கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாளைய மனிதர்கள்

Page 1
ང་
ალs
இ
 


Page 2

* * :
ဒွိ ဒွိoဂ္ဂိ ،:.*.*.*= «هغه (psy: A Palestinian boy looks at a statue of a horse, meant as a symbol of freedom, built by a German sculptor from car scrap metal crushed by Israelitanks, in the West Bank city of Jenin on Thursday. issings: THE HINDU

Page 3

நாளைய மனிதர்கள்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
புதுப்புனல்

Page 4
நூல்
ஆசிரியர்
முதற்பதிப்பு
ஒளி அச்சு
அச்சாக்கம்
வெளியீடு
பக்கங்கள்
நாளைய மனிதர்கள் (நாவல்)
ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம் (C)
டிசம்பர் 2003
விக்னேஷ்
மகேந்திரா கிராபிக்ஸ்
பார்டர்தோட்டம், சென்னை-14.
புதுப்புனல் 32/2, ராஜித்தெரு, முதல்மாடி, அயனாவரம், சென்னை-600023.
172-4
ரூ.75

பதிப்புரை
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் குடியேறி பரவியிருக்கும் பல்வேறு இனங்களிடையே அகதிகளாக குடியேறியும் தனது கலாச்சாரத்தின் மேலும், மொழியின் பாலும் பற்று கொண்டிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்.
இவர்கள் தங்கள் வாழ்வையும் பல்வேறு கலாச்சார பிரிவுகளில் ஒப்பிட்டும், தங்களின் குறைபாடுகளை நேர்மையுடன் ஏற்றுக் கொண்டு தங்கள் வளர்ச்சிக்கு தேவைப்படும் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்றைய அவர்களின்வாழ்வின் நிலையை தெளிவான முறையில் படம் பிடித்து காட்டுகிறது, திருமதி.ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின்நாவலானநாளைய மனிதர்கள்.
திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் வாழ்ந்து வருபவர். இவர் தனது பல்வேறு இலக்கிய படைப்புகள் மூலம் உலக தமிழர்களிடையே நன்குஅறிமுகமானவர்.
அமைதியான வாழ்வை நாடி நிற்கும் இந்நாவலுக்கு பொருத்தமாக இதன் அட்டைப்படமாக பாலஸ்தீனிய குதிரை சிலை ஒன்று-போர் சூழலில் சேதமடைந்த கார்களின் தகடுகளை பொருத்தி அமைத்து போரின் பேரழிவை எடுத்துக் காட்டும் நினைவுச்சின்னம் - இடம் பெற்றுள்ளது.
இந் நா வ  ைல வெளி யிட அனு ம தித் த திருமதி.ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய திரு.ஞானி அவர்களுக்கும் மேலும் பிழைத்திருத்தம் செய்த திரு.கெளரி காந்தன் அவர்களுக்கும் புதுப்புனல் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னை-23 புதுப்புனல்

Page 5
அணிந்துரை
கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கத்திய நாகரீகத்தோடு நமக்கு ஏற்பட்ட மோதல் மற்றும் உறவுகள் குறித்து நாம் தொடர்ந்து கவலைப் படவும் சிந்திக்கவும் வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் நாகரீகங்களுக் கிடையிலான உறவின் சாதகம் மற்றும் பாதகமான கூறுகளிலிருந்து நாம் தப்பமுடியாது. நமது மரபு சார்ந்த கலாச்சாரம்தான் மேன்மையானது என்றும் அதை இறுகப்பற்றிக் கொள்வதன் மூலம்தான் நமக்கு வாழ்வு என்று இருப்பதற்கில்லை. மேற்கிலிருந்து வரும் கலாச்சாரம் எல்லா நிலைகளிலும் நம்மை அடிமைப்படுத்தும் என்றும் கீழ்மைப்படுத்தும் என்றும் நமக்குள் அரண் அமைத்துக் கொள்ளவும் முடியாது. வரலாற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை சரியான பார்வையோடு புரிந்துகொள்வதும் முன்னைய மரபுகளி லிருந்து இன்றைக்கும் நம்மை வளர்க்கக் கூடிய கூறுகளை மேம்படுத்திக் கொள்வதும் நமக்குத் தேவையான கடமை. மேற்கை இகழ்ந்துரைத்து நம்மை பெருமைப்படுத்திக் கொள்ளமுடியாது.
திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் எந்த ஒரு படைப்பையும் நாம் வாதிக்க நேரும்பொழுது இப்படி ஒரு சிந்தனைக்குள் நாம் செல்லுகிறோம். தில்லையாற்றங்கரை, தேம்ஸ் நதிக்கரையில் முதலிய நாவல்களையும், அம்மா என்றொரு பெண், அரைகுறை அடிமைகள் முதலிய சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்தவர் திருமதி. ராஜேஸ்வரி 1970 -லேயே இங்கிலாந்தில் குடியேறி மேற்கல்வி கற்று, குழந்தை நல ஆலோசகராக இன்றுவரை பணியாற்றிவருகிறார். தொழிற்கட்சியிலும் அவர் உறுப்பினர் பெண்ணியம் என்ற கருத்தியலில் தாய்மைக்கு அழுத்தம் தருபவர். தான் ஒரு பெண்ணியவாதி என்ற முறையில் உலக அளவில் பெண்களுக்கு

எதிராக மட்டுமல்லாமல் எந்தவகை ஆதிக்கத்திற்கும் எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். நாளைய மனிதர்கள் என்ற இந்த நாவலிலும் ஈராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக் கெதிரான போராட்ட உணர்வை விரிவாக வெளிப்படுத்துகிறார். இங்கிலாந்தில் உள்ள இளைஞர்களுக்கு, அவர்கள் தொழிற் கட்சியை சார்ந்தவர் எனினும் அமெரிக்கப்படையெடுப்போடு ஒத்துச் செயல்படுகிற பிரிட்டிஷ் பிரதமரின் கொள்கை உடன்பாடு இல்லை. அமெரிக்க ஆதிக்கத்தை மட்டுமல்லாமல் வேறு எந்த நாட்டிலும் செயல்படும் வேறு எந்த ஆதிக்கமும் இவர்களுக்கு உடன்பாடு இல்லை.
திருமதி. ராஜேஸ்வரிஅவர்களை குறித்துஒரு உண்மையை அழுத்தமாக இங்கு சொல்லவேண்டும். இலங்கையிலிருந்து இங்கிலாந்தில் குடியேறி 25 ஆண்டுகளுக்குமேலானநிலையிலும் தமிழின் வேர்களை தமக்குள் ஆழமாக தாங்கி இருக்கிறார். இங்கிலாந்தின் சனநாயகப்பண்பை அவர்பெரிதும் போற்றுவதோடு, மாறுபட்ட சமூகத்தில் வளர நேர்ந்துள்ள தமிழ் மக்கள் பற்றி ஆழ்ந்த ஈடுபாட்டோடு அவர் சிந்திக்கிறார். பழமைப் பிடிப்புகளிலிருந்து தமிழ்க்கலாச்சாரம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். கற்பு, பெற்றோர் சொல்லையே வேதமாக ஏற்றல், கல்லானாலும் கணவன் முதலிய தமிழ்ப்பண்பாட்டின் பிற்போக்கான கூறுகளை இனியும் கடைப்பிடிக்க முடியாது. இனம், மொழி என்பனவற்றைக் கடந்தும் மனிதர்களுக்கிடையில் அன்பை போற்ற முடியும். ஆதிக்கங்களை எந்த வடிவத்திலும் ஏற்க முடியாது. தனிமனிதர் சார்ந்த நலன்களை காட்டிலும், சமூக நலத்திலும் மரியாதைக்குரியது. தான் சார்ந்த மக்கள் கூட்டம் அடிமைத்தனத்தில் வாழ்ந்திருக்கும்போது, தன் நலமே போதும் என வாழமுடியாது. இத்தகைய கலாச்சார பண்புகளைக்கடைப்பிடிப்பதன்மூலமே வாழ்வு செழுமை பெறும்.
இத்தகைய பண்பாட்டு கூறுகள் தமிழ்க்கலாச்சாரத்திற்கு அன்னியமாக முடியாது. இத்தகைய சீரீய உணர்வுகளை இந்த நாவலில் இலங்கையிலிருந்து இங்கிலாந்தில் குடியேறிய தமிழர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய நிகழ்வுகள் மூலம் நமக்குள் எழுப்புகிறார் ஆசிரியர். நாவலில் இடம் பெறும் மனிதர்கள் நிகழ்வுகள் குறித்து இங்கு விவரிக்க வேண்டியது இல்லை. இன்னும் ஒன்று மேற்கத்தியர் என்றவுடன் அவர்கள் எல்லோரையும் சில குணங்களில் நம்மவர் வரையறை செய்வதும் நியாயம் இல்லை. மேற்குலகின் சனநாயக வரலாறு அற்புதமான மனிதர் களை தோற்றுவித்துள்ளது. ஆதிக்கத்திற்கெதிராக அங்கு இளைஞர்கள் போராடுகிறார்கள். இளமையில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் வளர்ந்த சூழலில் அன்புக்காக அவர்கள் ஏங்குகிறார்கள். திருமணம் செய்து கொள்ளாமலும் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியும் என்பதை மெய்பிக்கிறார்கள். பாலியல் உறவில் வக்கிரங்கள் என்று நம்மவர்கிருக்கும் சில போக்குகள் அவர்களிடம் இருந்த போதிலும்

Page 6
அவர்கள் ஆரோக்கியமான மனிதர்களாக இருக்கிறார்கள். நேசத்திற்காக அவர்கள் எதையும் விட்டுக்கொடுக்க விரும்புகிறார்கள். காதலையும் நேசத்தையும் அவர்களால் பாகுபடுத்தி பார்க்க முடிகிறது. தம்மை கைவிட்டு தம் இளமைக்காலத்தில் பிரிந்து சென்ற பெற்றோரை, உறவுகளைத் தேடிச் சென்று அலைந்து திரிந்து கண்டறிவதில் நிறைவு கொள்கிறார்கள். இங்கிலாந்துச் சூழலில் வாழும் அற்புதமான மனிதர்களை இந்த நாவலில் நாம் காண்கிறோம். ஜேன் என்றும் , டேவிட் என்றும், மெலினி என்றும், ஜார்ஜ் என்றும் கரலைன் என்றும் பெயர்களில் இத்தகைய மனிதர்களை இந்த நாவலில் நாம் காண்கிறோம். இவர்கள் வழியே மனிதம் சார்ந்த கலாச்சாரம் என்றால் என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
1983 இனக்கலவரங்களுக்கு பிறகு மேற்கத்திய உலகில் குடியேற வேண்டிய நிற்பந்தம் ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு சோக வரலாறு என்பதில் ஐயமில்லை. இந்த வரலாற்றின் காயங்கள் அவர்கள் நெஞ்சிலிருந்து என்றும் மறைவதற்கில்லை. புதிய சமூகக் கலாச்சாரச் சூழலில் வாழ நேர்ந்த நிலையில் இவர்களுக்குள் கலாச்சார நெருக்கடிகள் தீவிரப்படத்தான் செய்யும். மூத்த தலைமுறைக்கும், இளைய தலை முறைக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகரிக்கவும் செய்யும். தமிழ்க் கலாச்சாரத்தை மதிக்கின்ற குடும்பச் சூழலில் வாழ்கிற இளைய தலைமுறை யினருக்கு நெருக்கடிகள் இன்னும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளையும் வெட்டிக் கொள்ள இயலாது. எதிர்காலத்தில் தனக்குரிய நாடு கலாச்சாரம் எது என்னும் சிக்கல்கள் எழும். டாக்டர் ராமநாதனைப்போன்றோர் தாய்நாடு திரும்புவதற்கில்லை. தாயகத்தின் இனப்போரில் தன் குடும்பத்தில் பலரை இழக்க நேர்ந்த நிலையால் தன் தாயகத்திற்கு திரும்பாமல் இருக்கமுடியாது. இரண்டு கலாச்சாரங்களுக்கிடை யிலான மோதலில் சித்ரா கொஞ்ச காலம் சிக்கி தவிக்கிறாள். சுமதிக்கு எந்த வகையிலும் இனி விடுதலை இல்லை.
நாவல் என்பது ஒரு நவீன காலக் கலை. நவீனகால வாழ்வின் நெருக்கடிகளைச் சித்தரிக்கும் முறையில் நாவல் என்ற படைப்புதன்னை மேம்படுத்திக் கொள்கிறது. புறச்சூழல் பற்றிய விவரிப்புகளை காட்டிலும், நெருக்கடி மக்கள் சூழலுக்கு எதிர்வினை தரும்முறையில் மனிதர் தமக்குள் நடத்துகிற மனப்போராட்டங்கள் நாவல் என்ற கலைக்கு வளம் சேர்க்கிறது. தமிழன் தன் தாயத்தை விட்டு வெளியேறி உலக அளவிலான வாழ்வை எதிர்கொள்ள வேண்டியவனாகிறான்.
இதை எதிர் கொள்ளும் முறையில் தன்னை விரித்துக்கொள்ள வேண்டும். புதுப்பித்துக்கொள்ளவேண்டும். தமிழ் நாவல் என்னும் கலைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு நேர்ந்திருக்கிறது. நாவல் என்பது ஒரு கலை மட்டுமல்ல, கல்வியாகவும் செயல்படுகிறது. மனிதர்களைக் குறித்த

ஆய்வாகவும் நாவல் அமைகிறது. இவ்வகையிலும் இந்த நாவலை நாம் விரிவாக்கமுடியும்.
மேலும், ஒன்று - நாவலின் தலைப்பு ஆகிய நாளைய மனிதர்கள் என்பதை மனத்திலிருத்தி இந்த நாவல் குறித்து ஒரு மறுபார்வை செலுத்துவதும் தேவையாகிறது. நாளைய மனிதர்கள் என்ற பெயருக்கு தகுதி உடையவர்கள் இந்த நாவலில் யார்? என்று கேட்டுக் கொள்கிறோம். ரவியை நாளைய மனிதன் என்று ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். ரவிமட்டுமா நாளைய மனிதன்? நமக்குள் தீவிர உணர்வோடு தேடுகிறோம். மெலினி, ஜேன், டேவிட், ஜார்ஜ், கரலைன் இவர்கள் நாளைய மனிதர்கள் என்பதில் ஐயமில்லை. இவர்கள் ஆங்கிலேயர்கள். நாவலில் இடம்பெறும் தமிழர்களில் ரவியைத் தவிர இன்னும் யார் நாளைய மனிதர் என்ற தகுதிக்கு உரியவர்? சுமதியும் அவர் கணவன் செந்திலும் நேற்றைய மனிதர்கள். அவர்களால் நிகழ்காலத்திற்குள் கூட வரமுடியவில்லை. ஜோர்ஜ்ஜோடு திருமணம் முடிந்த நிலையில் சித்ரா தனக்குள் இருந்த நெருக்கடிநிலையிலிருந்து விடுபட்டு நாளைய மனிதர் ஆகலாம். டாக்டர் ராமநாதன் தனபால் பற்றி எதிரிடையாக சொல்வதற்கு இல்லை. இவர்களைப் போலத்தான் திலகவதியும், நாளைய உலகத்திற்கு நம்மையும் தகுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இந்த நாவலை நாம் வாசிக்கமுடியும். நாராயணன் என்ற ஒரு இந்தியத் தமிழனையும் நாவலில் சந்திக்கிறோம். எதிர்காலத்தில் இவனுக்கு நிச்சயம் இடமில்லை.
- ஞானி
123, காளீசுவரர் நகர், கோயமுத்தூர் - 641 009.

Page 7
நாளைய மனிதர்கள்

ஆடி மாதம் 2002
கார் ஓடிக்கொண்டிருக்கிறது.
மெலனிசாம்ஸன்கார் ஒட்டிக்கொண்டிருக்கிறாள். கார்ரேடியோவி லிருந்து பிரபல பாடகனாக ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த ஜோன் லெனனின் 'இமாஜின்’ என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது.
லண்டனில் வசந்தகாலம். மேகங்கள் மந்தைக் கூட்டங்கள் மாதிரி வானில் விரைகின்றன.இளம் வெயில் இதமாக இருக்கிறது. சனிக்கிழமை என்றபடியால் கடைகண்ணிகளுக்குப்போவோரின்கார்கள்தெருக்களை நிறைந்திருக்க காருக்குள் ஜோன் லெனனின் 'இமாஜின்’ பாட்டு ரவியின் காதையும் கருத்தையும் நிறைத்திருந்தது. இமாஜின்” - 'கற்பனை செய்' என்று அந்தக் கலைஞன் பாடுகிறான்.
உலகத்தில் அமைதியையும், அன்பையும், நட்பையும், வறுமை யற்ற வாழ்வையும் கற்பனை செய்தவனின் பாடல் அது. அந்தப் பாடல் எழுதிக் கொஞ்ச நாட்களில் ஜோன் லெனன் அமெரிக்காவில் வைத்துக் கொல்லப்பட்டான். அவன் பாடலை அமெரிக்க உளவுவாதிகள் விரும்ப வில்லை என்பது வதந்தி. “ஜோன் லெனனை உனக்குப்பிடிக்கும்போல் இருக்கிறது” கார் ஒட்டிக்கொண்டிருந்த மெலனி, ரவி தன் விரல்களால் பாட்டுக்கு ஏற்பத்தாளம் போடுவதைப் பார்த்துவிட்டுக் கேட்டாள். இசை ஒரு தெய்வீகக் கலை. எந்த மனிதரையும் உருக்கிவிடுகிறது என்பது அவள் அபிப்பிராயம். “ஜோன் லெனன் மட்டுமல்ல யாரும், எந்தப் பாடகனும், எந்தக் கவிஞனும் வறுமையற்ற வாழ்வு பற்றி, நோயற்ற மனிதர் பற்றி, பகைமையற்ற உறவுகள்பற்றி, காதல் நிறைந்த மனிதர் பற்றிப் பாடினால் பிடிக்கும், அப்படியான உலகத்தைக் கற்பனை செய்பவர்களில் நானும் ஒருத்தன்' ரவி மெலனியைப் பார்த்துச் சொன்னான். அந்தப் பாட்டு அவன் சிந்தனையை எங்கோதிருப்பியது. ரவிக்கு இன்றைக்கு இந்தப் பிரயாணம் செய்வதை நம்ப முடியாம லிருக்கிறது. அதைப்பற்றி அவளிடமே சொல்ல வேண்டும் போலிருந் தது. மனம் விட்டு எதையும் பேசுமளவுக்கு அவன் நெருக்கத்தை

Page 8
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 10
யுண்டாக்கவில்லை, மெலனி அவனுடைய மேலதிகாரி. அவன் இலங்கையிலிருந்து மேற்படிப்பிற்காக லண்டனிற்கு வந்த இளம் டாக்டர். வயது முப்பது. அவள் அவனுக்குப் பலவிதங்களில் உதவியாக இருக்கும் மேலதிகாரி. அவள் ஒரு மெடிகல் ரெஜிஸ்ரார், அவன் அவளுடைய சீனியர் ஹவுஸ் ஆபிஸர்.
"வறுமையற்ற வாழ்வு, பகைமையற்ற உறவு, காதல் நிறைந்த மனிதர்கள். ரவி நீநன்றாக கற்பனை செய்கிறாய். ஜோன் லெனனை விட மிகவும் நன்றாகக் கற்பனை செய்கிறாய்' மெலனியின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது. கண்கள் சிரித்தன.
“பரம்பரையாயிருக்கலாம்"ரவி பதில் சொன்னான்.
“என்ன?' இவனிடம் மேலதிக விபரம் கேட்கும் ஆவல் அவள் பார்வையில் தெரிந்தது.
“என் தகப்பன் ஒரு கவிஞன். எத்தனையோ நல்ல கற்பனைகளை நனவாக்க யோசித்த மனிதன்.' ரவி கண்களை மூடிக்கொண்டான். தகப்பனைப் பற்றி மேலதிகமாகப் பேசமுடியவில்லை. நினைவுகள் எங்கேயோபோகின்றன. 1985ம் ஆண்டு இலங்கையில் அவன்சிந்தனை பாய்கிறது.
யாரோகதவைத் தட்டுகிறார்கள்.
இலங்கைச் சிங்கள ராணுவத்தினர், ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் தமிழ் இயக்கத்தினர் என்று எத்தனையோ பேர் மக்களைக் கலக்கிக் கொண்டிருந்த காலம்.
வெளியில் போக முடியாமல் மனிதர்கள் - தமிழ் மனிதர்கள் சிறைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று அது.
ரவியின், தகப்பன்சிதம்பரம் மாஸ்டர், யார் கதவைத் தட்டினார்கள் என்று பார்க்கப்போய்க்கதவைத்திறந்தார். காலன்வந்து கதவைத்தட்டிய கொடுமை தெரியாத மனிதன் கதவைத் திறந்தார். வானத்தில் நிலவு மேகங்களைத் துரத்திக்கொண்டு பவனிவந்து கொண்டிருந்தது.தூரத்தில் மட்டக்களப்பு வாவி நிலவில் தங்க நட்சத்திரங்களைக் கொட்டி நகர்வது போல் நிலவு வெளிச்சத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது. இரவு தன் பயங்கரக்கரங்களால் உலகை மூடிக் கொண்டிருந்தது. நோயால் அவதிப் படும் யாரோ ஒரு வயோதிகர் ஓயாமல் இருமுவது கேட்டது. பக்கத்து வீட்டுப் பூனை மதில்மேல் படுத்திருந்தது. அயல்வீட்டுக் குழந்தை - இப்போதுதான் பிறந்து நான்கு நாட்களாகின்றன, உலகம் புரியாமல் ஒலம் போட்டுக் கொண்டிருந்தது.
அப்பாகதவைத் திறக்கப் போனார்.

11 நாளைய மனிதர்கள்
அடுத்த கணம் காதைப் பிளக்கும் குண்டுச் சத்தம். "ஐயோ' அம்மாவின் அலறலில் பதின்மூன்று வயது ரவீந்திரன் தான் படித்துக் கொண்டிருந்த பாடப் புத்தகத்தை உதறிவிட்டு ஓடிவந்தான். பத்தொன் பது வயது அக்கா, தகப்பனின் நிலை கண்டு மயங்கிப் போன தாயைத் தாங்கிக் கொண்டாள். அந்தத் தாயின் எதிர்காலம் அஸ்தமித்த கணமது.
இருதம்பிகளும் இரத்தம் பீறிட இறந்து கிடக்கும் தகப்பனைப் பார்த்து அலறியதில் அக்கம் பக்கத்தார் ஓடிவந்தார்கள். எட்டு வயதுத் தங்கை, “அப்பா, அப்பா' என்று கதறி, இறந்து போனவரின் சட்டை யைப் பிடித்து உலுக்குகிறாள்.
அப்பாகண்ட கற்பனைகளுக்கும் அன்றைய நிலைமைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 1985ம் ஆண்டு அவனின்தகப்பனின் வாழ்க்கை சட்டென்று துண்டிக்கப்பட்டு விட்டது.
“என்ன ரவி தூக்கம் வருகிறதா?’ ரவியின் மெளனத்தை அவ தானித்த மெலனிதிரும்பிப் பார்த்துக் கேட்டாள்.
தூக்கமா? அவன் சிலிர்த்துக் கொண்டான். தனது துக்கத்தை அவளிடம் சொல்லலாமா?
இவ்வளவு காலமும் அவர்கள் வேலை செய்யும் டிப்பார்ட் மென்டில் ஏதும் பார்ட்டிநடந்தால் எத்தனையோ வேற்று மனிதர்களைச் சந்தித்திருக்கிறான். அவர்கள் மெலனிக்குத் தெரிந்தவர்களாயிருந்தால் ரவிக்கும் அறிமுகம் செய்துவைப்பாள். உத்தியோக தோரணையில் அவள் ஒரு சிறந்த மேலதிகாரி. அவனை ஊக்கப்படுத்துபவள். ஆனால் அவளைப் பற்றித்தனிப்பட்ட முறையில் அவனுக்குஅதிகம் தெரியாது. அவளுடைய கனிவான குரலை அவனுக்குப் பிடிக்கும். உத்தியோகத் தோரணையில் கண்டிப்பாக சொல்லும் விஷயங்களும் பிடிக்கும். “லண்டனில் இருக்கும்போது எத்தனையோ விஷயங்களைப் படிக்க லாம், எவ்வளவோ இன்ரஸ்டிங்கான இடங்களைப் பார்க்கலாம், அதெல்லாவற்றையும் மறக்காதே." என்று ஆலோசனை சொன்னதும் பிடிக்கும்.
அதற்கப்பால், இன்றுவரையும் அவர்கள் இருவரும் ஒருநாளும் ஒரு இடத்திற்கும் தனியாகப் போகவில்லை. ஜோன் லெனனின் பாட்டை ரசிக்கவில்லை. ஒரு இளம் சோடியாகக் காரில் இருந்துகொண்டு இசை பற்றிப் பேசவில்லை.
“முன்பின் அறிவித்தல் இல்லாமல், இன்று காலை உனக்குப் போன் பண்ணி, பிரைட்டன் பீச்சுக்கு வருகிறாயா, என்று நான் கேட்டது சரியில்லைதான், மன்னிக்கவும்.'அவளின் குரலில் மன்னிப்பு உண்மை யான தொனியில் ஒலித்தது.
"அப்படிச் சொல்ல வேண்டாம். மாமாவிடம் வருவதாகச் சொல்லி யிருந்தேன். வருவது சாத்தியம் என்று சொல்லி யிருந்தேன். நிச்சயமாக

Page 9
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 12
வருவதாகச் சொல்லவில்லை. அத்துடன் இந்த வார விடுமுறையில் நேரமிருந்தால் எனது தமக்கை வீடுபோவதாக இருந்தேன். ஆனால் அந்த விடயங்களை அடுத்த கிழமை பார்த்துக் கொள்ளலாம்தானே?”
“நிறைய உறவினர்கள் லண்டனில் இருக்கிறார்கள்போலும்" மெலனியின் கேள்வியில் ஆச்சரியம்.
"நாங்கள் இலங்கைத் தமிழர்கள். உயிரைப் பாதுகாப்பதற்காக உலகமெல்லாம் நாடோடியாய் அலைபவர்கள். எங்களின் உறவுகள் உலகத்தில் எழுப்பத்து நான்கு நாடுகளில் பரந்து கிடக்கிறார்கள்’ ரவி சொல்லிக் கொண்டிருந்தான்.
கார்ட்ரபிக் லைட்டில் நின்றது.
நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. லண்டனில் கொஞ்சம்
வெயில் அடித்தால் மிகவும் சந்தோசமாயிருக்கும். இந்த ஆங்கிலேயர் களைப் பார்க்க ரவிக்குச் சிலவேளை ஆச்சரியமாக இருக்கும்.
இவர்கள் சுதந்திரமானவர்கள். அரசியல், பொருளாதாரம், தனி மனித உறவுகள் ஆகியவற்றை சுயசிந்தனையின் ஆற்றலுடன் வெளி யிடத் தயங்காதவர்கள். சுதந்திரமற்ற இலங்கைத் தமிழர்களுக்கும் சுதந்திரமுள்ள இந்த ஆங்கிலேயர்களுக்கும் எத்தனையோ வித்தியாச முண்டு. கார் ஸ்ராட் பண்ணியதும் இவனின் நினைவில் என்னவிருக்கும் என்று தெரிந்ததுபோல் மெலனி அவனைப் பார்த்தாள்.
"இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அமைதிச் சூழ்நிலை நிரந்தரப்படுத்தப்படும் சூழ்நிலையிலிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”
இந்தக் கேள்வியை மெலனி சாம்ஸனிடமிருந்து ரவி எதிர்பார்க்கவில்லை.
“அமைதி நிரந்தரமாக வரவேண்டுமென்று பெரும்பாலான இலங்கை மக்கள் வேண்டுகிறோம். இன விரோதத்தை வளர்த்து, அதனால் தொடர்ந்த சண்டையில் இறந்த மனிதர்கள் ஆயிரக் கணக்கானோர் - அழிந்த செல்வங்கள் எத்தனையோ. எதிர்காலம் ஒரு நல்ல விடிவைத் தர எங்கள் நாட்டில் அமைதி தேவை. அல்லல்படும் மக்களில் முப்பது வீதம் பேர் மனநோய்களால் அவதிப்படுகிறார்கள். எங்கள் நாட்டுக்கு அமைதி தேவை.' ரவியில் குரலில் உணர்ச்சி பெருகியது. அவள் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தாள்.
'இன்று நான் இந்தப் பிரயாணத்தை ஏற்படுத்தியதற்கு எனக்கு நானேநன்றி சொல்லப்போகிறேன்.'அவனைப் பார்த்துச் சொன்னாள்.
"அப்படியா ஏன்?"உண்மையான ஆர்வத்துடன்கேட்டான்ரவி.

13 நாளைய மனிதர்கள்
“எனக்கு இதுவரை தெரியாத ரவியைப் பார்க்கிறேன்". அவள் குரலில் சந்தோசம்.
“என்னைப்போல் எத்தனையோ ரவிகள் அனாதைகளாக உலக மெல்லாம் சிதறுப்பட்டுக் கிடக்கிறார்கள்.
அமைதி தேவை, அதைத் தொடர்ந்து எதிர்காலத்தைச் சுபிட்சப் படுத்தும் திட்டங்களும் தேவை.'அவன், மனம் திறந்து சொன்னான்.
'நீங்கள் ஒரு சைக்கியாட்ரிஸ்டாக இருக்காமல் ஒரு அரசியல் வாதியாக இருந்திருக்கலாம்' மெலனியின் குரலில் உண்மையான எதிர்பார்ப்பு.
“ஐயய்யோ, ஆளை விடுங்கள். அரசியல் ஒரு சாக்கடை.'அவன் அலறினான்.
மெலனி வாய்விட்டுச் சிரித்தாள். இந்தச் சிரிப்பு மனதிற்கு இதமாக இருந்தது. உத்தியோகத் தோரணைக்கு அப்பாலான சிரிப்பு. அதை அவன் ரசித்தான்.
தற்செயலான இந்தப் பிரயாணம் மனதில் ஒரு திருப்தியைத் தந்தது ரவிக்கு. ஏனென்றால் எல்லாரிடமும் அவன் மனம் விட்டுப் பேசமாட்டான். W
大
ரவி வரமாட்டான் என்று ராமநாதனுக்கு நிச்சயமானது. வருவதா யிருந்தால் போன் பண்ணியிருப்பான். இதுவரைக்கும் அவனிடமிருந்து எந்த போன் காலும் வராதபடியால் அவன் இன்று மத்தியானச் சாப் பாட்டுக்கு வரப்போவதில்லை என்று நிச்சயித்து விட்டார்.
சித்திராவையும் எதிர்பார்த்தார். கேம்பிரிட்ஜ் நகரிலிருந்து லண்ட னுக்கு வந்து போவது பெரிய காரியமில்லை, அவர் மகள் சித்திரா கேம் பிரிட்ஜ் நகரில் சோசியல் வேர்க்கராக இருக்கிறாள். வார விடுமுறையிலும் ஏதோ வேலை வந்துகொண்டிருக்கும்.
பின்னேரம் அவருடைய பழைய மாணவர் சங்கக் கூட்டம் இருக்கிறது. அதுவரைக்கும் அவர் மனைவி திலகவதி எதையாவது சொல்லித் தொண தொணவென்றிருப்பாள். குழந்தைகள் இல்லாத வீட்டில் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கொண்டிருக்கும் முதுமை வாழ்க் கையது. திலகவதியின்சமையல் மூக்கைத் துளைத்தது. ஒரே ஒரு மகளின் வருகையை எதிர்பார்த்து ஏதோவெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள். அத்துடன் மருமகன் ரவியையும் எதிர்பார்த்திருந்தாள்.
அவள் முகத்தில் அந்த எதிர்பார்ப்பின் சந்தோசம் தெரிந்தது. பகல் பன்னிரண்டு மணியாகப் போகிறது.

Page 10
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 14
ரவிக்குப் பிடித்த உளுந்துவடை, பாயாசம் செய்கிறாள். அவளின் சமையலை ரசிக்க அவன் வரமாட்டான் என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடையப்போகிறாள். ராமநாதன் தோட்டத்திற்குப் போனார். தோட்டத் தில் துப்புரவுப்படுத்தும் வேலை செய்பவன்நாளைக்கு வருவான். நல்ல வெயிலடித்தது. கையில் பத்திரிகையுடன் கதிரையையும் எடுத்துக் கொண்டு போனார்.
தோட்டத்தில் உட்கார்ந்து பத்திரிகை படித்தாலும் மனமோ, மகள் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் அங்கலாய்த்தது. அவர்களின் மகள் சித்திரா கேம்பிரிட்ஜ் நகரில் சோஸியல் வேக்கராக இருக்கிறாள். சிலவேளைகளில் வார விடுமுறைக்கு வருவாள், பத்திரிகையில் மனம் செல்லவில்லை. இன்னொரு தரம் உள்ளே வந்தார். ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவைத் தூக்கிக் கொண்டார். அலைபாயும் மனத்தை இழுத்து ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற உந்தல் செயலில் தெரிந்தது.M.S.சுப்பு லட்சுமியின் “மீரா படப் பாடல்கள் அடங்கிய டேப்பைப் போட்டார்.
காற்றில் தலை சாய்த்துத் தாளம் போடும் "கமிலியா பூக்கள்', மீராவின் - "காற்றினிலே வரும் கீதம்' பாட்டுக்காகத் தாளம் போடுவது போலிருந்தது. கமிலியா பூக்களை ரசித்தவர் தோட்டத்தை ஒருதரம் நோட்டம் விட்டார். தோட்டத்தைத்திருத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அவருக்கு அறுபது வயதாகிறது. இருதயம் அவ்வளவு சரியாக வேலை செய்யமாட்டேன் என்கிறது. ஏதும் கொஞ்சம் வேலை செய்தால் மூச்சு வாங்குகிறது.
அவர் ஒரு சத்திரவைத்திய நிபுணர். ஆனால் தன் இருதய நோய் பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. "சும்மா சின்னப் புழை தானே' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
திலகவதிக்கு அது தெரிந்தால் துடிதுடித்து விடுவாள். அவளுக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. அவளுக்கு முப்பத்திஎட்டு வயதில் டையா பெட்டிஸ் வந்துவிட்டது. அதற்கு மருந்தெடுத்துக் கொண்டும், டாக்டர் களைப் பார்த்துக் கொண்டும் திரிகிறாள். இந்த நிலையில் அவருக்கு இருதயத்தில் ஏதோபுழை என்று தெரிந்தால் பதறிவிடுவாள். அவர்களின் ஒரே ஒரு மகள் சித்திரா, இருபத்தி எட்டு வயதாகிறது. இன்னும் அவள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது திலகவதியை உருக்குகிறது என்று தெரியும். தங்களுக்கு ஏதும் நடப்பதற்குள் மகளுக்குத் திருமணம் நடக்க வேண்டுமென்பது அவள் ஆவல்.
சுப்புலட்சுமியின் காற்றினிலே வந்த கீதம் பக்கத்து வீட்டு வெள்ளைக்காரனுக்கும் கேட்டிருக்க வேண்டும். எட்டிப் பார்த்தான்.
பக்கத்து வீட்டு வெள்ளைக்காரனின் பெயர் மைக்கேல். மனைவி யின் பெயர் கரலைன். இருவரும் அண்மையிலிருக்கும் பாடசாலையில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். வேலிக்கு மேலால் வெறும் புன்னகை

15 நாளைய மனிதர்கள்
யாய் ஆரம்பித்த உறவு இப்போது மிகவும் நெருங்கிப் பழகுகிறார்கள். நல்ல மனிதர்கள் என்று உறவு கொண்டாடுவாள் திலகவதி. அவளின் வாழ்க்கையில் - லண்டனுக்கு வந்து பதினெட்டு வருடங்களில் கொஞ்சம் கூடுதலாகப் பழகும் ஆங்கிலேயர்கள் அவர்கள்தான்.
"குட்மோர்னிங். இல்லை இல்லை, குட்ஆப்டர்நூன்" வேலிக்கு மேலால் சொன்னான் மைக்கேல், ஆறடி உயரமான அவன் திடகாத்திரமாய்த் தெரிந்தான்.
"குட் ஆப்டர்நூன் மைக்கேல்" ராமநாதன் பதிலுக்குச் சொன்னார். மகனைப் பார்த்து ஒரு தகப்பன் சொல்லும் பாசம் அவர் குரலில்,
கரலைன் பக்கத்துத் தோட்டத்தில் தெரிந்தாள். திலகவதி வடைப் பார்சலுடன் வந்தாள். மைக்கேலுக்கு இந்திய - இலங்கைச் சாப்பாடுகள் பிடிக்கும். கரலைன் வடையைப் பார்த்தாள். “ஓட்டை போட்ட கேக்கா' என்று விசாரித்தாள்.
'இல்லை உளுந்து வடை' திலகவதி உளுந்து வடை பற்றிய விரிவிலக்கணத்தை அவர்களுக்குச்சொல்லிக் கொண்டிருந்தாள். திலகவதி சமையல்கலை பற்றிய பாடங்கள் எடுத்தால் மிகவும் விசேடமாயிருக்கும்.
“மிகவும் நன்றாயிருக்கிறது" கரலைன் சந்தோசப்பட்டாள். உளுந்து வடையில் பொதிந்திருந்த காரம் அவளின் கண்களில் நீர் வரப் பண்ணிக் கொண்டிருந்தது.
"இன்றைக்கு சில விசிட்டர்கள் வருவதாக இருக்கிறார்கள்'. திலகவதி மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போது டெலிபோன் மணியடித்தது.
ராமநாதன் உள்ளே போனார்.
திலகவதியும் பின்தொடர்ந்தாள்.
"யார் சித்திராவா" அவள், அவர் அருகில் நின்று முணுமுணுத் தாள். அவர் இல்லை என்று தலையாட்டினார். அவள் கேள்வியைத் தொடர்ந்தாள்.
“y-Fumo
அவர் இல்லை என்று தலையாட்டினார்.
அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ரவியும் வரவில்லை. சித்தி ராவும் வரவில்லை. அவள் சோர்ந்து விட்டாள். துயரம் முகத்திற் படிந்தது. போன் பண்ணியவர் ராமநாதனின் நண்பர். பின்னேரக் கூட்டம் பற்றிச் சொன்னார்.
“ரவிவரமாட்டானா'திலகாகேட்டாள்.

Page 11
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 16
"அவன் வருவதாயிருந்தால் எப்போதோ வந்திருப்பான். நான் நினைக்கல்ல வருவான் எண்டு' திலகவதியின் ஏமாற்றமான முகத்தை அவர் பார்க்காமல் சொன்னார். இன்னொருதரம் தோட்டம் பக்கம் போகாமல் சோபாவில் உட்கார்ந்தார். பத்திரிகையில் மனம் செல்ல வில்லை. சனிக்கிழமைகளில் வேலைக்குப் போனால் காலை பதினொரு மணிக்குப்பின் வீட்டுக்கு வந்துவிடுவார்.
இன்று மகள் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் கொஞ்சம் முந்தியே வீட்டுக்கு வந்திருந்தார்.
ரவியைப் பற்றிக் கேட்டவள், சித்திராவைப் பற்றிக் கேட்காதது ஆச்சரியமாக இருந்தது. திலகவதி எப்படியும் சித்திரா வருவாள் என்று எதிர்பார்ப்பது புரிந்தது. மகளில் உயிரை வைத்திருக்கும் திலகவதிக்குச் சிலவேளை சித்திரா வயது வந்து தங்களைப் பிரிந்து போய்விட்டாள் என்பதே கணக்கில் இல்லை. 'ரவிக்கு விருப்பமான வடையும் பாயாச மும் செய்தேன்' திலகாவின் குரலில் ஏமாற்றம். ரவிக்கு ஏன் இப்படி உபசாரம் செய்கிறாள் என்பது அவருக்குத் தெரியும். அவருக்குச் சிரிப்பு வந்தது. ஒருகாலத்தில் ரவியின் தாயை - ராமநாதனின் தங்கையை திலகவதிக்குக் கண்ணில் காட்டக்கூடாது. ராமநாதனின் தங்கை கமலா தங்களுக்குப் பிடிக்காத, அல்லது தாங்கள் பார்க்காத மாப்பிள்ளையைச் செய்துவிட்டாள். மத்தியதர வாழ்க்கை வாழும் கொழும்புத் தமிழ்ப் பெண்ணானகமலாதங்கள் அந்தஸ்துக்குக்குறைந்தவனில் மனம் பதித்து விட்டாள். தாய்தகப்பனின்அனுமதி கிடைக்காது என்று தெரிந்தும் கமலா தனக்குப் பிடித்தவனின் குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன் திருமதி கமலா சிதம்பரமானாள்.
நீண்டநாட்களின் பின் கமலா தமயனுடன் தொடர்பு கொண்டாள். "அண்ணா, நீஎன்றாலும் எனது விருப்பத்திற்கு உதவி செய்வாய் என்று நினைத்தேன்’ என்ற கமலாவின் கடிதம் அவள் எவ்வளவு தூரம் ஏமாற்றம் அடைந்திருக்கிறாள் என்பதைக் காட்டியது. அவரின் கடைசித் தங்கையவள். குடும்பத்தின்கட்டுப்பாட்டால் தங்கையின்திருமணத்திற்கு ஒரு உதவியும் செய்யவில்லை. அவர்உதவிசெய்யத்தொடங்கியபோது கமலா இழக்க வேண்டியவை எல்லாவற்றையும் இழந்துவிட்டாள்.
★
சித்திரா இந்க் கிழமை லண்டனுக்குப் போவதாக யோசித்திருக்க வில்லை. ஆனாலும் ஒவ்வொரு கிழமையும் எதிர்பார்ப்பதுபோல் இந்தக் கிழமையும் அவள் பெற்றோர் அவளை எதிர்பார்ப்பார்கள் என்று தெரியும்.
இருபத்து எட்டு வயது மகளுக்கு இன்னும் செல்லம் பண்ணும் திலகவதி எல்லாஇலங்கைத்தமிழ்த்தாய்களும் போலத்தான்இருக்கிறாள்.

17 நாளைய மனிதர்கள்
பதினெட்டு வருடம் லண்டனில் வாழ்ந்தும் திலகவதியால் அவளுடைய சமயலறை உலகிற்கப்பால் போக முடியாமலிருப்பது அவளின்மகளுக்கு ஆச்சரியம் அல்ல. பெரும்பாலான தமிழ்த் தாய்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். தாயின் மனநிலை தெரிந்தாலும் சித்திரா இன்று தாய் தகப்பனைப் போய்ப் பார்க்க முடியாமலிருக்கிறது. மதியம் ஒரு மணி யாகிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முதல்தான் அவளின் மைத்துனிசுமதி போன் பண்ணினாள்.
சுமதி பேசிய தோரணையிலிருந்து அவள் மனம் மிகவும் குழம்பிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்தது.
"உனது தம்பியிடம் பேசினாயா?"சித்திராவுக்கு சுமதியின் குடும்ப விஷயங்களில் தலையிட விருப்பமில்லை. ஆனாலும் சுமதி தன்னிடம் எதிர்பார்க்கும் உதவி ஒரு சகோதரி இன்னொரு சகோதரியிடம் எதிர்பார்க்கும் உறவு.
“இந்த வாழ்க்கையை நினைத்தால் எனக்கேன் இந்த விதி என்று யோசிக்கிறேன்."
சுமதி மிக மிக நொந்துபோன நேரங்களில் கடவுள், விதி என்றெல்லாம் பேசத் தொடங்கிவிடுவாள். விரக்தி வரும்போது விதியில் பழிபோடும் பல மனிதர்களில் சுமதியும் ஒருத்தி. தனிமனித உணர்வுகள் வாழ்க்கையைப் பரிணமிக்கிறது என்பது தெரியாதவள், சித்திராவின் மாமி கமலாவின் மூத்த மகள் சுமதி. மூத்த மகள் சுமதியையும் மூத்த மகன் ரவியையும் தவிர மற்ற மூன்று குழந்தைகளையும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல கோணங்களில் இழந்து விட்டவள்
SO6).T.
சித்திராவின் தகப்பன் தனது தங்கையிடம் பரிதாபம் கொண்டவர். அவளுக்கு உதவி செய்ய, டாக்டர் ராமநாதன், சுமதிக்கு லண்டன் மாப்பிள்ளையைப் பேசி செய்து வைத்தார். முப்பத்தி ஏழு வயதில் இரு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட வாழாவெட்டியாக இருக்கிறாள் சுமதி. சுமதிக்கும் அவள் கணவருக்கும் எப்போதும் பிரச்சினை.
"இவர் இப்படியானவர் என்று தெரிந்தால் நான் கல்யாணம் செய்யாமல் காலமெல்லாம் கன்னியாகவே இருந்திருக்கலாம். ஆண்கள் தங்கள் சுயநலத்திற்கு ஏன் பெண்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்?"
சுமதியின் கேள்விக்கு சித்திராவால் பதில் சொல்ல முடியாது. மனித உறவுகளின் சிக்கல்கள் பற்றிய கேள்வியிது.
இந்தக் கிழமை சித்திரா மிகவும் கடுமையாக வேலை செய்ததால் உடம்பெல்லாம் களைத்துப் போயிருக்கிறது. நேற்று உலகக் கால்பந்

Page 12
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 18
தாட்டப் போட்டியில் இங்கிலாந்துக் கோஷ்டி ஆர்ஜென்டினாவைத் தோற்கடித்தது. அந்த வெற்றியைக் கொண்டாட இங்கிலாந்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டாட்டம். அந்தச் சந்தடியில் இரவெல்லாம் சரியானதுக்கமில்லை.
பக்கத்து வீட்டிலுள்ள ஜேன் என்னும் பெண்ணுக்குக் கால்பந் தாட்டம் பிடிக்காது. "இந்த ஆண்கள் ஏன் இப்படி பைத்தியம் பிடித்துக் கிடக்கிறார்களோ தெரியாது என்றாள். சித்திராவுக்குச் சிரிப்பு வந்தது. ஜேன் எதையும் பொருளாதார-அரசியல் ரீதியாக ஆராய்வாள். “சித்திரா, இந்த காற்பந்தாட்டப் போட்டி ஒருவிதத்தில் ஒரு ஏகாதிபத்தியப் போட்டி மாதிரி. பணமுள்ள நாடுகள் தோல்வியடையும்போது பார்க்கச் சந்தோச மாக இருக்கிறது." ஜேன் சந்தோசத்துடன் சொன்னாள். ஆங்கிலேயர் ஆர்ஜென்டின் வீரர்களிடம் தோற்றதைப் போற்றுகிறாள். "ஜேன் நீ இங்கிலிஸ்காரி. இப்படிப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது." ஜேன் செய்து தந்த அந்த கரட் கேக்கை மிகவும் ருசித்தபடி சொன்னாள் சித்திரா.
“சும்மா போ, பணத்தால் மதம் பிடித்துப்போய் இருக்கும் மேலை நாட்டாருக்கு ஆப்பிரிக்க நாடுகளும் தென் ஆப்பிரிக்க நாடுகளும் பாடம் படிப்பிப்பதைப் பார்க்கச் சந்தோசமாக இருக்கிறது.'
ஜேன் இங்கிலாந்து தொழிற்கட்சியில் அங்கத்தவராக இருக்கிறாள். அவள் உலகத்தைப் பார்க்கும் விதம் வேறு. அவள் எதிர்பார்க்கும் எதிர்காலம் வேறு. கேம்பிரிட்ஜ் பெண்கள் அமைப்பொன்றில் வேலை செய்கிறாள். வசதியற்ற பெண்களுக்கு உதவி செய்வது, படிப்பு, தொழில் போன்ற விடயங்களில் அவர்களை ஊக்குவிப்பது போன்ற விடயங்களை அந்த ஸ்தாபனம் செய்கிறது. ஜேன் ஒரு அகில உலகவாதி. அடக்கப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடுவாள்.
தனது யுனிவர்சிட்டிப் படிப்பு முடிந்ததும் மூன்று வருடங்கள் ஆப்பிரிக்காவில் - உகாண்டா நாட்டில் ஏழை எளியோர்களுக்கு உதவி செய்யும் ஸ்தாபனம் ஒன்றில் வேலை செய்தவள். “ஒருசில பேராசை பிடித்த அரசியல்வாதிகளால் உலகத்தில் இத்தனை கொடுமை நடக்கிறது. இடி ஆமீனால் உகாண்டா நாடு சிதிலமடைந்தது. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுச் செல்வத்தை உறிஞ்சு கிறார்கள். அந்தப் பணத்தை மேற்கத்திய வங்கிகளில் போடுகிறார்கள். அதன் பின்தங்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யச் , சொல்லி பணம் படைத்த மேற்கு நாட்டு அரசியல்வாதிகளைக் கெஞ்சு கிறார்கள். உதவி என்ற பெயரில் அவர்கள் கொடுக்கும் பணம் உருப்படியாக மக்கள் தேவைக்குப் பயன்படுவதில்லை. இது மீண்டும் அரசியல்வாதிகளின் வீட்டுப் பணமாகச் செலவழிக்கப்படுகிறது.'

19 தாளைய மனிதர்கள்
"ஜேன், நீ எனக்கு இதெல்லாம் சொல்லத் தேவையில்லை. நான் பதினாறு வருடங்களுக்குமுன் இலங்கையிலிருந்து உயிரைக் காப்பாற்ற இந்த நாட்டுக்கு வந்தேன். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது. உலகத்தை ஒரு விளையாட்டுப் பூமியாகப் பார்க்கும் வயதில் இன அழிப்பு என்ற பெயரில் மிகவும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த நாங்கள் 83-ம் ஆண்டு அகதிகளாய் அனாதைகளாய் உயிர் தப்ப அலைந்தது உனக்குப் புரியாது. ஏழ்மையைப் பார்த்திருக்கிறாய். ஏழ்மையை அனுபவிக்க உனக்குச்சந்தர்ப்பம் இல்லை." ஜேன், சித்திரா சொல்வதை உண்மை என்று ஒப்புக் கொண்டாள்.
சித்திராலண்டனுக்குப் போக வெளிக்கிட்டபோது கதவைத்தட்டிய சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.
ஜேன்தான் நின்று கொண்டிருந்தாள். முகத்தில் களையில்லை. கண்களில் பரபரப்பு. ஏதோ துன்பமான விடயத்தைத் தொண்டையில் பிடித்து வைத்திருக்கும் பாவம். கண்கள் பனித்திருந்தன. “சித்திரா. ஜேனின் குரலில் படபடப்பு. முகத்தில் கலவரம், கண்களில் பனிப்பு.
yy
“என்ன ஜேன், உடம்புக்கு ஏதும் சுகமில்லையா?”சித்திராஜேனை அன்புடன் அணைத்துக் கொண்டு கேட்டாள்.
ஜேன் சித்திராவை நேரே பார்க்காமல் வானத்தைப் பார்த்தாள். நீலவானம் மிகவும் தெளிவாக இருந்தது.
"சித்திரா நான் உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும்.' தயக்கம் குரலில்
"சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் லண்டனுக்குப் போகிறேன். என்ன விடயம்.'
"நீபிஸியாயிருந்தால் நான்இந்தப் பேச்சை எடுப்பது சரியில்லை'.
ஜேன் அப்படிச் சொன்னாலும், தயவு செய்து கொஞ்சநேரம்
என்னுடன் பேசு என்பதுபோல் அவள் கண்கள் கெஞ்சின.
“சரி உள்ளே வா" ஜேன் குழந்தைபோல சித்திராவைத் தொடர்ந்து
உள்ளே வந்தாள்.
மிகவும் பரபரப்பாகக் காணப்பட்ட ஜேன் வழக்கமாக மிகவும்
பொறுமையான பெண். மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும்
ஈடுபாடுள்ளவள்.
சித்திரா ஒரு சோசியல் வேர்க்கர்.

Page 13
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 20
ஜேன் ஒரு பெண்கள் அமைப்பு உழைப்பாளி.
இருவரும் பக்கத்து வீடுகளில் வாழக் கிடைத்தது மிகவும் சந்தோச மானவிடயம் என்று நினைப்பவள் ஜேன். இருவரும் நல்ல சினேகிதிகள். ஜேனில் சித்திராவுக்கு மதிப்பும் அன்பும் உண்டு. மிகவும் கசுவலாக உடைகள் அணிவாள் ஜேன். ஜேன் நினைத்தால் எத்தனையோ பெரிய வேலை எடுக்கலாம். ஆனால் பெண்களுக்கு உதவுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது. "பணம் ஒருபிசாசு, மனிதனைமிருகமாக்கிவிடும்'. இது ஜேன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளில் ஒன்று. பணம் இருந்தால் மற்றவர்களுக்கு உதவுவாள். அவளுக்கு உதவி தேவையாம்! என்ன உதவி? அவளின் போய் பிரண்ட் டேவிட்டிடம் கேட்க முடியாத உதவியா?"சித்திராநான்கர்ப்பமாயிருக்கிறேன்.'ஜேனின் குரலிலிருந்த பரபரப்பு சித்திராவை ஆச்சரியப்படப் பண்ணியது. சந்தோசப்பட வேண்டிய விடயமல்லவா இது? "கொங்கிராயுலேஸன்ஸ்" சித்திரா ஜேனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
★

2
சாப்பாட்டு நேரத்தில் கொஞ்சம் வைன் குடித்திருந்ததால் மனம் கொஞ்சம் இதமாக இருந்தது. ரவிக்கு அரசியல் பிடிக்காது. அடுத்த மனிதர்களைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. அதிக பேராசை பிடிக்காது. அவசரப்படுத்தும் கல்யாணங்கள் பிடிக்காது. மெலனியுடன் மத்தி யானம் சாப்பிட்டான். சிவப்பு வைன் குடித்தார்கள். ஆங்கிலேயப் பெண்ணுடன் வைன் குடித்த முதல் அனுபவம்! மாமா ஞாபகத்திற்கு வந்தார். நிச்சயமாகத் தன்னால் வரமுடியாது என்று இவன் சொல்லா விட்டாலும் இவன் வருகையை அவர் எதிர்பார்த்திருப்பார் என்று தெரியும். திலகவதி மாமியின் அருமையான சமையல் நாக்கில் ஜலம் வரப்பண்ணும்.
அவன் இப்போது மெலனியுடன் ஆங்கிலேயச் சாப்பாடு சாப்பிட் டிருக்கிறான். அவர்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்று தெரியும்.
இங்கிலாந்துக்குவரும்போது இதெல்லாம் எதிர்பார்த்து வரவில்லை. மேல் படிப்பு படிக்க வேண்டும். இலங்கைத் தமிழர் இங்கிலாந்தில் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்து வந்திருந்தான்.
"இங்கிலாந்துக்குப் படிக்கப்போன நிறையத் தமிழ் டாக்டர்கள் இலங்கைக்குத் திரும்பிவருவது கிடையாது'.
இலங்கையில் ரவியின் மேலதிகாரி இப்படிச் சொன்னார்.
மாமா ராமநாதனும் அப்படித்தான் லண்டனுக்கு வந்தார். மேற்படிப்புக்காக வந்தார்.
லண்டன் மாநகரத்தில் 'அமைதியான வாழ்க்கை அமைத்துக் கொண்ட ஆயிரக்கணக்கான தமிழ் டாக்டர்களில் அவரும் ஒருவராகி விட்டது ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாமா இலங்கைத் தமிழரின் விடுதலையை நாடுபவர். அதற்காக லண்டனிலிருந்து கொண்டு எத்தனை யோ விதங்களில் வேலை செய்கிறார். நிதியுதவி சேர்த்து இலங்கைக்கு அனுப்புகிறார். அப்படியிருந்தும் இலங்கைக்குத் திரும்பிப் போக

Page 14
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 22
மாட்டேன் என்கிறார். தமிழர்களுக்கு விடுதலை தேவை என்று இரவும் பகலும் நினைக்கும் இந்த மனிதன்இலங்கைதிரும்பு மாட்டாராம், “தமிழர் விடுதலைக்குப் பாடுபடுவதென்பது போலியா' ரவி நேரே 6.7%; ஏனோதானோ என்று இலங்கைத்தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் எத்தனையோ பேர்களைச் சந்தித்திருக்கிறான். தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் அவன் குடும்பத்தில் அவனுக்கு உயிரான நால்வரை இழந்தவன் அவன்.
இலங்கையில் ஆறாய் ஓடும் தமிழரின் குருதியில் அவன் குடும்பத்தின் நான்கு பேரின் குருதியும் சங்கமித்திருக்கிறது.
"இலங்கை எங்கள் தாயகம். எல்லோர்க்கும் சொந்தம் இந்நிலம். வாழ்வோம் இந்த நாட்டிலே, மானத்தோடு வாழுவோம்'.
சங்கீதா இந்த வரிகளை மிகவும் உணர்ச்சியாகிப் பாடிக் கேட்ட போது அவனுக்கு வயது பதினைந்து. அவளுக்கு வயது பத்து. தான் பிறந்த இடத்தைத் தாயகமாக நினைத்த தமிழர்களுக்கு இனவாத சிங்கள ஆட்சி தடையுத்தரவு போட்டது. அதை எதிர்த்தவர்கள், இறந்தவர்கள் ஏராளம். தகப்பனையிழந்ததுக்கத்தில் தாய் தூண்டிற் புழுவாய்த் துடித்த போது அந்த ஊர் மக்கள் அவர் மறைவை நினைவுபடுத்த அமைத்த கூட்டத்தில் சங்கீதா பாடினாள்.
சங்கீதா ரவியின் கடைசி சகோதரி. தகப்பனின் மறைவு அவளை எப்படி மாற்றியிருக்கிறது என்று அவளின் உணர்ச்சி கரமான பாடலிலிருந்து தெரிந்தது.
மீன்பாடும்தாய்நாடாம் மட்டக்களப்பில் இளம் தமிழ் இளைஞர்கள் ஆடுமாடுகள் போல் அடைக்கப்பட்ட காலமது. காட்டு மிருகங்களாய் வேட்டை ஆடப்பட்ட காலமது. சிங்கள ராணுவம் மனித வேட்டையாடி யபோது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலோரை யிழந்தது மட்டக்களப்பு மாவட்டம்.
மாமா லண்டனுக்கு ஓடிவந்து விட்டார். ஓடிவருவது சிரமமாக இருக்கவில்லை. அவர் வசதி படைத்த தமிழ் டாக்டர். கொழும்புத் தமிழன். 83 ம் ஆண்டில் அவர் வேலை செய்த ஆஸ்பத்திரியில் அவருக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்த ஊழியர்கள் அவர் உயிரைக் குடிக்க முனைந்தபோது, இப்படியும் மனித குலம் மிருகவெறி பிடித்தலையுமா என்று பயந்தார்.
மாமா சொன்னார் 'ரவி நான் இலங்கைக்குத் திரும்பிப் போக மாட்டேன். சிங்கள இனவாதக் குண்டர்கள் கொலை வெறி பிடித்து கொழும்பின் மூலை முடுக்கெல்லாம் தமிழர்களைக் கொலை செய்த போது நான் ஒரு பெரிய டாக்டர், தமிழன் என்பதற்காக மூன்று நாட்களாக அழுக்கு துணி மூட்டைகள் போடும் அறையில் மறைத்து வைத்துக்

23 நாளைய மனிதர்கள்
காப்பாற்றப் பட்டேன். என் மனைவிக்கும் மகளுக்கும் என்ன நடந்தது, நான் உயிருடன் அந்த அறையிலிருந்து வெளியே போவேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. அந்தப் பயங்கர நினைவுகள் இரவும் பகலும் என்னை எப்படிச் சித்திரவதைப் படுத்தியது என்று யாருக்கும் புரியாது'.
மாமாவின் கண்களில் நீர் துளித்ததை ரவி கண்டான். அவன் லண்டனுக்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்தது இது. இப்போது அவனும் லண்டனுக்கு வந்துவிட்டான்.
உயிர் தப்பி, அமைதியான வாழ்க்கை தேடி, உழைப்புக்கு வழி தேடி வந்த தமிழ் மக்கள் உலகமெல்லாம் கொட்டிக் கிடக்கிறார்கள். ஒரு தலைமுறைத் தமிழ்க்குடி, நாடோடியாகிவிட்டது. அடுத்த தலைமுறை யின் கதி என்ன? இலங்கையிலிருக்கும் தமிழரில் முப்பது சதவீதத்தினர் மனவியாதிகளால் கஷ்டப்படுகிறார்கள். ரவியின் சிந்தனைகள் எங்கே யோ போய்க் கொண்டிருக்கின்றன. அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆங்கிலப் பெண் மெலனிக்கு இதெல்லாம் புரியாது. புரிந்தால் பரிதாபப் படுவாள் என்று தெரியும். "ரவி, நீங்கள் இன்று பீச்சுக்கு வந்ததையிட்டு
நான் மிகவும் சந்தோசமடைகிறேன்.' மெலனி ரவியை நேரே பார்த்துச்
சொன்னாள்.
அவள் குரலில் சந்தோசம். கண்களில் அதன் பிரதிபலிப்பு. மனித ஆத்மாவின் ஜன்னல்கள் கண்கள். அவள் நேர்மையானவள், உண்மை யைப் பேசுகிறாள் என்று தெரிந்தது.
“உங்கள் சந்தோசத்திற்கு காரணமாக இருப்பதையிட்டு மிகவும் பெருமையடைகிறேன்.' ரவிக்கு இதைவிட வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அத்தனை நெருக்கமுமில்லை அவர்கள்.
"மனிதர்களின் சந்திப்பு ஏதோ காரணத்திற்காக ஏற்படுகிறது என்று நினைக்கிறீர்களா?' மெலனி அவன் கண்களுக்குள் ஏதோ தேடுவது போலக் கேட்டாள்.
"புரியவில்லை'அவனுக்குப்புரிந்தது, அவள் என்ன சொல்கிறாள் என்று. ஆனால் சரியாகப் புரியவில்லை ஏன் சொல்கிறாள் என்று.
“உங்களைச் சந்தித்த நாட்களிலிருந்து இதுவரைக்கும் எங்கள் உறவு உத்தியோகப் பூர்வமாக இருந்தது.' மெலனியின் குரலில் ஏதோ ஒன்றைத் தொடரப்போகிறாள் என்பதன் பொருள் தெரிந்தது.
'நான் உங்கள் டிப்பார்ட்மென்டைப் பிரிந்து போகும் வரை அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.' அடக்கத் துடன் சொன்னான் அவன். அவள் மெளனம் சாதித்தாள். சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டாள். பின்னர்காரை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு

Page 15
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 24
அவனை நேரே பார்த்தாள். அவள் கண்களில் நீல நிறம் பனித்திருந்தது. சூரிய வெளிச்சத்தில் பணித்த கண்ணிர் முத்தாய்ப் பளபளத்தது. அதைச் சட்டென்று துடைத்துக் கொண்டாள். "ரவி, டிப்பார்ட்மென்டை விட்டு நீங்கள் போக முதல், நான் விலகிப் போகிறேன்', மெலனியின் குரல் அடைத்தது.
女
“அதுசரி உங்கள் அமெரிக்கக் கொன்பிரன்ஸ் பற்றிச் சொல்ல வில்லையே'ராமநாதனிடமிருந்து எல்லாவிடயங்களையும் எதிர்பார்த்துத் தோல்வியடைந்த அனுபவம் திலகவதிக்கு,
மதியச் சாப்பாட்டைப் பரிமாறியபடி திலகவதிகேட்டாள். டாக்டர் ராமநாதன் சேர்ஜன்ஸ் கொன்பரன்சிற்காக அமெரிக்காபோகவேண்டும். அதுபற்றி எப்போதோ அவளிடம் சொல்லியிருந்தார். மேலெழுந்த வாரியாகச் சொல்லியிருந்தார்.
“அதைப் பற்றி ஏன் இப்போது கேட்கிறாய் ' திலகவதிக்கு அவருடைய உத்தியோக ரீதியான விடயங்கள் பற்றிப் பேசுவதில் அதிகம் அக்கறையில்லை.
கொழும்பில் ஒரு பெரிய தனவந்தரின் மகளாயிருந்தவள்.A லெவல் முடித்து தையற்கலை, சமையல் கலை என்று படித்துக் கொண்டிருந்த போது இருபது வயதிலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது. அப்போது டாக்டர் ராமநாதன் மேற்படிப்புக்கு லண்டனுக்கு வர ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். மிகவும் கெட்டிக்கார டாக்டர் என்று பெயர் எடுத்தவர். ஸ்காலர்ஷிப் கிடைத்திருந்தது. கல்யாணம் பேசப்பட்டது. கல்யாணமும் நடந்தது.
68 ம் ஆண்டு அகில உலகெங்கும் மாணவர் புரட்சி வெடித்துக் கொண்டிருந்த காலம், பாரிஸ் மாணவர் கிளர்ச்சிச் சரித்திரத்துடன் இணைந்தபோது டாக்டர் ராமநாதன் லண்டனில் சேர்ஜரி படித்துக் கொண்டிருந்தார்.
ஸ்காலர்ஷிப் கிடைத்ததும் கல்யாணம் நடந்தும் திலகவதி சுகவீன மாக இருந்ததால் லண்டனுக்குவரத் தாமதமாகிவிட்டது.
அவர்லண்டனுக்குத்தனியாக வந்தார். இளம் மனைவியைப் பிரிந்த துன்பம் வாட்டியது. சீக்கிரமாகப் ப்டித்து முடித்துவிட்டு கொழும்புக்கு ஒடக் காத்திருந்தார்.
அப்போது தன்னைப் பற்றியும் தன் படிப்பு பற்றியும் திலகவதிக்கு
எழுதுவார். அவளுக்கு அவரின் மேற்படிப்பு பற்றிய அக்கறை ஒன்றும் இல்லை என்பது புரியத் தொடங்கியது.

25 நாளைய மனிதர்கள்
அன்பான மனைவி என்பவள், அறிவான மனைவி என்று எதிர் பார்க்கத் தேவையில்லை என்று உணர்ந்ததும் அவர் தன் உத்தியோக விடயம் பற்றி அவளிடம் பேசுவதில்லை.
தற்செயலாக ஏதும் சொல்லிவிட்டால் “சும்மா இருங்கோ, நான் வெஜிடேரியன். குடலை வெட்டுவது பற்றியும் இரத்தம் பாய்ச்சுவது பற்றியும் பேசவேண்டாம்'. அவர் சத்திர சிகிச்சை செய்பவர். தசையையும் எலும்புகளையும் வெட்டுபவர். அவர் வாயடைத்துப் போய்விடுவார். இப்போது அவள் அவருடைய அமெரிக்க விடயம் பற்றிப் பேசுகிறாள். அதற்குப் பின்னால் அவள் போடும் திட்டங்களைப் பற்றி அவர் அறியாதவர் அல்ல.
அவருக்கு அமெரிக்கா போக விருப்பமில்லை என்று சொன்னால் அவள் விடப் போவதில்லை.
கடந்த தடவை அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது எயார் போர்ட்டில் அவரை அந்த எயார்போர்ட் அதிகாரிகள் நடத்திய விதம் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது.
ராமநாதன் என்ற பெயரை எத்தனையோ தரம் உச்சரித்துப் பார்த்தார்கள். ரஹ்மான் என்றும் அவர் ஒருமுஸ்லீம் என்றும் அல்லது பின்லேடனின் சினேகிதன் என்றும் நினைத்துக் கொண்டவர்கள்போல் அவரை நடத்தினார்கள். அவருடைய சப்பாத்தைக் கழட்டச் சொன் னார்கள். இடுப்பில் போட்டிருந்த பெல்ட்டைக்கழட்டச் சொன்னார்கள். இவர் வெடிகுண்டு வைத்திருக்கிறாரா என்று சந்தேகித்து ஒவ்வொரு அயிட்டங்களையும் அலசினார்கள்.
அவருக்குப் பின்னால் வந்த இந்தியர் ஒரு சீக்கியன். அவரைப் படுத்திய பாடு மிக மிகப் பரிதாபமாக இருந்தது. தலைப்பாகையையும் அவரையும் பார்த்த விதமும் நடத்திய விதமும் இந்த அமெரிக்கர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்று யோசிக்கத் தூண்டியது.
பயந்தவன் கண்களுக்குள் பார்த்ததெல்லாம் பேயா? பழைய அனுபவங்கள் ஞாபகம் வந்ததும் அவர் மனம் குறுகுறுத்தது. ராமநாத னுக்கு அமெரிக்கா செல்ல விருப்பமில்லை. திலகவதிக்கு அமெரிக்கரின் நடத்தைகளையோ செப்டம்பர் பதினொராம் தேதி இரண்டாயிரத்து ஓராம் ஆண்டுக்குப் பின் முஸ்லீம்களுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் அதர்மங்களையோ அவள் அரசியலாகப் பார்க்க மாட்டாள். அப்பாவி மக்களை ஆப்கானிஸ் தானில் அமெரிக்கா கொன்று குவிப்பதைப் பார்த்துவிட்டு, 'பொங்கும் பால் வழியும்; என்பது பழமொழி’ என்பாள்.
அநியாயமாக அப்பாவி அமெரிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது மிக மிகக் கொடுமை. மிகமிகக் கொடுமை.

Page 16
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 26
அதற்குப் பதிலாக மிக மிக ஏழைகளான ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்கா குண்டு வீச்சுக்களால் அழித்தபோது சிலகவதி அழுது விட்டாள். சாபம் போட்டாள்.
இலங்கையில் இனக் கொடுமையின்போது அவர்கள் ஏறிவந்த வாகனத்திற்குப் பின்னால் வந்த வாகனத்தை வளைத்துப்பிடித்த சிங்களக் காடையர்கள் அந்த வாகனத்திலிருந்த அத்தனைபேரையும் உயிரோடு கொழுத்தியதை நேரிற் பார்த்தவள்.
83 ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தப்பிப் பிழைத்த தமிழ்க் குடும் பங்களில் அவர்களுடையதும் ஒன்று.
அவளுக்கு கொலை, கொள்ளை, பொய் என்பன பிடிக்காது. மத்தியவர்க்கத்து இறுமாப்பு இருக்கிறது. ஆனால் அவள் இதயம் மிகவும் இளகியது. வேகமாகப் பரவி வரும் அமெரிக்க ஆதிக்க வெறியைப் புரியாதவள் அவள். உலகத்தை மிக மிகப் பயங்கரமாகப் பார்த்துப் பயப்படுவாள்.
தன் 'உலகத்தைத் தன் குடும்ப உறவுகளுக்குள் ஒடுக்கிக் கொண்டவள். அவள் ‘உலகம்’ இப்போது அவளின் ஒரே ஒரு மகள் சித்திரா. அவளுக்குக் கல்யாணம் நடக்காதது திலகவதிக்குப் பெரிய யோசனை.
அவளின் தங்கை ஒருத்தி அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் மூலம் சித்திராவின் கல்யாணத்தை ஒழுங்கு பண்ண யோசிக்கிறாள்.
சாப்பாட்டைத் தட்டில் போட்டபடி எத்தனையோ விடயங் களையும் அவர் தலையில் போடுவாள். ஏன் மகளுக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை என்று தன்னை மற்றவர்கள் கேட்பதாகச் சொல்லி முணுமுணுப்பாள்.
பக்கத்து வீட்டுக் கரலைனுக்குத் தன் மகளின் வயது. கரலைன் கல்யாணம் செய்து ஐந்து வருடங்களாகின்றன எனத் திலகவதி கணவனுக்குச் சொன்னாள்.
“கரலைன் இங்கிலிஸ்ப் பெண். சித்திரா தமிழ்ப் பெண். சித்திரா கரலைனைப் போல் வெள்ளைக்காரனைப் பார்ப்பதை அனுமதிப் பாயா. 'திலகவதி அவர் கேட்ட கேள்வியால் ஸ்தம்பித்து விட்டாள்.
★
y
"ஏன் டிப்பார்ட்மென்டைவிட்டுப் போகிறாய்"
ரவி அப்படிக் கேட்டதும் அவள் கலங்கிய கண்களையும், சிவந்த முகத்தையும் அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்.

27 தாளைய மனிதர்கள்
“சொந்தப் பிரச்சினைகள் காரணம்' என்று சொன்னாள்.
ஆங்கிலேயர் சொந்த விடயங்கள் பற்றிப் பேசமாட்டார்கள் என்று தெரியும். அதுபற்றிக்கேட்க வேண்டும் என்று அவன்நினைக்கவில்லை. ஆனால் அவள் பிரிந்து போவது அதிர்ச்சியாக இருந்தது. இன்று அவள் அவனைப் பீச்சுக்குக் கூட்டிக்கொண்டு வந்ததையிட்டு நன்றிக் கடன் பட்டிருந்தான்.
சொந்தப் பிரச்சினைகள் காரணமாக டிப்பார்ட்மென்டை விட்டுப் போகிறேன் என்கிறாள். அதற்கும் இன்று என்னை பீச்சுக்குக் கூட்டிக் கொண்டு வந்ததற்கும் என்னசம்பந்தம் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
டிப்பார்ட்மெண்டில் இவளின் இந்த முடிவு தெரிந்திருந்தால் அது பலராலும் பேசப்பட்டிருக்கும். நர்ஸ் மார்கரெட் எப்போதும் கலகலப்பாக எல்லோருடனும் பேசுவாள். ரகசியம் என்ற வார்த்தையின் அர்த்தம் மார்க்கரெட்டுக்குப் புரியாது.
முக்கியமாக ரவியிடம் மிகவும் அன்பாக இருப்பாள். நடுத்தர வயதுள்ள மனுஷி, மேற்கிந்திய நாடான ஜமேய்க்காவைச் சேர்ந்தவள். தன் குடும்ப விடயங்களைச் சிலவேளை ரவிக்குச் சொல்வாள்.
ரவியின் வயதில் இரு மகன்கள் இருப்பதாகச் சொன்னாள். மெலனி டிப்பார்ட்மென்டைப் பிரிந்து போவது மார்க்ரெட்டுக்குத் தெரிந்திருந்தால் இவனுக்குச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டாள். மெலனி இந்த விட யத்தை இதுவரைக்கும் யாரிடமும் சொல்லாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
“உனது பிரிவு டிப்பார்ட்மென்டில் பலபேரை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தும்', சம்பிரதாயத்திற்குச் சொல்வதுபோல் சொன்னாலும் சட் டென்று அவள் தனது பிரிவைப் பற்றிச் சொன்னது அவனுக்கு அதிர்ச்சி யாயிருந்ததை அப்பட்டமாகக் காட்டிக்கொள்ளத் தயங்கினான்.
“ஒரு சிலருக்குச் சந்தோசத்தைத் தரலாம்". அவள் இதழ்களில் ஒரு இளக்காரமான சிரிப்பு நெளிந்தது.
"அப்படிச் சொல்லாதே. எனக்குத் தெரிந்தவரையில் அங்குள்ள எல்லோரும் உனது சேவையைப் பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள். உன்னில் அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள். உனது திறமையை மதிப்பவர்களாக இருக்கிறார்கள்.'
“போதும் ரவி, உங்கள் புகழ் மாலைக்கு நன்றி. எனது மன உணர்வை மதிப்பவர்கள் யாரும் அந்த டிப்பார்ட்மெண்டில் இருப்ப தாகத் தெரியவில்லை."

Page 17
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 28
இது இன்னுமொரு அதிர்ச்சி. இவளுக்குள் ஏதோ புகைந்து கொண்டிருக்கிறது என்று சாடை யாகப் புரியத் தொடங்கியது.
தன்னை ஏனோதானோவென்று இன்றைக்குச் சனிக்கிழமை தானே பீச்சுக்கு ஒருதரம் போய் வருவோம் என்ற தோரணையில் அவள் அழைத்து வரவுமில்லை என்று தெரிந்தது.
கேட்கலாமா? இவளை அப்படி நெருக்கமாகத் தெரியாதே! "நீங்கள் ஏன் சைக்ரியாட்ரிஸ்டாக விரும்பினிர்கள்'
மெலனிபேச்சைமாற்றுவதற்காகக் கேட்கிறாளாஅல்லது உண்மை யில் இவனைப் பற்றித் தெரியத்தான் கேட்கிறாளா என்று அவனுக்குப் புரியவில்லை.
என்ன பதில் சொல்வது? இலங்கையில் நடக்கும் அரசியல் கொடு மைகளால் எத்தனையோ மனிதர் மனநோய் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவப் போகிறேன் என்று சொல்லலாமா?
"நீ ஏன் சைக்ரியாட்ரிஸ்டாக விரும்பினாய்?" ரவி திருப்பிக் கேட்டான்.
அப்போது அவர்கள் லண்டன் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பிரைட்டன் பீச்சில் அவள் குழந்தைபோல் குதூகலித்தது ஒருசில மணித்தி யாலங்களுக்கு முன் நடந்த விடயம் என்றாலும், அந்த மெலனியும் இப்போது காணும், இப்போது பேசிக் கொண்டிருக்கும் மெலனியும் வித்தியாசமான மனிதர்களாக இருந்தார்கள். மத்தியானச் சாப்பாட்டு நேரத்திற்கும் தற்போதைக்கும் உள்ள இடைவெளி நேரத்தில் இவள் எத்தனை விடயங்களைப் பேசிவிட்டாள்? ஒரு பெண்ணுக்குள் எத்தனை பெண்கள் மறைந்திருக்கிறார்கள். s
அவள் காரைநிறுத்தினாள். அந்த சுற்றாடல் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகளால் நிரம்பியிருந்தது. நிர்மலமான நீலவானம். மெல்லிய தென்றல் காற்று, தெவிட்டாத இன்பச் சூழல், ரவி ஒரு கணம் கல்முனைக்கும் அக்கரைப் பற்றுக்கும் இடையிலுள்ள கிராமப் பகுதிகளை நினைத்துக் கொண்டான்.
நீண்ட பச்சை வயல் வெளிகள், அவை நடுவில் நிழல் தரும் ஓரிரு மரங்கள், வயலை அடுத்தோடும் அருவிப் பெருக்குகள், அந்த அருவியில் மீன் பிடிக்கும் அப்பாவிக்கிராம மக்கள்.
இலங்கைக்கே பசிதீர்க்கப் போதுமான நில வயல்கள். இப்போது போராட்ட சூழ்நிலையில் சூனியமாய்ப் போய் விட்டதே. "இந்த இடம் எனது ஊரைஞாபகப்படுத்தப்பண்ணிவிட்டது”. அவன்இன்னும் அந்த

29 நாளைய மனிதர்கள்
எழில் கொஞ்சும் இயற்கைத்தாயின்மடியில்தவழும் கோதுமை, சோழம் போன்ற வயல் வெளிகளை விழித்துப் பார்த்துச் சொன்னான்.
“பிடித்த மனிதர்களை, பழகிய இடங்களை, பார்த்த உறவுகளை, பாசமுள்ள சொந்தங்களைப் பிரிந்து நாடோடியாய்த்திரிவது ரொம்பவும் மனவேதனையான விடயமென நினைக்கிறேன்.' ரவியின் கண்கள் இன்னும் அந்தப் பச்சை வெளியில் பாய்ந்து தவழ்ந்து கொண்டிருந்தது.
“மக்கள் அனாதைகள் ஆவது அரசியல் ரீதியாக மட்டுமல்ல ஆதர வான குடும்ப உறவுக்குள்ளேயே சில மனிதர்கள் அனாதையாக இருக் கிறார்கள்' மெலனி மெல்லிய குரலில் சொன்னாள்.
சட்டென்று அவனுக்குஅவன்தமக்கைசுமதியின்ஞாபகம் வந்தது. சுமதி இப்படியான வார்த்தைகளை அடிக்கடி சொல்வாள். “எனக்கேன் இந்த வாழ்க்கை?அனாதை மாதிரி அழுகிறேனே.”
ரவி ஒரு கண இடைவெளியில் உணர்ச்சி வசப்பட்டு விட்டான். சுமதியின் வாழ்க்கை போல் இவளின் வாழ்க்கையிலும் ஏதோ பிரச்சினையா? சுமதிக்கு அவள் கணவன்செந்தில் பிரச்சினைகொடுப்பது போல் மெலனிக்கும் யாரோ துன்பம் தருகிறார்களா? காலையிலிருந்து 'ஒப்' பண்ணி வைத்திருந்த மோபைல் டெலிபோனில் எத்தனை மெஸேஜ்ஜஸ் வைத்திருப்பாள் சுமதி? தமக்கையைப் பற்றி யோசிப் பதைத் தவிர்க்க “ஏன் சைக்ரியாட்ரிஸ்டாக வந்தீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் மறுமொழியில்லையே' என்று மெலனியிடம் கேட்டான்.
A
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என்னை அப்படி மாற்றிவிட்டது' மெலனி ஆறுதலாகச் சொன்னாள்.
மெலனியிருக்கும் நிலையில் அவளிடம் எதைக் கேட்டாலும் துயரான பதில்கள்தான் வரும் என்று தெரிந்தது. வாழ்க்கையின் மாற்ற மென்றுஅவள் குறிப்பிட்டது மிகவும் துயரமானதாக இருக்கலாம். பாதையோரத்தில் காரைநிறுத்திவிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எப்போதாவது இருந்துவிட்டு இவர்களைத்தாண்டி ஒடும் கார்களில் உள்ளவர்களில் ஒருசிலர்இவர்களைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றனர்.
மெலனியிடம் மேலதிகமாகஅவன்கேள்விகேட்கவிரும்பவில்லை. காலையில் ஒருவித இன்ப நெருடலுடன் தொடங்கிய பிரயாணம் இப்போது நெஞ்சை நெருடும் துயரப் பிரயாணமாகத் திசை திரும்பும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“மன்னித்து விடுங்கள். இன்றைக்குச் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டுமென்றிருந்தேன். எதிர்பாராத விதமாகச் சில விடயங்

Page 18
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 30
களைச் சொல்ல வேண்டியிருந்தது. மன்னித்துக் கொள்ளுங்கள்." மெலனி திருப்பித் திருப்பி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
நீலக் கடலலையில் கால் நனைத்துக் குதித்துச் சிரித்த மெலனிக்கும் இப்போது வயற்கரை ஓரத்தில் விரக்திக் குரலில் பேசும் மெலனிக்கும் எவ்வளவோ வித்தியாசம்.
எத்தனையோ விதத்தில் இவள் ரவியின் இரு சகோதரிகளையும் நினைவுபடுத்தினாள்.
திடமான மனமும், உறுதியான இலட்சியமும் கொண்ட சங்கீதா, அரசியல், பொருளாதார, குடும்பநிலைகளுக்காக பொருந்தாத திருமணம் செய்த சுமதி ஆகிய இருவரையும் மெலனி ஞாபகப்படுத்தினாள்.
女
பின்னேரம் மிகவும் மனோரம்மியமான சூழலில் தொடர்ந்தது. ஜேனுடன் பேசியபின் சித்திரா லண்டன் புறப்பட்டாள். சித்திரா கேம்பிரிட்ஜிலிருந்து தன் காரில் லண்டன் போய்க் கொண்டிருந்தாள். சுமதி இரண்டு தடவை போன் பண்ணிவிட்டாள். சுமதி மதியம் போன் பண்ணியபோது தன் கணவரின் கொடுமையைப் பற்றிச் சொல்லி யழுதாள். தன் குடும்பப் பிரச்சினைகளைச் சொல்லியழ யாரும் தேவை யானால் சித்திராவுக்குப் போன் பண்ணுவாள். இப்போது போன் பண்ணியபோது தாயுடன் இலங்கைக்குப் போன் பண்ணியதாகவும் தாய்க்கு உதவியாயிருந்த அவளின் மருமகப் பையனை 'இயக்கத்தினர்' வந்து போராட்டத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டதாகவும், அதனால் தாய் மிகவும் துயரத்தில் இருப்பதாகவும் சுமதி சொன்னாள்.
தன் துயர் சொல்ல தாய்க்குப் போன் பண்ண தாயோ தன் துயர் சொன்னது சுமதியைத் தாக்கியிருக்க வேண்டும். “எனக்கு ஏன் ஒன்றுக்குமேல் ஒன்றாகத் துக்கம் வருகிறது? இவன், ரவி எங்கே போய் விட்டான்? காலையிலிருந்து போன் பண்ணிக் கொண்டிருக்கிறேன்" சுமதி வெடித்தாள். தம்பி ரவி லண்டனில் தங்கும் காலத்தில் தன்னுடன் நிறைய நேரத்தைச் செலவழிக்கவில்லை என்று சுமதி குறைப்படுவாள். "இன்றைக்குச் சனிக்கிழமைதானே, ஹாஸ்பிட்டலில் கிளினிக் ஒன்று மிருந்திருக்காதுசினேகிதர்களுடன் வெளியே போயிருப்பான்."
சுமதிக்கு ஆறுதல் சொல்ல ஏதோ சொல்லி வைத்தாள் சித்திரா.
“ஆமாம், நேற்று நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து வென்றதற்காகப் பெரிய பார்ட்டி வைத்து நித்திரையைக் குழப்புகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து ரவியும் எங்கேயோ போய் விட்டானாக்கும்.' ரவி தன்னிடம் வராத கோபத்தில் சுமதி பொரிந்து தள்ளினாள்.

31 நாளைய மனிதர்கள்
"ரவிக்கு கிரிக்கட்தானே பிடிக்கும்.'சித்திரா கேட்டாள்.
“என்ன சித்திரா, ரவிக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று தெரிந்து வைத்திருக்கிறாய். 'சுமதியின் குரலில் அவளின் துக்கத்தை மறந்த கிண்டல் . சுமதி தன் துன்பம் மறந்து சொன்ன விடயம் சித்திராவுக்குத் தெரியாமலில்லை.
அதன் உள்ளர்த்தம் சித்திராவுக்கு விளங்கியது. சித்திராவும் ரவியும் உறவுமுறையினர். திருமணம் செய்து கொள்வார்கள் என்று உறவினர் களால் எதிர்பார்க்கப்படுபவர்கள்.
சித்திராவுக்கு மேலதிகமாக அந்தப் பேச்சைத் தொடர விருப்ப மில்லை. சுமதியும் குடும்பத்தில் உள்ள பெரும்பாலோர் போல உறவு களை ஒன்றுக்குள் ஒன்று புதைத்துக் கொள்வதால் எதிர்காலத்தில் அந்த உறவின் தொடர்பை நீடிக்கலாம் என்பதில் நம்பிக்கையுள்ளவள். அவளிடம் இவைபற்றித்தர்க்கம் செய்ய சித்திராவுக்குத் தேவையில்லை. சில மனிதர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். சுமதியிடமிருந்து அந்தப் பேச்சைத் திருப்பி னாள். இலங்கையில் அவர்களின் ஊரில் சுமதியின் தாய் பற்றிய அகவிசாரணை நடந்தது.
“என்னவென்று ஊரில் நிம்மதியாக இருக்க முடியும்? அமைதிப் பேச்சு, தற்காலிக சமாதானம் என்றெல்லாம் ஒரு பக்கமிருக்க அடுத்த பக்கம் போருக்கு ஆள் சேர்ப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கு." வெளிநாட்டுக்குப் போக வசதியற்ற ஏழைகளை இயக்கம் இழுத்துக் கொண்டு போகிறது. மட்டக்களப்பு ஏழைகள் செய்த பாவம் யாரும் செய்திருக்க மாட்டார்கள்'
சுமதி பெருமூச்சு விட்டாள்.
"அம்மா ஊரில் தனியாக இருக்கிறாள். நீங்கள் இருவரும் இங்கேயிருக்கிறீர்கள். அம்மாவையும் கூப்பிட்டால் என்ன?" மாமியி லுள்ள அக்கறையில் சித்திராவிசாரித்தாள்.
"நான் மாரடிப்பதை அம்மா நேரடியாகப் பார்க்க வேணுமா?” சுமதியின் குரல் அடைத்தது. ஒருசில வினாடிகளில் சுமதி திரும்பவும் சோகநிலைக்குத் தள்ளப்பட்டாள்.
"அழாதே சுமதி வார்த்தைகளால் தேற்றுவதைத்தவிர அவளால் என்ன செய்ய முடியும்?
"கொதிக்கிற உலையிலிருந்து தப்ப, எரியுற நெருப்பில விழுந்த கதைதான் பெரும்பாலான தமிழரின் கதை. வெளிநாட்டுக்கு ஓடிவந்து முழுமையான சந்தோசத்தைக் கண்டவர்கள் யார்? எத்தனைபேர் நிம்மதியாக இருக்கிறோம்? அகதி என்கிற பெயரில் வந்தவர்கள், காசு

Page 19
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 32
சேர்க்க, பட்டம், பதவிபெற, மற்றவர்களைப் புடுங்கிப் பிழைக்க என்று காத்தனை ரகமான மனிதர்கள், தமிழர்கள் பெயரைச் சொல்லிப் பிழைப் பவர்கள் எத்தனை பேர்?"
"சுமதி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆராய்ச்சிகளினாலும் அறிக்கைகளினாலும் விபரங்களைப் பார்த்தால் இங்கு வந்திருக்கும் ஆசிய நாட்டு மக்கள் படிப்பில் முன் நிற்கிறார்கள். பணம் சேர்ப்பதில் முன்நிற்கிறார்கள்'சித்திரா விளங்கப்படுத்தினாள்.
சுமதிக்குத்தன்னுடைய சூழ்நிலைக்குஅப்பால் உலகத்தைப் பார்க்க முடியாமலிருந்தது.
பின்னேர சூழ்நிலையில் கேம்பிரிட்ஜிலிருந்து லண்டனுக்குப் போய்க் கொண்டிருப்பது மனத்திற்கு இதமான ஒரு பிரயாணம்தான். ஆனால் அவள் மனம் இதமானதாக இல்லை. இந்த வாரக் கடைசியில் தாய் தகப்பனைக்கூடப் பார்க்கப் போகாமல் வேலைக் கஷ்டங்களில் மூழ்கியிருந்தவளுக்கு சுமதியின்நிலை பரிதாபத்தையுண்டாக்கியது.
★,
அத்துடன் ஜேனின் அதிர்ச்சியான எதிர்பார்ப்பு அவளை மிகவும் தர்ம சங்கடமான நிலையில் தள்ளி விட்டிருக்கிறது என்று தெரிந்தது. அசாதாரணமானஅதிர்ச்சியுடன்ஜேனைக்கண்டதும் சித்திராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “கர்ப்பம் என்று தெரிந்ததும் ஏன்இவ்வளவு அதிர்ச்சி"
முகம் வெளுத்துப்போய்நிற்கும் ஜேனைப் பார்த்து சித்திரா ஒருசில மணித்தியாலங்களுக்கு முன் கேட்ட கேள்வி ஞாபகம் வருகிறது.
ஜேன் உயர்ந்து வளர்ந்த, மெல்லிய உடலுடைய இருபத்தாறு வயதுள்ள ஆங்கிலப் பெண். சோழம் பூவின்நிறத்தில் சுருளானதலைம யிரைக் கட்டையாய் வெட்டியிருப்பாள். அளவிற்கு மீறி எதையும் "மேக்அப்' என்ற பெயரில் பூசித் தொலைக்க மாட்டாள். டேவிட் என்ற அவளுடைய சினேகி தனுடன் வாழ்கிறாள். இப்போது வயிற்றில் கர்ப்பம் ஏன் அலறிப்புடைக்கிறாள்.
ஜேனின் பார்வை வெறித்திருந்தது. படபடப்பு வார்த்தைகளில் தெரிந்தது. நீலக் கண்கள் கலங்கியிருந்தன. தலை வாரப்படாமல் கலைந் திருந்தது. "நான்இதைஎதிர்பார்க்கவில்லை.'ஜேன்முணுமுணுத்தாள்."எதை எதிர்பார்க்கவில்லை?"சித்திராவின்மனத்தில் சாடையான குழப்பம்.
“கர்ப்பத்தைத்தான். எனக்குப் பிள்ளை வரும் என்று எதிர் பார்க்க வில்லை.'சித்திராவுக்குச் சாடையாய்க் கோபம் வந்தது.
“ஜேன், நீபெண், டேவிட் ஆண். இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்துகிறீர்கள். ஆணும் பெண்ணும் ஒன்றானால் இன்னொரு உயிர்

33 நாளைய மனிதர்கள்
பிறக்கச் சந்தர்ப்பம் இருக்கும் என்று முட்டாளுக்குக் கூடத் தெரியுமே,” சித்திராவின் கிண்டலை ஜேன் புரிந்து கொண்டாள்.
"ஆமா, ஆனால் டேவிட் எப்போதும் காண்டோம் பாவிப்பிான். என்ன இழவு நடந்ததோ’ ஜேன் இப்போது எரிச்சலை வெளிப்படை யாகக் காட்டினாள். தற்செயலாக, தவறிப்போய், திட்டம் போடாமல் " கர்ப்பமாகிவிட்ட குற்ற உணர்வு குரலில் தொனித்தது.
"குடும்பக் கட்டுப்பாடு சரியாக வராததால் வந்த விபத்தில் உண் டாகிய கர்ப்பமா?’ சித்திராவுக்கு இப்போது விஷயம் தெரியத் தொடங்கியிருந்தது. நாகரீகமடைந்தநாடுகளில் இந்த விடயம் எவ்வளவு சாதாரணமாகப் பேசப்படுகிறது? இலங்கையில் இப்படிப் பேசுவார் களா? “டேவிட்டிடம் சொல்வதுதானே,' சித்திரா ஜேனுக்குக் காப்பி கொடுத்தபடி சொன்னாள். டேவிட் மிகவும் பரந்த மனம் உள்ளவன். பிரச்சினைகளை முகம் கொடுக்கத் தயங்காதவன் என்பது சித்திராவின் கணிப்பு. “டேவிட்டுக்குக் குழந்தைகள் பிடிக்காது. அதாவது நாங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்று கேள்வி கேட்பான்.”
“என்ன?'சித்திராவுக்கு இன்னுமொரு அதிர்ச்சி.
"ஆமாம், உலகமெல்லாம் பட்டினி, பசி, சூழ்நிலை அசுத்தம், யுத்தங்கள் என்று அல்லோல கல்லோலப்படும்போது இன்னொரு உயிரை இந்த உலகத்திற்குள் கொண்டுவர வேண்டுமா என்று விவாதிப் பான் டேவிட். அவனிடம் போய் இதோ பார் எங்களுக்கு ஒரு குழந்தை கிடைத்துவிட்டது என்று சொன்னால் சந்தோஷத்தில் எகிறிக் குதிப்பான் என்று தெரியவில்லை."
“தத்துவங்களும் இலட்சியங்களும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சரி. வாழ்க்கையின்நடைமுறைக்குசரிவருமா?'சித்திராஜேனைத்தேற்று வதற்காக இதைச் சொன்னாள்.
“அதைப் பரீட்சித்துப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. ஆப்பிரிக் காவில் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பசியாலும் பட்டினி யாலும் வாடுவதை நேரிற் கண்டவள் நான். உலகத்தில் 60 வீதமான குழந்தைகள் நல்ல தண்ணிர்இல்லாமல் தவிக்கிறார்கள். இதையெல்லாம் நேரடியிற் பார்த்த நான், டேவிட் எங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று சொன்னபோது அவன் சொல்வது சரி என்று ஒப்புக் கொண்டேன்.'
“இப்போது நீகர்ப்பவதி என்று சொன்னால் என்னசொல்வான்" "குழந்தையை அழித்துவிடு என்று டேவிட் சொல்லலாம்" சித்திரா சிலையாகிப் போனாள். டேவிட் அப்படிச் சொல்வானா?
★

Page 20
மாலை ஏழுமணியாயிருந்தது.
லண்டனில் இன்னும் நேற்றைய கால்பந்தாட்டத்தின் பிரதிபலிப்புத் தெரிந்தது. போனவாரம் எலிஸபெத் மகாராணியாரின்ஐம்பதாவதாண்டு முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஒரு கோடி மக்கள் பக்கிங்காம் மாளிகைச் சுற்றாடலை நிறைத்தார்கள். பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மகாராணியார், 50 வது முடிசூட்டு விழாவை மகத்தாகக் கொண்டாடி னார்கள். இந்த வாரம் உலகக் காற்பந்தாட்டப் போட்டியின் குதூகலத்தில் லண்டன், மக்கள் ஆரவாரத்திலும் அவர்கள் சாப்பிட்டு எறியும் எச்சில் களிலும் நிறைந்திருந்தது. இந்தக் குப்பைகளால் எலிகள் குவிகின்றன என்று பத்திரிகைகள் ஒலமிடுகின்றன. சித்திரா நினைத்துக் கொண்டாள்.
சுமதி இருக்குமிடத்தின் பெயர்ஆர்ஸனல், லண்டன்நடுமையத்தின் விழிம்பிலிருக்கிறது. ஆர்ஸனல் காற்பந்தாட்டக் கிளப் உலகப் பிரசித்தி பெற்றது. எப்போதும் கலகலப்பாக இருக்குமிடம் ஆர்ஸனல்.
சுமதியின் வீட்டுக்கு முன் காரை நிறுத்தியபோது அவளுக்குப் பின்னால் இன்னொரு கார் வந்துநிற்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்தாள். ஒரு ஆங்கிலப் பெண் காரோட்டிக் கொண்டிருந்தாள். அதிலிருந்து இறங்கியவன் ரவி,
“காலையிலிருந்து மோபைல் போனில் பேசிக் கொண்டிருக் கிறேன். ரவியைக் காணவில்லை. எங்கே மேயப் போய் விட்டான்' என்று சுமதி எரிச்சல் பட்டுக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.இப்போது சுமதி வீட்டுக்குசோடியாக வந்திருக்கிறான்.
“மேய்ச்சலா? சித்திராசிரித்துக் கொண்டாள்.
நல்ல தமிழ் வார்த்தைதான். அழகான சோடியுடன் சேர்ந்த மேய்ச்சல்', சித்திராதனக்குள் சிரித்துக் கொண்டாள்.
கார்ச்சத்தம் கேட்டு வெளியே வந்த சுமதி இரண்டு கார்களிலிருந்து இறங்கிவரும் ரவியையும் சித்திராவையும் மாறி மாறிப் பார்த்தாள். மெலனி காரை விட்டு இறங்கவில்லை.

35 நாளைய மனிதர்கள்
“கம் இன் மெலனி, மீட் மை ஸிஸ்டர்' ரவி மெலனியிடம் சொன்னான். காலையில் பீச்சுக்குப் போகும்போது அவள் இருந்த ‘மூட்' வேறு. இப்போது இது புதிய இடம் என்றபடியால் மெலனி தயக்கத்துடன் இறங்கி வந்தாள். சுமதியின் பார்வை மெலனியை அளவிட்டது.
"மெலனி, இது என்தமக்கை சுமதி. இது எனது மைத்துனிசித்திரா.” ரவி அறிமுகம் செய்து வைத்தான்.
“சுமதி, மெலனி என்னுடன் வேலை செய்யும் எனது மேலதிகாரி. எங்கள் டிப்பார்ட்மென்டிலிருந்து விலகிப் போகிறாள். லன்ச்சுக்குப் போய் வந்தோம். அதாவது பிரியாவிடை விருந்து'
பாதி உண்மை, பாதி பொய் என்று தெரிந்து கொண்டும் ரவி தன் தமக்கைக்கு மெலனி பற்றிச் சொன்னான்.
அதைத் தவிர வேறு எதுவும் சொல்லவும் தெரியவில்லை. சுமதி கழுத்தறுக்கும் கேள்விகளெல்லாம் கேட்பாள். சுமதி அவன் தமக்கை, அவனிடம் கேள்வி கேட்க அவளுக்கு உரிமையுண்டு. கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் உருப்படியாக இருப்பதில்லை.
சுமதியின் முகத்தில் செயற்கையான மலர்ச்சி, வந்தவர்களை வரவேற்றாள். உள்ளே அழைத்தாள். அமர்க்கைகளைக் காட்டினாள். சம்பிரதாயம் சரியாக நடந்தது.
ரவியிடம் என்ன கேள்விகள் கேட்பாள் என்று சித்திராவுக்குத் தெரியும். தனக்குள் சிரித்துக் கொண்டாள். நேற்றைய வாழ்க்கையின் தொடராக இன்றைய வாழ்க்கையை நினைப்பவள் சுமதி என்று சித்திரா வுக்குத் தெரியும். அவளது தகப்பன் ராமநாதனுக்கும் அந்த மாதிரியான சிந்தனைகள் உண்டு. உலகத்தை வேறு கோணத்தில் பார்க்கத் தெரியாதவள் சுமதி.
நேற்றுப் பார்த்த மரம் இன்னும் அதேபோலவா இருக்கிறது? நீல வானத்தின் பின்னணியில் பச்சையிலைகளை தென்றலில் உலர்த்தும் மரம் பனிக் குளிரில் நிர்வாணமாய் நிற்கும்போது இயற்கையின் தீவிரம் மனசிற்படுகிறதே, அதேபோல மனிதரும் தங்கள் சூழ்நிலைகளால், பழகும் மனிதர்களால், கிடைக்கும் பணவசதியால், அல்லது கிடைக்காத பணவசதியால் தங்கள் வாழ்க்கை அமைப்பையும், மனப் போக்கையும் வித்தியாசமான விதத்தில் நடத்த முடியும் என்பதைச் சுமதியால் விளங்க முடியாதா? சித்திராவின் சிந்தனை வழக்கம்போல் சிறகடித்தது.
சித்திராவிற்குப் போன் பண்ணி அழுததுபோல் ரவிக்கும் போன் பண்ணி அழுதிருப்பாள் என்று தெரியும். அதுதான் ரவியும் இப்போது வந்திறங்கியிருக்கிறான். சுமதியின் கணவர் செந்தில் ஒரு குடிகாரன் என்றும்தன்னைத்துன்புறுத்துவதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

Page 21
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 36
ஒரு மனிதன் குடிகாரனாக மாறுவதற்குக் காரணங்கள் என்ன? பிறந்த வீட்டுச் சூழ்நிலையா, வளர்ந்த சுற்றாடலா அல்லது தனிமனிதப் பெலவீனமா? சித்திரா இந்தக் கேள்வியைச் சுமதியிடம் கேட்க நினைத்தாள்.
சித்திராலண்டனுக்குவருகிறேன்என்று கேம்பிரிட்ஜிலிருந்து போன் பண்ணியவுடனேயே சுமதி சமைக்கத் தொடங்கி யிருந்தாள். சமையலறைக்குள் துயரத்தை மறப்பவர்களில் சுமதியும் ஒருத்தி. உலகத்து உறவுகளைவிட சமையலறைச் சட்டிபானைகளுடன் அவள் மிகவும் நெருக்கம். எல்லாத் தமிழ்ப் பெண்கள் அல்லது பெரும்பாலான தமிழ் பெண்கள் போல சுமதிக்கும் சமையல் என்றால் மிக விருப்பம். சமைத்திருந்தாள். சித்திரா வெஜிடேரியன். அவளுக்காக சுமதி நிறையச் சமைத்திருந்தாள். கத்தரிக்காய் பொரித்த குழம்பு, வாழைக்காய்ப் பொறியல், பருப்பு, வடை, பாயாசம் என்று நிறையச் சாப்பாடு. செந்திலில் உள்ள கோபத்தை மறக்கத் தன் நேரத்தைச் சமையலில் செலவழிக்கிறாள் போலும். வந்தவர்களுக்குக் காப்பி கொடுக்க குசினிப் பக்கம் போன சுமதியைத் தொடர்ந்த சித்திரா, சமைத்து வைத்திருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள். சமையல் மணம் மூக்கைத் துளைத்தது.
“பசிக்குது சுமதி.'அப்பளம் ஒன்றை எடுத்து வாயிற் போட்டபடி சித்திரா முணுமுணுத்தாள். மெலனி பற்றி சுமதி ஏதும் தாறுமாறாகப் பேசாமலிருக்க வேண்டும் என்று மனம் சொல்லிக் கொண்டது. “கொஞ்சம் பொறு. ரவிக்கு ஏதாவது செய்ய வேணும். அந்த மெலனிப் பெண்ணுக்கு என்ன பிடிக்குமோ தெரியாது’. சுமதி, மெலனிப் பெண் என்று சொன்ன விதத்தில் சுமதிக்கு அவளை அதிகம் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
"ஏய் சுமதி, சும்மா கண்ட பாட்டுக்குக் கற்பனையைப் பறக்க விடாதே. வீட்டில் சும்மா குந்தியிருந்து கொண்டு தமிழ் டெவிவிஷன் சீரியல்களைப் பார்த்து நீ மிகவும் உணர்ச்சி வசப்படப் பழகிவிட்டாய். ரவியை ஒரு வெள்ளைக்காரியுடன் பார்த்ததும் உன்ர பிரச்சினை உலகத்தில் இருந்து ஓடிப் போயிற்றோ' சித்திரா கடிந்து கொண்டாள். சுமதி தட்டுகளில் வடைகள் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“எனக்கொன்னும் கற்பனையில்ல, நல்ல பையன்களை எப்படியும் கைக்குள்ள போட எத்தனையோ பெண்பிள்ளைகள் இருப்பினம். வெள்ளைக்காரி எண்டா என்ன, எங்கடநாட்டுப் பெண்பிள்ளை எண்டா என்ன, எப்படி என்றாலும் ஒரு டொக்டரைப் பிடிக்க சந்தர்ப்பம் கிடைச்சா சும்மா விடப் போகிறோமா?” காதற் திருமணங்கள் பற்றிய சுமதி வைத்திருக்கும் அபிப்பிராயம் சித்திராவை எரிச்சல் பண்ணத் தூண்டியது. சித்திராவிற்கு சுமதியின் பேச்சு அவளின் இளவயதில் அவர்களுடனிருந்த பாட்டியை ஞாபகப்படுத்தியது.

37 நாளைய மனிதர்கள்
சுமதியின் தாயும், சித்திராவின் தகப்பனும் அந்தப் பாட்டியின் வயிற்றிலிருந்து,உணர்விலிருந்து, பரம்பரைப்பழக்கநம்பிக்கைகளிலிருந்து பிறந்தவர்கள். கமலா மாமி சிதம்பரன் என்ற கவிஞனைத் திருமணம் செய்தபின் எவ்வளவோ மாறிவிட்டாள். அவள் வித்தியாசமானவள் என்ற உள்ளுணர்வு இருந்தபடியால்தான் தங்கள் அந்தஸ்துக்கு அப்பாற்பட்ட அல்லது வித்தியாசமான மனிதனான சிதம்பரம் மாமாவைக் காதலித்தாளா?
"நீ பாட்டி மாதிரி அலட்டத் தொடங்கி விட்டாய். இறந்து போன காலத்தின் நியாயங்களையும் நம்பிக்கைகளையும் நிகழ்காலத்தின் நடைமுறைக்குத் திரும்பிவிடுகிறாய்”
சுமதி சித்திராவை ஏறிட்டுப் பார்த்தாள். இந்தச் சித்திராவும் அப்பா சிதம்பரம் மாதிரி வித்தியாசமாகப் பேசத் தெரிந்தவளோ? அப்பா மற்றவர்கள் மாதிரி சாதாரணமாக இருந்திருந்தால் ஏன் சுடுபட்டுச் செத்திருப்பார்? அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காதவன் அறிவிருந்தும் முட்டாளாக இருப்பவன் என்று அப்பா அடிக்கடி சொல்வார். இந்தச் சித்திராவுக்குக் கோபம் வரும்படி என்ன சொல்லி விட்டேன்? பாட்டி மாதிரி அலட்டாதே என்கிறாளே.
முன் ஹாலில் மெலனியும் ரவியும் ஏதோ சிரித்துப் பேசுவது கேட்டது. சுமதி சித்திராவை அர்த்தத்துடன் பார்த்தாள்,
“என்ன பார்க்கிறாய்?"சித்திராவின் கேள்வியிது. "உனது மச்சானுடன்இப்படிச்சல்லாபம் போடுகிறாளே உனக்குக் கோபம் வரவில்லையா.'
“ஏன்கோபம் வரவேண்டும்? அவள் ரவியுடன்வேலை செய்கிறாள். ஒன்றாகவேலை செய்பவர்கள் ஒற்றுமையாகஇருப்பதுநல்லதில்லையா? நான் வேலை செய்யுமிடத்தில் நான் எத்தனையோ ஆங்கில இளைஞர் களுடன் பழகுகிறேன். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"
சுமதி பதில் சொல்லவில்லை. சுமதி பின்னேரம் செய்திருந்த வடையையும் கோப்பியையும் கொண்டு வந்தாள். பார்வை மெலனியை எடைபோட்டது. சுமதிஇப்படி ஒருநாளும் எந்த இளைஞனுடனும் சுற்றவில்லை. ரவி வடையை எடுத்தபடி சொன்னான் "மாமா வீட்டில் நிறையக் கிடைச்சிருக்கும்.'
"மாமா வீட்டபோகப் பிளான் பண்ணியிருந்தாயா?"
சுமதி வழக்கறிஞர் மாதிரிக் கேட்டாள்.
"ஆமாம். ஆனால் மெலனியுடன் போக வேண்டி வந்ததால் மாமாவின் வீட்டுக்குப் போகல்ல."
அவள் ஏதும் மறுமொழிசொல்ல முதல் சித்திரா குறுக்கிட்டாள்.

Page 22
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 38
“நானும் தான், வீட்ட போகலாமோ இல்லையோ என்று யோசிச்சன். அங்க போகாமல் இஞ்ச வந்ததற்கு அப்பாவும் அம்மாவும் கோவிப்பினம்'
“ஏன் நீயும் யாருடனும் மத்தியானச்சாப்பாட்டுக்குப் போனாயா?” சுமதியின் கிண்டலிது.
“இல்லை கர்ப்பத்தை எப்படிக் கலைப்பது என்று பேசிக் கொண்டிருந்தேன்.'
“அடிப்பாவிநீ. 'சுமதி வீட்டில் மற்றவர் இருப்பதையும் மறந்து கூவினாள். எதையும் மிகவும் சீரியஸாக எடுத்தாக் குழம்பிப் போயிடும் என்பதை சுமதி மூலம் கணிக்கக் கூடியதாக இருந்தது. ரவி கடைக் கண்ணால் சித்திராவைப் பார்த்தான். மெலனி வடையிலுள்ள மிளகாய் கடிபட்ட உறைப்பில் முகம் சிவக்க இருமிக் கொண்டிருந்தாள்.
சித்திராவுக்கு சுமதி என்ன யோசிக்கிறாள் என்று சட்டென்று புரிந்தது. ‘ஏன் இவளுக்குக் கோணல் மாணலாகத்தான் யோசனை வருகிறது'சித்திரா பொறுமையுடன் சுமதியைப் பார்த்தாள்.
“சுமதி நான் என்ன வேலை செய்யிறன் என்று தெரியுமா?" சித்திராவின் குரலில் கிண்டலுக்குப் பதில் கண்டிப்பு.
“சோசியல் வேர்க்கர்’
“அதன் கருத்து என்ன?” “கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்வது.' "கெட்டிக்காரி. கண்டு பிடித்துவிட்டாயே." சித்திரா கிண்டலாகச் சிரித்தாள். “கர்ப்பத்தைக் கலைக்க யோசிக்கும் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன்.' ரவி சிரிப்பைத் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். உறைப்பு வடையால் இருமித் தள்ளும் மெலனி நீரை மடமடவென்று குடித்தாள்.
“எனக்கத் தெரிந்த ஒரு பெண்..." சித்திரா வார்த்தைகளை முடிக்க முதல் சுமதிபாய்ந்தாள்.
“பிள்ளையைக் கலைக்கப் போகிறேன் என்கிறாளா? . உம் ஒரு விதத்தில் அவள் ஏன் அப்படி நினைக்கிறாள் என்று புரிகிறது. இந்தக் கேடு கெட்ட ஆம்பிள்ளைகளை நம்பிக் குழந்தைகளை இந்த உலகத்திற்குக் கொண்டு வருவதைவிட கருவிலேயே கல்லறை கட்டுவது புண்ணி யம்தான்".

39 நாளைய மனிதர்கள்
அந்த அறையில் சட்டென்று மெளனம் குடிகொண்டது. மெலனி அந்த மெளனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள்.
“மீண்டும் சந்திப்போம். வடைக்கு நன்றி.'அவள் எழுந்தாள்.
எல்லோரும் வாசற்படி வரைக்கும் வந்தார்கள். மெளனம் சித்திரா வின் பேச்சில் தகர்ந்தது. சந்தர்ப்பம் தெரிந்து நழுவும் மெலனியின் புத்திக் கூர்மையை சித்திராதன் மனத்துள் மெச்சினாள். "உங்களைச்சந்தித்ததில் மகிழ்ச்சி’ சித்திரா உண்மையாகச் சொன்னாள். என்ன காரணம் என்று தெரியவில்லை மெலனியைச் சித்திராவுக்குப் பிடித்திருந்தது. மெலனி யின் மெளனத்தின் பின்னால் எதையும் கெதியில் அனுமானிக்கும் தன்மை புலப்பட்டது. "நானும்தான் மகிழ்ச்சி யடைகிறேன். எனது பேர்த்டேப் பார்ட்டி விரைவில் வருகிறது. நீங்கள் ஏன் ரவியுடன் வரக்கூடாது." மெலனியின் இன்விட்டேஷன் சுமதி எதிர்பார்க்காதது. ஆனால் மனதுக்குப் பிடித்திருந்தது. எதிர்பாராத சந்தோசங்களில் இது ஒன்று. சுமதி அந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். தற்செயலான சந்திப்பாகத் தொடங்கியது எப்படி முடியப் போகிறதோ என்று யோசிப்பது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“நிச்சயமாக வருவேன்' சித்திரா சந்தோசத்துடன் சொன்னாள். மெலனி போன்றவர்களின் சிநேகிதம் அருமையானது என்று தனக்குள் முணுமுணுத்தாள். மெலனிகாரில் ஏறுவதையும் பார்த்துக் கொண்டிருந்த சுமதி, அவளின் கார் மறைந்ததும் ரவியைப் பார்த்தாள். பார்வையில் கனல் எரிந்துவிடாமல் இருக்கரவிநகர்ந்து கொண்டான். சுமதியிடமிருந்து எத்தனை திட்டல்கள் வரும் என்று தனக்குள் யோசித்தான். "முழுக்க முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு என்ற பாவனையா உனக்கு?’ சுமதி மூக்குக்கும் முழங்காலுக்கும் தொடர்புபடுத்திப் பேசினாள். “செந்திலிலுள்ள ஆத்திரத்தை யாரிடமாவது கொட்டுவதாயிருந்தால் அதற்கு நானா அகப்பட்டேன்."
'யார் நனைந்தார்கள், யார் முக்காட்டை எடுத்தார்கள்' ரவி எரிச்சலுடன் கேட்டான். இவனுடைய மொபைலில் எத்தனையோதரம் மேசேஜ்ஜஸ் வைத்திருந்த சுமதி இப்போது ரவியைக் கண்டபாட்டுக்குப் பேசுவது அநாகரிகமாகப்பட்டது. இவனைக் காணாமல் தவிப்பதாக டெலிபோன் ஆன்ஸர் போனில் செய்தி வைத்திருந்தாள். "என்ன பேசுவதற்குத் தேடினாய் அக்கா, உனக்கு என்னிடம் பேசுவதற்கு ஒரு விடயமும் இல்லை என்றால் இன்னொருதரம் வர்றன்." சுமதியுடன் வீணாக வாதாடி அவளைப் புண்படுத்த அவன் விரும்பவில்லை. பாசத் துடன் கோபமும் வந்தது. அவனின் கோபம் அவளுக்கு விளங்கியது. சாந்தமாக அவனைப் பார்த்தாள். குரலைத் தணித்தபடி சொன்னாள்.

Page 23
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 40
"சாப்பிட்டிடுப்போ.'குரலில் கனிவு. தம்பியிடம் பரிவு.
“பசிக்கல்ல." அவன் எழுந்து கொண்டான். மெலனியுடன் மட்டு மல்ல சித்திரா அல்லாத எந்தப் பெண்ணுடனும் அவனைக் கண்டால் சுமதிக்குப் பிடிக்காது. “நான் லிப்ட் தர்றன்." சித்திரா தமக்கைக்கும் தம்பிக்குமிடையில் கொஞ்சம் சமாதானத்தையுண்டாக்க எத்தனித்தாள்.
அவன் இருக்குமிடம் விம்பிள்டன். அவர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்குமிடம் ஆர்ஸனல். தெற்கும் வடக்குமான பிரதேசங்கள். சித்திராவின் சமயோசிதம் ரவிக்குப் பிடித்தது. சுமதிக்குச் சந்தோசம் தரத் தன்னை ரவியுடன் பிணைக்கிறாளா? “வேண்டாம் சித்திரா, நீங்கள் எனக்காக விம்பிள்டன் வரைக்கும் அலைய வேண்டாம். சுமதிக்காக கேம்பிரிட்ஜிலிருந்து வந்ததே பெரிய விடயம்.'நன்றியுடன் கூறினான். அதே நேரம் சுமதியைத் திருப்திப்படுத்த சித்திராவைப் பயன்படுத்த அவன் விரும்பவில்லை. "எதற்கும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டுப் போங்கள்.'சித்திராவை அவன்அடிக்கடி சந்திப்பது கிடையாது. சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமுமில்லை. அவள் வேலை செய்வதும் வாழ்வதும் கேம்பிரிட்ஜில். லண்டனிலிருந்து கிட்டத்தட்ட அறுபது மைல்கள். அவன் இருப்பது லண்டனில், அப்படியிருந்தும் அவனுடைய தமக்கை யை விட அவனைக் கூடப் புரிந்து வைத்திருக்கிறாள் என்று புரிந்தது.
அமைதியுடன் உட்கார்ந்தான்.
சுமதி சாப்பாடு எடுக்க குசினிப் பக்கம் நகர்ந்ததும் சித்திரா ரவியை ஆதரவுடன்பார்த்தாள்.சுமதிக்காக உங்களிடம் மன்னிப்புக்கோருகிறேன் என்ற பார்வையது. அதன் மொழியை உள்வாங்கிக்கொண்டான் ரவி.
“மெலனியை எனக்குப் பிடித்துக் கொண்டது." சித்திரா இப்படிச் சொன்னது அவளுக்கே விந்தையாக இருந்தது.
சந்தித்த முதல் நாளே யாரையும் உடனடியாக அறிந்து கொள்ள முடியாது என்பதைத் தெரிந்தவள். ஆனாலும் மெலனியிடமிருந்த ஏதோ ஒரு அற்புத காந்த சக்தி சித்திராவைப் பற்றிக் கொண்டது. மெலனியைத் தனக்குப் பிடித்துக் கொண்டது என்று சொன்னதன் மூலம் ரவியின் செயலைத் தான் பெரிது படுத்தவில்லை என்று காட்டிக் கொண்டாள். "நல்ல பெண்மணி என்னுடைய மேலதிகாரி. இன்றுவரைக்கும் நான் அவளுடன் தனிப்பட்டமுறையில் பேசியதுமில்லை. பழகியதுமில்லை. இன்றைக்கு அவளுடன் ஒரு நாளைச் செலவழிப்பேன் என்று நினைத் திருக்கவில்லை. சீக்கிரம் வேலையை விடப் போகிறாள் என்ற விடயமே இன்றுதான் தெரிந்தது. பெரிய இழப்பு அது',
"தற்செயலாக நடக்கும் சந்திப்புகளும் மனிதர்களும் சிலவேளை எங்கள் வாழ்க்கையையே மாற்றி விடுவது தவிர்க்க முடியாதது.'

41 நாளைய மனிதர்கள்
சித்திரா சொன்னது சம்மட்டியால் அடிப்பது போல் அவன் மனத்தில் உறைத்தது. அத்தனை திடகாத்திரமாகச் சொன்னாள் அவள். மெலனியின் உறவால் யார் வாழ்க்கை மாறப் போகிறது? அந்த வசனங்களின் உண்மை அவனை மெய்சிலிர்க்கப் பண்ணியது. மறக்க வேண்டிய எத்தனையோ நினைவுகள் சட்டென்று மனதில் வந்து போயின. அவனின் தம்பிகள் அவனின் அருமைச் சகோதரி சங்கீதா எல்லோரும் ஒரே மேடையில் தோன்றி அவன் முன்னே நிற்பது போன்ற பிரமை. அவர்களுடன் அவனின் தந்தை.
சுமதி சாப்பாட்டுடன் வந்ததும் அவன் நினைவு துண்டித்தது.
ரவி ஏதோ பாட்டுக்குச் சாப்பிட்டான். சொந்த தமக்கை அன்னிய மாய்த் தெரிந்தாள். அவள் வாழ்க்கையில் அவள் இப்போது பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு மற்றவர்களிடம் உதவி கேட்கிறாள்.
'மற்றவர்கள்’ என்று குறிப்பிடும்போது சித்திராவும், ரவியும் அவளுக்கு மற்றவர்கள் அல்ல. தமயனும் மைத்துணியும்.
இன்று மெலனியைச் சந்தித்திருக்காவிட்டால் இன்று சுமதியை அவன் பார்க்க வந்ததற்கு அர்த்தம் வேறுவிதமாக இருந்திருக்கலாம். மெலனியுடன் அவனைப் பார்த்தது ஒரு தர்மசங்கடமான உணர்வை யுண்டாக்கியதை அவள் மறைத்துக் கொள்ளவுமில்லை. ஏதோ ஒரு விதத்தில் தனது சொந்தப் பிரச்சினை காரணமாக மெலனி வேலையை விட்டுப் போகிறாள். சொந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவளின் ‘சுயமை’ உதவி செய்கிறது.
தனக்குள் அமர்ந்து கிடக்கும் எத்தனையோ அரும் பெரும் உணர்வுகள், உண்மைகள், விடயங்களை நேர்மையாகப் பார்க்கும் தெளிவு என்பன பிரச்சினையான நேரத்தில் தனியே இருந்து சிந்தித்தால் அவை அந்த மனிதனுக்கு உதவி செய்யும் என்பதை மெலனி சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறாள்.
மெலனிக்கு அவள் வேலை செய்யும் டிப்பார்ட்மெண்டை மிக மிகப் பிடிக்கும். அங்கு வேலை செய்பவர்களுக்கும் அவளை மிக மிகப் பிடிக்கும்.
அப்படியான சூழ்நிலையைத் துறந்து அவள் போகிறாள் என்றால், அவள் இந்த முடிவை எடுக்க உந்திய விடயம் மிக மிக ஆழமாக இருக்க வேண்டும்.
ரவியின் சிந்தனை மெலனியின் பின்னால் தொடர்ந்தது.
“ஏன் வேலையை விட்டுப் போகிறாள். ப்ரமோஷனாஅல்லது." குரலில் மிக மிகத் தயக்கத்துடன் சித்திரா கேட்டாள்.

Page 24
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 42
“தெரியாது' ஒரு வசனத்தில் மறுமொழிசொன்னான். அவளைப் பற்றித் தயவு செய்து தொடராதே’ என்பது அந்த ஒருவசன மறு மொழியின் அர்த்தம் என்று சித்திராவுக்குப் புரிந்தது. ஆங்கிலேயர்கள் தங்களுக்குப் பிடிக்காதவற்றை யாரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந் தால் சட்டென்று முறித்துவிடுவர். ஆஹா, வந்து கொஞ்ச நாட்களில் ரவிக்கும் இந்த ஆங்கில மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சம் வரத் தொடங்கிவிட்டது என்று தெரிந்தது.
மெளனமாகச் சாப்பாட்டைப் பரிமாறினாள் சுமதி. தனக்குள்ள துன்பங்களுடன்இவ்வளவு சமையலும் செய்திருந்தது மிகவும் ஆச்சரிய மாக இருந்தது. சுமதியின் குழந்தைகள் இருவரும் அவளது கணவர் செந்திலுடன் வெளியில் போனதாகச் சொல்லிருந்தாள். மருமக்களைப் பார்ப்பதற்காகத்தான் ரவி அடிக்கடி வருவான். துடிப்பான குழந்தைகள். மாமாவில் உயிரையே வைத்திருக்கிறார்கள். “குழந்தைகள் எப்போது வருவார்கள்’?
ரவி தமக்கையைக் கேட்டான்.
எப்போது உனது கணவர் வீட்டுக்கு வருவார் என்று கேட்டுச் சுமதியின் அழுகையை ஆரம்பித்து வைக்கத் தயாராயில்லை.
சுமதியும் செந்திலும் அடிக்கடி சண்டை போடுவதும் செந்தில் தன் தமக்கை வீட்டுக்கு லெம்பிளி என்ற இடத்திற்குப் போய்க் கிழமைக் கணக்காகத் தங்குவதும் அடிக்கடி நடக்கும் விடயம் என்று அவனுக்குப் புரியத் தொடங்கிய பின், சுமதி சொல்லாத நேரங்களில் செந்திலைப் பற்றிக்கேட்பதைத் தவிர்த்திருந்தான்.
"எங்களோடு இருந்து சாப்பிடுங்களேன் சுமதி' சித்திரா எவ்வளவோ சொல்லியும் சுமதி சாப்பிடத் தயாரில்லை. குழந்தைகள் வரட்டும் என்று சொல்லிவிட்டாள். குழந்தைகளுக்காகக் காத்திருக்கிறாளா அல்லது செந்திலுக்காகக் காத்திருக் கிறாளா என்று சொல்லத் தெரியவில்லை.
"எங்கள் இருவருக்கும் போன் பண்ணிக் கூப்பிட்டாயே என்ன நடந்தது," ரவியின் குரலில் ஆதரவு. எப்படியிருந்தாலும் சுமதி அவன் தமக்கை. சொந்தம் என்று கொண்டாட உள்ள நெருக்கமான பிறவி.
“என்ன சொல்ல. கண்டபாட்டுக்குக் குடிக்கத் தொடங்கி விட்டார்.'
"செந்தில் எப்போதும் குடிப்பவர்தானே அதென்ன சட்டென்று கண்டபாட்டுக்குக் குடிக்கிறார்?"
ரவி கேட்கநினைத்ததை சித்திரா கேட்டாள்.

43 ; தாளைய மனிதர்கள்
சுமதிக்கு அவமானமும் ஆத்திரமும் ஒன்றாய் வந்தது. கோபத்தைப் பாத்திர பண்டங்களில் காட்டினாள், தேவையற்று மேசையில் உள்ள சாமான்களை அங்குமிங்கும் தூக்கி வைத்தாள்.
ரவியிடமும் சித்திராவிடமும் காலையிலிருந்து சொல்ல நினைத்த தைச் சொல்ல முடியாமல் தவிப்பது அவள் செய்கைகளில் தெரிந்தது.
ஒரு கொஞ்சநேரத்திற்கு முன் அநாவசியமாக மெலனியை அலட்சி யப்படுத்திய சுமதி இப்போது எதையோ கண்டு பயந்த குழந்தைபோல விசும்பினாள்.
“இவ்வளவு காலமும் குடித்தார். இப்போது அடிக்கத் தொடங்கி விட்டார்.”
சித்திராஇதை எதிர்பார்த்ததால் அதிகம் உணர்ச்சிவசப்படவில்லை. ரவியால் மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை.
அக்காவின் வாழ்க்கையிற் பிரச்சினையிருக்கிறது என்று தெரிந்து தான் லண்டனுக்கு வந்தான். மாமா, ரவிக்கு உதவி செய்ததற்கு ஒரு காரணமே ரவி லண்டனுக்கு வந்து எப்படியும் இந்த தம்பதிகளை ஒற்றுமையாக்க முடியும் என்ற நம்பிக்கையிற்தான்.
'தன்னிடம் பாதுகாப்பாக வந்த எந்தப் பெண்ணையும் கைநீட்டி அடிப்பவன் மனிதமற்றவன்."
தமக்கைக்காக மட்டுமல்லாமல், உலகத்தில் கணவனிடம் அடி வாங்கும் பெண்களின் வாழ்க்கைக்காகக் குமுறுவது ரவியின் குரலிற் தொனித்தது.
“எனக்கிந்த மனிசனோட வாழ முடியாது."
சுமதி உணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை வெடித்தாள். வாழ்க்கையை இன்னொரு உயிருடன்பிணைத்துக்கொண்டு அதிலிருந்து விடுபட முடியாத தவிப்பு அவள் குரலில், திடீரென்று மெளனம். "என்ன செய்யப்போகிறாய்"சித்திராஎழுந்துபோய் சுமதியின்தலையைத் தடவி விட்டாள்.
“என்ன செய்ய?அவரை விட்டுப் போட்டிருந்தா உலகம் என்ன சொல்லும்? அதைவிடத் தற்கொலை செய்யுறது நல்லது எண்டு நினைக்கிறன்.' கணவர்களுக்கப்பால் உலகம் தெரியாத பெண்களின் புலம்பல் இது!
“முட்டாள்த்தனமாகப் பேசாதே. குழந்தைகளின் கெதி என்ன? இப்படி அழுது கொண்டிருந்தால் அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை வரும் தெரியுமா'சித்திராதான் இன்னும் பேசிக் கொண்டிருந் தாள். வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

Page 25
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 44
சித்திரா போய்க் கதவைத் திறந்தாள். குழந்தைகள் சந்தோசத்துடன் வந்து மாமாவைக் கட்டிக் கொண்டார்கள். அவர்களுடன் செந்தில் வரவில்லை. அவனின் மாமாதனபாலன் வந்திருந்தார்.
செந்தில் எங்கே என்று ரவி கேட்கவில்லை. செந்தில் வந்திருந்தால் வாய்த்தர்க்கம் வந்திருக்கலாம்.
சுமதியின் பெண் குழந்தைக்கு எட்டு வயது. மற்றொன்றுக்குப் பத்து வயது. எட்டு வயது ரேணுகாமாமாஏன்அடிக்கடிதங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டாள்.
"நீங்கள் ஊருக்குத் திரும்பிப் போகப் போறதில்லைத்தானே.” நிச்சயமான குரலில் கேட்டான்சிவம். பத்துவயதுதான்.ஆனாலும் குரலில் அழுத்தமும் உறுதியும்.
அவனுக்கு மறுமொழி சொல்லாமல் “செந்தில் எங்கே?'தனபால் மாமாவிடம் கேட்டான் ரவி.
“வழக்கம்போல தமக்கை வீட்ட இருக்கிறார்.” தனபால் குரலில் அவமானம். தனது மருமகனின்நடத்தையால் இந்த மனிதர்கள் முன்னால் குற்றம் புரிந்தவன்போல் தலை குனிந்திருப்பது தாங்க முடியாதிருந்தது என்பது தெரிந்தது.
ரவி அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். சுமதியைவிட அவர் மிகவும் வருத்தப்படுகிறார் என்று தெரிந்தது.
குழந்தைகளுக்கு முன்னால் அவருடன் ஒன்றும் பேசவிரும்ப வில்லை. சுமதி குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுப்பதில் கவனமாக இருந்தாள்.
“சரி நான் போகட்டா'தனபால் எழுந்தார். “ஏதும் சாப்பிடுங்கள்'சித்திரா சொன்னாள்.
“வேண்டாம்’அவர் எழுந்து கொண்டார். ரவியும் எழுந்து கொண் டான். அந்த இடத்திலிருக்க தர்ம சங்கடப்படுகிறார் என்பது புரிந்தது. இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது.
ரவி தனபால் மாமாவைப் பின்தொடர்ந்தான். தனபால் மாமாவை ரவிக்கு நன்றாகத் தெரியும் . தனபால் மாமா ரவியின் தந்தையின் நண்பர். ஒன்றாக யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள், ஒரே மாதிரிக் கொள்கையுடையவர்கள்.
இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் ஊரைவிட்டு ஓடிய மனிதர்களில் அவரும் ஒருத்தர். நாடோடியாய் வாழும் வாழ்க்கையை மிக மிக வெறுப்பவர். அவர் குழந்தைகள், அவரின் மனைவியுடன் சென்னையிலிருக்கிறார்கள்.

45 நாளைய மனிதர்கள்
குழந்தைகளின் வாழ்க்கைக்காக அவர் மனைவி சென்னையில் வாழ்கிறார். தனபால் மாமா அடிக்கடி சென்னை போய் வருவார்.
“அவசரமாக வீட்ட போக வேணுமா?" அவருடன் ரவி பேச ஆசைப்படுகிறான் என்று அவனின் கேள்வியில் தொனித்தது.
ஆனாலும் அவர் சுமதிக்கு முன்னால் ஏதும் பேச விரும்பவில்லை. சுமதியை செந்திலுக்குத் திருமணம் செய்து வைத்ததில் அவருக்கு நிறையப் பொறுப்புண்டு.
“பக்கத்தில் ஒரு 'பப்'இருக்கிறது." ரவி சொன்னதன் அர்த்தம் புரிந்தது. இருவரும் "பப் புக்குள் நுழைந்தார்கள். சனிக்கிழமை என்றபடி யால் குடிக்குமிடம் நிரம்பியிருந்தது. போன கிழமையிலிருந்து லண் டனில் பெரும்பாலோர் மிகவும் "சந்தோசமாக இருக்கிறார்கள்.
ஆர்ஜென்டினாவை உதைப்பந்தாட்டப் போட்டியில் தோற்கடித்த தைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
தனபால் மாமாதனக்குவிஸ்கி ஓர்டர் பண்ணிக் கொண்டார். ரவி பீர் குடித்தான்.
“சுமதி மிகவும் மனமுடைந்து போயிருக்கிறாள்.' ரவி நேரடியாக பேச்சுக்கு வந்தான். “எதிர்பார்த்ததுதானே. சந்தோசமற்ற குடும்ப சீவியம்,'தனபால் மாமா ரவியைப் பார்க்காமல் முணுமுணுத்தார்.
"இலங்கையில் நடக்கிற அநியாயத்தால் எத்தனை பேரின் வாழ்க்கை பாழாகிறது,'பெருமூச்சில் விரக்தி தெறித்தது. தனபால் மாமா சுமதியின் பிரச்சினையை அரசியல் பின்னணியிற் பார்த்தார்.
“இலங்கையில் மட்டுமா உலகத்தில் எந்த மூலையை எடுத்தாலும் பிரச்சினைதானே".
ரவி பட்டும் படாமலும் சொன்னான். சுமதிக்குக் கல்யாணம் பேசி வைத்ததற்காக அவர் குற்ற உணர்வுடன் தவிப்பது தேவையில்லை என்று சொல்ல நினைத்தான்.
"இந்த நாசமாப்போகிறவர்கள் உலகத்தில் யாரைத்தான்நிம்மதியாக இருக்கவிடப் போகிறார்கள்'.
நாசமாகப் போகிறவர்கள் என்று யாரைச் சொல்கிறார்?
“யாரைச் சொல்கிறீர்கள்?’ தனபால் மாமா மிகவும் அரசியல் நாட்டம் கொண்டவர். அவர் இலங்கை அரசாங்கத்தைத் திட்டுகிறாரா

Page 26
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 46
அல்லது தமிழ் விடுதலைப் போராளிகளைத் திட்டுகிறாரா அல்லது வேறு யாரையும் திட்டுகிறாரா என்று அவனுக்குப் புரியவில்லை.
"இன்டைக்குப் பாருங்கோதம்பி, இந்த அமெரிக்கன்தங்களுக்குப் பிடிக்காத பின் லேடன் பெயரைச் சொல்லிக்கொண்டு தங்களுக்கு வால் பிடிக்காத முஸ்லீம்களையெல்லாம் தொலைத்துக்கட்டுகிறான்.இஸ்ரேலி யருக்கு உதவி செய்யற தால அப்பாவி பாலஸ்தீனச் சனம் அழியுது. பாகிஸ்தானுக்கு உதவுறதால இந்தியாவில் அணுஆயுதப் போர் வரப்போகுது.'
“அமெரிக்கர்தான் உலகப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமா?"
“அவர்கள் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, பிரச்சினைகளை
யுண்டாக்கி நாடுகளைக் குழப்புகிறார்கள், மக்களை வதைக்கிறார்கள்,
தங்களுக்குப் பிடிக்காத அப்பாவி மக்களை அநியாயமாகக் கொன்று குவிக்கிறார்கள்.”
'தீவிர வாதத்திற்கு எதிராகப் போராடுவதாக அல்லவோ சொல்கிறார்கள்.'
தனபால் மாமாவுக்கு கோபம் வந்துவிட்டது.
“யார் தீவிரவாதிகள்? பின் லேடனை வளர்த்தவர் யார்? சதாம் ஹ"சேனை வளர்த்தவர் யார்? இண்டைக்குப் பாகிஸ்தான் முஷாருப் புக்கு உதவுவது யார்? சண்டைக்கு தென் ஆப்பிரிக்கச் சர்வாதிகாரி பினேஷ”0க்கு உதவியது யார்? அப்போது வியட்நாமியரை மிருகங்கள் மாதிரி வேட்டையாடிச் சுட்டு அழித்தார்கள். இப்போது முஸ்லீம் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். குடிசை வீட்டில் வாழ்ந்து பட்டினியோடு மாரடித்த ஆப்கானிஸ்தான் ஏழைகளுக்கும், இவர்களின் எதிரி பின்லேடனுக்கும் என்ன சம்பந்தம், ஆபுகானிஸ்தான் மண் குடிசைகளைத் தவிடுபொடியாக்க கோடானுகோடி டாலர்களைச் செலவழித்துவிட்டு எதிரிகளை அழிப்பதாகச் சொல்கிறார்கள். இதுதான் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமா?”
★

4.
ரவி, மாமாவின் கோபத்தையுணர்ந்தான். மாமாவும் அப்பாவும் இப்படிப் பேசித்தான் அவன் கேட்டிருக்கிறான்.
தனபால் மாமாவும் அப்பாவும் எழுத்தாளர்கள். வியாபார எழுத் தாளர்கள் அல்லர். உலகத்தைப் பற்றி, சமுதாயக் கொடுமைகளைப் பற்றி மணிக் கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மக்கள் சிந்தனையைத் துண்டிவிட எழுதுபவர்கள். அரசியல், சமயம், என்பன வற்றின் போர்வையில் நடக்கும் அக்கிரமங்களை அவர்களால் தாங்க முடியவில்லை. 1985ல் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்கங்கள் ஒன்றை ஒன்று அழித்ததைக் காண மனம் பொறுக்காமல் அப்பாசிதம்பரம்எழுதிய கவிதைஅவர்உயிருக்குஉலைவைத்துவிட்டது.
"தமிழன் என்ற ஒட்டுமொத்த ஆத்திரத்தில் சிங்களஇனவாதம்தமிழ் மக்களை அழிக்கிறது, பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே தன் நாட்டில் வாழும் சொந்தக் குடிமக்களை மிருகம்போல் சுட்டுத்தள்ளுகிறது. அதை எதிர்ப்பதற்கு ஒன்றுபட்டுப் போராடாமல் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்கிறார்களே' அப்பா சிதம்பரத்தின் இந்த உணர்வு அவர் கவிதை களில் வெடித்தது. அந்த ஆத்மீக அழுகையின் பலன் அவர் இருதயத் தைச் குண்டு துளைத்து அவர் உயிரைக் குடித்தது. தமிழனைத் தமிழன் சமுதாயத்துரோகி என்ற பட்டம் சூட்டிச்செய்த பயங்கரக்கொலை அது. "ஐயோவாயைப் பொத்திக்கொண்டு சும்மாஇருங்கோ' கமலம் பொரு முவாள். ஐந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு இருவரின் ஆசிரிய வேலைச் சம்பளத்தில் சுமாராகச் சீவியம் பண்ணினால் போதும் அவளுக்கு. -
"தெருவில ஒடுற ஓணானப் பிடிச்சு ஏன் வேட்டிக்குள்ள வைக்கிறியள்’கமலாசத்தம் போட்டாள்.அவரின்இறப்பு சுயசிந்தனை, சுதந்திர உணர்வுடன் எழுதியவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. தனபால் மாமாஇந்தியாவுக்குப் போய்விட்டார். மேற்குநாடுகளுக்கு ஓடி வருபவர்கள் ஓடிவந்துவிட்டார்கள்.
ரவி அவரிடம் செந்தில் பற்றிப் பேசக் கூப்பிட்டான். ஆனால் அவரோ உலகக் கொடுமைகள் பற்றி ஒலம் போடுகிறார். இறக்கும்வரை

Page 27
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 48
சமுதாய, அரசியல் சிந்தனையுள்ள மனிதர்களில் தனபால் மாமாவும் ஒருத்தர் என்பது அவன் அபிப்பிராயம்.தனபால் மாமாஇன்னொருதரம் விஸ்கி ஒடர் பண்ணுவதைப் பார்த்து ரவி பயந்துவிட்டான்.
"மாமா போதும்,'அவன், அவர்இரண்டாவதுதடவையாக விஸ்கி ஒடர் பண்ணுவதைத் தடுத்தான்.
““Eff வெளிக்கிடுவோமா' இந்த இளைஞன் தன்னையும் ஒரு வெறிகாரன் என்று நினைக்கக்கூடாது என்ற தவிப்பு மனதில் இருந்ததை அவர் குரல் காட்டியது. "வாழ்க்கையில் எப்போதும் ஒரு வரைபாடும், நிதானமும் தேவை'அவர் சிரித்தார்.
அவர் வாழ்க்கையில் எத்தனையோ மேடுபள்ளங்களைத் தாண்டி வந்தவர். கொலைகளை நேரில் பார்த்தவர். அரசியல் கொடுமைகளுக்கு முகம் கொடுத்தவர்.
அவனோ வாழவேண்டிய வயதில் தகப்பனையிழந்து வாடியவன். இலட்சியமும் எதிர்கால நம்பிக்கைகளும் கொண்ட இரு தம்பிகளை முறையே இலங்கை ராணுவத்திடமும், இந்திய ராணுவத்திடமும், மிகவும் ஆசையாக, அருமையாக வளர்க்கப் பட்ட தங்கை சங்கீதாவை தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் தாரை வார்த்தவன். அனுபவங்கள் ஒரு மனிதனை அறிஞனாக்கும் என்றால் அந்த வரைவிலக்கணம் ரவீந்திர னுக்குப் பொருந்தும் என்று தனபாலுக்குத் தெரியும்.
'நீ மிகவும் உறுதியானவன். இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைவிலக்கணத்தோடு வாழ்கிறாய். லண்டன் ஆடம்பரம் உன்னைப் பாதிக்கவில்லை. சுமதியைப் பார்க்கும்போது ஒருவிதத்தில் பாவமும், ஒரு விதத்தில் ஆத்திரமும் வருகிறது. அவளால் குடும்பம் என்ற போர் வைக்குள் நடக்கும் பல விடயங்களைத் தாங்க முடியாமலிருக்கிறது. பப்பை விட்டு வெளியேறி வரும்போது தனபால் சொன்னார்.
தனது சினேகிதனின் மகள் சுமதி என்பதைவிடத் தனது மருமகன் செந்திலின் மனைவி என்ற உரிமை அவர் குரலில் தொனித்தது. வாழ்க்கையில் நிதானம் தேவை என்று பேசியவர் சுமதியின் நிலையை எப்படிப்பார்க்கிறார்? ரவிசண்டைக்குப் போகத் தயாரில்லை. “ஏன் என் தமக்கையில் பிழை சொல்கிறீர்கள்' என்று அவன் ஆர்ப்பரிக்கத் தயாரில்லை. தனபால் திட்டம் போட்டு யாரையும் வருத்த மாட்டார் என்று தெரியும்.
அவனை, ராமநாதன் மாமா இலங்கையில் படிப்பிக்கவும் இப்போது லண்டனுக்கு வரவும் எவ்வளவோ உதவிகள் செய்திருக் கிறார். அதன் பின்னணியின் விளக்கங்கள் அவனுக்கு சாடையாகத் தெரியும். முழுமையும் விளங்கிக் கொள்ளும் அவசியமில்லை, அவசரமுமில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பம் வரும்போதும் ஒவ்வொரு

49 தாளைய மனிதர்கள்
விடயமும் தன்பாட்டுக்கு வெளியில் வரும், அது உலக நியதியும் கூட என்பது அவனுக்குத் தெரியும்.
“சுமதியும் செந்திலும் சாதாரணதம்பதிகள். சாதாரண ஆசைகளால், எதிர்பார்ப்புக்களால் வாழ்க்கையை நிறைத்துக்கொள்ளப் பார்ப்பவர்கள். அதில் தடங்கல்கள் வந்தால் ஒருத்தரை ஒருத்தர் வருத்திக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்'மாமாதத்துவம் பேசினார்.
நடந்துபோன தனபால் சட்டென்று நின்றார். ‘பப்பைக் கடந்து கொஞ்சத் தூரம் வந்திருந்தபடியால் ரோட்டில் அதிக சனநடமாட்ட மில்லை. இரவின் நிசப்தம் தர்மத்தின் மறுபகுதியாய்ப் பயமுறுத்தியது. ஒரு கார் இவர்களைத் தாண்டிக் கொண்டு போனது.
"உன்னைவிட வயதில் மூத்த தம்பதிகள் அவர்கள். ஆனால் பெரியோர்கள் பக்கத்தில் இருந்து புத்திசொல்லாததாலோ என்னவோ வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டு மாரடிக்கிறார்கள். அதனால் குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படப் போகிறது என்று பயப்படுகிறேன்.'
தனபால் உருக்கத்துடன் சொன்னார். உணர்ச்சிவசப்பட்ட அவரின் கண்களில் நீர் துளித்ததை நிலவு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
"மாமா. உங்களைக் கண்டபோது அப்பாவைக்காணும் சந்தோசம் இருக்கிறது. நேர்மைக்கும் நீதிக்கும் குரல் கொடுக்கும் உங்கள் மாதிரிப் பேர்வழிகளின் தலைமுறை அழிந்துவிட்டதோ என்று யோசிச்சேன். ராமநாதன் மாமா, சுமதியின் சந்தோசமற்ற வாழ்க்கையைப் பற்றி அம்மாவுக்கு எழுதவில்லை. சுமதியும் ஒன்றும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பாள் என்று நான் நம்பவில்லை. ராமநாதன் மாமா, நீங்க என்னை லண்டனுக்கு வர உதவி செய்ததன் பின்னால் எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும், அதில் ஒன்று சுமதி வாழ்க்கையை ஏதோ ஒருவிதத்தில் சரிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நான் ஒரு மேஜிக்கும் செய்ய முடியாது. நான்மந்திரவாதி யில்லை. புத்திமதி சொல்லலாம். ஒன்றாய் வாழுபவர்கள் அவர்கள். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். நான் மூன்றாம் Guiallyf.'
ரவியின் குரல் திடமாக இருந்தது. சுமதியின் தம்பி என்ற ஸ்தானத்தி லிருந்து அப்பால் நின்று பேசுவதுபோலிருந்தது.
'தம்பி என்ற முறையில் தமக்கைக்காகச் சண்டை பிடிப்பாயோ என்று யோசித்தன். உனது அப்பாவின் குணங்களில் பல உனக்கிருக் கிறது, உனது தகப்பன்தான்நினைத்ததைச்சாதித்தவன். நீயும் உனக்குப் பிடித்த விடயங்களில் மட்டும் தலையிடுறாய்."

Page 28
ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியம் 50
இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். கார் அருகே வரும்வரை தனபால் பேசிக்கொண்டே வந்தார். சில விடயங்கள் அரசியல் சம்பந்த மாக இருந்தது. ஆனால் ஒழிவு மறைவாகச் சொல்லும் விடயங்கள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. தனபால் மாமா போன்றோர் இலங்கையில் இருந்தால் இவர்களுக்கு ஆபத்து வருவது நிச்சயம். அதுபற்றிஅவரிடம் கேட்கமுதல் வீடு வந்துவிட்டது. சித்திராஇவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.
தனபால் மாமா இன்னும் புறப்படவில்லை என்று தெரிந்ததும் காப்பி சாப்பிடச் சொன்னாள். அவர் நடையிலிருந்து அவர் நிறையக் குடித்திருக்கிறார் என்பது வெளிப்பட்டது. காப்பியின் பெயரைக் கேட்டதும் "அதுவும் நல்லதுதான்”அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சித்திராவும் சுமதியும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். அவருடன் அளவளாவிக் கொண்டு சென்ற ரவி ஏன் திடீ ரென்று மெளனமாகிவிட்டான் என்று தெரியாமல் அவள் குழம்பினாள். தனபால் மாமா அப்படி என்ன சொல்லியிருப்பார்? ஏன் ரவி மெளனமாக இருக்கிறான்? சித்திரா தனக்குள் யோசித்தாள். சுமதி குழந்தைகளைப் படுக்கையிற் போட மேல் மாடிக்குப் போய்விட்டாள்.
மாமா தனபால் புறப்பட்டதும் சித்திரா ரவியைக் கேள்விக் குறியுடன்நிமிர்ந்து பார்த்தாள். செந்திலைப் பற்றி தனபால் மாமா என்ன சொன்னார் என்று கேட்கும் பார்வையது, அவன் இவளுடன் மேலதிகமாகப் பேசப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனின் செய்கையை அவள் புரிந்து கொண்டாள்.
“சரி நான் புறப்படுகிறேன்”சித்திரா வெளிக்கிட்டாள்.
சுமதி கீழே வந்தாள். முகம் சோர்ந்திருந்தது. இன்னுமொரு தரம் அழுதிருக்கிறாள் போலும். “இனி இந்த நேரத்தில் வீட்ட போக யோசிக் காத, இங்கேயே நிற்கலாம்.'சுமதி சொன்னது அவனுக்குக் கேட்டதோ என்னவோ அவன் மறுமொழிசொல்லவில்லை.
“சொல்றது கேட்குதா?" சுமதி தம்பியருகில் வந்தாள். அவன் தோள்களில் பாசத்துடன் கை வைத்தாள்.
“வேண்டாம் நான் போய்விட்டு வாறன்'.
வெளியில் கும் மிருட்டுகளை அகற்ற லண்டன் வெளிச்சங்கள் போட்டி போட்டன. காரில் சித்திரா இருந்தாள். இவன் வருகைக்கு காத்திருந்தாள். “ஸ்ரேஸன் வரைக்கும் லிப்ட் தரலாம்,' சித்திரா சொன்னாள். இந்த நேரத்தில் தனிமையாகச் செல்வது அந்தப் பிராந்தியத தில் மிகவும் அபாயமான விடயம். அவன் மறுமொழிசொல்லாமல் ஏறிக்கொண்டான்.

51 நாளைய மனிதர்கள்
கார் ஹைபரி இஸ்லிங்டன் ஸ்ரேசனில் நின்றது. குடிக்கும் நேரம் முடிவடைந்ததால் பட்டாளம் பட்டாளமாகப் பல ‘குடிமகன்கள் பப்புகளுக்குள்ளால் வந்து கொண்டிருந்தார்கள். சந்தோசம் தேடிசாராயத் தவறனை தேடும் கூட்டம்.
பாட்டுப் பாடுபவர்கள் சிலர், பாதையில் இடறி விழுபவர் சிலர், டாக்சிக்காககாத்திருப்பவர்பலர். கையோடு கைகோர்த்துமுத்தமிடுவோர் இன்னும் சிலர். இளைஞர்கள், இளைஞகள், கிழவர்கள் என்ற பேதமின்றி 'பப்' நிறைத்த மக்கள் "மகிழ்ச்சியுடன்’ வந்து கொண்டிருந்தார்கள்.
அண்டர் கிரவுண்ட் ரெயினை நோக்கிப் பலர் போய்க் கொண் டிருந்தனர். சித்திரா அவனைக் காரால் இறக்காமல் காரை ஸ்ராட் பண்ணினாள்.
“என்ன யோசிக்கிறாய் சித்திரா?"உயிரற்ற குரலிற் கேட்டான் ரவி. வீதி விளக்குகள் கண்சிமிட்டின. அவன் மனம் எங்கேயோ இருந்தது.
“உங்களை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போறன்.”
அவள் குரலில் தாய்மை கனிந்த பரிவு.
அவன்சண்டைபிடிக்கவில்லை. மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவள் ஒருதரம் இவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்ன தனபால் மாமா மெளன மாத்ரை தந்தாரா என்ன? வாய் திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.'
“ஏதோ பாட்டுக்கு எதையாவது பேச மனமில்லை". அவன் முணு முணுத்தான். செந்திலை நேரே கண்டால் மென்னியைத் திருகவேண்டும் என்று கோபம் வந்தது. நள்ளிரவில் கார் வடக்கு லண்டனிலிருந்து தெற்கு லண்டனுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆங்காங்கே சனக்கூட்டம் வழிந்தது. பெரும்பாலும்பப்'முடிந்து வரும் மனிதர்களாகஇருந்தார்கள்.
சித்திரா ரேடியோவில் உலகச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் ஒருவித பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை.
பெரிய மாடிக் கட்டிடங்களைத் தாண்டி கார் விம்பிள்டனை நோக்கிஓடிக் கொண்டிருந்தது.
ரவியின் மோபைல் டெலிபோன்கிணுகினுத்தது. “இப்போதுதான் சுமதி வீட்டிலிருந்து வருகிறேன். இன்னொரு தரம் போன் பண்ணு கிறாளா,'அவன் சிந்தித்தபடி "ஹலோ" சொன்னான்.
“ஹலோ மெலனி பேசறன்”
அவன்முகத்தில் சட்டென்று ஒரு வித்தியாசம்.

Page 29
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 52
“இப்போதுதான்சுமதிவீட்டிலிருந்துபோய்க்கொண்டிருக்கிறோம்."
தான் தனிமையாயில்லை என்பதை அழுத்திச் சொன்னான். மெலனியுடன் பேசும் மனநிலையில் அவன் இல்லை.
“ஸாரி, உங்களைக் குழப்பியதற்கு மன்னிக்கவும்'அவள் குரலில் உண்மையான மன்னிப்பு. அதை அவன் உணர்ந்தான். மீண்டும் அமைதி.
கடந்து செல்லும் இரவுக் காட்சிகளில் கண்களைப் பதித்தவன் போலிருந்தாலும் அவன் சிந்தனை எங்கோ சிக்குப் பட்டுக் கொண்டிருக் கிறது என்று சித்திராவுக்குப் புரிந்தது.
இரவு எத்தனையோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்தபடி நீண்டு கொண்டிருந்தது. சித்திரா ரேடியோவில் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ரேடியோவில் நேயர்கள் அரங்கம் நடந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்தில் தனக்கு நேர்ந்த துன்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கணவர் தொடக்கம், கணவரின் குடும் பத்தினர் யாவரும் தன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினர் என்று அந்த இந்தியப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"தன்னில் உண்மையான அன்புதன் மனைவி வைத்திருக்கிறாளா என்பதை நிரூபிக்கவும் தன் மனைவிகற்புவதியா என்பதை நிரூபிக்கவும் ஒரு கணவர்தன் பெண் சாதியை நெருப்பில் இறங்கச் சொன்னாராம்.'
ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த சித்திரா ரவீந்திரனுக்குச் சொன்னாள்.
“செந்தில் போல் மனிதர்கள் உலகத்திலுள்ள வரைக்கும் இப்படி எத்தனையோ பெண்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள்." பெருமூச் சுடன் சொன்னான்ரவி. செந்தில் பற்றிய பேச்சை எடுத்தால் தேவையற்ற பல விடயங்கள் வெளிவரும் என்பது அவனுக்குத் தெரியும்.
சித்திரா அவன் ஆத்திரத்தைப் புரிந்து கொண்டாள். அவன் இவ்வளவு நேரமும் மெளனமாய் இருந்ததற்குக் காரணம் இப்போது விளங்கியது. தன் தமக்கையின் வாழ்க்கை எப்படி அவனைத் துன்பப் படுத்துகிறது என்பதை உணர்ந்தாள். அவன் சுமதியையும் செந்தி லையும் பற்றியா யோசித்துக் கொண்டிருக்கிறான்?
“உங்கள் வீட்டு விலாசத்தை இன்னொருதரம் சொல் லுங்கள்." அவன் வீட்டுக்கு அவள் இதுவரைக்கும் வந்ததில்லை. சித்திரா காரின் வேகத்தைக் குறைத்தாள். அவனைத்திரும்பிப் பார்த்தாள். அவன்முகம்

53 V நாளைய மனிதர்கள்
சோர்ந்து போயிருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டு விலாசத்தைச் சொன்னான்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் இருக்கும் வீட்டின் முன்னால் சித்திராவின் கார் வந்து நின்றது. மத்தியதர மக்கள் வாழும் வசதியான இடம். அவன் ஒரு டாக்டர். அவன் காரைவிட்டு இறங்கினான்; வீட்டை நோக்கினான். அவள் இறங்கவில்லை. அவன் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் என் வீட்டு வாசற்படி மிதிக்க விருப்பமில்லையா?”அவன் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
"அது உங்கள் வீடல்ல, வாடகை வீடு.'சித்திரா குறும்புத்தனமாகச் சொன்னாள்.
'வாடகை வீட்டிலும் ஒரு கோப்பி குடிக்கலாமே.' அவன் அழைப்பு விடுத்தான்."சித்திரா, இந்த நேரத்தில் திரும்பிப் போக வேண்டாம். இங்கே நின்றுவிட்டுக்காலையில் போகலாம்.'சித்திராவிற்கு அது சொல்வதுபோல் படவில்லை; உத்தர விடுவதாக ஒலித்தது. அவளது மைத்துனன் அவன். உத்தரவிட உரிமையுள்ளவன்.
ஒரு கொஞ்ச நேரம் சித்திரா இவனது கட்டளைக்கு அடிபணிவதா இல்லையா என்று யோசிப்பது தெரிந்தது.
“சித்திரா, நீ இந்த நேரத்தில் சுமதி வீட்டுக்குப் போனால் அவளுடையதும் குழந்தைகளினதும் நித்திரை குழம்பும், நாங்கள் இருவரும் சுமதி வீட்டுக்குப் போய் என்ன பண்ணிவிட்டோம்?"
அவள் வாயடைத்துப் போய் நின்றாள்.
சுமதியின்டெலிபோன்அழுகையைக் கேட்டுப்பரிதவித்து ஆறுதல் சொல்ல வந்தவளுக்கு சுமதியின்தமயனே இப்படி ஏனோதானோ என்று பேசுவது புரியவில்லை.
சுமதி வீட்டுக்குப் போகாவிட்டால் தாய் தகப்பன் வீட்டுக்குப் போகவேணடும். இந்த நேரத்தில் முடியாத காரியம் அது. சித்திரா காரில் இருந்தபடியே யோசித்தாள். அவன் இன்னும் இவள் பதிலுக்குக் காத்திருந்தான். "நான் ஒன்றும் உன்னைச் சாப்பிட மாட்டேனர்.'அவன் பாதிக் குறும்புடன் பாதி எரிச்சலுடன் சொல்லிவிட்டு நகர்ந்தான். கதவு திறந்திருந்தது. அவன் இவளது வருகைக்குக்காத்துக் கொண்டு நின்றான்.
கார்க்கதவைச் சாத்திவிட்டு அவள் உள்ளே போனாள். காலையில் மெலனியுடன் தொடங்கியநாளை சித்திராவுடன்முடிக்கப்போகிறானா?

Page 30
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 54
"பிரம்மசாரிகளின் வீட்டில் தங்கிப் பழக்கமில்லை." சித்திரா குறும்புடன் சொன்னாள்.
அவளின் கிண்டலுக்கு அவன் செவிசாய்த்தானோதெரியாது. பதில் பேசாமல் முன்ஹாலுக்குள் போனான்.
சைக்ரியாட்ரிஸ்ட் புத்தகங்கள் மேசையெல்லாம் பரப்பிக்கிடந்தன. திரும்பிய இடமெல்லாம் புத்தகங்கள். ரவிநிறைய வாசிப்பான்போலும்.
"தனியாகவாஇருக்கிறீர்கள்?"
சித்திரா ஹாலின் நாலாப்பக்கமும் பார்வையைச் சுழட்டியபடி கேட்டாள்.
"இல்லை, இன்னுமொரு டாக்டர். இந்தியாவைச் சேர்ந்தவர். அவரும் மேற்படிப்புக்காக வந்திருக்கிறார். லண்டன் பார்க்க ஒரு சொந்தக்காரனுடன் போய்விட்டார். அவர்அறையில் நான்படுக்கிறேன். என்னுடைய அறையை நீபாவிக்கலாம்.'
பதிலுக்கு எதிர்பாராமல் அவன் போய்விட்டான். இரண்டு அறைகள் மேல் மாடியில் இருக்க வேண்டும். கீழே ஒரு ஹால். வழக்கம்போல் கிச்சன், என்று அமைந்திருந்தது.
மேல்மாடிக்குப் போனவன் கொஞ்ச நேரம் வரவில்லை. அவன் தன் அறையை ஒழுங்கு செய்கிறான் போலும் சித்திரா தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் அவன் கீழே வந்தான். லுங்கி மாத்தியிருந்தான். வித்தியாசமாகத் தெரிந்தான்.
"இந்தா சித்திரா, எனது லுங்கியும் சேர்ட்டும். இங்க நைட்ரெசும் றெஸிங்கவுனும் கிடைக்காது."அவள், அவன் கொடுத்த உடுப்புக்களை வாங்கிக் கொண்டாள். லுங்கியும் சேர்ட்டும்! அவன் கிச்சனுக்குப் போய் காப்பியோ ஏதோ தயாரித்தான். இந்த சந்திப்பையும் அவனின் அழைப் பையும் உபசாரத்தையும் எதிர்பார்த்தா அவள் வந்தாளா?
“எனக்கொன்னும் வேண்டாம்.'சித்திராஹாலில் இருந்தபடிசத்தம் போட்டாள்.
"குட்நைட்,'அவன்இவளைத்திரும்பிப் பார்க்காமல் சொன்னான். உத்தியோக தோரணையான 'குட்நைட்'!
அவன் ஏதோ தயாரித்துக் கொண்டு மேலே போனான்.
'திறந்திருக்கும் அறை என்னுடையது. காலையில் பேசிக் கொள்ளுவோம். நான் மிகவும் களைத்திருக்கிறேன்".

55 தாளைய மனிதர்கள்
அவன் போய்விட்டான். இவளுடன் உட்கார்ந்திருந்து ஏதும் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். கொஞ்சநேரம் ஹாலில் உட்காரந்திருந்தாள் சித்திரா. தனியாக உட்கார்ந்து தன் சுற்றாடலை இன்னொருதரம் நோட்டம் விட்டாள். ரவி அவளின் மைத்துனன். அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று உறவினர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவளை இப்போது அவனின் பிளாட்டில் கண்டால் என்னமாதிரிப் பேசிக் கொள்வார்கள்? சித்திராவின் தகப்பன் ராமநாதன், ரவியை லண்டனுக்கு மேற்படிப்புக்கு அழைத்த காரணமே இதுதானோ என்று அவள் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
ரவி என்னவென்றால் உலகத்தைப் பற்றி எந்த அக்கறையு மில்லாமல் அவளைத் தன் அறையில் தங்கப் பண்ண வைத்துப் போய்விட்டான். அவனின் செய்கை மிக மிக வித்தியாசமாக இருந்தது. உலகம் மிக மிகநிசப்தமாக இருந்தது. கார்களின் ஒசையும் நின்றுவிட்டது.
மாடிப்படியில் ஏறும்போது ஏதோதன் வாழ்க்கையில் மாற்றங்கள் இருப்பதை ஒவ்வொரு படியும் உறுத்திச் சொல்வது போலிருந்தது. இவன் எனது மைத்துனன். எனது எதிர்காலத்தில் அக்கறையுள்ளவன். அந்த மாற்றங்களைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.
அவன் அறை திறந்திருந்தது. ஒரு ஆணின் அறை. பிரமச்சாரியின் கட்டில்! இதுவரைக்கும் அவள் எந்த இளைஞனின் அறையிலும் இப்படிப் போகவில்லை. அறையை நோட்டம் விட்டாள். நிறைய புத்தகங்கள். நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்த உடுப்புகள். மேசையில் அவனின் குடும்பத்துப் படம். அவனின்தந்தை உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட படம் போலும். ஐந்து குழந்தைகள். தாய் தகப்பனுடன் எடுத்த ஒரு குடும்பப் படம். மாமி கமலாவின் முகத்தில் எவ்வளவோ சந்தோசம்.
சித்திராவின் கண்களில் நீர் வந்தது. அந்த அருமையான குடும்பத்தில்தான் எத்தனை மாற்றங்கள்?
‘மாமி கமலா, ரவி, சுமதியைத் தவிர மற்ற நால்வரும் அநியாயமாக இந்த உலகத்திலிருந்து போய்விட்டார்களே!"
சங்கீதாவிற்கு அப்போது ஏழு வயது. எட்டு வருடங்களின் பின் அவளும் சிறகு முளைத்த பறவையாப் பறந்து போய் என்ன கண்டு விட்டாள்?
ரவியின் கட்டிலில் உட்கார்ந்தாள்.
பதின்நான்கு வயது சங்கீதா ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு போராளியாகப் போய்விட்டதை மாமி சொல்லிக் கத்தியபோது சித்திரா வீட்டிலிருந்தாள்.

Page 31
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 56
அப்போது, அப்பா ராமநாதன் தன் தங்கையின் கதறலைத் தாங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை மறைக்க எத்தனையோ பாடுபட்டார்.
"அண்ணாஎனக்கேன்இந்த விதி. புருஷனையிழந்தேன். அநியாய மாணஇந்தியன்ஆர்மியாழ்ப்பாணத்திற்குப் படிக்கப்போனளன்அருமை மகன் அழகேசனைக் கொன்றது. பாடசாலைக்குப் போன என் அழகு மகன் கண்ணன் இலங்கை ராணுவத்தால் கொண்டு போகப்பட்டான். இப்போது இவளும் போய்விட்டாளே' பெற்ற மனம் வெடிக்க கமலா கதறினாள்.
அப்போதும் கூடத் திலகவதி "எங்கள் சொல்லை நம்பி நாங்கள் சொன்ன யாரையும் செய்திருந்தால் இந்தக் கதி வந்திருக்காதே’ என்று பல்லவி பாடினாள்.
திலகவதியின் உலகம் வித்தியாசமானது.
83 ம் ஆண்டில் இலங்கைத் தமிழர்களில் பலர் இனப் படுகொலைக்குத்தப்பி உலகின் நாலா பக்கங்களுக்கும் ஓடியபோது திலகவதியும் லண்டனுக்கு வந்தாள்.
லண்டனில் வாழ முடியாது என்று மறுத்தவள் மனம் மாறி டாக்டர் ராமநாதனையும் கூட்டிக் கொண்டு வந்தாள். அவர்கள் குடும்பம் குடிபெயர டாக்டர் ராமநாதனை விட திலகவதிதான் மிகவும் அக்கறை எடுத்தாள்.
'எனது மகளின் வாழ்வு இலங்கையிலிருந்தால் பாழாகிப் போகும் 'தன் மகள் சித்திராவைக் காரணம் காட்டிப் பிரயாணத்தைத் தொடங்கினாள்.
சித்திரா இன்னும் தூங்கவில்லை.
தூங்க முடியவில்லை. நித்திராதேவியை எத்தனையோநினைவுகள் விரட்டி விட்டன. இன்று தொடர்ந்து கொண்டு போகும் நிகழ்ச்சிகளால் பழைய, புதிய நினைவுகள் அலை மோதின. ஜேன் ஞாபகம் வந்தாள்.
தான் விரும்பும் மனிதனுக்காக தன்னுள் வளரும் உயிரை என்ன பண்ணுவது என்று தவிக்கும் ஜேன்.
சுமதி ஞாபகம் வந்தாள். தான் கைப்பிடித்த கணவனுக்காக வாழ்க்கையெல்லாம் கஷ்டப்படும் சுமதி.
தன்னுடைய மகள் என்பதால் தன் அபிலாஷைகளைச் சித்திராவில் திணிக்கும் திலகவதி. சித்திரா பெருமூச்சு விட்டாள்.
மெலனி ஞாபகம் வந்தாள். ரவியின் வாழ்க்கையில் அவள் பங்கு என்ன?

57 நாளைய மனிதர்கள்
தகப்பனை நினைத்துக் கொண்டாள்.
டாக்டர் ராமநாதன் தன் மகளின் சந்தோசத்தில் நிறைவைக் காண்பவர். அவள் யூனிவர்சிட்டியில் படிக்கும்போது ஒரு மகளுக்குத் தேவையான புத்திமதிகள் எல்லாம் சொல்லியனுப்பினார்.
தனது படிப்பு முடிந்ததும் தனக்குக்கல்யாணம் பேசுவார்கள் என்று தெரியும். யூனிவர்சிட்டியில் அவள் காதல் மலர்ந்தது. இளம் பெண்ணின் மனதில் இன்னொரு உலகம் உதித்தது. தன்னுடன் படித்த இந்திய மாணவன் நாராயணன் பற்றிச் சொன்னாள். அவள் சொன்னவிதத்தைத் தகப்பன் புரிந்து கொண்டார். அம்மாதலையைச் சொறிந்தாள்.
"உனது சந்தோசம் எனது சந்தோசம்.' பெரும்பாலான தமிழ்த் தகப்பன்கள் போலில்லாமல் அவர் தன் மகள் யாரைச் செய்தாலும் சந்தோசமாயிருந்தால் போதும் என்று நினைப்பவர். அதிலும் தன் மகள் ஒரு இந்தியத் தமிழனை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் மிகவும் சந்தோசப்பட்டார்.
இந்தியா திரும்பிய நாராயணன் தன் தாய் தகப்பன் தனக்கு கல்யாணம் நிச்சயம் செய்து விட்டார்கள் என்று எழுதியபோது அந்த ஏமாற்றம், ஆத்திரம், அழுகை முடியச் சில காலம் எடுத்தது.
பழைய ஞாபகங்கள் இப்போது ரவியின் அறையை எட்டிப் பார்த்தது. சித்திரா லுங்கியை மாற்றிக் கொண்டாள். ரவியின் சேர்ட்டை மாட்டிக் கொண்டாள்.
கண்ணாடியிற் தன்னைப் பார்த்தாள். சிரிப்பு வந்தது. தன்னை இந்தக் கோலத்தில் தன் இனிய நண்பன் ஜோர்ஜ் சந்தித்தால் என்ன நினைப்பான் என்று யோசித்தாள். ஜோர்ஜ் பற்றி நினைத்ததும் நினைவு இனித்தது. கண்களை மூடிக் கொண்டாள். கற்பனையில் ஜோர்ஜ் சிரித்தான்.
★

Page 32
5
திலகவதிக்குத் தோசை செய்ய விருப்பம். அதுவும் பக்கத்து வீட்டு கரலைன் திலகவதியின் தோசையில் ஆசைப்படும்போது திலகவதியால் தோசை செய்யாமலிருக்க முடியவில்லை.
நேற்று ரவியும், சித்திராவும் வருவார்கள் என்று எதிர்பார்த்து அவள் செய்த சமையல் நிறைய இருப்பதால் இன்று சமைக்கத் தேவையில்லை.
டாக்டர் ராமநாதன் இரவு மிகவும் நேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்தார். சித்திரா நேற்று வராததை அவர் பெரிது படுத்தவில்லை என் றாலும் அது அவர் மனதைச் சாடையாக வருத்தியிருக்கும் என்று தெரியும்.
சித்திரா தனது நண்பன் ஜோர்ஜ் என்பவனை இரண்டு மூன்று தரம் வீட்டுக்குக்கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். வேலை விடயமாக அவன் அமெரிக்காவுக்குப் போய்விட்டதாகச் சொன்னாள்.
ஜோர்ஜைத் தன் சினேகிதன் என்று அறிமுகப்படுத்தியதால் தாயும் தகப்பனும் அதிகப்படியாகக் கேட்கவில்லை.
சித்திரா - நாராயணன் உறவு மலர்ந்தபோது அவர்கள் நாராயணன் ஒரு இலங்கைத் தமிழன் இல்லையே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் தங்கள் மகள் ஒரு ஆங்கிலேயனைக் கூட்டிக் கொண்டு திரியவில்லை என்று சந்தோசப் பட்டார்கள்.
அந்த உறவு சட்டென்று உடைந்தவுடன், அந்த உறவைப் பற்றித் தெரிந்த சொந்தக்கார இலங்கைத் தமிழர்கள் சித்திராவைப் பற்றிப்பேசிய விடயங்களையும் திலகவதி கேள்விப் பட்டிருக்கிறாள்.
சித்திராவுக்கு இப்போது இருபத்தெட்டு வயது. அவள் திருமணம் செய்து "செற்றில்’ ஆகவேண்டும் என்று ஒரு தாய் எதிர்பார்ப்பதில் ஒரு தவறுமில்லை என்றும் திலகவதிக்குத் தெரியும்.
உனது மகள் வெள்ளைக்காரனைச் செய்தால் என்ன செய்வாய் என்று யாரும் கேட்டால், “எனது மகள் அப்படிச் செய்வாள் என்று

59 நாளைய மனிதர்கள்
நம்பல்ல' என்று வெளிப்படையாகச் சொன்னாலும் மனத்துக்குள் சித்திரா - ஜோர்ஜ் பற்றிய சிந்தனை படர்ந்து கொண்டேயிருந்தது.
நேற்று நடந்த கூட்டத்தில் நடந்த சம்பாஷணைகளை நினைவு படுத்தியபடி ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையுடன்அமர்ந்திருந்தார் டாக்டர் ராமநாதன்.
பாகிஸ்தான் இந்திய யுத்த ஆயத்தங்கள் பற்றி லண்டன் 'டைம்ஸ்’ எழுதியிருந்த கட்டுரையைப் படிக்கும்போது சித்திராவின் நண்பன்' நாராயணனை நினைத்துக் கொண்டார். நாராயணனின் தொடர்பு அறுந்தவுடன் மகள் பட்டதுயரை அவர் அறிவார்.
அவன் தன் மகளின் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கா விட்டால் சித்திரா எப்படியிருப்பாள் என்று அவரால் யோசிக்க முடியாது. லண்ட னில் வளர்ந்தவள். சுயசிந்தனைக்கு முன்னிடம் கொடுப்பவள். தாய் தகப்பனிடம் எதையும் மறைக்காதவள். நாராயணனை ஒரு பரந்த மனமுள்ள, கெளரவமான தமிழனாக நினைத்தவள். சமுதாய சிந்தனை யுள்ளவள். 'டாக்டராக வரலாமே லாயராக வரலாமே,' என்ற பட்டியலை திலகவதி தொடங்கியபோது "என்னைநானாக - சித்திராவாக இருக்க விடுங்கள்,' என்று சொன்னவள். அவளுக்கு அப்போது வயது பதினாறு. நேற்றைய தத்துவங்களிலுள்ள பெண்ணடிமைத்தனத்தைக் கேள்வி கேட்கும் இன்றைய பெண் அவள். பதினாறு வயதுப் பெண்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களாகவே நிச்சயிப்பார்கள் என்று தெரிந்து கொண்டபோது திலகவதிக்குத் தன் மகளின் எதிர்காலம் பற்றி எத்தனை யோ யோசனைகள் வந்தன. •
'இங்கிலாந்தில் குழந்தைகளை வளர்த்துவிட்டு இலங்கையில் வாழ்வதுபோல் வாழ எதிர்பார்க்கக் கூடாது." டாக்டர் ராமநாதன் மகள் பக்கம் சேர்ந்து சொன்னதையும் திலகவதியால் கிரகிக்க முடியவில்லை.
ஒரே ஒரு மகள். உள்ள நகை, நட்டு, சீதனம் எல்லா வற்றையும்
மகளுக்குக் கொடுத்து ஆசைப்பட நினைத்த திலகவதிக்குச் சித்திராவின் நகையில் ஆசையில்லாத்தன்மை இன்னும் பெருமூச்சுக்களைத் தந்தன.
நாராயணனை'அவள் விரும்பியபோது எப்படியும் என்மகள் மற்ற தமிழ்ப் பெண்களைப் போல் வாழ்வாள் என்று மலர்ந்த நம்பிக்கை, நாராயணனின் தொடர்பு அறுந்தபோது அவளுக்கு இன்னும் தலை யிடியை உண்டாக்கியது.
ஏன் நாராயணன் ஏமாற்றினான்?
இந்தக் கேள்வியை அவள் மகளிடம் கேட்கவில்லை. கேட்கத் தயாராகவுமில்லை.

Page 33
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 60
ஒரு கொஞ்ச காலம் துயரமாயிருந்த சித்திரா தன் பணிகளில் ஈடு பட்டுப் பழைய வாழ்க்கையை மறந்துவிட்டபோது டாக்டர் ராமநாதன் சொன்னார், "என் மகள் நேற்றைய நினைவுகளில் தன்னையழித்துக் கொள்ளப்போவதில்லை. நாளைய எதிர்பார்ப்புகள் நன்மையாயிருக்கும் என்பதை நம்புகிறாள்,' என்றார். நாளைய மனிதர்களில் ஒருத்தியாய் சித்திராவை அவர் எதிர்பார்த்தார். திலகவதியின் பிரார்த்தனை தன் ஒரே ஒரு மகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதே.
'இவளுக்காகத்தானே நாட்டை விட்டு ஓடிவந்தோம். இப்போது இவளே தன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறேன் என்கிறாள். தாய் தகப்பன் சொல்லைக் கேட்டுக் குழந்தைகள் வாழ்ந்த காலம் இனிவராதா?”
திலகவதியின்இப்படியான கேள்விகள் ஒவ்வொரு தாயும் கேட்கும் சாதாரண கேள்விகள். ராமநாதன் தன் மனைவியின் பழங்கால வழக்கமான கேள்வியைக் கேட்டுச் சிரித்தார். காதலிப்பதும் கைவிட்டுச் செல்வதும் அவள் குடும்பத்தில் கேள்விப்பட்டிராத விடயங்கள். கொழும்பில் கறுலாக்காட்டைச்சேர்ந்ததனவந்தரின்மகள் அவள். பெரிய இடத்தில் படித்த மாப்பிள்ளையை விலை பேசி முடிப்பதில் ஒரு பிரச்சினையும் படாத குடும்பம் அவளுடையது. முப்பது வருடங்களில் உலகம் எப்படி மாறிவிட்டது என்று யோசித்தாள் திலகவதி.
தோசை சுட்டபடி தன் வாழ்க்கையை எடை போட்டாள். இலங் கையில் இனப்பிரச்சினை வராமலிருந்தால் சித்திராவின் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்ற யோசித்தாள்.
தன் மகளை வஞ்சித்த நாராயணனில் கோபம் வந்தது. ஆத்திரத்தில் சாபம் போட்டுத் தீர்த்தாள். அழுகை வந்தது. நேற்று சித்திராவரவில்லை. ஜோர்ஜ் அமெரிக்காபோய்விட்டான். அவனை இவள் விரும்புகிறாளா? ராமநாதன் எட்டிப் பார்த்தார்.
தோசைக்குச் சட்னி செய்ய வெங்காயம் வெட்டியதால் அவள் கண்கள் கலங்கியிருக்கிறதா அல்லது ஏதோ யோசனையில் கண்கள் கலங்குகிறதா என்று அவர் சிந்திக்கத் தேவையில்லை. சித்திராவுக்காகத் திலகவதி அழுகிறாள் என்று அவருக்குத் தெரியும்.
வெளியில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. வந்தவர்கள் கதவைத் தட்டினார்கள்.
திலகவதி இன்னும் சமையலறையில். ராமநாதன் வந்து கதவைத் திறந்தார்.
சித்திராவையும் ரவீந்திரனையும் ஒன்றாகக் கண்ட அதிர்ச்சியைச் சட்டென்று மறைத்துக்கொண்டார். திலகவதிதன் மகளைத் தன்மருமகன் ரவியுடன் ஒரேயடியாகக் கண்டால் என்ன சொல் வாள்? “வட் ஏ

51 நாளைய மனிதர்கள்
சேர்பிரைஸ்?" என்றார். குரலில் மகிழ்ச்சி. அவரின்டேப்பிலிருந்து அலை பாயுதே கண்ணாவை ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். 'அம்மா எங்கே’’ என்ற சித்திராவின் குரல் கேட்டு திலகவதி வெளியே வந்தாள்.
ரவியையும் சித்திராவையும் ஒரேயடியாகக் கண்டு ராமநாதன் திடுக்கிட்டது போல் அவளும் திடுக்கிட்டாள்.
இருவரையும் நேற்று எதிர்பார்த்தாள். அவர்கள் வரவில்லை. இன்று வந்தார்கள் ஒன்றாக. அழுவதா சிரிப்பதா? திலகவதி திகைத்துப் போனாள். அடுப்பில் தோசை எரிந்து மணத்தது. அலைபாயுதே இசையுடன் அவள் செய்கை தாளம் போட்டது. திலகா குழந்தைபோல் துள்ளிஓடினாள். அவளின் மகிழ்ச்சிஅவள் நடத்தையில் பிரதிபலித்தது. "நேற்று எதிர்பார்த்தோம்,'ராமநாதன் சொன்னார்.
இரண்டு மூன்று மாதமாக ரவியை அவர் காணவில்லை. அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். மேற்படிப்புக்கு வந்தவன் நிறையப் படிக்கிறான் போலும்.
"நேற்று சுமதி வீட்டுக்குப் போயிருந்தோம்" சித்திரா சொன்னாள். "இரவு சுமதி வீட்டில் தங்கினாயா'தாயின் விசாரிப்பு இது.
'இல்லை ரவியின் வீட்டில் நின்றேன்" சித்திரா தாயின் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னாள்.
இன்னுமொரு அதிர்ச்சி. . . தாயும் தகப்பனும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். ரவிக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்ததும் புரியாததுமாக சித்திராவைப் பார்த்தான்.
அவர்களைப் புரிந்துகொண்ட சித்திரா ரவியைக் குறும்புடன் பார்த்தாள்.
அவள் ரவி வீட்டில் தங்கி நின்றிருந்த விஷயத்தைத் தாய் தகப்பனுக்குச் சொல் ல வேண்டிய அவசியமில்லை. வேண்டு மென்றே சொல்லி அவர்களின் அதிர்ச்சியைப் பார்த்து அவள் மனம் மகிழ்கிறாள் என்று தெரிந்தது.
ரவியின் மனம் இன்னும் சுமதியின் வாழ்க்கையைச் சுற்றிக் கொண்டிருந்ததால் அவளின் குறும்புத்தனத்தை ரசிக்கும் ‘மூட்டில்' இல்லை. மாமாவிடம் சுமதியின் நிலை பற்றிப் பேசலாமா என்ற யோசனை அவன் மனத்தை வாட்டியது.
"தோசை சுடச் சுடச் சாப்பிட்டால் ருசியாயிருக்கும். 'திலகா உற்சாகத்துடன் சொன்னாள்.

Page 34
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 62
சித்திரா கொல் என்று சிரித்தாள். நீண்ட நேரம் சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய்?'திலகா புரியாமல் விழித்தாள்.
“சூடாகச் சாப்பிட்டால் தோசை ருசியாயிருக்கும் என்று எனது சின்ன வயசில இருந்து சொல்லி வருகிறாய் அம்மா. இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தோசை பற்றிச் சொல்வாய்'. திலகாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது டெலிபோன்கால் வந்தது.
சுமதி பேசினாள். தன் மகள் இரவெல்லாம் வாந்தி எடுத்ததாகவும் மாமாவிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்றும் சொன்னாள்.
"உன் தம்பியும் இஞ்சதான் இருக்கார்.'
ரவிசுமதியுடன் பேசினான். குழந்தையின்நிலை பற்றிக்கேட்டான். என்ன செய்ய வேண்டும் என்று சொன்னான். தேவையானால் போன் பண்ணச் சொன்னான்.
“ஊரில் அம்மா எப்படி?”
மாமா தனது தங்கை கமலா பற்றி - ரவியின் தாய் கமலா பற்றிக் கேட்டார்.
"அரசியல் பிரச்சினைகள் இன்னும் மக்கள் வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. அம்மாவுக்குத் துணையாக இருந்த பையனை இயக்கம் கூட்டிக் கொண்டு போய்விட்டதாம்.' இலங்கை அரசியலில் எத்தனையோகோணங்களில் அடிபட்டவன் அவன், அவன் குரலில் ஆத்திரம். மாமா மெளனமாக இருந்தார். பின்னர் சொன்னார் “புரிந்துணர்ந்த சமாதான நிலை இருக்கும்போதும் போருக்கு ஆட்கள் சேர்ப்பது நடக்கிறதா?”
"மாமா, இலங்கை அரசியல் பற்றிநன்றாகத் தெரிந்த நீங்களே இந்தச் ‘சமாதானம்' என்ற பேச்சை நம்புவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது' ரவியின் குரலில் தொனித்த அவநம்பிக்கையை அவர் உணர்ந்தார். "சமாதானம் வராது என்று நினைக்கிறாயா?' ராமநாதனின் குரலில் ஆர்வம். மருமகனின் பேச்சில் உண்மை தேடினார். "மாமா இலங்கைத் தமிழர்களை ஒடுக்குவதில் எப்போதும் முன்நின்றவர்கள் யு.என்.பி. கட்சிக்காரர்கள். தமிழருக்கெதிராக ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை செய்து சிங்கள மக்களின் இனவெறியைத் தூண்டியது ஞாபகமில்லையா?
போர் என்றால் போர் என்று, 83 ம் ஆண்டு சிங்கள அரசு இயந் திரத்தின் எல்லாச் சக்திகளையும் அப்பாவித் தமிழர்களுக் கெதிராகப் பாவித்தவர்கள் யு.என்.பி.காரர். விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டவர்கள் இவர்கள். இவர்களை நம்பி

63 தாளைய மனிதர்கள்
சமாதானத்தை எதிர்பார்ப்பதா?' ரவியின் பேச்சில் அனுபவம் நெருடிய துன்பம்.
மாமா பெருமூச்சு விட்டார்.
"இப்போது எந்த அரசாங்கம் வந்தாலும் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சைத் தொடங்கி நாட்டில் அமைதியை நிலைநாட்டு வோம், பொருளாதார திட்டங்களை முன் எடுப்போம் என்றுதான் சொல்கின்றன. சந்திரிகாவும் அதே வார்த்தைகளை வைத்துத்தான் பதவிக்கு வந்தார். ரணில் விக்கிரமசிங்காவும் அதே சுலோகங்களைத்தான் பாவிக்கிறார், “சிங்களப் பொதுமக்களை எமாற்றுவதற்கானநாடகம்இது'
“எத்தன காலந்தான்ஏமாற்றுவார்கள்'மாமா படித்தவர். ஆனாலும் அவர் குரல் பரிதாபமாக இருந்தது.
"மாமா உலகத்தில் எந்தப் போராட்டமும் தொடர்ந்து நடந்ததில்லை. இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இது இப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினையாக மட்டுமல்லாமல்உலகப்பிரச்சினையாகக்கருதப்படுகிறது."
"அப்படியிருக்கத்தானே வேணும். எழுபத்தியாறு நாடுகளில் தமிழர் நாடோடிகளாக இருக்கிறார்கள். ஆயினும் மேற்கத்திய நாடுகள் அகதிகளை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அப்படியிருக்கும் போது இது ஒரு உலகப் பிரச்சினையாக மாறியதில் என்ன சந்தேகம்’ மாமா ரவியிடம் கேட்டார்.
“பொலிட்டிக்ஸ் கிடக்கட்டும், தோசை சாப்பிடுங்கோ'திலகவதி தன் சமையல்உலகத்திற்கு மாமாவையும் மருமகனையும் இழுத்தாள்.
சித்திராவை ரவியுடன் சந்தித்த சந்தோசம் திலகவதியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
★
கேம்பிரிட்ஜ் நகரம் மழையில் நனைந்து சோர்ந்து போய்க் கிடந்தது.
ஜேனின் முகத்தில் கலவரம். சித்திரா தன் பக்கத்து வீட்டுச் சினேகிதியைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
"ஆண்களுக்காக ஏன் எங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது?" ஜேனின் குரல் அவள் முகத்தில் தேங்கியிருந்த சோகம் போற் தொனித்தது.
“பெண்களின் முட்டாள்தனம்,'சித்திராஜேனுக்குப்பிடித்த வடை செய்து கொண்டிருந்தாள்.

Page 35
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 64
கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம். ஜேன் தனது கர்ப்பம் பற்றி டேவிட்டிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆனிமாதக் கடைசிப் பகுதியில் ஆங்கிலேயர்கள் வருடாந்தரம் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மனம் பதித்திருந்தார்கள். டேவிட்தனது அரசியல் விடயங்களில் மும்முரமாக இருந்தான். இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் ஒரு சமரசத்தையுண்டாக்க பிரிட்டிஷ், அமெரிக்கராஜதந்திரிகள் அடிக்கடி பிரயாணத்தை மேற்கொண்டிருந்தனர்.
டேவிட் மிகவும் அரசியல் அவதானி. ஜேன் போலவே அவனும் அகில உலகப் 'பிரச்சினைகளில் தன்னையிடுபடுத்திக் கொண்டவன். கேம்பிரிட்ஜ் நகரப் பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறான்.
பாகிஸ்தானும் இந்தியாவும் போரைத்தடுத்துக்கொள்ளவேண்டும் என்று போதனை செய்துகொண்டே பிரிட்டிஷ் அரசாங்கம் அதிவிசேட மானபோர்ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பது பற்றி டேவிட் எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் தன் கர்ப்பம் பற்றிய விடயத்தை எடுக்கத் தயங்கினாள் ஜேன். ஜேன் சித்திராவுடன் பேசிக் கொண்டிருக் கும்போது டேவிட்வந்து சேர்ந்தான். ஜேனைஅணைத்து முத்தமிட்டபடி “ஹலோசித்திரா" என்றான்.
அவர்களின் அந்நியோன்னியம் சித்திராவின் மனதைத் தொட்டது. இருவரும் சில வருடங்களாக ஒன்றாக வாழ்கிறார்கள். தங்களுக்குக் குழந்தைபிறக்கத் தேவையில்லை என்று முடிவுசெய்து கொண்டவர்கள்.
இப்போது ஜேன் கர்ப்பமாயிருப்பது அவனுக்குத் தெரிந்தால் அவனது நடவடிக்கைகள் என்னவாயிருக்கும் என்று தெரியாததால் ஜேன் தனது யோசனைகளையும் துன்பங் களையும் சித்திராவுடன் பகிர்ந்து கொள்கிறாள். மனதில் ஜேனின் கர்ப்பம் பல பிரச்சினைகளைக் காட்டியது. செயற்கை முறைப்படி பிரசவத்தை யுண்டாக்கியபோது ஏற்பட்ட தவறுதலான மாற்றத்தால் ஆங்கிலேயத் தம்பதியர் இரட்டை யான இரு கறுப்புப் பிள்ளைகளைப் பெற்றது பற்றிபத்திரிகை, ரேடியோ எல்லாம் பிரசுரித்ததைப் பற்றிடெலிவிஷனில் ஒருத்தர் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
பிரசவம் பற்றிய நிகழ்ச்சி என்றபடியால் ஜேன் தர்ம சங்கடத்துடன் சித்திராவைப் பார்த்தாள், டேவிட் சித்திராவின் உளுந்து வடையை ருசித்துக் கொண்டிருந்தான்.
“இந்தியச் சமையல்கள் பெண்களைச் சமையலறைகளில் சிறைப் படுத்தி வைக்கின்றன. 'டேவிட்சித்திராவைப் பார்த்துச் சொன்னான்.
"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

65 நாளைய மனிதர்கள்
“எங்களுக்குப்பிடித்தசான்ட்டிச்சைசெய்து சாப்பிடஒருசில நிமிடம் எடுக்கும். வடை செய்ய மணித்தியாலங்கள் எடுக்கிறாயே.'டேவிட்டின் முகம் வடையில் சேர்த்திருந்த உறைப்பால் சிவந்தது. அவனுக்கு உறைப்புச்சாப்பாடுபிடிக்கும். “பிடித்தவர்களுக்குச்சமையல் செய்வதில் எனக்கு ஒன்றும் கஷ்டம் கிடையாது," சித்திரா சிரித்தாள். "சமையல் செய்யும் பெண்கள் அடிமைகள் அல்ல, சமையல் ஒரு கலை," அவள் தொடர்ந்தாள். "ஜோர்ஜ் கொடுத்து வைத்தவன்.' டேவிட் கண்சிமிட்டி யபடி சொன்னான். ஜோர்ஜ் பெயரைக் கேட்டதும் சித்திராவின் கன்னம் சிவந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜேன், டேவிட் இருவரின் மூலந்தான் சித்திரா ஜோர்ஜை சந்தித்தாள். டேவிட்டின் நண்பன் ஜோர்ஜ். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமொன்றில் கொம்பியூட்டர்புரோக்கிராமராக வேலை செய்கிறான். வேலை விடயமாகச் சில மாதங்கள் அமெரிக்கா போய் விட்டான். ஒரு சில மாதங்கள் அவனைக் காணாது அவனைபத்து இருபது வருடங்கள் பிரிந்தது போலிருக்கிறது. “ஜோர்ஜ் எப்போ வருகிறான்?'சித்திராவின் முகத்தைப் பார்த்தபடி டேவிட் கேட்டான்.
“தெரியாது. இன்னும் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி வரும் என்று சொன்னான்'. சித்திரா எப்படி மறைத்தாலும் ஜோர்ஜைப் பிரிந்த தாபம் கண்களில் நிழல் காட்டியது. "ஜோர்ஜைப் பிரிந்திருப்பதில் கஷ்டப்படுகிறாய் என்று தெரிகிறது.'ஜேன்சித்திராவை உற்றுப் பார்த்தபடி சொன்னாள்.
ஜோர்ஜின் பிரிவு அவளை எப்படி வாட்டுகிறது என்று அப்பட்ட மாகத் தெரிந்தது. சித்திரா எப்போதும் ஜோர்ஜைத் தனது சினேகிதன் என்று சொல்வாளே தவிர காதலன் என்று சொன்னது கிடையாது. காதல் பற்றிய தத்துவங்களில் அவள் அக்கறைப்பட வில்லை. சித்திரா பதில் சொல்ல முதல் ஜேனுக்கு வாந்தி வந்துவிட்டது.
ஒடிப்போய் பெரிய சத்தத்துடன் வாந்தி எடுத்தாள். டேவிட்பதறிப் போய்விட்டான். "ஜேன் என்ன நடந்தது. ஏதும் சுகமில்லையா?" டேவிட் ஜேனைத் தாங்கிக் கொண்டான்.
வாந்தி எடுத்த தொந்தரவில் ஜேன்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள். முகம் வெளுத்திருந்தது. மயங்கிவிடுவாள் போலிருந்தது. டேவிட்டின் அணைப்பில் துவண்டு கிடந்தாள்,
“ஜேன் டார்லிங் என்ன நடந்தது?"
டேவிட் பதறினான்.இருவரையும் அந்தநிலையில் பார்க்கும்போது ஒருத்தரில் ஒருத்தர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. சித்திராஜேனைப் பார்த்தாள். இப்போதாவது உன் விடயத்தை டேவிட்டிடம் சொல்லப் போகிறாயா இல்லையா என்ற பார்வை.

Page 36
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 66
ஜேனுக்கு இப்போது வராத தைரியம் இனி ஒருநாளும் வராது. சித்திரா தனக்குள் முணுமுணுத்தாள். டேவிட் ஜேனை இறுக அணைத்துக் கொண்டான். தலையைத் தடவி விட்டான். முத்தமிட்டான். ஜேன்அழத் தொடங்கிவிட்டாள். சொல்ல வந்த விடயத்தை எப்படிச் சொல்வது என்று புரியாத அழுகையது.
*YA
“டேவிட்." ஜேன் விசும்பினாள். என்ன சொல்லப் போகிறாய் என்பதுபோல் டேவிட் நிமிர்ந்து பார்த்தான். சொல் லித் தொலையேன் என்பதுபோல் சித்திரா ஜேனைப் பார்த்தாள்.
“டேவிட். டேவிட்" ஜேன் இன்னும் தயங்கினாள். "சித்திரா, ஜேன் ஏன் இப்படியிருக்கிறாள்?" டேவிட்அழாக்குறையாக் கேட்டான். சித்திராபொறுமை கடந்தாள். "குழந்தை பிறக்கும் தாய் வேறு எப்படி இருப்பாளாம்." சித்திராதனது வார்த்தைகளை ஆறுதலாகத் தவழவிட்டாள். “வாட்' டேவிட் பேயைக் கண்டு அலறியதுபோல் அலறினான். சித்திராவுக்குச் சிரிப்பு வந்தது.
“டேவிட், உங்களுக்கு அழகான ஒரு பாப்பாபிறக்கப் போகிறது." சித்திரா நிதானமாகச் சொன்னாள்.
ஜேன் இன்னும் வாய் திறக்கவில்லை.
டேவிட் மெளனமாக ஜேனைப் பார்த்தான். சித்திரா சொல்வது உண்மைதானா என்ற கேள்வி நிறைந்த பார்வையது. ‘என்னை மன்னித்துவிடு' ஜேன் விசும்பினாள். இப்படிச் சொன்ன ஜேனைப் பார்த்து எரிச்சல் பட்டாள் சித்திரா. சித்திராவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
ஏழ்மை காரணமாக இந்தியாவில் எத்தனையோ பெண் குழந்தை களைக் கொன்று தொலைக்கிறார்கள். வரதட்சணை பெரிய பிரச்சினை அங்கு. இங்கு என்ன பிரச்சினை? உலகத்திலேயே பெரிய பணக்கார நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் பிள்ளை பெற ஏன் இத்தனை யோசனை?
"அப்படி எல்லாம் சொல்லாதே ஜேன்.'
வாய்தான் அப்படிச் சொல்லியதே தவிர டேவிட்டின் மனம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது என்பது அவன் பார்வையில் தெரிந்தது. திடீரென்று அவன் தான் ஒரு தந்தையாகி விட்டான் என்ற

67 நாளைய மனிதர்கள்
அதிர்ச்சியில் பேதலித்து விட்டான். இருவருக்கும் கிட்டத்தட்ட சித்திரா வின் வயது. நல்ல உத்தியோகத்திலிருக்கிறார்கள். ஏன் பிள்ளை பெற்றெடுக்கத் தயங்குகிறார்கள் என்று சித்திராவுக்குக் குழப்பமாக இருந்தது. டேவிட்டைப் பார்க்க ஒருவிதத்தில் ஆச்சரியமாகவும் ஒரு விதத்தில் ஆத்திரமாகவுமிருந்தது.
சமூக சேவைகளுக்காகத் தாங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்வ தில்லை என்று சொன்னது சரி. ஆனால் இப்போது தற்செயலாகப் பிள்ளை வந்துவிட்டது. டேவிட் என்ன செய்யப் போகிறான்?
உலகத்தில் பெரும்பாலானஆண்களேசுயநலவாதிகளா? செந்தில், டேவிட், நாராயணன் எல்லோருமே சுயநலவாதிகளா?
★

Page 37
6
ரவிக்கு சுமதியின் கணவன் செந்திலைப் பார்க்கப் பிடிக்கா விட்டாலும் சுமதியின் வாழ்க்கையைச் சீராக்க செந்திலைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. செந்திலைப் போய்ப் பார்ப்பதை ஒத்திப் போட்டுக் கொண்டு வருகிறான் ரவி.
வாழ்க்கையில் மிகவும் சோர்ந்துபோன உணர்வு வந்தது. யாரிட மாவது மனம் விட்டுப் பேசவேண்டும் போலிருந்தது.
மெலனி இன்னும் சில வாரங்களில் வார்ட்டைவிட்டுப் போகிறாள் என்பது மிகவும் துக்ககரமான விஷயமாகப்பட்டது. லண்டனில் அவளைத் தவிர யாரும் நெருங்கியவர்களாகத் தெரியவில்லை. இலங்கை யிலிருந்து வந்தபோது மிகவும் உதவியாயிருந்தாள்.அவளின்இடத்திற்கு எந்த மேலதிகாரி வருவாரோ தெரியாது.
போதாக்குறைக்கு மாமா இவனிடம் அடிக்கடி போன் பண்ணி இலங்கைக்கு ஏன் திரும்பிப் போக வேண்டும் என்று கேட்கிறார்.
அதன் உள்ளர்த்தம் அவனுக்குத் தெரியும். சித்திராவையும் ரவியையும் ஒன்றாகப் பார்த்த நாளிலிருந்து மாமாவின் பேச்சிலும் போக்கிலும் மிகவும் வித்தியாசம்.
அப்படி அவர் எதிர்பார்த்தால் என்னசொல்வது? என்னசெய்வது? அவனை லண்டனுக்கு வரவழைத்ததன் உள் அர்த்தமே இதுதானா? அவர் அவனின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறையானவர். அம்மா பாவம். ஊரில் தனியாக வாழ்கிறாள். ஐந்து குழந்தைகளைப் பெற்றவள் இன்று யாருமற்ற அனாதையாக இருக்கிறாள். இவன் சிலவேளை லண்டனில் தங்கிவிடுவானோ என்ற பயம் அவளுக்குண்டு.
“லண்டனுக்குப் போக எத்தனையோ லெட்சங்கள் செலவழித்து எப்படியெல்லாமோ போகிறார்கள். நீ மேற்படிப்புக்காப் போகிறாய். டாக்டர்மார்களுக்கு அங்கே நல்ல எதிர்காலமிருக்கும். நின்று விடப் போகிறாயா?" இப்படி அம்மா கேட்டபோது, நின்றுவிடாதே மகனே என்று கெஞ்சுவது போலிருந்தது.

69 நாளைய மனிதர்கள்
சுமதி கல்யாணமாகி லண்டன் போன கால கட்டத்தில் "அம்மா சுமதிக்கும் வசதியாயிருக்கும். உங்களுக்கும் யாருமில்லை. நான் கொழும்பில் இருக்கிறேன். நீங்கள் லண்டன் போனால் என்ன'
ரவி இப்படிக் கேட்டபோது அவள் இவனை விரக்தியாகப் பார்த் தாள். பெருமூச்சு விட்டாள். வாழ்க்கையில் அடிபட்ட அவள் உடலும் உள்ளமும் மிகப் பெலவீனமானது. இவனைக் கடந்துபோய் வீட்டு வராந்தாவில் நின்று உலகத்தைப் பார்த்தாள்.
மட்டக்களப்பு வாவியை அண்டியது அவர்களின் வீடு. சிதம்பரம் மாஸ்டர்மிகவும் கஷ்டப்பட்டு குருவிசேர்ப்பது போல் பணம் சேகரித்துக் கட்டிய வீடு அது. மெல்லியநீரலைகள் தென்னைமரத்தின்அடிவாரத்தில் கொஞ்சிப் போகும். வீட்டோடு ஒட்டிய வாவியில் காலையில் சூரிய கதிர்கள் ஜாலம் காட்டும். நீரையடர்ந்திருந்த பற்றைகளில் பறவைகள் கீச்சிடும். சிலவேளை நீர்ப் பாம்பு நெளிந்து இவர்கள் வாசலைத் தாண்டிப் போகும். கவிஞனான சிதம்பரத்தின் கற்பனையில் எழுந்த அழகிய வீடு அது.
மகனுக்கு மறுமொழி சொல்லாமல் வீட்டுக்கு முன்னால் நின்று உலகத்தை வெறித்துப் பார்த்தாள் கமலம்.
பின்னர் நடந்துபோய் தென்றலுக்குத் தாளம் போடும் வெள்ளை ரோஜா மலரைத் தடவினாள். "உனது அப்பா நட்ட பூங்கண்டு இது,' அவள் கண்களில் வெள்ளம். குரலில் அடைப்பு, ரோசாப் பூக்களைத் தடவி விட்டாள்.
'இந்த வீட்டில் ஒவ்வொரு அங்குலமும் அவர் காலடி பட்டது. ஒவ்வொரு கல்லிலும் அவர் உழைப்பு உறைந்திருக்கிறது. இந்த மரங்கள் காய்த்துக் கொட்டுகிறது. அதை வைத்த மனிதனைக் கடவுள் எடுத்துவிட்டான்.
இதோ பார் இந்த மல்லிகைச் செடியை, இதை வைத்தவள் உனது தங்கை சங்கீதர். வாழவேண்டிய வயதில் தமிழ் மொழிக்காக, தமிழர் களுக்காக, தமிழ் மண்ணுக்காகத்தன்னைத்தியாகம் செய்தவள் அவள்'.
கமலா பேசுவதை நிறுத்தினாள். அடுத்ததாக வீட்டின் ஒரு மூலை அறையிற் போட்டு வைத்திருக்கும் அழகேசனின் பைசிக்களைப் பார்த்து அழுவாள் என்று தெரியும். யாழ்ப்பாணத்திற்குப் படிக்கப் போக முதல், தனது பைசிக்களை இந்த அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்தான் அழ கேசன். பூட்டி வைத்த பொருள் அப்படியே இருக்கிறது. உரியவனை இந்திய ராணுவம் பலி வாங்கிக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட தமிழ் உயிர்களில் அவனின் உயிரும் ஒன்று. மகன் கண்ணனின் அறைக்கு அவள் போவதில்லை. என்று கண்ணன் தன் கதவைச் சாத்திவிட்டு கல்லூரிக்குப் போனானோ

Page 38
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 70
அப்படியே அந்த அறையிருக்கிறது. அவன் வருவானா? அவள் பைத்தியம் போல் சிலவேளை கேள்வி கேட்பாள்.
தீவிரவாதிகள் என்று கைதுசெய்யப்பட்டஎத்தனையோஇளைஞர் களில் கண்ணனும் ஒருவன்.
தொலைந்துபோன, இலங்கைத் தமிழ் மனிதர்களில் கண்ணனும் ஒருத்தன். என்னஆனாணோ?அவன்உடல் எங்கேஎன்றுகூடயாருக்கும் தெரியாது. இலங்கை ராணுவத்தின்அதிரடியின் பிரதிபலிப்பு அது.
"மகனே ரவி இலங்கையில் ஒரு தமிழ்த் தாயாகப் பிறந்த நான் எத்தனையோ இழந்துவிட்டன். லண்டனுக்குப் போய் என்னத்தைக் காணப் போறன்."அவள் குரல் பரிதாபமாக ஒலித்தது.
“நிம்மதியான வாழ்வு.'ரவிதாயில் பரிதாபப்பட்டுச் சொன்னான்.
எப்போதும் பழைய நிகழ்ச்சிகளை நினைத்து அழுவதற்கு முடிவு தேவையில்லையா?
“என் குழந்தைகள் மூவர், கணவர்என்று என்வாழ்க்கையில் இழக்க முடியாததையெல்லாம் இழந்து விட்டன். இறக்கும் வரைக்கும் எனக்கு நிம்மதியிருக்கும் என்று நினைக்கிறாயா?"தாய்சத்தியத்தின் பிரதிநிதியாய் நின்று உண்மை மறுமொழி தேடினாள்.
και, 'சுமதிக்குத் துணையாயிருக்கலாம். அவளின் குழந்தைகளின் அன்பில் துன்பங்களை மறக்கலாமில்லையா'ரவியின் விவாதம் இது.
"மகனே எனது சோகம் அவர்களைப் பாதிக்காமலிருக்கட்டும். சுமதி கெட்டிக்காரி. சமாளித்துக்கொள்வாள், எங்கள்திருப்திக்காக மற்றவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது.'
அம்மா எத்தனை நம்பிக்கையுடன் சொன்னாள்? சுமதி தன் வாழ்க்கைத் துயரைச்சமாளிக்கத் தெரியாமல் தவிப்பதை அம்மாபுரிந்து கொள்வாளா?
டிப்பார்ட்மெண்ட் வேலையெல்லாம் முடிந்தபின் டாக்டர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் இருந்தான் ரவி. இவனுடன் வேலை செய்யும் சக டாக்டர்கள் பெரும்பாலும் போய்விட்டார்கள். அவர்கள் இருந்தால் கெளரவத்திற்காக எதையோபேசிக் கொண்டிருப்பார்கள்.
"மெலனிக்காகக் காத்திருக்கிறாயா' நேர்ஸ் மார்க்கரெட் கேட்டாள். அவள் கண்களில் மிக மிகக் கூர்மையான தேடல் உணர்வு பளிச்சிட்டது. நேர்ஸ் மார்க்கரெட் நடுத்தர வயது மாது. மேற்கிந்திய நாட்டைச் சேர்ந்தவள். இந்த சைக்கியாட்ரிஸ்ட் வார்ட்டில் இருபது வருடங்களுக்குமேலாக வேலை செய்கிறாள். பருத்த

71 நாளைய மனிதர்கள்
உடலும் பாசமான உணர்வும் கொண்டவள். இளம் டாக்டர்களைத் தன்குழந்தைகள் போல் நடத்துவாள். ரவியின் முன்னால் அமர்ந்தாள். டாக்டர்ஸ் ஒய்வெடுக்கும் இடத்தில் நேர்ஸஸ் பெரும்பாலும் வரமாட் டார்கள். ஆனால் மார்க்கரெட் வித்தியாசம்.
“மெலனி போய்விட்டால் என்ன பண்ணப் போகிறாய்?" மார்க்கரெட்இடுப்பில் கைவைத்தபடிகேட்டாள்.அவளின் பருத்த உடம்பு மலை போல் அவன் முன்னின்றது. அவள் கேட்கும் கேள்வி களும் கேள்வி கேட்கும் தோரணையும் சுவாரஸ்யமாக இருந்தது. ரவி புன்னகைத்தான். அவள் வந்து தலையைத் தடவி விட்டாள். "ஏன் நீஅவளைக் கல்யாணம் செய்யக்கூடாது?" மார்க்கரெட் ஒரு வழக்கறிஞர் மாதிரிக் கேட்டாள். ரவி இப்போது புன்னகைக்கவில்லை. பதறிப் போய்விட்டான். "மார்க்கரெட் என்ன பேசுகிறாய் என்று யோசித்துப் பேசு. இதெல்லாம் விளையாட்டுப் பேச்சல்ல."
அவன் குரலிலிருந்த கடுமை மார்க்கரெட்டின் முகத்தில் இருந்த சந்தோசத்தை வாரியெடுத்துவிட்டது.
"உனக்கு இப்படிக் கோபம் வருமென்று எனக்குத் தெரியாது", மனக்குறையுடன் சொன்னாள் மார்க்கரெட்.
“சாரி மார்க்கரெட், மெலனிக்கு இது கேட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்'?
மார்க்கரெட் பதில் சொல்லாமல் ரவியின் பக்கத்தில் வந்து உட்கார்ந் தாள். அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். தாய்மையுடன்கன்னத்தில் முத்தமிட்டாள்.
“இனவாதம் பிடித்த இந்த நாட்டில் மெலனி போன்றவர்கள் தேவதைகள்.'மார்க்கரெட்டின் குரல் பாசத்தால் கரைந்தது.
ரவி மறுமொழி சொல்லவில்லை. "உன்னால்தான் அவள் இந்த இடத்தை விட்டுப் போகிறாள் தெரியுமா உனக்கு?'மார்க்கரெட்டின் கேள்வியிது.
மார்க்கரெட்டின் கண்கள் அவனது முகபாவத்தை உற்று நோக். கியது. அவள் கொண்டு வைத்திருந்த கோப்பிபோல் அவன் மனமும் சூடாக இருந்தது.
இலங்கையிலிருந்து எத்தனையோ கொடுமையான அனுபவங் களுக்கு உள்ளானவன் அவன். லண்டனுக்கு வந்து யாரையும் ஊரை விட்டுப்போகும்படியான எந்தவித செயலிலும் அவன் ஈடுபடவில்லை.

Page 39
ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியம் 72
மெலனி சாம்ஸன் அவனின் மேலதிகாரி. மிகவும் அன்பாக நடத்துவாள். ஒருதரம் இவனை பீச்சுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். அவ்வளவுதான். அதற்காக ஏன் அவள் லண்டனை விட்டுப் போக வேண்டும்?
"மார்க்கரெட், விளையாட்டுத்தனமாக எதையும் சொல்லி வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.'
"ரவி, அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்கள் கொன்ஸல்டன்ட்மிஸ்ரர்கொலின் டெய்லர் மிகவும் பொல்லாத மனிதர்." மார்க்கரெட் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு இவன் காதில் ரகசியம் சொன்னாள்.
"நான்எனது கொன்ஸல்டன்ட்மிஸ்டர்டெய்லரை ஒன்றும் செய்ய வில்லையே?'அவன் குழப்பத்துடன் கேட்டான். மார்க்கரெட்கொண்டு வந்திருந்த கோப்பிஅவன் கோபத்தைத் தணிக்கவில்லை.
"அவரின் காதலி மெலனியை அவரிடமிருந்து பிரித்தெடுக் கிறாயே?'மார்க்கரெட் சொல்வது ரவிக்கு ஒரு விதத்தில் புதிராகவும் மறு விதத்தில் புதினமாகவுமிருந்தது.
“டெய்லரின் காதலி?. மெலனி, டெய்லரின் காதலியா?"மிஸ்டர் டெய்லர் எப்போதும் மெலனியை விழுங்கித் தொலைப்பதுபோல் பார்ப்பார். அதன் அர்த்தம் இதுதானா?
"ஐயோரவி, இத்தனை வயதாகியும் உலகத்தைப் புரிந்து கொள்ளா மலிருக்கிறாயே, 'மார்க்கரெட்சத்தம் போட்டுச் சிரித்தாள்.
இன்று பின்னேரம் தனது மைத்துனன் செந்திலைக் காணவேணும், அவனுடன் என்ன சொல்ல வேணும் என்றெல்லாம் நினைத்திருந்த வனுக்கு மார்க்கரெட் சொல்லும் விடயங்கள் ஆச்சரியம், எரிச்சல் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் கொண்டு வந்தது.
எல்லா இடங்கள் போல ஹாஸ் பிட்டலிலும் நிறைய வம் பு தும்புகள் பேசப்படும். அதில் தன் பெயரும் இழுபடும் என்று அவன் நினைக்கவில்லை.
மத்தியானசாப்பாட்டு நேரம். டாக்டர்களின்சாப்பாட்டு மேசையில் மெலனியும் டெய்லரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவதைக் கண்டான். எப்படி அந்த இடத்திலிருந்து ஓடுவது என்று யோசித்தான்.
மிஸ்டர் டெய்லர் பெரும்பாலும் யாருடனும் சேர்ந்து சாப்பிட மாட்டஈர். அவருடன் மெலனியைக் கண்டதும் மார்க்கரெட் சொன்னது ஞாபகம் வந்தது. அவர்கள் இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

73 நாளைய மனிதர்கள்
“ஹலோ ரவி. எங்களுடன் வந்து சாப்பிடலாமே,' மிஸ்டர் டெய்லர் இவனைக் கண்டதும் கூப்பிட்டார். ஆங்கிலேயர்களுக்குள்ள மிடுக்கு அவர் குரலில். மெலனி மெளனமாக இருந்தாள். அவனுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. வேறு வழியில்லை.
ரவிக்கு மெலனி ஒரு ஹலோ சொல்லிக் கொண்டாள். டெய்லருக்கு முன்னால் பயப்படுகிறாளா?
"ரவியின் படிப்பும் முடிகிறது. மெலனியும் டிப்பார்ட் மெண்டை விட்டுப் போகிறாள். இந்த டிப்பார்ட்மெண்டில் களையில்லாமல் போகப் போகிறது.' மிஸ்டர் டெய்லரின் முகத்தில் சிரிப்பு. வார்த்தைகளில் இரட்டை அர்த்தம்.
மிஸ்டர் டெய்லரைப் பகைத்துக் கொண்டால் ரவி போன்ற மேற் படிப்பு படிக்க வரும் டாக்டருக்கு நல்லதல்ல. அது நன்றாக ரவிக்குத் தெரியும். படிப்பு முடியும் வரைக்கும் இந்த மனிதருடன் சினேகிதமாய் இருப்பது புத்திசாலித்தனம். டெய்லரின் வார்த்தைகளின் உள் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாதவன் போல் “யேஸ் சேர், எனது படிப்பு முடியப் போகிறது.' ரவி கவனமாகத் தன் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துச் சொன்னான்.
"இலங்கைக்குத்திரும்பிப் போகிறாயா, அல்லது உன்னைப்போல் மேற்படிப்பு படிக்க வரும் டாக்டர்கள் போல் இங்கிலாந்திலேயே தங்கிவிட யோசனையா?"டெய்லரின் குரலில் கிண்டல். படிக்கவென்று வந்த எத்தனையோ தமிழர் தங்கி விட்டார்களே, எத்தனை விஷம் இந்த மனிதரின் வார்த்தையில்?
ரவி மறுமொழிசொல்லமுதல் மெலனி சொன்னாள்.
“ரவிக்கு இங்கிலாந்தில் இருக்கப் பிடிக்கவில்லை என்று நினைக் கிறேன்.' மெலனி ரவிக்காகப் பேசினாள். இலங்கைக்குத் திரும்பிப் போவதைப் பற்றிஎத்தனையோ தரம் ரவி அவளுக்குச் சொல்லி யிருக்கிறான். “அடடே உங்களுக்குள் இதெல்லாம் பேசிக் கொள்ளும் நெருக்கம் இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது."டெய்லரின் வார்த்தைகளின் கிண்டல் அவனை மிகவும் எரிச்சலூட்டியது. இவ்வளவு காலமும் பழகிய இந்த மிஸ்டர் டெய்லரின் அடுத்த பக்கம் இப்போது புரியத் தொடங்கியது போலிருந்தது.
“சேர், எனது நாட்டில் உள்ள நிலையில் பலர் நாட்டை விட்டுப் போகும் நிலையுள்ளது. இங்கு படிக்க வந்தவர்களில் எல்லோரும் இங்கிலாந்தில் தங்கி விடவில்லை. பெரும்பா லானவர்கள் திரும்பிப் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். தனது சொந்தப் பிரச்சினைகள் காரணமாக."

Page 40
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 74
அவன் சொல்ல இடைமறித்தார் மிஸ்டர் டெய்லர். “நீங்கள் லண்டனிலேயே நிற்க யோசிக்கிறீர்கள் அப்படித்தானே?"டெய்லருக்கு எப்படி மற்ற மனிதர்களைத் தள்ளிவிடவேண்டும் என்று தெரியும். அவர் தன் மேலதிகாரி என்பதையும் மீறி அவரிடம் கோபம் வந்தது ரவிக்கு.
“மற்றவர்கள் என்ன செய்வார்கள், ஏன் செய்கிறார்கள் என்பதை அனுமானம் செய்வது சிலவேளைதவறுதலானமுடிவுகளைக் கொடுக்கு மில்லையா?’ ரவியின் குரலில் ஆத்திரம். ஆங்கிலேயரின் மண்டைக் கனமான அபிப்பிராயங்களுக்கு அவன்தலை சாய்க்கத் தயாராயில்லை. இப்படித்தான் குரலைத் தணித்துச் சொன்னாலும் அவன் குரலிலுள்ள கடுமையான தொனி மெலனியைக் கலவரப்படுத்தியது.
இந்த இடத்தில் இன்னும் கொஞ்சநேரமிருந்தால் இவர்கள்இருவரும் தர்க்கப்படஆரம்பிக்கலாம் என்பதையுணர்ந்த மெலனி"எக்ஸ்யுஸ் மி. வார்ட் ரவுண்ட்ஸ் செய்ய நேரமாகிவிட்டது,' மெலனி சட்டென்று சொன்னாள். "ஆண்கள் ஏன் சில வேளைகளில் குழந்தைத்தனமாக இருக்கிறார்கள்?' அவள் எழுந்தாள். அவளைத் தொடர்ந்து ரவியும் எழுந்தான். மிஸ்டர்டெய்லரின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை. அவர் ஆங்கிலேயன். உணர்ச்சிகளை அதிகம் பொருட்படுத்தமாட்டார். 'ரவி நீங்கள் ஒன்றும் சாப்பிடவில்லை." மெலனிஅவசரப்பட்டுச்சொன்னாள். ரவியில் அவளுக்குப் பரிதாபம். அதை மற்றவர்கள் வித்தியாசமாக நினைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. "பசிக்கவில்லை,' அவளை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ரவி ஆத்திரத்துடன் வெளியேறினான். மிஸ்டர் டெய்லர் இனவாதம் பிடித்தவர். இங்கிலாந்தில் வந்து குடியேறும் கறுப்பர்களைப் பற்றித்தாழ்வான அபிப்பிராயம் வைத்திருக் கிறார் என்பதை அவர் பேச்சு சொல்லாமல் விளக்கிவிட்டது.
மெலனியிலுள்ள ஆத்திரத்தில் தன்னை அப்படிப் பேசினாரா அல்லது அவர்அடிமனத்தில் வெள்ளையரல்லாதோர் பற்றி நல்ல அபிப்பிராயமில்லையா?
அரசியல் தஞ்சம் கேட்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டார் இங்கிலாந்தில் வந்து குவிவதால் இப்போது வெளிநாட்டார்களுக்கு எதிரான குரல் வலுக்கிறது என்பது பத்திரிகைகள் மூலம் தெரியவருகிறது. வார்ட்டுக்கு வந்தான். தலை வலித்தது. வேலையில் மனம் ஒட வில்லை. மார்க்கரெட் ரவியை ஒரக்கண்ணாற் பார்த்தாள், அவள் பார்வையில் அனுதாபம். “உன்னைப்போல் எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்." அவள் சட்டென்று சொன்னாள்.
“இனத்துவேசத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், படிப்பைக் குழப்பியவர்கள் அவர்கள்." இனத்துவேசம் மற்றவர்களின் வார்த்தை களில் நடவடிக்கைளில் மட்டுமல்ல அவர்கள் நினைவிலேயே ஊறிப் போயிருக்கிறது"

75 நாளைய மனிதர்கள்
மார்க்கரெட் வாஞ்சையுடன் சொன்னாள்.
"நீ ரொம்பவும் நல்லவன் மட்டுமல்ல அப்பாவியுமாயிருக்கிறாய். உனது படிப்பைத் தவிர உன்னைச் சுற்றி நடப்பது பற்றியுணராமலிருக் கிறாய். மெலனி ஒரு நல்ல ஆங்கிலேயப் பெண். அவளை மிஸ்டர் டெய்லர் மிகவும் விரும்புகிறார். மிஸ்டர்டெய்லர் இப்போதுதான் தனது மனைவியை விவாகரத்து செய்து கொண்டார். நீண்ட நாட்களாக அவர் மெலனியில் ஒரு பார்வை வைத்திருந்தார். நாங்கள் நேர்ஸஸ், எங்களுக் குத் தெரிந்த ரகசியங்கள் உங்களைப்போல் மேற்படிப்பு படிக்க வந்த யாருக்கும் தெரிவதில்லை. பெரும்பாலானவர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்புண்டு என்று விதத்தில் இருந்துவிட்டு, படித்துவிட்டுப் போகிறார்கள். மெலனிக்கு உன்னில் ஒரு பிடிப்பு என்பதை நீ புரிந்து கொள்ளாவிட்டாலும் இந்த டிப்பார்ட் மெண்டில் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்."
மார்க்கரெட்செய்திச்சுருக்கம் சொல்வதுபோல் சொல்லி முடித்தாள். மார்க்கரெட் சொல்வது புரிந்தது. மற்றவர்கள் சொல்வதுபற்றி அவன் என்ன செய்ய முடியும். வீட்டிலிருந்தால் சுமதியின் பிரச்சினை தலை யிடிக்கப் பண்ணுகிறது என்றால் வேலைக்கு வந்தால் புதிய பிரச்சினை முளைக்கிறது.
வேலை முடிந்து செந்திலைப் பார்க்க வேண்டும். அவனின்நடவடிக் கையால் சுமதியும் குழந்தைகளும் படும் துன்பங்களை செந்திலுக்குப் புரிய வைக்க வேண்டும். செந்திலைத் தனியாகப் பார்க்க அவன் விரும்பவில்லை. மாமா தனபால் வந்தால் நிறைய அரசியல் பேசிக் கொண்டிருப்பார். ஆனாலும் அவரில்லாமல் செந்திலிடம் போய்ப் பேசிப் பிரயோசனமில்லை. சித்திரா கேம்பிரிட்ஜில் இருக்கிறாள். வாரக் கடைசியில் மட்டும் லண்டன் வருவாள். தன்னுடன் சித்திராவை அழைத்துக் கொண்டுபோனால் செந்தில் தரக்குறைவாகப் பேசுவான். செந்தில் போன்றவர்களின்கண்களில் ஒரு ஆணும் பெண்ணும் தனியாகச் சந்தித்தால் அது ஒழுக்க விரோதமாகிவிடும். யோசித்துக் கொண்டு வரும்போது மெலனி எதிர்ப்பட்டாள்.
“லிப்ட் தரலாம்,' அவள், அவன் அருகில் காரை நிற்பாட்டினாள். மார்க்கரெட் சொன்ன விடயங்கள் பற்றி மெலனியிடம் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
கும்பிடப்போனதெய்வம் குறுக்கே வந்ததுபோல் அவள் வந்தாள். அவளிடம் கட்டாயம் பேச வேண்டும். காரில் ஏறிக் கொண்டான்.
அவனது வீடு கொஞ்சதூரத்தில்தானிருக்கிறது. அண்டர்கிரவுண்ட் ரெயினில் இரண்டு ஸ்ராப்ஸ் தள்ளியிருக்கிறது. நல்ல சூழ்நிலை என்றால் நடந்தே போவான்.

Page 41
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 76
இவனின்முகத்தில்சந்தோசம்இல்லையென்பதை மெலனிஉணர்ந்து கொண்டாள். மெளனமாகக் கார் போய்க் கொண்டிருந்தது. அவளிடம்
எத்தனையோ பேசவேண்டும்.
"மிஸ்டர் டெய்லருக்கும் உனக்குமுள்ள தொடர்புக்கு நான் இடையில் வந்து குதித்ததாக மிஸ்டர் டெய்லர் நினைக்கிறார். அப்படி நினைப்பதற்குநான்மிகவும் வேதனைப்படுகிறேன்.'ரவிதாழ்மையான குரலில் சொன்னான்.
"மிஸ்டர்டெய்லருக்கும் எனக்குமிடையில் தொடர்பு இருப்பதாகக் கதை கட்டிவிடநீங்கள் யார்?'மெலனியின் குரலில் அசாதாரண கோபம். இப்போதுமெலனிபாய்ந்து விழுந்தாள். அவன்இதை எதிர்பார்க்க வில்லை. “உண்மையை அறியாமல் பேசுகிறேனா? மார்க்கரெட் சொன்னதைத் திருப்பிச் சொன்னான்.
"மிஸ்டர் டெய்லர் டிவேரார்ஸ் பண்ணுவதும் இன்னொரு பெண் ணைத் தேடுவதும் அவரின் சொந்த விடயம். நான் அவர் தேடும் அந்தப் பெண்ணாக இருக்கவிரும்பாததால்தான்.அவரின்கரைச்சலிலிருந்து தப்ப வேறொரு இடத்திற்குப் போகிறேன். அத்துடன் நான் இனி ரெஜிஸ்டார் இல்லை. ஆக்டிங் கொன்ஸல்டன்ட்."
மெலனியாலும் சூடாகப் பேசத் தெரியும் என்று க்ண்டு கொண்டான்.
இருவரும் வேறு வேறு காரணங்களால் மனத்தில் எரிச்சலுடன் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
"அக்டிங் கொன்ஸல்டண்டாகப் பதவி உயர்வு கிடைத்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்." அவளின் சூட்டைக் குறைக்க ஏதாவது சொல்வதற்காகச் சொல்லி வைத்தான்.
“தாங்க் யு.'இவனைப் பார்க்காமல் கார் ஒட்டிக் கொண்டிருந்தாள். கார் ஒட்டும் விதத்தில் அவள் கோபம் பிரதிபலித்தது.
"எங்கே போகிறாய்?" “ஸ்கொட்லாந்துக்கு - எடின்பரோ ஹாஸ்பிட்டலில் வேலை."
அவள் லண்டனை விட்டு வெகு வெகுதூரம் போகப் போகிறாள். “லக்கி யூ," ரவி முணுமுணுத்தான். "டெய்லர் போன்றவர்
களிடமிருந்து தப்பிப் போவது மிக அதிர்ஷ்டமான விடயம்தானே'
"ஏன் நான் லக்கி?"
“லண்டனை விட்டு எங்கேயாவது போவது நல்லதுதானே?" அவன் குரலில் விரக்தி.

77 நாளைய மனிதர்கள்
"எடின்பரோ போவதில் அவ்வளவு விருப்பமென்றால் ஒரு சில மாதங்களில் உங்கள் படிப்பு முடிந்தபின் எடின்பரோ வரலாம். எனது டிப்பார்ட்மென்டிலேயே வேலை தரலாம்.' மெலனி சட்டென்று சொன்னாள். இவனுடன் உறவைத் தொடரத் தான் தயார் என்கிறாளா? அவள் வேடிக்கைக்குச் சொல்கிறாளா அல்லது உண்மையாகத்தான் சொல்கிறாளா என்று தெரியவில்லை.
"மெலனி, ஸ்கொட்லாந்துக்குப் போவது மனதுக்குப் பிடித்த விடயமென்றால் ஏன் உன் கண்களில் நீர் வந்தது.'
ஒரு சில வாரங்களுக்கு முன் பீச்சுக்குக் கூட்டிக் கொண்டு போகும் போது தான் லண்டனை விட்டுப் போகப் போவதாகச் சொன்னபோது அவள் கண்களில் நீர் வழிந்ததை அவன் மறக்கவில்லை.
“கண்களில் நீர் வர ஸ்கொட்லாந்துக்குப் போவது மட்டும்தான் காரணமாக இருக்க முடியுமா?"
“பெண்களுக்கு கண்ணிர் வர என்னென்ன காரணங்கள் இருக்கும் என்றுகண்டுபிடிக்கும் விசேட அறிவு என்னிடமில்லை.'ரவிசலிப்புடன் சொல்லிக் கொண்டான். அவள் இன்று ஏதோ காரணத்தால் கோபமா யிருக்கிறாள் என்பது வெளிப்படை. "ரவி, நாங்கள் இருவரும் சைக்ரி யாட்ரிஸ்ட்ஸ் மனித உணர்வுகளையும் அவர்களின் வாழ்க்கையின் பிரச்சினைகளையும் பற்றி விசேட அறிவு கொண்டவர்கள்."
"சரி, ஏன் உனக்குக் கண் கலங்கியது என்று சொன்னால் என் குழப்பம் நீங்கிவிடும்.' குழந்தைத்தனமான கேள்விதான். ஆனால் இப்படியான கேள்விகள் தவிர்க்க முடியாதன.
“எனக்குப் பிடித்த இடம்,பிடித்த மனிதர்களை விட்டுப் போவது மனத்திற்குச் சிரமமாக இருக்கிறது.' மெலனி உண்மையுடன் சொல்கி றாள் என்பது வெளிப்படை.
"அப்படி என்றால் போகவேண்டாம்," கிண்டலாகச் சொன்னான் ரவி, "மிஸ்டர்டெய்லருடன்மாரடிக்க வேண்டும்." m
இருவரும் சிரித்தார்கள். அவளுடன் மனம் விட்டுப் பேசியதில் மனதில் இருந்த துன்பம் குறைவது போலிருந்தது.
"மிஸ்டர்டெய்லருடன் பெரிதாகச்சண்டை போடப் போகிறாயோ என்று மத்தியானம் பயப்பட்டேன்,' அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் மலர்ச்சி, அவள் குரலில் நிம்மதி.
"மிஸ்டர் டெய்லர் மட்டுமல்ல, எனது மைத்துனர் செந்தில் கூடத் தான் எனக்கு எரிச்சலைத் தந்து கொண்டிருக்கிறார்.' செந்தில், டெய்லர் போன்ற ஆண்கள் ஏன் பெண்களை வருத்திக் கொண்டிருக்கிறார்கள்."

Page 42
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 78
யார் செந்தில் என்னை முறைத்துப் பார்த்த உங்கள் சகோதரியின் கணவரா?' மெலனி கேட்டாள்.
அவன் தலையாட்டினான்."உன்னோடு பழகுவதற்காக மிஸ்டர் டெய்லர்முறைக்கிறார், உன்சகோதரிமுறைக்கிறாள். எடின்பரோவுக்குப் போனால் யாரும் முறைக்கமாட்டார்கள்."அவள் குரலில் நிம்மதி.
“குட்லக், “அவன் வேண்டா வெறுப்பாகக் கூறினான். میتی ۔
“தாங்க் யூ." அவள் அவன் இறங்க வேண்டிய அண்டர் கிரவுண்டில் காரை நிறுத்தினாள்.
★

7
சுமதியின் மகனுக்குக் கையில் காயம். ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவேண்டிய காயம். நடுஇரவில் சுமதி போன் பண்ணித் தம்பியை அழைத்தாள்.
அவனிடம் காரில்லை. டாக்சி எடுத்துக் கொண்டு வடக்கு லண்டன் போகவேண்டும். தனது மருமகனுக்கு என்ன காயம், எப்படி நடந்தது என்றுகேட்டு விசாரிக்க முதல் அவனுக்குச் செந்திலில் சந்தேகம் வந்தது. மருமகன்சிவம் மிகவும் சூடிகையான எட்டு வயதுப் பையன். செந்திலின் கோபத்திற்கு ஆளாகியிருப்பானா? குடிகாரன் மட்டுமல்ல, செந்தில் இப்போது அடிகாரனாகவும் மாறிவிட்டான், சுமதியைப் படுத்தும் பாடு இப்போது ஊர்சிரிக்கும் விடயமாகிவிட்டது. டாக்சிஎடுத்து தமக்கை வீடு சென்றான்.
இரவு பன்னிரண்டு மணிக்குச் சுமதியின் அழுகை நெஞ்சைப் பிழிகிறது. முன்பின் யோசிக்காமல் மெலனியின் டெலிபோன் நம்பரை டையல் பண்ணினான்.
யாரிடமாவது உதவி, அல்லது ஆலோசனை கேட்க வேண்டும் போலிருந்தது. மெலனியை இந்த நேரத்தில் கூப்பிடுவதைப் பற்றிஅவள் என்ன நினைப்பாள் என்று கூட அவன் யோசித்துப் பார்க்கவில்லை.
சுமதியின் குரல் அவனை அப்படிப் பண்ணியிருந்தது. இவ்வளவு காலமும் எவ்வளவு கொடுமைளைச் சகித்திருக்கிறாள் என்பது அவன் லண்டனுக்கு வந்த பின்தான் தெரிகிறது.
ஏன் என்னை நடுராத்திரியில் கூப்பிட்டாய் என்று மெலனி திட்ட வில்லை. இருபது நிமிடங்களில் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
நடுச் சாமம் என்றும் பார்க்காமல் மாமா ராமநாதனுக்குப் போன் பண்ணிவிடயத்தைச் சொன்னான்.
மெலனியுடன் ஹாஸ்பிட்டலுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் சுமதி ஓடிவந்து தம்பியின் கைகளைப் பிடித்து அழத் தொடங்கி விட்டாள். அக்ஸிடென்ட் அண்ட் எமேர்ஜென்சி டிப்பார்ட் மெண்டில் குழந்தை

Page 43
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 80
களுடன் அனாதை போல் காத்திருந்த தமக்கையில் பரிதாபம் வந்தது. எப்படி இந்த நேரத்தில் தனபால் மாமாவந்தார் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவரும் ஹொஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தார்.
ரவிசந்தேகப்பட்டது சரிதான். செந்தில் தன்குடிவெறியில் சுமதியை அடிக்க அதைத் தடுக்கப் போன மகனைத்தள்ளிவிழுத்தியதால் அவனது கை உடைந்து விட்டது.
செந்தில் பக்கத்திலிருந்தால் அவனைக் கொலை செய்யுமளவிற்கு கோபம் வந்தது. விம்மலுக்கும் குமுறலுக்குமிடையே சுமதி நடந்த விடயத்தைச் சொன்னாள்.
எட்டு வயதுப் பையனோ உடைந்த கையால் வழியும் இரத்தத் தைப் பார்த்துப் பயந்து சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தான். எமேர் ஜென்சி டிப்பார்ட்மென்டில் மணிக்கணக்காகக் காத்திருப்போர் தொகை யுடன் இவர்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
தனபால் மாமா தனது மருமகனின் நடத்தை குறித்து மிகவும் வருத்தப்பட்டார். எட்டு வயதில் இந்தக் குழந்தை ஏன் இந்தக் கொடுமை களைச் சந்திக்கிறது? குடும்பம் என்பதன் அர்த்தம் என்ன. “சின்னப் பையன். இந்த வயதில் இந்தக் கஷ்டமெல்லாம் படவேணுமா?’ அவர் பெருமூச்சு விட்டார். அன்பும் ஆதரவும் கொடுக்க வேண்டிய குடும்பங் களில் எத்தனை குழந்தைகள் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள்? தந்தையன் பைத் தன் பதின்மூன்று வயதிலிருந்து இழந்தவன் ரவி. அந்த அன்பிற்கு ஏங்கியவன். பதின் மூன்று வயதிலேயே தன் தம்பிகள், தங்கைகளுக்குக் 'குடும்பத் தலைவனாக'ஏற்றுக் கொள்ளப்பட்டவன்.
ஒருத்தர் மாறி ஒருத்தராக குடும்பத்தில் தம்பிகள் அழகேசன், கண்ணன், சங்கீதா இறந்தபின் தமக்கை சுமதி நன்றாக வாழ வேண்டு
மென்று பிரயாசைப்பட்டவன்.
லண்டன் மாப்பிள்ளைக்காக பட்ட கடனை அடைக்க எவ்வளவோ பாடுபட்டவன். அவன்கண்முன்னால் இந்தக்குழந்தைகள்படும்பாட்டை அவனால் சகிக்க முடியவில்லை.
சுமதியின் மகன் சிவத்தை வார்ட்டில் அட்மிட் பண்ணினார்கள். சுமதியின் கண்கள் வீங்கியிருந்தன. "அடிபட்டு அழுது வீங்கும் கண் களுடன் எத்தனை பெண்கள் இந்த உலகத்தில் நடைப் பிணங்களாக வாழ்கிறார்கள்.' மெலனிபெருமூச்சு விட்டாள்.
சுமதியின் மகள் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். சுமதி அந்தச் சின்ன மகளுடன் வார்டில் நிற்க முடியாது. பாதுகாப்பு என்று மாலை

81 நாளைய மனிதர்கள்
யிட்ட கணவன் அருகில் இல்லை. தம்பியின் கோபம் அவளுக்குப் புரிந்தது. சுமதிதன் வாழ்க்கை குறித்து மிக மிக வேதனைப்பட்டாள். தன பால் மாமா தனியாக வாழ்பவர், அவர் அந்தக் குழந்தையைக் கொண்டு போகமுடியாது. பெண் குழந்தை ரேணுகா தனக்கு முன்னால் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சோர்ந்து போயிருந்தாள். ரவிதன்தூங்கிவழியும் மருமகளைத் தூக்கிக் கொண்டான். "அக்கா நீ ஹாஸ்பிட்டலில் நிற்பது அவசியம். நான் மெலனியுடன் வீட்ட கொண்டு போறேன், ரேணுகா பாவம் அவள் தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிறாள்.'
"நீநாளைக்கு வேலைக்குப் போகவேணுமே,'தம்பியின் வேலை யில் உள்ள அக்கறையுடன் சொன்னாள் சுமதி.
'ஒன்றிரண்டு நாள் வேலைக்குப் போகாவிட்டால் எனக் கொன்றும் ஆகிவிடாது, எனது மேலதிகாரி மெலனி, அவளே என்னுடனிருக்கிறாள்'.
அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தான். மெலனி பின்தொடர்ந்தாள்.
காலை நான்கு மணிக்குச் சுமதியின் வீட்டுக்கு வந்தான். மெலனி சுமதியின் சமயலறையில் ரவிக்குக் காப்பி போட்டுக் கொடுத்தாள். மெலனியின் அன்பு அவனை நெகிழப் பண்ணியது. மெலனி அவன் தங்கை சங்கீதாவை ஞாபகப்படுத்தினாள். இப்படியொரு காலை நேரத்திற்தான் சங்கீதா வீட்டை விட்டுப் போனாள். சமுதாய விடு லைக்குத் தன்னைத்தியாகம் செய்யப் புறப்பட்டாள்.
"அண்ணா, நான் எடுக்கும் இந்த முடிவு உனக்கு ஆச்சரியம் தரும். ஆனால்உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு கடமையுண்டு என்று நினைக்கிறேன். இந்த நாட்டில் கெளரவ முள்ள தமிழ் இனமாக வாழவேண்டுமென்றால் எத்தனையோ தியாகங்கள் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. போன கிழமை சிங்களராணுவத்தால் கொடுமை செய்யப்பட்டு இறந்த கோணேஸ்வரி போன்றவர்களின் மரணம் விரயமாகக் கூடாது. அவர்கள் ஒரு கோணேஸ்வரியை இந்த ஊரிலிருந்து அழிக்கலாம். ஆனால் ஓராயிரம் சங்கீதா போன்ற பெண்கள் தங்கள் உயிரைக் கொடுத்தென்றாலும் எங்கள் இன விடுதலைக்குப் போராடுவார்கள்.
எனது எதிர்காலத்தை எப்படி எல்லாமோகற்பனைசெய்திருப்பாய். நான் எதிர்காலத்தை என் இனத்தின் விடுதலைக்கு அர்ப்பணிக்கிறேன். இலங்கை ராணுவத்தினருக்கு எங்கள் பெண்கள் அவர்களின் காமப் பசிக்கு இரையாவதைத் தடுக்க சங்கீதா போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்யத்தான் வேண்டும், அம்மாவைப்

Page 44
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 82
பார்த்துக் கொள்ளுங்கள். கோணேஸ்வரிபோன்ற பெண்களின் உடல் புதைக்கப்படலாம். அந்த விதைப்பில் எத்தனையோ சங்கீதா போன்ற
பெண்கள் இலங்கை சிங்கள ராணுவத்தினருக்கு மரண கீதம் பாடப் பிறப்பார்கள். இது சங்கீதாவின் கடிதம்.
ரவி நாட்டுக்குத் தன்னையிழந்த சங்கீதாவை யோசித்தான். இப் போது தன் வீட்டாரின் திருப்திக்காக செந்திலை மணந்த தமக்கை சுமதியை யோசித்தான்.
ஆண் மகன் என்றும் பாராமல் அழுதான்.
காப்பி போட்டுக் கொண்டு வந்த மெலனி தன் சினேகிதனை அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பு அவன் அழுகையை இன்னும் கூட்டியது.
அம்மாவைத் தவிர இப்படிப் பாசத்துடன் அவனை யாரும் அணைத்ததில்லை, தம்பிகளின் மரணம், தங்கையின் மரணம், தகப் பனின் மரணம் என்று எத்தனையோ சொல்ல முடியாத துயர்களை அனுபவித்தபின்அம்மாயாரையும் அணைப்பது கிடையாது. தன்னைத் தானே ஒடுக்கிக் கொண்டாள். ஒதுங்கிக் கொண்டாள்.
ரவி மெலனியின் அணைப்பில் அழுதான். தன் தங்கை சங்கீதா
பற்றிச் சொன்னான். தன் கண்களுக்கு முன்னால் சுடப்பட்டு மூளை
சிதறியிறந்த தகப்பன்பற்றிச்சொன்னான். தமிழர்கள்இலங்கையிற் பட்ட கொடுமைகளைச் சொன்னான்.
எத்தனையோ ஆசைகளுடன் படிக்கச் சென்று இந்திய ராணுவத் தினரால் சுடப்பட்ட அழகேசன்பற்றிச்சொன்னான். இலங்கை ராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு தொலைந்து போனதாகச் சொல்லப்பட்ட - ஆனால் உயிரோடு புதைக்கப்பட்ட தன் அருமைத் தம்பி கண்ணன் பற்றிச் சொன்னான். அடக்கி வைத்திருந்த எத்தனையோ துன்பக் கதைகளைத் தன் மனம் திறந்து மெலனியிடம் கொட்டினான். அழுகை மடை திறந்து வந்தது. இத்தனை வருடங்களாக அடக்கி வைத்திருந்த அணைதிறந்து விட்டதுபோலிருந்தது.
“ஒரு டாக்டராக இருந்தால் என்ன, சாதாரண கூலியாயிருந்தால் என்ன துன்பங்கள் சிலவேளை எத்தனை உறுதியான மனத்தையும் உலுக்கி விடும். மெலனி நான் ஏன் சைக்கிரியாட்ரிஸ் ஆக ஆசைப் பட்டேன் என்று கேட்டாயே. எனது பதிலை ஒரு வார்த்தையிற் சொல்ல முடியாது. மனம் பேதலித்துப் போயிருக்கும் என் தாய் போல எத்தனை யோ தாய்கள் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் இருக்கிறார்கள். தாய் தகப்பனையிழந்த குழந்தைகள், கணவனையிழந்த மனைவிகள், அண்ணன் தம்பியற்று வாழும் குடும்பங்கள் என்று எத்தனையோ பேர் இலங்கையிலிருக்கிறார்கள். மன வைத்தியனாக என்னால் அவர்களுக்கு

83 * தாளைய மனிதர்கள்
ஏதும் செய்ய முடியுமென்றால் சந்தோசப் படுவேன். எனது துயர் மறப்பேன், உலகத்திற்குச் சேவை செய்வது எங்களுக்குச் சேவை செய்வதில்லையா?'ரவியின் அழுகை ஓய்ந்து கொண்டு வந்தது.
“ரவி நீங்கள் ஹாஸ்பிட்டலுக்கு வரவேண்டாம். நான் மிஸ்டர் டெய்லருக்குப் பதில் சொல்கிறேன்.' மெலனி சொன்னாள்.
“என்னால் உனக்கும் டெய்லருக்கும் பிரச்சினை வரவேண்டாம் மெலனி.”
"நான் அவரை விரும்பவில்லை என்பதை அவரால் ஏற்க முடியாமலிருக்கிறது. என்னை நீங்கள் குழப்புவதாகக் கற்பனை செய்து கொண்டு உங்களைப் பிழை பிடிக்கிறார். உண்மையில் நான் இந்த டிப்பார்ட்மென்டைப் பிரிந்து போவது நல்லது என்று நினைக்கிறேன். டெய்லர்அப்போதென்றாலாவது உண்மையை உணர்ந்து கொள்வார்.'
“உனது பிரிவு எங்கள் பலபேரைத் துன்பப்படுத்தும்.” “உண்மையாகவா?' மெலனிஅவனையுற்றுப் பார்த்தாள். “நான் ரொம்பவும் வருந்துவேன், நான் சந்தித்த பெண்களில் நீ மிகவும் வித்தியாசமான பெண், உன் உறவை மதிக்கிறேன்."
"அப்படியானால் உன் படிப்பு முடிய இலங்கைக்குத் திரும்பிப் போகாமல் எடின்பரோவுக்குவாயேன்."
அவன் வாயடைத்துப் போய்விட்டான். தன் எதிர் காலத்தில் இவ்வளவு அக்கறை மெலனிக்கிருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“ரவி என்னில் உனக்குப் பிடிப்பிருக்கா?”
மெலனியின் குரல் மிகவும் ரகசியமாகக் கேட்டது.
மருமகளுக்குக் காலைச் சாப்பாடு செய்து கொடுப்பது புது அநுபவம். மெலனியின் அணைப்பிலிருந்தது முதல் அநுபவம். மெலனியின் அன்பு அவன் மனதை மிகவும் குழப்பிவிட்டது.
காலையில் சித்திராபோன் பண்ணினாள், தகப்பன் போன்பண்ணிச் சொன்னதாகச் சொன்னாள். சித்திராவுக்காகத் தான் மெலனியுடன் நிற்பதாகச் சொன்னான். சித்திரா அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. மாமா ராமநாதன் போன் பண்ணினார். தான் அமெரிக்காவுக்கு ஒரு கொன்பரன்ஸ் விடயமாகப் போவதால் தன்னால் வரமுடியாதென்றார். சுமதிபடும் பாட்டுக்கு மிக மிக மனவருத்தப்பட்டார்.
“செந்தில் கையை முறித்துவிட்டான். சுமதி ஹாஸ்பிட்டலில் நிற்கிறாள். அவள் வந்தவுடன்தான்செந்தில் பற்றி என்னசெய்வது என்று யோசிக்க வேண்டும்."

Page 45
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 84
“என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறாய்?' ராமநாதன் தயக்கத்துடன் கேட்டார். குடும்ப ரகசியம் காப்பாற்றும் தயக்கமது.
“செந்திலைப் பிடித்துப் போலிஸில் கொடுக்க வேண்டும்' ரவி உறுதியுடன் சொன்னான். அவன் பொறுமை எல்லை கடந்துவிட்டது. மாமாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. மத்திய தர மக்கள் எதையும் சமாளித்து வாழப் பழகிவிட்டார்கள். அவர் விதிவிலக்கல்ல.
“அப்படிச் செய்வதனால் செந்தில் திருந்துவான் என்று நினைக் கிறாயா?"ராமநாதன் குரலில் நம்பிக்கையில்லை.
"திருந்த முடியாதவர்களை திருந்தப்பண்ணஎத்தனையோ வழிகள் உண்டு, நாங்கள் குடும்ப கெளரவம் பார்ப்பதனால்தான் செந்தில் போன்றவர்கள் இப்படிச் செய்கிறார்கள். மாமா, ஒரு மனிதனைத் திருத்தினால் அவன்குடும்பம் திருந்தும். குடும்பம் திருந்தினால் சமுதாயம் திருந்தும். சமுதாயம் திருந்தினால் நாடு திருந்தும். சுமதியின் மகன் செந்திலின் அடிமாடல்ல. அந்தப் பையன் நாளைய சந்ததி, அவனை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் தாய் தகப்பனுக்கு எந்த உரிமையு மில்லை. எங்கள் வயிற்றில் பிறந்த குற்றத்திற்காக இந்தக் குழந்தைகள் இந்தக்கஷ்டம் படவேண்டுமா?’மருமகன்சிவத்தின் எதிர்கால நன்மைக் காக வாதாடினான் ரவி,
“இது சுமதியின் சொந்த விடயம்.' மாமா ராமநாதனுக்கு இந்தப் பொலிஸ் விடயமெல்லாம் சரிவராது என்பது அவர் குரலிற் தெரிந்தது.
“மாமா, அரசியல் ரீதியாக அடிவாங்கினால் அதை எதிர்க்க ஆயுதம் எடுக்கிறோம், குடும்பம் என்ற அமைப்புக்குள் எத்தனையோபெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், குழந்தைகளின் வாழ்க்கை சின்னா பின்னமாக்கப்படுகிறது. இதெல்லாவற்றையும் முகம் கொடுக்காத எங்களுக்கு ஏன் விடுதலை வேணும்? எங்களை நாங்கள் அடிமைப் படுத்திக் கொண்டு வாழலாமே"
“நான் அமெரிக்காபோகவேண்டும், நீசெய்ய வேண்டிய விடயங் களைச் சரியாக யோசித்துச் செய்." அவர் அவனுடன் வாதிட விரும்ப வில்லை என்று சொல்லாமற் சொன்னார்.
மாமா போன்றவர்கள் நேற்றைய மனிதர்கள், மாற்றங்களுக்குச் சரியாக முகம் கொடுக்கத் தெரியாதவர்கள். ஆகவும் கூடிப் போனால் எதையும் விதியின் தலையில் தூக்கிப் போடத் தயங்காதவர்கள். ரவி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
காலையில் மெலனி சொல்லிவிட்டுப் போன விடயங்கள் ஞாபகம் வந்தன.

85 நாளைய மனிதர்கள்
எத்தனை நேர்மையான பெண் அவள்? தன் வாழ்க்கையில் மறைக்க வேண்டிய விடயங்கள் என்பதைக்கூட இவளிடம் மனம் விட்டுச் சொன்னானே.
"ரவி, செந்திலுக்குப் பாடம் கற்பிக்காவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக அவன் இந்தக் குடும்பத்தை அழித்து விடுவான்’ சுமதி குடும்பத்தைத் தெரிந்துகொண்ட சினேகிதியாக அவள் புத்தி சொன்னாள்.
ரவியின் ஆத்திரத்தையும் புரிந்து கொண்ட தோரணையில் சொன் னாள் அவள். "ரவி, உங்கள் ஆத்திரம் என்னால் புரிகிறது. குழந்தை சிவத்திற்காக நீங்கள் எடுக்கும் முடிவும் தெரிகிறது. ஆனால் பெரும் பாலான குடும்பங்களில் குடும்ப கெளரவம் என்ற பெயரில் ஆண்கள் செய்யும் கொடுமைகளைப் பெண்கள் மூடி மறைப்பதனால்தான் ஆண்மகனின் கொடுமை நீடித்துக் கொண்டு வருகிறது, ஆண்களின் கொடுமையை மிக மிக இளவயதில் அனுபவித்தவன் நான்' மெலனி மேலும் சொன்னாள். அதிகாலைப் பொழுதில் ரவி தன் மனம் விட்டுத் தன் துயரங்களைச் சொன்னது அவள் மனத்தை வருத்தியிருக்கிறது என்பது அவள் பேச்சில் தெரிந்தது.
"ரவி, அன்று பீச்சுக்குப் போகும்போது நீஏன் சைக்கியாட்ரிட்டாக வந்தாய் என்று என்னைக் கேட்டாயே, அதற்கு மறுமொழி சொன்னால் நீநம்ப மாட்டாய்'.
ரவி சோகத்துடன் சிரித்தான். “மெலனி, நான் ஒரு இலங்கைத் தமிழன். கடந்த இருபது வருடங்களாக, கொலை, குண்டு வெடி, ஆள் கடத்தல், அதிரடித்தாக்குதல்கள் பாலிய வன்முறை என்பவற்றை மிகவும் தெரிந்து கொண்டவன். உன்னைப்போல் வெள்ளைக்கார மேற்தட்டு வாழ்க்கையில் தரமாக வாழ்ந்து, படித்து பட்டம் பெறவில்லை. எனது தகப்பன் செத்தபின் வறுமை என்றால் என்னவென்று தெரிந்தது. எனது மாமனார் ராமநாதன் போட்ட பிச்சைதான் எனது படிப்பு. தனது தங்கை கமலாவின் வாழ்க்கை அழிந்து போகாமல் அவர் எடுத்த முயற்சிதான் எனது படிப்பு. அவர் குற்ற உணர்வில் - ஒரு கைங்கரியமாகச் செய்திருக் கலாம். ஆனாலும் அவர் உதவிதான் எனது பட்டப் படிப்பு. இப்படி இல்லாமை நிலைப் பற்றி உனக்கென்ன தெரியும்.'
இவற்றைச் சொல்லி முடிய அவன் குரல் கலங்கியிருந்தது. கண்கள் இன்னொருதரம் நீர் பணித்தது.
மெலனி அருகில் வந்தாள். அவன் கண்ணிரைத்தன் முத்தத்தால் துடைத்து விட்டாள். அவளின் செய்கை அவனுக்குப் புதிது. அவள் முத்தம் அவன் உடம்பில் புல்லரித்தது.” மத்திய தர வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா?”மெலனிசாந்தமாகக் கேட்டாள்.

Page 46
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 86
“பிரச்சினையில்லாதவர் மனிதரில்லை. ஆனால் எனது அனுப வங்கள், வாழ்க்கை முறை, வாழ்ந்த அரசியல் சூழ்நிலை பொல்லாதது என்றுதான் சொல்ல வந்தேன்."
‘ஏழுவயதுப் பெண் தனது சித்தப்பனால் பாலியற் கொடுமைக்கு ஆளாவது எந்தச் சமுதாயத்திலும் நடக்கும். ஆண்களின் கொடுமைக்கு இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லை கிடையாது.'
இப்போதுமெலனியின் குரல் தடுமாறியது.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். பக்கத்திலுள்ள ரெயில்வே ஸ்டேசனில் காலையில் ஆரம்பிக்கும் ஆரவாரம் கேட்டது. ரெயில் ஒன்று வந்துநின்றது.
ரவி நிமிர்ந்து பார்த்தான்.
"உனது தாய், ஒன்று தொடர்ந்து ஒன்றாக நான்கு உயிர்களைப் பறிகொடுத்து மனநிலை தடுமாறினாள். என்தாய் தன் ஒரே ஒரு மகளின் குழந்தைத்தனம், எதிர்காலம் என்பன ஒரு சில நிமிடங்களில் பறிக்கப் பட்டதையறிந்து துடித்தாள். மனநோயாளியானாள். உலகத்திற்குத் தெரிந்தால் தன் மகளின் எதிர்காலம் பாழாகுமே என்பதால் தனக்குள் நினைத்து நினைத்து அதிர்ந்து போனாள். அவள் போலத் தாய்கள் எத்தனைபேர் உலகத்திலிருக்கிறார்கள். ஏழு வயதிலேயே கறைபடிந்த பெண்கள் எத்தனை பேர்? இவர்களுக்கு என்னால் செய்ய முடிந்ததைச் செய்யத்தான்நான்இந்தப்படிப்பைத் தொடர்ந்தேன்’மெலனிநிமிர்ந்து நின்று சொன்னாள். குரலில் உறுதிமுகத்தில் ஆவேசம். ரவி மெலனியை ஏறிட்டு நோக்கினான். அந்த ஏழு வயதுப் பெண்?
“என்ன பார்க்கிறாய். இப்போது என்னைப் பார்க்க வித்தியாசமாக இருக்கிறதா?’ மெலனியின் குரலில் ஆத்திரம். தன்னை உலகமறியா வயதில் கொடுமைப்படுத்தியவனில் உள்ள ஆத்திரம், அந்த அதிகாலையில் வெடித்தது. பற்களை இறுகக் கடித்துக் கொண்டாள். உதடு நடுங்கியது.
“மெலனி. மெலனி, ஐயம் ஸாரி”
ரவிதவித்துப் போனான்.
“ஸாரி சொல்லுமளவுக்கு நான் ஒன்றும் உடைந்து போகவில்லை. எனக்கு நடந்த கொடுமையின் பிரதிபலிப்பால் ஒவ்வொரு நாளும் துடித்தேன். யாரும் ஆண்கள் நெருங்கி வந்தால் ஆத்திரத்தில் ஓடி விடுகிறேன். டெய்லரின் நெருக்கம் எரிச்சல் வருகிறது. அவர் என் சித்தப்பாவை ஞாபகப்படுத்துகிறார். அவருக்கு நான் என் இறந்த கால வாழ்க்கையைச் சொல்ல வேண்டுமென்று எனக்கு ஒரு நியதியுமில்லை. உன்னை எனக்குப் பிடிக்காது என்று டெய்லரிடம் சொல்லவும் விருப்பமில்லை."

87 நாளைய மனிதர்கள்
"பாவம் மெலனி,'இப்படி நினைப்பதை விட ரவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வானம் பொத்துக் கொண்டு மழையைக் கொட்டியதுபோல் தன் உள்ளக் கிடக்கைகளைக் கொட்டி விட்டு அவள் போய்விட்டாள்.
சோர்ந்து துவண்டுபோய் சுமதி வந்தாள். மகனின் உடைந்த கைக்குப் பிளாஸ்டர் போட்டிருப்பதாகவும், ஒன்றிரண்டு நாட்களில் வீட்டுக்கு வரலாம் என்று, டாக்டர்கள் சொன்னதாகச் சொன்னாள். இரவெல்லாம் ஆஸ்பத்திரியில் நின்ற சோர்வு அவள்முகத்தில் தெரிந்தது.
"இதைப்பற்றிப் போலீசுக்குச் சொல்லவில்லையா?” ரவியின் குரலில் கடுமை. தமக்கையை ஏறிட்டுப் பார்த்தான். “எதைப்பற்றி?'சுமதியின் கேள்வி குழந்தைத்தனமாகப்பட்டது.
“எதைப்பற்றியா? உன் புருஷன் உன் மகனின் கையை ஒடித்த தைப் போலீசுக்குச் சொல்லவில்லையா என்று கேட்டேன்." அவள் மறுமொழி சொல்லாமல் அவனைப் பார்த்தாள். “கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன்என்று புராணம் பாடப் போகிறாயா? கணவன்மாருக்கு மனைவியும் குழந்தைகளும் அடிமையில்லை. கணவனை விட்டால் வேறு வழியில்லாத ஏழைகள் இப்படி உருப்படியில்லாத வசனங்களைப் பேசிக் கொண்டு உதை வாங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். உனது மகனின் எதிர்காலத்தைப் பார்? அடியும் உதையும் வாங்கிய குழந்தை குடிகாரனாக மாற நிறைய வாய்ப் புண்டு. குழந்தைகள் கண்ணாடிகள். தாய்தகப்பனின்நடத்தையின் பிரதி பிம்பங்கள். உனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார். நீ பூட்டிய அறைக்குள் அடி வாங்கிக் கொண்டு அந்தக் காயங்களை மறைக்கக் காஞ்சிபுரம் சேலையைக் கட்டிக்கொண்டு ஊர்வலம் போ. ஆனால் உன் குழந்தைகளின் எதிர்காலத்தை யோசித்துப் பார்' ரவி வெடித்தான். எரிமலையாய் அவன் வசனங்கள் பறந்தன.
சுமதி அழுது கொண்டிருந்தாள். அவளிடம் பேசிப் பிரயோசன மில்லை என்று தெரிந்தது. ரவி வெளியேறிவிட்டான். ரெயிலுக்குப் போகும் வழியில் தனபால் மாமாவந்து கொண்டிருந்தார். தனது குடும்பம் போல் சுமதியின் குடும்பத்தைப் பார்க்கும் அவரின்இரக்ககுணம் ரவியின் மனத்தைத் தொட்டது.
வேரறுந்த கிளைகளாக எத்தனையோ இளம் தம்பதிகள் தனியே வாழும்போது எத்தனையோபிரச்சனைகள் வரும். அவற்றையெல்லாம் நிவர்த்திசெய்ய, புத்தி சொல்லித்திருத்தப் பெரியோர்கள்இல்லாவிட்டால் வெளிநாட்டில் வாழும் இளம் தமிழர் என்ன செய்வார்கள்?
தனபால் மாமாவுடன் இன்னொருதரம் சுமதி வீட்டுக்குப் போய் சுமதியின் நித்திரையைக் குழப்பத் தயாரில்லை.

Page 47
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 88
ஏதாவது கோப்பி கபேக்கு மாமாவைக் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று யோசித்தான்.
“என்னஇன்னைக்குவேலைக்குப் போகல்லயா?"மாமா உண்மை யான அனுதாபத்தோரணையிற் கேட்டார்.
“சின்ன மருமகளைப் பார்க்க யாரும் இருக்கவில்லை மெலனியும் நானும் வந்தோம். மெலனிகாலையில் வேலைக்குப் போய்விட்டாள்'.
ஹாஸ்பிட்டலிலிருந்து மெலனியுடன் அவன் வந்ததை அவர் கவனித்தார்என்ற படியால் அவராக மெலனிபற்றிக்கேள்விகேட்க முதல் ரவியாகச் சொன்னான்.
தனபால் மாமாதன்னைப் பற்றி எந்த விதமானதப்பபிப் பிராயமும் வைத்திருப்பதை அவன் விரும்பவில்லை. தகப்பனின்சினேகிதன் அவர். ரவியின் குடும்பத்தில் மிகவும் அக்கறை கொண்டவர் உண்மைகளைப் பேசுபவர், புரிந்துகொள்பவர்.
வெளியில் மழைபெய்து ஓய்ந்திருந்தது.
மாமாவின் முகத்திலும் நித்திரைக் களைப்பு. நல்ல தூக்கமில்லாமல் இங்கும் அங்கும் திரிகிறார் என்று தெரிந்தது.
எப்போதும்போல் கையில் பத்திரிகையிருந்தது. அரசியல் நிகழ்ச்சி நிரலைப் படித்து விட்டு அங்கலாய்ப்பார்.
“காப்பி நன்றாக இருக்கிறது.' ரவியின் முகத்தில் படிந்திருந்த கோபத்தை மாற்ற ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் என்று தெரிந்தது.
"மாமா அடிக்கடி இந்தியாவுக்குப் போவதால் இந்தியத் தமிழ் வாடையடிக்கிறது.'ரவி சொன்னான்.
"இந்தியாவில் எங்கப்பா சுத்தத் தமிழ் இருக்கு? ஆங்கில மோகத் தால பொறுக்கி இங்கிலீஸ் பேசுவாங்க, தமிழ் பேசறதைக் கவுரவக் குறைவாக நினைக்கிறாங்க. தமிழ் படங்களைப் பார், ரெட், யூத், தோஸ்து, பிரண்ட்ஸ், நியூ என்றெல்லாம் பேர் வைக்கிறார்கள். இப்ப தமிழ் உணர்வு உள்ள எல்லாரையும் உள்ளே தள்ளிப்போடுகிறார்கள்." மாமா பெருமூச்சுடன் சொன்னார்.
"இலங்கைத் தமிழரின் அமைதிக்காக மேற்கு நாட்டு வெள்ளை யர்கள் இவ்வளவு சிரத்தை எடுக்கிறார்கள். ஆனா, அண்டை நாடான தமிழகம் ஏன் இப்படி எதிர்த்துக் கொதிக்கிறதோ புரியல்ல".
ரவி மாமாவிடம் கேட்டான்.

89 நாளைய மனிதர்கள்
"ரவி, தமிழ் நாட்டுத் தமிழ் மக்களின் உணர்ச்சிக்கும், ஈழத் தமிழர் களுக்கு அமைதி கிடைக்க வேண்டுமென்ற சாதாரண தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும், இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் தலைமையின் நடவடிக்கைக்கும் எந்தக்தொடர்பும் கிடையாது. இதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான ஒரு சிலரின் பொறாமையின் எதிரொலி'. மாமா தெளிவாகச் சொன்னார்.
மாமா ஒவ்வொரு வருடமும் இந்தியா போய் வருகிறவர். அவர் குடும்பம் இந்தியாவில் வாழ்கிறது.
"இந்தியக் கலாச்சாரத்தில் தன் குழந்தைகள் வளரவேண்டுமென்று அவர் நினைக்கிறார். இந்தியக் கலாச்சாரம் என்றால் என்னவென்று கேள்வி கேட்கும் நிலையும் வரலாம். அமெரிக்க ஆதிக்கம் கொக்கோ கோலாவிலிருந்து மக்டோனால்ட்ஸ் மலிவுச் சாப்பாட்டுக் கடை வரைப் பரவுகிறது. மத்திய தரத் தமிழர்களின் எதிர்காலம் அமெரிக்காவை நோக்கிக் கற்பனை செய்கிறது."மாமா அங்கலாய்ப்புடன் சொன்னார்.
"மாமா கலாச்சாரம் எப்போதும் மாறிக்கொண்டும் தெளிவுபட்டுக் கொண்டுமிருக்கும். இந்திய, இலங்கை, இங்கிலீஸ் கலாச்சாரம் என்று பிரித்து வைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. எத்தனையோ பரிமாணங் களால் நிரம்பியது கலாச்சாரம்'.
மாமாசிரித்தார்.
"ஏன்சிரிக்கிறீர்கள்?'ரவி கடைக்காரன்கொண்டு வந்த கோப்பியை உறிஞ்சியபடி கேட்டான்.
“இந்தியத் தமிழ் எழுத்தாளர் ஒருத்தர், தான் தமிழ்க் கலாச்சாரத் திற்காக எழுதுகிறேன் என்று தம்பட்டம் அடிக்கிறார். அவரின் தலைக் கனம் பற்றிச் சிரிக்கிறேன்."
"இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை மாமா, அந்த எழுத்தாளனுக்குக் கலாச்சாரத்தின் ஆணிவேர்கள் என்று அறிஞர்கள் காட்டும் சில அத்தியா வசியங்களின் பரிமாணங்கள் தெரியாதவர் என்று நினைக்கிறேன்".
ரவி மாமாவை அரசியல் பேச்சிலிருந்து திசைதிருப்ப யோசித்தான்.
★

Page 48
8
"சுமதியின் கணவரின் செய்கைபற்றிபோலீசாருக்குஅறிவிக்கலா மென்று யோசிக்கிறேன்," ரவி மாமாவின் முகத்தின் உணர்ச்சிகளை உற்றுநோக்கியபடி கேட்டான்.
"ரவி உனக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நடக்கிறது என்று தெரியாது.நீபோலீஸாருக்குப் போய் உனது மருமகனின்கையை உனது மைத்துனர் ஒடித்து விட்டார் என்று புகார் கொடுக்கலாம். உனது தமக்கையும் மருமகனும் உனது புகாருக்கு உதவியாக இருப்பார்கள் என்று என்னநிச்சயம். எங்கள் தமிழ்ப் பெண்கள்தாம் கணவன் கையால் இறப்பது புண்ணியம் என்று முட்டாள்தனமாக நினைக்குமளவுக்கு எங்கள் தமிழ்க் கலாச்சாரம் போதித்து வைத்திருக்கிறது'.
"மாமா, சுமதி செந்திலுடன் வாழ்வதால் என்ன பிரயோசனம்?"
சுமதியின் உடன் பிறந்த தம்பி என்ற ஸ்தானத்திலிருந்து அவன்
கேட்டான்.
“செந்திலைப்பிரிந்து போவதால் என்னத்தைக்காணப் போகிறா?" அப்படி மாமா கேட்டது ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாமா பெண் களின் விடுதலையை ஆதரிப்பவர்.
“எங்கள் இந்து சமயத்தில் உள்ள எத்தனையோ தத்துவங்கள் பெண்கள் ஆண்களைவிடச் சக்திவாய்ந்தவர்கள் என்று சொன்னாலும், நடைமுறையில் பெண்கள் ஆண்களின் சுகத்திற்கும் தேவைக்கும் பாவிக்கப்படும் வெறும் பண்டங்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள். சுமதிக்குத் தனியாகப் போய் வாழும் உரிமையிருக்கிறது. இங்கிலாந்தில் தனியாக வாழும் பெண்களுக்கு உதவி செய்ய எத்தனையோ ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆனால் சுமதி அதை முழுமனத்துடன் ஏற்பாளா?, தன்னைக் கணவனிடமிருந்து விலகிப் போகநிதான் காரணம் என்று திட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று என்ன நிச்சயம்?'மாமா கேட்டார்.
W “வாழ்க்கையில் வரும் தோல்விகள்தான் பெரிய படிப்பினை. இவ்வளவு காலமும் செந்திலுடன் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து சுமதி

91 நாளைய மனிதர்கள்
எவ்வளவோ படித்திருப்பாள். அந்தப் படிப்பினைகளை எதிர்காலத் திற்குத் தேவையானால் பாவிக்கட்டும்.'
"ரவி, நீ நினைப்பதும் சொல்வதும் மிகவும் உண்மையான விஷயங்கள், யதார்த்தம் அப்படியல்ல . உனது தமக்கையின் வாழ்க் கையில் அத்தனை அக்கறை என்றால் ஏன் நீ லண்டனிலேயே தங்கக் கூடாது. உனது வாழ்க்கையில் தத்துவங்களைத் திடமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாய், அதை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பாயா?" சாப்பிட்டுக் கொண்டிருந்த கேக் ரவியின் தொண்டையில் அடைத்து விட்டது. "அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற நப்பாசையில் ஓடி வந்து இங்கே என்ன நிம்மதியைக் கண்டோம்.” என்று பெருமூச்சு விடுகிற மாமாவாஇப்படிச்சொல்கிறார்.
"இந்த வெள்ளைக்காரர் அகதிகளாய் வருபவர்களால் தங்கள் கலாச்சாரம் அழிவதாக ஒரு பக்கம் ஒலம் வைக்கிறார்கள். அடுத்த பக்கம் அவர்கள் செய்யாத தொட்டாட்டு வேலைகளைச் செய்ய அகதிகள் தேவை. லண்டனில் அரைகுறை அடிமைகளாக வாழ அகதிகள் தேவை. அப்படி நாங்களும் வாழ்ந்து பழகிவிட்டோம். அரசியல் என்ற பெயரில் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் தர்மம் அழிந்து அதர்மம் ஆட்சியிலிருக்கிறது. கொள்ளையடிக்கப்போரும் மனநிலைக் குழப்பம் வந்தவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சியிலிருக்கிறார்கள். ஏதோ பேருக்கு என்றாலும் ஜனநாயகம் இங்கேயுண்டு. பிழைத்துக் கொள்ள லாம். படிக்கலாம். பணம் உழைக்கலாம் ஏன் நீ தேவை யில்லாமல் திரும்பிப் போகப் போகிறாய்'.
மாமாவின் மேற்கண்ட கேள்விக்கு ரவியால் பதில் சொல்ல முடிய வில்லை. மெலனியும் இதே கேள்வியைத்தான் கேட்டாள். “என்ன ரவி யோசிக்கிறாய், சந்திரிகாவும், ரணிலும் யார் மக்களின் நம்பிக்கையைக் கூடப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக எத்தனையோபலப்பரீட்சைகள் செய்கிறார்கள். இலங்கைத் தமிழரின் வாழ்வு எப்போதும் இவர்கள் கையில் பகடைக்காய்தான். இலங்கைத் தமிழருக்குநிரந்தரமான அமைதி வாழ்க்கை இப்போது கிடைக்கும் என்று நான்நம்பவில்லை".
"மாமாதயவுசெய்து அவநம்பிக்கையுடன் பேசாதீர்கள். தமிழர்கள் இலங்கையில் அழிந்ததுபோதும், இழந்ததுபோதும், வசதியுள்ளவர் களும், வாழத் தெரிந்தவர்களும், படித்த பலரும் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். இலங்கைத் தமிழர் எல்லோரும் நாட்டை விட்டு ஓடமுடி யாது. அவர்கள் அங்கே தான் வாழப் போகிறார்கள். அவர்களுக்குச் சமாதானம் தேவை."
"ரவி, மூன்றாம் நாடுகளில் அரசியல் ஒரு வியாபாரம், அங்கு யாரையும் வாங்கலாம், எந்தக் கொள்கையையும் விற்கலாம். இதற்கு எதிராக ஒன்றுபடாத விதமாகச் சாதாரண மக்களை சாதி, மதம், இனம்,

Page 49
ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியம் 92
மொழி ரீதியாக ஆளும் வர்க்கம் பிரித்து வைத்திருக்கிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு மதிப்பிருந்தால் இலங்கைத் தமிழருக்கு இந்தக் கதி வந்திருக்காது. இந்த நாட்டில் இந்தக் கொடுமைகள் நடக்காது. தனிமனித வழிபாடு, தான் பிழைத்தாற் போதும் என்ற சுயநலம், குடும்பத்திற்குச் சொத்துச் சேர்ப்பதற்குப் பதவியை உபயோகிக்கும் அரசியல் வாதிகள் என்போரால் எங்கள் நாடுகளில் அரசியல் நாற்றம் எடுக்கிறது. இதனால் சாதாரணமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நீஒரு சாதாரணடாக்டர் உன்னையும் இதெல்லாம் பாதிக்கும். இங்கிலாந்தில் உனக்குமுறையான மைத்துணி சித்திராவுக்கும் உனக்குப் பின்னால் சுற்றும் மெலனியும் இருக்கிறார்கள். ஒருத்தியைச் செய், லண்டனில் செட்டில் பண்ணு.' ரவிக்கு மாமா சொல்வது ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருக்கவில்லை. மாமா மற்றவர்கள் நினைப்பது போலத்தான் நினைக்கிறார். வயது வந்த ஆண்மகன் ஒரு பெண்ணுடன் பழகினால் அது வெறும் சினேகிதமாக இருக்க முடியாது என்பதை இவரும் நம்புகிறாரா? இலங்கையில் பெண் களின் நிலை போராட்டத்தில் சம பங்கு எடுக்கப் பண்ணியிருக்கிறது. எத்தனையோ மாற்றங்கள் நடக்கிறது. "மாமா உங்கள் கணிப்பை வேறு விதத்தில் பார்த்தேன். சித்திரா எனது மைத்துணி, மெலனி எனது மேலதிகாரி, இவைகளுக்கப்பால் இவர்களுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது.”
‘வாழ்க்கையின் தேவைகள் சிலவேளை உறவுகளை நியமிக் கின்றன." அவர் இப்படிச் சொன்னதும் அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
தனபால் மாமா எழுந்தார். ரவிக்கு இந்த விஷயம் பற்றிப் பேசப் பிடிக்கவில்லை என்று முகத்தில் தெரிந்தது.
“கல்யாணம், குழந்தைகள், உறவுகள் என்பன வாழ்க் கையின் நியதிகள். மனிதர்கள் சாதாரண ஆசைகளினால் உந்தப் படுபவர்கள். நீ ஒரு சைக்கியாட்ரிஸ்ட், சாதாரண மனித தேவைகள் பற்றிநான் சொல்லத் தேவையில்லை. உடை, உணவு, இருக்க இடம், பகிர்ந்து கொள்ள ஒரு பற்றுத் தேடாதவன் சாதாரண மனிதனுக்கு அப்பாற்பட்டவன். அந்தத் தேடல்கள் வரும்போது உனக்கு முன்னால் சித்திராவும், மெலனியும் இருக்கிறார்கள். சும்திக்காக நீ லண்டனில் வாழ வேண்டும். இப்போது இலங்கைக்குப் போய் இன்னுமொரு யுத்த சூழ்நிலையில் ஏன் நீ அகப்படவேணும்?”
எத்தனை கேள்விகள்? தனபால் மாமா போய் விட்டார். ரவி ஸ்தம்பித்துப் போய் நின்றான்'. லண்டனில் நான் தங்கா விட்டால் என் எதிர்காலம் பாதிக்கப்படுமா?'அவன் யோசித்தான்.
·★

93 நாளைய மனிதர்கள்
சித்திரா தன் சினேகிதி ஜேனைப் பரிதாபத்துடன் பார்த்தாள். ஜேனின் கர்ப்பம் தெரிந்தவுடன் டேவிட்டும் ஜேனும் அடிக்கடிதர்க்கப் பட்டுக் கொண்டார்கள்.
ஒரு சில வாரங்களுக்கு முன் உயிரும் உடலுமாயிருந்த டேவிட்டும் இப்போது எடுத்ததெற்கெல்லாம் தர்க்கம் செய்து கொள்வது அவர்கள் ஒருத்தருக்கொருவர் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதைக் காட்டியது.
கர்ப்பப்பையில் இப்போதுதான் அந்தச் சிசு இடம் பிடித்திருக்கும். அதற்கு முதலே கல்லறை கட்டச் சொல்கிறான் டேவிட்.
எங்களுக்குப்பிள்ளைகள் தேவையில்லை என்று சொன்னதை மீறி ஜேன் கர்ப்பமாயிருப்பது தனக்குச் செய்த துரோகம் என்று டேவிட் நினைக்கிறான். ஜேன் ஆத்திரத்துடனும் அதே நேரம் மிக மிகத் துயரத் துடனும் சித்திராவுக்குச் சொன்னாள்.
சித்திரா ஜேனுக்குத் தேவையான ஆறுதல்கள் சொன்னாலும் ஜேனின் வயிற்றில் வளரும் சிசுபற்றித்தான் அதிகம் யோசித்தாள்.
“சித்திரா, உனக்கு இந்த நிலை வந்தால் என்ன செய்வாய்?" ஜேனின் கேள்வி சித்திராவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.
நாராயணனின் மார்பில் முகம் புதைத்து எதிர்காலம் பற்றிக் கனவு கண்டதை அவள் மறக்கத் துடித்த காலங்கள் உண்டு.
அவன் முகம் திரும்பிய பக்கமெல்லாம் தனக்குத் தெரிவதாகப் பிரமைப்பட்ட காலமெல்லாம் கனவாகிப் போய்விட்டது. முதற்குழந்தை ஆணாக பிறந்தால் என்ன பெயர் வைப்பது? பெண்ணாகப் பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று சிந்தித்ததெல்லாம் நேற்றைய மழை.
“எனக்கு இந்த நிலை வந்தால் .." சித்திரா யோசித்தாள். கல்யாண மில்லாமல் தாய்மையடைந்த சொந்தக்காரர் யாரையும் அவளுக்குத் தெரியாது. சினேகிதிகளில் ஜேன் ஒருத்திதான் கஷ்டப்படுகிறாள். திலகவதி தன் மகள் சித்திரா கல்யாணத்திற்கு முன் கர்ப்பம் தரிப்பதை ஒருநாளும் விரும்பமாட்டாள்.
சித்திராவும் தன்னை அந்த நிலையில் வைத்துப் பார்க்க விரும்ப வில்லை. நாராயணனிடமிருந்த உறவை மறக்க முடியாது. அதற்காக அவள் நடந்துபோன விடயங்களால் மன ஊனமும் அடையவில்லை. நாராயணனின்தொடர்பு மூலம் குழந்தை வந்திருந்து அவள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பாள்?"ஜோர்ஜ் பிள்ளைகளில் ஆசைப்படுவாரு, " ஜேன் இன்னொரு கேள்வியைக் கேட்டாள். “பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வம்ச விருத்திக்கு, குடும்ப

Page 50
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 94
வளர்ச்சிக்குக் குழந்தைகளை விரும்புவார்கள். ஜோர்ஜ் பிள்ளைகளில் ஆசைப்படுவான்.'சித்திராதயக்கமின்றிச் சொன்னாள்.
“எனக்குச் சகோதரர் சகோதரிகள் கிடையாது. நான் ஒரு அநாதை. என்னைத் தங்கள் வளர்ப்புக் குழந்தையாய் வளர்த்தவர்களுக்கு என் னைத்தவிர யாரும் இல்லை. உனது அன்பு நான் எப்போதும் அனுபவிக் காத அன்பு. உனது அன்பு என்றைக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.'
இப்படித்தான் ஜோர்ஜ் சொன்னான். சித்திராவின் நினைவுநாராயணனிலிருந்து ஜோர்ஜில் தாவியது.
'நன்றிநாராயணன். நீஎன்னை மறந்து விட்டது அல்லது மறுத்து விட்டதற்கு நன்றி. அந்த நிலை வந்திராவிட்டால் இன்று ஜோர்ஜைச் சந்தித்திருக்க மாட்டேன். ஒரு கதவு சாத்தப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்பது நல்ல தத்துவம்தான். திறக்கப்பட்ட கதவும் இருட்டறையைக் காட்டாமல் இருந்தால் நல்லது.”
“என்ன நான் ஏதோ கேட்கிறேன். பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய்?" ஜேன்தன் சினேகிதியைக் கேட்டாள்.
கனவு உலகத்திலிருந்து திரும்பி வந்தாள் சித்திரா. ஜேன் தன்னைக் கேள்விகேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியும். ஆண்களின் செயல்களைப் பற்றித்தான் ஜேன் கேட்பாள். ஆங்கிலப் பெண், அந்தக் கலாச்சாரத்திலுள்ள ‘சுதந்திரம்' என்ற வாழ்க்கையமைப்பில் தங்கள் எதிர் பார்ப்புகள், சந்தோசங்களைச் சிறை வைத்துத் திண்டாடும் ஜேன் போன்ற பலரை சித்திரா சந்தித்திருக்கிறாள்.
பத்து வயதுப் பெண்ணாகக் கொழும்பிலிருந்து ஓடி வந்தபோது அவளின் இறந்தகால நினைவுகள் ஒரு தமிழ்க் குழந்தை என்ற அணுகு முறையில் மிக மிகத் துன்பமாக இருந்தது. வித்தியாசமான மொழிபேசுவ தால், சமயத்தைக் கடைப்பிடிப்பதால், வேறு இனமாக இருப்பதால் மனிதனை மனிதன் உயிரோடு கொழுத்தும் சுற்றாடல லிருந்து இலங்கை யிலிருந்து விமானம் ஏறியபோது எதிர்காலம் பற்றி ஒன்றும் தெரியாது. தெரியாத வயது, புரியாத உலகம். அன்பான தகப்பனின் மார்பில், விமானத்திலிருக்கும்போது தூங்கி விழுந்தாள்.
குளிரடித்த காற்று லண்டனில் வரவேற்றது. அதிகம் சனமில்லாத தெருக்கள், உயர்ந்த கட்டிடங்கள். சித்திராவேடிக்கை பார்த்தபடி வடக்கு லண்டனில் வந்து சேர்ந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
திலகவதியின் உறவினர்கள், எப்போதோ லண்டனுக்கு வந்து குடியேறியவர்கள் காட்டிய அன்பிலும், ஆதரவிலும் இலங்கையில் நடந்த கொடுமையை மறக்கத் தொடங்கினாள் சித்திரா.

95 நாளைய மனிதர்கள்
அனாதையாய் விடப்பட்ட ஜோர்ஜைச் சந்தித்த போது பரிதாபப் பட்டாள்.
'டேவிட் என்னைவிட்டுப் போய் விடுவான் என்று நினைக்கிறாயா?"
ஜேனின் குரலில் தொனித்த அழுத்தம் சித்திராவை உலுக்கியது. அது ஒரு சாதாரண கேள்வி. நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்காலச் சந்தோசத்திற்கும் அடிப்படையான கேள்வி. டேவிட் போய்விட்டால் வாழ்க்கை ஊனமாகிவிட்டதாகநினைக்காதே. பெண்கள் மனப்பலம் உள்ளவர்கள். 'நாராயணன் என்னைவிட்டுப் போனபோது நான் எப்படி இருந்தேன்?"
ஜேனின் நிலையில் தன்னை வைத்துச் சிந்தித்தாள் சித்திரா. தன் காதல் பற்றித் தாய் தகப்பனுடன் பேசி அவர்களின் சம்மதத்துடன் சித்திராவை இந்தியாவுக்கு அழைத்துத் திருமணம் செய்வதாகத் தான் நாராயண் சொல்லி விட்டுப் போனான்.
'தயவு செய்து மன்னித்துவிடு. நான் உனக்கு ஒரு சினேகிதனாக மட்டும்தான் இருக்க முடியும்.'
அவனிடமிருந்து வந்த அடுத்த கடிதங்களை சித்திரா பொருட் படுத்தினாளா இல்லையா என்று ஞாபகமில்லை.
ஒன்றாக இருந்துவிட்டு, இருமனித உடல் ரகசியங்களை அனுப வித்து விட்டு எப்படி இவனால் ஒரு சாதாரண சிநேகிதனாகத் தன்னை மாற்றிக்கொள்ளமுடியுமென்று புரிந்து கொள்ளும் மனநிலை அப்போது சித்திராவுக்கு இல்லை. அது குழம்பிப் போய்க் கிடந்தது.
“Be practicalஜேன்'சித்திரா எங்கேயோபார்த்துக்கொண்டு சொன் னாள். நாராயணனுக்குப் பிடித்த வார்த்தைகள் அவை. ‘பிராக்டிக்கலாக' இருப்பதன் தடைகளைப் புரிந்து கொண்டுதான் சொன்னானா? தடுக்கி விழுந்த காலில் குருதிவழிந்தபோது சாதாரண நடை போடமுடியுமா?
உடைந்த மனதில் உதிரம் கொட்டும்போது உண்மைகள் பொருளற்றுத் தெரிவதேன்?
நடந்துபோன "காதல்’ நாடகம் அவனின் காமத்தின் இச்சைகள் என்று அவள் உணர்ந்தபோது எழுந்த ஆத்திரத்தை எங்கே தணிப்பாளர்?
அவள் காளியாய் மாறி அவன் கழுத்தைக் கொய்து மாலையாகப் போடமுடியாது. ‘பிராக்டிகலாகத்தான்'இருக்க வேண்டும்.
'டேவிட் இல்லாமல் எனது வாழ்க்கையை என்னால் கற்பனை செய்ய முடியாது." ஜேன் விரும்புகிறாள்.

Page 51
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 96
“அடி பெண்ணே உனது கர்ப்பத்தில் ஒரு காளி வளர்கிறாள் அவளை எடுத்துவிடு. அவள் தகப்பன் செய்தது சரிதானா என்று அவனிடம் கேட்டு ஊழித் தாண்டவம் ஆடட்டும்.'
சித்திராவுக்குச் சாதாரணமான அவளது பொறுமையான சுபாவத் தைத் தாண்டி டேவிட்டில் கோபம் வந்தது.
"ஜேன்பெண்கள் மிகவும் மனபலம் வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை இன்னொரு உயிரைத் தாங்கி உலகத்திற்குக் கொடுக்கக் கடவுள் படைத்திருக்கிறான். கிறிஸ்தவ நண்பர் ஒருதரம் சொன்னார், ‘கடவுள் ஆணை மட்டும் படைத்துவிடாமல் ஏன் பெண்ணையும் படைத்தார் என்றால் அவதிப்படும் ஒவ்வொரு மனிதத்திற்கும் அருகில் தான் இருந்து தேற்ற முடியாது. கடவுள் தன் கருணையை, அன்பை, ஆதரவை, காதலை, கணிவை நம்பிக்கையைக் கொடுக்கத்தான் பெண்ணைப் படைத்தான்." ஜேன், டேவிட் இல்லாமல் நீ வாழலாம். உனது குழந்தை உனக்குத் துணையாக இருக்கும். நீ உன் குழந்தைக்குத் துணையாக இருப்பாய்',
ஜேன்சித்திராவை இறுகத்தழுவிக்கொண்டாள். டேவிட்டில் ஜேன் வைத்திருக்கும் அன்பு சித்திராவுக்குத் தெரியும். அந்த அன்பு இப்போது இல்லை. அவர்களுக்கிடையில் ஆத்திரமும், அவலமான சொற்களும் பரிமாறப்படுகின்றன.
s “டேவிட் இப்படி என்னை நடத்தினால், என்னால் எப்படி
அவனின் சுடுசொற்களைத் தாங்குவது என்று தெரியாமலிருக்கிறது, குழந்தை வரப்போகிறது என்று நான் சொன்ன நாளிலிருந்து என்னை விட்டுத் தூரப் போய்விட்டான். தனியாகப்படுத்துக் கொள்கிறான். என்னைத் தொடுவதே கிடையாது. இப்படி ஏனோதானோ என்று இருப் பதை விட அவன் இல்லாமல் இருப்பது நல்லது. அவன் என்னைச் சித்திரவதை செய்கிறான். நான் ஏதோ திட்டம் போட்டு அவனிடம் பிள்ளை வாங்கியதாக யோசிக்கிறானோ தெரியாது. எனது உடலை அநுபவிக்கத் தெரிந்தவனுக்கு என் உள்ளத்தின் வேதனை ஏன் தெரியா மலிருக்கிறது.'
“ஜேன், ஆண்மகனுக்குப் பெண்களுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்கலாமென்று சில வேளை புரிவதில்லை. ஆத்திரம் வந்தால் அடிப் பார்கள். அப்படிச் செய்வதன் மூலம், தான் அதிகாரம் படைத்தவன் என்று காட்டிக் கொள்வார்கள். அல்லது ஒரு பெண்ணை அடக்க வேண்டுமென்றால் அவர்களை எப்படியோ தங்களுடன், படுக்கப் பண்ணிவிடுவார்கள். இது எத்தனை கோணங்களிலிருந்து பார்த்தாலும் எப்போதும் எங்கேயும் நடக்கும் விஷயம். கல்யாணமான பெண்கள் என்றால் இப்படிறேப்பண்ணப்படுவதை மாங்கல்ய பாக்கியம் என்று பெருமூச்சுடன்ஏற்றுக்கொள்வார்கள். காதலிகள் என்றால் இது காதலின்

97 ... 's நாளைய மனிதர்கள்
ஒரு பரிமாணம் என்று முட்டாள்த்தனமாக முனகிக் கொள்வார்கள். விபச்சாரி என்றால் காசுக்காக எதையும் தாங்க வேண்டும் என்று சமாதானப்பட்டுக் கொள்வாள். ஆனால் உண்மையில் பரிதாபமான பேர்வழி யாரென்றால் ஆண்கள். இப்படியெல்லாம் செய்வதால் அவர்கள் அடையும் திருப்தியை விட மற்றவர்களை திருப்தியடையப் பண்ணுவதால் வரும் பிரச்சினைகளை எதிர் நோக்கி மிகவும் அவதிப் படுகிறார்கள். டேவிட்டும் அப்படித்தான். அவனால் உன்னை அடிக்க முடியாது. அடிக்கமாட்டான். அதற்கு நீஇடம் கொடுக்க மாட்டாய்”.
“என்ன செய்வேன்?' ஆசிரியையிடம் புத்தி கேட்கும் மாணவி போல் சித்திராவிடம் ஜேன் கேட்டாள்.
“ஒரு மண்ணும் பண்ண வேண்டாம். துணையாய் இருக்க முடியா விட்டால் தொல்லை தராமல் இரு என்று சொல்லிவிடு."
ஜேன் கண்களை மூடி ஏதோ சிந்தனைசெய்து கொண்டிருந்தாள். இத்தனை காலமும் ஒன்றாய் இருந்தவனை என்ன வென்று அந்நிய னாய்ப் பார்ப்பது? என்ற யோசனை அவளைப் பாதிக்கிறது என்று தெரிந்தது.
சுமதி மாதிரி இவளும் ஏனோதானோ என்ற துணைவனுடன் மாரடிக்கப் போகிறாளா?
சித்திராவால் அதற்குமேலாக ஒன்றும் யோசிக்க முடியவில்லை.
‘ஒரு துணையுடன் வாழவேண்டும் என்ற நியதிக்காக எத்தனை மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்? அன் பில்லாக் கணவனுடன் அல்லல்படுவதை விடத் தன்கையே தனக்குதவி என்று எதிர்காலத்தை நின்று பிடிப்பது ஒரு சுதந்திர சிந்தனையின் பிரதிபலிப்பில்லையா? ஏன் ஆண்டாண்டு காலமாக இந்தப் பெண்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவும், சமுதாயம் கெளரவிக்க வேண்டும் என்பதற்காகவும் பொய்மையில் வாழ்கிறார்கள். ‘சுயநினைவுடன் வாழ்ந்து முடிந்தால் ஒரு வெற்றியல்லவா?”
சித்திரா தனக்குள் யோசித்தபடிதன் சோபாவில் சுருண்டு படுத்துக் கிடக்கும் ஜேனைப்பார்த்தாள். பரிதாபம் வந்தது. இவளும் ஒரு சுமதியா?
★
ராமநாதன் சித்திராவைத் தேடி கேம்பிரிட்ஜூக்கு வருவது மிக மிக அருமை. ஒரு மணித்தியலாக் கார் ஓட்டத்தில் அவள் ஒவ்வொரு கிழமை யும் வருவாள். தாய் தகப்பனைப் பார்க்க வருவது தன் கடமை என நினைத்திருந்தாள்.

Page 52
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 98
அவர் இப்போது அமெரிக்கா போகப் போகிறார். அதற்குள் சித்திராவைப் பார்க்க வேண்டும் என்று மனம் சொல்லியது. ஒரே ஒரு மகள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கிட்டத்தட்ட ஒரு விதமான சினேகிதர்கள். தாய் திலகவதியிடம் சொல்ல முடியாத எத்தனையோ விஷயங்களைத் தகப்பனிடம் சொல்லத் தயங்கமாட்டாள்.
அவரும் ஜோர்ஜ் விஷயத்தில் அவனைத்தன் சினேகிதன் என்று சொல்கிறாளே தவிர அதைத்தவிர ஒன்றையும் விபரமாகச் சொல்ல மாட் டாளாம். காதல் என்ற வார்த்தையைச் சொல்லவே பயப்படுகிறாளா?
இருபத்தி எட்டு வயதாகிறது. வெளியில் சொல்லா விட்டாலும் சித்திராதிருமணம் செய்து செட்டிலாக வேண்டும் என்ற ஆசை.அவருக்கு நிறைய உண்டு.
இலங்கையிலிருந்து அகதியாக ஓடிவரும்போது இங்கிலாந்தில் தன் மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். அவர் லண்டனில் மேற்படிப்பு படித்தவர். லண்டனை பற்றிப் புரிந்தவர். மனிதனை வாழ வைக்கும் நகரத்தில் லண்டன் முன் நிற்கிறது என்பது அவர் அபிப்பிராயம். அதே நேரம் ஒரு மனிதனின் பலவீனத்தையும் இந்த நகரம் பதம் பார்த்து விடும் என்றும் அவருக்குத் தெரியும்.
மத்தியதர வாழ்க்கைச் சூழ்நிலையில் தன் மகள் நன்றாகப் படித்து நன்றாக வாழவேண்டும் என்று எதிர்பார்த்தது எந்தச் சாதாரண தாய் தகப்பனுக்கும் அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்கள் அல்ல. ராமநாதன் ஒரு நல்ல சிந்தனையுடன் கார் ஒட்டிக் கொண்டிருந்தார்.
போனவாரம் சித்திராவையும் ரவியையும் அவர்களின் அன்பான நட்பையும் அவதானித்த பின் ஏன் தன் மருமகனுக்குத் தன் மகளைக் கல்யாணம் செய்து வைக்கக் கூடாது என்று அவர் யோசித்தார்.
அந்த யோசனை அவரின் அடிமனத்தில் எப்போதுமே யிருந்தது. ஆனால் ஒரு டாக்டர் என்றபடியால் ஒரே குடும்பத்து உறவுக்குள் திருமணங்கள் நடப்பதை அவர் விரும்பவில்லை.
இவருக்கு இப்படி ஆசைகள் இருக்குமென்பதை உணர்ந்தோ இல்லையோ இவரின் நண்பர் ஒருவர், “நீங்கள் ஒரு குடும்பத்திற்குள் திருமணங்கள் செய்ய நினைத்தால் அதன் பலா பலன்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும். மூளை பலம் குறைந்த அல்லது உடல் பலம் குறைந்த குழந்தைதான் பிறக்கலாம். சித்திராவை ஏன் அந்த நிலைக்குத் தள்ள யோசிக்கிறாய்?"
ராமநாதன் தன் மகளின் விரும்பத்திற்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார். ஆனால் அங்கும் இல்லை இங்கும் இல்லை அடியுமில்லை நுனியுமில்லை என்று அவள் நடப்பது தர்மசங்கடமாக இருக்கிறது.

'99 தாளைய மனிதர்கள்
நாராயணன் விவகாரத்தின் பின்தன் எதிர்காலத்தைப் பற்றித்தானே முடிவு கட்டுவதாகச் சொல்லி விட்டாள். மற்றவர்கள் தன் வாழ்வில் தலையிடுவதை விரும்பவில்லை என்று திட்டவட்ட மாகச் சொல்லி விட்டாள்.
அத்துடன் அவளின் மைத்துணி சுமதியின் வாழ்க்கையில் நடை பெறும் போராட்டம், சித்திராவை நிறையப் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. குடும்பம் பார்த்துப் பேசிய மாப்பிள்ளை செந்திலை ஒரு மறு பேச்சும் பேசாமல் திருமணம் செய்து கொண்டவள் சுமதி.
"சுமதிநல்ல பெண்ணாய் இருந்தால் எப்படியும் கணவனை அடக்கி நல்லவனாக வைத்திருக்கலாம்தானே?”
திலகவதியின் கேள்வியிது. ஒரு மனைவிக்காக ஒரு கணவன் நல்லவனாக இருக்க முயன்றால் உலகத்தில் ஏன் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன. சிலவேளை திலகவதி அப்பாவித் தனமாக நடந்து கொள்கிறாள்.
நாராயணனின் பிரிவால் சித்திரா துடித்தபோது பெற்ற மனத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை. திலகவதி கடவுளர்களைச் சபித்தாள். தனது ஒரே ஒரு மகளின் வாழ்க்கை இப்படியானதே என்று அவள் இரவு பகலாகச் சிலவேளைகளில் புலம்புவாள். அப்போது சித்திராவுக்கு இருபத்தி மூன்று வயது. சர்வகலா சாலைப் படிப்பை முடித்ததும் தன் மகளுக்குத் திருமணத்தைச் செய்ய வேண்டும் என்று துடித்த திலக வதிக்குத் தன் மகள் யாரையும் வெள்ளைக்காரன்கள் பார்த்து விடக் கூடாது என்ற தவிப்பு மனசில் ஊசலாடியது.
“எனக்குப் பிடித்தவன். இந்தியத் தமிழன்." சித்திரா தன் தாய் தகப்பன் விருப்பப்படி ஒரு 'தமிழனைத் தெரிவு செய்ததைப் பார்த்து உற்றார் உறவினர், சினேகிதர்கள் சந்தோசப் பட்டார்கள்.
லண்டனில் வாழும் பெண்கள் ‘கண்டபாட்டுக்குத் திரிவதைப் பற்றி வம்பளக்கும் கூட்டம் சித்திராவின் தெரிவு பற்றிச் சந்தோசப் பட்டனர்.
ராமநாதன் பெருமூச்சுவிட்டார். எத்தனை எதிர்பார்ப்புக்கள்? ராமநாதனின் தகப்பனும் தன் மகள் கமலாவுக்கு எத்தனையோ நாடு நகரெல்லாம் சென்று பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்.அவளோ, தான் படிப்பிக்கப் போன இடத்தில் சிதம்பரன் என்ற இலக்கிய ஆசிரி யரிடம் மனதைப் பறிகொடுத்து விட்டாள். ராமநாதனின்தகப்பனும்தான் இடிந்து போனார்.
கார் கேம்பிரிட்ஜை நெருங்கிக் கொண்டிருந்தது. தான் அமெரிக்கா போகும் விடயமாகச் சித்திராவைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் நம்புவாளா?

Page 53
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 100
சித்திரா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கும் தகப்பனைப் பார்த்தாள். அது ஒரு அழகிய மாலை நேரம். லைப்ரரிக்குப் போக புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஆனந்தத்துடன் தகப்பனை வரவேற்கிறாள்.
“என்ன எங்கேயோபோகப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறாயோ?” அவளைப் பார்த்ததும் கரை கடந்த சந்தோசம் வந்தது. கவலையற்ற வாழ்க்கை வாழும் சித்திராவைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. பழைய நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டுதோல்வி மனப்பான்மையில் அவள் வாழமாட்டாள் என்று அவருக்குத் திருப்தி,
“என்ன திடீரென்று', மகள் விசாரித்தாள்.
வாரவிடுமுறைக்கு அவள் தாய் தகப்பனிடம் போவதுண்டு. அது வரைக்கும் பொறுக்காமல் அவர் வந்ததற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தெரிந்தது.
“சரி, நான் இனிலைப்ரரிக்குப் போகமுடியாது."
“வேண்டாம் எனக்காக உன் திட்டம் ஒன்றையும் மாற்ற வேண்டாம். ஒரு மணித்தியால ட்ரைவ்தானேசும்மா பார்க்க வந்தேன்".
"சுமதி எப்படி இருக்கிறாள்.'
செந்திலில் ரவி மிகவும் கோபமாயிருக்கிறான் என்பதைச் சொன் னார். 'சுமதி மிகவும் நொந்து போயிருக்கிறாள். இந்த நேரத்தில் ரவி கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்." சித்திரா சொன்னாள்.
அப்படி அவள் சொன்னது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. செந்திலின் போக்கால் சுமதி கஷ்டப்படும்போது சித்திரா சுமதிக்காகப் பரிதாப்படுவது நியாயம்தான். ஆனால் சுமதியை வருத்தப்படுத்தும் செந்திலைத் தண்டிக்க ரவி எடுக்கும் திட்டங்களுக்குச் சித்திராவும் தயங்குவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
"அப்பா இப்போது சுமதியிருக்கும் நிலையில் சரியாக எதையும் சிந்திக்கமாட்டாள். இந்தச்சூழ்நிலையில் பொலிஸ் கோர்ட் என்று வந்தால் அவளுக்கு நேர்வஸ் பிரேக் டவுண் வருவது ஆச்சரியமல்ல. அவர் மகன் சுகமாகும் வரைக்கும் என்றாலும் ரவி பொறுமையாயிருப்பது நல்லது என்று நினைக்கிறேன், ஏனென்றால் செந்தில் இப்போது சுமதி வீட்டில் இல்லை. அதே பெரிய விஷயம்.'
ராமநாதன் சுமதி விஷயம் பற்றி மேலதிகம் பேச விரும்பவில்லை. இருவரும் கேம்பிரிட்ஜ் வளாக மத்தியில் நடந்து கொண்டிருந்தார்கள். கோடை விடுமுறையானதால் மாணவர் கூட்டம் குறைந்திருந்தது.

101 நாளைய மனிதர்கள்
கல்வியின் உயர்ந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் கேம்பிரிட்ஜ் எங்கே திரும்பினாலும் புத்தகக் கடைகள், இளைஞர்களுக்குரிய பலதரப் பட்ட பொருட்களை விற்கும் எத்தனையோவிதம் விதமானகடைகளால் நிரம்பிவழிந்தது.
“லண்டனைவிடஎவ்வளவு அமைதியான இடம்இது.'ராமநாதன் அந்தச் சூழ்நிலையில் மனதைப் பறிகொடுத்துச் சொன்னார்.
“அதுதானே லண்டன் வேண்டாம் என்று இந்தப் பக்கம் வேலை எடுத்துக் கொண்டு வந்தேன்." சித்திரா தன்னையறியாமல் பெரு மூச்சு விட்டாள். அவள் லண்டன் பிடிக்காமல் ஓடிவந்ததற்கு உண்மையான காரணம் பழைய ஞாபகங்கள் என்று தெரியும். நாராயணனை ஞாபகப் படுத்தும் எந்த இடத்தையும் அவள் பார்க்கத் தயாரில்லை என்பதை அவர் அறிவார்.
'ஒன்றிரண்டு கிழமையில் ஒரு கொன்பரன்ஸ் விஷயமாக அமெரிக்கா செல்கிறேன்."
“அமெரிக்கா பேரைப் பிடிக்கவில்லை என்றீர்கள்?" இருவரும் ஒரு பார்க்கில் அமர்ந்தார்கள். கோடைகாலத்தின் எழில், பூத்துக் குலுங்கும் பலவிதமான மலர்களில் வெளிப்பட்டது.
“என்ன செய்ய, டிப்பார்ட்மெண்ட் போகச் சொன்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை . ஜோர்ஜ் எப்போது வருகிறான்."
மகளின் முகத்தை நேரே பார்த்துக் கேட்டார். “இன்னும் சில வாரங்களில் வருவான்." "நான் அமெரிக்காவில் நிற்கும்போது ஜோர்ஜைப் போய்ப் பார்த்தால் நன்றாகஇருக்கும். அவனும் நியூயார்க்கில் தானே நிற்கிறான்.” “ஒ உங்களைக் கண்டால் மிகவும் சந்தோசப்படுவான். இரவு கூட நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்".
ராமநாதன்தன் மகளின் முகபாவத்தை நோட்டம் விட்டார்.
ஜோர்ஜ் என்ற பெயரைச் சொன்னதும் இத்தனை சந்தோசமாக இருக்கிறாளே இவளிடம் நேராகக் கேட்கலாமா?
“வேலை விஷயமாகநியூயார்க் போன ஜோர்ஜ் ஏன்தாமதிக்கிறான் என்று தெரியவில்லை. விலாசம் தருகிறேன். முடிந்தால் ஒருதரம் போய்ப் பாருங்கள்.'சித்திராவின் குரலில் சட்டென்று தொனித்த சோகத்தை அவர் கவனித்தார்.
நீ ஜோர்ஜை விரும்புகிறாயா என்று அவர் நேரே கேட்கத் தேவை யில்லை. அவசரப்பட்டு கேம்பிரிட்ஜ்ஜ"0க்கு வந்தது பிழை என்று

Page 54
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 102
தெரிந்தது. ரவி பற்றி இவளிடம் பேசமுடியாது. இவள் மனத்தை ஆட்கொண்டிருப்பவன் ரவியல்ல.
“ரவி எப்படியிருக்கிறார்?'சம்பிரதாயத்திற்காக கேட்கிறாள் என்று பகிரங்கமாகத் தெரிந்தது.
“சுமதி விடயத்தில் தலையை மாட்டிக் கொண்டு தவிக்கிறான். பாவம், படிக்க வந்த இடத்தில் எத்தனை பிரச்சனை.'
"அப்பா, ரவி சாதாரண தமிழர்களை விட வித்தியாசமானவர். அவரின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ விஷயங்கள் அவரை மிகவும் இறுக்கி விட்டிருக்கிறது. சுடச்சுடப் பொன்போல மிகவும் தூய்மையான மனத்துடன் வாழ்கிறார். பொய்மையைக் கண்டால் அவருக்கு எரிச்சல் வருகிறது என்று நினைக்கிறேன். சுமதியின் வாழ்வில் அவர் எப்படி ஒரு நல்ல முடிவைக் கொண்டு வருவது என்று தெரியாமல் திண்டாடுகிறார் என்று நினைக்கிறேன்."
எவ்வளவு ஆழமாக ரவியை எடைபோட்டு வைத்திருக்கிறாள் இவள்? இருவரும் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக இருக்கும்?
“என்னப்பா இவ்வளவு தூரம் வேலை மெனக்கிட்டு வந்திருக் கிறீர்கள். என்னமுக்கிய விஷயம்?'இவரின் மனத்தை அறிந்தவள் போற் சொன்னாள்.
"தற்செயலாக நீவராமல் விட்டாலும் உன்னைப் பார்த்து விட்டுப் போக வந்தேன்.' ராமநாதன்தானறியப் பொய் சொன்னார்.
★

9
தகப்பன் திரும்பிப் போனபின் சித்திரா வரும்போது டேவிட்டின் கார் நின்றது. ஜேன் தனக்கு பின்னேரம் ஒரு மீட்டிங் இருப்பதாகச் சொல்லியிருந்தாள்.
“ஹலோ சித்ரா', டேவிட் இவள் வருவதைப் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு வாசலில் நின்று கூவினான்.
ஜேன் தனக்குக் குழந்தை கிடைப்பதாகச் சொன்ன நாளிலிருந்து டேவிட்டை அதிகம் சந்திக்கவிரும்பாததால், சித்திரா பதிலுக்கு "ஹலோ டேவிட்' சொல்லிவிட்டுத் தன் வீட்டுக்குப் போக முனைந்த போது, டேவிட் சித்திராவை நோக்கி வருவது தெரிந்தது.
“என்னை ஏன் அவாய்ட் பண்ணுகிறாய்?' டேவிட் பட்டென்று கேட்டான்.
"நான் யாரையும் அவாய்ட் பண்ணவில்லை." சித்திரா எடுத் தெறிந்து பேசினாள்.
"ஜேன் வீட்டுக்கு வர லேட்டாகும் ஏதாவது பாருக்குப் போ வோமா?’ சித்திராவின் உதாசீனத்தைப் பொருட்படுத்தாமற் கேட்டான் அவன்.
“இப்போதுதான் லைப்ரரிக்குப் போய் வந்தேன், வேண்டுமானால் என் வீட்டுக்குவா, நல்ல உறைப்புடன் கோழிக்கறி இருக்கிறது.'
டேவிட்டுக்கு இந்தியச் சமையல் என்றால் பிடிக்கும். டேவிட்டும் நன்றாகச் சமைப்பான். இந்தியச் சமையலைப் படிக்கிறான்.
“ஜேனுக்கு இப்போதெல்லாம் எதைக் கண்டாலும் கோபம் வருகிறது.' W
வந்ததும் வராததுமாகச் சொன்னான் டேவிட்.
சித்திரா மறுமொழி சொல்லவில்லை. இவன் தனது அரசியல் சமாசாரத்தைத் தவிர்த்து விட்டு ஜேன் பற்றிப் பேசியது ஆச்சரியம். “ரோனி பிளேர், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு சதாம் ஹ"சேனை

Page 55
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 104
அடிப்பதென்று நிற்கிறார். இந்த போருக்கு எதிராகத் திரளும் கூட்டத் துடன் வரச் சொன்னால் ஜேன் மாட்டேன் என்கிறாள்'.
சித்திராவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தன் வீட்டில் நடக்கும் பிரச்சினையைத் தெரிந்து கொள்ளாமல் உலகப் பிரச்சினைகளைத் தூக்கித்தலையில் போடுகிறானே?
“என்ன மெளனம்? வருகிற சனிக்கிழமை இந்தப் போருக்கு எதிராகக் கூட்டம் ஒழுங்கு செய்கிறேன். நீயும் வருவாய் என எதிர் பார்க்கிறேன்.'அவன் குரலில் உற்சாகம்.
“ஜேன் உன்னுடன் ஏன் கூட்டத்திற்கு வரமாட்டாள் என்பதற்கு அவள் இந்தப் போரை ஆதரிக்கிறாள் என்று அர்த்தமில்லை டேவிட். அவளின் நிலையை நீபுரிந்து கொள்ளாமல் இருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது.'
சித்திரா இவனுக்குச் சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள். குக்கரில் பப்படம் பொரிந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கோழிக்கறி சூடானது. மரக்கறிகளை வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த டேவிட் சித்திராவின் பேச்சைக் கேட்டான். டேவிட் மெளனமானான்.
“ஜேனின் நிலை எனக்குப் புரியாது என்று நான் எங்கே சொன்னேன்? சித்திரா இந்த உலகத்தில் குடிப்பதற்கு நல்ல தண்ணிர் கிடைக்காமல் ஒரு மணித்தியாலத்திற்கு இரு நூற்றைம்பது குழந்தைகள் இறக்கிறார்கள். நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கும் இந்த ஐந்து நிமிடத்தில் இருபதுக்கு மேல் இறந்து விட்டிருப்பார்கள். இப்படியான உலகத்தில் இன்னும் ஏன் குழந்தைகள்?"
“டேவிட் உன் இலட்சியங்கள் அற்புதமானவை. ஆனால் இயற்கையின் நியதி அது என்றால் நீயும் நானும் ஒன்றும் பண்ண முடியாது. இந்த உலகம் பணம் படைப்போர் கையில் இருக்கிறது. அவர்கள் நாளைய சந்ததியினர் பற்றிக் கவலைப் படப் போவதில்லை. இன்னும் இருபது வருடங்களில் இயற்கையின் மகாசக்திகளான மழை யாலும் வரட்சியினாலும் கோடிக்கான மக்கள் அழியத்தான் போகி றார்கள். உலக மயமாக்கப்படுதல் என்ற பெயரில் வளர்ச்சியடையாத நாடுகளை இந்தப் பணம் படைத்த உலகம் ஏப்பம் விடப் போகிறது. அதற்குநீயும், ஜேனும் பிள்ளை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட்டு விட முடியாது'.
"சரிசித்திரா, ஆனால் .'டேவிட்டை இடைமறித்தாள் சித்திரா.
"ஜேன் தன் குழந்தையை வயிற்றில் வைத்து அழித்துக் கொள்ள வேண்டும் என்கிறாயா? ஏன் உலகத்தில் பெரும்பாலான ஆண்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்? உலகமயமாக்கும் திட்டத்தைக்

105 நாளைய மனிதர்கள்
கொண்டு வருபவர்களுக்காகவும், உனது பிடிவாதத்திற்காகவும் ஜேனின் வயிற்றில் வளரும் குழந்தையை ...' அவள் முடிக்க முதல் அவன் குறுக்கிட்டான்.
“சித்திரா நான் ஒன்றும் அபார்ஷன் செய்து கொள்ளச் சொல்லவில்லையே.'
“ஆமாம் நீ கொடுக்கும் தொல்லையில் அவள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கருச்சிதைவுத் தானாக நடக்க மாட்டாது என்பது என்ன நிச்சயம்?"
ஜேனுக்காகச் சித்திரா அழுதுவிடுவாள் போலிருந்தது. டேவிட் இவள் சொன்ன உண்மையைக் கிரகித்துச் சிலையாய் நின்றான்.
★
т659 எடின்பரோவுக்குப் போவதாக எந்தத் திட்டமும் வைத்திருக்க வில்லை. மேற்படிப்புக்கு வந்தவன் லண்டனைத் தவிர வேறிடங்கள் போவான் என்று நினைத்திருக்கவில்லை.
தான் வேலை செய்யப் போகும் ஹாஸ்பிட்டலைப் பார்க்கப் போவதாக மெலனி சொன்னாள்.
"நீங்களும்தான் ஸ்காட்லாந்து பார்க்கவில்லை வரலாமே".
அவளின் இந்த வேண்டுகோளை அவன் எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் லண்டனிலிருந்தால் சுமதியுடன் தேவையில்லாமல் தகராறு பண்ண வேண்டிவரும் என்றும் அவனுக்குத் தெரியும்.
செந்திலைப் பற்றிப் போலீஸில் புகார் கொடுப்பது பற்றி சுமதி பெரிதாக அக்கறை எடுக்கவில்லை என்று தெரிந்ததும் அவனுக்கு எரிச்சல் வந்தது.
அம்மாவுக்குப் போன் பண்ணினான். வழக்கமாக ஒவ்வொரு கிழமையும் போன் பண்ணுவான். மனச்சாந்தி தேடி அம்மாவுக்குப் போன் பண்ணினான்.
சுமதியின் மகன் தற்செயலாக அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாகச் சொன்னபோது தன்னை இப்படிப் பொய் சொல்ல வைத்த சுமதியின் மீது கோபம் வந்தது. போதாக் குறைக்கு அம்மா செந்திலைப் பற்றிச்சொல்லும்போது 'அவன் சுமதியின் மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறான். குழந்தைகளை நன்றாகப் பார்ப்பான்' என்றாள்.
அம்மாவுக்கு இப்படியான கருத்துக்களை மனதில் கொட்டியது யார்? சுமதியா? அவனுக்கு எரிச்சல் வந்தது.
“உனது படிப்பு முடியப் போகிறது.'

Page 56
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 106
அம்மா இப்படிச் சொன்னபோது அவனிடம் என்ன எதிர் பார்க்கிறாள் என்று புரியாமல் இருந்தது. ஊருக்கு உடனடியாக வரச் சொல்கிறாளா? அல்லது கொஞ்ச காலம் லண்டனிற் தங்கிநின்று வேலை பழகு என்று சொல்லப் போகிறாளா?
அவளைப் பார்க்கச் சொல்லி உதவிக்கு வைத்திருந்த பையன் இயக்கத்தில் சேர்ந்து விட்டான் என்று கேள்விப்பட்டிருந்தான். இப்போது அம்மாவை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?
அப்பாவின் சொந்தக்காரப் பெண் - ஒரு விதவை தன்னுடன் வந்திருப்பதாகச் சொன்னாள்.
இவன் கேட்க முதலே அம்மா சொன்னாள்.
“இங்க பெரிய மாற்றங்கள். வயது வராத பிள்ளைய வேலைக்கு வைச்சிருக்க முடியாது." W
“நல்லதுதானே', ரவி ஏதோ கேட்கவேண்டும் என்று நினைத்தான் கேட்க முடியவில்லை. அம்மா வீட்டிலிருந்த பையன் எப்படி இயக் கத்தில் சேர்ந்தான் என்று கேட்க நினைத்தான், கேட்க விரும்பவில்லை. அரசியல் கேள்விகளைத் தவிர்ப்பது அம்மாவுக்கும் நல்லது தனக்கும் நல்லது என்று முடிவு கட்டியிருக்கதான்.
சுதந்திரசிந்தனையைத் தடைப்படுத்தும் வாழ்வில் தேவையில்லாத கேள்விகளை கேட்டு அம்மாவைத் துன்பப்படுத்தவில்லை அவன்.
அம்மா, அப்பாவின் அந்திரட்டி பற்றிச் சொன்னாள். “அநியாய மாய் என்ர அவர என்னிடமிருந்து பிரிச்சுப் போட்டான்கள்." அம்மா குலுங்கியழுதாள். அப்பா இறந்து பதினெட்டு வருடங்கள் ஆகின்றன. அவரின் சிந்தனைகளின் வெளிப்பாடு அவர் மரணத்திற்குக் காரண மாயிற்று. அம்மா அந்த மரணம் பற்றிப் பேசமாட்டாள். அவர் பிரிவு பற்றிப் பேசுவாள். அவரை மரணமடையப் பண்ணிய காரணிகள் பற்றிப் பேசமாட்டாள்.
கொடுத்த தேனிரைக் கையிலெடுத்துக்கொண்டு, தட்டிய கதவைத் திறந்த மனிதன்மூளை சிதறிக் கீழே விழுந்த அதிர்ச்சி அவளை எவ்வளவு நாள் நடைப்பிணமாக வைத்திருந்தது? ரவி இவற்றை எல்லாம் பேச முடியாது. அம்மாவின் வாழ்க்கையில் அவள் இழந்தவை ஏராளம். இனி நடக்கப் போவது என்றாலும் நன்றாகநடக்க வேண்டும் என்று கற்பனை செய்வது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. தன் கணவன் சிதம்பரம்போல் தன் மகள் கணவன் செந்திலும் நல்லவனாக இருப்பான் என்று அவள்
நினைப்பது இயற்கை.
“ஸ்கொட்லாந்தின் இயற்கைக் காட்சிகள் மிக ரம்மியமானவை' மெலனி சொன்னாள். லண்டனிலிருந்து ஸ்கொட்லாந்து போகும்

107 நாளைய மனிதர்கள்
வரைக்கும் பெரும்பாலும் தனது வேலை விடயமாகப் பேசிக் கொண்டு வந்தாள். மிஸ்டர்டெய்லருக்காகத் தான் ஓடிப்போகவில்லை என்பதை அவள் சொன்னாலும் அவள் எடுத்த முடிவுக்கு மிஸ்டர்டெய்லரும் ஒரு முக்கிய காரணிஎன்று அவனுக்குத் தெரியும்.
"ஏன் சில மனிதர்கள் விருப்பமில்லாத உறவுகளுக்குள் தங்களைச் சிறைப் பிடித்திருக்கிறார்கள்?'அவன் பெருமூச்சுடன் கேட்டான். அவர் கள் முன்னே எடின்பரோ கோட்டை கம்பீரமாகத் தெரிந்தது. அதைச் சுற்றிய இடத்திலுள்ள கட்டிடங்கள், பூங்காவனங்கள், புதிதாக முளைக்கும் எத்தனையோ கடைகள் என்பன மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. இவர்கள் போயிருந்த சமயம் 'காமடி நிகழ்ச்சிகள் பெரிதாக நடந்து கொண்டிருந்தன. இவனையும் கூட்டிக்கொண்டு காமடிக்’கிளப் ஒன்றுக்குப்போகவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள்.
மெலனிதன் பழைய வாழ்க்கைபற்றிஇவனுக்குச் சொன்ன போது இவன் மிக மிகத் துன்பப்பட்டான். மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த பெண்களையும் இந்தப் பாலியல் கொடுமைகள் எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதை மெலனிமூலம் தெரிந்தபோது நெஞ்சில் நெரிஞ்சி முள் தைத்தது.
மிஸ்டர் டெய்லரின் பார்வைக்குப் பயந்து வேலை மாறிப் போவதாக இருக்கிறது அவள் செய்கை, ஆனால் அதுதான் காரணம் என்று அவள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.
உனக்கு யாரும் பாய் பிரண்ட் இருக்கவில்லையா என்று இவன் இதுவரைக்கும் கேட்கவுமில்லை. ஆங்கிலேயர் தாங்களாகத் தங்கள் தனிப்பட்ட விஷயங்களைச் சொன்னால் அன்றி மற்றவர்கள் கேட்பதை விரும்ப மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.
எல்லோரிடமும் கருணையுள்ளத்துடன் பழகுகிறாள். முதல் நாள் சந்திப்பிலேயே சித்திராவைத் தன் பிறந்த தினப்பார்ட்டிக்குக் கூப்பிட்டு விட்டாள்.
“என்ன எடின்பரோ வந்தும் லண்டன் பற்றிய யோசனையா?” மெலனியின் பொன்கூந்தல் காத்திலாட, முகத்தில் மலர்ச்சி தவழக் கேட்டாள்.
யாரிடமாவது சொல்லியழ வேண்டும் போலிருந்த எத்தனையோ விஷயங்களை மெலனியிடம் சொன்னான்.
“செந்தில் ஏன் இன்னொரு பெண்ணுடன் சுற்றுகிறான். ஒன்றுடன் திருப்திப்படாத மனிதர்கள் இவர்கள்'
'உலகத்தில் எத்தனையோ டெய்லர்களும் செந்தில்களும் இருக்கிறார்கள், கல்யாணம் என்ற போர்வைக்குள் விரும்பாத பாரங்களை

Page 57
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 108
எல்லாம் சுமக்க வேண்டி வரும்போது சுவையாக ஏதும் கிடைக்குமா என்று தேடுவது மனித சுபாவம். அதில் நாங்கள் எல்லோரும் அடங் குவம். எங்களுக்கு இப்போது இருக்கும் சூழ்நிலையில் லண்டன் பிடிக்கவில்லை வெளியில் வந்து விட்டோம். கல்யாணம் முடித்தவர்கள் அப்படிச்செய்யமுடியுமா!ஏதோஒருவிதத்தில் எஸ்கேப் தேடுகிறார்கள்." “சுமதி இவ்வளவு காலமும் செந்திலைப்பற்றித் தெரியாமல் இருப்பது ஆச்சரியம்."
"ரவி, சுமதிக்குத் தெரியாமலில்லை. முழுக்க முழுக்கத் தெரியா விட்டாலும் தன் புருஷன் இன்னொருத்தியைப் பார்ப்பது ஒரு மனைவிக்குத் தெரியாமலில்லை. தெரியாத மாதிரிக் காட்டிக் கொள்வது கெளரவம் அல்லது தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொள்ளும் ஒரு முறை என்று கணித்துக் கொள்கிறார்கள். நேரடியாகக் கேட்டுச் சண்டை பிடிக்கப் பெரும்பாலான பெண்களுக்குத் துணிவில்லை. வேறு ஏதோ காரணங்களைக் காட்டிச் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பெரும் பாலான தம்பதிகள் போலியாகத்தான் வாழ்கிறார்கள், சமுதாய அந்தஸ்துக்காகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.'
எனது தகப்பன் நல்லவர். “உங்களைப் பார்த்தால் தெரிகிறது."
“என்ன தெரிகிறது?" “ஒரு நல்ல அப்பாவுக்குப் பிறந்த பிள்ளை என்று தெரிகிறது.” “நல்ல மனிதர்கள் என்பவர்யார்?சமுதாயத்தில் நடக்கும் கொடுமை களை எதிர்த்து நின்று அதன் பிரதிபலனாகத் தன் குடும்பத்தை இக்கட் டானநிலையில் விடுபவர்களா?” .
ரவியின் நினைவுகள் நீண்டகாலத்தின் பின்தாவி விட்டது என்பது அவனின் குரலில் தெரிந்தது. மெலனியிடம் ரவி தனது தந்தை இறந்து போன செய்தியைச் சொல்லியிருக்கிறான். என்ன மாதிரியான சூழ் நிலையில் கொலை செய்யப்பட்டார் என்றும் சொல்லியிருக்கிறான்.
“நல்ல மனிதர்களாகத்தான் எல்லோரும் பிறக்கிறோம். குடும்ப சூழ் நிலை, சமுதாய சூழ்நிலை, உறவுகளின் தாக்கம் என்பன ஒரு மனிதனை மாற்றுகிறது. எல்லா உயிர்களும் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் உள் உணர்வின் நியாயத்தோடு போராடிக் கொண்டு தான் இருக்கின்றன. நியாயத்திற்கு நின்று பிடிப்பது இலகுவான காரியமல்ல. உயிரையே பறிகொடுக்கும் அளவுக்கு உன் தகப்பன் உறுதியாய் நின்றது ஒரு மகத்தான செயல் என்று நினைக்கிறேன்.'
ரவி மெலனியைப் பார்த்தான். அவர்கள் அப்போது லண்டனை விட்டு எவ்வளவோ தூரத்தில் இருந்தார்கள்.

109 நாளைய மனிதர்கள்
மட்டக்களப்பில் எப்போதோ நடந்த மரணத்தின் தாக்குதலை எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இந்தப் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருப்பது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
இந்த மெலனியிடம் எதையும் மனம் விட்டுப் பேசலாம்', ரவிதனக் குள் நினைத்துக் கொண்டான். மனித உறவுகள் இப்படி மகத்தானதாக இருக்கும் என்பதை நேரில் உணர்ந்தபோது புல்லரித்தது.
அவளின் உறவு சந்தோசமானதாக இருந்தது. பிரச்சினையற்றதாக இருந்தது. தனபால் மாமா சொல்வதுபோல் இவன் பின்னால் அவள் சுற்றிக்கொண்டு திரியவில்லை. இவனுக்குப் பின்னால் சுற்றித் திரிந்து நேரத்தை வீணடிக்கும் முட்டாள் பெண்ணல்ல அவள். சந்தோசங்களும் திருப்திகளும் ஆண்களின் மூலம்தான் பெண்களுக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்றவள். ஸ்காட்லாந்தின் மலை முகடுகள் மெளனமாய் இவர்களின் சம்பாஷனையை ஏற்றுக் கொண்டன. மெல்லிய குளிர் காற்று குழம்பிக் கிடக்கும் மனதிற்கு இதமாக இருந்தது. அலைபாய்ந்து கிடந்த மனத்திற்கு இந்தச் சூழ்நிலை நிம்மதியைத் தந்தது.
லண்டன்வெள்ளைக்காரரை விடஎடின்பரோவில் காணும் ஸ்கொட் டிஷ் மக்கள் சினேகிதத்துடன் பழகுகிறார்கள். வேலை, வீடு, சுமதி ஆகிய பிச்சினைகளுக்கப்பால் இருப்பது இன்னொரு உலகத்தில் இருப்பது போலிருந்தது. பிரச்சினைகளைத் தன் சாதாரண சூழ்நிலைக்கு அப்பால் பார்ப்பது வித்தியாசமான அனுபவம். ஒன்றிரண்டு நாள் பிரச்சினைகளுக் கப் பாலிருந்து கொண்டு மூன்றாம் மனிதனாய் விஷயங்களைப் பார்க்கும்போது சில விஷயங்கள் தெளிவாக இருப்பது போலிருந்தது.
“டெய்லருக்குப் பயந்து ஸ்கொட்லாந்துக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். ப்ரமோஷனுடன் ஒரு வேலை வரும்போது ஏன் முகம் கொடுக்க முடியாது எனது யோசித்தேன்.' தனது நடவடிக்கைகளை இவன் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் குரலிற் தொனித்தது.
மெலனிஇவனிடம் இதை ஏன் சொல்ல வேண்டும் என்று அவனுக் குத் தெரியாது. ஆனால் அவள் மேலும் விளக்கம் கொடுத்தபோது இன்னும் சில மாதங்களில் கவனமாக இருப்பது மிக முக்கியமென்று Lull-gil.
மேற்படிப்பு முடிந்து ஒரு தலையிடிதீருகிறது என்றிருக்கும்போது ஏன் மிஸ்டர் டெய்லருடன் மோதிக்கொள்ள வேண்டும் என்று அவன் யோசித்தான்.
★
என்னவென்று சில வாரங்கள் ஓடிவிட்டனளன்று தெரியவில்லை. ஈராக்கில் சதாம் ஹ"சேனை எப்படித்தொலைப்பது என்று அமெரிக்கன்

Page 58
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 110
பிரசிடெண்ட் புஷ் பிரசாரம் செய்ய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஒத்துப்போவது பிரித்தானிய மக்களை மிகவும் கவலைக் குள்ளாக்கியிருந்தது.
போருக்கு எதிரான பிரச்சாரக் கூட்டங்களில் டேவிட் மிகவும் பிஸியாக இருந்தான். அவனின் மனிதாபிமானமான இந்தச் செயல்களில் ஜேனும் மிகவும் ஆர்வமுடன் ஈடுபட்டாள். அவர்களின் உறவில் மீண்டும் நெருக்கம் உண்டானது.
சித்திராவிடம் வந்து ஜேன்வழக்கம்போல் தனது மனக்குறைகளைச் சொன்னபோது, “உலகத்தின் துன்பத்தைக் குறைக்கப் பாடுபடுகிறான். உனது துன்பத்தைப் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறான் என்பது உனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது இவர் தங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பார்க்காமல் எங்கேயோ அலைகிறார்' என்று சித்திரா சொல்ல,
“டேவிட் உலகத்தைப் பற்றிக் கவலைப்படுவதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவன் பணத்திற்காக எதையும் எழுத மாட்டான். எதையும் செய்ய மாட்டான். ப்றிலான்ஸ் சில் போர்ட்டராக இருப்பதால் ஓரளவு சுதந்திரமாகவும் சுயமையுடனும் எழுதலாம் என்று நினைப் பதால்தான் அவனின் நேர்மை என்னைக் கவர்கிறது', ஜேன் பெருமூச்சு விட்டாள்.
“இப்போது என்ன செய்யப் போகிறாய்?" டேவிட் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று திண்டாடிக் கொண்டிருக்கும் ஜேனைக் கேட்டாள் சித்திரா.
"நாங்கள் இருவரும் எங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று எப்போதோ சொல்லிக் கொண்டது உண்மை. இப்போது எனக்குக் குழந்தை வந்தது இருவருக்கும் பொறுப்பான விடயம்தான். ஆனால் அரைகுறை மனத்துடன் இந்த மாற்றத்திற்கு முகம் கொடுப்பது சரியில்லை என்று நினைத்தேன்'
"அப்படியானால்,.'
"அவனைச் சுதந்திரமாக வாழ விடாமல் நான் தடுக்கக் கூடாது என்று நினைக்கிறேன்." ஜேனின் குரல் தெளிவாக இருந்தது. "ஆண் களின் தயவில்லாமல் பெண்களால் வாழ முடியும்." ஜேன் தொடர்ந்து சொன்னாள்.
“அதாவது'
ஜேன் சித்திராவை நேரே பார்த்தாள். ஜேனின் முகத்தில் இருந்த தெளிவு சித்திராவை வியக்கப் பண்ணியது.

111 நாளைய மனிதர்கள்
சில வாரங்களுக்கு முன் என்ன செய்வேன், எப்படி எதிர்காலம் இருக்கப் போகிறது, டேவிட் விரும்பாவிட்டால் நான் இந்தக் கர்ப்பத்தை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த குழப்பமான பெண்ணாகத் தெரியவில்லை. அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள். பிரச்சினை களை எப்படி ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கோணத்தில் அணுகு கிறார்கள் என்பதைஜேன் புலப்படுத்தினாள். தனது நீண்ட தலைமயிரை ஒதுக்கிக் கொண்டாள். ஜேன் தன் சினேகிதியை அன்புடன் பார்த்தாள்.
"சித்திரா நீஎவ்வளவு தூரம் எனது முடிவுகளுக்கு உதவி செய்தாய் என்பதை நான்விளங்கப்படுத்த முடியாது. ஒரு பெண்ணுக்குசாட்டுக்கும் போக்குக்கும் ஒரு ஆண் துணை இருப்பதைவிட ஒரு பெண் தன் மனச்சாட்சியின்படி நடப்பது சரி என்று நீஎனக்குப் புலப்படுத்தினாய். நீ அடிக்கடி சொல்வாயே, அதாவது, நாராயணன் என்னை மறந்ததோ மறுத்ததோ பற்றி நினைத்து நினைத்து அழப் போவதில்லை. நாளைய உலகம் எனக்கு நன்மையாயிருக்க வேண்டும். அந்த உலகத்திடம் என்னை நம்பிக்கையுடன் அர்ப்பணித்திருக்கிறேன் என்றும் நீ சொன்னாய். உனது வார்த்தைகள் என்னையோசிக்கப் பண்ணியது. ஒரு உயிர் மிகவும் அற்புதமானது. ஆண்களின் எதிர்பார்ப்புகளுக்காக நான் அந்த உயிரை அழிக்கும் கொலைகாரியாகத் தயாரில்லை. டேவிட் இல்லாத வாழ்வு மிகவும் துக்கமாகத்தான் இருக்கும். ஆனால் எனது எதிர்காலம் குழந்தையுடன் மிகவும் சந்தோசமாகவும், திருப்தியாகவும், நேர்மையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன், அதில் டேவிட் இணைந்து கொண்டால் மிக மிகச் சந்தோசப்படுவேன்' ஜேனின் குரல் தழுதழுத்தது. சித்திரா மெளனமானாள். ஜேன் தொடர்ந்தாள்.
“ஒரு உறவு உடையும்போது அந்த உறவின் இனிமைகளை நினைத்துக் கொள். வேண்டாத நினைவுகளை அகற்றிக் கொள். சந்திப்புக்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு நியதியுடன்தான்நடக்கிறது. நான் டேவிட்டுடன் வாழ்ந்த வாழ்க்கை உண்மையானது. சந்தோசமானது. அவன் மிக மிக நல்லவன். இப்போது என்னோடு சேர்த்து இன்னொரு உயிரையும் சேர்த்துப் பார்ப்பது அவனுக்கு முடியாமல் இருக்கிறது போலும். அதற்காக நான் அவனைத் திட்டவில்லை. காதலின் ஞாப கங்கள் மனதில் இருக்கிறது. அவன் இன்றைய நாளிலிருந்து எப்படியும் வாழட்டும்.'
“அதாவது டேவிட்டை விட்டுப் பிரிவது என்று தீர்மானித்து விட்டாய்."
ஜேன்சித்திராவின் கேள்விக்குப் பதில் பேசவில்லை.
女

Page 59
1 O
சித்திராஇரண்டுநாட்களாகச் சாப்பிடவில்லை. உலகம் இன்னொரு தரம் இருண்டுவிட்டது போலிருந்தது. கேம்பிரிட்ஜ் நகரம் இளைஞர் களின்நகரம். எதிர்காலக் கனவுகளை இனிமையாக்குபவை. அகில உலக மாணவர் பட்டாளத்தால் அந்த நகரம் ஒரு அற்புதக் கலைத் தன்மை வாய்ந்ததாய் இருந்தது. அந்த உலகம் சட்டென்றுகளையிழந்து போனது போல் இருந்தது.
கால் போனபடி நடந்து சென்றாள் சித்திரா. மனதில் ஏறியிருந்த பாரம் உடலையும் வருத்தியது. சல சலவெனப் பாயும் சின்னக் கால்வாய் அருகில் உட்கார்ந்தாள். ஒரு சில காதலர்கள் மர நிழலில் இந்த உலகை மறந்து போயிருந்தனர். காதல் வயப்படுவது ஒரு அற்புதமான அனுபவம். சித்திரா சிந்தித்தாள். தன்னைவிட இந்த உலகத்தில் மற்ற யாவரும் மிகவும் சந்தோசமாக இருப்பதாக நினைத்தாள்.
ஆழ்ந்துபோன சோகத்திலிருந்து தப்ப வேறு ஏதோ செய்யலாம் என்றால் மனம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. தன்னை இப்படி யாக்கிய ஜோர்ஜை நினைத்தால் மனம் வெடிக்கிறது. அமெரிக்கா ஈராக்குக்கு எதிராகத்தொடுக்கப் போகும் போரை எதிர்த்து நடத்தப்படும் கூட்டத்திற்கு சித்திராவையும் வரச்சொல்லிடேவிட்கேட்டான். அரசியல் வேலைகளில் ஈடுபட அவள் மனநிலை சரியாயில்லை.
“எங்களுக்கு உலகத்தில் எத்தனையோ கடமைகள் இருக்கின்றன. அதர்மம் பிடித்த அமெரிக்கா தனது போர்வெறியில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்லப் போகிறார்கள். யாரையாவது அல்லது எதையாவது அழிக்காவிட்டால் அமெரிக்காவுக்குத் திருப்தி வராது போலிருக்கிறது. நீயும் இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டும்.' டேவிட்
விடாப்பிடியாகக் கேட்டான்.
தன் சொந்த வாழ்வு சிதறிப்போய் இருக்கும்போது உலகத்திற்காக
அழ அவளால் முடியவில்லை.
ஏதோ காரணம் சொல்லி டேவிட்டை அனுப்பிவிட்டாள்.
டேவிட்டின்அரசியல் பணியில் ஜேனும் ஒத்துப்போகிறாள். தனிப்பட்ட

113 . " . ۸ நாளைய மனிதர்கள்
பிரச்சினைகளைக்காட்டவில்லை. அதேநேரம் சுமதிக்குப் பரிதாபப்பட்ட சித்திரா இப்போது தனக்காகத் துக்கப்பட்டாள். சித்திரா தன் சோக நிலையை யோசித்து மனம் சோர்ந்து போனாள். என்னவென்று ஜோர்ஜ் இப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அல்லது நான் அப்படி நினைக்கிறேனா?
'இன்னொரு பெண்ணையணைத்தபடி ஜோர்ஜ் போய்க் கொண்டிருந்தான்.' அப்பா இப்படிச் சொன்னபோது சித் திரா வாய்விட்டுச் சிரித்தாள்.
"அப்பா தெரிந்த சினேகிதப் பெண்களுடன் அணைத்தபடி நடப்பது ஆங்கிலேயர்களால் அங்கீகரிக்கப்பட்ட விடயம்'. சித்திரா இப்படிச் சொன்னது அப்பாவுக்குக் கோபத்தையுண்டாக்கிவிட்டது.
“அணைப்புக்கும் ஆதரவுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கின்றன சித்திரா. நீ ஜோர்ஜை உன்னுடைய சினேகிதன் என்று சொல்கிறாய். உன்னைப்போல் இன்னொருசினேகிதியை நியுயோர்க்கில் சந்தித்திருப்பான் போலும்."அப்பா அலுப்புடன் சொன்னார்.
அமெரிக்கா போயிருந்தவர் ஜோர்ஜைத் தேடிப் போனபோது அவன் ஒருபெண்ணின் நெருங்கிய அணைப்பில் இருந்ததைத் தான் கண்டதாகச் சொன்னார். அவர் முகத்தில் வேதனை, சோர்வு. வேலை விடயமாக இரண்டு மாதம் தங்குவதற்குச் சென்றவன் நான்கு மாத மாகியும் திரும்பிவராதபோது அவள் சந்தேகப்படவில்லை. அப்பாவந்து ஜோர்ஜ் பற்றிச்சொன்னபின் அவள் மனம் மிகவும் குழம்பிப் போயிருக் கிறது. கடந்த வாரம் போன் பண்ணியபோது அமெரிக்காவில் எப்படித் தன் வாழ்க்கையின் புதிய திருப்பம் ஏற்பட்டது என்பதைத் தான் வந்து விளங்கப் படுத்துவதாகச் சொன்னபோது சித்திரா அதை ஒரு பெரிய விடயமாகநினைக்கவில்லை. இப்போது பெருமூச்சு விடுகிறாள். ஜோர்ஜ் பெரும்பாலான ஆண்களில் ஒருத்தனா? தலை சுற்றியது. மோபைல் டெலிபோன்கினுகினுத்தது.
“என்னலண்டன்பக்கம் எட்டிப் பார்க்கும் யோசனை இல்லையா", சுமதி கேட்டாள். சுமதியின் குரலைக் கேட்டதும் வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. செந்திலின் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் சுமதி, டேவிட்டின் உதாசீனத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஜேன், இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கை ஆண்களால் குழப் பப்படுகிறது? பெணகளின் பெலவீனமா இதற்குக் காரணம்?
“வேலையில் பிஸி'சித்திரா மனதறிந்த பொய் சொன்னாள்.
“ஓம். நீ வேலையில பிஸி, ரவி மெலனியோட பிஸி, நான் ஒருத்தி தனிமையில்," சுமதி வழக்கம்போல் சுயபரிதாபத் தோரணையைத் தொடங்கினாள்.

Page 60
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 114
“சுமதி தன் கையே தனக்குதவி. மற்றவர்கள் எவ்வளவுக்கு எப்போதும் உதவியையும் சந்தோசத்தையும் தருவார்கள் என்பதைத் தவிர்க்க வேண்டும்".
"நான் என்ன லண்டன் மாப்பிள்ளை கேட்டேனா? உன்ர தகப் பனும் தனபால் மாமாவும் இந்த மோசமான செந்திலை என் தலையில் கட்டினார்கள்.எனது கண்ணிர் இவர்களை விடாது.” சுமதி பட்டிக்காடு
மாதிரிச்சாபம் போட்டாள். *
A 'f
சுமதி தன் மாமா ராமநாதனுக்குச் சாபம் போடுகிறாள். அவர் மகள் சித்திரா அதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள். என்ன விந்தை?
ராமநாதன் மகளுக்கு என்ன நடந்தது என்பதைச் சுமதிக்குச் சொல்லலாமா?
போனகிழமை ஜோர்ஜ் போன்பண்ணியபோது தன் வாழ்க்கையில் புதிய திருப்பம் வந்ததாகச் சொன்னான். என்ன திருப்பம்? அப்பா சொன்ன விடயம் உண்மையா? ஒரு சில நாட்களுக்கு முன் தகப்பன் வந்து ஜோர்ஜை, தான் இன்னொரு பெண்ணுடன் சந்தித்ததாகச் சொன்னார்.
இன்று காலையில் ஜோர்ஜ் போன் பண்ணிஇன்னும் சில நாட்களில் லண்டன் வருவதாகவும் சித்திராவுக்கு மிக மிக ஆச்சரியமான விடய மொன்றைச் சொல்லப் போவதாகவும் சொன்னான்.
"அப்பா உன்னை இன்னொரு பெண்ணுடன் பார்த்தாராம் அது யார் அந்தப் பெண்’ என்று அவள் கேட்கவில்லை. அப்படிக் கேட்கத் தனக்கு உரிமையிருக்கிறதோ தெரியாது என்று யோசித்தாள்.
“என்ன ஆச்சரயமான விடயம்?' தொனியைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாலும் நாடி படபடவென்று அடித்துக் கொண்டது.
“விடயத்தைப் போனில் சொல்ல முடியாது. கூட்டிக் கொண்டு வர்றன். இவ்வளவு காலமும் உன்னிடம் மனம் திறந்து என்னைத் திருமணம் செய்துகொள்என்று சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் என்னவென்று சொல்வேன்." ஜோர்ஜ் டெலிபோனில் சொல்லிக் கொண்டிருந்தான். போனைப் பிடித்திருந்த சித்திராவின்கைகள் நடுங்கின. குரலில் அந்த நடுக்கம் தாவாமற் பார்த்துக் கொண்டாள். மனம் திறந்து எத்தனை விடயங்களைச் சொல்லாமல் விட்டாய் என்று கேட்கவில்லை அவள்."என்னைத்திருமணம் செய்ய வேண்டுமென்றுநீநினைத்தாயா? எனக்குத் தெரியாது." சித்திரா அழுதுவிடுவாள் போலிருந்தது. அழ மாட்டேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொணடாள்.

115 தாளைய மனிதர்கள்
“நான் நினைத்த எத்தனையோ விடயங்களை நான் உன்னிடம் சொல்லவில்லை சித்திரா', அவன் பெருமூச்சு விடுவது கேட்டது. தாய் தகப்பன் இல்லாமல் அனாதையாக வளர்க்கப்பட்டவன். அதை அவளுக்குச் சொல்லிவிட்டானே! ஏன் இந்தப் பெருமூச்சு!
“மனிதர்களில் எப்படித்தான் நெருக்கமாயிருந்தாலும் தங்களை மற்றவர்களிடமிருந்து எத்தனையோ கோணங்களில் மறைத்துக் கொள்கிறார்கள்."
அவன் அவளுக்கு விளங்காத எதையோ பேசுவது போலிருந்தது.
"நான் ஒன்றும் உங்களை முழுக்கத் தெரிந்து கொள்ள விரும்ப வில்லை. எனக்குத் தெரிந்த விதத்தில் உங்களைப் புரிந்து கொண்டது போதும்.'
"நீ கெட்டிக்காரி, என் நிலையைப் புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்."என்னசொல்கிறான்? அமெரிக்காவில் என்னநடக்கிறது என்று தெளிவாய்ச் சொன்னால் என்ன?
ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு.
அவளுக்கு எரிச்சல் வந்தது. வயது வந்தவர்கள் மாதிரி நடந்து கொள்ளாமல் என்ன குழந்தைத்தனம்?
“என்னுடன் வரப்போகும் பெண்ணைப் பார்த்துநீஆச்சரியப்படப் போகிறாய்."
சித்திரா எப்படித்தான் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண் டாலும் அவன் இன்னொரு பெண்ணைப் பற்றிப் பேசுவதைக் கேட்கத் தர்ம சங்கடமாக இருந்தது.
“மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்', குரலைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு சொன்னாள்.
அப்பா சொன்னது சரிதான். ஜோர்ஜ் மாறித்தான்விட்டான். இன்னு மொரு பெண் இன்னுமொரு உறவு. இன்னுமொரு தோல்வி
“தாய் தகப்பனை மீற முடியவில்லை. நான் அவர்கள் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன்." இப்படித்தான் நாராயணனும் சொன்னான். ஐ லவ் யூ என்ற சொல்லு மிகவும் பொழுதுபோக்கான ஒரு சொற் தொடராகி விட்டதோ அதைத் தானே நாராயணனும் செய்தான்.
இன்னும் சில நாட்களில் அவளுக்குப் பிடித்த ஜோர்ஜ் இன்னொரு பெண்ணுடன் வருகிறான்! கெளரவமாக அவள் ஹலோ ஹவ் டு யு டு சொல்லிக் கொள்ள வேண்டும்! அவள் இங்கிலாந்துக் கலாச்சாரத்தின்படி

Page 61
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 116
மிகவும் கெளரவமாக அவளை வரவேற்க வேண்டும். சித்திரா தன் துன்பத்தை மறந்து விட்டு ஜோர்ஜை வரவேற்க வேண்டும். இந்த நிலையில் சுமதிப் பெண் தன்னைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்று ஒலம் போடுகிறாள். உலகம் சில வேளையில் பைத்தியத் தனமாய்ப் போய்க் கொண்டிருப்பதாகப் பட்டது.
செந்தில் குடிப்பவன். மனைவி குழந்தைகளை அடிப்பவன். அவனுக்குஇன்னுமொரு பெண்ணுடன்தொடர்பிருக்கிறது என்பது ஊர், உறவினர் அறிந்த ரகசியம், ஆனால் சுமதிக்குத் தெரியாது. தெரிந்தால் என்ன செய்வாள்? ஒடிப்போய் தேம்ஸ் நதியில் விழுந்து வாழ்க்கையை முடித்து விடுவாளோ?
“சுமதி இப்போது உனது நிலையில்தான் நானும் இருக்கிறேன். உனது கணவன் போலத்தான்நான் விரும்பிய சினேகிதனும் யாரோ ஒரு பெண்ணுடன் திரிவதாக அப்பா சொன்னார்' என்று சுமதிக்கு அவள் சொல்ல முடியாது.
அப்பா சொன்னது, அவன் போன் பண்ணிச் சொன்னதையும் ஒட்டிப் போட்டு ஒரு உருவம் அமைத்தால் ஜோர்ஜ் நிச்சயமாக மாறி விட்டான் என்று தெரிகிறது.
உன்னைத் தவிர எனக்கு நெருங்கிய சினேகிதம் யாருமில்லை என்றவன், நான் கூட்டிக்கொண்டு வரும் பெண்மணியைப் பார்த்து நீ ஆச்சரியப்படப் போகிறாய் என்கிறான்.
என்ன நடந்தது? சித்திராவின் யோசனை எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கசுமதியின்தொணதொணப்புத்தொடர்ந்து கொண்டிருந்தது.
“இந்த வார விடுமுறையில் ஏன் நீவரக்கூடாது?’ சுமதி உரிமையுடன் கேட்டாள். சுமதிக்குத்தன் துயரங்களை கொட்டியழ சித்திரா இருக்கிறாள், சித்திராவுக்கு யாரும் இல்லை.
சுமதியிடம் போனால் செந்திலைத் திட்டுவாள் அல்லது தன் தம்பியைப் பற்றி ஏதோமுணுமுணுப்பாள். நானும் போய் ஜோர்ஜ் பற்றி ஏதும் சொல்லலாமா?
'சுமதியிடம் ஏன் ஜோர்ஜ் பற்றி சொல்ல வேண்டும்? அவனுக்கு ஜோர்ஜ் யாரென்றே தெரியாதே. அத்துடன் ஜோர்ஜ் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? நான் உன்னைக் கல்யாணம் செய்யப்போகிறேன் என்று எப்போதாவது சொன்னானா? தன்னை மிகவும் சந்தோசப் படுத்தும் பெண்ணுடன்வருவதாகச் சொல்லியிருக்கிறான், அந்த நேர்மை எத்தனை ஆண்களுக்கு வரும்?
சித்திரா ஏதோ யோசித்தபடி நடந்தாள். தெருவில் யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பதை அவளால் கிரகிக்க முடியவில்லை. அப்பா

117 நாளைய மனிதர்கள்
போனில் பேசியபோது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது. லண்டனுக்குப் போனாள். காரில் ஏறியது, வீட்டுக்குப் போனது எல்லாம் கனவில் நடப்பது போலிருந்தது.
கேம்பிரிட்ஜிலிருந்து லண்டனுக்குப் போகும்போது பெரிய மோட் டோர்வேயில் போகாமல் சிறிய ரோட்டுக்களால் லண்டனையடைந்தாள்.
கேம்பிரிட்ஜை விட்டு ஓடவேண்டும் போல் இருந்தது. நாராயணன் ஞாபகத்தால் லண்டனை விட்டு ஓடியவள் இப்போது ஜோர்ஜை நினைத்ததும் வேறு எங்கேயாவது போகவேண்டும் போலிருக்கிறது.
அம்மாவுக்குத் தெரிந்தால் மிக அவஸ்தைப்படுவாள் என்று தெரியும். இருபத்தி எட்டு வயதில் இன்னும் சித்திராதிருமணம் செய்யாம லிருப்பது திலகவதிக்குப் பொறுக்கவில்லை. நாராயணன் விஷயத்தில் மகள் பட்ட துன்பம் திலகவதியை உலுக்கிவிட்டது. உலகத்தின் கண்களின் முன் தன் தோல்வியை மறைக்க அவள் பட்ட பாடு சித்திரா வைத்தாயின்நிலை குறித்துப் பரிதாபப்படவைத்தது.
ராமநாதன் அமெரிக்கா போன நாளிலிருந்து திலகவதிக்குச் சுகமில்லை. வயிற்று நோவு என்று அவதிப்பட்டவளுக்குப் பக்கத்து வீட்டுக் கரலைன் உதவி செய்தாள்.
கரலைனின் உதவி திலகவதிக்கு ஆங்கிலேயர் பற்றிய கருத்தை மாற்றிவிட்டது.
“உனக்குக் கஷ்டம் கொடுப்பதற்கு மன்னிக்கவும். சித்திரா வார விடுமுறையில் தான் லண்டனுக்கு வருவாள். அதற்கிடையில் போன பண்ணிப் பிரச்சினை கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்". திலகவதி மகளில் வைத்திருக்கும் பாசம் கரலைனை மனம் நெகிழப் பண்ணிவிட்டது.
"உன்னைப் போல எனக்கொரு தாயில்லையே', குரல் தழு தழுக்கச் சொன்னாள் கரலைன்.
திலகவதிபாசத்துடன்கரலைனின்தலையைத் தடவிக்கொடுத்தாள். உத்தியோக ரீதியாக மட்டும் ஆங்கிலேயருடன் இதுவரையும் உறவு வைத்திருந்த திலகவதி இப்போது இந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணின் நிலை கண்டு பரிதவித்தாள்.
“என்ன நடந்தது உன் தாய்க்கு?'தாயின் பாசத்துடன் கரலைனை அணைத்துக் கொண்டாள்திலகவதி.
திலகவதி பிறந்த இடம் வேறு, தெரியப்படுத்தப்பட்டதத்துவங்கள் வேறு. கொழும்புதனவந்தரின் மகளாகப் பிறந்து கறுவாக்காட்டு மத்திய தரவாழ்க்கையைக் கண்டவளுக்கு எண்பத்துமூன்றாம் ஆண்டுகளுக்குப் பின்தான் தனது வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட மக்களை கண்டாள்.

Page 62
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 118
கரலைனின் வாழ்க்கையின் பின்னணி தெரியாது. கரலைனும் மைக்கலும் காட்டிய அன்பில் திலகவதிதன் சுகவீனத்தை மறந்தாள்.
“தம்பியும் நானும் பாடசாலையால் வீடு வந்தோம். எனக்கு ஒன்பது வயது. தம்பிக்கு ஏழு வயது .'கரலைன் ஆரம்பித்ததை நிறுத்தினாள்.
திலகவதி தன் பார்வையில் கரலைனின் முகபாவத்தை அளவிட் டாள். ஆங்கிலேயரின் வித்தியாசமான வாழ்க்கை முறையை இப்போது தான்கரலைன்மூலம் தெரிந்து கொள்கிறாள். 'திலகவதி, நீங்கள் ஒரு நல்ல தாய். என் தாய் எங்களுக்கு செய்ததை நீங்கள் ஒருநாளும் கனவிலும் நினைக்க மாட்டீர்கள். சித்திரா மிகவும் கொடுத்து வைத்த பெண்.’
திலகவதி அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. குழந்தைகளை விட்டுப் பிரிந்து வாழ்வது ஒரு தாயால் முடியாத காரியம். என்ன கலாச் சாரம், என்ன மதமாயிருந்தாலும் சரி, தாய் சேய் உறவு அற்புதமானது.
“எங்களைவிட என்தாய்க்கு அவளின் புதிய காதலன் முக்கியமாகி விட்டான். தகப்பனுடன் சேர்த்து எங்களை விட்டு விட்டு எங்கள் தாய் போய் விட்டாள்".
கரலைனின் குரலில் ஆத்திரம் . கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
'திலகா, நீங்கள் என்னில் காட்டும் அன்பு என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது."
"அப்படி என்ன செய்து விட்டேன்? என் மகள் என்னுடன் இருந்தால் அவளுக்குப் பிடித்த சாப்பாட்டைச் செய்து கொடுப்பேன்." திலகவதி கரலைனின் கரங்களைப்பிடித்துக் கொண்டு சொன்னாள். கரலைனும் திலகவதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். உறவு வளர்ந்தது. திலகவதி சுகவீனமான போது மைக்கலும் கரலைனும் திலகவதியை அன்புடன் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் மூலம் தன் மகள் சித்திராவின் உறவை அலசினாள். தன் மகள் ஒரு வெள்ளைக் காரனுடன் உறவாக இருக்கிறாளே என்று துன்பப்பட்டவளுக்கு மைக்கலின் அன்பு தெளிவைக் கொடுத்தது. எல்லா மனிதர்களிலும் எத்தனையோ வித்தியாசங்களும் ஒற்றுமைகளுமுண்டு என்று உணர்ந்தாள். தன் மகளின் சினேகிதன் ஜோர்ஜ் பற்றிச் சித்திராவிடம் கேட்கவேண்டும் என்று திலகாமுடிவு கட்டி விட்டாள்.
சித்திரா வந்து கதவைத் திறந்தபோது வீட்டில் தகப்பன் இல்லை. தாய் திலகவதி கடவுளுக்கு விளக்கேற்றிவிட்டு மாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.
சொல்லாமல் கொள்ளாமல் எதிரே வந்து நிற்கும் மகளைப் பார்த்தாள் திலகவதி, போன் பண்ணிவிட்டு வரும் சித்திரா திடீரென்று வந்து நிற்கிறாள்.

119 நாளைய மனிதர்கள்
"அம்மா, உங்களுக்குச் சுகமில்லை என்று எனக்கு ஏன் சொல்ல வில்லை?’ சித்திராவின் குரலின் கடுமை. திலகவதியின் முகத்தில் பாச மானபுன்சிரிப்பைக்கொண்டு வந்தது. சித்திராவின்பாசம் தாயை நெகிழப் பண்ணிவிட்டது.
மகளைப் போல் அன்பு செலுத்த கரலைன் என்று நல்ல தொரு வெள்ளைக்காரப் பெண் இருக்கிறாள் என்று சொல்ல அவள் விரும்பவில்லை.
“பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை. வயிற்றில் நோவு அவ்வளவு தான்.'திலகவதியின் குரலில் மகளின் கரிசனையை ஆமோதித்த அன்பு தவழ்ந்தது.
சித்திரா ஹோலுக்குள் போனாள். தகப்பன் இல்லை என்று தெரிந்தது, அப்பா அம்மாவிடம் ஜோர்ஜ் பற்றிச் சொல்லியிருப்பாரா?
"அப்பா எங்கே?'
“லண்டனில் ஏதோ கூட்டமாம் . இந்தியாவிலிருந்து மிஸ்டர் ராம் வருகிறாராம் .'திலகவதிக்கு அரசியல் தெரியாது, புரியாது, புரிந்தது எண்பத்திமூன்றாம் ஆண்டில் அவள் அனுபவித்த கொடுமைகள். அதற்கு அப்பால் அவளுக்கு ஒன்றும் தெரிய வேண்டாம்.
மேசையில் கிடந்த நோட்டிசின்படி அப்பா லண்டனில் நடக்கும் மறைந்து போன பாராளுமன்ற அங்கத்தவரும் தமிழர் கூட்டணித் தலைவருமான அமிர்தலிங்கத்தின் மறைந்த தின அஞ்சலிக் கூட்டத்திற்கு போய் விட்டார் என்று தெரிந்தது.
“மரக்கறிச்சமயல்தான்இருக்கு. 'தாய் முடிக்க முதல் மகள் இடை வெட்டினாள்.
“எனக்குப்பசிக்கவில்லை.'சித்திராவின்வார்த்தைகள் வெடித்தன.
திலகவதி இப்போது மகளின் முகத்தை ஊடுருவிப் பார்த்தாள். வழக்கம்போல குதுகலிக்கவில்லை. குறும்புத்தனமில்லை. எப்போதும் கண்களில் தவளும் சுவாரசியமில்லை. முகம் வெழுத்திருந்தது.
“என்ன சித்திரா சுகமில்லையா?'தாயின் குரலில் பதற்றம், மகள் அருகில் வந்தாள்.
"அம்மா எனக்கொன்றும் இல்லை. அப்பாவுடன் பேசியபோது உனக்குச் சுகமில்லை என்று சொன்னார்".
"அப்பா பதறும் அளவுக்கு ஒன்றுமில்லை."
"அப்பா இல்லாத நேரத்தில் உங்கள் உடம்புக்கு ஏதும் நடந்தால் ஒருக்கா போன் பண்ணக் கூடாதா? நான் போன் பண்ணிய நேரம் ஏன்

Page 63
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 120
உங்களுக்குச் சுகமில்லை என்று சொல்லவில்லை?” சித்திராவின் குரல் அடைத்தது.
திலகவதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏன் இந்தப்பெண் கண் கலங்குகிறாள் என்று தெரியவில்லை. ஏன் மிகவும் உணர்ச்சி வசப் பட்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.
“சித்திரா என்ன குழந்தைப் பிள்ளை மாதிரிப் பேசறாய். என்னைப் பார்க்கத் தனபால் மாமா வந்தார், சுமதி வந்தாள், பக்கத்து வீட்டில் கரலைனும் மைக்கலும் மிகநல்ல மனிதர்கள்'
“என்னை இப்போது ஒருத்தருக்கும் தேவையில்லாமல் போய் விட்டது.'சித்திராமுகத்தைத்திருப்பிக் கொண்டாள். இப்படிக் கவலைப் படுவதற்கு நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்ற குழப்பம் திலகாவின் முகத்தில். இன்னும் இரவு படியாததால் தோட்டத்தில் சிவப்பு ரோஜாப் பூக்கள் காற்றுக்குத் தாளம் போடுவதைப் பார்க்க அற்புதமாக இருந்தது. சித்திராவின் முகம் கோபத்தால் சிவந்து விட்டது.
“சே, சே, முட்டாள்ப் பெண்ணே, என்ன பேசுகிறாய்.'திலகவதி மகளின் அருகில் வந்தாள். கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“மைக்கல் எவ்வளவு நல்லவன் தெரியுமா, கரலைனை எவ்வளவு அன்புடன் பார்த்துக் கொள்கிறான் தெரியுமா”.
எந்த சம்பந்தமுமில்லாத விதத்தில் மைக்கலின் பெயரை சம் பாஷணையில் கொண்டு வந்த தாயைப் பார்த்தாள். தாய் ஏதோ மறைமுகமாகச் சொல்ல நினைக்கிறாளா?
"உனது ஜோர்ஜ"லம் உன்னைச் சந்தோசமாக வைத்திருப்பான் தானே'? ஒரு கலக்கமுமின்றி அந்தத் தாய் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
திலகவதியின் கேள்வியில் உறைந்துபோனாள் சித்திரா. அப்பா இவளிடம் ஜோர்ஜ் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று தெரிந்தது. அப்பாவின் மனமுதிர்ச்சி அம்மாவிடமில்லை. அதையுணர்ந்து அவர் நடந்து கொண்டிருக்கலாம்.
"ஜோர்ஜ்அமெரிக்காவிலிருந்து வந்ததும்நீஏன் கல்யாணம் பற்றிக் கதைக்கக் கூடாது? அமெரிக்காவிலிருந்து வந்த நேரத்திலிருந்து அப்பா ஏதோபிசியாக இருக்கிறார். சித்திராஉனக்குஇருபத்தி ஒன்பது வயதாகப் போகிறது .'திலகவதியின் பேச்சை இடையில் வெட்டினாள் சித்திரா. தலையில் கை வைத்தாள். கண்களில் அனல் பறக்கும் கோபம்.
“அம்மா எனக்கு என்ன வயது என்று தெரியும். நான் ஏதோ கல்யாணப்பைத்தியத்தில் இல்லை."

121 நாளைய மனிதர்கள்
சித்திராவுக்கு நெஞ்சு படபடத்தது, எங்கே நிம்மதி கிடைக்கும் என்று வந்தாளோ அங்கேயே நெருஞ்சி முட்கள் பாதையில் நிறைந்து கிடக்கிறதே.
"மகளே நாராயணனை மறந்து விடு. ஜோர்ஜைக் கல்யாணம் செய்து கொள்.'தாய்மையின் பாசம் வார்த்தைகளைக் கொட்டியது.
'அம்மா நான் நாராயணனை நினைத்து அழுது கொண்டிருக்க வில்லை. ஜோர்ஜ் என்னைக் கல்யாணம் பண்ண வேண்டும் என்று கற்பனை செய்யவுமில்லை." தாயிடமிருந்து தப்பி ஓடவேண்டும் போலிருந்தது.
தான் சொல்லும் விஷயத்திற்கு இந்தப் பெண் சந்தோசப் படுவாள் என்று பார்த்தால் ஏன் இவள் இப்படி வெடிக்கிறாள் என்று தெரியாமல் தவித்தாள் திலகவதி.
'அம்மா, நீங்கள் ரவியையும் என்னையும் சேர்த்துப் பார்த்துப் பட்ட பரவசத்தை நான் மறக்கவில்லை. இப்போது ஜோர்ஜ் பற்றிப் பேசுகிறீர்கள். என்னை யாராவது ஒருத்தர் தலையில் கட்ட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எரிச்சலைத் தருகிறது, நான் என்ன ஆடா, மாடா, யாரிடமாவது கட்டிவிட?”சித்திராவின்வார்த்தைகள் வெடித்தன. திலகவதிக்கு ஏன் இந்தப் பெண் கேம்பிரிட்ஜிலிருந்து இந்த இருட்டில் வந்து சண்டை பிடிக்கிறாள் என்று தெரியவில்லை.
“சித்திரா ரவி உனக்கு முறை மாப்பிள்ளை. ஆனால் நீ ஜோர்ஜில் விருப்பமாயிருக்கிறாய், ரவியை நீ செய்தால் ரொம்பவும் சந்தோசப் படுவோம். அப்பா கூட."
தாயை இன்னொருதரம் இடைமறித்தாள் சித்திரா, "அப்பா என்ன சொன்னார்?'சித்திராவின் கண்களில் தீப்பொறி.
“ரவி விரும்பினால் சித்திராவைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று சொன்னார்.' திலகவதியின் குரலில் அப்பாவித்தனம், ஆனால் அதை சித்திரா கண்டுகொள்ளவில்லை.
"ரவி விரும்பினால் ...' வார்த்தைகளை அழுத்தமாக்கினாள். திலகவதி மறுமொழி சொல்லவில்லை.
ரவி விரும்பினால் அப்பாஇவளைக் கட்டிக் கொடுத்து விடுவாரா?
“ஏன் என்னை எல்லோரும் ஏதோ ஒரு விலைப் பொருள் போல பேசுகிறீர்கள்?'சித்திராவின் குரலில் விரக்தி,
தாயின் முகத்தில் சோகம், மகளின்நிலை குறித்துப் பரிதாபம்.
★

Page 64
11
“விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கப் போகிறது. இப்படி இரண்டு முறை தொடங்கினார்கள். எண்பத்தி ஒன்பதாம் ஆண்டு பிரேமதாசா காலத்திலும் தொண்ணுரறின் மத்திய காலத்தில் சந்திரிகாவுடனும் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டது. இப்போதும் ரணில் விக்கிரம சிங்காவின் ஆட்சியில் இன்னொரு பேச்சு செப்டம்பர் மாதம் பதினாறாம் தேதி தொடங்கப்போகிறது. என்ன பேசப்போகிறார்கள்?விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை. அரசாங்கம் தமிழ் ஈழம் கொடுப்பதாகச் சொல்லவுமில்லை. அப்படியானால் பேச்சு வார்த்தை என்ன விதத்தில் தொடரும்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்' அமிர்தலிங்கம் கூட்டத்திற்குப் பிரதம விருந்தினராக வந்திருந்த சென்னை பிரன்ட்லைன்பத்திரிகையாசிரியர்ராம் இப்படிப்பேசிக்கொண்டிருந்தார். சமாதானப் பேச்சுவார்த்தை பற்றி அவரின் கருத்துக்கள் எத்தனையோ உண்மைகளை வெளிக் காட்டின. லண்டன் மத்தியில் அமைந்திருந்த இந்தியன் வை.எம்.சி.ஏ. கட்டிடம், மத்திய, உயர்வர்க்கத்தமிழ் மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
"பாவம்தமிழர்கள்', தனபால் பெருமூச்சுவிட்டார். இடைவேளை நேரத்தில் வடையும் தேனிரும் சாப்பிட்டபடி தனபால், டாக்டர் ராமநாதனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஏன் தமிழர்கள் பாவம் என்று சொல்லிறியள்?" டாக்டர் ராமநாதன் கேட்டார். “எத்தனையோ தரம் இப்படிப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஏதோ நிம்மதியான எதிர்காலம் பிறக்கும் என்று எதிர்பார்த் திருந்தவர்கள் தமிழர்கள். இந்த முறையும் இந்தப் பேச்சு வார்த்தை சரிவராவிட்டால், அதாவது இன்னுமொரு தரம் போர் தொடங்கினால் என்னவென்று தாங்கப் போகிறார்களோ தெரியாது". டாக்டர் ராமநாதனுக்கு மட்டுமல்ல வந்திருந்த பலருக்கும் இந்தச் சந்தேகம் இருக்கிறது.
தனபால் தொடர்ந்தார். "ரணில் தொடர்ந்து ஆட்சியில் இருக்க இப்படி ஒரு பேச்சு வார்த்தையைத் தொடங்க வேண்டும் இல்லை

123 , நாளைய மனிதர்கள்
என்றால் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதியுதவி கிடைக்காது. நாடு பொருளாதார ரீதியில் மிகவும் மோசமானநிலையிலிருக்கிறது'.
“இந்தப் பேச்சுவார்த்தையால் தமிழருக்கு ஏதும் நன்மை கிடைப்பது கஷ்டம் என்று சொல்லவறியளா?’ டாக்டரின் கேள்விக்கு தனபால் பதில் சொல்ல முதல் ரவி வந்து சேர்ந்தான். மாமாவைப் பார்த்து அவன்முகம் மலர்ந்தது.
"மாமா எப்படி அமெரிக்கா?’ ரவி மாமாவிடம் கேட்டான். இந்தக் கேள்வி உடனடியாக ராமநாதனின்முகத்தில் மாறுதலையுண்டாக்கியது.
“வெள்ளைத் தோலில்லாத எல்லாரும் அமெரிக்காவுக்கு எதிராக வேலை செய்வது போல் நினைக்கிறார்கள். பணத்தாலும் ஆயுத பலத்தாலும் உலகில் எந்த இடத்திலும் குண்டு போட்டுத் தகர்க்கலாம், எந்த அரசியல் அமைப்பையும் சீர்குலைக்கலாம் என்றிருந்த அமெரிக்கர் களுக்குப் போன வருடம் சில நிமிட நேரத்தில் அவர்களின் தலைநகரம் தாக்கப்பட்டது மிக அவமான விடயமாக இருக்கிறது, பணபலம், படை பலம் எல்லாம் இருந்தும் ஆழமான, நுண்ணிய அறிவுடைய புலனாய்வுத் துறை அவர்களிடமில்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனோ தானோ என்று தங்கள் விஷயத்தைப் பார்த்துக் கொண்டு திரியும் எங்கள் போன்ற அப்பாவிகளை அநியாயமாக அவமானப் படுத்துகிறார்கள்." டாக்டர் ராமநாதன் தன் மருமகனுக்கு நீண்ட பதிலைச் சொன்னார்.
“ஆதிக்கத்திலுள்ளவர்கள் சிலரின் போக்குக்காக அமெரிக்கர் களையோ அல்லது வெள்ளையர்களையோ ஒட்டுமொத்தமாகச் சந்தேகிப்பது நல்லதல்ல. இன்றைக்குத்தமிழர் பிரச்சினையில் சமாதானப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்காக முன்னிற்பது நோர்வேய் நாட்டைச் சேர்ந்த ராஜதந்திரிகள்தானே மாமா?'அமெரிக்க வெள்ளைக் கார உணர்வுகளுக்கும் நோர்வே நாட்டினரின் சமாதான உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாதா? ராமநாதன் மருமகனை ஒரு சில வினாடிகள் கூர்ந்து பார்த்தார். சோழியன் குடுமிசும்மாஆடாது என்பதை இந்த இளம் மனம் ஏற்றுக் கொள்ளுமா என்று அவர் யோசித்தார். அல்லது வெள் ளைக்காரர் என்பதால் உலகத்தில் உள்ள எல்லா வெள்ளைக்காரரும் ஆதிக்க வெறிபிடித்தவர்கள் அல்ல என்கிறானா? கூட்டத்திற்கு வந்திருந் தவர்களில் சிலர் ரவி எப்ப இலங்கைக்குத் திரும்பிப் போவாரு, என்று கேள்வி கேட்டனர்.
அவர்களின் கேள்வி அவனுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக லண்டன் வந்த தமிழர்கள் அதாவது டாக்டர் ராமநாதன் மாமா போன்றவர்கள் படிப்பு முடிந்ததும் திரும்பிப் போனார்கள்.

Page 65
ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியம் 124
இங்கிலாந்தின் இனவாதத்தையும் குளிர் கால நிலையையும் பொறுத்துக் கொள்ள மேற்படிப்பிற்காக வந்த மத்திய தர தமிழர்களால் முடியவில்லை. வெள்ளையரின் ஆதிக்க உணர்வை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இலங்கையில் வாழ்க்கை மிகவும் சந்தோசமானது, நிம்மதியானது அந்த நிம்மதி அரசியல் என்ற பெயரில் குழி தோண்டிப் புதைக்கப் பட்டபோது இனவெறியிலிருந்து தப்ப இலங்கையை விட்டு ஓடிய தமிழர்களை இன்னொரு தரம் இலங்கைக்குப் போகச் சொன்னால் அவர்களால் அந்த நிலைமையை எப்படி முகம் கொடுக்க முடியும் என்று அவனுக்குத் தெரியாது.
நினைவு தெரிந்த நாளிலிருந்து நேற்றைக்கும் இன்றைக்குமிடையில் நடக்கும் அரசியல் வாழ்க்கை மாற்றங்களின் அடிபாடுகளுடன் வளர்ந்தவன் அவன். அவற்றிற்குப் பழக்கப் பட்டவன். மரண ஒலங்களுடன்கோயில் மணிஓசையையும் சேர்த்துக்கேட்டவன். நாயின் ஒலங்களுடன் மனித ஒப்பாரிகளையும் ஒன்றாகக் கிரகித்தவன் அவன். ‘நிம்மதி' என்ற வார்த்தைக்கு எத்தனை கோணங்களிலிருந்து விளக்கங்களைப் பெற முடியுமோ அத்தனை விளக்கங்களையும் தெரிந் தவன் அவன். உலகத்தை அழிக்க ஊழித்தாண்டவம் ஆடுவதுபோல் இலங்கை ராணுவம் செய்யும் கொடுமைகள்அவனுக்குத் தெரியாததல்ல. "திரும்பிப் போவாயா? டாக்டர்களுக்கு எந்த ஊரிலும் வரவேற்புண்டு, அதிலும் சைக்கியாட்ரிஸ்டுகளுக்கு நல்ல எதிர்காலமுண்டு. அவற்றை யெல்லாம் யோசித்துப்பார்?'.
இப்படி எத்தனைபேர் சொல்லி விட்டார்கள். அந்தக் கூட்டத்திற்கு வந்தோர்பலர் மனம் விட்டுப்பேசினர். அன்றைய கூட்டத்திற்கு வந்தோர் பலர் இப்படி ஒரு கூட்டத்தை இலங்கையில் நடத்த முடியாது என்றனர். விடுதலைப் புலிகளின் அங்கீகாரமற்ற எந்தச் ‘சுதந்திரமான கூட்டங் களும் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில் நடக்காது என்று ஒருத்தர் சொன்னதும் தனபால் மாமா பெருமூச்சு விட்டார்.
"தமிழர்களுக்கு நிம்மதி, விடுதலை, சுதந்திரம் தேவை. அதற்காகப் போராடி இறந்த எத்தனையோ தமிழ் இளம் ஆண்களுக்கும் பெண் களுக்கும் தலைவணங்குகிறேன். ஆனால் இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தை வெற்றி பெற்றும் எப்படியான ஒரு அரசியலமைப்பைத் தமிழர்கள் முகம் கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி”.
தனபால் மாமா வழக்கம்போல் தன் கேள்விகளை எழுப்பினார்.
“மாமா,நீங்கள் இலங்கையை விட்டு வரும்போது இருந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் இப்போது மாறிக்கொண்டிருக்கும் அரசியல் விவகாரங்களுக்கும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. சிங்களத்

125 நாளைய மனிதர்கள்
தலைவர்களாக இருந்தாலும் தமிழ்த் தலைவர்களாக இருந்தாலும் அகில உலக அரசியல் அமைப்புகளின் பரிணாமங்களுக்கு அப்பால் போவது கடினம். விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தங்களுக்குப் பிடிக்கா தவர்களை வேட்டையாடிய மூர்க்க குணம் மாறாவிட்டால் விடுதலைப் புலிகள் ஒரு ஜனநாயக அரசியலை அமைக்கத் தகுதியானவர்களா என்ற கேள்விநாலா பக்கத்திலிருந்து வரும். அகில உலக ரீதியாகத் தடைப்பட்ட அவர்கள் இயக்கம் மீண்டும் வெறிப்பட்டு வேலை செய்ய எத்தனையோ மாற்றங்களை முகம் கொடுக்க வேண்டும்.'
ரவியின் மறுமொழிக்குத் தனபால் புன்னகைத்தார்.
"நீ, நாளைய மனிதன், நன்மைகளை எதிர்பார்க்கிறாய். அந்த நம்பிக்கை நல்லது. உடைந்துபோன தமிழ்ச் சமுதாயம் உருப்பட உன்னைப் போல் இளம் தலைமுறையினரின் நம்பிக்கை மிக மிக முக்கியம் ' ரவிக்குத் தனபால் சொல்லும் விஷயங்கள் புரிந்தன. ஆனாலும் என்ன நடக்குமோ என்ற தொடர்ச்சியான அவநம்பிக்கையுடன் அவன் வாழத் தயாரில்லை. நம்பிக்கை என்ற வார்த்தையை அவன் ஆத்மீக ரீதியாக நம்பினான்.
தனபால் ரவியை அவன் வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டபோது நடுச் சாமமாகிவிட்டது.
அவனுடன் வாழும் டாக்டர் குப்தா யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்துக் கொண்டு வந்தவனுக்கு அர்த்த ராத்திரியில் சித்திராவைக் கண்டதும் அதிர்ச்சியானது என்ன திடீரென்று வந்து நிற்கிறாள்?
அவள் முகம் பேதலித்துப் போயிருந்தது. இரண்டு மூன்று நாட்களாகச் சரியாகச்சாப்பிடாத சரியாகநித்திரை கொள்ளாத முகபாவம். அவளைப் பார்த்தவுடன் அவனையறியாமல் இரக்கம் பிறந்தது. ஆதரவுடன் அவளைப் பார்த்தான். மற்றவர்களுக்காகத் துக்கப்பட்டுத் தன்னைக் கஷடப்படுத்திக் கொள்பவள் அவள்.
“என்ன சித்திரா இந்த நேரத்தில்..'அவன் கேள்விக்கு அவளின் சூடான பார்வை பதிலாகக் கிடைத்தது.
"தனியாகப் பேசவேண்டும்,' அவள் குரலில் இனமறியாத ஆத்திரம் தொனித்ததை அவன் அவதானித்தான். யாருக்காக வாதாடப் போகிறாள் இப்போது? டாக்டர் குப்தா குழும்பிப் போனார். தனபால் மாமா விடை பெற்றார்.
“வீட்டிலிருந்து பேசவிருப்பமில்லை . வெளியில் எங்காவது போகலாமா?’ சித்திரா ஏதோ ராஜதந்திரி மாதிரிப் பேசினாள். குரல் கனத்திருந்தது. கண்கள் இவனை ஊடுருவிப் பார்த்தன.

Page 66
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 126
ரவிக்குத் தர்ம சங்கடமாகிப் போனது. நடுஇரவில் மோகினிப் பேய் மாதிரி வந்திருந்து என்ன சொல்கிறாள்?
'ரவி தயவு செய்து என்னுடன் வாருங்கள்." குற்றவாளியைக்
கூப்பிடும் நீதிபதியின் குரல் அது.
அவன் மறுமொழி சொல்ல முதல் அவள் நடந்தாள். ஒருபக்கம்
ஆச்சரியமும் மறுபக்கம் எரிச்சலாகவுமிருந்தது.
“என்ன இது? எனக்குக் களைப்பு, நித்திரை என்று பாராமல் கேட்கி றாயே?'ரவியின் குரலின் கடுமை அவளின் நடையை நிறுத்தியது.
திரும்பிப் பார்த்தாள். இரவின் லைட் வெளிச்சத்தில் அவள் கண்கள் பனிப்பது தெரிந்தது. அவனால் அதைத் தாங்க முடியவில்லை.
“சரி வர்றன்." அவன் பின் தொடர்ந்து போய்க் காரில் ஏறிக் கொண்டான்.
சித்திரா ஒரு சில நிமிடங்கள் மெளனமாகக் காரை ஒட்டினாள். விம்பிள்டன் நகரம் தூங்கி வழிந்து கொண்டிருந்தது.
“என்ன அப்படி முக்கியமான விஷயம்?' ரவி அமைதியாகக் கேட்டான். சித்திரா ஏதோ கோபத்திலிருப்பது அவள்முகத்தில் தெரிந்தது, அவள் நடவடிக்கை மூலம் புரிந்தது.
“என்ன அவசரமான - முக்கியமான - தலைபோகிற விஷயம்?" சித்திராவிடம் அழுத்திக் கேட்டான் ரவி.
“உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் அவசரமாகவும் முக்கிய மாகவும் தலை போகிற விதத்திலும் நடந்து முடிகிறது." அவள் குரலில் நையாண்டி கலந்த கோபம்.
"உலக நடப்புகளுக்கு என்னை ஏன் நடுஇரவில் இழுத்து வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கிறாய்?"
அவன் குரலில் சாடையான கோபம், அதிருப்தி.
"தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் அரசியல் வாதிகளும் சில ஆண்களும் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இந்தி யாவில் தனக்குப் பிடிக்காதவர்களைச் சிறையில் அடைக்கும் ஆணவம் பிடித்த அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கே என்றால் தங்களுக்குப் பிடிக்காத நாடுகளையும் மக்களையும் குண்டு போட்டு அழிப்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் அவசரப்படுகின்றன.'
'சித்திரா என்ன பேசுகிறாய்? அமெரிக்கத் திட்டங்களுக்கு நானா பொறுப்பு? அரசியல் வாதிகள் அப்படி நடந்தால் நான் என்ன செய்வது?"

127 நாளைய மனிதர்கள்
"அரசியல்வாதிகளின்நடவடிக்கைக்கும் உங்கள் நடவடிக்கைக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கிறது என்று சொன்னேன்’
"சித்திரா கொஞ்சம் நிதானமாகப் பேசு. நான் அரசியல் வாதியல்ல. மக்களைச் சுரண்டவில்லை. அடக்கவில்லை, அழிக்கவில்லை."
சித்திரா காரை நிறுத்தினாள்.
மெளனம், நீண்ட மெளனம், வெளியிலும் மெளனம். காருக் குள்ளும் மெளனம், ஏதோ பூகம்பம் வெடிக்கப் போவதற்கான அறிகுறியது.
"ரவி, நீங்கள் மற்றத் தமிழர்கள் போலல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பீர்கள் என்று பார்த்தேன். இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்குப் பயந்து எத்தனையோ தமிழர்கள், எத்தனையோ வழிகளில் நாட்டை விட்டு ஓடிப் போகிறார்கள். ஏதோ சாட்டுக்காக லண்டனுக்கு வந்தவர்கள் அகதிகளாக இருப்பதற்கு அப்ளை பண்ணி யிருக்கிறார்கள். லண்டனில், வாழ்வதற்காகக் கல்யாணமும் செய்து கொள்கிறார்கள், தனி மனித விருப்பு வெறுப்புகளை நான் மதிக்கிறேன் அதே நேரம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மெலனியை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று கொஞ்சம் யோசித்தீர்களா?' சித்திரா இப்படிச் சொன்னதும் அவனின் குழப்பம் இன்னும் கூடியது.
'இப்போது மெலனியை ஏன் இந்தப் பேச்சில் இழுக்கிறாய் சித்திரா?' நடுச்சாமத்தில் இவள் எத்தனை மனிதர்களின் பெயர்களை இழுக்கிறாள்?
“செந்தில் சுமதியை அடித்துத் துன்புறுத்துகிறான். டேவிட் ஜேனைத் துக்கப்படுத்துகிறான். உலகத்தில் சுயநல உணர்வுடன் பெண்களைப் பாவிக்காத ஆண்களில் ஒருத்தராக நீங்கள் இருப்பீர்கள் என்று நினைத்தேன்."
“மெலனியை எனது சுய நலத்திற்குப் பாவிக்கிறேன் என்று நீ எவ்விதம் முடிவு கட்டினாய்?"
"ஊர் தெரிய ஒன்றாகச் சுற்றுகிறீர்கள், ஸ்கொட்லாந்துக்கு ஹாலிடேயில போய் வந்திருக்கிறீர்கள், கட்டிலுக்கு மட்டும் தான் அவள் சரியா, கல்யாணத்திற்கு வேறு பெண்ணா?"
“சித்திரா ஏதோ காரணத்தினால் நீ மிகவும் குழம்பிப் போயிருக் கிறாய். அந்த ஆத்திரத்தை என்னிடம் கொட்டுவது அநாகரிகம் என்று சொல்கிறேன்.' மெலனியைப் பற்றி அவள் பேசியது ஆத்திரத்தை உண்டாக்கியது. ரவிகாரை விட்டு வெளியே வந்தான். விம்பிள்டன் தெரு கிட்டத்தட்ட வெறித்துப் போய்க் கிடந்தது. அவனது வீட்டை விட்டு ஒன்றிரண்டு மைல்களுக்குப்பால் வந்திருப்பார்கள். அவன் காரை விட்டு இறங்கியது சித்திராவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.

Page 67
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 128
"நில்லுங்கள், நான் சொல்வதற்குச் சரியாக மறுமொழி சொல்லத் தெரியாவிட்டால் இந்த இரவில் முன் பின் தெரியாத இடத்தில் நடந்து போவது சரியல்ல."
சித்திரா அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவனது கோபம் அவன்நடையில் தெரிந்தது.
சட்டென்று நின்றான்.
"சித்திரா உனக்குத்தமிழ் எவ்வளவுதூரம் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள். வில்லம்பு பட்டதுன்பம் மாறும். சொல்லம்பு பட்ட துயர் மாறாது. உனது தகப்பன் செய்த உதவிகளுக்கு நன்றி. ஆனால் அதற்காகஇப்படி இந்த இரவில் உன்னிடம் இப்படிப் பேச்சு வாங்க வேண்டும் என்று எனக்கு அவசியமில்லை." அவன் குரலில் அனல், மெலனியை அவன் ஏமாற்றுவதாக இவள் நினைப்பதில் ஆத்திரம்.
இவள் என்ன சொல்லியும் அவன் கேட்கமாட்டான் போலிருந்தது.
"நீங்கள் மெலனிக்குத்துரோகம் செய்வதாகநான்நினைக்கிறேன்.” அவள்சத்தம் போட்டாள். அவன்நின்றான். இரவின் அமைதியில் அவள் குரல் பயங்கரமாக ஒலித்தது.
"உனது நினைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. சதாம் ஹ"ஸ்சேன் அமெரிக்காவை அழிக்கப் போவதாக பிரசிடென்ட் புஷ் நினைப்பது சரியா? பிழையா? என்று உலகமெல்லாம் விவாதம் நடக்கிறது. தமிழ் நாட்டில் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள்தண்ணிர்இல்லாமல், நெசவுத் தொழிலாளர்கள் எலிக்கறி சாப்பிடுகிறார்கள் பட்டினி தாங்காமல், கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கோஷம் போடுகிறார்கள். பிரச்சினையை வேறு திசைகளில் திசை திருப்புகிறார்கள் அரசியல் தலைவர்கள். தார்மீகமாக உணர்வுகளற்று, தன் மதத்தை மறந்து, ஏழை களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் எந்த அக்கறையுமற்று எத்தனையோ செய்கிறார்கள். இப்படியான செய்கைகளால் எத்தனை விளைவுகள் வரும் என்று கொஞ்சம் அரசியல் தெரிந்தாருக்கும் புரியும். நீயும் என்னைப் பற்றி எத்தனையோ நினைப்பதாகச் சொல்கிறாய். குட் லக் எதையாவது நினைத்துக் குழம்புவது ஆரோக்கியமான விஷயமல்ல. நேர்வஸ் பிரேக் டவுன் வரலாம்'. அவன் போய் விட்டான். இருளின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அவன் சொல்லிய வார்த்தைகள் ஒலம் போட்டன.
அவனின் அஸ்திர பாணம் அவளைக் குதறியது.
அவன் சைக்கியாட்ரிஸ்ட். சாதாரண மனிதர்களின் மனக் குழப்பங் களைத் தீர்த்து வைப்பவன். மிகவும் குழம்பிப் போய்விட்டான் என்று தெரிந்தது.

129 நாளைய மனிதர்கள்
“தேவையற்ற விஷயங்களை நினைத்துக் குழம்புகிறேனா?" தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருந்தாள் சித்திரா. நேரம் நடுச் சாமத் தைத் தாண்டிவிட்டது. தாய் தகப்பனிடம் போக இரண்டு மணித்தி யாலங்கள் எடுக்கும்; கேம்பிரிட்ஜிக்குப் போக அதை விடக் கூட நேரம் எடுக்கும். ஏதாவது ஒரு ஹோட்டலுக்குப் போய் தனியறை எடுத்துக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது. அவன் போய் விட்டான். அவளுக்கு அவமானமாக இருந்தது. காரை ஓட்டினாள். என்னவென்று சுமதியின் வீட்டுக்கு வந்தாள் என்று கூட அவளுக்குத் தெரியாது.
சுமதியின் முகத்தில் ஆச்சரியம், அதைவிட இனமறியாத தவிப்பு. “என்ன நடந்தது இந்த நேரத்தில்..?' சுமதி பதறினாள். பேதலித்துப் போயிருந்த சித்திராவின் முகம் சுமதியைப் பொருளற்று உற்றுப் பார்த்தது.
“என்ன இழவுக் கேள்விகள் கேட்கிறாய்?' செந்திலின் குரல் அதிர்ந்தது. சித்திராவை அவ்விடத்தில் சுமதி எதிர்பார்க்கவில்லை.
"வர்ற வழியில கார் பழுதாகிப் போச்சு. மெக்கானிக்கப் பார்த்துக் கொண்டு நிண்டதில் நேரம் போனது தெரியல்ல."
என்னவென்று இப்படித் தன்னால் பொய் சொல்ல முடியும் என்று சித்திராவால் நம்ப முடியாமல் இருந்தது.
செந்தில் சித்திராவை ஏறிட்டு பார்த்தான். செந்திலைப் பார்த்து எத்தனையோ மாதங்களாகிவிட்டன. மிகவும் ஊதிப் போயிருந்தான். மது வாடை அடித்தது. அவனைப் பார்க்க எரிச்சலும் அருவருப்பாய் வந்தது.
வழக்கமாக செந்திலுடன் சித்திரா அதிகம் பேச்சுவைத்துக்கொள்வ தில்லை. ஏதோ உறவு என்ற சாட்டுக்காக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவாள்.
இப்போது தனது சொந்த மகனையே காயப்படுத்திஆஸ்பத்திரிக்கு அனுப்பியவன் ஒன்றும் நடக்காதது போல் முன்னால் வந்து நிற்பதைப் பார்க்கக் கோபம் வந்தது.
இப்போது யாரை அடித்துக் காயம் பண்ணப் போகிறான்? சித்திராவுக்கு இந்த உலகத்தில் மிகவும் கோபம் வந்தது. அவனுக்குத் தெரியாத ஒரு புது உலகத்திற்கு ஓடவேண்டும் போலிருந்தது.
'ஏதும் சாப்பிடப் போகிறாயா?" சுமதி பரிவுடன் கேட்டாள். சித்திராவுக்குப் பசி என்றால் என்னவென்று மறந்து சில நாட்களாகி விட்டன. வேண்டாம் என்றால் சுமதி விடப் போவதில்லை.
“பால் இருந்தால் சூடாக்கித் தரவா', உரிமையுடன் கேட்டாள் சுமதி. இவளுக்கும் இவள் தம்பி ரவிக்கும் எத்தனை வித்தியாசம் என்று நினைத்தாள் சித்திரா.

Page 68
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 130
இருவரும் சமயலறைப் பக்கம் போனார்கள். பெண்களின் சிந்தனையகம் சமயலறையா?
“என்ன செய்தாலும் கல்யாணம் மட்டும் செய்து போடாதை.' சுமதி மெல்லிய குரலில் சித்திராவின் காதில் கிசுகிசுத்தாள்.
சித்திராவுக்குச் சுமதி ஏதோ சொல்லப் போகிறாள் என்று புரிந்தது. அடுப்பில் பால் பொங்கியது. சித்திராவின் மனத்தில் ஆத்திரம் பொங்கியது.
“ரவி தன்னைப் போலீசில் புகார் செய்யப் போகிறான் என்று கேள்விப் பட்டு சமாதானம் பண்ணிக் கொண்டு காலைப் பிடிக்க வந்து விட்டார். எல்லாம் போலி நாடகம். ' சுமதி ஆத்திரத்துடன் முணுமுணுத்தாள்.
மிக மிகக் குழம்பிப் போயிருந்த சித்திராவின் மனத்தில் சுமதியின் ஆதங்கம் இன்னும் குழப்பத்தை உண்டாக்கியது. தன் மைத்துணியை ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்?" சுமதி சித்திராவைப் பார்த்துக் கேட்டாள்.
“என்ன செய்தாலும் கல்யாணம் மட்டும் செய்து போடாதை என்று எனக்குச் சொல்லும் உனக்கு உன் நிலையைக் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்கத் துணிவு இருக்கா?”சித்திரா வெடித்தாள்.
"நான் மற்றவர்களின் சொல்லைக் கேட்டு என் கழுத்தில தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டன். நீ சுதந்திரமான பெண். பெரும்பாலான ஆண்பிள்ளைகள் சுயநலவாதிகள்.'சுமதி ஆத்திரத்தைப் பாத்திரங்களில் காட்டினாள்.
சித்திரா சுமதியை ஏறிட்டு நோக்கினாள். ஒரு கொஞ்ச நேரத்திற்கு முன்இதே வசனங்களைச்சித்திராரவிக்குச் சொல்லிக்கொண்டிருந்ததைச் சுமதிக்குச் சொன்னால் சுமதி நம்புவாளா?
செந்தில் மேல் மாடிக்குப் போவது கேட்டது. “சித்திரா, நல்ல
மனிதர்கள் சட்டென்று செத்துப் போகிறார்கள். எனக்கொரு சாவு அப்படி
வந்தால் எல்லாப் பிரச்சனையும் எனக்குத் தீர்ந்து விடும்'. சுமதி வழக்கம் போல் அழத் தொடங்கினாள்.
“முட்டாள் சுமதி. அழகான இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இப்படி உன்னால் எப்படிப் பேசமுடிகிறது. எனது வாழ்க்கை யில் சுதந்திரமிருக்கிறது. ஆனால் அதே நேரம் மிக மிகக் கொடுமையான தனிமையுமிருக்கிறது. குழந்தைகள் இருவரும் இந்த உலகத்திற்குத் தங்களைக் கொண்டு வரச் சொல்லி உன்னிடம் கேட்கவில்லை. நீஅந்த அழகிய குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிப் பெருமைப்பட ஆசையில் லையா'தன்மைத்துனியிடம் ஆதரவுடன் கேட்டாள் சித்திரா.

131 நாளைய மனிதர்கள்
"இந்த மனிதன் என் வாழ்க்கையை நரகமாக்கும் போது, நான் எப்படி எதிர்காலத்திற்கு ஆசைப்படுவது.'
“சுமதி, வாழ்க்கை மிக மிகச் சிக்கலானது. ஆக்குவதும் அழிப்பதும் எங்களைப் பொறுத்தது.' வழக்கம் போல் சுமதியைத் தேற்றும் நிலை சித்திராவுக்கு.
சுமதியின் வீட்டுக்கு வந்தது ஒரு விதத்தில் சித்திராவை நிதானப் படுத்தியது. தன்னைவிட மிகவும் பரிதாபமான நிலையிலிருக்கும் சுமதியில் பரிதாபம் வந்தது.
செந்தில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பாக இருக்கும் விஷயம் தெரிந்தால் சுமதி என்ன செய்வாள்? ஜோர்ஜ் பற்றி நான் அதிர்ந்து போயிருப்பது போல் இவளும் ஆட்டம் கண்டு விடுவாளா?
'இவளால் தாங்க முடியாது. தாலி கட்டி, குடும்பமாயிருந்து, குழந்தைகளையும் பெற்ற பின் தனக்கு மட்டும் சொந்தம் என்று நினைத் தவன் இன்னொருத்தியை வைத்திருப்பதை இவளால் தாங்கமுடியாது'. சித்திராதன் நினைவுகள் தொடர்ந்தோடச் சுமதியைப் பார்த்தாள்.
'ரவி லண்டனில் இருக்கும் வரைக்கும் இந்த மனிதன் அடங்கி யிருக்க என்று நினைக்கிறான். கடவுள் மனம் வைத்தால் ரவி மெலனி யைச் செய்து கொண்டு லண்டனில் இருக்கலாம்." சுமதியின் குரலில் விரக்தி, வெறுப்பு.
'சுமதி உனக்கு மெலனியைப் பிடிக்காது என்று நினைச்சன்' சித்திரா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"இதில எனக்குப் பிடிக்கிறத்துக்கு என்ன இருக்கு. அவன் கொஞ்ச நாளா அவளுக்கு பின்னாலதானே திரிகிறான்'
சுமதி பெருமூச்சு விட்டாள். தம்பி ஒரு வெள்ளைக்காரப் பெண் ணுடன் உறவாயிருப்பது இவளுக்குப் பிடிக்காது. நான் ஒரு வெள்ளைக் காரனுடன் உறவாயிருந்தேன் என்பதை என்னவென்று ஏற்றுக்
கொள்வாள்?
★

Page 69
12
““g-f மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் போய்ப் படு.' ஆதரவுடன் சொன்னாள் சித்திரா. போவதற்காக எழும்பினாள் சித்திரா.
"நீஎன்ன கேம்பிரிட்ஜூக்கு இந்த நேரத்தில் போகப் போகிறாயா?” வெளியில் கும்மிருட்டு, இரவு லைட்டுக்கள் கண்சிமிட்டின.
“ஏன் நான் உன் வீட்டுச் சோபாவில படுக்க முடியாதா?’ சித்திரா உண்மையில் களைத்துப் போன தொனியிற் கேட்டாள்.
சுமதி சித்திராவை ஏற இறங்கப் பார்த்தாள். “ஏன் சோபாவில படுக்க வேணும். என் அறையில படு.” “செந்தில்'சித்திரா சுமதியை ஆழமாகப் பார்த்தவாறு கேட்டாள். “சித்திரா, செந்திலும் நானும் ஒரு கட்டிலைப் பகிர்ந்து கொண்டது எத்தனையோ வருடங்களுக்கு முன். நான் கல்யாணம் பண்ணிய வாழாவெட்டி"
சுமதி வார்த்தைகளைக் கொட்டினாள். இரவு மெளனமாய்க் கண்ணிர் வடித்தது.
'ஜேனும், டேவிட்டும் ஒரே வீட்டில் தனித் தனியாக வாழ்கி றார்கள். செந்திலும் சுமதியும் தனித்தனியாக வாழ்கிறார்கள். உலகில் எத்தனையாயிரம் தம்பதிகள் இப்படிதங்களைத் தாங்களே வருத்திக் கொள்கிறார்களோ?
“வேண்டாம் நான் கேம்பிரிட்ஜ0க்குப் போகிறேன்.” சித்திராவின் குரலில் வேதனை, விரக்தி, அலுப்பு. “போடி பைத்தியம், வர்ற வழியில கார் பழுதாகிப் போனதென் றாய், பேசாமல் படு. இன்னும் என்னஇன்னும் சில மணித்தியாலங்களில் விடிந்து விடும்.”
இருவரும் சமயலறையிலுள்ள கதிரைகளில் அமர்ந்து கொண் டார்கள். அவர்களைச் சுற்றி குக்கரும், பிரிட்ஜ"0ம், சட்டி பானைகளும் இந்தப் பெண்களின் சோகத்திற்குச் சாட்சிகளாய் அமர்ந்திருந்தன.

133 நாளைய மனிதர்கள்
“எத்தனைகனவுகளைக் காண்கிறோம்? காதல், கல்யாணம்'சுமதி தத்துவ ஞானிபோல் பேசினாள். சித்திரா சுமதி வீட்டுக்கு வரும்போ தெல்லாம் அவள் அழுது வடிந்து கொண்டிருந்தது சித்திராவுக்கு எரிச் சலைத் தருவதாக இருந்ததுண்டு.
"வாழ்க்கையில் அலுப்பு வந்தால் ஆண்கள் குடிப்பார்கள், அடிப்பார்கள், சின்ன வீடு வைத்துக் கொள்வார்கள், சமுதாயம் அவர்களை ஒன்றும் சொல்லாது. கெளரவமாக நடித்துக் கொள்வார்கள், நடந்து கொள்வார்கள். நாங்கள் சொற்பம் என்றாலும் வழிதவறினால் வசையும் பழியும் வரும்.'சுமதி பேசிக் கொண்டேயிருந்தாள்.
சித்திரா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். தெருவில் எப்போதோ ஒரு கார்போகும் சத்தத்தைத் தவிர எந்தச்சத்தமும் இல்லை.
"செந்திலைப் பற்றி அப்படி ஏதும் சந்தேகிக்கிறாயா?"
"அவர் அடிப்பதும் குடிப்பதும் ஊர் அறிந்த விஷயமாயிற்றே .
மற்ற ..." சுமதி முகத்தை மூடிக் கொண்டாள். அழுதாள். செந்திலுக்கு 'சின்னவீடு" இருப்பது சுமதிக்குத் தெரியும் என்பது அப்பட்டமாகப் புரிந்தது.
“எனக்கு இவர் எங்கே போகிறார். யாருடன் படுத்து விட்டு வருகிறார் என்பது அப்போதே தெரியும். நேரே கேட்டு அவமானப்படத் தயாரில்லை. ஆனால் அந்த ஆத்திரத்தில் எடுத்த சின்ன விசயத்தி லெல்லாம் சண்டை பிடிக்கிறோம்"
சுமதி விம்மினாள். இரவின் நிசப்தத்தில் விம்மல் இருதயத்தைச் சுண்டியது. இதுவரைக்கும் யாருக்கும் சொல்லியழ முடியாத ரகசியம் இரவின் நெகிழ்ச்சியில் மனக்கோட்டையைத் திறந்து கொண்டு அழுதது.
“ஒரு பெண் எதையும் தாங்குவாள். ஆனால் தான் நம்பிக் கை வைத்தவன் இன்னொருத்தியுடன் சல்லாபம் பண்ணுகிறான் என்பதைத் தாங்க மாட்டாள். அது அவள் நரம்புக்கும், உள்ளத்திற்கும் அவள் கணவனால் மூட்டி விட்ட நெருப்பாக எரியும்'
இதுவரைக்கும் சுமதி இப்படி வெளிப்படையாகப் பேசி சித்திரா கேட்டதில்ல. சுமதியின் அணை கடந்த துன்பத்திற்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று அவளால் புரியவில்லை.
ஜோர்ஜ் பற்றித் தான்படும் துன்பம் தீர்க்க லண்டனுக்கு ஓடிவந் தவளுக்கு, அம்மா, ரவி, சுமதி எல்லோரின் சந்திப்பும் எத்தனையோ உண்மைகளை உடைத்துக் காட்டியது. அம்மாவின் அபிலாஷை, ரவியின் உதாசீனம், சுமதியின்சுமையான வாழ்க்கை எல்லாவற்றையும் விடத் தன்னுடைய வேதனை என்பன சித்திராவை நிலைகுலையப் பண்ணியது. ரவி சொல்வதுபோல் அளவுக்கு மீறி யோசித்தால் மூளை பிசகி விடும். நேர்வஸ் பிரேக்டவுன் வந்து விடும்.

Page 70
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 134
இருவரும் தூங்கவில்லை. பேசிக் கொண்டிருந்தார்கள். சுமதி மனம் விட்டுப் பேசிாைள். சித்திரா மெளனத்துடன் கேட்டுக் கொண்டாள்.
சித்திராவின் கடந்த வாழ்க்கையில் நாராயணன் பற்றிய விஷயம் சுமதிக்குத் தெரியும். ஆனாலும் சித்திராவால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண் என்று நினைக்கப்பட்ட சுமதி இதுவரைக்கும் வாய் திறந்து நாராயணன் பற்றிக் கேட்டில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாத பெருந்தனத்தை சித்திரா புரிந்து கொண்டாள்.
“எவ்வளவு காலம் இப்படி அழுது கொண்டு சகிக்கப்போகிறாய்?" சித்திராவின் கேள்வியை ரவி எத்தனையோ தரம் தன் தமக்கையிடம் கேட்டு விட்டான்.
“என்ன செய்ய, ரவி சொல்லுவதுபோல் டிவோர்ஸ் செய்யவா?” சுமதி சித்திராவைப் பார்த்து நேரே கேட்டாள்.
.." சித்திரா மெளனம்.
"குழந்தைகளுக்காக நான் இந்த நரகத்தில் வாழ்கிறேன். ஆனால் அப்பாவால்தான் தன் கை உடைந்தது என்ற ஆத்திரத்தில் மகன் தகப்பனுடன் கதைக்க மாட்டேன் என்கிறான். இப்படிச் சூழ்நிலையில் ஒன்றாக வாழ்வதால் என் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுமோ என்று பயப்படுறன்.'
சுமதி சரியான வழியில் யோசிப்பதாகத் தெரிந்தது. இனி ரவி, சித்திரா, தனபால் மாமாயாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. சுமதி யின் மனத்தில் சில தெளிவுகள் உருவாகி விட்டன என்று புரிந்தது.
"உன்னுடைய புருஷனைப் பகிர்ந்து கொள்ளும் பெண்ணில் உனக்கு ஆத்திரமில்லையா?” தான் இந்தக் கேள்வியைக் கேட்பது சரிதானா என்று கூடச் யோசிக்காமல் கேட்டதற்குச் சித்திரா தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
“இல்லை.” மிக மிகத் தெளிவாகச் சொன்னாள் சுமதி. சித்திரா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.
"சித்திரா, நாங்கள் சாதாரண மனிதர்கள். துன்பம் துயர்வரும்போது யாரோ ஒருத்தர் அன்புக்காக ஏங்குவோம். அந்தப் பெண் இலங்கையில் இந்திய ஆர்மியின் அக்கிரமத்தில் குடும்பத்தில் அத்தனைபேரையும் இழந்தவளாம். இந்திய ஆர்மியின் செல் அடியில் வீடு பிழந்து எரிந்த போது தாய் தகப்பன், தங்கச்சி, தம்பி எல்லோரும் எரிந்து பிணமாகி விட்டார்களாம். அவள் இவரின் பழைய சினேகிதி. கல்லூரியில் ஒன்

135 நாளைய மனிதர்கள்
றாய்ப் படித்தவர்களாம். லண்டனுக்கு வந்ததும் உறவு மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அவள் நிலையில் தன் துயரத்திற்குத் துணையாக இவர் அகப்பட்டார்.'
"இவ்வளவையும் தெரிந்து கொண்டு இவ்வளவுநாளும் பொறுமை யாயிருக்கிறாயே?”
"நான் ஒன்றும் பொறுமையாயில்லை. என்னைத் தொடவேண் டாம் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டேன். அந்த ஆத்திரம் அவருக்கு எத்தனையோ பிழைகளைச் செய்யப் பண்ணுது. அந்தப் பெண்ணை இனி எந்தத் தமிழனும் கல்யாணம் செய்ய மாட்டான். இந்த மனிசன் இரண்டு பெண்களின் வாழ்க்கையைக்கெடுத்துப் போட்டுது." எத்தனை சிக்கல்கள்! இந்த உலகத்தில் நாராயணன், ஜோர்ஜ், செந்தில், என்று எத்தனை ஆண்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
இருவரும்நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுநித்திரையாகிப் போனபோது கிட்டத்தட்ட விடியும் நேரமாயிருந்தது.
அடுத்த நாள் திங்கட்கிழமை. சித்திரா அவசரமாகத் தன் ஒப்பீசுக்குப் போன் பண்ணித் தனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள்.
உடம்பு சரியில்லை என்பதை விட மனம் சரியில்லை என்பதுதான் சரி என்று பட்டது. செந்தில் எழும்ப முதல் தான் சுமதி வீட்டை விட்டுப் போக நினைத்தாள்.
செந்திலைச் சந்திக்க அவள் விரும்பவில்லை. சுமதியை அடக்கி ஆளும் ஒரு மனிதனாக இல்லாமல் சுமதியைச் சுற்றித் திரியும் ஒரு பல வீனமான மனிதனாகத் தெரிந்தான். கல்யாணம் என்ற போர்வைக்குள் கெளரவமாக வாழும் ஒரு காவாலியாகத்தான் தெரிந்தான்.
சொந்தக் குழந்தையே முகம் கொடுத்துப் பேசாமல் ஒரு தகப்பன் இருப்பதானால் அவன் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
படுக்கையிலிருந்தபடியோசித்தாள். கேம்பிரிட்ஜூக்குப் போகப் பிடிக்கவில்லை. லண்டனில் நிற்கப் பிடிக்கவில்லை. உறவுகள் முறிந்தால் ஒளிந்து ஒட இடம் தேடலாமா?
ஒரு சில கிழமைகள் லீவு எடுத்துக் கொண்டு எங்காவது போக வேண்டும்.
மனத்தில் கனத்துக் கிடக்கும் சுமையை எங்காவது இறக்கி வைக்க வேண்டும். இருபத்தி எட்டு வயதில் வாழ்க்கை சூனியமாகிப் போன

Page 71
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 136
உணர்ச்சி. எமது கனவுகள் பற்றி சுமதி சொன்னது ஞாபகம் வந்தது. ஜோர்ஜூம் ஒரு கனவுதானா? அல்லது அவனைப் பொல்லாதவனாக கற்பனை செய்கிறேனா? ஜோர்ஜின்நினைவு அவ்வளவுதூரம் அவளில் ஊறிப் போய்விட்டதா?
'கண்ணால் பார்த்ததும் பொய், காதால் கேட்டதும் பொய் தீர அறிந்து கொள்வதே உண்மை என்று சொல்லியிருக்கிறார்களே!,
அப்பா ஜோர்ஜ் பற்றிச் சொன்னது என்னை ரவிக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகவா? அல்லது உண்மையாகவே ஜோர்ஜ் இன்னொரு பெண்ணுடன் சுற்றுகிறானா? ஜோர்ஜ் ஆங்கிலேயன் அவனை நம்பியது என் தவறா?
மனித மனங்களின் பலவீனம் மிக மிகச் சிக்கலானது. ஒரு சில வினாடிகளில், மணித்தியாலங்களில், நாட்களில் எப்படி மனிதர்கள் மாறிவிடுகிறார்கள்? நெருக்கமும் பிரிவும் உண்டாக்கும் நெருடலான உணர்வு நெஞ்சைக்குத்திக் கிழித்தன.
சினேகிதனான ஜோர்ஜ் பற்றி இப்படித்துடிதுடிக்கிறேன். சாத்திர தோத்திரம் பார்த்துத் தாலி கட்டிய கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதன் பரிமாணத்தைச் சுமதி எவ்வளவு சுலபமாக விளக்குகிறாள்? சித்திரா சிந்தித்தபடி படுத்திருந்தாள்.
சுமதி எழுந்து குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்ப ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அதன்பின்னர்சித்திராவிடம் பேசத்தொடங்கு வாள்.அவசரமாக எழுந்து சுமதிக்குக்குட்பை சொல்லிவிட்டுத்தன்காரை நோக்கி நடந்தாள். சித்திரா மனம் சோர்ந்து போயிருந்தது.
சில நாட்களாகச் சரியாகச் சாப்பிடாததால் உடம்பு பலவீனமாக இருந்தது. ரவி சொன்ன வார்த்தைகளை ஞாபகப் படுத்தினாள்.
“தேவையில் லாதவற்றை மனசில் போட்டுக் குழப்புவது ஆரோக்கியமான விஷயமல்ல.' ரவி சொல்லிவிட்டுப் போனது மீண்டும் மீண்டும் ஒலித்தது.
சுமதி வீட்டிலிருந்து சித்திரா சாப்பிடாமல் புறப்பட்டதால் காலைச் சாப்பாட்டை ஒரு நல்ல கபேயில் முடித்துக் கொண்டாள். மொபைலில் மெலனியை அழைத்தாள். மெலனியும் ரவியும் ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள்.
மெலனியை ஒரு தரம் தான் சந்தித்தாள், ஆனால் அவளை சித்திராவுக்குப் பிடித்து விட்டது. சித்திராவின் பெரும்பாலான சினேகி திகள் ஆங்கிலேயப் பெண்கள்.
மெலனிவித்தியாசமானவள். அதற்குக் காரணம் அவளின் சுயமை மட்டுமா அல்லது படிப்பு, வாழ்க்கை முறை என்பனவுமா என்று

137 நாளைய மனிதர்கள்
தெரியாது. சித்திராவைத் தன் பர்த்டேய் பார்ட்டிக்கு வரச் சொல்லிக் கேட்டாள். சித்திராவால் போகமுடியவில்லை. இப்போது லண்டனில் நிற்கும்போது அவளைச் சந்திக்க வேண்டும் போலிருந்தது. மோபைலில் ஹாஸ்பிட்டலில் மெலனியிருக்கிறாளா என்று கேட்டபோது அவள் இன்று வேலைக்கு வரவில்லை என்று சொன்னார்கள்.
மெலனி தந்த வீட்டு டெலிபோன் நம்பர் இருந்தது. போன் பண்ணியபோது மெலினி வீட்டிலிருந்தாள்.
சித்திராவின் அழைப்பு அவளுக்கு ஆச்சிரியத்தை தந்தது என்று பதில் குரலில் தெரிந்தது.
“எப்படி கேம்பிரிட்ஜ்?' மெலனி சம்பிரதாயத்திற்குக் கேட்டாள். இவ்வளவு தூரம் தன்னைத் தேடி வந்தவள் ஏதோ முக்கிய விஷயம் சொல்லத்தான் வந்திருக்கிறாள் என்று மெலனிக்குத் தெரியும்.
"நான் கேம்பிரிட்ஜிலிருந்து போன் பண்ணவில்லை." "ஒ அம்மா, அப்பாவுடன் செல்லம் பண்ணிக் கொண்டு செயின்ட் அல்பேன்சில் இருக்கிறாயா?"
'இல்லை லண்டனில் நிற்கறேன். மத்தியானச் சாப்பாட்டுக்கு உன்னையழைக்கலாமா என்று யோசிக்கிறேன்"
மெலனியின் சிரிப்பு கணிர் என்று கேட்டது. அந்தச் சிரிப்புகள்ளம் கபடற்றுக் கேட்டது. ஒரு குழந்தையின் சிரிப்பு. ஏன் சிரிக்கிறாள்? நான் கேட்டது வேடிக்கையாகவா இருக்கிறது?
“ஏன் என்னுடன் சாப்பிட வரமாட்டாயா? உனது பர்த்டேயுக்கு வரமுடியல்ல. அதுதான் ஒரு லன்ச் தரலாம் என்று யோசித்தேன்."
சித்திரா வேடிக்கையாகச் சொன்னாள். “பெரிய சந்தோசம். ஆனால் லன்சுக்கு வரமுடியாது. எங்களுடன் வேலை செய்யும் ஒரு நேர்சின் குடும்பத்தில் ஒரு துக்ககரமான விஷயம் நடந்து விட்டது. போகவேண்டும்.'
"அப்போது பின்னேரம் சந்திப்போம். எங்கே சந்திக்கலாம்?" மெலனி தனக்குப் பிடித்த ஜப்பானிஸ் ரெஸ்ட்ரோரன்டின் பெயரைச் சொன்னாள்.
மற்குமா ரெஸ்டோரண்ட்! சித்திராவுக்கு இரத்தம் உறைவது போலிருந்தது. அவள் சொன்ன இடம் நாராயணனுக்குப் பிடித்த இடம்.
"ஒ எனக்கு ஜப்பானிச் சாப்பாடு பிடிக்காது. ஆனாலும் உனக்காக வருகிறேன்.'எப்படி என்றால் பொய் சொல்ல முடியும்?

Page 72
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 138
தயவு செய்து என்னை அந்த இடத்திற்கு அழைத்துப் போகாதே எனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றாக அது இருந்தது என்று அவளால் சொல்ல முடியவில்லை.
இரவு சுமதியிடம் பொய் சொல்லியாகி விட்டது. இப்போது மெலனியிடம் பொய் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள்.
“எனக்காக வரவேண்டாம். சைனிஸ் சாப்பாடு பிடிக்குமா?" மெலனியின் குரல் சித்திராவைத் திருப்திப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதை எதிரொலித்தது. 'அதற்கென்ன எங்கே போகலாம்.'
சித்திரா சந்தோசத்துடன் சொன்னாள் "உனக்கு பிடித்த சைனிஸ் எது என்று சொல்.’ "சைனா டவுனில் பூன் ரெஸ்ட்ரோரண்டுக்கு வருகிறாயா?" “சரி ஆறுமணிக்கு உன்னைச் சந்திக்கிறேன்.' மெலனி பூன் ரெஸ்ட்ராரண்ட் இருக்கும் இடத்தின் விலாசத்தை வாங்கிக் கொண்டாள்.
அப்பாவுடன் சில வேளைகளில் வந்த இடமது.
அந்த இடம் அவளின் தகப்பனுக்குப் பிடித்த இடம். மிகவும் ருசியானசாப்பாடு, நல்ல தரமான சைனாச்சாப்பாடு கிடைக்குமிடம் அது.
இப்போது நேரம் பதினொரு மணி மெலனியைச்சந்திக்க இன்னும் ஏழு மணித்தியாலங்கள் இருக்கின்றன. நீண்டகாலமாக லண்டன் தெருக்களில் சுற்றவில்லை. ஹைட்பார்க்குப் போகவில்லை. பொயில்ஸ் புத்தர் கடைக்குப் போகவில்லை. லண்டன் மியூசியத்தைப் பார்த்து எவ்வளவோ நாட்களாகிவிட்டன.
துன்பம் வந்தால் சிலர் குடிப்பார்கள், சிலர் போதைப் பொருட்கள் எடுப்பார்கள்.
சித்திரா புத்தகங்கள் வாங்குவாள். மனத்துயரைத் தீர்க்கத் தன் மனத்தை எங்கேயோ செலுத்துவாள்.
நாராயணின் உறவு உடைந்தபின் பாரிசுக்குப் போய் இரண்டு கிழமைகள் பிரான்சின் சரித்திரப் பிரசித்தம் உள்ள இடங்களைப் பார்த்தாள். மனம் பாரம் குறைய ஏதாவது செய்ய வேண்டும். எந்த ஒரு பெரிய பிரச்சினையுமற்ற வாழ்க்கையில் சட்டென்று பிரச்சினைகள் நாலாப்பக்கத்திலிருந்து ஒரேயடியாக வந்தது போலிருந்தது. ஒரு கிழமைக்கு முதல் எத்தனையோ விதத்தில் யார் யாருக்கோ எல்லாம் உதவி செய்த சித்திரா இப்போது தனித்து விடப்பட்ட அனாதையாகத் தான் இருப்பதாக உணர்ந்தாள். யாரிடம் போய் உதவி கேட்பது? அம்மாவுக்கு இவளைப் புரியாது. தனக்குத்தானே அன்னியமாய்ப்

139 நாளைய மனிதர்கள்
போன உணர்வுடன் நடந்தாள். லெஸ்டர் சதுக்கத்தில் உல்லாசப் பிரயாணிகளின் கூட்டம் நிறைந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் தன்னைத் தனியாக அடையாளம் கண்டாள். சதுக்கத்தின் நாலாப்பக்கத்திலும் பிரமாண்டமான சினிமாத் தியேட்டர்கள் பெரிய போஸ்டர்களுடன் உறுத்துப் பார்த்தன. குழந்தையின் மனநிலைபோல் தனக்கு முன்னால் அவசரப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் உலகைப் பார்த்தாள்.
ஒரு இளம் பெண்ணும் வாலிபனும் தர்க்கம் செய்து கொண்டிருந் தார்கள். அவன்முகத்தில் கோரமான கோபம். அவள்முகத்தில் கெஞ்சல்.
என்ன பிரச்சினையாயிருக்கும்? சித்திரா ஒரு சோசியல் வேர்க்கர். பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது, தீர்க்க வழிதேடுவது அவள் வேலை. ஆரம்ப காலத்தில் அவள் மிகவும் பயந்து ஒதுங்கிப் போன விஷயங்கள் இப்போதெல்லாம் பெரிதாப்படுவதில்லை.
எத்தனையோ பிரச்சினைகளுக்கு அவள் முகம் கொடுத்தாள்? இன்று எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் பிரிந்து போய்தனக்குமுன்னால் விரிந்து கிடக்கும் உலகுக்கும் தனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போலிருக்கிறது.
அந்த இளம் தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துத் தள்ளினர். அவள் அழுதாள். அவன் முறைத்துப் பார்த்தான். அவன் உதறிய வேகத்தில் அவள் அந்த முலைச் சுவரில் முட்டி விழுந்தாள்.
அவள் விழுந்ததைக் கூடத்திரும்பிப் பார்க்காமல் அவன் வேகமாக நடந்தான். அவ்ஸ் சத்தம் போட்டு அழுதாள். சிலர் வேடிக்கை பார்த்தனர். பலர் முகத்தில் பரிதாபம், சிலர் முகத்தில் வெறும் வேடிக்கை. அவன் போகும் வழியைப் பார்த்து ஐ லவ் யு என்று அலறுகிறாள். அந்தக் காட்சியை எத்தனையோ பேர் பார்த்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த சித்திராவுக்கு வயிற்றை ஏதோ செய்தது. நாராயணன் மறந்துபோன போது தானும் மறைமுகமாக இப்படித்தான் அலறினேன் என்று சொல்லிக் கொண்டாள்.
இனியும் இன்னுமொருத்தன் அவளை அழப்பண்ண முடியாது. ஜோர்ஜூக்காக அவள் அழத் தயாரில்லை. அவன் ஆங்கிலேயன். இப்படித்தான்நடந்து கொள்வான், இன்னொரு பெண்ணைப்பார்ப்பான் என்றெல்லாம் அவள் அடிமணம் எப்போதோ சொல்லியிருந்ததால் ஜோர்ஜ் பற்றி அப்பா சொன்னது மிக மிகக் கொடுமையாக இல்லை. ஆனால் வேதனையாகத்தான் இருக்கிறது.
அந்த வேதனை அவளை மெலனியிடம் துரத்திவிட்டது. மெலனி சைக்கியாட்ரிஸ்ட். விஷயங்களை வித்தியாசமான முறை யில் அணுகுவாள்.

Page 73
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 140
"ரவியை ஏன் நான் ஒரு சைக்கியாட்ரிஸ்டாக நடத்த வில்லை. ஏன் அவனிடம் அப்படி நடந்து கொண்டேன்?"
"மெலனியுடன் நெருங்கிப் பழகும் அதேநேரம், அப்பாவுக்காக என்னைத்திருமணம் செய்யச்சம்மதிக்கப்போகிறான்என்று நினைத்துத் தர்மசங்கப்படுகிறேனா?”மெலனிக்காகப் பரிதாபப்பட்டேனா அல்லது எனக்காகவா? குழப்பம் குழப்பம்.
புத்தகக் கடைக்குள் சில மணித்தியாலங்கள் தன்னை புதைத்துக் கொண்டாள். தனக்குப் பிடித்தமான மனோவைத்தியம், சைக்கோலஜி பற்றிய புத்தங் க்ளைத் தேடினாள். அவளுக்குப் புத்தகங்களைப் பிடிக்கும். குழந்தையைத் தடவிக் கொடுக்கும் நுண்ணிய உணர்வுடன் 'புத்தகங்களைத் தடவிக் கொடுத்தாள். சில வேளைகளில் சில புத்தகங் களிலிருந்து எத்தனையோ அற்புதமான உண்மைகளை யுணர்ந் திருக்கிறாள். உயிருக்குயிரான சினேகிதிகளை விட இந்தப் புத்தகங் களுடன் எத்தனையோ மணித்தியாலங்களைச் செலவழித்திருக்கிறாள்.
துன்பம் நேர்கையில் தான் இருந்த பழமையான சூழ்நிலையை விட்டு ஒரு மாற்றுச் சூழ்நிலையில் தன்னைப் புதைத்துக் கொண்டது ஒரு கொஞ்சமாவது ஒரு தற்காலிக சுகத்தைத் தருவதுபோலிருந்தது. ஜோர்ஜ் பற்றிய உணர்வுகளை யதார்த்தமாக அணுக வேண்டும் என்று முடிவு செய்தாள்.
★

13
மெலனியின் முகம் வாடியிருந்தது. ஆனால் கண்களில் சித்தி ராவை ஆராயும் கேள்விக்குறி தொக்கிக் கிடந்தது. நீலக் கண்கள் சித்திராவை ஆழம் பார்த்தன.
மெலனிக்காகச் சித்திரா காத்திருந்தபோது மெலனிவந்ததும் எப் படிப் பேச்சைத்தொடங்குவது என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்தாள்.
“மெலனியை நேரடியாகச் சந்தித்தது ஒரே ஒருதரம் தான். அந்த உறவின் ஆழம் என்ன? தனது மைத்துனன் ரவியுடன் ஒன்றாகக் கண்ட படியால் அவர்களின் உறவின் நெருக்கத்தைத் தவறுதலாக எடை போட்டு விட்டேனா?"
“என்னவிதமான சைனிஸ் சாப்பாடு உனக்குப் பிடிக்கும்?" மெலனியின் குரல் சித்திராவை சாதாரண நிலைக்கு இழுத்து வந்தது, சாப்பாட்டுக்காக சித்திரா தன்னை அழைக்கவில்லை என்பதை மெலனி புரிந்து கொண்டாள் என்பது சித்திராவுக்குத் தெரியும்.
“எதுவும் ஸ்பெஸலாகத் தேவையில்லை." சித்திரா மெலனியின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள்.
மெலனியிடமிருந்து ஒரு சில வினாடிகள் ஒரு பதிலும் வராததால் சித்திராதன் பார்வையை மெலனியின் முகத்தில் படரவிட்டாள்.
மெலனியின் லிப்ஸ்டிக் தடவிய இதழ்களில் ஒரு மெல்லிய புன் சிரிப்பு. அந்தப் புன்சிரிப்பு சித்திராவின் மனதில் முள்ளாகத் தைத்தது.
“என்ன போய் பிரண்ட் வேறு பெண்னைப் பார்த்து விட்டாரா? அல்லது அப்பா அவசரமாகக் கல்யாணம் பேசுகிறாரா?'இந்த மெலனி என்ன ஆறறிவுக்கு அப்பால் ஏதோ அற்புதங்களைத் தெரிந்தவளா? உண்மையை அப்படியே அப்பட்டமாகக் கேட்கிறாளே?
சித்திராதர்ம சங்கடப்பட்டாள்.
"நான் சைக்கியாட்ரிஸ்ட் என்பது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்."

Page 74
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 142
சித்திராவின் முகத்திலிருந்து தன் பார்வையினை எடுக்காமல் சொன்னாள் மெலனி. வெயிட்டர் வந்து நின்றான். மெனு அட்டையை மெலனிபார்த்தாள். "டைகர் பீர்நல்லது,"மெலனியின்குரலில் குறும்புத் தனம்.
“என்ன?’ சித்திரா குழப்பத்துடன் கேட்டாள். ஒரு சில வினாடி களுக்கு முன் போய் பிரண்ட் பற்றிப் பேசியவள் இப்போது டைகர் பீர் பற்றிக் கேட்கிறாள்.
“சித்திரா, நீஏன் என்னைச் சந்திக்க விரும்பினாய் என்று தெரியாது. ஆனால் உன்னைச்சந்திப்பதில் மிகவும் சந்தோசப்படுகிறேன்."மெலனி மிக ஆறுதலாகச் சொன்னாள்.
சித்திரா குழப்பத்துடன் மெலனியைப் பார்த்தாள். "டைகர் பீர் ஆடர் பண்ணட்டுமா? மிகவும் மைல்ட் ஆனது. மனம் விட்டுப் பேச உதவி செய்யும்."மெலனி சைனாக்கடையில் கிடைக்கும் டைகர் பீர் பற்றிச் சித்திராவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். சித்திரா தலையாட்டினாள்.
வெயிட்டரிடம் இரண்டு டைகர் பீர் ஆர்டர் கொடுத்தாள் மெலனி. சித்திராவுக்கு பீர் பற்றி ஏதும் புரியாது. சிவப்பு வைன் மட்டும்தான் அவளுக்குத் தெரிந்த விடயம்.
“செத்த வீட்டுக்குப் போய் வந்தேன். மனம் மிகவும் சோர்ந்து போயிருக்கிறது.' மெலனி பேச்சைத் தொடர்ந்தாள். V “செத்த வீடா?’ சித்திராவின் குரலில் பரிதாபம். தன் துன்பம் சொல்லி அழ வந்தவளுக்கு மெலனி சொல்வது ஆச்சரியமாக இருந்தது.
"ஆமாம் எங்களுடன் வேலை செய்யும் மார்க்கரெட் என்ற நேர்ஸின் மகன் கொலை செய்யப்பட்டு விட்டான். மகனை இப்படி அநியாயமானமுறையில் பறிகொடுத்த மார்க்கரெட்டைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது எத்தனை கஷ்டம் என்பது எத்தனையோ பேருக்குத் தெரிவதில்லை. அப்படி வளர்க்கும் குழந்தைகளை அநியாயமாகப் பறிகொடுக்கும் போது ஒரு தாய் துடிக்கும் துடிப்பை எத்தனைபேர் புரிவர்". "ஐயாம் சொறி மெலனி’ சித்திராவின் குரலில் கனிவு, மெல்லமாக மெலனியின் கைகளைத் தடவி விட்டாள். மெலனியின் முகத்தில் படர்ந்திருந்த களைப்பின் காரணம் இப்போது தெரிந்தது.
மார்க்ரெட்டின் மகன் எப்படிக் கொலை செய்யப்பட்டான் என்று சித்திரா கேட்கத் தேவையில்லை. லண்டனில் பல இடங்களில் கறுப்பு வாலிபர்கள் தங்களுக்குள்ளே நடக்கும் கோஷ்டிச் சண்டைகளால் படுமோசமாக ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொள்கிறார்கள். கொலை

143 நாளைய மனிதர்கள்
செய்யப் படுகிறார்கள். போதைப் பொருள் விற்பனையும் விபச்சாரத் தொழிலும் மூலகாரணங்கள் என்பது பகிரங்க விடயம்.
A.
'பாவம் மார்க்கரெட்' மனப்பூர்வமாகத் தன் ஆழ்ந்த அனுதா பத்தைச் சொன்னாள் சித்திரா.
“ரவியின் மீது மார்க்ரெட்டுக்கு மிக மிக அன்பு. அவன் அங்கு இப்போது நிற்கிறான். அவனைக் கட்டிக் கத்துகிறாள் மார்க்ரெட். லண்டனில் இருக்க வேண்டாம். உடனடியாக இலங்கைக்குத் திரும்பிப் போ என்று சொல்கிறாள் மார்க்ரெட்".
ரவியின் பெயரைக் கேட்டதும் சித்திராவின் முகத்தில் சூடேறியது. அவனைப் பற்றிப் பேசத் தானே வந்தாள் சித்திரா? வெயிட்டர் பீர் கொண்டு வந்தான்.
டைகர் பீர் அவள் உணர்வை மிகவும் இலகுவாக்கிக் கொண் டிருந்தது. தன்னைப்பற்றி, ரவியைப் பற்றி, தன் எதிர்காலம் பற்றிய குழப்பங்களைப் பேச வந்தாள் சித்திரா. இப்போது மெலனியே அந்தப் பேச்சை எடுத்தது சந்தோசமாக இருந்தது.
‘'நீ ரவியைக் காதலிக்கிறாயா?" சித்திரா சட்டென்று கேட்டாள். அப்படி நேரடியாகக் கேட்டதை அவளே ஆச்சரியத்துடன் உள்வாங்கிக் கொள்டாள்.
மெலனி சித்திராவை உற்றுப் பார்த்தாள். ஒரு சில விநாடிகள் பார் வையை சித்திராவின் கண்களில் புதைத்துக்கொண்டாள். உண்மையாகத் தோண்டும் பார்வையது. மெலனியின் கூர்மையான பார்வை சித்திரா வைத்திக்குமுக்காடப் பண்ணியது.
மெலனிடைகர்பீர் முழுவதையும் குடித்துமுடித்துவிட்டாள். முகம் சிவந்துபோய்விட்டது. சித்திராவின்இருகண்களையும் இறுகிப்பிடித்துக் கொண்டாள். சொல்லப் போவதின் அழுத்தம் அந்தப் பிடியில் புலப்பட்டது.
“ரவியை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னைக் கல்யாணம் செய்து கொண்டு லண்டனிலேயே இருந்து விடேன் என்று ரவியைக் கேட்டேன்.' மெலனி மிக மிக ஆறுதலாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.
இப்படி மெலனியை பேசு வைக்குமளவுக்கு நெருங்கிப் பழகிய வன் தன் தகப்பன் விரும்பினால் சித்திராவைத் திருமணம் செய்யலாம் என்று அம்மா சொல்கிறாளே!சித்திராவின் கண்கள் பனித்தன். உதடுகள் நடுங்கின “உஷ் உஷ், இது என்ன? பிளிஸ் சித்திரா அழுவதை நிறுத்திவிடு. நான் அவளைக் கல்யாணம் செய்யச்சொல்லிக்கேட்டால் நீ ஏன் ஒப்பாரிவைக்கிறாய்? பொறாமையா'

Page 75
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 144
மெலனி குறும்புத் தனமாகக் கேட்டாள். சித்திரா அழுகையுடன் மெலனியைப் பார்த்தாள். “மெலனி அவன் துரோகி நம்பாதே." சித்திராவின் குரல் உணர்ச்சியில் கொந்தளித்தது.
மெலனி இன்னொரு தரம் அமைதியானாள். வெயிட்டர்சாப்பாடு கொண்டுவந்தான்.
"சாப்பாடு - சூடாற முதல் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சமிகரணம் நன்றாக இருக்கும்.’’ சித்திரா உண்மையாகக் குழம்பி விட்டாள். மெலனியை அவளால் புரிந்து கொள்ளமுடிய வில்லை. எவளிடம் தன் மனத்துயரைக் கொட்டி முறைப்பாடு செய்ய வந்தாளோ அவளே தன்னை குழப்பி விடுவதாகத் தெரிந்தது.
சாப்பாடு இறங்கவில்லை. நேற்றிலிருந்து அவள் மனம் கொதித்துக் கொண்டிருந்ததால் சாப்பாட்டில் மனம் இறங்கவில்லை. ஏன் மெலனி யிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று பட்டது.
"சாப்பிட்டபின் எங்காவது போவம். சாப்பாட்டுக் கடையிலிருந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருக்க விடமாட்டார்கள். ஏதாவது லைன் பாருக்குப் போவமா?' மெலனி ஆறுதலாகக் கேட்டாள்.
அவள் நடத்தையில், பேச்சில் அந்தச் சூழ்நிலையைக் கையாளும் விதத்தில் இருந்த முதிர்ச்சி சித்திராவைத் திக்கு முக்காடப் பண்ணியது. ரவியை மிகவும் விரும்பும் மெலனியிடம் சித்திரா ரவியைத் திட்ட வந்திருக்கிறாள். "சீனாச் சாப்பாட்டில் எனக்குப் பிடித்தமானது இறால் புரட்டிய நூடல்ஸ்.' மெலனி சாதாரணமாகச் சொல்வதுபோல் சொன்ன தும் அவள் கண்கள் தன் உணர்ச்சிகளை எடைபோடுகிறது என்பதை சித்திரா மறக்கவில்லை.
தான் சரியாகச் சாப்பிடாவிட்டால் ஏதோவெல்லாமோ சொல்லி மெலனி தன்னைச் சாப்பிடப் பண்ணுவாள் என்று தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாச்சாப்பாடும் முடியவிட்டு மெலனியை ஏறிட்டுப்பார்த்தாள். "புடிங் ஓர்டர் பண்ணட்டா?' மெலனி ஒரு குழந்தையைக் கேட்பது போல சித்திராவைக் கேட்டாள்.
ரோம் நகரம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனின் கதைக்கும் மெலனிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா? சித்திரா மெலனி யை ஏறிட்டுப் பார்த்தாள்.
"டைகர்பீர், சீனா சாப்பாடு, இனிப்பு புடிங். சித்திரா தன் சூழ்நிலையை எடை போட்டாள்.' மெலனி என்ன செய்கிறாள்.
'வயிற்றில் ஒன்றுமில்லாதபோது மனத்தில் பாரங்கள் ஏறும். அது உடம்புக்கும் மூளைக்கும் கூடாது. மூளை சரியாக வேலை செய்ய

145 நாளைய மனிதர்கள்
வயிற்றில் சாப்பாடு தேவை. டாக்டர்கள் உடம்பு வைத்தியர்கள். சைக்கியாட்ரிஸ்டுகள் மனவைத்தியர்கள்' மெலனியின் குரலில் குறும்பு.
சைனாத் தெரு வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது. உலகம் இன்னும் இருளத் தொடங்கவில்லை.
பாலியல் இன்பத்திற்கு இரைதேடும் ஆண்கள் எந்தப் பெண்கள் நேரில் வந்தாலும் இழித்த வாயுடன் பார்ப்பதுபோல் மெலனியையும் சித்திராவையும் பார்த்தார்கள்.
“பெண்கள் தனியாகப் போனால் ஏறிட்டுப் பார்க்காத எத்தனை ஆண்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்?'சித்திரா கேட்டாள்.
'ரவி இருக்கிறானே', பட்டென்று மறுமொழி சொன்னாள் மெலனி.
மெலனி ரவியின் பெயரைச் சொன்னதும் சித்திராவுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.
'நாராயணன் உறவு முறிந்ததும் லண்டன் பிடிக்காமல் கேம் பிரிட்ஜில் தஞ்சம் புகுந்தாயா?”
மெலனி எதையும் நேரடியாகப் பேசுவது மிகமிகத்தர்மசங்கடமாக இருந்தது.
“சாரி, சொந்த விஷயத்தில் கை வைத்து விட்டேன். றியலி சாரி' மெலனி உண்மையில் மன்னிப்பு வேண்டினாள். அதே நேரம் உன்னைப் பற்றிய முழுவிபரத்தையும் ரவி என்னிடம் சொல்லிட்டான் என்று மெலனி மறைமுகமாகச் சொல்வதும் தெளிவாகத் தெரிந்தது. ‘எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா “உங்கள் புராணங்களில் இதிகாசங்களிலும் காட்டுக்குப் போனவர்கள் திரும்பித்தானே வந்தார்கள்' மெலனி சித்திராவைக் கேட்டாள்.
மெலனி எவ்வளவு தூரம் இந்துத் தத்துவங்கள் புரிந்து வைத் திருக்கிறாள் என்று தெரியாமல் விட்டாலும் அவளின் அறிவு முதிர்ச்சிக்கு சித்திரா கெளரவம் கொடுத்தாள்.
'நாராயணனின் தொடர்பை ஒரு நல்ல பாடமாக எடுத்துக் கொள்ளலாமே? தோல்வியின் ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளாமல் அனுபவங்களின் ஆரம்பம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?’
இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டுபோய்க் கொண்டிருந்தபோது இரண்டு தடியர்கள், இவர்களில் வேண்டுமென்று வந்து மோதிவிட்டுச் "சாரி சொன்னார்கள்.
மெலனி சட்டென்று திரும்பினாள். மோதியவனின் சேர்ட்டை இருக்கிப் பிடித்து அவனை தன் முகத்தருகே இழுத்தாள். "ஏய் நாயே,

Page 76
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 146
பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாவிட்டால் நான் எப்படி மரியாதை கொடுப்பது என்று சொல்லித்தரட்டா?' அடுத்த கணம் தன் முழங்காலை உயர்த்தி அவனின் கால்களுக்கிடையில் ஒரு உதை விட்டாள்.
அவன் முகம் வேதனையில் சிவந்தது. பக்கத்திருந்தவன் கையை உயர்த்த முதல் மெலனி சொன்னாள், “இதோ பார் நான் கூச்சலிட்டால் கூட்டம் வரும் போலிஸ் வரும், இப்போது உனது சினேகிதனின் ஆண் குறியில் நான் கொடுத்த உதை உங்கள் இருவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். உங்கள் இருவரையும் போலிசாரிடம் ஒப்படைத்து எனது நேரத்தை வீணாக்க நான் தயாராயில்லை. நான் நாளைக்குக் காலையில் பாரிசில் ஒரு காண்பிரன்சில் கலந்து கொள்ள வேணும் அவசரமாக வீட்டுக்குப் போக வேணும்.' மெலனி இப்படிச் சொன்னதும் ஒருத்தன் முறைத்தான் மெலனி தன் பிடியைத் தளரவிட்டாள். சித்திரா தாங்க முடியாத ஆச்சரியத்துடன் தனக்கு முன்னாள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சில ஆண்களுக்குத் தங்கள் ஆண் குறியைத் தாண்டி உலகம் விரிந்து கிடக்கிறது என்ற தெரியாமல் போகிறது', எரிச்சலுடன் சொன்னாள் மெலனி.
குறும்புத் தனத்துடன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த மெலனி யின் பல தரப்பட்ட முகங்களையும் சில மணித்தியாலங்களில் காண முடிந்ததை ஆச்சரியத்துடன் அவதானித்தாள் சித்திரா.
லெஸ்டர் சதுக்கம் பின்னேர கோலாகலத்தில் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ‘கிவேஸ் இன் ரோட்டில் எனது சினேகிதியின் வீடு இருக்கிறது போவமா?’மெலனி கேட்டாள்.
சித்திராவுக்கு எதிர்ப்பில்லை. இருவரும் பேசிக் கோண்டே நடந்து சென்றார்கள். சீனாநகர்ப்பகுதியிலிருந்து கிரேய்ஸ் இன்ரோட்வரைக்கும் நடந்து கொண்டிருந்தபோது மெலனியிடம் தான் சொல்ல வேண்டிய விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருப்பது போல பட்டது சித்திராவுக்கு.
“அந்த முரடர்களை எதிர்த்துக் கொண்டாயே உனக்கும் பயம் இல்லையா?" சித்திரா தன்னுடன் நடந்து வரும் அந்த உயர்ந்த, உறுதி யான ஆங்கிலப் பெண்ணான மெலனியிடம் கேட்டாள்.
மெலனியுடன் தன்னை ஒப்பிடும்போது, தான் மிகவும் உணர்ச்சி வசப்படும் பெண்ணா இருப்பதாகப் புரிந்து கொண்டாள் சித்திரா. வெட்கப்பட்டாள்தான்சாப்பாட்டுக்கடையில்அழுததுவெட்கத்தைததந்தது, ஜேன் என்ற தனது சினேகிதிக்கும் மெலனிக்கும் எத்தனை ஒற்றுமைகள், வேற்றுமைகள்இருக்கின்றனஎன்றுஅவள்மனம்கேள்விகேட்டது.

147 நாளைய மனிதர்கள்
"நாங்கள் பயப்படும் வரையும் தான் மற்றவர்கள் எங்களைப் பயப்படுத்துவார்கள். பெரும்பாலான ஆண்கள் மிகவும் பெலலீவின மானவர்கள். பாலியல் வன்முறைகளைப் பெண்கள் மூலம் பிரயோகிப் பதால் தங்களை வலிமையுள்ளவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதைப் பெரும்பாலான பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். சமயக் கட்டுப்பாடுகள், சமுதாயக் கோட்பாடுகள் என்பன ஆணின் வன்முறை களை ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்துகின்றன".
சித்திராதலையாட்டிக் கொண்டாள்.
மெலனியின் சினேகிதியின் பிளாட் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பெண்கள் பற்றிய புத்தகங்கள் நூற்றுக் கணக்காகக் காணப்பட்டன.
“எனது சினேகிதி பெண்கள் கல்வி, சுதந்திரம், சமத்துவம் என் பதைப்பற்றி எழுதுபவள் நிறைய வாசிப்பாள். நிறையப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறாள்.'பிளாட்டில் பெருகிக்கிடந்த புத்தகங்களைப் பார்த்து மெலனி சொன்னாள்.
மெலனியின் குரலில் தொனித்த இனிமை, குழைவு, சந்தோசம் என்பன மெலனியும் அந்த பிளாட்டில் வசிப்பவளும் நெருங்கிய சினேகிதிகள் என்று புலப்படுத்தியது.
மெலனி உரிமையுடன் நடமாடினாள். “எனது சினேகிதி ஒரு ஆராய்ச்சி விஷயமாகச் சீனாவுக்குச் சென்று விட்டாள்".
சித்திரா கேட்கமுதலே மெலனி சொன்னாள். இருவருக்கும் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்தாள் மெலனி. இருவரும் ஆறுதலாக உட்கார்ந்தார்கள்.
சித்திரா மெளனமாக இருந்தாள். இவளிடம் எவ்வளவோ சொல்லி, எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும் என்று வந்தவள் வாயடைத்துப் போயிருந்தாள்.
"சரி, சித்திரா ஏதோ பேச வேண்டியிருந்தபடி யால்த்தானே எனக்குப் போன்பண்ணினாய். என்ன விஷயம்'.
“இரவு சுமதி வீட்டுக்குப் போயிருந்தேன். சித்திரா தொடங்கினாள் ஆனால் தொடரமுடியவில்லை.
“சுமதி என்பது ரவியின் அக்கா, புருசனிடம் அடி வாங்கிக் கொண்டிருப்பவள். ரவி அவளைக் கணவனிடமிருந்து பிரிந்து வாழச் சொன்னதாகச் சொன்னான்' மெலனி விளக்கினாள்.
ரவி மெலனியிடம் ‘எல்லாவற்றையும் சொல்லி யிருக்கிறான் என்பதை இன்னொருதரம் ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

Page 77
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 148
“கொஞ்ச காலமாக என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் ரொம் பவும் கஷ்டப்படுகிறார்கள். எனது பக்கத்து வீட்டுச் சினேகிதி குழந்தையை வயித்தில் சுமக்கிறாள். எனது மைத்துணி கணவனிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறாள்.
சித்திராமுடிக்க முன்மெலனிகேட்டாள் "உனக்கு என்னபிரச்சனை ஜோர்ஜ் யாரோஒரு பெண்ணைப் பார்க்கிறானா?”
இவளிடம் எதையும் மறைக்க முடியாது என்று சித்திராவுக்குத் தெரியும்.
"அப்படித்தான் அப்பா சொல்கிறார். அமெரிக்கா போயிருந்த போது அவர் ஜோர்ஜ"oடன் இன்னுமொரு பெண்ணைப் பார்த்ததாகச் சொன்னார்.'
“உனக்கு உலகம் வெறுத்துப் போய்விட்டதாஅந்தச் செய்தியைக் கேட்டு?’மெலனிஅன்பாகக் கேட்டாள். அதே நேரத்தில் அவள் குரலில் ஒரு விதமான நையாண்டித்தனம் இருப்பதையும் சித்திராவால் உணர முடிந்தது. மெலனிக்குக் காதலின் வேதனை புரியாதா? அல்லது அவள் தொழிலில் இதெல்லாம் சகஜமாக எடுக்கப் பழகிவிட்டாளா?
“சித்திரா உன்னைப் பார்த்தால் நீ மிக மிகக் குழம்பிப் போயிருக் கிறாய் என்று தெரிகிறது. அதன் மூலம் நீ எவ்வளவு தூரம் ஜோர்ஜில் மனதைக் கொடுத்திருக்கிறாய் என்றும் தெரிகிறது. அப்பா கண்டது, சொன்னது எல்லாம் ஏன் பொய்யாக இருக்கக்கூடாது'?
மெலனி ஆறுதலாகக் கேட்டாள். சித்திராவின் இருதயம் அலறியது.
“ஏன்ஜோர்ஜ் வரும் வரையும் பொறுமையாய் இருக்கக்கூடாது?” மெலனிதன் உத்தியோகத் தோரணையுடன் கேட்டாள்.
“மனித உறவுகள் சாசுவதமானதல்ல, மாறக் கூடியது. ஏமாற்றக் கூடியது. துரோகம் செய்யக் கூடியது. மனிதர்கள் பலவீனமானவர்கள். சுய நலமானவர்கள், பெரும்பாலானவர்கள் தங்கள் லாபத்தின் அடிப் படையில் உறவுகளைப் படைக்கிறார்கள். பெண்கள் சில வேளைகளில் பேய்த்தனமாக அல்லது முட்டாள்த் தனமாகத் தெய்வீகம், தூய்மை, தியாகம் என்ற பெயர்களில் தங்கள் உணர்வுகளை அழித்துக்கொள் கிறார்கள். இந்தப் பலவீனமான தத்துவத்தை இன்றைய சினிமாப் படங்களும் அன்றைய புராண இதிகாசங்களும் மேன்மையான, பெண்மையின் அதியுன்னத வாழ்க்கையாகச் சித்தரிக்கின்றன".
சித்திராவுக்குத் தெரியாத உண்மைகள் அல்ல இவை. ஆனால் இன்னொருத்தர் மூலம் கேட்கும்போது அந்த உண்மையின் வேகம் உள்ளத்தை ஊடுருவியது.

149 நாளைய மனிதர்கள்
"காதல் என்பது இயற்கையான உணர்வு. எங்கள் உடம்பின் சுரப்புகளும், எங்கள் மனத்தின் உணர்வுகளும் ஒன்றுசேர்ந்த ஒரு பரிமாணத்தின் மலர்ச்சிதான் காதல். காதலை அனுபவிக்காதவன் முழு மனிதனாக இருக்க முடியாது. கல்யாணங்களுக்குள் காதல் என்ற பெயரில் கடமை வளர்கிறது. இதைப் பெரும்பாலும் செய்பவர்கள் பெண்கள். ஆண்களின் எல்லாவிதமான தேவைகளையும் பரிபூரணப் படுத்துவதன் மூலம் ஒரு பெண் கற்புள்ள பெண், பத்தினிப் பெண், குடும்பத்தலைவி, நல்ல பெண் என்றெல்லாம் புகழப்படுகிறாள். ஆனால் நல்ல ஆண்கள் என்று பெயர் எடுக்க ஆண்கள் பெண்களுக்காகச் செய்யும் கடமைகள் என்ன? இதையாரும் கேட்பதில்லை'மெலனியின் பேச்சை சித்திரா கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
நல்ல ஆண் என்று பெயர் எடுக்க டேவிட், ஜேனின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமா? சட்டென்று நினைத்துக் கொண்டாள் சித்திரா. 'ரவியைத் துரோகி என்று திட்டினாயே, உனக்கு அவன் என்ன செய்தான்'
மெலனியின் அடுத்த கேள்வி “எனக்கல்ல.'சித்திராதயங்கினாள், மெலனியிடம் நேரே கேட்க முடியாமலிருந்தது.
“யாருக்குத்தான் துரோகம் செய்தான்?" மெலனி மிக ஆறுதலாகக் கேட்டாள் "உன்னைக் கல்யாணம் செய்யச் சொல்லி அவனைநீகேட்டதாகச் சொன்னாயே,'சித்திராவின் குரலில் எரிச்சல்,
"அவன் என்னைக் காதலித்துக் கைவிட்டதாக நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்?' மெலனி ஆச்சரியத்துடன் கேட்டாள், மெலனி சித்தி ராவை உற்று நோக்கினாள். சித்திரா தொடர்ந்தாள்.
“என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று நீ கேட்குமளவுக்கு உன்னுடன் நெருங்கிப் பழகியதை என்னவென்று சொல்வது?"
சித்திராவின் இந்தக் கேள்விக்கு மெலனி சிரித்தாள். 'ரவி எனக்கு மிகவும் பிடித்தமான மனிதன். நான் சந்தித்த ஆண்களில் மிக மிகக் கெளரவமானவன். அவன் சந்தித்த அனுபவங்கள் அவனை ஒரு மிக மிக நல்ல மனிதனாக மாற்றியிருந்தது. அவன் தனது நோயாளிகளுடன் பழகும் விதம், அவன் தன் கடமையாகச் செய்யும் விதமெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது.'
'அதற்காக உன்னைக் கல்யாணம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தாயா?"சித்திரா உண்மையாகக் குழம்பிவிட்டாள்.

Page 78
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 150
“என்ன சித்திரா குழம்பிப்போய் இருக்கிறாய், நான் அவனை எனக்குப் பிடித்தமான மனிதன் என்று சொன்னேனே தவிர கட்டிலுக்கு வரத் தயாரானவன் என்று சொன்னேனா?” மெலனிவெடித்தாள்.
“பிடித்தவன் என்றால் ஏன் கல்யாணம் செய்யக் கூடாது?" சித்திராவின்இந்தக் கேள்விக்கு மெலனிமறுமொழிசொல்லவில்லை. ஒரு சில வினாடிகள் கண்களை மூடிக் கொண்டாள். பின்னர் சித்திராவைப் பார்த்துக் கேட்டாள். "ஜோர்ஜ் சரிவராவிட்டால் ரவியைச் செய்து கொள்வாயா?" மெலனி இந்தக் கேள்வியைக் கேட்டபின் சித்திராவை ஏறிட்டு நோக்கினாள்.
ஒரு சில வினாடிகள் யோசித்தபின் பெருமூச்சுடன் “இல்லை" என்றாள் சித்திரா.
“ஏன் மாட்டாய்?"
“அவன் என்னை விரும்ப மாட்டான்." சித்திராவுக்கு இதைச் சொன்னபோது உலகமே இருண்டு கொண்டு வந்தது, நாராயணன் போய்விட்டான். ஜோர்ஜ் அமெரிக்காவிலேயே தங்கிவிடலாம். ரவி மெலனியில் மிகவும் விருப்பமுள்ளவன். “எனக்கு என்ன நடந்தது'? சித்திரா வாய்விட்டுக் கேட்டாள்.
மெலனி சித்திராவின் அருகில் வந்தாள். அனைத்துக் கொண்டாள். ஒரு சகோதரியின் பாசம்.
“சித்திரா நீ ஒரு சோசியல் வேர்கர். மற்றவர்களுக்கு உதவி செய்பவள். மற்றவர்களின் பிரச்சினையைத்தீர்த்து வைப்பவள். ஆழ்ந்து யோசித்துப் பார். உனக்கு எத்தனையோ வெற்றிகள் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆண்களின் அன்பில், உறவில் மட்டும்தான் வாழ்க்கை யின் முழுமை இருக்கும் என்று நினைக்காதே."
‘'நீ மட்டும் ஏன் ரவியைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டாய்?"
இலங்கையில் இப்போது நடக்கவிருக்கும் சமாதானப் பேச்சுகள் சரிவராவிட்டால் தமிழன் என்ற பெயரில் ரவிதுன்பங்களை அனுபவிக்க நேரிடலாம். அவனைப்போல் ஒரு நல்ல டாக்டரின் சேவை நீடிக்க வேண்டும். தமிழன் என்ற பெயரில் கொலை செய்யப்படாமல் எங்காவது தப்பியிருக்கட்டும். அவனுக்கு இங்கிலாந்தில் இருக்க விருப்பமென்றால் அவன் இருக்கும் வசதிக்கு விசா எடுப்பதற்காக அவனைத் திருமணம் செய்ய யோசித்தேன். “ரவியில் எனக்குள்ள அன்பு மிக வித்தியாசமான அன்பு. காமமோகாதலோ அல்ல."
"அவனில் உள்ள மதிப்பில், பரிதாபத்தில் அவனைக் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டாயா?"

151 நாளைய மனிதர்கள்
சித்திரா மெலனியிடமிருந்து இன்னும் என்ன புதினங்கள் வெளி வரப்போகுதோ என்பது தெரியாமல் கேட்டாள்.
"ஆமாம் ஒரு ஆண் என்ற முறையிலோ ஒரு ஆணுடன் குடும்ப மாயிருக்க வேண்டும் என்றோ நான் ரவியைத் திருமணம் செய்ய விரும்பவில்லை. ஒரு பெண் ஒரு ஆணுக்கும் ஒரு ஆண் ஒரு பெண் ணுக்கும் உதவி செய்வதாயிருந்தால் அதன் அடிப்படை எப்போதும் செக்ஸ் அடிப்படையிற்தான்இருக்க வேண்டும் என்றாநினைக்கிறாய்?"
சித்திரா பதில் பேசவில்லை.
“சித்திரா இந்த பிளாட்டில் நான் மிகவும் சுதந்திரமாக இருக்கிறேன். இதிலிருந்து ஏதும் உனக்குப் புரிகிறதா'
"உனக்கு நெருக்கமான சினேகிதியின் பிளாட் என்று நினைக் கிறேன்." சித்திரா கொஞ்சம் கொஞ்சமாக என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்டாள்.
"தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நான் வேலையை விட்டு ஸ்கொட்லாந்து போகிறேன். அதன் பின்னணிக் காரணம் என்னால் ரவி பிரச்சினைப்படக்கூடாது என்பதுதான்'
மெலனியின் பெருந்தன்மை சித்திராவின் மனதைத் தொட்டது.
“சித்திரா நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எனக்கும் ரவிக்கும் உள்ள அன்பையும் நெருக்கத்தையும் பார்த்துச் சிலர் தவறாக முடிவு கட்டுகிறார்கள். படித்த பெண்ணான நீயும் ஜோர்ஜ் விடயத்தில் ஆற அமர யோசிப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஜோர்ஜ் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க முடியாதா?”
“நன்றி"சித்திரா மனமாரச் சொல்லிக் கொண்டாள்.
"சித்திரா எனக்கும் உனது மைத்துனருக்கும் உள்ள உறவு உத்தியோக சம்பந்தமாகத் தொடங்கி வளர்ந்தது. அதற்குக் காரணம் ரவி ஒரு நல்ல மனிதன் என்பதுதான்.நான் அவனைச் செக்ஸ் தேவைக்காகப் பாவிக்கவில்லை."
★

Page 79
14
நாட்கள் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிழமைக்கு இரண்டு தரம் என்றாலும் ஜோர்ஜ் வழக்கம்போல் போன் பண்ணினான். தவிர்க்க முடியாத காரணத்தால்தான் அமெரிக்காவிலிருந்து உடனடியாக வரமுடி யவில்லை என்றான். அவன் குரலில் சந்தோசம். சாதாரணமாகவே ஜோர்ஜ் மிகவும் அடக்கமான பேர்வழி. அவனை மாற்றிய விடயம் என்ன? மனிதர் யார்?
“இப்படிச் சந்தோசப் படுகிறாயே <9յԼւ գ என்ன விசேடம் அமெரிக்காவில்?’அப்பட்டமாகக் கேட்டாள்.
“உம் உனக்கு சேர்பிரைஸ் தருவதாக இருக்கிறேன்.' அவன் குதுகலத்துடன் சொன்னான்.
“உன்னைச் சந்தோசப்படுத்திய பேர்வழி மிகவும் ஸ்பெசல் என்று நினைக்கிறேன்", தனது குரலைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு கேட்டாள். மெலனி சொன்னதுபோல் ஆண்களின் தயவில் தன் வாழ்வின் நிறைவை அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் ஒரு கொஞ்ச நேரம் மெளனமாயிருந்தான். எனது சித்திராதான் எனது ஸ்பெசல் பேர்வழி என்று அவன் சொல்வான் என்று நினைத்தாள்.
"ஆமாம் ஒரு விதத்தில் ஸ்பெசல்தான். உனக்கு நேரில் எல்லா வற்றையும் சொல்கிறேன். அதுவரைக்கும் என்னை மன்னித்துவிடு.' ஜோர்ஜ்ஒரு நல்ல சினேகிதன் என்பதை சித்திரா உணர்வாள். ஜோர்ஜ் மிக மிக நேர்மையானவன் என்பது அவனைச் சுற்றியிருப் போரின் கருத்து. அவளுக்கு அவன் பொய் சொல்ல மாட்டான் என்று சித்திராவுக்குத் தெரியும். விரைவில் லண்டனில் நடக்கவிருக்கும் அமைதிப் போராட்டத் திற்கான ஆயத்தங்களை டேவிட் செய்து கொண்டிருந்தான். இங்கி லாந்தில் அறுபது வீதத்திற்கும் மேலான மக்கள் அமெரிக்க ஜனாதிபதி யுடன் பிரதமர் டோனி பிளோர் சேர்ந்து ஈராக் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுப்பதை வெறுத்தனர். ஆனாலும் அரசாங்கம் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு போருக்கான ஆயத்தங்களைச்செய்து கொண்டிருந்தது.
“ரஷ்யா தனது விரோதி என்று அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்து நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்தது.

153 நாளைய மனிதர்கள்
அந்த ஆயுத பலத்தில் இப்போது உலகை ஆட்டிப் படைக்கிறது. இஸ்ரேலின் கொடுமையான செயல்களைப் பார்த்தும் பாராமல் இருந்து கொண்டு ஈராக்கை உதைத்து அழித்து அந்த நாட்டைக் கூறுபோட அமெரிக்காமுனைகிறது, தடுப்பார்யாருமில்லை', டேவிட்வழக்கம்போல் போருக்கு எதிரான கருத்துக்களைச்சொல்லிக்கொண்டிருந்தான்.
ஜேன் அவனுக்கு ஓடி ஆடி உதவி செய்து கொண்டிருந்தாள். ஜேனின் வயிற்றில் வளரும் குழந்தையால் ஜேன் வாந்தி எடுத்துக் கொண்டு கஷ்டப்பட்டபோது டேவிட் மிக மிக அன்புடன் பார்த்துக் கொண்டான்.
ஆரம்பத்தில் அவன் “ஏன் இப்போது எங்களுக்குக் குழந்தை தேவை என்று முணுமுணுத்தபோது நானும் அவசரப்பட்டு ஏதும் செய்யாமலிருந்ததன் பலன் இப்போது தெரிகிறது. பெரும்பாலான மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். தற்செயலாகப் பிரச்சினைகள் தலையில் ஏறும்போது குழம்பிப் போவார்கள்." ஜேன் டேவிட்டுக்காகப் பரிந்து பேசினாள்.
செப்டம்பர் மாதம் இருபத்தெட்டாம் தேதி லண்டனில் நடந்த ஈராக் போருக்கு எதிரான அமைதி ஊர்வலத்தில் ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள்.
டேவிட், ஜேன் மற்றும் பல நண்பர்களுடன் லண்டன் வந்திருந்த சித்திரா அந்த அமைதிப் படையைப் பார்த்துப் பிரமித்து விட்டாள். ஜோர்ஜ் இருந்தால் அவனும் சேர்ந்து வந்திருப்பான். மூன்றாம் நாட்டு மக்களில் அக்கறையுள்ளவன் அவன். அமைதிக்காகப் போராடும் மக்களுடன் தன்னையிணைத்துக் கொண்டபோது பெருமிதமாக இருந்தது.
அன்று பின்னேரம் தாய் தகப்பனிடம் போனாள். எதிர்பாராத விதமாக ரவியைச் சந்தித்தாள்.
அவனுடன் பட்டிக்காட்டுப் பெண்போல் நடுச்சாமத்தில் விம் பிள்டன் சந்தியில் வைத்துச் சண்டை போட்டது ஞாபகம் வந்ததும் அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் சுயமரியாதை விடவில்லை.
இவளைக் கண்டதும் திலகவதியின் முகத்தில் இருள் படர்ந்தது. ஜோர்ஜ் பற்றி அப்பா அவளிடம் என்ன சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. மகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்திலகவதி.
உன் தலைவிதி இப்படியாகிப் போய்விட்டதே என்ற பெருமூச்சு. அப்பாவழக்கம்போல் மகளை அணைத்துக்கொண்டார். ரவியுடன் அவள் எப்படிப் பழகுகிறாள் என்பதைத் தாயும் தகப்பனும் கடைக் கண்ணால் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தது.

Page 80
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 154
"அம்மா இரண்டு கிழமை லீவில் லண்டனில் நிற்கப் போகிறேன் சந்தோசமா?'சித்திராதாயைக் கேட்டாள்.
சித்திரா எல்லோர் முன்னிலையிலும் இப்படிச் சொன்னது எல் லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் யாரும் சினேகிதி களுடன் சேர்ந்துகொண்டு ஊர் சுற்றும் சித்திரா எப்படி மாறிவிட்டாள் என்று அவர்கள் யோசிப்பது தெரிந்தது.
“ஒன்றிரணடு நாட்கள் எனக்குத் துணையாக லண்டன் நகர் பார்க்கலாமா?’ ரவி கேட்டதும் எல்லோர் பார்வையும் சித்திராவில் திரும்பியது.
மெலனி ஸ்காட்லாந்து போய்விட்டாள் என்று சித்திராவுக்குத் தெரியும். ஸ்காட்லாந்து தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக மெலனி சித்திராவுக்குச் சொன்னாள்.
“அதற்கென்ன", மரியாதைக்குச் சொல்லி வைத்தாள்.
நாராயணனுடன் போன பூங்காக்கள், தியேட்டர்கள், ரெஸ்ட் ரோண்டுகளுக்கு ரவியுடன் போகும்போது தன் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தாள்.
“டாக்டர் குப்தா இந்தியா திரும்பிவிட்டார். நீ வேண்டுமானால் எனது பிளாட்டிலேயே நிற்கலாம்.'
ஒளிவு மறைவின்றி ரவி அழைப்பு விடுத்தது அங்கிருந்தவர்களை இன்னொருதரம் ஆச்சரியப்படுத்தியது.
என்ன சொல்கிறான்? என்ன நினைத்துக் கொண்டு சொல்கிறான்? நாராயணனைநம்பிஏமாந்தாய், ஜோர்ஜ் பற்றி ஏங்குகிறாய் அதற்கப்பால் நான் இருக்கிறேன் என்கிறானா? அல்லது உன்னைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது என்று மறைமுகமாகச் சொல்கிறானா?
“லண்டனில் சில இடங்களைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”
ரேட் கலறி - கலாச்சார நிலையத்திற்குப் போகும்போது ரவி சொன்னான். சித்திராவுக்கு வயிற்றை ஏதோ செய்தது.
"நீ சென்னைக்கு வந்தால் ஆர்ட்டிஸ்ட் காலனிக்கு உன்னை அழைத்துச் செல்வேன். வாழ்க்கை எல்லாம் நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கலைப்பொருளை வாங்கித் தருவேன்' என்று நாராயணன் சொல்லிய வார்த்தைகள் நாராசமாய் அவள் மனத்தில் எதிரொலித்தது.

155 நாளைய மனிதர்கள்
ரவி ஒவ்வொரு கலைப் பொருட்களையும் ரசித்தான். மாடர்ன் ஆர்ட்டில் மறைந்து கிடக்கும் தத்துவங்களை விளக்கினான்.
சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று சித்திராவின் பக்கம் திரும்பினான். அவளை ஏறிட்டு நோக்கினான். ஏதோ சொல்லப் போகிறான் என்று ஊகித்துக் கொண்டாள்.
“சுமதி எப்போதாவது ஏதாவது ஆர்ட் கண்காட்சிக்கு வந்திருப்பாள் என்று நினைக்கிறாயா?"அவன் குரலிலிருந்த சோகம் அவளின் இருத யத்தின்அடியில் உறைந்தது. உணர்வுகளைக் குழப்பியது. தமக்கையில் இத்தனை பாசம் வைத்திருக்கும் ஒரு தம்பியை அவள் சந்தித்ததில்லை. அவளுக்கு எந்தச் சகோதர சகோதரிகளுமில்லை. அந்த அனுபவம் எவ்வளவு நெருக்கமானது என்பது அவனின் நெகிழ்ந்த குரலிலிருந்து தெரிந்தது. ரவி தனது மைத்துனன் என்பதற்கு அப்பால் அவன் ஒரு நல்ல மனிதன் என்பதை அங்கீகரித்தாள். மெலனி இவனைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதின் பின்னணியில் அவர்களின் உறவு எப்படி வளர்ந்திருக்கும் என்று கற்பனை செய்தாள்.
உறவினர் என்பவர்களைத் தவிர அவள் வாழ்க்கையில் சினேகி தர்கள் சினேகிதிகள் நிறையப்பேர்குறுக்கிட்டிருக்கிறார்கள். தமயன்என்ற ஸ்தானத்தை அவள் கொடுப்பதானால் டேவிட்டுக்குக் கொடுப்பாள். ஜேனும் டேவிட்டும் அவளின் நீண்ட கால நண்பர்கள். நாராயணனின் துயர ஞாபகங்களை அவர்களின் அன்பிலும், பரிவிலும் கொஞ்சம் கொஞ்சம் மறக்க உதவினார்கள்.
இப்போது தனது தமக்கையின் வாழ்க்கை பற்றி துயர்படுகிறான். “தனக்குத் துரோகம் செய்யும் ஒரு ஆணுடன் எப்படிச் சில பெண்கள் தொடர்ந்து சீவிக்கிறார்கள் என்று தெரியவில்லை' அவன் பெருமூச்சு விட்டான். “சித்திராஎன்னைநீஉணர்வாய் என்று நம்புகிறேன்."அவள் புன்னகைத்தாள்.அவர்களுக்கு எதிரில் மிலேனியத்திற்காகக் கட்டப்பட்ட சக்கரம் நூற்றுக்கணக்கான மக்களைத் தாங்கிக் கொண்டு மெல்ல மெல்ல சுற்றிக் கொண்டிருந்தது.
"வாழ்க்கையே இப்படித்தான். ஒரு இடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.'
அவன் வேதாந்தம் பேசவா இரண்டொருநாள் தன்னுடன் தங்கச் சொன்னான்?
“மனைவிகளுக்குத் துரோகம் செய்யும் கணவர்கள் உலகத்தில் எல்லா இடமும் நிறைந்து கிடக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி கிளிண் டன் மொனிக்காவை உறவு கொண்டபோது அவர் மனைவி ஹிலரி ஓடிவிட்டாளா? இங்கிலாந்தின் மாஜிப் பிரதமர் தனது மந்திரி எட்வீனா வுடன் உறவு கொண்டபோது அவர் மனைவி நோர்மா விவாகரத்து

Page 81
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 156
செய்து விட்டாளா? நாங்கள் சுமதியை செந்திலிடமிருந்து பிரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவனுக்குத் தெரியும்.”
ரவி இப்போது சித்திராவை ஏறிட்டு நோக்கினான். அவன் பார்வை யிலிருந்த எதிர்பார்ப்பு என்னவென்று அவளுக்குத் தெரியும்.
"நாங்கள் நினைத்தபடி மற்றவர்கள் நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல என்று நினைக்கிறேன்".
சித்திரா இப்படிச் சொன்னதும் அவன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டான்.
இருவரும் தேம்ஸ் நதிக் கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். “உங்கள் தமக்கைக்குப்புத்தி சொல்ல வேண்டும் என்று என்னைக் கேட்பதற்காகவா என்னைக் கூப்பிட்டீர்கள்'
அவள் நிதானமாகக் கேட்டாள். இவன் தாய் தகப்பன் முன்னி லையில் என்னுடன் ஒன்றிரணடு நாட்கள் செலவழிக்கிறாயா என்று கேட்டபோது தாய் தகப்பன் என்ன நினைத்திருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அவள் அதிகம் யோசிக்கவில்லை. மற்றவர்களின் செயல்களைச்சிலவேளைதடுக்கலாம். புரிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் நினைவுகளைத் தடுக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும்.
ரவி இவளைப் பார்க்கவில்லை. நதியைத் தாண்டியிருந்த படிகளில் இறங்கி உட்கார்ந்தான். பின்னேர ஆரவாரத்தில் தேம்ஸ் நதியில் பல உல்லாசப் படகுகள் ஆரவாரத்துடன் போய்க் கொண்டிருந்தன.
"நான் உன்னைக் கூப்பிட்டதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. அதில் நீ சுமதிக்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்க யோசித்ததும் உண்டு.”
அவன் மேலதிகமாக ஏதோவெல்லாம் சொல்ல யோசிக்கிறான் என்று தெரியும். 'நீ என்னுடன் வந்து நிற்பதால் எங்கள் இருவருக்கி மிடையில் ஏதோ இருப்பதாக உனது தாய் தகப்பன் நினைக்க மாட்டார்கள் என்று விளக்கவும் யோசித்தேன்'
சித்திராதர்மசங்கடப்பட்டாள். ஒருசில வினாடிகளுக்குமுன்அவள் நினைத்ததை அவன் சொல்கிறான்.
“நான் இன்னும் சில வாரங்களில் இலங்கைக்குத் திரும்பிப் போகிறேன். எத்தனயோ பேருக்கு லண்டன் பிடிக்கலாம் எனக்கு விருப்பமில்லை". அவன் தொண்டையடைத்தது. தொடர்ந்தான். குரல் உணர்ச்சிவசப் பட்டிருந்தது.

157 நாளைய மனிதர்கள்
"உனது தகப்பன் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். எனது தாய் அவரின் சகோதரி என்ற காரணத்தைத் தவிர நான் அவர் மருமகனாக வரவேண்டும் என்ற அடிப்படையில் அவர் உதவி செய்திருந்தால் மன்னிக்கச்சொன்னேன். ஏனென்றால்நான் எந்தக் காரணம் கொண்டும் லண்டனில் தங்கத் தயாரில்லை." ரவி தேம்ஸ் நதியைப் பார்த்தபடி சொன்னான்.
ஒருவிதத்தில் அவளுக்கு நிம்மதியாயிருந்தது.
"நான் எனது நாட்டையும் மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். இலங்கையில் ஒரு மாற்றம் வரும். உடைந்து கிடக்கும் சமுதாயத்தை நல்லபடியாக உருவாக்க என் கடமை பயன்பட்டால் நான் சந்தோசப் படுவேன். என்தந்தையின்இரத்தம் சிந்திய பூமியது. இரு தம்பிகளையும் பலி வாங்கிய அரசியல் வெறி பிடித்த நாடது. எனது தங்கை தன் வாழ்க்கையைத் தியாகம் செய்த பூமியது. அந்தப் பூமியில் தன் உயிரும் போகவேண்டும், எனது குடும்பம் புதைக்கப்பட்ட பூமியில் தானும் சங்கமமாக வேண்டும் என்று நினைக்கிறாள். அவளுக்கு இலங்கையில் என்னைத் தவிர யாரும் கிடையாது.' ரவியின் குரலில் உணர்ச்சி வசப்பட்டுத்திணறியது.
"அப்பா உங்களிடம் என்னைக் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டாரா?' அவள் குரலில் அவமானம். என்னை யாரிடமாவது தள்ளிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள் என்ற ஆதங்கம். என்னை இந்த நிலையில் ஏதோ ஒரு பரிதாபத்துக்குரியவள் என்று நினைக்கிறார்களே என்ற எரிச்சல்.
“சித்திரா உனது திறந்த மனமும் புத்திசாலித்தனமும் எனக்கு நிறையப் பிடிக்கும். ஆனால் சிலவேளை சிலவிடயங்களைக் கற்பனை செய்துகொண்டு சங்கடப்படுகிறாயோ என்று சந்தேகமாக இருக்கிறது. உனது தகப்பன் மிகவும் பரந்த மனம் படைத்த நல்ல மனிதன்."
அவள் சட்டென்று எழுந்தாள். இன்னொருதரம் அவனுடன் சண்டை பிடிக்கத் தயாரில்லை.
"உனது தகப்பனுக்கு நான் லண்டனில் கடைசி வரைக்கும் தங்க மாட்டேன் என்று தெரியும். அதேவேளை உனக்குப்பிடிக்காத எதையும் செய்ய மாட்டார் என்றும் தெரியும். அவருக்கு என்னைப் பற்றி என்னவெல்லாமோ கற்பனையிருந்திருக்கும். ஆனால் வெளிப்படுத்த முடியாதவாறு எத்தனையோ தடங்கல்கள் உண்டு என்றும் தெரியும். சித்திரா, தயவு செய்து என்னைப் புரிந்துகொள். நாங்கள் வித்தியாசமான மனிதர்கள்."
“மெலனியை ஏன்தட்டிக் கழித்தீர்கள்?"
சித்திராவின் குரலில் ஆத்திரம்.

Page 82
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 158
அவன் இப்போது வாய்விட்டுச் சிரித்தான். ஆத்திரப்படவில்லை. அவன் ஏன்சிரிக்கிறான் என்று அவளுக்கு விளங்கவில்லை.
“மெலனி என்னில் பரிதாபப்பட்டாள். இலங்கைக்குப் போய் அரசியல் பிரச்சினைகளில் உயிரை இழந்து விடுவேனோ என்ற பயத் திற்காக என்னை லண்டனில் இருக்கச் சொன்னாள். லண்டனில் இருக்க விசா தேவைக்கு வேண்டுமானால் என்னைத் திருமணம் செய்யக் கேட்டாள்"
"உங்களுக்கு மெலனியில்."
அவள் முடிக்க முதல் அவன் சொன்னான்.
“மிக மிக அன்பும் மரியாதையுமிருக்கிறது. ?அதற்காகக்கல்யாணம் செய்ய வேண்டுமா?’
அவளுக்கு வெட்கமாக இருந்தது. தன்னை ஒரு முற்போக்குப் பெண்ணாக நினைத்தவளுக்கு ரவியின் கேள்வி சாட்டையாக இருந்தது.
"மெலனி என்னை ஒரு காதலனாக விரும்பவில்லை. ஒரு சினேகிதனாகத்தான் உதவி செய்ய விரும்பினாள்.'
மெலனியைப் பற்றி இவனும் இவனைப் பற்றி மெலனியும் எவ்வளவுதூரம் மதிப்பாக எடை போடுகிறார்கள்? என்னையும் ஜோர்ஜ் இப்படி எடை போடுவானா?
“சித்திரா உன்னை நாராயணன் விட்டுப் போய்விட்டதால் உலகத்தில் எல்லா ஆண்பிள்ளைகளும் பொய் சொல்பவர்களாகவும் புரிந்துணர்ந்து கொள்ளும் உணர்வற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று முடிவு கட்டுவது சரியல்ல."
நாராயணன் பற்றி அவன் பேச்சு எடுத்ததும் அவள் அடக்கி வைத்திருந்த கோபம், சோகம் எல்லாம் ஒரேயடியாகப் பொங்கி கண்ணிராய் வந்தது. வார்த்தைகள் வரவில்லை. அவன் தொடர்ந்தான்.
"சித்திராநிஎத்தனையோ பேருக்கு புத்தி சொல்கிற உத்தியோகத்தில் இருக்கிறாய். நான் உனக்குப் புத்தி சொல்லத் தேவையில்லை. சில ஆண்கள் பெயருக்குஆண்கள் என்ற உருவத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் உண்மையான ஆண்மை இருப்பதில்லை. ஊருக்கும் உலகத்திற்கும் பெரியவர்கள்போல பழகுவார்கள். ஆனால் தன்னை விடக் கொஞ்சம் மனவலிமை, அறிவு வலிமை படைத்த பெண்களை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆரம்பத்திலேயே அவசரப் பட்டு ஓடிவிட்டவனைப் பற்றி ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" ரவிசித்திராவை ஆறுதல்படுத்தச் சொன்னான்.

159 நாளைய மனிதர்கள்
"நீயும் அப்படித்தான் மெலனியை விட்டுப் போகிறாய்." ரவிசித்திராவைத் திரும்பிப் பார்த்தான். ரவி பெருமூச்சு விட்டுக் கொண்டான். என்ன சொல்ல நினைக்கிறான் என்று தெரியவில்லை.
நாஷனல் பிலிம் தியேட்டர்பார்நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. தனக்கு பீரும் அவளுக்கு ஆரன்ஜ்சும் ஒடர் பண்ணிக் கொண்டான். “சித்திரா பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய சரித்திரம் எனக்கில்லை. எந்தப் பெண்ணிடமும் அப்படித் தொடர்புமில்லை. மெலனியிடமோ அல்லது உன்னிடமிருந்தோநான் ஏதோதப்பிஓடுவதாக நினைக்காதே." அவன் உண்மை சொல்கிறான், அவன் நேர்மையானவன் என்பதை அவள் சந்தேகிக்கவில்லை. அவன் இவள் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். அதன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை.
“சித்திரா மனம் விட்டுக் கேட்கிறேன், உனது அப்பாவின் திருப்திக்காகவோ அல்லது நான் லண்டனில் வாழ விசா கிடைக்கும் என்பதற்காகவோ நீஎன்னைத்திருமணம் செய்து கொள்வாயா?”
குடித்துக்கொண்டிருந்த ஜூஸ் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இவன்இப்படிக் கேட்டிருக்கக்கூடாது. அடிமணம் ஜோர்ஜ் பற்றிஅலறிக் கொண்டிருக்கும்போது இவன் இப்படிக் கேட்கிறானே.
"உனது மனம் ஜோர்ஜ் பற்றித் திண்டாடிக் கொண்டிருக்கிறது. உனது அப்பா எல்லாம் சொன்னார்.'
“ஓ, அதுதான் எனக்குப் புத்தி சொல்ல உங்களுடன் தங்கச் சொன்னீர்களா. ஜோர்ஜ் பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?"அவள் குரலில் படபடப்பு. அவன் பின்னால் சரிந்து உட்கார்ந்தான்.
“சித்திரா, நாங்கள் எல்லோரும் அன்பைத் தேடி அலைகிறோம். பிராய்ட் சொல்வதுபோல் காதல் இல்லாவிட்டால், எங்களை யாரும் நேசிக்கவில்லை என்று தெரிந்தால் நாங்கள் எங்களை மிகவும் குழப்பிக் கொள்கிறோம். மற்றவர்கள் மூலம் எங்களை எடைபோடாமல் எங்களை நாங்களே காதலிக்க வேண்டும். நம்ப வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மிக மிகக் குழப்பமான, விசித்திரமான, முரணான இந்த உலகத்தைச் சமாளிக்கலாம்.'அவன்உபதேசித்தான்.
“நல்லது இரண்டு நாட்கள் என்னஇரண்டு கிழமைகள் உங்களுடன் நின்று சைக்கோலஜி படித்துக் கொள்கிறேன்." அவள் குரலில் நை யாண்டி. ஆனாலும் அவன் உலகத்தைக் கிரகிக்கும் விதம் அவளுக்குப் பிடித்திருந்தது.

Page 83
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 160
“என்ன கிண்டலடிக்கிறாயா?" அவளைத் துன்பப்படுத்தி விட்டேனோ என்ற பச்சாத்தாபம் அவன் குரலில் தொனித்தது.
“இல்லை நீங்கள் போக முதல் நான் எப்படியும் ஜோர்ஜை மறக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்."
அவளை அவன் தொடர விடாமல் இடைமறித்துச் சொன்னான்.
“சித்திரா யாரும் யாரையும் மறக்கவும், மறுக்கவும் நான் சொல்ல வில்லை. உலகத்தை வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்த்தால் இப்போது புரியாத விடயங்கள் எத்தனையோ விளங்கும்.'
"அழகும் அறிவுமான மெலனியை நீங்கள் மறுத்ததை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் எனக்குப் புரியவில்லை." சித்திரா வெடித்தாள். அவன் இன்னொருதரம் வெறுமையான பார்வையைத் தவழவிட்டான்.
"சித்திரா நீ நினைக்கும் உறவு எங்களுக்குள் இல்லை. அவள் லெஸ்பியன். ஆண்கள் தேவையற்றவர்கள். மிக மிக நல்ல சினேகிதி. ஆண்கள் தயவில்லாமல் வாழும் பெண்மணி"
சித்திரா உறைந்துவிட்டாள்.
"நீ போன லண்டன் பிளாட்டில்தான் அவளின் சினேகிதி
இருக்கிறாள்' ரவி சித்திராவை ஏறிட்டுப் பார்த்தான். எடை போடும்
பார்வையது. மெலனி பற்றி சித்திராவுக்கு இப்போது எத்தனையோ விடயம் விளங்கியது.
“உங்களைத் தப்பாக நினைத்ததற்கு மன்னிக்கவும்.” இவர்கள் வீட்டுக்குப் போயிருந்த சமயம் தனபால் மாமா ரவியைப் பார்க்க வந்திருந்தார்.
ரவியின் வீட்டில் சித்திராவைக்கண்டதும் அர்த்தத்துடன் பார்த்தார். என்ன இந்தப் பெண் உன் வீட்டில் கூடாரம் போட்டிருக்கிறாள் என்ற பார்வை.
“பயப்படாதீர்கள் மாமா, நாங்கள் இருவரும் கல்யாணம் செய்யப் போவதில்லை'. ரவி கிண்டலாகச் சொன்னான். அவரின் தேவையற்ற சிந்தனைகளைத் துண்டாடிய குரலது. அவர்தர்மசங்கடத்துடன்சிரித்தார். தான்நினைத்ததை அவன் கண்டுபிடித்த வெட்கம்.
“சுமதி.'தயக்கத்துடன் தொடங்கினார்.
“சுமதிக்கு என்னநடந்தது?'ரவி அவசரமாய்க்கேட்டான். ஏதாவது தாறுமாறாக நடந்துவிட்டதோ என்று பயப்பட்டான்.

161 நாளைய மனிதர்கள்
“உன்னுடன் இலங்கைக்கு வரப் போகிறாளாம். டிக்கட் வாங்கித் தரச் சொன்னாள். கொஞ்ச காலம் லண்டனை விட்டுப் போய் இருக்க வேண்டும்போல் இருக்கிறதாம்.'
சித்திராவும் ரவியும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள். தனபால் தொண்டையைச் சரிசெய்து கொண்டார். ரவியைப் பார்த்தார்.
“சுமதிக்கு நீங்கள்தான் புத்தி சொல்ல வேண்டும்." அவர் குரலில் கெஞ்சல்.
“நிச்சயமாக", அவன் வார்த்தைகளில் கிடந்த அர்த்தம் அவருக்குப் புரியவில்லை.

Page 84
15
அக்டோபர் 2002
சில கிழமைகளில் இலங்கை திரும்புவேன் என்று சொன்ன ரவி இன்னும் ஊர்திரும்பவில்லை.
சுமதி தன் குழந்தைகளுடன் தன் தாயைப் பார்க்கப் போவதாகச் சொன்னபோது செந்தில் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போக வேண்டாம் என்று சொன்னான்.
“ஏன், உங்களுடன் குழந்தைகளை ஒப்படைத்து விட்டுப் போக வேண்டுமா?'சுமதி பொறுமையுடன் கேட்டாள்.
ஆங்கிலச் சட்டத்தின்படி தகப்பன் அனுமதியில்லாமல் ஒரு தாய் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்ல முடியாது என்று தெரியும்.
“பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடும்." செந்தில் உறுமினான். அந்த உறுமலுக்குச் சுமதி பயப்படுவாள் என்ற எதிர்பார்ப்பு.
“ஒரு மாத லீவில் அப்படி ஒன்றும் பெரிய படிபபுக் கெட்டு விடாது." அவனைக் கோபப்படுத்தக் கூடாது என்ற தோரணையில் சொன்னாள்.
“ரவி உன்னைத்தூண்டிவிட்டிருக்கிறான்', செந்தில்துள்ளினான்.
“எனது தாய் சுகமில்லாமல் இருக்கிறாள். லண்டனுக்கு வந்து நான் அவளைப் போய் பார்க்கவில்லை.'சுமதிகண்ணிரை அடக்கிக்கொண்டு சொன்னாள்.
"அந்த சித்திரா ஒரு பக்கம், ரவி ஒருபக்கம் உனக்குப் புத்தி சொல்லியிருப்பார்கள்.”செந்தில் அடம் பிடித்தான். சுமதி பொறுமையா யிருந்தாள்.
சுமதியை திட்டிவிட்டு ரவியைத் தேடிப் போனான் செந்தில். செந்திலின் வருகையை ரவி எதிர்பார்க்கவில்லை, செந்தில் உருத்திர மூர்த்தியாயக் கோபத்துடன் வந்தான்.

163 தாளைய மனிதர்கள்
"என்ன உனது தமக்கைக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கப்போகிறாயா?”செந்தில் தரக்குறைவாகப்பேசத்தொடங்கினான்.
“முட்டாள்த்தனமான கேள்விகளுக்கு நான் மறுமொழி சொல்லத் தயாரில்லை", ரவி கோபத்தை அடக்க மிகவும் கஷ்டப்பட்டான்.
“வெள்ளைக்காரியுடன் கும்மாளம், சித்திராவுடன் சேட்டை, உங்கள் தரவளிகளைக் கட்டிவைச்சு உதைக்க வேணும்'
செந்தில் மறைமுகமாக ஒழுக்கம் பற்றிப் பேசுகிறான் என்று தெரிந்தது.
“யாரைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்ற கேள்விக்கு உனது மனத்தைத் தொட்டுக்கேள். சரியான பதில் வரும். கட்டிய பெண்சாதியை வீட்டில் அடிமையாக நடத்திக் கொண்டு வெளியில் உல்லாசம் தேடுவது, உலகம் தெரியாத மகனின் கை உடைப்பது எல்லாம் உன்னைப் போல மரக் கட்டைகளின் மனதில் உறைக்காது'
செந்திலுடன் எந்தத் தகராறும் வைத்துக் கொள்வதில்லை என்று விலகிப் போயிருந்த ரவிக்கும் இப்போது செந்திலே வந்து நியாயம் கேட்பது எரிச்சலாக வந்தது.
செந்திலுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் ஏதும் விபரீதம் நடக்கும் என்று ரவிக்குப்புரிந்தது. ரவியின் பிளாட்டில் அப்போது யாரும் இருக்கவில்லை.
'நீ உடனே போகாவிட்டால் நான் போலீஸாருக்குப் போன் பண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை'ரவி குமுறினான்.
போலீஸ் என்ற வார்த்தை செந்திலின் கோபத்தைக் கொஞ்சம் அடக்கியது. மிகப் படித்த மனிதர்களின் மிருகத்தனமான வாழ்க்கை பற்றி ஏதோவெல்லாம் அர்த்தமின்றி அலட்டினான். கீழ்த்தரமான வார்த்தை களால் திட்டிவிட்டுச் செந்தில் சென்றான். புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது.
அவன் போனபின் அவன் சொல்லிவிட்டுச் சென்ற சில விடயங் களைத் திரும்ப யோசித்தான்.
மெலனியுடன் திரிந்ததை எப்படித் திரித்துப் பேசுகிறார்கள் என்று புரிந்தது. ஆனால் சித்திராவுடன் தன்னைச் சம்பந்தப்படுத்திப் பேசியது அவனால் தாங்க முடியாதிருந்தது. சித்திரா நேர்மையான, துணிவான, களங்கமற்ற ஒரு நல்ல பெண் என்று நினைத்தான். ரவியையும் மெலனி யையும் பற்றி யாரும் ஏதும் பேசினால் அந்த வம்புச் சொற்கள் மெலனியைச் சென்றடையாது, அப்படி யாரும் சொன்னாலும் அவள் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் சித்திராவை இப்படி யான கீழ்த்தரமான பேச்சுக்கள் புண்படுத்தும் என்று தெரியும்.

Page 85
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 164
அவள் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறாள். இந்த நேரத்தில் இந்தச் செந்தில் போன்றவர்களின் சின்னத்தனமான போக்கு எவ்வளவு தூரம் சித்திராவை மட்டுமல்ல திலகவதி, ராமநாதனையும் புண்படுத்தும் என்று யோசித்துப் பார்த்தான். செய்நன்றிக்கு நான் செய்யும் பிரதியு பகாரம் அவர் மகளுக்கு வாங்கிக் கொடுத்த கெட்ட பெயரா? சித்திராவில் இவ்வளவு அக்கறையிருந்தால் அவளைத் திருமணம் செய்து கொள்ள லாமே என்று திலகவதி கேட்டாலும் ஆச்சரியமில்லை. நினைவு கசந்தது. யாரோஒருத்தரின் துன்பம் நீக்கத் தன்வாழ்க்கையைப் பலியாக்க அவன் விரும்பவில்லை. தனபால் மாமாவிடம் சொல்லி செந்திலின் வாயை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து அவருக்குப் போன் பண்ணி னான். தனபால் மாமாவுக்குச் சுமதியின் போக்குத் தர்ம சங்கடத்தைத் தந்தது என்று அவனுக்குத் தெரியும். எப்படியிருந்தாலும் செந்தில் அவரின் மருமகன். எத்தனையோ முற்போக்குக் கொள்கையுடையவர் அவர் ஆனாலும் பெண்கள் விடயத்தில் பிற்போக்குத்தனமான கொள்கைகள் வைத்திருக்கிறார். மார்க்ஸியம் பேசும் எத்தனயோ பேரிடம் அவன் கண்ட உண்மையது.
கம்யூனிஸ்ட் என்றால் கோரைப் பாயில் படுக்க வேண்டுமா என்று கேட்பார். தத்துவம் வேறு யதார்த்தம் வேறு என்பார்.
குழந்தைகளுக்காகக் கணவனும் மனைவியும் “ஒற்றுமை"யாக வாழ வேண்டும் என்று சொல்வார் என்று அவனுக்குத் தெரியும். அவரது சிந்தனைகள் முற்போக்கானவை. செயல்கள் அந்தச் சிந்தனையுடன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. தனபால் மாமாவந்தார்.
வழக்கம்போல் அரசியல் விடயங்கள் பேசினார். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை தொடங்கப் போவதைப் பற்றிச் சொன்னார். பேச்சு வார்த்தை இழுபடப் போகிறது என்று குறைபட்டார்.
அம்பாரைப் பகுதியில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட தமிழர்களைப் பற்றிப் பேசினார்.
“சமாதானப் பேச்சுவாத்தையைக் குழப்ப சந்திரிகாவைச் சேர்ந்த சிலரும் ஜே.வி.பி யைச் சேர்ந்த சிலரும் இப்படிக் குழப்பங்களை யுண்டாக்குவார்கள் என்று பேசிக்கொள்கிறார்களே?'ரவி கேட்டான்.
“யார் குழப்பினாலும் இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்காவிட்டால் தமிழர்களின் எதிர்காலம் எப்படி யிருக்குமோ தெரியாது.' வழக்கம் போல் தன் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை தான் முக்கியம்.' நாளை நடப்பது என்று அவன் குறிப்பிட்டது தமிழ்

165 நாளைய மனிதர்கள்
மக்களை மட்டும் குறிப்பிடவில்லை என்று அவருக்குப்புரியும்.இப்படிச் சொன்ன ரவியை உற்றுப் பார்த்தார் தனபால்.
“எங்கே நல்லது நடக்கிறது? இலங்கையை எத்தனையோ பேர் எத்ததனயோ விதத்தில் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் எத்தனையோபிரச்சினை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தனிப்பட்ட நாடுகள் போல் நடந்து கொள்கின்றன. ' தனபால் மாமா மருமகன் செந்திலைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார் என்று தெரிந்தது.
"மாமா, இந்தியா மதரீதியாகச் சேர்க்கப்பட்டிருந்தாலும் மொழி ரீதியாக, கலாச்சார ரீதியாக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தனிநாடு தான். ஒரு காலத்தில் இந்தியாவும் தனித்தனிநாடுகளாகச் சிதறும்'.
தனபால் நம்பிக்கையில்லாமல் தலையசைத்தார்.
"மாமா ஆனானப்பட்ட ரஷ்யாவை எத்தனையோ விதங்களில் அமெரிக்காவும் மற்றைய மேற்கத்திய நாடுகளும் துண்டு துண்டாகச் சிதைத்துவிட்டன. இப்போது பழைய ரஷ்ய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனி நாடாகப் பிரிந்து கொண்டு ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருக்கின்றன.'
“ரஷ்யா அரசியல் ரீதியில் ஒன்றுபட்டிருந்ததே?" "மாமா, ரஷ்யாகம்யூனிஸ்டுகளின்காலத்தில் செயற்கையாக ஒன்று சேர்க்கப்பட்டது. இந்தியாவிலும் ஆங்கிலேயர் காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. அமெரிக்கா ஏதோ ஒரு வழியில் இந்திய ஒற்றுமையை உடைக்கும். ஒருகாலத்தில் தனிநாடுகளாக மாறும்.'
"மூடநம்பிக்கைகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடை யாகும். மதம் என்ற பெயரில் இந்தியாவில் மூட நம்பிக்கைகளும் மத வெறியும் மிக வேகமாகப் பரவுகிறது.'
தனபால் மாமா பெருமூச்சு விட்டார். காவேரிப் பிரச்சினையில் உடைபடும் நடிகர் சங்கம் பற்றிப் பேசினார். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேசினார். அரசியலும், மதமும், சினிமாவும் ஒன்றாகிக் குழப்புவதைப் பற்றி வருத்தப்பட்டார்.
'தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக உண்மையான தமிழர் நலம் பற்றிய ஆட்சியா நடக்கிறது? வாரிசு சண்டையும், பொது மக்களின் சொத்தை சூறையாடுவதும்தான் நடக்கிறது.'
தனபால் மாமா பரிதாபத்துடன் சொன்னார். மாமாவுக்குத் தனது மருமகனின் விடயம் உறைக்கவில்லையா?
"குடும்பம் என்ற முறையில் செந்தில் சுமதியை செய்யும் கொடுமை களை என்னவென்று கணிப்பது?"

Page 86
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 166
செந்தில் பற்றிய விடயத்திற்கு நேரடியாக வந்தான் ரவி. தனபால் மாமா மனம் விட்டுப் பேசத் தயங்கினார் என்பது அவர் முகபாவத்தில் தெரிந்தது. அரசியல் பேசிய வாய் சொந்த விடயம் வந்ததும் அடங்கிவிட்டது.
"மாமா நாட்டுக்கும் போக்குக்கும் சம்பிரதாயங்களுக்குமாக ஒன்று சேர்ந்திருப்பதைவிடசுமதிதன்வாழ்க்கையை நிர்ணயிப்பதுநல்லதல்லவா’
“சுமதிதான்நிர்ணயிக்கிறாளா அல்லது."
தனபால் மாமாதன் கேள்வியைச்சட்டென்று நிறுத்தினார். ரவியைக் குறைசொல்ல அவர் விரும்பவில்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
மாமா என்ன சொல்வார் என்று ரவிக்குத் தெரியும்.
"மாமா, கல்யாணமாகி இத்தனை வருடம் அவள் தன் சொந்தத் தாயைப் பார்க்கக் கூடச் செந்தில் அனுமதிக்கவில்லை. மனித தர்மங் களுக்கு எதிரான விடயமிது. இப்போது என்னுடன் வரப்பார்க்கிறாள். அவள் எப்படித் தன் எதிர்காலத்தை நிர்ணயிப்பது என்று நான் சொல்லவில்லை. அதை அவள் முடிவு கட்டட்டும்.'
"இலங்கை அரசியல் இருக்கும் நிலையில் இவள் இலங்கையில் போய்த்தங்கிவிட்டால் குழந்தைகளின் கெதி என்ன?”
"மாமா, இலங்கையில் மனிதர்கள் வாழவில்லையா? சுமதி என்ன சொர்க்கலோகப் பெண்ணா? அவள் தன் எதிர்காலத்தைப் பற்றியோசிக்க அவகாசம் கொடுங்கள். குழந்தைகள் நலனில் அவளுக்கும் அக்கறை யுண்டு. லண்டனில் பிறந்த குழந்தைகள் பலர் எத்தனையோ நாடுகளில் சந்தோசமாய் இருக்கிறார்கள். அவளுக்குப் பிடிக்காவிட்டால் அவள் திரும்பி வருவாள்'
தனபால் மாமா பொறுமையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.
அவர் செந்திலுடன் பேசுவார் என்ற நம்பிக்கையிருந்தது.
“எந்தக் குழந்தையும் தான் விரும்பி இந்த உலகில் பிறப்பதில்லை. குடும்ப வளர்ச்சிக்கு, தாம்பத்தியம் சரியான வழியில் நடக்கிறது என்பதை நிரூபிக்க, வாரிசு தேவைக்கு, எதிர்கால உதவிக்கு என்று எத்தனையோ காரணங்களுக்காகப் பிள்ளையைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைகளின் மன, ஆத்மிக வளர்ச்சிக்கு எத்தனைதாய்தகப்பன் உதவி செய்கிறார்கள்"
தனபால் மாமா பதில் சொல்லவில்லை. ஏதும் அரசியல் பேச்சென் றால் மணிக்கணக்காப் பேசிக் கொண்டிருப்பார். இப்போது தனது மருமகனின் விடயமென்றபடியால் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வழக்கம்போல் நழுவி விட்டார்.

167 நாளைய மனிதர்கள்
ஊரிலிருந்து அம்மாவின் டெலிபோன் கால் வந்தது. “எப்போது வர்றாய்?" அம்மா அப்படிக் கேட்டபோது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
ஊரில் எப்போது என்ன பிரச்சினை வருமோ தெரியாது. நீ லண்டனிலேயே நின்றுவிடு என்று சொல்லி விடுவாளோ என்று யோசித் தவனுக்கு அம்மாவின் கேள்வி சந்தோசமாக இருந்தது.
லண்டனில் எத்தனையோ பேர் கேட்டார்கள் 'ஏன் திரும்பிப் போகிறாய்' என்று.
அவர்கள் இவன் சொல்லும் மறுமொழியில் திருப்திப் படாமலிருக் கலாம். ஆச்சரியப்படலாம். லண்டனுக்கு வந்தும் தள்ளிநிற்க விருப்ப மில்லாமல் திரும்பிப் போகும் முட்டாளாக நினைக்கலாம். சொகுசான வாழ்வை அவன் பார்த்திருக்கிறான். அது போதும். "மாமா என்ன நினைப்பார்?'ரவி தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
தன்னை லண்டனுக்கு அழைத்தது தனது மேற்படிப்பில் அவருக் குள்ள அக்கறையாலா அல்லது தனது மகளுக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனா? சித்திராவின் தற்போதைய நிலை கண்டு அவன் பரிதாபப்பட்டான். மேலும் மேலும் இப்படியான கேள்விகள் அவன் மனதில் எழுந்து கொண்டிருந்தது.
செந்தில் வந்து திட்டிவிட்டுப் போன வார்த்தைகளையும் அவன் மறக்கவில்லை. சித்திராவையும் தன்னையும் பற்றித் தமிழர் மத்தியில் என்ன கீழ்த்தரமான பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை செந்திலின் பேச்சுக்கள் வெளிப்படுத்தின.
"உலகம் எப்படித்தான் முன்னேறிக் கொண்டிருந்தாலும் எங்கள் மக்கள் மாறவே மாட்டார்களா?”
"மேலைநாட்டில் நாங்கள் படித்து நன்மை பெறக்கூடிய எத்தனை யோ விடயங்கள் இருக்கும்போது ஏன் ஒரு சிலர் மற்றவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்."
‘ஒருதரம் தோல்வி கண்டதுன்பத்தில் இருக்கும் சித்திரா இப்போது ஜோர்ஜ் விடயத்தில் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாள். தகப்பன் ஜோர்ஜ் பற்றிச் சொன்ன விடயங்கள் அவளை மிகவும் துன்பப்படுத்தி விட்டன என்று அண்மையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் தெரிகிறது."
“எத்தனை அறிவுள்ளவள் சித்திரா. அவளுக்கேன் இப்படித் துயர்கள் வரவேண்டும்? இவளின் நேர்மை, துணிவு, விடயங்களுக்கு நின்று பிடித்து முகம் கொடுக்கும் தைரியம் ஆண்களை அவளிடமிருந்து ஒடப் பண்ணுகிறதா?

Page 87
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 168
"மெலனிக்காக என்னிடம் நடுச்சாமத்தில் வந்து சண்டை போட்டாளே அப்படித்துணிவு எத்தனைதமிழ்ப் பெண்களுக்கு வரும்?"
'சுமதியை ஒரு உடன்பிறந்த தமக்கைபோல் பார்த்துக் கொள் கிறாளே இந்தப் பாசம் எத்தனை அற்புதமானது.'
இப்படிப் பல சிந்தனைகள் வந்து ரவியைக் குழப்பின.
‘மாமா சித்திராவிடம் ஜோர்ஜ் பற்றி சொல்லிய விடயங்கள் உண்மையானவையா? அல்லது அவர் அப்படிக் கற்பனை செய்து தானும் குழம்பி மகளையும் குழப்பி விட்டாரா?”
‘அப்படி அவர் நினைத்ததற்கும் சொன்னதற்கும் நானும் ஒரு காரணமா?"
இப்படி நினைத்தபோது அவன் அதிர்ந்து போனான்.
'மாமா தன்னை லண்டனுக்கு அழைத்தது தன் மகளுக்குத் தன்னைத்திருமணம் செய்து வைக்கும் திட்டத்துடனா?"
‘அப்படியானால் அவர் நினைவிற்குத் தீனி போடுவதுபோல் நானும் சித்திராவை என்னுடன் வந்து தங்கி நிற்கச் சொல்லி விடயத்தை இன்னும் சிக்கலாக்கி விட்டேனா?"
ரவிக்குச் சரியாக வேலை ஒடவில்லை.
'மாமா சொல்லுவதுபோல் ஜோர்ஜ் இன்னொரு பெண்ணுடன் தொடர்பாயிருந்தால் ஏன் ஒவ்வொரு நாளும் சித்திராவுக்குப் போன் பண்ணுகிறான்? ஒரே நேரத்தில் ஒன்றிரண்டு பெண்களுடன் லீலை செய்யும்,தரம் கெட்டபேர்வழிகளில் இவனும் ஒருத்தனா?”
'சித்திராஅப்படியானமனிதர்களுடன்தொடர்புகொள்ளமாட்டாள், பரந்த அறிவுள்ளவள், நாராயணன் மூலம் ஒருதரம் நம்பி ஏமாந்தவள். இப்போது, இந்த இங்கிலீஸ்காரனிடமும் நம்பிஏமாந்திருப்பாளா?
ரவி தனியாக இருந்து ஆழமாக யோசித்தான். மாமாதன்னைஅவரின்மருமகனாக எண்ணிநடத்திஇருந்தால் அது ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல. அவர் எனக்கு எத்தனையோ நன்மைகள் செய்திருக்கிறார்.
அவரின்தங்கச்சியின் மகன்நான். அப்படி அவர் நினைத்திருந்தால் அம்மா என்ன சொல்லியிருப்பாள்?
தான் தன் குடும்பத்திற்கு விருப்பமற்ற ஒரு ஆசிரியரைக் காதலித்த
குற்றத்திற்காக தன்னைத்தன்குடும்பம் ஒதுக்கி வைத்ததை ரவியின் தாய் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள்.

169 நாளைய மனிதர்கள்
தனது பிறந்த குடும்பத்தின் உதவி எதுவும் தேவையில்லை என்று கமலாதன் கணவருடன் வாழ்ந்தாள்.
ரவி கண்களை மூடிக் கொண்டான். மற்றவர்கள் கேட்கும் கேள்வியைத் தானும் தனக்குள் கேட்டுக் கொள்கிறான்.
“எனக்கு முப்பது வயதாகிறது. நான் ஏன் இன்னமும் தனிமை யாயிருக்கிறேன். எனக்கு வருபவள் என் தாயைச் சரியாய்ப் பார்த்துக் கொள்வாளா என்ற பயம்தானே? நான் ஒரு சைக்ரியாட்ரிஸ்ட், மற்றவர்கள் துன்பங்களைப் பார்த்து உதவி செய்பவன். எனக்காக என் தாயைத் தவிர யார் இருக்கிறார்கள்?’
'சுமதி ஊருக்கு வருவதாகச் சொல்றாள். எவ்வளவு நாட்கள் அம்மாவுக்குப் பொய் சொல்ல முடியும்? தன் மகள் வாழாவெட்டியாக வந்து நிற்கிறாள் என்பதை அம்மா எப்படித் தாங்குவாள்?’
ரவிக்கு மறுமொழி விளங்கவில்லை.
★
தென்கிழக்காசியத் தீவுகளில் ஒன்றான பாலியில் வெடித்த வெடி குண்டினால் கிட்டத்தட்ட இருநூறு மக்கள் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி உலகை உலுப்பியது.
டேவிட் வழக்கம்போல் அரசியல் கூட்டங்களுக்கு போய் வந்து கொண்டிருந்தான்.
ஜோர்ஜ் லண்டனுக்கு வந்துவிட்டதாகச் சித்திராவுக்குத் தெரியும். போன் பண்ணினான். அவள் தன் அலைபாயும் தன் மனத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டு அவன் வருகையை எதிர்பார்த்தாள். அவன் எந்த நேரம் லண்டனுக்கு வந்து சேருவான் என்று அவன் போன் பண்ணிச் சொல்லியிருந்தாலும் அவன் வந்துவிட்டான் என்ற செய்தி சித்திராவை என்னவோ பண்ணியது. அவன் குரல் அவள் இதயநாதத்தில் சோகம் பாடியது. உணர்ச்சிகளை மறைக்கத் துடித்தாள். விமானப் பிரயாணத் தால் வந்த களைப்புக்களையும் பொருட்படுத்தாமல் உடனடியாக கேம்பிரிட்ஜ் புறப்படுவதாகச் சொன்னான் இவளைக் காணும் ஆவலை அவன் விளங்கப்படுத்தியபோது அழுகையை அடக்கிக் கொண்டாள். “எனக்குப் பிடித்த கோழிக்கறி செய்து வை', என்று அவன் கெஞ்சிய போது அவனில் இருந்த கோபம் ஒரு நிமிடம் மறைந்தது. பழைய ஜோர்ஜ்தான்திரும்பிவந்துவிட்டான்.அவள் மனம்துள்ளியது. "இரணடு பேருக்குச் சேர்த்து சமைத்து வை' அவன் குரலில் மிகவும் சந்தோசம். இரண்டு பேருக்கா?

Page 88
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 170
ஆங்கிலேய வழக்கப்படி தன் முதல் சினேகிதியையோ அல்லது மனைவியையோ இரண்டாவது தொடர்புக்கு அறிமுகம் செய்து வைப்பது பெரிய விடமயல்ல. சித்திரா மிகவும் முற்போக்கான பெண்!
தன்னுடன் வரும் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறான், எத்தனை பெருந்தன்மை?
சித்திராதன்னைத்தானேகிண்டலாகக் கேட்டுக்கொண்டாள். அப்பா இப்போது என்ன நினைப்பார்? அப்பா தன்னில் பரிதாபப்படுவாரா அல்லது வெறும் சம்பிரதாயத்திற்காக வேண்டாம் என்று நழுவிப் போன வணைஇழுத்து வைத்து விருந்து போடுவதாகஅப்பாநினைப்பாரா? அப் பாவின் நினைவுகளில் அவள் தன் எதிர்காலத்தை அமைக்க முடியாது. ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் இன்னும் சந்தோசமாக இருக்கி றேன்என்று நினைத்து என்னைநானே சமாதானப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொள்வாரா?
இவனை மறந்துவிடு என் மருமகன் ரவியைத் திருமணம் செய்து கொள் என்று கெஞ்சுவாரா? ரவியை அவள்மதிக்கிறாள். ஆனால் மணம் செய்து கொள்வாளா? மறுமொழிகளை எதிர்பார்க்காமல் கேள்விகளைத் தன் மனதிற் போட்டுக் குடைந்து கொண்டாள்.
“உலகம் முன்னேறுகிறதா பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்க கிறதா என்று எனக்குப் புரியாமலிருக்கிறது.' தனது சாப்பாட்டறையில் இருந்து கொண்டு சித்திரா செய்து வைத்த உழுந்து வடையைக் கடித்தபடி சொன்னான்டேவிட். அவன் ஏதாவது உலக அரசியல் பற்றிய பேச்சைத் தொடங்கப் போகிறானா? சித்திரா தன் நினைவுகளிலிருந்து நிஜ உலகிற் குத் திரும்பி வந்தாள். இப்போதெல்லாம் டேவிட்டும் ஜேனும் சித்திரா வீட்டிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறார்கள். காரணங்கள் பல. அதில் ஒன்று ஜேன் தாங்க முடியாத வாந்தியும் வயிற்றுக் குமட்டலுமாக இருப்பதால் சித்திராசமைத்துப் போடவேண்டி யிருந்தது. எப்போதுமே சித்திராவின் சமையலில் ஆசைப்படும் டேவிட் இப்போது தாராளமாக அரசியல் பேசியபடி சித்திராவின் வீட்டில் வளைய வந்து கொண்டிருக்கிறான். வீடு கலகலவென்றிருப்பதால் சித்திராவும் கலகலவென்று இருக்கிறாள்.
வெளியில் கார்ச்சத்தம் கேட்டது. ஜேன் ஒடிப்போய் ஜோர்ஜூக்கு முத்தம் கொடுத்தாள். ஜோர்ஜின் பார்வை எல்லோரையும் தாண்டி எங்கேயோ விரைந்தது. டேவிட், ஜேன், ஜோர்ஜ் மூவரும் ஒரே காலகட்டத்தில் யூனிவர்சிட்டியில் படித்தவர்கள், ஜேனின் முத்தத்தைத் வாங்கியபின் ஓடோடி வந்து சித்திராவைக் கட்டிக் கொண்டான் ஜோர்ஜ். சித்திராதர்மசங்கடப்பட்டுக்கொண்டாள். தனது ஜோர்ஜ்வந்துவிட்டான். மனம்துள்ளியது. “இவ்வளவு காலமும் உன்னைக்காணாமல் எவ்வளவு தூரம் மெலிந்து விட்டேன் பார்." ஜோர்ஜ் உண்மையாகத்தான் மெலிந் திருந்தான். கண்கள் நித்திரையில் சோர்ந்து தெரிந்தது.

171 தாளைய மனிதர்கள்
அவன் பின்னால் வந்த பெண்சித்திராவை வைத்த கண்வாங்காமல் பார்த்தாள். அழகான பெண். ஜோர்ஜின் அருகில். சித்திரா ஏறிட்டுப் பார்த்தாள்.'
"சித்திரா இதுதான். இவள்தான் நான் உனக்குத் தரவேண்டிய செர்பிரைஸ். இது என் சகோதரிஷிலோ.'சித்திராவுக்கு அமெரிக்காவில் மாதக் கணக்காக அவன் தேடிய புதையல் என்னவென்று புரிந்தது. அவனின் குடும்பம், சித்திரா என்னவென்று தன்னைச் சமாளித்தாள் என்று தெரியவில்லை. ஒடிப்போய் அப்பாவைத்திட்டவேண்டும்போல் இருந்தது. தனது சகோதரியை அணைத்துக் கொண்டு போனதை அப்பா பார்த்ததும் தப்பாக நினைத்து விட்டாரா? ஒரு சில மாதங்கள் வெறும் கற்பனையிலா அவள் வெந்து போனாள்? சாதாரண பெண்ணாய் நடந்தேனே! ஆ! சரி, தனக்கு இந்த உலகில் யாருமில்லை, தன்னை எடுத்து வளர்த்தவர்களும் இறந்து விட்டதாகச் சொன்னானே. தன் சரித்திரம் தேடியலைந்தானா?
சித்திரா இன்னொரு தரம் குழம்பினாள். தனது உண்மையான குடும்பம் பற்றிய அவன் வேதனைஅவளுக்குத் தெரியும்.
“சித்திரா இவளைத் தேடித்தான் - அதாவது எனது உண்மையான தாயையும், அவள் குடும்பத்தையும் தேடித்தான் இவ்வளவு காலமும் அமெரிக்காவில் தாமதித்தேன். அதெல்லாம் பெரிய கதை, விளக்கமாகச் சொல்வேன்." சித்திரா நிம்மதியுடன் பெருமூச்சு விட்டாள். தனது முட்டாள்த்தனமானதுயரை நினைத்து வெட்கப்பட்டாள்.
சட்டென்று ஜோர்ஜ் அவள் முன்னால் மண்டியிட்டான். ஆங் கிலேய வழக்கப்படி அப்படி அமர்ந்துதான் பெண்களிடம் கல்யாணத் திற்குச் சம்மதம் கேட்பார்கள். ஜோர்ஜின் கண்களில் பரவசம். காதல், மலர்ச்சி, "வில் யு மரி மீ சித்திரா" ஜோர்ஜின் குரலில் தவித்த உணர்வு அவள் கண்களில் நீரை வரவழைக்கப் பண்ணிவிட்டது. அவனையிறுகத் தழுவிக் கொண்டாள். வாய் திறந்து அவள் மறுமொழிசொல்லத் தேவை யில்லை. ஜேன், டேவிட்டைப் பார்த்தாள். டேவிட் கல்யாணங்களில் நம்பிக்கையில்லாதவன். ஜேனின் பார்வையின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. அவளை அணைத்துக் கொண்டான். “இதுபற்றி யோசிப் போம்" ஜேனின்முகத்தில் சந்தோசம். ஜோர்ஜ் பற்றித்தான்பட்டதுயரை அவள் எப்போதோ சொல்வாள்.
“சுமதி இலங்கைக்குப் போக முடியாது. செந்தில் தன்வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். அவனின் அனுமதியில்லாமல் சுமதி குழந்தைகளை இங்கிலாந்திலிருந்து வெளியில் கொண்டுபோக முடியாது." ராமநாதன் சொன்னார். சுமதி வரவில்லை.
தனபால் மாமாவும் ராமநாதன் மாமாவும் ஒரேயடியாக ரவியைப் பார்க்க வந்திருந்தார்கள். ரவி ஊருக்குத் திரும்பிப் போகிறான். வான

Page 89
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 172
ளாவிய கட்டிடங்களை ஏறிட்டுப் பார்த்தான், ரவியின் முகத்தில் ஏமாற்றம், "நான் அவளுக்காக லண்டனில் நிற்க முடியாது மாமா.'
“தெரியும் நீ யாருக்காகவும் லண்டனில் நிற்க மாட்டாய் என்று தெரியும்.' ராமநாதன் மாமா பல அர்த்தங்களை மனதில் வைத்தபடி சொன்னார்.
“சுமதி பாவம்", அவன் முணுமுணுத்தான். அவளைச் செந்திலுக்குத் திருமணம் செய்து வைத்த ராமநாதனும் தனபால் மாமாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். குற்ற உணர்வு தெரிந்தது. ஆனால் காலம் கடந்துபோன விடயத்தை எப்படித் திருத்துவது?
"தான் தனியாக வாழ சுமதி முடிவு கட்டினால் அவளுக்கொரு வேலை கிடைத்து தன் காலில் நிற்கும் வரை என் வீட்டில் இருக்கலாம்.”
ராமநாதன் மாமா இப்படிச் சொன்னதும் ரவியின் கண்களில் நன்றி பெருகியது, இப்படி நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் தமிழ்க் கலாச் சாரம் உயிர் பிழைத்திருக்கிறது.
'மாமா எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அதற்குப் பிராயச்சித்தமாக."
"ரவி நீ ஒன்றும் செய்யத் தேவையில்லை. எனது எதிர்பார்ப்பு களுக்கும் நான் செய்த விடயங்களுக்கும் பிராயச்சித்தமாகவும் நீ ஏதும் செய்யத் தேவையில்லை."
சொல்ல வந்ததை அவர்நிறுத்திவிட்டுத்தன் மருமகனைப் பார்த்தார். "எல்லாத் தமிழ்த் தகப்பனைப் போல் நானும் எனது மகள் சித்திரா ஒரு தமிழனை செய்தால் நல்லது என்று நினைத்தேன். நான் நேற்றைய மனிதன். என்னையும் எனது குடும்பத்தையும் பற்றி நினைப்பவன். நீ நாளைய மனிதன். குடும்பத்தை மட்டுமல்லாது சமுதாயத்தையும் பற்றி ஆழமான உணர்வுள்ளவன். உன்னைப்போல நூறு தமிழர்கள் இருந்தால் தமிழ்ச் சமுதாயம் உலகில் எத்தனையோ சாதிக்கும்.”
நீண்ட நேரம் பேசிவிட்ட வெட்கம் அவர் முகத்தில் படர்ந்தது. விமானத்திற்குப் புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
ரவி நேரத்தைப் பார்த்தான். "இலங்கை அரசியலுக்கும் சமுதாயத்திற்கும் உன்னைப் போல நடுநிலை மனம் படைத்தவர்கள் தேவை.
இலங்கைத் தமிழர்கள் உன் சேவையைப் பெறக் கொடுத்து வைத்தவர்கள்.'
தனபால் மாமா ரவிக்கு விடை கொடுத்தார்.
★女女


Page 90


Page 91