கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை

Page 1


Page 2


Page 3

ஒரு திறனாய்வாளரின்
இலக் éIJú LJITIióOó)/
Bab.676йр. dfј6ofсфшрлpTair
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை,
L6sit 9566) : manimokalai10data one in gaO)600TL 56Tih : ww.tamilvanan.com
தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 2434 2926, 2434 6082
露

Page 4
f
நூல் தலைப்பு > ஒரு திறனாய்வாளரின்
இலக்கியப் பார்வை
ஆசிரியர் > கே.எஸ்.சிவகுமாரன் மொழி > தமிழ் ية
பதிப்பு ஆண்டு X<2008 ح
பதிப்பு விவரம் > முதல் பதிப்பு
நூலாசிரியருக்கே > מffi60) L_פ
தாளின் தன்மை > 1.6 கி.கி
நூலின் அளவு > கிரெளன் சைஸ்
(12 A X 18% GF.L.)
அச்சு எழுத்து அளவு > 11 புள்ளி
மொத்த பக்கங்கள் » X + 272 = 282 நூலின் விலை X<ح ரூ.85.00 இலங்கை விலை Xe- ரூ.300.00
அட்டைப்பட ஓவியம் > மோகன் கிராபிக்ஸ் லேசர் வடிவமைப்பு > எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர்
gagA GLTr > பி.வி.ஆர். பிரிண்டர்ஸ்,
சென்னை-14. நூல் கட்டுமானம் i > தையல்

:
பொருடக்கம்
தகைமைசார் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் அணிந்துரை-------------
விபுலாநந்தர் : ஈழத்துத் தமிழ்த்
திறனாய்வு முன்னோடி ------------------
சி.சுப்பிரமணிய பாரதி : புனைகதையாளர் ------
്ഥണങ്ങി : മൃിധT് (L് ---------------------- சுந்தரராமசாமி : புளியமரத்தின் கதை
இலங்கையர்கோன் (சிவஞானசுந்தரம்)
രിഖങrണി' (sub -----------------------
இளங்கிரன் (சுபைர்) தென்றலும் புயலும் amm
செ.கணேசலிங்கன் : முதல் நான்கு நாவல்கள் -- எஸ்.பொன்னுத்துரை (எஸ்பொ) : தீ -----------
அஸ.அப்துஸ் ஸமது எனக்கு வயது
പുളിങrepങg ---------
தெணியான் : மரக்கொக்கு -
. காவலூர் ராசதுரை: குழந்தை ஒரு தெய்வம் -----
நீர்வை பொன்னையன் : மேடும் பள்ளமும் ---- பேராதனை எழுத்தாளர்கள் : கதைப் பூங்கா -
. செ.கணேசலிங்கன் : சங்கமம் --------------------
வஆஇராசரத்தினம் : G8Tഞ്ഞി ------------------
டொமினிக் ஜீவா : பாதுகை ------------
1
34
46
59
6S
82
92
102
108
115
124
131
141
151
158
171

Page 5
M
En 17, ഖ്വf suഞഥ : ഥus-------------------------- tee 18, 66u'lut' : ഥേf ഗുച്ഛേ--------------------- 184
19. தொல்காப்பியர் : த்வனி (தொணி) கோட்பாடு - 190
20. பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும் - அமரர்
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி 202
21. இலக்கிய விமர்சனம் - அமரர்
தி.மு. சிதம்பர ரகுநாதன் - 207
22. மதிப்பீட்டியல் - இலங்கை கல்வி வெளியீட்டுத்
திணைக்களப் பாடப் புத்தகம் (தமிழ் 09) ------ 21S
23. ஆக்க இலக்கியமும் அறிவியலும் -
கைலாசபதியின் நோக்கு --------------- 219
24. 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் - பேராசிரியர்கள் சி.மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு
எம்.ஏ.நுஃமான் 224
25. திறனாய்வு : சில அடிப்படை அம்சங்கள் ----- 232
26. ഥഴ്ചി"ഞgub pണlഖു ------------------- 242
27. உளவியலும் இலக்கியத் திறனாய்வும் ---------- 2SO
28. இரண்டு திறனாய்வு நூல்கள்
6ത്ര ക്രി'ക്ക് -------------------- 2S6 129. EZRAPOUND மறுமதிப்பீடு மேர்வின் த சில்வா,
ഠിgജി 6ിഖfrgങ്ങ് ------------------------- 260

. V
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கணிப்பு
கே.எஸ்.சிவகுமாரனும் ஈழத்துத் தமிழிலக்கியமும்
இத் தொகுதியில் கே.எஸ்.சிவகுமாரன்
அவர்களது முப்பது கட்டுரைகள் உள்ளன.
அவற்றினை அவர் இரண்டு பெருந்தலைப்புகளின் கீழே தொகுத்துத் தந்துள்ளார்.
இந்தக் கட்டுரைகளின் பொருளும் பொருள் அமைதியும் திரு.சிவகுமாரன் கடந்த (ஏறத்தாழ) நாற்பது வருடகாலமாகத் தொழிற்பட்டு வந்த முறையினைச் சுட்டுவனவாகவுள்ளன.
திரு.சிவகுமாரன் தமது எழுத்துகளினாலும் அவற்றை எழுதிய முறைமையாலும் தன்னை ஈழத்தின்நவீன தமிழிலக்கியத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சமாக்கியுள்ளார். அந்த எழுத்துக்களை நான்கு பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
1.தமிழ் இலக்கியங்கள் இலக்கிய ஆசிரியர்கள், குறிப்பிட்ட படைப்புகள் (ஆக்கங்கள், விமர்சனங்கள்) பற்றிய தமிழ் எழுத்துக்கள்.
இந்த எழுத்துக்கள் பற்றிய சுய மதிப்பீட்டில் இவர் விமர்சனம் திறனாய்வு (Criticism) என்ற பதத்தைத் தவிர்த்து மதிப்புரை (Review) என்ற
Ül=

Page 6
VM
= பதத்தினையே பயன்படுத்தி வருகின்றார். t இத்தொகுதியில் அந்த வேறுபாடு பற்றிய ஒரு கட்டுரை உள்ளது ("மதிப்புரையும் திறனாய்வும்")
மேற்குறிப்பிட்ட எழுத்துக்கள் பெரும்பாலும் அறிமுக முறைமையில் அமைந்தனவாக அமையும். சிலவிடயங்களில் தொகுத்துக்கூறும் முறைமை யினவாகவும் அமையும்.
2. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள், பிரதான படைப்புக்கள் ஆதியன பற்றிய ஆங்கில எழுத்துக்கள்.
திரு. சிவகுமாரனுடைய இலக்கியப் பணியில் மிகமுக்கியமான அமிசம் இதுவாகும். ஈழத்துத் தமிழிலக்கியப் போக்குகள் பற்றி ஆங்கிலத்தில், ஆராய்ச்சிக்கட்டுரைகளைத் தவிர, சாதாரண வாசக தேவைக்கு எழுதும் போக்கு தமிழ்த் தொழிற் புலமையினரிடத்தே மிக மிகக் குறைவு என்றே கூறவேண்டும். திரு. சிவகுமாரன் அப்பணியை செம்மையாகவும் தொடர்ச்சியாகவும் செய்து வந்துள்ளார். இந்தப் பணி காரணமாக தமிழ் தெரியாத, ஆங்கிலந் தெரிந்த இலக்கிய ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், புலமையாளர்கள் மத்தியிலே திரு. சிவகுமாரனுக்கு நிறைந்த மதிப்புண்டு.
gaugi upstaids6tfei 626ipstar (Tamil Writing in Sri Lanka) (இலங்கையில் தமிழ் எழுத்துக்கள்)
h என்பது இத்தகைய எழுத்துக்களின் தொகுப்பே.
─────།།

VM 3. மேலைநாட்டுக் கலை, ം துறையில் ஏற்படும் முக்கிய வளர்ச்சிகளைப் பற்றிய t ஆங்கிலத்தில் நடைபெறும் கலை, இலக்கிய வாத விவாதங்கள் பற்றிய எழுத்துக்கள்.
இதுவும் கணிக்கப்பட வேண்டிய ஒரு தொழிற் பாடாகும். இவற்றால் அத்துறைகளில் ஈடுபட்டுள்ள ஆனால் ஆங்கிலப் பரிச்சயமற்ற தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் பயன் பெற்றனர்.
4. மூன்றாவதன் விஸ்தரிப்பாக, சிவகுமாரன் அவர்கள் அண்மைக்காலத்தில் உலகச் சினிமா பற்றித் தமிழில் எழுதும் கட்டுரைகள்
ஈழத்துத் தமிழ் வாசகர்களைப் பொறுத்த வரையில் சிவகுமாரன் அவர்கள், இத்துறை வளர்ச்சிகள், அழகியல் அமிசங்கள் ஆகியன பற்றி அறிவதற்கான பலகணியாக அமைந்துள்ளார்.
திரு, சிவகுமாரனது தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு புலமைத் தேவையுள்ளது. ஆங்கிலத்தில் ஆழமான பரிச்சயமில்லாத எழுத்தாளர்களுக்கும், ஆற்றல் கொண்ட வாசகர்களுக்கும் இவரது எழுத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக மாணவர் மட்டத்தில் (ஏ.எல்.முதல் பட்டதாரி வகுப்புவரை) திரு.சிவகுமாரன் வாசிக்கப் படுவதற்கான காரணம் இதுவேயாகும். இன்றைய
h கல்விமுறையின் அமைப்பிலே
VE

Page 7
VII
Sh
திரு.சிவகுமாரன் போன்றவர்கள் முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றனர்.
மேற்கூறிய எழுத்துப்பணிகளை நிறைவுறச் செய்வதற்கு இவ்வாறு எழுதுபவர் நிறைய வாசிக்க வேண்டுவது அவசியமாகின்றது. ஆங்கிலத்திலும் வாசித்தல் வேண்டும், தமிழிலும் வாசித்தல் வேண்டும். இத்தொழிற்பாட்டில் சிவகுமாரன் அவர்கள் சிறிதளவேனும் பின் நிற்கவில்லை. வேண்டியன பற்றி வேண்டப்படும் வேளைகளில் அவர் வாசித்துக் கொள்கிறார். இது ஒரு பெரிய புலமை நிர்ப்பந்தமாகும். அதனைப் போற்றக் கூடியமுறையில் திரு.சிவகுமாரன் நிறைவேற்றி வருகின்றார்.
சிவகுமாரன் அவர்களைப் பெரிதும் "ஏற்புடைத் தான" ஒருவராக்கியது அவர் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் முறைமையாகும். தான் அறிமுகப் படுத்தும் ஆசிரியரையோ, ஆக்கத்தையோ, ஆராய்ச்சியினையோ பக்கச்சார்பு இல்லாது, இயன்ற அளவுக்கு நடுநிலைநின்று கூறும் ஒரு பண்பு இவரிடத்தும் உண்டு ஆயினும் இவரிடத்து இலக்கியம் பற்றிய ஒரு உலக நோக்கு இல்லை என்றும் முற்று முழுதாகக் கூறிவிடவும் முடியாது. இலக்கியம் என்பது சுவைக்கப் பட்டத்தக்கதாய், அடிப்படை மனித நியமங்களைப் போற்றுவதாய் அமைய வேண்டும் எனுங்கருத்தும் பலவிடங்களிலே
h தெளிவாகச் சுட்டப் பெறுகின்றது.
Ul=

இந்த எழுத்துக்களை இவர் எழுதும் முறைமையே பிரதானமானதாகும். சிவகுமாரன் தன்னை என்றும் ஒரு நியாயமான விமர்சகனாகக் கொள்வதில்லை. இவர் தனது எழுத்துக்களை "மதிப்புரை” (Review) களாகவும் பத்தி எழுத்துக் களாகவுமே (Columns) காண்கின்றார். ஆழமான, நுண்ணிதான கருத்துநிலைத்தனம் நின்ற விமர்சனங் களிலிருந்து தனது எழுத்துக்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே இவர் இவ்வாறு கொள்கின்றார் என்பது தெரிகின்றது.
இந்த விடயத்தைப் பொறுத்தவரையில், திரு.சிவகுமாரன் தன்னைத்தான் குறைத்து மதிப்பிடுகின்றார் என்றே கருதுகிறேன். ஆழமான விமர்சனக் கண்ணோட்டம் ஒன்று இல்லாது மதிப்புரைகளையும் இலக்கியப் பத்திகளையும் எழுத முடியாது. தமிழிலக்கிய உலகிலே காணப்படும் கருத்துநிலை, தனியாள் நிலைச்சிக்கற்பாடு களுக்குள்தான் அகப்பட்டுவிடக் கூடாது என்கின்ற ஒரு நிலைப்பாடு அவரிடத்து உண்டு என்பதை உய்த்துணரக் கூடியதாகவுள்ளது.
இந்த விடயத்தில் இவரது ஆளுமையின் இயல்பும் முக்கியமாகின்றது. h திரு. சிவகுமாரனின் எழுத்துக்களைப் புரிந்து Vl= கொள்வதற்கும், அவற்றுக்கு உரிய

Page 8
X ܫܢܵܐ
SE இடத்தை வழங்குவதற்கும் ஆங்கிலத்திற் Guayapatastasayairoit "Literary Joumalism" (A45tlands யெழுத்துவழி வரும் இலக்கிய எழுத்து) என்ற தொடரே பொருத்தமானது போலத் தெரிகின்றது. இந்த நிலைநின்ற எழுத்து சிந்தனைக்கனதிகுறைந்த ஒன்று அல்ல. ஆசிரியரின் எழுத்தின் போக்கை இனங்கண்டு, அதன் ஆழ அகலங்களை உணர்ந்து, அதனைச் சிக்கலற்ற முறையில் ஆனால் மிக எளிமைப்படுத்தாத முறையில் ஒன்றை எடுத்துக் கூறுவதற்கு ஒரு திறன் ஆற்றல் வேண்டும். அப்படியில்லையென்றால் தகவற்பரிமாற்றம் நடைபெறாது. திரு.சிவகுமாரன் தன்னைப் பற்றி எவ்வளவுதான் தாழ்த்திக் கூறினாலும் அவர் இந்தத் திறனை உடையவர் என்பது தெளிவு.
அறுபது வயதினைத் தாண்டிவிட்ட திரு.சிவ
குமாரனை, அவரது கடந்த நாற்பது வருடகால
இலக்கியச் சேவைக்காக வாழ்த்துவது நமது கடன் என்றே கருதுகிறேன்.
சிவகுமாரன் அவர்களின் முயற்சிகள் வெல்க! அவர் பணி மேலும் வளர்க!
கார்த்திகேச சிவத்தம்2
இந்நூலாசரியரின்"திறனாய்வுப்பார்வைகள்" (1996) என்ற
நூலில் இடம் பெற்ற அணிந்துரை. U=

O
7.
விபுலாநந்தர் தமிழ் திறனாய்வு A
N W
Dறைந்த சுவாமி விபுலாநந்தர் அவர்கள், ஒரு சிலரினால் 'ரசிக விமர்சகர்' என்று இளக்காரமாகக் கணிக்கப்பட்டாலும் அவருடைய படைப்புகளைப் படித்ததன் காரணமாக, எனது சிற்றறிவுக்கு எட்டிய மட்டிலும் அவரை நான்இலங்கையின் முதலாவது தமிழ்த் திறனாய்வாளர் என்று கூற முற்படுகிறேன். இதுவே, இந்தக் கட்டுரை மூலம் நான் உணர்த்த விரும்புவது.
திறனாய்வுத்துறை இன்று இலங்கையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இதற்கு மூலகர்த்தாவாக சுவாமி விபுலாநந்தரையே குறிப்பிட வேண்டும் என்பது எனது அவா. இதனை நிரூபிக்குமுகமாக அவருடைய s இலக்கியக் கட்டுரைகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்
களை வைத்து இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

Page 9
്ത്ര ക്രമങ്ങZബ/ബീബ്
சுவாமி விபுலாநந்தரின் ஆளுமை பல்வேறு தரிசனங்களைக் கொண்டிருந்த போதிலும் அவரைத் திறனாய்வாளர் என்ற முறையில் மாத்திரமே இங்கு ஆராய்வோம்.
சுவாமி விபுலாநந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிராத இன்றைய இளஞ் சந்ததியினர் நலன் கருதி, அவரைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைத் தொகுத்து நோக்குவோம்.
சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் சிமயில்வாகனன் ஆகும். இவர் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரை தீவு என்ற இடத்தில், 1892 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி பிறந்தார். இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்ட் ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல்ஸ் கல்லூரியிலும் இடம் பெற்றது. அந்நாட்களில் நடைமுறையில் இருந்த Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல்ஸ் கல்லூரியில் ஆசிரியராகச் சில காலம் பணி புரிந்து, அதன் பின் மட்டக்களப்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, தென்கோவை கந்தையாப்பிள்ளை என்பவரிடம் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கற்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. குறுகிய காலத்திற்குள் கொழும்புத் தொழினுட்பக் கல்லூரியில் விஞ்ஞானத்துறை டிப்ளோமா வகுப்பில் பயில்வதற்கான வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. 1916ஆம் ஆண்டு, அவர், இந்த டிப்ளோமாப் பரீட்சையில் சித்தியடைந்ததுடன் மதுரை பண்டிதர்கள் பரீட்சைக்குத்

3 தோற்றவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இடமளிக்கப் பட்ட முதலாவது அறிஞர் சுவாமி விபுலாநந்தராவார்.
/2ے صaی تح4ZZZ ترZZZلکھے تھے عیPے
அடிகளார் யாழ்ப்பாணத்திலுள்ள புனித பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பின்னர் சேர்ந்து, லண்டன் பல்கலைக்கழக B.Sc., பரீட்சைக்குத் தோற்றினார். 1920 ஆம் ஆண்டில் அவர் அந்தப் பரீட்சையில் சித்தியடைந்தார். அதனைத் தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். 1922 ஆம் ஆண்டில் அந்தப் பதவியில் இருந்து விலகிக் கொண்ட பண்டிதர் மயில்வாகனனார் என்று அழைக்கப் பட்ட இந்த அறிஞர், இராமகிருஷ்ண மிஷனில் அடிகளாராகச் சேர்ந்து கொண்டார்.
தமிழ் நாட்டிலுள்ள மயிலாப்பூர் மடத்தில் பிரபோத சைத்தன்ய (Prabodha Chattanya) பிரிவில் அவர் பிரமச்சாரி யாக அங்கீகரிக்கப்பட்டார். இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் வெளியிடும் ஆங்கில இதழான, 'வேதாந்த கேசரி (Vedanta Kesar) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்கு வெளியான இராமகிருஷ்ண விஜயம்' என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். விபுலாநந்த அடிகளாரின் கட்டுரைகள் 'செந்தமிழ்' என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் வெளியாயின.
ஆங்கில, தமிழ், விஞ்ஞானத் துறைகளில் அவருக்கு இருந்த பாண்டித்தியம் இக்கட்டுரைகளில் வெளிப்

Page 10
4.
படலாயிற்று. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படை
മെ ക്രമബZബZീങ്
யாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி" என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலக் கவிதைகளின் அரியதொரு தமிழாக்கத்தை இந்த நூலில் காணலாம் என்று அறிஞர் எஸ்.அம்பிகை பாகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுவாமி விபுலாநந்தர் அவர்கள், 1924 ஆம் ஆண்டில் துறவியானார். அதன் பின்னர், அவர், இலங்கை திரும்பி, இரiாமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப்பணிகளை ஒருங்கமைத்தார். சமய இலக்கிய மகாநாடுகளில் அவர் கலந்து கொண்ட போதிலும் இக்காலப் பகுதியில் அவருடைய வெளியீடுகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
1931 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பேராசிரியர் பதவிக்காக ஒருவரைத் தேடிய பொழுது, சுவாமி விபுலாநந்தரே அந்தப் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என்று உணர்ந்து, அவரை அப்பதவிக்கு நியமித்தது. இந்தியாவில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் இதற்கு முன்னர் தமிழ்த்துறையை நிறுவவில்லை. இப்பதவியை வகித்த சுவாமி விபுலாநந்தர் அவர்கள், தமது கடமையைச் செவ்வனே செய்து, தமிழ் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்த மான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை

め பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பகுதியில் இருந்து, விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
/ 7ZZZZZZZZapے تھے عرص?گے
இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா (Almorah) என்ற இடத்தில் இருந்து வெளியிடும் பிரபுத்த பாரத' (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1939 ஆம் ஆண்டில் விபுலநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் பணி புரிந்த அவர், தமிழ், இலக்கியம், இசை, சமயம் என்பன பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
1943ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கல்ைக்கழகம் இயங்கத் தொடங்கிய பொழுது தமிழ்த்துறையின் முதலாவது பேராசிரியராகப் பணி புரியும்படி விபுலாநந்த அடிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ் ஆய்வுத் துறை எவ்வழியிற் செல்ல வேண்டும் என்ற திட்டங் களை சுவாமி விபுலாநந்த அடிகளே வகுத்தார் என்பது நினைவில் இருத்தத்தக்கது. அவரைத் தொடர்ந்தே பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வ நாயகம், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சதாசிவம் போன்ற அறிஞர்கள் தமிழ்த்துறையை விருத்தி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழ்த் திறனாய்வுத்துறை வளர்ச்சி பெறுவதற்கு

Page 11
6 മെ ക്രീമഞ്ഞ/ZബZിമീ முதற்படியை அமைத்துக் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே என்றால் அது மிகையாகாது.
சுவாமி விபுலாநந்தர் சுகவீனம் காரணமாகப் பேராசிரியர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறைவனடி சேரு முன்னர், அவர் தமது மாபெரும் ஆராய்ச்சி நூலான "யாழ் நூலை வெளியிட்டார்.
Cx xx xx
அடுத்ததாக சுவாமி விபுலாநந்தர், எவ்வாறு
இலங்கைத் தமிழ் திறனாய்வுத் துறைக்கு மாத்திர மன்றிப் பொதுவாகத் தமிழ்த் திறனாய்வுத்துறைக்கும் முன்னோடியாக இருந்தார் என்பதைப் பார்ப்போம். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பிற்கான பாடத்திட்டத்தை வரைந்த குழு, அவ்வகுப்பிற்குரிய பாட நூல்களுள் ஒன்றாக விபுலாநந்த அடிகள் எழுதிய இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை, 1974ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்தது.
அந்த நூலில் இடம்பெற்ற கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டே எனது கருத்தை நிறுவ முயல்கிறேன். கருத்தை, கருத்தாக மாத்திரம் தெரிவித்தால் போதுமானதாக அமையாது. எனவே, குறிப்பிட்ட கேட்டுரைகளில் இருந்து பொருத்தமான பகுதிகளைத்
தேர்ந்தெடுத்து விளக்க முயல்கிறேன்.
x. ° xx

7
முதலிலே, இலக்கியச் சுவை என்ற தலைப்புள்ள
pavaa/Z7 A//ava/
கட்டுரையைப் பார்ப்போம். 1939 ஆம் ஆண்டு கல்முனை நகரத்தில் நடை பெற்ற ஆசிரியர் விடுமுறைக் கழகத்தினரின் ஒரு கூட்டத்தில் அடிகளார் தலைமை தாங்கினார். அங்கு, இலக்கியம் கற்றலும் இலக்கியச் சுவையில் ஈடுபடலும் என்பது பற்றி அவர் ஆற்றிய இலக்கிய நயச் சொற்பொழிவு இதுவாகும்.
எம்மில் பலர் இன்றும் கூடப் பழந்தமிழ் இலக்கிய வரிசையை வகுதி ரீதியில் நிரற்படுத்தத் தெரியாதவர்களாக இருக்கிறோம். ஆயினும், சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு சுவை பயக்குகின்றன என்று அடிகளார் வகுத்தார். அவர் கூறுகிறார்:
"பரந்துபட்ட தமிழ் இலக்கியம் என்னும் பரவையின் உள்ளே சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்து நல்லியப் புலவர் வகுத்தமைத்த பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், தினெண்கீழ்க்கணக்கு என்பனவும், பின்னரெழுந்த சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, நீலகேசி என்பனவும், கொங்குவேள்மார்க் கதையின் மூவர் தமிழும், திருவாசகமும் திருக்கோவையாரும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும், பெரிய புராணம், ராமாவதாரம், கந்த புராணம், வில்லி பாரதம், திருவிளையாடற் புராணம் இரண்டும் என்பனவும் ஆரியப்புலவர் பாகவதமும், காசி தாண்டவமும், சிறு பிரபந்தங்கள் என நின்றவற்றுள்ளே, குமரகுருபரரும், சிவப்பிரகாசமும், மீனாட்சிசுந்தரரும்,

Page 12
8
சுப்பிரமணியி பாரதியும் வகுத்தமைத்தனவும் தமிழ் மாணவராலே பயிலப்பட்டு வருகின்றன. இவை யாவும் செய்யுள் நடை இலக்கியங்கள்."
്ത്ര മഞ്ഞZബ്ബീര്
'உரை நடை இலக்கியங்கள் தமிழில் அருகி நடப்பன. நக்கீரனார் கண்ட களவியல் உரையும், பரி மேலழகியார் ஈர்ந்த திருவருளுரையும், நச்சினார்க்கினியர் அருவந்தளித்த சிந்தாமணியுரையும், அடியார்க்கு நல்லார் வழங்கிய சிலப்பதிகார உரையும், பெரியவாச்சான் பிள்ளை உதவிய பிரபந்த உரையும், ஆறுமுக நாவலர் அன்பினோடருளிய பெரிய புராண வசனம், திருவிளை யாடற் புராண வசனம் என்பனவும் இந்நாளிலே தமிழுக்கு வரம்பாகி, தென்றிசைக்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், எழுத்தறி புலவர் என உலகு புகழ, நீடு நின்று தமிழ் தொண்டாற்றி வரும் சாமிநாதர் அருளிய மீனாட்சி சுந்தரர் சரிதம், உதயணன் கதை, பெளத்த தர்ம சங்கம் என்பனவும், சிந்தாமணி, சிலப்பதிகார, மணிமேகலைக் கதைச் சுருக்கங்களும், உரை நடை இலக்கியங்களாகி நிலவுகின்றன."
இவ்வாறு குறிப்பிட்ட விபுலாநந்த அடிகள் பின்னர், "இலக்கியம் இவையெனத் தந்தோம். இனி, இலக்கியச் சுவையாவது யாது, அச்சுவையில் ஈடுபடுவதற்கு வேண்டிய மனப்பழக்கம் யாது, இலக்கியம் கற்றற்கு இயைந்த கருவிகள் யாவை", என்பன போன்ற வினாக்களை எழுப்புகிறார். இவ்வாறு செய்வதே ஒரு திறனாய்வாளரின் முயற்சிகளில் முதல்படி நிலைகளாகும். இந்தப் படிகளை அரை நூற்றாண்டுக்கு முன்னரே விபுலாநந்த அடிகள்

ളിഞ്ചക്കീസ്ഥ Zഞഖ് --— . 9 தெட்டத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அது மாத்திர மல்ல, கலை இலக்கியத்துறைகளின் அடிநாதமாகத் தொனிக்கும் விஷயங்களை, இன்றைய விமர்சகர்கள் இன்று கூறி வரும் அதே கருத்துகளை, அன்றே அவர் கூறியுள்ளதையும் அவதானிக்கலாம். உதாரணமாக, விபுலாநந்த அடிகள் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"மனமானது வெளிப்பட்டுத் தோன்றுமிடத்து அறிவு, இச்சை, துணிவு என முத்திறப்பட்டு நிற்கும் என்பது மன நூலார் கண்ட முடிவு. அறிதல், இச்சித்தல், துணிதல் என்னும் முத்திறச் செயலின் தெளிவு, இனிமை, உறுதி என்னும் குணங்களை அளவி நிற்பன. இவை முறையே உண்மை, அழகு, நன்மை என்னும் குணங்களைச் சார்பன" இதற்கு அடுத்ததாக நூல்கள் எவ்வாறு வகுக்கப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
"உண்மை உணர்த்தும் நூல்களும் Hಶ பெளதிக
விஞ்ஞான நூல்களும் தர்க்க நியாய தத்துவ நூல்களும், அழகு உணர்த்துவ; இசை ஓவிய நூல்கள், நன்மை உணர்த்துவ அற நூல்கள், உண்மை அழகு நன்மை ஆகிய அனைத்தும் உணர்த்து நல்லிசைப் புலவர் அளித்த இலக்கிய நூல்கள். இவை, செய்யுள் எனப்படும்." பேராசிரியர் விபுலாநந்தர் அவர்கள் செய்யுளின் முக்கியத் துவத்தையும் தொட்டுக் காட்டுகிறார். “ஏனைய கன்லத் துறைகள் உள்ளத்தின் ஒவ்வொரு திறத்தினைப் பற்றி நிற்கச் செய்யுள் மாத்திரம் உள்ளம் முழுவதையும் பற்றி நிற்கும். ஆதலினாலே மதிப்பிடற்கரியதொரு நிறை வினையும் மறுமலர்ச்சியையும் உள்ளத்திற்கு அளிக்கும்."

Page 13
፲0 — മത്ര മീഞ്ഞ/മീബിമീ திறனாய்வாளன் ஒருவனின் தேடல் முயற்சிகளில் ஒன்று ஒப்பீடு ஆகும். பல்வேறு இலக்கிய வகைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது அதன் பணிகளில் ஒன்று எனலாம். வில்லி பாரதத்தில் வரும் இலக்கியக் காட்சிகளைக் கிரேக்கக் கவி ஹோமரின் (Homer) படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் முன்னோடித் தன்மையை விபுலாநந்தர் அவர்களிடம் காண்கிறோம். பிற்காலத்தில் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தமிழ் சங்க காலப் படைப்புகளைக் கிரேக்க வீர காவியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து கலாநிதிப்பட்டம் பெறுவதற்குத் தூண்டு கோலாக, சுவாமி விபுலாநந்தரின் இந்த ஒப்பீட்டுப் பாங்கு அமைந்ததோ என்றும் நாம் வியக்கலாம். குறிப்பிட்ட வில்லி பாரதக் காட்சியொன்றை விளக்கிய அடிகளார், "இத்தகையதோர் காட்சியினை ஹோமர் எழுதிய வீர காவியங்களிலும் காண்தலரிது" என்று கூறுகிறார்.
ஒப்பீட்டாய்வு என்று பார்க்கும் பொழுது வில்லி பாரதத்தில் வரும் போர்க்களத்திலும் பூஞ்சோலையிலும் காட்சிகளை ஒப்பிட்டு இலக்கியச் சுவை எத்தகையது என்று அவர் விளக்குகிறார். அது வருமாறு :
"போர்க்களத்திலே பெருமிதச் சுவை தலையாய சுவையாகி நிற்கும். செயற்கருஞ் செயல்களைக் கண்டு இறும்பூதெய்தும் உள்ளத்திலே மருட்கை என்னும் சுவை தோன்றும். எள்ளி நகைக்கின்ற நகையும் அசைவு கண்டிரங்கும் அவலமும் பகைமேற் செல்லும் வெகுளியும் இகழ்ந்துரையாடும் இழிவரலும் அஞ்சத்

4Pavasatzz4ý ZZZžava/ 77 தக்கன. கண்டுழி நிகழும் அச்சமும், வெற்றியாலெய்திய உவகையும், என ஏனைய சுவைகளும் போர்க்களத்திலே தோற்றுதற்குரியன. a
இவ்விதமாகச் சுவைகளைச் சுட்டிக் காட்டிய விபுலாநந்தர், தொடர்ந்து பூஞ்சோலைக் காட்சியை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:
'பூஞ்சோலைக்காட்சியின் உள்ளே காதலர் இருவர் கருத்தொப்ப ஆதரவுபட்ட உவகையும், இனிய நகையும், வியப்பின்பாலதாகிய மருட்கையும், பிரிவு நோக்கிய அச்சமும், பிரிவாலெய்திய அவலமும், பெருவரவின் பொருள் குறித்து எழுந்த சுவையினால் மாத்திரமன்று, பாவினகத்து எழுத்துக்கள் அமைந்து நின்ற தாளவிகற் பங்களினாலும், கவிஞர் தமது உள்ளக் குறிப்பினை வெளிப்படுத்துவார்."
அடிகளார் மேலும் விளக்குகிறார்:
வளவன்பதி முதலாக வயங்கும்பதி தோறும் துளவங்கம ழதிசிதள தோயங்கள் படிந்தே இளவண்டமீ றெழுதேடுமுன் னெதிரேறிய துறைசூழ் தளவங்கமழ் புறவஞ்செறி தண்கடல் புகுந்தான்
என்னும் செய்யுளின் பின் "குன்றில் இளவாடை வரும் பொழுதெல்லாம்" என்னும் செய்யுள் வருகிறது. இடையினவெழுத்துப் பயின்று மெல்லென்று நீர்மையாகி நிற்கும். "துழவங்கம ழதிசீதள தோயம்", "இளவண்டமழி ழெழுதேடு", "தவழங்கமழ் புறவம்" என்னும் சொற்றொடர் களின் நயத்தை நோக்கும்படி கூறுகிறார் அடிகளார்.

Page 14
72
മത്ര ക്രീമഞ്ഞZ/ബീജ് இந்தக் கட்டுரைகளில் பேராசிரியர் விபுலாநந்த அடிகள் மடக்குகள் பற்றியும் சுவைகள் பற்றியும் எடுத்துக் காட்டியிருப்பதுடன் சந்த விருத்தத்தின் இலக்கணத்தை நாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறார். -
இன்றைய சூழலில் இந்த விமர்சன அணுகு முறைகள் ஒன்றும் புதிதானவை போல் தோன்றாமல் இருக்கலாம். ஆயினும், இந்த அணுகு முறைகள் தமிழ் இலக்கியப்பரப்பில் நவீனத்துவ நோக்கில் முதற்றடவை யாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும். அதனால் தான் விபுலாநந்த அடிகளைத் தமிழ்த் திறானயவுத் துறை முன்னோடியென நாம் வலியுறுத்துகிறோம்.
சென்சிபிலிட்டி (Sensibility) என்ற ஆங்கில விமர்சனப் பதம் பற்றி இன்னமும் தெளிவான ஓர் விளக்கம் நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி சென்சிபிலிட்டி' என்ற ஆங்கில வார்ததைக்குக் கொடுக்கும் வியாக்கியானம் வருமாறு :
"ஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வு நயம், எளிதில் ஊறுபடும் தன்மை."
விபுலாநந்த அடிகள் செந்தமிழ்' என்ற ஏட்டில் 1940 ஆம் ஆண்டு வெளியாகிய 38 ஆம் தொகுதியில், ஐயமும்
அழகும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் சென்சிபிலிட்டி' என்ற

യക്രീസ്ഥ Zതയ 73 ஆங்கில விமர்சனப்பதத்தின் நுட்ப வியாக்கியானத்தைத் தமிழ் இலக்கிய ரீதியாக அவர் விளக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.
"காட்சிக்கும் துணிவுக்கும் இடையே ஐயம் நிகழும். காட்சி ஐம்புல வாயிலாக எய்தும் உணர்வு, துணிவு யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்ற்றோன்றினும் அந்தோன்றிய வார்த்தை கண்டொழியாது அப்பொருளின் கண்நின்று மெய்யாகிய பொருளைக் காணும் மெய்யுணர்வு ஆதலின் ஐயத்தின் நீங்கிற் தெளிந்தாரான் எய்துதற் குரியது.
"அளவினால் எல்லைப்பட்ட பொருளினைக் கண்ணுற்றாள் ஒரு நோக்கோடு அமைவான். நோக்குந் தோறும் புதிய புதிய அழகினைத் தோற்றுவிக்கும் ஒரு பொருள் கண்ணெதிர்ப்படுமாயின் அதனைக் கண்டோன் நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி அப்பொருளின் காட்சி நலனைத் துய்த்தற்கு முயல்வான். இம்முயற்சியே ஐயவுணர்விற்கு அடிப்படையாயிற்று. ஆதலினாலே ஈண்டு நாம் ஆராயும் காட்சி, ஐயம் என்னும் இரண்டினுள்ளும் காட்சியினும் ஐயம் சிறப்புடையது என்று அறிதல் வேண்டும். ஐயமானது வியப்பு எனவும் மருட்கை எனவும் தமிழ் நூலார் வகுத்துக் கூறிய அற்புத ரசத்தினைச் சார்ந்து வருவது. ஒரு பாற்கிளவி கண்ணும் வருகை தானே வழக்கென மொழிப என ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஒரு மொழி யொழிதன்இனங்கொளற்குரித்தே" எனப்பிற்காலத்தாரும் கூறிய விதி சொல்லிலக்கணத்திற்குப் போலவே

Page 15
74 - മഗ്ര ക്രമങ്ങന്നZZമ് பொருளிலக்கணத்திற்கும் பொருந்துவது" என விபுலாநந்தர் சுட்டிக் காட்டுகிறார்.
சுவாமி விபுலாநந்தர், இன்றையத் தொடர்பியல் அடிப்படைகளைத் தொட்டுக் காட்டுவது போல அன்றே இலக்கியத்தில் தொடர்பியல் பயன்படுவதைத் தொட்டுக் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, அவர் கூறுகிறார்:
"நல்லிசைப் புலவர் யாத்தமைத்த கவியிலே ஈடுபட்டு நெஞ்சமுருகி இன்புறுவோன் அக்கவிதையின் பால் அன்பு செலுத்துகிறான். கவிதையை யாத்த புலவன் படிப்போருக்கு இன்பம் பயப்பது கருதியே யாத்தான். ஆதலின் படிப்போருக்கும் படிக்கப்படும் கவிதைக்கும் இடையே அமைந்த தொடர்பு பெருந்திணையன்று. கைக்கிளைத்திணையாம் என்பது வெளிப்படை. இயற்கைக்கும் புலவனுக்கும் இடையிலான தொடர்பு கைக்கிளைத் திணையின்பாற் படுவதென அறிகிறோம். இவ்வாறு பொதுவாய் நிற்கும் இன்பம் பற்றிய அன்பினை நூன் முறையாக வகுத்துக் கூறப்புகுந்த ஆசிரியர் மிக்க திறன்மேல் வைத்துக் கூறினார் எனினும், 'குழவி மருங்கினும் கிழவ தாகும்', "ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப' எனக் கைக்கிளைப் புறனாகிய பாடாண் பகுதியினுள்ளே பிறவற்றிற்கும் ஏற்றுக் கூறினார்" என்பது அடிகளாரின் கூற்று.
சுவாமி விபுலாநந்தர் அவர்கள் விஞ்ஞான, கணிதத் துறைகளிலும் ஒரு மேதை. அன்னாரின் அறிவியல்

75 oZکےZZZZap ترZZZZلکھے تھے عرصPہے அறிவும் அழகியல் அறிவும் இணைந்தது காரணமாக, காரண காரியத் தொடர்புடைய திறனாய்வுப் பாங்கு இயல்பாய் வந்தமைகிறது.
நாம் இப்பொழுது ஆராயும், ஐயமும் அழகும்' என்ற கட்டுரையிலேயே வெளிப்படும் ஏனைய கருத்துகளையும் நாம் நோக்குவோம்.
"ஐம்புலன் உணர்வினைக் கூறும் பொருளியல் நூல்களுக்குக் காட்சி, கருவியாகும். அதாவது 'சயன்ஸ்' (Science) எனப்படும் விஞ்ஞானம்."
"நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி" இன்புறுதற்குரிய ஓவிய நூல், வட்டிகைச் செய்தி என்றித் தொடக்கத்தவாகிய அழகு நூல்களுக்கு ஐயம் கருவியாகும். அதாவது. "பைன்ஆட்ஸ்" (Fine Arts) எனப்படும் நுண் கலைகள்.
"துணிவு தத்துவ ஞானம் என வட நூலார் கூறும்
:ெய்யுணர்வுநூல்களுக்கும் ஐயம் கருவியானது. ஆதாவது 33 í7GavmaFL í7" (Philosophy).
"ஐயத்தின் வழி அழகு பிறப்பதென உணர்த்துவதற்கு ஆன்றோர் செய்தளித்த அழகிய செய்யுட்க"ளை அடிகளார் பின்னர் எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
இக்கட்டுரையின் ஈற்றிலே செய்யுள் அணிகள் ஆன்றோர் செய்யுள்களில் இயைந்து நிற்பதை எடுத்துக் காட்டி, 'ஈன்று உரைப்பிற்பெரும்' என முடிப்பதில் இருந்து திறனாய்வின் முக்கிய பண்புகளில் ஒன்றாகிய

Page 16
76
சுருங்கக் கூறி விளங்க வைக்கும் பண்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.
മത്ര ക്രമങ്ങZബ്ബീജ്
"செய்யுட்களில் தன்மை உவமை, உருவகம், தீவகம், பின்வருநிலை, வேற்றுப் பொருள் வைப்பு, ஒற்று, அதிசயம், தற்குறிப்பேற்றம், நிரநிரை, ஆர்வமொழி, சுவை, ஒப்புவமைக்கூட்டம்" என்னும் செய்யுள் அணிகள் இயைந்து நிற்பதை விபுலாநந்தர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இவ்வாறு பகுப்பாய்வு செய்ததன் மூலம், உருவம், உள்ளடக்கம் ஆகியன ஒன்றோடு ஒன்று இயைந்து இருப்பதைத் திறனாய்வாளர் சொல்லாமல் சொல்லுகிறார் எனலாம்.
பேராசிரியர் விபுலாநந்த அடிகள் வெறுமனே இலக்கியத் திறனாய்வாளர் மட்டுமல்ல. அவர் ஒரு கலை விமர்சகரும் கூட. இதனை, அரை நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட அவருடைய கட்டுரை ஒன்றில் இருந்து நாம் அறிய முடியும். 'செந்தமிழ் தொகுதி 38 இல் அடிகள் எழுதிய 'வண்ணமும் வடிவும்" கட்டுரை இதைக்
காட்டும்.
"மிகப்பழைய காலத்தில் சிற்பங்களை வடிப்பவர்கள் "மண்ணிட்டாளர்' எனப்பட்டனர். இவர்களை ஒவியர் என்பதும் இவருக்குரிய நூலினை ஓவியச்செந்நூல் என்பதும் பழைய வழக்கு" என்கிறார் அடிகளார். அவ்வோவியங்களை அமைப்போர், நுண் உணர்வும் நுழைந்த நோக்கம் உடையராதல் வேண்டும் என்பதை

77
ഉജക്ൿീz Z(ബ് 'மதுரைக்காஞ்சிச் செய்யுள் ஒன்றிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். அந்தச் செய்யுள் அடிகள் வருமாறு :
"எவ்வகைய செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த வளைந்து நோக்கிற் கண்ணுள் வினைஞர்."
இந்தக் கண்ணுள் வினைஞர் யாவர்? அடிகளார் கூறுகிறார்:
"வெண்சிதையில் தீட்டிய உருவத்தினது இயற்கை வண்ணம் வெளிப்படுமாறு வர்ணம் தீட்டுவோரும், வட்டிகை பலகையிலேயே துகிலினைக் கோலினாலே பல வித வர்ணங்களை எழுதி அழகிய சித்திரங்களை அமைப்போரும் கண்ணுள் வினைஞர் எனப்பட்டனர்.”
விபுலாநந்த அடிகள் மேலும் விளக்குகிறார் :
'கண்ணுள் வினைஞர் - சித்திரகாதிகள்' என அடியாருக்கு நல்லார் உரை கூறும் எனவும்,
'தூவர வட்டிகை மணிப்பலகைவண்ணநுண்டு சிலிகை என்னும் சித்தாமணிச் செய்யுள் அடியினுள்ளே கண்ணுள் வினைஞருக்கு வேண்டிய கருவி மூன்றும் கூறப்பட்டன" எனவும்,
"வட்டிகை என அடியாருக்கு நல்லார் கூறுதலின், இக்காலத்து மேனாட்டுச் சித்திரக்காரிகள் வழங்கும், 'பலேட்' (Palate) என்னும் பலகையினை ஒத்த வட்டிகைப் பலகைகளே பண்டை நாளிலும் இருந்தன என எண்ண இடமுண்டு” எனவும் அடிகளார் கூறுகிறார்.

Page 17
78
മത്ര ക്രീമഞ്ഞZഖZബീത് ஓவியக் கலைத் திறனாய்வு தொடர்பாக முதலில் ஒவியம் பற்றிய சில செய்திகளைத் தருகிறார். அவற்றைப் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டுவது, அடிகளார் நமது பழைய பண்பாட்டில் ஊறித்திளைத் திருந்தமையையும் அப்பண்பாடு நவீனத்துவத்திற்கு ஆதாரமாக இருப்பதையும் உணர்த்தி, அவர் ஒரு நல்ல திறனாய்வாளர் என்பதையும் வெளிப்படுத்துவதனால், அவரை, நமது முன்னோடித் திறனாய்வாளர் வரிசையில் முதன்மை இடம் வகிக்கச் செய்கிறது.
கீழைத்தேய ஓவிய மரபு பற்றி ஓரிரு வாக்கியங்களில் பொருத்தம் குறித்து உதாரணங்களுடன் காட்டிய பின்பு, திறனாய்வாளர் விபுலாநந்தர், திறனாய்வாளன் நுட்பமாக ஆராய வேண்டிய விஷயம் ஒன்றையும் கோடிட்டுக் காட்டுகிறார். அவர் கூற்று வருமாறு :
"மண்ணிட்டாளர், கண்ணுள் வினைஞர் ஆகிய இருபாலாரையும் ஒவியர் என்பதும், வண்ணம் வடிவம் என நுணுகி வேறுபடுத்தாது அனைத்தினையும் ஓவியம்
Vy
இந்த ஒரு தலைப் பாங்கை விரும்பத்தகாத அம்சமாகச் சொல்லாமல் சொல்லி அடிகளார், ஒவியத்தை எவ்வாற அளவிட வேண்டும் என்ற வரைவிலக்கணம் ஒன்றையும் தொட்டுக் காட்டுகிறார்.
"ஓவியனானவன் படத்தில் வர்ணம் தீட்டியோ, சுவர் மீது சிதையினால் புனைந்தோ, வெண் சலவைக்கல்லைச் செதுக்கியோ, கருங்கல்லைப் பொளிந்தோ வெளிப் படுத்திய உருவத்தை அறிவுடையோன் நோக்கும் போது,

ളിഞ്ചക്കീzീ Zഞഖ 79 ஓவியனது கை வன்மையை வியப்பதோடு அமையாது, 'ஓவியன் உள்ளத்து உள்ளியது' இதுவெனக்கண்டு வியத்தல் வேண்டும். ஒவியனது உள்ளக்கருத்தே ஒவியத்திற்கு உயிர் போன்றது.
"நவில் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம் போலவும், பயிலும் தோறும் இனிமை பயக்கும் பண்பு உடையினர் தொடர்பு போலவும், பார்க்கும் தோறும் அறிவுடையோனுக்கு உவகை அளிக்கும் ஓவியமே அழகிய ஒவியமாகும்."
இவ்வாறு அழகாகத் தமிழைக் கையாண்டு, திறனாய்வுக் கோட்பாடுகளை விளக்கிய முதல்வர் அடிகளார் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்.
"வண்ணமும் வடிவமும்' என்ற கட்டுரையிலே தொடர்ந்து வரும் செய்முறைத் திறனாய்வு விளக்கத்தைப் படிக்கும் பொழுது திறனாய்வாளர் விபுலாநந்தரின் திறனை வியக்காமல் இருக்க முடியவில்லை. இதோ: அடிகளாரின் சம்பந்தப்பட்ட பகுதிகள்.
"பஞ்சரத்தில் உள்ள கிளிப்பிள்ளை பொன் வட்டிலிற் பாலடிசில் உண்ணுவதை இவ்வோவியம் காட்டுகின்றது" என்று ஓர் ஓவிய விமர்சகர் கூறினால், eggil போதுமான விளக்கம் இல்லை என்கிறார் அடிகளார். அவர் கூறுகிறார்:
“காட்சி மாத்திரத்திலே அளந்து தீர்ப்பதற் குரிய ஓவியம் அறிஞருக்கு உவகை பயப்பதில்லை. இப்பொழிலகத்தே நிற்கும் மாமரத்தின் கனியினை இக்கிளிப்பிள்ளை உண்ணுகின்றது. எனக்குரிய ஓவியமும்

Page 18
2O முன்னையதைப் போல்வதே. ஆனால், ஓர் ஓவியன்
இவ்விரண்டினையும் ஒரு படத்திலே சித்திரித்துத் தருகின்றான் என வைத்துக் கொள்வோம். பொழில்
മഗ്ര ക്രീമഞ്ഞ/Zഖff/ീഞ്ഞ്
நடுவில் அழகிய மாளிகை. மாளிகை மேல் மாடத்தில் ஒரு மடவரல். பஞ்சரத்துக் கிளக்குப் பாலடிசில் ஊட்டுகின்றாள். பக்கத்தில் உள்ள மாமரக் கிளையில் இருக்கும் கிளி தன்னிச்சையாக மாங்கனியினை உண்கின்றது." இப்படத்தினைப் பார்த்தவுடனே நமது சிந்தையிலே பல்வேறு எண்ணங்கள் உதிக்கின்றன. இப்படம் சுதந்திர வாழ்க்கையையும் அடிமை வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றதா அன்றேல், மனை வாழ்க்கையையும் பட்டிக்காட்டு வாழ்க்கையையும் காட்டுகின்றதா என இவ்வாறு எல்லாம் சிந்திக்கின்றோம். "கண்ணினைக் கவர்ந்த படம் மனத்தினையும் கவர்ந்து விட்டது" எனக் கூறிச் செல்லும் விபுலாநந்த அடிகளை வெறுமனே அழகியல் ரசிக விமர்சகர் என்று அறியாதவர் கூறுவதை மேலும் நாம் அனுமதிக்கலாமா?
இன்னும் ஒன்று, இக்காலத் திறனாய்வாளர் பெரும்பாலும் எடுத்துக்கொண்ட பொருளைக் கோட்டை விட்டுவிட்டு, அங்கிங்கெல்லாம் சென்று தமது போலித் தன்மையான ஆழத்தைப் பறைசாற்றுவர். ஆனால் விபுலாநந்த அடிகளோ மிகவும் இறுக்கமாகத் திறனாய்வு செய்வார். உதாரணமாக, இந்தக் கூற்றைக் கவனிப்போம். "செவியின்பம், நாவின்பம், மூக்கின்பம், ஊற்றின்ப மாகிய நான்கும் எடுத்துக்கொண்ட ஆராய்ச்சிக்குப் புறம் பானவை ஆதலின், அவை தம்மை ஒழித்து வண்ணமும்

、27
ളിങ്ങക്ക്ലീമീ Zഞഖ வடிவமும் காட்டும் செய்யுளானது வல்லான் வகுத்த ஒவியம் போன்று அகக்கண்ணுக்கு உவகை அளிக்கும் மாண்பினை." என்று எழுதிச் செல்லும் அடிகளார் தேவைக்கேற்ற அளவுகோல்களை மாத்திரம் வலியுறுத்துவதை நாம் காண்கிறோம்.
χα και χα
அடுத்ததாக, நிலவும் பொழிலும்' என்ற கட்டுரையை எடுத்துக்கொள்வோம். அங்கு, விபுலாநந்த அடிகளார் இவ்வாறு கூறுகிறார்: ༤
"இன்பப் பொருள் அனைத்தும் அழகினோடு இயைந்து நிற்பன. அழகினை அளத்தற்கு மனிதர் கொள்ளும் அளவுகோல் இரண்டு உள. கண்டு கேட்டு உண்டு உயர்த்துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணேயுள' என்று அமையின் மகளிர் பாற்பெறும் இன்பவிழைவின் வயப்பட்டோருக்கு 'பனி மலர்க்குழற் பால்வ நல்லாரே எல்லா அழகிற்கும் அவ்வலகின் வழியெய்தும் எல்லா இன்பங்களுக்கும் நனி சிறந்த எடுத்துக் காட்டவர் என்பது வெளிப்படை
“கவிஞன் கண்ணாடி போன்று பிற நிகழ்ச்சியைத்
தன்னிகழ்ச்சியாகக் காட்டும் ஆற்றல் வாய்ந்தவன் ஆதலின் மேற்கூறிய அளவுகோல் இரண்டினாலும் அழகினை அளத்தல் அவர்க்கு இயல்பாகும்" என்கிறார் விபுலாநந்தர்.

Page 19
22
െ ക്രീമഞ്ഞZഖമണ/ീക്ക് சுவாமி விபுலாநந்தர் ஆங்கில இலக்கியத்தில் நன்கு பரிச்சயம் பெற்றவர் என்பது அவருடைய கட்டுரைகளைப் படிக்கும் பொழுது நமக்குத் தெரிய வருகிறது. குறிப்பாக. 'ரொமான்டிக் பொயெட்ஸ்' (Romantic Poets) எனப்படும் மனோரதியக் கவிஞர்கள் கவிதா அனுபவத்தைப் பெரிதும் சுவைத்தவர். உவேட்ஸ்வேர்த், ஷெலி, கீட்ஸ், ப்ளேக், கோலரிட்ஜ் போன்ற மனோரதிய இயற்கைக் கவிஞர்களைத் திறனாய்வு நோக்கில் சுவைத்தவர்.
ஜோன் கீட்ஸ் என்ற கவிஞரின் ஆக்கங்களில் இருந்து சில வரிகளை அழகு தமிழில் தந்து ‘கவியும் சால்பும்" என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார். இக்கட்டுரை 1941ஆம் ஆண்டு, செந்தமிழ் தொகுதி 38 இல் வெளியாகியது.
அக்கட்டுரையை விபுலாநந்த அடிகள் இவ்வாறு ஆராம்பிக்கிறார் :
திருமலி யழகுடைச் செழும்பொருள்தானே உவகை நீர்மையது; அங்கள்வுவகை பன்னாட் கழியினும் கழியா வியற்பிற்றண்டா வின்பந் தந்துநிற்பதுவே" என ஆங்கில மொழிப்புலவராகிய கீற்ஸ் என்பவர் தாம் இயற்றிய 'எந்திமியோன்' என்னும் பெருங் கர்ப்பியத்திற்குத் தோற்றுவாய் கூறினார்.
இவ்வாறு கூறும் திறனாய்வாளர் விபுலாநந்த gylglds6ir, 6.6m576ir A thing of beauty is a joy for ever 6T6irgi ஆரம்பிக்கும் கவிதை மொழித் தொடரை இவ்வாறு தமிழிற் தருகிறார்.

23
"அழகுடைய பொருள் என்றும் உவகை தருவது; அழியாவின்பத்தில் நீர்மையது. ஆதலின், அதுவே
புலவராற் பாடுதற்கமைந்தது." இது கீற்ஸ் நிறுவிய முடிவு என்கிறார் விபுலாநந்தர்.
ളങ്ങക്ക്സീz Zല്ക്കബ്
&parsair topGpITG55iganatuitar "Beauty is Truth. Truth Beauty - that's all ye know on earth and aliye need to know" a rainLiang, இவ்வாறு தமிழில் தருகிறார் அடிகளார் :
"அழகே உண்மை, உண்மை அழகென உலகினில் அறிந்தோர் அறிவுபிறவேண்டார்."
இதை விளக்கும் விமர்சகர், "ஆண்டு அழகிற்கு உண்மை ஒப்புடைப் பொருளாகக் கூறப்பட்டது" என்கிறார்.
xx x. xx
அது மட்டுமல்லாமல், இந்தியத்தத்துவ ஞானத்தின் சில ஆறுகளுடன் எவ்வாறு மேலைத்தேய இலட்சியச் &ந்தனைகள் இணைகின்றன என்பதையும் தொட்டுக் காட்டுகிறார். அவற்றை நாம் மீள அவதானித்தல் பொருத்த முடையது :
"அறிவு, இச்சை, செயல் (ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி) எனும் மன நீர்மை மூன்றினுள் அறிவு உண்மைப்பாலது; இச்சை அழகின்பாலது; செயல் செம்மைப்பாலது; உண்மை, அழகு, செம்மை என்பது முறையே அறிவு, இச்சை, செயலுக்கு எல்லையாகவும் நிலைக்களமாகவும் அமைந்தன."

Page 20
24
മെ ക്രമങ്ങ്/ZയZീര് "மனநீர்மை மூன்றாயினும் மனம் ஒன்றே ஆதலினாலே உண்மை, அழகு, செம்மை என்பன தம்முள்ளே ஒப்புடையவாயின. அழகே உண்மை, உண்மையே அழகு, அழகே செம்மை, செம்மையே அழகு, உண்மையே செம்மை, செம்மையே உண்மை."
"செம்மை, உண்மை, அழகென்னும் இவற்றை வட நூலார் சிவம், சத்தியம், சுந்தரம், என்பார்." ஆங்கில
distanti, Goodness, Truth, Beauty 6T6irLIri.
இவ்வாறு அழகாக ஒப்பீடு செய்யும் அடிகளாரின் விளக்கவுரை, மேலும் இலக்கியத் திறனாய்வு நயச் செறிவைத்தருகிறது. அதனையும் பார்ப்போம்.
"நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவு நிலைமை யாற் கல்வியழகே அழகு என்புழி, 'நெஞ்சத்து நல்லம்' எனச் செம்மையும் கல்வியழகு" என அறிவும் அழகின் வேறின்மையாதற் கூறப்பட்டது. உருவின் மிக்கதோர் உடப்பினைப் பெற்றோரும் கல்வியறிவில்லாதவழி அறிவுடையோரால் அழகிலரெனக் கருதப்படுவராதலின் கல்வியழகேயழகு" என்னுமிடத்து வந்த ஏகாரம் பிரிநிலையும் தோற்றமுமாயிற்று" விபுலாநந்தர் மேலும் கூறுகிறார்:
"அழகும் உண்மையும் கவிப்பொருளாயினவாறு போலச் செம்மை வயத்ததாகிய சால்பும் கவிப் பொருளாயிற்று. காப்பியத் தலைவனிடங் காணப்படும் இயல்பே காப்பியக்கவிகள் விளித்துக் கூறும் பெரும்
பொருள்."

25 "வாழ்க்கையிலே சால்பு வாய்ந்தோனாகிய
Ağpanvassa%2z/Z7 4/7/7az/az/
கவிஞன் ஒருவன் சால்பினைக் கவிப்பொருளாகக் கொண்டு செய்யுள் செய்வானாயின், அச்செய்யுள் இனிமையும் மாண்பும் உறுதியுந் தந்து மிளிருமென்பது அறிஞராயினாருக்கு உடம்பாடேயாம்."
குறிப்பிட்ட கல்வியும் சால்பும்' என்ற இக்கட்டுரையின் நோக்கத்தை ஒரு திறனாய்வாளனுக்கே உரிய திட்ட வட்டமான முனைப்புடன் விபுலாநந்தர் எடுத்துக் கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது.
வெள்ளக்கால் கிழார் இயற்றிய தனிச் செய்யுள்கள் பற்றிக் குறிப்பிடும் விபுலாநந்தர் இவ்வாறு கூறுகின்றார்:
"வெள்ளக்கால் கிழார் இயற்றிய தனிச் செய்யுளகத்துக் காணப்படும் கவியழகுகள் பல துறைய. அவையனைத்தையும் ஆராய்ந்து கூறப்புகின் உரை பெருகுமாதலின், மக்களைத் தேவராக்கும் நீர்மயராகிய "சால்பு' என்னும் பெரும் பொருளினைக் குறித்து, வாழ்க்கையிலே சால்பு வாய்ந்த இப்பெரும் கவி கூறிய பல கவிதைகளிலே ஒரு சிலவற்றை ஆராய்ந்து அவை தம்முட் பொதிந்த அழகினை எடுத்துக் காட்டுதலே ‘கவியும் சால்பும்" என்னும் பொருளுரையின் நோக்கமாகும்."
மேற்கண்டவாறு கூறிவிட்டு, பொருளுரையைத் திறனாய்வாகவே விபுலாநந்தர் எழுதியிருப்பதைப் படிப்பவர்கள் உணரத்தவறார்.
x xx xx

Page 21
26
മത്ര ക്രമങ്ങZബ/ബിങ്, "இலக்கியத் திறனாய்வு" என்ற வகுதிக்குள் லக்கியக் கட்டுரைகளையும் அடக்கலாம். அத்தகைய இலக்கி P யும் அடக்கலாம். அத்த இலக்கியக் கட்டுரைகளில் ஒன்று "யாழ் நூல்" பற்றி அவர் எழுதியதாகும். அக்கட்டுரையில் யாழ் உறுப்பியல் என்ற தலைப்பிலே வில், யாழ், பேரியாழ், கவைக்கடை ஆகியன பற்றி வரைபடங்களுடன் தகவல்களை அவர் இலக்கிய நயம் செறிந்த கட்டுரையாகத் தருவது திறனறிந்து சுவைக்கும் வாசகர்களுக்கு பரம திருப்தி அளிக்கும்.
இதே போன்றே இயலிசை நாடகம்' என்ற கட்டுரையையும் குறிப்பிட வேண்டும்.
வசன நடை கைவந்த வல்லாளன் என்று ஆறுமுக நாவலரைப் போற்றுவதில் தவறில்லை. ஆனால், விபுலாநந்தரின் தமிழ் நடையையும் மொழியாக்கத் திறனையும் வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிற்காலத்தில் ரா.பி.சேதுப்பிள்ளை, அறிஞர் அண்ணா போன்றவர்கள் தமிழைக் கையாளும் ஆற்றலைப் பெறுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் விபுலாநந்த அடிகள் என்றால் அது மிகையாகாது.
தமிழரும் யூதரும் ஆபிரிக்கரும் இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பவர்கள். தமிழர்கென்று தனி நாடு ஒன்று இல்லாவிட்டாலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உலக நோக்குக்கிணங்க ஆறு கோடி தமிழர் இன்று உலகெங்கிலும் பரவிக் காணப்படுகின்றனர். சுவாமி விபுலாநந்தரின் ஒரு கூற்று இந்த இடத்திலே பொருத்தமானது. அவர் கூறுகிறார்.

ഴ്ചക്കമ Zഞഖ് - 27
"உலக சரித்திரமே தமிழ்க் குலத்தாரோடு தொடங்குகின்றது என்பதும், இவற்றைக் ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பூவலயத்தின் நடுப்பாகம் முழுவதிலும் தமிழ்க் குலத்தார் சீரும் சிறப்பும் உற்று வாழ்ந்தார்கள்" என்பதும் குறிப்பிடத் தக்கது.
சுவாமி விபுலாநந்தர் "ஆங்கில வாணி" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை முதற் தடவையாக ஆங்கில இலக்கியச் செல்வங்களைத் தமிழ் இலக்கியத்திற் பழகிய அனைவரும் எளிதிற் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்டமையும் நமது திறனாய்வு நோக்கிற்கு உட்பட்டதே.
தமிழ் நாட்டுப் பண்புகள் சிலவும் ஸ்கொட்லாந்து நாட்டுப் பண்புகள் சிலவும் ஒத்திருப்பன. ஸ்கொட்லாந்து மக்கள் ஆங்கிலம் பேசும் முறையும் இலங்கைத் தமிழர் ஆங்கிலம் பேசும் முறையும் ஒத்திருப்பதை நாம் குறிப்பிடலாம். ஐ.டி.என். தொலைக்காட்சியில் இடம் பெற்ற ஸ்கொட்லாந்து தொலைப்படத்தின் சில காட்சி களில் பாத்திரங்கள் பேசும் முறை யாழ்ப்பாணத்துத் தமிழர் ஆங்கிலம் பேசும் முறையைத் தழுவியதாக இருந்ததை நாம் அவதானித்தோம். ஸ்கொட்லாந்தில் பிறந்த புகழ் பெற்ற எழுத்தாளர் சேர் வோல்டர் ஸ்கொட் அவரைப் பற்றி விபுலாநந்தர் இவ்வாறு மதிப்பீடு செய்கின்றார்.

Page 22
28
്ത്ര ക്രീമഞ്ഞ/ZZിങ് "வோல்டர் ஸ்கொட் எத்தனையோ சிறந்த வசனக் காவியங்களைச் செய்திருக்கின்றார். இவர் ஆற்றிய செய்யுள் வடிவ நூல்கள் அத்துணை உயர்வுடைய வல்லவாகினும் கதை பொதிந்த பனுவல்களாதலின் இளைஞர்களுக்கு உவகை பயப்பன. இவர் ஸ்கொட்லாந்தில் பிறந்தவர். தேசாபிமானம் நிறைந்தவர். பழைய காலத்திலே தமது நாட்டிலே வாழ்ந்த குறுநில மன்னரது வீரச் செயல்களையும் அவர்களது மன்றங்களிலே யாழிசைத்த பாணர் திறத்தினையும் சிறப்புறக் கூறுவார்."
வரலாற்று மனோரதிய நாவல்களை, அதாவது, ‘gnólařiv GTnTgólašas 6iv Golgimtuomr6ătF6řv” (Historical Romances) தமிழில் எழுதிப் புகழ் பெற்ற 'கல்கி" கிருஷ்ணமூர்த்தியைத் தமிழ் நாட்டு சேர் வோல்டர் ஸ்கொட் என்றும் கூறுவர். 'கல்கி ஸ்கொட்டினால் கவரப்பட்டவர் என்பது வெளிப்படை
திறனாய்வாளர் விபுலாநந்தர், ஸ்கொட் பற்றிக் குறிப்பிடும் மேலும் சில பகுதிகளும் அவதானிக்கத் தக்கவை.
"இவரது பாடல்களைப் படிக்கும் பொழுது பழந்தமிழ் நாட்டின் நினைவு உள்ளத்திலே இயல்பாக எழும். பன்னுயிர் காக்கத் தம்முயிரை ஈயும் மறவச் செயலும், அடுகளத்திலே தம் மைந்தர் பொருது வீழ்ந்த செய்தி கேட்டு உவகைக் கண்ணீர் புகுந்த வீரத் தாயார் செயலும் ஆண்மை சான்ற ஆடவரும் அழகு வாய்ந்த

ളിങ്ങക്ക്സീZ Zഞഖ 29 அரிவையரும் கேட்டு உளமுருகுமாறு வீரஞ்செறிந்த பாடல்களை யாழ் இசையோடு பாடும் பாணர் செயலும் பழந்தமிழ் நாட்டுக்கு உரியனவன்றோ? இத்தகைய செயல்கள் வோல்டர் ஸ்கொட் என்னும் கவிஞரது நாட்டுக்கும் உரியன."
திறனாய்வாளர் விபுலாநந்தர் உவேட்ஸ்வேர்த் என்ற கவிஞனின் ஆக்கம் ஒன்றையும் தமிழிற் தந்து திறனாய்வு ரீதியில் அறிமுகப்படுத்துவதும் பாராட்டத் தக்கது. "ரொமான்டிக் கவிஞர்கள் எனப்படும் உவேட்ஸ்வேர்த், ஷெலி, கீற்ஸ், பைரன், ஆகியோர் பற்றியும் தொட்டுப் பார்க்கும் அடிகளார் கீற்ஸ், மறைவின் நூற்றாண்டு விழாவிற்குத் தாம் அனுப்பிய கவிதை ஒன்றையும் இக்கட்டுரையிற் சேர்த்துள்ளார்.
மற்றும் ரெனிசன், ஹோமர், பிரவுனிங், ஜோர்ஜ் பேர்னாட் ஷோ போன்றவர்களையும் அடிகளார்
அறிமுகஞ் செய்கிறார்.
xx xx xx
விபுலாநந்த அடிகளார் எழுதிய மற்றொரு பயனுள்ள நீண்ட திறனாய்வுக் கட்டுரைகள் 1922ஆம் 23ஆம் 24ஆம் ஆண்டுகளில் "செந்தமிழ் ஏட்டில் வெளியாகின. மேற்றிசைச் செல்வம்' என்னும் தலைப்பிலே வரலாற்றுச் செய்திகளை அழகு தமிழில் தருவதோடல்லாமல், ஓர் ஆய்வறிவாளனுக்கே உரிய முறையில் கருத்துக்களைத் தர்க்க ரீதியாகவும் தருகிறார்.

Page 23
r മ്മ ക്രീമഞ്ഞ/ZയZില്ക്ക് உதாரணமாக இந்தப் பகுதியைப் பார்ப்போம் : ".இவ்வாறெல்லாம் மேலைத்தேச சாஸ்திரிகள் ஆராய்ந்து கண்டிருக்கிற முடிவுகளை நமது புராணோதிகாச முடிவுகளோடு ஒட்டி யுக்தி கொண்டு ஊகிக்கக் கிடக்கும் சித்தாந்தங்கள் சிலவுள. அவற்றை முடிந்த முடிவுகள் என்று கொள்வதற்குப் போதிய சான்றில்லையாதலால் இருத்தல் கூடும்' என்னும் படியிற் கொண்டு ஆராய்வது அறிஞர் கடன்" என்கிறார். இதுவும் திறனாய்வுப் பண்பு அல்லவா? இன்னோர் இடத்திலே இவ்வாறு கூறுகிறார்:
"ஹோமர் என்னும் மகாகவி இயற்றிய இலியட், ஒடிசி என்னும் காப்பியங்கள் இரண்டும், யவன புரத்தாருக்கு நாற்பொருள் பயக்கும் நீர்மையவாகப் பின்நூல் பலவற்றிற்கும் முதன் நூலாக நிலை பெற்று இருந்தன."
"இக்காவியங்கள் ஒவ்வொன்றும் 24 காதைகளால் அமைந்தன. 30 காதைகளால் அமைந்த மணிமேகலை நூலின் செய்யுள் தொகை 30 அகவற்பாவாலானது போல இவ்விரு காப்பியங்களும் 24 வீர பாக்களால் முடிந்தன. வீரப்பா பலவாய அடிகளால் நீண்டு நடக்கு நேர்மையது."
இதன் யாப்பினை ஆராயுமிடத்து அடியொன்றுக்கு ஆறு சீராய் முதலைந்து சீரும் குருலகு லகு என நிற்க ஈற்றிச்சீர் குருகுரு எனக் காண்போம். ஒரேயொரு சீர் இடையிநூல் குருகுருவென நிற்பதுண்டு. வடமொழி

37 مح۔۔۔۔۔۔۔۔ யாப்பின் வழிவந்த செய்யுளினங்கள் தமிழில் வந்து நடப்பது போல யவன மொழியின் வழிவந்த வீரப்
ളിഞ്ചക്കീയZ Z(ഖ
பாவையும் சொல்லாசிரியருரைத்த கலிப்பா வகையினுள் அடக்கித் தமிழிலெழுதுவாம்." என்று அவர் எழுதுவதைப் படிக்கும் எவரும் விபுலாநந்த அடிகளின் ஒப்பீடு செய்யும் தன்மையை அவதானிக்கலாம்.
தமிழ் ஹெரோயிக் பொயெற்றி என்ற தலைப்பில் பேராசிரியர் க.கைலாசபதி ஆங்கிலத்தில் எழுதிய நூலிலே கிரேக்க தமிழ் வீர யுகப்பாடல்களை ஒப்பீடு செய்தார். கைலாசபதி அவர்களுக்குக் கலாநிதிப் பட்டம் இந்த ஆராய்ச்சி மூலம் கிடைத்தது, கைலாசபதி அவர்கள் நவீனத்துவ நோக்கில் திறனாய்வுத்துறையை வளர்த்துச் செல்ல முன்னோடியாக நின்றவர் விபுலாநந்த அடிகளே.
அடுத்து வரும் மேற்கோள் இதனை ஓரளவு நிரூபிக்கும். விபுலாநந்தர் கூறுகிறார் : "ஹோமருடைய கறலம் கலி 2057 என ஒரு சாராரும் கலி 2050 என மற்றொரு சாராரும் கூறுவர். கலி 2300 வரையில் இருந்த ஹெஸியோட் என்னும் பெரும் புலவர், "நாளும் வினையும்" என்ற பெயரில் நூலொன்று செய்தளித்தார்.
இந்நூல் நமது மொழியில் உள்ள பதினெண் கீழ்க் கணக்கினையொத்த நடையினது. ஹோமர் இயற்றிய தனிப்பாசுரங்களும் பலவுள. இவை யாவும் வீரச் சுவையும் இன்பச் சுவையும் செறிந்தன."
xx xx xx

Page 24
32 മത്ര ക്രമങ്ങZയമബീജ്
இன்னோர் இடத்திலும் திறனாய்வாளனுக்குரிய ஒப்பியல் நோக்குத்தன்மையைக் காண்கிறோம். "தமிழ் நூலில் தலை சிறந்து விளங்கும் புறநானூறு என்னும் நூலானது வடிவேலேந்தி அடுகளத்துப் பொருத சுத்த வீரர்களால் பாடப்பட்ட வஞ்சினக்காஞ்சி போன்ற செய்யுட்களைத் தன்னகத்துக் கொண்டமை யானன்றோ நாம் அதனைப் பொன்னே போற் போற்றுகிறோம். யவனபுரத்துப் பூர்வ நூல்களும் இத்தகையனவே. ஆதலினாலன்றோ அவை இன்றும் நிலை பெற்று இன்று தேவருலகத்தில் அமுதம் போலப் படிப்போருக்கு உற்சாகத்தையும் தீவிரத்தையும் தருகின்றன."
ஒரு திறனாய்வாளனுக்கு இருக்க வேண்டிய கட்டுக் கோப்பான நெறிமுறையை அடிகளார்நினைவுறுத்துவார். "எடுத்துக்கொண்ட விஷயத்தோடு தொடர்புடைய பொருளை மாத்திரம் பேசலாம் என்று எண்ணுகிறேன்" என அவர் 'சோழமண்டலத் தமிழும் ஈழ மண்டலத் தமிழும், என்ற ஒப்பாய்வுக் கட்டுரையில் குறிப்பிடுவதை நாம் அவதானிக்கலாம்.
விபுலாநந்த அடிகளின் மாணவரே பேராசிரியர் கணபதிப்பிள்ளை. பின்னவரின் "நானாடகம்" என்ற தொகுதியைப் படித்துச்சுவைத்த அடிகளார், "மட்டக்களப்பு வழக்கு மொழியினையும் ஓரிரண்டு நாடகங்களிலே படம் பிடித்தும் வைப்பது நன்று" என ஆலோசனை σαμύlσοΤπή.

33
ളിങ്ങക്ൿ/Z Zഞഖ
திறனாய்வாளர் என்ற வகையில் மறைந்த சுவாமி விபுலாநந்தர் அவர்கள் எவ்வாறு செயற்பட்டார் எனக் காட்டும் முகமாக சில விபரங்களை இக்கட்டுரையில் தொகுத்துத் தந்தோம்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 26-0791ஏற்பாடு செய்த சுவாமி விபுலாநந்த அடிகள் நூற்றாண்டு. விழா நினைவுரையாக வாசிக்கப்பட்ட கட்டுரையிது. பின்னர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட பண்பாடு மலர் 1 இதழ் 2 - 1991 ஒகஸ்ட் இதழில் பிரசுரமானது.)

Page 25
34
dF சுப்ரமண்ய Luigi N
" LIGOD605560Dj5uLIT6TIT
ர்ேப்ரமண்ய பாரதி கவிதை, கட்டுரைகளுடன் கதைகளும் எழுதினார் என்பது நாம் அறிந்ததே. பாரதியாரின் கவிதைகள் பற்றிக் கணிசமான அளவு இரசனைக் கட்டுரைகளும், ஓரளவு திறனாய்வுக் கட்டுரை களும் வெளிவந்துள்ளன. அதே சமயத்தில் அவருடைய புனைகதைகளைப் பற்றிய அபிப்பிராயங்களோ, விமர்சனங்களோ இது வரை வெளிவரவில்லை என்றே கூறலாம். இதற்கு முக்கிய காரணம், கவிஞன் என்ற முறையில் சுப்ரமண்ய பாரதியின் ஆகிருதி மகோன்னதமாக இருப்பது தான். அவ்வாறு மகா கவிகளுக்கேயுரிய பண்பு களை அவன் கொண்டிருந்தமையும், அவனது தேசியக் கவிதைகளும், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு போன்ற தனித்துவமான படைப்புகளும் அவனைக் கம்பனுக்கடுத்த கவிஞனாகத் தமிழிலக்கியத்தில் நாம்
 
 
 

35
இனங்காணுவதும், பாரதியின் ஏனைய திறனாற்றல்களை அதிகம் மதிப்பிட உதவுவதில்லை. தவிரவும், தமிழ்ப் புனைகதைத் துறையில் குறிப்பிட்டுப் பேசுமளவிற்கு அவன் படைப்புகள் அமையவில்லை. அதாவது. வ.வே.சு. ஐயர், புதுமைப்பித்தன் போன்றோ, ராஜம் அய்யர், மாதவையா, வேதநாயகம் பிள்ளை போன்றோ,
APavašaéZý ZZZYava/
புனைகதைத் துறையில் முன்னோடியாக அவன் விளங்க வில்லை. இருந்த போதிலும் அடிப்படையில் அவன் கவிஞனாக இருப்பதனால் அவன் கவித்துவப் பாங்காக மிளிர்ந்தமையும் குறிப்பிடத்தக்கவை. ')"
புனைகதை என்னும் பொழுது நாம் நாவல், சிறு கதை ஆகிய இரண்டையுமே மனதிற்கொண்டு அளவிட முற்படுகிறோம். இன்று சிறுகதை,நாவல் ஆகியன தமிழில் வளர்ச்சியடைந்து வருவதைக் காண்கிறோம். உலக நாவல் இலக்கியம், நவீன தொடர்பு சாதனங்களின் தாக்கமும், வளர்ச்சியும் காரணமாக புதுப்புது வடிவங்களில் வெ:ள்வருகின்றது.
இத்தகைய வளர்ச்சி நிலை, பாரதி கதைகள் எழுதிய காலத்தில் இருக்கவில்லை என்பது வெளிப்படை எனவே, அவனது காலக் கட்டத்தில் அவனுக்கு பரிச்சயமாயிருந்த உத்தி முறைகளைப் பயன்படுத்தியே அவன் புனை கதைகளைப் படைத்ததில் ஒன்றும் வியப்பில்லை. தவிரவும், சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு கலைஞன் அவன் அது காரணமாகக் கதைகளைச் சாதாரண மக்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினான். சாதாரண மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அவன், ஐரோப்பியச்

Page 26
36 - செல்வாக்கினால் தமிழிலும் புகுந்த புனைகதை என்ற நவீன வடிவத்தைக் கையாண்டான்.
ஒகு திறன/ப்வாணரின்
பாரதி எழுதிய கதைகள் அதிகமில்லை. அவன் எழுதிய கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பூம்புகார் பிரசுரம் என்ற நிறுவனம், 1977 இல் ஒரு தொகுதியை வெளியிட்டது.
ஞானரதம்
அவன் எழுதிய கதைகளுள் ஒன்று ஞானரதம்' இது ஒரு நீண்ட கதை. சுமார் 70 பக்கங்களுக்கு நீளும் இந்தக் கதையைச் சிறுகதையென்றோ குறுநாவலென்றோ விவரிக்க முடியாதாயினும், வசனத்தில் எழுதப்பட்ட ஒரு குறுங்காப்பியம் எனலாம். இந்தக் கதையில், கவிஞன் பாரதியின் அடக்கப்பட்ட ஏக்கங்கள் மனோரதியப் பாங்கில் சொல்லுருவம் பெறுகின்றன. கற்பனைத் தேரில் ஏறி அவன், செளந்தர்யம், அழகு, உண்மை, இலாவண்யம் போன்றவை என்றால் என்ன என்று விளக்குகிறான். அதே சமயத்தில் அவன் நிதர்சன உலகில் காலூன்றிக் கொண்டே சிறிது நேரம், நடப்புலக வாழ்வில் நின்று தப்பியோடிச் செல்கிறான். பிறகு, நிஜ வாழ்க்கைக்கே திரும்பி இடர்ப்பாடுகளை எதிர் நோக்குகிறான்.
"ஞானரதம்" கதையைப் பீடிகையுடன் பாரதி ஆரம்பிக்கிறான்.
"பின்மாலைப்பொழுது திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில் கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் மஞ்சத்தின் மீது படுத்துக் கொண்டிருந்தேன்."

APavajaŽzZzŽ ZZzavav 37
இவ்வாறு ஆரம்பித்து, “சகல மனிதர்களிடத்திலும் ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீக ரதத்தைக் கொடுத்து இருக்கிறார். அது விரும்பிய திசைகளுக்கெல்லாம் போய் விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்து வரக்கடிய வல்லமை உடையது." என்று எழுதி பீடிகையை பாரதி முடிப்பது இவ்வாறுதான்.
".அந்த ரதத்தின் மீது ஏறிக் கொண்டேன். அதிலேறி நான் கண்டு வந்த காட்சிகளும் அவற்றின் அற்புதங்களுமே இந்தப் புஸ்தகத்தில் எழுதப் படுகின்றன." −
பாரதி ஞானரதம் என்ற தனது கதையிலே ஞானத் தேரிலேறி, உபசாந்தி லோகம் (கவலையற்ற வாழ்வு), கந்தர்வ லோகம் (இன்ப உலகம்), சத்திய லோகம், மண்ணுகலம், தர்ம லோகம் ஆகிய இடங்களுக்குத் தான் சென்று திரும்புவதாக எழுதியிருக்கிறான். இந்த லோகங்களிலே, கந்தர்வ லோகத்தில் பந்தாட்டம், மதனன் விழா, பறவைக் கூத்து, கடற்கரை, அருவி ஆகியன பற்றி அழகாக வர்ணித்துச் செல்கிறான். இவ்வருணனையின் அடிப்படையிற்றான்தமிழ்த் திரைப்படங்கள் அக்காலத்தில் புராணக் காட்சிகளை உள்ளடக்கினவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழ் திரைப்படம் மாத்திரமல்ல, தமிழ்ச் சிறுகதை மன்னர்களில் ஒருவராகிய புதுமைப்பித்தனும், பாரதி கதைகளினால் கவரப்பட்டவர் என்பதற்குச் சான்றாக, புதுமைப்பித்தன் கையாண்ட நகைச்சுவையான கிண்டல் நடை அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

Page 27
38 ്ത്ര ക്രമങ്ങZബ്ബിങ് இதற்கு உதாரணமாக மண்ணுலகம் என்ற பகுதியில் வரும்ச சில பந்திகளைக் குறிப்பிடலாம். வாசகனைத் தன்னோடு அழைத்துச் செல்லும் ரீதியில், தன்மை, ஒருமையில், களிப்பும், சுய கிண்டலும், கவின் மெருகும் கூடிய நடையிலே பாரதி இக்கதையை, ஞானரதத்தை எழுதியிருக்கிறான்.
மனதைப் பற்றிக் குறிப்பிடும் பாரதி,
“நாளேற நாளேற நான் வேறு, இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையே பெரும்பாலும் மறந்துபோகும் வண்ணமாக எனக்கு இம்மோகினியிடத்தில் பிரேமை மிகுந்து போய் விட்டது." என்கிறான்.
வேதாந்தக் கருத்துக்களை இடையிடையே பெய்து ஞானரதம்" கதையைப் பாரதி எழுதியிருக்கிறான். அதே சமயம் மண்ணுலகில் காலூன்றிய வராதலால், ஓர் இரட்டை அல்லது இருமையை பாரதி தரிசனத்தில் நாம் காணலாம்.
"எனக்கு உலக வாழ்க்கையே இந்த மனத்தினால் தானே எய்திற்று. இதை ஈசனென்றே சொல்லத்தகும்" என்ற வரிகளையும் உதாரணங் காட்டலாம்.
விவரணை, உரையாடல் நாட்குறிப்பு, பேட்டி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி இக்கதையை எழுதி இருக்கும் பாரதி, கிரேக்க காவியங்களில் பாதாள உலக வருணனை அமைந்தாற் போன்றும் சிற்சில பகுதிகளை விவரிக்கிறான்.
ஞானரதம்' என்ற கதை மூலம் சுப்பிரமணிய பாரதி இந்தியத் தத்துவார்த்தப் பண்பாட்டை விளக்குகிறான். நவீன மனிதன் எவ்வாறு இந்து தர்மத்தைப் புரிந்து

4Pav4šakŽzý ZVZžava/ 39 கொள்ளலாம் என்று பாரதி இக்கதையிலே வழி காட்டியிருக்கிறான்.
ாகவதந்திரக் கதைகள்
அதே போன்று இந்துப் பண்பாட்டின், அரசியலின், தர்மத்தின், சமூகத்தின் விளக்கமும் என்ன என்பதற்கு அவன் கூறும் பதில் போல, அவனுடைய நவதந்திரக் கதைகள்' அமைந்துள்ளன. ஆயிரத்திரவு' கதைகள் போல, சங்கிலித் தொடராகப் பல கிளைக் கதைகளை இக்கதைகள் ஊடாக பாரதி எழுதியிருக்கிறான். நவதந்திரக் கதைகள் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. பஞ்ச தந்திரக் கதைகள் எழுதப்பட்டது போல, இக்கதை களை பாரதி எழுத முனைந்தாலும் சிறுவர் இலக்கியமாக மாத்திரமன்றி, சுவையான படைப்புகளாகவும், பெரியவர்க்கும் பாடம் படிப்பிக்கும் கதைகளாகவும் இவை அமைந்துள்ளன.
நவதந்திரக் கதைகளில், பாரதி பிரெஞ்சுப் புரட்சியின்தாரக மந்திரமாகிய சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்பவற்றையும் கொலம்பஸ் முட்டையுடைத்த கதையையும் பொருத்தமான முறையில் சேர்ந்திருக்கிறான். நவீன சிந்தனைகளைத் தழுவிப் பழைய முறையில் அவன் கதை சொல்கிறான். சிறுகதை, நாவல் வகுதிகளுக்குள் இக்கதைகளடங்கா.
சந்திரிகையின் கதை
பாரதி எழுதிய மற்றொரு நீண்ட கதை தான் சந்திரிகையின் கதை. சுமார் 105 பக்கங்கள் வரையிலு
மானது இக்கதை.

Page 28
40 ്ത്ര ക്രീമീയബീര്
பெண் விடுதலை, விதவை மறுமணம், சாதி ஒழிப்பு
பிராமணர் பண்பும் பயனும், பார்ப்பனர் குறைபாடுகள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியது. இக்கதை, சுவாரஸ்யமாக எழுதப்பட்டாலும், இடையிடையே கதாசிரியனான பாரதி, கதையோடு ஒட்டாத விவரங் களையும் விஸ்தாரமாக எழுதுவதனால், விறுவிறுப்பு குறைகிறது. தெலுங்கிலே சில சம்பாஷணைகளை எழுதியிருக்கிறான். வடமொழி மாத்திரமன்றி, ஹிந்தி, உருது போன்ற மொழிச் சொற்களையும் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறான் பாரதி.
'சந்திரிகையின் கதை"யில் பாரதி மனித பாத்திரங் களை இயல்பாகவும் நடைமுறை யதார்த்தத்திற்கு இணங்கியதாகவும் படைத்திருக்கிறான். விசாலாட்சி என்ற விதவைக்கும், ஒரு பாலசந்நியாசிக்கும் மையல் உண்டாவதை நியாயப்படுத்துகிறான் பாரதி. ஜீவன் முக்தி பற்றி பாரதி எழுதியிருப்பதையும் கவனியுங்கள். "பொருளில்லாவிடினும் கல்வியில்லாவிடினும் ஒருவன், ஜீவன் முக்திபதமெய்தலாம். ஆனால் காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன், முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது."
பாரதி இக்கதையிலே தர்மிஷ்டர், அதர்மிஷ்டர் என்ற வார்ததைகளையும் பிரயோகிக்கிறான்.
கதையில் எல்லாவற்றையுமே சொல்லி விட வேண்டும் என்று பாரதி விரும்பினான். அதனால், வடிவ அம்சங்களுக்கு அதாவது கட்டுக்கோப்புக்கு அதிக கவனஞ் செலுத்தாது பெருங்குறையாகத்தானிருக்கிறது.
சந்திரிகையின் கதையிலுள்ள விடுதலை என்ற

áé?av4šaéZý Z/zzava/ 47
அத்தியாயத்தின் இறுதியில் அவனே இந்தக் குறைபாட்டை உணர்ந்து எழுதியிருக்கிறான்.
பாரதியை ஒரு சிறந்த புனைகதையாளன் என்று கருத முடியாவிட்டாலும் அவன் ஒரு தலைசிறந்த சிந்தனையாளன், பக்குவம் பெற்ற ஞானி, ஒரு மகாகவி என்று கூறுவதில் தப்பில்லை. அவனுடைய கதைகளில், லெளகிக வாழ்க்கை பற்றியும், ஆன்மீக வாழ்க்கை பற்றியும் அற்புதமான விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. 'சந்திரிகையின் கதை' என்று தலைப்பிட்டாலும், இக்கதையில் பெரும் பகுதி சந்திரிகையின் அத்தையான விசாலாட்சி பற்றியது. பிற்பகுதி சோம நாதையர், அவர் மனைவி முத்தம்மாவின் தாம்பத்திய வாழ்வு பற்றியது. நவதந்திரக் கதைகள்' போலவே சந்திரிகையின் கதை'யும் சட்டென்று முடிவடைகின்றது. கதைத் தொகுப்பில் ஒரு தருக்கரீதியான தொடர்பையும், முடிவையும் கானோம்.
சின்னச் சங்கரன் கதை
அதே சமயத்தில், ஐரோப்பிய புகைகதை ஆரம்ப முயற்சிகள் பற்றி பாரதி அறிந்திருந்தான் என்பதும் அவதானிக்கத்தக்கது. உதாரணமாக, 'சின்னச் சங்கரன் கதை' ஆரம்பத்திலே சுப்ரமண்ய பாரதி இவ்வாறு எழுதுகிறான் :
"நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடி தொடங்கி கதாநாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு வளர்ப்பெல்லாம் கிரமமாகச் சொல்லிக்

Page 29
42 ஒரு திரணசர்வாணரின் கொண்டு போவது வழக்கம். நவீன ஐரோப்பியக் கதைகளிலே பெரும் பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப் போல கதையை நட்ட நடுவில் தொடங்கு கிறார்கள். பிறகு போகப் போக கதாநாயகனுடைய பூர்வ விருத்தாந்தங்கள் தெரிந்து கொண்டேபோகும்."
இது அவர்களுடைய வழி என்று கூறி 'சின்னச் சங்கரன் கதை'யை இந்திய பழைய மரப்பிற்கிணங்கவும், ஐரோப்பிய ஆரம்ப மரபுப் படியும் பாரதி எழுதி இருக்கிறான். இருந்த போதிலும் திடீரென்று அறுந்த நூல் போல, கதை அந்தரத்தில் நிற்கிறது.
பாத்திரங்கள் பேசுவதை வேறுபடுத்த மேற்கோள் குறிகள் இடுவது வழக்கம். ஆனால், இக்கதையில் பாரதி, தனது விவரணையுடன் சேர்த்து, ஜமீந்தார் பாத்திரம் பேசும் பேச்சையும் கொச்சை மொழியில் விசேடமாக எழுதி இருக்கிறான். சின்னச் சங்கரன் கதையில் சிவைதாமோதரம் பிள்ளை, சுந்தரம்பிள்ளை, ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் பெயர்களும் வருகின்றன.
ஆறில் ஒரு பங்கு
பாரதி எழுதிய குறுநாவல் என ஆறில் ஒரு பங்கு" என்ற கதையைக் குறிப்பிடலாம். ஐந்து அத்தியாயங்களாக இக்கதையைளழுதியிருக்கிறான்.இக்கதையின்முகவுரையிலே, "இந்நூலை பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து
நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரகூதிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த

43 வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்" என்று பாரதி குறிப்பிட்டிருக்கிறான்.
பாரதியின் காதல், தேசியம், உணர்வு, மற்றும் முற்போக்கான கருத்துகளை உள்ளடக்குவதாக இக்கதை அமைந்துள்ளது. இக்கதையில் வரும் ஒரு பகுதியைப் பாருங்கள். "வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம், புரசைவாக்கம் முழுதும் நித்திரையி லிருந்தது. இரண்டு ஜீவன்கள் விழித்து இருந்தன. நான் ஒன்று, மற்றொன்று அவள்."
ിക്സീഥ? Zഞഖ
பாரதியின் வடநாட்டுப் பிரயாண அனுபவங்கள் இக்கதையில் இடம் பெற்றுள்ளன.
ஸ்வரண் குமாரி
"ஸ்வரண் குமாரி" என்ற தலைப்பில் ஐந்து அத்தியாயங்களில் மற்றொரு நெடுங்கதையையும் பாரதி எழுதியிருக்கிறான். இது ஒரு பிரசாரக்கதை. தேசப்பற்றை வலியுறுத்தக் காதல், கடமை, வைதீகம் போன்ற பற்றின் மோதல் மூலமாக சித்திரம் ஒன்றை பாரதி வரைந்து உள்ளான்.
வேடிக்கைக் கதைகள்
ஞானரதம், நவதந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை, ஆறில் ஒரு பங்கு, ஸ்வரண் f குமாரி ஆகியவற்றுடன், 35 சிறிய கதைகளை வேடிக்கைக் கதைகள் என்ற பெயரில் பாரதி எழுதியிருக்கிறான். "குதிரைக்கொம்பு" என்ற கதையில், இராமாயணக் கதைச் சுருக்கத்தை இராவணன் பார்வையில் தந்திருக்கிறான்.

Page 30
44 இதன் படி இராமாயணக் கதை நகைச்சுவையாகத்
திரிக்கப்பட்டுள்ளது.
മത്ര ക്രീമഞ്ഞZബ്ബീര്
வேடிக்கைக் கதைகள் என்ற பகுதியில் இடம் பெறுவதாகப் "பிரார்த்தனை” என்ற தலைப்பிலான ஒரு சிறு பகுதியைச் சிலர் கருதுகின்றனர். இது பொருத்தமே இல்லை. அப்பகுதி இதுதான் :
"கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும் நடு வயதிற்கு முள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க."
"வேடிக்கைக் கதைகள்" என்ற பகுதியிலே, 'காக்காய்ப் பார்லிமென்ட்" என்ற கதையில் பாரதி இவ்வாறு எழுதியிருக்கிறான்.
"பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின்மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ? என்று எண்ணிச் சில இலக்கணகாரர்கள் சண்டைக்கு வரக்கூடும். அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கிறது. 'போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது' என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்கிறேன். அதைப் பற்றி இபபோது பேச்சில்லை” இவ்வாறு நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பாரதி எழுதிச் செல்கிறான்.

4/5
രക്കിയz’ Zമയ
இயற்கை வழிபாடு, சம தர்மம், வேதாந்தம், தேசப்பற்று, மொழிப்பற்று, பெண் விடுதலை, காதல் போன்ற விஷயங்களைப் பற்றியே தமது கதைகளிலும் சுப்ரமண்ய பாரதி எழுதியுள்ளான்.
இக்கட்டுரையில் பாரதி எழுதிய கதைகள் பற்றிய சில அறிமுகத் தகவல்களையும், விமர்சனக் குறிப்பு களையும் படித்தீர்கள். அவனுடைய புனைகதைகள் தமிழுக்குச் செழுமை ஊட்டியுள்ளன. அவனுடைய கதைகள் சிலவற்றைப் பள்ளிக் கூட மாணவர் பாட நூல்களிலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான திறனாய்வுப் பயிற்சிகளிலும் சேர்த்துக் கொள்ளல் விரும்பத்தக்கது.
பாரதியின் தரிசனத்தை அவன் எழுதிய புனை கதைகள் மூலமும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
(தினகரன் வாரமஞ்சரி-மே 22,1982)

Page 31
46
6ിDബrമ്
அழியாச்சுடர்
மெள. என்ற சிறுகதை ஆசிரியர் எழுதிய
கதைகளுள் ஒன்றின் பெயர் அழியாச்சுடர். மெளனியின் கதைப் பொருள்கள் (ஆங்கிலத்தில் "தீம்ஸ்") தத்துவப் பாங்கானவை என்று நாம் கருத இடமுண்டு; அப்படி நாம் கருதினால், அப்பாங்கின் ஓர் அசைவை, "அழியாச்சுடர்" கதையில் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அக்கதையில், மெளனியின் தத்துவ நோக்கு, எவ்விதம் பரிவர்த்தனை செய்யப்படுகின்றது என்பதைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
"அழியாச் சுடர்" என்ற கதையை வாசகர்கள் முதலில் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது தான், இங்கு அறிமுகப்படுத்தப்படும் பகுதிகளைத்
 
 
 
 

47
இலக்கிz7 ZZவை !
தக்கபடி இணங்கண்டுகொள்ள முடியும். எனினும்,
அப்படி இனங்கண்டுகொள்வதற்கு வசதியாக, அக்கதையி லிருந்து சிற்சில பகுதிகளைப் பிரித்தெடுத்து மீளத் தருகிறேன். முதலில் கதையின்பிற்பகுதியுடன் ஆரம்பிப்போம். அடைப்புக் குறிகளுக்குள் எனது விளக்கங்களைச் சுருக்கமாகக் காணலாம்.
வாக்கிய அமைதி
"அன்று முதல் நான் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டேன். எதற்காக நிறுத்தினேன் என்பது எனக்குத் தெரியாது. இந்த மாதிரி வாக்கிய அமைதிகளில் தமிழ் எழுத்தாளர்கள் அன்று எழுதியதில்லை. இன்றும் அப்படி எல்லாரும் எழுதுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது. "சுபாவமாகத் தான் நின்றுவிட்டது என்று நினைத்தேன்" இந்தப் பந்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் கருத்துகள் அல்லது வேண்டுமானால் எண்ணப் போக்குகள் என்று சொல்வோமே, அவை “எக்ஸிஸ்டென்ஷலிஸ" தத்துவப் போக்குகளுக்கு இணக்கமானவை. இந்தப் பந்தியில் பேசும் குரல் கதாநாயகனுடையது. தொடர்ந்தும் கதாநாயகன் கதாசிரியரிடம் பேசுகிறான். கேட்டுப் பாருங்கள்.)
"நேற்று இரவு என் மனது நிம்மதி கொண்டிருக்க வில்லை. எங்கெங்கோ அலையத் தொடங்கியது. கோவிலுக்குச் சென்று ஈசுவர தரிசனம் செய்து வரலா மெனப் புறப்பட்டேன். இரவில், நாழிகை கழித்தே சென்றேன். அதிக கூட்டமில்லாமல் இருக்க வேண்டு

Page 32
48
மென்பது தான் என்னுடைய எண்ணம். பெரிய கோபுர வாயிலைக் கடக்கும்போதே, எட்டிய சுவாமியின் கர்ப்பக்
്ത്ര ക്രീമമ്മീയമബീജ്
கிருகம் தெரியும்.
"வெகு காலமாக, ஜோதிகொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில், தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு மட்டும் லிங்கத்தருகில் எரிந்துகொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து, பிறகு பழையபடியே அமைதியில் தெரிந்தது. இது துரிதப் படிமம் அல்லவா? தாக்கமான ஓர் உத்தி என்று உங்களுக்குப் படவில்லையா?) யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள் சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க்கொண்டிருந்தேன்.
"உலகின் கடைசி மனிதன் வழிபாட்டை முடித்துக் கொண்டு, அநந்தத்திலும் அவியாத ஒளியை உலகில் விட்டுச் சென்றது போலத் தோன்றியது அந்த மறைவும் தோற்றமும். இது ஆசிரியரின் தத்தவ ரீதியான சமயக் கோட்பாட்டைக் கோடி காட்டுகிறது) தூண்டப்படாது அணையவிருந்த என்னுள் எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது. மேலும், கோவிலில் நான் எண்ணியபடி ஒருவரும் இல்லாமல் இருக்கவில்லை.
"அவளுக்கு இப்போது இருபத்திரண்டு வயது இருக்கலாம். அவளை இப்போது கோவிலில் கண்டதும், என் மனது வேதனை கொண்டது. எதிர்பாராது நேர்ந்த இந்தச் சந்திப்பினால் (பல வருடங்களுக்குப்பின் அந்தப் பெண்ணைக் கதாநாயகன் இங்கு சந்திக்கிறான். அவளிடம்

4PavašaŕŽzý zVzŕava/ 49 ஒரு வகை வெறுப்புக் கொள்ளலானேன். அவள் என்னை அறிந்து கொள்ளவில்லை என நினைத்தேன். இப்போது என்னுடைய நாகரிகப்போக்கு எண்ணங்கள் தடுமாறி மனம் மாற்றம் கொள்ளும் நிலையில் இருப்பதனால், அவளுடைய அழுத்தலும் நாகரிக நாஸ9க்கும் எனக்கும் சிறிது ஆறுதலைக் கொடுத்தன. நான் முன்பு அவள் காதுகேட்கச் சொன்னவற்றை நினைத்துக் கொண்டபோது ("உனக்காக நான் எது செய்யவும் காத்திருக்கிறேன். எதையும் செய்ய முடியும்.") என்னையே வெறுத்துக் கொள்ளாதபடி அவள் புதுத்தோற்றம் ஆறுதல் கொடுத்தது. (முரண்பாடான மனச் சுழிவுகளைப் பிரமாதமாகச் சித்திரித்து வருகிறார்) முழு வேகத்தோடு அவளை வெறுத்தேன். ஆனால், அவள் கடவுளின் முன்பு தியானத்தில் நிற்கும் போது, தன்னுடைய மேற்பூச்சை அறவே அழித்து விட்டாள். கடவுளின் முன்பு மனிதர்கள் எவ்வளவு எழில் கொள்ள முடிகிறது, எத்தகைய மனக் கிளர்ச்சிக்கு உடன்படுதல் முடிகிறது என்பதை அவளைப் பார்த்ததும் நான் உணர்ந்தேன். (இங்கு கதாசிரியர், கதாநாயகனுடாகத் தனது சமயச்சார்பான தத்துவக் கோட்பாட்டைக் கோடி காட்டுவதைக் காண்க)
குறித்த மனோநிலை
"அவள் தியானத்தின் மகிமை என்னைப் பைத்திய மாக்கிவிட்டது. வெறித்து வெறுமனே நிற்கச் செய்தது. ஒரு இன்ப மயம், ஒரு பரவசம், திரும்பிய அவள் என்னைப் பார்த்ததும் கண்டுகொண்டுவிட்டாள். எதிரில் நின்ற தூணை உன்னிப்பாய், அவள் சிறிது நேரம் பார்த்தாள்.

Page 33
50 ィ ്ത്ര ക്രീമഞ്ഞ/ZബZിങ് என் வாக்கின் அழியாத சாகூழியாக அமைந்து நின்ற அந்த யாளி எழுந்து நின்று கூத்தாடியதைத் தான் நான் பார்த்தேன். (இது யதார்த்தமாக இல்லையே என்று வாசகர்கள் அங்கலாய்க்கத் தேவையில்லை. இங்கு கதாநாயகனின் குறிப்பிட்ட ஒரு மனோநிலை அவனுக்கு அவ்விடத்தில் ஒரு மனப் பிராந்தியைக் (ஹலுளவினேஷன்) கொடுக்கிறது. உளவியல் முறைப்படி பார்த்தால் அவ்விதம் அந்த மனப்பிராந்தி வரத்தான் செய்யும். அந்த யாளி வெறுமனே ஒரு குறியீடாக இல்லை. அது அதற்கும் மேலும் கதாநாயகனின் சஞ்சல மனோநிலையைக் குறிப்பிட்டு உணர்த்தும் பணியைச் செய்கிறது.) மேலே உற்று நோக்கிய போது, ஐயோ! மற்றொரு யாளி வெகுண்டு, குனிந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் பார்க்குமிடத்தைப் பார்த்து நின்ற என் மனம், பதைத்துவிட்டது. என்னை நோக்கி அவள் ஏதோ ஆக்கினை இடுபவளாகத் தேனர்றினாள். அவள் பார்வை என்னை ஊடுருவித் துளைத்துச் சென்றது. ஒருவன், தான் உள்ளூர உணர்ந்த ரகசியத்தை, பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவதுபோல அவன் பார்வை என்னை விட்டு அகன்றது. இதுவும் ஒரு மனப் பிராந்திதான்) உணர்ச்சிகள் எண்ணங்களாக மாற யத்தனிக்குமுன் அவள் சொன்னது என்ன என்பதை மனம் புரிந்து கொள்ளு முன் அவள் போய் விட்டாள். குனிந்த என் தலை நிமிர்ந்த போது, அவள் மறுபடியும் என் பக்கம் திரும்பியதை நான் பார்த்தேன். ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இரு மணிகள் மின்னுவது போல இரு

57
4928vasa%2z/Z7 4zzzzaz?/az/ . . . . சொட்டுக் கண்ணிர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது." (ஒரு துரித சம்பவத்தின் மனோவாட்சி அற்புதமாக ஆசிரியரால் சித்திரிக்கப்படுகிறது)
"நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ காணப்போகிறாய்” இங்கும் ஆசிரியரின் சமயரீதியான தத்துவக் கோட்பாட்டைக்
காணலாம்.)
"அவள் என்ன சொன்னாள் - அவள் என்ன செய்யச் சொன்னாள்? நான் என்ன செய்ய இருக்கிறது? எல்லாம் ஒரு கனவு தானா? (இது ஒரு வித "ரொமான்டிக் பெளவிமிஸம்" கற்பனாலய சோர்வு மனப்பான்மை) அவள் பேசவில்லை. சப்தத்தில் என்ன இருக்கிறது? பேச்சில், உருவில்? சீ சீ எல்லாம் அர்த்தமற்றவை; உண்மையை உணர்த்த முடியாதவை. எல்லாம் இருளடைகின்றன. இதனை சூனியவாதம் நிஹிலிஸம்) என்பார்கள். இறுகிய பிடிட் பிலும் துவண்டு புகை போன்று நழுவுகின்றன. ஆனால், எல்லாம் மாயை என்பதை மட்டும் நிச்சயமாக உணர்த்தாது "மேலே அதோ" என்று காட்டியும் நாம் பார்த்து அதன் வழியே போகத் தெரிந்துகொள்ளு முன் மறையத் தான் இந்தச் சுட்டு விரல்கள் இருக்கின்றன. இருண்ட வழித் தடுமாற்றத்தில் அகஸ்மாத்தாகத் தாண்டிக் குதித்தலிலாவது சரியான வழியை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கை தான் நமக்கு இருப்பது." (இந்த மாதிரியான பகுதிகளைக் கொண்டு தான், மெள்னரியை கஃப்கா என்ற ஜேர்மன் மொழி நாவலாசிரியருடன்
ஒப்பிடத் துணிகிறோம்.)

Page 34
52 — മെ ക്രമങ്ങZബ്ബിങ് "அதோ அந்த மரத்தைப் பார். அதன் வரிக்கப்பட்ட சிப்பிக் கோடுகள் அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது காணாது தெரியவில்லையா? மெல்லென ஆடும் போது அது வானவெளியில் தேடுகிறது. குருட்டுத்தனமாகத்தானே அங்கே தேடுகிறது." இது ஒரு கற்பனாலய அல்லல் அல்லது ஏக்கம் என்று கூறலாம்.)
விவரண ஆசிரியர்
இதுவரை, கதாநாயகன் பேசியதைக் கண்டோம். இனி மெளனி ஒரு விவரண ஆசிரியராக எவ்வாறு தன் கதையை முடிக்கிறார் என்று பார்ப்போம். அவர் கதை சொல்லும் பொழுது யதார்த்த பூர்வமாகத்தான் சொல்கிறார். ஆனால், அவர் கதாபாத்திரங்கள்தான் கற்பனா - ஏக்கம் (ரொமான்டிக் நொஸ்டால்ஜியா), சூனியவாதம் (நிஹிலிஸம்) இருப்புவாதம் (எக்ஸிஸ்டென்ஷலிஸம்), மனப்பிராந்தி (ஹலுளவினேஷன்), போன்ற போக்குகளை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். மெளனி, பின்வருமாறு கதையை முடிக்கிறார் :
'நன்றாக இருட்டிவிட்டது. அவன் வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது, நான் சொல்லிக்கொள்ளாமலே வெளிக்கிளம்பி விட்டேன்."
"வீதியில் வந்ததும் உயர உற்று நோக்கினேன், இரவின் வளைந்த வானக் கற்பலகையில், குழந்தைகள் புள்ளியிட்டதுபோல எண்ணிலா நகூடித்திரங்கள் தெரிந்தன. தத்தம் பிரகாசத்தை மினுக்கிமினுக்கி எவ்வளவு தான் கொட்டினாலும், அவைகளுக்கு உருகி மடிந்துபட, அழிவே கிடையாது போல, ஜொலித்தன. மேலே

4PavafaéZZZý ZVzzava/ め3 இருப்பதை அறிய முடியாது, தளர்ச்சியுடன் ஒரு பெருமூச். செறிந்தேன். நடந்து நடந்து வீட்டையடைந்தேன்."
"இன்று காலையில் அவனை (கதாநாயகனை)க் காணோம். அவன் எங்கே எதற்காகச் சென்றானோ எனக்குத் தெரியாது. அவனுக்கே தெரியுமோ என்பதும் எனக்குத் தெரியாது. எல்லாம் அவனுக்கு (கடவுள்) தெரியும் என்ற எண்ணந்தான் எனக்கு. அவன் கடவுள் என்பது இருந்தால்."
இனி, அழியாச்சுடர் என்ற இக்கதையில், மெளனி, ஆசிரியர் கூற்றாக என்ன கதை கூறுகிறார் என்று பார்ப்போம். அந்தக் கதை அவரது நண்பர் ஒருவரின் அனுபவம் பற்றியது. அந்த அனுபவத்தை அந்நண்பர் மூலமாகவே எடுத்துச் சொல்கிறார். அந்த அனுபவம் பற்றி ஆசிரியர் எட்ட நின்றும் விமர்சிக்கிறார். அப்படி விமர்சிக்கும் பொழுது ஆசிரியரிடம் சிந்தனைத் தெளிவு இருக்கிறது. கதையும் யதார்த்தமாக இருக்கிறது. ஆனால், நண்.1னைப் பேச வைக்கும் பொழுது ஒரு வித ழனோரதியப் பார்வை (ரொமான்டிக் அப்ரோச்) விழுகிறது. இந்தப் பார்வை தவிர்க்க முடியாமல் தான் விழுகிறது. ஏனென்றால் அந்த நண்பரின் அனுபவம் சிருங்கார உணர்ச்சி நிரம்பிய அனுபவம். ஆனால், அது வழமையான சிருங்கார உணர்ச்சி நிரம்பிய அனுபவம் போலில்லை. எனென்றால் அச்சிருங்கார அனுபவம் ஒருவித தத்துவக் கோட்பாட்டுக்கிணங்கியதாக - அறிவும் உணர்ச்சியும் மோதிடும் ஒரு தரிசனமாக - அமைகிறது. அந்தத் தத்துவக் கோட்பாட்டை, சுருங்கிய ஓரிரு சொற்களுக்குள் அடக்கி விளக்க முடியாது. அது பெரும்பாலும் 'மாயா வாதம்"

Page 35
54 ஒCத ക്രഞ്ഞസ്ഥിബീബ് என்ற இந்தியத்தத்துவத் தரிசனத்துக்கு ஒட்டியதாகவும் மேற்கத்திய இருப்புவாதத்திற்கு (எக்ஸிஸ்டென்ஷலிஸம்) நெருங்கியதாகவும் இருக்கிறது. இதனை விளக்குவதிலும் பார்க்க, இதன் மூலம் வாசகர் பெறும் அனுபவமே பெரிது. அந்த அனுபவத்தைப் பெறும் வாசகர், ஒரு கணப் பொழுதில், 'மெளனி" இக்கதை மூலம் என்ன சொல்ல
வருகிறார் என்பதைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைவார்கள்.
கதையின் அடி நாதம்
`፡ "மெளனி"இந்தக் கதையில் ஒரு மரத்தின் படிமத்தை இமெஜ்) வைத்துக் கொண்டு கதையின் அடிநாதமாக் உள்ள சுருதியை உருவகப்படுத்தி மீட்டுகிறார்.
. இக்கதையில் வரும் நண்பனை, ஆசிரியர்பார்க்கச் சென்றபோது, அவன் ஒரு மரத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த மரத்தை ஆசிரியரும் பார்த்தார். ஆசிரியர் அம்மரத்தை எப்படிப் பார்த்தார்? ,
இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்ட மரம் போன்ற தோற்றத்தை அளித்துக்கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு, தலைவிரி கோலத்தில் நின்று, மொளனமாகப் புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது. ஆகாயத்தில் பறந்து, திடீரென அம்மரக் கிளைகளில் உட்காரும் பகூதிகள் உயிர்நீத்தவையே போல், கிளைகளில் சமைந்து ஒன்றாகும். அவற்றின் கூவல்கள், மரண ஒலியாக, விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தன. சிறிது சென்று ஒன்றிரண்டாகப் புத்துயிர் பெற்றவை போலக் கிளைகளைவிட்டு ரிவ்வெனப் பறந்து சென்றன.

Ag?evašaéZý ZVzzava/ 55
அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. காலையிலிருந்து உக்கிரமான வெயிலில் பாதி மூடிய கண்களுடனும், வெற்றுவெளிப் பார்வையுடனும் கண்ட தோற்றங்கள், என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக்கிளர்ச்சிகளுக்குக் கீாரணமாயினவோ, என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை." / '
மேற்கண்ட இந்தப் பந்தியில், கதையில் வரும் பெண்ணைப் பகூரிகளுடன் ஒப்பிட்டும், மரத்தை வாழ்வின் புதிரான தன்மையுடன் ஒப்பிட்டும் காட்டாமல் காட்டுகிறார் ஆசிரியர். பெண்ண்ை மரத்துடனும் ஒப்பிடுகிறார். இன்னும் நுணுக்கமான அம்சங்கள் இதில் இருக்கின்றன. அவற்றை வாசகர்களின் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் எட்டிய அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்.
கேள்விப் பொருளாக விளங்கும் இவ்வையகமும், வாழ்வும் மனக்கிளர்ச்சி பெற்ற தனிமனிதர்களின் தனிப் பட்ட, ஒரேயொரு குறிப்பிட்ட உணர்ச்சி சுபாவத்தினால் எவ்விதம் தோற்றுகின்றன என்பதைத் தான் மெளனி இக்கதையில் காட்டுகிறார்.
மெளனியின் கதாநாயகன் இந்த மரத்தைப் பற்றி தனது அனுபவச் சித்திரிப்பைப் பின்வருமாறு தீட்டுகிறான்." "ஆமாம், அதுதான் (மரம்) ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கைவிரித்துத் தேடித் துழாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசைந்து, நிற்கிறது, ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை. மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள், கனத்து, மிதந்து வந்து அதன் மேல் தங்கும். தாங்காது

Page 36
56 தளர்ந்து ஆடும். விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது? அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஓங்கியா நிற்கிறது? எதற்காக?"
மேற்கண்ட இந்தப் பகுதியும் வெறுமையை, சூனியத்தை விளக்குவதற்காகத் தான் ஆசிரியரால் பொருத்தமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கதையில், பதின்மூன்று வயதுச் சிறுமியொருத்தி வருகிறாள். அவளை ஒன்பது வருடங்களுக்கு முன் கதாநாயகன் சந்தித்தான். அந்தச் சிருங்காரச் சம்பவத்தைக் கதாநாயகன் இரை மீட்கிறான். பின்பு இருபத்திரண்டு வயதான அப்பெண்ணைச் சந்தித்தான். அதன் விளைவுதான் அவன் மனக் கிளர்ச்சி. முன்னைய சிருங்காரச் சம்பவம் என்னவென்றால், இளைஞனான அவனை அச்சிறுமி அன்று பார்த்த பார்வை. அந்த வசீகரப் பார்வையில் மருண்ட கதாநாயகன், பின்னால் சென்றான்.
ஓகு திறன/ப்/ைனரின்
உருவமும் உள்ளடக்கமும்
"அவள் பின்னோடு உள் செல்ல என்னை இழுத்தது எது? எனக்கு தெரியவில்லை. அப்போதைய சிறுபிள்ளைத் தனமாக இருக்கலாம். காதல் - அது, இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக் குறைவு உண்டாகிறது. காரணமற்றே நடந்த காரியமும், காரணம் கொள்வதற்கு வேண்டி காரணம் தான் போலும்.
மேற்கண்ட பந்தியின் கடைசி வரிகள் எனக்கு "எக்ஸிஸ்டென்ஷலிஸ்" எழுத்தாளர்களான ஜ்வுான் போள் சாத்ரேயையும், அல்பேர் கெமுவையுமே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

57 மெளனி ஓர் உருவவாதி (ஆனால் அவர் வெறுமனே ஓர் உருவவாதி அல்ல. அவரது உள்ளடக்கம் கனமானது என்று கண்டோம்) என்ற அடிப்படையில் பார்த்தாலும் அவர் ஒர் அற்புதச் சிறு கதையாசிரியர். உருவம் அவருக்கு லளிதமாக வளைந்து கொடுக்கிறது அந்த உருவத்தில் ஓர் அம்சம் அல்லது கூறு என்று கீழ்க்காணும் பகுதியைப் போக்கோடு போக்காகக் காட்டலாம்.
ളിഞ്ചക്ക്സീമ Zല്ക്ക്
"ஈசுவர சந்நிதியில் நின்று தலைகுனிந்து அவள் மெளனமாகத் தியானத்தில் இருந்தாள், அவளுக்குப் பின், வெகு சமீபத்தில் நான் நின்றிருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடைவெளியாகக் கர்ப்பக்கிருக சரவிளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதைக் கண்டேன். அவள் கண்கள், விக்கிரகத் திற்குப் பின் சென்று வாழ்க்கையின் ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்பமயத்தைக் கண்டுகளித்தன போலும். எவ்வளவு நேரம் அப்படியோ தெரியாது. காலம் அவள் சந்நிதியில் சமைந்து நின்று விட்டது." (இது கதாநாயகனின் கூற்று.)
கதாசிரியர் மெளனி, விவரண நடையில் தரும் ஒரு விளக்கத்தைப் பாருங்கள் :
"என் நண்பன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் மனம் ஓடியது. அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது. கோவில் - சந்நிதானம் - ஆம், பகலிலும் பறக்கும் வெளவால்கள், பகலென்பதையே அறியாது தான் கோவிலில் உலவுகின்றன. பகல் ஒளி பாதிக்கு மேல் உட்புகத் தயங்கும். உள்ளே இரவின்மங்கிய வெளிச்சத்தில் சிலைகள் ஜீவகளை கொண்டு நிற்கின்றன. ஆழ்ந்த அனுபவத்திலும், அந்தரங்கத்திலும் மெளனமாகக்

Page 37
めa
கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிற்பித்தவைதானா கோவில்கள்? கொத்து விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். அதன் பிரகாசத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக் கூடாத திகைப்பைக் கொடுக்கும். அச்சந்நிதானம் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள் தானோ? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? என்பன போன்ற பிரச்சினைகளை என் மனம் எழுப்பிய போது ஒரு தரம் என் தேகம் முழுதும் மயிர்க்கூச்செறிந்தது.
"என் நண்பனின் பார்வை மகத்தானதாக இருந்தது. ஏதோ ஒரு வகையில் ஒரு ரகசியத்தை உணர்த்த அவன் பேச்சுக்கள் உன்னதமாக என் காதில் ஒலித்துக்கொண்டு இருந்தன. பேச்சினால் தன் உணர்ச்சிகளை வெளிச் சொல்ல முடியாது என நினைக்கும் போது அவன் சிறிது தயங்கி நிற்பான். அப்போது அவன் கண்கள் பிரகாசத் தோடு ஜொலிக்கும்."
മത്ര ക്രിത്രങ്ങരമീയബീജ്
மெளனியின் சிறுகதைகளில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் 'அழியாச் சுடர்", "பிரபஞ்ச கானம்' போன்ற ஓரிரு கதைகள் மெளனியின் மேதைத் தன்மையை ஒலிபரப்பிக்கொண்டே இருக்கும் என்பது எனது திடமான அபிப்பிராயம். -
(தினகரன் வாரமஞ்சரி ஜனவரி 13, 1966)
 

59
глублл ллалл75 புளியமரத்தின் கதை
ÖT és ராமசாமி நாவல், சிறுகதை, கவிதை, திறனாய்வு ஆகிய துறைகளில் ஈடுபட்டுப் பல இலக்கியத் தரமான வாசகர்க்ளுக்குத் திருப்திதரக் கூடிய படைப்பு களைத் தந்துள்ளார். இவருடைய படைப்புகளில் ஒன்று ஒரு புளிய மரத்தின் கதை. நான் அறிந்த மட்டில் மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன. இது. சுரா. யின் முதலாவது நாவல். என்னளவில் இவருடைய வெற்றிகரமான படைப்பு "ஜே.ஜே. சில குறிப்புகள்"
"சரஸ்வதி என்ற சிற்றேடு 1950 களின் இறுதியிலே சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை'யைத் தொடராக வெளியிட்டு வந்தது. ஆயினும் இவ்வேடு இடையில் நின்றுபோனதால், கதை தொடரவில்லை. நாவலாசிரியர் படைப்பு முழுமையாக 1966 இல் வெளி வந்தது.

Page 38
60 - ശ്ര ക്രിഗ്ഗമZിമീ இந்த நாவலின் முன்னுரையில் லேசான கிண்டலுடன் பின்வருமாறு எழுதினார்:
"தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபை திசை திருப்பி விட வேண்டுமென்றோ, உரு, உத்தி இத்தியாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளை யடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது.
"தமிழன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை. எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடை வெளிகளை நிரப்பவோ இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமை ஊட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்தி லேயே மாட்டிக் கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. எழுத்தாளன் தன்னுடைய பொறிகளுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும் முடிப்பிலும் அவனுடைய இரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்.
மொழி, செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள், தலை கீழாகச்

ളഭക്കീസ്ഥ Zങ്ങഖ 67 சொல்லிப் பழகி விட்டார்கள். சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள் கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல்
பழகி விட்டது."
புளியமரத்தின் கதை' என்ற இந்த நாவலின் மையப் பொருள் ஒரு புளிய மரம். புளிய மரச் சந்தியை மையமாக வைத்து, அக்கிராமமே விமர்சிக்கப்படுகிறது. வாழ்வதும் தாழ்வதும் பணத்தாலே என்பது போல, பாத்திரங்களின் ஏற்ற இறக்கங்கள் நுண்ணிய மனப் பிடிப்புடன் சித்திரிக்கப்படுகின்றன. வேஷதாரித்தனம், விடா முயற்சி, நயவஞ்சகப்பேச்சு, போலியுணர்வு, வாய் வீச்சு அரசியல் போன்றவை கலைத்துவமான முறையில் அங்கதச் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
. xx xx
இந்நாவலிலே எனக்குப் பிடித்த பகுதிகள் பல. அவற்றிலே சிலவற்றை மாதிரியாகத் தருகிறேன்.
a
"கிழடு தட்டுப்போன புளியமரத்தை சுந்தர ராமசாமி எப்படி ஒப்பிடுகிறார் பாருங்கள் : "தலை பஞ்சுப் பொதியாகி கண்களும் பஞ்சடைந்து, கூனிக் குறுகிப் போன கிழவி ஒருத்தி நிஷ்காம நிலையில் ஆழ்ந்து தன்னுள்ளே புதையுண்டிருக்கும் ஆனந்தத்தைத் தேடி அனுபவித்துக் கொண்டிருப்பது போல்தான் இருக்கும்."
ộ rộ rộ.
"கூட்டு உணர்ச்சியை வாங்கிக் கொண்டு ஒப்புக்கு போலித்தனம் என்று பழித்து வருகையிலேயே போலித்தனம்

Page 39
ό 2 — മത്ര ക്രമഞ്ഞരമബ്ബിങ്ങ് மனசைச் சொக்க வைத்துவிடுகிறது என்பது உண்மை தான்."
மனித சுபாவ முரண்பாட்டை நாவலாசிரியர்
குறிப்பிடுகிறார்.
இந்த நாவலிலே இஸக்கி என்ற பாத்திரம் வருகிறது. நாவலின் உச்சக் கட்டம் ஏற்படக் காரணமாயிருப்பவன் இஸக்கி அவனையும் அவன் செயலையும் நாவலாசிரியர் விபரிக்கிறார்:
'இஸக்கி காலேஜ் ரோடு வழியாக மண மேடை ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனுக்கு மட்டும் நிலா காய்கிறது போலிருக்கிறது. ஆடியாடியும் கும்பிடுகள் அநேகம் போட்டும், நின்று பேசியும், இழுத்து நிற்க வைத்துப்பேசியும், அட்டகாசமாகச் சிரித்தும் அவன் வந்து கொண்டிருக்கிறான். செய்திகளை லபக்கென்று பிடித்துவிட விரையும் பாய்ச்சல் புறப்பாடு அல்ல இது என்பது தெளிவு. அநேக சமயங்களில் அவன் அவசரமானவன். பிறருக்குத் தன் அவசரத்தை உணர்த்தும் அவசரம் அவனுடையது. அது அவன் ஒரு தினசரியின் ஓவியன் என்பதில் அவனுக்குக் கிடைக்கக் கூடிய கெளரவத்தின் முக்கியமான அம்சம். இவ்வாறு தென்றல் போல் புறப்பட்டு வருகிற சந்தர்ப்பங்களும் அருமையிலும் அருமையாய் வாய்ப்பதுண்டு. இன்று அவ்வாறே தான் ஒரு ஜேர்னலிஸ்டு என்பதோடு ஒரு கலைஞனுமானதால் அலுவல் மிகுந்த நாட்களில் சில பொழுதை இவ்வாறு ஒதுக்கி, சிருஷ்டி இலக்கியத்திற்கும் தன்னைத் தயார்

ളങ്ങള്ക്കZ Z(ബ് --— 63 செய்துகொள்ள வேண்டிய அவசியமும் உண்டு என்பதை உணர்ந்தவன் அவன். அவ்வாறு புறப்பட்டு வருகிற பொழுது சில அரிய நோக்குகள் ஏற்பட்டு சில அரிய காட்சிகள் பார்வைக்கு இலக்காகி, அதிலிருந்து சில அரிய கருத்துக்களும் தனக்கு உதயமாவது உண்டு எனத் தன்னைப் பார்க்க வருகிற வாசக விசிறிகளிடமும், இளம் எழுத்தாளர்களிடமும் அவன் சொல்வது வழக்கம். அடுத்து வரவிருப்பதே அவனுடைய மகோன்னதமான சிருஷ்டி என்றும் அவன் வாசகர்களுக்கு சொல்லி வந்தான். வாசகர்களுக்கு அது படிக்கக் கிடைக்கப் போவதில்லை. அது அச்சேறி முடிந்ததும் தடை செய்யப்பட்டு விடும் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமிருக்கவில்லை. இது சம்பந்தமான செய்திகள் தினசரிகளின் முன் பக்கங்களைப் பிடித்துக் கொள்ள, சட்டசபையிலம் சர்ச்சைக்கு இடமாகத்தான் செய்யும்."
"அவன் ஒரு எலும்புக் குச்சி. அவனுடைய சரீர வாகு அப்.டி. தாடை ஒட்டி மண்டை விரித்து, சைக்கிள் சீற்று மாதிரி மூஞ்சி. முகத்தைப் பார்த்ததுமே ஆழக்குழிகள் விழுந்துவிட்ட விழிகள் நம் பார்வையை உறுத்தும். அவை வெகுவாக இடுங்கினவை. சருமத்தில் உளியால் ஒரு இழுப்பு இழுத்து எடுத்தது போலவே இருக்கும். அவன் சிரிக்கும் பொழுது கண்கள் பூர்ணமாக மறைந்து விடுகின்றன. அவன் உண்மையாகவும் பொய்யாகவும் ரொம்பவும் சிரிப்பவன். ஆதலால், அவனுடைய கண்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது."

Page 40
64 മഗ്ര ക്രമബ/Za/ബീബ് புகழ் என்றால் என்ன? நாவலாசிரியர் சுந்தர
ராமசாமியின் வியாக்கியானம்;
"நமக்குத் தெரியாதவர் களும் நம்மைத் தெரிந்து வைத்திருப்பதிலுள்ள சுகம் தானே? அனுபவித்துப் பார்த்தவர்களுத் தான் அதன் அருமை தெரியும். அபார சுகம்தான் அது. சந்தேகம் இல்லை. ரோட்டில் நடந்து போகிற பொழுது பின்னாலிருந்து தன்னை சுட்டிக்காட்டி இன்னார் எனக் குசுகுசுத்து அறிமுகப்படுத்தும் குரல் காதில் விழுந்ததும், விழாத பாவனையில் சென்று விடுகிற சுகம் லேசானதா? புகைப்படத்தோடு பேச்சு தினசரிகளில் பிரசுரமாகிற பொழுது ஒரு பேரானந்த நிலை ஏற்படத்தான் செய்கிறது. மேலுக்கு எல்லாம் துறந்து விட்டது போல் காட்டிக் கொள்வது யாரால் தான் முடியாது? சுகம் சுகம்தான்."
Cox - ox x " இப்படி மனித பலவீனங்களை எல்லாம் தமது முதல் நாவலிலேயே சுந்தர ராமசாமி, சுட்டிக் காட்டியிருக்கிறார். நவீன தமிழ் எழுத்து பற்றிய விசாலமான பரிச்சயத்துக்குப் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்றென்பது எனது அகவயக் கணிப்பு.
(வீரகேசரி வார வெளியீடு)
 

65
(66)nifodill JIf 65/16
ஈழத்துச் சிறுகதை
முத்துத் தமிழ்ச் சிறு கதைத்துறை முன்னோடி களுள் ஒருவர் இலங்கையர்கோன். இலங்கையர்கோன் புனை பெயர். உண்மையான பெயர் ந.சிவஞானசுந்தரம். சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சிவஞானசுந்தரம் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார். இவர் எழுதிய விதானையார் வீட்டில், கொழும்பிலே கந்தையா, லண்டன் கந்தையா போன்ற வானொலி நாடகங்கள் பிரபல்யமடைந்தன. மாதவி மடந்தை, மிஸ்ரர் குகதாஸன், முதற்காதல், வெள்ளிப்பாதரசம் ஆகிய இவர் எழுதி வெளிவந்த நூல்கள். அரசாங்க சேவையில் காரியாதிகாரியாகப் பணிபுரிந்த இவர் 15-11-1961 இல் காலமானார்.

Page 41
66
n صه 20کویر تعییzzzz کهozzzz%۶ص இலங்கையர் கோன் என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்ட சிவஞானசுந்தரம் இலங்கையில் இலக்கியக் கோனாக விளங்க விரும்பியிருக்கலாம். அவருடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவனவாக அவர் எழுதிய சிறுகதைகளும், அவற்றில் இடம் பெறும் சொற் பிரயோகங்களும் அமைகின்றன.
மணிக்கொடி போன்ற இந்தியப் பத்திரிகைகளில் தமது சிறு கதைகளைப் பிரசுரித்த இலங்கையர் கோன், ஈழத்து வரலாற்றுச் சம்பவங்களைக் கற்பனை கலந்து எழுதியிருப்பதும், ஈழத்துப் பொது வழக்கில் உள்ள மரபுச் சொற்களைக் கொண்டு கதைகளைத் தீட்டியிருப்பதும், சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகத் தமது கதைகளில் நடமாடவிட்டிருப்பதும், பழந்தமிழ் இலக்கியத்தில் அவர் நன்கு பரிச்சயம் கொண்டிருந்தார் என்பதை உணர்த்தும். கவிதா படிமங்களைப் பயன்படுத்தி இருப்பதும் அவர் அக்காலத்திலேயே தனிப்பண்புகளைத் தமது எழுத்துக்களிற் பொறிக்க முனைந்தார் என்பதைக் காட்டுவன.
அக்காலப் பின்னணியில் இலங்கையர் கோன் படைப்புகள் அத்துணைச் சிறப்பிடம் பெற்றிருந்தாலும், ஈழத்து இலக்கியப் போக்குகளும், நெறிகளும் இன்று வழிபடுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளன என்பதைத் தொட்டுச் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ിക്കീസ്ഥ Z(മ 67
வெள்ளிப்பாதரசம் என்ற தொகுதியில் இடம் பெற்ற பதினைந்து கதைகளையும், ஒரே சீராய் நாம் படித்துப் பார்க்கும் போது, ஆசிரியர் தொடர்பாகத் தென்படுபவை: இலங்கையர் கோன் ஒரு மனோரதியவாதி அல்லது கற்பனாலயவாதி, மனிதாபிமானம் உடையவர். உத்தியோக அந்தஸ்து, மேதாவிலாசம் போன்றவற்றைப் பாராட்டுபவர் சாதிகளைப் பெயர் சொல்லியே அழைப்பவர். தமிழின் இனிமையில் வயப்பட்டவர். இழுமென்மொழியைப் பயன் படுத்துபவர். சமூக யதார்த்தப்பின்னணியில் பாத்திரங்களை வார்ப்பதை விட, மேம்போக்கான சில குண நலன்களின் அடிப்படையில் பாத்திரங்களைச் சித்திரிப்பவர். ஆழமான உணர்ச்சிகளைப் படிப்பவர்கள் மத்தியில் எழுப்புவதை விட மேலோட்டமான முறையில் சில கோடிகளை மட்டும் காட்டுபவர். சில வேளைகளிற் தாமே வலிந்து அறநெறி சார்ந்த உண்மைகளைக் கதையிற்புகுத்துபவர். இவை பொதுப்படையான அவதானிப்புகள்.
இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் பற்றி ஒவ்வொன்றாக ஆராயு முன்னர், மற்றும் ஒரு அடிப்படை யான குறிப்பையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையர் கோன் உள்ளடக்கச் சிறப்பில் கவனஞ் செலுத்துவதை விட உருவ அமைப்புக்கே அதிக கவனம் செலுத்தியுள்ளார். உருவ அமைப்பு என்னும் பொழுது கவிதை நடையே, இங்கு மனதிற் கொள்ளப் படுகிறது. புனைகதை மூலம் தமிழ் உரை நடைக்கு வளமூட்டிய ஈழத்து எழுத்தாளர்களுள், இலங்கையர்கோனுக்கு நிச்சயமான தோர் இடமுண்டு. இலங்கையர்கோன்

Page 42
68
உள்ளத்திலே ஒரு கவிஞன் என்பதனாற்றான், அவருடைய
മ്മ ക്രമബZബZിങ്ങ്
சொற் சித்திரப் படிமங்கள் புதுப்புனைவாய் அமைந்துள்ளன.
"அனுலா", "சீகிரிய", "யாழ்ப்பாடி' ஆகியன இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்து கற்பனையுடன் எழுதப்பட்ட சிறுகதைகளாகும். "மரியா மதலேனா", "தாய்" ஆகியன விலிலிய கதைகளின் வெளிப்பாடு. இலங்கையர் கோனின் இலக்கியக் கோட்பாடும் விமர்சனப் போக்கும் "நாடோடி" என்ற கதையில் அற்புதமாக வெளிக்காட்டப் பட்டு உள்ளன. "மேனகா' பெளராணிகக் கதை சார்ந்தது. எஞ்சியவை பாத்திரங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டன.
"மேனகா" என்ற கதையிலிருந்து சில பகுதிகளைச் சிறிது பார்ப்போம் :
"விசுவாமித்திரரை வருத்தியது இளமையின் மனக் காதல் அன்று, நடுத்தரவயதின் மனக் கலப்பற்ற கொடிய உடல் வேட்கை, தசையின் பிடுங்கல். வெளிக்கு ரிசி பத்தினியே போன்ற தன்மையான சுபாவத்திற்குள் வடவைத் தீ போன்ற காமத்தை மறைத்துவைத்திருப்பவளான மேனகை, ஆயிரம் அமரர்களின் பொதுமகளான அவளுக்குப் புது மணப் பெண்ணின் மனத்தில் தோன்றுவது போல சிறிது நாணங்கூட ஏற்பட்டது. இரவு முழுவதும் தாரகைகள் நடமாடிய தனால் செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்திருந்த வானரங்கைத் துடைத்துச்சுத்தம் செய்வன போல் அருணத்தோட்டி கீழ்த்திசையில்

ളിയ്ക്കീ/Z Z(ബ് - 69 எழுந்தான். பூத்துக் குலுங்கும் மகிழின் கீழ் வெண் பட்டணிந்து கருங்கூந்தல் தோளிற் புரள, தெய்வமயன் கடைந்து நிறுத்திவிட்ட தந்தப்பாவை போல மேனகை நின்றாள். பிரபஞ்சத்தை கண்கண்ட விந்து ரூபத்தையும் கண்காணாத நாத ரூபத்தயும் மனத்தில் இருத்த முயன்றார்."
புராணக் கதையாக இருந்தாலும் கதை சொல்லும் நேர்த்தியும் வார்த்தைப் பிரயோகமும் இங்கு வாசகர் களைக் கவர்ந்திழுக்கிறது.
தாழை நிழலிலே
இக்கதையின் முற்பகுதி ஆசிரியரின் ஏதோவொரு கவிதையின் விரிவாக்கம் போன்று அற்புத ரசனை உணர்வைப் படிப்பவர் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது. மரபுத் தமிழ், இலக்கியத்தின் தீந் தமிழ்ச்சொற்களால் ஆசிரியர் தீட்டும் வண்ணம், ஓவியம் உவகையையும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இலங்கையர் கோன் இந்தக் கதையில் இலங்கையின் கீழ்க்கரையை அடுத்த ஓர் ஊரிலே செம்படவர்கள் வாழும் பகுதியில் இளவரசி நிகர் அமீனா என்ற சிறுமியின் படிமத்தையும் அவள் சூழலையும் கவிதைப்பண்புகள் நிரம்பிய சொல்லோவிய மாகத் தீட்டுவது நயக்கத்தக்கது. ஒசைச் சிறப்பும் இதமான மெல் உணர்வும் வெளிப்படும் ஆசிரியர் நடைச்சிறப்பு அவருடைய ஆக்கத்திறனுக்குச் சான்று. . .
'மாட்டேன்" என்ற பொருள் படும் "ஒண்ணா" வார்த்தையின் பயன்பாட்டை ஆசிரியர் உரையாடலின் சரிவரப் பயன்படுத்தியுள்ளார்.

Page 43
ፖ0 ஒரு திறன/ப்வாணரின்
"ஆமீனாவின் புன்னகை உதயசூரியன் அழகுபோல் என்மனதில் பட்டது. அவளுடைய கன்னங்கள் சில கடற் சிப்பிகளிற் காணும் ரோஜா வர்ணம்போல் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்திலகம் போல் செந்நிறம்பாய்ந்தன" என்று எழுதும் ஆசிரியர் அரசிகள் அழுவதில்லை, தரையை நோக்குவதில்லை என்றால் அரசிபோல் வீற்றிருந்த அமீனாவின் சொந்த வாழ்வில் கணவன் விட்டுப் பிரிந்த போது அவள் சாதாரண பெண்ணாகி விடுகிறாள் என்பதைக் கதையில் காட்ட முனைகிறார்.
'இதுதானா அழகிய தாழை மலர்? அதன் மென்மை யான சுகந்தம் எல்லாம் இது தானா? மனிதர்களின் அசுர மூச்சினால் அழகிய மலரும் வாடி அதன் இனிய வாசனையும் தீர்ந்துபோய் விட்டதா என்ன?” என்று முடிக்கும் பொழுது கதை எழுப்பும் சோகப்பண் திடுமென முறிந்து அபசுரமாகியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
மரியா மதலேனா
"படுகுழியில் வசந்தம் காந்தச் சூழல், வாழ்க்கை ரசத்தின் மண்டி, சுத்தப் பிரமுகர்கள், நன்னடத்தையின் சித்திரங்கள், வாழ்க்கைக் கிண்ணத்தில் சுவை மிகுந்த மதுரசம், நாலு திசைகளில் இருந்தும் வாழ்வின் சண்ட மாருதங்கள், வைகறையின் ஒளியின் முன் கலையும் இருள்போல, முடியிழந்த கோபுரம் போல, தாயின் குரல் கேட்ட புள்ளினம் போல, அந்தராத்மாவின் இன்பப்

77
புனல்" என்பன போன்ற உவமேயங்கள் கொண்ட விவிலிய சார்புடைய இந்தக்கதை சுமாரானது. இதன் சிறுகதை வடிவம் சிறப்பாக அமையவில்லை என்றே கூற
ഴയക്ൿീ/Z Zഞഖ
வேண்டும்.
சக்கரவாகம்
"காதல் என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது. விவாகரத்து, கர்ப்பத்தடை முதலியவற்றைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், வாழ்க்கை, கொடிய வறுமையிலும் செம்மையாய், பிணக்குகள் தடியடிச் சண்டைகளுக்கிடையிலும் ஆழ்ந்த அனுதாபமும் அன்புங் கொண்டதாய் பூவுலக மோட்சமாய் பரிமளித்தது. நாற்பது வருஷம் நாற்பது நாள்" இந்தக் கதை தாம்பத்திய உறவைச் சித்திரிக்கிறது. வெள்ளிப் பாதசரம் கதைத் தொகுதிக்கு. மதிப்புரை எழுதிய கி.வா.ஜெகந்நாதன்,
"கணவன் மனைவி உறவு ஓர் அற்புதமான, தெய்வீக உறவு ஆரவாரமற்ற ஆழ்கடலின் அமைதியுடன் விளங்கும் உறவு. இதனை நன்குணர்ந்து ஆசிரியர் ஒரு தம்பதியின் உறவைப்பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார்" எனக்
கூறியிருக்கிறார்.
அனாதை
இக்கதையில் வரும் நகைச்சுவை அம்சம் :
"என் ஊற்றுப்பேனாவை (அது உண்மையில் மை ஊற்றுகிற பேனா தான்) மேசையில் வைத்துவிட்டு

Page 44
72 நிமிர்ந்து உட்கார்ந்தேன். உடனே என் நாற்காலியின் சாய்வுப் பகுதியில் பிரம்புப் பின்னலில் தொளைகளில் பூச்சிக்ளுக்கு என் வீரத்தமிழ் இரத்தம் மணந்து விட்டது. இன்னுமொரு பத்துநிமிஷங்களுக்காவது அவைகளுக்கு நல்ல வேட்டை கண்ணிர் பட்ட இடங்களில் அவள் முகத்தில் பூசியிருந்த வாசனை மாஅழிந்திருந்தது. நீலிக்கண்ணிர் என்று முதலில் நினைத்த நான் பவுடர் அணியும் பெண்களுக்கும் உணர்ச்சி உண்டு என்று அறிந்ததும் அதனால் உண்டான என் ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டேன். என்னுடைய உத்தியோக பரம்பரை என்னுடைய வெளிப்படைச் சிரிப்பைக் கொண்டு விட்டது. எனக்குச் சிரிக்கத் தைரியமில்லை. ஏன் சிரிப்பதற்கு ஆண்மையில்லை என்று கூட சொல்லிவிடலாம்."
മത്ര ക്രമങ്ങ്/മീബബീര്
வளர்ந்த தாயின் உண்மையான பாசத்தை எடுத்துக் காட்ட ஆசிரியர் முனைந்தாலும் ஆழமான முறையில் அந்த அனுபவத்தைப் பரிவர்த்தனை செய்யும் விதமாக கதை அமையவில்லை. இது, ஒரு சாதாரணக் கதை. ஆசிரியரின் உத்தியோக அந்தஸ்து தான் கதையில் மேலெழுந்து நிற்கிறது. சாதி உணர்வும் தென்படுகிறது.
அனுலா
இது ஒரு வரலாற்றுக் கற்பனை. இதில் வரும் வருணனை ரசிக்கத் தக்கதாக அமைந்துள்ளது. உதாரணமாக

73
gpazvassaç2z/Z7 4/7a/a7a/
"தங்கத் தகட்டில் ரசம் பாய்ந்தது போல் சந்திரனை மறைத்துப் புகார் படர்ந்திருந்தது. தொலைவில் நகர் எல்லையில் இருந்து வரும் இணைக்குகைகளின் உறுமல் நிசப்தமான இரவைக் காலத்துண்டுகளாக வெட்டி வெட்டி வைத்தது. அனுலா சர்வாலங்கார பூஜிதையாய், சுகந்தம் கமழ, கை வளை ஏங்க, அரச பரம்பரையில் தோன்றாத அனுலா என்பவள் தன் காமக்கூத்தாட்டம் மூலம் எவ்வாறு ஈழத்தின் முதல் அரசி ஆனாள்" என்பதை விபரிக்கிறது இந்தக் கதை. கதை சொல்பவரே கூறுவது போல சுவாரஸ்யமாகவே கதை கூறப்படுகிறது.
வெள்ளிப்பாதரசம்
கற்பனாலய போக்குடைய (ரொமான்டிஸிஸம்) சிருங்கார (ரொமான்டிக்) கதை இது. வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழாக் காட்சியை கவின் பெற விபரிக்க முற்படும் ஆசிரியர் யாழ்ப்பாணக் கமக்காரரின் நாளாந்த கஷ்டமான சீவியத்தையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். தம்பதிகளுக்கிடையில் ஏற்படும் ஊடலும் கூடலும் நயமாகச் சித்திரிக்கப்படுகிறது என்பதைத் தவிர கதையின் உள்ளடக்கம் பற்றி விசேஷமாக ஒன்றையும் கூற முடியாதிருக்கிறது.
வழக்கம் போல ஆசிரியரின் உவமைகளும் உவமேயங்களும் வருணனைகளும் குறிப்பிடத் தக்கன. சில உதாரணங்கள் :
அஸ்தமிக்கவும் சூரியனைக் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக்

Page 45
ፖ4 മത്ര ക്രമങ്ങരീക്കുന്നീട് கொண்டிருந்தன. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவன் தன் வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொண்டான். அவனுடைய கலகலத்த வாயும் விடை யில்லாத ஒரு கேள்வியைக் கேட்பது போல அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவளுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்கமாட்டாதது போல ஒசியும் நூலிடையும் நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப் பாணத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருந்தும் வந்த மனிதர்கள் நிரம்பியிருந்தனர். சின்ன மனிதர்களைப் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்த வெளிப்பிரதேசத்தில்தான் மனிதனின் ஜீவநாடி நாகரிக முறைகளால் மலிந்துபடாமல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது."
மனிதக் குரங்கு
முக்கிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகையில்
சிறு சிறு வசனங்களில் வர்ணிப்பதைக் காணலாம். உதாரணம்.
(உதடுகளை மூடிக்கொள்ள முடியாத படி முன்னோக்கிய மேற்பல் வரிசை சிறிய பரிதாபகரமான கண்கள்; புருவங்கள் இல்லை என்ற சொல்லிவிடலாம். குரு தலையலங்காரம், இலங்கைக்கு வருமுன்னரேயே பொருளாதார நோக்கம் கருதி கால் அங்குலத்திற்கு மேல்

திலக்கியம் AM//avov ፖõ நீளாது வெட்டி விடப்பட்ட தலைமயிர் சிறிய காதுகள். வறுமையினால் இளமையிலேயே நரையும் திரையும் தேங்கிவிட்ட கன்னங்கள்)
நகைச்சுவை கலந்த ஆசிரியரின் கூற்று
(ஏன் இப்படி அசிங்கமான வருணனை செய்வதை
விட அது ஒரு குரங்கு என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்)
அதே வேளையில் பாத்திரம் தொடர்பாக ஆசிரியர் மனிதாபிமான நோக்கத்தையும் காண முடிகிறது. (அது ஒரு குரங்கு என்று வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால், அப்படிச் சொல்வதற்கில்லை. அது ஒரு மனிதன். அவனை வெகு நாட்களாகவே அறிந்திருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன். ஆமாம் பாக்கியம்தான். பூர்வ புண்ணியத்தின் பயன் என்று கூடக் கூறுகிறோம்.)
மனிதப் பண்பு மிகுந்த குரங்கு முகத்துடைய வலுக்கு விசுவாசமற்ற ஒருத்தி மனைவியாய் வாய்த்தாள் என்று கூறாமல் கூறும் ஆசிரியர் அவளை வர்ணிக்கும் தோரணை -
"அவள் பெயர் காமசெளந்தரி, சிவகாம செளந்தரி என்பதன்திரிபு காலப் போக்கில் சிவம் உதிர்ந்தது. காமமே செளந்தர்யமாய், செளந்தர்யமே காமமாய், காதலாய், கணம் யுகமாய், யுகம் கணமாய் அவையெல்லாம் பிந்தி நடந்தவை. மூன்று நாள் வயது சென்ற கொழுக்கடை போல செந்நிறம் பாய்ந்து வீங்கிய கன்னம்"

Page 46
, ፖ6
മത്ര ക്രീമഞ്ഞ്വമയZിങ്ങ് (மூன்று நாள் வயது சென்ற என்ற தொடர் புதுப் பிரயோகம் என்பதை அவதானிக்க)
ஆசிரியரின் வேறு சில அங்கதச் சுவை பொருந்திய தொடர்கள் :
"கறுத்த கோட் அணியும் இளம் பட்டினிப் பட்டாளம்', 'மண மாசிலான், மனத்தின் பொதிவு." இப்பொழுது ஈழத்து எழுத்தாளர்கள் அரிதாகவே பயன்படுத்தும் காலாவதியான சொற்கள் வக்கீல், குமாஸ்தா, காரியாலயம்.
இத்தனை உருவ, அழகியல் சிறப்புகள் இருந்தாலும் இக்கதை நிறைவு பெற்றதாக அமையவில்லை.
"அவளுடைய செவ்வரி படர்ந்த கண்களின் பார்வை வெட்டும், புன்னகையும் பேச்சும் என் மனத்தில் கேள்விக் குறிகளாய் நிலைத்து நின்றன” என்ற கூற்றுடன் சிவகாம செளந்தரியை விசுவாசமற்றவள் என்று காட்ட முனையும் ஆசிரியர், அவள் மணமாகி ஏழு மாதங்களுக்குள் ஒரு ஆண்மகவைப் பெற்றமை, அவளுடைய நடத்தையைக் காட்டுவதாகவும், கதாநாயகனான கொரில்லா வெளுத்த தெல்லாம பால் என்று நினைப்பவன் என்றும், கூறாமல் கூறுகின்றார். கதையில் அழுத்தம் அல்லது நம்பும் தன்மை மிகக் குறைவாக இருப்பதனாலும் எடுத்துக் கொண்ட தொனிப் பொருளைக் கட்டுக்கோப்பாக நெறிப்படுத்த முடியாததனாலும் இக்கதை உரிய நிறைவைத் தரவில்லை என்றே கூற வேண்டும்.

APavaš4zZž Zvzavav 77
நாடோடி
ஆசிரியரின் இலக்கியக் கோட்பாட்டை அறிய இக்கதை உதவுகிறது.
'ரொமாண்டிக் அல்லது கற்பனாலய அல்லது மனோரதியப் போக்குடைய கவிதையைத் தாமும் ரசிக்கிறார் என்பதை உணர்த்துவிக்கும் ஆசிரியர், நவீனத்துவ இலக்கிய நோக்கம் கொண்டவர் என்பதைக் காட்டுவதாக அமைவது.
"அவனுடைய கவிதை யாப்பிலக்கணத்தின் வரம்புகளையும் தகர்த்து எறிந்துகொண்டு காட்டாற்று வெள்ளம் போல் புரண்டு சென்றது. வாயில் இருந்து வெளி வரும் வார்த்தைகளுக்கு இலக்கண வரம்பு செய்யலாம். இருதயத்தின் ஆழத்தில் இருந்து உற்பத்தியாகும் உணர்ச்சிக்கு இலக்கணம் செய்ய முடியுமா?"
என்ற பகுதி கதாநாயகன் ஒரு மனோரதிய வாதியாயினும், அவன் சமூகப் பிரக்ஞை கொண்டவன் ன்ன்பதைப் பாத்திர வாயிலாகவே ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
"உலகத்திலே நடக்கும் ஆபாசங்களையும் துரோகங் களையும் மனிதர்களைப் பீடித்திருக்கும் அர்த்த மற்ற நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் காணும் பொழுது என் உள்ளம் குமுறுகிறது. அதனால் பாடுகிறேன். பாட்டு எனக்குச் சாந்தியளிக்கிறது."
ஆசிரியர் தமது சமூகச் சூழலின் பின்னணியில் முரண் நகைத் திறனாக எழுதும் தோரணை.

Page 47
ኧ፰
V മെ ക്രീമഞ്ഞ/Zബ്ബീങ് "பூரண முதலியார் ஒரு குணக்குன்று. அவருடைய
உள்ளம் குழந்தையினது போல கள்ளங் கபடமற்றிருந்தது.
மிக விசாலமான பரந்த மனப்பான்மை உடையவர்"
ஒரு யாழ்ப்பாணத்தமிழரைப் பற்றி அவ்வளவு சொல்வது பெரிய காரியமல்லவா? Վ.
விமர்சனத்தில் அழுத்தம் எதற்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்கும் முறை :
"இலகுவான, இயற்கையான தமிழ் நடையைத்தான் யாரும் விரும்புவார்கள். யாவருக்கும் புரியும்படி.எழுதுவது ஒரு தனிக்கலை. யாப்பிலக்கண விதிகள் எல்லாம் பா இயற்றுவதற்கு முயலும் குழந்தைப் புலவனுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தனவே அன்றி கை தேர்ந்த புலவனின் சொற்பெருக்கையும் கற்பனா வேகத்தையும் தடை செய்யும் முட்டுக்கட்டைகள் அல்ல. அத்தோடு விஷயத்தின் உயர்வுக்கும், அதை வரிசைப்படுத்திக் கூறும் நயத்திற்குமே முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும்.' a
அரச கேசரியில் இரகுவம்ச மொழி பெயர்ப்புப் பற்றிக் குறிப்பிடுகையில் w
**நைந்த உயிரற்ற வெறும் சொற்குவியல்" என்றும்,
"பழமை பழமை என்று பிதற்றிக் கண்களை மூடிக் கொண்டு தம் அற்ப திறமையில் இறுமாந்து உட்கார்ந்து இருக்கும் இவர்களுக்குப் புதுமையும் முற்போக்கும் எங்கே பிடிக்கப் போகிறது?"

79 என்றும் பாத்திரவாயிலாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
49ava542z/Z7 4/7a/a7a/
"திருக்கோவையாரைப் படித்துவிட்டு அதில் வெட்ட வெளிச்சமாக இருக்கும். அழகையும் ஜீவனையும், ஓசையையும், தேனையும், அமுதத்தினையும் சுவைத்து உணர அறியாது அதற்குள் வேறு ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்துகிடக்கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப் புலிகள்"
என்பது ஆசிரியரின் கருத்தாகக் கொள்ளக் கூடியது. கதை நிகழும் கால கட்டம் 16 ஆம் நூற்றாண்டாயினும், இலங்கையர் கோன் இன்றைய இலக்கிய உலகிலும் பின்தங்கிய மனப்போக்கு இருந்து வருவதை இக்கதையில் உணர்த்தி நிற்கிறார்.
தாய்
யேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட கதையை ஒரு கவிஞனின் கருணைப் பார்வையில் ஆசிரியர் விபரிக்கிறார். V
LD ġ-gr 6iT
இலங்கையர் கோன் கடைசியாக எழுதிய கதைகளில் இதுவும் ஒன்று. ஒரு எட்டு வயதுச் சிறுவன் தனது மச்சாள் (தமையன் அவளைக் கல்யாணம் கட்டுவான் என்று நம்பியிருந்தான் அப்பையன்) பற்றிய மனப் பதிவுகளை வெளிப்படுத்துவதாக இந்தக் கதை அமைந்துள்ளது. நயமான கற்பனையும் கவிதை சார்ந்த

Page 48
30 മ്മ ക്രീമഞ്ഞZഖ/ബീബ് நடையும் கொண்ட இக்கதையில் உரையாடல்களைப் பேச்சு வழக்கில் அமைத்துள்ளார். "தாழை நிழலிலே” அரசிகள் அழுவதில்லை என்று ஆசிரியர் உணர்த்து விக்கும் அக்கதையில் வரும் அமினா அரசியாக ஈற்றில் வீற்றிருக்க முடியவில்லை என்றார். இக்கதையில் வரும். மச்சாள் எதற்கும் மனங்கலங்காத வெகுளிப் பெண்ணாக வந்தாலும் அவளுடைய ஆளுமை அரசிகளுக்குரிய தொன்றெனக்காட்ட முனையும் ஆசிரியர் கதையின் இறுதியில்,
"அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்துவிட்ட மரகதங்கள் போல மின்னின. கண்ணிர். ஆனால் அரசிகள் அழுவதில்லையே!”
என்று கூறி முடிக்கிறார். துறவியின் துறவு
சிங்கள இளைஞன் ஒருவன் பெளத்த குருப் பட்டத்தைத் துறக்கும் நிகழ்ச்சி விபரிக்கப்படுகின்றது. டெ6ாத்த மத நம்பிக்கையின் பின்னணியில் இக்கதை எழுப்பும் சலனம் உணர்ந்து ஆராயத் தக்கதே. முதற் சம்பவம்
பதினொரு வயதுடைய மற்றொரு சிறுவனைப் பற்றியது. யாழ்ப்பாணக் கிராமியச் சூழலில் இதில் விபரிக்கப்படும் சம்பவம் அதற்குரிய முக்கியத்துவத்தின் தாற்பரியத்தைக் காட்டி நிற்கிறது.

ളങ്ങള്ക്ക%Z Z( - 87 LUT pů U T
மணற்றிடல் என்ற தீவை வலகம்பாகு என்ற சிங்கள மன்னன் யாழ்வாணன் ஒருவனின் இசைத்திறன் அறிந்து பரிசிலாக வழங்கினான் என்றும், அதுவே இப்பொழுது யாழ்ப்பாணம் என்று வழங்கப்படுகிறது எனவும், கற்பனை சார்ந்த வரலாற்றுக் கதை ஒன்றை ஆசிரியர் விபரிக்கிறார். ddeffu U
சீகிரிய என்ற கதையும் இலங்கைச் சரித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சம்பவத்தின் கதை வடிவமாகும்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை அடைந்துள்ள வளர்ச்சியைக் கவனிக்கவும் மதிப்பிடவும் இலங்கையர் கோனின் சிறுகதைகள் உதவினாலும், அதாவது சுமார் 30, 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட ஈழத்து சிறு கதையின் போக்கையும் தரத்தையும் இக்காலக் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவினாலும், வெள்ளிப் பாதரசம் என்ற இந்தத் தொகுப்பு நிறைவு தருவதாக இல்லை. எனினும், இலங்கையர்கோன் திறன் படைத்த கவியுள்ளம் கொண்ட ஓர் எழுத்தாளர் என்பதை மறுக்க (ւՔւգւաngյ1.
(வானொலி மஞ்சரி செப்/ஒக் 1979)

Page 49
32
இm/ங்கிரன் தென்றலும் புயலும்
ଅଠିକ୍ତ ளங்கீரன் ஈழத்துப் பின்னணியில் தென்றலும் புயலும், இங்கிருந்து எங்கே? நீதியே நீ கேள்', 'காலம் மாறுகிறது" ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். நான் அறிந்த மட்டில் "தென்றலும் புயலும், நீதியே நீ கேள்' ஆகிய நாவல்களே இது வரை நூல் வடிவம் பெற்று இருக்கின்றன.
இவர், இப்பொழுது ஆக்க இலக்கியப் படைப்பு களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஈழத்துத் தலை சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராக விளங்கும் இளங்கீரன், தென்றலும் புயலும்' என்ற நாவலை ஏறக் குறைய 15 வருடங்களுக்கு முன்னர் எழுதினார். முற்போக் கான கருத்துகளை அப்பொழுதே நாவல் வடிவத்தில் இளங்கீரன் எழுதத் தொடங்கியிருந்தார்.
 
 
 
 

4Pavaš4zZž z/zavav 83
'தென்றலும் புயலும்' இளங்கீரனின் தலை சிறந்த நாவல் என்று கூற முடியா விட்டாலும் காத்திரமான முற்போக்குச் சிந்தனையாளரின் நுணுக்கமான அவதானிப்புகளைப் பதிவு செய்யும் உடன் நிகழ்கால நாவலாக இது விளங்குகிறது.
இது ஒரு சிருங்கார நாவலாகும். ஆயினும், ஆசிரியரின் வாழ்க்கை பற்றிய தத்துவம், கருத்துகள், நாவலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நாவலின் பாத்திர அமைப்பில் ஒரு வித ஒடுங்கிய நோக்கு இருப்பதனால், அதில் கலை நயம், மெருகு பெறவில்லை. முரண்படும் மதிப்புகளின் மத்தியில் சிக்கியுள்ள, யாழ்ப்பாணத்து மத்திய தரக் குடும்பம் ஒன்றின் கதையை, இந்த நாவல் கூறுகின்றது. பாலு என்பவன் கொழும்பில் உள்ள அழகான செல்வந்தப் பெண் ஒருத்தியைக் காதலிக்கிறான். கொழும்பில் அவன் வேலைவாய்ப்புகளை எதிர் நோக்கியிருக்கிறான். மனோன் என்ற அவனுடைய காதலி விசுவாசமாக இருப்பதாக அவனுக்கு உறுதி யளிக்கிறாள். உணர்ச்சி வசப்பட்ட காதலினால் மனோன் கர்ப்பம் தரிக்கிறாள். இதனைக் கேள்வியுற்ற அவளின் பெற்றோர் கருச்சிதைவை ஏற்படுத்தவும் அவளுடைய அந்தஸ்து பொருந்திய மைத்துனனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்கவும் அவசரப்படுகின்றனர்.
எதிர்பாராத விதமாக ஏமாற்றப்பட்ட பாலு வாழ்க்கையின் கோட்பாடுகளை மாற்றிக் கொள்கிறான். உள, உடல் நோய்களினால் பாதிக்கப்பட்டு அவன் இறுதியில் மரணமடைகிறான். செல்வந்தனுக்கும்

Page 50
84
ഴ്ചശ്ര ക്രീമഞ്ഞ/ZഖZബീജ് வறியவனுக்கும், மேன் மக்கள் சமூகத்திற்கும், மத்தியதர வர்க்கத்தினருக்கும் இடையேயுள்ள உள வேறுபாடுகள் இவ்வித திருமணத்திற்கு உதவ மாட்டாதென்பது ஆசிரியர் கருத்து. சிக்கனமாக ஆசிரியரினால் பின்னப்பட்ட பாலு, மனோன் ஆகியவர்களின் காதல் விவகாரங்கள், தென்றல் போல் ஆரம்பித்து, புயலில் முடிவடைகின்றன.
இந்தக் கதையுடன் மற்றுமொரு காதல் கதையும் பின்னப்பட்டுள்ளது. பாலுவின் தங்கையான தங்கம் அடுத்துள்ள வீட்டிலுள்ள குறைந்த சாதிக்காரன் என்று கூறப்படும், பூபதியைக் காதலிக்கிறாள். கடும் எதிர்ப்புகள் இருந்த போதிலும் அவர்களிடையே ஆழ்ந்த காதல் தொடர்கிறது. இது காரணமாக பாலு தியாகம் செய்யும் அளவிற்கான பலத்தைப் பெற்று விடுகிறான். இந்த நாவலில் வரும் இரண்டு விதக் காதல் தொடர்புகளை பாலு, பூபதி ஆகிய இருவருக்கும் நண்பனான நடராஜனின் வாய் மொழிமூலம் ஆசிரியர் வலுக்கொடுத்து விளக்குகிறார். நாவலாசிரியரின் முற்போக்குக் கருத்து களுக்கு ஊது குழலாக நடராஜன் விளங்குகிறான். முதிர்ச்சியடைந்த இளைஞனாகச் சித்திரிக்கப்படும் நடராஜன் சுற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய தனது அபிப்பிராயங்களைப் பொது மனிதாபிமான இலட்சியங்கள், தனிமனிதனின் சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படை யில் தெரிவிக்கின்றான்.
கொழும்பு வாழ்க்கை பகட்டாகவும் போலியாகவும் அவனுக்குப் படுகிறது. பாலு வேலை தேடும் கட்டத்தில்

85 ஊழலையும், லஞ்சத்தையும் நேர்மையின்மையையும் எதிர் நோக்குகிறான்.
ിയക്കീസ്ഥ Zഔമ
உயர் சமூகத்தினரின் போலி வாழ்வை நடராஜன் மூலம் ஆசிரியர் சாடுகிறார்.
"தமிழ் சமூகத்திலுள்ள பெரும் புள்ளிகளின் எண்ணங்கள் ஆங்கிலமயமானவை. நடையுடைபாவனை அமெரிக்கப்பாணியானது. ஆனால், பொதுக்கூட்டங் களிலும், பொது இடங்களிலும் தமிழ்க் கலாசாரம், நாகரிகம் ஆகியவற்றைக் கட்டிக் காப்பவர்களாக அவர்கள் கூறும் போதுநகைப்பையே தருகிறது. உனக்குத் தெரியுமா பாலு தமிழ்க் கலாசாரமும் நாகரிகமும் எங்கு வளருகிறது என்று? வறிய தமிழ் மக்களின் இல்லங்களிலும், எண்ணங்களிலும், வாழ்க்கையிலுமே அதனைக் காண (ԼՔւգ-պւն."
"தொழிலாளர்களும் பாட்டாளிகளும் கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் மேற்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலங்காரப் பொருட்களுக்காகச் செலவிடப் படுகிறது. இழிந்த முதலாளித்துவ சமூகம் மேற்போக்கான அழகுப் பிரக்ஞை கொண்ட வர்க்கத்தினரை உற்பத்தி செய்கிறது. எமது தேசிய சொத்துக்களை உலகின் முதலாளித்துவ நாடுகள் சுரண்டியெடுக்கின்றன." செல்வந்த சமூக வர்க்கத்தினர் அலுங்காமல் நலுங்காமல் உலாப் போவதை விக்ரோரியாப் பூங்காவில் பூபதியுடன் கண்ணுற்ற காட்சிகளின் நிமித்தம் நடராஜனுக்கு மேற்கண்ட சிந்தனைகள் எழுந்தன.

Page 51
86
മത്ര ക്രീമഞ്ഞ/ZബZബീജ് பாலு, மனோனின் இல்லத்திற்கு ஆசிரியனாகச் செல்கிறான், யாழ்ப்பாணத்தில் சிந்தித்தும் பார்க்க முடியாத அளவு சுதந்திரத்துடன் அவள் அவனுடன் பழகுகிறாள். பாலுவுக்கு பசியெடுத்த போதிலும் அவளின் வீட்டில் அவன் அதிகம் சாப்பிடவில்லை. மத்திய தர வர்க்கத்தினரின் போலிப் பெருமிதம் அவ்விதம் அவனைத் தடை செய்தது.
மனோனின் அழகு, பெருமை, அந்தஸ்து, செல்வம், ஆற்றல் பற்றி நடராஜனிடம் பாலு கூறியபொழுது "கோடை நிலவும் இடத்திலிருந்து குளிர் இடம் ஒன்றிற்கு நீ வந்திருக்கிறாய். இது உனக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். ஆனால் கவனம், குளிரே உன்னை விறைக்கப் பண்ணிக் கொன்று விடும்." என நடராஜன் கூறினான். ஆனால், பாலு, மனோனின் மையலினால் மேலும் மேலும் கவரப்பட்டான்.
பாலு - மனோன்.உறவு பற்றி நடராஜன் நம்பிக்கை கொள்ளவில்லை.
"சாதித் தடைகளை மீறிக் காதல் வெற்றியடையலாம். ஆனால், அந்தஸ்து வேறுபாடுகளை மீறிக் காதல் வெற்றியடைவது கஷ்டமானது. எம்மைப் போன்ற மத்திய தர வர்க்கத்தினர் சாதிப் பாகுபாட்டைப் பற்றிச் சதா சிந்திக்கின்றோம். மனோனின் பெற்றோர்கள் போன்றவர்கள் அந்தஸ்து பற்றி எந்நேரமும் சிந்திக்கின்றார்கள்."
"எம்மைப்போன்றவர்கள்” என்பவர்களிலேயே நாவலாசிரியர் இளங்கீரன், வருங்காலத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

8ፖ
- épavai47zz7 Z/Zava/
"மத்தியதர வர்க்கத்திலுள்ள நாம் மாத்திரமே காதல், அற நெறி, மானம், நன்னடத்தை போன்றவற்றிற்கு முக்கியத்துவம்' அளிக்கின்றோம்" என்று சொல்லும் ஆசிரியர் வறியவர்களின் போராட்டத்தில் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கற்பிக்கிறார். ے
"எம்மைப் போன்றவர்களுக்கு காலிமுக மைதானம் போன்று செளகரியமானதாகவும் சந்தோஷமானதாகவும் வாழ்க்கை அமையவில்லை. உன் மீது தழுவிச் செல்லும் புயல் அவர்களையும் தழுவிச் செல்கிறது. ஆனால், அவர்கள் மனதை இழப்பதில்லை, நம்மவர்கள் வாழ்க்கைப் போராட்டத்திலேயே நாட்களைக் கழிக்கின்றோம். உணவு, உடை, ஒதுக்கிடம் ஆகியவற்றிற்காக நாம் போராடுகிறோம். இம்மூன்றிற்காக நடைபெறும் போராட்டமே மனித இனத்தின் வரலாறாகும்."
சமூக முரண்பாடுகளைப் பொதுவாகப் பரிசீலிக்கும் ஆசிரியர் குறிப்பிட்ட சில தீவினை நிகழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டுகிறார். சாதித்தடைகள் போன்றவற்றினால் பாதிக்கப்படும் அறிவுள்ள உண்மையான இளம் காதலர்களின் இடையூறுகள் தங்கம் - பூபதி உறவின் மூலம் காட்டப்படுகின்றன. பூபதி போன்ற குறைந்த சாதிக்காரனுக்கும் தங்கம் போன்ற உயர்ந்த சாதிப் பெண் ஒருத்திக்கும் இடையே காதல் மாத்திரமே சாத்தியமாகிறது. ஆயினும், திருமணம் என்ற மாளிகைக்கு அவர்கள் தம் காதலை எடுத்துச் செல்ல முடியாதிருக்கிறது. சாதி என்ற சுவர் இன்னும் விழுந்து ஒடியவில்லை. தனது காதல்

Page 52
88 മത്ര ക്രിത്രങ്ങ7Zബണു/ീങ് நிறைவேறாது என்று பூபதிக்குத் தெரியும். தனது உணர்ச்சிப்போராட்டத்தை பூபதி தங்கத்திற்கு எடுத்துக் கூறினான். அவள் கூறினாள்.
"வானத்துச் சந்திரன் பூமியில் வந்து விளையாடினால் மாத்திரமே நான் உன்னை மறப்பேன்."
சாபக்கேடான சீதன முறை, அதனால் நிர்க்கதி யாகும் இளம் பெண்கள் ஆகியவை பற்றி எல்லாம் விஸ்தாரமாக ஆசிரியர் எழுதுகிறார்.
பாலு யாழ்ப்பாணம் திரும்பியதும் அவனுடைய தகப்பனார் அவனைக் கடிந்து பூபதிக்கும் தங்கத்துக்கும் இடையே உள்ள உறவையும் எடுத்துக் கூறுகிறார். பாலு தன்னுடைய சகோதரியின்நிலைமை பற்றியும் தன்னுடைய நிலைமை பற்றியும் ஒரு புறமும், சாதி, அந்தஸ்து, செல்வம் ஆகிய தடங்கல்கள் பற்றி மறு புறமும் சிந்திக்கிறான். மனோனுக்கும் தனக்கும் இடையில் உண்மையான இணக்க உறவுகள் இருக்கின்றனவா என்பது பற்றி அவன் ஆராயவில்லை. ஆனால், பூபதியைத் திருமணம் செய்யக்கூடிய சாத்தியங்கள் பற்றித் தங்கம் ஆராயவே இல்லை. பூபதிக்கும் அவளை மறக்க முடிய வில்லை. அவளைத் திருமணம் செய்வதால் ஏற்படும் சமூக விளைவுகளைப் பற்றி அவன் முற்றாகவே அறிந்திருந்தான். அவர்களைச் சுற்றிலும் உள்ள சமூகம் அவர்களை இளக்காரமாக நோக்குகிறது. தனிப்பட்ட குரோதங் கொண்ட காடையன் ஒருவன்பூபதியை அடித்த பொழுது உயர் சாதிப் பெண் ஒருத்தியுடன் பொருந்தாக் காதல் கொண்டிருந்தமைக்காக அவனுக்கு உரிய தண்டனை

89 கொடுக்கப்பட்டிருப்பதாக அயலவர் நினைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியினால் தங்கம் அநேகமாக நம்பிக்கை இழக்கிறாள். ஆனால், சுய அனுதாபமின்றித் துணிவுடன் இந்த அனுபவத்தை பூபதி ஏற்றுக் கொள்கிறான்.
APavajazz/ Z/zava/
சமூகத்தில் உள்ள தீங்குகள் மத்தியில் ஆக்கபூர்வ மான நன்மைகளைக் காண முற்படும் ஆசிரியர் மனித உறவுகளிடையே அந்த நல்லம்சங்களைக் காண்கிறார். பெற்றோரின் புத்திமதிகளும், அதிகாரமும் தாக்கம் பெறத்தவறும் வேளையில் உண்மையான, முழுமையான மக்களிடையேயுள்ள பரிவும், பிணைப்பும் அவற்றிற்கு ஈடு செய்கின்றன. “வயதுக்கும், அறிவுக்கும் இடையில் தொடர்பு இல்லை" என்று நடராஜன் கூறுகிறான். மனித நீதி, நாகரிகம் அனைத்தினது சட்டங்களுக்கு எதிராகவே சாதி, இன, சமூக வேறுபாடுகள் பரவுகின்றன. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குத் திருமணங்களை ஏற்பாடு செய்யும் பொழுது, சாதி, இனம், சமயம் ஆகியவற்றைப் பார்க்கிறார்கள். ஆனால், தாம்பத்திய உறவுக்கு இவை அடிப்படையானவை அல்ல. தம்பதிகளின் உடல், உள வளர்ச்சி, இல்லற வாழ்க்கை விஷயங்கள் பற்றிய பரிச்சயம், இணக்க உறவு, ஒருவரை ஒருவர் விரும்பும் காதல், ஒற்றுமையுடன் வாழக்கூடிய ஆற்றல் ஆகியவையே முக்கியமானவை. காதலில் தோல்வி கண்டாலும், கடைசி முயற்சியாக அவ்விதம் தோல்வி கண்டவர் சமூகத்தின் அமைப்பை மாற்றுவதற்கு தன்னுள் பலத்தை திரட்ட வேண்டும். அதனால், தனி மனிதனின் சுதந்திரம், சுய மரியாதை பேணப்படும் என்று கூறும் ஆசிரியர்.

Page 53
90 മത്ര ക്ര%ങ്ങZര്
"பூபதி குறைந்த சாதிக்காரன் ஆயினும், அவன் ஓர் உன்னத மனிதன். தனது நலம் குறித்து அவன்தன் காதலை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறான். அவன் வாழ்க்கையையே அது பாதிக்கக்கூடும். ஆனால் உனக்கு அந்த இதயம் இல்லை. பூபதியின் இதயம் உன்னுடையது போன்றதல்ல. அவன் தங்கத்தை மணம் முடித்திருந்தால் சாதிப்பாகுபாடுகள், சீதன முறை ஆகியவற்றிற்கு பேரிடி விழுந்திருக்கும். வளர்ந்து வரும் முற்போக்கு உலகத்தை அது அறிவித்திருக்கும். சமூகத்திற்கு ஒரு சவாலாக அவர்களுடைய காதலும், திருமணமும் அமைந்திருக்கும். இனி வரப்போகும் மாற்றங்களின் போக்கைச் சுட்டிக் காட்டுவதாக அது அமையும், வாழ்க்கையின் ஓர் அம்சம் மாத்திரமே காதலாகும். காதலே வாழ்க்கை அல்ல. காதலில் தோல்வி கண்டாலும்
o PP
ஒருவர் தொடர்ந்து வாழ்ந்து பல செயல்களைப் புரியலாம்.
'நாவல்களிலும் காவியங்களிலும் தான் காதலுக்காக செல்வத்தையும், வசதிகளையும் தியாகம் செய்யும் பெண்கள் வருவார்கள். ஆனால், நாளாந்த வாழ்க்கையில் இப்படியான பெண் ஒருத்தியை காண்பது அரிது."
"தனது கணவனுடன் சேர்ந்து துயரங்களையும், கஷ்டங்களையும் அவள் பகிர்ந்து கொண்டாலும் சந்தோசமான திருப்திகரமான வாழ்க்கையாக அது அமைய மாட்டாது. அவள் தன்னையே ஏமாற்றிக் கொள்வாள். அதன் பின்னர் வாழ்க்கை படிப்படியாக வெறுப்பை மறைக்கும் போலி வாழ்க்கையாக அமையும். சொகுசான வாழ்க்கையை அனுபவித்தவர்கள் காதலுக்குக் கஷ்டமான வாழ்க்கையை பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்."

4pazvayfas%z/Z7 4/7a/a7a/ 97
"முரண்பாடுடைய வர்க்கங்களின் விருப்பு வெறுப்புகளை இணைக்கும் சக்தி காதலுக்கு இருக்கிறது என்று கூறுபவர்கள் யதார்த்தவாதிகள் அல்லர் வெறும் கற்பனாவாதிகள் அவர்கள். இந்தச் சித்தாந்தம் சரியான தென்றால் சகல வறியவர்களும் செல்வந்தர்களைக் காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரே அந்தஸ்து உடையவரின் காதல் வெற்றி அடைகிறது. மற்றவர் களுடைய காதல் தோல்வி அடைகிறது. வர்க்க முரண்பாடுகள் கொண்ட எமது காலத்துச் சமூகம் அடிவாறாக மாற்றம் அடைய வேண்டும். வர்க்க பேதமற்ற சமூகம் ஒன்றிலேயே சுதந்திர கீதத்தை நாம் இசைக்க முடியும்." என்று கூறுகிறார்.
தங்கம் - பூபதி திருமணத்துடனும், அதிர்ச்சியினால் தங்கத்தின் தகப்பனார் இறப்பதுடனும் நாவல் முற்றுப் பெறுகிறது. பாலுவும் இறந்து விடுகிறான். அவனுடைய தாயாரை பராமரிக்கும் பொறுப்பை நடராஜன் ஏற்றுக் கொள்கிறான். இறுதியில் முற்போக்குக் கருத்தோட்டம் வெற்றி அடைகிறது.
இளங்கீரன் எளிய முறையிலும், காத்திரமான முறையிலும் தனது கருத்துக்களை இலகுவான முறையில் எழுதுகிறார். உருவத்தில் சில குறைபாடுகள் இருந்த போதிலும், தென்றலும் புயலும்' என்ற நாவலின் தனிச் சிறப்பு அதன் நேர்மையாகும்.
(அஞ்சலி : ஜனவரி / பெப்ரவரி 1972)

Page 54
92
கணேசலிங்கன் R
முதல் நான்கு
N)
காவல்கள்
M N t இ
ps ழத்துத் தமிழ் நாவல்கள், உடனிகழ்கால வாழ்க்கைப் போக்குகளை, விமர்சனக் கண்ணோட்டத்தில் யதார்த்த ரீதியாகச் சித்திரிக்கின்றன. கலைஞனுக்கு ஒரு சமூகப் பணியுண்டு. சமுதாயத்தைச் சித்திரிப்பதுடன் மாத்திரமல்லாது எழுத்தாளன் சிந்தனையையும் மக்களிடையே உண்டுபண்ணுகிறான். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு எழுத்தாளன் வழி காட்டுகிறான். உலக இலக்கிய வரலாற்றில் அத்தகைய எழுத்தாளர்கள் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
செ.கணேசலிங்கன் இது வரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார் "நல்லவன்", "ஒரே இனம்", "சங்கமம்", "நீண்ட பயணம்", "சடங்கு",
 
 
 
 
 
 
 
 

93
4PapuafaE/az/zV 4/7/Wave.pu/
"செவ்வாணம்', 'தரையும் தாரகையும்", "போர்க்கோலம்" போன்றவை அவர் எழுதிய நாவல்கள். இவற்றுள் "போர்க் கோலம்" தவிர்த்து ஏனையவை பற்றிச் சுருக்கமாக எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடைசியாகக் கூறப்பட்ட நாவல், தனித்தே பிறிதாக விமர்சிக்கப்பட வேண்டியதொன்று.
கணேசலிங்கனின் நாவல்களில் சித்திரிக்கப்படும் விஷயங்கள் கடந்த சில தசாப்தங்களுக்குள் நடை பெற்றவை. அவற்றை ஒரு விதத்தில் வரலாற்று நாவல்கள் என்று கூறலாம்.இவை வெறுமனே வரலாற்றுநாவல்களாக இல்லாது, சமூக விமர்சனங்களாகவும் அமைந்துள்ளன. சமூக விமர்சனப்பார்வை மூலம், அவர் வாசகர்களைச் சிந்திக்க வைக்கிறார். அவருடைய நாவல்கள் மூலம் மேலோட்டத் தகவல்களைப் பெறுவதோடல்லாமல், அடிப்படைக் காரணங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
சமூகத்தில் நடைபெறும் சம்பவங்கள் என்ன, அவை ஏன் அப்படி நடை பெறுகின்றன. அவற்றிற்கான காரணங்கள் எவை, அவற்றைத் தவிர்ப்பதற்கான வழி வகைகள் என்ன என்பவற்றை எல்லாம் அவர் நாவல்கள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
நாவலாசிரிர் கணேசலிங்கனின் கோட்பாடுகள் அவருக்கே உரித்தானவை. அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அல்லது ஏற்றுக்கொள்ளாது விடலாம். அது அவரவர் அபிப்பிராயத்தைப் பொறுத்திருக்கிறது.

Page 55
94 ஒரு திறனாப்வாணனின் நாவலாசிரியர் தான் கூற வருவதைக் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளாரா என்பதே நமது பரிசீலனை. முதுலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி ஆசிரியரிடத்தில் நேர்மை தொனிக்கிறதா என்பதாகும். அதாவது ஆசிரியருடைய எழுத்தில் ஒளியுண்டா என்பதாகும்.
கணேசலிங்கன் கொண்டுள்ள கோட்பாடுகளில் அவருக்கு நிறைய நம்பிக்கை உண்டு. ஆதலால் அவருடைய உள்ளத்தில் ஒளியுண்டு. அது வாக்கிலும் பிரதிபலிக்கிறது. எனவே தான், கணேசலிங்கன் எழுத்தில் நேர்மையும், உண்மையும் காணப்படுகின்றன.
கூறுவதின் தன்மையைப் பொறுத்துள்ளது கூறப்படும் விதம். கூறப்படும் விதம் சற்றே கலைப் பாங்காக இருப்பின், படைப்பின் வெற்றியும் அழகியல் உணர்ச்சியை ஊட்டும். கலைப் பாங்காக அமையா விடினும், உள்ளடக்கச் சிறப்பு, வேறு எவற்றையும் விடப்
போதுமானது.
கணேசலிங்கனின் நாவல்களில் உருவப் பரிசோதனைகள் இல்லைதான். வெறும் அகவய உணர்ச்சி களைச் சித்திரிக்க முயலும் அரைவேக்காடு உருவப் பரிசோதனைகளால் யாது பயன். ஆகவே, கணேசலிங்கன் உருவத்தில் அளவுக்கு மீறிய அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், சம்பிரதாயமான முறையிலாகுதல் தான் கூறுவதைக் கூறி விடுகிறார்.
ஆகையால் தான், இன்று தமிழ் நாவல் இலக்கியத் துறையில் கணேசலிங்கன் முக்கிய இடம் வகிக்கிறார்.

95 கணேசலிங்கன், இளங்கீரன், நந்தி போன்றோரின்
Ağpazvayfas%2z/Z7 4/7a/a7a/
நாவல்கள் தமிழ் நாட்டு நாவலாசிரியர்களுக்கு வழிகாட்டி யாக அமையும். வெறும் படாடோப, மேற்போக்கான உணர்ச்சிகளைத் தீட்டும் தென்னிந்திய நாவலாசிரியர்கள், சாசுவதமான உணர்ச்சிகள், மாற்றத்திற்கு உட்படும் நிதர்சன சம்பவங்களைவிட, உலகப் பொதுமையானவை என்று காரணங் காட்டலாம். ஆனால், உணர்ச்சிகள் மாத்திரமே உலக இயக்கமன்று என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்குக் காலம் எடுக்கும். அது வரை பத்திரிகை ரக நாவல்களின் மவுசு தென்னிந்தியாவில் அழியாது.
இனி, ஒவ்வொன்றாக, திரு.செ.கணேசலிங்கனின் முதல் நான்கு நாவல்களையும் எடுத்துக் கொள்வோம். யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் சிறிது சிறிதாக ஏற்படும் மாற்றங்களை "நீண்ட பயணம்" சித்திரிக்கின்றது. இவை, பிரதானமாக, சமூக அரசியல் மாற்றங்களாகும். குறைந்த சாதிக்காரர் என்று அழைக்கப்படும் அக்கிராம மக்களின் எழுச்சி தான் அங்கே ஏற்படும் சமூக மாற்றமாகும். சமய நம்பிக்கைகளில் வேரூன்றியவையும், மனிதரால் திணிக்கப் பட்டவையுமான சமூக மதிப்புகள் காரணமாக எழுந்த தடங்கல்களை உடைத்துக்கொண்டு அந்தத் தீண்டாச் சாதியினர் எழுச்சி பெற்று இறுதியில் தமது சொந்த உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவம் பெறுமளவிற்கு பலம் பெற்று விடுகின்றனர்.
இந்த சமூக, அரசியல் விடுதலையைப் பெறுவதற்கு அவர்கள் மூன்று நீண்ட வருடங்கள் போராட வேண்டி

Page 56
YÓ
് ക്രമങ്ങZബണുീര്
இருந்தது. அவர்களுடைய அந்தப் போராட்டமே இந்த நாவலில் சித்திரிக்கப்படுகின்றது.
இது சாதிப் பிரச்சனையைப் பற்றிய ஒரு நாவல். ஆசிரியரின் நோக்கம் நேர்மையாக இருப்பதனாலும் கருணைப் பார்வையுடன் கதாபாத்திரங்களின் அவல வாழ்வைச் சித்திரிப்பதனாலும் நாவல், நோக்கத்தில் வெற்றி பெறுகிறது. ஆயினும் நாவலின் முடிவு அவசரக் கோலத்தில் அமைந்துள்ளது. அரசியல் பிரக்ஞை கொண்டவனாகவே கதாநாயகன் சித்திரிக்கப்பட்டுள்ளான். இந்த அரசியல் குறிக்கோளை நோக்கியே அவனும் ஏனைய பாத்திரங்களும் இயக்கப்படுகின்றனர். கிராம சபையில் சாதி, அல்லது வகுப்பு பிரதிநிதித்துவத்துக்கு இடங்கொடுக்கும் விதத்தில் நாவலை எழுதியிருப்பதினால் நாவலாசிரியர் மறைமுகமாக இவ்வித பிரதிநிதித்துவங்களை ஆதரிக்கின்றார் எனத் தோன்றுகின்றது. அவ்விதம் செய்வதனால், மாற்றுப்பரிகாரம் காணப்படும் வரை இவ்வித பிரதிநிதித்துவங்கள் இருந்து வருமென்பதை நாவலாசிரியர் உணர்த்துகின்றார்.
யதார்த்தத் தொனியில் விவரணையும் நடையும் அதிகாரபூர்வமான வர்ணனையும், கொண்டது இந்த நாவல். சமூகத்தில் நசுக்கப்படும் ஒரு வர்க்கத்தினரின் சில்லறை நிகழ்ச்சிகள் கூட ஆசிரியரின் கூர்ந்த பார்வையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
செம்பாட்டுப் பள்ளர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சற்றே தரம் உயர்ந்த சாதிக்காரன் ஒருவன் மணம் முடிப்பதன் மூலம் சீர்திருத்தத்தைத் தனது சொந்த வீட்டில் முதலில் கொண்டு வருகிறான்.

97
Apavaaz/zy Z/77apa/
காதற் காட்சிகளை வருணிக்கையில் ஆசிரியரின் கவிதை சார்ந்த வர்ணனைகள் அழகாகவும், கவித்துவம் நிரம்பியனவாகவும் அமைந்துள்ளன. ஏனைய இடங்களிற் கூட ஆசிரியரின் எளிய நடை நாவலின் சுவாரசியத்திற்கு வகை செய்கிறது. செம்மைப்படுத்தப்பட்ட கொச்சை மொழி விவரணைக்கு அழகு முலாம் பூசுகிறது. செயற்கையான முறையில் அந்த உணர்ச்சிப் பிரவாகம் இந்நாவலில் ஊட்டப்படவில்லை. நாவலில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நம்பத்தகுந்த விதத்தில் அமைந்துள்ளது. ஆயினும், நாவலில் முக்கிய பாத்திரங்கள் அல்லாத ஒருசில பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சிகளை நீடித்திருப்பது குறைபாடாக அமைந்துள்ளது.
வாசிக்கத்தக்க நாவலாக இது சுவாரஸ்யமான முறையில் அமைந்துள்ளது. சாதாரண நிகழ்ச்சிகள் கூட நாவலில் முக்கியத்துவம் பெறுகின்றன. நேர்மையான நோக்கம், ஆசிரியருக்கு இருக்கின்றதால், இது வரை எந்த ஈழத்து நாவலாசிரியரும் கைவைக்காத விஷயமொன்றைச் சித்திரிக்க முன்வந்ததற்காக இந்த நாவலாசிரியரைப் பாராட்ட வேண்டும். இளங்கீரன் தனது நாவல்களில் சாதிப் பிரச்சனையைப் பற்றி தொட்டுச் சென்றாலும், குறிப்பாகவும், பிரத்தியேகமாகவும் அது பற்றி எழுத வில்லை. ஆயினும் தீண்டாச் சாதியினரின் ஒரு சில முக்கிய வாழ்க்கைப் போக்குகளை முழுதாகவே இந்த நாவலாசிரியர் சித்திரிக்கிறார். திரைப்படத்திற்குரிய பல அம்சங்கள் இந்த நாவலில் இருப்பதால் இதனைக் கவி நயம் செறிந்த திரைப்படமாகவும் எடுக்கலாம்.

Page 57
98 ஏச @ങ്ങZീയബീര് கணேசலிங்கனின் இரண்டாவது நாவலாகிய "சடங்கு" என்ற நாவலில் யாழ்ப்பாணக் கிராமிய இந்துத் திருமணங்களோடு ஒட்டிய வைபவங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள் ஆகியவை பூரணமாகச் சித்திரிக்கப் படுகின்றன. இது பற்றி அறிந்திராத ஒருவருக்கு இந்தப் புத்தகம் ஒரு கை நூலாகவும் விளங்கக் கூடும்.
நாவலாசிரியர் பல விஷயங்களை இந்த நாவல் மூலம் எள்ளி நகையாடுகிறார். தம்பதிகளை ஒன்று சேர்த்து வைப்பதற்கு முன்னர் ஒரு சில பழமைவாதிகள் திருமணத்தில் படாடோபத்தையும், மரபுகளையும் கிரிகை களையும் அனுட்டானங்களையுமே கவனிக்கின்றனரன்றி, தம்பதிகளின் மன இசைவு, கருத்தொற்றுமை ஆகிய வற்றைக் கவனிப்பதில்லை என்பதை நாவலாசிரியர் தனது கருத்தாகக் கொண்டுள்ளார். அதாவது, வித்தியாசமான புதிய பரம்பரை ஒன்று எழுச்சி பெறுவதைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று நாவலாசிரியர் குற்றஞ்சாட்டுகிறார். அவருடைய கருத்தின்படி நிலப் பிரபுத்துவ அடிப்படையிலமைந்த தமது சொந்த வாழ்க்கைக் கருத்தோட்டங்களைப் பெற்றோர்கள் திணிப்பதனால் அவர்கள் தமது சந்ததியினருக்கு மட்டு மின்றித் தமக்கும் தீங்கை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்பது நாவலாசிரியரின் கருத்து.
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய கலாநிதி கா.சிவத்தம்பியின் பகுப்பு முறை, கருத்தோவியம் சிந்தனைக்குரியது. V−

4PavašazZÝ ZZZžava/ 99 சுருங்கச் சொன்னால் முற்போக்கான சமுதாயம் ஒன்றில் மாற்றத்திற்கு உட்பட்டு வரும் சமூக மதிப்புகளை இந்த நாவல் சித்திரிக்கிறது. ஆயினும், பாத்திரங்கள் இயங்குவதற்கு அரசியல் இயக்கங்கள் காரணமாக இருந்தனவா என்பது நாவலாசிரியரால் தெளிவாகக் காட்டப்படவில்லை. அத்துடன் நாவலாசிரியர் குறிப்பிடும் நிலப்பிரபுத்துவப் பிரதிநிதிகளாக இப்பாத்திரங்கள் இல்லை என்பது எனது அபிப்பிராயம், கணேசலிங்கனின் சித்திர விஸ்தரிப்பு அகலத்தில் குறைவாக இருந்தபோதும் அது உலகியல் பரிமாணங்கொண்ட ஆழ்ந்த நாவலாகும். இந்த நாவல் ஓர் துன்பக் கதையை யதார்த்த பூர்வமாகச் சித்திரிப்பதோட்டல்லாமல் உடனிகழ்கால முரண்பாடு களையும் இணக்கமின்மைகளையும் சரியான முறையிலும் புத்தி பூர்வமான முறையிலும் மக்கள் அணுகுவதற்கு வழிகாட்டுகிறது.
கணேசலிங்கனின் மூன்றாவது நாவலாகிய "செவ்வானம்", கலாநிதி க.கைலாசபதி கூறுவது போல ஒரு வரலாற்று நாவலாகும். உடனிகழ்கால அரசியல் சமூகப் பின்னணி கொண்டது இந்த நாவல். இந்த நாவலில் முடிவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம்.
அரசியல் சமூக மாற்றங்கள் காரணமாகச் சடுதியில் பணம் குவித்த உயர் மத்தியதர வர்த்தகர் ஒருவரைச் சுற்றி இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது. அவருடைய நேரடி எதிர்ப்புப் பாத்திரமாகப் பல்கலைக்கழகத்தில் பயின்ற தொழிற்சங்கவாதி ஒருவர் வருகிறார். அவர் தொழிலாள வர்க்கத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர்.

Page 58
700 - മത്ര ക്രമഞ്ഞZബZീര് பத்திரிகாலயத்தைச் சேர்ந்த பெண் செயலாளர் ஒருவரும், வர்த்தகரின் டாம்பீகம் விரும்பும் மனைவியும் கதையில் மெல்லிடையாள் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். சமூகத்திலுள்ள சகல தீங்கு விளைவிக்கும் குறைபாடு களையும் நீக்குவதற்கு ஆசிரியர் மார்க்சியக் கோட் பாட்டை ஆலோசனையாகத் தெரிவிக்கின்றார். வாழ்க்கை பற்றியும் சமூகம் பற்றியும் ஆசிரியர் கொண்டுள்ள கருத்து அவருடையதாகும். சுவையாக வாசிக்கக் கூடிய நாவல் என்ற முறையில் இது ஆவலைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்க்கையையும் வாழ்க்கைப் போக்கு களையும் தீர்மானிக்கும் ஒவ்வொரு செல்வாக்கான அம்சமும் - மத்தியதர வர்க்கத்தினரின் தார்மீகம், இனக் கவர்ச்சி, காதல், செல்வம், அரசியல், சமூகப் போக்கு ஆகியவை - நாவலில் தீட்டப்படுகின்றன. பாத்திர அமைப்பில், குறிப்பாக தொழிற்சங்கவாதியின் பாத்திர வார்ப்பில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. அத்துடன் நாவலின் உருவத்திலும், பரிசோதனை முயற்சிகள் மேற் கொள்ளப்படவில்லை. ஆயினும், உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கிறது. உயர்ந்த மட்டத்தில் மதிப்பீடு செய்தால், கலைஞர் ஒருவரின் ஆழ்ந்த நோக்கும் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளதெனலாம்.
கணேசலிங்கனின் நான்காவது நாவல் தரையும் தாரகையும்' ஆகும். தனது நாவல்களுக்கு உடனிகழ்கால வரலாற்றை அவர் பின்னணி நிகழ்ச்சிகளாகத் தேர்ந்து எடுக்கிறார். இந்த நாவலில் 58 ஆம் ஆண்டு நடைபெற்ற கீழ்த்தரமான இனக்கலவரங்கள், பின்னணி நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளன. ஆனால், அவை, பின்னணி நிகழ்ச்சி களாக மாத்திரமே இடம் பெறுகின்றன. உண்மையில்

4paeva.54%z/Z7 4/7a/avazov 707 நாவல், மத்தியதர வர்க்கத்தினர் திருமண உறவுகள் பற்றி கொண்டிருக்கும் மதிப்புகளின் போலித் தன்மையைக் காட்டுகிறது. ஒரு விதத்தில் இதனை விளக்க நாவல் என்றும் கூறலாம். காதல், இனக்கவர்ச்சி போன்றவைக்கு இன்னொரு அர்த்தம், பொருள் வளமாகும் என்பது ஆசிரியரின் கருத்து.
அத்துடன் கீழ் மட்டத்திலுள்ள மத்தியதர வர்க்கத்தினர் அல்லது தொழிலாளவர்க்கத்தினர் செல்வந்தர்களின் வாழ்க்கைப் போக்குகளைப் பின்பற்றுவதையும் இந்த நாவல் கண்டிக்கிறது. அதே வேளையில் பெண்களின் உளப்பாங்கும், ஆண்களின் உளப்பாங்கும், சித்திரிக்கப் பட்டுள்ளதை மத்தியதர வர்க்கத்திற்குத் தன்னை உயர்த்திக் கொள்ளும் ஒரு கீழ் மட்ட மத்தியதர வர்க்க கதாநாயகனின் பரிதாபத்தை இந்த நாவல் சித்திரிக்கிறது. வர்க்க பேதங்கள் கொண்ட சமூகத்தில் மத்தியதர வர்க்க மனிதன், தரம் மூன்று எழுது வினைஞன், இணையாக அமையும் பொருளாதாரப் பிரச்சனைகள், ஆகியவை நாவலாசிரியரின் பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன.
கணேசலிங்கனின் முடிவுகள் தீவிர பாங்குடையவை யாக இருக்கலாம். ஆனால், அவற்றைச் சுவையாகத் தீட்டுவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது பாராட்டத்தக்க விஷயமாகும்.
(தமிழமுது: ஐப்பசி/மார்கழி 1970)

Page 59
702
எஸ்.பொன்னுத்துரைN
6 ஸ். பொன்னுத்துரை இன்று ஈழத்தில் ஒரு பிரபல எழுத்தாளர். கண்டன விமர்சனத்துறையில் (destructive criticism) (p6iraoTaooflufai filibu aii. 6156 ligஎழுத்தாளர்களுள் தலை சிறந்தவர். இலக்கியப் படைப்பாளியாக இவரை மதிப்பிடுகையில் இவர் ஒரு உருவவர்தி (Formist) ஆவார். இவர் கையாளும் உள்ளடக்கம் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டதாயிருந்தாலும், இவர் அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள், தத்துவங்கள் ஒன்றும் தமிழிற்குப் புதிதானவை அல்ல. ஆனால், அவற்றைக் கூறும் விதத்திலேயே புதுமையுண்டு. உள்ளடக்கப் பிரகரணங்கள் யாவும் திரும்பத் திரும்ப வருபவையாதலால், உருவ மாறுதலே, ஒரு படைப்புக்கு
 
 

703 மெருகு அளிக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர். பரிசோதனை என்ற பெயரில் பூரண வடிவங்களாக அமையாத இலக்கிய உருவத்தைச் சமைக்க முயன்று இருக்கிறார் இவர். அம்முயற்சிக்காக இவரைப் பாராட்டலாம்.
4pavassaç2z/Z7 42%Azvkaz”.az/
"தீ" என்ற நாவலும் உருவ அமைப்பினாலேயே பெரிய பரபரப்பை ஏற்படுத்திற்று. "தீ" ஒரு தத்துவ விசார நாவலோ, பாலுணர்ச்சியின் விளக்க நாவலோ, சமூக நாவலோ, வீட்டு நாவலோ, மனோதத்துவ நாவலோ அல்லது வேறு எந்தப் பிரிவுக்குள்ளுமோ அடங்கக்கூடிய நாவலோ அல்ல. ஆனால், "தீ"யில் மனோதத்துவ, உடலுறவு சம்பந்தமான, தத்துவார்த்த சமூக யதார்த்த சிருங்கார ரஸமான பார்வைகள் உண்டு. இவற்றில் எந்த ஒரு பார்வையுமே, மற்றவற்றை விட மேலெழுந்து நிற்கவில்லை. அதனால், இதனைக் குறிக்கோளில்லாத நாவல் என்றும் சொல்ல நேர்ந்து விடுகிறது. அதனாலேயே நல்ல தமிழ் நாவல்கள் இலக்கிய ரீதியில்) வரிசையில் இது இடம் பெறத் தவறி விடுகிறது.
நாவலாசிரியரின் சொந்த அனுபவங்கள், அபிலாஷைகள், கற்பனைகள், கனவுலக சோபனாக்கள் போன்றவற்றின் எழுத்து வடிவப் பதிவாக "தீ" அமைந்து இருக்கிறது. அதில் கவிஞனின் கலைப்பாங்கு இருக்கிறது. ஆனால், கொடூரமான துல்லிய யதார்த்தப் பார்வை மெருகில்லாமல் இடையிடையே அப்பப்பட்டு இரசனையை அருவருக்கச் செய்கிறது, மக்களுக்காக எழுதப்படும் இலக்கியம் மக்களை மேம்படுத்த, நல்வழிப்

Page 60
704
படுத்த உதவ வேண்டுமேயன்றி, வெறுமனே புகைப்படக் கருவிவாக்கில், உலகையும், மக்களையும் படம் பிடித்தால் மட்டும் போதாது. அதிலும், மனித வாழ்க்கையைப் பூரணமாகவே இவர் படம் பிடிக்கிறாரோ என்றால் அதுவும் இல்லை. இக்கதையில் வரும் பாத்திரச் சித்திரிப்பும், சம்பவங்களும் உடலின்ப வேட்கையைச் சுற்றி சுழன்றாலும், நாவலின் கதைப்பொருள் (Theme) அதுவல்ல என்பதை இங்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
இலக்கிய மதிப்பை இது பெறத் தவறி விடுகிறது. திலகா என்ற பாத்திரத் தன்மையைச் சற்று மகோன்னத மாகச் செய்ததனால் தான், இந்த நாவலை - அல்ல இந்த எழுத்துத் தொகுப்பை - முழுமையாகப் படித்து, சுவைக்க முடிகிறது. ** t சிதம்பர ரகுநாதன் எழுதிய 'கன்னிகா ஒரு மனோதத்துவ நாவல்; பருவ சுருதியின் வேட்கையை, யதார்த்த பூர்வமாக, கலை நயமாக, மாசிலா முறையில் விளக்கும் நாவல். இதனுடன் தீயை ஒப்பிடவே முடியாது. ரகுநாதன் ஈட்டிய இலக்கிய வெற்றியைப் பொன்னுத்துரை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
ത്ര ക്രമങ്ങZബ്ബീത്
அடுத்ததாக, இதன் ஆபாசத்தன்மை'யைப் பார்க்க வேண்டும். தமிழராகிய நாம், தமிழ் சொற்களைக் கூடப் பூரணமாக விளங்கிக் கொள்ளாமல், அனர்த்தங்களை உச்சரித்து விடுகிறோம். ஓர் இலக்கியம், ஆபாச உணர்வு களைத் தட்டி எழுப்புவதற்காகவே எழுதப்படுமாயின்,

ളിഞ്ചക്കീ/Z Z്ഞഖ 705 அது இலக்கியமாகாது. அது "கஞ்சல்' ஆக்கமாகும். தீ என்ற நூலில் அருவருக்கத்தக்க, அல்லது தமிழ் நவீன இலக்கியங்களைப் படித்துப் பழகியோர் மட்டும் அறிந்திராத, நேரடியான வர்ணனைகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. குழி என்ற அதிகாரம் சற்று மிகைப்பட எழுதப்பட்டுள்ளது தான் என்றாலும், நிச்சயமாகத் தீ ஒரு ஆபாச நாவலல்ல, அதாவது, ஆபாச உணர்வையே முதல் நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதல்ல. கதைப் போக்குடன் இவ்விதமான சில பகுதிகள், இலக்கிய நயமாக, வரையப்படின் ஆட்சேபிப்பதற்கில்லை.
சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, கந்த புராணம் மற்றும் அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், தாயுமானவர் போன்றோரின் படைப்புகள் எல்லாமே ஆபாசம் என்று நாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டியதுதானே! தள்ளமாட்டோம் நாம்!
நாவல் இலக்கியத்திலே, ஓர் எல்லையைத் தாண்டி விட்டதாகக் கருதப்படும் ஜேம்ஸ் ஜோய்ஸின் நாவலான யூலிஸஸ்' என்பதில் உள்ள கடைசிப் பகுதிகள், மிருகத் தனமான இச்சையைக் கூடப் பச்சையாகச் சொல்கின்றன. அதனால், அதனை ஓர் ஆபாசமான படைப்பு என்று கூறுவதில்லை. சற்றலி சீமாட்டியின் காதலன், 'லொலிற்றா, மற்றும் தொமஸ் மான், ஜ்ஷோன் போனல் சாத்ரே, அல்பேர்கெமு போன்ற எத்தனையோ இலக்கிய ஆசிரியர்கள் எல்லாம் பச்சையாகவே, ஆனால், கலை நயமாக எழுதியிருக்கின்றனர். பொன்னுத்துரையின் வருணனைகள் சில மெருகில்லாமல் இருக்கின்றன

Page 61
706
என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளையில், முழுதாக நோக்கும் பொழுது, தீ ஆபாசப் படைப்பு அல்லவே அல்ல.
മത്ര ക്രമങ്ങ്/മീയബീജ്
தீயிலுள்ள உருவ அமைப்பையும், உள்ளடக்கம் பற்றிய ஆதாரத்தன்மைகளையும் (Authenticity) Glungi நோக்காக அமைந்த இந்தக் கட்டுரையில், பகுப்பு முறை கொண்டு விமர்சிக்க முடியாது. அதற்குப் பிரிதாகவே ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஆனால், தற்காலிகமாக அ.ந.கந்தசாமி, "வீரகேசரி"யில் எழுதிய விமர்சனத்தை நானும் உள் வாங்கிக் கொள்கிறேன்.
உருவம் என்ற பொதுச் சொல் இலக்கியத்தில் பல உட்பிரிவுகளை உள்ளடக்கும். அவற்றுள் கதைப்பின்னல் (Plot), 2 gig (Technique), Guongs. 6167Tib, 6TCupgg, panl (Style) குறியீடுகள் (Symbols), உவமை உருவங்கள் போன்றவை ஒரு சில. பொன்னுத்துரை உருவவாதி என்னும் பொழுது விசேடமாக அவரது எழுத்து நடையையே நான் குறிப்பிடுகிறேன். உருவ அமைப்பிலுள்ள இதர பகுதி களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் பொழுது, அவரது உருவ அமைப்பில் சில குறைபாடுகள் உள. அவற்றை யெல்லாம் இங்கு நான் விபரிக்கப் போவதில்லை.
அவரது எழுத்துநடை பெரும்பாலும் பிரயாசையாக (laboriously) எழுதப்பட்ட அர்த்த புஷ்டியான நடை. இந்நடையினை அவர் சிருஷ்டித்துறையிலும், கண்டனத் துறையிலும் கையாள்கிறார். ஆனால் ஆக்கப்படைப்புகளிற் சில இடங்களில் இவர் வலிந்து வலிந்து எழுதுவது, இவரது

ങ്ങള്ക്കഥ Z( — 707 கலைத்தன்மையைக் கெடுத்து விடுகின்றது. "தீ"யில் உள்ள இவரது உவமான உவமேயங்கள் சிறப்புடையனவாய் அமைந்திருக்கின்றன. உதாரணமாக,
"riguemaT விழுங்கிய கேதுவைப் போல, முகத்தை அப்படியே அடைத்திருக்கும் அகலிய நயனங்களில், பரிவு நீரோடை சுரந்து நிற்கின்றது. அதன் குளு குளுப்பில் என் உள்ளம் கிளுகிளுக்கிறது"
எத்தனையோ விதமான அழகிய சொல்லங் காரங்களில் இதுவும் ஒன்று.
முடிவாக, "தீ" ஈழத்து எழுத்துலகில் ஒரு புது மாதிரியான முயற்சி. ஆனால், தமிழ் இலக்கிய உலகில் அதற்கு இடங்கிடையாது. "சுவடு" என்ற சிறுகதையை எழுதி வெற்றியீட்டிய ஆசிரியரே "தீ" யையும் எழுதியிருக்கிறார். முன்னையதில் கண்ட இலக்கிய இரசனையைப் பிள்னையதில் நான் காணவில்லை. "தீ" பற்றிய எனது பார்வை தான் முடிந்த முடிபு என்றோ சரியான பார்வை என்றோ வாசகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ இல்லை. எனது இரசனையைத் தெரிவித்துள்ளேன். அவ்வளவு தான்!
(6தனருனி : ஜூலை 1962)

Page 62
708
அ. ஸ.அப்துஸ் ஸமது M
எனக்கு வயது பதின்மூன்று
O ஸ். அப்துஸ் ஸமது அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். சுமார் கால் நூற்றாண்டாக எழுதி வருகிறார். அவர் ஒரு சமகால இலக்கியப் படைப்பாளியாக இருப்பதுடன் "சீறா இன்பம்', 'சுலைமான் - பல்கிஸ்", இலக்கியப் பொய்கை, இலக்கிய விளக்கத்துணை', இஸ்லாம் வழிகாட்டி"ஆகிய நூல்களின் ஆசிரியருமாவார். இவருடைய முற்றத்து மல்லிகை" என்ற தொகுப்பில் 57 ஈழத்து முஸ்லிம் கவிஞரின் கவிதைகள் இடம் பெற்று உள்ளன. இவர் இஸ்லாமிய கலாசாரத்தில் ஈடுபாடு உடையவர் என்பதை இவருடைய எழுத்துகளிலும், ஒலிபரப்புகளிலுமிருந்து அறிய முடிகிறது. ஆசிரியர் ஒரு தமிழ்ச் சிறப்புப்பட்டதாரி. கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்.
 
 
 
 
 

709
ഉിയക്സീ/z) Zഞഖ
அ.ஸ்.அப்துஸ் ஸ்மது பத்திரிகைகளில் எழுதி வெளியிட்ட பத்துக் கதைகளினதும் மற்றுமொரு கதையினதும் தொகுப்பே மதிப்புரைக்கு உட்படுகிறது. 1961 ஆம் ஆண்டிற்கும் 1976 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் சிலோன் ஒப்ஸேவர் (இது மொழி பெயர்ப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன்) தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, மலர், தேன்மலர், இன்ஸானியா அகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. இந்தக் கதைகள் பற்றிப் பார்க்கு முன்னர் ஆசிரியரது கோட்பாடு, தத்துவ நோக்குகள் ஆகியன பற்றிச் சிறிது பரிச்சயம் செய்து கொள்ளல் அவசியமாகிறது.
"..மனித உணர்வுகள், தேவைகள் என்பன பொருளியல் நோக்கு ஒன்று மட்டும் உடையனவல்ல. மனித இயல்புகளின் பல்வேறு உந்தல்கள் - வாழ்க்கை அனுபவங்கள் நம்மையும் மீறி நிற்கும் நியதிகள், நம்பிக்கைகள் என்பனவற்றையும் அவை பெரிதும் பிரதி பலிப்பன, அத்தோடு சமுதாய மரபு நெறித் தாக்கங்கள் என்பனவும் அவர்களது வாழ்வின் அமைப்பைத் தீர்மானிக்கின்றன. என் சிறுகதைகள் என் சமுதாயத்தை, என் சூழ்நிலையை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் கலை வடிவங்களாக விளங்க வேண்டும் என்பதை நான் அவ்வக் காலகட்டங்களில் நினைவுகூரத் தவறவில்லை. இது எம் கதைகளில் ஓர் இலட்சியத் தாக்கத்தை இயல்பாகவே ஏற்படுத்தியிருந்தது என் சிறு கதைகள், என் சமுதாயம், நான் பிறந்த மண் என்னும் இரண்டையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்பதில் நான் எப்பொழுதுமே

Page 63
770 - മത്ര ക്രമങ്ങzബീര് அக்கறை கொண்டு வந்துள்ளேன். சமுதாய நடை முறைகள், போக்குகள் என்பனவற்றிற்குக் கலை வடிவம் கொடுக்கும் போது தனி மனித சுயாதீனத் திற்கு ஏற்படும் தடைகளை மீறித் தன்னம்பிக்கையோடு முன்னேறும் பாத்திரங்கள் பலவற்றை நீங்கள் இக்கதையில் சந்திக்கலாம். தனிமனித உணர்வுகள் மதிக்கப்படத்தக்கன. அத்தகைய சுயாதீனங்களும் உணர்வுகளும் சமுதாயத் தினால் அழிக்கப்படக் கூடாதென்பது என் கருத்து."
ஆசிரியரின் கூற்றுகள் சில மேற் கண்டவை. இந்தப் பின்னணியிலேயே நாம் அவருடைய கதைகளை அணுகுதல் வேண்டும்.
இலங்கையின் இரண்டாவது சிறுபான்மை சமூகத் தினர்களாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களுள் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழ் பேசுகின்றனர். தமிழை நேசிக்கின்றனர். மதத்தால் இஸ்லாமியர்களாகவும், இனத்தால் முஸ்லிம்களாகவும், மூச்சால் தமிழர்களாகவும் அவர்கள் வாழ்கிறார்கள் என்பது சிறிது மிகையாகத் தென் பட்டாலும் அதில் பெருமளவு உண்மையும் இருக்கிறது. ஈழத்து முஸ்லிம்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழ்கிறார்கள். குறிப்பிட்ட இந்த முஸ்லிம்களின் வாழ்வில், அப்பகுதித் தமிழர்கள் வாழ்வின் சாயல் இருப்பதைக் காண முடிகிறது. இது இயல்பே.
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் முஸ்லிம்
மக்களின் பங்கு விதந்துரைக்கத் தக்கது. ஈழத்து முதல்

777
தமிழ்நாவலாசிரியர், ஏன், முழுத்தமிழ் நாவல் பரப்பிலும் கூட முதல் நாவலாசிரியர் எனக் கருதப்படும் சித்தி லெப்பை முதல் இன்றைய எண்ணற்ற புதுக்கவிதைக்
திலக்கிz z/சவை
காரர்கள் வரை பலரும் பற்பல விதங்களில் தமது பதிவேடு களை அளித்துள்ளனர். வரலாற்றாசிரியர்கள் தொகுத்தும் வகுத்தும் பகுத்தும் காட்டும் போது இந்த உண்மை தெரிய வரும். அக்காலம் வரும் வரை கிடைக்கும் தொகுப்பு களைக் கொண்டு, மனப்பதிவுகளாகச் சில அவதானிப்பு களை மாத்திரமே தெரிவிக்க முடியும். அத்தகைய ஒரு அலுவலையே இங்கு நான் செய்ய முற்படுகிறேன்.
சிறுகதைகளைப் பொறுத்த மட்டில், அ.ஸ்.அப்துஸ் ஸ்மதின் இந்தத் தொகுப்பே ஈழத்து முஸ்லிம்களின் வாழ்க்கைப் பகைப் புலத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது. ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகள் இன்னும் தொகுப்பாக வெளிவரவில்லை.
"எனக்கு வயது பதின்மூன்று" என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதைகள் லேசான உணர்வுகளை மெல்ல எழுப்புவன. இவை, சாமான்யமான கதைச் சம்பவங்களை அல்லது உணர்வுகளைச் சித்திரிப்பனவாக மேலெழுந்தவாரியாகத் தோன்றினாலும், உள்ளுணர்வில் சிறிது இதத்தை அல்லது சஞ்சலத்தைத் தோற்றுவிப்பவை. அதுவும் ஒரு கலையழகு தான். அத்தகைய கதைக்கு ஓர் உதாரணமாக, "நெருஞ்சிமுள்'ளைக் காட்டலாம். உண்மைச் சம்பவம் ஒன்றிற்குக் கற்பனை மெருகிட்டு ஒரு வித தார்மீக உணர்வை ஆசிரியர் புலப்படுத்த முற்படுகிார். இருந்த போதிலும் கதை நிகழும் இடம் தவிர்த்த கலப்புப்

Page 64
772 பண்புகள் கொண்ட கொழும்பு போன்ற நகரங்களில்
്ത്ര മഞ്ഞമീബീജ്
கதாமந்தர், இக்கதையில் வரும் கபூர் போன்று சித்திரிக்கப் படுவாரா என்பதும் ஆராயத் தக்கது. இக்கதையில் "நெருஞ்சி முள்" ஒரு குறியீடாகவும், இரட்டை அர்த்தம் உடையதாகவும் வருகிறது. கபூரின் நெஞ்சிலும் ஒரு நெருஞ்சி முள் போல அந்தப் பெட்டைக் குருவியின் மாண்ட நிலை இருக்கிறது. சமுதாயம் என்பது கிணற்றுக்குள் விழுந்த செம்மறியாட்டு மந்தையின் கதை போன்றதே என்ற உவமை கதைக்குப் பொருத்தமாகவே அமைகிறது.
ஆசிரியரின் உவமைகள் நயக்கத்தக்கவையாக இருக்கின்றன என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு, தங்கை' என்ற கதையில் வரும் ஆரம்பப் பந்திகளாகும். கிழக்கிலங்கைத் தமிழில் நல்ல பரிச்சியமுள்ளவர்களுக்கு இந்தக் கதையில் இடம் பெறும் சாதாரண பேச்சு வழக்கு குறிப்பாக அப்பகுதி முஸ்லிம்களின் தமிழ்க் கதாபாத்திரங் களுக்கு இடையிலான உண்மையான, நேர்மையான உறவை யதார்த்தபூர்வமாகக் காட்டுகின்றது. சிறுகதைக் குரிய இலட்சியங்களில் ஒன்று எதிர்பாராத முடிவு என்பவர் சிலர். அதற்கேற்றவாறு சிறிது திகைப்பூட்டும் முடிவு கதைக்கும் கவர்ச்சியூட்டுகிறது. இக்கதையே 1961 ஆம் ஆண்டு 'சிலோன் ஒப்ஸேவர் பத்திரிகையில் வெளியாகியது.
மசக்கை' என்ற கதையில் பக்கீர்மாரின் வாழ்க்கைக் கோலங்களை வெகு அனாயாசமாகக் காட்டுகிறார் ஆசிரியர். உண்மையில் முன் பின் இது பற்றிக் கேள்விப்

773 படாத எனக்கு, கதையில் வரும் சம்பவங்களை உணர்வால்
அனுபவிக்க முடிந்தது. இது ஒரு சுவையான கதை மட்டுமன்றி உட்பொருள் கொண்டதாகவும் வாசகரின்
ളജിക്കീz’ Z്ഞയ
கற்பனைக்கு வேலை வைக்கும் முடிவைக் கொண்ட தகாவும் இருக்கிறது. இந்த விதத்தில் அப்துஸ் ஸ்மது, சிறுகதை நுடட்பங்களை நன்கு தெரிந்து அறிந்தவர் என்பது தெரிய வருகிறது.
ஆசிரியர் வெறும் உருவவாதியல்லர். முற்போக்கான சிந்தனைவாதி என்பதற்கு விளக்கமாக "சாணைக்கூறை" என்ற கதை அமைந்துள்ளது. இந்தக் கதையில் வரும் சுவைதாவின் கடிதம், இலக்கிய நயமும் சிந்தனைத் தெளிவும் பண்பான போக்கும் கொண்ட ஒரு நவீன முஸ்லிம் பெண்ணின் எழுத்து என்பதை அறிமுகஞ் செய்கிறது. அதில் இழையோடும் ஒரு வித இரக்க பாவம், அதனை அந்த உணர்ச்சி மேலிடாகச் சொல்லாமல் ஆசிரியர் பார்த்துக் கொண்டார். மனதில் ஒருவித அரிப்பைத் துழாவும் பண்பை இக்கதை ஏற்படுத்தி விடுகிறது.
தொகுப்புத் தலைப்புக் கதை, ஆசிரியர் கூறியிருப்பது போன்று தற்றுணிபுள்ள கதாபாத்திரம்" ஒன்றைக் கொண்டது. வரவேற்கத்தக்க கதை. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியச் சுவையை அறிய இக்கதையைப் படித்துப் பார்க்கலாம். அது மட்டுமல்ல. காணிச்சீர்திருத்தம் என்ற பெயரில் இடம் பெறும் சில தில்லுமுல்லுகளையும் கதை சொல்லாமல் சொல்கிறது. கூடவே, யதார்த்த நிலையில் உணர்ச்சிகளின் சலனங்களையும் காட்டுகிறது.

Page 65
774
മത്ര മഞ്ഞ/Zിങ് "சாவின் எல்லை" என்ற கதை தாம்பத்திய உறவின்
நெருக்கத்தையும் பொருளாதார அவல நிலையையும்
மனச்சாட்சியின் கிளறல்களையும் காட்டி நிற்கிறது.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற பல கதைகளில் முக்கிய பாத்திரங்களாகப் பெண்களே வருகின்றனர். பெண்களின் மனோதத்துவத்தை ஆசிரியர் உளவியல் ரீதியில் பகுத்தாராய்ந்திருப்பவர் என்பதை நடமாட விட்டிருக்கும் பாத்திரங்களின் கட்டுக்கோப்பு அமைந்து உள்ளது. வர்ண பேதம்' காவிய நயம் செறிந்த ஒரு பெண்ணின் சிருங்காரக் கதை. இதயக்கதவு, மனவடிவு' ஆகியவற்றையும் அப்படியே விபரிக்கலாம். ஆனால், இக்கதையின் முடிவு சிறிது அதீத நாடகப் பண்பு வாய்ந்ததாக இருக்கிறது.
இறுதியாக, "மனிதன் உண்மையை அடைவதற்கு மாயை அவனை எவ்வளவு தூரம் உழலச் செய்கிறது. தெய்வ அருள் இல்லாமல் அவனை விட்டும் நீங்காது" (ஆசிரியர் விளக்கம்) என்பதை வலியுறுத்தும் அவளும் நானும்' என்ற கதையும் "ஈர்ப்பு' என்ற கதையும் சமயச் சார்புடைய தத்துவக் கதைகளே.
ஆசிரியர், நான் முன்னர் கூறியது போன்று சிக்கலான சித்திரிப்புகளில் ஈடுபடாமல், இலேசான சம்பவங்களை அலட்டிக் கொள்ளாமல் சித்திரித்துக் காட்டும் முயற்சியில் கதைகளை எழுதுகிறார். அதுவும் ரசிக்கத்தக்கதே.
(இனிமை : ஜனவரி 1978)
 

775
தெணியான் மரக்கொக்கு
jf நாவல் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் அண்மைக் கால வரலாற்று நாவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தெணியான் (இது புனை பெயர்) எழுதிய சமீபத்திய படைப்பு, மரக்கொக்கு, 1973 முதல் 1989 வரை இவர் எழுதிய நூல்கள், 'விடிவை நோக்கி" (நாவல்) 'கழுகுகள்" (நாவல்), "சொத்து' (சிறுகதைகள்), பொற் சிறையில் வாடும் புனிதர்கள் (1989),
கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ள மரக் கொக்கு நாவலை கனடாவிலிருந்து வெளிவரும் நான்காவது பரிமாணம், அதன் ஐந்தாவது வெளியீடாக வெளியிட்டிருக்கிறது.

Page 66
776
മത്ര ക്രീമഞ്ഞZബ്ബിങ്
இறுமாப்புடன் வாழ்ந்து, கையாலாகாதவளாக உருக்குலைந்து போய் வீழ்ச்சியடையும், மாற்றத்துக்கு உட்படத் தவறும், அறியாமையின் வெளிப்பாடான ஒரு பெண்ணையும், அவள் குடும்பத்தினரையும், சுற்றி நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்தக் கதை. உடன் நிகழ்கால சமுதாய நடப்புகள், வரலாற்றுப் பின்னணியைக் காட்டி நிற்கின்றன.
விஜயலட்சுமி என்ற மணமாகாத ஒரு 35 வயது பெண் மரக்கொக்குக்கு சூசகமாக ஒப்பிடப்படுகிறாள். எனவே, மரக்கொக்கு ஒரு சின்னம், அதுவே கதையின் தலைப்பு.
சமநிலை நோக்கில்லாமல் பெண்ணின் வாழ்வியல் அம்சங்களை உற்சாகம் காரணமாக, ஒரு தலைப்பட்சமாக அணுகும் பெண்ணியவாதிகளில் சிலர், இந்த நாவலைப் பெண்ணியத்துக்கு எதிரான ஒரு நாவலாகக் கருதவும் கூடும். அதாவது, இந்தச் சமுதாயத்தில், குறிப்பாக, சாதி சமய ஆசாரங்கள் இளகிப்போகும் யாழ்ப்பாணச் சாதியமைப்பு முறை மையிற் கூட பெண் தனித்து நின்று, ஆண் மாதிரியாக நடந்துகொள்ள முடியாது என்பது நாவலிற் கூறாமற் கூறப்படும் செய்தி
உலகமே ஒரு குடும்பம், ஒரு கிராமம் என்று உணரப்படும் இவ்வேளையில், இக்கதையில் நிகழுமாற் போல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடுமா என்று இன்றைய இளவல்கள் ஆச்சரியப்பட்டால் அது ஆச்சரிய மில்லை. ஏனெனில், இந்த 90 களில் யாழ்ப்பாணச் சமுதாயம் அடிவாறாக மாற்றத்திற்குட்பட்டு வருவதை

രക്കീമീ Z( - ፲፲ፖ யாவருமறிவர். போரினால் பல பழைய பிற்போக்கான போக்குகள் களையப்பட்டு வருகின்றன. இந்த நாவலில் கதை நிகழும் காலம் 1940களின் பிற்பகுதி முதல் தாழ்த்தப் பட்டோர் என்று கூறப்படுபவர்களின் ஆலயப் பிரவேசம்' பற்றிய எத்தனிப்பு வரையிலுமானது.
இந்தக் கதையில் அடிக்கடி (refrain) வரும் பந்தி : "அந்தக் கூடத்தில் சாய்வு நாற்காலிக்கெதிரே வட்ட வடிவமான டீப்போய்யின் மேல் இளம் பச்சை வண்ணத்தில் வெண்பட்டு நூலால் பூக்கள் இழைத்த விரிப்பின் மீது ஒற்றைக் காலில் தவமியற்றிக்கொண்டு நிற்கும் அந்த மரக்கொக்கு, அங்கு தன் தவத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது"
இந்த மரக்கொக்கு, நாவல் நாயகி விஜயலட்சுமியின் பிடித்தமான ஒரு நூதனப் பொருள். அது அவளையே பிரதிபலிப்பதாக நாவலாசிரியர் சுட்டுகின்றார்.
நாவலை ஆசிரியர் முடித்து வைக்கும் கூற்றுக்கள் :
"கொக்குக்கு. என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு மீன் வரும். ஆனால் மரக் கொக்குக்கு.?"
நாவலின் இறுதிக் கட்டங்களில், பெரியவர்களும், சிறுவர்களுமான ஆறு பெண்களுக்கிடையில் தனித்துப் போன, அகம்பாவம் பிடித்த ஒருத்தியின் கதை சொல்லப் படுகிறது. காலத்தின் போக்கை உணராத, அல்லது உணர்ந்தும் தன்னை மாற்றிக்கொள்ள மறுக்கும்
ஒருத்தியின் கதை நாவலில் கூறப்படுகிறது.

Page 67
77.8
ത്ര ക്രീമഞ്ഞ/Zബീജ് இந்தப் பாத்திரத்தை மையமாக வைத்து ஆசிரியர் தமது நாவலை ஏன் ஏழுதினார்?
அமரர் கே. டானியலுக்கு இந்த நாவலை அர்ப்பணஞ் செய்திருக்கும் நாவலாசிரியர் தெணியான், விமர்சகர்களுக்குச் சிரமந்தராமலே தனது நாவல் எழுதப் பட்ட முறைமையைத் தானே விளக்கிக் கூறுகிறார். அவர் கூற்றை இங்கு தருவது மிகப் பொருத்தமே.
"இவள். மரக் கொக்குக்கு! வாழ்வின் இனிய வசந்தங்களை இவளுந்தான் நீண்டகாலம் நெஞ்சிலே சுமந்திருந்தாள்.
தனக்குள்ளேதான் ஓர் அரசி என்னும் நெஞ்சுநிறைந்த நினைவுகளுடன் தனக்கெனத் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவியாக இவள் விளங்கினாள். இவளின் தனி வீடு, இவளது ஆட்சியதி காரங்கள், கோலோச்சும் கோட்டையாக இருந்து வந்தது. அந்தக் கோட்டையினுள்ளே இறுமாந்து தலை நிமிர்ந்து உலாவிக் கொண்டிருப்பது போல வெளியே இவள் தோற்றம் காட்டினாள். உள்ளத்தினுள்ளே நிறைவேறாத கனவுகள் யாவும் தூரத்துத் தாரைகளாக எப்பொழுதும் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. அண்ணாந்து வானத்தை வெறித்த வண்ணம் நெடு மூச்செறியும் இளமை உணர்வுகளினால் உள்ளம் சுருகிக் கொண்டிருந்தது. கல்யாணம் ஆகாதவள். அதனால், வயது என்ன ஆனாலும் கன்னிப் பெண். இவளை இன்னும் எத்தனை காலம்
ஏக்கத்துடனும். தவிப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கும்

ളിങ്ങക്ക്സീസ്ഥ Zഞഖ -— 7g படி நான் விட்டு வைக்கலாம்!" என்று நியாயப்படுத்தும் நாவலாசிரியர் மேலும் தொடர்கிறார்.
"இவளுக்குத் தங்கைகளாக வந்து பிறந்த சிலர், தேடி வந்த சாதகங்களுடன் இணங்கிப் பொருந்திப் போனதால் இன்று வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்து விட்டார்கள். தாங்கள் வெளி வர வேண்டும் என்பதற் காகவே வெளியீட்டு நாயகர்களிடம் அந்தரங்கத்திற் சோரம் போனவர்கள், அவர்கள். இவள் எப்பொழுதும் எச்சரிக்கையானவள். அவர்களுக்கு நேர்ந்த விபத்து, இவளை மேலும் விழிப்படையச் செய்தது. தன்னை இழந்து போவதற்கு ஒரு பொழுதும் இவள் தயாராக இல்லாதவள்.
"அதனால் நீண்ட பதினான்கு ஆண்டுகள் இவள் காத்திருக்க நேர்ந்தது. இவளை நான் காத்திருக்க வைத்து விட்டேன்."
தெணியான், இனி தமது சமுதாய வராற்று நோக்கில் கொண்ட தமது அக்கறையைக் காட்டுகிறார்.
'இவளின் வாழ்வுக்கூடாக இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தை, அதன் மூல வேருடன் கண்டு கொள்ளலாம். அக்காலக்கட்டத்துச் சமூக பரிணாமத்துக்கான முன் தொடர்ச்சியாக வளர்ந்துள்ள ஒரு வாழ்வுச் சங்கிலியையும் ஓரளவு தரிசிக்கலாம்."
"பாரம்பரிய பெருமைகள் என்னும் வெண்கொற்றக் குடையின் கீழ் சாதி அகங்காரம் என்னும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றவள் இவள். குடும்ப உறவினர்களாகத்

Page 68
720
தோன்றியவர்கள், இவர்களிலிருந்து மாறபட்ட சிந்தனைப் போக்கும், குணவியல்புகளும் உடையவர்களாகக் குடும்பத்துக்குள் வளைய வந்து இணைந்துநிற்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இந்தச் சமூகத்தின் வகை மாதிரியான மனிதர்கள். இவர்களது சிந்தனைகள், குணவியல்புகள், நடத்தைக் கோலங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் என்பவைகள் மூலம் இவர்களது வகைமாதிரி இயல்பினைக் கண்டுகொள்ளலாம்" என்கிறார் நாவலாசிரியர்.
മത്ര ക്രീമഞ്ഞZബ്ബീങ്
மார்க்சிய விமர்சகர் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அவதானிபின் படி, "மார்க்சியத்திற் சில வேளைகளில் பேசப்படும் "மேற்கட்டுமானத்தின் கொடுங்கோன்மை" என்பதை விஜயலட்சுமி என்னும் இந்தப் பாத்திரத்திலே மிகச் சிறப்பாகக் காணலாம்." இவருடைய முன்னுரை நாவலில் இடம் பெற்றுள்ளது.
நாவல் என்ன கூறுகின்றது. அதன் அடி நாதம் (Theme) என்ன என்பவற்றை அறிந்து கொண்டோம் கதைப் பின்னல் (Plot) எவ்வாறு அமைந்துள்ளது என்று கூறினால் வாசகர்கள் தாமே நாவலைப் படித்துச் சுவைக்காமல் விட்டுவிடக்கூடும். எனவே, அதனைத் தவிர்த்துள்ளேன். பாத்திர அமைப்பு, விறுவிறுப்பு, கதை நிகழுமிடம் போன்ற விபரங்கள் ஓரளவு இப்பொழுது உங்களுக்குத் தெரியவந்திருக்கும்.
நாவல் எழுதப்பட்ட முறை, எழுத்து நடை போன்ற விபரங்களைச் சுருக்கமாகப் பார்த்து, இந்த மதிப்புரையை நிறைவு செய்வோம்.

gPav454%z/Z7 Z/7a/az/az/ 727
11ஆம் பக்கம் முதல் 182 ஆம் பக்கம் வரை அத்தியாயங்கள் எதுவுமேயின்றி முழுவதுமே கதை. கதை ஆரம்பமே நிகழ்காலத்தில், படர்க்கையிடத்திலிருந்து கூறப்படுகிறது. மீனலோசனி என்ற சிறுமி பற்றியும், அவள் செயல்கள் பற்றியுமான விவரணை, இலங்கை எழுத்தாளர்கள் வழமையாக எழுதும் பாணியில் இல்லாமல், சுவாரஸ்யமாக, புதுப்புனைவாகத் தெணியான் வார்த்தைகளைக் கையாள்வது, வாசகர் மனதை முதலில் கவருகிறது. சிறுமியை, ஆசிரியர் பின்னர் விஜயாவைச் சந்திக்க வைக்கிறார். மாறி மாறி மீனாவினதும், விஜயாவினதும் பாத்திர வார்ப்புகள் உருப்பெறுகின்றன. அன்னலட்சுமி என்ற பாத்திரத்தின் செயலொன்றும், விஜயாவின் நடப்புகளும் விபரிக்கப்படுகின்றன. அதன் பின் மீனாட்சியம்மாள் விஜயா உறவு, பொன்னம்பலம் பிள்ளை பற்றிய செய்திகள்.
சிதம்பரப் பிள்ளை, பொன்னம்பலம் பிள்ளை, வைரவநாத பிள்ளை போன்றவர்களின் பூர்வீகங்களை எடுத்துரைக்கும்போது ஆசிரியர் நிகழ் காலத்திலிருந்து, சென்ற காலத்திற்கு 35 ஆம் பக்கத்திலிருந்து சென்று விடுகிறார்.
இது 62 ஆம் Lukasub வரை செல்கிறது. பின்பு விஜய
லட்சுமி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாணிக்கம்
என்ற பாத்திரத்தின் அறிமுகம், அவன் செயல்கள், விஜயலட்சுமியின் திகைப்பு, சின்னி - மணியகாரன் உறவு, கறுத்தான் - சின்னி உறவு ஆகியன அடுத்து வரும் சம்பவங்களின் எடுத்துரைப்பு. இவை யாவும் சென்ற

Page 69
, ፲22
காலம் மூன்றாம் இடத்திலிருந்து விபரிக்கப்படுகின்றன. 95 ஆம் பக்கம் வரை இந்த விபரிப்புகள் இடம் பெறுகின்றன. அந்தப் பக்கத்தின் நடுப் பகுதியிலிருந்து அன்னலட்சமி - ஆனந்தராசன் - சின்னி உறவுகள் 105 ஆம் பக்கம் இறுதி வரை விபரிக்கப்படுகின்றன.
മഗ്ര ക്രീമഞ്ഞ/Zഖ/ബീജ്
இறந்த காலம் கைவிடப்பட்டு நிகழ் காலம் வருகிறது. விஜயலட்சுமி - தனலட்சுமி உறவுகள், மீனலோசனியின் தாய் வரலட்சுமியின் வாழ்க்கைப் பின்னணி, அவள் மீது விஜயலட்சுமி காட்டும் ஆணாதிக்கம், விஜயலட்சுமியின் கோயில் நிர்வாகம், மாணிக்கத்தின் வீழ்ச்சி, தாழ்த்தப் பட்டவர், பாதிக்கப்பட்ட முறை, தேர்தல் காலச் சமாச்சாரங்கள், அன்னலட்சுமி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகை, விஜயலட்சுமி அன்னியமயப்படல் போன்றவை சென்ற காலத்தில் மீண்டும் விபரிக்கப் படுகின்றன. அதே சமயம், சில பகுதிகள் நிகழ் காலத்தில் கூறப்படுகின்றன. விஜயலட்சமி தவிர ஏனையோர் குதூகலமாகப் போவதை சுவாரஸ்யமாக ஆசிரியர் விபரிக்கிறார். பேச்சுத் தமிழ் சுவையாக இருக்கிறது. இப்பொழுது 151 ஆம் பக்கத்திற்கு வந்துவிடுகிறோம்.
விஜயலட்சுமி தனிமைப்படுத்தப்பட்ட விஷயம், அவள் மீது தெய்வசிகாமணி கொண்ட காதல் நிகழ் காலத்தில் விபரிக்கப்படுகிறது. அடுத்து, சென்ற காலத்தில் மாணிக்கம் - பொலிஸ் விவகாரம், தனலட்சுமி - சின்னராசன் உறவை விஜயலட்சுமி காணல், தற்கொலை செய்வது பற்றிய அவள் சிந்தனையை விபரித்து விட்டு, பின்னர் நிகழ் காலத்தில் அவளின் மனோநிலையைப்

723 பற்றிய எடுத்துரைப்பையும், மற்றைய சகோதரிகள், தாய் உரையாடல்களையும் ஆசிரியர் தருகிறார். இறுதிக் கட்டமும் வருகிறது.
தெணியானின் இந்தக் கதை எழுதப்பட்ட முறை சிறிது வித்தியாசமானது. வழமையான வாய்ப்பாட்டுக்
ളിഞ്ചക്കീz’ Zല്ക്കബ്
கதைகளைப் படித்து சுவாரஸ்யமிழந்து போன வாசகர்கள் நிச்சயமாக இதனைப் படித்த பின், உருவ அக்கறை கொண்ட ஈழத்து எழுத்தாளர்களும் இருப்பதை அறிவார்கள்.
பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்கள் கூட இப்பொழுதெல்லாம் தமிழ்ப் புனைக்கதைகளின் உலகப் பொதுவான வளர்ச்சி பற்றிச் சிந்திக்கத் தொடங்கி யிருப்பதுடன் தெணியான் போன்ற எழுத்தாளர்கள் அத்தகைய வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவலாம் என்றும் கூறுகிறார்.
வேறு என்ன வேண்டும்?
(தினகரன் வாரமஞ்சரி: 07.05.1995)

Page 70
724
திTவலூர் இராசதுரை எழுதிய பத்துக் கதை களடங்கிய புத்தகம் குழந்தை ஒரு தெய்வம்' சென்னை "சரஸ்வதி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ஒரு எழுத்தாளன் ஒரேயொரு நல்ல கதை எழுதினாற் கூட அவனுக்குரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். குழந்தை மனப்பாங்கை வைத்துத் தமிழில் ஏற்கெனவே நல்ல கதைகள் வெளிவந்திருக்கின்றன.
இராசதுரை எழுதிய 'தொட்டாற் சுருங்கி" என்ற கதையில் குழந்தையுளப்பாங்கு ஊடுருவிச் செலுத்தப் பட்டுச் சித்திரிக்கப்படுகின்றது. தமிழில் உள்ள நல்ல சிறு கதைகளில் இதுவும் ஒன்று. ஆசிரியரின் சொற்
செட்டினாலும், சொல்லாமற் சொல்லி விளங்க வைக்கும்
 

ീജക്കഥ? Zരമ 725 கலை நயத்தாலும் ஜீவமலரின் உணர்வுக் குமுறல்கள்' வாசகன் மனத்தில் பெட்ரோல் மீது எறியப்பட்ட தீப்பந்தம் போல் தொற்றிக் கொள்கின்றன. (லா.சா.ராமாமிருதம் என்ற தமிழ் நாட்டு எழுத்தாளரின் எழுத்து நடையின் சாயல் சிறிது இக்கதையில் படிந்திருந்தாலும் இக்கதையினை 'பிரக்ஞை ஓட்டம்' என்ற உத்தியைக் கொண்ட கதை என்று சொல்ல முடியாது) கதையை நேரடியாகவே செயல்களுடன் ஆசிரியர் படிப்படியாக எடுத்துக் கூறுவது இரசிக்கத் தக்கதாய் உளது.
"வார்த்தை செயலாகி செயல் மாமிசமாகி, வார்த்தையே மாமிசமாகும் விந்தையைப் பற்றிய சிந்தனையே கிடையாத அவளின் பருவத்திற்கு இது பெரும் புதுமையாயிருந்தது" என்று எழுதியிருப்பது மிகமிகக் கவிதா சக்தி நிரம்பிய உணர்த்துதல் என்று எனக்குத் தோன்றுகிறது. கவிதைப் பூச்சு நடையை ஆசிரியர் இடையிடையே பின்னியிருக்கிறார் "கணவன் மழையில் நனைந்து கொண்டு நிற்பதுபோலத் தெரிந்தது" என்ற வாக்கியம் அழகாக அக்காவின் மனோநிலையை உணர்த்தி விடுகின்றது. அத்தான் முன் ஜீவமலர் நிற்கும் பொழுது அனுபவிக்கும் உணர்வை பழுதையும் பாம்புமான அவனில், சர்ப்பாம்சம் இப்படி விகர்ச்சித்துப் படமெடுக்கிற போதெல்லாம் அந்த அரவத்தின் உடலை இருளில் மிதித்தவள் போல அவள் திணறிப்போவாள் என்று வெளிக்காட்டுகிறார். அதற்கடுக்க, 'அட கோப மென்றால் அடியன். திட்டன்" என்று சேர்ந்திருப்பதும் உயிரூட்டமாயுள்ளது.

Page 71
726
മഗ്ര ക്രീമമ്മ/ZഖZബീബ് இத்தனைக்கும், இக்கதையில் கதையம்சம் அல்லது கதைச் சம்பவங்கள் மிகச் சாதாரணமானவை. ஆனால், வெகு அழகான வடிவம் கொண்டிருப்பதனாலும், சம்பவங்கள், குழந்தையின் மனோ பக்குவத்துடன் இணக்கமாயிருப்பதனாலும் வெற்றி பெறுகின்றது.
(இத் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை மிகத்தரம் உயர்ந்ததாயுள்ளது. சிறுகதை இலக்கிய வரலாற்றையே மிகத் தெளிவாக முன்னுரையாசிரியர் கா.சிவதம்பி விமர்சிக்கின்றார்)
அனுபவ முதிர்ச்சி பெற்ற கலைஞன் ஒருவன், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின் முனைப்பினை எவ்வாறு காண்கின்றான் என்பதை விளக்குவது போல் 'வீழ்ச்சி' என்ற கதை அமைந்துள்ளது, என்கிறார் முன்னுரை ஆசிரியர், ஆனால் இக்கதையின் மூலம் கதாசிரியர் என்ன உணர்த்த விரும்புகிறார் என்பது புரியவில்லை. இதற்குக் காரணம் அவர் எடுத்துக்கொண்ட உருவ அமைப்பேயாகும். கதை முதலுக்கும், கடைக்கும் ஒருவிதத் தொடர்பும் கிடையாது. கதையில் ஒரு ஒழுங்கு முறை கிடையாது. காலம், இடம் பின்னிக் கிடக்கின்றது. கதையில் பாலச்சந்திரன் முக்கிய பாத்திரமா, அல்லது அவன் சகோதரிகளின் அவல நிலை பிரதான அம்சமா, அல்லது அவன் மனைவியின் "செக்ஸினஸ்” அடிப்படையா என்று சரியாகப் புலப்படுத்தப்படவில்லை.
"தேவகிருபையை முன்னிட்டு வாழும்” என்ற கதையில் யாழ்ப்பாணத்துச் சாதாரண கத்தோலிக்கக் குடும்ப வாழ்வு வெகு அழகாகச் சித்திரிக்கப்படுகின்றது. சுருங்கிய

727
ളുഖക്ക്സീz’ Zല്ക്കബ് குறிப்புப் பொருள் அல்லது ஒட்டலங்காரம் மூலம் அவர் எடுத்துரைப்பது நயமானது.
உதாரணமாக "கிழவி ஒரு ஸ்தாபனம் - கோயில் - சிற்றமார் மடம் - கூப்பன் கடை மாதிரி" என்று அறிமுகப் படுத்துவது வாசகனின் கற்பனைக்கு இடங் கொடுக்கின்றது. "வங்கிசம்', 'சந்திக்கு' போன்ற வார்த்தைகளைப் பாத்திரத்தின் பேச்சு வழக்கிற்கேற்ப உபயோகித்திருப்பது உசிதமானது.
'பனையளவிற்கு உயர்ந்ததாம்' என்பது இன்னு மொரு உதாரணம். உரையாடல்களில் ஓர் இயற்கைத் தன்மை மிளிர்கின்றது. கிழவியின் சபலம் இயற்கையானது. மனோ தத்துவ ரீதியில் அழகாகச் சித்திரித்திருக்கிறார் இங்கு தான், முன்னுரையாசிரியர் சொல்லியிருப்பது போல, "வசனங் கொண்டு கவிதா உணர்வை' ஏற்படுத்துகிறார்.
"பேடி' என்ற உருவக்கதை மூலம் தற்காலச் சிந்தனை அல்லது தத்துவ ஓட்டத்தைச் சித்திரிக்கின்றார். சிறுகதைக்குரிய முதலிடைகடை அம்சங்களைஇக்கதையில் இனங்கண்டு கொள்ள முடிவதால் அதனையும் சிறுகதை என்று ஆசிரியர் கருதினார் போலும்,
"குழந்தை ஒரு தெய்வம்" என்ற கதையில் சபலமடைந்த இருவர் - வேறு ஆணும் மணமான பெண்ணும் - தாம் தவறிழைக்கவிருந்த போது, பெண்ணின் மகன் காரிலடி பட நேரிடும் பொழுது, சுதாரித்துக் கொள்கின்றனர் என்பதைக் கலை நயமாக உணர்த்துகின்றார். இங்கு குழந்தை ஒரு தெய்வம் போல வந்து அவர்களைக்

Page 72
728 മത്ര ക്രീമഞ്ഞ/മീ/മീറ് காப்பாற்றுகின்றது. இங்கும் லேசான மனோ தத்துவப் பார்வை தொனிக்கின்றது.
"மோதிரம்" என்ற கதையில் மனித வாழ்வின் ஒரு கோணத்தைச் சித்திரிக்கிறார் ஆசிரியர். வயிற்றுப் பிழைப்புக்காக, கோல்பேஸ் திடலில் பொறுக்கித் தொழில் பார்க்கின்றான் கதாநாயகன், சமுதாய இழிநிலை மறைமுகமாக இங்கு உணர்த்தப்படுகின்றது.
"நாயிலும் கடையர்" என்ற கதை அப்படியொன்றும் பிரமாதமான மனோ தத்துவத்தை உணர்த்துவதாக எனக்குப் படவில்லை. "யாரிடமாவது அன்பு செலுத்த வேண்டியிருப்பதாலும் நாய்கள் மனிதர்களிலும் பார்க்க மேலானவை என்பதாலும்" திருமதி ராஜேந்திரம் அறை வாடகைக்காரரின் வசதிக் குறைவைப் பொருட்படுத்தாது மனுக்குலத்தின் தவறுகளினால் மனம் பேதலித்ததால் எழுந்ததாக அந்த எண்ணமிருக்கலாம். சில வேளைகளில் மனிதர்கள் இவ்வாறு அலுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், இங்கு திருமதி ராஜேந்திரம் வெறுப்படை வதற்கான சம்பவங்கள் எவை என்று கூறப்படவில்லை. உணர்த்தப்படக் கூடவில்லை. மேலும் (கதா பாத்திரம் தன்மை ஒருமையில் கதை சொல்பவர்) நாய்கள் மீது வெறுப்புக் கொள்வதற்கும் ஏதும் தொடர்பு இல்லை. வீணாக வளர்க்கப்பட்டு எழுதப்பட்ட பத்திரிகை ரகக்
கதையிது.
"கல்வி" என்ற கதையில் ஒரு பத்து வயதுச் சிறுவனின் மூளை செய்த வேலையின் விளைவு விவரண நடையில் எடுத்துக் கூறப்படுகிறது. இங்கும் லேசான மனோ தத்துவப் பார்வையுளது. ஒரு யதேச்சையான

729 நிகழ்ச்சியால் (வீட்டிற்குப்போய், துவாரத்தைப் போட்டுக் கொள் என்று பணம் கொடுத்தவர் சொல்லிய சம்பவம்)
gpazvayfas%z/Z7 4/7/7a/7a/
ரோசமான பையன் ஒருவனும் தன் நற்குணத்தைக் கை விடுகின்றான் என்றாகிறது. இக்கதையில் ஆழம் கிடையாது. அதாவது உணர்வைத் தொற்றவைக்கும் சம்பவங்கள் இல்லை. சம்பவங்கள் வலுவாக இல்லா விட்டாலும், கதை உத்தி முறைகளில் புதுமை மிளிர்ந்து இருக்குமாயின் கதை சிறப்பாக அமைந்திருக்கும். கதாபாத்திரத்தின் சுய சிந்திப்பைக் கதை சொல்லும் படர்க்கையிடத்துடன் பிணைத்திருப்பது தற்பாவித (Monologue) உத்தி தானாயினும், அது புதுமை என்று மருளத் தேவையில்லை.
"பிள்ளையார் பிடிக்க" என்ற கதையில் ஒரு சாசுவத உண்மை (an eternal truth) புலப்படுத்தப்படுகின்றது. விருப்பு வெறுப்பற்ற அல்லது அறிவுத் தெளிவுள்ள நிலையில் இருக்கும் போது கருத்துகளை உச்சரிப்பவன் ஒருவன் தன்னைத் தாக்கும் அல்லது தன் உணர்வைத் தாக்கும் சம்பவங்கள் ஏதும் நடைபெறும் பொழுது, தன் நிலை குலைகின்றான். ஆனால், சுயமாகச் சிந்திக்கும் தன்மையை இழக்கின்றான். தயாளன் என்ற மனோ தத்துவ நிபுணன் தன் நண்பன் விஷயத்தில் உதவி செய்யப் புகுந்து வெற்றி கண்டிருந்தாலும் "புறச்சான்றுகளைக் கொண்டு அகத்தை அளவிடும் சாதனை" தன் மனைவியைப் பற்றி (தன்னுணர்வைப் பாதிக்கும் இனத்தவன்) வந்தவுடன் சந்தேகம் கொள்கின்றான். அவன் மனைவி அவனுக்கு எழுதிய கடிதத்தில் "ராமு" என்ற சொல்லை எழுதி விட்டுப் பின் "அடித்திருப்பது" (அழித்திருப்பது) தயாளனின்

Page 73
730
கற்பனையை விரியச் செய்கிறது. கேள்விமேல் கேள்வியைத் தன்னகத்தே கேட்டு சந்தேகத்தை வளர்த்துக் கொள்கின்றான். கதை முடிவு கலை நுட்பமானது என்று கூறலாம். தயாளனின் அனுமானம் தவறானது என்பதைக் கதாசிரியர் வலிந்து கொண்டு வந்து விவரண நடையில் விளக்காமல், தயாளன் மனைவியின் சொற்களிலேயே விளக்குவது நன்று. இறந்த காலத் தன்மை ஒருமையில் எழுதும் ஆசிரியர் உபகதை' என்று பேச்சு வழக்கில் கருதப்படும் விவரண நடை, கதை சொல்லும் பாணியில் (Reported style) எழுதியிருப்பது கதையில் விறுவிறுப்பு இல்லாமற் போகச் செய்கிறது. ஒட்டம் தடைப்பட்டுத் தடைப்பட்டு நிற்கின்றது. கதையின் முடிவு அல்லது கதையின் போக்கு எப்படி யிருக்கும் என்பதைக் கதை முதலிற் காட்டியிருப்பது நன்று.
"பிரியதத்தத்தினாலே" என்ற கதையின் அடி நாதங்களாகக் காணப்படுபவை, உணர்ச்சிக் குமுறலோ உணர்வுத் தொற்றுதலோ அல்ல. யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க கிராமியக் பேச்சின் கலைப்பாங்கான கவிதானுபவம் தான். சிறுகதைக்குரிய பிரகரணத்தைக் கொண்டிருந்தும், அதனை வளர்க்கக் கதா சம்பவக் கருப்பொருள்களைப் பின்னியிருந்தும், ஆசிரியருக்குப் பழக்கமான அந்த உபகதை' நடையினால் இத்கதையை நடைச் சித்திரம்' என்று தான் என்னால் மதிப்பிட முடிகின்றது.
ത്ര ക്രമങ്ങ്/മീബ/ീഞ്ഞ്
(afcases : Guo 1962)
 

737
நீர்வை பொன்னையன் மேரும் பள்ளமும்
1. 959 இற்குப் பின் எழுதத் தொடங்கியவர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒரு சில இளம் எழுத்தாளர்கள் நல்ல வேகத்துடன் வளர்ந்து வருவதுடன் காலத்தின் இலக்கியத் தேவைகளைப்பூர்த்தி செய்தும் வருகிறார்கள். இவர்களது வளர்ச்சி, முன்னைய கால எழுத்தாளர்களின் ஆரம்ப வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது மிகவும் திருப்திகரமாகியிருக்கிறது என்பது எனது துணிபு.
"முற்போக்கு எழுத்தாளர்கள்" என்று விசேடமாக அழைக்கப்பட்டுவரும் கொம்யூனிஸ்ட்'அரசியற் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கோட்பாடுகளுக்கு கலை வடிவங் கொடுப்பதில், இன்று நீர்வை பொன்னையனும், எஸ்.அகஸ்தியரும் முன்னணியில் நிற்கின்றனர்.

Page 74
732
ത്ര ക്രീമഞ്ഞZബ7ബീത് தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்காக இலக்கியத்தை ஒரு சாதனமாகப் பாவிப்பவர்கள் சோஷலிஸ் யதார்த்தவாதிகள். புது எழுத்தாளர்களான, பொன்னையனும், அகஸ்தியரும் உள்ளடக்கத்தில் அக்கறை செலுத்துவதோடு நின்றுவிடாது உருவத்திலும் கவனஞ்செலுத்தி வருவது மகிழ்வுக்குரியது.
1959 முதல் 1961 வரை தான் எழுதிய 15 கதை களைத் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார் நீர்வை பொன்னையன், கலைப்பிரகரணங்கள் யாவுமே திரும்பத் திரும்ப வருபவை என்பதையும் உருவச் சிறப்பினாற் தான் கலைகள் ஒளியுடன் மிளிர்கின்றன என்ற உண்மையையும் பிரக்ஞையுடன் நீர்வை பொன்னையன் உணர்ந்தியிருக்கிறார் என்பதற்கு, அவரது கதைகளின் உருவ அமைதி (குறிப்பாக மொழி வளம்) சான்று பகருகின்றது.
பொன்னையன் புதுமையில் (அடிபட்ட சொற்றொடர் களுக்குப் புது வண்ணம் தீட்டுவதில்) நாட்டமுடையவர் என்பதைக் காட்டியிருக்கிறார். இவருடைய தொகுப்பில் முதல் முதலில் என்னைக் கவர்ந்த அம்சம், இவரது சுயத்தன்மை பயக்கும் உவம்ை யுருவகங்கள்! எனவே முதலில் நான் இரசித்த சொற்றொடர்களை இங்கு தொகுத்துத் தருகின்றேன்.
"எல்லாம் தலைவிதி என்று அவன் இலவசமான சுமைதாங்கி மேல் பாரத்தைப் போட்டு விட்டான்', "கெம்பி மிதந்த மார்பங்கள்", "கனவுகாணும் கண்கள்", 'தும்பைப் பூக் கூந்தல்" (ஊர்வலம்).

733
"முழுப்பாக்கை வாயில் போட்டு டக் கென்று கடித்துச் சப்பும் பற்கள்",
ിരക്കീz Z്ഞയ
தொலைவில் ஆடுகள் வெண்திரைக்குப்பின்னுள்ள சிலையின் நிழலாயின", "எங்கும் சுற்றிவரும் இருளின் கருவண்ணத்துக்குள் இயற்கை மறையத் தொடங்கியது" "வெங்கதிரோனுடைய கொடும் நாக்குகள் அந்த வெளியிலேயுள்ள சடப் பொருள்கள் எல்லாவற்றையும் நக்கி எரித்துக் கொண்டு இருந்தன" (பாசம்).
"கன்னிப் பெண்ணின் பிறை நெற்றியிலே திலக மிட்டதுபோல, ஒரு தென்னஞ்சோலை வயல் நிலத்து மத்தியிலே கம்பீரமான நின்றது", "வானமும் பூமியும் கட்டித்தழுவும் எல்லைக்கோட்டில் யாழ்ப்பாணத்தின் பெயர்போன உப்பாறு', 'விரைவிலேயே தாயாகப் போகும் கன்னிக் கர்ப்பவதி, தாய்மை உணர்ச்சி பொங்கி வழிய, தனது கணவருடைய முகத்தைப் பார்த்துச் சிரிப்பது போல, மேட்டு நிலம் வானத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது", "முகங்களும் செவ்வாழைப் பூப்போல மலர்ந்தன" (மேடும் பள்ளமும்).
"சுரக்காய் போன்ற முட்டிவயிறு", "முள்முருக்கம் பூக்காடு போன்ற பரட்டைச் செம்பட்டைத் தலைமயிர்", "பனங்காய் சூப்பிய மாட்டினுடைய மூஞ்சியைப் போல” (GSFfugp).
"பனித்துளிகள் பட்டு மலர்ந்த ரோஜா இதழின் செம்மை" (பனஞ்சோலை).
"கருத்திரை விரிப்பு மெள்ள மெள்ளப் படர்ந்து
சூனியமாக்குகின்றது", "அவள் சிரித்தாள் வானத்துத்

Page 75
734
தாரகைகள் உதிர்ந்து சிதறின", "அப்பார்வையிலும் சிரிப்பிலும் இறைவனுடைய சிருஷ்டித் தொழில் அதன் இரகசியம், பூரணத்துவ எழில், இப்பிரபஞ்சத்தின் இயக்கம் எல்லாமே பொதிந்து கிடந்தன", "நீக்கிறோப் பெண்ணின் தனங்களிலிருந்து பால் பீறிட்டுப் பாய்வது போல குன்றுகளிலிருந்து பாய்ந்து ஒடித்துள்ளி விளையாடி வரும் நீர்வீர்ழ்சிகள்" (வானவில்).
മൃബമബീര് تھP6
"மழையின் முகில்களைப்போல அவனுடைய வெறும் வயிறு முழங்கியது", "முழுகிவிட்டு வரும் பருவப் பெண்ணின் கூந்தலில் இருந்து நீர் சொட்டுவது போல, தழைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்ற மரவள்ளி இலைகளிலிருந்து மழைத்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன", "உளிப் பிடிபோன் குள்ளமான உயரம்", "அடிவானம் தாம்பூலம் தரித்து, ஆகாயத்தில் செங்குழம்பை அள்ளி அப்பிக் கொண்டிருந்தது' (சம்பத்து).
"வேப்பிலைக்கண்கள்" (மின்னல்).
"மனித நெஞ்சின் அமைச்சல் அவரது அங்கங்களை அரித்துக் கொள்ளுகின்றன."
"சுட்ட கத்தரிக்காயாக வெளிறி வெதும்பியிருந்த அவளுடைய உடல்" (கிடாரி)
"இமை வெடிப்புக்குள் அவள் கண்கள் பதுங்குகின்றன" (அசை)
"மண் றோட்டில் வண்டி போன தடங்கள் மாதிரி" (புயல்).

735 லா.ச.ராமாமிருதம், மெளனி, அழகிரிசாமி, ஜெய
ളിയേക്ക്ൿീZ Zല്ക്കബ്
காந்தன் ஆகிய தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நடையைச் சார்ந்து எழுதும் நீர்வை பொன்னையனின் கதைகளில் உள்ள உள்ளடக்கம் ஒன்றும் பிரமாதமானதாயில்லை.
இனிக் கதைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஊர்வலம் :
"முதலாளி வர்க்கம் கல்நெஞ்சம் படைத்த வர்க்கம்" எனக் கூறும் இக்கதையின் கருப்பொருள்கள் (Plots) இறுக்கமாய் அமைந்திருப்பதனால் கதை சுமாராய் அமைந்துள்ளது. 18 வருடங்களாக உழைத்த ஒரு தொழிலாளியின் மரணத்தின் ஊர்வலத்திற் கூடக் கலந்து கொள்ள, சக தொழிலாளர்களை ஒரு மில் முதலாளி அனுமதிக்கிறாரில்லை. ஆனால் தொழிலாளர்கள் மீறி ஒன்றுபட்டு ஐக்கியமாகி ஊர்வலத்துடன் பெரிதாகச் செல்கின்றனர்.
பாசம் :
80 வயது இடையன் ஒருவரின் சாவைச் சொல்லும் இக்கதையில் ஆடுகளுக்கும், இடையனுக்கும் இடையே ஒரு பாசம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், அப்பாசத்தினை வாசகர்களுக்கு உணர்த்துவிப்பவை. "ஆடுகளின் உள்ளுணர்வுக்கு அந்த முதிர்ந்த கட்டை யோடு ஒட்டியிருந்த உயிரைக் காணவேண்டுமென்ற துடிப்புண்டானதோ...' என்ற தொடரே. ஆனால் கதையில் இந்தப் பாசத்தை வலியுறுத்தப் போதிய சம்பவங்கள் இல்லை. வெறுமனே மேலோட்டமாகக்
கூறினாற் போதாது.

Page 76
736 — മത്ര ക്രീമഞ്ഞമ്മയബീത് மேடும் பள்ளமும் :
தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்து, முதலாளி வர்க்கத்தின் கொடூரங்களைத் தகர்த் தொழிக்கலாம். மேடைப் பள்ளமாக்கலாம் என்ற கோட் பாட்டை வெளிப்படையான பிரச்சார வாடையின்றி, சுவையான கதைப்போக்குடன் சொல்கிறார் ஆசிரியர். அந்த அளவில், நைந்து போன பிரகரணமாயிருந்தாலும், உருவ அளவிலாவது வெற்றி பெற்றிருக்கிறார். நிறைவு :
இவர் எழுதிய கதைகளில் மிகச் சிறப்பானதும் தமிழிலேயே ஒரு சிறந்த படைப்பானதுமான இக்கதையில் ஒரு காவிய ரசனையை அனுபவிக்க முடிகிறது. கவிதை லயம் கதை நெடுகிலும் இழையோடுகின்றது. கலை கலைக்காகவே என்ற கொள்கையை, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழும் எழுத்தாளர்கள் ஆதரிக்க மாட்டார்கள். கலை முதலிற் கலையாக இருப்பதுடன் மக்களுக்காகவும் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி வெகு அற்புதமானதொரு சிறு கதையை மனக்குகை ஓவிய வார்ப்பில் சித்திரித்து இருக்கிறார். சோறு
உயர்ந்த சாதிக்காரன் ஒருவனின் திவேச வீட்டில், கருக்கல் சோறும், வாழைக்காய் பலாக்காய் கறிகளும் உண்ட பொழுது, காட்டான் என்ற சிறுவன்தன் வீட்டிலும் யாரேனும் செத்தால் பெரிய விருந்து கிடைக்கும் என்று

737 நம்புகிறான். அவன் தாழ்ந்த சாதிக்காரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது நப்பாசையைச் செயலாக்கச் தனது தம்பியையே நஞ்சூட்டிக் கொல்கிறான். பசியினால் விளைந்த இந்த பாதகத்திற்கு உயர்சாதிக்காரரைக் குற்றவாளியாக்குவது யதார்த்தத்திற்குப் புறம்பானது. ஆயினும், ஆசிரியர் கலை நயமாகக் கதையைப் புனைந்திருப்பது பாராட்டத்தக்கது.
ഉിങ്ങക്ക്സീ/Z Z( '
பனஞ்சோலை :
காதலித்தவனைக் கைப்பிடிக்க முடியாமற்போன கன்னியொருத்தி மாற்றான் ஒருவனை மணமுடித்த பின்னும் பழைய காதலனின் மோகத்தில் திளைத்திருப்பது யதார்த்தமானது என்று தான் வைத்துக் கொண்டாலும், அபத்தமானது என்பதை அறிய வேண்டும். ஒரு பெண் உடலாற் தான், தன் கற்பை இழக்க வேண்டுமென்றில்லை. உள்ளத்தாற்கூட அவள் தனது கணவனுக்குத் துரோகம் செய்வாளாயின் அது விபசாரததை ஒக்கும். இலக்கியம் வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டும். நரகத்தைப் படம் பிடித்தால் மட்டும் போதாது. நரகத்திலுள்ளவர்களை மேலெழுப்ப முடியாவிட்டாலும், உயரத்திலிருப்பவர்களை நரகத்திற்குத் தள்ளாமல் மட்டும் இருந்தால் போதுமானது. உள்ளத்தில் எழும் உணர்வு நீசத்தனமாயிருந்தால், அதனை ஒதுக்குவதே பண்புடைமை, ஆனால், இதனை இக்கதையில் வரும் திலகா என்ற பாத்திரம் செய்யவில்லை. கதாசிரியர் கூட, அவளுக்கும், பழைய காதலனுக்கும் தொடர்பு மேலும் பெருக வேண்டும் என்ற அடிப்படையில் கதையை முடித்திருப்பது நிச்சயமாகக் கண்டிக்கத் தக்கது.

Page 77
738 - മത്ര ക്രമങ്ങZZിങ് கதையில் உருவச் சிறப்பிருந்தாலும் உள்ளடக்க அபத்தத்தினால் மதிப்பிழக்கின்றது.
தவிப்பு :
மனிதமனம் இளமை, அழகு, பொலிவு, மென்மை போன்ற பண்புகளையே இயல்பாக விரும்புகின்றது. பள்ளத்தில் இருப்பவர்கள் மேட்டிற்கு வர விரும்புவது இயற்கை. ஆனால், மேட்டில் இருப்பவர்களோ பள்ளத் திற்கு வர விரும்பார். தாய்மைப் பேற்றுக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் உணர்வு மனித இயல்போட்டத்திற்கேற்பச் சித்திரிக்கப்படுகின்றது. பொன்னையன் கற்றறிந்தவர் என்பதை இக்கதை மூலம் புலப்படுத்தியிருக்கிறார்.
வானவில் :
பெண்மை அழகின் பிறப்பிடம் என்பது உண்மை யானது என்றாலும் அழகுணர்ச்சி வேண்டியதில்லை. பெண்ணை பெண் என்ற முறையில் மனிதாபி மானத்துடன் நோக்கினால் அதுவே போதும் என்ற கருத்தை உணர்த்துவிக்கிறார் ஆசிரியர். இது ஒரு பார்வை. அதனால், ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆசிரியரின் கண்ணோட்டம் கலை நயமாகத் தெரிவிக்கப்
படுகின்றது.
சம்பத்து :
இது ஒரு நல்ல கதை. உள்ளடக்கமும் உருவமும் ஒன்றுக்கொன்று இணக்கமுடையதாயிருப்பதால் நன்றாக அமைந்துள்ளது.

ളിയക്ക്സീഥ7 47ഞഖ് - 739
மின்னல் :
"பனஞ்சோலை" என்ற அபத்தக் கதையை எழுதிய
ஆசிரியரே இதனையும் எழுதியிருக்கிறார். தனது குறை
பாட்டை நீக்குமுகம் போல் எழுதப்பட்டுள்ள இக்கதை
மற்றுமொரு வெற்றிகரமான படைப்பு.
சிருட்டி :
சிந்தனையைத் தூண்டும் கதை. பசித்தால் பண்பு கூடப் பறந்து விடும் என்ற கருத்தை தெரிவிப்பது. பசித்தாலும் பண்பை இழக்காத மேன் மக்களைத் தான் வையகம் போற்றும் என்பதை ஆசிரியர் உணர வேண்டும்.
கிடாரி :
கீழ்ச்சாதிப் பெண்ணொருத்தி, மேற்சாதிக்காரன் ஒருவனால் கற்பழிக்கப்பட்டுப் பைத்தியமாக்கப்பட்ட சோக நிலையைக் கூறுகின்றது.
6) 8
வேலையில்லாதிருக்கும் ஓர் இளைஞனின் மனக்குகை அபிலாஷைகளை வடிப்பவை.
புயல் :
ஒரு கொந்தளிப்பான கதை. புரியவில்லை.

Page 78
· ፲40 മ്മ ക്രീമങ്ങZയZബീങ്
சாதிப் பிரச்சனை பற்றி அறியாத பாலகரின் உணர்வுக்கதை.
மொத்தமாகப் பார்க்கும் பொழுது "மேடும் பள்ளமும்" என்ற தொகுப்பில் "மேடும் பள்ளமும், நிறைவு', 'சோறு, தவிப்பு, ‘வானவில்', 'சம்பத்து, மின்னல்' ஆகிய கதைகள் தரமுயர்ந்திருக்கின்றன. நீர்வை பொன்னையனும் ஈழம் பெருமைப்படக்கூடிய ஒரு கலைஞன் என்பதை நிலை நாட்டியுள்ளார்.
இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் பிரேம்ஜி, "யதார்த்தத்துக்கு, கருத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எழுத்தாளர்களிற் சிலர், உருவத்திற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்காத குறைபாடு இல்லா மலில்லை", என்ற பேருண்மையைத் துணிந்து, வெளிப் படையாகக் கூறியதற்கு நன்றி. இலக்கியத்தில் உருவம் என்பதை விட இலக்கிய விமர்சனத்தில் உருவ அக்கறை எடுப்பவர்கள் உள்ளடக்கத்தை உதாசீனஞ் செய்பவர்கள் என்று முற்போக்குக்காரர் தப்பாக விளங்கிக் கொள்கிறார்கள். இந்தத்தத்துவார்த்தத்குழப்பம் நீங்குவதற்கு ஒரே வழி, ரஷ்ய இலக்கியம் உட்பட, ரஷ்ய இலக்கிய விமர்சனம் உட்பட, உலக இலக்கிய விமர்சனங் களை, கொள்கை வெறியில் மயங்காமல், சாவகாசமாகப் படித்துப் பார்ப்பதேயாகும்.
(விவேகி : ஜூன் 1962)
 

፲47
பேராதனை
எழுத்தாளர்கள் கலைப்பூங்கா
. ராதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் பன்னிருவரின் சிறு கதைகள் அடங்கிய தொகுப்பான "கலைப்பூங்கா'வுக்கு முன்னுரை எழுதிய விரிவுரையாளர் திரு.கைலாசபதி அவர்கள்,
"ஒரு குறிப்பிட்ட பருவத்து மாணவர் தமது மனோ நிலையை வெளியிடச் சிறந்த கருவியாகச் சிறு கதையைக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை முற்றாக உணர்ந்து கொள்ளாத, ஒரு விதமான இலட்சிய மனோபாவம், கதைகளுக்கு ஒரு மைப்பாட்டையளிக்கிறது. பல கதைகளில் சோகச் சுவை காணப்படுகிறது. ஆனால் அதிலும் இலட்சிய வேகமே தெரிகின்றது? அதனை வென்று எல்லா மாணவரும் எழுதியிருக்க முடியும் என்றும் நான் கூறமாட்டேன்", என்று சரியாகவே கதைத் தொகுப்பை எடைபோட்டு இருக்கிறார்.

Page 79
742
മത്ര ക്രീമഞ്ഞZയമബീജ്
இக்கதாசிரியர்கள் வயதில் இளைஞராயும், மாணவர் களாயுமிருப்பதால், எடுத்த எடுப்பிலேயே மிகத்தரமான கதைகளை மதிப்பிடும் அளவுகோல் கொண்டு, இவர்களது கதைகளைப் பரிசீலிப்பது முறையாகாது. ஆயினும், இவர்கள் உண்மையிலேயே ஆற்றல்மிகுந்த திறமைசாலிகள் போலத் தோன்றுகிறார்கள். அவர்கள் மேலும் செம்மை பெற்ற எழுத்தாளர்களாக விளங்குவதற்கு அவர்களது குறை நிறைகள்ை எடுத்துக் காட்டுவது அவசியமாகிறது.
வளர்ந்த எழுத்தாளர்கள் என்றும், முன்னணி எழுத்தாளர்கள் என்றும் தற்பறை சாற்றும் ஈழத்து எழுத்தாளர்களுள் சிலர் எழுதும் கதை போன்ற கட்டுரை களைப் பார்க்கிலும், இப்பல்கலைக் கழக மாணவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஓரிரு நல்ல சிறுகதைகளை எழுதி யிருக்கின்றனர் என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயமாகும்.
கூட்டு மொத்தமாக, இத்தொகுதியைப் பார்க்கும் பொழுது, இதில் ஒரேயொரு கதை மாத்திரமே உள்ளடக்கச் சிறப்புக் கொண்டுள்ளது. அக்கதையின் பெயர் 'சமரசம்' ஏனைய கதைகளில் உள்ள உள்ளடகம் புதுமையான தாகவோ, சிறப்பானதாகவோ எனக்குத் தோன்றவில்லை. ஆனால், 'மலர்கள், அவன் சமாதியில், சுவடு, பாதி மலர், ஆகிய நான்கு கதைகளிலும், பரிசோதனை என்று சொல்ல முடியா விட்டாலும், பிரக்ஞை கொண்ட உருவ மாற்றம் இருப்பதால் பாராட்டுக்குரியவையாகின்றன. 'எட்டு மாதங்கள்' என்ற கதை, தமிழ் வாசகர்களுக்குச் சவால் விடும் - ஆனால், புதுமையென்று சொல்வதற்கில்லை - ஒரு கதை. இக்கதையை நேரடியாகச் சொல்வதில் ஆசிரியர்

ഴഞ്ചക്കീയZ Zഞ്ഞഖ 743 வெற்றி பெற்றிருக்கிறார். "வாழ்க்கைத் துணை, இடிவிழ, இறுதி மூச்சு, ஆகிய கதைகளின் உள்ளடக்கம் ஏதோ பிரமாதமானவை என்று சொல்ல முடியா விட்டாலும் நல்ல கதைப்பொருள்களைக் கொண்டவை. ஆனால், இவற்றின் உருவ அமைப்பு சம்பிரதாயமானது. உள்ளடக்கத் தன்மைக்கேற்ப உருவ அமைப்பும் மாறியிருக்குமாயின் நல்ல கதைகளாக அமைந்திருக்கும். ஏனைய மூன்று கதை களிலும் ஆரம்பமுயற்சிகளின் சாயல் துலாம்பரமாய்த் தெரிகிறது.
இனி, இவற்றைத் தனித்தனியே எடுத்துப் பார்ப்போம்.
இக்கதைகளில் உள்ள கருப்பொருள்களை (Plots) நான் இங்கு எடுத்துக் கூறப்போவதில்லை. கதைப் பொருளை (Themes) மாத்திரமே எடுத்துக்கூறி, கதைகளில் நான் இரசித்த பகுதிகளைச் சுட்டிக் காட்டுவதுடன் எனது அபிப்பிராயத்தையும் கூறுவேன்.
செ.யோகநாதன்
எழுதிய மலர்கள்' என்ற கதையில் அவர் ஒரு பாச உணர்வு இரு பாத்திரங்களுக்கிடையில் எழுவதற்கான முன் நிகழ்ச்சியைப் புதிய முறையில் (தமிழுக்குப் புதிது என்ற அர்த்தத்திலல்ல, புதிதாக எழுதத் தொடங்குபவர்கள் கை வைக்கத் தயங்கும் விதத்தில்) சொல்லுகிறார்.
இறந்தகால படர்க்கையிடத்தில் நின்று கதை சொல்லப்படுகின்றது. இடையிடையே Flash Back உத்தியைக் கையாண்டு கடந்த கால நிகழ்ச்சிகளும்,
மனத்திரையில் ஒடுவது போல் சித்திரிக்கப்படுகின்றது.

Page 80
744 മത്ര ക്രമങ്ങZബ്ബിങ് இந்த ஆசிரியர் கையாண்ட சொற் சித்திரங்கள் மனதைக் கவருவன.
"ஒரே செடியில் மலர்ந்த இரு மலர்கள். அவற்றிடையே மாறுபட்ட பண்பா? மணத்தினிற் பேதமா?”
"இதயம் துன்பத்துள் வீழ்ந்து பொசுங்குகிறது" "அவள் புன்முறுவலில் அவன் நெஞ்சம் நனைகிறதோ?”
க.குணராஜா
எழுதிய 'அவன் சமாதியில்" என்ற கதையில், காதலன் ஒருவன், தன் காதலி, மாற்றான் ஒருவணை மணந்த பின்பும், தன்னிடம் உடலுறவு கொண்டாட வருவது, தமிழ்ப் பெண்மைக்கு இழுக்கு என்ற இலட்சியத்தில், அவளைக் கொன்று விடுகிறான். தமிழ்ப் பெண்ணுக்கு இழுக்கு' என்ற உணர்வு இலட்சிய அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், மனிதாபிமான நோக்குடன் பார்க்கும் பொழுது, அப்பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்து செய்த பின், தன் காதலனிடம் போயிருப்பாளாயின், அது குறையாகாது. இதனை வெவ்வேறு கோணத்திலும் நின்று பார்க்கலாம். ஆசிரியர் நின்று பார்த்த கோணம் ஒன்று. அதில் அவர், அப்பெண்ணைக் கீழ்த்தரமான குணமுடையவளாகத் தான் படைத்திருக்கிறார்.
i "வேண்டாம், வேண்டாம், கற்புக்கரசிகளைத் தான்
உங்களுக்குப் பிடிக்குமோ?" என்று அவள் ஒரு முறை தன் காதலனிடம் சொல்லும் பொழுதும், காதலன் அவளிடம் “சீ. களங்கப் பிண்டமே. பெண்ணினத்திற்கு மாசு தீராத

APavaš4ZÝ ZVzvava/ 745 வசை!” என்று பேசுவதிலுமிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவளைக் கொல்வதுடன் தானும் சாகிறான். இக்கதையும் கட்டுக் கோப்பான முறையில் Flash Back உத்தி கொண்டு எழுதப் படடிருக்கின்றது. இக்கதாசிரியரிடம் சுயமான வருணனைத் திறனுண்டு.
"கனலில் இழைத்த உடல், உன் விழிகள் நிதம் கனவில் மிதப்பன, உன் இதழ் நறுமதுவைப் பிலிற்றும், முறுவல் ஒளிக்கதிரை நிகர்த்தும்" ஆகியவை ஒரு பகுதி. கோகிலா
எழுதிய சமரசம்' ஒரு மனிதத்துவக்கதை. விலங்கினத் திற்கும், மனிதவினத்திற்கும் இடையே பசிக்காக நடை பெறும் போராட்டத்தின் ஒரு சித்திரமாக இது அமைந்து உள்ளது. இரு வர்க்கப் பிரதிநிதிகளும் சாவில் சமரசம் அடைவதாகக் கூறப்பட்டுள்ளது. இக் கதையைப் படித்த பொழுது கலை நயமாக எழுதும் முற்போக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய கதை ஒன்றின் ஞாபகம் என் நினைவிற்கு வந்தது. இக்கதையின் முடிவு தத்து வார்த்தமாக அமைந்திருக்கின்றது.
இக்கதாசிரியை படாடோமாகச் சொற்களை வாரிச் சொற்சிலம்பம் ஆடாமல், கதையை நேரடியாகவே சொல்வது பாராட்டத்தக்கது. - அதாவது, கதை உள்ளடக்கத்திற்கு பொருத்தமான உருவக் கட்டத்தை அமைத்திருக்கிறார். ஈழத்துத்தமிழில் 'சாதம்' என்ற வழக்கு இல்லை என்பதை ஆசிரியை கவனிக்கவில்லை போலும்! இவர் எழுதியுள்ள சில வரிகள் கதைக்கு உயிரூட்டமாய் உள்ளன.

Page 81
746
മത്ര ക്രീമഞ്ഞ/ZഖZിങ് "ஆறறிவு படைத்த மனிதன் கடவுளின் படைப்பில் உன்னத சிருஷ்டியாகக் கருதப்பட்டு வந்தவன். பகுத்தறிவு படைத்தவன். தன் வயிறு காய்ந்த போது, மாக்களுக்குச் சமநிலையில் கொண்டு வரப்பட்டபோது, மிருகத்தோடு மிருகமாகப் போராடினான். மனிதன்தன் ஸ்திதியிலிருந்து நழுவியது போல, நன்றியுள்ள மிருகங்களின் பரம்பரையில் வந்த நாய் நன்றி மறந்த நிலையில் நன்றி கெட்ட மிருகமாக மாறிப் போராடிக்கொண்டிருந்தது."
"வேறுபட்ட இரு வர்க்கத்தின் வாரிசுகளாக விளங்கிய மனிதனும் மிருகமும் போராட்டத்திற்குப் பிறகு ஒற்றுமையுடன் தமது இறுதி யாத்திரையைத் தொடங்கினர். சாவில் என்றாலும், அவர்கள் சமரசம் அடைந்ததைக் கண்டு வானம் கறுத்து! மழையாகிய கண்ணிரைத் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது."
வெ. கோபாலகிருஷ்ணன்
எழுதிய இடிவிழ" என்ற கதையில், ஒருத்தன் ஒரு நேரம் நல்லவனாக இருக்கிறான். ஒரு நேரம் கெட்டவனாக இருக்கிறான்! மனிதர் எல்லாம் அப்படித் தானே என்ற உண்மையை வெளிக்காட்ட எழுதப்பட்டது. ஆனால் போதிய வடிவம் அமையாதிருப்பதால் சுமாரான கதையாகவே இதை எடைபோட முடிகிறது.
அங்கையன்
எழுதிய 'சுவடு என்ற கதையின் உள்ளடக்கம் சலித்துப்போன, புளித்துப்போன, அசட்டு அபிமான

ፖ4ፖ
„APavašaíŽzý Zvzňava/
உணர்ச்சியைத் தூண்டும், கதைப் பொருளை மையமாகக் கொண்டது எனலாம். மணமாகாத கதாநாயகி, தன் காதலனால் கர்ப்பந்தரிக்கின்றாள். காதலனோ வேறு ஒருத்தியை மணஞ் செய்து கொள்கிறான். அந்தப் பெண்ணோ கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த மாமூல் கதையைப் படிக்கச் செய்வது ஆசிரியர் கையாண்ட எழுத்து நடையேயாகும்.
உதாரணமாக, 'ஆலிலை போன்ற உதரம்", 'கண்ணிலே இனம் புரியாத கேள்வி, இதயத்தின் துடிப்பு. கண்ணிமைகளின் படபடப்பு, பருவம் நிறைந்து தளம்புகிறது! அதன் பளபளப்பிலே எவருடைய முகமும் பிரதிபலிக்கத்தானே செய்யும்', 'எறியப்படும் விழி வேல்கள், காந்தம் பாய்ச்சும் கண்கள்', 'எரிமலைப் பவள அதரங்கள்', 'அகல விரியப் பிணைப்பு அறுபட்டது', 'நெஞ்சம் உருகிக் கண்களை வாசலாக்கி, கண்ணிராகப் பாய்ந்து கொண்டிருந்தது', 'பருவத்தின் வெடிப்பு', மெய்யின் விதிர்ப்பு' என்பன போன்ற சொற்றொடர்கள் ஆசிரியரின் சுயத் தன்மையைக் காட்டுகின்றன.
வாணி
எழுதிய கதை சாதிக் கட்டுப்பாடு பற்றிய ஒரு சிறிய சித்திரம். இறைவன் எங்கே? என்ற கதை. கிழக்கிலங்கைப் பேச்சில் ஒரு சாயலை நுகர முடிகின்றது. கதைப் பொருள் அடிபட்ட பிரகரணமாயிருப்பதால் சோபிக்கவில்லை. உருவ அமைப்பில் மாற்றமிருந்திருந்தால் ஒரு வேளை சிறப்படைந்திருக்கக் கூடும்.

Page 82
፲48 செ.கதிர்காமநாதன்
൧൭ ക്രീമഞ്ഞ/Zബ്ബിങ്
எழுதிய 'எட்டு மாதங்கள்', என்றதொரு கதை, பழமையில் மாத்திரமே ஊறித் திளைத்து வெளியில் வராத தமிழ் வாசகர்களுக்கு ஒரு பிரச்சினைக் கதை போலத் தோன்றும். தமிழ்ப் பெண்மையின் தூய்மை பற்றி மிகைப்படுத்திப் பேசுபவர்களுக்கு இது ஆபாசமாகத் தோன்றும். ஆனால், எதையும் கலைக்கண் கொண்டு பார்க்கும் யதார்த்தவாதிகளுக்கு இது ஒரு நல்ல கதை என்று தோன்றும். இக்கதையின் உள்ளடக்கம் உணர்ச்சிகரமான பாத்திரச் சிருஷ்டிக்கு ஏற்புடைத்து. உருவமும், கவிதைப் பூச்சு நடையாகவே அமைந்திருக்க வேண்டியது. ஆனால், ஆசிரியர் கதையை நேரடியாக, எதுவித ஆர்ப்பாட்டமு மின்றிச் சொல்லி விடுகிறார். கதையும் மனதில் பதிந்து விடுகிறது.
துணிகரமான அந்நிய உருவ அமைப்பைக் கொண்டு எழுதி வெற்றியீட்டியதற்கே ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.
செம்பியன் செல்வன்
எழுதிய "பாதி மலர்' என்ற கதை தாழ்வு மனப்பான்மையினின்றும் எழுந்த தாபமும், வேட்கையும், சித்த சுவாதீனத்தையும் கொண்டு வரும் என்ற ரீதியில் எழுதப்பட்டிருக்கின்றது.
'திட்டுத் திட்டாக புழுமேய்ச்சற்பட்ட முகமாக மேடுபள்ளங்கள்", "கண்மலர்கள் படபடக்கின்றன", "மலர்விழிகளில் ஒரு வித மயக்கம் படர்கின்றது", "வெள்ளத்திலே தோன்றி மறையும் நீர்க்குமிழிகள் போற்

,42avašaéŽzý Z/zžava/ - 749 சம்பந்த சம்பந்தமல்லாத எண்ணச் சிதறல்கள் இமைத்திரையிற் சுழன்று நீந்துகின்றன” என்பன போன்ற இவரது எழுத்து நடையும் மனதைக் கவருவன. இவரும் உருவ அமைப்பில் பிரக்ஞை கொண்ட அக்கறை எடுத்திருக்கிறார் என்பதற்கு இவர் கதையை நிகழ்காலத்தில் சொல்லுவதே சான்றாக விருக்கின்றது.
அ.சண்முகதாஸ்
எழுதிய ஏமாற்றம்' என்ற கதையில் உள்ள விவரண நடை சற்று அலுப்புத்தட்டுகின்றது. உள்ளடக்கத்திலும் புதுமையில்லாததால் சுமாரான கதையாகவே இதை எடைபோட முடிகின்றது. .
எம்.ஏ.எம்.சுக்ரி
"வாரிசு" என்ற கதையில் யதார்த்த ரீதியில் ஒரு அனுபவத்தை உணர்த்த முயல்கிறார். ஆனால், கட்டுக்கோப்பில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. பிரதான கதை நிகழ்ச்சி வலுவாகச் சொல்லப்படவில்லை. கதையில் ஒரு தொடர்பான உணர்வு இல்லாததால் சுமாராகவே எடைபோட முடிகின்றது. பிரேமையின் ஸ்பரிஸம்" என்ற தொடர் தமிழுக்குப் புதிது என்று நினைக்கிறேன்.
முத்து சிவஞானம்
எழுதிய இறுதி மூச்சு" என்ற கதையில் சமூகத்தின் கீழ்த் தளத்தோரின் ஒரு பகுதியினரின் அவல நிலை, குடிவெறியின் தீமை என்பன பற்றி விவரண நடையில்

Page 83
750
മത്ര ക്രീമഞ്ഞZബ്ബിങ്
சொல்லுகின்றது, "சேரி மக்களின் வாழ்க்கை போல, குடிசை முழுவதும் ஒரே இருள்" என்ற வாக்கியம் ஓரளவுக்குப் பொருத்தமான இடத்தில் விழுந்திருக்கிறது.
க. நவசோதி
எழுதிய "வழ்க்கைத் துணை" என்ற கதையின் உள்ளடக்கம் ஒருவித தியாகச் செயலை உணர்த்துவது. மிகவும் நைந்துபோன பிரகாரணம் என்று சொல்ல முடியா விட்டாலும், ஓரளவுக்கு அறிமுகமானதே. இதனைச் சித்திரிக்கும் பொழுது, ஆசிரியர் கதையை நேரடியாகவே சொல்வது பாராட்டத்தக்கது. ஏற்கெனவே அறிமுகமான சொற்றொடர்களைப் புதிய சொற்களில் கூறியிருப்பாராயின், கதை சிறப்படைந்திருக்கும்.
முடிவாக, நாளை ஈழத்துப் பேனா மன்னர்களாகப் போகும் இவ்விளைஞரின் சவால், இன்று கொடிகட்டிப் பறப்பதாக என்னும் எழுத்தாளர்களுக்கு உஷாராய் அமைந்துள்ளது. கதைப்பூங்கா ஒரு நல்ல தொகுப்பு.
(விவேகி : ஜூலை 1992)
 

757
செ. தனேசவிங்க
சங்கமம்
6
영 ரேஇனம் நல்லவன், சங்கமம்'ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார் செ.கணேசலிங்கன். இவரது சமீபத்திய வெளியீடு சங்கமம்.
1960 - 61 காலப்பகுதியில் இவர் எழுதிய 18 கதைகள் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றன. தமிழ் நாட்டு மக்கள் விமர்சகர், வல்லிக் கண்ணன், இதற்கு ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். இனி கதைகளைப் பார்ப்போம்.

Page 84
752
െ ക്രമബ/Zഖ/ബീത്
சங்கமம்
சிறுகதைக்குரிய கதைப்பொருளும், உணர்ச்சி மயப்படுத்தி வாசகனை வாசிக்கச் செய்யத் தூண்டும் நாடக உணர்வும் இக்கதையில் இருக்கின்றன. ஆனால், இவற்றை வாசகனின் மனதில் உணர்வுடன் தொற்ற வைப்பதில் ஆசிரியர் வெற்றியடையவில்லை. அதற்குக் காரணம் இக்கதையில் உள்ள வலுவற்ற கதைக்கருப் பொருட்களாகும். அத்துடன், ஆசிரியர் கையாண்ட ஒருமைப்பாடற்ற உருவ அமைப்பும் உதவி செய்வதாய் இல்லை. பொதுவாக இவர் கையாண்ட எழுத்து நடை அதாவது சிறிய, சிறிய வாக்கியங்களில் செயல்களை எடுத்துரைப்பது சிறப்புடையது. ஆனால், அந்நடை இத்தகைய கதைகளை எழுதும் பொழுது உதவியளிக்கத் தவறி விடுகிறது. கதைகளுக்கேற்றவாறு, அவற்றின் உருவ அமைப்பையும், வேறு வேறு படுத்தி ஆசிரியர் அமைத்து இருக்கலாம். −
கவலை இல்லாதவன்
சிறு கதையாக அமைய வேண்டிய இக்கதை, பத்திரிகைச் செய்திச்சுருள் போலாகிவிட்டது. ஏழைகளின் துன்பம் அனைத்திற்கும் காரணம் அறியாமை தான் என்ற கருத்தைச் சித்திரிக்க முயன்ற ஆசிரியர், இரு சம்பவங்களைப் பிரதானப் படுத்தி எழுதுகின்றார். பின் கதை மையத்திலிருந்து சமூக நிலை பற்றிய வியாக்கியானத் திற்கும் பாய்ந்து விடுகிறார். இடையில் கதை சொல்பவர், கதை சொல்லும் நேரத்தில் பின்னணியில் நடக்கும்

753
4PavašaíŽzZý ZVzžava/
சம்பவங்களையும் எடுத்துரைக்கிறார். இது என்னவோ, பிரக்ஞை ஒட்ட உத்தி என்று மாத்திரம் மருளத் தேவை யில்லை. இத்தகைய முறையினால், கதை, சிறுகதை என்ற வகையின் உறுதிப் பொருளம்சத்தில் நின்று விலகி விடுகிறது. இருந்தாலும், "தனி மனிதர் மேல் பழிபோடும் காலம் மலையேறிவிட்டது. எவ்வளவு அறிவை வளர்த்து மனதை விரித்தாலும், அது சில வேளைகளில் குறுகிய
y y
வேலியுள் அடங்கப்பார்க்கிறது." என்பன போன்ற நறுக்குத்தறித்த வசனங்கள் பொருத்தமாய் உள்ளன.
GU GT
இது ஓர் ஈழத்துச் சிறுகதை என்ற முத்திரையுடன் உண்மையிலேயே மண்வாசனையை இக்கதையில் நுகர முடிகின்றது. இது ஒரு அருமையான கதை. கலை நுட்பமாகக் கதையை முடித்திருப்பது பாராட்டத்தக்கது. "அவன் இதயம் அதிர்ந்து கண்கள் துளிர்த்தன" என்ற வாக்கியம் வெகு அழகாக சின்னத்தம்பியின் மன நிலையைப் படம் பிடிப்பதுடன், வாசகர் உணர்வையும் உலுக்குகின்றது.
வெறித்த பார்வை
இக்கதையில் வரும் சுந்தரம் என்ற பாத்திர வருணனையும், பாத்திரச் சிருஷ்டியும், வெகு தத்ரூபமாக அமைந்துள்ளன. கதையின் உச்சக் கட்டத்திற்கு விறுவிறுப்புடன், வாசகர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர், பட்டென்று பத்திரிகை ரகக் கதை போல,

Page 85
754. Pas sŽvazzžavazza கதையை முடித்திருப்பது செயற்கைத் தன்மையாயுள்ளது. கதையளவில் ஒரளவுக்கு வெற்றிதான் என்றாலும், செயற்கையான முடிவு உள்ளத்தைத் தொடவில்லை.
புயல்
இது ஒரு சுமாரான கதை தான் என்றாலும் ஓரளவுக்கு தமிழ் வாசகர்களுக்குப் பிரச்சினை அம்சத்தை உள்ளடக்கியது. காதலரிருவர் ஒன்று சேர முடியவில்லை, காதலி வேறு ஒருவனை மணம் முடித்துப் போலிவாழ்க்கை நடத்துகிறாள். காதலன், தன்னைப் புதிதாகக் காதலிக்கத் தொடங்கிய ஒரு சிங்களப் பெண்ணை மனமிரங்கி மணம் முடிக்கிறான். ஆனால், அவளோ இனக் கலவரத்தில் இறக்கிறாள். அவன், தனது பழைய காதலியையும், கணவனையும் யதேச்சையாக, ஒரு நாள் காண நேர்ந்தது. புயல் கிளம்பியது. காதல் கணவனைத் துறந்து, காதலனைத் தஞ்சமடைகிறாள். தனது கணவரிடமிருந்து, விவாகரத்துக் கோரிய பின், தன் காதலனிடம் அவள் சென்றிருப்பின், அது தமிழ்ப் பெண்ணுக்கு இழுக்கு என்று சொல்ல முடியாது. ஆசிரியர் மறைமுகமாக இதனை உணர்த்துகிறார்.
"அவன் கண்களில் கண்ணிர்த்துளிகள் அரும்பு முன்னரே, அவற்றை வெந்த உள்ளம் ஆவியாக்கிவிட்டது." ஒரு நல்ல வசனம்.
போராட்டம்
மாக்ஸியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட
யதார்த்த பூர்வமான கதையிது. நல்ல வேளையாகச்
சிறுகதை போல அமைந்து விட்டது. வரலாற்றில் இடம்

Pavadazz AM//ava/ 155 பெறத்தக்க ஒரு பழைய நிகழ்ச்சியைக் கதையில் வெற்றிகரமாகப் புகுத்தியிருக்கிறார்.
மேற்கு வேலி
சுவையான ஒரு கதையிது. நகைச்சுவை இழையோட தத்ரூபமாக ஆசிரியர் வருணித்துச் செல்வது இரசிக்கத் தக்கது.
வியாபாரம்
கிழக்கு மாகாணச் சூழ்நிலையில் முக்குவச் சட்டம் சம்பந்தமாக எழுதப்பட்டது. இச்சட்டம் பற்றிய அறிவு எனக்கில்லாததால், மொத்தமாக ஒன்றும் கூற முடியாது இருக்கின்றது. கதை சுவையாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், சம்பாஷணைகள் இயற்கையாயில்லை. உயிர்
பள்ளிக்கூடங்களை அரசாங்கம் எடுத்தபொழுது காட்டப்பட்ட எதிர்ப்புகளில் ஒன்றைப் பற்றிக் கூறுகிறது கதை, கதை முடிவில் ஒரு இயற்கைத் தன்மையிருக்கிறது. பொலீஸ்காரன் ஒருவனைச் சுட்டுவிட்டு ஓடும் ஒரு விசுவாசமுள்ள மாணவன், தற்கொலை செய்து கொள்ளவே முயல்கிறான். ஆனால், கடைசி நேரத்தில், அவ்விதம் செய்யாமல் சரணாகதியடைகிறான். அவனது இந்த நிலைதான், கதைக்குப் பலத்தைக் கொடுக்கின்றது. பொதுநலத்தில் சுய நலமும் கலந்திருக்கிறது என்பதைத் தான் இக்கதை சொல்லாமற் சொல்கின்றது.

Page 86
, 756
്ത്ര ക്രീമഞ്ഞZഖZിങ് பொழுதுபோக்கு
மேல்தளத்திலுள்ளோரை (தாம் சார்ந்த கொள்கை நெறி காரணமாக)ச் சித்திரிக்கும் பொழுதெல்லாம், அவர்கள் குறைபாடுகளை மிகைப்படுத்தி எழுதுவது சோஷலிஸ் யதார்த்தவாதிகளின் வழமை. எனவே, இக்கதையில் வெளிப்படையாகவே தன்து முற்போக்குச் தன்மையை ஆசிரியர் காட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால் அவர் கதையைக் கூறியிருக்கும் முறை செயற்கையாயிருப்பதால், இந்த பூஷ்வா (Bourgeois) கதையை "பூ இவ்வளவுதானா?" என்று கூற வைக்கிறது.
மரணத்தின் அணைப்பில்
இம்மாதிரியான முற்போக்குக் கதைகளே உண்மையில் வரவேற்கத்தக்கவை. இதில் சித்திரிக்கப்படும் சம்பவம் நடக்கவும் கூடியது; நடக்கக் கூடுவது சந்தேகத்திற்குமுரியது. இக்கதையில் உருவ அமைப்பு செவ்வனே அமையாவிட்டாலும், உள்ளடக்கம் போற்றத் தக்கது.
கற்பு எங்கே?
டாக்டர் வரதராசனாரின் பாணியில் எழுதப்பட்ட கதை போன்ற இந்த சுவாரஸ்ய விசாரத்தில் ஆசிரியர் தனது மனதிலுள்ளவற்றை எழுத்தில் வடித்த திருப்தி பெற்று இருப்பார். எமக்கு அவர் திருப்தி மகிழ்ச்சி தருகின்றது.
 

4pavada%z/z? ZVAZMarav 757
காணிக்கை
ஒருபாத்திரம் தனது தாயின் ஞாபகார்த்தமாகச் செலுத்தும் உரைநடைக் காணிக்கை,
மொத்தத்தில், திரு.கணேசலிங்கனின்இத்தொகுப்பில் முன்னைய தொகுப்புக்களை விடச் சிறந்த சிறுகதைகள் இருக்கின்றன. அவரிடத்தில் ஆர்வம் இருக்கிறது. அறிவு இருக்கிறது. புகைப்படக் கருவிக் கண்கள் இருக்கின்றன. அதே நேரத்தில், காதல் என்ற பொருள் பற்றிய ஒரு சோர்வு மனப்பான்மையும் (Melancholic View) தான் முற்போக்கு என்று கருதும் கருத்த்துக்களைத் திணித்து கட்டம் கட்டுவதுடன் நின்று விடும் சுயதிருப்தியும் காணப் படுகின்றன. அது மட்டும் போதாது ஒரு எழுத்தாளன் இலக்கியக் கலைஞனாக, மாறுவதற்கு என்பதை அவர் உணர்ந்து கொஞ்சம், லாவகமாக எழுதுவாராயின் நிச்சயமாக அவர் பெருமைக்குரியவராவார்.
(விவேகி : ஆகஸ்ட்1962)

Page 87
7.58
வ.அ.இராசரெத்தினம் தோணி
6. ஒரு புதிய சிறுகதைத் தொகுப்பில் இருந்து ஒரேயொரு கதையை மட்டும், கலை நுணுக்கப் Lugil Cup60.pdig5 (Exposition of Craftsmanship in the story) எடுத்துக் கொள்வோம்.
வ.அ.இராசரெத்தினம் எழுதிய கதைகளின் தொகுப்பான "தோணி"யிலிருந்து "தோணி" என்ற கதையை எடுத்து இங்கு பரிசீலிப்போம் இக்கதை நன்றாக எழுதப்பட்டது மாத்திரமல்லாமல், 1954 இல் எழுதத் தொடங்கியவர்களின் கதைகளுடன் ஒப்பிடும் பொழுது மிக மிக வெற்றிகரமாக அமைந்தும் இருந்தது.
 
 
 
 

7.59
4PavašaŕZý ZZZžava/
மிக அழகிய வருணனையுடன் கதையை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். ஆனால் ஒரு சொல்லாகுதல் அனாவசியமானது என்று ஒதுக்கித்தள்ள முடியாது. முதுலாவது பந்தியிலே வாசகர்களுக்கும் ஆசிரியருக்கு மிடையே ஒரு தொடர்பு உண்டாகி விடுகின்றது.
"கிராமம் என்ற சொன்னேன்? பூமிசாத்திர சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது"
என்று எழுதும் பொழுது கதாபாத்திரத்தின் குணாதிசயங்களுள் ஒன்றைக் கோடிகாட்டி விடுகிறார் ஆசிரியர்.
தன்மை, ஒருமையில் கதையைப் புனையும் ஆசிரியர், கதாபாத்திரம் எழுத்தறிவித்தகனல்ல என்பதை உணர்த்து விக்கிறார். அடுத்த வசனத்தில், கதாபாத்திரம் ஒலைக் குடிசைகளுக்கிடையே வாழ்பவன்' என்பதை வெகுநய மாகக் கூறுகிறார். கேள்விகளைக் கேட்டு ஒருவித ஏளனச் சவாலுடன் எழுதுவது ரஸமாயுள்ளது.
"ஒரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைகளுக்குப் போகப் பெண்களின் தலை வகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன." என்ற உவமை நயமானது, புதுமையானது என்றுங் கூறலாம். வாசகர் மனதில் பதியுமாறு சுற்றுப் பிரகாரத்தைச் சுருங்கக் சொல்லியும் விளங்க வைத்து விடுகிறது. கதாபாத்திரத்தினை உயிருள்ளதாகப் படைக்க முனைகையில் ஆசிரியர் பாத்திரத்தின் இயல்புக்கும், சுற்றாடல்களுக்கும் ஏற்பவே

Page 88
760 அதனைச் சித்திரிக்கிறார். வேறு சில ஆசிரியர்கள் போன்று, குடியானவன் அரசியல், வகுப்பு அந்தஸ்து (Class status) சித்தாந்தங்கள் பேச வைப்பதாகவோ அல்லது தாழ்த்தப்
ത്ര ക്രീമഞ്ഞ/ീയമബീജ്
பட்டவன் கறுவாக்காட்டு மனிதரின் வாழ்க்கை முறையைக் கண்டனம் செய்வதாகவோ, இந்த ஆசிரியர் சமூக அரசியல் பிரச்சனைகளைக் கொண்டு குட்டை குழப்பவில்லை. கதையோடு சம்பந்தமான சமுதாய
நிலையையே படம் பிடிக்கிறார். அதுவும் நிழற்பட யதார்த்தமாகவல்ல, கலைநயம் கொண்ட யதார்த்தமாக!
அடுத்த மூன்று பந்திகளிலும் கதாபாத்திரத்தின் சூழலையும் குடும்பத் தொழிலையும் வயதுப் பருவத்தையும் சொல்லாமற் சொல்லி விடுகின்றனர், கதாபாத்திரம் சிறுவன் என்பது.
"ஏறு வெயிலில் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைக்கட்டுக்கூடாகவும் முகடு பிய்ந்து கிடக்கும் எங்கள் வீட்டுக் கூரைக்கூடாகவும் துள்ளிப் பாய்ந்து நிலத்தில் வெள்ளித் துண்டுகளைப் போல வட்ட ஒளியைச் சிந்தும். அந்த ஒளி என் புறங்கையில் விழ, அடுத்த கையால் அதை நான்மறைக்க அவ்வவொளி அடுத்த கையிலும் விழ, நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக் கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டாயிருக்கும்."
என்ற வரிகளால் புலப்படுத்து கின்றார். இந்த வரிகளில் உள்ள கவிதைப் பூச்சு ஒலி நயம் மிக்கதாயும், கற்பனை வளமுடையதாயும், இருக்கிறது. அத்துடன்

ഉമയ്ക്കZ Zമയ -ത്ത 767 படிப்பவர் உள்ளத்தில் கதையுடன் நெருங்கிய தொடர்பு வைக்கும் ஆவலையும் கிளப்பி விடுகின்றது.
செல்லனை அறிமுகப்படுத்தும் விதமே அலாதி! கதையுடனும் கதாபாத்திரத்திடனும் தொடர்புடையதாகப் பொருத்தமான உவமையுடன் அவனை அறிமுகப்பத்து கின்றார். பாய்மரக் கம்பு போல' என்ற அவரது உவமை, கதாபாத்திரத்தின் உலக அனுபவம் குறைந்தது என்பதையும் அவன் உலகம் கிராமம் மாத்திரம் தான் என்பதையும் புலப்படுத்துகின்றது.
சிறுவர் இருவரினது விளையாட்டுகளை வருணிக்கையில் கூட ஆசிரியர் கையாண்ட சொற்சிக்கனம் "வழவழா", "கொழகொழா" எழுத்தாளர்களைச் சிந்திக்கச் செய்யும் என்று நம்புகின்றேன். மேலும், அவற்றை விபரிக்கும் பொழுது வெறும் வருணனைகளாயில்லாமல் கூடிய வரை செயல்களுடனும் நெருங்கிப் பிணைத்துப் புனைந்திருப்பது ஆசிரியருக்கு உருவமும் கைவந்ததற்கு ஒரு உதாரணம்.
τα அந்த நம்பிக்கையில் முகத்தில் சுள்ளென்று அடிக்கும் சூரிய கிரணங்களை நெற்றிப் பொட்டில் கைகளை விரித்து மறைத்துக் கொண்டு அந்தத் தோணியைப் பார்த்துக் கொண்டிருப்பேன்."
இவ்வசனத்தைத் தொடர்ந்து சிறுவனின் அபிலாஷை களை மிகவும் குழந்தைத்தனமாகச் சித்திரிக்கும் பொழுது பாத்திரப்படைப்பே வெற்றி பெறுகின்றது. நாமும் பாத்திரத்துடன் ஒன்றிக் கலந்து விடுகிறோம்.

Page 89
762
- മത്ര ക്രീമഞ്ഞമീയബീങ്
தொடர்ந்து வருணிப்பு, வாசகர்களுக்கும் விறுவிறுப்பு ஏற்பட்டு விடுகிறது. இடையில் பாத்திரத்தின் கனவுக் காட்சி வருகின்றது. அதிற்கூட ஆசிரியரின் சொற் செட்டே மனதைக் கவருகின்றது. சுருங்கிய சொற்களால் விளங்க வைத்து விடுகிறார்.
சிறுவன் தனது கனவை நனவாக்க முயல்கிறான். ஆனால், அவன் வயதில் சிறியவனாகையால் அதில் தவறி விடுகிறான். ஆயினும் 'தம்பியும் தன் தொழில் பழகுவது போல"அவன் ஒரு முருக்க மரத்துண்டைக்குடைந்து ஒரு பொம்மைத் தோணியையே செய்து விடுகிறான். இங்கு தான் கதையின் ஆரோகணத்தின் (Climax) முதற் படியைக் கோடி காட்டுகிறார் ஆசிரியர் சிறுவனின் இந்தச் செயல் தந்தையைப் பிரமிக்கச் செய்கின்றது. மைந்தனின் ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யவும் உதவுகின்றது.
"கடைசியாய் எங்கோ ஒரு சேவல் கூவிற்று, அதைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் சேவல்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு கூவின," என்று ஆசிரியர் கூறும் பொழுது படிப்போர் இதழ்களில் குறுநகை தவழ்ந்தோடாமற் போகாது.
ஆசிரியரின் நீரோட்டமான, மனதிற் பதிய வைக்கும் உவமான உவமேயங் கொண்ட கவிதைப்பூச்சு நடையின் எழிலைச் சற்றுச் சுவைத்துப் பாருங்கள்.
"சுட்ட பிணம் போல வளைந்து நெளிந்து உட்கார்ந்து கொண்டேன். படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில் வாடைக் கடுவல் ஊசி

763
குத்துவதைப் போலச் சுளிர் சுளிரெண்டு அடித்தது. தூரத்தே குடிசைக்குள் இருந்த அகல் விளக்குகள் இருளைக் குத்து குத்தென்று குத்தின."
"ஓடைக்கரையை அடைந்த போது ஆறு, பரமார்த்த குருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப் போலத் தூங்கிக் கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப் பொட்டென்று ஆற்றில் எங்கே போகிறோம் என்ற பிரக்ஞை அற்ற வண்ணம் போய்க்கொண்டிருந்தன. கோரைப்புற்களின் மேலே சிலந்தி வலை போலப் பனிப்படலம் மொய்த்துக் கிடந்தது."
ളിങ്ങക്കീയZ Z(ഖ
"நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின் முன்னணியத்தில் ஒடுங்கிப் போய்க் கொண்டிருந்தேன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தி போல வானத்தில் விடிவெள்ளி தொங்கிக் கொண்டிருந்தது."
பையனின் ஆசைக்கனவுகள் நிராசையாகும் பொழுது கதையின் ஆரோகண - உச்ச கட்டத்திற்குவந்து விடுகிறோம். மீன்கள் பிடிப்பவனுக்குச் சொந்தமில்லை என்பதையும், மீன்பிடிகாரர்களின் பொருளாதார நிலையையும் விளக்கத் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் போதமானதாயிருக்கின்றது. சொல்லாமல் சொல்லி சமுதாயப் பிரச்சினையைச் சித்திரிக்கிறார் ஆசிரியர். இங்கும் தேவையற்ற "வியாக்கி யானங்'களில் இறங்கவில்லை ஆசிரியர். கதையின் போக்குடனேயே சமுதாயப் படப்பிடிப்பும் உள்ளது. கதை இயற்கையாகவும், யதார்த்தமாகவும் இருக்கின்றது.

Page 90
76 - ക്ര ക്ര7ങ്ങZിജ് ஆசிரியர் சமூகப் பிரச்சனைகளை வலிந்து எடுத்துக் காட்டவில்லை. காட்டினாற் தான் கதை நயம் கெட்டு கட்டுரையாக மாறி விடுமே! *
கதையின் அவரோகணம் (Anticlimax) உடனேயே வந்து விடுகிறது. இது நல்ல கதைகளில் காணப்படும் அம்சம். எதிர்பாராமலிருக்க அவன் எண்ணங்கள் பகற் கனவாகின்றன. ஆனாலும், கதை முடியவில்லை. கதையிலுள்ள சில சம்பவங்கள் உண்மையில் பாத்திரத்தின் வாழ்க்கையிலுள்ள சில சம்பவங்கள் சில விடுபட்டுப் பின்பும் புதிதாகக் குதித்தெழுகின்றன. அப்பொழுது கதாபாத்திரத்தினை வயது வந்து இளைஞனாக அறிமுகப்படுத்துகின்றார்.
கனகம் என்ற பெண் பாத்திரத்தை வாசகருக்கு அறிமுகப்படுத்துகையில் ஆசிரியர் கையாண்ட உவமைகள் சூழலுக்கேற்றவாறு அமைந்திருப்பது ஆசிரியர் கதையின் கட்டுக் கோப்பிலும், உருவத்திலும் எவ்வளவு அக்கறை எடுத்துள்ளார் என்பதைக் காட்டுகின்றது. அதாவது, சம்பந்தமுடைய இரண்டு சம்பவங்களின் கோவைக்குப் பொருத்தமான உவமைகளும், நிகழ்ச்சிகளும் பாத்திரப் படைப்பும் அமைந்திருக்கின்றன.
கனகத்தை அறிமுகப்படுத்தும் தோரணையைப் பாருங்கள்.
"கனகம் எங்கள் கிராமத்துப் பெண் தான். நீரின் இடை மட்டத்தில் ஆடும் பாசிக் கொடியைப் போல எப்போதும் மென்மையாக ஆடிக்கொண்டுதான் அவள் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீனைப் போலச் செக்கச்

gpazvassaç2z/Z7 4/7a/a7a/ 765 செவேலென்று அழகாக இருப்பாள். வண்டலில் மின்னும் கிளிஞ்சல்போல் இருக்கும் அவள் கண்களை இன்றைக்கு முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கலாம்."
கதாபாத்திரத்தின் கனவுகளில் மீண்டும் இடி விழுகின்றது. "தோணி" ஒன்றைச் சீதனமாகப் பெறுவதற்கு, அவன் கனகத்தை மணம் முடிக்கக் காத்திருந்தான். ஆனால், 'விதி'யும் "வறுமை"யும் வேறு விதமாய் விளையாடின. அமாவாசையன்றிரவு, புங்க மரத்தின் கீழே இருந்த வைரவர் கோவிலடியில் செல்லன்அவள்கையைப் பிடித்தான். நண்பனிடம் "தோணி" சொந்தமாயிருப்பதால் கனகத்தை நிர்க்கதியாக்கிவிட்டான் சேலையும் நகையும் வாங்கிக் கொடுப்பான் என்று ஒரு திருப்தி
.னால் 4ے
"இன்னமும் தோணி எனக்குக் கனவுலகப் பொருளாகத்தான் இருக்கிறது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான்." என்று கூறி தன்னைத் தேற்றிக்கொள்கிறான்.
கதை முடிகின்றது.
இந்தக் கதையில் கதையம்சம் என்று குறிப்பிடுவதற் கான நிகழ்ச்சிகள் இல்லை. அப்படியிருந்தும் சிறுகதைக் குரிய வடிவத்தைப் பெற்றுள்ளது. முதல், இடை, கடை மூன்று பகுதிகளையும் இக்கதையில் இனம் கண்டு கொள்ளலாம். கதாபாத்திரப்படைப்பினால் மேலெழுந்து நிற்கிறது இக்கதை. அன்டன் செகோவ் (Anton Chekov) என்ற ருஷ்ய எழுத்தாளரின் கதைகளைப் போலத் தனிமனித

Page 91
766
குணசித்திரங்களை சமுதாயப் படப்பிடிப்புத் துணை
മെ ക്രി/മഞ്ഞ/Zബ/ബീജ്
செய்யச் சித்திரிக்கிறார் ஆசிரியர். இலட்சியங்கள் நனவாகலாம். ஆனால், அதற்குப் பொருளாதார நிலை தடை செய்கின்றது என்ற வெளிப்படையான கருத்தைக் கதை மூலம் உணர்த்தும் ஆசிரியர் மறைமுகமாகச் சமுதாய இழிநிலையைக் கிண்டல் பண்ணுகிறார். ஒரு குழந்தைப் பருவச் சிறுவனின் அபிலாஷைகளைக் குழந்தை மனப்பான்மையுடன் சித்திரிக்கிறார்.
அதே நேரத்தில் குழந்தை மனப்பாங்குடைய கதாபாத்திரம், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது சற்று செயற்கையாகத் தான் இருக்கிறது. இது ஒரு பெரிய குறை என்று சொல்ல முடியாது. ஏனெனில், அப்பாத்திரம் வளர்ந்ததும் பரிபக்குவம் அடைந்திருக்கலாம் அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிரியரின் உரைநடை தமிழ் மரப்புக்கு ஏற்றவாறு இருப்பதால் தமிழ் வடிவமே கொண்டுள்ளது.
திரு.இராசரத்தினத்தின் இதர கதைகளையும் படித்துப் பார்க்கும் பொழுது, அவர் ஈழம் பெருமைப்படக் கூடிய தலை சிறந்த சிறுகதையாசிரியர் என்பதையும், ஈழத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய - ஓரிரு - நல்ல எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதையும், 'தேசிய', யதார்த்த, முற்போக்கு' போன்ற இலக்கியப் பண்புகள் பொதிந்த கதைகளை எழுதியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகின்றது. இது வரை வெளி வந்த ஈழத்து சிறுகதைத் தொகுப்புகளில் சிறப்பானது தோணி தான் என்பது எனது மதிப்பீடு.

ഴ്ചയ്ക്കZ Zഞഖ -ത്ത ' 767
"தோணி" என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரேயொரு கதையை மாத்திரம் எடுத்து கதையமைக்கப் பட்ட முறையை விளக்கிக் கூறியிருந்தேன்.
இனி "தோணி என்ற தொகுப்பை முழுமையாக எடுத்துக் கொள்வோம்.
தமிழ் நாட்டின் தலை சிறந்த சிறுகதையாசிரியர் களுடனும், ஓரளவுக்கு ஒரு நல்ல மேனாட்டாசிரியர் களுடனும், ஒப்பிடத்தக்க அளவிற்குச் சிறுகதைகள் எழுதியுள்ள ஓரிரு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுள் வ.அ.இராசரத்தினமும் ஒருவர்.
இவருடைய கதைகளில் மேனாட்டுச் சிறுகதை யாசிரியர்களைக் குறிப்பாக, அன்டன் செகோவைப் படித்த மன அருட்சியின் சாயைகளைக் காண முடிகின்றது. இவருடைய கதைகளில் நிகழ்ச்சிச் சித்திரங்களும் குறைவாயிருக்கும். பாத்திரச் சிருஷ்டித் தன்மையே மேலோங்கி நிற்கும். சூழ்நிலை அமைப்பு விறுவிறுப்பு கட்டுக்கோப்பு, இறுக்கம், கவிதைச் பூச்சான மொழி வளம், போன்ற சிறுகதை உருவப்பண்புகள் இவருடைய கதைகளில் செவ்வனே அமைந்திருக்கும். அதே நேரத்தில், பிரதேசப் பண்புகளும், மொழியழகும், யதார்த்த நயமும், சமூகச் சித்திரிப்பும், கலாரசனையும் பொதிந்து கிடக்கும். இத்தகைய பொதுப் பண்புகளை இவருடைய கதைகளிற் காண்பதால், இவரை ஒரு நல்ல சிறு கதையாசிரியர் என்று தயங்காமல் கூற முடிகின்றது.

Page 92
፲68
മത്ര ക്രമങ്ങZബ്രു/ിക്ക്
இவர் 1951 - 1954 காலப்பகுதியில் எழுதிய 14 கதைகள் - அவை எழுதப்பட்ட கால வளர்ச்சியை மனதிற் கொண்டு பார்க்கும் போது - நன்றாகவே எழுதப்பட்டு உள்ளன. அக்கதைகளின் கோவையான இத்தொகுப்பில் தோணி, அறுவடை', 'பிரிவுபசாரம்', 'மனிதன்', 'பாசம்' 'பெண்" ஆகிய நல்ல கதைகளும், ஒற்றைப் பனை", 'குடிமகன்’, ‘ஏமாற்றம்" ஆகிய சுமாரான கதைகளும், 'கோகிலா’ போன்ற உருவகக்தையும், 'கலைஞனும் சிருஷ்டியும்" என்ற சரித்திரக் கதையும், 'பாலன் வந்தான், தருமம், நம்பிக்கை போன்ற பத்திரிகை ரகக் கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
அறுவடை கதை முடிவு பத்திரிகைக்கதை' வாக்கில் அமைந்திருந்தாலும், நிகழ்ச்சிச் சித்திரங்களில் ஒரு வளர்ச்சிப் பாங்கு இருக்கின்றது. யதார்த்த பூர்வமான சூழ்நிலை வருணனையைத் தீட்டும் பொழுது, கலைப் பாங்கான உவமையுருவங்கள், ஆசிரியருக்குத் துணை செய்கின்றன.
"வாலைக் குமரி போலத் திமுதிமு என்று வளர்ந்த பயிரின் நெஞ்சம் விம்மிப் பூவாய், பூநிறைந்த குலையாய், பாளையாய்க் காலிற் சதங்கை கட்டிக் கொண்டு, ஆடத் தயாராய் நிற்கும் நர்த்தகியைப் போல கம்பீரப் பார்வை பார்க்கையில் பனிக்காலம் தொடங்கி விட்டது. வெறிச்சோடிக் கிடக்கும் கடலின் மேற்பரப்பில் அந்தக் காவற் குடில், கருநீலமாகப் பரந்து கிடக்கும் ஆழியில் வட்டப் பாய் விரித்து நிற்கும் சின்னஞ்சிறிய படகைப்

Pavata/Z Z/7Zava/ 769 • -ܚܝܵܚܝܵ போல் நின்றது. காளான் குடையைப் போல விரிந்து நிற்கும் குடில்."
"Shiflous ITyth' மனித உணர்வலைகளைச் சித்திரிக்கும் ஒரு வெளியுலக நடப்புக்கதை. இப்பொழுது படிக்கும் பொழுது இது போன்ற எத்தனையோ கதை களை நாம் படித்த நினைவு வருகிறது. ஆனால், இது எழுதப்பட்ட 1953 இல் இது புதுமையாக இருந்திருக்கக் கூடும்.
'மனிதன்" ஒரு மனிதத்துவ (Humanitarian) கதை. ஒப்பற்ற ஓர் உணர்வு கதையில் இழையோடுகின்றது. கதையைக் கலை நயமாக ஆசிரியர் முடித்திருக்கிறார். "வறண்ட மூளைக்குள்ளே சிக்கிக் கொண்டு முன்னே ஒடத் தெரியாத கற்பனை போலக் காலம் ஊர்ந்து செல்கின்றது" என்ற வாக்கியம் அழகாக அமைந்திருக்கின்றது.
பாசம்' பழைய பட்டினத்தார் கதைக்கு ஒரு புதிய பார்வை கொடுத்திருக்கும் ஆசிரியர் தனது வளமான நடையில் தமிழ் மணங்கமழச் செய்கிறார். 'நாதியான கடவுளுடன் பொங்குமாங்கட"லை ஒப்பிடுதல், "தண்ணிரில் மிதக்கும் எண்ணெய் போல" செட்டியாரை ஒப்பிடுதல், செவ்வானத்தை மனைவிக்கும், மனிதனின் ஆபாசங்களைச் சுட்டெரிக்கும் நியமத் "தீ"க்கும் ஒப்பிடுதல், இரசிக்கத் தக்கவை.
"பெண்” மனோதத்துவப் பார்வை கொண்ட ஒரு கதை. கதையில் தமிழ்ப் பெண்களின் போக்கை எள்ளி நகையாடினாலும் பாத்திரத் தன்மையைச் செவ்வனே புனைந்திருக்கிறார்.

Page 93
7ፖ0
്ത്ര ക്രീമങ്ങZബ്ബീര്, 'ஒற்றைப்பனையில் கிராமத்திய சண்டை சச்சரவு களை அல்லது கிராமத்திய மக்களின் அறியாமையை வெகு
அழகான சித்திரமாகத் தீட்டுகிறார். ஆனால் இதன் உருவ அமைப்பு வெற்றி பெறவில்லை.
'குடிமகன் ஒரு யதார்த்த பூர்வமான சமூகப் பிரச்சனைக்கதை. இதனைக் கலைநயமாகத் தீட்டி யிருப்பதனால், கதையின் உள்ளடக்கம், புதுமையாயில்லா விட்டாலும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.
'ஏமாற்றம் "சிறுகதை" என்ற வகைக்குள் அடங்கா விட்டாலும் சில மனித உண்மைகளைக் கோடிகாட்டி நிற்கும் அல்லது ஆசிரியரின் தனித்தன்மையை எடுத்து இயம்பும் சித்திரமாக அமைந்திருக்கின்றது.
'கோகிலா ஒரு நல்ல உருவகக் கதை (Alegory)
“கலைஞனும் சிருஷ்டியும் வெற்றியடையா விட்டாலும், விவரணநடையில் சொல்லப்பட்ட சரித்திரக் கற்பனை தருமம், முற்போக்கு எண்ணங் கொண்ட கதை: வரவேற்கத் தக்கது. ஆனால், சோபிதமடையவில்லை. ‘நம்பிக்கை" என்ற கதையும் ஒரு பத்திரிகை ரகக் கதைதான்.
தோணி என்ற சிறுகதைத் தொகுப்பு சிறப்பானது.
(விவேகி : ஒக்டோபர் 1962)
 

777.
டொமினிக் ஜிவIr பாதுகை
13
திணியைத் தொடர்ந்து வெளியாகி
யிருக்கும், மற்றொரு சிறுகதைத் தொகுப்பான, பாதுகை' பலவிதத்திலும் சிறந்ததொரு தொகுப்பாக விளங்குகின்றது. இதில் நல்ல சிறு கதைகள் சில இடம் பெற்றிருக்கின்றன.
இவற்றை எழுதிய டொமினிக் ஜீவா, தான் ஒரு தொழிலாளி என்பதில் பெருமை கொள்பவர். இவரது கதைகளில், "சோஷலிஸ் யதார்த்தவாதம்' என்ற பண்பு விரவி நிற்கும். அதாவது, சாதாரண, தொழிலாள, வறிய மக்களின் வாழ்க்கை நெறி போன்றவை புகைப்பட ரீதியில் படம் பிடிக்கப்பட்டு கதைகள் தீட்டுபவர். திரு.டொமினிக் ஜீவா கூறுவது போல, ஒரு சில சாய்வு நாற்காலிக் கற்பனை வாதிகள் எவ்விதம் தமது கதைகளில்

Page 94
772
ஒரு திறனசம்வாணரின்
மற்றைய பிரச்சனைகள் பற்றி நேரடி அனுபவம் இல்லாததாலும், அப்பிரச்சனைகள் பற்றி உண்மை யாகவும், யதார்த்த பூர்வமாகவும், சித்திரிக்க முடியாது இருப்பதால் மத்திய தர அல்லது மேல்தளத்துப் பாத்திரங் களைச் சிருட்டித்து அப்பாத்திரங்களின் வாழ்க்கை முறையை (நேரடி அனுபவம் பெற்றிருப்பதால் ஒரு வேளை) சித்திரிக்கிறார்களோ, அவ்விதமே பொதுவாக "சோஷலிஸ் யதார்த்த வாதிகளும், அடித்தளத்து மக்களின் அவல நிலையை மாத்திரம் சித்திரிப்பதில் அக்கறை எடுப்பவர்கள்.
டொமினிக் ஜீவா போன்ற சோஷலிஸ் யதார்த்த வாதிகளுக்குத் தனித்தேயொரு இலக்கியத் தத்துவார்த்தக் கோட்பாடு (deology) உண்டு. ஆசிரியரின் தத்துவார்த்தக் கோட்பாடு பற்றி, விமர்சகன், அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தனது கோட்பாட்டை அல்லது நோக்கத்தை - அது எதுவாயுமிருக்கலாம். வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறாரா, இல்லையா என்பதே எமது கேள்வி? இக் கேள்வியை மனதிற் கொண்டு பார்க்கும் பொழுது ஜீவா, தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம்.
பாதுகை' என்ற தொகுப்பில் 1 கதைகள் உள்ளன. தொகுப்பிற்காகச் சில மாற்றங்களை, ஆசிரியர் செய்து இருப்பதாகக் கூறுகிறார். இம்மாற்றங்கள் வரவேற்கத்தக்க வையாகவும் ஆசிரியர் சுய திருப்தியில் மயங்கிக் கிடக்காமல், வளர்ச்சியில் நாட்டங் கொண்டுள்ளார் என்ற

773
4pazvaria2z/Z7 4/7a/a7427
கருத்தைப் படிப்பவர் மத்தியில் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.
கலை மெருகு, கட்டுக்கோப்பு, கவிதைப் பூச்சு, அகவுணர்வுச் சித்திரிப்பு, பொருத்தமான யதார்த்தப் படப்பிடிப்பு, பாத்திரத் தன்மைக்கேற்ப நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக் கிரமத்தில் கோவைப்படுத்துதல் போன்ற உருவ அக்கறையில், ஆசிரியர் கவனம் எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்லாமல் ஆசிரியர் வளர்ந்தும் வருகிறார். தண்ணிரும் கண்ணிரும்' என்ற இவரது முன்னைய தொகுப்புக் கதைகளைப் பார்க்கிலும் சிறப்பாகக் கதையெழுதும் கைத்திறனைப் பெற்று வருகிறார் என்பதையும் காட்டுகின்றது.
இக்கதைகளில், நான் மிகவும் இரசித்தது வாய்க்கரிசி என்ற கதையாகும். இதில் ஒரு மனிதாபமான உலகியல் வாழ்க்கையை, வெகுதுல்லியமாக ஆசிரியர் விளக்க முனைகிறார். கதை நெடுகிலும் ஓர் இறுக்கமான கட்டுக் கோப்பு இருக்கின்றது. கதை முடிவைத் தான் விரும்பியவாறு எழுத ஆசிரியருக்கு உரிமையுண்டு. இக்கதையின் முடிவு, அவசரமாக எழுதப்பட்டது போல தோன்றுகிறது. தகப்பனாரை உதாசீனம் செய்து வந்த தில்லை நாதன் கடைசி நேரத்தில் (மகன் அல்லாத தேவதாஸன், தில்லைநாதனின் தகப்பனாருக்கு அந்திமக் கிரியைகள் செய்ய வரும் பொழுது) வேதக்காரன் என்ற காரணங்காட்டி குறைப்பட்டுக் கொள்வது உளவியலிற் கேற்புடையதாக இல்லை!

Page 95
7ፖ4
ஒகு திறனாகப்வாணரின் “காகிதக்காடு" என்ற கதையில் சூசகமாக எதனையோ உணர்த்துவிக்க விரும்புகின்றார் ஆசிரியர் என்பது தெரிகிறது. அது எதுதான் என்று தெற்றெனப் புரியவில்லை. கதையை வெகு அழகாகப் புனைந்திருக்கும் ஆசிரியர் வாசகர் மனதில் தொற்ற வைக்கும் விதத்தில் ஏதோ ஒரு உணர்வைக் கதை மூலம் ஊட்டுகின்றார். அவ்வுணர்வை இனங்கண்டு கொள்வது சிறிது சிரமமாய் இருக்கிறது. இது ஆசிரியருக்கு ஒரு வெற்றி எனலாம். ஏனெனில் இன்றைய இலக்கியப் போக்குகள் இத்தன்மை வாய்ந்தனவாய்த் தானிருக்கின்றன.
‘பாதுகை ஒரு செருப்புத் தொழிலாளியின் அனுபவத்தைக் கூறுகிறது. இதில் இயல்புக்கேற்ற யதார்த்தச் சித்திரிப்பு இருக்கின்றது. கதையின் உயிர் நாடியாக விங்குவது யாதெனில் கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான முத்து முகம்மது என்ற தொழிலாளி. சந்தர்ப்பவசத்தால் இவர் ஒரு திருட்டை அறிந்தே செய்து விடுகிறார். அதை மறைக்க பொய்ச்சத்தியம் பண்ணவும் அவர் கூசவில்லை. ஆனால், அத்தொழிலாளரின் முக்கிய தொழிற் சாதனமாகிய சப்பாத்தைக் கொண்டு சத்தியம் பண்ணச் சொல்லிக் கேட்கப்படும் பொழுது தொழிலாளி மறுத்து விடுகிறார். இது தான் கதையிலுள்ள முக்கிய நிகழ்ச்சி. இக்கதையின் மூலம் தொழிலாள மக்களும் தவறு செய்யக்கூடும் என்ற உண்மையைத் தயங்காமல் கதாசிரியரான திரு.டொமினிக் ஜீவா எடுத்துக் கூறுவது பாராட்டத்தக்கது. ஆயினும் கதையிலுள்ள முக்கிய நிகழ்ச்சியைப் பிரதானப்படுத்திக் கூறுமளவிற்கு

4pazvasa2z/Z7 4/7a/a7a/ 775 இக்கதையில் ஏதேனும் ஒப்பற்ற உணர்வு, வாசகர்களைத் தொற்றிக் கொள்ளும் விதத்தில் இழையோடுவதாகத் தெரியவில்லை. மற்றபடி கதையின் இதர அமைப்புக் கூறுகள் 'பாதுகையில் நன்றாய் அமைந்திருக்கின்றன.
‘நகரத்தின் நிழல்கள்’ என்ற கதையில் ஒரு ரிக்ஷோக்காரனுக்கும் கதை சொல்பவருக்குமிடையே ஏற்பட்ட உறவு சித்திரிக்கப்படுகின்றது அவ்வுறவின் மூலம் அத்தொழிலாளியின் வாழ்க்கை நிலையைக் கதை சொல்பவரும் வாசகர்களும் அறிந்து கொள்கின்றனர், காணமுடிகின்றது. சின்னட்டி என்ற அந்த ரோஷமுள்ள ரிக்ஷோக்காரனைப் பின்வருமாறு ஆசிரியர் அறிமுகப் படுத்துகின்றார்.
"ஒரு கையால் ரிக்ஷோவின் ஏர்க்காலைத் தாங்கிய வண்ணம் மறுகையால் தன் முகத்தில் ஒட்டியிருக்கும் அழுக்கைப் பார்க்கிலும் அழுக்கு மிகுந்த சீலைத் துண்டினால் பசிக்களை இழையோடியிருக்கும் முகத்தில் சற்றே வேர்விடும் வியர்வைத் துளிகளை உரசித் துடைத்தவாறு. நடு வயதைத் தாண்டிக் குடும்பப் பாரத்தால் நசியுண்டு பசியினால் உடல் உலர்த்தப்பட்டு ரிக்ஷோ இழுப்புத் தொழிலால் கூனிய முகத்துடன் அவன் காட்சி தந்தான்."
மூன்றாவது கதையான தாளக் காவடி' என்பதைக் கலை மெருகுடன் எழுதப்பட்ட சுவாரஸ்யமான பத்திரிகைச் செய்திச் சுருள் (Reportage) என்று கூறலாம். சிறுகதைக்குரிய பண்புகள் இதனில் செவ்வனே அமைய வில்லை. ஒரு பஸ் கண்டக்டரின் அனுபவத்தைச்

Page 96
776 മg ീഴഞ്ഞമീബ്ബീര് சித்திரிக்கும் இக்கதையில் கதாசிரியரான திரு.டொமினிக் ஜீவாவின், கம்பீரமான கிண்டலான எழுத்துநடை மனதைக் கவருகிறது.
அடுத்த கதையான 'பாபச் சலுகையில் ஜீவா பிரயோகித்திருக்கும். "மகிழ்ச்சியுடன் ஊதிப் பெரிதாக்கிய பலூண் வெடித்துச் சிதறியதைக் கண்ணால் காணும் குழந்தையின் மனத்தவிப்பு" போன்ற ஒப்புவமை அல்லது 2. "சாய்வு நாற்காலிக் கனவு வாதிகளைப் போல” என்ற தொடர், அல்லது 3. "கோழிச்சண்டையில் வெற்றிபெற்ற சேவல் இறக்கையை அடித்து 'கொக்கரககோ என்று கூவிவிட்டு அலட்சியமாக அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நிற்குமே அதைப்போன்ற” என்பனபோன்ற ஆசிரியரின் பிரயோகங்கள் குறிப்பிடத்தக்கவை. சாதிப் பிரச்சனை பற்றிய பிரக்ஞையைக் கதைப் பொருளாகக் கொண்ட இக்கதையில் செயல்களும், உரையாடல்களும் பொருத்தமாகப் பிணைந்திருக்கின்றன.
“மனத்தத்துவம்" என்ற கதை மனோதத்துவப் பார்வை சற்றே மிளிரப் புனையப்பட்ட சுவையானதொரு மத்தியதரக் காதல் கதை. அது கடித வடிவத்தில் அமைந்திருக்கின்றது.
'மிருகத்தனம்' என்ற கதையில் அமானுஷ்ய அன்பையும், மானிட அன்பையும் ஒன்றுபடுத்தி அதே நேரத்தில் வேறுபடுத்தி அழகாகக் காட்டுகிறார் ஆசிரியர். “குளத்து விரால் மீன்களைப் போன்று எண்ணங்கள் முடிவற்றுப் பரிவட்டமிட்டன. அவற்றின் பிரதிபலிப்புகள் போல இடையிடையே பெருமூச்சுகள்" போன்ற கலைநய

፲ፖ? மான வார்த்தைப் பிரயோகங்களை இக்கதை கொண்டு இருந்தாலும் சிறுகதைக்குரிய அந்தத் தனித்துவச் சிறப்பு இக்கதையிற் குறைவு.
பத்திரிகை ரகக் கதைப்போக்கில் குறளி வித்தை என்ற கதையிருந்தாலும் அதில் கையாளப்பட்டிருக்கும் கவிதைப் பூச்சு நிரம்பிய யாழ்ப்பாணத்துக் கொச்சை மொழி பொருத்தமாகவும் சுவையாகவும் இருக்கின்றது.
4Pavaša Zý ZVzŕavav
உதாரணமாக,
“எணேய், ஆச்சி! எணேய் ஆச்சி" என்று பல தடவைகள் தம்பிப்பிள்ளை குரல் கொடுத்த பின்னர் தான் நாகம்மா விழித்துக் கொண்டாள். "என்னடா? காலங்காத்தாலை ஏன் கத்துறாய்?" என்று அலுத்துக் கொண்டாள். a.
'பூமணிக்கு என்னமோ, வயித்துக்குள்ளை செய்யுதாமெணை" என்று குரல் கொடுத்தான். இதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பதைத்து வாரிச் சுருட்டிக் கொண்டு விறாந்தைக்கு வந்தாள் நாகம்மா.
பூமணியின் நிலை அவளுக்கு விளங்கிவிட்டது. "குறுக்காலை போறவனுக்குச் சொன்னால் கேட்டால் தானே? டேய் கன்னிப் புள்ளைத்தாச்சியடா! எப்ப எண்டு சொல்ல முடியாது. புள்ளை பெறச் சாமான் எல்லாம் வேண்டி வைக்கச் சொன்னனான். கேட்டாத்தானே இப்ப பாரடா!" என்று இரைந்தாள். நாகம்மாவின் குணம் அப்படித்தான். எந்தச் சிறிய விடயமானாலும் பந்தல் பிரித்துத்தான் பேசுவாள்.

Page 97
፲ፖ8
്ത്ര ക്രമങ്ങZബ്ബിങ്
"புள்ளை! இப்ப எப்படி இருக்கடி?. குத்துதே?" என்று கேட்டுக்கொண்டே, உப்பிப் பருத்திருத்த வயிற்றினைத் கட்டினாற் போல இருந்த சேலையை இடுப்பை விட்டுச் சற்று அவிழ்த்து நெகிழ விட்டாள்.
"ஆச்சி இப்ப என்ணை செய்கிறது?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் தம்பிப்பிள்ளை.
"உதிலைதான் நிண்டுகொண்டு நிக்கிறியே? காலங் கிடக்கிற கிடையிலை என்னால் முடியாது. பேந்து, இந்த மருத்துவச்சியளைக் கொண்டந்து தன்ர மேனைச் சாக்காட்டிப் போட்ட தெண்டு அளவெட்டியாள் ஏறக்கம் பாய்வாள். உதில பரமன்ரை கார் நிக்கும் கூட்டியா".
இவ்வாறு எழுதிச் செல்கிறார் ஆசிரியர்.
இரு சகோதரர்களுக்கிடையில் இருந்த உறவு சிறிது காலம் அறுபட்டுப் பின்பு, ஒரு மலசலகூடத் தொழிலாளியின் உந்துதலினால், பிணைப்புண்ட கதைதான் "கைவண்டி" என்ற அருமையான கதை. இதில் கைவண்டிக்காரனின் பாத்திர அமைப்பு சிறப்பாக உருப் பெற்றிருக்கிறது.
மாட்டுவண்டிச் சவாரியைப் பொறுத்த வரையில் சாத்திரம் பொய்த்ததாகக் கூறும் கதை, சவாரி"இக்கதையில் வரும் பாத்திர வருணனை அருமை எனலாம்.
சமுதாயத்தின் முதுகெலும்பு போன்ற தொழிலாள மக்களின் வாழ்க்கை நிலையை மாத்திரம் சித்திரிக்கும் திரு.டொமினிக் ஜீவா, தொடர்ந்தும் உலகானுபவமுள்ள

Apavaaz/Z Z/7Zapa/ 779
(Universal) பொருள்களைப் பற்றியும், எழுதுவதில் தனது கவனத்தைச் செலுத்துவாராயின், விரும்பத்தக்கது. தண்ணிரும் கண்ணிரும்' என்ற தொகுப்பில் காணப்பட்ட உருவக் குறைபாடுகளும், ஒருதலைப்பட்சமான சித்திரிப்புகளும் 'பாதுகையில் இல்லை. மொத்தத்தில் சிறுகதை' என்ற இலக்கிய வடிவத்தில் நமது ஈழத்துச் சிறுகதைகள் வளர்ச்சி பெற்று வருகின்றன என்பதற்கும் ஜீவா வளர்ச்சியடைந்திருக்கிறார் என்பதற்கும் பாதுகை சான்று பகருகின்றது.

Page 98
780
வரதர் கயமை மயக்கம்
ரெதரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பில் அவரது ஆரம்பகாலச் சிறுகதைகள் உட்பட மொத்தம் 12 கதைகள் உள்ளன. 'கயமை மயக்கம்' என்ற அத் தொகுப்பில் வரதரது இலக்கியக் கோட்பாடுகளின் விளக்கத்தைக் காணலாம். சி.வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன், சு.வே.போன்ற ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களைத் தொடர்ந்து வந்த வரதர் என்ற திரு.தி.ச.வரதராஜன் 'மறுமலர்ச்சி குழுவைச் சேர்ந்தவர். அவரது கோட்பாடுகளில், அவரது முன்னோடிகளின் கோட்பாட்டின் தாக்கம் இருப்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் காலத்தின் போக்கிற்கேற்ப அவரது கதைகளும், செம்மை பெற்று வந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. திரு.வரதராஜனின் கதைகளைப் பற்றிப் பொதுவாக இங்கு குறிப்பிட்டுச் சொல்கையில் அவரது வெற்றி, தோல்விகளையும் எடைபோட முடிகின்றது. வரதர், ஈழத்தின் நல்ல சிறு கதையாசிரியர் களுள் ஒருவர்.
 
 
 
 
 

4Paduvafat%z/Z* Az/az.wavav 787
Digerí Uph : olalue207 ponLuílio (Narrative style) எழுதப்பட்ட மெல்லிய ஏளனங்கொண்ட கதை. கதை எழுதப்பட்ட முறை, பக்குவம் பெற்ற இன்றைய வாசகர் களைக் கவரும் தன்மையுடையதாக இல்லை. "கொழுத்துத் தடித்த பணக்கார வீட்டு இளம் பெண்ணின் கன்னத்தைப்போல" என்ற உவமையைப் படித்த போது குறுநகை முகிழ்கின்றது.
உள்ளுறவு ஊடலின் நிமித்தம் பிரிந்த தம்பதி களின் பிணைப்பைப்பற்றிக் குறிக்கின்றது. சாதாரண பத்திரிகை ரகக் கதை வாக்கில் அமைந்திருக்கிறது.
வேள்விப்பலி : "உயிர்பலியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதன் தன் உயிரைப் பலி கொடுத்தான். ஆனால் தன் உடம்பை, என்றோ ஒரு நாள் எரித்து சாம்பலாகப் போகின்ற உடம்பை, வளர்க்க வேண்டுமென்பதற்காக எத்தனையோ உயிரை வதைக்கிறானே, அவனும் ஒரு மனிதனா?” என்று அழகாக முடியும் கதையில் ஆசிரியரின் முற்போக்குத் தன்மையைக் காணமுடிகின்றது. இது ஒரு நல்ல கதை. நன்றாகவும் எழுதப்பட்டுள்ளது. அதே கதையில் வரும் மற்றுமொரு வசனமான, "வெற்றியை அனுபவித்ததற்காக நாம போராடுகிறோம். நம்முடைய வேலை கடமைகளைச் செய்ய வேண்டியது. பலனை அனுபவிக்க வேண்டியது நமது சமூகம்" என்பது குறிப்பிடத்தகதகது.
'உள்ளும் புறமும் : பெரிய மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் சின்னத்தனங்களை ஒருதலைப் பட்சமற்ற முறையில் அழகாக எழுதியிருக்கிறார். ஆனால் இதன் உருவ அமைப்பில் கட்டுக்கோப்பு தளர்ந்து

Page 99
782 — മത്ര ക്രമങ്ങZയZമ്
காணப்படுகின்றது. இதனை ஒரு Sketch என்று தான் சொல்ல வேண்டும்.
'பிள்ளையார் கொடுத்தார் : ஒரே மாதிரியான தார்மீக எண்ணங்களைத் திரும்பித் திரும்பி நினைத்துச் சலித்துப் போனவர்களுக்கு இக்கதையில் வரும் ஒரு சம்பவம் சற்று இதமாக இருக்கின்றது. என்னைப் பொறுத்த வரையில் இதன் உள்ளடக்கத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.
"வீரம் : இளங்கோ. கயல்விழி. இருவர்களுக்கு
மிடையில் இருந்த உறவில் சாதாரண எழுத்தாள வாசகி என்ற தொடர்போடு இனக் கவர்ச்சியும் சேர்ந்திருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் காதல்? இன்னும் வரவில்லை. இன்னும் சில மாதங்கள் இப்படிப் பழகி வந்தால் அது வந்துவிடக் கூடும்" என்று எழுதியிருப்பது கதாசிரியரின் முதிர்ந்த அறிவைக் காட்டுகின்றது. ஆசிரியரின் மனிதாபிமான உணர்வை இக்கதையில் இனங்கண்டு கொள்ளலாம். இதுவும் ஒரு நல்ல கதை.
“வெறி' இக்கதையில் மனிதனின் பேராசை ஒன்றைச் சித்திரிக்க முனைந்தாலும் செயற்கையாகப் புனையப்பட்டிருப்பதால் கதையில் உயிரோட்டம் இல்லை. அத்துடன் ஆசிரியர் கதை எழுதும் மாதிரியையும் காட்டி கொடுத்து விடுகிறது. சிறுகதை பத்திரிகை ரகக் கதைப் போக்கில் அமைந்து விட்டது.
‘ஒரு கணம் : இக்கதையையும், அது எழுதப் பட்டிருக்கும் செயற்கையான உருவ அமைப்பினால் இரசிக்க முடிவதில்லை. "சிறுகதை' என்ற இலக்கிய

ഉഒക്ടീസ്ഥ Zഞഖ് --— 783 வகையில் புது விதமான உருவ அமைப்பும் உள்ளிருந்து முகிழ்த்தெழுந்த உள்ளடக்கம் அமையும் இவ்வேளையில் இத்தகைய கதைகள் சிறப்ப்படையாதது ஆச்சரியம் இல்லை.
புது யுகப் பெண் : உள்ளடக்கத்தில் புதுமை கொண்ட இக்கதையும் வரவேற்கத்தக்கது. இது போன்ற கதைகள் மூலம் திரு. வரதரின் முதிர்ச்சியைக் காண முடிகின்றது.
‘வாத்தியார் அழுதார் : மனநெகிழ்வு அழகாகப் படம்பிடிக்கப்படுகிறது.
"கற்பு வரதரின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு. இக்கதை, சந்தர்ப்பவசத்தால் உடலால் கற்பிழந்தால் அது கற்பிழந்ததற்கு சரியாகாது என்று கருத்துப்பட எழுதியிருக்கிறார். வரவேற்கத்தக்க புது மாதிரியான கதை.
“கயமை மயக்கம் : இது ஒரு நீண்ட கதை, இடையிடையே பின்னோக்கி உத்தியைக் கையாண்டு கூடிய வரை இறுக்கமாக எழுதியிருக்கிறார்.
முடிவாக, இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகள், 'கயமை மயக்கம்' 'கற்பு', 'வாத்தியார் அழுதார், புதுயுகப் பெண், உள்ளும் புறமும்', 'வீரம்', 'பிள்ளையார் கொடுத்தார், வேள்விப்பலி ஆகியவையாம்.
(விவேகி : டிசம்பர் 1962)

Page 100
784
கச்சியப்பர் மாதர் மதுவெறி
ர்ேப்பிரமணியப் பெருமானுடைய திருமணத்தைக் காணச் சென்ற அரிவையர்கள் மதுவெறியினால் மயங்கிக் கிடந்த காட்சியினை அழகாக வருணித்துள்ளார் ஆசிரியர் கச்சியப்பர்.இருபத்தைந்து பாடல்களால் இக்காட்சிதனை எம்மனத்திரை முன் வரைந்துள்ளார். அழகுறப் பாடப் LuLL- இக்கவிதைகளில் பல வண்ணக் காட்சிகள் மிளிர்கின்றன. பொங்கி வரும் பெருவெள்ளம் போல் நிகழ்ச்சிச் சித்திரங்கள் சென்று கொண்டு போவதை ஆசிரியர் கவினுற எடுத்துக் கூறுகின்றார். கற்பனைச் செறிவும், உயர்வு நவிற்சியும், தற்குறிப்பேற்ற அணியும் இக்காட்சிகளை வருணிக்குமிடத்தில் காணக் கிடக்கின்றன. மதுவெறிக் காட்சியினைப் புலவர் எங்ங்னம் வருணிக்கிறார் என்பதனை இனிப் பார்ப்போம்.
 
 
 
 
 
 

4pazvaria2z/Z7 4z/az/az/az/ ፲85
இளநீர் பருகும் உவமை
அந்திமாலைப் பொழுதில் சூரியன் மறைந்ததும் விண் மீன் கூட்டங்கள் நீல வானகத்தே தோன்றி மினுமினுத்தன. பால் நிலவு எங்கும் பொங்கி வந்து ஒளியினைப் பொழிந்து கொண்டிருந்தது. அந்நேரத்திலே தையலார் நெஞ்சிலே ஒரு கிளுகிளுப்பு உண்டாகியது. காம நோயினால் அவர்கள் வாடினாற் போலத் தோன்றிற்று. அழகிய கிண்ணங்களில் மதுவினை நிரப்பிக் கொண்டு அவர்கள் தத்தம் இடங்களுக்குச் சென்றனர். ஆடவர் சிலரும் அம்மாதர்களைத் தொடர்ந்து சென்றனர். குளிர்ச்சி பொருந்திய அக்கள்ளினைத் தம் அரிவையருக்குத் தாமாகவே ஊட்டி அவர்களுடைய அதரத்தினின்றும் ஊறும் அமிர்தத்தைத் தாம் பருக ஆடவர்கள் விழைந்தனர்! இந்நிலையினைக் கச்சியப்பர், தெங்கு மரத்திற்கு நீரூற்றலுக்கும், பின்பு இளநீரைப் பருக ஆவலாய் இருப்பதற்கும் ஒப்பிடுகிறர்.
மதி"க்கு மது கொடுக்கும் மங்கை
வான மண்டலத்தில் முழுமதி மின்மினிகளுடன் தோன்றும் காட்சியினைப் புலவர் பூவுலகிலுள்ள தேன் மொழி நங்கையர்களின் வதனங்களுக்கும், அவர்களின் கைகளில் மின்னும் வெள்ளிக் கிண்ணங்களுக்கும் ஒப்பிடுகின்றார். வண்டுகளுக்கு உணவாகிய மதுவினை ஒரு மாது சிறிது கூடுதலாக அருந்தியிருந்ததனால் மயக்க முற்றுக் கதி கலங்கியிருந்தாள். மதியின் தண்ணொளி மேனியில் பட்டதும் அவள் வெறி அதிகமாயிற்ற.

Page 101
786 மதியிலும் மறுவுண்டு. அம்மறுவினையகற்ற மதுத்துளி களைப் பருகும்படி முழுநிலவுக்கு அந்நங்கை பணித்தாள். அங்ங்ணம் பூரணச் சந்திரன் செய்யாவிடில் சந்திரனின் மறு அகலாது என்றும் அப்படிச் செய்தால் முழு மதியின் நிலவும் முழுவதுமே தெரியுமென்றும் அவள் கூறினாள்.
മത്ര ക്രമങ്ങമീയബീജ്
இன்னுமொரு நங்கை அறிவு மயங்கி இருக்கும் வேளையில் சந்திரனைப் பார்த்துத் தாம் அருந்தும் மதுவினில் அரைவாசியைத் தான் தருவதாகவும், சந்திரன் வெட்கத்தினால் தன்னிடம் மது தரும்படி கேட்கவில்லை என்றும் கூறினாள். தான் சந்திரனுக்காக மதுவினைப் பங்கிட்டுக் கொடுக்க முன்வருவதாயும், சந்திரன் மதுவினை உண்டால் சூரியனிலும் வீறாப்படைவான் என்றுங் கூறினாள். இவள் அதிகம்மதுவருந்தினதால் அறிவு கலங்கியிருப்பதுடன், தான் அருந்தும் மதுவினைச் சந்திரனுக்குப் பங்கிட்டுக் கொடுக்கவும் முன்வந்துள்ளாள்.
இன்னொருத்திகள்வெறியினால் அசைந்துஅசைந்து நடக்கலுற்றாள். சந்திரனின் ஒளி அவள் மேல் பட்டதும் அவள்நிழலுருவம் நிலத்திற் படிந்தது. தன்நிழலுருவத்தைக் கண்டு அவள் மோகித்துப் பிதற்றலுற்றாள்.
களவாகப் புணர்ந்தானோ கணவன்?
வேறொருத்திக்குக் கள்ளுண்ட மயக்கத்தில் தன்னிலேயே சந்தேகம் வந்துவிட்டது. வெள்ளிக் கிண்ணத்தில் இருந்த மதுவினில் பாதி குடித்திருந்தாள். மிகுதியினைக் குடிக்கும் பொழுது தன் பார்வை அக்கிண்ணத்தில் இருந்த மதுவில் பிரதிபலிப்பதைக் கண்டாள். தன்னுடைய கயல் போன்ற விழிகள் செக்கச்

፲8ፖ
செவேலெனச் சிவந்திருப்பதையும் அதரங்கள் வெளுத்துக் காணப்படுவதையும் கண்டு தன் கணவர் தான் அறியாமலேயே தன்னைப் புணர்ந்துள்ளார் என்றெண்ணி மதுவெறிகொண்டு தன் கணவனைத் தேடியோடினாள். மது நுகர்ந்தார்க்கும் கணவனோடு சேர்ந்தார்க்கும், விழி சிவத்தலும் அதரம் வெளுத்தலும் இயல்பென்றும் அந்த மங்கைதான்மதுவுண்டதை வெறியிலுணராது, மயக்கத்தாற் கணவர் புணர்ந்தமையால் உண்டானதென எண்ணினாள் என்றும் உரை ஆசிரியர் ஆறுமுக நாவலரவர்கள் கூறுகிறார்கள்.
4pava5a42z/Z7 4/7a/az?/az/
இதுகாறும் எங்கே சென்றீர்?
சில மாதர்கள் அழகினையுடைய ஆபரணங்களைப் பூண்டிருந்தனர். நல்ல தெளிவான மதுவும் உண்டிருந்தனர். ஆனால், காம நோய் அவர்களை வாட்டிற்று. அம்புலியின் தண்ணொளி அவர்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதை விட்டுத் தணலினைத் தருவது போற்றோன்றிற்று. அதனால், உணவையும் மறந்து புணர்ச்சியை வேண்டி நின்றனர். தம் கணவரைப் புணர்கின்ற ஆவல் கொண்டு இருந்தனர். மது வெறி காமத்தினை இங்கு விழைந்ததைப் புலவர் மறைமுகமாய்க் கூறுகின்றார். காம நோயினால் கணவரைப் புணர விரும்பும் அம்மாதர்களுள் சிலர் தம் கணவர் அருகிலில்லாததையிட்டு வாடினார். சில கணவர் சிறிது நேரங்கடந்து வந்ததும், "இதுகாறும் எங்கு சென்றிருந்தீர்?" என்று பிணங்கினர் சில மாதர்.
மது வெறி கொண்ட பெண்கள் தம் நிலை மறந்து நாணமற்று, ஆடை அரையினின்றும் அவிழ்ந்து வீழவும்

Page 102
788 ஒகு திறனாப்வாணனின் பிதற்றிக் கொண்டும், தம்முணர்வில்லாது தடுமாறித் திரிந்தும் வாடினர். எண்ணத்தை அழிப்பதற்கும் கள்ளினைப் போல் வேறொன்றுமில்லை என்பதற்கு மேற்கண்ட காட்சி சாட்சியாகும்.
மேற்கூறப்பட்ட காட்சிகளைத் தனது வருணனை களில் நேர்த்தியாய்க் கச்சியப்பர் வருணித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். ஆபாசமான நிகழ்ச்சிகள் பாடல்களின் பொருள்களாக அமைந்திருந்தாலும் அவற்றைச் செவ்வனே விளக்கிப் புலவர் கூறுவதற்கு ஒரு காரணமுண்டு. தீதானதொன்றை மக்கள் மனத்தில் தீதென்று எடுத்துக் காட்டுவதற்குத் தீமையானவற்றை நன்கு விளக்கிச் சொன்னாலேயே அவர்கள் அதனை நன்கு பதிய வைத்து அவற்றின் இழிமையையுணர்ந்து நன்மையைப் பேணுவார்கள். இதற்காகவே புலவர் கள்ளுண்ணல் என்ற தீதான பழக்கத்தால் விளையும் சம்பவங்களைப் பெண்களின் காமக்கிளர்ச்சியின் மூலம் காட்டுகின்றார் என்று கூறலாம்.திருமணங்களில் களியாட்டம் போன்றவற்றில் மக்கள் பெரு விருப்புடையவர்களாதலால், கச்சியப்பர் சுப்பிரமணியப் பெருமானின் திருமணத்தைக் காணச் செல்லும் அரிவையர்கள் கள்ளுண்டு மயங்கிச் செய்த ஆர்ப்பாட்டங்களைச் சுவைபடக் கூறி அவற்றின் இனிமையையும் கூறாமற் கூறியுள்ளதால் புலவரின் திறன் பாராட்டத்தக்கதேயாகும்.
(utilatti : 07.10.1961)
 

789

Page 103
790
தொல்காப்பியர் தொனிக் கோட்பாடு
பண்டைத் தமிழ் இலக்கியக் கொள்கைகள்' என்ற பெயரில், தொல்காப்பியர் கருத்துக்கள் பற்றி, குறிப்பாக, தொல்காப்பியத்தின் பொருளாதாரம் பற்றி, வடமொழிப் பேராசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். அந்த வட மொழிப் பேராசிரியர் ஒரு தமிழர். ஜி.சுந்தரமூர்த்தி என்ற அப்பேராசிரியர் எழுதிய நூலை, வடமொழி, தமிழ் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற அவருடைய மாணவர் திராதாமோதரன் தமிழில் பெயர்த்திருக்கிறார். மதுரை மேற்கு வெளி வீதி 32/1 இலக்கத்தில் உள்ள சர்வோதய இலக்கியப் பண்ணைஇந்த நூலை வெளியிட்டு இருக்கிறது.
இலக்கிய மாணவர்களுக்குக் குறிப்பாகவும், இலக்கிய ஆர்வலர்களுக்குப் பொதுவாகவும், பயன்படும் இந்நூல் எழுத்தாளருக்கும் ஒரு நல்ல கையேடாக
 
 
 
 
 

797 /oمصZZa/4 ترZZZZلکھے تھے عصPے
அமைந்துள்ளது. குறிப்பாக, கரு, பாத்திரங்கள், மெய்ப் பாட்டில், உவமையியல், உள்ளுறை, ஒளசித்தியம், இலக்கிய உத்திகள் ஆகியன நவீன எழுத்தாளனுக்கும் இலக்கியத்தின் சில உறுதிப் பொருள்களை அடிப்படையில் எடுத்து விளக்குவன. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா பூராவும், குறிப்பாக வட மொழி இலக்கியத்தினூடாகப் பரவியுள்ள "ரச"க் கோட்பாடும் விளக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், தொல்காப்பியக் கோட்பாடுகளை வடமொழி இலக்கியக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டும், தொல்காப்பியரின் காலம், சிறப்பு போன்றவற்றை
தாமோதரனின் தமிழாக்கம் படிப்பதற்கு இடைஞ்சற் படுத்தவில்லை. கூடியவரை ஆற்றோட்டமாகவே அமைகிறது.
இனி, இந்த நூலிற் தெரிவிக்கப்பட்டிருக்கும் சில கருத்துகளை, வாசகர் நலன் கருதித் தொகுத்துப் பார்ப்போம்.
"தொல்காப்பியம், யாப்பு, அணி, மற்றும் இலக்கணம் ஆகியகூறுகளைத் தன்னகத்தே கொண்டதாக இலங்குகிறது. ஒலியியல் பற்றிக் கூறும் எழுத்ததிகாரம், சொல்லியல் பற்றிக் கூறும் சொல்லதிகாரம், பொருள் நெறி மரபினைக் கூறும் பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் பிரிவுகளாகத் தொல்காப்பியம் பிரிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் முழுவதும் சூத்திரங்களின் வடிவிலேயே எழுதப்பட்டு இருக்கிறது. சங்க காலத்துடன் நெருங்கிய உறவு கொண்டது

Page 104
79.2
ஓர திறனார்வரினி
தொல்காப்பியத்தின் காலமாகும். தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகளைச் சங்க இலக்கியங்கள் பின்பற்றி இருக்கலாம். அல்லது சங்க இலக்கியத்தில் மனதைப் பறிகொடுத்த தொல்காப்பியர் தனது இலக்கியக் கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கலாம். தொல் காப்பியத்தின் காலம் கி.மு.4 அல்லது கி.மு.3 ஆம் நூற்றாண்டு என்று அறுதியிட்டுக் கூறலாம். 11 ஆம் நூற்றாண்டிலிருந்து பலர் தொல்காப்பியத்திற்கு உரை செய்தனர். இவர்களில் தலை சிறந்தவர்களாகக் கருதப்படுபவர் இளம் பூரணரே.
"அக்காலத்தில் இலக்கியத்திற்குக் கதை அமைப்பு முக்கிய தேவை என்று கருதப்படவில்லை. ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத, ஆவலைத் தூண்டும் சிந்தனைகளையும், பொருள்களையும், நிகழ்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் கொண்டதாக இலக்கியக்கரு அமைந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர். ஆகவே, அக்காலப் படைப்புகளுக்குக் கதையின் இன்றியாமையைப் பற்றித் தொல்காப்பியர் பேசவில்லை. அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே அவருடைய கருத்துக் கொள்கை அமைந்துள்ளது. தொல்காப்பியர் குறிக்கும் நெறிகள் நடை முறை நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருக்கின்றன."
"தொல்காப்பியத்தில் மெய்ப் பாகுபாடுகளைப்பற்றி விளக்கிக் கூறும் மெய்ப்பாட்டியல் என்னுமோர் இயல்

793
4PavašaéZý ZZZžava/
உள்ளது. மன உணர்வுகளின் விளைவாக உடலில் தோன்றும் வெளிப்பாடுகள் அல்லது அடையாளங்களுக்கு மெய்ப்பாடு என்று பெயர். சமஸ்கிருதத்தில் விபாவம், அனுபவம், சாத்வீக பாவம், வியபிசாரி பாவம், ஸ்தாயி பாவம் என்ற சொற்களால் காட்டப்படும் கருத்துக் கிணையான பொருளியல் தான் தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு என்னும் சொல்லால் வழங்கப்படுகிறது."
"இலக்கியத்தில் தொனிக் கோட்பாட்டைக் கண்டு பிடித்தவர் தொல்காப்பியரே" என்றும் பேராசிரியர் ஜி.சுந்தரமூர்த்தி கூறுகிறார். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய மறைந்த துணை வேந்தர் வரதராசனார் கூறியிருப்பது போல, "குறிப்புப் பொருள் ஒளசித்தியம் ஆகிய கோட்பாடுகள் பற்றி விளக்குவது போற்றுதற் குரியது. இந்த இலக்கியக் கொள்கைகள் பற்றிய வரலாற்றுக்கு இந்நூல் மிக முக்கியமான பங்காக அமைந்துள்ளது. இந்நூலாசிரியர் இந்தளவுக்கு ஒப்பற்ற சேவை செய்துள்ளார்."
திராதாமோதரன் மொழி பெயர்த்த இந்த நூலுக்கு மூல ஆசிரியரே முன்னுரை எழுதியிருக்கிறர். அவரே கூறுகிறார்:
"வடமொழி இலக்கியக் கொள்கைகளைக் கற்றதன் விளைவாகத் தொல்காப்பியத்தில் பல அரிய கொள்கை களை நான் காண முடிந்தது. பொருளாதாரத்தில் காணப்படும் இலக்கியக் கொள்கைகளை முறைப்படுத்தும்
முதல் நூல் இது."

Page 105
794
മത്ര ക്രീമമ്മZബ്ബീജ്
மொழிபெயர்ப்பாளர் என்ன கூறுகிறார்?
"வட மொழி இலக்கியக் கொள்கைகளைத் தெளிவாகவும், விரிவாகவும், இது வரை யாரும் தமிழ் உலகிற்குத் தரவில்லை. தமிழ் இலக்கியக் கொள்கை களோடு பேராசிரியர் சுந்தரமூர்த்தி ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தமிழ் மொழி அறிந்தவர்கள் வட மொழி இலக்கியக் கொள்கைகளை அறியவும், வட மொழி பயின்றவர்கள் தமிழ் இலக்கியக் கொள்கைகளை அறியவும் இந்நூல் பேருதவியாக இருக்கும். இரு மொழிகளுக்குமிடையே உள்ள ஒற்றுமைகளை அறியும் வாய்ப்பினை நாம் பெற்றிருக்கிறோம்." நாமும் உடன் படுகின்றோம்.
"பண்டைத்தமிழ் இலக்கியக் கொள்கைகள்' மாணவருக்கு நல்லதோர் இலக்கிய நூல். பேராசிரியர் க.கைலாசபதியின் பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும் என்ற நூலையும் மாணவர் சேர்த்துப் படிக்கும் பொழுது ஒரு சமநிலையான அறிவார்ந்த அணுகல் முறையைப் பிரயோகிக்க ஏதுவாகும் என்பது எனது நம்பிக்கை.
(aflgasørfi almg 6arafluf6 21.9.1980)
 

79.5
சு.வித்தியானந்தன் தமிழியற் சிந்தனை
ப்பிரமணியன் வித்தியானந்தன் சமகால ஈழத்துக் கலாசாரத்துடன் இயைந்த ஒரு பெயரெனின் மிகையாகாது. பல்கலைக்கழகப் பேராசான்களே பெரும்பாலும் சமகால கலாசாரப் போக்கை நிர்ணயிப்பது வழக்கம் என்பது வெளிப்படையாகப் புலனாகாததோர் உண்மையாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக விளங்கிய பேராசிரியர் வித்தியானந்தன் இன்றைய ஈழத்துத் தமிழ் ஆய்வறிவாளர்களுடன் நெருங்கிய விதத்தில் சம்பந்தப்பட்டவர். அவர் பட்டறையில் மிளிர்ந்த பலர் இன்று உயர் கல்வி மட்டத்திலும், ஏனைய துறைகளிலும், ஏற்றம் பெற்றுள்ளனர். இலக்கியத்

Page 106
796
தென்றல், தமிழர் சால்பு போன்ற அரியநூல்களை எழுதிப்
്ത്ര ക്രമങ്ങZബZിങ്ങ്
புகழ் பெற்ற ஆசிரியரின் பெரும் தொண்டு நாடகத் துறையில் ஆகும். குறிப்பாக, ஈழத்து நாட்டுக் கூத்துத் துறைக்குப் புது வளம் பெருக்கியவர் என்ற முறையில் அவர் பங்கு அளப்பரியது.
கல்வித்துறையிலும் கலாசாரத்துறையிலும் வித்தியானந்தன் ஆற்றிய, ஆற்றி வரும் பங்கு பற்றி ஆராய்வதல்ல இவ்விடத்தில் எமது நோக்கம். அவை பற்றித் தனியாக விமர்சித்தல் வேண்டும்.
பேராசிரியர் வித்தியானந்தன் எழுதிய ஏழு தமிழ்க் கட்டுரைகளும் இரண்டு ஆங்கிலக் கட்டுரைகளும் அடங்கிய தமிழியற் சிந்தனை என்ற நூல் பற்றி நயமாகத் தொட்டுச் செல்வதே இங்கு முனைப்பு. யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக்கழம் வெளியிட்ட மூன்றாவது நூலே இது.
ஈழத்து இலக்கியம் என்ற தனியான பிரிவு வளர்ந்து சிறப்புறுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட இக்கால கட்டத்தில், ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி அறியவும், ஆய்வு நடத்தவும் பெரு விருப்பங்கொண்ட மாணவர் களின் தொகை மேலை நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதிலிருந்தே இதனை அறியலாம்.
ஈழத்து தமிழ் அறிஞர்களின் அரும் பணிகளை விதந்துரைப்பவையாக இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள் அமைகின்றன. ஆங்கிலக் கட்டுரைகள்

797 மிகவும் பயனுடையவை. இத்தொகுப்பு உயர் கல்விமாணர் களும், பல்கலைக்கழக மாணவர்களும், விமர்சகர்களும் பயனடைய உதவுகின்றது. ஆசிரியர் தமது கட்டுரைகளின் நோக்கத்தையும் பயனையும் தாமே முகவுரையில் குறிப்பிட்டிருப்பது படிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கின்றது.
நாவலரும் தமிழகமும் என்ற கட்டுரையில், தமிழகம் நாவலருக்கு எவ்விதத்தில் கடமைப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டித் தொண்டுகளை விபரிக்கும் ஆசிரியர், "தமிழகத்தை ஈழநாட்டுக்கு கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர்" என்ற சோமசுந்தர பாரதியாரின் மேற்கோளையும் ஆதாரம் காட்டுகிறார். தமிழகத்தினர் ஆறுமுக நாவலரின் பணியை அங்கீகரிப்பது எவ்வாறு வரலாற்று அடிப்படையில் தவிர்க்க முடியாதோ அவ்வாறே விபுலாநந்த அடிகளின் பணியும் ஒப்புயர்வற்றது. ஈழம் ஈன்ற இரு மேதைகளையும் ஆசிரியர் இரண்டாவது கட்டுரையில் ஒப்பிட்டு ஆராய்கிறார். 1943 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் துறையில் முதலாவது பேராசிரியராக விபுலாநந்த அடிகளே நியமனம் பெற்றா ரென்பது அவதானிக்கத்தக்கது. ஏனெனில், கிழக்கிலங்கை கல்வியிற் பின்தங்கிய பகுதி என்று கருதப்பட்ட போதிலும், அங்கு உதித்த ஒருவர் உயர் கல்விப் பீடத்தில் அமரும் வாய்ப்பையும் தம்மாற்றலினால் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டது.
ിരക്കീയZ Zയമ
இன்று, தமிழ் இலக்கிய விமர்சனத்துறையில் லங்கை தென்னிந்தியாவுக்கு வழிகாட்டுகி என்ப
த ந வுககு DSI து

Page 107
798 — മന്ത്ര ക്രമങ്ങZZിങ്ങ്
படித்தறிந்த தமிழ் நாட்டுக் கலாபிமானிகளும், விமர்சகர் களும் கூறுவர். அதே போன்று சி.வை.தாமோதரம் பிள்ளை போன்றவர்கள், "புதிய இலக்கண நூல்களை எழுதியும், பழைய நூல்களைப் பதிப்பித்தும் சிறந்த தொண்டாற்றினார்கள், ஆறுமுக நாவலர், சிதம்பரம் பிள்ளை, குமாரசாமிப்புலவர், த.கயிலாய பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோரின் பணி பற்றி குறிப்பிடும் ஆசிரியர்,
"19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் தமிழ்மொழி வரம்பிழந்து அழிந்தொழியாமற் காத்தவர் ஈழத்தவரே. இலக்கண மரபைப் பாதுகாத்து வந்தவர் ஈழத்தவரே எனினும் மிகையாகாது" என நிலை நாட்டுகிறார்.
ஈழத்தில் தமிழ் கிராமிய நாடகத்துறையில் அதிகாரப் பூர்வமாக பேச்சுடியவராக பேராசிரியர் வித்தியானந்தன் விளங்கினார் என்பது யாவரும் அறிந்ததே. அவருடைய நுண்மாண் நுழைபுலப் பார்வையைக் காட்டுவதாக இந்த நூலில் இடம் பெற்ற அடுத்த கட்டுரை அமைந்துள்ளது. மட்டக்களப்பிலும், மன்னாரிலும் ஆடப்படும் நாட்டுக் கூத்துகள் பற்றி சிறப்பாகவும், கிராமிய நடனக்கலை பற்றிப் பொதுவாகவும் விளக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மன்னார் மாவட்ட நாடகங்கள், சிங்கள மொழியில் காணப்படுவதை ஆசிரியர் விபரித்துள்ளார். அதே போன்று, கன்னட யக்ஷகான நாடகத்திற்கும் மட்டக் களப்பு வடமோடி நாடகத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாகவும், ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.

(ഥ Zബ് - 799 ஈழத்தின் சமயம் பற்றியும் கல்வி பற்றியும், அடுத்த கட்டுரையில் விபரிக்கும் ஆசிரியர், “சிங்கள மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தி அவர்களின் வழிபாட்டு முறைகளிற் சைவ முறைகளையும், புகுத்தி புத்த சமயத்திற்குப் புனிதத்தன்மையை அளித்தனர் தமிழர் என்றார். தமிழில் என்னும் பொழுது தமிழர் சமயமும், தமிழர் கலாசாரத்துடன் பிணைந்ததென்பது புலப்படும். அதன் நிமித்தம் இக்கட்டுரையும் மதிப்படைகிறது. 'தம்பதேனியாவிலிருந்து அரசு செலுத்திய 3 ஆம் பராக்கிரமபாகு என்பவன் காலத்தில் சரசோதிமாலை என்னும் சோதிட நூலைப்பாடி அவ்வரசன் சபையில் அரங்கேற்றினார் போசராச பண்டிதர்" என்றும், "கண்டியிலிருந்து ஆண்ட இறுதி அரசனாகிய பூரீ விக்கிரமராஜசிங்கனும், தமிழர் கல்வி விருத்தியிற் கவனம் செலுத்தினான்" என்றும் ஆசிரியர் தகவல் தந்துள்ளார். கட்டுரையின் பிற்பகுதியில், ஐரோப்பியர் காலத்தில் ஈழத்தவரின் தமிழ்க் கல்வி சமய முயற்சிகள் பற்றியும், ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளார்.
மேற்கண்ட கட்டுரையின், தர்க்க ரீதியான தொடராக அடுத்த கட்டுரை அமைந்துள்ளது. "ஈழத்திலே தமிழ்க் கல்வியும் பல்கலைக்கழகமும்" என்ற தலைப்பில் இடம் பெற்ற இக்கட்டுரையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இன்று யாழ்ப்பாணத்திலே தனியான ஒரு பல்கலைக் கழகம் இயங்கும் இவ்வேளையில் பின்னணித்தகவல்கள் பலவற்றைத் தெரிவிப்பதாக, இக்கட்டுரை அமைந்து இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.

Page 108
200 ്ത്ര ക്രമങ്ങZബണുീര്
பொதுவாக யாவரும் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மையை ஆசிரியர் வாயிலாக நாம் படிக்கும் பொழுது புளகாங்கிதம் அடைகிறோம். அவ்வரிகள்,
"இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரச் செல்வத்தை உடையவர். எனவே, அவர்கள் மொழியையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் போற்றிப் பேண ஒரு பல்கலைக்கழகம் அவசியமாகும் என்ற உணர்வு கல்வி வல்லாரிடையே உறுதிப்பட்டு வந்தது."
இந்நூலில் இடம் பெற்ற ஏழு தமிழ்க் கட்டுரை களிலே, ஈற்றில் அமைந்தது, இஸ்லாமியரும் தமிழிற் புதிய பிரபந்த வகைகளும்" என்ற கட்டுரையாகும். இஸ்லாமிய மக்களே தமது மதப் பிரபந்தங்கள் பற்றி அறிந்திராத வேளையிலும், பேராசிரியர் இந்த விஷயம் பற்றிய தகவல்களைத் திரட்டித் தந்தமை பாராட்டிற் குரியது.
நூலின் இரண்டாம் பகுதியில் இரண்டு ஆங்கிலக் கட்டுரைகளும் நூலாசிரியர் பற்றிய ஒர் அறிமுகக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. துணைவேந்தரின் நல்ல மாணவர்களில் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆங்கில அறிமுகம் தமிழ் மொழி அறியாதவர்களுக்கு நல்லதோர் பணியைச் செய்கிறது.
சிங்கள கலாசாரத்தில் தமிழ் செல்வாக்கு, ஈழத்துத் தமிழறிஞர் தமிழ் பற்றி ஆங்கிலத்தில் எழுதியவை, நடத்திய

49avasa2z/Z7 4/7a/a7a/ 207
ஆய்வுகள் (1968ஆம் ஆண்டு வரை) ஆகியனவற்றை அவை விளக்குவன. இவை ஆங்கில மொழியறிந்த சகலருக்கும் பெரிதும் பயனுள்ளவை என்பது கூறாமலே விளங்கும்.
இந்த நூலில் இடம் பெற்ற கட்டுரைகளில், கூறியவை கூறும் குறைபாடு காணப்படுகின்றதாயினும், அவை, வெவ்வேறு காலகட்டங்களிலும் எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டமையினால் ஏற்பட்டதாகையால், அதனைப் பெரிது பண்ண வேண்டியதில்லை. தவிரவும், மாணவர் களுக்கு மனதில் பதிய வைக்க, ஒரு சில தகவல்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன என்று கூறி அமைதி காணலாம்.
இறுதியாய்வில், தமிழியற் சிந்தனை, கல்வி, கலாசாரம், கலை போன்றவற்றில் நாட்டமுடையவர் எவரும் கைவசம் வைத்திருக்க வேண்டிய நூல் எனின் மிகையில்லை.
(வானொலி மஞ்சரி : ஏப்ரல் 1979)

Page 109
202
கைலாசபதி பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
ராசிரியர் கைலாசபதியின் நூல்களைப் படிக்கும் பொழுது அவர் ஒரு சுய சிந்தனையாளர் என்ற உண்மை புலப்படுகிறது. அவருடைய ஆய்வறிவு முயற்சிகள் வெறும் ஓய்வு நேர அப்பியாசங்கள் அல்ல. மேலெழுந்துவரும் தமிழ் அறிவாளர் கூட்டத்திற்கு வழிகாட்டல்களாக அவை அமைகின்றன.
வரலாற்று உணர்வுடன் அவர் எழுதுகிறார். அவர், எடுத்துக் கொள்ளும் விஷயங்களைப் பகுத்து ஆராய்ந்து விளக்குகிறார். இலக்கியம், கலை, மெய்யியல், சமயம், மொழி போன்றவற்றின் வடிவங்களைத் தீர்மானிப்பது சமூகத்தின் பொருளாதாரப் பின்னணி தான் என்பது ஆசிரியருடைய பொது நம்பிக்கை. அத்துடன் கலை, இலக்கியம், நெறிமுறை, சமயம் போன்றவற்றின்
 
 
 
 
 
 
 

203
രക്രീസ്ഥ Z(ഖ
ஆய்விற்கும், சமூக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள உறவை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை நிறைவேற்றுவதிலும் அவர் அக்கறை கொண்டுள்ளார்.
பூர்வீக தமிழ் இனம், சமயம் பற்றிய எட்டு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல், பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும். சோழர் கால இறுதி வரையுமுள்ள விஷயங்கள் இந்நூலில் ஆராயப்படுகின்றன.
பல்லவர் கால இலக்கியம் பற்றிய தனது விவரணையில், கலாநிதி கைலாசபதி சைவ சித்தாந்தத்தில் நிறுவப்பட்ட சில கருத்துக்களுக்குச் சவால் விடுகிறார். இந்து சமயத்தின் ஓர் பிரிவாகிய சைவ சித்தாந்தம், பக்தியை மையமாகக் கொண்டது. பக்தி காரணமாகப் பழைய கர்ம வினையிலிருந்து ஒருவர்தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்றும், மோட்சத்தின் கதவுகளைப் பக்தி திறந்து விடுகிறது என்றும் சைவ சித்தாந்திகள் நம்புகின்றனர். ஆனால், வர்க்கப் போராட்டத்தின் துணை விளைவே சைவம் என்ற கலாநிதி கைலாசபதியின் குறிப்புணர்த்தல் ஆராய்வுக்குரியது. சமணத்தைத் தழுவிய பொருளாதாரப் பலம் பொருந்திய வர்த்தகர்களுக்கும் சைவத்தைப் பின்பற்றிய நில உடைமை கொண்ட விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் விளைவு பல்லவர் கால இலக்கியம் என்று ஆசிரியர் கூறுகிறார்.

Page 110
204
മത്ര ക്രിമഞ്ഞZബZീര്
தர்மம், அரசியல் ஆகிய பொருள்கள் பற்றிய கட்டுரையில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காவியங்கள் உதாரணம் காட்டப்படுகின்றன. இவை எழுதப்பட்ட காலத்தில் இருந்து வந்த சமூக இழிவுகளை, இவை சித்திரித்துக் காட்டியதுடன் இவற்றின் நிவர்த்திக்கான வழிகளையும் இந்தக் காவியங்கள் காட்டுகின்றன. ஆனால், காவியகர்த்தாக்களின் சமூக சீர்த்திருத்தத்திற்கான முயற்சிகள், தோல்வியடைந்தன. காரணம், அவர்கள் தமது கருத்துகளைக் கர்மம், அல்லது துறவின் அடிப்படையில் உருவாக்கியதுதான். உண்மையில் சமூக அநீதியும் சம உரிமையின்மையுமே சமூகக் குறைபாடுகளின் நோய்களாக இருந்தன. இவை ஆசிரியர் காட்டும் கோணம்.
பக்தி வழிபாடு, சோழர் காலம் உருவாக வழி வகுத்தது. இக்காலத்தில் எதிர்க்கேள்வியின்றிப் பக்தி செலுத்துவது சம்பிரதாயமாக இருந்தது. தெய்வீகப் பிரதிநிதி மன்னன் என்ற கொள்கை நிலவிவந்தது. இங்கு தான் ஆண்டான் அடிமை உறவுகளும் நிலச்சுவாந்தர் முறைகளும் வளர்ச்சியுற்றன.
கலாநிதி கைலாசபதியின் கருத்துப்படி, காவிய கர்த்தாக்கள் ஆளும் வர்க்கத்தினரின் ஊது குழல்களாக விளங்கினர். போரைப் புகழ்ந்து செறிவூட்டியும் உள்ளனர். யுத்தத்தின் அவல நிலையில் வீரத்தையும் அழகையும், கவிஞர்கள் கண்டனர். மன்னர்களின் பிரசாரகர்களாக அவர்கள் விளங்கினர். பொருட் தேவையும், அழகியல் சார்ந்த இலட்சியங்களும், கவிஞர்களுக்கு இருந்தன.

ിക്കീയz’ Z(/ 205
வீர வணக்கம் உறுதியான மன்னராட்சி முறைக்கு அடிகோலும் சந்தர்ப்பத்தை அளித்தது. தெய்வத் தன்மை கொண்டவராக வீரர் ஒருவரை மதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பொது மக்களின் அறியாமையும், நியாய அளவுக்கு மீறிய அதிக செய்கைப் பண்பு வாய்ந்த உணர்ச்சி மேலீடும் இதற்கு வழி வகுத்தன. வரவிருந்த சமூக மாற்றத்திற்கு இவையெல்லாம் அடிப்படையாக alertist,
மனிதனின் ஆன்மா பற்றிய பிரக்ஞை எழத் தொடங்கிய காலத்தை எழுதப்புகுந்த ஆசிரியர், ஆன்மாவைப் பற்றி மனிதன் சிந்தித்துச் சிந்தித்து படிப்படியாகக் கடவுள் பற்றிய பிரக்ஞையை பெறத் தொடங்கினார் என்று கூறுகிறார்.
மந்திர தந்திர கிரியைகளைப் பின் பற்றி இறுதியில் சகல நிறைவுகளுக்கும் வித்தாக விளங்கும் அன்னை வழிபாடு உருவாகத் தொடங்கிற்று.
அன்னை, முருகன் மற்றும் பெயரில்லாத இந்து நதிப்பள்ளத்தாக்கு நாகரிக கடவுளரின் வழிபாட்டு மூலங்களை, ஆசிரியர், ஒரு கட்டுரையில் விளக்குகிறார். இந்து நதிப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஆண் கடவுள் முதலில் உள்ளுர்த்தாய்க்கடவுளை (கொற்றவை) மனைவி யாகவும் முருகனை (உள்ளூர் குழு ஒன்றின் தலைவன்) மகனாகவும் கொண்டதாக நம்பிக்கை உருவாகியது என்கிறார் ஆசிரியர்.
காத்திரமான வரலாற்று மாணவனுக்கு, கலாநிதி கைலாசபதியின் இந்த நூல் பழமையைக் குறிக்கோளுடன்

Page 111
206 — മെ ക്രമങ്ങZZങ്ങ് மறுபரிசீலனை செய்வதாக அமைகிறது. ஆயினும், இது
பக்கச் சார்வுடையது, மார்க்சிய பொருள் முதல்வாத வரலாற்று நோக்குடன் மாத்திரம் பார்வை விழுந்து இருப்பதனாலும், அந்த நோக்கிலேயே யாவும் காணப் படுகின்றன என்பதனாலும், பக்கச் சார்வு உடையது எனலாம். ஆயினும், தமிழ் இலக்கிய மாணவனுக்கு ஒரு சில அடிப்படிடையான விமர்சனப்பண்புகளை நூல் ஆசிரியர் இந்த நூலில் அற்புதமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
என்னைப் பொறுத்த வரையில் சமூக, மெய்யியல் விஷயங்கள் தொடர்பாக வியத்தகு விதத்தில் எழுதப்பட்ட இலக்கிய விமர்சனமாகும் இது.
இந்த ஒரே காரணத்தினால் ஆராய்ச்சி நோக்குடன் படிப்பதற்கும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும்
ஏற்றதாக அமைகின்றது இந்நூல்.
(மலர் : ஒக்டோபர் 1977)
 

2O7
சிதம்பர ரகுநாதன் இலக்கிய விமர்சனம்
திறனாய்வு பற்றித் தமிழகத்திலே வெளிவந்த நூல்களில் ஒன்று தான் இலக்கிய விமர்சனம்' என்ற நூல். சிதம்பர ரகுநாதன் எழுதிய இந்த நூல் 1948 இல் முதலில் வெளிவந்தது. இற்றை வரை நான்கு பதிப்புகள் வெளியாகியுள்ளன.
சிதம்பர ரகுநாதன் ஓர் ஆக்க இலக்கியகாரருங் கூட. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், ஆராய்ச்சி, விமர்சனம் போன்ற துறைகளில் ஈடுபட்ட இவர் ஒரு பொருள் முதல்வாதியாவார். இவர் பத்திரிகையாசிரியராகவும் விளங்கினார்.
இக்கட்டுரையில் ரகுநாதன் தமது இலக்கிய விமர்சனம் என்ற நூலில் தெரிவித்திருக்கும் கருத்துகளைத் தொகுத்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதே எனது நோக்கம்.

Page 112
208
ത്ര ക്രമങ്ങZബZീര്
புதிய சரக்கு
"இலக்கிய விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம், இவைகளின் ஜீவிதத்தைக் கொண்டு தமிழுக்கு இலக்கிய விமர்சனம் புதிதல்ல என்று சாதித்து விட முடியாது. ஏனைய நாட்டு இலக்கியங்களின் மேதா விலாசத்தோடும், தத்துவங் களோடும் நம் நாட்டின் இலக்கியத் தத்துவங்களையும் அசுர சாதனைகளையும், எடை போடுவது இந்த இருபதாம் நூற்றாண்டில் தான் தலையெடுத்திருக்கிறது" என்று கூறும் சிதம்பர ரகுநாதன், "இந்தத் தலைமுறையைத் தொடக்கி வைத்தவர் காலஞ்சென்ற வ.வே.சுஐயர் என்றே சொல்லலாம்" என்கிறார்.
அ.சீனிவாசகராகவன், எஸ். வையாபுரிப்பிள்ளை, புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலம் ஆகியோரின் விமர்சன நூல்கள் குறிப்பிடத்தக்கவை என்பதும் ரகுநாதனின் அபிப்பிராயம்.
"இலக்கிய கர்த்தாவின் இதயானுபவத்தை எடை போட்டு நிற்பது விமர்சனம்" என்று கூறும் ரகுநாதன், "காமம் செய்யாது கண்டதை மொழிவது தான் விமர்சனம். காமம் செப்புவது சுலபம் கண்டது மொழிமோ என்றால் அதுதான் கஷட்டமான காரியம்" எனவும் கோடிட்டுக் காட்டுகிறார்.

gavata%/z7 Z/7Zavav H 209 சமுதாயத் தேவை
இலக்கியம் மனித சிந்தனையின் அளவு கோலாக இருக்க, சமுதாயமும் நாகரிகமும் செயலின் அளவு கோல்கள் என விவரித்த ஆசிரியர், இலக்கிய விமர்சனத்தின் சமுதாயத் தேவையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"ஒரு நூலின் தேவை அதிலுள்ள கருத்துக்கள் சமுதாயத்துக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளன என்பதைப் பொறுத்துத் தான் அதன் மதிப்பும். இலக்கிய விமர்சகன் அந்த மதிப்பைத்தான் எடை போட வேண்டும். உரை செய்ய வேண்டும். விமர்சனம், ஒரு நூலின் மதிப்பையும் அதிலுள்ள கருத்துக்களை ஆசிரியன் எப்படி மக்களுக்கு எடுத்துச் சொல்கிறான் என்பதையும் பொறுத்திருக்க வேண்டும்."
இங்கு ரகுநாதன் விமர்சனத்தின் ஒரு பண்பைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இதை மேலும் விளங்குவன போல ரகுநாதனின் மற்றைய கூற்றுக்கள் அமைந்துள்ளன.
"ஆசிரியன் எடுத்துக் கொண்ட கருமத்தில் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறான் அல்லது தவறி இருக்கிறான் என்பதைக் கொண்டே அந்த நூலின் மேன்மை தாழ்மையை நிர்ணயிக்க வேண்டும். அதுபோலவே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களையே உண்மையெனக் கருதி, அதற்கு அப்பாற்பட்ட உண்மைகளை ஏற்க மறுப்பதும் அதை நிராகரிப்பதும், விமர்சகர்களின் வேலையல்ல.

Page 113
270 ത്ര ക്രീമഞ്ഞ/Zബീര് இலக்கியம் வரம்புகளைக் கடந்து நின்று இதய நீதி கூறுவது. ஒப்புக் கொள்ளப்பட்ட விரும்பப்பட்ட அபிப்பிராயம் என்பதையும் கடந்து நின்று, புதுப்புது விஷயங்களை, புரட்சிகரமான கருத்துக்களைப் படைக்கக் கூடியது. ஆகவே நிரூபணம் செய்யப்பட்ட, விஷயங் களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை இலகுவில் ஒதுக்கி விட முடியாது. அந்த விஷயத்தின் தன்மையை பாராபட்ச மற்று உணர்ந்து, அதற்குரிய மதிப்பைச் செலுத்துவதே விமர்சகனின் கடமையாய் இருக்க வேண்டும். ஆகவே, ஒரு நூலில் மதிப்பை அதன் தன்மையைக் கொண்டே அளவிட வேண்டும் என்றாகிறது. நூலைத் தான் மதிப்பிட வேண்டுமேயொழிய நூலாசிரியனின் கருத்துக்களில் தலையிட்டு அவனைத் தடைப்படுத்த எண்ணக்கூடாது. நூலாசிரியனுக்கும் நூல் விமர்சனுக்கும் நூல் ஒன்றுதான் தொடர்புச் சங்கிலியாக இருக்க வேண்டும். அதாவது விமர்சகன் நூலாசிரியனின் உரிமைகளில் தலையிடக் கூடாது."
பாரபட்சமின்மை
மேற் சொன்ன கருத்துகளிலிருந்து, சிதம்பர ரகுநாதன் ஒரு நடுநிலை வகிக்கும் பாரபட்சமற்ற விமர்சகர் என்பது தெரிய வருகிறது.
இலக்கிய விமர்சனம்' என்ற தமது நூலில், சிதம்பர ரகுநாதன் கலை, கலை மரபு மொழி, கவிஞன், கவிதை, சிறுகதை, நாடகம், வசனம் போன்றவை பற்றியும் சில
விமர்சனக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

277 மனித சிந்தனையும், அனுபவமும் கலை என்பவர், சிந்தனை மட்டும் போதாது என்றும் அதை வெளியிடவும் கலைஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார்:
യക്കീz? -Zമയ
"கலைஞன் என்றால் அவனுக்குச் சிந்தனா சக்தியும், கற்பனையும் மட்டும் போதாது. அதை ஒரு சாதனம் மூலம் உருவாக்கவும் தெரிய வேண்டும். எத்தனையோ உள்ளங்களில் தாறுமாறாய் உறைந்து கிடக்கும் எண்ணங்களைக் கலைஞன் ஒழுங்கு செய்து, அவற்றை வெளியிலும் கொண்டு வந்து விடுகிறான். நமது மனசிலே கிடந்து வெளிவர முடியாமல் புழுங்கித் தவிக்கும் இன்பத்தை, வேதனையைக் கவிஞன் கற்பிதம் பண்ணி எழுதிவிட்டால் நாம் ஒரு நிவர்த்தி கண்டு துள்ளுகிறோம். ஆகவே, கலையைப் படைப்பதற்குச் சிந்தனை மட்டும் போதாது, அதை வெளியிடவும் தெரிய வேண்டும். கற்பனையும், சிருஷ்டி சக்தியும் கூடிப் பிறக்கும் குழந்தை தான் கலையாயிருக்க முடியும்."
இருவகைக் கலைஞர்
கலைஞர்களைக் கவின் கலைஞர்களென்றும், பயன் கலைஞர்களென்றும் பிரிக்கும் நூலாசிரியர், ஜன சமூகத்திற்கும் கலை உள்ளத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தும் ஒரு சாதனம் கலை எனக் கூறி, இரு கலைகளும் இருந்து தான் தீரவேண்டும். இரண்டு கலைஞர்களும் வாழத்தான் வேண்டும் என்று நிதர்சன நிலையை அங்கீகரிக்கிறார்.

Page 114
272
ത്ര ക്രമങ്ങZബZിങ് கலை மரபில் உருவம் வகிக்கும் முக்கியத்துவத்தைக் சுட்டிக் காட்டும் ரகுநாதன், மேலைநாட்டுக் கீழை நாட்டுக் கலைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
உதாரணமாக,
"மேல் திசைக்கலை இயற்கையை அப்படியே "மொழி பெயர்க்க எண்ணுகிறது. நமது கலை இயற்கையைத் தழுவி தனது இதய பாவத்தையும் கலந்து தருகிறது. மேல் நாட்டார் தமது கலையில் ஜீவனைக் கொண்டு வருவதோடு மட்டுமின்றி, அதில் இதயத்தையும் படைப்பதற்காக இயற்கையைத் தம்முடைய தாக்குகிறார். அதாவது, புறத்தோற்றத்தின் அமைப்பை அப்படியே மேல் நாட்டார் சமைக்கிறார்கள். கீழ் நாட்டார் அகத்தோற்றத்தின் பாவத்தைத் தெரிவிக்க, உறுப்பமைப்பு களில் அதீதத் தன்மை கொடுத்து, இதயப்பண்பை வலியுறுத்துகிறார்கள்" என்ற வரிகளைக் குறிப்பிடலாம்.
சிதம்பர ரகுநாதன் முதிர்ச்சியைக் காட்டுவது போல, இலக்கியத்தில் உருவம் வகிக்கும் பங்கு பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
"எந்தக் கலையும் மனிதனுடைய சிந்தனையில் பிறந்து கண் மூக்கு உள்ள ஓர் உருவம் பெற்றதோடு உயிரும் பெய்யப் பெற்றது தான் என்றே சொல்ல வேண்டும். அதாவது, இதய அனுபவத்தின் வெளியீடு மனித சிந்தனை வழியாகப் பிறவாதது கலையல்ல. உணர்ச்சிக் கலப்புகளின் வார்ப்பு அமைப்பு, விஸ்தீரணம்

2፲3
இவையெல்லாம் கர்த்தாவின் மனோ பாவத்துக்கு விட்டுவிட வேண்டியவை. விடாவிடில், அந்தச் சுதந்திரத்தை அவர்கள் தாமாகவே தட்டிப் பறித்துக் கொள்வார்கள். ஆனால், கட்டுக்கோப்புக்கு ஓர் உருவம் வேண்டும் என்பதையும் எந்தக் கலைஞனும் ஒப்புக் கொண்டே தீர வேண்டும் அரங்கின்றி வட்டாடி விட முடியாது. இந்தக் கட்டுக்கோப்பு இப்படித்தானிருக்க வேண்டும் என்று வாதாடுவது கூடாது. எனினும், பல கட்டுக் கோப்புகள் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. சில தனித்தும் நிற்கின்றன."
4PavajaíŽvzÝ Zozŕavav
இவ்வாறு குறிப்பிடும் ரகுநாதன், வடிவம் புதுப்புது வடிவங்களைப் பெற்று வருவது பற்றியும் குறிப்பிட்டு a 6irami,
"இலக்கியக் கனவுகளும் அபிலாஷைகளும் விருத்தி யடைந்து, இலக்கியம் வளர வளரப் புதுப்புச் சட்டைகளும், சட்ட விஸ்தீரணங்களும், நெளிவு சுழிவுகளும் தாமாகவே அமைந்து விடுகின்றன.
"ஆதலால், என்றைக்கும் இலக்கண விசாரம் அதிகம் தேவையில்லை. அதைப் பற்றிச் சர்ச்சை செய்வது வெறும் கிளியந்தட்டுவிவகாரம்” என்கிறார் ரகுநாதன்.
உலகில் தலை சிறந்த இலக்கியங்கள் எனக் கருதப் படுபவை எந்த விதமான கால தேச வர்த்தமானத்தாலும் சிதைவு பட்டுவிடாத, மனித குணங்களை அடிப்படை யாகக் கொண்டவற்றைப் பொறுத்தது தான். உலக மகா சிருஷ்டி கர்த்தாக்கள் இதைத்தான் செய்கிறார்கள் என்கிறார் இந்த மார்க்சிய விமர்சகர்.

Page 115
274 ഴത്ര ക്രങ്ങബീബ്
கலைக்கு உருவம்
கலைக்கு உருவம் அவசியமானது என்று வலியுறுத்தும் சமுதாய இலக்கியப் பார்வை கொண்ட இவ்விமர்சகர், பிரசாரம் பற்றிக் கூறியிருப்பது ஈண்டு கவனிக்கத் தக்கது. அவர் கூறுபவற்றைப் பாருங்கள்.
"நேரடியான பிரசாரத்தால் கலையின் உயர்வு மழுங்கி விடுகிறது. கலையில் பிரசாரம் பிறந்த மேனியாக வந்தால், மக்கள் மசிவது கஷ்டம். அதற்குப் பதிலாக, கதையோடு கதையாய் அவர்களை இழுத்துச் சென்று அவர்களை அறியாது தம் வழியிலே இழுப்பது தான் கலைஞர் தொழில்."
சிதம்பர ரகுநாதனின் கன்னிகா', 'பஞ்சும் பசியும், வென்றிலன் என்ற போதும், புதுமைப் பித்தன் வரலாறு, ரகுநாதன் கவிதைகள், கங்கையும் காவிரியும், சமுதாய இலக்கியம்' போன்ற நூல்களும் படித்துப் பயன் பெறத் தக்கவை. நவீன தமிழிலக்கியத்தில் சிதம்பர ரகுநாதன் அல்லது திருச்சிற்றம்பலக் கவிராயரின் பங்களிப்பு குறைந்ததல்ல.
(Adamsgat awyr argraffiadldó 14.3.7982) asdanguwasqyd, “asaorav Alaud4Maurj Alpamatay” ataip grad Aav avgMasanyasayd Adfasdfang ALAðaluppø/.
 

275
இலங்கை கல்வி
வெளியிட்டுத் தி ணைக்களப்N LJIII Üjõgjä5b N
தமிழ் மதிப்பீட்டியல்
ij ல்வி வெளியீட்டுத் திணைக்களப் பாடப் புத்தகம் தமிழ் - 9 இலே "மதிப்பீட்டியல்" என்ற பாடம் அடங்கியுள்ளது. செய்முறைத் திறனாய்வுக்குரிய சில அடிப்படைக் கேள்விகள் இப்பாடத்திலும் அமைந்து இருப்பதை நாம் காண்கிறோம். அவை, நமது திறனாய்வு முயற்சிக்குப் பயனளிக்கக் கூடும் என்று கருதி, அவற்றைத் திரட்டித் தருகிறோம்.
"எங்கள் வாசிப்பு, புத்திசாலித்தனமாக அமைய வேண்டுமாயின் எழுத்தாக்கங்களை மதிப்பீடு செய்யப் பழகுவது அவசியமானதாகும். மதிப்பீடு என்பது தான் என்ன? நம் முன் உள்ள வாக்கியங்களின் தராதரங் களையும் பண்பு விகற்பங்களையும் கண்டு தெளிந்து கொள்வதே மதிப்பீடு."

Page 116
276 ഴ്ചക്ര ക്രമങ്ങ4ീക്കുന്നുീട്
"புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மதிப்பீடாகாது என்று வலியுறுத்துவதுடன் எழுத்தாக்கமொன்றை விளக்கி யுரைப்பதும் அதன் பண்புகளை ஆராய்ந்து கூறுவதும் மதிப்பீடாகும்" என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக நமது எழுத்தாளர்களிற் சிலர் 'கண்டனமே" விமர்சனம் என்றும் அழுத்தம் திருத்தமாக" ஒரு படைப்பாளியை அடிப்பதுமே" விமர்சனம் எனக் கருதி, அதுவே ஆழமான விமர்சனத்துக்குச் சான்று எனத் தவறாகக் கருதி வருகின்றனர்.
அடிப்படைகள்
திறனாய்விலே கவனிக்க வேண்டியவை எவுை என்று குறிப்பிட்ட இந்தப் பாடத்திலே சில கேள்விகள்
தரப்பட்டுள்ளன. அவையாவன :
1. எழுத்தாளன் கூறும் கருத்து யாது? வெளிப்படை யான நேர்க் கருத்தைவிட, குறிப்புக் கருத்தான உட்பொருள்கள் உண்டா? அவை யாவை? W
2. எழுத்தாளர் கையாண்ட சொற்கள் எத்தகைய உணர்ச்சிகளை எழுப்புகின்றன? இவ்வுணர்ச்சி சந்தர்ப்பத்துக் கேற்ற அளவான உணர்ச்சியா? மிகையுணர்ச்சியா? அல்லது உணர்ச்சித் துடிப்பேயில்லாத வெறும் பினம்போல் அச்சொற்கள் கிடக்கின்றனவா?
3. சொற்களைத் தொகுத்துள்ள முறையிலே சிறப்பான ஓசை நயம் ஏதும் தோன்றுகிறதா? அது

Agpavašať7zý 4/zžavav - 277 கருத்துக்கும் உணர்ச்சிக்கும் செய்யும் துணை யாது? அல்லது ஓசை நயம் கருத்துப் போற்றுக்கும் உணர்ச்சிப் போற்றுக்கும் இடையூறாக உள்ளதா?
4. கையாண்ட சொற்கள் எப்படிப்பட்டவை? எழுத்தாளனின் தனித்தன்மையைக் காட்டுகின்றனவா? அவன் வாழ்ந்த பிரதேசம், அவன் வாழ்ந்த காலம், அவனுடைய தொழில், சமூக நிலை என்பவற்றைத் தெரிவிக்கின்றனவா? சிறப்பான சொற் பிரயோகங்களால், ஆசிரியரின் கருத்துக்களும் உணர்ச்சிகளும் பெறும்
தயங்கள் எவை? நட்டங்கள் எவை?
5. எழுத்தாளனின் தொனி எப்படி உள்ளது? எழுத்தாளன் தனக்குத்தானே பேசுகிறானா? பொது மக்களை நோக்கிப் பேசுகிறானா? தான் படைத்துக் கொண்ட ஒரு பாத்திரத்தை நோக்கிப் பேசுகிறானா? அன்றேல், தானே ஒரு பாத்திரமாக மாறி நின்று பேசுகிறானா? விடயங்கள் நன்கறிந்தவன் என்ற முறையிலே அதிகாரத் தோரணையில் எழுதுகிறானா?
6. எழுத்தாளன் வாசகனுக்குத் தரும் மதிப்பு எப்படிப் பட்டது? வாசகனைத் தனக்குச் சமனாக மதிக்கிறானா? தாழ்ந்தவனாக மதிக்கிறானா? உயர்ந்தவனாக மதிக்கிறானா? எழுத்தாளன் கையாண்ட எந்தச் சொற்களை ஆதாரமாகக் கொண்டு நாம் இதுபற்றி முடிவு கட்டலாம்?

Page 117
278 ്ത്ര ക്രീമഞ്ഞ/ീബീജ്
7 எழுத்தாளனின் கொள்கைகள் பற்றி ஏதும் அறிய முடிகிறதா? அவனுடைய வாழ்க்கை நோக்கு எப்படிப் பட்டது? தத்துவச் சார்பு யாது?
கவிதை விமர்சனம்
கவிதையிலே குறிப்பாக உணர்த்தப்படும் பொருள், ஒசைநயம், கற்பனை, உவமை, உருவகம் போன்ற அணிச் சிறப்புகள் கவனிக்கப்பட வேண்டியவை. கவிதை மதிப்பீட்டிற்குரிய சில கேள்விகளும், மேற் சொன்ன பாடத்திட்டத்திலே தரப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
1. கவிதையின் வெளிப்படைப் பொருள் யாது? குறிப்புப் பொருள் உண்டா? அது யாது?
2. உவமை, உருவகங்களாலான உத்திகள் கவிதையின் கருத்துக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கும் எவ்வாறு உதவுகின்றன?
3. கவிதையின் ஒசை எப்படிபட்டது? அவ்வோசை பொருட் பேற்றுக்கும், உணர்ச்சிப் பேற்றிற்கும் எவ்வாறு உதவுகிறது?
4 கவிதையின் முழுமொத்தமான பயன் யாது?
 

279
ஆக்க இலக்கியமும் அறிவியலும்
கைலாசபதி நோக்கு
இலக்கியத்திலே சமூகவியற் பார்வை உள்ளதா என்பதைப் பார்க்கையில், செய்முறைத் திறனாய்வு எவ்வாறு அமைய வேண்டும்?
இலக்கியப் படைப்பாளி, வாசகர், இலக்கியப் படைப்பு ஆகிய மூன்று அம்சங்களுக்குமிடையே உள்ள சமுதாய ரீதியிலான சகல விஷயங்களும், இலக்கியத்தின் சமூகவியல் எனலாம் என்பர் ஆராய்ச்சியாளர். தனி மனிதர் ஒருவர் ஒரு படைப்பைப் படைத்த பொழுதும், அது பொதுச் சொத்தாகி விடுகிறது. படைப்பாளியின் சூழலும் முக்கியமாகிறது.

Page 118
220
"எழுத்தாளனது வாசகர் தொகை, நூல் உற்பத்திச்
Pas éZavazzazýavzazzźøÝ
செலவு, நூற்சந்தையின் தன்மை, மத்தியதர வாசகர்களின் இயல்பு எழுத்தாளனது வர்க்கச் சார்பு இவை போன்றன ஒரு படைப்பின் உள்ளடக்கம், உருவம், என்பவற்றைப் பெருமளவில் பாதிக்கின்றன. முன்னர் இவை தனியெழுத் தானது ஆற்றலை மாத்திரம் மனங்கொண்டு ஆராயப் பட்டன. சமூகவியலின் வருகைக்குப் பின்னர் இவை கண்ணுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும் உள்ள சமூக சக்திகளின் செயற்பாட்டினால் உருவாக்கப்படுபவை என்ற உண்மைநிலை தெளிவாகியுள்ளது" என்று பேராசிரியர் க.கைலாசபதி விளக்கம் அளிக்கிறார்.
யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை அதன் முதலாவது வெளியீடாக, "ஆக்க இலக்கியமும், அறிவியலும்' என்ற தொகுப்பை 1977 ஆம் ஆண்டிலே வெளியிட்டது. அதிலே விமர்சகர் கைலாசபதி அவர்கள் ஆற்றிய உரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
அழகியலைப் பற்றிப் பேசினால் அது "பூர்ஷ"வா" (பணக்கார மத்தியதர வர்க்கம்) தத்துவம் என்று பொருள் படச் சில தீவிர மார்க்சியவாதிகள் வலியுறுத்துவர். அதே சமயம் நிதானமான மார்க்சிய விமர்சகர்கள் அழகியலைப் புறக்கணிப்பதில்லை என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
கைலாசபதி நோக்கு
பேராசிரியர் க.கைலாசபதி வலியுறுத்தி வந்த திறனாய்வு நோக்கு எத்தகையது என்பதையறிய

ഉിരക്കഥ Zഔഖ -ത്ത 227 அவருடைய கட்டுரைப் பகுதியிலிருந்து சில பகுதிகளை நாம் படிக்க வேண்டியுள்ளது. இதோ சில வரிகள் :
"பூர்ஷ"வா சமூகவியல்வாதிகளைப் போலவே நமது பெரும்பாலான எழுத்தாளரும் ஒன்றிணைக்கப் பட்ட தத்துவார்த்த நோக்கின்றித் தமது சின்னஞ்சிறு உலகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றனர். எவ்வாறு பூர்ஷ"வா சமூகவியல் வாதிகள் மனித சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிப் போக்கு, வர்க்க வேறுபாடுகள், உற்பத்தி உறவுகள் முதலிய அடிப்படை களை மனங்கொள்ளாமல், வர்க்க வித்தியாசங்களைக் கடந்தனவாகக் கருதப்படும் மாணவர்கள், இளைய தலைமுறையினர், கார்ச்சாரதிகள், விபசாரிகள், நாடோடிகள், புலம் பெயர்வோர்கள், முதலிய சிறுசிறு குழுக்களைப் பற்றி "சமூகவியல்" ஆய்வுகள் நடத்திவந்து உள்ளனரோ, அவ்வாறே நமது எழுத்தாளரும் வர்க்கங்களை மறந்து தனிமனிதர்களைப் பற்றியும் எழுதி வந்துள்ளனர். பூர்ஷ"வா சமூகவியலாளர் பூர்வீகக் குடிகள் குறித்தும் "புராதன மக்கட் கூட்டம்" பற்றியும் சுவையான மானிடவியல் ஆய்வுகள் நடத்தி வந்திருப்பதைப் போலவே, நமது எழுத்தாளரும் பழங்காலத்து ராஜா ராணிக் கதைகளையும் புழங்குடி மக்கள் வாழ்க்கையையும் சுவாரஸ்யமான சிறு கதைகளாகவும் நெடுங் கதை களாகவும் உற்பத்தி செய்து இந்திருக்கின்றனர். இவை மிகப் பொதுவான மேலோட்டமான சில ஒப்புவமை களாகும்.

Page 119
222 മത്ര ക്രീമഞ്ഞമീബZിങ്ങ് "இவற்றுக்கும் மேலாக அடிப்படை ஒற்றுமை ஒன்றுண்டு. நாம் முன்னர் கூறியிருப்பது போல பூர்ஷ"வா சமூகவியல் வாதிகள், சமுதாயத்தை மாறும் பொருளாகக் கொள்ளாமல் அதனை மாற்றும் பணியிலும் நாட்டமின்றி உள்ளதை உள்ளவாறே நுட்பமாக விவரித்து வந்துள்ளனர். நமது எழுத்தாளர்களிற் பலர் அவ்வாறே இயற்பண்பு வாதிகளாய்த் தத்ரூபமாக” யாவற்றையும் உருவாக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.
"முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியிலே பல நோக்குகளும், போக்குகளும் வளர்ந்தன. அவை இடையறாமல் உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி நுணுக்கமாக விபரிப்பது, நடப்பியலைக் கண்டு மனமுடைவது, அதனைக் கிண்டல் செய்வது, சிறுமையைக் கண்டு சீறுவது, சில சமயம் உலகினையே சபிப்பது என்றெல்லாம் எத்தனையோ மனப் போக்குகளை நவீன இலக்கியத்திற் காணக் கூடியதாயுள்ளது. இப்போக்குகள் ஒவ்வொன்றும் நமக்குகந்த உத்திகளையும், உருவாக்கியுள்ளமையும் தெளிவு. எனினும் நிதானமாக நோக்கினால் இப்போக்குள் அனைத்தும் பூர்ஷ"வா உலக நோக்கின் விகற்பங்கள் என்னும் உண்மை புலப்படும்."
மேற்கண்டவாறு அமரர் கைலாசபதி ஆக்க இலக்கியமும் சமூகவியலும்' என்ற தமது கட்டுரையிலே (ஆக்க இலக்கியமும் அறிவியலும் பக்கம் 46 - 48) குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், அவர் வலியுறுத்திய மற்றொரு கருத்தையும் இங்கு அடிக்கோடிடுவது முறையாகும். அக்கருத்து இது தான்.

ളിയേക്ക്സീബz Zമയ 223
"குறுகிய அர்த்தங் கற்பித்து இத்தகைய எழுத்தாளர்கள் நேரடியாகவே பூர்ஷ"வா வர்க்கத்தின்
நலன்களை பிரக்ஞை பூர்வமாகக் கட்டிக் காக்க முனைபவர்கள் என்றோ, அல்லது ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் என்றோ நாம் விவரிக்க வேண்டியதில்லை. உண்மையில் முதலாளித்துவ சமுதாயத்தின் பெளதிக நிலைமைகளின் வரம்புக்குள் நின்று கொண்டு இவர்கள் உலகை நோக்குவதால், அதனால் கட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றார்கள். இவர்கள் பூர்ஷ"வாத் தத்துவார்த்த எல்லையைத் தாண்ட மாட்டாதவராய் உள்ளனர், பூர்ஷ"வா சமுதாயத்தை எத்துணை விமர்சித்தாலும் அதிற் காணப்படும் பிரச்சனைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஒரே வழி, அவற்றை இல்லாமற் செய்வதே என்னும் அடிப்படை உண்மையை உணராமையே இவர்களது குறைபாட்டிற்குக் காரணமாகும். எனவே தாம் அங்கீகரித்துள்ள சமுதாயத்தின் பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் சித்திரிப்பதல்லாது, யதார்த்தத்தில் அவற்றுக்குத் தீர்வு காணக்கூடிய மார்க்கத்தை அவர்களாற் காட்ட முடியாதிருக்கின்றது."
(gawasgai : 76.12.1984)

Page 120
224
20 ஆம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம்
சி.மெளனகுரு, மெள.சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான்
"20 ஆம் நாம்மாண்டின் ஈமச்
ஆம் நூற்றாண்டின் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்குக்களைத் திரட்டிக் கூறும் இந்நூல், பல்கலைக்கழகப் பரீட்சை களுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர் களுக்கும், ஈழத்தில் அக்கறையுள்ள பொது வாசகர் களுக்கும், ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வமுடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க முறையில் அமைந்துள்ளது" என்ற வெளியீட்டாளர் (வாசகர் சங்கம் "நூறி மன்ஸில்", கல்முனை - 6) தற்புனைவுப் புகழ்ச்சியுடன் வெளிவந்து இருக்கும் இந்நூலின் ஆசிரியர்கள் சி.மெளனகுரு, மெள.சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான் ஆகியோர்.
 
 
 
 
 
 
 

225
4PavašaíŽzZÝ Zvzzava/
வெளியீட்டாளர் குறிப்பு எந்த விதத்திலும் பொய்யுரை இல்லை என்பதை இந்தச் சிறு நூல் காட்டி விடுகிறது. ஈழத்து இலக்கிய வரலாறு ஓர் அறிமுகம், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன. ஈழத்து இலக்கிய வரலாறு தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். 1859 ஆம் ஆண்டின் சைமன் காசிச்செட்டி எழுதிய தமிழ் புழுட்டா முதல் 1979 பெப்பிரவரி மாதம் வெளியாகிய பேராசிரியர் சு.வித்தியானந்தனின் தமிழியற் சிந்தனை' வரை பிரசுரிக்கப்பட்ட நூல்களில் இருந்தும், சிறப்பிதழ் களில் இருந்தும், ஆங்காங்கே எழுதப்பட்டு வரும் கட்டுரைகள், விமர்சனங்கள், ஆகியவற்றில் இருந்தும், இலக்கிய மாணவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
முன்னர் குறிப்பிட்ட இரு நூல்களையும் விட, 1886 ஆம் ஆண்டில் பாவலர் சரித்திர தீபகம்’ (ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை), 1916 இல் தமிழ்ப் புலவர் சரித்திரம்" (குமாரசாமிப்புலவர்), 1939இல் ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்' (கணேசையர்), 1962 இல் 'ஈழத்து முஸ்லீம் புலவர்கள் (ஏ.ஆர்.எம்.சலிம்), 1964 இல் மட்டக்களப்புத் தமிழகம்" (வீசீகந்தையா), இலக்கிய வழி, (சி.கணபதிப் பிள்ளை) 'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’

Page 121
226
(ஆ.சதாசிவம்), 'ஈழத்து இலக்கிய வரலாறு' (கனக
മത്ര മക്തബീത്
செந்திநாதன்), 1967இல் ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி (சில்லையூர் செல்வராசன்), ‘ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்" (மு.கணபதிப்பிள்ளை), 1968 இல் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கா.சிவத்தம்பி) ஈழத்தில் நாடகமும் நானும் (கலையரசு சொர்ணலிங்கம்), 1971இல் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள் (பூபாலசிங்கம்), 1972 இல் 'ஈழத்து தமிழ் நூல் வரலாறு (எவ்.எக்ஸ். சி. நடராஜா), 1973 இல் ஈழத்துச் சிறுகதை மணிகள் (செம்பியன் செல்வன்), 1974 இல் தமிழ் றையிற்றிங் இன் பூரீலங்கா (கே.எஸ். சிவகுமாரன்), 1977 இல் ஈழத்துத் தமிழ் நாவல்கள் - நூல் விவரப் பட்டியல் (நா.சுப்பிரமணியன்), 1978 இல் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (க.சொக்கலிங்கம்) வெளிவந்துள்ள நூல்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றியவை. இவற்றுடன் பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய நூல்களில் அடியும், முடியும் தமிழ் நாவல் இலக்கியம் ஆகியனவும் முதளைய சிங்கம் எழுதிய போர்ப்பறை, மெய்யுள் ஆகியனவும் ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுவன. இவற்றைவிட வாழையடி வாழை (க.செபரத்தினம்), ஆக்க இலக்கியம்" (யாழ்ப்பாண வளாக வெளியீடு), இலக்கியமும் திறனாய்வும் (க.கைலாசபதி), கவிதை நயம்' (இ.முருகையன், க.கைலாசபதி) ஆகிய நூல்களும் இத்துறையில் உதவுபவை.

227
4PavašaŕZý ZVzzava/
ஈழகேசரி, ஈழநாடு, தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசாபிமானி, தொழிலாளி, புதினம், செய்தி, மறுமலர்ச்சி, கதம்பம், தமிழின்பம், குங்குமம், ஈழச்சுடர், உன்னைப் பற்றி, மலர், தேனருவி, தமிழமுது, மல்லிகை, வசந்தம், கலைச்செல்வி, சுடர், அலை, நெய்தல், வானொலி மஞ்சரி, பாரதி, கவிஞன் போன்ற பத்திரிகைகளில், பல கட்டுரைகளும் விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.இளந்தென்றல், தமிழ் சாகித்திய விழா மலர், தமிழ் இலக்கிய விழா மலர், தினகரன் நாடக விழா மலர், மாநாட்டு விழா மலர், பாவலர்துரையப்பாப்பிள்ளை நூற்றாண்டு விழா மலர், புதுமை இலக்கியம், மறுமலர்ச்சிக் காலம், மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ் வெளியீடுகள் போன்றவற்றில் இருந்தும் மாணவர்கள் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிவை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இத்தகைய பின்னணியில், நூலாசிரியர்களின் முயற்சியை நாம் கணிக்கும் போது அவர்களுடைய நோக்கத்தை மனதில் இருத்தல் வேண்டும். 'பொதுவாக வளர்ச்சிப் போக்குகளை திரட்டிக் கூறும் நூல்" என்ற முறையில் இது, விரிவான விமர்சன நூல் அன்று. 1975 இலும் வெளியிட்ட சிறப்பிதழ்களில், பிற கட்டுரை ஆசிரியிர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஒட்டியே, குறிப்பாக தமது கணிப்பை நூல் ஆசிரியர்கள் செய்து

Page 122
228 - മത്ര ക്രീത്രങ്ങZബ്ബീജ് உள்ளார்கள். இருந்த போதிலும் 1979 ஆம் ஆண்டு வரையும் உள்ள முயற்சிகள் பற்றியும் அவர்கள். கூறியிருப்பதனால் புதிய கருத்துகளைத் தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களே கூறுகிறார்கள்: "சமகால ஈழத்து இலக்கியத்தில் எதோ ஒரு துறையிலேனும் ஈடுபாடு கொண்டுள்ள படைப்பாளிகள் அநேகர் உள்ளனர். குறிப்பாக கவிதை, சிறுகதைத் துறைகளில் இவர்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் உள்ளது. இவர்கள் எல்லோருடைய பெயர்களும் இந்நூலில் இடம்பெறுவது சாத்தியமல்ல. அது அவசியமும் அல்ல. ஆயினும், பெயர்களை முடிந்த அளவு குறைத்தும் பொதுப் பண்புகளை மட்டும் சுட்டிச் செல்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆகவே, ஏதோவொரு வகையில் முக்கியமானவர்கள் என்று கருதக் கூடியவர் களின் பெயர்கள் இந்நூலில் சற்றுக் கூடுதலாகவே இடம் பெற்றுள்ளன. இடம்பெறாதவர்கள் இடம்பெறத் தகாதவர்கள் என்று பொருளாகாது. இந்நூலில் குறைபாடுகள் இருக்கலாம். அவை சுட்டப்படும் போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். ஆயினும் இந்நூல் எழுதப்பட்ட நோக்கத்தை இது நிறைவேற்றும் என்றே நம்புகின்றோம்."
இந்த நூலில், கவிதை, நாவல், சிறுகதை நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றி குறிப்பிட்டுள்ள போதிலும், இட நெருக்கடியை முன்னிட்டு இந்த நூல்நயத்தில் விமர்சனம்

മയ്ക്കിമ Zഞഖ് - 229 பற்றிக் குறிப்பிட்ட கருத்துகளில் சிலவற்றை மாத்திரம், இங்கு சுட்டிக் காட்டுவோம். இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இலக்கிய வரலாற்றுடன், விமர்சனமும் தொடர்பு கொண்டுள்ளதால், அது பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமானதே என நினைக்கின்றோம்.
நூல் ஆசிரியர்களின் கருத்துப்படி,
"19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரை எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னோடி எனக் கூறுதல் மரபு. தத்துவங்களையும் இலக்கணங்களையும் ஆதாரங்காட்டி கற்பனையும் ரசனையும் கலந்த உரை செய்தவர்களில் முக்கிய மானவராகக் கருதப்படுபவர் ச.பொன்னம்பலப்பிள்ளை ஆவார்.இவருடன் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், வல்லை வைத்தியலிங்கப்பிள்ளை, கணேசையர், நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதர் ச.அருளம்பலநாதன், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, மகாலிங்கசிவம், கனகசெந்திநாதன். க.ச.அருள்நந்தி, பொ.கிருஷ்ணபிள்ளை, க.பொ.ரத்தினம், க.வேந்தனார், ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம். தனிப் புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வெளியிடும் மரபினை முதல் முதல் ஈழத்து விமர்சன உலகில் தொடக்கி வைத்தவர் கனக செந்திநாதன், இவருடைய நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளிலும் ரசனை முறையின் பாதிப்பை, ஒரளவு காணக்கூடியதாக இருக்கின்றது. 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத்

Page 123
230
தொடங்கியது. பழைய சிந்தனை மரபுக்கு இடையே
മത്ര ക്രീമഞ്ഞZബീജ്
ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. இலங்கையர்கோனின் கதை ஒன்றில் இந்த நவீன இலக்கிய சிந்தனையின் தோற்றத்தைக் காணலாம். இருவரும் சோ.சிவபாதசுந்தரம், சி.வைத்திய லிங்கம் ஆகியோரும், ஆரம்பத்தில் விமர்சனத்துறையில் ஆர்வம் காட்டினார்கள். இலக்கிய விமர்சனக் கொள்கை களை அந.கந்தசாமி, கே.கணேஷ், பேராசிரியர் கணபதிப் பிள்ளை, அசெமுருகானந்தம் ஆகியோரும் முள்வைத்தனர். ஆயினும், 50ஆம் 60ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்து இலக்கிய விமர்சன முயற்சிகள் வளர்ச்சியுற்றன. க.கைலாசபதி, காசிவத்தம்பி இளங்கீரன், ஏ.ஜே. கனகரத்தினா, பிரேம்ஜி, சில்லையூர் செல்வராசன். எம்.எச்.பி.முஹிதீன் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். 60 க்குப் பிறகு இலக்கிய ஆய்வு, இலக்கியப் புலமை, இலக்கிய வரலாற்று உணர்வு, ஆகியன ஈழத்தில் வளர்ச்சியுற்றன. 70களில் இலக்கியத்தில் உருவ உள்ளடக்க இயைபினையும் இலக்கியத்தின் கலைப் பெறுமானத்தையும் அழுத்தும் விமர்சனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. எம்.ஏநுஃமான், சண்முகம், சிவலிங்கம், ஏ.ஜே.கனகரத்னா போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். எஸ்.பொன்னுத்துரை, முதளைய சிங்கம் ஆகியோர் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகளை நற்போக்கு இலக்கியம், பிரபஞ்சயதார்த்தவாதம் முன்வைத்தார்கள். மு.பொன்னம்பலம், என்.கே.மகாலிங்கம்,

42avasa?/az/Z7 4/7a/yava/ 237 இமயவன் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள் சமீபகாலமாக இலக்கிய விமர்சன முயற்சிகளில், மொழியியல் அறிவின் செல்வாக்கைக் காண முடிகிறது. பல புதிய விமர்சகர்கள் உருவாகியுள்ளார்கள்."
இந்நூலாசிரியர்கள் மூவரும், புதிய பரம்பரையின் முன்னோடி ஆய்வறிஞர்களாக இருக்கிறார்கள் என்பது வாசகர்கள் அறிந்ததே. எனவே, இந்த நூலும் உரிய மதிப்பைப் பெறுகின்றது.
(வானொலி மஞ்சரி : ஜனவரி 1979)

Page 124
232
சில அடிப்படை அம்சங்கள்
தி றனாய்வு தொடர்பாகப் பலரும் பல விதமாக விபரித்து எழுதியுள்ளனர். திறன் சக ஆய்வு சமன் திறனாய்வு என்பது வெளிப்படை. ஒன்றின் திறனை அறிவது அவ்வளவு இலகுவானதல்ல. திறனறிதல் ஒன்றும் புதிதானதல்ல. திருக்குறள் காலத்திலிருந்தே இப்பதம் புழக்கத்திலுள்ளது. அதே சமயம், ஒரு பயிற்சி நெறியாகப் பழங்காலத்திலே திறனறிதல் மேற்கொள்ளப்பட வில்லை.
நமது மொழியைப் பொறுத்த மட்டிலே தி.செல்வ கேசவராய முதலியார் எழுதிய பல கட்டுரைகள், குறிப்பாக மகாகவி கம்பன் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் திறனாய்வு அடிப்படையில் அமைந்திருந்தன. இவரைத் தொடர்ந்து மறைமலை அடிகள் எழுதிய சில
 
 
 
 
 

233
கட்டுரைகள் ஒரளவு திறனாய்வுப் போக்கிலே அமைந்து இருந்தன. ஓரளவு' என்று குறிப்பிடப்படுவது ஏனெனில், இக்கட்டுரைகளிலே, குறிப்பாக முல்லைப் பாட்டு' பற்றிய கட்டுரைபோன்றவற்றில் பழைய உரையாசிரியர்களின்
Ag2avašaŕZý ZVzŕava/
போக்கும் காணப்படுவதானல் தான்.
"கம்பராமாயண ரசனை'யாக வ.வே.சு.ஐயர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் ஆரம்பகால நவீன திறனாய்வுக் கட்டுரைகளாகும்.
கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகிய இருவரும் எழுதிய 'கண்ணன் என்ற கவி' என்ற புத்தகம் உடனிகழ்காலத் திறனாய்வு முயற்சியின் ஆரம்ப வெளிப்பாடு எனலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியை ரசனைப் பாங்காக மட்டுமன்றி, நெறிப்படுத்தப்பட்ட திறனாய்வு அடிப்படை அம்சங்களையும் உள்ளடக்கியதாய் இந்த நூலை இவர்கள் எழுதியுள்ளனர். கு.ப.ரா.மறைந்து விட்டார். "சிட்டி சென்னை அடையாறில் வசித்து வருகிறார்.
ஈழத்தைப் பொறுத்த மட்டிலே மறைந்த சுவாமி விபுலாநந்தரின் கட்டுரைகள் நவீன திறனாய்வு முயற்சிகளுக்கு முன்னோடி எனக் கொள்ளலாம்.
இலக்கியத் திறனாய்வின் போது, ஏக காலத்தில் பல விஷயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 'இலக்கியம் மொழியால் ஆக்கப்படுவதனால், முதலில் மொழித்தின் பற்றிய ஆய்வும், மொழி குறிக்கும் பொருள், காலதேச வர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்டனவாய் இருப்பதால்,

Page 125
234
சரித்திரம், சமுதாயம் என்பன பற்றிய ஆய்வும், இலக்கியத்தைப் படிப்போர் அனுபவத்தெளிவுடன் இன்பமும் பெறுகின்றனராகையால், இன்ப நுகர்ச்சியின் இயல்பு பற்றிய ஆய்வும் குறைந்தபட்சம் இன்றியமையாதன வாகின்றன" என்று கூறுகிறார் மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி.
െ ക്രമങ്ങZഖZീജ്
இந்த நூற்றாண்டின் மாபெரும் தமிழ் ஆய்வறிவாளர் களுள் ஒருவரும், திறனாய்வுத் துறையில் முதலிடம் பெறுபவருமான அமரர் கைலாசபதி மேலும் தெளிவு படுத்து முகமாகப் பின்வருமாறு கூறுவார்.
"சுருக்கமாகக் கூறுவதானால், ஓர் இலக்கியப் படைப்பின் மொழி நுட்பம், வாழ்க்கை நோக்கு அல்லது தத்துவம், இன்பச்சுவை என்பன ஒன்று சேர்ந்தே அதற்கு நிறைவை அளிக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஒன்றையொன்று ஆதாரமாகக் கொண்டன." (பார்க்க : தினாய்வுப் பிரச்சினைகள்' க.கைலாசபதி).
ஆங்கிலக் கவிஞரும், திறனாய்வாளருமான டி.எஸ்.எலியட் கூறியிருப்பது போல "கலைப்படைப்பு களை விளக்கித் தெளிவாக்குதல், அழகுணர்வைச் செம்மைப் படுத்துதல் ஆகியன திறனாய்வு மூலமே செயற்படுகிறது. பதரையும், நெல்லையும் இனங்காணத் திறனாய்வு அவசியமாகிறது." திறானய்வாளன் ஓர் இலக்கியப் படைப்பை ஆய்ந்து, ஓர்ந்து, தேர்ந்து
வெளியிடுகிறான்.

Pavada2Z/ZÝ Zzzzapav 23.5
ஈழத்தின் மற்றொரு தமிழ் ஆய்வறிவாளரும், கல்விமானுமாகிய பேராசிரியர் கா.சிவத்தம்பி திறனாய்வு ஒரு தேடுதல் முயற்சி என்பார். 'இலக்கியத் தன்மை, அதன் நோக்கம், அது ஏற்படுத்தக்கூடியதாக்கம் ஆகியன பற்றிய
ஆய்வுநிலை நின்று தேடுதல் இலக்கிய விமர்சனமாகும்."
ộ tộ. ệ.
நமது நாட்டு ஆய்வறிவாளர்களிலே கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவருடன், மூன்றாவதாக குறிப்பிடப் பட வேண்டிய திறனாய்வாளர் முதளையசிங்கம் என்பது இக்கட்டுரையாளரின் கணிப்பு முன்னைய இருவரையும் போலவே மறைந்த தளையசிங்கமும் ஓர் தேடல் முயற்சியிலேயே ஈடுபட்டார். முன்னைய இருவரும் இலக்கிய வரலாற்றாசிரியர்களாய் நூல்கள் பல எழுதி இருப்பது போலவே இவரும் "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி" என்ற நூலை எழுதியிருக்கிறார். முன்னைய இருவரும் தமது நூல்களிலே திறனாய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கிறார்கள். கைலாசபதியும் சிவத்தம்பியும் சமகால இலக்கியப் படைப்பொன்றைத் தனியே எடுத்து இதுவரை (அதாவது நூல் வடிவில்) திறனாய்வு செய்ய வில்லை. தளையசிங்கமும் அப்படிச் செய்யாவிட்டாலும், தன்னைப்பற்றியும் எஸ்.பொன்னுத்துரை பற்றியும் இவர் திறனாய்வுப் போக்கிலே எழுதியுள்ள பகுதிகள் இவர் ஒரு சிறந்த விமர்சகர் என்பதைப் பறைசாற்று
கின்றன.

Page 126
236
മത്ര ക്രമങ്ങZബ്ബിങ്ങ് திறனாய்வின் அடிப்படை அம்சங்கள் என்னும் பொழுது அத்துறை பற்றிய அம்சங்கள் மாத்திரமன்றி, அத்துறையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான அடிப்படை அம்சங்களும் கவனத்திற்குட்பட்டவை.
ஈழத்திலே பல திறனாய்வாளர்கள் அல்லது விமர்சகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பல்கலைக் கழக ஆசிரியர்களாகவும், கல்வி போதனாசிரியர்களாகவும் இருக்கிறார்கள். பலர் அருமையான, ஆழமான கட்டுரை களை எழுதி வருகின்றனர். துரதிஷ்டவசமாக இவை நூல் வடிவில் வெளியாகவில்லை, சில நூல்களுக்குச் சிலர் எழுதிய முன்னுரைகள், எம்.ஏநுஃமான், கிருஷ்ணராஜா, மு.பொன்னம்பலம், கலாநிதிகள் சபா ஜெயராஜா, மெளன குரு, சித்திரலேகா மற்றும் பல புதிய கண்டு பிடிப்புகள் எழுதிய ஆராய்ச்சி பூர்வமான எழுத்துக்கள், சஞ்சிகை துளில் வெளிவந்த பலவிதமான பார்வைக் கட்டுரைகள் அத்தனையையும் திரட்டி ஒரு பெரிய நூலாக வெளியிட்டாலே அது ஒரு பாரிய செயலாக அமையும்.
குறிப்பிட்ட இந்தக் கல்விமான்களுடன் பத்திரிகை களில் பத்திகள் எழுதும் தெளிவத்தை ஜோசப், லெமுருக பூபதி, அந்தனிஜீவா, எஸ்திருச்செல்வம்.இக்கட்டுரையாளர் மற்றும் பலரும் சில வேளைகளில் விமர்சனச் சாயல் கொண்ட திறனாய்வுகளை மேலோட்டமாகச் செய்து உள்ளனர். செம்பியன் செல்வன் சில ஈழத்துச் சிறுகதை களைத் தொகுத்துச் சில விமர்சனக் குறிப்புகளை எழுதி யிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திலக்கியம் பார்வை 237
முதளையசிங்கமும், இக்கட்டுரையாளரும் தாங்கள் விமர்சகர்கள் அல்லர் என்று பகரங்கமாகவே குறிப்பிட்டு உள்ளனர். திறனாய்வு' என்றால் என்ன என்பதை நன்கு அறிந்து வைத்ததனாலேயே அவர்கள் தாம் விமர்சகர்கள் அல்லர் என்று கூறினர்.
ஆனால், பலருக்கு இந்தத் திறனாய்வு அல்லது விமர்சனம் என்பதைத் தரம் பிரித்துப் பார்க்கும் திறனில்லை போல் தெரிகிறது. வசதியை முன்னிட்டோ, சோம்பல் காரணமாகவோ, அறியாமையினாலோ, அபிப்பிராயம் கூறுபவர்கள் அனைவருமே விமர்சகர் களாகக் கருதப்படுகின்றனர்.
செ.கணேசலிங்கன், மு.பொன்னம்பலம், யோகா பாலச்சந்திரன், எம்.ஏ.ரகுமான், லெமுருகபூபதி, ஜாவத் மரைக்கார், மு.பவுர், சொக்கன், மயிலங்கூடலூர் நடராசன், கு.பாலகுமாரன், சேரன், வில்வரத்தினம் இப்படிப் பலரும் சிலவேளைகளில் விமர்சகர்களாகக் கருதப்பட்டு வந்துள்ளனர். இவர்கள் விமர்சனச் சாயல் படிந்த அபிப்பிராயங்களைத் தெரிவித்திருக்கக் கூடுமாயினும், நெறிப்படுத்திய முறையில் விமர்சனஞ் செய்பவர்களாக இவர்கள் தம்மை இது வரை இணங்காட்டிக் கொள்ள வில்லை. தமக்குள்ளே ஆழமாய் எழுதுவதாக நினைத்துக் கொண்டாலும், ஆழமான விமர்சனங்களை இவர்கள் எழுதியதாய் இக்கட்டுரையாளர் இது வரை உணர வில்லை.
ஒரு படைப்பு பற்றிய விரிவான (ஆழமான) ஆய்வு திறனாய்வு எனலாம். சுருங்கச் சொல்லி (மேலோட்டமாக)

Page 127
238
ஒரு திறன/ப்வாணரின் விளக்குவது மதிப்புரை எனலாம். மதிப்புரை பக்க வரையறைக்கு உட்பட்டது. தினாய்வுக்கோ, அத்தகைய கட்டுப்பாடு இல்லை. அனைவரும் புரிந்து கொள்வதற்காக எழுதப்படுவது மதிப்புரை. எனவே எளிமை, சுருக்கம் அவசியமாகிறது. இலக்கியப் பயிற்சி மிக்கோருக்காக விரிவாக, அடிக்குறிப்புகளுடன், விரிவுரைகளுடன் திறனாய்வு எழுதப்படுகிறது.
புகழ்வதும், கண்டிப்பதும் திறனாய்வன்று. முழுக்க முழுக்கப் புகழ்மாலையும் அல்லது முழுக்க முழுக்கக் கண்டனமும் விமச்சனமாகாது. இலக்கியக் கொள்கைக் கேற்பத் திறனாய்வுப் போக்கு அமைகிறது.
60x x xx
பத்தி எழுத்தாளர்கள் (கொலம்னிஸ்ட்ஸ்)இலக்கியப் பத்திரிகையாளர்கள் (லிட்டரறி ஜேர்னலிஸ்ட்ஸ்) காலந் தோறும் கலை, இலக்கியம் தொடர்பான பத்திகளையும், மதிப்புரைகளையும் எழுதி வருகிறார்கள். இக்கட்டுரை யாளரும் அத்தகையவர்களுள் ஒருவர்.
இந்தப் பத்தி விமர்சனம் பற்றிய குறிப்புகள் இங்கு அவசியமாகிறன. திறனாய்விலிருந்து அல்லது இலக்கிய விமர்சனத்திலிருந்து இது சிறிது வேறுபட்டது என்பதை விளக்கச் சில வரிகள் :
மேலோட்டமான விமர்சனக் குறிப்புகள், தகவல்கள், அறிமுகம், மதிப்புரைகள் இப்பத்திகளில் அடங்குகின்றன. இடவசதியின்மை, ஜனரஞ்சகம், கண்டனத்தவிர்ப்பு

39 لیۓ --ســــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ oyےapےZZZZ تر7zzzے تھے رہبر?ھے (விமர்சனம் என்றால் கன்னாபின்னா என்று திட்டிக் கண்டிப்பதல்ல), திட்டவட்டமான முடிவுரைகளை வழங்காமை, பொருளைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறல், கவர்ச்சித் தலைப்பு, இடம் பொருள் ஏவலுக்கேற்ப அழுத்தம் மாறுபடல் போன்றவை பத்தி விமர்சனங் களுக்குப் பொதுவான அடிப்படை அம்சங்கள்.
ộ rộ rộ.
திறனாய்விலே பல உட் கூறுகள் இருக்கின்றன: இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, மதிப்புரை, இலக்கியப் பத்தி எழுத்து, அறிமுகம், இலக்கியச் சந்திப்பு - பேட்டி - செவ்வி
இலக்கியக் கொள்கை எத்தனை வகைப்படும் போன்ற விபரங்களையறிய பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய இலக்கியமும் திறனாய்வும்' என்பன என்ற நூலைப் படித்துப் பாருங்கள். நமது நாட்டு இலக்கிய வரலாறுகள் பல வெளிவந்துள்ளன. இவற்றிலே மறைந்த பேராசிரியர் சோ.செல்வநாயகம் எழுதிய நூலில் நமது சமகால இலக்கியம் பற்றிய சில விபரங்கள் அடங்கி யுள்ளன. போராசிரியர்கள் சு வித்தியானந்தன், பொபூலோக சிங்கம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி. அ.சண்முகதாஸ், எஸ்தில்லைநாதன் போன்றவர்களும் மற்றும் பல்கலைக் கழகத்தினரும் ஏனையோரும் ஈழத்து இலக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளனர்.
மறைந்த கனக செந்திநாதன், மு.தளையசிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் முழுமையான

Page 128
240 இலக்கிய வரலாறு இனிமேல் தான் எழுதப்பட வேண்டும். சில்லையூர் செல்வராசன் ஆரம்ப ஈழத்துத் தமிழ்நாவல்கள் பற்றிய தகவல்களைத் தொகத்துத் தந்துள்ளார்.
நூல் வடிவில் முழுமையான இலக்கியத் திறனாய்வு தனியாக இன்னும் வெளிவரவில்லை. நா.சுப்பிரமணிய ஐயர், செம்பியன் செல்வன், சிதில்லைநாதன் போன்றோர் சில விமர்சனக் குறிப்புகள் அடங்கிய நூல்களை எழுதியுள்ளனர். சொக்கன், மயிலங்கூடலூர் நடராசன் போன்றோர் ஓரளவுக்குத் திறனாய்வு எனக் கூறக்கூடிய நூல்களை எழுதியோ, தொகுத்தோ வெளியிட்டுள்ளனர். நூல்வடிவில் வராவிட்டாலும் பல திறனாய்வுக் கட்டுரைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. இவறிலே பல தரமானவை.
്ത്ര ീഴങ്ങ്രമീയZിങ്
மதிப்புரைகள் தரமான முறையில் வெளிவந்துள்ள போதிலும், நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை. இம் முயற்சிகள் புத்தகங்களாகத் தமிழில் வந்தால் பிரயோசனமாக இருக்கும்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் காலத்திற்குக் காலம் வெளிவந்த நல்ல தரமான திறனாய்வுகளையும் மதிப்புரைகளையும் சேர்த்துத் தொகுத்து வெளியிட்டால் பிற்கால மாணவர்களுக்கு அது பெரிதும் பயனளிக்கும்.
இது போன்ற பத்தி எழுத்துக்களும் தொகுக்கப்பட வேண்டும். எஸ்தி, தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, லெமுருகபூபதி ஆஇரத்தினவேலோன், ஆர்.சடகோபன்,

A2avašaŕZý ZVZžava/ 247
இக்கட்டுரையாளர் போன்றோர் பல தரமான பத்திக் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
இவ்விதம் சிறு சிறு நூல்களும் திறனாய்வின் சகல அம்சங்களும் பிரதிபலிக்கக்கூடிய நூல்களும் வெளிவந்தால், திறனாய்வின் அடிப்படை அம்சங்கள் பற்றித் தெளிவு ஏற்படக் கூடியதாய் இருக்கும்.
தமிழ் நாட்டிலே பல திறனாய்வு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டிலே அவ்விதம் நூல்கள் வெளிவருவதேயில்லை. பேராசிரியர் கைலாசபதியின் ஆரம்ப முயற்சிகைளத் தொடர்ந்து பலர் அங்கு நல்ல திறனாய்வு நூல்களை எழுதி வருகின்றனர்.
இக்கட்டுரையிலே மறதி காரணமாகக் குறிப்பிடப் படாதோர் சிலர் இருக்கலாம். கால அவகாசம் கிடைக்காத தால், சம்பந்தப்பட்ட சகல நூல்களையும் கண் முன்னே கொண்டு வர முடியவில்லை. அறியத்தந்தால் பின்னர் விரிவாக எழுத முடியும்.
(ஈழமுரசு இரண்டாவது ஆண்டு மலர் 05.02.1986 இதில் சில பகுதிகள் கட்டுரையாளரின் 'கலை இலக்கியத் திறனாய்வு' என்ற நூலிலும் இடம் பெற்றள்ளன)

Page 129
242
மதிப்புரையும்
இலக்கியத் திறனாய்வை ஆங்கில மொழியிலே Literary Criticism 6reðrum fræ6ir. 'Criticism 6r6örpmei) sødóru-6ðrtb' என்று பொருள் கொள்வது இயல்புதான். ஆனால் கலை இலக்கியங்களுக்கு "criticism என்ற வார்த்தையைப் பிரயோகிக்கும் போது, அது பிரத்தியேகமான பொருளைக் கொடுக்கிறது. கலை, இலக்கியங்கள் பற்றிய மதிப்பீட்டைத் தமிழில் திறனாய்வு என்று கூறுவது வழக்கமாயினும், அது Criticism என்ற ஆங்கில வார்த்தையின் முழு அர்த்தத்தையும் கொண்டு வருவதாக இல்லை. ஏனெனில் நயங்காணல்" 'போன்றே திறனாய்வும் இருக்கிறது. நயங்காணலும்,
கண்டனமும் சேர்ந்ததே 'CRITICSM ஆக அமைகிறது.
 
 
 
 

Apavajazz/ Zvzav - 243
Criticism என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம், கவனமாக மதிப்பீடு செய்தல் அல்லது தீர்ப்பளித்தல் என்பதாகும். கிரேக்க மொழியில் Critic என்றால், தீர்ப்பளிக்கத் தகைமை பெற்றவன்' எனப் பொருள்படும். எனவே, விமர்சகன் நொட்டை சொல்பவன் மாத்திரமல்லன், பாரட்டவேண்டியவற்றைப் பாராட்டிக் கவனமாக மதிப்பீடு செய்து தனது அபிப்பிராயத்தைக் தக்க சான்று களுடன் ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி கூறுபவனாவான்.
இலக்கிய விமர்சகன், நாடக விமர்சகன், திரைப்பட விமர்சகன், சித்திர விமர்சகன், சிற்ப ஓவியக்கலை விமர்சகன், வானொலி தொலைக்காட்சி விமர்சகன் என்று பல துறைகளுக்கும் பிரத்தியேக விமர்சகர்கள் பிற மொழிகளில் எழுதி வருகின்றார்கள்.
Literary Critics, Reviewers, Columunists gigs/Taggadi5u விமர்சகர்கள், மதிப்புரையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லோருமே பொதுவாக விமர்சகர்கள் அல்லது திறனாய்வாளர்கள் என்று தமிழில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எழுத்துக்களில் அல்லது ஒலிபரப்பில் விமர்சனப் பாங்கு காணப்படினும் உண்மையிலேயே இவை ஆழமான அர்த்தத்திலே திறனாய்வு அல்ல.
ஒரு படைப்பைப் பற்றி விரிவாக, ஆழமாகச் சான்றாதாரங்களுடன் பகுத்து ஆராய்ந்து தீர்ப்பளித்தல் திறனாய்வு என்றால், மேலோட்டமாக ஆராய்வது மதிப்புரை எனலாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அவதானித்தல் வேண்டும்.

Page 130
244
മത്ര ക്രമങ്ങZഖZബീജ് சி.சி.மறைமலை என்ற தமிழ்நாட்டு ஆசிரியர் ஒருவர் இலக்கியத் திறனாய்வு-ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலே ஒரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலே அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விளக்கம் இங்கு பொருத்தம் உடையது. அவர் கூறுகிறார்:
"மதிப்புரை பக்கவரையறைக்கு உட்பட்டது. திறனாய்வு பக்கவரையறைக்கு அடங்காதது. மேலோட்டமாகவும் எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளத் தக்க நடையிலும் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. திறனாய்வு மிக ஆழமாகவும், அகலமாகவும், இலக்கியப் பயிற்சி மிக்கோருக்கென எழுதப்படுவது. எனவே, தாம் மதிப்பிடும் நூலுக்கு மதிப்புரை வெளியிடு வதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் சுருங்கச் சொல்லி விளங்கவேண்டிய பணியை மேற்கொள்ளும் மதிப்புரையாளர் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் எழுதலாம். ஆனால் திறனாய்வாகவே எழுத முடியாது. திறனாய்வாக எழுத வேண்டுமெனில் அம்மதிப்புரையாளர் தனியாக கட்டுரையாகவோ, நூலாகவோதான் எழுத வேண்டும்."
இவ்வாறு மறைமலை அவர்கள் குறிப்பிட்டிருப்பது அவதானிக்கத்தக்கது.
பல்கலைக்கழக விமர்சகர்கள் பலரும் ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்ட சிலரும் நல்ல திறனாய்வாளர் களாக இருக்கிறார்கள். பத்திரிகைப் பத்தி எழுத்தாளர்கள் சிலர் நல்ல மதிப்புரையாளர்களாக இருக்கிறார்கள்.

245
4PavašažZÝ Zozňavav
யார் யார் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த வேறுபாடு அமைகிறது. ஓர் ஆக்கம் பற்றி அபிப்பிராயம் சொல்லப்படுவது தான் விமர்சனம். விமர்சனஞ் செய்யும் போது பலரும் பலவித மான அணுகுமுறைகளை அனுசரிக்கின்றனர். இன்னொரு விதத்தில் கூறுவதாக இருந்தால், விமர்சனத்தின் போது சிற் சில விஷயங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அந்த அழுத்தம் என்ன என்பது விமர்சகரைப் பொறுத்தது. விமர்சகரின் இலக்கியக் கொள்கை என்ன என்பதைப் பொறுத்து அவரது திறனாய்வுக் கொள்கையும் அமையும். அத்திறனாய்வுக் கொள்கைக்கேற்ப அழுத்தம் அமையும்.
இந்த லக்கியக் கொள்கைகளும், திறனாய்வுக் கொள்கைகளும் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளன என்று பார்க்குமுன் திறனாய்வு, மதிப்பீடு, மதிப்புரை, பத்தி விமர்சனம் போன்றவற்றுக்கிடையே நுட்பமான வேறு பாடுகளையும் நாம் இங்கு அவதானித்தல் வேண்டும்.
Columunists gaivagi Literary Journalists 6T60T LIGub பத்தி எழுத்தாளர்கள் காலந்தோறும் கலை, இலக்கியம், தொடர்பான பத்திகளையும், மதிப்புரைகளையும் எழுதி வருகிறார்கள். மேலோட்டமான விமர்சனக் குறிப்புகள், தகவல்கள், அறிமுகம், மதிப்புரைகள் இப்பத்திகளில் அடங்குகின்றன. இடவசதியின்மை, ஜனரஞ்சகம், கண்டனத் தவிர்ப்பு (அதாவது விமர்சனம் என்றால் கன்னா பின்னா என்று திட்டிக் கண்டிப்பதல்ல), திட்ட வட்டமான முடிவுரைகளை வழங்காமை, பொருளைச்

Page 131
246
്ത്ര ക്രമങ്ങZഖZിജ് சுருக்கமாகத் தொகுத்துக் கூறல், கவர்ச்சித் தலைப்பு, இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப அழுத்தம் மாறுபடல் போன்றவை பத்தி விமர்சனங்களுக்குப் பொதுவான அடிப்படை அம்சங்கள்.
"Writing Book Reviews' 6T6ip g5606vil Gay John E. Drewry என்பவர் சுமார் 47 வருடங்களுக்கு முன் எழுதியிருந்தார். அந்த நூலிலே அவர் புத்தக மதிப்புரையைப் பத்திரிகை ஆசிரியத் தலையங்கங்களுக்கு அதாவது Editorial ஐ இதற்கு ஒப்பிடுகிறார். ஓர் ஆசிரியத் தலையங்கம் எவ்வாறு பொருள் கொண்டு விளங்க வைக்கின்றதோ அதேபோல புத்தக மதிப்புரையும் செய்கிறது. மதிப்புரையாளரின் விமர்சன மதிப்பீட்டையும் அபிப்பிராயத்தையும் புத்தக மதிப்புரை தெரிவிக்கிறது. மதிப்புரை என்பது ஒரு Feature Article போன்றது. அதாவது சிறப்புச் சித்திராம்சக் கட்டுரை போன்றது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
G.Blayer 6T6itLuajir Feature Article 6Taipitai) 6TairaT 6T6ip) விபரிக்கையிலே,
“சாதாரண வாசகன் ஒருவனுக்குத் தகவல் தருவதாகவும் களிப்பூட்டுவதாகவும் சுவாரஸ்யமாயிருப்ப தாகவும் துரிதமாக வாசித்து முடிக்கத்தக்கதாகவும் அமைந்துள்ள விரிவான உண்மைத் தகவற் களஞ்சியமே Feature Article 6T60Tai gig5!'il 566.pnisi.
வாககர் ஒருவர் மதிப்புரை செய்யப்பட்ட நூலை வாங்கி வாசிக்கிறாரோ இல்லையோ தன்னளவில் வாசிக்கத்தக்க கட்டுரையாகப் புத்தக மதிப்புரை அமைதல்

4Payasa%2z/Z7 4/7a/a7/az/ 247 வேண்டும். நன்றாக எழுதப்பட்ட ஒரு புத்தக மதிப்புரை மதிப்புரைக்குட்பட்ட புத்தகத்தை வாசகர் வாசிப்பதற்கு தூண்டவும் செய்யும்.
புத்தக மதிப்புரை ஒரு பத்திரிகைச் செய்தி போன்றது என ஒப்பிடுவர். அதாவது மதிப்புரை செய்யப்படும் புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன, என்ற செய்தியைத் தரும் பொழுது அது பத்திரிகைச் செய்திக்கு ஒப்பிடப்படுகிறது.
ஆக, புத்தக மதிப்புரை பத்திரிகைத் துறையிலே செய்தி, ஆசிரியர் தலையங்கம், சிறப்புச்சித்திராம்சக் கட்டுரை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது எனலாம்.
திறனாய்வாளர் யார், மதிப்புரையாளர் யார் என்ற கேள்விகளுக்கு Oliver Prescott என்பவர் பதில் தந்திருக்கிறார்.
திறனாய்வாளர் பொதுவாகப் பல்கைலக்கழகப் பேராசிரியர் அல்லது விரிவுரையாளராக இருப்பார். உயர்தர கலை இலக்கிய ஏடுகளுக்கு எழுதுபவராய் இருப்பார். இடையிடையே ஜனரஞ்சகப் பத்திரிகை களுக்கும் தமது விமர்சனக் கருத்துகளைத் தெரிவிப்பவராக இருப்பார். திறனாய்வுக்கெனத் தமக்குக் கொடுக்கப்பட்ட புத்தகத்தை அல்லது தமது விமர்சன ஆய்வுக்கு உகந்த தெனக் கருதும் நூலை அவர் தமது ஓய்வு வேளையில் ஆற அமர இருந்து படித்துத் திறனாய்வு செய்பவராக இருப்பார். தமது வாழ்நாள் முழுவதுமே ஆராய்ந்து பின்பற்றிக் கொண்ட ஒர் இலக்கியக் கொள்கை, திறனாய்வுக் கொள்கை ஆகியவற்றுக்கிணங்க உலக இலக்கியப்

Page 132
24് --— മത്ര ക്രമങ്ങZബ്ബിങ് பின்னணியில் இலக்கிய உத்திகளைப் பகுத்து ஆராய்ந்து மதிப்பீடு செய்பவர் இலக்கியத் திறனாய்வாளராக இருப்பார். திறனாய்வாளர் பெரும்பாலும் நூலின் ஆசிரியருடன் பேசுவதாகவே எழுதுவார்.
ஆனால், மதிப்புரையாளர், குறிப்பாக ஒரு பத்திரிகையில் மதிப்புரை எழுதுபவர் பணியோ வேறானது. புத்தக மதிப்புரையாளர் தனது பத்தி வாசகருடன் பேசுவதாக எழுதுவார். வாசகர்களுக்கு ஒரு வழிகாட்டி யாக அவர் எழுத வேண்டும். பதர்களைப் பொறுக்கி எடுக்கும் அரிதட்டு போல் அவர் இருப்பார். புத்தகங்கள் பற்றிய செய்திகளை அவர் தருவார். நூலாசிரியர் என்ன கூறுகிறார், எப்படிக் கூறுகிறார், ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதை மதிப்புரையாளர் சுருக்கமாக விளக்குவார்.
இலக்கியக் கொள்கைகளை வகுப்பதாயிருந்தால் அவற்றை Organic (அவயக் கொள்கை), Didactic (அறவியற் கொள்கை), Emotive (உணர்ச்சிக் கொள்கை), Aesthetic (அழகியற் கொள்கை), Sociological (சமுதாயக் கொள்கை) என வகுப்பர்.
இவ்வாறு வகுக்கப்படும் இலக்கியக் கொள்கை களுக்கு ஏற்றவாறு திறனாய்வுக் கொள்கைகளும் அமையும். இத்திறனாய்வுக் கொள்கைகளை (mitative (அனுசரணைக் கொள்கை), Utilitarian (பயன்வழிக் கொள்கை) Subjective appreciation (அகவெளிப்பாட்டுக் கொள்கை), Objective approach (புறநிலைக் கொள்கை அல்லது விடயக் கொள்கை) எனப் பிரிப்பர்.

4pava542z/Z7 zzzz/az/az/ 249
எனவே ஒரு விமர்சகன் அல்லது மதிப்புரையாளன் அல்லது பத்தி எழுத்தாளன் தனது நிலைப்பாட்டிலிருந்தே ஒரு படைப்பை அணுகுகிறான். அதே சமயம் கூடியவரை விமர்சகன் படைப்பாளியின் அனுபவம், நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தே படைப்பை அணுக வேண்டும். அதாவது, படைப்பாளியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். படைப்பு எழுந்த சமூகப் பின்னணியை அறிந்து அப்பின்னணியின் முக்கியத்துவத்தை இனங்கண்டு அந்தப் படைப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.
(இலங்கை வானொலி கலைப்பூங்கா நிகழ்ச்சியில் இடம் பெற்ற பேச்சு, 'முனைப்பு'
சித்திரை 1989 இதிழிலும் இடம்பெற்றது. சில பகுதிகள் கட்டுரையாசிரியரின், 'கலை இலக்கியத் திறனாய்வு' என்ற நூலிலும் இடம் பெற்றன)

Page 133
250
N N
N
N
&
இலக்கியத் திறனாய்வு
Dan வாழ்வில் எந்தச் செயலுக்குமே காரணம் காட்டும் அளவிற்கு உளவியல் ஆய்வு வளர்ந்துள்ளது. மனித சிந்தனையின் ஓட்டத்தைக் கூட அணுவணுவாகப் பிரித்து இனங்கண்டு கொள்ள முடிகிறது. அதே போன்று இலக்கியங்களை மனோதத்துவ இயல்பின் அடிப்படையில் ஆராய முடியும் என்பர் சிலர்.
இலக்கியக் கோட்பாடுகள் உள்ளடக்கப் பண்புகள், இலக்கிய உருவ அமைப்புக்கள் இலக்கிய விமர்சன முறைகள் ஆகியன காலத்திற்குக் காலம் மாறுவது போல, உளவியல் பற்றிய சித்தாந்தங்களும் மாறுபடுகின்றன. உதாரணமாக, உளவியலில் நடத்தை அவதானிகள்' என்போரின் கருத்துகளுக்கு மாறாக ஜெஸ்டால்டிசம் என்ற வாதத்தை நிலைநாட்டி கோலர் என்பவர் எழுதிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

257 நூல் பாராட்டைப் பெற்றுள்ளது. எனவே, சித்தாந்தங்கள் யாவும் முடிந்த முடிபல்ல. அது போலவே இலக்கிய விமர்சகர்கள் தெரிவித்திருப்பவை யாவும் தீர்க்கமான
4pavasa2z/Z7 4/7a/az/az/
கணிப்புகள் அல்ல.
மனித மனத்தின் தன்மை பற்றி நிலவிய கருத்து களை ஒட்டியே அவ்வக் காலங்களில் இலக்கியம் பற்றிய கோட்பாடுகள் முன்னர் எழுந்தன. உதாரணமாக, லொக் போன்றோரின் மனோதத்துவம் பற்றி அமைந்த இலக்கிய விமர்சன வியாக்கியானங்கள் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டன.
ஜேர்மனிய இலக்கியமும் இலக்கிய விமர்சனமும் இந்த நூற்றாண்டின் முற் கூறில் பெரிதும் ப்றொயிட்டின் சித்தாந்தங்களை உள்ளடக்கியவையாக இருந்தன என்று ஜேர்மனிய இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
உளவியற் பகுப்பாய்வு எனப்படும் கணிப்பு முறையைக் கண்டு பிடித்த சிக்மன் ப்றொயுட்டின் சித்தாந்தங்களை ஒட்டியே நவீன உளவியல் வளர்ந்து உள்ளது.
உள் மனதில் அல்லது அக நோக்கில் அல்லது அடிமனப் பிரக்ஞையின் காரணங்களையும் கிரியை களையும் காரணகாரியங்களையும் ப்றொயிட் விளக்கினார். அவரது சித்தாந்தம் பலரைக் கவர்ந்தது. ஜ"ங், அட்லர், வில்லியம் ஜேம்ஸ், வேர்த்தீமர், கோலர் போன்ற நவீன மனோதத்துவ அறிஞர்களின் சித்தாந்தங்களுக்கு ஆதார சுருதியாக இருந்தது முன்னவரின் கண்டுபிடிப்புகளே.

Page 134
252
മത്ര ക്രമങ്ങZയZിങ് மனோதத்துவ சித்தாந்தங்களைச் சார்ந்து எழுதப்படும் இலக்கிய விமர்சனங்கள் காலப்போக்கில் மதிப்பை இழக்கின்றன. காலாவதியாகின்றன. குழப்பமாக உருக்கொள்கின்றன. இலக்கிய விமர்சனம் சம்பந்தமான சில அருமையான நூல்கள் கூட இந்தக் குறை பாடுகளினால் சிற்சில இடங்களில் பெறுமதியில்லாமற் போகின்றன. உதாரணமாக ஹென்றி ஹோம் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் எழுதிய விமர்சனத்தின் உறுதிப் பொருள்கள்", ஆர்ச்சி போல்ட் அலிஸன் எழுதிய ரசனையின் தன்மையும் கோட்பாடுகளும், ஈ.எஸ்.டரஸ் சென்ற நூற்றாண்டில் எழுதிய களிப்பு மிகு சாஸ்திரம், 1924இல் வெளியான ஐ.ஏறிச்சட்ஸின் இலக்கிய விமர்சன கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும், கவிதை போன்ற இலக்கிய ஆக்கங்கள் மனோவனுபவத்தைத் தாக்குவனவாய் இருப்பதனால் மனோதத்துவ விமர்சன முறையைக் கையாளலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
போலியில்லாத உண்மைக் கவிதையின் பயன் சிந்தனையையும் மனக்கவலைகளையும் குறைத்தல், மன எழுச்சிகளை ஒழுங்கு படுத்துதல், வெளிப்படையாகப் போதிக்காமல் மனப்போராட்டப் பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகளை உணர்த்துதல், மனோ நிலையைக் குழப்பமின்றி வைத்திருத்தல் ஆகியன என்று ஓரிடத்தில் படித்த, ஞாபகம். எனவே மனோதத்துவ முறையைக் கையாண்டு விமர்சனம் செய்பவர்களின் வாதத்தை
முற்றாக நிராகரிப்பதற்கு இல்லை.

ിക്കീയz’ Zീതക്കു 253
லேனாடோடாவின்சி, லூயிகரோல் போன்றோரின் ஆக்கங்களை மதிப்பீடு செய்யும் பொழுது அவர்களின் சித்த சுவாதீனமற்ற நிலையையும் அலசி ஆராய்ந்தே தம் விமர்சனங்களை மேனாட்டு விமர்சனங்கள் சிலர் தீட்டி இருக்கின்றனர்.
'சித்தசுவாதீனமற்ற நிலைக்குக் கிட்டிய நிலையை நிச்சயம் பெரும் அறிஞர்கள் அடைவர்' என்பது ஒரு கருத்து.
சில இலக்கியக் கலைஞர்கள் தனி வாழ்க்கையில் இயற்கைக்கு மாறாக நடந்திருக்கிறார்கள். அவர்கள் பழக்க வழக்கங்கள்,
போக்குகள் போன்றவை மீது சிலர் சந்தேகம் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய செய்கைகளுக்கான காரணங்களை மனோதத்துவ அடிப்படையில் விளக்கிக் கூறுவதும் விமர்சகர்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. எனவே, எவ்விதத்திலும் மனோதத்துவ விமர்சன முறை விரும்பத்தக்கதாக அமைந்துள்ளது என்று இன்றும் சிலர் கூறுவர்.
அதே வேளையில் மனோதத்தவ விமர்சன முறையைக் கையாளுபவர்கள் ஒரு படைப்பின் முழுமை யான மதிப்பை உதாசீனம் செய்பவர்களாகிறார்கள். உதாரணமாக மேனாட்டுப் புதுக்கவிதை எளிதில் விளக்கிக் கொள்ள முடியாதிருக்கும் போதே, அதனை விமர்சிக்கப் போகும் நாம், கவிஞரின் மனோ நிலை, அக்கவிதையை இயற்றும் பொழுது எவ்வாறு இருந்தது, அவ்வாறு

Page 135
254 ஒகு திறனார்வசனவின் இருந்ததற்கு அவர் அக வாழ்விலும் புற வாழ்விலும் என்ன என்ன சம்பவங்கள் நடைபெற்றன என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு அவர் சரிதையை நாம் ஆராயப் புகுகின்றோமேயன்றி சமூகச் சூழ்நிலையில் அவர் படைப்புப் பற்றிய விமர்சனத்தை செய்யத் தவறி விடுகிறோம். சரிதை ரீதியாக மாத்திரம் ஒரு கலைஞனை விமர்சிக்கும் போது, உளவியல் ஆய்வு முறையை நாம் கையாளலாம். படைப்பாளியைவிட்டுவிட்டு அவன் படைத்த பொழுது நடமாட விட்டிருக்கும் பாத்திரங்களின் மனோ நிலையை அணுகி ஆராயும் பணியில் சில விமர்சகர்கள் இறங்கிவிடுகின்றனர். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது உண்மைதான் என்றாலும் மேல் சொன்ன விமர்சகர்கள், இலக்கியங்களில் உள்ள பாத்திரங்கள் உண்மையிலேயே உயிரோடிருப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டு அப்புனைகதைப் பாத்திரங்களின் மனோநிலை ஆராய்ச்சியில் இறங்கி விடுவது வேடிக்கை தான்.
இலக்கிய விமர்சனம் என்பது பல்வேறு முறை களைக் கையாண்டு சிருஷ்டிக்கப்படும் ஒரு இலக்கியம் எனலாம். உதாரணமாக, ஒரு புதிய படைப்பாளியின் சிருஷ்டியை மதிப்பீடு செய்யும் பொழுது, "வெளிப் படுத்தும் முறையைக் கையாளலாம். அதே வேளையில் புதுமைப்பித்தன், பாரதி, நாவலர் போன்றோரை நாம் மதிப்பிடும் போது அவர்களைப் பற்றியும் அவர்களது ஆக்கங்கள் பற்றியும் "வெளிப்படுத்தும் முறை" விமர்சனங்கள் ஏற்கெனவே வெளிவந்து விட்டன வாதலால், சமூக, வரலாற்று, உளவியல் போன்ற முறை

255
42ałafazZŻ Zwzawa"
களைக் கையாண்டு அவற்றை விமர்சிக்கலாம். இலக்கிய விமர்சனத்தில் உளவியல் அடிப்படையிலான விமர்சனத் திற்கும் இடமுண்டு.
இலக்கியக் கோட்பாடுகளில் முக்கியமானவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம் என்பர் அகவயக் கொள்கை, அறவியற் கொள்கை, உணர்ச்சிக் கொள்கை, அழகியற் கொள்கை, சமுதாயக் கொள்கை.
இதே போன்று திறனாய்வுக் கொள்கைகளும் இருக்கின்றன. இவை அனுகரணக் கொள்கை, பயன்வழிக் கொள்கை என்பனவாகும்.
இது போன்ற பிரிவுகளைத் தெளிவாக விளக்கும் ஒரு நூலாகப் பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய இலக்கியமும் திறனாய்வும்" என்ற புத்தகம் அமைந்து உள்ளது. மாணவர் இந்நூலைப் பயில்வதனால் இலக்கியத்தை அணுகும் முறைகளை நன்கு அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
(வானொலி மஞ்சரி)

Page 136
256
இரு திறனாய்வு நூல்கள்
சிறு குறிப்புகள்
யூ டிரெக்ஷன்ஸ் இன் லிட்டரி ஹிஸ்ரரி (ரல்ஃப் கோஹென்), "மொடர்ண் கிறிட்டிஸிஸம் - தியறி அன்ட் பிரக்டிஸ்' (வோல்டர் ஸ்ட்டன் அன்ட் ரிச்சர்ட் ஃபோஸ்டர்) என்ற இரண்டு தொகுப்புகளை அண்மையில் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இலக்கிய வரலாற்றில் புதிய திசைகள்' என்ற முதல் நூலில், ரொபர்ட் வைமன் என்ற மார்க்ஸிய விமர்சகர் எழுதிய, இலக்கிய வரலாற்றில் பழையதன் முக்கியத்துவம் நிகழ்வதன் அர்த்தம்' என்ற கட்டுரை குறிப்பிடத் தக்கதொன்று.
 

pava5a62zzzý Zzzzavav - 257
அவர் கூறுகிறார்: “பழையதானாலும், நிகழ் காலத்திலும் அர்த்தமுடையதாக இருப்பவற்றின் மூலம் இலக்கிய வரலாற்றின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது பழையதன் முக்கியத்துவமும் நிகழ்வதன் அர்த்தமும் தொடர்புடையதாய் இருக்கின்றன. இவை ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. நிகழ்காலத்தின் வரவேற்பில் பழைய படைப்பு எவ்வாறு மதிப்புப் பெறுகிறது என்ற அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. கலைப் படைப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை, சமகாலத்தில் எவ்வாறு பொருள் கொண்டு விளக்கமுடிகிறது என்பதையும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது."
இரண்டாவது நூலான நவீன விமர்சனம் - கோட்பாடும் செய்முறையும்' என்ற புத்தகத்தில், சமுவேல் ஜொண்சன், அல்ஃப்ரட் கஸான், ஸி.எஸ்.லூயிஸ், ஸோல் ரொஸன்ஸ் வெக், எர்ணஸ்ட் ஜோன்ஸ், எர்விங் ஹோவ், பிரான்ஸிஸ், பேர்குஸன், வொலஸ் ஸ்டீவன்ஸ் போன்ற பிரபல அமெரிக்க விமர்சகர்களின் சுமார் எழுபது கட்டுரைகள் அடங்கியுள்ளன. விமர்சனத்தின் இன்றைய தொழிற்பாடு" (அல்ஃப்ரட் கஸான்), ஆங்கிலக் கவிஞர்கள், பூர்வீகத் திரட்டற் காலம்" (கிறிஸ்டோபர் கோல்ட்வெல்) ஆகிய கட்டுரைகள் விஷேமாகக் குறிப்பிடத் தக்கவை. ஆங்கிலம் தெரிந்த இலக்கிய வாசகர்கள் இந்த இரண்டு நூல்களையும் படித்துப் பார்த்தல் நலம். விமர்சன நூல்களும், விமர்சன சம்பந்தமானநூல்களும் பெருமளவு வெளியாகின்றன.

Page 137
25ど。
ഴ്ചക്ര ക്രമങ്ങZബ്ബീര് பல்துறை நெறிசார்ந்த விமர்சனம்
இலக்கிய விமர்சன வரலாற்றில் புதிய போக்கே பல்துறை நெறிசார்ந்த விமர்சனமாகும் (இன்டர் டிசிப்ளனறி கிரிடடிஸிஸம்) சமூகவியல் துறையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட புதிய பல்வேறு விழிப்பறிவின் அடிப்படையில், அதாவது, ஆய்வறிவு ரீதியாக (இன்டலெக்ஷவலி) விமர்சிப்பதே இந்தப் போக்காகும். பல்வேறு துறைகளின் வாயிலாகப் பெற்ற அறிவின், அனுபவத்தின் துணைகொண்டு இந்த விமர்சனப் பாங்கு அமைகிறது. இந்த இடத்தில் சமூகவியல் சம்பந்தமாக மாணவர்கள் புத்தறிவுபெறும் வாய்ப்பை பாடவிதான அபிவிருத்தித் திணைக்களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரையுள்ள மாணவர்களுக்காக இந்த நூல்கள் எழுதப்பட்ட போதிலும் பெரியவர்களாகிய நாமும் பெரிதும் பயனடையக் கூடிய விஷயங்கள் இவற்றில் அடங்கியுள்ளன. பல்துறை சார்ந்த விமர்சகர்களுக்கு தமிழ் மூலம், சமூகக் கல்வி பெறும் வாய்ப்பை இப்புத்தகங்கள் அளிக்கின்றன.
வரலாற்றுப் பார்வையில் விமர்சனம்
1. நூலாசிரியன் படைப்பை மேற்கொண்ட நேரத்தில் நிலவிய சூழலை, புலமைமிக்க வகையில் மீண்டும் சிருஷ்டித்தல், 2. அந்தப் படைப்பை உருவாக்க வழிவகுத்த காலத்தின் தீர்க்கமான கோட்பாட்டு அம்சங்களை அறிதல்.

APavašažZý ZZZňavaV 259
3. நூலிற்கான சான்றாதாரங்களும், பிற செல்வாக்குகளும் எவை என்று காணுதல் 4 நூலின் உறுதிப் பொருள்கள் அல்லது கூறுகளை வகுத்தல். 5. நுலின் செல்வாக்குக் கால எல்லையை நிர்ணயித்தல். 6. நூலாசிரியனின் ஆய்வறிவு ரீதியான நம்பிக்கைகளை வெளிப்படுத்துதல். 7 நூலாசிரியனின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளல். இவற்றின் பின்னணிகளை ஆராய்ந்து எழுதப்படுவதே
வரலாற்றுப் பார்வையுடன் கூடிய விமர்சனமாகும்.
தமிழில், நமது நாட்டுப் பல்கலைக்கழக விமர்சகர்கள், வரலாற்றுப் பார்வையுடன் கூடிய விமர்சனங்களைச் சிறப்பாக எழுதிவருகிறார்கள். அண்மையில், தமிழ் சிங்கள நாடக வரலாறு தொடர்பாக கலாநிதி கா.சிவத்தம்பி, கருத்தரங்கொன்றிலே, ஆங்கில மொழியில் நிகழ்த்திய ஒரு
சிறப்புரை இந்த விதத்தில் குறிப்பிடத்தக்கது.
(மன்னிகை - ஜூன் 1976)

Page 138
260
எஸ்ராயவுனட்
ரெஜிசிறிவர்தன - மேர்வின் த சில்வா
of லோன் டெயிலி நியூஸ்" பத்திரிகையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று 1973ல் (நொவெம்பர் 7, 8, 15, 17 20, 23 ஆம் திகதிகளில்) வெளியிடப்பட்டது. காலமான எஸ்ராபவுண்ட் என்ற கவிஞர் பற்றிய மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, 'டெயிலி நியூஸ்" பத்திரிகையின் ஆசிரியர் மேர்வின் த சில்வாவும் இலங்கைக் குடியுரிமை இயக்கத் தலைவர் ரெஜி சிறிவர்தனவும், இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் ஆங்கில மொழியில் எழுதும், நல்ல விமர்சகர்கள் எனப் பொதுவாகக் கருதப் படுபவர்கள்.
Ộ ÓE KE
 
 
 
 
 

4PavašažZÝ ZZZžava/ 267
வாழ்க்கை, கருத்தோட்டம், எழுத்தாளன், அவன் நம்பிக்கைகள், இலக்கியம், விமர்சனம், அரசியற் சார்பு ஆகியன பற்றிய சில அடிப்படையான விஷயங்கள் தொடர்பாக இருவரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அவர்களின் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் தான் என்றாலும் அவற்றிலே பல, பொது உண்மைகளாக இருப்பதனால், அவற்றை இங்கு தமிழில் தர விரும்புகிறேன்.
யாவும் உள்ளடங்கிய - இணைந்த பூரணத்துவ தரிசன நோக்குடையவர்களும், சமய அல்லது தத்துவ ஆய்வறிவுத் துறையினருமே, இவை பற்றிய ஆராய முடியும் என்பது மேர்வின் த சில்வாவின் வாதம், இலக்கிய விமர்சகன் இக்கேள்விகளுக்குப் பதிலளிப்பது சிரமம் என்று கூறும் அவர், தம்மைப் பொறுத்தவரையில் முழுமையான, நிலைத்து நிற்கக்கூடிய கருத்துகளைத் தெரிவிக்க முடியாதிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.
இலக்கிய வரலாற்றிலே குறிப்பிட்ட எழுத்தாளன் ஒருவன் வகிக்கும் பங்கு வேறு. அவனுடைய படைப்பு களின் அடிப்படைத் தன்மை வேறு என்று கூறும் த சில்வா, எஸ்ரா பவுண்ட் இலக்கிய வரலாற்றில் முக்கியமானவர் என்றும், கவிஞர் என்ற முறையில் அவர் படைப்புகள் மறு மதிப்பீட்டுக்கு உட்பட்டுள்ளன என்றும் கூறுகிறார். சில எழுத்தாளர்கள் தலை சிறந்தவர்கள் என்று கருதப்படா விட்டாலும், இதர எழுத்தாளர்கள் மீதான அவர்கள் செல்வாக்கிற்காக இதர எழுத்தாளர்கள் எழுதும் பாணி, குறிப்பிட்ட காலப்பகுதியில் நிலவும் கவிதை மரபு ஆகிய

Page 139
262
ഴ്ചക്ര ക്രീമഞ്ഞ/ZഖZബീജ് வற்றில் அந்த எழுத்தாளர்களின் செல்வாக்கு ஆகிய வற்றிற்காக) அவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
மரபு பற்றி முழுமையாக அறிந்திருக்கும் இலக்கிய மாணவர்களுக்கு, இது தெளிவு. ஆனால், எழுத்தாளர்கள் தாம் இதனை நன்கு அறிந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடும் மேர்வின் த சில்வா, இலக்கியத்தில் உலகப் பொதுமை பற்றியும் விளக்குகிறார்.
"எல்லா இலக்கியங்களும் வாழ்க்கை பற்றிய கூற்றே. ஒர் இலக்கியம் என்னை எவ்விதத்தில் ஆழமாக ஈர்க்கிறது, எழுத்தாளன் எனது கவனத்தைக் கவரும் விதத்தில் எவ்வாறு தனது திறமையைப் பயன்படுத்துகின்றான், மனித வாழ்க்கை நிலைமை அல்லது உணர்ச்சிகளை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன், எனது அனுபவத்தை எவ்வளவு தூரம் அந்த இலக்கியம் வளப்படுத்துகிறது என்ற கேள்விகளின் அடிப்படையிலேயே நான் ஒரு படைப்பை மதிப்பிடுகிறேன். ஓர் எழுத்தாளனின் அரசியற் சார்பு என்ன, அவன் கருத்துகள் யாவை, என்ற அறிய விரும்பும் அதே வேளையில், அவை அவனுடைய ஆக்கப் படைப்புக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும், நான் ஆராய விரும்புகிறேன். ஆயினும், இவற்றின் அடிப்படையில் மாத்திரம் நான் இலக்கிய விமர்சனம் செய்வதில்லை.
"ஓர் எழுத்தாளன் வாழும் சமூகம் எப்படிப் பட்டதாக இருந்தாலும் அவனின் சொந்த அரசியற் கருத்துகள் எவ்வாறிருந்தாலும் அவனின் கற்பனைப்

ളഭക്ക്സീബ Zഞഖ -ത്ത 263 படைப்பில் பொதுவான அடிப்படை உணர்வுகள் (அன்பு, வெறுப்பு உவகை துயர், இரக்கம், வெருட்சி போன்றவை) இருக்கும். அந்த அருட்டுணர்வினால் எழும் கருத்துகள், பிறிதொரு காலத்தில் அல்லது இடத்தில் அர்த்த முள்ளவையாக இருக்கக்கூடும். கலாசாரத்துறைக்கு சகல இலக்கியங்களும் தொடர்ந்து பங்கு செலுத்துவதனால், இலக்கியமும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இணைகிறது.
"சமய அல்லது தார்மீக முடிவுகள் போல இலக்கிய விமர்சனத்திலும் முடிந்த முடிவுகளைத் தெரிவிக்க இயலாது. புதிய அனுபவங்கள், நிதர்சனங்கள் ஆகியவற்றிற் கேற்ப நமதுநோக்கு மாற்றமடைகிறது? மாற்றமடையவும். வேண்டும். இது சமூக அடிப்படையிலும் சரி, தனிப்பட்ட அனுபவத்திலும் சரி செயற்படும் ஒரு பண்பாகும். ஆயினும் எமது தனிப்பட்ட உற்சாகம் அல்லது அகவயப்ப்ட்ட நிலை ஆகியவற்றின் அடிப்படையில், புதிய இலக்கிய மதிப்பீடுகளைச் செய்வது புத்திசாலித்தனமல்ல. இது பவுண்ட் வழிபாடு போல, புதிய வழிபாட்டு மதிப்பீட்டிற்கு வழிவகுக்கும். 跨段
இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் மேர்வின் த சில்வா, கலை இலக்கியம் பற்றிய மாஓவின் கருத்து ஒன்றுையம் சுட்டிக் காட்டினார். 'கலை இலக்கிய விமர்சனத் துறையில் இரண்டு விமர்சனப் பண்புகள் உள. முதலாவது அரசியல் ரீதியானது. இரண்டாவது கலா ரீதியானது. இரு முனைகளிலும் நாம் போராட்டத்தைத் தொடர வேண்டும்."

Page 140
264 മത്ര ക്രമങ്ങZബ്രീത്
திரு.மேர்வின் த சில்வா தமது கட்டுரையில், ஒரு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார். பாஸிஸத்தில் முழு நம்பிக்கை உள்ள ஒருவனால் நல்ல கவிதையைப் படைக்க முடியாதா? நல்ல அல்லது சிறந்த எழுத்தாளனாக மதிப்பிடப்படுதற்கு ஒரு சில அரசியல் கொள்கைகளைக் கொண்டிருத்தல் வேண்டுமா? அப்படியானால் எவ்விதமான அரசியற் கருத்துக்கள? முற்போக்கா? சோஷலிஸமா? மார்க்ஸிஸ்மா? இவற்றிற்கு முழுமையான இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கின்றனவா? அவ் வரைவிலக்கணங்களை யாவரும் ஏற்றுக் கொண்டுள்ளனரா? அப்படியல்லாவிட்டால் யார் நடுநிலைமை வகிப்பது? இவை போன்றவை இவருடைய கேள்விகளாகும். மார்க்ஸ், ஏஞ்ஜல்ஸ், ட்ரொட்ஸ்கி, லூக்காக்ஸ் போன்ற மார்க்ஸிய சிந்தனையாளர்களினால் வழி நடத்தப்படும் திரு.சிரிவர்தன போன்றவர்களை ஆட்சேபிக்க பலர் இருக்கிறார்கள் என்றும், மேர்வின் த சில்வா கூறுகிறார்.
சமூகப் பிரக்ஞை கொண்ட விமர்சகன் இலக்கிய விமர்சனத்தில் சில "லேபல்"களைப் பயன்படுத்தி விடுகிறான். மார்க்ஸிய கண்ணோட்டத்தில் இலக்கியத்தை அணுகாதவர்கள் இதுபற்றி விழிப்பாக இருக்கிறார்கள். இவ்வாறு கூறும் மேர்வின் த சில்வா, எஸ்ராபவுண்ட் பற்றி பின்ருறு மாறு மதிப்பிடு செய்கிறார்.
"பவுண்ட் தனது காலத்தில், தனது எல்லைக்குள், ஆங்கிலக் கவிதையில் மாத்திரமன்றி, நவீன கவிதை மரபிலும் புரட்சி செய்தார். ஆங்கிலோ - ஸ்க்ஸன் மரபிற்கு அப்பாலும் அவர் புரட்சியின் எல்லை வியாபித்து இருந்தது.

265
பவுண்ட், எலியட் ஆகியோருக்குப் பின்னால் மகத்தான
6avaa/Z7 AM77ava/
அளவில் புரட்சி மாற்றங்கள் ஏற்படவில்லையாயினும் அந்தப் புரட்சி நிலை ஒய்ந்து உள்ளது. ஆனால் முன்னர், பவுண்ட், எலியட், ஜோய்ஸ் போன்றவர்களை மதிப்புடன் நாம் கெளரவித்தது போல, இப்பொழுது வழிபடுவது அல்ல, எலியட்டை மறுபரிசீலனை செய்ததுபோலவே பவுண்டையும் மேனாட்டு விமர்சகர்கள் மறு மதிப்பீடு செய்து, அவரின் மதிப்பைக் குறைத்துள்ளார்கள். ஆரம்ப ஆரவாரம் குறைந்த பின்னர் முதிர்ச்சி வழிப்பட்ட சரியான மதிப்பீடு எழுவது இயல்பே. இன்றைய வாசகர்களும் உத்திச் சிறப்புகளில் மனம்லயித்து விடுவதில்லை.
பவுண்டும் எலியட்டும் பழைய கவிதை மரபையும் வடிவத்தையும் எதிர்ப்பதில் முன்னணியில் நின்றனர். புதுக் கவிதையில் சிக்கலான, விளங்கிக் கொள்ளாத தன்மைகள் காணப்படுமாயின் அவை சிறப்பாகக் கருதப்பட்டன. கவிதையைப் புரிந்து கொள்ளவும், பொருள் கொண்டு விளங்கவும் வாசகன், விமர்சகனின் துணையுடன் முற்பட வேண்டி ஏற்பட்டது. கவிதையின் பல்வேறு நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை வாசகனுக்கு ஏற்பட்டது. இவற்றை விளக்கும் உரைகள் குவிந்தன. பவுண்டின் கன்ரொஸில் உள்ள இசைச் சொற்களில் ஒருவர் மனதைப் பறி கொடுத்தாலும் அப்படைப்புகள் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்தல் அவசியம். புதிய அனுபவங்களை பவுண்டின் படைப்புக்களிலிருந்து ஒருவர் பெற்ற பின்னர், யேற்ஸ், ப்ரொஸ்ற் போன்றோரின் படைப்புகளிலிருந்து பெறும் அனுபவம் மேலானது என்றே கூறல் வேண்டும். ஆயினும் பவுண்டின் வரலாற்று

Page 141
266 முக்கியத்துவத்தை நாம் மறக்கலாகாது. புதிய கவிதை மரபின் முன்னோடிகளில் ஒருவர் பவுண்ட். இருபதாம் நூற்றாண்டுக் கலாசார வளர்ச்சிக்கு பவுண்டின் எழுத்துகள் முக்கியமானவை என்று எலியட் கூறிய போது, பவுண்டின் விமர்சனங்களையே அவர் மனதிற் கொண்டு இருந்தாலும் பவுண்டின் கவிதைகளுக்கும் அது பொருந்தும், உண்மையில் பவுண்டின் கவிதையும் விமர்சனமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. ஆர்னால்ட், கோலிறிட்ஜ் போன்றோர் கவிஞர், விமர்சகராகக் கருதப்படுபவராயின், பவுண்டும் அவ்விதமானவரே. பவுண்ட் கவிஞராக ஆங்கிலக் கவிதைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தார். விமர்சகராக பவுண்ட், அதனை நியாயப்படுத்தினார் புதிய விமர்சனப் பயன் மதிப்புகளை வெளியிட்டு, பொது ரசனையை மாற்றியமைத்தார். இத்துறையில் எலியட்டுக்கு அவர் வழிவகுத்தார். ஆனால் எலியட் அதனை பவுண்டை விடச் சிறப்பாகச் செய்தார்.
தகு திறனார்வசனரின்
அளவுக்கு மீறிய அபிமான உணர்வு, தப்பியோடிச் செல்ல உதவும் பண்பு ஆகியவற்றிலிருந்து ஆங்கிலக் கவிதையை விடுவிக்க உதவியவர் எஸ்ரா பவுண்ட் அழகு பற்றிய தவறான கோட்பாடு காரணமாக அக்காலக் கவிதை உணர்ச்சி நிரம்பியதாக இருந்தது. சாதாரண அனுபவத் திற்கும் பேச்சிற்கும் உண்மைக்கும் இயைந்த புது விதமான கவிதை முறையை அறிமுகப்படுத்த புதுவிதமான வடிவங்கள் தேவைப்பட்டன. புதிய அனுசரணைகள் வேண்டப்பட்டன. சரியான திட்டவட்டமான நுட்பமான முறைகள் தேவையாக இருந்தன.

Hpavaarz} 4æavav ጸ?6ፖ
நல்ல உரை நடையின் சிறப்பியல்புகள் கவிதையில் இருத்தல் வேண்டும் என்றும், சிந்தனை உள்ளம், கற்பனை ஆகியவையும் இணைய வேண்டும் என்றும் பவுண்ட் விரும்பினார். படிமவாதிகளின் ஒடுங்கிய பார்வையிலிருந்து விடுபட்டது பவுண்டின் கவிதை. சரியான விசாரணைக்குச் செறிந்த படிமங்கள் தேவை என்று கருதி வந்த பவுண்ட், தமது காலத்திற்குரிய படிமத்தைத் தேடுவதில் ஈபட்டார். அவர் ஒரு பரிசோதனைக் கவிஞராகையால் தமது உலகம் தமது சொந்த அனுபவம் ஆகியவற்றுக்கு இயைந்த நவீனத்துவ கூர் உணர்வைக் காண்பதில் தேடுதல் முயற்சியை மேற்கொண்டார், அத்துடன் புராதனச் சீனம், இத்தாலிய மறுமலர்ச்சிப் படைப்புகள், 17 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்துக் கவிதை மரபு, பிரெஞ்சுக் குறியீட்டுக்கவிஞர்கள் ஆகியோரிமிருந்தும், ஆகியவற்றிடம் இருந்து கவிதை மரபு, பிரெஞ்சுக் குறியீட்டுக் கவிஞர்கள் ஆகியோரிடமிருந்தும், ஆகியவற்றிடமிருந்து கிரகிக்கத்தக்க வடிவத்தையும் அர்த்தத்தையும் காணும் முயற்சியில் அற்புதமான புதிய வடிவங்களை தமது கவிதைக்கு அவர் அமைத்தார். அவருடைய படைப்புகளில் அடிப்படையான அமெரிக்கத் தன்மையும் உண்டு. தீர்க்கமான அபிப்பிராயங் களையும் பயன் மதிப்புகளையும் அவருடைய கவிதைகள் கொண்டிருக்காவிட்டாலும் பாரம்பரிய கலாசாரத்தில் காலூன்றிய தார்மீக நெறியை, பவுண்ட் பின்பற்றியதனால் அவர் அமெரிக்கராகவும், அதே வேளையில் துணிந்த ஒரு பரிசோதனைக் கவிஞராகவும் விளங்கினார். பழைய

Page 142
268 ஒகு திறனாப்வசனரின் கலாசாரங்களில் பிரிதி கொண்ட ஹென்றி ஜேம்ஸின் பிடிப்புப் போன்ற, புலன் உணர்வே பவுண்டுக்கும் இருந்தது. கவிஞனின் தனிப்பட்ட நெறியையும், பாத்திரங் களின் இயக்கப் போக்கையும் சமன்படுத்தக் கூடாது என்று பவுண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேர்வின் த சில்வா மேலும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மொழி, அதன் வளம், ஒலிநயம், அதன் ஒழுங்கு முறை, ஆகியவற்றைக் கவிதையில் காணும் போது நல்ல அம்சங்களைக் காணும் அதே வேளையில் அக்கவிதையில் அரசியற் கருத்துகளை இனங்கண்டு, அவையே கவிதையின் உட்கருத்து எனக் கூற முற்படும் பொழுது, விமர்சகன் கவிதைக்குப் புறம்பாக நின்று அதனை அணுக முற்படுகிறான். அதாவது விமர்சகனின் சொந்த அரசியல் நம்பிக்கைகளுக்குப் புறம்பான அரசியற் கருத்துகள் கவிதையில் காணப்படுமாயின், அவன் விரும்பத் தகாத கவிதை அம்சங்களை இனங்காண்பதில் அக்கறை செலுத்துகிறான்.
ஆசிரியரின் கருத்துகளும் விமர்சகனின் கருத்துகளும் வேறுபட்டால் இலக்கிய விமர்சனத்தில் தவறான அபிப்பிராயங்கள் எழுவது தவிர்க்க முடியாதவை. ஆசிரியன் பகிரங்கமாகவே வெளிப்படுத்திய கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு முரண்படான கருத்தை விமர்சகன் கொண்டிருப்பானாயின், இந்த முரண்பாடுகள் தெளிவாகும் என அவர் கூறுகிறார்.
ộ xộ rộ.

4panafaz/az/z? Azarafavay —- 2639
றெஜி சிரிவர்த்தன தமது அபிப்பிராயங்களை வெளியிடும் பொழுது, தலை சிறந்த எழுத்தாளர், மொத்த மனித அனுபவத்தில், தனது காலத்து அரசியல் அனுவத்தையும் இணைத்து சித்திரிக்க முடிகிறது எனக் கூறுகிறார். இந்த நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளிலும் எழுதிய ஆங்கில அமெரிக்க எழுத்தாளர் களின், சமூகப் பிரக்ஞை எல்லைக்கு உட்பட்டவை என்று அவர் கூறுகிறார். சமகால மனித அனுபவத்தின் முக்கிய பகுதிகளை அறிந்துகொள்ள, அவர்கள் நாட்டம் காட்ட வில்லை. இரண்டு உலக யுத்தங்களுக்கிடையில் வாழ்ந்த முக்கிய ஆங்கில அமெரிக்க எழுத்தாளர்களான யேற்ஸ், பவுண்ட், எலியட், ஜோய்ஸ், லோரன்ஸ் போன்றவர்கள் பிரதிபலித்த இலக்கிய உலகம் இன்று எவ்வளவு தூரத்திற்கு உலகப் பொதுமையானது என்று அவர் வினவுகிறார். தமது காலத்திற்குரிய மேனாட்டு உலக அனுபவத்தை இந்த எழுத்தாளர்கள் முழுதாகவே பிரதிபலிக்கவில்லை என்று றெஜி சிரிவர்தன குறைபட்டுக் கொள்கிறார்.
மிகப் பெரிய சமூக அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட காலப்பகுதியில் பிரிட்டனும் அமெரிக்காவும் அமைதியாக இருந்தன. ஐரோப்பாவில் ரஷ்யப் புரட்சியின் வெற்றி, மற்றைய புரட்சிகளின் தோல்வி, ஸ்டாலினிஸ் பாஸிஸ் எழுச்சி, குடியுரிமை யுத்தம் ஆகியன நடைபெற்ற அதே காலப்பகுதியில், அமெரிக்காவும், பிரிட்டனும் அதிர்ச்சி அடையாமல் இருந்தன. வறுமை கூட அங்கு நிலவிய அமைதியைப் பாதிக்கவில்லை.

Page 143
2ፖ0 ്ത്ര ക്രീമഞ്ഞമ്മീയബീജ தரிசு நிலம், கன்ரொஸ், யூலிஸஸ், பினிகன்ஸ்வேக் ஆகியவற்றில் உலகப் பொதுமையான அனுபவம் காணப் படுவதாகக் கூறப்படுகிறது. மனித வரலாற்றின் முழுத் தரிசனமும் அவற்றில் சித்திரிக்கப்படுவதாகக் கூறப் படுகிறது. விமர்சகர்களும், வாசகர்களும் இதனைக் கூறிவருகிறார்கள். ஆனால், எலியட், பவுண்ட், ஜோய்ஸ் ஆகியயோரையும் இதர ஐரோப்பிய எழுத்தாளர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சமகால மனித அனுபவத்தைக் கிரகிக்கும் ஆற்றல் முக்கிய ஆங்கில அமெரிக்க எழுத்தாளர் களுக்குக் கிடையாது என்ற உண்மை புலப்படும்.
எலியட், பவுண்ட், ஜோய்ஸ் ஆகியோர் சிறந்த உத்தியாளர்கள். சிறந்த இலக்கியக் கலைஞர்கள். ஆனால் அவர்கள் தரிசனம் வரையறைக்கு உட்பட்டது. தமது உலகத்தை மாற்றும் சக்திகளையும் இயங்களையும் பற்றி அவர்கள் யாதும் அறிந்திருக்கவில்லை.
பிறெச்ட், இளமையில் சிலோனே, இளமையில் மோல்ரோ, மச்சாடோ, செர்னெண்டெஸ், வல்லேஜோ, ளொக், யெஸினின், அகஹமட்டோவோ (வல்லேஜோ பிறப்பினால் பெருநாட்டைச் சேர்ந்தவனாயினும் அனுபவத்தினால் ஐரோப்பியன்)ஆகியோர் நேரடியாகவே தாம் அனுபவித்த நெருக்கடி நிலையினால் எழுந்த சமூக, மனித அனுபவத்தை மேலும் சிறப்பாகச் சித்திரித்தார்கள்.
பவுண்ட், ஜோய்ஸ், லோரன்ஸ் போன்ற கவிஞர்கள் பிறப்பிடம் பெயர்ந்து ஐரோப்பாவில் குடி வாழ்ந்து, தமது நேரடிச் சுற்றாடலுடன் தொடர்புற்றிருக்காது எழுதினார்கள்.

49 varaezzi zapov - 2ፖ7 ஐரோப்பிய சமூக அரசியல் நெருக்கடி நிலைமைகளுக்கு சமமாக அயர்லாந்தில் மாத்திரமே இலக்கியம் சமைக்கப் பட்டது. ஈஸ்டர் எழுச்சி, குடியுரிமை யுத்தம் ஆகியன இயற்கையைக் கவர்ந்தன. ஆனால், முக்கிய அமெரிக்க ஆங்கில எழுத்தாளர்கள் அரசியலில் அக்கறை செலுத்தாது இருந்தனர். இவர்கள் வலதுசாரிக் கருத்தோட்டங்களைக் கொண்டிருந்தார்கள்.
ஸ்ராலினிஸ்டுகளும் மாவோவிஸ்டுகளும் எழுத்தாளனின் அரசியற் கருத்துகளும் அவன் படைப்புகளின் சிறப்பியல்புகளும் சமன்படுத்தப்படக் கூடியவை என்று கூறுகிறார்கள். ஆனால், இலக்கியம் பற்றிய சிறந்த மார்க்ஸிய சிந்தனையாளர்கள் இவ்வாறு செய்வதில்லை. ஒரு படைப்பில் எழுத்தாளன் தெரிவிக்கும் அனுபவம், அவன் அரசியல் நம்பிக்கைகளுடனும் சம்பந்தப் பட்டுள்ளது. அவன் கற்பனைக்கு இந்த நம்பிக்கைகள் ஒவ்வாதனவல்ல என்று கூற முடியாது. எழுத்தாளன் சிந்தனையாளனும் கூட என்று கூறும் றெஜி சிரிவர்தன, எழுத்தாளர்கள் அரசியற் சார்புடையவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, எஸ்ராபவுண்ட் முசோலினிக்கு ஆதரவாக ஒலிபரப்பியமை, யேற்ஸ் பாஸிஸ்க் கொள்கைக்குச் சார்பாக எழுதியமை, எலியட் யூத இன எதிர்ப்பு பாஸிஸ்க் கோட்பாடு ஆகியனவற்றிற்கு ஆதரவும் காட்டியமை உலின்ட்ஹாம் லுயிஸ் ஹிட்லரைப் புகழ்ந்து பேசியமை ஆகியவற்றை உதாரணம் காட்டுகிறார்.
சிலோன்டெயிலிநியூஸ்" பத்திரிகையில் திருவாளர்கள் மேர்வின் த சில்வாவும் றெஜி சிரிவர்த்தனவும் வெளியிட்டு

Page 144
272 — മന്ത്ര ക്രമങ്ങZബീര് உள்ள கருத்துகள் சில பொதுப்படையான இலக்கிய விமர்சனக் கருத்துகளாகவும் அமைந்திருப்பதனால் அவற்றை இங்கு தமிழில் தர நான் முற்பட்டுள்ளேன். பேசப்பபடும் விஷயங்களும் பிரயோகிக்கப்படும் மொழி நடையும் என்னைப் பொறுத்தவரையில் தமிழில் பெயர்ப்பதற்கு சிறிய கடினமாக இருக்கின்றன. ஆயினும், நான் புரிந்து கொண்ட மட்டில் முக்கியமான சில பகுதிகளை மாத்திரம் தேர்ந்து இங்கு தந்துள்ளேன். இலக்கிய விமர்சன நெறிகள் பற்றி மேர்வின் த சில்வா கூறும் கருத்துகள் நியாயபூர்வமானவை. ஆயினும் றெஜி சிரிவர்த்தன கூறுவது போல அரசியலைப் பிரித்துப் பார்க்காத முறையில், அதனையும் இணைத்த பூரண பார்வையுடன் இலக்கியத்தை அணுகுதல் தவிர்க்க முடியாததாகி வருகிறது.
(பூரணி : தை - பங்குனி 1973)
 


Page 145