கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்

Page 1

鄱

Page 2

பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
கே.எஸ். சிவகுமாரன்
மீரா பதிப்பகம் கொழும்பு -06.

Page 3
நூலின் பெயர்
மீள் கூறல்
பதிப்புரிமை
முதற்பதிப்பு
நூல் கிடைக்குமிடம்
பதிப்பு
அச்சிட்டோர்
ഖിഞഖ
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
: கே.எஸ். சிவகுமாரன்
ஆசிரியருக்கே
: 28-02-2009
:21, முருகன் பிளேஸ்
கொழும்பு - 06. 21, Murugan Place (Off) Havelock Road Colombo-06 TPhone: 0-94-1-2587617 Mobile:0779606283
email : Sivakumaranks Gyahoo.com
மீரா பதிப்பகம் 7ே8 ஆவது வெளியீடு) கொழும்பு 06. TPhone: 077534.2128
பேஜ் அண்ட் இமேஜ் . 202/2B, றோயல் பேர்ல் கார்டின்ஸ் வத்தளை T'Phone: 01-94-11-4959661 Mobile : O7778862.38
el5LT. 150/=

நூலாசிரியரின் விளக்க உரை
இச் சிறு நூலிலே பன்னிரண்டு கட்டுரைகள் அடங்கி யுள்ளன. 1980களின் முற்பகுதியில் "வீரகேசரி வார வெளியீட்டிலே நான் எழுதிய "சாளரக் காட்சிகள்” என்ற பத்தியிலே இடம் பெற்ற பத்துக் கட்டுரைகளும், "தினகரன் வாரமஞ்சரி”யிலே "ஈஸ்வரபுத்ரா” என்ற புனைபெயரில் நான் நடத்திய "கேள்வியும் பதிலும்” என்ற பத்தியில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றும். "மல்லிகை” இதழில் இடம்பெற்ற ஒரு கட்டுரையும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
இப் பத்திகள் எழுதப்பட்டதன் நோக்கம், சாதாரண வாசகர்களும், உயர் வகுப்பு மாணவர்களும் பயனடைய வேண்டுமென்பதே. விரிவாக அல்லாமல், சிறு குறிப்புகளைக் கொண்ட தகவல்களாகவே "பத்தி"களில் எழுத முடியு மென்பதால், “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற அடிப்படையில் இவை எழுதப்பட்டுள்ளன.
எனது கலைமாணிப் பட்டப் படிப்புக்கு நான் தேர்ந் தெடுத்த மூன்று பாடங்களாவன ஆங்கிலம், தமிழ், மேலைப் u60iiLITGd, 356)|TFITTLE (Western Classical Culture).

Page 4
நான் மூன்றாவது பாடத்தில் கற்றுக் கொண்டவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி "சாளரக் காட்சி கள்” என்ற தொடரை எழுதினேன்.
இக்கட்டுரைகள் வெறுமனே ஓர் அறிமுகமேயின்றி விரி வான ஆய்வாக அமையாதது, எனது நோக்கத்திற்கு வசதி யாகப்பட்டது.
தமிழ் மாத்திரம் தெரிந்த நமது இளைய பரம்பரையின ருக்கு இச் சிறுநூல் சிறிதளவாகுதல் பயன்படும் என நினைக்கிறேன்.
எனது நூல்களில் பெரும்பாலானவற்றை வெளியிட்ட கொழும்பு மீரா பதிப்பகத்தினரே இந்நூலினையும் தமது 78ஆவது வெளியீடாக வெளிக் கொணர்கின்றனர். அவர் களுக்கு எனது அன்பு கலந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!
21,முருகன் பிளேஸ் - கே.எஸ். சிவகுமாரன் ஹெவ்லொக் வீதி வழியாக
கொழும்பு-06,
தொ.பே : (011-94-11) 2587617 அவசர அழைப்பு : 077 9606283 LiSaigo76556) ; sivakumaranks @yahoo.com

கல்வித்துறையில் கெளரவமான முறையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் வழங்கிய
அணிந்துரை
கே.எஸ். சிவகுமாரன் பல்துறைப் புலங்கள் தழுவிய ஆக்கத் திறனாய்வாளர். ஆக்க இலக்கியம், பன்முகத் திறனாய்வு, கட்டுரை இலக்கியம், மொழிபெயர்ப்பு, தொடர்பாடல முகிழ்ப்பு முதலிய பல பரிமாணங்களிலே தமது ஆளுமையைப் பதித்து வருபவர். ஆங்கிலம், தமிழ் முதலாம் இதழ்களிலே பத்தி எழுத்தாளராக’ (Columnist) தமது அகன்ற வாசிப்பு வழி எழுந்த அறிகைக் கோலங்களை வாசகர்களுக்குத் தந்துகொண்டிருப்பவர். தமிழ் எழுத்தாளர் களை ஆங்கிலம் வழியாக பிற மொழி பேசுவோருக்கு அறிமுகம் செய்து வரும் அவரது பணி தனித்துவமானது. ஆங்கில இலக்கிய வளர்ச்சி மற்றும் ஆங்கிலத் திறனாய்வு முதலிய தளங்களில் நின்று நவீன தமிழ் இலக்கியப் படைப்புக்களைத் தரிசிப்பவர். ஆங்கில இலக்கியப் பரப்பில் எழுச்சி கொண்ட மானிடவாதம் (Humanism) அவருக்குரிய கருத்தியலின் எழுகோலமாகின்றது. அந்தத் தளமே எந்த எழுத்தாளரையும் புறந் தள்ளி விடாத அவரது அணுகு முறைக்கு வழியமைக்கின்றது.
V

Page 5
உலக நாகரிகங்களின் தளம் என்றும் தோற்றுவாய்த் தொட்டில் (Cradle) என்றும் அழைக்கப்படும் கிரேக்க நாகரிகம் தந்த அறிவுச் செல்வங்கள், தருக்க முறைமை, அழகியல் நோக்கு, அறிவியல் முனைப்பு முதலியவை இன்றும் நீடித்து நிற்கும் எழுகாட்சிகளாக மேலோங்கி நிற்கின்றன. அவை பற்றிய தமிழ் அறிமுகத்தை மேற்கொண்டு வருவோரில் கே.எஸ். சிவகுமாரன் அவர்களுக்குத் தனியிடம் உண்டு.
கிரேக்க கல்வியினதும் கலைகளினதும் செல்வாக்கு இன்றுவரை உயிர்த்துடிப்புடன் வினைப்பாடு கொண்ட வண்ணமுள்ளது. அறிவுநிலையில் கிரேக்க நாகரிகம் அழிந்து விடவில்லை என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை கள் மீள வலியுறுத்துகின்றன. நவீன உலக அரங்கு கிரேக்க அரங்கின் செல்வாக்கை உட்கொண்டு எழுந்து உலாவு கின்றது. நவீன அழகியற் சிந்தனைகள் அரிஸ்டோட்டிலின் சிந்தனைகளைக் கடன் வாங்குகின்றன. நவீன கல்விச் சிந்தனைகளிலே பிளேட்டோவின் சிந்தனை விசைகள் ஒலித்த வண்ணமுள்ளன. நவீன மக்களாட்சி அரசியல் கிரேக்க நகர மன்றுகளிலே கால் பதித்து எழுகின்றன. இந்நிலையில் கிரேக்கம் பற்றிய அறிவு நவீன அறிவுலகிலே பயணிப்பதற் குரிய பலத்தைக் கொடுத்து வருகின்றது.
தொடர்பாடற் புலத்திலே நீண்ட அனுபவ வீச்சைக் கொண்ட கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் கிரேக்க அறிவுத் தளங்களை எளிமை பெறவும், துலக்கம் பெறவும் தந்து ள்ளமை அவர் திரட்டிக்கொண்ட தொடர்பாடல் அனுபவங் களின் செப்பநிலையைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு கட்டுரைகள் வழியாக அவர் மேற்கொண்ட நிரற்கோடல் (Encoding) நடவடிக்கை குறுக்கீடுகளைச் செயலிழக்கச் செய்யும் நிரற்கோடற் குலைப்பை (Decoding) வாசகர்க ளிடத்தே ஏற்படுத்திவிடும் நெகிழ்ச்சிப் பாங்குடையதாக அமைந்துள்ளது.
wi

ஆங்கில மொழி வாசிப்பின் வழியாக அவர் திரட்டிக் கொள்ளும் அனுபவங்கள் தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்கவும், தமிழ் மொழி வாசிப்பின் வழியாக அவர் திரட்டிக் கொள்ளும் அனுபவங்கள் தொடர்ந்து ஆங்கில வாசகர்களுக்குக் கிடைக்கப்பெறவும் வல்ல இருவழிச் செயலியக்க முறைமை தொடர்ந்து நீடிக்க எமது வாழ்த்துக்கள்.
GFLUIT. 6EguuJTGFT தலைவர் பெப்ரவரி 2009 கொழும்புத் தமிழ்ச் சங்கம்
Vji

Page 6
பண்டைய கிரேக்கர் பெற்ற மதிப்பு
கிரேக்க பெளராணிக உலகம்
கிரேக்க புராணங்களின் கடவுளர்
பண்டோராவின் பெட்டி’
கிரேக்க கடவுளரும் காவியங்களும்
ஹெரோடோட்டஸ்: முதலாவது வரலாற்றாசிரியன்
தூளமிடிடெஸ்: அறிவியல் சார்ந்த வரலாற்றாசிரியன்
ஈடிப்பஸ் கொம்ப்ளக்ஸ்’
ஹெஸியோட்: く தொழிலின் மகத்துவத்தை விளக்கியவன்
10. கிரேக்கரின் வழியில் துன்பீற்று நாடகம்
O
O5
09
2
15
19
23
26
29
34

பண்டைய கிரேக்கர் பெற்ற மதிப்பு
கலை இலக்கியத் திறனாய்வு முயற்சியில் ஈடுபட்ட நம்மில் பலர், பரவலான அறிவுப் பின்னணியில் இவ்வாக்கப் படைப்புகளை மதிப்பிட முற்படின் முழுமையான, பல்நெறி சார்ந்த திறனாய்வுப் பார்வையை விருத்தி செய்து கொள்ள லாம். அல்லவா?
திறனாய்வு அல்லது விமர்சனம், கவிதை, புனைகதை, மேடைநாடகம் போன்றவை மேலைத்தேயச் செல்வாக்குக்கு உட்பட்டே நவீன வளர்ச்சி பெற்று வருகிறது என்பதில் கருத்து வேற்றுமை இருக்க மாட்டாது.
எனவே பெரும்பாலும் மேல்நாட்டு விமர்சனக் கொள்கை களை அல்லது இலக்கியக் கொள்கைகளைப் பின்பற்றும் அல்லது தழுவும் நாம் மேலை இலக்கியத்தின் பண்பாட்டு ஊற்றாகிய கிரேக்க, உரோம நாகரிகங்கள் பற்றியும் அறிந்து கொள்வது பயனுடையது. எனவே பண்டைய கிரேக்கம் பற்றிய சில செய்திகளை முதலில் அறிந்து கொள்வோம்.
கி.மு. 3000 ஆண்டளவில் கிரேக்க மொழி பேசும் இனத்தவர் கிரேக்கம் என்றழைக்கப்படும் பிரதேங்களில் குடியேறினராம். அவர்களுடைய நாகரிகம் கொடி கட்டிப் பறந்த வேளை வரை (அதாவது கி.மு.200 ஆம் ஆண்டள வில் உரோமானியர் கிரேக்கத்தை வென்றது வரை) அற்புதமான மனிதப் பண்பாடு பரிமளிக்கத் தொடங்கியது. கிரேக்க நாகரிகம் கிபி நான்காம் நூற்றாண்டு வரை வளர்ச்சி பெற்று நீடித்ததாகவும் கூறுகிறார்கள்.
- 1 -

Page 7
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
பண்டைய கிரேக்கம் என்பது சுமார் 300 மைல் நீளமும் 200 மைல் அகலமும் கொண்ட ஒரு நிலப் பிரதேசம். அங்கு வாழ்ந்தோர் தொகை அதிகமில்லை. ஸ்பாட்டா, கோரிந்த் போன்ற நகர்-ராஜ்யங்கள் எமது இன்றைய சிறிய பட்டினங்களை ஒக்குமென்பர் சிலர்.
பண்டைய கிரேக்கர் செல்வந்தராய் வாழவில்லை. வல்லமை கொண்ட பிரஜைகளாகவும் அவர்கள் இருந்தா ரில்லை. அவர்களுக்குச் சாம்ராச்சியங்கள் இருந்ததில்லை. இருந்தபோதும் அவர்கள் படையெடுத்த பாரசீகர்களைத் தோற்கடித்தனர். பண்டைய கிரேக்கர்கள் ஆயுதங்களையோ எந்திரங்களையோ கண்டுபிடிக்கவில்லை.
இருந்த போதிலும் கிரேக்கரை நாம் மதிப்பது ஏன்?
அவர்களுடைய சிற்பங்கள் பளிங்குக் கற்களினாலான கோயில்கள், நாடகங்கள். கவிதைகள், தத்துவங்கள், வரலாறுகள் ஆகியன அரும் பெருஞ் செல்வங்கள் என்பத னாற்றான். ஜனநாயகச் சூழலில் வாழ்ந்த முதல் மனிதர் பண்டைக் கிரேக்கரே என்றும் சிலர் துணிவர்.
கிரேக்கம் படைத்த தத்துவ ஞானிகள் நடைமுறையறியா வெறும் வரட்டு விவாதிகள் எனச் சிலர் கூற முன்வரலாம். விஞ்ஞான வளர்ச்சிக்கு முரண்பட்டதாக அத் தத்துவங்கள் இருப்பதாக நிரூபிக்கலாம். ஆயினும் மேனாட்டுத் தத்துவ தரிசனங்கள் ஏன் எழுந்தன என்பதை நாம் மனதிலிருத்து வோமாயின் அத்தத்துவஞானியின் மூலப் பங்களிப்பை வியக்காமல் விடோம். ஆம்! விலங்கினங்களினின்று மனிதன் ஏன் வேறுபட்டு நிற்கிறான் என்றியம்ப முற்பட்டபொழுது கிரேக்க தத்துவமும் பிறந்தது என்பர் சிலர்.
மனித மூளையின், மனிதனின் சிந்தனை ஆற்றலை அறிந்த கிரேக்கர் மனிதன் எதற்காக எப்படிச் சிந்திக்கிறான் என்று ஆராய முற்பட்டனர். பகுத்தறிவும் தருக்கமும் எவ்வாறு
- 2

கே. எஸ். சிவகுமாரன்
செயற்படுகின்றன என்றறிவதன் மூலம் தொடர்ந்து வந்த மக்கள் தமது பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள லாம் என்பதற்கு வகை செய்தனர்:
உலகம் எவ்வாறு இயங்குகிறது? மனிதன் எவ்வாறு அவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்? என்பதை ஆராய்வதில் பண்டைய கிரேக்கர் ஈடுபடத் தொடங்கினர்.
இறைவனுக்கு அவர்கள் அஞ்சினர். இறைவன் இருக் கிறான் என்று நம்பினர். அதே சமயம் மனிதன் என்பவன் சில வேளைகளில் கொடுரமானவனாகவும் மடையனாகவும் இருந்தாலும் அவன் ஒரு மகத்தான பிறவி என்றும் வியந்த னர். பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை மனிதன் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அறிவைப் பயன்படுத்தி இயற்கையைத் தனது நலனுக்குப் பயன்படுத்த பண்டைய கிரேக்கன் கற்றுக் கொடுத்தான். எதிலுமே ஆர்வம் காட்டி னான். புதுமையை நாடி நின்றான்.
மனிதன் இன்னும் இன்னும் நன்றாகவே வாழ முடியும் என்ற கொள்கையில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தனர் அக்கால கிரேக்க மக்கள்.
நமது சிந்தனை முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கும் கிரேக்கரே வழி காட்டினர் என்பர் மேலைத் தேயத்தோர். எல்லாமே சமநிலை கொண்டுள்ளன என்று கிரேக்கர் கருதினர். உதாரணமாக வெப்பம் இருந்தால் குளிர்ச்சியும் இருக்கும். பகல் வந்தால் இரவு வரும் ஒளியும் இருளும், இன்பமும் துன்பமும் இப்படி எதிரெதிர்த் தன்மை கள் இருப்பதனால் ஒரு வித சமநிலை எய்தப்படுகிறது.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்” என்று நாம் கருதுவது போல் கிரேக்கரும் எதிலும் ஓர் அளவு எல்லை வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Page 8
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
எனவே எதிர்மறைகளிடையே சமநிலை ஏற்படாவிட்டால் ஒன்றினை இயக்க முடியாது என்று பண்டைய கிரேக்கர் கருதினர்.
அமைதி, அளவுக்கு மீறாமை, நற்பண்பு ஆகியன நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று நம்பிய அவர்கள் பிறர் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளித்தனர். எங்கெங்கு நல்லது காணப்பட்டதோ அவையாவும் தமதே எனக் கூறித் தம தாக்கிக் கொண்டனர்.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று தமிழன் கருதினால் “யாவும் நம்தே" என்று கிரேக்கன் அவற்றைப் பொதுவுடமையாக்கினான்.
வரி வடிவம், நாணயம், கட்டடக் கலைக் கோட்பாடுகள், கணிதம், சிற்பம், வனையியல் போன்றவற்றைத் தமக்கு முற்பட்ட பண்பாடுகளினின்று தழுவிக் கொண்டான் அந்நாட் கிரேக்கன்.
பிற மொழிச் சொற்களையும் தனது மொழியில் சேர்த்துக் கொண்டான்.
கருத்துச் சுதந்திரம். பேச்சுச் சுதந்திரம் ஆகியனவற்றிற்கு முதலிடம் அளித்தான் சரியான சொல்லைச் சரியான இடத்தி ல் பயன்படுத்தினான். அவன் சிந்தனைத் தெளிவுக்கு இது ஓர் காரணம்.
- வீரகேசரி :23-O2-1982

கிரேக்க பெளராணிக உலகம்
ஆரம்பமே குழப்பமாக இருந்தது. எல்லாமே மறைந்து காணப்பட்டன. பென்னம் பெரிய கரிய பிண்டங்களே இருள் போலக் கவிந்திருந்தன. பின்புதான் பூமித் தாய் அவ்விருண்ட பிளம்பிலிருந்து உதயமானாள். அவளை ‘கே’ என்றார்கள். பூமித் தாயைத் தொடர்ந்து இரு கடவுளர் தோன்றினர். ஒருவர் பெயர் "யூரேனஸ்" இவர்தான் விண்ணகத் தெய்வ மாம். மற்றவர் பெயர் "பொன்டஸ்” இவர் ஆழிக் கடவுளா வர். பூமியும், கடலும், வானமும் பிணைந்ததைத் தொடர்ந்து பண்டைய உலக மக்கள் தோன்றினர் என்பது கிரேக்க பெளராணிக் கதை.
கே, யூரேனஸ் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். இவர்களை "டைட்டன்ஸ்” என்றனர். ஆறு ஆண்களும், ஆறு பெண்களு மான இப் பிள்ளைகளிற் சிலர் குரூபிகள். "சைக்கிளோபஸ்” எனப்படும் ஒற்றைக் கண் ராட்சதர்களும், இந்தப் பன்னிரு குழந்தைகளில் இடம் பெற்றனர்.
தனது பிள்ளைகளின் கோர ரூபத்தைக் கண்டு யூரேனஸ் வெறுப்புற்றான். அவர்களை மறைவுலகமாகிய பாதாள லோகத்திற்கு அவன் அனுப்பி வைத்தான். இதனை அறிந்த தாயாகிய கே இரக்கமுற்றாள். தனது குழந்தைகளில் பலசாலியான குரோனஸை தந்தைக்கு எதிராக எழுமாறு அவள் துாண்டினாள்.
குரோனஸ் தனது தந்தையான யூரேனஸைத் தாக்கி னான். தந்தையைக் காயமுறச் செய்து அவனை சங்கிலி
5

Page 9
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
யால் பிணைத்துச் சிறையிலிட்டான். இப்பொழுது குரோனஸ்ே மன்னனான். ரியா என்ற டைட்டன் இனப் பெண்ணை அவன் திருமணஞ் செய்து கொண்டான். அது மாத்திரமல்ல. தன் தாயின் சொற்படி மறைவுலகத்தில் வாழ்ந்த தனது சகோதர சகோதரிகளையும் தன்னுலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தான்.
அதே சமயம் குரோனஸ் தனது பிள்ளைகளைக் கண்டு பயந்தான். காரணம் அவனுடைய புதல்வர்களில் ஒருவனே அவனின் சாவுக்குக் காரணமாவான் என்று குரோனஸ் ஆரூடம் மூலம் அறிந்து வைத்திருந்தான். தனது மரணத் தைத் தடுக்க குரோனஸ் என்ன செய்தான் தெரியுமா? ஒன்றன் பின் ஒன்றாக தன் குழந்தைகளை விழுங்கி வந்தான். ஆனால் கடைசிக் குழந்தையாகிய ஸியஸ் தப்பி விட வேண்டும் என்று கருதிய குரோனசின் மனைவியாகிய ரியா ஒரு தந்திரம் செய்தாள். குழந்தை போலத் தோன்றும் ஒரு கல்லை எடுத்து சிலையில் வைத்து விட்டாள். குரோனஸ் அது தனது குழந்தையான ஸியஸ் என்று நினைத்து விழுங்கி விட்டான்.
ஸியஸ் தப்பிப் பிழைத்து வாலிபப் பருவம் அடைந் திருந்தான்.
ஒரு நாள் ஏதோ ஒரு மருந்தைக் கலக்கித் தன் கணவனா கிய குரோனஸ்"க்கு ரியா கொடுத்தாள். இதனால் சுகவீன முற்ற குரோனஸ் தான் விழுங்கிய பிள்ளைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கக்கினான்.
ஹெஸ்டியா, டிமிட்டர், ஹேரா, ஹேட்ஸ். பொசிடோன் ஆகிய பிள்ளைகளும் குரோனஸின் வாயிலிருந்து விழுந் தனர். அதன் பின்னர் ஸியஸ் விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியானான். மறைவுலகம் அல்லது பாதாள லோகத்தை ஹேட்ஸ் தனது ஆளுகைக்குள் கொண்டு வர பொசிடான்
6

கே. எஸ். சிவகுமாரன்
கடலுக்கு மன்னனானான். எஞ்சியவர்கள் அவனுடன் கடுமை யாக மோதி மறைவுலகத்திற்கு தள்ளப்பட்டனர்.
ஒலிம்பஸ் சிகரத்திலிருந்து ஸியஸ் அரசோச்சினான். ஒலிம்பஸ் கடவுளரின் இருப்பிடமாக மாறியது. மனிதர் எதிர் நோக்கிய அனைத்து இன்னல்களையும் கடவுளரும் அனுபவித்தனர். ஆனால் ஒன்று மாத்திரம் வித்தியாசம். தேவர்கள் இறவா வரம் பெற்றவராயிருந்தனர்.
பண்டைய கிரேக்கரின் தெய்வங்கள் உண்மையில் இயற்கையே. கதிரவனின் சக்தியும் வெப்பமும் கொண்ட வனாக அப்போலோ உருவெடுத்தான். காதலுக்கும் கட்ட ழகுக்கும் உருவகமானாள் அப்ரடொயிட். இவளை விட எந்தவொரு அழகியும் பூவுலகில் தோன்றியிருக்கவில்லை. பூமித்தாய் வழங்கும் காய்களும் கனிகளும் தானியங்களும் பயன்தருவதற்குக் குறியீடாக டிமிட்டர் விளங்கினான். தீ, இடி, மின்னல், மழை, காற்று, சமுத்திரம் ஆகியனவும் உண்மையில் தெய்வங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அக்கால கிரேக்க மக்கள் நம்பினர். ஸியஸின் ஆயுதம் இடி முழக்கம் தான் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.
இறைவன் ஒருவனே என்று அக்கால கிரேக்கர் கருதா விட்டாலும் இறைவர்களில் முதல்வன் ஸியஸ் எனக் கருதினர். கிரேக்கக் கடவுளரும் மனிதரைப் போலவே தோற்றம் அளித்தனர். ஆனால் மனிதரை விடப் பலசாலி களாகவும்,பெரிய தோற்றம் உடையவர்களாகவும் இருந்தனர் என நம்பப்பட்டது.
கிரேக்க கடவுளரின் முதல்வனாக சனி பகவான் ஒரு காலத்தில் இருந்து வந்தான். அவன் ஆட்சிக் காலத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். உண்பதற்கு அவர்களுக்கு நிறைய பண்டங்கள் கிடைத்தன. அதிக வெயிலோ, அதிக குளிரோ காணப்படாததனால் உறைவிடம்

Page 10
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
அவர்களுக்குத் தேவைப்படவில்லை. மக்கள் தமக்குள் சண்டை பிடிக்காமல் நட்பாகவிருந்தனர்.
சனி பகவானின் புத்திரன் தான் ஜூப்பிட்டர் என்ற வியாழன். தந்தையைத் தோற்கடித்து அரச பீடத்தை வியாழன் கைப்பற்றியவுடனேயே தந்தையையும் ஏனைய டைட்டன்களையும் மறையுலகச் சிறையிலிட்டான். கடலின் அரசனான நெப்டியூனை ஆள்வதற்கு அனுமதித்தான். புளுட்டோ, பாதாள லோகத்துக்கு அதிபதியாக விளங்கி 66.
கிரேக்கரின் பழைய கடவுளரின் முக்கியமானவர்களாக ஜூப்பிட்டர், ஜூனோ, அப்போலோ, டயன்னா, மார்ஸ், மினேர்வா, செரேஸ் வல்கன், மேர்க்கரி, வீனஸ், நெப்டியூன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஜூபிட்டர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பெளராணிகக் கதைகளையும் நாம் பார்க்க வேண்டும்.
- sig(385Fs: O6-O6-1982

கிரேக்க புராணங்களிலும் இந்து மதக் கடவுளர் போலப் பலர்
கிரேக்க கடவுளர்களுக்கு முதல்வனாக ஜுப்பிட்டர் இருந்த காலை அவன் காமக் கிழத்தியாக ஜூனோ விளங்கி னாள். அவளே கடவுளர் ராச்சியத்தில் ராணி, ஒலிம்பஸ் கிரியிலே சதிபதிகளாகக் காட்சியளிக்கும் பொழுதெல்லாம் ஜூனோ கணவனின் இடப்பக்கமே அமருவாள் (நமது மாதொரு பாகனின் இடப்புறத்திலே தான் உமையாளும் அமருகிறாள் என்பதைக் கவனியுங்கள்). பிறப்பிறப்பு தொடர் பாக கூடல்களுக்கு ஜூனோவை தலைமை தாங்குவாள். (நமது யமதர்மராஜா ஞாபகத்துக்கு வருகிறதா?) அவளுக் கென்று தனி வாகனமும் உண்டு. அது என்ன தெரியுமா? மயிலோ மயில்தான்! (நமது வடிவேலழகனின் வாகனமும் அதுவேயன்றோ!) ஒற்றை மயிலலல்ல! இரட்டை மயில்கள்! ஜூனோவுக்கு ஒரு குறையிருந்தது. அவள் இயற்கை யிலேயே பொறாமை பிடித்தவள். கணவன் ஜூப்பிட்டர் எந்நேரமும் தன்னைத்தான் சுற்றிச் சுற்றி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பவள்.
ஜூப்பிடரோ நமது இந்திரன் போன்று விண்ணுலகப் பெண்களன்றி மண்ணுலகப் பெண்களுடன் கூடிப் போதை யடைபவன், ஜூப்பிட்டர் கலவி நாடும் காமுகனாகையால், இயோ என்ற பெண்ணுடனும் அடிக்கடி சேர்ந்து வந்தான். ஒரு நாள் கங்கையின் தீரத்திலே இயோவைச் சுகித்துக் கொண்டிருந்தான். இல்லக் கிழத்தி ஜூனோ இதைப் பார்த்து விடக் கூடாதே என்றஞ்சி கருமேகம் ஒன்றை வரவழைத்து
9

Page 11
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
தம்மிருவருக்கும் மேலாக நிறுத்தி வைத்திருந்தான் ஜ"ப்பிட்டர்.
விண்ணுலகில், தன் உப்பரிகை நிலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜூனோ, எல்லா மேகக் கூட்டங் களுமே காற்றுக்கு விரைந்து செல்ல, ஒரு தொகுதிக் கரு மேகம் அசைவுறாதிருப்பதைக் கண்டாள். அவளுக்குத் தெரியாதா, தனது கணவனின் சங்கதிகளை, ஆத்திரம் மேலிட மேகக் கூட்டங்களிடையே விரைந்து கீழே வந்திறங் கினாள். எல்லாம் தெரிந்த ஜுப்பிட்டருக்கு ஜூனோ வருவது தெரிய வந்தது. உடனேயே அவன் தன் மனதுக்கினிய வளான இயோவை ஒரு பசுவாக ஆக்கி விட்டான். அது ஓர் அழகிய வெள்ளைப் பசு,
இந்தத் தந்திரத்தை ஜூனோ அறிவாள். அவளும் விட்டுக் கொடுக்காமல், பசுவாக மாறிய இப்பெண்ணைத் தனது கணவன் நேசிப்பதைக் கண்டு எரிச்சலுற்றாள். அதைக் காட்டிக் கொள்ளாமல், பசுவின் அழகைப் புகழ்ந்து பேசினாள். அந்த வெள்ளை நிறப் பசுவைத் தனக்குப் பரிசாகத் தரும்படியும் கணவனிடம் கேட்டாள். இது என்ன பிரமாதம் என்று கூறி அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தான் அந்த உலக நாயகன்.
ஜூனோ பசுவைத் தன்னிருப்பிடம் ஒட்டிச் சென்று. அதனைக் கவனமாகக் கண்காணிக்குமாறு, ஆர்கஸ் என்ற தேவதையிடம் பணித்தாள். ஆர்கஸ் கவனமாக விலங்கு களைக் கவனித்து வருபவன். அவனுடம்பெல்லாம் கண்கள் தான். (நமது இந்திரனுக்கும் ஆயிரம் கண்களாமே.) எனவே, ஆர்கஸின் விழிப்பு காரணமாக இயோவினால் வெளியேற முடியாது போயிற்று அவளை எப்படியாகுதல் விடுவித்து விட ஜுப்பிட்டர் வேட்கையுற்றான்.
விண்ணகத் துாதுவனான மேர்க்குரியை ஜூப்பிட்டர் அழைத்தான். நூற்றுக் கண்ணனான ஆர்கஸ்ஸை எப்படி
- 10

கே. எஸ். சிவகுமாரன்
யாவது ஒழித்துக் கட்டுமாறு மேர்க்குரியைப் பணித்தான் ஜூப்பிட்டர்.
மேர்க்குரி இடையனாக வேடம் தரித்து வேய்ங்குழல் இசைத்தான். (நமது கண்ணனும் ஞாபகத்திற்கு வருகிறதா?) அவ்வினிய நாதத்தில் ஆர்கஸ் மெய் மறந்தான்.
கீதமிசைப்துடன் கதை சொல்வதிலும் கைதேர்ந்தவன் மேர்க்குரி, பின்னே கதைகளும் சொல்லத் தொடங்கினான். கதைகளை நீட்டி முழக்கிச் சொல்வதனால், ஆர்கஸ்ஸிற்குச் சில வேளைகளில் நித்திரையே வந்துவிடும். அப்படியாகவே ஒரு நாள் தனது நூறு கண்களையும் மூடி, ஆழ்ந்த துயிலில் லயித்து விட்டான் ஆர்கஸ், இது தான் சமயமென்று மேர்க்குரி வாளையுருவி ஆஸ்கஸின் தலையைக் கொய்து விட்டான்.
தனது காவலாளியின் நினைவாக ஆர்கஸின் கண்களைப் பிடுங்கித் தனது மயில்களின் வால்களில் பொருத்தி விட்டான் ஜூனோ. அது தான் மயிற் தோகையில் கண் வடிவங்கள் காணப்படுகிறதாம்’ என்பர் சில கற்பனாவாதிகள்,
ஜூனோவுக்கு ஆத்திரமும் வேறு தனது கணவனின் ஆசைநாயகியாகிய இயோ இப்போது பசுவின் வடிவத்தி லிருப்பதை பொறுக்க முடியாத ஜூனோ குளவி ஒன்றை அனுப்பி வைத்தாள். அது சுற்றிச் சுற்றி வந்து இயோவை (பசுவை) இம்சித்து வந்தது. தொந்தரவைத் தாங்க முடியாது பசு (இயோ) அல்லலுற்றது.
இயோவுக்குச் சுயரூபத்தைத் தருமாறு கணவன் மனைவியை வேண்டியதுடன் இனிமேல் இயோவைப் பார்ப்பதில்லை என்றும் உறுதியளித்தான். இயோ மீண்டும் பெண்ணானாள்.
இது கிரேக்கரின் பண்டைய புராணக் கதைகளுள் ஒன்று.
- 6igGssf: O4 - O7 - 1982
11

Page 12
பண்டோராவின் பெட்டி
மனித இனத்திற்கு அழல் கண்டு தந்த மீமனித மாவீரன் தான் புரோமித்தீயஸ். இவன் ஒரு "டைட்டன்" கிரேக்க புராண மரபில் முற்பெரும் தேவனான யூரேனஸ்"க்கும் கே என்ற தேவிக்கும் பிறந்த முன் மூத்த தேவர்களில் ஒருவனை டைட்டன் என்பர். டைட்டனைத் தமிழில் தைத்தியன் என்றும் கூறுவர். கிரேக்க பழமை மரபில் தேவர்களால் வென்றழிக்கப்பட்ட தேவருக்கு முற்படு பெருந் தேவ கணத்தவனே தைத்தியன்.
தைத்தியன் ஒருவனுக்கு புரோமித்தீயஸ், எப்பிமீத்தீயஸ் என்று இரு புதல்வர்கள் இருந்தார்கள் ஜூப்பிட்டர் தைத்தியர் களைச் சிறைக்கு அனுப்பினான் என்று கண்டோமல்லவா? ஆனால் இவ்விருவரையும் அவன் விட்டு வைத்திருந்தான். சனியின் ஆட்சியில் மக்கள் கண்ட மகிழ்ச்சியையும் தத்துவத்தையும் ஜூப்பிட்டர் ஆள்கையில் பூவுலகத்தோர் கண்டதில்லை என உணர்ந்த புரோமித்தீயஸ் துயருற்றாள். அவர்களுக்கு உதவ விரும்பிய புரோமித்தியஸ், அழலை (நெருப்பை)க் கொணர்ந்து தனது கணத்தவருக்குச் கொடுத் தால் அவர்கள் சமைத்துண்ணக் கூடியதாக இருக்கும் என்று நம்பினான். அதற்கு உதவுமாறு ஜூப்பிட்டரிடமும் கேட்டுப் பார்த்தான். இது தனக்கு ஆபத்தாக முடியும் என்று பயந்து ஜூப்பிட்டர் மறுத்து விட்டார்.
இதற்கிடையில் ஒரு நாள் கடற்கரை வழியாக நடந்து சென்றான். செல்லும் வழியில் ஒரு நாணற் கயிற்றைக் கண்டெடுத்தான், எடுத்து தினகரன் உதிக்கும் கிழக்கே
- 12

கே. எஸ். சிவகுமாரன்
சென்று சூரியனுக்கெதிரே பிடிக்க ஒரு முனையில் தீப் பிடித்தது. அதனைக் கொண்டோடிச் சென்று தனது மக்க ளிடம் ஒப்படைத்தான் புரோமித்தீயஸ், குளிரில் நடுங்கி யிருந்த மக்களுக்கு இதமூட்ட அவன் வழங்கிய தீ பயன ளித்தது.
இது மட்டுமல்ல! வீடு கட்டவும், வன விலங்குகளிடம் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்றும், ஆயுதங்கள், கருவி களை எவ்வாறு செய்வது என்றும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். மக்கள் புளகாங்கிதம் அடைந்தது கண்டு அவன் ஆனந்தமுற்றான்.
புரோமித்தீயஸ் தனது கணங்களுக்கு நெருப்பு வழங்கி உதவினான் என்றறிந்த ஜுப்பிட்டர் வெகுண்டெழுந்தான். தைத்தியன்களைத் தண்டிக்க முடிவு செய்தான் ஜூப்பிட்டர். அவன் என்ன செய்தான்? களி மண்ணைக் கொண்டு பெண்ணுருவம் ஒன்று செய்யும்படி கொல்லுலைக் கடவுள் வல்கனைப் பணித்தான். அவனும் தான் படைத்த உரு வத்தை விண்ணுலகம் எடுத்துச் சென்றான். கடவுளர் அப் படைப்பை “பண்டோரா” என்றார்கள். ஜூப்பிட்டர் உயிர் கொடுத்தான். வீனஸ் அழகூட்டினாள். ஏனைய கடவுளரும் தத்தம் வழிகளில் பண்டோராவை செழுமையுற உதவினர். மனுக் குலத்தை நேசித்த புரோமித்தீயஸ். எப்பிமீத்தீயஸ் ஆகிய இரு சகோதரர்களுக்கும் அன்பளிப்பாகப் பண்டோரா வைக் கடவுளர் அனுப்பி வைத்தனர். கடவுளர் தன்னை வெறுப்பதை அறிந்திருந்த புரோமித்தீயஸ் இந்த அன் பளிப்பை ஏற்க மறுத்தான். ஆனால் அவனது சகோதரன் எப்பிமித்தீயஸ் பண்டோராவை விரும்பித் தனது இல்லத் திற்கு அழைத்துச் சென்றான். அவனுடைய வீட்டிலேயே அழகிய படங்களடங்கிய ஒரு பெரிய பெட்டி இருந்தது.
ஜ"ப்பிட்டரின் தூதுவனான மேர்க்குரியே இந்தப் பெட்டியை அங்கு கொணர்ந்து வைத்தவனாவான். கடவுள
13

Page 13
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
ரின் ரகசியம் ஒன்று அப்பெட்டிக்குள் இருப்பதனால் அத னைத் திறக்க வேண்டாம் என்று மேர்க்குரி, எப்பிமீத்திய ஸிடம் கூறிச் சென்றான்.
பண்டோராவுக்கோ அப்பெட்டியைத் திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெருகலாயிற்று. அதனைத் திறந்து பார்க்க தினமும் அனுமதி கோரினாள். எப்பிமித்தியஸ் மறுத்து வந்தான். ஒரு நாள் தனித்திருக்கும் பொழுது பெட்டியைத் திறந்து பார்க்க பண்டோரா முடிவு செய்தாள். பெட்டியின் மூடியைத் திறந்ததுதான் தாமதம், துன்பம், துயரம், நோய் போன்றவை பெட்டிக்குள் இருந்து வெளியே பாய்ந்து உலகம் எங்கும் பரவின. பண்டோரா பயந்து பெட்டியை மீண்டும் மூடிவிட்டாள்.
சிறிது நேரத்திற்குப் பின் பெட்டியுள் இருந்து லேசாகச் சத்தம் கேட்டது. என்னை வெளியே விட்டு விடு என்றும், ரகசியம் பேசியது ஒரு குரல், பண்டோரா முதலில் மறுத்தா லும் பின்னர் இரங்கி, பெட்டியை மீண்டும் திறந்தாள். அதனுள்ளிருந்து நம்பிக்கை வெளியேறியது.
துன்புறும் மக்களுக்குத் தென்பையும் உற்சாகத்தையும் ஊட்டி வந்தது நம்பிக்கை. மக்கள் சிறிது நம்பிக்கை கொண்டனர். கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளவும் எதிர் காலத்தில் நம்பிக்கை வைக்கவும் மக்கள் கற்றுக் கொண்டனர்.
இதற் கிடையில் சூரியனிடம் இருந்த தீயைப் பெற்ற தற்காக புரோமித்தீயஸைத், தண்டிக்க விரும்பினான் ஜ"ப்பிட்டர். உயர்ந்த மலைச் சிகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லுமாறும் சங்கிலியால் அவனைக் கட்டித் தூங்க விடுமாறும் கட்டளையிட்டான். அங்கு காலங்காலமாக புரோமித்தீயஸ் தூங்கிக் கொண்டிருந்தான். ஹேர்க்கியூலஸ் வந்துதான் புரோமித்தீயஸை விடுவித்தான்.
- 6fg(385Fish : 2O-O6-1982
14

கிரேக்கக் கடவுளரும் காவியங்களும்
பண்டைய கிரேக்க கடவுளரை நேரிற் கண்டிலராயினும் விண்ணகத்துத் தேவதைகள் நிஜமாகவே நிழலாடினர் என்று நம்பினர்.
தென்னாடுடைய சிவன், கைலயங்கிரியிலே உறைந்து ளன் என்று இந்து மகன் நம்பினான் ஆயின், கிரேக்கக் கடவுளர் ஒலிம்பஸ் சிகரத்தில் வாழ்ந்தனர் என்று கிரேக்கப் புதல்வன் கருதினான். அர்த்தமுள்ள இந்து மதத்தில் சிற்சில தெய்வங்கள் இருப்பது போல கிரேக்கரும் பற்பலவற்றிற்கு விசேட தேவதைகளைக் கொண்டிருந்தனர்.
உதாரணமாக அத்தீனி பட்டணங்களுக்கான தேவதை. பயிர்களுக்கான தெய்வம் டெமீட்டர்.ஆண்களின் தொழில் களைக் கவனிக்க ஒரு கடவுள்-பெயர் ஹெபேய்ட் டோஸ், காதற் கடவுள் நாமம் அப்ரொடைட்.
கடவுளருக்கும் பூசையும் பலியும் சமர்ப்பித்துத் தம் காரியங்களைச் சாதித்துக் கொண்டனராம் அக் கிரேக்க மக்கள். இக் கடவுளர்க்கெல்லாம் கடவுள்தான் ஸியாஸ்.
ஸியாஸ் நமது சிவனைப் போன்றவர். அதே சமயம் அவர் இடி, மின்னல் ஆகியவற்றின் அதிபதியுமா வார்.அவருக்கு இரு தம்பியரும் உண்டு. ஒருவர் பெயர் ஹேட்ஸ். மறைவுலக மன்னர் அவர் மற்றவர் பெயர் பொஸிடொன். சமுத்திரராஜன் அவர் மற்றைய கடவுளர் ஒருவருக்கு ஒருவர் உறவினர்.
15

Page 14
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
கிரேக்க கடவுளர் பற்றிய ருசிகரமான வேறு தகவல் களும் நிறைய இருக்கின்றன.
கிரேக்க காவியங்களின் கதைப் போக்கை அறியு முன் நாடகம் பற்றிச் சில துணுக்குகள்.
மதுரச மன்னன் டயோனிசஸ். அவனைக் கெளரவிக்க நடைபெற்ற சமய விழாக்களின் ஒரம்சமாகவே நாடகங்கள் அந்நாட்களில் நடத்தப்பட்டன. வட்டக் களரியில் பார்வை யாளர் சுற்றி வர அமர்ந்திருக்க, நடிகர் குழாம் பா ஒதி நர்த்தனம் புரிந்ததாம். பின்னர்தான் நடிகர்கள் மேடையில் நடித்துக் காண்பிக்க கிரேக்க மேடை வளர்ச்சி பெற்றதாம். நாடகக் கதை நகர நகர கோரஸ் என்ற சூத்திரதாரி விளக்க வுரை செய்தானாம்.
கி.மு.525 ஆம் ஆண்டளவில் பிறந்த ஈஸ்கிலஸ் என்ப வரையே மேனாட்டு நாடகத் துறைத் தந்தை என்பர். இருவர் மாத்திரம் நடித்துக் காண்பிக்கத்தக்க விதத்தில் இவருடைய நாடகங்கள் அமைந்தன. “கட்டறுத்த புலோமித்தியஸ்” என்பது இவரது புகழ் பெற்ற நாடகமாகும்.
இவரைத் தொடர்ந்து வந்த ஸோபாக்கிஸின் தமது நாடகத்தில் மூன்றாவது நடிகரை அறிமுகப்படுத்தினார். “மன்னன் ஈடிப்பஸ்”, “அன்டிகொணி”, “எலெக்ட்ரா" போன்றவை இவருக்குப் புகழ் தந்த நாடகங்கள்.
கி.மு.480ஆம் ஆண்டளவில் பிறந்த ஈயூரிப்பிடிஸ் மற்றொரு கிரேக்க நாடகசிரியராவார். மீடியா,இபிஜினியா, த பாக்கே ஆகியன இவருடைய நாடகங்களில் நன்கறியப் பட்டவை.
இந்த நாடகங்கள் எல்லாம் கிரேக்க மன்னர்களையும் ளவரசர்களையும் பாத்திரங்களாகக் கொண்டவை. தமது வாழ்நாட்களுக்கு முன் வாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டவர் கள் பற்றியே இந் நாடக ஆசிரியர்கள் சித்திரந் தீட்டினர்.
16 --س

கே. எஸ். சிவகுமாரன்
இன்பியல் நாடகங்களையும் கிரேக்கர் எழுதினர். அரிஸ் டோபிளஸ் இவர்களிற் பெயர் பெற்றவர்."தவளைகள்", “லிசிஸ்ட்ரா", "குழவிகள்” ஆகியன இவருடைய நகைச்
சுவை நாடகங்களாகும்.
இனி கிரேக்க காவிய கர்த்தா ஹோமருக்கு வருவோம்.
பண்டைய கிரேக்கத்தின் வீரயுகக் காவியப் பாடல்கள் இரண்டை உலகுக்குத் தந்த மகாகவி ஹோமர் கி.மு. 850 ஆம் ஆண்டளவில் ஆசியாக் கண்டத்திலே பிறந்தார் என்று கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோட்டஸ் கூறுவார். கண்ணிழந்த ஹோமர் நாடோடியகத் திரிந்து தன் காவியத் தைப் பாடிக் காண்பித்தார் என்பர். ஆயினும் சமகால விமர்சகர் ஹோமர் எக்காலத்தில் வாழ்ந்தார் என்று திட்ட வட்டமாகக் கூற முடியாது என்றும் அவர் தான் உண்மையில் இம் மகா காவியங்களை இயற்றினாரா என்று அறுதியிட முடியாது என்றும் தெரிவிக்கிறார்.
பாணர் பலர் நினைவில் நின்ற பல்வேறு கர்ண பரம்பரைக் கதைகளைத் தத்துதவ கி.மு.790 ஆம் ஆண்டள வில் காவியங்களாக "இலியட்”டும், "ஒடிசி’யும், தொகுக்கப் பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
ட்ரோய் நகரத்தினருக்கும் கிரேக்க இளவரசர்களுக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பத்து வருடப் போர் பற்றி இலியட் காவியம் கூறுகின்றது.
(நமது மகாபாரதப் போர் போல இது.) இந்தப் போர் ஏன் நடைபெற்றது?
ஸ்பார்டா தேசத்தரசன் மெனிலொஸ், அவன் அழகு மனைவி பெயர் ஹெலன். இவள் மீது மோகம் கொண்டான் ட்ரோய் நகரத்து இளவரசன் பரிஸ். அவளை மயக்கிக் கணவனிடம் இருந்து பிரித்துக் கொண்டு வந்து விடுகிறான்
17

Page 15
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
பரிஸ். (இராவணனும் சீதையும் ஞாபகத்திற்கு வருகிறதா?) கிரேக்க இளவரசர் அனைவரையும் அணைத்துப் போருக் குக் கிளம்பினான் மெனிலோஸ். ட்ரோய் நகரத்திற்குள் பிரவேசிப்பது எவ்வளவு இலகுவானதல்ல. எனவே தான் மரக் குதிரை அமைக்கப்பட்டு அதனுள் போர்வீரர்கள் ஒளிந்திருந்து தம் காரியத்தைச் சாதித்தனர்.
- வீரகேசரி : 1982
18

மூத்த முதல் வரலாற்றாசிரியன் ஹெரோடோட்டஸ்
உலகின் முதலாவது வரலாற்றாசிரியன் ஹெரோ டோட்டஸ் தான் என்று பலர் கூறுகின்றனர். கி.மு.484 அள வில், இவன் கிரேக்கத்திலுள்ள களிச்சாரல் என்ற இடத்தில் பிறந்தவன் என்று நம்ப இடமுண்டு. பெரிக்கிளஸ் மன்னனின் பொற்கால ஆட்சியில், பல நாடுகளுக்கும் சென்று அனு பவங்களைப் பெற்றுத் தனது வரலாற்று நூலை ஹெரோ டோட்டஸ் தந்துள்ளார். ஈஸ்கிளஸ், ஸோபாக்கிளிஸ், ஈயூரிப் பிடஸ், ஸோக்கிரட்டிஸ், ஹிப்போகிரேட்டிஸ் போன்ற கிரேக்க முன்னோடிகள் இவனது சம காலத்தவர் என்பர்.
இவன் எழுதிய வரலாறு நவீன கண்ணோட்டத்தில், விஞ்ஞான அணுகுமுறை கொண்டதாக இல்லை. இருந்த போதிலும் ஐதீகக் கதைகள், வரலாற்றுச் செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கி பல தகவல்களை இவன் தருகிறான். எகிப்திய மீனோஸ் நான்காவது வம்சம், பெளத்த ஜாதகக் கதைகள், ஆசிரிய, ஹிட்டைட் சாம்ராஜ்யங்கள் போன்ற பண்டைய வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கி யுள்ளன. ஆபிரிக்க நைஹா நதி மீது பீனிசியர்கள் சென்ற விதம், மத்திய ஆசியாவின் பழக்கவழக்கங்கள், பெற்றோரை விழுங்கும் சாதியர், கருங்கடல் பிரதேசக் கதைகள், டெல்பிக் கதைகள், அத்தென்ஸ் ஜனநாயக முறைகள், ஸ்பாட்டா வரலாற்று போன்ற பல வரலாற்று விபரங்களை இவனு டைய நூல்களில் காணலாம். சாதி, மொழி, பழக்க வழக்கங்
19

Page 16
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
கள், உணவு போன்ற தலைப்புகளில் மனிதன் உளம் உடல் இரண்டும் சார்ந்த முழு வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு முன்னோடியாகவும் ஹெரோடோட்டஸ் திகழ்ந்திருக்கிறான். கிரேக்க-எகிப்திய சமயக் கிரியைகளுக்கிடையிலான ஒற்றுமைகளை அவன் எடுத்துக் காட்டியுள்ளான். அதே சமயம் நம்ப முடியாத கட்டுக் கதைகளையும் அவன் சேர்த்துள்ளான். விமர்சனக் கண்ணோட்டத்தில் வரலாறு எழுதியவன் என இவனைக் கருத முடியாது.
வரலாற்றின் பயன்பாடு மூன்று என ஹெரோடோட்டஸ் வகுத்தான். அவையாவன:
.
மனித செயல், மானிடப் பயன் மதிப்பு ஆகியன பற்றிய விபரங்கள் அழிந்தொழிந்து போகாமல் பேணப்படல்.
கிரேக்கரோ, காட்டுமிராண்டியினரோ, மேலைத் தேயத்தவரோ, கீழைத்தேயத்தவரோ- எவருடைய தாயினும் அரும்பெருஞ் செயல்கள் பிற் சந்ததியின ரின் நலன் கருதி எழுத்தில் பொறித்து வைக்கப்படல்.
இத்தகைய அரும்பெருஞ் செயல்கள், தற்செயலாய் இடம் பெறுவதில்லை. ஏதோ சில நோக்கங்களுக் காகவே இவை இடம்பெற்றுள்ளன. இவற்றை நுணுகி ஆராய்தல் பழமையிலிருந்தே புதுமை பிறக் கிறது. எதிர்கால வழிகாட்டியாகப் பழமை அனுபவங் கள் தொழிற்படுகின்றன.
ஹெரொடோட்டஸின தத்துவம் என்ன?
சாசுவதமற்ற இவ்வுலகிலே மனித உயிரும் அழியக் கூடியது. பெருமை பிடித்தவர்கள். பேராசை பிடித்தவர்கள்
2O

கே. எஸ். சிவகுமாரன்
கடவுளரின் பொறாமைக்கு உட்பட்டு அழிந்து போவார்கள். தெய்வத்தில் நம்பிக்கை கொண்டிருந்தான் ஹெரோடோட்டஸ் என்பது இங்கு தெளிவாகிறது. “ஹியூப்ரிஸ்", "அட்டே" "பிதொனோஸ்” ஆகிய கிரேக்கச் சொற்கள் இதனையே விளக்கும்.
சில உதாரணங்கள் : யுத்தத்தை தொடர வேண்டாம் என ஆர்டாபானுஸ் ஸேர்ஸெஸ் என்பவனுக்கு ஆலோசனை கூறுகிறான். வீண் பெருமை, செல்வம், அதிகார பலம் ஆகியவற்றிற்கும், தாழ்ந்தோரின் மனநிறைவுக்கும் இடை யிலான வேறுபாட்டை ஸொலான் க்ரோஸஸ்"க்கு எடுத்துக் கூறுகிறான். மனிதன் இறந்த பின்னரே மகிழ்ச்சியடைகிறான் என்பது இந்த எடுத்தியம்பலில் ஒரு வாசகம். பொலிக் ரேட்டிஸ் என்பவன் தனது மோதிரத்தை கடலில் எறிந்தும் அது ஆச்சரியம் தரும் விதத்தில் மீண்டும் அவன் கைக்கு கிடைக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிர்ஷ்டத் துக்கு மேல் அதிர்ஷ்டம் அவனுக்கு கிடைக்கிறதோ? அந்தோ, பின்னர் தெய்வ வாய்மொழியின் பேரில் அவன் கழுவேற்றப்பட்டுக் கோரமாக மடிகிறான்.
நடப்பது நடந்தே தீரும். விதி என்று நாம் கூறுவோமே. இதுவும் ஹெரோடோட்டஸின் தத்துவம் தான். பாரசிகர்களின் படையெடுப்பு தவிர்க்க முடியாததொன்று என ஸேர்சஸ் ஆர்டா பானுஸிடம் கூறுவது அதனாற்றான். அத்திக்காவில் பாரசிகர்களின் மேலாதிக்கம் இருந்தே வரும் என்ற நிமித்தம்.
O O. O.
ஹோமரின் மரபிலேயே ஹெரோடோட்டஸ"ம் தனது வரலாற்றை எழுதினான். அவன் ஒரு கலைஞனாக நின்றே சரித்திர நிகழ்ச்சிகளைக் கற்பனை பண்ணியும் எழுதினான். ஹோமருடன் போட்டி போட்டுக் கொண்டு எழுதியது போல வரலாற்றில் பல அம்சங்களை அவன் உட்படுத்தினான்
21

Page 17
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
என்று டினிசிஸ் கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே விமர்சித்திருக்கிறான். இது உண்மைதான் காப்பிய வடிவிலே, பிரமாண்டமான வரலாற்றுச் சூழலிலே, கிழக்கும் மேற்கும் மோதுவதனால் ஏற்படக்கூடிய கலாசார முரண் பாட்டுச் செறிவிலே, பல நாட்டுச் சரித்திரங்களை அவன் தனது நூலிலே விபரித்துக் கூறினான். கவிதை நடையிலே ஒருமைப்பாடு, நாடகப் பாணியிலமைந்த எடுத்துரைப்பு. விரிவுரைகள், விவாதங்கள், சண்டைக் காட்சி விவரணை களை, தெய்வ தலையீடு ஆகிய உறுதிப் பொருள்களை உள்ளடக்கியது காரணமாகவும் ஹோமர் மரபிலே ஹெரோடோட்டஸ் எழுதினான் என்று கூற வைக்கிறது.
- வீரகேசரி : 12-02-1984
22

விஞ்ஞான ரீதியாக விளக்கிய வரலாற்றாசிரியன் தூஹிடிடெஸ்
பண்டைய கிரேக்க நாட்டிலே அதென்ஸ் ஸ்பார்டா ஆகிய இரு அரசுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை யாய் விளங்கின. இவ்விரு அரசுகளும் நடத்திய ஏகாதிபத்தி யப் போர் 27 வருடங்களாக இடம் பெற்றது. இப்போரிலே அதென்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்த மகா யுத்தம் பற்றி பெலபொன்னிஸிய யுத்தம் பற்றி கூடியவரை உண்மைத் தகவலடங்கிய ஒரு வரலாற்றை துாஸிடிடெஸ் (கி.பி.460 - கி.பி.400) என்பவன் எழுதி முடித்தான். போரிலே நிவாரண உதவிப் படைத் தளபதியாக இவன் பணி புரிந்தி ருந்தான்.
இந்த நூலிலே பெரும் பகுதி சிராக்கியஸ் படை யெடுப்புப் பற்றிய விவரணமாக அமைந்திருக்கிறது. ஹெரோடோட்டஸ் போன்று கற்பனை தழுவியதாக எழுதா மல், சரியான விபரங்களைத் தொகுத்துத் தந்துள்ளான். குறிப்பாக டசிட்டஸ் என்ற மன்னன் பற்றிய விபரங்கள் உயிர்த்துடிப்பாகத் தரப்படுவதனால் நம்பும் தன்மையைப் பெறுவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருந்த போதிலும் ஆழமற்ற, மேம்போக்கான வரலாற் றுப் பார்வையை இவனிடமும் காண முடிகிறது என்று பிற்கால விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இவன் பண்பாட்டு வரலாற்றை எழுதும் நோக்கம் கொண்டவன் அல்லன்.
23

Page 18
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
தார்மீக நெறிகளை வலியுறுத்தியவனுமல்லன். அதென்ஸ், ஸ்பார்டா ஆகிய அரசுகளுக்கிடையே அரசியல் பொருளாதாரம் போன்றவை வேறுபட்டிருப்பதைக் கண்ட அவன் அவற்றைச் சுட்டிக் காட்டும் பொருட்டு இந்த வரலாற்றை எழுத முன்வந்தான் என்பர்.
ஸ்பார்டர்கள் தரையிலும். அதீனியர்கள் கடலிலும் போரிடுவதில் அசகாய சூரர்களாக விளங்கினர். இந்த வேறு பட்ட யுத்த முறைகளைக் கொண்டு அவர்கள் மோதிய விதத்தை உள்ளது உள்ளபடி கோவையாக்கி இந்த வரலாற்றை துாஸிடிடெஸ் தந்துள்ளார். மனித செயல் களுக்கு இறைவன் பொறுப்பாக மாட்டான் என்பது துாஸிடி டெசின் விளக்கம். விளைவுகளுக்கெல்லாம் மனிதனே பொறுப்பு. கடவுள் அல்ல என்பதைத் தனது வரலாற்று நூல் மூலம் ஆசிரியன் நிரூபிக்கின்றான்.
அரசியலுக்கும், மனித நாகரிக வளர்ச்சிக்கும் அதிகார பலம் அவசியம் என்பது அவன் கண்ட உண்மை.
அழகை நாம் ஆராதனை செய்கிறோம். அதே சமயம் மனிதத் தன்மையும் புருஷோத்தமும் பலமளிக்கும் விதத்தில் சிக்கன வழிகளில் மனதையும் பண்படுத்த விரும்புகிறோம். இதுவும் துாஸிடிடெசின் கூற்று துாஸிடிடெஸ் தான் எடுத்துக் கொண்ட பொருளான பெல போனிஸிய யுத்தத்தை விஞ்ஞான ரீதியாக விபரிக்கையில் அதென்ஸ் நோக்கிலும், ஸ்பார்ட்டா நோக்கிலும் பாரபட்சமின்றி தனது எழுத்தை மேற்கொண்டான். யுத்தம் நடைபெறத் தொடங்கிய நாள் தொடக்கமே அவன் குறிப்பேடுகளில் விபரங்களை எழுதி வைத்தான். யுத்தத்தில் ஈடுபட்டவர்களை நேரிற் சந்தித்துப் பேட்டி கண்டான். தான் கண்ணாரக் கண்டதை எழுதினான். அக்ஸிபிடெஸ் என்பவனின் எடுத்துரைப்புகள் துாஸிடி டெஸ்க்குப் பெரிதும் உதவின. ஒப்பந்தங்கள், உடன்படிக்கை கள் போன்றவற்றினைச் சார்ந்து நிற்பவையாகவே வாசகங் களைச் சேர்த்துக் கொண்டான்.
சமயம், கற்பிதம், கற்பனை போன்றவற்றினை சார்ந்து நிற்காமல், உண்மையான விபரங்களை மாத்திரமே தேர்ந்து
24

கே. எஸ். சிவகுமாரன்
வரலாற்றுச் செய்தி ஆக்கினான். விமர்சனப் பாங்கு அவனுக் கிருந்தது. உதாரணமாக "ட்ரோஜன்” யுத்தத்தை மையமாக வைத்து மகாகவி ஹோமர் தனது "இலியட்" காப்பியத்தைப் படைத்தபோதும் ஹோமர் தனது காலத்திற்குரிய தகவல் களைக் கொண்டே தனக்கு முந்திய காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஹெலனின் கதையைக் காவியமாகப் பாடினான் என்று துாஸிடிடெஸ் குறிப்பிட்டிருக்கிறான். அதாவது, வரலாற்றுச் செய்திகளுக்கு ஹோமரை முற்றாக நம்ப முடியாது என்பது இதன் பொருள்.
பெரிக்கிளிஸின் மூன்று பேச்சுக்கள் உட்பட 40 பேச்சுக் களைத் தனது நூலில் இடம்பெறச் செய்துள்ளான் இந்த வரலாற்றாசிரியன்.
ஹெரோடோட்டஸ் என்ற வரலாற்றாசிரியனுக்கும் துாஸிடி டெஸ் என்ற வரலாற்றாசிரியனுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்கள் என்ன?
முன்னவன் கிரேக்கத்தின் பழம் பெருமை பேசினான். வீரதீரச் செயல்களை விபரித்தான். பின்னவன் யுத்தத்தின் கோரத்தை யதார்த்தபூர்வமாக எடுத்துக் காட்டினான். காரண காரியத் தொடர்பை விளக்கினான்
வீண் ஆணவம் காரணமாக கிரேக்கர் அழிந்த விதத்தை எடுத்துக் கூறினான்.
முன்னவன் கிரேக்க விஸ்தரிப்பு காலகட்டத்தில் கொழுந்து பின்னவன் கிரேக்க வீழ்ச்சியின் வரலாற்றா
ரியன்.
முன்னவன் குழந்தை மனப்பாங்குடையவன். பின்னவன், விஞ்ஞானக் கண்கொண்டு, தருக்க ரீதியாகச் சிந்திப்பவன். முன்னவன் ஹோமர் வழி வந்தவன். பின்னவன் ஈஸ்கிஸஸ். ஸோபாக்கிஸிஸ் போன்ற கிரேக்க நாடகாசிரியர்கள் பாங்கைச் சார்ந்தவன்.
- 6G3sFff: O4-03-1984
25

Page 19
ஈடிப்பஸ் கொம்ப்ளக்ஸ்
ஈடிப்பஸ் கொம்ப்ளக்ஸ்’ என்று உளவியலில் வரும் பதம் கிரேக்க பெளராணிகக் கதைகளுடன் சம்பந்தப்பட்ட தாகத் தான் இருக்கவேண்டும். அப்படியாயின் "ஈடிப்பஸ்” என்றால் என்ன? அல்லது யார்?
ஈடிப்பஸ் ஒருவனின் பெயர், தீப்ஸ் ராஜ்ய மன்னன் லேயஸின் மகன்தான் அவன். தாய் பெயர் ஜொக்காஸ்டா. ஈடிப்பஸ் பிறந்தபொழுது ஆரூடம் கணித்தவர்கள் கூறினார் கள். இவன் தந்தையைக் கொன்று தாயை மணம் முடிப்பான் என்று. இதையறிந்த தந்தை லேயஸ், சிசுவின் இரு பாதங் களையும் கயிற்றினால் கட்டி மலையடிவாரமொன்றில் விட்டு விட்டான். விளைவு பாதங்கள் வீங்கின. இதைக் காரணமாகக் கொண்டு குழந்தைக்கு ஈடிப்பஸ் எனப் பெயரிட்டனர். கிரேக்க மொழியில் ஈடிப்பஸ் என்றால் "பாதம் வீங்கியவன்" என்று அர்த்தமாம். தனிமையில் விடப்பட்ட ஈடிப்பஸ், அதிர்ஷ்டவசமாக இடையன் ஒருவனால் கண்டெடுக்கப்பட்டு கொரிந்த் ராஜ்யத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அங்கு குழந்தையற்ற பொலிபஸ் என்ற மன்னனும் மனைவியும் "ஈடிப்பஸ்"ஸை வளர்த்து வந்தனர். ஈடிப்பஸ் வளர்ந்ததும், தனது வருங்காலம் எப்படி அமையப் போகிறது என்று அறிந்தான். அதாவது, தனது சொந்தத் தந்தையைக் கொன்று தாயைச் சேரப் போவதை. இதையறிந்த ஈடிப்பஸ் பரபரப் படைந்து கொரிந்தை விட்டு ஓடினான்.
ஒடுங்கிய பாதையூடாகத் தேரில் அவன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்ப்புறத்தில் மற்றொரு தேரில்
26

Ga. erstö. ésag5LDngsst
மன்னன் ஒருவன் வருவதைக் கண்டான் ஈடிப்பஸ். இரு தேர்களும் செல்வதற்கு இடம் போதாமையால் இரு மன்னர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஈடிப்பஸ் மற்றைய மன்னனை அடித்துக் கொன்றான். இறந்தவன் வேறு யாருமல்லன். அவன் சொந்த் தந்தையான மன்னன் லேயஸ் தான். இது ஈடிப்பஸ்ஸுக்குத் தெரியாது.
ஈடிப்பஸ் மேலும் தனது பயணத்தைத் தொடர்ந்து தீப்ஸை அடைந்தான். அங்கு ஒரு சம்பவம் நடைபெற்றது.
சிங்கத்தின் உடலும் சிறகுகளைக் கொண்ட முலைகளை யும், மனிதத் தலையும் கொண்ட பெண்ணொருத்தி போவோர் வருவோரிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விடுவாள். அந்தக் கேள்வி இது தான்: "நான்கு பாதங்களும் ஒரு குரலுமுடைய ஒன்று, இரு பாதங்களை இறுதியில் மூன்று பாதங்களை உடையதாக மாறுகிறது அது என்ன?” இந்தக் கேள்விக்குப் பதிலளிக்காதவர்களை அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவாள்.
ஈடிப்பஸ்ஸிடமும் இந்தக் கேள்வியை அவள் கேட்டாள். ஈடிப்பஸ் அதற்குப் பதிலளித்தான். அக்கேள்விக்குச் சரியான விடை இதுதான்,'மனிதன்' பதில் சரியாக அமையவே. அந்த அதிசயப் பிறவி தான் இருந்த கற்பாறையினின்று பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டது.
இப்பிறவியின் கேள்விக்குச் சரியாகப் பதில் அளித்தமை யால், தீப்ஸின் மன்னனாக அவன் முடி சூட்டப்பட்டான். கணவனை இழந்த ஜொக் காஸ்டா, புதிய மன்னன் ஈடிப்பஸ் ஸின் மனைவியானாள். அதாவது தாய் தனையனை மணந்தாள். ஆனால் இருவருக்குமே தமது உண்மையான உறவு தெரிந்திருக்கவில்லை.
காலங்கள் ஓடின. ஒருநாள் ஈடிப்பஸ்ஸைக் கண்டெடுத்த இடையன் தீப்ஸுக்கு வந்தான். வந்து அவன் வளர்ப்புத்
27

Page 20
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
தந்தையாகிய பொலிப்பஸ் இறந்துவிட்டதனால் கொரிந்த் ராஜ்யம் ஈடிப்பஸ்ஸினுடையதே என்று கூறினான். ஈடிப்பஸ் ஸைத் தான் கண்டெடுத்த கதையையும் இடையன் மன்னன் ஈடிப்பஸ்ஸுக்கு எடுத்துக் கூறினான் இதைக் கேட்ட ஜொக்காஸ்டா பதறிப் போனாள். தன் சொந்த மகனையே மணந்ததை அறிந்த அத்தாய் தூங்கிச் செத்தாள். ஈடிப்பஸ் அவமானத்தால் குன்றிப் போனான். வாளை எடுத்துத் தன் கண்ணைக் குத்திக் கொண்டான்.
ஈடிப்பஸ் தமது நாட்டில் மேலும் இருந்தால் இழவே வந்துவிடும் என்றஞ்சிய தீப்ஸ் மக்கள் அவனை நாடு கடத்தினர். கண்ணிழந்த கயவன் என்ற பேருடன் துன்பங் களை அனுபவித்துத் தேசாந்தரியானான் ஈடிப்பஸ். அவனுடன் கூடவே அவனின் மூத்த மகள் அன்டிகொனியும் சென்று வரலானாள். ஈற்றில் அவன் ஏதென்ஸை அடைந் தான். அங்கு அந்த ராஜ்யத்து மன்னன் தீஸியஸ் தனது அரண்மைைனயில் ஈடிப்பஸ்ஸுக்குப் புகலிடம் அளித்து வந்தான். சிறிது காலத்தின் பின் ஈடிப்பஸ் காலமானனான்.
ஈடிப்பஸ்ஸின் இந்தச் சோகக் கதை ஒரு துர்ப்பாக்கிய மான கதையே. தாயை அவன் அறியாமலே மணந்து புணர்ந்தான். தாய் மேல் அளவுக்கு மீறிய பற்று இருப்பதை ஈடிப்பஸ் கொம்பளெக்ஸ்’ என்கிறார்கள் உளவியலாளர். இளவரசன் ஹம்லெட்டுக்கும் இந்தத் தாய் மோக மனப் பான்மை இருந்தது என்பர் சில மேலைநாட்டு விமர்சகர்கள்.
தினகரன் வாரமஞ்சரி
28

ஹெஸியோடின் வேலைகளும் நாட்களும்
பண்டைய கிரேக்கத்திலே, கி.மு. எட்டாம் நூற்றாண்டு இறுதியிலே ஹெஸியோட் என்றொரு கவிஞன் வாழ்ந்து வந்தான். உலக மகாகவி ஹோமருக்குப் பின் பிரகாசித்த இவன் ஒரு மக்கள் கவிஞன் எனலாம். வாழ்க்கைப் போராட் டத்தின் பல அம்சங்களை இவன் தனது "வேலைகளும் நாட்களும்” நூலில் தீட்டினான். ஹோமர் வீரயுகத்தை போற்றிப் பாடினால், அம்மரபுக்கு மாறான விதத்தில், பிரத்தி யட்சமாக விவசாயி அனுபவிக்கும் கடின வாழ்க்கையைச் சித்திரித்தான். கடும் உழைப்பாளிகளைப் பற்றிப் பாடிய ஹெஸியோட் போரை வெறுத்து அமைதி நிலவக் கவிதை சமைத்தான். செல்வந்தரை விடுத்து வறியவர்களைக் கதா நாயகர்களாகக் கொண்டான் அவன். கடின உழைப்பு, சிக்கனம், உண்மை, வாய்மை. செயலறிவு போன்ற பண்பு களின் மகத்துவத்தை நிலைநாட்டினான். பொது மகன் மீது அக்கறை காட்டினான். கடலைக் கடந்திராத சிறு கமக்கார னைப் பாடினான். ஆக்கியோனே ஒரு விவசாயிதான். கோடையிலும், மாரியிலும் ஓயாத உழைப்பை வேண்டி நிற்கும் அஸ்கரா என்ற கிராமத்தை விட்டு புலம் பெயரவும் அவன் விரும்பினானில்லை. நீதி வழுவும் வண்ணம் கை லஞ்சம் பெற்று வந்த சிற்றரசர்களுக்கு எதிராக அவன் கொடி எழுப்பினான். பொற்காலத்திலிருந்து வெகுதூரம் உலகம் கெட்டு விட்டதாக அவன் அவநம்பிக்கை கொண் டான். அவன் வாழ்ந்த காலமோ இரும்பு யுகம்.
29

Page 21
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
ஹோமர் காலத்தைத்தான் ஹெஸியோட் படம் பிடித்தா லும், ஹோமரின் காவிய நாயகர்கள் ஈடுபட்ட வீரதீரச் செயல்களில் நாட்டம் காட்டவில்லை. ஹோமரின் கற்பனை யைவிட தான் வாழும் கால யதார்த்தமே நிஜமானது என்று நம்பினான்.
வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுபடக் கடும் உழைப்பே வழி என்று அவன் கருதினான். நேர்மைத் திறன், அர்ப்பண மனோபாவம் கடும் பிரயாசை போன்ற வையே மனிதனுக்கு விமோசனம் அளிக்கும் என்று அவன் வலியுறுத்தினான்.நெற்றி வியர்வை நிலத்தில் விழும் அளவுக்கு உழைத்தால் மாத்திரமே தப்பிப் பிழைக்கலாம் என்றும் இதய சுத்தியுடன் உழைக்கும் தொழிலாளியே உண்மையில் நல்ல மனிதனாவான் என்றும் ஹெஸியோட் விளக்கம் கூறினான்.
ஊழல் நிறைந்த சமூகத்தில் வாழ்ந்தனுபவித்த ஹெஸி யோட் சிற்றரசர்களையும் சாடினான். எல்லாம் அறிந்த பரம் பொருளான கிரேக்கக் கடவுள் ஸீயஸ், இச் சமூக விரோதி களைப் பழி வாங்காமல் விடமாட்டான் என்றும் கவிஞன் அறைகூவுகிறான்.
நீதி நேர்மையற்ற உலகிலே, நீதி தவற நடப்பதே சகஜம் என்பது உண்மைதான் என்றாலும் அநீதியை ஒழித்துக் கட்டு வது தலையாய கடன் என்கிறான். "எங்கு பலம் உண்டோ அங்கு யாவும் சரிதான்” என்ற நோக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் புலவன் கூறுகிறான். அதாவது ஆயுத பலத்தைவிட ஆத்ம பலம் வஜ்ஜிரமானது என்கிறான். போரையும், வீரத்தையும் பாடிப் புகழ்ந்த ஹோமர், சமுதாயச் சீரழிவுகளைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. வீரதீரச் செயல்களின் மத்தியில் நீதி, நியாயம் புறக்கணிக்கப்பட்டன. முதற் தடவையாக கிரேக்க தார்மிகத்தின் குரல் ஹெஸி யோட் வாயிலாக ஒலிக்கத் தொடங்குகிறது.
30

Ges. Everû, éloigpITgsor
கவிஞன் தனது "வேலையும் நாட்களும் நூலிலே ஆலோசனை வழங்க முன்வருகிறான். சிலவேளைகளில் நகைச்சுவையை ஏற்படுத்தினாலும், கவிஞனின் ஆன்மீக ஆவேசத்தை நம்மால் உணர முடிகிறது.
பெற்றோருக்கும் கடவுளுக்கும் கவிஞன் கொடுக்கும் மதிப்பும் கவிதையூடாகப் புலப்படுத்தப்படுகிறது. ஹெஸி யோட்டின் வேலையும் நாட்களும் கவிதையை அடியொற் றியே ரோமக் கவிஞன் வேர்ஜில் “ஜோர்ஜிக்ஸ்” என்ற படைப்பைத் தந்தான் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது. அதே சமயம் உண்மை அனுபவ முத்திரையை ஹெஸி யோட்டின் படைப்பில் காண்பதனால் ஐரோப்பாவின் முதல் யதார்த்தப் படைப்பாளி இவன்தான் என்றும் கூற வைக்கிறது.
கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஹெஸியோட்டின் வேலைகளும் நாட்களும்' என்ற கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "பெங்குவின்” வெளியீடாக ஏற்க னவே வந்துள்ளது. சுமார் 828வரிகளைக் கொண்ட இப் பாடலை, வசதியை முன்னிட்டு 11 பிரிவுகளுக்குள் அடக்க லாம்.
1. எல்லாம் வல்ல இறைவன் ஸியஸ் மீதான கடவுள்
வாழ்த்து. 2. தீவினை, போர் ஆகிய இரு இன்னல்களை எடுத்துக் கூறிய நன்மை, ஆரோக்கியமான போட்டி ஆகிய வற்றை மாற்றுப் பரிகாரமாக வலியுறுத்துதல். 3. மனிதனை என்றுமே அதிருப்தி கொண்டவனாக வைத்திருக்க தெய்வாதீனச் செயல். இதை விளக்க யுரோமிதியஸ் கதை. 4 கிரேக்கக் கடவுளர் முதல்வன் ஸியஸ் சிருஷ்டித்த ஐந்து யுகங்களின் விளக்கம். பொற்காலம் (மகிழ்ச்சி
31

Page 22
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
யும், இலகு வாழ்க்கையும்) வெள்ளியுலகம் (100 வருட அநீதியும், போலிப் பெருமையும்) வெண்கலக் காலம் (சக்தி மிக்க, போரிடும் வல்லமை படைத்த வீரர்கள் யுகம்) கடவுளர் போன்ற காவிய நாயகர் காலம் (தேபிஸ், ட்ரோய் யுத்த நாயகர்களின் விண்ணுலகப் பிரவேசம்) இரும்பு யுகம் (சீரழியும், காட்டுமிராண்டித்தனம்). வாசகன் உணர்ச்சிபூர்வமாக உச்சக்கட்டத்தை அனு பவிக்கும் விதத்தில் படிப்படியாக விவரணைகளைக் கவிஞன் கோத்துத் தருகிறான். 5. தற்பெருமையின் தீங்கும், நீதியின் உயர்வும் - இதை விளக்க வல்லூறின் ஆதிக்கத்தையும் சிட்டுக் குருவி யின் பரிதாப நிலையையும் விளக்கும் கதை. 6. பேர்ஸியஸ் என்பவனுக்கு ஆலோசனை, நீதியாகயும், நேர்மையாகவும் இருப்பதுடன் கெட்ட நடவடிக்கை களைத் தவிர்க்கும்படியும் ஆலோசனை வழங்கப் படுகிறது. 7 இளவரசர்கள் நீதி தவறாது இருக்கும்படி கேட்டல். ஸியஸ் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக் கிறான் என்று எச்சரிக்கை. 8. நீதியே மனிதனின் சிறந்த பொக்கிஷம் என பேர்ஸிய னுக்கு மீண்டும் அறிவுறுத்தல், மனிதனுக்கும் விலங்கு களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புலப்படுத்துதல். நாகரிகமடைந்த, பண்பட்ட இதயம் "மைட் இஸ்ரைட்" (வல்லமையே சரியானது) என்ற கோட்பாட்டை ஒரு நாளும் ஏற்காது என எடுத்துக் காட்டல். 9. நல்லவனாக எப்படி வாழ முடியும்? எச்சரிக்கை யுடனும், சிக்கனத்துடனும், மிதவாதமாகவும்
32 -

கே. எஸ். சிவகுமாரன்
இருப்பதன் மூலம் எப்படித் தீமையைத் தவிர்த்துக் கொள்ளலாம்? ஆகியன விபரிக்கின்றன. 10. பல்வேறுபட்ட விஷயங்கள் பற்றிய ஆலோசனைகள் கமம், முகாமைத்துவம், வீட்டுக்கு உபயோகமான வற்றைச் சேகரித்தல், கருவிகளை ஆக்குவதற்கு மரங்களைத் தறித்தல், உரிய காலநிலைகளில் வேலை செய்ய ஆயத்தப்படுத்தல். படகு விடுதல், வர்த்தகம். விவாகம், நட்பு. கிரியைகள், தடைகள், பண விவகாரம், குடும்ப வாழ்க்கை போன்றவற் றிற்காக செயலறிவு போன்றவை பற்றிய ஆலோ சனைகள் சுருங்கச் சொன்னால் , நல்ல கமக்காரனின் வாழ்க்கை முறை பற்றிய அறிவுரைகள் தரப்படு கின்றன. மே மாதம் முதல் நொவம்பர் மாதம் வரை கமக்காரர் கடுமையாக உழைக்க வேண்டுமாம். மழைக்காலமான ஒக்டோபரில் உழ வேண்டுமாம்.
11. நல்ல நாட்கள் எவை. தீய நாட்கள் எவை என்று
கூறப்படல்.
O () ()
ஹெஸியோட் எழுதிய "வேலைகளும் நாட்களும்" விவசாய போதனை. தார்மிக நெறி விளக்கம். சமூக அரசியல் விமர்சனம், மூட நம்பிக்கைகள் ஆகியனவற்றை உள்ளடக்கும் ஒரு பாட்டாளிப் படைப்பு எனலாம்.
6ify(3sFff: O3.O2.2OO1
33

Page 23
கிரேக்கரின் வழியிலே துன்பீற்று நாடகம்
பண்டைய உயர் இலக்கியங்கள் பற்றிப் பேசும் பொழுது கிரேக்க துன்பீற்று நாடகம் பற்றியும் பேசாதிருக்க முடியாது. பண்டைய கிரேக்கப் பண்பாடுகள் பற்றிப் பல ஆய்வறிவாளர் பயனுள்ள விமர்சனக் கருத்துக்களைத் தந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஈடித் ஹமில்டன் என்ற அமெரிக்கப் பெண்மணி 19 ஆம் நூற்றாண்டிலே பிறந்த இந்த ஆய்வாளர் 1963லே இறந்து போனார். அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று த க்றீக் உவே’ (கிரேக்கரின் வழி யிலே). அந்தப் புத்தகத்திலே, துன்பீற்று நாடகம் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துக்களைத் திரட்டித் தருவதே எனது நோக்கம்.
O O. O.
உலகிலே மிகச் சிறந்த துன்பீற்று நாடாசிரியர்கள் நால்வர். இவர்களில் ஷேக்ஸ்பியரைத் தவிர மூவரும் கிரேக்கர். அவர்களின் பெயர்கள். ஈஸ்கிலஸ், ஸோபோக் ளிஸ், பூரிப்பிடஸ். கவிஞன் ஒருவனே துன்பீற்றுப் படைப் பொன்றைத் தர முடியும்.
கவிதை என்ற ரசவாதம் மூலம் துன்பம் துயரை உன்னத மான அனுபவமாக மாற்றிக் காட்டுவதுதான் துன்பீற்றுப் படைப்பு உண்மையான உள்ளறிவே கவிதை என்றால், பெருங் கவிஞர்கள் எல்லாருமே நல்ல வழிகாட்டிகள்
34

கே. எஸ். சிவகுமாரன்
என்றால், இந்த அனுபவ உருமாற்றம் மனதைக் கவ்வும் பயனை அளிக்கின்றது.
துன்பீற்றுப் படைப்பு துயரைக் காட்டி இன்பமளிக்கிறது. எவ்வளவு தூரம் அல்லல் தீட்டப்படுகிறதோ, எவ்வளவு தூரம் சம்பவங்கள் பயங்கரமாய் இருக்கின்றதோ, அவ்வளவு தூரம் ஆழமாக இந்த இன்ப அனுபவம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
வேதனை, துயரம், அழிவு போன்றவை எல்லாம் மனதை வருத்துவன. அதே சமயம் துன்பத்தில் இன்பம் காண்பது என்பது முரண்பாடானது. துன்பீற்று-இன்பம் என்பது ஒரு தனி ரகம். இந்தக் கழிவிரக்கம் அநுபவப் புத்துயிர்ப்பு எனப் பொருள்பட அரிஸ்டோட்டில் விபரித்துள்ளார்
இரக்கம், பயங் கலந்த வியப்பு, அமைதி காணல், உன்னத உணர்வாக அனுபவித்தல் ஆகியன துன்பங் கலந்த இன்பத்தின் ஊற்றுக்கள்.
துன்பீற்று நாடகப் பாத்திரங்களுக்கிடையே ஆன்மீக ரீதியிலான போராட்டம் நடைபெறுகையிலே. பார்வையாளர் அனுதாபம் ஒவ்வொரு பாத்திரம் மீதும் லயித்திருக்கிறது என்று ஹெஜல் என்ற தத்துவஞானி குறிப்பிட்டுள்ளான். குற்றம் புரியாத அப்பாவி பாதிக்கப்படும் பொழுது இந்த அனுதாபம் மேலும் அதிகரிக்கிறது.
வாழ்க்கையின் மேம்போக்கான அம்சங்களை இன்பீற்றுப் படைப்புகள் தருகின்றன. துன்பீற்றுப் படைப்புகளோ இவற் றைப் புறக்கணிக்கின்றன. வாழ்க்கையின் முக்கியமான, அடிப்படையான பண்பு என்ன? என்பதைப் பொறுத்தே துன்பீற்றுப் படைப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்று இனங்கண்டுகொள்ள முடியும். இன்னலில் சிக்கி அவதிப் பட்டு, துன்புற்று, துயரமடைந்து அல்லற்படலே துன்பிற்று அனுபவ மாகும். ஓர் ஆன்மாவின் கடுந் துயரமும் ஆனந்தக் களிப்பும் தரும் அனுபவ மகத்துவம் போல் வேறில்லை.
35

Page 24
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
மரணம் மாத்திரம் துன்பமில்லை. மரணத்தை உணர்ந்து, வேதனைப்பட்டுப் பலியாவது துன்பீற்று அனுபவந்தான். மக்பெத், லியர் மன்னன், அன்டி கொனி, ஹம்லட் போன்ற வர்களே துன்பீற்றுக் கதாநாயகர்களாவர். மிகவும் பெரிய அளவில் துயரம் அனுபவிக்கும் ஆன்மாவே துன்பீற்றுக் கதாநாயகன், சித்தரிக்கப்படுகின்றான்.
நல்லதல்லாத அல்லது மகிழ்ச்சி தராத முடிவுள்ளவை துன்பீற்றுப் படைப்புகளில் அடங்க வேண்டும் என்றில்லை. இப்ஸனின் நாடகங்கள் துன்பீற்ற நாடகங்கள் இல்லை. அதே சமயம் டொஸ்தோயெவ்ஸ்கி ஒரு துன்பீற்றுப் படைப் பாளி, டோல்ஸ்டோயின் அனா கரினினா ஒரு துன்பீற்றுப் படைப்பு.
O. O. O. கிரேக்கத்தின் முதலாவது நாடகாசிரியனும், துன்பீற்று நாடகத்துறையின் முதல்வருமான ஈஸ்கிலஸ் தொடர்பான ஈடித் ஹமில்டனின் கணிப்பை அடுத்துப் பார்ப்போம்!
புதுயுகம் ஒன்றின் கவிஞன் ஈஸ்கிலஸ். வெளி உலக அழகின் கவிதையையும், உலகின் வேதனையின் அழகின் கவிதையையும் இணைத்த கவிஞன் அவன். மனதைக் குழப்பிவிடும் வாழ்க்கையின் விசித்திரங்களையும் வினோ தங்களையும் கிரகித்த முதற் கவிஞன் அவன். துயரின் மர்மத்தை அவன் புரிந்து கொண்டான். வாழ்க்கையின் ஆபத்துக்களை எதிர்நோக்கும் பொழுதே அது முழு நிறைவு பெறுகிறது. தோல்வியை வெற்றியாக ஆக்கும் பொழுது நிறைவு பெறுகிறது. இதுவே ஈஸ்கிலளின் வாழ்க்கை நோக்கு.
துன்பத்தின் எல்லையையும், மாட்சிமையின் மகோன்னதத் தையும் ஒருங்கே காட்டுவது துன்பீற்று நாடகத்துக்கே உரிய பண்பென்றால், ஈஸ்கிலஸ் துன்பீற்று நாடகாசிரியர்களிலேயே மிகவும் துன்பீற்று நாடகங்களைப் படைத்தவன். வாழ்க்கை
36

கே. எஸ். சிவகுமாரன்
யின் முரண்பாடுகளிடையே ஒத்திசைவைக் காண வைத்த வன் அவன். அவனுடைய நாடகப்பாத்திரங்கள் ஒதுங்கிச் செல்ல மாட்டா: எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ள மாட்டா.
மனித வாழ்க்கையை வியத்தல், அதன் அழகை, கொடு ரங்களை நேர்கொண்டு நோக்கி வசீகரப்படல், மானிடரின் செயலையும் சொல்லையும் உற்று வியத்தல் - ஈஸ்கிலளிட மும் ஷேக்ஸ்பியரிடமுந்தான் இந்தப் பண்புகள் காணப் படுகின்றன.
ஈஸ்கிலஸின் வருகைக்கு முன்னர் ஒரு கட்டியக்காரனும் குழுவினரும் (கோரஸ்) மாத்திரமே இருந்தனர். இவன் இன்னொரு நடிகனை அறிமுகஞ் செய்து வைத்தான். பாத் திரங்களிடையே மோதல் ஏற்பட வகை செய்யப்பட்டது. இந்த மோதல், போராட்டமே நாடகத்தின் முக்கிய பண்பு. ஈஸ்கிலஸ் ஒரு நாடகாசிரியன் மட்டுமல்ல, ஒரு நடிகன், தயாரிப்பாளன். ஒப்பனை, உடையலங்காரம், காட்சியமைப்பு போன்ற சகல மேடை அனுசரணைகளையும் கவனித்தவன். நாடகத்துறை அனுபவம் அவனுக்கிருந்த போதிலும், நாடக உத்திகளில் அவன் அதிக கவனஞ் செலுத்தவில்லை. ஆயினும் நாடகத்தன்மை அவனுடைய நாடகங்களில் நிரம்ப இருந்தது.
பூமியிலே பெரும் படாடோபம் அல்லது சுபீட்சம் தேவதைகளால் அவதானிக்கப்படுகிறது. ஈற்றிலே துன்பம் நேரிடுகிறது என்ற கிரேக்க தத்துவத்தை ஈஸ்கிலஸ் நிராகரித் தான். சுபீட்சமல்ல பாவமே துயரைக் கொண்டு வருகிறது என்று 'அகமம் னோன்’ என்ற நாடகத்தின் மூலம் உணர்த்தினான்.
O O. O.
ஈடித் ஹமில்டன் அடுத்து ஸோபோக்ளிஸ் பற்றி என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.

Page 25
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
நடப்பதை ஆண்மையுடன் ஏற்றுக் கொள்ளும் பண்பை ஸோபோக்ளிஸ் காட்டினான். அனுபவிக்க வேண்டியதை வீரத்துடன் அனுபவித்தே தீரும் மனப் போக்கு இவனுடைய நாடகங்களில் விஸ்தரிக்கப்பட்டது. 'சொந்த விளையின் நாயகி அன்டிகோனேவைப் பாத்திரமாகினான். கஷ்டத்தைத் தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளும் பண்பு இவன் பாத்திரங் களின் குணவியல்பு.
ஸோபோக்கிலிஸ் வைதீகத்தில் ஊறியவன். ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த அமைப்பு முறையைத் துாக்கிப் பிடித்தவன். ஈஸ்கிலஸ் சுதந்திரத்தை விரும்பினாள். ஸோபோக்கிளிஸ் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத் தினான். அளவுக்கு மீறல் என்பதை இவன் வெறுத்தான். எதிலும் ஒழுங்கும், கட்டுப்பாடும் அவசியம் என்று வாதாடி னான். அழகு என்பது அமைப்பிலேயே, வடிவத்திலேயே, உருவத்திலேயே, கட்டுக்கோப்பிலேயே இருக்கிறது என்று ஸோபோக்கிளிஸ் கருதினான். இவனுடைய நாடகக் கட்டுக் கோப்பு, ஈஸ்கிளசினுடையதை விடச் சிறப்பாக இருப்பதை யும் அவதானித்தல் வேண்டும்.
இவனுடைய பாத்திரங்கள் மனம்விட்டுப் பழகினாலும். இவன் எட்ட நின்றே விமர்சித்தான். ஆங்கிலக் கவிஞன் மில்டனைப் போல செம்மையான மொழி நடையைக் கையாண்டான். ஆயினும் நாடகத்தன்மை ஈஸ்கிலசுடன் ஒப்பிடும் பொழுது குறைவாகவே காணப்பட்டது. நாடகாசிரி யன் என்பதைவிட கவிஞனாகவே இவன் திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றது. மேடைக்கேற்ற விதத்தில் நாடகத்தை எழுதுவதிலும் இவன் கைதேர்ந்தவன்.
கவித்துவம், நுட்ப புத்தி, அழகிய கட்டமைப்பு ஆகியன இவன் நாடகங்களில் பிரதிபலிப்பவை.
38

கே. எஸ். சிவகுமாரன்
இறுதியாக, யூரிப்பிடெஸ் பற்றி ஈடித் ஹபில்டன் கணிப்பு என்ன என்பதை அறிந்து கொள்வோம்!
மிகவும் துக்கத்தை ஏற்படுத்தினான். ஆயினும் இவனைச் சிறந்த துன்பீற்று நாடகாசிரியன் எனக் கூறமுடியாது. அதே சமயம் மிகவும் நவீனத்துவப் போக்குடையவனாக இவன் விளங்கினான். மனித இதயங்களை அவன் நேசித்தான். சுய இரங்குதல் என்பது கோழைத்தனம் என்று இக்கலைஞன் கருதினான். பழசைப் பற்றியே நினைத்து மனம் வருந்தாமல், நடக்கப் போவதைப் பற்றிச் சிந்தை செலுத்தினான் இவன். இவனிடம் கவித்துவமும் மனிதாபிதானமும் ஒன்றிணைந்தன.
மல்லிகை ஒக்டோபர்- 1984
39

Page 26


Page 27