.
இவள் பாவம் இந்தியக்கடையில் வெண்காயம் தெரிந்து அடுக்குபவள்.
பக்டீரியல் மெனிங்சையரிஸ் (Bacterial meningitis), வைரஸ் மெனிங்சையரிஸ் என்று இரண்டுவிதம் இருப்பதாக டொக்டர் இவளுக்கு ஆறுதலாக விளங்கப்படுத்திக் கொண். டிருக்கும் போது குழந்தை வாயைக் கோணிக் கொண்டது.
அடுத்த இரண்டு கிழமைகளையும் ஆஸ்பத்திரியிற் செலவழித்தாள் மாலதி. குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால் அந்த வருத்தம் மூளையைத் தாக்கியதால் குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டு விட்டது என்றும் குழந்தையின் வளர்ச்சி கேள்விக்குரியதென்றும் டொக்டர்கள் சொன்னார்கள்.
வளர்மதி ஆடி ஓடவில்லை. பிரமையுடன் வெறும் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா அப்பா சொல்வாளா? மாலதி கண்ணிருடன் மகளைப் பார்த்தான். வாடிய தண்டாய்ச் சுருண்டு கிடந்தாள் வளர்மதி. வீட்டில் ஒரு புதிய வாஷிங் மெஷின் பூட்டியிருந்தது. இந்த மெஷினுக்கு ஆசைப்பட்டு லீவில்லாமல் வேலை செய்யாமல் குழந்தையின் வருத்தத்தை உடனே கண்டுபிடித்திருந்தால் இப்போது வளர்மதி இப்படி இருக்க வேண்டி வந் திருக்குமா? மாலதி பாவம், அவள் ஒரு சாதாரண பெண். சாதாரண ஆசைகளால் ஆட்டிப் படைக்கப்படுபவள். * வாஷிங் மெஷின் இப்போது கட்டாயம் அவளுக்குத் தேவை, ஏனென்றால் வளர்மதி அடிக்கடி உடுப்புக்களை நனைக்கிறாள். அவளுக்கு வளர்ச்சி இனி வராது. -

Page 11
2. கற்புடைய விபச்சாரி
"நானென்ன லண்டன் மாப்பிள்ளை இல்லையெண்டா அழுதன், நல்ல இடம், லண்டனில் படிக்கிற பெடியன் 'எண்டெல்லாம் புழுகி இப்பிடி என்ற வாழ்க்கையை அநியாய மாக்கிப் போட்டினம் ஊரில் ஒரு ஏழையைச் செய்து போட்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம்."
டொக்டர் சாந்தி தன் முன்னால் மெளனமாய் உட்கார்ந் திருக்கும் புவனேஸ்வரியை எடை போடுகிறார்.
புவனேஸ் டொக்டர் சாந்தியின் சொந்தக்காரப் பெண். ஒருத்தியின் சினேகிதி. சொந்தக்காரப் பெண் நேற்றிரவு சாந்திக்குப் போன் பண்ணி புவனேசுக்கு உதவி செய்யச் சொல்லியிருந்தாள்.
புவனேசின் முகம் வீங்கியிருக்கிறது. இரவெல்லரம் அழுதிருக்கவேண்டும். கண்கள் சிவந்து பார்வை தெளிவில் லாத மாதிரி வெறித்துப் போயிருக்கிறது.
*கோப்பி ஏதும் குடிக்கப் போகிறீர்களா?" சாந்தி புவனே சைக் கேட்டாள். புவனேஸ் "இல்லை எனக்கு வேண்டாம்" என்ற பாவனையில் தலையாட்டினாள்.

rrGiggsħonu f' 19
வெளியில் சரியான காற்று போலும். ஏற்கனவே இலை யுதிர்காலத்தால் இலையிழந்த மரங்களிலிருந்த ஒன்றிரண்டு இலை தழைகளும் இப்போது அடித்துக் கொண்டிருக்கும். பெருங்காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன. சரியானகுளிர் என்று சாந்தியின் மகன் சொல்லிக் கொண்டதை சாந்தி காலையில் கேட்டாள். சாந்திக்கு எப்படி பேச்சை ஆரம் பிப்பது என்ற பிரச்சனையில்லை. ஆனால் புவனேசுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்றுதான் அவளால் மட்டுக் கட்ட முடியாமலிருந்தது. அவள் படும் துயரத்தின் சாடை சோகமான முகபாவனையில் தெரிகிறது. ஆனால் சோகத்தின் காரணத்தை எப்படி இந்த டொக்டரால் நிவர்த்தி செய்யலாம் என்பதுதான் கேள்வி.
'ஏன் ஆண்பிள்ளைகள் கண்டதெற்கெல்லாம் பிழை பிடிக்கிறார்கள்’ புவனேஸ் திடீரென்று கேட்டாள்.
சாந்தி கோப்பிக் கோப்பையை மேசையில் வைத்தபடி தனக்கு முன்னாலிருந்து கேள்வி கேட்கும் பெண்ணை ஊடுருவிப் பார்த்தாள். பாவம் மிகவும் கலங்கியிருக்கிறாள்.
“எனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடிக்கப் போகுதோ தெரியேல்ல". புவனேஸ் விம்மினாள். 'மனம் நிறைந்த துன்பம் வரும்போது, துன்பத்தை நீக்க வழி தெரி யாமலே போய்விடுமோ என்று தோன்றும்போது அப்படிச் சில சிக்கலான கேள்விகள் வருவதுண்டு. அதற்காகத் துன்பம் வந்து, பிரச்சனை கூடிவிட்டால் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று முடிவுகட்டக் கூடாது’ டொக்டர் ஆறுதலாகச் சொல்கிறாள்.
* வேண்டாத பெண் சாதி கைபட்டாலும் பிழை, கால் பட்டாலும் குறை என்றது சரிதான்" மூக்கைச் சீறிக் கொள் கிறாள் புவனேஸ்.
"அவர் விரும்பித்தானே உங்களைச் செய்தார்?"

Page 12
நாளைக்கு இன்னொருத்தன்
"ஓம் ஒரே பிடியில நிண்டு கல்யாணம் செய்துகொண்டு வந்தவர். இப்ப இப்பிடியெல்லாம் கஷ்டப்பட வேண்டிக் கிடக்கு."
"உங்களின் சகோதரங்கள் என்ன சொல்லுகினம்?"
‘அண்ணா எப்பிடி உங்கட தனிப்பட்ட பிரச்சனையில குறுக்கிடுகிறது என்று கேட்கிறார், அக்கா சொல்லுறா Hருஷன் கையால அடிவாங்கிறது புண்ணியமாம். ஒரு பொம்புளை புருஷனால செத்துப் போனா ஏழு பிறப்புக்கு நல்லதாம்"
டொக்டருக்குக் கோபம் வருகிறது, ஒரு பிறப்பில் இந்தப் பெண் அவனுடன் படும்பாடு போதாது. ஏழுதரம் பிறக் கட்டாம்.
"நான் எத்தினை நாளைக்கு இப்பிடி வாழுறது" புவனேஸ் வாய்விட்டு அழத் தொடங்கி விட்டாள். *புவனேஸ், இது உன்ர வாழ்க்கை. எப்பிடி வாழப் போகிறாய் என்பதை முடிவுகட்டுவது உன்ர பொறுப்பு. இப் போது உனக்கு உடம்பு சுகமில்லை என்றால் நான் உதவி செய்யலாம்.' - - - - -
"டொக்டர் எனக்கு என்ர வயித்தில வளரும் பிள்ளை உயிரோட பிறக்க வேணும், இதையும் அவன் அழிக்கப் பார்க்கிறான், தயவு செய்து உதவி செய்யுங்கோ" அவளது விம்மல் டொக்டரின் நெஞ்சைப் பிழிகிறது.
*"நானென்ன லண்டன் மாப்பிள்ளை இல்லையெண்டா அழுதன்; நல்ல இடம், லண்டனில் படிக்கிற பெடியன் எண் டெல்லாம் புழுகி இப்பிடி என்ர வாழ்க்கையை அநியாய மாக்கிப் போட்டினம். ஊரில் ஒரு ஏழையைச் செய்து போட்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம்."
அவள் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். இப்பிடி எத்தனையோ தரம் தனக்குத் தானே அவள் சொல் லியிருக்கலாம்.

ராஜேஸ்வரி 2.
டொக்டருக்குப் புவனேஸ் இரவு போன் பண்ணி தன்னைப் பற்றி எல்லாமே சொல்லியிருக்கிறாள். புவனேசுக்கு வயது இருபத்திரண்டு ஓரளவான மத்தியதரக் குடும்பம். தமையன் டொக்டர். தமக்கையின் கணவனும் லண்டனில்,
இலங்கையில் ஓயாத பிரச்சனை. மாப்பிள்ளை தட்டுப் பாடு. புவனேசுக்கு தான் யூனிவர்சிட்டிக்கு போகவேண்டும் என்ற ஆசை.
"லண்டன் மாப்பிள்ளை, அவளைக் கலியாணம் செய்து கொண்டு லண்டன் போனால் படிக்கலாம். வசதியாக Surp 6) Tib.'
அப்பா அம்மா ஊரார் எல்லோரின் பரவலான கருத்து அது. நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாகத் தெரிந் தான். லண்டனில் மாணவனாக இருக்கிறானாம். அவள் வந்து ஒரு மாதத்தில் தெரிந்தது அவன் படித்துக் கொண்டி ருக்கும் பட்டதாரியில்லை. குடித்துக் கொண்டு திரியும் ஊதாரி என்று.
அவள் தாத்தா கள்ளுக் குடித்ததற்காக பாட்டி ஏசிக் கொண்டேயிருந்தது ஞாபகம் வந்தது. நடராஜன் பியர் குடிக்கிறான். பியர், விஸ்கி மாதிரி ஒன்றும் பொல்லாத சாமானில்லை என்று புவனேசுக்குச்சொன்னான். அவளுக்கு அவனை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை
'நீர் உடனே படிக்கத் தொடங்க முடியாது. இங்கிலீஸ் பழக வேணும். வேலைக்கு அங்க இங்க எண்டு போனால் இங்கிலிசு பிடிச்சுப் போடலாம்' அவன் சொல்லை நம்பு வதைத் தவிர வேறு வழியில்லை.
"நீங்கள படிக்கப் போகவில்லையா?" அவள் தயக்கத் துடன் கேட்டாள்.

Page 13
22 நாளைக்கு இன்னொருத்தன்
"கொலீஜ் பீஸ் கட்டாம போன வருசம் போக முடி யல்ல, இனி என்ன ரெண்டு பேரும் பார்த்துச் சமாளிப்பம்." அவன் சிரித்தான். அவள் உழைக்க அவன் கொலிஜ் அட்மிஷன் எடுத்தான்.
இரண்டு கிழமை அவனுக்குச் சந்தோசம். இந்திய கடை யில் இந்திய முதலாளி நாயாய் வேலைவாங்கி உடம்பை முறிப்பதைப் பற்றி அவனுக்கு கவலையில்லை. கணவன் படிக்க வேண்டும். எனது கணவன் பட்டதாரி என்று ஆட் களுக்கு சொல்ல வேண்டும். அவள் உழைத்தாள்.
கனகாலம் கல்லூரிக்குப் போகாததால படிக்கிற மூட் வருதில்ல."
அவன் பியர் குடித்தபடி வீடியோவில் குப்பை ஆபாசப் படம் பார்த்தபடி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவன் என்ன "மூட்"டில் இருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியும். வேலை செய்து களைத்த உடம்பு கணவன் தேவைக்கு. கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன்.
அவளுக்கு ஊர் புதிது. குளிர் கொடுமை. அண்ணாவும் அக்காவும் தங்கள் பாடு.
அவன் பெரும்பாலும் பின்னேரங்களில் அரை வெறியில் இவளுக்காகக் காத்திருப்பான். கடையில் இந்திய முத லாளி, வீட்டில் கட்டிய கணவன். அவள் உடம்பு பொருள் முதல்வாதத்திற்கும் கற்பு முதல்வாதத்திற்கும் பயன் பட்டது
அவளுக்கு வயிற்றில் குழந்தை "ஏன் குழந்தை வராமல் பார்த்துக் கொள்ளவில்லை’ அவன் கோபத்தில் முணுமுணுத்தான். அவனால்:குழந்தைப் பொறுப்பு வந்தால் படிக்க முடியாதாம்.
நான் இப்ப என்ன செய்ய?’

grw Giggsiap Gruff? 23.
அவள் தான் குற்றம் செய்த தொனியில் தயங்குகிறாள்.
'அபோஷன் செய்யுறது" அவன் சாதாரணமாகச் சொன்னான்.
நெஞ்சில் ஏதோ அடைப்பது போன்ற உணர்ச்சி அவள் சிநேகிதிக்குக் குழந்தையில்லை என்று இந்தியாவில் புண்ணிய தலயாத்திரை செய்கிறாள்.
"ஏன் கணவர் ஒரு மாணவர். எங்களுக்குப் பிள்ளை பிறந்தால் அவர் படிப்புத் தடைப்படும்’
அவள் வெள்ளைக்கார டொக்டரிடம் (p60sDu Lirst இவள் ஒரு கறுத்தப் பெண். இவளுக்குப் பிள்ளை பெற வேண்டுமென்பது அக்கறையில்லையென்றால் வெள்ளைக் கார டொக்டருக்கென்ன.
கருக்கலைப்புச் செய்து விட்டு வீட்டுக்கு வந்த அண்ணா: அக்கா, அயலார் யாருக்கும் தெரியாது. அ. வயிறு நொந்த போது 96.6ir அழிந்து போன் "குழந்தை"யை நினைத்து அழுதாள். இப்போது அ ளுக்கு அவள் "குடும்ப" வாழ்க்கையில் தன் நிலைமை சரி யாகப் புரிந்தது. W
அவள் இன்னொரு தரம் பிள்ளை வராமல் இருக்க எடுத்த கற்பத் தடைக் குளிசையால் அவளுக்கு வாந்தியும், தலைசுற்றும்.
*சில பெண்களுக்குக் கற்பத் தடைக்குளிசைகள் ஒத்து வராது. உங்கள் கணவரைக் “கொண்டோம்” பாவிக்கச் சொன்னால் என்ன?" டொக்டர் அவளைக் கேட்டார்.
'றப்பர் உறை பாவிக்கிறவன் தேவடியாள்கிட்டப் போறவன்' அவன் அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரித் தான்.

Page 14
2A நாளைக்கு இன்னொருத்தன்
நடராஜன் தன் "ஆண்மைக்கு'(?) உறை போடத் தயாரில்லை. அவளுக்கு அடுத்த பிள்ளை வயிற்றில்.
பபிள்ளை வந்து வாழ்க்கையைக் குழப்பப் போகுது.",
அவன் முணுமுணுத்தான். இன்னும் சோதனை பாஸ் பண்ணவில்லை.
"அப்படி எண்டாப் படுக்காமல் இருந்திருக்கலாம் தானே?" கோபத்தில் அவள் வார்த்தைகள் வெடித்தன. பெரிய தாக்கம்.
ஆண்மை’. பேச மறுத்தால் அடுத்தநடவடிக்கை அடி’ இந்தத் தடவை அவள் டொக்டரிடம் அபோஷனுக்குப்
பாகவில்லை.
அவன் உதைத்த தாக்கத்தில் அவள் மயங்கி விழுந்து எழும்பியபோது அவள் கால்களுக்கிடையில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. ரொய்லட்டில் 'தொப்' என்று விழுந்தது வெறும் இரத்தக் கட்டியல்ல. தான் சுமந்த குழந்தை என்றதும் அவள் துடித்துப் போய்விட்டாள்.
இவள் அழுவது அவனுக்குப் பிடிக்காது. அவள் இரண் டொரு நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய நிலை. அப்போதுதான் தன் வாழ்க்கை என்ன திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்று அவளால் தெளிவாகப் பார்க்க முடிந்தது இருபத்தியொரு வயது. அவள் இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாள்.
அவனுக்குப் படிப்புச் சரிவரவில்லை.
'என்ன படித்தாலும் என்ன? இந்த வெள்ளைக்காரன் படிச்ச படிப்புக்கு வேலை தரப் போறானா??
நடராஜன் வியாபாரம் ஒன்று தொடங்கப் போகிறா -ன்ாம். புவனஸ் உழைத்துக் கொண்டேயிருந்தாள்
சொந்தக்காரர் கண்களுக்கு அவர்கள் ஒரு சந்தோசமான

சீாஜேஸ்வ்ரி 25
தம்பதிகள். ஏதும் அவள் கேட்டாள் அல்லது எதிர்த்துப் பேசினால் அவன் அடிப்பதில் கெட்டிக்காரன், 7
ஆன் தொடுவது ஒன்றில் அடியில் முடியும் அல்லது "கட்டிலில் முடியும். அவன் தொடுவதையே அவள் அருவருப்
பாக நினைத்தாள்,
"என்னடி நான் தொடாட்டா வேற யாரையடி G6?g5TL விடுகிறாய்" அவனின் ஆபாசக் கேள்வி அவளுக்கு வாந்தியை வரவழைத்தது.
“கற்புள்ள தமிழ் பெண்பிள்ளை கணவன் விருப்பத் துக்கு நடக்க வேண்டும்?
அவன் கற்பையும் கலாச்சாரத்தையும் பற்றி பிரசங்கம் செய்தான்.
கற்பைப் பற்றி கதைத்தால் அவள் குழம்பிப் போய்விடு வாள். கந்தன் முருகனைக் கோவிலில் வைத்திருக் கிறார்கள். பயப்பிடலாம் கும்பிடலாம். கற்பு எங்கேயிருக் கிறது? அவளுக்குத் தெரியாது. ஆனால் பயப்பட வேண்டிய நிர்ப்பந்தம்.
'கற்பெண்டா என்ன? என்னைப் படுக்கத்தானே பாவிக்கிறியள்" அப்பாவித்தனமாக அவள் கேட்டாள்.
“பல்ல உடைப்பன் நாயே" அவன் சீறினான். குப்பயம், அவள் வாய்திறக்கவில்லை. அடுத்த குழ்ந்தை வயிற்றில்,
அவள் அவனுக்குச் சொல்லவில்லை. பயம், அவள் கற்புள்ள மனைவி கணவன் GlFirsib தட்டக் கூடாது. ஆனாலும் அவள் சொல்லவில்லை. அவள் காலையில் 'சத்தி எடுக்க அவன் கண்டுபிடித்து விட்டான்.
நா-2

Page 15
26 நாளைக்கு இன்னொருத்தன்
'ஒரு வியாபாரம் தொடங்க இருக்கிறன். அதுக்கிடை யில பிள்ளை வேணுமா' அவன் கேள்வி, சாதாரண தொனி.
r 'ஏதோ பார்த்துச் சமாளிப்பம்" அவள் கோபத்தை யடக்கிக் கொண்டு கூறினாள்.
*நீர் வேலை செய்யாட்டா சமாளிக்க முடியாது"
எனக்கொரு பிள்ளை தேவை" அவளுக்கு கோப மில்லை. ஆனால் வேதனையில் கண்ணிர் வந்தது.
இன்னொருதரம் அபோர்ஷன் செய்ய அவள் விடப் போவதில்லை.
"என்னடி மாய்மாலக் கண்ணீர்" அவன் சிரித்தான்கேவலமான சிரிப்பு.
அன்றிரவெல்லாம் சண்டை அடிபிடி, அவள் தன் அடி வயிற்றில் உதைவிழாமலிருக்க எத்தனையோ பாடுபட வேண்டியிருந்தது. அன்றிரவு அவள் தன் சிநேகிதியிடம் உதவி கேட்டுப் போய்விட்டாள்.
சிநேகிதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் பமிலி டொக்டர் சாந்தியிடம் அனுப்பியிருக்கிறாள்.
* இப்ப என்ன செய்யப் போகிறாய், புவனேஸ்"
"அந்த மனிசனிட்ட போனா என்ர பிள்ளைக்கு ஏதும் நடந்திடும் எங்கே எண்டாலும் ஒரு இடம் எடுக்க உதவி செய்யுங்கோ" . . . .
"உங்கட சகோதரங்களிட்டப் போனா என்ன?’ ’
"இதெல்லாம் என்ர தனிப்பட்ட குடும்ப விஷயம் என்று இசால்லிப் போட்டினம். அவயிட்ட போனா கற்புள்ள பெண் விள்ள புருஷனோட இருக்க வேணும் எண்டு என்னை பர்ஸல் பண்ணி என்ர மனிசனிட்ட அனுப்பிப் போடுவினம்’ அவள் அழுகிறாள்.

ராஜேஸ்வரி 27
"சரி என்னால ஆனதைச் செய்யுறன்". டொக்டர் சாந்திக்கு வேலைக்கு soyonF Frib.
9. 00 go
வேலையிடத்தில் நிறைய பேர் காத்திருக்கிறார்கள். முதலாவது நோயாளி டொக்டர் சாந்தி முன் வந்து இருக் கிறாள்.
**பெயர் என்ன”
டொக்டர் சாந்தி தனக்கு முன்னால் மறுமொழி சொல் லாமலிருக்கும் நோயாளியைப் பார்க்கிறாள். அவளைப் பார்த்தும் புவனேசின் ஞாபகம் வருகிறது. சோகமான முகம். கிட்டத்தட்ட அதே வயதாக இருக்கலாம். கண்கள் பேதலித்து, முகம் சோர்வாக, முன்னால் அந்த இளம்பெண் உட்கார்ந்திருக்கிறாள். நோயாளியின் குறிப்பை அவதான மாகப் படிக்கிறாள் டொக்டர் சாந்தி.
இந்தப் பெண் போதைவஸ்து பாவிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவள். இப்போது நெஞ்சில் ஏதோ சுகமில்லை என்று வந்திருக்கிறாள். இவள் வாழும் வாழ்க்கையில் என்ன வருத்தமும் வர י,
6abitab.
"உனது பெயர் என்ன?" டொக்டர் சாந்தி குரலை ஆட்யர்த்திக் கேட்கிறாள்.
"யூடித் சிம்ஸன்" 'வயது?" **இருபது'
என்ன மருந்துக்கு அடிமையாய் இருக்கிறாய்?" *ஹெரோயின் " குரலில் தயக்கம். "ஹெரோயின் வாங்க எப்படிக் காசு கிடைக்கிறது?"

Page 16
28 நாளைக்கு இன்னொருத்தன்
விபச்சாரம் செய்வதன் மூலம் ' விபச்சாரம் செய்யும் போது வரும் அபாயங்கள்
தெரியும்தானே” வந்தவள் மறுமொழி சொல்லவில்லை. "எயிட்சிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறாயா" "நான் எயிட்ஸ் பற்றிக் கவலைப்படவில்லை’ ஏனோ தானோ என்ற மறுமொழி. "நீ ஒரு விபச்சாரி' **அதற்கென்ன’’
"பலபேருடன் படுப்பவள்
"நான் படுத்தெழும்புவதாக நீ ஏன் முடிவு கட்டுகிறாய் டொக்டர்’ W
யூடித் சிம்ஸன் என்ற விபச்சாரி அதிகம் படித்த டொக்டர் சாந்தியைக் கேள்வி கேட்கிறாள்.
ஒரு விபச்சாரி உடம்பை விற்றுப் பிழைப்பவள், பல ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் என்ன வென்று தொழில் செய்கிறாய்?"
"உங்களுக்கு எங்கள் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள், எப்படி வாழ்கிறோம். எப்படி முடிவுகள் எடுக்கிறோம் என்று தெரியாது போலிருக்கிறது"
வந்தவுடன் சோர்ந்துபோய் இருந்தவள் டொக்டர் கேட்ட கேள்வியால் கோபம் வந்திருக்க வேண்டும் போலி ருக்கிறது. உசாராகப் பேசிக் கொண்டிருந்தாள்.
டொக்டர் மெளனமாக அவள் சொல்வதை மிக அவ தானமாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
* விபச்சாரிகள் என்றாலும் இப்படி இப்படித்தான் வாழ வேண்டும். இன்ன இன்னதான் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறோம்.'

grør Goggsív6uf 29
டொக்டர் அவளைப் பேச விடுகிறாள். 'எனக்கு எயிட்ஸ் வராது. ஏனென்றால் நான் எந்த ஆண்களுடனும் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. பெரும்பாலான எனது வாடிக்கைக்காரர் பேசிக் கொண்டிருக்கி என்றே வரு வார்கள்."
"உடலுக்கு உன்னை வற்புறுத்தினால் என்ன செய்
- 6 TIL
'அதற்கென்றே வேலை செய்கிற விபச்சாரிகளைக் காட்டி விடுவேன். இது வரைக்கும் என்னை எந்த ஆணும்
வற்புறுத்தவில்லை"
"உனக்கு உனது வாடிக்கைகாரர்களில் ஆசை வருவ தில்லையா?”
*செய்யுற தொழிலில ஆசை வந்தது போல நடிக்கிறது துண்டு. இது என்ர தொழில்" அவள் சிரிக்கிறாள்.
டொக்டர் ஆச்சரியத்துடன் யூடித்தைப் பார்க்கிறாள்.
"எனக்கு என்னை முழுமையாக விரும்புகிற ஒருத்த னிடம் தான் ஆசை வரும். அது வரைக்கும் காத்திருக் கிறேன்."
"அப்படியென்றால்?" டொக்டருக்கு குழப்பம். தன் உடம்பை கணவனிடம் காப்பாற்றிக் கொள்ள முடியாத புவனேசின் முகம் ஞாபகம் வருகிறது.
“என்ன டொக்டர் விளங்கவில்லையா, நான் இன்னும் யாருடனும் உடலுறவு கொள்ளாதவள், என்றோ ஓர் நாள் நான் விரும்பும் ஆணுக்கு என்னைக் கொடுக்க காத்திருக் கிறேன்". அவள் சிரிக்கிறாள். இந்த விபச்சாரிக்குக் கூட தன் விருப்பு வெறுப்பை நிர்ணயிக்கும் வழியும் உரிமையும் இருக்கிறது. புவனேசுக்கு இல்லையே! பாவம் புவனேஸ்
போன்ற பெண்கள்
-1992

Page 17
3. மஞ்சுளா
'மத்தளங்கள் கொட்டுங்கள் மந்திரங்கள் சொல்லுங்கள் பெட்டை மாட்டைக் கொண்டு வந்து
தாலி ஒன்று கட்டுங்கள்'
அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாகத் தெரிந்தாலும் முகத்தில் ஒன்றும் குழந்தைந்தனம் தெரியவில்லை.
மாமியார் தர்மசங்கத்துடன் அவளைப்பார்த்தாள். மாமிக்கு வயது எழுபதாகப்போகிறது அவளுக்கு- அது தான் கிழவியின் மருமகளுக்கு முப்பத்தைந்து வயதிருக்க arub.
மாமிக்குப் பெயர் திருமதி. திருச்சிற்றம்பலம். அவ குக்கு என்று ஒரு பெயர் எப்போதோ இருந்திருக்கலாம். ஆனால் ஊருக்கும் உலகத்துக்கும் அந்தக் கிழவி திருமதி. திருச்சிற்றம்பலம்தான்.
மருமகளுக்குப் பெயருண்டு. மஞ்சுளா என்று பெயர். மஞ்சளும் குங்குமமுமாகத் திருமதி. திருச்சிற்றம்பலத்தின் மருமகளாக வந்தவள்.
"பெண்மை என்று பேசுங்கள்
தாய்மை என்று முழங்குங்கள்

ராஜேஸ்வரி ει
தாலி கட்டி முடியவிட்டு போலியாக வாழுங்கள்"
“மஞ்சுளா சும்மா இரு" மாமியார் கடுமையாகச் சொன்னாள். மாமியாரின் வாரிக்கட்டிய கொண்டையை மருமகள் தட்டிவிட்டுச் சிரித்தாள். W
மாமியும் மருமகளும் காரில் இருக்கிறார்கள். கார் லண்டனில் ஒரு நெருக்கமான றோட்டில் போய்க்கொண்டி ருக்கிறது. மஞ்சுளா கொஞ்ச நாளாக ஒருமாதிரி" இருந் தாள். W
கலியாணமாகிப் பத்து வருடமாகிறது. மஞ்சுளா எப் போதும் ஒரு "மாதிரியாகத்தான் இருப்பாள். அதைப்பற்றி ஒருத்தரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
கட்டிய கணவன் தாலிகட்டிய கையோடு லண்டனுக்கு வந்ததிலிருந்து மஞ்சுளா ஒருமாதிரித்தான்" இருந்தாள். ஆனாலும் அதை ஒருத்தரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
கார் ஒரு சிவப்பு லைட் சந்தியிலே நின்றது. வாழக்கை, பிரயாணம், சந்திப்புகள், சந்திகள், இப்படி லைட்டுகள்!!!
'மேடை ஒன்று கட்டுங்கள் மேளம் ஒன்று தட்டுங்கள் தாளம் போட்ட நடையைக் கட்டி சங்கிலிகள் பிணையுங்கள் மஞ்சுளா இப்போது முணுமுணுத்தாள். மாமியார் பேசு வாள் என்பதை உணரும் நிலையில் அவள் இருந்தாளோ இல்லையோ அவள் மெளனமாக முணுமுணுத்தாள்.
காரை ஓட்டி வந்தவன் கிழவியின் சொந்தக்காரப் பையன். கிழவி மறைக்க வைக்கும் உண்மையை எப்

Page 18
a2 நாளைக்கு இன்னொருத்தன்
போதோ உணர்ந்து கொண்டவன். அவனுக்கு இப்போது முப்பது வயதாகிறது. இருபது வயதில் அவன் திருமதி. திருச்சிற்றம்பலம் வீட்டருகிற்தான் கொழும்பில் வசித்து வந்தான். .
கொழும்பில் தனியார் கொம்பனி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மஞ்சுளா அக்காவையும் சாடையாகத் தெரியும். அவளுக்கு லண்டனிலிருந்து மாப்பிள்ளை வந்ததும் தெரியும்.
அதன்பின் கல்யாணமாகி இரண்டு வருடம் வரை ஏன் மஞ்சுளா அக்கா லண்டனுக்குப் போகவில்லை என்று அவனுக்குத் தெரியாது. 83ம் ஆண்டுக் காலம் தொடங்க முதல் கொழும்பில் அமைதியான வாழ்க்கை தொடர்ந்த காலத்தில் வாழ்வின் முன்னேற்றத்தைத் தேடியலைந்த தமிழ் இளைஞர்களில் அவனும் ஒருத்தன்.
கிழவிக்கு மூன்று மகன்கள். மூவரும் அப்போது வெளி நாட்டிலிருந்தார்கள். முதல் மகன் சிங்களப் பெண் ஒருத்தி யைச் செய்தபின் திருமதி. திருச்சிற்றம்பலம் அடுத்த மகனும் அப்படி ஏதும் செய்து தொலைக்கமுதல் உடனடி யாக ஒரு தமிழ்ப்பெண்ணைச் செய்து வைத்தாள். கிழவியின் கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களின் பின்னும் கடைசி மகனின் கலியாணம் நடக்கவில்லையே என்று தெரிந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிகுந்ததும் இந்த இளைஞன் கேள்விப்பட்டிருக்கிறான்.
அந்தக் காலத்தில் மஞ்சுளா அக்கா மிகவும் அடக்கமான பெண்ணாக - வீணை பழகி, கோயிலுக்குப் போய், விரதங்கள் பிடித்து, சீதனம் சேர்த்து ஒரு நல்ல மாப் பிள்ளைக்குக் காத்துக் கொண்டிருந்தாள்.
"டொக்டர் என்ன சொல்வாளோ தெரியாது”
கிழவி யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியாது.

ராஜேஸ்வரி 38、
ம்ஞ்சுளாவுக்குக் கிழவி சொல்வது புரியுமோ இல்லையோ என்றும் அவனுக்குத் தெரியாது.
"உலகம் என்ன சொல்லும்? கிழவி பெருமூச்சு விட்டாள். உலகமா?
அவன் கண்ணாடியில் கிழவியைப் பார்த்தான். அவ துணுக்கு நல்ல ஞாபகமிருக்கிறது கிழவியின் நாடகம்
*இந்தப் பையன் லண்டனில் என்ன கூத்து ஆடு றானோ தெரியாது” இப்படித்தான் கிழவி அவனின் தகப்ப னிடம் வந்து சொன்னதாக ஞாபகம்.
அவனின் தகப்பன் கிழவியின் தூரத்துச் சொந்தம், இரண்டு பையன்களும் கல்யாணமாகிய ஒரு சில வருடங் களிலேயே குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.
கடைசி மகனைப்பற்றி ஏதோ பேச்செல்லாம் அடிபடு வதாகக் கேள்விப்பட்டதும் கிழவி துடிதுடித்தது இவனுக்கு ஞாபகமில்லையா என்ன?
* எந்தத் தேவடியாள் வலையில் விழப்போகிறானோ தெரியாது” கிழவி கோபத்தில் வார்த்தைகளை வெடித்ததை இவனின் அம்மா மிகவும் தர்ம சங்கடத்துடன் சகித்துக் கொண்டாள்.
"ஏன் லண்டனில் யாரும் கேர்ள் பிரண்ட் இருக்கினமா" இவனின் அம்மா கிழவியை மெல்லமாகக் கேட்டாள். கொழும்பில் லண்டன் மாப்பிள்ளைக்கு நல்ல விலை. மஞ்சுளா மாதிரி எத்தனையோ பேரின் குடும்பம் உள்ள தெல்லாவற்றையும் கொடுத்து ஒரு லண்டன் மாப்பிள்ளை சடுக்க துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காலத்துக்குக் காலம் கத்தரிக்காய்களுக்கும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் விலையேறுவதுபோல் ஆண் களுக்கும் விலையேறிக்கொண்டிருந்தது.

Page 19
நாளைக்கு இன்னொருத்தன்
மஞ்சுளா ஒரு சாதாரண பெண். சுமாரான தோற்றம், அருமையான குரல், கதை கவிதைகளில் மிக மிக ஈடுபாடு. வினையோடு தானிணைந்து தெய்வீகக் குரலில் பாடுவாள்.
வெள்ளவத்தைக் கடற்கரையில் சிலவேளையில் தன் அக்காவின் குழந்தைகளுடன் காற்று வாங்கும்போது இவன் அப்போது விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந் தான். கிழவி வீட்டுக்கு வருவதும் மகனுக்குக் கல்யாணம் பேசிக் கொண்டிருந்ததும் இவனுக்குத் தெரியும்.
கிழவியின் மகன் திடீரென்று கொழும்புக்கு வந்ததும் மஞ்சுளா அக்காவுக்குக் கல்யாணம் நடந்ததும் ஏதோ கனவில் நடந்ததுபோலிருக்கிறது.
... .
தரன் இறக்கும் தறுவாயிலிருப்பதாகவும் மகனை
உடனடியாக வரும்படியாகச் சொல்லி தந்தியடித்ததாகவும்
மகன் வந்தவுடன் தான் பார்த்து வைத்திருந்த பெண்ணைக் கல்யாணம் செய்யாமற் திரும்பிப் போனால் தான் தற் கொலை செய்து கொள்ளப் போவதாகக் கிழவி பயமுறுத்திய தாகவும் இவன் கேள்விப் பட்டான்.
எதையும் கண்ணிராலும் கட்டளைகளாலும் நிறை வேற்றச் சில பெண்கள் தயங்கமாட்டார்கள் என்று இவன் அப்போதுதான் அறிந்து கொண்டான்.
கார் இன்னொரு ட்ரவிக் லைட்டின் சிவப்புலைட்டில் ஸ்தம்பித்து நின்றது. லண்டன் முழுவதும் கார்கள். கார் கள்லிருந்து புகை. கண்களைக் கசக்கும் குழந்தைகள்.
அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மஞ்சுளா அக்கா ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந் தாள். அவள் நீலக் கடலைக் கற்பனை செய்வாளா? நில வுடைந்து பிரதிபலிக்கும் கடலலைகள் அவன் கற்பனையில் விசியுமா? பசும் தரையும் பாய்ந்தோடும் நதிக்கரையும் அவள் பார்வைக்குத் தெரியுமா?

ராஜேஸ்வரி 35
மஞ்சுளா அக்காவின் பார்வை பரபரப்பானது. விளக்க, > மில்லாத, கலவரமடைந்த கண்கள்.
கலவரமடைந்த கண்களா?
அவன் காரைச் செலுத்தினான். குடும்பத்துக்குள் உறவுகளுக்குள் மறைந்து வைக்கப்படவேண்டிய ரகசியங் களை அவன் பகிரங்கப்படுத்தலாமா?
மஞ்சுளா அக்கா கல்யாணமாகியும் இரண்டுவருடங்கள் கொழும்பிலிருந்தாள், 83ம் கலவரத்தில் சிங்களப்பேரின வாதிகள் தமிழர்களை மிருகவேட்டையாடியபோது ஓடிய தமிழர்களில் கிழவியும் ஒருத்தி. மருமகளும் மாமியும் ஒரே யடியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். இவனும் வந்து சேர்ந்தான்.
மஞ்சுளா வின் கணவர் வேறு யாரோ பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருந்ததை மஞ்சுளா எப்படித் தாங்கியிருப் பாள் என்று அவனுக்குத் தெரியாது.
சிங்கள இனவாதம் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண் களின் பெண்மையைப் பலி கொண்டது, அவர்கள் அந்தக் கொடுமையை என்னென்று தாங்கியிருப்பார்கள்?
மஞ்சுளா அக்கா லண்டனுக்கு வந்தும் பழைய மாதிரியே கோயிலுக்கும் பிரார்த்தனைகளுக்கும் போய் வந்து கொண் டிருந்தாள்.
*"கோயிலுக்குள் வெறும் சிலைகள்
கோபுரத்தில் பெண் சிலைகள் பெரியவர்கள் தர்மவான்கள் பெண்களெல்லாம் பலியாடுகள்." மஞ்சுளா அக்கா சத்தம் போட்டுச் சிரித்தாள். அவன் சந்தியில் திரும்பினான்.

Page 20
36 நாளைக்கு இன்னொருத்தன்
கிழவி தன் மருமகளை ஒரு மனோவைத்திய டொக்ட ரிடம் கொண்டுபோவதாகச் சொன்னாள். - “இந்தப் பெண் கண்டபாட்டுக்குப் பாடத் தொடங்கி விட்டாளே” கிழவி பெருமூச்சு விட்டாள். ஆண்கள் பாட வெளிக்கிட்டால் அறிஞர்களாகிவிடுவார்கள், பெண்கள் பாடத்தொடங்கினால் பைத்தியப் பட்டமா?
மஞ்சுளா அக்கா பிரார்த்தனைகள், வேண்டுதல்கள். அவனைத் தொட்டுத் தாலிகட்டிய கணவனிடம் ஏற வில்லை. விவாகரத்து முயற்சிகள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது மஞ்சுளாவில் பெரிய அக்கறையாய் ஒரு மாமா முதலைக் கண்ணீர் வடித்தாரே!
**பட்டங்கள் படிப்புக்கள்
சட்டங்கள் சம்பிரதாயங்கள்
ஆணினத்தின் சொத்துக்கள்
அவர்கள் தொட்ட பெண்களெல்லாம்
குரங்கு தொட்ட பூமாலைகள்’’
கிழவியின் சொந்தக்கார ‘மாமா' மிகவும் பக்திமான். சத்தியபாபா பிரார்த்தனையை மிகப் பக்தியுடன் செய்பவர்.
இவர்களெல்லாம்:
"குட்டியாடு நனைந்ததென்று
குமிறியழும் ஓனாய்கள்" போனவருடம் மஞ்சுளா அக்காவிற்கு என்ன நடந்தது? அவன் காரை நிறுத்தினான்.
லண்டன் மத்தியில் ஏதோ ஒரு இடம், கூட்டம் நிரம்பி வழிகிறது. வீடற்ற ஒரு சிலர் வீதியருகில் படுத்திருக் கிறார்கள். ரோட்டெல்லாம் மாளிகை போன்ற கார்கள், குழந்தையுடன் கையேந்திப் பிச்சை எடுக்கும் சில ஆங்கிலப் பெண்கள். ஒரு நிமிடத்து ஓராயிரம் ஸ்ரேலிங் பவுண்களை ஊதியமாகப் பெற்று ஒய்யாரிகள்.

ராஜேஸ்வரி 37
ம்ே, பெண்கள், பெண்கள்.
மஞ்சுளா அக்கா ஏதோ தனக்குத்தானே சொல்லிச் சிரித்துக் கொண்டாள்.
கிழவி போன வருடம சுகமில்லாமல் ஆஸ்பத்திரியிற் தங்கவேண்டி வந்தது. மஞ்சுளா அக்கா அதன் பின் தானே "ஒருமாதிரி” யாக மாறிப்போனாள்!
பூட்டிவைத்த பெட்டகத்து நகைகளை வீட்டு விருந் தாளியாக வந்தவன் விளையாடிப் போய்விட்டானா?
பத்து வருட வாழாவெட்டித்தனத்துள்ளும் தன்னைக் காத்துக்கொண்ட பெருமையை காட்டு மிருகமொன்று களவாடி விட்டதா?
கிழவி உடல் சுகமாகி வீடு வந்தாள். மருமகள் 6. முடைந்து மூலையிலிருந்தாள்,
மனம் மட்டும்தானா? மஞ்சுளா உலகை வெறித்துப் பார்த்தாள். விவகாரத்தால் மிகவும் கலங்கிப் போயிருப்ப தாகக் கிழவி ஊரெல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்தாள். மஞ்சுளா தற்கொலை செய்து கொள்ள முயன்றதும் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் விவாகரத்தால் வந்த வினை என்று கிழவி ஒப்பாரி வைத்தாள். • ጎ
நல்லதோர் வீணையொன்று நாசமாகிவிட்டதை விதியின் தவறிற் தூக்கிப்போட்டாள் கிழவி. மஞ்சுளா வின் தமக்கை தலையிலடித்துக் கொண்டாள். கடவுளை நொந்தாள். தங்கைக்குத் தாலிப் பாக்கியமில்லை: என்று தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள்.
"மாமா' விருந்தாளியாய் வந்தபோதெல்லாம் மஞ்சுளா அக்கா வெறி வந்தமாதிரி வீறிட்டுக் கத்தியதை மற்றவர்கள் வேறுவிதமாக எடுத்துக் கொண்டார்கள்.
கணவரில் உள்ள கோபத்தில் உலகத்து ஆண்களை எல்லாம் மஞ்சுளா திட்டுவதாகக் கிழவி அழுதாள்.

Page 21
'O நாளைக்கு இன்னொருத்தன்
ஆண்களிடம் "மனிதமெங்கே? அவர்கள் என்ன மிருகங் ளைா? மஞ்சுளாவுச்குக் கேள்வி கேட்கத் தெரியவில்லை
அமைதியான அவள் சுபாவமெங்கே? அடக்கமான பாவ மெங்கே? தெய்வீக ஒலி எழும்பும் அந்த இனிய குரலுக்கு என்ன நடந்தது?
மாமா மஞ்சுளாவில் மிக மிகப் பரிதாபப்பட்டார் அளவுக்கு மீறிப் பெருத்த தன் மனைவியுடனும் அழகிய இரண்டு பெண்களுடனும் மிகவும் துக்கப்பட்டுக் கொண்டார். அவர் டொக்டர்சேர்ஜநிக்கு முன் காரை நிறுத்தினான். 4மஞ்சுளா அக்கா இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துச் சத்தம் போட்டதை ஒரு சிலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டார்கள். லண்டனில் ஏராளமான ஆசியப் பெண்களுக்குப் பைத்தியம் வருகிறது. அவர்களில் மஞ்சுளாவும் ஒருத்தி என்று சொல்லப்படலாம்.
அவள் எழும்பி ஓடினாலும். நீயும் உள்ளே வாயேன்" கிழவி இவனைப் பார்த்துக் கேட்டாள்.
"டொக்டர் சரியாகப் பார்த்துக் கொள்வாள்தானே" அவன் வேண்டாவெறுப்பாச் சொன்னான்.
நீண்ட நேரமாக அவர்கள் வரவில்லை. டொக்டர் என்ன சொல்லிக் கொண்டிருப்பாள். மஞ்சுளா அக்காவைப் பயித் தியக்கார ஆஸ்பததிரியில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பாளா?
ளப்புடன் தலையைச் சாய்த்துக்கொண்டான். ர்கள். நிறையச் சீதனம் ாக்குப்போக்குச் சொல்லி
அவள் கை அவனுக்குக் கல்யாணம் பேசுகிறா சரிவரும்வரைக்கும் அம்மா ஏதோ ச தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறாள்.
இவனுக்கும் ஒரு காலத்தில் ஒரு “மஞ்சுளா வருவாள். இவனும் ஒரு நாளைக்குத் தானம் போட்ட நடையை ஒரு

or groggsiivsmus 39
சங்கிலிக்குள் பிணைப்பானா? இசை பதித்த இழ்தகளில் விஷம் எடுத்துப் பூசுவானா?
மஞ்சுளா வெளியே வருகிறாள். பெரிய அட்டகாசமான சிரிப்பு. ஆண்டவனே நீயெங்கே.
*ஆழ்கடலில் அமிழ்ந்தாயோ -பெண்மை துடிப்பதெல்லாம் .பூகம்பமாய் வெடிக்காதோ
மஞ்சுளா சிரிக்கிறாள்.

Page 22
4. அவள் வந்து நிற்கிறாளாம்!
காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள். "அவள்” வந்து நிற்பதாக.
அறுந்த செருப்பை ஒரு விதமாக "அட்ஜஸ்ட்” பண்ணிப் போட்டவன். அவசரத்தில் ஒரேயடியாகச் செருப்பை அறுத்துவிட்டான், அழும் குழந்தைக்குப் பால் கொடுத்தபடி மனைவி சொல்கிறாள். "உங்களைக் கேட் டாள் சுசீலா, எப்படி இருக்கிறது உங்கள் எழுத்து என்று கேட்டாள்" இன்னும் அவளுக்கு நினைவிருக்கிறதா, தன் பரபரப்பை எக்காரணம் கொண்டும் மனைவி காணக்கூடாது என்ற தவிப்பு. அவன் சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்துத் தலை சீவிக்கொண்டான்.
ஒன்றிரண்டு நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொன் னேன்” தன் எழுத்தாளக் கணவனில் உள்ள பெருமை. மனைவியின் குரலில் தெரிகிறது.
அவன் மறுமொழியை அவள் எதிர்பார்த்துச் சொல்லாத படியால் அவனின் மெளனம் அசாதாரணமாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்குத் தெரியும் தன் மெளனம் அசாதாரணம் என்பது, தன்னை இன்னும் ஞாபகம் வைத் திருக்கிறாளாம்!
அவள் வந்து நிற்பது ஆச்சரியமில்லை. லண்டனில் வாழ்பவர்கள் ஒரு சில வருடங்களுக்கொருதரம் இலங்கை

ராஜேஸ்வரி 41
வந்து தங்களின் லண்டன் சீவியத்தைப் புழுகிப் போட்டுப் போவது புதினமில்லை. அவனைக் கேட்டது தான் ஆச்சரிய LDffas ĝ7(E5F535 ĝ5J.
அவனும் வந்திருக்கலாம். கணவன் குழந்தைகுட்டி களுடன் கை நிறையக் காசுடன் வந்திருக்கலாம். லண்டனால் வரும் ஒரு சிலர் போல் தெரிந்தும் தெரியாத மாதிரிப் போகலாம் இவர்களுடன் என்ன இருக்கிறது கதைப்பதற்கு என்பது போல் எடுத்தெறிந்து நடத்தலாம்.
ஆனால்,
“என்னைக் கேட்டாளாம், என் குழந்தையைப் பற்றிக் கேட்டாளாம். ஏதும் புத்தகம் எழுதியிருக்கிறேனா என்றும் கேட்டாளாம்'
சிந்தனையில் அவன் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாரிய தலை மயிரை வாரிக் கொண்டிருப்பதை மனைவி வியப்புடன பார்ப்பது கண்ணாடிக்குள்ளால் தெரிகிறது. மெல்லமாக முடித்துக் கொள்கிறான். மனைவியைக் கேட்க லாமா? எங்கே கண்டாள் சுசீலாவை, எப்படி இருக்கிறாள் சுசீலா என்று கேட்கலாமா?
மனைவி சந்தேகப் பட ஒன்றுமில்லை. அவன், அவன் மனைவி, சுசீலா என்னும் "அவள் எல்லோரும் ஒரு காலத்தில் ஒரு பாடசாலையில் படித்தவர்கள். சுற்றி வளைத்த சொந்தக்காரர்கள். இவன் எழுதத் தொடங்கிய காலத்தில் பாடசாலை வாசகர் வட்டத்தில் சுசீலாவும் ஒருத்தி, வாசிப்பது பொழுது போக்கு வெறும் வாசகியா?
அவன் தன் மனைவியிடம் 'அவளைப்" பற்றி ஒன்றும் கேட்காமல் சைக்கிளைத் தள்ளுகிறான். "ஆரோடும் கதைத்திராமல் வெள்ளெண்ண வாங்கோ’ மனைவி சரோஜா கத்துகிறாள். அவன் ஓம் என்று சொல்லும்போது
நா-3

Page 23
42 நாளைக்கு இன்னொருத்தன்
சைக்கிள் ஒழுங்கையில் இறங்கி விட்டது. கோயிலுக்குப் போகவேனுமாம் சரோஜா மணல் நிரம்பிய ஒழுங்கையில் சைக்கிள் சில்லுகள் புதைய அவன் உருட்டிக் கொண்டு செல்கிறான்.
எப்போது வந்தாளாம்? அவள் நினைவு உருள்கிறது மனத்தில், யாரிடமும் கேட்ட விருப்பமில்லை. இந்த ஒழுங் கையால் போய்க் கொண்டிருக்கிறான். ஒழுங்கை போய் ரோட்டில் முடிகிறது. தார் ரோட்டில் ஏறாமல் கிரவல் ரோட்டால் போனால் அவளின் வீட்டைத்தாண்டிப் 3utas லாம். எட்டு வருடங்களுக்கு முன் அடிக்கடி அப்படித்தான் போவான். 'அவளுக்குத்’ தெரியும் ஏன் அப்படிக் கிரவல் ரோட்டுப் பிராயணம் செய்கிறான் என்பது.
மழைக் காலங்களில் சேறும் சசதியுமாய் கால் புதைய அவன் வேட்டியை உயர்த்திக் கொண்டு கிரவல் ரோட்டில் விஜயம் செய்வதை வோழை மர இடுக்குகளால் அவள் கண்கள் எட்டிப் பார்க்கும்.
இருவரும் நடித்துக் கொள்வார்கள். ஒருவரை ஒருவர் கவனிக்க இல்லை என்று. 'தார் ரோட்டால் போகலாமே”* ஆச்சி சொன்னாள் அவன் வேட்டியெல்லாம் கிரவல் புரண் டிருப்பதைப் பார்த்து.
*கிரவல் ரோட்டில் பார்த்து நடக்கலாம். தார் ரோட்டில் பார்த்து நடக்க முதல் வண்டிலும் காரும் தண்ணியடிச்சிப் பழுதாக்கிப் போடும் ஆக்கிளை' கிழவி நம்பத்தக்கதாக அவன் சாட்டுச் சொல்வான்.
மழைகாலம் வருவது அவனுக்குப் பிடிக்காது. ஏனென் றால் சிலவேளை கிரவல் ரோட்டு ஆட்களையே அமிழ்த்தி விடும் அளவு சகதியாய் இருக்கும்"
இருந்தும் அவன் போவான். அவள் காத்திருப்பது
தெரியும் அடிக்கடி இல்லை என்றாலும் இருந்திருந்து ஒரு நாள் போவான். தன் எழுத்துக்களை எடுத்துக் கொண்டு

ராஜேஸ்வரி , 43
அவளிடம் காட்டப் போவான். அவனின் முதலாவது வாசகி
அவள். தூரத்து உறவு. பார்ப்போருக்கு அதிகம் சந்தேகம் இருக்காது என்பது அவன் நம்பிக்கை.
காரணங்கள் பல. ஏழ்மைகள், இல்லாமைகள் என்பன காரணங்கள். கதைகளில் வேண்டுமனால் ஏழை வேலைக் காரனை பணம்படைத்த ராஜகுமாரி காதலுக்காகக் கல்யாணம் செய்யலாம். இலங்கை தமிழர்களுக்கிடையில் அப்படி நடக்குமா என்பது அவனால் நம்ப முடியாதது.
அவன் சைக்கிளை தார் ரோட்டில் திருப்புகிறான். நேர் எதிரே கிரவல் ரோட்டுத் தெரிகிறது. அவன் ஒரு காலத்தில் படித்த, இப்போது படிப்பிக்கும் பாடசாலை நேரே இருக் கிறது அந்தக் கிரவல் ரேரட்டின் முடிவில்.
ஆனால் அவன் தார் ரோட்டில் போகிறான். சுற்றி வளைத்த தூரம். ஏன் அவளைக் கண்டாலும் என்ற சந்தேகமா? ܀ ; :
அவன் சைக்கிளில் ஏறியிருந்து மிதிக்கிறான். எவ்வளவு காலம் நிற்பாளாம் ஊரில்?
எங்களை எல்லாம் சொந்தம் என்று நினைத்து ஏன் வந்து பார்க்கப்போகிறாள்? நாங்கள் தான் பார்க்கப்போக வேண்டும்!
அவனுக்கு அந்த யோசனை திருப்தி தருவதாகஇல்லை. அவன் சைக்கிளைக் காருக்கு வழிவிட வெட்டிய விதத்தி லிருந்து மனதில் உறைக்கிறது. வசதியானவர்களுக்கு நான் ஏன் வளைந்து கொடுக்க வேண்டும்? சொந்தம் என்ற உறவிலா பழகினோம்?
மெல்லிய பெருமூச்சுடன் ரோட்டின் வளைவில் திரும்பு கிறான் அவனின் முதற் கவிதையை அவள் படித்தபோது அவளது கண்களில் இருந்த ஆவல், கள்ளம் கபடமற்ற முகத்தில் தோன்றிய உணர்ச்சிகள். விபரிக்க முடியாதவை

Page 24
胜4 நாளைக்கு இன்னொருத்தன்
யாரைப் பார்த்து எழுதினிர்கள்" அவள் குறும்பாகக் கேட்டாள். உன்னைப் பார்த்து என்று சொல்வானோ என்ற ar Lu Sabib!
"கலைஞர்கள் கற்பனையில் யாரைப் படம் பிடிக்கிறார் கள் என்பது பெரிய ரகசியம்" அவன் வார்த்தைகளால் தன் சங்கடத்தை மறைத்துக் கொண்டான்.
விடிந்தவுடன் நினைக்கின்றேன். விண்வெளியில் தேடுகின்றேன்.”
சலங்கை ஒலி தெருவில் கேட்டால் அவள் சங்கீதம் தான் கேட்கும்.
மென்விழிகள் மீனாக, பொன் மொழிகள் இசையாக என் அருகில் அவள் இருந்தால் ஈடென்ன? நான் ஏழை!
அவள்,
என்னவள ய் இருப்பாளோ இனிய கதை சொல் வாளே?’
அவன் முதல் கவிதை. இருவருக்கும் தெரியும் ஏன் எழுதடபட்டது என்று.
இப்படியெல்லாம் எழுதினால் உங்களுக்கு யாரோ பெட்டை இருக்கினம் எண்டு சொல்லப்போகினம்’
கவிதை வாசித்த கண்கள் நாணத்தில் நனைய அவள் அவனைப் பார்க்கமால் சொன்னாள்.
பேப்பருக்கு அனுப்பமாட்டேன். அவர்கள போட மாட் டார்கள்." அவன் உறுதியளித்தான் மறைமுகமாக அந்தக் கவிதை இருவருக்கும் ரகசியமாய்எழுதப்பட்டதை உணர்த்த.
இன்னும் எத்தனையோ, எத்தனையோ?
கொஞ்சக் காலத்துக்கு முன் ஒரு முதிர்ந்த எழுந்தாளர் கேட்டார் "வாழ்கையில் என்ன நிகழ்ச்சி உங்களை எழுதப்

ராஜேஸ்வரி 45
பண்ணியது"? அவனுக்கு மறுமொழி சொல்லத் தெரிய வில்லை. வயிற்றை வாட்டும் பட்டினியில் முகட்டைப் பார்த்துக் கொண்டு படுக்கும் போது பணக்காரர்கள் அழிய வேண்டும் என்ற வசை மாரிதான் முதலில் அவனால் உண்டாக்கப்பட்ட வசனக் கோர்வை என்று சொன்னால் அவர் விளங்கிக் கொள்வார் என்று அவன் நம்பவில்லை.
கேட்டவர் பிரசித்தி பெற்ற எழுத்தாளர், ஆகாயத்தைப் பரிர்த்து நிர்மலமான நீல வானத்தில் தன் அடுத்த படைப் புக்கு ஆக்கம் தேடுபவர்.
' அவர் அனுபவித்திருப்பாரா, இரண்டு தேரப் பசியை
அவர் பத்து வயதாய் இருக்கும் போது?
மூத்திரம் பெய்யப் போய் வீட்டுக்குப் பின் சுவரில் எழுதி யிருப்பாரா? இறைவன் என்று யாருமில்லை. ஏழைகள்தான் உலகமெல்லாம். எங்கும் “அவன்’ இருப்பானேல் என் பசியைத் தெரியானோ?”
அம்மா காற்சட்டையைக் கழட்டிவிட்டு குண்டியில் ரெண்டு வைத்தாள். சுவரில் கரியால் எழுதிய குற்றத்திற்கு.
அதன் பிறகு?
இளமை, அதன் துரண்டுதல்கள். உணர்ச்சில் குவியல்கள்,
இல்லாமை இல்லாமைகள்,
இரண்டுவிதமான இல்லாமை. வறுமை என்ற இல்லாமை, தான விரும்பும் பெண்ணுடன் பழகமுடியாத வறுமையின் மறுபக்கம் என்ற கொடிய இல்லாமை.
அவன் எழுதத் தொடங்கியபோது யாரும் பொருட் அடுத்தவில்லை பெரிதாக. விசர் அலட்டல்கள். அவர்களுக்கு. அவர்கள் சிவாஜிகணேசனின் சிம்மக்குரல் கேட்க செக்கண்ட் ஷோவுக்குப் போவார்கள். இவனின் புலம்பல்கள் பொருளற்

Page 25
6 நாளைக்கு இன்னொருத்தன்
றவை அவர்களைப் பொறுத்த வரையில். அவள் அப்படி
ós son sav.
அப்படியில்லாமல் இருந்ததற்கு அவன் எழுத்து மட்டு: மல்ல அவனின் ஏழ்மையும் தான் காரணம் என்பதை அவளின் குடும்பம் மறை முகமாகக் காட்டிக்கொண்டபோது அவனால் தாங்கமுடியாமல் இருந்தது. தங்களுக்கு ஆபத். தில்லாதவரை தங்கள் வர்க்கத்திற்கு அவன் வருகை பாதிப் பளிக்காது என்று அவர்கள் நினைத்ததை அவள் மறைமுக மாகச் சோன்னாள்.
அந்த வீட்டில் தன் வருகை என்னவிதமாகப் பொருட் படுத்தப்படுகிறது என்பதையறிய ஒருநாள் சொன்னான்.
எழுத்தைச் சாட்டிக் கொண்டு இஞ்ச வாறதைப்பற்றி ஆக்கள் என்னவும் நினைப்பினம்" ஆட்கள் நினைக்கிறார் களோ இல்லையோ அப்படி அவன் நினைத்துக் கொள் வதில் சந்தோ சப்படுகிறான் என்பதைத் தெரியாத அவள் அவனை ஏறிட்டுப்பார்த்து "ஆக்கள் அப்படிக் கதையா யினம். உங்களுக்கு ஒரு மாதிரியாய் இருந்தா வரா தேங்கோ” என்றாள். அவனுக்குப் பகீரென்றது. அவள் பார்வை அவனின் கசங்கிய உடுப்பிலிருந்தது. அப்படித்தான் இல்லாமைகளையும் இயலாமைகளையும் பறை சாற்றிக், கொள்ள அவன் இளமனம் மறுத்தது.
அவன் போகவில்லை. கல்கி, கலைமகள் கதைகளைப் பற்றி அவளிடம்
கதைக்கப் போகவில்லை.
அவர்களிடம் புத்தகங்கள் வாங்கி ஒசியில் படிக்காமல் (குந்து கொஞ்ச காலம் வாசகசாலைக்குப் போனான்.
சும்மா வாசித்தெறியாமல் சில கதைகளும் கருத்துக்களும் மனதில் உறைக்கும் போது அதுபற்றி அவளிடம் கதைக்க வேண்டும் போல் இருக்கும். 1

Tr Gagsîusuf 47
அவளுக்கு இலக்கியத்தில் அக்கறையுண்டு என்பது அவன் அபிப்பிராயம். அப்படி நினைக்கப் பண்ணியிருந்தாள் அவள். ஆனாலும் சில மாதங்கள் போகவில்லை.
ஒருநாள் கிரவல் ரோட்டில் போகும் போது அவள் தட்டு வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்தாள்.
மெல்லிய சிரிப்பு அவள் முகத்தில் படர்ந்திருந்தது "என்ன வழி மறந்து போச்சா' என்றாள்.
அவன் தயங்கினான்.
ஆச்சி கேட்டாள் உங்களைக்காணயில்ல எண்டு' அவள் நெளிந்து கொண்டு சொன்னாள். கிழவி கடைசிவரைக்கும் அவன் பெயரைச் சொல்லி யிருக்க மாட்டாள்.
செருக்குப் பிடித்த கிழவி. கிழவியின் தாயின் வழிதான் இவனின் தாயும். எக்காரணம் கொண்டும் அந்த உறவை ஞாபகப் படுத்தவில்லை. படுத்தவும் மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு.
ஆனாலும் போனான் எலும்பின் பின்னால் நாய் போவது போலவா? இளமையின் எரியும் நெருப்பென்ற உணர்ச்சிக்கு அவளின் சிரிப்பும், நெளிப்பும், எண்ணெய் வார்த்தன.
தனிமையில் தன் சுய உணர்வோடு நினைத்தபோது தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான்.
தன் ஏழ்மையின் போர்வையில் அவள் இவனுடன் பழகுவது தெரியும். அவள் பயப்படத் தேவையில்லை, ‘இவனிடம் ' ஏழையின் உணர்ச்சியைத் தட்டி விட்டுத்தான்
மகிழ்வது அவளுக்குப் பொழுது போக்காக இருககுமா என்று நினைத்த போது பெண் வர்க்கத்தில் கோபம் வந்தது.

Page 26
4's நாளைக்கு இன்னொருத்தன்
அவன் ஆசிரியர் பீயிற்சிக் கல்லூரிக்குப் போய்விட்டான், இளம் மலர்க் கொத்துக்கள் குலுங்குவது போல் சக மாணவிகள் சிரிக்கும் போது சுசீலாவின் ஞாபகம் அடிமனத் கின் இடைவெளியால் எட்டிப் பார்ப்பதுண்டு.
விடுமுறைகளில் சாட்டுக்கு ஒன்றிரண்டு தரம் எட்டிப் பார்த்தான். தன் பிரிவு அவள் மனதைப் பாதித்திருக்கிறதா என்று பார்க்கத் துடித்தான்.
அவள் காட்டிக் கொள்ளவேயில்லை.
ஒன்றிரண்டு கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்த போது தான் படித்ததாகச் சொல்வாள்,
ஒசியில் பேப்பர் படிக்காமல் ஒருகாலத்தில் தான் நினைத்த புத்தகங்களைத் தானே வாங்கு வசதி கிடைத்த போதும் அவன் ஏதோ சாட்டுக்கு அவள் வீட்டுக்குப் போவான். அவளுக்கு வேலைக்குப் போகும் அத்தியாவசியம் இல்லை. வீட்டிலிருப்பாள். சமையற்கலை. தையற்கலை பழகிக் கொண்டிருந்தாள்.
புருஷனை எதிர்பார்க்கும் மத்திய வர்க்கத்து எதிர் பார்ப்புகள். அவளுக்கு மாப்பிள்ளை பேசுவதாக வீட்டில் கதைக்துக் கொண்டார்கள்.
ஏதோ சுண்டியிழுத்தது போல் இருந்தது மனத்தை.
லண்டன் மாப்பிள்ளை என்று சொல்லிக் கொண்
டார்கள். தன் கதைகள் வந்த பத்திரிகைளை அனுப்பினால் படிப்பாளா லண்டனில் என்று யோசித்துப் பாத்தான்.
கொட்டும் பனியையும் கொடிய குளிரையும் பற்றித் நனக்கு எழுதுவாளா என்று நினைத்துப் பார்த்தான்.
அந்த அளவுக்குத் தங்கள் உறவு நெருக்கமில்லை என்று மனம் சொல்லியது. அப்படி அவள் காட்டிக் கொண்ட தாகவுமில்லை. நேரம் கிடைத்த போது ஒரு நாள் அவளைப் பார்க்க. 、皺 蠍

ராஜேஸ்வரி {4,9
ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தாள். திருமணப் பதிவு நடந்துவிட்டது. கெதியில் லண்டன் போகிறாளாம்.
வீட்டில் யாருமில்லை. வெள்ளிக்கிழமை எல்லோரும் கோவிலுக்குப் போய் விட்டார்கள் போலும்.
கிழவி கூட இல்லை. நாய்க்குக் கயிறு போட்டாற் போல் அவள் கையில மோதிரம் ஏறிவிட்டபின் "காவல்" காக்கத் தேவையில்லை என்ற நினைப்போ அவர்களுக்கு. யாரும் இல்லை வீட்டில்
அவள் ஸ்கேட்டும் பிளவுசும் போட்டிருந்தாள் லண்டன் உடுப்புகள்! இப்போழுதே மாறத் தொடங்கி ‘விட்டாள். பெண் வேட்டையாட வந்த லண்டன் மாப்பிள்ளை வாங்கி வந்திருக்கலாம் என்ன விலை கொடுத்து வாங்கி யிருப்பார்கள்?
சட்டப்படி அவள் யாரோ ஒருவனின் மனைவி! அவனுக் குத் தர்ம சங்கடமாக இருந்தது அவனையறியாமல், திருமணத்திற்குத் தன் வாழ்த்துக்களை சொல்லிக் கொண் டான் எத்தனையோ "சாட்டுக்களை" வைத்துக் கொண்டு அவளைப் பார்க்க வந்ததும் பழக வந்ததும் குழந்தைத் தன மாகவும் அவலத் தனமாகவும் பட்டது. நிராசையான உணர்வுகளுக்கு நினைவுத்தீன் போட்டமாதிரி இருந்தது. "என்னை ஞாபகம் இருக்குமா உங்களுக்கு" அவள் கேட் டாள் அவனுக்கு அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க விருப்பமில்லை.
ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை. அவளுடைய குரலும் பார்வையும் நடத்தையும் வித்தியாச மாக இருப்பதாகப் பட்டது
அசட்டுத் தனமாகச் சிரித்தான் அவள் கேள்விக்கு. -அப்படி நடக்க வேண்டிய சந்தர்ப்பத்துக்குத் தன்னை

Page 27
50 நாளைக்கு இன்னொருத்தன்
ஆளாக்கிய குற்றத்திற்காகத் தன்னையே கோபித்து மனத்தில். 'தமிழ்ப் பேப்பர்கள் புத்தகங்கள் கிடைக்குமோ தெரியாது லண்டனில்" அவள் பேச்சைத் தொடர்ந்து கொண்திருந்தாள். தமிழ்ப் புத்தகம் தேடிப்பார்க்கும் அள வுக்கு இருப்பாளா?
ஒரு கொஞ்ச நாளில் கொண்டையையும் வெட்டிக் குரலையும் மாற்றிக் கொள்வீர்கள் என்று சொல்ல நினைத் தான்.
அப்படிச் சொல்வதை அவள் வேடிக்கையாக நினைத்துச் சிரிப்பாள். வேறு என்னென்று எதிர்பார்ப்பது?
'தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்க வழி செய்துவிட்டால் கிடைக்கும்”அவன் சொன்னான்.
"நீங்கள் எழுத மாட்டீர்களா? அனுப்ப மாட்டீர்களா?” அவள் குரல் கலங்கியதாக இருந்தது. அவன் திடுக்கிட்டான். நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்கள் கலங்கியிருந்தன. விருப்பமில்லாமல் கல்யாணம் செய்தார்கள? லண்டன் மாப்பிள்ளைக்கு தவம் கிடைக்கிறார்கள் பெண்கள். இவள் என்னடா என்றால்?
'மாப்பிள்ளை எப்படி” என்றான் பேச்சை மாற்ற. அவள் நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள் "நீங்கள் ஏன் பணக்காரனாக இருக்கவில்லை. இருந்திருந்தால்."
அவள் கண்ணிர் வழிவதை அவன் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
'அடிக்கடி எழுதுங்கள்" அவள், அவன் எதிர்பாராத விதத்தில், அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

*ராஜேஸ்வரி 51
"நீங்கள் வசதியான ஆளாய் * இருந்தால்." ஏன்?" இப்படிச் சொல்கிறாள்?
அவள் அழுகை அவனுக்கு ஏனோ பரிதாபமாக இருக்க வில்லை. அவள் விரும்பியிருந்தால்..? அவளுடைய அழுகை, துடிப்பு எல்லாம் ஏதோ நிறைவேறாத ஒன்றை நிலைப்படுத்தத் துடிக்கும் போதுஉண்டாகும் நடவடிக்கை யின் அறிகுறிகளாக இருந்தன.
அவள் விரும்பியிருந்தால். அவன் திருப்பித் திருப்தி யோசித்தான்.
அவன் அவ்வளவு எழையில்லை ஒரு மனைவியை சில குழந்தைகளை வைத்துக் காப்பாற்ற அவனின் ஆசிரியர் சம்பளம் போதாமல் இருக்கப்போவதில்லை. காரும் வீடும் வாங்க முடியாதுதான். இலங்கையில் எத்தனையோ ஆயிரம் ஆசிரியர்கள் வாழவில்லையா? ஒரு சில நூறு ரூபாயில்? இவளுக்கு அதெல்லாம் வசதியற்ற தன்மையா? அவனுக்கு அவள் அவனின் “வசதியின்மை" பற்றிக் கதைத்தது கோபம் வந்தது. ஏழ்மையைக் காட்டி என்னைத் தாழ்த்துகிறாள்.
ஏழ்மையாம் ஏழ்மை? இவளுக்கு சந்தோஷம் உண்டாக் கவா என் எழுத்து?
யாருக்கு ஏழ்மையும் இல்லாமையும்? அவளுக்கா? எனக்கா? மன உணர்வுகளுக்குத் தீனி கேட்டுத் திரியும் அவள் போன்ற ஆட்களும் அவள் வர்க்க மும். என்னையும் என் இல்லாமையும் அவலமாகக் காட்டி.என் எழுத்தைச் சாட்டாக வைத்து.
அவனுக்குக் கோபம் வந்தது. அவனை, அவன் எழுத்தை, அவன் தொடர்பை அவள் இழந்து கொண்டிருக்கும் 'சுகங்களுக்கு'ப் பாவிக்கப்படு வதை அவன் வெறுத்தான் ஏன் பழகினேன் என்று திட்டிக்

Page 28
52 நாளைக்கு இன்னொருத்தன்
*கொண்டு வந்தான் அவளுக்காகக் கவிதை எழுதியது
விசர்த் தனமாகவும் தெரிந்தது
e оа
அவன் மனைவி கோயிலுக்கு வெளிக்கிட்டுக் கொண் டிருந்தாள். அவன் எழுதிக் கொண்டிருந்தான்.
"சுசீலா ஏதும் புத்தகம் தரலாமோ என்று கேட்ட" ஸ்" மனைவிக்கு என்ன விசரா இப்படி அவளுக்கு விழுந்தடித்து உபசாரம் செய்ய? அல்லது லண்டன்காார் தன் கணவனை ஒரு எழுத்தாளன் என்று மதித்து அவன் எழுத்துக்களைக்
கேட்கிறார்கள் என்ற கிளுகிளுப்பா!
அவனுக்குக் கோபம் வருகிறது அவளின் அறியாமையை யும் பரபரப்பையும் கண்டு மறுமொழி சொல்லமல் எழுதிக் கொண்டிருக்கிறான்.
மனைவிக்குத் தெரியும் அவனின் மெளனத்தின் காரணம் எழுத்தென்று. பேசாமல் நிற்கிறாள் கொஞ்ச நேரம்.
அவள் போய்விட்டாள் என்று தலை நிமிர அவள் நிற்பது தெரிகிறது. சரோஜாவின் பார்வை அப்பாவித்தன மாக இருக்கிறது.
கேட்டுதா போற வழியில் குடுத்திட்டுப் போறான் சுசீலாவுக்கு. உங்கட புத்தகம் ஒன்றிரண்டைத் தாங்கோ’
அவன் பேதமை தவழும் மனைவியின் முகத்தைப் பார்க்கின்றான். ஒன்றிரண்டு சொற்கள் அவன் வாயி லிருந்து வருகின்றன.
‘அவர்கள் விரும்பத்தக்கதாக நான் ஒன்றும் எழுத வில்லை." . ,
1992

5. உஷா ஓடிவிட்டாள்!
2-ஷா சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.
மூலைச் சீட்டில்’ முடங்கிக்கொண்டு குறட்டைவிடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர் கேள்விக் குறியுடன் அவளைப் பார்க்கிறான். எங்கே இறங்கப் போகிறாய் என்று அவன் கேட்டால் அவளால் பதில் சொல்ல முடியாது. அவளுக்கே தெரியாது 6TIGs இறங்குவது என்று: 人
அவள் இப்போது இறங்கவில்லை என்று நிச்சயப் படுத்திக் கொண்ட கொண்டக்டர் மணியடிக்க புறப்படுகிறது.
அடுத்த ஸ்டொப்பில் ஒருவரும் ஏறாமல் விட்டால் அந்த மூலைக் கிழவனும் இறங்கிவிட்டால் அவள் தனியாக இருந்தால் அந்த நீக்ரோ கொண்டக்டர் வந்து கேட்கத்தான் போகிறான்.
Լյsh)
சன நெரிசலில் அவளை ஒருத்தரும் கவனிக்கவில்லை பயத்துடன் பரபரப்புடன் அவளின் கலங்கிய கண்கள் போராடுவதை யாரும் அக்கறைப்படுத்தவில்லை. இப்போது அவள் கிட்டத்தட்டத் தனியாளாகிவிட்டாள். அவள் 'நினைத்தது சரி. லண்டனில் கிழக்கில் தொடங்கி வடக்கு வரை போகும் பஸ் அது. ஐம்பத்து மூன்றாம் நம்பர்

Page 29
b4 நாளைக்கு இன்னொருத்தன்
பஸ்ஸில் எப்போதும் சன நெருக்கமாய் இருக்கும். ஏனென்றால் லண்டனில் உல்லாச புரியான பிக்கடிலிக்குப் படம் பார்க்க வருபவர்கள், "வேறு காரணங்களால் வருப வர்கள், ஒக்ஸ்போர்ட் வீதியில் 4F Tuor sör வாங்க வருபவர்கள். இந்த இரவில் படம் பார்க்க வருபவர்களைத் தவிர யார் வருவார்கள்?
உஷா இறங்கிக் கொள்கிறாள். இவ்வளவும் பஸ்ஸில் இருக்கும்போது சூடாக இருந்தது. இப்போது ஊசி முனைகள் போன்று குளிர்காற்றின் நாக்குகள் உடம்பைத் துளைக்கின்றன. உஷாவின் கண்களுக்கு முன்னால் பிக்கடிலி சேர்க்கஸ் கார்னிவல் காட்சியாகத் தெரிகிறது. பகட்டான விளக்குகள், படாடோபமான கடைகள், சிலை போல் திரியும் அழகிய பெண்கள் ஏதேதோ அர்த்தத்தில் அவர்களை எடைபோடும் ஆண்கள்! இத்தனையும் புதிது உஷாவுக்கு. லண்டனில் பன்னிரண்டு வருடமாய் வளர்ந்தும் விக்கடிலி சேர்க்கஸ் புதிது அவளுக்கு. தாய் ஒன்றிரண்டு தரம் ஒக்ஸ்போர்ட், றீஜன்ட் வீதி கடைகளுக்குக் கூட்டி வந்திருக்கிறாள். பிக்கடிலிப் பக்கம் அதிகம் வந்ததில்லை. றீஜன்ட் பார்க் மிருகக்காட்சிச் சாலைக்குப் போகும்போது ஐம்பத்து மூன்றாம் பஸ்ஸின் ஜன்னல்களால் எட்டிப்பார்த்து ரசித்த பிக்கடிலி சேர்க்கஸ் அவள் முன்னால் விரிந்து கிடக்கிறது.
எங்கே போவது?
யாரைத் தெரியும் அவளுக்கு?
யாரைக் கேட்கலாம். பெணகள் விடுதி எங்கேயாவது இருக்கிறதா என்று?
போலீஸ்காரர் ஒருவர் உஷாவை உற்றுப் பார்க்கிறார் தாண்டிச் செல்லும் போது, கேட்கலாமா? உதவி கேட்கலாமா? உஷாவுக்குப் பகீரென்றது. பொலீஸ் காரனைக் கேட்பதாவது? முதல் வேலையாகத் தன் தாய்,

ராஜேஸ்வரி , 55
தகப்பனுக்கு அறிவிப்பதாக இருக்கும் பொலீஸ்காரரின் vis-GDD
தாய் தகப்பன்! அவர்களின் நினைவு அவளைத் தாக்கு கிறது. குளிர்காற்றால் மட்டுமல்ல தாயின் நினைவு வந்ததும் கண்களில் நீர் வடிகிறது. கடந்த இரண்டு மூன்று நாள்களாக அழுது அழுது அவள் கண்களில் நீர் வற்றியிருந் தாலும் இப்போது தாயை நினைத்துக் கொண்டதும் மடை திறந்தாற்போல் வருகிறது.
கோட் கைகுள்ளால் எடுத்த பேப்பர் கைலேஞ்சியால் கண்ணைத் துடைத்து மூக்கையுறுஞ்சிக் கொள்கிறாள். பேப்பர் கைலேஞ்சியைக் குப்பை வாளியில் எறியத் திரும்பிய போது தன்னைத் தாண்டிச் சென்ற பொலீஸ்காரர் "பீட்டர் லோர்ட்" கடைக்கு முன்னால் நின்று கொண்டு தன்னை யுற்றுப் பார்ப்பது தெரிகிறது.
எங்கே போவது? மீண்டும் அழுகை வருகிறது. உஷா வுக்கு? அவள் இங்கிலிஸ் சினேகிதிகள் இந்த வயதில் தனியாக ஐரோப்பிய நகரங்களுக்கு உல்லாசப் பிரயாணம் போகிறார்கள். உஷா தன் பெற்றோர்களையோ சகோதரர் களையோ விட்டு இதுவரை எங்கும் போக அனுமதிக்கப்பட வில்லை. தாயின் நிழலில் நடந்தவள்.
இன்று மெல்லக் கொஞ்சத் தூரம் நடந்தாள். கண்கள் எங்கும் சுற்றி அலைந்தன. ஏதும் பெண்கள் விடுதியின் பேரைத் தேடின அவளின் சோகம் நிறைந்த கண்கள்.
கடை வீதியில், சினிமாத் தியேட்டர் நிறைந்த பகுதி களில் எந்த விடுதியும் இருக்காது என்பது விளங்க கொஞ்ச தூர நடையும் துயர் படிந்த சில நிமிடங்களும் எடுத்தன அவளுக்கு. திருவிழாக் கோலத்தில் இருக்கும் பிக்கடிலிச் சேர்க்கஸின் மூலைகளில் தெரியும் சந்து பொந்து ரோட்டு களைப் பார்க்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. இவள் தனியாகத் திரிவதை உப்பு மூட்டைகள் போன்ற சில உருப்படி உருக்குலைந்த மனிதர்கள் உற்றுப் பார்ப்பதைப்

Page 30
56. நாளைக்கு இன்னொருத்தன்
பார்க்க அவளுக்கு உடம்பை என்னவோ செய்கிறது. ஜன்ன லுக்கப்பால் உலகத்தைப் பார்க்கத் தெரியாதவள் உஷா?
வீட்டில் என்ன செய்வார்கள்?
அவள் வீட்டை விட்டு 'ஓடிவிட்டாள்' என்ற விசயம் இவ்வளவும் தெரிந்திருக்குமா?
அம்மா ராதாகிருஷ்ணன் படத்துக்கு முன்னால் விழுந்து கண்ணிரும் கம்பலையுமாக அழுவாள்.
தகப்பன் கோபத்தில் பெரியதம்பி ரமேஷைப் போட்டு அடித்துக் கொண்டிருப்பாரா!
சின்னத்தம்பி தினேஷ் வீட்டில் நடக்கும் ரகளையைப் பார்த்து விடாமல் ஒப்பாரி வைப்பான். அவனுக்கு இப்போது தான் ஆறு வயது. ஆனாலும் குழந்தைபோல் ஒப்பாரி வைப்பான்.
'தினேஷ் உன்னை எப்படியடா பிரிந்து இருப்பேன்’’’ உஷா வாய்விட்டுச் சொல்லத் துடிக்கிறாள். தம்பி தினேஷ் பிறந்து கொஞ்ச மணித்தியாலங்களில் தாய் உயிருக்குப் போராடினாள். அந்த நோய் குணமடைய மாதக்கணக்கில் எடுத்தன. அந்த நாள்களில் பதினொரு வயதில் தாயைப் போல பராமரித்தாள் உஷா தினேவுை. எப்படிப் பால் தயாரிப்பது என்று தகப்பனுடன் சேர்ந்து பால் தயாரித்து அழும் குழந்தையை ஆதரித்து °தினேஷ், உங்களை எல்லாம் விட்டுப் பிரிய எனக்கேன் இந்த விதி உஷாவின் நடை தளர்கிறது. ஒரு நோக்கில்லாமல் எத்தனை தூரம், அலைவது?
கண்ணுக்கு முன்னால் பிடிக்கடிலி சேர்க்கஸ் அண்டர் கிரவுண்ட் ஸ்ரேசன் தெரிகிறது
போகலாமா? அண்டர்கிரவுண்ட் வாசல் இருள் குகை யாய்த் தெரிகிறது.

ராஜேஸ்வரி 5曾
* ஒன்று குளிர் குறைய இருக்கும். அடுத்தது லண்டனுக்கு வரும் பெண்களிடம் ஏதும் பெண்கள் விடுதி விலாசம் தெரியுமா என்று விசாரிக்கலாம். இப்படித் திரிந்துகொண் டிருந்தால் தகப்பனார் தேடி வந்தால் சிலவேளை அவர் கண்களில் அகப்படலாம் அகப்பட்டால் அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் அடி அடி என்று அடித்துவிட்டு இன்னும் இரண்டு நாள்களில் நடக்கப் போகும் அவள் கல்யாணத்தை நடத்திவிடலாம். 6 : * V
அவளின் கல்யாணம்!
போகிழமைதான் உஷாவைப் பெண் பார்த்தார்கள். மாப்பிள்ளை இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந் தார்.
தாய் கடந்த மூன்று வருடங்களாக உஷாவிடம் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறாள். உஷா எப்படி ஒரு உயர்ந்த இந்துப் பெண்ணாக இருக்கவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக உஷா மெளனத்துடன் கேட்பாள், அவளின் இங்கிலீஸ் சினேகிதிபோல் உஷா "வாயாடி’ அல்ல. தாங்கள் குழந்தைகளுக்காகத்தான் எல்லாம் செய்வ தாகத் தாயும் தகப்பனும் சொல்லியிருக்கிறார்கள். தகப்பன் இரவு, பகல் என்று பாராமல் உழைத்து லண்டனில் இரண்டு வீடு வாங்கி இருக்கிறார். தாய் தகப்பன் தங்களுக்கு “சரியா னவைதான்" செய்து கொண்டிருப்பதாகச் சொல்லியிருக் கிறார்கள். உஷா தாயையோ தந்தையையோ எதிர்த்து இதுவரை. எதுவும் கதைத்ததில்லை. சினேகிதிகள் பாடசாலையில் கதைத்த "ஆங்கில பாட்டுக்காரரின் நிகழ்ச் சியைப் பார்க்க ஆசை என்று சொல்லி உஷாவின் தாயின் தண்களில் நீர் வந்துவிட்டது. இப்படிக் கேவலமான செய்திகள் பார்த்துத்தான் வெள்ளைக்காரர்கள் இப்படிச் சீரழிகிறார்கள் என்று மகளின் தலைக்கு எண்ண்ெய் தடவும் போது உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னாள். உஷா
நா -4

Page 31
8 நாளைக்கு இன்னொருத்தன்
முறுவார்த்தை சொல்லவில்லை, வால்ட் டிஸ்னியின் "மிக்கி ழவுஸ்" படங்கள் போன்ற கார்ட்டூன் சித்திரப் படங்களை தம்பிகளுடன் இருந்து பார்க்க அப்பா விடுவார். செய்தி தளும் சில வேளை பார்ப்பதுண்டு. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இரவில் தாய் நீண்ட நேரம் சொல்லியிருக் கிறாள்.
வெளியில் பணி பெய்யும் அந்த மெல்லிய ஓசையில் தாயின் உபதேசம் உஷாவைத் தாலாட்டிக் கொண்டு நித்திரையாகும் தாங்கள் தங்கள் தாயுடன் ஒரு அறையில் படுத்ததாக நினைவு தெரியவில்லை என்று வெள்ளைக்கார சினேகிதிகள் சொன்னபோது அவள் ஆச்சரி யப்பட்டாள். சில வேளைகளில் தனக்கும் ஒரு தனியறை வேணும் என்று கேட்க ஆசையாக இருக்கும். ஆனால் வீடு நிறைய ஆட்கள் வாடகைக்கு இருக்கிறார்கள். அவர்களால் நல்ல உழைப்பு. அப்படி உழைத்துத்தான் பிள்ளைகளை நல்ல நிலையில் வைத்திருப்பதாக அப்பா சொன்னார். வாழ்க்கையில் என்றைக்காவது தனக்கொரு தனியறை கிடைக்குமா என்று உஷாவுக்குத் தெரியாது. கல்யாணம் முடித்துக் கணவருடன், பின் பிள்ளைகள் பிறந்தால் அவர் களுடன். இப்போது உஷாவுக்குக் கல்யாணம் பேசி முடிவு கட்டிவிட்டார்களாம். போன கிழமைதான் உஷாவுக்குச் சொன்னார்கள். அவள் எதிர்த்து ஒன்றும் பேசவில்லை, அழகாக உடுத்துக்கொண்டு மாப்பிள்ளை பார்த்தாள் உஷா. டிப்போய்த் தனியாக இருந்து அழவேண்டும்போல் இருந்தது. அவளுக்கு மாப்பிள்ளையைக் கண்டவுடன் முறுக்கிய மீசையும் முண்டாசுக் கட்டுமாக அமர்ந்திருந்தான் ராம்சிங். பெரிய பணக்காரர்களிடம் இந்தியாவில் அவர் களுடன் சம்பந்தம் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம், தாய் புழுகிக் கொண்டாள் பலவிதத்தில் லண்டனில் ஒரு கடை போடவேண்டுமாம். உஷாவின் பெயரில் நிறையக் காசு பாங்கில் போடுகிறார்களாம், உஷா பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ராஜேஸ்வரி 59
அன்று இரவு தாயிடம் விம்மலுடன் சொன்னாள். அந்த மாப்பிள்ளையைத் தனக்குப் பிடிக்கவில்லை என்று, அடிபட்ட நாகம்போல் துடித்தெழுந்த தாய் சட்டென்று எழுந்து லைட்டைப் போட்டுக் கண்ணிரும் கம்பலையுமாக இருக்கும் உஷாவைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டாள். மகள் இப்படி அழுது அவள் கண்ட தில்லை.
"என்ன குறை மாப்பிள்ளைக்கு? உன்னைவிடப் :பதினைந்து வருடம் வித்தியாசம். அதில் என்ன? எனக்கும் உன் தகப்பனுக்கும் கிட்டத்தட்ட பதினாறு வயது வித்தியாசம். இதெல்லாம் எங்கள் சமுதாயத்தில் சகஜம். ஓம். ராம்சிங்குக்கு இங்கிலீஸ் தெரியாதுதான். அதில் என்ன நட்டம்? உனக்கு இந்தி தெரியும்? நீங்கள் போகும் கடையில் இங்கிலீஸ் தெரிந்த இந்தியாக்காரரை வேலைக்கு வைத்தால் பிரச்சினையில்லை" தாய் பொரிந்து முழங் கினாள்.
உஷாவுக்கு எதிர்த்துப் பேச தாய் எதுவும் வைக்க வில்லை. உஷா என்ன கேள்வி கேட்டாலும் தாய் தகப்ப *னிடம் விளக்கம் எவரெடி'யாய் இருக்கிறது.
மாப்பிள்ளை வீட்டார் பெண் பிடித்துவிட்டது என்று சொன்னபோது உஷாவின் தாயும் தகப்பனும் மகளைக் கட்டிப் பிடித்து, அவள் அதிர்ஷ்டசாலி என்று பாராட்டி *னார்.
தகப்பன் மாப்பிள்ளை வீட்டார் இந்தியாவில் தந்த அனபளிப்பு நிலத்தில் என்னென்ன செய்யலாம் என்று நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார். இவர் லண்டனில்" கடை கொடுக்க அவர்கள் இந்தியாவில் நிலம் கொடுத்தார்கள். லண்டனில் பெண் வைத்திருந்தால் வ்வளவு நல்லது தாய் தகப்பனுக்கு? இந்தியாவிலிருந்து வ்விடம் வர என்ன விலை கொடுத்தும் பெண் வாங்கத் தயாராய் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாகச் *சொன்னபோது அழும் கண்களுடன் மகள் இருப்பதைக்

Page 32
60 நாளைக்கு இன்னொருத்தன்
கண்டும் கவனிக்காது விட்டார் தகப்பன். இப்போது என்ன செய்வார்கள்? . . . . . ; ,
என்னதான் நடந்தாலும் இனி வீட்டுக்குப் பேர்வ தில்லை. உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். இரவிர வாக இந்த அண்டர் கிரவுண்ட் ஸ்ரேசனில் நிற்க முடியுமா? தூரத்தில் ஐஸ்கிரீம் வைத்திருக்கும் அமெரிக்கன் கடையை மூடும் ஆரவாரத்தில் இருக்கிறான்.
அவளைச் சுற்றி நடமாட்டம் குறைகிறது. "ஹலோ ஸிஸ்டர்.’
அவள் கனவுலகத்திலிருந்து விடுபட்டதுபோல் முன்னால் சிரித்த முகத்துடன் நிற்கும் அந்த வாலிபனைப் பார்க்கிறாள். கலப்பு நிறத்தவன். சிகப்பு முகமும் பூனைக் கண்களும் புஸ் புஸ் என்ற நீக்ரோத்தலையும், பார்த்தர்ல் கெட்டவனாகத் தெரியவில்லை. ஆனாலும் முன் தெரியாத வர்களுடன் கதைத்துப் பழக்கமில்லாததால் அவள் முகம் குப்பென்று சிவக்கின்றது.
“ஹலோ...'
அவன் இன்னும் சிரித்தபடியே நிற்கிறான். அவள் பதில் சொல்லாமல் அங்குமிங்கும் பார்க்கிறாள். கடந்து போய், என்ன செய்வது?
*யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களா?* அவன் கேட்கிறான்.
"ஒம் என்று சொல்லிவிட்டால் கரைச்சல் இல்லை” உம் என்று தலையாட்டுகிறாள். ,
நானும்தான் என் சினேகிதனைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன்", அவனின் பற்கள் மிகவும் வெண்மையானவை என்று பளிச் சென்ற வெளிச்சத்தில் தெரிகிறது. அப்படி யானால் இவன் இதே இடத்தில் நிற்கப் போகிறான். கிட்டத்தட்ட அண்டர் கிரவுண்ட் ரெயின் சேவை முடியு

ராஜேஸ்வரி 61
மட்டும் அவன் நிற்கலாம். அதுவரைக்கும் அதில் அவள் நின்று என்ன செய்வது? வெளியில் இப்போது சனநட மாட்டம் குறைந்திருக்கும். இரவு பதினொரு மணியாகிறது. தற்செயலாகத் தகப்பன் தேடி வந்தாலும் அகப்படுவது MBF 6L u D . . .
அவள் எங்காவதுபோய் இடம் தேடுவது என்ற யோசனையில் வெளி வருகிறாள். ரெயினால் இறங்கிப் போகும் ஆட்களில் ஆண்கள்தான் கிட்டத்தட்டமுழுப்பேரும். அவர்களிடம் போய் பெண்கள் விடுதியைக் கேட்பதாவது? அவளுக்கு அழுகை வருகிறது. இப்படித் தன்னை ஓடவிட்ட கல்யாணம்; கல்யாணம் பேசிய தாய், தகப்பன், காசுதான் எல்லாம் என்று நினைக்கும் உலகம். குப்பென்று கண்ணிர் கொட்டுகிறது. கோட்டுக்குள்ளால் இன்னொரு பேப்பர் கைக்குட்டையை எடுத்து மூக்கைச் சீறிக் கண்ணைத் துடைத்து.
"ரோட்டில் நின்று அழுதால் பொலீசுக்காரன் பிடித்துக் கொண்டு போய்விடுவான்” அவள் திடுக்கிட்டுத் திரும்பு கிறாள். ஸ்ரேசனில் கண்ட அதே கலப்பு நிறத்தவன். அதே சிரித்த முகத்துடன் அவளின் பின்னால் நிற்கிறான்.
அவனில் வெளியுலகில் திடீரென்று ஒரு பயம் வருகிறது அவளுக்கு. ஏன் என்னை பின் தொடர்கிறான் இவன்? அவள் கோபத்துடன் ஏறிட்டுப் பார்க்கிறாள் அவனை.
*தேடி வந்தவர்களைக் காணாவிட்டால் வீடு போய்ச் சேருவதுதான்" புத்திசாலித்தனம். இந்த நேரத்தில் ர்ோட்டில் நின்று அழுவது புத்திசாலித்தனமல்ல."
முதல் தரம் அவள் முகத்திலிருந்து சிரிப்பு மறைந்து, ஸ்ரீரியசா கதைக்கிறான். வீட்டுக்குப் போவதா? 'நான் லண்டனுக்குப் புதுசு ஒரு பெண்கள் விடுதி தேடிக்கொண் டிருக்கிறேன்” அவள் நேரடியாக விடயத்துக்கு வருகிறாள்.

Page 33
62 நாளைக்கு இன்னொருத்தன்
அவன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு கைகளால் கழுத்தைத் தடவிக்கொண்டு ஒரு கணம் யோசிக் கிறான். 'இந்த நேரத்தில் தேடுவது கஷ்டம். அதுவும் விக்கடிலி ரோட்டில் நடந்து திரிவது அபாயம்."
அவன் பேச்சு சரி என்று பட்டாலும் டாக்ஸியில்ோ காரிலோ இந்த நேரம் போக அவள் நடுங்குகிறாள்?
'.
'பொலீசாரிடம் கேட்டால் என்ன? அவன் கேள்வி" கேட்டுவிட்டு அவள் முகத்தையுற்றுப் பார்க்கிறான்.
அவள் முகம் சட்டென்று மாறுகிறது. "வேண்டாம். வேறு
பாரிடமாவது கேட்போம்" அவள் பயத்துடன் சொல் கிறாள்.
ஏன் வீட்டைவிட்டு got- வந்தாயா?"
அனுபவ முத்திரையான கேள்வி அவனுடையது என்று அவளுக்கு விளங்கவில்லை. எவ்வளவு தூரம் மறைப்பது? அவள் கண்கள் நீர் மடையாகின்றன. ஓவர் கோட்டுக். குள்ளாலும் குமுறும் வேதனையால் அவள் நெஞ்சும் ஏறி யிறங்குவது அவனுக்கு விளங்குகிறது.
‘ஓடி வந்தாயிற்று. திரும்பிப் போவதாக இப்போது, பட்டால் பொலீசாரிடம் சொன்னால் உடனே கொண்டு போய்விடுவார்கள்" அவன் மெல்லச் சொல்கிறான், தன் பார்வையை அவள் முகத்தில் இருந்து எடுக்காமல்.
* கடைசி வரையும் வீட்டுக்குப் போவதில்லை" அவள் குரல் அடைக்கச் சொல்கிறாள். முழித்த பார்வையையும் முண்டாசுக்கட்டும் முறுக்கிய மீசையுமாக rrtháiris மணவறையில் உஷாவுக்காகக் காத்திருப்பதுபோல் அவள் மனம் படம் பிடித்துக் காட்டுகிறது. "கடைசி வரையும் வீட்டுக்குப் போவதில்லை" அவள் இரண்டாம் தடவை சொல்கிறாள்.
" இரவிரவாக பிக்கடிலி சேர்க்கஸில் திரிந்தால் நீ
க்ேட்காமலே பொலீசு பிடித்து நாளைக்கு வீட்டுக்கு அனுப்பி

rrGgshauf & 6惠
விடும்" அவன் கூர்மையான கண்கள் அவளை எடை போடு கின்றன. எத்தனை வயது? பதினாறு இருக்குமா? அழுது வீங்கிய கண்கள் என்றாலும் அதிலும் ஒரு சோகம் நிறைந்த தூய்மையான அழகு. ‘போய் பிரண்ட் இருந்தால் அவன் வீட்டுக்குப் போகலாம்" அவள் ஆழம் பார்த்துக் கொண்டு கேட்கிறான்.
அவள் திடுக்கிட்டு முதன்முறையாக அவனை ஏறிட்டு நோக்குகிறாள் "எனக்கு போய் பிரண்ட் ஒன்றுமில்லை" அடித்தாற்போல் வருகிறது மறுமொழி.
ஏனோ நிம்மதியான சிரிப்பு. அவன் முகத்தில் தோன்றி மறைவதை அவள் கவனிக்கவில்லை. கொஞ்ச தூரம் நடந்து பார்ப்போம். ஏதும் லொட்ஜிங் கிடைக்கிறதா என்று அவனுடன் தனியாக நடந்து செல்வது பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லை உஷாவுக்கு. இப்போது எங்கே வந்து விட்டோம்? அவனுக்குத்தான் எங்கே நிற்பது என்று கூடத் தெரியவில்லை சிலவேளை வீட்டுக்குப் போக மனம் வந்தாலும் (கட்டாயம் வ்ராது இப்போதைக்கு) இவனின் காலைத்தான் பிடிக்க வேண்டும் வழி காட்டச் சொல்லி யார் இவன்? என்னோடு நடந்து திரிகிறானே இவ்வளவு நேரமும். வீடு வாசல் இல்லையா போய்ச் சேர? யாரையோ எதிர்பார்த்து நிற்பதாகச் சொன்னானே. என்ன நடந்தாலும் எதிர்பார்த்து நின்ற சினேகிதனுக்கு? உஷாவின் மனதில் கோடிக்கணக்கான சிந்தனைகள் ஓடி மறைந்தன. நாளைக்கு என்ன செய்வது? கையில் கொஞ்சக் காசு இருக்கிறது. அது முடிவதற்கிடையில் ஒரு வேலை தேடவேண்டும் தாய், தகப்பன் என்ன செய்வார்கள்? பொலீசுக்குச் சொல்லியிருப்பார்கள். தன் படம் கிட்டத்தட்ட எல்லா பொலீஸ்ரேசனிலும் இருக்கும். எப்படி வெளியில் வேலைக்குப் போவது? தாய், தகப்பன் தேடி அலுக்கும்வரை கொஞ்ச நாளைக்குக் கவனமாக இருக்க வேண்டும். தீனின்மயின் வேதனை அவளுக்குப்புரிகிறது. பேர்ய் நிற்கத் தக்கதாக ஒரு சினேகிதிகளும் இல்லை.

Page 34
நாளைக்கு இன்னொருத்தன்
'என்ன பெரிய யோசனை" அவன் கேட்டான். எதைச் சொல்வது?"எதன்ை என்று சொல்வது? அவள் மெளன மின்க் நடந்தாள். கண்கள் பரபரவென்று ஏதும் இடம் அகப் பீடாதா என்று தேடிக் கொண்டிருந்தன. ■ -
கால்கள் குளிரில் விறைத்து விட்டன. வயிறு வேறு கெஞ்சிக் கொண்டிருந்தது. பசியில் கடந்த இரண்டு நாள் களாக உஷா சாப்பிடவில்லை. என்ன சததியாக்கிரகம் என்று தாய் அடிக்கடி பேசினாள். ஆனாலும் கல்யாண ஏற்பாடுகளின் அவசரத்தில் உஷாவுடன் கெஞ்சிக்கொண் டிருக்கத் தயாரில்லை. "ஏதும் சாப்பிடுவோமா" அவன் குரலில் அன்பு, அவள் மறுக்கவில்லை. ஏதோ பாதாளப் படிகளில் இறங்கிப்போவது போல் இருந்தது அவளுக்கு. அவர்கள் இறங்கிப் போனபோது ம்ெல்லிய வெளிச்சத்தில் அம்ைதியான இசையில் பலர் சாப்பிட்டுக் கொண்டு இருந் தார்கள். ஒரே சனக்கூட்டமாக இருந்தது. இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். அவள் அதிகம் வெளியில் சாப் பிட்டுப் பழக்கமில்லை. போனவருடம் 'ரெல் ரிட்ஜ்ஸ்’ கடைக்கு வந்தபோது சாப்பிட்டிருக்கிறாள் ப்ொரித்த உருளைக்கிழங்கும் முட்டையும். "என்னவேணும்? அவன் கேட்கிறான்.
"ஏதும் வெஜிடபிள். நான் முட்டை வெஜிட்டேரியன்"
அவள் கைப்பையை எடுத்தபடி சொல்கிறாள். சாப்பாட்டில் அதிகம் செலவழிக்க அவள் தயாராய் இல்லை. வேலை கிடைக்கும் வரை சமாளிக்க அவளிடம் கொஞ்சக் காசுதான் இருக்கிறது. "I அவளுக்கு முட்டையும் "சிப்சும் ஒடர் பண்ணிவிட்டுத் தனக்கு பன்றியிறைச்சிக்கும் வதக்கிய உருளைக்கிழங்குக்கும் ஒடர்" பண்ணுகிறான்' தங்க இடம் கிடைக்காவிட்டால் Tirur செய்வதாக உத்தேசம்' .அவனின் கேள்விக்குப் பின்னால் இருண்ட உலகம் தெரிகிறது. அவள் குனிந்து மேசையைச் சுரண்டுகிறாள்.

ராஜேஸ்வரி i 65
"ஏன் இந்த கஷ்டம். வீட்ட போனால் என்ன திரும்பி? பஸ்சுக்கு காசில்லை என்றால் நான் தருகிறேன். இப்போது போனாலும் கடைசி பஸ் கிடைக்கும்" அவன் குரலில் உள்ள” கனிவு அவளை இன்னும் வேதனைப்பட வைக்கிறது. ஏன் இவனைப்போல் எல்லோரும் அன்பாய் இருக்கக்கூடாது?
பப "நான் கடைசி வரையும் வீட்டபோகமாட்டேன்" அவள் தீர்மானமாகச் சொல்கிறாள்
அவன் ரன் என்று கேட்கவில்லை. இருவரும் சாப்பி if T if is gir 19 ܕܠܐ
li li, li li lill li
"தங்களுக்குப் பிாந்த குற்றத்துக்காகத் தங்கள் குழந் தைகளைத் தாங்கள் நினைத்ததைய்ே செய்யப்பண்ணுவது எவவளவு கொடுமை" அவள் சாப்பாட்டின் நடுவில் சொன் னாள். அவன் கேட்காவிட்டாலும் தன்னைப்பற்றிச் சொல்ல வேண்டும்போல் இருக்கிறது அவளுக்கு.
LETE - "பெரும்பாலும் தாய் தகப்பன் நல்ல காரியங்களைத் தான் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்வார்கள்" அவன் கஷ்டப்பட்டு பன்றியிறைச்சியை மென்று கொண்டு சொல் கிறாள் 11 ܕܠܐ ܬ, ܠܐ | Ni,
"பிடிக்காத மனிதனைக் கல்யாணம் செய்யச் சொல்லு வதா" அவளின் கேள்வியில் அவன் நிமிர்கிறான்.
ஓ! அதுவா பிரச்சினை, அதனால வீட்டை விட்டு ஓடினிர் என்பதுபோல் இருக்கிறது அவன் பார்வை.
"நான் ஓ லெவல் படித்திருக்கிறேன். வேலை செய்து, பிழைப்பேன். பிடிக்காத மனிதர்களைச் செய்யவேண்டு மென்று நான் நினைக்கவில்லை. எப்படி வாழ்க்கை எல்லாம் சீவிப்பது பிடிக்காத ஒருவருடன்? அவள் அவனுக்கு விளங் கப்படுத்துகிறாள். II, III.
அவள் சாப்பாட்டுக்கு காசு கொடுக்க ஆயத்தம் செய் கிறாள். : լ է :. "

Page 35
66 நாளைக்கு இன்னொருத்தன்
அவள் தன் கைப்பையை எடுக்கிறாள். அவன் வேண்டாம் என்பதுபோல் தலையை ஆட்டு கிறான்.
அவளுக்குத் தர்மசங்கடமாக இருக்கிறது. யார் காசிலோ சாபபிட்டது. அவள் இல்லை என்று அவனையடக்கவும். பயப்படுகிறாள்.
பக்கத்து மேசையில் இருந்தவர்கள் இவர்களின மெளன நாடகத்தைச் சாடையாகப் பார்க்கிறார்கள். ‘புதுச்சோடி யாககும்" என்பதுபோல் சிலர் அர்த்தத்துடன் இவர்களைப பார்ககிறார்கள்.
இருவரும் வெளியில் வர கிட்டத்தட்ட வெளியில் சன் நடமாட்டமேயில்லை.
"எங்கே இருக்கிறோம்?"
இவனும் போய்விட்டால் மீண்டும் அவள் கண்கள் கலங்குகின்றன.
தூரத்தில் ஒரு பொலீஸ்காரர் வருவதைக் கண்டதும் அவன்:சொல்கிறான் அவளுக்கு 'அந்தப் பொலிஸ்காரன் ஏதும் கேட்டால் என்னை உன் போய் பிரண்ட் என்று சொல்"
அவள் திடுக்கிடுகிறாள். 'என் பெயர் கொலின் ஹில. உன் பெயர் என்ன?" இவனை என் போய் பிரண்ட் என்று சொல்வதா? அவள் மீரண்டு பார்க்கிறாள்.
*இளம் பெண்கள் இந்தப் பக்கம் இந்த நேரத்தில் போனால் பொலீஸ்காரர்கள் தேவையில்லாத கேள்விகள் எல்லாம் கேட்பார்கள். உன் பெயர் என்ன?"
உஷா தடுமாறுகிறாள். பொலீஸ்காரன் இவர்களை புற்றுப் பார்த்தபடி வருகிறான்.

ராஜேஸ்வரி 67”
‘என் பெயர் உஷா" அவள் குரல் நடுங்குகிறது. பக்கத்தால் வந்த பொலீஸ்காரன் கொலினை ஏற் இறங்கப் பார்த்துக் கொண்டு போகிறான்.
*கலப்பு நிறமான மனிதர் என்றால் இந்த வெள்ளைப் பொலீஸ்காரனுக்குப் பிடிப்பதில்லை. எப்போ என்னி சாட்டுச் சொல்லிப் பிடிக்கலாம் என்று திரிகிறார்கள்.” கொலின் பொரிந்து தள்ளுகிறான். அவனின் கோபம் அவளுக்கு விளங்கவில்லை.
"அது சரி இவ்வளவு தூரம் தேடியாகிவிட்டது. இப்போது என்ன செய்வது?"
அவள் பரிதாபத்துடன் கேட்கிறாள். இன்னொரு தரம் இன்னொரு பொலீஸ்காரனைக் கண்டால் அவள் உயிரே போய்விடும்
'உமக்குப் பிடிக்குமோ தெரியாது. எனக்கு ஒரு இடம் தெரியும் அவ்வளவு வசதியான இடம் இல்லை. அத்தோட இந்த நேரம் இடம் கிடைக்குமோ தெரியாது?’ அவன் தயங்கித் தயங்கிச் சொல்கிறான்.
"எனக்கு பிடிக்குமாவது. தயவுசெய்து ஒருக்கா அந்தி இடத்துக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போங்கோ’ அவள் மகிழ்ச்சியுடன் கூறுகிறாள்.
அவன் கொஞ்ச நேரம் யோசிப்பதுபோல் இருந்து விட்டு *கனதூரம் போகவேணும். சும்மா போய் அலைந்: திரிவதைவிட போன் பண்ணிப் பார்க்கிறேன். கொஞ்சம் பொறும்" தூரத்தில் அடுத்த பக்கத்தில் இருக்கும். டெலிபோன் பூத்தை நோக்கி அவள் நடக்கிறான்.
எவ்வளவு நல்ல மனிதன். இப்படி உதவி செய்யும் மனப்பான்மை யாருக்கு இருக்கும்?
உஷாவின் தாய் தகப்பன் எந்த நீக்ரோக்களுடனும் கதைக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் எங்களைவிடக்

Page 36
68 நாளைக்கு இன்னொருத்தன்
குறைவானவர்கள் என்று எத்தனையோ தரம் சொல்லியிருக் கிறார். இப்போது தெரிகிறது. யார் குறைவு என்று? தான் பெற்ற மகளைத் தன் சுயநலத்துக்காக யாரோ ஒரு முன்பின் தெரியாத முண்டத்துக்குக் கட்ட நினைத்த தகப்பனா அல்லது முன்பின் தெரியாத எனக்கு இவ்வளவு உதவி செய்யும் இந்தக் ‘கொலினா" நல்லவன் என்று நன்றியால் அவள் உள்ளம் பொங்குகிறது.
"கொலின்? திரும்பி வருகிறான். 'உம்முடைய அதிர்ஷ்டம் ஒரு இடம் காலியாக இருக்கிறதாம். ஒன்றிரண்டு நாளைக்கு அங்கு நீர் நிற்கலாம்.' 波*
அவள் சந்தோஷப்படுகிறாள். அவனைக் கண்ட நேரத் திலிருந்து இப்போதுநான் முதல் தரம் ஒரு புன்னகைக் கீற்று அவளின் அழகிய இதழ்களில் தோன்றி மறைவதை அவன் கவனிக்கிறான். கொஞ்சத் தூரம் நடந்ததும் டாக்ஸி கிடைக்கிறது.
டாக்ஸி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு பெண்கள் ஆண்களின் துணையுடன் போய்க்கொண்டிருக் கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் என்னைப்போல் ஓடி வந்தவர்கள்?
ஏன் இப்படி எங்களைப்போன்ற பெண்களின் வாழ்க்கை அமைகிறது? அன்று லிண்டா சொன்னாள் ஒடிப்போகும் இந்திய இளம் பெண்களைப் பற்றி டெலிவிஷனில் காட்டிய தாக, காட்டி என்ன பிரயோசனம்? கலாசாரம் என்ற போர்வையில் இப்படி எத்தனை வியாபாரம்.? இவர்களிடம் என்ன கேட்டேன்? எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம். என்னைப் படிக்க விடுங்கள் இப்போதைக்கு என்று தானே கேட்டன், என் உண்ர்ச்சிகள் அவர்களுக்கு விளங்கவில்லை ஏன் என்னையுணர்ச்சியற்ற ஜன்மமாக நினைக்கிறார்கள்?
"உஷர் இதுதான் அந்த விடுதி! பேனில் எல்லாம் சொல்லியிருக்கிறேன். வேலைக்குப் போகும் யேர்சனையை

ராஜேஸ்வரி 69
விட்டு விட்டு இரண்டொரு நாள் ஒய்வெடும். நான் வந்து பார்க்கிறேன்" கொலினின் சொற்களுக்கு நன்றி சொல்லி விட்டு, அவள் போவதை டாக்ஸியில் இருந்தபடி பார்க் கிறான் ×
"இரண்டு மூன்று கிழமையாகப் பழைய சரக்குகளாகப் பொறுக்கிக்கொண்டு வருகிறாய். இன்னும் இரண்டு நாளையில் லண்டனுக்கு வரும் அராபிய பணக்காரன் ஒரு வேர்ஜின் கேர்ன்" கேட்கிறாள். பிடித்துக் கொடுத்தால் இரண்டு மூன்று நூறு பவுன்கள் என்றாலும் கிடைக்கும்" இன்று பின்னேரம் *கொலினின்? வியாபாரத் தோழன் இப்படித்தான் சொன்னான்.
இரண்டொரு நாள்களில் அவர்களுக்கு இரண்டு மூன்று நூறுகள் கிடைக்கலாம். • ፩ !
1993.

Page 37
6. இன்னும் சில அரங்கேற்றங்கள்!
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவர்களின் குழந்தை களாகிய எங்கள் மூவரிலும் கோபம். பெரியண்ணா வீட்டுக்கு வருவது குறைவு. வேலை செய்யுமிடம் எங்கள் வீட்டுக்கு அதிக தூரத்தில் இல்லை என்றாலும் அவன் *ளங்களுடன் இருக்காமல் தன் சினேகிதர்களுடன் வீடு
எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
எனக்கு இரவெல்லாம் சரியாகத் தூக்கமில்லை. ஆனாலும் அந்த ரெயினில் கால் வைத்ததும் வழக்கம்போல் ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கிறேன். ஏதோ ஒரு
புத்தகமில்லை. ஒரு கொஞ்சநாளாகபிராய்ட்தியரிகளில் ஒரு விருப்பம். எனது சினேகிதி சைக்காலஜி செய்வதும் அவள் விழுந்து விழுந்து பிராய்டைப் பற்றிப் படிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ரெயின் முழுவதும் மனித முகங்கள் ஒருத்தரை ஒருத்தருக்குத் தெரியாது, ஒவ்வொரு தரமும், அல்லது எனக்கு மனதில் சோகமான நேரங்களில் என்றாலும் என்னை இந்த மனிதர்களுடன் பிணைத்து ஏதோ ஓர் உறவைத் தேட யோசிக்கிறேன்.
நாங்கள் எல்லாம் "வெற்று மனிதர்களாய்" அந்த ரெயினில் குவிந்து கிடப்பது போன்ற பிரமை. ஒவ்வொருத் தரும் எங்கள் மனத்துக்குள் ஒவ்வோர்உலகத்தில் உறவாடிக் கொண்டிருப்போம். ஒரே ஒரு உறவு இவர்களுடன் நான்

ராஜேஸ்வசி ... 1
ஒவ்வொருநாளும் காலை 7.45 ரெயின் எடுத்து 8.90 மணிக்கு யூஸ்ரன் ஸ்ரேசனுக்குப் போகிறேன். அதன்பின் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைகளில் பிரிந்து போகிறோம். பின்னேரங்களில் 6.05 ரெயினுக்கு நான் ஓடிவரும்போது பெரும்பாலான மனிதர்களை மீண்டும் பார்க்கிறேன். ஒரு கூட்டத்துடன் என்னைப் பிணைத்துக் கொள்கிறேன்.
ஒருதரம் யூஸ்ரன் ஸ்ரேசனில் ஐ.ஆர். ஏ. காரர் குண்டு வைத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தில் எங்களை ரெயினால் இறக்கிவிட்டபோது ஒரு அரை மணித்தியாலம் ஸ்ரேச னுக்கு வெளியில் நாங்கள் காத்திருந்தோம். சிருத்தருடன் ஒருத்தர் பேசிக்கொள்ளவில்லை. சிரு கர்நாடக மேடையின் ஊமை நாடகங்களா?
ரெயின் ஒடத் தொடங்கியதும் நான் பிராய்டின் உளவியலில் கண்களைப் பதிக்கிறேன். மனம் மட்டும் வீட்டுக்கு ஓடிப்போய்விட்டது. புத்தகத்தில் கவனம் செல்ல வில்லை. முன்னிருக்கும் வெற்று மனிதர்களில் முகம் பதிக் காமல் கண்களை மூடிக்கொண்டால் அம்மாவின் கலங்கிய கண்களும் அப்பாவின் தொங்கிய முகமும் தெரிகிறது.
அக்கா ஒன்றிரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. அண்ணா கிழமைக் கடைசியில் எப்போதோ பார்ப்பான். என்னை மட்டும் ஹாஸ்டலில் இருந்து படிக் காமல் வீட்டிலிருந்து போகச் சொல்லி'*
ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்குமேல் பிரயாணத்தில் போகிறது. அந்த நேரத்தைப் படிப்பில் செலவிடலாமென்றால் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. "படிக்க வேண்டிய பிள்ளை எப்போதும் வீட்டிலிருக்து படிக் கும்தனே' என்று சொல்லிவிட்டாள்.
அம்மாவுக்கு நானும் அக்கா மாதிரிப் போய்விடுவேனே என்ற பயம். அக்காவை அசல் தமிழ்ப் பெட்டைகள் போலத்

Page 38
72 நாளைக்கு இன்னொருத்தன்
தான் அம்மா வளர்த்தாவாம். அவள் இப்படிச் செய்யலாழோ என்று அம்மா மூக்கைச் சீறிக் கொள்கிறாள்.
உங்களின் நல்ல வாழ்க்கைக்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் * அம்மா இப்படித்தான் நேற்று என்னைப் ஏசிக்கொண்டிருந்தாள் வீட்டுக்குப் போகவே சிலவேளை மனம் எரிச்சல்படுகிறது. V x ኵ* ... ,
கொஞ்சநாட்களாக அப்பா சரியாக சாப்பிடவில்லை. அது ஒருவிதத்தில் அவர் உடம்புக்குச் சரிதானே என்று சொல்ல நினைக்கிறேன். அப்பாவுச்கு நல்ல உடம்பு. இரத்த அழுத்தம் என்று டாக்டர் சொல்லிவிட்டாராம். அதனால் அப்பா உடம்பு மெலிந்தால் நல்லதென்று நினைக் கிறேன். ஆனால் அப்பா சாப்பிடாமலிருப்பது டாக்டர் இரத்தக் கொதிப்பு என்று சொல்லிவிட்டாரென்றல்ல. அவருக்கும் அம்மாவுக்கும் பிடிக்காத ஒருவனை அக்கா கல்ய்ாணம் செய்யப் போகிறாளாம். அம்மா அடிக்கடி மூக்கைச் சீறி எங்களைத் திட்டிக் கொண்டிருப்பாள். அப்பா தன் அறைக்குள் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டு *எங்களைச் சரியாக வளர்க்கவில்லை’ என்று அம்மாவைத்
திட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்பாவைப் பார்க்க அவரின் சிநேகிதர்கள், அதாவது எங்கள் குடும்ப நண்பர்கள் வந்தார்கள். லண்டனில் பிள்ளை களை வளர்க்கும் கஷ்டங்களைப்பற்றி ஒரு குட்டி மாநாடு நடத்தினார்கள். "எங்கள் குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டோம். இந்தக் குழந்தைகள் தங்களுக்கு வயது வந்ததும் எங்கள் கலாச்சாரத்தைப் பண்பாட்டை மறந்து தங்கள் விருப்பப்படி ஆட வெளிக்கிடுதுகள்." மஞ்சுளா மாமி இப்படித்தான். போன கிழமையிலிருந்து சத்தம் போட்டா. மஞ்சுளா மாமியின் ஒரு மகள் கல்யாணமே வேண்டாம். என்று சொல்லிவிட்டாளாம். அதற்கான காரணத்தை, மஞ்சுளா மாமி போனபின் அம்மாவும் சத்தியா மாமியும் குசு. குசுத்துக் கொண்டார்கள். என்னைக் கண்டதும் பேச்சுை

ராஜேஸ்வரி 78.
நிறுத்திக் கொண்டார்கள். ‘இதெல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் வயது எனக்கில்லையாம்.
எனக்குச் சிரிப்புத்தான் வந்தது, அதை நினைத்ததும் என் முகத்தில் அதன் பிரதிபலிப்புத் தெரிந்திருக்க வேண்டும் நினைவிலிருந்து கண்களைத் திறந்ததும் முன்னாலிருந்த பிரயாணி உற்றுப் பார்த்தார்.
இந்தப் பிரயாணிக்கும் அம்மாவுக்கும் என்ன வித்தி யாசம்? என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? எனக்கு இருபது. லண்டன் யூனிவேர் சிற்றியில் பயோலிஜி செய்கிறேன். இந்த வருட ப்ராஜெக்ட் மிக கஷ்டமானது. *பாலியல் நடைமுறை மற்றும எய்ட்ஸ் பற்றிய' என்ற கட்டுரை போனவாரம்தான் எழுதி முடித்தேன். அந்தக் கட்டுரை எழுத நான் எவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது; என்னென்ன அறிந்து கொண்டேன் என்று என் தாய்க்குத் தெரியாது.
அவளுக்கு நான் அவளது செல்ல மகள். மூன்றாவது சின்ன மகள். அம்மா பாவம். நிறையச் சீதனம் கொடுத்து மிகப் படித்த அப்பாவைக் கல்யாணம் செய்திருப்பாள். லண்டனுக்கு வந்து நாங்கள் எல்லாம் பாடசாலைக்குப் போகத் தொடங்க வீட்டிலிருக்கப் பயந்து "செயின்ஸ்பரி"யில் வேலை எடுத்துக் கொண்டார்களாம். 3.
கவுண்டரில் சீல் அடிக்கத் தெரிந்து கொண்ட அம்மா, தன் வளரும் குழந்தைகளின் வாழ்க்கையின் மாற்றத்தை, உடல் வளர்ச்சியை எடைபோடுவதுடன் மட்டும்தானா கண்டு கொண்டாள்.
அடுத்த ஸ்ரேசனில் எனக்கு முன்னாலிருந்த பிரயாணி இறங்கிவிட இன்னொருத்தர் வந்து உட்கார்ந்து கொள் கிறார். இவ்வளவு தூரமும் பச்சைப் பசேலென்று தெரிந்த
நா-5

Page 39
7塾· நாளைக்கு இன்னொருத்தன்
இங்களை அடிக்கடி சந்தித்த கண்கள் இனி எதிர் வரும்
லண்டன் கட்டிடங்களைச் சந்திக்கவேண்டும்.
நான் திரும்பவும் கண்களை மூடிக் கொள்கிறேன். அண்ணா வந்து சேர்கிறான் என் கண்களுக்குள். அண்ணா ராஜேந்திரன் வாட்ட சாட்டமானவன். எனக்கும் அவனுக்கும் எட்டு வயது வித்தியாசம், அவனைப்பற்றிய முதல் நினைவு எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என்று நினைக் கிறேன். நாங்கள் அப்போதுதான் லண்டனுக்கு வந் திருந்தோ மென்று ஞாபகம். வாங்கிய வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய ஊஞ்சல் இருந்தது. அண்ணா என்னை ஊஞ்சலில் ஏற்றி ஆட்டிக்கொண்டிருந்தான். நான் தவறி விழுந்து அடிபட்டபோது ஆவென்று அலற, அப்பா அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்தார். அப்பா அண்ணா வைத் திட்டினார்.
அண்ணாவுக்குச் சரியான அடி. அப்பா மிகவும் பொல் லாதவர். அடியாத மாடு படிக்குமா? என்று அண்ணாவுக்கு அடிப்பார். " மாடு மாதிரி வளர்ந்திருக்கிறாய்; ஒரு சின்ன பெண் பிள்ளையைப் பார்க்கத் தெரியவில்லை' அப்பா அண்ணாவை அடித்ததை என்னால் மறக்க முடியாது, அப்போது அண்ணாவுக்குப் பதினொரு வயது. அம்மா அளவுக்கு வளர்ந்திருந்தான். அம்மாவின் உயரம் ஐந்தடி.
அப்பா அண்ணாவை அடிக்க, நாங்கள் ஓலமிட, அம்மா இடையில் ஓடிவந்து விழ, பக்கக் து வீட்டுக்கார வெள்ளைக் காரன்வேலியால் எட்டிப் பார்க்க. அந்த நாடகம் என் மனதை விட்டு அகலவில்லை. "இந்தப் பேன் னென்று பெண் பிள்ளைகளைப் பார்ப்பான். அவளவை 'யாரோடும் ஓடினாலும் இவன் ஆவென்று நிற்கப்
போறான்."
என்
அப்பா இப்படி எத்தனையோ தரம் அண்ணாவைப் பேசியிருக்கிறார். தகப்பன், மகன் உறவை ப்ராய்டு தியறி

ராஜேஸ்வரி 75
மூலம் எனது சிநேகிதி றேச்சல் போன கிழமை விளங்கப் படுத்தத் தொடங்கியபோது அண்ணாவையும் அப்பாவை யும் நினைத்துக்கொண்டேன்.
அண்ணா அப்பா சொன்னதுபோல் அவனின் தங்கை கள் யாரோடாவது ஒடமுதல் தானே வீட்டை விட்டுப் போய்விட்டான். யூனிவர் சிற்றியால் அண்ணா வெளிக் கிட்டு லண்டனுக்கு வெளியில் ஒரு வேலை கிடைத்த போது, எப்போது இந்தச் சந்தர்ப்பம் என்று காத்திருந்த வன் போல் தன்னோடு வேலை செய்யும் சினேகிதர்களுடன் ஒரு வீடெடுத்துக்கொண்டு போய்விட்டான். 'வீட்டிலிருந்து பிரயாணம்செய்திருக்கலாம்." அப்பா உறுமினார் அண்ணா இப்போது அப்பாவை விடக் கூட வளர்ந்திருக்கிறான். அம்மா வழக்கம்போல் கண்களைத்துடைத்தாள். 'சாப்பாடு எப்படியோ?” அம்மா வடையும் மீன் பொரியலும் செய்து கட்டிக் கொடுத்தாள். s
அக்கா அந்த வருடந்தான் யூனிவர் சிற்றிக்கு எடுபட்டி ருந்தாள். அவள் இந்த நாடகத்தில் அதிகம் பங்கெடுக்க வில்லை. அக்காவில் அம்மாவுக்கு ஒரு பெருமை. அக்கா பார்க்க அழகாக இருப்பாள். ஒரு நல்ல தமிழ்ப்பிள்ளையாக வளர்க்க எத்தனையோ முன்னேற்பாடுகள். அந்தக் காலத்தில் லண்டனில் நடன அரங்கேற்றம் செய்தவர்களில் அக்காவும் ஒருத்தி. எங்களுக்குத் தெரிந்த மாமாவின் பெண் ணொருத்தி நடன அரங்கேற்றம் நடந்தபோது மிகமிக அழ காக இருந்தாள். நடனத்தின் பாரம்பரியம் தெரிந்ததோ இல்லையோ பரதநாட்டிய அரங்கேற்றம் தடந்தது.
அப்பாவும் அம்மாவும் மிகப் பெருமைப் பட்டுக்கொண் டார்கள். தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கள் தங்கள் குழந்தை களுக்குப் படிப்பிக்க வேண்டிய அவசியத்தை அப்பா தன் சிநேகிதர்களுடன் "விஸ்கி ஊற்றியபடி விளக்கினார். அப்பசு இரண்டு, மூன்று கிளாஸ் விஸ்கி எடுத்துக்கொண்ட தும் தமிழ்க் கலாச்சாரம் பற்றி மிக ஆவேசமாகப்பேசினார்.

Page 40
76 நாளைக்கு இன்னொருத்தன்
சேர்ந்திருந்த மாமாக்கள் சந்தோஷத்துடன் தலையாட்டிக் கொண்டனர்.
அம்மா கத்தரிக்காய்க் குழம்பு வைத்து இட்லியும் வடை யும் செய்ய, அப்பா எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைப் போட்டுக் கேட்டுக்கொண்டு விஸ்கிப் போத்தல்களைக் காலி செய்வார். எனக்கென்னவோ தமிழ்க் கலாச்சாரம் குழப்ப மாகத்தான் தெரிந்தது. அம்மா மேல் வீட்டில் கோயில் வைக்க அப்பா "பார் கீழ் வீட்டில் வைத்திருக்கிறார். அக்கா யூனிவர்சிற்றி ஹாஸ்டலில் படிப்புக்காரணமாக நிற்கப் போகிறேன் என்று சொன்ன போது அம்மா தயங்கினாள். அப்பா எத்தனையோ கேள்விகள் கேட்டார். கடைசியில் அக்காதான் வென்றாள். யூனிவர்சிற்றி முடிந்து பெட்டி படுக்கைகளுடன் வீட்டுக்கு வந்த போது அக்கா தன்னுடன் ஒரு வெள்ளையனையும் அழைத்துக் sொண்டுவந்து தன் சிநேகிதன் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறிமுகம் செய்து வைத்த போது நான் *ஏலெவல் சோதனைக்கு விழுந்து படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் பெரிய நாடகம். பரதநாட்டியத்தைவிடப் பெரிய அரங்கேற்றம்.
ரெயின் இன்னொருதரம் நின்றது. என்னை அறியாமல் இடது பக்கத்து ஜன்னலைத் திரும்பிப் பார்த்தேன். எப் போதும்போல் 'அவன்’ ரெயின் நிற்பதைக் கண்டதும் பேப்பரை மடித்து வைத்துக்கொண்டு ரெயினில் ஏற வந்தான். ༥
அவன் ஒரு இலங்கையனாக இருக்கலாம். அல்லது இந்தியனாகவோ பாகிஸ்தானியாகவோ இருக்கலாம். என்னைவிட நாலைந்து வயது வித்தி யாசமிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் லண்டனில் பங்கு சந்தையில் வேலை செய்பவன் என்று நான் நினைத்ததற்கு ஒரு காரணமுண்டு. சிலவேளைகளில் எனக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்ததும் தன் சூட்கேசைத் திறந்து பைல்களைப் புரட்டுவான். தற்செயலாக நான்

ராஜேஸ்வரி 77
பார்க்க நேரிடும்போது அவன் பைல்கள் பங்கு சந்தை பற்றிய தகவல்களைக் கொண்டிருப்பதை அவதானித்தேன்,
அவன் இன்னும் எனக்கு முன்னால் உட்கார்ந்தான். நான் ஒரு பயலிஜி மாணவி என்று அவன் தெரிந்திருப் பான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒருநாள் ரெயினால் இறங்கியபோது எனது புத்தகங்கள் தவறி விழ அவன் பறந்துபோன சில பேப்பர்களைப் பொறுக்கித்தந்து உதவி செய்தான். நான் வைரஸ்களையும் பாக்டீரியாக் களையும் படித்துக் கொண்டிருப்பதை அவன் கட்டாயம் அவதானித்திருப்பான்.
அவன் முன்னால் உட்கார்ந்ததும் வழக்கம்போல் நான் நிமிர்ந்து பார்த்துவிட்டுக் குனிகிறேன். அதுதான் எங்கள் "ஹலோ", அதற்குமேல் ஏதும் பேசுவதற்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அவன் பெயர் பரமசிவமாகவோ, ரஹமாகவோ, சமரக் கொடியாகவோ இருக்கலாம். எனது பெயர் வனிதா என்பது அவனுக்குத் தெரியாமலேயே இருக்கலாம். மிஸ் மயில் வாகனம் என்று சொல்லி அலுத்துவிட்டேன். வனிதாவுடன் நிற்பது மனதுக்குச் சுகமாயிருக்கிறது.
இப்போது ரெயின் லண்டனுக்குள்ளால் போய்க்கொண் டிருக்கிறது. உடைந்த கட்டிடங்கள், உடைபடும் கட்டிடங் கள், வானளாவும் கோபுரங்கள், வாழத் தெரியாத - முடியா மனிதர்கள்; பிராய்டை மூடிவைத்துவிட்டு ஜன்னலால் வெளியில் பார்க்கிறேன். வீட்டை விட்டுப்போன அக்கா வைத் தேடுகிறேன். எனது அக்கா இங்கேதான் எங்கேயோ தன் வெள்ளைக்கார போய் பிரண்டுடன் சீவிக்கிறாள். அக்கா கெட்டிக்காரி. எந்தச் சூழ்நிலையிலும் வாழ்ந்து கொள்வாள். அக்காவை ஏன் பெற்றோர்கள் விளங்க வில்லை?
அம்மாதான் துடிக்கிறாள். அப்பா தன் அறையில் குந்து படுத்திருக்க தெரிந்த மாமாக்கள் வந்து ஏதோ

Page 41
78 நாளைக்கு இன்னொருத்தன்
செத்த வீடு நடந்ததுபோல் துக்கம் விசாரிக்கிறார்கள். இவர்களில் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசு பவர்கள். "அந்தப் பிள்ளை (அதாவது அக்கா) இப்படிச் செய்திருக்கக் கூடாது.' வைத்தியநாதன் மாமா தன் ஊதிய வயிற்றைத் தடவிக்கொண்டு அம்மாவிடம் சொன் னார். இவர் ஒருகாலத்தில் தான் காதலித்த சிங்கள செக்ரெட்டரியை கைவிட்டு விட்டு மாமி சீதா லட்சுமியை சீதனத்துக்காகச் செய்து கொண்டவர் என்று அம்மாவும் மஞ்சுளா மாமியும் வடைக்கு உழுந்து அரைத்தபோது அலட்டிக்கொண்டார்கள்.
*என்னதான் இருந்தாலும் எங்கள் கலாச்சாரத்துக்கு தாங்கள் கெளரவம் கொடுக்கவேண்டும்’-இன்னொரு மாமி ஒப்பாரி வைத்துக்கொண்டார். அவள் மூன்றாம் கிளாஸ் விஸ்கி போகமுதல் வாய் திறந்து நான் கண்டதில்லை. ஒரு சாதாரண சம்பாஷணைக்கு மூன்று விஸ்கி எடுப்பவள் வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்க்க எவ்வளவு விஸ்கி எடுப்பாள்?
அக்கா கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவளின் "பாய் பிரண்ட்" உடன் தொடர்பு வைத்திருக்கிறாள். அவனைத் தமிழ்க்கலாச்சாரத்துக்காக "தியாகம்" செய்து விட்டு முன்பின் தெரியாத இன்னொருத்தனைத் தாலிக் க்யிற்றால் பிணைத்துக்கொண்டு கோயிலுக்கும் சந்தன குங்குமத்துக்கும் அவள் மனச்சாட்சி ை!! அழித்துக்கொள் ளவா சொல்கிறாள்? தமிழ்க்கலாச்சாரம் என்பது பொய்மை பயின் மறு பெயரா?
"எக்ஸ்கியூஸ் மீ?"
முன்னாலிருந்தவன் முதல் தரமாக என்னைப் பார்த்துக் கதைக்கிறான். நிமிர்ந்து பார்க்கிறேன். அக்காவைப்பற்றி இவனிடம் சொல்லி அழவேண்டும் போல் இருக்கிறது.
அவன் கண்கள் அழகானவை. தலைமயிர் சுருண்டு நேர்த்தியாய் வாரப்பூட்டு, முகம் செழுமையாய்ச் கவுரம்

*ராஜேஸ்வரி r: 9
செய்யப்பட்டு . நான் அவனை அளவிடுவதை அவன் தர்ம சங்கடத்துடன் தாங்கிக்கொண்டான். அவன் கையில் 'வாட்ஸ் ஆன்’ இருந்தது பீத்தேவான் இல் என் பார்வை யைப் பதித்துக் கொண்டேன். அவன் என்ன சொல்ல வந் தானோ தெரியாது. நான் அவன் சொல்வதைக் கேட் பதற்குத்தயாராய் இருப்பதாகக் காட்டிக் கொண்டேன்.
"கொன்சேர்ட்டுக்குப் போக இரண்டு ரிக்கட் வாங்கி னேன். தங்கச்சிக்கு வர முடியாதாம். எனக்குத்தனியாகப் போக விருப்பமில்லை " அவன் தயங்கினான். என்னை வாழ்க்கை முழுக்கத் தெரிந்தவன் போல் அவன் பேசினான். கையில் இரண்டு ரிக்கட்டுகள் இருந்தன.
அவன் என்ன சொல்கிறான்? முன் பின் தெரியாத என்னைத் தன்னுடன் பித்தோவன் பியனோ கான்சன்க்டுகு வரச் சொல்கிறானா?
வருடக்கணக்காக அக்கா பழகிய தன் அன்பனைக் கல்யாணம் செய்துவைக்காமல் அம்மாவும் அப்பாவும் நாடகம் அரங்கேற்றுகிறார்கள் இவனுடன் நான் இசை விழா பார்க்கப் போனால் அம்மா இட்லிக்குப் பதில் ஏதும் விஷத்தை விழுங்கிவிட மாட்டாளா?
நான் அவனைப் பார்த்தேன். 'ரிக்கட் வீணாகிவிடும்." அவன் மென்று விழுங்கி னான்.
முன் பின் தெரியாதவனுடன் கான்சன்ட்டுக்குப் போகக் கூடியவளாகவா நான் தெரிகிறேன்? எங்களை யாரென்று இருவருக்கும் தெரியாது. இந்த ரெயினில் ஒவ்வொரு நாள் காலையிலும் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் என்பதைத் தவிர வேறென்ன தெரியும்?
'நீங்கள் . அவன் இன்னும் தயங்குகிறான். அவனுக்குப் பெயர் என்னவாக இருக்கலாம்? எனது அப்பா வின் பெயர் இல்லாமல் வேறேதாகவும் இருக்கட்டுமே!

Page 42
e80 நாளைக்கு இன்னொருத்தன்
"உங்களுக்குத் தேவையானால் இதைப் பாவியுங்கள்.”* அவன் ஒருபடியாகச் சொல்லி முடித்துவிட்டான். ஒரு சில நிமிட நேரத்தில் எனது மனதில் நடந்த நாடகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி.
என்னவெல்லாம் எண்ணிவிட்டேன்? அவன் ''எக்ஸ் கியூஸ் மீ" சொன்ன நேரத்திலிருந்து இந்த விநாடிவரை அவனை எத்தனை கதாபாத்திரங்களாக்கி என் மனதில் அரங்கேற்றிவிட்டேன்? இவனிடம் எனது அக்காவைப்பற்றி நிறையச் சொல்லவேண்டும்போல் இருக்கிறது.
"தாங்ஸ், எனக்கு நிறையப் படிக்கக் கிடக்கிறது." நான் உண்மையான காரணத்தைச் சொல்கிறேன். என் மனதில் அம்மா, அப்பா, அக்கா, அவள் பாய் பிரண்ட் எல் லாரையும் விட பாக்டீரியாவும் வைரஸ் உம் முன் நிற் கின்றன. எனது படிப்பு சிந்தனையை அழுத்துகிறது. அக்காவுக்காக அம்மா, அப்பா நடத்தும் நாடக அரங் கேற்றத்தை நான் மனதிலிருந்து அகற்றவேண்டும். வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப நான் என்னை மாற்றிக் கொள்ளவேண்டும். ரெயின் நின்றுவிட்டது. நாங்கள் அவசரப்பட்டு இறங்கிக் கொண்டோம். நான் ஒரு நாளைக்கு அவன் பெயரைத்
தெரிந்துகொள்வேன்.
1993

7. "இப்படியும் கப்பங்கள்'
முர்த்தி அவசரமாக வேலைக்கு வெளிக்கிட்டான். லலிதா கணவனுக்காகப் புட்டும் பொரியலும் ஒரு குழம்பும் செய்து கட்டிக் கொண்டிருந்தாள்.
குழந்தை அகிலா தாய் தகப்பனின் அரவத்தையுண ராமல் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அகிலா வுக்கு ஐந்து வயது உலகம் தெரியாத வயது. உலகத்தைச் சரியாகப் புரியத் தெரியாத வயது. 'லலிதா' கணவன் மூர்த்தியின் குரலில் அளவுககு மீறிய பதட்டம் தொனித்தது. வேலைக்கு நேரத்தோட போகாவிட்டால் அவன் பதட்ட மடைந்துவிடுவான்.
நேரத்தையும் காலத்தையும் கணக்கிலெடுக்காத பெரும் பான்மையான தமிழர்களில் அவன் வித்தியாசமானவன் எதையும் சரியான நேரத்துக்குச் செய்பவன், சரியான விஷயங்களையும் சரியான நேரத்தையும் மிகவும் கண்டிப் பாகப் பார்ப்பவன் மூர்த்தி. லலிதா அவனைத் திருமணம் செய்தபோது அவனைப்பற்றி அவளுக்குத் தெரிந்த தெல்லாம் அவன் ஒரு 'நல்லபையன்’ என்பதே. மூர்த்தி ஒரு நல்ல பையனாக" அறிமுகமாகி இன்று அவளுக்கு ஒரு நல்ல கணவனாகவுமிருக்கிறான்.
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைக்குப் பயந்து இலங்கைத் தமிழர் கூடுகளிழந்த பறவைகளாக உலகெங்கும்

Page 43
82 நாளைக்கு இன்னொருத்தன்
உயிரைக் காத்துக் கொள்ள ஓடியபோது லலிதாவின் ஊரிலிருந்தும் எத்தனையோ வாலிபர்கள் உலகத்தின் நாலா பக்கங்களுக்கும் ஓடினார்கள்.
நாட்டுப் பற்றுள்ளவர்கள் எத்தனையோ தமிழ் உணர்வு உள்ளவர்கள் இன்று இறந்தாலும் ஒன்று நாளையிறந் தாலும் ஒன்று என்று நினைக்கும் தத்துவமனப்பான்மை யுடையோர், இந்தச் சிங்களவனுக்குப் பயந்து கோழை களாவதா என்ற உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள். ஏஜென்சிக்குக் காசு கொடுக்க வசதியற்றவர்கள், ஏகப்பட்ட சொத்துக்தளைவிட்டு ஓட முடியாதவர்கள். நோயாளர், முதியவர், நல்ல உத்தியோகத்திலிருப்பவர்கள், குடும்ப பொறுப்பைவிட்டு விடுதலை பெறமுடியாதவர்கள், குடும்பத் தலைமையை ஏற்றுக்கொண்ட தாய்மார்கள், விதவைகள் இளம் பெண்கள் என்போர் தமிழ் பகுதிகளிற் தங்கிவிட ஏனையோர் விமானம் ஏறி அந்நிய உலகத்துக்குப் போய் விட்டார்கள்.
மூர்த்தியும் அவன் படித்துக் கொண்டிருத்த காலத்தில் ஏதோ ஒரு இயக்கத்தின் ஆதரவாளனாயிருந்தான். தமிழர் பிரச்சினையை அறிவுபூர்வமாக ஆராயாமல் உணர்ச்சிபூர்வ மாக ஆராய்ந்து கொந்தளித்தவர்களில் மூர்த்தியும் ஒருத்தன்.
'லலிதா' மூர்த்தி இன்னொரு தரம் மனைவியைக் கூப்பிட்டான்.
ஏதோ நினைவிலாழ்ந்திருந்த லலிதா பதட்டத்துடன் தன்னைக் கூப்பிடும் கணவனை ஏறிட்டு நோக்கினாள். 'இவனை ஏறிட்டுச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் வாழ்க்கை பறக்கிறதே" ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டாள்.
*லலிதா."

நாஜேஸ்வரி 敏3
மூர்த்தியின் குரல் தாழ்ந்து தொனித்தது. மனைவியின் தலையைத் தடவிவிட்டான். அவன்த்தோ மிகவும் முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறான் சான்று அவளுக்குத் தெரிந்தது.
என்ன சொல்லப் போகிறான் என்றும் அவளுக்குத் தெரியும். ஆனால் அந்த விஷயத்தை வாய்விட்டுக் கதைப் பதையே அருவருப்பாக நினைக்கிறாள். அதை அவன் புரிந்துகொள்வான் என்று தெரியும்.
"லலிதாக் குஞ்சு ! அவன் மிகவும் நெருக்கமான உணர்வுகளுடன் அவளைக் கூப்பிடும்போதுதான் ‘குஞ்சு"
என்ற சொல்லைப் பாவிப்பான்.
அவளுக்கு அழுகை வந்தது?
அவனின் அன்பான இதயத்துள் தன்னைப் i புதைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
புட்டுப் பார்ஸலை மேசையில் வைத்துவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள். அவனை வேலைக்கு அனுப்பும் போது அழுது ஒப்பாரி வைக்க அவள் விரும்பவில்லை.
'இரவு நடந்ததுக்கு என்னை மன்னித்துக்கொள் லலிதா" அவன் குரலின் நெகிழ்ச்சி அவள் அடக்கி வைத் திருந்த அழுகையை அணைமீறப் பண்ணிவிட்டது.
“எங்களுக்கு ஏன் இந்தக் கொடிய வாழ்க்கை" அவள் விம்மி விம்மியழுதாள்.
இலங்கைத் தமிழர்களான கோடிக்கணக்கான மக்கள் கேட்கும் துயரக் கேள்வியிது.
அவனால் மறுமொழி சொல்ல முடியவில்லை.
"மனிதர்கள் எல்லாம் மிருகமாய் நடக்கினம்"

Page 44
84 நாளைக்கு இன்னொருத்தன்
அவள் கண்ணீர் அவனின் சேர்ட்டை நனைத்து அவன் தோலைத் தடவியது. இந்த விம்மல் அவன் இதயத்தை குடைந்து பாய்ந்தது.
'இல்லை லலிதா. மிருகங்கள்தான் மனிதமுகமூடிகள் போட்டுக்கொண்டும் சூட்டும் கோட்டும் மாட்டிக்கொண்டும்கெளரவமானவர்களாய்த் தெரிகிறார்கள்."
பக்கத்துத் தெருவில் காரின் ஒலிகள் கேட்கத் தொடங்கின. இனி இந்த ரோட்டில் திருவிழாக்கோலமாகத் தானிருக்கும்.
"நேரமாகுது" அவள் தன் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.
"அவன் சொன்னது எல்லாவற்றையும் மறந்துவிடு ' லலிதா' கணவன், இன்னொருத்தனுக்காக இவளிடம் கெஞ்சினான்.
"நெருப்புச் சுட்டா தோல் எரியும், அந்த நீசனின் சொல்லுகளால் நெஞ்சே எரியுதே" அவள் தன் துயர் மறைக்கத்தன் உதட்டைக் கடித்துகொண்டாள்.
லலிதா, நிலவைப் பார்த்து நாய் குலைத்தால், நில வென்ன தேய்ந்தாவிடும்” ”
அவளுக்கு ஆதரவு சொல்வதற்காக ஏதோ சொன்னான்.
‘நிலவுக்குப் பயந்து பரதேசம் போகலாமா? அவள் யோசித்தாள்.
அவன் போய்விட்டான். அழும் குழந்தையைத் தேற்றுவதுபோல் என்னவெல் லாமோ சொல்லியவளைத் தேற்றினான்.
அவன் சொன்ன எல்லா புத்திமதிகளும் அவள் காதில் துழையவில்லை. நுழைந்த சில புத்திமதிகளை நினைக்கக்

ராஜேஸ்வரி 85
கோபம் வந்தது. தன்னைச் சிறையிலிருக்கப் பண்ணிய *வனில் அவளுக்குக் கோபம் வந்தது.
**வெளியில் ஒரு இடமும் போகாதே. குழந்தை அகிலாவைப் பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் பாட சாலைக்கு அனுப்பிவிடு.'
மூர்த்தி சொல்லிவிட்டுப் போனவை காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நேற்றிரவு நடந்தது உண்மையில் நடந்ததுதானா என்று அவளால் நினைத்துக் பார்க்கக் கூட முடியவில்லை.
கருணாகரன் என்பவன் மூர்த்தியின் நண்பனாக ஒரு காலத்தில் பழகியவன். சின்ன வயதில் ஒன்றாகப் படித்த பழக்கத்தில் தொடர்ந்த உறவது, இன்று கருணாகரன் பணத்தின் திமிரால் உலகத்தையே விலைக்கு வாங்கப் பார்க்கிறான். கருணாகரனை நினைக்க அவளுக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வருகிறது.
கருணாகரன் கேட்ட கேள்வியை ஞாபகப்படுத்திக் கொண்டால் நெஞ்சே குமுறுகிறது.
இந்தக் கருணாகரன் போன்றவர்கள் தங்கை, அம்மா மார்களுடன் பிறக்கவில்லையா? அம்மாவின் அன்பையுணர வில்லையா? ஆச்சிகளின் புத்திமதி கேட்டு வளரவில்லையா? மாமி மருமகள்களிடம் மரியாதை கொடுத்துப் பழக வில்லையா? தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க எந்தப் பெண்ணும் தன் கண்ணைக் கொடுக்கத் தயங்காள். இவன் பெண்மையைக் கப்பம் கேட்கிறானே? பெண்கள் இல்லாத பாலைவனத்திலிருந்து குதித்தவனா இந்தப் பாவி கருணா கரன்?
"அம்மா." மகள் அகிலாவின் நித்திரை கலைந்த குரல் லலிதாவின் நினைவைத் துண்டாக்கியது?
o O O eo OO op

Page 45
86 நாளைக்கு இன்னொருத்தன்
கடந்த ஒரு கிழமையாக லலிதா வெளியில் போக) வில்லை. கருணாகரன் போன்ற கயவர்கள் வெளியில் திரிவார்கள் என்ற பயமும் ஏன பிரச்சினையை விலைக்கு வாங்குவான் என்ற யோசனையும் அவளை விட்டோடு அடைத்துவிட்டது. ༦་
மூர்த்தியின் பயம் கொஞ்சம் குறைந்தது.
"ஏன் இந்த நாய்களுக்குப் பயந்து நான் கூண்டில் அடைஞ்சு கிடக்க வேணும்' என்று லலிதா சண்டைபிடிப் பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் ஒரு கிழமையாக வீட்டோடு அடைந்து கிடப்பது ஒருவிதத்தில் நிம்மதியாகவும் மறுவிதத்தில் கருணாகரனின் ஆத்திரத்தையும் உண்டாக்கு கிறது?
லலிதா எப்படியோ தன் கோபத்தை தணித்துக் கொண்டாள். ஒரு கிழமைக் காலம் என்றது அவளின் நெஞ்சிற் படர்ந்த நெருப்பைக் கொஞ்சம் தணித்திருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை.
குளித்து முழுகிவிட்டுக் குழந்தையை அடுத்த வீட்டு மிஸ்ஸ் யோசப் என்ற பெண்மணியுடன் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலையைக் கவனிக்கத் தொடங் கினாள் லலிதா. . .
', மிஸஸ் யோச்ப் தான் வாசித்து முடித்தவுடன் லலிதா வுக்குப் புத்திமதிகளைக் கொடுப்பாள். ஏதோ புரட்டிக் கொண்டிருந்தவள் கண்ணுக்குப் பத்திரிகையின் முன்பக்கத் தில் போட்டிருந்த படம் கண்களை உறுத்தியது.
யூகோஸ்லாவாக்கியச் சண்டை காரணமாக ஆயிரக் கீண்க்கான முஸ்லீம்கள் சேர்பியன் துருப்புக்களின் அட்டூழி யத்தால் அழிந்து முடிகிறார்கள். அந்த அக்கிரமத்தில் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களும், யுவதிகளுமே.

Jow Giggsinvenus W 8ሽ "
சேர்பியன் ராணுவத்தினரின் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுத் தூங்கித் தற்குகாலை செய்து கொண்ட பெண் ஒருத்தியின் படம் இந்தப் பத்திரிகையில் முன்பக்கத் தில் போடப்பட்டிருந்தது.
ஒரு கணம் அவள் தன்னையந்தப் படத்தின் இடத்தில் வைத்துக் கற்பனை செய்து கொண்டாள்.
கருணாகரன் போன்ற ஆண்களுக்கும் இந்தச் சேர்பிய ராணுவத்தினனுக்கும் என்ன வித்தியாசம்?
தங்கள் ஆண்மையின் ஆதிக்கத்தின் பலத்தை பெண்மை யில் திணித்து அழிக்கப் பார்க்கிறார்கள் சிங்கள ராணுவம் செய்த கொடுமையால் அழிந்த தமிழ்ப் பெண்களின் தொகை எத்தனை? மூர்த்தி பாவம், தன் மனைவியை இன்னொருத் தனின் இச்சையிலிருந்து காப்பாற்ற என்ன பாடுபடு கிறான்?
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்ட அன்றைய இராவணன்களும் துரியோதனன்களும் இன்னும் எங்களி டையில் வாழ்கிறார்கள். இருக்குமிடங்கள்தான் வித்தியாசம், அவர்கள் நினைக்கும் பாவங்கள் எப்போதும் ஒரே மாதிரி யாகத்தான் இருக்கிறது?
அந்த உலகில் மூர்த்தி போன்ற கண்ணியமான மனிதர் களுமுண்டு. லலிதாவை மூர்த்திக்கு மனைவியாகக் கேட்டு வந்தபோது லலிதாவின் தாய் தகப்பன் மிகவும் யோசித் தனர். மூர்த்திக்குப் பெரிய குடும்பம். அவனுக்குப் பெரிய பொறுப்பு, அவனுக்குக் கட்டிக் கொடுத்தால் தன் மகள் கஷ்டப்பட வேண்டும், மைத்துணிகளின் சுமையையும் இவன் தாங்க வேண்டும் என்று பயந்தார்கள்.
தன்னை விரும்பிக் கேட்டவன் தாய் தகப்பன் தனக்காக வைத்திருக்கும் சீதனத்தைக் கேள்விப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றுதான் லலிதா நினைத்தாள். .

Page 46
88 நாளைக்கு இன்னெருத்தன்
தனக்குத் தெரிந்த சினேகிதிகளின் தமயன் ஒருத்தன் ஒரு காலத்தில் மூர்த்தியுடன் ஏதோ ஒரு தமிழ் இயக்கத்தில் இருந்தவன் என்று தெரிந்ததும் அவன் மூலம் மூர்த்தியைப் பற்றி விசாரித்தாள் லலிதா.
மூர்த்தி நல்ல பையன், முற்போக்குக் கொள்கைகள் கொண்டவன். தங்கை தமக்கையில்லாவிட்டால் தனக்கு என்று சீதனம் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான்" என்றான் சினேகிதியின் தமயன்.
சினேகிதியின்தமையனைலலிதா நன்றாகவிசாரித்தபின் மூர்த்தியைச் தான் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியனுப் பினாள் லலிதா. w இவள் சொல்லியனுப்பி, அவள் வந்து இவளைக் காண வருவதற்கிடையில் இவள் ஊரில் ஒரு பெரிய பயங்கரமே நடந்துவிட்டது. சமாதானப்படை என்ற முகமூடியில் வந்த இந்திய ராணுவம் இலங்கைத் தமிழ்ப் பெண்களை நடத்திய விதம் கண்களை கூசவைத்துக், காதுகளை செவிடாகப் பண்ணி வாயை ஊமையடையச் செய்யும் விதமாகும்.
லலிதாவைப் போன்ற எத்தனையோ பெண்களின் பெண்மை பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டது. லலிதாவின் தமயனைத் தேடிவந்த ராணுவம் மைத்துணியின் பெண்மையைச் சூறையாடியதும் அதனால் அவள் தன்னை தானேயழித்துக் கொண்டதும் ஏதோ கனவில் நடந்தது போன்றுதானிருந்தது. சிங்கள ராணுவம் தமிழருக்குச் செய்த அதே கொடுமையை இந்திய ராணுவம் செய்து கொண்டிருந்தது. அந்த ஊரில் உள்ள நாய்களும் பூனை களும் சுதந்திரமாகத் திரிய மனிதர்கள் ராணுவத் தால் மிருகங்களென வேட்டையாடப்பட்டார்கள். :نوي . நிலவும் காற்றும் மாறவில்லை. மனிதர்களின் நினைவு களில் பயங்கர வடுக்கள் பதிந்தன.
நீரும் நிலவும் கசக்கவில்லை, ஊர் தேடி வந்த ராணுவம் மனித நிழலையே கசக்கப் பண்ணும் விதத்தில் தன் மிருக வெறியைக் கரட்டியது.

v řGgsňvsuf 89
மூர்த்தி லலிதாவைக் காண ந்ேதபோது அந்த வீட்டில் இரண்டு சடலங்களையடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். காவலுக்கு வந்த "இந்து ராணுவம் இரண்டு தமிழ் பெண் களின் உயிரைக் கப்பம் எடுத்துக் கொண்டது. மைத்துணி அவள் கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள்,
அவள் உடலை எரித்த அடுத்த நாள் மூர்த்தி லலி தாவைப் பார்க்க வந்தான்.
போன மாதமாயிருந்தால் "உனது முற்போக்குக் கொள்கைகள் என்ன, சீதனம் வாங்குவதைப் பற்றி என்ன நினைக்கிறாய்' என்று குறும்பாகக் கேட்டிருப்பாள், -
இன்று அவன் வந்தபோது அவள் குடும்பத்தில் யார் இந்த அந்நியன் என்று யாரும் பெரிதாகக் கேள்வி கேட்க்க வில்லை. லலிதாவின் தாய் மனைவியையும் குழந்தையும் இறந்து போய், உடைந்துபோயிருக்கும் மனதைத் தேற்றிக் கொண்டிருந்தாள். இவன் சைக்கிள் கேற்றடியிற் சாத்தப் பட்ட சத்தம் கேட்டு கிணற்றடியில் வேலையாய் இருந்தவள் வந்தாள்.
'நான் நான் மூர்த்தி .." என்றான். லலிதா வீட்டில் நடந்த துன்பம் கேள்விப்பட்டிருந்தான். இவளை எத்த னையோ தரம் பார்த்திருக்கிறாள். ஏதோ ஒரு நெருங்கிய உறவு குரலிற் தொனித்தது V.
அவளுக்கு இவனைத் தெரியாது, இவன் எத்தனையோ தரம் ரியுட்டரிக்குப் போன பாதையில், தன்னைக் கண்டிருப் பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாள்.
கண்டதும் தொண்டையடைத்தது, கண்கள் சொரிந் தன.
தா-6

Page 47
90 நாளைக்கு இன்னொருத்தன்
"எங்கட வீட்டில இரண்டுபேர் செத்துப் போய்ச்சினம்” அவள் கேவிக் கேவியழுதாள்.
"தமிழர்கள் நிறையச் செத்துப் போச்சினம்" அவன் முணுமுணுத்தான்.
"செத்த இரண்டு பேரும் என்ர சொந்தம்" அவள் பைத்தியம்போல் சொன்னாள். - - -
* உங்கட மச்சான் பெரிய முட்டாள்" அவன் நிதானமாகச் சொன்னான். அவள் நீர்வடிந்த கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 'மிருகங்கள் கடிச்சால் மனிதர் செத்துப் போக நினைக்கக்கூடாது. கான்சர் வந்த காலை வெட்டி போடுறது பெரிய விஷயம்தான், இந்த அசிங்கமான விஷயத்தை நினைவில் இருந்து எடுக்கிறதும் . " அவன் பேசிக். கொண்டே போனான்.
"ராணுவக்காரன்கள் தன் எதிரியின்ரை ஆண்மைக்கு முகம் கொடுக்க முடியாத கோழைத்தனத்தில தான் எங்கள் பெண்களை இம்சை செய்தினம். அதற்காக நாங்கள் எங்களையழிச்சுக் கொள்ள முடியுமா?"
மூர்த்தி இவளை தேற்றுவதற்குப் பதிலாக மைத்துணி யைக் குற்றம் சாட்டியது இவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை
"லலிதா. உங்கட மைத்துணி போன்ற பெண்களைச் சாகப் பண்ணுகிறவங்ககூட சமுதாயத்தை திருத்த வேணும் ராணுவத்தால் அவள் பலவந்தப்படுத்தப்பட்டது அவள் குற்றம் என்று நினைக்கப் பண்ணியதும் அவளைச் சாகப் பண்ணியதும் எங்களின்ற கலாச்சாரத்தின் சீரழிந்த கருத் துக்கள் என்றுதான் நினைக்கிறேன்’
அவள் மெளனமானாள். இந்திய ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்ட இந்தக் குடும்பத்தில் இனி யாரும்

ராஜேஸ்வரி is locae is a 91 பெண் டுக்க வரமாட்டார்கள் என்று யோசித்துக் கொண்டி ருந்தவளுக்கு இவன் சொல்லியவிதம் வாயடைக்கப் பண்ணியது.
டெலிபோன் மணியடித்தது லலிதா தன் சிந்தனைமடலை மூடிவிட்டு டெலிபேனை எடுத்தாள், - : '.
பாடசாலையிலிருந்து ஆசிரியர் கதைப்பதாகவும் அகிலாவுக்கு ஏதோ assful என்று சொன்னதும் லலிதாவை நிலைகுலையப் பண்ணியது.
கொஞ்ச நாளைக்கு வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம் என்று மூர்த்தி சொன்னதை மறந்துவிட்டாள்.
“aut ši fu கடனைத்தரா விட்டால் உன்ரபொஞ்சாதியை ஒரு நாளைக்குத் தாவன்' என்ற கருணாகரனின் குரலை மறந்துவிட்டாள் லலிதா,
பத்தாம் மாடியில் இருக்கிறது அவளது பிளாட், லிப்ட்டுக்குக் காத்திருந்தபோது இருதயம் நின்றுவிடும் போல பக்பக்கென்று அடித்துக்கொண்ட்து.
'பாவம் அகிலா, சின்னக காயம் என்றாலும் துடித்துப் போவாளே." தாய் மனசு தவித்தது.
லிப்டால் கீழே வந்ததும் GT TIL 6io el 615 g prás ஓடினாள். மூர்த்திக்குப் போன் பன்ன விஷயத்தைச் சொல்லவில்லை என்பதைக்கூட அவள் அப்போதுதான் யோசித்தாள். அவனின் வேலைக்குப் போன் பண்ணிய போது அவன் இப்போதுதான் வெளிக்கிட்டுப் போனதாகச் சொன்னார்கள். பாடசாலை ஆசிரியர் அவனுக்கும் போன் பண்ணிச் சொல்லியிருப்பார் என்று தன்னைத்தானே சம தானம் செய்துகொண்டாள் லலிதா. - - - **

Page 48
92 நாளைக்கு இன்னொருத்தன்
உலகமெல்லாம் அந்நிய முகங்கள், அந்நிய மொழி. அவள் ஓடினாள். யாரோ அவளைக் காரிற் தள்ளியதும் இன்னொருத்தர் அவளின் வாயைப் பொத்தியதும் கனவில் நடப்பதுபோல் இருந்தது. தலையில் ஏதோ பாரமான அடி. அவள் வாழ்க்கையில் விழுந்த பலத்த அடி, எதிர்காலத்தைச் சிதறிய பயங்கர அடி நினைவு தவறிவிட்டது.
நினைவு வந்தபோது கலிகாலத்தின் அதர்மமெல்லாம் கருணாகரன் என்ற பெயரில் அவள் பெண்மையைத் துவம்சம் செய்துவிட்டது.
பிரம்மாண்டமான உருவத்தில் அவன் அவள் முன்னால் தன் கோரப் பற்களைக் காட்டிச் சிரித்தான். அசுரர்களின் அவதாரமா இந்த மனிதன்? லலிதா துவண்டுபோய்க் கிடந் தாள். திரெளபதிக்குத் துகிலுரியப்பட்டபோது கண்ணன் வந்தான். சீதை சிறைவைக்கப்பட்டபோது அனுமான் தோன்றினான்.
லலிதாவின் இதயவீணை உடைக்கப்பட்டு, எதிர்காலம் சிதைக்கப்பட்டபோது இந்த ஆங்கிலேய நாட்டின் நான்கு சுவர்களும் மெளனக் கண்ணிர் வடித்தது.
* கடன்பட்ட கணவன்ரிடம் அவன் மனைவியின் பெண்மை யைக் கப்பம் கேட்ட கருணாகரனைக் காறித் துப்பியவள் லலிதா. அவள் உதடுகளில் இரத்தம் கசிந்து கொண்டிருந்
ዶöö!•
இந்த வாயாற்தானே என்னைக் க்ாறித்துப்பினாய்" அதன்பின் அவன் சொன்ன விடயங்களும் நடந்து கொண்ட, விதமும்.
தமிழன் என்ற பெயரில் நடமாடும் இவர்கள் அவன் أنسا படித்த அ, ஆவையா படித்தார்கள்? அ, என்றால் அம்மா என்றும் ஆ என்றால் ஆதி பராசக்தி என்றும் பெண்மையைப் படித்திருப்பானா?

ரிாஜேஸ்வரி 93
மனிதத்தின் முதற்குரல் "ம்மா' என்பதை இவன் சொல்லியிருக்க மாட்டானா? மாட்டுக் குட்டி கூட "ம்மா' என்று தானே குரல் எழுப்பும். இவன் என்ன ஆண் உருவில் ஊரும் விஷப் பாம்பா? லலிதா வின் உடம்பு அடித்த நா ராகத் துவண்டது. எத்தனை நாள், எத்தனை மணித்தியாலம், அல்லது எத்தனை வருடங்கள் இந்த மிருகம் இந்த அறை யில் அவளை அடைத்து வைத்திருக்கிறான்? -
* உன்ர புருஷன் தன், தங்கச்சியின்ர கல்யாணத்துக்கு வாங்கிய கடன் திருப்பித் தராட்டால் தன்ர பொஞ்சாதி யைத் தான் தரவேணும் என்று போய்ச் சொல்' ly
கருணா கரன் கொடுத்த கடனில் மூர்த்தியின் தங்கை யின் கழுத்தில் தாலி. கருணாகரன் அவளை யுதைத்தான். ஆண்மையின் அசுர வெறிக்கு இந்த மெல்லிய பெண்ணுடல் துவண்டது. அடித்துப் போட்டுக் காரில் ஏற்றியது போல் இழுத்து வந்து அவனும் அவன் சினேகிதனும் காரில் ஏற்றி னார்கள்.
'புருஷன் வரமுதல் குளிச்சு முழுகிப் பொட்டு வைச்சுக்கோ' கருணாகரன் என்ற தெய்வத்தின் பெயரை வைத்துக் கொண்ட கயவன் உறுமினான்.
'இரண்டு நாளைக்குத் தொட விடாதே, அவன் உன்ர காயத்தைப் பற்றிக் கேள்வி கேட்பான்." :
நாய் குலைத்தது.
‘இனி நான் அடிச்சுக் காரிலே போடமாட்டேன். போன் பண்ணினா வந்திட்டுப் போ. பொலிசுக்கெல்லாம் போற கதை வைச்சா உன்ர மச்சாள்மாரின்ர குடும்பத்துக்கெல் லாம் கதையை எப்படிச் சொல்வன் என்று யோசிச்சுப் பார்" கருணாகரன் கர்ச்சித்தான். இப்படி மிரட்டித்தான எங்கள் தமிழ்ப் பெண்களை ஊமையாக்கி விட்டார்களா? லிப்டில் தள்ளி விட்டான் கருணாகரன். சிதைந்த சிலையாய்க் கிடந்தாள் லலிதா. இந்திய ராணுவத்தால் துவம்சம்செய்யப்

Page 49
94 நாளைக்கு இன்னொருத்தன்
பட்ட மைத்துணியின், கதறல் லிப்ட்டில் கேட்டது. அவளின் இறந்த உடல் கிணற்றில் மிதந்தது ஞாபகம் வந்தது, சிங்கள, இந்திய, சேர்பிய ராணுவம், கருணாகரன் போன்ற கயவர்களுக்கு வலுவற்ற பெண்களின் உடல்கள் என்ன போர்க்களமா வெற்றி கொள்ள?
பத்தாவது மாடியின் ஜன்னலால் விடுதலை தேட லாமா? தோல்வியைத் தாங்காமல் தற்கொலையை நாடு வது கோழைத் தனமில்லையா?
அடிவயிறு நொந்தது. அதனடியில் என்னவெல்லாமே. கசிந்தது, அவளுக்குச் சத்தி வந்தது. பூமியிழந்து அவளை விழுங்கிக் கொள்ளாதா என்றிருந்தது
மார்பகங்கள் இரத்தம் சிந்தின, இதழ்கள் விண் விண் என்று வலித்தன? தன் உடலையே அவள் வெறுத்தாள். விஷம் பரந்த உடம்பா இது?
என்ன செய்ய?
ஜன்னல் திறந்திருந்தது. மேகம் நிர்மலமாயிருந்தது. சூரியன் அவசரமாய் மேற்கு நோக்கி ஒடினான். எரிமலை யும் வெடித்து விட்டுத் தணிந்து விடும் அடைமழையும் அணையுடைந்து பாய்ந்தோடும் இவள் உடம்பில் பட்ட கறை எப்படித்தான் நீங்குமோ? என்ன சொல்லி இவள் அழுவாள்?
டெலிபோன் செய்தி வந்ததற்கும் இப்போதைக்கும் இடையில் ஆறுமணித்தியாலங்கள்தான் கழித்திருந்தன.
அடுத்த பிளாட் மிஸஸ் ஸோசப் அதிகாலைச் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். தான் வீட்டில் இல்லாததைக் கண்டதும் தனது பிளாட்டுக்குக் கூட்டிக் கொண்டு பாய் வைத்திருக்கலாம்.
மூர்த்தி தன் வேலையிலிருந்து வீடு திரும்ப இரவு பத்துமணியாகும். இரண்டு வேலைகள் செய்கிறான்

寄T ஜேஸ்வரி 95
தங்கைகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற அவன் இயந்திர மாக உழைக்கிறான். அவன் மனைவியின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது தெரியாமல் இன்று பத்து மணிக்கு வரு வான்
லலிதா ஜன்னலால் உலகத்தைப் பார்த்தாள். பெரிய பெரிய மாட மாளிகைகளில், இந்த மாட மாளிகைகளில் கருணாகரன் போன்ற கயவர்கள். இவர் இந்த ஜன்னலால் பாய்ந்து இறந்துவிட்டால். உலகத்துக்கு 'ஒன்றும் தெரியப் போவதில்லை. மூர்த்தி என்ன நினைப்பான்? இவள் இல்லாவிட்டால் அவன்தாங்கமாட்டானே கணவனுக்குக் காத்திருந்தால், அவனிடம் சொன்னால், அவளால் தெளி வாக ஒன்றும் சிந்திக்க முடியவில்லை. என்ன சொல்வான் மூர்த்தி?
இவள் மைத்துணியை இந்திய ராணுவம் கொடுமை செய்ய அவளை இறக்கப் பண்ணியது. சமுதாயம் அவளைப் பார்த்து அசிங்கப் பார்வை. அந்தச் சமுதாயத்தைத் திருத்த வேண்டும் என்று பிரசங்கம் செய்தானே! கலாச்சாரம் என்ற பெயரில் பெண்ணின் வாழ்க்கையைச் சிதறடிக்கும் கருத்துக்களுக்குச் சாவு மணியடிக்க வேண்டும் என்று பாரதி போல் முழங்குவானே!
இப்போது எப்படி நடந்து கொள்வான்?
இவன் மனைவியை இன்னொருத்தன் அசிங்கப்படுத்தி விட்டானே! என்ன சொல்வான் மூர்த்தி? இவள் சீதையாய்த் தீயிறங்கித் தன் தூய்மையை உலகுக்கு நிரூபிக்க வேண்டுமா? "ஊருக்கு உபதேசம், உனக்கில்லை லலிதா என்று சொல்லி விட்டால் இவளுக்கு வாழ்வேது? அவன் இதயத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ளத் துடிப் பாளே அந்த இதயம் அவனுக்காகத் திறந்திருக்குமா? ஜன்னல் திறந்திருக்கிறது; தற்கொலை தான் வழியா? அம்மாவின் இறப்பை எப்படி அகிலாவும் சகிக்க முடியும்?

Page 50
96 நாளைக்கு இன்னொருத்தன்
இவளில்லாமல் அந்தக் குழந்தை வளர்ந்து இன்னொரு கருணாகரனிடம் கைதியாக மாட்டாள் என்று என்ன நிச்சயம்?
இராவணர்களும் துரியோதனர்களும் எந்த மூலை யிலும் இருக்கிறார்களே.
லலிதா வின் நீர் வழிந்த கண்க்ள் காலையில் பார்த்த பத்திரிகையில் பார்த்த பெண்ணின் படம் தென்பட்டது.
சோவியத் ராணுவத்தால் பெண்மையிழந்த பெண்ணின் தற்கொலை!
லலிதா இறந்து விட்டால் அவள் இறப்பும் நாளைக்கு ஒரு சிறு செய்தியாக ஒரு பத்திரிகையில் வரும். .
லலிதா பெருமூச்சு விட்டாள். இல்லை, இல்லை, நான் என்னையழித்துக் கொள்ளப் போவதில்லை.
போலிசுக்குப் போனால் என்ன நடக்கும் என்று கருணா கரன் கிண்டலாகச் சொன்னான். இவளைக் குற்றவாளிக் கூண்டில் வைக்து எத்தனை கேவலமாக கேட்பார்கள் என்று தெரியும்.
மைத்துணி மாதிரி, பொஸ்ளியன் இளம் பெண் மாதிரி,
அல்லது மூர்த்தியிடம் சொல்லிவிட்டு அவன் தன்னை எப்படி நடத்துவானோ என்ற பயத்துடன் வாழ்க்கை
எல்லாம் துடித்து அழிவதா?
அல்லது கருணாகரன் போன்ற கயவர்களுக்குப் பாடம் கற்பிப்பதா? பெண்களுக்கு விடிவு பெண்மையின் சீற்றத்தில் தான் பிறக்கும். பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. லலிதா வின் கைகள் போலிஸின் நம்பரைச் சுழட்டுகிறது. கண்ணகிகள் இன்னும் சாகவில்லை! மனமோ அவள் கணவனின் ஆதரிப்புக்கும் அன்புக்கும், இவள் எடுக்கும் செய்கைக்கும் ஊக்கம் தரவேண்டும்என்றும்பிரார்த்திக்கிறது
மூர்த்தி ஒரு நல்ல பையன்.
1997

8, "நாடகங்கள் தொடரும்"
இடம் : உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு நாட்டின் தலைநகரமொன்றின் வீதி. காதலுக்கும் மனிதனின் நுண்ணிய உணர்வுகளின் பரிமாணத்தை விளக்கவும் மிகவும் சிறந்ததென்ற ஒரு மொழியைத் தனதாக்கிக் கொண்டதுமான நகரமது. உலகிலுள்ள எந்தப் பக்கத்திலுள்ள கலைஞர்கள் என்றாலும் தன் வாழ்க்கை யின் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டும் என்று தவிக்கும் அழகிய பட்டத்தையும் அது கட்டிடக்கலையில் பெயர் பெற்றது இரண்டாம் நூற்றாண்டில் ஹிட்லரால் அழிவு நேரலாம் என்பதற்காக மறைத்து வைக்கப் பட்ட அதியற்புத ஓவியங்களை, சிலைகளை, கலைப் படைப்புக்களை இன்று உலகத்தின் கலா ரசிகர்கள் ரசிப்பதற்காகக் கண் காட்சிக்கு வைத்துப் பெருமைப் படும் நாடது, நாகரீகத்தின் உச்சியில் நடமாடும் பெண்களின் நவீன வெளிப்பாட்டை புதுவை விரும்பி களுக்குக் காட்சி வைக்கும் நவ நாகரீகப் பட்டண மிது.
நேரம் : வசந்த காலத்தில் ஒரு பின்னேரம் மலர்கள் பூத்துக் குலுங்க மங்கையர் சிரித்தாட, ஆடவர் அந்த அழகில் திளைத்திருக்க, குழந்தையர் இளம்சூட் டில்

Page 51
98 நாளைக்கு இன்னொருத்தன்
அம்மணமாய் விளையாட முதியோர் தம் எஞ்சிய நாட் களை இதமாக அனுபவிக்கும் வசந்த காலம்,
அந்த சந்தி நிறைந்த சனம், அடுத்தவன் எந்த உலகத்தின் மூலையிலிருந்து வந்திருக்கிறான் என் பதை, என்ன துயரை மறக்க இப்படிக் குடித்துக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பாத மேற்கத்தியர் சேர்ந்து குடிக்கும் ஒரு 'பாரை'ச் சுற்றிய மாலை நேரம், !
மக்களின் சிரிப்பில், துயரில், காதலில், கோபத்தில், சிருங்காரத்தில், சீரளவில் எப்போதும் போல் தன் மெல்லலையை மிதமாகத் தவழ விடும் பிரதித்தி பெற்ற நதியை யண்டி நடந்து எத்தனையோ பேர் துயர் பறக்கும் நேரம்.
பின்னேர ஆதவனின் முகத்தில் அவன் பூமிக் காதலி தன் நெற்றியின் குங்குமத்தைத் தடவியோ என்னவோ அவன் சிவப்பாகத் தெரிகிறான். அவனைச் சுற்றிய மேகம் பருத்தி மூட்டைகளை அவிழ்த்து விட்டுப் பேரம் பேச அந்த மூட்டைகள் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டு நாலாபக்கமும் தெறித்தோடும் நேரமது.
மேடை யலங்காரம் : நடுச் சந்தி என்பதால் அதைச் சுற்றிய
எத்தனையோ "பார்கள்'தான் மிகவும் அலங்காரமாக இருந்தது. ஏனென்றால் அந்த பார்கள் உலகில் உள்ள மக்களின் ஆடையலங்காரங்களை மாலை நேரத்தின் தங்க நிறத்தின் பிரதிபலிப்பில் வானவில் தொகுதி களாக வர்ணம் படைத்தது. உயர்ந்தெழுந்த கட்டிடங்கள், அந்தக் கட்டிடங்களின் நடுவே பாம்பாய் நெறித்தோடும் நதி, இடை விடாத நாகரீக மோட்டார் வண்டிகளின் பவனி, நடை யில் சிலர், அவசரத்தில் சிலர், அமைதியாகப் பலர் என்று எத்தனையோ பேர் அந்தச் சந்தியை அலங் கரித்திருக்கிறார்கள்.

*ராஜேஸ்வரி 99
ஒலியமைப்பு : குழந்தையின் சிரிப்பு, கும்ரிகளின் நகைப்பு, வாலிபர்களின் எதிர்ப்பு, முதியோரிள் முனகல், நதியின் நாத தாளம், தென்றலின் இனிய கிசு கிசுப்பு.
மோட்ட்ார் வாகனங்களின் மூர்க்கமான சத்தம், மேகத்தைக் நொடுபோடும் விமானங்களின் உமுறல்.
“ஒளியமைப்பு : பூமித் தாயின் மடியில் முகம் புதைக்கும் சூரியன் குழந்தையின் தங்க நிறம் உயர்ந்த மாளிகை யில் ஏற்றப்படும் மின்சார விளக்குகளின் கண் சிமிட்டு, மோட்டார்களின் கண்ணை குருடாக்கும் வெளிச் சங்கள்.
போத்திரங்கள் : ஆஹா, எத்தனையோ?
முக்கிய பாத்திரம் என்று யாரைச் சொல்வது?
அதே அந்தச் சந்தியில் நடுவில் நாலைந்து ஆண் களுக்கு நடுவில் - துரியோதன சபையில் துகிலுரியப் பட அழைத்து வந்தவள் போல் பரிதாபமாக நிற் கிறாளே அந்தப் பெண்ணா முக்கிய பாத்திரம் அல்லது துச்சாதன்ை மாதிரி அவளை அறைகிறானே அவனா முக்கிய பாத்திரம்? அல்லது.
துரியோதனன் சபையில் அவன் போடும் சாப்பாட் டுக்காக வாய் திறவாமல் மெளன சாட்சிகளாக ஒரு பெண்ணின் அலறல்களைச் செவி மடுத்தபடி இருந்த முதியோர், படித்தோர், பண்புள்ளோர், அறிவாளர், உற் றோர், உறவினர் போல் அந்த சந்தியைச் சுற்றி நிற் கிறார்களே தமிழர்கள் அவர்களுமல்லவா முக்கிய பாத் திரங்கள். அதெப்படி மற்றவர்கள் அதாவது சந்தியைச் சுற்றியுள்ள கபேக்களில் "பார்’களில் கோப்பிக் கடை களில் அமர்ந்து இந்த நாட்டுக் கூத்தை அதிசயமாகப் பார்க்கிறார்களே அந்நியர்கள் அவர்களுமன்றோ

Page 52
00 நாளைக்கு இன்னொருத்தன்
இந்த நாடகத்தின்- அல்லது நாட்டுக் கூத்தின் உப பாத்திரங்கள். நாடகம் : கண்ணிரும் கம்பலையுமாக நடுச் சந்தியில் நிற்கும் அந்தத் தமிழ்ப் பெண் (பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள். களை கட்டவில்லை ஆனால் கறுப்புப் பாவாடையும் வெள்ளைச் சட்டையும் போட்டு ஒரு பழுப்பு நிறக் கோட்டும் அணிந்திருந்தாள்). கன்னத்தில் வழியும் கண்ணிரைத் துடைத்தபடி "என்ன தனியா வந்த என்னிட்ட சண்டித்தனம் காட்டுறியா."
துச்சாதனன் மாதிரியிருந்தவன் 'ஏனடி தனியா வாறதென்று மாய மாலம் காட்டுறாய் உன்ர கள்ளப் புருஷனைத் துணைக்குக் கொண்டு வந்திருக்கலாமே? கட்டிய புருஷனை விட்டிட்டுக் கள்ளப் புருஷன் பார்க் கிறவளுக்கு தனியாப் போ கேக்க மட்டுமில்ல நாலு பேரோடே இருக்கேக்கையும் அடுத்தவன் வந்து சண்டித்தனம் மட்டுமில்ல உன்ர சட்டை சேலையையும் தொட்டுப் பார்ப்பான். உன் மாதிரித் தமிழ்ப் பெண் களை உயிரோடு எரிக்க வேணும்'
ஆகா, அவன் சொல்வதை ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஆண்கள் செய்து வருகிறார்கள் தானே, ஏன் இவன் புதிதாக ஒரு ஸ்ரேட்மன்ட் விடு கிறான்?
வண்ணான் சொன்ன கதை கேட்டு ராமன் சீதை யைத் தீயில் இறக்கவில்லையா? (ஹ்யூமன் ரைட் வயலேஷன் என்று சத்தம் போட அம்னிஸ்ரி இண்டர் நேஷனல் அப்போது இருக்கவில்லையே)
அம்மாக்களும் பிள்ளைகளுமாய்ச் சேர்ந்துதான் ஒரு வருடத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்கான இளம் பெண்களைச் சீதனம் கொடுமைக்காக தீய்க்குப் பலி கொடுக்கிறார்கள் இந்தியாவில், இவன் என்ன புதி தாக ஏதோசொல்கிறான்.

4ாஜேஸ்வரி 10
இவன் சொன்னதை ரசித்து ஒரமாய் நின்றிருந்த ஒரு மீசைக்காரன் ஆரவாரமாகச் சிரித்தான். அவன் முன் தோன்றி மூத்த தமிழ் இனம் என்று அகப்பட்ட மேடைகளிலெல்லாம் ஏறி முட்டாள்த் தனமாகப் பேசு
1660.
டேய் முட்டாள்களே கல் தோன்றும் காலத்தே எந்த உயிர் உலகத்தில் வாழ்ந்திருக்க முடியும்?
விஞ்ஞானம் செவ்வாய்க் கிரகத்தில் மசாலா தோசை செய்யுமளவுக்கு வளர்ந்த பின்னும் உங்கள் மர மண்டைகளில் ஒரு துளியாவது பொது அறிவு புகவில்லையா? டார்வின் என்றொரு மனிசன் உயிரியல் வளர்ச்சியை எழுதினானே அவனிடம் போய் நீங்கள் கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ் இனம் என்று புலம்பி யிருந்தால் அவன் சிரித்திருப்பாரா மாட்டானா?
இப்படி இந்தத் தமிழ் மனிதர்களை (ஆண்களில் சிலரை) யார் பகிரங்கமாய்க் கேட்கப் போறார்கள் ?
எனவே அந்த மீசைக்காரனின் சிரிப்பை ஆமோதிப்பது போல் ஒரு சில பெண்கள் அவனை மரியாதையாகப் பார்க் கிறார்கள்.
அவர்கள் கல்லென்றாலும் புருஷன் புல்லென்றாலும் புருஷன் என்று போதிப்பவர்களாக இருக்கலாம். w
இந்த முட்டாள் மணிசிகளுக்குக் கல்லையும் புல்லையும் தவிர எவன் புருஷனாக வருவான்.
ஏனென்றால் இவர்கள் "உண்மையான பெண்களாக இருந்தால் அனாதையாக இந்தச் சந்தியில் இந்த வெறி பிடித்த நாலைந்து மனிதர்கனிடையே கவலைப்பட்டுக் கொண்டு நிற்கும் அந்த அவலைப் பெண்ணுக்குக் குரல் கொடுக்க மாட்டார்களா?

Page 53
102 நாளைக்கு இன்னொருத்தன்
எங்கேயோ தூரத்தில் நின்ற இன்ளஞன் இந்தக் கூத்தை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு அந்தரப் பட்டுக் கொண்டு நின்றான். அவன் அந்த அவலைப் பெண்ணின் சொந்தக்காரனாக இருக்கலாம் அல்லது அவர்கள் குற்றம் சாட்டும் அவளின் 'கள்ளப் புருஷனின் (??) (அவள் பகிரங்க மாக ஒருத்தனுடன் வாழ்கிறாள் கணவனைப் பிரிந்தவுடன் அவன் எப்படிக் 'கள்ளப் புருஷனாக முடியும்?)
அந்த இளம் பையன் அல்லது வாலிபன் ஒரு பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் மேற்கு நாடுகளுக்கு ஓடி வந்த அந்தச் சிறுவனாக இருக்கலாம். மேற்கு நாட்டுப் படிப்பையும் வாழ்க்கை முறையையும் ஓரளவு புரிந்தவனாக இருக்கலாம். இப்போதுஅவன் இந்தக் கூத்தை அரு வருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு சில நிமிடத்தில் பெரிய கூட்டம் குழுமி விட்டது. சந்தையைச் சுற்றி நிறையத் தமிழ்க்கடைகள் இருப்பதால் பாவக்காயையும் புடலங்காயையும் (யாழ்ப்பாணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை) காவிக் கொண்டு காசு கொடுக்காத நாடகம்பார்க்க இந்தக் கூட்டம் குழுமி விட்டது. யாழ்ப்பாணத்தில் கம்பத்தில் ஏற்றப்படும் நவீன யேசுக்களைத் தரிசிக்க வந்த பழக்கமோ? தூரத்தில் நின்ற அந்தப் பையனுடன் இன்னும் ஒன்றிரண்டு பக்கத்தி லுள்ள தமிழ்ப் புத்தகக்கடைக்குள்ளால் வந்தவர்கள்.
என்னடா மச்சான் கூத்து' கோலாவை உறிஞ்சிய படி ஒருத்தன் கேட்டான்.
அந்தப் பெட்டையை இந்த நாய்கள் அடிக்கின் றார்கள்” இருபத்தைந்து வயது முற்போக்கு முணு முணுத்தது.
'ஒரு தனிப் பொம்புளையை ஏன் அடிக்கிறார்கள்” குரலில் பரிதாபம்.

g tGagsiusuf 103
'அந்த பெட்டை புருஷன விட்டுட்டு இன்னொருத்த னோட இருக்கலாம்" (மேற்கு நாடுகளில் சர்வசாதாரணம்)
"அடிக்கிற பெரியவர் புருஷனோ" 'இல்லு அவரின் சினேகிதன்" கேட்டவன் திடுக் கின்றான் இந்த மறுமொழியால் ,
"ஏன் புருஷனுக்கு இல்லாத கோபம் இவருக்கு” அனுபவமில்லாத இளமையின் கேள்விக் கொழுப்பு.
* இவளின் முகத்தில் தான் முளிக்க மாட்டன் என்று புருஷன் சொல்லிப் போட்டாராம்'
'இதுக்காக வாடகைக்கு ஆள்வைச்சு அடிக்கிறாரோ"
'இல்ல. வெளிநாடுகளில்ல வாழுற தமிழ்ப் பெட் டைகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கக் கொஞ்சம் தமிழன்கள் வெளிக்கிட்டிருக்கினமாம். அவைதான் அடிக், கின ராம்'
"என்ன பாடம்? தனியா ஒரு பொம்புளையைக் கொண்டு வந்து நாலு சனம் பார்க்க நடுச்சந்தியில் வைச்சு அடிக் கிறதோ'
"அப்பதானே மற்றப் பெண்கள் கவனமாக இருப்பினம் என்ன நடந்தாலும் எங்கட கலாச்சாரத்தை மறக்க கூடாது" "எங்களைப் பற்றி அயல் நாட்டான் என்ன நினைப் பான்'
‘என்ன நினைப்பான்? இவ்வளவு நாளும் காசு உழைக்க வந்த கருப்பன்கள், வியாதி பரப்புற வெளி நாட் டான், கள்ளம் பண்ணுற ஆசியன் எண்டெல்லாம், சொல்றவன்கள் இப்ப நடுச் சந்தியில் வைச்சும் பெண் பிள்ளையை அடிக்கிறவன்கள் என்டும்சொல்லுவின ம்"தங்கள் இனத்தின் அடையாளத்தை அயலான் ஒப்படி மதிக்கிறான் என்ற அங்கலாய்ப்பு.

Page 54
04 நாளைக்கு இன்னொருத்தன்
பாங்கட காப்பியங்களப் படிச்ச வெள்ளக்காரன்களுக்கு தொண்டும் புதினமாகத் தெரியாது."
ஏன் அப்பிடிச் சொல்கிறாய்?" ஐந்து புருஷனும் பேடிகளாக்கப் பார்த்திருக்க அவன் களின் பொஞ்சாதி திரெளபதி சீலையுரிஞ்சது காப்பியமாகப் போயிட்டுது. இந்தக் காலத்தில ஒரு ஊரே சேர்ந்து பூலாந்தேவியை பலாத்காரமாக அழித்தது படமாக்கப்பட்டு விட்டது. இந்தப் பொம்புளயின்ற விஷயமும் நாளைக்கு ஒரு வெள்ளைக்காரன்ர பேப்பரில ஒரு சின்ன விடயமாகப் போகும்."
"உவன்களின்ர நடத்தையைப் பார்க்க நாக்கப் புடுங்கிக் கொண்டு சாகவேணும்போல இருக்கு மச்சான்."
'நாடகமே உலகம் நாங்கள் எல்லாம் சிறு நடிகர்கள்" சிரிப்பும் வேடிக்கையும் ஒருத்தனின் குரலில்.
'அதார்ரா மச்சான் இன்னொருத்தன் அந்தப் பொம் புளயின்ற முகத்தில காறித் துப்புறான்.'
* அந்த நீலச் சேர்ட் போட்ட மெல்லிய ஆளோ? ஒம் அவர் ஒரு பண்புவாதி. பெய்யெனப் பெய்யும் மழை என்று சொல்லத்தக்கதாகத் தன் பொஞ்சாதி கற்புள்ளவள் என்று புழுகிக்கொண்டிருப்பவர்.'
"என்ன மச்சான் உள்ர குரலில் கிண்டல் தெரியுலை?"
"அவரின்றி பொஞ்சாதி பின்னேரம் பார்ட்ரைம். கிளினிங் செய்யுறா. ஒரு சினேகிதன்ற காரில எட்டு மணி வேலைக்கு ஆறு மணிக்கே புறப்படுவோம். மணக்க மணக்க பூசிக்கொண்டு 6 மணிக்கு ஏன் போறாய் என்று கேட்க வக்கில்லாதவர் இன்டைக்குச் சந்நியில நின்று அடுததவன் பொம்பியின்ற நடத்தையைப் பற்றிக் கொதிக்கிறார்.’
*சும்மா இரு மச்சான், கிளினிங் போறதுக்கு ஆரும் வந்தால் சும்மா நாங்கள் நரம்பில்லாத நாக்கால நாலையும் பேசக் கூடாது." .

ராஜேஸ்வரி 105
தன் தலையில மலத்தை வைச்சிட்டு அடுத்தவன் நாறுகிறான் என்கிறது பிழையில்லையா?"
"மச்சான். மச்சான் அந்த ஆள் ஆர்? சிவப்புச் சேர்ட்டோட அவளைத் திட்டுகிறானே அந்த மெல்லிய மனிசன் ஆர்?"
"ஓ அவரே, அவருக்கு உலகத்துப் பெண்டுகள் எல்லாரிலயும் கோபம், அவரின்ர பொஞ்சாதி இவரின்ர அடி தாங்காம அண்ணன் வீட்ட போயிருக்கு. அண்ணன்மார் சேர்ந்து இவருக்கு மாட்டடி குடுத்துப் போட்டினம், அவளும் விடாம பிள்ளைச் செலவு கேட்டு கோர்ட் ஏறி இவரைப் புடுங்கிப் போட்டாள். அவருக்கு உலகத்துத் தாய்க்குலத் திலேயே ஆத்திரம். இப்ப இன்னொருத்தன் பெண்சாதி அடிபடுறதை இளிச்சு ரசிக்கிறார்."
"என்ன கேவலம் மச்சான். நாட்டை விட்டோடிவந்து இப்படிக் கேவலமாக நடக்கிறம், எப்படா நாங்க திருந்துவோம்."
"நாய்வாலைத் திருத்த முடியாது மச்சான். எங்கட தமிழன்ர குணத்தையும் மாற்ற முடியாது. ஆரை எண்டாலும் அடிக்காட்டா எங்கட ஆட்களுக்குத் திருப்தி வராது."
"என்னடா மச்சான் பொம்புளக்கு அடிக்கிறது ஆண்மையோ,
"உண்மையான ஆண்மையுள்ளவன் பொம்புளக்கோ, ஆதரவற்ற மனிசனுக்கோ அடிக்க மாட்டான். மனநோய்க் காரனும் பேடிகளும்தான் அந்த வேலை செய்வினம்."
‘இவன்கள் இப்படி அடிக்கிறான்கள். ஒரு பொவிஸ்காத னையும் காணல்ல."
A5 T -7

Page 55
106 நாளைக்கு இன்னொருத்தன்
"நல்ல நாடகம், ஒவ்வொரு நாளும் வீட்டில போடுற நாடகத்தை இப்ப ரோட்டில் செய்யலாம்."
'அடிபடும் பெண்ணின் அழுகை "பார்க'ளில் குடித்துக் கொண்டிருந்தோர் நெஞ்சங்களைக் குலுக்கியதோ என்னவோ ஓரிருவர் தமிழர் கூட்டத்தை நோக்கி ஓடி வந்தார்கள். ஒரு வெள்ளைக்காரப் பெண் தன் மொழியில் இந்த கேவலமான வேலையை நிறுத்துங்கள்’ என்று கத்தினாள்
ஓம், உங்க தரவளி, ஒரு நாளைக்கு ஒருத்த"ே படுக்கிற வெள்ளைக்காரிகளுக்கு இந்த விஷயம் பிடிக் காமற் தானே இருக்கும்.'
"ஒரு தமிழன் அதிர்ந்தான், அவன் அடிக்கடி மேடை களில் ஏறுபவன். பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பற்றி மேடையதிரப் பேசுபவன். பெண்களின் கடமையை (ஆண் களுக்குத் தொண்டு செய்வது போன்றவை) ஆணித் தரமாக அடித்துப் பேசுவான்.” タ
அவனுக்கு இந்த வெள்ளைக்காரப் பெண் தங்கள் பிரச்சினையில் இடைபுகுந்தது ஆத்திரத்தையுணடாக்கி யிருக்கவேண்டும்."
அவன் போன்ற கலைஞர்கள் குடும்ப உறவின் வலிமையை-பெருமையை அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுபவர்கள் ‘இது குடும்ப உறவு பற்றியது' அவன் வெள்ளைக்காரிக்கு உறுமினான்.
* குடும்ப உறவுகள் சரியாயிருந்தால் ஏன் மச்சான் உலகத்தில் இவ்வளவு சண்டைகள்,'
"குடும்பம் ஒரு கோயில் என்பதெல்லாம் a -6T 60p. At மச்சான்"
*உலகத்துச் சண்டைகள் அரசியலானது."

u TGgssivafl 107
*அரசியலைக் குழப்பியவன்களே மனிசன்கள் தானே? அவன்கள் எல்லாம் குடும்பத்திலிருந்து வந்தவன்கள் தானே'
‘எங்கட தமிழ்க் குடும்பத்தின் அன்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பு கம்பங்களில் கட்டித் தொங்கப்பட்டது மச்சான்" "அப்படியான அருவருப்பான குடும்பத்திலிருந்து பிரிந்துபோன பொம்புளக்கு ஏன் அடிக்கிறான்கள்."
"அவள் செய்தது சரியென்டு ஒப்புக்கொண்டா தங்கட பெண் சாதிகளெல்லாம் இந்த முண்டங்களையும் மூட்டை களையும் விட்டிட்டு ஓடிப்போயிடும் என்ட பயம்தான்."
*இலங்கையில பொம்புளயெல்லாம், ஒடுறதில்லையே மச்சான்."
'இலங்கையில அரசாங்கம் காசு குடுத்தா எத் தனையோ பொம்புளகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடித்தான் போவினம்."
போலீஸ் வானின் சத்தம் கேட்டது. நடுச் சந்தியில் 'நியாயம்’ வழங்கிய தமிழர்கள் மூலைக்கு ஒருத்தராய் ஓடிவிட்டார்கள்.
அவிழ்ந்த தலைமயிரையும், வழிந்த கண்ணிரையும் சரி செய்துவிட்டு அந்தப் பெண் நின்றாள்.
ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் ஒரு ஆணும் அவளுக் குக் கை கொடுத்தார்கள். - ............ بختہ
பொலிஸ்காரர்கள் வந்தார்கள். இன்னும் சில நாட்களில் இப்படி ஒரு நாடகம் இந்த அழகிய பட்டணத்தின் இன்னொரு சந்தியில் நடக்கலாம் இன்னொரு பெண்ணுக்கு "நியாயம்' வழங்கப்படலாம் இலங்கையில் செய்ததை இப்போது "International' (இன்ர் நாஷனல்) ஆகச் செய்கிறோம்.
1997.

Page 56
9. “rn 60mb p 60 sib'
விடிந்து விட்டது. வீட்டிலுள்ள என் குழந்தைகள் வெளியில் செல்ல அவசரப்படுகிறார்கள். உலகத்தைக் க்ண்டு பயப்பட்டுக் கொண்டு வீட்டில அடைந்து கிடக்கும் அனுபவம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை. நான் படுக்கையைவிட்டெழ மனமில்லாமல் ஜன்னலால் என் பார்வையை வெளியிற் செலுத்துகிறேன். எனது படுக்கை யறைக்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய மரம். ஆங்கில நாட்டின் மரக்களுக்கும் பூக்களுக்கும் எத்தனையோ பெயர்கள். பூவரச இலைமாதிரியிருக்கும் இந்த மரத்தின் இலைகள், எனக்கு இந்த மரத்தின் பெயர் என்னவென்று தெரியாது. அந்த மரத்தில் ஒரு பெரிய அணிலைப் பின்பற்றி ஒரு சிறிய அணில் ஊர்ந்து கொண்டிருந்தது. இராமர் தடவிய மூன்று விரல் அடையாலம் இந்த அணிலில் இருக்குமா?
தாயைப் பின்பற்றிக் செல்லும் சேயைக் கண்டதும் என் மனத்தை என்னவோ செய்தது. எத்தனை பா காப் புணர்ச்சியுடன் இந்த அணிற்குஞ்சு தன் அம்மா பின்ன ல ஊர்கிறது. இந்த அணிற்குஞ்சைச் சரியாகப் பார்க்கவில்லை என்று அயலவர்கள் வந்து தாய் அணிலைத் தண்டிப் பார்களா?
இன்று ஏன் விடிகிறது என்று இன்னுமொரு தரம் சலித்துக் கொள்கிறேன். இன்றைக்கில்லா விட்டாலும்

ராஜேஸ்வரி 109
நாளையென்றாலும் நான் இந்தக் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களிடமிருந்து நான் தப்ப விரும்பவில்லை தப்பவும் முடியாது.
சாப்பாட்டறையிலிருந்து வந்த கோப்பி மணம் மூக்கைத் துளைக்கிறது, அதை தொடர்ந்து வாட்டிய பாணும் மார்ப லேட்டின் மணமும் வருகிறது.
இன்னும் ஒரு சில நிமிடங்களில் என் சின்ன மகன் கார்த்திகேயன் கையில் தட்டத்தில் கோப்பியும் ரோஸ்ட்டும் வைத்துக் கொண்டு அம்மா எழும்புங்கோ என்றுசொல்வான் என் சின்ன மகனும் நானும் ஒரே நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறுவோம். மகனும் நானும் ஒரேரெயின் எடுப்போம். ஒரு கொஞ்ச தூரத்தின்பின் அவன் இன்னொரு பஸ் எடுத்துப் பாடசாலைக் ஆப் போவான்.
'ஏன் எழுப்பாமல் இருக்கிறீர்கள்? பன்னிரண்டு வயதுச் செல்லம் அம்மாவை உற்றுப் பார்த்தான்
'சுகமில்லையா?" தொடர்ந்து கேட்டான்; அப்படி ஒங்றும் இல்லை என்று தலையாட்டினேன்.
'ஒரு மாதிரியாயிருக்கிறீர்களே" அவன் அம்மாவின் முகத்தை வருடினான். அவனையிழுத்து வைத்து முத்தம் கொடுக்க ஆசை, ஆனால் அவன், தான் இப்போது பெரிய பையனாம் என்று வெட்கப் படுகிறான்
**ஆறுமணிக்கு எழும்பி சாமி கும்பிடுவீங்களே, ஏன் இண்டைக்குப் பேசாமல் படுத்திருக்கிறியள்'
சுந்தராம்பாளைக் கனவு கண்டானா, கேள்வியாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறனே நான் மறுமொழி சொல்லாமல் சிரித்தேன்
நான் எழும்பிப்போய் பல்விளக்கி முகம் கழுவிக் கொண் டேன். காத்திகேயன் என் அறையை விட்டுப் போய் விட்டான்.

Page 57
110 நாளைக்கு இன்னொருத்தன்
கோப்பி குடித்ததும் ஸ்ரேசனுக்குப் போனதும் ஏதோ இயந்திர வேகத்தில் நடந்தது. நான் மெளனமாயிருபபது என் மகனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.
பெரும்பாலும் இந்த நேரத்தில்தான் அவனது பாட சாலை, படிப்பு, எதிர்கால ஆசைகள் பற்றிக் கேட்பேன்.
தன் அகலக் கண்களை விரித்தபடி என் மகன் என் கேள்விகளுக்கு மறுமொழி சொல்வான். இன்று நான் பார்க்கப்போகும் மீனா என் ஞாபகத்தில் வருகிறாள், மீனா என்ன அந்த இந்தியப் பெண்ணும் தன் மகளிடம் எத் தனையோ கேள்விகளைக் கேட்க ஆசைப்படுவாள்தானே?
'என்னம்மா யோசிக்கிறீர்கள்?"
*அப்படி ஒன்று மில்லையடா மகனே" என்று நான் ஏதோ சொல்லிச் சமாளிக்கிறேன்,
உண்மைகளை விளங்கிக் கொள்ளாத இந்தப் பால கனிடம் ஏன் தேவையில்லாத விடயங்களைச் சொல்ல வேண்டும்?
மீனாவின் சோகமான கண்கள் என்னைத் துரத்து கின்றன, அவன் இன்று என்னை எப்படி வரவேற்கப் போகிறாள் என்று எனக்குத் தெரியாது. போன கிழமை போயிருந்தபோது நான் தனக்கு உதவி செய்ய வந்ததாகத் தான் நினைத்ததாகச் சொன்னால் பிரித்தானிய அரசாங்கத் தின் ஊழியை நான். கடமையைச் செய்கிறேன் என்று சொன்னது அவளுக்கு விளங்கவில்லை. மீனா தனக்குத் தேவையான விடயங்களை மட்டும் தான் தெரிந்து கொள்ள நினைக்கிறாள் என்று தெரியத் தொடங்கியதும் அவளின் நிலையையும் எதிர்காலத்தையும் யோசித்து எனக்குத் துக்கம் வந்தது.
எனது மூத்தமகன் ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் மீனாவைவிட ஐந்து வயது குறைந்தவனாய் இருந்தாலும்

orGgsivsufl 11
பிரித்தானிய நாட்டின் வாழ்க்கை முறையைத் தெரிந்தவளாக இருந்திருப்பாளா?
மீனா இந்தியாவில் பிறந்தவள். தாய் தகப்பன் சொல்லிய மாப்பிள்ளைக்குத் தன் வாழ்க்கையைக் கொடுத் தவள். அவனை நம்பி தான் பிறந்த பூமியை, தன்னை ம்றிந்த மனிதர்களை, தான் பழகிய சினேகிதர்களை, தான் அனுபவித்த அன்றாட வேலையெல்லாம் தியாகம் செய்து விட்டு இங்கே- லண்டனுக்கு வந்தான்.
இப்போது மீனாவின் நிலை?
எனது மகன் தனது ஸ்ரொப்பில் இறங்கிக்கொண்டான். அவன் இருந்த இடத்தில் ஒரு "இந்தியப் பெண்"-அல்லது ஆசிய நாட்டைச் சேர்ந்த பெண்வந்து உட்கார்ந்தாள்
இந்தப் பெண்ணுக்கும் மீனாவின் வயதாகத்தானிருக் கலாம், இருபத்தைந்துக்குக் கொஞ்சம் கூடிக் குறைந் திருக்கலாம்.
ஆசியப் பெண்களில் பெரும்பாலோர் மிகவும் அடக்க மாக உட்கார்ந்திருப்பார்கள். லண்டனில் பிறந்து வளர்ந்து, படித்த பெண்கள் கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்று வார்கள். அதாவது சு ஐ சுறுப்பாகத் தெரிவார்கள்.
எனக்கு முன்னாலிருந்த பெண் முகத்தைத் தாழ்த்திக் சொண்டு ஏதோ யோசனையிலுட்கார்ந்திருந்தாள்
இப்படித்தான் மீனாவும் ஒருநாள் லண்டன் பாதாளப் புகையிரத்தில் தன் கணவருடன் அடக்கமாக வந்திருப் பாளா? k
*உலகத்தில் நான் என்ன எதிர்பார்த்தன்? அம்மா சொன்ன மாதி அடக்கமான பெண்ணாகவும் அம்மா சொன்னமாதிரி புத்திசாலிப் பெண்ணாகவும்தானே என் ஊரில் வாழ்ந்தேன். கல்யாணம் செய்தவன் இப்படி நடுக்

Page 58
f12 நாளைக்கு இன்னொருத்தன்
க்டலில விட்டிட்டுப் போயிருர்கக் கூடாதே; மீனா தன் இதயம் வெடிக்கப் புலம்பியதை நான் மறக்க மாட்டேன்.
அவள் விம்பியது என் எலும்பையே உருக்கியது.
என் கையிலிருந்த ‘பைல் கனக்கிறது. இந்த 'பைல் மீனாவைப் பற்றிய "பைல், அவளைப் பற்றிய விபரங் களடங்கியது. மீனா ஒரு விபச்சாரி என விபரமாக எழுதப் பட்டிருக்கிறது.
அந்தப் "பைலை" அருவருப்புடன் பார்க்கிறேன். மீனாவையும் அவள் குழந்தையையும்பிரித்து வைக்கப் போகி றது இந்த 'பைல்'.
ரெயின் ஏதோ ஸ்ரேசனில் நின்றது. ஏறுபவர்கள் ஏற இறங்குபவர்கள் இறங்கிக் கொண்டார்கள். நான் இருண்ட குகையைப் பிழந்து கொண்டு மூவரும் !!ாதாள ரெயிலில் உட்கார்ந்து மீனாவை யோசித்தேன்.
மீனாவின் தாய் எத்தனை கற்பனைகளுடன் மீனாவை வளர்த்திருப்பாள். மூத்தமகளான மினாவை லன்டன் மாப்பிள்ளைக்குக் கட்டிவைத்தபோது எப்படிப் பூரித் திருப்பாள்?
இன்று அந்தத்தாய் தன் மகளின் கதியையும் பேத்தியின் எதிர்காலத்தையும் அறிந்து கொண்டால் இதயம் வெடித்து இறந்து விடுவாள்,
நான் ஒரு சோசியல் வேக்கர். எங்கள் டிப்பாட்மெண் டுக்கு மீனவைப் பற்றிப் புகார்கள் வந்திருந்தன.
அவள் தனது இரண்டு வயதுப் பிள்ளையைச் சரியாகப் பார்ப்பது இல்லை என்றும் அந்தக் குழந்தையின் வளர்ச் சிக்குப் பாதகமான முறையில் வாழுகிறாள் என்றும் பக்கத்து வீட்டார் புகார் செய்திருந்தார்கள்.

ராஜேஸ்வரி 113
எனது டிப்பார்ட்மென்டில் நான் ஒருத்திதான் ஆசிய நாட்டைச் சேர்ந்தவள். எனது தலையில் மீனாவின் கேசைக் கட்டி விட்டிருந்தார்கள். எனக்கு மீனாவின் மொழி தெரியாது மீனாவுக்கு ஆங்கிலம் சரளமாகத் தெரி யாது. ஏதோ பேசுவாள். அரைவாசி புரியும். அரை வாசி புரியாது.
இன்று நான் அவளின் மொழி பேசும் ஒரு இந்தியரை அழைத்திருந்தேன், அவர் சரியாக மொழி பெயர்த்து என்னிடம் அவள் நிலையைச் சொல்ல நான் றிப்போர்ட் எழுத வேண்டும்.
இதுவரைக்கும் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி மீனா நடந்து கொள்ளும் விதம் அவளின் குழந்தையின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இடையூறாக முடியும் என்று முடிவு கட்ட வேண்டியிருக்கிறது"
இதுபற்றி நான் போன்கிழமை அவளிடம் விசாரிக்கப் போன போது ஏதோ புரிந்தும் புரியாமல் நான் கிரகித்துக் கொண்டு எழுதிய விடயங்களை வைத்துக் கொண்டு நான் எந்த முடிவையும் என் மேலதிகாரிக்குக் கொடுக்க முடியாது.
நான் ரெயினை விட்டு வேளியேறி வெளியால் வந்ததும் மீனா வுக்கு மொழி பெயர்ப்பாளராக வநதிருந்த இந்தியர் எனக்காகக் காத்திருந்தார்.
அவரை எனது ஆபிஸில் போனகிழமை பார்த்துப் பேசியிருந்ததால் இன்று நான் மீனாவைப் பற்றி அதிகம் ஒன்றும் சொல்லத் தேவையில்லை.
"குட்மார்னிங் என்றார் மிஸ்டர் தேஸாய். சாந்தமான * முகம், ஆழமான கண்கள். நரைத்த தலை சாடையாக மொட்டை விழும் தலைமுடி. ஒரு காலத்தில் உயர்ந்து வளர்ந்த தோறறமாக இருக்கலாம், இப்போது வயது முதிர்ச்சியின் காரணத்தால் தளர்ந்துபோய்க் காணப்
. . . . .

Page 59
114 நாளைக்கு இன்னொருத்தன்
நீண்ட காலம் லண்டனில் வாழ்ந்தாலும் இன்னும் கலாச்சாரத்தை விடவில்லை. கையில் பகவத் கீதை வைத் திருந்தார். காலையில் மனத்துக்கு நிம்மதியாக ஏதும் படிக் கிறார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.
“உங்கள் முகம் சோர்ந்து போய் இருந்ததே' மிஸ்டர் தேஸாய் என்னையுற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னார். இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னால் பன்னிரண்டு வயது மகன் சொன்னதை இப்போது இந்தப் பழுத்த பழம் திருப்பிச் சொல்கிறது.
மெளனமாக நடந்து கொண்டிருந்தேன்.
'இந்தப் பெண்ணிடம் நீங்கள் சொனன கேள்விகளை எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். மிஸ்டர் தேஸாய் முணுமுணுத்தார்."
இருவரும் ரோட்டைக் கடந்து நடந்து கொண்டிருந் தோம். மிஸ்டர் தேஸாய் எங்களைக் கடந்து சென்ற இரு இளம் பெண்களை உற்றுப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார்.
"லண்டன் ஒரு சொர்க்கலோகம் என்று சில பெண்கள் வருகிறார்கள். நரகத்தின் ஒரு பகுதியும் லண்டனில் இருப்பது தெரியாது." நான் மறுமொழி சொல்லாமல் வந்தேன். : : * . .
நாங்கள் எங்கள் குழந்தைகளைக் கவனமாக வளர்க்க வேண்டும்' தேஸாய் எனக்குப் புத்திமதி சொல்லுவது போலச் சொன்னார்.
'மீனாவின் கணவனும் லண்டனிற் பிறந்து லண்டனில்
வளர்ந்தவன். மீனாவை இந்த நிலைக்கு தூக்கிவிட்டானே". நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை.

ராஜேஸ்வரி 115
'மீனா சொல்வதை நம்பிக்கொண்டு அப்படிச் சொல் கிறீர்கள்" மிஸ்டர் தேஸாய் சலித்துக் கொண்டார். நான் மெளனமாகி விட்டேன்.
இருவரும் மீனா வீடு வரும்வரை மெளனமாக நடந்து கொண்டு போகிறோம்.
‘இவர் மீனா சொல்வதை எல்லாம் சரியாக மொழி பெயர்த்து எனக்குச் சொல்வாரா?"
நான் யோசித்துக்கொண்டு போனேன்.
மீனா வின் கதவைத் தட்டும்போது நீண்ட நேரமாக எந்தப் பதிலும் வரவில்லை.
நான் இன்று மீனாவை வந்து பார்ப்பதாகச் சொல்லி யிருந்தும் ஏன் அவள் கதவைத் திறக்க மாட்டாள் என்று தெரியவில்லை.
மிஸ்டர் தேஸாய் பொறுமையின்றிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பொறுமையுடன் மீனாவின் வருகைக்குக் காத்து நின்றேன்.
காலைப் பொழுதில் இந்த லண்டன் தெரு எப்படிக் கலகலவென்று தெரிகிறது மீனா போன்ற பெண்களின் வாழ்க்கையின் இருண்ட எதிர்காலத்தை இந்தத் தெருவில் போவோர் யாரும் உணர்ந்து கொள்வார்களா?
லண்டனிற்தான் எத்தனை விதமான மனிதர்கள்? உலகத்தின் நாலா பக்கங்களிலுமிருந்து எத்தனையோ நிறத்தில் எத்தனையோ மொழிகள் பேசிக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளாத உலகில் முட்டி மோதிக் கொள்கிறார்களே!
இயந்திர வளர்ச்சியால் முன்னேற்றமடைந்த முதலாவது உலகத்திலிருந்து, கம்யூனிசத்தால் கறை பூசப்பட்ட இரண்டாம் உலகிலிருந்து, வறுமையைத் தாங்கமுடியாத

Page 60
116 நாளைக்கு இன்னொருத்தன்
மூன்றாம் உலகத்திலிருந்து எத்தனையோ மனிதர்கள் இந்த லண்டன் மாநகரில் குவிக்கிறார்களே. ஒவ்வொருத்தர் தேவையும் நிறைவு பெறுகிறதா?
மிஸ்டர் தேஸாய் சொன்னதுபோல் உலகம் தெரியாத மனிதர்கள் (அவர் குறிப்பிட்டது பெண்கள்) தேனில் விழுந்தழியும் மனிதர்கள் போல் லண்டன் கவர்ச்சியில் தங்களையழித்துக் கொள்கிறார்களா?
மீனா லண்டன் கவர்ச்சியில் தன்னையழித்துக் கொள்ள வில்லையே குடும்பம் காட்டிய வழியில்,கலாச்சாரம் சொன்ன கருத்துக்களில் வளர்ந்து கணவனுடன் வந்தாள். இன்று அவள் கெதி என்ன? நான் மிகவும் பலமாக அவள் கதவைத் தட்டினேன். மேல் மாடியில் அவளின் குழந்தையழுவது கேட்டது.
நான் மேல் மாடி ஜன்னலைப் பார்த்தேன். மீனாவின் முகம் தெரிந்தது இப்போதுதான் எழுந்திருக்கிறாள் போலிருக்கிறது கண்களைக் கசக்கிக் கொண்டாள். ஹலோ என்றும் சொல்லவில்லை.
என்னையும் என்னோடு நிற்கும் மிஸ்டர் தேஸாயையும் மாறி மாறிப் பார்த்தாள். யார் என்னுடன் வந்திருக்கும் மனிதன் என்று அவள் யோசிப்பது தெரிந்தது.
'நான் போன கிழமை சொன்னேனே, நான் ஒரு மொழி பெயர்ப்பாளரைக் கூட்டி வருகிறேன் என்று, அவர்தான் இவர். இவரின் பெயர். " நான் சொல்ல வந்ததை முடிக்கவில்லை. அவள் கொஞ்சமாகத் திறந்திருந்த ஜன்னலைப் பெரிதாகத் திறந்துவிட்டாள்.
*இந்த ஆம்பிள நாயை ஏன் கூட்டிக்கொண்டு வந்தாய்' மீனா சத்தம் போட்டாள். தெருவில் போவோர்கள் அவள் சத்தத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.

grʼrr (3ggsíu)6hu f` 117
'இவர் உனது பாஷை பேசுபவர்" நான் முடியுமான வரையில் என் குரலைச் சாதாரணமாக வைத துப் பேசினேன்.
"எத்னையோ தாங்கள் என்ர பாஷை பேசும் என்னைக் கட்டியவனும்தான். நான் பேசின பாஷையில் பேசினான்."
மீனா அதைத் தொடர்ந்து அசிங்கமான வார்த்தை களைக் கொட்டிக் கொண்டாள். நான் அங்கும் இங்கும் அரை குறை ஆங்கிலத்தில் குப்பை"கள் எல்லாம் கொட்டப்
ill-60 .
*ஒரு பெண்ணின்ர உடம்பைக் கட்டிலில் மட்டும் தொட்டுப் பார்ப்பவனுக்கு, உணர்வைத் தெரிந்து கொள்ளுற பாஷை என்னத்துக்கு."
தத்துவமான கேள்வியை, விபச்சாரி என்று பிரித்தானிய சோஸியல் சேர்வீஸ் பகுதியினராற் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்துப் பெண் மீனா என்னிடம் கேட்டாள்
நான் என்ன மறும்ொழி சொல்வதாம்? லண்டனிற் செல்வாக்கான வியாபாரக் குடும்பமொன்று தன் மகனுக்கு இந்தியாவிலிருந்து ஒரு “கெளரவமான" இந்துப் பெண்ணைத் திருமணம் செய்யவெண்டும் என்பதற் காக மீனாவைத் நிருமணம் செய்து வைத்தார்கள்.
மீனா ஒரு நல்ல கெளரவமான இந்தியக் குடும்பத்துப் பெண், கோடிக்கணக்கான மூன்றாம் நாட்டுப் பெண்கள் காணும் கனவான "லணடன் மாப்பிள்ளை தனக்குக் கிடைத்த பூரிப்பில் கணவனுடன், குனிந்த தலையும், உடம்பெங்கும் நகையுமாக வந்து சேர்ந்தாள்.
'ஆசையறுபது நாள் மோகம் முப்பது நாள் முடியவிட்டு இந்தப் பெண்" எனக்கு வேண்டாம் என்று போய்விட்டான் கட்டியவன்.

Page 61
11.8 நாளைக்கு இன்னொருத்தன்
புரியாத உலகம், தெரியாத பாஷை, விளங்கிக் கொள்ளமுடியாத கலாச்சாரம், கல்யாண வாழ்க்கை ஒரு கனவான கண்ட மீனா கலங்கிப் போனாள்.
கட்டிய புருஷனை வைத்துப் பார்க்கத் தெரியாதவள்” என கணவர் குடும்பம் இவளைத் துரத்திவிட்டது.
நீ ஊர் திரும்பி வந்தால் உலகம் என்ன சொல்லும். உன் தங்கைகளுக்கு எப்படித் திருமணம் நடக்கும்" தாய் தன் க்ண்ணிரால் கடிதம் போட்டிருந்தாள்.
8ቋGÜ காலத்தில் மீனாவின் கணவன் என்று அறிமுக மான ஒருத்தள் இவளிடம் பரிதாபம் காட்டினான். ஆண்கள் கலிற் காட்டும் பரிதாபம் அவர்களின் இரவின் இச்சைக்கு அத்திவாரம் என்று புரியாத மீனா நம்பி கெட்டுவிட்டாள்
அவன் இன்னும் சில "பரிதாபம் காட்டும் ஆண் மிருகங்களையழைத்து வந்தான்
.பக்கத்து வீடு மீனாவுக்குப் பரத்தை" பட்டத்தை மிகவும் சுகமாகக் கட்டி லண்டன் சோசியல் சேர்விசுக்கு அறிவித்து விட்டார்கள்."
மீனா தன் இரண்டு வயதுக் குழந்தையை நித்திரை யாக்கிவிட்டு இரவில் *வியாபாரம்" செய்யப் போவதாகப் பக்கத்து வீட்டார் சொல்லியிருக்கிறார்கள்."
(மீனாவின் சாட்சியத்தைச் சரியாக மொழி பெயர்த்துச் சொல்ல வந்த தேஸாய்க்கு மீனாவைக் காணவே அவளைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவளிட மருந்த அவளின் குழந்தையைப் பிரித்து அரசாங்கப் பாப்பில் வளர்க்க இந்த மனிதன் தயங்கப் போவு தில்லை."
நான் மிஸ்டர் தேஸாயைப் பார்த்தேன். மீனாவின் அர்ச்சனை வார்த்தைகளின் அருவகுப்பு அவர் முகத்தில்

ராஜேஸ்வரி m 419
அப்பிக் கிடந்தது. இந்தப் பெண்ணின் முகத்தையும் பார்க்க மாட்டேன் என்பதுபோல் எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றார். சீதையின் தூய்மையை உலகுக்குக் காட்டச் சீதையைத் தீயில் இறக்கிய ஆண்வர்க்கத்தின் பிரதிநிதி மிஸ்டர் தேஸாய், மீனா இந்தியக் கலாச்சாரத்தை-இந்துப் பண்பாடுகளை மிதித்துச் சிதைப்பதைத் தாங்குவாரா?
‘மிஸ்டர் தேஸாயின் முகத்தின் கோபம் வெடித்தது. வானத்தில் மழைகள் துளிர்த்தன.”
"லண்டனில் எப்போது என்ன சுவாத்தியம் மாறும் என சொல்லமுடியாது. லண்டனிற் காலநிலை காவாலித்தனமாக வளர்ந்த பணக்கார வாலிபன் பெண்ணுடன் விடும் சேட்டை மாதிரித்தான். எப்போது மழை வரும், எப்போது பணி கொட்டும் என்று காலநிலை அறிவிப்பளர் அழகாகச் சிரித் துக்கொண்டு டி. வி.யிற் சொன்னதெல்லாம் அடிக்கடி பொய்த்துப் போகும்."
“என்ன இந்தப் @uឆ្នាំ பெரிய வாயாடியாக இருக்கிறாளே" மிஸ்டர் தேஸாய் சலித்துக்கொண்டார்.
ஆண்கள் கோபம் வந்தால் அணு குண்டைப் போட்டு ஒருத்தரையொருத்தர் அழித்துக் கொள்ளும் உலகில் ஒரு பெண் தன் நிலைமையைப் பலப்படுத்தத் தன் "வாய்" என்ற ஆயுதத்தில் வார்த்தைகள் என்ற அம்பைப் பொருத்துவதை இவராற் சகிக்க முடியாதாம்.'
மீனா தயவுசெய்து கதவைத்திற நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்". தான் கெஞ்சினேன்.
என்ன கேட்கப் போகிறாய்? அவள் கத்தினாள். 'நீ திருந்துவதாக வாக்களித்தால் அரசாங்கம் உனக்கு
உதவி செய்யும், உன் குழந்தையை உன்னிடமிருந்து அரசாங்கம் பிரித்தெடுக்காது."

Page 62
120 நாளைக்கு இன்னொருத்தன்
நான் ஒவ்வொரு வார்த்தையாக அவனுக்குச் சொன னேன்.
அவளின் கணவரின் குடும்பம் மீனாவிடமிருந்து குழந்தையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று மிகுந்த பலத்துடன் விவாதித்துக் கொண்டிருப்பதும் எனக்குத் தெரியும்.
பக்கத்து வீட்டார் என்ற பெயரில் மீனாவின் கணவரின் குடும்பம்தான் அனாமதேயக் கடிதம் போட்டிருந்தாலும் ஆச்சரியமான விஷயமில்லை, அனாமதேயக் கடிதமோ இல்லையோ என்ன கடிதம் வந்தாலும் நாங்கள் கட்டாயம் விசாரிக்க வேண்டும்.
" என்ன சொல்கிறாய், நான் இருந்து போகிறேன் என்று சொன்னால் நீ என்னிடமிருந்து என் குழந்தையை பிரிக்க மாட்டேன் என்று சொல்கிறாயா"
அவளின் குரலில் ஆச்சரியம்.
இவள் சம்மதித்தால் அரசாங்கம் இவளுக்கு உதவி செய்யும் புயல் தென்றலாக மாறுவதில்லையா, அணை கடந்த வெள்ளம் சிறு அருவியாகப் போவதில்லை? காலத்தின் கோலத்தால் இந்த நிலைக்குள் தள்ளப்பட்டேன் ஒரு காலத்தில் திருந்த மாட்டாளா?
எனது நம்பிக்கை விரிந்தது.
மிஸ்டர் தேஸாய் என்னை வெறித்துப் பார்த்தார்.
**இந்தப் பெண்ணிடமிருந்து இந்தப் பிள்ளையை எடுக்க முடியாதா'
தேஸாய் நீதிபதியாய், கடவுளாய் மாநி இவர் பாவங் களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கும் குரலில் கேட்டார்.
எனக்கு எரிச்சலாக இருந்தது. எப்படி இந்த மனிதன் நடு நிலைமையிலிருந்து மீனாவின் சாட்சியத்தை மொழி பெயர்த்து சொல்லப் போகிறார்.

ராஜேஸ்வரி 121
மிஸ்டர் தேஸாய் சொன்னது மீனாவுக்குக் கேட்டிருக்க வேண்டும்.
“டேய் கிழவா நீ நெற்றியில குங்குமமும், வாயில பகவத்கீதையும் சொல்லிக் கொண்டு எத்தனை பெண்க ளோட படுத்தெழும்பிறாய். கடவுளையும் தெய்வீகத்தையும் பேச ஆண்களுக்கு என்னடா தைரியம்’
மிஸ்டர் தேஸாய் தன் ஆத்திரத்தைக் காறித்துப்பினார்.
“டேய் கிழவா, என்னிட்ட வந்து கோ பணத்தை அளிழ்க்கிறவன்கள் அடுத்த உலகத்திலிருந்து வந்த ஆண் பிள்ளையார் இல்லையடா, உன்னைப் போல பெரிய மனிசன்கள்தான்ரா என்னைப்போல பெண்களை இந்த நிலைக்கு ஆக்கினம்"
அவள் பதிலுக்குக் காரித்துப்பினாள்,
‘'நீ ஒரு இந்தியப் பெண், எங்கள் இந்துக் கலாச்சாரத் கிற்கே நீயொரு சாபக்கேடு" கிழவர் கோபத்தில் வெடித்தார்.
"கிழவா பம்பாயிலயும், டெல்லியிலயும் திறந்து போட்டுத் திரிகிற இந்துக் கலாச்சாரத்தை ஏனடா நீ பார்க்காமல் லண்டன் வந்திருக்கிறாய்? உன்னைப்போல ஆம்பிளைகள் இருக்கும் வரை என்னைப் போல பெண் களுக்கு அடையாள அட்டைகள் இல்லையட பெண்களுக்கு எங்கடா உலகம்? என்னடா கலாச்சாரம்? என்னடா மொழி? என்னடா வாழ்க்கை" அவள் வெடித்தாள். பெண்கள் வாழவது ஒரு நாலாம் உலகம். ஆண்களால் வகிக்கப்பட்ட உலகம். *
1997
நா-8

Page 63
10. "இயேசுவுக்குப் பொலிஸ் காவல்
வானத்திற்கும் பூமிக்கும் என்ன சண்டையாம்? விடிந்த நேரத்திலிருந்து பூமித்தாயை நனைத்துக்
கொண்ட வருண பகவானுககு உதவி செய்ய வாயு பகவானும் துணையா என்ன?
காற்றடித்து மழையைச் சீவி வாரிக் கொண்டு பெரிய அல்லோல கல்லோ லம்.
நடந்து செல்வோர் குடைபிடித்தும் நனைந்தும் தங்கள் காரியத்தைச் செய்ய விரைகிறார்கள். காரில் விரைபவர்கள் யார் நனைந்தால் என்ன என்ற அக்கறையில்லாமல் ஏதோ அவசரத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த இரட்டைத் தட்டுச்சிவப்பு பஸ்நகரமத்தியில் உள்ள பஸ் தரிப்பில் கற்பிணிப் பெண் போல் தன்னில் நிறைந்து தள்ளும் பிராணிகளுடன் நின்று கொண்டிருந்தது.
முதியோர், இளையோர், பெண்கள், குழந்தைகள் கறுப்பர், வெள்ளையர், இரண்டும் கலந்த நிறத்துடன் என்று எத்தனை சாதி அந்த இரட்டைத் தட்டு பஸ்ஸில்? அவசரப்படும் மனிதர்கள் அடக்கமாக உட்கார்ந்திருந் தார்கள். அவர்கள் மனத்திரையில் எத்தனை நாடகங்களோ?

ராஜேஸ்வரி , இச்?டிை 12s
கடைசியில் ஒரு இளம் சோடி ஆங்கிலேயர் காதல் மயக்கத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் களுக்கு முன்னிருந்த சீட்டில் ஒரு ஆசியக் குடும்பம் பங்காள தேசத்தவர்களாகவிருக்கலாம் மூன்று குழந்தை களுடன் நெருங்கியடித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர் களிடமிருந்து ஒதுங்கியிருக்கும் பாவம்.
கொண்டக்டரில்லாத பஸ்.
ட்ரைவர் ரிக்கட் விநியோகம் செய்து கொண்டிருந்தான்.
ட்ரைவருக்குப் பின்னாலிருந்த சீட்டிலமர்ந்திருந்த 9@ ஆசிய முதிய தம்பதிகள் அடிக்கடி ஒருத்தரையொருத்தர் பார்த்து தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந் தார்கள்.
ஆசிய முதியவர் அடிக்கடி தன் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டார். அவர்கள் அமைதியான தோற்ற முடையவர்கள். குஜராத்தித் தம்பதிகள் போலும், இருவரும் தங்கள் சுருங்கிப் பழுப்பேறிய நெற்றியில் குங்குமம் வைத் திருந்தார்கள்.
வெளியிற் பெய்த மழையால் உள்ளுக்கிருப்போர் விடும் மூச்சு ஆவியாகி பஸ் கண்ணாடிகளைப் புகார் மாதிரி முடியிருந்தது.
பங்காளக் குடும்பத்தினரின் பெரிய குழந்தை ஜன்ன லோரமாக இருந்த குழந்தை கண்ணாடியிற் படிந்திருக்கும் புகாரில் தன் இளம் சிறு விரலால் சித்திரம் தீட்டிக் கொண்டி ருந்தது. பெரிய முகத்தில் இரு சிறு கண்களும் ஒரு பெரிய சிரித்த வாயுமான சித்திரம்.
அவர்களுக்கு முன்னால் ஒரு பெரிய ஆங்கிலேயன்(?) தன் பெரிய வயிற்றைத் தடவி விட்டபடி அடிக்கடி உஸ் உஸ் சான்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். ஆஸ்மாக்காரன் போலும், கழுத்து புடைத்து நரம்பு தெரிந்தது.

Page 64
124 நாளைக்கு இன்னொருத்தன்
கொஞ்சிக் கொண்டிருக்கும் ஆங்கிலேயர்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு பிரயாணிகள் வந்து உட்கார்ந் தார்கள்.
ஒரு வெள்ளைக்காரன் தோய்ந்து நனைந்து போய் நனைந்த கோழி போல் வந்திருந்தான். அவனைத் தொடர்ந்து வந்த ஆசிய மாது மிகக் கவனமாகத் தன் குடையை மடித்து அருகில் வைத்துக் கொண்டாள். மிகவும் நாகரீகமாக உடை அணிந்திருந்தார்கள் பஸ்ஸில் உள்ள சீட்டுகளில் இருப்பவர்களை விடக் கூட மனிதர் நெருங்கி யடித்துக் கொண்டு பஸ்ஸில் நிறைந்திருந்தார்கள்.
ஆஸ்மாக்காரன் பொறுமையின்றி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான். அவன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்கக் கிழவன் இருமியபடி வந்து உட்கார்ந்தான். ஆஸ்தமாக்கார் வெள்ளைக்காரன் இருமிக் கொண்டிருக்கும் ஆபிரிக்கக் கிழவனை அருவருப்புடன் பார்த்தான்.
பங்காளக் குழந்தைக்கு பசியோ என்னவோ ஆலர் பரணம் செய்யத் தொடங்கி விட்டது. வெளியில் மழை, உள்ளே அழுகை, இருமல் ஆஸ்மா இழுப்பு இன்னும் எத்தனையோ சத்தங்கள் பின்னாலிருக்கும் சோடியின் முத்தத்தின் சத்தம் வேறு. م .
பஸ் இன்னும் புறப்படவில்லை. தெப்பமாய் வந்திருந்த வெள்ளைக்காரன் தனது கையிலிருந்த “வேர்க்கஸ் பார்ட்டி" பத்திரிகையைத் திறந்து வாசிக்கத் தொடங்கினான்.
அவனுக்குப் பக்கத்திலிருந்த பெண் சல்மன் ருஷ்டியின் “சற்றணிக் வேர் ஸஸ்" புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள். "ஏன் ஏன் இன்னும் பஸ் கிழம்பவில்லை" உயர்ந்து வுளர்ந்திருந்த ஒரு கறுப்பு இளைஞன் ட்ரைவரைப்பார்த்துச் சத்தம் போட்டான்.

ராஜேஸ்வரி 125
ட்ரைவருக்கும் சில பிரயாணிகளுக்கும் ஏதோ தகராது நடப்பதாற்கான சத்தங்கள் கேட்டன. பின்னாயிருந்த பிரயாணிகளுக்குச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தே தவிர என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
நின்றிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு மூன்று இளம் பெண்கள் பஸ்ஸில் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
பிரயாணிகளுக்குக் காலை வணக்கம் சொல்லிக் கொண்டு ‘யேசுவிடம் உங்களை ஒப்படையுங்கள்' என்று உரத்து சொன்னார்கள்.
ஒரு பெண் வட ஆபிரிக்க அல்லது கிழக்கு ஆபிரிக்கப் பெண்ணாக இருக்கலாம் கிளியோபாத்ரா மாதிரி நீண்ட கண்களும் ஒடுங்கிய முகமும்,
முல்லை மொட்டுக்கள் போன்ற உதடுகளும், பார்வை யில் ஒரு ஒளி கருணையும் குழந்தைத்தனமும் நிறைந்த ஒரு குழப்பமான சஞ்சலம்
மெல்லிய உடலைச் சுற்றி கம்பளியாலான கருப்புக் கோர்ட், கையிற் பைபிள்.
"உங்களை ரட்சிப்பதற்காக யேசு பிறந்தார், உங்களுக் காகத் தன்னைத் தியாகம் செய்தார். உங்கள் துன்பங்களை அவரிடம் ஒப்படையுங்கள், அவர் உங்கள் துன்பத்தைத் துடைத்துப் பாவங்களைப் பெருமனதுடன் மன்னிப்பார்."
ஆபிரிக்கப் பெண் பிரசங்கம் செய்யத் தொடங்கினாள்" அடக்கமாக இருந்து ஒரு சிலர் அவள் சொற்பொழிவைக் கேட்டன் ர்,
"ஒய், உமது யேசுவிடம் சொல்லி உனது முட்டாள் வாயை மூடச்
-ع
சோல்
ஆஸ்த்மாக்காரன் சத்தம் போட்டான். போட்ட சத்தத் தில் அவன் மூச்சு இழுக்கத் தொடங்கிவிட்டான்,

Page 65
126 நாளைக்கு இன்னொகுத்தன்
அவனுக்குத் துணையாக ஆபிரிக்கக் கிழவன் இருமல் தொடர்ந்தது.
பங்காளக் குழந்தை நீலாம்பரி வாசித்தது.
முத்தம் தந்துகொண்டிருந்த காதலர்கள் தங்கள் கந்தர்வ உலகத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்கள்
பைபிளுடன் வந்த பெண்களில் உயர்ந்திருந்தவள் ஆசிய இனம். அவள் முகம் மழையில் நனைந்தெழுந்த மல்லிகைப் பூப்போல் பளிச்சென்றிருந்தது. வண்டிரண்ரைக் கண்களாக வளையவிட்ட குறுகுறுப்பு. இளமைக் கவர்ச்சி யைக் கலையாக்கும் இதழ்கள்.
"நான் ஒரு சீக்கியப் பெண்ணாகப்பிறந்தேன். யேசுவின் அருளால் இப்போது உண்மைகளை உணரத் தொடங்கி விட்டேன்" அந்த அழகி உருக்கத்துடன் பேசத் தொடங்கி
SITT ST.
ஏன் உன் தாய் தகப்பன் பொய்களையே சொல்லித் தந்துகொண்டிருந்தார்களா" நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரி விண்ணானமாகக் கேட்டாள்.
"அப்படி அபத்தமாகச் சொல்லவேண்டாம். என் தாய் கூட இப்போது கிறிஸ்தவப் பெண்ணாக மாறிவிட்டாள். ஒருநாள் யேசுபிரான் என் தாயிடம் வந்தார்." அவள் பேச்சை முடிக்கவில்லை.
அந்த வெள்ளைக்காரப் பெண் கொல்லெனச் சிரித்தாள்.
"உனது அப்பன் அப்போது எங்கே போயிருந்தான் நீங்கள் சீக்கியர்கள் கையில் வாளும் வளைய மும் கொண்டு திரிவீர்களே. யேசு வரும்போது வாளைக் காட்டிப் பயம் காட்டவில்லையா" அந்த வெள்ளைக் காரப் பெண்ணின் கிண்டலுக்குப் பலியானாள் அந்த இளம் சீக்கியப் பெண்.

ராஜேஸ்வரி 127
பைபிளை வைத்துக்கொண்டிருந்த மூன்றாவது இளம் பெண் சல்மன் ருஷ்டியின் "சற்றானிக் வேர்ஸஸ்" நாவலை வைத்துக்கொண்டிருந்த ஆசிய மாதுவிடம் போனாள்.
"உங்களைப் பார்த்தால் இந்துப் பெண் போல இருக் கிறது' பைபிளை வைத்துக்கொண்டிருந்த இளம் பெண் தனது அகன்ற விழிகளால் அந்த மாதை ஏற இறங்கப் பாரித்தாள்.
"நான் ஒரு இந்துப் பெண் என்று கண்டுபிடித்த தற்கு கைதட்டிப் பாராட்டவா" நறுக்கென்று கேட் டாள் அந்த நாகரீக மாது.
'நாங்க முட்டாள்களாக ஆக்கப்பட்டிருந்தோம். மூளையற்ற அறிவிலிகள் போல் மாட்டையும் பாம்பையும் எலும்புக்கூடு போட்ட உருவங்களையும் வணங்கப் பழக் கப்பட்டிருந்தோம். ஆயிரம் உருவங்களை நம்பி வாழ் நாளை வீணாக்குவதைவிட ஒருத்தனை, கடவுளின் தூதனான யேசுவை நம்புங்கள்" உயர்ந்து வளர்ந்துபோய் பஸ் கம்பியொன்றில் தொங்கிக் கொண்டு நின்றிருக்கும் ஒரு கறுப்பனின் ரேடியோ விலிருந்து ஆபிரிக்க இசையொன்று தாளகதியுடன் மற்ற வர்கள் காதையும் துளைத்தது. பஸ்ஸிலிருந்த பிரயாணிகள் கூட்டம் ஒரு நாடகத்தைப் பார்ப்பதுபோல் அமர்ந்திருந் தார்கள்.
"உங்கள் பிரசங்கத்தை நிறுத்திக்கொண்டு பஸ்ஸை விட்டு வெளியேறுங்கள். நீங்கள் வெளியேறு மட்டும் நான் பஸ்ஸை எடுக்க மாட்டேன்" ட்ரை வர் பொறுமையற்ற குரலில் உத்தரவிட்டான்.
"ஆமாம் உங்கள் பிதற்றல்களைக் கொண்டுபோய் தெருவில் கொட்டுங்கள்"
ஒரு ஆங்கிலேயப் பெண்-மிக மிக மூதாட்டி, தன் நடுங்கும் குரலில் சத்தம் போட்டாள்.

Page 66
18 நாளைக்கு இன்னொருத்தன்
*உங்கள் பாதிரிகள் எங்கள் நாடுகளுக்கு வரும்போது தாங்கள் பட்டாடைகளை விரித்துப் பாதிரிகளை வர வேற்றோமே" கறுப்பு வாலிபன் கிழவியிற் சீறி விழுந்தான்,
‘இதெல்லாம் உலக யுத்தத்தால் வந்த வினை"
கிழவி கறுப்பு வாலிபனிற் பாய்ந்தாள்.
''67 sits T 66.60s.T.'
"நீங்கள் எல்லாம் எங்கள் நாட்டுக்கு வந்த வினை' கிழவியின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.
"நாங்கள் வேலைக்காரர்களாக அழைக்கப்பட்டு வந்தி
ருந்தோம்"
'நீங்கள் என்ன வேலையா செய்கிறீர்கள்? இரவு பகலாகக் காட்டு மிராண்டி மாதிரிப் பாட்டுக்களைப் போட்டு அக்கம் பக்கத்தாருக்குப் பைத்தியம் உண்டாக்குகிறீர்கள்."
'உங்களுக்கு ஏற்கனவே டைத்தியம். இல்லாவிட்டால் உலகமெல்லாம் போய் உலகத்தையே சின்னாபின்னம் செய் திருப்பீர்களா."
கறுப்பனின் கிண்டலுக்கு “வேர்க்கஸ்பார்ட்டி" பத்திரிகை வைத்திருந்தவன் கலகலவென்று சிரித்தான்.
யார் சிரிக்கிறார்கள் என்று தலையைத் திருப்பிய பங்காள முஸ்லீம் மனிதன் சல்மன் ருஷ்டியின் பித்தகம் வைத்திருந்த பெண்ணை எரித்துவிடுவதுபோற் பார்த்தான்.
அந்த ஆத்திரத்தில் கண்களைத் தவிர மற்ற எல்லா பாகத்தையும் மூடிக்கொண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்த மனைவியை ஏதோ சத்தம் போட்டாள்.
'கடவுளின் குழந்தைகளே அமைதியாக இருங்கள். நிறத்தையும், மொழியையும், சமயத்தையும் காரணம் வைத்துக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பகைத்துக்

vr&gsivsuf 129
கொள்ளாதீர்கள், நாங்கள் எல்லோரும் யேசுவின் குழந் தைகள், எங்கள் குறைகளை யேசுவிடம் சொல்வோம். அவரின் அன்புக்கு எங்களை ஆட்படுத்திக் கொள்வோம்'
வட ஆபிரிக்க அழகி கணிரென்ற குரலிற் சொன்னாள்.
‘சட் அப் அன்ட் கெட் அவுட்" ட்ரைவர் கத்தினான், 'ஏய். பிளடி இடியட்ஸ் கெற் அவுட், எனக்கு ஆஸ் பத்திரி அப்போயின்ட்மெண்ட்டுக்கு நேரமாகிவிட்டது?"
அஸ்த்மா க்காரன் எழுந்து நின்று கூக்குரல் போட்டான். நோயும் முதுமையுமான அந்த இந்தியத் தம்பதிகளில் அந்த மனைவி அழத் தொடங்கிவிட்டாள்.
பஸ் இன்னும் நின்று கொண்டிருந்தது. மழை சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. காற்று பேய்த்தனமாகச் சுழன்று வீசியது.
"இன்னும் இந்த உலகத்தில் மனிதர்கள் மதுவாலும், மயக்க மருந்துகளாலும் அறிவைக் கெடுக்கும் ஆபாச கலை களாலும் மிகவும் பெலவீனப்பட்டிருக்கிறார்கள், எங்கள் சமுதாயம் உய்ய நாங்கள் இறைவனைத் துதிப்போம்."
பைபிள் வைத்திருந்த சீக்கியப் பெண்ணின் குரலில் பரிவு.
"பேராசை பிடித்த மனிதர்களாய் இன்று ஆகாயத்தில்
ஓட்டையும் இயற்கையில் அழிவும், காற்றில் நச்சும் பரந்து
விட்டது. இவற்றையெல்லாம் உணர நீங்கள் யேசுவை நம்புங்கள்"
கடவுளுக்காக வட ஆபிரிக்கப் பெண் உருகினாள்.

Page 67
80 நாளைக்கு இன்னொருத்தன்
'பழமையான மூடநம்பிக்கையால் சாதி, சமயம், ஏழை, பணக்காரர் என்று மனிதகுலம் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்வதை விட்டுவிட்டு ஒருத்தரில் ஒருத்தர் அன்பாய் இருப்போம்" -
யேசுவின் பிரதிநிதியான அடுத்த ஆசியப் பெண் முழங் கினாள்.
“ஆமாம் இந்த மாதிரிப் போதனைகளுடன் எங்கள் நாடுகளுக்கு உங்கள் மத போதிகள் வந்துதான் எங்கள் நாட்டைக் கொள்ளையடித்தார்கள். ஒரு கையில் பைபிளும் அடுத்த கையில் துப்பாக்கியுடனும் வந்து எங்கள் நாட்டைக் கொள்ளையடித்தபோது நிறம், மொழி, சமயம் என்றெல் லாம் பார்த்துத்தானே எங்கள் நாட்டை நிர்மூலமாக்கி னிர்கள்."
கறுப்பு வாலிபன் அந்தப் பெண்ணிடமிருந்து பைபிளைப் பறிக்க எத்தனித்தான்.
"ஆமாம், கப்பிட்டலிஸ் மும் இம்பீரியலிஸமும் உலகத் தைக் கூறு போட்டு அழித்துக் கொண்டிருக்கிறது” தோய்ந்து நனைந்துபோய் நின்றவன் சொன்னான்.
1997

11. நாளைக்கு இன்னொருத்தன்!
அம்மா இன்னும் தன் முகததில் சிரிப்பைச் சுமந்து கொண்டிருக்கிறாள். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் ஏறி விழுந்த காயத்தின் வடுக்களை மறைக்க இந்த வய திலும் அவள் முகத்தில் ஒரு சிரிப்பு.
சிரிப்பு என்று சொன்னா ஏதோ மனம் திறந்த, முகம் மலர்ந்த, கண்கள் பளிச்சிடும் சிரிப்பல்ல. வாழ்க்கையின் அவலத்தை அன்றாட வாழ்க்கையின் எதிர்பாராத விடயங், களை எதிர்கொள்ளும் சிரிப்பு.
அப்பாவின் முகத்தை நான் நேராகப் பார்த்து எத். தனையே வருடங்களாகிவிட்டன. எனக்கு வயது முப்பத்தி மூன்று. இருபது வருடங்களுககுமுன் நான் "பெரிய பிள்ளை யாகி' விட்டபோது ஏதோ ஒரு உணர்வில் தலையைத் தாழ்த்திக் கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை நான் அப்பாவை "நேரே பார்த்ததில்லை. எனது சிறு வயதில் அவரின் தோளின் மேல் ஏறியிருந்து கோயில் திருவிழா வுக்குப் போனது ஞாபகமிருக்கிறது. அவரின் சால்வையால் என்னைச் சுற்றிக் கொண்டு இளவரசி" என்று என்னை நினைத்துக் கொண்டு அவரின் தோளென்ற தேரில் பவனி வந்தது பசுமையான நினைவுதான். ஆனாலும் இன்றுவரை அவரை நான் நேரே பார்த்தது கிடையாது. எனது தகப்பன்

Page 68
1.32 நாளைக்கு இன்னொருத்தன்
மிகவும் கம்பீரமானவர் உயர்ந்த தோற்றமும், பரந்த மார்பும் அகன்ற தோள்களுமுடையவர். அம்மா ஒரு நல்ல *மனுஷி' அதைவிட அம்மாவைப்பற்றி எனக்கு ஒன்றும் சொல்ல முடியாது
அம்மாவை எனக்குச் சரியாகத் தெரியாது. ந ங்கள் இருவரும் வாழ்க்கையின் பெரும் பகுதியை எங்கள் சமைய லறையில் கழித்தோம். நினைவு தெரிநத நாள் முதல் எனது உடலின் அழுக்கைத் தேய்த்து என் தாய் கழுவிவிட் டிருக்கிறாள்.
வளர்ந்து வரும் உடம்பின் மாற்றத்தை அவதானித்து தேவையான உடுப்புக்கள் வாங்கித் தந்திருக்கிறார். பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடங்களில் ஒன் றிரண்டைச் சொல்லித் தந்திருக்கிறார். அதைவிட அவ ளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிவதற்கு ஏதும் இருக்கிறதா என்று சிலவேளை நான் நினைத்ததுண்டு. ஆனாலும் என்னையவள் எப்படித் தெரிந்து கொண்டிருக் கிறாள் என்று எனக்குத் தெரியாதவரை அவளை நான் முழுக்கத் தெரிந்து கொள்ள முடியாமலிருப்பது நல்லது என்றே தோன்றுகிறது.
எனக்கு இரண்டு அண்ணாக்கள், அவர்கள் எப்போ துமே எனக்கு அந்நியர்களாகத்தானிருந்தார்கள். இரண் டாவது அண்ணாவுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் ஐந்து வருடங்கள். அவனின் பெயர் சுதாகரன். பெரிய அண்ணாவின் பெயர் நாராயணன், சுதாகரனை வீட்டில் சுதா என்று சொல்வார்கள். நான் பிறக்கும் வரை க்கும் அவன் அம்மாவின் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கலாம். நான் பிறந்ததும் தனது விசேட அந்தஸ்துக்கு நான் தடை யாக வந்து விட்டேன் என்று அவன் நினைக்திருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனாலும் அவன் என்னோடு பெரிய பாசத்தோடு பழகமாட்டான். பெரிய அண்ணா நாராயணன் எப்போதுமே ஒரு நோஞ்சல், எனக்கு நினைவு தெரிந்த

ராஜேஸ்வரி 33
நாள் முதல் அவன் யாரோ ஒருத்தியின் முந்தானைக்குள் முகத்தை மறைத்துக் கொள்வதாகத்தான் நான் நினைக் கிறேன்.
சின்ன வயதில் அண்ணாவுக்கு அம்மாவின் முந்தானை, இளமை வயதில் அண்ணாவுக்கு மச்சானின் முந்தானை. இப்போதெல்லாம் அவனைக் காண்பதே குறைவு.
இலங்கைத் தமிழர்கள் நாடுவிட்டு உலகின் நாலா பக்கமும் ஓடியபோது பெரிய அண்ணா கனடாவுக்கும் சுதாகரன் பிரான்சுக்கும் நானும் அப்பாவும் அம்மாவும் லண்டனுக்கும் வந்துவிட்டோம்.
இப்போது எங்கள் குடும்ப உறவு தொலைபேசிக்குள் ஒடுங்கிவிட்டது. பெரிய அண்ணாவின் மகள் பதினைந்து வயது போய் பிரண்ட் வைத் திருக்கிறாளாம். பெரிய அண்ணா துடித்துப் போய்விட்டான். அவன் ஒரு அசல் தமிழன். திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் தமிழர்களில் ஒருத்தன். மகளின் முந்தானையை வெள்ளைக்காரன் பிடிப்பதை இவனால் சகிக்க முடியவில்லையாம்.
தண்ணீருக்குள் இறங்கிவிட்டால் நனையாமல் இருக் கலாமா? நாங்களெல்லாம் வெள்ளைக்கார நாட்டுக்கு வந்து விட்டால் அவர்களின் கலாசாரம் குழந்தைகளைத் தாக்குவதை எப்படித் தடுக்க முடியும்?
லண்டனுக்கு வந்து பத்து வருடங்களாவிட்டன. நான் இன்னும் நல்ல தமிழ்ப் பெண்ணாக இருப்பதாக அம்மா எனக்கு கேட்கத்தக்கதாகயாரிடமோ சொல்லிக் கொண்டிருத் தாள். நல்ல பிள்ளையாகவே' என்னை எதிர்பார்க்கிறாள் என்பதின் கருத்துத்தானது. இருபத்துமூன்று வயதில் இளம் பெண்ணாக வந்த எனக்கு அம்மா அப்பா ஒரு நல்ல. மாப்பிள்ளை (?) தேட வெளிக்கிட்டுப் பத்து வருடங்களாகி விட்டன. m

Page 69
34 நாளைக்கு இன்னொருத்தன்
எத்தனைபேருக்கு எனது சாதகம் கைமாறியது என்று எனக்குத் தெரியாது. எத்தனை எச்சில்கள் எனது புகைப் படத்துக்கு முத்தம் கொடுத்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. நான் இன்னும் ஒரு நல்ல தமிழ்ப் பெண்ணாக இருக்கிறேன். அம்மா சொன்ன வேதங்களைப் படித்து ஒரு 'புருஷனுக்குக் காத்திருக்கிறேன்.
எத்தனை பேர் வந்து பார்த்து விட்டுப் போய்விட் டார்கள்! கொழும்பில் இருக்கும்போது யாரும் கல்யாணம் பேசி வந்தால் "அவளுக்கு இப்போதுதானே இருபத்து மூன்று வயது" என்று அம்மா சொல்வாள். இப்போது எனது வயதை வெளியிற் சொல்ல வெட்கப்படுகிறாள். முப்பத்து மூன்று வயது முது கன்னி. நான் அம்மா பாவம் எதிர்காலத் தில் எத்தனை நம்பிக்கை அவளுக்கு? எனது கல்யாணத்தை நினைத்து அவள் விடும் பெருமூச்சு அடுத்த அறைக் கதவைக் கடந்து எனது காதைத் துளைத்து இருதயத்தைக் குடைகிறது.
ஆரம்ப காலத்தில் வந்த மாப்பிள்ளைகளில் இவன் வேண்டாம், அவன் வேண்டாம் என்று பேரம் பேசியவள் இன்று யாரோ தலையில் என்றாலும் என்னைக்கட்டிவிடத் துடிக்கிறாள். வருவபனின் படிப்பைப் பார்த்து, குடும்பத் தைப் பார்த்து, வயதைப் பார்த்து நான் அவன் பார்வைக்கு முன் நிற்பேன். பட்டுச் சேலை கட்டி, பொட்டு வைத்து, பொன்னாபரணம் போட்டு மெல்ல நடந்து வந்து கடைக் கண்ணால் அவனைப் பார்த்து. அப்பப்பா எத்தனை யனுபவம்
* கசுவலாக ஏதும் உடுத்துக் கொள்” அம்மாவின் சினேகிதி தன் சொந்தக்காரப் பையனைக் கூட்டிக்கொண்டு வந்தபோது இப்படித்தான் சொன்னார். பாவாடையும் பிளவுசும் போட்டேன். அது நடந்தது ஒரு ஐந்து வருடங் களாக இருக்கும். அவன் படுபாவி. "என்ன இருபத்தியெட்டு

TrGgsivat f 35
வயதில் ஒரு பெட்டை மாதிரி ஸ்டைல் என்று கிண்டல் செய்தானாம்!"
"லண்டனில் பெட்டைகள் கொஞ்சம் பாஷனாக இருக்க வேணும். சேலையைக் கட்டிக்கொண்டு ஏன் பட்டிக்காடு மாதிரிப் பழக வேணும்' அம்மாவின் இன்னொரு மாமி என்னை சல்வார் கமீஸ் போடப் பண்ணிவிட்டாள். வந்தவனுக்கு இந்தியக் கலாசாரம் பிடிக்காதாம். போய் விட்டான். வேலைக்குப் போகும்போது ஆங்கிலேய உடுப்புப் போட்டு வீட்டுக்கு வந்தால் நல்ல தமிழ்ப் பெண்ணாம் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
இரவும் பகலும் என் பெற்றோர் எனக்காக ஒருத்தனை தேடுகிறார்கள். இனவெறி இலங்கையில் இளைஞர்களை வேட்டையாடுகிறது. பணக்கார வாலிபர்கள் ஊரைவிட்டு ஒட ஏழை இளைஞர்கள் பிறந்த மண்ணிலே மடிகிறார்கள்.
லண்டனில் சில தமிழ் இளைஞர்கள் தங்கள் உறுப்பில் விலைக் குறிப்பை மாட்டிக் கொண்டு பேரம் பேசுகிறார்கள்.
எனது சினேகிதி ஒர் ஆங்கிலேயப் பெண்மணி, இருவரும் ஒரு ஆபீஸில் வேலை செய்கிறோம். நான் கொம்பியூட்டர் ஒப்பரேட்டர், அவள் எனது மானேஜர். ஆரம்பத்தில் அவளது நிறமும் எனது நிறமும் எங்கள் உறவுக்குத் தடையாக இருந்தன. கண்டீனில் கண்டபோது எனது சோறும் கறியும் அவள் உறவைத் தந்தன. நன்றாக ருசித்துச் சாப்பிடுவாள்.
**இந்தியர்களின் மிளகையும் கறுவாவையும் தேடித் தானே நாங்கள் புது உலகமான அமெரிக்காவையே கண்டு பிடித்தோம் ' எலிஸபெத் குறும்பாகச் சொல்வாள். வெள்ளைக்காரன் இந்தியாவைத் தேட வெளிக்கிட்டு இன்றைக்குத் இந்திரலோகத்திற்கே கண் வைத்து விட்டானே! எலிஸபெத்துக்கு எனது வயது. இரண்டு தரம்

Page 70
酸86 நாளைக்கு இன்னொருத்தன்
திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டு இப்போது ஒருத்தனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
எனது கல்யாணப் பேச்சுவார்த்தைகள், பெண் பார்ப் புகள் அவளுக்கு வேடிக்கையாகவும் குழப்பமாகவும் சில வேளை கிண்டலாகவும் இருக்கின்றன.
'பெண்கள் எல்லோரும் ஒரு ஆணழகன், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பொன் தேரில் பெண் தேடி எங்களிடம் வருவான் என்றுதான் எதிர்பார்க்கிறோம். ஆனால் பெரும் பாலான பெண்களுக்கு கழுதை வண்டியில் வரும் குரங்குகள் தான் வருவார்கள். அவர்கள் இரவில் எங்களில் தடுமாறி விழுந்தெழும்புவார்கள்.' எலிஸபெத் எரிச்சலுடன் சொன்னாள். அவள் சொல்வது உண்மையா அல்லது தனது கல்யாணங்களின் கசப்புகளாற் சொல்கிறாளோ தெரியாது. நான் இன்னும் யாரோ ஒருத்தனுக்காகக் காத்திருக் கிறேன்.
'இத்தனை வருடங்களில் நீ பார்த்த ஆண்களில் ஒருத்தனும் உனது உள்ளுணர்வுகளைச் சுண்டியிழுக்க வில்லையா?" - எலிஸபெத் ஒருநாள் கேட்டாள்.
நாங்கள் இருவரும் ஓர் ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்தோம். லண்டன் தெருக்களில் படம் பார்த்துவிட்டு ஜோடிகளாகத் திரியும் இளம் கூட்டத்தை எனது கண்கள் ஏக்கத்துடன் பார்ப்பதை அவள் அவதானித் திருக்க வேண்டும். உள்ளத்தின் ரகசிய தாபங்கள் உடலின் புலன்களில் எரியும் தாபத்தை அவள் உணர்ந்திருப்பாள் தானே?
Lம்பைச் சிலிர்க்கும் குளிர்காலத்தில் ஒரு துணையின் அணைப்பில் சுகம் காண எனக்கும் ஆசையுண்டு என்பதை நான் எப்படிப் பச்சையாகக் சொல்வதாம்?

ராஜேஸ்வரி 37
என்னை நானே கண்ணாடியில் பார்க்கும்போது தளர்ந்துபோகும் என். உடம்பைத் தடவ ஒரு அன்புக்கரம் இல்லையே என்ற தாபத்தை எப்படிச் சொல்வதாம்?
மாதத்தின் நடுப் பகுதியில் எல்லாப் பெண்களுக்கும் உண்டாகும் உணர்வும் குழப்பங்களும் எனக்கும்தான் வரும் என்று எலிசபெந்துக்குத் தெரியும் தானே?
நான் மெளனமாக நடந்துகொண்டு வந்தேன். எனது அம்மாவின் முகம் ஞாபகம் வந்தது. எனது வயது அவளின் தாய் மனத்தைத் தவிக்கப் பண்ணுகிறது என்று தெரியும். கல்யாணம் ஆகா விட்டரிலும் எனது கண்களில் நான் தங்கி நிற்கும் பொருளாதார வல்லமை எனக்கு இருக்கிறது என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும். ஆனாலும் தமிழ்க் கலாசாரத்தின் மையம், கல்யாணத்திற்தானாம் அமைகிறது என்று பெருமூச்சு விடுகின்றார்களே. நான் என்ன செய்வதாம்?
போனகிழமை அம்மா என்னைக் கட்டாயம் கோயி லுக்குவரச் சொன்னாள். யாரோ ஒரு மொட்டையன் "பெட்டையைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு வ என்று அம்மாவின்சொந்தக்காரியிடம்சொல்லியிருப்பான்.ம. ; சந்தைக்கு விலைக்குக் கொண்டுபோவது போல் அம்மா என்னைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். எலிஸபெத் ஞாபகம் வந்தது. “கல்யாணம் என்பது புனிதம் என்று சொல்வதெல்லாம் பொய். ஆண்கள் தங்க ளுக்கு ஏற்றபடி கலாசாரத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறார். கள். பெண்கள் உடுக்க ஒரு உடுப்புக்கும், உன்ன ஒரு வேளை சாப்பாட்டுக்கும் தன் உடம்பையும் உழைப்பையும் ஒரேயடியாகத் தானம் செய்து கொடுப்பதுதான் ஆந்தச் &FLéGö.'
西町一9、

Page 71
38 நாளைக்கு இன்னொருத்தன்
'எனக்கு உடுப்பும் உணவும் யாரும் தரத் தேவை வில்லை’ என்றேன்.
* ஒரு துணை தேவை, உறவு தேவை உறவின்
தொடர்பில் ஒரு குழந்தை தேவை. எனது முழுமையை உணர ஒரு புணர்வு தேவை. எனது பெண்ம்ையை மலரப் பண்ண ஒரு ஆண்மை தேவை"
இப்படிச் சொல்ல அவள் என்னை ஏறிட்டுப் பார்த் தாள்.
ஆண்களின் பாஷையில் பெண்கள் எங்களையிழந்து ட்டோம்" என்றாள்.
அண்டர் கிரவுண்ட் ரெயினில் விழுந் தடித்து ஏறிக் கொண்டிருந்தபோது அவள் சொன்னபோது அவள் சொன்னது எனக்கு அதிகம் கேட்கவில்லை. கேட்டது புரியவுமில்லை.
பாதாள ரெயில் இருளைப் பிளந்துகொண்டு குகைக்குள் ஓடிக்கொண்டிந்தது. இப்படித்தானே எங்கள் வாழ்க்கை யும்?
சேடங்குகள் என்பது வெறும் நடவடிக்கைகள் மட்டு மல்ல, மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாஷைகள்தான் அவை:"
எலிஸபெத் என்னை ஊடுருவிப் பார்த்தபடி சொன் னாள். "உனது கழுத்திற் போடும் தாலியும். எனது கையிற் போடும் மோதிரமும் கைதியின் கையிற்போடும் விலங்கும் உனக்கு ஒன்றென்று தெரியவில்லையா? இந்தச் சடங்கு களுக்குள் பெண்களைப் பிணைக்காவிட்டால் இந்த ஆண் களால் வாழ முடியுமா?" W
இவளுக்கு ஆண்களிற்தான் எத்தை கசப்பு? "எனது அம்மாவை அப்பா கைதியாகவா வைத்திருக்கிறார்?" மெல்லமாகக் கேட்டேன்.

ராஜேஸ்வரி 139
"அவள் சுதந்திரமாக இருக்கிறாள் என்பதற்கு ஒரு அடையாளத்தைக் காட்டேன்?"
எலிஸபெத் சிரித்தாள்.
எனது தாய் அவித்த பிட்டுக் குவியலைச் சேர்த்தால் அந்தக் குவியல் இமயத்தைத் தகர்த்திவிடும்.
என் தாய் தோய்த்த துணிகளைப் பிரித்து வைத்தால் அவை உலகத்தை மூடிவிடும்.
என் தாய் விட்ட கண்ணிரை நதியாக்கினால் நர்மதா தலை குனிவாள்.
என் தாய் விடும் மூச்சுகளைச் சிறை பிடித்தால் எரி மலை பிளந்துவிடும். t
எனக்கு அழுகை வந்து விட்டது.
எலிஸபெத் அதன்பின் நீண்ட நேரம் என்னுடன் பேசிக் கொள்ளவில்லை. நான் மெளனமாக வீடு சென்றேன்.
அம்மா என்னைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள். ஏன் இவ்வளவு நேரம் என்பது கேள்வி.
நான் பதில் சொல்லிக் களைத்துவிட்டேன்.
நாளைக்கு லீவு எடுக்கமுடியுமா?’ அம்மா என்னைக் கேட்டாள். நான் மாடிப் படியில் நின்றவாறு என் தாயைத்
திரும்பிப் பார்த்தேன்.
"அப்பாவுக்குத் தெரிந்த யாரோ ஒருத்தர் ஒரு பையனைக் கூட்டிக்கொண்டு வருகிறாராம்" அம்மாவின் குரல் அமைதியான எங்கள் வீட்டில் மிகத் தெளிவாகத் தெறித்து விழுந்தது "பெரும்பாலும் சரிவருமாம்” அம்மா வின் குரலில் நம்பிக்கை.
நான் மெளனமாக என் அறைக்குள் சென்றேன், கல் யாணச் சந்தையின் பொருட்காட்சி எனது உடல்.

Page 72
140 நாளைக்கு இன்னொருத்தன்
நாளைக்கும் ஒருத்தன் வருகிறானாம். எனது உடலை ஏற இறங்கப் பார்ப்பான். எனக்குச் சிரிப்பா அழுகையா, சொல்லத் தெரியாத ஏப்பம். யாராயிருக்கும்? இரண்டாம். தாரமாகக் கேட்பானாக்கும். என் வயதில் கல்யாணம் கேட்டு வருவதே பெரிய விடயமாம்.
'இப்போதெல்லாம் லண்டன் தமிழ்ச் சமுதாயத்தில் விவாகரத்துக்கள் மலிந்துவிட்டன. ஒரு பெண்ணைத் தள்ளி வைக்க ஏதோ ஒரு பெரிய காரணம் தேவையில்லை. ஏனென்றால் வெளிநாட்டிலிருக்கும் எவனையும் செய்ய லங்கையில் ஒரு பெண்படை காத்திருக்கிறது. எவ்வளவும் கொடுத்து இரண்டாம் தாரமாக வரத் துடிக்கிறார்கள்.
ஏழைத் தமிழ் இளைஞர்கள் இலங்கையில் அழிய லண்ட னில் பணக்காரத் தமிழன் பணம் சேர்க்கிறான். இவர் களுக்கு எல்லாமே வியாபாரம். மொழி வியாபாரம், கலை வியாபாரம். கல்யாணமே பெரிய வியாபாரம் தாய்மையைப் புேரம் பேசத் தயங்காத கூட்டமிது.
எனது தாய் தகப்பன் எவ்வளவு கொடுத்தும் ஒருத் தனை என் தலையிற் கட்டத் தயார். எனது கெளரவம் கழுதை வண்டியில் வரும் ஒரு குரங்கின் தயவிற் தங்கியிருக் கிறது. வெள்ளைக் குதிரையேறி ஓர் ஆணழகன் வரவேண் டாம். சாதாரண ஒரு நல்ல மனிதனை நான் காண முடியாதா?
அப்பாவை நான் எப்போது நிமிர்ந்து பார்ப்பேன்? எனக்கு இனிக் கல்யாணம் பார்க்க வேண்டாம் என்று சொல்ல நான் தயாரா?
அம்மா அப்பாவித்தனமாகச் சிரிக்கிறாள். நானும் என் தாயும் இரு கால வித்தியாசத்தில் வாழ்பவர்கள், அவள் பேசும் பாஷையில் இடியப்பமும் கறியும் உருவாகிறது. அது தான் அவளுக்குத் தெரிந்த கலை தெரிந்த பாஷை அத னால் தான் அவள் உலகத்துடன் தொடர்பு வைத்திருக், கிறாள். ஒரு வீட்டில் உலவும் இரு துருவங்கள் நாங்கள்.

ராஜேஸ்வரி 141
நான் வேலைக்குப் போன உடுப்பை 'torðsóGsrör“ முழுமையான என்னை ஒரு நீண்ட கண்ணாடியில் நெடு நேரமாய்ப் பார்த்தேன். ஒரு மெளனச் சித்திரமிது. ஏதோ சாடைமாடையாய் என் உருவத்தை இவ்வளவு நாளும் அவசரமாக உடுப்பு மாற்றும்போது நிலைக் கண்ணாடியில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இன்று? என்னை நான் பார்த்தேன். இன்னொ ருத்தனுடன் சேர்த்துப் பார்த்தேன்.
கழுதை வண்டியில் வரும் ஒரு குரங்கு இந்த மார்பகத்  ைதந் கீறி விளையாடுமா?
அந்தக் கழுதையின் கைகள் இந்த சங்கு போன்ற கழுத்தை மிருகத்தனமாக அணைத்துப் பிடிக்குமா? க்ட்டிக் காத்து வைத்திருக்கும் பெண்மை ஒருகால் நிமிடத்தில் குத்திப் பிளக்கப்பட்டு, குருதியில் தோய்ப்டுமா?
எனது விரல்கள் எனது உடம்பின் மெல்லிய தோலில் கோலம் போடுகின்றன. அழகான வீணை, அதன் நாதத் தைப் புரிந்தவன் எத்தனை பேர்?
உணர்வு ஒரு இசை, அதைப் புணரத் தெரிந்தவன் “எத்தனை பேர்? அழகு ஒரு கலை, அதை ரசிக்கத் தெரிந் தவன் எங்கிருப்பான்? காதல் ஒரு தெய்வீகம், அதன் கருத்தைத் தெரிந்தவன் வருவானா?
எனது உடம்பு நடுங்குகிறது.
பூமாலை குரங்கிடம் போகக் கூடாது. தனிமை என்று தாங்கள் நினைக்கும் வரை தான் தனிமை! நிறைவு என்பது மனதில் உண்டு.
கணவன், வாழ்க்கை, குடும்பம், குழந்தை, உறவு. வெறும் கனவா அல்லது தவிர்க்க முடியாத வாழ்க்கைப் பிரயாணமா, எனக்குக் குழப்பம் வருகிறது. உடுப்பைப் போடுகிறேன். எங்கேயோ நடுச்சாம மணியடிக்கிறது.

Page 73
142 நாளைக்கு இன்னொருத்தன்
கீழே வந்தேன். அம்மா நான் சாப்பிட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் இடியப்பத்தை மேசையில் வைக் கிறாள்.
எனது தாய்க்கு அறுபத்தைந்து வயது. ஆயிரக்கணக். கான இடியப்பங்களைச் செய்த கலைச்செல்வி. புட்டுக் களைப் படைத்த புதுமை நாயகி. மெளனத்தைக் கவிதை, யாக்கிய கதாநாயகிகளில் ஒருத்தி.
அம்மாவை இறுகக் கட்டிப் பிடித்து அழுகிறேன். "நாளைக்கு நான் யாரையும் பார்க்கல்ல அம்மா." அம்மா என்னைப் புரியாமற் பார்த்தாள். அம்மா நினைக்கலாம் எனக்குப் பைத்தியமென்று. அப்பா என்னை ஒரேயடியாகப் பார்க்காமல் விடலாம்.
ஆனாலும் நான் என்றோ ஒருநாள் என்னையுணர்ந்த வனைச் சந்திக்காமலா விடுவேன்.
1995,

12. ரவுண்ட் அப்
சித்திரை மாதக் கொடும் வெய்யிலின் உக்கிரம் அதி காலை ஒன்பது மணிக்கே தெரிந்தது. எங்கள் வீட்டுப் பெட்டை நாய் டெய்சி தன் குட்டிகளுடன் வாழைத் தோட்டத்தில் நிழல் தேடியது.
போனகிழமை குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி தன் பலநிறக் குஞ்சுகள் பத்துடனும் கடமையுணர்வுடன் இரையைத்தேடித் திரிந்தது.
இரவெல்லாம் யார் வீட்டுப் பரணிலோ பொரியல் தேடித் திரிந்த களைப்பில் எங்கள் வீட்டுக் கடுவன் பூனை சிமேந்து விறாந்தையின் மூலையில் சுருண்டு படுத் திருந்தது.
வீட்டு மாமரத்திலும் குயில் கூவிக் கொண்டிருந்தது. குயில் கூவ என் தம்பிகளும் சேர்ந்து கூவி என் ஆச்சியின் எரிச்சலைத் தூண்டிக் கொண்டிருந்தார்கள்.
அப்பா குளித்துக் கொண்டிருந்தார். அம்மா புட்டவித் துக் கொண்டிருந்தார். எத்தனை அழகான காலை நேரமிது. அன்றுதான் வாழ்வின் திருப்பம்.
என் பெரியண்ணா முன் ஹோலில் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். அவன் எப்போதும் எதையோ படிப்
Lurr6ûr.

Page 74
144 நாளைக்கு இன்னொருத்தன்
இரண்டு தங்கைகளும் கொய்யாமர நிழலில் கோடிட்டு மாங்கொட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். உலகம் தெரியாத வயது, பத்தும் எட்டும் அவர்களுக்கு.
தாத்தா பூசையறையில் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். பல்விழுந்த அவர் வாயால்;
'அம்மையே அப்பா ஒப்பிலா
tD6öðfl(Gu
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப்
பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேனெனக்கு
செம்மையே ஆய சிவபதம்
அளித்த
என் செல்வமே சிவபெருமானே
இம்மையே
உனைச்சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினிலே’’
என்ற வார்த்தைகள் உருக்கமுடன் வெளிவந்து கொண் டிருந்தது.
பக்கத்துவீட்டுப் பார்வதி மாமியின் வீட்டிலிருந்து *சுப்பிரபாதம்” எங்கள் மல்லிகைக் கொடிகளைத் தாண்டி வந்த தென்றலுடன் சேர்ந்து வந்து என் காதுகளைத் தடவின. VK.
நான் அம்மியடியில் புட்டுக்கு மிளகாய்ச் சம்பல் அரைத் துக் கொண்டிருந்தேன். ..
எங்கள் வீட்டின் கம்பி வேலிகளின் இடுக்குகளால் தூரத்தில் தில்லையாறு பாம்பாகத் தவழ்ந்து நெளிந்தது.

ராஜேஸ்வரி 45
காலைச் சூரியனின் தங்கக் கிரணங்கள் தண்ணீரில் பட்டுத் தகதகத்தன. தில்லையாறு வற்றி ஓடையாய்த் தெரிகிறது, அந்தச் சந்திரன் உடம்பில் சூரியக் கதிர்கள் ஆடையாய்த் தவழ்கிற அழகு என்னை எப்போதும் கவரும்.
என் மனம் காலையின் மோனத்தை லயித்தபோது தூரத்தே கேட்ட நாய்களின் ஒலம் கலைத்தது. பயங்கர மாகக் குலைத்துத் தங்களின் எதிர்பை நாய்கள் காட்டு கின்றன. அடிவயிற்றில் புளிபிசைந்த உணர்வு. அந்த நாளில் எல்லையில் இரவில் நரியூளையிட்டால் ஏதோ ஒரு சாவு வரும் என்பது ஊர் நம்பிக்கை.
இன்று ஊர் எல்லையில் நாய் குரைத்தால் இராணுவத் தால் 'ரவுண்ட் அப்' பண்ணுகிறார்கள் என்றர்த்தம்.
அம்மா அடுப்படிச் சமையலை விட்டபடி ஓடிவந்தார்கள். அப்பா உடம்பிற்போட்ட "சோப் கழுவுப்படாமல் தெருவை நோக்கினார்.
செல்வமே சிவபெருமானே உனைச் சிக்கெனப்பிடித் தேன்’ என்று உருக்கமாய்ப் பாடிக்கொண்டிருந்த தாத்தா தவித்த முகத்துடன் விறாந்தையில் தரினம் தந்தார்.
தூரத்தில் இராணுவ வண்டிகளின் உறுமல்கள் கேட்டன. யமதூதர்கள் பாசக்கயிறுகளுடன் வருவதுபோல் பாசமற்ற கண்களுடன் பயங்கரத் துப்பாக்கிகளுடன் நூற்றுக்காணக்கான இராணுவத்தினர், இராணுவ வண்டி யிலும் கால் நடையாகவும் ஊரை முற்றுகையிட்டுக் கொண் டிருந்தார்கள்.
மிளகாய்ச் சம்பல் அரைத்தமையின் எரிவுடன் என் ஆத்மா சிலிர்த்தது. எங்கள் வீட்டார் ஒவ்வொருத்தரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டோம். '

Page 75
146 நாளைக்கு இன்னொருத்தன்
'தம்பி எங்காலும் ஒடப்பா" அம்மா அண்ணாவைக் கெஞ்சினார்.
பக்கத்து வளவுகளுக்குள்ளால் சில வாலிபர்கள் வேலி பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். மனித வேட்டை தொடங்கிவிட்டது. காடுகலைக்கிறார்கள்.
போனதடவை "ரவுண்ட் அப்" செய்யப்பட்டபோது சிங்கள இராணுவத்தினர் வேலிகளை எல்லாம் வெட்டி பெரிய மரங்களையும் வெட்டிவிட்டார்கள். ஏனென்றால் தமிழ்ப் போராளிகள் தங்களை மறைதிருந்து தாக்குவார் களாம். அத்தோடு தாங்களும் தமிழர் விடுகளின் சர்வ சாதாரணமாக நடந்து திரிவதற்கும் இந்த வேலிகளும் தடை செய்வதை அவர்கள் விரும்பவில்லை.
சாதியால், சம்பிரதாயத்தால், தனிப்பட்ட் பெருமை சிறுமைகளாற் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண் டிருந்த தலைக்கணம் பிடித்த தமிழ்ச் சமுதாயத்தை எதிரி யின் துப்பாக்கி நிலைகுலையப் பண்ணிவிட்டது.
இளைஞர்கள் ஓட, முதியோர் பதுங்க, தாயர்தாம் தவிக்க, ஆச்சிகள் அலற, பெண்கள் மறைய நாய்களும் கோழிகளும் கூக்குரலிட்டன.
பக்கத்துவீட்டுப் பார்வதி மாமியின் சுப்பிரபாதம் கருதி தவறிக் கேட்டது.
இராணுவம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒழுங்கை களில் புழுதி பறந்து. ஒடிபோனவர்களில் குண்டு பதிந்தது, அவர்கள் மரமெனச் சாய்ந்தனர். தாய்களின் அலறல்களில் பூமித்தாய் அதிர்ந்தாள்.
ஊரில் நாலா பக்கமும் இராணுவம் முன்னேறுக் கொண் டிருந்தது. அம்மாவின் முகத்தில் வியர்வை, கண்களில் நீராறு. அப்பா முகம் பேதலித்துக் கிடந்தது. தங்கைகள் கண்களில் காலனும் பாசக்கயிறும் தெரிந்தது.

ராஜேஸ்வரி 147
அண்ணா ஒரு இடமும் ஓடிப்போக முடியாது. வீட்டைச் சுற்றி எதிரிகள் முற்றுகை போட்டுவிட்டார்கள். தம்பிகள் இருவரும் கிணற்றின் பின் பக்கம் பதுங்கிக் கொண்டார்கள், தங்கைகள் இருவரும் குஞ்சுகளைத் தன் செட்டைக்குள் மறைத்துக் கொண்ட கோழியுடன் தங்களையும் மறைத்துக் கொண்டார்கள்.
ஆச்சி என்னைப் பார்த்துத் தலையிலும் வாயிலும் அடித்துக் கொண்டார்கள். நானும் இன்னும் "பெரிய பிள்ளையாகா' விட்டாலும் பார்ப்பவன் அதைப் பொருட் படுத்தப் போவதில்லை. பாய்ந்து வரும் இராணுவப் பருந்து களின் விருந்துகளால் நானும் என் அண்ணாவும் இரையா வோம் என்ற த்விப்பு அவள் அழுகையிற் தெரிந்தது.
நான் கண்களை இறுக்கிமூடிக் கொண்டேன். இப்போது நடப்பவைகள் ஒரு பயங்கரக் கனவாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தேன். கற்பனைகள் நடக்குமா? கனவு நனவாகுமா? ஆச்சி என்னை இழுத்துக் கொண்டுபோய் நெல்லுமூட்டைகளுக்குப் பின்னாற் தள்ளினாள். வாழ்க்கை யில் தன்னைக் காப்பாற்ற முடியாத என்னை இறைவன் தான் காப்பாற்றுவான். இராணுவம் எங்கள் ஒழுங்கையில் அதிர்ந்தது.
எங்கள் வாசல்கள் பெரிய காலணிகளின் மேடையென மாறியது, ஊழித்தாண்டவம் அரசியல் அதிகாரம் என்ற பெயரில் மேடையேற்றப்பட்டது. ரோட்டில் இராணுவ வண்டிகளில் பிடிபட்ட தமிழ் இளைஞர்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர்.
சுடுபட்ட தமிழ் இளைஞர்கள் குற்றுயிராய் இழுத்து வரப்பட்டார்கள். அவர்களின் குருதி எங்கள் தெருக்களில் கோலங்கள் போட்டன.
குமரிமுதல் இமயம் வரை கொடியேற்றிய தமிழன் பரம்பரையா இது? நான் நெல்மூட்டை மறைவிலிருந்து கொண்டு ஜன்னல் ஓட்டையால் உலகத்தை அளந்தேன்.

Page 76
148 நாளைக்கு இன்னொருத்தன்
ஏன் பூமி பிழந்து எங்களை எல்லாம் விழுங்கக்கூடாது. இந்தக் கொடுமை அனுபவிக்க இலங்கைத் தமிழன் என்ன செய்தான்?
தான் பொழிந்த மொழியை, தான் தவழ்ந்த நிலத்தைத் தன்னிடம் வைத்துக் கொள்ளப் போகிறேன் என்று தமிழர் கேட்ட கோரிக்கைக்காக இந்தத் தண்டனையா?
அம்மா தன் முந்தானையைப் பிடித்து மடிப்பிச்சை கேட்டாள். இராணுவம் என் அண்ணனைப் பிடித்து அடித் துக் கொண்டிருந்தது. அண்ணாவைகருத்தரித்துத் தாங்கிய தன் அடிவயிறு குலுங்கக் கதறினாள் என் அருமைத் தாய். அண்ணாவைக் காப்பாற்ற வந்த அப்பாவின் தலையிலடி, இரத்தம் பீறிட்டது. தங்கைகள் அலறினார்கள். ஆச்சி இடையில் வர ஒரு இராணுவம் அவளை ஒரு சிறு பூச்சியென "உதைத்தது. என் அண்ணனின் அலறல் என் இதயத்தைப் பிழந்தது. என் உடன் பிறந்த அண்ணனின் உடல் ஒழுங்கை யால் வந்தவனின் சொந்தமாகிவிட்டது. அண்ணாவை அடித் தார்கள். உதைத்தார்கள், பயங்கரவாதி என்று நெஞ்சிலும் வயிற்றிலும் துப்பாக்கி முனையால் குத்திப் பிளந்தார்கள். என்னை மடியினில் வைத்து 'அ'னா எழுதப் பண்ணிய என் அண்ணனின் கதறல்கள் என்னைச் செவிடாக்கின.
அம்மா, அம்மா என்ற தமிழைத் தவிர அவன் வாயால் எதுவும் வரவில்லை. அவன் அலறலின் சத்தம் குறைந்து குறைந்து கொண்டு வந்தது தாத்தா கொஞ்ச நேரத்தின் முன் "சிக்கெனப் பிடித்த சிவனெங்கே சீமைக்கா போய்விட் டார்?" அம்மா மூர்ச்சையாகிப் போனாள். அவர்கள் அண்ணாவை அரையும் குறையுமாய்த் தெருவால் இழுத்துப் போனதை அவள் காணவில்லை.
அப்பாவின் முகம் அவரின் தலையால் வடிந்த குருதி படிந்து கோரமாய்த் தெரிந்தது.

ராஜேஸ்வரி 149,
ஒரு இராணுவத்தினன் என்னை மறைவிலிருந்து, இழுத்து வந்தான். ஆச்சி என்னை இ கொண்டாள். ஆச்சியின் கண்களில் நெருப்பு போகாதா? W
துகப் பிடித்துக் a-6) st எரிந்து
தளர்ந்து போன முதிர்ச்சியிலும் இந்த இரும்புப் என் தாத்தா. ஒரு கொஞ்ச நேரத்துக்கு சிேன் புனிதமான சிவபெருமானைச் சிக்கெனப் பிடித்தவர். இப்போது சிங்கள இராணுவ வெறியனின் புழுதி பீ": கெட்டி ? யாகப் பிடித்துக்கொண்டு '6rsitiT பேத்தியை விடய்யா?* என்று கெஞ்சினார். தமிழ்ப் பெண்மை இனவெறுமையில் பேரம் பேசப்பட்டது.
சிங்களக் கப்டன் என்னை ஏற இறங்கப் பார்த்தான் பதின் நான்கு வயது மொட்டழகு அவன் பொட்டைக் க களுக்குள் புகுந்து விளையாடியதே. அவன் என் உடம்பைத் தாண்டி எங்கேயோ போகிறான். அப்படிப் பார்வை வயது. நான் அழிவில்லை. எனக்கு உணர்ச்சி மிர்த்துவிட்டன. இப்படி ஒரு "ரவுண்ட் அப்"பில் எத்தனையே தமிழ்ப் பெண்கள் இவர்களின் பசிக்கு இரையானார்கள்
எங்கள் தமிழ்ப் பெண்களின் வியது பத்தோ இல்லை எட்டோ என்பது பிரச்சினையில்லை. இவர்களின் இரைக்குச் சரியானபடி இருந்தால் சரி. இவர்கள் மிருகங்கள். Bauf களின் பசி-நர மாமிசம்: தேடுவது தமிழர்க.ை பலியாடுகள் நரங்கள்.
ஒருத்தன் என் நீண்ட தலைமயிரைத் தடவினான். ஆச்சி அவனைக் காறித்துப்பினாள். தாத்தா தன் தலையைத் தான் பிடித்த பெரியவனின் கிாலனியில் முட்டிக் கொண்டார்.
குருதி படிந்த தகப்பன், குற்றுயிராய்க் கிடக்கும் தமயன், உணர்வற்ற தாய், ஓலமிடும் ஆச்சி, உருக்கமாய்க் கெஞ்சும் தாத்தா.

Page 77
150 நாளைக்கு இன்னொருத்தன்
தமிழ்ப் பெண்மை என்ன செய்யும்.?
என் தாத்தா அழுது வடித்து சிக்கெனப் பிடித்த சிவனே என்னை விடுவிக்க ஊழித்தாண்டவம் ஆட மாட்டாயா? துரெளபதிக்குக் கண்ணன், சீதைக்குஅனுமான், இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு யாரிங்கு உதவி செய்ய? நான் உதடு களைக் கடித்துக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தேன். சிங்கள வெறியன் என்னையே பார்த்தான். அவனுக்கு என்னைப்போல் ஒரு மகள் இருக்கலாம். அல்லது தங்கை இருக்கலாம். அதுவுமில்லாவிட்டால் ஒன்றிரண்டு மருமக் களாவது இருக்கலாமோ?
என்ன நினைத்தானோ தெரியவில்லை.
அவன் செய்தன சைகையில் என்னைப் பிடித்தவனின் பிடி தளர்ந்தது.
அதர்மம் செய்யும் ஆண்களை அழிக்கும் அன்னை காளியே நீ ஏன் இலங்கையைவிட்டு ஓடிவிட்டாய்? ஓடி வா. ஓடிவா. ஓடிவந்து எங்களைப் பார். நான் பைத்தியம் மாதிரி நினைத்துக் கொண்டேன். சிங்கள இராணுவம் என்ற பெயரில் எங்கள் ஊரை 'ரவுண்ட் அப்" பண்ண அசுரர்கள் நகரத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை அழிக்க கண்ணன் இன்று அவதாரம் எடுக்கமாட்டானா? கலி காலத்தின் அழிவை இலங்கைத் தமிழர்கள் தலையிலா கட்ட வேண்டும்?
அன்று எங்கள் ஊரிலும் அடுத்த ஊர்களிலும்
இருநூறுக்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்
பட்டார்கள். எண்ணிக்கையற்றோர் அவர்கள் வீடுகளில் வைத்தே தாக்கப்பட்டார்கள்.
வானத்தில் பருந்தும் கழுகுகளும் பறக்கும்போது பூமியில் அப்பாவித் தமிழன் குருவியெனச் சுடப்பட்டான்.

ராஜேஸ்வரி 151
பச்சிளம் சேலை கட்டிய எங்கள் பாய்ச்சல் நிலங்கள் தமிழனின் குருதிப் பொட்டிட்டுக் காட்சி கண்டது. தாய்மையின் கதறல்கள் தென்றலை வெட்கப்படுத்தின.
எங்கள் ஊருக்கும் கடலுக்குமிடையில் தில்லையாறு பாய்கிறது. தில்லையாற்றின் மணல் மேட்டைத் தாண்டி னால் வங்காள விரிகுடாவின் வயிற்றில் உலகின் நாலா பக்கங்களுக்கும் கப்பல் கலம் போகும்.
அந்த மணல் மேட்டில்-ஆற்றையும் கடலையும் பிரித்துக் கடவுளால் கட்டப்பட்ட மணல் மேட்டில் நாங்கள் நண்டு பிடித்து விளையாடியிருப்போம்.
ஓடிவரும் கடலலைகளைத் தொட்டோடி எங்கள் சிறுபாதம் பதிப்போம். அந்த மணல் மேடு இன்று பினமேடையானது.
அங்கே எங்கள் ஊர் வாலிபர்கள் கொண்டு செல்ல பட்டார்கள். 'தமிழர்கள் கணக்குச் செய்வதில் கெட்டிக் காரராம்" என்று இகழ்ந்திருப்பானா அந்த இராணுவத் தினன்?
"டேய் தமிழா ஆறடி நீளத்திலும் மூன்றடி ஆழத்திலு ஒரு குழி போடடா" அந்த அதட்டலில்' இளைஞர்கள் தங்கள் மரணத்தை மணலில் தோண்டி னார்கள்.
எங்கள் தமிழ் இளைஞர்கள் 40 பேர் இன்று உயிரோடு புதைக்கப்பட்டார்கள்.
என் அண்ணனும் இன்னும் நாற்பத்தி மூன்று பேரும் குற்றுயிரும் குறையுமாகக் குவிக்கப்பட்டார்கள். . . .
மேல் வானம் செங்குருதி நிறத்தைப் பரப்பிய அந்த மாலை நேரத்தில் டயர்களால் மூடப்பட்ட உடல்கள் எரித்த கரும்புகை வானை மறைத்து மனிதத்தின் கேவலத்தை உலகுக்குக் காட்டியது. அன்று மட்டும் எங்கள் ஊர்ப்

Page 78
152. நாளைக்கு இன்னொருத்தன் பகுதியில் 125 தமிழ்ப் பெண்கள் விதவையானார்கள். ஆறு கடத்த ஊர் எல்லையில் எங்கள் தாய்மார் தங்கள் தனையன் களின் வாழ்க்கை கரும்புகையாய்ப் படர்வதைக் கண்டு கதறியழுதார்கள்.
கைது செய்யப்பட்ட வயதுபோன எனது தகப்பனும், தாத்தாவும் சித்திரவதை செய்யப்பட்டுச் சில நாட்களில் வீடு வந்தார்கள்,
அன்றைய 'ரவுண்ட் அப்”க்குப் பின் எங்கள் ஊரில் எத்தனையோ நடந்துவிட்டன. பத்து வருடங்களில் எத்தனை விதவைகள்? பாலியல் கொடுமையால் இறந்த பெண்களின் கணக்குண்டா?
ரவுண்ட் அப்புக்கள் இப்போதெல்லாம் பலவிதம். எதிரி மட்டும் வரமாட்டான்; துரோகக் கும்பல்களும் வருவார்கள். ஸ்பெசல் ராஸ்க் போர்ஸ்" (Special task force) என்ற பெயரில் வரும் மிகக் கொடுமையான சிங்கள இராணுவத்தினருடன் முஸ்லீம் இனவாதிகளும் எங்கள் ஊரை முற்றுகையிடுவார்கள். இந்திய சமாதானப் படை வந்தது. இடியை மிஞ்சிய பூகம்பம் அந்தப் படை. ii இப்போதெல்லாம் எங்கள் ஊரில் நேற்றைய சொந்தங்கள் இன்றைய சொந்தங்கள்.இன்றைய பகையைத் தங்களுக்குத் தெரிந்த குழுக்களிடம் சொல்லி இரக்கமற்ற கொலைகளைச் செய்கிறார்கள். தனிப்பட்ட கோபதா பங்கள் இன்று ஏ.கே. 47 என்ற கருவியின் அதிகாரத்தால் தீர்க்கப் படுகின்றன. எங்களைப்போல பெண்கள் எதிர்காலம் தெரியாமற் தவிக்கிறோம்.
என் பாட்டி என்னைக் கட்டிக் கொண்டழுவாள். *உனக்கு ஒரு நல்ல்து செய்து வைக்க ஒரு அண்ண னில்லையே” என்று தவிப்பதைக் கேட்க எனக்கு வேதனை யாக இருக்கிறது. எங்கள் ஊரில் தமையனற்ற தங்கைகள். கணவனற்ற கைம்பெண்கள் ஏராளம் ஏராளம்.

ராஜேஸ்வரி 153
தமிழர் பிரச்சினையைக் காட்டித் தாங்கள் தப்பிக் கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுடன் ஒம்பிடும்போது மட்டக்களப்புத் தமிழரை என்னவென்று சொல்வது?
ஒரு பக்கம் தமிழன், மற்றப் பக்கம் கடல். நான் எப்படிக் கால் நீட்டிப் படுப்பேன் என்று கேட்டானாம் எல்லாளன் என்ற தமிழ் அரசனைக் கொலைசெய்த துட்டகைனு என்ற சிங்கள இளவரசன்.
ஒரு பக்கம் சிங்களவர், மறுபக்கம் கடல். வடப்பக்கம் முஸ்லீம்கள், தென்பக்கம் தில்லையாறு என்று நாற்பக்கத் தாலும் சூழப்பட்ட என்னுரரார் எங்கே செல்வார் உயிர் பிழைக்க?
எதிரியால் இறப்பதைவிட எனது தமிழுக்கும் தாய் நாட்டுக்காகவும் இறப்பேன் என்று பால் மறந்த சிறார் களெல்லாம் படைசேர்ந்துவிட்டார்கள். என்னுரர் இளைஞர் களும், யுவதிகளும் ஈழத தமிழர்களின் விடுதலைக்குக் கடலிலும் களத்திலும் சிதறியழிகிறார்கள். நாங்கள் அனுப வித்த துன்பங்கள் போதும். எங்களுக்கு அமைதி தேவை.
நான் இன்னும் என் தமையன் எரிந்த மணல் மேட்டை வெறித்துப் பார்க்கிறேன். எங்கள் போன்றவர்கள் எதிர் காலம் கனவுகளில் அமைதியைத் தேடுகிறோம். "மனிதம்” என்பதை நாம் மறந்து விட்டோமா? நான் பெருமூச்சு விடுகிறேன். யாருக்கும் புரியுமா என் வேதனை?
1996
நா-10

Page 79
13. ஈஸ்வரா உன் தயவெங்கே?
--ܝܪ
பார்வதியாம் பெயர்
மெலிந்த தன் கழுத்துச்சுருங்கிய உடலை ஒரு சிவப்புப் புள்ளிகள் போட்ட சேலையால் மூடியிருந்தாள். ஐம்பது வயதிருக்கலாம். அல்லது அதற்கும் மேலிருக்கலாம்.
*ராஜேஸ் இந்தப் பெண் தான் பார்வதி.விளங்கப் படுத்திச் சொல்லேன்'. சகீலா என்னை அந்தப் பெண்மணி யிடம் கூட்டிக்கொண்டு போனாள்.
சகீலா என் சிநேகிதி, இந்தியப் பெண்கள் ஸ்தாபனம் ஒன்றில் சமூகப்பணி செய்பவள். இருவரும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாய் படிக்கும் போது சந்தித்துக் கொண் டோம். ነ - - -
அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் முஸ்லிம் களைத் தமிழ் இந்துக்கள் வெளியேற்றிக் கொண்டிருப்ப தாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
என்ன உங்கள் நாட்டிலும் இனத் தூய்மை. சவுன் ரிக்காடிங்களுக்கு நேரமாகிவிட்டது. அவசரமாக எனது மத்தியான சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஒட வெளிக் கிட்டுக் கொண்டிருந்தேன்.

ராஜேஸ்வரி 155
*உலகத்தில் எந்த மூலையில் கொடுமை நடக்கவில்லை. நான் முணுமுணுத்தேன். தென் ஆபிரிக்கா, பொஸ்னியர்' இலங்கை, அப்பப்பா எத்தனை கொடுமைகள்!
*ராஜேஸ் எனக்கு உதவி தேவை" சகீலா எப்போதும் யாருக்கும் எதையோ செய்ய இன்னொருத்தரைத் தேடு பவள். நான் புருவங்களை உயர்த்தினேன். வாய் திறக்க முடியவில்லை. இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
*நீ தமிழ் பேசுவாயா சகீலா தோளில் கைபோட்டாள். சங்கத்தமிழா அல்லது தற்போதைய தமிழா?
*பாடமாட்டேன், சுமாராகப் பேசுவேன், மோசமாகத் திட்டுவேன்"
சகீலா சிரிப்பதைப் பார்க்க எனக்கு ஆசை. முக்காடு போடாத முஸ்லிம் பெண். மூக்கில் ஒரு சிவப்பு மூக்குத்தி இந்தியாவுக்கு விடுமுறைக்குப் போய் வந்ததின் பிரதி பலிப்பு, கிழக்கையும் மேற்கையும் இணைக்க மூக்குத்தி மட்டும் போட்டுக் கொண்டாற்போதுமா?
‘எங்கள் ஸ்தாபனத்திற்கு ஒரு தமிழ்ப் பெண் உதிவி கேட்டு வந்தாள். உனக்குத் தெரியும் தானே, எங்களிலை யாரும் தமிழ் பேசமாட்டார்கள். இந்தப் பெண் ஒரு வேலைக் காரியாம். அராபிய சீமாட்டிக்கு வேலை செய்து கொண் டிருந்தாளாம். சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி யிருக்கிறாள் போலிருக்கிறது. எப்படியோ விஷயம் தெரிந்த பொலிசார் இவளை அந்த வீட்டிலிருந்து காப்பாற்றி இப் போது அந்த அராபியச் சீமாட்டிக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கிறார்கள். இவளின் வாக்குமூலத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் செய்வாயா?
சகீலா எப்போதும் ஒழுங்காக விஷயங்களைச் செய் பவள். நான் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க முதலே அவள்

Page 80
156 நாளைக்கு இன்னெ ாருத்தன்
பார்வதியின் வழக்கு சம்பந்தமான விடயமெல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்."
வழக்கு எங்கே நடக்கிறது? எத்தனைமணிக்கு? எப்படிக் கோர்ட்டுக்குப் போக வேண்டும்?
சகீலா இன்னொருதரம் எனக்கு விடயங்களை விளங்கப் படுத்திச்சொல்கிறாள்.
பார்வதியைப் பார்த்ததுமே என்மனதில் ஒரு சிலிர்ப்பு. பாவம் இந்த வயதில் வேலைக்காரியாய் உழைக்கிறாளே! புருஷன் அல்லது மகள் இல்லையா? 4.
பார்வதி பம்பாயைச் சேர்ந்தவள். கொஞ்சம் ஹிந்தியும் மராட்டியும் தெரியும். சகீலா டெல்லியைச் சேர்ந்தவள். ஹிந்தி, உருது பஞ்சாபி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பேசுவாளாம். சகீலா பத்து வயதில் இங்கிலாந்து வந்து சேர்ந்தவள். இன்றும் தன் கலாசாரத்தில் தனக்குத் தேவை பானதை வைத்துக் கொண்டு மிகுதியை எரிந்து விட்டாள். முக்காட்டைத் திறந்தது போல் எத்தனையோ விடயம்.
போர்வதி என்ர பேர் ராஜேஸ்வரி” நான் அறிமுகம் செய்து கொள்கிறேன், எங்கள் இருவருக்கிடையில் ஏதோ ஒரு பெரிய இடைவெளி. '
சந்தோசங்க" அவள் என் முகத்தைப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துச் சொல்கிறாள். அவள் வார்த்தைகளில் நெருக்கத்தின் தொனியில்லை. * o ፦
* உனக்கு மொழி பெயர்ப்பாளராக வந்திருக்கிறன்." *நன்றிங்க', அவள் குரலில் ஒரு மாற்றமில்லை. ஏதோ சாட்டுப்போக்காகப் பேசும் பேச்சு. "பயப்பிடக்கூடாது . " நான் கொஞ்சம் நெருங்கி உட்காருகிறேன். எல்லாரும் பெண்கள். ஸ்தாபனத்தின் ஹோலில் கூடியிருக்கிறோம்.

ττ ஜேஸ்வரி 157
பார்வதி மிகவும் கலங்கிப் போயிருப்பதாகவும் நாங்கள் கொஞ்சம் உற்சாகம் கொடுக்க வேண்டும் என்றும் வந் திருந்த பொலிஸ் பெண்மணி சொன்னார்.
"பார்வதி." நான் கூப்பிட்டேன் ‘.’ பதிலில்லை. 1ண"தேத்தண்ணி ஏதும் தரட்டா" ஆதரவு என் குரலில்.
“வேணாங்க" தள்ளிப் போயிருக்கத் துடிக்கும் தவிப்பு
"சாப்பிட்டாயா" அவள் மெல்லிய தோற்றம் பாவமாக இருந்தது.
ஆமாங்க" ஏழைகள் வாயில் உணவைக் காணாமல் மனதால் நிறைப்பவர்களா?
"படர்வதி பயப்படக்கூடாது" அவள் அழுது விட்டாள். திடீரென்று அழுதுவிட்டாள்.
முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு விசும்பத் தொட்ங்கிவிட்டாள். மெல்லிய விசும்பல், உலகத்துக் கொடுமைகளை எல்லாம் பொறுத்துப் பொறுத்து வெடித்த விசும்பல் மெல்லமாக அவள் தொண்டைக்குழிக்குள் சிக்குப் பட்டுத் தவித்தது. எனது தாய் அழுதால் என்னால் தாங்க (tptդպտT?
நான் அவளைக் குசினிக்குக் கொண்டுபோனேன். குளிர்த் தரையில் உட்கார்ந்து கொண்டு, முழங்கால்களில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தாள். நரை' விழும் தலைமரைக்கொண்டையாய்க்கட்டியிருந்தாள். காதில் ஒரு பிளாஸ்டிக் தோடு. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்.
பேரக் குழந்தைகளை அள்ளி எடுத்துக் கொஞ்சிக் கொண்டு ஆர அமர்ந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டி யவள், ஆயிரம் மைல்களுக்கப்பால் இந்தக் குளிர் தரையில் குனிந்திருந்து அழுகிறாள்.

Page 81
158 நாளைக்கு இன்னொருத்தன்
"அழாதே பார்வதி” நான் பக்கத்தில் குந்துகிறேன்; இருக்கக் கஷ்டமாகத் தான் படுகிறது. காற்சட்டையை ஒதுக்கிப் பிடித்துக் கொண்டு பார்வதியுடன் சேர்ந்து உட்காருகிறேன்
இப்போதே இப்படிக் குழம்புபவள் என்னவென்று அரேபிய சீமாட்டியின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யும் போது நிதானமாக இருக்கப் போகிறாள்?
"கவனமாக மறுமொழி சொல்லாட்டா வழக்கில வெல்ல முடியாது பார்வதி இவளைக் கொடுமை செய்தவளைத் தண்டிக்க வேண்டுமென்பது என் தவிப்பு.
'அம்மா நா ஒங்களிட்ட வழக்கு வேணும்னு கேட் டேனா". அவள் முதற்தரம் என்னை நேரடியாகப் பார்க். கிறாள், கண்களில் சாடையான கோபம்.
இப்போது குழப்பம் அடைவது நான். என்ன சொல் கிறாள் இவள்?
இவளுக்கு வழக்கு நடப்பதில் விருப்பமில்லையா?
பொலிஸ் பெண்மணி குசினியை எட்டிப்பார்க்கிறாள். பார்வதி மிகக் குழம்பிப் போய் இருப்பதை பொலிஸ் பெண் மணிக்கு ஆங்கிலத்தில் சொல்கிறேன்.
பொலிஸ் பெண்மணி என்னை வரும்படி கூப்பிடுகிறாள், நான் பார்வதியைத் தனியாக விட்டு விட்டு வெளியே போகிறேன். அந்த இடம் மிகவும் கொந்தளிப்பான சூழ் நிலையிலிருக்கிறது. யாரும் அதிகம் பேசிக் கொள்ள வில்லை. பின்னேரம் மூன்று மணி தான். நவம்பர் மாதம் என்றபடியால் இப்போது இரவாகி விட்டது, வெளியில் குளிரும் இருளும் கவ்விக் கொண்டிருக்கிறது.
மேசையில் பெரிய பைல்களும் சில என்வலப்புகளும், "இதெல்லாவற்றையும் பார்த்தாயா?

per Gegsium st 15g.
பெண்மணி பொலிஸ் பெரிய என்வலப்பில் இருந்து சில படங்களை வெளியில் எடுக்கிறாள்.
நான் பார்வையைப் படங்களிற் பதிக்கிறேன். "பார்வதியை நாங்கள் அரேபிய வீட்டிலிருந்து அப்புறப் படுத்திய அதே நாள் எடுத்த படங்கள்"
என் இரத்தம் உறைவது போன்ற உணர்ச்சி! இதென்ன கொடுமை?
"இதெல்லாம் நடந்து ஆறுமாதங்களாகி விட்டபடியால் பார்வதியின் தழும் பெல்லாம் மாறியிருக்கலாம். ஆனால் இந்தப் படங்கள் பெரிய சாட்சிப் பொருட்களாக இருக்கும். பார்த்தீர்களா கொடுமையை’? பொலிஸ் பெண் மணியின் குரல் உடுப்புப்போட்ட கடமைக்கப்பால் கண்ணிர் வடிக்க ஆயத்தம்,
எனக்குப் பேச்சு மூச்சு வரவில்லை. படங்களில் எனது பார்வை. இதெல்லாம் உண்மையாகப் பார்வதியின் உடம்பிற் பட்ட அடிகளா? பார்த்தாயா என்ன கொடுமை என்று” சகீலா ஒவ்வொரு படமாக நகர்த்துகிறாள்.
பார்வதியின் உதடு வெடித்து, வீங்கி, கண்ணடிகள் கறுத்து- அது ஒரு படம்.
தோள் மூட்டில் கோடு போட்டால் போல் ஒரு காயம் "இரும்புக் கம்பியால் சூடு போட்டாளாம் அந்த அரேபிய மூதேவி சகீலா ஆத்திரத்துடன் அந்தப் படத்தைக் குத்துகிறாள்.
"இந்த முதுகைப் பார்த்தாயா சகீலா இன்னுமொரு படத்தை என்னிடம் நகர்த்துகிறாள். முதுகு எரிந்து கொப்பளித்து. ஐயோ என்ன கொடூரம்? முதுகில் அயன் பிடித்து. ஐயோ ஐயோ இதெல்லாம் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குச் செய்த கொடுமைகளா?

Page 82
160 நாளைக்கு இன்னொருத்தன்
அடுத்த படம் பார்வதியின் முன்பக்கத்தை வைத்து சீடுத்தது. மார்பகங்களில் கீறல்கள்!
பாவி இந்த வயதான தோலில் எப்படி ஒரு வக்கிரமம் உனக்கு? நான் அரேபியச் சீமாட்டியைத் திட்டுகிறேன்"
முழங்கால்கள் வீங்கிய ஒரு படம், மணிக்கட்டுகளில் கயிறு கட்டி வைத்த தடத்துடன் ஒரு படம்; தொடையில் ஒரு பயங்கரக் கோடு.
"அது அவளின் சாட்டையடியாம் சகீலா வெறுப்புடன் சொல்கிறாள். என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது. இப்படியும் நடக்குமா?
சகீலா ஒரு வேலைக்காரியை இப்படி நடத்திய அந்த அரேபியச் சீமாட்டிக்குப் பைத்தியமா?. எனது கேள்விக்குச் சகீலா மறுமொழி தெரியவில்லை என்று தலையாட்டு கிறாள்.
நான் குசினிக்குப் போகிறேன்.
பார்வதி இப்போது வெறும் தரையில் விரலால் கோடு போடுகிறாள்.
"ஈஸ்வரா தயவு பண்ணேன்' அவள் முகட்டைப் பார்த்து வேண்டிக் கொள்கிறாள்.
கட்டாயமாக இவள் கூப்பிடும் ஈஸ்வரன் இவள் கணவ னாக இருக்க முடியாது. அகில உலகமெல்லாம் ஆண்டாளும் பரமேஸ்வரனைத்தான் இவள் கூப்பிடுகிறாள் போலும், ஈஸ்வரன் என்று ஒருத்தன் இருந்தால் ஏன் ஏழைப் பெண்கள் இப்படிக் கஷ்டப்படவேண்டும்? V
"பார்வதி. நான் படமெல்லாம் பார்த்தன்" அவள் வெறுமையாக என்னைப் பார்க்கிறாள்.
"உனது எஜமானி ரொம்பப் பொல்லாதவள் போலக் கிடக்கு”.

*ராஜேஸ்வரி 161
அவள் என்னை ஏறிவிட்டு பார்க்கிறாள். கோபம் வந்தால் அவ அடிப்பாங்க".
*உன்னில் கோபம் வந்தா உன்னை வேலையை விட்டு விட்டு நீக்குவது . அதற்காக இப்படி அடிப்பதா” என் குரலின் படபடப்பு. அவளை ஆச்சரியப்பட வைத்ததா?
‘என்னில் மட்டும் கோபம் இல்லீங்க” தயக்கத்துடன் சொல்கிறாள்.
* பின்ன யாரில கோபம்?*
பார்வதி பதில் சொலலாமல் இன்னொரு தரம் விரலால் கோடு போடுகிறாள்.
O O O GOO OO oo
கோர்ட்டுக்குப் போகவேண்டிய நாள் வந்துவிட்டது.
நான் A-Z புத்தகத்துடன் கோர்ட் இடம் தேடிப் போகிறேன்.
சகீலா வாசற்படியில் காத்திருக்கிறாள். அவள் சமூகப் பணி செய்யும் ஸ்தாபனத்தின் பாதுகாப்பிற்தான் பார்வதி யிருக்கிறாள். •
திடீரென்று பெரிய கார் எங்களைக் கடந்துபோய் நிற்கிறது. அதிலிருந்து ஒரு அரேபிய குடும்பமும் ஒரு கம்பீர 莒DT5ö丁 ஆங்கிலேயனும் இறங்குகிறார்கள். அந்த ஆங்கிலேயன்தான் அந்தச் சீமாட்டியின் வழக்கறிஞனாக இருக்கவேண்டும். இவன் செய்யும் குறுக்கு விசாரணைக்கு பார்வதி பதில் சொல்லவேண்டுமே! நான் அவளுக்கு உதவி செய்யவேண்டும்.
பார்வதி ஒரு செஞ்சில் உட்கார்ந்திருக்கிறாள். முகத்தில் கலவரம். கார் வந்த திசையில் அவள் போர்வை குத்திட்டுத் தவிக்கிறது.
'பார்வதி பயப்பிட வேணாம்."

Page 83
62 நாளைக்கு இன்னொருத்தன்
எனக்குப் பயமாக இருக்குங்க."
“பார்வதி, பிழை செய்த மணிசி அந்தா நிற்கிறாள் அரபுக்காரி, நீயேன் சும்மா பயப்பிடுகிறாய்."
"அம்மா உங்களுக்கு ஒன்னும் விளங்காதும்மா"
‘என்ன எனக்குவிளங்காது பார்வதி”?
எனக்கு இந்த வழக்கு விருப்பமில்லை அம்மா” எனக்குக் கோபம் வருகிறது. இந்தப் பைத்தியக்காரப் பார்வதி ஏன் தான் பட்ட துயரத்தைச் சொல்ல மறுக்கிறாள்?
நான் பேச்சை மாற்ற யோசிக்கிறேன்.
. ( "உன் எஜமானி எப்போதும் கொடுமை செய்வாளா?*
8 *அதெல்லாம் கேட்காதீங்கஅம்மா’பார்வதியின்பார்வை யில் ஒரு பரபரப்பு.
அரபுக்காரி முன்னால் உள்ள பெஞ்சில் வந்து உட்காரு கிறாள். அவள் கையிலிருந்த அழகிய குழந்தை ut ř6Jgf60dus பார்த்துக் கை நீட்டுகிறது. குழந்தையின் முகத்தில் பெரி" சந்தோசம்
சகீலா என்னை வெளியே வரும்படி கூப்பிடுகிறாள்.
என்ன விடயம்?’’ 'பார்வதி இந்த வழக்கை நடத்தாவிட்டால் அவளுக்கு நிறையப் u600Tib கொடுப்பதாக அரேபியக்காரியின் வழக்கறிஞர் சொல்கிறான்".
'
எனக்கு விளங்கவில்லை.
சகீலா கோர்ட் கேஸ் போட்டது பொலிஸார் தானே"
"ஆமா பக்கத்து வீட்டுக்காரன் ஒரு நாள் பார்வதியின் அலறல் கேட்டுப் போன் பண்ணிப் பொலிஸார் போய்ப்

ரர ஜேஸ்வரி 163
பார்வதியை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக் கிறார்கள். ஆனால் பார்வதி சாட்சி சொல்லாவிட்டால் கேஸ் என்னவாகும்.
சகீலாவின் கேள்வி என்னைக் குழப்புகிறது.
*ஏன் பார்வதி சாட்சி சொல்ல மாட்டாளாம்?"
இவ்வளவு நாளும் கிடைத்த தகவல்களின்படி அந்த அரேபியச் சீமாட்டி மிகம் பொல்லாதவள்.
ஒரு பெரிய எண்ணெய் கிணறுப் பணக்காரர் குடும்பத்தி லிருந்து லண்டனுக்கு வந்து குடியிருக்கிறாள். கணவன் பெரிய எண்ணெய்க் கம்பனித் தலைவனாம். கண்ட பாட்டுக்குத் திரிவானாம். பேருக்குத்தான் முஸ்லிம், மற்றப்படி ஆங்கிலேயர்களைவிட மோசம். பார்வதி அவர் களுடன் அரேபிய நாட்டிலிருந்து இங்கே வந்த வேலைக்காரி. பத்து வருடம் இந்தக் குடும்பத்துக்கு வேலை செய்கிறாளாம். கணவனின் கோபம் வரும்போதெல்லாம் வேலைக்காரப் பார்வதியை அடிப்பாளாம் அந்த அரேபியச் சீமாட்டி! இவளை அடிக்கும் சீமாட்டியைப் பத்து வயசிலி ருந்து இவள் தானாம் பராமரித்தாளாம். இவள் இருபது வயதில் இந்த ஐம்பத்தி ஐந்து வயது பெண்ணை இப்படி நடத்தலாமா?
*பார்வதி இந்தப் பெண் செய்த கொடுமைக்குந் தண்டனை அனுபவிக்க வேணும்" நான் கொதிப்புடன் சொல்கிறேன்.
**வேண்டாங்க எனக்கு இந்த வழக்கு வேண்டாங்க" பார்வதியின் உடம்பு நடுங்குகிறது. கை எடுத்து என்னைக் கும்பிடுகிறாள். கண்ணிர் மாலை மாலையாக வழிகிறது.
"அந்த அம்மா என்னோட கதைச்சாங்க அம்மா."
* என்ன பார்வதி சொல்கிறாய்."

Page 84
164 நாளைக்கு இன்னொருத்தன்
'நான் வழக்குப் பேசாம அவங்கக்கிட்டத் திரும்பிப் போனா என்னை நல்லா வைச்சுப் பார்க்கிறதாய்ச் சொன்னாங்க" பார்வதியின் குரலில் நடுக்கம்.
* பார்வதி யோசித்துப் பார். உனக்குச் சாட்டையடி, இரும்புக் காய்ச்சல், அயன் பிடித்தல் எல்லாக் கொடுமை களும் செய்த பெண்ணிடம் திரும்பிப் போகப் போறியா?"
'நான் என்னாங்க செய்யிறது. இந்த வயதில. என்ன வேற ஆரும் வேலைக்கு வைப்பினமா? எனக்கு வேலை யில்லாமல் போனா என் பொண்ணு கெதி என்ன” நான் பிரமித்துப் போய் நிற்கிறேன்.
**என்ர பொண்ணு பாவங்க பிள்ளை குட்டிக்காரி புருஷன் பொல்லாதவன். குடிப்பான், அடிப்பான் நான் காசு அனுப்பாட்டா எம் பொண்ணு ரொம்ப அடி வாங்கும் அம்மா. அதவிட நான் அடிவாங்கி உழைக்கிறன்'
ஈஸ்வரா நீ எங்கேயிருக்கிறாய்? பார்வதி கேட்க வில்லை. என் மனம் கேட்கிறது. இதுவும் ஒரு பெண்ணின் வாழ்வா.
1995

14. இரவில் வந்தவர்!
அவள் குழந்தைகளைப் படுக்கையில் போட்டாள் ஒலை யால் வேய்ந்த வீடு ஒட்டைகளுக்குள் பாதி நிலாவின் துண் டுகள் எட்டிப் பார்க்கின்றன. இப்போதெல்லாம் நிலவு வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாடுவதில்லை. கோயில் மணியோசையும் குழந்தைகளின் கலகலப்பும் எப்போதோ சூனியமாகிவிட்டன.
சத்தியா குழந்தையாயிருக்கும்போது நடந்த எத் தனையோ நிகழ்ச்சிகள் இன்றும் இனிமையாக இருக்கிறது. நினைவுகளைத் தவிர வேறெதுவும் குளிர்மையில்லை.
பெரிய குழந்தை பானுவுக்குப் பத்து வயதாகிறது. அவள் நித்திரை வராமல் புரண்டு படுக்கிறாள். சின்ன மகன் கேசவ இறுக்கு எட்டு வயது. அவன் பகலெல்லாம் ஓடிவிளையாடிய களைப்பில் நித்திரையாகிவிட்டான்
அவள் வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு வெளியில் வந்தாள். அவளும் நிலவும் ஒருத்தரை ஒருத்தர் முட்டிக் கொண்டனர். கிணற்றடி மல்லிகையிலிருந்து குப்பென்ற மணம் சேர்ந்து தென்றலுடன் தவழ்ந்து வந்து அவள் நாசி யில் நுழைந்தது
தூரத்தில் யாரோ அழும் சத்தம். வாய் விட்டழாத. சத்தம். யாரும் செத்துப்போயிருக்கலாம்.

Page 85
1.66 நாளைக்கு இன்னொருத்தன்
இறப்புகள் எப்பொழுதும் துப்பாக்கிக் குண்டுகளில் காத் திருப்பதில்லை. "இந்த நாய்களுக்கு ஏன் ஒரு குண்டை வீணாக்கவேண்டும்" என்று சொல்லும் விடுதலை வீரர்களின் காற்சப்பசித்து ஒரு உயிரைப்பலிவாங்க ஒரு நாளும் தயங்கிய தில்லை.
அவள் கணவனை ஒரு காலத்தில் சிங்கள அரசாங்கம் பிடித்துக் கொண்டு போனது. கேசவன் அப்போது கைக் குழந்தை. மகா வீரர்களாகப் போஸ்டர் போட்டு மரியாதை செலுத்தப்படாமற் செத்துப் போன எத்தனையோ இளைஞர் களில் அவனும் ஒருத்தன்.
தனிமை, சுமை, குடும்பம், இளமை, அழகு, இத்தனை யும் சத்யாவின் சொத்துக்கள். தாய் தகப்பன் எப்போதோ இறந்துவிட்டார்கள் ஒரே ஒரு தமையன், கொழும்பிலேயே தங்கிவிட்டான். யாழ்ப்பாணம் எட்டி பார்க்கப் பயம்.
சத்யா 3 ன் தனிமைக்குத் துணையாய் வந்தவன் நட ராஜனின் சினேகிதன் எண்பதாம் ஆண்டுகளில் கச்சை கட்டிக் கொண்டு கட்சி பிரித்த குழுக்களுள் சேராதவர்கள். புடவைக் கடைகளுக்குப் பிள்ளையார் துணிக்கடை, கணேசர் சாரி எம்போரியம், விநாயகர் சாரி பலஸ், கணபதி சேலைக் கடை, விக்னேஸ் துணி மாளிகை என்றெல்லாம் பெயர் வைப்பதுபோல் எத்ைைனயோ தமிழியக்கங்கள் கண்ணைக் கவரும். காதைக் குளிர வைக்கும, வீரத்தைப் பொங்க வைக் கும் பல கவர்ச்சியான பெயர்களை வைத்துக் கொண்டு விடுதலைக்கு வெளிக்கிட்ட போது, நடராஜனும் பாலேந்திர னும் பார்வையாளராக இருந்தார்கள்
சத்யா குழந்தை சுமக்க, நடராஜன குடும்பம் சுமந்தான். காதலித்துக் கலியாணம் செய்து கொண்டவர்கள். சந்தை யில் நடராஜன் சின்னக் கடை வைத்திருந்தான். வியாபாரம் நன்றாக வந்து கையில் காசு வந்ததும் வீட்டைத் திருத்திக் கட்டி ஒடு போடுவதாக யோசனை.

ராஜேஸ்வரி 167
கனவு அவன் கற்பனையாக மாறிப்போக இலங்கை ராணுவம் சுன்னாகத்தை எரித்துவிட்டது அவன் உடைந்து போனான். ஒலை வீடு ஒட்டை கண்டது. சத்தியாவின் நம்பிக்கை எதிர்காலத்துக்கு வழிகாட்டியது. :
'பிரச்சனைகள் தீரும். கடவுள் வழி காட்டுவார்? அவள் கணவனுக்கு அன்புடன் சொன்னாள் அவள் குரல் கடவுளுக்குக் கேட்கவில்லையோ என்னவோ பிரச்சனைகள் கூடிக்கொண்டு வந்தது.
83ம் ஆண்டு கலவரம் இலங்கைத் தமிழர்கள் தாங்கள் பிறந்த நாட்டிலேயே அகதிகள். நடராஜன் ஏதோ கிடைத்த வேலைகளைச் செய்து பிழைத்துக் கொண்டான்,
வீட்டுக்கு வீடு பிரச்சனை, போராட்டம், ஊர்வலங் கள், உற்சாக கோஷங்கள். ஈழம் கெதியில் கிடைத்து விடும்; எல்லோர் மனதிலும் நம்பிக்கை.
84ம் ஆண்டு ஊர்களில் திருட்டு. ஒரு இயக்கத்தின் பெயரில் இன்னொரு இயக்கத் திருட்டு, நடராஜன் வியாபார விடயமாக கொழும்புக்குப் போனவன் திரும் வரவில்லை.
கைக் குழந்தையுடன் சத்தியா கதறியதைக் கடவுள் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் கழுத்தில் கிடந்தவை ஒவ்வொன்றாய்ப் போய்க்கொன் டிருந்தன. தமையன் தன்னால் முடிந்ததை எப்போதோ இருந்து அனுப்புவான்
கடவுளே நன் யாருக்கு என்ன செய்தேன். எனக்கேன் இந்த விதி அந்தப் பத்தினியின் பரிதாபம் எந்தக் கடவுளுக் கும் விளங்கவில்லை. பானுமதி பசியால் துவண்டபோது, இகசவன் பாலுக்குத் தாயின் முலையைப் புண்ணாக்கிய போது அவள் கண்ணிரும் சில வேளை வற்றிவிடும்.

Page 86
168 நாளைக்கு இன்னொருத்த்ன்
85ம் ஆண்டு ஒரு இயக்கம் ஒரு இயக்கத்தை மனித வேட்டை செய்தார்கள். சந்திகளில் வைத்து எதிரியக்க. இளைஞர்களை கம்பங்களில் கட்டியதை பண்பட்ட தமிழ் தாய்மார் வேலியால் எட்டிப் பார்த்துக்கொண்டார்கள்.
கோயிற் திருவிழாக்களுக்கும் கொடும் கொலைகளுக் கும் வித்தியாசம் தெரியாத மனித மந்தைகள், தெரு திரண்டு, விழியுயர்த்தி, வாய் திறந்து, மனமுடையப் பார்த் துக்கொண்டு நின்றார்கள். சத்தியாவும் மற்ற மனிதர்கள் போல் கொடுமைகளுக்குள் குருடியாய், ஊமையாய்ச் செவி ட்ாய்ப் பழகிவிட்டாள்,
`ረ}
சத்தியா குடத்தில் நீர் வடித்து முகத்தைக் கழுவிக் கொண்டாள். மனம் எரிந்து கொண்டிருந்தது.
இப்படியவள் நிம்மதியில்லாமல் தவித்த ஒரு இரவில் பாலேந்திரன் வந்து சேர்ந்தான்.
"என்னையவர்கள் தேடுகிறார்கள்" என்றான்.
அவனுக்கு விளங்கவில்லை.
அவன் ஒருநாளும் எத்த இயக்கத்திலும் சேர்ந்திருக்க வில்லை. அதுதான் பிழை.
அவன் பயத்துடன் வாசலைப் பார்த்தான்.
அவனுர்ரில் அவன் இருக்கமுடியாதாம். அவன் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டபடி சொன்னான். சத்தியாவில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் முன் பின் தெரியாத ஒருத்தனுடன் வாழ்வதாக அவனை ஊர் தூற்றும் என்று தெரியும், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
பக்கத்து வீட்டு வேலிகளுக்குக் காதும் கண்களும் கிடைத்துவிட்டது. ஊருக்கு வாய் திறந்துகொண்டது.

TT Cassivauf 169
ஊரில் பெரிய மனிதர்கள் அவளைப் பார்க்க வந்தார்கள். அவள் நடத்தை பற்றி அடுத்த வீடுகளில் நல்ல அபிப் *பிராயம் இல்லை என்றார்கள்.
அவள் வாயடைத்துப் போய்விட்டாள். குழந்தைகளும், "இதெல்லாம் பொய்க்கதை. என்னில சந்தேகம். தட்டப் போறான்கள்" பாலேந்திரன் முணு முணுத்துக் கொண்டான், பாவம் அவன் முணுமுணுப்பு முடிய முதல் சில விடுதலை வீரர்கள் வந்து "கொஞ்ச நேரம்" கதைக்கக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களின் கொஞ்ச நேரத்துக்கு உண்மையான விளக்கம் பாலேந்திரனின் ஆயுள் காலம் என்பது சத்தியாவுக்குப் புரியாமலில்லை,
விடுதலை வீரர்களுடன் வந்திருந்த ஒரு பிரமுகர்
அவளைப் பார்க்க வந்தார். அவள் அழகு ஏழ்மையுடன் அழிந்து போகவில்லை. சோகத்திலும் ஒரு அழகு. பிரமுகர் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தார். பாலேந்திரன் போல ஆட்கள் மக்களின் துரோகி என்றார்.
அவள் மெளனமாகக் கேட்டுக்கொண்டு நின்றான்.
அவர் குரல் இரக்கமாயிருந்தது. பாலேந்திரனைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல அவளுக்கே இதுவரை பாலேந்திரனில் வைத்திருந்த நம் பிக்கை சந்தேகமாக இருந்தது.
**உனக்கு பாலேந்திரன் தங்களின்ரை ரகசியம் ஏதும் சொன்னானா?”
"ரகசியம் சொல்லுமளவுக்கு எனக்கும் பாலேந்தி ரனுக்கம் நெருங்கிய பழக்கமில்லை"அவள் அழுகையினூடே சொன்னாள்.
பாலேந்திரன் அவளின் கணவனின் நண்பன், அவள் பட்டினிக்கு எதோ ஒன்றிரண்டு உதவி செய்தவன்.
島mー11

Page 87
170 நாளைக்கு இன்னொருத்தன்
பிரமுகர் நிலவு வேளிச்சத்தில் அவளைப் பார்த்தார். அவளின் முகம் அவருக்குச் சரியாகத் தெரியவில்லை.
"குழந்தைகள் எப்படி” அவர் குரலில் இரக்கம்; நடிப்போ உண்மையோ என்று அவளால் பார்க்க முடிய வில்லை. " ۔۔۔۔۔۔
*செலவுக்கு வைத்துக் கொள்" புது நோட்டுகளைக் கையால் அவள் தொட்டு எத்தனையோ காலமாகி விட்டது
நிலவு வெளிச்சத்தில் புது நோட்டுகள் மோகனமாய்சி சிரித்தன. நீண்ட நேரம் அவள் தயங்க, அவர் குழந் தைகள்,பட்டினி பாசம் என்றெல்லாம் பேசிக் கொண்டி ருக்கக் கடைசியாக அவள் அழுது விட்டாள்.
"உன்ர புருஷன் எங்களோட வந்த ஆள்” பிரமுகர் இறந்த காலத்துக்கு அவள் நினைவை இழுத்தார். அவ ளுக்கு நடராஜன் யாருக்கும் புடிக்காமல் நடந்ததாக ஞாபக மில்லை. அவர் மிகவும் மெலலிய குரலில் தேசக்கடமை. மக்கள் கடமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
புது நோட்டுகள் கல்லின் பாரத்திலமர்ந்து கண்ண டித்தன.
அவர் போய்விட்டார்.
குழந்தைகள் புது உடுப்பு போட்டன. அவள் அடுத்த நாளைக்குச் சாப்பாட்டுக்கு யோசிக்கவில்லை. அதன்பின்
அவர் அடிக்கடி வந்தார். வீட்டு திண்ணை தாண்டி உள்
ளுக்கும் வத்து விட்டார்.
அவள் இன்று அவருக்காகக் காத்திருப்பதுபோல் காத்,
திருக்கத் தொடங்கிவிட்டாள்.
அவர் ஊர் பிரமுகர்களில் ஒருத்தர். இயக்கத்தில் ஒரு
பிரமுகர். குழந்தை குட்டிகளுக்குத் தகப்பன்.
இரவில் வந்து போனார்.

ராஜேஸ்வரி 71.
அடுத்தவர்கள் அவள் நடத்தையில் இன்னும் சந்தேகம். என்றும் இயக்கம் இந்த மாதிரி விடயங்களில் மிகக் கடுமை யாக இருப்பதாகவும் சொன்னார்.
அவள் அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டாள். இனி இந்தப் பக்கம் வராவிட்டால் நல்லது என்று அரை குறை மனத்துடன் சொன்னாள்.
அவர் ஒன்றிரண்டு கிழமையாக வரவில்லை. அவள காத்துக் கொண்டேயிருக்கிறாள். இருளில் ஏதோ சலனம். யாரோ கிணற்றடியில் நிற்பது
போன்ற பிரமை, அவரைத் தவிர யாரும் இந்தப் பக்கம் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை.
'நீங்களா?"
அவள் மெல்லக் கேட்டுக்கொண்டு போனாள். ஒரு வெடிச் சத்தம். அவள் துவண்டு விழுந்தாள்.
அடுத்த நாள் இயக்கக்காரர் வந்து நடத்தை கெட்ட இந்தப் பெண்ணைக் கையும் களவுமாய்ப் பிடித்து மரண தண்டனை கொடுத்துவிட்டதாகச் சொன்னார்கள்
அரை குறை நித்திரையில் தானெழுப்பும்போது Seyitnr வுடன் சேர்ந்திருந்த பிரமுகர் இன்று பக்கத்து 'வீட்டுப் பத்தினிகள் பார்த்திருக்க அம்மாவின் மரணத்திற்கு நியாயம் சொல்லிக்கொண்டிருந்தார்.
1995.

Page 88
15. அம்மா ஒரு அகதி
۔۔۔۔۔۔۔۔
அம்மா பாவம் இப்படி நினைத்துக் கொள்வதைவிட மாலினியால் வேறொன்றும் அம்மாவுக்காகச் செய்ய முடியாது. அவளின் கணவன் தான் மட்டும் ஏன் மாலினியின் தாயின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்கிறான். அம்மாவுக்கு இத்தனை பிள்ளைகள் இருந்தும் என்ன பலன்? கடைசிக் காலத்தில் அம்மா நிம்மதி யாக இருக்க ஒரு இடம் இல்லை. தம்பி ஒரு வெள்ளைகாரப் பெண்ணுடன் ஒன்றாய் வாழ்கிறான். அந்த வெள்ளைக்காரப் பெண்ணுக்கு அம்மாவில் விருப்பம். அவள் பெயர் ஜெனிபர். இந்தியா இலங்கை தாய்லாந்து நேபாளம் என்று பல இடங் களுக்கும் விஜயம் செய்தவள். கிழக்கு நாடுகளில் பெண் களுக்கு சமய ரீதியாக நடக்கும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பேசுபவள். V
ஜெனிபர் ஒரு ஆசிரியை. அதே நேரம் உலக தத்துவங் களில் ஆர்வம். நிறைய வாசிப்பாள். தம்பி லைபிறரியில் வேலை செய்கிறான். அங்குதான் இருவரும் சந்தித்தார்கள். புத்தகத்துக்கு திகதி போட்டுக் கொடுத்தவனுக்குத் தன் மனதைக் கொடுத்துவிட்டாள் ஜெனிபர்.
தம்பி எப்போதோ ஒரு காலத்தில் லண்டனுக்கு படிக்க வந்தவள். அகதிகள் இலங்கையில் இருந்து வந்த பொழுது

ராஜேஸ்வரி 173
அவனும் தானும் ஒன்று என்று பதிந்து கொண்டாள். படிப்பு ஒன்றும் பெரிதாகப் படித்து முடிக்க வில்லை. ஆனால் ஏதோ கைநிறைய உழைக்கிறாள்.
அவன் ஜெனிபருடன் ஒன்றாய் சீவிக்கப்போகிறேன் என்றதும் தமக்கை மாலினியும் அவள் கணவன் புண்ணிய மூர்த்தியும் தங்களுக்குத் தெரிந்த விபரங்களை மற்றச் சகோதரர்களுக்கும் அறிவித்தார்கள். பெரிய அண்ணா குடும்பம் கனடாவில் இருக்கிறார்கள். அக்காமார் இருவர் யேர்மனியில் இருக்கிறார்கள்.
இவன் கடைசிப் பையன் பொன்னம்பலம் வெள் ளைக்காரியைச் செய்யப் போவது ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை. அம்மாவை ஊரிலிருந்து எடுப்பித் தால் பொன்னம்பலம் திருந்துவான் என்று மாலினி சொன்னாள். அவள் லண்டனில் இருப்பதால் அம்மாவை ஸ்பொன்ஸர் பண்ணி எடுப்பது அவள் தலையில் விழுந்தது. அம்மா கொழும்பில் ஒரு சொந்தக்காரபெண்ணுடன் வசித் தவள். உலகத்தின் பலபாகங்களில் இருந்தும் பணம் போகும். அம்மாவின் வேலை அடிக்கடி கோவிலுக்குப் போவதே லண்டன்வர எத்தனையோ கஸ்டங்கள் பட வேண்டி இருந்தது
எப்படியோ வந்ததும் பொன்னம்பலம் 'பிரச்சினை" விவாதிக்கப்பட்டது. தான் யெனிபருடன்தான் வசிப்பேன் கல்யாணம் ஒன்றும் இப்போது செய்து கொள்ளப் போவ தில்லை என்று பொன்னம்பலம் சொல்லிவிட்டான். அம்மா வையும் அகதியாய்ப் பதிந்து உதவிப்பணத்தை எடுக்கச் சொல்லிவிட்டான். மற்றத் தமக்கைகளுக்குக் கொடுத்ததைவிட லண்டன் மாப்பிள்ளை தனக்கு நிறையச் சீதனம் தந்திருக்க வேண்டுமென்பது மாலினியின் கணவன் புண் ணியமூர்த்தியின் கருத்து. மாமியார் தங்கள் பொறுப்பில் இருக்காவிட்டாலும் அவ

Page 89
74 நாளைக்கு இன்னொருத்தன்
வுக்கு ஏதும் நடந்தால். தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற எரிச்சல் புண்ணியமூர்த்திக்கு வந்ததை மாலினி எதிர் பார்க்கவில்லை.
தம்பிக்குப்புத்தி சொல்லும் சாட்டில் அம்மாவை உன் தலையில் கட்டி விட்டார்கள் உன் குடும்பத்தினர். புண்ணிய மூர்த்தி முணுமுணுத்தான். உண்மையாகவிருக்கலாம் அம்மா கனடாவுக்குப்போக மாட்டாள். சரியான குளிர் என்று பயம். யேர்மனியில் அகதிகளின் பிரச்சனை சிக்கலாகிக் கொண்டு வருவதால் எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரி யாது என்று யேர்மனியில் இருந்து கடிதம் வந்தது. பிரான் சில் இருக்கும் தம்பியின் மனைவி அடிக்கடி சுகமில்லாமல் படுப்பவள். அவள் இரண்டு குழந்தைகளுடன் படும்பாடே அம்மாவால் சகிக்க முடியாமல் இருக்கும்.
அம்மா லண்டனுக்கு வரும்போது நல்ல சுகமாகத்தான் வந்தாள். வரும்போது லண்டனில் நல்ல வெயில். அந்த வருடக் குளிரில் நெஞ்சுத்தடிமன் வந்து கஸ்டப்பட்டுவிட் டாள். ஊரில் இருந்திருக்கலாம். அம்மா மெல்லமாகச் சொன்னாள். அறுபது வயது அம்மாவிற்கு. அப்பாவை பத்து வருடங்களுக்குமுன் இழந்தவள். சரியாக ஐம்பது வயதில் விதவையாகி விட்டவள்.
உனக்கென்ன உலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் உன்பிள்ளைகள் இருக்கிறார்கள். சொந்தக்காரர் பொறா மையை மறைக்கத் தெண்டித்தாலும் அவளுக்கு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விளங்காமலில்லை.
பிறந்த ஊரில் அரசியல் பிரச்சினை. இயக்கக் கொடுமை கள். இனஒழிப்பு நடவடிக்கைகள் போன இடங்களில் என் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் அம்மா. கடைசி மகன் பொன்னம் பலத்தைப் பற்றி மாலினி எழுதிய போது 19ற்றப்பிள்ளை தான் அம்மாவை வரச்சொல்லி எழுதியிருந்தார்கள். வந்த

氢75
கொஞ்சநாளிலேயே அம்மாவிற்கு லண்டன் அலுத்து விட்டது. குளிர். மொழிப்பிரச்சனை. மகளும் கணவரும் வேலைக்குப்போனால் வீட்டில் தனிமையான வாசம் என்பன அவளை லண்டனை வெறுக்கப்பண்ணிவிட்டது.
மாலினியின் குழந்தைகள்- வயது ஐந்தும் ஏழும்- அவர் களுக்கு பாட்டியுடன் பேசிப்பழக தமிழ் சரியாக வராது. மகன் பொன்னம்பலம், தான் அம்மாவை தன்னுடன் வைத் துப் பார்க்கிறேன்' என்று சொல்லி கூட்டிக்கொண்டு போனான். ஜெனிபர் ‘மாமியாருக்கு மரக்கறி சமைத்துக் கொடுத்தாள். தங்களுக்கு பன்றியை வதக்கி உருளைக் கிழங்கைப் பொரித்துக் கொள்வாள். வாழ்க்கை முழுவதும் ஷ்ரக்கறி சாப்பிட்டுப்பழகிய அம்மாவால் அடுப்பில் உருகிய பன்றியின் மணத்தைச்சகிக்க முடியவில்லை,
மாலினி வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள். இப்போது அம்மாவிற்கு சுகமில்லை யாராவது வீட்டில் நின்று அம்மாவைப்பார்த்துக்கொள்ளவேண்டும். மாலினி ஒரு கிழமை லீவு எடுத்தாள். டாக்டரிடம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போனாள். உங்கள் அம்மா மிகவும் டீப்பிறஸ்ட்ராக இருக்கிறார்கள். தனிமையாக விடாதீர்கள் டாக்டர் அம்மா விற்கு "ட்ராங்குலைஸர்" எழுதிக் கொடுத்தார். அம்மா விற்கு இப்போது எல்லாம் சரியான மறதி. கோப்பிக்குப் பதிலாக மிளகாய்த்தூள் போட்டு மாலினியின் கணவருக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
குசுனியில் "மைக்குறொஅவனுக்குள்" ஆப்பிள் பழங் களை வைத்து சூடுகாட்டிவிட்டாள். இந்த நிலைமை தொடர்ந்தால் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
“லண்டனுக்கு வந்து இரண்டு வருடத்தில் அம்மாவுக்கு இவ்வளவு தூரம் ஞாபக மறதி வரலாமா! சகோதரர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள். அம்மா கான் கனடாவிற்கு போகமாட்டாளாமே! பிரான்ஸ் யேர்மனி மாலினிக்கு என்ன

Page 90
76 நாளைக்கு இன்னொருத்தன்
செய்வது என்று தெரியவில்லை. ஊரில் இருந்தால் அம்மாவின் இந்த முதுமைக்காலம் எவ்வளவு சந்தோஷ, மாகப்போயிருக்கும். நிம்மதியும் சந்தோஷமுமாக வாழ வேண்டிய வயதில் இப்படியும் ஒரு வாழ்க்கையா? அம்மா வுக்கு ஞாபகங்கள் மழுங்கிப் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லேயே மாலினி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அடுத்தநாள் அவள் வேலைக்குப் போகவேண்டும். இந்த, வருட லீவெல்லாம் எடுத்தாகி விட்டது!
அம்மாவைக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு மாலினி வேலைக்குப் போனாள். வேலையில் அன்றெல்லாம் மனம் ஓடவில்லை. வரும் வழியில் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வீடு வந்தாள். வீட்டின் முன்னால் இரு பொலிசாச் நின்றிருந்தனர். சொறி - பொலிசார் விடயத்தைச் சொன்னார்கள். அம்மா வீட்டைவிட்டு வெளிக்கிட்டுப்போய் ஒரு காரில் அடிபட்டுச் செத்துப் போய்விட்டாவாம்!
அகதியாய், ஞாபகமில்லாத நடைப் பிணமாய் வாழப் பிடிக்காத அம்மா இப்படியொரு சாவைத் தேடினாளா!
1994

16. என்னவன்
செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்த போது அவர் பார்வை தூரத்தில் சுருண்டு படுத்திருக்கும் அவர் மனைவி சங்கரியில் தடைப்பட்டு நிற்கிறது.
இவருடன் ஒரு கட்டிலில் படுத்தால் இவருக்குச் சில வேளை நித்திரை கொள்ளச் சிரமமாக இருக்கலாம் என்று சொல்லி விட்டு அவசர தேவைக்கு என்று வாங்கி வைத் திருந்த "மடிக்கும்" கட்டிலை விரித்துப் போட்டு படுக்கத் தொடங்கிய போது இதுவரை தன்னுடன் ஒருகட்டிலைப் பகிர்ந்து கொண்ட சங்கரிக்கும் தூரத்திற் படுத்திருக்கும் சங்கரிக்குமுள்ள வித்தியாசத்தை உணரத் தொடங்கினார் செல்வரத்தினம்.
நினைவில் ஏதோ ஒரு சுண்டிப்பு, அவர் கண்களை மூடி நித்திரை கொள்ள முயன்றார்.
உடைந்த காலில் போட்ட பிளாஸ்ரருக்குள்ளால் தின வெடுத்துக் கடித்தது, சொறிய வேண்டும் போல் இருந் தாலும் அவரால் முடியாது.
பிளாஸ்டரால் மூடப்பட்டிருக்கும் காலில் மட்டுமா சொறி?

Page 91
178 நாளைக்கு இன்னொருத்தன்
செல்வரத்தினம் பெருமூச்சுடன் நெஞ்சைத்தடவிக் கொண்டார்,
அவர் அவளை இன்னொரு தரம் உற்றுப்பார்த்தார். எவ் வளவு அமைதியான முகம்
அவளை அவர் எப்போதாவது முழுக்கப்" பார்த்திருக் கிறாரா? அல்லது பார்ந்தத்தான் முயற்சிக்கிறாரா?
T அலலது 鷲*
எந்த ஒரு கணவன் தங்கள் மனைவியை முழுமையாகப் பார்த்து முழுமையைத் தெரிந்து தென்கிறான்?"
செல்வரத்தினம் நினைவில் இன்னொரு சுண்டிப்பு. தங்கள் தேவைகளுக்கு மட்டும் பெண்களே அடையாளம் கண்டு கொள்ளும் ஆண்வர்க்கத்தில் அவரும் ஒருத்தர் என் பதை தெரியத் தொடங்கிய குற்றஉணர் வின் சுண்டிப்பே
= lق[[ق
- . சங்கரி நிம்மதியாக நித்திரை செய்கிறாள்: பொறு? யான பூமித்தாயின் மெல்லிய மூச்சிளையில் உலகம் உறங்க அவளின் முகத்திலும் நிம்மதி. III 觐 இவர் நித்திரையில்லாமல் புரள்வதன் காரணம அவ ளுக்குச் சம்பந்தமில்லாதது என்று தனக்குத் தானே சமா
தானம் செய்து கொள்ள முயல்கிறார்.
உடைந்த காலில் ஏதோ நரம்பு னினுக் வினுக்கென்று நோவை உண்டாக்குகிறது
உடைந்த எலும்பில் மட்டுமா பிரச்சினை? I | If I || ||
ரு கால் உடையும் வரை அவருக்கு தன் உடம்பில் நரம்பு கள், தசைகள், எலும்புகள் என்னென்ன செய்கின்றன. ஒரு மனிதன் உயிர்வாழ எப்படி இரத்தமும், தசையும். நரம்பும் பின்னிப் பிணைந்து" ஒர் சிக்கலான அமைப்பில் இயங்கப் படுகிறது என்று தெரியவில்லை.

grgosius) fil. El la L. 179
காலில் அடிபட்ட போது விழுந்த ஞாபகம் இருக்கிறது" எழும்பிய போது ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார். 1
யாரோஒரு மனிதன்"போல் தன்னைப் பார்த்துக் கொண்டார் ஒரு காவில் நல்ல அடி: மாதக் கண்க்கு எடுக்கும் சுகமாக என்று சொல்லி விட்டார்கள். தோள்களில் காயம் பரவாயில்லை. சங்கரி பதறிப் போய்விட்டாள். இவரைக் கண்டதும் உதடுகளை இறுக்கிக் கொண்டு நீர் வடித்தாள்,
இதுவரை அவர் யாரையும் கேட்காத வாழ்வு, இன்று அவர் 'கயமை" பிளாஸ்ட்ரால் மூடப்பட்ட வலிமையிழந்த போதுதான் அவருக்குள் ஒளிந்து கிடந்த உண்மையான் பெலவீனமான செல்வரத்தினத்தை அவர் சந்தித்தார்.
"கால் எலும்பு ஒன்று சேர மாதக்கனக்காக எடுக்க லாம். ஆஸ்பத்திரியில் இருக்கத் தேவையில்லை. வீட்டுக் குப் போய்ப்படுத்திருக்கலாம், அடிக்கடி எக்ஸ்ரே எடுக்க வந்தால் சரி"
t
எஒம்புடைவு பார்க்கும் டாக்டர் இவருக்குச் சொன்ன போது இவரால் இரண்டொரு மாதங்களை எப்படிச் சமாளிப் பது என்று யோசனை t
சங்கரிக்கு அவர் வீட்டில் படுத்திருப்பது ஒருவிதத்துக்கு நிம்மதி இல்லா விட்டால் காலையில் எழுந்து, குழந்தையை பாடசா லைக்கு கொண்டு போய்விட்டு, இவருக்கு சினிமத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து, என்றெல்லாம் அலைந்து கொண்டிருக்க வேண்டும். I
அவரால் இப்படி ஒரு சில நாட்களில் இந்த இக்கட்டான "அக்ஸ்ளிடெண்ட்டையும் அதன் விளைவுகளையும் சங்கரி
போல் திட்டம் போட முடியுமா?
சங்கரிக்கு கால் உடைந்து படுத்திருந்தால் அவர் இப் படியா நிமமதியாய் படுத்திருப்பார்?அவருக்கு சமையல் தெரி

Page 92
180 நாளைக்கு இன்னொருத்தன்
யாது. குழந்தைகள் பாடசாலைக்கு போக நேரமாயிருந் தால் சத்தம் போட்டிருப்பார். அது மட்டுமா? சாப்பாடு தருவதிலிருந்து மலசலம் போய் துப்பரவாக்கும் வரைக்கும் தாயாய் தாதியாய் மாரடிக்கிறாளே சங்கரி. அவள் போல அவளுக்கு அவர்தொண்டு செய்திருப்பாரா?
செல்வரத்தனம் மெல்லமாக எழுந்திருந்து தலை யணையைச் சரிசெய்து கொள்கிறார்.
அவர் எப்போதும் அவள் நோயை, நோவைப் பெரிது படுத்தியதில்லை. குழந்தை பிறந்த நாட்களில் கூட அவள் ஏதோ முணுமுணுக்க இவர் கோபத்தில் “ஏதோ நீர் ஒருத்திதான் பிள்ளை பெத்திரோ' என்று வள்என்று விழுந் திருக்கிறார். அவள் தன் மெளனத்தில் தன் சோகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
வெளியில் இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு கார் கீரீச் என்று ஓடிய சப்தத்தில் சங்கரி திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் பின்பக்கம் தலை மயிர் விரிந்த அதன் இடைவெளியால் கழுத்தின் முழுப்பாகமும் அதில் பாம்பு போல் வளைந்து கிடக்கும் தாலியும் தெரிகிறது.
அவளை அவர் முதற்தரம் பெண்பார்க்க வந்த ஞாபகம் வருகிறது.
அவளை ஒருநாள் வடக்கு லண்டன் முருகன் கோவி' லுக்கு போயிருந்த போது கண்டார். வெள்ளிக் கிழமை பூசைக்கு திரண்டு வந்திருந்த தமிழ்க்கூட்டத்தில் அவளு மொருத்தியாக அடக்கமாகத் தலை குனிந்து பூசைத் தட்டைத் தாங்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
கோவில் முழுக்கச் சிலைகள், அவளும் ஒரு சிலை போல பளிச்சென்று, தெரிந்தாள் கவர்ச்சியான தோற்றம் நிமிர்ந்து பார்க்காமலே நின்றிருந்த அவளை அவர் எடை
போட்டார்

ராஜேஸ்வரி 181
* பெட்டைகளுக்கு என்ன வேலை தட்டத்திலை பழங் களையும், பூவையும் போட்டுக் கொண்டு புருசன் கேட்டு விரதம் பிடிக்கிறாளவை." பக்கத்தில் நின்றிருந்த சினேகிதனின் கிண்டல் செல்வரத்தினத்துக்கு ஆபாசமாகப் 4ull-gs,
உனக்குத் தெரிந்த பெண்ணா? இவன் கோள்வியின் தொனி சினேகிதனை யோசிக்கப்பண்ணியிருக்க வேண்டும். செல்வரத்தினததைக் ககுத்துடன் பார்த்தான்.
தெரிந்துகொள்ள விருப்பமா, குரலில் கிண்டல் இல்லை.
செல்வரத்தினம் தன் விருப்பத்தைக் காட்டிக் கொள்ள
வில்லை யாரும் பெண்ணில் தன்னைப் பறிகொடுத்து தன் "ரிைலையைக் குறைக்கத் தயாரில்லை
* சும்மா கேட்டேன்" செல்வரத்தினம் மழுப்பி விட்டார்.
சினேகிதன் அவளைப்பற்றி விசாரித்து அவருக்கு அவள்
கொடுக்கத் தயாராக இருக்கும விலையைப்பற்றி விசாரித்து,
இவரிடம சொல்லி அவர்கள் முறைப்படி பெண் பார்க்கப் போனார்கள்.
கோயிலுக்குள் நின்ற மாதிரியே தலை குனிந்து கையில் பலகாரத்தட்டத்துடன் செல்வரத்தினம் குடும்பத்தினர் இருந்த ஹோலுக்குள் வந்தாள்.
வெளியில் சரியான குளிர், இன்னும் சினோ பெய்யத் தொடங்கவில்லை, ஆனால் அவள் மேசையில் பலகாரத் தட்டத்தை வைத்த போது அவள் நெற்றியில் வியர்வை முத்துக்கள் பளிச்சிட்டன.
"லண்டனுக்கு வந்து இப்பதான் ஆறு மாதம், கொம்பி யூட்டர் படிக்கத் தொடங்கியிருக்கிறாள்' பெண்ணின் தம யனின் வாயெல்லாம் பல்லாக இளித்தார். லண்டனில் கலி யாண வயதைத் தாண்டி வண்டி வைத்து, தாடியும் நரைக்கத் தொடங்கிய ஆண்களும் கல்யாணச் சந்தையி3

Page 93
182 நாளைக்கு இன்னொருத்தன்,
தங்களை "மேக்கப்பால்" அலங்கரித்த பெண்களும் நிறைய மலிந்து போய் இருக்கிறார்கள்.
அவ: வந்து ஆறுமாதத்துக் கிடையில் கல்யாணம் என் றதும் எத்தனையோ பேர் பொறாமையுடன் பார்த்தனர். (நாங்கள் தமிழர்கள்!)
"எடே என்ன செய்தாலும், உன்னை முழுக்க முழுக்க காட்டிக் கொள்ளாதே, இந்தப் பெண்கள், இடம் கொடுத் தால் தலையில் ஏறி பரதநாட்டியம் ஆடிப் போடுவாளவை" சினேகிதனின் புத்திமதியிலும் செல்வ ரத்தினம் சங்கரியிடம் தன்னை முழுக்க முழுக்கக் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து பழகிவிட்டார். கெளரவமான தம்பதிகள் இரண்டு குழந்தை கள். தன்னிடம் அதிகம் சீதனம் கேட்காமல் கொடுத்த பணத் துடன் இவர் செய்து கொண்டது சங்கரிக்குச் சந்தோஷம், ஒரு நன்றிக் கடன் போன்ற சந்தோசம்,
பக்கத்து அறையில் சின்ன மகள் சினுங்கல் கேட்டது. சங்கரி குழந்தையின் குரல் கேட்டு இன்னொருதரம் புரண்டு படுத்தாள். குழந்தையின் சினுங்கல் அழுகை மாறியதும் அவள் சட்டென்று எழுந்து பக்கத்து அறைக்குப் போனாள். செல்வரத்தினம் அவளுருவம் தன்னைக் கடந்து போவதை மெளனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். கடமைக்குத்தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயந்திரமா அவள்?
அவளின் குரல் அடுத்த அறையிலிருந்த இவர் காதை சீட்டியது. மெல்லிய குரலில் குழந்தையைச் சமாதானப் படுத்தி நித்திரையாக்கிக் கொண்டிருக்கிறாள்.
இவர் தன் கால் நோகும் போது முணு முணுக்கும்
போதும் இப்படித்தான் ஆறுதல் படுத்துவாள்.
அவளை அவர் தன் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு இயந்திரமாகப் பாவிக்கிறாரா?

ராஜேஸ்வதி 139
நடுச் சாமத்தில் இந்தக் கேள்வி அவசி மண்டையைக் கிளறியது. வாழ்க்கை அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கலியாணம. வீடு, குழந்தைகள் என்று பிரச்சினைகள் கூடிக் கொண்டிருக்கும் போது கோபங்கள் * பங்கள எல்ல, அவளில் கொட்டுப்படும். பெரும்பாலும் Hதைத்துக் கொள் வாள். அவரிலுள்ள ஆத்திரம் சில வேள்ை குக்கரிலும், குழந்தைகளிலும் காட்டப்படும்.
நேரடியாக அவரிடம் தாக்கம் பண்ண 9یک#&u6Tr அவருக்கு. இதுவரை انا[9ق( கொடுக்கவில்லை.
செல்வரத்தினம் தலையணையில் உயர்த்தி வைக்கப்பட் டிருக்கும் தன் உடைந்த காலை மெல்லமாகத் தூக்கி ஒரு சுகமான நிலையில் வைக்கிறார். く*
தலையை ஏதோ குழப்புகிறது. சிந்தனையைச் dré6 Orr நிலையில் சீர் படுத்த முடியவில்லை.
வீட்டோடு இருக்கப் போகும் ஒள்நிண்டு மாதங்களை எட்படிச் செலவழிப்பது என்று யோசித்து நிறையப் புத்தங் களை கட்டிலுக்குப் பக்கத்தில் அடுக்கி வைத்திருக்கிறார்.
அந்த புத்தகங்கள் பல விடயங்களை அவருக்கு விள கப்படுத்தப் போகிறது. அவர் அறியாத எத்தனையோ விடயங்களை சந்தோஷத்துடன் ஏற்கப் போகிறார். சங்கரி குழந்தையைச் சமாதானப்படுத்தி விட்டு வருகிறாள்.
அவர் நித்திரை கொள்ளாமல் அவளுக்குச் draids Ltdits இருக்கிறது.
நீண்ட இரவுகளில் அவர் நித்திரை குழம்பும் போது என்ன தேவைப்படும் என்று அவளுக்கு தெரியும்.
““伊尼(5府””
அவர் குரலின் மென்மை, அவர் பக்கத்தில் வந்து உட் காருகிறாள். அவள் கைகனைப் பிடித்து அன்புடன் தழுவு கிறார் செல்வரத்தினம்.

Page 94
184 நாளைக்கு இன்னொருத்தன்
அவர் பக்கத்திலுள்ள புத்தகங்களைப் படி த் து எத்தனையோ அறிய ஆவலாக இருந்தாலும் இந்த நிமிடத் திலிருந்து அவளிடம் தன்னை முழுக்க அர்ப்பணித்து அவளைப் புரிந்து கொள்ளத் துடிக்கிறார்.
அவர் கண்களில் மின்னலிடும் ஆயிரக்கணக்கான பாவங் களை சங்கரி தன் நித்திரைக் கலக்கத்தில் கண்டு பிடிக்க முடியாது என்பதைக் கூட அவர் யோசிக்க முடியாத
9Alöf gTüb.
அவளை இறுக்கிப் பிடித்து முத்தமிடுகிறார். அவள் தூக்கம் கலைந்து இவரை ஏறிட்டுப் பார்க்கிறாள். மெல்ல மாக அவள் இவரிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கி றாள். இஞ்ச பாருங்கோ கொஞ்ச ந்ாளைக்கு நீங்க பொறுமையாகத்தான் இருக்க வேணும். கால் சரியாகப் பொருந்தாட்டா இன்னும் எத்தனை மாதம் கட்டிலில் இருக்க வேணுமோ தெரியாது. உங்களுக்கு மூணு மாதத் துக்கு மேல் சம்பளத்தோட லீவு கிடைக்காது."
சங்கரி என்ன சொல்கிறாள்?
செல்வரத்தினம் தன்னிடமிருந்து பிரிந்து போகும் மனைவியை வெறித்துப் பார்க்கிறார்.
நீ என்னவள், இதுவரை உன்னை என் தேவைகளுக்கு மட்டும் தான் பாவித்தேன். இப்போது தான் உன்னை என் வாழ்க்கையின் பாதியாக ஒரு சினேகியாக ஒரு ஆலோசகி யாக ஒரு பெண்ணாக நடத்தப் போகிறேன், என்று அவர் சொல்லத் துடிப்பதை, அவள் விளங்கிக்கொள்ள மாட்டாளா?
சங்கரி தூரத்திற் போய் படுத்துக் கொள்கிறாள். பக்கத் தில் படுத்திருந்த போது பாவிக்கப்பட்ட போது அவளைப் புரிந்து கொள்ளாதவர்; தன் உறவை அவள் நிலையில் வைத்துப் புரிந்து கொள்ளாதவர்; தூரத்தில் அவள் படுத் திருக்கும் போது புரிந்து கொள்ள, புரிய வைக்க துடிக்கிறார்டி

ராஜேஸ்வரி 185
ஏழு வருட காலம் ஒவ்வொரு வினாடியும் அவர் அவளி டிடம் வார்த்தைகளால் சொல்லாமல் வளர்த்து விட்ட ஞானம் இன்று அவரைச் சூனியமாகப் பார்க்கிறது.
இன்று அவருக்கு அவள் ‘என்னவள்" என்று உண்மை யாக நேர்மையாக வந்த உணர்வை அவள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரிடமிருந்து தன் உண்மைச் சொரூ பத்தை மறைத்து வைத்த ஆண்மையை அவர் சபிக்கிறார். இப்போது அவர் கால் எலும்பு மட்டுமல்ல நினைவுச் சிந்தனையும் வலிக்கிறது.
1992
நா-12

Page 95
17. "என் வீடும் தாய் மண்ணும்
லெட்சுமியம்மள் படலையடியில் நின்று தன் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். பெருமூச்சு காற்றுடன் கலக்க அவள் கண்களில் நீர் நிறைந்தது. "இது என் வீடு, நான் பிறந்த வீடு, நான் வளர்ந்த வீடு, நினைவோடும் உணர்வோடும் நான் வாழ்ந்த வீடு, இந்த வீட்டை விட்டு எப்படிப் போவேன்’ இப்படி எத்தனையோ தரம் எத்தனையோ பேரிடம் அவள் கேட்டிருக்கிறாள்.
Y இப்போது அவளுக்கு எழுபது வயதாகிறது. 'எந்தையும் தாயும் சேர்ந்து மகிழ்ந்து இருந்தது இந்த மண்ணிற் தானே? அவள் சோகத்துடன் நினைக்கிறாள்.
மூலையில் நிற்கும் மாமரமும், வேலியோடு நிமிர்ந்து நிற்கும் வேப்ப மரமும் அவளோடு சேர்ந்து * 6ir I ibbsosu. ஏக்கத்துடன் இவளைப் பார்க்கும் நாயும், குழம்பிப் போய் நிற்கும் கறுத்தப் பூனையும் இவளால் வளர்க்கப்பட்டவை இன்று அந்த மரங்கள் அந்த வீட்டோடு இருக்க, அவள் வளர்த்த நாயும் பூனையும் அவளைப் பரிதாபத்துடன் பார்க்க, குஞ்சுகளுடன் இரை தேடிக்கொண்டிருந்த வெள்ளைக் கோழி சத்தமிட அவள் படலையடியில் நின்றாள்.
அம்மா கெதியாக வாங்கோ” மகள் ராதிகா தாயை அவசரப்படுத்தினாள். இவர்களைக் கடந்து எத்தனையோ பேர் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
பக்கத்து வீட்டார், அயல் ரோட்டுக்காரர், சொந்தக் காரர்கள், சாதித் தடிப்புள்ளவர்கள், தாழ்த்தப்பட்டு இழிவாக நடத்தப்பட்டவர்கள், பண மமதை பிடித்தவர்கள், காரை

ராஜேஸ்மரி 187
விட்டு இறங்காதவர்கள், கல் வீட்டில் வாழ்ந்தவர்கள், கடல் கடந்து படித்தவர்கள் இப்படி எத்தனை தமிழர்கள் விரை கிறார்கள்?
லெட்சுமியம்மாளின் கால்கள் நகர மறுக்கின்றன. இந்த வீட்டை விட்டு வெளியேற அவள் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தன. ஆனால் இந்த மண்ணை விட்டுப் பிரிய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வென்று விடுவாள்.
பதினேழு வயதில் திருமணமானபோது இரவில் தனிமையில் இவள் கணவன் கொழும்புக்குப் போய்த்”தனிக் குடித்தனம் செய்வதைப் பற்றிக் காதில் இரகசியம் சொல் வான். அவனின் ஆதங்கம் புரியும். இவளுடன் தனியாக வாழத் துடிக்கும் அவனின் ஆசையும் புரியும். ஆனாலும் என்றுமே அதிகம் கதைத்துப் பழகாத பிடிக்காத லெட்சுமி பொங்கி வரும் கண்ணிரை அடக்கிக்கொண்டு கணவனின் தோளில் சாய்ந்து மெளனம் சாதிப்பாள். மணலில் புதைத்த கால்களா அல்லது மனதில் வளர்ந்த பிடிப்பா இந்த மண் னின் பலம்? இவள் கொழும்புக்கு வர )6 این آلالا بالا T6 in gp[[ சொல்வது சிங்களம், இங்கிலிஸ் என்று கதைக்க முடியாத தால்தான் என்று இவள் கணவன் மாதவன் நினைத்தான்.
இளம் மனைவியை யாழ்ப்பாணத்தில் விட்டு பிரம்மர் சாரியாக" கொழும்பில் தனியாக வாழ அவன் விரும்பு வில்லை,
"கொஞ்ச நாட்களில் சிங்களமும், இங்கிலிசும் கதைக் கப் பழகிவிடுவாய், அவனின் உற்சாக மொழிகள் அவளை ஊக்கப்படுத்தவில்லை. ‘அம்மாவை என்னவென்று தனி யாக யாழ்ப்பாணத்தில் இருக்கவிட்டு நான் கொழும்புக்கு வர முடியும்?' லெட்சுமி முணுமுணுத்தாள். அவன் 4ே வெறுப்பாக கொழும்பில் வாழ்ந்தான். மாதத்தில் ஒரு தரம் யாழ்தேவியில் வந்து போனான். தன் பிடிவாதம் கணவனை வேதனைப்படுத்துவதை லட்சுமியுணர்ந்தும் அவளின் மண்ணைவிட்டுப் பிரிய அவளால் முடியவில்லை.
. அவளுக்குக் குழந்தைகள் இரண்டு பிறந்ததும் அவன் மனைவி யாழ்ப்பாணத்தில்இருப்பதுதான் நல்ல்து என முடிவு கட்டிவிட்டான். கொழும்பில் ஒரு சின்ன "அனெக்ஸில் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் அவன் கூட்டிக் கொண்டு போகத் தயாரில்லிை.

Page 96
1H8 நாளைக்கு இன்னொருத்தின்
குழந்தைகள் வளர்ந்த பின் அவள் கணவனிடம் மனம் விட்டுச் சொன்னாள். னேக்கென்னவோ என்ர வீட்டைப் பிரிய மனமில்ல. நான் தவழ்ந்த மண்ணிலய வறுமையை L|th வாழ்க்கையையும் ஏற்கப் பழகிக்கொண்டன்" அவள் கடைபிடிக்கவில்லை. அடிக்கடி அவளைப் பிரிவதாலோ என்னவோ அவன் யாழ்ப்பானம் வந்தால் அவனுடன் வசந்தமும் சேர்ந்து வரும்.
பின்னேரத்தில் மாமா நிழலில் அவன் அமர்ந்திருக்க அவள் புழுக்கொடியல் உடைத்துக் கொடுப்பாள். குழந்தை விட்டு மூலையில் வளர்ந்து நிமிர்ந்து நின்ற மாமரத்தில் உள்ளுசல் போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
■
பரீட்டைச் சுற்றி அவள் தக்காளியும், மிளகாயும் EL TE வைத்திருப்பாள். அவள் கைகள் அள்ளிக் கொடுப் பவை. அடுத்த வீட்டார் பட்டினி கிடந்தால் இவளால் தாங்க முடியாது. கணவனின் உழைப்பில்மிச்சம் பிடித்து இரண்டு குழந்தைகளையும் நன்றாகப் படிப்பித்தாள். அயல் அட்டைகளில் இவள் ஒரு தங்கமான லட்சுமியானாள்.
贰
இன்று எழுபதாகப்போன வயதில் இந்தத் தங்கமான "தாய் ஃண்ணைத் துறந்துபோகத்தயங்கிாள். இந்தி வீட்டில்தான் பிற்ந்தாள். இந்த வீடு கல்வீடாக ாறியதே இவளின் அதிர்ஷ்டந்தான் என்று இவளின் தகப்பன் சொல்லியிருக்கிறார்.
நான்கு தமயன்களுக்குத் தங்கையாகப் பிறந்த அதிர்ஷ்ட ால், தாய் தகப்பனின் அருமை மகள் இன்று காது சரி யாகக் கேட்காது, காலம் செய்த வினை, கண்கள் சரியாகத் தெரியாது. வயது செய்யும் மாற்றமிது. கால்கள் சரியாக நடக்காது பெல்வீனத்தின் அறிகுறி. ஆனால் எதிரிச் சிங்களTராணுவத்தின் "ஷெல்" தாக்குதல்களால் ஆடாத உடம்பும் ஆடும் ஓடாத காலும், ஓடும். கலிகாலத்தின் Lசி அழிவின் சின்னங்கள் இன்று இலங்கைச் சிங்கள ராணுவத்தின் பெயரில் உலாவுகிறதா?
இன்று அந்த எதிரிகளின் படை இவளின் தாய் மண்ணை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவள் எழுபது வருடம் வாழ்ந்த மண்ணை எதிரியின் இரத்த வெறிக்குப் பயம் வைத்துவிட்டு ஓட வேண்டியிருக்கிறது.

ராஜேஸ்வரி 189
மாதவன் உயிருடனிருந்தால் இவளின் பிடிவாதத் துக்கு விட்டுக் கொடுத்திருப்பானா? நான் என்ர வீட்டை விட்டுப் போகமாட்டேன் என்ற இவளின் பிடிவாதத்தைச் செவிசாய்த்துக் கேட்டிருப்பானா?
"உயிர் ஒரு தாம்தானே போகும், ஏன் கோழை மாதிரி ஓட வேணும்" இந்தியன் ஆர்மிக்காரன் ஊழித் தாண்டவ மாடி தமிழர் இரத்தத்தை நதியாக்கியபோதும் இவள் தன் வீட்டை விட்டு நகர மறுத்துவிட்டாள்.
தலைப்பா கையணிந்த சீக்கிய இந்திய ராணுவத்தினன் இவளை இழுத்தெறிந்தான். கால் உடைந்துவிட்டது. கணவன் மாதவனுக்குத் தலையில்பட்ட அடி இரண்டு மாதம் படுக்கையில் கிடத்தியது.
இந்தத் தமிழ்க கிழவியின் திமிர் இந்திய ராணுவத் தினரைப் பொங்கியெழப் பண்ணியது. கிழவி நகரவில்லை. மகளும் மருமகனும் தங்கள் குழந்தைகளுடன் மன்றாடி னார்கள் கிழவி மறுத்துவிட்டாள். இந்தியன் இவள் மண்ணை விட்டு ஓடினான். இவள் நகரவில்லை.
மகன் வெளிநாட்டில் இருந்தவன் இந்திய ஊழித் தாண்ட எம் முடிந்து அவர்கள் வெளியேறியபோது மகன் வெளிநாட்டிலிருந்து வந்து தாயைத் தன்னுடன் வரச் சொல்விக் கேட்டான்
கணவனையிழந்து, கண்ணrர் வடித்துக் கொண்டிருந்த போது, 'அபு மா' என்று சொல்லிக்கொண்டு வந்த மகனை அவள் அட்ைபாளமே கண்டுகொள்ளவில்கரல.
பத்தொன்பது வயதில் இளம் மீசையுடன் லண்டனுக்குப் போன ஒல்லியான அவளின் அன்பு மகன் சீதா ராமன் பதினைந்து வருடங்களின் பின் முப்பத்து நான்கு வயதில் முன் வழுக்கீசியுடன், சிரட்டை நாடியுட ம்புடன் இவள் முன் எந்தபோது அவளை அடையாளமே கண்டு கொள்ள விள்லை.
"நீ என் மசனில்லை" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவன் இவளைப் பிரிந்தபோது ஒரேயொரு மகனைப் பிரிந்த துயரில் அவள் இரவிரவாக அழுவாள்.
'அவன் படிக்கத்தானே போயிருக்கிறான். படிப்புமுடிந் ததும் வருவான்தானே' கணவனின் தேறுதல்கள் அளின் காதில் ஏறவில்லை,

Page 97
90 நாளைக்கு இன்னொருத்தன்
சான் மகன் சீதாராமன் ஒரு வைதேகியைக் கல்யானம்
செய்யவேணும்"அவள் பிரார்த்திப்பாள். நீண்ட காலத்தின் போது அவன் ஊர் வந்தபோது அவளால் அவனை அடை யாளம் காண முடியவில்லை. லண்டனில் உள்ள சொந்தக் காரர் அவனுக்கும்.கல்யாணம் பேசிச் செய்தபோது அவள் ஆனந்தக் கண்ணிர் வடித்தாள். இலங்கையில் அப்போது இயக்க ரீதியாகத் தமிழ் இளம் சமுதாயம் மனித வேட்டை பாடியப்ோது தன் மகன் எங்கேயாவது நன்றாக இருந்தாற் பேர்தும் என்று பிரார்த்தித்துக் கொண்டாள். மகனின் கல்யாணம் ல்ண்டனில் தாய் தகப்பனில்லாமல் நடத் தேறியது. தனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மகன் சொன்ன போது அவள் அந்நிலையில் பார்ப்பது போல் தன் மகனைப் பார்த்தாள்.
பதினைந்து வருடங்களில் பாசம் மறக்கவில்லை" ஆனால் பழக்கம் மறந்துவிட்டது. மகன் முகம் பார்க்க மல் வாழ்ந்தவள் அவன் முன்வந்து நின்றதும் நினைவு வாாமற் தடுமாறினாள் இவனை ஏறிட்டுப் பார்த்தாள்.'நீ என் மகன் என்று நான் என்னவென்று நம்புவேன்' அவள் புலம் பினாள். எதிரியடித்த ஸெல்லால் அவள் உணர்வுகளே தடுமாறிப் போயிருந்தன.
சொந்தக்காரப் பையன்கள் ஒா: வேண்டிபவர்கள காலனின் கையில் பணயமானார்கள் பெற்ற மகன் தாயுடன் வாழாததால் அந்நியமாய்த் தெரிந்தான். அவள் ஆத்மா அவள் தவழ்ந்த மண்ணுடன் நிலைத்துக் கிடந்தது.
உறவுகள் பிரிந்தன, உற்றார்கள் அயல்நாடுகள் போனார்கள். அவள் அந்த வீட்டைச் சுற்றிச் ਸੁ வநதாள.
கல்யாணமாகிக் கொழும்பில் வாழ்ந்த மகள் எத்த னையோ தரம் கெஞ்சியும் அவள் அசையளில்லை இன்று மகள் வந்திருக்கிறாள். காபிய எப்படியாவது "காப்பாற்ற அவள் மகள் வந்திருக்கிறாள்.
எதிரில் படை முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. உயிரைப் பிடுத்துக்கொண்டு மனிதக் " ட்டம் தங்களால் முடிந்தவற்றைத் தூக்கிக்கொண்டு ரோகி 1ார்கள் . ஆண்ட' தமிழினம் இன்று அகதியாய் நகர்கிறது! காலம் செய்த கோலமிது.

ராஜேஸ்வரி 191
இவள் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. *
"என்னைச் சும்மா விடுங்கோ, என்ர மண்ணில "என்னைச் ச7 கவிடுங்கோ" அவள் கெஞ்சினாள்.
மகள் செய்வதறியாது திகைத்தாள். எல்லாரையும் ஊரைவிட்டு வெளிய்ேறுமாறு உத்தரவு வந்திருக்கிறது.
'இந்திய ஆர்மி வந்தபோதே நான் அசையவில்லை, என் சிங்கள ஆர்மிக்குப் பயப்பிட வேணும்" "கிழவி முணு (Pலுத்தாள்.
உத்தரவு போட்டவர்கள் இவளின் முணுமுணுப்பைச் of L-STFL- செய்யவில்லை. "எல்லாரும் в ц 50тІр штаб வெளியேற வேண்டும்" என்ற உத்தர்வு அமுல் நடத்தப் 'LL Lig.
'அம்மா கெதியாக நடவுங்கோ' மகள் அவசரப்படுத்து கிறாள். மகளுக்கு ஐம்ப்து வயதாகிறது. க்ையில் இரண்டு பேரப் பிள்ளைகள், சாமான் களுடன் கண் சரியாகத் தெரியாத தாயையும் தாங்கிக் கொண்டாள்
'என்னை விட்டிட்டுப் பேரங்கோ' கிழவி ஒரு கொஞ்சத் தூரம் நடந்ததும் மூச்சு வாங்கியது.
'அம்மா எப்படியும் நாங்க எங்கட ஊரைவிட்டுப் போக வேணும் மகள் குரல் தளுதளுக்கச் சொன்னாள்.
"வெளியிலயும் போய்ச் சாகத்தானே போறேன். என்ர மண்ணில என்னைச் சாகவிடன்" மகளிடம் தாய் கெஞ்சி ട്ടrrr,
"கொழும்பில அப்படி என்ன சுகம், ஒரு சின்ன அறையில ஒரு சிறைச் சீவியம். நான் வரமாட்டேன்" மாதவனிடம் பிடிவாதம் பிடித்த லட்சுமி இன்று மகளிடம் மன்றாடினாள்.
'அம்மா ஊரோட ஒத்துப் போகவேணும்' மகள் உறுத்திச் சொன் னாள்.
நான் உயிர் தப்பி ஓடிப்போய் என்னத்தைக் காணப் போறேன்? என்ர மண்ணில சாகவிடு" கிழவி திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் கூட்டம் அவசரப்பட்டு விரைந்து கொண்டிருந்தது- காருள்

Page 98
192 நாளைக்கு இன்னொருத்தன்
ளோர் ஓரிருவர், சைக்கிள் உள்ளோர் ஒரு சிலர், கால்நடை யாகப்போவோர் ஆயிரம் ஆயிரம்.
தென்றல் தாங்கிய யாழ்ப்பாணம் திகைத்து நிற்க மனித மூச்சு மேகத்தைத் தொட்டது. | ITA வானத்தை முட்டிய பனை வடலிகள் பேய்கள் எனச் சாய்ந்தாட மனிதப்படை ஊர்ந்து கொண்டிருந்தது
கோயில் மணியோசை பரந்த யாழ் தெருக்கடி மனித விசும்பலில் நனைந்தன.
வீணையொலி கேட்ட மனைகள் வீறிட்டெழும் அழுகை பில் வெடித்தன.
தர்மம் தளைத்த நிலம், தாய்மை மலர்ந்த பூமி, வெண்மை பொலிந்த் தெரு, "அகதிகளால் நிரம்பி வழிந் தன.
இந்த அகதிக் கூட்டத்துக்கு "அடையாளம்' ஒன்று மில்ல்ை, இவர்களின் சாதி என்ன? குடும்ப கெளரவம்என்ன, பரம்பரைப் பெருமையென்ன
அன்று கொடிகண்ட தமிழ் இனம் இன்று இடமிழந்து அகதிகளாய் ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.
லட்சுமிக் கிழவி, மாதவனின் அருமை மனைவி, ஒரு காலத்தில் வைத்தி மாஸ்டரின் மகள் என்று பெருமையாய் வாழ்ந்த லட்சுமி இன்று அனாதையாய்" "அகதியாய் எதிர் கால்ம்'என்னவென்று தெரியாதவளாய் நடந்துகொண்டிருக் தாள்.
இவள் அருகில் ஒரு இளம்பெண். ஐம்பூது வருடங் களுக்குமுன் ட்சுமி எப்ப்டிக் கட்டாக" இருந்தானோ அப்படி ஒரு அழகு, அந்த ஆழகு_ஆலையிற் புத்
மைன் வேதனையில் முச்செடுக்க நடந்து கொண்டிருந் தாள்.
கிழவி தன்னைச் சுற்றிப் பார்த்தாள், கண்கள் சரியாகத் தெரியாது. கடந்த நான்கு மனித் தியாலமாக நடக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஏதோ சாப்பிடுவம் என்று சொந்தக்காரப் பையன் சொன்னான்.
கையில் எடுத்து வந்த சாப்பாடு எத்தினை மணித் தியாலத்துக்கு, எத்தனை நாட்களுக்குப் போதும்?

ராஜேஸ்வரி 193
அவர்கள் உட்கார்ந்தார்கள். மனித வெள்ளம் அனை கடந்து போய்க் கொண்டிருந்தது. மெளன ஊர்வலம், மனம்விட்டுச் சொல்ல முடியாத துயர் சுமந்த மனித உரு வங்கள் வெற்றுடம்பாய் நிலத்தைக் கடந்து கொண்டிருந் $&]] -
"எங்கே போகிறோம்' கிழவி முணுமுணுத்தாள். மறு மொழி சொல்வார் இல்லை.
வானம் கறுத்தது. முகில்கள் எப்போது மடை திறக்கப் போகிறதோ என்பதுபோல் வானம் அழுதது. மனித துயருக்குத் துனை சேரும், இயற்கையின் விளையாட்டது.
அன்றிரவு எங்கோ தங்கினார்கள்? கிழவிக்குத் தான் எங்கேயிருக்கிறேன் என்றே தெரியவில்லை.
மாதவன் ஒரு காலத்தில் தன்னுடன் கொழும்புக்கு வரச்சொல்லி ஆசையாகக் கேட்டபோதுதான் மறுத்ததற்குத் தான் கடபிள் இப்படிந் தனடனை தருகிறாரா?
கிழவியின் கண்களில் நீர் பெருகியது வீட்டில் நாயும் பூனையும் என்ன செய்யும்? யார் அந்த வாயில்லாப் பிராணிகளுக்குச் சாப்பாடு போடுவார்கள்? அவள் நினைத்துக் கொண்டாள். அகதியான அவள் முன்னால் அவளின் இரு பேரப் பிள்ளைகளும் பசிபுடன் துவண்டு கிடந்தார்கள்.
"அம்மா சாப்பிடுங்கோ" வெளியில் இடியும் மழையும். மகள் தங்கள் ஒதுங்கியிருந்த வீட்டில் வைத்துத் தான் கொண்டுவந்த சாப்பாட்டுப் பாத்திரத்தைத் திறந்த ஸ். பேரப் பிள்ளைகள் பசியில் சாப்பாட்டை ஆசையுடன் பார்த் தன. இந்தச் சாப்பாடு முடிந்தால் என்ன கதி? நான் ஒருத்தி இல்லாவிட்டால் என் சாப்பாடு இந்தக் குழந்ாத களுக்குப் போகும். வீட்டைச் சுற்றி வெண்டியும், தக்கானி யும் மரவள்ளிக் கிழங்கும் ஏராளமர்கக் கிடக்கின்ற்ன. கோழி போட்ட முட்டைகள் இருக்கின்றன.
கிழவி ஒரு துண்டு பாணை ஆசையோடு பார்க்கும் தன் பேரக் குழந்தைகளைப் பார்த்தாள். இந்த அவல நிலையைக் காணவா இத்தனை தூரம் வந்து முடித்தாள்? மங்கிய கண்களில் நீர் நிறைந்தன.

Page 99
1.94 நாளைக்கு இன்னொருத்தன்
"எனக்குப் பசிக்கவில்லை" கிழவி பிடிவாதத்துடன்
படுத்து விட்டாள் சரியான குளிர் கோண்டு வந்த
போர்வையில் ஐந்து பேர் நடுங்கிறார்கள். பேரப்பையன் காய்ச்சலில் நடுங்கிறான்.
இரவு நீண்டுகொண்டிருந்தது. விசும்பல்கள், விக்கல்
கள் பெருமூச்சுகள் பிதற்றல்கள் ஆவியைச் சுற்றிப் படர்ந்
தன. இயல் இசை நாடகம் படைத்த தமிழ் ஒலிகளா இவை?
என்ன கொடுமை என்ன கொடுமை? இத்தனை அனு பவிக்க இலங்கைத் தமிழ் இனம் என்ன பாவம் செய்தது? கிழவி குளிரில் நடுங்கித் தவித்தாள்.
வீடு ஞாபகம் வந்தது. ஏதோ சாப்பிட என்று வீட்டில் ஏதோ இருக்கும், இன்றைய இல்லாமை நாளைய எதிர் காலம் தானே? சொந்த மண்ணில் கிடைத்த உணவு இரவல் மன்னரில் எப்படி கிடைக்கும்? ஒரு இனமே பிச்சைக் காரர்களாகிவிட்ட அவமானம் கிழவியைத் துளைத்தெடுத் தீது,
எழுபது வயது சரித்திரம் ஏழ்மையில் அழுதது, கன் மானத் தமிழ் இத் ம் தாங்காத வேதனையிற் துடித்தது. இரவில் அவளுக்குப் பார்வை சரியாகத் தெரியாது. மணி தர்கள் நிழல்களாகத் தெரிகிறார்கள். தாது சரியாக கேட் காது குரல்கள் ஏதோ அர்த்தமில்லாமல் கேட்கிறது.
மழை, இருட்டு, பசி கிழவியின் தலையிடிக்கத் தொடங்கியது. விண் விண் என்று இடித்தது. ஷெல் விழுந்த வேதனைபோல் இடித்துத் தொலைத்தது. குளிருடன் நடுங் கிய இளம் பேரனை அனைத்துக் கொண்டாள். 'என் தமிழ் மகனே ஏ 1 ப்யா உனக்கிந்தக் கொடுமை" கிழவியின் இரு தயம் சிதறியது.அன்றிரவு கிழவியின் ஆவி பிரிந்தது.
சனங்கள் ஊரத் தொடங்கிறார்கள். கிழவி அசயளில்லை. மகள் கோவெனக் கதறினான். 'சவம்" தனிமைப் படுத்தப் பட்டது ஊர்வலம் தொடர்கிறது என் வீட்டுக்கும் என் மண்ணுக்கும் எத்தனை பேர் திரும்புவார்கள்? அக்காலம் எப்போது வரும்?
199 4.

॥
|
18. சொக்கி லேட் மாமா
சொக்கலேட் மாமா' இறந்து விட்டாராம்
ாைழ வேண்டிய பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது இறக்கப் பண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'சொக்கலேட் மாமா' வயது வந்தவர். இறந்தது ஒன்றும் பெரியவிடயமில்லைதான்.ஆனாலும் அவர் எப்படி இறந்தார் என்று என் சினேகிதி பிலோமினா சோன்ன போது என்னால் பார்வதியை ஞாபகப்படுத்திக் கொள்ளாமலிருக்க
முடியவில்லை.
Fெ க்கலேட் மாமாவின் பெயர் சண்முகநாதன்
ஆனால் பக்கத்து விட்டுக் குழந்தைகளுக்கு எப்போதும் "சொக்கலேட்" மாமா தான்.
எத்தனையோ வருடங்களுக்கு முன் கொழும்பில் நாங்கள் சீவித்த வீட்டுக்கு முன்னிருந்த மகேசன் மாஸ்டர் வீட்டு விருந்தாளிதான் "சொக்கலேட் மாமா.
அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது இந்த மனிசன் ஒசியில் வந்து விருந்து சாப்பிடுது. இந்தச் சின்னப் பிசாசுகள் சொக்கலேட் மாமா எண்டு ஒலம் போடுதுகள்" மகேசன், மாஸ்டரின் மனைவி இப்படித்தான் முணுமுணுப்பாள்.
மாஸ்டர் வீட்டு வேலைக்காரப் பெண் தான் பார்வதி அவள் எப்போது அந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வந் தாள் என்று எனக்கு ஞாபகமில்லை. விடுமுறையில் நாருக் குப் போய்த் திரும்பி வந்தபோது பக்கத்து வீட்டில் பார்வதி

Page 100
195 நாளைக்கு இன்னொருத்தன்
வந்து சேர்ந்திருந்தாள். மாஸ்டரின் மூத்த மகள் காயத்திரியை விட ஓரிரண்டு வயது கூட இருக்கலாம். மலை நாட்டில் வேலை செய்யும் தங்கள் சொந்தக்காரர் ஒருவர் பார்வதியைக் கூட்டிக் கொண்டு வந்துகொடுத்ததாகம்ாஸ்ட ரின் மனைவி சொன்னாள்.
"என்ன அப்பிடிப் பார்கிறியள். ஓம்! அவள் குழந்தைப் பிள்ளைதான். ஆனாலும் இஞ்ச "நான்' என்ன'பெரிய வேலையா_வாங்கி முடிக்கிறன்? ஏதோ கையுதவியாக இருக்கட்டுமே" மாஸ்ட்ரின் மனைவி நான் கேள்வி"கேட்கா மலே மறுமொழி சொன்னாள்.
அவர்கள் வீட்டில் எனக்குத் தெரிந்த பலவருடமாக ஒரு சிங்களக் கிழவி வேலை செய்து கொண்டிருந்தாள். கடும்ை யான சுகமில்லாமல் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்குப் போனவள் திரும்பி வரவில்லை.
அவளது இடம் பார்வதிக்குக் கொடுக்கப்பட்டது. வயது வித்தியாசம் தான், ஆனால் வாழ்க்கையமைப்பில் ஒற்றுமை, இருவரும் ஏழைகள். அவர்கள் கையுதவி மாஸ்டரின் மனை விக்குத் தேவை.
பார்வதி அழகான குறிஞ்சி மலர், பத்துப் பன்னிரண்டு வயதாக இருக்கலாம். அவள் கண்களுக்குள்ளால் இருத பத்தைப் பார்க்கலாம். ஒரு சோக ரிழல் எப்போதாவது இருந்து குழந்தைகளுடன் சிரித்து விளையாடும் போது அவள் முகம் அவளுக்குச் சொந்தமில்லாததாகி விடும்.
.
மாஸ்டர் வீட்டுக் குழந்தைகளுடன் அவளும் வளர்ந் தாள். வித்தியாசம் அவள் வளர்ச்சியைப் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. "சொக்க வேட் மாமா'வைத் தவிர பார்வதியும் வளர்கிறாள். எனது ஞாபக மூட்டல்கள் மாஸ்டர் மனைவிக்கு எரிச்சலையும் தரும்,
மாஸ்டர் மனைவி தன் மகளுக்கு புது டிசைனில் உடுப்பு வாங்கும் போது பார்வதியின் கண்களில் ஏக்கர் தெரிவதை ஏன் மாஸ்டர் மனைவி பொருட்படுத்த வேண்டும் ,
"சொக்கலேட் மாமா' வார விடுமுறையில் அவர்கள் வீட்டுக்கு வருவார். அவர் மனைவியும் இரண்டு பெண்

ராஜேஸ்வரி 17
குழந்தைகளும் ஊரில்மிகச்சிக்கனமான மனிதன்,எப்போதோ ஒருதரம் சொக்கலேட் கொண்டு வந்து குழந்தைகளுக்குக் கொடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் அவருக்கு இன் றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருகிறார்கள்.
மாஸ்டர் மனைவி கொழும்புச் சீவியத்தில் திணறும் போது இந்த மாமா ஒரு சுயநல்வாதி என்று என்னால் நன துக்குள் திட்டாமலிருக்க முடியவில்லை.
பொரியலும் சாப்பாடும் அத்தோடு தலையில் வைச்சுக் குளிக்கதேசிக்காயும் தூக்கிக் கொண்டு போகுது" மாஸ்டர் மனைவியின் முணுமுணுப்புகளுள் ஒன்று
சிக்கனம் தேசிக்காய் கொண்டு போனதுடன் நின்றிருக்க வில்லை என்பதை மாஸ்டர் மனைவியுணர்ந்ததர்கவோ அல்லது உணர முயன்றதாகவோ எனக்குத் தெரியவில்லை. அவர் வேறு எதையோ கொண்டு போக மாட்டாரா? மனைவி பக்கத்திலில்லாதவிரக்திஅவர்கண்களில் தெரிவதைப் புரிய மாஸ்டர் மனைவிக்கு நேரமில்லையா?
பார்வதி வளர்ந்தாள். அவர் பார்வையும் வளர்கிறது. என்று நான் மனைவியுடன் தகராறு பட்டதுதான் மிச்சம்,
அப்படிப் பேசப்பட்ட சில வாரங்களுக்குப் பின் பார்வதி யின் தகபபன் வந்திருந்தான். கிழவன் பாவம், மாஸ்டரின் மன்ைவியின் காவில் விழுந்து கெஞ்சினான்.
பார்வதியைத் தான் வைத்துக் காப்பாற்றமுடியாதாம்! குரங்கு கையில் பூமாலை கொடுக்கும் ஏழைக் கிழவன் அன்று இரவு மாஸ்டர் வீட்டுக் குழந்தைகளுடன் நான் கடற்கரைக்குப் போனேன். கடைசிக் குழந்தையைத் துரக்கிக் கொண்டு பார்வதியும் வந்திருந்தாள்.
வெள்ளவத்தைக் கடற்கரை மணலில் கால் புதைய நாங்கள் எல்லோரும் குழந்தைகள் போல் ஓடி விளையாடி னோம்.
அப்பாவுடன் போயிருக்கலாமே!" பார்வதியிடம் மெல்ல மாகச் சொன்னேன். இளம் நிலா அவள் விழிகளில் சிதை பட்டு என்னிடம் எதிர்பட்டது
அவ்வளவு நேரமும் மலர்ந்திருந்த அவள் முகம்
வாடியது. நான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதா?

Page 101
198 நாளைக்கு இன்னொருத்தன்
"அப்பாவுக்கு உழைப்பு இல்லீங்க" அவள் கண்களின் நீரில் நிலா சிதறியது. *
"கிழவன் பார்வதிக்குயாரோ ஒரு பையனைப் பார்க்கிறா
ராம்' மாஸ்டர் மனைவி சொன்னாள், பார்வதிரின்
முகத்தில் புன்சிரிப்பு எதிர்காலக் கனவு அவள் கண்களி: தெரிந்தது.
கொழும்பில் வெசாக் விழா.திருவிழாக் கோலம் வெசாக் முடிய் கிழவன் பார்வதியைக் கூட்டிக் கொண்டு போவதாக ஏற்பாடு
靛
பார்வதிக்கு மாஸ்டரின் மனைவி புதுச் சேலை சட்டை வாங்கிக் கொடுத்திருந்தாள். கட்டிக் கொண்டு பார்வதி நாணியபோது, மல்லிகை மழையில் நனைந்த குளிர்ச்சி.
குழந்தைகளுடன் நானும் சேர்ந்து வெசாக் பார்க்கும் கும்மாளப் பூரனை நிலா, அலங்கரித்த கொழும்பு வீதிகள். பார்வதி வர முடியாமல் சுருண்டு படுத்திருந்தாள் பார் வதிக்கு சரியான காய்ச்சல்,
"பாவம் இரண்டு நாளாகச் சாப்பிடல் ல"மாஸ்டரின் மனைவி பரிதாபப் பட்டுக் கொண்டாள். பார்வதி எங்களுடன் வரவில்லை.
நாங்கள் எல்லோரும் காலிறோட்டில் பஸ்சுக்கு நிறைய நேரம் காத்திருந்தோம்"
மாஸ்டரின் ஒரு குட்டி "சொக்கலேட் மாமா' என்று கூறியது அந்தக் கூட்டத்தில் என்னால் சொக்கலேட் மாமாவை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை, சொக்கலேட் மாமா' அந்த நேரம் மாஸ்டர் வீட்டுக்குப் CEL TAI TOT Ir?
நாங்கள வீட்டுக்கு வர நடுச்சாமத்துக்கு மேலாகி விட்டது. மாஸ்டர் மனைவி என்னை அவசரமாகக் கூப்பிட் டாள்,"அவள் குரலில் தெரிந்த பரபரப்பு ஏதோ அபாயத்தை யுணர்த்தியது.
ாங் பார்வதி துவண்ட மலர்ச் செண்டாகச் சுருண்டு படுத்
திருந்தாள். எனது இருதயத்தில் ஈட்டி பாய்ந்த பிரமை,

ராஜேஸ்வரி 199
'என்னவோ மாதிரியிருக்கிறாயே' மாஸ்டரின் மனைவி
பதறினாள். பார்வதியின் பார்வை சூனியம்.
என்னசொல்வது? மாஸ்டரின் மனைவிக்குத் தெரிய வில்லையா? மீன் பொரியலைப் பூனை தேடி வ்ந்து சாப்பிட்டு விட்டுப் போய்விட்டது என்பதா? வெளியில் ப்ோதி சத்துவருக்குப் புனித விழா. வீட்டில் பஞ்சமா பாதகனின் கன்னரி எடுப்பு.
ஏழ்மையின் உழைப்புமட்டுமா இவர்களுக்குச் சொந்தம்? பார்வதியின் காய்ச்சல் இனித் தீராது என்று மாஸ்டரின் மனைவி புரிய மாட்டாளா?
கொஞ்ச நாளைக்குப் பின் பர்வதியின் தகப்பன் கிழவன் பார்வதியைக் கூட்டிக் கொண்டு போக வந்தான்.
பார்வதியைப் பார்த்துக் கிழவன் பேயடித்தது மாதிரி யாகிவிட்டான் தன் மகனைப் பார்த்துக் காறித் துப்பினான். ஏதோ அவள் ஆசைப்பட்டு வயிற்றை நிரப்பிய ஆத்திரம் கிழவனுக்கு, "இந்த முண்டத்தைக் கொண்டு போய் நான் என்ன செயவன்' கிழவன் தலையில் மண்ணை 5 Tf யடித்துக் கொண்டான். பார்வதியின் வயிறு ஊதி, கண்களில் சூனியம் மிதந்தது.
கிழவன் போய்விட்டான்.
மாஸ்டரின் மனைவியாரோ ஒரு கிழவனைக் கூட்டிக் கொண்டு வந்தாள் ஒன்றிரண்டு நாட்களாகப் பார்வதியின் முனகல் தாளாத சோகத்துடன் கேட்டது.
இரண்டு முன்று வாரங்களுக்குப் பின் அவளைக் கண்ட போது அவளின் "ஊதிய" வயிற்றைக் காணவில்லை. அவள் அந்த வீட்டு நாயுடன் ஏதோ |L கொண்டிருந்தாள்.
நல்லவனென்று நினைச்சா நீ இப்படி நடந்து கொள்ளலாமா மிருகமே" அவள் நாயை அடித்தாள். துப்பின்ாள். உதைத்தாள். பாவம் நாய் ஓலமிட்டது. அவ இருக்குச் சுகமில்லை" என்று மாஸ்டர் மனைவி சொன் னாள். பார்வதி திட்டிய நாய் றந்து விட்டது. அவள் அந்த நாயைக் கொலை செய்துவிட்டாள் என்று தெரிந்தது. பார்வதிக்கு 'சுகமில்லாமல்" பல மாதங்கள் சிரித்துக் கொண்டு திரிந்தாள். 'சொக்கலேட் மாமாவும் எப்ப்ோதா
ད།

Page 102
200 நாளைக்கு இன்னொருத்தன்
வது இருந்து வந்து போய்க் கொண்டிருந்தார். வழக்கம் போலப் பொரியலும் குழம்பும்" சாப்பிட்டு விட்டுப் போகும் போது தலையில் குல்லாப் போட்டுக் கொண்டுபோனார். பாவங்களைத் தேசிக்காய் கழுவுமா?
ஒருநாள் பார்வதியைக் காணாமற் தேடினார்கள். சில நாட்களின் பின் அவள் உடம்பு கொழும்புக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. கிழவன் வரவில்லை மாஸ்டர் வீட்டுக்கு இன்னுமொரு வேலைக்காரி வந்து சேர்ந்தாள். நாங்கள் பலபேர் லண்டனுக்கு வந்து விட்டோம். மாஸ்டரின் குழந்தைகள் பலர், பக்கத்து விட்டுப் பிலோமினா எல் லோரும் லண்டனுக்கு வந்து விட்டோம்.
சொக்கலேட் மாமா'வும் தன் சொந்தக்காரரின் அழைப்பின் பேரில் லண்டனுக்கு வந்ததாகக் கேள்விப் பட்டோம் மனைவி இறந்து விட்டாளாம்
இரண்டு பெண்கள், ஒரு மகளுக்குக் கல்யாணமான அடுத்த வருடம் விதவையாகி விட்டாள். மற்ற மகள் இன்னும் கல்யாணமாகவில்லை. ஆனால் தகப்பனுக்குப் பிடிக்காத தன் போய்பிரண்டுடன் ஒன்றாக வசிப்பதால் இவர் தான் ஒரு அறையில் இருக்கிறார். மூத்த மகள் டொக்டர் கனடாவுக்குப் போய்விட்டாளாம்.
சொக்கலேட் மாமா இறந்த விதத்தை நினைக்கும் போது எனக்குப் பார்வதி நாய்க்கு (நாயென்று நினைத்துக் கொண்டு யாருக்கோ) போட்ட சாபம் ஞாபகம் வருகிறது.
"நீ ஒரு மனிசனா நாயே, நீ ஒரு மனிசனா, சாப்பாடு போட்ட கையை கடிச்சுப் போட்டியே நீ ஒரு புழு நீ ஒரு ւյԾք.”
பார்வதி நாயைத் தான் பேசினாளா? "சொக்கலேட்" மாமா தனியறையில் வாழ்ந்தவராம். இறந்து எத்தனையோ நாட்களாகி ஒருத்தரும் கண்டு பிடிக்கவில்லையாம். ஏதோ நாற்றம் அடிக்கிறது என்று பக்கத்து வீட்டுக்காரன் போலி சுக்குப் போன் பண்ண அவர்கள் வந்து உடைத்த போது அவர் அழுகிப் புழு நெளிந்து கொண்டிருந்ததாம். பார்வதி யின் நொந்த சாபம் பலித்ததா?
1994.


Page 103


Page 104
பட்டமும் பெற்ற முத6 அதிகாரியாக இலண்ட
சமுக சேவையி இராஜேஸ்வரி தமிழ் - மகளிர் அணி ஆகியவற்
தேம்ஸ் நதிக்க வியாபாரிகள், தில்லை விடுமுறை, பனி பெய்ய ஏற்கெனவே வெளிவ சிறுகதைத் தொகு அறிமுகப்படுத்தும்.
 

த மி பூழி லு ம் ஆங்கிலத் திலும் நாவல், சிறுகதை, கட்டுரைகள் எ மு தி வ ரு ம் இராஜேஸ்வரி இலங்கை கிழக்கு மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த கோளாவில் கிராமத் தைச் சேர்ந்தவர். கடந்த இருபத் தேழு வருடங் σ95 (6ΥΤ Π 35 இலண்டன் மாநகரில் வாழ்பவர். மருத்துவயியலில் எம்.ஏ,
பட்டமும் திரைப்படத்
துறையில் பி.ஏ, சிறப்புப் ல் தமிழ் பெண்மணி, சுகாதார டனில் பணிபுரிகிறார்.
லும் ஆர்வமாக உழைக்கும் அகதிகள் நிறுவனங்கள், தமிழ் றின் தலைவியாகவும் உள்ளார்.
கரையில், உலகமெல்லாம் பாற்றங்கரையில், ஒரு கோடை |ம் இரவுகள் ஆகிய நாவல்கள் வந்து புகழ்பெற்றவை. இச் தி அன்னாரை மேலும்